ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்–பல ஸ்ருதிகள் -ஸ்ரீ பட்டர் பாஷ்யம் —

வநமாலீ கதி சார்ங்கி சங்கீ சக்ரீ ச நந்தகீ
ஸ்ரீ மான் நாராயணோ விஷ்ணு வாஸூ தேவோபி ரஷது

“வனமாலீ  கதீ  சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ, ஸ்ரீமான் நாராயணோ  விஷ்ணுர் வாசுதேவோ அபிரக்ஷது.”
என்ற ஆதிசங்கரரின் ஸ்லோகம்
இங்கு ஆதிசங்கரர் விஷ்ணுவின் வியாபக நாமங்களான நாராயண, விஷ்ணு மற்றும்  வாசுதேவ என்ற மூன்றையும் குறிப்பிட்டு உள்ளார்.
‘வனமாலி என்ற மாலையை அணிந்து
கௌமோதகி என்னும் கதை,
பாஞ்சசன்னியம் என்னும் சங்கு,
சுதர்சன என்னும் சக்கரம்,
சார்ங்கம் என்னும் வில்,
நந்தகம் என்னும் வாள்
ஆகியவற்றுடன் விளங்கும் நாராயண, விஷ்ணு, வாசுதேவன் என்ற நாமங்களைக் கொண்ட
திருமால் என்னைக் காக்க வேண்டும்’ என்பது இதன் பொருள்.

—————–

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம மஹிமையை அறிவிக்க திரு உள்ளம் பற்றி
சாந்தனுவின் புத்திரரான பீஷ்மர்
குந்தியின் புத்திரனான தர்மருக்கு உரைக்கிறார்

————

யதிதம் கீர்த்த நஸ்ய கேஸ வஸ்ய மஹாத்மந
நாம் நாம் ஸஹஸ்ரம் திவ்யா நாம் அசேஷேண ப்ரகீர்த்திதம்

நாம ஸங்கீர்த்தனம் செய்யத்தக்கவனும்
மிகுந்த மஹிமை பொருந்தியவனுமான
கேஸவனுடைய திரு நாமங்கள் ஆயிரமும் ஓன்று விடாமல் கூறப்பட்டன

கீர்த்த நஸ்ய –என்பதன் மூலம்
இன்று முதல் நீ பகவானைக் கீர்த்தனம் செய்ய வேண்டும் என்பதும்
கேஸ வஸ்ய மஹாத்மந-என்பதால்
கீர்த்தனம் செய்ய வேண்டியதன் காரணம் என்பதும்
திவ்யா நாம்-என்பதன் மூலம்
முக்தர்களால் பரமபதத்தில் கீர்த்தனம் செய்யப்பட வேண்டும் என்பதையும்
அசேஷேண-என்பதால்
இனி உனக்கு அறிய வேண்டுவது வேறே ஒன்றும் இல்லை என்பதுவும் கூறப்பட்டன

———

அவதாரிகை
அடுத்து அதிகாரி யார் என்பதும்
பயனும் கூறப்படுகின்றன

யதிதம் ஸ்ருணு யாந்நித்யம் யச்சாபி பரி கீர்த்த யேத்
நாஸூபம் ப்ராப்னுயாத் கிஞ்சித் ஸோமுத்ரேஹ ச மாநவ

இந்த ஸஹஸ்ர நாமத்தை எப்போதும் கேட்டபடி உள்ளவனும்
கீர்த்தனம் செய்தபடி உள்ளவனும்
பரலோகம் மற்றும் இந்தப் பூமியில் சிறிதும் கெடுதலை அடைய மாட்டான் –

இதம் ஸ்ருணு யாத் இத்யாதி –மூலம்
அவரவர் தகுதிக்கு ஏற்றபடி கீர்த்தனம் செய்தால்
இங்கும் அங்கும் உள்ள அஸூ பங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்று கருத்து

———

வேதாந்தகோ ப்ராஹ்மணஸ் ஸ்யாத் ஷத்ரியோ விஜயீ பவேத்
வைஸ்யோ தன ஸம்ருத்தஸ் ஸ்யாச் ஸூத்ர ஸூகம் அவாப்நுயாத்

இந்த ஸஹஸ்ர நாமத்தை அந்தணன் ஜபித்தால் வேதாந்த ஞானம் கிட்டும்
ஷத்ரியன் ஜபித்தால் வெற்றி கிட்டும்
வைஸ்யன் ஜபித்தால் செல்வம் கிட்டும்
ஸூத்ரன் ஜபித்தால் இன்பம் கிட்டும்

அந்தணர்கள் முதலான நான்கு வர்ணத்தாருக்கும்
பகவத் பக்தி திடமாக உண்டாகாத போது
அவர்கள் எந்தவித பலனையும் எதிர்பாராமல் இந்த ஸஹஸ்ர நாமத்தை ஜபித்தாலும் கேட்டாலும்
அவர்களுக்கு ஏற்படும் பலன்கள் கூறப்படுகின்றன –

——

தர்மார்த்தீ ப்ராப் நுயாத் தர்மம் அர்த்தார்த்தீ ச அர்த்தம் ஆப் நுயாத்
காமாந் அவாப் நுயாத் காமி ப்ரஜார்த்தீ ச ஆப் நுயாத் ப்ரஜா

தர்மத்தைக் கோரியவன் தர்மத்தையும்
பொருளை விரும்புபவன் பொருளையும்
போகத்தைக் கோரியவன் போகத்தையும்
குழந்தைகளைக் கோரியவன் குழந்தைகளையும் பெறுவான்

நான்கு வர்ணத்தினரும் ஏதேனும் பலனை எண்ணி ஜபித்தால் அவர்கள் விரும்பும் பலனை அடைவார்கள் என்று கூறப்படுகிறது

——-

அடுத்து சில விதி முறைகளுடன் ஸஹஸ்ர நாமத்தை ஜபித்தல் என்னும் ஸங்கீர்த்தனம் செய்யும் ஒருவனுக்கு
அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் உண்டாகும்
என்பதை அடுத்துள்ள நான்கு ஸ்லோகங்களும் கூறுகின்றன

பக்திமான் யஸ் ஸதோத்தாய ஸூஸிஸ் தத்கத மநஸ
ஸஹஸ்ரம் வாஸூ தேவஸ்ய நாம் நாம் ஏதத் ப்ரகீர்த்தயேத்

யஸஸ் ப்ராப்நோதி விபுலாம் ஜ்ஞாதி ப்ரதான்ய மேவ ச
அஸலாம் ஸ்ரியம் ஆப் நோதி ஸ்ரேயஸ் ப்ராப்நோத்ய நுத்தமம்

ந பயம் க்வசிதாப்நோதி வீர்யம் தேஜஸ் ச விந்ததி
பவத்ய ரோகோ த்யுதி மான் பல ரூப குணான்வித

ரோகார்த்தோ முச்யதே ரோகாத் பத்தோ முச்யேத பந்த நாத்
பயான் முச்யதே பீதஸ்து முச்யேதாபன்ன ஆபத

யார் ஒருவன் அன்றாடம் உறங்கி எழுந்த பின்னர் நீராடுதல் முதலான கர்மங்களைச் செய்து -பரி ஸூத்தனாகி
பக்தியுடன் வாஸூ தேவன் இடம் மனஸை நிலை நிறுத்தி
அவனுடைய இந்த ஆயிரம் திரு நாமங்களையும் நன்றாகக் கீர்த்தனம் செய்வானோ
அவன் மிகுந்த கீர்த்தியையும்
மனிதர்களில் முதன்மையாக உள்ள நிலையையும்
அழியாத செல்வத்தையும்
அனைத்தையும் காட்டிலும்ம் உயர்ந்த மோக்ஷத்தையும் பெறுகிறான்

அவனுக்கு எங்கும் எப்போதும் எதற்கும் பயம் இல்லை
அவன் சக்தி மற்றும் தேஜஸ்ஸை அடைகிறான்

நோய் அற்றவனாகவும் காந்தி உள்ளவனாகவும் பலம் ரூபம் குணம் கொண்டவனாகவும் ஆகிறான்
நோயாளி ஒருவன் அந்த நோய்கள் அனைத்தும் நீங்கப் பெறுகிறான்

பந்தத்தில் அகப்பட்டவன் அந்தப் பந்தத்தில் இருந்து விடுதலை அடைகிறான்
பயத்தில் உள்ளவன் பயம் இல்லாதவன் ஆகிறான்
ஆபத்திலுள்ளவன் ஆபத்தில் இருந்து விடுபெறுகிறான்

———

அடுத்து பகவானை மட்டும் விரும்பி நின்று மற்ற எதிலும் பக்தி இல்லாமல் உள்ளவனுக்கு
அவன் பிரார்த்தனை செய்யாமலேயே தீயவைகளை அவனிடம் இருந்து அகன்று விடுகின்றன என்கிறது

துர்க்காணி அதி தரத்யாசு புருஷஸ் புருஷோத்தமன்
ஸ்துவன் நாம ஸஹஸ்ரேண நித்யம் பக்தி ஸமந்வித

பக்தியுடன் கூடியவனாக இந்த ஸஹஸ்ர நாமங்களால் புருஷோத்தமனை ஸ்துதிக்கும் ஒருவன்
அனைத்து கஷ்டங்களையும் கடக்கிறான்

—-

அப்படிப்பட்டவர்களுக்கு உரிய பலன்கள் கூறப்படுகின்றன

வாஸூ தேவ ஆஸ்ரயோ மர்த்யோ வாஸூ தேவ பராயண
ஸர்வ பாப விஸூத் தாத்மா யாதி ப்ரஹ்ம ஸநா தநம்

வாஸூ தேவனையே அண்டியவனாக -வாஸூ தேவனை மட்டுமே பரமகதியாய் நம்பியுள்ளவனாக இருக்கும் ஒருவன்
அனைத்து பாபங்களில் இருந்தும் விடுபட்டவனாக எப்போதும் உள்ள ப்ரஹ்மத்தை அடைகிறான்

——–

நியமங்களுடன் கூடிய பக்தனுக்கு இடையே வந்து சேரும் பலன்கள் கூறப்படுகின்றன

ந வாஸூ தேவ பக்தாநாம் அஸூபம் வித்யதே க்வசித்
ஜன்ம ம்ருத்யு ஜரா வியாதி பயம் நைவோப ஜாயதே

இதம் ஸ்தவம் அதீயாந ஸ்ரத்தா பக்தி ஸமந்வித
யுஜ்யேத ஆத்ம ஸூக ஷாந்தி ஸ்ரீ த்ருதி கீர்த்திபி

வாஸூ தேவனிடம் பக்தி கொண்டவர்களுக்கு எப்போதும் தீமை வருவதில்லை
அவர்களுக்கு பிறப்பு இறப்பு மூப்பு பிணிகள் குறித்த பயமும் உண்டாவது இல்லை
மிகுந்த ஸ்ரத்தை பக்தி இவற்றுடன் கூடி இந்த ஸஹஸ்ர நாமத்தை அத்யயனம் செய்யும் ஒருவன்
ஸூகம் பொறுமை செல்வம் தைர்யம் ஞாபகத் திறன் புகழ் ஆகியவற்றை அடைகிறான்

———–

பகவத் பக்தியானது மிகுந்த புண்ணியங்களுடைய காரணத்தால் உண்டாலும் பயனாகும்
அது உண்டானால் குரோதம் முதலான தோஷங்கள் தாமாகவே விலகும் என்று கூறப்படுகிறது

ந க்ரோதோ ந ச மாத்சர்யம் ந லோபோ ந ஸூபா மதி
பவந்தி க்ருத புண்யா நாம் பக்தா நாம் புருஷோத்தமே

புண்ணியம் செய்வதன் காரணமாக புருஷோத்தமனை அடைந்தவர்களுக்கு கோபம் உண்டாவது இல்லை
ஆசை ஏற்படுவது இல்லை -தீய எண்ணங்கள் ஏற்படுவது இல்லை

———-

மேலே கூறப்பட்ட பலன்கள் அனைத்தும் புனைந்துரை என்னும் அர்த்த வாதமோ என்று பக்தி அயற்றவர்கள்
சந்தேகம் அடையக்கூடும் என்று எண்ணி
எம்பெருமானுடைய பெருமை காரணமாக கைகூடாதது எதுவுமே இல்லை
ஆகவே இவை அர்த்த வாதம் என்றோ வேறே விதமாகவோ எண்ணக் கூடாது என்பதற்காக அவனுடைய பெருமையை விவரிக்கிறார்

த்யவ் ச சந்த்ர அர்க நக்ஷத்ரா கம் திசோ பூர் மஹோ ததி
வாஸூ தேவஸ்ய வீர்யேண வித்ருதாநி மஹாத்மந

சந்திரன் சூர்யன் நக்ஷத்திரங்கள் ஆகியவற்றுடன் கூடிய மேல் லோகமும்
இடைவெளியான ஆகாசமும் திசைகளும் பூமியும் கடலும் மஹாத்மாவான வாஸூ தேவனுடைய சக்தியாலேயே தாங்கப் பட்டுள்ளன

——–

அனைத்தும் அவன் சக்தியாலேயே தரிக்கப் பட்டுள்ளன என்று கூறிய பின்னர்
அனைத்துமே அவனுக்கு வசப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது –

ஸ ஸூர அஸூர கந்தர்வம் ஸ யஷோ ரக ராக்ஷஸம்
ஜகத் வஸே வர்த்த தேதம் கிருஷ்ணஸ்ய ஸ சராசரம்

தேவர்கள் அஸூரர்கள் கந்தர்வர்கள் யக்ஷர்கள் நாகர்கள் ராக்ஷஸர்கள் சராசரங்கள்
ஆகிய அனைத்தும் கிருஷ்ணனுடைய கட்டுப்பாட்டில் உள்ளன

——-

இவ்விதம் அவை அனைத்தும் வசப்பட்டுள்ளவை என்பது ஆத்மா -சரீரம் என்ற சம்பந்தம் போன்றதாகும் எனப்படுகிறது

இந்திரியாணி மநோ புத்தி ஸத்வம் தேஜோ பலம் த்ருதி
வாஸூ தேவாத் மகாநி ஆஹு க்ஷேத்ரம் ஷேத்ரஜ்ஞ ஏவ ஸ

இந்திரியங்கள் மனம் புத்தி ஸத்வ குணம் தேஜஸ் சக்தி தைர்யம் ஆத்மா ஆகிய அனைத்தும்
வாஸூ தேவனுடைய சரீரங்கள் ஆகும் என்று ஸாஸ்த்ரங்கள் கூறுகின்றன

————

இவ்விதம் தத்வ ஸாஸ்த்ரங்கள்

அனைத்தும் அவன் வசப்பட்டவை என்று கூறிய பின்னர் மந்தமான புத்தி உள்ளவர்களுடைய
பயத்தை நீக்குவதற்காக அனுஷ்டான ஸாஸ்த்ரங்களும் அவன் வசப்பட்டவை என்கிறது

ஸர்வ ஆகமா நாம் ஆசார ப்ரதமம் பரி கல்பித
ஆசார ப்ரபவோ தர்மோ தர்மஸ்ய ப்ரபு அச்யுத

ஸாஸ்த்ரங்கள் அனைத்திற்கும் சிறந்த ஒழுக்கமே முதன்மையாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது
அந்த ஒழுக்கத்தில் இருந்து உண்டாவது தர்மம் ஆகும்
அந்த தர்மத்துக்கு அச் யுதனே ஸ்வாமி யானான்

ஸர்வ ஆகமா நாம் –என்றால் தர்மத்துக்கான பிரமாண ஸாஸ்த்ரங்கள் ஆகும்
ப்ரதமம் பரி கல்பித –என்றால் மிகவும் முக்கியமான உபதேசிக்கப்படும் தர்மம் ஆகும்
ஆசார -என்றால் ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை ஆகும்அச் யுதனே யாவான்
அவனே அந்த ஒழுக்கத்தில் நிலை நிற்கவும் அதற்கான பலனை அளிப்பவும் உதவுபவனும் ஆவான்

————

தர்மத்தைப் பற்றி நிற்பவர்களும் அவனிடம் இருந்தே உண்டானவர்கள் என்கிறது

ரிஷய பிதரோ தேவ மஹா பூதாநி தாதவ
ஜங்கமா ஜங்கம் சேதம் ஜகந் நாராயண உத்பவம்

ரிஷிகளும் பித்ருக்களும் தேவர்களும் பஞ்ச பூதங்களும் அவற்றின் செயல்களாகிய இன்பங்களும்
ஸ்தாவரங்களுமாகிய அனைத்து உலகங்களும் நாராயணன் இடம் இருந்தே உண்டாயின

ரிஷய –என்றால் ஸ்ம்ருதிகள் போன்றவற்றை யுண்டாக்கின மநு முதலானவர்கள்
மற்றும் அவற்றைத் தியானித்து பின்பற்றுவார்கள் ஆவர்
பிதரோ தேவ –என்றால் மற்ற தேவதைகள் ஆவர்
மஹா பூதாநி -என்றால் ஆகாசம் மற்றும் உள்ள நான்கு பூதங்களும் ஆகும்
தாதவ –என்றால் தர்மங்களை அனுபவிப்பதற்காக உண்டான தோல் முதலியவை
ஜங்கமா ஜங்கம் –என்றால் பலன்களை அனுபவிக்கும் அசையும் மற்றும் அசையாத பொருள்கள் நிறைந்த உலகம் ஆகும்

———

அடுத்து அனைத்து ஞானத்திற்கும் அவனே காரணம் என்கிறது

யோகோ ஞானம் ததா சாங்க்யம் வித்யா சில்பாதி கர்ம ச
வேதா சாஸ்த்ராணி விஞ்ஞாந மேதத் ஸர்வம் ஜநார்த்தநாத்

கர்மயோகம் பக்தி யோகம் ஆகியவற்றின் அறிவும்
சாங்க்யம் எனப்படும் ஞான யோகமும்
தர்க்கம் வியாகரணம் போன்ற வித்யைகளும்
சில்பங்களும்
வர்ணாஸ்ரம தர்மங்களும்
வேதங்களும்
ஸ்ம்ருதிகளும்
இதிஹாஸ புராணங்கள் என்னும் ஸாஸ்த்ரங்களும்
ஆகிய பலவிதமான ஞானமும் ஜனார்த்தனன் இடம் இருந்தே உண்டாயின

ஞானம் என்றால் ஸாஸ்த்ரம்
யோகோ ஞானம் என்றால் ஸாஸ்த்ரங்கள் குறித்த ஞானம்
யோகம் என்பது இரு விதம் -சமாதி யோகம் -கர்ம யோகம்
சாங்க்யம் -என்றால் தத்வங்களைப் பற்றிய அறிவிக்கும் பிரிவு
வித்யா -இலக்கணம் போன்றவை குறித்த அறிவாகும்
மேலும் வில் வித்தை மருத்துவம் இசை ஆடல் போன்றவையும் வித்யையாகும்
சில்பம் -செதுக்குதல் கட்டுமானம் போன்றவை ஆகும்
கர்மம் என்றால் அனைத்து செயல்பாடுகளும் ஆகும்
வேதங்களே அனைத்திற்கும் முன்னோடி ஆகும்
ஸாஸ்த்ரங்கள் என்றால் ஸ்ம்ருதி இதிஹாஸம் புராணம் ஆகும்
இவை அனைத்தும் ஜனார்த்தனிடம் இருந்தே வருகின்றன

————

அடுத்து மஹா விஷ்ணுவின் இரண்டு விபூதிகளையும் நிர்வஹிக்கும் தன்மையை அருளிச் செய்கிறார்

ஏகோ விஷ்ணுர் மஹத் பூதம் ப்ருதக் பூதான்ய நேகஸ
த்ரீன்ல் லோகான் வியாப்ய பூதாத்மா புங்க்தே விஸ்வ பூ கவ்யய

பெரும் பொருளாகிய மஹா விஷ்ணு பலவாகப் பிரிந்துள்ள பூதங்களையும்
மூன்று உலகங்கள் எனப்படும் பத்தர் முக்தர் நித்யர் என்னும் மூன்று வகை சேதனர்களையும் வியாபித்து
அனைத்து பிராணிகளுக்கும் அந்தர்யாமியாக யுள்ள போதிலும் அவற்றின் தோஷங்கள் ஏதும் அடையாதவனாக
அனைத்தையும் காப்பாற்றி அனுபவிக்கிறான்

ஏக -என்றால் மஹா விஷ்ணு தனித்தன்மை உள்ள ஒருவன்
அநேக என்றால் எண்ணற்ற ரூபம் செயல்பாடுகள் மாறுபாடுகள் ப்ரயோஜனங்கள் கொண்டுள்ள தனித்தனியான வேறுபட்ட பூதங்கள்
இவை அனைத்திலும் மூன்று லோகங்களிலும் அவன் பரவி நிற்கிறான்
பந்தத்தில் உள்ள ஜீவாத்மா முக்தாத்மா மற்றும் நித்யர் ஆகியவையே மூன்று லோகங்களிலும் உள்ள ஆத்மாக்கள்
அவை அனைத்தையும் கட்டுப்படுத்தி அவற்றின் எஜமானனாக உள்ளதால் அவையுடைய ஆத்மாவாக மஹா விஷ்ணுவே உள்ளான்
அவனே அவற்றைக் காப்பவன் ஆவான்
ஆனால் அவற்றின் தோஷங்களால் தீண்டப்படாதவன் ஆகிறான்
தனது மேன்மை காரணமாக மஹத் பூதம் ஆகிறான்
வாக்கு மற்றும் மனம் ஆகியவற்றுக்கு அப்பால் உள்ளவன்
புங்க்தே என்றால் லீலா ரஸம் மற்றும் போக ரஸம் ஆகியவற்றை அனுபவிக்கிறான் என்றவாறு

————–

அடுத்து அளவற்ற மஹிமை யுள்ள பகவான் இந்த சுலோகத்துக்கு விஷயம் ஆகிறான்
அவனைக் காட்டிலும் உயர்ந்த ஞானம் மற்றும் வாக்கு கொண்டவரான வேத வ்யாஸர் இந்த ஸ்லோகத்தை உரைத்தார்
அவர்கள் இருவர் யுடைய மங்களகரமான மஹிமையை இந்த ஸ்லோகம் கூறுகிறது
இதனைக் கொண்டு தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ள நிற்கும் அனைவருமே இதற்கு அதிகாரிகள் ஆவர்
ஆகவே உயர்ந்தும் தாழ்ந்தும் உள்ளதான அனைத்து விதமான பொருள்களையும் அடைய விரும்பும்
ஒருவன் யாராக இருந்தாலும் இந்த ஸ்லோகத்தை ஐயம் இன்றிக் கூறலாம்

இமம் ஸ்தவம் பகவதோ விஷ்ணோ வ்யாஸேந கீர்த்திதம்
படேத்ய இச்சேத் புருஷ ஸ்ரேய பிராப்தம் ஸூகாநி ச

ஸ்ரேயஸ் எனப்படும் முக்தியையும் மற்ற பல ஸூ கங்களையும் அடைய எண்ணும் ஒருவன்
வேத வ்யாஸரால் அருளிச் செய்யப்பட்டதும் பகவானாகிய மஹா விஷ்ணுவைக் குறித்தும்
உள்ளதான இந்த ஸ்தோத்ரத்தைப் படிப்பானாக

——

ஸ்வ பாவத்தாலேயே ஸூகம் துக்கம் நன்மை தீமை என்பது போன்ற இரட்டைகளாக உள்ள அனைத்து
கல்யாண குணங்களுக்கும் இருப்பிடமாக உள்ளவனும்
அடியார்களுக்கு கற்பக மரம் போன்றவனும்
தாமரை போன்ற சிவந்த திருக்கண்கள் கொண்டவனும்
மஹா லஷ்மியின் நாயகனுமான ஸர்வேஸ்வரனை வணங்குபவர்களுக்கு அவனே அனைத்துமாக உள்ளான்
ஆகவே அவனை வணங்குபவர்களுக்கு கிட்டக்கூடியவை சொல்வதற்கே எட்டாதபடியே உள்ளன
இப்படி உள்ள போது அவனை வணங்காமல் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் உலாவது ஏனோ என்று நிறைவு செய்கிறார்

விஸ்வேஸ்வரம் அஜம் தேவம் ஜகத பிறப்பும் அவ்யயம்
பஜந்தி யே புஷ் கராஷம் ந தே யாந்தி பராபவம்
ந தே யாந்தி பராபவம் ஓம் நம இதி

அனைத்து உலகங்களுக்கும் ஈஸ்வரனும்
பிறப்பற்றவனும்
அனைத்து ஆனந்தங்களைக் காட்டிலும் ஆனந்தம் உள்ளவனும்
இந்த உலகங்களின் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ஸம்ஹாரம் ஆகியவற்றுக்கு காரணமானவனும்
செந்தாமரைக் கண்கள் கொண்ட வானுமாகிய ஸ்ரீ மன் நாராயணனை உபாஸிப்பவன்
யாராக இருந்தாலும் அவன் எதிலும் தோல்வியே அடைய மாட்டான் -அவமானம் அடைய மாட்டான்
இரண்டாவது முறையாக இறுதியாக உள்ள வரியைக் கூறியதால்
தோல்வி அடைய மாட்டான் அவமானம் அடைய மாட்டான் என்று உறுதிபடக் கூறியதாயிற்று

அனைத்து விதமான நன்மைகளை அளிக்க வல்லதும்
ஸ்ருதி மற்றும் ஸ்ம்ருதியில் உள்ளவற்றை ஆதாரமாகக் கொண்டதும்
ஆகிய இந்த ஸஹஸ்ர நாமத்தைக் குறித்த வ்யாக்யானம்
ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளில் ஸமர்ப்பிக்கப் பட்டது

அஸ்மாகம் அத்ர ச பரத்ர ச ஸர்வ துக்கம்
உன் மூல்ய ஸம் பதம் அசேஷ விதாம் விதாய
ஸ்ரீ ரெங்க ராஜ மஹிஷீ ஸ ச வைஷ்ணவா நாம்
சங்காத் ஸூகம் ஸஹ ஐயேந ஸதா க்ரியாஸ்தாம்

ஸ்ரீ ரெங்கநாதனுடைய பட்ட மஹிஷீ யான ஸ்ரீ ரெங்க நாச்சியாரும்
ஸ்ரீ வைஷ்ணவர் களுடைய சேர்க்கையும்
நமக்கு இம்மையிலும் மறுமையிலும் அனைத்து துன்பங்களையும் நீக்கி
அனாசித்து விதமான ஐஸ்வர்யங்களையும் உண்டாக்கி
எப்போதும் வெற்றியுடன் கூடிய இன்பத்தை அளிப்பதாக

——–

இப்படியாக ஹாரீத குலத்துக்குத் திலகம் போன்ற ஸ்ரீ வத்சாங்கர் -என்னும் கூரத்தாழ்வானின் திருக்குமாரரும்
ஸ்ரீ பெரிய பெருமாள் திவ்ய ஆஜ்ஜையாலே ஸ்ரீ பராசர பட்டர் என்ற திரு நாமம் சாற்றப் பெற்றவருமான
ஸ்ரீ ரெங்க நாதன் என்னும் இயல் பெயர் கொண்டவர்
அருளிச் செய்த பகவத் குண தர்ப்பணம் என்னும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்ய வியாக்யானம் ஸம் பூர்ணம்

———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading