ஸ்ரீ ஆ முக்த மால்யதா-(முத்துகளால் ஆன மாலை)- ஸ்ரீ சூடிக்‌ கொடுத்தவள்‌) ஆறாவது அத்யாயம் -ஸ்ரீ கிருஷ்ணதேவராயன்-மொழிபெயர்ப்பாளர்‌ உரை -பன்மொழிப்‌ புலவர்‌ மு. கு. ஜகந்நாதராஜா

ஆறாவது அத்தியாயம்‌

செல்வத்தை நல்கும்‌ அருள்‌ நிறைந்த கண்களையுடையவனே வைகுண்டனே! தடையற்றவனே! பக்தர்கட்‌ கருளும்‌
பாதகமலங்களில்‌ பூந்தேன்‌ போல கங்கையையுடையவனே/வேங்கடமலையென்னும்‌ உதயகிரியின்‌ சூரியனே[ Vi—1

அடுத்துள்ள சரிதத்தைக்‌ கேட்பாயாக VI—2

தாசரி
பெயர்‌ சொல்லத்தகாத குலத்தில்‌ (பஞ்சமர்‌ குலத்தில்‌) எனது பகிதன்‌ ஒருவன்‌ இருந்தான்‌. அவன்‌ முன்பு நான்‌
வாமனாவதாரம்‌ எடுத்த புண்ணிய பூமியினைச்‌ (ிருக்குறுஙி குடியில்‌) சார்ந்துள்ள ஒரு யோசனைத்‌ தூரத்திலிருக்கும்‌ ஊரில்‌
வசத்தவனாக, பிரம்ம முகூரித்தத்தில்‌ (விடியற்காலத்தில்‌) வற்து கைக ராகத்தில்‌ பாடுவான்‌. VI—3

தினந்தோறும்‌ அம்மகாத்மா, VI—4

சாதிக்குரிய நடவடிக்கைகளை, என்பால்‌ பக்தியினால்‌ செய்துகொண்டு, தன்‌ மனம்‌ பரிசுத்தமாக அமைய, அழுக்குடை
யில்‌ பொதிந்துள்ள மாணிக்கம்போல குற்றமற்றவனாசக இருந்தான்‌. VI—5

என்னெய்‌ தோய்ந்த தோல்‌ சட்டை, குல்லாய்களுடன்‌ பித்தளைச்‌ சங்கு சக்கரக்‌ குண்டலங்கள்‌ காதில்‌ அமைய,
விளக்குத்‌ தூண்‌ எனும்‌ கருவியும்‌ தோற்பையும்‌ கையம்பும்‌ கொண்டிலங்கி, கழுத்தில்‌ தாழங்குடையுடனும்‌ திகழ்ந்து, எனது
பாதுகையும்‌ குதிரைவால்‌ மயிரால்‌ புனைந்த சுரைக்காய்‌ வீணை யும்‌ மிளிர, சிறுதாளமும்‌ (சங்கி) கக்கத்திலுள்ள சிறுபெட்டியும்‌
நடைவேகத்தால்‌ ஓவ்வொரு சமயம்‌ உரசி கலந்தொலிப்ப, கழுத்தில்‌ துளசிமாலையும்‌, அழுக்குடலும்‌, பட்டைத்‌ திருமண்‌
மணும்‌, அஞ்சிய சிவந்த பார்வையும்‌, மஞ்சல்‌ காவியுடையும்‌ திகழ அந்தப்‌ பஞ்சம வைணவன்‌ என்னைச்‌ சேவிக்க வருவான்‌. VI—6

சண்டாளர்‌ (பஞ்சமர்‌) கள்‌ அல்லாதவர்களின்‌ சீலமுடன்‌ கூடிய அவன்‌, தன்‌ சுமைகளை இறக்கி, பக்தியோடு கூடியவனாக
ஆடிக்கொண்டும்‌, பாடிக்கொண்டும்‌, மழை, காற்று, வெயில்‌, பச என்று பாராமல்‌ கல்லும்‌ கரையுமாறு பறைத்தம்புராவை
மீட்டியவாறு முற்பகலில்‌ கன்னங்களில்‌ ஆனந்தக்‌ கண்ணீர்‌ வழிய எனது தோத்திரங்களைப்‌ பாடிப்பரவசமடைவான்‌, VI—7

இவ்விதம்‌ நெடுநெரம்‌ சேவித்து, நெற்றி நிலந்தோய வீழ்ந்‌இறைஞ்சி, கருவறையிற்‌ கழுவிய தீரீத்தம்‌ கலஷ்தொட்டியில்‌
வீழ்ந்து நிறைந்து கால்வாய்‌ வழியாக கோயிற்புறத்துப்‌ போகவும்‌, சூத்திரன்‌ ஒருவன்‌ எடுத்தூற்றத்தான்‌ குடித்தான்‌.
(தான்‌ பஞ்சமன்‌ ஆதலின்‌ கீண்டாது நாலாம்‌ வருணத்தவரால்‌ தீர்த்தம்‌ எடுத்துத்தருமாறு பணித்து அதனைக்‌ குடித்தான் VI—7

அவன்‌, மேல்வருணத்தாரைக்‌ கண்டு விலஇஒயும்‌, வயில்‌ காற்றுகளில்‌ எவ்வளவு நேரமோ காத்திருந்தும்‌, பிரசாதம்‌ வினியோகிக்கும்போது இருந்து, நான்காம்‌ வருணத்தார்‌ மெச்சிக்‌ கொடுத்த பிரசாதத்தை, தம்புரா ஒதுக்கி, பத்த சிரத்தை களுடன்‌ அடக்கத்துடன்‌ கை ஏந்தி வாக்றி, உண்டு, தீர்த்தம்‌ குடித்து மகிழ்வான்‌. VI—9

இவ்விதம்‌ தன்‌ தாழ்ந்த பிறப்பினால்‌ ஏற்பட்ட ஏமைமை யால்படும்‌ துன்பங்களைக்‌ கண்டு எல்லோரும்‌ இரக்கப்பட கோயில்‌ வெளிப்‌ பிராகாரத்திலுள்ள நீர்‌ விழும்‌ துரம்புவின்‌ அருகில்‌ இருந்துகொண்டு சேவித்து, வலம்வந்து, பொழுது தேறவும்‌, தன்‌ சேரிக்குச்‌ செல்வான்‌, இப்படி. இருக்க ஒரு நாள்‌.
V{—10

நடு இரவில்‌ அந்த தாசரி (தாழ்ந்த குல வைணவ பக்தன்‌) அவ்வருகே, பூனைபுகுந்த குடிலில்‌ உள்ள கோழி பெருங்குரலில்‌
கூவக்கேட்டு, (திருமாலைச்‌ சேவிக்கும்‌) பொழுதாயிற்றெனக்‌
கருதி பாடுவதற்காகச்‌ செல்லும்‌ வழியில்‌, VI—il

மருட்கொடியை மிதித்து, “இருளே என்ன வென்று கேட்கும்‌’ இருட்டில்‌ வழிதவறி காடெல்லாம்‌ திரிந்து இழக்கே
வெளுக்கும்போது ஒரு ஆளரவமற்ற காட்டில்‌ புகுந்து சென்று,
(மருட்கொடியை மிதித்தால்‌ பாதை மறந்துபோகும்‌ என்பது மரபுவழிப்பட்ட நம்பிக்கை, இருளே என்று கூவி என்னவென்று
இருள்‌ பதில்‌ சொல்லும்‌ என்பது இருட்செறிவினை எதிரொலிக்‌ கும்‌ என்ற கருத்தில்‌ வற்த தெலுங்கு மரபுச்‌ சொல்‌ ஆகும்‌.) VI—12

இடிந்த சுவர்களில்‌, நாயுருவி சகாசமரீத்தம்‌, பூளைப்புதர்‌களாலும்‌, கீழே சாய்ந்த சுவரிடுக்குகளிலும்‌ கல்லிடுக்குகளிலும்‌
வூக்கும்‌ பெருச்சாளிகளாலும்‌, பாதி தரசியால்‌ புதைந்த, புல்‌ பூண்டுகளால்‌ வாய்முடப்பெற்ற, கஇணற்று வளைகளும்‌, எறும்பு
கள்‌ அரிசியை இழுத்துக்கொண்டு போக3வ சிதைந்து, காய்ந்‌துலரீந்த வேலித்தட்டிகளில்‌ உள்ள இறுங்கும்‌, தூதுவளை
குப்பை வேளைக்‌£ரைகளில்‌ வயிறொட்டியவாறு மீசை அசைதீதலும்‌ அடங்கிவிட்ட முதிய பூனைககளும்‌, புலங்களில்‌ வளரீந்த
சாரணத்தி, . கோரை முதலானகளைகளும்‌ நிறைந்து, ஏற்றம்‌ கெட்டுவிடவே கல்‌ துண்‌ மட்டும்‌ மிஞ்சியதாக உள்ளதும்‌ ஆன
பாழ்ப்பட்ட நிலத்தின்‌ வழியே சென்றவாறு. [13

தவறான வழியில்‌ சென்று, வழியிலுள்ள (உத்தரேனி) முள்ளைக்கால்களினால்‌ விபரீதமான முறையில்‌ துடைதி
தெறிந்து, நெருஞ்சி முட்களை விழிப்புடன்‌ பிடுங்கி எறிந்து கொண்டு போனான்‌. Iv—14

அவ்வழியில்‌ வைணவன்‌, அரையோசனை (இரண்டு குரோஸ்‌) நீளமுடைய, விழுதுகள்‌ விட்டு பல கிளைகளும்‌
உட்களைகளும்‌ உடைய ஆரமரத்தைக்‌ கண்டான்‌. அக்கிளைகளில்‌ உள்ள புழுக்கள்‌ குடைந்த இலைகள்‌ காற்றால்‌ வீசி
எறியப்பட்டு தூரத்தில்‌ வழிப்போக்கர்கள்‌ முன்பு வீழ்ந்து. இந்த மரத்தில்‌ பிரம்மராட்சசு உள்ளது. அருகே வரவேண்டாம்‌
என்று சொல்லி எச்சரிப்பதுபோல்‌ இருந்தன, அந்த இலைகளின்‌புழுக்க்குடைந்து எழுத்துக்களாகக்‌ காணப்பட்டன. இவ்விதம்‌
எச்சரித்த புண்ணியப்‌ பயனோ எனுமாறு அவ்வாலமரத்தில்‌ பழங்கள்‌ நிறைந்திருந்தன.
(ஆலமரம்‌, புழுக்கள்‌ குடைந்தது எழுத்துக்களாகத்‌ தோன்ற இலைகள்‌ வீசி வழிப்போக்கரை எச்சரித்தது போல இருந்தது
என்றும்‌, அந்தப்‌ புண்ணிய பயனே பழங்கள்‌ எனுமாறு இருந்தது என்றும்‌ கற்பிக்கப்பட்டு ள்ளது), 91.15

அவன்‌ அவ்வாலமரத்தைக்‌ கண்டு அப்பக்கம்‌ ஒரு ஒற்றை யடிப்‌ பாதை செல்வதையும்‌ சுண்டு, வழி கிடைத்ததே பெரும்‌
பாக்கியம்‌ எனக்‌ கரத விரைந்து அம்மரத்தின்‌ அருகே சென்றான்‌. IV—16

இளநீர்க்‌ குரும்பைகள்போல, மூளை எல்லாம்‌ உறிஞ்சி எறிந்ததால்‌ உருண்ட மண்டை ஓடுகளும்‌, இறைச்சியைக்‌ &றிய
கீறல்கள்‌ தோன்றும்படியாக முழுவதும்‌ சுவைத்துதி சுவைத்து, இளம்பச்சையூன்‌ படிந்த எலும்புகளும்‌, முசுமுசுவென மொய்த்த
ஈக்கள்‌ கூட்டம்‌ உருவம்‌ தெரியாமல்‌ மறைத்த முள்கிளைகளில்‌ தொங்கும்‌ பச்சைத்‌ தோலும்‌, தர படிந்து அழுக்கடைந்து,
நாவிதனின்‌ குப்பையோல இளர்ந்து எழுந்து பரவும்‌ காற்றிற்‌ காடும்‌ மயிர்க்குவையும்‌, துண்டுபட்ட மனித உடலுறுப்புக்களை,
கூடிவந்து கடித்து போகும்போது ஒன்றோடொன்று பிணங்கிப்‌ போராடும்‌ நாய்நரிக்‌ கூட்டமும்‌, அதன்‌ கால்பட்டு நகங்கி
இநாற்றம்‌ பரப்பும்‌ வருவல்‌ (உப்புக்‌ கண்டச்‌ சதைகள்‌) களும்‌, கழுகுகளும்‌ மிகுந்திருந்த செறிந்த துர்க்கந்தமிக்க வழியே
சென்று, எதிரே… (கண்டான்‌) VI—17

முன்கால்களால்‌ நீட்டி வளைந்து, மேலே திருட்டுப்‌ பார்வை கள்‌ செலுத்தியவாறு ஓடுகின்ற நாய்களும்‌, புலால்‌ தோரணஙி
இடீரென பறக்கும்போது கிளையடித்துவிட இரைச்சலிட்டோடும்‌ பருற்துகளும்‌, (பிரம்ம ராட்சசனுக்கு)
இடையே வந்ததால்‌ உள்ளங்கையால்‌ அடிபட்டு, இடையை இரு கரத்தாலும்‌ பிடித்துக்‌ கொண்டமும்‌ குரங்குகளும்‌, தற்செயலாக
ஓரிடத்தில்‌ காணப்பட்டு, அவ்விடத்தில்‌ மாயமாகி வேறோரிடத்‌ இல்‌ காணப்படுவதாகிய நடவடிக்கைளும்‌, பார்த்து, “யாரோ
ஒருவன்‌ (இம்மரத்தில்‌) இருக்கிறான்‌ போலும்‌. மனிதன்‌ அல்ல, விறகு, கட்டைகள்‌ சேகரிக்கும்‌ வேளையும்‌ இதுவல்ல, புலால்‌
மணக்காற்று வீசுறது. வழியோ தூரமாக இருக்கிறது”” என்று நினதைது கவலையும்‌ ஐயம்‌ உடையவனாகியிருந்‌த போது
(வேதம்‌ வெங்கட சாஸ்திரி உரையில்‌ பெண்‌ நாய்கள்‌ என்று உரை கூறுவார்‌. பெண்‌ நாய்களே வஞ்சகம்‌ மிக்கதாயும்‌ துணிந்து
வருபவையாகவும்‌ இருக்கும்‌ என்பது உரைக்‌ குறிப்பு: மாவிலைத்‌ தோரணம்‌ போல, உப்புக்கண்டம்‌ போடுவது போல புலால்‌
துண்டுகள்‌ தோரணமாகப்‌ போட்டுள்ளதால்‌ புலால்‌ தோரணம்‌ என வருணிக்கப்பட்டது) VI—~18

இறந்த மனிதப்‌ பிணத்தை தன்‌ கோவணம்‌ (கெளபீனம்‌) ஆக சட்டப்‌. போதாமையின்‌ இழுத்துக்கட்டும்‌ போது இரத்தம்‌
பட்ட உந்தியடைய அரைஞாண்‌ .உடையவனும்‌ முசுறு (முயிறு) மொய்த்த அண்டிமாப்‌ .போலசி சிவந்த போர்வையைப்‌
போர்த்திய கருமேனி உடையவனும்‌, தலை8ழ்‌ ஆக உள்ள யானைத்‌ கலைபோல்‌ தாடை (நாடி)யும்‌
கோரைப்‌ பற்களும்‌ உடைய முகத்தினனும்‌, குளவிகளின்‌ நீண்ட கூட்டைப்போல்‌ கோரோசனை வண்ணத்திலுள்ள தாடி. மீசை
களையுடையவனும்‌, இரைக்காக (தின்பதற்காக) வழிப்போக்கர்‌ யாராவது வருகிறார்களா எனப்‌ பார்க்க மரக்கிளையில்‌ ஏறும்‌
போது நழுவும்‌ குடல்பூனூலைச்‌ சினந்தவாறு மீண்டும்‌ தோள்‌களில்‌ சரிசெய்து வைத்துக்‌ கொள்பவனும்‌, தொங்கும்‌ தொந்தி
யும்‌, யானைக்காலும்‌, வழுக்கைத்‌ தலையும்‌, பிடரி மயிரும்‌ உள்ளவனும்‌…… (மூயிறு–சிவப்பு நிறமாள பெரிய எறும்பு) vi—19

சதை வளர்ந்த கண்களும்‌, பசியினால்‌, வேதாளங்களை (பிசாசுகளை) அடிக்கடி கெட்டவசவு (வசை)கள்‌ வைபவனும்‌
மலைப்பாரம்‌ உடையவனும்‌, முடமூழுகிகால்‌ (கும்பஜானு) எனும்‌ பொருத்தமானப்‌ (காரண) பெயருடையவனுமான ஒரு
பிரம்ம ராட்சசனளைக்‌ கண்டான்‌. VI—20

அவன்‌ (அந்த பிரம்ம ராட்சசனும்‌), “பார்த்தேன்‌! போகாதே! என்று மரங்கள்‌ பொடிப்பொடியாகுமாறு குதித்தான்‌ –
இவனும்‌ (வைணவ தாசரி) முன்பு இரவும்‌ பகலும்‌ போரில்‌ வீரமுடன்‌ போரிட்டவன்‌ ஆதலினால்‌ தைரியமாக நின்று, அந்த
கூரிய அம்பினைக்‌ கொண்டு (ராட்சசனை) அடிக்கவும்‌, அவன்‌ ,அதை (அம்பினை) முறிக்கவும்‌ இவன்‌ வீரமுடன்‌ முனைத்தான்‌.*VI—2!
*(மூற்காலத்தில்‌ பிணந்தின்னும்‌ பேய்மக்கள்‌ சிலர்‌ இருந்தனர்‌ எவ்று தமிழ்‌, வடமொழி இலக்கியச்‌ சான்றுகளால்‌ தெரிகிறது)

(இராட்சசன்‌) இழுக்கவும்‌, (தாசரி) காலடி பெயராமல்‌ அவன்‌ மாரீபில்‌ தட்டி, அந்தப்‌ பக்கம்‌ விலக, குதித்து, அவன்‌
அடிக்கவரவும்‌ வஞ்சித்துப்‌ பின்‌ வாங்கி, அவன்‌ மீண்டும்‌ முனைவதைக்‌ கண்வைத்து (எச்சரிக்கையுடன்‌) பார்தீது, அவன்‌ தன்‌
மேல்‌ பாய முனைந்து வரவும்‌, மார்பில்‌ குறிவைத்தவாறுள்ளபிடிப்பின்‌ வலிமையால்‌ அவனுக்குப்‌ பிடிபடாமல்‌ நின்று, அவன்‌
தன்மேல்‌ பாய முனையவே தான்‌ குனிந்து, தன்‌ கைப்பிடியே . (பாதுகாப்புக்‌) கோட்டையாக அவனை விடாது, திரியும்‌
இடமெல்லாம்‌ திரிந்து, அவன்‌ கொல்கருவிகளைத்‌ (கல்‌, முசலியன) தேடும்போது அவனை நையப்‌ புடைத்து, உதைத்து,
அவன்‌ திரும்பவுமே கைப்பிடியால்‌ முதுகிலும்‌ இடையிலும்‌ குத்தி, என்மேல்‌ பக்தியினால்‌ ஏமாந்து விடாமல்‌ எச்சரிக்கையாக
இருந்து போரிட்டான்‌. VI–22

தள்ளிவிட்டுப்‌ போகப்‌ பார்க்கவும்‌, தனது இராட்சதக்‌ கூட்டத்தை அவன்‌ விளிக்கவும்‌ அவர்களும்‌ ‘(மரத்திலிருந்து)
இறங்கி வரவும்‌, அதோ அவன்‌ போனான்‌, வாருங்கள்‌ வாருங்கள்‌ என்று ஒடிச்‌ சென்று அவர்களும்‌ தானும்‌ (தாசரியை) பிடித்துக்‌
கொள்ளவும்‌, VI—23

காளையொத்த தாசரி அப்போது கால்கை உதைத்து முழங்‌ கையால்‌ இடித்து, இருபக்கமும்‌ குத்திப்‌ போரிட்டவாறு ஏக
அவரீகள்‌ பிடித்து ஆலமரத்தில்‌ கட்டி (இராட்சசன்‌) இவ்விதம்‌ கூறினாள்‌. 13…-24

உன்‌ கொழுப்பிளனைச்‌ சுவைத்தின்புற்று மனநிறைவோடு மகிழ, என்‌ பஞ்ச பிராணங்களும்‌ தாகம்‌ தீருமாறு கத்தியால்‌ உன்‌
செருக்குடைய தலையைக்‌ கொய்து உனது முண்டத்திலிருநீது பொஙிகும்‌ சூடான இரத்தத்தை இனிது பருக இந்தப்‌ பிசாச
(பெண்‌ பேய்‌) இரும்புக்‌ கம்பியில்‌ கோர்த்து நெருப்பில்‌ வாட்டி உன்‌ மாமிசத்‌ துண்டுகளை எடுத்துத்‌ தரக்‌ கடித்து இந்த பனங்‌
காட்டினுள்ளே இருக்கும்‌ மண்டையோட்டு கலஙிகளில்‌ உள்ள கள்வினைக்‌ குடிப்பேன்‌, 41-29

என்னை இவ்வளவு அலைக்கழித்த நீசனாகிய உன்னை மென்மையாகக்‌ கொல்வேனளோ (கடுமையாகச்‌ சித்திரவதை செய்‌
வேன்‌) என்று விண்ணதிர ஆர்ப்பரித்து நெட்டுயிர்த்து, அக்கடை யோன்‌ தாகம்‌ கொண்ட தெளிவற்ற மொழிகளில்‌, VI—26

கத்தியும்‌, கலமும்‌ (இரத்தம்‌ பிடிக்கும்‌ பாத்திரமும்‌) கொண்டு வருமாறு கட்டளையிட்டு, கொடிபோன்ற குடலால்‌ பின்னிய
கயிற்றினை (கோலகக்கர)” (* கோலகக்கர–மாடுகளை லாடம்‌ அடிக்கும்‌ போது நான்கு கால்களையும்‌ கட்டி வீழ்த்தப்‌ பயன்படும்‌ கயிற்றுக்குப்‌ பெயர்‌,)எடுத்துத்‌ தள்ளிவிடவும்‌ மரத்தில்‌ சாய்ந்த (தாசரி) ௮ந்த இராட்சசனிடம்‌ அச்சமற்ற உறுதியான மொழிகளில்‌ அறநெறி கூறலானான்‌. VI—27

இரவில்‌ திரிபவனே (இராட்சசனே) ஒரு சொல்‌ கேட்பாயாக! விரைவு படுதல்‌ (அவசரம்‌) ஏன்‌? உன்னை தேவர்கள்‌ ஆனாலும்‌
வெல்ல முடியுமா? வட்டிலில்‌ வைத்த சோறு நான்‌/ இனி எங்கே போய்‌ விடுவேன்‌! (எனினும்‌) உயிரைக்‌ காப்பாற்றப்‌ போரா
டாமல்‌ இருப்பது பாவம்‌/ (அதனால்‌ தான்‌ பிணங்‌கிப்‌ போராடி .ளேன்‌) அதற்காகக்‌ கோபப்பட வேண்டாம்‌! எனக்கு உடல்‌ மேல்‌
பற்றில்லை! இது (இந்‌.த உடல்‌) போவதே மேலானது. VI—28

இழிந்த (சண்டாளப்‌) பிறப்பு அறுவது! ஏதேனும்‌ ஒரு உயிர்‌ மகிழ்வது, வீடுபேற்றுக்கருகே அடைவது நல்லதேயல்லவா! நிலை
யற்ற உடலை விற்று பரத்தை அடைந்த பிச்‌ சக்கரவர்த்தி மேலான வழிகாட்டியல்லவா
(சிபி-புறவுக்காக தன்‌ உடல்‌ அரிந்து துலைபுக்ககதை பிரசித்தம்‌) INV—29

நோயோ, பேயோ, தேளோ, வாளோ, மனக்கவலையோ, நஞ்சோ, வெள்ளமோ, கள்ளனோ, நீரோ, நெருப்போ, தயோ,
விலங்கோ, சூது, வாது, மாதுகளாலோ, மண்ணிலோ, புண்‌ ணாலோ, இடியோ, பாம்போ, ஏதேனும்‌ ஒன்றால்‌ எளிதில்‌
நாசமடையும்‌ இந்த உடல்‌, இவ்விதம்‌ கெடாமல்‌ ஒரு (பசியால்‌) மெலிந்தவனுக்கு உதவுவதால்‌ கெடுவது நல்லதல்லவா? VI—30

அது அப்படியிருக்க, இன்னொரு நல்லுரை கூறுகிறேன்‌. அதுவும்‌ உயிருக்கஞ்சி, காரியவாதியாகச்‌ சொல்வதாகக்‌ கருதாபல்‌, நடுநிலைமையுடன்‌ பேசுவதாகக்‌ கருதிக்‌ கேட்பாயாக! (நீ) கேட்கா விட்டாலும்‌, உயிர்களின்‌ நலம்‌ கருதிக்‌ கூறப்படும்‌ சொற்களை இறைவனாவது பாராட்டுவானல்லவா? (நீ) புலி, சிங்கம்‌, பன்றி, ஓநாய்‌, நரி முதலான கொல்‌ விலங்குகளில்‌ ஒரு விலங்கன்று. நீ தெய்வப்‌ பிறப்பினன்‌. உனக்கும்‌ எங்களைப்‌ போல கை, கால்‌, முகம்‌ முதலிய அறுப்புக்கள்‌ உள. பேச்சும்‌ எங்களைப்‌ போன்றுதான்‌. செய்யத்தக்கன, செய்யத்தகாதன எனும்‌ பகுத்தறிவும்‌ எம்‌ போன்றதே. ஆ! மறந்து சொன்னேன்‌! தாரவரங்களைவிட புழுப்பூச்சிகட்கும்‌, (ஊர்வன) அவற்றைவிட பறவை, விலங்குகள்‌ (நடப்பன) ஆகியவற்றுக்கும்‌ அவற்றைவிட எங்கட்கும்‌, எம்மைவிட, உங்கட்கும்‌ கை௰ால்‌,, உடல்‌, Baia, அறிவூத்‌ திறனும்‌, மிகுதியாகும்‌. இத்தகைய உனக்கு, முக்கியமாக திந்தைக்குரிய வெறுக்கத்தக்க, தக்கன, க்காதன, உண்பன, உண்ணாதன, பருகுவன, பருகாதன, எனும்‌ விவேகும இல்லா திருப்பது பொருத்தமாகுமா? இந்தத்‌ இய உண்டி (நரமாமிசம்‌) சுவையற்றது, தூய்மையற்றது. அதவும்‌ எல்லாப்‌ பாவங்களிலும்‌ தலையாய கொலையால்‌ வருவது.
கொலை (ப்பாவம்‌) பரலொகத்திலன்றோ பாதிப்பது, பர லோகம்‌ உயிர்‌ நீத்த பிறகன்றோ? நெடுநாள்‌ வாழும்‌ உயிர்‌ களாகிய எமக்கெதற்கு (கொலைப்‌ பாவ) அச்சம்‌? என்று கருத வேண்டாம்‌? பிராணபயம்‌ (உயிர்‌ நீக்கும்‌ அச்சம்‌) எமக்கு (மனிதர்க்கு) இன்றென்றால்‌ உங்கட்கு நாளையோ, நானை மறுநாளோ, முடிவில்‌ யுகரிந்தத்திலோ நீண்ட, குறுகிய கால எல்லைக்குள்‌ எப்படியும்‌ தப்பாது. சாவு வர ஏற்றத்தாழ்வுகள்‌ எப்படி இருந்தால்‌ என்ன? முன்னீரில்‌ (கடலில்‌) மூழ்குவதெதன்‌ றான பிறகு மலையானாலென்ன? அணுவானால்‌ என்ன? இரண்டும்‌ ஒரே நிலை தானே! எதிர்காலத்தைப்‌ பற்றி ஆலோசிக்க வேண்டாமா? தவத்தினால்‌ பெற்ற வரங்களை யுடைய முன்னாளில்‌ தேவர்களின்‌ செருக்கடக்கி உயர்ந்து நின்ற இரணியகூபு (கனகன்‌) தசமுகன்‌(இராவணன்‌) முதலான வார்கள்‌, நூறாயிரம்‌ ஆண்டுகள்‌ வாழ்ந்தும்‌ முடிவில்‌ இறந்த, தாம்‌ வெற்றிகொண்ட யமன்‌ கையிலேயே இக்கிக்‌ கொள்ள வில்லையா? இங்கு நீங்கள்‌ வலிமையிகுந்தோராயின்‌, அங்கு அவன்‌ (யமன்‌) வலிமைமிக்கவன்‌. எல்லா உயிர்களின்‌ ஏற்றத்‌ தாழ்வுகள்‌ அதனதன்‌ இடச்சிறப்பினால்‌ உருவாவதேதான்‌. கொடுங்கதிர்க்‌ கடவுளின்‌ மகன்‌ (சூரியன்‌ மகன்‌ யமன்‌) பட்டிணத்தில்‌ எல்லை கடந்த எம்போன்றே உங்கட்கும்‌ தண்டனை நிச்சயமாகும்‌. நீங்களும்‌, யமன்‌, மற்றதேவதைகளும்‌ குலத்தால்‌ சகோதரர்கள்‌ தான்‌, எனினும்‌ பரலோகத்தில்‌ ஒருவரை ஒருவர்‌ பீடிக்கன்றீர்‌ கள்‌. இந்த வேறுபாட்டுக்கு தமஸ்‌, சத்துவ குணங்கள்தான்‌ மூல காரணமாகும்‌, அந்த குணங்கட்கு உணவே மூலக்காரணம்‌,

வேதமந்திரங்கள்‌. மூலம்‌ வேள்வியில்‌ அழைக்கப்பட்டு புரோடாசம்‌ (வேள்வி நெய்யன்னம்‌) உண்ட புனித உணவினால்‌
தான்‌ பவித்திரர்களாகி தேவர்கள்‌ சாவதின்றி உங்களைவிட நெடுங்காலம்‌ நிலைத்திருக்கின்றனர்‌. அந்தப்‌ புனிதத்துவத்தைக்‌
கண்டல்லவா எப்போதும்‌ நான்முகக்‌ கடவுளின்‌ அம்சமாகிய அமுதகிரணன்‌ (சந்திரன்‌) கரைந்து, எல்லா ரசங்கட்கும்‌
எல்லையாய அமுதரசத்தால்‌ (தேவர்கட்கு) திருப்தியைத்‌ தரு கிறான்‌. இந்தப்பொருளை நாங்கள்‌ சொல்லக்‌ கூடாதென்றாலும்‌ வேதம்‌, முதற்‌ கலையை அக்னி (இக்கடவுள்‌) பருகுவதாகக்‌ கூறும்‌, மேலும்‌ அந்தந்தக்‌ கலைகள்‌ அந்தந்த தேவர்கட்கு
வரிசைக்கிரமமாகக்கூறும்‌, ஆதலின்‌ இதை எல்லாம்‌ ஆராய்ந்து உனக்குப்‌ பிடித்ததைச்‌ செய்க’ ”. என்று கூறவும்‌, கட கடவெளனச்‌
சிரித்து அந்த தாசரிக்கு இராட்சசன்‌ இவ்விதம்‌ கூறினான்‌.
(சந்திரனின்‌ பதினாறு கலைகளும்‌ பல்வேறு தேவர்களின்‌ உணவாகக்‌ கற்பித்தல்‌ வேத மரபாகும்‌. தூய அமுத ரசம்‌ உண்ட
தேவர்கள்‌ நூயராய்‌ நெடுநாள்‌ வாழ்வர்‌ என்று கூறி, நரமாமிசம்‌ உண்பது பரவம்‌ என்று தாசரி கூறுகிறான்‌). ்‌ Vi—31

“படிப்பினால்‌ (உபதேசங்களைக்‌ கூறிக்‌கொல்லாதே! நாங்கள்‌ படிக்காத சாஸ்திரங்களா? நாங்கள்‌ படிக்காத
வெதங்களா? அவை யெல்லால்‌ எமக்குப்‌ பிடிக்கவில்லை! நம்ப மாட்டாயா?” பிரதமாம்‌ பிபதே வஹ்னி (முதல்‌ பங்கை அக்னி
குடிக்கிறான்‌) என்ற சொல்‌ தப்பாதல்லவா?
(சந்திர கலையை ஒவ்வொரு தேவரும்‌ பருகுவர்‌ என்பதால்‌, முதல்கலை அக்னிதேவனுக்கு என்ற மந்திரம்‌ எடுத்துக்காட்டி,
தேவார்கள்‌ நிலவிளனைப்‌ பருகுவதால்‌ பிறரை அழித்து உண்டு இன்புறும்‌ கொடியர்தாம்‌ என்று பிரம்ம ராட்சசன்‌ கூறுகிறான்‌ என்பது கருத்து) 41.32

நில்‌! ஓகோ? எங்களை தேவர்கட்கு சகோதரர்கள்‌ என்றா யல்லவா? அவர்கள்‌ அமுதம்‌ குடிப்பவர்கள்‌, புனிதமற்றவை
யூண்ண மாட்டார்கள்‌ என்றாய்‌! சந்திரனின்‌ முதற்கலை அக்னி (பிற பிறரும்‌) பருகுவர்‌ என்றாய்‌! ஒரு செய்தி உன்னைக்கேட்‌
கிறேன்‌. அந்த அக்னி எல்லாம்‌ உண்பவன்‌ (சர்வபட்‌8) உலூல்‌ அவன்‌ நியாய3ம (முறையே) எங்கட்கும்‌, போதும்‌. இனி பெரிய
வர்கள்‌ ஓழுக்கப்படி நடந்துகொள்வது பாவமா?
(அக்னி தேவனுக்கு நாங்கள்‌ (ராட்சசர்‌) சகோதரர்கள்‌. அக்னி எல்லாம்‌ உண்பவன்‌. அவன்‌ ஆசாரப்படி. நாஙிகளும்‌
(நரமாமிசம்‌ உட்பட) எல்லாம்‌ சாப்பிடுவோம்‌; இது தப்பா? என்று வாதிக்கிறான்‌ பிரம்ம ராட்சசன்‌) 41-33.

திருமாலுக்கு நண்பனும்‌ வாஹனமும்‌ (தேர்‌) ஆகிய கருடன்‌. குனக்குக்‌ இடைத்த அமுதத்தை தேவர்கட்கு மீண்டும்‌ தந்துவிட்டு
பாம்புகளை உணவாக (சோறாக) வரம்பெற்றுக்‌ கொள்ள வில்லையா? அமுதமாயினும்‌ பிறவிக்கேற்ற உண்டியின்‌ சுவைக்‌ கீடாகுமா?
(கருடன்‌ தேவாமிர்தத்தை விட பாம்புதான்‌ சுவை எனக்‌ கருதியதுபோல, (பூனைக்கு எலிதான்‌ சுவை) தான்‌ நரமாமிசம்‌
சுவைப்பவன்‌ என்று கூறி நியாயப்‌ படுத்துகிறான்‌ பிரம்ம ராட்சசன்‌) VI—34

துக்கமும்‌ சோறும்‌ இன்றி படித்துக்கண்ட பயன்‌ என்ன? இந்தப்‌ படிப்பினால்‌ உண்டான வாதங்களாகிய பொய்களைக்‌
கேட்டு எவன்‌ ஏமாறுவான்‌?நீ எம்மிடம்‌ படிப்பு (சாத்திரம்‌) களைச்‌ சொல்ல ஒரு பாராட்டும்‌ கிடைக்கப்‌ போவதில்லை. “இந்த
படித்த கறி (மாமிசம்‌) புதிய சுவையாயுள்ளது. வேண்டுமட்டும்‌ கொணர்க” என்ம பாராட்டு ஒன்றுதான்‌ கிடைக்கும்‌.
(உன்‌ படிப்பைப்‌ பாராட்ட ஆள்‌ இல்லை. உன்‌ BMP சுவை யாக இருக்கும்‌ என்று பிரம்ம ராட்சசன்‌ கூறுகிறான்‌) ViI—35

என்று இவ்வாறு பிரகஸ்பதி மதம்‌ (லோசகாயதவாதம்‌) கைக்‌ கொண்டு தன்‌ சொற்களைப்‌ பரிகசிக்கும்‌ ராட்சசனின்‌ குதர்க்க
வாதங்களைக்‌ கேட்டு “இருஷ்ண கருஷ்ண’்‌ எனக்‌ காதுகளை மூடி இதற்கேற்ற பதில்களைக்‌ சொல்லி இவனைக்‌ இளறினால்குழப்பத்‌
தால்‌ இதைவிட அபத்தமான சொற்களைக்‌ கேட்க நேரும்‌/இனிச்‌ செய்யவேண்டியதைச்‌ சிந்திக்கவேண்டிய நமக்கு இதனை மறுக்க
வேண்டிய தேவையுமில்லை, என்று கருதி, மனத்தெளிவுடன்‌, அவன்‌ விருப்பத்திற்கேற்றபடி பேச விழைந்து, மனத்துள்‌ வெறுத்‌
தவாறு, இருபொருள்பட மனத்துள புத்தபகவாளை நினைத்துக்‌ கொண்டே :₹நீ சர்வக்ஞன்‌ (எல்லாம்‌ அறிந்தவன்‌) நான்‌
சாதாரண மனிதன்‌, தாழ்ந்த குலத்தினன்‌. சாத்திரங்களைக்‌ கல்லாதவன்‌. உளக்கு பதில்‌ கூற இயலுமோ? ஏதோ வாய்தவறிச்‌
சொன்ன சொற்களைப்‌ பொறுத்து அருள்‌ கூர்ந்து என்பால்‌ நம்பிக்கை வைத்து எனது வேண்டுகாளை நிறைவேற்றுவாயாக”) IV—36

ஏற்கனெவே தைத்தியர்‌ (இராக்கதரி) களில்‌ நீ பிரசித்தமானவன்‌. மேலும்‌ உனக்கு புகழ்‌ சேர்க்கவிரும்புகிறேன்‌. என்‌
உடலைத்‌ தருவதில்‌ தவறமாட்டேன்‌. முக்கியமான விரதம்‌ (நோன்பு) ஒன்றைக்‌ கடைப்பிடித்து வருகிறேன்‌. அதை நிறை
வேற்ற மாட்டாயா? ₹’சக்யம்‌ சாப்த பதீனம்‌’” (ஏழெட்டு நடந்‌ தாலே நண்பன்‌) என்ற சொல்படி நாம்‌ நண்பர்கள்‌,
அதைநினைத்தாவது என்‌ கோரிக்கையை நிறைவேற்றுக/ 1/1–37

அஃது யாதெனின்‌ — VI~38

தாசரி குறுங்குடிக்குப்‌ போதல்‌
இதற்கருகில்‌ இத்திருக்‌ குறுங்குடியில்‌ உள்ள திருமாலுக்கு தினந்தோறும்‌ விரதப்படி பாடிவருவேன்‌. அப்பகவானுச்கு
சேவை செய்துவிட்டு உனக்கு உணவாவேன்‌, இது உறுதி! உறுதி யாக இன்று திரும்பிவந்து உணவாவேல்‌ இதில்‌ தவறமாட்ேன்‌. VI—39

என்று அவன்‌ (தாசரி) சொல்ல குறுநகையுடன்‌ கன்னத்தில்‌ அடித்து “ஓ! தாசரி, நன்றாகப்‌ பழுக்க வைக்கிறாய்‌ (ஏமாற்று
கிறாய்‌) காட்டில்‌ வழிப்‌ போக்கர்களைக்‌ கொள்ளையடித்து உடம்பை வளர்த்து வைராக்யம்‌ வந்து நேற்றுத்தானே தாசரி
யானாய்‌! நீ எம்மை எளிதாசு (லேசாக) நினைத்து * கம்பி நீட்டப்‌ (தப்பித்துக்கொள்ளப்‌) பார்க்கிறாய்‌, உன்னை பாராட்டு கிறேன்‌. VI—40
கயிற்றைக்‌ கடிக்க பார்க்கிறாய்‌ என்பது மூலம்‌ பசுக்கள்‌ கட்டிய கயிற்றைக்‌ கடித்து அறுத்து தப்புதலைக்‌ குறிக்கும்‌,

எந்த நாட்டுக்‌ காரனாவது வாயிற்கு வந்த கவளத்தை உன்‌ உபதேசம்‌ கேட்டு விடுவானா? எந்த நாட்டுக்‌ காரனாவது தன்‌
சபதத்தை நிறைவேற்ற தானாக வந்து உடலைத்‌ தருவானாசீ (உயிர்‌ விடுவானா?) இனி உன்னைப்‌ போக விடுவதோ? திரும்பி
நீ வருவதோ! நடக்காதென்பது தெட்டத்‌ தெளிவு. ஏன்‌ வீண்‌ விவகாரங்களும்‌ பலப்பட பேசுவதும்‌? தாழ்ந்த குலத்தவனே / ஏன்‌
ஆலோசனைகள்‌ ஏன்‌ சவலை? IV—41

எனலும்‌ காதுகளைப்‌ பொத்திக்கொண்டு £“நாராயணா’” என்று நாமோச்‌ சாரணை செய்து அவன்‌ (தாசரி) “என்னை நம்‌
பாவிட்டால்‌ என்‌ சபதத்தை நம்புக” என்று ஆயிரமாயிரம்‌ சத்தியப்‌ பிரமாணங்கள்‌ கூறி, அதற்கும்‌ கேளாமல்‌ இருக்கவும்‌. VI—42

“இன்றே நான்‌ எவ்விதத்தேனும்‌ உன்னிடம்‌ வராவீட்‌ டால்‌! “*எவனது பார்வையினால்‌ உலகம்‌ உண்டாகுமோ! எவ
னிடம்‌ இவ்வுலகம்‌ மீண்டும்‌ அடங்குமோ அந்த இருமாலுக்கு இணையாக வேறோரு தெய்வத்தை நினைத்த பாவத்தை நான்‌
அடைவேளாகவும்‌’ £ என்று சூளுரைக்கவும்‌ கேட்டு (இராக்கதன்‌ தாசரியின்‌) கட்டுக்களை அவிழ்த்து விடவும்‌ VI—43

தாசரி திரும்பி வருதல்‌
அவன்‌ (தாசரி) தனது பாவ எச்சமும்‌ இருமாறு கட்டு நீங்கியவனாய்ச்‌ சென்று, அந்த (குறுங்குடி) தாமரைக்‌ கண்ணனாகிய
இருமாலிளை நிலம்‌ வீழ்ந்து வணங்கி, இசைக்கும்‌ வீணையுடன்‌ இன்னிசைப்‌ பாடல்களை செரக்குமாறு பாடி, பின்னர்‌ பொய்க்கு
அஞ்சியவனாக விரைந்தோடி வந்து, விரதம்‌ முடித்த மகிழ்வோடு இரரட்சசனிடம்‌;இவ்விதம்‌ கூறினான்‌. Vi—44

“இராக்கதனே! நின்‌ சிறை நீங்கிச்‌ சென்று திருமாலை வணங்கியதால்‌ முக்தி (வீடுபேறு) கிடைத்தது! இனி எந்தச்‌ சிறை
யிலும்‌ நான்‌ கட்டுப்பட மாட்டேன்‌; இனி நீ என்னை அனுப்பும்‌ போது எந்தக்‌ கால்கள்‌, எந்த வயிறு, எந்த மார்பு,2 எந்தத்தலை,
எற்தக்‌ கைகள்‌ இருந்தனவோ அதே சால்கள்‌, அதே வயிறு, அதே மார்பு, அதே தலை, அதே கைகள்‌ இருக்கின்றதை நீசரிபார்த்துக்‌
கொள்க: *
(இராக்கதன்‌ நம்பி விட்டதற்கு மோசம்‌ செய்யவில்லை. அதே உறுப்புகளுடன்‌ கொண்டுவந்து ஓப்படைத்துவிட்டேன்‌
என்று தாசரி கூறும்போது நகைச்சுவையுணர்வுடன்‌ சாவுக்கஞ்‌ சாத மனத்தெளிவும்‌ புலப்படுகிறது) VI—45

எனலும்‌, அவனது சத்தியத்தைக்‌ கண்டு கண்களில்‌ கண்ணீர்‌ உருள மகிழ்ச்சியுடன்‌ புளகமுற்றவனாக அந்தபிரம்ம ராட்சசன்‌,
நடுப்பகல்‌ கதிரவனின்‌ வெயில்‌ அவனது பெரிய வழுக்கைத்‌ தலையில்‌ பளபளக்க, தாசரியை அருகணைய ஓடிச்‌ சென்று, VI—46

அவன்‌ (இராக்சதன்‌) மலைபோல்‌ பக்தியினால்‌ வலம்வந்து, குறியைச்‌ சுற்றிலும்‌ சுற்றிச்சுழன்று விழும்‌ பாகலம்‌ எனும்நோய்‌
கொண்ட யானைபோல, தனது நெற்றி தாசரியின்‌ பாதத்தில்‌ பட, குரல்முழக்கத்தால்‌ பெருமலைகள்‌ அதிர்ந்தெதிரொலிப்பத்‌
துதித்தவாறு வீழ்ந்து வணங்கி, நீண்டபற்கள்‌ ஒதுக்கி, தான்‌பிடித்த பாதங்கள்‌ ஒவ்வொன்றாக தன்‌ தலையில்‌ வைத்துக்‌ கொண்டு VI—47

இந்த சசுல உலகலும்‌ தேவர்‌, அசுரர்‌, மன்னர்கள்‌, முனிவர்‌சுள்‌, யாவரும்‌ சொல்‌, செல்வம்‌ முதலியவற்றில்‌ சத்தியத்தை
நிலை நாட்டினரேயன்றி உன்போல உடல்‌ தருவதற்காக சத்திய விரதம்பூண்டு நிறைவேற்ற முன்வந்தார்‌ இலர்‌. நான்‌ வயது
முதிர்ந்தவன்‌, இனி, உன்போல சபதம்‌ நிறைவேற்றியவர்‌ இல்லை என்று சபதம்‌ செய்வேன்‌, 41-48

மேலும்‌, பண்ணார்ந்த இன்னிசைப்‌ பாடலாகிய கடலலை களில்‌ நீந்தும்‌ மிதவையாகிய சுரை (வீணை) யமைய, இருக்குறுங்‌
குடி நம்பியின்‌ அருளே பற்றுக்‌ கோடாகக்‌ கொண்டு, பிறவிக்‌ கடல்‌ கடந்து விட்ட உனது உறுதி, உளது ஞானம்‌, உனது சத்திய விரதம்‌, முதலியவற்றில்‌ உனக்கணையாவாரீ பிறருளரோ? 1249

(இராக்கதன்‌ இவ்வாறு) கூறுதலும்‌ அவனை,பாகவதோத்தமனாகிய அந்த தாசரி தழுவியவாறு “ஓ! இராட்சசனே/பாவமற்ற
வனே! ௨ன்‌ கடைச்கண்‌ பார்வையால்‌ பாக்கியசாலியானேனே ! என்‌ விரதம்‌ நிறைவேற்றுவித்தாய்‌/ VI—50

சபதங்கள்‌ வண்டிச்சக்கரம்‌ போல நிலையற்றவை, நம்பமுடியாது. பிராணபயத்தால்‌ இலட்சம்‌ சத்தியம்‌ செய்தாலும்‌
கிடைத்த உணவை விட்டுக்கொடுக்க உனக்குத்தான்‌ முடிந்ததுஅந்தணர்‌ குலத்துதித்தவனே! புண்ணியஜனம்‌ என ராட்சசனை
அழைப்பது உன்னால்தான்‌ பொருள்‌ படைத்ததாகியது, உன்‌மூலம்‌ உன்‌ இருகுலத்துக்கும்‌ புகழ்வாய்ந்தது.
(தீய பாம்புக்கு நல்லபாம்பு என்று பெயரீ வாய்த்தாற்போல தீயோராகிய இராக்கதருக்கு ‘“புண்யஜனர்‌”” என்று இடக்கரடக்‌
கராக ஒரு பெயர்‌ உண்டு. அதனை இராக்கதன்‌ அருள்‌ சேர்ந்த தால்‌ அது பொருள்‌ உடையதாயிற்று என்பது கருத்து) இருகுலம்‌,
அந்தணர்‌ குலம்‌, இராச்கதர்‌ குலம்‌ ஆகும்‌, இவன்‌ பிரம்ம ராட்ச சன்‌ ஆதலினால்‌ இருகுலம்‌ எனப்பட்டது. 81-51

வயிறு பெரும்பசியினின்று கபகபவென்றெரிந்தும்‌ என்‌ கடன்‌ நிறைவேற்ற வேண்டிப்‌ போகவிடுத்தனை! உங்கட்கியல்‌ பான
உணவாக இறைவனால்‌ நாங்கள்‌ (மனிதர்கள்‌) ஏற்படுத்தப்பட்‌டுள்ளோம்‌. ஆதலின்‌ (ந என்னை உண்பதால்‌) எனக்கொருபாவ
மும்‌ இல்லை சூளுரைக்கி3றன்‌. மறுக்காமல்‌ என்பால்‌ நட்புடன்‌ இருப்பாயானால்‌ என்‌ உடலை உன்‌ களைப்பு நீங்க உண்டு மூழ்‌வாயாக: ” V¥—52

இச்சொற்கள்‌ வஞ்சனையின்றி மனதாரச்‌ சொல்கிறேன்‌ . என்பதற்கு பகவானே சாட்சி! ஓ ராட்சசனே! என்‌ உடலிலுள்ள
கொழுப்புநிறைந்த புமாலினை உண்பாயாக” என்றதும்‌ அவன்‌ வருத்தத்தோடு (இரக்கமுடன்‌) கூறினான்‌. VI—53

என்ன சொன்னாய்‌? இப்படி அருளின்றிப்‌ பேசலாமா? இத்‌தனை நாளும்‌ இந்தச்‌ சோறே (நரமாமிசம்‌) இந்த வயிற்றில்‌
வைத்து, பெரும்பாவத்தை அடைந்து, உடலை வளர்த்து, எப்‌போதாயினும்‌ எப்படியாயினும்‌ ஒரு முனிவரோ, ஒரு நோன்பின
ரோவந்து என்னைக்‌ காண மாட்டாரா? அவர்‌ அருளால்‌ இந்தப்‌ பிறவி நீப்பேனாகவும்‌ என்று நினைத்துக்‌ கொண்டிருந்த என்னி
டம்‌ ஓ! புண்ணியாத்மாவே இப்படிக்‌ கூறலாமா? VI—54

தங்களைப்போன்ற பாகவதர்ர்சள்‌, எம்மைக்‌ கடைத்தேற்‌றாவிட்டால்‌ பின்‌ வேறு கதியுண்டோ? எம்மைப்‌ போன்றவர்க்கு
கதி நீங்கள்‌ தான்‌! எமது (முன்னைய) இழிபினைக்‌ கருதாமல்‌, அருள்‌ செய்வாயாக. VI—55

கோடாலியாயினும்‌, அந்தணனைக்‌ கொன்ற கொலைவாள்‌ எனினும்‌, பருசவேதியானது தஙிகமாக மாற்றும்‌. அந்த நியாயப்‌
படி தங்களை அணுகிய எங்களைப்‌ போன்றோசையும்‌ அருள்‌ செய்ய வேண்டாவோச VI—-56

எனவும்‌, உடல்‌ தருவதை வேண்டாமென்று வருந்திக்‌ கூறும்‌எளியதன்மையைக்‌ கண்டு “உன்‌ கருத்து யாவும்‌” என்‌ ஆன்மா
“வின்‌ சசடு (குற்றம்‌) நீக்குவதுதான்‌ அருளாகுமன்றி உடலைத்‌ தருகிறேன்‌ என்று கூறுவது அருளாகுமா? VI—57

சண்டாகருணனணனை விடவா கொடுஞ்செயல்‌ புரிந்தேன்‌? அவையே திருமால்‌ திருத்திச்‌ செல்வமளித்து முக்தி தரவில்லையா
இதைவிட பக்தர்கள்‌ அதிகம்‌ தர இயலுமன்றோ!/ அத்தகைய நலம்‌ எனக்குத்‌ தரக்குடாதா? உயிர்கட்கு நலம்‌ செய்வதுவே
இருமாலுக்குப்‌ பூசை செய்வதாகாதா? VI—58

எனக்கேட்ட தாசரி, அது பொருந்துவதே என்று கூறலும்‌, அந்த ராக்கதன்‌ ”நான்‌ ஒரு பிரம்மராட்சசன்‌, கும்பஜானு எனும்‌
பெயருடையவன்‌, கொடுஞ்செயல்புரிந்தவனாசு, இந்த ஆலமரத்‌தையடைந்து, வஞ்சமாக மனிதர்களைத்‌ தின்று கொண்டிருந்‌
தேன்‌. முற்பிறப்பில்‌ சோமசர்மா எனும்‌ பிராமணன்‌ ஆக இருந்‌ தேன்‌ சென்றபிறப்பில்‌ பிராமணனாக இருந்தமையால்‌ அருளுக
குரியவன்‌. ஒரு தீய செயலால்‌ இவ்விதம்‌ ஆனேன்‌. நீ திருமாலுக்‌குப்‌ பாடிய பாசுரங்களில்‌ புண்ணியப்‌ பயனை நீரோடுவார்த்துக்‌
கொடுப்பாயேயானால்‌ எனது இழிந்த பிறவி நீங்கும்‌. உனக்கு துயருற்றோரைக்‌ காத்த புண்ணியம்‌ இடைக்கும்‌. எல்லா அறக்‌
கருவியாகிய இவ்வுடலும்‌ வீடடையும்‌’*” எனலும்‌ அந்த உடல்‌ குறித்த சொற்கட்கு கலகலவெனச்‌ திரித்து அந்த தாசரி இவ்‌விதம்‌ கூறினான்‌. VI—S9

இதுபோன்ற உடல்கள்‌ மேற்பிறப்பும்‌ கீழ்ப்பிறப்புமாக எத்தனையோ எடுத்திருப்பதில்‌ இப்போதையதொன்று, இத்தகு
இழிந்த உடலுக்காக ஒரு நாளையதன்று ஒருகண நேரம்‌ பாடிய பயளைக்‌ கூடத்‌ தர இசையேன்‌! VI—60

இசைக்கதிபதியாக உடலெடுத்துப்‌ பின்‌ இரறந்துண்ணும்‌ வசைக்கதிபதியாக எத்தனை பிறப்பெடுக்கவில்லை நீயும்‌ நானும்‌;
எங்க உடலெடுத்தும்‌ சிறு புழு உடலாகியும்‌ எத்தனை பிறப்‌பெடுக்கவில்லை நீயும்‌ நானும்‌? குஞ்சர (யானை) உடலெடுத்தும்‌
கொசு உடலெடுத்தும்‌ எத்துணை பிறப்பெடுக்கவில்லை நீயும்‌ நானும்‌? அரச உடலெடுத்தும்‌ அடிமை உடலெடுத்தும்‌ எத்தனை
பிறப்பெடுக்கவில்லை நீயும்‌ நானும்‌? வேள்வியந்தணர்களாகப்‌பிறந்தோம்‌! சண்டாளர்களாகப்‌ பிறந்தோம்‌! பாம்பு, பேய்‌,
பிசாசு என்று எத்தனை பிறப்புகள்‌ எடுக்காதிருந்தோம்‌!
இருமாலடியாராகும்‌ பிறப்பு எடுக்கவில்லையேயன்றி எல்லாப்‌ பிறப்பும்‌ பிறந்ததிளைத்தோமன்றோ?
(திருமாலடியாராய்ப்‌ பிறந்ததால்‌ பிறவி நீங்கி மோட்சம்‌ பெறும்‌ வாய்ப்புளதாதலின்‌ அப்பிறப்பே சிறந்ததென்பது கருத்து) vI—61

இவ்வுடல்‌ வலைப்பெட்டியிற்‌ பெய்த நீர்‌, சிலந்தி வலையால்‌ முடிந்த மூட்டை இலவம்பஞ்சு. மரத்தில்‌ புழுத்துளைத்த எழுத்து
வெயிலில்‌ வைத்த மஞ்சள்‌, போன்றது. இதனை நம்பி புண்ணியத்தை விற்பது கற்பூரத்தை விற்று உப்பை வாஙிகினாற்‌ போலத்தான்‌.
(மீன்‌ பிடிக்கும்‌ வலைப்பெட்டியில்‌ நீர்‌ தங்காது, அதுபோல நிலையற்றது உடல்‌, சிலந்திவலை நிலையற்றது. வெயிலில்‌
மஞ்சள்‌ பிரகாடிக்காது. புழு துளைத்த எழுத்து புரியாதது எனும்‌ உவமைகள்‌ நிலையாமை, சிறப்பின்மைகளைச்‌ குழித்து வந்தன) VI~—62

என்று கூறவும்‌ இராக்கதன்‌ இவ்விதம்‌ கூறினான்‌ 1-63

சங்கதப்‌ பயனில்‌ ஓ! தாசரி! பாதியாகிலும்‌ அருள்‌ கூர்ந்து ஈவாயாக! மீன்‌ குடித்த ஒரு மடக்கு நீரால்‌ கடல்‌ குறைவு படுமா?
இருமாலைப்‌ பாடிய புண்ணியம்‌ (ஒரு சிறிதீவதால்‌) குறைவுறாது-6-64-

உடலை விடுத்து புண்ணியம்‌ கேட்டு ஏன்‌ தொந்தரவு செய்‌கிறாய்‌? என்னை வி$ூவித்தபோது உடலுக்காகசீ சூளஞூரைத்‌
தேனா? திருமாலை (வாமனனை) பாடிய பயனுக்காகச்‌ சூளுரைத்‌தேனா? பாதாளம்‌ மட்டும்‌ பாயும்படியான (கடினமான) கேள்வி
களை விடுத்து உடலைக்‌ கைக்கொள்க. கிணறு வெட்டப்‌ பூதம்‌புறப்பட்ட கதையாக நீ நினைத்த காரியம்‌ மட்டும்‌ கைகூடாது.VI—65

எனலும்‌, இராக்கதன்‌, மிக வருந்தி, காரியத்தில்‌ ஆர்வமுடன்‌ கண்ணிரை அடக்கிக்‌ கொண்டு, “அந்தோ! திருமால்‌ அடியார்கள்‌
அருளுடையவர்கள்‌ ஆக இருக்க வேண்டாமா? முன்பு தரிசளப்‌ பிரவார்த்தகராக பிரம்ம சாத்திரங்கட்கு வியாக்கியானம்‌ எழுதத்‌
திருமாலின்‌ விசிஷ்டாத்துவித சித்தாந்தத்தை நிலை நிறுத்திய ஸ்ரீராமானுஜ முனிவரரீ, நெடுநாட்‌ பணிவிடை செய்தமையால்‌
மகிழ்ந்த பெரிய நம்பி (திருக்கோட்டியூர்‌ நம்பி) எனும்‌ ஆரியர்‌, தகுதியிலார்க்குக்‌ கூற வேண்டாம்‌ என்று கூறி முறைப்படி தனக்‌
கருளிய கதையின்‌ சரமசுலோகப்‌ பொருளை இரக்கம்‌ மிக்கவராக அரங்கநாதனின்‌ தாமோதரம்‌ எனும்‌ தங்கக்‌ கோபுரத்திலேறி
நின்று, பெருங்குரலில்‌ அம்மந்திரப்‌ பொருளை அறிவிக்க, ஆசாரியர்‌ சினந்து கூறவும்‌ “தேவரீர்‌! தேவரீருடைய ஆணையை
மீறியதால்‌ நான்‌ ஒருவன்‌ மட்டுமே ரெளரவ நரகில்‌ வீழ்தல்‌ நன்றோ! பாகவதர்‌ கூட்டத்திற்கு பரமபதம்‌ காட்டுவித்தல்‌
நன்றோ என ஆராய்ந்து தாங்கள்‌ கூறியதாகவே கருதிக்‌ கூறினேன்‌’” என்று கூறி பாராட்டப்‌ பெற்றார்‌. அவர்‌ தனது
சடர்கட்கு நான்தோறும்‌ காலையில்‌ விலைபெறாமல்‌ பாலும்‌ தயிரும்‌ தந்து வேண்டிய இடையர்‌ தம்பதிகட்கு பரமபதம்‌
அருளினாச்‌. அவ்வுடையவரே முக்தி பெற்றும்‌ மற்றொருபிறப்பில்‌ அஞ்ஞானிகட்கு வீடு பேற்றின்‌ சுவை தெரியுமாறு
சுந்தர ஜாமாத்ரு (அழகிய மாப்பிள்ளை) என்ற பெயரில்‌ அர்ச்சி ராதி மார்க்கங்களைப்‌ பற்றி விளக்கினார்‌. அவரே எதிர்காலத்‌
இல்‌ யாதக௫ிரி (திரு நாராயணபுரம்‌) பகுதியில்‌ பாசன்டி (பிழ மதத்தின.) மிகுதயாகவே அவர்களை ஒழித்துக்கட்ட சடகோபர்‌
(ஆதிவண்‌ சடகோ. ஜீயர்‌) எனும்‌ பெயரில்‌ பிழந்து இடையறாதபிரசாரத்தால்‌ ஆந்‌ சர நாடு முதலிய இ.ங்களில்‌ அறிஞர்கட்கு
பகவத்‌ விஷயமாகிய வாதங்களை இரந்து கேட்டு திக்விஜயம்‌ செய்து கருடாசல குகையில (அகோ பிலத்தில்‌) நரசிங்க சுவாமியய
கபடசன்னியாசியாக வந்‌, கமண்டலமும்‌ கஷாயமும்‌ இரிதண்டி யூம்‌ அருளப்‌ பெற்று சனனியாச ஆ௫௪ரமத்தை ஏற்று பதஞ்சலி,
கணாதர்‌, அக்கபாதர்‌, பாதராயணர்‌ (வியாசர்‌) கபிலர்‌ ஜைமினி ஆ௫ூயோரின்‌ அறுவசைத்‌ தரிசனங்களின்‌ தத்துவங்களை மடத்தி
லுள்ள அந்தணருள்ளிட்ட டர்கள்‌ அனைவர்க்கும்‌ போதித்து,துறவிகட்கு எடுத்துக்காட்டாக நின்று தன்னை அடைந்த உலகி
லுள்ள மக்கள்‌ இதயமெல்லாம்‌ இருமகளும்‌ திருமாலும்‌ உறைவிட.மாகச்‌ செய்து, காமக்‌ குரோதங்களாகிய முள்ளினைத்‌ துடைத்து
பரிசுத்தமாக்கி பக்தியைப்‌ போதித்து உலகைப்‌ புனிதப்படுத்துவார்‌. மேலும்‌, ஹயக்கிரீவரை ஆராதனை செய்யும்‌ வெங்க
டேசன்‌ (வேதாந்த தே9கர்‌) எனும்‌ இன்னொரு ஞானி, திருமவின்‌ மதத்தினை விளக்கிக்‌ கூறும்‌ நூறு நூல்களை யாத்து, உஞ்ச விருத்தி செய்யும்‌ துறவியாகி தவமியற்றி தனக்கு முதிர்ந்த இலைகள்‌ தந்து அகத்திமரத்துக்கு வீடு பேரளிப்பான்‌.
இத்தசைய எதிர்கால சோதிடங்கள்‌ (ஹேஷ்யம்‌) எனது திவ்விய ஞானத்தால்‌ அறிந்திருப்பேன்‌.*
இத்தகைய முக்காலமும்‌ உணர்ந்த ஞானம்‌ இருத்தலினால்‌ இந்த உடல்‌ பாராட்டத்‌ தகுந்ததல்லவா எனலாம்‌. இது
பிறப்பால்‌ வந்ததன்று, சமம்‌, தமம்‌ முதலிய சாதனையால்‌ வந்த தன்று. குறத்தி குறி சொல்கிறாள்‌. அவள்‌ புனிதமானவளா?
ஆந்தை, காட்டுக்‌ கோழி, பல்லி, கரிச்சான்‌ குருவி, தங்கக்கண்‌ குருவி முதலிய விலங்கு பறவைகள்‌ கூட சகுனம்‌ கூறுகிறது. அவை
யெல்லாம்‌ எதிர்கால சூசனைகள்‌ செய்வதால்‌ தவசியர்‌ ஆவரோஅவற்றைப்‌ போன்றுதான்‌ எமது விஞ்ஞானமும்‌. எப்படி.
என்றால்‌ நாத்திகத்தனால்‌ (இறை நம்பிக்கையின்மையால்‌) சாத்திரங்களைக்‌ கற்றதன்றி அதன்படி. நிற்றல்‌ என்பதில்லை.
பிறரையும்‌ கற்பித்து ஒழுக்கமாக நடக்குமாறு செய்ததுமில்லை.ஆதலின்‌ அறநெறி எமக்கு வெகுதூரம்‌, ஆதலின்‌ பிறவி நீத்தல்‌
இயலாது. ஆதலின்‌ மாசற்ற புனித உடலாலன்றி மோட்சம்‌
கிடைக்காது, ஆகையினால்‌ இந்த குரூபமான உடலை நீங்க, புனிதனாவதற்கு அருள்‌ செய்வாயாக”* என்று பாதங்களில்‌
வீழ்ந்து பாடிய பாட்டில்‌ புண்ணியம்‌ கால்பங்காவது தருக என்றும்‌, அவன்‌ அதையும்‌ மறுக்கவே, **சரி! இன்று காலையில்‌
பாடிய கடைப்‌ பாட்டின்‌ பயனாவது தருக?” என்று மன்றாடிக்‌ கேட்கவே மனமிரங்கி, “அப்படியே யாகட்டும்‌’* என்று கூறி
அவன்‌ அவனை எழுமாறு செய்து, இந்த உடல்‌ கிடைத்த விதம்‌யாது என விளக்கமாகக்‌ கூறுக எனலும்‌, கேட்பாயாக என்று
அப்புலாலுண்போன்‌ (இராட்சசன்‌) துக்கத்துடன்‌ இவ்ிசம்‌கூறினான்‌;-VI—66

பமபிரம்மராடசசன்‌ கதை புராணத்திலுள்ளது. அவன்‌ கூறுவ தாகபிற்கால ராமானுஜர்‌, ஆதிவண்‌ சடகோபர்‌(அகோபில
மட முதலாம்‌ ஜீயர்‌) வேதாநத தேசிகர்‌ வரலாறு கூறுவது கால முரண்‌ ஆகும்‌. ஆதலின்‌ பிரம்ம ராட்சசன்‌ எதிர்கால ஞானம்‌
உடையவனாக கூறியதாகக்‌ கவிஞர்‌ அமைதி கூறியுள்ளார்‌.

குறிப்பு – வேதம்‌ வெங்கட்ராய சாஸ்திரி அவர்கள்‌ விளக்க வுரை நூலில்‌ இத்துடன்‌ ஆறாம்‌ அத்தியாயம்‌ முடிகிறது.

அடுத்து ஏழாம்‌ அத்தியாயம்‌ வருறங. சில பிரதிகளில்‌ இவ்விதம்‌ உள்ளனவாம்‌. வாவிள்ள ராமஸ்வாமி சாஸ்திரி விளக்கவுரை
நூலில்‌ இத்துடள்‌ முடியாமல்‌ தொடர்ந்து நூலிறுதிவரையும்‌ ஆறாம்‌ அத்தியாயம்‌ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆறாவது 65 ஏழாவது 73 பாடல்கள்‌ இருப்பதாகக்‌ கூறுவதைவிட 139 பாடல்களுடைய ஒரே அத்தியாயமாக கொள்வதே பொருத்தம்‌
என்று வாவிள்ள கூறுவது சரியாகவே தோன்றுகிறது. எனினும வேதம்‌ வெங்கட்ராய சாஸ்கிரியாரைப்‌ பின்பற்றி ஆறாவது
அத்தியாயம்‌ ஏழாவது அத்தியாயம்‌ என்றே பாகுபடுத்தி யுள்ளோம்‌.

பிரம்மதேவன்‌ இருடிய கன்றுகளையும்‌ குழந்தைகளையும்‌ போலத்தானே அவ்வவ்வுருவாகி, பசுக்களுக்கு கன்றுகளாய்‌
ஆயர்‌ மடந்தையர்க்குக்‌ குழந்தைகளாய்‌ அமைந்து இன்பம்‌ ஊட்டிய பெருமைமிக்கனே! அசுவத்தாமன்‌ விடுத்த அம்பால்‌
உத்தரையின்‌ கருவான பரீட்சித்து கருகும்‌ நிலையில்‌ இருக்க காத்த கண்ண3ேே/ சூரிய சந்திரர்கள்‌ கண்களாக உடைய
பெருமானே 71-௦7

எப்போதும்‌ புதிய புதிய காதல்‌ விளையாட்டுக்களால்‌ ஆயர்‌ குல மடந்தையர்களை இன்புறுத்தயவனே! துறவியரின்‌ மன
மாய பொய்கையில்‌ விளையாடும்‌ அன்னப்‌ பறவையாகியவனே! மணம்‌ மிக்க உருவுடையவனே. VI—68

நளன்‌ முதலான சக்கரவர்த்திகள்‌ காணிக்கை தநீத விலை மதிப்பற்ற மகுடம்‌ முதலிய அணிகளை யணிந்துள்ள வேங்கடே
சனே! ஓளி மிக்க உருவினையுடையவனே [ தேவர்களின்‌ பகைவர்‌ களை அழிப்பவனே [ சகல பிரம்மாண்டங்களின்‌ தலைவனே!
தரயவனே!/ அளப்பரிய குணநலன்களால்‌ சான்றோரை மகழ்‌ வித்துக்‌ காத்தருள்பவனே. VI—69

இஃது நைராமன (நைஜாம்‌) எனும்‌ யவன மன்னனின்‌ (முஸ்லிம்‌ அரசனின்‌) பெரிய விண்முட்டும்‌ கோட்டைகளைத்‌
தகர்க்கும்‌ பயங்கரமான யானைப்‌ படைக்கு மூன்‌ செல்லும்‌ இருஷ்ணதேவராயர்‌ எனும்‌ பெயருடைய எனது அமுக்த மால்யத
எனும்‌ காவியத்தின்‌ இனிய செய்யுள்‌ களுடைய ஆறாவது அத்தியாயம்‌. Vi—70

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ கிருஷ்ணதேவராயன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading