ஸ்ரீ ஆ முக்த மால்யதா-(முத்துகளால் ஆன மாலை)- ஸ்ரீ சூடிக்‌ கொடுத்தவள்‌) ஐந்தாம்‌ அத்யாயம் -ஸ்ரீ கிருஷ்ணதேவராயன்-மொழிபெயர்ப்பாளர்‌ உரை -பன்மொழிப்‌ புலவர்‌ மு. கு. ஜகந்நாதராஜா

ஐந்தாம்‌ அத்தியாயம்‌
திருமகள்‌, நீளாதேவி (நப்பின்னை) ஜாமபவதி ஆகிய தேவியரின்மனத்தாமரையில்‌ வண்டென உறைபவனே[/களிந்த மலைபி
லிருந்து வரும்‌ யமுனை நதிபோல கருவண்ண எழில்‌ பொங்கும்‌அழகனே! எல்லையற்ற பாதங்களும்‌ தலைகளும்‌ கண்களும்‌
உடையவனே! சேடமலைபில்‌ வாழ்‌ சிங்கமே! (சேடமலை திருமலை) V-1

கேட்பரயாக/ அந்த விட்டுசித்தன்‌ (பெரியாழ்வார்‌) V-2

மாந்தளிர்கள்‌ நிறைந்த பூம்புதர்களிடையே, படுக்கை யமைத்துக்‌ காதலர்‌ மேலமரீந்து காதலுணர்வுமிக்க காரிகையார்‌
கலந்தின்புற்றுக்‌ களைத்து நெட்டுயிர்ப்பு மிகவே மீண்டும்‌ தாம்‌ மூன்போலவே (ழே) அமர்ந்து கலவிப்போரில்‌ தோற்கவே
அதைக்‌ கண்ட மன்மதன்‌ அவரை விரட்டியெறிந்த(வாள்‌ வீச்சுக்‌) காயமோ எனும்படியாக முதுகில்‌ ஒட்டிய மாத்தளிர்கள்‌
தோன்றும்‌ பூந்தோட்டத்தில்‌ ஒரு நாள்‌, * V—3

* இளவேனிற்‌ காலத்தில்‌ மாந்தளிர்கள்‌ சிந்திக்‌ கடந்த பூந்தோட்டத்தில்‌ பெண்கள்‌ காதலுணர்வுமிக்கவர்கள்‌ தாமே
ஆண்போலப்‌ பாவித்துக்‌ கலவி செய்தனர்‌ என்ற இந்த வருணனை இருஷ்ண தேவராயர்‌ ஆண்டாளின்‌ அறிமுகத்துக்கு
முன்பு வைத்துள்ளாஈ. இதில்‌ தொனியிருப்பதாக நான்‌ கருது கிறேன்‌. வேதம்‌ வேங்கட்ராய சாஸ்திரியோ, வாவிள்ள ராமசாமி
சாஸ்திரியோ இப்படி தொனி இருப்பதாக சிந்திக்கவில்லைதான்‌ எனினும்‌ பூந்‌ தோட்டத்தை வருணிக்காமல்‌ காம உணர்வு மிக்கு
காதலர்களை ஏன்‌ வருணித்தார்‌? என்பது ஆராய்வுக்குரியது.

ஒரு படைவீரன்‌ தோற்றால்‌ அந்தப்‌ படைதி தலைவனே அந்த வீரனின்‌ முதுகில்‌ அடித்து இழிவுபடுத்துவான்‌ வாள்‌ வீசித்தாக்க அவமானப்படுத்துவான்‌. என்பது மறபு. அது போலவே கலவிப்‌ போரில்‌ இந்த நங்கை தோற்று ”புருஷாயத கேளி” யிலிருந்து மீண்டும்‌ பழைய நிலைக்கு வந்ததால்‌ மன்‌
மதன்‌ தோற்றவரை வாளால்‌ வீரி காயம்‌ உண்டாக்களொன்‌. அந்த காயம்‌ தான்‌ எனுமாறு மாந்தளிர்‌ முதஇல்பட்டிருந்தது என்று கற்பனை செய்யப்பட்டுள்ளது. V—3

அசன்ற ஒரு காட்டுப்பாதையில்‌ மர நிழல்பட்டு மரகதத்‌ இண்ணையபோல்‌ தோன்றும்‌, வெண்பளிங்குத்‌ தஇண்ணையில்‌
வெண்காமரைப்‌ பொய்கைக்கருகில்‌, துளசி வனத்தில்‌, மங்கள கரமான இலட்சணங்களோடு கூடிய பதுமராகப்‌ (செம்மணி)
பாளங்கள்‌ போன்ற சேவடிகள்‌, உள்ளங்கை, இதழ்களை யுடைய ஒரு பெண்‌ குழந்தையைக்‌ கண்டான்‌. vV—4

கண்டு, வியப்புற்று, அருகணைற்து, மென்மை, மேனிஎழில்‌ சுபலட்சணங்களையும்‌, கண்ணிமைக்காது சிறிது நேரம்‌
பார்த்து, **ஆகா! குழந்தையற்ற எனச்குத்‌ திருமாலே மகளாக இக்தழந்தையைத்‌ தந்தருள்‌ கூரீந்தான்‌’ £* என்று கூறி மூழ்ந்த
வனாக, V—5

கொண்டுபோய்‌, தன்‌ இல்லக்கிழத்தியினிடம்‌ அன்போடு தந்திடவும்‌, அவளும்‌ சுரந்த தன்‌ முலைப்பாலுடன்‌ செல்லமாக
வளர்த்தாள்‌. இப்படி வளரிந்து வரும்‌ நாளில்‌ உதடுகள்‌ (வாய்த்திரை)* முன்போல விரைந்து பேச
வில்லை. கூந்தல்‌ வளைந்து நெளிந்து இயன்றன. செல்வம்‌ சேரீந்ததால்‌ அரைவிழியோடு கண்டன. முகம்‌
புருவங்கள்‌ நெரித்து, விளையாடக்‌ கற்றன. முலைகள்‌ வளர்ந்த மாரீபானது குழந்தைமையை அலட்சியப்படுத்தியது. பாதங்‌
களும்‌ கைகளும்‌ சிவந்தன. இடை வறுமைப்பட்டது. உடல்‌ பயிர்ப்பினை உற்றது. உந்தி வெறும்‌ ஆழத்தைக்‌ காட்டியது.
இவ்விதமாக நாள்தோறும்‌ முன்னைய அன்புகுறைந்து விடலாலே இஙிகிருக்கக்‌ கூடாது என்று குழந்தைமையானது அகன்றது.

(குழந்தைமை நீங்கக்‌ கோதைகுமரியானாள்‌ என்பதுகருந்து]-5-7-
* உதடுகட்கு தெலுங்கில்‌: *வாதெற்‌ எனும்‌ அழகிய சொல்‌ உண்டு, வாய்த்திரை என்பது பொருள்‌, ்‌

அவளுக்கு முதலிலிருற்து இருக்கிற மேனியின்‌ பொன்‌ வண்ணத்தினாலோ, இதழின்‌ செம்மையாலோ, முகமதியின்‌ வெண்ணில வொளியினாலோ பெயர்‌ அமையவில்லை.
(பொன்‌ மேனியள்‌, செவ்விதழினள்‌ என்றில்லாமல்‌)அவளது கருங்கூந்தலின்‌ வண்ணத்தால்‌ மாமை நிறுத்தினாள்‌ (சியாமங்கி) என்ற பெயரை அடைந்தனள்‌, உடலில்‌ தலையே பிரதான மானது எனும்‌ பழஞ்சொல்‌ சரியானதுதான்‌, தலை முடிக்‌ கூந்தல்தானே பெயரிட வைத்துள்ளது.
(வடமொழியில்‌ சியாமளா என்றால்‌ இளம்‌ பருவப்பெண்‌ என்று பொருள்‌, இச்சொல்லைக்‌ கொண்டு சியாமளா (மாமை
நிறம்‌) எனும்‌ பண்புக்கு கூற்தலைக்‌ காரணம்‌ காட்டி கற்பனை செய்யப்பட்டுள்ளது) 5-8-

(இக்‌ கோதை திருமாலை மயக்கிடற்குள்ளாள்‌ ஆதலின்‌), ஒரே சக்கர த்தனையடைய கண்ணனை, கைகலப்புப்‌ போரில்‌
வெல்வதற்காக முயலும்‌ மன்மதனுடைய உருக்குச்‌ சக்க்ரங்‌ சளோ(இரும்பு வளையஙிகள்‌) எனுமாறு. அந்‌ நங்கையின்‌ சுருண்ட கூந்தல்‌ அமைந்தது,
(மோதிரங்கள்‌ போல சுருள்‌ சுருளாகப்‌ படியும்‌ கூந்தல்‌ உருக்காலான சக்கிரங்களாக உவமை கூறப்பட்டுள்ளது) 1/9

கருப்பூரத்திலகத்தினால்‌ வெண்மை ஒளி படிந்த அவள்‌
நுதலில்‌ படிந்த கருங்கூந்தல்‌, பிரம்ம தேவன்‌ இவள்‌ எல்லாப்‌ பெண்டிர்கட்கும்‌(சீமற்தனி) மேலாக செல்வ வளத்துடன்‌
இிகழ்வாள்‌ என்று எழுதிய எழுத்துக்களின்‌ வரிசை போலத்‌ தோன்றியது.
(பிரம்மன்‌ நெற்றியில்‌ எழுதுவதாக ஐ$ூகம்‌, தலைஎழுத்து என்பர்‌. வெள்ளைக்காகிதத்தில கருப்புமையால்‌ எழுதிய
எழுத்துக்கள்‌ போல கற்பூர திலகமிட்ட நெற்றியில்‌ சுருண்ட. கூந்தல்‌ படிந்தது என்பது கருத்து) V-10

ஒப்பனை செய்யும்‌ தோழியர்‌, கோதையின்‌ முகத்தை மேல்நிமிர்த்திக்‌ கண்கட்கு மை தட்டும்போது கண்கள்‌
தோழியரின்‌ முகமாகிய நாலாம்‌ நாள்‌ சந்திரனைக்‌ கண்டது,
அதனால்‌ இவள்‌ முகஎழிலை சற்திரன்‌ கவர்ந்திட மக்கள்‌, சந்திரனின்‌ எழில்‌ தான்‌ இவள்‌ சுவர்ந்தாள்‌ என்று கூறுவர்‌.
(நாலாம்‌ நாள்‌ சந்திரனைக்‌ காணல்‌ நன்றல்ல எனும்‌ ஐதிகத்தை ஒட்டிக்‌ கற்பனை செய்யப்பட்டுள்ளது) 5-.11

கண்ணிணை(மதியிலுள்ள) கஸ்தூரிமானன வெல்ல, அப்பழி தீர்க்க வேண்டி அந்தமான்‌, மதியைத்‌ தூண்டவும்‌, சந்திரனும்‌
முகத்திற்குத்‌ தோற்று முகத்தின்‌ மணம்‌ தனக்கில்லை, ஒளி தான்‌ உண்டு எனப்பின்‌ வாங்கவும்‌’ கஸ்தூரிமான்‌ மணம்‌ தர
சந்திரனையடையவும்‌, அந்த மானின்‌ மீது பகைபூண்ட அந்த நங்கை (பகைவரின்‌ குருதியால்‌ திலகமிட்டுப்‌ பழி இர்ப்பது
போல்‌) மானின்‌ குருதியால்‌ திலகமிட்டாளேயன்றி மணம்பெறு தற்கன்று எனுமாறு பச்சைக்‌ கஸ்துரி திலகமிட்டாள்‌.
(கஸ்தூரி மானின்‌ அஸ்டகோசத்திலுள்ள சுரப்பியால்‌ கஸ்துரரிஎனும்‌ மணப்பொருள்‌ வெளிப்படும்‌. அதைத்‌ திஎகமிட
மரபு. இங்கு மான்கண்ணை வென்ற மங்கையின்‌ முகல்ம்‌ மதியையும்‌ வென்று விட்டதாம்‌. மானின்‌ மீது பழி தீர்க்கவே
திலகமிட்டாள்‌ என்பது கற்பனை)
கஸ்தூரிமான்‌ சந்திரனுக்கு மணம்‌ தந்ததாகவும்‌. அதனால்‌ பகைபூண்ட நங்கை, கஸ்தூரியின்‌ இரத்தத்தால்‌
இலகமிட்டுப்‌ பழி தீர்த்தால்‌ என்பது கருத்து) 412

கருவிழிகள்‌ கடைச்கண்களில்‌ அடிக்கடி சென்று மீண்டும்‌ விரைந்து வருவதாகி நாணோடு கூடிய அவளது பார்வைகள்‌,
மன்மதன்‌; வில்லில்‌ குறி வைத்து நாணிற்பூட்டிய கருங்குவளை மலர்களோ எனுமாறு இருந்தன . V—13

புது இளமையாகிய மதுவின்‌ மயக்கத்தால்‌ கருவிழிகள்‌ ஐடி காதுகளாகிய இணற்றில்‌ வீழ்ந்து விடுமோ என்றஞ்சிய பிரமன்‌
அதைத்‌ தடுக்க வைத்த தளைகளோ (சங்கிலி) எனுமாறு மை இட்டிய கண்ணிணையில்‌ பொருத்தி எழிலூட்டின .
(மதங்கொண்ட யானைகள்‌ இணெற்றில்விழுந்து விடாமல்‌சங்கிலியாற்‌ பிணைத்தற்‌ போல கருவிழிகள்‌ செவியாகிய
சணெற்றில்‌ விழாது தடுக்க இமையாகய சங்கிலியைப்‌ பிணைத்த தாகக்‌ கதிபனை) 5-14

(உலகில்‌ சுமங்கிலியான சகோதரியின அணிகளற்ற வெறம்‌ காதினைச்‌ சகோதரன்‌ பார்ப்பது பாவம்‌ என்பது மரபு ஆதலின்‌)
அவள்‌ காதுகள்‌ ஸ்ரீ(திரு) எனும்‌ (தெலுங்கு) எழுத்தைப்‌ போன்றிருக்கும்‌, திருமகள்‌, கூடப்பிறந்த சந்திரன்‌ ஆகிய முகம்‌
பத்தாடும்போது காதணி &மே வீழ்ந்துவிட்டதால்‌ அக்காதினளை பார்க்கக்‌ கூடாது என்று தலையைற்‌ தோளோடு சேர்த்து
மறைத்து காதணியுடைய பக்கத்தைக்‌ காட்டவே கம்மல்கள்‌ தள.தளக்க பந்தாடி மகிழ்ந்தாள்‌. V—I15

சம்பகப்பூப்‌ போன்ற நாசியை வண்டுகள்‌ முகர அஞ்சினும்‌ அவள்‌ பேசும்‌ போது வண்டுகள்‌ மொய்க்கும்‌, அவள்‌ வாயில்‌
எற்த மணம்தான்‌ இல்லை? அவளது முல்லைப்பூ போன்ற பற்களில்‌ பிரதிபலிக்கும்‌ தம்‌ உருவைக்‌ கண்டு வண்டுகள்‌ மயங்கி
மொய்த்துக்‌ கடக்கும்‌, V—I16

சங்களைப்‌ போல முன்பு பிரமன்‌ அத்‌ தாமரைக்‌ கண்ணி னாளின்‌ கழுத்திஎனப்‌ படைத்தான்‌. இளமை வந்ததும்‌ மீண்டும்‌
மென்‌ சந்தளப்‌ பூச்சென, அதன்‌ (உருவத்தோடு) வண்ணமும்‌ சேர்ந்து எழமில்பெற்றது. V—17

தாமரை இதழ்போன்ற கண்ணை உடைய அவளது சங்கேதத்தில்‌ திகழும்‌, மந்திர, மத்திய தாரம்‌ எனும்‌ மூன்று
சுரங்களில்‌ இருப்பிட எல்லைகளை வரைந்து காட்டியது போல அவள்‌ கழுத்தில்‌ வரைகள்‌ “மூன்றும்‌ திகழ்ந்தன. V—18

நங்கையின்‌ மெல்லிய தோளிணைகளாகிய தாமரைத்‌ குண்டுகள்‌, தாமரைத்‌ தண்டின்‌ திருவிளை (அழடஏளனை) சுவர்ந்து
கொண்டன. அதனால்‌ திருவிழந்த தாமரைத்தண்டு நெறிமுறிந்து
(செல்வத்தோடு கூடிய தன்‌ வாழ்க்கை நெறி கெட்டு) வறுமைப்‌
பட்டதால்‌ தன்‌ தேகயாத்திரை (உடல்‌ ஓம்பும்‌ வாழ்க்கை) நூல்‌
நூற்பதால்‌ கழித்துக்‌ கொண்டிருந்தது.
(வறுமையுற்றார்‌ நால்‌ நூற்றுப்‌ பிழைப்பர்‌. அதுயோல்‌ துரமரைத்‌ தண்டின்‌ திரு (அழகு) வினை நங்கையின்‌ தோள்கள்‌
சுவர்நீிது கொண்டதால்‌ வறுமையுற்றதாம்‌. நூல்‌ நூற்று வாழ்ந்ததாம்‌. தாமரைத்‌ தண்டினை முறித்தால்‌ நரல்‌ வரும்‌.
அதுனை நரல்‌ நூற்பதாக கற்பனை செய்யப்பட்டுள்ளது.) ‘

அநீநங்கையின்‌ கழுத்துக்குக்‌ கீழும்‌ முலையிணைக்கு மேலும்‌ அகன்று நீண்டு குறுக்காக உள்ள மார்பில்‌ இகழும்‌ மாலை
யில்‌, தோள்‌ வளையிலுள்ள மணிகள்‌ பிரதிபலித்து, மன்மதன்‌,
ரதிதேவிக்கு திருமண காலத்தில்‌ சூட்டிய நெற்றிச்‌ சுட்டியோ எனுமாறு இகழ்ந்து. V—20

அவளுக்கு இளமை உருவாகி உடலினின்றும்‌ ததும்பி வெளிப்‌ போதலும்‌, முந்தானையும்‌ வெட்சுமும்‌ அதனை உள்ளுச்‌
கனுப்பி அழுத்தவும்‌, (இளமை எனும்‌ எழிற்சாறு) முதிர்ச்சி யுறாத இளம்பாகமாதலின்‌ வெளிப்படவும்‌ இயலாது, உட்‌ புகவும்‌ இயலாது. பிதுங்கி மார்பிடத்ரல்‌ இருபுறமும்‌ அடங்கிக்‌ கிடக்கவும்‌ பின்‌ நாட்படவும்‌ வலிமையுற்று வளர்ச்சியுற்ற தெனதங்கையில்‌ நூல்கள்‌ (முலைகள்‌) ஒளிர்ந்தன.
(உடலிலிருந்து வெளிப்பட்ட இளமை எழிலும்‌ நாணமும்‌,
முந்தானைகளால்‌ உள்ளே அடக்கப்படவும்‌, உள்ளும்‌ புக இயலாது, வெளிப்படவும்‌ இயலாது. அங்கேயே பிதுங்கிக்‌
கிடந்தது போல முலைகள்‌, பருத்துச்‌ செழித்தன என்பது கருத்து) குரும்பை முலையுடன்‌ கூடவே நாணம்‌ கூடுதலும்‌,
தூவணியில்‌ மறைத்தலும்‌ எண்டு கூறப்பட்டது) 5-21-

இராமனது சாபம்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாக தீர்ந்து விடவும்‌ இறுதியில்‌ இணைந்த சக்கரவாகப்‌ பறவை (அன்றில்‌) இணை போல மார்பு முழுவதையும்‌ கவர்ந்து கொண்ட முலை யிணைகள்‌ இணைந்து கொண்டன, அப்பறவைகள்‌ மூக்குப்‌ போல முலைக்‌ கண்கள்‌ இளங்கருப்புடன்‌ திகழ்ந்தன.
(இராமன்‌ சீதையின்‌ பிரிவில்‌ துயருற்மபோது சக்கிரவாசுப்‌ பறவைகள்‌ களித்தின்புறம்‌ ௪ண்டு, சினந்து பிரிவறும்படி சபித்த தாக ஒரு கதை இங்கு கூறப்பட்டுள்ளது. எத்த சாபமும்‌ இரண்‌ டாயிரம்‌ ஆண்டுகளுக்குள்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாக தீர்ந்து விடும்‌ என்பது ஐதீகம்‌, அதன்படி பிரிந்து தனித்தனியாக இருந்த மூலைகள்‌, வளர்ந்து செறிந்து ஒன்று கூடின என்றும்‌ அவை oa een போன்றுள்ளன என்றும்‌ கூறப்பட்டுள்ளன 5-22-

தாம்‌ எப்படியோ அப்படியே தம்மைச்‌ சேர்ந்த முத்துச்சரத்‌ தையும்‌ அவள்‌ முலைகள்‌, இரு பக்கத்தையும்‌ இணைவித்து ஒன்றாக்கின. பெரியவர்கள்‌ தம்மைச்‌ சாரீந்தோரிக்கும்‌ தமத ஒழுக்கத்தை ஈவார்கள்‌ அன்றோ?”
(முத்து மாலையின்‌ இருவடங்களும்‌ முலைகள்‌ மேல்‌ நில்லாது முலைச்‌ சந்தின்‌ ஒன்று கூடி இணைவது இயல்பு. அதனை, எப்படி முலைகள்‌ இரண்டும்‌ ஒன்றோடொன்று செறிந்து சொண்டனவேோ அதுபோல முத்துமாலையின்‌ இரு பக்க வடங்களையும்‌ ஒன்றாக ஆக்க. சான்றோர்களைச்‌ சேர்ந்தவர்களும்‌ சான்றோர்‌ பண்பு களை அடைவார்கள்‌ என்ற கருத்தினை மெய்ப்பிப்பது போலுள்ளது என்பது கருத்து.) V—23

பிரிவின்‌ மெலிந்த பெண்டிர்‌ மீது சினந்து மன்மதன்‌ விரைந்து பொன்னுறையுடன்‌ கூடிய வாளினை எறியவும்‌, உறையின்‌ தையல்‌ அறுந்து வாள்தோன்றியது போல பொன்னெழில்‌ இடை யூடாக மயிரொழுங்கு (வளி) தோன்றியது.
(பொன்னுறை வயிறாகவும்‌, தையல்‌ பிரிந்து நடு3வ தோன்றும்‌ வாள்‌ மயிர்‌ ஒழுங்காகவும்‌ உவமிக்சப்பட்டது.) 1.24

அன்னமென்னடையாளின்‌ உயிர்ப்புக்‌ சாற்றினை அவாவி, உந்திப்புற்றிலிருந்து புறப்பட்டு வந்து முளைக்குவடுகளின்‌ கடு போந்தூரும்‌ பாம்போ எனுமாறு அவளது மயிரொழுஙிகு எழில்‌ பெற்றிலங்கியது, V—25

நங்கை நிற்கும்போது அவளது மென்தோளும்‌ இடையும்‌ உலகினர்‌ காணுமாறு மணிகள்‌ மிடைந்ததோள்‌ வளையும்‌,
மேகலையும்‌ அணிவதாலும்‌, மயிரொழுங்கு அமைந்ததாலுமே தோன்றின,
(காணரிய இடையும்‌, மென்தோாளும்‌ அணிகள்‌ அணிவதால்‌ இருப்பது புலப்பட்டது என்பது கருத்து.) V—26
உடல்நடுவிலுள்ள (வயிற்றிலுள்ள) மும்மடிப்புகன்‌ எனும்‌ தங்கத்‌ துண்டுகளை பற்றவைத்திணைக்க அதே சாதியைச்‌

சார்ற்த தங்கத்தகுடு மன்மதன்‌ வைத்தான்‌ எனுமாறு ஒட்டியாணம்‌ அவளுக்கு எழிலூட்டியது.
(பொற்கொல்லர்‌ தங்கத்தை இணைக்க த௫கத்‌.தகட்டினை பயன்படுத்துவதுபோல, மன்மதன்‌ எனும்‌ பொற்கொல்லன்‌, அவளது வயிற்று மடிப்புகள்‌ (வளி) எனும்‌ துண்டுகளை இணைக்கும்‌ தங்கத்தசடு ஆக ஒட்டியாணம்‌ இருந்தது என்பது கருத்து.) V—27

மெல்லிடையாகய கொடி, நிதம்பம்‌ (புட்டம்‌) ஆய பாரத்‌தால்‌ அறுந்துவிழக்கண்ட பிரம்ம தேவன்‌, அதை இறக்கிவிட,
தளர்வாக முடிச்சுப்‌ போட்டானோ எனுமாறு சக்கிரவாகப்‌பறவை போன்ற முலைகளையுடைய அவளது ஆழமான உந்தி
அமைந்திருந்தது,(பிரம்மனின்‌ கயிற்றுமுடிச்சுப்‌ போல உற்தி இருந்தது என்றஉவமை நீயம்‌ சிறப்புறுகிறது.) V—28

நங்சையின்‌ நிதம்பம்‌ ஏனும்‌ பெயரில்‌ ஒரு மணல்‌ இட்டு– நதிக்கரை மணல்‌ திட்டுகளிலிருந்து தப்பி வந்துவிட்டது. அந்தக்‌
கணக்கு தெரியவே பிரம்மன்‌ : மனால்‌ திட்டில்‌ அன்னத்தின்‌ அடிகளாகிய குறியை இட்டான்‌.
(ஒரு பொருள்‌ காணாவிட்டால்‌ தெரிவதற்காக, கணக்கு அறிய குறியிடுவது வழக்கம்‌, மணல்‌ திட்டு ஒன்று நங்கையின்‌
நிதம்பமாகி காணாமற்போனது. . பீரம்மன்‌ மற்ற திட்டுக்களை கணக்கிட அன்னத்தின்‌ அடியாகய 3 என்ற குறியை இட்டு
வைத்தான்‌ என்பது கருத்து) V—29

வளத்தினைத்‌ திருடிக்‌ கொண்டது. எப்படி என்றால்‌, (திருடனின்‌ உடைகளைச்‌ சோதிப்பதுபோல) மட்டை புரிச்‌
தால்‌ உள்ளே பசு வால்போன்ற (மேலே அகன்று கழே குற்கிய) தண்டும்‌, பூவினையுரித்தால்‌ உள்ள நகம்‌ போன்ற மொட்டுக்களும்‌
(பூமூகைகள்‌ திருடர்களின்‌ ஒருவகைக்‌ கருவி போலுள்ளது) ௮தன்‌ சிகப்பும்‌ (பத்மராகக்‌ கற்கள்‌ எனும்‌ நவமணிகளும்‌) இருடியதின்‌
அடையாளங்களாகத்‌ திகழ்கின்‌றன. V—30

செல்வமிக்கவர்களானாலும்‌ அவளது தொடைகளுக்கு அடிமை செய்பவர்களாசத்தான்‌
ஆவார்கள்‌. செல்வமிக்க பெண்களின்‌ அங்கையின்‌ குடையும்‌ பூரண கும்பழம்‌ ரேகைசளாக அமைந்திருப்பது அடையாளமாகும்‌.
(அடிமைகள்‌ பிரபுவுக்கு குடைபித்து, பூரண கும்பம் பிடித்து வரவேற்பது போல–௮வள்‌ எழிலுக்கு தோற்ற பிற பெண்டிர்‌
தம்‌ கரங்கள்‌ குடை, கலச ரேகைகளால்‌ அடிமையாகின்‌றன என்பது கருத்து.) 5-31

நங்கையின்‌ சணுச்சால்‌ கலம்பிலுள்ள மரகதப்‌ பச்சையின்‌’ ஒளியால்‌ பசுமை படர்ந்து மன்மதனின்‌ குடும்பத்தைச்‌ செழிப்‌
பாகப்‌ பேணும்‌ செஞ்சாலிப்‌ பொதிபோல இருந்தது,
(நெற்பொதி (கதிர்விடுமுன்‌ உள்ள கருநிலை) சணுக்காலுக்கு உவமை கூறப்பட்டது.) V—32

நங்கையின்‌, மென்மையான, சணுக்காலின்‌, இணையாக வேண்டிய நெற்பொதி, தம்முன்னே முள்ளினை திறமையுடன்‌
அடக்கி வைத்திருந்தது, பின்னர்‌ நாட்படவும்‌ அடங்காது ௮வை (முள்‌) வெளிப்படவே (நாணத்தால்‌) தலை குனிந்தன.
(முதலில்‌ நெற்பொதி இணையாக இருந்தாலும்‌ நாட்படவும்‌ முள்வெளிப்படல்‌, நிறமாற்றம்‌, ஆ௫யெவையால்‌ இணையாக
முடியவில்லை, அதனால்‌ நாணுற்று தலை சுவிழ்ந்தது. நெற்‌ குதிர்கள்‌ முற்றியதும்‌ தலை கவிழ்தலை நாணுற்றதாக பல
சவிஞர்கள்‌ கூறியுள்ளனர்‌. அறிவு நிறைந்ததும்‌ தலை நிமிரீந்த செருக்கு நீங்கி தலை கவிழ்ந்து அடக்கம்‌ ஏற்படுவதாகவும்‌
கவிஞர்கள்‌ வருணிப்பர்‌.) 3.33

“உலகிலுள்ள பொருட்களுக்கெல்லாம்‌ செல்வண்ணம்புூசும்‌ இயல்பினராகய எம்மீது இனிவேறு செம்பஞ்சுக்‌ குழம்பு
(அரத்தகம்‌) பூசுவா?னன்‌? பேதைமை யல்லவா??* என்றுஅவளது பாதங்கள்‌, முகமாகிய விரல்சளினால்‌ நகமாகபய பற்‌
களைக்‌ காட்டிச்‌ சிரிப்பது போல, நங்கை எழில்‌ மிக்‌இருந்தாள்‌.
(வெண்பற்களாகிய நகங்களிலும்‌ செம்பஞ்சுக்‌ குழம்பு பூசும்‌போது செம்மை படியுமமே எனினும்‌, வெற்றிலை போட்ட பற்‌
களோடு சிரித்தன என்று கொள்க,) V—34

நங்கையின்‌ முழங்கால்‌ ஆமை3யாடு போல இருக்கும்‌, அவளீ நடையோ பிடிநடையாகும்‌. ஆமைக்கும்‌ பிடிக்கும்‌ (பானளைக்கும்‌)
ஏற்பட்ட போராட்டம்‌ எனப்படும்‌ பழமொழி இவளால்தான்‌ ஏற்பட்டது,
(கஜகச்சப (யானை, ஆமை) கலஹ நியாயம்‌ எனும்‌ வட மொழிப்‌ பழமொழியைக்‌ கருத்துட்கொண்டு இக்கவிதை உள்ளது
யானைக்கும்‌ முதலைக்கும்‌ ஏற்பட்ட போராட்டக்கதை தான்‌ பிரசித்தம்‌ யானை, ஆமை கலகக்கதை தெரியவில்லை. V—35

மங்கையின்‌ மேனி எழிலுக்கெதிரே, புது மஞ்சள்‌ துலைக்கு வர முடியாமல்‌ (இணையாகாமல்‌) மிகுந்த மாசுற்றது. அதனால்‌
தான்‌ அதற்கு இரா, ௮ல்‌, என்பனை போன்ற இரவின்‌ பெயர்‌ களையுற்று கரைந்து இராமலே, இல்லாது போனது.
(மஞ்சள்‌ நாட்படின்‌ மேல்தோல்‌ கருவண்ணம்‌ உறும்‌, மாசுறு வதாக சுற்பனை செய்யப்பட்டது. மஞ்சளுக்கு வடமொழியில்‌
இரவீன்‌ பெயர்கள்‌ எல்லாம்‌ பரியாய பதங்களாகும்‌. ராத்ரி, நிச, தமிஸ்ர, நிஸீதினி, கூப என்பன இரவின்‌ பெயர்கள்‌.
கரைதல்‌, கெடுதல்‌, தேய்தல்‌, என்ற பொருளின்‌ அடியாக இச்சொற்கள்‌ அமைந்தன. அவளது உடல்‌ பொன்‌ வண்ணம்‌
உண்ட மஞ்சள்‌ தோற்ற கரைந்து இல்லாது போயிற்று என்பது கருத்து.) 5-36

அந்த மதிமுகத்தினள்‌, பூமி ‘தவியாசலின்‌ அவளுடைய முன்னைய தோழியரான நாகக்கள்னிகள்‌, அவளை இணை
பிரீயாதிருக்க வேண்டி, பக்கத்து வீடுகளில்‌ வைணவர்களின்‌ மகளிர்களாகப்‌ பிறந்து, மராளிகா (அன்னம்‌) ஏகாவளி (ஒற்றை
வட முத்துமாலை) மனோக்ஞா (மனதை அறிபவள்‌) ஸ்ரக்விணீ (பூமாலை யுடையவள்‌) என்ற பெயரிகளுடன்‌ தோழியராகத்‌
திகழ்ந்தனர்‌. அவர்கள்‌ பொம்மைக்‌ கல்யாணம்‌ முதலிய விளையாட்டுக்களில்‌ லட்சுமி தேவி திருமண வைபவக்‌ கதைப்‌
பாட்டுக்களைக்‌ கேட்டுக்கேட்டு, வியப்புற்று, திருமாலின்‌ திருவிளையாடல்களில்‌, ஈடுபட்டு அவனையே மணம்‌ புரிய
வேண்டுமென முன்பிறவி. வாசனையால்‌, ஆசையுற்று அவனது இரு அவதாரக்‌ கதைகளை மீண்டும்‌ மீண்டும்‌ கேட்டின்புற்று மூழ்ந்தாள்‌. 1.37

அவளது  தந்‌ைத (பெரியாழ்வார்‌) திருமால்‌ தந்த செல்வச்‌ செழிப்பு மிக்சிருந்தும்‌ தனது முன்னைய மாலை தொடுத்துச்‌
சேவகம்‌ புரிதலை விடாது ஆர்வமுடன்‌ இருந்தமையால்‌, திருமாலின்‌ திருவிளையாடல்களையும்‌, வைணவபுராணங்களை
யும்‌ வியாக்கியானம்‌ செய்து கொண்டும்‌, நுரல்கள்‌ இயற்றிக்‌கொண்டும்‌ இருப்ப, அவர்‌ கட்டிய மணமிகு செங்கழுநீர்‌,
பூக்களை யுடைய தோமாலையை, கூந்தல்‌ சீவி, மன்மதனுக்கு மயிற்பிலியால்‌ இயற்றிய முடி (கேடகம்‌) போல, கருவண்ணக்‌
காளை மாட்டின்‌ இமில்போல சிறிதே இடப்பக்கம்‌ சாய்ந்த கொண்டையினடியில்‌ விருப்புடன்‌ சேர்த்து (கூந்தலில்‌ பூமாலை
சூடி) ணெற்று நீரில்‌ (தன்னெழில்‌) கண்டு மீண்டும்‌ பூக்குடலை யில்‌ வைப்பாள்‌. V—38

அந்நகிகை (கோதை) சிறிது மஞ்சள்‌ பூசிக்குளித்து கூறை (சேலை) யுடுத்தி, முலைக்குவட்டில்‌ மணம்‌ மிகுமாறு குங்குமச்‌
சாறு பூசி, கற்பூரத்‌ இலகமிட்டு, தந்‌ைத கட்டிய பூமாலையை விருப்புடன்‌ கூநீதலில்‌ சூடி, சிறிது நேரம்‌ வைத்திருந்து, மீண்டும்‌ களைந்து வைத்துவிட்டு தோழிகளைப்‌ பார்த்து வெய்துயிர்ப்‌பாள்‌. [39

நீங்கள்‌ பாடிய திருமாலின்‌ நடவடிக்கைகளை எந்த முறையில்‌ சேர்க்க முடியும்‌? தஷ்னை நாடிய நங்கையரையே
அருள்‌ செய்யாதவன்‌, எந்தப்‌ பெண்ணைத்தான்‌ காப்பாற்றினான்‌, TV—-40

அவன்‌ தேவன்‌, (வாமனன்‌) முனிவன்‌ (பரசுராமன்‌) அரசன்‌ (ஸீராமன்‌) ஆய உடலைத்‌ தாஙிகி பெண்களை வெய்துயிர்க்கச்‌
செய்ததைவிட அதற்குமுன்‌ எடுத்த பிறவிசகளாகிய, மீன்‌, ஆமை பன்றி, சங்கமாகிய உருவிலிருந்தாலே நல்லதாயிருந்திருக்கும்‌.
(பெண்களுக்கு விரகதாபத்துயர்‌ தராத முன்னைய பிறவி களில்‌ மட்டும்‌ பிறந்திருந்தால்‌ நன்றாயிருக்கும்‌ என்பது கருத்து)-5 41

அந்த (மீன்‌, ஆமை, பன்றி, சங்க)ப்‌ பிறவிகளில்‌ பெண்கள்‌ காதலிக்க வில்லையல்லவா? நல்லதாசப்‌ போயிற்று, ஒருவேளை
காதலித்தாலும்‌ விலங்குகட்கு மனிதர்கட்டுள்ள வேட்கை இராதல்லவா? (என்‌ இராது?) தெரியாமல்‌ ஏன்‌ இப்படிச்‌ சொன்னேன்‌. IV—42

*அத்மவத்‌ சரீவபூதானி’* (தன்னைப்‌ போலவே எல்லா உயிர்களும்‌) என்பது பொய்தான்‌. மனிதப்பெண்களாவது
ஆடல்‌ பாடல்களிலும்‌, சரச சல்லாபங்களிலும்‌, கதைகளிலும்‌ கொஞ்சமாவது விரகதாபத்தை அடக்கிக்கொள்ளலாம்‌.
வாயில்லா உயிர்களுக்கு நோயும்‌ அதிகம்தான்‌.
(தன்போலவே பிற உயிர்களையும்‌ கருதுவது எப்படி? மனிதர்கள்‌ வாயிருப்பதால்‌ பேசி மகிழ்ந்து ஆற்றியிருக்க முடியும்‌.
வாயற்ற விலங்குப்‌ பிறவிகளில்‌ எப்படி விரகதாபத்தை அடக்க முடியும்‌ என்பது கருத்து ) 14-43

இவன்‌ முன்பிறவிகளில்‌, காதலித்த சன்னியரின்‌’ கமலக்‌ கண்களில்‌ நீரை வரவழைத்தும்‌, அவர்கள்‌ உடலில்‌ புளகம்‌
உருமாறம்‌ செய்த வினைப்பயனால்‌ தான்‌, பின்னர்‌, நீரில்‌ இடக்கும்‌ மீன்‌, ஆமையாகவும்‌, புளகம்‌ போன்ற மயிர்கிலிர்க்கும்‌
பன்றி, சிங்கமாகவும்‌ பிறந்தான்‌. எனினும்‌ அந்த உண்மையை மறைத்து திறமையாக இருக்கிறான்‌. ivV—44

தேவன்‌, முனிவன்‌, அரசனாகப்‌.பிறந்த பிறவிகளில்‌ இவன்‌ தாமரைக்‌ கண்ணாரைத்‌ தண்ணளியின்‌ றித்‌ தவிக்கச்‌ செய்தான்‌
என்றேனே அதனை உங்கள்‌ பாடல்களிலிருந்தே தெரிவிக்‌கிறேன்‌. IV—45

முதலில்‌ விஷ்ணுழூர்த்தியாக, இவன்‌, பிருகு முனிவரின்‌ மனைவியைக்‌ கொன்று, அந்தக்‌ கிழவன்‌ (பிருகுமுனி) தன்னைப்‌
போல மனைவியைப்‌ பிரிந்து வருந்துவாயாக எனச்‌ சாபமிட எனக்கு அதுவம்‌ தேவகாரியமாகட்டும்‌’ கூறி
வாமனனாஇ (பிரம்மச்சாரியாகி) திருமகளைப்‌ பிரிவுத்துயரில்‌ ஆழ்த்தினான்‌ அல்லவா?
(இராமாயணம்‌ உத்தர காண்டத்தில்‌ பிருகு முனிவன்‌ சாபக்‌கதை வருகிறது, பிருகு முனிவனின்‌ மனைவி அசுரர்களுக்கு அபயமளித்துக்‌ காப்பாற்றியதால்‌ அவளை, விஷ்ணு கொன்றதாகக்‌ கதை.) IV—46

பிரளயகாலச்‌ சூரியனைப்‌ போன்ற கூரிய கோடாரி (பரசு)யாகிய வீணைக்‌ தண்டினால்‌, பகைவன்‌, பகைவனின்‌ நண்பன்‌,
நண்பனின்‌ பகைவன்‌ எனும்‌ முத்திறத்துப்‌ பகைவர்களின்‌ சம்மாசனங்களாகிய (மந்திர மத்திய தாரங்கள்‌) கட்டைகளில்‌
ஏழு தடவை (ஏழு சுரங்களில்‌) வாசித்து, தன்‌ தோள்‌ வலிகாட்டிய புகம்‌ எனும்‌ வீணையை மீட்டிய போது, விழைந்து
வந்த பூமியாகிய கற்பின்‌ செல்வியைத்‌ துறந்து காசியப முனிவனின்‌ மகளாகி.ச்‌ செய்யவில்லையா?
(பரசுராமன்‌, தன்‌ தந்தையைக்‌ கொன்ற கார்த்த வீரியார்ச்‌ சுனனின்‌ மக்கள்‌ மீது வஞ்சினம்‌ பூண்டு ஏழு தடவை பூமியை
வலம்‌ வந்து, க்ஷத்திரியர்களைக்‌ கொன்று அந்தக்‌ குருதியினால்‌ சமந்த பஞ்சகம்‌, எனும்‌ மடுவை உருவாக்கி பித்ரு தர்ப்பணம்‌
செய்தான்‌. அவன்‌ உலகை வென்றும்‌, காசியபன்‌ எனும்‌ முனிவன்‌ யாசித்ததுமே அந்த உலக முழுதுமே தானம்‌ செய்து
விட்டான்‌. உலகம்‌ காசியபன்‌ மகள்‌ ஆயிற்று. ஆதலில்‌ காசினி என்று பூமிக்குப்‌ பெயர்‌ உண்டாயிற்று பரசுராமன்‌ தான்‌ வென்ற
பூமியை ஆளாமல்‌ துறந்தான்‌ என்பதால்‌ இப்பிறவியிலும்‌ இருமகள்‌ (பூமி) எனும்‌ பெண்ணுக்கு ௮ரள்‌ செய்யவில்லை என்பது கருத்து.) IV—47

தனது அழகினைச்‌ சொல்லக்‌ கேட்டு, மனமுருகி, திருமகள்‌ (ராஜ்யலட்சுமி) அழைத்துத்‌ தாமசைப்‌ படுக்கையில்‌ இன்ப
முடைய அன்போடு கூடி இணைய வரும்போது, கொடுமையாகத்‌ துறந்து சென்று அவளைப்‌ பித்துறச்‌ செய்த காகுத்தனாகய
இராமனின்‌ நடவடிக்கைகளை உள்ளத்தில்‌ ஆராய்ந்து பாருங்கள்‌.
(இராமன்‌, அரசு அகிய திருமகளைத்‌ துறந்து பட்டம்‌ ஏற்காமல்‌ காட்டுக்குச்‌ சென்று அவளை பிரிவுத்‌ துயரில்‌
ஆம்த்தினான்‌ என்பது கருத்து.) 13.48

அழூய உருவந்தாங்கி, தன்னை நாடிக்‌ காதலித்து வந்த இராவணனின்‌ தங்கை (சூர்ப்பநகை) யை, நாலுபேர்‌ நகைக்கும்‌
படியாக அவ்விதம்‌ (மூக்கரிந்த செயல்‌) செய்யாமல்‌, எற்றுக்‌ கொண்டிருந்தால்‌, சம்பந்தியாகி, அந்த இராவணனும்‌ சினந்து
சீதையைச்‌ றை வைச்கமாட்டான்‌. வீணாகப்‌ பகை மூளச்‌ செய்து தனக்கும்‌, தைக்கும்‌ இராவணனுக்கும்‌, சூர்ப்பணகைக்‌
கும்‌ கேடுண்டாக்கிக்‌ கோண்டானல்லவா?
(சூர்ப்பணகசையை ஏற்றிருந்தால்‌ இத்துணைத்‌ துன்பம்‌ வராது என்றும்‌: நயந்து வந்த பெண்ணைக்‌ கொடுமைப்படுத்து
வது நியாயமா? என்றும்‌ கேட்டிறாள்‌ கோதை! பெண்கள்‌ உணர்வறிந்த பெண்ணுக்குத்தானே இரச்கம்‌ அதிகம்‌.) IV—49

ஓவென்றலறிச்‌ செங்குருதி ஓழமுக, உதடுகள்‌ துடிக்க, முகில்‌ முழக்கம்‌ என முறையிட்டவாறு, கொடி போன்ற வாள்‌ ஏந்திய
சந்தன மரக்களை போன்ற தோள்களைத்‌ தடுக்க பாம்பு போன்ற தன்‌ கரங்களைச்‌ சுற்றிய சூர்ப்பபகையை இங்க
மொத்த அவன்‌ மூக்கரிந்து கொடுமைப்‌ படுத்தவில்லையா?
(மூக்கரிந்தது இலக்குவனே எனினும்‌ பொறுப்பாளி இராமனாதலின்‌ இராமன்‌ மேலைற்றிக்‌ கூறப்பட்டது. கோயில்‌
கட்டுதல்‌ சற்பியேயாயினும்‌ அரசன்‌ கோயில்‌ கட்டினான்‌ என்பது போல) IV—50

வேண்டாம்‌ போ என்றால்‌ போக மாட்டாளா? அவள்‌ அரக்கி என்பதால்‌ பரிகாசம்‌ செய்து அலைக்‌ கழித்தல்‌ முறையோ? பெண்‌
குலமே நாணுமாறு அவளாகவே வந்தாள்‌! அது போதாதென்று பெண்ணைக்‌ கேவலப்‌ படுத்த வேண்டுமா? V—51

தன்னைத்‌ தழுவப்‌ பெண்ணாகப்‌ பிறக்க விரும்பிய முனிவர்‌ களை, தன்‌ பாதத்துக்குள்‌ (பொண்ணாக்கும்‌) ஆற்றல்‌ இருந்தும்‌ கூட, மற்றொரு பிறவியில்‌ (கண்ணன்‌ ஆக) ஆயரீ மகளிராகப்‌ பிறக்கச்‌ செய்து இணைந்தும்‌, அக்குரூரவன்‌ தூண்டுதலால்‌, அநீநங்கையரைப்‌ பிரிந்து மதுராபுரிக்குச்‌ சென்று விடவில்லையா?
(ஆடவர்‌ பெண்மை அவாவுறும்‌ அழகன்‌ என்று கம்பனும்‌ இராமனைக்‌ குறிப்பிடுவான்‌. முனிவர்கள்‌ பரம்பொருளைப்‌ பெண்‌ கோலத்தில்‌ சுவைக்க விரும்பி ஆயர்‌ மகளிராகப்‌ பிறந்தனர்‌ என்று பாகவதக்‌ கதை கூறுகிறது.) V—52

அயோமுகி, சூர்ப்பணகை ஆகியவர்களை அரக்கியர்‌ அழகற்ற வார்கள்‌ என நயவாது தண்டித்தான்‌ என்றால்‌ பலரா.மனாக, தன்னை விட வயதில்‌ மூத்த பனைமரம்‌ போன்றுயர்ந்த ரேவதியைத்‌ தான்‌ கிழவனாக இணையவில்லையா? கண்ணன்‌ ஆகி, கூனியாகிய (குப்ஜா எனும்‌) வேலைக்காரியை விரும்பி உக்கிரசேனனிடம்‌ தான்‌ சேவகனாக, கூனலைத்‌ திருத்தி ஏற்றுக்‌ கொள்ளவில்லையா?
(அழகு, இளமை இல்லாவிட்டாலும்‌ அன்பிருந்தால்‌ ஏற்றுக்‌ கொள்வர்‌ என்றும்‌, அரக்கியர்பால்‌ அன்பின்மையால்‌ அவன்‌ அவர்களை ஏற்றுக்‌ கொள்ளவில்லை என்றும்‌ கருத்து)
(கிழவன்‌ என்பது உரிமையுடையவன்‌ என்ற பொருளிலும்‌ கொள்க.) V—53

முராரி, (கண்ணன்‌) பிருந்தாவனத்தில்‌ தன்னை எல்லோரும்‌ காதலித்திருந்தாலும்‌ சிலரைப்‌ புணர்ந்தும்‌ சிலரை விரகதாபத்‌
கால்‌ வருத்தியும்‌ ராதையிடம்‌ மட்டும்‌ ஈடுபாட்டுடன்‌ இருந்து எல்லாப்‌ பெண்டிரையும்‌ மனவருத்தம்‌ செய்யவில்லையாச்‌ VY—54

என்று, இவ்விதமாக, நாணம்‌ மிகுதியினால்‌ நிந்திப்பது போல மீண்டும்‌ மீண்டும்‌ நினைந்து திருமாலைப்‌ பற்றிப்‌ பேசவுல்‌,
தோழியர்‌ அவளது உட்கரந்துறையும்‌ காதலையுணர்ந்து
கொண்டு “இந்தத்‌ தோழி திருமாலிடம்‌ ஈடுபட்ட கன்னிக்‌ காதலுடையவளாய்‌ நாணத்தால்‌ வெளிப்படக்‌ காட்டாமல்‌, புடமிட்ட பொன்‌ போல, உள்ளம்‌ வெதும்பி, சிக்குற்று, நாள்‌ தோறும்‌ சிரித்தவாறே சங்கடப்பட்டுக்‌ கொண்டிருக்கிறாள்‌.
இந்நங்கையின்‌ தனிமை (மறைவான உணர்வுகளை) நீக்கி நம்மோடிணைந்து கலந்துறவாடச்‌ செய்து, நம்மிடம்‌ மறைக்கும்‌
மனக்‌ கருத்தினை (இங்கிதம்‌) தானே தெரிவிக்கும்படி செய்து சுவலையை நீக்காவிட்டால்‌ மோசம்‌ நேரும்‌” என்று சிரித்தவாறு குறிப்போடிவ்வாறு கூறினர்‌.V—54

எல்லோரும்‌ இப்படித்தான்‌, உயிர்த்துணைவரீகள்‌ நெடுந்‌தொலை பிரிந்திருத்தார்கள்‌ என்றால்‌, பிரிவுத்‌ துயரால்‌
வெய்துயிர்த்து குற்றங்கூறாமலிருக்க மாட்டார்கள்‌. பின்‌ அவரிகள்‌ தம்‌ வசப்படினோ, யாரையும்‌ பொருட்படுத்தாமல்‌
அவர்களோடிணைந்து இந்திரன்‌ சந்திரன்‌ என்று புகழ்வார்கள்‌ .
அதன்‌ பிறகு இணைவித்த தோழியரும்‌ பயனற்றவர்களாக நினைப்பார்கள்‌. இத்தகைய நிலை உன்‌ தலையிலும்‌ விடிந்தது போலும்‌. | V—56

எனலும்‌, இளநகை யரும்ப, வெளிக்காட்டாதடக்க, சிறிது . சினம்‌ வரவழைத்துக்‌ கொண்டு, &முதட்டைக்‌ கடித்துக்கொண்டு,
அத்தோழியரை பந்தினால்‌ மெல்ல வீசி எறிந்து, அக்கம்பக்கம்‌ பார்த்தவாறு மெதுவாகச்‌ சொன்னாள்‌. V—57

இடைவிடாத உஙிகள்‌ பாட்டு அழகாக இருந்ததினால்‌, மீண்டும்‌ பாடச்‌ சொன்னேனே யன்றி வேறல்ல. இது தவறா?
பாயசம்‌ மீண்டும்‌ கேட்டால்‌ ஏழைகளாக விடுவரே? பழி தூற்றா தர்கள்‌. அவனோடெனக்கென்ன வேலை?
(விருந்தில்‌ பாயசம்‌ மீண்டும்‌ வேண்டினால்‌ அவர்கள்‌ ஏழைகள்‌தான்‌ என்பதில்லை. செல்வந்தரும்‌ சுவைத்துக்‌ கேட்கலாம்‌ என்ற
பழமொழியைக்‌ கூறி இசைக்கு மயங்கனே?னேயன்றி இறைவனை நாடவில்லை என்றாள்‌ கோதை) ப V—58

அந்தப்‌ பேச்சை விடுங்கள்‌ என்று கோதை கூற தோழியர்‌, இவ்விதம்‌ கூறலானாரீகள்‌. :அகட்டும்‌, நீ சொல்வது உண்மை
இனிமேலேப்‌ போதாவது, இனிக்கொஞ்சநேரம்‌ கழித்தாவது, நாளையேனும்‌, நீ அவனுடைய குணங்களையோ
குற்றங்களையோ சொன்னால்‌ அப்போது சொல்லுகிறோம்்‌ஸ்ரீ உன்‌ மனம்‌ அவனிடம்‌ ஈடுபட்டிருப்பதை மழைத்து எங்களை ஏமாற்றப்‌
பார்க்கிறாயா? V—59

நீ முகத்தைத்‌ திருப்பிக்‌ சொண்டு (பிறஈறியாது) நகநுனியால்‌ துடைத்தெரிந்த கண்ணீர்த்‌ துளிகள்‌, விளக்குச்‌ சுடரில்பட்டு
௪ட௪ட என்ற ஓசை எழுப்ப நீ அழுவதைத்‌ தெரிவிக்கவும்‌, மிகுந்த வருத்தமுடன்‌ மறைவாக (உஸ்‌ என்று) வாயால்‌
நெட்டுயிர்த்தல்‌, மெல்லிய இடையின்‌ பக்கங்கள்‌ அடிக்கடி அசைவதால்‌ தெரிவிக்கவும்‌,
(நாங்கள்‌ பேச்சுக்‌ கொடுக்கும்போது) இடுக்கிட்டு தமுதழுத்த
குரலைச்‌ சரி செய்ய நீ முயலும்‌ முயற்சியே நின்‌ நிலையை வெளிப்படுத்தவும்‌,
(பெண்ணாகப்‌ பிறந்ததே தவறு என்று) பெண்பிறவியை விரகத்துயரால்‌ நிந்திக்கும்‌ உன்‌ நடவடிக்கைகளை உன்‌ துயரை
எடுத்துக்‌ காட்டவும்‌, பிரிவாற்றாது படுக்கையில்‌ புளுவதே துயிலின்மையை புலப்படுக்க, தணிவு (இறந்து விடுவோமா என்ற
மனத்துணிவு) உள்ளுக்குள்ளேயே நீ சிரித்துக்‌ கொள்வதே புலப்படுத்த, எங்கள்‌ மேல்‌ (தோழியர்பா&்‌) காரணமில்லாமல்‌
கோபித்துக்கொள்வது உன்‌ மனக்கலக்கத்தை உணர்த்த, நங்காய்‌ நீ. இரவில்‌ படும்‌ அவத்தையைக்‌ காட்டும்‌
அடையாளங்கள்‌ அல்லவா?” V—60

(ஒருதோழமி சொல்கிறாள்‌)
அ ஒரு அற்புதம்‌ உங்களுக்குத்‌ தெரியாதல்லவா? இந்தத்‌ தோழி (கோதை) பொய்கையீல்‌ குளிக்கப்போகும்போது தன்‌ முத்து
மாலையை என்னிடம்‌ ஒப்படைத்தாள்‌, நானும்‌ அவளுடன்‌ சென்று மறந்துபோய்‌ கூடவே குளிக்க நீரில்‌ இறங்கினேன்‌
(வீரகதாபத்தால்‌ முன்பே பொரிந்திருந்த முத்துமாலை) நீரில்‌ பட்டதும்‌ சுண்ணாம்பாடிவிட்டது. : அவளே௱
வற்புறுத்தி தனது நகையைத்‌ (முத்துமாலை) தருமாறு கேட்கி றாள்‌! கேட்ிறா3ளயன்றி தன்‌ நிலைமையை கிறிதும்‌ உணர்ந்த
தாகத்‌ தெரியவில்லை. v—61

எனலும்‌, மராளிகா எனும்‌ தோழி சொல்வாள்‌ “கேட்டாயா ஹரிணி/ ஒரு நாள்‌ கஸ்தூரி எடுத்துக்கொண்டு போய்‌ எனக்கு
பொட்டுவை என்று அன்புடன்‌ (கோதையை) கேட்கவும்‌ அவள்‌ பொட்டிட முனைந்தாள்‌, சுரீர்‌ என்று முகத்தில்‌ சுட்டதுபோல
அவள்‌ நெட்டுயிர்ப்புக்காற்றினால்‌ கஸ்தூரி காய்ந்துபோகவும்‌, அதை நகத்தால்‌ சுரண்டி எடுக்கவும்‌, மீண்டும்‌ வைக்கவும்‌,
காய்ந்ததைச்‌ சுரண்டவு3ம நேரம்‌ சரியாகப்‌ போய் விட்டது v—62

எனலும்‌, சிரக்வினி எனும்‌ தோழி சொன்னாள்‌… *தோழியரே/நான்‌ இவளை பூங்கொடி ஊஞ்சலில்‌ ஊக்கும்போது, இவளது முலைப்‌ பாரத்தினால்‌ பூங்கொடி அறுந்து வீழின்‌ எவ்விதம்‌ தாங்குவது என்று ஐயுற்று கைலாஇல்‌ இவளைத்‌ தூக்கிப்‌ பார்க்கவ நடுப்பகலில்‌ வாடிய தட்டைப்பொம்மை போல எளிதாக (இ3லசாக) என்‌ கைகளில்‌ இருந்தாள்‌”, v—63

என்றிவ்வாறு தன்‌ நிலைமை தோன்றும்‌ படியாகக்‌ கூறவும்‌, அவற்றைப்‌ பொருட்படுத்தாதவள்போல அவர்களிடம்‌ இவ்விதம்‌ கூறினாள்‌. V— 64

ஆற்று விக்கவும்‌, தீரீத்துவிடவும்‌ மிகுதிறமையுடைய தோழிகள்‌ போல நீங்கள்‌ ஏதேதோ பேசுகிறீர்கள்‌! என்மீது எவ்வளவே அக்கறை இருப்பது போலக்‌ காட்டுகிறீர்கள்‌ உங்களுக்கேன்‌ இந்தக்‌ கவலை எல்லாம்‌? V—65

என்று பரிகாசம்‌ செய்துகொண்டு, ம௰க்கடித்துப்‌ பேக புடமிட்டதுபோல விரகத்துயரால்‌ வெய்துயிர்த்து, அந்நங்கையர்‌ திலகம்‌, அடக்கியும்‌ அடக்க முடியாமல்‌ இரவில்‌ ஒவ்வொரு சமயம்‌ தனக்குள்‌ இவ்விதம்‌ கூறிக்கொள்வாள்‌. v—-56

புதிதாக அலர்த்த வேளை மலர்‌ போன்ற கருவண்ணமுடைய மென்மையான இடது தோளில்‌ மகர குண்டலம்‌ தொட்டுக்‌
கடக்க, இணையற்ற முகத்‌ 9ெழில்‌ எனும்‌ திருவார்ந்த இளமையை நிலைநிறுத்தும்‌ வேப்பிலையோ என புுவத்தைச்‌
காட்டியும்‌, பருவத்தலர்ந்த பந்தூகம்‌ (உச்சிதிலகம்‌*) போன்ற இதழ்கள்‌ சிந்தூர. மழை பொழிய, ஒளி பொருந்திய கண்ணிணைகளின்‌ ,
பார்வை, காதிலணிந்த குண்டலங்களின்‌ ஒளியோடிணைய, ஏழு உலகங்களிலுள்ள மகளிரையும்‌ மகிழ்விக்கும்‌ ஏழுவிதமான
(சப்தசரங்களாகய) மதகுகள்‌ மூலம்‌ அமுதம்‌: பொழிவித்திடல்‌ போல குழல்மேல்‌ விரல்களை மாற்றி மாற்று வைத்து (ஊது)
ஆய்ச்சியரை மயக்க முறச்செய்தனையோ? V—67

அந்தோ. ராதையே/ உனக்குத்‌ தகுநீிததுதானா? (முறையா) கணவரையும்‌ மாமன்மாமியரையும்‌ விடுத்து (ஏமாற்றி வந்து) முகுந்தனின்‌ வேணுகானம்‌ (குழலிசை) ஆய வீளைக்கு (விளிக்கும்‌ ஒசை) ஆட்பட்டு, மான்களின்‌ கூட்டம்‌ போல வந்து, (திராசையுற்று) விரகதாபத்தால்‌ வெந்து, பயந்து, இரவில்‌ வந்த ஆய்ச்சியர்களை வருத்தமுறச்‌ செய்து, நீ ஒருத்திம்ட்டும்‌ அவன்‌ நலம்‌ முழுமையும்‌ குத்தகைக்கு எடுத்தாற்‌ போல்‌ இன்பத்தில்‌ திளைத்தாயே/ (இது தியாயமாகுமா?) V—~68

அக்கமலக்‌ கண்ணன்‌, ஒருத்தியைத்‌ தன்‌ தோளில்‌ ஏற்றிக்‌ கொண்டு பூம்‌ புதார்க்காட்டிற்கொண்டு போகவும்‌, பிற
நங்கையர்‌ எல்லாம்‌, யமுளைக்‌ கரையில்‌, சுமையால்‌ மிகவும்‌ அழுத்திய அடிச்சுவடுகளைப்‌ பின்பற்றித்‌ தேடிச்‌ செல்வர்‌,
சென்று தேடி அங்கே எதைக்‌ காணப்போடறார்கள்‌? பெண்‌களுக்குத்‌ தன்மானம்‌ வேண்டாமோ? V—69

வீட்டை விட்டுக்‌ கனவிலும்‌ வெளியேறாத சுற்புடைய மகளிரைச்‌ கூட்டி, விடுபவளாக, அச்சத்தை நீக்கி, கண்ணனின்‌
கலவி இன்பச்‌ சுவையைக்‌ காட்டி, பிறகு, அவர்கள்‌ வீரகதாபத்‌தால்‌ உன்னுடைய மணல்‌ திட்டுகளில்‌ வருத்தத்தால்‌ புரளச்‌
செய்தனை! கொடுங்கதஇர்ச்கற்றையுடையவனின்‌ மகள்‌ அல்லவா நீ!
(கொடுங்கதிர்களையுைய சூரியனின்‌ மகள்‌ யமுனை/ யமனின்‌ சகோதரியுமாவாள்‌! ஆதலின்‌ மரபு வழிப்பட்ட
கொடுமை உனக்கும்‌ ஏற்பட்டது என்பது குறிப்பு. உள்ளச்‌
சூட்டைவிட மணல்கதிட்டுச்‌ சூடு குறைந்தது ஆதலின்‌ அதில்‌ துன்பத்தால்‌ புரண்டனர்‌ என்றும்‌ குறிப்புள்ளது) V—70

என்று தனித்துத்‌ தனக்குள்‌ சொல்லிக்கொள்ளும்‌ சொற்‌ களைக்‌ கேட்ட அருகிலிருந்த தோழியர்‌: முகத்தில்‌
சிரிப்பு ஏனும்‌ நிலவொளி கால, வெளிப்பட்டு, நங்காய்‌,!
என்னென்ன உன்‌ மனபறிந்துதானே முதன்‌ முதலிலேயே அவனைப்‌ பற்றிய பேச்சுக்களைவிட இயலாது என்று
சொன்னோம்‌ என்று நினைஷூட்டவும்‌, சிறிது தலை சுவழ்ந்தவளாக, முகம்‌ வெளுப்ப குறு நகையடக்கிக்கொண்டு, இனியும்‌
மறைக்க முடியாமற்‌ போகவே, அவர்களோடு கலந்து இவ்வாறு கூறினாள்‌. V—72,

“மலரன்ன மங்கையரே! அன்று நாம்‌ இருந்திருந்தால்‌ எப்படியிருப்போம்‌?2’* எனலும்‌ அவர்கள்‌ பதிலுக்கு அவளிடம்‌
கூறினர்‌. “நங்காய்‌ அன்று நீ இல்லாமல்‌ எங்கே போய்‌ விட்டாரய்‌2”* என்றலும்‌ வியப்புடன்‌ கோதை கூறினாள்‌, V—72

“தோழியரே! முக்காலமும்‌ உணர்ந்த முனிவர்கள்‌ போலச்‌ சொல்கிறீர்கள்‌! அத்தகைய ஞானம்‌ உங்களுக்கிருந்தால்‌
சொல்லுங்கள்‌, முதலில்‌ நான்‌ யாராக இருந்தேன்‌?“ எனவும்‌, அவர்கள்‌ மீண்டும்‌ இவ்விதப்‌ கூறலானார்கள்‌, V—73

“சம்மலர்க்‌ கண்ணினாய்‌! வானுலகப்‌ (பாரிவிதப்‌) பூவை சக்களத்தி (ருக்மணி)யிடம்‌ தந்ததைக்‌ கண்டு, பொறுக்காமல்‌,
சிறிய செய்தியைப்‌ பெரியதாக்க, சினமும்‌ பொறாமையும்‌ கொண்டு, பூவோடு போகாமல்‌ மரத்தையே கொண்டு வருமாறு
கணவனை ஏவி, மருந்தென மரமே கொண்டு வருமாறு போலகெடுவைத்துத்‌ தருவித்த அப்போதைய சத்தியயாமையல்லவா நீ்‌ *
(மருந்து கொண்டு வரச்சொல்லின்‌ மரத்தையே கொண்டு வருமாறு என்பது பழமொழி. அனுமன்‌ மருந்துக்காக
மலையையே கொணர்ந்தது போல என்பது குறிப்பு. செம்மலர்க்‌ கண்ணினாய்‌! என்பதில்‌ சனந்ததால்‌ (செம்மை படர்ந்த கண்‌
என்று குறிப்பால்‌ சத்திய பாமையே நீ என்ற கருத்தை விளக்கும்‌)V—74

திடீரென (உடனை) உதித்த ஞானம்‌ உடையவளாய்‌, வீட்டில்‌ விளக்கேற்றியதும்‌ வீட்டிலுள்ள பொருள்கள்‌ எல்லாம்‌
உடனே புலப்படுவது போல, முற்‌ பிறவியில்‌ கண்ணனோடு விளையாடிக்‌ கவித்த இனிய அனுபவங்கள்‌ அப்போது துய்த்தாற்‌
போலத்‌ தோன்றவும்‌, V—75

பரந்த கண்களில்‌ தோன்றிய கண்ணீர்‌, (கண்ணீல்‌ கட்டிய)மையோடு கலந்து, செவித்துளையில்‌ நிறைந்து, அருகிலுள்ள
கூந்தலுக்குத்‌ தாய்ப்‌ போலப்‌ பேணவும்‌ ஏலவள்ளி போன்ற தன்‌மேனியில்‌ பூ மொட்டுகள்‌ போலப்‌ புளகமுற்று, தளர்ந்த
மேனியளாய்‌, மயங்கிவிழவும்‌, தோழியர்‌ கண்டு மனம்‌ பதைத்து ஆ/ என்றலறியபடி. அன்போடு அருகணைந்தளர்‌.
(கண்ணீர்‌ கருமையினால்‌ கருங்குழலுக்கு மேலும்‌ வண்ணம்‌ பூச, தாய்போலப்‌ பேணியது என்பது குறிப்பு) 77-76

“தாமரைக்‌ கண்ணினாளின்‌ செயல்கள்‌ எந்த அளவுக்குக்‌ கொண்டு போய்‌ விட்டது பார்த்தீர்களா? அதோடு நிற்காது
இவளது முற்பிறவியைப்‌ பற்றிய செய்திகளைக்‌ கூறி நகத்‌தளவினை மலையளவாக்கி (கடுகனைமலையாக்கி) விட்டோம்‌.
என்று கூறி குவளையுமிழ்ந்த நீரோடு பனைமடல்‌ வீசிறியோடு விசிறி மென்மையான பனித்துளிகள்‌ பெய்து ஆற்றுவிக்கவும்‌,77

உணர்வு வரவும்‌, கண்‌ திறந்து, மீண்டும்‌ தாமரைக்‌ கண்‌களையுடைய கோதை, கண்ணனின்‌ திருவடிகளை ‘ நினைந்து
அசைவற்று, கண்களை மூடி, மீண்டும்‌ கண்ணீர்‌ நிறைந்து இமைகளைத்‌ தள்ளி கண்‌ திறந்து பார்த்துத்‌ தோழியரிடம்‌ கூறினாள்‌. V—78

நீங்கள்‌ யார்‌” எனலும்‌’? அழகிய நங்காய்‌, நாங்கள்‌ நாகக்கன்னியரி, முன்பே பூலோகத்திற்கு வந்தோம்‌’” என்றனர்‌
எனலும்‌ அந்‌ நங்கையரைத்‌ தழுவிக்கொண்டு ஆர்வமுடன்‌ கூறினாள்‌. V—79

“அத்தகைய முராரி (கண்ணன்‌)க்கு அப்போது காதலியாக இருந்து, பின்‌ இக்‌ கலிகாலத்தில்‌ மீண்டும்‌ பிறந்து பிரிவுத்துயரில்‌ வருந்தும்‌ இந்த உடல்‌ எதற்காக? இத்தகைய என்னை எனது தந்தை இன்னொருவனுக்குத்‌ தருவதற்கு முன்பே யோகசக்தி யால்‌ உடலை மாய்த்துக்‌ கொள்கிறேன்‌! மீண்டும்‌ கண்ணனின்‌ பாத தாமரைகளைப்‌ பற்றுவேன்‌” “, V—80

எவள்‌ காதலனைப்‌ பிரியும்‌ துயரினுக்குஞ்சி உடனே உடலைத்‌ துறப்பாளோ, அவளது மனமே தசுரயபக்தியுடைய
தாகும்‌. மற்றதெல்லாம்‌ வஞ்சக முடையதுதான்‌. 8)

என்று (கோத) கூறவும்‌, அவர்கள்‌ கூறினர்‌. “ அந்தக்‌ கண்ணன்‌ எங்கேபோய்விட்டான்‌?”” கேள்‌; இருவரங்கத்தில்தான்‌
அருக்கிறான்‌! விரைவெதற்கு? அவனே உன்‌ கணவளாவதற்கு அர்ச்சனைகள்‌ முதலியவற்றால்‌, இந்த (திருவில்லிபுத்தார்‌)
ஊரிலுள்ள ஆரி (வடபெருங்கோயிலுடையான்‌)யினைப்‌ பூசிப்பாயாக!’ * V—82

*அஞ்சேல்‌” எனவும்‌, மனம்‌ தெளிந்தாள்‌. பின்‌, அதிலிருந்து, அடிக்கடி தோழியர்‌ கூறும்‌ தெளிவுரைகளாகிய வெண்
(முத்துக்களும்‌, கவலைகளாகய ௧௫ (*லமணி)களும்‌ சுலந்து நகையணியாதக மெலிவுற்ற அவள்‌ இதயத்தில்‌ இடை இடை
மணிகோத்த பன்னசரம்போல இருந்தது.
(தெளிவுரைகள்‌ முத்துக்கள்‌, கவலை நீலமணிகளாக, இதயத்தில்‌ பிரதிபலித்தது என்பது கருத்து) V—83

காத்திருந்து எப்போதும்‌ சுண்ணுறங்கவிடாமல்‌, மன்மதண்டி சண்டைக்‌ கிழுத்தவாறிருக்க, வெண்ணிற (வளர்பிறை) கருநிற
(தேய்பிறை) இரவுகளாகிய முள்ளம்‌ பன்றியின்‌ முள்‌ வீட்டில்‌ வைத்தாற்போல மதிமுகத்திளளுக்காயிற்று,
(முள்ளம்‌ பன்றி முள்‌ வீட்டில்‌ இருந்தால்‌ கலகம்‌ வரும்‌ என்பது ஐ.கம்‌. அந்த முள்‌ கருப்பும்‌ வெளுப்பும்‌ ஆமாறு போல
வளர்பிறை தேய்பிறைகளாகய இரவுகள்‌ முள்போல குத்தவைத்து மன்மதன்‌ போரிட்டான்‌ என்பது கருத்து) -34

கதுளிர்களே ஆயுதமாக உடைய மன்மதனின்‌ அணையால்‌, காலை எனும்‌ பீரங்கி வீரன்‌, நங்கையின்‌ உறுதியாகிய பெருங்‌ கோட்டையை வீழ்த்த, நாள்‌ கோறும்‌ சினத்துடன்‌ மென்மை யான சூரியனின்‌ இளங்கதிராகய வத்தியின்‌ சுடர்பட்டு விரிந்த தாமரைக்‌ தண்டாகய இருப்புக்‌ குமா (பீரங்கி)யின்‌ துளை நின்று புறப்பட்ட கருவண்டுகளாகிய குண்டுகளைப்‌ பிரயோக௫ித்‌ தானி.
(மாலையில்‌ தாமரை மலருட்‌ புகுந்த கருவண்டுகள்‌ இகழ்‌ ஹடப்பட்டபின்‌, காலையில்‌ கதிர்பட விரிந்ததும்‌ இதழ்‌ விரிய வெளியேறியது. பீரங்கியிலிருந்து புறப்பட்ட இரும்புக்குண்டு களாக உவமிக்கப்பட்ட நயம்‌ பாராட்டற்பாலது) V—S85

நங்கையின்‌ உறுதியைக்‌ கெடுக்க, அருகில்‌ நடுப்பகல்‌ என்னும்‌ மந்திரவாதி, பனி நீர்த்துளிகள்‌ சிந்தும்‌ இல்லத்தில்‌ காவித்‌ துகில்‌ போரீத்த மாலையை விதானத்தின்‌ கீழ்‌ அமர்ந்து குடயற்திர ஏற்றம்‌ ஆகிய உருட்டினான்‌,
(குடங்களைச்‌ சச்கரத்தில்‌ கட்டி ஏற்றமாக இறைக்க ஒன்று கீழே நீர்‌ மொண்டு கொண்டும்‌ ஒன்று மேலே நீரைச்‌ இந்திக்‌ கொண்டும்‌ இருக்கும்‌ வகையிலமைந்த கமலையாகும்‌. இது இன்றும்‌ வடநாட்டில்‌ கிணற்றில்‌ நீர்‌ இறைக்கப்‌ பயன்படுத்தக்‌ காணலாம்‌. இது ஜபமாலை உருட்டுவதாக உவமிச்கப்பட்டது. பிறரை அழிக்க *அபிசாரஹோமம்‌” செய்வது போல நங்கையின்‌ உறுதியைக்‌ குலைக்க, நடுப்பகல்‌ முயன்றது என்பது கருத்து)1/..-660

தாமரை கேள்வனாகிய சூரியனாகய முகமுடையதும்‌ மல்லிகை மலர்கள்‌ ஆகிய பல்லினையுடையதும்‌, குவளை மலர்ப்‌ ந்தாதாகிய மேனி வண்ணமுடையதும்‌, தேன்வண்ணத்தாரகை களாகிய கண்களையுடையதும்‌ ஆகாய மரத்தில்‌ திரியும்‌ மாலை யாகிய பெண்‌ குரங்கு குட்டிகளாகய சக்கரவாகங்களின்‌ இச்சுக்‌ குரலோடு கூடியதாக–அந்த நங்கையின்‌ கவலையா இரவு களில்‌ (கனவில்‌) தோன்றி வருத்தியது.
(கனவில்‌ குரங்கு தென்படுவது  என்பது ஐதீகம்‌ மாலையே குரங்காகக்‌ காணப்பட்டதாகச்‌ கற்பனை) 37-67

இவ்விதம்‌ காலை, நடுப்பகல்‌, மாலை ஆய வேளைகளிலும்‌ வருந்தி, அற்ற மாட்டாது. அற்நங்கை, அங்கிருக்கும்‌ திருமாலை ண்டும்‌ அடைய மனளத்துட்கறாதினாள்‌. V— 88

தாமரை முகத்தினளளாகிய கோதை, தினந்தோறும்‌ விடியற்‌ காலையில்‌ மெளனமாகக்‌ கடவுளை வணங்கி எழுந்து, தோழியர்‌
தங்கப்பாத்திரத்தில்‌ மஞ்சளும்‌, நெல்லிக்காய்‌ முதலியவையும்‌ குளித்தற்குரிய பொருட்களைத்‌ தரவும்‌, துவைத்த துகிலும்‌,
கூந்தல்‌ உலார்த்தத்‌ துணியும்‌ எடுத்துக்‌ கொண்டுபோய்‌, வீட்டருகிலுள்ள தோட்டக்கிணற்றிற்குச்‌’ சென்று இவ்விய பிரபந்தப்‌
பாடலைப்‌ பாடியவாறு குளித்தெழுந்து, மஞ்சள்‌ பூசிய எழில்‌ மேனி அசைவின்‌ ஒளி வீச்சுகள்‌, இளங்கதிர்‌ வெயிலுக்கு மாறு
கொள்ள, (போட்டிடபோட) நீண்ட கூந்தலைப்‌ பின்னுக்கு முடித்து விரைந்து ஈரம்புலர்த்தி நியமப்படியே V—89

முல்லை முகை வென்ற பல்லினளாகிய கோதை, நெற்றியில்‌ பூசணிவிதை போல திருமண்‌ (நாமக்கட்டி) திலகம்‌ நீட்டி
யானையின்‌ மத்தகத்தில்‌ சிந்தாரம்‌ போல நிதம்பங்களில்‌ செவ்‌ வண்ணப்‌ பட்டாடையுடுத்தி இருந்தாள்‌. குளிர்ந்த இரவில்‌ பூசிய
புனுகன்‌ மணத்திற்கு வண்டுகள்‌ வந்து விருந்தயர கூந்தல்‌ ஈரம்‌ மணம்‌ பரப்பிட V—90

கோயிலுக்குச்‌ சென்று, தான்‌ கட்டிய செங்கழுநீர்‌ பூமாலையும்‌, மரத்தில்‌ பழுத்த கதலிப்‌ பழக்குலையும்‌ கொண்டு
சென்று, நம்பி (பூசாரி) மக்களை விலக்கி வழி செய்யப்போந்து, திருமாலை வணங்கி வழிபட்டு, கருவறைத்‌ திண்ணையில்‌ பல்‌
வண்ணக்‌ கோலமிட்டு 4.91

காராம்பசுவின்‌ நெய்‌ பெய்த பெரிய விளக்கில்‌ சுடரேற்றி துவய மந்திரத்தை உச்சரித்தவாறு திருமார்பிற்‌ சாற்றி, அகில்‌
புகையிட்டு, சர்க்கரை, நெய்‌ கலந்த வாழைப்பழத்தை நைவேத்தியம்‌(படையல்‌) சமர்ப்பித்து. V—92
* அதுகாலையில தாமமை மலபாதாதலின செங்கமுநீர்ப்‌ பூமாலை கொண்டு சென்றாள்

நறுக்கிய பாக்கும்‌, இஞ்சித்‌ துண்டுகளும்‌, கற்பூரத்‌ தண்டுகளும்‌ கலந்த தாம்பூலம்‌ (வெற்றிலை) மிகுந்த பக்கியுடன்‌
சமர்ப்பித்து, தோழிகளுடன்‌ புறப்பட்டு V—93

நங்கை, கருப்பகிரகத்தைப்‌ பிரதட்சினம்‌ செய்து (வலம்‌ வந்து) வணங்கி தலையில்‌ சடகோபம்‌ (சடாரி) தரித்து, சரண
இர்த்தம்‌ பெற்றுக்‌ கொண்டு, பிரசாதமாகக்‌ இடைத்த பூமாலையை அணிற்து கொண்டு, இல்லத்திற்குச்‌ செல்வாள்‌. V—94

அச்சுதன்‌ (வடபெருங்கோயிலுடையான்‌) திருவடிகளைத்‌ தினந்தோறும்‌ பூசை செய்து வந்து, பிரிவாற்றாமையாலே உறுதி
யிழந்தவளாகி, அப்பெருமானின்‌ குணங்களை தமிழ்‌ மொழியில்‌ (த்ரவிடபாஷன்‌) பாடிக்‌ கொண்டிருப்பாள்‌. V—95

இளவேனில்‌ ஏற்கனவே சூடி. கொடுத்தவளின்‌ (அமுக்க மால்யத) காதல்‌ வெம்மையாகிய கதிரவனால்‌ சுட்டெரிக்கப்பட்டு வெப்‌
புற்ற தென்திசையை எனது சூடும்‌ கூடினால்‌ முழுவது?ம கரிந்துவிடுமென்று விலகிக்கொண்டானோ எனுமாறு வடதிசை
நோக்கிக்‌ கதிரவன்‌ புறப்பட்டான்‌.
(தட்சிணாயனம்‌ விட்டு உத்தராயணம்‌ நோக்கி (மகர சங்கி ராந்தியன்று) சூரியன்‌ வடக்கு முகமாகப்‌ புறப்படுதல்‌ இயல்பு) V—S6

கொடுங்கதர்களையுடைய கதிரவன்‌ அப்போது குபேரனின்‌ (வடக்குத்‌) இசைக்குத்‌ சென்றதன்‌ காரணம்‌, தெரிந்துவிட்டது.
நங்கையின்‌ தாங்கரிய வீரகதாபத்தின்‌ தீச்சுட்ட தென்இசையில்‌ இருந்ததால்‌ உண்டான தன்‌ மேனிச்‌ சூட்டினைத்‌ தணிக்க
வேண்டி, சனவுருவடைந்த தண்ணீராகிய சிவபிரானின்‌ மாம னாகிய இமயமலைச்‌ சாரலில்‌ குனிர்மையுற்று உய்வதற்காகத்‌தான்‌. V—97

மன்மதன்‌ சினற்து (விரகமுற்ற நங்கையரீமேல்‌, படை எடுத்து வரும்போது அவன்‌ கொடியில்‌ உள்ள மீன்‌ (மீன ராசி) வருவது சரிதான்‌. மேடம்‌ (ஆடு) (மேஷ ராசி) எதற்காக, வநீதது என்று கூறுவானேன்‌? தலைவனைப்‌ பிரிந்து வாடும்‌ நஙிகையரின்‌ வருத்தும்‌ தீ (அக்னி) வரும்போது அதன்‌ வாகனமும்‌ (ஆடு) வராமல்‌ இருக்குமாச்‌(உத்தராயணத்தில்‌ சூரியன்‌ மீனராசி, மேடராூிகளில்‌ சஞ்சறித்‌ தலைக்‌ குறிப்பிடப்பட்டுள்ளது) V—98

காதலரை இறுகத்‌ தழுவுதல்‌ இனிமேல்‌ அவ்வளவாக (வசந்த காலம்‌ வருவதால்‌) இராது என்று குளிர்‌ காலத்திலேயே பயந்து உதடுகளை நக்கிய நங்கையர்கள்‌ முன்‌, வசந்த பருவம்‌ விரைந்து வந்தது, குளிர்‌ தீர்ந்து முன்னைய நிலைமைகளைத்‌ துறந்தகர்‌,
ஆபத்துக்‌ சகாரலத்தில்‌ தைரியமாக இருக்க வேண்டும்‌ என்ற மூதுரை பொருத்தமேயல்லவா?
(உதடுகளை நாக்கால்‌ நக்குதல்‌ பயத்தாலும்‌ ஏற்படும்‌ குளிர்‌காலத்தில்‌ பனியால்‌ உதடுகள்‌ பிளவுறுவதாலும்‌ ஏற்படும்‌. இவ்‌
விரண்டினையும்‌ இலக்கணையாலும்‌ சிலேடையாகவும்‌ உணர்த்தப்‌ பட்டுள்ளது. நங்கையார்‌ பயந்தபடியே வசந்தகாலம்‌ வந்தாலும்‌
உறுதியோடு சமாளித்துக்‌ கொண்டனர்‌ என்பது கருத்து) 14-99

பல காயங்களை (உதடுகளில்‌) உண்டாக்கிய குளிர்காலத்தில்‌ தாம்‌ எச்சிற்படத்திய தேனையே உண்ட தேனீக்களின்‌ எச்சி
லாகிய மெழுகினை (தம்‌ உதடுகளில்‌) பூசியதால்‌ ஏற்பட்ட அவமானத்தை இந்த வசந்தம்‌ இர்த்தது என்ற நன்றிப்‌ பெருக்‌
கால்‌ அந்நங்கையர்‌ஜ இலவேனிலானுக்கு ஓய்வளிதீது தாமே பூக்கள்‌ மலர ஊக்கமூட்டும்‌ (தோகத) செயல்கள்‌ செய்தார்கள்‌.
(உதட்டுப்‌ பிளவுக்குத்‌ தேன்‌ மெழுகினைப்‌ பூசுதல்‌ மரபு. அதனால்‌ பெண்கள்‌ இழிவுற்றனராம்‌. அதைத்‌ தவிர்தசது
இளவேனில்‌. ஆதலால்‌ நன்றியுடன்‌ வசந்தனின்‌ வேலைகளில்‌தாமும்‌ பங்கு கொண்டு வேலைப்‌ பளுவைக்‌ குறைத்தனராம்‌,
உதைத்தலால்‌ அசோகு, உமிழ்தலால்‌ மகிழும்‌, டார்த்தலால்‌ மாவும்‌ தளிரித்துப்‌ பூக்கும்‌ என்பது வடமொழி இலக்கிய ட்டம்‌–5-100

ஏற்கனவே சந்திரனின்‌ பலத்தோடு (கஇிரககஇியால்‌ சந்திரபலம்‌) மலய மலையின்‌ மணம்படு இளங்காற்று எனும்‌ தேரில்‌,
ஏறிவரும்‌ மன்மதனுக்கு, கதிரவன்‌ கூட புதிதாகத்‌ துணை நின்றான்‌. பிரிந்த தலைவியரின்‌ உயிர்கவர நினைக்கும்‌ விதியின்‌
செயல்‌ நிறைவேறாமல்‌ போகுமா? 5-.10]

சூடாமணிப்‌ பாடலும்‌ இக்கருத்தைக்‌ கூறும்‌. — ஏடவிழ்‌ ம௫ழ்சுவைக்க எழிற்பாலை நண்புகூடப்‌
பாடலம்‌ நிந்திக்கத்‌ தேம்படிமுல்லை நகைக்கப்‌ புன்னை ஆட, நீள்குரா அணைக்க, அசோகுதைத்திட வாசத்தி
பாட மாப்பார்க்க வார்சண்பக நிழற்படத்‌ தளிர்க்கும்‌ சூடாமணி நிகண்டு 12-109

மலய (பொதிகைமலைச்‌) சாரலில்‌ தவக்குடியில்‌ வாழும்‌ குடமுனியினிடம்‌ பணிவிடை புரிந்து கற்றாளனோ எனுமாறு
தென்றல்‌ காற்று மெதுவாகத்‌ தவழ்ந்து பனிக்கடலைப்‌ பருகியது.
(குடமுனி (அசத்தியன்‌) கடலைக்‌ குடித்த கதை பிர௫த்தம்‌. அவனிடம்‌ கந்றுதனால்‌ குளிர்கடலைக்‌ குடித்துக்‌ குளிர்மை
யூ.ற்‌.றதென்பது கருத்து), V—102

பொதிகைச்‌ சந்தன மரத்தின்‌ பரிமளச்‌ சிறப்பினை மற்றுள்ள எல்லா மரங்கட்கும்‌ உருவாக்க வேண்டுமென்றுதான்‌ போலும்‌
மலரீவிக்கும்‌ சாக்கில்‌ மணமுண்டாக்கியது எனுமாறு அங்கு தென்றல்‌ வீசியது. ்‌ Y—103

இரவிக்கையவிழ்த்து, ஒருக்களித்துக்‌ காதலரைத்தழுவியவாறு தமது செறிமுலைகள்‌ அவர்களது மார்பில்‌ ஒற்றப்படுத்திருந்த
காதலியர்‌, சிறிது நேரம்‌ கழித்து வியர்வை படிந்ததென ஐயுற்று விடியலில்‌ இலுப்பைப்‌ பூக்களை மலரச்‌ செய்து வரும்‌ தென்றற்‌
காற்று வீசவும்‌, கொசுவலையை மேலே எடுத்துக்‌ கட்டினார்கள்‌. வெம்மை மிகவே இரும்படுப்பின்‌ கணப்பினைத்‌ தூண்டாமல்‌
விட்டு விட்டனர்‌. V—10

செங்கதிர்களையுடைய கதிரவன்‌, பனிக்கர்லம்‌ எனும்‌ இரவில்‌ மெலிந்து மறைந்து, இளவேனிற்காலமாகிய பகலின்‌
விடியலில்‌ எழுந்து, மங்கையரின்‌ கொங்கைகளிற்‌ பூச்சாக இட்ட குங்குமமாகிய செம்மையை (முன்‌ ஒப்படைத்த பொருளை
மீண்டும்‌) பெற்றுக்‌ கொண்டான்‌. இல்லாவிட்டால்‌ காலக்கணித மறியும்‌ கோழி (குயில்‌)யின்‌ குரல்‌, புலர்ந்த மகளிரின்‌ செவிகட்கு
இடியாகத்‌ தோன்றுமா?
(பனிக்காலம்‌ (ஹேமந்த சிசிரருதுக்கள்‌) இரவாகும்‌. வசந்தம்‌ பகல்‌, பசுலில்‌ எழுந்த சூரியன்‌ செம்மை ஏற்றான்‌. அது
முன்பே பெண்களின்‌ முலைக்குவட்டில்‌ பூசிய குங்குமமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது, சூரியன்‌ இரவில்‌ தன்‌ சூட்டினை
அக்னியிடம்‌ தருவான்‌. மறுநாள்‌ பெறுவான்‌ என்பது மரபு.
இங்கு அக்னிகை எனும்‌ குங்குமப்பூ அகீனியாகும்‌, அதனிடம்‌ செம்மையுளது, முலையில்‌ வெம்மையும்‌ குஙிகுமச்‌ செம்மையும்‌
இருத்தலின்‌ சூரியன்‌ ஒப்படைத்ததாகக்‌ கற்பனை செய்யப்‌ பட்டது. விடிந்ததும்‌ கோழி கூவும்‌. அதுபோல வசந்தமாகிய
விடியலில்‌ கோழி போலக்‌ காலக்‌ சுணிதமறிந்து வசந்தத்தில்‌ கூவும்‌ குயிலின்‌ குரலிசையும்‌ அமைந்தது. புலவி கொண்ட மகளிர்‌
கோழியின்‌ குரல்‌ கேட்டதும்‌ இடி முழக்கம்போல பொழுது வீணே கழிந்ததே விடிந்து விட்டதே என்று வருத்தம்‌ செய்வது போல,
குயிலின்‌ இசையும்‌ பிரிந்த தலைவியரை வருத்தமுறச்‌ செய்யும்‌.பருவஙிகளை ஒரே நாளாகக்‌ கற்பனை செய்யப்பட்டது) v—105

கஸ்‌.தூரிப்‌ பூச்சை விடுத்து சந்தனம்‌ பூசினர்‌. முலையிணை களில்‌ முத்துமாலை அணிந்தனர்‌, செருகிய சரப்பூமா லையில்‌ ஒரு நன்னாறிவேரினை ஏற்றுக்‌ கொண்டார்கள்‌.
(இளவேனிற்‌ தொடக்கமாதலின்‌ சம சீதோஷ்ணமான பொருள்களை ஏற்றனர்‌ என்பது கருத்து), V—106

பெண்‌ பாம்புகளின்‌ அமுத ரச இதழிலிருந்‌ தூறிய வாய்‌ மணத்தால்‌ இனிமையுடையதாகியும்‌, நயந்த காதலராகிய ஆண்‌ பாம்புகளின்‌ நச்சுப்‌ பற்களின்‌ வெம்மை படிந்த காரமுடியதாரஅ யும்‌ கலந்து சந்தனப்‌ பொதிகைத்‌ தென்றல்‌, புறப்பட்டு வீசுவதால்‌ மரங்களில்‌ வற்றலாகி (இலைகள்‌ உதிர்தலும்‌)யும்‌ தளிர்கள்‌ தளிர்த்தும்‌ இருகுணங்களையும்‌ கொண்டதாக இருந்தது.
(ஆண்‌ பாம்பின்‌ நச்சுக்காற்றால்‌ மரங்களில்‌ இலைகள்‌ உதிர்‌தலும்‌, பெண்‌ பாம்பின்‌ அமுதக்‌ காற்றால்‌ தளிர்கள்‌ தலிர்த்தலும்‌
ஆகிய இரு பண்புகளையும்‌ கொண்டதாகத்‌ தென்றல்‌ காற்று வீசியது). V—107

சந்தன (பொதிகை) மலையிலிருந்து திரியும்‌ மெல்லிய தென்றற்காற்று, பழுத்த மரஞ்‌ செடி கொடிகளிலிருந்து காம்‌
புதிர்ந்து வீழ்ந்த இலை (சருகு)கள்‌–தாமரைப்‌ பொகுட்டில்‌ உடையதும்‌, முறித்த மஞ்சட்‌ காம்பினுடையதுமான மஞ்சள்‌
வண்ணமுடைய தங்கச்‌ சக்கரங்கள்‌ (ஆடப்‌ பொலியும்‌ தேரில்‌ கிறு கிறு என்ற ஒலியுடன்‌ செல்வதால்‌ மன்மதனின்‌ தேர்‌ என்பது
உண்மை எனத்‌ தெரிந்தது.
(தென்றல்‌ மன்மதனின்‌ தேர்‌ என்பது சுவி மரபு, மன்மதன்‌ திருமகளின்‌ மகன்‌ அல்லவா? தங்கத்தேராகத்‌ தானே இருக்க
வேண்டும்‌. தங்கத்தேரின்‌ தங்கச்‌ சக்கிரங்களே உதிர்ந்த மஞ்சள்‌ இலைகள்‌ என்பது கற்பனை) V—108

அதன்பிறகு V—109

பூமி என்னும்‌ பிடி (பயானை)யின்‌ மேல்போரீத்திய சப்புக்‌ கம்பளமாகவும்‌, பெருங்காடு எனும்‌ நங்கையின்‌ மதுமாதம்‌
(வசந்தம்‌) எனும்‌ மதுவுண்டதால்‌ ஏற்பட்ட செம்மையாகவும்‌, கொடிகள்‌ என்னும்‌ பாம்புகளின்‌ நாக்காகவும்‌, மரங்கள்‌ எனும்‌
கருடனின்‌ இறகாசவும்‌, செய்குன்றமாகிய மேகத்தின்‌ படிந்த வாள வில்லாகவும்‌,
புதிதாக வந்த தும்பிகள்‌ எனும்‌ விருந்தாளிகளை அழைக்கும்‌ மங்கள (அட்சதை) மஞ்சளரிசியாகவும்‌, காகத்திடமிருந்து பிரிந்த
குயில்களின்‌ பிரிவுப்‌, பத்திரிக்கைகளாகவும்‌, மாலதி (சாதிமல்லிகை)யை அச்சுறுத்தும்‌ நோயான பச்சை இரத்தமும்‌, வன
தேவதைகள்‌ பூசிய குங்குமமாகவும்‌, தென்றல்‌ காற்று எனும்‌ சாணையிற்பிடித்ததால்‌ உராய்ந்து பழுத்த இலைகள்‌ எனும்‌
மேற்‌ செதில்கள்‌ உதிர்ந்து, ஒளி வீசும்‌ பதுராகம்‌ (செம்மணி) ஆகவும்‌, தளிர்கள்‌ எங்கும்‌ தளிர்த்திருந்தன . V—110

முல்லைப்‌ பூக்கள்‌ அம்பறாத்‌ தூணியில்‌ தீர்ந்துவிட்டன மன்மதனை இச்சமயத்தில்‌ வெல்லலாம்‌ எனக்‌ கருதிய
பெரியோர்கள்‌, கொடிய பலிகள்‌ தரும்‌ நாட்களான தேய்பிறைஇரவில்‌ (சிவராத்திரியில்‌ மன்மதன்‌ பகைவனான சிவனை
வணங்கியும்‌, தளிர்கள்‌ எனும்‌ பட்டாக்கத்தியால்‌ அடிக்கப்‌ பட்டார்கள்‌.
(மன்மதனுக்கு மலரம்புகளில்‌ மாசி மாதம்‌ மிகுதியும்‌ பூக்கும்‌முல்லைப்‌ பூக்கள்‌ சித்திரை மாதத்தில்‌ தீர்ந்துவிட்டதால்‌, அவன்‌
தூணியில்‌ முல்லைகள்‌ இல்லை. இதுதான்‌ சமயம்‌ என்று மன்மதனை வெல்ல பெரியோர்கள்‌ முயன்றனர்‌. மன்மதனின்‌
பகைவன்‌ சிவன்‌ ஆதலின்‌ வழிபட்டனர்‌. எனினும்‌ மன்மதன்‌ அம்புகள்‌ இல்லாவிட்டாலும்‌ தளிர்கள்‌ எனும்‌ கத்தியால்‌ அவர்‌
களை வீழ்த்தினான்‌. என்பது கருத்து) 111

பூமியில்‌ அப்போது புதிதாகப்‌ பிறந்த மன்மதன்‌ எனும்‌ குழந்தைகளுக்கு, வசந்த காலம்‌ எனும்‌ மருத்துவச்சி கொப்பூம்க்‌
கோடியறுத்த பண்ணரிவாள்‌ போன்ற புரசம்‌ பூமொட்டுகள்‌, பிரிந்திருப்பவர்களின்‌, நெஞ்சங்களையும்‌ அரிந்தன. 4.12

(பிரசவம்‌ பார்க்கும்‌ மருத்துவச்‌ வசந்த காலம்‌, புதிதாகப்‌ பிறந்த குழந்தையே மன்மதன்‌. கொப்பூழ்‌ கொடியறுத்த பண்ணிரிவாள்‌ புரசமொட்டு. புரசமொட்டு பண்ணரிவாள்‌ போல வளைந்திருக்கும்‌ கொப்பழ்‌ அறுத்ததால்‌ இரத்தம்‌ படிந்து சிவந்தாற்போல புரசம்‌ பூக்கள்‌ சிவந்திருக்கும்‌)
பிற எல்லா மலர்களும்‌ நங்கையரின்‌ கூந்தலில்‌ இருப்ப (மணமின்மையின்‌) தான்‌, மட்டும்‌ அப்படி இருக்க முடிய வில்லையே என்ற நாணத்தால்‌ வணங்கிளாற்‌ போல வளைந்‌ திருந்த, புரசமொட்டுகள்‌ எனினும்‌, காதலா்‌ (பீய்ச்சுங்‌) குழலில்‌ (புரச மலரை அரைத்துக்‌) கரைத்துத்‌ தெளித்தலால்‌ நங்கையரின்‌ கொங்கைகளில்‌ சிறிது நேரமேனும்‌ மெய்ப்பூச்சாக இருக்கும்‌ பாக்கியம்‌ இடைத்ததே என்ற பெருமிதத்தில்‌ மக௫ழ்ந்ததவோ எனுமாறு சிவந்து மலர்ந்து எழில்‌ பெற்றன.
(புரசமுூகை, நாணத்தால்‌ வளைந்தாலும்‌, வசந்தகாலத்தில்‌ (காமன்‌ பண்டிகையில்‌) செவ்வண்ண நீருக்காக புரசமலர்சளை அரைத்து நீரிற்‌ கலந்து பீய்ச்சாங்குமலால்‌ தெளிப்பார்‌, ஆதலின்‌ கொங்கையிற்‌ படிந்து, அதிக நேரம்‌ கூந்தலில்‌ இருப்பதைளி ட சிறிது நேரம்‌ கொங்கசையில்‌ இருப்பது சிறப்பெனக்‌ கருதி மகிழ்ந்து மலர்ந்தன என்பது கருத்து) V—113

தென்றல்‌ காற்றானது, சந்தனப்‌ பொதிகை மலைக்‌ காடு களின்‌ மரங்களின்‌ மணத்தில்‌ தோய்த்து, தாமிரபரணியில்‌
கிடைத்த முத்துக்களாகிய விதைகளை திறமையுடன்‌, கை விதைப்பாக விதைத்திட முளைத்தது போலும்‌, இல்லாவிட்டால்‌
இத்த (வசந்த சால) மலர்களுக்கு உருவெழிலும்‌ நன்‌ மணமும்‌, எவ்விதம்‌ கிட்டும்‌ எனுமாறு புதுமலர்கள்‌ தோன றின,
(விதைத்தல்‌ இருவகை, கைவிதைப்‌ பாக கைப்பிடியில்‌ எடுத்து எறிந்து விதைத்தல்‌ ஒருவகை. கருவியில்‌ விதைகளைப்‌
பெய்து துளை வழியாக ஒவ்வொன்றாக வீழச்‌ செய்வது ஒரு வகை. கைவிதைப்பு சிறப்பென்பர்‌, தென்றல்‌, முத்துக்களை
சந்தன மனத்தில்‌ தோய்த்து விதைத்ததாக கற்பனை செய்யப்‌ பட்டது) v—114

கொடிகளையும்‌ மரங்களையும்‌ இரட்டையராக (தம்பதியராக) இணைவிக்க, மன்மதன்‌ (அம்பினை) எய்யவும்‌. அது
துளைத்து (இப்புறமிருந்து அப்புறத்திற்கு) ஊடுருவி, பசு வண்ணமுடைய  மேற்தோல்‌ சிதைய முளைத்த அம்பின்‌ முனைகளோ
எனுமாறு மொட்டுக்கள்‌ தோன்றின. v—115

வனலட்சுமி எனும்‌ திருமகள்‌, தன்‌ வயிறரகிய நிலத்தில்‌ பிறந்த மரங்கள்‌ எனும்‌ குழந்தைகள்‌ தளிர்களால்‌ செவ்வண்ணம்‌
கொண்டிருப்ப, அவை வளரவும்‌ மொட்டுக்கள்‌ ஆகிய பற்கள்‌ முளைக்கவும்‌, இனி மாதவன்‌ (வசந்தன்‌) ஆகிய காதலனைக்‌
கலந்தின்புறலாம்‌ என மஒழ்ச்சியாற்‌ பொங்கினாள்‌.
(குழந்தைகள்‌ பிறக்கும்போது டுயல்பாக செம்மையாக இருப்பார்‌. அதுபோல தளிர்‌ வண்ணச்‌ செம்மையால்‌ மரங்கள்‌
பிறந்த குழந்தைகள்‌ போன்றன. பின குழந்தைகள்‌ வளரவும்‌ பற்கள்‌ தோன்றும்‌, அது? பால மரஙிகளில்‌ மொட்டுக்கள்‌ பற்கள்‌
போலத்‌ தோன்றின. பிரசவித்த பெண்டிர்‌, தமது குழந்தை களுக்கு பற்கள்‌ முளைத்த பிறகு மீண்டும்‌ புணர்ச்சிக்குத்‌ தகுதி பெறுகின்றனர்‌ என்பது மரபு, ஆதலின்‌ வனலம்சுமியாகிய திருமகள்‌, மரக்குழந்தைகட்கு மொட்டாகிய பற்கள்‌ வரவே இனி மாதவனைக்‌ சகுலநிதின்புறலாம்‌ என மகிழ்ந்தாள்‌ எனுமாறு
வசந்த கால எமில்‌ தோன்றியது.
குழந்தைகட்கு பற்கள்‌ முளைத்ததும்‌ கலவிக்குத்‌ தாம்‌ தகுதி யுற்றோம்‌ என பெண்டிர்‌ மகழ்ந்ததாக *காதா சப்த சதிூயிலும்‌
சில பாடல்கள்‌ உள்ளன. சுருதி, ஸ்மிருதிகளிலும்‌ கூறப்‌ பட்டுள்ளது) V–116

முதலில்‌ பூக்களை ஆர்வமுடன்‌ முன்கால்களால்‌ பற்றி மூக்கன்‌ இரு துளை (தும்பிக்கை)சகளால்‌ உறிஞ்சி, பச்சை
வாசனையடிக்க3வ விடுத்து,
பருவமலரீகளின்‌ கொத்துள்ள இடத்தை ஆராய்ந்து பூம்புதர்க்கு நிரை நிரையாகச்‌ சென்று, நுழைந்து ஒரு தும்பி,
புது மலரின்‌ முன்பே நுழைய முயன்றபோது அதனைத்‌ தள்ளி
நிலத்தில்‌ விழச்‌ செய்து, தான்‌ பூந்தேன்‌ மாந்த, இலைகளு]ர்ந்த துளையில்‌, ஊறிய பசையை (மதுவெளனமயங்கி) குடிக்க ஆசைப்‌
பட்டு, காலூன்றி கால்‌ சிக்கிக்கொள்ளவே பயந்து கூவி, எப்படிமோ, ஒரு மலர்‌ கிடைக்கவும்‌, வயிறாரக்‌ குடித்து,
அம்மலர்‌ காற்றில்‌ அசையவும்‌ தடுமாறி நிலை நிற்க,
பூந்தோட்டத்தைக்‌ காவல்‌ காக்கும்‌ கஉனியர்‌ விளையாட்டாக நகைத்தவாறு பிடிக்கவும்‌ மலரிலிருந்து கீழே விழும்‌.
(வசந்த காலப்பூக்களை நாடும்‌ ஒரு தும்பியின்‌ வருணனை இது, முதலில்‌ படிந்த பூ பக்குவமில்லாததாதலின்‌ விடுத்து, பருவமலரை நாடி, ஏற்கனவே படியும்‌ தும்பியைக்‌ கீழே ஒன்ளித்தான்‌ குடித்தது. வயிறு நிறைத்த மயக்கத்தில்‌ இருக்கும்‌ போது கன்னியர்‌ பிடித்தனர்‌) V—117

(வண்டுகளின்‌ வருணனை)
காற்று கொணர்ந்த சந்தனமலை மரப்பாம்புகளின்‌ ந்ச்சுப்‌ புகைபோலவும்‌, ௮ ) சக்கடி வீழும்‌ மன்மதனின்‌ தோர்ச்சக்கர த்தின்‌ வண்டிமை (மசகு)த்‌ துண்டுகள்‌ (கவளம்‌) போலவும்‌,
(வசந்தகாலத்தைக்‌ கண்டஞ்சி) பயந்தோடும்‌ சர (குளிர்‌) காலம்‌ (நங்கை விடுத்த (கருமை நீட்டிய) கண்ணீர்த்துளிசளோ எனுமாறும்‌,
குயிலின்‌ பஞ்சமசுத்தைப்‌ பாடற்கேற்ற சின்னஞ்சிறிய வீணை3யா எனுமாறும்‌, மழைபோன்று தேன்மமை பெய்யவும்‌ பழுத்த நாவற்கனிகளோ எனவும்‌ மமைக்காலம்‌ பாடப்பட்ட இததோளராகத்திற்‌ இசைந்து வந்த காரர்வண்ணனாகய திரு மாலின்‌ மேனி எழிலோ எனுமாறும்‌, கனவினில்‌ குறியிடம்‌ செல்லும்‌ கன்னியரின்‌ துகலினை கருவண்ணமாக்கும்‌ சித்த குளிகையோ எனுமாறும்‌ சாதிமல்லிகைப்‌ பூக்கள்‌ (பூக்காத கால மாதலின்‌) வசந்த காலத்தைப்‌ பழித்துத்‌ தூற்றிய வசைமொமி களோ எனுமாறும்‌,
நங்கையர்‌ (குளிர்காலத்தில்‌ கணப்படுப்பில்‌ வைத்த alls துண்டுகள்‌, வசந்த காலம்‌ வந்ததால்‌ இனித்‌ தேவையில்லை என்று) எறிந்ததும்‌ அக்‌ கரித்துண்டுகள்‌, வசந்தகாலமாகிய அமுத சஞ்சீவிபட்டு, மீண்டும்‌ உயிர்பெற்று தாம்‌ பிறந்த இடமாகிய மரங்களை நாடிச்‌ செல்கின்றனவோ எனுமாறும்‌ வண்டுகளின்‌ கூட்டம்‌ காட்டில்‌ அலைந்து திரிந்தன.
(இந்தோள ராகம்‌ . வசற்த காலத்‌ தொ…க்கத்தில்‌ பாடுதற்‌ குரிய பண்ணாகும்‌.
சித்த குளிகையால்‌ பிறரரியாது போகும்‌ திறன்‌ ஏற்படும்‌. களவிற்புணரக்‌ குறியிடம்‌ செல்லும்‌ கன்னியர்‌ பிறர்‌ காணா
திருக்க இரவில்‌ நீல வண்ண ஆடை அணிவர்‌. சித்த குளிகை ௧௫
நிறம்‌ ஆக இருப்பதால்‌ வண்டாக கற்பனை செய்யப்பட்டது .
புகழ்‌, வெண்மை, இகழ்கருமை என்பது கவிமறபு. சாதிமல்விகை கள்‌ சபித்தல்‌ இகம்‌ ஆதலின்‌ அவை கருமையாக உ வமிக்கப்‌
பட்டது) V—i18

இரு பிறப்பிளையுற்றும்‌ மதுசேவை விடாது சாஇதியைவிடுத்த
தேனீக்களின்‌ இசையோடு கூடிய தாலோ என்னவோ குயிலிசை யும்‌ பஞ்சமத்தையடைந்தது,
(இரு.அிறப்பு – அந்தணர்‌, பல்‌, பறவை மூன்றுக்கும்‌ துவிசர்‌ என்பதாதலின்‌, ஈண்டு வண்டு (பறவை) ஆகிய பிராமணன்‌, மது
சேவை (தேன்‌-கள்‌) யாலே சாதியை (சாதிமல்லிகைப்பூவை) விடுத்தலால்‌ பாவம்‌ செய்ததாயிற்று. அந்த வண்டோடு சேர்த
லினாலே குயில்‌ பஞ்சமத்தை (பஞ்சமம்‌ எனும்‌ சுரத்தை) அடைந்தது. பஞ்சமம்‌ என்பது பஞ்சமாபஈதகத்தை என்பதும்‌
குறிப்பிடும்‌, இவை சிலேடையாகப்‌ பொருள்பட்டன.
பிரம்ம ஹத்தி, மதுபானம்‌, இருட்டு, குருமனைவியைப்‌ புணரல்‌ இந்நான்டும்‌ மாபாதகம்‌, இத்நதுகையோரிடம்‌ சேர்வது
ஐந்தாவதாகிய பஞ்சமாபாதகம்‌ என்பது மரபு.) V—119

(மா என்ற சொல்‌, குதிரை, மாமரம்‌எனும்‌ இருபொருட்டும்‌, இச்சிலேடை. மூலம்‌ வரும்‌ கற்பனை இது.)
பூத்த மாவினை. கேடுவரும்‌ எனும்‌ ஐயத்தால்‌ மலரம்பின னுக்கு மாதவன்‌ (வ௪ந்த காலம்‌) விற்றனன்‌ அவன்‌ அதனையே
கைக்கொண்டு, பிரிந்து செல்பவர்களை வெல்லும்‌ திறமை பெற்றனன்‌. தனக்குதெய்வம்‌ அனுகூலமாகவும்‌, பிறருக்கு
மேன்மை குறையும்காலமாகவும்‌ இருந்தால்‌ கருவிகள்‌ பழுதுறினும்‌ வெற்றி பெறுவது நிச்சயம்‌ அல்லவா?
(பூத்த மா என்பது ஈண்டு நிறம்‌ வேறுபாடுற்ற குதிரை என்பது ஒரு பொருள்‌.ர்குதிரையின்‌ தோல்‌ நிறம்‌ வெளுப்புற்றால்‌
அதனால்‌ தீங்கு ஏற்படும்‌ என்பது அசுவ சாத்திரக்‌ கருத்து. பூத்த மாமரம்‌ பிரிந்தவார்கட்கு துன்பந்தருவதாகும்‌. இங்கு பூத்த
மாவாகிய குதிரையை மன்மதனுக்கு வசந்தன்‌ விற்றுவிட்டான்‌ என்றாலும்‌ மன்மதன்‌ தெய்வ அரளால்‌ அதனைக்‌ கொண்டே
வெற்றி பெற்றான்‌ என்பது கருத்து) V—120

வசந்த காலம்‌ எனும்‌ பால்‌ கறப்பவன்‌ தன்‌ ஆற்றல்‌ முழுதும்‌ காட்டி, இரவு எனும்‌ பசுவின்‌ சந்திரன்‌ எனும்‌ மடியில்‌ கறந்த
நிலவு,என்னும்‌ அமுது பரந்து, பிச்சிப்‌ (கொஜ்ஜக) பூக்களின்‌ மச ரந்தமாகிய மணம்‌ பொருந்திய நீரும்‌ கலந்து முன்னீராகப்‌
(கடலாக) பெருக்கெடுத்து இருக்கவும்‌, வண்டுகள்‌ ஆ£ய அன்னங்‌கள்‌ பிரித்தறிந்து உண்டன.
(அன்னம்‌ பால்‌ மட்டும்‌ பிரித்தறிந்துண்ணும்வண்டுகள்‌ நீர்‌ மட்டும்‌ பிரித்தறிந்துண்ணும்‌ நிலவாகியபாலும்‌, பூந்தேனாகய
மண நீரும்‌ கலந்திருட்ப வண்டுகள்வேறு பிரித்துண்டன என்‌. கருத்து,) V—.20

பொய்கையில்‌ அன்னப்பறவை தாமரைத்‌ தண்டினைத்‌ துண்‌டித்து வாயிற்‌ கவ்விக்‌ கொண்டு, கரையில்‌ வளைத்திருச்கும்‌ கரும்‌
பின்‌ ஊடாகப்‌ பறந்து அப்புறத்திலுள்ள மலர்ந்த புன்னை மரக்‌ இளையிற்‌ சென்று வ௫க்கவும்‌, (தாமரைத்‌ தண்டின்‌) நூலிழைகள்‌
வழியாக புன்னை மரத்‌ தேனுக்கும்‌ பொய்கை மலர்த்தேனுக்கும்‌ வரவும்‌ போகவுமாக இருக்கும்‌ வண்டுகளின்‌ வரிசை மன்மதனில்‌
(கரும்பு) வில்லுக்கு இரட்டை நாண்‌ ஆகத்தோன்றியது. 7–122

காற்று, நீண்ட தேன்‌ ஒழுக்கினை (நிலத்தில்‌ விழுமுன்பே) இடையை பெற்று, (பிசுபிஈத்துள்ள மையின்‌) அவை கொடிகளா
இச்‌ சுற்றிக்‌ கொண்டாற்போல பஞ்சள்‌ (கோரோசனை திறம்‌) வண்ணமுடையதா௫, கண்ணாடி வளைபோல நெளிந்த சுழித்துக்‌
கொண்டிருப்ப மெதுவாக நடந்தது? பிரிவுற்ற தலைவர்களின்‌ நெடுமூச்சுக்களாகிய இ எதிர்படவே, கொழுந்துவிட்டெறிந்து
படபடவெளனப்பொறிந்து சுழிப்புற்றனவோ எனுமாறு அக்காற்று திகழ்ந்தது. V—123

வனலட்சுமியானவள்‌ தனக்கும்‌ நிலமகளுக்கும்‌ கணவனாகிய மாதவன்‌ (வசந்தகாலம்‌) வருவதை உணர்ந்து, மலர்கள்‌ என்னும்‌ தகைகளை நிலமகளுக்கும்‌, நிலத்தாமரை என்னும்‌ நகைகளைத்‌ தனக்கும்‌ இரவலாகப்‌ பரிமாறிக்‌ கொள்ளத்‌ திரியும்‌ மரையாணித்‌ தஇருகலோ.
எனுமாறு 8ழே உதிர்ந்த பூ மகரந்தத்‌ தூளை வாரி எடுத்து சுழன்றடித்த காற்று மரங்கள்‌ மேல்‌ பொழிந்து மஞ்சள்‌ வண்ண முடன்‌ சுழன்றன. V—124

நங்கையர்‌ மகிழ மரத்தை மதுவுமிழ்ந்து பூக்கச்‌ செய்தலைக்‌ கண்ட வனதேவதைகள்‌ “நாங்களும்‌ பெண்கள்தானே” £ என்று எல்லா மகிழ மரங்களையும்‌ பூத்திடச்‌ செய்ததற்கு (தாண்டற்‌ காக) தம்‌ கன்னம்‌ நிறைய மதுவைத்‌ தேக்கி (௨மிழ்தற்காக)
வைத்தனரோ எனுமாறு மகரந்தம்‌ நிறைந்த இலுப்பைப்‌ பூக்கள்‌ நிறைந்திருந்தன.
(இலுப்பைப்‌ பூக்கள்‌ வெண்ணிறமுடையவை, கள்ளிற்கு உவமையாக்கப்பட்டது.) V—125

நங்கையர்‌ தழுவுதலால்‌ பூக்கும்‌ வாய்ப்பினை இழக்கசி செய்து, தம்மைப்‌ வீணாகப்‌ பூக்கள்‌ சுமை தாங்கெளாக்கி
விட்டான்‌ இந்த வசந்தன்‌. (இளவேனிற்காலம்‌) என்று; தழுவு மின்பம்‌ இடைக்காததால்‌ காதல்‌ தீயில்‌ வெந்து, வண்டுகளே
புகையாக, பூநீதுகளே நீறாக (சாம்பலாக) மகரந்தமே சா$தாக கொள்ளிக்கட்டையான குரவகம்‌ (மருதாணி) நிலத்தில்‌ சாய்ந்தது.
(கொரவி என்ற சொல்‌ கொள்ளிக்கட்டை ‘ என்றும்‌ குரவக மரம்‌ என்றும்‌ இருபொருள்‌ தெலுங்கு மொழியில்‌ உண்டு. அப்‌
பொருள்‌ சிலேடை நயம்‌ தோன்ற இப்பாடல்‌ அமைந்திருக்கிறது,
கொள்ளிக்கட்டை எரிந்தால்‌ புகையும்‌, சாம்பலும்‌ கட்டை நுனியில்‌ நீர்ச்‌ கசிவாகிய சாந்தும்‌ ஏற்படுதல்‌ இயல்பு. வண்டுகள்‌
கருநிறமாதலின்‌ புகையாகவும்‌, பூந்துகள்‌ சாம்பல்‌ (நீறு) ஆகவும்‌ மகரந்தம்‌ சாந்தாகவும்‌ உவமிக்கப்பட்டன. மிகுதியாகப்‌ பூத்து
விட்டதால்‌ பெண்கள்‌ தழுவ வரவில்லை என்ற ஏக்கத்தால்‌ காதல்‌ வெம்மை கொண்டு மரம்‌ எரிந்து கொள்ளிக்கட்டையாகி
விட்டது என்பது கற்பனை) V—J26—மரையாணி -Screw.

நங்கையர்‌ மாமரத்தை தொட்டு, பூக்கச்செய்யவே வண்டுகள்‌ கொண்டாட, காய்கனிகள்‌ உதிர்ந்து தம்‌ ‘உணவு கெடுதலின்‌,
கிளிகளும்‌ குயில்களும்‌, திண்டாடிச்‌ சனத்தலினால்‌ (கிளிகளின்‌) முகமும்‌, (குயில்களின்‌) கண்ணும்‌ மிகுதியாகச்‌ சலவந்தன.
(வசந்த காலத்தில்‌ கிளி (மூக்கும்‌, குயிற்கண்ணும்‌ அதிகம்‌ சிவப்புறும்‌ அதனைச்‌ சினத்தலினால்‌ வந்ததாகக்‌ கற்பனை செய்யப்பட்டது) V—127

இணையற்ற காதலால்‌ நெகிழ்ந்த ஒரு பெண்‌, தன்‌ காதலன்‌ விளையாட்டாகக்‌ குறியிடத்தில்‌ மறைந்திருப்ப அவனைக்‌
காணாது காதல்‌ வெம்மை கூர்ந்து மனக்கலக்கம்‌ உற்று “Qlமரமே! என்‌ ‘ காதலனைக்‌ கண்டனையோ” என்று கேட்டதும்‌
அற்த மலைக்‌ கோங்குமரம்‌, மலர்ந்தது. அவ்வளவில்‌ அவன்‌ காணப்படவே அவள்‌ நகைக்கவும்‌, அருகிலிருந்த சுரபுன்னை
மரமும்‌ மலர்களால்‌ நிறைந்தது.
(கோங்கு பெண்கள்‌ உரையாட மலரும்‌. சுரபுன்னை நகைத்தலின்‌ மலரும்‌ என்பது கவி மரபு. குறியிடத்தில்‌
விளையாட்டாக மறைந்திருந்த காதலனைக்‌ காணாக்காரிகை கலக்கமுடன்‌ மரத்தைப்‌ பார்த்து உரையாடினாள்‌. கோங்கு
மலர்ந்துவிட்டது. கோங்கு ! மலர்‌ பொன்‌ வண்ணமுடைத்தாதலின்‌ அம்மலரின்‌ ஒளியால்‌ மறைவிடத்தில்‌ இருட்டில்‌ இருந்த
காதலன்‌ தென்பட்டான்‌. அது கண்டு மகிழ்ந்து நகைத்தாள்‌. சுரபுன்னையும்‌ மலர்ந்தன என்பது கருத்து, கோங்குமலரை
சுடருக்கு உவமை கூறல்‌ கவிமரபு) V—128

தாணு (ஸ்தாணு மரக்கட்டை-சிவன்‌) ஒரு ஆண்‌ மகன்‌ தயங்காது உமிழகிவாது பலன்‌ (பயன்‌-பழம்‌) தந்ததாகக்‌
கூறுவர்‌. தாமரை முகத்தினள்‌ வாய்‌ மதுவினை அன்போடு தர மலராவது தராமல்‌ இருக்கலாமோ என்று தினைந்தாற்போல
(ஒருத்தி) உமிழவே வகுளம்‌ (மகிழ்‌) மலர்ந்தது. (வகுளம்‌ உமிழ்தலால்‌ மலரும்‌ என்பது கவிமரபு, மரக்‌
கட்டையே பழம்‌ தந்தபோது – இலைகளுடன்‌ செழித்த மரம்‌ ஆ$ூய நான்‌ மலராவது தரக்‌ கூடாதா? என்று கருதியதாகக்‌
குறிப்பு. தாணுவாகிய சிவனைக்‌ கண்ணப்பனாகிய திண்ணன்‌…வாயால்‌ நீரைக்‌ கொணர்ந்து உமிழ்ந்து பூசை செய்ய சிவன்‌
பயன்‌ (அருள்‌) தந்தான்‌ என்பது தமிழில்‌ பெரியபுராணத்திலும்‌ தெலுங்கில்‌ ஸ்ரீ காளாஹஸ்தி மகாத்மியம்‌ எனும்‌ நூலிலும்‌ கூறப்‌
பட்ட கதை; இதைக்‌ கருத்திற்கொண்டு இக்குவிதையமைநீ துள்ளது. அண்‌ மகன்‌ உமிழவே பயன்தர பெண்மகள்‌ உமிழ்த
லின்‌ மலராவது தரவேண்டும்‌ என்று வகுளமரம்‌ நினைத்தாகக்‌ கற்பிக்கப்பட்டது.) V—129

மது என்ற பெயரையுடைய வசந்தகாலமும்‌ மதுவென்ற கள்ளும்‌, ஒரே பெயரைப்‌ பெற்றதால்‌ ஏற்பட்ட போட்டி
பொறாமையாலே தத்தம்‌ ஆற்றலைக்‌ காட்ட முனைந்து
(பெண்களின்‌ வாயில்‌ உள்ள மது உமிழ்வதாலும்‌, வசந்த கால வருகையாலும்‌) வகுள மரங்கள்‌ இலையுதிர்ந்து மலர்‌ சொரிந்து
நிறைந்தன. அது கண்ட தேனீக்கள்‌ வெற்றியடைந்ததாகக்‌ கருதி ஆரவாரம்‌ செய்தன்‌. V— 130

முயன்று பிருகுமுனிவன்‌ (இருமாலைக்‌ காலால்‌) உதைத்த போது (சனக்காமல்‌) மெச்சியவர்‌ (நாராயணன்‌ )னுக்கு மனித
மனைவி (£தை)யாகிய திருமகஷூக்கு உறைவிடமாகி (அசோக வனத்தில்‌) நட்புப்பூண்டதால்‌ இத்தகைய சாந்த குணம ஏற்‌
பட்டதோ எனுமாறு பூங்காவிலுளள அசோகமரம்‌ ஒரு நங்கை உதைத்தலும்‌ மலர்ச்சியாயிற்று, மலர்த்தாது ஆகிய (பொன்‌
நாணயங்கள்‌) கனகாபி?ேகம்‌ செய்தது.
(அசோகு நங்கையர்‌ உதைத்தலால்‌ பூக்கும்‌ என்பது க்வி மரபு. மண்‌ மகள்‌ ஈதையின்‌ பொறுமை அசோகுக்கு ஏழ்‌
பட்டது என்பது கற்பனை) V—131

பொறுமைமிக்க சம்பகமரத்தில்‌ ஒரு நங்கை முகமெடுத்துப்‌ பார்த்தலும்‌ அவளது முகச்சந்திரனது அமுதூறப்பிறந்த பது
மலர்களில்‌ இனிய தேன்‌ சுவைக்கலாம்‌, முன்‌ போல கசப்பும்‌ வாசனையும்‌ இராதென்று கருதி தும்பிகள்‌ அருகணைந்தன/
அந்தோ! அம்மலர்களிலும்‌ பழைய சம்பகத்தீன்‌ குணமே இருந்தது. கசந்து விரட்டியது. பொதுவாக தாயினைப்‌
போலவே பிள்ளை என்பது போல தாயின்‌ தீய குணங்கள்‌ தாயினை ஓத்துள்ள குழந்தைகட்கும்‌ இருக்குமல்லவா?
(சம்பகம்‌ நங்கையர்‌ ஏறெடுத்துப்‌ பார்த்தலால்‌ மலரும்‌ என்பது கவிமரபு. தும்பிகட்கு சம்பகமலர்‌ பகை. அதன்‌ மணம்‌
பிடிக்காது. (அலர்ஜி) அதன்‌ பூந்தேனும்‌ கசக்கும்‌ எனினும்‌ நங்கையின்‌ முசுச்சந்திரனால்‌ உருவான மலர்கள்‌ ஆதலினாலே
ஒருவேளை தேன்‌ இனிக்கும்‌ என்ற நப்பாசையில்‌ தும்பிகள்‌ சென்றன. சம்பகத்தின்‌ இயல்பான தன்மை மாறவில்லை.
முகச்சற்திரன்‌–தந்்‌தயாகவும்‌, சம்பகம்‌ தாயாசவும்‌ கற்பனை செய்யப்பட்டது. தாயின்‌ குணமே பிள்ளைக்கு
வந்தது என்றும்‌ தந்தையின்‌ குணம்‌ அல்ல என்றும்‌ கருத்தாகும்‌ 5-132–

ஒரு பெண்‌ தனக்கு விருப்பமான வசந்த ராகத்தைப்‌ பாடவும்‌ (பாட்டை கேட்டலரும்‌) பிரியாளு எனும்‌ மரம்‌ பூக்கவும்‌
அப்பெண்ணின்‌ சக்களத்தி பொறாதையால்‌ *₹:பக்தியினால்‌ தேவர்கள்‌ மெச்சி அநள்வார்கள்‌ இவள்‌ வசந்த ராகம்‌ பாடிய
தால்‌ வசந்தன்‌ அருள்‌ கூர்ந்து பூக்கச்‌ செய்தானே யன்றி இவள்‌ ஆற்றல்‌ ஒன்றுமில்லை’ * என்று குறை கூறினாள்‌. V—133

ஒருத்தி தனது வாயால்‌ காற்றினை ஊதவும்‌ அவள்‌ அணித்‌ இருந்த மூக்குத்தி (புல்லாக்கு)யாகிய முத்து அவளது இதழழ
தால்‌ உயிர்‌ பெற்று தான்‌ (முத்து) உயிர்ப்‌ பொருள்‌ ஆதலினால்‌ உயிரித்து முத்து முட்டைகள்‌ இட்டனவோ எனுமாறு மலர்கள்‌
உடர்ந்த சிந்துவாரம்‌ (தேக்கு) மீண்டும்‌ மலர்களால்‌ நிறைந்தது,
(சிந்துவாரம்‌ பெண்களின்‌ உ&யிர்ப்புக்‌ காற்றால்‌ மலரும்‌ என்பது சவிமர பு) V—130

செறிந்திருந்த இலைகள்‌ உதிர்ந்து திலகமரம்‌ மிகு வறுமை யுற்றதைக்‌ கண்ட ஒருத்தி, உள்ளத்தில்‌ இரக்கம்‌ பூண்டு,
கண்ணிணையால்‌ கண்டாள்‌. தொடாமலும்‌, ஒரு செயற்பாடு மின்றி மலர்கள்‌ பூத்துக்‌ குலுங்குவது கண்டால்‌, மன்மதன்‌
ஏற்கனவே இவளிடம்‌ ஒப்படைத்திருந்த மலரம்புகள் தான்‌ நிறைந்‌ துள்ளன. இல்லாவிட்டால்‌ எப்படி பார்த்ததுமே பூக்கள்‌ வரும்‌.
இது பொய்‌! என்று கூறுமாறு பார்வையாலே மலர்வித்தாள்‌. (திலகம்‌ பார்வையால்‌ மலரும்‌ என்பது கவி௦ரபு) V—135

அடிக்கடி மகரந்த மழை பெய்து பாதாளமும்‌, உதிரும்‌ பூக்களால்‌ பூலோகமும்‌, பூந்துகள்‌ செறிந்து வானுலகும்‌ ஆக
மும்முறைகளாலும்‌ மாதவனாகிய வசந்தன்‌ மூவடி அளந்து சூரியனணாகிய பலி சக்கரவர்த்தியின்‌ சூடாகிய ஆற்றலினை
அடங்கச்‌ செய்தான்‌.
(மாதவனாகிய திருமால்‌ மூவடியினால்‌ மூவுலகளந்தாற்‌ போல மாதவனாகிய வசந்தன்‌ மூவுலகும்‌ அளந்தான்‌ என்பது கருத்து) V—136

மகரந்த ஊற்றுக்கள்‌ கொப்புளித்த நிலங்களில்‌ படிந்த கருவண்டுகளின்‌ கூட்டம்‌, வசந்த காலத்தில்‌ மர நிழல்கள்‌ அசையாது நின்று விட்டன போலத்‌ தோன்றின.
(நிழல்‌, சூரியன்‌ செல்லச்‌ செல்ல தானும்‌ அசைந்து வேறு படுவது இயல்பு, மரத்தடியில்‌ மொய்த்த வண்டுசளின்‌ கருவண்ணத்தால்‌ நிழல்‌ எப்போதும்‌ மாறாமல்‌ அசையாது இருப்பது போலத்‌ தோன்றிற்று என்பது கருத்து) V—137

வெண்டாமரை மலர்களைப்‌ பரப்பினாற்‌ போன்ற சித்திரை மாத இரவில்‌ பொழியும்‌ வெண்ணிலவாகிய வெள்ளத்தில்‌
வான்‌ தொடும்‌ மரங்களின்‌ பூந்துகள்‌ குவை சேர்ந்து சேறாட களங்கமுறலும்‌, மலைக்‌ காடுகளிலுள்ள களா மரப்‌ பூந்துகள்‌ பட்டு
தேறும்படி செய்தலாலன்றோ காதலர்கள்‌ நிலவாகிய வேள்ளத்‌திம்‌ புனல்‌ விளையாடிக்‌ களித்தின்‌ புற்றனர்‌. இல்லா விட்டால்‌
களித்தின்‌ புறுவது கெடும்‌ அன்றோ?
(களாவிள்‌ பூந்துகள்‌ நீரின்‌ கலக்சலை நீக்கி தெளிவுறுத்தும்‌; தேற்றாங்‌ கொட்டை போல என்க) V— 138

பனி(க்காலம்‌) இர்ந்ததும்‌ ௮தன்‌ குளிர்மையும்‌ வெண்மையும்‌ இருள்படு திராட்சைக்‌ பந்தரிலும்‌, பூக்களிலும்‌ சார்ந்தன.
பிரிவின்‌ மெலிந்தவர்களின்‌ கழன்ற வளையும்‌ கானமும்‌, பொதிகைத்‌ தென்றற்‌ காற்றில்‌ சுழலிலும்‌, வண்டுகளின்‌
ரீங்காரத்திலும்‌ சேர்ந்து கொண்டன.
சாதி மல்லிகையின்‌ மணமும்‌ ஓளியும்‌ புது மருதாணிப்‌ பூக்களையும்‌ நிலவையும்‌ சேரீந்தன.
நோற்றவன்கள்‌ (துறவிகள்‌) விரதம்‌ முடித்ததும்‌ அவர்களது சடைமுடி உச்சிமர விழுதினையும்‌, மூங்கில்‌ தண்டம்‌–வேலி
களையும்‌ சார்ந்தன, மாமரங்களில்‌ நங்கையர்‌ வளர்த்த
குயில்கள்‌ பாடின. ஆங்கு அவர்கள்‌ களவின்பத்தில்‌ துய்த்த களைப்பிளை நீக்கித்தாமரைப்‌ பொய்கையில்‌ தவழ்ந்து வரும்‌
புதுமணத்‌ தென்றல்‌ வீசியது, V—139

அடிக்கடி கிளிகள்‌ தேமாவின்‌ கிளையில்‌ பழங்களை கொத்தச்‌ செல்லவும்‌, அக்கனிரசத்தைச்‌ சுவைக்க கருவண்டுகள்‌ இளிகளைத்‌ தொடர்ந்து சென்றன. வனலட்சுமி மனிதர்களைப்‌ போலவே இளிகளின்‌ இன்‌ சொல்‌ அமுது பருக விழைந்து (கருவண்டுகள்‌ ஆகிய) சங்கிலியால்‌ (இளிகளைக்‌) கட்டி வளர்க்‌
கின்றனளோ எனமாறு அங்கே ஓசை மிகுந்திருந்தது. V—140

நோன்பினரைக்‌ கெடுத்த பாவத்தால்‌ புழுவாகப்‌ பிறந்து, அந்நிலை மாறி: வண்டுகளகக உருவெடுத்த உடலைப்‌ பெற்று, இயமன்‌ இசை (தெற்கு)யிலிருந்து வந்த காற்றால்‌ உயிர்ப்பினைப்‌ பெற்று, அந்த வண்டுகளின்‌ நடன அரங்கமாக காமரைப்‌ பூவாசிய கண்‌ விழித்து, ஆங்குள்ள மலர்ந்த மா மரத்தினைசி சேர்ந்து மொய்க்கும்‌ வண்டின்‌ ஈட்டம்‌ திடீரென்று எழுந்து (போவதுவே) சித்திரன்‌ (வசந்தனைத்‌ தழுவிக்‌ கொண்டு பூந்‌ துகளாகிய, ஆடையினால்‌, (நீர்‌ மட்டத்திலிருந்து) மேலேமழுந்த துண்டினையுடைய பொய்கை அல்லி மலரின்‌ பூந்தாகய இரதி தேவியின்‌ கண்ணீரைத்‌ துடைத்தவாறு, வெண்ணிறமுடைய முசிகண்ணன்‌, இரதியின்பால்‌ இரக்கப்‌ பட்டு உதைத்துவிட்ட தால்‌ பிழைத்த, மன்மதன்‌ மீண்டும்‌; புரசமுகை என்னும்‌ விற்பிடியினால்‌ கிளிகள்‌ அசைத்த இலைகளையுடைய அசோக மரத்தின்‌ பூங்கணைகளைத்‌ தொடுத்து எழுந்து நின்றான்‌.
(சிவனால்‌ எரிக்கப்பட்ட மன்மதன்‌, வண்டுகள்‌ எனும்‌ உடலைப்‌ பெற்று, தென்றல்‌ எனும்‌ உயிர்ப்பினையுற்று தாமரை யாகிய கண்‌ விழித்து எழுந்தான்‌. தன்‌ நண்பன்‌ வசந்தனை (சைத்திரன்‌) தழுவிக்‌ கொண்டான்‌. (வண்டுகள்‌ மொய்த்து எழுந்து வேறொரு மரத்தில்‌ படிதலைப்‌ தழுவுதலாக உருவ௫க்கப்‌ பட்டது) பூநீதுகள்‌ ஆகிய ஆடையால்‌, இரதிதேவியின்‌ கண்ணீரைத்‌ துடைத்தான்‌.
(நீர்மேல்‌ எழுற்துள்ள அல்லி மலரின்‌ பூந்‌?தன்‌ கண்ணீ ராகவும்‌, பூந்தேனில்‌ படிந்த பூந்துகளால்‌ தேன்‌ மறைதல்‌ துடைத்ததாகவும்‌ கற்பனை செய்யப்‌ பட்டது). உயிர்பெற்ற மன்மதன்‌ மீண்டும்‌ அசோக மலரம்புகளைத்‌ தொடுத்து தன்‌ கடமை ஆற்றப்‌ புறப்பட்டு விட்டான்‌. பனிக்‌ காலம்‌, இலையுகிரீந்து, பொலிவின்றி இருத்தல்‌ சிவன்‌, எரித்த மன்மதனுக்கு உருவகம்‌, வசந்தகாலத்தில்‌ வண்டுகள்‌.
மலர்கள்‌, பொலிவுடன்‌ இகழ்தல்‌ மன்மதன்‌ மீண்டும்‌ உயிர்‌ பெற்றதற்கு உருவகம்‌, மன்மதன்‌. நோன்பிருந்த துறவிகளை மலரம்பு எய்து கொடுமைப்‌ படுத்தியதால்‌ புழுவாகப்‌ பிறந்து
ணை்டாூப்‌ பிறப்பெடுதிதான்‌. என்பது இமை புரிந்தோர்‌ புழுவாகப்‌ பிறப்பர்‌ என்ற மர பிளை ஒட்டி எழுந்த கற்பனை, .  இருந்த வண்டுகள்‌, அந்நிலைமாறி .. இறகுகள்‌ பெற்று வானில்‌ பறந்து திரியும்‌ அமனை, புழு நிலை மாறிய வண்ணத்துப்‌ பூச்சிகள்‌ போல இருந்து, பனிக்‌ காலம்‌ புழுறிலை யாகவும்‌ வசந்த சாலம்‌ பறந்து திரியும்‌ வண்டாகவும்‌ உருவ௫த்‌ தாற்‌ போல தொனிப்‌ பொருல்‌ தருறது.
(அற்புதமான கற்பனை தயம்‌ செறிந்த கவிதையிது ,) 5-141-

குயில்களுக்குத்‌ தளிரும்‌, கிளிகட்‌ ஈமப்‌ மங்களும்‌, அஸி (தேனீக்‌) கட்குத்‌ தேனும்‌. வளி (காற்ழடக்கு மணமும்‌, காதலர்‌
கட்கு மலர்களும்‌, அருளோடு நிறையக்‌ தந்த வசந்தகாலம்‌ எனும்‌ காம3தனு, தான்‌ கொடை தந்ததால்‌ தன விருப்பங்கள்‌ நிலற வேறும்‌ என்ற கருத்தால்தான்‌ ஆண்மையை அடைதந்ததோ எனுமாறு கடுமையா பிரிந்தவர்களை வருத்தியது. 5- 142

தேமாவின்‌ பழச்சாற்றின்‌ மணத்தோடு கள்‌ மணமும்‌ கலந்து இதழ்களில்‌ பரிமளிக்க சந்தனப்‌ பூச்னால்‌ எலுமிச்சைத்‌ தோலின்‌ வண்ணத்தோடு எழில்‌ பெற்றிலஙிகும்‌ கரதுகளில்‌ ரோஜாமலர்களை அணிந்து, கற்பூரவாழையின்‌ உட்தண்டின்‌ வண்ணத்தோடு மாறு கொள்ளும்‌ பாவாடைகள்‌, தொடைகளின்‌ தகதகவெனும்‌ மினுமினுப்பைப்‌ பற்றிக்‌ கொண்டு (அவ்வெழிலில்‌) தமக்கும்‌ ஒரு பங்கு கேட்டு முரண, மிதிக்கும்‌ தேனீக்களை
விரட்ட சம்பகப்‌ பூமாலைகள்‌ தலை முடியில்‌ சூடி எழில்‌ பெற்றிலங்ட, கைகளில்‌ சித்திரான்ன வாசனை போக, குங்குமப்‌
மூ பூரிக்‌ கொண்டவாறு, பூக்கள்‌ பாரத்தால்‌ எழில்‌ பெற்ற
சுரபுன்னை மரங்களை தென்றல்‌ அசைத்ததால்‌ பூந்துகள்‌ நீறு தனது மேனி படிய, நங்கையர்‌, பூம்புதரிடையே தன்‌ சகாதலரோடு
இணைத்தின்புற்றனர்‌. V—143

அப்போது — (அந்த வசந்த காலத்தில்‌) V—144

நங்கை (சூடிக்கொடுத்த நாச்சியார்‌); வசந்த காலத்தில்‌ செருக்கினை அடக்குவேன்‌ என்று கூறி, தன்‌ நலம்‌ நாடியவளாக
(மேகரஞ்சனி’ ” எனும்‌ பண்ணினைப்‌ பாடவும்‌, பல்வண்ண மணி களுடன்‌ எழில்பெற்ற வானவில்லும்‌, மின்னலும்‌, கூடிய கார்‌
முகில்‌ கூட்டம்‌ தோன்ற, மலர்ந்த கதம்ப மலர்கள்‌, தாழம்‌பூக்களின்‌ மணத்தைத்‌ தழுவியவாறு மென்காற்று வீசவே,
அதைத்‌ தாங்க முடியாது சோர்ந்து மயங்கி வீழ்ந்தாள்‌.
(பிரிந்தவர்களை கதம்ப (கடம்‌ப) மலரும்‌ தாமை மலரும்‌ மிகவும்‌ வருத்தும்‌ என்பது கவி மறபு) V—-145

நங்கை (ஆண்டாள்‌) முழுமதியைக்‌ கண்டஞ்சி சந்திரகாந்தக்‌ கல்‌ மேடையில்‌ படுக்கவும்‌, அங்கு (வருத்தம்‌) இருமடஙிகாகவே
வானில்‌ இருந்த சந்திரனை வீட்டிற்குக்‌ கொணர்ந்தேனே என்று மிகவும்‌ பரபரப்புடன்‌ எழுந்து செல்வாள்‌.
(சந்திரகாற்தக்கல்‌ குளிரிச்சியுடையது. அதில்‌ சந்திரன்‌ பிரதி பிம்பம்‌ தோன்றும்‌, அது கண்டு தேவி பொறுக்க இயலாமல்‌
விஷ்ணில்‌ இருழ்ததை மண்ணிற்குக்‌ கொணர்ந்தேனே என மறுகினாள்‌ என்பது கருத்து) 5-146-

வண்டுகளின்‌ தத்தை அடக்க வீணை மீட்டவே, அந்த வீணையின்‌ இசை சுருதி கூடி வண்டிசையை இருமடங்கு சுவை
கூட்டி விடவும்‌, உடனே மீட்டுவதை நிறுத்தி **ஊழ்வலியின்‌ முன்னர்‌ நமது உபாயங்கள்‌ பலிக்காது”£” என்று கூறி நெட்டு யிர்த்துச்‌ சிரிப்பாள்‌. yV—147

மலர்ப்படுக்கை மங்கைக்கு மிகுந்த வெம்மையைத்‌ தந்தது, முன்‌ அவள்‌ உதைத்தல்‌ (நகைத்தல்‌, இகழ்தல்‌) முதலிய அதட்டல்‌
களால்‌ மனம்‌ நொந்து மரங்களில்‌ பூத்த மலர்கள்‌, காத்திருந்து பழிவாங்கும்‌ சமயம்‌ வாய்த்தது என மிகவும்‌ வருத்துமேயன்றி
ஆறுதலைத்‌ தருமா?
(நங்கையர்‌ உதைத்தல்‌, இகழ்தல்‌, உமிழ்தல்‌, முதலிய தோகதக்‌ (தூண்டற்‌) கிரியைகளினால்‌ அவமானமுற்ற மரஙி
களில்‌ பூத்த மலர்கள்‌ ஆதலின்‌ அவை பழிவாங்கக்‌ காத்திருந்து இதுதான்‌ சமயமெனப்‌ பழி தீர்த்துக்‌ கொண்டாற்‌ போல மலர்‌
களும்‌ வெம்மை தந்தன என்பது கருத்து) 5-148

அன்ன மங்கை நல்லாள்‌, பூசை புரிவதற்காக எனும்‌ காரணம்‌ காட்டி கவனமின்றி தன்‌ விரக தாபத்தைதி
தணிக்க வேண்டி, தஇருமாலின்‌ திருவுருவத்தை திறமையுடன்‌ சாத்திர விதிப்படி தூரிகை கொண்டு (9த்திரம்‌) எழுக, நாண
முற்று, எல்லா அவயவங்களையும்‌ வரைந்தாள்‌. பின்‌ அந்த தெய்வத்தின்‌ மார்பில்‌ இடங்கொண்ட திருமகள்‌ உருவத்தைக்‌
கண்டு, பொறாமையும்‌, தாபமும்‌ மிக3வ கலக்கமுற்றாள்‌.
(சத்திரம்‌ எழுதும்போது கவனமின்றி இருந்ததால்‌ இருமகள்‌ சித்திரமும்‌ வரைந்தாள்‌ என்றும்‌ பின்‌ அச்சித்திரம்‌ கண்டு
பொறாமையுற்றாள்‌ என்றும்‌ குறிப்பு) V—149

வள்ளையல்லிப்பூப்‌ பொய்கைக்‌ சுரையில்‌ புது கமுநீர்ப்பூம்‌ படுக்கையில்‌ சாய்ந்து, அந்த
தேவி, பெளர்ணமி, (முழு மதிஉலா)யில்‌ குயில்கள்‌ கூவி உயிரைப்‌ பறிக்க குறறுயிரோடு கிடந்து தாளம்‌ செய்த புண்ணியப்‌
பேற்றினால்‌ பிழைத்திருந்தாள்‌. அவ்விரலில்‌ மல்லிகை மலர்‌களை நாடிய வண்டுகளின்‌ ஓசை அவள்‌ காதில்‌ விழாதவாறு
இரவு முழுதும்‌ சொரிந்த கண்ணீரானது காதுகளில்‌ தேங்கிஅடைத்தது, அதனால்தான்‌ மறுநாளும்‌ பிழைத்திருந்தாள்‌.
(காதில்‌ கண்ணீர்‌ தேங்குவதால்‌ ஒலிபுகாது வண்டிசை கேட்கவில்லை. அதுவும்‌ கேட்டால்‌: துயர்‌ மிகுதியால்‌ இறந்‌திருப்பாள்‌ என்பது கருத்து) v-—150

(குடங்களில்‌ உதவியால்‌ வெள்ளத்தில்‌ நீந்திக்‌ கடச்களாம்‌. ஆனால்‌ அக்குடங்களினுள்ளே வெள்ளம்‌ மிகுந்தால்‌ அவை மிதக்காது.. மூழ்கடிக்கும்‌, அதுபோல)
நங்கையின்‌ முலைக்குடங்கள்‌ இரண்டிருந்தும்‌ பிரிவுத்‌ துயராகிய கடலைக்‌ கடக்கத்‌ துணைபுரியவில்லை தோழியர்‌ பெய்யும்‌ பன்னீர்‌ வெள்ளம்‌ உட்புகுந்தமையால்‌, மூழ்கடிக்காமல்‌ எளிதாக மிதக்க செய்யுமா என்ன?
– (விரகதாபம்‌ போக்க பன்னீர்‌ தெளித்தார்கள்‌. அந்தப்‌ பன்னீர்‌ முலைக்‌ குடத்தில்‌ நிறைந்ததால்‌ அதன்மூலம்‌ துயர்‌ வெள்ளத்தை நீந்திக்‌ கடக்க முடியவில்லை என்பது கருத்து]–151

சஞ்சலிக்கும்‌ கண்களையுடைய அந்நங்கையணிந்த தாமரைத்‌ தண்டுகளை, விரைந்து களையவும்‌, ஒடி வந்து பேய்ந்த அரச அன்னம்‌, அதன்‌ சூட்டினைப்‌ பொறுக்காமல்‌ (வாய்‌ வெந்து) அலறித்‌ தவித்திடும்‌ அதன்‌ சேட்டைகளை கண்டு, அவள்‌ மெல்லச்‌ சிரித்தான்‌! அவள்‌ நகையைக்‌ காண்போமா? என முகத்தில்‌ விழி வைத்து முகத்தினையே பார்த்துக்‌ கொண்டிருந்த தோமியர்கட்கு ஒருவிதமாக உயிர்‌ வந்தது
(விரகதாபத்தால்‌ தாமரைத்‌ தண்டுகள்‌ கொதித்தன. அறியாது தின்ற அன்னங்கள்‌ வாய்வெந்து அலறின. மரணப்‌ படுக்கையில்‌ இருப்பவர்சள்‌ சிரித்தால்‌ மீண்டும்‌ உயிர்‌ பிமைப்பா்‌ என நம்பிக்கை ஏற்படும்‌ என்பது மரபு. அன்னத்தின்‌ நிலை கண்டு தேவி சிரித்தாள்‌. தோழியர்கட்கும்‌ போன உயிர்‌ திரும்பியது. சஞ்சலநேத்திரி அலையும்‌ (கண்களையுடையவள்‌) என்ற விளி பொருத்தமானது. உயிர்‌ ஊசலாடுவது போல அவள்‌ கண்களும்‌ ஊசலாடின என்பது குறிப்பு) V—152

இருமகள்‌ கேள்வன்‌ மேல்‌, இனிய குரலையுடைய அந்த தேவி, பாட விரும்பி, வீணைஞஷயத்‌ தொடவும்‌, அவள்‌ கைச்சூடு பட்டு, படிக்கட்டின்‌ (மெட்டு) மெழுகு கரைந்து போகவே, அதனை விடுத்து, தம்புராவை எடுத்து பாட முனையவும்‌, மீண்டிம்‌ வியரீவையினால்‌ தந்திகள்‌ நனைந்து கெடவே, விடுத்துத்‌ தானே பாடுவாள்‌! கழுத்து குரல்தடுமாறவே இயலாது(செய்வதறியாது) நிலை குலைந்து திற்பாள்‌. V—153

ஒவ்வொரு பூம்படுக்கையிலும்‌ நழுவிவிழுந்த சுட்ட வளையல் களின்‌ கரிய குறிகள்‌ இரண்டும்‌, வட்ட வடிவமாகக்‌ கடந்தது;
அழகிய பற்களையுடைய நங்கை, இனி மானமும்‌, தைரியமும்‌ பூஜ்யம்தான்‌ என்று வெட்கத்தால்‌ சொல்ல முடியாமல்‌ எழுதிக்‌
காட்டினாளோ எனும்படியாக இருந்தது.
(பூம்‌ படுக்கையில்‌ சரிந்த வளையல்‌ இரண்டும்‌ இரு பூத்யங்‌களை (சைபர்‌ 0) குறியாகப்‌ பதித்தன, அவை நங்கை, மான
தைரியங்கள்‌ இன்மையை வரைந்து காட்டியது போலிருந்ததுஎன்பது கருத்து, பூஜ்யம்‌ (சுன்னம்‌) இன்மையை எண்ணிற்‌
குறிக்கும்‌) v—154

அந்தத்‌ தாமரைக்‌ கண்ணாள்‌, விரகதாபத்தால்‌ புரளவும்‌, கசங்கிய ஆடை. அணிகளை, உடனுக்குடன்‌ களைந்து வேறு வேறு
அணிகள்‌, உடைகள்‌ அணிந்து (பகற்கால) பூசைக்களுக்காக புத்தாடையணிவது போலத்‌ தோன்றுமாறு பகவத்‌ பூசளையில்‌
கவனமாக இருந்தும்‌, பொய்யான நலன்‌ காட்டியும்‌ காதல்‌ நோயை மறைத்தாலும்‌ அது எப்படியும்‌ வெளிப்படவே அதைக்‌
கண்டு (விஷ்ணு கத்தர்‌) மனம்‌ வருந்தினார்‌. V—155

விஷ்ணு சித்தர்‌, புதல்வர்‌ பேறின்மையாலும்‌, ஒருமகளும்‌ இவ்விதம்‌ இருப்பதறிந்தும்‌, காதல்‌ உணர்ச்சிகளை அறியாதவர்‌
ஆகையாலே, இது ஏதோ ஒரு தவம்‌ (விரதம்‌) என்று கருதினார்‌.V—156

(விஷ்ணுசித்தர்‌) நினைந்து நாள்தோறும்‌ வளரும்‌ மகள்‌ உடல்‌ மெலிவினைக்‌ கண்டு மிகுந்த வருத்தம்‌ அடைந்து அதன்‌
காரணத்தை அறியாமல்‌; வேண்டாம்‌ என்று அறியாமையால்‌ தடுத்துப்‌ பார்த்தும்‌, வரவர அதிகமாவதையறிந்து கோயிலுக்குச்‌
சென்று, பூசை முடித்து வணங்கிய பின்‌, தன்‌ மன வருத்தத்தை அநீநகரத்‌ திருமாலுக்கு (ஸ்ரீவில்விபுத்தூர்‌, மன்னார்‌ சுவாமிக்கு)
விண்ணப்பித்துட மீண்டும்‌ வணங்கி, ஓ தேவா! தங்கள்‌ அடிமை யாகிய என்மசள்‌ எதற்காகவோ விந்தையான விரதத்தை மேற்‌
கொண்டு உடலை மெலிவிக்கிறாள்‌. வேண்டாம்‌ என்றாலும்‌ கேட்க மாட்டாள்‌. மகன்‌ இல்லாத எனக்கு, மசன்‌ ஆனாலும்‌
மகள்‌ ஆனாலும்‌ அவளே தான்‌. நான்‌ என்‌ செய்வேன்‌! மேலும்‌, அள்‌ தவம்‌ செய்யும்‌ விதம்‌ எங்கள்‌ தவமுறையன்று, நாங்கள்‌
துங்கள்‌ தினங்கள்‌, தங்கள்‌ அவதார தினங்கள்‌ தவிர பிற நாட்‌ களில்‌ இரவில்‌ சண்‌ விழித்தறியோம்‌. நாங்கள்‌ தாமரைக்‌
கொட்டை அச்கமாலையன்றி தாமரைத்‌ தண்டு மாலையை அறியோம்‌. நாங்கள்‌ பிரசாதமான பூக்களை காதில்‌ செருகுவ
தன்றி, பூவினாலான படுக்கையில்‌ படுத்தறியோம்‌. நாங்கள்‌ தங்கள்‌ தீர்த்தத்தைப்‌ பருகினால்‌, அவள்‌ தன்னுடல்‌ முழுதும்‌
நனைத்துக்‌ கொள்கிறாள்‌. நாங்கள்‌ சாந்திராயண விரதத்தில்‌ கலைகட்கேற்ப (வளர்பிறையில்‌) கவளத்தைக்‌ கொஞ்சங்‌
கொஞ்சமாக அதிகமாக்க (உண்டால்‌) குறைத்துக்கொண்டு வருறாள்‌, நாஙிகள்‌ மூச்சை உள்‌ வாங்க அடக்கினால்‌ அவள்‌
மூச்சை (நெடு மூச்சுக்கள்‌) வெளியே விடுகிறாள்‌. நாங்கள்‌ சின்‌ முத்திரையாக கையை இதயத்தில்‌ சேர்த்தால்‌ அவளோ கையைக்‌
கன்னத்தில்‌ வைத்திருக்கிறாள்‌. நாங்கள்‌ மரவுரி அணிந்தால்‌ அவன்‌ தளிரிலைகள்‌ அணிகிறாள்‌. நாங்கள்‌ வளர்பிறை புதிய
நிலவினை (பிறைச்சந்திரனை) பாராட்டினால்‌ அவள்‌ முழுமதி யினை இகழ்கின்றாள்‌. இவ்விதமாக இருக்கிறாள்‌. இது என்ன
விரதமோ! பித்துற்றனள்‌ போலும்‌, தங்கள்பால்‌ எத்துணை பக்தியிருந்தாலும்‌ எங்களைப்‌ போன்றோருக்கு பிரகிருதி
சம்பந்தம்‌ ( உலகப்பற்று) விடாது. அந்தர்‌ யாமியாகிய உனக்குத்‌ தெரியாதது ஒன்றுமில்லை. இவளது நிலையினைத்‌ தெரிவிக்க
மாட்டாயா?” * என்றார்‌. எனலும்‌ துயைமிகுந்து அவரது வைஇீகத்தை (உலக விவகாரம்‌ தெரியாத நிலையை)யுணர்ந்து
குறுநகை புரிந்த குன்றெடுத்த மாதவன்‌ இவ்விதம்‌ ண -5-157

முகில்‌ போன்ற நீல வண்ணனே/ மது கைடபார்‌ எனும்‌ இராக்கதார்களாகிய நாகங்கட்டு கருடன்‌ ஆனவனே! யோகியரின்‌
இதய முடிச்சைப்‌ பிளந்து எழுந்த பெண்‌ பாம்பின்‌ (குண்டலினி சக்தி) உயிர்ப்பினோடு கபாலத்தில்‌ ஓழுகும்‌ அமுததாரையாகிய
பாற்கடல்‌ அலைகளில்‌ விளையாடும்‌ விருப்புடையவனே பத்துத்‌ தலை இராவணனின்‌ சகோதரன்‌ (விபீஷணன்‌) சரண்‌ புகப்‌ பெற்றவனே. V—158

தேவர்கள்‌ அனைவரும்‌ வணங்கும்‌ பாதங்களையுடையவனே! அசுரரை அழிக்கப்‌ பிறந்த சீதையின்‌ கேள்வனே/ பிறவிக்குப்‌
பகையான புகழ்மிக்க பெயரையுடையவனே . V—159

எல்லா பிரம்மாண்டங்களையும்‌ வயிற்றிலடக்கியவனே / குமரனின்‌ தவப்பயனாக குழந்தையாக அவதரித்தவனே! நீரி
நிறைந்த கோனளேரியில்‌ பொன்‌ மண்டபத்தில்‌ அமர்ந்தவனே /V—160

அது. தெலுங்கு மொழியில்‌ செம்பாவி (செங்கிணறு) என்ற இயல்பான பெயருடைய, யவனர்‌ (துருக்கர்‌) களின்‌ குருதியால்‌
நிறைக்கப்பட்ட, மேகங்களைத்‌ தடுக்கும்‌ கோட்டைகளை அழித்த சேனைகட்குமுன்‌ நடக்கும்‌ கிருஷ்ணராய மன்னன்‌ எனப்‌ பெயா்‌
பூண்ட எனது *ஆமுக்த மால்யத’ எனும்‌ நூலில்‌ ஐந்தாவது அத்தியாயம்‌ இனிய செய்யுட்களால்‌ அமையப்பெற்றுள்ள து.-V—161

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ கிருஷ்ணதேவராயன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading