ஸ்ரீ ஆ முக்த மால்யதா-(முத்துகளால் ஆன மாலை)-மூன்றாம்‌ அத்யாயம் -ஸ்ரீ கிருஷ்ணதேவராயன்-மொழிபெயர்ப்பாளர்‌ உரை -பன்மொழிப்‌ புலவர்‌ மு. கு. ஜகந்நாதராஜா

மூன்றாம்‌ அத்தியாயம்‌

திருமகள்‌, நிலமகள்‌, நப்பின்னை (மீளா தேவி)யர்க்குக்‌ கணவ/ எருதாகி வந்த இராக்கதனைக்‌ கொன்றழித்தவனே!
வராக அவதாரத்தின்‌ தன்‌ கோரைப்‌ பற்களால்‌ இரணியாட்‌ சனைக்‌ கொன்றவனே? குமரனை பார்வையால்‌ அருள்பவனே!
வெங்கடேசனே! 111.1

கேட்பாயாக. அவ்விதம்‌ சென்று விஷ்ணு சித்தன்‌ (பெரியாழ்வார்‌) 1172

நாள்தோறும்‌ விவாதங்கள்‌ நடந்து கொண்டிருந்ததால்‌ முன்னறிவிப்பின்றியே காவலர்கள்‌ அனுமதிக்கவும்‌ தான்‌ செல்லவே, மன்னனும்‌ அறிஞர்குழுவும்‌, ஐயமுடன்‌ உடன்‌ எழுந்து மரியாதை செய்யவும்‌, அவைச்சுளம்‌ புகுந்து, மன்னனால்‌ தரப்பட்ட உன்னதமான இருக்கையில்‌ அமர்ந்து [11.3

விருந்தாளியாக மரியாதை செய்யப்பட்டு, இருமால்தன்‌ மனத்‌ கமர்ந்திருக்க, அமைதியாக இருந்த அறிஞர்‌ குழுவை நோக்கி, “அன்னியமா நான்‌? தொடங்கியதை நிறுத்துவானேன்‌? பேசுங்கள்‌ * என்று சொன்னான்‌. uI—4

சில சொற்களிலேயே அவர்களது திறமையைப்‌ புரிந்து கொண்டு, புன்முறுவலோடு அரசன்முகம்‌ நோக்கி *₹நீ நடுவராக
இருப்பின்‌ யாமும்‌ சில பேசுகிறோம்‌” என்று கூறி அவன்‌ அனுமதி பெற்று, 115

பெரியாழ்வார்‌ வாதம்‌

அவர்களுள்‌ ஒரு அறிஞனைப்‌ பார்த்து அவன்‌ கூறிய வாதங்‌ களையே தானும்‌ மீண்டும்‌ கூறி அவன்‌ கருத்தை திச்சயப்படுத்திக்‌
கொண்டு பின்‌ அவன்‌ வாதங்களைக்‌ கண்டிக்கத்‌ தொடங்க சொன்ன கருத்துக்களில்‌ உள்ள குற்றங்களை மெல்ல எடுத்துக்‌
காட்டிப்‌ (விரைவுபட்டால்‌ தன்‌ வாதமே கெடலாம்‌, பொறாமை ஏற்படலாம்‌) பின்னர்‌, அவ்‌ அவையோர்‌ உடன்படப்‌ Gua,
இடையே பேசும்‌ வாதங்களுக்கு ஒவ்வொன்றாக பதில்‌ கூறு, எல்லாரும்‌ இடைமறித்துப்‌ பேசும்போதும்‌, கலவரமடையாமல்‌,
எல்லோரையும்‌ சமாதானம்‌ அடையச்‌ செய்து, முதலில்‌ பேசியவனிடமே திரும்பி, மற்றும்‌ சுருதி சுமிருதி, சூத்திரம்‌ (வேதம்‌
மனுதர்மசாஸ்திரம்‌, பிரம்ம சூத்திரம்‌) முதலியவற்றால்‌ ஒரே கருத்தை உருவாக்கி, தனது சித்தாந்தத்தை அனைவரும்‌
ஏற்கச்‌ செய்து, எதிரியை முறியடித்து அருளோடு அவனை விடுத்து IJI—6

**நீ என்ன சொன்னாய்‌? வருக** என்று அடுத்தவனை அணுகி, அவளையும்‌ தோற்றோடச்‌ செய்து, அவ்வந்தணன்‌
(பெரியாழ்வார்‌) அனைவரையும்‌ வென்றான்‌ IlI—7
—————

பிறர்மதம்‌ மறுத்தல்‌
உலகப்‌ படைப்புக்கு ₹பிரடஇருதி” (பிரதானம்‌)யே மூல காரணம்‌ என்னும்‌ சாங்கிய வாதியை *ஈக்தோர்‌ நாசப்தம்‌”
முதலிய பிரம்ம சூத்திரங்களைக்‌ கொண்டும்‌,
ஈசன்‌ (பிரம்மம்‌) *நானே’ என்னும்‌ ஜீவாத்மா, பரமாத்மா ஒன்றே என்கிற) வேதாந்தியின்‌ .(அத்வைதிகளின்‌) மாயா
வாதத்தை *:போக மாத்ர சாம்யலிங்காச்ச’” எனும்‌ சூத்திரங்‌ களைக்‌ கொண்டும்‌,
**கருமமே (வேள்வி முதலியவை) பலன்‌ தரும்‌ எனும்‌ பூர்வமீமாம்சா வாதியாகிய கடவுளை ஏற்காதவர்களை ₹பலம்‌
அத: உபபத்தே’ என்றும்‌ சூத்திரத்தின்‌ மூலமும்‌ இறைவனை அனுமானம்‌ மூலமே பெறமுடியும்‌ (சப்தபிரமாணத்தாலன்று)
எனும்‌ பரமாணுவாதி, யாகிய வைசேடிகரை, சாஸ்த்ர யோனித்வாத்‌” ‘ எனும்‌ சூத்திரம்‌ மூலமும்‌,
“நித்தியங்களில்‌ எல்லாம்‌ நித்தியமான து” எனும்‌ (நித்யோ நித்யானாம்‌ எனும்‌ கடோபநிடத) சுருதி மூலமாக உலசம்‌
கஷணிகம்‌ (அநித்தியம்‌) எனும்‌ பெளத்தமத வாதியையும்‌,
“மன்னனே இறைவன்‌” எனும்‌ பிரத்தியட்சவாதியாகய சார்வாகனை *அனுபபத்தேர்‌ நசாரீரக;) எனும்‌ சூத்திரம்‌ மூலமும்‌ வாதிட்டு வென்றான்‌. il—8

———
அறிஞர்களால்‌ புகழப்பட்ட விஷ்ணு சித்தன்‌( பெரியாழ்வார்‌)
இவ்விதம்‌ சத்‌.சித்‌, ஆனந்தமயமான பரப்பிரம்ம தத்துவத்தை. வியாசபகவானால்‌ அருளப்பட்ட பிரம்மசூத்திரம்‌, மற்றும்‌ உபநிடதங்கள்‌ மூலம்‌ நிறுவி, பின்னா்‌ அப்பரப்பிரம்மதத்துவம்‌ விஷ்ணுவே(திருமால்‌) என்று விசிஷ்டாத்வைத தத்துவத்தை தெளி வாக தக்க பிரமாணங்களுடன்‌ எடுத்துச்‌ சொன்னான்‌, 171…

ஆதியில்‌ (படைப்பின்‌ தொடக்கத்தில்‌) நாராயணன்‌ ஒருவனே இருந்தான்‌. பிரம்மா இல்லை. மசேசன்‌ இல்லை.
ஆகாயம்‌ இல்லை. சூரியன்‌ இல்லை. சந்திரன்‌ இல்லை. நட்சத்திரங்கள்‌ இல்லை. நீர்‌ இல்லை.  இல்லை. அப்படியிருக்கும்‌
போது விளையாட்டாக தனித்திருப்பது தகாது: பலவாகிறேன்‌ என நினைந்து சத்‌-௮9த்‌ இரண்டிற்‌ புகுந்து, என்று சாந்தோக்கிய
உபநிடதம்‌ தெரிவிக்கிறது.

*அந்தராதித்யவித்யையில்‌’ சூரியனில்‌ இருக்கும்‌ தாமரைக்‌ கண்ணன்‌ அவனே என்று கூறுகிறது.
எட்டுக்‌ கண்களையுடைய பிரம்மாவும்‌, முக்கண்‌ உடைய சிவனும்‌, ஆயிரங்கண்ணுடைய இந்திரனும்‌ ௮ன்றி இரு கண்கள்‌
உடைய (திருமால்‌) தெய்வமே கூறப்படுதலின்‌ அச்சுருதியே தெளிவாகக்‌ கூறியுள்ளது.* HI—10
இந்தச்‌ சுருதியில்‌ (சாந்தோக்கியத்தில்‌) இணையற்றுள்ள சொரூபமும்‌, குணங்களும்‌, செல்வங்களும்‌ உள்ளும்‌ புறமும்‌
நிறைந்திருப்பது நாராயணனே என்றும்‌, நாராயணீய யக்னி கோப நிஷத்திலும்‌ வேதத்தில்‌ அருணம்‌ எனும்‌ பாகத்திலும்‌
நாராயணனே பரம்‌ பொருள்‌ என்பது தெளிவாக்கப்பட்டுள்ள து. 1.11
இந்த சுருதியில்‌ *அபஹதபாப்மாதி திவ்யோ தேவ ஏதோ நாராயண” என்று கூறப்பட்டுள்ளபடி வேதவாக்கியங்களில்‌
நிலையற்றுள்ள நாராயண பதமே. வேறு தெய்வம்‌ இல்லை என்னும்‌ உண்மையை சொல்லி வாதத்தைத்‌ தீர்த்துவைத்துள்ளது.1[[…..12
*(சாந்தோக்கிய உபநிடதத்தில்‌ அந்தராதித்ய வித்தையில்‌,
“ய ஏஷோ ன்தராதித்யே ஹிரண்மய… ஸர்வ ஏவ ஸுவார்ணஸ்‌ தஸ்யயாதா,
கப்யாசாம்‌ புண்டரீகமேவ மக்ஷிணி தஸ்யோதிதி நாம”எனும்‌ மந்திரம்‌ ஈண்டு குறிப்பிடப்படுகிறது)

முன்பு ₹பிரதர்த்தனன்‌’ எனும்‌ அரசன்‌ பரசுராமனுக்கஞ்சி, அரசினை நீத்துக்‌ காட்டுக்கேக, வீடுபேற்றுக்காக இந்திரன்‌
வேண்ட, இந்திரன்‌ பிரத்தியட்சமாகி *என்னை வணங்குக” என்றான்‌. தன்னை வணங்கி வரும்போது தன்னை வணங்குக
என்றது அந்தர்யாமியாக உள்ள நாராயணனை வணங்குக என்பது கருத்தாகும்‌. சத்‌ ௮சித்‌ அனைத்தும்‌ நாராயணனின்‌ சரீரம்‌ ஆகும்‌.

வாமதேவ முனிவரும்‌ இதையே கூறுகிறார்‌:
அறம்‌, பொருள்‌, இன்பம்‌, மூன்றும்‌ பிரம்ம ருத்திரர்‌ முதலிய தெய்வங்கள்‌ அளிப்பினும்‌ வீடுபேறு அளிப்பது நாராயணனே.
மற்றும்‌ எல்லாவற்றுக்கும்‌ அவனே அடைக்கலம்‌. தாய்‌, தந்தை சகோதரர்‌, வீடு, பாதுகாவலன்‌ அனைத்தும்‌ அவனே என்று
சுபாலோபநிஷத்‌ கூறுகிறது.

இவ்விதமாக பாண்டிய மன்னனுக்கு போதித்து விஷ்ணு சித்தன்‌ அ௮ம்மன்னனுக்கு நாராயணன்‌
அடைய வழி கூறுகிறேன்‌ என்று காண்டிக்ய, கேசித்வஜ சம்வாகுத்தைக்‌ கூறலானான்‌. [ரா….-13

——-

காண்டிக்கிய கேசித்துவஜ உரையாடல்‌
நிமி எனும்‌ அரச வம்சத்திற்கு சனகர்கள்‌ என்பது பொதுப்‌ பெயராகும்‌. ௮ம்மரபில்‌ தருமத்துவசன்‌ எனும்‌ மன்னனுக்கு
மிதத்துவசன்‌, திருதத்துவசன்‌ என இருமக்கள்‌ பிறந்தனர்‌. அவர்‌கட்கு முறையே (மிதத்துவசனுக்கு) கருமத்திலீடுபாடுடைய
சாண்டிக்கியனும்‌, இருதத்துவசனுக்கு பிரம்மஞானத்தில்‌ ஈடுபாடுடைய கே௫ித்துவஜனும்‌ பிறந்தனர்‌. 11114

அவர்கள்‌ தமக்குள்‌ அரசு பெற வேண்டும்‌ எனும்‌ நோக்கில்‌
பகைமை பூண்டு பல நாட்கள்‌ போரிட்டனர்‌. மக்கள்‌ நிலை குலைவும்படி இடைவிடாது போரிட்டனர்‌, WI—15

அவர்கள்‌ இருவரும்‌ *இச்சுமதியாற்றின்‌ இருகரையிலும்‌ இருந்து கொண்டு, விடிந்ததும்‌ படைகளைத்‌ தத்தம்‌ பாசறைகளி
லிருந்து ஓல்று சேர்த்து வெளியே வந்து போரிட்டு, மீண்டும்‌ பாசறைக்குச்‌ சென்றும்‌ இவ்விதம்‌ நாள்தோறும்‌ போரிட்டுக்‌
கொண்டிருந்தனர்‌. இறுதியில்‌ கேசித்துவஜனின்‌ படைகளின்‌ முற்றுகைக்‌ காற்றாமல்‌ காண்டிக்கியன்‌ தோற்றோடினான்‌. 1]1–16

தோற்றோடிக்‌ காட்டிற்குச்‌ சென்று, ஆங்காங்கே மலைச்‌ சிகரங்களில்‌ ஒற்றர்களை வைத்து சுற்றிலும்‌ தடையமைத்துக்‌
குடில்களில்‌ மந்திரி, குர, சேனைகளோடு கூடி இருந்து வந்தான்‌.
(மலைச்சிகரங்களில்‌ ஒற்றர்களாக காவலர்கள்‌ இருந்து எதிரி நடமாட்டத்தை உடனுக்குடன்‌ அடுத்தடுத்துள்ள பாசறைகட்கு
ஓலி மூலமோ, தீப்பந்தம்‌ மூலமோ, சமிக்ஞை செய்து அறிவிப்பது வழக்கம்‌) ; 1[1–17

இவ்விதம்‌ இரு அரசுகளும்‌ தனக்குச்‌ சேர்ந்ததும்‌ கேசித்துவஜன்‌, பயனில்‌ பற்றற்றவனாக அறியாமையையும்‌
சாவினையும்‌ வெல்வேன்‌ இனிப்‌ பிறப்பெடுக்கமாட்டேன்‌ என்று யோகத்தில்‌ இணைந்து ஞானம்‌ அடைந்து, வேள்விகள்‌ செய்து,
தட்சை பெற்று இருக்கும்‌ காலத்தில்‌ 111–18

வேள்விச்‌ சாலைக்கருகே ஆற்றோரம்‌ புதரில்‌ புல்‌ மேய்ந்து கொண்டிருந்த யாகப்பசு, யமனின்‌ கொடியோ என அசையும்‌
பெண்பாம்பு போன்ற புலியின்‌ வாலினைக்‌ கண்டு, பயந்து, கழுத்திலுள்ள மணி ஒலிப்பப்‌ பாய்ந்து குஇக்கவும்‌, அந்தப்‌ புலி
இடிபோல மேலே தாக்கியது. 111… [9

புலி வாய்‌ நாற்றமும்‌ ஈக்களும்‌ மூச்சையடைக்க பசு மயங்க, மர இலைகள்‌ உதிருமாறு தள்ளிக்‌ கொண்டு போகவும்‌, மேக
முழக்கம்‌ போன்ற ஒலி செவியில்‌ வீழவும்‌ பசுமேய்ப்பவன்‌ மயங்கி நிலத்தில்‌ விழவும்‌, அந்த வெம்புலி(வேங்கை) கழுத்தைக்‌ கடித்து
மாறு தலைபோட்ட பசுவை வீழ்த்திப்‌ பாய்ச்சலுடன்‌ 17-20

தன்னுடம்பில்‌, கொம்பு குளம்புகள்‌ படாமல்‌ (பசுவின்‌ உடலை) திருப்பியவாறு ஓசையோடு வாலையாட்டி உதிரம்‌
குடித்தவாறே சாதுரியமாக வேள்விப்பசுவைத்‌ தன்‌ குகைக்கு இழுத்துச்‌ செல்லும்‌ நேரத்தில்‌ 121

வயல்‌ வெளிகளில்‌ காவலிருப்பவர்கள்‌ கூச்சடலிடவே, அந்தணர்கள்‌ அந்நதியில்‌ சந்தியா வந்தனம்‌ செய்து கொண்டிருந்‌
தவர்கள்‌ மரக்கிளைகளில்‌ ஏறி கைதட்டி அதட்டவும்‌ குதிரை வீரர்கள்‌ விரட்டியடிக்கவும்‌, அப்புலி (பசுவை) அங்கேயே போட்டு
விட்டு உதடுகளை நக்கிக்‌ கொண்டும்‌ (சினத்தினால்‌) குடகுட வென உறுமிக்கொண்டும்‌ (மீண்டும்‌ இரை கிடைக்குமோ என)
திரும்பிப்‌ பார்த்துக்‌ கொண்டும்‌, மரங்கள்‌ செறிந்த இடத்திற்கு (தப்பித்துக்கொள்ள) விரைந்தோடிச்‌ சென்றது. [11-22

குபுகுபுவெனக்‌ குருதி கொப்புளித்து வரவும்‌, கழுத்துக்‌ குழி யில்‌ உயிர்ப்பு திக்குமுக்காடவும்‌, கண்விழிகள்‌ பிதுங்க நடுங்கிய
வாறு குற்றுபிரோடு உதைத்துக்கொண்டு இருந்தஅந்தப்‌ பசுவைப்‌ பற்றிய செய்தியை, 1.23

அரசன்‌ (கேசிதுவஜன்‌) இடம்‌ விண்ணப்பிக்கவும்‌ அவன்‌ (தன்‌ வேள்விப்‌ பசு இறந்து போனதால்‌) பிராயசித்தம்‌ (கழுவாய்‌)
என்னவென்று ருத்துவிக்குகளை (யாகசாலைத்‌ தலைமையந்தணனை)க்‌ கேட்டான்‌.அவர்கள்‌ கசேரு முனிவளைக்‌ கேட்கக்‌
கோரினர்‌. கசேருவும்‌ தனக்குத்‌ தெரியாதென்று சுனகமுனிவனைக்‌ கேட்கச்‌ சொல்ல, அவரும்‌ தனக்குத்‌ தெரியாது என்று கூறி
விட்டு “மன்னனே! ருத்துவிக்குகள்‌, கசேரு, ஆகியோருக்கோ எனக்கோ தெரியாது. நாங்கள்‌ மட்டுமல்ல! உலகில்‌ யாருக்கும்‌
தெரியாது. உனக்கு (தோற்றோடி) அரசினைத்‌ தந்து (படை,குடி, கூழ்‌, அமைச்சு, நட்பரண்களையும்‌ தந்து) மரங்கள்‌ வெறும்‌
கற்பாறைகளுக்கடையே திரிந்து கொண்டு இருக்கும்‌ காண்டிக்‌இயன்‌ ஒருவன்தான்‌ தெரிந்திருக்கலாம்‌! விரும்பினால்‌ அவனைக்‌
கேள்‌’ ” என்றான்‌. ்‌ VWI—24

அரசன்‌ “முனிவரனே! என்‌ பகைவன்‌ நான்‌ பிராயச்சித்தம்‌ கேட்கச்‌ செல்லும்‌ போது என்னைக்‌ கொன்றால்‌ யாகப்பலன்‌
இட்டும்‌. கொல்லாமல்‌ பிரயாச்சித்தம்‌ சொன்னால்‌ யாகம்‌ நிறைவேறி முழுமைபெறும்‌. இருவிதத்தும்‌ என்‌ விருப்பமே
நிறைவேறும்‌: ‘என்று சொல்லித்‌ தேரில்‌ ஏறிச்சென்றான்‌. 11-25

கேசித்துவஜன்‌, மான்தோல்‌ மேலாடையாக, ஆயுதமின்றி, காண்டிக்கியன்‌ இருக்கும்‌ இடத்திற்குப்‌ புறப்பட்டுக்‌ காட்டை
யடையவும்‌, ஒற்றர்கள்‌ அவன்‌ கொடியைக்‌ கண்டதும்‌ யார்‌ என அறிந்துகொண்டு ஒன்றுகூடி. கூச்சலிட்டு அறிவிக்கவும்‌. 11726

நாட்டை விட்டோடி வந்த மக்கள்‌ பயந்து கலங்க காண்டிக்கென்‌ அவர்கள்‌ பயம்‌ தீர்ப்பதற்காக சிலரை நியமித்து,
மலைச்‌ சிகரங்களில்‌ ஆங்காங்கு வில்‌ வீரர்களை அனுப்பி த்குந்த ஏற்பாடுகளைச்‌ செய்து, தான்‌ கோபம்‌ மிக்கவனாக வாசற்‌
சுதவைத்‌ திறந்து வெளியே வந்தான்‌. WI—27

வருகின்ற பகைவனை (கேசித்துவசனைப்‌) பார்வையாலேயே சுட்டெரித்து, தன்‌ செல்வத்தைக்‌ கவர்ந்ததாலும்‌ மீண்டும்‌ ஈண்டு
வந்துற்றதாலும்‌, சினத்தாலும்‌ முத்தியாகச்‌ சேர்ந்து வலிமை யுற்று மின்னல்போல அசையும்‌ வில்லில்‌ அம்பைத்‌ தொடுத்துச்‌ சொன்னான்‌. . 11128

குனம்‌, தானியம்‌, யானை, குதிரை, பசுக்கூட்டம்‌, அரசு எல்லாம்‌ கவர்ந்தது போதாதென்று மாரீசனைப்போல மான்‌
தோல்‌ போர்த்துக்கொண்டு, சாந்தமுடையவனைப்‌ போலப்‌ புகுந்து, உயிரையும்‌ கவர வந்தனையோ? இய நோக்குடை
யவனே! உன்னைக்‌ கூரிய வேலால்‌ கொன்றொழிப்பேன்‌” * 11[..-29

எனவும்‌, கையெடுத்து ஓஒ! கோபப்படாமல்‌ கேள்‌! நான்‌ கொல்ல வரவில்லை. என்‌ வேள்வியில்‌ தவறுதலாக இடையூறு
நேர்ந்துவிட்டது. அதற்குப்‌ பிராயச்சித்தம்‌ அந்தணர்களைக்‌ கேட்க அவர்கள்‌ உன்னிடம்‌ அனுப்பி வைத்தார்கள்‌. “மன்னா!
அவனுக்குத்தான்‌ பிராயச்சித்தம்‌ தெரியும்‌ போ!” என்று கூறினர்‌.
கோபத்தையோ சாபத்தையோவிடுக, எதுவானாலும்‌ மேல்தான்‌(கோபம்‌ விட்டால்‌ அருள்கூர்ந்து பிராயச்சித்தம்‌ கேட்டு வேள்வி முடித்து நலம்பெறுவேன்‌ அல்லது சாபம்‌(வில்‌) விட்டால்‌ இறந்துபடுவேன்‌ அதுவும்‌ சரிதான்‌ என்பது கருத்து.) IJI—30

எனவும்‌, அவன்‌ (காண்டிக்கியன்‌) மரச்செறிவிற்குள்‌ புகுந்து மந்திரி, புரோகிதர்‌ முதலியவர்களுடனும்‌ அச்செய்தி சொல்லி
ஆலோசனை கேட்கவும்‌ மந்திரிகள்‌ இவ்விதம்‌ கூறினர்‌. 111-231

“பங்காளி (தாயாதி) நமக்கொரு சிரமமும்‌ இல்லாமல்‌ தானே அருகணைந்துள்ளான்‌. இதுதான்‌ சமயம்‌! எழுக!
மன்னவா! அருள்போதும்‌! முற்றிய இலைகளைத்‌ இன்னச்‌ செய்து மக்களைக்‌ கொல்லாதே! * JIJ—32

மனைவி மக்கள்‌ குழுமி தரிசு நிலங்களில்‌ ரை கொய்யச்‌ சென்று, மெல்லடித்‌ தாமரைகளில்‌ முள்‌ தைத்து அதை எடுக்கும்‌
போது அவர்கள்‌ நோவால்‌ அலறுவதால்‌ கண்களுக்குத்‌ தூக்கம்‌ வராமல்‌ ஒதுங்கிச்‌ இடந்து வேதனைப்‌ படுகிறோம்‌. எங்களுக்கு
மட்டுமன்று! நீ படும்‌ பாட்டைச்‌ சொல்ல முடியுமா? 171…33

உடையவன்‌, அமைச்சு, நட்பு, பொருள்‌ (பொக்கிஷம்‌) நாடு, படை, அரண்‌ எனும்‌ ஏழு அரசியலங்கமும்‌ உடையவன்‌ (அரசு) இருந்தால்‌ முன்பாக அதுவும்‌ இருக்கும்‌. அவயவி (ஆன்மா) சுகமாக இருந்தால்‌ அங்கங்களும்‌ (உறுப்புகளும்‌) சுகமாக இருக்கும்‌ என்பது நாம்‌ அறிந்ததுதானே 11134

அவன்‌ காரியத்தை முடித்துவிட்டால்‌, அரசு இரண்டுமே உன்னைச்‌ சாரும்‌, எப்படியேனும்‌ அரசனுக்கு பகைவனை
வெல்வது இன்றியமையாதது, அதனால்‌ பொருட்பேறும்‌ மக்களை அருளோடு பாதுகாத்தலும்‌ அறமாகும்‌. 11-35

தாங்கரிய குரோதமுடைய வலிமையான பகைவனை அநியாயத்தால்‌ கொன்றால்‌ அந்தப்‌ பாவத்திற்குப்‌ பரிகாரம்‌,
நியாயமாக மக்களைப்‌ பாதுகாப்பதுதான்‌ ஆகும்‌. 136

இந்திரன்‌, இரி£ீரிடன்‌ (முத்தலையன்‌) எனும்‌ அந்தணனும்‌ தன்‌ குருவானவுமான பெரியவனால்‌ தன்‌ நாட்டுக்குத்‌ இமை
நேரும்‌ என்று அறிந்து கொல்லவில்லையா? அருளை விழக!
உன்னை நம்பிய மக்கள்‌ துன்புற்று மெலிய இந்த அருள்‌ என்ன பயன்‌? [ரா–37 :

மன்ன! நல்லொழுக்கமுடைய உன்னை இந்தப்‌ பாடுபடுத்திய சுயவனைக்‌ கொன்று, பின்பு வேள்விகள்‌, தான தருமங்கள்‌
செய்து பாவத்தைப்‌ போக்கிக்‌ கொள்வாயாக, 111–38

இன்னும்‌ இரண்டு நாட்கள்‌ பார்த்து உன்னிடம்‌ சாரமில்லை என்று கண்டால்‌ மக்கள்‌ ஊரை நோக்கிப்‌ போனால்‌, நீ துறவி
யாக வேண்டும்‌ அல்லது தாழ்ந்த நிலையில்‌ உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும்‌! இதுதவிர வேறுவழியுண்டேோ? 111-..39

மன்ன! தவம்‌ செய்ய முயன்றாலும்‌, அவமானம்‌ என்னும்‌ அம்பு தைத்த வேதனை இதயத்தில்‌ இருக்கும்போது வெறும்‌
கண்ணை மூடிக்கொள்ளலாமே தவிர, பரப்பிரம்மத்தை தியானிக்க முடியுமா? Tlf 40

பரசுராமன்‌ அவமானத்தால்‌, தன்‌ தந்தையைக்‌ கொன்ற மன்னார்களைக்‌ கொன்று அவர்கள்‌ குழந்தைகளையும்‌ மரபினரை
யும்‌ தேடித்‌ தேடிக்‌ கொன்று பிறகுதான்‌ தவம்‌ செய்து முனிவன்‌
ஆனான்‌. அரசைப்‌ பெறுவதற்காக இல்லாவிட்டாலும்‌ மன அமைதியுறவேனும்பகையை அழிக்கவேண்டாமா? 11-41

பகைமையும்‌ கவலையும்‌ இல்லாமல்‌ கிடைத்தது போது மென்கிற சாதாரண குடிமகன்‌ ஆக இருப்பது மேல்தான்‌.
ஆனால்‌, அரச வேடம்‌ ண்டவனுக்கு பகை ஏற்பட்டுவிட்டால்‌ அமைதியாக பசையை மறந்திருப்பது தகுந்ததன்று 11-42

புலிமலையிலிருந்து (ஈன்ற(புனிறு) காலத்தில்‌) கண்ணோயால்‌ ஊருக்குள்‌ வந்துவிட்டால்‌, மனிதர்கள்‌ நோய்‌ நீக்கிக்‌ கொள்‌
என்று சொல்லி குகைக்கு அனிப்பி வைத்துவிட்டுப்‌ பின்னா்‌ அதனாலே கொல்லப்படுவரோ? ஊரிலேயே கூச்சல்‌ போட்டுக்‌
கத்தியாற்‌ குத்திக்‌ கொல்வார்களா? சொல்க! 111–43

இந்நேரம்‌ வலிமை மிக்க அவனை நீதிக்காக விட்டு விட்டா யானால்‌, இழந்த அரசினை மீண்டும்‌ பெறுவதற்கு என்ன வழி
பபிருக்கிறதென விரல்‌ மடித்துச்‌ சொல்க, * Ti—44

சோம்பேறியாகப்‌ படுத்திருக்கும்‌ மனிதன்‌ கலியுகமாம்‌. உட்கார்ந்திருப்பவன்‌ துவாபரயுகமாம்‌. எழுந்திருப்பவன்‌
திரேதாயுகமாம்‌. மற்றும்‌ நடப்பவன்‌ திருதயுகமாம்‌. இவ்விதம்‌ கூறும்‌ ருக்வேத பிராமணத்தில்‌. உள்ள சோல்‌ கேட்கவில்லையா?
(நடக்கும்‌ முயற்சியே சிறந்தது என்பது கருத்து) [77-45

தன்னாட்டிலுள்ள குறைகளை உடனே நீக்கியும்‌, தன்‌னாட்டை எதிரிகளிடமிருந்து துன்புறாமல்‌ பாதுகாத்தும்‌,
பகைவரை அழிக்க ஏற்ற காலத்தில்‌ நண்பர்‌ கூறும்‌ வாக்குக்கேற்ப முயற்சி செய்தும்‌, தகாத காலத்தில்‌ விரையாமல்‌ ஆழ்ந்து சிந்தித்‌
தும்‌ இவ்விதம்‌ இருக்கும்‌ அரசன்‌ நெடுநாள்‌ உலகிஎன ஆள்வான்‌.11-46

எமுக! எழுக! என்று கூறவும்‌ = பார்த்து மன்னன்‌ இவ்விதம்‌ கூறலானான்‌. IN—47

நீங்கள்‌ கூறியது செய்யத்‌ தகுந்தது தான்‌! இவ்விதம்‌ செய்தால்‌ அரசு முழுதும்‌ நமக்கும்‌ அவனுக்குப்‌ பரலோகம்‌
(சுவர்க்கம்‌) கிடைக்கும்‌. இதில்‌ எது சிறந்தது என்பதை ஆராய வேண்டும்‌. 111-468

பரலோகம்‌ (துறக்க இன்பம்‌) நிலையானது. உலக அரச போகங்கள்‌ நிலைத்தவையன்று. ஆதலின்‌ பாவம்‌ செய்து
பரத்தை இழக்கலாமோ? 111–49

கைகூப்பி எனளிமையுற்று வரும்‌ அடைச்கலமானவளை, பரலோக சிந்தையுடைய ஒருவன்‌ சினத்தால்‌ கொல்வது மிகுந்த தீங்காகும்‌ என கண்வமகரிஷி கூறிய வாக்குகளைச்‌ இந்திக்க வேண்டாமோ? 1171-50

என்று கூறி வெளியே வந்து அம்மன்னனிடம்‌ (கேசித்துவஜ னிடம்‌) கேட்டு, யாகப்பசு கொல்லப்பட்ட விதம்‌ அறிந்து, அதற்‌
கேற்ற பிராயச்சித்தம்‌ (கழுவாய்‌) கூறினான்‌; அது கேட்க அவனும்‌ வேள்வி முறையாகச்‌ செய்து முடித்து, 11-51

வேள்வியின்‌ இறுதி நீராட்டு முடிந்து, வேத அந்தணர்கட்கு
வணங்கிப்‌ பரிசுகள்‌ ஈந்து, பின்னர்‌ இரவலர்கட்குப்‌ பரிசுகள்‌ நல்கி, கேட்டவர்கட்கெல்லாம்‌ அவர்கள்‌ தேவைகளை நிறை வேறச்‌ செய்து, 11152

அதன்பின்னும்‌ தன்‌ மனம்‌ அமைதியுறாமையால்‌, அராய்ந்து “குருதட்சணை கொடுக்காமல்‌ இருக்கிறோமே” என வருந்தி மீண்டும்‌ காண்டியக்கியனிடம்‌ செல்லவும்‌ அவன்‌ ஐயமழுற்று பரபரப்புறவும்‌, (1–53

அமைதியுறச்‌ செய்து 1உனக்கு எது விருப்பம்‌? குருதட்சணை (காணிக்கை) தர வந்துள்ளேன்‌, மன்ன! கேட்பாயாக” * எனவும்‌ அம்மன்னன்‌ மீண்டும்‌ கன்‌ நண்பர்களுடன்‌ 111… 54

குருதட்சணை தர இம்மன்னன்‌ வந்துள்ளான்‌! நீவிர்‌ என்பாற்‌ பற்றுடையவர்கள்‌! ஆராய்ந்து நன்றாகச்‌ சிந்தித்து
நாம்‌ கேட்பதற்கு எதுமேல்‌ என்று கூறுங்கள்‌.” £ 111-255

எனவும்‌, அவர்கள்‌ அம்மன்னவனிடம்‌ மகிழ்ச்சியோடு இவ்‌விதம்‌ கூறினர்‌. **இன்றல்லவா தெய்வம்‌ அருள்‌ கூர்ந்தது!.
விரைந்து குருதட்சணையாக சுடல்‌ சூழ்ந்த நிலம்‌ முழுதும்‌ கேட்பாயாக! மன்ன! எங்கள்‌ அனைவரையும்‌ காப்பாற்றுக!
சுற்றமும்‌ நட்பும்‌ பாதுகாத்தலைவிடப்‌ புண்ணியம்‌ வேறிருக்‌கிறதா? 11-56

நமக்கெப்போது பலம்‌ வரும்‌! . எப்போது சமயம்‌ வாய்க்கும்‌! வாய்த்தாலும்‌ போர்‌ ஏற்படுமா? ஏற்பட்டாலும்‌ நாம்தாம்‌
வெல்வோம்‌ என்று யாரேனும்‌ சொல்ல முடியுமா? உன்‌ பாக்கியவசத்தால்‌ இந்த நற்பயன்‌ கிடைத்துள்ளது. சுற்றத்தார்க்கும்‌
நட்பினர்க்கும்‌ ஒரு திங்கும்‌ நேராமலேயே, தீ இருந்தாற்‌ போலிருந்து நமக்குக்‌ கிடைக்கிறது, செல்வம்‌ சாகாமலும்‌
நோகாமலும்‌ கிடைக்குமா? 11-57

என்று கூறவும்‌, மெல்ல நகைத்து அம்மன்னன்‌ (காண்டிக்கியன்‌) இவ்விதம்‌ கூறினான்‌. *₹நீங்கள்‌ பொருளாதாற
நூல்‌ வல்லவார்களேயன்றி, பேரின்பம்‌ நல்கும்‌ வீடுபேற்றைக்‌ காட்டும்‌ தத்துவ ஞானத்தில்‌ வல்லவர்கள்‌ அல்லர்‌! நிலையற்ற
செல்வத்திருமகளை எவ்விதம்‌ சென்று கேட்பேன்‌! அப்பேரறிஞ விடம்‌ பரமார்த்தம்‌ (தத்‌ தவம்‌) கேட்காமல்‌ அரசினைக்‌ கேட்பதெப்படி?” 111…

எமக்கு அரசுதர்னர்‌ குறிக்கோள்‌! அவன்‌ தூய யோகநெறி சார்ந்தவன்‌. மேலான யோகத்தைப்‌ பெறுவது சிறப்பா? நிலத்தைக்‌ கேட்பது சிறப்பா? UI—59

*விடுக* என்று பாசறை நீங்கி வெளியேவந்து காண்டிக்‌ யென்‌ கேசித்துவஜனைக்‌ கண்டு கெளரவித்து *ஈகுருதட்சணை நிச்சய
மாகத்‌ தருவாயா?’” என *:நிச்சயமாகத்‌ தருவேன்‌”  எனவும்‌, *“மன்ன! நீஆன்ம இன்பத்திற்‌ இளைப்பவன்‌ குருவுக்கு தட்சணை
தர விரும்பினால்‌, எல்லாப்‌ பிறப்புக்களையும்‌ ஒழிக்கும்‌ வித்தை எதுவோ அகளைப்‌ போதிக்கவும்‌” என்று கூறவும்‌, கேசித்துவஜன்‌
சிரித்து, **அடடா! இடையூறு இல்லாத எனது அரசனைக்‌ கேட்காமல்‌ இது ஏன்‌ கேட்டாய்‌ இப்போது? க்ஷத்திரியர்கட்கு
அரசினைவிடப்‌ பிரியமானது வேறொன்றுண்டோ?” என்றான்‌. எனவும்‌ அவன்‌ இவ்விதம்‌ கூறினான்‌. 11160

கேசித்துவனே! அரசனைக்‌ கேட்காததற்குக்‌ காரணம்‌ கூறுகிறேன்‌. அறியாமையால்‌ உள்ளவர்க்கன் றி ஞானிகட்கு ஆசைகள்‌ உண்டாகுமா? போரில்‌ பகைவரை அழிக்கும்‌ வீரமும்‌,
அறத்தோடு குடிமக்களை ஓம்புதலும்‌ அரசனுக்கு தருமமாகும்‌, உன்னால்‌ தோற்கடிக்கப்பட்ட எனக்கு (இவ்விரண்டும்‌ இயலா மையின்‌) பாவம்‌ சேராது. 11-61

மன்ன! அரசினை ஏற்று குடிமக்களைக்‌ காத்தல்‌, பசைவரை அழித்தல்‌ எனும்‌ மன்னர்க்குரிய தருமத்தை அதிகாரமில்லா தவன்‌ விடுவதில்‌ தவறில்லை. அதிகாரமுடையவன்‌ விட்டால்தான்‌
பாவம்‌ சேரும்‌. மேலும்‌ ஒருவன்‌ தர ஒருவன்‌ ஏற்கும்‌ அர போகத்துக்கேயன்றி தருமத்துக்குரியதன்று. அரசன்‌ இரந்து
பெற்றுக்‌ கொள்வது மிக்க இழிவாகும்‌, என்‌ _ மந்திரிகள்‌ அரசினைப்‌ பெறுக என்று கூறுவது ஆசையால்‌ கூறுவதன்றி
அறத்தால்‌ அன்று. அது தக்கதல்ல. ஆதலின்‌ நான்‌ அரசனைக்‌ கேட்காமல்‌ ஆன்மஞானத்தைக்‌ கேட்கிறேன்‌. *” 11-62

ஞானிகள்‌ அரசினுக்கு ஆசைப்படுவரோ? நான்‌ எனும்‌ அகங்காரக்‌ கள்ளினைக்‌ குடித்தவர்கள்‌ போன்று, எம்‌ போன்‌
றோர்க்கு ஆசைகள்‌ எதற்கு?’” என்று (காண்டிக்கியன்‌) கூறவும்‌, கேசித்துவஜன்‌ கூறினான்‌; ம.

நான்‌ அறியாமையால்‌ சாவினைத்‌ தாண்டுதற்கு அரசும்‌ வேள்விகளும்‌ செய்துகொண்டிருக்கிறேன்‌. புண்ணியப்‌ பயனை
அனுபவித்து அழிப்பேன்‌. * 1.64

மன்ன! நமது இந்த நிமி மரபின்‌ புனிதமான நற்பேற்றினால்‌ உனக்கு தத்துவ ஞானச்‌ சிந்தை உண்டாயிற்று! இனி உனக்கு
அஞ்ஞானத்தின்‌ இயல்பைக்‌ கூறுகிறேன்‌. கேள்‌/ 111௦

அஞ்ஞானம்‌ எனும்‌ மாபெரும்‌ மரத்தின்‌ உற்பத்திக்குத்‌ தான்‌ (ஆன்மா) அல்லாத உடம்பில்‌ தான்‌ எனும்‌ புத்தியும்‌, தனது இல்லாத (மனைவி, மக்கள்‌, வீடு, சொத்து)வற்றில்‌ தனது எனும்‌ பற்றும்‌, ஆகிய இவ்விரு விதைகளே மூலகாரணங்களாகும்‌. 11-66

மன்ன? பஞ்சபூதங்களாலாள சரீரத்தில்‌, ஆன்மா, அஞ்ஞான
மாகிய செறிந்த இருளினால்‌ சூழப்பட்டு, ₹நான்‌, இது என துடமை’ என்று எல்லையற்ற மயக்கத்தில்‌ சழல்வான்‌.”* 11767

நீர்‌, மண்‌, விண்‌, இ, காற்றெனும்‌ பஞ்சபூதங்கட்கு அப்பாற்‌பட்டு ஒளிரும்‌ ஆன்மா இருக்கும்போது, இவ்வுடம்பினை யார்‌ .
ஆன்மா வென்று கருதுவார்கள்‌? 171.-…68

மன்ன! வீடு, மனைவி முதலியவை உடல்‌ அனுபவிக்கத்‌ தக்கதேயன்றி ஆன்மாவிற்குடையதன்று. அதுபோன்று உடலால்‌
பிறந்த மகன்‌, பேரன்‌ முதலியோரும்‌ ஆன்மாவிற்கு தொடர்‌பின்றி உடல்‌ தொடர்புடையவரே யாவர்‌. மரணத்தையடையும்‌
இவ்வுடலிற்‌ பிறந்த மகன்‌ முதலியோரும்‌ தன்னவர்‌ எனக்‌ கருதுதல்‌ தகாது, எப்போது ஆன்மா வேறு, உடல்வேறு என்று
அறிகின்றானோ அப்போது அனுபவங்கள்‌ ஆன்மாவைத்‌ திண்டாது. அப்படிக்கின்றி இவ்வுடலே ஆன்மா எனக்‌ கருதினால்‌
அனுபவங்களும்‌ தன்னைத்‌ தீண்டும்‌. மண்குடில்‌ மண்ணாலும்‌ நீராலும்‌ பூசப்பட்டிருப்பததைப்போல, பஞ்சபூதச்‌ சேர்க்கையான
இவ்வுடலும்‌ உண்பது, குடிப்பது முதலியவற்றினால்‌ இருக்கும்‌இதில்‌ ஆன்மாவினைப்‌ பெளதீக அனுபவங்கள்‌ தொடாது. 11-69

சம்சாரியாகி (பிறவியுற்றற) வழிப்போக்கனாகிய ஜீவன்‌ ஆயிரக்‌ கணக்கான பிறவிகள்‌ என்னும்‌ பயணங்களையுடைய
வனாக, பிரபஞ்ச வாழ்க்கை என்னும்‌ வழியே சென்று கொண் டிருப்பான்‌. அனாதி கருமவாசனையாகிய தூசி படிந்து
அஞ்ஞானமாகிய களைப்பினையுற்று துன்புறுவான்‌. எப்போதேனும்‌ ஞானமென்னும்‌ வெத்நீரால்‌ கழுவப்பட்டு அக்களைப்‌
பினைத்‌ தீர்ந்து இன்புறுவான்‌. [ர….-70

நல்லோய்‌! ஜீவன்‌ முன்பு நிர்வாண (மோட்ச) ஆனந்த ரூபியாகலின்‌, அஞ்ஞானமாகிய களைப்பினைத்‌ தீர்ந்ததும்‌
முன்னைய நிர்வாண (போட்ச) சுகத்தையே அடைவான்‌,1[[…-7]1

கேள்‌ மன்னனே! நீர்‌ நேரிடையாக நெருப்பினால்‌ தொடடு படாதிருந்தும்‌ குடத்தின்‌ வயிற்றில்‌ இருப்பதினால்தான்‌ மிகக்‌
குஸிர்ச்சியுடையதாயிருந்தும்‌, வெந்து கொதித்துப்‌ பொங்குவது போல, ஆன்மாவும்‌ பிரகிருதி (மாயை) சம்பந்தத்தினால்‌, *:நான்‌
எனது” எனும்‌ அகங்காரத்தால்‌ அழுக்குற்று பிரகிருதியின்‌ தன்மையைப்‌ பெறும்‌. இவற்றிற்கு முரண்பட்ட தன்மையுடைய
ஆன்மா அழிவற்றது. ஆதலின்‌ துன்பங்கட்கு மூலகாரணம்‌ அஞ்ஞானமே. அதைத்‌ தெரிவித்தேன்‌. எல்லாத்‌ துன்பங்‌
களையும்‌ நீக்கும்‌ ஒரே உபாயம்‌ யோகம்தான்‌! வேறொரு உபாயம்‌ இல்லை” எனவும்‌ மகிழ்ந்து, காண்டிக்கியன்‌!
“மகாத்மா! நிமிமரபில்‌ யோக சாத்திரத்தை அறிந்தவன்‌ நீ. எனக்கும்‌ அந்த யோகத்தைத்‌ தெரிவித்தருள்க” எனவும்‌ கேத்‌
துவஜன்‌ அருளோடு கூடியவனாக, “மன்ன! மறுபிறப்பை எய்தாது பிரம்மத்தில்‌ இணைவிக்கும்‌ யோக சாத்திரத்தைச்‌
சொல்கிறேன்‌! கவனமாகக்‌ கேள்‌!” என்று கூறி இவ்விதம்‌ கூறினான்‌, [11-72

உயிர்கள்‌ கட்டு (பந்தம்‌) வீடுபேறு (மோட்சம்‌) அடைவதற்கு மனமே காரணமாகும்‌. புலன்களோடு சேரும்போது பந்தம்‌
அடைகிறது. புலன்களிலிருந்து விடுபடும்போது வீடு?பற்றை யடைகறது. 173

வீடுபேற்றையடைய சாதகன்‌ புலனின்பங்களிலிருந்துமனதை மீட்டு, பரப்பிரம்மத்தை தியானித்தல்‌ வேண்டும்‌. காந்தம்‌
இரும்பைக்‌ கவரிந்து தன்‌ சொரூபத்தைத்‌ தருவதுபோல, பிரம்மம்‌, தன்னை தியானிப்பவனுக்கு தன்‌ சொரூபத்தை
யளிக்கும்‌. யோகம்‌ என்பது யமம்‌, நியமம்‌ (அடக்கம்‌, கட்டுப்‌ பாடு) முதலியவற்றால்‌ மனதைப்‌ பரிசுத்தமாக்கி, அம்மனத்தை
பிரம்மத்தில்‌ நிலை நிறுத்துதல்‌ ஆகும்‌. இத்தகு சிறப்பான யோகத்தை உடையவனே யோகி ஆவான்‌. [1]-.-74

மேலும்‌, பிரம்மச்சரியம்‌ முதலிய யமம்‌ (அஹிம்சை, சத்தியம்‌? திருடாமை, பிரம்மச்சரியம்‌, பரிமிதபரிசிரகம்‌ (மிகு பொருள்‌
விரும்பாமை) என்னும்‌ ஐந்தும்‌, தன்‌ பயிற்சி (ஸ்வாத்யாயம்‌) செளசம்‌ (சுத்தம்‌), சந்தோஷம்‌, தவம்‌, கடவுள்‌ வணக்கம்‌,
முதலிய நியமம்‌ ஐந்தும்‌ பற்றற்றவனா9 மனப்‌ பரிசுத்தத்திற்காக அனுசரிக்க வேண்டும்‌. இவை பற்றுடன்‌ கூடியிருந்தால்‌ றந்த
பேறுகளும்‌, பற்றற்றிருப்பின்‌ வீடு பேறும்‌ நல்கும்‌. இந்த யம, நியமங்களை விடாது பின்பற்றி, ஆசனங்கள்‌ (பத்ரம்‌, பத்மம்‌, சிம்மம்‌, சித்தம்‌ முதலிய யோகாசனங்கள்‌) முதலியவற்றில்‌ _ ஒன்றைப்‌ பின்பற்றி, பிரணாயாமத்தினால்‌ உயிர்ப்பினைத்‌ தன்‌
வயமாக்க வேண்டும்‌. அது சபீஜம்‌, நீர்பீஜம்‌ என இருவகைப்‌ படும்‌. ரேசகம்‌ (மூச்சை வெளியிடுதல்‌) பூரகம்‌ (மூச்சை உள்ளுக்‌
கிழுத்தல்‌) கும்பகம்‌ (மூச்சை அடக்குதல்‌) எனும்‌ மூன்று வகைப்‌ படும்‌. சபீஜம்‌ என்பது உருவத்தை தியானிப்பது, நீர்பீஜம்‌
உருவற்றதை தியானிப்பது. மனதைப்‌ புலன்களிலிருந்து திருப்பி, மனத்துக்குள்‌ கட்டுப்படுத்துதல்‌ பிரத்தியாஹாரம்‌ எனப்படும்‌.
இத்தகைய பிரத்தியாஹாரம்‌ மோட்சத்தை விரும்புபவன்‌ செய்வது இன்றியமையாதது. இதனால்‌ மிகுந்த சஞ்சலமுடைய
இந்திரியங்கள்‌ (புலன்கள்‌) தன்வயம்‌ ஆகும்‌. இது வசமாகா விட்டால்‌ அவன்‌ யோகியாகமாட்டான்‌. பிராணாயாமத்தால்‌
காற்றையும்‌, பிரத்தியாஹாரத்தால்‌ புலன்களையும்‌ வசப்‌ படுத்திய பிறகு சித்தம்‌ (மனம்‌) நலஞ்சார்ந்து அமைதியுறச்‌
செய்யவேண்டும்‌’” என்றலும்‌ காண்டிக்கியன்‌ இவ்விதம்‌ கூறினான்‌. 111-.-75

நல்லோய்‌! மனதிற்கு மங்களம்‌ (நலம்‌) தருவதெதுவோ? எது எல்லாவற்றுக்கும்‌ ஆதாரமோ? எதை நினைத்தால்‌ எல்லாத்‌
துன்பங்களும்‌ நீங்குமோ அதனைக்‌ கூறுவாயாக,  111–76

பின்‌, கேசித்துவஜன்‌ அவனுக்குச்‌ சொன்னான்‌. “பிரம்மமே மனதுக்குப்‌ பற்றிடம்‌ ஆகும்‌. அது பரம்‌, அபரம்‌ என இருவகைப்‌
படும்‌. பரம்‌ உருவற்றது. அபரம்‌ உருவுடையது. TH—77

முன்பு நான்‌ கூறிய இரண்டில்‌ பரம்‌ எனப்படுவது பிரகிருதி சம்பந்தமில்லாத (வீடுபேறுற்றற ஆன்மா (பிரம்மம்‌) ஆகும்‌.
உருவற்றது. உபாசனை (தியானம்‌) செய்ய இயலாதது. மற்றது அபரபிரம்மம்‌ என்பது பிரம்மன்‌ (நான்‌ முகன்‌) மூதலிய கட்டுப்‌
(பந்தத்தில்‌) பட்ட ஜீவர்களின்‌ கூட்டம்‌, இது உருவுடையதேனும்‌ மூன்று பாவனைகளுடன்‌ கூடியிருப்பதனால்‌, கைவிடத்‌
தக்கதாகும்‌, மோட்சத்தை விரும்புபவன்‌ இவ்விரண்டையுமே கைவிடவேண்டும்‌. 11478

அந்த மூன்று பாவனைகள்‌ யாதெனச்‌ கூறுகிறேன்‌! பிரம்ம பாவனை, கரும பாவனை, பிரம்ம கரும உபயபாவனை என மூன்றும்‌ அவற்றில்‌, பிரம்ம பாவனையாளர்கள்‌ சனந்தனர்‌ முதலானோர்‌. தேவர்கள்‌ முதல்‌ தாவரங்கள்‌ ஈறாக உள்ள உயிர்கள்‌ யாவும்‌ ௧௬ம பாவனையாளர்கள்‌. பிரம்மா முதலானோர்‌. உபயபாவனை (இரண்டிலும்‌ ஈடுபட்டோர்‌) யாளர்கள்‌. இம்மூவகையினரும்‌, மூன்று பாவனைகள்‌ உடைய வார்கள்‌. ஆதலினாலே இம்‌ மூவகை உருவினையும்‌ போற்றுதல்‌ கூடாது. சனந்தனர்‌ முதலானோர்‌ முன்னைய பிரம்ம கற்பத்தில்‌ சஞ்சரித்தவர்கள்‌ ஆதலின்‌ பாவனையால்‌ . கட்டுப்பட்டனர்‌. பாவனையோடு கூடிய உலகு இருப்பதற்கு எல்லை யாதெனின்‌ ஞான கருமங்கள்‌ தேவமானுடர்களில்‌ ஓழிந்து போவதுதான்‌!
இத்தகைய உலகாகக்‌ காணப்படும்‌ பிரம்மா முதலியவார்‌ களைவிட வேறுபட்ட பரம்‌ எனக்‌ கூறப்படும்‌ உருவற்றது, கட்டற்றதுமான பொருளைப்பற்றி முன்பே குறிப்பிட்டேன்‌ அல்லவா? அதன்‌ சொருபத்தைத்‌ தெளிவாக்குகிறேன்‌. முன்‌ கூறிய தேவர்கள்‌ முதலிய பேதங்கள்‌ இல்லாததாய்‌, அத்தகைய வேறுபாடில்லாததாலே இத்தகையது எனக்‌ கூற முடியாததும்‌, அழிவு முதலிய சிந்தனைகட்கு உட்படாததும்‌, சம்‌( உட்பொருள்‌)
என்ற சொல்லால்‌ குறிப்பிடப்பட இயல்வதுமாய, தன்னாலே உணரப்படுவதும்‌ (ஆத்ம சம்வேத்யம்‌) ஆன, ஞானத்தால்‌ மட்டுமே நிரூபிக்கப்படத்‌ தக்கதும்‌, ஆன பிரம்மம்‌ எனப்‌ பெயரிடப்பட்ட பரம்‌ பொருளாகும்‌.
மேலும்‌, மூவகை பாவனைகளையுடைய, உலகுக்கு வேறு பட்ட உருவற்ற பிரம்மத்தைப்‌ பயின்ற யோகியர்க்கும்‌ சிந்திக்க இயலாததாகும்‌ இனி அபரம்‌ எனச்‌ சொல்லப்பட்ட பிரம்மன்‌,
இந்திரன்‌, பிரஜாபதி (தக்ஷன்‌) முதலானவர்கள்‌ மருத்துக்கள்‌, வசுக்கள்‌ (8) ருத்திரர்‌ (11) ஆதித்தர்கள்‌ (12) நட்சத்திரங்கள்‌,
கிரகங்கள்‌ (9) கந்தருவர்‌, யட்சார்‌, இராக்கதர்‌, அசுரர்கள்‌, முதலிய எல்லா தேவர்களும்‌, மனிதர்‌, விலங்கு, மலை, கடல்‌
மரம்‌ முதலியனவும்‌, மேலும்‌ ஒருகால்‌, இருகால்‌, பலகால்‌, காலற்றவை ஆகிய உயிர்களும்‌, அவை பிறத்தற்கு காரணமாகித்‌
திகழ்கின்ற, பிரதானம்‌ முதல்‌, விசேடம்‌ வரையுள்ள அறிவுடைய, அறிவிலாத பிரபஞ்சத்திலுள்ள உயிர்த்‌ தொகைகள்‌ பருவுருவுடை
யவர்கள்‌ யாவும்‌ யோக முயற்சியாளனுக்குச்‌ சிந்தித்தற்குரிய தாகும்‌. இவை மோட்சம்‌ தர வல்லன அன்று, இவை திருமாலின்‌
உடலாக அமையும்‌. கருமத்தினால்‌ சூழப்பட்ட ஆன்மா (வன்‌) பிறப்பு, இறப்புக்கள்‌ எனும்‌ பிறவித்‌ துன்பங்களில்‌ உழன்று,
வினைக்கேற்ற உடல்கள்‌ எடுத்து, அறிவின்‌: தராதரங்கட்‌ கேற்ப, ஏற்றத்தாழ்வுகளை அடையும்‌. அதன்‌ தன்மையைக்‌ கேட்பாயாக. 1711-79

(ஆத்ம சைதன்யத்தின்‌ (அறிவின்‌) தராதரமாவது) உயிரற்றவைகளில்‌ ஓரளவு அந்த சக்தி (ஆற்றல்‌) உண்டு,
தாவரங்கட்கு அதைவிட அதிகமுண்டு. மண்புழு, பூரான்‌, முதலிய ஊர்வனவற்றுக்கு அதைவிட அதிக அறிவுண்டு. பறவை
கட்கு அதைவிட அதிகம்‌, விலங்குகட்கு அதைவிடஅதிகம்‌ உண்டு. யானை,நரி,பச முதலியவற்றுக்கு அதைவிட அதிகமுண்டு. அதை
விட தேவர்கட்கு அதிகமாகும்‌, இந்திரனுக்கு அதைவிட அதிகம்‌.தட்சபிராஜாபதிக்கு அதைவிட அதிகம்‌, அதைவிட இரணிய
கருப்ப(பிரம்மா)னுக்கு அதிக ஆன்ம ஆற்றல்‌ உண்டு. 111–80

ஆகாயம்‌ எவ்விதம்‌ எல்லாவற்றிலும்‌ நிறைத்திருக்குமே அது போல விஷ்ணு (இிருமால்‌) எல்லா உருவங்களிலும்‌ சிந்தனைக்‌
கெட்டாத ஆற்றல்‌ மூலமாக நிறைந்திருப்பான்‌. அந்த உருவங்கள்‌ எல்லாம்‌ அவனுடைய உடலாகும்‌. 111..-8!

முன்பு யான்‌ கூறிய பரம்‌ என்ற குறியீட்டையுடைய, இரண்‌டாவது (தத்துவமாக) யோகிகள்‌ தியாளத்திற்குரியதாக,
உருவற்ற மற்றொரு சொரூபம்‌ *விஷ்ணு’ எனும்‌ பெயரில்‌ உண்டு. அதையே தொல்லறிஞர்கள்‌ என்பர்‌. ௮ச்‌
சொரூபமே எல்லாச்‌ சக்திகட்கும்‌ மூலமாக, முன்‌ கூறிய பிரபஞ்ச உருவத்தைவிட முரணுடையதாக, கல்யாணகுணங்களும்‌ எல்லை
யற்ற செல்வங்களும்‌ உடையதாக) மிகுந்த பெருமைபெற்‌றிலங்கும்‌, அத்தகைய ஆற்றல்‌ உடைய அந்த பிரம்மம்‌, உலகைக்‌
காப்பாற்ற தன்‌ திருவிளையாடல்‌ காரணமாக, தேவர்‌, மனிதர்‌, விலங்கு முதலிய பெயர்களோடும்‌ உருவகிகளோடும்‌ அவதாரம்‌ எடுக்கும்‌. 1[1–62

(நம்போல) கரும (வினைக்&டான) பலனைத்‌ துய்ப்பதற்காக அன்றி, (உயிர்களை உய்விக்க) அவன்‌ எல்லாக்‌ குலத்திலும்‌
பிறப்பெடுப்பான்‌. பிறந்த அவன்‌ செயல்கள்‌, இராவணன்‌முதலானோர்களால்‌ குறைபாடுறுவதில்லை, 11183

அத்தகைய பரமேசுவரனுக்கு, பக்த, முத்த (கட்டு, வீடு பேறு) முதலிய பல்வேறு உருவங்களையுடைய முமுட்சு (வீடு
பேற்றைத்‌ தேடுபவன்‌)விற்கு அறிவைப்பெற, பர, வியூக, விபவ, முதலிய உருவங்களே சித்திக்கத்தக்கன. சுடரும்‌ நெருப்பானது
காய்ந்த புதரினை எப்படி எரிக்குமோ அதுபோல உள்ளத்துறையும்‌ இறைவன்‌, யோகியரின்‌ எல்லாப்‌ பாவங்களையும்‌
சுட்டெரிப்பான்‌. ஆதலின்‌, எல்லா ஆற்றல்கட்கும்‌ உறைவிட,மான அப்பரமான்மாவிடம்‌, உள்ளத்தை நிறுத்துதல்‌ தூய
தாரணை எனப்படும்‌. எல்லாப்‌ பழ்றுக்களையும்‌ நாடி. ஓடம்‌ சபலமுடைய மனத்திற்கு, மூன்று பாவனைகள்‌) (பிரம்ம, கரும
பிரம்ம க௫ம பாவனைகள்‌) கடந்தவனாகுிய அத்தேவன்‌நலமீந்து வீடுபேறருள்வான்‌. மற்ற (பிரம்மா, சிவன்‌ முதலிய,
தேவர்கள்‌ கருமத்திற்குட்பட்டவர்கள்‌ ஆதலின்‌ மனதிற்கு பற்றுக்‌ கோடாகமாட்டார்கள்‌. பற்றுக்‌ கோடில்லாத தியானம்‌ அமை
யாது. ஆதலின்‌, தாரணை தியானங்கட்குத்‌ தென்படும்‌ தூய, மற்றொரு பரு உருவம்‌, அப்பிரம்மத்திற்கு உண்டு, அதை
விரிவாகக்‌ கூறுகிறேன்‌ கேள்‌! 111-984

சரத்கால சந்திரனின்‌ மின்னொளியை வென்ற கருணைமிக்க மூகமுடையவனும்‌, பெரிய செந்தாமரைகள்‌ போன்ற கண்களை
யுடையவனும்‌, அழகிய கன்னங்களும்‌ நுதலும்‌ உடையவனும்‌, மகரகுண்டலங்களை யணிந்துள்ளவனும்‌, கமுசினை வென்ற
எழில்மிகு கழுத்தும்‌, மார்பில்‌ இருவும்‌ மறுவும்‌ மருவியவனை, ஆழமான நாபி (உந்தி)யும்‌, மும்மடிப்புகளையுடைய சன்னமான
வயிறுடையவனும்‌, . மூழங்காலளவு நீண்ட நான்கு தோள்களை யுடையவனும்‌, மானையின்‌ [துதிக்கை போன்ற துடைகள்‌
அழகிய தளிர்கள்‌ போன்ற பாதங்களையுடையவனும்‌, பொன்‌ னாடை, மகுடம்‌, முத்துமாலை முதலிய அணிகளும்‌, சங்கு
சக்கரம்‌ முதலிய ஆயுதங்களும்‌ உடையவனும்‌, ஆன திருமாலைத்‌ தியானிக்க வேண்டும்‌. 17… 85

திருமாலை இவ்விதம்‌ தியானம்‌ செய்யவேண்டும்‌. எவ்விதம்‌ எனின்‌, முதலில்‌ ஒரு உறுப்பை மனதில்‌ அழுத்தமாகப்‌ பதித்துக்‌
கொண்டு, அதன்பின்‌ அதைத்‌ தொடர்ந்து மற்ற உறுப்புக்களையும்‌ பாவனை செய்து முழு உருவமும்‌ மனத்தில்‌ நிலைபெறச்‌
செய்யமேண்டும்‌. தான்‌ நடந்தாலும்‌ இடந்தாலும்‌ எப்பணி செய்தாலும்‌ விடாது தன்‌ மனத்தில்‌ இறைவனை இருத்திக்‌
கொள்ளவேண்டும்‌. இவ்விதம்‌ இலைவனோடிணைந்து அஞ்ஞானம்‌ அழிந்து, கல்யாண குணங்களுடைய திருமாலும்‌
தானும்‌ ஒன்றேயான நிலைபெற வேண்டும்‌. அப்படி இறைவனளோடிணைந்தவளை எவரும்‌ பிரித்திடஇயலாது. 11186

மன்னனே! (காண்டிக்கியனே) இவ்விதமாக கட்டற்ற வீடு பேற்றினை அளிக்கும்‌ அங்காட்டகம்‌, எனும்‌ பெயரையுடைய
யோகத்தை விரிவாகச்‌ சொன்னேன்‌. இனியும்‌ எனக்குச்‌ செய்யத்‌ தக்கது யாதெனக்‌ கூறுவாயாக” என்றான்‌. IU—87

எனவும்‌, “மன்ன/ (கேசித்துவஜனே) நற்பேறடைந்தேன்‌ எனக்கு இதைவிட வேண்டத்தக்கதென்ன இருக்கிறது” என்று
கூறி, அவனை வணங்க, வேண்டாம்‌ என்று மறித்தும்‌ தானே ஈந்த தனது அரசனை தன்‌ மகனுக்கு அளித்துவிட்டு 11-68

புரோகிதர்‌, மந்திர முதலானவர்களிடம்‌, இளமையடைட
யாத தன்‌ மகனை ஒப்புவித்து, தன்‌ மகனிடம்‌ அவர்கட்கு கொடை, பரிசு முதலியவற்றால்‌ பேண வேண்டுமெனக்‌ கூறி, தான்‌ கோவிந்த திருவடிகளை நினைந்த உள்ளத்தவனாக; காண்‌டிக்கியன்‌ இருவிளைநீத்து,அக்காடே தபோவ்னமாகஅமையச்சில
காலத்தில்‌ கேசித்துவஜன்‌ சொன்ன பக்தியோகத்தில்‌ நிலைத்து திருமாலுடன்‌ இரண்டறக்‌ கலந்தின்புற்றான்‌.
கேசித்துவஜனும்‌, அவன்‌ மகளையும்‌, மந்திரியையும்‌ அரசினை நடத்துமாறு ஒப்படைத்துவிட்டு, மீண்டும்‌ மிதிலை
புக்கு, யோகத்தில்நிலைத்து இருவினை தீர நன்னெறியில்‌ ஆண்டு வந்தான்‌.
ஆதலின்‌ பாண்டிய மன்னனே! அந்த திருமாலே நீ அடையத்‌ தக்கவன்‌, பரந்தாமனையே வணங்குவாயாக! இது பக்தி யோகம்‌
ஆகும்‌. இதிலும்‌ ஒரு குறையுண்டு. இடையூறு ஏற்படின்‌ மறுபிறவி உண்டு. அதன்‌ பின்‌ முக்தியடையலாம்‌. ஆதலினாலே, இதை
விட எளியவழி, அக்‌ (குருட்சேத்திர) போர்க்களத்தில்‌ கண்ணன்‌ அர்சுணனுக்கு உபதேசித்த சரணாகதி தருமமேயாகும்‌. ” *என்றிவ்‌
வாறு, பரிபக்குவமான மனத்தை உடைய பாண்டியனுச்கு, எண்ணெமுந்து (ஓம்‌ நாராயணாயா நம) மந்திரத்சையும்‌துயத்தை (இரட்டை) யும்‌ அருளிச்‌ செய்து, சிறந்த வைணவளாக்க, பெரியாழ்வார்‌ மகிழ்ந்தார்‌, [1[–69

வருள மாலையணிந்த (நம்மாழ்வார்‌) உடைய இதயத்‌ துறைபவனே! ஓளிறும்‌ ஞாயிறும்‌ திங்களும்‌ இரு கண்களாக
உடையவனே! தாமரையிற்பிறந்தவன்‌ (பிரம்மா) காமனைக்‌ தூய்ந்தவன்‌ (சிவன்‌) இருவரையும்‌ படைத்தவனே! கொடிய .
அரக்கனாகிய கேசியைக்‌ கொன்றவனே! கோழிக்‌ கொடியை யுடைய (முருக)னின்‌ தெப்ப உற்சவத்திலும்‌ கோடையில்‌ தெப்ப
உற்சவத்திலும்‌ ஈடுபாடுடையவனே! 11-90

அருச்சுணனுக்குத்‌ தேரோட்டியவனே! இடைச்சிறுவரோடி.ணைந்‌ தாடுவதில்‌ விருப்பமுள்ளவனே! பிரகலாதனின்‌ பிரார்‌
தனைப்‌ பாடலைக்‌ கேட்டு புளகாங்கெதமுற்ற உடலையுடை யவனே.
அரவின்‌ பாயலில்‌ படுத்தவனே! வானமும்‌ மண்ணும்‌ அளந்த பாதங்களையுடையவனே! பக்தர்களின்‌ மனமாசுகளைப்‌ போக்கு
பவனே]! காளிய நாகப்.படத்தின்‌ மேலே நாட்டியங்கள்‌ ஆடிய ஸ்ரீவெங்கடேசா! 11192

இது பிரகரேசுவரபாத்ர முதலிய உத்கல மன்னர்களால்‌ பாதுகாக்கப்பட்ட விண்தொடும்‌, இறமையான யந்திரங்களை
யுடைய *கொண்டபல்லி’ கோட்டையைக்‌ கவர்நீத பாம்பொச்த வாளினளையும்‌ வலமிக்க தோளினையும்‌ உடையகிருஷ்ணதேவராய
மன்னன்‌ இயற்றிய ஆமுக்த மால்யத (சூடிக்கொடுத் தனை) எனும்‌ காவியத்தில்‌ மூன்றாவது அத்தியாயமாகப்‌ பொலிவுறும்‌. 111–93

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ கிருஷ்ணதேவராயன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading