ஸ்ரீ ஆ முக்த மால்யதா-(முத்துகளால் ஆன மாலை)-இரண்டாம் அத்யாயம் -ஸ்ரீ கிருஷ்ணதேவராயன்-மொழிபெயர்ப்பாளர்‌ உரை -பன்மொழிப்‌ புலவர்‌ மு. கு. ஜகந்நாதராஜா

இரண்டாம்‌ அத்தியாயம்‌

இருமகள்‌ கண்கள்‌ என்னும்‌ குவளைமலர்கட்கு, நிலவாகிய புன்னகை இந்தும்‌ ஒளி பொருந்திய முகத்தையுடையவனே.
அசுரர்களால்‌ கவரப்பட்ட தேவர்களின்‌ செல்வத்தை மீட்டித்‌ தந்தவனே! திருவேங்கட வா! II—1

கேட்பாயாக! அவ்வமயம்‌ பாண்டிய மண்டலத்தில்‌ 7-2

எந்த நகரில்‌, நங்கையர்‌ முலைத்தடத்தில்‌ கற்பூரம்‌, புது முத்துமாலையின்‌ சிப்பிகளின்‌ புலவு நாற்றத்தைப்‌ போக்குமோ,
எந்த நகரில்‌, சந்தன மரக்‌ கட்டைகள்‌ முதலில்‌ வீட்டு உத்தரங்‌களாகப்‌ போடப்பட்டு மிகுந்தவை பிற நாடுகட்கு ஏற்றுமதி
செய்யப்படுமோ.-எந்த நகரில்‌, ஈழநாட்டின்‌ வேழங்கள்‌ (சிங்கள தேசயானைகள்‌) வடதிசையானைகளை வசந்த காலத்தென்றல்‌
வீசி மருளச்‌ செய்யுமோ, எந்த நகரில்‌, மூன்னைய மன்னர்கள்‌ அணிந்து எறிந்த மரகத மணிகளை பிற நாட்டரசர்கள்‌சூடுவரோ.
குரக்கரசனால்‌ (சுக்கிரிவனால்‌) பாராட்டப்பட்டுக்‌ கூறப்பட்ட மலை போன்று பொன்னும்‌ முத்துக்களும்‌ உடைய
கதவுகளையுடைய (இராமயாணத்தில்‌ கவாடபுரம்‌ என்று சிறப்பிக்கப்பட்ட) வாசலைக்‌ கொண்ட உயர்ந்த கோட்டையை உடையதுமான மரங்கள்‌ செறிந்துள்ள தென்‌ மதுரை சிறப்புற்றிலங்கியது. 11–3

காலனைக்‌ காய்ந்தவனாகிய சிவன்‌ முப்புரம்‌ எரித்தபோது மேருமலையை வளைத்து வில்லாக்கிய பின்‌ விட்டுச்‌ சென்ற
பொன்மயமான மலையோ எனும்படியாக அந்நகரினைச்‌ சுற்றிலும்பொற்கோட்டை திகழ்ந்தது. 1-4

அந்நகரின்‌ கோட்டை மதிற்சகெரங்களின்‌ வரிசை பொன்‌ கதிர்கள்திகழ உராய்வினால்‌ நுண்ணியதாகத்‌ தென்படுவது,
வானத்‌ திருமகள்‌ சூட்டிய வண்ணச்சம்பங்சிப்‌ பூமாவை போலத்‌ தோன்றும்‌, 175

அகழியில்‌ இத்நகர்ப்பெண்டிர்‌ புனல்விளையாட்டின்போது, அவர்களது பேரெழிற்‌ கொங்கையிற்‌ பூசிய குங்குமமும்‌ அகிலும்‌
கஸ்தூரியும்‌ சந்தனமும்‌ ஆகிய சேற்றின்‌ மணம்‌ நீரில்‌ கலந்ததால்‌, பாதாள உலகத்திலுள்ள தேவநதிக்கும்‌ போகவதி என்ற பெயா்‌
பொருத்தமாக ஏற்பட்டது.
(மணம்‌ போகப்‌ பொருளாதலின்‌ அது பெற்றமையால்‌ போகவதி என்ற பெயர்‌ பொருத்தம்‌ என்பது கருத்து) 77.6

பாம்புகள்‌ (நாகம்‌) பாதாளத்திலிருந்து வந்து பூமியையும்‌ கைப்பற்ற நினைத்து அந்தஅகழி நீரில்‌ எறி மேல்வர முயலவும்‌,
ஆங்குள்‌ ள கருடபச்சைகற்களால்‌ ஆனபடித்துறைகளைக்‌ கண்டதும்‌ பயந்து நிற்காமல்‌ உடனே மூழ்இவிடும்‌.

(பாம்புக்கு கருடன்‌ எதிரியாதலின்‌ என்பது கருத்து 2-~7

இளம்‌ பாசியும்‌. தாமரை இலைகளும்‌ மிடைந்து மரகத வண்ணத்திற்‌ பொலியும்‌ அந்த அகழி நீர்‌, முன்‌ பிரம்மதேவன்‌
கோட்டையை பொன்னாக்குவதற்காகப்‌ பிழிந்த மருந்திலைகளின்‌ சாறு போலத்தோன்றும்‌. [8

உறுதியான கால்கோள்‌ (அஸ்திவாரம்‌) உடைய அந்த கோட்டை என்னும்‌ மல்லன்‌, தன்‌ கைகளாகிய பீரங்கிகளால்‌
சுவர்க்கம்‌ எனும்‌ மல்லனைப்‌ போருக்கழைத்து ஆகாய கங்கையாகிய கச்சையிடையே பிணங்கி தரக்கப்போட முயன்றது
போலச்‌ சிறப்புற்றிலங்கும்‌. 1-9

நிமிர்ந்த கொங்கைபோன்ற இரும்புப்‌ ுூண்களையுடைய மார்பு போன்ற கதவினளைக்‌ கொண்ட சந்தனக்‌ கட்டை
(தாழ்ப்பாள்‌) பொன்‌ (தகடு)களையுடைய நகரம்‌ ஆகிய நங்கையின்‌ எழில்கண்டு, வாசலிலேயே விடாமல்‌ எப்போதம்‌ சூரிய
சந்திரார்களாகிய (விடர்‌)கள்‌ சுற்றித்திரிவார்கள்‌. []….-10

மாளிகையின்‌ மேல்‌ உப்பரிகைகளில்‌ ம௫ழ்த்திருக்கும்‌ இளநங்கையர்‌ கலவி வேகத்தில்‌ அறுந்து வீழ்த்த தூயமுத்துமாலை
யின்‌ பெரியமுத்துக்கள்‌ சிதறி விழ, காலையில்‌ பணிமகளிர்‌ சூடிக்களைந்த பூக்களுடன்‌ சேர்த்து, பெருக்கஎறியவும்‌, அவை
கீழே உள்ள முகில்களின்‌ வயிற்றிலடங்கியிருந்து சமயம்‌ வரும்‌ போது மழையுடன்‌ 8ழே விழுவதால்தான்‌ மு௫லிலும்‌ முத்துக்கள்‌
பிறக்கும்‌ என்பதன்றி, கடலில்‌ அன்றி வேறெவ்விடத்தாவது முத்துக்கள்‌ பிறக்குமா? [[..-11

(கடலில்‌ சப்பல்களில்‌ செல்லும்‌ வணிகர்கள்‌, நடுக்கடலில்‌ தத்தமது புதிய சரக்குகளின்‌ மாதிரி (சாம்பிள்‌) களை துணியில்‌
முடிந்து ஒரு மூங்கிற்கழியில்‌ முடிச்சினை வைத்து எதிரேயுள்ள கப்பலில்‌ உள்ளவர்கட்கு நீட்டித்தருவர்‌. அவர்களும்‌ அவ்வாறே
இவர்கள்‌ பக்கம்‌ கழியிற்கட்டிய மாதிரியைத்‌ தருவர்‌. இவ்விதம்‌ பரஸ்பரம்‌ பரிமாறிக்கொள்வது கடல்‌ வணிகர்களின்‌ பழஙிகால
வழக்கம்‌ (அதுபோலவே)

உயர்ந்த மேடைகள்‌, ஆகாய கங்கை என்னும்‌ கடலில்‌ பிரதிபலித்து கப்பல்கள்‌ போலவும்‌, (மேடையிலுள்ள) மகளிர்கள்‌
வணிகர்கள்‌ போலவும்‌, அந்நகரக்‌ கொடிக்கம்பங்களில்‌ கட்டிய கொடி (பதாகை)கள்‌ காற்றில்‌ அசைந்து தத்தமது கழிகளில்‌
முடிந்துவைத்த தமது தீவில்‌ (நாட்டில்‌) உள்ள புதிய சரக்குகளின்‌ மாதிரிகள்‌ பொதிந்த பட்டுத்துணிகள்‌ போலவும்‌, சுவர்க்க
மும்‌ மதுராபுரியும்‌ பரஸ்பரம்‌ வணிகம்‌ செய்வது போலத்‌ தோன்றும்‌. 11-12

மேடைகளில்‌ உள்ள காலதர்‌ (ஜன்னல்‌)களில்‌ இளம்‌ விண்மீன்‌ (நட்சத்திரம்‌) கள்‌ (வழிதவறிப்‌) புகவும்‌, அங்குள்ள
மகளிர்‌ அதைப்பிடிக்க கதவினை மூடவும்‌, (அவ்விண்மீன்கள்‌) தம்மை: முத்துக்கள்‌ என நினைத்து துளையிடுவார்கள்‌. என
அஞ்சு, அழகிய விதான (மேல்கட்டு)த்தில்‌ தொங்கும்‌ முத்து மாலைகளோடு தாமும்‌ ஒரு முத்து மாலையாக ஓளித்திருந்து
விட்டு, பொமுதானதும்‌, கலவியிற்களைத்த மகளிர்‌ (காற்று வரட்டும்‌ என) கதவுகளைத்‌ திறந்ததுமே விடுபட்டு வெளியேறும்‌. W—13

மயிற்‌ பீலியொத்த கூந்தலையுடைய மகளிர்கள்‌ அத்ரசுற மாளிகைகளின்‌ கீழே முழக்கத்துடன்‌ திரியும்‌ முகல்களை,
மாளிகையில்‌ உள்ள தமது மயில்கட்கு நடனம்‌ கற்பிக்க வேண்டி.
*மேகரஞ்சனி: ராகம்‌ பாடி முகில்களை மேலே வரவழைப்பார்கள்‌.
(மேகரஞ்ஜனி ராகம்‌ பாடினால்‌ முகில்கள்‌ ஒன்று திரண்டு வந்து மழைபொழியும்‌ என்பது மரபு. இந்தராகம்‌ பதினைழ்‌ தாவது
மெளகர்த்தா ராகமாகும்‌. சரிகம நிப–பநிமகரி௪ — என்பது இந்த ராகம்‌.) 11-14

மதுரைத்‌ திருமகளின்கரங்களில்‌ மிளிரும்‌ தங்கச்‌ சங்கிளியின்‌ ஓலி கேட்டு, சுவர்க்கத்‌ திருமகள்‌ என்னவென்று தன்‌ முகத்தை
மேல்நோக்கிப்‌ பார்க்கவும்ம துரைமகள்‌ சுவர்க்கமகளின்‌ கண்களை விளையாட்டாகப்‌ பொத்தியது போல,மதுரை நகர்மாளிகைகவில்‌
உள்ள கொடிகள்‌ கிண்கிணி ஒலிப்ப சுவர்க்க மாளிகைச்‌ சிகரங்‌களின்‌ தாமரை மொட்டுகள்‌ போன்ற கலசங்களை மூடும்‌ 11-15

மேடைகளில்‌ உள்ள குலமகளிர்‌, ஏழு முனிவர்‌ (சப்தரிஷிகள்‌)களின்‌ மனைவியர்‌ அருளோடு புலவி நீக்கி (இரவு வறிதே கழிந்த
தாலும்‌ விடியல்‌ நேரமாயதாலும்‌) அறிவுறுத்தவும்‌ விரைந்து மேகங்களிலுள்ள மின்னற்சுடரில்‌ வட்டில்‌ வைத்து அதன்‌ அடியில்‌
படிந்த கண்மையால்‌ அஞ்சனம்‌ தட்டியும்‌, இளஞாயிற்றின்‌ சூட்டில்‌ கரைந்த புனுகைப்‌ பூசிக்கொண்டு, உதய சநீதிரனில்‌
படச்செய்து செங்குவளை மலார்களைவிரியசீ செய்து கூந்தலில்‌ அணிந்துகொண்டு கணவளைக்‌ கூடியின்‌ புறுவார்கள்‌.
(மகளிர்‌ என்ற பன்மைக்கு கணவர்கள்‌ என்ற பன்மைச்‌ சொற்‌ கூறுவது சிறப்பின்மையால்‌ கணவன்‌ என்ற ஒருமை
மூலமே விளக்கிய நயம்‌ கவனித்தற்குரியது) IT—16

ஞாயிறு என்னும்‌ விளக்கை கொடித்துகில்‌ முனையால்‌ மறைத்து, நீரூற்று யந்திரங்களாகிய வியர்வை யோடு கூடி;
புறாக்களின்‌ மெல்லொலிச்‌ சொல்லினால்‌ பேச, .சுவர்க்க நாயகனை மதுரைத்‌ திருமகள்‌ புதுமணப்பெண்போல, மணப்‌
புகையாகய இரவில்‌, கூரை முகடாகிய தோழியர்‌ உய்ப்ப கலத்தின்‌ புறுவாள்‌; 11-17

மதுரைப்பட்டினத்திற்குமேல்‌ நேராகச்‌ சூரியன்‌ செல்லும்‌ போது நடுப்பகலில்‌ ( உச்சிவேளையில்‌) பிரம்மதேவன்‌ (காலை,
மாலைச்‌ சந்திகளுக்கு செம்மை வைத்தாற்போல மத்தியான வேளைக்கு செம்மை வைக்க) மறந்துபோன குறையைதீ
இர்ப்பதற்காக, செம்மை சோர்த்தாற்போல நகர மாளிகைக்‌ கோபுரங்களில்‌ செதுக்கப்பட்ட பதுமராக (செம்மணி) க்கதிர்கள்‌
பட்டு மிகுந்த சிகப்பாகத்‌ திகழ்வான்‌, 11-18

ஈழங்காய்‌! உன்‌ பூ மாலைக்கு விலை என்ன?
“என்‌ (இடம்‌ சேர்தற்குரிய) மாலை (நேரத்திற்கு) விலை மதிக்க யாரால்‌ இயலும்‌?”
“அங்குவளை”  எங்கே? மலர்க்‌ கூந்தலோய்‌?”,
இங்கு “வளை” கழன்ற இயல்புதான்‌.” ”
கடிமிக்க தாழம்பூ தருக! நங்காய்‌”
கடிமிக்க தென்பதை பின்னர்‌ பார்ப்போம்‌”
சாதி உள்ளவோ? தாமரைக்‌ கண்ணாய்‌”: *
சாதிகள்‌ இருப்பது அரிதாகுமே?’ ”.
இவ்விதம்‌ முற்கூறிய சொல்லில்‌ உள்ள காமக் குறிப்புடைய சொற்கேற்ப சாதுரியமாகப்‌ பதிலளித்து .பூக்களைஅந்நகரப்‌
பூக்காரிகள்‌ விற்பனை செய்வர்‌. 11… 19

கடி -மணம்‌, கடித்தல்‌, வளை — வளையல்‌, குவளை.-குவளைமலாா்‌
சாதி — சாதிமல்லிகை– பத்மினி, சங்கிளி முதலிய பெண்டிர்‌ வகைகள்‌

சுவைஞர்‌ (ரசிகர்‌)களின்‌ காதற்குறிப்புடைய சொற்கள்‌ இன்பம்‌ ஊட்ட, கதம்பமாலை தொடுக்கும்‌ போது தமது மனம்‌
உருகுதலைக்காட்டும்‌ கடைக்‌ கண்பார்வைகளும்‌, பதில்‌ தரும்‌
தமது இடை இடையே நகைக்கும்‌ நகை களும்‌ கழுநீர்ப்பூக்களும்‌ மல்லிகைப்‌ பூக்களும்‌ என மயங்கி வெற்றிடம்‌ தொடுத்து வெறும்‌
நூலை மட்டும்‌ (மாலை என்று) தந்து (பின்‌ தம்‌ பிழையுணர்ந்து நாணத்துடன்‌ பூக்காரிகள்‌ இருப்பார்கள்‌. 11-20

தாமரை முகத்தவளே  இந்நகரில்‌ நீயே கெட்டிக்காரி
(பூத்தொடுப்பதில்‌ –. கஈதல்‌ களியாட்டில்‌ என்பது கருத்து) என்று தெரிந்து இங்கே வரவேண்டியதாயிற்று .
நங்காய்‌! யாமம்‌” வரைக்கும்‌ இருக்கும்‌ கடிமணம்‌ (மகழ்ச்சி) வாசனைமலர்‌ நன்றா? நாழிகை வரையிருக்கும்‌ மலர்‌ நன்றா?” *
“நாங்கள்‌ கேட்டால்‌ நீ£ஃ ருது (பருவ) வேளையச்‌ சொல்கிறாயே? அது வரை காத்திருக்க முடியுமா?”
*பக்சுத்தில்‌ வரக்‌ கூடாதா பந்தில்‌ கைப்பட்டால்‌ வாடிப்‌ போகுமா என்ன! மான்‌ விழியாய்‌; என்றிவ்வாறு பரிபாடையாக (குறிப்பு மொழியில்விடர்கள்‌) பேச, முந்தானையால்‌ வாயிதழ்‌ களைமூடி அடக்கிய சிரிப்பு கண்கள்‌ மூலமாக வெளிப்பட்டுப்‌
பொங்கிவர பூக்களை நனைப்பது போல தண்ணீர்‌ தெளிக்கவும்‌ அந்த சரசமான (காதற்‌ சுவைமிக்க) தண்ணீரே அந்த விடலைகளை மோகங்‌ கொள்ளச்‌ செய்யும்‌. 2-21

“இதோ! என்று சொல்லும்போது முல்லைப்பல்‌ வரிசை ஒளியோடு கூடிய அசையாத கூரிய பார்வையால்‌ முன்பே (உளம்‌) தடுமாறவும்‌-
விலை ஒப்பாது அப்புறம்‌ சென்றால்‌, இதழ்‌ (உதடு) மடித்து சினங்கலந்த பார்வை வீசிட (முகங்கோணக்கூடாதென்ற
தாட்சண்யத்தினால்‌) கண்ணோட்டமுடன்‌ திரும்பிவரச்‌ செய்து,
திரும்பிவந்தவரைப்‌ புன்‌ முறுவல்‌ பேசும்‌ ஓய்யாரப்‌ பார்வையால்‌ உண்டு, இல்லை என்று எதுவும்‌ பேச முடியாமல்‌ செய்து.
இவளதுதான்‌ ஆகுமோ? எங்களது ஆகாதோ? என்ற பிற பெண்டிரைச்‌ சக்களத்திகளாக்கப்‌ பேசும்‌ துடுக்கான பேச்சுக்கள்‌ மனம்‌ மகிழச்‌ செய்ய, சாதுரியப்பேச்சு, ஒய்யாரம்‌, மேனியெழில்‌ ஆகியவற்றால்‌ கவர்ந்து, முன்பு பணம்‌ தந்தமங்கையை மறந்து
நிற்க, தான்‌ மன்மதனுக்கு (மலர்‌) அம்புகளைத்‌ தரும்‌ இரதி தேவியைப்போல விடர்களுக்கு அவர்கள்‌ (பூக்காரிகள்‌) விரை மலர்கள்‌ தருவார்கள்‌.–11.22

நிறைந்த கற்பூரத்துண்டுகள்‌ தாரகைகள்‌ ஆகவும்‌, புனுகு ஜவ்வாது நிறைந்த மினுமினுக்கும்‌ இளஞ்சிகப்பு (பாடலம்‌) நிற
முடைய தந்தச்‌ மிழ்‌, சந்திரனாசவும்‌, குங்குமம்‌ தடவிய சேலையின்‌ செம்மை படிந்து, ஒருபுதிய சந்தியாகாலம்‌ போலத்‌
தோன்றுமாறு அந்நகர வெளி வீதிகளில்‌ சந்திரகாந்தக்‌ கல்‌ இண்ணைகளில்‌ மணப்பொருள்கள்‌ (வாசனைப்‌ பொடிகள்‌)
விற்கும்‌ மகளிர்‌ திகழ்வார்கள்‌. 11-23

தன்‌ மேலிருக்கும்‌ மாவுத்தனின்‌ கட்டளைகட்கு செவி கொடுத்து மேல்நோக்கி வெட்ட வெளியைச்‌ சீறி
முதுகில்‌ உராயச்‌ சென்று விண்ணதிர அதட்டும்‌ (கழே உள்ள) ஈட்டிக்காரனை தளைப்பட்ட பாதங்களால்‌ தாண்டி விரட்டி,
விரட்டி, ஈரத்தை உணர்ந்து வீட்டு வாசல்‌ இது எனத்‌ தெரிந்து தின்று அங்குள்ள மக்களைப்‌ பிடிக்க விரும்பி துதிக்கையை நீட்டி
நீட்டி, தப்பட்டை ஒலிக்கு மதநீர்‌ பெருக்கெடுக்கவும்‌, வாத்தியம்‌ வாசிப்பவனை கற்களால்‌ எறிந்து எறிந்து, மூங்கிற்கமி அடிகட்கு
அஞ்சி ஊருக்கு வெளியே வந்து, பிற யானைகளின்‌ பிளிறல்‌ கேட்டுப்‌ போகாமல்‌ திரும்பி வந்து, கண்களால்‌ எதிரிகளை
வெல்ல அனுப்பும்‌ சக்தியைப்‌ போல்‌ கூர்ந்து பார்த்து, பிடி (பெண்யானை) யின்‌ வசப்பட்டு (பிடிப்பட்டு) த்திரும்பி
ஊருக்குள்‌ வருவதாக மதயானை கம்பீரமாக இருக்கும்‌. 11-24

தன்மேல்‌ எப்போதும்‌ வாரி எறிந்த தரசியின்‌ மேல்‌ (பறவைகள்‌ கடித்து) எறிந்த (யாளைகட்டும்‌) கம்பமான மரத்தின்‌ பழங்‌
களிலிருந்து உதிர்ந்த விதைகள்‌, அதனுடைய (யானையின்‌) துதிக்கை நீரால்‌ நனைந்து முளைக்கவும்‌, நெருங்க முடியாதபடி.
உயிருடைய மலைகளோ எனும்படியாக அந்நகர நந்‌ தவனங்களில்‌ மதயானைகள்‌ திரியும்‌. 11-25

அந்தகர உயர்சாதிக்‌ குதிரைகள்‌ “முனிவன்‌ சாபத்தால்‌ எங்கள்‌ இறக்கைகள்‌ இற்றொழிந்தன! நீங்கள்‌ (அம்பு) இறகுகள்‌
உள்ளவர்கள்‌ தானே! வாருங்கள்‌ பார்க்கலாம்‌ (பந்தய ஓட்டத்‌ துக்கு) என்று வில்லோடு கூடிய பாம்புகளை ஓத்த அம்புகளைப்‌
பார்த்து கேட்பதுபோல ஓரக்கண்‌ பார்வையுடனும்‌, வாய்‌ நுரையாகிய சிரிப்புடனும்‌ கடிவாளமிட்ட முகத்தைத்‌ தாக்கிப்‌
பாய்வதுபோலத்‌ தோன்றும்‌, அம்புகளைவிட விரைவாக குதிரைகள்‌ செல்லும்‌ என்பது கருத்து) 11–26

அந்நகரக்‌ குதிரைகள்‌ “நம்மேலிருக்கும்‌ வீரர்கள்‌ பகைவரிடம்‌ சினம்‌ கொண்டு போரிடும்போது நம்மிடம்‌ வில்லும்‌ அம்புப்‌
பொதிகளும்‌ காட்டாமல்‌ விடமாட்டார்கள்‌. அப்போது அம்பிளைச்‌ செலுத்தும்போது அம்பு நம்‌ நடைக்குப்‌ பின்‌
வாங்காமல்‌ இருக்காது. தவறுதலாக அந்த அம்பு நம்வீரர்கள்‌ முதுகில்‌ பட்டால்‌, புற முதுகற்‌ புண்பட்டறியாத அவர்கட்கு
இழுக்கு ஏற்படுமோ? என்‌ செய்வது”  என்ற கவலையினால்‌ போலும்‌ தம்‌ காற்‌ குளம்புகளால்‌ நிலத்தைக்‌ &றிக்கொண்டிருக்கும்‌.
(கவலையுற்றவர்கள்‌ கால்‌ நக’த்‌ தால்‌ நிலத்தைக்கறுவது இயல்பு. குதிரைகள்‌ குளம்பால்‌ நிலம்‌ &றுவதும்‌ இயல்பு. இவ்விரு
தன்மைகளை இணைத்த கற்பனை இது, * தாங்கள்‌ விட்ட அம்பே தங்களைத்‌ தைக்கும்‌ அளவிற்கு குதிரைகள்‌ விரைவாகப்‌ போகும்‌ என்பது குருத்து.) 11-27

தனக்குச்‌ சமமான (இணையான) வாயுக்‌ கூட்டத்தை (பத்து வாயுக்களை) ஒரே பாய்ச்சலில்‌ பின்‌ வாங்கச்‌ செய்து வென்றா
லும்‌, தன்‌ வயிற்றில்‌ உள்ள சமானன்‌ (இணையானவன்‌-௪மான வாயு) என்னும்‌ வாயு (காற்று) மட்டும்‌ தன்னோடு இருப்பதால்‌
வெல்ல முடியவில்லை என்ற இகழ்‌ என்னும்‌ கருமை அக்குதிரை கட்கு இருந்தது. காலையில்‌ இனியுண்ணும்‌ போது சுவாசக்‌ காற்றினால்‌ மணிபந்தம்‌ என்னும்‌ மலையிற்‌ பிறந்த காண்ணடி டிப்‌ பாளங்கள்‌ போன்ற உப்புப்‌ பாளங்களை நக்கும்‌ போது அவை கருமையுறுவது அதனால்தான்‌ என்று தோன்றுகிறது((பிராணன்‌ (இதயம்‌) அபானம்‌ (குதம்‌) சமானன்‌ (நாபி) உதானன்‌ (கழுத்து) வியானன்‌ (உடல்‌ முழுவதும்‌) என்று பஞ்ச
வாயுக்களில்‌ சமானன்‌ என்றும்‌ வாயு வயிற்றிலுள்ளது.)2-28-

“பாய்ந்தோடும்போது (குதிரையின்‌ முதுகு வளைந்து) கால்‌ நிலத்திற்பட்டும்‌, (குதிரையில்‌) ஏறும்போது முன்பே இருதிவலயங்‌
கள்‌ வேண்டியிருப்பதாலும்‌ (உயரமாகையால்‌) இருவிதத்திலும்‌ இது நமக்கு இகழ்‌ தருகிறது என்று கூறும்படியான பாஹ்லிகம்‌ சகம்‌, தாரா, ஆரட்ட, கோட்டாணம்‌ முதலிய நாடு களின்‌ உயர்ந்த சாதிக்குதிரைகள்‌ அந்நகரில்‌ மிகுதியாக உள்ளன.-11-29

முடியவிழ்த்தலுமே அடித்தாமரையில்‌ படி.தலால்‌ தேனிக்கள்‌ (தும்பிகள்‌) தான்‌ கூந்தல்‌ என்பதில்‌ ஐயமுண்டேோ?
கண்டார்‌ எப்படிப்பட்டவராயினும்‌ தம்‌ கொள்வதால்‌ கண்ணாடி தான்‌ அவர்கள்முகம்‌ என்பதில்‌ .ஐயமுண்டோ?
மெல்லிடை என்னும்‌ ஆகாயத்தில்‌ மிளிர்வதால்‌ சக்கரவாக (அன்றில்‌) இணை தான்‌ முலைகள்‌ என்பதில்‌ ஐயமுண்டோ?
புலவு புரளும்‌ பார்வையால்‌ மீன்கள்‌ தான்‌ அவர்கள்‌ கண்கள்‌ என்பதில்‌ ஐயமுண்டோ?
அருகணைந்ததுமே மணம்‌ வீசுவதால்‌ பூங்கொடிதான்‌ அழகிய உடல்‌ என்பதில்‌ ஐயமுண்டோ? என்று கூறும்படியாக
அழகுமிக்க, மதனகலையில்‌ சிறந்த விலைமகளிர்‌ அந்நகரில்‌ திகழ்வார்கள்‌. Il—30

பரந்து சிவந்த மஞ்சள்‌ வண்ணமுடன்‌ கூடிய குங்குமப்‌ பூக்களோடும்‌, ௧௬ வண்ணக்‌ கஸ்‌ தூரி வீணையில்‌ தேனிசை முரல,
கற்பூரக்குவையானது நாரத முனிவனைப்போல்‌ திகழும்‌ ஆதலின்‌ அந்நகர காமுகர்கட்கு கலவிப்போர்கட்கு இடையூறு நேராமல்‌
மிகுந்திருக்கும்‌. [1.31

வானமும்‌ திரிசங்குவினால்‌ பறைச்சேரி யானது இங்கு இருக்கக்‌ கூடாது என்று பூமிக்கு இறங்கிவந்த தாரகைகள்‌,
கிரகங்கள்‌ என்னும்படியாக ஒளிமிக்க நவரத்தினங்கள்‌ அந்நகரின்‌ அங்காடிகளில்‌ மிளிரும்‌. JI—32

நெடுங்காலமாகப்‌ பாதுகாத்து வந்த அக்னி (யாகத்த) நனைந்து கெடுமென்று அஞ்சியோ அல்லது தாமே வேள்வித்தி
உருவினராதலின்‌ அந்‌ தணர் கள்‌ மறைமலைகளாகவும்‌. தவவேள்விச்‌ சீடர்களாகவும்‌ இகழ்ந்து இந்திர குபேரர்‌ ஆனாலும்‌
அவரிடம்‌ தானம்‌ (கொடை) பெறுவதற்காக வலது கையை நீட்ட மாட்டார்கள்‌.
(தானம்‌ பெறும்‌ போது தாரை வார்த்தலின்‌ கைநனையும்‌ என்று தாளம்‌ பெறமாட்டார்கள்‌ என்பது கருத்து)
(அந்தணர்‌ வலச்கரத்தில்‌  உள்ளதாக உருவூத்தல்‌, வேதமரபு, வேள்வித்‌ தீயாகவும்‌ உவமிப்பர்‌, JI—33

மந்திரக்‌ கவசம்‌ அணிவார்களே யன்றி போரில்‌ கவசம்‌ அணியார்‌ கொடையின்‌ போது ஐந்தைப்‌ பந்தாக்குவார்களே
யன்றி தங்கள்‌ ஆற்றலைக்‌ காட்டும்‌ போது அவ்விதம்‌ செய்ய மாட்டார்கள்‌.
(முன்வைத்த கால்‌ விரல்‌ ஐந்தைப்‌ பின்‌ வாங்கி மற்ற ஒரு கால்விரலுடன்‌ இணைத்துப்‌ பத்தாக்க மாட்டார்கள்‌. அல்லது
கைவிரல்‌ ஐந்துடன்‌ மற்றொரு கைவிரல்‌ ஐந்தும்‌ இணைத்து பத்தாக்கி எதிரியை வணங்க மாட்டார்கள்‌ என்பது குறிப்பு
கொடை தரும்போது ஐந்து பொன்‌ கேட்டால்‌ பத்துப்‌ பொன்‌ ‘ தருவர்‌ என்பது கருத்து, மந்திர கவசம்‌ என்பது கந்தர்‌ சஷ்டி.
கவசம்‌ போன்றவை)
விளையாடும்‌ களத்தில்‌ மண்ணிய்புரள்வார்களே யன்றி அரசன்‌ தராமல்‌ மண்ணிற்‌ புரளார்‌. (நிலம்‌ வேண்டி கெஞ்ச
மாட்டார்கள்‌ என்பது கருத்து)

இடியேறுபோன்ற (வஜ்ரம்‌ போன்ற) தம்‌ தோள்களால்‌ பிற மன்னார்களைதக்‌ தம்‌ வயப்படுத்தும்‌ ஆற்றலுடையவா்களாக
அந்நகர அரசகுமாரர்கள்‌ (அித்திரியார்கள்‌) இருந்தார்கள்‌. 11.34

செருக்கில்லாமல்‌, கொடுத்த தானம்‌ வார்த்த நீர்‌ தெருவில்‌ பாய்ந்தோடி அங்காடியில்‌ உள்ள .கம்பங்களினை தளிர்க்கச்‌
செய்கிறது என்று கூறும்படியாக, அறவழியிற்‌ சம்பாதித்த பொன்‌ கோடிக்கு ஒரு கொடியாக நட்டு, முகிலினை மறைக்கச்‌ செய்யும்‌
வளமுடையவர்களாக அந்‌ நகர வணிகர்‌ (வைசியார்‌)கள்‌ திகழ்ந்தார்கள்‌. 11..-35

மன்னர்கள்‌ பாதங்களில்‌ உள்ள ஏர்‌ ஆகிய ரேகைக்கு (சங்கு சக்கர ரேகை போல ஏர்‌ ரேகை இறப்பினைக்‌ குறிக்கும்‌) எங்கள்‌
தோள்களில்‌ உள்ள ஏர்தான்‌ மூலகாராணம்‌ என்று கூறி, கோடிக்‌ சுணக்கிலும்‌ குன்றுகள்‌ போலவும்‌ நிறைவிக்கும்‌ தானியக்‌ குவைகளைப்‌
பயிர்‌ செய்து விளைவித்து அந்நகர நான்காம்‌ வருணத்தார்‌ (சூத்திரர்கள்‌) நல்லோர்களைப்‌ போற்றிப்‌ புகழ்‌ பெ.ற்றிலங்குவார்கள்‌. Il—36

உமிழ்தல்‌, உதைத்தல்‌, உரைத்தல்‌, சீரித்தல்‌ ஆகிய தூண்டுகோற்‌ செயல்கள்‌ செய்து தம்மை இகழ்ந்த நங்கையரை
(நங்கைக்குப்‌) பிடித்துத்‌ தருக என்று சில மரங்கள்‌ (அணைத்தல்‌? பார்த்தல்‌, தொடுதல்‌ முதலிய கூண்டுகோழ்‌ செயல்கள்‌ செய்யப்‌ பட்ட) மரங்களிடம்‌ கூறி, வண்டுகளாகிய சங்கிலியாற்‌ பிணித்து, நம்‌. பிக்கையின்றி,’ மன்மதனின்‌ படையாகிய கிளி, குயில்களை கூட்டிக்கொண்டு முற்றுகையிட்டனவோ எனும்படியாக பூங்கா வளங்கள்‌ எமில்‌ பெற்றிலங்கிென.* 11-37

தென்திசையானையின்‌ மதத்துக்கும்‌ மதுரை நகர யானை யின்‌ மதத்துக்கும்‌ உள்ள வேறுபாட்டைக்‌ காண வேண்டும்‌ என்று
கருதியது போல கடாம்‌ (யானையின்‌ கன்னம்‌) உரச, கலவியிற்‌ களைத்தவர்பால்‌ அருள்‌ கொண்டாற்‌ போல்‌
காரிகையாரின்‌ கன்ன வியர்வையைத்‌ துடைத்து; சழித்த நாபியுடன்‌ கடக்கும்‌ கஸ்தாரிமான்கட்கு உயிர்‌ கொடுக்கப்‌ .
போவதுபோல அதன்‌ உந்திப்பையில்‌ நுழைந்து, கதன்‌ பகையான பாம்புகளைக்‌ கொல்லும்‌ என்பதால்‌ இல்லக்‌
கூரைகளில்‌ உள்ள மயில்களின்‌ இறகினை (நேயமோடு) தடவி, நகரின்‌ செல்வச்‌ செழிப்பினை விரைவின்றி மெல்லக்‌
காண்பதுபோல, மேல்‌ திசையானை மேல்‌ ஏறி வந்தாற்போல
மென்னடையில்‌ எப்போதும்‌ அந்த மதுரையில்‌ சந்தன மலையி லிருந்த வந்த மந்த மாருதன்‌ (இளந்தென்‌ றல்‌) இன்புறுத்துவான்‌.
(தென்றற்குரியை மணம்‌, தண்மை, மென்னடைகசட்கு காரணம்‌ கற்பிக்கப்பட்ட நயம்‌ காண்க) 11.38

* (நந்தன மரங்கள்‌ பூத்தலால்‌ வண்டுகளாலும்‌, பழங்கள்‌ மிகுந்ததால்‌ கிளிகளாலும்‌, தலிர்கள்‌ மிகலால்‌ குயில்களாலும்‌
நிறைந்து பொலிவுற்றன என்பது கருத்து)
(வட மொழி இலக்கிய மரபில்‌ பெண்களின்‌ சில செயல்கள்‌
சில மரங்கட்டு எருவிட்டாற்போல தரண்டற்கிரியை (கோகதம்‌) ஆற்றும்‌ என்று கற்பிப்பர்‌. சூடாமணி நிகண்டு 12–109 பாடல்‌
இதனை விளக்கும்‌.

ஏடவிழ்‌ மகிழ்‌ சுவைக்க, எழிற்பாலை நண்பு கூடப்‌ பாடலம்‌ நிந்திக்கத்‌ தேம்படி முல்லை நகைக்கப்‌ புன்னை
ஆட, நீள்‌ குரா அணைக்க, அசோகுதைத்திட, வாசந்தி பாட, மாப்பார்க்க வார்சண்பக நிழல்படத்‌ தவிர்க்கும்‌”

இதற்குரிய வடமொழிக்‌ காரிகை.
அசோகஸ்‌ சரணாஹத்யா வகுளோமுக துளா, ஆலிங்களாத்‌ குரவகஸ்‌ திலகோ வீகூணேனச௪
கரஸ்பார்ஸணே மாகந்தோ முகராகேன சம்பக; ஸல்லாபத: கர்ணிகார; சிந்துவாரோ முகானிலாத்‌
கத்யா ப்ரியாளுர்‌ நிதராம்‌ நமேரு ஹஸிதேன ச”

———-

மீனக்கொடியோன்‌
சந்தி (நட்பு) விக்ரகங்களாகிய அறுகுணகிகளில்‌ (அரசநீதியில்‌) சிறந்த சக்கரவர்த்தியும்‌ ஈரிரண்டு (நான்கு–சாமதான,
பேத தண்டங்கள்‌) உபாயங்களாகிய அறிவில்‌ சிறந்த பண்டிதனும்‌, மலய (பொதிகை) மலையை விளையாடும்‌ செய்குன்ற
மாகத்‌ கொண்டவும்‌, பொன்மலை (மேரு)யில்‌ தன்‌ பெயர்‌ பொறித்த நூலாசிரியனும்‌ சங்கிலியாற்‌ கட்டப்பட்ட மேகங்கள்‌
போன்ற யானைகள்‌ உடையவனும்‌, கடலிற்கு அணைகோலிய தற்கால இராமனும்‌, தாமிரபரணி (பொருளை) நதியின்‌ தூய
நண்ணீரில்‌ களிக்கும்‌ அன்னப்‌ பறவையானவனும்‌ இலங்கைக்கு அரசனுடன்‌ நட்புடையவனும்‌ அகத்திய ‘முனிவனுடைய ஆசி
சுளைப்‌ பெற்றவனும்‌, இந்திரனையும்‌ வெல்லும்‌ திறன்‌ படைத்தவனும்‌ பூதகணங்களை வசப்படுத்தும்‌ சிவபெருமானின்‌ தொடர்‌
பான நிலத்துக்ககிபதியானவனும்‌ ஆகிய மீனக்கொடியோன்‌ ஆகிய பாண்டியன்‌ அந்நகரை ஆண்டு வந்தான்‌. 11-39

சந்திரகுலத்திற்‌ சிறந்தவனாகிய அம்மன்னன்‌ எப்போதும்‌ நீதி வழுவாது இருப்பான்‌. மனம்‌ வருந்துமாறு மக்களிடமிருந்து
வரி (இறை) வசூலிக்க (ஏற்க) மாட்டான்‌. ஒருவர்‌ கூறும்‌ புறஞ்‌ சொற்களைக்‌ கேட்டு, மனத்துட்கொண்டு மூழ்ச்சி கெடுமாறு
பிறருக்குக்‌ கெடுதல்‌ செய்ய மாட்டான்‌. தன்னைப்‌ புகழ்ந்தால்‌ (நாணத்தால்‌) தலை குனிவான்‌. தான்‌ வீரனாகினும்‌ கோழை
யைக்‌ கூட குறை கூற மாட்டான்‌. 1{—40

மலயமலைக்‌ காடுகளில்‌ விளையாடினும்‌, பாம்புகட்கு, கடுகளவும்‌ அஞ்சமாட்டான்‌, மிகமிகக்‌ குறைவாகப்‌ பேசுபவனாக
தற்புகழ்ச்சியற்றவனாக, பிறரைக்‌ கேலிப்‌ பேச்சிலயே-அடக்குபவனாக (சேர மன்னர்களை ஓடுக்குபவனாக) இருந்தான்‌,
தாமிரபரணிக்கு (தென்திசை பெண்‌ யானையின்‌ பெயர்)த்‌குலைவனாக இருந்தாலும்‌ நல்லோர்‌ (சங்கத்தார்‌) உறவினால்‌
இகழ்‌ (அஞ்சனம்‌-மை) இல்லாதவனாகவும்‌ இருந்தான்‌.
(அஞ்சனம்‌ எனும்‌ யானை தாமிரபரணி எனும்‌ பிடியின்‌ கணவன்‌ ஆதலின்‌ இக்கற்பனை செய்யப்பட்டது)
சிறந்த பெருமையினால்‌ மதுர (மதுரைநகர்‌-இனிப்பு) முடையவனாயினும்‌, லாவணியம்‌ (அழகு-உப்பு) கூடியிருந்தும்‌ சிறப்புற்றான்‌.

கடல்‌ அலைகள்‌ முறிந்து வீழச்‌ சிதறிய நீர்த்துளிகளை உண்டாக்கத்‌ திரியும்‌ இமிங்கலத்தின்‌ வால்‌ வீச்சுப்போல, (அலை
போன்ற) பகைமன்னர்‌ யானைகளின்‌ கும்பங்களில்‌ இருந்து  (நீர்த்துளி போன்ற) முத்துக்கள்‌ சிதறி விழும்படிச்‌ செய்யும்‌
(வால்போன்ற) வாள்‌ வீச்சினையுடைய (திமிங்கலம்‌ போன்ற)தோள்களை உடையவனாக அந்த மன்னன்‌ இருந்தான்‌. 71.41

தானம்‌ (பிறர்‌ கேட்ப தாரை வார்த்துத்‌ தருவது) தியாகம்‌ (பிறர்‌ கேளாமலேயே தாமாகவே அளிப்பது) என்னும்‌ இரண்டு
இறக்கைகளையுடைய அம்மன்னனுடைய புகழ்‌ என்னும்‌ அன்னப்‌ பறவை, தானமாகிய இற்கு நனைந்தாலும்‌, பிற பறவை
போலன்றி ஈரிறகுகள்‌ நனைந்தாலும்‌ பறக்கும்‌ தன்மையுடைய தாதலின்‌ வானத்தில்‌ பறந்து இரியும்‌.
அன்னம்‌ இரு சிறகுகள்‌ நனைந்தாலும்‌ பறக்கும்‌ என்பது மரபு) 11-42

இனிக்‌ கூட்டம்‌ சங்கிலிகளால்‌ கணிகையர்‌ இல்லங்களில்‌ சிறைப்படுத்தப்பட்டும்‌, சிற்றெலிகளின்‌ கூட்டம்‌ பகைவரின்‌
சூனியமாகிய மாளிகைகளில்‌ செண்டாடிக்‌ கொண்டிருக்கவும்‌, தன்‌ வீரக்கழலில்‌ பிரதிமைகளாக உள்ள சிற்றரசர்கள்‌ மட்டுமே
உரக்‌ கொண்டு அடங்கிக்‌ கடப்ப, தன்‌ படையிலுள்ள யானைகட்கு போட்டியான எதிரி யானைகளின்‌ கன்னங்களில்‌ (மதம்‌
இன்றி) அனாவிருட்டி (மழையின்மை) சேர்ந்து கொள்ள, தானம்‌ (கொடை) தரும்போது தனது கையில்‌ அதிவிருட்டி (மிகுமழை)
அமைந்துவிட, தன்‌ பிரதாபம்‌ (ஆற்றல்‌) என்னும்‌ இயில்‌ எதிரிகள்‌ பொசுங்கிய விட்டில்கள்‌ ஆகவும்‌ அப்பாண்டிய மன்னன்‌
இவ்விதம்‌ இவ்வுலகை ஆட்சி புரிந்து வந்தான்‌.
(அதி விருஷ்டி அநாவிருஷ்டிர்‌ மூஷிகாஸ்‌ ஸபலர்‌ சுகா; அத்யாபன்னாஸ்ச ராஜான: ஷடேதே ஈதய: ஸ்ம்ருதா.
எனும்‌ சுலோகப்படி ஒரு நாட்டின்‌ துன்பங்களான மழையின்மை, மிகுமழை, எலி, விட்டில்‌, இளிகள்‌ பயிர்‌, தானீயங்‌
களை அழித்தல்‌, எதிரி மன்னர்கள்‌ படை எடுப்பு ஆயெவற்றைக்‌ கடந்து நலமான வளமுடன்‌ ஆட்சி செய்தான்‌ என்பது கருத்து.)11-43

அவ்வரசன்‌ இவ்விதமாக சாம்ராஜிய வைபவங்களை அனுபவித்துக்‌ கொண்டிருக்கும்போது சில காலம்‌ கடந்ததும்‌. 11-44

முது வேனில்‌
பாதிரி மரம்‌ பாக்கியம்‌ பெற்றது போலப்‌ பூக்கவும்‌, கானல்‌ நீர்‌ தோன்றும்‌ காலமும்‌, இலவம்‌ பழங்களை உடைக்கச்‌ செய்வது
மாகிய கோடைக்‌ (முதுவேனிழ்‌) காலம்‌ பூமியில்‌ வந்தது. 11-45

அருவி வெள்ளம்‌ வற்றியதும்‌ பாறைகளில்‌ தேங்கிய பாட வரண்டு பெரும்‌ பிளவுகளாக எழுந்தன. குறவர்கள்‌, குழிகளில்‌ நீர்‌ வற்றியதால்‌ குருவிகளைப்‌ பிடிப்பதற்காக ஆங்காங்கு கொண்டுவந்து ஊற்றிய நீர்‌ தெரிந்தது.
காட்டுத்தீயால்‌ பொசுங்கிய மர இலைகளை சூறாவளிக்‌ காற்று மேலே கிளப்பவும்‌, புறாக்கள்‌ எனக்‌ கருதி வல்லூறுகள்‌ ஊடே பாய்ந்தன. மரத்தடி நிழலில்‌ தரங்கிய வழிப்போக்கர்கள்‌ நிழல்‌ நகர நகர தாமும்‌ அதைத்‌ தொடர்ந்து புரண்டு புரண்டு படுத்தனர்‌. திகம்பரர்‌ (திசையே உடையானவர்‌) ஆன வைரவ (பைரவர்‌)ருக்குத்‌ துவைத்த உடைகள்‌ காயப்போட்ட வண்ணாந்துறை போல எல்லா திசைகளும்‌ (வெளுத்த) இருத்தன. பேய்த்தேர்‌ (கானல்‌ நீர்‌)களால்‌ வெளியிடங்கள்‌ வெளுத்து வெயிலில்‌ கன்றியது போல திசைகள்‌ புகைப்படிந்து காணப்பட்டன. 11-46

வேனிலில்‌ யானை, பன்றி, காட்டெருமை, முதலியவற்றின்‌ உடலில்‌ மூடிக்கிடக்கும்‌ சேறு காய்ந்து ஆறிய பிறகு; இந்த வெக்கையில்‌ எல்லா உயிர்களும்‌ அழிந்துவிடும்‌ என்றஞ்சிய பிரம்மதேவன்‌ இனிவரும்‌ சிருஷ்டிக்‌ (படைப்புக்‌) காக மேலக்‌ காற்றினால்‌ ஒளிரும்‌ கொடும்‌ வெயில்‌ எனும்‌ தீயில்‌ வேக வைத்து அச்சுவார்க்க வைத்த மூசைகளோ எனும்படியாக இருந்தது. அச்சு வார்த்தல்‌–மோல்டிங்‌ ( M oalding) Ji—47

காட்டுத்‌ தீயின்‌ புகை என்னும்‌ இருட்டில்‌ தங்களது தண்ணீர்‌ ஆகிய திரவியத்தை (பொருளை) தாமரை கேள்வனின்‌ (சூரியனின்‌) கதிர்கள்‌ (எனும்‌ ஆட்கள்‌) கவர்ந்து சென்று விடவும்‌ (இத்த அனியாயத்தை சூரியனிடம்‌) மூறையிடுவதற்காக வானத்‌ திற்குச்‌ செல்லும்‌ பாழும்‌ உறை கணறுகளோ எனும்படியாக, பார்க்கம்‌ போதே பூமியில்‌ உருவாகி மேலே அகன்றுள்ள, வைக்கோல்‌ சுற்றியும்‌ ஆட, சூறாவளிக்காற்றில்‌ பூழ்தி வட்டங்கள்‌ மேலே பறந்து சென்றன.
(புகை கருநீல நிறமாதலின்‌ இருட்டெனக்‌ கூறப்பட்டது. சூறாவளிகள்‌ கிணறுகளாக உவமிக்கப்பட்டன. சூரியன்‌ தாமரை கேள்வன்‌ ஆதலின்‌, தாமரை நீர்‌ இன்றி வாமாதாதலின்‌ முறை யிட்டதும்‌ நீர்மீண்டும்‌ கடைக்கும்‌ என்று கருதியதாகக்‌ கருத்து. சூரியன்கதிரால்‌ நீர்‌ நீராவியாகி முகிலாகி மீண்டும்‌ மமையாக திரும்பி வருவது இயற்கை. அதை நினைவிற்கொண்டு இக்கற்பனை செய்யப்பட்டுள்ளது.) [[…. 48

சூரியனின்‌ தேர்க்கயிறாகிய பாம்புகள்‌, மேல்‌காற்று ஆகிய சுடுகாற்றினை (உணவு ஆதலின்‌) உண்ண முடியாமல்‌, வேறுண
வின்‌.றி பட்டினி கடந்து களைத்துப்போகவே, பிடி நழுவி விட்டதால்‌, முடவனாகிய அருணன்‌ ஆகிய தேரோட்டி சூரியனின்‌ ஆணையால்‌, பாம்புக்‌ கயிற்றினை முடிச்சுப்போட அடிக்கடி தேரை நிறுத்தியதால்‌, பயணம்‌ தடைபட்டுத்‌ தாமதம்‌ ஆனதென பகல்‌ நீண்டதாக வேனிற்காலம்‌ இருந்தது.
(ரதஸ்யேகம்‌ சக்ரம்‌ புஜங்கயமிதா: சப்த துரகர்‌ நிராலம்போ மார்க்கஸ்‌ சரணவிகல : சாரதிரபி ரவிர்‌ யாத்யே வாஸ்தம்‌
ப்ரதிதினமபாரஸ்ய நபாஸ ; க்ரிய : சத்வே பவதி மஹதர்ம தநோபகரனே -போஜபிரபந்தம்‌.
தோர்ச்சக்கரம்‌ ஒன்று. பாம்புகள்‌ கயிறு, ஏழு குதிரைகள்‌. ஆதாரமில்லா வழி. முடவன்‌ சாரதி, (இப்படி இருந்தும்‌) சூரியன்‌
தினந்தோறும்‌ எல்லையற்ற வானத்தைக்‌ கடந்து அத்தம்‌ புகுகின்றான்‌. பெரியோர்க்கட்கு தம்மன உறுதியால்தான்‌ செயலில்‌ வெற்றி பெறுகின்றார்களே ஒழிய துணைக்‌ கருவி களால்‌ அன்று,
இத்த சுலோகப்படி ஓன்றையாழியானாகிய சூரியனுக்கு பாம்பக்கயிறும்‌ முடவனாகிய சாரதியும்‌ இருப்பதால்‌ பகல்‌ நீண்ட தெனக்‌ கற்பிக்கப்பட்டது.) 1… 49

சூரியனின்‌ கதிர்க்கற்றைகள்‌ என்னும்‌ நெருப்பில்‌ வெந்த பூமியின்‌ நீறு (சாம்பல்‌) காற்றால்‌ பறந்தது போல இலவமரத்தின்‌
பழுத்த பழங்கள்‌ உடைந்து சிதறிய பஞ்சு வானில்‌ பரந்தது. II—50

வழிப்போக்கர்களால்‌ தோண்டப்பட்ட ஊற்றுக்‌ குழிகளில்‌ நிறைந்த நீரில்‌ பிரதிபலித்த சூரிய பிம்பங்கள்‌, கடலரசனைப்‌
பிரிந்த விரக தாபத்தை நீக்குவதற்காக நதி நங்கையர்‌ தம்‌ மேனியில்‌ அணிந்த முத்து வடங்களோ எனும்படியாக இருந்தன.
(நதிகளாகிய நங்கையர்‌ வேனிலில்‌ நீர்ப்பெருக்கின்மையால்‌ கடலினைத்‌ தழுவ முடியாத பிரிவுத்‌ துயரால்‌ ஏற்பட்ட
வெம்மையைப்‌ போக்க குளிர்ந்த முத்து மாலையணிந்தது போலக்‌ கற்பனை.) IT~—51

வருணதேவன்‌ மிகுமழை பெய்வித்து அதனால்‌ முன்‌ நாட்‌களில்‌ கடலோடு கூட்டுவிப்பவனாக இருந்தமையால்‌, அதுபோல
இந்நாளிலும்‌ செய்வித்தருள வேண்டுமென்று இலஞ்சம்‌ (காணிக்கை) ஆக, பொற்காசுகளை, நதி வாளத்திலுள்ள வருண
தேவனுக்கு தன்கையால்‌ கொடுப்பதுபோல நீரற்ற நதி.பில்‌ வெள்ளம்‌ இன்மையால்‌ வணங்கிய இதழ்களோடு கூடிய
பொகுட்டினையுடைய மேல்‌ நிவந்ததாமரைத்‌ குண்டுகள்‌ தோன்றின,
(மேலே தரக்கிய தாமரைத்‌ தண்டு கரங்கள்‌, பொகுட்டு உள்ளங்கை, அதிலுள்ள மஞ்சள்‌ வண்ண விதைகள்‌ பொற்‌
காசுகள்‌ என்று உவமிக்கப்பட்டுள்ளது. ) ]1–52

சிறிதே வாடிய பாசிகளைத்‌ தின்றதால்‌ கழுத்தில்‌ துவர்ப்பு அடைந்து, இளம்புலால்‌ மணம்‌ கலந்த காற்று வீசுவதால்‌
விரைந்து செல்லாமல்‌ மெல்ல ஒதுங்கி, முடிவாக சென்று, ஒரு பக்கமாக இருந்து மிதித்தவாறு அயிரை மீன்களையும்‌, சிறு
நத்தைச்சிப்பிகளையும்‌ மென்றவாறு, நண்டு தன்‌ காலைக்‌ கவ்விடவும்‌ சிறிது விலகி அலகால்‌ குத்தித்‌ தின்றும்‌, ஈரம்புலர்ந்த
நிலத்தில்‌ சேம்புத்‌ தோட்டம்‌ போல உள்ளதாமரைத்‌ தண்டுகளுக்‌ இடையே வெயிலைக்‌ கழித்தும்‌, இருக்கிற கொக்குகட்கு குளங்கள்‌
முழங்கால்‌ அளவானது. உடும்புகள்‌ போல முதலைகள்‌ நாய்கட்‌ கஞ்சி கிணற்றில்‌ வீழ்ந்தும்‌, பசுஞ்சாணத்திலுள்ள புழுக்களைத்‌ தின்பதற்காகவும்‌
இரவில்‌ திரியலாயின. விலாங்கு (பாம்பு போன்ற மீன்‌) மீன்கள்‌ பொத்துகளில்‌ புகுந்தன. IT—-53

ஆழமான குட்டங்களில்‌ நீர்‌ வற்றவும்‌ அங்குள்ள பெரு நாரைகள்‌ முதலில்‌ பெரிய மீன்களை எல்லாம்‌ விழுங்கி, வெயிலிற்‌
காய்ந்த பிளவுகளின்‌ வழியே தோன்றும்‌ அல்லி வேரிளைத்‌ தொடர்ந்து உள்ள சேற்றின்‌ சாற்றோடு கலந்து சின்னஞ்சிறு
மீன்களையும்‌ அதன்‌ சனைகளையும்‌ குடித்தன. I[—54

விடியலில்‌ அந்த வேனிற்காலத்தில்‌ பாதிரிப்‌ பூக்களின்‌ மகரந்தம்‌ நனைந்த பூந்தோட்டத்தின்‌ மணமிக்க தென்றல்‌ வீசும்‌
போது அம்மரங்கட்கு நீர்‌ பாய்ச்சும்‌ ஏற்றக்காரர்கள்‌ பாடும்‌ உரத்த குரலிலான பாட்டுக்கு, ஏற்றப்பானை நீர்‌ மொண்ட
போது ஏற்படும்‌ ஒலி மிருதங்க வாத்தியமாக அமைய மனம்‌ மகிழ்விப்பதாக இருந்தது. 11-55

மிகக்‌ கொடுமையான உச்ச வெயிலில்‌ வாடிய இளம்‌ குண்டு மல்லிகைப்‌ புதர்களின்‌ முனையில்‌ வேனற்கொப்புளங்கள்‌ போல
பெரிய மொட்டுக்கள்‌ உருவாகின. 141–56

நீர்ச்சுமி உந்தியாகவும்‌, தாமரை மலர்கள்‌ கண்களாகவும்‌ பாசி கூந்தலாகவும்‌ சக்கரவாகம்‌ (அன்றில்‌) பறவை முலைகளாக
வும்‌, நுரை நகையாகவும்‌ தம்முன்‌ அமைத்துக்‌ கொண்டு, கோடைக்குப்‌ பயந்து (நீர்‌ அற்று விடுமென அஞ்ச?) எதிர்‌
காலத்துக்கே வேண்டுமென்று கருதி விதை எடுத்து வைத்தாற்‌ போல தண்ணீரைக்‌ குடங்களில்‌ வைத்து பாதுகாத்து உதவும்‌
நீரரமகளிர்‌ (ஐலதேவை)கள்‌ என்னும்படியாக வேனிற்பத்தலில்‌ இள நங்கையர்‌ இருந்தனர்‌.
(சுழி தாமரை முதலியவற்றைத்தம்‌ அவயவங்களில்‌ தாங்கிய ஐலதேவதைகள்‌ வரம்‌ ஈந்தாற்போல வருவோர்க்கு தண்ணீர்‌
தந்து உயிர்தரும்‌ நங்கையர்‌ வேனிற்காலத்து தேவதைகளாகவே தோன்றுவர்‌ என்பது கருத்து.) 1—57

வெம்மைக்காற்றாது மறைவிடம்‌ தேடிய கங்கையும்‌ யமுனை போல மல்லிகைப்‌ பூச்சூடிய சடை (கூந்தல்‌)கள்‌ தோன்றவும்‌.
வட்டமுலை அழகினைத்‌ திருடியது (முலைகட்கு குடம்‌ உவமையாதலின்‌) அதனை மீண்டும்‌ தருக என்று சோதித்திடல்‌
போல பெரிய பானைகளில்‌ (நீர்‌ மொண்டுதரும்‌) அகப்பைகள்‌ (துமாவிய படி.) உள்ளே மூழ்கினவாசவும்‌.
நீரின்‌ தாரையில்‌ தோன்றும்‌ கண்களின்‌ பளபளப்பு, வாசனைக்காக இட்ட ஆம்பல்மலரிதழ்கள்‌, வீழ்ந்துள்ளனவேோ
என்று மயங்கச்‌ செய்யவும்‌ ஒளிமிக்க முகத்தமகை மெச்சி தலை யசைக்கும்‌ நீர்‌ குடிக்கும்‌ வழிப்போக்கர்கள்‌ ஊற்றுகின்ற நீர்‌
போதும்‌ என்று குறிப்பிடுபதற்கான சைகையாகக்‌ கருதாமல்‌ குலையசைப்பினை தம்‌ அழகளை மெச்சித்தான்‌ என்றுணர்ந்து)
நிலையறிந்து (நீர்‌ ஊற்றுதலை) நிறுத்தாமல்‌, நகைபுரியும்‌ சாது ரியத்துக்கு மனங்கரையவும்‌ ஆக உள்ள நங்கையார்கள்‌ உள்ள
வேனிற்‌ பந்தலில்‌, மன்மதன்‌ வேறிடங்கள்‌ செல்ல இயலாத
வனாகி போலி அதிகாரங்காட்டி வழிப்போக்கர்கள்‌ அந்நங்கையர்‌ அழகில்‌ ஈடுபட்டு அன்புடன்‌ தரும்‌ தாம்பூலம்‌ என்கின்ற சுங்கம்‌
(வரி) பெற்றவனாசு இருந்தான்‌. Tl—59

(முதலில்‌ தாகத்தால்‌ களைத்துத்‌) தள்ளாடியவாறு வந்த! அம்மா அச்கா! என்று கிறங்கியவாறு பரிதாபமாக வந்து லக :
குவித்து (நீர்ஊற்றியதும்‌) தாகம்‌ தீர்ந்து களைப்பு தீர்ந்து விடவும்‌, தாம்‌ முனபு கூறிய (அம்மா; அக்க என்ற) சொற்களைத்‌
கணிக்காமல்‌, முகமும்‌, முலையும்‌, கக்கங்களும்‌ ஏற இறங்க பார்த்தபடி குடிப்ப துபோல பாவனை செய்யும்‌ ஓரு வழிப்‌
போக்களைப்‌ பார்த்து, நீர்வார்ப்பது போல சன்னமாக நீரொழுகுமாறு தந்தபடி தமக்குள்‌ குறிப்பாக சைகைகள்‌ மூலம்‌
சிரித்துக்‌ கொண்டார்கள்‌ * 2….-59

* காதா சப்த சதி பாடலின்‌ சாயல்‌ இதில்‌ உள்ளது
இப்பாடலைத்‌ தழுவிய அப்பயதட்சிதரின்‌ அலங்கார மேற்கொள்‌ சுலோகம்‌.
யதோ ஊர்த்‌ வாக்ஷ பிபத்யம்பு. பதி கோ விரலா ங்குலி?
கு தாப்ரபா பாலி காபி தாராம்‌ விதனுதேதனும்‌.
மேலே பார்த்தவாறு தண்ணீர்‌ குடிக்கும்‌ வழிப்போக்கன்‌ விரல்கள்‌ நெடிழவிட்டு நீர்‌ குடிப்பதுபோல இருப்ப, வேனிற்‌
பந்தல்‌ நங்கை கூட நீர்‌ ஓமுக்களை மெல்லிய தாக்கி இன்னும்‌ மெலிதாக்கி ஊற்றினாள்‌.
(இருவரும்‌ பிறர்‌ அழகினை காண கூடக்கொஞ்ச நேரம்‌
இருக்க வேண்டும்‌ என்ற ஆர்வத்தினால்‌ தண்ணீரைச்‌ சிந்தவிட்டு
நேரம்‌ கடத்தினான்‌. அவளும்‌ தண்ணீர்‌ சிறிது சிறிதாக களற்றி நேரம்‌ மிகுவித்தாள்‌ என்பது கருத்து.)

தோசைக்கல்லில்‌ மாவு ஊற்றியதும்‌ கிளர்ந்த ‘ ஆவிபோல–நீராவிப்புகை எழவும்‌, பகல்வெயில்‌ ஆறாத பொழுதே காய்ந்த
கல்போல உள்ள பூ மண்டலத்தில்‌ இரவில்‌ நிலவு பொழிவது சகோரப்பறவைக்‌ குஞ்சுகட்டு மெல்லியதாக தோசை சுட்டுத்‌ தந்தது போல இருந்தது. 11.60

பகல்‌ முழுதும்‌ வாவியில்‌ புனல்‌ விளையாட்டில்‌ பொழுதைக்‌ கழித்துக்‌ களைத்தும்‌, தாமரைத்‌ தண்டுபோலக்‌ குளிர்ந்துவிட்ட
தோள்களை முழுங்கைகட்கெதிராக வளைத்து கைகளைத்‌ தழுவியவாறு, சோம்பலினால்‌ நன்கு ஆற்லிடாத மணம்மிக்க
கூந்தலில்‌ மல்லிகைப்‌ பூக்கள்‌ மலர. கழுவியும்‌ சந்தன மணம்‌ மிகுந்துள்ள குளிர்‌ முலைகள்‌ பொருந்த குழுவியும்‌, புரண்டும்‌;
தென்னங்கள்ளின்‌ இனியநெட்டுயிர்ப்புகள்‌ உண்டாக, மெல்லிய ஒற்றைத்‌ துகில்‌ அணிந்து மார்பில்‌ துயிலும்‌ தம்‌ நங்கையரை
விடியலில்‌ தொடை நெ௫இழ்த்தி எச்சரித்து பால்வெண்ணிலாவில்‌ பாக்கிய சாலிகளான இளைஞர்கள்‌ நிலா முற்றங்களில்‌ கலந்து மகிழ்ந்தார்கள்‌. 1[–6)

நெஞ்சம்‌ (வெம்மையின்‌ உருக்கத்தால்‌) இணைபாராமல்‌ வெட்டி அரவணைப்புகளுடன்‌, மேலான செயலில்‌ (கலவியில்‌)
ஈடுபடாமல்‌ வீண்‌ பேச்சுக்களிலே பொழுதைப்‌ போக்கி, வெறும்‌ தன்மை மிக்க உபசாரங்களாலும்‌ கொடும்‌ வேனிற்காலத்தில்‌
பண்பாடில்லாதவர்களின்‌ கூட்டுறவு போல தம்பதியர்கள்‌ கூடினர்‌.
(நெஞ்சமிணையாத செயலற்ற பேச்சுக்கள்‌ உடைய நட்பு பண்பாடிலார்‌ நட்பு ஆதலின்‌ வேனிற்காலக்‌ கலவிக்கு உவமிக்கப்‌ பட்டுள்ளது, ) 11-62

வேனிற்காலத்தில்‌ அடங்கிக்‌ கிடக்கும்‌ மன்மதனைத்‌ தொடர்ந்து தென்றலும்‌, வெயிலுக்காற்றாது பாதாளம்‌ புக
முனையவும்‌, (இளைஞர்‌ தம்‌ காதலியர்கட்கு) வெட்டிவோர்‌ சுட்டிய பனையோலை விசிறிகளால்‌ வீசும்‌ காற்று பெண்டிர்‌
முகத்தில்‌ படுவது எப்படியிருந்ததென்றால்‌ ( வெட்டிவேர்‌ மருந்தாதலின்‌, மருந்துக்‌ கதிபதி சந்திரன்‌ ஆதலாலும்‌) வெட்டி
வோர்‌ தன்‌ மணத்தைத்‌ திருடிய காற்றினை தம்‌ குலைவனாகிய சந்திரன்‌ (பெண்டிர்முகம்‌) பால்‌ ஒப்படைத்தது போலத்‌ தோன்றுகிறது. [[…63

நகரில்‌ அத்தகைய கடுமையான வேவிலில்‌ சந்தனமலைத்‌ தென்றல்‌ அழிந்து புகழ்‌ (கதை) மட்டும்‌ மிஞ்சியதாகிவிட, அதை
செயற்கையாக இந்திரஜாலமந்திரவாதி கொண்டுவந்தாற்போல விசிறிகள்‌ காற்றைக்கொணர்ந்தன. விசிறி மாந்திரிகம்‌ செய்கிறது
என்பதற்கு அதில்‌ மயிற்பீலி சூட்டியிருப்பதுவே சாட்சியாகும்‌ அல்லவா? 11-04
(மந்திரவாதி மயிற்பீலி வைத்திருப்பதுமரபு. ஆ தலின்‌ விசிறிக்கு மயிற்பீலி வைத்ததை இவ்விதம்‌ உவமிக்கப்‌ பட்டுள்ளது.)

அத்தகு கொடுமையான வெச்கையால்‌ மன்மதனின்‌ கைகள்‌ வியர்வைமிகுதலால்‌ பிடிநழுவி அடிக்கடி பூமியில்‌ வீழ்ந்த
கருப்புவில்‌ எனும்படியாக அக்காலத்தில்‌ கரும்பு பக்குவத்திற்கு வந்தது. 11-63

இளமங்கையர்‌ கைப்பிடிச்சுவல்‌ முலை வைத்து (குனிந்து) நீர்‌ இறைக்கவும்‌, கதிரவனின்‌ வெயிலுக்கு அஞ்சி பாதாள குகை
களில்‌ ஒளிந்து கொண்ட குளுமை. (வேட்டைக்காரன்‌ பழக்கிய விலங்கு, பறவைகள்‌ மூலம்‌ அதன்‌ இனத்தைப்‌ பிடித்து விடுவதுபோல) இந்த முலையின்‌
குளுமைதான்‌ மேலே கொணர்ந்தது அல்லாமல்‌ முடிச்சுப்போட்ட கயிறுகளா கொண்டு வரமுடியும்‌? ஏனுமாறு மிகுந்த முயற்சியால்‌
காணப்பட்ட கண்ணீரின்‌ குஞுமை கிணறுகளில்‌ அக்காலத்தில்‌ மகிழ்வூட்டியது.
ஈகூபோதகம்‌ வடச்சாயா தாம்பூலம்‌ தரூணிகுசெளசீததாலே பவத்யுஷ்ண முஷ்ணகாலேது ச€ீதல என்ற சுலோகப்படி கிணற்ற.
நீர்‌, ஆலமரநிழல்‌ தாம்பூலம்‌, கலிர்‌ மூலைகள்‌, குளிர்காலத்தில்‌ வெம்மையும்‌, கோடை காலத்தில்‌ குளுமையும்‌ தருமாதலின்‌
ரமூலைகளின்‌ குரஞுமைதான்‌ கிணற்றின்‌ குளுமையை மேலே கொண்டுவந்ததாகக்‌ கற்பனை.] 11-06

தனக்குக்‌ காரணமாகிய கோடையைப்‌ போலவே சூடுடைய மல்லிகை மலர்கள்‌ இளநங்கையரின்‌ கருங்கூந்தலை பிளவுகளாகப்‌
பிரித்து விடவும்‌, பாதிரிப்‌ பூக்கள்‌ மிகுதியினால்‌ பூந்தேன்‌
சாரலாடச்‌ சிந்தி அக்கூந்தலை இணைவித்தது (ஓ3ர காலத்து உதித்த மலர்களில்‌ வேறுபாடுண்டாகுமோ என்றால்‌) அது சரித்‌
தான்‌, ஒரே கடலில்‌ பிறந்த நஞ்சுவும்‌ அமுதமும்‌ வேறு வேறு பண்பு களைக்‌ காட்டக்‌ காண்கிறோம்‌ அல்லவா? Il–67
(மல்லிகை, பாதிரிப்‌ பூக்கள்‌ கோடையில்‌ மலர்வன;)
மாவின்‌ (பிஞ்சு, காய்‌, செங்காய்‌–பழம்‌) இளமை கடந்த (குழந்தைமை, இளமை, வாலிபன்‌, முதுமை எனும்‌ நான்கு மனித
நிலைக்குவமை) புதிய பழங்களோடு நன்கு எண்ணெய்‌ ஊற்றி, சுய்யென்ற ஒலியுடன்‌ தாளிதம்‌ செய்து, வற்றிய நீரோடு கூடிய
மீன்‌ துண்டங்களும்‌ நடுப்பகலில்‌ உண்டு அது ₹ரணிக்கும்போது உண்டாகும்‌ ஏப்பம்‌ வரவே அதன்‌ துவார்ப்பு அடங்குவதற்காக
மாலைநேரத்தில்‌ பூந்தோட்டத்தில்‌ மணலில்‌ வைக்கப்பட்ட தேங்காய்களின்‌ இளநீர்‌ பருக, அங்குள்ள மக்கள்‌ இன்பம்‌ அனுபவித்தனர்‌. 71…-68

அரூர்க்கு குறுநில மன்னர்கட்கிட்ட வேனிற்‌ பந்தல்கள்‌, : குளிர்மைதந்து, உலகம்‌ என்னும்‌ அடுப்பில்‌ பூத்த தாமரை
மலர்கள்போல அக்காலத்தில்‌ திகழ்ந்தன. [1.59

பகலெல்லாம்‌ தோட்டத்தில்‌ இருந்துவிட்டு, மாலையில்‌ மல்லிகைப்‌ பூக்களைச்‌ சூடியவாறு காவியுடையுடுத்திய குடியான
வார்கள்‌ கரும்பாலைக்கு (கருப்பஞ்சாறு பருகுவதற்காக) வருவதைக்‌ காணின்‌, இனிவரும்‌ மழைக்கு அஞ்சி முட்டைகளோடு
இனிப்பை நாடும்‌ செவ்வெறும்புகள்‌ போலத்‌ தோற்றும்‌, ||–70

அயல்‌ நாட்டந்தணன்‌
அந்த கொடும்‌ வேனிற்காலத்தில்‌ வைபவத்தோடு அந்நகருக்கு ‘ அருகே உள்ள (அழகர்கோவில்‌) சுந்தரத்தோளுடையார்கோவில்‌
தெப்ப உற்சவத்திற்கு வந்த அயல்நாட்டு அந்தணன்‌ ஒருவன்‌ பக்தியோடு, 71

சேவித்து செல்லும்போது மதுரைநகரின்‌ செல்வச்‌ செழிப்‌ பினைக்‌ காணும்‌ வேட்கையுட்ன்‌ இரிந்து களைப்பு நீங்க வைகை
நதியிற்‌ குளித்து மாலைச்‌ சந்தியாவந்தனம்‌ முடித்துவிட்டு மன்னனின்புரோகிதனுடைய இல்லத்திற்கு முன்பு [72

பரிபக்குவமான மணம்மிக்க வாழைப்பழங்களுடனும்‌, பருத்த பலாவின்‌ பெரியசுளைகளோடும்‌, கட்டிநெய்த்துண்டுகள்‌ போன்ற
கண்டசக்கரையுடனும்‌, பல்வகையான மாம்பழங்களோடும்‌, திராட்சை, மென்குலைகளோடும்‌, தோல்‌ நீக்கிய பாூிப்பயி
றுடனும்‌, இனிய மாதுளை விதைகளுடனும்‌, அன்னமிட்டு பானகந்தரவும்‌ விருந்தினரோடு தானும்‌ உண்டுகளித்து,
சந்தனம்‌ பூசிக்கொண்டு தலையில்‌ பூச்சூடி, வெற்றிலைக்‌ கற்பூர மூடன்‌ மென்று அந்த அந்தணன்‌ நிலாக்காயும்‌ நேரத்தில்‌ |/–73

(தான்கொணர்ந்த) பையை தலையணையாக வைத்து வழித்‌இண்ணையில்‌ படுத்து, ஒருவன்‌ பாட்டும்‌ ஒருவன்‌ தையும்‌ பாட
தான்‌ சில நீதி சுலோகங்களைக்‌ கூறிக்கொண்டு பொழுதைக்‌ கழித்தவாறு இருக்கும்வேளையில்‌. H-—74

அரசன்‌ கணிகையிடம்‌ செல்லல்‌

பன்னீரோடு பரிமளதிரவியங்கள்‌ கலந்து பூசிய கஸ்தூரியின்‌ மணம்‌, அரண்மனையைச்‌ சார்ந்தவன்‌ என்று தெரிவிக்க,
பாதிரிப்‌ பூமணத்தென்றல்‌ அசைப்ப தலைப்பாகையில்‌ உள்ள குஞ்சங்கள்‌ அசைந்து பூ மணம்‌ நாடிவந்த வண்டுகளை ஓச்ச,
காதில்‌ ஊஞ்சலாடும்‌ முத்துக்களின்‌ ஒளி, மார்பணியான முத்துமாலையின்‌ மேலேறும்‌ ஒளியை கீழே தள்ளிவிட,
௪ந்திரனின்‌ நிலவொத்த செங்காவி உருமாலையுடைய: கையில்‌ தங்கக்‌ கைப்பிடி போட்ட கூர்வாள்‌ ஒளிர,
ஓரு பெண்‌ அடைப்பைதர, முன்னும்‌ பின்னும்‌ மெய்க்‌ காவலர்கள்‌ வர, நடமாடும்‌ மேரு மலைபோல நடுவழியில்‌
இரண்டாவது அந்தப்புரம்‌ போன்ற மாளிகைக்கு தனது காமக்‌ கிழத்தியிடம்‌ கலந்தின்புறச்‌ சென்று கொண்டிருந்த அந்த பாண்டிய மன்னன்‌ 11-75

மழைக்காலமாகிய நான்கு மாதங்கட்கு மற்ற எட்டு மாத காலத்திலும்‌, இரவுக்காசு பகலிலும்‌, முதுமைக்காக இளமை
யிலும்‌, பரலோகத்துக்காக இக லோகத்திலும்‌ (எச்சரிக்கையாக இருந்து வேண்டியவற்றை) முயற்சித்தல்‌ வேண்டும்‌ என்ற
பொன்மொழியை (சுலோகத்தை) அந்த அந்தணன்‌ எதிர்கால நலன்‌ கருதும்‌ நீதியை மற்ற அந்தணர்கள்‌ மனம்‌ கொள்ளும்படி
சொன்னதைக்‌ கேட்டான்‌.-

வார்ஷர்த்தமஷ்டெளப்ரயதேத மாஸான்‌ நிசார்த்தம்‌ அர்த்தம்‌ இ*வஸே யதேத
வார்த்‌ கய ஹே தோர்‌ வயஸா நவேந பரத்ர ஹேதோ ரிஹஜன்மனாச௪  ”
என்ற வடமொழிச்‌ சுலோகத்தை அந்தணன்‌ கூற பாண்டிய மன்னன்‌ கேட்டான்‌ என்பது கருத்து,] 12-76

கேட்டு, அச்செய்யுளின்‌ பொருளை மனத்தில்‌ நிளைந்து புரிந்து, மயங்கி, முடிவில்‌ தன்‌ அறியாமைக்கு அஞ்சி, மன்னன்‌
(காமக்கிழத்தியின்மனையின்‌ (௮ப்‌)பக்கம்‌ செல்லாமல்‌ நின்று வருத்தத்துடன்‌ Il—77

“என்ன அரசவைபவங்கள்‌? என்ன போகங்கள்‌? என்ன விரைவு? அந்தோ! நீர்க்குமிழி போன்ற இவ்வுடம்பிளை நம்பி,
மோட்சத்தை (வீடுபேற்றை) எண்ணாமலிருந்தேன்‌! யுகங்கள்‌ முழுதும்‌ இருந்த மனுமுகலானவர்கள்கூட இறுதியில்‌ காலனின்‌
கைப்பட்டு அழிவதிலிருந்து தப்பிக்க முடிந்ததா? TI—78

இருந்தாற்போலிருந்து அக்கரைக்குச்‌ சேர்க்கும்‌ நாவாய்‌ (படகு) போல மனிதர்களை விரைந்துதான்‌ போகாதது
போலிருந்து காலம்‌ ஆயுளைக்‌ கழித்து மோசம்‌ (மரணத்தை) செய்விக்கும்‌ 11-79

சகரன்‌, நளன்‌, புரூரவன்‌, அரிச்சந்திரன்‌, புருகூதன்‌, கார்த்த வீரியார்ச்சுணன்‌, கயன்‌, பிருது, பரதன்‌, சுகோத்திரன்‌, சிபி,
பரதன்‌, இலீபன்‌, பரசுராமன்‌, யெளவனாஸ்வன்‌, சிபிந்து, அசங்கன்‌, அம்பரீடன்‌, யயாதி, ரந்திதேவன்‌, இராகவன்‌ மருத்து
முதலிய மன்னன்மன்னர்களை எல்லாம்‌ காலம்‌ தன்‌ பால்‌ ஆக்கிக்‌ கொள்ளவில்லையா? [1–80

ஆதலினால்‌, மின்னல்போன்ற நிலையற்ற அரசபோகங்களீல்‌ மூழ்கி புலனின்பங்களில்‌ திளைக்க மாட்டேன்‌. இனி3மலாவது
மறுமை இன்பத்திற்காக முயல்வேன்‌. [[- 81

(அறம்பொருள்‌ இன்பம்‌ ஆகிய) முப்பால்‌ தன்னில்‌ முயன்று சுவர்க்க நகரங்களில்‌ உழலாமல்‌, வீடுபேற்றை எந்த தெய்வம்‌
தருமோ அவனை அறிந்து வழிபடுவேன்‌”, 11.82

என நிளைந்து, மெச்சி, அவ்வந்தணனுக்குத்‌ தாம்பூலத்‌ : தட்டோடு பொற்கிழி ஒன்றை காவலர்‌ மூலம்‌ கொடுக்கச்‌ செய்து,
பின்‌ நகரை யடைந்து இரவு கழிந்ததும்‌ 11-83

கொலுவிருந்து, பல்வேறு சமயவாதிகளையும்‌ சித்தாந்த பண்டிதர்களையும்‌ ஒன்றுகூட்டி “உநிகள்‌ உங்கள்‌ சாத்திரங்களில்‌ :
யார்‌ மோட்சத்தை அடைவிப்பான்‌ என்பதை ஆராய்ந்து தநிச்சயிப்பீர்களாக” என்றான்‌ IIT —84

வாதம்‌ செய்து (பிறன்‌ மதம்‌ மறுத்துத்‌ தன்மதம்‌ நிறுவி) வென்றவர்கட்கு என்று பீர்க்கம்பூவைப்‌ போன்ற பொழ்காசு
களை நிறைத்து ஆஸ்தானமண்டபத்தில்‌ பொற்கிழியைக்‌ கட்டித்‌ தொங்கவிடவும்‌ கருநாகம்‌ போன்று தொங்கும்‌ கிழியைக்‌ சுண்டு ர… 85

ஒருவன்‌ சிவன்‌ எனவும்‌ ஒருவன்‌ உமை எனவும்‌ ஒருவன்‌ இந்திரன்‌ எனவும்‌ ஒருவன்‌ அக்னி எனவும்‌, ஒருவன்‌ சூரியன்‌
எனவும்‌ ஒருவன்‌ சந்திரன்‌ எனவும்‌, ஒருவன்‌ சணபதி எளவும்‌ ஒருவன்‌ பிரம்மன்‌ எனவும்‌ விவாதமானது அச்சமயத்தில்‌ 11-86

திருவில்லிபுத்‌தரரில்‌ உள்ள விஷ்ணு சித்தர்‌ (பெரியாழ்வார்‌) துளசிமாலையும்‌ மூல மந்திரமும்‌ மார்பில்‌ அணிவிக்கப்‌ போகும்‌
போது மன்னார்‌ (திருமால்‌) இன்மொழிகளில்‌ (மதுரை சம்பந்தமான செய்திகளை) விவரித்து இவ்விதம்‌ ஆணையிட்டார்‌ 11-87

பேரறிவுடையோய்‌! இன்று நீ மதுரைக்கு விரைந்து சென்று அங்கு பாண்டியன்‌ அவையில்‌ நிறைந்து ஏதேதோ பேசுகின்ற
செருக்குற்ற குருடர்களின்‌ திறல்‌ அடக்கி, எனது பெருமையை வெளிப்படுத்து, பொற்குமியை அறுத்துக்கொண்டு வருக அவனும்‌
(மன்னனும்‌) இவ்வுலக இன்பங்களை வெறுத்துள்ளான்‌. அவனை அருளோடு வைணவனாக்குயாக (1–88

எனவும்‌, கடகடவென நடுநடுங்கி சாட்டாங்கமாக வணங்கி, ஆனந்தக்‌ சுண்ணீர்‌ பெருகிட, புளகமுற, ‘ அடக்கத்துடன்‌,
அவ்வந்தணன்‌ (விட்டுசித்தன்‌) திருமாலிடம்‌ பக்தியுடன்‌ இவ்விதம்‌ விண்ணப்பித்தான்‌ 189

“சுவாமி” இதற்கு முன்பு படித்தறியாத, சாத்திர நூல்களைக்‌ கற்றறியாத என்னை, பூந்தோட்டத்தில்‌ மண்ணை த்தோண்டி
கடப்பாரை, மண்வெட்டிகளைப்‌ பிடித்து காய்த்துப்போன கைகள்‌ உடையவனும்‌, தங்கள்‌ கோவிலில்‌ வாழ்பவனுமாகிய என்னை,
வாதம்‌ செய்ய அனுப்புவீர்களேயானால்‌, மன்னரவையில்‌ நான்‌ தோற்றால்‌ அதனால்‌ வரும்‌ இகழ்‌ குங்களைச்‌ சாராதிருக்குமா? 11-90

கோயில்‌ மெழுகல்‌, தண்ணீர்‌ கொண்டு வருதல்‌ சிங்காரப்‌ . பல்லக்கை சுமத்தல்‌, துளசி மாலை கோத்தல்‌, கொடி. பிடித்தல்‌,
விசிறுதல்‌, குடை பிடித்தல்‌ தீப்பந்தம்‌ ஏந்துதல்‌ முதலிய வேலைகளா? நரசிம்மனே! வாதமாடல்‌ இது போன்றதல்லவே!
தின்‌ திருவிளையாட்டிற்குப்‌ பாத்திரமானவர்கள்‌ வேறு யாரு மில்லையா? 91 –

திருமால்‌ பெரியாழ்வார்க்‌ கருளல்‌
என்று கூறவும்‌ அவனது பக்திக்குமெச்சி அச்சுதன்‌ (திருமால்‌) புன்முறுவல்‌ பூத்து திருமகள்‌ முகத்தைப்‌: பார்த்து “இவன்‌
மூலமாகவே வாதத்தில்‌ வெற்றி பெறச்‌ செய்வேன்‌. எனது பெருமையை மடந்தாய்‌! காண்க’” என்று தனது வைபவம்‌ தோன்றச்‌ சொல்லி H—92

“உன்‌ விருப்பமா? சும்மா போ அப்பா! வரமுனிவனே! மன்னன்‌ அவையில்‌ உன்னை ஏற்கும்படி செய்கிறேன்‌.
மறுப்பொன்றும்‌ கூற வேண்டாம்‌. அதன்‌ பிறகு நான்‌ பார்த்துக்‌ கொள்கிறேன்‌.” 2-93-

எனவும்‌, பதில்‌ சொல்ல அஞ்சி, அந்த ஆழ்வார்‌ போவதற்கு
ஒப்புக்‌ கொண்டார்‌. அதற்குள்‌ தாமரைக்‌ கண்ணனாூய திருமால்‌ பயண ஏற்பாடுகளைச்‌ செய்யுமாறு நம்பி (பூசாரி)க்கு- கட்டளை இட்டார்‌ 11—94

பெரியாழ்வார்‌ மதுரைக்‌ கேகுதல்‌ ‘
கட்டளைப்படியே, கோயில்‌ நிர்வா௫ுகள்‌ பழைய பல்லக்கும்‌, சுமப்பவர்களையும்‌ ஏற்பாடு செய்து கோயில்‌ கொட்டாரத்தி
லிருந்து பயணப்படி தந்து அனுப்பி வைத்தான்‌ [495

வலிய குதிரைகள்‌ மேல்‌ பயணப்பைகள்‌ தொங்க, பக்கத்தில்‌.ஏகாங்ககள்‌ வரவும்‌ மன்னனுக்கு கோயில்‌ பிரசாதங்கள்‌
(அதிரசம்‌) எடுத்துக்கொண்டு சென்றான்‌. 11—96

இல்லாள்‌ பக்தியுடன்‌ வழிப்பயணத்திற்காக வேண்டிய பொருட்களோடு, பொரிவிளங்காய்‌ வைத்து அனுப்பவும்‌,
உலையில்‌ அப்படியே போடுவதற்கேற்ற (கல்‌ பொறுக்கி சுத்தம்‌ செய்த) பழைய நெல்லரிசியும்‌, வெல்லம்‌ (பலசரக்கு சாமான்கள்‌)
கூடிய புளி, சமையல்‌ பாத்திரங்கள்‌ (அடிசிற்கலங்கள்‌) உள்ள காவடியின்‌ நுனியில்‌ கட்டிய நெய்ச்செம்புகளும்‌, தயிர்‌ வடகம்‌,
பச்சை வடகம்‌, பருப்பு, பூசைக்கான பெட்டி, முதலியவற்றை சாத்தினவர்களும்‌ சாத்தாதவர்களும்‌ * முறையறிந்து கொண்டு
வர மதுரைக்குச்‌ சென்றான்‌. 11.-97

யமம்‌, நியமம்‌, (அடக்கம்‌) முதலியயோகத்தினால்‌ அடையப்‌ படுபவனே ! பிரம்மா முதலிய தேவர்கட்குத்‌ தலைவனே! பிறவித்‌
துயர்கெடுக்கும்‌ நாமசங்கர்த்தனையுடையவனே! முரன்‌ என்னும்‌ (முரண்பட்ட) அசுரனைக்‌ கொன்றவனே! பாவங்களை அழிப்‌
பவனே! திருமகள்‌ காதலனே! தாமரைக்‌ கண்ண? அடியார்‌ மனத்திலுள்ள அறியாமை என்னும்‌ புல்லைச்‌ செதுக்கும்‌ வாள்‌
போன்றவனே! நிலமகள்கேள்வனே/ முலையும்‌ கரிக்குருவி யையும்‌ வென்ற வண்ணமுடையவனே 17-98

நுகம்‌ போன்ற தோள்களால்‌ ஆற்றற்கரிய கோவர்த்தன கிரியைத்‌ தாங்கயெவனே! இராதையின்பால்‌ அன்பு பூண்டவனே!
விசாயாட்டாக வட்டி (இருப்பதி வெங்கடேசப்‌ பெருமான்‌ வட்டி
வாங்குவதற்காக புராணம்‌) வாங்குபவனே! இந்திரன்‌ மகன்‌ (சயந்தன்‌) கண்களை (காகமாக வந்து தையை அவமானப்‌
படுத்தியபோது இராமனாக) விகாரம்‌ படுத்தியவனே 17-9௦

பிரம்மபுத்திரனாகய நாரதனின்‌ மனத்தில்‌ வூக்கும்‌ சிவந்த பாதங்களையுடையவனே / எல்லா உயிர்களிலும்‌ உள்ளும்‌ புறமும்‌ திறைந்திருப்பவனே/ பார்வதி தேவியால்‌ துஇிக்கப்படும்‌ சிறப்பினையுடையவனே ! TJ-—~100

“இப்பாடல்கள்‌ திருமாலை நோக்க விளிப்பதாக அமைந்த சமர்ப்பண பாடல்கள்‌.

உலகுக்கணியாகக்‌ கொண்ட. ₹வீடு’ என்னும்‌ கோட்டையிலும்‌ உகுயகரியிலும்‌ கஜபதிமன்னன்‌ மகன்‌ வீரபத்திர பாத்திரனின்‌ படை மக்களின்‌ உயிரைக்‌ கவரும்‌ இராகுவான வீரமிக்க கிருஷ்ண தேவராயர்‌ எனும்‌ பெயருடைய என்னுடைய ஆமுக்த மால்யத எனும்‌ காவியத்தில்‌ இனிய செய்யுட்களோடு கூடிய இரண்டாவது அத்தியாயம்‌ இதுவாகும்‌.

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ கிருஷ்ணதேவராயன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading