ஸ்ரீ ஆ முக்த மால்யதா-(முத்துகளால் ஆன மாலை)-முதல்‌ அத்தியாயம்‌–ஸ்ரீ கிருஷ்ணதேவராயன்-மொழிபெயர்ப்பாளர்‌ உரை -பன்மொழிப்‌ புலவர்‌ மு. கு. ஜகந்நாதராஜா

இவ்வரிய காவியத்துக்கு “ஆமுக்த மால்யத:என்றும்‌ ₹₹விஷ்ணு சித்தீயம்‌’” என்றும்‌ இரு பெயர்கள்‌ உண்டு.

“ஆமுக்த மால்யத’ என்று வடசொற்கு *:சூடிக்‌ களைந்த பூமாலையைத்‌ தந்தவள்‌£” என்று பொருள்‌ படும்‌:

விஷ்ணு சித்தீயம்‌ என்பது பெரியாழ்வார்‌ பெயர்‌ “விஷ்ணு சித்தன்‌” என்ற சொல்லிலிருந்து உருவாகியதாகும்‌.

தமிழில்‌ சூடிக்கொடுத்தவள்‌ என்று பெயரிட்‌.டுள்ளோம்‌.

இக்காப்பியம்‌ ஆறு ஆஸ்வாசம்‌ எனப்படும்‌. அத்தி யாயங்களை உடையது, வேதம்‌ வெங்கடராயசாஸ்திரி அவர்கள்‌ உரை நூலில்‌ ஏழு அத்தியாயங்களாகக்‌
கொண்டுள்ளார்‌. — ஏமூமலையானுக்குச்‌ சமர்ப்பித்த நூல்‌ ஆதலின்‌ ஏழே பொருத்தம்‌ என்பது அவரது கருக்‌தாகும்‌.

ஸ்ரீ வைணவத்தில்‌ ஆழ்ந்த பற்றுடையவராக  ஸ்ரீகிருஷ்ணதேவராயர்‌ திருப்பதி ஸ்ரீவேங்க டேசுவரிடத்து அளவற்ற பக்தி கொண்டவர்‌.

இவர்‌, 1513இல்‌ கட்டாக்‌ (ஒரிசா) கஜபதி மன்னரைப்‌ போரில்‌ வென்றார்‌; கஜபதி மன்னரின்‌ மகளை மணந்து கொண்டார்‌.
இவர்‌, கர்நாடகத்தைச்‌ சேர்ந்த ராயச்சித்திரத்‌தையும்‌, தமிழகம்‌, சிங்களம்‌, கேரளம்‌ கிய நாடுகளையும்‌ தம்‌ வசமாக்‌கினார்‌.
பீஜப்பூர்‌ சுல்தானை வென்று கர்நாடகம்‌ முழுவதையும்‌ தம்மடிக்‌கிழ்க்‌ கொணர்ந்தார்‌.
பத்தாண்டுகளுக்குள்‌(1520-இல்‌) தென்னகம்‌ முழுவதற்கும்‌ ௮வர்‌ ஏக சக்கராதிபதியாக உயர்ந்தார்‌.

தாதாசாரியரீ என்பவர்‌ கருஷ்ணதேவராயரின்‌ வைணவக்‌ குருவாவார்‌.–கிருஷ்ணதேவராயர்‌ 1529, அக்டோபர்‌ 27ம்‌ நாள்‌ மரணமுற்றார்‌.

ஸ்ரீ கிருஷ்ணதேவராயர்‌ 1515-16ம்‌ ஆண்டில்‌ விஜயவாடா விற்கு அருகிலுள்ள ஸ்ரீகாகுளம்‌ ஆந்திர விஷ்ணு தேவாலயத்‌
திற்குச்‌ சென்று *ஆமுக்த மால்யத” காவியத்தை இயற்றத்‌ தொடங்கி 1520இல்‌ அதனை முடித்திருப்பார்‌ என்றுகரு தப்‌ படுகிறது.

ஸ்ரீ கிருஷ்ண தேவராயர்‌, பெரியாழ்வாருக்கு மிகப்‌ பிற்‌காலத்தில்‌ வாழ்ந்த ஆளவந்தார்‌, ஆளவந்தாரின்‌ சீடராகிய
இராமானுசர்‌, இவரது மரபில்‌ வந்த வேதாந்த தேசிகர்‌ ஆகியோரையும்‌ இணைத்திருக்கிறார்‌. இது வரலாற்றுணர்வுக்குப்‌
பொருத்தமன்று, கவி நயத்தாலும்‌, கவிஞனுக்குரிய சுதந்திரத்தாலும்‌, இக்காலப்‌ பொருத்தமின்மையைக்‌ காவியங்களில்‌ முற்காலக்‌
கவிஞர்களும்‌ பயன்படுத்திமையாலும்‌ இதனை ஒரு காவிய உத்தியாகவே கொள்ள வேண்டும்‌,
————-

முதல்‌ அத்தியாயம்‌

திருமகளின்‌ அழகிய மார்பணியான மணிஹாரரத்தில்‌ தானும்‌ தனது கெளஸ்துப மணியில்‌ அத் திருமகளும்‌ பிரதி பிம்பமாகத்‌
தோன்ற, பரஸ்பரம்‌ தத்தம்‌ மனங்களில்‌ காதல்‌ மீதூர நிலைத்து இலங்கும்‌ அவர்களது உருவங்கள்‌ உடலின்‌ .தூய்மையாலே
வெளியே தோன்றுகின்றனவோ என்று கருதும்‌ படியாக உள்ள, திருவேங்கடவனை வணங்குகிறேன்‌. I~1

திருமகளை வஞ்சித்து அவளுக்குத்‌ தெரியாமல்‌ நிலமகளைப்‌ புணர்தற்கு யாருடைய படமுடிகள்‌ விசாலமான சந்திர சாலை
களாக (நிலாமுற்றங்களாகத்‌) திகழ்ந்தனவேவோ அந்த ஆதிசேடனை, புலனடக்கமிக்க புனிதனை என்றும்‌ வணங்குகிறேன்‌–I—2

கடல்நீர்‌ வானில்‌ நடமிடப் பாதாளம்‌ காணப்பட்டும்‌, ஒன்றோடொன்று பிணைந்து மொத்தையாடிூப்‌ பயந்த அரவங்‌
களைக்‌ காணத் தக்கதாக்கியும்‌, கூடு கட்டக்‌ கொண்டு செல்லும்‌ கட்டைகளோ எனுமாறு பெருமரங்கள்‌ பின் தொடருமாறு
காற்றடித்தும்‌, இறக்கைகளின்‌ பேரொலியால்‌ எதிர்முழக்கமிடும்‌ மேரு மத்தர கிரிகளின்‌ குசைகள்‌ துந்துபிகளாக அமையச்‌ செய்தும்‌,
சூறாவளிக்‌ காற்றால்‌ எறியப்பட்டு தத்தம்‌ நகர்கள்‌ மாற்றமடைந்த திக்பாலகர்களை வெருவச்‌ செய்தும்‌, மின்னலுடன்‌
கூடிய மழை முகில்களை கடலில்‌ வீழ்த்தியும்‌, கடலிலுள்ள வடவைத்‌ கீயை வானில்‌ வீசியும்‌, மாபெரும்‌ ஆற்றலைக்காட்டும்‌
கருடனுடைய இறக்கைகளிலிருந்து எழுந்த பெருங்காற்று எமது பாவங்கள்‌ என்றும்‌ பஞ்சுக் குவையை வீசியெறியுமாக/ —1~3

முகுந்தனின்‌ கட்டளைகளை புருவ அசைப்பிற்‌ கண்டு பிரம்மாண்ட பிரபஞ்சங்களை உருவாக்கவும்‌ அழிக்கவும்‌ வல்ல
தனது.பொற்பிரம்பின்‌ அசைவும்‌ அசைவின்மையும்‌ ஜடசேதனங்‌ களாகத்‌ திகழச்‌ செய்யும்‌ விசுவக்சேனரின்‌ பொற்பிரம்பினை வணங்குகின்றேன்‌, –1-4

திருமால்‌ (சங்கை) ஊதவும்‌, அவன்‌ வாய்மணம்‌ விழைந்து கவரப்பட்ட உந்திக்‌ கமலத்துள்ளிருக்கும்‌ வண்டுகள்‌ எதிர்‌
சூழவும்‌, அது, அசுரர்களின்‌ பாவம்‌ நிறைந்த உயிர்களைக்‌ கவர்வது போலத்‌ தோன்றும்‌, முழுநிலவொத்த பாஞ்ச ஜன்யம்
எனும்‌ சங்கம்‌ எல்லா நலன்களும ஈவதாக, (அசுரர்‌ உயிர்கள்‌ கருவண்டுகளாக உவமிக்கப்பட்டது) 1–5

பரந்துள்ள கீழ்  மேல் பாகங்கள்‌ (பிடியின்‌ இருபக்கமும்‌) விளக்குத் தூண்‌ போலவும்‌, அதன்மேல்‌ ஒளிரும்‌ முதலைவாய்‌
எனும்‌ பொன்தகடு. விளக்குச்‌ சுடராகவும்‌ அதன்‌ மேல் திகழும்‌ வாள்‌ சுடர்க்‌ கொடி(கரும்புகை)யாகவும்விளங்கி ஞானதீ பமாகத்‌
திகழும்‌ அழகிய நந்தகமென்னும்‌ – வாள்‌= பாவக்கொடிகளை அறுத்தெறியுமாக, –1-6-

யாதவகுல மாமன்னன்‌ (கண்ணன்‌) உடைய தோள்களால்‌ ஏவப்பட்டு சாளுவன்‌ எனும்‌ அசுரனுடைய பொன்னாலான
மணிகள்‌ உடைய கோட்டையை தனது (கதையினுடைய) வளையணிகளில்‌ ஒன்றாக அமைத்த காமோதகி எனும்‌ கதையை,
மகழ்ச்சி தரும்‌ கற்பகப்‌ பூமாலைகளுடன்‌ இகழ்வதாகிய அதனை வணங்குகிறேன்‌.
(சாள்வன்‌ பொற்கோட்டையும்‌ ஒரு வலயமாக அணிவிக்கப்‌ பட்ட கதை வெற்றி மிக்கது என்பது கருத்து, இக்கதை புராணக்‌ கதைகளில்‌ காண்க) 1—7

பிடியிலடங்கும்‌ இடையும்‌ மூன்று வளைவுமுடைய கூனியை நிமிர்த்தி நல்லெழில்‌ நங்கை யாக்கியது போல பிடியிலடங்கி,
வளைவுடன்‌ நற்குணமும்‌ உடைய என்னையும்‌ நேராக்கி ஏற்றுக்‌ கொள்க என்று வணங்கும்‌ சார்ங்கம்‌ எனும்விற்கொடி நம்மைக்‌ காக்குமாக.
(சுமாலி எனும்‌ அசுரனைப்‌ போரில்‌ வென்ற போது மழை போல அம்புகள்‌ பொழிந்த வில்‌ சார்ங்கம்‌ ஆகும்‌.) 1–8-

கழுத்திலிருந்து ஒழுகும்‌ குருதி தீச் சுவாலையாகவும்‌, தலை–உலை வைத்த பெரும் பானையாகவும்‌, வாய் கக்கிய அமுத தாரை,
நுரை பொங்குவதாகவும்‌ தோன்றுமாறு ராகுவின்‌ தலையைக்‌ கொய்த சுதர்சன சக்கரத்தை வணங்குகிறேன்‌– I-9

பிரசித்தமான பன்னிரண்டு சூரியர்கள்‌ (துவாதச ஆதித்தியர்கள்‌) நடுவில்‌ வசித்ததால்‌ ஏற்பட்ட வெம்மையைப்‌
போக்குவதற்காக, தமது மனத் தாமரை மலரில்‌ பிறந்த தேனாற்றில் திளைத்து இன்புறுமாறு திருமாலை வழிபட்டுப்‌ பயன்‌
பெற்ற பன்னிரு ஆழ்வார்களையும்‌ (திவ்ய சூரிகள்‌) மோட்‌ சத்தை விழைந்து வணங்குகிறேன்‌. . 1—10

என்று தெய்வ வணக்கம்‌ செய்து, முன்பு சுலிங்க நாட்டை வெற்றி கொள்ள நினைந்து படையெடுத்துச்‌ செல்லும் போது
விஜயவாடாவில்‌ சின்னாள்‌ இருந்து ஸ்ரீகாகுளத்தில்‌ உறையும்‌ ஆந்திரமது மதனனை (திருமாலை)ச்‌ சேவிக்கச்‌ சென்று ஏகாதசி விரதம்‌ இருந்து அங்கு அப்புண்ணிய இரவில்‌ நான்காவது யாமத்தில்‌, 1–11

கரு முகிலை வென்ற மின்னும்மாமை நிறத்தோடு கூடிய வனும்‌, தாமரை மலர்களை வென்ற ஒளி மிக்க நீண்ட கண்ணிணை
யுடையவனும்‌, புள்ளரசனின்‌ (கருடனின்‌) இறக்கைகளைவென்ற பொன்‌ வண்ணப்பட்டாடையுடனும்‌, காலை இளம்பரிதி எழிலை வென்ற கெளஸ்துப மணியுடனும்‌, தாமரைக் கையிருக்க, மற்றொரு கையால்‌ கை லாகு தருகின்ற வறுமையைப்‌ போக்கும்‌ இளம்‌ பார்வையுடைய நங்கையோடு (திருமகளோடு) கூடியவனாக இருந்து, அருள்‌ ஒழுகும்‌ புன் முறுவலோடு ஆந்திர விஷ்ணு இவ்விதம்‌ ஆணையிட்டருளினான்‌ I—12

உவமை உருவகங்களின்‌ சிறப்பு மிளிர, ரசிகர்கள்‌ மனங்களிப்ப மதாலசசரித்திரம்‌ சொன்னாய்‌, தொனி, கருத்து எழில்மிகுமாறு
“சத்ய பாமா பரிணயம்‌’” எனும்‌ காவியம்‌ செய்தாய்‌, வேத புராணங்களிலிருந்து தேர்ந்து தொகுத்து *:சகல கதாசார
சங்கிரகம்‌’” படைத்தாய்‌! கேட்பவர்‌ பாவங்கள்‌ போமாறு சொற்‌ சாதுரியத்தோடு *:ஞானசிந்தாமணி** நால்‌ இயற்றினாய்‌
மேலும்‌ *ரசமஞ்சரி’ முதலிய இனிய காவியங்கள்‌ வடமொழியில்‌ படைத்துச்‌ சிறப்பெய்தினாய்‌! அத்தகைய உனக்கு தெலுங்கில்‌ படைப்பது அ௮ரிதன்று; அதில்‌ ஒரு காவியம்‌ எமது விருப்பத்தின்‌ பொருட்டு இயற்றுவாயாக, T—13

எனது அவதாரங்களில்‌ எதைப்‌ படைப்பது? என்பாயாயின்‌ கேள்‌! நான்‌. தானே சூடிக் கொடுத்த பாமாலையைத்‌ குந்த அச்சிறுமியை (பேதையை) திருவரங்கத்தில்‌ திருமணம்‌ புரிந்த கதையைக்‌ கூறுவாயாக! முன்பு (கருஷ்ணாவதாரத்தில்‌) ஒரு ஆண்மகன்‌ (சுதாமன்‌) தர விருப்பின்‌றி மலர்மாலை கள்‌ புனைந்து கொண்டேன்‌. நானோ தெலுங்குராயன்‌. (தெலுங்கு மன்னன்‌- நீயோ கன்னடராயன்‌ (கர்ணாடக அரசன்‌) அக்குறையைத்‌ தீர்க்குமாறு காதலி சூடித்தந்த கையைக்‌ கூறுவாயாக. 1–14-

தெலுங்கில்‌ எதற்கென்று கேட்டால்‌ நான்‌ இருக்கும்‌ நாடு தெலுங்கு நாடாகும்‌. நான்‌ தெலுங்கு வல்லபன்‌. தெலுங்கு
மட்டுமா? எல்லா மன்னர்களும்‌ கொலுவிருக்கும்போது (பல்வேறு மொழிகளில்‌) பேசியறிய மாட்டாயா? தேச பாஷைகளில்‌
(நாட்டு மொழிகளில்‌) தெலுங்கே அழகானது. இனிமை மிக்கது -1-15-

உனக்கு இஷ்டதெய்வம்‌ வெங்கடேசுவரன்‌ ஆதலினாலே அவன்‌ பெயரில்‌ சமர்ப்பணமாக்கி இயற்றுக. ஓவ்வோரிடத்தும்‌
வேறு வேறு குறியீடுகளுடன்‌ (பெயர்‌ வேறுபடினும்‌) இருப்பது நான்தான்‌ அல்லவா? I—16

நூல்‌ இதனைச்‌ செய்யின்‌ உனக்கு மேன்மேலும்‌ நலன்கள்‌ கிட்டும்‌ என்று கூறிச்‌ செல்லவும்‌. ( துயிலிலிருந்து) விழித்தெழுந்து
வியப்புற்று பக்தியுடன்‌ கோயில்‌ கோபுரத்தை வணங்கி விடிந்ததும்‌ காலைக்‌ கடன்கள்‌ முடித்துவிட்டு –1-17-

கொலுவிருந்து, சேனாதிபதி, சிற்றரசர்கள்‌ குழுவை அழைத்து விடியற்காலையிலேயே வீட்டிற்கனுப்பி வைத்து,
பல்வேறு வேதாகம வித்தகர்களாகிய பண்டிதர்களைக்‌ கண்டு வணங்கி அவ்வினிய கனவைப்‌ பற்றிக்‌ கூறவும்‌, மகிழ்ந்து அவர்‌
களும்‌ வியப்புற்ற மனத்தினர்களாய்‌ “தேவா தேவதேவன்‌ (திருமால்‌) விஜயம்‌ செய்த அக்கனவு பல நலன்களும்‌ எய்துவதைக்‌
குறிக்கும்‌, எப்படி எனின்‌, முதலில்‌ தாமரைக்‌ கண்ணன்‌ கனவில்‌ காட்சி தந்தது முன்னைவிட அதிக பக்தியும்‌, அவன்‌ பிரபந்தம்‌
(காவியம்‌) படைக்குமாறு பணித்தது முன்னினும்‌ அதிக ஆமமான இலக்கியப்‌ பேரறிவும்‌, அவன்‌ தேவியின்‌ வருகை முன்னினும்‌
மிக்கச்‌ செல்வச்‌ செழிப்பும்‌ அவனது தேவியின்‌ கையிலிருந்த நூற்றிதழ் வெண்டாமரை இன்னும்‌ மிக்க வெண்‌ கொற்றக்‌
குடைகளையும்‌, அவன்‌ பல்வேறு மன்னர்களோடு அவரவர்‌ மொழிகளில்‌ பேசியறியமாட்டாயா? என்றது இன்னும்‌ மிக்க
மன்னர்களை வென்றுயர்வாய்‌ என்பதையும்‌, காதலி சூடித்தந்த தின்பம்  மிக்கதென்றதால்‌ இன்னும்‌ மிக்க பல காதலியர்‌ எய்தி
யின்புறுவதையும்‌, எடுத்துக்காட்டுகிறது! மிகுதிறன்மிக்க துருவசு மரபில்‌ பிறந்த உனக்கு இத்தகு நலன்கள்‌ எய்துவதில்‌ வியப்‌ பென்ன இருக்கிறது கேட்பாயாக- I~18

எவனைக்‌ கடல்தாய்‌ வயிறாரப்‌ பெற்றெடுத்தாளோ, சிவனுடைய சடை முடிக்காட்டில்‌ யார்‌ வாடாத பூவாக, என்றும்‌
பொலிவுற்றிலங்குவரோ, எல்லா தேவர்கட்கும்‌ பசி நீக்கும்‌,வித்தி விளைவிக்காத வான்பயிராகத்‌ திகழ்வது எதுவோ, இருளைத்‌
தின்று, குமுத மலரைத்‌ தன்‌ கரத்தால்‌ தீண்டிய நகையுறுத்துபவர்‌ யாரோ, அந்தப்‌ புகழ்மிகுந்த திருமாலின்‌ மைத்துனனும்‌,
கலைகட்‌குறைவிட மானவனும்‌, விண்மீன்களுக்கு அரசனும்‌, ஒளியின்‌ எல்லையாகத்‌ திகழும்‌, மன்மதனின்‌ தாய்‌ மாமன்‌ ஆகிய
பகலொளிக்கிணையான இரவொளியாகிய சந்திரன்‌ சிறப்புற்று, இலங்கினான்‌. 1.19

அந்த அழகு கிரணனுடைய செல்வமரபெனும்‌ கடலில்‌ எழுந்த மகனான, வேத வேதாங்க சாஸ்திரக்‌ கலைகள்‌ முற்று
முணர்ந்த அறிவுச்சுமை தாங்கிய புதன்‌ உதயமானான்‌.–I~20

அவனுக்குபுரூரவன்‌,சிங்கம்‌ போலப்‌ பேரறிவுடன்‌ பிறந்தான்‌. அம்‌ மன்னனுக்கு ஆயுவு பிறந்தான்‌. அவ்வரசனுக்கு யயாதி பிறந்தான்‌, 1.21
அவனுக்கு யது, துருவ்ச்‌ என்னும்‌ மக்கள்‌ பிறந்தனர்‌. பகைவரை யடக்கும்‌ திறனும்‌ கலைஞானமும்‌ மிக்கவர்களாக ்‌
இருந்தனர்‌. அவருள்‌ நற்குணச்சிறப்புடன்‌ துருவசு புகழ்‌ பெற்று இலங்கினான்‌ — 1–22

அவன்‌ மரபு, துளுவ வம்சம்‌ ஆயிற்று, அதில்‌ பலமன்னர்கள்‌ பிறந்தனர்‌. எல்லா உலகிலும்‌ நிறைந்த புகழுடன்‌ சிறப்புற்றிலங்‌
கிய அம்மரபில்‌ பிறந்தான்‌ திம்மராஜு மன்னன்‌. 1–23:

ஆன்ம, மந்தரமலை, அனந்த (சேஷ) சர்ப்பம்‌, திசை யானைகள்‌, முதுவராகம்‌ இவைகள்‌ தாங்கிய உராய்வின்‌ துயர்‌
தீர்த்து கன்‌ தோளில்‌ தாங்கி நிலைநிறுத்தி புகழ்‌ ஓளிவான்‌ முழுவதும்‌ பரவச்‌ செய்து, மன்னர்கள்‌ மருங்கில்‌ வணங்கத்‌
கொலுவிருக்குமாறு பிரதாபத்துடன்‌ அம் மன்னன்‌ தான்‌.–1-24

கொடை வள்ளலான அத் திம்ம மன்னனுக்கும்‌ தேவகி தேவிக்கும்‌ ஈஸ்வர ராஜு என்னும்‌ நல்லோரைக்‌ காக்கும் புண்ணிய மூர்த்தி பிறந்தான்‌. -1-25

திறன்‌ மிக்க செருக்குடைய பகைவர்‌ கோட்டைகளை (முப்‌ புரங்களை) அழித்தும்‌, நல்லோரைக்‌ காத்தும்‌, முன்னைய
ஈஸ்வரனே ஈஸ்வரனாசு பிறந்ததனால்‌, தாமரைக்‌ கண்‌ மடந்தையரை நீத்து, மலைக்‌ காடுகளில்‌ அஞ்சித்‌ திரியும்‌ பகை மன்னரின்‌
உடலிற்‌ பூசிய மன்மதக்‌ குறிகளும்‌ அழிவுற்றன. I—26

தன்‌ தோளைச்‌ சரணடைந்த நிலத்திற்கு வைரக்கவசமாகவும்‌, கயவர்களான பாம்புகட்கு பாம்பாட்டியாகவும்‌, தாமரைக்‌
கண்ணார்‌ தம்‌ மனப்பொருளைக்‌ கவர்பவனாகவும்‌, பகைவர்‌ எனும்‌ அன்னப்பறவைகளை விரட்டும்‌ மழை முகில்‌ வரவாகவும்‌
யாசகர்கள்‌ எனும்‌ குயில்கட்கு இளவேனிலாகவும்‌, நற்குண மணிகட்குறைவிடமான மலையாகவும்‌ உறவினர்‌ எனும்‌ தாமரை
மலர்கட்குச்‌ செங்கதிரவனாகவும்‌, அருள்‌ நதிக்‌ கரசனாகவும்‌, திகழ்ந்து, புகழ்‌ பெற்றான்‌. திம்ம பூபாலன்‌ மகன்‌ ஈஸ்வரன்‌
மன்னர்கள்‌ 555 திறைகளின்‌ செழிப்பால்‌ சுவர்க்கத்தை வென்ற சிறப்புடன்‌ மிளிர்ந்தான்‌, I—27

அந்த ஈஸ்வர மன்னனுக்கு,கற்புடைச்‌ செல்வி புக்க மாம்பா்‌வுக்கும்‌ கதிரொளியும்‌ மதிவலிவும்‌ உடைய தரசிம்மன்‌, திம்ம
ராஜு எனும்‌ இருவர்‌ உதயமாயினர்‌. I—28-

அவருள்‌ நரசமன்னன்‌, சந்தனம்‌, மந்தார மலர்‌, முல்லைப்பூ, நிலவுகளுக்கி ணையாளபுகழ்நிறைந்து நாற்றிசையும்‌ கீர்த்தியுடன்‌
பாவங்களைப்‌ போக்கி அரசாண்டான்‌.–1-29-

கடலாடையுடுத்த நிலவலயத்தைத்‌ தன்‌ தோளில்‌ தாங்கி பரிபா்லித்தும்‌, நாற்றிசை மன்னர்களை வென்று தன்‌ வீரக்கழல்‌
மணிச்‌ சித்திரமாக்கி வைத்தவனும்‌, தன்‌ பெரும்‌ புகழ்‌ என்னும்‌ பொய்கையில்‌ வானகத்தையே, அன்னப்பறவை ஆக்கியவனும்‌
இடைவிடாக்‌ கொடை மழையால்‌ கவிச்‌ சாதகப்‌ பறவைகளைத்‌ தணிவித்தவனும்‌ ஆகிய, கூரிய வாள்துணித்த செருக்குற்ற
மன்னர்தம்‌ தலைகளை ஈசனுக்கு அணியாக்கி வழிபட்ட நர௫சம்‌.ம மன்னன்‌ மிக்க புகழுடன்‌ திகழ்ந்தான்‌. J—30

அந்த நரசிம்ம மன்னன்‌ இப்பாம்பா மூலம்‌ வீரநரசிம்மனும்‌ நாகாம்பா மூலம்‌ திருமாலின்‌ அம்சமாக கிருஷ்ண தேவராய
னாகிய நின்னையும்‌ புத்திரராக அடைந்தான்‌- 1-31

வீர நரசிம்மன்‌ தன்‌ தோள்வலியால்‌ பகைவரை வென்றடக்கிச்‌ சிறப்புடன்‌ ஒருகுடைக்கீழ்‌ நிலத்தினையாண்டான்‌. 1.32

அம்மன்னனுக்குப்‌ பின்னார்‌, இந்நிலத்தை நீ ஆண்டாய்‌?திருமாலாதேவியும்‌, அன்னபூர்ணாதேவியும்‌ (கமலாப்‌ ஐமுகியும்‌)
மனைவியராக இன்புடன்‌ திகழ்ந்தாய்‌, –I—33

கிருஷ்ண தேவராய நீ ஆட்சிப்‌ பொறுப்பேற்று அரசாளத்‌ தொடங்கியதுமே எங்கும்‌ செழிப்பு ஏற்பட்டது. மக்களுச்கு
தூமகேதுவின்‌ பீடை (தூமகேது–வால்‌ நட்சத்திரம்‌)தொலைந்தது. மிகுமழையால்‌ வரும்‌ அச்சம்‌ அகன்றது. கயவரைப்‌ பற்றிய பயம்‌ நீங்கியது. செருக்‌
குற்ற மன்னரின்‌ பெருக்கம்‌ ஒழிந்தது, பாவம்‌ நீங்கியது. பாரலைவனத்தும்‌ மாதம்‌ மும்மாரி பொழிந்தது.
பேதையர்‌, கோவலர்‌ முதல்‌ அனைவரும்‌ மகிழ்வுடன்‌ வாழ்ந்தனர்‌. மக்கள்‌ எல்லோருக்கும்‌ ராமராஜ்யமாகத்‌ திகழ்ந்தது. 1—34

ஓன்பது கண்டங்களாம்‌! பதினெட்டுப்‌ பேர்‌ சுமப்பவர்கள௱ம்‌,-யானை, பன்றி, ஆமை, மலை; பாம்புகள்‌ என்ன வலியுடையன
எனக்கருதி உனது தோள்‌ ஒன்றே உலகினைத்‌ தாங்கியது . (சுமப்பவார்‌ 18 அவது திசையானை 8பன்றி1 ஆமை 1
மலைகள்‌ 7 ஆதிசேடன்‌ .1] ஆக 18 என்பது கருத்து. பதினெட்டு போர்‌ சுமந்த9 கண்டங்களையுடைய பூமியை உன்‌ ஒரு புஜமே
தாங்கிற்று என்பது கருத்து.) .1-35

கிருஷ்ண தேவராய! உனது பிரதஈபம்‌ என்னும்‌ நெருங்குதநற் கரிய இயானது வால்நெருப்புப்‌ போல முதன்முதலில்‌ உதயகிரி
என்னும்‌ கல்லில்‌ உன்‌ வாளாகிய இரும்பு உராயவே சூடேறிப்‌ பிறந்தது. பின்கொண்ட வீடு (மலைவீடு)வைப்‌ பற்றி எரிந்தது.
அதைக்‌ தொடர்ந்து ஐம்மி லோய” (வன்னிமரப்‌ பள்ளத்தாக்கு) எனும்‌ இடத்தை சுட்டெரித்தது. கோளசீமை ‘(சீழ்க்கடற்கரைப்‌
பகுதி)யைக்‌ கொளுத்தி, கொட்டம்‌ (கொட்டாரம்‌) எனும்‌ ஊரையும்‌ பற்றிக்‌ கொண்டது. கனகஇரி (தங்கமலை)யை
கரைத்து, கோதாவரியைக்‌ காயச்‌ செய்து அதன்‌ பிறகு பொட்டுனூரை (பதர்ஊர்‌)யும்‌ தீய்த்து, .மாடமுல (மாடி)
ஊரைப்‌ பொசுக்கியது. ஒட்டியா்‌ நாட்டை (கலிங்கம்‌) கரியாக்கியது. கடகத்தை (கட்டாக்‌)ச்‌ சுட்டது. கஜபதி (கலிங்க
மன்னர்கள்‌) (யானை)கள்‌ மருண்டோடச்‌ செய்தது. (வால்நெருப்பு :–வரட்டிகளை வரிசையாக ஒன்றன்பின்‌
ஒன்றாக அடுக்கிக்‌ காட்டில்‌ தீ மூட்டி விடுவர்‌. அது அணையாது. ஒவ்வொன்றாகப்‌ பற்றியெரியும்‌. வால்போல அமைந்து இருப்ப
தால்‌ இதனை வால்நெருப்பு (தோகசிச்சு) என்பது வழக்கம்‌:
அதுபோல கிருவ்ணதேவராயரின்‌ படை எடுப்பான உதயூரியில்‌ (நெல்லுர்‌ அருகே) தொடங்கிய முற்றுகை வெற்றி பெற்று
ஒரியாதலை தலைநகரான கடகம்‌ (கட்டாக்‌) வரை சென்று வென்ற வீர வரலாற்றை இப்பாடல்‌ விளக்குகிறது.) I—36

இருண்ண தேவராய மன்னனே! உனது முற்றுகைக்குத்‌ தாங்காமல்‌ தோற்றோடிய உத்கல (கலிங்க) க்ஷத்திரியார்களாகிய
பாத்திரார்கள்‌ எல்லோரும்‌ வாடாத மேனியோடு (விழுப்புண்‌ படாமலே) தேவமகளிரின்‌ இல்லங்களில்‌ புகுந்தார்கள்‌.
ராஜமஹேந்திரத்திற்கும்‌ கொண்ட. வீடுவுக்கும்‌ குடிபோக என்ன தந்திரம்‌ (சுரங்க வழி போன்றவை) முன்னோர்‌ செய்தனரோ?
வியப்பாயுள்ளது.
(தோற்றவர்கள்‌ ராஜமஹேந்திரவரம்‌. பகுதி புளிஞர் (சபரர்‌) இல்லங்களில்‌ நுழைந்து மறைந்து சுகமாக இருந்தார்கள்‌ என்பது ஏளனமாக சுட்டப்படுகிறது.) 1-37

கிருஷ்ணதேவராய மன்னனே! கலிங்க ராத்யலட்சுமி
யானவள்‌ விண்தொடும்‌ யானைகளோடு வந்துன்னைச்‌ சேர்ந்‌ தாள்‌!
அன்புடன்‌ வாடாத நேயமுடன்‌ குிருஷ்ணராயனைச்‌
சேர்வதன்றி, முறைகெடுமாறு சகோதரனாூய உருத்திரனைக்‌ கூடுவாளோ?
காரணம்‌ இதுதான்‌ ஆகும்‌.
(கலிங்க மன்னன்‌ பெயர்‌ வீரருத்திரன்‌, லட்சுமிக்கு
உருத்திரன்‌ (சிவன்‌) சகோதரி முறை என்பது புராணம்‌.) 1–38

கிருஷ்ணதேவராய/! உனது முற்றுக்கைக்கஞ்சி விந்திய
மலையைக்‌ கடந்து கஜபதி மன்னர்கள்‌ செல்வர்‌.
அவர்கள்‌ உனக்கஞ்சியபடி இடையர்‌ வேடம்‌ பூண்டு காட்டில்‌ நுழையும்‌ போது, இரவில்‌ குகையில்‌ புகவே
பாம்புச்‌ சட்டையானது தலை முடியில்‌ சுற்றிக்கொண்டு தலைப்பாகை போலவும்‌,
உடலெங்கும்‌ சிலந்தி வலைபட்டு, பட்டுத்துகில்போல அமையவும்‌,
இருட்டில்‌ குகையில்‌ நுழையும்போது கல்லில்‌ இடிபட்ட நெற்றியில்‌ பொங்கிய குருதி காய்ந்து போய்‌ சிந்தூரதிலகம்‌ போல்‌ இருக்கவும்‌,
களைப்பில்‌ புரண்டபோது ஒட்டிய மயிலிறகுகள்‌ மூவண்ணச்‌ சரிகைக் கரைபோல தோன்றவும்‌ செய்தன.
தூக்கத்திலிருந்து எழுந்து, அருவி நீரில்‌ தம்‌ நிழலைக்‌ கண்டு, இடையர்‌ வேடம்‌ போய்‌ முன்னைய மன்னர்‌ வேடம்‌ வந்ததென்ன?
இந்த இடத்தின்‌ மஹிமை போலும்‌ என்று பயந்தவாறு அந்த வனத்தைவிட்டுப்‌ பெயர்ந்தனர்‌. J—39

நீ பொட்டுனூரி1யருகில்‌ பனைமரம்‌ என நிறுவிய வெற்றித்‌ தூணில்‌ செதுக்கிய சாசனத்தை
சிம்மாசல நரசிம்ம சுவாமியின்‌ திருநாளுக்காக வானத்திலிருந்து இறங்கிய தேவர்கள்‌
கலிங்கமன்னனின்‌ இகழ்‌ என்னும்‌ மையைத்‌ தடவி பல
முறை விருப்புடன்‌ படிப்பார்கள்‌.
(ஏடுகள்‌, சாசனங்களில்‌ மையைத்‌ தடவி வாசிப்பது மரபு) 1.40

கிருஷ்ணதேவராய/ கலபரகி (குல்பர்க்கா) சாகர்‌ பட்டணங்‌களில்‌ யவன மன்னர்களை வென்றபோது படையெடுப்பில்‌
இருந்த துருக்கப்படை வீரர்கள்‌ சுவர்க்கத்தில்‌ சென்று சனகாதி முனிவர்களின்‌ கோபிசந்தன திரிபுண்டர நாமங்களை நக்கியும்‌,
தேவநாயகர்களின்‌ வீணையின்‌ தந்திகளை அறுத்தும்‌, சப்தரிஷிகளின்‌ ததேவகங்கை மணலிற்‌ செய்த லிங்கங்களை காலால்‌
துவைத்தும்‌, ரம்பை முதலிய அப்சரமகவிர்தம்‌ முலைக்‌ கும்பங்‌ களை பிடித்திழுத்தும்‌ பூர்வவாசனை விடாமல்‌ திரிகின்‌ றனர்‌. I—41

குதிரைக்‌ குளம்புகளால்‌ பேய்ச்சுரைக்‌ கொடிகள்‌ போக உழுது, யானைகளின்‌ மத தாரையால்‌ நனைந்த நிலத்தில்‌ நினது
புகழ்‌ என்னும்‌ பயிரையிட்டு ஏதில்‌ ஷா என்னும்‌ முஸ்லிம்‌ மன்னனின்‌ தலையாகிய திருஷ்டிபொம்மையை கட்டி வைத்‌ துள்ளாய்‌. ்‌ I— 42

கிருஷ்ணராய/ அடிக்கடி மனமொத்தியற்றும்‌ உனது பதினாறு தானங்களும்‌, அக்கரகாரங்கள்‌ தந்த கெரடையும்‌
கண்டு உனக்கிணையாகோம்‌ என்றல்லவா தேவலோகக்‌ கற்பக தருவும்‌ இகழ்‌ஃ என்னும்‌ வண்டுகளும்‌ குயில்களும்‌ சேரப்‌ பெற்றுள்ளது.

பிரபல ராஜாதிராஜ! வீரப்பிரதாப! ராஜபரமேசுவர! பொருள்‌ எனும்‌ பார்வதிக்கு நடேசனாகியவனே/ சாஹித்ய (இலக்கியம்‌) சமராங்கன (போர்க்கள) சார்வ பெளம (சக்கரவர்த்தி)! இருஷ்ணராயேந்திர! நரல்‌ செய்வாயாக” எனக்‌ கூறினர்‌. [44

அவ்வளவில்‌ மகிழ்ந்த மனத்தினனாய்‌ I—45
சமர்ப்பணப்‌ பாடல்கள்‌
அலை மகளின்‌ முலைதடக்‌ குங்குமத்தொய்யில்‌ சப்பட்ட
மார்புடையவனும்‌, இந்திரன்‌ மு.தலியவர்கட்குத்‌ தலைவனும்‌, தாமரைக்‌ கண்கள்‌ உடையவனும்‌, தரசிம்மமானவனும்‌ I—46

காளிங்கனின்‌ படத்தை துவைத்தவனும்‌,சடைமுடியோனும்‌,
பிரம்மனும்‌ பிரதிபிம்பிக்கப்பட்ட துரய  யுடையவனும்‌, சார்ங்கம்‌ எனும்‌ வில்லின்‌ தழும்பையுடைய தோளையுடையவனும்‌, பாவச்‌ சேற்றினைப்‌ போக்கும்‌ சூரியன்‌ ஆனவனும்‌, அசுரர்‌ எனும்‌ யானைகட்கு அங்குசம்‌ (தோட்டி) ஆனவனும்‌. I-47-

குக்புஷ்கரணிக்‌ கரையின்‌ காட்டில்‌ அலைந்த வஞ்சகப்‌ புளிஞன்‌ (பளியர்‌) ஆனவனும்‌, பிரம்மாண்டங்களைத்‌ தன்‌
வயிற்றிலடக்கியவனும்‌, நலன்‌ பயக்கும்‌ கருணை மிக்கு கடைக்‌ கண்களையுடையவனும்‌ I—48

சுதர்சனம்‌ எனும்‌ சக்கிராயுதமாகிய நெருப்புக்குத்‌ தூண்டி. விடும்‌ நெய்யாகிய ராகு எனும்‌ அசுரனின்‌ ரத்தத்தைப்‌
பெய்தவனும்‌ ஆகிய திருவேங்கடாசலபதிக்கு I—49

நான்‌ விண்ணப்பிக்கப்‌ பூண்டுள்ள ஆமுக்தமால்யத (சூடிக்‌ கொடுத்தவள்‌) எனும்‌ மகா காவியத்துக்கு கதைக்‌ இரமம்‌ எப்படி. என்றால்‌, 1-30-

—————

கதைத்‌ தொடக்கம்‌
மனங்கவரும்‌ பூங்காவிலுள்ள குயில்‌, கிளிகளின்‌ குரல்‌ எதிரொலித்து, மாளிகை உப்பரிகையில்‌ இழைக்கப்பட்ட நீலமணி
களால்‌ ஆன குயில்‌, மரகதத்தால்‌ ஆன கிளிகளின்‌ குரலாக மயங்கச்‌ செய்யும்‌. வானைத்‌ தொடுகின்ற பொன்‌ மாளிகைகள்‌
எங்கும்‌ எழில்‌ பெற்றிருக்கும்‌ ஸ்ரீ வில்லிபுத்தூர்‌ என்னுமவர்‌ பாண்டிய நாட்டின்‌ தலைச்சுட்டியாக (திலகம்‌ போல) சிறப்புற்றிருக்கும்‌. I—S!

தாமரை மொட்டுக்கள்‌ போன்ற செம்புக்‌ கலசங்களின்‌ ஒளி, சிகப்புத்‌ தலைப்பாகையாகவும்‌, தங்க ஓடுகள்‌ வேய்ந்துள்ளது
கவசமாகவும்‌ அமைய, இந்திரனின்‌ மாளிகையான “வைஜயந்தத்‌’)ை வெற்றி கொள்வதற்காக நிற்கும்‌ (படை
வீரன்‌ போன்று) ஸ்ரீ வில்லிபுத்தூாரின்‌ மாளிகைகள்‌ எழில்‌ பெற்றிலங்குகின்றன. I—S2

கடலில்‌ கிடந்ததால்‌ பாசிபடித்த இசை யானைகள்‌ என்னும்‌ படியாக மரகதக்‌ கல்லில்‌ இழைத்த யானைகளும்‌, யானையின்‌
துதிக்கை மட்டும்‌ மிஞ்ச (மற்ற உடலை) விழுங்கிய மரகதத்தால்‌ ஆன சிங்கமும்‌* (துதிக்கையடன்‌ கூடிய சிங்கம்‌ ஆன ₹யாளி’யை யை இங்கு கவிஞர்‌ குறிப்பிடுவதாகத்‌ தோன்றுகிறது. இத்தகைய யாளி உருவங்கள்‌ தென்னகக்‌ கோயில்களில்‌ காணப்படுகின்றன. இதனை தெலுங்கு உரையா?ரியர்கள்‌ சிங்கம்‌ என்றே கருதி உரை வகுத்துள்ளனர்‌)நிறுவிய படிக்கட்டுக்கள்‌ அமைய இரட்டை
யானைகள்‌ நீராட்டும்‌ பொன்‌ (முலாம்‌) னாலான நீரில்‌ வரையப்‌ பட்ட இருமகளும்‌, அவளருகில்‌ சங்கு சக்கரங்களும்‌ உடைய
சித்திரம்‌, அணிகளால்‌ ஆன திண்ணையில்‌ பிரதிபலிக்க மாளிகைகள்‌ இருந்தன. பிற நகர மனைத்திருவினை மண முடிக்க இவ்வில்லத்தரசார்கள்‌ கட்டிய கங்கண சூத்திரம்‌ போல மணித்தோரணங்கள்‌ திகழ்ந்தன. இத்தகு இல்லங்கள்‌ நூல்‌ பிடித்தாற்‌ போல ஒழுங்காக இருந்தன. I—53 .

பவளச்‌ செந்தூரம்‌ பூசிய பாண்டிய மாதர்‌ முலைகளை நகைக்கும்‌, செவ்விளநீர்களோடு கூடிய தென்னை மரங்களும்‌,
வைரச்‌ சுவர்களோடு கூடிய பாதைகளும்‌, வீடு கட்ட உபயோகித்தது போக மீந்த மணிகளைக்‌ காப்பாற்றுவதற்காக,
கடலானது தனது முதன்‌ மனைவியாகிய கங்கையையும்‌ மகனாகிய கற்பசுத்‌ தருவையும்‌ அடகு வைத்தது போலதீ
தோன்றின. (வைரமணிச்‌ சுவரின்‌ ஓளிபட்ட தெருக்கள்‌ வெண்மையான கங்காநதி போலவும்‌, தென்னை மரங்கள்‌
கற்பகத்‌ தருக்களாகவும்‌ உவமிக்கப்பட்டுள்ளன) 1… 54

பாளை விரிந்த தென்னை மரங்கள்‌,(வாயிலைச்‌ சேர்ந்துள்ள) மணிகளால்‌ ஆன திண்ணைகளில்‌ பிரதிபலித்துவாசலை முயற்சி
யின்றியே செய்த சிங்காரமாகி (சாணத்தால்‌) மெழுகிக்‌ கோல மிட்டது போலத்‌ தோன்றும்‌,
(சாணத்தால்‌ மெழுகனால்‌, தென்னையின்‌ ஓலைகள்‌ போல பசு நிறமான நீண்ட வளைவான வரைகோடுகளும்‌, தென்ன
ஈர்க்கு போல கரும்பச்சைக்‌ கோடுகளும்‌ விழும்‌, இதில்‌ பாளை விரிந்த பூ மொட்டுகள்‌ கோலம்‌ போட்டது போல அமையும்‌.
இவ்வுவமை மனம்‌ சுவருவதாகவும்‌ மாமன்னனின்‌ கவித்‌ திறமையை எடுத்துக்‌ காட்டுவதாகவும்‌ அமைந்துள்ளது.) 1-55

கையில்‌ உள்ள பூசனைக்குரிய தாமரைப்பூ குடத்தில்‌ தள்ளாட, இணைமுலைகள்‌ மெல்லிடை மீது அருள்‌ இல்லாது
போக, செங்கழுநீர்ப்பொய்கையில்‌ திருமால்‌, திருமஞ்சனத்‌ திற்காக, நீர்‌ சுமந்து இடையில்‌ வைத்துச்‌ கொண்டு, திவ்வியப்‌
பிரபந்தம்‌ பாடும்‌ வாயினராக, தமிழ்ப்‌ பெண்கள்‌, பூங்காவின்‌ உள்‌ பாதைகளில்‌ சிலம்பார்ந்த பாதங்களால்‌ நடந்து வருவார்கள்‌. 1-56

நீலமணிகளால்‌ இயன்ற மேல்‌ மட்ட உறை வரையும்‌ நிறைந்த தெளிந்த நீரையுடைய, தெருக்கிணற்றில்‌ உள்ள மீன்‌களைப்‌ பார்த்து,
வீட்டு மேற்கூரையைச்‌ சார்ந்துள்ள மரக்கிளையிலிருந்து குபீரெனப்‌ பாய்ந்து மீன்‌ கொத்துப்‌ (சிரல்‌) பறவை
கீழே வீழ்ந்தும்‌ எழுந்தும்‌ (வருவதும்‌ போவதுமாக) இருப்பது,இல்லம்‌ (வீடு) என்னும்‌ நங்கை மறைந்திருந்து,
தமிழ்ப்பெண்‌களிடம்‌ பழகியதால்‌ பந்தாடுவது போலத்‌ தோன்றுகிறது. 1— 57

மனித தம்பதிகளின்‌ உருவத்தில்‌ செதுக்கப்பட்ட பொம்மைகளோடு கூடிய, திருமால்‌, திருமகள்‌, இருவரது (உற்சவத்‌)
தேர்கள்‌; தேவர்கட்கு உறைவிடம்‌ நல்கிய மேருமலையும்‌,அமுதம்‌ (உணவு) ஈந்த மந்தரமலையும்‌, தத்தமது புண்ணிய
பலனின்‌ தராதரங்களைத்‌ தெரிந்து கொள்வதற்காக, எளியவர்‌கட்கு உணவுடைகள்‌ தரும்‌ திருவில்லிபுத்தூர்‌ இல்லங்கள்‌ அருகில்‌
வந்து நிற்‌பது போலத்‌ தோன்றுகின்றன, (பொம்மைகளுடன்‌ கூடிய தேர்கள்‌, சித்தர்கள்‌ வாழும்‌ குகைகளையுடைய மலைகளுக்கு உவமை.) I—58

வளை ஒலிப்ப, பாசிகை (சொக்கட்டான்‌ ஆடும்‌ தாயம்‌) உருட்டும்போது அதட்டலைக்‌ கேட்ட முனிவர்கள்‌ நெஞ்சம்‌
இஇிலுற்று கலங்கும்படியாகவும்‌, எதிரே வரும்போது ஏறெடுத்துப்‌ பாராமல்‌ இருக்கும்‌ பராமுகம்‌, மன்மதனைக்‌ கூட அலட்சியப்‌
படுத்தவும்‌, கோயில்‌ கைங்கரியஸ்தார்களைக்‌ கண்டதும்‌ எழுந்து வணங்குவது கண்டு இந்திரன்‌ (சுவர்க்கத்தைவிட) இந்தக்‌
கோயில்‌ கொலுவினையே விரும்புவதாக அமையவும்‌, கோயில்‌ பூசை வேளைச்‌ சங்கொலி கேட்டு முகந்திருப்பும்‌ போது கடைக்‌
கண்‌ பார்வை மக்கள்‌ நெஞ்சு ஊடுருவிப்‌ பாயவும்‌, தாயம்‌ உருட்டி, கூந்தல்‌ குலைய ஒரு கரத்தால்‌ சரிசெய்து கொண்டு, அப்போது
முந்தானையில்‌ மன்மதனின்‌ திண்டு மெத்தை போன்ற பட்டு ரவிக்கையணிந்த முலைகள்‌ குத்திட்டு நிற்க, திண்ணைகளில்‌
பரத்தையர்‌ சொக்கட்டான்‌ ஆடுவார்கள்‌, 1—59

தாம்பூலச்‌ செங்காவி நிறம்‌ போய்‌ நிலவொளி காலும்‌ படியாக ஓரு நெல்‌ மணியால்‌ பல்துலச்கியும்‌, வெண்துகிலால்‌
துவட்டினும்‌ அதில்‌ படாதவாறு மேனியில்‌ மினு மினுக்குமாறு மஞ்சள்‌ பூசி நீராடியும்‌, முந்தானைக்குள்‌ கைவிட்டு பரிமள
இிரவியப்‌ பூச்சினை மென்மையாகப்‌ பூசிக்‌ கொண்டும்‌ கலவியின்‌ விரைவில்‌ முத்துக்கள்‌ அறுந்த நாலில்‌ தங்காமல்‌ சிதறி வீழச்‌
சிங்காரம்‌ செய்துகொண்டு குலம்‌ அறிந்து கூடியும்‌, நலன்‌ அழிந்து ஏழ்மையுறினும்‌ அவர்கட்கு ஆதரவு காட்டியும்‌ மன்னனின்‌ புற
அந்தப்புரம்‌ போல எண்ணும்படி பல்வேறு மொழிகளில்‌ காவியம்‌ படைக்கும்‌ திறமையுடன்‌ அற்த தாமரை முகத்தினர்‌ ஆகிய
கணிகையர்‌ இருந்தார்கள்‌. 1.60

அங்குள்ள இளநங்கையர்கள்‌, மேலான முத்துமாலை வளை யணிகள்‌ அன்றி களிம்புறும்‌ (கடினமான) தங்க நகைகள்‌
அணியார்‌. கஸ்தூரியை மெய்யில்‌ பூசுவரன்றி ஜவ்வாது (புனுகு)பிசுக்குறும்‌ எனத்‌ தொடமாட்டார்கள்‌. அகில்‌ புகையன்றி
பூக்களை ஈரம்‌ எனக்‌ கருதிச்‌ சூடார்‌. மென்துகில்‌ அன்றி பிற அணியார்‌. 1-61

வீணை வாசிப்பதில்‌ தேர்ந்த, அக்கணிசையர்‌, விடிந்ததும்‌, மேடையில்‌ உப்பரிகையிலிருந்து கொண்டு தங்கள்‌ சடையை
முலைமேல்‌ வைத்து (௪டையை) அவிழ்த்து சிக்கை எடுக்கும்‌ போது ஆங்குள பூக்களை (மல்லிகை முதலியன) நகத்தால்‌
விதிர்க்கும்‌ போது மணம்‌ நாடி. வந்த தும்பிங்கள்‌ ரீங்காரம்‌ செய்‌வதைக்‌ கேட்ட தெரு வழிச்‌ செல்லும்‌ காமுகர்கள்‌, நின்று (முலை
மீதுள்ள சடை) வீணையாகவும்‌, பூக்கள்‌ குந்தக்கட்டை(மெட்டுக்‌கள்‌) கள்‌ ஆகவும்‌, அவிழ்க்கும்‌ விரலசைவின்‌ விரைவு வீணை
வாசிப்பது போலவும்‌ தோன்ற மகிழ்வுறுவார்கள்‌. 1-62

தோழியர்‌ கூற்றுக்களால்‌,பணத்தாசைக்‌ காட்டிக்‌ கெஞ்சினும்‌.தாழ்நீத குலம்‌, முதுமை, அழகின்மை ஆகியவையுடையவர்களின்‌
அழைப்பினை அவர்கள்‌ நிராகரித்துச்‌ செவியில்‌ ஏற்கமாட்டார்‌கள்‌. * ஸ்ரீ (திருமகள்‌) சொரூபமான செவிகள்‌ ஆகையால்‌ பணப்‌
பேராசையுடைய சொற்களைக்‌ கேளார்‌, 1.63

(ஸ்ரீ (இர) என்னும்‌ எழுத்து தெலுங்கில்‌ (3) என்ற உருவில்‌ இருக்கும்‌. இதனை காதுகட்கு உருவ ஒப்புமையாகக்‌ கூறுவது தெலுங்குக்‌ கவிகளின்‌ மரபு, )

தமிழ்ச்‌ சுமங்கலிகள்‌ (இல்லத்தரசிகள்‌) மஞ்சள்‌ தங்கப்படிக்‌ கட்டுகளின்‌ 8மே–நீர்‌ அலைத்ததால்‌ அங்கு தூங்கிய இல்லப்‌
பொய்கையில்‌ உள்ள அன்னங்களின்‌ இறகுகளில்‌ தோய்ந்து பசுமையுண்டாக, அவை நகரில்‌ திரியும்‌ போது ஆகாயகங்கையி
லிருந்து வந்த பொற்‌ சிறறனையுடைய அன்னங்களோ என மயக்சுத்தையூட்டும்‌. [–64

தலையை இறக்கைகளில்‌ நுழைத்து வாத்துக்கள்‌ வயலில்‌ கால்வாய்‌ நடுவே தூநிகவும்‌, அதைக்கண்ட குளக்காவலர்கள்‌
(கரையாளர்‌) அதிகாலையில்‌ (விடியலில்‌)குளித்துவிட்டுப்‌ போன அந்தணர்கள்‌ துவைத்துப்‌ பிழிந்து வைத்த துணிகள்‌ என்று
நினைத்து அவர்களிடம்‌ சேர்ப்பதற்காக, துறையிலிறங்கவும்‌, அவர்களைக்‌ கண்டதும்‌ (வாத்துக்கள்‌) ஓடவே, இதைக்‌ கண்டு
(களை எடுக்கும்‌) உழத்தியர்‌ நகையாடுவார்கள்‌. 1—65

பூந்தோட்டத்திலுள்ள மலர்க ளின்‌ பெயரையுடைய(மல்லிகை – கர்‌ ஜூரம்‌ — புஷ்பமஞ்சரி– மாம்பூங்கொத்து என
நெல்வகைள்‌) நெல்வயல்களிலும்‌ இருப்பதால்‌ இணையானாலும்‌ நெல்வயலே உயர்வென்று (தராசின்‌) இணை முள்‌ காட்டும்‌
(நெல்லில்‌ முள்போல ஈர்க்குகள்‌ இருப்பதால்‌ இக்கற்பனை செய்யப்பட்டுள்ளது) ஆதலின்‌ நெல்‌ வயல்‌ வெண்ணிறப்பறவை
(பலாகா)யின்‌ செருக்கினால்‌ நகும்‌. 1—66-

(யானைக்கொம்பு–£ரகச்‌ சம்பா–முதலிய நெல்வகைகள்‌ தமிழகத்துண்டு. அதுபோல இவை ஆந்திர நாட்டில்‌ முன்பு
வழங்கிய நெல்வகைகளின்‌ பெயர்கள்‌ ஆம்‌.) நெற்பயிர்கள்‌ விளைந்தபிறகு (அறுவடைக்காக) நீர்வற்றம்‌
செய்யவே, தாகம்‌ கொண்டு, அப்பயிர்கள்‌ செழித்த செங்கழுநீர்ப்‌பூக்கள்‌ மேல்‌ சாய்ந்து தலை வைத்து முன்‌ நீர்‌ குடித்த வேர்களை
தலையில்‌ கொணர்ந்து பூந்தேன்‌ மாந்துவது போல அருகுள பூங்காவிலிருந்து வரும்‌ காற்றினால்‌, அ௮சைக்கப்‌ பட்டுத்‌ தோன்றும்‌. I—67

அடியில்‌ பழுத்து உடைந்து சேறாகி, தேன்‌ கொப்புளிக்கும்‌ வேர்ப்பலாவின்‌ உருண்டைக்கல்‌ போன்ற பெரிய பழங்களின்‌
சாற்றினைப்‌ பருக வந்த தேனீக்கள்‌ மல்லாடுவது காணின்‌,மதம்‌ ஒழுகி பூழ்தி படிந்து, சங்கிலியால்‌ கட்டப்பட்டுள்ள வசந்த
மன்னனின்‌ பட்டத்து யானையின்‌ கும்பம்‌ ( தலைப்பகுதி) போலத்‌ தோன்றும்‌. 1.68

மிகச்‌ செறிந்த பெரிய சம்பகப்‌ பூக்களோடு கட்டிய தோமாலை(இலைகளுடன்‌ பூக்கள்‌ மிடைந்து பெரிதாகக்‌ கட்டிய
பூமாலை) போலப்‌ பழுத்த நிலந்தோய நின்ற மணமிக்க வாழைக்‌ குலைகளில்‌ தொங்கும்‌ வாழைப்‌ பழங்களின்‌ நுனியிலுள்ள கருப்பு
சம்பகப்‌ பூவில்‌ வீழ்ந்து மயங்கிக்‌ கிடக்கின்ற வண்டுகளைப்‌ போலத்‌ தோன்றும்‌. இத்தகு கதலி வனங்கள்‌ (வாழைத்‌ தோப்புகள்‌) ஆங்குண்டு,. I—69
(சம்பகப்பூ — மணம்‌ வண்டுகளைக்‌ கிறங்கச்‌ செய்யும்‌. ஆதலின்‌ நெருங்காது அறியாது சென்ற வண்டுகள்‌ இவ்விதம்‌ மயங்கிக்‌ கடக்கின்றன.)

நமக்கு அனுராகம்‌ (செம்மை–காதல்‌) மிகுவிக்கும்‌ மருந்து இதுதான்‌ என்று கழுத்தைத்‌ துழுவியவாறு நாகவல்லி
(வெற்றிலைக்‌ கொடி) கமுகிளைப்‌ பார்த்து சொல்வது போலத்‌ தோன்றும்‌. அதனைக்‌ கேட்ட கமுகு மட்டை உதிர்க்கவே அது
வீழ்ந்ததால்‌ ஒடிந்த கரும்பின்‌ முத்துக்கள்‌–கரும்பாலை அடுப்பில்‌ வீழ்ந்து பொரிந்து சுண்ணாம்பாக இருக்கும்‌.
(கரும்பில்‌, கதலியில்‌, மூங்கிலில்‌ முத்துக்கள்‌ விளைவதாகக்‌ கூறுவது கலிமரபு, முத்துப்‌ போன்ற முளைக்கணுக்களை
உவமித்திருப்பர்‌ போலும்‌. இங்கு வெற்றிலை பாக்குக்கு செம்மை மிகுவிக்கும்‌ சுண்ணாம்பும்‌ ஒரே இடத்தில்‌ விளைகிறதாகக்‌ காட்டப்பட்டுள்ளது) I~ 70

அத்நகரில்‌ கழுநீர்ப்பூக்கஞம்‌, நீர்த்தாமரையும்‌ பாசியும்‌ கற்பூரவாசமும்‌ பரவியிருக்க, உள்ளே கொழுத்த வாளை மீன்கள்‌
போராடித்‌ துள்ள, உள்ளே நீர்க்‌ கோழிகள்‌ கொல கொலவென்று கூச்சலிட்டவாறு நீரில்‌ மூழ்கும்போது அதன்‌ கழுத்து வளைவுகள்‌
வினோதமாகத்‌ தென்பட, மாந்தோப்பிலுள்ள பழங்கணெறு (குட்டம்‌)கள்‌ மலர்கள்‌ சிந்தி அதில்‌ நடந்து போக இயலுமாறு
போல எழிலுடன்‌ காணப்படும்‌. மாலைநேரத்தில்‌ இறைவன்‌ திருமால்‌ இல்லத்‌ (கோயில்‌) திலிருந்து பறைஓலியும்‌, குழல்‌ (நாதசுரம்‌) ஒலியும்‌ எழுந்து பரவி
பூம்புதர்களினுள்‌ எதிரொலிக்கும்‌. அது, விளையாட்டு பூங்காவிலிருந்து கூட்டை நோக்கிச்‌ செல்ல முனைந்த அன்னங்களின்‌
இழக்கைகளின்‌ படபடவென்ற (பறை ஒலிபோன்ற) ஓலியும்‌,அதன்‌ (குழல்‌ ஓலி போன்ற) கூவுதலும்‌, தான்‌ எதிரொலிப்பதுபோலத்‌ தோன்றும்‌. 1—72

வடபெருங்கோயிலுடையானாகிய, தாமரைக்‌ கண்ணணின்‌ மார்பில்‌ உள்ள துளசிமாலையின்‌ மகரந்தத்துளிகளைத்‌ தழுவி,
பணியாரம்‌ (நைவேத்தியத்தின்‌) புனித மணம்‌ அளைந்து, நடனமாட முனைந்த நங்கையரின்‌ ஓரஞ்சாய்ந்த கூந்தலில்‌
(கொப்பு) இருந்து நழுவும்‌ செங்கழுநீர்ப்‌ பூக்களை அசைத்தும்‌ தென்றல்‌, (தன்மை, மணம்‌, மென்மை ஆகிய தன்மைகளுடைய
தாகி) மூன்று வருத்தங்களை (தாபத்திரயம்‌) நீங்கச்‌ செய்யுமாறு வீசும்‌.
(தாபத்திரயம்‌-ஆத்யாத்மிகம்‌–(தன்மனத்தால்‌ உருவாருங்‌ துன்பம்‌) ஆதிபெளதிகம்‌ (பிற உலகிலுள்ள பெளதீகப்‌ பொருட்‌
களால்‌ உருவாகும்‌ துன்பம்‌) ஆதிதைவிகம்‌ (தெய்வத்தால்‌–இடி_.பூகம்பம்‌ முதலியவற்றால்‌ உருவாகும்‌ துன்பம்‌) என மூன்று ஆகும்‌.
முத்துன்பமும்‌ முக்குணம்‌ உடையதென்றல்‌ போக்கும்‌ என்பது கருத்து. மகரந்தத்தால்‌ தன்மை, நைவேத்தியத்தால்‌
மணம்‌, கூந்தல்‌ மலர்களை அசைப்பதால்‌ மென்னடையும்‌ உடையதாகத்‌ தென்றல்‌ திகழ்கின்றது என்பது கவியின்‌ கற்பனை,) I—73

பொதிகைத்‌ தென்றல்‌ இரவில்‌ திருமால்‌ கோயில்‌ கொடிமரத்‌தின்‌ பொன்மணிகளை ஒவ்வொரு சமயம்‌ அசைக்கவும்‌ கணீர்‌
என்று ஓலிப்பவும்‌, ஆங்கு விண்முட்டும்‌ பொற்பிராகாரத்திலுள்ள சம்பக மரக்கிளையிலுள்ள பறவைகள்‌ அவ்வொலி கேட்டு
இடுக்கிட்டெழுந்து கலகலவென ஓசைஎழுப்பவும்‌,விழிந்ததென்று கருதி தம்பதியர்‌ புலவி நீத்துக்‌ கலவி கொண்டின்புறுவர்‌. 1.74

அந்நகரில்‌ முற்றத்தில்‌ செந்நெல்‌ காயப்‌ போட்டுக்‌ காவலிருக்கும்‌ தமிழ்‌ மங்கையர்‌, திருமால்‌ கோயில்‌ மான்கன்று
நெல்லை அடிக்கடி தின்ன வரவும்‌, கொண்டையில்‌ வைப்பதற்‌காக விற்க வந்த கிராமப்‌ பெண்கள்‌ இறக்கி வைத்த, பிரப்பங்‌
கூடையிலுள்ள செங்சமழுநீர்ப்பூந்தண்டினாலே (நோகாதபடி)விரட்டி விடுவார்கள்‌. I—75

எதிர்சென்று சாஷ்டாங்கமாக வணங்கி,கால்‌ கழுவி, நீர்தந்து தென்னம்பாய்‌ இருக்கையில்‌ அமர்வித்து, மென்மையான கமுகம்‌
பாளையில்‌ செய்த தொன்னைகளோடு (காய்கறிவைத்து) அகன்ற வாழையிலை விரித்து, நெற்சோறு, பருப்பு, நிறைய நெய்‌
பெய்து, பலவிதமான கறிகளோடு, பால்‌ தயிர்வைத்து உண்பித்து கை கழுவிய பிறகு கால்களை ஒற்றி, தாம்பூலம்‌ தந்து, நலம்‌
விசாரித்து *போகிறோம்‌’ என்று கூறின்‌, அவர்பின்‌ சிறிது தூரம்‌ சென்று, தம்‌ செல்வநிலைக்கேற்ப மரியாதை செய்து விடை.
கொடுத்தனுப்பி, (பிரிந்ததால்‌) வருத்தமுடன்‌ இல்லம்‌ மீண்டு வருவர்‌. இவ்விதம்‌ எப்போது அதிதிகளாகிய பாகவதார்களை
உபசரிப்பது அவ்வூர்‌ பாகவதரார்களின்‌ பண்பாகும்‌. [-..-76

விட்டு சித்தன்‌
துவயம்‌ (இருமை) எனும்‌ வைணவதிருமந்திரத்திற்கு இல்லம்‌ (உறைவிடம்‌) ஆனவனும்‌, தாமரை போன்ற முகமுடையவனும்‌
சுகதுக்கங்களாகிய இருமையைச்‌ சமமாகக்‌ கருதுபவனும்‌, இடை.யறாத தியான யோகமென்னும்‌ சங்கிலியால்‌ திருமால்‌ என்னும்‌
யானையைக்‌ கட்டியவனும்‌, படிக்காமலேயே வேத வேதாங்க ஞானங்களைத்‌ தெளிந்த துவைதமறிந்த ஞானியும்‌, பொருத்த
மான பெயரையுடையவனுமாகிய விஷ்ணு  என்னும்‌ ஆசார சீலன்‌ அவ்வூரில்‌ (ஸ்ரீவில்லிபுத் தூரில்‌) இருந்தான்‌. 1-77

அவ்வந்தணன்‌, பிரகிருதியைவிட வேறுபட்ட தன்‌ (ஆன்மா)னையும்‌, தன்னைவிட. வேறுபட்ட பரம்பொருளையும்‌ (ஈஸ்வரன்‌)
,பரமேசுவரனின்‌ அருளால்‌ பல பிறவிகளின்‌ நற்பயனாய்‌ கிட்டிய குருவருளால்‌ மறைத்து வைத்த புதையல்‌ கிடைத்தது
போல ஞானம்‌ உணர்ந்து, தான்‌ (ஜீவன்‌) அடிமை, அவன்‌(ஈஸ்வரன்‌) உடையவன்‌ என்பது ஆனாதியான தொடர்பென்‌
றுணர்ந்து, முழுமையான பேரின்பத்தில்‌ திளைத்து இருக்கும்‌ பரமயோகிக்கு (உத்தம பக்தனுக்கு) வருத்தந்‌ தருகின்ற கல்வி
யாற்‌ பயன்‌ என்ன? என்று சிந்தித்து, இந்த ஞானம்‌ இல்லாதவன்‌ பகுத்தறிவு பாழாகும்‌, தருக்க அறிவு உருக்குலைக்கும்‌. சாங்கியம்‌
சபலமுடையது. மீமாம்சை இம்சையாகும்‌. இலக்கணம்‌ தலைக்‌கனம்‌. அதுமட்டுமின்றி படிக்க முயன்றால்‌ காலம்‌ சாலாது.
இடையூறுகள்‌ தடையாகும்‌. கொஞ்சம்‌ படித்ததும்‌ செருக்கை யுண்டாக்கும்‌, முற்ற முடியக்‌ கற்றறிந்தாலும்‌ அதனால்‌
கிடைத்த தெளிந்த அறிவை, முக்குண விஷயத்தை வைத்துக்‌ கொண்டு, தானியம்‌ கஇடைத்தவன்‌ பதர்‌ நீக்குவது
போலவும்‌, தேனடை பெற்றவன்‌ தேன்‌ கொண்டு மெழுகை நீக்குவது போலவும்‌ (விஷயஞானத்தை) விட்டு (தத்துவ
ஞானத்தை)ப்‌ பெற்று உய்தல்‌ வேண்டும்‌. ஆதலின்‌ சாந்தி (புறப்‌ புலன்களை ஒடுக்குதல்‌) தாந்தி (அகப்புலன்களை ஒடுக்குதல்‌)
களையுடைய பற்றற்ற எனக்கு முதலில்‌, படித்து முடிவில்‌ விடுவானேன்‌? அதனால்‌ பயன்‌ என்ன? எதிரிகளை வாதத்தில்‌
மடக்கவும்‌, அரசர்களை மூழ்விக்கவும்‌ ஆன அக்கல்வி மீண்டும்‌ பிறத்தற்கஞ்சாதவர்களுக்காகுக. எம்மைப்‌ போல்வார்க்கு,
வேதங்கற்றதால்‌ உண்டாகும்‌ புகழ்‌, பரிசில்‌, குழப்பம்‌; இழப்புகள்‌ எவையும்‌ வேண்டாம்‌,”* என்று ஆராய்ந்து முன்பு
சிந்து தேசாதிபதிக்கு ஐடபரதமுனி உபதேசம்‌ செய்து முக்தி நெறி காட்டியவாறு பாசவதர்கட்கு பல பிறவிகளிலும்‌
கைங்கரியம்‌ செய்து, பகவான்‌ திருமாலுக்குப்‌ பணிவிடை செய்வதே பிறவிப்‌ பயன்‌ என்று ஓர்ந்து ஸ்ரீவில்லிபுதீ தூரில்‌
திருமால்‌ கோயிலில்‌ பூமாலை தொடுத்தளிக்கும்‌ தொண்டில்‌ ஈடுபாடு கொண்டிருந்தான்‌, 1-78

மேலும்‌, நியாயமாகச்‌ சம்பாஇுத்த பொருளைக்‌ கொண்டு அந்த யோூஸ்வரன்‌, இமய௰யமலைக்கும்‌, பொதிகை மலைக்கும்‌
இடையே வந்து போய்க்‌ கொண்டிருக்கும்‌ வைணவ அடியார்கட்‌ கெல்லாம்‌ அன்னமளித்து விருந்தோம்பினார்‌. I—79

வாளம்‌ மலையூற்றெனப்‌ பொங்கிய அடைமழைக்‌ காலத்தில்‌ மனைவியின்‌ கண்களில்‌ புகை நுழையாதபடி, தேங்காய்ச்‌
சிரட்டைகள்‌ போட்டெரிந்து சமையல்‌ ஆக்கவும்‌, சிரட்டை அகப்பைகளால்‌ முகந்தெடுத்த செந்நெற்சோறு, தோல்நீக்கிய
பருப்பு, நான்கைந்து தாளித்த கறி வகைகளுடன்‌, நெய்‌ வெள்ள மெனப்‌ பெய்து, வடகம்‌ வற்றல்களுடன்‌ தயிர்‌ வைத்து
உணவருந்தச்‌ செய்தபின்‌. 1.80

முதலில்‌ சந்தனப்‌ பூச்சு தந்து, இதமான சூடுள்ள (இளஞ்‌சூடான) வெண்சோறும்‌, இனிய சாறு (ரசம்‌)களும்‌, மோர்க்‌
குழம்பும்‌, மென்மையான கூழும்‌, கருப்பஞ்சாறு, இளநீர்‌, சுவைப்‌பண்டங்கள்‌, இன்கனிகள்‌ மணம்‌ (வெட்டிவேர்‌) ஊட்டிய
குளிர்ந்த தண்ணீர்‌, ஊறுகாய்‌, நீர்‌ மோர்‌, முதலியவற்றோடு கோடைக்‌ காலத்தில்‌ உணவிடுவான்‌, 1—81

புனுகு மணங்கமழும்‌ செஞ்சாலிப்‌ புத்தன்னம்‌; மிளகுப்‌ பொடியோடு, சட்டி சர்‌*ரென்று ஓசை எழ, (அப்போதே
இறக்கிய) சுடச்சுட கறி வகைகளுடன்‌, மூக்குக்கு மருந்தான கடுகுப்பொடியோடு கலந்த பச்சடிகள்‌, பாயசமும்‌, ஊறுகாய்கள்‌,
கை சுறுக்கெனும்படியான புத்துருக்கு நெய்‌, வற்றக்‌ காய்ச்சிய பால்‌, மூதலியன மிகுதியாக குளிர்காலத்தில்‌உணவிடுவான்‌,1–82

சனிக்கிழமையன்று, ஆழமான வாழைப்பூமடல்‌ தொன்னையைக்கையில்‌ இலுப்பைமாவில்‌ பொருத்தமாக வைத்துக்கொண்டு
வேண்டிய மட்டும்‌ நல்லெண்ணயை நிறைய ஊற்றிக்‌ கொண்டு சென்று, கயிற்றில்‌ துவைத்த வேட்டி. தொங்க நதியில்‌ குளித்து
விட்டு பிறநாட்டு வைணவர்கள்‌ பலரும்‌ அவர்‌ இல்லத்திற்கு விருந்தென வருவார்கள்‌, J—83

அந்த நல்லொழுக்கச்‌ செல்வரின்‌ இல்லத்தில்‌ நடு இரவில்‌ சென்று கேட்பின்‌, திருமால்‌ திரு அவதாரக்‌ கதைகளும்‌, திவ்வியப்‌
பிரபந்த அனுசந்தானமும்‌ கேட்கும்‌. அந்நேரந்தில்‌ “கறிகள்‌ அதிகம்‌ இல்லை. சூடு இல்லை, அப்பளம்‌ இல்லை, அன்னம்‌
சிறப்பாக இல்லை” என்று அடக்கத்தின்‌ காரணமாக விஷ்ணு சித்தன்‌ கூறும்‌ சொற்கள்‌ காதில்‌ விழும்‌. 1—84

அந்த வைணவோத்தமராகிய விஷ்ணு சித்தன்‌, இவ்விதமாக விழிப்புடன்‌ தீர்த்த யாத்திரை வரும்‌ பாகவதர்கட்கு
சிரமம்‌ கருதாமல்‌ யார்‌ எது வேண்டினும்‌ அவர்கட்கு மனம்‌ நிறைவுறுமாறு ஈந்து விருந்தோம்பி வந்தான்‌. I—85

இளஞாயிற்றின்‌ கதிர்பட்டு விரிந்த சரத்காலத்‌ தாமரை போன்ற கண்கள்‌ உடையவனே! தாமரைமலராள்‌, நிலமகள்‌,
நீளாதேவி, ஜாம்பவதி எனும்‌ நங்கயைர்‌ கணவ! சிவன்‌, தாமரையிற்‌ பிறந்த பிரம்மன்‌, இந்திரன்‌ முதலியவர்களின்‌ மணி
மகுடங்கள்‌ : ஒளிபட்டு விளங்கும்‌ பாதங்களையுடையவனே! நான்காம்‌ நாள்‌ பிறைச்‌ சந்திரன்‌ பே௱ன்ற நெற்றியில்‌
அழகொளிரும்‌ . சுருள்‌ முடியுடையவனே! மகர குண்டலங்கள்‌ அணிந்தவனே! T—86

மீன்‌, ஆமை எனும்‌ நீர்வாழ்வன, பன்றி, சிங்கம்‌, பிரம்மச்‌சாரி, (வாமனன்‌) பரசுராமன்‌, ரகு குல ராமன்‌, பலராமன்‌,
புத்தன்‌, குதிரையையுடைய கல்கி ஆகிய அவதாரங்களால்‌ மக்களைக்‌ காப்பாற்றுபவபனே, அலர்மேல்‌ மங்கை எனும்‌
பெயருடைய திருமகளை மார்பில்‌ ஏற்றவனே! I—87

இந்திரனால்‌ ஏவப்பட்ட மழைமுகல்களின்‌ கல்மாரியை தடுக்கு மலையைக்‌ குடையாக ஏந்தியவனே! சாணூரமல்லனை
மாய்த்தவனே! ஓரேநிமிடத்தில்‌ கம்சனைக்‌ கொன்றவனே! மயிற்‌ பீலியணிந்தவனே! * 1-—88

கேட்பாயாக! என்று அடுத்த அத்தியாயத்தில்‌ வினை முடிவு வரும்‌.

இது, கர்ணாடக (கன்னட) நாட்டின்‌ (சாம்ராஜ்யத்தை) தாங்கிய தோள்களையுடைய, உதயகிரி கோட்டையில்‌ மன்னன்‌
(பிரதாப கஜபதியின்‌) சிற்றப்பன்‌ (பிரஹரேஸ்வரபாத்ரனை) காணிக்கை தந்த மகுடத்தின்‌ மணிக்கண்களின்‌ ஒளிபடும்‌ பாதங்‌
களையுடைய, கிருஷ்ணதேவராய மாமன்னனால்‌ சொல்லப்பட்ட ஆமுக்தமால்யத (சூடிக்கொடுத்தவள்‌) எனும்‌ காவியத்தில்‌
இனியசெய்யுட்களால்‌ இயன்ற முதல்‌ அத்தியாயமாகத்‌ திகழ்‌ கின்றது, * . I—89

*கிருஷ்ண தேவராயர்‌ திக்விஐயயாத்திரையில்‌ கட்டாக்‌ (ஒரிசா) சென்ற கஐபதி மன்னர்களை வென்ற காலத்தில்‌ உதயகிரி கோட்டையில்‌ இருந்து கொண்டு கஜபதி மன்னனின்‌ சிற்றப்பன்‌ “பிரகரேஸ்வர பாத்ரா” என்பவன்‌ கடும்‌ போரிட்டான்‌. முற்றுகையிட்ட மன்னன்‌ இருஷ்ண தேவராயா்‌ *பிரகரேஸ்வரன்‌ தலையை மிதிக்காமல்‌ குளிக்க மாட்டேன்‌” என்று சபதம்‌ (வஞ்சினம்‌) கூறி போரிட்டபோது அது தெரிந்த பிரகரேஸவரன்‌ அஞ்சி தனது மகுடத்தை தோல்வியை ஒப்புக்‌ கொண்டு அனுப்பிவைத்தான்‌. மாமன்னனும்‌ அதனை மீதித்து வஞ்சினம்‌ தீர்ந்து நண்பகலில்‌ குளித்தான்‌ என்ற சரித்?ரம்‌ இந்தச்‌ செய்யுளில்‌ குறிப்பிடப்படுகிறது.

முதல்‌ அத்தியாயம்‌ முடிவுற்றது

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ கிருஷ்ணதேவராயன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading