ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் —வையத்து வாழ்வீர்காள் —

இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,
ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,
மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

————————–

அவதாரிகை –
க்ருத்ய அக்ருத்ய விவேகம் பண்ணுகிறது –
இதர விஷயங்களில் விடப்படுமவை விடவும் அரிதாய் இருக்கும் –பற்றபடுமவை பற்றவும் அரிதாய் இருக்கும்-
அதுக்கடி –
இவன் உடைய கர்ம அனுகுணமாக நன்றாயும் தீதாயும் தோற்றுகிற இத்தனை போக்கி-
ஸ்வத விஷயத்தைப் பற்றி வருவதொரு நன்மையையும் தீமையும் இல்லை
எங்கனே என்னில் –

ஒரு நாள் ஒருவன் ஒன்றை ஆதரித்து அவன் தானே பின்பு சில நாள் சென்றவாறே
அது தன்னையே உபேஷியா நின்றான்-
முன்பு உபேஷித்தது தன்னையே பின்பு ஒரு நாளில் ஆதரிப்பதும் செய்யா நின்றான்-
ஆகையால் இவனுடைய கர்மம் அடியாக நன்றாயும் தீதாயும் தோற்றுகிற இத்தனை போக்கி-
விஷயத்தைப் பற்றவரில் என்றும் ஒரு படிப் பட்டு இருக்க வேணும்-
அது இல்லாமையால் புறம்பு உள்ளவை விடவும் அரிது -பற்றவும் அரிது-
விடுகிறவற்றுக்கும் பற்றுகிறவற்றுக்கும் வாசி தெரிவிக்க-அரிதாகையாலே-

இங்கன் இன்றிக்கே-
அல்பமுமாய் அஸ்த்ரமுமாய் ஹேயமுமாய் இருக்கிற விஷயங்களை விட்டு-
சமஸ்த கல்யாண குணாத்மகனை பற்றுகையாலே-
விடுகையும் பற்றுகையும் இரண்டும் எளிதாய் இருக்கும்

இதர விஷயங்களில் விடுமவற்றோடு பற்றுமவற்றோடு வாசி இல்லை –
துல்ய பலமாய் இருக்கும் –ஆயாசத்தாலே பெறுமதாகையாலும் –நிலை இல்லாமையாலும் –

இங்கு
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு(மூன்றாம் திருவந்தாதி -14) இறே
(பற்ற வேண்டியதுக்கு முக்கியம் -பற்றவே விட வேண்டியவை தன்னடையே கை நழுவிப் போகுமே )

கீழில் பாட்டில்-
பிராப்ய ஸ்வரூபத்தையும்-பிராபக ஸ்வரூபத்தையும்-அதிகாரி ஸ்வரூபத்தையும்-சொல்லிற்று-
இதில்-அந்த அதிகாரிக்கு சம்பாவித ஸ்வபாவங்களை சொல்லுகிறது

முதல் பாட்டு ப்ராப்ய ப்ராபக ( தருவான் பறை)சங்க்ரஹம்
இரண்டாம் பாட்டில் க்ருத்ய அக்ருத்ய விவேகம் பண்ணுகிறார்கள்
மூன்றாம் பாட்டு ப்ராபக சங்க்ரஹம் –

இப் பாட்டில் பகவத் கைங்கர்யத்துக்கு-ருசி உடையராய்-
அவனையே உபாயமாக பற்றி இருக்கிற இவ் அதிகாரிக்கு-
சம்பாவித ஸ்வபாவ விசேஷங்களை அருளிச் செய்கிறார் –

விடுமவற்றை விடுகையும் – செய்யுமவற்றை செய்கையும்- இரண்டும் பிரியமாகையாலே-
க்ருத்ய அக்ருத்ய விவேகம் பண்ணுகிறது –

பிராப்ய பிராபகங்கள் இரண்டும் ஈஸ்வரனே என்று இருக்கும்-இச்சா திகாரிகளுக்கு சம்பாவிதமாய்
குர்வத் ரூபமான கரணங்களுக்கு-வகுத்த வ்யாபாரங்களைக் காட்டிக் கொடுக்க வேண்டிய படியாலும்-
கால ஷேபத்துக்காகவும்-ராக ப்ரேரிதமாக அனுஷ்டேயமான கர்தவ்யாம்சத்தை சொல்லிற்று

———-

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மை இட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்-2-

வையத்து வாழ்வீர்காள்–திருவாய்ப்பாடியிலே-வாழ்வை உடையவர்கள் என்று-சப்தார்தம் திரு உள்ளம் பற்றி
வையத்து வாழ்வீர்காள் -என்கிறார்-
சர்வேஸ்வரன் திருவாய்ப்பாடியிலே கிருஷ்ணனாய் வந்து திருவவதரித்து-
தன்னை தாழ விட்டு பரிமாறுகிற காலத்தில் வாழப் பிறந்த பாக்யவதி காள்-

இங்குத்தை வாழ்ச்சிக்கு பரமபதமும் சத்ருசம் அன்று-
அங்கு மேன்மை காணலாம் இத்தனை போக்கி-நீர்மை கண்டு அனுபவிக்கலாம் படி இருப்பது இங்கே இறே-
அங்கு போக்தாக்கள் அசங்குசதராய் இருப்பார்கள் –
இங்கு போக்யம் அசங்குசிதமாய் இருக்கும் –
தயநீர் உண்டான இடத்தில் இறே தயாதி குணங்கள் அனுபவிக்கலாவது –
அங்கு விஷயம் இல்லாமையாலே தயாதி குணங்கள் பிரகாசிக்கப் பெறாதே –

அக் குறை தீருகைக்காக இறே நித்ய ஸூரிகள் இங்கே வந்து அனுபவிக்கிறது –
அவதாரத்தில் நீர்மையில் அகப்பட்டாருக்கும் மற்றோர் இடம் பொறாத படியாய் இருக்கும்
பாவோ நான்யத்ர கச்சதி -என்றான் இறே திருவடி –
அச் சுவை பெறினும் வேண்டேன் -என்றாரும் உண்டு இறே
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்றார் இறே

அதவா –
மரு பூமியில் தண்ணீர் போலே-இருள் தரு மா ஞாலமான சம்சாரத்திலே இருந்து வைத்து
கிருஷ்ண அனுபவம் பண்ணி வாழப் பிறந்தீர்கள் என்றுமாம்

புத்தி நாஸாத் ப்ரணச்யதி (சங்கம் காமம் காமம் படிக்கட்டுகள் ஸ்ரீ கீதை )-என்கிறபடியே
இதர விஷயத்தில் மண்டி முடியும் நிலத்திலே-வகுத்த விஷயமே அனுபவிக்கப் பெற்றவர்கள் அன்றோ –

பல நீ காட்டிப் படுப்பாயோ -என்றும் –
இன்னம் கெடுப்பாயோ -என்றும் –
உணர்ந்தவர்கள் கூப்பிடும் நிலம் இறே –
நாட்டார் பெறா விடில் முடியும்படியான விஷயங்களினுடைய தர்சனத்திலே முடிக்கிறார்கள் இறே இவர்கள் –

வையத்து வாழ்வீர்காள்-
(இந் நிலத்திலே )-இந்தளத்திலே -தாமரை போலே –

வாழ்வீர்காள் –
அவ் வூர் தன்னிலே பிறந்து வைத்து பருவம் நிரம்பி இருக்கை
அன்றிக்கே
அவனுடைய கடாஷத்துக்கு இலக்காம் படி ஒத்த பருவமாய் இருக்கை –
கிருஷ்ண அவதாரத்துக்கு முன்னாதல் பின்னாதல் அன்றிக்கே சம காலத்தில் பிறக்கப் பெறுவதுமாம் –
அது தன்னிலும் இவ் ஊரை ஒழிந்த இடத்தே அன்றியே இவ் ஊரிலேயே பிறக்கப் பெறுவதாம் –
அது தன்னிலும் அவனோடு ஒத்த பருவமாகப் பெறுவதாம்
இது ஒரு பாக்யாதிசயம் இருக்கும்படி என் –

வாழ்வீர்காள் –
அவ் ஊரில் வர்த்தகம் என்றும் வாழ்ச்சி என்றும் இரண்டு இல்லை காண் –
அவன் நித்ய வாஸம் பண்ணும் இடத்தில் வர்த்தகமே வாழ்ச்சியாய் இருக்கும் இறே
வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள் -என்னக் கடவது இறே
இது கோயிலிலே வர்த்தகம் போலே காணும்-

சொல்லுகிற தங்களுக்கும் வாழ்ச்சி ஒத்து இருக்க-
வாழ்வீர்காள் என்று பிறரைச் சொல்லுகிறது என் என்னில் –
தாங்கள் தனியே அனுபவிக்கும் அனுபவம் ரசானுபவமாய்-தோற்றாமையாலே
அத்தை ரசமாக்கித் தருமவர்களைக் கொண்டாடுகிறார்கள்-

வையத்து வாழ்வீர்காள்-
கிருஷி பூமியிலே பலம் புஜிப்பதே-
வானிலே போல் சிறை இராதே –
கிருஷ்ண குணங்கள் திருவாய்ப்பாடியிலே ஆழி மூழையாய் பரிமாறா நிற்க
வானில் இருப்பாகிறது –
பெருமாள் காடேற எழுந்து அருள திரு அயோத்யையில் இருப்பு போலவும்
கிருஷ்ணன் திருவாய்ப்பாடியிலே வளர்ந்து அருளா நிற்க
ஸ்ரீ மதுரையில் இருப்பு போலவும் இறே

அயோத்யா மடவீம் வித்தி என்று திரு அயோத்தியை பட்டது பட்டு இறே அங்கு கிடக்கிறது
அங்கே மேன்மை —
இங்கு நீர்மை –
குணாதிக்யத்தாலே இறே வஸ்துவுக்கு ஏற்றம்

(ராமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜநகாத் மஜாம்
அயோத்யாமடவீம் வித்தி கச்ச தாத யதா ஸூகம் -அயோத்யா -40-8-

ராமம் தசரதம் வித்தி -ஸ்ரீ ராமனை தசரத சக்ரவர்த்தியாக நினைத்திரு
மாம் வித்தி ஜநகாத் மஜாம் -ஸீதா பிராட்டியை நானாக நினைத்திரு
அயோத்யாமடவீம் வித்தி -அடவீம் அயோத்யாம் வித்தி -காட்டை அயோத்யா பட்டணமாக நினைத்திரு
கச்ச தாத யதா ஸூ கம் –தாத யதா ஸூ கம்-கச்ச -குழந்தாய் ஸூ கமாக செல்வாயாக –)

ந ச புனரா வர்த்ததே–மீட்சி இன்றி -ஏற்றி வைத்து ஏணி வாங்கி -என்றும் சொல்லுகிறபடி –
அங்கு உள்ளார்க்கு இங்கே வர ஒண்ணாதே
இங்கு உள்ளார்க்கு மேன்மையும் காணலாம் –
ஆகை இறே விண்ணுளாரிலும் சீரியரே (திரு விருத்தம் -79 )என்கிறது –
முழுதும் இத்யாதி இறுதி கண்டாளே –
நித்ய அஞ்சலி புடா –என்று நாம் தொழும் அத்தனை இறே அங்கு –
சீல குணத்துக்கு அகப்பட்டார் மற்றொரு குணத்துக்கு ஆளாகார் இறே

ஸ்நேஹோமே பரம -அங்குப் போரும் அளவுள்ள காணும் என்னது ஸ்நேஹம் என் படுத்தாது தான் –
என் தன் அளவன்றால் யானுடைய அன்பு(இரண்டாம் -100) -என்கிறது –
ஆஸ்ரயத்தின் அளவுள்ள காணும் ஸ்நேஹம் –

வாழ்வீர் காள்-
பெருமாள் ஏகாம் தரணிம் ஆஸ்ரிதவ் -என்றால் போலே
ஒரு பூமியிலே ஆகப் பெறுவதாம்-
சம காலத்திலே பிறக்கப் பெறுவதாம் –
ஒரு ஊரிலே ஆவதாம்-
அதிலும்
அவன் காண வேண்டாத ஆண்களாகவும் -பருவம் கழிந்த பெண்களாகவும் அன்றிக்கே –
ஒத்த பருவமாக பெறுவதாம் –
திரு அயோத்யையில் உள்ளார்க்கு போலே விஸ்லேஷ வியஸனம் இல்லாதாவையாகப் பெறுவதாம் –
இது ஒரு வாழ்ச்சி இருந்தபடி என் தான் -என்கிறார்கள் –

வாழ்வீர்காள் –
என்ற பன்மைக்குக் கருத்து –
அதொரு விபூதியாக பகவத் அனுபவமே யாத்ரையாய் இருக்குமா போலே
இதுவும் ஒரூராக இதுவே யாத்திரையாக பெறுவதே –
ஓரூருக்கு ஒருவனை இறே பெற்றது –
(நவ திருப்பதிக்கும் ஒரே நம்மாழ்வார் போல் )
விபீஷணஸ் து தர்மாத்மா -என்று
வக்தாஸ்ரோதா ச துர்லப-என்று சொல்லுவான் ஓருவனேயாய்க் கேட்ப்பார் இல்லாத இலங்கை போல் அன்றிக்கே
த்ரிபாத் விபூதி ஒரு நாடாகச் சமைந்தால் போலே
இது ஒரு ஊராகச் சமையப் பெறுவதே

வையத்து வாழ்வீர்காள் –
இருள் தரும் மா ஞாலமான இவ் விபூதியிலே பிறந்து வைத்து-
பகவத் அனுபவம் பண்ணப் பெற்ற பாக்யவதிகாள்-
பகவத் குணங்கள் ஸ்வ ஸ்வ விஷயத்திலே சேர்ந்து விளங்கா நின்றுள்ள இவ் விபூதியிலே பிறந்து-
பகவத் குணாநுபவம் பண்ணுகிற பாக்யவதிகள் என்கிறார்கள் ஆகவுமாம் –

இத்தால்
விண்ணுளாரினும் சீரியர் -என்கிறது-
விண்ணுளாருக்கும் இங்கே வந்து இறே சீலாதி குணங்களை-அனுபவிக்க வேண்டுவது –
இங்கு உள்ளாருக்கு ஸ்வரூப ஜ்ஞானம் உண்டானால்-
யாவத் குண விசிஷ்டனை இங்கே அனுபவிக்கலாம் இறே

வையத்து வாழ்வீர்காள் —
கொடு உலகம் -என்ற இவ்விடத்தே வாழப் பெற்ற பாக்யவதிகாள் –
இங்கே இருந்து ப்ராக்ருத போகங்களை புஜிக்கிற உங்களுக்கு –
மேல் சொல்லுகிற அப்ராக்ருத போகம் இவ் வுடம்போடே சித்திப்பதே -என்கிறார்கள் –

வழியடி யுண்கிற தேசத்திலே முடி வைத்துக் கொண்டு இருக்கிற பாக்யவதிகாள் –
கிருஷி பண்ணும் பூமியிலே பலம் புஜிக்கப் பிறந்த பாக்யவதிகாள் –

இங்கே கிருஷ்ண குணங்கள் ஆழ மோழையாய்ச் செல்லா நிற்க வானிலே போய்ச் சிறை இராதே –
அந்த இருப்பு தட்டில் இருப்பாரைப் போலே -இது ராக பிராப்தி போலே –
அவன் காற்கடைக் கொண்ட பரமபதம் ஒழிய இங்கே பிறக்கப் பெற்றிகோளே-என்கிறது
அயோத்யாம் அடவீம் வித்தி –

வாழ்வீர்காள் –
திரு அயோத்யையிலே உள்ளாரைப் போலே வாழக் கோலிப்
பதினாலு ஆண்டு தரைக் கிடை கிடந்தால் போலே கிடத்தல் –
அவர்களைப் போலே வாரிப் பிடியாகப் பிடியுண்டு போய் அநர்த்தப் பட்டால் போலே படுதல் செய்யாதே
அவனோடு ஓக்கப் பிறந்த பாக்யவதிகள் அன்றோ

திருவடி -பாவோ நான்யத்ர கச்சதி -என்று இலனோ –
அச்சுவை பெறினும் வேண்டேன் -என்றும்
வானுயர் இன்பம் -என்றும்
அவ்விடம் இவர்களுக்கு சம்சாரமாய்த்து -அவன் இருந்த இடத்தே வாழலாம் அத்தனை இறே-
சேதனனுக்கு அரிதான இடம் –
இவ்விடம் அவன் தானே வந்து தன்னைப் பெறுகிற விடமான தன்னேற்றம் உண்டு

(யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–8-1-9-)

உயர்வற உயர்நலம் யுடையவன் -என்ற போது தெளிவோடு இருந்தவர் –
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு -என்ற போது -எத்திறம் -என்று மோஹித்தார்-
தெளியப் பண்ணும் விஷயமே மோஹிக்கப் பண்ணும் –
விஷயமோ சீரியது -அங்கு அவனைத் தொழும் அத்தனை –
இங்கு தொழுகையும் இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்-என்று
அவன் தொழவும் காணலாம் –
ஆகையால் அன்றோ இங்குள்ளார் -விண்ணுளாரிலும் சீரியராய்த்து

வாழ்வீர்காள்
என்கிற பன்மையாலே ஒரு விபூதியாக பகவத் அனுபவமே யாத்ரையாய் இருக்குமா போலே
ஊராக இதுவே யாத்திரையாக இருக்கை
அடியோமோடும் நின்னோடும் –வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல்-என்று கூட்டுத் தேடினார் தமப்பனார்
இவளுக்கு இங்கே வாழுகைக்கு குழாங்கள் உண்டான படி –

ஏகாம் தரணிம் ஆஸ்ரிதவ்-என்று நீங்களும் அவனும் ஒரே மண்ணிலே பிறக்கப் பெற்றி கோளே -என்றுமாம் –
கிருஷ்ணன் ஒளிக்க வேண்டும் ஆணாகாதே பெண்ணாகப் பெற்றி கோளே
அதுக்கு மேலே பருவம் கழிந்த பெண்களாகாதே அவன் உகக்கும் பருவத்தில் பெண்ணாகப் பெற்றி கோளே -என்றுமாம் –

வையத்து வாழ்வீர்கள் -வாழ்ச்சி உள்ளது இங்கே இறே–
காக்கா ஓட்டுகிற மந்த்ரம் -காக்கை பின் போவதே ஹாவு ஹாவு ஹாவு

————

நாமும் –
அத்தலையால் பேறு என்று இருக்கிற நாமும் –
அவனாலே பேறாகிலும் ருசி இருந்த இடத்திலே இருக்க ஒட்டாது இறே –
இந்தப் பலம் ஒருநாள் வரையிலே கை வந்ததாக வற்றே -என்று இருக்கிற நாமும் -என்னவுமாம்

நாமும் –
நம்மில் நாம் வக்தாக்களும்-ஸ்ரோத்தாக்களுமாக -இருந்தோமே யாகிலும் –
லாப அலாபங்களில்-சம துக்க ஸூகராம் படி இருக்கிற
(நப்பின்னைப் பிராட்டியும் கோபிகளில் ஒருத்தியாகவே தன்னை எண்ணிக் கொள்கிறாள் அன்றோ
நாம் அனைவரும் -கண்ணனும் இங்கே )

இந்தப் பலம் நமக்கு ஒரு நாள் கை வரவற்றே என்று இருந்த நாமும்
(அவனாலே அவனை அடைவோம் என்று விஸ்வசித்து உள்ள நாமும் )

நாமும்
நமக்கும் சில க்ருத்ய அக்ருத்யங்கள் யுண்டு –
உபாய உபேயங்கள் அவனே யாகையாலே இவை அவற்றில் புகாது
வேறு ஒன்றைக் கொண்டு போது போக்க ஒண்ணாது –
ருசி கிடந்த இடத்திலே கிடக்க ஒட்டாது –

நாமும்
அதனாலே அலமருகிற நாமும் –
நாராயணனே உபாயம் என்று அறுதியிட்டு —
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்துப்
பின்னும் ஆளும் செய்வன் -என்று பேற்றை அறுதியிட்டு நாமும்

நாமும் –
உம்மைத் தொகை –
பேற்றுக்கு பிரவ்ருத்தி பண்ண உரிமை அற்றதாய் இருக்க–
ருசி தூண்ட பதறி செய்யும் கார்யம்
அப்ராப்த விஷயங்களில் சக்தனானவன் அது லபிக்க வேணும் என்று இரா நின்றால்–
பிராப்த விஷய பிரவணனுக்கு சொல்ல வேண்டா இறே
அனுஷ்டானமும் அனநுஷ்டானமும் உபாய கோடியிலே அன்வயியாது–
அநந்ய உபாயத்வமும் அநந்ய உபேயத்வமும் அநந்ய தைவத்மமும்-குலையும்படி பிரவ்ருத்தி காணா நின்றோம் இறே–
ஜ்ஞான விபாக கார்யமான அஜ்ஞானத்தாலே வருமவை எல்லாம் அடிக் கழஞ்சு பெறும்-
உபாய பலமாய் உபேய அந்தர்பூதமாய் இருக்குமது உபாய பிரதிபந்தகம் ஆகாது

——–

நம் பாவைக்கு –
நம்முடைய நோன்புக்கு-
அவனையையும் அவனுடையாரையும் அழிக்கைக்குப் பண்ணும் இந்த்ரிஜித் பிரப்ருதிகள்
பௌண்டரீக வாசுதேவாதிகள் போல்வார் உடைய யாகம் போல் அன்றியே-
ததீயரும் அவனும் வாழுகைக்குப் பண்ணும் யாகம் –

பிரயோஜனாந்த பரமான நோன்பு அன்றிக்கே
(அவனையே பிள்ளையாகப் பெற சக்ரவர்தியாதிகள் செய்த
யாகம் -நோன்பு -போல்வனவும் அன்றிக்கே )
கிருஷ்ண விபூதியும் உண்டாக்குகைக்கு பண்ணுகிற நோன்பு –

ப்ராப்ய ருசி பரவசராய் நாம் அனுஷ்டிக்கிற நோன்புக்கு-
அவனும் அவன் விபூதியும் வாழ்க்கைக்கு பகவத் விஷய மங்களா சாசன பரரான நாம்
அனுஷ்டிக்கிற நோன்புக்கு -என்னவுமாம்

நம்முடைய நோன்புக்கு
இந்த்ரஜித்து நிகும்பிலையிலே ஹோமம் பண்ணினாலே போலே அன்றிக்கே
சக்ரவர்த்தி நாலாஹூதி பண்ணி நாலு ரத்னங்களைப் பெற்றால் போலே
நமக்கும் நோன்பு கூடுவதே -என்று கொண்டாடுகிறார்கள்

நம் பாவைக்கு
அவனையும் அவன் உடைமையையும் அழிக்க நினைத்த இந்திரஜித்தின் நோன்பு போல் அன்றியே
அவனையும் அவனுடையாரையும் உண்டாக்கும் நோன்பு
பெண்களையும் அவனையும் எழுப்பிக் கூட்டி ஓலக்கம் இருத்திக் காண்கையே பிரயோஜனமாய் இருக்கை –
பெரிய திருவடியைப் போலே சாத்தியமே சாதகமாய் இருக்கை –

(அம்ருதம் தேடப் போன பெரிய திருவடியை வாழ்த்தின விநதா தாய் போல் கௌசல்யை பெருமாளுக்கு மங்களா ஸாஸனம்
சாதனமாக அம்ருதம் கொண்டு வந்தது போல்)

தூய அமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே –(1-7-3)

(விபவ அவதார அனுபவமே ஸாத்யம் -இத்தைக் கொண்டு மயர்வு மறுத்ததால் சாதனமாகவும் ஆனதே)

தர்மம் மேல் பலம் தருமதாய் இருக்கை
ஸூ ஸூகம் கர்த்தும் (அவ்யயம்-ஸ்ரீ கீதை )-கைக்கூலி கொடுக்க வேண்டி இருக்கை –

(ஸ்ரவணம் கீர்த்தனம் இத்யாதிகள் அங்கும் உண்டே இதனாலே -அவ்யயம் -என்கிறான்)

(அவதார ரஹஸ்யம் -மே திவ்யம் கர்ம திவ்யம் ஜன்ம -அவனுக்கே திவ்யம் -ஸாத்யம் ஸாதனம் இரண்டுமே ஓன்று ஆனதே)
கரும்பு தின்னக் கருப்புக் கட்டி கூலியாமா போலே -அவ்யயம் -தன்னையும் உபய விபூதியையும் கொடுத்தாலும் போராது
இவன் பண்ணின உபகாரத்துக்கு -என்று இவன் பண்ணின அஞ்சலியை நினைத்து இருக்கை –
(கோவிந்த இதி யத் ஆக்ரந்தத் க்ருஷ்ணா மாம் தூரவாஸிநம்)ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே-
ந ஜாது ஹீயதே –(ஆளவந்தார் -ஒரு கை கூப்பு -அனைத்தையும் கொடுத்து வீணாகப் போகாமல் விட்டுப் பிரியாமல் இருக்குமே )

(த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||-ஶ்லோகம் 28 –

காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும், அது எல்லாப் பாபங்களையும்
அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்; அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.)

———————

செய்யும் கிரிசைகள்
பண்ணக் கடவ க்ருத்யங்கள்-
சேதனன் ஆகையாலே ப்ராப்ய சித்தி அளவும் கால ஷேபத்துக்காக இழிந்து-
அனுபவிக்கக் கடவ அனுஷ்டானம் என்றபடி –
ஆரம்பித்துத் தவிருமவை அல்ல –
பத்தும் பத்தாக செய்து அற வேணும்-மடல் போலே காட்டி விடுமதல்ல –

நாமும் –
நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் –
ப்ராப்ய ப்ராபகங்கள் அவனே என்று அறுதியிட்ட பின்பு செய்யுமவை ப்ராப்யத்தில் புகுரும் அத்தனை இறே –
இனி பேற்றுக்கு உடலாகச் செய்வது ஓன்று இல்லை —
அச்சம் உறுத்திக் கார்யம் கொள்ளப் பார்க்கிறார்கள் இறே –
(அவனை அச்சம் உறுத்தவே இந்த வார்த்தைகள் -மடல் எடுப்பதாக சொல்வது போல்வன ஓதி நாமம் குளிப்பது இத்யாதி
ஸ்ரீ மதே நாராயண நம என்றே சொல்லும் கூட்டம் -ஸ்ரீ மத் நாராயண சரண சரணம் பரபத்யே சொல்வது நமக்காகவே )
த்வரை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே -ப்ராப்ய பிரதிபத்தி பண்ணியே ப்ராபக ஸ்வீகாரம் பண்ணுகிறது –
ஆறி இருந்தான் ஆகில் பிரதிபத்தி பண்ணிற்று இலனாம் அத்தனை இறே –

அதிகாரி தான் முமுஷுவே -ஞானம் பலம் உண்டாக வேணும் –
தியாக மாத்ரத்தையே ஸ்வீகரித்து -ப்ராப்யத்திலே ருசி இன்றிக்கே தான் நினைத்த படி நடக்கில்
நாஸ்திகத்வமே பலித்து விடும் அத்தனை இறே

ஷூத்ர விஷயத்தில் பிறந்த ஸ்ரத்தை செயல் அளவும் பலியா நின்றது –
அது பகவத் விஷயத்தில் வேண்டா தன்று இறே

செய்யும் கிரிசைகள்
என்கையாலே அவனும் அவனுடையாரும் வாழும் படியாய் இருக்கை –

செய்யும் கிரிசைகள் –
விஹிதத்திலே ப்ரதிஷேதம் உள்ளது –
இச்சைக்கு விதேயத்வம் உண்டோ –
நாம் உகந்து செய்யும் க்ருத்யங்கள் –

செய்யும் கிரிசைகள்
மடல் போலே காட்டி நடுவே விடுவது அல்ல -செய்து தலைக் காட்டியே விட வேணும் –

செய்யும் கிரிசைகள் கேளீரோ உய்யுமாறு எண்ணி –
கைங்கர்யமாக -உபாசன பரமாக இல்லை –
திருக்கண்ண மங்கை ஆண்டான் -தர்சன புஷ்கரணி -நாத முனி சச் சிஷ்யர் –
நாய் -யஜமானன் -அபிமானம்–இப்படியா -பகவத் – ஸுய வியாபாரத்தை விட்டார்
அலகிட்டு தொண்டு செய்து -பரம பதம் -பெருக்கினதால் என்ன சாதனை -இரண்டையும் பாரே -அழுக்கு மனசில் –

———–

கேளீரோ –
பெண்கள் கிடாய் கிருஷ்ணன் கிடாய் என்று நிஷேதிக்கிற ஊரிலே-
இங்கனே ஒரு சேர்த்தி உண்டாவதே-
பகவத் விமுகர் கோலாஹலத்திலே கிருஷ்ண அனுபவத்துக்கு இத்தனை பேர் உண்டாவதே-என்று
அவர்கள் இந்த லாப அனுசந்தானத்தாலே சதப்தைகளாய்-இருக்கையாலே -கேளீரோ -என்கிறார்கள் –
மேய்ச்சல் தலையிலே -கிருஷ்ண சம்ஸ்லேஷம் பண்ணும் காலம் —
அசை இடுவார் உண்டோ –
இந்த நாலு நாளும் போனால் நம்மை ஒருவரை ஒருவர் சேர ஓட்டுவார்களோ

கேளீரோ-
சம்ச்ரவே மதுரம் வாக்யம்-என்னும்படியே
ஸ்ரவணம் தானே-பிரயோஜனமாய் இருக்கிற படி-
புருஷார்த்தோ அயமேவைகோ யத்தா ஸ்ரவணம் ஹரே -என்றான் இறே –
வைசம்பாயன பகவான் இடம் சிஷ்யன் ஜனமேஜயன் தனக்கு புருஷார்த்தமாக சொல்லியது –
சொல்லுகிறவர்கள் தான் ஆச்சார்ய பதம் நிர்வஹிக்கைக்காக சொல்லுகிறார்கள் அல்லர் –
கேட்கிறவர்கள் தங்களுக்கு அஞ்ஞாதமாய் கேட்கிறவர்கள் அல்லர்-
போதயந்த பரஸ்பரம் -என்று இங்கனே அல்லது போது போகாமல் இருந்த படி –

நாங்களும் வாய் படைத்த லாபம் பெற்று நீங்களும் செவி படைத்த லாபம் பெற வேண்டாவோ –

கேளீரோ
அந்ய பரத்தை இல்லாமல் கேளுங்கோள்
பகவத் விமுக கோலாஹலத்திலே தாங்கள் பகவத் அனுகூலராய்
பகவத் அனுகூலரைத் தேடி அழைக்கும் படி இத்தனை பேர் உண்டாவதே –
என்று அந்ய பரராய் இருக்க –
கேளீரோ -என்று அந்ய பரத்தையை தவிர்க்கிறார்கள்

கேளீரோ –
கிருஷ்ணனையும் நம்மையும் சேர சம்மபிப்பதே -இதொரு லாபமே -என்று இத்தைக் கொண்டாட
மேய்ச்சல் தரையிலே அசையிடாதே இத்தைக் கொள்ளுங்கோள் -என்கை –

ஸ்ரூயதாமிதி சாமந்த்ர்ய ப்ரஹ்ருஷ்டோ வாக்யமப்ரவீத் -என்று தொடங்கி-
புருஷார்த்தோய மேவைகோ யத்தகதாஸ்ரவணம் ஹரே -என்னும் அளவும்
மஹா பாரதத்தில் சபாத லக்ஷ க்ரந்தத்திலும் தர்மார்த்த காம மோக்ஷங்களைச் சொல்லி –
இவற்றில் நீ எது புருஷார்த்தமாய் இருந்தாய் -என்று வைசம்பாயன பகவான் தன் சிஷ்யனான ஜனமேஜயனைக் கேட்க
நீ பகவத் குணங்களை சொல்லி நான் கேட்க்கும் அது ஒன்றுமே புருஷார்த்தமாக நினைத்து இருந்தேன் -என்றான்

கேளீரோ
இழிந்த துறை தோறும் ஆழங்கால்-அவர்கள் கேட்க ஷமர் அல்லர் -இவள் சொல்லாது இருக்க ஷமை அல்லள்
இவள் ஆச்சார்யத்வம் ஆசைப்பட்டது அல்ல -அவர்கள் அறியாது கேட்க்கை யல்ல
போதயந்த பரஸ்பம் பண்ண –
ஸம்ஸ்ரவே மதுரம் வாக்யம் –
உங்கள் வயிறு வளர்க்க அமையுமோ என்ன சொல்லீரோ என்றார்கள் –

ஸ்ரீ நாரத பகவான் ஸ்ரீ ராமாயணத்துக்குப் போக்கு விட்டால் போலே சொல்லி அல்லது
தரிக்க ஒண்ணாதாய் இருக்கிற படி
(ஒரே கேள்விக்கு சங்க்ஷேப ராமாயணம் –32- ஸ்லோகம் அருளிச் செய்தார் அன்றோ தாம் தரிக்கைக்காக )

கேளீரோ
கேட்டாயே மட நெஞ்சே -திரு வட்டாறு பாசுரம் –
கேசவ நம்பிரானை பாட்டாய பல பாடி பழ வினை பற்று அறுத்து–
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினோமே –

கேளீரோ
வாயால் கேட்பது -காதால் கேட்பது -முன்னோர் உபதேசம் கேட்பது -மூன்றும் உண்டே

———

எங்களுக்கு எதனால் நல்லது ஆகில் சொல்லல் ஆகாதோ -என்ன-
மேல் சொல்லுகிறார்கள்-

பாற் கடலுள் பையத் துயின்ற –
பரம பதத்தில் நின்றும் ஆர்த்த ரஷணத்துக்காக-
திருப் பாற் கடல் அளவும் ஒரு பயணம் எடுத்து-
ஜகத் ரஷண சிந்தையிலே அவகாஹிதனாய்-
ஆர்த்த த்வனிக்கு செவி கொடுத்துக் கொண்டு கிடக்கிற படி

கீழே நாராயணன் -என்றார்களே –
அந்த நாராயண சப்த வாச்யனான ஸர்வேஸ்வரன் திருப் பாற் கடலிலே
ப்ரஹ்மாதிகளுடைய கூக்குரல் கேட்க்கும் படி குடில் கட்டிப் பயிர் நோக்கும் கிருஷிகனைப் போலே
தோள் தீண்டியாக வந்து கண் வளர்ந்து அருளுகிறான் என்கிறார்கள் –

மன்னு வடமதுரை மைந்தன் -என்று மேலே சொல்லப் புகுகிறார்கள் ஆகையால் –
நாராயணன் -என்பது –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் என்பதாகா நின்றார்கள் –

ஸ்ரீ பீஷ்மர் பரத்வமே பிடித்து உபபாதித்திக் கொண்டு வாரா நிற்க –
ச ஏஷ ப்ருது தீர்க்கா ஷஸ் சம்மந்தீ தே ஜனார்த்தன -என்று மூதலித்துக் காட்டினால் போலே –

அபரம் பவதோ ஜென்ம பரம் ஜென்ம விவஸ்தத-என்று அர்ஜுனனுக்குத் தானும் அருளிச் செய்தான்

திருப் பாற் கடலிலே திரு அநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே
பிராட்டியார் திருமுலைத் தடத்தாலே நெருக்கி அணைத்தாலும்
அவர்களுக்கு முகம் கொடாத படி ஜகத் ரஷண சிந்தைனையினில்
அவஹிதனாய் கண் வளர்ந்து அருளுகிறவனாய்

அத ஏவ பரம பதத்தில் நின்றும் சம்சார சேதன சம்ரஷணார்த்தம்
திருப் பாற் கடலிலே அவசர ப்ரதீஷனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகையாலே
வந்த குணாதிசயத்துக்கு ஒப்பு இல்லாதவனாய்
திரு அநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து அருளுகையால் வந்த பரபக சோபைக்கு ஒப்பு இல்லாதவனாக இருக்கிற
எம்பெருமான் உடைய திருவடிகளை ப்ரீதிக்கு போக்கு வீடாக பாடி போக்யாந்தராங்களிலே அந்வயியோம்

——–

பையத் துயின்ற –
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து-அதன் மேல் கள்ள நித்தரை கொள்கின்ற -என்னக் கடவது இறே
இவ் உறக்கத்தின் உண்மை அறிந்தவர் கள்ளம் என்று வெளி இட்டார் இறே

பையத் துயின்ற-
பிராட்டி மாரோடு போகத்துக்கு இடம் கொடாதே-
ஆராலே ஆருக்கு என்ன நலிவு வருகிறதோ என்று அதிலே-அவஹிதனாய் கொண்டு சாய்ந்தபடி

முதல் பாட்டிலே நாராயணத்வம் சொல்லி-
இப் பாட்டில் அங்கு நின்றும் திரு அவதார அர்த்தமாக-திருப் பாற் கடலிலே சாய்ந்த படியைச் சொல்லுகிறது-

ஆர்த்த நாதம் கேளாத போது காணும்-பிராட்டிமார் போகமும்
மதுரா மதுரா லாபா -என்று பிச்சேறப் பண்ணுமவள் பேச்சும் அஸஹ்யமாம் —
ஜகத் ரக்ஷணத்தில் திரு உள்ளம் பற்றின போது –

பாற் கடலுள்-பையத் துயின்ற –
கீழ் நாராயணன் -என்றது -இங்கு அவன் கிடந்த படி சொல்லுகிறது
சதா பஸ்யந்தி -என்று தன்னைப் பிரியில் வாடுமவர்களை விட்டுப் போந்து -சம்சாரிகளோடு கலக்கப் பெறாதே
நடுவே தனியே இவற்றின் ஆர்த்தி தீர்த்துக் கலக்கைக்கு உபாயம் சிந்தித்துக் கிடக்கிறபடி

பையத் துயின்ற
கர்ப்பிணிகள் வயிற்றில் பிரஜைகளுக்கு நோவு வாராமல் சாயுமா போலே அங்கு பிராட்டிமார்களும் கழகங்களுமாய்ச் செல்ல
ஆனைக்குப்பு (சதுரங்கம் )பாடுவாரைப் போலே அநாதரித்து
மஹாபலி போல்வார் நலிந்தார்கள் என்று கூப்பிடும் கால் கேட்டுக் கிடக்கை –

————

பரமன்
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே-திரு அனந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளின பின்பு-
வடிவில் பிறந்த புகரின் பெருமையைச் சொல்லுகிறது-

அன்றியே
ஜகத் ரஷண அர்த்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகையாலே-
குணத்தின் ஏற்றத்தை சொல்லிற்றாகவுமாம்-
சர்வத்தாலும் அதிகன் என்றபடி-(அதமன் -மத்யமன் -உத்தமன் -பரம உத்தமன் இதர ஸமஸ்த விலக்ஷணன் )

பரமன் –
இருந்து அருளின போதையிலும்
சாய்ந்து அருளின போது காணும் அங்க ப்ரத்யங்கங்களில் புக்கு அநுபவிக்கலாவது-
நாட்டார்க்கு மற்றப்படியே –
இங்கு கிடந்ததோர் கிடக்கை -என்றும் –
கோலம் திகழக் கிடந்தாய் என்றும் சொல்லலாம் படி இருக்கும் –
சர்வாதிகன் என்று -தோற்றுமாய்த்து கண் வளர்ந்து அருளும் போதை –அழகில் பிரசித்தி –

மயா போதித-காகம் என்று ஒரு வியாஜ்யம் இடுகிறேன் அத்தனை -என்னாலே கெட்டேன்
ஸ்ரீ மான் -கண் வளர்ந்து அருளுகிற போதை காந்தி பிராசர்யம்
ஸூக ஸூப்த -படுக்கைக்கு ஈடாய் இறே உறக்கம் இருப்பது
பரந்தப -எழுப்பிக் -கொள்ள நினைத்த காரியத்துக்கும்- உறக்கமே அமையும் கிடீர்
(போதித ஸ்ரீ மான் –துயின்ற பரமன் )

சிம்மம் உறங்கும் போதும் துஷ்ட மிருகங்கள் அணைய மாட்டாதே –

கௌசல்யா ஸூ ப்ரஜா ராம —
உண்ணப் புக்கு வாயை மறப்பாரை போலே -வந்த காரியத்தை மறந்தான் –
ஒரு திருவாட்டி பிள்ளை பெறும் படியே என்கிறான் –

படுத்த பைந் நாகணை (பெரியாழ்வார் )–

பரமன்
கிட்ட வந்து கிடக்கிற குணாதிக்யத்தாலே வந்த ஏற்றம் ஆகவுமாம்

பரமன்
சர்வாதிகன் தன்னை பரார்த்தமாக்கி வைக்கும் குணாதிகன்

பரமன் அடி பாடி-நெய்யுண்ணோம் பாலுண்ணோம் –
உண்டார்க்கு உண்ண வேணுமோ –
பாலைக் குடித்து வேப்பங்காயைத் தின்ன வேணுமோ

ஆனால் கிருஷ்ணனைச் சொல்லாதே ஷீரார்ணவ சாயியைச் சொல்லுவான் என் என்னில் –
கோப வ்ருத்தர்கள் தளும்பாமைக்காக ஒரு தேவதையின் பேரிட்டுச் சொல்லுகிறார்கள் –

வையத்து —பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் –
ஏஷ நாராயண ஸ்ரீ மன் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்யஹி ஆகாதோ மதுராம் புரிம் –
அரவத் தமளியினோடும்- அழகிய பாற் கடலோடும்

—————

அடி பாடி-
அவனுடைய ஆதிக்யத்தின் எல்லையை அனுசந்தித்தால்-
பின்னை தங்கள் தாழ்ச்சியின் எல்லையில் நிற்கும் இத்தனை இறே-
ஔசித்யத்தாலும் போக்யதையாலும் கிருஷ்ணன் திருவடிகளைப் பாடாதே-
திருப் பாற் கடலில் கண் வளர்ந்து அருளுகிறவனை பாடுவான் என் என்னில் –
இரண்டு இடமும் ஒருவனே ஆகையாலே
நோன்பு நோற்க புக்கவர்கள் கிருஷ்ணனைப் பாடா நின்றார்கள் என்று சொல்லாமைக்காக-
ஒரு தெய்வத்தின் பேரைச் சொல்லிற்றாக சொல்லுகிறார்கள்-

பாற் கடலுள் பையத் துயின்ற –
கிருஷ்ணனை அனுபவிக்கப் புகுந்து ஷீராப்தி நாதனை சொல்லுகிறது என் என்னில் –
கிருஷ்ணனைச் சொல்லி பண்டே சங்கித்து இருக்கிற இடையர்-
நமக்கு தைவம் தந்த இந்த சேர்த்தியை அழிக்கிறார்களோ-என்று பயப்பட்டு-
கிருஷ்ணனுக்கு அடியான ஷீராப்தி நாதனைச் சொல்லுகிறார்கள் –
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான்-ஷீரார்ணவ நிகேதன-நாக பர்யங்க முஸ்த்ருஜ்ய-ஹ்யாகதோ-மதுராம் புரீம் -என்னக் கடவது இறே

அடி பாடி –
மகிஷிகளோடு அல்லாதாரோடு வாசி யற-சேஷத்வம் சமானமாய் இருக்கையாலே-
திருவடிகளைப் பாடி -என்கிறார்கள்-
பள்ளி கொள்ளும் இடத்து அடி கூடிட -என்னக் கடவது இறே-
அவனுடைய வடிவழகை ப்ரீதி ப்ரேரிதைகளாய்க் கொண்டு பாடி

அடி பாடி –
பரமன் என்கிறார்களே –
அவனுடைய சேஷித்வத்தை அனுசந்தித்தால் நடுவு தங்குமவர்கள் அல்லாமை திருவடிகளில் விழுகிறார்கள்
அவன் உறக்கம் புருஷோத்தமத்வத்துக்கு ஸூ சகமானால் போலே
இவர்களும் நாரீணாம் உத்தமைகள் ஆனமைக்கு ஸூசகம் திருவடிகளைப் பாடுகை-
அவன் சேஷித்வத்துக்கு சமைந்தால் போலே இவர்கள் சேஷத்வத்துக்கு சமைந்த படி
ஸ்தநந்த்ய பிரஜை முலையிலே இறே வாய் வைப்பது -செவ்வடி செவ்வி திருக்காப்பு என்னுமவர்கள் இறே

அடி பாடி
அவன் சேஷித்வத்துக்கு சமைத்தால் போலே யாயத்து சேஷத்வத்துக்கு இவர்கள் சமைந்த படி
இத்தை அடைய (ஜகத் ரக்ஷண சிந்தை -பரார்த்தமாக செய்தவை சேஷித்வம் அனைத்தையும் )அழிக்கிறோம் -என்கை
மடலூர்ந்தால் தலைமை கிடக்கும்-ஸ்வ பாவம் மாத்திரம் அழியும் -ஆர்த்திக்கு உதவிற்றிலன் என்னில் ஸ்வரூபம் அழியும்

பாடி –
உகந்து -செய்வதே சந்தோஷம்- உபாயம் இல்லையே இதுவே பிராப்தம் -பலானுபவம் இது
பரம பதத்தில் நின்றும் சம்சார சேதன சம்ரஷணார்த்தம்–திருப் பாற் கடலிலே
அவசர ப்ரதீஷனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகையாலே
வந்த குணாதிசயத்துக்கு ஒப்பு இல்லாதவனாய்–திரு அநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து அருளுகையால் வந்த–
பரபாக சோபைக்கு ஒப்பு இல்லாதவனாக இருக்கிற
எம்பெருமான் உடைய திருவடிகளை ப்ரீதிக்கு போக்கு வீடாக–
பாடி
போக்யாந்தராங்களிலே அந்வயியோம்

அளந்த பத்ம பாதாவோ –
காண் தகு தோள் அண்ணல் –கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளன்
இப்படி பரத்வ ஸுலப்ய அனுபவம் -அடி உடன் சேர்த்து அனைத்தும்

அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லல் மற்ற ஓர் அரசும் எண்ண மாட்டேன்
வாட்டாற்றான் அடி வணங்கே–சங்கை போக்கி -விசுவாசம் பிறப்பித்து -அனைத்துக்கும் திருவடி இணைகளே –
காட்டி தன் கனை கழல் காட்டி நரகம் புகல் ஒழிந்த -சம்சாரம் நீக்கி
கைங்கர்யம் கொள்ளுவதும் திருவடியே

—-

பாடி நெய் உண்ணோம் பால் உண்ணோம் –
போக்யாந்தரங்களில் அந்வயியோம்-உண்டார்க்கு உண்ண வேண்டா விறே –
இவர்கள் உண்டார்களோ என்னில்
ஓம்-உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை -நமோ நாராயணா என்று
உன் பாதம் நண்ணா நாள் அவை பட்டினி நாளே -என்றும்
எல்லாம் கண்ணன் -என்றும்
கூறை சோறு இவை வேண்டுவது இல்லை -என்றும்
பாதேயம் புண்டரீகாஷ நாம சங்கீர்த்தன அமிர்தம் -என்றும்
வாசு தேவஸ் சர்வம் -என்றும்
இப்படி இறே ஜ்ஞானம் பிறந்தால் இருப்பது –

குடியோம் -என்னாதே உண்ணோம் -என்பான் என் என்னில்-
உண்ண என்று குடிக்கைக்கு ஜாதி பேச்சு-
ஆகை இறே நெய் உண்டான் வெண்ணெய் உண்டான் என்று கிருஷ்ணனுக்கு பேராகிறது-
முதல் தன்னிலே கிருஷ்ணன் பிறந்த பின்பு அதில் வுயுத்பத்தி இல்லாமை-
அவன் வரும் அளவும் உபவாச க்ருசைகளாய் இருக்கக் கடவோம்-
இவர்கள் தான் ஆரைக் கெடுக்க பட்டினி கிடக்கிறது என்னில்-
இவர்கள் உண்ணாது ஒழிந்தால் பட்டினி விடுவான் அவன் போலவே காணும்-
ஆகையில் இறே இவர்கள் இங்கனே சொல்லுகிறது

அடி பாடி நெய் உண்ணோம்
அடி பாடுவதுக்கு முன்பு போலே அவை தாரகமாவது
எல்லாம் கண்ணன் என்று இறே பின்னை இருப்பது –
வாஸூ தேவஸ் சர்வம் இறே -எல்லாம் அவனே என்று இருக்கையாலே
கூறை சோறு இவை வேண்டுவது இல்லை என்றார் தமப்பனார் –
இவள் அவரிலும் உள் புக்கு -இடைச்சியான முறுக்கத்தாலே-
நெய் உண்ணோம் பால் உண்ணோம் -என்கிறாள் –

அடி பாடி நெய் உண்ணோம் பால் உண்ணோம் –
உண்டார்க்கு உண்ண வேண்டாவே –
குடிக்கக் கடவது உண்ணக் கடவது -என்று அறிகிறிலள்
முதல் தன்னிலே வ்யுத்புத்தி இல்லாமையால்
இவர்கள் ஸுகுமார்யம் தான் திருவடிகளை பாடுதல் நெய்யும் பாலும் குடித்தால் போலே

நெய் உண்ணோம்
அவன் ஜீவனம் வாங்கோம் என்கிறார்கள்

நெய் உண்ணோம்
இவர்கள் ஆரைத் தான் பட்டினி கொள்ளப் பார்க்கிறது –
இவர்கள் உண்டால் பசி கெடுவது அவனுக்குப் போலே
சரீரத்துக்கு வரும் நன்மை சரீரிக்கு இறே -யஸ்யாத்மா சரீரம் –

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் –
திருவடிகளை பாடுகையாலே தெகுட்டி-இவற்றால் கார்யம் இன்றிக்கே இருக்கை –

நெய்யுண்ணோம் -என்கிறது
கிருஷ்ணன் பிறந்த பின்பு முதலிலே வ்யுத்பத்தி இல்லாமை –

நெய்யுண்ணோம் –
பாலில் சாரமான நெய்யைத் தவிர்த்தவர்கள் பாலைத் தவிர்க்க கேட்க வேணுமோ –

அடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் –
உண்டார்க்கு உண்ண வேணுமோ –
உண்ணா நாள் பசியாவது ஒன்றில்லை –
கூறை சோறு இவை வேண்டுவது இல்லை –
எல்லாம் கண்ணன் –

உண்ணோம்
என்கிற இது கிருஷ்ணன் பிறந்த பின்பு உண்ணக் கடவதோ– குடிக்கக் கடவதோ-என்று வியுதப்பத்தி இல்லாமை
இவர்கள் பர்த்தாக்கள் காம ரசம் அறியலாய்த்து இவர்கள் இது அறிவது
இவர்கள் பட்டினி அவனை பட்டினி கொள்கை இறே(ரக்ஷணமே அவனுக்கு ஊண் )
ஆண்களும் அகப்பட- ந மே ஸ்நானம் -என்னக் கடவ அவன் –(கைகேயி புத்திரனான பரதனை விட்டு குளிக்க மாட்டேன் பாஞ்ச ஜன்ய அம்சம் )
பெண்கள் மாசுடை யுடம்போடு தலையுலரி –நாச் -1–8- என்று தரிக்க வல்லனோ –

(மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப் புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு
தேசுடைத் திறலுடைக் காமதேவா நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
பேசுவது ஓன்று இங்கு உண்டு எம்பெருமான் பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் –1-8-)

———

நாட்காலே நீராடி –
அவன் வந்தால் குளிக்க இராதே-
முன்பே தத் போக போக்யமாக குளித்து விடுவோரைப் போய்-குளிக்கக் கடவோம்-
அவன் திருப் பாற் கடலிலே வந்து சாய்ந்து அருளினதை அசத் சமமாக ஆக்கக் கடவோம்-
மகிஷியானவள் ஸ்வ ரஷணத்திலே பிரவர்த்திக்கும் படியாக-இருக்கைக்காக மேற்பட-புருஷனுக்கு அவத்யம் இல்லை இறே
அதாவது தங்கள் த்வரையாலே அத்தலையில் உபாய பாவத்தை அழிக்கிறார்கள்
ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஒளி மா மலர்ப் பாத-நாளும் பணிவோம் நமக்கே நலம் ஆதலில் -என்கிறார்கள்
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே விரஹ தாபம் ஆறுகைக்காக
நோன்பு -என்கிற வியாஜ்யத்தை இட்டு குளிக்கத் தேடுகிறார்கள் இறே
அத்யந்த சுக சம வ்ருத்தஸ் ஸூகுமாரஸ் ஸூ கோசித கதந்வ-பாராத்ரே ஷூ சரயூமவ காஹதே -என்கிறபடியே-

ஆக நீராடி மூன்று அர்த்தம்-
போகார்தம்-
சாதனமாக-
விரஹ தாபம் தீர–

நாட் காலே நீராடி
ப்ரஹ்ம முஹூர்த்தத்திலே குளிக்கக் கடவோம் –
அவன் திருப் பாற் கடலிலே கிடந்த கிடக்கை என்னாச்சு தான் –
மஹிஷியானவள் குளித்து விரல் முடக்குமதில் காட்டிலும் மடல் உண்டோ –
ஓதி நாமம் –
அவனை அழிப்பார் வார்த்தைகள் இறே

நாட் காலே நீராடி –
அதிலே அவனை பிற்பாடானாக ஆக்கக் கடவோம் –
(அமரர்க்கு முன் செல்வான்
இதில் அவனை பிற்பாடு ஆக்குவோம் )

நமே ஸ்நானம் -பர்த்தாவின் அசந்நிதியிலே குளிக்க இறாய்க்கும் பார்யைப் போலே –
(பரதன் இல்லாமல் குளிக்க இறாய்க்கும் ராமனுக்கு இது த்ருஷ்டாந்தம் )
வஸ்திராண்யா பரணா நிச-உடம்பு தானே மிகையாய் இருக்க –
அதுக்கு மேலே அந்தரமானவற்றைச் செய்யவோ
உடம்பினால் குறைவிலமே என்று ஆகாதே இருக்கிறது

தம்விநா -குளிப்பார்க்கு பிரதான உபகரணம் வேண்டாவோ
கைகயீ புத்ரம் -நடுவில் ஆய்ச்சி பிள்ளையை நலிந்தாள் என்னா நாமும் அவனை நலியவோ
கைகயீ புத்ரம் -ரிஷிகளோடே சம்பாஷிக்கவும் -அவர்கள் விரோதிகளை போக்கவும் -அத்தால் வந்த புகழும்
அவளால் வந்தது அன்றோ -அவள் பெற்ற பிள்ளை அன்றோ –
பரதம் -அவள் சம்பந்தம் மிகை என்னும் படி அன்றோ அவன் தன் படி
தர்ம சாரிணம்-நம்மை பிரிந்தால் அவன் இருக்கும் படி இருந்தால் –
அவனைப் பிரிந்தால் நாம் இருக்கும் படி இருக்க வேண்டாவோ
இப்படி சேஷ பூதர் அசந்நிதிகளிலே சேஷிகள் குளிக்க இறாய்ப்பர்கள் இறே –
அத்தைப் பொய்யாக்கி அவனை ஒழிய நாங்கள் குளிக்கக் கடவோம் என்கிறார்கள்

நாட் காலே நீராடி
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே -அத்யந்த ஸூக சம்வ்ருத்த -இத்யாதி
சேதே சீதே மஹீதலே பரதஸ்ய வதே தோஷம் என்றவன் வார்த்தை -இறே –
அநு கூலன் என்று அறிந்தவாறே நாம் தழை முறித்திட்டாகிலும் கிடப்புதோம்-
அவன் தறைக் கிடை கிடக்கிறான் என்கிறார் –

நாட்காலே நீராடி
ப்ராதஸ் ஸ்நானத்தைப் பண்ணி-இத்தால் கர்ம யோகத்தை உப லஷிக்கிறது
இத்தால்
தத் தத் வர்ணாஸ்ரம உசிதமான ஸ்நானாதி நித்ய கர்மங்கள்- இவ்வதிகாரிக்கு யாதாவத அனுஷ்டேயம் என்றது ஆய்த்து-

பாடி -என்ற இது-பாடக் கடவோம் என்றபடி-
நீராடி -என்றது நீராடக் கடவோம் என்றபடி
தத்து கர்மசமாசரேத் என்று இவ்வதிகாரிக்கு-அநபிசம்ஹித பலமான கர்மம் அநுஷ்டேயம் என்றது இறே –

ப்ராஹ்மே முஹுர்த்தே -இத்யாதி படியே ராம விரஹத்தாலே பிறந்த வெக்கையை ஆற்றுகைக்காக
ஸ்ரீ பரத ஆழ்வான் நீராட்டுப் போலே
கிருஷ்ணம் விரஹம் தின்ற உடம்பை நீரிலே தோய்க்க வென்கிறார்கள் –
சாத்விக அக்ரேஸர் எழுந்து இருக்குமா போலே எழுந்து இருக்கை –

நாம் முற்பட்டு அவன் மநோ ரதத்தை அசத் கல்பம் ஆக்குவோம்
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே விரஹ தாபம் தீர –

———–

மை இட்டு எழுதோம் –
முதலிலே மைய கண்ணாள் இறே-
இனி அஞ்சனம் இடுவதும் மங்களார்த்தமாக விறே
அது தவிரக் கடவோம் என்கையாலே அவனுக்கு அவகாச பிரதானம் பண்ணக் கடவோம் அல்லோம் என்கிறார்கள் –
இவர்கள் அஞ்சனம் எழுதப் புக்கால் குறையும் தலைக் கட்டுவான் அவனே இறே
பரிபூர்ண விஷயத்தில் இப்படி அவகாச பிரதானம் பண்ணப் பெறாத அன்று-கிஞ்சித் கரித்ததாக விரகு இல்லை இறே-
அவனும் பரம பிரணயியாகையாலே -இங்கே கிஞ்சித் கரித்து-ஸ்வரூபம் பெற வேணும் என்று இருக்கும் –

மை இட்டு எழுதும் –
மைய கண்ணாள் இறே -இனி அது தனக்கு நிறம் கொடுக்கை இறே உள்ளது –
அவனைக் கெடுக்கிறாள் காணும் –
(அவனுக்கு விருப்பமானது இது அன்றோ -அபிமதம் கொடுக்காமல் கெடுக்கப் பார்க்கிறார்கள் )
இவர்கள் தொடங்கினால் இறே அவன் குறையும் கற்ப்பிப்பது-
(ஆசை -இச்சை ஒன்றே வேண்டுவது -இசைவித்து தனது தாளிணை வைத்து மகிழ்பவன் அவனே )
அவன் கிஞ்சித் காரத்துக்கு அவகாச பிரதானம் பண்ணோம் என்கிறார்கள் –
சேஷிக்கு கிஞ்சித் கரியாத போது சேஷத்வம் இல்லை —
அவன் நிரபேஷன் ஆகையால் கிஞ்சித் காரத்துக்கு இடம் இல்லை
இவன் ஸ்வரூப லாபத்துக்காகவே அவன் சாபேஷரைப் போலே இவர்கள் கிஞ்சித்காரம் கொள்ளக் கடவன்
இவன் சேஷத்வம் தன்னுடைய சேஷித்வத்திலே சேருகையாலே இது ஸ்வரூப அந்தர்கதம்-

மையிட்டு எழுதோம் –
மை கண்ணுக்கு பிரகாசம் ஆகையால் ஆத்ம யாதாம்யா பிரகாசகமான
ஞான யோகத்தில் அந்வயிக்கக் கடவோம் அல்லோம் –

மை இட்டு எழுதோம் –
அஸி தேக்ஷணைகளாகையாலே வேண்டுவது இல்லை –
அஞ்சன பர்வதத்தின் அந்தராத்மாவைப் பிடித்தாய்த்துக் கொள்ளீர் இவள் மை எழுதுவது –

(பக்தி சித்தாஞ்சனமே -கண்ணனையே பூசிக் கொண்டவர்கள் அன்றோ –
அஞ்சன-மைப்படி மேனி -அந்தராத்மா -ஸ்வரூபத்தையே கைக் கொண்டவர்கள் அன்றோ )

மை இட்டு எழுதோம்
மைய கண்ணாள் ஆகையால் மங்களார்த்தமாக இடுமத்தனை –
எம்பெருமான் பூர்ணனாய் இருந்து வைத்து இவற்றின் சத்தை (சேஷ பூதர் சத்தைக்கும் சேஷ உபகரண சத்தைக்கும் )யுண்டாக்கைக்காக அடிமை கொள்ளுமா போலே
இவர்களும் அவன் சத்தைக்காக அடிமை செய்வர்கள் –
இப்போது அது செய்யோம் -அவனைத் துடிப்பிக்கிறோம் என்று கருத்து –

————-

மலரிட்டு நாம் முடியோம் –
சுரும்பார் குழல் கோதை -என்றும்-
வாசம் செய் பூம் குழலாள் -என்றும் இறே இருப்பது
இனி பூவுக்கும் தான் நாற்றம் கொடுக்கைக்காக வாய்த்து பூ முடிப்பது –
அது செய்யக் கடவோம் அல்லோம் என்கை –

நாம் முடியோம் –
அவன் தான் மாலையைக் கொடு வந்து-மயிரை முடித்து அலங்கரித்து-விரல் கவ்வி-
இது வாங்காது ஒழிய வேணும் -என்னுமாகில் செய்யலாவது இல்லை-
அவன் தீம்பாலே செய்யுமத்தை நம்மால் செய்யலாவது இல்லை –
நாமாக செய்யாது ஒழியும் இத்தனை இறே வேண்டுவது-
அவன் உகந்த விஷயத்தில் இப்படி அலங்கரித்தது உண்டோ என்னில்
அத்ரோ பவிஸ்ய சாதேன காபி புஷ்பை ரலங்க்ருதா-அந்ய ஜன்மனி சர்வாத் மா விஷ்ணு ரப்யர்ச்சி தோயயா-என்னக் கடவது இறே

மலரிட்டு நாம் முடியோம் –
சுரும்பார் குழல் கோதை இறே –
அப்போது அலர்ந்த செவ்விப் பூவினின்றும் வண்டுகள் கால் வாங்கி
இவள் குழலிலே படியும் படி இறே திருக் குழலில் செவ்வி இருப்பது –
தான் மாலை சூட என்று தொடங்கினால் -குறையும் அவன் வந்து சூட்டி அலங்கரிக்கும் இறே –
அதுக்கு அவனுக்கு அவகாசம் வையோம் என்கை –

நாம் முடியோம் –
அவன் தானே வந்து சூட்டில் செய்யலாவது இல்லையே

மலரிட்டு நாம் முடியோம்
பூச் சூடுகை போக ரூபமாகையாலே -மலரிட்டு நாம் முடியோம் என்று
பகவத் அனுபவ ரூபமான பக்தி யோகத்தில் அந்வயிக்கக் கடவோம் அல்லோம் -என்கிறது –

நாம் முடியோம் –
நாமாய் பகவத பிராப்தி சாதனங்களாக ஞான யோக பக்தி யோகங்கள் இரண்டிலும் அந்வயியாது ஒழிகையே வேண்டுவது
அவன் தானே இவ்வாத்மா வஸ்துவை அனுபவிக்கும் போது-ஞான பக்திகள் இரண்டையும் கொடுத்து –
இவற்றை நீ தவிராது ஒழிய வேணும் என்று நிர்பந்திக்கும் போது-நம்மால் செய்யலாவது ஓன்று இல்லை இறே
நாமாய் அனுஷ்டிக்கிற போதும் அவன் கொடுக்க நாம் பரிக்ரஹியாத போதும் ஸ்வ ஸ்தவாந்தர்யம் குலையாமையாலே –
அது குலைக்கைக்காக நாமாய் அனுஷ்டியாது ஒழிகையும் வேணும் –
அவன் தர நாம் பரிக்ரஹிக்கையும் வேணும் –

மலரிட்டு நாம் முடியோம்
மாலை முடியோம் –
பறப்பதின் குட்டி தவளுமோ
சூடிக் களைந்தன சூடுவார்கள் இறே –
மாலா காரர் மகள் இறே
(நாமாகவே முடியோம் -அவன் சூட்ட வந்தால் முடிந்து கொள்வோம் என்றுமாம் )

மலரிட்டு நாம் முடியோம்-
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்த சூடும் இத்தொண்டர்களோம்-என்னுமவர்கள் ஆகையால்
சேஷத்வம் இவர்களுக்கு ஸ்வரூபம்

நாம் முடியோம்
அவன் சூடி -கட்டி ஒப்பிக்கில் இவர்களுக்கு செய்யலாவது இல்லை –
ப்ருந்தா வனத்தே கொடு புக்கு மாலையைச் சூடி ஆணையிட்டு விரல் கவ்வி –
கொண்டையை அவிழாதே கொள்-என்னில் செய்யலாவது இல்லை –
நமக்கு அபேக்ஷை இல்லாமையால் புருஷார்த்தம் அன்று -அவன் தீம்பாலே செய்யில் செய்யும் அத்தனை –

———–

செய்யாதன செய்யோம்
விதி உண்டாகிலும் பூர்வர்கள் ஆசரித்ததற்கு மேற்பட-ஆசசரிக்க கடவோம் அல்லோம்
அதாகிறது –
ஸூஹ்ருதம் சர்வ பூதாநாம் -என்று
அவன் சர்வ பூத ஸூ ஹ்ருத்தாக இருந்தானே யாகிலும்-
ததீயரை முன்னிட்டுக் கொண்டு அல்லது அவனைக் கிட்டக் கடவோம் அல்லோம் என்கை –

பெண்களில் முற்பட உணர்ந்தார் ஒருவரை ஒருவர் எழுப்பி-எல்லாரும் கூடி அல்லது
கிருஷ்ணனைக் கிட்டக் கடவோம் அல்லோம் -என்கை

நிவேதயதாம் மாம் ஷிப்ரம் -என்றும்
பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய ப்ரசத் -என்றும்-இவை இறே பிரமாணங்கள்

ஸ்ரீ பரத ஆழ்வானை முடி சூட சொன்ன இடத்திலும்-சர்வ பிரகாரத்தாலும் யோக்யதை உண்டாய் இருக்க-
இக் குடியில் இதுக்கு முன்பு செய்யாதன நான் செய்ய மாட்டேன் -என்றான் இறே

செய்யாதன செய்யோம் –
வசன சித்தமே யாகிலும் பூர்வர்கள் அனுஷ்டானமே ஒழிய வேறு செய்யக் கடவோம் அல்லோம் –
ப்ரசக்த்துக்கு இறே ப்ரதிஷேதம்(வாசனை இருந்தால் தானே தடுக்க வேண்டும் ) உள்ளது –
இது இப்போது என் என்னில் ஸ்வரூப கதனம்-

ஆழ்வான் -எங்கள் பூர்வர்கள் தேவதாந்த்ர பஜனம் பண்ணாமையாலே என்றானாம் –
பிரதிபுத்தா நசே வந்தே இறே

ப்ராப்ய ப்ராபகங்கள் அவனே யாகிலும்
அநாத்ம குணங்கள் தவிருகையும்
ஆத்ம குணங்கள் உண்டாகையும் தவிராதே -சேதனன் ஆகையால் –

சர்வ பூதாத்ம கேதாத-கார்ய காரணங்களினுடைய அநந்யத்வத்தைச் சொல்லுகிறது
ஜெகன்நாதே-ஜகத்துக்கும் அவனுக்கும் சம்பந்தம் -சேஷ சேஷி பாவத்தால் என்கிறது –
ஜெகன் மயே -சரீர சரீரீ பாவத்தால் இஸ் சம்பந்தம் என்கிறது –
பரமாத்மனி-இவற்றுக்கு தானே வியாபகனானால் போலே தனக்கு வியாபகாந்தரம் இல்லை என்கிறது
கோவிந்த்தே – – இவ் வைச்வர்யத்தைக் கொண்டு -கடக்க இராதே கிட்ட நிற்குமவன் -என்கிறது
மித்ர அமித்ர கதா குத-சம்பந்தம் இதுவான பின்பு மித்ரத்வ மித்ரத்வ பிரதிசம்பந்தியான அமித்ரத்வமும் இல்லை என்கிறது –

முக்தனுக்கு ததீய ஆகாரத்துவத்தாலே லீலா விபூதி உத்தேச்யம் ஆகா நிற்கச் செய்தே த்யாஜ்யமும் ஆகிறது இறே –
விபூதி மாத்திரமே உத்தேச்யமாம் அன்று –
அவனுக்கு தனுபூதரான ப்ரஹ்மாதிகளோடு ஓக்க நீராய் நிலனாய் என்கிறதுவும் உத்தேச்யமாம் இறே
இவை ஆஸ்ரயணீயம் ஆனாலும் ஈஸ்வர அபிமானிகள் த்யாஜ்யர் இறே
அக்னி ஹோத்ர அக்னிக்கும் ச்மசா அக்னிக்கும் அக்னி சாம்யம் உண்டாய் இருக்கச் செய்தும்
விதி தந்ரங்களிலே ஓன்று நிஷித்தமாகவும் ஓன்று சுத்தமாகவும் சொல்லா நின்றது இறே

இப்படி பூர்வர்கள் அனுஷ்டானமும் உண்டு இறே –
ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் -என்கிறபடியே பிராப்தி உண்டாகிலும்
ஒருவர் ஒருவரை எழுப்பி எல்லாரும் திரள வல்லது அவன் முன்பு நிற்க்க கடவோம் அல்லோம் –
நாம் தனியே சென்று நிற்கில் வைரூப்பிய அவஹமாம் –
(விரூப்யை ஆக வாய்ப்பு -சூர்ப்பணகை தனியே சென்று பட்ட பாடு அறிவோம் )

செய்யாதன செய்யோம் –
சர்வாத்மான அபர்ய நுநீயமாக -என்ற இளைய பெருமாளை போலேயும்
சக்கரவர்த்தியும் பெருமாளும் கொடுக்கையாலே
ராஜ்ஜியம் பண்ணுகை சாஸ்த்ரார்த்தமாக இருக்க
இவ் வம்சத்தில் முறை தப்புவார் இல்லை என்று ஸ்ரீ பரதாழ்வான் முடிக்கு இறாய்த்தால் போலேயும்

செய்யாதன செய்யோம் –
பிரமாணம் உண்டே யாகிலும் பூர்வாச்சார்யர்கள் அனுஷ்டியாத வற்றை அனுஷ்ட்டிக்கக் கடவோம் அல்லோம்
அதாவது
எம்பெருமான் வாத்சல்யாதி குண விசிஷ்டனே யாகிலும்
ததீயரை முன்னிட்டு அல்லது அவனைப் பற்றக் கடவோம் அல்லோம் –

செய்யாதன செய்யோம்
விதி யுண்டே யாகிலும் பூர்வர்கள் ஆசரித்த படியை ஒழிய செய்யக் கடவோம் அல்லோம்
முடி சூடுகை சிஷ்டாசாரம் அல்ல என்று இருந்த ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே
பஞ்ச லக்ஷம் குடியிலே உள்ள பெண்களிலே
ஒருத்தி குறையிலும் கிருஷ்ணன் பக்கல் போகோம் என்கிறார்கள் –
(போவான் போகின்றாரைக் காத்து உன்னைக் கூவுவான் வந்தோம் என்பவர்கள் அன்றோ )

செய்யாதன செய்யோம் –
முன்பு அநீதிகள் செய்து இப்போது தவிர்க்கிறோம் என்கிறார்கள் அல்லர் –
ஸ்ரீ பரத ஆழ்வான் முடி சூடுகைக்கு எல்லாப் படியாலும் வழக்குண்டாய் இருக்க
இக் குடியில் செய்து போராதது செய்யேன் -என்றால் போலே பூர்வர்கள் செய்யாதனகள் தவிருகை –

ஆழ்வானை தேவரீர் தேவதாந்த்ர பஜநம் பண்ணாது ஒழிகிறது என் என்ன –
எங்கள் பூர்வர்கள் செய்து போந்திலர்கள் என்றார்
இவர்களுக்கு இவை யல்ல பொருள்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் முன்னிலையாக அல்லது எம்பெருமானைப் பாடப் புகோம் -என்று இருக்கை
நிவேதியத மாம் க்ஷிப்ரம்
பிதாமஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத
ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் ஸ்ரீ பரத ஆழ்வான் முன்னாகத் திருச் சித்ர கூட பர்யந்ததுக்கு போனால் போலே

———-

தீக் குறளை சென்றோதோம்
பிறர்க்கு அநர்த்தரவஹமாக பொய் சொல்லக் கடவோம் அல்லோம்-
பிராட்டி பெருமான் பக்கல் ஏகாந்தத்திலும் ஏகாஷி ஏக கர்ணிகள்-நலிந்தபடி சொல்லிற்றாக வில்லையே ஸ்ரீ ராமாயணத்தில்-

நம்மில் நாம்-
நப்பின்னை நங்காய் -என்றும்-
நாயகப் பெண் பிள்ளாய் -என்றும் –
நிர்வாஹகையாக இருந்த படி இதுவோ -என்று வெறுத்து சொன்ன வார்த்தை –
பேய்ப் பெண்ணே -என்றும்-ஒருவருக்கு ஒருவர் இட்டீடு கொண்டு சொன்னவை
கிருஷ்ணன் செவிப் படுத்த கடவோம் அல்லோம்

பத்து மாசம் சுற்றி இருந்து ராக்ஷஸிகள் பண்ணின தர்ஜன பத்சநா திகளை ஏகாந்தத்திலும்-
பெருமாளுக்கு விண்ணப்பம் செய்யாத பிராட்டியைப் போலே –

சென்று ஓதோம்
அவன் தான் கலந்து நின்று அறியுமாகில் செய்யலாவது இல்லை –

சென்று ஓதோம் –
பிறர் செய்யுமவை அறிவிக்கச் சென்றாலும் அவன் முகத்தில் தண்ணளி கண்டால் அறிவிக்க ஒண்ணாத படி இருக்குமே
சச நித்யம் ப்ரசாந்த்தாத்மா -என்று இறே இருப்பது –

தீக் குறளைச் சென்றோதோம்-
பரா நர்த்தாவஹமான பொய் சொல்லக் கடவோம் அல்லோம்-

தீக்குறளை சென்று ஓதோம்
பிராட்டி ராக்ஷஸிகள் செய்த தப்பு திருவடிக்கு அருளிச் செய்யாதே மறைத்தால் போலே
தம்மில் தாம் ப்ரணய ரோஷத்தாலே
ஏதேனும் தப்புப் புகுந்தாலும் எம்பெருமானுக்கு அறிவியாமை

சென்று ஓதோம்
கண்ணால் கண்டது நெஞ்சோடு கூட்டோம் -அந்தர்யாமி இறே
நினைக்கை யாவது அவனுக்குச் சொல்லுகை
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறியுமவன் இறே

(நினைக்கவே கூடாதே -இதனால் தான் பாகவத அபசாரம் குரூரம் என்கிறார் )

தீக்குறளை சென்று ஓதோம்
நம்மில் நாம் பேய்ப் பெண்ணே என்று சொன்னமே யாகிலும்
கிருஷ்ணன் செவி கேட்க ஒரு குறை சொல்லோம்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் தோஷம் கண்டால் கண்டது நெஞ்சோடு கூட்டோம் என்கிறார்கள்
நெஞ்சோடு கூட்டுகையாவது -அவனுக்குச் சொல்லுகை
என் நெஞ்சகம் கோயில் கொண்ட -(பெரிய திரு மொழி -9-5-10 )-இறே
அந்தர்யாமி -இறே
என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -(திருவாய் -10-8-6 )-இறே
ஆகையால் நெஞ்சோடு கூட்டோம் என்கிறார்கள் –

———

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி –
ஐயம் ஆவது யோக்ய விஷயத்திலே குருவாக வ்யவிக்குமது-
பிச்சை யாகிறது-ப்ரஹ்மசாரிகளுக்கும் சந்யாசிகளுக்கும் இடுமது-

இங்கு கிருஷ்ண அனுபவம் பண்ணுவோம் -என்பாருக்கு அவனை அனுபவிப்பித்தும்-
ததீயரை அனுபவிப்போம் என்பாருக்கு அவர்களை அனுபவிப்பித்தும் போரக் கடவோம் –

ஆந்தனையும் –
அவர்கள் கொள்ள வல்ல ராந்தனையும்-அர்த்திகள் ஆமளவும்-கை காட்டி
சர்வத்தையும் கொடுத்தான்-ஒன்றும் செய்யப் பெற்றிலோம் -என்று இருக்கை
இவர்களை கிருஷ்ண அனுபவம் பண்ணி வைத்தும் இவர்கள் திறத்தில்
ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று இருக்கையை சொல்லுகிறது
அதவா
ஐயம் ஆகிறது -ஈஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குண விஷய ஜ்ஞானம்
பிச்சை யாகிறது -ஆத்ம ஸ்வரூப மாத்ர ஜ்ஞானம்
இவற்றைத் தனக்கு உள்ளளவும் உபதேசிக்கை என்றுமாம் –

கை காட்டி-
இப்படி ஞான உபகாரகன் ஆனாலும் அவ் உபகாரம் தன் நெஞ்சிலே தட்டாது இருக்கை

ஐயமும் பிச்சையும்
ப்ராப்த காலங்களில்
ஆர்த்தரையும்
யோக்யரையும் பார்த்து இடுமவை

ஆந்தனையும்
அவர்கள் கொள்ள வல்லராந்தனையும் கொடுத்து

கை காட்டி
எல்லாம் கொடுத்தாலும் கொடுத்தது உண்டோ என்று இருக்கை –
அதாவது –
ஒருவரை ஒருவர் எழுப்புகையும் –
அவர்களுக்கு சர்வ ஸ்வதானமாக தங்களைக் கொடுக்கையும்
எல்லாரையும் கொண்டு போகையும்-
கிருஷ்ண அனுபவம் பண்ணி வைகையும் இவை எல்லாம் செய்தாலும்
ஒன்றையும் செய்யப் பெற்றிலோம் என்று இருக்கையும் –

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
பகவத் வைபவத்தையும் பாகவத வைபவத்தையும் தாம் அறிந்த அளவும் உபதேசித்து –
நாம் ஒன்றும் உபதேசித்திலோம் -என்று தம் கார்ப்பண்யத்தை அனுசந்தித்து –
ஆர்த்திகள் உள்ள அளவும் உபதேசிக்கக் கடவோம்

ஐயமும் பிச்சையும் –
முகந்து இடுகையும் பிடித்து இடுகையும்
ஐயமாவது யோக்கியருக்கு இடுமது
பிச்சையாவது சன்யாசிகளுக்கு இடுமது
(பாகவத வைபவம் சொல்வதும் பகவத் வைபவம் சொல்வதும் என்றுமாம் )

ஆந்தனையும் –
கொள்வாரைப் பெருந்தனையும் -கொடுக்கக் கொள்ளுவார் கொள்ள வல்லார் ஆந்தனையும்

கை காட்டி
எல்லாம் கொடுத்தாலும் -நாம் கொடுத்தது உண்டோ -என்று அத்தை அநாதரிக்கை –
ஓவ்தார்யத்தின் மிகுதி இருக்கிறபடி

ஐயமும் பிச்சையும்
ஐயம் யோக்யற்கு குருவாகக் கொடுக்குமவை
பிச்சை -சன்யாசிகளுக்கும் ப்ரஹ்மசாரிகளுக்கும் இடுவது

ஆந்தனையும்
அவர்கள் கொள்ள வல்லார் ஆந்தனையும்

கை காட்டி
ஒன்றும் செய்ததாய் இராமை

பகவானை காட்டினார் எம்பெருமானார் —
கரண்ட மாடு பொய்கை -புஷ்கரணி -திருக்குறுங்குடி —குறிய மாண் உருவாய் –வைஷ்ணவ நம்பி –
இவரை காட்டிக் கொடுக்க–ஐயமும் பிச்சையும் -கை காட்டி –
திரிபுரா தேவி -ஈசான முல்லையில் கை காட்டில்–கையில் கனி என்ன கண்ணனை காட்டி தரிலும்–
தன் சரண் அது தந்திலன் தான் அது தந்து –
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்து ப்ரஹ்மானுபவம் செய்த நம் ஸ்வாமி –
அடி பாதுகை -அந்தரங்க சிஷ்யர்களை -குரு பரம்பரை அனுசந்தானம் பூர்வகமாகவே அனைத்தும்

சர்வத்தையும் கொடுத்தான்-ஒன்றும் செய்யப் பெற்றிலோம் -என்று இருக்கை
இவர்களை கிருஷ்ண அனுபவம் பண்ணி வைத்தும் இவர்கள் திறத்தில்–
ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று இருக்கையை சொல்லுகிறது

———

உய்யுமாறு எண்ணி
இதப் பிரகாரங்களினாலே உஜ்ஜீவிக்கும் படிகளை எண்ணி –
பகவத் விஷயத்தில் உள் புக்க அன்று இறே இவன் உஜ்ஜீவித்தான் ஆகிறது –
அது இல்லாத போது-அசந்நேவ-இறே

எண்ணி உகந்து –
மநோ ரத வேளையே தொடங்கி ரசிக்கிற படி
ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் -என்கிறபடியே
ஸ்மர்த்தவ்ய விஷயத்தின் ரஸ்யதையாலே ஸ்ம்ருதி வேளையே தொடங்கி ரசிக்கும் இறே

எண்ணி உகந்து –செய்யும் கிரிசைகள் கேளீரோ -என்று அந்வயம்

உய்யுமாறு எண்ணி –
அசன்னேவ ச பவதி -என்று இறே முன்பு கிடந்தது –
சந்த மேனம் ததோ வித்து என்கிறபடி யாகை

எண்ணி உகந்து
மநோ ரதமே பிடித்து நித்தியா நிற்கும் போலே –
நின் புகழ் இத்யாதி (பெரிய திருவந்தாதி )-உன்னுடைய கல்யாண குணங்களை அநுஸந்திக்கும்
அனுசந்தானத்தோடு ஒக்குமோ நீ போரப் பொலியக் கொடுக்கும் பரம பதம்
மாலே படிச் சோதி மாற்றேல் இனி –மறப்பின்மை யான் வேண்டும் மாடு –
உகந்து செய்யும் கிரிசைகள் கேளீர் -என்கிறார்கள் –
விதி பூர்வகமாகச் செய்கை அன்றிக்கே ப்ரீதி பூர்வகமாகச் செய்கை –

(உய்யுமாறு எண்ணி உகந்து –உத்தர வாக்கியம் -இது முன்னாக வைத்து
செய்யும் கிரிசைகள் -பூர்வ வாக்கியம் -இது அன்றோ இவர்கள் நிஷ்டை
எம்பெருமானார் -உபேயத்திலே எப்பொழுதும் கண் வைத்து
உபாயத்தில் ஸக்ருத் தானே –
கரு முகை மாலையை சும்மாடு ஆக்குகிறோம் அன்றோ )

உய்யுமாறு
சந்தமேநம் -என்று உஜ்ஜீவிக்கக் கடவர்கள்-
கைங்கர்யம் என்றால் உஜ்ஜீவிக்கச் சொல்ல வேணுமோ

(ப்ரஹ்மம் அஸ்தி சத்தாக ஜீவனம் -உள்ளவராக அறிந்த பின்பு கைங்கர்யம் செய்வதே அதுக்கும் மேல் உஜ்ஜீவனம்)

எண்ணி உகந்து-
நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அவர்க்கு வைகுந்தம் என்று
அருளும் வான் -என்று மநோரத மாத்திரமே இனி தாம் விஷயம்

உய்யுமாறு எண்ணி உகக்கை யாகிறது –
தொட்டு உதைத்து நலியேல் கண்டாய் -என்றும். குருந்திடைக் கூறை பணியாய் – என்று
தாங்களும் அவனும் இட்டீடு கொள்ளும் படியை மநோ ரதிக்கை

உய்யுமாறு எண்ணி –
இப்படிகளாலே பிழைக்கும் விரகு எண்ணி

உகந்து
ப்ரீதைகளாய்

எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்
அனுபவிக்கும் படியை மநோ ரதித்து

உகந்து செய்யும் கிரிசைகள் கேளீரோ என்று அந்வயம் –

உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்
ஏவம் பிரகாரேண உஜ்ஜீவிக்கும் படி உகந்து செய்யும் கிரிசைகள் கேளீரோ -என்று அந்வயம்

ஏல் ஓர் எம்பாவாய் -பாதத்தைப் பூரித்துக் கிடக்கிறது-

உய்யுமாறு எண்ணி
இந்தப் பிரகாரங்களினாலே உஜ்ஜீவிக்கும் படிகளை எண்ணி —
பகவத் விஷயத்தில் உள் புக்க அன்று இறே இவன் உஜ்ஜீவித்தான் ஆகிறது –
அது இல்லாத போது-அசந்நேவ-இறே-

ஆறு கேள்விகளில் பதில் சொல்லவே ஸ்ரீ மத் பாகவதம்
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் -த்வயம் ஷட் பதம் –
ஸ்ரீ ராமாயணம் ஆறு காண்டங்கள் –
ஆறி இருக்க வேண்டும் -சாஸ்த்ர சாரம் –
உய்யுமாறு ஆறு வார்த்தைகள் -திருக் கச்சி நம்பி–எம்பெருமானார் ஆறு வார்த்தை -என்னவுமாம் –

உய்யுமாறு எண்ணி -ஆறு வழி -ஆறு வார்த்தை த்வயம் எண்ணி -கீழே மூல மந்த்ரம் -இதில் த்வயம் –
ஸ்ரீ ஆறு வ்யுத்பத்தியையும் எண்ணி

ஆறு ஐந்துகள் -ஐ ஐந்தும் ஐந்தும் அன்றோ

ஐ ஐந்தும் ஐந்தும்
ஆறும்
முதல் ஐந்து -பர வ்யூஹ வைபவம் அர்ச்சை அந்தர்யாமி ஐந்தையும்
இரண்டாவது -ஐந்து -அவதார ஐந்து –
மூன்றாவது ஐந்து -அர்த்த பஞ்சகம்
நாலாவது ஐந்து -சரணாகதிக்கு பஞ்ச அங்கங்கள்
ஐந்தாவது ஐந்து -பஞ்ச கால பராயணர் -அதி கமனாதிகள் ஆக கால பஞ்சகம் –
ஆறாவது ஐந்து -பாகவத ஸ்வரூப பஞ்சகம் -சாமன்யக் நிர்வேதத்தி வைராக்யா அபராத பீரு பக்தி பரவச ப்ரீதி யோகியர்
பகவத் கீதையில் ஏற்றம் பகவதீ கீதைக்கு ஏற்றம் -அது அர்ஜுனனுக்கு இது கிருஷ்ணனுக்கு அன்றோ உபதேசம் –

செய்ய வேண்டிய ஆறும் -செய்யக் கூடாத ஆறும் –
ஷாட் குணங்களும் பிரகாசிக்கும் ஆறு -என்பதால் –

உய்யுமாறு எண்ணி–ஆறு வார்த்தைகள்–என்னவுமாம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் அருளிச் செய்யும் படி –
1-வதுவை வார்த்தை –வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் -திருவாய் -5-10-2-
2–நெய்யுண் வார்த்தை -நெய்யுண் வார்த்தையுள் உன்னைக் கோல் கொள்ள -5-10-3-
3-வெண்ணெய் வார்த்தை -ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் உண்ட அழு கூத்தப்பன் -6-2-11-
4-நடந்த வார்த்தை -தேசம் அறிய ஒரு சாரதியாய் சென்று சேனையை நாம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை -7-5-9-
5-மெய்ம்மைப் பெரு வார்த்தை -செம்மை யுடைய திருவரங்கர் தாம் பனித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை -நாச் -11-10-
6-கஞ்சன் விடுத்தான் என்பதோர் வார்த்தை -கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் கருநிறச் செம்மயிர்ப் பேயை
வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டு -பெரியாழ்வார் -2-8-6-

உய்யுமாறு ஆறு –
கண்கள் சிவந்து -8-8-ப்ரணவார்த்தம்
நமஸ் சாப்த்தமான அர்த்தம் -கரு மாணிக்க மலை -8-9-
ஆர்த்தமான அர்த்தம் -நெடுமாற்கு அடிமை -8-10-
நாராயண அர்த்தம் கொண்ட பெண்டிர்-9-1-
ஆய -சதுர்த்தி அர்த்தம் பண்டை நாளால்-9-2-
வியாபக மந்த்ர ஸ்ரேஷ்டம் -ஓர் ஆயிரமாய் -9-3-
ஸ்ரீ நடுவில் திரு வீதிப் பிள்ளை -அருளிச் செய்த சங்கதி –ஆறு திருவாய்மொழிகளுக்கும் –

உய்யும் ஆறு –
அர்த்த பஞ்சகம்-நவ வித சம்பந்த ஞானமும் வேண்டுமே உஜ்ஜீவனத்துக்கு

பரமன் அடி பாடி –
நெய் உண்ணோம் இத்யாதி -பிரயோஜனாந்தர பரர்கள் அல்லையே –
திருவடித் தாமரை தேன் இருக்க உள்ளித் தாமரை கள்ளிச் செடி போவார் உண்டோ –
ப்ரபன்னர் நிஷ்டை சொல்லும் பாசுரம் -இது –
பிரபத்திக்கு வாசகம் -நாமம் -திருமந்த்ரார்த்தம் கீழே –
இங்கு த்வயார்த்தம் -பாற் கடலில் தானே பிராட்டிக்கு த்வய உபதேசம்

மூன்று வகையான நோன்புக் கிரிசைகள் பற்றி இப்பாசுரம் பேசுகிறது.
அ) வாக்கு – “பரமனடி பாடி” என்பது வாசிகம்
ஆ) செயல் – நீராடுதல், ஈகை செய்தல் ஆகியவை காயிகம்
இ) மனம் – “உய்யுமாறெண்ணி” அதாவது பரமனை சதாசர்வ காலமும் சிந்தையில் வைத்தல் என்பது மானசீகக் காரியம்

“ஐயம்’ என்பது ஆச்சார்ய சமர்ப்பணத்தையும்,
“பிச்சை” என்பது சன்னியாசிகளுக்கு உரிய சமர்ப்பணத்தையும் குறிக்கிறது.

நோன்பின் போது விலக்க வேண்டிய ஆறு:
நெய் உண்ணல், பால் உண்ணல், மையிடுதல், மலர் சூடல், செய்யாதனச் செய்தல், கோள் சொல்லல் ஆகியவை.

கடைபிடிக்க வேண்டிய ஆறு:
பரமனடி பாடுதல், அதிகாலை நீராடல், ஐயம் இடல், பிச்சை இடல், அவற்றை இயன்றவரை இடல், உய்வதற்கு வேண்டி உகந்து இடல் ஆகியவை

மையிட்டெழுதல் என்பது ஞான யோகத்தையும், மலரிட்டு முடித்தல் என்பது பக்தி யோகத்தையும்,
ஐயம் என்பது பகவத் வைபவத்தையும், பிச்சை என்பது பாகவத வைபவத்தையும் உட்பொருளாகக் கொண்டுள்ளன.

‘உய்யுமாறெண்ணி’ என்ற பதத்தை ‘உய்யும்’, ‘ஆறு எண்ணி’ என்று பிரிக்கலாம்.
‘உய்யும்’ என்பது மோட்ச சித்தி பெறுவதைக் குறிக்கிறது.
அதை அடைய, வரதராஜப் பெருமான், திருக்கச்சி நம்பிகள் வாயிலாக, ராமானுஜருக்கு உபதேசித்த
ஆறு (விசிஷ்டாத்வைத) வைணவக் கோட்பாடுகளை சிந்தையில் நிறுத்துவதை, “ஆறு எண்ணி” என்பது உட்பொருளாகக் குறிக்கிறது.
அந்த ஆறு கோட்பாடுகள்:
1. ஸ்ரீமன் நாராயணனே ஆதிமூலம், அனைத்துக்கும் காரண கர்த்தா
2. எல்லா உயிர்களிலும் ஜடப் பொருள்களிலும் ஸ்தூல – சூட்சும சரீரமாக பரமனே விரவி நிற்கிறான்
3. பரமனின் திருவடிகளில் சரணாகதி அடைவதே மோட்ச சித்திக்கான ஒரே உபாயம்
4. அந்திம காலத்தில், பரமனை சிந்தையில் நிறுத்த வேண்டும் என்பது அவசியமில்லை
5. உடலில் வாழ்ந்த காலத்தில் (பரமன் திருவடிகளில்) பூரண சரணாகதியை கடைபிடித்த ஆன்மாவானது உடலை விட்டுப் பிரிந்த பின்னர் முக்தி அடைகிறது.
6. கற்றறிந்த வைணவ ஆச்சார்யனின் உபதேசமே ஸூய ஸ்வரூபத்தை உணரும் (நிலையை அடைவதற்கான உபாயம்

———————————

பாற்கடலுள் பையத்துயின்ற பரமனடிபாடுகை,
நாட்காலே நீராடுகை,
ஐயமும் பிச்சையு மாந்தனையுங் கைகாட்டுகை
ஆகிற இம்மூன்றும் செய்யப்படுமவை.

நெய்யுண்ணாமை,
பாலுண்ணாமை,
மையிட்டெழுதாமை,
மலரிட்டு முடியாமை,
செய்யாதன செய்யாமை,
தீக்குறளை சென்றோதாமை என்பன விடப்படுமவை.

“உண்ணோம், செய்யோம், ஓதோம்” என்ற தன்மைப் பன்மை வினைமுற்றுக்கள் ஸங்கல்பத்தைக் காட்டுமவை.

நாமும் என்றவிடத்து உம்மைக்குக் கருத்தென் எனில்;
ஸ்வாமிக்குப் பரதந்த்ரமான ஸ்வம் பேற்றுக்காகத்தானே ஒரு ப்ரவ்ருத்தி பண்ணுகைக்கு உரிமை யற்றதாயிருக்க,
ருசி இருந்தவிடத்தில் இருக்க வொட்டாமையாலே பதறிச் செல்லுகின்றமையைக் காட்டும்.

“ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்”
“நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு” என்றிருக்கையாகிற
அநந்யோபாயத்வத்தைக் குலைக்க வல்ல செயல்களில் நோன்பும் ஒன்றாதலால்
அது ஆத்மாவுக்கு அப்ராப்த கரும மெனப்படுகிறது.

ஜ்ஞாந விபாக கார்யமான அஜ்ஞாநத்தாலே வருமவையெல்லாம் அடிக்கழஞ்சு பெறும்.
உபாய பலமாய் உபேயாந்தர்ப்பூதமாயிருக்குமது உபாயப்ரதி பந்தகமாகாது” இத்யாதி ஸ்ரீவசநபூஷண ஸூக்திகளையும்
அவ்விடத்து வியாக்கியான வாக்கியங்களையுங் கண்டு தெளிக.

நோன்பு நோற்கைக்கு அங்கமாகவும் விரஹதாப மாறுகைக்காகவும் குளிக்கும் படியைச் சொல்லுகிறது,
நாட்காலே நீராடி என்று.

இந்திரியங்களுள் பிரதானமான கண்களுக்கு,
“காணாதார்கண்ணென்றுங் கண்ணல்ல கண்டாமே” என்றபடி எம்பெருமானை அநுபவிக்கை யொழிய
வேறு பேறு இலதாதலால் அப்பேறு வாய்க்குமுன் அக்கண்களை அலங்கரிக்கக் கடவோ மல்லோம்;

“நின் பாத பங்கயமே தலைக்கணியாய்”
“தாள் கண்டு கொண்டேன் தலைமேற் புனைந்தேனே” என்றபடி எம்பெருமான் தன் இணையடிகளைப் புனைதலே
தலைக்குப் பேறாதலால் அப்பேறு பெறுதற்கு முன் தலையை அலங்கரிக்கக் கடவேலமல்லோ மென்கிறார்கள், ஐந்தாமடியால்.

யோக்ய புருஷர் விஷயத்திலும் ஆசார்ய விஷயத்திலும் உரிய காலங்களில் பஹுமாநத்துடன்
வெகுவாக ஸமர்ப்பிக்குமது ஐயம்;
“தேஹி” என்று அர்த்தியா நின்ற பிக்ஷுக்கள் விஷயத்தில் ஆதரத்துடன் பரிமிதமாக ஸமர்ப்பிக்குமது பிச்சை.
இவ்விரண்டையும் இயன்ற வளவு செய்யக் கடவோ மென்கிறார்கள், ஏழாமடியில்;.

ஆந்தனையும் என்றது ஆமளவுமென்றபடி; சக்தியுள்ளவளவும் என்க.
‘இந்நோன்பு ஆந்தனையும்’ என்று உரைப்பாருமுளர்.
“அவர்கள் கொள்ளவல்லராந்தனையும்” என்று முரைப்பர்.
கைகாட்டி என்ற சொல் நயத்தால் எவ்வளவு கொடுத்தாலும் ‘நாம் என்ன கொடுத்து விட்டோம்’ என்ற
நெஞ்சிலோட வேணுமென்பது போதருமென்ப.

உள்ளுறைபொருள் :-
எம்பெருமானையே ஸர்வ போக்யமுமாகக் கொள்ள வேண்டுமென்கிறது, நெய்யுண்ணோமித்யாதியால்.
வர்ணாசரமங்கட்கு உரிய, நித்ய கருமங்கள் குறையற அநுஷ்டிக்கக்கடவன வென்கிறது, “நாட்காலே நீராடி” என்பதனால்.
மை கண்ணுக்கு ப்ரகாசகமாகையாலே ஆத்ம யாதாத்மிய ப்ரகாசகமான ஜ்யாந யோகத்தில் அந்வயிக்கலாகாதென்றும்,
மலரிட்டு முடிகை ஸ்வ போக ருபமாகையாலே பக்தி யோகத்தைச் சொல்லிற்றாய்,
அதில் அந்வயிக்கலாகாதென்றுங் கூறுகின்றது ஐந்தாமடி.

“நாம் முடியோம்” என்கையாலே பகவத் ப்ராப்தி ஸாதனங்களான ஞான யோக பக்தி யோகங்களில்
நாமாக அந்வயியாதொழிகையே வேண்டுவது; அவன்றானே இவ்வாதம் வஸ்துவை அநுபவிக்கும்போது
ஞானபக்திகள் இரண்டையுந் தந்து
‘இவற்றை நீ தவிராதொழிய வேணும்’ என்றால் செய்யலாவதில்லை என்னுமிடம் தோற்றும்.

இனி “மையிட்டெழுதோ” மென்பதனால் ஐச்வரியத்தில் ஆசை கொள்ளக்கடவோ மல்லோமென்றும்,
“மலரிட்டு முடியோ” மென்பதனால் ஆத்மாநுபவமாகிற கைவல்யத்தில் ஊன்றக்கடவோமல்லோ மென்றுஞ்
சொல்லுகிறதெனவுங் கூறக்குறையில்லை.

எம்பெருமான் வாத்ஸல்யாதிகுண யுக்தனாகிலும்
“வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர்பெருமான் திருப்பாதம் பணிந்து” என்றபடி
பாகவதரை முன்னிட்டல்லது ஆச்ரயிக்கலாகாது என்பதைக் காட்டும், “செய்யாதன செய்வோம்” என்பது.
பிறர்க்கு அநர்த்தத்தை விளைக்கவல்ல பொய் சொல்லலாகாது என்கிறது, “தீக்குறளை சென்றோதோம்” என்று.

ஐயமாவது – பகவத் வைபவம்;
பிச்சையாவது – பாகவத வைபவம்;
இவை இரண்டையும் தானறிந்தவளவும் பிறர்க்கு உபதேசிக்க வேண்டுமென்கிறது.

புகவத் ஸந்நிதியில் பாகவத வைபவத்தையும்,
பாகவத ஸந்நிதியில் பகவத் வைபவத்தையும் யதா சக்தி கூற வேண்டுமென்க.

————————————–

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

—————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading