ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் —மார்கழி திங்கள் —

இன்றோ திருஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம் பராம் கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,
ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,
மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

————

அவதாரிகை –
இந் நோன்புக்கு ஒரு காலம் நேர் படுவதே -என்று காலத்தை கொண்டாடுகிறார்கள்-
மார்கழி திங்கள் -என்று தொடங்கி-சிறுமீர்காள் -என்னும் அளவும் பிராப்யம்-
மேல் பிராபகம் –
பிராப்ய பிராபக சங்கரஹம்-என்றுமாம்-

இப் பாட்டில்-
அதிகாரி ஸ்வரூபத்தையும்-உபாய ஸ்வரூபத்தையும்-உபேய ஸ்வரூபத்தையும் ஸங்க்ரஹித்து-
இந் நோன்புக்கு காலம் நேர்பட்ட படியைக் கொண்டாடுகிறார்கள்

முதல் பாட்டுக்கு வாக்யார்த்தம் -ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் நாராயணனே -என்று அருளிச் செய்கிறார் –

முதல் பாட்டு –
பிரபந்த தாத்பர்யமான ப்ராப்ய ப்ராபக ஸங்க்ரஹம் –காலத்தைக் கொண்டாடுகிறது என்றும் சொல்லுவார்கள்

பகவத் சம்ஸ்லேஷமே பிராப்யம் -அநந்ய சாத்தியமான இதுக்கு சாதனமும் அவனே –
அந்த சாதனத்தில் அன்வயிக்கைக்கு அதிகாரிகளும் அந்த பிராப்யத்தில் இச்சை உடையவர்களே -என்று
சாத்ய ஸ்வரூபத்தையும்-சாதன ஸ்வரூபத்தையும்-அதிகாரி ஸ்வரூபத்தையும் சாதித்தது

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கு ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ் சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர எம்பாவாய்-1-

மார்கழி திங்கள்
நாதி சீதா ந கர்மதா-என்கிற ந்யாயத்தாலே-அதி உஷ்ணமாதல் அதி சீதளமாதல் அன்றிக்கே இருக்கும் மாசம்
நாளுக்கு ப்ரஹ்ம முஹூர்த்தம் போலே சம்வத்சரத்துக்கு இம் மாசம் ஆகையாலே-சத்வோத்தரமான காலம்-
மாஸாநாம் மார்க்க சீர்ஷோஹம் -என்று மாசங்களில் வைத்துக் கொண்டு மார்கழி மாசம் ஆகிறேன்-என்று
அவன் தானே அருளிச் செய்கையாலே -வைஷ்ணவமான மாசம் –

சர்வ வஸ்துக்களும் அங்குரிக்கும் காலம் ஆகையாலே-தங்களுடைய உன்மேஷத்துக்கு அர்ஹமான காலம்-
கோப வ்ருத்தர் குளிருக்கு அஞ்சி புறப்பட மாட்டாத காலம் –

தங்களுக்கு உத்தேச்யம் கிடக்க காலத்தை கொண்டாடுகிறது தான் என் என்னில் –
சைத்த்ரச் ஸ்ரீ மான் அயம் மாஹ -என்று-ஒரு சம்ருதியைப் பற்றி காலத்தை கொண்டாடிற்று இறே-

அல்லாரில் காட்டில் பெருமாளுக்கு உள்ள பிராதான்யம் போலே
மாசங்களுக்கு எல்லா வற்றுக்கும் முதலான மாசம்-

ஸ்ரீ மான் –அவர் எல்லாருக்கும் ராஜாவாக பிராப்தர் ஆனாப் போலே
சைத்ர மாசம் சர்வருக்கும் ஸுக ககரம் ஆகையாலே மாசங்களுக்கு எல்லாம் ராஜா என்கிறது

அயம் மாஹ –
அபிஷேக மனோரத சமயத்திலே சந்நிஹிதமான தன்னேற்றம் அங்கு
சேஷியை சேஷ பூதர் லபிக்கைக்கு கொண்டாடுகிற கொண்டாட்டம்
இங்கு-சேஷி பூதரை சேஷி லபிக்கைக்கு கொண்டாடுகிற கொண்டாட்டம்-

புண்ய புஷ்பிதகாநந-பாவநஸ் சர்வ லோகாநாம் த்வமேவ -என்றும்
பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரிண்ம் -என்றும்-
அவருக்கு இரண்டு ஆகாரம் உண்டானாப் போலே-
இக்காலமும்–பாவனமாயும்–போக்யமுமாயும் இருக்கை-

(தனுர் ராசி –சூர்யன் -ராசிக்குள் புகுவதை பொறுத்தே மாசங்களின் பெயர் )

புஷ்பித காநந –
படை வீடு போலே நாம் அலங்கரிக்க வேண்டாதே தானே அலங்கரிக்கை-
புஷ்பித காநந —
பெருமாள் பொன் முடி சூட காடு பூ முடி சூடிற்று –

புஷ்பித காநந –படை வீடு போலே நாம் விதானிக்க வேண்டா -தானே அலங்கரித்தது -(காடு பூ முடி சூடிற்றே )
வ்யதி ரேகத்தில் –அபி வ்ருஷா பரிம்லாநா -இறே

(ஆவும் அழுத; அதன் கன்று அழுத;    அன்று அலர்ந்த
பூவும் அழுத; புனல் புள் அழுத கள் ஒழுகும்
காவும் அழுத; களிறு அழுத கால் வயப் போர்
மாவும் அழுதன; அம் மன்னவனை மானவே.)

கிருஷ்ணனோடு தங்களைக் கூட்டின காலத்தைக் கொண்டாடுகிறார்கள் –
கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்று நிலை நின்ற தர்மத்தைப் பற்றுகிற காலம் –
மழை விழுந்து ஹ்ருதயம் குளிர்ந்து ஸத்வ உத்தரமான காலம்
மலையின் உச்சியில் கிடந்த ஸஸ்யங்களும் நிலத்தில் கிடந்த ஸஸ்யங்களும் ஒக்கப் பருவம் செய்யும் காலம்

அன்றிக்கே –
பாதகரான இடையர் உறங்கும் காலம் என்றுமாம் —
ஸந்த்யை தப்பிற்று என்று ப்ராஹ்மணரைப் போலே அகரேண ப்ரத்யவாயம் இல்லாமையாலே உணரார்கள்-

திரு வத்யயனம் தொடங்கும் காலம் இறே-

ஓழிவில் காலம் எல்லாம் -என்றும்-அநாதிர் பகவான் கால -என்றும் சொல்லுகிறபடியே
பகவத் விஷயத்தில் இவனுக்கு ஆபிமுக்யம் பிறந்தால் பின்னை அவன் தன்னை அல்ல காணும் கொண்டாட அடுத்து –
அக் காலத்தை யாய்த்து-

கால க்ருத பரிணாமம் இல்லாமையைக் கொண்டாடும் போலே பரிணாமத்தைக் கொண்டாடுகிறார்கள் இறே
பரிணாமம் உண்டாகவுமாம்-இல்லை யாகவுமாம் –பகவத் அனுபவத்துக்கு புறம்பானது த்யாஜ்யமாம் அத்தனை இறே

———–

மதி நிறைந்த –
மாசம் நேர்பட்டால் போலே இருந்ததீ பஷமும் நேர் பட்ட படி –
மங்கள கார்யம் செய்வாருக்கு விதிக்கிற விதியும் இவர்களுக்கு கோல் விழுக்காட்டிலே சேர விழுந்தது-
பகவத் பிரவணராய் இருப்பார் உடைய தேக யாத்ரையை-விதி தான் பின் செல்லக் கடவதாய் இறே இருப்பது –
ஒருவரை ஒருவர் முகம் கண்டு அனுபவிக்கைக்கும்-
எல்லாரும் கூடிச் சென்று கிருஷ்ணனை எழுப்புக்கைக்கும்-நிலா உண்டாகப் பெற்றதே

நள் இருள் கண் -என்ன வேண்டா விறே இவர்களுக்கு
விரோதிக்கக் கடவ அவ் ஊராரே இசைந்து மேல் எழுத்து இடப் பற்றது இறே

முன்பு இருள் தேட்டமானால் போலே இப்பொழுது நிலா தேட்டமாய்த்து –
காமுகர்க்கும் கோபர்க்கும் இருள் தேட்டமாய் இருக்கும் இறே
நள் இருள் கண் என்னை உய்த்திடுமின் -என்று இறே முன்பு இருப்பது –
தாய்க்கும் தகப்பனுக்கும் அஞ்ச வேண்டா-இருளிலே புறப்பட்டு அணைக்கலாம் என்கிறாள் –

இருள் அன்ன மா மேனி எம்மிறை –
இருளோடு சேர்ந்து இறே வடிவு தான் இருப்பது
பிஷக்குக்கள் வாசலில் ஆர்த்தர் கட்டணமாகக் கிடக்குமா போலே
ஸ்ரீ நந்தகோபர் வாசலில் கிருஷ்ணனால் புண் பட்ட பெண்கள் கட்டணமாய் கிடக்குமாய்க் கொள்ளீர் -என்று பட்டர் –
(வைத்யோ நாராயண ஹரி அன்றோ )

அப்படி நிலாவுக்கு இறாய்க்க வேண்டாதே ஊர் இசைந்து மேல் எழுத்து இட்ட நாள் இறே –
ஒருவரை ஒருவர் எழுப்புகைக்கும் கிருஷ்ண முக அவலோகநத்துக்கும் நிலா உண்டாகப் பெற்றது என்கை

ஷயாதிகள் போய் பூர்ணன் ஆகிறான் இறே அவனும் –
இவர்களும் நாமும் உளோமாய் பூர்ணைகளாக வாரிகோள் என்கிறாள் –

அவனைக் காணப் பெறுகையாலே நிலவுக்கு இறாய்க்க வேண்டாக் காலம்
பெண்களுக்கு முகம் கண்டு வாழலாம் காலம்
திங்கள் முகங்கள் திரண்ட காலம்
திங்கள் திருமுகத்து சேயிழையார்கள் இறே

ஞான பலம் (தர்சனம் )பூரணமான காலம் –
முளைத்து எழுந்த திங்கள் தானாய்

எம்பெருமானார் விலஷண சந்தரன் –யதிராஜ சந்தரன் -என்றபடி-
மார்கழி மார்க்க சீர்ஷ–தலையான மார்க்கம் –ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே –
சரம உபாயம் உயிர் நிலை ஆண்டாள் கருதியது –

மார்க்கம் சீர்ஷம் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -என்கிற மதி நிறைந்த நன்னாள் –
ஆழ்வாராதிகள் -ஆச்சார்யாதிகள் -திருவதரித்த நக்ஷத்ரம் –

———-

நன்னாளால் –
மாசத்துக்கும் பஷத்துக்கும் நாயகக் கல் போலே-இருப்பதொரு நாள் நேர்பட்ட படி என்
நம்மை கிருஷ்ணனோடு கிட்ட ஒட்டாதவர்கள் தாங்களே
கிருஷ்ணனோடு சேருகைக்கு பிரமாணம் பண்ணிக் கொடுத்த நாளாகப் பெற்றதே

பகவத் பிரசாதத்துக்கு இலக்காகப் பெற்ற நாள் இறே இவ்வாத்மாவுக்கு நல் நாள் ஆகிறது-
ஷிபாமி -என்ற அவன் தானே-ததாமி -என்னப் பெற்ற நாள் இறே-
சர்வேஸ்வரன் உடன் எதிர்  அம்பு கோக்குகை தவிர்ந்து-
அவன் நமக்கு ரஷகன் என்று விசுவாசம் பிறந்த நாள் இறே-நல் நாள் ஆகிறது

அவன் எதிர் சூழல் புக்குத் திரிய –இவன் வைமுக்யம் பண்ணுகை தவிர்ந்து-அவன் கிருஷி பலித்த நாள் என்கை –

அத்யமே சபலம் ஜன்ம ஸூப்ரபாதாசமே நிசா -என்று கம்சன் சோறு உண்டு வளர்ந்த எனக்கு இங்கனே
ஒரு நல் விடிவு உண்டாகப் பெறுவதே -என்றான் இறே அக்ரூரன்

நன்னாளால்
தாநஹம் த்விஷத க்ரூரான்-என்று இவற்றின் அபராதத்தை நினைத்து
பெற்ற தாய் பசலை அற்று இருக்குமா போலே
குழியைக் கல்லி மண்ணைவிட்டு அமுக்குவேன் என்னுமது தவிர்ந்து
தாதாமி புத்தி யோகம் -என்றும்
ஏஷ சர்வஸ்வ பூதாஸ்து -என்றும் இரங்கப் பண்ணும் நாள்
ஊரார் இசைந்து மேல் எழுத்திட்ட நாள்

(விச்வாமித்திராதிகளுக்கு புத்தி யோகம் தந்த நாள் -திருவடி அக்ரூரர் மாலாகாரர் போல்வாருக்குத் தன்னையே தந்த நாள் போல்

பரதனைக் கூடும் நாள் என்று பெருமாளே உகக்கும் நாள் போல் )

வத்யதாம் -என்ற மஹா ராஜர் -அஸ்மாபிஸ் துல்யோ பவது என்றால் போலே
அநாதி காலம் பண்ணிப் போந்த விபரீத ருசி தவிர்ந்த நாள்
துர்லபமான பகவத் ருசி பிறந்த நாள்
ஸூப்ரபாதா ச மே நிசா –கம்சன் சோறுண்டு திரிந்த எனக்கு ஒரு நல்விடிவு உண்டாகப் புகா நின்றதோ என்று இருந்தேன்
இப்படி இருந்த எனக்கு ஒரு காலம் அஸ்தமியாத படி விடிந்தது

(பிறந்த நாள் கொண்டாடாமல் பகவத் விஷயத்தில் ருசி பிறந்த நாள் -சமாஸ்ரயணம் பண்ணிக் கொண்ட நாளைக் கொண்டாடுவோம் )

ஸூப்ரபாதாத்ய ரஜ நீ மதுரா வாச யோஷிதாம் –வில் விழவன்று ஸ்ரீ மதுரையில் பெண் பிள்ளைகளுக்கு விடிந்தால் போலே
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் –
இதுக்கு முன்பு எல்லாம் ராத்ரியாய் இருந்தபடி
உறங்காத என்னையும் கண்டேன் -அஸ்தமிதியாத ஆதித்யனையும் கண்டேன் –
பாஹ்யமான விடிவு அன்றிக்கே ஆந்தரமான விடிவு -நாராயண தர்சனம் –

மாசத்தை கொண்டாடுகிறது-
பஷத்தை கொண்டாடுகிறது-நாளை கொண்டாடுகிறது
இதிலே இவர்களுக்கு கிடக்கிற த்வரை வெள்ளம் என் தான் –இவர்களின் பிராப்ய ருசி இருக்கிறபடி-

ஆல் –ஆதலால் -மார்கழி ஆதலால் -மதி நிறைந்த நல் நாள் ஆதலால் -என்று அன்றோ கொண்டாடுகிறார்கள்-

அப் படை வீட்டில் கண் இல்லாதார்க்கு கண் உண்டானால் போலேயும்
பிராணன் இல்லாதார்க்கு பிராணன் உண்டானால் போலேயும் யாய்த்து இவர்களுக்கும் 

பஞ்ச லக்ஷம் குடியில் சந்த்ரர்களும் திரண்ட நாள் –
திங்கள் திரு முகத்து சேயிழையார்கள் இறே
(ஐந்து லக்ஷம் சந்திரர்கள் திரண்ட நாள் அன்றோ
மதி நிறைந்த தொடங்கி -திங்கள் திரு முகத்து சேயிழையார் நிகமனம் )

ஞான பலம் பூரணமான காலம் –முளைத்து எழுந்த திங்கள் தானாய்

ப்ரக்ருத் யாத்ம விவேகம் பிறந்த நாள்
(குடந்தைக் கிடந்தாய் அடியேன் ஒரு வாழ் நாள் சென்னாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே
அன்று நான் பிறந்திலேன் )பாஹ்யமான விடிவு அன்றிக்கே ஆந்த்ரமான விடிவு -நாராயண தர்சனம்

மார்கழி இத்யாதி
சத்வோத்தரமான காலத்திலே-சதாசார்ய பிரசாதம் அடியாக -ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞானம் பரி பூரணமாய்
இச் சேதனன் பகவத் விஷயீ கார பாத்ர பூதமான திவசத்திலே
தங்களுக்கு பகவத் கைங்கர்யத்தில் ருசி பிறந்த இன்று-மங்கள கார்யம் செய்யுமவர்களுக்கு தேட்டமான காலம்
தன்னடையே நேர்பட்ட படியைக் கண்டு ஆச்சர்யப் படுகிறார்கள் –

மாசி பவுர்ணமி -கடல் நீராட்டம் – மாசி மகம் உத்சவம் உண்டே இன்றும்
மார்கழி பவுர்ணமி தொடங்கி தை பவுர்ணமி சுனை யாடல் -தமிழர்கள் –

———–

நீராட
கிருஷ்ண விரஹத்தால் பிறந்த தாபம் ஆறும்படி குளிக்கை-
இத்தால் இவர்கள் நினைக்கிறது கிருஷ்ண சம்ச்லேஷம்

தமிழரும் கலவியை –சுனையாடல் -என்றார்கள்

இவர்கள் தங்களுக்கு நீராட -என்று நோயாசை இறே –
யமுனா ஜலம் ஒருத்தியுடைய விரஹ அக்னியாலே சுவறுமே-

ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோ ஸ்மிக்ரீஷ் மே ஸீதே மிவ ஹ்ரு தம்
என்று பகவத் சம்ச்லேஷத்துக்கு கிரீஷ்ம காலத்தில் குளிர்ந்த மடுவை திருஷ்டாந்தமாக சொல்லிற்று இறே

தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தில் இறே -(10-1)

நீராட –என்றது மாறி மாறித் தங்கள் மெல்லிய தோளில் அவன் தோயவும் -இவர்கள் அவன் மார்பில் தோயவும் இறே
(வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் )
அதாவது –அப்பன் திருவருள் மூழ்கினாள் -(8-9-5-)-இறே

அவனைப் பிரிந்த நாளாகையாலே சீத காலமே கோடையாய்த்து-
அவ்விரஹ தாபம் தீர எம்மடுவிலேயோ இவர்கள் ஆடப் புகுகிறது
தயரதன் பெற்ற மரகத மணித் தடம் —
மெல்லியல் தோள் தோய்ந்தாய் -(பெருமாள் பிராட்டி உடன் நீராடினால் போல் நாமும் மிதுனத்தில் நீராடுவோம் )
ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோஸ்மி க்ரீஷ்மே சீதமிவ ஹ்ரதம்-
நீராட்டுமவன் முன்னே சமைந்து நின்றான் -ஆடுவாரை இறே அழைக்க வேண்டுவது
ருசி பிறந்த பின்பு அவ்வருகுள்ள ப்ராப்ய தேசமும் அர்ச்சிராதி கதி சிந்தையும்
ததீயரையும் அவனையும் அனுபவிக்கையும் காலமும் அடைய ப்ராப்யத்திலே புகும் அத்தனை –

நீராட
கிருஷ்ணனும் பெண்களும் மாறி மாறி முழுக்கிட –

தாங்கள் நினைத்த படி சொல்லுகைக்கு ஈடான முறை உண்டாய் இருக்கச் செய்தேயும்
அத்தை தவிர்ந்து பகவத் சம்பந்தத்தையே பார்த்து கௌரவித்து-நீராட என்கிறார்கள்

புத்ரர்கள் ஆகவுமாம்-சிஷ்யர்கள் ஆகவுமாம்- பகவத் சம்பந்தம் உடையாரை கௌரவ்யர் என்கிறது-
பொற்றாமரை கயம நீராடப் போனாள்-என்னக் கடவது இறே
இத்தால் பிராப்யத்தை சொல்லுகிறது

கணபுரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவாரே-(8-2-9 )என்றும்
பெரும் தவத்தனள் -(திரு நெடுந்தாண்டகம் )என்றும்
நேர் இழை நடந்தாள்-(6-7-திருக் கோளூருக்கு நடந்த தனது மகளை )என்றும் -சொல்லா நின்றார்கள் இறே

இப்படியாகை இறே ஸ்ரீ வைஷ்ணவர்களை -நீராட -என்கிறது –
ஆச்சார்யர்களை நம்பி என்கிறதும் -ஸ்ரீ மதுரகவிகள் நம்பி என்கையாலே –

தம் மகளை நீராட்டினாலும் ஆழ்வார் என்ன வேண்டுமா போலே
பகவத் விஷயத்துக்கு அண்ணியாரைத் தோழிமார் என்றும் சிஷ்யர்கள் என்றும் இல்லை –
பூஜ்யராகக் கொண்டாட வேணும் என்கை –
இதுக்கு ஒரு சிஷ்டாசாரம் உண்டு –
ஆண்டாள்  தனது திருக்குமாரரான -பட்டர் ஸ்ரீ பாதத்தைக் கழுவித் தீர்த்தம் கொள்ளும்-

எம்பெருமானார் ஸ்ரீ வைஷ்ணவர்களும் எழுந்து அருளா நிற்க பெரிய நம்பி தெண்டன் இட்டுக் கிடந்தார் –
நம்மை இங்கனம் செய்து அருளிற்று ஏன் என்று கேட்க –
ஆளவந்தார் எழுந்து அருளுகிறார் என்று இருந்தேன் -என்று அருளிச் செய்தார்
இவை இறே பகவத் சம்பந்தத்தை இட்டு கௌரவிக்கும் படி –

நீராட போதுமினோ –பகவத் கைங்கர்யம் பண்ண வாருங்கோள்

ருசி பிறந்த பின்பு அவ்வருகுள்ள ப்ராப்ய தேசமும் அர்ச்சிராதி கதி சிந்தையும்
ததீயரையும் அவனையும் அனுபவிக்கையும் காலமும் அடைய ப்ராப்யத்திலே புகும் அத்தனை –

“பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள் பேர் பாடித் தண் குடந்தை நகரும் பாடிப்,
பொற்றாமறைக் காயம் நீராடப் போனாள் பொரு வற்றாள் என் மகள் உம் பொன்னு மஃதே” என்ற
திருமங்கையாழ்வார் பாசுரமும் காண்க.

———–

அல்ப பலமான ஸ்வர்க்க அனுபவத்துக்கு அதிகார அர்த்தமாக-பண்ண வேண்டும் தேவைகளுக்கு ஓர் எல்லை இல்லை-
இந்த நிரவதிக சம்பத்தை பெறுகைக்கு எவ்வளவு யோக்யதை வேணும் -என்னில்
போதுவீர் போதுமினோ –இச்சையே அதிகாரம்-

திருவேங்கட யாத்திரை போலே நீராடப் போகையே உத்தேச்யம்

அது அப்ராப்த விஷயம் ஆகையாலே அதிகாரி சம்பத்தி உண்டாக்கிக் கொண்டு இழிய வேணும்-
இது வகுத்த விஷயம் ஆகையாலே இச்சைக்கு மேற்பட வேண்டுவது இல்லை –
நெடும் காலம் இழந்ததும் இவன் பக்கல் இச்சை இல்லாமையே -ஆகையால் இந்த இச்சையே வேண்டுவது –
சக்தியும் பிராப்தியும் அத் தலையில் பூர்ணம் ஆகையாலே-இச்சைக்கு மேற்பட வேண்டுவது இல்லை –
சேதனன் ஆனவனுக்கு இச்சை இல்லை யாகில் இது புருஷார்த்தம் ஆக மாட்டாது இறே

இச்சை சர்வ உபாய சாதாரணமாய் இருக்குமே –
அல்லோம் -என்னாதார் எல்லாரும் அதிகாரிகள் –
(அல்லோம் என்னாதார் -ஆம் என்பார் -இரண்டுக்கும் நெடு வாசி உண்டே )
இவ் விச்சை சாதனத்தில் புகாது –சைதன்ய கார்யமாம் அத்தனை –

இவ்விஷயத்தில் இச்சா மாத்திரம் அமைகிறபடி எங்கனே —
புறம்பு உள்ளவற்றுக்குப் பெரு நெறிகள் செல்லா நிற்க -என்னில்
இங்கு அபரிச்சேத்யமான விஷயமாகையாலும் –
தானே உபாயமாகையாலும் –
சேதனான வாசிக்கு இச்சா மாத்திரம் அமைந்தது

கூடும் மனமுடையீர் -இறே-போதுவீர் போதுமினோ
(பெரியாழ்வார் வார்த்தை அங்கு-இது ஆண்டாள் வார்த்தை )

சூத்திர விஷயத்துக்கு தனித் தேட்டம் ஆனால் போலே
அபரிச்சின்ன விஷயத்துக்கு துணைத் தேட்டம் ஆகையாலே சஹ காரிகளை சேர்க்கிறார்கள்

போதுமினோ –
பிரதி கூலரையும் அகப்பட தேன மைத்ரீ பவதுதே யதிஜீவிது மிச்சசி -என்னுமவர்கள்
அபிமுகரைப் பெற்றால் விடுவார்களோ

போவான் போகின்றார் என்று வழிப் போக்கே இறே ஸ்வயம் பேறு ஆகுமே –

அவர்கள் இரந்தார்கள் அல்லர் -தன் செல்லாமையாலே இரக்கிறாள்-

இசைந்தவர்கள் காலில் விழுகிறார்கள் -தங்கள் பேறாய் இருந்தபடி –எங்களை வாழ்வியுங்கோள் என்கிறார்கள் –

போதுமினோ
நாங்கள் வாழும்படி புறப்பட்டு இங்கனே நடக்கலாகாதோ-
அவர்கள் முன்னே போக-அந் நடை அழகு கண்டு-நாங்கள் பின்னே போக இறே நினைக்கிறது

அவர்கள் முன்னே போகத் தான் பின்னே போக நினைக்கிறாள் –
அவர்கள் போக இசைவார்களோ என்னில் ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே
இவளுக்கு பிரியம் என்றவாறே அத்தையும் இசைவார்கள்-போகாதே இருந்தால் ஆற்றலாமாகில் தவிருங்கோள் –

நீராட
கிருஷ்ணனும் தாங்களும் மாறி மாறி முழுகக் கூப்பிட ஈடுபாட்டால் அவர்கள் எழுந்து இருக்க ஷமர் அல்லர் –
தன் செல்லாமையாலே இவள் இரக்கிறாள்
பிரதிகூலரையும் அகப்பட – தேன மைத்ரீ பவது தே – என்னக் கடவர்களுக்கு அனுகூலரை ஒழியச் செல்லுமோ –

(ஆசை உடையோருக்கு -என்று வரம்பு அறுத்தார் -இப் பாசுரம் கொண்டே எம்பெருமானார்
மால் பால் மனம் சுழிப்ப இத்யாதி

————-

நேரிழையீர்
விலஷணமான ஆபரணத்தை யுடையீர்-
இவர்கள் போதுமினோ -என்ற பின்பு அவர்கள் வடிவிலே பிறந்த
புதுக் கணிப்பு இருந்தபடி –

அன்றிக்கே –
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழிய -என்கிறபடியே
கிருஷ்ணனுடைய வரவை கடாஷித்து-அவன் எப்பொழுது வந்து மேல் விழும் -என்று அறியாத படியாலே
தங்களை எப்போதும் அலங்கரித்த படியே இருப்பார்கள் என்றுமாம்

வசதி ஹ்ருதி சௌம்ய ரூப -(ஸநாதன பெருமாள் ஸ்ரீ விஷ்ணு புராணம் ))என்னுமா போலே–முன்புத்தை கிருஷணனோட்டை கல்வியால் வந்த புகர்-
இப்போதும் தோற்றும் படியாய் இருக்கையாலே சொல்லவுமாம்-

அவனோடு கலந்தார்க்கு இறே -அவனோடு கலக்க வேணும் என்று ஆற்றாமை மிகுவது

புனை இழைகள் அணியும் ஆடை யுடையும் புதுக் கணிப்பும் நினையும் நீர்மையதன்று -என்னுமா போலே
ஆபரணங்களை மாறாடிப் பூண்டு இருந்த படியாலும்
பரியட்ட மாறாட்டத்தாலும் வடிவில் வேறு பட்டாலும் (குட்ட நாட்டுத் திரு புலியூர் )
இவள் சர்வேஸ்வரனுக்கு பிரசாத பாத்திரம் ஆனாள் என்று தோற்றா நின்றது என்றால் போலே –

உருவுடையார் இளையார்கள் நல்லார் ஒத்து வல்லார்களைக் கொண்டு வைகல்
தெருவிடை எதிர் கொண்டு பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காம தேவா (நாச் -1–6-) என்றபடி வடிவு அழகு அமைந்து இருக்கிறது
பிரபத்தியை ஆபரணமாக யுடையார் -(இதுவே நேரிழையீர் )

பெரு நாளை (பெரு நாளில் அத்யயன உத்சவம் )-கையார் சக்கரம் என்றால் (ஐப்பசியில் ப்ரஹ்ம உத்ஸவம் முன்பு நடந்ததாம் அப்பொழுதும் )ஊர் புதுக் கணித்து இருக்குமா போலே –
மார்கழி நீராட என்ன இவர்கள் புதுக் கணித்த படி
பாவனா ப்ரகர்ஷத்தாலே ஒருபடி பூண்டால் போலே இருக்கும் –

கிருஷ்ணன் எப்போது பார்க்குமோ என்று எப்போதும் இருந்து கோலம் செய்வர்கள் –

நீராடப் போதுவீர் – பகவத் கைங்கர்யம் பண்ணப் போருகையிலே-ருசி உடையவர்களாய்

நேரிழையீர் –இதுக்குத் தகுதியான-ஜ்ஞான பக்தி வைராக்யங்களை உடையராய் –

———–

சீர் மல்கு ஆய்ப்பாடி –
இவ் வூரில் ஐஸ்வர்யம் வழிந்து போய் வேறு ஊருக்கு வெள்ளமிடப் போந்து இருக்கை –
அதாவது
கிருஷ்ணன் உடைய இங்குத்தை நீர்மை பரம பதத்திலும் சென்று அலை எறியும் படியாய் இருக்கை –
வஸ்துவுக்கு குணத்தால் இறே உத்கர்ஷம்

அங்குத் தன்னில் குறைந்தார் இல்லாமையாலே குணத்துக்கு விஷயம் இல்லை
ஆகையால் தர்மியைப் பற்றிக் கிடைக்கும் அத்தனை அங்கு
அந்தகாரத்திலே தீபம் போலே பிரகாசிப்பதும் இங்கே யாகையாலே
ஐஸ்வர்யம் பூர்ணம் ஆய்த்து இங்கே இறே

த்ரிபாத் விபூதியில் அடங்காத வஸ்து-தன்னை நியாம்யம் ஆக்கி வர்த்திக்கிற ஊர் இறே
பண்டே கோ சம்ருத்தி உண்டாய் இருக்கச் செய்தே-பிள்ளைகள் கால் நலத்தாலே கறப்பன கடைவன வற்றால்-குறைவற்று இறக்கை
நாழிப் பால் நாழி நெய் போருகை என்றுமாம் –

உழக்கிலே பதக்கிட்டால் போலே (உழக்கு -2 ஆழாக்கு -பதக்கு -62 ஆழாக்கு )-திருவாய்ப்பாடியிலே ஐஸ்வர்யம் பெருத்த படி எங்கனே என்னில்
ப்ரீதி ரோதம் அசஹிஷ்ட சா புரீ ஸ்த்ரீவ காந்த பரி போக மாயதம்(ரகு வம்சம் -பெரிய சேனை அயோத்யையில் இருந்து மிதிலைக்கு வந்தது போல் -ஸந்தோஷத்தால் மிதிலா புரி இருந்தது போல் )-என்கிறபடியே

பண்டே பாலாலும் வெண்ணையாலும் சம்ருதமாய் இருக்கச் செய்தே-உபய விபூதி உக்தன் பிறந்த ஐஸ்வர்யம் உண்டு இறே –
பஞ்ச லக்ஷம் குடியை யுடைத்தாய் -அவர்களுக்கு தனமான பசு முதலான சம்பத்தாலே சம்ருத்தமாய் –
அது தான் பிள்ளைகள் கால் நலத்தால் ஓன்று இரட்டியாய் –சம்பத்து மிகுத்து இருக்கும் படி –

சீர் மல்குகை யாவது –
பகவத் குணங்கள் மாறாதே சீராகக் கிடைக்கை என்றுமாம் –
அதாகிறது
ஊரடைய கிருஷ்ணன் தீம்பும் அவன் வார்த்தையுமாய்க் கிடக்கை-

ஆய்ப்பாடி
1-பரம பதம் போலே தேஹாந்தர பரிக்ரகம் பண்ணிச் சென்று-அனுபவிக்க வேண்டாத ஊர்
2-ஆசார பிரதானரான வசிஷ்டாதிகள் வர்த்திக்கிற திரு அயோதியை போல் அன்றிக்கே
இடக்கையும் வலக்கையும் அறியாத இடையர் வர்த்திக்கிற ஊர்
3-பெருமாள் குணம் கண்டு உகக்கும் ஊர் போல் அன்றியே-கிருஷ்ணன் தீம்பு கண்டு உகக்கும் ஊர்

அங்கு தான் கும்பீடு கொண்டு இருக்கும் –இங்கு தான் கும்பிடுகிற இடம் இறே –
தொழுகையும் இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே -என்னக் கடவது இறே

இது காண்கைக்காக இறே வைதிக புத்திரர்கள் வியாஜ்ஜியத்தாலே -நாய்ச்சிமார் அழைத்துக் கண்டது –

இங்குத்தைக்கும் அடி அவ்விருப்பு என்னும் இடம்-பிரமாணம் சொல்லக் கேட்க்கும் அத்தனை இறே

இவ் விடத்தில் ஐஸ்வர்யம் அதிலும் விஞ்சி இருக்கும் என்னும் இடம் கண்களால் காணலாகிறது இறே
மனுஷ்யத்தவே பரத்வம் இறே இங்கு

இடக்கையும் வலக்கையும் அறியாத வூர் –தம்பி தீம்புக்குத் தமையன் பெரு நிலை நிற்குமூர்-

தீம்பு கண்டு மேல் விழுவார் இருக்கிற வூர் –
இந்திரனுக்கு இடும் சோற்றை மலைக்கு இடுங்கோள் அதுக்கு இசையுமூர் இறே –
(ஸ்வரூப க்ருத தாஸ்யராகவே இங்குள்ளார் -அங்கு போல் குண க்ருத தாஸ்யர் அல்லவே )

கண்டவிடம் எங்கும் கிருஷ்ணன் தீம்புகளும் –அவன் வார்த்தைகளுமாய்ச் செல்லுகை –
கோவிந்த தாமோதர மாதவேதி–(கோவிந்தன் வாங்கலையோ -உள்ளம் எல்லாம் இவனே
எம் தம்மை விற்கவும் பெறுவாரே )

பட்டர் திருப்பாவை அருளிச் செய்யா நிற்க பூணூல் சாத்தாத தொரு ஸ்ரீ வைஷ்ணவர் வர
கூசாதே உள்ளே புகுவீர் இவ்விடம் திருவாய்ப்பாடியாய்க் காணும் செல்லுகிறது என்று அருளிச் செய்தார் –

—————

செல்வச் சிறுமீர்காள்
இவ் வாத்மாவுக்கு நிலை நின்ற ஐஸ்வர்யம் ஆவது-பகவத் பிரத்யாசத்தி இறே
ராஜ்யத்தை விட்டு வெறும் கையோடு பெருமாள் பின்னே போன
இளைய பெருமாளை லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -என்றது இறே-நாடு எல்லாம் தன்னைப் போலே வாழும்படி வாழப் பிறந்த பாக்யவான்(கைங்கர்யம் )

ராவண பவனத்தின் நின்றும் கால் வாங்கி பெருமாள் இருந்த தேசத்தைக் குறித்து
வருவதாக -பரி த்யக்தா மயா லங்கா மித்ரா நிசத நா நிச -என்று
சர்வத்தையும் விட்டு ஆகாஸ் ஸ்தானனான-விபீஷண ஆழ்வானை-
அந்தரி ஷக்த ஸ்ரீ மான் –
என்றது இறே-ராவண சம்பந்தம் அற்ற போதே ஸ்வாபாவிகமான வைஷ்ணவ ஸ்ரீ வந்து மாலையிட்ட படி(ஆபாச பந்து விட்டு ப்ராப்ய பந்து அடைந்த ஸ்ரீ மத்வம் )

அவனை ரஷகனாக அத்யவசித்து தன் பக்கல் முதல் அற்று
கை வாங்கின ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை –சது நாகவர ஸ்ரீ மான் -என்றது இறே(தன் செயலில் கைவிட்டு அவன் செயலே செயலாக அத்யவசித்த பின்பு
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ஸ்ரீ மான் என்றால் போலே)

ராவண சம்பந்தம் அற்றவோபாதி யாய்த்து ஸ்வா தந்தர்யம் அறுகையும்-
அவனுக்கு அந்நிய சேஷத்வமேயாய் ஸ்வா தந்தர்யம் இன்றியே இருந்தது
இவனுக்கு அந்நிய சேஷத்வம் இன்றியே ஸ்வ ஸ்வா தந்தர்யம் யுண்டாய் இருந்தது
இருவருக்கும் இரண்டும் அற்றவாறே லஷ்மி ப்ராபித்தாப் போலே –

அப்படியே இவர்களும்-இங்கு ஐஸ்வர்யமாக சொல்லுகிறது கிருஷ்ண ப்ரத்யாசத்தியை
அதாவது-
வழி பாதி வழக்கு பாதி தர்மம் பாதி யாக-
பஞ்ச லஷம் குடியில் பெண்களில் இவனால் புஜிக்கப்படாதார்-ஒருவரும் இல்லை
வலி  யாகிறது -தன் செல்லாமை
வழக்கு ஆகிறது -மைத்துனமை
தர்மம் ஆகிறது -சம்சயம்

வலி பாதி -வழக்கு பாதி தர்மம் பாதியாக -கிருஷ்ணனால் எச்சில் (அனுபவிக்கப் )படுக்கை -என்னவுமாம் –
தர்மமாவது -ஆந்ரு சம்ஸ்யத்தாலே மனிச்சு கலக்கும் படி
வழக்கு மைத்துனமை கொண்டு கலக்கும் படி
வலியாவது-தன் செல்லாமை கொண்டு மேல் விழும்படி

சிறுமீர்காள்
கிருஷ்ணனோடு ஒத்த பருவமாய் இருக்கை-
துல்ய சீல வயோ வ்ருத்தாம் -என்கிற படியே
எல்லாவற்றிலும் அவனுக்கு ஈடாய் இருக்கை

பருவம் நிரம்பின ஸ்திரீகளையும் புருஷர்களையும் கண்டால்-
தேவதாந்தர பஜனம் பண்ணினாரையும்-
தம்தாமுக்காக நினைத்து இருப்பாரைப் போலே நினைத்து இருக்கும்-
தனக்கு அனன்யார்ஹைகளாக நினைத்து இருப்பது இவர்களை-
இத்தால் அவனுக்கேயாய் இருக்கிற யோக்யதைச் சொன்ன படி-

ஆண்களைக் கண்டால் -நான் என்னது என்று இருப்பாரைக் கண்டால் போலே காணும் –
பருவம் கழிந்த பெண்களைக் கண்டால் தேவதாந்த்ர பஜநம் பண்ணினாரைக் கண்டால் போலே காணும்
பாலைகளைக் கண்டால் உகக்கும் -அது என் என்னில்
பார்த்தாவுக்கு ஸ்நேஹியாத பாலை அறிந்தவாறே பார்த்தாவுக்கு ஸ்நேஹிக்கும்-
பார்த்ரந்தர பரிக்ரஹம் பண்ணினவர்கள் பார்த்தாவுக்கு ஆகாதே

ஜ்ஞான லவதுர் விதக்தர் அன்றியே-
இடக்கையும் வலக்கையும் அறியாத கன்யைகளாய் இருக்கை-
இவனுடைய விஷயீ காரத்தாலே இளகிப் பதித்து இருக்கை
அக் கோலத்தில் குறைந்த கிருஷ்ண கடாஷம் இல்லை இறே
அதாவது-கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகாது இருக்கை

அஹங்கார ஸ்பர்சமாதல் –தேவதாந்த்ர ஸ்பர்சமாதல் அன்றிக்கே இருக்கை –
இத்தால் சொல்லிற்று ஆயத்து- அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்கள் இன்றிக்கே இருக்கை –

அவனுக்கு சத்ருசமான அநந்யார்ஹ சேஷத்வம் யுடையராகை –

மறந்தும் புறம் தொழா மாந்தர் –(நான்முகன் -68)

—————–

எங்களை நீர் இங்கனே கொண்டாடுகிறது என்-நமக்கு இந்நோன்பு தலைக் கட்டித் தருவாரார் -என்ன

நந்த கோபன் குமரன்
என்கிறார்கள் -அவன் நமக்குச் செய்யுமோ -என்ன -குடிப் பிறந்தவன் அன்றோ -என்கிறாள் –

கூர் வேல் கொடும் தொழிலன்
சக்ரவர்த்தி வில் பிடிக்க பிள்ளைகள் வில் பிடித்தால் போலே
இக்குடிக்கு வேலே ஆயுதம்
பிள்ளையைச் சொல்லும் இடத்தில் நின் கையில் வேல் போற்றி -என்று இறே சொல்லுவது –

கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் –
ஸ்ரீ நந்த கோபர் முன்பு பசும்புல் சாவ மிதியாவராய் ஆய்த்து –
நம் சிறியாத்தானைப் போலே ஆன்ரு சம்சய பிரதானராய் போருவது –
பிள்ளைகள் பிறந்த பின்பு அவர்கள் மேல் உண்டான வாத்சல்யத்தாலே –
அவர்களுக்கு என்ன வருகிறதோ -என்று அஞ்சி-
வேலைப் புகர் எழ கடைந்து பிடிக்கத் தொடங்கினார் –

கொடும் தொழிலன் –
தொட்டில் கீழே எறும்பு புகுரிலும் சிம்ஹத்தின் மேல் விழுமா போலே
சீற்றத்தின் மிகுதியால் உதிரக் கையரானார்-
ந ஹிம்ஸ்யாத் சர்வா பூதானி -என்கிற சாமான்ய விதி
அக்னீ ஷோமீயம் பஸூ மாலபதே -என்கிற விசேஷத்தில் வாராது இறே-
ஸ்வார்த்தமாக செய்யும் அன்று இறே நிஷித்தமாவது
அத் தலைக்கு என் வருகிறதோ என்று அஞ்சிச் செய்யுமன்று தர்மமாகக் கடவது –
மன் நிமித்தம் க்ருதம் பாபம் -இத்யாதி-
நின் பால் பொறுப்பு அரியனகள் பேசில் –ஆங்கே தலையை அறுப்பதே கருமம் கண்டாய் -என்றது இறே

சாதுவாய் நின்ற பசு கன்று இட்டவாறே அதின் பக்கல் வாத்சல்ய அதிசயத்தால்
முன்னின்ற கன்றையும் புல்லிட வந்தவர்களையும்
அகப்படக் கொம்பிலே கொள்ளுமா போலே படுவர்
பெரியாழ்வார் பெண் பிள்ளை யாகையாலே அங்குத்தைக்கு காவல் உண்டு என்று தரிக்கிறார்கள்-

நந்த கோபன் –
பிள்ளையைக் கண்ட ப்ரீதியாலே ஆனந்தத்தை உடையவர் என்னுதல்-
நாம தேயமாதல் –
இப்போது இவரைச் சொல்லுவான் என் என்னில்
உத்தேஸ்ய வஸ்துவை நோக்கித் தருபவர் என்னும் பிரீதியாலே –
நந்த கோபாலா -எழுந்திராய் என்று எழுப்பிக் கார்யம் கொள்ளலாம்படி இறே
இவர்களுக்கு அவர் விதேயமாய் இருப்பது –

நந்த கோபன்
நந்தாமி பஸ்யன் நபி தர்சநேந தாம் ஜராம் -பிள்ளையைக் கண்ட ப்ரீதியாலே
ஆனந்தத்தை யுடையனாகவுமாம்-
நரை திரை மாறி இளகிப் பதித்தபடி என்றுமாம் –
( வா போகு வா இன்னம் வந்து* ஒருகாற் கண்டுபோ )

பிள்ளையைக் கண்டு இளகிப் பதித்து உகப்பு ஒரு வடிவு கொண்டால் போலே இருக்குமவர் –

அம்பரமே தண்ணீரே -என்ற பிராண தாரகங்களைக் கொடுக்குமவர்
நம் பேர் இழவுக்கு இரங்கி நம் பிராண தாரகத்தைத் தாராரோ

குமரன் –
வெண்ணெய் களவு கண்டான்
பெண்களை களவு கண்டான்
ஊரை மூலையடி ஆக்கினான்
என்று எல்லாரும் வந்து முறைப்பட்டால்
என் கண் வட்டத்திலே வந்து தோற்றினான் ஆகில் நியமிக்கக் கடவேன் -என்று
பெரிய உத்யோகத்தோடு இருந்தால் அவர் முன்னே தோற்றும் போது
ச விநயமாக தோற்றுகையாலே-கெட்டேன் இவனையோ எங்கனே பழி இட்டது -என்று
அவர்களையே பொடியும்படியாய் இருக்கை-

ஸ்ரீ நந்தகோபர் சந்நிதியில் கோல் கீழ் கன்றாய் நிற்கும் படி

தீம்பிலே கை வளர்ந்து திரிய அவர்கள் வந்து முறைப் பட்டால்
இவனையோ இவர்கள் இப்படி சொல்வது என்னும் படி விநயம் பாவித்து நிற்கும் –

வெண்ணெய் களைக் களவு கண்டான் -பெண்களைத் தீம்பு செய்தான் -என்று எல்லாரும் வந்து முறைப்பட கேட்டு –
என் முன்னே தோற்றும் கிடீர் என்று இருந்தவர் முன்னே தோற்றினால்
இவனையே குற்றம் சொல்வது என்று அவர்களைக் கோபிக்கும் படி
சக்ரவர்த்தி திருமகனைப் போலே விநயம் பாவித்து இருக்கும் –

யசோதை பிராட்டி பொடியும் போதும் –
உந்தம் அடிகள் முனிவர் -என்று அன்றே பொடிவது –
படிறு பல செய்து இப்பாடி எங்கும் திரியாமே -கொடியேன் என் பிள்ளையைப் போக்கினேன் -என்று இறே இவள் இருப்பது

————–

ஏரார்ந்த கண்ணி யசோதை-
யசோதை பிராட்டி கண்ணிலே அழகு குடி கொண்டாய்த்து இருப்பது –
பிள்ளையை மாறாதே பார்த்துக் கொண்டு இருக்கையாலே
அவ்வாசி யடைய கண்ணிலே தோற்றும்படியாய் இருக்கை –
அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் தொழுகையும் -இவை கண்ட கண் இறே
அம்பன்ன கண்ணாள் யசோதை தன் சிங்கம்( 6-8) -என்னக் கடவது இறே

அழகார்ந்த கண்ணை யுடையவன் -அவனை சதா பஸ்யந்தியான கண்கள் –
அம்பன்ன கண்ணாள்-என்னுமா போலே ஒரு ஆளும் ஓர் நோக்கும் ஒன்றாய் இருக்கை-

கிருஷ்ண அனுபவத்தால் பிறந்த ஹர்ஷம் அடைய கண்ணிலே காணலாய் இருக்கை –
நாட்டார்க்கு புண்ய பாபங்கள் கலசி இருக்கையாலே ஒரு வைரூப்பியம் உண்டே கண்ணில் –
இவளுக்கு சர்வேஸ்வரனை பிள்ளையாகப் பெற்ற பாக்யம் அடைய கண்ணிலே தோற்றி இருக்கும் –

பிள்ளைக்கு தாய் வழி யாகாதே கண் -என்று பிள்ளை உறங்கா வல்லி தாசர் வார்த்தை –
ஒரு நாடாக சதா பஸ்யந்தி பண்ணி அனுபவிக்கிற விஷயத்தைத் தானே ஒரு மடை செய்து அனுபவிக்கிறவளுடைய கண் இறே

சதா பஸ்யந்தி என்று பிள்ளையைக் காண்கைக்குத் திறந்திடு வாசலாக நிலைக் கதவைப் பிடுங்கிப் பொகட்ட கண்கள் –
தமப்பனார் கையிலே வேல் ஒன்றும் கொண்டு நோக்கும்
அம்பன்ன கண்ணாள் யசோதை -(பெரிய திருமொழி -6-8-6)ஆகையால் இவள் முகத்தில் அம்பு இரண்டும் கொண்டு நோக்கும்

அஞ்ச வுரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும்(3-5) -என்று
அவன் செய்யும் தீம்புக்கும் அவள் அனுமதி பண்ணி இருக்கும் –

——–

யசோதை
யசோதா அறிவுறாய்-என்று எழுப்பிக் கார்யம் கொள்ளலாம்படி இறே
இவர்கள் திறத்தில் அவள் அனுகூலித்து இருக்கும்படி

இளஞ் சிங்கம்
ஸ்ரீ நந்தகோபர் ஹித காமர் ஆகையாலே அங்கு விநயம் தோற்ற நின்ற படியைச் சொல்லிற்று –
இவள் பிரியமே நடத்துபவள் ஆகையாலே செருக்கும் மேணானிப்பும் தோற்ற நின்ற நிலையைச் சொல்லுகிறது –
அஞ்ச உரைப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் -என்று
இவன் செய்தது எல்லாம் உத்தேச்யமாக விறே இவள் நினைத்து இருப்பது
ஆரேனும் வந்து முறைப்பட்டால் -அஞ்ச உரப்பாள்-
இவன் தீம்பிலே தகண் ஏறும்படியாக வாய்த்து உரப்பது –

இளஞ் சிங்கம் –
சிறுமியருக்கு ஒத்த பருவமாய் இருக்கை
சிங்கக் குருகு என்று பட்டர் அருளிச் செய்வர்-

சிங்கக் குருகு -என்று ஆழ்வான் வார்த்தை –என்றுமாம்
நந்த கோபன் குமரன் -என்று தமப்பனார்க்கு பவ்யனாய் இருக்கும் படி சொல்லிற்று –
இளஞ் சிங்கம்—என்று தாயாருக்கு அடங்காத படி சொல்கிறது -தன் களவுக்கு பெரு நிலை நின்று அன்றி
அவளுக்கு பிழைக்க ஒண்ணாது இருக்கை-

அவர்கள் சிறுமியர் -இவன் இளஞ்சிங்கம் –
அநந்யார்ஹ சேஷத்வமும் சேஷித்வமும்
ராகவோர்ஹதி வைதேஹீம் -என்னுமா போலே இருக்கை –

அஞ்ச உரப்பாள் யசோதை (நாச்சியார் )இறே —
கருத்து அறிந்து தீம்பிலே கை வளரும் படி காணும் அவள் நியமிக்கும் படி –
இவள் பார்வை அறிந்து பரிமாறும் பாவஞ்ஞன் இறே அவனும் –
இவளும் அவன் ஆணாட்டம் கண்டு ஆனந்த நிர்ப்பரையாய் இருக்குமாய்த்து –
அவ்விடம் புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் –என்று ஒளிக்க வேண்டுவார் புகுந்தால் ஏதேனும்
ஒரு பதார்த்தாலே மறைத்து வைக்கலாம் படி இருக்குமாய்த்து –

சிறுமீர்காள் என்றால்-இளஞ்சிங்கம் என்ன வேண்டாவோ –

ஒருத்தரும் முடி சூட்ட வேண்டா அதுக்கு -தானே ம்ருகேந்த்ரம் இறே-கம்சனை முடியச் செய்ய வல்ல மிடுக்குண்டாகை-

இங்கு ஆண்டாள் மந்த்ர லிங்கம் தோற்றாமே சொல்லுகிறாள் காண் -என்றுமாம் –
(கண்ணன் பெயரே இல்லாமல் )

——

கார் மேனி –
நம்முடைய சகல தாபங்களும் ஆறும்படியான வடிவு-இவர்கள் விடாய் தீரும் படி யான வடிவு –
தூ நீர் முகில் போல் தோன்றாய் -என்று பிரார்த்தித்த வஸ்து இறே-
இவர்களுக்கு பிரத்யஷித்து நிற்கிறது-மாதா பிதாக்கள் தங்களை மறைத்து வைத்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகு

தமப்பனாரும் தாயாரும் ஒளித்து வைத்தாலும் -களவு காண்டாகிலும் காண வேண்டி இருக்கும் விஷயம்

அவர்கள் நீராடப் புக்கவாறே பின்பு அவன் உடம்பிலே இட்ட செவ்வி

கண்ண பிரானது திருமேனியைக் காண்டலுமே கார் முகிலைக் கண்டாற்போல்
ஸகல தாபங்களும் தீர்வது பற்றிக் “கார் மேனி” எனப்பட்டது.

தங்கள் ஆடப் போகிற தடாகம்(கார் மேகத்தில் அன்றோ நீராடப்போகிறார்கள் )

செங்கண்
அத் திருமேனிக்கு பரபாகமான சிவப்பை உடைய திருக் கண்கள் –
அகவாயில் வாத்சல்யம் அடைய திருக் கண்களில் தோற்றும்படியாய் இருக்கை –
ஐஸ்வர்யத்தாலும் குதறி இருக்கும் இறே-

வாத்சல்யத்தை தெரிவிக்கிற கண்கள் –
ஒரு மேகத்திலே இரண்டு தாமரை பூத்தால் போலே இருக்கை –
இராத் திரு நாள் சேவித்தார் கண் போலே இருக்கை –
இவர்களிலும் இழவு தன்னது என்னும் இடம் கண்ணிலே தோற்ற இருக்கும் –

அஞ்சன கிரியிலே இரண்டு தாமரைப் பொய்கையைப் போலே-

கார்மேனி -செங்கண்-
வடிவாலே அணைத்து-கண்ணாலே குளிர நோக்குகையிலே இறே கருத்து

கதிர் மதியம் போல் முகத்தான் –
பிரதாபத்துக்கும் குளிர்ச்சிக்கும் ஆதித்யன் உடைய புகரை-ஊட்டின சந்தரனைப் போல் ஆய்த்து-திரு முகம் இருக்கும் படி-
பிரதிகூலருக்கு அநபிபவ நீயானாய்-அனுகூலருக்கு கிட்டி நின்று-அனுபவிக்கலாம்படி இருக்கை –

தத்ர கோவிந்த மாசீனம் பிரசன்ன ஆதித்ய வர்ச்சசம் -என்னக் கடவது இறே
கதிர் மதியம் போல் முகத்தான் –
பிரகாசமுமாம் ஆஹ்லாத கரமுமான முகத்தை உடையவன் என்னவுமாம்

செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் –
மடுவிலே பூத்த தாமரை ஓடத்தை விழவிட்டு வடிவைக் காட்டிக் குளிர நோக்கி
வாயாலே வினவும் படியை நினைக்கிறார்கள்

முளைக் கதிரை-என்று சொல்லும்படி இருக்கை –
ஆஸ்ரிதற்கு நிலவைப் போலே -அநாஸ்ரிதற்கு வெய்யில் போலே
ஆஸ்ரிதற்கு புனலுரு-அநாஸ்ரிதற்கு அனலுருவாய் இருக்கும்
ஆஸ்ரிதற்கு சந்திரன் -அநாஸ்ரிதற்கு ஆதித்யன்

ஆண்களுக்கு அநபி பவனாய் -பெண்களுக்கு அணைக்கலாய் இருக்கை –

பிராட்டி வடிவுக்கு -வரவுக்கு -அருணோதயம் போலே மார்கழி நீராட நினைத்த பொது பிறந்த செவ்வி –

கதிர் மதியம்
ஆண்களுக்கு அநபி பவனாய் -பெண்களுக்கு அணைக்கலாய் இருக்கை –
முளைக் கதிரை –
விரியும் கதிரே போல் வானை -(நாச்சியார் )
செய்யாதோர் நாயிற்றைக் காட்டி-(திருவாய் )
ஸூர்யமிவோ தயஸ்த்தம்-பிராட்டி வடிவுக்கு -வரவுக்கு -அருணோதயம் போலே மார்கழி நீராட நினைத்த பொது பிறந்த செவ்வி –

முகத்தான் –
அவ்வளவிலும் உபமானம் நேர் நிற்க மாட்டாமையாலே உபமேயம் தன்னையே சொல்லுகிறது-

உபமேயத்தை காணும் அளவும் இறே அது நிற்பது –
ஆனாலும் அனுபவிப்பார்க்கு ஒரு துறை இட்டுக் கொண்டு இழிய வேணுமே –

நகட்டுச் சந்திரனும் கார் கால ஆதித்யனும் போல் அல்லன்-
அம் முகத்தை யுடையவன் என்னும் அத்தனை
என் மகன் முகம் நேர் ஒவ்வாய் -என்றும்
சந்த்ர காந்தாநநம் ராமம் -என்றும் சொல்லுமா போலே –

அத் திரு மேனிக்கு பரபாக சோப அவஹமாய் அகவாயில்–வாத்சல்ய பிரகாசகமாயும்–பரத்வ பிரகாசகமாயும்-இருந்துள்ள
சிவந்த திருக் கண் மலர்களை உடையனாய்-
கார் மேனி என்கையாலே -சௌலப்ய சௌசீல்யங்களையும்–
செங்கண் என்கையாலே -வாத்சல்ய ஸ்வாமித்வங்களும்-தோற்றுகையாலே
ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குண சதுஷ்ட்யமும் சொல்லிற்று ஆய்த்து
அநபிபவநீயதவம் சக்தி கார்யம் ஆகையாலே–ஆஸ்ரித கார்ய ஆபாதாக சதுஷ்டயமும் சொல்லிற்று ஆய்த்து-
இப்படி குணங்களை உடையனான நாராயணனே

———–

நாராயணனே
கோவர்த்தன உத்தரணாதி அதிமாநுஷ சேஷ்டிதங்களாலே
சர்வேஸ்வரத்வம் பெண்களுக்கு தெரியும் படி -யாய் இறே இவ் வவதாரம் தான் இருப்பது –

வடிவு அழகைக் கண்டு -வேறு ஒரு விஷயத்தை பற்றிற்றாக வேண்டாதே ப்ராப்த விஷயமாய் இருக்கை –
அவனாலும் தன்னை அனுபவிக்கத் தாரேன் என்ன ஒண்ணாது காணும் –
இத் தலை வைமுக்யம் பண்ணின வன்றும் தான் ஆபிமுக்யம் பண்ணிப் போருமவன்-
(நாரங்களை அயனமாகக் கொண்டவன் உள்ளேயே இருந்து பதி கிடக்கிறான் அன்றோ )
நாராயண அநுவாக ஸித்தமான வஸ்து இடைச்சிகளுக்கும் கூட ஸூலபனான படி –

தேவதாந்தரங்கள் அறியாத கோப வ்ருத்தர்கள் நோன்புக்கு அங்கமாக ஜெபிக்கும்
மந்த்ரமாக உபதேசிக்கையாலே சொல்லுகிறார்கள் என்னவுமாம் –

இன்னவும் தன்னுடைய தமப்பன் மார் சொல்லவும் கேட்டு இருக்கும் இறே –

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால் -என்றும்
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -என்றும்
திண்ணம் நாரணம் -என்றும்
நாரணனை நன்கு அறிந்தேன்-என்றும்
இவ் வர்த்தத்தில் ரிஷிகளும்
நாராயணா சப்தார்த்தம் -என்றும்-

ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் -என்றும்
ஸ்ருதியும்
நாராயண பரம் பரமம் -என்றும்
பல விடத்திலும் சொல்லிற்று

நாராயணனே
ஓட்டொட்டியாய்-பெண்களை விடாதே இருக்குமவன் –
இத்தனை நல்லது நமக்கு கிடைக்குமோ என்னில்-நாம் அல்லோம் -என்று இருக்கும் காலத்திலும் தான் ஆவேன் என்று இருக்குமவன்
ஆசைப்பட்ட விஷயமே வகுத்த விஷயமாய் இருக்கிறபடி-

————

நாராயணனே நமக்கே பறை தருவான்
சர்வ ஸ்வாமி யானவனே-நம்முடைய அபேஷித சம்விதானம் பண்ணுவான் –
இத்தலை இசையாத வன்றும் தான் விட மாட்டாத வாத்சல்யம்-அவதாரணத்துக்கு கருத்து
சமிதை பாதி சாவித்திரி பாதி அன்றிக்கே-தானே சென்று தலைக் கட்ட வல்லவன் என்கிற-
சாதன நைரபேஷ்யம் சொல்லுகையிலே நோக்கு –
நாரயணத்வம் சர்வ சாதாரணம் அன்றோ என்னில் –

நமக்கே –
அத் தலையாலே பேறு என்று இருக்கிற நமக்கு -என்றபடி –
அகிஞ்சநராய்-அவன் கை பார்த்து இருக்கிற நமக்கே -என்றுமாம் –

நமக்கே –
அத் திரு நாமத்தில் சொல்லுகிறபடியே சர்வ விஷயமாக அன்று –
சம்பந்த ஞானம் உடைய நமக்கே –ஸ்வ ரக்ஷணத்திலே அன்வயம் இல்லாத நமக்கே (தருவான் )

நாராயணனே -என்கிற இடத்தில் அவதாரணம் –உபாய நைரபேஷ்யத்தை சொல்லுகிறது –

இதில் (நமக்கே )அவதாரணம்-ப்ராப்தாவினுடைய ஆகிஞ்சன்யத்தை அறிவிக்கிறது

அவனுக்கு உபாய பாவம் ஸ்வரூப அந்தர்கதம்-
அத்தலையில் நிறைவாலும் அவனே உபாயம் –
இத்தலையில் குறைவாலும் அவனே உபாயம் –

பலி புஜி சிசுபாலே தாத்ருகாகஸ் கரேவா குண லவ ஸஹஸாசா தத்வ ஷமா சம்குசந்தீ -(ஸ்ரீ ரெங்கராஜஸ்தவம் )
போக்கற்றவனுக்கு திறந்து கிடந்த வாசலிலே புக வேணும் –வைக்கிறவனுக்கும் பேர் சொல்லி வைய வேணும்-
இத்தனை இறே காகமும் சிசுபாலனும் செய்தது –இத்தனை யாகிலும் விஷயீ கரித்தான் இறே இருவரையும் –
இக் கைம் முதலும் இல்லை என்கிறார்கள் -நமக்கே -என்கிற இத்தால் –

நமக்கே பறை தருவான்
உடையவனே உடைமையை நிர்வஹிப்பான்-
ஏவ கார்த்தாலே மிடல் -(வேறே வலிமை )வைக்க வேண்டா என்கை –
சணல் கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்திரம் போலே வேறு ஓன்று காணில் விடும்

நமக்கே –
என்றது என் -நாராயணத்வம் எல்லாருக்குமே என்னில்-அதிகாரி நியமம் பண்ணுகிறது –
ஸ்வரூபத்தில் உணர்த்தியும் -ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தியும் யுடையவனுக்கே -என்கிறது –
அவனாலே அவனைப் பெற இருக்குமவர்கள் -என்றுமாம்
விலக்காமையும் அதுக்கு அடியான சம்பந்தத்தை உணர்ந்து இருக்கையும் யுடையவர்கள் என்றுமாம் –
அப்படியல்ல வாகில் சர்வ முக்தி பிரசங்கமாம் –
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்த்வம்-(பராசர பட்டர் இவை குணம் அல்ல ஸ்வரூபமே )

நாராயணனே
குண ஹீனன் ஆனாலும் ஸ்வரூபம் நோக்க வேணும் –
வழி பறிக்காரனுக்கும் பசலுக்குச் சோறிட வேணுமே –
பசலுக்குச் சோறிடாதவனுக்கும் தன் வயிறு வளர்க்க வேணுமே
சேதன அசேதனங்கள் அவனுக்கு சரீரம் இறே

———

பறை தருவான் –
நாட்டுக்கு பறை என்று ஒரு வ்யாஜமாய்-
தங்களுக்கு அபிமதமான அடிமையை யாய்த்து நினைக்கிறது-

பறை தருவான்
நாட்டுக்கு நோன்பு -நமக்கு பறை —
த்வ்யர்த்தகம்

இத்தை சாதித்துத் தருவர் ஆர் என்னில் -இவர்கள் தாங்களே இறே –
இற்றைப் பறை கொள்வான் அன்று காண – என்று -மேலே சொன்னார்கள் –

தருவான் –
பிராப்தி உண்டானாலும் அவன் தரக் கொள்ள வேணும் என்னுமிடம் தோற்றுகிறது-

உக்கமும் தட்டொளியும் -என்று நாட்டுக்கு ஒரு பேர் சொல்லிக் கிட்டின வாறே
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்னா நின்றார்கள் இறே –
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் -என்கையாலே–யாவதாத்மா பாவியான அடிமையை நினைக்கிறது

பாடிப் பறை கொண்டு -என்றதையும் நிஷேதித்திக் கொண்டு
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் -என்றதையும் நினைக்கிறது –

நோன்புக்கு உபகரணங்களைப் பறை என்கிறது
அவனோட்டை சம்ஸ்லேஷம் அவர்களுக்குப் பறை -நமக்கு கைங்கர்யம் –
இது இடைச்சிகள் துடைப் பேச்சு -ச கோத்ரிகள் அறியுமத்தனை -( ஸங்கேத பதம் )

உடையவனே உடைமையை நிர்வஹிப்பான்-
ஏவ கார்த்தாலே மடல் வைக்க வேண்டா என்கை –
சணல் கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்திரம் போலே வேறு ஓன்று காணில் விடும்

நாராயணனே நமக்கே பறை தருவான் -இதுவே ஸ்ரீ பாஷ்யம் –
சமன்வய அதிகாரம் –சர்வ காரணத்வன்-நாராயணன் -சர்வ பூத அந்தராத்மா –ஏகோ -யஸ்ய பிருத்வி சரீரம் –
நாராயணனே ஏவ காரம் -இரண்டாம் அத்யாயம் -விரோதம் பரிக்ரஹித்து -அவிரோத அத்யாயம்
தருவான் -மூன்றாவது -உபாய பூதன்-பக்தியால் ப்ரீதனான அவனே உபாயம்
பறை -புருஷார்த்தம் -நான்காவது -பலாத்யாயம்
நமக்கே -சாத்திய உபாயத்தால் வசீகரித்த நமக்கே –

மார்கழித் திங்கள் -நாராயணன் -பரமபத நாதன் -ஸ்ரீ பரமபத அனுபவம் -ஸூ சகம்
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர –ஜாதோசி தேவதேவேச சங்க சக்ர கதாதர –

நாராயணனே நமக்கே பறை தருவான் -திருப்பாவை -1
கண்ணே உன்னைக் காண எண்ணே கொண்ட -திருவாய்மொழி -9-4-2-

நமக்கே -அதிகாரி ஸ்வரூபம் -எண்ணே கொண்ட
பறை -பிராப்யததை -காண
தருவான் -உபாயத்தை -கண்ணே
பிராப்ய பிராபக அதிகாரி ஸ்வரூபம் இறே சாஸ்திர அர்த்த தமம் ஆவது –
பிராப்ய பிராபக அதிகாரி ஸங்க்ரஹம்-இரண்டிலும் –

நாராயணனே நமக்கே பறை தருவான்
எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந் தண்ணந் துழாய் முடி அப்பனூர் செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1-
நல்ல வருள்கள் –
என் குற்றத்தை யாதல்
தன்னுடைய சர்வஞ்ஞதவம் ஆதல் பாராமல்
தன பேறாக பண்ணின அருள் –
மாயக் கூத்தா -என்ற திருவாய் மொழியிலே
விடாய்க்கு அருளினான் என்று இருக்கின்றிலர்-
நமக்கே தந்தருள் செய்வான் –
பலர் அடியார் முன்பு அருளிய -திருவாய்மொழி -7-10-5–என்கிறபடியே
நித்ய ஸூரிகளும் தாம் பெற்ற பேறு பெற்றிலர் என்றாயிற்று நினைத்து இருப்பது –

எம்பெருமானார் விஷயமாகவே –
ஸ்ரீ பாஷ்யாதிகள் சாதிக்கும் பொழுது கதிர் போலேயும்
பகவத் விஷயாதிகள் சாதிக்கும் பொழுது ஆஹ்லாத சீதா நேத்ராம்பு -மதியம் போலேயும் இருப்பாரே
நாராயணனே நமக்கே பறை தருவான் – சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்த மயீம்
தநூம் மக் நான் உத்தரதே லோகான் –உத்தாராக ஆச்சார்யர் அன்றோ

நிஷ்காமருக்கு நித்யமாயும்
பகவத் பிரபன்னர்க்கு கைங்கர்யமாயும்
போருகிற இந் நோன்பிலே-பகவத் அனுபவ ஏகாந்தம் என்று அத்யவசித்து
ஸ்ரத்தா பூர்வகமாதயதா விதானம் அனுஷ்டித்தால்-லௌகிக வைதிக பரம வைதிகர்கள் உடைய கொண்டாட்டம்-
தன்னடையே சித்திக்கும் இறே
யத்தாஷ்டாஷர சம்சித்தோ மஹா பாஹோ மஹீயதே-என்னக் கடவது இறே-

சமஸ்த கல்யாண குணாத் மகனான ஸ்ரீ மன் நாராயணனை
அவனை ஒழிய ப்ருதுக் ஸ்திதி யுபலபதி இல்லாதபடி-பிரவேசித்து-ஸ்வ சத்தையை லபித்தேன் -என்று
ப்ரஹ்ம அனுபவத்துக்கு-நீராட்டத்தை திருஷ்டாந்தமாக சொல்லுகையாலே-
நீராட -என்று பிராப்யத்தை ஸங்க்ரஹித்தார்கள்-
நீராடப் போதுவீர் என்று -இப் புருஷார்த்தத்துக்கு இதில் இச்சையை உடையவர்களே
அதிகாரிகள் என்று அதிகாரியை ஸங்க்ரஹித்தார்கள்-
நாராயணனே என்று ப்ராபகத்தை ஸங்க்ரஹித்தார்கள்-
நமக்கே என்று உபாய அதிகாரிகளை ஸங்க்ரஹித்தார்கள்-
இத்தால்-
உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக-அவனையே உபாயமாக பற்றுகை-அதிகாரம் என்றது-ஆய்த்து-

நாம் விதித்த படி செய்வானாக -சொல் படி என்னாமல்-விதி அதிகிரமத்தில் பிரத்யவாயத்துக்கு
அஞ்சுவாரைப் போலே
நிரந்குச ஸ்வ தந்த்ரன் -இப்படி வித்தித்த படி செய்வதே -சௌலப்ய குணம் பாரோர் புகழ -என்றபடி-

படிந்து–இந் நோன்பிலே அவஹாகித்து–நீராடப் போதுவீர் போதுமினோ -என்று அந்வயம்

தருவான் -தருவதற்காகவே நாராயணன் இங்கு கண்ணனாக அவதாரம்

நாராயணனே நமக்கே பாரோர் புகழ படிந்து பறை தருவான் -என்றுமாம்
அருள் தருவான் அது நம் விதி வகையே

———–

பாரோர் புகழ –
கிருஷ்ணனையும் நம்மையும் சேர ஒட்டாதவர்கள்-தாங்களே கொண்டாடும்படி
கிருஷ்ணன் வேண்டும் உபகரணங்களைக் கொடுக்க-பெண்கள் நோன்பிலே உபக்ரமித்தார்கள்-

பாருக்கு எல்லாம் அநாவ்ருஷ்டி இல்லாமையால்-வர்ஷித்தால் பார் எல்லாம் கொண்டாட ப்ரசக்தி இல்லாமையாலும்-
சேர ஒட்டாதவர்கள் புகழ்கையே இவர்களுக்கு பரம உத்தேச்யமாய் இருக்கையாலும்
பாரோர் -என்றதுக்கு கோப வ்ருத்தர் பரமாக அர்த்தம்-
நாடு அடங்க அநாவ்ருஷ்டி தீர்ந்து சக்ருத்தமாய்த்து என்று கொண்டாடும்படி-

இசையாதவர்களும் கொண்டாடும்படி –
ஸ்வரூப ஞானம் உடையாருடைய யாத்திரையை ஸ்வரூப ஞானம் இல்லாதார் நிந்திப்பார்கள் –
அது வேண்டா இறே இவர்களுக்கு -வர்ஷம் உண்டாகையாலே

பாரோர் புகழ
இந்த சம்ஸ்லேஷம் அறியார்களாகிலும் இச் சேர்த்தி கண்டு இனியராம் படி படுத்தும் –

———

படிந்து
இந் நோன்பிலே அவஹாகித்து-நீராடப் போதுவீர் போதுமினோ -என்று அந்வயம்

அபி நிவேசித்து முன்பு சொன்ன மடுவில் அவகாஹித்து

ஏல் ஓர் பாதத்தை பூரித்துக் கிடக்கிறது
எம்பாவாய்
எங்கள் நோன்பு -என்னுதல்
எங்கள் சந்தஸ் -என்னுதல்

ஏல் -இப்படி ஆகில்
சம்போதனம் ஆகவுமாம்
ஓர் -புத்தி பண்ணுங்கோள் -என்னவுமாம்-

ஏல்-இப்படி யாகில் -என்றபடி –
ஏல் -என்றது சம்போதனை
ஓர் -புத்தி பண்ணு
எம்பாவாய் -என்றது
எங்கள் சந்தஸைப் பின் செல் என்றபடி

அன்றிக்கே –
பாத பூர்ணமான அவ்யயமாக வுமாம் –

எம்பாவாய் -என்றது –
மேல் காம ஸமாச்ரயணம் ஆகையால் பாவாய் -என்று ரதியைச் சொல்லிற்று ஆகவுமாம்
எங்கள் சந்தஸ் அனுவ்ருத்தியைப் பண்ணு என்றுமாம் –

எம்பாவாய் -எம் பிள்ளாய் –

ச -வை -து -ஹிக்கள் போலே
பாதத்தைப் பூரித்துக் கிடக்கிறது என்று சொல்லுகிறது –

1-காலத்தைக் கொண்டாடி —
2-பலத்தைச் சொல்லி —
3-அதிகாரிகளை சொல்லி–
4-இது கேட்ட பின்பு-அவர்களுக்கு பிறந்த புஷ்கல்யத்தை சொல்லி –
5-கிருஷ்ண சம்ச்லேஷத்துக்கு ஏகாந்தமான ஊரிலே பிறக்கப் பெற்ற நீங்களும் சிலரே என்று-
ஸ்ரீ நந்த கோபர்க்கும் யசோதை பிராட்டிக்கு பவ்யனாகையாலே இழக்க வேண்டா என்று-
அவர்கள் ஒளித்தாலும் விட ஒண்ணாத படியான வடிவு அழகாய்ச் சொல்லி–
6-விரூபனானாலும் விட ஒண்ணாத படியான ப்ராப்தியைச் சொல்லி–
7-உபாய நைரபேஷ்யம் சொல்லி–
8-ஆகிஞ்சன்யத்தில் நைரபேஷ்யம் சொல்லி–
9-உகவாதாரும் உகந்து கொண்டாடும் படி சொல்லித் தலைக் கட்டுகிறார் —

————

முதல் பாட்டில்
பகவத் பரத்வத்தால் சொல்லிற்று ஆகிறது
வேதார்த்தம் –
அதாவது
சர்வ ஸமாச்ரயணீய ஸ்தலம் -என்றும்
அவ தீர்ணனாவான் அழகே ருசி ஜனகன் -என்றும்
ருசி யுடையார் ப்ராப்ய த்வரையாலே அவன் தன்னையே மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
இவ் விஷயத்தில் இழிவார்க்கு ருசியுடையார் உத்தேச்யம் என்றும்
ப்ராப்யமாகிறது
அனுபவ ஜெனித ப்ரீதி காரிதமுமாய் -யாவதாத்மா பாவியான கைங்கர்யம் -என்றும்
தத் சாதனமும் அவன் திருவடிகளே என்னலாயிற்று-

ப்ராப்ய ப்ராபக சங்க்ரஹம்-

————–

மார்கழித் திங்கள் இத்யாதி
இதில் அத்யந்த பக்தி யுக்தரானவர்கள் பகவத் விரஹ பரிஹாரமாக –
சஹகாரிகளுடன் பகவத் விஷய அவகாஹனம் பண்ண ஒருப்பட்டு
ஸ்வ அபேஷிதங்களை அத்தலையால் பெற்று வாழும் படியையும் சொல்லுகிறது
தந்தாம் ப்ரீதி விஷயங்களைப் பிரிந்தார்களுக்கு எல்லாம் இப்படி இறே ப்ரேம ஸ்வ பாவம் இருப்பது –

————

நாராயணனே நமக்கே பறை தருவான் என்று -என்று முதலிலே திருமந்திரத்தை எடுத்தாள்-
திருமந்த்ரத்தினுடைய மூன்று பதத்தாலும் மூன்று அர்த்தம் சொல்லுகிறது
முதல் பதம் ஆத்மாவினுடைய ஸ்வபாவிக சேஷத்வத்தைச் சொல்லுகிறது
இரண்டாம் பதம் அதுக்கு எதிர்த்தட்டான அந்நிய சேஷத்வமும் ஸ்வ ஸ்வா தந்தர்யமும் அஸஹ்யமாம் படி சொல்லுகிறது
மூன்றாம் பதம் அந்த சேஷத்வத்தினுடைய சீமையாவது ததீய சேஷத்வ பர்யந்தமாய் இருக்கை -என்கிறது

முதல் பதத்தில் சொன்ன அர்த்தத்துக்கு த்ருஷ்டாந்த பூதர் இளைய பெருமாள்
மத்யம பதத்தில் சொன்ன அர்த்தத்துக்கு த்ருஷ்டாந்த பூதர் ஸ்ரீ பரத ஆழ்வான்
மூன்றாம் பதத்தில் சொன்ன அர்த்தத்துக்கு த்ருஷ்டாந்த பூதர் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் -அவன் படி இவர்களது

உற்றதும் உன்னடியார்க்கு அடிமை நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் கண்ண புரத்துறை யம்மானே
அவன் அடியார் நனிமாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க -என்னுமவர்களுடைய பெண் பிள்ளை இறே

தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-

ஆகையால் ஒருவரை ஒழிய ஒருவர்க்குச் செல்லாமை –
உணர்ந்தவர்கள் அடையச் சென்று உணராதார் வாசல்களைப் பற்றி எழுப்புகிறார்கள்

——————-

திருப்பாவை முப்பது பாட்டுக்கும் முதல் பாட்டு ஸங்க்ரஹமாய் இருக்கும் –
எங்கனே என்னில்
ஸ்ரீ பாஷ்யம் ஒன்பதினாயிர க்ரந்தத்துக்கும் முதல் ஸ்லோஹம் ஸங்க்ரஹமானால் போலேயும்
ஸ்ரீ ராமாயணம் இருபத்து நாலாயிரம் கிரந்தத்துக்கும் முதல் சர்க்கம் ஸங்க்ரஹமானால் போலேயும்
ஸ்ரீ மஹா பாரதம் நூறாயிரத்து இருபத்தையாயிரம் க்ரந்தத்துக்கும் முதல் அத்யாயம் ஸங்க்ரஹமானால் போலேயும்
திருவாய் மொழிக்கு முதல் திருவாய்மொழி ஸங்க்ரஹமானால் போலேயும்
முதல் திருவாய் மொழிக்கு முதல் பாட்டு ஸங்க்ரஹமானால் போலேயும்
மந்த்ர சேஷத்துக்கு பிரணவம் ஸங்க்ரஹமானால் போலேயும்
முப்பது பாட்டுக்கும் முதல் பாட்டு ஸங்க்ரஹமாய் இருக்கும் -ஸங்க்ரஹமான படி
எங்கனே என்னில்-

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் -என்கிற இடத்தில்
முதலிட்டு அஞ்சு பாட்டுக்கும் ஸங்க்ரஹம் சொல்லிற்று –

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் -என்கிற இடத்திலே
பத்துப் பெண்களை எழுப்புகிற இடத்துக்கு ஸங்க்ரஹம் சொல்லிற்று

கூர்வேல் கொடுந்தொழிலன் -என்கிற இடத்தில்
கோவில் காப்பானே -என்கிற இடத்துக்கு ஸங்க்ரஹமாகச் சொல்லுகிறது

நந்த கோபன் -என்கிற இடத்தாலே –
நாயகனாய் நின்ற நந்தகோபன் என்றும்
ஓடாத தோள் வலியன் நந்த கோபாலன் -என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்

குமரன் -என்றத்தால்
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே -என்கிற இடத்துக்கு ஸங்க்ரஹம்

கதிர் மதியம் போல் முகத்தான் -என்கிற இடத்தால் –
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல் -என்றும்
உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே என்றும் இத்யாதிகளுக்கு ஸங்க்ரஹம்

நாராயணன் -என்கிற இடத்தாலே-
நாராயணன் மூர்த்தி கேசவன் என்றும்
நாற்றத் துழாய் முடி நாராயணன் -என்றும் ஓங்கி உலகளந்த உத்தமன் -என்றும்
மா மாயன் மாதவன் வைகுந்தன் -என்றும்
முகில் வண்ணன் பேர் பாட -என்றும்
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே என்றும்
வங்கக் கடல் கடைந்த மாதவன் -என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்

நமக்கே பறை தருவான் -என்கிற இடத்தாலே –
பாடிப் பறை கொண்டு என்றும்
நம்மால் போற்றப் பறை தரும் -என்றும்
இற்றைப் பறை கொள்வான் என்றும்
அறை பறை என்றும்
சாலப் பெரும் பறை என்றும்
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் -என்றும் இறைவா நீ தாராய் பறை என்றும்
அங்கு அப்பறை கொண்ட ஆற்றை என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்

பாரோர் புகழ என்கிற இடத்தாலே –
நாடு புகழும் -என்றும்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் -என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்

ஏலோரெம்பாவாய் -என்கிற இடத்தாலே
முப்பது பாட்டிலே ஏலோரெம்பாவாய்க்கு ஸங்க்ரஹம்

இப் பாட்டில் காலத்தைக் கொண்டாட நின்று கொண்டு
பிரபந்த தாத்பர்யமான ப்ராப்ய பிராப்பகங்களைச் சொல்லுகிறது

ஆக –திருப்பாவையால் சொல்லிற்று ஆயிற்று
வேதார்த்தம் -அதாவது
1-திரு அவதாரமே சர்வ ஸமாச்ரயணீயம் -என்றும்
2-அவ தீர்ணனானவனுடைய வடிவழகே ருசி ஜனகம் -என்றும்
3-ருசியுடையார் ப்ராப்ய த்வரையாலே அவனை மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
4-இவ்விஷயத்தில் இழிவார்க்கு ருசியுடையார் அடங்க உத்தேசியர் -என்றும்
5-ப்ராப்யமாகிறது -அனுபவ ஜெனித ப்ரீதி காரிதமாய் யாவதாத்மா பாவியான கைங்கர்யம் -என்றும்
6-தத் சாதனமும் அவன் திருவருளே -என்றும்
சொல்லிற்று ஆயிற்று

——-

இப்பாட்டில் காலத்தைக் கொண்டாட நின்று கொண்டு பிரபந்த தாத்பர்யமான ப்ராப்ய ப்ராபகங்களை சொல்லுகிறது –

அதிகாரி ஸ்வாபதேசம் –

இந்த ஸ்வாபதேசத்தில் –
முதல் ஐஞ்சு பட்டாலும் –
பிரபந்த நிஷ்டா க்ரமங்களையும் –
பிரபத்தி வாசகமான திரு நாம வைபவத்தையும் பேசுகிறது –

அதில் முதல் பாட்டில்
பிரபன்ன அதிகாரிக்கு -ச ஏஷ தேச கால -என்கிறபடியே
தேச காலம் எல்லாம் அவனுடைய கடாக்ஷத்தாலே ப்ராப்யம் என்னுமத்தையும் –

கரமாந்தர பரித்யாகத்தையும் –

பகவத் விஷயங்களில் ருசி விசுவாசங்களினுடைய பிரதான்யத்தையும் –

ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் சர்வ ஸ்வாமியான நாராயணனே என்றத்தையும்

ஏவ காரத்தால் தேவதாந்த்ர ராஹித்யத்தையும் –

பிரயோஜனாந்தர ராஹித்யத்தையும் –

அநந்ய பிரயோஜனத்தையும் –
த்ரிபாத் விபூதி நாயகனான சர்வேஸ்வரன் தங்களுக்கு அபேக்ஷிதா விதானம் பண்ணுவான் என்று
நிரபரத்வ அனுசந்தானத்தையும்

சர்வ ஜன ஸூ ஹ்ருதத்வத்தையும் –

இப்படி நிஷ்டா க்ரமங்களையும் பிரபத்தி வாசகமான திரு நாமத்தையும் சொல்லுகையாலே
அதிகாரி ஸ்வரூபம் சொல்லிற்று யாயிற்று –

நாராயணனே நமக்கே பறை தருவான் -என்கையாலே
திருமந்திரத்தில் பத த்ரயத்தாலும் பிரதிபாதிக்கிற –
ஸ்வரூப
உபாய
புருஷார்த்தங்கள் மூன்றும் சொல்லுகிறது –

ஆகையால் இப்பாட்டு
திருமந்த்ரத்துக்கு சங்க்ரஹம் என்றதாயிற்று –
இப்பாட்டில் பரத்வம் ஸூசிப்பிக்கிறது –

———–

ஆக முதல் ஐந்து பட்டாலும் –
நாராயணனே -என்றும் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்றும் –
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்றும்
மாயனை வடமதுரை மைந்தனை -என்றும் சொல்லுகையாலே கிருஷ்ணனுடைய அடிப்பாடு சொல்லுகிறது –

————

கூர் வேல் கொடும் தொழிலன் -இத்யாதி
கூரியதாய்-சர்வ அநிஷ்ட நிவர்தகமான மங்களா சாசனத்தை உடையவராய்-
அல்ப அமங்களம் சம்பாவிக்கையிலும்-அதிசயித மங்களா சாசனை பரராய்-
பகவ லாபத்தாலே களித்து-
பகவத் விஷயத்தை அசல் அறியாதபடி-ரஷித்துக் கொண்டு போருகிற ஆசார்ய விஷயத்தில்-
தன்னுடைய நியாம்யத்தை தோற்றும்படி இருக்குமவனாய்-

கண் என்று ஜ்ஞானமாய் –
அதுக்கு அழகாவது வஸ்துவை உள்ளபடி கிரஹிக்கை –
அத்தாலே
பூரணமான ஞானத்துக்கு பிரகாசமாய்-
தன்னை அனுசந்திப்பாருக்கு ஆபிஜ்யாதி சகல அதிசய ப்ரதமான-திரு மந்த்ரத்திலே-
தன்னுடைய சகல காரண்த்வாத்ய அதிசயங்கள் எல்லாம் பிரகாசிக்குமவனாய் –
மந்த்ரோ மாதா -என்னக்   கடவது இறே-

இம்மந்த்ரம் தானும் சமஸ்த கல்யாண குணாத்மகனான
எம்பெருமானைத் தன்னுடைய கர்ப்பத்திலே வைத்துக் கொண்டு எல்லாரும் அறியலாம்படி பிரகாசிப்பிக்கையாலே
இம்மந்த்ரத்தை மாதா என்னக் குறை இல்லை

ஆஸ்ரித சகல தாப நிவர்த்தகமாய்-
பரம உதாரமான திரு மேனியை உடையனாய்
இத்தால் உபாய க்ருத்யம் சொல்லுகிறது
அன்றிக்கே
கார்மேனி -என்று மேகம் போலே-தர்சநீயமான திருமேனியை உடையவான் என்று அழகை சொல்லுகையாலே-
உபேயத்வம் சொல்லிற்று ஆகவுமாம்

அத்திரு மேனிக்கு பரபாக சோப அவஹமாய் அகவாயில்-வாத்சல்ய பிரகாசகமாயும்
பரத்வ பிரகாசகமாயும்-இருந்துள்ள சிவந்த திருக் கண் மலர்களை உடையனாய்
கார் மேனி என்கையாலே -சௌலப்ய சௌசீல்யங்களையும்-
செங்கண் என்கையாலே -வாத்சல்ய ஸ்வாமித்வங்களும்-தோற்றுகையாலே-
ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குண சதுஷ்ட்யமும் சொல்லிற்று ஆய்த்து

கதிர் மதியம் இத்யாதி –
சூர்ய கிரணங்களை உடைய மதியம் போலே இருக்கிற திருமுக மண்டலத்தை உடையவனாய்-
இத்தால் –
அனுகூலர்க்கு அணுகலாம் படி இருக்கையும்-
பிரதி கூலர்க்கு அணுக ஒண்ணாமையும் தோற்றுகையாலே-
அநபிபவநீயதவம் சக்தி கார்யம் ஆகையாலே-
ஆஸ்ரித கார்ய ஆபாதாக சதுஷ்டயமும் சொல்லிற்று ஆய்த்து
இப்படி ஆசார்ய பௌநயத்வாதி குணங்களை உடையனான நாராயணனே

நமக்கே –
சஹாயாந்தர நிரபேஷமாக அவனாலே புருஷார்த்தம் என்று இருக்கிற நமக்கே
நமக்கே -என்கிற இடத்தில் ஏவகாரத்தால்-உபாயாந்தரங்களையும்
தன்னையே உபாயமாக பற்றினவர்களுக்கு-ஈஸ்வரன் கர்ம அனுகுணமாக பலம் கொடுப்பான் அத்தனை அல்லது
கிருபா அனுகுணமாக பலம் கொடான் என்னும் இடம் தோற்றுகிறது

பறை தருவான் -இத்யாதி
புருஷார்த்தத்தைக் கொடுப்பான் -ஆகையால் பூமிப் பரப்பில் உள்ள லௌகிக வைதிக பரம வைதிகர்
எல்லாரும் கொண்டாடும்படி-இந் நோன்பிலே அவஹாகித்து நீராடப் போதுமினோ என்று அந்வயம்

காமனாதிகாரிகளுக்கு சாதனமாயும்
நிஷ்காமருக்கு நித்யமாயும்
பகவத் பிரபன்னர்க்கு கைங்கர்யமாயும் போருகிற இந் நோன்பிலே-
பகவத் அனுபவ ஏகாந்தம் என்று அத்யவசித்து ஸ்ரத்தா பூர்வகமாதயதாவிதானம் அனுஷ்டித்தால்-
லௌகிக வைதிக பரம வைதிகர்கள் உடைய கொண்டாட்டம்-தன்னடையே சித்திக்கும் இறே
யத்தாஷ்டா ஷர சம்சித்தோ மஹா பாஹோ மஹீயதே-என்னக் கடவது இறே-

இப்பாட்டில் -ஏஷ ப்ரஹ்மபிரவிஷ்டோ ச்ம்க்ரீஷ் மே சீதமிவ ஹ்ருதம் -என்கிறபடியே
கிரீஷ்ம காலத்தில் சூர்ய கிறன தப்தனானவன் தன தாபம் ஆறும்படி குளிர்ந்த மடுவிலே
நாம ரூப விபாக அர்ஹனாம் படி-பிரவேசிக்குமா போலே-
சம்சார தாபார்த்தனான தான் அந்த தாபம் ஆறும்படி-சமஸ்த கல்யாண குணாத்மகனான ஸ்ரீ மன் நாராயணனை
அவனை ஒழிய ப்ருதுக் ஸ்திதி யுபலபதி இல்லாதபடி-பிரவேசித்து-ஸ்வ சத்தையை லபித்தேன் -என்று
ப்ரஹ்ம அனுபவத்துக்கு-நீராட்டத்தை திருஷ்டாந்தமாக சொல்லுகையாலே-
நீராட -என்று பிராப்யத்தை ஸங்க்ரஹித்தார்கள்-

நீராடப் போதுவீர் என்று -இப் புருஷார்த்தத்துக்கு இதில் இச்சையை உடையவர்களே
அதிகாரிகள் என்று அதிகாரியை ஸங்க்ரஹித்தார்கள்-
நாராயணனே என்று ப்ராபகத்தை ஸங்க்ரஹித்தார்கள்-
நமக்கே என்று உபாய அதிகாரிகளை ஸங்க்ரஹித்தார்கள்-

இத்தால்-
உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக-
அவனையே உபாயமாக பற்றுகை-அதிகாரம் என்றது-ஆய்த்து-

—————————————————————–

பகவத் கைங்கரியத்தில் ருசியுடைய பாகவதர்கள், பகவத் குணாநுஸந்தாநத்தினால்
“காலாலழும் நெஞ்சழியுங் கண் சுழலும்” என்றபடி எழுந்திருக்க வல்லமையற்று ஸ்தப்தராய்க் கிடக்கும்
பாகவதர்களைக் கைங்கரியத்திற்கு அழைத்தல் இதற்கு உள்ளுறை பொருள்.

“மார்கழித் திங்கள்” என்று – ஸத்துவ குணம் நிறம்பெறும் படியான கால விசேஷத்தைக் கூறியவாறு.
“மதி நிறைந்த நன்னாள்” என்று – ஆசிரினுடைய அருளடியாக ஸ்வருப வுணர்ச்சி பெற்று
எம்பெருமானுடைய விஷயீகாரத்திற்கு இலக்காகப் பெற்ற நாளைக் கூறியவாறு.
“அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்” என்றபடி –
பிறந்தநாள் இதுவாதலால் அதனைக் கொண்டாடுகிறபடி.

கண் – ஞானம். திருமந்திரம் தாயாகச் சொல்லப்படுவதனால்,
இங்கு “அசோதை” என்று திருமந்திரத்தைக் குறித்தவாறாம்.
மந்திரம் எம்பெருமானைத் தன் கருவிலே வைத்துக் கொண்டு எல்லாருமறியலாம்படி பிரகாசிப்பிக்குந்
தன்மையுடைமை பற்றித் தாயாகக் கூறப்படுதல் பொருந்துமென்க.
ஆச்ரயணீயனுடைய போக்யத்வஞ் சொல்லுகிறது,

“கதிர்மதியம் போல் முகத்தான்” என்பது. அவ்வெம்பெருமான் இடத்தன்றி மற்றையோரிடத்து
யாம் பேறுபெறக் கடமைப்பட்டிலோம் என்பதைக் காட்டுவது, ஏழாமடி.

புகவதாச்ரயணத்தினால் நமக்கு அளவற்ற புகழ் உண்டாகுமென்கிறது, “பாரோர் புகழ” என்பது.

மார்கழி – மார்க்கசீர்ஷமென்னும் வடசொற் சிதைவு.

——–

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading