சுபாஷிதம்–

சுபாஷிதம் -01 -அக்ரதஸ் சதுரோ வேதாஹா ப்ருஹ்ஸ்டதஸ் ஸசரம் தனுஹூ இதம் ப்ராம்மம் இதம் க்ஷாத்ரம் சாபாதபி சராதபி

முன்னால் நான்கு வேதங்கள், பின்னால் அம்பு பூட்டிய வில். ஒன்று உள்சக்தி, மற்றோன்று புறசக்தி. தவ வாக்கினாலும் அன்பினாலும் உலகம் நன்மை அடைய உழைப்போம், இரண்டும் சேர்ந்திருக்கும்போது பெருமை கூடுகிறது.

சுபாஷிதம் 02 -அகர்தவ்யம் ந கர்தவ்யம் ப்ரானை கண்டகதைரபி லர்ட்ஜவ்ய மேவ கர்தவ்யம் ப்ரானை கண்டகதைரபி — சாணக்ய சரசம்கிரஹ

எந்தச் செயல் தவறானதோ மரண்மே வந்தாலும் அந்த செயலை செய்யக் கூடாது. எந்தச் செயல் சரியானதோ அதை மரணமே வந்தாலும் செய்து முடிக்க வேண்டும்

சுபாஷிதம் –03 –அடாம்பிகத்வம் ஆசாரே, விசாரே தூரதர்ஷிதா பிரசாரே தத்வநிஷ்கத்வம் ஸ்வீகார்யம் சங்க யோகினா —– சங்க கீதை

படாடோபமில்லாமல் நடந்து கொள்ளுதல் நெடுநோக்குடன் சிந்தித்தல். கொள்கையையே வலியுறித்திப் பிரசாரம் செய்தல். இவை சங்க அன்பர்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கவை.

சுபாஷிதம் – 04 அதிஷ்டானம் ததா கர்தா கரணஞ்ச ப்ருதக்விதம் விவிதாஷ்ச ப்ருதக்சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம் — பகவத்கீதை

எடுத்த காரியத்தில் வெற்றி கிடைப்பதற்கு இடம்(ஆதாரம்), பணி செய்கிறவர், பல்வேறு கருவிகள், விதவித முயற்சிகள் இவற்றிற்குப் பிறகு தெய்வம் ஐந்தாவதாக விளங்குகிறது.

சுபாஷிதம்– 05– அந்த ஷாஸ்த்ரம் பஹீலாஷ்ச வித்யாஹ அல்பஷ்ச காலோ பஹூ விகநதாச யத்ஸார்பூதம் ததுபாஸநீயம் ஹம்ஸோ யதா க்ஷீரமிவாம்பு மத்யாத் —- சாணக்ய நீதி

சாத்திரங்கள் எண்ணற்றவை; கல்வி கணக்கிலடங்ககாதவை; ஆயுட்காலமோ மிகவும் குறுகியது; வாழ்க்கை நிறைய தடைகளைக் கொண்டது. எனவே ஆராய்ந்து பார்த்து பாலிலிருந்து நீரைபிரித்து பருகும் அன்னம் போல நாமும் வழ்விற்குரியவற்றை தேர்ந்தெடுத்து அறிந்து கொள்ள வேண்டும்.

சுபாஷிதம் -06- அபார பூமி விஸ்தாரம் அகண்ய ஜன சங்குலம் ராஷ்ற்றம் சங்கடநாஹீநம் ப்ரப்வேந் நாத்ம ரக்ஷணே||

எல்லையில்லாத பரந்து விரிந்த நிலப்பகுதி, எல்லையில்லாத அளவு மக்களின் எண்ணிக்கை இருந்தாலும் – ஒற்றுமையாக இல்லை யென்றால் நாடு தன்னை காத்துக்கொள்ள இயலாது

சுபாஷிதம் –07- அமந்த்ரம் அக்ஷரம் நாஸ்தி நாஸ்தி மூலம் அநௌஷ்தம் அயோக்ய புருஷோ நாஸ்தி யோஜகத்தத்ர துர்லபம்

உதவாக்கரை என்று எந்த மனிதனும் இல்லை. சரியான தகுதி உள்ளவரைத் தேடிக் கண்டு பிடிக்கும் ஆற்றல் உள்ளவனே சரியான தேசியப் பணி செய்யும் தொண்டன்

சுபாஷிதம் -08- அவிசார்ய ந வக்தவ்யம் வக்தவ்யம் ஸூ விசாரிதம் கிஞ்ச தத்ரைவ வக்தவ்யம் யத்ர உக்தம் ஸ பலம் பவேத்

ஆராயாமல் பேசக்கூடாது; நன்கு யோசித்த பிறகே பேச வேண்டும். மேலும் எங்கு பேசினால் பலன் கிடைக்குமோ அங்கு மட்டுமே பேச வேண்டும்

சுபாஷிதம் -09– அயம் மே ஹஸ்த்தோ பகவன் அயம் மே பகவத்தரஹ அயம் மே விஸ்வ பேஷஜஹ அயம் மே ஷிவாபிமர்ஷனஹ

இந்த எனது கை இறைவனாகும். இது அதிக இறைமை யுடையது. இந்த எனது கை உலக மருத்துவன் (அனைவரது நோயையும் போக்கும்) இந்த எனது கை நன்மை விளைவிக்கும் தன்மை யுடையது.

சுபாஷிதம் 10 அயம் நிஜஹ் பரோவேத்தி கணனா லகு சேதசாம் உதார சரிதானாம்து வசுதைவ குடும்பகம் ——- சார்ங்கதர பததி

இவன் நம்முடையவன்; அவன் வேறு என்கிற பேதம் குறுகிய மனம் உள்ளவர்களுக்குத்தான். பரந்த மனப்பான்மை உள்ளவர்க்கு உலகமே சொந்தக் குடும்பம்.

சுபாஷிதம் – 11 அர்த்த ஸித்தி பராமிச்சன் தர்மமேவாதி தஷ்சரேத் நஹி தர்மாதபைத் யர்தஹ ஸ்வர்க லோகாதி வாம்ருதம் —-விதுர நீதி

எவனெருவன் செல்வம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை கொண்டு இருக்கிறானோ அவன் முதலில் தர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும். ஸ்வர்கத்தை விட்டு அமுதம் பிரிந்து போவது இல்லை. அது போல தர்மத்தினின்று செல்வம் பிரிந்து போவது இல்லை.

சுபாஷிதம் –12– அலப்தம் சைவ லிப்ஸேத லப்தம் ரக்ஷேதவேக்ஷயா ரக்ஷிதம் வர்த்தயேத் ஸம்யக் வ்ருத்தம் தீர்தேஷு நிக்ஷிபேத்

இது வரை அடையாத்தனை (திறமை, செல்வம்) அடைய விரும்ப வேண்டும். அடைந்ததனைப் பொறுப்பாகப் பாதுகாக்க வேண்டும். பாதுகாத்ததனை மேலும் வளர்த்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு நன்கு வளர்ந்ததனை (திறமை, செல்வம்) நற்பணிகளுக்காகச் செலவிட வேண்டும்

சுபாஷிதம் -13 -அனல்பே (அ)ல்பம் விலயதி நித்யே (அ)நித்யம் ஸ்திரே(அ)ஸ்திரம் ஸமஷ்டி ஜீவனே தஸ்மாத் மஜ்ஜயேத் வ்யஷ்டி ஜீவனம் — சங்க கீதை

சிறிதானது பெரியதுடன் கலந்துவிடும். நிரந்தரமில்லாதது நிரந்தரத்துடன் கலந்துவிடும், ஆகவே தனிமனித வாழ்க்கையை சமுதாய வாழ்க்கையுடன் கலந்து விடவேண்டும்.

சுபாஷிதம் -14 -அனாகத விதா தாச ப்ரத்யுத் பன்ன மதிஸ்ததா த்வாவைதௌ ஸூகமேதேதே யத்பவிஷ்யோ வினஷ்யதி —- சாணக்ய நீதி சாஸ்திரம்

நிகழ் காலத்தில் விழிப்புடனிருப்பவனும், எதிர்கலத்திற்குத் தன்னைத் தயார் படுத்திக் கொள்பவனும் வெற்றி பெறுவான். நடக்க வேண்டியது தான் நடக்கும் என்பவன் தோல்வி யுறான்.

சுபாஷிதம் 15 அனாத்த்யந்தா து ஸா த்ருஷ்ணா அந்தர் தேஹ கதா ந்ருணாம் வினாஷயதி ஸம்பூதா அயோனிஜ இவானலஹ | —– மஹாபாரதம்

பொருள்: ஆரம்பமும், முடிவும் இல்லாத – தன்னுள்ளேயே இருக்க கூடிய — பேராசையானது, சுயமாக வளர்ந்து அழிக்கக் கூடிய தியைப் போன்று மனிதனை அழித்து விடும்

சுபாஷிதம் – 16 அனிர்வேதஷ் ஷ்ரியோமூலம் லாபஸ்யச ஷுபஸ்யச | மஹான்பவத் யநிர்விண்ணஹ ஸுகம் சானந்த்யமஷ்னுதே || — விதுர நீதி 7 – 57

ஊக்கத்துடன் உழைப்பது தான் செல்வம், லாபம் சுபம் ஆகியவற்றின் அடிப்படையாகும் உழைப்பை விடாதவன் மஹான் ஆகி எல்லையில்லாத ஆனந்தநிலை அனுபவிப்பான்

சுபாஷிதம் – 17 அனித்யாநி ஷரீராணி விபவோ நைவ ஷாஸ்வதஹ நித்யம் ஸந்நிஹிதோ ம்ருத்யுஹு கர்தவ்யோ தர்மஸங்க்ரஹஹ

பொருள்: உடம்பு நிலையானது அல்ல,, அதிலும் செல்வம் நிலையானது அல்ல, சாவு – எப்பொழுதும் அருகிலேயே இருப்பதால் எப்பொழுதும் தர்மத்தைக் கடைப்பிடிப்பதே கடமை.

சுபாஷிதம் 18 அஸ்வம் நைவ கஜம் நைவ வ்யாக்ரம் நைவச் நைவச அஜாபுத்ரம் பலிம் தத்யாத் தேவோ துபல காதகஹ — ஹிதோபதேசம்

பொருள்: பலி கொடுப்பது குதிரையை அல்ல, யானையையும் அல்ல; புபியையோ அல்லவே அல்ல. ஆட்டுக்குட்டியைத்தான் பலி கொடுக்கிறார்கள். அதாவது பலமற்றவர்களுக்கு கடவுளால் கூட திமை ஏற்படுகிறது

சுபாஷிதம் 19 அஸதோ மா ஸத் கமய தமஸோ மா ஜ்யோதிர் கமய ம்ருத்யோர் மா அம்ருதம் கமய ஓம் ஷாந்திஷ் ஷாந்திஷ் ஷாந்திஹி

பொருள்: அசத்தியலிருந்து என்னை சத்திய நிலைக்கு எட்டுச் செல்வாயாக. அஞ்ஞான இருளிலிருந்து ஞான ஒளிக்கு என்னை அழைத்துச் செல்வாயாக அழிவிலிருந்து என்னை அமரத்துவ நிலைக்கு கொண்டு செல்வாயாக. அமைதி அமைதி அமைதி

சுபாஷிதம் 20 அஹமஸ்மி ஸஹமான் உத்தரோனாம் பூப்யாம் அமீஷாமஸ்மி விஸ்வாஷா மாஷா விஷாஸஹி அதர்வண வேதம்

பொருள்: எனது தாய்நாட்டிற்காக, அதன் பாதுகாப்புக்காக எல்லா விதமான இன்னல்களையும் ஏற்க நான் ஆயத்தமாயுள்ளேன். எந்த திசையிலிருந்து எந்த நேரத்தில் அந்த இன்னல் ஏற்படுமாயினும் சரி

சுபாஷிதம் 21 ஆலஸ்யம்ஹி மனுஷ்யாநாம் ஷரீரஸ்தோ மஹான் ரிபுஹீ நஸ்த்யுத் யமஸோ பந்து ஹீ க்ருத்வாயம் நாவஸீததி

பொருள்: ஒவ்வொருவரிடத்திலும் இருக்கும் மிகப்பெரிய எதிரி அவரது சோம்பேறித்தனம். நமக்கு உண்மையான நண்பன் – உழைப்பு; இதனை நம்பி செயல் புரிந்து கெட்டுப் போனவர்கள் யாருமில்லை

சுபாஷிதம் 22 ஆலோகம் தாது மந்தே ப்யோ நேத்ர தானம் விஷிஷ்யதே யேன ஜீவேன் ம்ருதோ (அ) ப்யத்ர யஷஹ் காயேன ஷாஷ்வதம்

பொருள்: பார்வை இல்லாதவர்களுக்கு கண்தானம் செய்வது மிகவும் சிறப்பான தொண்டு, இப்படித் தருபவர்கள் இறந்த பிறகும் புகழ் உடம்புடன் என்றென்றும் வாழ்வார்கள்

சுபாஷிதம் 23 ஆத்மார்தம் ஜீவ லோக(அ)ஸ்மின் கோன ஜீவதி மானவஹ பரம் பரோப காரார்தம் யோ ஜீவதி ஸ் ஜீவதி

பொருள்: இவ்வுலகில் எவரொருவர் தனக்காக மட்டும் வாழாமல் பிறருக்கு உதவும் வாழ்க்கை வாழ்வாரோ அவரே உண்மையில் வாழ்கிறார்

சுபாஷிதம் 24 ஆஸிந்து ஸிந்து பர்யந்தா யஸ்ய பாரத பூமிகா பித்ருபூஹீ புண்யபூ ஷ்சைவ ஸவை ஹிந்து ரிதி ஸ்ம்ருதஹ

பொருள்: சிந்து நதி தொடங்கி கடல்கள் சூழ்ந்த பகுதி வரைக்கும் உள்ள தந்தையர் நாடுதான் எல்லா மதங்களின் தாயகம். பாரத பூமியை எவன் தன் புண்ய பூமியாக கருதுகிறானோ அவனே ஹிந்து.

சுபாஷிதம் 25 ஆஹார நித்ரா பய மைதுனம் ச ஸாமான்ய மேதத் பசுபிர் ந ராணாம் தர்மோ ஹி தாரஹ அதிகோ விசேஷஹ தர்மேண ஹீனாஹ பசுபிஸ் ஸமானாஹா:

பொருள்: உணவு, உறக்கம், அச்சம், இனவிருத்திசெய்தல் இவை விலங்குகளுக்கும் மனிதனுக்கும் பொது. தர்மம் தான் மனிதனின் சிறப்பு. தர்மாம் இல்லாவிட்டல் மனிதனும் மிருகமும் ஒன்றே.

சுபாஷிதம் 26 உக்ரத்வம் ச ம்ருத்வம் ச ஸமயம் வீக்ஷ்ய ஸம்ஷ்ரயேத் | அந்தகாரமஸம்ஹ்ருத்ய நோக்ரோ பவதி பாஸ்கரஹ ||

பொருள்: நேரத்திற்கு தகுந்தவாறு கடுமையாகவோ மென்மையாகவோ இருக்க வேண்டும். சூரியன் இருளை முழுமையாக அழிக்கும் வரை மென்மையான கிரண்ங்களைச் செலுத்துகிறான். அதன் பிறகே உக்கிரமடைகிறான்.

சுபாஷிதம் 27 உத்தரம் யத் ஸமுத்ரஸ்ய ஹிமாத்ரேஸ்சைவ தக்ஷிணம் வர்ஷம் தத் பாரதம் நாம பாரதீ யத்ர ஸந்த தி —–விஷ்ணுபுராணம்

சமுத்திரத்திற்கு வடக்கிலும் இமயமலைக்குத் தெற்கிலும் அமைந்துள்ள நாட்டின் பெயர் பாரதம். அதன் மக்கள் பாரதீயர்கள்.

சுபாஷிதம் 28 உத்பன்ன பஷ்சாதாபஸ்ய புத்திர் பவதி யாத்ருஷீ தாத்ருஷீ யதி பூர்வம் ஸ்யாத் கஸ்ய ந ஸ்யான்மஹோதயஹ சாணக்ய நீதி சாஸ்திரம்

ஒரு செயலை செய்து முடித்த பின் வருந்துவதை விட செயலை செய்யும் முன் சிந்திப்பவன் நிச்சயம் வெற்றி பெறுவான்

சுபாஷிதம் 29 உத்யந்து ஷதமதித்யாஹ உத்யந்து ஷதமிந்தவஹ | நவீனா விதுஷாம் வாக்யைஹி நஷ்யத்யாப்யந்தரம் நமஹ ||

பொருள்: நூறு சூரியன்கள் உதித்தாலும், நூறு சந்திரன்கள் உதித்தாலும் அறிஞர்களின் அறிவுரைகள் இல்லாமல் உள்ளே இருக்கும் இருள் நீங்குவதில்லை

சுபாஷிதம் – 30 உத்யமம் சாகஸம் தைர்யம் புத்திஷ் ஷக்திஹ் பராக்ரமஹ ஷடேதே யத்ர வர்தந்தே தத்ர தேவஸ் ஸஹாய க்ருத் —– பகவத் கீதை

பொருள்: உழைப்பு, துணிவு, தைரியம், அறிவு, பலம் வீரம் இந்த ஆறு பண்புகளும் எங்கே இருக்கின்றனவோ அங்கே தெய்வம் துணை நிற்கும்

சுபாஷிதம் – 31 உத்யமே நாஸ்தி தாரித்ரியம் ஜபதோ நாஸ்தி பாதகம் மெளனேன கலஹோ நாஸ்தி நாஸ்தி ஜாக்ரதோ பயம்

பொருள் உடலுழைப்பு இருப்பின் ஏழ்மை என்றும் நெருங்காது. நாமஜபம் செய்வோரிடம் பாவம் அண்டாது. மெளனமாய் இருந்தால் கலகம் ஏற்படாது. அதுபோல விழிப்புடன் இருப்பவனுக்கு பயம் இல்லை

சுபாஷிதம் 32 உத்ஸவே வ்யஸனே ப்ராப்தே துர்பிக்ஷே ஷத்ரு ஸங்கடே ராஜத்வானா ஸ்மஷானே ச யஸ்திஷ்டதி ஸ பாந்தவஹ ——- சாணக்ய நீதி

பொருள்: கொண்டாட்டங்களின் போதும் துக்கதிலும் வறட்சி ஏற்படும் போதும், எதிரிகளால் தாக்கப்படும் போதும் மன்னனால் கௌரவிக்கப்படும் போதும் மயானத்திலும் கூடவே இருப்பவர்கள்தான் உறவினர்கள்

சுபாஷிதம் 33 உத்ஸாஹோ பலவான் ஆர்ய நாஸ்த்யுத் ஸஹாத் பரம் பலம் ஸோத் ஸாஹஸ்ய ஹி லோகேஷு நகிஞ்சிதபி துர்பைம் —- வால்மீகி ராமாயணம்

பொருள்: [லக்ஷ்மணன் ராமனிடத்தில்] வணங்கிதற்குரிய சகோதரரே! உற்சாகம் ;நிரம்புயவனே பலமுடையவனாவான்; உற்சாகத்தைத் தவிர வேறொரு பலம் தருகின்ற ஒன்றுமில்லை; உற்சாகமுடையவனுக்கு முன்னால் உலகில் அடைய முடியாதது என்பதே இல்லை.

சுபாஷிதம் 34 உபகாரிஷூ யஸ்ஸா துஹீ ஸாதுத்வே தஸ்ய அபகாரிஷூ யஸ் ஸாது ஹீ ஸ ஸாது ஹீ — பஞ்சதந்திரம்

பொருள்: உதவி செய்தவனிடம் நல்லவனாக ஒருவன் நடந்து கொண்டால் அவனுடைய நற்குணத்தில் சிறப்பு என்ன உள்ளது. தீங்கு செய்தவனிடமும் எவன் நல்லவனாக நடந்து கொள்கிறானோ அவனே நற்குணத்தவன் என்று சொல்லப்படுகிறான்

சுபாஷிதம் 35 உபகுர்யான்னி ராகா ங் க்ஷோ யஸ்ஸ ஸாது ரிதீர்ய தெ ஸாகாங் க்ஷமுபகுர் யாத்யஹ ஸாதுத்வே தஸ்ய கோ குணஹ —– ஸ்கந்த புராணம்

பொருள்: யார் தனக்காக எதுவும் எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவி செய்கிறார்களோ அவர்களே நல்லவரெனப்படுகிறார்கள். எதிர்பார்ப்புடன் தொண்டு செய்வதில் என்ன நற்குணமுள்ளது?

சுபாஷிதம் 36 உபார்ஜிதானாம் வித்தானாம் த்யாக ஏவ ஹி ரக்ஷணம் த்டாகோதர – ஸம்ஸ்தானாம் பரீவாஹ இவாம்பஸாம்ல்

பொருள்: ஒருவர் சேர்த்த செல்வத்தை நல்ல பணிகளுக்காக செலவிடுவதே, செல்வத்தைப் பாதுகாக்க சிறந்த வழியாகும். ஏரியில் அதிகப்படியான நீர் வெளியேற உதவும் கால்வாய் இருப்பதால் அல்லவா ஏரி உடையாமல் இருக்கிறது.

சுபாஷிதம் 37 ஏகத் தேஷ ப்ரஸூதஸ்ய ஸகாஷாதக்ர ஜன்மனஹ ஸ்வம் ஸ்வம் சரித்ரம் ஷிக்ஷேரன் ப்ருதிவ்யாம் ஸர்வ மானவாஹ

பொருள்: இந்த நாட்டில் பிறந்த உயர்ந்த மனிதர்களிடமிருந்து உலகத்திலுள்ள அனைத்து மனிதர்களும் தத்தமது வாழ்க்கை முறைகளைக் கற்றுக் கொண்டிருந்தார்கள்

சுபாஷிதம் 38 ஏகம் விஷரஸம் ஹந்தி சஸ்த்ரே ணைகச்ச வத்யதே | ஸராஷ்ட்ரம் ஸப்ரஜம் ஹந்தி ராஜானம் மந்த் ரவி ப்ளவ: ||

பொருள்: நஞ்சானது ஒருசமயத்தில் ஒருவரை மட்டும் அழிக்கும் ஆயுதமானது ஒரே சமயத்தில் பலரை அழிக்க வல்லது. ஆனால் ஒர் அரசனோ அல்லது அவனது மந்திரிகளோ எடுக்கும் ஓர் தவறான முடிவு கூட அந்த நாட்டையோ அல்லது மக்களையோ அழிக்க வல்லது

சுபாஷிதம் 39 கச்சன் பிபீலகோ யாதி யோஜனானாம் ஷதான்யபி அகச்சன் வைனதேயோபி பதமேகம் ந கச்சதி

பொருள்: ஊர்ந்து போகின்ற எறும்பாய் இருந்தாலும் நடந்து கொண்டே இருக்கின்ற காரணத்தால் நூறு யோஜனை தூரத்தையும் கடக்க முடியும். வேகமாகப் பறக்கின்ற கழுகாய் இருந்தாலும் அசையாமல் இருந்தால் ஒரு அடி கூட கடக்க முடியாது.

சுபாஷிதம் – 40 கதே ஷோகோ நகர்த்தவ்யோ பவிஷ்யன்னைவ சிந்தயேத் | வர்தமானேன காலேன ப்ரவர்த்தந்தே விசக்ஷனாஹா || —சாணக்ய நீதி சாஸ்திரம்

பொருள்: கடந்த காலத்தைப் பற்றி வருத்தப்படக்கூடாது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அறிஞர்கள் நிகழ்காலத்தைப் பற்றி சிந்தித்து செயல்படுகிறார்கள்

சுபாஷிதம் 41 கர்ணஸ் த்வசம் சிபிர் மாம்ஸம் ஜீவம் ஜீமுதவாஹனஹ தாதள ததீசி அஸ்தீனி நாஸ்த்யதேயம் மஹாத்மனாம்

பொருள்: கர்ணன் தன் தோலைக் கொடுத்தான். சிபி தனது சதையைக் கொடுத்தார். ஜீவமூதவாஹனன் தன் உயிரையே கொடுத்தார். ததீசி தன் எலும்பையே கொடுத்தார். உயர்ந்த மனிதர்களால் கொடுக்க முடியாதது என்று ஒன்றுமே இல்லை.

சுபாஷிதம் – 42 கலி; சயனோ பவதி, ஸஞ்ஜிஹானஸ்து த்வாபர; உத்திஷ்ட்டன் ஸத்ரேதா பவதி, க்ருதம் ஸம்பத்யத சரன் சரைவேதி! சரைவேதி!!

பொருள்: உறங்குவது கலியுகம் ; கண் விழித்துப் பார்ப்பது துவாபரயுகம் ; சிலிர்த்து எழுவது த்ரேதாயுகம் ; விரைய முற்படுவது கிருதயுகம். எனவே முன்னேறிச் செல்லுங்கள், விரைந்து முன்னேறிச் செல்லுங்கள்

சுபாஷிதம் 43 காமஹ் க்ரோதஷ்ச லோபஷ்ச தேஹே திஷ்டந்தி தஸ்கராஹ ஞானரத்னா பஹாராய தஸ்மாஜ் ஜாக்ரத ஜாக்ரத

பொருள்: காமம், குரோதம், கருமித்தனம், என்னும் திருடர்கள் உடலுக்குள்ளேயே இருக்கிறார்கள். இவர்கள் ஞானமென்னும் ரத்தினத்தைத் திருடிவிடுவார்கள். ஜாக்கிரதை!

சுபாஷிதம் 44 கிராமஸ்ய ஸேவயானுனம் ஸேவா தேஷ்ஸ்ய ஸித்யதி தேஷஸேவா ஹி தேவஸ்ய ஸேவாத்ர பரமார்தத ஹ —- கிராம கீதாம்ருதம் 3-27

பொருள்: உண்மையிலேயே கிராமங்களுக்கு செய்யும் சேவையே தேச சேவையாகும். தேசசேவையே உயர்ந்த லட்சியமாகிய இறைவனின் தொண்டாகும்

சுபாஷிதம் 45 குணஷ்வைவ ஹி கர்த்தவ்யஹ ப்ரயத்னஹ் புருஷோஸ்ஸதா குணயுக்தோ தரித்ரோபி நைஷ்வரைர் குணைஸ்ஸமவா:

பொருள்: மனிதன் நற்குணங்களைப் பெறுவதற்காகத் தான் எப்போதும் முயல வேண்டும். நற்குணங்கள் இல்லாதவன் செல்வந்தனாக இருந்தாலும் நற்க்குணங்கள் கொண்ட ஏழைக்கு சமமானவனல்ல

சுபாஷிதம் 46 குணாஹ ஸ்ர்வத்ர பூஜ்யந்தே நமஹத்யோபி ஸம்பதஹ பூர்னேந்து கிம் ததா வந்த்யோ நிஷ்கங்கோ யதா க்ருன்ஷஹ —– சாணக்ய நீதி சாஸ்திரம்

பொருள்: செல்வம் எவ்வளவு இருந்தாலும் நல்ல குணம் தான் எல்லா இடங்களிலும் மதிக்கப்படுகிறது. முழுநிலவைக்கூட மாசற்ற, சிறிய வளர்பிறையின் இரண்டாம் நாள் சந்திரனே மதிக்கப்படுகிறது. (அடுத்த நாளே சுப நாளாக கருதப்படுகிறது)

சுபாஷிதம் 47 கோ(அ)ஸ்தி பாரஸ் ஸ்மர்தானாம் கிம் தூரம் வ்யவஸாயினாம் கோ விதேஷஹ் ஸவித்யானாம் கஹ்பரஹ் ப்ரிய வாதினாம்.

பொருள்: திறமை உள்ளவருக்கு எந்த வேலையும் பாரம் இல்லை. உழைப்பாளிகளுக்கு எதுவும் தூரமில்லை. கற்றறிந்தவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. இனிமையாகப் பழகுகிறவருக்கு எவரும் “யாரோ” ஆவதில்லை [அவருக்கு எல்லோரும் நம்மவர்தான்]

சுபாஷிதம் – 48 சங்க கார்யைக நிஷ்டஸ்ய வரிஷ்டஸ்ய விஷேஷதஹ வாசோ பவேயுர் மதுராஹ சர்வலோக மனேஹராஹ —– சங்க கீதை

பொருள்: [சங்க கார்யத்தில் மனதைச் செலுத்தியவர்கள் விசேஷமான குணங்களைப் பெற்றிருப்பர். அவர்களது வாக்கு இனிமையாக இருக்கும் அனைவரையும் மகிழ்விக்கும்படி இருக்கும்

சுபாஷிதம் 49 சங்கச்சத்வம் ஸம்வதத்வம் ஸ்ம்வோ மனாம்ஸி ஜானதாம்! தேவா பாகம் யதா பூர்வே ஸஞ்ஜா நானா உபாஸதே !!

பொருள்: தோளுடன் தோள் இணைந்து செல்லுங்கள். ஒருமித்த குரலுடன் பேசுங்கள். சமமான அறிவு இருக்கட்டும். பழைய காலத்தில் தேவர்கள் தங்களது அமிர்தத்தை எவ்வாறு பெற்றுக் கொண்டார்களோ, அதுபோலவே ஒருமித்த அறிவுடன் பணிபுரிபவர்களும் தத்தமக்கு உரிய பங்கினைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

சுபாஷிதம் 50 சத்யம் மாதா பிதா ஞானம் தர்மோ ப்ராத தயா சகா சாந்திஹ் பத்னீ க்ஷமா புத்ரஹ ஷடேதே மம பாந்தவஹ

பொருள்: சத்யமே தாய்; ஞானமே தந்தை; தர்மமே சகோதரன்; கருணையே நண்பன்; அமைதியே மனைவி; மன்னிப்பே மகன் என்று எனக்கு இவர்களே ஆறு உறவினர்கள்.

சுபாஷிதம் 51 சதுர்தா புருஷா லோகே ஸங்க கார்யோபகாரகா மமக்ஞா யுக்தகர்மக்ஞா ஸத்குணக்ஞாஸ் ஸூயோஜகா: —- சங்க கீதை

பொருள்: வேலையின் ஆழத்தைத் தெரிந்தவரும் தகுந்த வேலையத் தெரிந்தவரும், நல்ல குணங்களை அடையாளம் தெரிந்து கொள்பவரும் திட்டமிடத் தெரிந்தவரும் ஆகிய இந்த நான்கு குணங்களை உடையவர்கள் சங்க வேலை செய்ய உதவியாய் இருப்பவர்கள்

சுபாஷிதம் 52 சந்தனம் சீதலம் லோகே சந்தனாதபி சந்த்ர மாஹா சந்த்ர சந்தனயோர் மத்யே சீதலா ஸாது சங்ககதிஹி

பொருள்: உலகில் சந்தனம் குளிர்ச்சியானது. சந்தனத்தைவிட சந்திரன் குளிர்ச்சியானது. சந்தனம், சந்திரன் இரண்டையும்விடக் குளிர்ச்சியானது நல்லோர் உறவு.

சுபாஷிதம் – 53 சஸ்த்ரைர் ஹதாஸ்து புருஷா: ந ஹதா பவந்தி பிரக்ஞா ஹதாஸ்ச்ச நிதராம், ஸூ ஹதா பவந்தி சஸ்த்ரம் நிஹந்தி புருஷஸ்ய, சரீர மேகம் பிரக்ஞா குலஞ்ச்ச விபவஞ்ச்ச, யஷஷ்ச்ச ஹந்தி

பொருள்: ஆயுதங்களாலே கொல்லப்பட்ட மனிதர்கள் உண்மையில் கொல்லப்பட்டவர்களாக ஆவதில்லை. புத்தியின் மூலமாக அழிக்கப்பட்டவர்கள், முற்றிலும் அழிக்கப்பட்டவர்களாகவே ஆகிறார்கள். ஆயுதங்கள் மனிதனின் உடலை மட்டிலுமே அழிக்கின்றன. புத்தியோ குலத்தையும், செல்வத்தையும், புகழையும் சேர்ந்து அழித்துவிடுகின்றது

சுபாஷிதம் – 54 சஷினா ச நிஷா நிஷயா ச சஷி சஷினா நிஷயா ச விபாதி நபஹ பயஸா கமலம் கமலேன பயஹ பயஸா கமலேன விபாதி ஸரஹ

பொருள்: சந்திரனால் இரவுக்கு அழகு; இரவால் சந்திரனக்கு அழகு, இரண்டும் சேர்ந்து ஆகாயத்தை அழகுபடுத்துகின்றன. தாமரையால் தண்ணீருக்குப் பொலிவு; தண்ணீரால் தாமரைக்குப் பொலிவு. இரண்டும் சேர்ந்து தடாகத்தைப் பொலிவுற செய்கின்றன. [அது போல தனிமனிதனும், சமுதாயமும் நன்மை பெறும் வரும் வண்ணம் இணக்கத்தோடு இயங்க வேண்டும்]

சுபாஷிதம் 55 சாயம் அன்யாஸ்ய குர்வந்தி ஸ்வயம் திஷ்டந்தி சா தபே பலந்தி ச பரார்த்தேஷூ நா த்ய ஹேதோ; மஹாத்ருமா:

பொருள்: பெரிய மரங்கள் தங்கள் வெயிலில் வாடினும் மற்றவர்களுக்கு நிழல் தருகின்றன. மேலும் அவை கனிகளை தருவதும் பிறர் நமையின் பொருட்டேயன்றி தமது சுயநலதிற்காக அல்ல. (மகான்களும் இது போன்றே)

சுபாஷிதம் 56 சாஸ்த்ராண்ய திதியாபி பவந்தி மூர்கா| யஸ்து க்ரியா வான்புருஷ: ஸ வித்வான் ||

பொருள்: பல நூல்களைக் கற்ற போதிலும் ஒருவன் மூடனாக இருக்க முடியும் என்வன் தான் கற்றதை செயலில் வெளிப்படுத்துகின்றானோ அவனே வித்வான் ஆகிறான்

சுபாஷிதம் 57 சிந்தினீயா ஹி விபதாம் ஆதாவேவ ப்ரதிக்ரியா | ந கூபகனனம் யுக்தம் ப்ரதீப்தே வஹ்னினா க்ருஹே ||

பொருள்: வீடு தீப்பற்றி எரிந்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அதை அணைப்பதற்காக கிணறுத் தோண்டுவது பயனற்றது. மாறாக நாம் முன்யோசனையுடன் இருக்க வேண்டும். அதைப் போலவேப் பிரச்சினைகள் தோன்றுவதற்கு முன்னரே அதை எதிர்க் கொள்ளக் கூடிய வகையில் நாம் முந்தயாரிப்புடன் இருக்க வேண்டும்.

சுபாஷிதம் 58 த்ருதி; க்ஷமா தமோஸ் தேயம் ஷௌசம் இந்திரிய நிக்ரஹ தீர் வித்யா ஸத்யமக்ரோதஹ தசகம் தர்ம லக்ஷணம்

பொருள்: உறுதி, பொறுமை, அடக்கம், தனக்குரியதல்லாத பொருளை ஏற்காமலிருப்பது, தூய்மை, புலனடக்கம், அறிவுக்கூர்மை, கல்வியறிவு, உண்மை, கோபப்படாமலிருப்பது ஆகிய பத்தும் தர்மத்திற்கு இலக்கணமான பத்து பண்புகள்.

சுபாஷிதம் 59 த்யஜேத் ஏகம் குலஸ்யார்த்தே க்ராமஸ்யார்த்தே குலம் த்யஜேத் க்ராமம் ஜனபத்ஸ்யார்த்தே ஆத்மார்த்தே ப்ருத்வீம் த்யஜேத் —– மகாபாரதம்

பொருள்: குலத்தின் நன்மைக்காக ஒரு நபரை இழக்கலாம், கிராமத்திற்காக ஒரு குலத்தை இழக்காலாம், நாட்டிற்காக ஒரு கிராமத்தை இழக்கலாம் ஆன்ம உணர்வு பெற உலகை இழக்கலாம்.

சுபாஷிதம் 60 த்வாவிமௌ புருஷௌ ராஜன் ஸ்வர்க்கஸ்யோ பரிதிஷ்டதஹ ப்ரபு ஸ் ச க்ஷமயா யுக்தஹ தரித்ரஸ்ச ப்ரதானவான் —– விதுரநீதி

பொருள்: அரசே! பலசாலியாக இருந்தும் மன்னிப்பவனும், ஏழையாக இருந்தும் கொடையாளியாக இருப்பவனும். சுவர்கத்தைவிட உயர்வான இடத்தை பெறுகின்றனர்.

சுபாஷிதம் 61 த நானி ஜீவிதம் சைவ பரார்த்தே ப்ரஜ்ஞ உத்ஸ்ருஜேத் ஸந்நிமித்தம் வரம் த்யாகஹ விநாசே நியதே ஸதி.

பொருள்: பணம் வாழ்க்கை ஆகியவைகளை பிறருக்காகத் தியாகம் செய்வது சிறந்தது ஆகும். அழியும் தன்மை கொண்ட இவ்விரண்டும் நல்ல செயலுக்காக பயன்படட்டுமே

சுபாஷிதம் 62 தர்மார்த ப்ரபவதே தர்மாத் ப்ரபவதே ஸுகம் தர்மேன லபதே ஸ்ர்வம் தர்ம ஸாரமிதம் ஜகத் —– இராமாயணம் அயோத்யா காண்டம்,

பொருள்: பொருளும் இன்பமும் தர்மத்தினாலேயே கிடைக்கின்றன. எல்லா ஆசைகளும் தர்மத்தினாலேயே நிறைவேறுகிறது. தர்மமே உலகிற்கு ஆதாரம்.

சுபாஷிதம் 63 தனதான்ய ஸீஸம்பன்னம் ஸ்வர்ணரத்னாதி ஸம்பவம் | ஸீஸம்ஹதிம் வினா ராஷ்ட்ரம் ஸதாஸ்யாத் சூன்யவைபவம் ||

பொருள்: தனம் தான்யம் நிறைந்த போதிலும், தங்கம் ரத்னம் இவைகள் குவிந்திருந்த போதிலும் உறுதியான ஒருங்கிணைப்பு இல்லாத நாடு(எப்பொழுதும்) எதுவும் இல்லாதது போலாகிவிடும்

சுபாஷிதம் 64 தனதான்ய ஸூகஸம்பன்னம் ஸ்வர்ண ரத்ன மயாகரம் ஸூஸம்ஹதிம் விநா ராஷ்ட்ரம் ந பவேத் விபவாஸ்பதம்

பொருள்: செல்வம் தான்யம் நிறைந்திருக்கலாம் – தங்கம், ரத்னம் கொட்டியிருந்தாலும் – நல்ல ஒற்றுமை இல்லாத பட்சத்தில் நாடு முன்னேற்றம் அடைய முடியாது

சுபாஷிதம் 65 தானாய லக்ஷ்மீ, சுக்ருதாய வித்யா சிந்தா பரப்ரம்ஹ வினிஸ்ச யாய பரோபகாராய வாசன்ஸி யஸ்ய வந்த்யஸ் த்ரிலோகே திலகஸ்ஸ ஏவ —–சாங்கதர ஸ்ம்ருதி

பொருள்: தனது செல்வமெல்லாம் தானமளிப்பதற்கே, தனது கல்வியறிவு நற்பணிகளுக்கே, தனது சிந்தனையோ உயர்ந்த விஷயங்களைக் கண்டு உணர்வதற்கேதான். சொல்லும் சொல் எல்லாம் பிறர் நன்மைக்காகவே என்று வாழ்கின்ற பெருந்தகையை மூவுலகும் கைதொழும்; அவரே மேலோர்.

சுபாஷிதம் 66 திருஷ்டிபூதம் ந்யஸேத்பாதம் வஸ்த்ரபூதம் பிபேஜ்ஜலம் ஷாஸ்த்ரபூதம் வதேத்வாக்யம் மனஹ்பூதம் ஜ்ஸமம்சரேத் —- சாணக்ய நீதி

பொருள்: பார்வையால் சோதித்து காலடி வைக்க வேண்டும். துணியால் சோதித்து (வடிகட்டி) தண்ணீர் குடிக்க வேண்டும். நன்னெறி வழுவாமல் வார்த்தைகளை வெளியிட வேண்டும். மனதால் சோதித்து (மனசாட்சி) நடைமுறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

சுபாஷிதம் 67 தேவி புவன மனமோகினீ நீல சிந்த்ஜல தௌதசரணதல —- ரவீந்திரநாத் தாகூர்

பொருள்: பாரதமாதாவின் பேரழகு உலகையே மயக்குகிறது. அவளது திருவடிகளை நீலக் கடல்கள் கழுவுகின்றன.

சுபாஷிதம் – 68 தைவா வலம்பினஹ் கேசித், கேசித் தேவா வலம்பினஹ சங்க கார்ய ப்ரவ்ருத்தாஸ்யுஹு புருஷார்த்த வலம்பினஹ

பொருள்: சிலர் அதிருஷ்டத்தை நம்பியிருப்பார்கள்; இன்னும் சிலர் கடவுளை நம்பியிருப்பார்கள்; சங்கப்பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் உழைப்பை நம்பி இருப்பார்கள்

சுபாஷிதம் 69 தைவாயத்ஹ்டம் குலே ஜன்ம மதாயத்தம் து பௌருஷம்

பொருள்:’ எந்தக் குலத்தில் பிறக்கிறோம்,என்பது விதிவசம். ஆண்மை கைவரப் பெறுவதோ தன் முயற்சியின் பலன்.

சுபாஷிதம் – 70 ந தேவா தண்ட மாதாய, ரக்ஷந்தி பஷூ பாலவத் யந்து ரக்ஷிதுமிச்சந்தி, புத்யா ஸம்விபஜந்தி தம்

பொருள் தேவர்கள் தடியை எடுத்துக்கொண்டு மாடு மேய்ப்பவர்களைப் போல பாதுகாவல் செய்வதில்லை. யாரைப் பாதுகாக்க விரும்புகின்றார்களோ, அவருக்கு புத்தியை அளித்து அருள்புரிவார்கள்

சுபாஷிதம் 71 ந புத்தி பேதம் ஜனயேத் அஞானம் கர்ம ஸங்கனாம் ஜோஷயேத் சர்வ கர்மாணி வித்வான் யுக்தஸ் ஸமாசரண் —- பகவத் கீதை (3-26)

பொருள்: நம்பிக்கையுடன் சேவை போன்ற காரியங்களில் ஈடுபட்டிருக்கும் பாமரர்களின் மனதில் குழப்பம் ஏற்படுத்தக் கூடாது. மாறாக விஷயம் தெரிந்தவர்கள் நற்பணிகளில் முழுபாவத்துடன் தாங்களும் ஈடுபட்டு மற்றவரையும் ஈடுபடுத்த வேண்டும்.

சுபாஷிதம் – 72 ந ராஷ்ட்ரம் ராஷ்ட்ரதாம் யாதி யத்ய ஸங்கடிதா ஜனாஹ| நிதானம் ராஷ்ட்ர பாவஸ்ய ஸூஸங்கடித ஜீவனம் ||

பொருள்: மக்கள் ஒருங்கிணையாமல் இருந்தால் தேசம், தேசியத்தை அடைவதில்லை. தேசிய உணர்வின் அடிப்படை ஒருங்கிணைந்த வாழ்க்கையே

சுபாஷிதம் 73 ந ராஷ்ட்ரம் ராஷ்டதாம்யாதி யத்ர அசங்கடிதா ஜநா; நிதானம் ராஷ்ற்ற பாவஸ்ய சு சங்கடித ஜீவனம்

பொருள்: மக்கள் ஒற்றுமை இல்லையெனில் நாடு நாடாகாது. நல்ல ஒற்றுமை வாழ்வே தேச உணர்வுக்கு அடிப்படை

சுபாஷிதம் 74 ந ராஜ்யம் ந ச ராஜாஸீத் ந தண்ட்யோ ந ச தாண்டிகஹ தமேணைவ ப்ரஜாஸ் ஸர்வாஹ ரக்ஷந்திஸ்ம பரஸ்பரம்

பொருள்: அரசு இருக்கவில்லை; அரசனில்லை; தண்டனை இல்லை; குற்றவாளியில்லை, தர்மத்தின் மூலமே ஒவ்வொருவரும் பரஸ்பரம் காப்பாற்றிக் கொண்டனர்.

சுபாஷிதம் 75 நாத்மானம் அவமன்யேத பூர்வாபி ரஸ்ம்ருத்திபி: ஆ-ம்ருத்யோ: ஸ்ரீயம் அன்விச்சேத் நைனாம் மயேத துர்பலம்

பொருள்: கடந்த காலத் தோல்விகளை எண்ணி ஒருவர் தன்னைத்தானே இகழ்ந்து கொள்ளக்கூடாது. வெற்றி ஒன்றும் எட்டாக் கனி அல்ல என்ற எண்ணத்துடன் உயிருள்ளவரை முயற்சி செய்ய வேண்டும்

சுபாஷிதம் – 76 நாத்மான மவன்யேத பூர்வாபிரஸம்ருத்திபிஹி ஆ ம்ருத்யோஷ் ஷ்ரியமன்விச்சேத் நைனாம் மன்யேத் துர்லபாம் —-மனுஸ்ம்ருதி

பொருள்: முந்தைய தோல்விகளின் காரணமாகத் தன்னைத் தானே ஈனமாக நினைத்துக் கொள்ளக் கூடாது. மாறாக வாழ்க்கை முழுவதும் நல்ல நிலை அடைய முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். முடியாது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது

சுபாஷிதம் 77 நா பிஷேகோ ந ஸ்ம்ஸ்காரஹ ஸிம்ஹஸ்ய க்ரியதே வனே விக்ரமார்ஜித சத்வஸ்ய ஸ்வயமேவ ம்ருகேந்த்ரதா — கருட புராணம்

பொருள்: காட்டில் எவரும் முடிசூட்டி, சிங்கம் அரசனாவதில்லை. தனது பராக்ரமத்தின் துணை கொண்டே தானே விலங்குகளின் அரசனாக அமைகிறது சிங்கம்.

சுபாஷிதம் 78 நாரிகேல சமர்காராஹ த்ருஷ்யந்தேஹி சுஹ்ருத் த்மாஹ அன்யே பதாகா காராஹ பஹிரேவ மனோஹராஹ

பொருள்: நல் இதயம் படைத்தவள் தேங்காய் போன்ற தோற்றம் உடையவர்கள். அதாவது மேலே மட்டையும் உள்ளே இனிய தேங்காயும் உடையவர்கள். மற்றவர்கள் இலந்தையைப் போல வெளியே மென்மையாகவும், அழகாகவும் உள்ளே கருமையாகவும் இருப்பார்கள்

சுபாஷிதம் 79 நாஸ்தி வித்யாஸமம் சக்ஷூ; நாஸ்தி சத்ய சமம் தப: நாஸ்தி ராக ஸமம் துக்கம் நாஸ்தி த்யாக சமம் சுகம்

பொருள்: கல்விக்கு இணையான கண்கள் இல்லை, உண்மைக்கு இணையான தவம் இல்லை. ஆசைக்கு இணையான துன்பம் இல்லை. தியாகத்திற்கு இணையான சுகம் இல்லை.

சுபாஷிதம் 80 நிஷ்சித்ய ய(ப்) ப்ரக்ரமதே நாந்தர்வஸதி கர்மணஹ அவந்த்ய காலோ வஸ்யாத்மா ஸ் வை பண்டித உஸ்யதே|| —– விதுர நீதி

பொருள் துவக்குவதற்கு மு வேலையினை முடிவு செய்பவர், இடையில் வேலையை நிறுத்தாமல் இருப்பவர், நேரத்தை விணடிக்காமல் இருப்பவர், மனதை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் எவரோ அவரே அறிஞர் என அழைக்கப்படுகிறார்.

சுபாஷிதம் – 81 ப்ரதம வயஸி பீதம் தோயமல்பம் ஸ்மரந்தஹ ஷிரஸி நீஹிதபாரா நாரிகேலா நராணாம் உதகமம்ருத கல்பம் தத்யு ராஜீவிதாந்தம் நஹிக்ருத முபகாரம் ஸாதவோ விஸ்மரந்தி!

பொருள்: கன்றாக இருக்கும்போது. நீரை மனிதனின் கையால் குடித்ததை நினைவில் வைத்துக்கொண்டு, இளநீர் வடிவத்தில் தலைமேல் சுமந்து நிற்கும் தென்னை மரம். வாழ்நாள் முழுவதும் அமுதம் போலிள்ள நீரைக் [மனிதனுக்கு] கொடுக்கும். அதுபோல நல்லவர்கள் பெற்ற உபகாரத்தை மறக்க மாட்டார்கள் (கடமை உணர்வோடு சமுதாயத்திற்கு சேவை செய்வார்கள்)

சுபாஷிதம் 82 ப்ரவ்ருத்திஞ்ச நிவ்ருத்திஞ்ச்ச் கார்யாகார்யே பயாபயே | பந்தம் மோக்ஷஞ்சயா வேத்தி புத்தி: ஸா பார்த்த ஸாத்விகீ|| — கீதை [அத்யாயம் 18, பாடல் 30]

பொருள்: எந்த செயலில் ஈடுபடுவது எதிலிருந்து விலகியிருப்பது என்றும் கார்யம் எது கார்யம் அல்லாதது எது என்பதையும் அச்சத்தையும் அச்சமின்மையையும் பந்தத்தையும் விடுதலையையும் எந்த புத்தி அறிகிறதோ அதுவே சாத்வீக புத்தியாகும்

சுபாஷிதம் 83 ப்ராப்யாப தம் நவ்யததே கதாசித் உத்யோகம் அன்விச்சதி சாப்ரமத்தஹ துக்கஞ்ச காலே ச ஹதே மஹாத்மா துரந்த ரஹ்த ஸ்ய ஜிதா ஹ ஸபத் னா ஹ —விதுரநீதி 1-101

பொருள்: நெருக்கடியைக் கண்டு கலங்க மாட்டான்; கவனம் சிதறாதவனாகவே பணியில் இறங்குவான்; பெருந்தன்மையுடையவனாக, நேர்கிற துன்பத்தைப் பொறுத்துக் கொள்வான் பொறுப்பு ஏற்பான்; இதனால் அவனது எதிரிகள் அவனிடம் தோற்று விடுவர்

சுபாஷிதம் – 84 ப்ராரப் யதேன கலு விக்ன பயேன நீசை; ப்ராரப்ய விக்ன விஹதா விரமம்தி மத்யா; விக்னைர் முஹீர் முஹீரபி ப்ரதிஹன்ய மானா; ப்ராரப்த முத்தம் குணா த பரியஜந்தி — நீதி சாஸ்திரம்

பொருள்: அதமர்கள் (சோம்பேறிகள்) கஷ்டம் வந்துவிடும் என்ற பயத்தினால் ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க மாட்டார்கள். மத்தியமர்கள் துணிந்து ஆரம்பித்து கஷ்டத்தினால் தடைபட்டு நின்று விடுவார்கள். உத்தமர்கள் எவ்வளவு கஷ்டங்கள் நேரிட்ட போதிலும் ஆரம்பித்த காரியத்தை முடிக்காமல் விட மாட்டார்கள்

சுபாஷிதம் 85 ப்ரியவாக்ய ப்ரதானேன ஸர்வே துஷ்யந்தி ஜந்தவாஹ தஸ்மாத் ததேவ வக்தவ்யம் வசனே கா தரித்ரதா

பொருள்: இனிய சொற்களைப் பேசினால் மிருகங்களுக்குக் கூட மகிழ்ச்சி உண்டாகிறது. ஆகவே இனிமையாகப் பேச வேண்டும். இனிய பேச்சுக்கு என்ன பஞ்சம் வந்து விட்டது?

சுபாஷிதம் 86 பரஸ்பர விரோதே து வயம் பஞ்ச ச தே சதம் பரைஹி பரிபவே ப்ராப்தே வயம் பஞ்சாதிகம் சதம் ——- மகாபாரதம்

பொருள்: நமக்குள் பகைவரும் போது நாம் ஐவர், அவர்கள் நூறு பேர். ஆனால் நமக்குப் பொதுவான எதிரி வரும்போது நாம் நூற்றைந்து பேர், என்று தர்மபுத்திரன் பீமனிடம் கூறுகிறான்

சுபாஷிதம் 87 பரோக்ஷே கார்யஹந்தாரம் ப்ரத்யக்ஷே ப்ரியவாதினம் வர்ஜயேத்தா த்ருசம் மித்ரம் விஷகும்பம் பயோ முகம்

பொருள்: காணாத போது காரியத்தைக் கெடுப்பவன்; ஆனால் நேரில் பார்க்கும் போது இனிமையாகப் பேசுபவன். இத்தகைய நண்பனை ஒதுக்க வேண்டும். விஷம் நிறைந்த பானையின் வாயருகே மட்டும் பால் உள்ளது போன்றவன் அவன்.

சுபாஷிதம் 88 பரோபகாராய பலந்தி வ்ருக்ஷா பரோபகாராய வஹந்தி நத்ய; பரோபகாராய சரந்தி காவ: பரோபகாரார்த்த மிதம் சரீரம்

பொருள்: பிறர்க்கு வழங்குவதற்காக மரங்கள் கனிகள் உற்பத்தி செய்கின்றன; பிறர்க்கு நீர் தருவதற்காக நதிகள் ஓடுகின்றன; பிறர்க்கு பால் வழங்குவதற்காக பசுக்கள் மேய்கின்றன. எனது இந்த உடலும் பிறர்க்கு உதவுவதற்காக. பரமபூஜனீய ஸ்ரீ குருஜி போன்ற மகாங்களின் வாழ்க்கையும் இது போன்றதுதான்.

சுபாஷிதம் 89 பரோபகாரஹ் கர்த்தவயஹ ப்ராணைரபி தனரபி பரோபகாரஜ புண்யம் ந ஸ்யாத்க்ரதுஷதைரபி

பொருள்: நமது உயிரையும் பணத்தையும் கூடப்பொருட்படுத்தாமல் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். ஏனெனில் பரோபகாரத்தால் வரும் புண்ணியம் நூற்றுக்கணக்கான ஜன்மங்களுக்கும் மறையாது.

சுபாஷிதம் 90 பஹூனாம் அல்ப ஸாரானாம் ஸம்ஹதிஹ் கார்யஸாதிகா த்ருணைர் குணத்வமா பன்னைஹி பத்யந்தே மத்த தந்தினஹ

பொருள்: குறைந்த சக்தியுள்ளவராக இருந்தாலும் இணைந்து இருப்பதால் கார்யங்களை சதிக்க முடியும். காய்ந்த புல்லாய் இருந்தாலும் கயிறாக திரிப்பதால் மத யானையையும் கட்ட உதவும்.

சுபாஷிதம் 91 பாத்ரேத்யாகீ, குணே ராகீ போகீபரிஜனை ஸ்ஸஹ! ஷாஸ்த்ரே போத்தா ரணே யோத்தா ஸவை புருஷஉச் யதே!!

பொருள்: தகுதியுள்ள நல்லவர்களுக்கு தானம் தருபவனும், நற்குணங்கள் உள்ளவனிடம் ஈடுபாடு கொண்டவனும் அருகில் இருப்பவர்களுடன் வசதிகளைப் பகிர்ந்து அனுபவிப்பவனும் நீதிநெறிகளைத் தெரிந்தவனும், போர்க்களத்தில் வீரத்துடன் போராடுபவனுமாகிய ஒருவனைத்தான் ஆண்மகன் என்று சொல்வார்கள்.

சுபாஷிதம் 92 பார்த்த நைவே ஹ நாமுத்ர வினாஷஸ்தஸ்ய வித்யதே நஹி கல்யாணக்ருத் கஷ்சித் துர்கதிம் தாதகச்சதி —-பகவத்கீதை (6-40)

பொருள்: அர்ஜூனா! ஈடுபட்டிருந்த நல்ல வேலையைத் (யோகம்) தொடர முடியாமல் போனாலும் அவருக்கு இந்த உலகிலும் அந்த உலகிலும் வீழ்ச்சி கிடையாது (ஏனென்றால்) பிறருக்கு நன்மை செய்த எவருக்குமே அவல நிலை வராது,

சுபாஷிதம் 93 புராண மித்யேவ நஸாது ஸர்வம் ந சா பி காவ்யம் நவமித் யவத் யம் ! ஸந்த ஹ் பரீக்ஷ்யானய தரத் ப ஜந்தே மூட ஹ் பரப்ரத் யயநேய புத்தி ஹி!!

பொருள்: வெறும் பழமையானது என்பதற்காக எல்லாம் நல்லதாக ஆகாது. புதியது என்பதற்காக எந்த ஒரு பொருளும் ஓதுக்கப்பட வேண்டியது ஆகாது. புத்திசாலியான நல்லவர்கள் ஆராய்ந்து பார்த்த பின்புதான் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பார்கள். ஆனால் முட்டாள் சுயபுத்தியை பயன்படுத்தாமல் மற்றவர்களின் கருத்தின்படி முடிவுக்கு வருவான்

சுபாஷிதம் 94 புத்திர்யஸ்ய பலம் தஸ்ய நிர்புத்தேட்து குதோ பலம் வனேஸிம்ஹோ மதோன் மத்தஹ ஷஷகேன நிபாதிதஹ —– பஞ்சதந்திரம்

பொருள்: புத்தி யாருக்கு உண்டோ அவன் சக்தி வாய்ந்தவன். புத்தியில்லாதவனுக்கு பலம் எப்படிப் பயன் படும்? காட்டில் மதம் பிடித்த சிங்கத்தை ஒரு முயலே தோற்கடித்தது.

சுபாஷிதம் 95 மநஸ்யேகம் வசஸ்யேகம் கர்மண்யேகம் மஹாத்மநாம் மநஸ்யந்யத் வசஸ்யந்யத் கர்மண்யந்யத் துராத்மநாம்

பொருள்: மகான்களுடைய சிந்தனை, சொல், செயல், இவை எப்பொழுதும் ஒன்றாக இருக்கிறது. ஆனால் துர்ஜனங்களுடையதோ சிந்தனை வேறு, சொல் வேறு, செயல் வேறாக இருக்கிறது.

சுபாஷிதம் 96 மஹா சித்தாந்த நிஷ்டானாம் ஸ்வானுஷாஸன வர்தினாம் | ஸமஷ்டிலீன வ்யஷ்டினாம் ஸங்க ஆதர்ஷ் உஸ்யதே || சங்ககீதை 115

பொருள்: யாருக்கு உயர்ந்த லட்சியப்பற்றும் சுய கட்டுப்பட்டுடன் நடந்து கொள்வதும் சமுதாயத்தில் இரண்டறக் கலந்துவிடுவதும் தன்மையாகியுள்ளதோ அவர்களது ஒருங்கிணைக்கப்பட்ட சக்தி (சங்கம்) முன்னுதரணமாக இருக்கும்.

சுபாஷிதம் 97 மாத்ருவத் பரதாதேஷு பரத்ரவ்யேஷு லோஹ்ஸ்டவத் ஆத்மவத் சர்வ பூதேஷூ யஹ்பஹ்ஸ்பதி ஸ் பண்டிதஹ —- சாணக்ய நீதி

பொருள்: பிறருடைய மனைவியைத் தாயாகவும் தன்னுடையதல்லாத எந்தப் பொருளையும் மண்ணைப் போலவும். அனைத்து உயிர்களையும் தன்னைப் போன்றதாகவும் கருதுபவன் தான் அறிஞன்.

சுபாஷிதம் 98 முக்தஸ்ங்கோ(அ)நஹம்வாதீ த்ருத்யத்ஸாஹ ஸயன்விதஹ ஸித்யஸித்யோர் நிர்விகாரஹ கர்த்தா ஸாத்விக உஸ்யதே —— பகவத் கீதை

பொருள்: பலனில் பற்றை விட்டவன், அகங்காரம் இல்லாதவன் உறுதியும், உற்சாகமும் நிரம்பியவன், வெற்றி தோல்விகளால் பாதிக்கப் படாதவன் ஆகிய குணங்களை உடையவனே உத்தம ஊழியன்.

சுபாஷிதம் 99 யத்ததக்ரே விஷமிவ பரிணாமே அம்ரு தோபமம் தத்ஸுகம் ஸாத்விகம் ப்ரோக்தம் ஆத்ம புத்தி ப்ரஸாதஜம் —–பகவத் கீதை (18 – 37)

பொருள்: ஆரம்பத்தில் கடினமாகவும் விளைவுகளில் அமுதம் போன்றும் இருப்பதுதான் சாத்வீக சுகம் என்று சொல்லப்படுகிறது. இது உள்ளுணர்விலிருந்து ஏற்பட்ட சுகமாகும்.

சுபாஷிதம் 100 யதாத்மானஸ் ததான்யஸ்ய ரஹஸ்யம் ந ப்ரகாஷயேத் விஜானீயாச்ச வைகுண்யம் யதான்யஸ்ய ததாத்மனஹ — சங்ககீதை

பொருள்: சொந்த ரகசியத்தைக் கட்டிக் காப்பது போலவே மற்றவர்களின் ரகசியத்தையும் விளம்பரப்படுத்தாமல் இருக்க வேண்டும். பிறரிடம் குறை காண்பது போலவே ஒருவர் தமது குறைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சுபாஷிதம் 101 யதயத் ஆசரதிஸ்ரேஷ்டஹ தத்ததேவ இதரோ ஜனஹ ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ்ததனு வர்த்ததே —- மகாபாரதம்

பொருள்: மேன்மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்களோ அப்படியே மற்ற ஜனங்களும் நடந்து கொள்வார்கள். எதனை அவர்கள் மதிப்புள்ளதாக செய்கிறார்களோ அதனை உலகம் பின்பற்றும்

சுபாஷிதம் 102 யத்ர யோகேஸ்வர(ஹ்) க்ருஹ்ஸ்ணோ யத்ர பார்த்தோ தனுர்தரஹ தத்ர ஸ்ரீ விஜயோ பூதிர் த்ருவா நிதிர் மதிர் மம:

பொருள்: யோக ஈசனான கண்ணனும் வில்லேந்திய பார்த்தனும்(அர்ஜூனன்)எங்கே இருக்கிறார்களோ, அங்கே மேன்மைகளும், வெற்றியும், செல்வமும், சாஸ்வதமான நீதியும் இருக்கும் என்பது என் கருத்து (என்று சஞ்சயன் திருதராஷ்ற்றனிடம் கூறுகிறான்)

சுபாஷிதம் – 103 யத்துஷ்கரம் யத்துராபம் யத்துர்கம் யச்சதுஸ்தரம் தத்ஸர்வம் தபஸா ப்ராப்யம் தபோஹி துரதிக்ரமம்

பொருள்: எளிதில் செய்ய முடியாத வேலைகளையும் கஷ்டம் தரும் விஷயங்களையும் கடக்க முடியாத இடங்களையும் கூட கடுந்தவத்தால் சாதிக்க முடியும். எல்லாக் கஷ்டங்களுக்கும் தீர்வு தவம் தான்.

சுபாஷிதம் 104 யாவத் பரியேத் ஜடரம் தாவத் ஸ்வத்வம் ஹி தேஹினாம் அதிகம் யோபி மன்யேத ஸ் ஸ்தேனோ தண்ட மர்ஹதி — மனு ஸ்ம்ருதி

பொருள்: உடலுக்கு அத்தியாவசியமான அளவை மட்டும் எடுத்துக் கொள். அதைவிட அதிகமாக ஏற்பது திருட்டு. அது தண்டனைக்குரிய செயலாகும்.

சுபாஷிதம் – 105 யாத்ரு ஷைஸ் ஸந்நிவிஷதே யத்ருஷாம்ஸ் சோபஸேவதே யத்ருகிச்சேச்ச பவிதும் தாத்ருக் பவதி பூருஷஹ: — விதுரநீதி 4 – 12

பொருள்: யாருடன் பழகுகிறானோ, யாருடன் பணிபுரிகிறானோ, எவரைப் போன்று ஆக விரும்புகிறானோ அவ்வாறே மனிதன் ஆகிறான். (நல்லோருடன் பழக நல்லோரைப் போல் ஆக விரும்ப நல்லவனாகிறான்)

சுபாஷிதம் 106 யதாக்நிர் தாருமத்யஸ்தோ நோத்திஷ்டேன் மதநம் விநா | விநா சாப்யாஸ யோகேந ஞான தீபஸ்ததா நஹி ||

பொருள்: நெருப்பு விறகில் இருப்பினும் அதனைக் கடையாவிட்டால் வெளிப்படுவதில்லை. அதுபோல முயற்சி என்ற யோக சாதனை இல்லாமல் ஞானம் என்ற ஒளி ஏற்படுவதில்லை.

சுபாஷிதம் 107 யாந்தி ந்யாய ப்ரவ்ருத்தஸ்ய திர்யஞ்சோ (அ)பி ஸஹாயதாம் | ஆ பந்தானாந்து கச்சந்தம் ஸோதரோ (அ)பி வுமுஞ்சதி || — அனார்கராகவ

பொருள்: நியாயமான பாதையில் செல்பவனுக்கு (ராமனுக்கு) குரங்குகளும் உதவியளிக்கும். தவறான பாதையில் செல்பவனை (ராவணனை) சொந்த சகோதரன் கூட (விபீஷணன்) கை விட்டு விடுவான்.

சுபாஷிதம் 108 யஸ்ய ப்ரஸாதே பத்மாஸ்தே விஜயஷ்ச பராக்ரமே ம்ருத்யுஷ்ச வஸதி க்ரோதே ஸர்வ தேஜோ மயோஹி ஸஹ —– ஹிதோபதேசம்

பொருள்: யாருடைய அருளால் (மகிழ்ச்சி கொண்டால்) செல்வம் கிடைக்குமோ, வீரத்தால் வெற்றி கிட்டுமோ, கோபம் கொண்டால் மரணத்தை ஏற்படுத்த முடியுமோ அவன்தான் ஒளிமயமானவன்

சுபாஷிதம் – 109 யஸ்ய க்ருத் யம ந விக்னந்தி ஷீத முஷ்ணம் பயம் ரதி ஹி ஸம்ருத்தி ர் அஸம்ருத் திர்வா ஸ வை பண்டித உச்யதே! விதுரநீதி 1- 17 யஸ்ய க்ருதம் ந விக்னந்தி ஷீதமுஷ்ணம் பயம் ரதிஹி ஸமருத்திர ஸம்ருத்திர்வா ஸ் வை பண்டித உஸ்யதே

பொருள்: எவனது செயலை குளிர், வெப்பம், பயம், வேறு பொருளில் நாட்டம், வசதி, வசதிகுறைவு என்று எதுவும் இடையூறாகித் தடை செய்யாதோ அவனே அறிவாளி

சுபாஷிதம் 110 யஸ்ய நாஸ்தி ஸ்வயம் ப்ரக்ஞா ஷாஸ்த்ரம் தஸ்ய கரோதிகிம் லோசநாப்யாம் விஹீநஸ்ய தர்பணம் கிம் கரிஷ்யதி

பொருள்: சுய அறிவு இல்லாதவனுக்கு எவ்வளவுதான் சாஸ்த்ரம் புகட்டினாலும் ஒரு பயனும் இருக்காது. பார்வை இல்லாதவனுக்கு கண்ணாடியால் என்ன செய்ய இயலும்? [சுய அறிவு என்பது கண்களுக்கும், சாஸ்த்ரம் என்பது கண்ணாடிக்கும் ஒப்புமைப் படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது]

சுபாஷிதம் 111 யஸ்மான்னோத்விஜதே லோகஹ லோகான்னோத்விஜதே ஹர்ஷாமர்ஷ பயோத்வேகைஹி முக்தோ யஸ் ஸ: சமே ப்ரியஹ — பகவத் கீதை

பொருள்: யாரால் உலகத்திற்குப் பிரச்சனை இல்லையோ,, யாருக்கு உலகத்தால் பிரச்சனை ஏற்படாதோ, யார் மகிழ்ச்சி, எரிச்சல், அச்சம், கலக்கம், இவைகளிலிருந்து விடுபட்டவனோ அவன் எனக்குப் பிடித்தமானவன் என்கிறார் பகவான்

சுபாஷிதம் 112 ரத்னாகரா தௌதபதாம் ஹிமாலய கிரீடினீம் ப்ரம்மராஜரிஷி ரத்னாட்யாம் வந்தே பாரதமாதரம்

பொருள்: எந்த பாரத அன்னையின் கால்களைக் கடல் நனைக்கிறதோ, எந்த அன்னை இமயலையை கிரீடமாக அணிந்திருக்கிறாளோ, ப்ரம்ம ரிஷிகள் ராஜரிஷிகள் எங்கின்ற செல்வங்களை உடையவளான அந்த பாரத அன்னைக்கு வணக்கம்.

சுபாஷிதம் 113 ராகஞி தர்மினி தர்மிஷ்டா பாமே பாபாஸ் ஸமே ஸமாஹ ராஜானமனுவர்த்தந்தே யதா ராஜா ததா ப்ரஜா —-சாணக்ய நீதி

பொருள்: அரசன் தர்மவானாக இருந்தால் குடிமக்களும் தர்மவாங்களாக இருப்பர். அரசன் பாவியாக இருந்தால் குடிமக்களும் பாவிகளாக இருப்பர். அவன் அனைவரிடத்திலும் சமமான பார்வையுடையவனாக இருந்தால் மக்களும் அனைவரிடத்திலும் சமமான பார்வையுடைவர்களாக இருப்பர். எல்லவற்றிலும் குடிமக்கள் மன்னனையே பின்பற்றுவார்கள். மன்னன் எப்படியோ, குடிமக்களும் அப்படியே.

சுபாஷிதம் 114 லக்ஷ்மீர் வஸதி ஜிஹ்வாக்ரே ஜிஹ்வாக்ரே மித்த பாந்தவாஹ பந்தநம் சைவ ஜிஹ்வாக்ரே ஜிஹ்வாக்ரே மரணம் த்ருவம்

பொருள்: நாக்கின் நுனியில் திருமகள் வஸிக்கிறாள். நாக்கின் நுனியிலேயே நண்பர்களும் உறவினர்களும் இருக்கிறார்கள். சிறைபடுதலும் (தளையும்) நாக்கின் நுனியில்தான். மரணம்கூட நிச்சயமாக நாக்கின் நுனியில் தான் இருக்கிறது.

சுபாஷிதம் – 115 வ்ருத்தி ப்ரலாவஸ்தேஜஸ்ச ஸத்வ முத்தானமேவ ச வ்யவஸயஸ்ச யஸ்ய ஸ்யாத் தஸ்யவ்ருத்தி பயம் குத: — விதுர நீதி 5வது அத்யாயம் 41வது ஸ்லோகம்

பொருள்: எங்கு வளரும் சக்தி, ஒளி, வலிமை, பராக்ரமம், முயற்சி, உறுதி போன்றவை காணப்படுகிறதோ அங்கு உயிர் போய்விடும் என்ற பயம் எவ்வாறு ஏற்படும்?

சுபாஷிதம் 116 வ்யாயாம புஷ்ட காத்ரஸ்ய புத்திஸ்தேஜோ யஷோ பலம்! ப்ரவர்தந்தே மனுஷ்யஸ்ய தஸ்மாத் வ்யாயாமமாசரேத்!!

பொருள்: உடற் பயிற்சியால் நல்ல உடம்பை அடைந்தவனின் புத்தியும், தெய்வீக களையும், புகழும், பலமும் வளரும். ஆகவே உடற்பயிற்சி செய்வீர்.

சுபாஷிதம் – 117 வதனம் ப்ரஸாத ஸதனம்; ஸதயம் ஹ்ருதயம் ஸூதாமுசோ வாசஹ கரணம் பரோபகரணம் யேஷாம் கேஷாம் நதே வந்த்யாஹா

பொருள்: எப்போதும் மலர்ந்த முகம்; இதயத்திலோ கருணை பொங்கும்; வாக்கிலே அமுது சிந்தும் ; எப்போதும் பிறர்க்கு உதவிகரமாக இருப்பார் – இப்படிப்பட்ட வரை யார் தான் போற்றமாட்டார்கள்?

சுபாஷிதம் 118 வனானி தஹதே வன் ஹேஹெ ஸகா பவதி மாருதஹ ஸ ஏவ தீப நாஷாய, க்ருஷே கஸ்யாஸ்தி ஸொஹ்ருதம்

பொருள்: காடு தீப்பற்றி எரியும்போது வீசும் காற்று தீக்கு நண்பனாகி பரவச் செய்து விடுகிறது. அதே காற்று மெல்லிய தீபத்தை அணைத்து விடுகிறது. பலவீனமானவனுக்கு யார்தான் நண்பனாக இருப்பார்கள்?

சுபாஷிதம் 119 வாக்த்ருத்வம் கீத கானம் ச கதா கதன கெளஷலம் யத்னே நைதே(அ)தி கந்த வ்யாஹ லோக ஸங்கட கா குணாஹ — சங்ககீதை

பொருள்: பேச்சுத்திறன், பாட்டுப்பாடும் திறன், கதை சொல்கின்ற திறமை ஆகியவை மக்களை இணக்கும் குணங்கள். இவற்றை முயற்சி செய்து கற்றுக் கொள்ள வேண்டும்

சுபாஷிதம் 120 விகாஸயதி ஸத்பாவான் விலோபயதி துர்குணான்! வினாஷயதி வித்வேஷான் கார்யம் ஸங்கடனாத்மகம்

பொருள்: நல்ல எண்ணங்களை மலரச் செய்வதும், தீயகுணங்களைக் களைவதும், வெறுப்பை அழிப்பதும் சங்கவேலையின் பலனாகும்

சுபாஷிதம் – 121 விகாஸயதி ஸத்பாவான் விலோபயதி துர்குணான் | வினாஷயதி வித்வேஷான் கார்யம் ஸ்ங்கடனாத்மகம் || —- ஸங்க கீதை

பொருள்: நல்ல எண்ணங்களை மலரச் செய்வதும், தீய குணங்களைக் களைவதும் வெறுப்பை அழிப்பதும் சங்க வேலையின் பலனாகும்.

சுபாஷிதம் 122 வித்யா மித்ரம் ப்ரவாஸேஷு மாதா மித்ரம் க்ருஹேஷுச ரோகினம் ஒளஷதம் மித்ரம் தர்மோ மித்ரம் ம்ருதஸ்யச

பொருள்: பயணம் செய்பவனுக்கு கல்வி நண்பன். வீட்டில் தாய் நண்பன், நோயாளிக்கு மருந்தே நண்பன். தர்மம் இறந்த பின்னும் நண்பனாயிருக்கும்

சுபாஷிதம் 123 வீரேதி ஹாஸ விக்யாதம் ஸாது சாரித்ரிய விஹ்ஸ்ருதம் வினா ஸங்கடிதம் ராஷ்ட்ரம் ந பவேத் பலவந்தரம் —– சங்க கீதை

பொருள்: வீரர்களின் வரலாற்றால் பெயர் பெற்றிருந்தாலும் நல்லவர்களின் செயல்களால் புகழ் பெற்றிருந்தாலும் நாடு இணைந்து இல்லாவிட்டால் பலம் வாய்ந்ததாக ஆகாது.

சுபாஷிதம் 124 விஸ்மய: ஸ்ர்வதா ஹேய: ப்ரத்யூஹ்: ஸர்வகர்மணாம் தஸ்மாத் விஸ்மயமுத்ஸ்ருஜ்ய ஸாத்யே ஸித்திர் விதீயதாம்

பொருள்: எதைக் கண்டும் மலைத்துப் போகக்கூடாது. அது நமது பணிகளுக்கு மிகப்பெரும் தடையாகும். ஆகையால் எதனைக் கண்டும் மலைத்துப் போகாமல், அடைய வேண்டிய குறிக்கோளை நோக்கி முழுமுயற்சி செய்ய வேண்டும்.

சுபாஷிதம் 125 விஹாய பௌருஷம் யோஹி தவமேவா வலம்பதே ப்ரஸாத ஸிம்ஹ வத்தஸ்ய மூர்த்னி திஷ்டந்தி வாயஸாஹ!

பொருள்: எவனொருவன் தன்னுடைய செயல் சக்தியை மறந்துவிட்டு வெறும் தெய்வத்தை (விதியை) நம்பி இருப்பானோ, அவன் வீட்டுக்கு முன் உள்ள உயிரற்ற சிங்க பொம்மைகள் போல இருக்கிறான். அது சிங்கமாக இருந்தாலும் அந்த தலையின் மீது காக்கை உட்காரும்.

சுபாஷிதம் 126 விஜேதவ்யா லங்கா சரண தரணீயொ ஜலநிதிஹி விபக்ஷஹ் பௌலஸ்த்யோ ரணபுவி ஸஹாயாஷ்ச கபயஹ த்தாப் யே கோ ராமஸ் ஸகலமவ தீத்ராக்ஷஸகுலம் க்ரியா ஸித்திஸ் ஸத்வே பவதி மஹதாம் நோபகரணே||

பொருள்: ஜெயிக்க வேண்டியதோ இலங்கை; கடக்க வேண்டியதோ பெருங்கடல்; எதிரியோ ராவணன்; போர்க்களத்தில் உதவி என்று பார்த்தால் குரங்குகள், இப்படி எல்லாம் இருந்தாலும் ராமன் தனியாக ராக்ஷஸ குலம் முழுவதையும் அழித்தான். (காரணம்) மகாங்களுக்கு வேலையில் வெற்றி கருவிகளால் இல்லை; உள்சக்தியினால்தான்

சுபாஷிதம் 127 வினா ஸ்வதர்மான் ந ஸூகம் ஸ்வதர்மோ து பரம் தபஹ —- சுக்ர நீதி

பொருள்: ஒருவன் தன்னுடைய வாழ்க்கை முறையைக் கடைபிடிக்காவிட்டால் இன்பமில்லை. தன்னுடைய வாழ்க்கை முறையே ஒருவனுக்கு தலைசிறந்தத தவமாகும்.

சுபாஷிதம் 128 வேஷா பாஷா ஸதாசாரஹ ரக்ஷணீயம் இதம் த்ரயம் அந்தானு கரம் மன்யேஷாம் அகீர்த்தி கரமுஸ்யதே

பொருள்: ஆடை, மொழி, நன்னடத்தை இம்மூன்றும் பாதுகாக்கப் படவேண்டும். பிறரைக் கண்மூடித்தனமாய்ப் பின்பற்றுவது பெருமையல்ல என்று கூறப்படுகிறது.

சுபாஷிதம் 129 வேஷா பாஷா ஸதாசாரஹ ரக்ஷணீயம் இதம் த்ரயம் | அந்தானு கரண மன்யேஷாம் அகீர்த்தி கரமுச்யதே ||

பொருள்: ஆடை, மொழி, நன்னடத்தை இம்மூன்றும் பாதுகாக்கப்பட வேண்டும். பிறரைக் கண்மூடித்தனமாக பின்பற்றுவது பெருமையல்ல என்று கூறப்படுகிறது.

சுபாஷிதம் 130 ஸ்ரீர்மங்கலாத் ப்ரபவதி ப்ராகல்ப்யாத் ஸம்ப்ரவர்த்தே ! தாக்க்ஷ்யாத்து குருதே மூலம் ஸம்யமர்தப்ரதி திஷ்ட்தி!! —-விதுரநீதி

பொருள்: செல்வமானது சுபகார்யங்களால் வரும். பராக்கிரமத்தினால் அது பெருகும். புத்திசாலிதனத்தினால் அது வேரூன்றி நிற்கும். மனக்கட்டுப்பாட்டால் அது பாதுகாப்பாக இருக்கும்.

சுபாஷிதம் – 131 ஸ்வதேசம் பதிதே கஷ்டே தூரஸ்தா லோகயந்தியே நைவச ப்ரதிகுர்வந்தி தே நராஹா சத்ரு நந்தனாஹா

பொருள்; சொந்த நாடு துன்பத்தில் இருக்கும் பொழுது விலகி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் நாட்டின் பகைவர்களுக்கு மகிழ்ச்சியூட்டுபவர்களாகிறார்கள்

சுபாஷிதம் 132 ஸ்ரோத்ரம் ஸ்ருதேனைவ ந குண்டலேன தானேன பாணிர் நது கங்கணேன விபாதி காயஹ கருணா பராணாம் பரோபகாரேண ந சந்தனேன —— நீதிசதகம்

பொருள்: நல்ல கருத்துக்களைக் கேட்பதால் காது பிரகாசிக்கிறது, குண்டலம் அணிவதால் அல்ல. தானம் செய்வதே கரத்திற்கு அழகு; கங்கணம் அணிவதல்ல. கருணை உள்ளம் படைத்தவர்கள் சரீரம் பிறருக்கு உதவுவதால் பிரகாசிக்கிறது, சந்தனத்தால் அல்ல.

சுபாஷிதம் – 133 ஸ்வதேச பதிதம் கஷ்டம் தூரஸ்தா லோகயந்தி யே நைவ ச ப்ரதி குர்வந்தி தே நராஹா சத்ரு நந்தனாஹா

பொருள்: [நாடு துன்பத்தில் இருக்கும் போது அதனை நீக்க முயலாமல் எட்டி நின்று வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பவர்கள் நாட்டின் பகைவர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவர்களாக ஆகிறார்கள்.]

சுபாஷிதம் 134 ஸ்வபாவம் ந ஜஹாத்யேவ ஸாதுராபத்கதோபி யென் கர்ப்பூரஹ் பாவகஸ்ப்ருஷ்டஹ ஸௌரபம் லபதேதராம்

பொருள்: உயர்ந்த மனிதர்கள் கஷ்டம் வந்த காலத்திலும் தங்கள் பிறவில்ன் பண்பை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். கற்பூரத்தை நெருப்பிட்டுக் கொளுத்தினாலும் அது நறுமணத்தைத்தான் தரும்

சுபாஷிதம் – 135 ஸக்தாஹ் கர்மண்ய வித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத குர்யாத் வித்வாம்ஸததா ஸகதஹ சிகீர்ஷீர் லோக் சங்க்ரஹம் — ஸ்ரீமத் பகவத் கீதை

பொருள்: பார்த்தா பற்றுள்ளவராய் பாமரர் செயல்படுவது போல அறிஞர்கள் பறில்லாதவராய் உலகை நல்வழியில் நடத்த வேலை செய்ய வேண்டும்

சுபாஷிதம் 136 ஸங்க ச்சத்வம் ஸம்வதத்வம் ஸம்வோ மனாம்ஸி ஜானதாம் | தேவா பாகம் யதா பூர்வே ஸ்ஞ்ஜானானா உபாஸதே ரிக்வேதம்

பொருள்: நீங்கள் ஒருவருக்கொருவர் இணைந்து செல்லுங்கள். ஒன்று கூடி அன்புடன் அளவளாவுங்கள் (பேசுங்கள்). உங்கள் மங்கள் ஒத்த கருத்துடையனவாகி மீயறிவைத் தேடட்டும். முற்காலத்தில் சான்றோர்கள் ஒன்றாகச் சேர்ந்து யாகங்களைச் செய்து தேவர்களை வழிபட்டது போலவே நீங்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடையவராகுங்கள்.

சுபாஷிதம் – 137 ஸதா ப்ரவாஸி நிரோஹி பத்ரவேஷ ஷூசிஸ்மிதஹ ஹிதகாரி மிதாஹாரி பவேத் சங்க பராயணஹ — சங்க கீதை

பொருள் சங்கமொன்றே சிந்தையாகக் கொண்ட சிறந்த கார்யகர்த்தர்கள் எப்போதும் தமது பணிக்களத்தில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருப்பர். ஆரோக்கியமானவர்களாகவும், நேர்த்தியான உடையணிந்தவர்களாகவும் இருப்பர். சுத்தமாகவும் சிரித்த முகத்தோடும் காணப்படுவர். எப்போதும் நல்லதையே செய்து கொண்டிருப்பர், மிதமான உணவை உட்கொள்வர்

சுபாஷிதம் 138 ஸமானோ மந்த்ரஸ் ஸமிதிஸ் ஸமானி ஸமானம் மனஸ் ஸஹச் சித்தமேஷாம்! ஸமானம் மந்த்ரம் அபிமந்த்ரயேவஹ ஸமானேன வோ ஹவிஷா ஜீஹோமி!!

பொருள்: எனது உணவை உன்னுடன் சமமாகப் பகிர்ந்து கொள்வேனாக. நீ இணைந்து பணியாற்றி, எய்த வேண்டிய பலனை அடைவதற்கு நான் உறுதுணையாய் இருப்பேன்.

சுபாஷிதம் 139 ஸமானீவ ஆகூதிஹி ஸமானா ஜ்ருதயானிவஹ! ஸமானமஸ்து வோ மனோ யதா வஸ் ஸீஸஹாஸதி!!

பொருள்: உங்கள் அனைவருக்கும் ஒரே சிந்தனை, ஒரே இலட்சியம் அமையட்டும். உங்கல் எல்லோரது இதயங்களும் இணைந்து பணீ புரியட்டும். உங்கள் எல்லோரது மனமும் ஒருங்கிணைந்து அமையட்டும். அதன் மூலம் நீங்கள் செய்யும் பணீயில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு நல்குவீர்களாக.

சுபாஷிதம் 140 ஸச ஸர்வகுணோபேதஹ கௌஸல்யாநந்த வர்தனஹ! ஸமுத்ர இவ காம்பீர்யே ஸ்தைர்யேண ஹிமவானிவ!! —— வால்மீகி

பொருள்: அவன் (ஸ்ரீராமன்) எல்லா குணங்களும் நிறைந்தவனாக இருந்து கௌஸல்யையின் (அம்மாவின்) மகிழ்ச்சியை அதிகரிப்பவனாக இருந்தான். கம்பீரத்தில் கடல்போலவும, மன உறுதியில் இமயம் போலவும் விளங்கினான்

சுபாஷிதம் 141 ஸர்வே பவந்து ஸுகின: ஸர்வே ஸந்து நிராமயாஹா ஸர்வே பத்ராணி பஸ்யந்து மாகஸ்சித் துக்க பாக்பவேத்

பொருள்: எல்லோரும் இன்பமடையட்டும் எல்லோரும் நோய் அற்றவர்களாக இருக்கட்டும் எல்லோரும் மங்களங்களையே அனுபவிக்கட்டும் ஒருவரும் துன்பமடையக் கூடாது

சுபாஷிதம் 142 ஸர்வதா ஸ்ம்ஹதைர் ஏவ துர்பலைர் பலவானபி அபித்ரஹ ஷக்யதே ஹந்தும் மதுஹா ப்ரமரைரிவ —– வியாசர்

பொருள்: பலவீனர்களும் ஒன்று திரண்டு தாக்கினால் பலவானையும் வீழ்த்த முடியும். தேனீக்கள் ஒன்று திரண்டு தேனெடுக்கும் மனிதனைத் தாக்கித் துரத்திவிட முடியும்.

சுபாஷிதம் 143 ஸர்வேபி சிகினஸ் ஸந்து ஸர்வே ஸந்து நிராமயாஹ ஸர்வே பத்ராணி பஸ்யந்து மாகஸ்சித் துக்க பாக் பவேத்

பொருள்: எல்லோரும் சுகமாக இருக்கட்டும்; எல்லோரும் நோயற்றவர்களாக இருக்கட்டும். எல்லோரும் மங்களகரமானவற்றையே பார்க்கட்டும். யாருக்கும் துக்கம் நேராது இருக்கட்டும்.

சுபாஷிதம் 144 ஸத்யம் ஏக பதம் ப்ரம்ஹஹ ஸத்யே தர்மப் ப்ரதி ஷஷ்டிதஹ ஸத்யமேவாக்ஷயா வேதாஹா ஸத்யேநா வாப்யதே பரம்

பொருள்: உண்மை ஓங்கார வடிவ ப்ரம்மம் ஆகும்; உண்மை தர்மத்தை நிலை நிறுத்துவது ஆகும்; உண்மை அழியாத வேதமாகும்; உண்மை பரம்பொருளிடம் நம்மை சேர்ப்பிப்பதாகும்.

சுபாஷிதம் 145 ஸம்ஸார விஷவ்ருக்ஷஸ்ய த்வே பலே ஹ்யம்ருதோபமே காவ்யாம்ருத ரஸாஸ்வாத ஜ ஆலாபஸ் ஸஜ்ஜனநஹி ஸஹ

பொருள்: பிறவியாகிய விஷமரத்தினுடைய அம்ருதத்திற்கு ஒப்பான இரண்டு கனிகள் அம்ருத சுவையுடைய நூலும், நன்மக்களுடன் உரையாடலும் ஆகும்

சுபாஷிதம் 146 ஸமுத்ர வஸனே தேவி பர்வதஸ்தன மண்டலே விஷ்ணுபத்நி நமஸ்துப்யம் பாதஸ்பர்ஷம் க்ஷமஸ்வமே’

பொருள்: சமுத்ரத்தை ஆடையாக அணிந்தவளும், மலைகளை மார்பகங்களாக கொண்டவளும், விஷ்ணுவின் மனைவியுமான அன்னையே உன்னை வணங்குகிறேன். எனது கால்கள் உன் மீது படுகின்றது. அதற்காக என்னை மன்னிக்கவும்.

சுபாஷிதம் 147 ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோஷமபி நத்யஜேத் ஸர்வாரம்பாஹி தோஷேண தூமேனாக்னிரி வாவ்ருதாஹா ——பகவத் கீதை (18 – 48)

பொருள்: அர்ச்சுனா! குறைகள் தோன்றினாலும் இயல்பாய் நாம் ஏற்றெடுத்த வேலையைக் கைவிட்டு விடக்கூடாது. (ஏனென்றால்) புகைமூட்டம் நெருப்பை சுற்றி இருப்பது போல நல்ல வேலையைக் குறைகளும் குற்றங்களும் சூழ்ந்திருக்கும்.

சுபாஷிதம் 148 ஸாக்ஷரா: விபரீதாச்சேத்ராக்ஷஸா: ஏவ கேவலம் | ஸரஸோ விபரீதச்சேத்ஸரஸத்வம் ந முஞ்சதி ||

பொருள்: நன்கு படித்தறிந்தவன் கூட சந்தர்ப்பவசத்தால் அரக்கனைப் போல மாறுவான். மாறாக உயர்ந்தப் பண்பாளன் எத்தகைய சூழ்நிலையிலும் தன் இயல்பிலுருந்து மாறமாட்டான் “சாக்ஷ்ரா” எனும் வார்த்தையை மாற்றி எழுதும் போது “ராக்ஷசா” என்று வடிவம் பெறும் மாறாக ஸரஸா எனும் வார்த்தையை மாற்றி எழுதும் போது ஸரஸா என்ற வடிவமே பெறும்.

சுபாஷிதம் 149 ஸாமர்த்யமூலம ஸ்வாதந்த்ரயம் ஸ்ரமமூலம் ச வைபவம் ந்யாயமூலம் ஸூராஜ்யம் ஸ்யாத் ஸங்க மூலம் மஹாபலம் சங்ககீதை 37

பொருள்: ஒரு நாட்டின் சுதந்திரத்திற்கு அடிப்படை அதன் கெட்டிக்கரத்தனத்தில் உள்ளது. உன்னத நிலைக்கு அடிப்படை உழைப்பாகும். நல்லாட்சிக்கு அடிப்படை நீதி நெறியாகும். பெரும் சக்திக்கு அடிப்படை ஒருங்கிணைப்பு (சங்கம்) ஆகும்

சுபாஷிதம் 150 ஸிம்ஹாதேகம் பகாதேகம் ஷட் ஷூனஸ்த்ரீணி கர்தபாத் வாயஸாத் பஞ்சஷிக்ஷேச்ச சத்வாரி குக்குடாதபி பஞ்சதந்திரம்

பொருள்: சிங்கத்திடமிருந்து ஒன்றும் (ஒழுங்காகச் செய்தல்), கொக்கிடமிருந்து ஒன்றும் (கவனம் சிதறாமலிருப்பது) நாயிடமிருந்து ஆறும் (கொஞ்ச உணவு, கிடைத்ததில் திருப்தி, தகுந்த தூக்கம், சுறுசுறுப்பு, எஜமான பக்தி, சாகஸ குணம்), கழுதையிடமிருந்து மூன்றும் (ஓய்வில்லாமல் சுமப்பது, குளிர், வெய்யிலால் பாதிக்காதது, இன்ப, துன்பங்களில் மாறாதது), காக்கையிடமிருந்து ஐந்தும் (கெளரவமான இல்லற வாழ்க்கை, தங்க வீடு ஏற்படுத்திக் கொள்வது, தைரியமாக முயற்சிப்பது, எப்பொழுதும் விழிப்புடன் இருப்பது, சோம்பலின்மை) சேவலிடமிருந்து நான்கும் (எதிரியுடன் பின் வாங்காத போராட்டம், உறவினருடன் சேர்ந்து உண்ணுதல், அதிகாலையில் எழுதல், பெண்களைக் காப்பாற்ற பயமின்றிப் போராடுவது) கற்றுக் கொள்ளத் தக்கவை [அதாவது எல்லாரிடமிருந்தும் ஏதேனும் கற்றுக் கொள்ள முடியும்]

சுபாஷிதம் 151 ஷ்ரத்தா த்யாகஸ்தபோ யத்னஹ ஸமதா ஷூத்த ஷீலதா இத்யேதத் ஸங்க யோகஸ்ய விக்ஞாதவ்யம் ஷடங்ககம்

பொருள்: சிரத்தை, தியாகம், தவம், உழைப்பு(முயற்சி), சமத்துவம், நல்லொழுக்கம் இவைகள் சங்க யோகத்தின் ஆறு அம்சங்கள். [சங்க வேலையில் வெற்றிக்காக கடைபிடிக்க வேண்டியவை]

சுபாஷிதம் 152 ஷ்லோகார்த்தேன ப்ரவக்ஷ்யாமி யதுக்தம் க்ரந்தகோடிபிஹி பரோபகாரஹ் புண்யாய பாபாய பரபீடனம்

பொருள்: கோடிக்கணக்கான நீதி நூல்கள் கூறும் விஷயத்தை நான் வெறும் அரை ஸ்லோகத்தில் கூறிவிடுவேன். “மற்றவர்களுக்கு உதவி செய்வது புண்ணயம் தீங்கு செய்வது பாவம்”

சுபாஷிதம் – 153 ஷட் தோஷா ; புருஷே னேஹ ஹாதவ்யா பூதிமிச்சதா நித்ரா தந்த்ரிபயம் க்ரோதஹ ஆலஸ்யம் தீர்கஸுத்ரதா — விதுரநீதி 1- 72

பொருள்: தூக்கம், சோர்வு, பயம், கோபம், சோம்பல் சிந்திப்பதில் நேரம் கடத்திச் செயலில் ஈடுபடாமை என்ற ஆறும் நலத்தை விரும்புகிறவனால் தவிர்க்கத் தக்கவை

சுபாஷிதம் 154 ஷட் தோஷாஹா புருஷேணேஹ ஹாதவ்யா பூதிமிச்சதா | நித்ராம் தந்த்ரா, பயம், க்ரோத, ஆலஸ்யம் தீர்க்க சூத்ரதா ||

பொருள்: வெற்றி பெற விருப்பமுள்ளவர்கள், அதிகமாகத் தூங்குதல், பாதி தூக்கம்-பாதி விழித்திருத்தல், பயம், கோபம், சோம்பல், வேலையைத் தள்ளிப் போடுதல் அல்லது மெதுவாகச் செய்தல் ஆகிய ஆறு குறைகளை விட்டுவிட வேண்டும்

சுபாஷிதம் 155 ஷஷிநா ஷோபதே ராத்ரிஹி ஸ்ருஷ்டிஸ் சீர்யேண ஷோபதே ஸத்யேந ஷோபதே வாணீ ஸதாசாரேண ஜீவநம்

பொருள்: இரவு சந்திரனால் விளங்குகிறது; உலகமானது சூரியனால் விளங்குகிறது; வாக்கு உண்மை பேசுவதால் விளங்குகிறது. வாழ்வு ஸதாசாரத்தால் (நல்லொழுக்கத்தால்) சிறப்புற்று விளங்குகிறது ஹ், ஹ, ஹா, ஹி, ஹீ . . . . .

சுபாஷிதம் 156 ஹ்ருதம் ஸதயம் யஸ்ய பாஷிதம் ஸத்ய பூஷிதம் காயஹ பரஹிதோபாயஹ கலிஹ் குர்வித தஸ்யகிம் —- வைராக்ய சதகம்

பொருள்: கருணை நிறைந்த இதயம், உண்மையால் மெருகெறிய பேச்சு. பிறருக்கு உதவுவதற்காக உடல் என்று கொண்ட ஒருவரை கலி என்னதான் செய்துவிட முடியும்.

சுபாஷிதம் 157 ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம் தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருதநிஷ்சய !! ஸ்ரீமத் பகவத்கீதை

பொருள்: போரில் மடிந்தால் பொன்னுலகைப் பெற்றிடுவாய். வென்றால் மண்ணுலகை ஆண்டு அனுபவிப்பாய். ஆகையால் கௌந்தேய (அர்ஜுனா) போரின் பொருட்டு உறுதி கொண்டு எழுந்திரு.

சுபாஷிதம் 158 ஹஸ்தி ஸ்தூலதனுஸ் ஸ் சாங்குஷ வஷஹ கிம் ஹஸ்தி மாத்ரோங் குஷஹ தீபே ப்ரஜ்வலிதே வினஸ்யதி தமஹ கிம் தீப மாத்ரம் தமஹ! வஜ்ரேணா பிஹிதாஹ் பதந்தி கிரயஹ கிம் சாத்ரி மாத்ரஹ் பவிஹி தேஜோ யஸ்ய விஹாஜதே ஸ் பலவான் ஸ்தூலேஷ்ய் கஹ் பரத்ய்ய்ஹ!

பொருள்: யானையின் சாரீரம் மிகப் பெரியதாயினும் அங்குசத்தினால் கட்டுப்படுத்தப்படுகிறது. அங்குசம் என்ன யானையைப் போன்ற பெரிய உருவம் கொண்டு இருக்கிறதா? விளக்கை ஏற்றுவதால் சுழ்ந்துள்ள இருட்டு விலகிப் போய்விடுகிறது. இருட்டு என்ன விளக்கைப் போல் சிறியதாகவா இருக்கிறது? வஜ்ராயதத்தின் தாக்குதல் மிகப்பெரிய மலைகளையும் முடக்கி விடுகின்றது. வஜ்ராயுதம் என்ன மலையைப் போன்று பெரியதாகவா இருக்கின்றது? ஆகவே பெரிய உருவம் என்பதல்ல முக்யம். யாரிடம் தேஜஸ் (உள் சக்தி) இருக்கிறதோ அவனே பலவான்.

சுபாஷிதம் – 159 ஹிமாலயம் ஸமாரப்ய யாவதிந்து ஸரோவரம் தம்தேவ நிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே — பார்ஹஸ்பத்ய சாஸ்த்ரம்

பொருள்: இமய முதல் சமுத்திரம் வரை பரந்துள்ள ஹிந்துஸ்தானம் இறைவனால் உருவாக்கப்பட்ட தேசம், நம் கண் முன் உள்ளது.

சுபாஷிதம் 160 ஜனனி ஜனகஷ்சைவ ஜன்ம பூமிர் ஜனார்தன: ஜீவோ ஜயஸ்ச ஜனதா ஸேவாஏதே ஸகௌரவம்

பொருள்: ஜனனி (தாய்) ஜனக (தந்தை) ஜன்மபூமி (பிறந்த நாடு) ஜனார்த்தன (இறைவன்) ஜீவ (வாழ்வு) ஜய (வெற்றி) மற்றும் மக்கள் (சமுதாயம்) இவர்களுக்கு தொண்டு மிகுந்த மரியாதையுடன் செய்ய வேண்டும்

சுபாஷிதம் – 161 ஜாதி மாத்ரேன கிம் கஸ்சித் தன்யதே பூஜ்யதே க்வசித் வ்யவஹாரம் பரிக்ஞாய வத்ய(ஹ்) பூஜ்யோ(அ)தவா பவேத் —- இதோபதேசம்

பொருள்: ஜாதியை மட்டும் வைத்து எவரையும் பெருமைக்குரியவர் என்றோ, போற்றத்தக்கவர் என்றோ கொள்வதில்லை. ஒருவரது நடத்தையை வைத்தே அவர் தண்டனைகுரியவராகிறார் அல்லது போற்றுதலுக்குரியவராகிறார்

சுபாஷிதம் – 162 ஜாதி த்வேஷோ தர்ம நாசோ தேச துரோகஹ ஸ்வவிஸ்ம்ருதிஹி யத்ர ப்ரவர்ததே தத்ர சங்க தர்மோஹி தரகஹ.

பொருள்: ஜாதிக் காழ்ப்புணர்வு, க்தர்மத்தின் அழிவு, தேச துரோகம், நாம் யார் என்பது பற்றிய உணர்வின்மை – இவை மண்டிக்கிடக்கும் இடத்தில் சங்க நெறிதான் அருமருந்து

சுபாஷிதம் 163 ஜீவனே யாவதா தானம் ஸ்யாத் ப்ரதானம் ததோதிகம் இத்யாஷா ப்ரார்த் தனாஸ்மாகம் பகவன் பரிபூர்யதாம்

பொருள்: வாழ்க்கையில் நாம் பெறுவதை விட கொடுப்பதே அதிகமாக இருக்க வேண்டும். இந்த எங்களது ப்ரார்த்தனையை கடவுள் நிறைவேற்றட்டும்

————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ச

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading