ஸ்ரீ கீதா சாம்யமும் ஸ்ரீ திருவாய் மொழியின் ஏற்றமும்-ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்—சூரணை-189-190-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம்

சூரணை-189-

இனி மேல் இப் பிரபந்த பிரதிபாத்ய அர்த்தங்களை விஸ்த்ரேண பிரதி பாதிப்பதாக திரு உள்ளம் பற்றி ,
அதில் பிரதமத்திலே சாஷாத்க்ருத பகவத் தத்வரான இவர் -சம்சாரிகளுக்கு உஜ்ஜீவன அர்த்தம்
உபதேசம் பண்ணின இப் பிரபந்தம் –பிரதி பாத்ய அர்த்த சாம்யத்தாலே -பகவத் ப்ரணீத –
கீதோ உபநிஷத் -சமமாகச் சொல்லப் படும் என்கிறார் -மேல் –
(மேலே ஸ்ரீ கீதா சாம்யமும் இதன் ஏற்றமும் அருளிச் செய்கிறார் -மேல் ஐந்து ஸூத்ரங்களால்
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினான் அவ்வருமறையின் பொருள் அருளினான் ஸ்ரீ கீதாச்சார்யர்
அவர் அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
திருக்குருகூர் ஞானப்பிரான் சந்நிதியும் பிரதானம் -)

மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை
நின்மலமாக வைத்தவர்
ஞானப் பிரானை ஞானத்து வைமின் என்ற இது
தத்வ விவேக
நித்யத்வாநித்யத்வ
நியந்த்ருத்வ
சௌலப்ய
சாம்ய
அஹங்கார இந்திரிய தோஷ பல
மன பிராதான்ய
கரண நியமன
ஸூஹ்ருதி பேத
தேவாஸூர விபாக
விபூதி யோக
விஸ்வரூப தர்சன
சாங்க பக்தி பிரபத்தி த்வை வித்யாதிகளாலே
அன்றோதிய கீதா சமம் என்னும் ..

அதாவது
மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை —
எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் –முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை–திருவாய் -1-5-2-என்றும் –
எல்லையில் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கர்மங்களும் செய் –திருவாய் -3-10-8- -என்றும் சொல்லுகிறபடி
சர்வ காரணமாய் –அபரிசேத்யமான சங்கல்ப ரூப ஞானத்தை உடையவனாய் –
சூழ்ந்த அதனில் பெரிய சுடர் ஞான இன்பம் –திருவாய் -10-10-10-–என்கிறபடியே
பிரகிருதி புருஷ தத்வங்கள் இரண்டும் தன்னுள்ளே ஆகும் படி வியாபித்து –
தான் அபரிசேத்யமாய் – உஜ்ஜ்வலமாய் -ஞான ஆனந்த லஷணமாய் இருக்கிற –
ஸ்வரூபத்தை உடைய சர்வேஸ்வரனை –

நின்மலமாக வைத்தவர் –
எனது ஆவி உள்ளே நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து -திருவாய் -4-7-7-என்று
பரிபூர்ண ஞான ஸ்வரூபனான உன்னை என் நெஞ்சுக்குள்ளே விசத தமாக அனுபவித்து –
என்னும் படி சாஷாத் கரித்த இவ் ஆழ்வார் –.

ஞானப் பிரானை ஞானத்து வைம்மின் என்ற இது —
இரும் கற்பகம் சேர் வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா வர்க்கும்
எரி திரை வையம் முற்றும் ஏனத்து உருவாய் இடந்த –ஞானப் பிரானை
அல்லால் இல்லை நான் கண்ட நல்லது -திருவிருத்தம் -99-என்று
பிரளய ஆர்ணவ மக்னையான பூமியை -மகா வராஹமாக -உத்தரித்த -ஞான சக்திகளையும் –
ஸ்வாமித்வ பிராப்தியும் உடையவனாய் -ஸ்லோக த்வய முகத்தாலே சரமோ உபாயத்தை
வெளியிடுகையாலே -ஞான உபகாரனுமாய் இருப்பவனை – ஒழிய -சர்வருக்கும்
உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பது ஒன்றும் இல்லை –இது நான் அறுதி இட்ட விலஷணமான அர்த்தம் –
என்று பிரதம பிரபந்தத்தில் அருளிச் செய்த விஷயத்தை உபாயகமாகப் பற்றச் சொல்லுகிற அளவில் –

திரு குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைமின் உம்மை உய்யக் கொண்டு போகுறிலே–திருவாய் -4-10-9-என்று
உஜ்ஜீவிக்க வேண்டி இருந்தீர்களாகில் –அவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசத்தை
உங்கள் மானஸ ஜ்ஞானத்துக்கு விஷயம் ஆக்குங்கோள் என்று சம்சாரிகளை
குறித்து உபதேசித்த இப் பிரபந்தம் –

தர்ம சம்ஸ்தாபன அர்த்தமாக அவதரித்து அருளின ஸ்ரீ கிருஷ்ணன் –
அஸ்தான ஸ்நேஹ காருண்யா தர்ம அதர்ம தியா குலம்
பார்த்தம் பிரபன்ன முத்திஸ்ய சாஸ்திர அவதரணம் க்ருதம்–ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –5–என்கிறபடியே –
அஸ்தானத்தே உண்டான – பந்து ஸ்நேஹ காருண்யங்களாலும் – ஸ்வ தர்மத்தில் அதர்ம புத்தியாலும் கலங்கி –
நயோத்ஸ்யாமி–ஸ்ரீ கீதை -2-6- -என்று யுத்த அநிவ்ருத்தனாய் –
யச்ஸ்ரேயஸ் ஸ்யான் நிச்சிதம ப்ரூஹி தன்மே சிஷ்யத் தேஹம்
சாதிமாம் த்வம் பிரபன்னம்–ஸ்ரீ கீதை –2 7-என்ற அர்ஜுனனைத் தெளிவித்து
யுத்தே பிரவர்த்தன் ஆக்குகைக்கு வியாஜமாக –
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய–திருவாய் -4-8-6- -என்கிறபடியே
லோகத்துக்கு உஜ்ஜீவன சாஸ்த்ரமாம் படி எல்லாப் பொருளும் விரித்த ஸ்ரீ கீதையில் –

1 ,2 ,3 தத்வ விவேக –
பிரதமத்தில் –தேக ஆத்மா அபிமான கார்யமான பந்து சிநேகத்தையும் –
வத பீதியையும் மாற்றுகைக்காக தத்வ ஞானத்தை உபதேசிக்கத் தொடங்கின அளவிலே –
நத்வே வாஹம் ஜாது நாசம் நத்வம் நேமே ஜநாதிபா –
நசைவ நபவிஷ்யாம சர்வே வயமத பரம் –ஸ்ரீ கீதை -2-12–என்று
சர்வேஸ்வரனான தன்னோபாதி சகல ஆத்மாக்களும் நித்யர் என்று அருளிச் செய்கிற வழியிலே –
ஜீவ பர பேதம்–ஜீவர்களுக்கு பரஸ்பர பேதம் -ஆகிய இவற்றை தர்சிப்பித்து –

தேஹி நோஸ்மின் யதா தேக கௌமாரம் யௌவனம் ஜரா
ததா தேஹாந்தர ப்ராப்தி தீரஸ் தத்ர நமுஹ்யதி -2-13-– இத்யாதியாலே –
பிரகிருதி ஆத்மா விவேகத்தையும் சொல்லுகையாலே தத்வங்களினுடைய விவேகத்தையும் —

4 -நித்யத்வ அநித்யத்வ —
அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தாஸ் சரீரிண
அநாசின அப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத -2-18-என்றும்
நஜாயதே ம்ரியதேவா கதாசித் நாயம் பூத்வா பவிதா வாநபூயஸ்
அஜோ நித்யஸ் சாஸ்வதோயம் புராணோ நஹன்யதே ஹன்யமானே சரீரே –2-20 -என்றும் ,
வாசாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாயா நவாணி க்ருஹணாதி நரோபராணி
ததா சரீராணி விஹாய ஜீர்ணான் யன்யாமி சம்யாதி நவாணி தேஹி –2-22-இத்யாதிகளாலே
ஆத்ம நித்யத்வ தேக அநித்யங்களையும்-

5 -நியந்த்ருத்வ –
பூமிராபோ நலோ வாயு கம்மனோ புத்தி ரேவச –
அஹங்கார இதீயம் மே பின்னா பிரகிருதி ரஷ்டதா–7-4-
அபரே யமித ஸ்த்வன்யாம் பிரகிருதி வித்தி மே பராம் –
ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் -7-5-என்கிற படியே
சேதன அசேதன சரீரியாய் –
சர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதி ஜ்ஞாந மபோஹநஞ்ச -15-15-என்றும் –
ஈச்வரஸ் சர்வ பூதானாம் ஹ்ருத்தேசே ர்ஜூன திஷ்டதி
ப்ராமயன் சர்வ பூதானி யந்த்ராரூடானி மாயயா-18-61- -என்றும்
சொல்லுகிறபடி சர்வ ஜன ஹ்ருதிஸ்த்தனாய் -நின்று -சர்வ பிரவ்ருத்தி நிவ்ருத்திகளையும்
பண்ணுவிக்கை யாகிற ஈஸ்வரனுடைய நியந்தருத்வத்தையும் —

6 -சௌலப்ய –
தஸ்யாஹம் ஸூலப பார்த்த நித்ய யுக்தஸ்ய யோகின-8-11- –என்றும்
பரித்ராணாய சாதூனாம் ,விநாசாய துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே-4-8- -என்றும்
பக்திமான்கள் நிமித்தவாகவும் அவதார பிரயுக்தமாகவும் உண்டான அவன் சௌலப்யத்வத்தையும் ..

7 -சாம்ய –
சமோஹம் சர்வ பூதேஷு நமே த்வேஷ் யோஸ்தி நப்ரிய–9 -29-என்று
அவனுடைய ஆஸ்ரத்யநீயத்வே சர்வ சாம்யத்தையும்

8 -அஹங்கார தோஷ –
அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே-3-27 -என்று அஹங்கார தோஷத்தையும் –

9 -இந்திரிய பல–
யததோஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித
இந்திரியாணி ப்ரமாதீனி ஹரந்தி பிரசபம் மன -2-60-என்று
இந்திரிய பிராபல்யத்தையும்-

10 -மன ப்ராதன்ய –
சஞ்சலம் ஹி மன க்ருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோ ரிவ ஸூ துஷ்கரம்-6-34-என்றும் –
அசம்சயம் மஹாபாஹோ மனோ துர் நிக்ரஹம் சலம்
அப்யாசேனது கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே-6-35- -என்றும்
மற்ற இந்திரியங்களில் வைத்துக் கொண்டு மனசின் உடைய பிரதான்யத்தையும் –

11 -கரண நியமன –
தானி சர்வாணி சம்யம்ய யுக்த ஆசீத மத்பர
வசே ஹி யச்யேந்த்ரியாணி தஸ்ய பிரஜ்ஞா ப்ரதிஷ்டிதா -2-61- -என்றும் –
சர்வத்வாராணி சம்யம்ய மனோ ஹ்ருதி நிருத்த்யச – 8-12- என்றும்
கரண நியமனத்தையும் —

12 -ஸூஹ்ருதி பேத –
சதுர்விதா பஜந்தே மாம் ஜனாஸ் ஸூக்ருதி நோர்ஜுன
ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூராரர்தாத்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப-7-16- -என்று
ஸூஹ்ருதிகளுடைய பேதத்தையும் –

13 -தேவாசுர விபாக –
த்வௌ பூத சர்கவ் லோகேஸ்மின் தைவ ஆஸூர ஏவச-16-6-என்றும்
தைவீ சம்பத் விமோஷாய நிபாந்தயா ஸூரி மதா 16-4–என்று
தேவாசுர விபாகத்தையும்

14 -விபூதி யோக –
ஹந்ததே கத யிஷ்யாமி விபூதி ராத மநஸ் ஸூப பிராதான்யதஸ் குரு ஸ்ரேஷ்ட
நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே –10-9-என்றும்
ஆதித்யா நாமஹம் விஷ்ணு ஜ்யோதிஷாம்
ரவிரம்சுமான்-10-21- -இத்யாதியால் விபூதி யோகத்தையும் –

15 -விஸ்வரூப தர்சன –
பஸ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹ சர்வாம் ஸ்ததா பூத விசேஷ சங்கான்
ப்ரஹ்மாணம் ஈசம் கமலா சனஸ்தம் ருஷீம்ஸ் ச சர்வான் உரகாம்ச தீப்தான் 11-15-இத்யாதியாலே
விஸ்வரூப தர்சனத்தையும் –

16 -சாங்க பக்தி –
மன்மனா பவ மத் பக்தோ மத் யாஜி மாம் நமஸ்குரு
மாமே வைஷ்யசி யுக்த்வைவ மாத்மானம் மத்பராயணா -9-24–என்று
அங்க சஹிதையான பக்தியையும்-
(உபாய – சாதன -உபாசனை -பக்தி இது–என் விஷயமாக ஆறு தடவை சொல்கிறான் -)

17 -18 -பிரபத்தி த்வை இத்யாதி –
தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்தயா
மாமே வயே பிரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே -7-14-என்றும்
தமேவ சரணம் கச்ச சர்வ பாவேன பாரத–18-62- -என்று
அங்கத்வேனவும்
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூ ச -18-66- –
ஸ்வதந்த்ரவேனும் –
இரண்டு படியாகவும் பிரபத்து உபதேசம் பண்ணினால் போலேயும்-

(ரஹஸ்ய த்ரயத்தில் தான் ஸ்வ தந்த்ர பிரபத்தி -கீதா பாஷ்யம் வேதாந்த அர்த்தம் சொல்ல வந்ததால் –
அங்க பிரபத்தி தான் இரண்டுமே )

இவரும்
1-2 -3–ஜீவ பர பேதமும்/ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் –
பிரகிருதி -ஆத்மா விவேகம்-ஆகிற தத்வ விவேகத்தையும் —
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -8-8-2-என்கிற இடத்தில் சப்தமாகவும் -ஆர்த்தமாகவும்
ஜீவ பர பேதமும்,ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் ,
( அடியேன் உத்தம புருஷன் இதனால் ஜீவ பரஸ்பர பேதம் -அடிமைத்தனம் அறிந்த அறியாத என்றும் பேதமும் உண்டே )
சென்று சென்று பரம் பரமாய்-8-8-5- -என்று
ஆத்மாவுக்கு தேக விலஷணத்தைச் சொல்லுகையாலே பிரகிருதி -ஆத்மா விவேகம்
ஆகிற தத்வ விவேகத்தையும் —

4 — நித்யத்வ -அநித்யத்வங்களையும்
மின்னின் நிலையிலே மன் உயிர் ஆக்கைகள்-1-2-2- -என்றும் –
உள்ளதும் இல்லதும் -1-2-8–என்றும்
சித் அசித் தத்வங்களின் நித்யத்வ -அநித்யத்வங்களையும்-

5–நியந்தருத்வத்தையும்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து-1-1-7- -என்றும் –
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்து -1-1-19–என்றும்
சேதன அசேதன சரீரியாய்
நின்றனர்-1-1-6- -இத்யாதிப் படியே
அவற்றின் சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ஸ்வ ஆதீனம் ஆகும் படி இருக்கிறவனுடைய
நியந்தருத்வத்தையும்-

6 -அவனுடைய சௌலப்யத்தையும்
பத்துடை அடியவர்க்கு எளியவன் -1-3-1–என்றும் –
பல பிறப்பாய் எளிவரும் இயல்வினன் -1-3-2- -என்றும்
ஆசா லேசம் உடையாரை பற்றவும் அவதார பிரயுக்தமாகவும் உண்டான
அவனுடைய சௌலப்யத்தையும்-

7 -சாம்யத்தையும்
பற்றிலன் ஈசன் முற்றவும் நின்றனன் –1-2-6–என்று
அவனுடைய ஆஸ்ரணியத்வே சாம்யத்தையும்-
(போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும் மாற்றே மாற்றல் இலையே நினக்கு
மாற்றோரும் இலர் கேளிரும் இலர் எனும் வேற்றுமை இன்றது போற்றுநர்ப் பெறினே–பரிபாடல் -4-51/54-)

8 -அஹங்கார தோஷத்தையும்
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -1-2-3–என்று
சம்சார ஹேது அதுவேயாக சொல்லுகையாலே -அஹங்கார தோஷத்தையும்-

9 -இந்திரிய பலத்தையும்
விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம் புலன்-7-1-6- -என்று
இந்திரிய பலத்தையும்-

10 -மனோ பிரதான்யத்தையும்
மனத்தை வலித்து -5-1-4-என்று
மனோ நியமத்தின் சொல்லுகையாலே மனோ பிரதான்யத்தையும்-

11 -கரண நியமனத்தையும்
உள்ளம் உரை செயல் உள்ள விம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து -1-2-8–என்று
கரண நியமனத்தையும்-( மத் பர அவன் இறை உள்ளில் ஒடுங்கு இவர் )

12 -ஸூஹ்ருதி பேதத்தையும் –
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்-4-1-1– -என்கையாலே
ஆர்த்தனான பிரஷ்டை ஐஸ்வர்ய காமன்
இறுகல் இறப்பு-4-1-10– என்னும் -என்கையாலே
ஜிஜ்ஞாசுவான கேவலன் –
குணம் கொள் நிறை புகழ் மன்னர் -4-1-8–இத்யாதியாலே
அர்த்தார்த்தியான அபூர்வ ஐஸ்வர்ய காமன்
திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து உய்ம்மின்-4-1-1- -என்கையாலே
ஜ்ஞாநியாகிற பகவத் சரணார்த்தி -என்கிற ஸூஹ்ருதி பேதத்தையும் –

13 -தேவ அசுர விபாகத்தையும்
அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் –5-2-5–என்றும் ,
நண்ணா அசுரர் –நல்ல அமரர் -10-7-5–என்று
தேவ அசுர விபாகத்தையும்-

14 -விபூதி யோகத்தையும்
புகழு நல் ஒருவன் -3-4-1–என்றும் –
நல் குரவும்-6-3-1- -என்றும் –
மாயா வாமனன்-7-8-1- -என்றும் –
இவைகளில் விபூதி யோகத்தையும் –

15 -விஸ்வரூப தர்சனத்தையும் –
நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனாய் -6-9-1–என்று
விஸ்வரூப தர்சனத்தையும் –

16 -சாங்க பக்தியையும்
வணக்குடை தவ நெறி வழி நின்று புற நெறிகளை கட்டு உணக்குமின் பசையற-1-3-5-என்றும் –
மேவித் தொழுது உய்மினீர்கள் வேதப் புனித விருக்கை நாவில் கொண்டு அச்சுதன்
தன்னை ஞான விதி பிழையாமை-5-2-9-என்றும் –
மாலை நண்ணி –காலை மாலை –கமல மலர் இட்டு-தொழுது எழுமினோ -9-10-1–என்றும் -சாங்க பக்தியையும் –

17 –18 –இரண்டு வகையான பிரபத்தியும் உபதேசிக்கையாலே
அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து -1-3-5–என்று
அவன் அருளி செய்த பிரபத்தி ரூப ஞானத்தை சகாயமாக கொண்டு அத்தை அறிந்து என்கையாலே –
பக்தி அங்கத் வேனவும் –
மற்று ஓன்று இல்லை-9-1-7–என்றும் –
சரணமாகும் -9-10-5-என்கிற வற்றால்
ஸ்வதந்திர வேனேவும் –
இரண்டு வகையான பிரபத்தியும் உபதேசிக்கையாலே-

ஏதத் பிரதி பாத்யர்த்த சாம்யத்தைக் கொண்டு
மாயோன் அன்று ஓதிய வாக்கு–நான்முகன் –71 -என்கிற
ஸ்ரீ கீதை உடன் ஒக்க சொல்லப் படும் என்கை ..

பிரபத்தி த்வை இத்யாதிகளாலே -என்கிற இடத்தில்-ஆதி -சப்தத்தாலே –
19-அவதார ரஹச்ய வைபவம்
ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாமேதி சோர்ஜுனா–4-9-என்றார் போலே
இவை பத்தும் வல்லார் அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம் சிறை-1-3-11- -என்று
சொன்ன அவதார ரஹச்ய வைபவம் –

20-ஸ்வ ஆராதன்-
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி –
ததஹம் பக்த்வுபஹ்ருத மஸ்நாமி பிரயதாத்மன -9-26– என்றார் போலே –
பிரிவகை இன்றி நன்னீர் தூயப் புரிவதுவும் புகை பூ-1-6-1–என்று சொன்ன
அவன் ஸ்வ ஆராதத்தை முதலாக கீழ் அனுக்தங்களையும் –

21-கர்ம யோகம் தொடங்கி ஆச்சார்ய அபிமானம் பர்யந்தம் உபதேசம்
தேக ஆத்மா அபிமானிகளை க்ரமத்திலே பிராப்ய சாதனங்களின் எல்லையில் மூட்டுகையும் –
சாத்யோ உபாயங்களில் பரந்து சித்தோ உபாயத்தை மறைத்து உபதேசிக்கும் இடத்தில்
வைபவம் தோற்ற வெளி இடுகையுமான வற்றையும் நினைக்கிறது –

———————————-

சூரணை -190-

ஆக ஸ்ரீ கீதையோடு திரு வாய் மொழிக்கு உண்டான சாம்யம் சொல்லிற்று கீழ் .
அதில் இதுக்கு உண்டான ஆதிக்யத்தை பல ஹேதுக்களாலும் சொல்கிறது மேல் …
பிரதமம் வக்த்ரு வைலஷண்யத்தால் வந்த ஏற்றம் சொல்கிறது இதில் ..
(பிரபந்த உதய ஹேது வைலக்ஷண்யம் அடுத்ததில் -191-
உபக்ரம உபஸம்ஹார ப்ரக்ரியை வைலக்ஷண்யம் -192-
ப்ரதிபாத்ய அர்த்த வைலக்ஷண்யம் -193 —-கீழே-189- ப்ரதிபாத்ய அர்த்த சாம்யம் பார்த்தோம்
ப்ராமாண்ய உதகர்ஷ வைலக்ஷண்யம் -194- )

அது தத்வ உபதேசம்
இது தத்வ தர்சி வசனம்-

அதாவது
அந்த ஸ்ரீ கீதை பிரபந்தம் –
தத்வம் ஜிஜ்ஞா சமா நாநாம் ஹேதுபிஸ் சர்வதோமுகை
தத்வமேகோ மஹாயோகீ ஹரிர் நாராயண பர –பாரதம் -சாந்தி பர்வம் -347-83-என்கிறபடியே –
தத்வ பூதனான சர்வேஸ்வரன் தானே உபதேசித்தது ..(ஞானம் இச்சா ஜிஜ்ஞாஸூ )

இப் பிரபந்தம் –
தத் வித்தி ப்ரனிபாதேன பரி பிரச் நேன சேவையா
உபதேஷ்யந்தி தே ஞானம் ஞானிநஸ் தத்வ தர்சின –4-34-என்று
ஜ்ஞான உபதேசத்துக்கு ஆப்த தமராக அவன் தான் அருளிச் செய்த
தத்வ தர்சிகளில் தலைவரான ஆழ்வார் வசனம் என்கை ..

இத்தால் சொல்லிற்று ஆய்த்து ..
அஹம் க்ருதஸ்னஸ்ய ஜகத பிரபவ பிரளயஸ் ததா
மத்த பரதரம் நாந்யத் கிஞ்சி தஸ்தி தனஞ்சய –7-6-என்றும்
மா மேகம் சரணம் வ்ரஜ –18-66-என்றும்
இப்படி ஸ்வ வைபவத்தை ஸ்யமேவ அருளிச் செய்கையாலே ஸ்வ பிரசம்சை போலே
இருக்கையாலே -அது மந்த மதிகளுக்கு விஸ்வசநீயம் ஆகாது ..
(ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பி ஸ்ரீ வைஷ்ணவ நம்பியான ஐதிக்யம் )

சுத்த சத்வ ஜ்ஞானரான இவர்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட
நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -2-2-1-என்றும் –
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா -கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -5-2-7–என்றும் –
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்
திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்மினோ -9-1-10–என்று
இப்படி மத்யஸ்தமாக நின்று தத் வைபவத்தை உபதேசிக்கையாலே ,
இது மந்த மதிகளுக்கும் விஸ்வ நீயமாய் இருக்கும் என்கிற ஆதிக்யம் –

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading