ஸ்ரீ ராமானுஜ சதுஸ்லோகி –
ஸ்ரீ ஸ்வாமி இராமானுசர் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர் ஶ்ரீஅனந்தாழ்வான்.
இவர், கர்நாடகத்தின் மாண்டியா மாவட்டத்தில் சிறுப்புத்தூர் (இன்றைய கிரங்கனூர் -மேல்கோட்டை அருகில்) எனும்
அழகிய சிற்றூரில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அனந்தன் என்னும் இயற்பெயரில் பிறந்தவர்.
தனியன் –
அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்|
ஆச்ரிதாநாம் ஸுஸரணம் வந்தே அநந்தார்ய தேசிகம்||
ஶ்ரீமத்ராமாநுஜாசார்ய ஶ்ரீபாதாம் போருஹத்வயம்|
ஸதுத்தமாங்க ஸந்தார்யம் அனந்தார்யமஹம் பஜே||
சக்ரே கோதா சதுஸ்லோகீம் யோ வேதார்த்த பிரகர்ப்பிதம்
ஸ்ரீ வேங்கடேச சத்பக்தம் தம நந்தகுரும் பஜே-
வேதப் பொருள்களைத் தன்னுள் கொண்ட “கோதா சதுஸ்லோகி” என்னும் ஸ்துதியை அருளிச் செய்த
குருவாகிய திருமலை அனந்தாண்பிள்ளையைப் போற்றித் தொழுகிறேன்-
———————————————————————
அநிஶம் பஜதாம் அநந்ய பாஜாம்
சரணாம் போருஹ மாதரேண பும்ஸாம் |
விதரந் நியதம் விபூதி மிஷ்டாம்
ஜய ராமானுஜ ரங்க தாம்நி நித்யம் –ஸ்லோகம் -1-
ஶ்ரீ உடையவரே! தேவரீர் திருவடிகளைப் பற்றி வேறு புகல் இல்லாத அடியவர்களுக்கு
கேட்ட விபூதியை அளித்துக் கொண்டு
(அனந்தாழ்வானுக்கு இஷ்டமான ஆச்சார்ய கைங்கர்யம் இங்கே இருந்து தானே உடையவர் அளித்து அருளினார் )
திருவரங்கம் பெரிய கோயிலிலே விஜய ஸ்ரீ யாக விளங்கக் கடவீர் விஷயீ பவ ஸ்ரீ ராமாநுஜ!
——————————————————————————————–
புவி நோ விமதாம்ஸ் த்வதீய ஸூக்தி:
குலிஷீ பூய குத்ருஷ்டி பிஸ் ஸமேதாந் |
ஷகலீ குருதே விபக்ஷ்வி தீட்யா
ஜய ராமாநுஜ ஷேஷ ஷைல ஸ்ருங்கே ||–ஸ்லோகம் -2-
(அப்பனுக்கு சங்காழி அளித்தவரே!) தேவரீருடைய ஸ்ரீ ஸூக்திகள் வஜ்ராயுதம் போலே குத்ருஷ்டிகள் போன்ற
எதிரிகளை பொடி படுத்த “வேதார்த்த சங்க்ரஹம்” தேவரீர் அருளிச் செய்ததால்
(இதுவே இவர் அருளிச் செய்த முதல் கிரந்தம் என்பர் )தேவரீர் திருவேங்கடமா மலை யுச்சியில்
பல்லாண்டுகள் வெற்றித் திருமகளோடு விளங்குவீராக!
விஜயீபவ ஸ்ரீ ராமாநுஜ!
(ஸ்ரீ கீதை -ஸ்ரீ உபநிஷத் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -பிரஸ்தான த்ரயம் என்பர் மற்ற சம்ப்ரதாயம்
நம் சம்ப்ரதாயம் ஒரே பாதை -அனைத்தும் ஒரே கருத்து )
(மதம் பெருகு வேழம் மாப்பிடிக்கு முன் நின்று -இரு கண் – இள மூங்கில் வாங்கி
அருகு இருந்த தேன் கலந்து -நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
எங்கள் ராமானுஜர் முனி வேழம் -அனந்தாழ்வானுக்கு கடக சுருதி -கொண்டு
பேத அபேத ஸ்ருதிகளை -ஸர்வம் ஸமஞ்ஜயம் )
——————————————————————————————–
ஸ்ருதிஷூ ஸ்ம்ருதிஷூ பிராமண தத்வம்
க்ருபய ஆலோக்ய விஷுத்தயா ஹி புத்த்யா |
அக்ருதாஸ் ஸ்வத ஏவ ஹி பாஷ்ய ரத்னம்
ஜய ராமாநுஜ ஹஸ்தி தாம்நி நித்யம் ||–ஸ்லோகம் -3–
ஶ்ரீபாஷ்யகாரரே! யதிராசரே! நிர்ஹேதுக கருணையினாலே ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலுள்ள பிரமாணங்களின்
உண்மையை குற்றமற்ற மதியினாலே நடுநிலையாக ஆராய்ந்து ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்தீர். அவ்வாறான தேவரீர்!
ஸ்ரீ ஹஸ்திகிரியில் வெற்றியுடன் “நித்யஸ்ரீ” யாக விளங்க வேணும்
ஜய விஜயீ பவ ஸ்ரீ ராமாநுஜ!
பெருமாள் கோயிலுக்கும் ஸ்ரீ பாஷ்யத்துக்கும் பொருத்தம்
வேடன் வேடுவிச்சியாக கூட்டி வந்ததும் இந்த மிதுனமே
ஆறு வார்த்தை அருளிச் செய்ததும் அறிந்தோமே
அஹம் ஏவ பரதத்வம் –தர்சனம் பேத ஏவ ச —
ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்ய பேர் அருளாளன் தானே காரணம்
கப்யாஸம் புண்டரீகாக்ஷ ஸ்ருதி விளக்கம் இவர் அருளாலே
ஆளவந்தார் -ஆ முதல்வன் இவன் என்று மானசீகமாக கடாக்ஷித்து
சரணம் அடைந்து பேர் அருளாளன் தானே இவரை சம்பிரதாயத்துக்கு ஆக்கி அருளினார்
முக்த ஸ்லோகம் -யஸ்ய ப்ரஸாத கலயா -செவிடன் கேட்டும் ஊமை பேசியும் நொண்டியும் நடந்து மலடி பிள்ளைகள் பெற்று -இத்யாதி
யாமுனர் தம் மூன்று விரல்கள் நிமிர்த்து மூன்று குறை விலக்கி மூ ஏழு உலகும் ஏத்த முக்கோல் தரித்து
முக்குறும்பு அறுத்து மும்மறை விளக்கிய தேவன் -கட்டியம் சொல்கிறோம்
பாஷ்ய காரர் இது கொண்டு ஸூத்ர வாக்கியங்களை ஒருங்க விடுவார்
மயர்வற மதிநலம் அருளினவனும் அயர்வறும் அமரர்கள் அதிபதி தானே
கூரத்தாழ்வானை பாஷ்யகார உடன் சேர்ப்பித்து அருளினவனும் இவனே
———————————————————————————————
ஜய மாயி மதாந்தகார பாநோ
ஜய பாஹ்ய பிரமுகாடவீ க்ருஷா நோ |
ஜய ஸம்ஷ்ரித ஸிந்து ஷீத பாநோ
ஜய ராமாநுஜ யாதவாத்ரி ஷ்ருங்கே ||––ஸ்லோகம் –4-
(ஆதிசேஷ அவதாரமான லக்ஷ்மண முநியே!)
மாயாவாதிகளின் மதமாகிற இருளுக்கு சூரியன் போன்றவரே!
பாஹ்ய குத்ருஷ்டிகளாகிற காட்டிற்கு நெருப்புப் போன்றவரே!
உமது அடியார்களாகிற கடலைப் பூரிக்கச் செய்யும் சந்திரனாயிருப்பவரே!
யதிராசரே! திருநாராயணபுரமாகிய (ஶ்ரீபலராமன் ஆண்ட) யாதவாத்ரியில் நித்யஸ்ரீ யை வளரச் செய்து
நீடுழி விளங்க வேணும். ஜய விஜயீ பவ ராமாநுஜ!
தொண்டனூர் வாதம்-ஆதிசேஷனாகவே திரைக்குப் பின் இருந்து ஏக காலத்தில் நிரஸித்து அருளினார் அன்றோ
பலரையும் திருத்திப் பணி கொண்டார்
அடியார்கள் ஆகிய கடலுக்கு சந்திரன் போல் குளிர்ச்சியாக இருந்தார் அன்றோ -12 ஸம்வத்சரம் இருந்து –
தமர் உகந்த திருமேனி -பேசும் எதிராஜர் என்ற திருநாமமும் இங்கு உண்டே
தான் உகந்த தானான திருமேனியும் இதுவே என்பர் அங்குள்ளார்
———————————————————————————————–
ராமாநுஜ சது: ஷ்லோகீம் ய: படேந் நியத: ஸதா |
ப்ராப் நுயாத் பரமாம் பக்திம் யதிராஜ பதாப்ஜயோ ||
பல ஸ்ருதி:− இந்த ஸ்ரீ ராமானுஜ சதுஸ்லோகியை எப்போதும் பாராயணம் செய்பவர்க்கு
ஸ்ரீ யதிராசருடைய திருவடிகளில் பரம பக்தி உண்டாகும்
மேன்மேலும் பக்தி வளரப் பெறுவார்
ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் என்பதால் தக்க பலம் அடைவர் –
————————————————————————————————
ஸ்ரீ அநந்தார்யா மஹா குரவே நம–
——————————————————————————————–————————————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அனந்தாழ்வான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply