ஸ்ரீ யதிராஜ விம்சதி – ஸ்லோகம்–11- -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்/ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்யா ஸ்வாமிகள்–வியாக்யானம்–

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

————–

இப்படி அக்ருத்ய கரண பகவத் அபராதிகளிலே அந்விதனாய் இருக்கச் செய்தேயும் அவற்றிலே அந்வயிதாவனைப் போலேயும்
வர்த்திக்கையாலே என்னில் குறைந்தார் ஒருவரும் இல்லை என்று விஷண்ணரான
இவரைப் பார்த்து ஸ்ரீ எம்பெருமானார்
அனுதாபாதிகள் உண்டாகில் அவை தன்னடையே கழியும் காணும் என்று அருளிச் செய்ய
அனுதாபாதிகளிலே லேசமும் இல்லாமையால் இப்போதும் அக்ருத்ய கரணமே எனக்கு நித்ய அனுஷ்டானமாகச் செல்லா
நின்றது -என்று விண்ணப்பம் செய்கிறார்

சப்தாதி போக ருசி ரன்வஹ மேத தேஹா -எனபது –
அத்யாபி வஞ்சன பர -என்பது –
ததோ அஸ்மி மூர்க்க -என்பது
ஹா ஹந்த -என்பதாகா நின்றீர்
ஆகையால் உமக்கு பய அனுதாபாதிகள் உண்டு போல் தோற்றுகிறது –

இனி உமக்கு பிராயச்சித்தி அதிகாரம் உண்டாயிற்று -இறே–பேற்றுக்கு குறை என் என்ன –
அதுவோ அநுகாரம் இத்தனை போக்கி மெய்யே அடியேனுக்கு அவை இல்லை என்கிறார் –
பாபே க்ருதே -இத்யாதியால் –

பாபே க்ருதே யதி பவந்தி பயா நுதாப
லஜ்ஜா புன கரண மஸ்ய கதம் கடேத
மோஹேந மே ந பவதீஹ பயாதி லேச
தஸ்மாத் புன புநரகம் யதிராஜ குர்வே –11–

ஸ்ரீ யதிராசனே பாபம் செய்த அளவில் என்ன தீங்கு விளையுமோ என்கிற பயம் ,தீமை செய்து விட்டோமோ என்கிற
பச்சாதாபம் ,வெட்கம் ஆகிய இவை இருக்கும் ஆகில் இந்த வித செய்கையை திரும்பவும் செய்வது எப்படி கூடும்..
மோகத்தால், மதி மயக்கத்தால் எனக்கு இப்படி பாபம் செய்வதில் பயம் கொஞ்சம் கூட இல்லை
அதனால் நான் திரும்பவும் திரும்பவும் தீங்கை செய்கிறேன்..

பாபே க்ருதே யதி பவந்தி பயா நுதாப லஜ்ஜா புன கரண மஸ்ய கதம் கடேத–
பயமாவது மேல் வரக் கடவ அனர்த்த விசேஷங்களுக்கு ஸூ சகமான விக்னங்களைக் கண்டு பிறக்குமது அன்றோ
இப்போது இத்தைச் செய்தால் மேல் நமக்கு அனர்த்தம் வரும் என்று வெருவுமவனுக்கு அப்படிப்பட்ட பயம் உண்டாகும்

நாம் அக்ருத்ய கரணத்தில் கடவோம் அல்லோம் என்று அபிசந்தி விராமம் பிறந்து இருக்கச் செய்தேயும்
துர்வாசனையாலே நெஞ்சு கலங்கி நினைவரை அக்ருத்யத்திலே இறங்கினவனுக்கு அனுதாபம் உண்டாகும்

புத்தி பூர்வம் ப்ரவர்த்தியா நிற்கச் செய்தேயும் சிஷ்ட ஹர்ஹைக்கு அஞ்சினவனுக்கு லஜ்ஜையும் உண்டாகும்

இவற்றில் ஏதேனும் உண்டாயத்தாகில் மீளவும் பாபத்தைச் செய்கை எங்கனே கூடும்படி –

பாபே –
பாபம் ஆகிறது -நிஷித்த அனுஷ்டானம் –
நிஷித்தங்கள் தானும் நாலு விதமாய் இருக்கும் –
அதில் ஓன்று ஒன்றே அநேக விதமாய் இருக்கும் –
ஆக பாபம் என்று ஜாத் ஏக வசனமாய் -பாபத்வ ஜாத்ய வச்சின்ன சகல பாபங்களையும் சொல்லுகிறது

இது இவனுக்கு ப்ராப்தி பிரதிபந்தகம் ஆகிற மாத்ரம் அன்றிக்கே இஹ பரங்களிலும் பய ஹேதுவாய் இருக்கும்
இஹத்திலே ப்ரத்யஷ தண்ட ஹேது வாகையாலும் லோக அபவாத ஹேது வாகையாலும் பய ஜனகமாய் இருக்கும் –
பரத்தில் யம வஸ்யத ஹேதுவாகையாலும் -பகவத் ப்ரீதி ஜனகங்கள் ஆகையாலும் பய ஜனகமாய் இருக்கும்
இப்படி இருந்துள்ள பாபமானது

க்ருதே –
சங்கல்ப்பித்து விடுகை யன்றிக்கே காயிகமாகச் செய்யப் படா நிற்கச் செய்தேயும்

யதி பவந்தி பயா நுதாப லஜ்ஜா –
நாம் இவற்றைச் செய்தால் பிரத்யஷத்தில் ராஜ தண்ட லோக அபவாதங்களும்
பரத்தில் யம தண்டனையும் வருமே என்கிற பயமும்

இப்படி பய ஹேதுவான பாபத்தைச் செய்தால் நாம் என்ன தப்புச் செய்தோம் என்கிற அனுதாபமும் –

இப்படி நரக ஹேதுவான பாபத்தைச் செய்தால் நாம் என் கொண்டு சிஷ்ட கோஷ்டியில் புகுரக் கடவோம் என்கிற லஜ்ஜையும்
முதல் தன்னிலே உண்டாகிறனவல்ல –

யதி பவந்தி –
ஒரு நாள் வரையில் உண்டாயிற்றதுகளாகில்

புன கரண மஸ்ய கதம் கடேத –
பயாநுதாப லஜ்ஜா நிவர்த்தயமான இப் பாபத்தினுடைய புனர் அனுஷ்டானம் எவ்வகையில் கூடுவது
பிரதிபந்தகம் கிடக்க கார்யம் உண்டாமோ என்று கருத்து

பிராயச் சித்தம் அன்றோ பாப நிவர்த்தகம் ஆவது -பய அனுதாபாதிகள் பாப நிவர்த்தகங்கள் ஆகிற படி எங்கனே என்ன –
மணிக்கு அக்னி ஸ்வரூப நாசகத்வம் அன்றியிலே ஒழிந்தாலும்-தாஹ பிரதிபந்தகதவம் உண்டாகிறாப் போலே
பய அனுபாதாதிகளுக்கு
பாப ஸ்வரூப நாசகத்வம் அன்றிலே ஒழிந்தாலும் உத்தர உத்தர பாப அனுஷ்டான பிரதிபந்தகத்வம் உண்டாகக் குறை இல்லை

இத்தால் ஹா ஹந்த இத்யாதியில் தோற்றுகிறது பய அனுதாபாதிகளுடைய அநுகாரம் இத்தனை போக்கி வாஸ்தவம் அன்று என்கிறது –
இப்படி லோக ந்யாயம் அறிந்த உமக்கு பய அனுதாபாதிகள் இல்லாமைக்கு அடி என் என்ன

மோ ஹே ந மே ந பவதீஹ பயாதி லேச–
மேல் வரும் அனர்த்தத்தை யாதல் -இப்போது உண்டான சிஷ்ட ஹர்ஹை யாதல் ஒன்றையும் நிரூபிக்க அறியாத
அஞ்ஞானத்தாலே புத்தி பூர்வகமாக அக்ருத்யாதிகளிலே மண்டிப் போகும் எனக்கு ஏக தேசமும் பயாதிகள் உண்டானது இல்லை

மோஹே ந மே –
அதுக்கு அடி அடியேனுடைய அஜ்ஞ்ஞானம் என்கிறார்

மோஹமாவது
தேஹாதிரிக்தமாய் இருப்பதொரு ஆத்ம வஸ்து என்று ஓன்று உண்டு என்று அறியாதே
தேஹமே ஆத்மா என்று இருக்கை யாகிற அஜ்ஞ்ஞானம் –

மோஹே ந மே –
இவ் வஜ்ஞ்ஞானத்தை இட்டு நிரூபிக்கும் படியான அடியேனுக்கு -என்னுதல் –
தேஹாத்மா அபிமானியாய் புத்தி பூர்வகமாக பாபத்தை பண்ணா நிற்கிற அடியேனுக்கு என்னுதல்

ந பவதீஹ பயாதி லேச
இப்படி புத்தி பூர்வகமாக பாபத்தைச் செய்கையாலே பய அனுதாப லஜ்ஜைகள் பூரணமாக இன்றிக்கே ஒழிந்தாலும்
அல்பாம்சமே யாகிலும் உண்டாகக் கூடுமே அதுவும் இல்லை –
இங்கே அபி சப்தம் அத்யார்ஹார்யம்

தஸ்மாத் புன புநரகம் யதிராஜ குர்வே –
ஆகையால் அடுத்து அடுத்து பாபமே செய்யா நின்றேன் –

தஸ்மாத் –
பாப அனுஷ்டான பிரதிபந்தங்களான-பய அனுதாபாதிகள் இல்லாமையாலே

புன புநரகம் யதிராஜ குர்வே
புன புன -மேலும் மேலும் –
அகம் -பாபத்தை
அகம் புன புன -இதில் ஒரு புதுமை இல்லை
ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே சஹஸ்ரே ஸோ யன்ன மா வயதாயி -ஸ்தோத்ர ரத்னம் -25–என்கிற படியே
செய்த குற்றத்தையே மென்மேலும் செய்யா நின்றேன் –

இவர் இப்படி அனுதாப ஸூந்யராய்-பய அனுதாபாதிகள் இன்றிக்கே மென்மேலும் பாபத்தைச் செய்வேன் என்றவாறே
நீர் இவ் வக்ருத்ய கரணங்களுக்கு எல்லாம் மூலமான இந்த்ரிய வச்யதையை தவிர்க்க மாட்டீரோ என்ன
யதிராஜ
அடியேனுடைய உஜ்ஜீவனத்துக்கு கிருஷி பண்ணுகிற தேவரீரே இத்தை தவிர்த்து அருள வேணும் என்று சம்போதிக்கிறார் ஆதல்

யதிராஜ குர்வே
மாத்ரு சந்நிதி இருக்க பிரஜை கிணற்றில் விழுவதே என்கிறார் –

பவதீய பயாதி லேச – என்ற பாடமான போது-
இஹ பரங்களிலே பிறர் நிமித்தமான பயாதிகள் இன்றிக்கே ஒழிந்தாலும்-
நேரே ஹித அஹிதங்களை உபதேசிக்கிற நம்மிடத்தில் பயம் இல்லையோ என்ன -அதுவும் இல்லை என்கிறார்

பவதீய –
மற்றயோர் நிமித்தமான பயாதிகள் இல்லாமை யன்றிக்கே இவ்வாத்மாவினுடைய உஜ்ஜீவனத்துக்கு கிருஷி பண்ணிப் போருகிற
தேவரீர் நிமித்தமான பயாதி லேசமும் இல்லை -என்கிறார்

அன்றிக்கே –
யமாதிகள் நிமித்தமாய் வரும் பயம் கெட்டு துணுக்கற்று மார்விலே கை வைத்து உறங்கும் படி
இவனுக்கு அபய பிரதரான தேவரீர் நிமித்தமான பயலேசமும் இல்லை -என்கிறார் –

இவரைக் கொண்டு யமாதிகள் நிமித்தமாய் வரும் பயம் கெடும் படி எங்கனே என்ன –
லோக வேதங்களில் பாபமாயிற்று யமாதிகள் நிமித்தமான பயம் வருகைக்கு ஹேது –அந்த பாபம் தானும்
துரோ சாரோ அபி -விஹிதங்களைச் செய்யாமலே ஒழிந்தானே யாகிலும் –
இங்கு துராசார சப்தத்தாலே நிஷித்த அனுஷ்டானத்தைச் சொல்லாமல் விஹித அநனுஷ்டானத்தைச் சொல்லுகிறது-
மேல் சர்வாசீ என்று நிஷித்த அனுஷ்டானத்தைச் சொல்லுகையாலே —
துர்ஜ்ஞ்ஞேயம் இத்யாதிகளில் ஜ்ஞேயத் வபாவம் இறே-விவஷிதம்

சர்வாசீ –
இது நிஷித்த அனுஷ்டானங்களுக்கு எல்லாம் உப லஷணம் –

அபஷய பஷணாதிகள்-நிஷித்தங்களை செய்தானே யாகிலும்
க்ருதக்ந –
இரண்டுக்கும் அடியாக உபகாரக விஷயத்தில் உபகார ஸ்ம்ருதி இல்லாத மாத்ரம் இன்றிக்கே
செய்த உபகாரகங்களை அப்போதே மறக்குமவனே யாகிலும்

நாஸ்திக –
அதுக்கும் அடியாக சாஸ்திர விஸ்வாசமும் இன்றிக்கே ஒழிந்தானே யாகிலும் —

இப்படி சாஸ்திர விஸ்வாசாதிகள் இன்றிக்கே ஒழிந்தது தான் எத்தனை காலம் என்னில்

புறா
முன்பு உள்ள காலம் எல்லாம் —

ஆக முன்பு உள்ள காலம் எல்லாம் சாஸ்திர விஸ்வாசாதிகள் இன்றிக்கே விதி நிஷிதங்களை
அதிக்ரமித்து வர்த்தித்தானே யாகிலும்

ஆதி தேவம் –
இவன் ஆஸ்ரயிப்பதற்கு முன்னே இவன் தன்னையும் அங்கீ கரிக்கையில் உண்டான நசையாலே
உஜ்ஜ்வலனான ஸ்ரீ எம்பெருமானை

ஸ்ரத்தயா –
விஸ்ரம்ப-பாஹூள்யத்தோடே கூட

சரணம்
உபாயமாக

சமாஸ்ர யேத்யதி-
இவனைப் பார்த்தால் ஆஸ்ரயிக்க விரகு இல்லை -அவனைப் பார்த்தால் இவன் ஆஸ்ரயிக்கா விடில் தரிப்பில்லை –
ஆகையாலே அவனுடைய ஜீவநாத்ருஷ்டத்தாலே இவன் அவனை ஆஸ்ரயித்தான் ஆகில் –

இங்கு விஸ்ரம்ப பாஹூள்ய வாசியான ஸ்ரத்தா சப்தத்தாலே உபாயாந்தர நிவ்ருத்தியையும் –
சமாஸ்ர யேத்-என்கிற இடத்தில்
சம் -என்கிற உப சர்க்கத்தாலே ஆஸ்ரயணத்தில் உபாயத்வ புத்தி நிவ்ருத்தியும் -சொல்லப்படுகிறது –

தம்
அப்படி சர்வாபதார விசிஷ்டனாய் பகவத் சமாஸ்ரயணம் பண்ணினவனை

ஐந்தும் –
தேவ திர்யக்-மனுஷ்ய ஸ்தாவரங்களில் யாதொன்று ஆகவுமாம் அதிலே ஒரு நிர்பந்தமும் இல்லை

நிர்தோஷம் வித்தி –
சவாசனமாக -வானோ மறி கடலோ -என்கிறபடியே தெரியாதே போன பாபங்களை உடையேனாக புத்தி பண்ணக் கடவி –

என் கொண்டு என்னில்
பிரபாவாத் பரமாத்மன –
தனக்கு மேற்பட்ட வியாபகர் இல்லாமல் தானே சர்வ அபேஷயா வ்யாபகனான ஸ்ரீ எம்பெருமானுடைய ப்ரபுத்வ சக்தியாலே –
பாப மாத்ரம் க்ரியா ரூபமாகையாலே அது செய்த போதே நசித்துப் போம் –
அத்தை திரு உள்ளத்திலே வைத்து இவன் இப்படி விதி நிஷேதங்களை அதிக்ரமிப்பதே என்னும் நிக்ரஹத்தாலே
பிராப்த காலங்களிலே தத் அனுரூபமான பலத்தை கொடுப்பான் ஸ்ரீ ஈஸ்வரன் யாயிற்று
அவன் தானே சரணா கதியை வ்யாஜி கரித்து இச் சேதனனை அனுக்ரஹித்தவாறே தந் நிக்ரஹம் கழி யுண்கையாலே –
பாபங்கள் எல்லாம் போயிற்று என்கிறது

ஸ்ரத்தயா சஹிதம் ஆதி தேவம் -என்று யோஜிக்கவுமாம் –
அப்போது ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே -என்கிற இடத்தில் ஸ்ரத்தா சப்தம் ஸ்ரீ பிராட்டிக்கு வாசகம் ஆகிறது –
இத்தால் ஈஸ்வரன் ஸ்ரீ ஜகத் காரணன் ஆகிறதும் –
பரஞ்ஜயோதிஸ் ஆகிறதும்
சேதனரை அங்கீ கரிக்கும் இடத்தில் இவர்கள் ஆஸ்ரயிப்பதற்கு முன்னே அவர்களை ரஷிக்கைக்கு அவசர பிரதீஷனாய்
இருக்கும் இருப்பும் ஸ்ரீ பிராட்டி சம்பந்த்தாலே என்கிறது

ஆக இஸ் ஸ்லோஹத்தில் சொல்லுகிறபடியே
பிரபத்தி யாய்த்து பிராயச் சித்த ரூபமாய் இருக்கும்

இப்பிரபத்தி தானும் –
ஸ்ரீ மந்திர ரத்னம் த்வயம் ந்யாச பிரபத்திஸ் சரணா கதி -என்கிறபடியே ஸ்ரீ த்வயாத்மகமாய் –
ஆச்சார்யாத் தைவ வித்யா விதிதா சா திஷ்டம் ப்ராபயதி -என்கிறபடியே ஸ்ரீ ஆசார்ய அதீனமாய் இருக்கும்

ஆசார்யம் தாம் –
தஸ்மின் ராமானுஜார்யே குருரிதி சப்தம் பாதி நான் யத்ர-என்கிறபடியே ஸ்ரீ எம்பெருமானாருக்கு
அசாதாரணமாய் யாயிற்று இருப்பது
மற்றையவர்களுடைய ஆசார்யத்வம் இவருடைய சம்பந்த நிபந்தனம் –
ஆகையால் இவர் சம்பந்தம் உண்டாகவே யமாதிகள் நிபந்தமாய் வரும் பயாதிகள் கெடக் குறை இல்லை –

தஸ்மாத்
சகல பய நிவர்த்தகரான தேவரீர் நிமித்தமான பயாதிகள் இல்லாமையாலே

புன புன ரகம் யதிராஜ குரவே –
மேன்மேலும் பாபத்தைச் செய்யா நின்றேன் -என்கிறார்

அன்றிக்கே –
பவதீய -அவர் எம்மை நின்றாளும் பெரியவரே -என்கிறபடியே
அடியேனை அடிமை கொள்ள வல்ல தேவரீர் சம்பந்திகள் நிமித்தமான பயாதி லேசமும் இல்லை என்கிறார் ஆகவுமாம் –

இத்தால்
ஆசார்ய ததீய நிமித்தமான பயாதிகள் இன்றியிலே அபராதங்களைச் செய்வேன் என்கையாலே
அசஹ்யா அபசாரங்களையே யாயிற்று அடியேன் செய்வது என்கிறார் –

————————————————————————–———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: