ஸ்ரீ தேவ நாயக பஞ்சாசத் —

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

———————————–

ஸ்ரீ தேவ நாயகன் -ஸ்ரீ திரு வஹீந்த்ர புரம் திவ்ய தேசம் –அடியவர்க்கு மெய்யன் -அச்யுதன்-மூவராகிய ஒருவன்
-53-ஸ்தோத்திரங்கள் –30-ஸ்லோகங்களை மேல் திரு மங்கள விக்ரஹ அனுபவம் -கடைசியில் –8-ஸ்லோகங்களால் சரணாகதி
-40-வருஷங்களாக ஸ்வாமி இங்கே எழுந்து அருளி மங்களா சாசனம் –

ப்ரணத ஸூர கிரீட ப்ராந்த மந்தார மாலா விகலித
மகரந்த ஸ்நிக்த பாதாரவிந்த
பசுபதி விதி பூஜ்ய பத்ம பத்ராக்க்ஷ
பாணி பதிபுர பாது மாம் தேவ நாதா –1-

தேவர்கள் கிரீடம் -மகரந்த மாலையில் இருந்து வழியும் மது -போல் ஸ்வாமி யுடைய ஹ்ருதய கமலத்தில் இருந்து
ப்ரவஹிக்கும் பிரேம பாவ பக்தி மது
திருவடி தாமரைகளில் விழுந்து ஸ்லோகம் பரிபூர்ணமாக படி-ப்ரஹ்ம ருத்ராதிகள் ஆராதிக்கும்
ஸ்ரீ தேவ நாதன் அருளைப் பிரார்த்திக்கிறார் இத்தால்

தேவாதி நாத கமலா ப்ருதனேசா பூர்வாம்
திபிதந்தரம் வகுளா பூஷணா நாதா முக்யை
ராமானுஜ ப்ரப்ருதிபி பரி பூஷிதாக்ராம்
கோப்த்ரீம் ஜகந்தி குரு பங்க்தி அஹம் ப்ரபத்யே -2-

குரு பரம்பரை -தேவாதி நாதன் தொடங்கி -கமலா -ப்ருதனேசர் -ஸ்ரீ விஷ்வக்சேனர் -வகுளா பூஷணர்-
நாதா முக்யை-ஸ்ரீ நாத முனிகள் தொடக்கமாக -பெரிய நம்பி -ஸ்ரீ ராமானுஜர்-அஸ்மத் ஆச்சார்யர் வரை – –குரு பங்க்தி-

திவ்யே தயா ஜாலா நிதவ் திவிஷத் நியந்து
தீர்த்தம் நிதர்சி தவத த்ரி ஜகன் நிஷேவ்யம்
பிரச்சா கவீன் நிகம சம்மிஹித ஸூருண உக்தின்
பிராச்சேதச ப்ரப்ருத்திகான் பிரணாமாமி அபீக்க்ஷ்ணம்-3-

சரணாகதி மார்க்கம் காட்டி அருளின ஆதி கவிகளான ஸ்ரீ வேத வியாசர் -ஸ்ரீ வால்மீகி முனிகளுக்கு வந்தனம் –
ஆராவமுதமான தயா சாகரத்தில் எளிதாக தீர்த்தமாடி பரம புருஷார்த்தம் பெரும் துறையை –
வேத மார்க்கத்தில் இருந்து -காட்டியவர்கள் அன்றோ

மாதா த்வம் அம்புருஹ வாஸினி கிம் சிதேதத்
விஞ்ஞாநப்யதே மயி குருஷ்வ ததா பிரசாதம்
ஆகரணயிஷ்யதி யதா விபுதேஸ் வரஸ்தே
ப்ரீயானசவ் ப்ரு துக ஜல்பிதம் மதுக்திம்–4-

ஸ்ரீ ஹேமாம் புஜ வல்லி தாயார் –தம் யுக்தி -மழலைச் சொல் -புருஷகார சமர்ப்பணம் இங்கு –

நிர்விஷயமான விபவம் நிகம உத்தமாங்கை
ஸ்தோதும் ஷமாம் மம ச தேவாபதே பவந்தம்
காவா பிபந்து கணாச கலசாம்புராசிம்
கிம் தேன தர்னாக கண த்ருணாம் ஆததானா -5-

சத்யஸ்ய சத்யன்-தாச சத்யன் -இவன் திரு நாமம் -நிர்விகார ப்ரஹ்மம் -அச்யுதன்-விபு -சர்வகதன்-ஸர்வேஷாம் பூதானாம் அதிபதி –
பரஞ்சோதி -உபநிஷத்துக்கள் கோஷிக்குமே -யாதோ வாசோ நிவர்த்தந்தே-சொல்லி முடிக்க முடியாதே -தன் முடிவு காணாத தேவ நாயகன்
தேவதானம் பரமம் தேவம் -பாற் கடலில் பாலை பருகும் பசுக்கள் போலே உபநிஷத் -கன்று குட்டி போலே நம் ஸ்வாமி –

அஞ்ஞாத சீமகம் அநந்த கருத்மாத் அத்யை
தம் த்வாம் சமாதி நியதைரபி சாமி த்ருஷ்டம்
துஸ் தூஷதோ மம மனோர தா சித்திதாய்ல்
தாசேஷூ சத்யா இதி தாரய நாம தேயம் -6-

அடியார்க்கு மெய்யன் -தாஸ சத்யன் -யதோத்த காரி -சொன்ன வண்ணம் செய்பவன் அன்றோ –
சத்ய நாமம் -107–ஸமாச்ரிதேஷூ சத்ஸூ சாது இதி சத்யா / சத்யஸ்ய ஸத்ய -873-சாத்விக சாஸ்த்ர பிரதிபடன் –ஆஸ்ரித ஸூலபன் –
மும் வாகேஷூ அநு வாகேஷூ ச நிஷாத்ஸூ உபநிஷஸூ ச குருநந்தி ஸத்ய கர்மாநாம் சத்யம் சத்யேஷு ஸாமசு -ஸ்ரீ பட்டர்

விஸ்ராநயன் மம விசேஷ விதாம் அநிந்த்யாம்
அந்தர வர்த்திம் கிராம் அஹிந்த்ரபுராதிராஜா
ஸ்தவ்ய ஸ்தவ ப்ரிய இதிவ தபோ தனோக்தம்
ஸ்தோ தேதி ச தவத் அபிதானம் அவந்த்யய த்வம்-7-

ஸ்தவ்யன்–ஸ்தவ பிரியன் –ஸ்தோதா –மூன்று திரு நாமங்கள்-684-688–உண்டே -கீர்த்த நீயன் –
ஏந கேனாபி ஐந்துநா ஏந கேனாபி பாஷயா -பிரியாத்மா பவதி
யம் ஸ்துவன் ஸ்தவ்யதாமேதி வந்தமானச்ச வந்த்யதாம் –ஸ்தோத்ரம் பண்ணுபவனை பகவானே ஸ்தோத்ரம் பண்ணுவானே
அடியேனைக் கொண்டு பாடுவித்து -விசேஷ விதாம் அநிந்த்யாம்- – வித்வான்கள் புகழும் படி –
அந்தர வர்த்திம் கிராம்–சாராம்ச தத்துவங்களை உள்ளடக்கி பாடும்படி அருள வேணும் –

சம் ரக்ஷணீயம் அமராதி பதே த்வைவ
தூரம் பிரயாதமபி துஸ் த்யஜ காத பந்தம்
ஆக்ருஷ் தவனாசி பாவான் அநு கம்பமான
ஸூத் ரானுபத்த சகுனி க்ரமதா ஸ்வயம் மாம் -8-

துஸ் த்யஜ காத பந்தம் – ஒழிக்க ஒழியாத உறவு உண்டே /
யூப ஸ்தம்பம் -சம்சார கட்டு – விடுவித்து தன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான்
ஸூத் ரானுபத்த சகுனி க்ரமதா-பறவை காலில் கட்டி கூண்டில் வைத்தால் போலே சம்சார பந்தம் –

வ்யாமோஹித விவித போக மரீச்சிகாபி
விஸ்ராந்திம் அத்ய லபதே விபூதை காந்த
கம்பீர பூர்ண மதுரம் மம தீர் பவந்தாம்
கிரீஷ்மே தாடகாமிவ சீதனம் அநு ப்ரவிஷ்டா -9-

அடியேனுடைய புத்தி விஸ்ராந்தி அடையும் படி உன் ஆனந்த ரசமயன் –காம்பீர்யம் -மாதுர்யம் -பரி பூர்ணத்வம் –
அனைத்தையும் காட்டி அருளி -கானல் நீரை தேடி அலைந்து பட்ட தாபங்கள் தீர்க்கும்படி அருளினாய் –

திவ்ய பதே ஜல நிதவ் நிக்காம உத்தம அங்கே
ஸ்வாந்தே சதாம் ஸவித்ரு மண்டல மத்திய பாகே
ப்ரஹ்ம சலே ச பஹுமான பதே முனீம்
வ்யாக்திம் தவ த்ரித சநாத வதந்தி நித்யம் –10-

ப்ரஹ்மாச்சலம் -திரு வஹிந்த்ர புரம்-ஒளஷத கிரி -ஸுகந்திய வனம் /
திவ்யபதம்-தெளி விசும்பு திரு நாடு -சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் ஜோதி -வைகுண்டம் புகுவது மண்ணவர் விதியே –
ஜல நிதவ்- -கடல் மகள் நாச்சியார் சமேத ஷீராப்தி நாதன் -நாக மூர்த்தி சயனமாய் நலம் கடல் கிடந்து
அம்பஸ்ய பாரே -புவனஸ்ய மத்யே -நாகஸ்ய ப்ருஷ்டே -மஹதோ மஹீயான் –
சுக்ரேன ஜோதிகும்ஷி சாமானு ப்ரவிஷ்டா பிரஜாபதிஸ் சாரதி கர்ப்பே அந்தே

தீரத்தைர் வ்ருதம் வ்ருஜின துர்கதி நாசநார்ஹை
சேஷ ஷமா விஹகராஜா விரிஞ்ச ஜுஷ்டை
நா தா த்வயா நாத ஜனஸ்ய பாவவ் ஷதேன
ப்ரக்யாதம் ஒளஷத கிரிம் பிரணமந்தி தேவா -11-

பரம ஒளஷதம் -சேஷ தீர்த்தம் -பூமி-ஷமா தீர்த்தம் -கருட -நதி -தீர்த்தம்-விஹகராஜா -ப்ரஹ்ம-விரிஞ்ச- தீர்த்தம் -/
ப்ரக்யாதம்-பிரசித்தமான ஒளஷத கிரிம் -என்றவாறு
த்ரிஸாம சாமக சாம நிர்வாணம் பேஷஜம் பிஜக் –

ஸ்வாதீந விஸ்வ விபவம் பகவான் விசேஷாத்
த்வாம் தேவ நாயகம் உசந்தி பரவர ஞான
ப்ராய பிரதர்ஸயிதும் ஏதத் இதி ப்ரதீம
த்வத் பக்தி பூஷித தியாம் இஹ தேவ பாவம் -12-

உபய விபூதி நாதனாக இருக்கச் செய்தே தேவ நாதன் என்று சுருங்க சொல்வது தேவத்வம் -தேவ பாவத்துக்கு மேலே
ஆஸ்ரித தொண்டர்களை பிரசாதித்து அருளுவதாலேயே
பராவர தெளிந்த ஞானம் அருளி -/ ஸ்ரீ கீதை -தேவ அஸூர விபாகம் -பிரகிருதி புருஷயோ -பகவத் விபூதித்வம் –
விபூதிமதோ பகவதோ விபூதி பூதாத்-அசித் வஸ்துனா சித்த வஸ்துனா ச பத்த முக்தோ உபய ரூபாத்
அவ்ய யத்வ வ்யாபன பரணாஸ் ஸ்வாம்யை அர்த்தாந்தரதயா புருஷோத் மத்வேன யாதாத்ம்யம் ச வர்ணிதாம்-ஸ்ரீ கீதா பாஷ்யம்
தைவீ சம்பத் விமோஷாயா -ஸ்ரீ கீதா -16-5-

தத்வானி யானி சித் அசித் பிரவிபாகவந்தி
த்ரயந்த வ்ருத்த கணிதானி சித் அசிதானி
தீவ்யந்தி தானி அஹி புரந்தர தாம நா தா
திவ்யாஸ்திர பூஷண தயா தவ விக்ரஹேஸ்மின்-13-

பஞ்ச பூதங்களும் தன்மாத்திரைகளும் வனமாலை / காரமா ஞான இந்திரியங்கள் அம்புகள் / அஞ்ஞானம் உறை /
மனஸ்-திரு ஸூதர்சனம் /அஹங்காரம் -ஸ்ரீ சார்ங்கம் ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் / ஸ்ரீ நந்தகம் -ஞானம் /
ஸ்ரீ கௌமோதகம் -கதை -மஹான் /பிரகிருதி -ஸ்ரீ வத்ஸம் / ஜீவன் -ஸ்ரீ கௌஸ்துபம் –

புருடன் மணிவரமாகப் பொன்றா மூல பிரகிருதி மறுவாக மான் தண்டாகத்
தெருள் மருள் வாள் மறைவாக ஆங்காரங்கள் சார்ங்கம் சங்காக மனம் திகிரியாக
இருடீகங்கள் ஈரைந்தும் சரங்களாக இரு பூத மாலை வனமாலை யாகக்
கருடன் உருவாம் மறையின் பொருளாம் கண்ணன் கரிகிரி மேல் நின்று அனைத்தும் காக்கின்றானே

பூஷாயுதை அதிகதம் நிஜ காந்தி ஹேதோ
புக்தம் பிரியாபி அனிமேஷா விலோசநாபி
ப்ரத்யங்க பூர்ண சுஷமா ஸுபகம் வபுஸ்தே
த்ருஷ்த்வா த்ருசவ் விபுதாந்த ந த்ருப்யதோ மே -14-

நிஜ காந்தி உன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹ சம்பந்தத்தால் -ஆபரணங்களுக்கு அழகூட்டும் பெருமாள் –
-14-தொடங்கி-45-வரை திருக் கேசாதி திருப் பாதாந்த்ர -திவ்ய மங்கள விக்ரஹ ஸுந்தர்ய அனுபவம் –

வேதேஷூ நிர்ஜர பதே நிகிலேஷூ அதீதம்
வ்யாஸாதிபிர் பஹுமதம் தவ ஸூக்தம் அக்ரயம்
அங்காந் யமுனி பவத ஸூபகாநி அதிஹே
விஸ்வம் விபோ ஜெனிதவந்தி விரிஞ்ச பூர்வம் -15-

நிர்ஜர பதே-தேவ நாதன் / தவ ஸூக்தம்-புருஷ ஸூக்தம் —
பூத யோனி தேவாதாத்ம சக்தி-நாம ரூப பிரபஞ்சம் ஸ்ருஷ்ட்டி யாதி கோஷிக்குமே

தேவேஸ்வரத்வம் இஹ தர்சயிதும் ஷமஸ்தே
நாத த்வய அபி வித்ருத கிரீட
ஏகி க்ருத த்யுமணி பிம்ப சஹஸ்ர தீப்தி
நிர்மூலயன் மனசி மே நிபிடம் தமிஸ்ரம் -16-

ஆதி ராஜ்யம்-அதிகம் புவனானாம் அதிபதி ஸூசகம்-திரு அபிஷேகம் -அஞ்ஞானங்கள் அனைத்தையும் போக்கி அருளும் –
திருக் கேசாதி திருப் பாதாந்த அனுபவம் செய்து ஆத்ம நிவேதனம் –

முக்த ஸ்மிதாம்ருத ஸூபேந முகேந்துநா தே
சங்கம்ய சம்சரண சம்ஜ்வர சாந்தயே ந
சம்பத்யதே விபுதந்தா சமாதி யோக்ய
ஸர்வாரி அசவ் குடில குந்தள காந்தி ரூபா -17-

சம்சார தாபம் தீர்க்கும் -திருக் குழல் காற்றை தேஜஸ் -முக்த -ஸ்மித திரு முக மண்டலம் —
யோகத்துக்கு ஏற்றவாறு -சம்சார சம்ஜவரத்தை போக்கி அருளும்
சந்த்ர காந்த திருமுக மண்டலம் -ஆயிரம் இரவி போன்ற திரு அபிஷேகம் -சேராச் சேர்க்கை -அகடி கடிநா சமர்த்தன் அன்றோ

பிம்பாதரம் விகாச பங்கஜ லோசனம் தே
லம்பாலகம் லலித குண்டல தர்ச நீயம்
காந்தம் முகம் கனக கைதக கர்ண பூரம்
ஸ்வாந்தம் விபூஷயதி தேவ பதே மதீயம்-18-

பிம்பாதரம்- கோவை செவ்வாய் திருவதாரம் – / விகாச பங்கஜ லோசனம்-கரியவாகி புடை பரந்து
செவ்வரியோடி மிளிர்ந்த நீண்ட திருத் தாமரைக் கண்கள்
லம்பாலகம்-மை வண்ண நறும் குஞ்சி குழல் / லலித மகர குண்டலங்கள் / கனக கைதக கர்ண பூரம்-தாழம்பூ செவிப்பூக்கள் –
ஸ்வாந்தம் விபூஷயதி தேவ பதே மதீயம்- இந்த ஐந்தும் பொருந்திய அசாதாரண ஸுந்தர்யம் – அடியேன் மனசுக்கு அன்றோ பூஷணம்
அத்புதம் மஹத் அஸீம பூமகம் நிஸ்துலம் கிஞ்சித் வஸ்து -அவன் சம்பந்தத்தால் அனைத்தும் அழகு பெறுமே –

லப்தா திதவ் க்வச்சித்யம் ரஜநீ கரேண
லஷ்மீ ஸ்திர ஸூர பதே பவதோ லலாடே
யத் ஸ்வேத பிந்து கணிகோத்கத புத்புதாந்த
த்ரயக்ஷ புரா ச புருஷோ அஜனி ஸூலபாநி -19-

சுக்ல அஷ்டமி சந்திரனுக்கு அழகூட்டும் திரு நெற்றி-ஸ்திரமான ஸுந்தர்ய லஷ்மீ அன்றோ –
இதன் வியர்வை திவலையில் இருந்தே திரிசூல பாணி உத்பத்தி –

லாவண்யா வர்ஷினி லலாட தடே கனாபே
பிப்ரத் தடித்குண விசேஷ மிவோர்த்வ புண்ட்ரம்
விஸ்வஸ்ய நிர்ஜபதே தமஸா ஆவ்ருத்தஸ்ய
மன்யே விபவயசி மங்களீக ப்ரதீபம் –20-

மேகக் கூட்டத்தில் மின்னல் வெட்டினால் போலே நீல மேக ஸ்யாமளானுடைய திரு மண் காப்பு -அஞ்ஞானம் போக்கி
பக்த ஜனான் உபரி உத்தாரத்தி இதி ஊர்த்வாஸ்ரயணா ஸூசிதா ஸக்திம்–ஊர்த்தவ கதி அர்ச்சிராதி மார்க்கம்

ஆஹு ஸ்ருதிம் விபூதி நாயக தாவகீனாம்
ஆசா கண பிரசவ ஹேதும் அதீத வேத
ஆகர்ணிதே ததீய மார்த்தாரேவ ப்ரஜாநாம்
ஆசா பிரசாத்தாயிதும் ஆதிசதி ஸ்வயம் த்வாம் -21-

திசா ஸ்ரோத்ராத் -வேதங்கள் பத்து திசைகளும் உன் திருக் காதுகளில் இருந்து வந்ததாக சொல்லும் –
சேதனருடைய ஆர்த்தி கூக்குரலை கேட்டு ரஷித்து அருள அன்றோ –
ஆசா –திசை என்றும் ஆசைகள் என்றும் -/ சுருதி -வேதம் -திருக் காதுகள் என்றும் /ஆதிசதி-தூண்டும் என்றவாறு –

கந்தர்ப்ப லாஞ்சன தனு த்ரிதஸ ஏக நாத
காந்தி ப்ரவாஹ ருசிரே தவ கரணபாஸே
புஷ்யத்யசவ் பிரதி முக்த ச திதி தர்ச நீய
பூஷாமயீ மகரிகா விவிதான் விஹாரான் -22-

த்ரிதஸ ஏக நாத -தேவ நாதனுடைய திரு மகர குண்டல காந்தி பிரவாஹ அபரிமித ஆனந்த அனுபவம் /
கந்தர்ப்ப லாஞ்சன தனு-மன்மதனுடைய கொடியில் மகரம் உண்டே /
திருக் கரண பூஷணமா -உத்த அம்ச விபுஷ -மேல் திருத் தோள்களுக்கு பூஷணமா -அம்ச லம்பி அலக -சுருண்ட திருக் பூஷணமா –
இவை அனைத்தும் இல்லை -அடியேன் மனஸஸ்யா பரிகர்ம விஷயமே-அடியேனை ஆள் கொண்டு அருளவே -ஸ்ரீ கூரத் தாழ்வான்-

நேதும் ஸரோஜ வசதி நிஜ மாதி ராஜ்யம்
நித்யம் நிஸாமயதி தேவ பதே ப்ருவவ் தே
ஏவம் ந சேத் அகில ஐந்து விமோஹனார்ஹா
கிம் மாத்ருகா பவதி காம சரசானஸ்ய –23-

கிம் மாத்ருகா பவதி காம சரசானஸ்ய -மன்மதனுடைய கரும்பு வில் உன் திருப் புருவம் கண்டு அன்றோ நான்முகன் படைத்தான் –

ஆ லஷ்ய சத்வம் அதி வேலா தயோத்தரங்கம்
அப்யார்த்தினாம் அபிமத ப்ரதிபாதந அர்ஹம்
ஸ்நிக் ஆயதம் ப்ரதிம சாலி ஸூபர்வ நாத
துக்தாம்புதே அநு கரோதி விலோசனம் தே -24-

சத்வம் -ஸ்நிக்தம் -இரண்டும் கண் வளர்ந்து அருளும் திருப் பாற் கடலுக்கும் -திருக் கண்களுக்கும் –
துக்தாம்புதே அநு கரோதி விலோசனம் தே
அதி வேலா தயோத்தரங்கம்–ஓயாத அலைகள் உண்டே இரண்டுக்கும்
அப்யார்த்தினாம் அபிமத ப்ரதிபாதந அர்ஹம் -வேண்டிற்று எல்லாம் அளிக்கும் கற்பகம் போலே
ஸ்நிக் ஆயதம் ப்ரதிம சாலி விலோசனம்—திருக் காதுகள் வரை நீண்டு மிளிர்ந்து பெரியவாய -வாத்சல்யம் -மிக்கு இருக்குமே-

விச்வாபிரக்ஷணா விஹார க்ருத க்ஷணைஸ் தே
வைமாநிகாதிப விதாம்பித முக்த பத்மை
ஆமோத வாஹிபி அனாமய வாக்ய கர்பை
ஆர்த்ரி பவாமி அம்ருத வர்ஷ நிபை அபாங்கை–25-

வைமாநிகாதிப-கால்கள் கீழே பாவாத தேவர்களுக்கு அதிபதி என்றவாறு –
உனது கடாக்ஷ அம்ருத மழையில் நனைந்து தாபங்கள் நீங்கப் பெறுவோம்

நித்யோ திதைர் நிகம நிஸ்வஸிஹைஸ் தவஷா
நாசா நாபச் சரபதே நயனாப்தி சேது
அம்ரேதித ப்ரியதமா முக பத்ம கந்தை
ஆஸ்வாஸிநீ பவதி சம்ப்ரதி முக்யதோ மே –26

நீண்டு பரந்த திருக்கண்கள் -இரண்டு சமுத்திரம் போலே -திரு மூக்கு -சேது அவற்றுக்கு /
யஸ்ய நிகம நிஸ்வஸிஹைஸ் -உன் உஸ்வாச நிஸ்வாசமே வேதம் /
அம்ரேதித ப்ரியதமா முக பத்ம கந்தை -திரு நாச்சியார் திரு முக
மண்டல காந்தி சேர்த்தி இந்த வேத வாசனையை அபிவிருத்தி பண்ணுமே
ஆஸ்வாஸிநீ பவதி சம்ப்ரதி முக்யதோ மே -இந்த வேத ஸ்வாசம் அடியேனது அஞ்ஞானங்களை போக்கி அருளும்

ஆருண்ய பல்லவித யவ்வன பாரிஜாதம்
ஆபீர யோஷித அநு பூதம் அமர்தி அநாத
வம்ஸேந சங்கல்பதிநா ச நிஷேவிதம் தே
பிம்பாதரம் ஸ்ப்ரு சதி ராகவதி மதிர் மே -27-

திருக் கோபிமார்கள்- திருப் புல்லாங்குழல் -திருப் பாஞ்ச ஜன்யம் அனுபவிக்கும் கோவைச் செவ்வாய் -பிம்பாதரம்- திருப் பவள அனுபவம் –
திருப் பவள செவ்வாய் தான் தித்தித்தது இருக்குமோ -செங்கண் மால் தன்னுடைய வாய் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாயே வலம் புரியே
வாயிலூரிய நீர் தான் கொணர்ந்து -இளைப்பை நீக்க பிராத்திக்கிறாள் நாச்சியார்
கோவிந்தனுடைய கோமள வாயில் குழல் முழைஞ்சுகளினூடு குமிழ்த்துக் கொழுத்து இழிந்த அமுதப் புனல் அன்றோ

பத்மாலயா வலய தத்த சுஜாத ரேகே
தவத் காந்தி மே ஸஹித ஸங்காநிபே மதிர்மே
வீஸ்மேர பாவ ருசிரா வனமாலி கேவ
கண்டே குணீ பவதி தேவபதே தவ தீயே –28-

பத்மாலயா வலய தத்த சுஜாத ரேகே- ஸ்ரீ ஹேமாம்புஜ வல்லி தாயார் திருக் கை வளையல் முத்திரை
நீல மேக நிப ஷ்யாம வர்ணம் -திருமேனி திருக் கண்டத்தில் இருந்து வெண்மையான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தில் தெளிக்கக் கண்டு அனுபவம்

ஆஜானு லம்பிபி அலங்க்ருத ஹேதி ஜாலை
ஜ்யாகாத ராஜி ருசிரை ஜித பாரிஜாதை
சித்ராங்கதை த்ரிதச புங்கவ ஜாதாசங்கா
த்வத் பஹுபி மம த்ருதம் பரி ரப்யதே தீ -29-

திருக் கரங்கள் அனுபவம் -சித்ராங்கதை-தோள் வளைகள்/ஜ்யாகாத ராஜி ருசிரை-தழும்பு தெரியுமே -/
அலங்க்ருத ஹேதி ஜாலை-திவ்யாயுதங்கள் அலங்காரத்துக்காகவே
திவ்ய உதாரன்-வீர ஸூர பராக்ரமம் -ஸுந்தர்யம் -மோக்ஷ தாயக முகுந்தத்வம் –

நீலா சலோதித நிசாகர பாஸ்கராபே
சாந்தாஹிதே ஸூர பதே தவ சங்க சக்ர
பாணே ரமுஷ்ய பஜதாம் அபய ப்ரதஸ்ய
ப்ரத்யாயனம் ஜகதி பாவயாத ஸ்வ பூம்னா–30

இந்திரா நீல மலையில் ஸூர்ய சந்த்ர உதயம் போலே அன்றோ திரு ஆழி-திருச் சங்கு ஆழ்வார்கள் –
அபய ஹஸ்த முத்திரை –மஹா விசுவாசம் அருள அன்றோ இவை –
தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சதிர் மூர்த்தி அன்றோ தேவ நாதன்

அஷோபநீய கருணாம்புதி வித்ருமாபம்
பக்தானு ரஞ்சனம் அமர்த்தயா பதே த்வதீயம்
நித்யாபராத சகிதே ஹ்ருதயே மதியே
தத் அபயம் ஸ்புரதி தக்ஷிணா பாணி பத்மம் -31-

அஷோபநீய-கருணாம்புதி–வித்ருமாபம்—வலது திருக் கரம் -அபய ஹஸ்தம்-
தயா சாகரத்தில் இருந்து எடுத்த முத்து போலே -சிவந்து இருக்குமே –
வ்ரஜ -சாதன – அங்கனேஷு -கோபிகள் குடில்களில்
தவழ்ந்த காரணத்தால் சிவந்ததோ -ஆநிரை கோல் கையில் கொண்டதாலோ –
கொல்லா மா கோல் கையில் கொண்டதாலோ -ஸ்ரீ கூரத்தாழ்வான் -கண்டதுமே சம்சார தாபம் தீருமே

துரத்தாந்த தைத்ய விசிக சக்த பத்ர பங்கம்
வீரஸ்ய தே விபூத நாயக பஹுமத்யம்
ஸ்ரீ வத்ஸ கௌஸ்துப ரம வனமாலிகாங்கம்
சிந்த அநு பூய லபதே சரிதார்த்த தாம் ந -32-

துரத்தாந்த தைத்ய விசிக சக்த பத்ர பங்கம் –அம்பு தழும்புகள் வர்ண கோலம் -திரு மார்பில் –இவையும் மற்றும் -இங்கு உள்ள
ஸ்ரீ வஸ்தம் -ஸ்ரீ கௌஸ்துபம் ஸ்ரீ வனமாலை -ஸ்ரீ மஹா லஷ்மீ -இவை அனைத்தும் ஸர்வேஸ்வரத்வத்தை பறை சாற்றும்
சிந்த அநு பூய லபதே சரிதார்த்த தாம் ந-இவற்றைக் கண்ட நாம் பரம ஸுபாக்யத்வம் பெறுவோமே –

வர்ண க்ரமேண விபுதேச விசித்ரிதாங்கீ
ஸ்மேர ப்ரஸூந சுபக வனமாலி கேயம்
ஹ்ருத்யா சுகந்திர் அஜஹத் கமலா மணீந்த்ரா
நித்யா தவ ஸ்புரதி மூர்த்திரிவ த்விதீயா –33-

வர்ண க்ரமேண-நிறங்கள் என்றும் ப்ராஹ்மணாதி வர்ணாஸ்ரமங்கள் என்றும் –
விசித்ரிதாங்கீ-விசித்திர தேக அங்கங்கள் -வேறு வேறு மாலையின் பாகங்கள் –
ஸ்மேர ப்ரஸூந சுபக-நன்றாக மலர்ந்த திருமேனி போலே
ஹ்ருத்யா சுகந்தி-திருமார்புக்கு -மனதுக்கு இனியான் போலே ஸ்ரீ வனமாலையும் –சர்வ கந்தனுக்கு அநு ரூபமானதன்றோ
அஜஹத் கமலா மணீந்த்ரா நித்யா – ஸ்ரீ மஹா லஷ்மி -ஸ்ரீ கௌஸ்துபம் போலே நித்யம் –
ஆகவே வனமாலை திரு மேனிக்கு முழுவதுமே ஒப்புமை உண்டே –

ஆர்த்ரம் தமோன தனம் ஆஸ்ரித தாயகம் தே
சுத்தம் மனஸூ மனஸாம் அம்ருதம் துஹாநம்
ததாஹ்த்ருசம் விபுதா நாத சம்ருத்த காமம்
சர்கேஷ்விதம் பவதி சந்த்ர மாசம் ப்ரஸூதி –34-

சந்த்ரமா மனசோ ஜாதா -ஆதி காரணன் அன்றோ நீ -திரு உள்ள அனுபவம் –
கண்ணா நான் முகனைப் படைத்தாயே காரணா -இச்சாத ஏவ விஸ்வ பதார்த்த சத்தா –
முக்தித முக்த போக்யம் -உன் ஸ்வரூபம் ரூபம் குணங்கள் விபூதி ஐஸ்வர்யம் -சேஷ்டிதங்கள்

விஸ்வம் நிகீர்ய விபூதி ஈஸ்வர ஜாதகார்ஸ்யம்
மத்யம் வலி த்ரய விபவ்ய ஜகத் விபாகம்
ஆமோதி நாபி நளினஸ் தா விரிஞ்ச ப்ருங்கம்
ஆகால பயத் உதார பந்த இவாசயோ மே —35-

அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மா நிலம் ஏழு மால் வரை முற்றும் உண்டவன் அன்றோ /
தாமோதரத்வம் வலி த்ரய சிஹ்னம்/

நாகவ் கஸாம் ப்ரா தாமதாம் அதி குர்வதே தே
நாபி ஸரோஜ ரஜசாம் பரிணாம பேத
ஆராத்யத் பிரிஹ தைர் பவத சமீசீ
வீரோ உசித விபூதி நாயகா இதி அபிக்ய-36-

வீரோ உசித விபூதி நாயகா இதி அபிக்ய –இது தேவ நாயகனான உனக்கு உசிதமான திரு நாமம் அன்றோ –
தேவர்களுக்காக வீரச் சேஷ்டிதங்களை செய்தாயே
உன் நாபி கமல ரஜஸ் தானே பரிணாமம் அடைந்து 33-கோடி தேவர்கள் ஆனார்கள் -விபூதி நாயகன் அன்றோ நீ

பீதாம்பரேன பரிவாரவதீ சுஜாதா
தாஸ்யே நிவேசயதி தேவ பதே த்ருஸவ் மே
விநயஸ்த சவ்ய கர சங்கம ஜாயமான
ரோமாஞ்ச ரம்ய க்ராணா ரசனா த்வதீயா –37-

மேகலை அனுபவம் –உன் திருக் கர ஸ்பரிசத்தால் ரோமாஞ்சலி -மயிர் கூச்செறிந்து வெட்க்கி அன்றோ ஒளி விடுகிறாள்
கண்ட அடியேன் மனமும் கண்ணும் வழங்கி தாஸ்ய பூதன் ஆனேன்

ஸ்த்ரீ ரத்ன காரணம் உபாத த்ருதீய வர்ணாம்
தைத்யேந்திர வீர சயனம் தைத்யோபதானம்
தேவேச யவ்வந கஜேந்திர கராபிராமம்
உரீ கரோதி பவத் உருயுகம் மநோ மே -38-

ஸ்த்ரீ ரத்ன காரணம் உபாத த்ருதீய வர்ணாம் – ஊர்வசியும் – காரணம்
உபாத த்ருதீய வர்ணாம் வைஸ்யரும்–உன் திருத் தொடைகளில் இருந்து வந்ததாக சொல்லுமே
தைத்யேந்திர வீர சயனம் மது கைடபர்களை நிரசித்ததும் இவற்றால் –
காரப மரகத ஸ்தம்பம் இவற்றுக்கு ஒப்பு இல்லை -என்பர் ஸ்ரீ கூரத்தாழ்வான்
தைத்யோபதானம்—பிராட்டி மகிழ்ந்து சயனிப்பதும் இவற்றிலே
நித்ய யுவா குமாரன் –யானை துதிக்கை போன்ற திருத் தொடைகளின் அழகில் ஈடுபட்ட அடியேன் மனஸ் உருகுகிறதே

லாவண்ய பூர லலித ஊர்த்வ பரிப்ரமாபம்
லஷ்மி விஹார மணி தர்பண பத்த சக்யம்
கோபங்கனேஷு க்ருத சங்கரமானாம் தவைதாத்
ஜானு த்வயம் ஸூர பதே ந ஜஹாதி சித்தம் -39-

இரண்டு திரு முட்டுக்களும் லாவண்யம் மிக்கு -பிராட்டி திரு முகம் பார்க்கும் திருக் கண்ணாடி போலே —
கோபிகள் குடில்களில் தவழ்ந்தவை அன்றோ –
இவை அடியேன் மனசை விட்டு அகலாவே
லாவண்ய அருவி திரு நாபியில் சுழித்து இவை வழியாக திருவடியில் சேரும் -ஐஸ்வர்ய கொண்டை போன்றவை அன்றோ –

துத்யே துகோலா ஹரணே வ்ரஜ ஸூந்தரிணாம்
தைத்யா நுதாவான விதவ் அபி லப்த ஸஹ்யம்
கந்தர்ப்ப காஹல நிஷங்க காலாஞ்சி காபம்
ஜங்கா யுகம் ஜயதி தேவ பதே த்வதீயம்–40-

இன்னார் தூதன் என நடந்த திருக் கணுக்கால்கள் அன்றோ /
குருக்கத்தி மரம் கோபிகள் வஸ்திரங்களை கொண்டு ஏறியவை தானே –
அஸூரர்களை விராட்டி ஒட்டியவை தானே -கஹால வாத்யம் மன்மதன் இவற்றைப் பார்த்தே கொண்டான்-
காலாஞ்சிக பாவம் -மன்மதன் காமம் தூண்ட -அவன் பானம் வைத்து உள்ள பாத்திரம்- இத்தை பார்த்தே செய்தான் –

பாஷாந நிர்மித தபோதான தர்மாதாரம்
பஸ்மனி உபாஹித நரேந்திர குமார பாவம்
ஸம்வாஹிதம் த்ரிதச நாத ராமா மஹீப் யாம்
சாமான்ய தைவதம் உசந்தி பதம் த்வதீயம் -41-

பாஷாந நிர்மித தபோதான தர்மாதாரம்- அஹல்யை சாபம் விமோசனம் அருளிய திருவடிகள் —
பஸ்மனி உபாஹித நரேந்திர குமார பாவம்- உத்தரை கர்ப்பம் -பரீக்ஷித்- ரஷித்து அருளிய திருவடிகள் –
பிராட்டிமாரும் கூசிப் பிடிக்கும் மார்த்வம் உள்ள திருவடிகள் கொண்டு அன்றோ கானகம் நடந்தும்
காளியன் மேல் நடமாடியும் உலகெல்லாம் அளந்தும் செய்து அருளினாய் –
சாமான்ய தைவதம் உசந்தி பதம் த்வதீயம்–அவன் விட்டாலும் -சாம்யா பத்தி அருளும் திண்ணிய திருவடிகள்-

ஆவர் ஜிதாபி அநுஷஜ்ய நிஜாம்சு ஜாலை
தேவேச திவ்ய பத பத்ம தளாயிதா அபி
அந்நிய அபிலாஷ பரிலோலாமிதம் மதீயம்
அங்க்லிக்ருதம் ஹ்ருதயம் அங்குலிபி ஸ்வயம் தே -42-

திருவடி திரு விரல்களை தரிசிக்கும் முன்னால் அந்நிய அபிலாஷைகளால் பரிலோலமாக திரிந்து அன்றோ அடியேன் இருந்தேன்
திருவடி தாமரைகளும் அதன் இதழ்களான திரு விரல்களும் இவையே பரம புருஷார்த்தம் என்று காட்டி அருளினவே –

பங்கா ந்யாசவ் மம நிஹந்தி மஹ தரங்கி
கங்காதிகம் விதததீ கருட ஸ்ரவந்தீம்
நகவ் கஸாம் மணி கிரலடா கணைர் உபாஸ்ய
நா தா த்வதீய பதயோ நாகா ரத்ன பங்க்தி -43-

கெடிலம்–கருட நதி -கங்கா நதியை விட பெருமை திரு நகங்களின் ஸ்பர்ச ஸம்பந்தத்தால்- –
இன்றும் பெருமாள் திருமஞ்சனம் இந்த தீர்த்தம் கொண்டே –
தேவர்கள் தங்கள் திருமுடிகளை வைத்து வணங்க இவையும் இவற்றின் ஸ்பர்ச ஸம்பந்தத்தால் அன்றோ ஒளி பெற்றன –
அவை அடியேனுடைய அஞ்ஞானம் போக்கி அருளின –

வஜ்ரா த்வஜம் அங்குச சுத கலச தாபத்ர கல்ப
த்ரு மாம்ப்ருஹா தோரண சங்க சக்ரை
மத்சயஸ் யாதிபிஸ்ச்சா விபூதி ஈஸ்வர மந்திதம் தே
மான்யம் பதம் பவது மௌலி விபூஷணம் ந -44-

திருவடிகளில் உள்ள திரு லாஞ்சனங்களை அனுபவிக்கிறார் –வஜ்ராயுதம் -த்வஜம் -அங்குசம் –
அம்ருத கலசம் -தாபத்ரம் -திருக் குடை – கற்பக வ்ருக்ஷம்-
தாமரை -தோரணம் -திருச் சங்கு ஆழ்வான் -திரு சக்கரத்தாழ்வான் -திரு மத்ஸ்யம் –
தேவர்கள் திருமுடி வைத்து வணங்கும் திருவடிகளே நமக்கு சிரஸுக்கு பூஷணம் -திண்ணிய திருக் கழல் அன்றோ –

சித்ரம் த்வதீய பத பத்ம பராக யோகாத்
யோகம் விநா அபி யுகபத் விலயம் ப்ரயாந்தி
விஷ்வஞ்சி நிர்ஜர பதே சிரஸி ப்ரஜாநாம்
வேதா ஸ்வ ஹஸ்த லிகிதானி துரக்ஷராணி -45-

சதுர்முகன் எழுதிய தலை எழுத்துக்களை உனது திருவடி துகள்களின் மஹிமையை அறிந்து-
பத பத்ம பராக யோகாத் – அவற்றை தரித்து வேறே உபாயாந்தரங்களை பற்றாமல் அன்றோ –
யுகபத் விலயம் ப்ரயாந்தி-தலை எழுத்தை மாற்றி -பரம புருஷார்த்தம் பெறுகிறார்கள் சரணாகதர்கள் –
என்ன விசித்திரம் –

ஏ ஜன்மா கோதிபி உபார்ஜித ஸூத தர்மா
தேஷாம் பவச் சரணா பக்தி அதீவ போக்யா
த்வத் ஜீவிதை த்ரிதச நாயக துர்லபை தை
ஆத்மாநம் அபி அகதாய ஸ்வயம் ஆத்மவந்தம் -46-

ஞானி த்வாதமைவ மே மதம் -பக்தானாம் யத் வபுஸி தகரம் பண்டிதம் புண்டரீகம் –
பக்தி யோக பாக்யர்களை இங்கும் கொண்டாடுகிறார்

நிஷ் கிம் சனத்தவ தனிநா விபூதேஸ யேந
ந்யஸ்த ஸ்வ ரக்ஷண பரஸ்த்வ பாத பத்மே
நாநா வித ப்ரதிஹ யோக விசேஷ தன்யா
ந அர்ஹந்தி தஸ்ய சதா கோடி தம அம்ச கக்ஷியாம் -47-

சத் தஹர வித்யாதிகள் உபாசகர்களுக்கு -இதில் அசக்தர்களுக்கு அவர்களது ஆகிஞ்சன்யமே
பச்சையாகக் கொண்டு ப்ரபன்னராக்கி மஹா விசுவாசமும் அருளி இவர்களில்
கோடியில் ஒரு அம்சத்துக்கும் அன்றோ பக்தி யோக நிஷ்டர்களை ஆகும் படி உயர்த்தி அருளிச் செய்கிறாய்

ஆத்மபஹார ரஸிகேன மயைவ தத்தம்
அந்யைர் ஆதார்யம் அதுனா விபுதைக நாத
ஸ்வீ க்ருத்ய தாரயிதும் அர்ஹஸி மாம் த்வதீயம்
சோரோப நீத நிஜ நூபுரவத் ஸ்வபதே -48-

ஆத்ம நிவேதனம் செய்து -அகிஞ்சனன் அநந்ய கதி-பாதார விந்தத்தில் சரண் அடைந்து –
அசித்வத் பாரதந்தர்ய ஸ்வரூபம் உணர்ந்து
திரு நூபுரம் திருடி -பின்பு உணர்ந்து அத்தை சமர்ப்பித்தால் நீ அணிந்து கொள்வதைப் போலே
அடியேனையும் ஸ்வீ கரித்து அருள வேண்டும் என்கிறார் —

அஞ்ஞான வாரிதும் அபாய துரந்தராம் மாம்
ஆஞ்ஞா விபஞ்ஞானம் அகிஞ்சன ஸார்வ பவ்மம்
விந்தன் பாவான் விபூதி நாத ஸமஸ்த வேதி
கிம் நாம பாத்ரம் அபரம் மனுதே க்ருபாயா –49-

அஞ்ஞான சமுத்திரம் / நீசர்களுக்குள் முதல்வன் , சாஸ்த்ர விரோதமே அனுஷ்டிப்பவன் -/ உன்னை சரண் அடைகிறேன்
சர்வஞ்ஞனான நீ உனது கிருபா பாத்திரத்துக்கு அடியேனை விட தகுந்த அதிகாரி இல்லை என்பதை அறியாயோ –

பிரகலாத கோகுல கஜேந்திர பரிஷிதாத்யா
த்ராதஸ் -த்வயா நனு விபத்திஷு தாத்ருசீஷூ
சர்வம் ததேகம் அபரம் மம ரக்ஷணம் தே
சந்தோலியதாம் த்ரிதச நாயக கிம் கர்லயே-50-

பிரகலாதன் -கோப கோபிகள் ஆநிரை -கஜேந்திரன் -பரீக்ஷித் -இவர்கள் அனைவரையும் த்வரித்து வந்து
ரஷித்து அருளியதை விட அடியேனை ரஷிப்பதே உனக்கு மஹா வைபவம் விளைவிக்கும் –

வாத்யா சதை விஷய ராக தயா விவ்ருத்தை
வியாகூர் நமான மனஸாம் விபூதிர் ராஜா
நித்ய உப்தப்தாம் அபி மாம் நிஜ கர்ம கர்மை
நிர்வேசய ஸ்வ பத பத்ம மது ப்ரவாஹம்—51-

திருவடித் தாமரைகளில் இருந்து பெருகும் மது அருவியில் என்னை மூழ்கப் பண்ணி –
விஷய ஸூக ராக பிரம்மத்தில் ஆழ்ந்து இருந்து உள்ள அடியேன் மனசை மீட்டு
நித்தியமாக துஷ் கர்மாக்களை செய்து- தாப த்ரயங்களில் ஆழ்ந்து உள்ள அடியேனை
தேனே பெருகும் திருவடிகளில் சேர்த்து உஜ்ஜீவிக்க பிரார்த்திக்கிறார் –

ஜய விபூதி பதே த்வம் தர்சித அபீஷ்ட தான
ஸஹ ஸரஸி ஜவாசா மேதிநீப்யாம் வாஸாப்யாம்
நல்ல வனமிவ ம்ருதனன் பாப ராஸிம் நாதானாம்
கரு தசரிதனுபே கந்த ஹஸ்தீவ த்வீயன் -52-

பிருகு மகரிஷி போலே நித்ய வாசம் செய்து அருள பிரார்த்திக்கிறார் -உபய நாச்சியார் உடன் சஞ்சாரம் செய்து
யானை வன புதர்களை அழிப்பது போலே தமர்கள் கூட்டும் வல்வினைகளை நாசம் செய்து நடை அழகைக் காட்டி அருள வேண்டும்

நிரவதிக குண ஜாதம் நித்ய நிர்தோஷம் ஆத்யம்
நரக மதன தக்ஷம் நாகினாம் ஏக நாதம்
விநத விஷய சத்யம் வேங்கடேச கவிஸ்த்வாம்
ஸ்துதி பதம் அபி கச்சன் சோபதே ஸத்ய வாதீ-53-

ஆறு சுவை விருந்துடன் நியமிக்கிறார்
1 -நிரவதிக குண ஜாதம்
2-நித்ய நிர்தோஷம்
3–ஆத்யம் -த்ரிவித காரணன்
4–நரக மதன தக்ஷம்-ஆஸ்ரிதர் சம்சாரம் நிவ்ருத்தன்
5–நாகினாம் ஏக நாதம் -தன் ஒப்பார் ஒல்லில்லா அப்பன்
6–விநத விஷய சத்யம்-அடியவர்க்கு மெய்யன் அன்றோ
சத்யம் ஞானம் அனந்தம் அமலம் ப்ரஹ்மம்–சத்யஸ்ய சத்யம் – –
தன்னைப் போலே -ஸ்தோத்திரம் பண்ணுவாரையும் சத்யவாதீ ஆக்கி அருளுவான்

ஸ்ரீ ஹேமாம்புஜ வல்லி சமேத ஸ்ரீ தேவ நாயக பர ப்ரஹ்மணே நம

————————————–

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹேமாம்புஜ வல்லி சமேத ஸ்ரீ தேவ நாயக பர ப்ரஹ்மம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: