ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம் -4–

ஸ்ரீ விஷ்ணு புராணம்6 அம்சங்கள்முதல் அம்சத்தில் 22 அத்யாயங்கள் –இரண்டாவதில் 16 அத்யாயங்கள்
மூன்றாவதில் 18 அத்யாயங்கள் –நாலாவதில் -24 அத்யாயங்கள் –ஐந்தாவதில் 38 அத்யாயங்கள் –ஆறாவதில் 8 அத்யாயங்கள்
-ஆக மொத்தம் 126 அத்யாயங்கள்
கடைசி அத்யாயத்தில் மைத்ரேயர் -பகவன் கதிதம் சர்வம் யத் ப்ருஷ்டோசி மயா மு நே –நாந்யத் ப்ருஷ்டவ்யம ஸ்தி மே விச்சின்னாஸ்
சர்வ சந்தேஹா –என்று கேட்டு அதற்கு விரிவாக பராசரர் சொல்லலி தலைக் கட்டி அருளுகிறார்
இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி மத புராணங்கள் –யன்ம யஞ்ச ஜகத் சர்வம் -என்று பொதுவிலே பிரச்னம் பண்ண –
விஷ்ணோஸ் சகாசாத் உத்பூதம் என்று கோள் விழுக்காட்டாலே உத்தரமாகை யன்றிக்கே எருமையை யானையாகக் கவி பாடித் தர வேணும்
என்பாரைப் போலே லிங்கம் என்ற ஒரு வ்யக்தியை நிர்தேசித்து இதுக்கு உத்கர்ஷம் சொல்லித் தர வேணும் என்று கேட்கிறவனும்
தமோபிபூதனாய்க் கேட்க சொல்லுகிறவனும் தமோபிபூதனாய்ச் சொல்ல இப்படி பிரவ்ருத்தமான லைங்க புராணாதிகளான
குத்ருஷ்டி ச்ம்ருதிகளும் -ஸ்ரீ விஷ்ணு புராணத்தின் உபக்ரமத்தின் அழகைச் சொன்னபடி
சர்வத்ராசௌ சமஸ்தஞ்ச வசத்யரேதி வை யத ததஸ் ச வா ஸூ தேவேதி வித்வத்பி பரிபட்ட்யதே –1-1-12-
தான் சர்வத்ர வசிப்பவனாய்-தன்னிடத்தில் சர்வமும் வசிக்கப் பெற்றவனாய்
ததஸ் சமுத்ஷிப்ய தராம் ஸ்வ தம்ஷ்ட்ரயா மஹா வராஹஸ் ஸ்புட பத்ம லோசன ரசாதலாத் உத்பலபத்ர சந்நிப சமுத்திதோ
நீல இவாசலோ மஹான் – 1-4-26–இதை ஒட்டியே நீலவரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப கோல வராகம்
ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் -என்கிறார் ஆழ்வார்
உத்திஷ்டதஸ் தஸ்ய ஜலார்த்த குஷே மஹா வராஹச்ய மஹீம் விக்ருஹ்ய விதூன்வதோ வேதமயம் சரீரம் லோமாந்தரஸ்தா
முனயஸ் ஸ்துவந்தி –1-4-29–ரோம கூபங்களில் மக ரிஷிகள் ஒடுங்கி இருந்து கைங்கர்யம் செய்ய -ஆதியம் காலத்து அகலிடம்
கீண்டவர் பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே ஓதும் மால் எய்தினாள் -ஆழ்வார்
ஜ்யோதீம்ஷி விஷ்ணோர் புவனானி விஷ்ணுர் வனானி விஷ்ணுர் கிரயோ திசச்ச– –நத்யஸ் சமுத்ராச்ச ச ஏவ சர்வம் யதஸ்தி
யன் நாஸ்தி ச விப்ரவர்ய -2-12-38–சரீராத்மா பாவத்தால் சகலமும் அவனே என்றபடி
எங்கள் ஆழ்வான் வியாக்யானம் -அம்புன விஷ்ணோ காயத்வேன தத் பரிணாம பூதம் பிரஹ்மாண்டம் அபி தஸ்ய காய
-தஸ்ய ச விஷ்ணு ராத்மேதி சகல ஸ்ருதிகத –தாதாத்ம்ய உபதேச உப ப்ருஹ்மண ரூபச்ய -ஜ்யோதீம் ஷீத் யாதி நா வஷ்ய
மாணச்ய சாமா நாதி கரண்யச்ய சரீராத்ம பாவ ஏவ நிபந்தனம் இத்யாஹா –என்று
யதச்தி -என்பதனால் உள்ள பதார்த்தங்கள் எல்லாம் சரீர பூதம் -யன் நாஸ்தி ச -இல்லாத வஸ்துக்களும் சரீர பூதம் என்கிறது எப்படி என்றால்
அஸ்தி -சப்தத்தால் சேதனப் பொருள்களையும் நாஸ்தி சப்தத்தால் அசேதனப் பொருள்களையும் சொல்லுகிறது –
இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு -அவன் உரு உள்ளதும் அல்ல இல்லதும் அல்ல சர்வ விலஷணன் என்றபடி
நா சதோ வித்யதே பாவோ நா பாவோ வித்யதே சத உபயோரபி த்ருஷ்டோந்த -ஸ்ரீ கீதை -2-16-இங்கே
அந்த -நிர்ணயம் என்றபடி அசேதனனுக்கு அசத்வமும் சேதனனுக்கு சத்வமும் தேறிற்று –
மூன்றாவது அம்சம் சப்த ரிஷிகளின் விவரணம் -வசிஷ்டர் காச்யபர் அத்ரி ஜமதக்னி கௌதமர் விஸ்வாமித்ரர் பரத்வாஜர் -சப்த ரிஷிகள்
ஐந்தாவது அம்சம் பூர்ண கிருஷ்ணாவதாரம் குரவை துவரைகளில் வடிவு கொண்ட சபாலன் அன்றோ –
அங்கநா மங்கநா மாந்தரே மாதவோ மாதவம் மாதவஞ்சாந்தரே ணாங்கநா -என்கிறபடியே திருக் குரவையிலே பெண்களோடு
அநேக விக்ரஹம் பர்ரிக்ரகாம் பண்ணி அனுபவித்தால் போலேயும்
ஏகஸ்மின் நேவ கோவிந்த காலே தாஸாம் மஹா முநே ஜக்ராஹ விதிவத் பாணீன் ப்ருதக் கேஹேஷூ தர்மத உவாச விப்ர
சரவாசாம் விஸ்வரூப தரோ ஹரி -31 அத்யாய ச்லோஹம் -என்கிறபடியே ஸ்ரீ மத த்வாரகையிலே
தேவிமார் உடன் பதினாறாயிரம் விக்ரஹம் கொண்டு அனுபவித்தால் போலேயும் –
ப்ருந்தாவனம் பகவதோ க்ருஷ்ணேந அக்லிஷ்ட கர்மணா சுபேந மனசா த்யாதம் கவாம் வ்ருத்திம் அபீப்சதா –5-6-24
பிருந்தா -துளசீ-நெரிஞ்சி–நெரிஞ்சிக் காட்டை பசும் புல் காடாக மாற்றி அருளி -அக்லிஷ்ட கர்மணா-சரமம் இல்லாமல் கார்யம் செய்து
அருளும் கிருஷ்ணன் -சங்கல்பத்தாலே செய்து அருளும் சக்தன் அன்றோ
உத்பன்ன நவ சஷ்பாட்யம் என்னும் படி கடாஷித்தால் போலே தத்தவங்களை விசதமாக அறிய வல்லராம் படி ஆழ்வாரைக் கடாஷித்தான் -ஈடு
கோவ்ருத்திக்கு நெரிஞ்சியைப் புல்லாக்கினவன் ஜகத் ஹிதார்த்தமாக எனக்கே நல்ல அருள்கள் என்னும் படி சர்வ சௌஹார்த்த
பிரசாதத்தை ஒரு மடை செய்து இவரைத் தன்னாக்க லோகமாக தம்மைப் போலே வாக்கும் படி யானார் -ஆசார்ய ஹிருதயம்
கோப வ்ருத்தாஸ் ததஸ் சர்வே நந்தகோப புரோகமா மந்திர யாமா ஸூ ருத்விக் நா மஹோத்பாதாதி பிரவ –என்று தொடங்கி
கோகுல வாசம் ஆபத்து என்று ஸ்ரீ பிருந்தாவனம் சென்றார்களாம் பஞ்ச லஷம் பெண்களும்
கதாசித் சகடச் யாதஸ் சயா நோ மது ஸூ தன சிஷேப சரணாயூர்த்த்வம் ச்தன்யார்த்தீ ப்ரருரோத ஹ -இத்தைக் கொண்டே
முலை வரவு தாழ்த்ததனால் சீறி நிமிர்த்த திருவடிகளாலே சகடத்தை சாடினான் ஆயிற்று என்பர்-

சதுர்முக சமாக்க்யாபி சடகோப முநௌ ஸ்திதா ஸ்வ வாசா மாத்ரு துஹித்ரு சஹீவாசா ச வர்ண நாத் –
ஆழ்வாருக்கும் நான்கு முகங்கள் உண்டே -பின்னை கொல் நில மா மக்கள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள்-
-காவியம் கண்ணி என்னில் கடி மா மலர்ப்பாவை ஒப்பாள் —தாய் அத்யவசாய நிஷ்டை மகள் த்வரா நிஷ்டை
என் பெண் மகளை எள்கி தோழிமார் பலர் கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன் –தாய் தோழி மேல் பழி
குமுறும் ஓசை விழ ஒலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு அமுத மென் மொழியாளை நீர் உமக்கு
ஆசை இன்றி அகற்றினீர் –தோழி தாய் மேல் பழி
இணக்கி எம்மை எம் தோழிமார் விளையாட போதுமின் என்ன போந்தோமை –தலைவி தோழி மேல் பழி
அன்னைமீர்காள் நீர் என்னை முனிவது எங்கனே –மகள் தாய் மேல் பழி
முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையும் முநிதீர் –தோழி தாய் கூட்டு சேர்ந்து தலைவி மீது பழி
அந்தரங்க ஆராய்ச்சில் தலைவிக்கு சொல்லும் நன்மையே –மஹத்தான-கௌரவ பிரதிபத்தி உண்டே இருவருக்கும்
உண்ணும் சோறு –எல்லாம் கண்ணன் என்றே இருப்பால் என் மகள் – –மூவருக்கும் உண்டான அந்தரங்க உகப்பு -தோற்றும்
திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் -நம்பியை நான் கண்டது முதலாக என்னாமல் -அலர் தூற்றிற்று முதலாக கொண்ட என் காதல் -7-3-8-
போலே இல்லாமல் நம்பாடுவான் வாக்கின் அனுவாதம் முத்தா லங்கார ரீதியிலே நன்கு தேறுகிறது என்னக் குறை இல்லை –
காதல் கடல் புரிய விளைவித்த காரமர் மேனி -சௌந்தர்யம் -சௌகுமார்ய சிந்தனா பரிவாஹமாக –
ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் -ஒரு பணிவிடைக் காரனை வைத்துக் கொள்ள வில்லையே -உபய விபூதியும்
அவன் ஆளாய் இருக்க –திவ்ய்யாயுதங்களை அவன் ஏந்துவது மலைகளை எடுத்தால் போலே தோன்றுகிறதே ஆழ்வாருக்கு
நண்ணாதார் நலிவு எய்த நல்லவஅமரர் பொலிவு எய்த திருவாய் மொழி திருவவதரித்தது என்று தாமே அருளிச் செய்கிறார்
உகவாதார் நெஞ்சு உளுக்கும் படியான பிரபந்தம்

போகத்தில் வழுவாத விஷ்ணு சித்தன் -போகம் -பகவத் அனுபவம் -மாலுக்கு வையகம் -6-6- திருவாய்மொழி நிகமன -இப்பத்தும் வல்லவர்
கட்டு எழில் வானவர் போகம் உண்பாரே – பெரியாழ்வார் போகத்துக்கும் நித்ய ஸூ ரிகள் போகத்துக்கும் பர்வத பரம அணு வோட்டை வாசி உண்டே
-இவரது ஸ்ரீ கிருஷ்ணாவதார சேஷ்டித போகம் அன்றோ-
யசோதை பாவத்திலே -மிடுக்கு இல்லாமையால் நான் மெலிந்தேன் –பெரு நீர்த் திரை எழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்த பலம்
தரு நீர் சிறுச் சண்ணம் துள்ளம் சோர தளர் நடை நடவானோ
வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவேரித் தென்னரங்கன் –பண்டவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல்
-அரையர் அரங்கன் செய்ததாக பேசும் பொழுது பாடுவார் கண்ணில் காவேரிப் புனலும் கங்கைப் புனலும் பெருகாது இருக்குமோ

வாத்சல்யம் தோஷ போக்யத்வம் –வாத்சல்யம் நாம தோஷேஷூ குணத்தவ புத்தி -சம்பந்த விசேஷான் விதேஷூ ப்ரீதி சிநேக யஸ்ய
விபாகா அஸ்தான பயசங்கித்வம் தோஷா நவபாச தோஷேபி குணத்வ புத்திரித்யாதய -குற்றங்கள் புலப்படாதவை மட்டும் இல்லாமல்
அவற்றையே நாற்றமாக கொள்ளும் படியான ப்ரீதி-எற்றே தன் கன்றின் உடம்பின் வழு வன்றோ காதலிப்பது அன்று அதனை ஈன்று உகந்த ஆ
—இப்படிப் பட்ட பிரேம விசேஷமே வாத்சல்யம் –தோஷத்தை குணமாகக் கொள்வது ஞான பூர்த்திக்கு கொத்தையா -அவிஜ்ஞ்ஞாதா
இந்த தோஷ போக்யத்வத்தையே மங்க ஒட்டு உன் மாயை என்கிறார் ஆழ்வார்
தயா -பர துக்க துக்கித்வ ரூபம் -பர துக்க நிராகரண இச்சை -குண பரீவா ஹாத்மானாம் ஜன்மானாம் -திருக்குணங்களை காட்டி அருளவே திருவவதாரம்

சத்யமேதா –சஹச்ர நாமம் –சத்யமான மேதையை உடையவன் -வல்லவ வ ஸூ தேவாதி சா ஜாத்ய அபிமானி நீ மேதா சத்யா அஸ்ய ந நடன மாதரம்
சமஸ்த கல்யாண குணாத்மகனாய் சர்வ நியந்தாவாய் இருக்கிற சர்வேஸ்வரன் நாள் இடைப் பெண்கள் இருந்த இடத்தே புக்கு அல்லது நிற்க மாட்டாதே செல்லாமை விளைய அவர்கள் இங்கே புகுராதே கொள் என்ன விலங்கு இட்டாப் போலே பேரவும் திரியவும் மாட்டாதே தடுமாறி நின்றான் என்கிற
சௌசீல்யம் தங்களையும் இவர்களையும் ஒழிய ஆர் அறிந்து கொண்டாட வ்யாசாதிகள் எழுதி விட்டு வைத்துப் போனார்களோ
-பட்டர் மின்னிடை மடவார் கழகமேறேல் நம்பி என்ற இடத்துக்கு
ஸ்வ நியந்தாவானவன் சிலருக்கு நியமிக்கலாம் படி எளியன் ஆனான் என்றால் இது மெய் என்று கைக் கொள்ளுவாரை கிடையாது இ றே-
சாஸ்திரங்கள் எல்லாம் ஈசேசிதவ்ய விபாகம் பண்ணி ஒருங்க விடா நிற்க அத்தலை இத்தளையாகச் செல்லுகிறதே இது -நம்பிள்ளை
விகர்த்தா –விகர்த்தா ச்வார்த்த ஹர்ஷ சோகாத்ய பாவேபி பரார்த்த தத் ப்ரசக்தி அதோஷ அந்யதா பர துக்க துக்கித்
வாதயோ குணா கதம் அஸ்ய சயு -பட்டர் ஸ்ரீ ஸூ க்தி -மநோ விகாரம் அடைகிறவர்

ஜ்ஞான வைராக்ய ராசயே—ஞான வைராக்யங்களுக்கு ராசி என்றும் ஜ்ஞான சமூஹங்கள் வைராக்ய சமூஹங்கள் என்றுமாம்
-பகவத் ச்வரூபாதி ஜ்ஞான விஷயங்கள் பல உண்டே -த்யாஜ்ய விஷயங்களும் பல உண்டே
அகாத பகவத் பக்தி சிந்தவே -பக்திக்கு கடல் என்று சொல்லாமல் காதல் கடை புரைய விளைவித்த -பக்தியை கடலாக ரூபித்து
அகாதமான பகவத் பக்தி கடலை உடையவர்
லோகே -சம்சாரி ஜானே –சாஸ்த்ரத்தில் -என்றுமாம் -பக்த ஜனக ஜீவிதம் -பக்த ஜனங்களுக்கு தரகாதிகள் இவன் என்றும்
அவர்களை தாரகமாக கொண்டவன் இவன் என்றும்
சமர்த்தம் -அளவுடையரான நித்ய சூ ரிகள் அனுபவிக்கும் தன்னை நித்ய சம்சாரிகள் அனுபவிக்கும் இடத்தில் ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை -என்கிறபடியே சாத்மிக்க சாத்மிக்க அனுபவிப்பிக்கும் ஆற்றல் உடையவன் என்றவாறு -ஆஸ்ரிதா நாம் சாத்ம்யயோக பிரதான

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும் பெரிய கோலத் தடம் கண்ணன் -4-5-6-
இதற்கு பிள்ளான் -நீல மேக நிபதிவ்ய ரூபோசித திவ்யாங்காரத்தாலே அநுலிப்தனாய் -அதி விசாலமாய் அதி ரமணீயமாய்
இருப்பதொரு தாமரைத் தடாகம் போலே இருப்பதொரு திருக் கண்களை உடையவனை -என்றவாறு
வெளிய நீறு –திவ்யாலங்காரம்-கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்-எம்பெருமானுக்கு விசேஷணம்
பெரியவாச்சான் பிள்ளை -வெளிய நீறு -அஞ்சன சூர்ணம்
கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்-பெரிய கோலத் தடம் கண்ணுக்கு ஏக தேச விசேஷணம்
சஷூஷீ தத்தாரணம் தத்ர விஹிதமிதி அஞ்சனபரத்வமாகாரா ஆசார்ய -தேசிகன்

ஓடும் புள்ளேறி -1-8-/பொரு மா நீள் படை -1-10-/அணைவது அரவணை மேல் -2-8- இவற்றுக்கு ஆறாயிரப்படி அவதாரிகை வேறு விதம்
-பெரியவாச்சான் பிள்ளை முதலானோர் அவதாரிகை வேறே விதம் -தேசிகன் இருபத்து நாலாயிரப் படி ஒன்றியே
திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியும் சாரமும் அருளிச் செய்துள்ளார்
தாள தாமரைக்கு -பிள்ளான் -திருக்கண்ணபுரத்து எம்பெருமானை அனுபவித்து இப்போது திருமோகூர் எம்பெருமானை அனுபவிக்கிறார்
-என்பதுவே —மற்ற வியாக்யானங்களில் பரமபத யாத்ரைக்கு நாள் குறிப்பிட்டதால் நிச்சயித்து வழி துணையாக பற்றுகிறார்
மார்க்கபந்து சைத்யம் மோஹனத்தே மடுவிடும் -தேசிகன் ரத்னாவளியில் ஸ்ராந்திஹாரத்வ முக்க்யை ராகாரைஸ் சத் கதிஸ் ஸ்யாத் -என்றும்
சாரத்தில் சதபத வ்யாம் சஹாயாம் ஸ்ரீ சம் ப்ராஹ – -இத்தால் தேசிகன் இவற்றையே நிதியாகக் கொண்டு கையாண்டார் -எனபது ஸ்பஷ்டம்

ஸ்ரீ கீதையில் அர்ச்சா பிராஸ்தாபம் இல்லையே என்பதற்கு நம்பிள்ளை –நாலாமோத்தில்-யே எதா மாம் பிரபத்யந்தே தான் ததைவ பஜாம்யஹம் -என்றதில் அர்ச்சாவதார நிலையம் அந்தர்கதம் -உமர் உகந்து உகந்த உருவம் நின்னுருவமாக்கி -8-1-4–அர்ச்சாவதார பரமான வியாக்யானம் கீதா பாஷ்யத்திலும் இல்லை -இது நம்பிள்ளை நிர்வாகமே
தேசிகன் -தாத்பர்ய சந்த்ரிகையிலே -யே யதா மாம் உபக்ரமத்திலேயே -அதர கிருஷ்ணாவதார வருத்தாந்தேன சஹ அர்ச்சாவதார வ்ருத்தாந்தோபி-என்று
காட்டி அருளுகிறார்
தம்மை உகப்பாரை தாம் உகப்பார் என்ற நாச்சியார் திருமொழி பாசுரத்தைக் கொண்டு ரசமாக நம்பிள்ளை –ப்ரியோ ஹிஜ்ஞானி நோத்யர்த்தம் அஹம் ச மம ப்ரியா –என்கிற ஸ்ரீ கீதா ச்லோஹத்தில் சகாரத்தைக் கொண்டு ஜ்ஞானி என் பக்கல் செய்யும் ப்ரீதியை உபாதியாக்கி அவன் பக்கலிலே நான் ப்ரீத்தி பண்ணினது பெரிதோ -என்று அருளினார்
தாத்பர்ய சந்த்ரிகையில் -ச மம ப்ரிய இத்யர்த்த நிரதிசய ப்ரீதிம் குர்வதோபி மகோ தாரச்ய ஈச்வரச்யாபி தத் ப்ரீதி உபாதிக ப்ரீதி கரணாத்
அத்ருப்திஸ் சூசிதேதி கேசிதாசார்யா -கேசிதாகூ -என்னாமல்- கேசிதாசார்யா என்றது பிரபத்தி கௌரவம் தோற்ற அருளிச் செய்கிறார்

ஜ்ஞாநீ து ஆத்மைவ மே மதம் -ஸ்ரீ கிருஷ்ணன் உடைய சித்தாந்தம் -பெருமாள் இளைய பெருமாளை நோக்கி -த்வதீயம் மேந்த்ராத்மானாம்
த்வாம் –ஸ்தோத்ர ரத்னம் -மகாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய ஷணேபி தே யத்விர ஹோதி துஸ் சஹ -என்று இத்தையே காட்டி அருளுகிறார்

கப்யாச -கம்பீராம்ப –விகசித –புண்டரீக தள–அமல ஆய்த
கம்பீராம் பஸ் சமுத்பூத –ஸூ ம்ருஷ்ட நாள–ரவிகர விகசித
நீரார் கமலம் போல் செங்கண் மால் –சிறிய திருமடல் -அ ழர் அலர் தாமரைக் கண்ணன் -திரு விருத்தம் -இத்தைக் கொண்டே கம்பீராம்பஸ் சமுத்பூத
எம்பிரான் தடம் கண்கள் –மென்கால் கமலத் தடம் போல் பொழிந்தன –திரு விருத்தம் -ஸூ ம்ருஷ்ட நாள –
செந்தண் கமலக் கண் நாயிறு –அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே -திருவாய்மொழி -ரவிகர விகசித

நாத முனிகள் -பராசரர் -நம்மாழ்வார் -ஸ்தோத்ர ரத்னம் -அவயவி அவயவம் கூட சேர்ந்து இருக்க வேண்டும் என்பதால் -மாதா பிதா
–ஆத்யச்த குலபதே –லஷ்மி நாதனையே குறிக்கும் வகுளாபிராமனான திருவடி நிலை நம்மாழ்வார் என்றபடி
-ந இடையிலே உள்ளதால் நம்மாழ்வாரையே குலபதியாக கொண்டார்-

காசையாடை –திசைமுகனார் தங்கள் அப்பன் சாமியப்பன்-சாம வேத கீதன் சந்தோகன் என்று சாமான்யம் ஆக்காமல்
-வேத கீத சாமி நாதன் என்ற சாமம் தோன்ற அருளிச் செய்கிறார்
இவையும் ஓர் பத்தும் வல்லார் ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பார் நீராயே –சிறந்த பிராப்ய பலன் அன்றோ நீராய் உருகுவது
சீர்பாடி களிமின் களிப்போமே-என்பதே மருவி பல பல திரிபுகள் –

மயர்வற மதி நலம் -நலம் -பக்தி – -வீடு செய்து மற்று எவையும் புகழ் நாரணன் தாள் நாடு நலத்தால் அடைய –பக்தியினால் அடைய -என்று
உபக்ரமித்து –சார்வே தவ நெறியில் -சார்வாகவே அடியில் தான் உரைத்த பக்தி தான் -என்று உப சம்ஹரித்து -அருளினார்
ஜன்மாந்தர சஹச்ர நல தவங்களாலே —வேதன உபாசன சேவாத்ய நாதிகள் — சாத்ய சாதன பக்தியாக சாஸ்திர சித்தம் –
சேதன சாத்யமாய்-பகவத் பிரசாதன உபாயதயா-தத் பிராப்தி சாதனமான பக்தியாக -சாத்யமான சாதன பக்தி என்றே பொருள்
சாத்ய பக்தியாகவும் சாதன பக்தியாகவும் என்கிற பொருள் சிறிதும் ஏலாது –சாத்ய பக்தியா சாதன பக்தியா விகல்பமே ஏலாது என்று முடிந்தது
ஸ்வ யதன சாத்யையாய் உபாய பூதையான பக்தி -முதல்
சித்த உபாயத்தை சுவீகரித்து -பிரார்த்தித்து -சரீரவியோக சமனந்தரம் பெரும் பக்தி இரண்டாவது
உபாய பக்தி பிராரப்த வ்யதிரிக்தாக நாசி நீ சாத்ய பக்திஸ் து சா ஹந்த்ரீ ப்ராரப்தஸ்யாபி பூயஸீ–ரகச்த்ய சாரம் –
இங்கு சாத்ய பக்தி -பிரபத்தி -என்ற பொருள் -சம்சாரிகளுக்கும் சர்வேஸ்வரனுக்கும் ஆழ்வார் உபதேசம் செய்து அருளுவது
இவர்களுக்கு சாதனத்திலும் சாத்யத்திலும் உண்டான கலக்கம் தீர்க்கைக்காகவே –
வீடுமின் முற்றவும் பக்தி ரூப சாதன உபதேச பரம் – சாத்ய பக்தியும் சாதன பக்தியும் பர்யாயமே
ச்வீகாரமும் தானும் அவனாலே வந்தது அன்றோ -ச்வீகாரத்துக்கு உபாய கர்த்தவ்யம் ஒழிய உபாயத்வம் இல்லை என்றதாயிற்று
உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் —சித்த உபாயே தரமான சாத்ய உபாயம் -ஸ்வ பாரதந்த்ர்யஜ்ஞான ரஹிதராய் -ஸ்வ யதன பரராய்
இருப்பார்க்கு மோஷ சாதனதயா சாஸ்திர விஹிதமாகையாலே ஸ்வஸ்மின் உபாயத்வ பிரதிபத்தி சஹமாய் இருக்கும்
பிரபத்தி உபாயத்துக்கு இக் குற்றங்கள் ஒன்றும் இல்லையே -மோஷ உபாய பிரபத்திஸ் ஸ்யாத் -திருக் கச்சி நம்பி ஆறு வார்த்தைகளில் ஒன்றே
ஆழ்வாருக்கு எம்பெருமான் அருளால் பெற்ற பக்தி அன்றோ –கர்ம ஜ்ஞான ஸ்தானங்களிலே பகவத் பிரசாதமாய் -அதனாலே விளைந்த பக்தி
தமக்கு எம்பெருமான் மயர்வற மதி நலம் அருளினது போலே ஆழ்வார் தாமும் சம்சாரிகளுக்கு மயர்வற மதிநலம் அருளி
பக்தியை உபதேசிப்பதாக கொள்ள வேண்டும் –

மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா -வைத்யோ நாராயணோ ஹரி -நிர்வாணம் பேஷஜம் பிஷக் –மருந்தும் பொருளும் அமுதமும் தானே
-மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று பெரும் தேவர் குழாங்ககள் பிதற்றுவார்களே –ஆர் மருந்து இனி ஆகுவர் -7-1-5-
சுடர் ஆழி சங்கு ஏந்தி இருக்கும் மருந்தையே -நம்மாழ்வார் –மருத்துவன் என்னாமல் மருந்து என்கிறார்
எருத்துக் கொடி உடையானும் பிரமனும் இந்த்ரனும் மற்று ஒருத்தரும் இப் பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவார் இல்லை –
திருமால் இரும் சோலை உறையும் தெய்வமே மருந்து அறியும் தெய்வம் என்கிறார்
போர்த்த பிறப்போடு நோயோடு மூப்பொடு இறப்பிவை பேர்த்து பெரும் துன்பம் வேரற நீக்கி நின் தாளிணைக் கீழ் சேர்த்து
அவன் செய்யும் சேமத்தை எண்ணுவார் இல்லையே

வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம் சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால் யீரரியாய் நேர் வலியோனான இரணியனைஓர் அரியாய் நீ
இடந்த தூன்-பொய்கையார் தனது தாள் வணங்க வில்லை என்றது காரணம் இல்லை பிரகலாதனுக்காதத் தான் என்று சொல்லாமல் காட்டி அருளுகிறார்
ஜ்ஞாநீ து ஆத்மைவமே மதம் -ஈஸ்வரன் அவதரித்து செய்த ஆனைத் தோழிகள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையால் அன்றோ

புழு குறித்தது எழுத்து ஆமா போலே -குணஷதலி பிக்ரமாத் உப நிபாதின பாதி ந –குண ஷர நியாயம் -யாத்ருச்சிகமாக நல்லதாய் முடியும்
நம் செயலை உபாயம் என்ன ஒண்ணாதே –பிரபத்தியும் உபாயம் அன்று -நியாச இதி ப்ரஹ்ம நியாச இத்யாஹூர் ம நீ ஷீ ணோ ப்ரஹ்மானாம்
-உபநிஷத் படி பர ப்ரஹ்மத்தையே பிரபத்தி உபாயம் என்றதாயிற்று -ஆஸ்ரித சம்ரஷணம் ஸ்வ லாபம் மத்வா ப்ரவர்த்ததே
-க்ருதக்ருத்யர்த்தமும் விஜ்வரத்வமும் ப்ரமோதாசலித்வமும் பெருமாளுக்கே அல்லது ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு இல்லையே
-பரம புருஷம் ஜ்ஞாநினம் லப்த்வா -பேற்றுக்கு த்வரிப்பது –அதுவும் அவனது இன்னருளே -நிதானம் தத்ராபி ஸ்வயம் அகில நிர்மாண நிபுண
தச்யாஹம் ஸூ லப -ஸ்ரீ கீதா பாஷ்யம் –தஸ்ய நித்ய யுக்தச்ய-நித்ய யோகம் காங்ஷமாணச்ய யோகின அஹம் ஸூ லப —
அஹமேவ பிராப்ய -ந மத்பாவம் ஐஸ்வர் யாதிக ஸூ ப்ராபச் ச தத் வியோஹம் அசஹமான -அஹமேவ தம் வருணே
மத ப்ராப்த் யனுகுண உபாசன விபாகம் தத் விரோதி நிரசனம் அத்யர்த்த மத ப்ரிய த்வாதி கஞ்ச அஹமேவ ததாமீதி அர்த்த
-யமேவைஷ வ்ருணுதே தென் லப்யா இதி ஹி ஸ்ருயதே -வஷ்யதே ச தேஷாம் சத்த யுக்தாநாம் –இதி -பரகத ச்வீகாரம்
பிரஜாபதிம் த்வாவேத பிரஜாபதிஸ் த்வம்வேத யம் பிரஜாபதிர் வேத ச புண்யோ பவதி –

நயாச திலகம் -ஆர்த்தேஷ்வா சுபலா தத் அந்ய விஷயேபி உச்சின்ன தேஹாந்த்ரா
வஹ்ன்யாதேர நபேஷணாத்தா நுப்ருதாம் சத்யாதிவத் வியாபி நி
ஸ்ரீ ரெங்கேஸ்வர யாவதாம நியத த்வத் பாரதந்த்ர்யோசிதா
த்வவ்யேவ தவது பாயதி அபிஹிதச்வோ பாயபாவா அஸ்து மே –பத்து வ்யாவர்த்திகள் பக்திக்கும் பிரபத்திக்கும்
1-ஆர்த்தேஷ்வா சுபலா -பக்தி விளம்பித்து பலன் அளிக்கும் –பிரபத்தி விரைவில் பலன் அளிக்கும் ஆர்த்த பிரபன்னர் திறத்தில்
தத் அந்ய விஷயேபி உச்சின்ன தேஹாந்த்ரா
2-தேஹாந்தர சம்பந்தம் அறுத்து தருவதில் பக்தி நியதம் அல்லவே –பிரபத்தி நியமேன தேஹாந்தர சம்பந்தத்தை அறுத்து தரும்
3-வஹ்ன்யாதேர நபேஷணாத்தா நுப்ருதாம் சத்யாதிவத் வியாபி நி
பக்தி அதிக்ருதாயதிகாரம் –இது சர்வர்க்கும்
4-ஸ்ரீ ரெங்கேஸ்வர யாவதாம நியத த்வத் பாரதந்த்ர்யோசிதா-த்வவ்யேவ தவது பாயதி அபிஹிதச்வோ பாயபாவா அஸ்து மே –
பக்தி ஸ்வரூப விருத்தம் இது ஸ்வரூப அனுரூபம்

திருப்பாவையில் உறங்குமவர்கள் -மத்சித்தா பரர்கள் வெளியில் இருந்து திருப் பள்ளி உணர்த்துபவர்கள் மத்கதப்ராணா பரர்கள்
-எல்லே இளம் கிளியே -போதயந்த பரஸ்பரம் பரமான பாசுரம்
பிள்ளாய் -ஜ்ஞான விபாக கார்யமான அஜ்ஞ்ஞானத்தால் வருமவை எல்லாம் அடிக் கழஞ்சு பெரும் -இந்த அஜ்ஞ்ஞானம் காரணமாக
பெரியாழ்வார் பிள்ளாய் என்று அழைக்கப் படுகிறார்
தஸ்மாத் ப்ரஹ்மணா பாண்டித்தியம் நிர்வித்ய பால்யேன திஷ்டாசேத்-பிருஹுதாரண்யம் –5-5-1-பரிபூர்ண ஜ்ஞானம் பெற்று
பால்யத்துடன் இருக்க வேணும் அநா விஷ் குர்வன் அந்வயாத்–ப்ரஹ்ம சூத்ரம் -3-4-49- ப்ரஹ்ம விதியை அதிகரிதவன் செருக்கு
கொள்ளாமல் இருக்க வேண்டும் -இதனாலும் பிள்ளாய் -என்றதாயிற்று
புள்ளும் சிலம்பின காண் -இவருக்கும் தொண்டர் அடிப் பொடி ஆழ்வாருக்க்ம் சேருமே அதனாலே இந்த அடையாளம் மீண்டும் வரும்
புள்ளரையன் -வைனதேயாம்ச சம்பூதம் விஷ்ணு சித்த மஹம் பஜே -த்யான ஸ்லோஹம் -செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பார்திருத் தேர் க்ருத்மான் வடிவம்-க்ருத்யம்சமான பெரியாழ்வார்
-புள்ளரையன் உடைய அம்ச பூதர் -கோயில் வெள்ளை விளி சங்கு –கோ இல் பாண்டிய ராஜன் சபா மண்டபம்
-பாண்டியன் கொண்டாட பட்டர் பிரான் வந்தான் என்று ஈண்டிய சங்கம் எடுத்தூத –
வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர்த் திருச் சக்கரம் எனது கையன் -4-1-7- என்றாரே –இவரே பாட்டுக்கு விஷய பூதர்
-என்று வெள்ளை விளி சங்கு சொல் தொடர் ஸூ சிப்பிக்கும்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் முதலில் -பிறங்கிய பேய்சசி முலை சுவைத்து உண்டிட்டு -1-2-5-
நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப் போய்—1-2-11- என்று கள்ளச் சகடம்
கலக்கழிய காலோச்சியதையும் அனுபவிக்கிறார் –வெள்ளத்தரவில் துயில் அமர்த்த வித்தினை உள்ளத்துக் கொண்டு
-பனிக் கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என் மனக் கடலில் வாழ வல்ல -என்றும்
-அரவத் தமளியினோடும் அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து பரவைத்திரை பல மோதப் பள்ளி கொள்கின்ற
பிரானை பரவுகின்றான் விட்டுசித்தன் -என்று சொல்லிக் கொள்கிறார் –முனிவர்களும் யோகிகளும் -பாசுரங்கள் பாடிய முகத்தால்
குணானுபவ நிஷ்டர் -வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழி அறுத்த தனத்தைக் கொண்டு ஸ்ரீ வில்லிபுத்தூரில் பிரகார கோபுர
மண்டபங்கள் நிர்மாணித்து -கைங்கர்ய நிஷ்டர் –மெள்ள எழுந்து -பெருமாள் நினைப்பூட்ட -எழுந்து அரி என்ற பேர் அரவம்
-ஓம் ஹரி சொல்லியே வேதங்கள் ஆரம்பம்

பேய்ப்பெண்ணே –பெருமாள் திருமொழி மூன்றாம் பதிகம் –மையல் கொண்டு ஒழிந்தேன் -நரகாந்தகன் பித்தனே -உன்மத்தன் காண்மினே
-மணவாளன் தன பித்தனே -எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே –பித்தனாய் ஒழிந்தேன் பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே
-தனிப் பெரும் பித்தனாம் குலசேகரன் – ஒன்பதில் கால் சொன்ன பெயர்
நாயகப் பெண் பிள்ளாய் –கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன் குலசேகரன் —ஆசார்ய கோஷ்டியில் நடுநாயகம் –
பெண்ணே பெண் பிள்ளாய் –ஏர் மலர் பூம் குழல் -ஆலை நீள் கரும்பு –மன்னு புகழ் –கோபிகள் தேவகி கௌசல்யை பாவனை உண்டே
தேசமுடையாய் -தேஜஸ் மிக்கு –ஷத்ரிய தர்மம் –கொல்லி நகர்க்கு இறை -கூடல் கோமான் குலசேகரன்
தேவத்வமும் நிந்தையானவனுக்கு ஒளி வரும் ஜனிகள் போலே –பண்டை நாளில் பிறவி உண்ணாட்டு தேசு இ றே -ஆழி யம் கை பேர்
ஆயற்கு ஆளாம் பிறப்பு –உண்ணாட்டு தேசன்றே –கைங்கர்ய அனுரூபமான ஏதேனும் ஆவேனே -என்கிறார்
ஆனைச்சாத்தம் எங்கும் கலந்து கீசு கீசு என்று பேசின பேச்சரவம் –கிருஷ்ணா கிருஷ்ணா -எங்கும் திரு நாம சங்கீர்த்தனம்மலையாளப் பேச்சு
காசும் பிறப்பும் கல கலப்ப –ஆபரணம் –ஆரம் கெட பரன் அன்பர் கொள்ளார் என்று அவர்களுக்கே வாரம் கொடு குடம் பாம்பில் கை இட்டவன்
–ஆபரண பிரஸ்தாபம் -கை இட்டது உண்டே -குறை சொல்லிய மந்த்ரிகள் கைகளை பேர்த்ததாகவும் கூளலாம்
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவக் கதை -தயிர் கடைய ஒல்லை நானும் கடைவன் -6-2-
நாரணன் மூர்த்தி கேசவனைப் பாட -நிகமத்தில் -வள்ளல் நலம் திகழ் நாரணன் அடிக் கீழ் நண்ணுவரே -மாவினை வாய் பிளந்து உகந்த மாலை –
நீ கேட்டே கிடத்தியோ -ஸ்ரீ இராமாயண சரிதை கேட்ட சரித்ரம்

கோதுகலமுடைய பாவாய் -அழகும் பாத்விரதையும் உள்ளதால் பாவாய் -ஜ்ஞான பக்தி வைராக்யங்கள் அழகு -உன்னால் அல்லால் யாவராலும்
ஒன்றும் குறை வேண்டேன் -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -கோதுகலமுடைய பாவாய் நம் ஆழ்வாருக்கே பொருந்தும் -க்ருஷ்ணா த்ருஷ்ணாதத்வம் இவோதிதம் -கிருஷ்ணே த்ருஷ்ணா -க்ருஷ்ணச்ய த்ருஷ்ணா -குதுகலமே வடிவாக –எம்பிரானும் என் மேலானே
-ப்ரியோ ஹி ஜ்ஞானி நோத்யர்த்தம் அஹம் ச மம ப்ரிய –எம் பாவை போய் இனித் தண் பழனத் திருக் கோளூர்க்கே —சூழ் வினையாட்டினேன் பாவையே
எழுந்திராய் -இவர் வீற்று இருப்பதால் –கீழ் வானம் வெள்ளென்று –தஸ்மை நமோ வகுள பூஷண பாச்கராயா-ஆதித்ய ராமதிவாகர அச்யுத பானுக்களுக்கு போகாத உள்ளிருள் நீங்கி சோஷியாத பிறவிக்கடல் வற்றி விகசியாத போதில் கமலம் மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே
கீழ் வானம் -மேல் வானம்மேல் என்ற்றது உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம்
வானம் மேகம் -தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் -அடியார்க்கு இன்ப மாரியே-
எருமை -ரஜஸ் தமஸ் குண பிரசுரர்கள் -சிறு வீடு -கைவல்யம் -சிறுக நினைவதோர் பாசம் உண்டாம் –தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்
-இவர் திருவவதரிப்பதற்கு முன்பே கைவல்ய ஐஸ்வர் யார்திகளாகவே இருந்தார்கள்
மிக்குள்ள பிள்ளை-மேம்பட்ட -இவர்களை சிரித்து இருப்பார் ஒருவர் உண்டு இ றே
போவான் போகின்றாரை போவதே பரம புருஷார்த்தம் போவான் வழிக் கொண்ட மேகங்களே -கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ
-கூவிக் கொள்ளை வந்தந்தோ –வீற்று இருந்த –ஏற்ற நோற்றேர்க்கு -வண் தமிழ் நோற்க நோற்றேன் –வெம்மா பிளந்தான் தன்னை –
வான நாயகனே அடியேன் தொழ  வந்தருளே -இமையோர் தலைவா -அமரர்கள் அதிபதி
ஆவா வென்று -ஆவா வென இரங்கார் அந்தே வலிதே கொல் மாவாய் பிளந்த மனம் -அடியேற்கு ஆவா வென்னாயே –
ஆராய்ந்து –ஆர் என்னை ஆராய்வார் -உம்முடைய குறையும் தீரும் அருள் -மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் அன்றோ

மாமன் மகளே -கமலாமி வான்யாம் கோதாம் -ஸ்ரீ மகா லஷ்மி -யானால் -பார்க்கவீ லோக ஜனனீ ஷீர சாகர சம்பவ –
-ஆண்டாள் ப்ருகு குலத்தில் தோன்றியவள் -திரு மழிசைப் பிரானும் ப்ருகு குலம் -ரிஷி குலத்தில் பிறந்து பிரம்பன் குடியானவர்
ஆண்டாள் ப்ராஹ்மண குலத்தில் ஆவிர் பவித்து ஆயர் குலத்தை ஆஸ்தானம் பண்ணினாள்
தூ மணி மாடத்து -உட் கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டிடே
சுற்றும் விளக்கு எரிய -ஜ்ஞான விளக்கு -சாக்கியம் கற்றோம் -யான் அறிந்தவாறு ஆர் அறிவார் -என் மதிக்கு விண் எல்லாம் உண்டோ விலை
தூபம் கமழ -பரிமளம் -மறந்தும் புறம் தொழாதவர் –வலத்திருவடி பெருவிரல் கண்ணைத் திறந்து நெற்றிக்கண் திறந்த
-பெரும் தீயைக் கிளப்பி விட்டு புகை சூழப் பண்ணி
துயில் அணை மேல் கண் வளரும் -நாகணைக் குடந்தை –கிடக்குமாதி நெடுமால் –
துயில் அணை மேல் கண் வளரும் மாமானுடைய மகளே -மஹா மகன் -யதோத்தகாரி ஆராவமுத ஆழ்வார்
மாமீர் -இவருக்கு ஞான போதம் அருளிய –பேயாழ்வார் -மாமீர் என்கிறது
கிருஷ்ணா நாம் வ்ரீஹீனாம் நக நிர்ப்பின்னம் -ஊமையோ -செவிடோ அக்ரபூஜை -சிசுபாலா பிரப்ருதிகள் வசையைக் கேளாமல்
அனந்தல் -பரமைகாந்தி -புற விஷயங்களில் நெஞ்சு செலுத்தாமல் -தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழி பட்டும்
பூசித்தும் போக்கினேன் போது என்றும் தொழில் எனக்கு தொல்லை மால் தன்னாமம் -ஏத்த பொழுது எனக்கு மற்று அதுவே போதும் –
மந்திரப் பட்டாளோ -இவர் ஒருவருக்கு தான் பேயாழ்வார் இடத்தில் மந்திரப் பட்டது பிரசித்தம்
மா மாயன் -மாயம் என்ன மாயமே -மாயமாய மாக்கினாய் உன் மாய முற்றும் மாயமே -மாதவன் -மாதவனை ஏத்தாதார் ஈனவரே
வைகுந்தன் -வைகுந்தச் செல்வனார் சேவடி மேல் பாட்டு

நோற்றுபேயாழ்வார் -திருக்கண்டேன் -மற்ற இருவரும் விளக்கு ஏற்ற -இவரே வாசல் திறவாதார் –நாற்றத் துழாய் முடி
-இரண்டாம் பாசுரம்–பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அடுத்து -மலராள் தனத்துள்ளான் தண் துழாய் மார்பன் –
-நிகமத்தில் தண் துழாய் தார் வாழ் வரை மார்பன் –நாராயணன் -திருத் துழாய் -கண்ணன் சேர்த்து பாசுரம் உண்டே
நாமம் பல சொல்லி நாராயணா வென்று நாம் அங்கையால் தொழுதும் நன்னெஞ்சே வா மருவி மண்ணுலகம் உண்டு
உமிழ்ந்த வண்டறையும் தண் துழாய் கண்ணனையே காண்க நம் கண்
-கும்பகர்ணன் தோற்றது –அகஸ்த்ய கும்ப சம்பவ -கும்பத்தை ஜன்ம பூமியாக -தஷிண திக்குக்கு தலைவர் அவர் -இவர் தமிழ் தலைவன்
இவரது திருவந்தாதியிலும் –நடுவில் -அவனே இலங்கா புரம் எரித்தான் எய்து –என்றும் -எய்ததுவும் தென் இலங்கை கோன் வீழ –
அரும் கலமே -எம்பெருமான் மிதுனம் பெற்ற அருள் -சத்பாத்ரமே -திருக் கண்டேன் –இத்யாதி
தேற்றமாய் வந்து திற -பேய்த் தனமாக வராமல் என்றபடி –

யோநிஜ்த்வம் என்னும் குற்றம் இல்லாத -கோவலன் -திருக் கோவலூர் ஸூ சகம் -மூவரில் பொற் கொடி பூதத்தாழ்வார்
கோல் தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே மால் தேடி ஓடும் மனம்
கணம் -வடசொல்லில் சிறிய -வெண்பாவில் பாடி அருளி –முதல் திருவந்தாதி கறவைக் கணம் –
இரண்டாம் திருவந்தாதி சேர்ந்து கறவைக் கணங்கள் -மூன்றாம் திருவந்தாதி சேர்த்து கற்றுக் கறவை கணங்கள் பல
செற்ற திறல் அழியச் சென்று செருச் செய்யும் –
தீர்த்த கரராமின் திரிந்து -என்றார் புற்றரவல்குல்-இடை அழகு –ஞானம் பக்தி வைராக்கியம் -இடையில் பக்தி
அன்பே தகளியா -தொடங்கி–யாமுடைய அன்பு -நிகமித்து
புன மயில் பொழில் இடத்தே வாழும் மயில் இவரும் திருக் கடல் மல்லை -கடி பொழில் சூழ் கடல் மல்லை
சுற்றத்து தோழிமார் –சுற்றம் பொய்கை பேய் ஆழ்வார் தோழிமார் மற்றைய ஆழ்வார்கள்
முகில் வண்ணன் பேர் பாட -உலகு ஏழும் முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் பூம் பாடகத்து உள்ளிருந்தானை ஏத்தும் என் நெஞ்சு
புன மயில் முகில் வண்ணனைத் தானே பாடும்

நங்காய் -வனச மலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே   -தாமரைப் பூவில் தோன்றிய பொய்கை யாழ்வார்
நனைத்து இல்லம் சேறாக்கும் -பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி  அழுத -கண்ண நீர் கொண்டு அரங்கன் கோயில் திரு முற்றம் சேறு செய் தொண்டர் -இவர் இல்லம் பொய்கையும் சேறானது தானே
கனைத்து -முதலிலே அருளிய ஆழ்வார் -அங்கியான நம்மாழ்வாருக்கு அங்கமான இவர் கனைத்த படி
இளம் கற்று எருமை -எருமை மகிஷி –தேவ தேவ திவ்ய மகிஷி -இவரும் தாமரை மலரில் திருவவதரித்து
இளம் கன்றுடைய -இவர் மாத்ரு ஸ்தானம் மற்ற ஆழ்வார்கள் வத்சம்
கன்றுக்கு இரங்கி -வையத்து அடியவர்கள் வாழ அருளிச் செயல் நினைத்து முலை வழியே நின்று பால் சோர -பகவத் குணங்களை நினைத்தவாறே ஹர்ஷம் உள்  அடங்காமல் அருளிச் செயல்கள் வெளி வந்த படி
பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி -பொய்கை என்பதால்
திருக் கோவலூர் வாசல் கடை பற்றியதும் ஸூ சகம்
சினத்தினால் –ஸ்ரீ ராம சரிதை -வாளரக்கன் நீண் முடியை பாதமத்தால் எண்ணினான் பண்பு -நாமே அறிகிற்போம் நன்னெஞ்சே -மனத்துக்கு இனியானை
இனித் தான் எழுந்திராய் -பழுதே பல பகலும் போயின என்று இழந்த நாளைக்கு கூப்பிடுகிறவனுக்கு உறங்க விரகு இல்லையே
அனைத்து இல்லாதாரும் அறிந்து -அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன்
நல செல்வன் தன்னுடைய கை -நம் ஆழ்வார் உடைய மதுர கவி ஆழ்வார் -நல செல்வன் எம்பெருமானார் தங்கை ஆண்டாள் என்றுமாம்

போது அரிக் கண்ணினாய் -புஷ்பங்களை ஹரிப்பதில் திருஷ்டி கொண்டவர் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் துளபத் தொண்டாய
தொல் சீர் தொண்டர் அடிப் பொடி -தொடையொத்த துளபமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள்
பாவாய் -பதி வரதா சிரோ மணி –அரங்கனுக்கே -சோழியன் கெடுத்தான் காணும்
புள்ளின் வாய் கீண்டானை கண்ணன் ராமன் கீர்த்திமை பாடி -கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை -மா முனி வேள்வியைக் காத்து அவபிரதமாட்டிய வடுதிறல் அயோத்தி எம்மஅரசே அரங்கத்தம்மா –சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான் –
-கற்றினம் மேய்த்த எந்தை கழல் இணை பணிமின் நீரே
பிள்ளைகள் எல்லாம் –பாவைக் களம் புக்கார் -இரவியர் –மணி நெடும் தேரோடு இவரோ –அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று சுடர் ஒளி பரந்தன
பள்ளிக் கிடத்தியோ -அரங்கத்தம்மா பள்ளி எழுது அருளாயே
நன்னாளால் மார்கழி கேட்டை திருவவதாரம்
கள்ளம் தவிர்ந்து -சூதனாய் கள்வனாய் –கள்ளமே காதல் செய்து -கள்ளத்தேன் உன் தொண்டாய்-பொன் வட்டில் களவு விருத்தாந்தம்
பூம் பொழில் வாசம் -புள்ளும் சிலம்பின குள்ளக் குளிர –குளித்து மூன்று அனலை -ஓம்பும் -இத்யாதி –

நங்காய் குண பூரணை -பாரதந்த்ர்யம் மிக்க திருப் பாண் ஆழ்வார் -லோக சாரங்க முனிவர் தோள்களிலே ஏறிக் கொண்டாரே
நாணாதாய் நாண் அஹங்காரம் செருக்கு இல்லாமல் -அடியார்க்கு என்னை ஆட்படுத்திய விமலன்
நாவுடையாய் -நாவினில் நின்று மலரும் ஞானக் கலைகள்
பாண் பெருமாள் பாடிய தோர் பாடல் பத்தும் பழ மறையின் பொருள் என்று பரவுமின்கள்
புழக்கடை தோட்டத்திலே வாழ்ந்தவர்
கோயில் திரு மஞ்சனக் காவேரி அருகே வாழ்ந்தவர் வாவி -நீர் நிலை
ஒரு வாய் மலர மற்று ஒரு வாய் மூடின படி ஐயோ அபசாரம் பட்டோமே லோக சாரங்கர்
சன்யாசி பிரஸ்தாபம் இவர் சரிதையில்
சங்கிடுவான் சங்கம் பலர் அறியும்படி
எங்களை –எழுப்புவான் –எழச் செய்கை தூக்கிக் கொள்கை
கையினார் சுரி சங்கு அனல் ஆழியார் –கரியவாகிப் –அப்பெரியவாய கண்கள் சங்கோடு சக்கரம் ஏந்திய –பங்கயக் கண்ணானைப் பாட

எல்லே -சம்பாஷனை உண்டே திருமங்கை ஆழ்வார் இரு தோழிகள் பாடும் பாசுரங்கள் நிறைந்தவை
இளம் கிளியே –கிளி போல் மிழற்றி நடந்து –மென் கிளி போல் மிழற்றும் என் பேதையே
வல்லை –ஆசுகவி சித்ர கவி மதுர கவி விஸ்தார கவி
உன் கட்டுரைகள் -வாசி வல்லீர் -வாழ்ந்தே போம் நீரே
நின் திரு எட்டு எழுத்தும் கற்று நாண் உற்றத் உன் அடியார்க்கு அடிமை
மடலூராது ஒழியேன் நாண் -உனக்கு என்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ -கடைக்குட்டி ஆழ்வார்
வல்லானை கொன்றானை -கவள யானை கொம்பொசித்த கண்ணன்
அரட்ட முக்கி அடையார் சீயம் கொற்ற வேல் பரகாலன் மாற்றாரை மாற்று அழிக்க
மாயன் -மாயனைப் பாடிய மாயன் அன்றோ மாயர்கள் நால்வர் நீர் மேல் நடப்பான் நிழலில் ஒதுங்குவான் தோழா வழக்கன் தாள் உஊதுவான்
புத்த விக்ரஹம் கூட வைதிகமாக்கிய மாயம் உண்டே

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: