ஸ்ரீ யதிராஜ விம்சதி -17-18-19-20– ஸ்லோஹங்கள் –ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் வியாக்யானம்–

அவதாரிகை –

நீர் இப்படி நம்மை நிர்பந்திக்கிறது என் –
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் ஈஸ்வரன் அன்றோ கடவன் -அது நமக்கு பரமோ என்ன
அவனும் தேவரீருக்கு சொல்லிற்று செய்யும்படி வச்யனாய் யன்றோ இருப்பது –
ஆகையாலே தேவரீரே சக்தர் என்கிறார் —
ஸ்ருத் யக்ரவேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப-இத்யாதியாலே

ஸ்ருத் யக்ரவேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப
ப்ரத்யஷ தாமு பக தஸ்த்விஹா ரங்க ராஜ
வச்யஸ் சதா பவதி தே யதிராஜ தஸ்மாத்
சக்தஸ் ஸ்வகீய ஜன பாப விமோசநே த்வம்–17-

ஸ்ருத் யக்ர –
என்றும் ஒக்க சர்வராலும் குரு முகேன கேட்க்கப் படா நின்ற ஸ்ருதிகள்
ஸ்ருதிகள் யாவன –
ருக் யஜூஸ் சாம அதர்வண ரூபேண நாலு வகைப் பட்டு இருந்துள்ள வேதங்கள்
அவைகளுடைய அக்ரங்கள் உண்டு -வேதாந்தங்கள் –
அவை யாவன -புருஷ ஸூக்த-நாராயண அனுவாகாதிகள் -அவற்றாலே
சஹஸ்ர சீர்ஷா புருஷ சஹஸ்ராஷஸ் சஹஸ்ர பாத் -என்றும்
புருஷ ஏவேதம் சர்வம் -என்றும் –
அணோர் அணீயான் மஹதோ மஹீயான் ஆத்மா குஹாயாம் நிஹி தோஸ்ய ஜந்தோ -என்றும்
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தரா-என்றும்
ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹத பாபமா திவ்யோ தேவ ஏகோ நாராயணா -என்றும்
சத்ய காமஸ் சத்ய சங்கல்ப -என்றும்
பாதோஸ்ய விஸ்வா பூதானி த்ரிபாதஸ் யாம்ருதம் திவி -என்றும்

தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் தாள்கள் ஆயிரத்தாய்
பேர்கள் ஆயிரத்தாய் -8-1-10- என்றும்
ஆமவை யாயவை நின்றவர் அவரே –1-1-4-என்றும்
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன் -1-1-10- என்றும்
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறத்துள்ளான் – 8-8-2-
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-10- என்றும்
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ -10-10-10- என்றும்
மூ வுலகும் வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தார்-8-7-9- -என்றும்
அவை முழுதுண்ட பரபரன் -1-1-8–என்றும்
குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1- என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி –1-1-1- என்றும்
அமரர்கள் ஆதிக் கொழுந்தை -1-7-4- என்றும்
படர் பொருள் முழுவதுமாய் யவை யவை தொறும் உடன் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-7- என்றும்
பரிவதில் ஈசனை -1-6-1- என்றும்
பரஞ்சோதி -3-1-3- என்றும்
எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசன் -3-3-3- என்றும்
வண் புகழ் நாரணன் -1-2-10- என்றும்
வாழ் புகழ் நாரணன் –10-9-1- என்றும்
அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது -1-2-7-இத்யேவ மாதிகளாலே —

வேத்ய
அறியத் தக்கவைகளாய்-வேதைஸ் ச சர்வைர் அஹமேவ வேதே -ஸ்ரீ கீதை -15-15- என்னக் கடவது இறே
இத்தால் வேதங்கள் நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்ம பரங்கள் என்கிற பஷம் நிரஸ்தம்

நிஜ –
தொல் புகழ் -3-3-3- என்றும்
ஸ்வாபாவகீ ஜ்ஞான பல க்ரியா ச –என்றும்
ஸ்வா பாவிக அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கனௌக மஹார்ணவ-என்கிறபடியே ஸ்வ கீயங்களாய்-
இத்தால் உபாசன தசையில் குணங்கள் ப்ரஹ்ம நிஷ்டங்களாய்த் தோற்றுகிறது இத்தனை போக்கி
ஸ்வத ப்ரஹ்மத்தில் குணங்கள் இல்லை என்கிற பஷம் வ்யுதஸ்தம்

திவ்ய –
ஹேய ப்ரத்ய நீகங்களான-என்னுதல் –
ஸ்வரூப விக்ரஹ பிரகாசகங்கள் என்னுதல்

குண ஸ்வரூப –
இவ்விரண்டும் மற்றை இரண்டுக்கும் உப லஷணமாய்-ஸ்வரூப ரூப குண விபூதிகளை உடையனாய் என்கிறது

குணங்களாவன –
ஜ்ஞானானந்த அமலத்வாதிகளும் -ஜ்ஞான சக்த்யாதிகளும் வாத்சல்ய சௌசீல்யாதிகளும் –
சௌந்தர்ய சௌகுமார் யாதிகளும் –

ஸ்வரூபம் ஆவது
குண விக்ரஹ விபூதிகளுக்கு அபாஸ்ரயமாய்-
பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய -என்றும் –பரஞ்சோதி நீ பரமாய் -3-1-3- என்றும் சொல்லுகிறபடியே
நிரவதிக தேஜோ ரூபமான திவ்யாத்ம ஸ்வரூபம்

விக்ரஹங்கள் ஆவன –
அஜாய மா நோ பஹூதா விஜாயதே –என்றும்
ச உஸ்ரேயான் பவதி ஜாயமான -என்றும்
இச்சாக்ருஹீதாபி மதோரு தேக -ஸ்ரீ விஷ்ணு புரா-6-7-84- என்றும்
பிறப்பிலியாய் -திரு நெடும் -1- என்றும்
சன்மம் பல பல செய்து -3-10-1- என்றும்
சூழல் பல பல வல்லான் -1-9-2- என்றும் சொல்லுகிறபடியே
கர்மத்தால் அன்றியே தம் திரு உள்ளத்தாலே பரிக்ருஹீதங்களான அப்ராக்ருத திவ்ய சம்ஸ்தானங்கள்

விபூதிகள் ஆவன –
போக லீலா அசாதாரணங்களான நித்ய விபூதியும் லீலா விபூதியும்

ஸ்ருத் யக்ரவேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப–என்கையாலே பரத்வம் சொல்லப் பட்டது –
வேதாந்த வேத்யன் இறே பரனாகிறான்

ப்ரத்யஷ தாமுபகத –
என்றும் ஒக்க ஓலைப் புறத்தில் கேட்டுப் போகை யன்றிக்கே கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி
கண்ணுக்கு விஷய பூதனான
உபகத -என்கையாலே
தூரத்தில் சமுதாய தர்சனம் யாகாமல் யாவதவயவ சோபையையும்-தனித் தனியே கண்டு அனுபவிக்கும் படி
சந்நிஹிதனாய் கண்ணுக்கு விஷயமான படியைச் சொல்லுகிறது
இது தான் பரம சாமா பன்னரான நித்ய ஸூ ரிகளுக்கோ என்னில்

இஹ
இருள் தரும் மா ஞாலமான இத் தேசத்திலே -கிடீர் அவன் சகல மனுஜ நயன விஷய தாங்கதனான படி -என்கிறார்
இத்தால் சௌலப்யமும் வாத்சல்யமும் சௌசீல்யமும் சொல்லப் படுகிறது
இன்னார்க்கு என்று விசேஷியாமை யாலே இத் தத்வம் சர்வ சமாஸ்ரயணீயம் என்கிறது –

பிரத்யஷதாம் உபக தஸ்து
வேதாந்த வேத்யனாய் -சர்வ ஸ்மாத் பரனானவன் காணும் இத் தத்வத்துக்கு சௌலப்யமே நிரூபகம் என்னும் படி
அனைவரும் கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி ப்ரத்யஷ விஷயமானது என்கிறார்

ரங்க ராஜ –
பரம பதத்தில் நின்றும் சம்சாரி சேதனர்க்கு காட்சி கொடுக்கைக்காக -அவர்கள் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி
ஸூ லபனாய் திரு வரங்கத்திலே சாய்ந்து அருளுகையாலே வந்த புகரை உடையவன் என்னுதல் –
ரங்க ராஜ –
அவன் ஒன்றை அபிமாநிப்பது தனக்கு நிரூபகம் என்னலாம் படி காணும் என்கிறார் –
ரங்க ராஜ –
பெரிய பெருமாள் ஆனவர்

வஸ்யஸ்
சஞ்ஜோஹம் த்வத் பிரதீ ஷோஸ்மி-என்கிறபடி சொல்லிற்றுச் செய்கையாலே -க்ருத சங்கல்பனாய் –
எதிர்த்தலையில் நியமனத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் படி காணும் வஸ்யராகிறார்

சதா
இது தான் ஒரு கால விசேஷத்திலே அன்றிக்கே சர்வ காலமும் என்கிறார்

பவதி –
இப்படி வஸ்யராய் இருக்கை அவருக்கு சத்தை பெற்றால் போலே காணும் இருப்பது என்கிறார் –

வஸ்யஸ் சதா பவதி –
இவ்வஸ்யதைக்கு ஷண கால விச்சேதம் வரிலும் அவனுக்கு சா ஹானி இத்யாதியில் சொல்லுகிறபடியே சத்தை
குறையும்படி காணும் இருப்பது என்கிறார் –பக்தா நாம் -ஜிதந்தே -1- என்று இ றே அவன் இருப்பது
இது தான் ஆருக்கு என்னில்

தே -யதிராஜ தஸ்மாத் –
மற்றை யாரேனுக்கும் யானால் அடியேனுக்கு பிரயோஜனம் என்
உலகோர்கள் எல்லாம் அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணறு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினர் –41-என்கிறபடியே
ஸ்வ அவதார மாத்ரத்தாலே சகல சேதனரையும் பவதீயர் ஆக்க வல்ல சக்தியை உடைய தேவரீர்க்கு என்னுதல்
தர்ச நாதே வ சாதவ -இறே –அ நாரத்தம் ஆர்த்ரம் -என்றது ததீய அவதாரத்துக்கும் ஒக்கும் இறே
ஜ்ஞாநீத்வாத் மைவ மே மதம் -ஸ்ரீ கீதை -7-18- என்கிறபடியே
எம்பெருமானாலே தமக்கு தாரகராக அபிமானிக்கப்பட்ட தேவரீர்க்கு என்னுதல்

ரங்க ராஜஸ்து தே வஸ்யோ பவதி –
முன்பு எல்லாம் பரத்வாதிகளை இட்டு நிரூபிக்கலாம் படி இருந்தவன் -இப்போது தேவரீர்க்கு வஸ்யனாகிறது
முன்பும் இவனுக்கு இதுவே ஸ்வரூபம் என்னும் படி காணும் என்கிறார்
அன்றிக்கே –
தே -என்று சதுர்தியாய் இவன் இப்படி வஸ்யனாகிறது ஸ்வார்த்தம் அன்றிக்கே
தேவரீர் முக விகாசமே பிரயோஜனமாக என்னுமாம் –

யதி ராஜ
அவனுடைய ராஜத்வம் போலேயோ தேவரீருடைய ராஜத்வம் –
அவனுடைய ராஜத்வம் ரங்க நிரூபிதம் –தேவரீருடைய ராஜத்வம் ஜிதேந்த்ரிய நிரூபிதம் -அன்றிக்கே
யதி ராஜ
இதுவன்றோ தேவரீர் இந்த்ரிய ஜயத்தால் பெற்ற ராஜத்வம் –

நிரபேஷம் முநிம் சாந்தம் நிர்வைரம் சம தர்சனம்
அநு வ்ரஜாம் யஹம் நித்யம் பூயயே தங்கரி ரேணுபி-என்கிறபடியே
இதர விஷயத்தில் ஸ்ப்ருஹை இல்லாதவனாய் -அத ஏவ பகவத் விஷய மனன சீலனாய் –
அத ஏவ சப்தாதி விஷய பிரவண ரஹிதனாய்-
நிரபேஷம் -சாந்தம் என்கிற இரண்டு விசேஷணங்களாலும்
அந்தர இந்த்ரிரிய பாஹ்ய இந்த்ரிய நிக்ரஹங்களைச் சொல்லுகிறது
அத ஏவ குரோத ரஹிதனாய் வா ஸூ தேவஸ் சர்வம் -ஸ்ரீ கீதை -7-19-என்கிறபடியே
ததீயத்வேன ப்ரஹ்மாதி ஸ்தம்ப பர்யந்தமான சமஸ்த வஸ்துக்களிலும் சம தர்சனம் உடையானாய் இருக்கும் அதிகாரியை –
அவனுடைய திருவடிகள் சம்பந்திகளான பராகங்களாலே தான் பவித்ரனாகக் கடவேன் என்று
சர்வ நியந்தாவான தான் என்றும் ஒக்க அனுசரித்து நடவா நின்றேன் என்று அவன் தானே சொல்லும் படி
அவனை வசீகரிக்கும் படியாய் இருக்கை

தஸ்மாத்
சர்வ ஸ்மாத் பரனான பெரிய பெருமாள் உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் தேவரீருக்குக் கொடுத்து
பரவா நஸ்மி -ஆரண்ய -15-7- என்கிறபடியே தேவரீருக்கு பர தந்த்ரராய் இருக்கும் படியாலே

சக்த
சமர்த்தராகிறார்
தேவரீருக்கு சக்தி இல்லாமையாலே தவிர வேண்டுவது இல்லை என்று கருத்து -எதிலே என்னில்

ஸ்வகீய ஜன பாப விமோசநே –
தேவரீர் திரு உள்ளத்தாலே மதீயன் என்று அபிமானிக்கப் பட்ட ஜனத்தினுடைய ப்ராப்தி பிரதிபந்தக
சகல பாப விமோசனத்தில் -என்கிறார்
தேவரீர் மதீயன் என்று அபிமானிக்க -தேவரீருக்கு பவ்யனான ஈஸ்வரன் இவன் இடத்தில் மிகவும்
அனுக்ரஹத்தை பண்ணுமாகையாலே-
தந் நிக்ரஹ ரூபமான பாபம் தன்னடையே போம் –
தேவரீர் அபிமானியா விடில் செய்வது என் என்று கருத்து –
குருணா யோ அபி மன்யேத குரும் வா யோபிஸ் மந்யதே தாவு பௌ பரமாம் சித்திம்
நியமாதுப கச்சத -என்னக் கடவது இறே

த்வம்-
க்ருபயா நிஸ் ச்ப்ருஹ-என்கிறபடியே க்யாதி லாப பூஜா நிரபேஷராய்-க்ருபா பிரதானரான தேவரீர் கிருபை
இல்லா விடில் செய்வது என்-என்று கருத்து

த்வம் பாப விமோசனே சக்த –
கடாதி பதார்த்தங்களுக்கு கம்பு க்ரீவாதி மத பதார்த்தங்களிலே சக்தி யாகிறாப் போலே தேவரீருக்கு
பாப விமோசனத்திலே இறே சக்தி
குருரிதி ச பதம் பாதி நான் யத்ர-என்னக் கடவது இறே –
இத்தால் இவருக்கு பாப விமோசகத்வம் ஸ்வரூபம் என்கிறது

தஸ்மாச் சக்தஸ் ஸ்வகீய ஜன பாப விமோசநே த்வம் –
சக்தி இல்லாமையை இட்டுத் தவிர ஒண்ணாது –
ஸ்வரூபம் இல்லாமையை இட்டுத் தவிர ஒண்ணாது –
கிருபை இல்லாமையை இட்டுத் தவிர ஒண்ணாது –

ஆகையாலே அடியேனுடைய சப்தாதி விஷய அனுபவ ருசியைப் போக்கி –
தேவரீர் சம்பந்தி சம்பந்திகளுடைய சரமாவதி தாஸ்ய ருசியை உண்டாக்கித் தர வேணும் -என்கிறார் –

———————————————————————————-

அவதாரிகை –

சாஸ்திரங்கள் எல்லாம் ஒரு தலையாக சாபராத சேதனரக்கு-பகவத் ஷமை ஒழிய மற்றொரு புகலிடம் இல்லை
என்று சொல்லா நிற்க நீர் நம்மை அபராதங்களைப் போக்கி தர வேணும் என்றும்
தேவரீர்க்கு அதில் சக்தி உண்டு என்றும் நிபந்தியா நின்றீர் இது சங்கதமோ என்ன –
அந்த ஷமை தானும் தேவரீருடைய ப்ரார்த்தநா சித்தமாய் தேவரீர் சம்பந்திகளுக்கு ரஷகமாய்
இருக்கையாலே சங்கதம் என்கிறார்–
கால த்ரேய அபி கரண த்ரய நிர்மிதாதி –இத்யாதியாலே

கால த்ரேய அபி கரண த்ரய நிர்மிதாதி
பாப க்ரியஸ்ய சரணம் பகவத் ஷமைவா
சா ச த்வயைவ கமலாரமணே அர்த்தி தாயத்
ஷேமஸ் ஸ ஏவ ஹி யதீந்திர பவஸ் ஸ்ரிதா நாம் –18-

கால த்ரேய அபி –
பூத பவிஷ்யத் வர்த்தமான ரூபேண-மூன்று வகைப் பட்டு இருந்துள்ள கால த்ரயத்திலும்
கரண த்ரய –
மநோ வாக் காய ரூபேண மூன்று வகைப் பட்டு இருந்துள்ள கரண த்ரயத்தாலே
நிர்மிதாதி பாப க்ரியஸ்ய –
செய்யப்பட மஹா பாதக உபபாதங்களை உடையவனுக்கு
கால த்ரேய அபி –
ஒரு காலம் இல்லா ஒரு காலத்திலே யாகிலும் -சாதன அனுஷ்டானம் இன்றிக்கே எல்லாக் காலத்திலும்
பாபங்களையே யாய்த்து இவன் செய்வது
கரண த்ரய –
அது தான் ஒவ்வொரு கரணத்தால் அன்றிக்கே கரண த்ரயத்தாலும் யாய்த்து பாபங்களைச் செய்வது

நிர்மிதாதி
சங்கல்பித்து விடுகை யன்றிக்கே அனுஷ்டான பர்யந்தமாகச் செய்வது -அன்றிக்கே
ஆரம்பித்து விடுகை யன்றிக்கே முட்ட முடிய வாய்த்துச் செய்வது

அதி பாப க்ரியஸ்ய-
பிராயச் சித்த அனுபவ விநாச்யங்களான பாபங்களை செய்கை மாத்ரம் அன்றிக்கே —
அவற்றால் நசியாத பாபங்களையும் யாய்த்துச் செய்வது
பிராயச் சித்த அனுபவ விநாச்யம் இல்லாத பாபம் உண்டோ என்னில்
கோக் நே சைவ ஸூ ராபே ஸ ஸ்தேய பக்ந வ்ரதே ததா -நிஷ்க்ருதிர் விஹிதா சத்பி கருதக் நே நாஸ்தி நிஷ்க்ருதி -என்றும்
யத் ப்ரஹ்ம கல்ப நியுதா நு பவேப்ய நாஸ்யம் -என்றும் சொல்லுகையாலே உண்டு –
அதில் க்ருதக் நதையாவது
பிராயச்சித்த நாச்யம் யன்றிக்கே அனுபவ ஏக நாச்யமாய் இருக்கும் –

இனி பிராயச் சித்த அனுபவ நாச்யம் அல்லாததாய் –
புண்ய பாபங்களுடைய அனுஷ்டானத்துக்கு காரணமாய் உபாசக பர்யந்த
அனுதாவனமாய் இருப்பதொரு பாபம் உண்டு -அப்பாபத்தையும் யாய்த்து இவன் செய்வது –

கரண த்ரய என்கையாலே
இவன் செய்த குற்றம் எல்லாம் புத்தி பூர்வகம் என்கிறது —
நிர்மித என்கிறது பூத காலத்துக்கு சேருமே யாகிலும் -வர்த்தமான பவிஷ்ய காலங்களுக்கும் உப லஷணமாகக் கடவது –
க்ருதான் க்ரியமாணான் கரிஷ்யமாணாம்ச-என்று இறே ஸ்ரீ பாஷ்ய காரரும் அருளிச் செய்தது –
அன்றிக்கே –
பூத கால அபராதங்கள் போலே வர்த்தமான பவிஷ்யத் பாபங்களும் இன்னபடி செய்யக் கடவோம் என்று சங்கல்ப்பித்து
வைத்தவையாய் அவைதான் பாவன பிரகர்ஷத்தாலே அனுஷ்டித்தவை போலே தோற்றுகையாலே-நிர்மித -என்கிறார்
அதுவும் அன்றிக்கே –
ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே சஹச்ர ஸோ யன்னமயா வ்யதாதி -ஸ்தோத்ர ரத்னம் -23-என்றும்
பூர்வம் யத் சமபூத்ததேவ ஹி புநர் —பவேத் -என்றும் சொல்லுகிறபடியே
வர்த்தமான பவிஷ்யத் பாபங்களும் பூத காலத்தில் பண்ணின பாபங்களுக்கு சஜாதீயங்கள் யாகையாலே –
நிர்மித -என்கிறார் ஆகவுமாம் –
அங்கன் அன்றிக்கே –
கால த்ரயமாவது -ப்ராதர் -மத்யந்தி ந சாய்ந்த ரூபமான காலமாய் –
அபி -சப்தம் அநுக்த சமுச்சாயகமாய்
காலத் த்ரேயேஅபி என்று பஞ்ச காலத்திலும் என்னவுமாம் –
ப்ராஹ்மே முஹூர்த்தே ஸோத்தாய சிந்தயேத் ஆத்மனோ ஹிதம் -என்றும் –
ப்ராதர்த்யூத பிரசங்கே ந மத்யாஹ்னே ஸ்திரீ பிரசங்கே தாராத் ரௌ சோர பிரசங்கே ந என்றும் –
யத்சாயம் ப்ராதர்மத் யந்தி நம் ச -என்றும்
இத்யேவ மாதிகளாலே பகவத் த்யான ஆராதன குண அனுபவாதிகளுக்கு உபயுக்ததயா சாஸ்த்ர விஹிதமான
ப்ராதர் மத்யந்தி ந சாய்ந்த ரூபமான கால த்ரயத்திலே -என்னுமாம் –

பரேத் யுபச்சிமே யாமே யாமின்யாஸ் சமுபஸ்தி தோ பிரபுத்ய சரணம் கதவா பரம் குரு பரம்பராம் -என்று தொடங்கி
தத் ப்ரத்யுஷ சிஸ் நாத்வா க்ருத்வா பௌர்வாஹ்ணி கீ க்ரியா யதீந்திர சரணத் வந்தவ ப்ரவணே நைவ சேதஸாம்
அத ரங்க நிதிம் சமயக் அபிகம்ய நிஜம் பரப்பும் ஸ்ரீ நிதானம் சனைச் தஸ்ய சோதயித்வா பதத்த்வயம் ஆராத்ய ஸ்ரீ நிதிம்
பஸ்சாத் அனுயாகம் விதாய ச ததஸ் சேதஸ் சமாதாய புருஷே புஷ்கரே ஷணே உத்தம் சித கரத் வந்தவம் உபவிஷ்ட முபஹ்வரே
ததஸ் ஸூ பாஸ்ரயே தஸ்மின் நிமக்னம் நிப்ருதம் மன யதீந்திர பிரவணம் கர்த்தும் யதமானம் நமாமி தம் -என்றும்
சாய்ந்த நம் தத க்ருத்வா சம்யகாராதனம் ஹரே -என்றும் இப்படி இறே இவர் விஷயமான தினசரியிலே
அப்பா பஞ்ச கால பராயணத்வத்தை அருளிச் செய்தது –
இத்தால் -அக்ருத்ய கரணம் மாத்ரம் அன்றிக்கே க்ருத்ய அகர்ண ரூப பாபமும் உண்டு என்கிறது –

அங்கனும் அன்றிக்கே –
தேஹாத்மா அபிமானியாய் இருக்கும் காலமும் -ஸ்வஸ்மிந ஸ்வா தந்த்ர்ய அபிமானியாய் இருக்கும் காலமும்
அந்ய சேஷமாய் இருக்கும் காலமும் என்று கால த்ரைவித்யம் சொல்லவுமாம்
அப்போது இம் மூன்று காலத்திலும்
தத்தத் அபிமான அனுகுணமாக சாத்திய சாதனங்களிலே ஸ்வயமே பிரவர்த்திக்கை நிஷ்க்ருஷ்ட ஸ்வரூப விரோதி யாகையாலும் –
தத்தத் அதிகார அணுகுண சாஸ்திர அதிக்கிரமம் வருகையாலும் பாபம் உண்டு என்று கொள்ள வேணுமாம்

அன்றிக்கே
தமக்கு பூர்வ காலத்திலும் சம காலத்திலும் தமக்கு உத்தர காலத்திலும் உள்ள சாபராத சேதனருக்கு என்றும் ஒக்க
பகவத் ஷமையே இஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹாரங்களுக்கு உபாயம் என்று அனுசந்திக்கிறார் ஆகவுமாம்

இப்படி இன்றிக்கே -கால த்ரயமாவது –
நாஸ்திகனாய்-சாஸ்திர வஸ்யன் அன்றிக்கே இருக்கும் காலமும்
ஆஸ்திகனாய் சாஸ்திர வஸ்யனாய் இருக்கும் காலமும் –
ஜ்ஞானாதிகனாய் ஸ்வரூப வஸ்யனாய் இருக்கும் காலமும் -என்று காலத்தை பேதித்து
இம்மூன்று வகைப்பட்டு இருந்துள்ள காலத்திலும் என்றும் சிலர் சொல்லுவார்கள் –

அவர்கள் பஷத்தில் நாஸ்திகனான தசையில் விதி நிஷேதங்களை அதிக்ரமித்து வர்த்திக்கையாலும் –
ஆஸ்திகனான தசையில் விதி பரதந்த்ரனாய் ஸ்வரூப விருத்தங்களைச் செய்கையாலும்
ஸ்வரூப வஸ்யனான தசையிலும் சாஸ்திர வஸ்யதை இல்லாமையாலே விதி நிஷேதங்களை அதிக்ரமித்து வர்த்திக்கையாலும்
அபராதம் உண்டு என்பார்கள் -அது கூடாது –
ஸ்வரூப வஸ்யனான தசையில் சாஸ்திர வஸ்யதை இல்லாமையாலே விதி நிஷேத அதிக்கிரமம் பாபமாக மாட்டாது
அத ஏவ துஷ்க்ருதா சரணத்தால் அனுதாபம் பிறந்து ஸ்வரூப வஸ்யன் ஆகையாலே ஸ்வரூப விருத்தங்களைச் செய்து
அனுதபிக்க விரகு இல்லை –
சாஸ்திர வஸ்யனுக்கு சாமான்ய விசேஷ ந்யாயத்தாலே ஸ்வரூப விருத்தமான விதி அதிக்கிரமம் கூடும்
இவன் தனக்கு விதி நிஷேத அதிக்கிரமம் ஸ்வரூப விரோதியாய் ராக பிராப்தம் ஆகையாலே தவிர விரகு இல்லை

ஸ்வரூப வஸ்யனுக்கு சாஸ்திர வச்யதை இல்லை என்கிறதும் கூடாது -ஸ்வரூப வஸ்யனுக்கு பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் உண்டு இறே-
அவர்களுக்கு விஷயம் பகவத் இஷ்ட அநிஷ்டங்கள் என்று கொள்ளும் அளவில் அவற்றை நேர் கொடு நேரே அறியப் போகாமையாலே
சாஸ்திர முகமாகவே அறிய வேண்டும் -அப்போது சாஸ்திர வச்யதை தன்னடையே உண்டாமாகையாலே
நாஸ்திகத் வாதிகளை இட்டு கால த்ரைவித்யம் சொல்லுகை அசங்கதம்-
சாஸ்திர வஸ்யதை உண்டாகில் இறே விசேஷ சாஸ்திர வஸ்யதை உண்டாவது
ஸ்வரூப வஸ்யனுக்கும் விதி பாரவஸ்யம் உண்டு -ஆகை இறே த்யஜ -வ்ரஜ -என்று த்யாக ஸ்வீ காரங்களை விதித்தது

அனுகூலங்களாக தோற்றுகையாலே ராக பிராப்தங்களாய் இருக்கும் -ஆகையாலே நாஸ்திகத் வாதிகளை இட்டு காலத்தைப் பிரிக்கும் போது
இரண்டு என்றே கொள்ள வேணும் -ஆகையாலே கால த்ரேயேபி என்றதுக்கு கீழ்ச் சொன்ன படியே பொருளாகக் கடவது –
பவிஷ்யத் காலம் சரணாகத யுத்தர காலமாகையாலே அதில் புத்தி பூர்வகம் கொள்ளும் அளவில் சாஸ்திர விரோதம் வாராதி என்னில் -வாராது
பூர்வம் மானசமாக சங்கல்பிதமான வற்றுக்கே உத்தர காலத்தில் ப்ராமாதிக அனுஷ்டானம் கூடுகையாலே –
அன்றிக்கே –
ஜாதேபி -கௌடில்யே சதி சிஷ்யாப்ய நகையன் -தத்வ சாரம் -என்கிறபடியே புத்தி பூர்வகமாக உத்தராகத்திலே
பிரவ்ருத்திக்கும் படி மாத்ருச கடின சித்தரும் உண்டாகையாலே பவிஷ்ய காலத்திலும் புத்தி பூர்வாகம் உண்டு என்னுமாம் –
அது ஷமா விஷயம் அன்றிக்கே சிஷா விஷயமாய் யன்றோ சொல்லப் படுகிறது என்னில் –
அந்த சிஷை தானும் –லகுர் தண்ட பிரபன்னச்ய ராஜ புத்ர அபராதவத் -என்கிறபடியே –
கல்ப கோடி சதே நாபி ந ஷமாமி வ ஸூ ந்தரே -என்னும்படியான பாபத்தை இஸ் சரீரத்தோடு அல்ப காலத்தில் அனுபவிக்கும் படி
பண்ணுகையாலே ஷமா கார்யமாகக் கடவது -ஆக கால த்ரயத்தாலும் சாபராதியான இச் சேதனனுக்கு

சரணம்
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் -இஷ்ட பிராப்திக்கும் தப்பாத உபாயம் –

பகவத் ஷமைவ-
ஆஸ்ரித கார்ய கரத்வோபயோகிகளான ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குணங்களை யுடையனான சர்வேஸ்வரன் உடைய
பொறுத்தோம் என்கிற ஷமை தானே –
ஏவ காரத்தாலே மற்று ஓன்று இல்லை என்கிறது –சரணாகதி தானும் ஷமாவ்யஞ்சகம் இறே –
இத்தை இறே ஷாம் யஸ்யஹோ ததபி ஸந்தி விராம மாத்ராத் -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -61-என்று ஆழ்வான் அருளிச் செய்தது

சா ச –
எப்பேர்பட்ட அபராதங்களுக்கும் புகலிடமாக பிரசித்தமான அந்த ஷமை தானும்

த்வயைவ
சம்சாரிகள் துர்கதி கண்டு பொறுக்க மாட்டாதே -இவர்கள் துர்கதியில் நின்றும் நிவ்ருத்தராய் ஸ்வரூப அனுரூபமான
தாஸ்யத்திலே அன்வயித்து வாழும்படி எங்கனே என்று கரை புரண்ட கிருபையை உடைய தேவரீராலேயே
ஏவ காரத்தாலே
இன்று ஒருவன் அறிவுடையவனாய் பிரார்த்திக்க வேண்டாத படி ஸ்வ ஆஸ்ரித சகல சேதன விஷயமாக
தேவரீராலே பிரார்த்திக்கப் பட்டது என்கிறது

இத்தால் ஸ்ரீ எம்பெருமானார் தாமே ஸ்வ சம்பந்தி சர்வ சேதன விஷயமாக பிரபத்தி செய்து அருளுகையாலே
தனித்து ஒருவர் பிரபத்தி பண்ண வேண்டா என்கிறது –
இவ்வர்த்தம் ஸ்ரீ எம்பெருமானார் தம் சரம தசையிலே ஸ்ரீ பெரிய பெருமாள் திரு முன்பே சென்று சேவித்து நிற்க அவ்வளவிலே
ஸ்ரீ பெரிய பெருமாளும் அருளப் பாடிட்டு ஓன்று சொல்வான் போலே இருந்தாயீ-என்ன
நாயந்தே அடியேன் சம்பந்தி சம்பந்திகளும் தேவரீர் சாமிக்கு விஷயராய் உஜ்ஜீவிக்கும் படி கிருபை செய்து அருள வேணும் என்ன
ஸ்ரீ பெருமாளும் அப்படியே யாகக் கடவது என்று அனுக்ரஹித்தார் என்று பிரசித்தம் இறே
நாம் பிரார்த்தமை யுண்டு -அவன் ஸ்வா தந்த்ர்யத்தால் செய்யா விடில் செய்வது என் என்ன –

கமலா ரமேண-
தேவரீர் சொல்லிற்றை மறுக்கும் விஷயத்திலேயோ தேவரீர் பிரார்த்தித்து
அவன் தேவரீர் பிரார்த்த படி செய்யா விடில் ஸ்ரீ பெரிய பிராட்டியார் அவனுக்கு முகம் கொடுப்பாளோ என்னுதல்
தேவரீர் பிரார்த்தனையை செய்விக்கும் சாஷி உண்டு என்னுதல் -கமலத்தில் திரு வவதரிக்கையாலே கமலை என்று
திரு நாமம் உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான ஸ்ரீ எம்பெருமான் இடத்திலே என்னுதல்
கஸ்ஸ மஸ்ஸ கமௌ கமௌ லாதீதி கமலா என்று வ்யுத்பத்தியாய் அத்தாலே ஸூக பிரதனான ஸ்ரீ ஈஸ்வரனையும்
ஜ்ஞான பிரதனனான சேதனனையும் உபதேசத்தாலும் சௌந்தர்யாதி களாலும் -ஸ்வ வசமாக்கிக் கொள்ளும்
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான ஸ்ரீ எம்பெருமான் இடத்திலே என்னுதல் –

அர்த்திதா
மநோ வாக் காயை -என்கிற சூர்ணிகையாலே பிரார்த்திக்கப் பட்டது

இதியத் –
என்கிறது யாதொன்று உண்டு

ச ஏவ
லிங்க வ்யத்யயம்-விதேய பிரதான்யத்தாலே ஸ்வ சம்பந்தி சர்வ சேதன விஷயமாக தேவரீர் –
மநோ வாக் காயை -என்று தொடங்கி-
க்ருதான் க்ரியமாணான் கரிஷ்ய மாணாம்ச சர்வா ந சேஷாத ஷமஸ்வ -என்று
இருவருமான சேர்த்தியிலே பிரார்த்தித்த பிரார்த்தனை தானே

ஷேம
ரஷை-ரஷையாவது -ஸ்வ சம்பந்திகளுக்கு சர்வ அநிஷ்டங்களையும் போக்கி ரஷகமாம் போலே தேவரீருடைய பிரார்த்தனையும்
தேவரீர் சம்பந்திகளுக்கு சர்வ அநிஷ்டங்களையும் போக்கி தானே ரஷகம் ஆகிறது –

பவஸ் ஸ்ரிதா நாம் –
ஸ்வ அனுவ்ருத்தி நிரபேஷராய் கிருபா மாத்திர பிரசன்னாசார்யாரான தேவரீரை ஆஸ்ரயித்தவர்களுக்கு -என்னுதல்
தேவரீர் சம்பந்தி பரம்பரையும் உஜ்ஜீவிக்கும் படி பகவத் விஷயீ காரம் பெற்ற தேவரீரை ஆஸ்ரயித்தவர்களுக்கு என்னுதல்
இத்தால் ஸ்ரீ எம்பெருமானார் சம்பந்தம் உண்டாகவே பகவத் ஷமை இவன் பிரார்த்திக்க வேண்டாத படி தன்னடையே யுண்டாம் என்கிறது –
இத்தால் ஈஸ்வர சம்பந்திகளுக்கு ஸ்வ அபராதங்களை ஈஸ்வரன் ஷமிப்பனோ ஷமியானோ என்று சம்சயிக்கவும் கூடும்
அஸ் சம்சயமும் இல்லை எம்பெருமானார் சம்பந்திகளுக்கு என்கிறது –
ஏவ காரத்தாலே இதா நீந்தனை பிரார்த்தனை ரஷகம் என்கிறது

ஹி
இவ்வர்த்தம் அடியேன் விண்ணப்பம் செய்ய வேணுமோ
அர்வாஞ்ச இத்யாதியால் பிரசித்தம் அன்றோ என்கிறார்
இத்தால் ஆசார்ய அபிமானமே உத்தாரகம் என்கிறது
இப்படி இவர் விண்ணப்பம் செய்த வாறே நம்முடைய யத்னம் சபலமாய்த்து என்று திரு உள்ளம் உகந்தபடி இருக்கக் கண்டு
ஸ்ரீ யதீந்திர
என்கிறார்
பவஸ் ஸ்ரிதா நாம்
ஸ்வ யத்னமே ஸ்வ ஆஸ்ரிதர் ரஷகமாம் படி இருக்கிற தேவரீர் சம்பந்திகளுக்கு என்னவுமாம் –

————————————————————————————

அவதாரிகை –

கீழ் அல்பாபி தொடங்கி இவ்வளவும் வர தம்முடைய தோஷ பூயஸ்வத்தையும்-
ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களையும்
பாப நிவ்ருத்தி பூர்வக பிராப்தி லாபத்தில் அபேஷையையும்-
பாபத்தைப் போக்கி அபேஷிதம் செய்கைக்கு அத்தலையில் சக்தி விசேஷத்தையும்
நிரபேஷ உபகாரகத்வத்தையும் விண்ணப்பம் செய்தவாறே திரு உள்ளம் உகந்து உமக்கு வேண்டுவது என் என்ன

நித்யம் யதீந்திர -என்கிற ஸ்லோஹத்தில் பிரார்த்தித்தபடியே நிரதிசய கைங்கர்யத்தைத் தர வேணும் -என்ன
அது முன்பே ஸ்ரீ திருமலை ஆழ்வார் உமக்கு தந்து அருளினாரே என்ன –
ஆகிலும் அத்தை தேவரீர் அநு தினமும் அபிவிருத்தமாம் படி செய்து அருளி
அதுக்கு விரோதியான யாவத் விஷய ப்ராவண்யமும் போக்கி யருள வேணும் என்கிறார் –

தாஸ்யத்தை அபிவிருத்தம் ஆக்குகையாவது -ததீய பர்யந்தம் ஆக்குகை
இத்தை இறே –உன் தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும் படி என்னை யாக்கி
அங்கு ஆட்படுத்தே -107-என்று அமுதனார் பிரார்த்தித்தது
ஆகில் –நித்யம் என்கிற ஸ்லோஹம் போம் வழி என் என்னில் –
வாசா -என்கிற ஸ்லோஹத்தில் தாம் பிரார்த்தித்த ததீய சேஷத்வம் தமக்கு அப்போதாக சித்தியாமையாலே
அதுக்கு மூலமான தச் சேஷத்வமும் போனதாகக் கொண்டு அத்தை பிரார்த்தித்தார் இத்தனை போக்கி
அதில் பர்யாப்தராய் அன்று –
இப்படிக் கொள்ளாத போது-தத் தாஸ தைக ரசதா அவிரதாம மாஸ்து-என்றதோடு விரோதிக்கும் இறே
ஆனால் இது புநர் உக்தமன்றோ என்னில்
ததீய சேஷத்வம் தச் சேஷத்வ வருத்தி ரூபம் என்கையாலும்
இது தமக்கு கேவலராக பிராப்தம் அன்றிக்கே சம்ப்ரதாய பிராப்தம் என்கையாலும்
புநர் உக்தம் அன்று ப்ராப்ய த்வித்வமும் இல்லையாம் –

ஸ்ரீ மன் யதீந்திர பவ தீய-(தவ திவ்ய)- பதாப்ஜ ஸேவாம்
ஸ்ரீ சைல நாத கருணா பரிணா மதத்தாம்
தாமன்வஹம் மம விவரதய நாத தஸ்யா
காமம் விருத்த மகிலஞ்ச நிவர்த்தய த்வம் –19-

ஸ்ரீ மன்
ஸ்வ சம்பந்த மாத்ரத்தாலே சர்வ அபராதங்களையும் பொறுத்து சர்வ சேதனரையும் சர்வேஸ்வரன் –
செய் தலைச் சங்கம் -75- என்கிற படியே அனுவர்த்திக்கும் படி
பகவத் விஷயீ காரம் பெருகையாலே வந்த ஸ்ரீ யை உடையவரே என்னுதல்

ஸ்ரீ ராமானுஜாய நம இதய சக்ருத் கருணீ தேயோ மா நமத் சர மதஸ்மர தூஷீ தோபி பிரேமாதுர
ப்ரியதமாம பஹாய பத்மாம் பூமா புஜங்க சய நஸ்த ம நு பிராதி -என்கிறபடியே
தம் திரு நாமத்தைச் சொன்ன மாத்ரமே கொண்டு
ஸ்ரீ யபதியானவன் அவள் தன்னையும் விட்டு எத்தனையேனும் தண்ணியரையும்
அனுவர்த்திக்கும் படி பகவத் விஷயீ காரத்துக்கு விஷயமான ஸ்ரீ மானே என்னுதல் –

அன்றிக்கே –
ஷேமஸ் ச ஏவ ஹி யதீந்திர பவஸ்ஸ்ரிதா நாம் -என்று இவர் விண்ணப்பம் செய்தவாறே –
இப்படி ஸ்வ பிரவ்ருத்தி சாமான்யத்தை விட்டு பர பிரவ்ருத்தி யேதங்கம் என்று இருப்பான் ஒரு அதிகாரி உண்டாவதே
என்று தம்மிடத்திலே ப்ரேமம் கரை புரண்டு இருக்கும் படியைக் கண்டு ஸ்ரீ மன் என்கிறார்
ஆசார்யனுக்கு சிஷ்ய விஷயத்தில் ப்ரேமம் இறே பரமமான சம்பத்து –
சிஷ்யனைக் கண்டால் அபிமத விஷயத்தைக் கண்டால் போலேயும் -என்று இறே பிள்ளை லோகாசார்யர்
ஸ்ரீ வசன பூஷணத்தில் அருளிச் செய்தது

யதீந்திர
தேவரீர் ஜிதேந்த்ரியரில் தலைவராய் இருந்தமையால் யன்றோ இவ் விஷயீ காரம் பெற்றது
ஜிதேந்த்ரியரில் தலைமை யாவது –
தமக்கு உண்டான இந்த்ரிய ஜெயம் ஸ்வ சம்பந்தி பரம்பரைக்கும் போரும்படி இருக்கை
இவ்வர்த்தம் –
ஸ்ரீ ராமானுஜாங்க்ரி சரணோஸ்மி -ஸ்ரீ வராத ஸ்தவம் -102–
பிதா மஹம் நாத முனி விலோக்ய -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -65- இத்யாதிகளிலே ஸூஸ்பஷ்டம்
இவர் இப்படி சம்போதித்த வாறே உமக்கு செய்ய வேண்டுவது என் என்ன

பவ தீய பதாப்ஜ ஸேவாம்
தேவரீர் சம்பந்திகளான திருவடித் தாமரைகளுடைய நித்ய கைங்கர்யத்தை பிரசாதித்து அருள வேணும் என்கிறார்
பவதீய
புண்யம் போஜ விகாசாய -என்கிறபடியே சர்வ பாப மூலமான அஹங்காரத்தைப் போக்கி –
ஸ்ரீ கௌஸ்துப ஸ்தாநீயரான ஆத்ம வஸ்துக்களை பவ தீயராக்கி அவன் திரு முக மண்டலத்தை விகசிப்பிக்கையே
பிரயோஜனமாக அவதரித்த தேவரீர் சம்பந்திகள் என்னுதல்
பரம பிராப்யரான தேவரீர் சம்பந்திகளான -என்னுதல்

பிராப்யத்துக்கு பரமத்வமாவது ஸ்வ அபேஷ அதிசயித ப்ராப்யத்வம் அன்றிக்கே இருக்கை –
பகவத் பிராப்யத்வம் அதிசயிதம் அன்றோ என்னில் அதுவும் இதிலே அந்தர்கதம் இறே

தவ திவ்ய
என்ற பாடமான போது தவ என்றதுக்கு முன்பு சொன்னதே அர்த்தமாய் திவ்ய என்கிற பதத்துக்கு ஸ்வ ஆஸ்ரிதரை
நழுவ விடாமையாலே வந்த புகரை உடையவைகள் என்ற அர்த்தமாகக் கடவது

பதாப்ஜ
சௌகந்தியாதிகளாலே தாமரை போன்ற திருவடிகளுடைய

ஸேவாம்
கைங்கர்யத்தை

பவதீய பதாப்ஜ -என்கிற போது
பிராப்தங்களாயும் போக்யங்களாயும் இருக்கும் திருவடிகள் என்கிறது

ஆக பிராப்தங்களுமாய் போக்யங்களுமாய் இருக்கிற தேவரீர் திருவடித் தாமரைகள் உடைய
கைங்கர்யத்தை பிரசாதித்து அருள வேணும் என்கிறார்

ஸ்ரீ சைல நாத கருணா பரிணா மதத்தாம்
ஆகில் இது முன்பே ஸ்ரீ திருமலை யாழ்வார் என்கிற திரு நாமம் உடைய ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை தம் பரம
கிருபையாலே பிரசாதிக்கப் பட்டதன்றோ -என்ன
கருணா பரிணாம -என்கையாலே
அர்த்தித்த்வ நிரபேஷமாக தம் கிருபையாலே பிரசாதித்து அருளினார் என்னும் இடமும்
ஸ்ரீ சைல நாத -என்கையாலே
தான் தோன்றி யன்றிக்கே ஸ்வ ஆசார்யரால் தரப் பெற்றது என்னுமதுவும் தோற்றுகிறது

தாம்
மம மத் பக்த பக்தேஷூ ப்ரீதிரப்யதி காபவேத் -என்கிறபடியே
பகவத் கைங்கர்யம் சரமாவதியாக பிரசித்தமான என்னுதல் –
ஆச்சார்யா தீநோ பவ -என்றும்
குற்றம் இன்றி குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய் –பெரியாழ்வார் -4-4-2-இத்யாதி
பிரமான பிரசித்தமான என்னுதல் –
கைங்கர்யத்தின் போக்யதையைப் பார்த்தால் இயத்தா நவச்சின்னமாகையாலே தாம் என்கிறார் ஆதல்

ஆக -பிரமாண பிரசித்தமாய் பரம போக்யமாய் பகவத் கைப்ங்கர்ய ஸீமா பூமியாய்
சம்ப்ரதாய பரம்பரா ப்ராப்தமான தேவரீர் உடைய திருவடித் தாமரைகளில் -கைங்கர்யத்தை –

அன்வஹம் –
சர்வ காலத்திலும் -இங்கு அஹஸ் சை இட்டுக் காலத்தைச் சொல்கிறது -திருப் பள்ளி எழுச்சி முதலாக திருக் கண் வளர்த்தி
அளவாக உள்ள கைங்கர்யங்கள் எல்லாம் தமக்கு உத்தேச்யம் ஆகையாலே -அதில் ஒன்றும் குறையாமல்
அநு தினமும் நடக்க வேணும் என்னும் அபிப்ராயத்தாலே –
அன்வஹம் என்கையாலே தேச அவஸ்தைகளும் உப லஷிதங்கள்-

ஆக -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் என்கிறார் -கைங்கர்யம் தமக்கு நிரூபகம் ஆகையாலும்
போக்யமாகையாலும் இதர விஷய அனுபவத்துக்கு இடம் கொடாமைக்காகவும் -அன்வஹம் -என்கிறார் ஆகவுமாம் –

மம –
அக்கைங்கர்யமே நிரூபகமான அடியேனுக்கு -என்னுதல்-
அதில் ஆசை உடைய அடியேனுக்கு என்னுதல் -விஷய சபலனான அடியேனுக்கு என்னுதல்

விவரதய
அதுவே தாரக போஷாக போகயங்கள் -வாழ் முதல் வளர் முதல் மகிழ் முதல் -ஆகும் படி
செய்து அருள வேணும் என்னுதல்
அபிவ்ருத்தமாம் படி செய்து அருள வேணும் என்னுதல் –
அபிவ்ருத்தம் ஆக்குகையாவது ததீய பர்யந்தம் ஆக்குகை-இந் நிர்பந்தத்துக்கு நிதானம் என் என்னில்

நாத
தேவரீர் ஸ்வாமி யன்றோ -அடியேன் கார்யம் செய்யாமைக்கு என்கிறார்
நாத
யாசித்து பிறர் கார்யம் செய்யுமவர்க்கு பிரார்த்தனை மிகை யன்றோ என்கிறார்
ஸ்ரீ கண்ணனும் ஸ்ரீ நம்பி மூத்த பிரானும் ஸ்ரீ மாலா காரரை யாசித்து பூ சூடிற்று -அவன் ஸ்வரூபம் நிறம் பெறுகைக்காக இறே-
அப்படியே செய்கிறோம் –நீர் விஷய பிராவண்யத்தைத் தவிரும் என்ன -அர்த்த ஜரதீய நியாயம் ஆகாமே
அத்தையும் தேவரீரே போக்கி அருள வேணும் என்கிறார்
தஸ்யா-காமம் விருத்த மகிலஞ்ச நிவர்த்தய த்வம் -இத்யாதியாலே

தஸ்யா
அடியேனுக்கு ஸ்வரூப பிராப்தமாய் போக்யமாய் த்வதீய பர்யந்தமான த்வத் கைங்கர்யத்துக்கு
விருத்தம்
தனக்கு போக்யதயா அப்ராப்தங்கள் ஆகையாலே விருத்தமான
காமம்
சப்தாதி விஷய பிராவண்யத்தை
அகிலம் நிவர்த்தய
சிறிது அனுகூலம் என்று வையாதே நிஸ் சேஷமாக போக்கி அருள வேணும் என்கிறார் –
பிரதம பர்வத்தில் காமமும் சரம பர்வதத்துக்கு விரோதி இறே –
அ நக -என்றது இறே ஸ்ரீ சத்ருகன ஆழ்வானை
த்ருணீக்ருத விரிஞ்சாதி -என்னக் கடவது இறே
த்வம்
இஷ்டம் செய்கைக்கு கடவரான தேவரீரே அநிஷ்டமான காமத்தையும் போக்கி அருள வேணும் -என்கிறார்

ஆக –உன் இணை மலர்த் தாள் என்தனக்குமது இராமானுசா இவை ஈந்தருளே –76-என்கிறபடியே
த்வத் கைங்கர்ய ரூப-பரம பிராப்யத்துக்கு -தேவரீரே உபாயமாக வேணும் என்று
விண்ணப்பம் செய்யா நின்று கொண்டு –
கீழ் ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணம் -என்று ப்ரஸ்துதமான உபாயத்வத்தை
இஸ் ஸ்லோஹத்தாலே நிகமித்தாராய்த்து

———————————————————————————-

அவதாரிகை –

நிகமத்தில்
தாம் அன்வஹம் மம விவர்த்தய நாத தஸ்யா காமம் விருத்தம் அகிலஞ்ச நிவர்த்த்ய த்வம் -என்ற இவர்
தம்முடைய உபய வித அபேஷிதத்தை விண்ணப்பம் செய்தவாறே
இவர் அபேஷிதம் செய்து அல்லது நிற்க ஒண்ணாத படியான கிருபை கரை புரண்டு இருக்கும் இருப்பைக் கண்டு
இப்பிரபந்த ரூபமான அடியேன் விண்ணப்பத்தை தேவரீர் திரு உள்ளம் பற்றி அருள வேணும் என்று விண்ணப்பித்தவாறே
இப்பிரபந்தத்தை நிகமித்து அருளுகிறார் —
விஜ்ஞாபனம் யதிதமத் யது மாம கீ நம்–இத்யாதியாலே –

விஜ்ஞாபனம் யதிதமத் யது மாம கீ நம்
அங்கீ குருஷ்வ யதிராஜ தயாம்பு ராஸே
அஜ்ஞோ அயம் ஆத்ம குண லேச விவர்ஜி தஸ்ச
தஸ்மாத் அநந்ய சரணோ பவதீதி மத்வா –20-

விஜ்ஞாபனம் யதிதம்
அநாதி காலமே பிடித்து விஷய சபலராய்ப் போந்த தம்மையும் எத்தனையேனும் அதிசயித ஜ்ஞானிகள்
தங்களுக்கு வகுத்த விஷயத்தில் செய்யக் கடவதான இவ் விஜ்ஞாபநத்தையும் பார்த்து
தமக்குக் கிடையாதது கிடைத்தது என்று –யதிதம் விஜ்ஞாபனம்-என்கிறார்
அன்றிக்கே –
யச் சப்தம் பிரசித்த பராமர்சி யாகையாலே -கிரந்த ரூபேண பிரசித்தமான இவ் விஜ்ஞாபநத்தை -என்கிறார் –

இதம் விஜ்ஞாபனம்
இப்பிரபந்த ரூபமான விஜ்ஞாபநத்தை —
மற்று ஒரு விஜ்ஞாபனம் உண்டாகிலும் -அதுக்கு மேல் எழுத்து இல்லை இறே
கையோலை செய்து கொடுத்தது இவ் விஜ்ஞாபநத்தை இறே
இதம்
பாட்யே கே யே ச மதுரம் ப்ரமாணைஸ் த்ரிபி ரந்விதம்-பால -4-8- என்று ஸ்வ கர்த்ருகமான ஸ்ரீ ராமாயணத்தை
ஸ்ரீ வால்மீகி பகவான் கொண்டாடினால் போலே
இவரும் இப் பிரபந்தம் தமக்கு போக்யமாய் இருக்கையாலே –இதம் -என்று கொண்டாடுகிறார்
இது தான் எப்போது உண்டாய்த்து என்னில்

அத் யது-
கீழ் கழிந்த காலம் போலே விஷய அனுபவத்துக்கும் தத் அலாபத்தால் உண்டான துக்க அனுபவத்துக்கும் போந்திருக்கை யன்றிக்கே
தேவரீர் திருவடிகளிலே கைங்கர்யத்தினுடைய லாப அலாபங்களிலே மோத கேதங்கள் உண்டாம் படியான இக்காலத்திலே என்கிறார்
அத் யது-
தம்மையும் பார்த்து காலத்தையும் பார்த்தவாறே -இதுவும் தமக்கு அலாப்ய லாபம் என்று தோற்றி -அத்யது -என்கிறார் –
அன்றிக்கே –
கீழ் கழிந்த காலம் போலே பழுதே பல பகலும் போயின -முதல் திரு -16–என்று நிந்தா விஷயமாக வன்றிக்கே-
அத்யமே சபலம் ஜன்ம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-3- என்று ஸ்லாக நீயமான இக் காலத்திலே என்னுமாம் –
விஜ்ஞாபனம் தான் யார் செய்கிறது என்னில்

மாம கீ நம் –
அநாதி காலமே பிடித்து விஷய சபலனாய்ப் போந்த அடியேன் -அதில் சாபலம் அற்று
தேவரீர் திருவடிகளிலே கைங்கர்யத்திலே ப்ரேமம் தலை எடுத்துப் பண்ணுகிறது
மாமகீ நம்
தாம் முன்னிருந்த இருப்பையும் இப்போது இருக்கும் இருப்பையும் பார்த்து -நாம் இப்படி யானோமே யாகாதே -என்று
தந் யோஹம் -என்னுமா போலே தம்மைத் தாமே கொண்டாடுகிறார்
அன்றிக்கே –து -சப்தம் ஏவ காரார்த்தமாய் -அத்யைவ -என்கிறார் ஆக வுமாம் –
உத்தர ஷணத்திலே நிலையாய் இருக்குமோ இராதோ என்று கருத்து
இதுக்கு அடி என் என்னில்

மாமகீ நம் –
அடியேன் சம்பந்தி யாகையாலே என்கிறார் -சப்தாதி போக நிரதர் இறே தாம் -ஆகில் செய்ய வேண்டியது என் என்ன

அங்கீ குருஷ்வ –
இத்தை ஓர் அவயவி யாக்கித் தர வேணும் என்கிறார் –
அவயவி யாக்குகை யாவது சபலமாக்குகை -அதாவது அப்படி செய்கிறோம் என்று திரு உள்ளம் பற்றுகை
குருஷ்வ என்கையாலே
அங்கீ காரத்தால் வரும் பலமும் அத்தலைக்கே-என்கிறார் –
அத்தலைக்கு உகப்பாக இறே கைங்கர்யம் செய்வது

மாமகீ நம் அங்கீ குருஷ்வ
த்வத் தாஸ தாஸ சரமாவதி தாசனான அடியேன் செய்கிற விண்ணப்பம் ஆகையாலே தேவரீரால் தவிரப் போகாது என்கிறார் –
இவர் இப்படி விண்ணப்பம் செய்த வாறே அப்படியே செய்து அருளுவதாகத் திரு உள்ளம் பற்றி

யதிராஜ –
என்று சம்போதிக்கிறார்-ஆஸ்ரித கார்யம் செய்கையில் சங்கல்பம் தேவரீருக்கு புகர் என்கிறார் ‘
அன்றிக்கே –
தாம் இப்படி விண்ணப்பம் செய்த வாறே திரு உள்ளத்தை தம்மிடத்தில் நின்றும் சலிக்க ஒண்ணாத படி பண்ணி
தமக்கு ரஜ்ஞ்கராய் இருக்கையாலே யதிராஜ -என்று சம்போதிக்கிறார் ஆக வுமாம்
நீர் சொன்ன படியே செய்கிறோம் உம்மிடத்தில் குணம் ஏது என்ன

தயாம்பு ராஸே
தேவரீர் தயா சமுத்ரம் யன்றோ -அடியேன் இடத்தில் குணம் ஒன்றும் இல்லை –
கேவலம் தேவரீர் கிருபையாலே செய்து அருள வேணும் என்கிறார் –
ஆகில் நீர் தய நீயரோ என்ன ஆம் என்கிறார் மேல்

அஜ்ஞோ அயம் –
அஜ்ஞ்ஞானமே நிரூபகமாய் இருப்பான் ஒருவன் இவன் -அயோக்யனாய் இருந்து வைத்து யோக்யர் பிரார்த்திக்கும்
புருஷார்த்தத்தை ப்ரார்த்திக்கை அஜ்ஞ்ஞதை இறே -என்கிறார்
அஜ்ஞ
சாஸ்திர ஜன்ய ஞானம் இல்லாதவன் என்னுதல் –
நம்மை ஒழிய புறம்பே ஒரு விஷயம் அறியாதவன் என்னுதல்

ஆத்ம குண லேச விவர்ஜி தஸ்ச –
அறிவு இல்லா விடிலும் ஆத்ம குணங்களான சமதாதிகளில் ஏதேனும் ஓன்று உண்டாகலாமே –
அதுவும் இல்லாதவன் ஒருவன் இவன் என்கிறார் –
காரத்தாலே அநாத்ம குண பரி பூரணன் -என்கிறார் –

தஸ்மாத்
ஜ்ஞானமும் -தந் மூலமான ஆத்ம குணங்களும் இல்லாதான் ஒருவன் ஆகையாலே

அநந்ய சரணோ பவதீதி –
பரம தயாளுவான தேவரீரை ஒழிய மற்றொரு புகலிடம் இல்லாதவன் என்று

மத்வா
திரு உள்ளம் பற்றி –மாமகீ நம் விஜ்ஞ்ஞாபனம் அங்கீ குருஷ்வ -என்று
மனனமும் அங்கீ காரமும் ஏக கர்த்ருகமாகத் தோற்றுகையாலே
இத்தலையிலே ஸ்வ அயோக்ய அனுசந்தானமும் இல்லை -என்கிறது

அஜ்ஞோ அயம் ஆத்ம குண லேச விவர்ஜி தஸ்ச -என்கையாலே தய நீயதை சொல்லப் பட்டது –
தய நீயர் ஆகிறார் துக்கிகள் இறே –
அஜ்ஞ்ஞானத்துக்கு மேற்பட துக்கம் இல்லை
அன்றிக்கே –
அஜ்ஞோ அயம் ஆத்ம குண லேச விவர்ஜி தஸ்ச -இவர் தயாம்பு ராஸே -என்றவாறே —
ஆகில் தயை உண்டாகும் போது செய்கிறோம் என்ன-
தேவரீர் தயை பண்ணுகைக்கு இங்கு ஏதேனும் பிரதி பந்தகம் உண்டோ என்கிறார் அஜ்ஞோ இத்யாதியாலே –

அஜ்ஞ– என்கையாலே ஜ்ஞான யோகமும் தத் விசேஷமான பக்தி யோகமும் இல்லை என்கிறார் –
ஆத்ம குண லேச விவர்ஜி தஸ்ச -என்கையாலே கர்ம யோகமும் இல்லை என்கிறார்
அது எங்கனே என்னில் சமதமாதிகள் இந்த்ரியங்களுடைய விஷயோபரதி ரூபங்கள் ஆகையாலே
அவ்வுபரதி ரஜஸ் தமோ நிவ்ருத்தியால் அல்லது கூடாமையாலே ரஜஸ் தமோ நிவர்த்தகம்
தர்மேண பாபமவ நுததி -என்றும்
கஷாய கர்மபி பக்வே -என்றும் சொல்லுகிறபடியே பாப நிவ்ருத்தி த்வாரா தர்ம விசேஷமான
கர்ம யோகம் ஆகையாலே ஆத்ம குண ஹானி கர்ம யோக அபாவத்தைக் காட்டுகிறது
காரத்தாலே பிரபத்தியும் இல்லை என்கிறது –
அகிஞ்சனனுக்கு புகலிடம் பிரபத்தி இறே –

ஆக சர்வ உபாய ஸூந்யன் என்றபடி –
இவற்றிலே ஏதேனும் உண்டாகில் இறே தேவரீர் தயை பண்ணாது இருக்கலாவது

தஸ்மாத்
தேவரீர் தயை பண்ணுகைக்கு பிரதிபந்தகங்களாய் இருப்பதின் கந்தம் இல்லாதவன் ஒருவன் ஆகையாலே தேவரீர் தயை ஒழிய
ஸ்வ யத்னமாதல் -பகவத் யத்னமாதல் -மற்றொரு புகலிடம் இல்லாதான் ஒருவன் என்று திரு உள்ளம் பற்றி
இப்பிரபந்த ரூபமான விண்ணப்பத்தை அங்கீ கரித்து அருள வேணும் -என்கிறார் –

பகவத் யத்னம் சர்வாதிகாரம் யன்றோ -அத்தையும் கழிக்கலாமோ என்னில் –
அது விஸ்ரம்ப-பாஹூள்ய-சாபேஷம் ஆகையாலே -அது இல்லாதவனுக்கு அது தன்னடையே நழுவும் இறே
இதுவும் இன்றிக்கே
பகவத் யத்னம் ஸ்வா தந்த்ர்ய அனுகூலமாய் -நிக்ரஹ அனுக்ரஹங்களுக்கு பொதுவாய் இருக்கும்
ஆசார்ய அபிமானம் இவ்விரண்டு தோஷமும் இன்றிக்கே இருக்கும் -ஆகையால் இறே
ஸ்வ தந்த்ரனை தான் உபாயமாகப் பற்றும் போது இறே இப்பிரசங்கம் தான் உள்ளது -ஸ்ரீ வசன பூஷணம் -410- என்று
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் அருளிச் செய்தது

ஆக இப்பிரபந்தத்தாலே சர்வ உபாய ஸூந்யராய்-பகவத் விஷயத்துக்கும் அநாதிகாரிகளான சேதனர்க்கு
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்றதாய்த்து
இந்தப் பிரபந்த ரூபமான விஜ்ஞ்ஞாநபத்தை திரு உள்ளம் பற்ற வேணும் என்கையாலே
ஸ்ரீ எம்பெருமானார்க்கு பிரசாத ஜனகமும் இப்பிரபந்தம் என்றதாயிற்று

———————

க்ருபயா யதி ராஜஸ்ய முநேர் வர வரஸ்ய ச
பிரவ்ருத்தேயம் க்ருதிஸ் ஸத்பிஸ் சாதரம் சமுதீஷ்ய தாம்
ஸூத்த சத்த்வ மஹாசார்ய க்ருதிநா குண பூதி நா
யதீஸ விம்சதி வியாக்யா லலிதா கலிதா பலௌ

———————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading