திரு நெடும் தாண்டகம்-தனியன்-அவதாரிகை -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

ஸ்ரீ யபதி -ஆழ்வார்கள்-பிர மாதா வாழி –அருளி செயல்கள் வாழி -பிரமாணங்கள் வாழி —
குரவர்கள் தாம் வாழி –வ்யாக்யானங்கள் நிறைந்த -அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி —
செய்ய மறை தன் உடனே சேர்ந்து —

பரத்வம் திரு விக்ரமன் முதல் ஆழ்வார்கள் நோக்கம் –
திரு மழிசை ஆழ்வார் அந்தர்யாமி நோக்கு- உள் பொசிந்த வண்ணமே காட்ட சொன்னார் –
நம் ஆழ்வார் பெரியாழ்வார் ஆண்டாள்- கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை-
குலசேகரர் ஆழ்வார் ராமன்-
தொண்டர் அடி பொடி ஆழ்வார் திரு பாண் ஆழ்வார் கோவிலிலே திரு அரங்கத்திலே காதல்–
திரு மங்கை ஆழ்வார் அர்ச்சை யில் நோக்கு கார்த்திகை கார்த்திகை–திரு குறையலூரில் ஆறு அங்கம் கூற  அவதரித்தார் –
மாறன் பணித்த மறைக்கு -நீலன் இயற் பெயர்–குறு நில மன்னர் ஆலி நாட்டு அரசர் மங்கை நாட்டு மன்னன்–
திரு வெள்ள குளம் ஸ்வேத புஷ்கரணி-அண்ணன் கோவில்- குமுத வல்லி-ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் கொண்டு–பஞ்ச சம்ஸ்காரம் –
ததீயாராதனம் -ஆடல் மா குதிரை–தாபக புண்டரக தாஸ்ய நாமம் மந்த்ரம் யோகம் –
திரு நறையூரில் ஸ்ரீநிவாசன் நம்பிக்கை வல்லி வஞ்சுல நாச்சியார் -இன்றும் திரு ஆழி திரு சக்கரம் தன் மார்புக்கு முன் வைத்து சேவை —
நூறு பாசுரங்களும் மடலும் எடுத்தார் இவர் மேல்–

திரு அரங்கத்தில் நான்காவது மதிள் –
திருட நான்கு பேர் துணை– நீர் மேல் நடப்பான் நிழலில் ஒதுங்குவான் தாள் ஊதுவான் தோலா வழக்கன்–
திரு மணம் கொல்லை– வயலாலி மணவாளன் நாச்சியார் திரு கல்யாணம் –
பயந்தால் போல ஆபரணங்கள் கட்டி- வாயால் கடித்து பல்லால் இழுக்க கால் ஆபரணம் பிடுங்க– மிடுக்கு  -கலியன் –
என்ன மந்த்ரம் போட்டீர் –வாளால் கேட்டு -அரச மரத்தின் அடியில்-ஆழ்வார் திரு மங்கை ஆழ்வார் ஆனார் –
வளம் கொள் மந்த்ரம் பெற்றதும்  அணைத்த வேலும் தொழுத கையும் வாய் பொதித்த –
வாடினேன் வாடி ..நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்–
பங்குனி உத்திரம் முன் நாள் திரு  வேடு பரி உத்சவம் இரவு 11.55 மணிக்கு திரு மணம் கொல்லையில் -இன்றும் சேவிக்கலாம் –
ஆலி நாட்டுக்கு அரசு-தெய்வ அரசன்-மந்திர அரசினை அரச மரத்தின் அடியில்–ஸ்வாமி ராமானுஜரும் மகிழ மரத்தின் அடியில் பெற்றார் —
கலயாமி -அறிவின்மை போக்கும் லோக திவாகரன்-அஞ்ஞானம் போக்கும் -வாக்கின் பிர பந்தங்கள் கொண்டு –
ஒளி விளக்கால் -ஒழித்து ஒட்டி விட்டவரை வணங்குகிறேன் –சுவாமி ராமானுஜர் அருளிய -வாழி —-
தூயோன் சுவர் மான வேல்–11 கருட சேவை–கார்த்திகை கார்த்திகை உத்சவம் வாழி பர காலன்..

வாழி கலி கன்றி-கலி கன்றி தாசர்-நம் பிள்ளை-வாழி குறையலூர் வாள் வேந்தன் –குரு நில மன்னர்–
ராஜா கஜானா திருட -கையும் மெய்யுமாக  பிடி பட -தேவ பிரான் -வேகவதி நதி கரை வர சொல்லி ..-காட்டி கொடுக்க –
பெருமை கண்டு கொண்டான் ராஜாவும்–
வாழியரோ மாயோனை வாள் வலியால் மந்த்ரம் கொள் மங்கையர் கோன் தூயோன் -சுடர் மான வேல்–
வென்று பகை கெடுக்கும்  நின் கையில் வேல் போற்றி -போல/
கூரத் ஆழ்வான் அருளிய தனியன்–நெஞ்சுக்கு இருள் கடி தீபம் போல–அடங்கா  நெடும்  பிறவி நஞ்சுக்கு நல்ல அமுதம் –
தமிழ நல்  நூல் துறைகள் ஐந்துக்கு இலக்கியம் –எழுத்து சொல் பொருள் யாப்பு  அலங்காரம்–ஆரண சாரம்
பர சமய பஞ்ச்சுக்கு பொறி –தலை அறுப்பதே கருமம்-தொண்டர் அடி பொடி ஆழ்வார் —
சாஸ்திர விரோதிகளே பரர்கள்–வேத குருஷ்டிகள் பாக்யர்கள்–தீ கங்கு நெருப்பு போல இவர் பாசுரங்கள்–
நாட்டிய நீச சமயங்கள் மாண்டன –ஸ்ரீ பாஷ்யம் அருள -கலி மிக்க –வலி மிக்க சீயம் ராமானுஜர் –பனுவல்கள் பெருமை சொன்னார் இதால் —

இரும் தமிழ்  புலவன் பனுவல் ஆரும் -வேத சதுஷ்டய அங்க உப அங்கங்கள் போல –
நான்கு மாறன் பிர பந்தங்கள் -இவரின் பிர பந்தம் அங்கம்- மற்றவர் அருளிய பிர பந்தங்கள் உப அங்கங்கள்-
எம்பார் அருளிய தனியன் -ராமானுஜரை கேட்டு இவர் பாசுரங்கள் தரிக்க -சட கோபன் வேதம் தரிக்கவும் சுவாமி அருள் வேண்டும்—
எங்கள் கதியே ராமானுச முனியே -மனனம் பண்ணி கொண்டே சாஸ்திர ரக்ஷணம் –
சங்கை கெடுத்து ஆண்ட தவராசா -சங்கை-ஐயம் சந்தேகம் இதி சர்வம் சமேசயம்-ஒருங்கி விட்டாரே –
பொங்கு புகழ் மங்கையர் கோன் ஈந்த மறை ஆயிரம் அனைத்தும் தங்கும் மனம நீ எனக்கு தா

சோமாசி ஆண்டான்-மணவாள மா முனி அருளி யது என்பார் மாலை தனி வழியே பறிக்க வேண்டும் என்று கோலி
பதவி இருந்த கொற்றவனே -வேலை அனைத்து அருளும் கையால் வினைகளை துணித்து அருள வேண்டும் –
அருள் என்னும் ஒள வாள் உருவி கிட்டி –

யாப்பு -வெண்பா -ஆஸ்ரியப்பா-/திரு எழு கூற்றிருக்கை சித்ர கவி–
அந்தாதிகள்–திரு வாய் மொழி –முதல் சொல்லை கொண்டும் பெயர்-
பெரிய ஆழ்வார் திரு மொழி பெருமாள் திரு மொழி நாச்சியார் திரு மொழி -அருளியவர் பேரில்- –
தாண்டகம்–தண்டகம்-சமஸ்க்ருதம் உண்டு- நான்கு அடிகள் -சந்தம் 4-26 தாண்டகம் 27-47 /எழுத்துகள்-999 எழுத்துகள்வரை  சமஸ்க்ருதம் என்பர்–
திரு நெடும் தாண்டகம் 120 வரிகள் 24 வரிகள் மட்டும் தான் 27 எழுத்துகள் உண்டு/
நிதி இணை  பவள தூணை – திரு குறும் தாண்டகத்தில் எல்லா வரியிலும் உண்டு//
தொல்காப்பியம் படி -அறுசீர் ஆஸ்ரிய விருத்தம்–திரு மாலை–20 எழுத்துகள் மேல் இருந்தால் தாண்டகம் -என்பர்–
தாண்டகம் தனி சிறப்பு–முற்று இன்றி வினை எச்சம் உடன் இருக்கும் —
ஸ்ரீ பராசர பட்டர் ஈடு பட்ட பிர பந்தம்-நஞ்சீயரை- மாதவாச்சார்யர்–கை கொண்டார் இத்தால்–
நம் பெருமாளும் உகந்து ஸ்ரீ வைகுண்டம் அருளினார் இதை கேட்டதும்

ஆண் பாவனை முதல் 10  /நடு தாய் பாசுரம் 10/ மகள் பாசுரம்-10/
திவ்ய தேசம் பல அருளினார் பெரிய திருமொழி -38நம் ஆழ்வார்- 86திவ்ய -தனித்தே 47 திவ்ய தேசங்களை–
அடி தோறும் அர்ச்சை — அரசர்களுக்கு பிடி தோறும் நெய் சேர்ப்பது போல-
மன்று அமர கூத்தாடி மகிழ்ந்தாய் வட திரு வேம்கடம் போல -விபவமும் அர்ச்சையும் மாறி மாறி அருளுவார் —-
ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே என்பார்–
விடாய்தவன் தண்ணீர் முகத்திலும் மேனி யிலும் வாரி கொள்வது போல – திரு குரும் தாண்டகம் அருளி–
திரு எழு கூற்று இருக்கை யில் வரும் இடர் அகல உன் அடி இணை பணிவேன் என்றார்–
கோபம் கொண்டு மடல் எடுத்தார்-விபவம் அழிக்க அர்ச்சை அழிக்க இரண்டு மடல்கள் –
-மாசறு சோதியில் யாம் மடல் ஊருதும் என்பர் நம் ஆழ்வாரும்–

தான் அழிவதை ஏற்று கொண்டாலும் ஆழ்வாரை பிரிய கூடாது என்று சேவை சாதிக்க –
வாடினேன் -சிரமத்துடன் பாட ஆரம்பித்து மகிழ்வாக முடிக்கிறார் இதை–
பன்னி பன்னி வியாக்யானம் அருளி இருக்கிறார் இதற்க்கு பெரிய வச்சான் பிள்ளை–

ஆழ்வார் -பெருமாள் மரத்தின் அடியில் ஆத்மாவை வைத்து சரீரத்தில் வைத்து திரு மங்கை ஆழ்வார்–
சர்வேஸ்வரன் விபூதி அடைய தம் சொத்து என்று-தொடைக்கு கீழ் இருப்பதாக -அகங்கரித்து  –
தேக ஆத்மா விவேகம் ஞானம் இன்றி– பெரிய திரு மொழி -6-3-4 சாந்து எனது மென் முலை–விஷய பிரவணராய் போந்து –
அளவில்லா சிற்று இன்பத்தில் திளைத்து -பரமாத்மா ஞானம் பிறக்க யோக்யதை இன்றி–வாடினேன் வாடினேன்–
இதில் நின்றும் மீட்க்கும் விரகு பார்த்து – விஷய பிரவணராய் இருக்கும் இவரை -சாஸ்திரம் காட்டி மீட்க்க ஒண்ணாது –
அழகை காட்டி திருத்த -சௌந்தர்யமே -கடைசி ஆயுதம்-
சுஷேணன்-தோள் அழகு-மல் ஆண்ட திண் தோள் மணி வண்ணன்–
பிள்ளை உறங்கா  வல்லி தாசரை ஸ்வாமி நம் பெருமாள் திரு கண் அழகை காட்ட சொல்லி –

நடுவே வந்து உய்ய கொள்கிற நாதன்–போதரே என்று  சொல்லி புந்தியுள் புகுந்து தன் பால் ஆதாரம் பெருக வைத்தான்-
தன் பக்கலில் ஆழம் கால் பட்டவர்–சம்பந்த ஞானம் உணர்த்தி–ஸ்வாமி பிதா -நித்யம் ஆக இருக்க –
கிழி சீரை உடன் -முடிச்சு-திரு மந்த்ரதோடு-தனம் போல -அர்த்தமும் -சர்வ அர்த்த பிரகாசம்–
சௌசீல்ய  ஆதி குணங்கள் ஏற்றமும் அருளி–விலகாமல் இருக்க–
திருப் பதிகளையும் காட்டி கொடுக்க -சீரார் திரு வேம்கடமே -ஆராமம் சூழ்ந்த அரங்கம்–
உகந்து அருளின திவ்ய தேசங்கள்-திரு மந்த்ரம் எல்லை நிலம்–
ஒரு நல் சுற்றம்- 9 பாசுரங்கள் 10-1 வரை 18 திவ்ய தேசங்கள் இந்த பதிகத்தில்–சாதனம் போக்கியம்–அனுபவித்தார் இதை கொண்டு

உகந்து அருளின நிலங்களே ஆஸ்ரனியம் சாதனம் போக்கியம் என்று கொண்டு இருந்தவரை—-
அவிச்சின்னமாக இருக்க–தேச விசேஷம்–அந்தமில் பேர் இன்பம் –நலம் அந்தமில் இல்லாதோர் நாடு–
சம்சார தண்மை காட்டி–அடி கொதிப்பு -அறிவிப்பிக்க —
திரு மந்திர அர்த்தம் -அறிந்து கொண்டு–பொய் நின்ற ஞானமும் -பொல்லா ஒழுக்கும் அழுக்கு   உடம்பும் -ஓட்டை மாடம் –
புறம் சுவர் -மின் நின் இலையில மன் உயிர் ஆக்கைகள் —யாம் உறாமை  -இமையோர் தலைவா மெய் நின்று கேட்டு அருளாய்–
இல்லதும் உள்ளதும் அவன் உரு–உள்ளது வெளியது ஆனால் காக்கை ஓட்ட ஆள் இல்லை–பாம்பை போல —

ஒரே கூரையில் படுத்து இருந்தது போல-
யட்ஷன்-தர்ம புத்திரன்- ஒன்பது வாசல் கதவு திறந்து இருந்தும் வெளியில் போகாமல் இருக்கும் ஆத்மா–பரமாச்சர்யம்-
போகிறவர்களை பார்த்தும் நிரந்தரம் என்று நினைப்பதே–
மாற்றம் உளவிலே–இன்று என்னை பொருள் ஆக்கி  –நேற்று புறம் போக்க வைத்தாயே–
புது மண பெண் போல்  வெட்கி கால் கட்டை விரலை கொண்டு கொடு இட்டு கொண்டு இருந்தானாம்-பட்டர்–
பரம பதம் போக அர்ச்சிராதி மார்க்கம் காட்டி -அது போல பயம் பீதராக -இரு பாடு எரி கொள்ளி  உள் இருக்கும் எறும்பு போல– 
ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்–ஞானம் இருந்தும் அசித் போல தான்-
பாம்போடு ஒரு கூரையில் பயின்றால் போல்–வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மா மழை மொக்குளில் மாய்ந்து மாய்ந்து

வாள்களாகி நாள்கள் செல்ல –தம் பயத்துக்கு பல திருஷ்டாந்தம் சொல்லி பெரிய திரு மொழி தலைகாட்ட–
அவன் முகம் காட்டாமல் -பிர பந்தங்கள் அருள வேண்டி–அஜீர்ணம் -குழந்தைக்கு-பிரதி ஒவ்ஷதம் இட்டு அன்னம் கொடுப்பது போல–
நாடு திருத்த -நச்சு பொய்கை ஆகாமல்–
விடாய் பிறக்க -நீரை குடித்து நீரை உடம்பில் இறைத்து கொள்வாரை போல –தாரகம்  போஷகம் போக்கியம் அவன் மட்டுமே –
வாக்கினால் ..வேட்கை மீதூர வாங்கி விழுங்கி னோர்க்கு இனிய வாறே —
கண்டவற்றை பெற்று இனிமை  அடைவது போல-உலகம் ஏத்தும் கண்டியூர்  அரங்கம் –என்று மன்னி–
பழைய அபிநிவேசர்க்கு -இதுவே உத்கம்பமாய்- அடி இணை பணிவன்-வரும் இடர் அகல மாற்றோ  வினையே –ஆடு அரவு -உச்வாசம் நிச்வாசம்–
மடி விரிந்து அடங்க ஊஞ்சல் போல கொண்டு -வினையே மாற்றோ–இடம் மாற்றி பரம பதம் கேட்டார்–
ரத பந்தம் போல சித்ர கவி அருளி–திரு குடந்தை ஆரா அமுதன் மேல்–
அடுத்து மடல் எடுத்தார் – சக்கரவர்த்தி திருமகன் கடல் அரசன் இடம் சரண் அடைந்தால் போல –
வழி அல்லா வழி–வில் எடுத்தார் பெருமாள் இவர் சொல் எடுத்தார் மடலில்–
கடல் என்ன காமத்தார் ஆகிலும் மடல் எடுக்க மாட்டார் மாதர்-இது தென் நெறி-மன்னு வட நெறியே வேண்டினோம்–
இவன் புருஷோத்தமன் என்பதால்–இரண்டு தலையையும் அழித்து ஆகிலும் அவனைக் கொள்ள –
பிர பன்னன் மார்பில் கை வைத்து உறங்க பிராப்தி -வாழும் சோம்பரை உகத்தி போலும் -துரும்பு நறுக்க பிராப்தி இல்லை–

சிறிய திரு மடலில் அவன்  பரத்வம்  தவிர விபவம் நீர்மையை அழிக்க முற்பட்டார்–இதற்க்கு முகம் காட்ட வில்லை–
அர்ச்சையில் உள்ள நீர்மை -எல்லை நிலம் -இதையும் அழிக்க –
விபவ நீர்மையே பரத்வம்  என்னும் படி நீர்மை உள்ள அர்ச்சையை-தமர் உகந்த உருவம் தம் உருவம் தமர் உகந்த பேர் தம் பேர் —
இவர் பிறந்ததே -அவனுக்கும் தனக்கும் வைப்பு-நிதி- இது தானே–
முகம் காட்டாது ஒழிந்தால் உபய விபூதியும் -போனாலும் ஆழ்வாரை இழக்க முடியாது என்று முகம் காட்ட–
இங்கு உளன் என்ற பிரகலாதனாதிகளுக்கு காட்டினால் போல – முகம் காட்டி -தானும் இவரும் ஜகத்தில் உள்ளலாம் படி பண்ணினான் —

சுகர் முதல் ஆழ்வார் -பரதவ, ஜனகாதிகள் திரு மழிசை அந்தர்யாமி/
வால்மீகி குலசேகரர் ராம அவதாரத்தில் ஊன்றி /
பராசர் வேத வியாசர் நம் ஆழ்வார் பெரி ஆழ்வார் ஆண்டாள் கிருஷ்ண அவதாரம்–
நாரதர் தொண்டர் அடி பொடி திரு பாண் ஆழ்வார் -கோவிலிலே பர வாசுதேவன்/சௌனக பகவானும் இவரும் அர்ச்சையில் ஊன்றி இருப்பார்கள்–

அல்லாத ஆழ்வார்களை போலேயும் / ஜனக ராஜன் திரு மகள்  போல அன்றி—
சம்ச்லேஷ -சௌகுமார்யம்–உம் அடியார்  எல்லோடும்  ஒக்க எண்ணி இருந்தீரோ –
ஷண கால விச்லேஷம் பொறுக்காமல்- வாழ்ந்தே போம்-ஆண் பாவனையிலே ஊடுகிறார்–திரு இந்தளூர் பரி மள ரெங்கன்–
போவான் போகாமல்–பாரிப்புடன் போனாரே–இம்மைக்கு இன்பம் பெற்றோம்–துன்பமே பெற்றோம் காட்டி இருந்தால் உய்யோமே –
சிந்தை தன்னில் நீங்காது இருந்த திருவே- இது போறாது–ஆலிங்கனம் வேண்டும் –
உம் அடியார் எல்லோரும் ஒக்க எண்ணி இருந்தீரே –மலையாள ஊட்டு போல -நம் ஆழ்வார் -பிரிந்து பல பாசுரங்கள் அருளுவார்–
தூது விட்டார் நாளே பாசுரம் -உடனே ஒ மண் அளந்த தாளாளா என்று நேராக இவனை பாட ஆரம்பித்தார்– வைலஷண்யம் உண்டு–
சேர்ந்து இருக்கும் பொழுதும் –ஆழி யோடும்  பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் —
அவா பெற்று வீடு பெற்றதை பேசி தலை கட்டுகிறார்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: