ஸ்ரீ இளைய பெருமாளின் மஹிமை —

ஸ்ரீ ராமோ விக்ரஹவான் தர்ம

மாரீசனே ராவணனிடம் ராமரைப் பற்றி, “ராமோ விக்ரஹவான் தர்ம:” “ராமன் தர்மத்தின் மறு உருவம்” என்று புகழ்கிறான். “அறம் வெல்லும் பாவம் தோற்கும்” என்பதையே கம்பன் தன் காவியத்தின் முகப்புச் செய்தியாக அளிக்கிறான். அறத்தைப் பேணி வர்க்கும் சத்ய பராக்ரமனான ராமனின் குணங்களே அவனைத் தெய்வமாக இனம் சுட்டிக் காட்டுகின்றன

உத்தர ராம சரிதத்தில் அருந்ததி கோசலையிடம் கூறுவது இது:

“குணா: பூஜா-ஸ்தானம் குணிஷு ந ச லிங்கே ந ச வய:”

“ஒருவரது குணங்களினாலேயே அவர் மதிக்கப்படுகிறார். ஆணா அல்லது பெண்ணா என்பதாலோ அல்லது வயதாலோ அல்ல”

ரகு வம்சத்தில் மஹாகவி காளிதாஸன்,

” த தா ஹி சர்வே தஸ்ய ஆஸன் பரார்த்த ஏக பலா: குணா:” என்று சுருங்கச் சொல்லி ராமாவதார நோக்கத்தை விளங்க வைக்கிறான்.

இதன் பொருள்: “அவரது எல்லா குணங்களும் ஒரே நோக்கத்தையே கொண்டிருக்கின்றன. மற்றவர்கள் அனைவரும் சுகமாக வாழ்வதே அது”

ராமரின் சாஸ்வதமான அனுஷ்டானம்!

ராமரைப் பற்றி சீதை கூறும் அரிய குணங்கள் ஆரண்ய காண்டத்தில் நாற்பத்தியேழாவது ஸர்க்கத்தில் 17ஆம் ஸ்லோகத்தில் இடம் பெறுகிறது. ராவணன் சீதையை யார் என வினவ சீதை தனது குடும்பத்தைப் பற்றிச் சொல்லும் அற்புதமான சித்திரத்தை இங்கு காண்கிறோம்.

தத்யாத்ந ப்ரதிக்ருஹ்ணீயாத் சத்யம் ப்ரூயாந்ந சான்ருதம் I
ஏதத்ப்ராஹ்மண ராமஸ்ய வ்ரதம் த்ருவமனுத்தமம் II

ப்ராஹ்மண – பிராம்மணரே! தத்யாத் – (ஸ்ரீ ராமர் எப்போதும்) அளிப்பார் ந ப்ரதிக்ருஹ்ணீயாத் – (ஒருபோதும்) வாங்கமாட்டார் சத்யம் – உண்மையே ப்ரூயாத் – பேசுவார் அன்ருதம் – பொய்யை ச ந – ஒருபோதும் பேச மாட்டார் ராமஸ்ய – ராமரது அனுத்தமம் – ஒப்புயர்வற்ற த்ருவம் – சாஸ்வதமான வ்ரதம் – அனுஷ்டானம் ஏதத் – இது.

அந்தண வேடத்தில் கபட வேஷதாரியாக வந்த ராவணனிடம் ராமரைப் பற்றி சீதை கூறும் அற்புத ஸ்லோகம் இது.

சில பதிப்புகளில் காணப்படும் இந்த ஸ்லோகத்தின் இன்னொரு உருவம் இது:

தத்யாத்ந ப்ரதிக்ருஹ்ணீயாத் சத்யம் ப்ரூயாந்ந சான்ருதம் I
அபி ஜீவிதஹேதோர்வா ராம: ஸத்யபராக்ரம: II

இதற்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. என்றும் நிலை கொண்டிருக்கும் சத்தியம் மற்றும் பராக்கிரமம் என்றும் பொருள் கொள்ளலாம். சத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட பராக்கிரமம் என்றும் பொருள் கொள்ளலாம்

இந்த ஸ்லோகத்தில் ஒரு சுவாரசியமும் அடங்கியுள்ளது. இதே ஸ்லோகத்தை சீதை ஹனுமானுக்கு அசோகவனத்தில் கூறுகிறார். சுந்தரகாண்டத்தில் முப்பத்திமூன்றாவது ஸர்க்கத்தில் 26வது ஸ்லோகமாக இது அமைகிறது. ஆக ராமாயணத்தில் அபூர்வமாக இரு முறை வருகின்ற ஒரே ஸ்லோக வரிசையில் ராமரின் அபூர்வ குணங்களை அறிவிக்கும் இந்த ஸ்லோகமும் இடம் பெறுகிறது.

வால்மீகி முனிவர் பெரிய மகரிஷி. அவர் வாயிலிருந்து உண்மைகள் மட்டுமே வரும்; இத்தகைய அற்புதமான காட்சி கிஷ்கிந்தா காண்டத்தில் வருகிறது . வாலியை ராமர்,  மரத்தின் பின்னாலிருந்து நின்றுகொண்டு வில் அம்பினால் அடித்துக் கொன்றார். இதை வால்மீகி மறைக்கவில்லை. உள்ளதை உள்ளபடியே எழுதினார். இதைக் கண்டு நகைத்து  வாலி எழுப்பிய வினாக்களையும் ராமரது மறு மொழியையும் நமக்கு அப்படியே தந்தார் . எதையும் மறைக்கவில்லை. அப்பொழுது வாலியின் மனைவி தேம்பித் தேம்பி அழுதார். அடுத்தாற்போல சுக்ரீவன் அழுது புலம்பினார் அதைக் கண்டு ராமனும் அழுதார். அது மட்டுமல்ல ஒரு முகூர்த்த காலத்துக்கு பிரமை பிடித்தவர் போல நின்றார்.

நமக்கு ஏதேனும் அதிர்ச்சிதரும் செய்தி கிடைத்தால் எனக்கு அரை மணி நேரத்துக்கு ஒன்றுமே ஓடவில்லை அப்படியே நின்றேன் என்று சொல்லுவோம். இதை முதலில் சொன்னவர்  வால்மீகி முனிவர் ; ஒரு முஹூர்த்தம் என்பது 24 நிமிடம் ; இதோ  வால்மீகியின் சொற்கள் :

ததோ நிபதிதாம் தாராம் ச்யுதாம் தாராமிவாம்பராத்

சனை ராச்வா ஸயாமாஸ ஹனுமான் ஹரியூதபஹ

பின்னர் வானர கூட்டத்தலைவனான ஹனுமான் , வானத்திலிருந்து விழுந்த விண் மீன்போல தரையில் வீழ்ந்து கிடந்த தாரைக்கு மெள்ள ஆறுதல் வார்த்தை கூறினார் . சம்ஸ்க்ருத மொழி தெரிந்தவர்கள் கவியின் அழகையும் ரசிக்கலாம் ; வானத்திலிருந்து விழுந்த தாரா = நட்சத்திரம் ; தமிழில் தாரகை என்று சொல்லுவோம்; கீழே விழுந்த பெண் தாரா = வாலியின் மனைவி ; சோகமான கட்டத்திலும் முனிவர் தன் கவிப்புலமையைக் காட்ட சிலேடையைப் பயன்படுத்துகிறார் .

அடுத்தாற்போல சுக்ரீவன் அழுது புலம்பினார் இதையல்லாம் பார்த்த ராமபிரான் என்ன செய்தார் ?

இத்யேவ மார்த்தஸ்ய ரகுப் ரவீரஹ ச்ருத்வா வாச்சோ வால் யநுஜஸ்ய தஸ்ய

சஞ்சாத பாஷ்ப ஹ பரவீர ஹந்தா ராமோ முஹூர்த்தம் விமனா பபூவ

இவ்வண்ணமே வருந்திப் புலம்பும் அந்த சுக்ரீவன் உரைகளைக் கேட்டு , எதிரிகளை அழிக்கவல்ல ரகுகுல சிரேஷ்டரான ராமர் , கண்ணீர் பெருக்கியவராக ஒரு முஹூர்த்த காலத்துக்கு ஒன்றுமே தோன்றாதவராகக் கலங்கி நின்றார்.

தாரையின் புகழ்மாலை

ஸா தம் ஸமா ஸா த்ய விசுத்த ஸத்வா சோகேன ஸம்ப் ராந்த சரீர பாவா

மனஸ்வினீ வாக்யமுவாச தாரா ராமம்  ரணோத் கர்ஷண லப்த லக்ஷம்

அந்த தாரை வருத்தத்தால் உடலும் உள்ளமும் நிலை கொள்ளாதவளாய் , யுத்தத்தில் நினைத்ததை நடத்திக்கொள்ளும் பெருமையுடைய ஸ்ரீ ராமரை அணுகி கோப தாபம் நீங்கப் பெற்ற சுத்த மனத்தினளாய் இவ் வார்த்தையைக் கூறினாள் ,

த்வமப்ரமேயச்ச துராசதச்ச ஜிதேந்த்ரிய ச்சோத்தம தார்மிகச்ச

அக்ஷய்ய கீர்த்திகிச்ச விசக்ஷணநச்ச க்ஷிதி க்ஷமாவான் க்ஷத ஜோபமாக்ஷஹ

தாரா சொல்கிறாள் :

நீ அளவிடற்கரிய  இயலாதவர் ; யாராலும் எதிர்க்க முடியாதவர், புலன்களை அடக்கியவர், தர்ம நெறியில் நிற்பவர்களின் சிறந்தவர், அழிவற்ற புகழை உடையவர், எல்லாம் செவ்வனே அறிந்தவர், பூமி போல பொறுமை உடையவர், சிவந்த திருக்கண்களை உடையவர் .

“க்ஷ” என்ற எழுத்தைக்கொண்டு பல சொற்களை வால்மீகி முனிவர் உண்டாக்கியதோடு, பூமி போல பொறுமை என்று சொல்லுவதைக் கவனிக்க வேண்டும்..

சங்க இலக்கியத்திலும் திருக்குறளிலும் இந்த உவமையைக் காண் கிறோம்.(அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல ……குறள் )

பின்னர் அவர்களுடைய துக்கத்தை ராமனும் பகிர்ந்துகொண்டார் என்று சொல்லி இக்காட்சியை முடிக்கிறார் வால்மீகி .பின்னர் வாலியை தகனம் செய்கிறார் சுக்ரீவன் .

ராவணன், வாலி போன்றோர் தகனம் செய்யப்பட்டது அவர்கள்  இந்து சமய நெறிகளைக் கடைப்பிடித்தவர்கள் என்பதைக் காட்டுகிறது.

தாரா பயன்படுத்தும் அப்ரமேய (அள விடற்கரியவர்), ஜிதேந்த்ரிய  (புலன்களை வென்றவர்), உத்தம  என்பனவெல்லாம் விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திலும் வருகிறது .

அனயா சித்ரயா வாசா த்ரிஸ்தான வ்யஞ்ஜனஸ் தயாஹா

கஸ்ய ந ஆராத்யதே சித்தம் உத்யத் அஸே  அரேஹே அபி 4-3-33

உடலில் மூன்று இடங்களிலிருந்து வரக்கூடிய அவனது பேச்சு,  வசீகரிக்கச் செய்கிறது . எவனுடைய இதயத்தைத்தான் இது தொடாது? ஓங்கிய கத்தியுடன் வருபவனையும் கவரக்கூடியது .

அதாவது உருவிய கத்தியுடன் தாக்குவதற்கு வரும் எதிரியும் அனுமன் பேச்சைக் கேட்ட மாத்திரத்தில்  கத்தியைக் கீழே போட்டுவிடுவானாம்

மூன்று இடங்களில் இருந்து சொற்கள்  வரும் என்று சம்ஸ்க்ருத உச்சரிப்பு PHONETICS சாஸ்திரம் சொல்கிறது உரசி = மார்பு,சிரஸி =தலை , கண்ட = கழுத்து என்று வியாக்கியானக்காரர்கள் விளக்குவர்.

ஏவம்  விதோ யஸ்ய தூதோ ந பவேத்  பார்த்திவஸ்ய து

ஸித்தயந்தி  ஹி  கதம் தஸ்ய கார்யாணாம்  கதயோ அனக

மாசு மருவற்ற தூயவனே (லெட்சுமணா )! இப்படிப்பட்ட (சொல்வன்மையுடைய ) ஒரு தூதன் ஒரு அரசனுக்கு இருந்தால் அவன் வெல்ல முடியாத, சாதிக்க இயலாத , காரியம் ஏதேனும் உண்டோ !

ஏவம் குண கணைர் யுக்தா யஸ்ய ஸ்யுஹு கார்ய ஸாதகாஹா

தஸ்ய ஸித்தயந்தி ஸர்வ அர்த்தா தூத வாக்ய ப்ரசோதிதாஹா 4-3-34-

பல்வேறு குணங்கள் ஒருங்கே கூடிய இப்படிப்பட்ட சாதனையாளர்கள் ஒரு அரசனுக்கு இருந்தால் அந்த தூதனின் சொல்வன்மையால் அரசனின் குறிக்கோள்கள் அனைத்தும் நிறைவேறிவிடும்.

இந்த இடத்தில் இரண்டு, மூன்று முக்கிய விஷயங்களை நாம் அறிதல் வேண்டும்.

உலகிலேயே தூதர் AMBASSADOR , MESSENGER என்ற பதவியை உருவாக்கி அதற்கு இலக்கணம் கற்பித்தது இந்துக்கள்தான். சாம, தான, பேத , தண்ட  என்ற நான்கு வித உபாயங்களில் முதல் உபாயம், ஒரு போரைத் தவிர்ப்பதற்காக தூது விடுவதாகும் . மஹாபாரதத்திலும் ராமாயணத்திலும் இதை விரிவான இலக்கணத்துடன் காண்கிறோம்.

மேற் கூறியவற்றை ஒப்பிட குறள் பாக்கள் :

[பொருட்பால்அமைச்சியல்தூது]

ஆறு குணங்களை வள்ளுவன் 3+3 =6 ஆக தருகிறான்

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்

செறிவுடையான் செல்க வினைக்கு- 684

இயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் திறம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்

வாய்மை வழியுரைப்பான் பண்பு–688

தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்

வென்றி வினையுரைப்பான் பண்பு.[பொருட்பால், அமைச்சியல், தூது]-குறள் 683

அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.

நூலாருள் நூல்வல்லன்= கவீம் கவீநாம் என்ற ரிக் வேத (Rig Veda) சொற்களின் மொழியாக்கம். இதைச் சொல்லித்தான் பிராமணர்கள் பூஜையைத் தொடங்குவர்  (கணாணாம்  த்வா …….. மந்திரம்)

சொல்வன்மை

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின் -648

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்–643

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து –645

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது– 647

இவை அனைத்தும் வால்மீகி முனிவரின் அனுமன் வருணனையில் இருப்பதை ஒப்பிட்டு மகிழ்க.

————-

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் அணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு –53-

சென்றால் குடையாம்
அவன் உலாவி அருளும் போது
மழை வெய்யில் படாதபடி
குடையாக வடிவு எடுப்பான் –

இருந்தால் சிங்காசனமாம்
எழுந்து அருளி இருந்த காலத்தில்
திவ்ய சிம்ஹாசன ஸ்வரூபியாய் இருப்பான்

நின்றால் மரவடியாம்
நின்று கொண்டு இருந்தால் பாதுகையாய் இருப்பான்

நீள் கடலுள் என்றும் புணையாம்-
திருப் பாற் கடலில் திருக் கண் வளர்ந்து அருளும் போது
மெத்தையாய் இருப்பான்

புணையாம் -திருப் பாற்கடலில் அழுந்தாதபடி தெப்பமாவான்

அணி விளக்காம் –
ஏதேனும் ஒன்றை விளக்கு கொண்டு காண அவன் விரும்பும் பொழுது விளக்கும் ஆவான்

மணி விளக்காம் என்றுமாம்

பூம் பட்டாம்-
சாத்திக் கொள்ளும்படி திரு பரியட்டத்தை அவன் விரும்பும் பொழுது அதுவும் ஆவான்

புல்கும் அணையாம்
சாய்ந்து அருளும் போது தழுவிக் கொள்ளுவதற்கு
உரிய உபாதாநமும் ஆவான்

பிரணய கலஹத்தினில் விரஹ துக்கம் தோன்றாதபடி அணைத்துக் கொள்வானாம் என்றுமாம்

ஆளவந்தார் -செய்யா ஆசனம் இத்யாதி
சென்றால் குடையாம் கடல் புணையாம் திருத் தீவிகையாம்
நின்றால் இரு திருப் பாதுகையாம் நித்திரைக்கு அணையாம்
குன்றா மணி ஒளி ஆசனமாம் புணை கோசிகையாம்
அன்று ஆலிலையில் துயில் அரங்கேசர்க்கு அரவரசே -பிள்ளை பெருமாள் ஐயங்கார் -திருவரங்கத்து மாலை

————–

லஷ்மணோ லஷ்மி சம்பன்ன

ந ச தேந விநா நித்ராம் லபதே புருஷோத்தம |
ம்ருஷ்டம் அன்னம் உப அனில்தாம் அஸ்நாதி ந ஹி விநா – || —1-18-30
புருஷோத்தமனான பெருமாள் இளைய பெருமாள் இல்லாமல் தூங்க மாட்டார் –
நல்ல உணவையும் அவர் இல்லாமல் உண்ணவும் மாட்டார்

அந்யோன்யம்
பால்யாப் ப்ரப்ருதி
தனியாகத் தொட்டிலில் இருக்கும் போதே அழுத வ்ருத்தாந்தம்

ததா வசிஷ்டே ப்ருவதி ராஜா தசரதாத் ஸ்வயம்
ப்ரக்ருஷ்டா வதநோ ராமம் ஆஜுஹாவா ஸஹ லஷ்மணாம் –|| –1- 22 -1

In sargam 102 of uththara kaaNdam Raama says to LakshmaNa -இமா குமாரவ் ஸுமித்ரே தவ தர்ம விசாரத்வ் |
அங்கத சந்த்ர கேது ச ராஜ்யார்த்தே த்ருத விக்ரமவ் || உத்தர -102 சேர்க்க ஸ்லோகம்

ஹே லஷ்மணா -இந்த அங்கதன் சந்த்ரகேது ஆகிய உனது குமாரர்கள் இருவரும் ராஜ தர்மம் அறிந்தவர்கள் –
பரதனுக்கு தக்ஷன் புஷ்கலன் என்ற இரண்டு குமாரர்கள்
சத்ருக்கனனுக்கு ஸூபாஹு ஸ்ருதஸேநன் என்ற இரண்டு குமாரர்கள்

பாவஜ்ஜேந க்ருதஜ்ஜேந தர்மஜ்ஜேந ச லஷ்மணா |
த்வயா புத்ரேந தர்மாத்மா ந ஸம் வ்ருதா பிதா மம || 3-15-29

உள் உணர்வை அறிந்தவன்-ஸர்வ சக்தன் -க்ருத அக்ருதங்களை அறிந்தவன்
நீ அருகில் இருக்க நான் சக்ரவர்த்தி இழந்தவனாக நினைக்கவே இடம் இல்லையே –

ரமந்தே யோகிநோ அநந்த ஸத்ய சிதாத்மாநி |
இதி ராம பதேந அசவ் பரம் ப்ரஹ்ம அபிதீயதே ||–ஸ்ரீ ராம சத நாம ஸ்தோத்ரம் -8-பத்ம புராணம்

ஸ்ரீ ராம ராம ராம இதி ரமே ராமே மநோ ரமே |
ஸஹஸ்ர நாம தத் துல்யம் ராம நாம வரானனே ||–சிவன் பார்வதிக்கு அருளியது

மித்ரி பாக்யமே பாக்யமு ஸுமித்ரி பாக்யமே பாக்யமு

பாகுக விந்த ராகமுள நாளா பமு சேயக மேனு புலக ரிஞ்சிக தியாகராஜ போகடி ஜூசு ஸு —
–தியாகராஜர் கீர்த்தனை

சித்ர ரத்ன மய சேஷ தல்பமண்டு
சீதா பதி உசினி யூஸே ஸுமித்ரே –
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளம் தானே பெருமாள்

ஸ்தோத்ரம் -40-அவதாரிகை –

திரு வனந்த ஆழ்வான் உடைய வ்ருத்தி விசேஷங்களை
அனுபவிக்கிறார் –
தமக்கு அடிமையில் உண்டான த்வரையாலே
உபமாநம சேஷாணாம் ஸாது நாம் -என்னும் ந்யாயத்தாலே
அடிமையில் ருசி யுடையார்க்கு எல்லாம்
உதாஹரண பூதமாய் இறே திரு வநந்த ஆழ்வான் உடைய
வ்ருத்தி விசேஷங்கள் இருப்பது
இவன் உடைய காஷ்டையை அருளிச் செய்கிறார் –

நிவாஸ ஸய்யா ஆஸன பாதுகா அமஸூக
உப தான வர்ஷா தபவாரணாதிபி
சரீர பேதைஸ் தவ சேஷதாம் கதைர்
யதோ சிதம் சேஷ இதீரிதே ஜனை–40-

நிவாஸ –
எழுந்து அருளி இருக்கிற திரு மாளிகையாம்

ஸய்யா-
கண் வளர்ந்து அருளுகைக்குப் படுக்கையாம்

ஆஸன –
இருந்தால் சிங்காசனமாம் -முதல் திருவந்தாதி -53-

பாதுகா –
நின்றால் மரவடியாம் –

அமஸூக –
பும்ஸ்த்வ அவஹமான திருப் பரியட்டமாம் –

உப தான –
புல்கும் அணையாம் –

வர்ஷா தபவாரணாதிபி –
சென்றால் குடையாம் -என்கிறபடியே
வர்ஷத்துக்கும் ஆதபத்துக்கும் சத்ரமாம் –

ஆதி சப்தத்தாலே
அடிமையில் அபி நிவேச அநு ரூபமாக சரீரத்துக்கு தொகை இல்லை –
ஸ ஏக்தா பவதி -என்று தொடங்கி சஹஸ்ரதா பவதி -என்னக் கடவது இறே –

சரீர பேதைஸ் –
கைங்கர்ய பேதமே சரீர பேதத்துக்கு ஹேது –

தவ சேஷதாம் கதை –
தேவரீர் உடைய விக்ரஹங்கள் ரஷண ஹேதுவாய் இருக்கிறாப் போலே
இவனுடைய விக்ரஹங்கள் சேஷத்வத்தை அடைந்து இருக்கும் என்கை –
யதோ சிதம் –
யதா யதார் ஹி கௌசல்யா -என்கிறபடியே
தத் தத் கால உசிதமாய் இருக்காய்

சேஷ இதீரிதே ஜனை –
சிறியார் பெரியார் என்னாதே
சர்வராலும் சேஷம் என்று சொல்லப் படுகை –
சேஷத்வம் தான் ஒரு வடிவு கொண்டாப் போலே இருக்கை
ஜனை
பெருமக்கள் உள்ளவர் -திருவாய் மொழி -3-7-5-என்கிறபடியே
நித்ய சித்தரைச் சொல்லவுமாம்-
பரகத அதிசய அதான இச்சா உபாதேயதவ மேவ யஸ்ய ஸ்வரூபம் ஸ சேஷ -பரஸ் சேஷி –
என்கிற சேஷத்வத்தின் படியே
பாரதந்த்ர்யம் பரே பும்சி -இத்யாதி –

(மன்னிய பல் பொறி சேர் ஆயிரவாய் வாள் அரவின் சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள் மன்னிய
நாகத்தணை மேல் -ஸ்ரீ பெரிய திருமடல் பாசுரம் படியே – பணா மணிவ்ராத-
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும் புணையாம் அணி விளக்காம்
பூம் பட்டாம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு -முதல் திருவந்தாதி பாசுரம் அடி ஒற்றியே இந்த ஸ்லோகம் –
வர்ஷாத பவாரண–வெய்யில் மழை இரண்டாலும் காக்கும் குடை என்றவாறு -)

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading