ஸ்ரீ திவ்ய பிரபந்தத்தில் ஸ்ரீ திவ்ய ஆயுதங்கள்-ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி ..

மான் முனிந்து ஒருகால் வரி சிலை வளைத்த மன்னவன் பொன் நிறத்து உரவோன்
வூன் முனிந்து அவனதுடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து 1-4-8

சிலையும் கணையும் துணையாக சென்றான் வென்றிச் செருக் களத்து 1-5-1

இலங்கை பொடியா வடிவாய்ச் சரம் துரந்தான் 1-5-2

உலவு திரையும்  குல வரையும் வூழி முதலா எண் திக்கும் 
நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விறல் ஆழி வலவன் 1-5-3

வூரான் குடந்தை வுத்தமன் ஒருகால் இருகால் சிலை வளைய  1-5-4

அவள் மூக்கு அயில் வாளால்  விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான் 1-5-5

அலம் புரி  தடக் கை ஆயனே ! மாயா !வானவர்க்கு அரசனே ! 1-6-2

அவுணன் பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் இடம் ….சிங்க வேள் குன்றமே 1-7-1

நெஞ்சு இடந்த கூர் உகிர் ஆளன் இடம் ….சிங்க வேள் குன்றமே 1-7-2

வள்ளுகிரால் வகிர்ந்த அம்மானது  இடம் ….சிங்க வேள் குன்றமே 1-7-3

அவுணன் பொன்ற ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் இடம் ….சிங்க வேள் குன்றமே 1-7-5

நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான் 1-8-3

அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ….அரியாய  வன் திருவேங்கடம் அடை நெஞ்சமே ! 1-8-6

இலங்கைக்கு இறைவன் தன திண் ஆகம் பிளக்க சரம் செல வுய்த்தாய் ! 1-10-1

தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாள் அரக்கன்   பொய் இல்லாத பொன் முடிகள்
ஒன்பதோடு  ஒன்றும் அன்று செய்த வெம் போர் தன்னில் அங்கு ஓர்
செஞ்சரத்தால் உருள எய்த எந்தை எவ்வுள் கிடந்தானே 2-2-2

அரக்கன் மன்னூர்  தன்னை வாளியினால் மாள முனிந்து 2-2-3

கான் அமர் வேழம் கை எடுத்து அலறக்  கரா அதன் காலினைக் கதுவ ஆனையின் துயரம் தீர
புள்ளூர்ந்த்து சென்று நின்று ஆழி தொட்டானை தேன் அமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிகேனிக் கண்டேனே 2-3-9

அவுணன் அவன் மார்பகலம் உகிரால் வகிராக முனிந்து  அரியாய் நீண்டான்
குறளாகி நிமிர்ந்தவனுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே 2-4-2

அலமன்னு மடல் சுரி சங்கம் எடுத்து அடல் ஆழியினால் அணியார் உருவின்
புல மன்னு வடம் புனை கொங்கையினாள் பொறை தீர முனாள் அடு வாள் அமரில் 
பல மன்னர் படச் சுடர் ஆழியினை பகலோன் மறையப் பணி கொண்டு அணி சேர்
நில மன்னனுமாய் உலகாண்டவனுக்கு இடம் மா மலை யாவது நீர்மலையே  2-4-3

இலங்கை கெடப் படை தொட்டு …வாளியினால் கதிர் நீள் முடி பத்தும் அருத்தமரும்…..
இடம் மா மலை யாவது நீர்மலையே  2-4-6

பார் இடத்தை எயிறு கீற இடந்தானை 2-5-6

தென்   இலங்கை அரக்கர் வேந்தை விலங்கு உண்ண வலங்கை வாய்ச் சரங்கள் ஆண்டு 2-5-9

திரு சக்கரத்து எம்பெருமானார்க்கு இடம் 2-6-9

வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா அரி உருவாம் . 2-8-1

செம் பொன் இலங்கு வலங்கை வாளி திண சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்
உம்பர் இரு சுடர் ஆழியோடு கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே ! ….இவர் ஆர் கொல் ?
என்ன அட்ட புய கரத்தேன் என்றாரே 2-8-3

வெஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி  வேதம் முன் ஓதுவார் நீதி வானத்து
அஞ்சுடர் போன்று இவர் ஆர் கொல் ? என்ன அட்ட புய கரத்தேன் என்றாரே 2-8-4

அப்பால் அதிர் சங்கம் இப்பால் சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில் ….
இவர் ஆர் கொல் ? என்ன அட்ட புய கரத்தேன் என்றாரே 2-8-8

செருவில் திறல் வாட்டிய திண சிலையோன்  பார் மன்னு பல்லவர் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே 2-9-2

வெருவச் செரு வேல் வலங்கை பிடித்த படைத் திறல் பல்லவர் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் அதுவே 2-9-8

மா  களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி அந்தரமே வரத் தோன்றி அருள் செய்தானை ….திரு கோவலூர்
அதனுள் கண்டேன் நானே 2-10-3

கரன் முதலாக் கவந்தன் வாலி கணை ஒன்றினால் மடிய….திரு கோவலூர் அதனுள் கண்டேன் நானே 2-10-5

தூவடிவின் பார்மகள் பூ மங்கையோடு சுடர் ஆழி சங்கு இருபால்
பொலிந்து தோன்ற…..திரு கோவலூர் அதனுள் கண்டேன் நானே 2-10-9

மின்னும் ஆழி அம் கையவன்  செய்யவள் உறை தரு திரு மார்பன் 3-1-2

விசயனுக்காய் மணித் தேர் கோல் கொள் கைத் தலத்து எந்தை 3-1-9

குல மன்னர் அங்கம் மழுவில் துணிய தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித் தவ மா முனியைத்
தமக்காகக கிற்ப்பீர் !….தில்லை திரு சித்ர கூடம் சென்று சேர்மின்களே 3-2-5

நீண்ட எயிற்றோடு பேழ் வாய் சிங்க வுருவின் வருவான் சித்ர கூடத்து உள்ளானே 3-3-8

கருமுகில் போல்வது ஓர் மேனி கையான ஆழியும் சங்கும் …வருவான் சித்ர கூடத்து உள்ளானே 3-3-9

வையணந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்தெடுத்து மதங்கள் செய்து
நெய் அணைந்த திகிரியினால் வாணன் தோள் நேர்ந்தவன் தாள் அணைகிற்ப்பீர் ! 3-4-3

குருதி யுக உகிர் வேல் ஆண்ட நின்மலன் தாள் அணைகிற்ப்பீர் ! 3-4-4

விராதனுக்கு வில் குனித்த விண்ணவர்கோன் தாள் அணைவீர் ! 3-4-6

செருவில் வலம் புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்ப்பீர் !3-4-7

சிலையாளா ! மரம் எய்த திறலாளா !திரு மெய்ய மலையாளா !3-6-9

நெய் இலங்கு சுடர் ஆழி படையானை நெடுமாலை 3-6-10

விளங்கு சுடர் ஆழி என்னும் படையோடு சங்கு ஓன்று உடையாய் !என நின்று இமையோர் பரவும் இடம் 3-8-9

இரணியனை நண்ணி அவன் மார்வகலத்து உகிர் மடுத்த நாதன் 3-9-2

தன் நிகரில் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது உறை கோயில் 3-9-5

நரகன் உரம் அழித்த அடல் ஆழித் தடக் கையன் 3-9-8

சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும் தாமரை கண் நெடிய பிரான் 3-9-10

விறல் ஆழி  தடக் கையன் 3-10-2

இரணியனை பற்றி வாடாத வள்ளுகிரால் பிளந்து அவன் தன மகனுக்கு அருள் செய்தான் 3-10-4

நெடும் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என் தன தனிச் சரண் 3-10-6

இரணியனை  வாடாத வள்ளுகிரால் பிளந்து  அளைந்த மாலதிடம் 4-1-7

பத்தும் அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில் 4-2-1

இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானை 4-3-6

வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை 4-3-8

உருத்து எழு வாலி மார்வில் ஒரு கணை உருவ வோட்டி கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடியரசு அளித்தாய் ! 4-6-3

ஆழி படையன் என்றும் நேசன் தென் திசைக்கு திலதம் அன்ன மறையோர் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி 4-8-8

தென் இலங்கை வேந்தன் வீயச் சரம் துரந்து மாவாய் பிளந்து மல் அடர்த்து
மருதம் சாய்த்த மாலதிடம் ..புள்ளம் பூதம் குடி தானே 5-1-3

திரள் தோள் ஐ நான்கும்  துணித்த வால் வில் ராமன் இடம் ..புள்ளம் பூதம் குடி தானே  5-1-4

வென்றி மா மழு வேந்தி  முன் மண் மிசை மன்னரை மூ எழு கால் கொன்ற தேவ ! 5-3-1

கையில் நீள் உகிர்ப் படையது வாய்த்தவனே !எனக்கு அருள் புரியே 5-3-3

அரக்கன் தன சிரம் எல்லாம் வேறு வேறு உக  விழ அது வளைத்தவனே ! எனக்கு அருள் புரியே 5-3-7

ஆழி தடக் கை குறளன் இடம் …..தென் அரங்கமே 5-4-3

வளைத்த வல் வில் தடக் கையவனுக்கு இடம் …..தென் அரங்கமே 5-4-4

வென்ற சுடர் ஆழியான் வாழ் இடம் …..தென் அரங்கமே 5-4-7

மராமரம் ஏழு எய்த வென்றிச் சிலையாளன் 5-5-2

அடல் மழுப் பற்றி மற்று அவன் அகல் விசும்பு அணைய 5-7-6

இலங்கை  பாழ் படுப்பதற்கு எண்ணி வரி சிலை வளைய அடு சுரம் துரந்து மறி கடல் நெறி பட
மலையால் அரி குலம் பணி கொண்டு அலை கடல் கடிந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே 5-7-7

இலங்கை மலங்க அன்று அடு சுரம் துரந்து ….பகலவன் ஒளி கெட பகலே ஆழியால் அன்று
அங்கு ஆழியை மறைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே 5-7-8

கை இலங்கு ஆழி சங்கன் கரு முகில் நிறத்தன் 5-9-1

அரி உருவமாகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த சக்கரச் செல்வன் தென் திரு பேர் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே 5-9-5

விளங்கு இழை பொருட்டு வில்லால்  இலங்கை மா நகர்க்கு இறைவன் இருபது  புயம் துணித்தான் 5-9-6

வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம் இவை அம் கை உடையான்
நாளும் உறைகின்ற நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே ! 5-10-5

நந்தி புர விண்ணகரம்  நண்ணி உறையும் உறை கொள்  புகர் ஆழி சுரி சங்கம் அவை அம் கை உடையானை 5-10-10

நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி  -6-2-4

வலங்கை ஆழி இடங்கை சங்கம் உடையானூர்…..நறையூரே  6-5-1

அவுணன் முரண் மார்வம் புனை வாள் உகிரால் போழ பட ஈர்ந்த புனிதனூர் …..நறையூரே  6-5-2

வாள் உகிர் நுதியால் அவனதாகம் அங்குருதி பொங்குவித்தான் அடிக் கீழ் நிற்ப்பீர் ! 6-6-4

நிசாசரை தோளும் தலையும் துணிவெய்தச் சுடு வெண்சிலை வாய்ச் சரம் துரந்தான்  6-7-1

தனிவாய் மழுவின் படை ஆண்ட தாரார் தோளான் 6-7-2

ஆயர் கோவாய் நின்றான் கூராளிப்  படையான் ….நறையூர் நின்ற நம்பியே 6-7-7

பாஞ்சாலி கூந்தல் முடிக்க ….. மன்னர் கலங்க சங்கம் வாய் வைத்தான் 6-7-8

வரி செஞ்சரம் துரந்த வில்லானை …நறையூரில் கண்டேனே 6-8-5

பொங்கேறு  நீள் சோதிப் பொன்னாழி தன்னோடும் சங்கேறு தடக்கை பெருமானை ..நறையூரில் கண்டேனே 6-8-5

அழல் ஆரும் சரம் துரந்தான் அடி இணையே அடை நெஞ்சே ! 6-9-2

பகல் கரந்த சுடர் ஆழிப் படையான் …பொன் அடியே அடை நெஞ்சே ! 6-9-5

இலங்கை கோன் வல்லாள் ஆகம் வில்லால் முனிந்த எந்தை  விபீடணற்கு
நல்லான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே 6-10-4

ஆயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா ! 7-2-7

செம் கண் அரக்கர் உயிர் மாள செற்ற வில்லி என்று கட்ட்றவர் தந்தம்
மனமுள் கொண்டு என்றும் எப்போதும் நின்றேத்தும் மா முனியை 7-3-1

ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக் கன்றி
என் மனம் தாழ்ந்து நில்லாதே 7-3-4

போராளும் சிலை அதனால்  பொரு கணைகள் போக்குவித்தாய் என்று 7-4-4

சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டு உகந்த சங்கம் இடத்தானைத் தழல் ஆழி வலத்தானை 7-6-1

கோவானார் மடியக் கொலையார் மழுக் கொண்டருளும் மூவா வானவனை 7-6-2

விறல் ஆழி விசைத்தானை 7-6-3

உருவச் செஞ்சுடராழி வல்லானே ! 7-7-1

நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோள் உடையாய் ! 7-7-3

உலகம் அளந்த வென்றித் தனி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின் 7-7-6

சிரங்கள் புரண்டு வீழ அடுகணையால் எய்து உகந்த அம்மான் காண்மின் 7-7-7

பெறு வலித் தோள் உடைய வென்றி நிலவு புகழ் நேமி அம் கை நெடியோன் காண்மின் 7-8-9

கையில் ஓர் சங்குடை மை நிறக் கடலை 7-10-2

கையில்  ஆழி ஓன்று ஏந்திய கூற்றினை 7-10-5

ஆழி ஏந்திய கையனை 7-10-6

மெய்ம்மை சொல்லின்  வெண் சங்கம் ஓன்று ஏந்திய கண்ண ! நின் தனக்கும்
குறிப்பாகில் கறக்கலாம் கவியின் பொருள் தானே 7-10-10

சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம்
என்கின்றாளால் …..கண்ண புரதம்மானைக் கண்டாள் கொலோ ? 8-1-1

செருவரை முன்னாசறுத்த சிலையன்றோ ? கைத்தலத்தென்கின்றாளால்
பொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை என்கின்றாளால் 8-1-2

கரை எடுத்த சுரி சங்கும் 8-3-1

இரணியனை முரணழிய  அணி உகிரால் உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வழியே 8-3-6

மார்வில் திருவன் வலன் ஏந்து சக்கரத்தன் 8-4-6

கழல் மன்னர் பெரும் போரில் மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் 8-5-4

ஏழு மா மரம் துளை படச் சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த ஆழியான் 8-5-5

வரி கொள் வெஞ்சிலை வளைவித்த  மைந்தனும் வந்திலன் 8-5-6

வெஞ்சமத்து அடுசரம் துரந்த எம் அடிகளும் வாரானால் 8-5-7

மழுவினால் மன்னர் ஆர் உயிர் வவ்விய மைந்தனும் வாரானால் 8-5-8

திண் தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனிந்த திரு மார்பன் 8-6-1

சிலை  கைக் கொண்டானூர் கண்ண புரம் தொழுதுமே  8-6-2

முனி தன வேள்வியை கல்விச் சிலையால் காத்தானூர் ண்ண புரம் தொழுதுமே  8-6-3

மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்து 8-6-4

கலை மாச் சிலையால் எய்தானூர் கண்ண புரம்  நாம் தொழுதுமே  8-6-7

மழுவியல் படையுடையவன் இடம் 8-7-6

வேற்றான் அகலம் வெஞ்சமத்து பிளந்து வளைந்த உகிரானை 8-8-4

வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூவெழு கால் படியார் அரசு களை கட்ட பாழியானை அம்மானை 8-8-6

சங்கமார் அங்கைத் தடமலருந்திச் சாம மா மேனி என் தலைவன் 9-1-1

வன் முதலை துணி படச் சுடு படை துரந்தோன் 9-1-2

மழுவினால் அவனியரசை மூ எழுகால் மணி முடி பொடி படுத்து 9-1-6

இலங்கையோர் கோனை பானு நேர் சரத்தால் பனங்கனி போலப் பரு முடி யுதிர வில் வளைத்தோன் 9-1-7

கலையுலா வல்குல் காரிகை திறத்துக் கடல் பெரும் படை யொடும் சென்று சிலையினால்
இலங்கை தீ எழச் செற்ற திரு கண்ணங்  குடியுள் நின்றானை  9-1-10-

செஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி ….ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும் அச்சோ ஒருவர் அழகிய வா ! 9-2-2

வம்பவிழும் துழாய் மாலை தோள் மேல் கையான ஆழியும் சங்கும் ஏந்தி … அச்சோ ஒருவர் அழகிய வா ! 9-2-4

கையில் வெய்ய ஆழி ஓன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி .. அச்சோ ஒருவர் அழகிய வா ! 9-2-5

அலமும் ஆழிப் படையும் உடையார் நமக்கு அன்பராய் 9-3-8

தெய்வச் சிலையாற்கு என் சிந்தை நோய் செப்புமினே 9-4-3

பரிய இரணியனது ஆகம் அணி உகிரால் அறி வுருவாய்க் கீண்டான் அருள் தந்தவா ! 9-4-4

வில்லால் இலங்கை மலங்கச் சரம் துரந்த வல்லாளன் பின் போன நெஞ்சம் 9-4-5

சிலையால்  இலங்கை செற்றான் 9-6-10

வலம் புரி யாழியானை வரையார் திரள் தோளன் தன்னை ….திரு மால் இரும் சோலை
நின்ற நலம் திகழ் நாரணனை நணுகும் கொல் 9-9-9

கோல வல் விலி ராம பிரானே ! 10-2-1

முன நாள் வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போல்
அவுணன் உடல் வள் உகிரால் அளைந்திட்டவன் 10-6-3

உகிரால்  பிளந்திட்டு அமரர்க்கு அருள் செய்து உகந்த பெருமான் திருமால் 10-6-4

மன்னன் சினத் தோள் அவை ஆயிரமும் மழுவால் அழிதிட்டவன் 10-6-6

ஆர்மலி யாழி சங்கொடு பற்றி ஆற்றலை ஆற்றல் மிகுத்து கார் முகில் வண்ணா ! 10-9-3

தோள்   ஆயிரம் வீழப் படை மழுப் பற்றிய வலியோ ? 10-9-7

சொல்லாய் பைங்கிளியே !சுடராழி வலனுயர்த்த
மல்லார் தோள் வட வேங்கடவனை வர சொல்லாய் பைங்கிளியே ! 10-10-5-

——————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: