திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-7-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 15, 2013

கருளப் புட்கொடி சக்க ரப்படை வான நாட!எம் கார்முகில் வண்ணா!
பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்!
தெருள்கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள்செய் தங்கிருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே.

பொ-ரை :- கருடக் கொடியினையும் சக்கரப்படையினையுமுடைய வைகுந்த நாடனே! எம் கார்முகில் வண்ணனே! பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமைகொண்டாய்; நான்மறைகளிலும் வல்லவர்களான தத்துவ ஞானத்தையுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் பலர் வாழ்கின்ற ஸ்ரீவரமங்கலநகரத்திற்குத் திருவருளைச்செய்து அங்கே தங்கியிருக்கின்றவனே! ஒரு பிரதியுபகாரத்தை யான் அறியேன் என்கிறார்.

வி-கு :- வானநாட! கார்முகில்வண்ணா! அங்கு இருந்தாய்! என்னை அடிமைகொண்டாய்; அதற்கு ஒரு கைம்மாறு அறியேன் என்க. வெம் கார்முகில் வண்ணா! என்றுகொண்டு விரும்பப்படுகின்ற கரிய மேகம் போன்ற நிறத்தையுடையவனே! என்னலுமாம். வெம்மை-விருப்பம். “வெம்மை வேண்டல்” என்பது தொல்காப்பியம். தெருள்-ஞானம். வல்லவர்: முற்றெச்சம்.

ஈடு :- மூன்றாம் பாட்டு. 1“அருளாய்” என்றீர், அருளக்கடவோம், அதில் ஒருதட்டு இல்லை; ஆனாலும், 2“ஆன்மாகருத்தாவானால் சாஸ்திரம் பயனுடைத்தாம்.” “சாஸ்திரம் பயனுடைத்தாம்போது ஆன்மா கருத்தாவாகவேணும்” என்றபடி அருள் பெறுவார் பக்கலிலும் சிறிது உண்டாக வேணும் காணும் என்ன, இது மேலுற்றைக் கிட்ட மரியாதையோ! கீழுற்றைக்கும் ஏதேனும் உண்டோ; ஆன பின்னர், இத்தலையில் கிஞ்சித்காரத்தை விட்டு உன் கிருபையாலே செய்தருளாய் என்கிறார். இவ்வளவும் வர இதற்கு முன்பு நீ நிர்ஹேதுகமாக ஏற்றுக்கொண்ட பின்பு, மேலும் செய்தருளவேணும் என்கிறார்.

கருளப்புட்கொடி . . . . . . . . . . அடிமைகொண்டாய் – 1நீ முன்பு அருளிற்று உன்னை அறிந்தோ, என்னை அறிந்தோ! கருளப்புட்கொடி – பெரிய திருவடியைக் கொடியாகவுடையவனே! 2இன்னமும் ஒன்று வேண்டும்படியோ உன்னுயர்த்தி. 3“அருளாழிப்புள்” அன்றோ. சக்கரப்படை – அதுவும் வரவேண்டும்படியோ இது இருக்கிறது. 4“அருளார் திருச்சக்கரம்” அன்றோ. வான நாட – 5ஒன்று எடுக்கவும் ஒன்று பிடிக்கவும் வேணுமோ, இருப்பிடமே அமையாதோ. 6ஆக, பெரிய திருவடியைக் கொடியாகவும், திருவாழியை ஆயுதமாகவும், பரமபதத்தை வசிக்குமிடமாகவும் உடையையாய் வைத்து என்றபடி. பெரிய திருவடியை மேற்கொள்ளுதல்,திருவாழியைச் சலியாமல் பிடித்தல், பரமபதத்தை இருப்பிடமாகவுடையனாதல் இவை அறப் பெரியவனுக்கு இலக்கணம்; 1இவை ஓரொன்றே அமைந்திருக்க எல்லாவகையாலும் நிறைந்தவனாயிருக்கிறபடி.

“புள்” என்பது, பொதுப்பெயர்; 2“கருப்புள்” என்பது, கருடனாகிய பறவை என்று சிறப்பித்தபடி. “ஈடே” என்றதனை, “ஈளே” என்னுமாறு போலே, கருடன் என்பது ‘கருளன்’ என வந்தது. அன்றிக்கே, ‘கருள்’ என்று கறுப்பாய், அது சீற்றமாய், பகைவர்கள் மேலே சீற்றத்தையுடையவன் என்னுதல். 3“கருளுடைய பொழில் மருதும்” என்னக்கடவதன்றோ. எம் கார்முகில் வண்ணா-என்பக்கலிலே ஒளதார்யத்தைச் செய்தவனே! 4பெரிய உன் உயர்த்தி பாராவிட்டால் ஒளதார்யம் செய்கிற இடத்தைத்தான் பார்த்தாயோ. என்னளவு பாராதே பிரயோஜனத்தில் விருப்பமில்லாமல் செய்தபடி. செய்த ஒளதார்யம் ஏது? என்ன,

பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி-வஸ்து முன்பே உண்டாய், அதற்கு ஓர் உயர்வினைச் செய்துவிட்டாயோ; 5“இறைவனைப் பற்றிய ஞானமில்லாதவன் இல்லாதவனாக ஆகிறான்” என்று அன்றோ அங்கீகாரத்திற்கு முன்பு இருந்தது, இப்போது ஒரு வஸ்துவாக்கி, “இறைவனைப் பற்றிய ஞானமுள்ளவனை உள்ளவன் என்று அறிகிறார்கள்” என்று உஜ்ஜீவிக்கும்படி செய்தாய்.அடிமை கொண்டாய் – 1“பெருமக்கள் உள்ளவர்” என்கிறபடியே, நித்தியசித்தர் செய்யக்கூடிய கைங்கர்யத்தை அன்றோ என்னைக் கொண்டது. 2உண்டாக்கின அளவேயோ, ஜீவனமும் இட்டிலையோ என்கிறார். “கார்முகில்” என்றது, பலித்தபடி. ‘அடிமை கொண்டாய்’ என்கிறது, “அடிதொழுது எழு” என்னச் செய்த அவ்வளவை அன்றோ. மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் இப்படிச் சொல்லுகையாலே, தம்மைத் தாழ்த்திக் கூறல் ஞானகார்யம்; “ஈஸ்வரரோகம் – நான் பெரியவன்” என்றிருக்கை அஜ்ஞான கார்யம் என்பது பெறப்படும்.

தெருள்கொள் நான்மறை வல்லவர் – சிறந்த ஞானத்தையுடையராய்க் கொண்டு, நாலு வகைப்பட்ட வேதங்களையும் தாங்கள் நினைத்தபடி நிர்வஹிக்க வல்லவர்கள். என்றது, தெரியும்படி வேத தாத்பர்யம் கைவந்தவர்கள் என்றபடி. பலர் – ஒருவர் இருவர் அன்றிக்கே ஸ்ரீ வைகுண்டம் போலே திரள் திரளாயிருக்கை. வாழ் – வேதப்பொருளாய் விளங்குமவனைக் கண்டு அநுபவிக்கிறவர்கள். 3புண்ணிய தீர்த்தங்களிலே வசிக்கிற பிராணிகளுக்குப் பாவம் போகிறது இல்லை அன்றோ, ஞானம் இல்லாமையாலே; அங்ஙன் அன்றிக்கே, ஞானமும் அதனோடு சேர்ந்த செயலும் உடையராயிருக்கை. சிரீவரமங்கல நகர்க்கு அருள்செய்து அங்கு இருந்தாய் – சிரீவரமங்கல நகரிலுள்ளார்விரும்பாமல் இருக்கவே, அவர்கள் பக்கல் தண்ணளியாலே வந்திருந்தவனே! இதனால், 1அங்குள்ளார்க்குத் தன்னைக் கொடுத்துக்கொண்டிருக்கிற இருப்பு, தன்பேறாக இருக்கிறபடி. அன்றிக்கே, 2என்னை அடிமை கொள்ளுகைக்காக அங்கே வந்திருந்தாய் என்றுமாம். 3‘கைங்கர்யத்தளவும் வர நிறுத்தினோம், இனி அதற்குப் பிரிவு வர ஒண்ணாது’ என்று அங்கே வந்திருந்தாய். ஒரு கைம்மாறு அறியேன் – நீ இவ்வளவாக உபகரித்து நின்ற இதற்கு, நான் ஒன்று செய்தேனாக அறிகின்றிலேன். 4இதற்கு முன்னர் உதவி செய்வதற்கு ஒரு காரணம் என் பக்கலிலே உண்டு என்று சொன்னாயாதல், இனியும் நீயே நிர்வஹித்தாயாதல் செய்ய வேணும். 5‘நீர் உள்ளீராகையாலே செய்தோம்’ என்றும் சொல்லலாவதில்லை உன்னால். பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அன்றோ அடிமை கொண்டது.

தம் உபாய சூந்யதையைச் சொல்லி, ‘நீயே காப்பாற்ற வேண்டும்’ என்று
பிரார்த்திக்கின்ற இவ்விடத்திற்கு, “அடிமை கொண்டாய்”, “அறியேன்
ஒருகைம்மாறே” என்கிறது சேராது என்கிற சங்கையிலே, இது, முன்பு
செய்ததற்கு ஒரு பிரதியுபகாரம் அறியேன் என்கிறதைச் சொல்லுகிறது
என்னுமிடம் தோன்ற அவதாரிகை அருளிச்செய்கிறார் ‘அருளாய் என்றீர்’
என்று தொடங்கி.

2. “சாஸ்த்ரபலம் ப்ரயோக்தரி”-என்பது, பூர்வமீமாம்சை.

“கர்த்தா ஸாஸ்த்ரார்த்தவத்த்வாத்”-  என்பது, உத்தரமீமாம்சை.

‘மேலுற்றைக்கிட்ட மரியாதையோ’ என்றது, “அருள்செய் தங்கிருந்தாய்”
என்றதனைத் திருவுள்ளம்பற்றி. ‘கீழுற்றைக்கும்’ என்றது, “பொருளல்லாத
என்னைப் பொருளாக்கி” என்றதனைத் திருவுள்ளம்பற்றி. ‘ஆன பின்னர்’
என்றது, முன்பு இன்றியே இப்போது உண்டான பின்பு என்றபடி.

“அடிமைகொண்டாய்” என்பது முடிய, பாவம் அருளிச்செய்கிறார் ‘நீ
முன்பு’ என்று தொடங்கி. ‘அறிந்தோ’ என்ற ஓகாரத்திற்குக் கருத்து,
உன்பெருமையையும் என்சிறுமையையும் பாராதே முன்பு நீர்ஹேதுகமாக
அடிமை கொண்டாற்போலே, பேற்றினையும் உன்கிருபையாலே செய்தருள
வேண்டும் என்கிறார் என்பது.

2. “கருளப்புட்கொடி” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘இன்னமும்’
என்று தொடங்கி என்றது, கருடக்கொடியே உன் பெருமைக்கு நிரபேக்ஷ
சாதகம், சக்கரத்தைத் தரித்தலும் பரமபதத்தில் இருத்தலும் மிகை என்றபடி.

3. மேலே, மேன்மைக்குக் காரணமாக அருளிச்செய்து, இங்கே நீர்மைக்குக்
காரணமாக அருளிச்செய்கிறார் “அருளாழிப்புள்” என்று தொடங்கி. இது,
திருவாய். 1. 4 : 6.

4. “அருளார் திருச்சக்கரம்” என்பது, திருவிருத்தம்.

ஆனால், இவர் வஸ்து அலரோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘இறைவனைப் பற்றிய’ என்று தொடங்கி.

“அஸந்நேவஸபவதி அஸத்ப்ரஹ்மேதி வேதசேத்
“அஸ்திபிரஹ்மேதி சேத்வேத ஸந்தமேநம் ததோவிது:”-என்பது, தைத்திரீய. ஆனந். 6.

தெருள்கொள் நான்மறை வல்லவர்” என்று ஞானத்தைச் சொல்லி,
“வாழ்” என்று அநுபவத்தைச் சொல்லுவது என்? திவ்யதேச வாசம் தானே
உஜ்ஜீவனத்திற்குக் காரணம் அன்றோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘புண்ணிய தீர்த்தங்களிலே’ என்று தொடங்கி.

“கங்காதி தீர்த்தேஷு வஸந்தி மத்ஸ்யா:
தேவாலயே பக்ஷிஸங்கா; சநித்யம்
பாவோஜ்ஜிதா: தே ந பலம் ல பந்தே
தீர்த்தாநி புண்யாயதநா: ச முக்யா:”-என்பது, இங்கு நினைத்தல் தகும்.

கைம்முதல் எதுவும் இல்லை தம்மிடம் என்றார் முதலில்
உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்த  தமிஎனுக்கு அருளாய் என்றார் அடுத்து
-அருளுவேன் -திரு உள்ளம் பரிச்சேதிக்க -சாஸ்திர பலத்தை அனுபவிக்க கர்த்தா ஓன்று செய்து இருக்க வேண்டுமே
சேதனன் பிரயத்னம் செய்து சாஸ்திர பலன் அனுபவிக்க -ப்ரஹ்ம ஸூத்ரம் –
கர்த்த்ரத்வ அதிகரணம்
சாசநாத் கட்டளை இடும் சாஸ்திரம் விதி நிஷேத -வாக்கியம்
விஷய பூதன் சேதனன் -கர்த்தாவாக இருக்க வேண்டுமே –
அருள் பெறுவார் பக்கலிலும் சிறிது உண்டாக வேணும்
இத்தையும் உனது கிருபையால் -செய்து அருளுவாய்
நிர்ஹேதுகமாக கீழே மயர்வற மதி ந்சலம் அருளி -இப்பொழுது ஒன்றை எதிர் பார்க்கலாமா

அவஸ்துவாய் கிடந்த என்னை -பொருள் அல்லாத என்னை
கருடனை கொடியாக கொண்டவனே சக்கரப்படை கொண்டு வான நாடாஎன்  கார் முகில் வண்ணா
அசந்நேவ என்று கிடந்த என்னை பொருளாக்கி அடிமை கொண்டாயே
கைம்மாறு அறியேன்
நீ முன்னம் அருளியது உன்னை அறிந்தோ என்னை அறிந்தோ –
உனது மேன்மையும் எனது தாழ்மையும் பாராமல் அனுக்ரகித்தாய்
கருடப் புள் கொடி -இன்னும் ஒன்றும் வேண்டும்படியாயோ உன்னுடைய மேன்மை
பெரிய திருவடியை த்வஜமாக கொண்ட -அருளாழி புள் -கடவீர் -அருளே வடிவு எடுத்த கருடன்
சக்கரப்படை -அதுவும் வர வேண்டும்படியாய் -தானே சென்று விரோதி அழிக்கும்
வான நாட -இருப்பிடமே அமையாதே எடுக்கவும் பிடிக்கவும் வேண்டாமே
கொடி பிடிக்கவும் ஆயுதம் எடுக்கவும் வேண்டாமே
பரம பதம் வாஸ ஸ்தானமாக உடைத்து -சர்வாதிக லஷணம் -இவை
பெரிய திருவடியை மேற் கொள்ளுதல் வாகனமாகவும் கொடியாகவும்
திரு ஆழி சலியாமல் பிடித்து
பரம பதம் -இருப்பாக
ஒன்றே -அமையும் சர்வாதிகம்
புள் பஷி சாமான்யம் -கருட குறிப்பாக
கள்ள புள் -கருடன் -ரிக் அக்நி ஈடே ஈளே போலே டகாரம் ளகாரம்
அன்றிக்கே கருள் –
கருப்பாய் சீற்றமாய் -பிரதி பஷம் மேலே சீற்றம் உடையவன்
கருள் உடைய –மருது பெரியாழ்வார்
என் கார் முகில் வண்ணா -உனது உயர்த்தி பார்க்காமல் –
என் -என்னையும் பாராதே பிரயோஜன நிரபேஷமாக எதிர்பார்க்காமல் அருளி –
பொருள் அல்லாத என்னை பொருளாக்கி அடிமையும் கொண்டாய்
இல்லாத வஸ்துவை -உண்டாக்கி
விஷயீ காரம் முன்பு அசந்நேவ பவதி
உயர்வற உயர் அடி தொழுது ஏழு -என் மனனே -அருளிய பின்பு தான் வஸ்து வானார்
சத் ப்ரஹ்மத்தை உள்ளபடி அறிந்தவன்
அறியாதவன் அசத் -இல்லாத வஸ்து
சந்தம் ஏனம் உஜ்ஜீவிக்கும் படி அருளினாய்
மேலே அடிமை கொண்டாய்
நித்யர் செய்யும் கைங்கர்யம் செய்யும் படி அருளி ஆக்கிக் கொண்டாய்
உண்டாக்கி பின்பு ஜீவனமும் அருளி –
கார் முகில் பலித்த படி -பூமியை சத்தாக்கி பயிர் விளையும்படி
அடி தொழுது எழு -அடிமை கொண்ட க்ரமம்
தனக்கு ஒன்றுமே தெரியாது
ஈச்வரோஹம் எனபது அஞ்ஞான கார்யம்
அஹம் ஏவ பண்டித சொல்லுவான் அஞ்ஞன்
அஹம் பண்டிதன்
அஹம் அபி பண்டிதன் நான் கூட பண்டிதன்
நாஹம் பண்டித ஒன்றும் அறியாதவன் என்பான்
நெல் கதிர் முத்த முத்த வளையும்
மரம் பழுக்க பழுக்க தணியும்
வித்யை ஏற்ப்பட்டால் விநயம் உண்டாகுமே

அருளிய பின்பும் அவஸ்து என்கிறார்
ஸு நிகர்ஷம் சொல்லுகை ஞான கார்யம்
ஸ்ரீ வர மங்கல -நகர் வாசிகள்
தெருள் -இருள் பதத்துக்கு எதிர்பதம் -தருள் கொள் ஞான
நான்மறை கற்றவர்கள் -பலர் -திரள் திரளாக இருக்கை
வாழ்கை -வேதார்த்த பூதனுக்கு கைங்கர்யம்
தீர்த்தங்களில் வர்த்திக்கிற மிருகங்கள்-கங்கையில் இருக்கும் மீன்கள்  ஞானம் இன்றி
பாபம் போகிறது இல்லை
ஞானமும் அத்துடன் சேர்ந்த வ்ருத்தியும் -வாழ் -சப்தம் சொல்லுமே
அங்கு உள்ளாருக்கு இருக்கும் இருப்பு தனது பேறாக
ஸ்வயம் வ்யக்த ஷேத்ரங்கள் எட்டும்
ஸ்வயமேவ வ்யக்த்யமாக்கிக் கொண்டு
சுமதி ராஜ ரிஷி பிரார்த்திக் கொண்ட படி பார்த்தசாரதி

அர்த்திக்காத அன்றே தானே வந்து
இருந்தவன் என்னை அடிமை கொள்ளுகைகாக அங்கெ வந்து இருந்தவன் என்றுமாம்
உபகரித்த இவற்றுக்கு கைம்மாறு ஒன்றும் இல்லையே
நீயே இன்னும் செய்து அருள்
நீர் உள்ளீராகில் -அதனால் பண்ணினேன் சொல்ல முடியாதபடி அவஸ்துவாக இருந்தேனே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-7-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 14, 2013

அங்குற் றேனலேன் இங்குற் றேனலேன் உன்னைக்காணும்
அவாவில் வீழ்ந்துநான்
எங்குற் றேனுமலேன் இலங்கைசெற்ற அம்மானே!
திங்கள் சேர்மணி மாடநீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.

பொ-ரை :- ஒரு சாதனத்தைச் செய்து முக்தியை அடைந்தவனாயிருக்கிறேன் அல்லேன், சாதனத்தைச் செய்கின்றவர்களில் ஒருவனாயிருக்கிறேன் அல்லேன், உன்னைக் காண வேண்டும் என்கிற ஆசையிலே அகப்பட்டு நான் உபாயங்களைச் செய்வதற்கு ஆற்றலுடையேனும் அல்லேன்; இலங்கையை அழித்த அம்மானே! சந்திரமண்டலம் வரையிலும் பொருந்தும்படி மாணிக்கங்கள் பதித்த மாடங்கள் உயர்ந்திருக்கின்ற ஸ்ரீவரமங்கல நகரிலே எழுந்தருளியிருக்கின்ற சங்கினையும் சக்கரத்தினையுமுடையவனே! வேறு துணை இல்லாத எனக்குக் கிருபை செய்தருள வேண்டும்.

வி-கு :- அம்மானே! சங்குசக்கரத்தாய்! அங்குற்றேனல்லேன், இங்குற்றேனல்லேன், ஆசையில் வீழ்ந்து எங்குற்றேனுமல்லேன், தமியேனுக்கு அருளாய் என்கிறார். திங்கள்சேர் என்பதற்கு, சந்திரன் வந்து தங்கியிருக்கும்படியாக என்று பொருள் கூறலுமாம். மணி – அழகுமாம்.

ஈடு :- இரண்டாம் பாட்டு. 1“ஆற்றேன்” என்றால் பெற்றது என், தடைகள் இன்னம் உண்டே? என்ன, பிராட்டிக்கு வந்த தடைகளைப் போக்கியது போன்று, அடியேனுடைய விரோதியையும் போக்கியருள வேண்டும் என்கிறார்.

அங்குற்றேன் அல்லேன் – 2முக்தர் இந்தச் சம்சாரத்திலே உலாவினாற்போன்று சித்தசாதனனாய்த் திரிகிறேன்அல்லேன். இங்குற்றேன் அல்லேன் – 1இங்கே இருந்து சாதனங்களைச் செய்கின்றவர்களிலே ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன். 2அன்றிக்கே, “சனங்களுடன் இந்தச் சரீரத்தை நினையாதவனாகிறான்” என்கிறபடியே, உன்னை அநுபவித்துச் சம்சாரத்தை நினையாதிருக்கிறேன் அல்லேன். இங்குற்றேன் அல்லேன் – 3“மறந்தேன் உன்னை முன்னம்” என்கிறபடியே, உன்னை மறந்து, “அவர் தரும் கலவியே கருதி” என்கிறபடியே, அதுவே பேறாக இருக்கிறேன் அல்லேன் என்னுதல். 4யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல்வீடு செய்கையாலே அப்படி இருக்கமாட்டாரே. உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து யான் எங்குற்றேனும் அல்லேன்-5ஆனால், ஒரு காலத்திலாகிலும் சில செய்ய வல்லீரோ? என்னில், அது, முன்பே தானேஉன்னைவிட்டு ஒன்றும் ஆற்றகிற்கின்றிலேன்” என்று சொன்னேனே அன்றோ. 1ஒரு காரியத்தைச் செய்ய வேண்டியவர்கள் அதற்கு ஆற்றல் உள்ளவராய் இருக்க வேண்டும் அன்றோ. ‘உன்னைக் காண வேணும்’ என்னும் ஆசையாலே வலிமை குன்றினவனாய்த் தளர்ந்தேன். ஆதலால் சாதனங்களைச் செய்வதற்கு ஆற்றலுடையவன் அல்லேன். இது, பூர்வர்கள் நிர்வாஹம். அங்குற்றேன் அல்லேன் – 2நித்தியசூரிகளோடுகூட அங்கே இருக்கிறேன் அல்லேன். இங்குற்றேன் அல்லேன்-சம்சாரிகளைப் போன்று இங்கே உண்டு உடுத்துப் போருகிறேன் அல்லேன். 3இங்ஙனே ஆனால், நீ வந்து முகங்காட்டுமளவும் நடு ஓர் இடத்தில் நிற்கப் பொறாதவனாக இருக்கிறேன். உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து யான் எங்குற்றேனுமல்லேன் – 4“ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம்” என்கிறபடியே, அந்த ஆசையிலே வீழ்ந்து கரையேறமாட்டாதே தடுமாறாநின்றேன்.இலங்கை செற்ற அம்மானே – 1தம் தலையில் ஒன்றும் இல்லாமையைக் கண்டார், ஒன்றும் இல்லாதார் பெற்ற இடத்தைப் பார்க்கிறார்; கைம்முதல் அற்றவன் முன்பு ஈட்டி வைத்த செல்வத்தை வாங்கிப் பார்க்குமாறு போலே. 2தன்பேறாகக் கொள்ளுமவன் என்பார் ‘அம்மானே!’ என்கிறார். 3அன்றிக்கே, ஸ்வரூபம் பிரகாசித்தால், அவன் தலையிலே தள்ளிவைக்கவுங்கடவதாய், அவனும் பிராட்டிமாரைப் போன்று மேல் விழுந்து விரோதிகளையும் போக்கி அணைக்கைக்கு வேண்டும் சம்பந்தம் உண்டாய்க் காணும் இருப்பது என்னுதல். நன்று; அவை எல்லாம் செய்தமை உண்டு, ஆனாலும், 4அதற்குப் பிற்பட்டதே? என்ன, அக்கண்ணழிவு அறுத்துவைத்தாய் அன்றோ என்கிறார் மேல்:

திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவரமங்கலநகர் உறை-சந்திரமண்டலம்வரை செல்ல உயர்ந்து இரத்தினமயமான மாடங்களையுடைய சிரீவரமங்கல நகரிலே, அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்தியவாசம் செய்கின்றாயில்லையோ? நீடுகை – நீட்சியையுடைத்தாயிருக்கை. அன்றிக்கே, திங்கள் சேர் மணிமாடம் நீடு என்பதற்கு, சந்திரனோடே சேரும்படி மாணிக்க மயமான மாடங்கள் வளர்கின்ற என்னுதல். அது அப்படியேயானாலும் பரிகரம் இல்லையே? என்ன, சங்கு சக்கரத்தாய் – அங்ஙன் கண்ணழிவு சொல்லலாமோ? ஒரோ 5கைக்குப் படைஅன்றோ கூட நிற்கிறது என்கிறார். 1இங்கு, “இலக்குமணனே! வில்லைக் கொண்டு வா” என்னவேண்டும் குறை உண்டோ. பிறர் கை பார்த்திருக்கவேண்டும் குறை உண்டோ இங்கு. பரிகரங்களை அழைத்துக் காரியம் கொள்ளவேண்டும்படியோ உனக்கு இருக்கிறது. 2நீ அண்மையிலிருப்பவன் அல்லாமையோ, நீ ஆற்றலுடையவன் அல்லாமையோ, உனக்குப் பரிகரம் இல்லாமையோ, பரிகரம்தான் கைகழிய நின்றோ, எதனாலேதான் இழக்கிறது? என்ன, அவை எல்லாம் அப்படியே, இத்தலை இப்படிக் குறைவற்றிருந்தாலும் பிரயோஜனம் இல்லையே, 3அத்தலையும் குறைவற்றிருக்க வேணுமே? என்ன,

தமியேனுக்கு – இத்தலையும் குறைவற்றது என்கிறார். 4அங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன், இங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன். 5இங்குள்ளார்க்கு இவ்விஷயத்தை அறியாமையாலே பிரிவு இல்லையே. தமியேனுக்கு-உன்னை ஒழியத் துணை இல்லாத எனக்கு. 6ஸ்வரூபத்தைச்‘சாதனம்’ என்று செலவு எழுதிக் கழிக்கில் கழிக்குமித்தனை. 1நீ உபாயம் ஆனாலும் உபாயத்தைப் பிரதிபத்தி பண்ணுவார் வேண்டாவோ. தமியேன்-2பிராட்டியில் வேறுபாடு அங்காகில் ஒரு திரிசடையாகிலும் உண்டே அன்றோ, இங்கு “ஆவார் ஆர் துணை” என்னும்படி அன்றோ தனிமை. ஆயின், செய்யவேண்டுவது என்? என்ன, அருளாயே – 3என் வெறுமையும் உன்நிறைவும் அறிகைக்கு, நீ அடியில் தந்த அருள் இன்று குடி போயிற்றோ, 4அன்று நான் விரும்பாதிருக்க அருளின நீ, விரும்புவதற்குத் தகுதியைப் பிறப்பித்துப் பொகடவோ. 5ருசியை உண்டாக்குவார் ஒருவரும், உபாயத்தை அநுஷ்டிக்கிறவர் ஒருவருமாயோ இருப்பது. 6நின்னருளே புரிந்திருக்கிற எனக்கு அருளாயாகில் பின்னை யார்க்கு வேறு அருள இருக்கிறாய்.

ஆற்ற -பிரதிபந்தகங்கள் பல உண்டே
பிராட்டி பிரதிபந்தகங்கள் போக்கி அருளினது போலே என்னுடைய விரோதிகளையும் போக்கி கைக்கொள்ள வேண்டும்
தமியேன் -தனிப்பட்டவன்
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்
மயர்வற மதி நலம் அருளி இங்கு பொருந்தாமல் -அங்கும் கூட்டிப் போகாமல் தமியேன்
முக்தர் சம்சாரத்தில் திரி வது  போலே -எம்பெருமான் நியமனம்படி -தமது இச்சைப்படி
ஸ்தாவரங்கள் -நித்ய -முக்தர்கள் பட்டர் அருளி –
இங்கு இருந்து சாதன அனுஷ்டானம் செய்வாரில் ஒருவர் அல்லேன் -பூர்வர் நிர்வாகம்

உபாசகர், ஆரப்தயோகர் என்றும், ஆரூடயோகர் என்றும் இரு வகையர்.
அவர்களில் ஆரூடயோகர் படி தமக்கு இல்லை என்கிறார் என்று கூறத்
திருவுள்ளம்பற்றி அதனை அருளிச்செய்கிறார் ‘முக்தர்’ என்று தொடங்கி.
‘சித்தசாதனனாய்’ என்றது, சாதனங்கள் எல்லாம் அநுஷ்டித்துப் பலத்தினை
அநுபவிப்பதற்காக அங்கே செல்ல இருக்கிற ஆரூடயோகனாய் என்றபடி.

ஆரப்தயோகர் படி தமக்கு இல்லை என்கிறார் என்று கூறத்
திருவுள்ளம்பற்றி அதனை அருளிச்செய்கிறார் ‘இங்கே இருந்து’ என்று
தொடங்கி. ‘சாதனங்களைச் செய்கின்றவர்களிலே’ என்றது, சாதன
அநுஷ்டானம் செய்ய ஆரம்பித்த ஆரப்தயோகரிலே என்றபடி. ஆக, மேல்
திருப்பாசுரத்தில் “நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்” என்று
சொன்ன உபாயம் இன்மையை, இத்திருப்பாசுரத்தில் “அங்குற்றேன்
அல்லேன் இங்குற்றேன் அல்லேன்” என்று வேறு வகையாக
அநுபாஷிக்கிறார் என்பதாம்.

2. “அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்” என்பதற்கு, மற்றும்
ஒரு பொருள் அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று தொடங்கி.

“ஸஉத்தம : புருஷ : ஸதத்ர பர்யேதி ஜக்ஷத்கிரீடந் ரமமாண:

ஸ்திரீபிர்வா யாநைர்வா ஜ்ஞாதிபிர்வா ந உபஜநம் ஸ்மரந் இதம் சரீரம்”
என்பது, சாந்தோக்யம், 8. 12 : 3.

சாதனா அனுஷ்டானம்  ஒருவர் இல்லை
நோ பஜனம் -உன்னை அனுபவித்து சம்சாரம் மறந்தவர்களில் ஒருவர் இல்லை
சம்சாரம் தாழ்ந்தது ஞானம் உண்டான -பின்பு –

மறந்தேன் உன்னை முன்னம்” என்பது, பெரிய திருமொழி, 6. 2 : 2. “அவர்
தரும் கலவியே” என்பது, மேற்படி 1. 1 : 1.

4. இதர விஷயமே அடையத் தகுந்தது என்று இருந்தாலோ? எனின் அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘யாதானும் பற்றி’ என்று தொடங்கி. என்றது,
இவ்வுலக இன்பங்களில் ஏதேனும் ஒன்றனைப் பற்றிப் பகவத் விஷயத்தை
விட்டே போம்படியான இந்தச் சம்சாரி சேதனனுடைய நினைவானது
மீண்டும் தொடராதபடி அதனை நன்றாக விடுவிக்கையாலே என்றபடி.
இது, திருவிருத்தம், 95-ஆம் பாசுரம்.

5. “அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்” என்பதற்கு
அருளிச்செய்த இருவகைப் பொருள்களுள், முதற் பொருளுக்குத் தகுதியாக அவதாரிகை அருளிச்செய்கிறார் ‘ஆனால்’
என்று தொடங்கி. ‘ஆனால்’ என்றது, ஆருடயோகரும் ஆரப்தயோகரும்
அல்லீராகில் என்றபடி. ‘செய்ய வல்லீரோ’ என்றது, சாதனங்களை
அநுஷ்டிப்பதற்கு யோக்கியதைதான் உமக்கு உண்டோ? என்றபடி.

“நம்மை விட்டுத் தரிக்க மாட்டீர்” என்றால், “யோக்கியதை இல்லை”
என்னுமதற்கு, அது ஒரு காரணமாமோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘ஒரு காரியத்தை’ என்று தொடங்கி. என்றது, “காலாழும்”
(பெரிய திருவந்.) என்றபடியே, பக்திபாரவஸ்யத்தாலே அசக்தனான நான்,
மேலும் சாதந அநுஷ்டானத்துக்குத் தக்கவனல்லேன் என்றபடி.

2. பிரபந்நர் ஆர்த்தப் பிரபந்நர் என்றும், திருப்தப் பிரபந்நர் என்றும் இரு
வகையர்; அவர்களுள், திருப்தப் பிரபந்நனல்லேன் என்கிறார் என்று
பொருள் கூறத் திருவுள்ளம்பற்றி, அதனை அருளிச்செய்கிறார்
‘நித்தியசூரிகளோடுகூட’ என்றது முதல், ‘பொறாதவனாக இருக்கிறேன்’
என்றது முடிய.

3. நித்தியசூரிகளிலும் சம்சாரிகளிலும் கூட்டு அன்றிக்கே, வேறுபட்டவரானால்
ஸ்வரூப ஞானத்தாலே தரித்திருந்தாலோ? என்ன, அதற்கு, விடை
அருளிச்செய்கிறார் ‘இங்ஙனேயானால்’ என்று தொடங்கி. என்றது,
பக்திபாரவஸ்யத்தாலே, “சேஷிசெய்தபடி கண்டிருக்கிறோம்” என்று
ஆறியிருக்கப் பொறுமையுடையவனல்லேன் என்றபடி. இதனால், திருப்தப்
பிரபந்நன் அல்லேன் என்றபடி.

ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம்” –பெரிய திருமொழி, 4 : 9 : 3.என்கிறபடியே, அந்த ஆசையிலே வீழ்ந்து

கரையேறமாட்டாதே தடுமாறாநின்றேன்.

உன்னைக் காணும் ஆசையினால் பல ஹீநன் ஆனபின்பு -உபாயாந்தரம் செய்ய வல்லேன் அல்லேன்
உலகை திருத்த இங்கே வைத்து இருந்து –
chocolate காட்டி பின்பு குழந்தைக்கு கொடுக்காமல் இருப்பது போலே
உன்னை –இத்யாதி
நீ வந்து முகம் காட்டும் அளவும் நடுவில் நிற்க சக்தி இன்றி ஆசையில் வீழ்ந்து
அவா -சமுத்ரம் அபிநிவேசம் -கரை ஏற மாட்டாமல்
விரோதி போனால் தானே அங்கே போக
முடியும் கர்மங்களையும்நீயே போக்கி தர வேண்டுமே
பிராட்டி ஸு சக்தி விட்டாள் -தனது தலையில் ஒன்றும் -இல்லாமல்
சஞ்சிதமான தனம் வாங்கிப் பார்க்கும் போலே
கை முதல் அற்றவன் –

இலங்கை செற்ற அம்மானே -இவருக்கு உபகரித்து போலே
ஸ்வரூபம் அறிந்த பின்பு கடி மா மலர் பாவைக்கு ஒக்கும் ஷட் பாவம்
அனன்யார்க சரண்யத்வம் போக்யத்வம் போல்வன
பிராட்டி போலே மேல் விழுந்து ரஷிப்பான்
அது எல்லாம் அவதாரம் என்றானாம்
பிற்பட்டவரே
அந்த -குறையும் நீயா தீர -வீற்று இருந்த எந்தாய் -திவ்ய தேசம் வந்தபின் சொல்ல முடியாதே
திங்கள் சேர் மணி மாட -ஓங்கி இருக்கும் மாடங்கள் ரத்னா மயமாய்
ஸ்ரீ வர மங்கல நகர் அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்ய வாசம் செய்யும் திவ்ய தேசம்
சந்தரன் போலே கடாஷிக்கும் மணி மாடங்கள்
விரோதி போக்க ஆயுதங்கள் -சங்கு சக்கரங்கள் உண்டே
இங்கு சாபமானே சமுத்ரம் குறை இல்லையே -வில்லை கொண்டுவா அம்பை கொண்டு வா

சொல்ல வேண்டி இருந்ததே அங்கு

சந்நிகிதன் இல்லாமையால் இழக்கிறேனோ
சத்தை இல்லாமல் இழக்கிறேனோ
பரிகரம் இல்லாமல் இழக்கிறேனோ
எத்தால் இழப்பேன்
அத்தலையிலும் குறை இல்லாமல் இருக்க வேண்டுமே என்றானாம்
தமியேனுக்கு -தனிப்பட்டவன் -என்கிறார்
அங்கு பிரியாது இருக்கும் படி அல்லேன்
சம்சாரிகள் சப்தாதி விஷயங்களை பிரியாது இருக்கும்படி அல்லேன்
பகவத் விஷயம் அறியாமல் இருக்கும் சம்சாரிகள்
நீ ஒருவனே துணைவன்
ஸ்வரூபத்தையும் சாதனம் என்று நினைத்து தான் கழிக்க வேண்டும்
நீ உபாயம் ஆனாலும் -பற்றுவதும் உபாயம் அல்லை -ஸ்வரூபத்தில் சேர்ந்தது
சர்வ முக்தி பிரசங்க ஆகுமே

இன்னார் இணையார் பார்க்காமல் தானம் கொடுப்பவர் -நிர்ஹேதுகமாக
கை நீட்டினால் தானே கொடுக்கிறார் இது சாதனம் இல்லை –
உபாய பிரதிபத்தி சாதனத்தில் சேராமல்
பிராட்டி விட வ்யாவிருத்தி -திரிஜடை அங்கு உண்டே இங்கு ஆழ்வார் தனிமை
செய்ய வேண்டியது என்ன
அருள் -அடியில் -தந்த அன்று அபேஷிக்காமல் அருளிய நீ
இன்று பிரார்த்தித்த பின்பு அருள் -செய்ய வேண்டாமா
உன்னைக் கொடுக்க வேண்டும் -அருளாயே என்கிறார்
எனது வெறுமையும் உனது பூர்த்தியையும்
ருசி உண்டாக்கிய பின்பு -நீயே உபாயமாக இருந்து பலம் கொடுக்க வேண்டும்
நின்னையே குறித்து இருந்தேன்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-7-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 14, 2013

ஏழாம் திருவாய்மொழி – “நோற்ற நோன்பு”

முன்னுரை

    1மேல் திருவாய்மொழியில் அநுகரித்துத் தரிக்கப்பார்த்தார்; ‘அநுகரித்துத் தரிக்க வேண்டும்படியான கலக்கம் பிறந்த இடத்திலும் வந்து முகங்காட்டிற்றிலன்; இதற்குக் காரணம் என்? தன்பக்கல் ஆசை சிறிதுடையார்க்குத் தானே வந்து முகங்காட்டிக் காப்பாற்றக்கூடிய சர்வேச்வரன் நம்பக்கல் ஆறி இருக்கைக்கு நிபந்தனம் என்?’ என்று பார்த்தார்; ‘இனி இங்ஙனேயாமித்தனை; நம் பிரகிருதி ஸ்வபாவத்தாலே தன்னால் அல்லது செல்லாதபடியாயிருப்பதோர் ஆற்றாமை உண்டாயிருந்தது; ‘அது நமக்கு ஸ்வரூபம்’ என்று அறியாதே ‘உபாயம்’ என்றிருந்தானாக வேணும் என்று பார்த்து, தம் கையில் ஒன்று இல்லாமையை அறிவித்து அவன் திருவடிகளிலே சரணம் புகுகிறார். 2கடற்கரையின் வெளியில் மஹாராஜரை உள்ளிட்ட முதலிகளோடும், 3“புண்ணியத்தையே இலக்ஷணமாகவுடைய இளையபெருமாள்” என்கிற தம்பியோடுங்கூட எழுந்தருளியிருக்க, ஸ்ரீவிபீஷணாழ்வான் 4“கெட்ட ஒழுக்கத்தையுடையவன், இராவணன் என்று பிரசித்தி பெற்றவன், அரக்கர்களுக்கெல்லாம் அரசனான அரக்கன் இருக்கிறான்; நான் அவனுக்குப் பின் பிறந்த தம்பி; விபீஷணன் என்று

பிரசித்தி பெற்றவன்” என்று தன்னுடைய தாழ்ச்சியை முன்னிட்டுக்கொண்டு பெருமாள் திருவடிகளிலே விழுந்தாற்போலே, இவரும், அவன் கடற்கரையிலே தனி இருந்த இழவு தீர, பிராட்டிமாரோடும் 1நித்திய பரிகரத்தோடுங் கூடச் சிரீவரமங்கல நகரிலே திருவனந்தாழ்வான்மேலே எழுந்தருளியிருக்கின்ற வானமாமலை திருவடிகளிலே, வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புகுகிறார். இவர்தாம் 2என்கொண்டு அவனை வடிம்பிடப் பார்க்கிறது என்னில், அவன் காத்தற்குரிய பொருள்களை விரும்பியுள்ளான், காவலனை விரும்புதல் தமக்கு உண்டாயிருந்தது; ஆன பின்னர், இதற்கு மேற்பட சம்பந்தம் உண்டோ? என்று.

509

        நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும்
இனிஉன்னைவிட் டொன்று
ஆற்றகிற் கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடுமலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்குமிகை அல்லேன் அங்கே.


    பொ-ரை :- செய்த கர்மயோகத்தையுடையேனல்லேன், ஞான யோகத்தையுடையேனல்லேன், அப்படியானாலும், இனி உன்னைப் பிரியச் சிறிதுபொழுதும் பொறுக்கமாட்டுகின்றிலேன்; ஆதிசேஷசயனத்தையுடைய அம்மானே! சேற்று நிலங்களிலே தாமரைகள் செந்நெற்பயிர்களுக்கு மத்தியில் மலர்கின்ற ஸ்ரீவரமங்கை என்னும் திவ்விய தேசத்தில் வீற்றிருக்கின்ற எந்தையே! காப்பாற்றுகின்ற உனக்கு அங்கே புறம்பு அல்லேன்.

வி-கு :- அம்மானே! எந்தாய்! நோன்பிலேன், நுண்ணறிவிலேன், ஆகிலும் உன்னை விட்டு ஒன்றும் ஆற்றகிற்கின்றிலேன், உனக்கு அங்குமிகை அல்லேன் என்க. ஒன்றும் – சிறிதும். கில்: ஆற்றலையுணர்த்தும் இடைச்சொல். கிற்கின்றிலேன் – ஆற்றலையுடையேனல்லேன். வீற்றிருந்த : காலமயக்கம்.

இத்திருவாய்மொழி ஆசிரியத்துறை.

ஈடு :- முதற்பாட்டு. 1என்னுடைய பேற்றுக்குக் காரணமாயிருப்பதொரு கைம்முதல் என்னிடத்தில் இல்லை, இல்லாமையாலே ரக்ஷகன் வேண்டும் என்ற விருப்பம் உண்டு; பரிபூர்ணரான தேவர், காத்தற்குரிய பொருள்களை விரும்புகின்றவராய் இருந்தீர்; ஆகையாலே, தேவரே என் விருப்பத்தை முடித்தருள வேண்டும் என்கிறார்.

நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் – 2கர்ம யோகத்தில் நிஷ்டையுடையேன் அல்லேன், ஞானயோகத்தையுடையேன் அல்லேன், உன்னுடைய திருவடிகளில் பக்தியுடையேன் அல்லேன்” என்கிறார். 3“ந தர்ம நிஷ்டோஸ்மி – கர்ம யோகத்தில் நிஷ்டையுடையேனல்லேன்” என்றது, நாட்டார் ‘இவன் சில செய்யா நின்றான்’ என்றிருக்கைக்கும், அது கண்டு நான் ‘நமக்குச் சில உண்டு ஆகாதே’ என்று மயங்குவதற்கும், நீ கைவிடுகைக்கும் வேண்டுவது உண்டு; ஆனால் பலத்தோடேகூடியிருப்பது ஒன்று இல்லை என்றபடி. “ந ச ஆத்மவேதீ-ஞானயோகமுடையேனல்லேன்” என்றது, 1தாச்சீல் யந் தோன்ற இருப்பன், எனக்கு அதுதானும் இல்லை. 2“அந்தப் பரமனைப் பற்றிய ஞானம்தான் ஞானம் என்ற சொல்லால் சொல்லக்கூடியது; ஆகையால், மேற்சொல்லிய ஞானத்திற்கு வேறானது அஜ்ஞானமாகச் சொல்லப்பட்டது” என்கிறபடியே, ஆத்மாவைப் பற்றிய உண்மையான ஞானத்தை முன்னாகக் கொண்ட ஈச்வர ஞானம் எனக்கு இல்லை என்றபடி. “ந பக்திமான்-பக்தியுடையேனல்லேன்”பக்தி இல்லை என்று சொல்ல வேண்டாவே அன்றோ, மேற்சொல்லிய அவை இரண்டும் உண்டானால் வருமதுவே அன்றோ அது. அவை இரண்டும் இல்லாமையாலே, பக்தியும் இல்லை என்கிறார் என்றபடி. ‘நோன்பிலேன்’ என்ன அமையாதோ? ‘நோற்ற நோன்பிலேன்’ என்ன வேண்டுமோ? என்ன, சாதனங்களைச் சமைய அநுஷ்டித்து, பலத்தோடே கூடியிருப்பதாகப் பார்த்திருக்கலாவது ஒன்று இல்லை என்கைக்காகச் சொல்லுகிறார். என்றது, 3சக்கர்வர்த்தி, ஸ்ரீ வசுதேவரைப் போலே பேற்றுக்கு அடியாக நினைத்திருக்கலாவது ஒன்றில்லை என்றபடி. “ந தர்மநிஷ்டோஸ்மி – கர்மயோகத்தில் நிஷ்டையுடையேனல்லேன்” என்கிற இடத்தில், ‘தர்மம் இல்லை’ என்னாமல், தர்மநிஷ்டனாகப் பெறுகின்றிலேன் என்றாற்போலே, ‘அறிவிலேன்’ என்னாமல், ‘நுண்ணறிவிலேன்’ என்கிறார். என்றது, 1ஆத்ம ஞானம் முன்னாகப் பரம்பொருளின் சொரூபத்தைக் காணும் அளவாக அறியும் அறிவையுடையேனல்லேன் என்றபடி.

“ந பக்திமான்” என்றும், 2“நின்கணும் பக்தன் அல்லேன்” என்றும் எடுத்துக் கழித்த அளவு 3இங்கும் எடுத்துக்கழியாது ஒழிவான் என்? என்னில், 4“கரும ஞானங்களால் அலங்காரம் பண்ணப்பட்ட மனத்தையுடையவனுக்கு” என்கிறபடியே, அவை இரண்டும் உண்டானால் வருமதுவேயன்றோ பக்தி; அவை இல்லாமையாலே எடுத்துக்கழிக்கவும் வேண்டாவே அன்றோ. ஆனால், இதைப் போன்று, ‘கர்மம் இல்லை’ என்ற போதே, ‘ஞானம் இல்லை’ என்பது போதருமே அன்றோ, அதனை எடுத்துக் கழிக்க வேண்டுவது என்? என்னில், முற்பிறவியில் கர்மங்கள் முடிந்த அளவிலே மரணம் உண்டானால் அடுத்த பிறவியிலே ஞானம் உண்டாகக் கடவது. 5ஆயின், பக்தியும் அப்படி ஆனாலோ? என்னில், ஞானகர்மங்கள் இரண்டும் உண்டானால் 1பக்தி கூடி அல்லது நில்லாது, ஆன பின்பு, இங்கு அப்படி ஆக ஒண்ணாது. 2‘உன்னைவிட்டு ஒன்றும் ஆற்றகிற்கின்றிலேன்’ என்று இவர் சொல்லுகிற இது, பக்தி அன்றோ, 3“சிநேகத்தை முன்னிட்ட தியானமானது பக்தி” அன்றோ; ஆனபின்பு, இது உபாயம் ஆனாலோ? என்ன, அங்ஙனம் ஒண்ணாது அன்றோ, கரும ஞானங்களோடு கூடியுள்ள மனத்தையுடையவனுக்கு உண்டாகும் பரபக்தி அன்றோ சாஸ்திரங்களில் சாதனமாகச் சொல்லிப் போருகிறது; இது, அங்ஙன் அன்றிக்கே, அவனுடைய திருவருள் காரணமாக வந்தது ஆகையாலே இது ஸ்வரூபமாமித்தனை. 4அங்ஙன் அன்றிக்கே, புராணங்களிலே தனித்தனியே கர்ம ஞானங்களைச் சாதனமாகச் சொல்லுகையாலே சொல்லிற்றாகவுமாம்.

5அவை இல்லையாகில், முதல் இல்லாதார் பலிசை இழக்குமத்தனை அன்றோ? என்ன, ஆகிலும் – இங்ஙனம்இருந்தேயாகிலும். 1‘ஆற்றகிற்கின்றிலேன்’ என்னுமிதனை, ‘உபாயம்’ என்றிருந்தாராகில், ‘ஆகிலும்’ என்கைக்கு இடம் இல்லை. ஆனால், நீர் இந்நாள்வரை ஆறி இருந்தீரே? என்ன, இனி-2உன்னையும் அறியாதே என்னையும் அறியாதே இருந்த அன்று இழக்க அமையாதோ, உன் நிறைவும் என்குறைவும் அறிந்த இன்றும் இழக்க வேண்டுமோ? 3ஒருவன் கையிலே சோறும் உண்டாய் அவன் இடுவானுமானால், ஒருவனுக்குச் சோறும் இன்றிக்கே பசியனும் ஆனால் இழக்க வேணுமோ? இனி – 4என் கையிலேயும் ஒன்று உண்டாய் அது சமையும் தனையும் ஆறி இருக்கிறேனோ. 5ஸ்வரூபத்தை உபாயத்திலே செலவு எழுதிக் கைவிடப் பார்க்கில் பார்க்குமித்தனை. 6அநாதி காலம் மெய்மறந்து இழந்த காலம் போராதோ, நான் மெய்யாக இசைந்த இன்றும் இழக்க வேண்டுமோ?உன்னைவிட்டு – 1நீயும் என்னைப் போலே இருந்தாயாகில் நான் ஆறி இரேனோ, நானும் சிறிது செய்து வரவேண்டும்படியோ நீ இருக்கிறது. அன்றிக்கே, 2உயிரை விட்டு உடல் தரிக்கவற்றோ என்னலுமாம். ஒன்றும் ஆற்றகிற்கின்றிலேன் – 3உன்னுடைய ஸ்வரூபஞானம் என்னுடைய தாரணத்துக்குக் காரணமாய் இருக்கிறதில்லை. 4“அங்ஙனம் அழைத்துக்கொண்டு செல்லும் செயல் அவருக்குத் தக்கதாகும்” என்று ஆறி இருக்கைக்கும் ஒருவழி உண்டே அன்றோ அவளுக்கு. கடலை அணை செய்யவும் இராவணனை அழியச் செய்யவும் வேண்டாவே அன்றோ இவளுக்கு. இதுகாறும் தம்முடைய நிறைவின்மையைச் சொன்னார்; இனி, அவனுடைய பூர்த்தியைச் சொல்லுகிறார்: அரவின் அணைஅம்மானே – அரவினை அணையாகவுடைய சர்வேச்வரனே! 1பாம்பினைப் படுக்கையாகவுடைமை, அறப்பெரியவனாந்தன்மைக்கு இலக்கணமே அன்றோ. 2உன்னுடைய போகப் பிராவண்யம் என்னால் ஆறி இருக்கலாயிருக்கிறதோ? நீ பரமபோகியாயிருக்க, என்னால் ஆறியிருக்கப்போமோ?

சேற்றுத் தாமரை செந்நெலூடு வளர் சிரீவரமங்கல நகர் – சேறுகளிலே தாமரைகளானவை செந்நெலூடே அவற்றுக்கு அணுக்கன் இட்டாற்போலே அலராநிற்கின்ற தேசம். 3“நித்தியஸூரிகளுடைய நகரம் அயோத்தி என்னும் பரமபதம்” என்னும்படியான பரமபதத்திற் காட்டில் தனக்கு நகரமாக விரும்பி வாழ்கின்ற தேசம். சம்சாரிகளுடைய இரக்ஷணத்துக்காக நித்தியவாசம் செய்யும் தேசம். பரமபதத்தையும் மறக்கச் செய்யும் தேசம் என்பார் ‘சேற்றுத்தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கல நகர்’ என்கிறார். 4அன்றிக்கே, அரசர்கள் எடுத்துவிட்ட இடத்தே பரிகரமும் புகுமித்தனையன்றோ என்னுதல்.

வீற்றிருந்த-‘அங்கே இருக்கக்கூடிய நமக்கு, இவ்விருப்பு இருக்க வேண்டாநின்றதே!’ என்னும் வெறுப்போடு அன்றிக்கே, 5தட்டியிலிருந்தவன் முடி சூடினாற்போலே தன் வேறுபாடு தோற்ற இருக்கை. எந்தாய் – அங்குத்தை இருப்பு நித்தியசூரிகளுக்கு ஆனாற்போலே, இவ்விருப்பு எனக்காக அன்றோ இருக்கிறது. சிரீவரமங்கல நகரானஅங்கே வீற்றிருந்த எந்தாய்! என்க. உனக்கு மிகை அல்லேன் – பரமபதத்திலே நெடுங்கைநீட்டாக இருந்தாயாகில் நான் தரித்திருக்கலாயிற்றே, எனக்காக வந்த இடத்தை நான் இழக்கவோ. அங்கே வீற்றிருந்த உனக்கு மிகை அல்லேன் – 1காக்கும் பொருள்களைத் தேடிக்கொண்டிருக்கின்ற உனக்குப் புறம்பு அல்லேன். அன்றிக்கே, உனக்கு மிகை அல்லேன் – 2“என்னை அடியவனாகக் கொள்வதில் சேவ்ய சேவக பாவம் மாறாடிக் கிடக்கிறது இல்லை” என்று, மற்றைப் போதைக்கு நான் இரேன். என்றது, உனக்கு மிகையானபோது அல்லேனாய் விடுவேன் என்றவாறு. 3இத்தால் தமக்கு இலாபம் என்? என்ன, அங்கே 4“தேவரீருக்கே பிரயோஜனம் கிடைக்கப் போகிறது” என்கிறபடியே, இத்தால் வரும் பிரயோஜனமும் தேவரீருடையதே. 5பால்குடிக்கும் குழந்தையை, பால்குடித்து வயிறு நிறையக்கண்டு உகக்கும் தாயைப் போலே, அடிமையாக இருப்பவன் ஸ்வரூபம் பெற்று அடிமைசெய்கை சேஷிக்குப் பேறே அன்றோ.

மேல்திருவாய்மொழியில் அநுகரித்துத் தரிக்கப் பார்த்தவர்,
இத்திருவாய்மொழியில் “நோற்ற நோன்பிலேன்” என்று கூறுவதற்கு அடி
யாது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்யுமுகத்தால், மேல்
திருவாய்மொழிக்கும் இத்திருவாய்மொழிக்கும் இயைபு அருளிச்செய்கிறார்
‘மேல்திருவாய்மொழியில்’ என்று தொடங்கி. ‘ஆற்றாமையுண்டாயிருந்தது’
என்றது, இத்திருவாய்மொழியில் வருகின்ற “ஆற்றகிற்கின்றிலேன்”
என்றதனைத் திருவுள்ளம்பற்றி. ‘உபாயம் என்றிருந்தானாக வேணும்’
என்றது, ஆற்றாமையாவது சிநேகமாய், சிநேகத்தை முன்னாகக் கொண்ட
தியானம் பக்தியாகையாலே, இது உபாயமாகவேணும்
என்றிருந்தானாகவேணும் என்றபடி.

நோற்ற -நாலும் உபாய ஸ்வரூபம் காட்ட
உபாய சூன்யம் வெளி இட்டுக் கொண்டு வேர் அற்ற மரம் போலே விழுந்து சரண் அடைகிறார்
ஆசாலேசம் உள்ளாருக்கும் முகம் காட்டுபவன்
அனுகரித்தும் ஆறி இருப்பதருக்கு கரணம் என்ன
ஆற்றாமை ஸ்வரூபம் என்று உணராமல் உபாயமாக எண்ணி
சர்வ தரமான் பரித்யஜ்ய -தடவி பார்த்து -லவலேசம் நான் பண்ணினேன் என்றட எண்ணம் இருந்தால் தள்ளி வைப்பான்
metal detector -வைத்து எங்கேயோ குண்டூசி இருந்தாலும் தள்ளி வைப்பது போலே
தமது கையில் ஒன்றும் இல்லாமையை சொல்லிக் கொண்டு சரண் அடைகிறார்
விபீஷணன் -கடல்கரை வெளியில்

“லக்ஷ்மணம் புண்ய லக்ஷ்மணம்” என்பது, ஸ்ரீராமா. யுத். 18:7.

புண்யங்கள் எல்லாவற்றுக்கும் லஷ்ணம் ஸ்ரீ லஷ்மணன்

ராவணோ நாம துர்வ்ருத்தோ ராக்ஷஸோ ராக்ஷஸேஸ்வர:
தஸ்ய அஹம் அநுஜோ ப்ராதா விபீஷண இதி ச்ருத:” 
என்பது, ஸ்ரீராமா. யுத். 17:10.

அவனுடைய பின் பிறந்த தம்பி -பிராதா மட்டும் -சொல்லாமல்
பின்னால் பிறந்தால் குடி இருந்த கர்ப்பத்தில் இருந்து வந்ததால் அந்த குணம் வருமே
பிராட்டி இல்லாமல் துக்கித்து இருந்தார் பெருமாள்
இங்கே பிராட்டி உடன் கூடி -ஸ்ரீ வர மங்கை -நித்ய பரிகரதுடனும்
திருவந்தாழ்வான் மேல் சயனித்து –
வானமாமலை எம்பெருமான் -திருநாமம்
எத்தை கொண்டு -சரண் -அடைகிறார் -ரஷ்ய விஷய அபேஷை
இவரும் ரஷ்கரை தேடி போக
நீ என்னை அன்றி இலேன்
நின் அருள் அன்றி புகல்  ஒன்றும் இல்லை பயன் இருவருக்கும் ஆனபின்பு -அமுதனார்

நிகர் அன்றி நின்ற நீசதை -என்னிடம் -உன் அருள் அன்றி வேறு புகல் இல்லை
உம்முடைய அருளுக்கும் அதுவே புகல் –
உனக்கு என்னை விட்டால் வர வழி இல்லை
ராமானுசா இனி நான் பழுதே அகலும் பொருள் என்ன –
எனைப்போல குறை செய்வார் உண்டோ
உனைப் போல் குறை பொறுப்பார் உண்டோ மணவாள மா  ஆர்த்தி -பிரபந்தம்

கைம்முதல் இல்லை -ஆசை மட்டும் உண்டு

“நோற்ற நோன்பிலேன்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘என்னுடைய’
என்று தொடங்கியும், “ஆற்றகிற்கின்றிலேன்” என்றதனைத்
திருவுள்ளம்பற்றி ‘ரக்ஷகன் வேண்டும்’ என்று தொடங்கியும்,
“சிரீவரமங்கலநகர் வீற்றிருந்த” என்றதனைத் திருவுள்ளம்பற்றிக்
‘காத்தற்குரிய பொருள்களை’ என்று தொடங்கியும் அருளிச்செய்கிறார்.
மேல் திருப்பாசுரத்திலே “அருளாய்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி
‘என் விருப்பத்தை முடித்தருள வேண்டும்’ என்கிறார்.

2. “நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்” என்று இப்படிச் சொன்ன பேர்
உளரோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘கர்ம யோகத்தில்’
என்று தொடங்கி. ‘என்கிறார்’ என்றது, ஸ்ரீஆளவந்தாரை.

“ந தர்மநிஷ்டோஸ்மி நச ஆத்மவேதீ ந பக்திமான் த்வத் சரணாரவிந்தே
அகிஞ்சந : அநந்யகதி : ஸரண்ய த்வத் பாதமூலம் ஸரணம் ப்ரபத்யே”.

என்பது, ஸ்தோத்திர ரத்நம். இது, ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்தது.

3. மேலே காட்டிய சுலோகத்திற்கு விரிவுரை அருளிச்செய்கிறார் ‘ந
தர்மநிஷ்டோஸ்மி’ என்று தொடங்கி. “தர்மவாந்நாஸ்மி” என்னாது, “ந
தர்மநிஷ்டோஸ்மி” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘நாட்டார்’
என்று தொடங்கி. என்றது, பல சாதனத்தைத் தொடங்கிய மாத்திரமே
ஒழிய, சாதனத்தை அநுஷ்டித்து, ‘பலம் கைவரும்’ என்று நிச்சயிக்கத்
தக்கது இல்லை என்றபடி.

ஸ்ரீ வர மங்கள நகர் -உயர்ந்த கிராமம்
ஸ்ரீவர -பாண்டியன் ஏற்படுத்தி
நத்தம் -வர குண மங்கை வர குண பாண்டியன் ஏற்படுத்தியது
நோற்ற நோன்பு இலேன் கர்ம யோகம் இல்லை
ந தர்ம நோஷ்டோமி -ஆளவந்தார் -ந ச ஆத்மவேதி ஞானமும் இல்லை –
தர்மவான் ந அஸ்மி சொல்லி -இருக்கலாம் தர்ம நிஷ்டையே இல்லையே நிலைநின்றவனாக இல்லை –
நாட்டார் இவன் செய்யா நின்றான் என்று இருக்கச் செய்தேயும் -அஹங்காரம் வர காரணமாகி
அதுவே நீ கை விட காரனமாகுமே பலத்துடன் ப்ராப்தம் இல்லாமல் போகுமே
ந ச ஆத்மவேதி -ஆத்மாவை பற்றிய ஞானம் -முதல்படி அப்புறம் சேஷம் அறிந்து –
அடிமைப்பட்டது யாதாத்மா ஞான பூர்வகமான உள்ளறிவு இன்றி –

“தத் ஞானம்; அஜ்ஞானம் அத: அந்யத்உக்தம்”-  என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 5 : 57.

ந பக்திமான் -கர்ம ஞான யோகம் இல்லை சொன்னதன் பின்பு இத்தை சொல்ல வேண்டுமா
நின் கண் பக்தன் அல்லேன்
நோன்பிலேன் சொல்லாமல் நோற்ற -சாதனங்கள் பூர்த்தியாக அனுஷ்டித்து பலன் கிட்டும்வரை
ஆரம்பித்து விட்டேன் -சக்ரவர்த்தி வாசு தேவர் போலே இல்லை
தொடங்க கூட வில்லை –
நுண் அறிவு இலேன் -நிஷ்டனாய் இல்லை சொன்னது போலே
நிஷ்டை இல்லை -ஊன்றி இல்லை –
அறிவு ஞானம்
நுண் அறிவு யாதாத்மா ஞானம்
ஸ்வ ஸ்வரூப ஞானம் யாதாம்ய ஞானம் பர ஸ்வரூபம் பர்யந்தம் வரை

குளித்து மூன்றனலை யோம்பும் குறிகொள்அந் தணமைதன்னை
ஒளித்திட்டேன் என்க ணில்லை; நின்கணும் பத்தனல்லேன்;
களிப்பதென் கொண்டு? நம்பி! கடல்வண்ணா! கதறு கின்றேன்;
அளித்தெனக் கருள்செய் கண்டாய் அரங்கமா நகருளானே.-  என்பது, திருமாலை, 25.

நின் கண் பக்தன் அல்லேன் -மூன்றையும் சொல்லி இங்கே
ஆளவந்தாரும் மூன்றையும் சொல்லி
ஆழ்வார் இரண்டையும் சொல்லி
உபயம் இருந்தால் தான் பக்தி வரும்
“உபய பரிகர்மித ஸ்வஅந்தஸ்ய ஏகாந்தி காத்யந்திக
பக்தியோகைகலப்ய:”-என்பது, ஆத்மசித்தி

கர்ம ஞானங்களால் அளந்க்ரதமான மனசை உடையவனே பக்திமான் ஆகலாம்
எடுத்துக் கழிக்க வேண்டாமே
ஞானம் யோகம் எத்ருக்கு சொன்னார் -அப்படி -ஆனால்
பூர்வ ஜன்மம் -கர்மம் தொடங்கி -விட்ட இடத்தில் -தொடரும்

பக்தியும் அப்படியே -ஆகாதோ என்றால் –
ஞான கர்மங்கள் இரண்டும் இருந்தால் பக்தியாக வராமல் போகாதே
உன்னை விட்டு ஒன்றும் ஆற்ற -விட்டு இருக்க முடியாது இதுவே தானே பக்தி தானே
சிநேக பூர்வம் -அநு த்யானம் பக்தி -பிரமாணம்

‘பக்தி கூடியல்லது நில்லாது’ என்றது, “பக்திஸ்ச ஞான விஸேஷ:” என்றும்,
“ஞானம் கனிந்த நலம்”  என்றும் சொல்லுகிறபடியே, ஞானத்தின் பரிபாகம்
பக்தியாகையாலே, ஞானம் பக்தியோடும் கூடியதாகவே இருக்கும் என்றபடி.

2. ஜிஜ்ஞாஸு பிரச்நத்தை அநுவதிக்கிறார் ‘உன்னை விட்டு’ என்று தொடங்கி.

3. “ஸ்நேஹபூர்வம் அநுத்யானம் பக்தி: இதி அபிதீயதே
பஜஇதிஏஷதாது: வை ஸேவாயாம் பரிகீர்தித:
தஸ்மாத் ஸேவாபுதை: ப்ரோக்தா பக்தி ஸப்தேந பூயஸீ”

4. “பக்தியானது, கர்ம ஞானங்களை அங்கமாகக் கொண்டு தான்
அங்கியாயிருக்கும்” என்கிற வேதாந்தப் பிரக்கிரியையை மேற்கொண்டு
அருளிச்செய்தார் இதுகாறும். இனி, கர்மம் ஞானம் முதலானவற்றைத்
தனித்தனியே சாதனமாகச் சொல்லுகிற புராணப் பிரக்கிரியையை
மேற்கொண்டு அருளிச்செய்கிறார் ‘அங்ஙன் அன்றிக்கே’ என்று தொடங்கி.
இந்தப் பக்ஷத்தில், இத்திருப்பாசுரத்தில், கர்ம ஞானங்கள் இல்லாமையைச்
சொன்னது, பக்தி இல்லாமைக்கும் உபலக்ஷணம்:

“ஜ்ஞான பக்தி அந்விதம் கர்ம ஜனகாதிஷு த்ருஸ்யதே
கர்ம பக்தி அந்விதம் ஜ்ஞானம் ப்ராயேண பரதாதிஷு
கர்ம ஜ்ஞாநாந் விதா பக்தி: ப்ரஹ்லாத ப்ரமுகாஸ்ரயா”-என்ற சுலோகம் இங்கே நோக்கல் தகும்.

சாதன பக்தி -கர்ம ஞான பக்தி பர பக்தி பர ஞானம் பரம பக்தி பர்யந்தம்
சாத்திய பக்தி அவனே -அருளிமயர்வற மதிநலம் அருளி –
அவன் அனுக்ரகம் அடியாக வந்ததால் இதுவே ஸ்வரூபம் ஆகும் இத்தனை

ஆற்றகிற்கின்றிலேன்” என்கிற பகவத் பிரசாதம் அடியாக வந்த பக்தி
தானே சாதனம் ஆனாலோ? என்னில், அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘ஆற்றகிற்கின்றிலேன் என்னுமிதனை’ என்று தொடங்கி. என்றது, “ஆகிலும்”
என்ற பதம் பயன் அற்றதாய்விடும் என்றபடி. அதாவது, “வேறு உபாயங்கள்
தமக்கு இல்லை” என்று அருளிச்செய்யக்கூடாது என்றபடி.

துடிப்பு தானே பக்தி -அவனே அருளி -மதி நலம் -ஞானம் முதிர்ந்து பக்தி -ஞான பக்திகள் கொடுத்து அருளி –
சாதனமாக கொடுக்க வில்லை –
அனுபவம் ரசிக்க பக்தி வேண்டுமே ப்ரீதி -அத்யந்தமான –
இதுவும் கொடுத்து தன்னையும் -கொடுத்தான் இந்த பக்தி இருந்தால் தான் அனுபவம் ரசிக்கும்
பக்தி தேக யாத்ரா விசேஷம் -போஜனத்துக்கு சூத்து போலே பசி வேண்டுமே –
துடிப்பு கொடுத்து -தன்னை அனுபவிக்க -கொடுக்கிறான்
உபாசகர்கள் பக்தியை சாதனமாக  கொண்டு
இந்த தானே கொடுத்த பக்தியை சாதனமாக அவனே நினைத்து இருக்கிறானோ -ஆழ்வார் சங்கித்து
24000 படி உபயாந்தர நிஷ்டர் -சாதனம் அனுஷ்டித்து துக்கிக்கும் படி -பலம் கிடைத்ததும்
துக்கம் மறந்து -அனுஷ்டிக்கும் பொழுது துடித்து -அஷ்டாங்க யோகம் -செய்து –
ஆழ்வாரும் துடிக்கிறார் -அவனை பெறாத -வருத்தத்தால்
அவன் தப்பாக நினைத்து இருக்கிறானோ -ஆழ்வார் சங்கை

நன்மைகள்ஏதும் இல்லை  குளித்து தொடங்கி ஐந்து பாசுரங்கள்
அடுத்து தீமைகள் எல்லாம் உண்டு ஐந்து -பாசுரங்களில் சொல்லி
கறவைகள் ஒரே பாசுரத்தில் ஆண்டாள் சொல்லி
நீசனேன் நிறை ஒன்றுமிலேன் ஆழ்வார் அருளி –

“ஸ்நேஹபூர்வம் அநுத்யானம் பக்தி: இதி அபிதீயதே
பஜஇதிஏஷதாது: வை ஸேவாயாம் பரிகீர்தித:

தஸ்மாத் ஸேவாபுதை: ப்ரோக்தா பக்தி ஸப்தேந பூயஸீ”

இதுதானே பக்தி என்றால் –
கர்மம் ஞானம் -பக்தி -பர பக்தி படிப்படி-சாதனம்
இது ஸ்வரூபம் -அவன் அருளியதால்
ஆழ்வாரைத் துடீக்க விட்டு நம்மை பக்தியில் தூண்ட -விட்டான்
சாத்திய பக்தி சாதன பக்தி வாசி -அறிந்து கொண்டு
புராணங்கள் கர்மமே சாதனம் ஜனகர் -போல்வார்
ஒன்றும் இல்லை -என்கிறார் ஆகவுமாம்
முதலே இல்லையானால் வட்டி வருமா
ஆகிலும் ஆற்ற கிற்கின்றிலேன் -உபாயமாக கொண்டால் ஆகிலும் சப்தம் வேண்டாமே
இந்நாள் வரை ஆறி இருந்தீரே –
இனி -இருபது கால் இனி
உன்னையும் என்னையும் அறியாத காலம்
சோறும் உண்டாய்
நீயும் இடுவானாய் எனக்கும் பசியாய்
சாதனம் இருந்து ஆறி இருக்கிறேனோ
சத்தை -துடிப்பு ஸ்வரூபம் -உபாயத்தில் சேர்க்காதே
அநாதி காலம் மெய் மறந்து இழந்த காலம் போதாதே
மெய்யையே நினைந்து
மெய்யை அறிந்த பின்பு இழப்பேனோ
உன்னை விட்டு –
உன்னை கண்ணாடியில் பார்த்து  கொள்ள வில்லையே –
நீயும் என்னைப் போலே இருந்தாகில் நான் ஆறி –
நானும் சிறிது செய்ய வேண்டும்படி இருக்கிறாயா
ஆத்மா சரீரம் போலே
உன்னுடைய ஸ்வரூப ஞானம் தன்மை அறிந்து
சேய் தலை நாற்று போலே
பிராட்டி ஆறி இருந்தாள்
கடலை அணை கட்ட வேண்டாமே நேராக வந்து அனுக்ரகம்
கீழ் தன்னுடைய அபூர்த்தி சொல்லி மேல் அவன் பூர்த்தி சொல்லி
-துடிக்கிறேன் உயர்ந்த வஸ்து கொடுக்கிற நீ இத்தையும் நீயே கொடுத்து அருள் –
அருள் செய் கண்டாய் -தொண்டர் அடி பொடி
ஒன்றுமே கொண்டு போகாதவனுக்கு தங்க காசு எதிலே கொடுப்பேன் என்னுமா போலே

நித்ய சூரிகளும் செந்நெலுமாக வந்து -இவன் வானமா மலையாய் வந்து
கா பூர்வாக -எவ்ஊர் -காஞ்சி பூரணன் -கப்பூர்வாக கேட்காமல் –
வீற்று இருந்த -பரம பதத்தில் போலே
சந்தோஷமாக இங்கே -இப்படி இருக்க வேண்டி இருந்ததே
சிறையில் இருப்பு பரம பதத்தில்
எந்தாய் -அன்குற்றை இருப்பு நித்யர் இங்கு எனக்கு
மிகை அல்லேன் -நித்ய விபூதியில் நெடும்கை நீட்டியது போலே
ரஷிக்க வந்த இடத்தில் இங்கு நான் புறம்பு அல்லேன்
அடியார் காப்பது உனது கடன்
புள்ளி அதிகம் இல்லை

தாமரையையும் செந்நெல்லையும் வர்ணிப்பதற்கு வேறு ஒரு பாவம்
அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று தொடங்கி. என்றது, சர்வேச்வரன்
வந்து அவதரிக்கையாலே நித்தியசூரிகளும் அவற்றின் உருவமாக வந்து
அவதரித்திருக்கின்றார்களாகையாலே, அவனைப் போன்றே உத்தேஸ்யமாய்
வருணிக்கிறார் என்றபடி.

“அங்கே வீற்றிருந்த உனக்கு மிகை அல்லேன்” என்பதற்கு, இரண்டு
வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார். ஒன்று, எந்தையாய்
அண்மையிலிருப்பவனான உனக்கு மிகையல்லேன் என்பது. என்றது, உன்
ரக்ஷணத்துக்குப் புறம்பு அல்லேன் என்றபடி. இதனையே
அருளிச்செய்கிறார் ‘காக்கும் பொருள்களை’ என்று தொடங்கி.
இரண்டாவது பொருளை அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று
தொடங்கி. இரண்டாவது பொருளுக்குக் கருத்து, உனக்குப் புறம்பாய்த்
தோற்றிற்றாகில் தரியேன் என்பது. அல்லேன் – தரியேன்.

2. மிகையானால் தரியேன் என்னுமதனைத் திருஷ்டாந்த மூலமாகக்
காட்டுகிறார் ‘என்னை அடியவனாக’ என்று தொடங்கி.

“குருஷ்வ மாம் அநுசரம் வைதர்மம் நேஹ வித்யதே
க்ருதார்த்த : அஹம் பவிஷ்யாமி தவச அர்த்த: ப்ரகல்பதே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 32. பெருமாளைப் பார்த்து
இளையபெருமாள் கூறியது.

ரஷித்தே தீர -உனக்கு மிகையானால் அல்லேன் ஆவேன்

“தவச அர்த்த: ப்ரகல்பதே” என்பதன்
பொருள், ‘தேவரீருக்கே’ என்றது முதல் ‘கிடைக்கப் போகிறது’ என்றது
முடிய.

பிரயோஜனமும் உன்னுடையது
தாயார் மகிழ்வது குழந்தை பால் உண்டால்
சேஷிக்கு ஸ்வரூபம் காப்பது
உம்முடைய அனுக்ரகம் ஒன்றையே எதிர்பார்த்து இருக்கிறேன்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-6-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 11, 2013

கூந்தல் மலர்மங்கைக்கும் மண்மடந் தைக்கும்
குலஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயி ரத்துள்
இவையும்ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ்செல்வத் தராய்த் திருமால்
அடியார் களைப் பூசிக்க நோற்றார்களே.

பொ-ரை :- மயிர் முடியையுடைய பெரிய பிராட்டியார்க்கும் பூமிப்பிராட்டிக்கும் ஆயர்குலத்துக்குக் கொழுந்து போன்ற நப்பின்னைப் பிராட்டிக்கும் கணவனான சர்வேச்வரனை, பொருந்திய வளப்பத்தையுடைய வழுதி நாடரும், நிலைபெற்ற திருக்குருகூரில் அவதரித்த சடகோபருமான நம்மாழ்வாரால் குற்றேவல் செய்து ஆராய்ந்து சொல்லப்பட்ட தமிழ்ப் பாசுரங்கள் ஆயிரத்துள் இப்பத்துப் பாசுரங்களையும் வல்லவர்கள், தரித்த பெரிய செல்வத்தையுடையவர்களாகிச் சர்வேச்வரனுடைய அடியார்களைப் பூசிப்பதற்குப் புண்ணியம் செய்தவர்கள் ஆவார்கள்.

ஈடு :- முடிவில், 1இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை செய்யப்பெறுவர்கள் என்கிறார்.

கூந்தல் மலர்மங்கைக்கும் – சர்வேச்வரனுடைய ஐச்வரியத்துக்கும் காரணமாயிருக்கிற பெரிய பிராட்டியார். அன்றிக்கே, 2“சர்வேச்வரனுடைய செல்வமாக இருப்பவள்” என்கிறபடியே, சர்வேச்வரனுடைய செல்வமாயிருக்கிற பெரிய பிராட்டியார் என்னுதல். மண் மடந்தைக்கும் – அந்தச் செல்வத்திற்கு விளைபூமியாயிருக்கிற ஸ்ரீ பூமிப்பிராட்டி. குல ஆயர் கொழுந்துக்கும் – அதனுடைய 3பல உருவமாயிருக்கும் நப்பின்னைப் பிராட்டி. கேள்வன்தன்னை – 1“உலகங்கட்குத் தலைவனாகிய இறைவன் இலக்குமியோடு கூடி எழுந்தருளியுள்ளான்” என்கிறபடியே, இவர்களுக்குப் பதியாயுள்ளவனை. இதனால், ஓர் அவதாரமாத்திரமன்றிக்கே, உபய விபூதிநாதனான பூர்ண விஷயத்திலே அநுகரிக்கிறார் என்று தோற்றி இருக்கிறபடி. வாய்ந்த – வாய்க்கையாவது, கிட்டுகை. 2அநுகாரத்தாலே கிட்டின படியை நினைக்கிறது. குற்றேவல் செய்து-ஆழ்வார், திருவடிகளில் அந்தரங்க அடிமைகள் செய்தபடியாயிற்று இவைதாம். என்றது, 3வாசிகமாக அடிமை செய்தபடியாயிற்று என்றபடி.

நன்று; அநுகாரம் அடிமையானபடி எங்ஙனே? என்னில், அப்படியாகத் தட்டு என்? கொள்ளுகிறவன் கருத்தாலே. 4அவன் உகப்பே அன்றோ அடிமையாலும் புருஷார்த்தம். ‘நம்முடைய பிரிவில் அநுகரித்துத் தரிக்க வேண்டும்படி சம்சாரத்திலே இப்படி உண்டாவதே!’ என்று திருவுள்ளம் போர உகக்கும், அது அடிமையாய்த் தலைக்கட்டுமித்தனை. ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஓர்பத்தும் வல்லார் – ஆராய்ந்து சொன்ன தமிழ்த் தொடை ஆயிரத்திலும் இப்பத்தைக் கற்க வல்லவர்கள். உலகில் ஏந்து பெரும் செல்வத்தராய் – 5இந்த உலகத்தில் எல்லாரும் கொண்டாடும்படி ஸ்ரீ

வைஷ்ணவ ஸ்ரீயையுடையராய். அன்றிக்கே. 1“நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம்” என்கிறபடியே, உலகத்திலே முகந்தெழுபானையான எல்லையில்லாத செல்வத்தையுடையராய்க் கொண்டு என்னுதல். திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே – ஸ்ரீமத் புத்திரர்களை ஆராதிக்கப் பெறுவர்கள். திருமால் அடியாரை ஆராதிக்கையாவது, இவர் அநுகாரத்தாலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பிரியமுள்ளவராக ஆனாற்போலே, இது கற்றார்களும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பிரியத்தைக் கொடுக்கக் கூடிய கைங்கரியத்தைச் செய்யப்பெறுவர் என்கை. என்றது, இவர் அநுகரித்த இப்பாசுரங்களைச் சொல்லுகை. 2“தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன் மாலைகள் சொன்னேன்” என்னக் கடவதன்றோ.

 

திருவாய்மொழி நூற்றந்தாதி 

        கடல்ஞாலத் தீசனைமுன் காணாமல் நொந்தே
உடனா அநுகரிக்க லுற்றுத் – திடமாக
வாய்ந்தவனாய்த் தான்பேசும் மாற னுரையதனை
ஆய்ந்துரைப்பார் ஆட்செய நோற்றார்.

ஸ்ரீ வைஷ்ணவர் கைங்கர்யம் கிட்டும் பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்
கூந்தல் மலர் மங்கை -சர்வேஸ்வரன் சம்பத்தாய் இருக்கும் பெரிய பிராட்டியார்

“நித்யைவ ஏஷா ஜகந்மாதா விஷ்ணோ : ஸ்ரீ : அநபாயிநீ
யதா ஸர்வகதோ விஷ்ணு : ததைவ இயம் த்விஜோத்தம”-  என்பது, ஸ்ரீ விஷ்ணுபுராணம், 1. 8 : 17.

பூமி -பிராட்டி மண் மடந்தை -விளையும் பூமி
ஆயர் கொழுந்து -நப்பின்னை -களம்
கேள்வன் -வாய்ந்த வழுதி வள நாடன் வாசிக்க கைங்கர்யம் செய்து
அவதாரம் மாதரம் இன்றி பூர்ண உபய விபூதி நாதனை அனுகரிக்கிரார்கள்
ஏய்ந்த பெரும் செல்வத்தால்
திருமால் அடியாரைப் பூசிக்க பெறுவார்கள்
ருக்மிணி சத்தியபாமை நப்பின்னை கேள்வன் கண்ணன் தான் சொல்லலாம்
ஜகத் காரணம் சொல்லியதால் உபய விபூதி நாதணனை அனுகரிக்கிறாள்
வாய்கை கிட்டுகை -அநுகாரம் செய்து கிட்டி
அந்தரங்க வருத்தி வாசிக்க கைங்கர்யம் செய்து
கொள்ளுகிறவன் கருத்தாலே -அவன் உகப்பே அடிமையாகும் புருஷார்த்தம்
பிரிந்து அநுகாரம் செய்து தரிக்க வேண்டும் படி சம்சாரத்தில் இருதே என்னும் உகப்பு வருமே அவனுக்கே
ஆய்ந்த ஆராய்ந்து சொல்லி
உலகில் ஏந்து பெரும் செல்வத்தார் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ
நீள் செல்வம் வேண்டாதார செல்வம் தான் வேண்டாத நிரவதிக சம்பத் கிட்டும்

செல்வம் தானே வந்து கிட்டுமே

“ஏந்து” என்றதற்கு, இரண்டு பொருள் அருளிச்செய்கின்றார். ஒன்று,
எல்லாராலும் கொண்டாடப்படுதல். மற்றொன்று, முகந்து எழுபானை
போன்று மேலும் மேலும் பெருகிவருதல் என்பது. இந்த இரண்டு
பொருளையும் முறையே அருளிச்செய்கிறார் ‘இந்த உலகத்தில் என்று
தொடங்கி.

நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்
மின்னையே சேர்திகிரி வித்துவக் கோட்டம்மா!
நின்னையே தான்வேண்டி நிற்பன் அடியேனே.-என்பது, பெருமாள் திருமொழி.

முகந்தெழுபானை – தண்ணீரை முகந்துகொண்டு மேலே எழுகின்ற
ஏற்றப்பானை.

. இப்பாசுரங்களைச் சொன்னால் அவர்கட்கு உகப்பு ஆகுமோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘தொண்டர்க்கு’ என்று தொடங்கி. இது,-திருவாய்மொழி, 9. 4 : 9.

யேத்தச் சால்போலே -நீர் இறைத்து –
செல்வம் -முகந்து -வரும் போதே -செல்லும் –
நிரவதிக சம்பத்து கிட்டும் -தண்ணீர் போலே செலவழிக்க
பெருவர் திருமால் அடியார்கள் -பூசிக்க பெறுவார்கள்
அனுகாரத்தால் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ப்ரீதி அடைந்தது போலே
தொண்டர்க்கு அமுது உண்ண  சொல் மாலை -சந்தோஷம்  -உண்டாக்கும்
பெரும்செல்வம் நெருப்பாக சொல்லி பலன் சொலலாமா
கைங்கர்யத்துக்கு உபயோகம் என்றால் ஐஸ்வர்யமும் உத்தேச்யம் த்யாஜ்யம் இல்லை
திருமங்கை ஆழ்வார் திருவவதாரதுக்கு பின்பு இப்படி ஆனதே

சாரம் –
ஈசனை முன் காணாமல் நொந்து
உரு -வெளிப்பாட்டில் சேவித்து –
சாஷாத் காரம் அடையாமல்
உளனாய்
அனுகரித்து அவனே தான்
பேசும் திடமாக வாய்ந்து -ஆராய்ந்து -அவனாய் தான் [ஏசும் மாறன் உரை
ஆள் செய்ய நோற்பார்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-6-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 11, 2013

கோலங்கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோலமில் நரகமும் யானே என்னும்
கோலம்திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலம்கொள் உயிர்களும் யானே என்னும்

கோலம்கொள் தனிமுதல் யானே என்னும்
கோலம்கொள் முகில்வண்ணன் ஏறக்கொலோ?
கோலம்கொள் உலகத்தீர்க்கு என்சொல்லு கேன்?
கோலம்திகழ் கோதைஎன் கூந்த லுக்கே.

பொ-ரை :- அழகினைக் கொண்டுள்ளதான சுவர்க்கமும் யானே என்பாள், அழகு இல்லாத நரகமும் யானே என்பாள், அழகோடு விளங்குகிற பரமபதமும் யானே என்பாள், அழகினைக் கொண்ட உயிர்களும் யானே என்பாள், அழகினைக் கொண்டிருக்கின்ற ஒப்பற்ற மூலப்பகுதியும் யானே என்பாள், அலங்காரத்தைக் கொண்ட மேகம் போன்ற நிறத்தையுடைய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? அலங்காரத்தைச் செய்துகொண்டு வந்து நிற்கிற உலகத்தீர்க்கு, அழகோடு விளங்குகிற மாலையைத் தரித்த கூந்தலையுடைய என் மகளுக்கு உண்டான நிலைகளைப் பற்றி எதனைச் சொல்லுவேன்?

ஈடு :- பத்தாம் பாட்டு. சுவர்க்கம் முதலான பொருள்கள் எல்லாம் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள் என்கிறாள்.

கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும் – சுகரூபமான சுவர்க்கமும் யானே என்னும். 1நிலை நில்லாமையாலே, முகப்பில் காட்சிக்கினியதாந் தன்மையைப் பற்ற, ‘கோலம் கொள்’ என்கிறது. 2‘நரகத்தோடு ஒத்திருக்கச் செய்தே, வாசலிலே கழஞ்சு செம்மண் பூசி இருக்குமாறு போலே காண்’ என்று அருளிச்செய்வர் சீயர். கோலம் இல் நரகமும் யானே என்னும் – மேல் எழப் பார்க்கையில் அங்ஙனமும் ஒன்று இன்றியிலே இருக்கிற நரகமும் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள். கோலம் கொள் மோக்கமும் யானே என்னும் – மீண்டு வருந்தன்மை இல்லாததாய்ச் சுகத்திற்கே இருப்பிடமானதான மோக்ஷமும் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள். “கடல் ஞாலம் செய்தேன்” என்று, படைப்புத் தொடங்கி, “மோக்கமும் யானே”என்று மோக்ஷம் முடிவாகத் தன்னுடைய காரியம் என்கிறாள். கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்-நாடகம் கட்டி ஆடுவாரைப் போலே தேவனாகவும், மனிதனாகவும், இப்படிப் பல வகையான சரீரங்களை மேற்கொள்ளுகிற ஆத்மாக்களும் யானே என்னும். அன்றிக்கே, கோலம் கொள் உயிர்கள் – 1ஞான ஆனந்த லக்ஷணமான உயிர்கள் என்னுதல். கோலம் கொள் தனிமுதல் யானே என்னும் – 2இவற்றிற்கெல்லாம் காரணமான மூலப்பகுதியும் யானே என்னும். அன்றிக்கே, சங்கல்ப ரூப ஞானத்தைச் சொல்லுதல். அன்றிக்கே, விசித்திர காரிய காரிணியான மூலப்பகுதியையும் சங்கல்பரூப ஞானத்தையும் பிரகாரமாகவுடையனாய், எல்லா நற்குணங்களையுமுடையனான சர்வேச்வரன் என்னுதல். கோலம் கொள் முகில்வண்ணன் – திருமேனிக்கு மேகத்தை ஒப்பாகச் சொல்லும்போது அலங்கரித்துச் சொல்லவேணுமாதலின் ‘கோலம் கொள் முகில்’ என்கிறது. மின்னி முழங்கி வில்லிட்டு வந்து தோற்றின போதாயிற்று ஒப்பாகச் சொல்லலாவது. கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் – ‘கேட்கவேணும்’ என்று ஒருப்பட்டிருக்கிற உலகத்தீர்க்கு நான் எதனைச் சொல்லுவது. அன்றிக்கே, மயிரும் உகிரும் பேணி, உடம்பு பேணி வந்து அலங்கரித்துக்கொண்டு நிற்கிற உங்களுக்கு என்னுதல். கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கு-அழகிய மாலையையும் மயிர்முடியையுமுடைய என் மகளுக்குப் பிறந்த அவஸ்தைகளை. என்றது, இவள் மாலையையும் மயிர் முடியையும் கண்டார் படுகிற பாட்டைத் தான் பட்டு அநுகரித்துச் சொல்லுகிறவற்றை நான் எதனைச் சொல்லுவது என்றபடி.

சுவர்க்கம், பரமபதம் போன்று சுகரூபமாக இருக்குமோ? என்ன, மேலே,
“கோலம் திகழ் மோக்கம்” என்று விசேடிக்கையாலே அது இல்லை
என்கிறார் ‘நிலை நில்லாமையாலே’ என்று தொடங்கி. நிலை
நில்லாமையாலே, என்றது, நிலை நில்லாததுமாய், துக்கம் கலந்ததுமான
சுகத்தையுடையதாகையாலே என்றபடி.

ஸ்வர்க்கம் முதலான எல்லாம் என்னுடைய ஆதீனம் என்கிறாள் –
கோலம் -அழகு
அழகான ச்வர்க்கமும் நானே
கோலம் திகள் மோஷமும் நானே
எல்லாவற்றுக்கும் மூல காரணமும் நானே
சுக ரூபமான ஸ்வர்க்கம் -நிலை நில்லாமையாலே முகப்பில் -தர்சநீயம் ஆக இருக்கும்
நரகத்தோடு ஒத்து இருக்கச் செய்தே வாசலிலே களைஞ்சு செம்மண் பூசி இருக்குமே
ப்ரமம் செய்து -இருப்பதால் நரகம் விட மோசம் என்கிறார் -மேல் எழுந்து பார்த்தால் சுகம் போலே தோன்றி
கோலம் இல் நரகம் -பார்க்க கூட அழகு இன்றி
மோசமும் நான் இட்ட வழக்கு
கடல் ஞாலம் செய்தேன் சிருஷ்டி தொடங்கி மோஷம் வரை –
மூன்று கார்யம் -படைத்தல் காத்தல் ஆழித்தல் -சம்சார விமோசனம்
தனியாக உத்பாத ஸ்திதி பிரளய சம்சார விமோசன நான்கு கார்யங்கள் உண்டே அவனுக்கே
அது போல் ஆழ்வார் கோலம் திகள் மோஷமும் -அருளி –
கோலம் கொள் உயிர்கள் -நாடகம் கட்டி ஆடுவாரை போலே மன் உயிர் ஆக்கைகள்
ஒரே ஆத்மா பல சரீரம் கொண்டு –

“கோலம்” என்பதற்கு இருபொருள். இரண்டாவது பொருள், அழகு
என்பது, ஆத்மாவிற்கு அழகாவது. ஞான ஆனந்தங்களேயாதலின்,
அதனை அருளிச்செய்கிறார் ‘ஞான ஆனந்தலக்ஷ்ணமான’ என்று தொடங்கி.

2. “கோலம்கொள் தனிமுதல் யானே என்னும்” என்பதற்கு, மூன்று வகையாகப்
பொருள் அருளிச்செய்கிறார் ‘இவற்றிற்கெல்லாம்’ என்று தொடங்கி.
இவற்றிற்கெல்லாம் – இந்த உலகங்கட்கெல்லாம். மூலப் பகுதிக்கும்,
சங்கல்பரூப ஞானத்துக்கும் கோலமாவது யாது? எனின், விசித்திரமான
காரியத்திற்குக் காரணமாயிருத்தல் என்க.

வேஷம் போலே -ஜீவாத்மாவுக்கும் சரீரத்துக்கும் சம்பந்தம் இன்றி –
தேவ மனுஷ்ய நானாவித சரீர அலங்காரம் பண்ணிக் கொண்டு –
ஞான ஆநந்த லஷணம் கொண்ட ஆத்மா என்னவுமாம் -கோலம் கொள்
தனி முதல் -யானே முதல் தனி -வித்தேயோ மூல பிரகிருதி நானே –

அல்லது சங்கல்ப ரூப ஞானம் -கூடிய -சர்வேஸ்வரன் –
விசித்திர கார்ய காரண -சமஸ்த கல்யாண குனாத்மகனான சர்வேஸ்வரன்
முகில் -வண்ணன் கோலம் கொள் -வெறும் மேகம் உபமானம் ஆகாதே
திருவாசிரியம் -மலைக்கு விசெஷணம் -மரகத -குன்றம் பல விசெஷணங்கள் சொல்லி –
சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது -போலே

மின்னி -முழங்கி -வில்லிட்டு -மேகம் இங்கே
கோலம் கொள் -உடம்பு பேணி அலங்கரித்து நிற்கும் உங்களுக்கு என்ன -சொல்வேன்

கோதை கூந்தலுக்கு கூந்தல் -உடையவள் அன் மொழித் தொகை -இங்கே
கோதை -மாலை உடையவள்
வல்லி -கொடி போன்றவள்
-சீதை பெயர் வைத்தது போலே பெரியாழ்வார் ஆண்டாள் கோதை
கலப்பை நுனி -பெயரையே வைத்தது போலே
சூடி களைந்த -மாலை –
கோதை சொன்ன மாலை -மாலை கட்டின மாலை -மாலைக் கட்டின மாலை -நாயனார் வியாக்யானம்
மாலை கூந்தல் அழகைப் பார்த்து அவன் பட வேண்டிய அவஸ்தை இவள் படுகிறாள்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-6-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 8, 2013

கொடிய வினை யாதும் இலனே என்னும்
கொடிய வினை ஆவேனும் யானே என்னும்
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்
கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ?
கொடிய உலகத்தீர்க்கு இவைஎன் சொல்லுகேன்?
கொடியேன் கொடிஎன் மகள் கோலங்களே.

பொ-ரை :- கொடுமை பொருந்திய கர்மங்கள் ஒரு சிறிதும் எனக்கு இல்லை என்னும், கொடிய கர்மங்கள் ஆவேனும் யானே என்னும், கொடிய பாவங்களைச் செய்விப்பவனும் யானே என்னும், கொடிய பாவங்களைத் தீர்க்கின்றவனும் யானே என்னும், கொடியவனான இராவணனுடைய இலங்காபுரத்தை அழித்தேனே என்னும், பகைவர்களுக்குக் கொடுமையை விளைவிக்கின்ற கருடப்பறவையை வாகனமாகவுடைய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? கொடுமையையுடைய உலகத்தீர்க்கு, மஹாபாவியேனான என்னுடைய கொடி போன்ற பெண்ணானவள் செய்கின்ற அழகிய காரியங்களைப் பற்றி என் சொல்லுவேன்?

ஈடு :- ஒன்பதாம் பாட்டு. கர்மங்களுக்குக் கட்டுப்படாமை முதலான, பகவானுடைய வார்த்தைகளைத் தன்னுடையனவாகப் பேசாநின்றாள் என்கிறாள்.

கொடிய வினை யாதும் இலனே என்னும் – கர்மங்களுக்குக் கட்டுப்பட்டவர்களை அருளின்றி நலியும் கர்மங்கள் எனக்கு ஒன்றும் இல்லை என்னும். 1“ஜீவாத்மாவுக்கு வேறுபட்ட சர்வேச்வரன் கர்மபலத்தை அநுபவியாமல் மிகவும் பிரகாசிக்கிறான்” என்றும், 2“என்னைக் கர்மங்கள் ஒட்டுவன இல்லை, கர்ம பலத்தில் எனக்கு ஆசைஇல்லை” என்றும் சொல்லப்படுகிற அவன் படிகளைத் தான் சொல்லாநின்றாள். 1“நாட்டிற் பிறந்து படாதன பட்டு” என்கிற இடம், இச்சையால் வருவனவே அன்றோ. கொடிய வினை ஆவேனும் யானே என்னும் – நான் இவற்றால் தொடப்படாத மாத்திரமேயாய், அவைதாம் எனக்குப் புறம்பாய் இருக்கின்றனவோ; அந்தப் பாவங்கள் தாம் என்னுடைய நிக்கிரஹமேயன்றோ என்னும். கொடிய வினை செய்வேனும் யானே என்னும் – 2அடியார்களுடைய பகைவர்களுக்குக் கொடியதான பாவத்தை விளைப்பேனும் யானே என்னும். ஈண்டுச் ‘செய்வேன்’ என்றது அடியார்களுடைய பகைவர்களைப் பாவங்களிலே மூட்டுகையைக் குறித்தபடி. “என்னைப் பகைக்கின்ற அத்தகையரும் கொடுந்தன்மையரும் இழிந்தவருமான பாவிகளை எப்பொழுதும் பிறப்பு இறப்பு பரம்பரைகளில் அவற்றிலும் அசுரப்பிறவிகளில் தள்ளுகிறேன்” என்பது ஸ்ரீ கீதை.

கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்-என்னை வந்து அடைந்தவர்கட்கு அவை வந்து கிட்டாதபடி 3“எல்லாப் பாவங்களில் நின்றும் விடுவிக்கிறேன்” என்பேனும் யானே என்னும். கொடியான் இலங்கை செற்றேனே என்னும்-4சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமையுடையவனாதலின் ‘கொடியான்’ என்கிறது. இவ்விடத்தில் 1‘கொடியான்’ என்றது, திருத் தாயார் வார்த்தை காண்’ என்று அருளிச்செய்வர் சீயர், எதிரிகளை இவன் ஒன்றாக மதித்திருந்தானாகாமைக்கு; அவனாலே ஆவேசிக்கப்பட்டவள் அன்றோ இவள். கொடிய புள்ளுடையவன் ஏறக்கொலோ – அடியார்களுடைய பகைவர்களுக்கு யமனை ஒத்தவனான பெரிய திருவடியை வாஹனமாகவுடைய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? 2கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் – ‘கேட்க வேணும்’ என்று திரண்டு கிடக்கிற உலகத்தீர்க்கு என்னுதல். ‘இது கூடும்; கூடாது’ என்று பாராமல் ‘சொல்லு சொல்லு’ என்று நிர்ப்பந்தித்து 3ஸ்வகாரியத்தில் நோக்குள்ளவர்களாயிருக்கிற உங்களுக்கு எதனைச் சொல்லுவது என்னுதல். கொடியேன் கொடி என்மகள் கோலங்களே – இவள் அநுகரித்துச் சொல்லுகிற பாசுரங்களைக் கேட்க வேண்டும்படியான பாவத்தைச் செய்த என்னுடைய மகள் செய்கிற 4காணத்தக்க இனியவான செயல்களை. அன்றிக்கே, ஒருப்பாடுகளை என்னுதல்.

அகர்ம வச்யன் -பகவான் -கர்மத்தால் -பாதிக்கப்படாதவன் அவன் வார்த்தை சொல்லி –

“தயோ: அந்ய: பிப்பலம் ஸ்வாது அத்தி அநஸ்நந் அந்ய:
அபிசாக ஸுதி”-என்பது, உருக்கு வேதம்.

“ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மபலே ஸ்ப்ருஹா”-என்பது. ஸ்ரீ கீதை. 4.14.

கர்மம் ஒன்றுமே இல்லையே
கண்ணற்று நலியும் நம்மை கர்மங்கள் –
ஒரே மரத்தில் இரண்டு பறவைகள்

நாட்டில் பிறந்து படாதன பட்டு -என்ற இடம் இச்சையால் சங்கல்ப்பத்தால் வந்தது

அகர்மவஸ்யன்” என்று சொல்லி வைத்து, “கொடிய வினை செய்வேன்”
என்னுமிது முரண் அன்றோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘அடியார்களுடைய’ என்று தொடங்கி.

“தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்
க்ஷிபாமி அஜஸ்ரம் அஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு”-  என்பது, ஸ்ரீ கீதை. 16. 19.

3. “ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச:”-என்பது, ஸ்ரீ கீதை. 18. 66.

4. “சுரிகுழல்கனிவாய்த் திருவினைப்பிரித்த கொடுமையிற்கடுவிசை
அரக்கன்”-என்பது, பெரிய திருமொழி, 5. 7 : 7.

கர்மங்கள் அவன் -கட்டுப்பாட்டில் நிக்ரகம் அடியாக
செய்ய சொல்வதை செய்யாமல் -செய்ய கூடாததை செய்து -நிக்ரகம் –
ஆஸ்ரித விரோதிகளை பாபத்தில் மூட்டி –
இலங்கை செற்றேனும் யானே -என்னும்
கொடியான் -வார்த்தை மட்டும் தாயார் வார்த்தை
தனது வாயால் கொடியான் சொல்ல -மாட்டான் -நஞ்சீயர் -அருளுவார்
எம்பெருமானுக்கு யாருமே கொடியவன் இல்லையே
திருவினை பிரித்த கொடுமையில் கடு விசை அரக்கன் -ஆழ்வார் ஸ்ரீ சூக்தி

கொடியது -உடையவன் ஆஸ்ரித விரோதிகளுக்கு கொடியவன் பெரிய திருவடி
கொடிய உலகத்தீருக்கு -என்ன சொல்வேன்
சொல்லு சொல்லு நிர்பந்தித்து -எத்தை சொல்வது
பெண் அனுகரித்து சொல்லும் பாசுரங்களை கேட்கும் படி கொடியேன் நான் -திருத் தாயார்
கோலம் -தர்சநீயமான

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-6-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 8, 2013

உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
உரைக்கின்ற அமரர்கோன் யானே என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக்கொலோ?
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என்சொல் லுகேன்?
உரைக்கின்ற என்கோமள ஒண் கொடிக்கே.

பொ-ரை :- தாமத புராணங்களிலே சொல்லப்படுகின்ற சிவபிரானும் யானே என்பாள், அவனுக்கும் தமப்பனாகச் சொல்லப்படுகின்ற பிரமனும் யானே என்பாள், சொல்லப்படுகின்ற தேவர்களும் யானே என்பாள், சொல்லப்படுகின்ற தேவர்கள் தலைவனான இந்திரனும் யானே என்பாள், உரைக்கின்ற முனிவர்களும் யானே என்பாள், வேதங்களிலே பிரசித்தமாகச் சொல்லப்படுகின்ற மேகம் போன்ற நிறத்தையுடைய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? சொல்லு சொல்லு என்று பேசுகின்ற உங்களுக்கு, உலக விஷயத்தைக் கடந்து பேசுகின்ற அழகிய கொடி போன்ற என் பெண் விஷயத்தில் எதனைச் சொல்லுகேன்?

ஈடு :- எட்டாம் பாட்டு. உலகத்திற்குப் பிரதாநரான பிரமன் முதலான தேவர்கள் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் என்கிறாள்.

உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும் – 2வேதத்திலே பகவானுடைய செல்வங்கள் பரக்கச்சொல்லப்படுகின்ற இடங்களிலேயாதல், புனைந்துரையாகப் பேசப்படுகின்ற இடங்களிலேயாதல் சொல்லப்படுமவனாய், தன்னுடைய கோஷ்டிக்கு உபகாரகனான சிவன் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள். அன்றிக்கே, 1“பதினோர் உருத்திரர்களுக்குள்ளே சங்கரன் நான் ஆகின்றேன்” என்கிறபடியே, சர்வேச்வரனுக்குப் பிரகாரமாகச் சொல்லப்பட்டவனாதலின் ‘உரைக்கின்ற’ என்கிறார் என்னுதல். உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும் – 2“விரூபாக்ஷனும் பிரமனுக்கு ஜ்யேஷ்ட புத்திரனுமான சிவன்” என்கிறபடியே, அந்தச் சிவனுக்கும் தமப்பனாகப் பிரமாணப் பிரசித்தனாயிருக்கின்ற பிரமனும் நான் இட்ட வழக்கு என்கிறாள். உரைக்கின்ற அமரரும் யானே என்னும் – பிரமனாலே படைக்கப்பட்டவர்களாய், நித்திய சிருஷ்டிக்கு உரியவர்களாகச் சாஸ்திரங்களிலே சொல்லப்படுகின்ற பிரமர்கள் பதின்மர்களும் நான் இட்ட வழக்கு என்னும். 3அன்றிக்கே, “பிரமன் என்ன, தக்ஷர் முதலான பிரஜாபதிகள் என்ன, இவர்கள் முதலானவர்கள் சர்வேச்வரனால் நியமிக்கப்படுகின்ற பொருள்கள்; உலகத்தைப் படைப்பதற்குக் காரணர்களாக இருக்கிறார்கள்” என்கிறபடியே, பகவானுக்குப் பிரகாரமாகச் சொல்லப்படுகின்றவர்களாதலின் ‘உரைக்கின்ற அமரர்’ என்கிறாள் என்னுதல்.

உரைக்கின்ற அமரர்கோன் யானே என்னும்-4“இந்திரனே! உன்னைக்காட்டிலும் உயர்ந்தவர் ஒருவருமிலர்” என்று சொல்லப்படுகின்ற இந்திரனும் யானேஎன்னும். அன்றிக்கே, 1“வேதங்களில் சாமவேதம் நானாக இருக்கிறேன், தேவர்களில் இந்திரன் நானாக இருக்கிறேன்” என்கிறபடியே, பகவானுக்குப் பிரகாரமாகச் சொல்லப்படுகின்றவன் ஆதலின், ‘உரைக்கின்ற’ என்கிறாள் என்னுதல். உரைக்கின்ற முனிவரும் யானே என்னும் – வேதத்தின் அர்த்தங்களை நினைத்து, உலகத்திற்குச் செய்ய வேண்டியனவற்றைச் சொல்லும் மனு முதலான முனிவர்களும் நான் இட்ட வழக்கு என்னும். உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக் கொலோ – வார்த்தை சொல்லுவதாய், கழுத்தே கட்டளையாக நீரை முகந்து, மின்னி, முழங்கி, வில்லிட்டு வருவதொருமேகம் போலே வடிவழகையுடைய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? அன்றிக்கே, உரைக்கின்ற 2“கருமை நிறத்தையுடைய மேகத்தின் நடுவில் இருப்பதான மின்னல் போலே” என்கிறபடியே, நீருண்ட மேகம் போலே என்று சொல்லப்படுகிற என்னுதல். உரைக்கின்ற உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் – சிலவற்றைச் சொல்லுமித்தனையேயாய், ‘சொல்லலாம், சொல்ல ஒண்ணாது’ என்று பாராதே, சொல்லு சொல்லு என்று வருத்துகின்ற உலகத்தீரான உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவது? உரைக்கின்ற என்கோமள ஒண்கொடிக்கே – அதுவும் சொல்லி ஒழிவேனே அன்றோ 3வார்த்தை சொல்லிற்றிலள் ஆகில். ‘கோமளம்’ என்கையாலே, சௌகுமார்யத்தைச் சொல்லிற்று. ‘கொடி’ என்கையாலே, 4“கணவனை அடைதற்குரிய வயதினையுடையவள்” என்கிறபடியே, ஒருகொள்கொம்போடே சேராத போது தறைப்படும் பருவம் என்பதனைச் சொல்லிற்று.

ப்ரஹ்மாதிகள் தானே
உரைக்கின்ற –வேதத்தில்
உரைக்கின்ற முக்கண் -பிரான் அந்தர்யாமியாக இருந்து
வேதத்தால் உரைக்கப் -பற்ற விபூதி சொல்லும் வேதம்

“உரைக்கின்ற” என்பதற்கு, பரம்பொருளாக உரைக்கப்படுகின்ற என்றும்,
பகவானுக்குச் சரீரமாக உரைக்கப்படுகின்ற என்றும் இரண்டுவிதமாகப்
பொருள் அருளிச்செய்யத் திருவுள்ளம்பற்றி, அவ்விரண்டு
பொருள்களையும் முறையே அருளிச்செய்கிறார் ‘வேதத்திலே’ என்று
தொடங்கியும், ‘அன்றிக்கே’ என்று தொடங்கியும்.

“ருத்ராணாம் ஸங்கர: ச அஸ்மி வித்தேஸ: யக்ஷரக்ஷஸாம்
வஸூநாம் பாவக: ச அஸ்மி மேரு: ஸிகரிணாம் அஹம்”-  என்பது, ஸ்ரீ கீதை. 10 : 23.

2. “விரூபாக்ஷாய பிரஹ்மண: புத்ராய ஜ்யேஷ்டாய ச்ரேஷ்டாய”-  என்பது, சாமவேதம்.

பிரமர்கள் பதின்மர் :- மரீசி, அத்திரி, அங்கிரசு, புலஸ்தியர், புலகர்,
கிரது, வசிஷ்டர், தக்ஷர், பிருகு, நாரதர் என்பவர்கள்.

3. “ப்ரஹ்மா தக்ஷாதய: கால: ததைவ அகில ஜந்தவ:
விபூதய: ஹரே: ஏதா ஜகத: ஸ்ருஷ்டி ஹேதவ:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 22 : 31.

4. “நகிரிந்த்ர த்வத் உத்தர:” என்பது, ருக்வேதம்.

அர்த்தவாதம் பிரகரணம்
உண்டே தாமச புராணம் உண்டே
முக்கண் பிரான் –உபகாரகன் அவனுக்கும் கோஷ்டி உண்டே என்பதால் பிரான்

திசை முகன் -ப்ரஹ்மாவும் நானே

“வேதாநாம் ஸாமவேத: அஸ்மி தேவாநாமஸ்மி வாஸவ:” என்பது, ஸ்ரீ கீதை.  10 : 22.

2. “நீலதோயத மத்யஸ்த்தா” என்பது, தைத்திரீய நாராயண உப. 11.

3. ‘வார்த்தை சொல்லிற்றிலளாகில்’ என்றது, பகவானுடைய விபூதியைப்
பரக்கச் சொல்லிற்றிலளாகில் என்றபடி. ஆதலால், இப்படிப்பட்டவளுடைய
வைபவம் என்னால் சொல்லப்போகாது என்பது கருத்து.

4. “பதி ஸம்யோக ஸு லபம் வய: த்ருஷ்டவா ச மே பிதா” என்பது, ஸ்ரீராமா.
அயோத். 118 : 36. அநசூயைப் பார்த்துப் பிராட்டி கூறியது.

பத்து பிரஜாபதிகளை உண்டாக்கி -கார்யம் கொடுத்து பிரித்து -அமரர் –சப்தம் இவர்களைக் குறிக்கும்
உரைக்கின்ற அமரர் கோனும் நானே இந்த்ரனும் -நானே என்கிறாள்
வேதார்த்தை ஸ்மர்த்திது மனு போல்வாரும் நானே -நான் இட்ட வழக்கு
தர்ம சாஸ்திரம் கர்த்தவ்யம் செய்தவர்களும் நானே
முகில் வண்ணன் -நீல தோயாத -மழை
மின்னி முழங்கி கழுத்தே கட்டளையாக நீரை முகர்ந்து
சார்ங்கம் உத்தித சாரா மழை போலே
உரைக்கின்ற உலகத்தீருக்கு என்ன சொல்வேன்
வார்த்தை சொல்லி -கோமள -சௌகுமார்யம்
கொடி பருவத்தால்
கொள் கொம்பால் சேராமல் தரைப்பட்டு போகுமே
சீதை பிராட்டி வார்த்தை

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-6-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 8, 2013

உற்றார்கள் எனக்குஇல்லை யாரும் என்னும்
உற்றார்கள் எனக்குஇங்கு எல்லாரும் என்னும்
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்
உற்றாரிலி மாயன் வந்து ஏறக்கொலோ?
உற்றீர்கட்கு என்சொல்லிச் சொல்லு கேன்யான்?
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே.

பொ-ரை :- எனக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பாள், இங்கு எல்லாரும் எனக்கு உறவினர்களே என்பாள், உறவினர்களை உண்டாக்குகின்றவனும் யானே என்பாள், உறவினர்களை அழிக்கின்றவனும் யானே என்பாள், உறவினர்களுக்குப் பொருந்தியவனும் யானே என்பாள், உறவினர்கள் ஒருவரும் இல்லாத மாயனாகிய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? இங்கு வந்து சேர்ந்திருக்கின்ற உங்களுக்கு, என்னுடைய பேதைப்பருவத்தையுடைய மகள் பொருந்தி உரைக்கின்ற வார்த்தைகளை எதனைச் சொல்லுவேன்?

ஈடு :- ஏழாம் பாட்டு. எம்பெருமான் அடியார்கள் விஷயத்தில் இருக்கிற இருப்பைத் தன் படியாகப் பேசா நின்றாள் என்கிறாள்.

எனக்கு உற்றார்கள் யாரும் இல்லை என்னும்-1எனக்கு ஒருகாரணம் பற்றி வந்த பந்துக்கள் ஒருவரும் இலர் என்னும். அன்றிக்கே, என்னுடைய சம்பந்தம் அறிந்து என்னோடு சிநேகிக்கக்கூடியவர் ஒருவரும் இலர் என்னும் என்னுதல். 2“உலகங்கட்கு எல்லாம் தலைவன்” என்று இதனை ஓதிவைத்தே வேறு தெய்வங்களை வணங்குதல் அன்றோ செய்வது. எனக்கு உற்றார்கள் இங்கு எல்லாரும்என்னும்-எனக்கு, காரணம் இல்லாமல் வந்த பந்துக்கள் அல்லாதார் இலர் என்னும். அவர்கள் இப்படி இருக்கச் செய்தே காரணமில்லாமல் வந்து பந்துவாய் எல்லாரிடத்திலும் அன்புடையனாயிருப்பன் என்னுதல். உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்-அவர்களிலே சிலர் வந்து என்னை அடையும்படி செய்கின்றேனும் யானே என்னும். உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்-அவர்களுக்கு வேறு பிரயோஜனங்களிலே ருசி உண்டானால், அந்தப் பிரயோஜனங்களைக் கொடுத்து என்பக்கல் நின்றும் அகற்றுவேனும் யானே என்னும். அன்றிக்கே, அவர்களை அழகு முதலியவைகளாலே அழிப்பேனும் யானே என்னாநின்றாள் என்று ஆண்டான் பணித்தானாக 1இளையபெருமாள் பணிப்பர்.

உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும் – என் பக்கல் வேறு பிரயோஜனங்களை விரும்பாதவர்களாய் என்னை அடைகின்றவர்கட்கு, என்னளவு வேறு பிரயோஜனங்களை விரும்பாதவர் இலர் என்னுதல். அன்றிக்கே, என்னையே எல்லா உறவு முறையுமாகப் பற்றினவர்கட்கு, நானும் அவர்களையே எல்லா உறவு முறையுமாக இருப்பேன் என்னுதல். உற்றார் இலி மாயன் வந்து ஏறக்கொலோ – இற்றைக்கு முன்பு தம் முயற்சியால் கிட்டினவர்கள் ஒருவரும் இல்லாதபடி இருக்கிற ஆச்சரியத்தையுடைய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்-இங்ஙனம் சந்தேகிக்கலாமோ, உறவினர்களுக்கு அறுதியிட்டுச் சொல்லவேணுங்காண் என்ன, உறவு முறையராமித்தனையோ வேண்டுவது, சொல்ல வேண்டுவன இருந்து சொல்ல வேண்டாவோ, என்ன பாசுரத்தைச் சொல்லிச் சொல்லுவேன்? ஏன்தான், சொல்ல ஒண்ணாமைக்கு வந்தது என்? என்னில், என்னுடைப் பேதை உற்று உரைக்கின்றவே-பருவம் நிரம்பாத என் பெண், மறுபாடுருவத் தைத்துச் சொல்லுகிறவற்றை, கரையிலே நிற்கிற நான் எதனைச் சொல்லுவது? 2திருத்தாயாரானநிலையும் இவர்க்கே உள்ளது ஒன்றாகில் இங்குச் சொல்ல ஒண்ணாதபடி கலங்குகையாவது என்? என்னில், 1“தனக்கும் தன்தன்மை அறிவரியான்” என்கிறபடியே, சர்வேச்வரனை, தன்படி தானும் அறியான் என்று சொல்லுமாறு போலே, தம்நிலை தமக்குங்கூடப் பேச்சுக்கு நிலம் அன்று என்கிறது.

ஆஸ்ரிதர் விஷயத்தில் எம்பெருமான் இருக்கும் நிலை தானே என்கிறாள்
நிர்பாதிக பந்து அனைவருக்கும் அவனே

எனக்கு உற்றார்கள் யாரும் இல்லை” என்பதற்கு, இரு வகையாகப்
பொருள் அருளிச்செய்கிறார். இரண்டாவது வகையில் உற்றார் –
உற்றிருப்பார் என்றாய், சிநேகம் செய்வார் என்பது பொருளாகக் கொள்க.

2. சம்பந்தம் அறிந்து சிநேகம் செய்யார்களோ? என்ன, ‘உலகங்கட்கெல்லாம்’
என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

“பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸவம் அச்யுதம்” என்பது,-தைத்திரீய நாரா.

நமக்கு உற்றார் கர்மம் அடியாக உபாதி
அவனுக்கு உபாதி இல்லையே
என்னோட்டை சம்பந்தம் அறிந்து -வெறுப்பில் சொல்கிறான் என்னை ஒருவரும் புரிந்து கொள்ள வில்லை
பதிம் விச்வச்ய அறிந்து வைத்தே தேவதாந்தர பஜனம் செய்கிறார்கள் –
உற்றார்கள் யாரும் இல்லை
ஆனால் எல்லாரும் பந்து தானே -பந்து  இல்லாதாவார் இல்லை -நிருபாதிக பந்து
சிலர் ஆஸ்ரயிக்க பண்ணுபவனும் யானே
பிரயோஜனாந்தர ருசி உண்டாக்கி போக்குபவனும் நானே

தனக்கு ஆகாதவரை தானே விலக்கி வைத்து
திருத் தாயார் தசையும் இவளே
தம்மாலே சொல்லி கொள்ள முடியாதா
சொல்ல ஒண்ணாத படி கலங்குவது
தனக்கும் தன் படி அறியான் போலே -தனது நிலை தன்னாலும் சொல்ல முடியாதபடி

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-6-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 8, 2013

இனவேய்மலை ஏந்தினேன் யானே என்னும்
இனஏறுகள் செற்றேனும் யானே என்னும்
இனஆன்கன்று மேய்த்தெனும் யானே என்னும்
இனஆநிரை காத்தேனும் யானே என்னும்
இனஆயர் தலைவனும் யானே என்னும்
இனத்தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?
இனவேற்கண் நல்லீர்க்கு இவைஎன் சொல்லுகேன்?
இனவேற் கண்ணி என்மகள் உற்றனவே.

    பொ-ரை :- கூட்டம் கூட்டமான மூங்கில்களையுடைய கோவர்த்தனம் என்னும் மலையைத் தூக்கினவனும் நானே என்னும், ஒத்த இடபங்களைக் கொன்றவனும் யானே என்னும், ஒத்த பசுவின் கன்றுகளை மேய்த்தேனும் யானே என்னும், ஒத்த ஆயர்களுக்குத் தலைவனும் யானே என்னும், கூட்டம் கூட்டமான நித்தியசூரிகளுக்குத் தலைவனான சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? வேலை ஒத்த கண்களையுடைய நல்லவர்களான உங்களுக்கு, வேலை ஒத்த கண்களையுடையவளான என் மகள் அடைந்தனவற்றை என்சொல்லுவேன்?

ஈடு :- ஆறாம் பாட்டு. கோவர்த்தன மலையைத் தூக்கித் தரித்திருத்தல் முதலான, கிருஷ்ணனுடைய செயல்களை எல்லாம் செய்தேன் நான் என்னா நின்றாள்.

இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்-2அணுக்கனைக் கவிழ்த்துப் பிடித்தாற்போலே, திரள்திரளான மூங்கிலையுடைத்தான மலையை வருத்தம் இன்றியே தரித்தேன் நான் என்னாநின்றாள். இனம் ஏறுகள் செற்றேனும் யானே என்னும் – ஒன்று இரண்டு அன்றிக்கே 3யமனுக்கு ஒத்தனவாக இருக்கிற இடபங்கள் ஏழனையும் ஒருகாலே ஊட்டியாக நெரித்துப் போகட்டேன் நான் என்னும். இனஆன்கன்று மேய்த்தேனும் யானே என்னும் – 1“கன்றுகளின் நடுவில் உள்ளவனும் இளமைப்பருவமுடையவனும்” என்கிறபடியே, என்னோடு ஒத்த பருவமுள்ள கன்றுகளை மேய்த்தேனும் நான் என்னும். இன ஆநிரை காத்தேனும் யானே என்னும் – முன்பு பிரஹ்மசர்யம் அநுஷ்டித்துப் பின்பு இல்லற தர்மம் அநுஷ்டிப்பாரைப் போலே, இளமைப் பருவத்தில் கன்றுகளை மேய்த்து, பருவம் நிரம்பின பின்பு பசுக்களை மேய்த்தேனும் நான் என்னும். இன ஆயர் தலைவனும் யானே என்னும் – 2“தன்னேராயிரம் பிள்ளைகள்” என்கிறபடியே என்னோடு ஒத்த பருவத்தில் பிள்ளைகளும் நானுமாகத் தீம்பு செய்து திரிகிற இடத்தில் அவர்களில் என்னளவு தீம்பு செய்கின்றவர்கள் இலர் என்னும். இனத்தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ-வேறு ஒன்றிலும் விருப்பம் இல்லாதிருத்தலுக்குத் தன்னோடு ஒத்திருக்கிற நித்தியசூரிகளுக்கு நிர்வாஹகனான சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? அன்றிக்கே, இனத்தேவர் என்பதற்கு, தனியே அநுபவிக்க ஒண்ணாமையாலே திரள்திரளாக இருக்கிற நித்தியசூரிகள் என்னுதல். 3“அடியார்கள் குழாங்கள்” என்னக்கடவதன்றோ. இனம் வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன் – இவள் நிலை எவ்வளவாய்த் தலைக்கட்டுகிறது என்று, வேல் ஒழுங்கு போலே கூர்க்கப் பார்த்துக்கொண்டிருக்கிற உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவேன்? ஏன் தான், சொல்ல அருமை என்? என்ன, இனம் வேல் கண்ணி என்மகள் உற்றன-தன் கண்களுக்கு இலக்கானார் படுமதனைத் தான் படுகிறபடியைச் சொல்லப் போமோ? 4“உயிர்காமின்கள் ஞாலத்துள்ளே” என்பதே அன்றோ இவள் கண்களுக்கு இலக்கானார் படுவது.

கிருஷ்ண செஷ்டிதங்கள் செய்தேனும் யானே
வேய் மூங்கில் உள்ள மலையை ஏந்தினேன்
ஏறுகள் இனம் நப்பின்னை பிராட்டுக்கு கன்று மேய்தவனும் நானே பசுக்களை ரஷித்து
இடையவர் தலைவனும் நானே
அணுக்கன் -குடை கவிந்து பிடித்தால் போலே கோவர்த்தன மலையை ஏந்தி
இனம் ஏறுகள் -செற்றேனும் யானே -யமன் போல -ஊட்டியாக கழுத்து உடன் சேர்த்து
என்னோடு ஒத்த கன்றுகளை மேய்தவனும் யானே
ஆநிரை காத்தவனும்
கன்று மேய்த்து பிரமச்சர்யம் பின்பு கிரகஸ்தன் பசுக்களை மேய்த்து

வத்ஸ மத்யகதம் பாலம் நீலோத்பல தளச்சவிம்” என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா.-  5. 17 : 19.

2. “தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர்நடை இட்டு வருவான்” என்பது,  பெரியாழ்வார் திருமொழி.

ஆயர் தலைவனும் நானே
தீம்புகள் செய்வதில் -மிக்கு -அனைவர் செய்யும் தீம்புகளையும் செய்து
நித்ய சூரிகள்  இனத்தே வர் -அபேஷையே இல்லாதவர் -தன்னைப் போலே –
இனத்தேவர் -கூட்டம் -தனியாக அனுபவிக்க முடியாமல் -இனம் இனமாய் இமையோர்கள் ஏத்த
திரளாய் இருந்து அடியார்கள் குழாம் கலை உடன் கூடுவது என்று கொலோ

“கடாவிய வேகப் பறவையின் பாகன் மதனசெங்கோல்”
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே”-  என்பது, திருவிருத்தம் 6.

கூர்ந்து பார்த்து கொண்டு இருக்கும் உங்களுக்கு எத்தை சொல்வேன்
அழகான கண்ணை உடைய எனது மகளை அடைய அவன் துக்கப் பட இருக்க
இவள் துக்கம் படுகிறாளே -சொல்லப்போமோ
உயிர் காத்து கொள்ளும் -போலே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-6-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 8, 2013

 திறம்பாமல் மண்காக்கின்றேன் யானே என்னும்
திறம்பாமல் மலைஎடுத் தேனே என்னும்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்
திறங்காட்டி அன்றைவரைக் காத்தேனே என்னும்
திறம்பாமல் கடல்கடைந் தேனே என்னும்
திறம்பாத கடல்வண்ணன் ஏறக் கொலோ?
திறம்பாத உலகத்தீர்க்கு என்சொல் லுகேன்?
திறம்பாது என்திரு மகள் எய்தினவே.

 

    பொ-ரை :- நன்னெறியினின்றும் ஒருவரும் பிறழாதவாறு உலகத்தை எல்லாம் காக்கின்றவன் யானே என்னும், தளர்ச்சி இல்லாமலே கோவர்த்தனம் என்னும் மலையை எடுத்தேன் என்னும், தப்பாதபடி அசுரர்களைக் கொன்றேன் என்னும், திறமைகளைக் காட்டி அக்காலத்தில் பாண்டவர்களைக் காப்பாற்றினேன் என்னும், தப்பாமல் சமுத்திரத்தைக் கடைந்தேன் என்னும், தன்விதிகளை ஒருவரும் தப்ப ஒண்ணாதவாறு இருக்கின்ற கடல்வண்ணனாகிய சர்வேச்வரன் ஆவேசித்தானோ? பகவானுடைய குணங்களில் நின்றும் மீளாதவாறு என்மகள் எய்தியவற்றை, கேட்டு அல்லது மீளாத உலகத்தார்க்கு எதனைச் சொல்வேன்?

ஈடு :- ஐந்தாம் பாட்டு. உலகத்தைப் பாதுகாத்தல் தொடக்கமான செயல்களை எல்லாம் செய்தேன் நான் என்னாநின்றாள் என்கிறாள்.

திறம்பாமல் மண்காக்கின்றேன் யானே என்னும்-1ஒருவர் கூறை எழுவர் உடாதபடி, “இந்தப் பரமாத்மாவினிடமிருந்து பயந்து காற்று வீசுகிறது” என்கிறபடியே, பூமியை நோக்குகிறேன் நான் என்னும். திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும் – ஒரு பசுவின் மேலாதல், ஓர் ஆயன் மேலாதல் ஒரு துளிபடாதபடி கோவர்த்தனகிரியைத்தரித்துப் பாதுகாத்தேனும் நான் என்னாநின்றாள். திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும் – அசுரர்களுடைய கூட்டத்தைத் தப்பாதபடி அறுத்துப் போகட்டேன் என்னும். திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும் – 1உலகத்தில் என்படிகளைக் காட்டி, பகலை இரவாக்கியும், ‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுத்தும், பகைவர்களுடைய உயிர்நிலையைக் காட்டியும் இப்படி அன்று பாண்டவர்கள்மேல் அன்பு வைத்து அவர்களைக் காப்பாற்றினேனும் நான் என்னாநின்றாள். “கிருஷ்ணா! வெற்றியையாவது இராச்சியத்தையாவது நான் விரும்பவில்லை” என்ற அருச்சுனனை, “இப்போதே போரைச் செய்ய வேணும் என்கிற உன்னுடைய வார்த்தையை நிறைவேற்றி விடுகிறேன்” என்னச் செய்தானே அன்றோ. திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்-ஒருதாழிக்கு உட்பட்ட தயிரை ஒன்றும் பிரிகதிர்ப்படாதபடி கடைவாரைப் போலே, சமுத்திரம் என்கிற மஹாதத்துவத்தின் நடுவே மந்தரத்தை நட்டுக் கடைகிற இடத்துக் கீே்ழ விழுதல் மேலே கொந்தளித்தல் செய்யாதபடி கடலைக் கடைந்தேனும் நான் என்னும். திறம்பாத கடல்வண்ணன் ஏறக்கொலோ – தன் சாசனத்தை ஒருவரால் தப்ப ஒண்ணாதபடியாயிருக்கிற, அளவிட்டு அறிய ஒண்ணாத தன்மையனான சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? திறம்பாத உலகத்தீர்க்கு என்சொல்லுகேன் – கேட்டு அல்லது கால்வாங்கோம் என்று இருக்கிற உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவது. திறம்பாது என் திருமகள் எய்தின – திருமகளை ஒத்த என் மகள், ஹிதம் சொல்லி மீட்க ஒண்ணாதபடி அடைந்தவற்றை நான் எதனைச் சொல்லுவது? 1ஆழங்காலிலே இழிந்தார்படியைக் கரையிலே நின்றாராலே சொல்லப்போமோ.

“திறம்பாமல்” என்பதற்கு, ஒருவர் நிமித்தமான அச்சத்தாலே ஒருவர்
அஞ்சாதபடி என்று பொருள்கூறத் திருவுள்ளம்பற்றி
அதனைஅருளிச்செய்கிறார் ‘ஒருவர்’ என்று தொடங்கி. ஒருவர் கூறை
எழுவர் உடுக்கையாவது, ஒருவன் கையில் உள்ள புடைவையை ஒருவன்,
அவன் கையிலுள்ள அதனை வேறு ஒருவன் பறிக்க, இப்படியே ஏழு
பேராகப் பறித்து உடுத்தல். இது, எளியாரை வலியார் வருத்துவதற்குத்
திருஷ்டாந்தம். இப்படி, எளியாரை வலியார் வருத்தாதபடி அவர் அவர்கள்
மரியாதைகளிலே நிறுத்திப் பூமியைக் காக்கிறேன் என்றபடி.

திறம்பாமல் -தப்பாமல் மண் காத்து
திறலை காட்டி –

றம் காட்டி-பக்ஷபாத பிரகாரங்களைக் காட்டி என்னுதல். திறம் என்று
சமூகமாய், தத்துவ விவேகம் தொடங்கிப் பிரபத்தி முடிவாகவுள்ள அர்த்த
சமூகங்களைக் காட்டி என்னுதல். இந்த இரண்டு பொருள்களையும் முறையே
அருளிச்செய்கிறார் ‘உலகத்தில்’ என்று தொடங்கியும், ‘கிருஷ்ணா!’ என்று
தொடங்கியும்.

“நகாங்க்ஷே விஜயம் க்ருஷ்ண நச ராஜ்யம் ஸுகாநிச
கிம்நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகை: ஜீவிதேநவா”

“நஷ்டோ மோஹ: ஸ்மிருதி: லப்தா த்வத் ப்ரசாதாத் மயாஅச்யுத
ஸ்திதிஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசனம் தவ”-என்பன, ஸ்ரீகீதை. 1 : 32, 18 : 73.

ஒருவர் கூறை எழுவர் -உடுக்காமல் அனைவருக்கும் உடுக்கை
இது எளியாரை வலியார் பாதிக்க திருஷ்டாந்தம்
சிறியதை பெரியார் வலியாதபடி -அராஜாகம் -இல்லாதபடி திறம்பாமல் மண் காத்து
பீஷாத்மா -பயத்தால் -காற்று வீச -கட்டளை இட்டு –
சூரியன் சரியாக -உதித்து -ஸ்ரீ ரெங்க பஞ்சாங்கம் பார்த்து செய்கிறான் -காஞ்சி ஸ்வாமி அருளி
திறம்பாமல் -கோவர்த்தன கிரியை -தரித்து பசு இடையர் மேல் விழாமல் -விசேஷ ரஷணம்
அசுரரை -கொன்றேன் திறம்பாமல்
திறம் காட்டி ஐவரை ரஷித்து
லோகத்தில் எனது படியைக் காட்டி –
பகலை -இரவாக்கி -அஸ்தமிக்கும் முன்பே
ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுத்து
கிர்த்ரிமம்
சத்ருக்கள் உயிர் நிலை காட்டி -அஸ்வத்தாமா ஹதா சொல்ல சொல்லி
கர்ணன் மார்பில்
ஜெயதரன் தலை ரிஷி மடியில் விழ வைக்க -தகப்பனார் -தலை விழுந்தால் தலை வெடிக்கும் –
ஐவரை காக்க பலவும் காட்டி –
பஷ பதித்து ரஷித்து
அர்ஜுனன் -யுத்தத்தில் ஓட -செய்ய வைத்தானே
ஜெயமே வேண்டாம் போனவனை கீதை உபதேசித்து கரிஷ்யே வசனம் தவ சொல்ல வைத்தான்

கடல் கடைந்து -தாளிக்கு உட்பட்ட தயிரை கடைவது போலே சிந்தாமல் கடைந்து
மந்த்ரத்தை நட்டு கடைந்து –
திறம்பாத கடல் வண்ணன் -சாசனம் யாராலும் தப்ப ஒண்ணாத
திறம்பாத உலகத்தீர் -கேட்டு அல்லது போக மாட்டாத உங்களுக்கு
என் திரு மகள் -ஹிதம் சொல்லி மீட்க ஒண்ணாத படி
உள்ளே இறங்கினவள் கடல் கரையில் இருந்து பேச முடியுமா
அனந்தாழ்வான் என் திருமகள் பெயர் வைத்து

 

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.


Follow

Get every new post delivered to your Inbox.

Join 74 other followers