ஸ்ரீ பெரிய திருமொழி-2-1-7-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 5, 2013

தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை
நெருக்குவாரலக்கண் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டதனோடும் வானிடை
அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே——————————————————–2-1-7-

————————————————————————————————————————————————————————————————–

வியாக்யானம் –

தருக்கினால் சமண் செய்து –
கேவல தர்க்கத்தாலே
தங்கள் உடைய சித்தாந்தத்தை ஸ்தாபித்து –
வேத சாஸ்த்ரா விரோதி நா
யஸ் தர்க்கேணாநு சந்தத்தே ஸ தர்மம் வேத நே தர –
என்கிறபடியே
பிரமாண அநு கூல தர்க்கம் கொண்டு
அர்த்தத்தை நிர்வஹிக்கை அன்றிக்கே
சுஷ்கமான கேவல தர்க்கம் கொண்டு
அவைதிகமாக ஸித்தாந்த ஸ்தாபனம் பண்ணி –

சோறு-இத்யாதி –
வேகும் சோறு என்று ஓன்று உண்டு இ றே
அவர்கள் ஜீவித்துப் போருவது
தயிரும் சோறுமாக குழைத்து திரட்டி
வ்ரதத்துக்கு உறுப்பாக கண் பிதுங்கும்படி
மிடற்றிலே நெருக்குவர்கள்
அப்போது படும் அலக்கண் உண்டு –துக்கம் அத்தைக் கண்டு-

மருட்கள் இத்யாதி –
மருள் இந்தளம் என்கிற பண்ணை
வண்டுகள் பாடா நின்ற திருமலையை
வாஸ ஸ்தானமாகக் கொண்டு –
தண் தயிரினால் திரளை மிடற்றிடை

அருக்கன் மேவி நிற்பாற்கு –
வைதிகர் ஆனவர் ஆஸ்ரயிக்கும் படியாக
ஆதித்ய அந்தர்யாத்மாவாகக் கொண்டு
நிற்கிறவனுக்கு –

அடிமைத் தொழில் பூண்டாயே –
ஆதித்ய அந்தராத்மாவாய் இருக்கும் என்று
அனுசந்தித்துப் போகை அன்றிக்கே
கண்ணாலே கண்டு அடிமை செய்து
அனுபவிக்கப் பெற்றாயே நீ –

———————————————————————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .

திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழி-2-1-6-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 5, 2013

துவரி யாடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் நந்தி யுண்டு பின்னரும்
தமரும் தாங்களுமே தடிக்க என்னெஞ்சம் என்பாய்
கவரி மாக் கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட கண்ணார் விசும்பிடை
அமர நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே——————————————————2-1-6-

———————————————————————————————————————————————————————————————-

வியாக்யானம் –

துவரி இத்யாதி –
துவரூட்டி இருந்துள்ள சிவந்த ஆடையை உடையராய் –
தலை மயிரைப் பறித்து பொகட்டி இருக்கிற சமண் தொண்டர் உண்டு -அமணர் ஆகிறார்
அவர்கள் தாங்கள் கண்டபடி மேல் விழுந்து புஜித்து
அதுக்கு மேலே –
தங்களோடு  ஒத்து தங்கள் தர்சநத்திலே ருசி உடையராய்
அந்த வேஷ தாரத்தையும் பண்ணி இருக்கிறவர்களும்
கடவராய் இருக்கிற தாங்களும்
சரீரம் ஆனது தடிக்கும்படியாக –

என்னெஞ்சம் என்பாய் –
அவர்கள் செய்தபடி செய்ய
வ்யாவ்ருத்தமான படியை வுடைய உன்னைத் தான் ஆர் என்பர் –

கவரி இத்யாதி –
கவரிகளை உடைத்தான
ம்ருகங்கள் உடைய திரள் வந்து சேருகிற
திருமலையை வாஸ ஸ்தானமாக வுடையவனே –

கண்ணார் இத்யாதி –
இடம் மிக்கு இருந்துள்ள விசும்பு உண்டு -த்ரி பாத் விபூதி
அதிலே உண்டான
அநந்த வைநதேயாதிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனுக்கு –

அடிமை இத்யாதி –
அமரருடைய வ்யாபாரத்தை அநா தரித்து
நித்ய சூரிகள் உடைய யாத்ரைகளிலே அன்வயித்தாயே-

———————————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .

திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழி-2-1-5-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 5, 2013

பொங்கு போதியும் பிண்டியும் உடைப் புத்தர் நோன்பியர் பள்ளியுள் ளுறை
தங்கள் தேவரும் தாங்களுமேயாக என்னெஞ்சம் என்பாய்
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்றருள்
அங்கணாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே————————————————————2-1-5-

——————————————————————————————————————————————————————————————————

பாவியாது -என்று நீ இப்படி விசாரியாதே துணிவதே
என்று என்னைக் கொண்டாட வேண்டின ஹேது என் -என்ன
விசாரிக்க வேண்டும்படி
எத்தனை விஷயம் புறம்பே கிடக்கிறது
என்கிறார் –
வியாக்யானம் –

பொங்கு போதியும்-
விஸ்த்ருதமாக நின்று உள்ள வரசும் –

பிண்டியும்-
அசோக வ்ருஷமும் –

உடை-
இவை இரண்டையும் ஆயிற்று தங்களுக்கு பிரதானமாக
நினைத்து இருப்பது பௌ த்தார்ஹதர்கள்

புத்தர் நோன்பியர்-
பௌ த்தரையும்
அமணரையும்
-சொன்னபடி –

பள்ளியுள் ளுறை தங்கள் தேவரும் தாங்களுமேயாக –
அவர்கள் தங்களுடைய
தேவ ஸ்தானங்களிலே வர்த்தித்த
தேவதைகளும் தாங்களுமாக –
அல்லாதார் அடங்கலும்
முதாதராம் படி யாயிற்று –

என்னெஞ்சம் -இத்யாதி
இவருடைய திரு உள்ளம் அவற்றை அநாதரித்து
பகவத் விஷயத்தில் பிரவணம் ஆயிற்று -என்றால்
பின்னை லோகமாக அவற்றை அநாதரித்து
இங்கே ப்ரவணமாம் போலே காணும் –

எங்கும் இத்யாதி –
எங்கும் ஒக்க தேவர்களும்
அசுரர்களும் நெருங்கி நின்று ஏத்தா நின்றுள்ள
அன்றிக்கே
தானவர் -என்கிறது
ஸ்தானத்தில் உள்ளார் ஆகவுமாம் –

அங்கணாயகற்கு –
அக் கண்ணில் குளிர்திக்கு இலக்கு ஆவதே –
அக் கண் அழகுக்கு ஜிதம் என்று எழுதிக் கொடுத்தார் உடைய
வ்ருத்தியிலே அன்வயித்தாயோ
இன்று அடிமைத் தொழில் பூண்டாயே

———————————————————————————————————————————————————————————–

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .

திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழி-2-1-4-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 5, 2013

பாவியாது செய்தாய் என்னெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை மண் மிசை
மேவி யாட் கொண்டு போய் விசும்பேற வைக்கும் எந்தை
கோவி நாயகன் கொண்ட லுந்துயர் வேங்கட மலை யாண்டு வானவர்
ஆவியாய் இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே———————————————————-2-1-4-

————————————————————————————————————————————————————————————

வியாக்யானம் –

பாவியாது இத்யாதி –
அத்தைச் செய்தோமோ
இத்தைச் செய்தோமோ என்று இங்கனே
அலமாவாதே -கிடவாதே –நிரூபியாதே -இப்படியிலே அத்யவசிப்பதே –
என்ன அலாப்ய லாபமோ
சம்சாரத்தில் அத்யவசிப்பதே
சப்தாதிகளை அனுபவித்து இருப்புதுமோ
பகவத் கைங்கர்யம் பண்ணுவோமோ
என்று இங்கனே விசாரியாதே
நீ இதிலே துணிவதே
உன்னாலே இ றே இப் பேறு எல்லாம் பெற்றது-

பண்டு இத்யாதி –
முன்பு அடிமை செய்தவர்களை
தான் சம்சாரத்திலே வந்து அவதரித்து
இவன் என் தோழன் -இவன் என் மைத்துனன் –
என்று சொல்ல லாம்படி
அவர்களோடே பொருந்தி
அவர்களுக்கு கைங்கர்ய ருசியைப் பிறப்பித்து
அடிமையைக் கொண்டு
அது தானே
விச்சின்னமாய் செல்ல வேண்டும் என்று
அதுக்கு உறுப்பாக
பரம பதத்தில் கொடு போய் வைக்கும் ஸ்வாமி-

கோவி நாயகன் –
ஸ்திரீ கோபிமார் உடன் கலக்குமா போலே
ஆஸ்ரிதர் உடன் பரிமாறுமவன் –

கொண்ட லுந்துயர் வேங்கட மலை-
மேகங்களை சென்று தள்ளும்படி
அவ்வளவும் வளர்ந்த சிகரங்களை உடைய
திருமலையை வாஸ ஸ்தானமாகக் கொண்டு-

வானவர் இத்யாதி –
ஜ்ஞாநீத்வாத் மைவ மே மதம் -என்கிறபடியே
ஜ்ஞாநிகளைத் தனக்கு
ஆத்ம பூதராக உடையவனாய்
இருக்கிறவனுக்கு
நீயும் ஆவி ஆனாயோ-

—————————————————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .

திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழி-2-1-3-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 5, 2013

இண்டை யாயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும் வானிடைக்
கொண்டு போயிடவும் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
வண்டு வாழ் வட வேங்கடமலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை
அண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே———————————————————-2-1-3-

———————————————————————————————————————————————————————————————-

-வியாக்யானம் –

இண்டை இத்யாதி –
இண்டை -என்று பூ மாலைக்கு பேர்
ஆக
பூ மாலை என்ற பேர் பெற்றவற்றைக் கொண்டு
எண்ணிடிசையும் உள்ள பூ கொண்டு ஏத்தி -என்கிறபடியே

தொண்டர்கள் ஏத்துவார்-
பகவத் விஷயத்தில் அடிமை செய்யுமவர்கள்
கையிலே பூ மாலை கொண்டு
வாயாலே ஏத்தா நின்று கொண்டு
அடிமை செய்கிறவர்கள் உடைய –

உறவோடும் வானிடைக் கொண்டு போயிடவும் –
அவர்களோடு
சம்பந்த சம்பந்திகளோடு
ஒரு நாள் கார்யம் செய்தவர்களோடு
வாசி அற எல்லாரையுமாகக் கொண்டு போய் –
நித்ய விபூதியிலே வைக்கும் –

அது கண்டு என்னெஞ்சம் என்பாய் –
நீர்மையை அனுசந்தித்து -என்னெஞ்சமே
இங்குத்தை இருப்பு தன்னையும் இழக்கிறோமோ -என்று
அஞ்ச வேண்டி இருக்க
அவ்வருகே போய் அடிமை செய்ய
ஆசையை உடையை ஆவாயே நீ –

வண்டு வாழ் வட வேங்கடமலை கோயில் கொண்டு –
வண்டுகள் ஆனவை மது பாநத்தைப் பண்ணி
மத்தமாய் கொண்டு வாழா நின்றுள்ள
திருமலையைத் தனக்கு
நித்ய வாஸத்துக்கு ஸ்தானமாகக் கொண்டு –

அதனோடும் மீமிசை அண்டம் ஆண்டு இருப்பாற்கு –
உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரனுக்கு –
அண்டம் என்று ஆகாசத்துக்கு பேர்

வெறும் அண்டம் என்னில்
ஸ்வர்க்காதிகளிலும் ஏறும் என்று
மீமிசை அண்டம் என்று பரம பதத்தை சொல்லுகிறது
மஹா ஆகாசம் பரம ஆகாசம் -என்னக் கடவது இ றே
உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரனுக்கு –

அடிமைத் தொழில் பூண்டாயே –
அவாப்த சமஸ்த காமனானவனுடைய குறையை
ஒருபடி நிரப்பினாயே
திருமலையிலே வந்து புகுந்து
இவரை அடிமை கொள்வதற்கு முன்பு
உபய விபூதி யோகத்தால் வந்த
ஐஸ்வர்யத்தை ஒன்றாக நினைத்திலன் காணுமவன் –
தந லுப்தன் ஒரு காசு விழுந்த இடத்தில்
கை எல்லாம் புழுதியாக தேடும் இ றே

————————————————————————————————————————————————————————–

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .

திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழி-2-1-2-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 5, 2013

உறவு சுற்றம் என்று ஓன்று இலா ஒருவன் உகந்தவர் தம்மை
மண் மிசைப் பிறவியே கெடுப்பான் அது கண்டு என்நெஞ்சம் என்பாய்
குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து
அறவனாயாக்ற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே——————————————————2-1-2-

——————————————————————————————————————————————————————————————————–

உறவு -இத்யாதி
பந்துக்கள் ஜ்ஞாதிகள் என்று இங்கனே
கர்ம நிபந்தனமாக சொல்ல லாவதொரு உறவு
உடையன் அல்லாத அத்வதீயன் –

உகந்தவர் இத்யாதி –
தான் சிலரை உகந்து அவர் பக்கல் உகப்பாலே
அவர்களுக்கு பாபத்தைப் போக்குதல்
பலத்தைக் கொடுத்து விடுதல் செய்கை அன்றிக்கே
சம்ஸார ஜென்மத்தை போக்கிக் கொடுக்கிற
ஸ்வ பாவத்தை அனுசந்தித்து –
உகந்தவர் –
தன்னை உகந்தவர் என்றுமாம்

என்னெஞ்சம் என்பாய் –
அவனைச் சொல்லுவதோ
உன்னைச் சொல்லுவதோ
உன்னை ஆர் என்று சொல்வேன்
சம்பாவாநா பிரகாரம் இருக்கிற படி –
என்னெஞ்சமே -என்றபடி –

குறவர் இத்யாதி –
குறப் பெண்களோடு கூட வண்டுகள் ஆனவை
குறிஞ்சி இந்தளம் என்கிற
பண்ணைப் பாடா நிற்கிற –

வேங்கடத்து அறவ நாயகற்கு –
தண்ணீர் பந்தலை வைத்து
நம் அடிமை பெறுகைக்கு
தம்மை நமக்குத் தந்து கொடு நிற்கிற
பரம தார்மிகன் –
நம்மை அடிமை கொள்வதாக
திருமலையிலே வந்து சந்நிதி பண்ணின
பரம -தார்மிகனுக்கு

அடிமைத் தொழில் பூண்டாய் –
அவன் திருமலையில் வந்து நிற்கிற நிலையை
நீ ஒருபடி சபலம் ஆக்கினாயே-

——————————————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .

திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழி-2-1-1-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 5, 2013

பிரவேசம் –
அடைந்தேன்
அடியேனை ஆட் கொண்டு அருளே -என்றும்
இனி நான் உன்னை என்றும் -விடேன் என்றும்
கைங்கர்ய லாபத்துக்காக திருவடிகளிலே வந்து சரணம் புக்கு
இக்கைங்கர்யம் தான் நித்யமாக செல்ல வேண்டும் என்னும்படி
அதிலே ப்ரேமம் பிறந்ததாய் -நின்றது
நமக்கு இப்படி இந்த சமாதி தான் பிறக்கைக்கு அடி என் -என்று ஆராய்ந்து -பார்த்தார்
உபகார ஸ்ம்ருதிக்காக –
அத்தை ஆராய்ந்தவாறே –
மந ஏவ -என்கிறபடியே
நாட்டார் பாஹ்யராயும் -குத்ருஷ்டிகளாயும்
அனர்த்தப் பட்டு போரா  நிற்க
நமக்கு கைங்கர்ய லாபத்துக்காக திருவடிகளிலே விழுந்து
சரணம் புகுகையும்
அது தான் அவிச்சின்னமாக செல்ல வேணும் என்னும் படியான
ருசி பிறக்கையும்
இஸ் சம்ருதிக்கு அடி இந் நெஞ்சு இ றே என்று
தம் திரு உள்ளத்தைக் குறித்து
உன்னாலே இஸ் சம்ருத்தி எல்லாம் உண்டாயிற்று என்று
திரு உள்ளத்தோடே கூடி இனியர் ஆகிறார் –

—————————————————————————————————————————————————————————-

வானவர் தங்கள் சிந்தை போல என்னெஞ்சமே யினிதுவந்து மாதவ
மானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற வெந்தை
கான வரிடு கார்கில் புகை ஓங்கு வேங்கடம் மேவி மாண் குற
ளான வந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே———————————2-1-1-

—————————————————————————————————————————————————————————-

வியாக்யானம் –

வானவர் தங்கள் சிந்தை போல என்னெஞ்சமே யினிதுவந்து –
நித்ய சூரிகள் ஹிருதயத்தில்  போலே
என் ஹிருதயத்திலான –

மாதவ மானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற வெந்தை –
மஹா தபசை  உடையவராய் இருக்கிற மனுஷ்யர்கள் உடைய
ஹிருதயந்களிலே –
அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு
நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்வாமி –

கான வரிடு கார்கில் புகை ஓங்கு வேங்கடம் மேவி –
கானவர் உண்டு -அங்குத்தை திரு வேடுவர்
அவர்கள் தங்கள் புனங்களில் உண்டான
மரங்களை வெட்டித் திரள விட்டு நெருப்பை இடுவர்கள் –
அது தான்
அகில் மரம் ஆகையாலே அகில் புகையானது போய்
ஆகாச அவகாசத்தை இடமடைக்கும் படி
ஓங்கின சிகரத்தை உடைய திருமலையிலே பொருந்தி வர்த்திக்கிற –

மாண் குற ளான வந்தணற்கு –
தன் உடைமையை பெறுகைக்கு தன்னை இரப்பாளன்
ஆக்கினவர்க்கு
அந்தணற்க்கு -என்று ப்ராஹ்மணற்கு -என்றபடி
மகாபலிக்கு கொடுத்து அல்லது நிற்க ஒண்ணாத படி
விநீத வேஷத்தோடே சென்றான் ஆயிற்று –

மாண் குற ளான வந்தணற்கு -வானவர் தங்கள் சிந்தை போல

என்னெஞ்சமே யினிதுவந்து —இன்று அடிமைத் தொழில் பூண்டாயே –
நித்ய சூரிகள் உடைய ஹ்ருதயம்
பகவத் கைங்கர்யத்திலே ப்ரவணமாய் இருக்குமா போலே
நீ அவன் திருவடிகளிலே உகப்போடே அன்வயித்தாயே –

மாண் இத்யாதி –
அவன் அடிமை கொள்வதாக வந்து
இரந்து நிற்கிற பின்பு
நீயும் அவன் நினைவின் படி
போகப் பெறுவதே

———————————————————————————————————————————————————————————————–

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .

திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழி-1-10-10-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 5, 2013

வில்லார் மலி வேங்கட மா மலை மேய
மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை
கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை
வல்லார் வர் வானவர் ஆகுவர் தாமே—————————————1-10-10-

——————————————————————————————————————————————————————-

வியாக்யானம் –

வில்லார் இத்யாதி –

பரமபதத்திலே நித்ய சூரிகள்
அஸ்த்தாநே பய சங்கை பண்ணிப் பரிய இருக்குமவன் இ றே
சம்சாரத்தில் வந்து சந்நிதி -பண்ணினான்
சம்சாரம் ஆகையாலே ஸத்தாநே பயமாய் இருக்கும் இ றே இங்கு
ஆகையாலே
அங்குத்தை திரு வேடர் எப்போதும் ஏறிட்ட வில்லும் தாங்களுமாய்
உணர்ந்து நோக்குவார்கள் ஆயிற்று –
ஸ்ரீ குஹப் பெருமாள் இரவு எல்லாம் உணர்ந்து நோக்கினாப் போலே –

மல்லார் இத்யாதி –

சிம்ஹம்  கிடந்த முழைஞ்சு -யாயிற்று –
இப்படி உணர்ந்து நோக்குகிறது –
மிடுக்கு மிக்க தோள் உடைய
தர்ச நீயமான வடிவை உடையனான
சர்வேஸ்வரனை –

கல்லார் இத்யாதி –

இருவருக்கும் அரணாகப் போரும்படி யாயிற்று
திருமங்கை ஆழ்வார் தோள் மிடுக்கு இருக்கும்படி –

வல்லார் இத்யாதி –

இவற்றை அப்யசிக்க வல்லார்கள்
நித்ய சூரிகள் உடைய
நித்ய கைங்கர்யமே தங்களுக்கு யாத்ரையாகப் பெறுவார்கள் –

——————————————————————————————————————————————————————————–

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .

திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய திருமொழி-1-10-9-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

August 5, 2013

வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ
சிந்தா மணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே—————————————1-10-9-

———————————————————————————————————————————————————–

வியாக்யானம்

-வந்தாய் –
ஸ்ரீ வைகுண்டம் கலவிருக்கையாக இருக்க
அபேஷியா இருக்கச் செய்தேயும்
நான் இருந்த இடம் தேடி வந்து புகுந்தான் ஆயிற்று
இவர் வேண்டாம் என்று விலக்க மாட்டாதே இருந்தார்
அதுவே பற்றாசாக ஹிருதயத்திலே வந்து புகுந்தான்-

மன்னி நின்றாய் –
முன்பு புகுர மாட்டாதே நின்றது உறவு இல்லாமை யன்று இ றே –
இத்தலையில் இசைவு கிடையாமை இ றே –
இனிப் போகில் புகுர அரிதாம் என்று
அதுவே நிலையாக நின்றான் ஆயிற்று
இப்படி இருக்கிற இடத்து
ஸ்ரீ வைகுண்டம் கலவிருக்கையாக இருக்கக் கடவ
நாம் இங்கே வந்து சிறைப் பட்டோம் என்னும் இன்னாப்போடு அன்றிக்கே
இவர் பக்கலிலே புகுந்து இருக்கப் பெற்ற இது பெறாத பேறாய்
தனக்கு பண்டு இல்லாத ஐஸ்வர்யம் பெற்றானாய்
உத்சலனாக நின்றான் ஆயிற்று –

நந்தாத கொழும் -சுடரே

விச்சேதம் இல்லாத ஔ ஜ்வல்யத்தை உடையவனே –

எங்கள் நம்பீ –

இப்பாழும் தாறையும்  ஒருபடி நிரப்புகை –

சிந்தாமணியே –
இவன் ஒன்றை எனக்கு என்று நினைப்பது காண்
நாமத்தை கொடுக்கைக்கு என்று இரா நின்றான் ஆயிற்று
ஞானம் பிறந்தாலும் உபேஷியாத ரத்னம் –

திருவேங்கடம் மேய -எந்தாய்

திருமலையிலே வந்து புகுந்து
உன்னுடைய ஸ்வாமித்வத்தைக் காட்டி
என்னை அனந்யார்ஹன் ஆக்கினவனே –

இனி -இத்யாதி

எனக்காக வந்து நிற்கிற நிலையை விடாய் –
ஆனபின்பு நான் உனக்காம் படி பற்றின பற்று விடுவேனோ

-என்றும்

-இத்தால் -பரபக்தி பர்யந்தமாக பிறந்தது -என்றபடி
அரை ஷணம் அவனை ஒழியச் செல்லாமை உண்டாகை இ றே
பரபக்தி -யாவது
வ்யதிரேகத்தில் ஜீவியாத படி -ஆனார்

———————————————————————————————————————————————————————–

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .

திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-7-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

August 5, 2013

  வைத்தமா நிதியாம் மதுசூ தனையே அலற்றிக்
கொத்தலர் பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப்பத்து அவன்சேர்திருக்கோ ளூர்க்கே
சித்தம் வைத்துரைப் பார்திகழ் பொன்னுல காள்வாரே.

பொ-ரை :- சேமித்து வைத்த சேமநிதிபோன்ற மதுசூதனையேபற்றி பூங்கொத்துக்கள் மலர்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபராலே அலற்றி அருளிச்செய்யப்பட்ட பத்து நூற்றுள் இந்தப் பத்துப் பாசுரங்களையும் அவன் சேர்ந்திருக்கின்ற திருக்கோளூரிலேயே சித்தத்தை வைத்து உரைப்பவர்கள் விளங்குகின்ற பரமபதத்தை ஆள்வார்கள் என்றபடி.

வி-கு :- அலற்றிச் சொன்ன பத்து என்க. இப் பத்தை உரைப்பார் ஆள்வார் என்க.

ஈடு :- முடிவில், 1இப் பத்தும் கற்றார் இட்ட வழக்கு திருநாடு என்கிறார்.

வைத்த மா நிதியாம் – 2இவள் தனிவழி போகைக்கும், தாயாரை விடுகைக்கும் காரணம் இருக்கிறபடி. 3செல்வம் சேர்த்து வைத்ததாக இருக்க, எடுத்து அழித்துக் கெடுத்து ஜீவியாமல் ஆறி இருப்பார் இலரே. வைத்தமாநிதி – 4எய்ப்பினில் வைப்பினைக் காசினை மணியை”-பெரிய திருமொழி. 7. 10 : 4.- என்கிறபடியே, தளர்ந்தார் தாவளமாய், எய்ப்பினில்வைப்பாய், ‘உண்டு’ என்ன, உயிர் நிற்கும்படியாய், உடையவன் காலிலே எல்லாரும் விழும்படியாய், உடையவனுக்கு அறவிட்டு ஜீவிக்கலாய், ‘அறவிட்டு ஜீவித்தான்’ என்று ஏசாதபடியாய், 1அவன் தனக்கு பெருமதிப்பைக் கொடுப்பதுமாய், உடையவனுக்கு ஒன்றுக்கும் கரைய வேண்டாதபடியாய், எல்லாம் தன்னைக்கொண்டே கொள்ளலாய், எல்லா ரசங்களும் போகங்களும் தன்னைக்கொண்டே கொள்ளலாய், இந்தவிதமான குணங்களையுடைத்தாயிருக்கையைப் பற்ற ‘நிதி’ என்கிறது. மாநிதி என்றது, அழியாத நிதி என்றபடியாய், அத்தால், தன்னைக்கொண்டே எல்லாம் கொள்ளாநின்றால் தனக்கு ஒரு குறை அற்று இருக்கை. அல்லாத நிதி மாண்டு நிற்குமே.

மதுசூதனையே அவற்றி – இந்த நிதியைக் 2காத்து ஊட்டுவதும் தானே என்கிறது. உத்தேசியமானதுதானே விரோதியையும் போக்கி அநுபவிப்பிக்கவற்றாயிருக்கை. கொத்து அலர்பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன – 3“வீட்டில் எல்லாரும் சௌக்கியமாக இருக்கிறார்கள்” “பங்கதித்த: உ ஜடில: பரத: த்வாம் ப்ரதீக்ஷதே
பாதுகே தே புரஸ்க்ருத்ய ஸர்வஞ்ச குஸலம் க்ருஹே”

என்பது, ஸ்ரீராமா. யுத். 127 : 5.என்னுமாறு போலே, ஸ்ரீபரதாழ்வன் பெருமாள்

பக்கலிலே நெஞ்சினை வைக்க வைக்க, அதனைக்கண்டு, ‘அவர் வரவு அணித்து’ என்று திருவயோத்தியை தளிரும் முறியுமானாற்போலே, விரஹத்தை நினைக்க ஆற்றலில்லாதபடி அவன் பக்கலிலே ஏகாக்ர சித்தராகையாலே பிறந்த தோற்றத்தாலே, திருநகரியும் தளிரும் முறிவுமானபடி. 1இத்தலையிலே இத்தனை விரைவு உண்டானால் அத்தலையால் வருகிற பலத்துக்குக் கண்ணழிவு உண்டோ? 2“மரங்களும் உலர்ந்தன” என்கை தவிர்ந்து “காலமல்லாத காலத்தும் மரங்கள் பலத்தைக் கொடுத்தன” என்னும்படியாயிற்று.

“அபிவ்ருக்ஷா:” என்பது, ஸ்ரீராமா. அயோத். 59 : 5.

“அகால பலிநோ வ்ருக்ஷா:” என்பது, ஸ்ரீராமா. யுத். 127, 19.

பத்து நூற்றுள் இப்பத்து – கடலில் அமுதம் போலே, ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப்பத்து. அவன் சேர் திருக்கோளூர்க்கே சித்தம் வைத்து – அவன் பொருந்தி வாழ்கின்ற திருக்கோளூர்க்கே நெஞ்சை வைத்து. உரைப்பார் – சொல்லுவார். திகழ் பொன்னுலகு ஆள்வாரே – ஒருத்தி கூப்பிட, ஒருத்தி தனியே போகை அன்றிக்கே, நித்தியாநுபவம் பண்ணலாம் நிலத்திலே புகப்பெறுவர். தனிவழி போகாதே, அர்ச்சிராதி கணம் சேவிக்க, விலக்ஷணமான தேசத்தே போய்ப் புகப்பெறுவர்

 

திருவாய்மொழி நூற்றந்தாதி

    உண்ணும்சோ றாதி ஒருமூன்றும் எம்பெருமான்
கண்ணன்என்றே நீர்மல்கிக் கண்ணிணைகள் – மண்ணுலகில்
மன்னுதிருக் கோளூரில் மாயன்பாற் போமாறன்
பொன்னடியே நந்தமக்குப் பொன்.

இட்ட வழக்கு திரு நாடு ஆகும் பலம் சில்லி நிகமிக்கிறார்
வைத்த  மா நிதி -இவள் தனியாக -போவதற்கும் தாயாரை விடவும் இதுவே ஹேது
எடுத்து அழித்து ஜீவிப்பார் இல்லை இந்த நிதியை
கருமி போலே வள்ளல் இல்லையே
தான் அனுபவித்து கொடுப்பான் கொடை வள்ளல்
தனம் சஞ்சிதமாக இருந்தால் –
காசினை மணியை
எய்ப்பினில் வைப்பு
தளர்ந்தார் தாரகம்
பணம் ஆனால் பிணமும் வாய் திறக்கும்
எம்பெருமான் செல்வம் இரண்டுக்கும்
உண்டு என உயிர் நிற்கும்
உடையவன் காலில் அனைவரும் விழும்
உடையவன் இஷ்ட விநியோகம் செய்து ஜீவிக்கலாம்
அத்தை இட்டு ஜீவிக்கிறான் வையாமல் கொண்டாடி
அவன் தனக்கு பெரு மதிப்பை
கொடுத்து எதற்கும் துக்கம் இன்றி
எல்லாம் தன்னைக் கொண்டே செய்யலாம்படி
எல்லா ரசங்களும் போகங்களும் தன்னைக் கொண்டே
எம்பெருமான் -நிதி ஒற்றுமை
உபன்யாசர் சௌபாக்கியம்
மாணிக்கம் தனம் மேகம் யானை ஒற்றுமை காஞ்சி ஸ்வாமிகள் அருளி காட்டி இருக்கிறார்-

ஒரு புஸ்தகம் பார்த்து எழுது திருட்டு
பல பார்த்து எழுதி திரட்டு theesis
மா நிதி -மகாத்மான -செலவழித்தாலும் குறை இன்றி
எல்லாம் பெருமாள் -ஸ்வர்ண விக்ரகம்
நிதி காட்டிலும்
வேறுபாடு தனக்கு குறை அன்றி இருக்குமே
மாளாது
மதி சூதனையே அலற்றி
நிரசித்து தன்னை நமக்கு உபகரிக்கை
உத்தேசய -வஸ்து  அனுபவம் மட்டும் அன்றி விரோதியையும் போக்கி
சர்வஞ்ஞ குசலம் க்ருஹீ -பரதன் இடம் பெருமாள்
ஆழ்வார் வாட வாட திரு நகரி சந்தோஷம்
எம்பெருமான் வருவது நிச்சயம் என்பதால்
விரகத்தை அனுசந்திக்க ஷணம் இன்றி இருக்க இவரிருக்க
த்வரை உண்டானால் பலம் நிச்சயம்
கடலில் அமிர்தம் போலே ஆயிரத்தில் இப்பத்து
அவன் பொருந்தி உள்ள திருக் கோளூருக்கே
நித்ய அனுபவம்
ஒருத்தி கூப்பிட ஒருத்தி போவது துக்கம் இன்றி
தனி வழி போராதே
அர்ச்சிராதி கணம் -சதம் -அஞ்சன ஹஸ்த –

சாரம்
உண்ணும் சோறாதி ஒரு மூன்றும் எம்பெருமான்
ஆதி பகவன் –
கண்ணன் என்றே நீர் மல்கி
மாயன் மன்னு  திருக் கோளூரில்
மாயன் திருவடியே பொன்னடி
மதுரகவி ஆழ்வார்
திருவடி நிலை
-மதுர கவி தானே மாறன் பொன்னடி
மதுரகவி நிஷ்டை
வடுக நம்பி நிலை

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.


Follow

Get every new post delivered to your Inbox.

Join 78 other followers