1-பெருக்காறு போலே விபவங்கள் -அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரங்கள்
வாய் வழியாக வழங்கி வந்த உரைகள் பெருக்காறு போலே
ஏடு படுத்தி உள்ள உரைகள் மடுக்கள் போலே
————–
2-ஐதிஹ்யம் -இதி ஹ இதி ஹ -இப்படியாம் இப்படியாம் -என்று சொல்லி வரும் நிகழ்ச்சிகள்
ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போலே வளர்த்தேன் செம்கண் மால் தான் கொண்டு போனான்
பெரு மகளாய் குடி வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற யசோதை
மருமகளை கண்டு உகந்து மணாட்டுப் புறம் செய்யும் கொலோ -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–3-8-4-
இவ்விடத்தில்
ஆழ்வான் திரு நாட்டுக்கு எழுந்து அருளும் போது – உடையவர் -விச்லேஷம் பொறுக்க மாட்டாமல் –
ஒரு மகள் தன்னை உடையேன் -என்றும் –
உலகம் நிறைந்த புகழால் திரு மகள் போலே வளர்த்தேன் -என்றும் –
செம்கண் மால் தான் கொண்டு போனான் -என்று அருளிச் செய்தார் -என்று ஆச்சாம் பிள்ளை அருளிச் செய்வர்
உபமாநம சேஷானாம் சாதூனாம் யச் சதா பவத்-என்கிறபடியே
சாதுக்களுக்கு எல்லாம் உபமான பூமியாக சொல்லலாம் படி இருக்கையாலே –
உலகம் நிறைந்த புகழ் உள்ளது ஆழ்வானுக்கே இறே
————–
3-நிர்வாகம் – இப்படி நிர்வ கிப்பார் –
ஆள வந்தார் -எம்பெருமானார் -கூரத்தாழ்வான் -பட்டர் நிர்வாகங்கள் போல்வன உண்டே
எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே–9-5-10-
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே –
ஈஸ்வர விபூதி சம்ருத்தமாக -நிறை வுற்று இருக்க வேண்டும் -என்கிறாள் –
இதற்கு
தாம் தாம் முடிய நினைப்பார் -நாடு வாழ்க -என்பாரைப் போலே சொல்லுகிறாள் -என்று
ஆளவந்தார் அருளிச் செய்வர்
நான் பட்ட பாடு நாடு படாது ஒழிய வேண்டும் -என்று எம்பெருமானார் அருளிச் செய்வர்
நான் முடிய என் ஆர்த்தி -துக்கம் கண்டு நோவு படாதே உலகம் அடங்க
பிழைக்கும் அன்றோ -என்று பட்டர் அருளிச் செய்வர்-
————–
4- வார்த்தைகளுக்கு பொருள் உரைத்து அருளிச் செய்யும் பொழுது அவித்துக்களுக்குத் தக்கப்படியே அருளிச் செய்வார்கள்
கல் மாரியாகையாலே கல்லை எடுத்துக் காத்தான் -நீர் மாரியாய் இருந்தால் நீரையே எடுத்து ரக்ஷிக்கும் காணும் என்பர் ஸ்ரீ பட்டர்
சில இடங்களில் பொருத்தமான கதைகளையும் கோத்து அருளிச் செய்து விளக்குவார்கள்
அடங்கெழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கெழில் அது என்று அடங்குக உள்ளே -1-2-7-
பிதா புத்ர சம்பந்தம் -உறவை அறிந்ததும் பராத்பரனோடு கூச்சம் இல்லாமல் கலக்கலாமே
5-ஸம்வாதங்கள் -சங்கைகளைக் குறித்து வார்த்தைகள் பரிமாற்றம்
மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில்
தக்கது அன்று என்று தானம் விளக்கிய
சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய
சக்கரக் கையனே அச்சோ அச்சோ சங்கம் இடத்தானே அச்சோ அச்சோ -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -1-8-7-
ஸத்பாத்ரத்துக்கு அபீஷ்ட தானம் -குற்றமும் சிறை வாசமும் வந்ததே
இது மாயா ரூபம் என்றவர் கண் அழிவு பெற்றான் -இது நியாயமோ
இவ்விடத்தில் பிள்ளை அருளிச் செய்வதாக ஆச்சான் பிள்ளை –
ஆச்சார்யர் வாக்கியம் மீறியதால் அவனுக்கு தண்டனை
இவனுக்கு தானம் விளக்கிய தோஷம்
————
6- உதாஹரணங்கள் காட்டி விளக்குதல்
அனைத்து இல்லாரும் அறிந்து –திருப்பாவை -12-
இந்த கோபிகை -ஒருவர் தப்பாமல் எல்லாரும் எம்பருமானைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புமவள்
எம்பெருமானார் திருவவதரித்து ஆசை உடையோர்க்கு எல்லாம் என்று பேசி வரம்பு அறுத்தால் போல் –என்று காட்டுவார்கள்
————-
7-ஆச்சார்யர்களுடைய ஸ்தோத்திரங்களை மேற் கோள் காட்டி விளக்குதல்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —–அமலனாதி பிரான் 8–
க்ருபயா பரயா கரிஷ்ய மானே சகலாங்கம் கில சர்வ தோஷி நேத்ரே
ப்ரதமம் ச்ரவஸீ சமாஸ்த்ருணாதே இதி தைர்க்யேண விதந்தி ரங்க நேது –
பெரிய பெருமாளுடைய திருக் கண்கள் ஆனவை திருச் செவி யளவும் செல்ல நீண்டு
இருக்கிறபடிக்கு ஒரு நினைவு உண்டு என்கிறார் பட்டர் –
அதாவது –
பெரிய பெருமாள் உடைய திருக் கண்கள் ஆனவை
மீனுக்குத் தண்ணீர் வார்ப்பாரைப் போலே நித்ய ஸூரிகளுக்கு
முகம் கொடுத்து கொண்டு இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கும் கண்கள் இரண்டாய்
ராம க்ருஷ்ணாத்யவதாரம் பண்ணி குஹாதிகள் விதுராதிகள் தொடக்கமானார் சிலர்க்கு அல்ப காலம்
முகம் கொடுத்து விஷயீ கரித்து வந்தாப் போலே வெறும் கையோடே போனவர்களுக்கும் கண் இரண்டாய்-
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது எழுந்திரேன் என்று கோயிலிலே அர்ச்சா ரூபியாய்
அவ்வவர் நிகர்ஷங்களைப் பாராதே முகம் கொடுத்துக் கொண்டு இருக்கிற பெரிய பெருமாளுக்கும்
கண் இரண்டாய் இருக்கவோ –
இவருடைய க்ருபையை பார்த்தால் உடம்பு எல்லாம் கண்ணாக வேண்டாவோ என்று பார்த்து –
எல்லா மண்டலங்களும் தங்களுக்கே ஆக வேணும் என்று
இருக்கிற ராஜாக்கள் முற்படத் தங்களுக்கு ப்ரத்யாசன்னரான வன்னியரை அழியச் செய்யுமா போலே
பெரிய பெருமாளுடைய அவயவாந்தரங்கள் அடைய நாமேயாக வேணும் என்று பார்ச்வ
ஸ்தங்களாய் இருக்கிறன திருச் செவிகள் ஆகையாலே அவற்றை வென்று அவ்வருகே போவதாக முற்பட
அவற்றுடனே அலை எறிகிறாப் போலே யாய்த்து திருக் கண்கள் செவிகள்
அளவும் நீண்டு இருக்கிறபடி –
—————
8–ஸ்ரீ வார்த்தா மாலை -ஸ்ரீபின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த திவ்ய கிரந்தம்
ஸ்ரீ பகவத் விஷயம் -ஸ்ரீ அரங்க நாத முதலியார்
ஸ்ரீ ஐதிக நிர்வாக ரத்ன மாலை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்
———————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –