Archive for the ‘Uncategorized’ Category

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -91–பக்தி மஹத்வம்–

October 2, 2020

ஸ்ரீக்ருஷ்ண த்வத்பா3தோபாஸன
மப4யதமம் பு3த்3தி4மித்2யார்த்த2 த்ரு3ஷ்டே:
மர்த்யஸ்யார்தஸ்ய மன்யே வ்யபஸரதி
ப4யம் யேன ஸர்வாத்மனைவ |
யத்தாவத் த்வத்ப்ரணீ தனிஹா ப4ஜன விதீ4
நாஸ்தி2தோ மோஹமார்கே3
தா4வன்னப்யாவ்ருதாக்ஷ: ஸ்க2லதி ந குஹசித்
தே3வதே3வாகி2லாத்மன் || ( 91 -1)

ஸ்ரீ தேவர்களின் தேவனே! ஸ்ரீ சர்வாத்மனே! ஸ்ரீ கிருஷ்ணா ! பொய்யான சரீரத்தில் “நான்” என்ற
தேக அபிமானம் கொண்டவனுக்கும், உடமைப் பொருட்களின் மேல் “இவை என்னுடையவை” என்று
உறுதியான அபிமானத்தை உடையவனுக்கும், இந்தக் காரணங்களால் மரணம் அடையும்படி விதிக்கப்பட்டவனுக்கும்,
அதனால் மிகுந்த மன வருத்தம் உற்றவனுக்கும், பயத்தைப் போக்கடிக்கும் ஒரே சாதனம்
தங்கள் திருவடிகளைத் தொழுவது என்று நான் கருதுகின்றேன்.
தங்கள் பாத சேவையால் பயம் முற்றிலுமாக விலகுகின்றது.
பஜன மார்க்கங்களில், தங்களால் உபதேசிக்கப்பட்ட பஜனை முறைகள் மேற் கொள்பவன்,
மயக்கம் தரும் பாதையில், கண்களை மூடிக் கொண்டு ஓடினாலும், எங்குமே இடறி விழ மாட்டான்.

பூ4மன் காயேன வாசா முஹுரபி
மனஸா த்வத்3ப3லப்ரேரிதாத்மா
யத்3யத் குர்வே ஸமஸ்தம் ததி3ஹ
பரதரே த்வய்யஸாவர்பயாமி |
ஜாத்யாபீஹ ச்’வபாகஸ்த்வயி நிஹித மன:
கர்மவாகி3ந்த்3ரியார்த்த2
ப்ராணோ விச்வம் புனீதே ந து விமுக2
மனாஸ் த்வத்3 பதா3த்3விப்ரவர்ய : || (91 – 2 )

எங்கும் நிறைந்துள்ள ஸ்ரீ ஈசா! தங்களுடைய சக்தியால் பிரேரணை செய்யப்பட்டுள்ளது என் மனம்.
அதனால் சரீரத்தினாலும், வாக்கினாலும் மனத்தினாலும் நான் எதை எதைச் செய்கின்றேனோ அவற்றை எல்லாம்
ஸ்ரீ பரமாத்மாவாகிய தங்களிடம் அர்ப்பணம் செய்கின்றேன்.
மனம், கர்மங்கள், வாக்கு, இந்திரியங்கள், அவற்றின் விஷயங்கள், பிராணன் இவற்றைத் தங்களுக்கு
அர்ப்பணம் செய்பவன் தாழ்ந்த பிறவி எடுத்திருந்தாலும் உலகையே பரிசுத்தம் ஆக்குகின்றான்.
தங்களிடம் பராமுகமாக இருக்கும் அந்தணன் அவ்வாறு பரிசுத்தம் ஆக்குவதில்லை அல்லவா?

பீ4திர் நாம த்3விதீயாத்3 ப4வதி
நனு மன கல்பிதஞ்ச த்3விதீயம்
தேனைக்யாப்4யாஸ சீ’லோ ஹ்ருத3யமிஹ
யதா2ச’க்தி பு3த்3த்4யா நிருந்த்4யாத் |
மாயா வித்3தே4ஷு தஸ்மின் புனரபி ந
ததா2 பா4தி மாயாதி4நாத2ம்
தம் த்வாம் ப4க்த்யா மஹத்யா
ஸததமனுப4ஜனீச’ பீதி4ம் விஜஹ்யாம் || (91 – 3)

பயம் என்பது தன்னிடமிருந்து வேறுபட்ட ஒரு இரண்டாவது வஸ்துவிடம் தான் தோன்றுகின்றது.
அந்த இரண்டாவது வஸ்துவும் சங்கல்ப விகல்ப ரூபமான அந்தக்கரண விருத்தியால் மட்டுமே
அவ்வாறு மாறுபட்டதாகக் கற்பிக்கப் படுகின்றது.
காரண காரியங்கள் ஒன்று என்பதை நான் எப்போதும் அப்பியாசம் செய்வேன்.
மனத்தை அந்தக்கரண விருத்தியால் ஒரு வஸ்துவில் நிலை நிறுத்துவேன்.
அந்த மனம் மாயையின் காரியங்களாகிய காம குரோதங்களால் வியாபிக்கப் பட்டு விட்டால்,
முன் போல நிலை நிறுத்தப் பட்டபோதிலும், அது முன் போலப் பிரகாசிப்பதில்லை.
அதனால் மாயைக்கு அதிபதியான தங்களைத் திடமான பக்தியுடன் தொழுவேன்.
பயம் என்பதை முற்றிலுமாக விட்டு விடுவேன்.

ப4க்தேருத்பத்தி வ்ருத்3தி4
தவ சரணஜுஷாம் ஸங்க3மேனைவ பும்ஸாம்
ஆஸாத்3யே புண்யபா4ஜாம் ச்’ரிய இவ
ஜக3தி ஸ்ரீமதாம் ஸங்க3மேன |
தத்ஸங்கோ3 தே3வ பூ4யான்மம க2லு ஸததம்
தன்முகா2துன்மிஷத்3பி4 :
த்வன் மாஹத்ம்ய ப்ரகாரைர் ப4வதி ச
ஸுத்3ருடா4 ப4க்தி ருத்3தூ4த பாபா |(91 – 4 )

உலகில் செல்வந்தர்களின் சேர்க்கையால் ஒருவனிடம் செல்வம் பெருகும்.
அது போன்றே தங்களுடைய திருவடிகளைச் சேவிக்கும் பக்தர்களின் சேர்க்கையால் ஒருவனிடம்
பக்தி உற்பத்தியாகி அது வளரும்.
ஸ்ரீ தேவா! எப்போதும் எனக்குத் தங்கள் பக்தர்களின் சகவாசம் உண்டாகட்டும்.
அவர்கள் கூறுகின்ற தங்களின் மஹிமா விசேஷங்களால், எனக்குத் தங்களிடம் திடமான,
என் பாவங்களைப் போக்க வல்ல உறுதியான பக்தி உண்டாகட்டும்.

ச்’ரேயோ மார்கே3ஷு ப4க்தாவதி4க
ப3ஹுமதிர் ஜன்ம கர்மாணி பூ4யோ
கா3யன் க்ஷேமாணி நமான்யபி தது3ப4யத:
ப்ரத்3ருதம் ப்ரத்3ருதாத்மா |
உத்3யத்3தாஸ: கதா3சித் குஹசித3பி ருத3ன்
க்வாபி க3ர்ஜன் ப்ரகா3யன்
உன்மாதீ3வ ப்ரந்ருத்யன்னயி குரு கருணாம்
லோகபா3ஹ்யச்’சரேயம் || (91 – 5)

முக்கியமான புருஷார்த்தமான மோக்ஷத்தைத் தரும் மார்க்கங்களில் ஒன்று பக்தி.
அதில் அதிக ஆதரவு கொண்டவனாக நான்; க்ஷேமத்தையே தருகின்ற தங்களின் திரு அவதார லீலைகளையும்,
அவற்றினால் தங்களுக்கு உண்டான நாமங்களையும் கானம் செய்து கொண்டும்,
அவற்றால் மனம் உருகிச் சில சமயங்களில் சிரித்துக் கொண்டும், சில சமயங்களில் அழுது கொண்டும்,
சில சமயங்களில் கர்ஜித்துக் கொண்டும், பாடிக் கொண்டும், பித்தனைப் போல ஆடிக் கொண்டும்,
உலகில் பற்றின்றி சஞ்சரிப்பேனாகுக! அதற்குக் கருணை புரிவீர்!

பூ4தான்யேதானி பூ4தாத்மகமபி
ஸகலம் பக்ஷி மத்ஸ்யான் ம்ருகா3தீ3ன்
மர்த்யான் மித்ராணி ச’த்ரூனபி யமித
மதிஸ்த்வன் மயான்யானமானி |
த்வத்ஸேவாயம் ஹி ஸித்3த்யேன்மம
தவ க்ருபயா ப4க்தி தா3ர்ட்4யம் விராக3:
த்வத்தத்வ ஸ்யாவபோ4தோ4Sபி ச பு4வனபதே
யத்ன பே4த3ம் வினைவ || (91 – 6)

பஞ்ச பூதங்கள், அவற்றால் உருவாக்கப்பட்ட பிரபஞ்சங்கள், பறவைகள், மீன்கள், மான் முதலிய மிருகங்கள்,
மனிதர்கள், நண்பர்கள், பகைவர்கள், அனைவருமே
தங்களின் ஸ்வரூபம் என்று நிச்சயமான மனத்துடன் அவர்களை வணங்குவேனாகுக.
ஸ்ரீ லோக நாதா! தங்களுக்குச் சேவை புரியும் போது, தங்களின் கருணையால், திடமான பக்தியும்,
வைராக்கியமும், ஸ்ரீ பகவத் தத்துவத்தின் மெய்யான ஞானமும் வேறு கடின முயற்சிகள்
எதுவும் செய்யாமலேயே எனக்குச் சித்திக்கும்.

நோ முஹ்யன் க்ஷுத்ரு டா3த்3யைர்
ப4வஸரணி ப4வைஸ்த்வன்நிலீனாச’யத்வாத்
சிந்தாஸாதத்யசா’லீ நிமிஷலவமபி
த்வத் பதா3த3ப்ரகம்ப: |
இஷ்டாநிஷ்டேஷு துஷ்டி வ்யஸன விரஹிதோ
மாயிகத்வாவ போ3தா4த்
ஜ்யோத்ஸ்னாபி4ஸ்த்வன் நகே2ந்தோ ரதி4க
சி’சி’ரி தேனாத்மனா ஸஞ்சரேயம் || (91 -7 )

தங்களிடம் லயித்த மனம் கொண்டு; அதனால் சம்சாரத்தில் உண்டாகும் பசி, தாகம் போன்றவைகளால்
மயக்கம் அடையாது; தங்களை இடைவிடாது தியானம் செய்து கொண்டு;
ஒரு நிமிடம் கூடத் தங்கள் திருவடியிருந்து சலியாது; இவை மாயா காரியங்கள் என்ற அறிவினால்
பிரியமான வஸ்துக்களால் மன மகிழ்ச்சியும், பிரியமில்லாத வஸ்துக்களால் மன வருத்தமும் அடையாமல்,
தங்கள் திருவடிகளின் நகங்கள் வீசுகின்ற சந்திரிகையால் குளிர்ந்த மனத்துடன் சஞ்சரிப்பேன் ஆகுக!

பூ4தேஷ்வேஷு த்வதை3க்ய ஸ்ம்ருதி
ஸமதி4க3தௌ நாதி4காரோSது4னா சேத்
த்வத்ப்ரேம த்வத்கமைத்ரி ஜட3மதிஷு
க்ருபா த்3விட்ஸு பூ4யாது3பேக்ஷா |
அர்சாயாம் வா ஸமர்ச்சா
குதுகமருதரச்’ரத்3த4யா வர்த்த4தாம் மே
த்வத்ஸம்ஸேவி ததா2Sபி த்3ருதமுபலப4தே
ப4க்தலோகோத்தமத்வம் || (91 – 8 )

எல்லாப் பிராணிகளிடமும் தங்களுடைய ஐக்கிய அனுசந்தானம் அடைவதற்கு எனக்கு இன்னமும்
தகுதி ஏற்படாமல் இருக்கலாம். அப்படியென்றால் தங்களிடம் பிரேமையும், தங்கள் அடியவர்களிடம் நட்பும்,
மூடர்களிடத்தில் கருணையும், பகைவர்களிடத்தில் உபேக்ஷையும் எனக்கு உண்டாகட்டும்.
இதற்கும் நான் தகுதி பெறவில்லை என்றால், தங்கள் பிரதிமைக்குப் பூஜை செய்வதில் எனக்கு உள்ள
விருப்பம் அதிக சிரத்தையுடன் கூட இன்னமும் விருத்தி அடையட்டும்.
தங்களைச் சேவிக்கின்றவன் தங்கள் பக்தர்களில் சிறந்தவனாக விரைவாக மாறிவிடுகிறான்.

ஆவ்ருத்ய த்வத்ஸ்வரூபம்
க்ஷிதி ஜல மருதா3த்3யாத்மனா விக்ஷிபந்தீ
ஜீவான் பூ4யிஷ்டகர்மாவலி விவச’
க3தீன் துக்க2ஜாலே க்ஷிபன்தீ |
த்வன்மாயா மாS பி4பூ4ன் மாமயி
புவ4னபதே கல்பதே தத்ப்ரசா’ந்தை
த்வத்பாதே3 ப4க்திரேவேதி அவத3தி2 விபோ4
ஸித்3த4 யோகீ3 ப்ரபு3த்3த4 : || (91 – 9 )

ஹே ஸ்ரீ ஜகன் நாதா! தங்களுடைய பரமார்த்த ரூபத்தை மறைத்துக் கொண்டு, தங்களின் விக்ஷேப சக்தியால்
பூமி, ஜலம், வாயு போன்ற பல ரூபங்களில் தோன்றுகின்றீர்கள் .
பலவகைப்பட்ட கர்மங்களால் ஜீவாத்மாக்களைத் தன் வசம் இழக்கச் செய்து, துக்க வலையில் கொண்டு தள்ளுகின்றீர்கள்.
தங்களின் இந்த மாயை என்னை அடிமைப் படுத்தக் கூடாது.
ஹே ஸ்ரீ பிரபு ! தங்களின் திருவடி பக்தி ஒன்றே மாயையை வெல்லும் சாதனம் என்று
ஸ்ரீ பிரபுத்தர் என்ற சித்த யோகி ஸ்ரீ விதேக ராஜனுக்குக் கூறினார் அல்லவா?

துக்கா2ன்யாலோக்ய ஜந்துஷு அலமுதி3த
விவேகோSஹம் ஆசார்யவர்யாத்
லப்த்வா த்வத்3 த்ரூப தத்வம் கு3ண
சரிதகதா2த்3யுத்3ப4வத்3 ப4க்தி பூ4மா |
மாயாமேனாம் தரித்வா பரமஸுக2மயே
த்வத் பதே3 மோதி3தாஹே
தஸ்யாயம் பூர்வரங்க3: பவனபுரபதே
நாச’யாசே’ஷ ரோகா3ன் || ( 91 – 10)

நான் ஜீவர்களின் பற்பல துக்கங்களைக் கண்டு விவேகத்தைப் பெறுவேனாகுக!
சிறந்த ஒரு ஸ்ரீ குருவிடம் இருந்து தங்கள் ஸ்வரூபத்தின் உண்மையை அறிவேனாகுக!
தங்கள் குணங்ளையும், சரிதங்களையும், கானம் செய்து பக்திப் பெருக்கை அடைவேனாகுக!
இந்த மாயைத் தாண்டிப் பரமானந்த மயமான தங்கள் திருவடிகளில் மகிழ்ச்சி அடைவேன் ஆகுக!
இந்த மாயா ஜயம் அதற்கு நாந்தி போல அமையட்டும்!.
ஹே ஸ்ரீ குருவாயூரப்பா அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும் !

——————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -81–நரகாசுர வதம்-பாரிஜாத ஹரணம் –

October 2, 2020

ஸ்நிக்3தா4ம் முக்3தா4ம் ஸததமபி
தாம் லாலயன் ஸத்யபா4மாம்
யாதோ பூய ;சஹ க2லு தயா
யாக்ஸேனீ விவாஹம் |
பார்த்த2 ப்ரீதியை புனரபி மனாகா3
ஸ்திதோ ஹஸ்தி புர்யாம்
ச’க்ர ப்ரஸ்த2ம் புரமபி விபோ4
ஸம்விதா4யா க3தோபூ:|| (81 – 1)

மிகவும் பிரியம் உள்ளவளும், அழகுள்ளவளும் ஆகிய ஸ்ரீ சத்திய பாமையை எப்போதும்
இன்புறச் செய்து கொண்டு இருந்தீர்கள். பிறகு அவளுனடனேயே ஸ்ரீ திரௌபதி விவாஹத்திற்குச் சென்றீர்கள்.
ஸ்ரீ பாண்டவர்கள் சந்தோஷத்திற்காக சில நாள் ஸ்ரீ ஹஸ்த்தினாபுரத்தில் வசித்தீர்கள்.
இந்திரப் பிரஸ்தம் என்ற பட்டணத்தையும் உருவாக்கினீர்கள் அல்லவா? ( 81 – 1 )

ப4த்3ராம் ப4த்3ராம் ப4வத3வ ரஜாம்
கௌர வேணார்த்2ய மானாம்
த்வத் வாசா தாமஹ்ருத குஹ
நாமஸ்கரி ச’க்ர ஸூனு:|
தத்ர க்ருத்3த4ம் ப3ல மனுநயன்
ப்ரத்ய கா3ஸ்தேன ஸார்த்த4ம்
ச’க்ர ப்ரஸ்த2ம் ப்ரிய ஸக2 முதே3
ஸத்யபா4மா ஸஹாய:|| ( 81 – 2 )

மிகுந்த அழகியாகிய தங்கள் தங்கை ஸ்ரீ சுபத்திரையை துரியோதனன் விரும்பினான்.
ஆனால் உங்கள் திருவாக்கின் படி கபட சந்நியாசி ஆகிய ஸ்ரீ அர்ஜுனனன் அவளை அபகரித்தான்.
இந்த விஷயத்தில் மிகுந்த கோபம் கொண்டார் ஸ்ரீ நம்பி மூத்த பிரான்.
அவரை சமாதானப்படுத்தி ஸ்ரீ சத்ய பாமையுடன் இந்திரப்ரஸ்தம் சென்றீர்கள் அல்லவா? ( 81 – 2 )

தத்ர க்ரீட3ன்னபி ச யமுனாகூல
த்3ருஷ்டாம் க்3ருஹீத்வா
தாம் காலிந்தீம் நக3ர மக3ம:
கா2ண்ட3வ ப்ரீணி தாக்3னி:|
ப்3ராத்ருத்ராஸ்தாம் ப்ரணய விவசா’ம்
தேவ பைத்ருஷ்வ ஸேயீம்
ராக்ஞாம் மத்4யே ஸப3தி ஜஹிஷே
மித்ரவிந்தா3 மவந்தீம் || ( 81 – 3)

அப்போது இந்திரப் பிரஸ்தத்தில் பொழுது போக்கிக் கொண்டு இருந்த தாங்கள்
காண்டவ வனத்தைக் கெடுத்து அக்னியைத் திருப்தி செய்தீர்கள்.
ஸ்ரீ யமுனைக் கரையில் காணப்பட்ட ஸ்ரீ காலிந்தீ என்பவளைப் பெற்றுக்கொண்டீர்கள்.
ஸ்ரீ மத் துவாரகை திரும்பினீர்கள். சகோதரர்களிடம் அஞ்சிய, தங்கள் மேல் உள்ள காதலால் தன் வசம் இழந்த,
அத்தை மகளாகிய, அவந்தி தேசத்து அரசன் மகளாகிய ஸ்ரீ மித்ர விந்தை என்பவளை,
அரசர்களுக்கு மத்தியில் விரைந்து அபகரித்தீர்கள் அல்லவா? ( 81 – 3 )

ஸத்யாம் க3த்வா புனருத3வஹோ
நக்3ன ஜின்னந்தனாம் தாம்
ப3த்3த4வா ஸப்தாபி ச வ்ருஷ வரான்
ஸப்த மூர்த்திர் நிமேஷாத்|
பத்ராம் நாம ப்ரத3து3 ரத2 தே
தே3வ ஸந்தர்த3நாத்3யாஸ்
தத் ஸோத3ர்யா வரத3 பவதஸ்
ஸாபி பைத்ருஷ்வ ஸேயீ || ( 81 – 4)

ஒருநாள் ஸ்ரீ மத் அயோத்திகுச் சென்று ஏழு உருவங்களை எடுத்துக் கொண்டீர்.
ஏழு சிறந்த காளைகளை ஒரு நொடியில் கட்டினீர்கள்.
நக்னஜித் என்ற அரசன் மகளாகிய ஸ்ரீ சத்தியை என்பவளை விவாஹம் செய்தீர்கள் அல்லவா?
பிறகு சந்தர்த்தனன் முதலியவர்கள் ஸ்ரீ பத்ரை என்னும் அவர்களின் சகோதரியைத் தங்களுக்குத் தந்தார்கள்.
அவளும் தங்கள் அத்தை மகளே. ( 81 – 4 )

பார்தா2த்2யை ரப்ய க்ருத லவனம்
தோய மாத்ராபி4 லக்ஷ்யம்
லக்ஷம் சி2த்வா ச’பர ம்வ்ருதா2
லக்ஷ்மணாம் மத்3ர கன்யாம்|
அஷ்டாவேவம் தவ ஸமப4வன்
வல்லபா4ஸ் தத்ர மத்4யே
சு’ச்’ரோத2 த்வம் ஸுரபதி கி3ரா
பௌ4ம து3ச்’சேஷ்டிதான் || ( 81 – 5)

ஸ்ரீ அர்ஜுனன் முதலானவர்களால் கூட அறுக்கப் படாததும், நீரில் மட்டுமே பார்க்கக் கூடியதும்,
மீன் உருவம் கொண்ட இலக்கத்தை அறுத்து மத்ர தேசத்து அரசன் பெண் ஸ்ரீ லக்ஷ்மணை என்பவளை வரித்தீர்கள்.
இப்படித் தங்களுக்கு எட்டுப் பத்தினிகள் அமைந்தார்கள்.
இதற்கிடையில், தாங்கள் நரகாசுரனுடைய தீச் செயல்களை தேவேந்திரன் கூறக் கேட்டீர்கள் அல்லவா? ( 81 – 5 )

ஸ்ம்ருத்யாம் பக்ஷி ப்ரவர
மதி4 ரூட4ஸ்த்வ மக3மோ
வஹன்னங்கே பாமா முபவன
மிவாராதி ப4வனம் |
விபி4ந்தன் து3ர்கா3ணி த்ருடித
ப்ருதனா சோ’ணி ஹதரசை:
புரம் தாவத் பராக்3 ஜ்யோதிஷ
மகுருதா2ச்’ சோ’ணித புரம் || (81 – 6 )

தாங்கள் நினைத்த மாத்திரத்தில் வந்த ஸ்ரீ பெரிய திருவடி முதுகின் மேல் ஏறிக்கொண்டு மடியில்
ஸ்ரீ சத்யபாமையை வைத்துக் கொண்டு நந்த வனத்துக்குச் செல்பவர் போல சத்ருவின் இருப்பிடத்துக்குச் சென்றீர்கள்.
சென்ற உடனேயே கோட்டையை உடைத்தீர். கொல்லப்பட்ட சேனைகளின் ரத்த நீரால்
ஸ்ரீ பிராக் ஜோதிஷ புரம் என்ற பட்டணத்தைச் சோணித புரமாக மாற்றிவிட்டீர்கள் அல்லவா? ( 81 – 6 )

முரஸ்த்வாம் பஞ்சாஸ்யோ ஜலதி4
வன மத்4யா து3த3பதத்
ஸ சக்ரே சக்ரேண ப்ரத3லித
சி’ரா மங்க்ஷு ப4வதா |
சதுர் த3ந்தைர் த3ந்தாவல பதிபி4
ரிந்தா4ன ஸமரம்
ரதா2ங்கே3ன ந சி2த்வா நரக
மகரோஸ் தீர்ண நரகம் || ( 81 – 7

ஐந்து தலைகளை உடைய முரன் என்பவன் சமுத்திர நீரின் நடுவில் இருந்து தங்களை எதிர்த்து வந்தான்.
விரைந்து சக்கர ஆயுதத்தால் அவன் தலைகளை அறுத்துத் தள்ளினீர்கள்.
நான்கு கொம்புகள் உடைய சிறந்த யானைகளுடன் மேலும் மேலும் விருத்தி அடைந்த போர் புரியும்
நரகாசுரனை சக்கர ஆயுதத்தால் வெட்டி, நரகத்தைத் தாண்டி
மோக்ஷம் அடைந்தவனாகச் செய்தீர்கள் அல்லவா? ( 81 – 7)

ஸ்துதோ பூ4ம்யா ராஜ்யம் ஸபதி3
ப4க3த3த்தேSஸ்ய தனயே
கஜஞ்சைகம் த3த்வா ப்ரஜிக3யித2
நாகா3ன் நிஜ புரம் |
க2லேனா பத்3தா4னாம் ஸ்வக3த
மனஸாம் ஷோட3ச’ புன:
ஸஹஸ்ராணி ஸ்த்ரீணா மபி ச
த4னராசீ’ம் ச விபுலம் || ( 81 – 8)

ஸ்ரீ பூமி தேவியால் துதிக்கப்பட்டு, உடனே நரகாசுரானின் மகனான பகதத்தனிடம் ராஜ்ஜியத்தையும்,
ஒரே ஒரு யானையையும் ஒப்படைத்தீர். மற்ற யானைகள், நரகாசுரனால் பந்திக்கப்பட்டுத்
தங்களிடத்தில் மனம் லயித்திருந்த பதினாறாயிரம் பெண்களையும், செல்வக் குவியலையும்
தங்கள் நகருக்கு அனுப்பினீர்கள் அல்லவா?-(81 – 8 )

பௌ4மாபாஹ்ருத குண்ட3லம் தத3தி3தேர்
தா3தும் ப்ரயதோ தி3வம்
ச’க்ராத்3யைர் மஹித ஸம்மதயியா
த்3யு ஸ்த்ரஷு த3த்தா ஹ்ரியா |
ஹ்ருத்வா கல்பதரூம் ருஷாSபி4 பதிதம்
ஜித்வேந்த்3ர மப்4யாக3ம:
தத்து ஸ்ரீமத3 தோ3ஷ ஈத்3ருச’ இதி
வ்யாக்2யாது மேவா க்ருதா2:|| ( 81 – 9 )

தேவமாதர் நாணும் அழகுடைய ஸ்ரீ சத்ய பாமையுடன், நரகாசுரன் கவர்ந்திருந்த குண்டலங்களை
அதிதிக்குத் திருப்பிக் கொடுக்க, சுவர்க்க லோகம் சென்றீர்கள்.
இந்திரன் முதலியவர்கள் தங்களைப் பூஜித்தார்கள். கற்பக விருக்ஷத்தை அபகரித்தீர்!
கோபத்துடன் எதிர்த்து வந்த இந்திரனை ஜெயித்து ஸ்ரீ மத் துவாரகைக்குத் திரும்பினீர்.
ஐஸ்வரியத்தால் உண்டாகும் கெடுதி என்ன என்பதைத் தெரிவிப்பதற்கே
இவ்வாறு செய்தீர்கள் அல்லவா? ( 81 – 9)

கல்ப த்3ருமம் ஸத்யபா4மா ப4வனே பு4வி
ஸ்ருஜன் த்3வ்யஷ்ட ஸாஹஸ்ர யோஷா:
ஸ்வீ க்ருத்ய ப்ரத்யகா3ரம் விஹித ப3ஹு வபு
லீலயன் கே2லி பே4தை3:|
ஆச்சர்யான் நாரத3 லோகித விவித4
க3திஸ் தத்ர தத்ராபி கே3ஹே
பூ4ப: ஸர்வாஸு குர்வன் த3ச’ த3ச’ தனயான்
பாஹி வாதாலயேசா’|| ( 81 – 10 )

கற்பக விருக்ஷத்தை ஸ்ரீ சத்ய பாமையின் வீட்டில் கொல்லைப் புறத்தில் நடச் செய்தீர்கள்.
பதினாறாயிரம் சரீரங்களை எடுத்துக் கொண்டீர்கள். பதினாராயிரம் ஸ்திரீக்களை விவாகம் செய்து கொண்டு,
பல கிரீடைகள் புரிந்து கொண்டு, எல்லாப் பத்தினிகளிடமும் பத்துப் பத்து பிள்ளைகளை உண்டாக்கி,
நாரதரையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய, தாங்கள் அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் ( 61 – 10 )

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -84–ஸமந்தபஞ்சக யாத்ரா உபாக்யானம்

October 2, 2020

க்வசித3த2 தபனோபராக3காலே
புரி நித3த4த் க்ருத வர்ம காமஸூன்|
யது3குல மஹிலாவ்ருத ஸுதீர்த்த2ம்
ஸமுபக3தோSஸி ஸமந்த பஞ்சகாக்2யம் || (84 – 1)

ஒருநாள் சூரிய கிரஹண காலத்தில் கிருதவர்மனையும், அநிருத்தனையும் ஸ்ரீ மத் துவாரகையில்
காவலுக்கு வைத்து விட்டு யாதவர்களாலும் ஸ்திரீகளாலும் சூழப்பட்டவராகச்
சமந்த பஞ்சகம் என்ற புண்ணிய தீர்த்தத்தை அடைந்தீர்கள்.

ப3ஹுதர ஜனதா ஹிதாய தத்ர த்வமபி
புனன் விநிமஜ்ஜ்ய தீர்த்த2தோயம் |
த்3விஜ க3ண பரிமுக்த வித்த ராசி’:
ஸமமிலதா2: குருபாண்ட3வாதி3 மித்ரை: || (84 – 2)

தாங்களும் ஜனங்களின் க்ஷேமத்திற்காக அந்தத் தீர்த்தத்தில் நீராடினீர்கள். அந்த புண்ணிய தீர்த்தம்
தங்களால் மேலும் பரிசுத்தம் ஆனது. பிராமணர்களுக்கு தானம் செய்துவிட்டு,
கௌரவர்கள் பாண்டவர்கள் முதலிய நண்பர்களுடன் ஒன்று சேர்ந்தீர்கள்.

தவ க2லு த3யிதா ஜனை: ஸமேதா
த்3ருபத3 ஸுதா த்வயி கா3ட4 ப4க்திபா4ரா |
தது3தி3த ப4வதா3ஹ்ருதி ப்ரகாரை:
அதி முமுதே3 ஸமமன்ய பா4மினீபி4 :|| (84-3)

தங்களிடம் திடமான பக்தி கொண்ட ஸ்ரீ திரௌபதி, தங்கள் பிரிய பத்தினிகளிடம் அவர்களைத் தாங்கள்
எங்கனம் அபகரித்து வந்தீர்கள் போன்ற விவரங்களைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தாள்.

தத3னு ச ப4க3வன் நிரீக்ஷ்ய கோ3பான்
அதி குதுகா து3பக3ம்ய மானயித்வா |
சிரதர விரஹா துரங்க3 ரேகா2:
பசு’ப வதூ4: ஸரஸம் த்வமன்வயாஸீ : || (84 – 4 )

ஸ்ரீ பகவன்! அதன் பிறகு தாங்கள் கோபர்களைக் கண்டு, அவர்கள் அருகில் சென்று,
அவர்களை வெகுமானித்தீர்கள். வெகு நாட்கள் பிரிவினால் வருந்தி இளைத்த சரீரத்தை உடைய
ஸ்ரீ கோப ஸ்த்ரீகளை மிகவும் சந்தோஷத்துடன் பின் தொடர்ந்து சென்றீர்கள்.

ஸபதி3 ச ப4வதீ3க்ஷணோத்ஸவேன
ப்ரமுதி3 தமானஹ்ருதா3ம் நிதம்பி3நீனாம் |
அதிரஸ பரிமுக்த கஞ்சுலீகே
பரிசித் ஹ்ருத்3யதரே குசே ந்யலைஷீ : || (84 – 5 )

தங்களைக் கண்ட சந்தோஷத்தில் அந்தப் பெண்கள் தங்கள் அபிமானத்தைத் துறந்து விட்டனர்.
மகிழ்ச்சியில் அவர்களின் உடைகள் நெகிழ்ந்து விட்டன.
முன் பரிச்சயத்தால் மனோ ஹரமான அவர்களிடம் தாங்கள் லயித்து விட்டீர்கள்.

ரிபுஜன கலஹை: புன: புனர்மே
ஸமுபக3தை ரியதி விலம்ப3னாSபூ4த் |
இதி க்ருத பரிரம்ப4ணே த்வயி த்3ராக்
அதி விவசா’ க2லு ராதி4கா நிலீல்யே || (84 – 6 )

“அடிக்கடிப் பகைவர்களுடன் எழுந்த போர்களால் எனக்கு இவ்வளவு தாமதம் ஆகி விட்டது!” என்று கூறித்
தாங்கள் ஆலிங்கனம் செய்த போது ஸ்ரீ ராதை பரவசம் அடைந்து தங்களிடம் லயித்து விட்டாள் அல்லவா?

அபக3த விரஹ வ்யதாஸ்ததா3 தா
ரஹஸி விதா4ய த3தா3த2 தத்வ போ3த4ம் |
பரம ஸுக2 சிதா3த்மகோSஹமாத்மேதி
உத3யது வ: ஸ்புடமேவ சேதஸீதி || (84 – 7)

அப்போது அந்தப் பெண்களுக்கு ஏகாந்தத்தில் தங்களின் பிரிவினால் ஏற்பட்ட துயரம் நீங்கும்படிச் செய்தீர்கள்.
“நான் பரமானந்தா ரூபியும் ஞான ரூபியும் ஆகிய பரமாத்மா!” என்பது அவர்களுக்கு
நன்கு விளங்கும்படித் தத்துவ ஞானத்தைத் தந்தீர்கள் அல்லவா?

ஸுக2ரஸ பரிமிச்’ரிதோ வியோக3
கிமபி புராSப4வ து3த்4த3 வோபதே3சே’:
ஸமப4வ த3முத: பரந்து தாஸாம்
பரம ஸுகை2க்ய மயீ ப4வத் விசிந்தா || (84 – 8 )

முன்பே ஸ்ரீ உத்தவருடைய உபதேசங்களால் தங்களைப் பிரிந்த வருத்தம் அவர்களிடம் கொஞ்சம்
ஆனந்தம் கலந்ததாக மாறியிருந்தது .
தங்களின் இந்த உபதேசத்துக்குப் பின்பு அவர்களுக்குத் தங்களின் நினைவே பரமானந்தம் ஆனது.

முனிவர நிவஹைஸ் தவாத2 பித்ரா
து3ரித ச’மாய சு’பா4னி ப்ருச்2ய மானை: |
த்வயி ஸதி கிமித3ம் சு’பா4ந்தரை
ரித்யுரு ஹஸிதை ரபி யாஜிதஸ் ததா3Sசௌ|| (84 – 9 )

தங்கள் தந்தை ஸ்ரீ வஸுதேவர் முனிவர்களிடம் பாவ பரிஹாரங்களுக்குப் பிராயச் சித்தங்களைக் கேட்டார்.
தாங்கள் அவர் புத்திரனாக அருகில் இருக்கும் போது பிராயச்சித்தம் செய்வதற்குச் சத் கர்மங்களின்
அவசியமென்ன என்று அவர்கள் கேட்க; எல்லோரும் நகைத்தார்கள் என்றாலும் ஸ்ரீ வஸுதேவர் யாகம் செய்தார்.

ஸமஹதி யஜனே விதாயமானே
ப்ரமுதித மித்ரஜானே ஸஹைவ கோ3பா: |
யது3ஜன மஹிதாஸ்த்ரிமாஸ மாத்ரம்
ப4வ த3னுஷங்க3 ரஸம் புரேவ பே4ஜு: || (84 – 10)

பெரும் யாகம் நடந்தது. கோபாலர்கள் யாதவர்களால் நன்கு வெகுமானிக்கப் பட்டன்ர்.
மூன்று மாதங்கள் தங்கள் அருகாமையையும் அது தந்த சுகத்தையும்
தங்களின் நண்பர்கள் அடைந்தார்கள் அல்லவா?

வ்யபக3ம ஸமயே ஸமேத்ய ராதா4ம்
த்3ருட4 முபகூ3ஹ்ய நிரீக்ஷ்ய வீத கே2தா3ம் |
ப்ரமுதி3த ஹ்ருத3ய புரம் ப்ரயாத:
பவன புரேச்’வர பாஹிமாம் க3தே3ப்4ய : || (84 – 11)

ஹே ஸ்ரீ குருவாயூரப்பா! திரும்பிச் செல்லும் போது ஸ்ரீ ராதையை ஆலிங்கனம் செய்து கொண்டீர்கள்.
வருத்தம் நீங்கியவளாக அவளைக் கண்டதும் சந்தோஷத்துடன் ஸ்ரீ மத் துவாரகை சென்றீர்கள்.
தாங்கள் அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும் –

—————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 40–பூதனை மோக்ஷம்–

September 25, 2020

தத நு நந்த மமந்த ஸூபாஸ் பதம் ந்ருப புரீம் கரதாந க்ருதே கதம்
சமய லோக்ய ஜகாத பவத் பிதா விதித கம்ஸ ஸஹாய ஜ நோத் யம –1-

அதன்பின்‌ அனைத்துச்‌ செல்வங்களும்‌ நிரம்பப்‌ பெற்ற நந்தகோபன்‌ அரசனுக்குக்‌ கப்பம்‌ கட்ட வேண்டி
மதுரையம்பதி செல்ல, கம்ஸனுக்கு உதவி புரியும்‌ மந்திரிகளின்‌ தீய முயற்சியை நன்கு அறிந்த
தங்கள்‌ தந்தையான வஸுதேவர்‌ அவரிடம்‌ (பின்வருமாறு) கூறினார்‌.

அயி சகே தவ பாலக ஜன்ம மாம் ஸூக யதே அத்ய நிஜாத்ம ஜ ஜன்மவத்
இதி பவத் பித்ருதாம் வ்ரஜ நாயகே சமதி ரோப்ய ச சம்ச தமா தராத் –2-

நண்பனே! உனக்குப்‌ பிள்ளைப் பேறு கிடைத்தது எனக்கே பேறு கிடைத்தது போல்‌ என்‌ மனம்‌ மகிழ்கிறது’
என்று யது குலத்‌ தலைவ்ரான நந்தனின்‌ மேல்‌ ‘தங்களுக்குத்‌ தந்‌தை ‘ என்கிற புகழை ஏற்றி வைத்து
மிக்க அன்புடன்‌ அவரைப்‌ புகழ்ந்தார்‌-

இஹ ச சந்த்ய நிமித்த சதாநி தே கடக ஸீம்நி ததோ லகு கம்யதாம்
இதி ச தத் வஸசா வ்ரஜ நாயகோ பவத பாயபியா த்ருத மாயயவ் –3–

நண்பனே! இப்பொழுது தங்களுடைய கோகுலத்தில்‌ நூற்றுக் கணக்கான தீய சகுனங்கள்‌ காணப்படுகின்றன.
ஆகவே விரைவில்‌ திரும்பிச்‌ செல்லுங்கள்‌’ என்று வஸுதேவர்‌ சொல்லக்‌ கேட்ட நந்தன்‌,
தங்களுக்குத்‌ தீங்கு நேரிடுமோ என்ற அச்சத்தால்‌ விரைவில்‌ (கோகுலம்‌) திரும்பி வந்தார்‌.

அவஸரே கலு தத்ர ச காசந வ்ரஜ பதே மதுராக் ருதிரங்க நா
தர லக்ஷ ட் பதலாலித குந்தலா கபட போதக தே நிகடம் கதா -4-

மாயக் குழந்தை வேடம்‌ பூண்ட குருவாயூரப்பா! அப்பொழுது இங்குமங்கும்‌ அசையும்‌ வண்டுகள்‌ மொய்க்கும்‌
கூந்தலையுடைய அழகிய வடிவுடைய ஒரு பெண்‌ கோகுலத்தில்‌ தங்கள்‌ அருகில்‌ வந்தாள்-

ச பதி சா ஹ்ருத பாலக சேதநா நிஸி சரான் வயஜா கில பூதநா
வ்ரஜ வதூஷ் விஹ கேயமிதி க்ஷணம் விம்ருஸ தீஷு பவந்த முபாததே –5-

குழந்தைகளின்‌ உயிரைப்‌ பறிப்பவளும்‌, அரக்கர்‌ குலத்தில்‌ பிறந்தவளும்‌, பூதனை என்ற பெயர்‌ கொண்டவளுமான
அப் பெண்ணைக்‌ கண்ட இடைச்சியர்கள்‌ ‘இவள்‌ யார்‌?” என்று ஆராய்ந்திருக்கையில்‌,
அவள்‌ தங்களைத்‌ கையில்‌ எடுத்துக்‌ கொண்டாள்‌.

லலித பாவ விலாஸ ஹ்ருதாத்மபிர் யுவதிபி ப்ரதி ரோத்தும பாரிதா
ஸ்தன மஸவ் பவ நாந்தநி ஷேது ஷீ ப்ரதது ஷீ பவதே கபடாத்மநே –6-

தனது’ அழகிய நடை யுடை பாவனைகளால்‌ ஆய்ச்சியர்‌ மனதைக்‌ கவர்ந்த பூதனை, எவராலும்‌ தடுக்கப்படாமல்‌
வீட்டினுள்‌ புகுந்து (ஓரிடத்தில்‌) அமர்ந்து கொண்டு கபட உரு தாங்கி வந்த தங்களுக்கு
மார்போடு அணைத்து நகில்களால்‌ பால்‌ கொடுத்தாள்‌.

சமதி ருஹ்ய ததங்கம சங்கிதஸ் த்வமத பால கலோப ந ரோஷித
மஹதி வாம்ர பலம் குச மண்டலம் ப்ரதிசு ஸூ ஷித துர் விஷ தூஷிதம் -7-

இவள்‌ குழந்தைகளைக்‌ கொல்வது அறிந்து மிக்க சினங்கொண்ட தாங்கள்‌ சிறிதும்‌ அச்சமின்றி அவளது மடியில்‌
ஏறி யமர்ந்து கொடிய நஞ்சு நிரம்பிய அவளுடைய மார்பகத்தைப்‌ பெரிய மாம்பழத்தை உறிஞ்சிச்‌ சாப்பிடுவது போல
உறிஞ்சிக்‌ குடித்தீர்கள்

அ ஸூபி ரேவ சமம் தயதி த்வயி ஸ்தநமசவ் ஸ்தநிதோபம நிஸ்வநா
நிர பதத் பயதாயி நிஜம் வபுஸ் பிரதிகதா ப்ரவிசார்ய புஜா யுபவ் -8-

தாங்கள்‌ முலை யுண்ணுகையில்‌ அவளது உயிரையும்‌ சேர்த்துப்‌ பருகினதால்‌ அப் பூதனை இடி. போன்ற
பேரொலியுடன்‌ அச்சம்‌ தரும்‌ தனது உண்மையான அரக்க வடிவம்‌ கொண்டு தனது
இரு கைகளையம்‌ விரித்தவாறு ‘ மல்லாந்து விழுந்து இறந்தாள்‌.

பயத கோஷண பீஷண விக்ரஹ ஸ்ரவண தர்சன மோஹித வல்லவே
வ்ரஜ பதே ததுரஸ்தல கேல நம் நநு பவந்தம க்ருஹணத கோபிகா –9-

இடைச் சேரியில்‌ அச்சம்‌ தரும்‌: குரலைக்‌ கேட்டும்‌, பயங்கரமான அஸுர உடலைப்‌ பார்த்தும்‌ கோபியர்கள்‌
மயங்கிய பொழுது தாங்கள்‌ அப்பூதனையின்‌ மார்பகத்தில்‌ விளையாடிக்‌ கொண்டிருந்தீர்கள்‌.
உடனே ஆய்ச்சியர்‌ ஓடி வந்து தங்களை எடுத்துக்‌ கொண்டார்கள்‌ அல்லவா?

புவந மங்கல நாமபி ரேவ தே யுவதி பிர் பஹு தா க்ருத ரக்ஷண
த்வமயி வாத நிகேதந நாத மாம கதயன் குரு தாவக ஸேவகம் –10-

அனைத்துலகங்களுக்கும்‌ எல்லா நலன்களும்‌ அருளும்‌ குருவாயூரப்பா! தங்களுடைய மங்களமான திருநாமங்களை
ஓதியே பெண்மணிகள்‌ அனைவரும்‌ தங்களுக்குப்‌ பல வகையிலும்‌ காப்பு செய்தார்கள்‌.
அத்தகைய தாங்கள்‌ தங்கள்‌ அடிமையாகிய அடியேனை நோயற்றவனாகச்‌ செய்தருள வேண்டும்‌.

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீமந் நாராயணீயம் – இரண்டாவது தசகம்–ஸ்ரீ பகவத் ஸ்வரூப மாதுர்யம் -ததா பக்தி மஹாத்ம்யம் —

September 16, 2020

ஸுர்ய ஸ்பர்த்தி கிரீடம் ஊர்த்தவ திலக
ப்ரோத்பாஸி பாலாந்தரம்
காருண்யாகுல நேத்ரம் ஆர்த்ர
ஹலிதோல்லாஸம் ஸுநாஸாபுடம்
கண்டோத்யன் மகராப குண்டல யுகம்
கண்டோஜ்வலத் கௌஸ்துபம்
த்வத்ரூபம் வனமால்ய ஹார படல
ஸ்ரீவத்ஸ தீப்ரம் பஜே !—1-

குருவாயுரப்பனே ! உன் கிரீடம் சூரியனை விட பலமடங்கு ஒளி உள்ளதாய் இருக்கிறது . அழகான நெற்றியில் உள்ள திலகத்தால்
நெற்றி ஒளி வீசுகிறது . கண்களில் கருணை ததும்பி உள்ளது . அந்த கண்கள் புன்னகையை வீசி சிரிக்கின்றன .
மூக்கு எடுப்பாக உள்ளது. காதுகளில் அணிந்துள்ள குண்டலங்கள் மீன் போன்று கன்னங்களில் வந்து வந்து இடிக்கின்றன .
கழுத்தில் கௌஸ்துபம் என்ற மணி ஒளி வீசுகிறது . திருமார்பில் வைஜயந்தி என்ற மாலையும் முத்து மாலையும் உள்ளன .
மேலும் ஸ்ரீவத்சம் கொண்டதுமான உனது மார்பு உள்ளது . இத்தனை அழகான உனது உருவத்தை நான் தியானம் செய்கிறேன் .

கேயுராங்கத கங்கனோத்தம
மஹாரத்ன அங்குலீயாங்கித
ஸ்ரீமத் பாஹு சதுஷ்க ஸங்க கதா
சங்க்காரி பங்கேருஹாம்
காஞ்சித் காஞ்சன காஞ்சி ஸாஞ்சித
லஸத் பீதம்பராலம்பினிம்
ஆலம்பே விமலாம் புஜத் யுதிபதாம்
மூர்த்திக் தவ ஆர்திச்சிதம் !!—-2-

ஸ்ரீ அப்பனே !! உன்னுடைய நான்கு கைகளில் வளையல்கள், அங்குத ஆபரணம் ,கங்கணம் , ரத்னம் உள்ள மோதிரங்கள் உள்ளன .
அந்த கைகள் சங்கு சக்கரம் கதை மற்றும் தாமரை மலர் ஆகியவற்றை ஏந்தி உள்ளது . உனது இடுப்பில் அரைஞான் கயிறும்
பட்டு ஆடையான பீதாம்பரமும் உள்ளன. உனது திருவடிகள் தாமரை மலர் போன்று அழகாக சிவந்து தூய்மையாக உள்ளன .
உனது இத்தகைய திருமேனியை கண்டவர்களது துன்பங்கள் அனைத்தும் மறைந்து விடுகின்றன . இதனை நான் சரணடைகிறேன்.

யத் த்ரை லோக்ய மகியஸ: அபி
மஹிதம் சம்மோஹனம் மோஹனாத்
காந்தம் காந்தி நிதானத :
அபி மதுரம் மாதுர்ய துர்யாதபி
ஸௌந்தர்யோத்தரோபி ஸுந்தரதரம்
த்வத்ரூபம் ஆச்சர்யதோபி
ஆச்சர்யம் புவநே ந கஸ்ய குதுகம்
புஷ்ணாதி விஷ்ணோ விபோ !!–3-

அனைத்து இடங்களிலும் நிறைந்து உள்ளவனே !! விஷ்ணுவே !! உனது உருவம் எப்படிபட்டது ?
மூன்று உலகிலும் பெருமையும் சிறந்தும் உடைய பொருள் எது இருந்தாலும் அதைவிட சிறந்ததாக உள்ளது .
எந்த பொருள் அனைவரது மனதையும் கவருமோ அந்த பொருளை விட உனது திருமேனி கவரக்கூடியது.
எந்த பொருள் கவர்ச்சியும் ஒளியும் கொண்டதோ அதைவிட கவர்ச்சியும் ஒளியும் கொண்டது.
எது மிகவும் இனிமையாக உள்ளதோ அதனைவிட இனிமையானது .
எது அழகாக உள்ளதோ அதனைவிட அழகு நிறைந்ததாக உள்ளது .
எது வியப்பை அளிக்கிறதோ அதனைவிட வியப்பை அளிப்பதாக உள்ளது .
இத்தனை சிறப்புடைய உனது திருமேனி யாருக்குத்தான் மனமகிழ்வை அளிக்காது ?

தத்தாத்ருங் மதுராத்மகம் தவ வபு :
ஸம்ப்ராப்ய ஸம்பந்மயி
ஸா தேவி பரமோத்ஸுகா சிரதரம்
ந ஆஸ்தே ஸ்வ பக்தேஷ்வபி
தேன அஸ்யா : பத கஷ்டம் அச்யுத விபோ
த்வத்ரூப மனோஜ்ஞக
ப்ரேமஸ் தைர்யமயாத் அசாபல பலா
சாபல்ய வார்த்தோதபூத் !!–4-

எங்கும் உள்ளவனே !! உனது அடியார்களை கைவிடாதவனே !! அனைத்து ஐஸ்வர்யங்களுக்கும் இருப்பிடமாக
உள்ளவள் மகாலட்சுமி, அவள் ஒப்பு இல்லாத உயர்ந்த உனது திருமேனியை அடைந்து அதனால் மிகவும்
மன மகிழ்வு அடைந்து தங்கிவிட்டாள். இதனால் அவள் தன்னுடைய அடியார்களிடம் கூட தங்கி இருப்பதில்லை .
இதனால் இவளுக்கு சபலம் உடையவள், நிலை அற்றவள் என்ற அவப் பெயர் அல்லவா உண்டானது .

லக்ஷ்மீஸ் தாவக ராமணீயக
ஹ்ருதைவேயம் பரேஷ்வஸ்த்திரேதி
அஸ்மின் அந்யத் அபி ப்ரமண மதுநா
லக்ஷ்யாமி லக்ஷ்மிபதே
யே த்வத் த்யான குணானு கீர்த்தன
ரஸா ஸக்தா ஹி பக்த ஜனா :
தேஷ்வேஷா வஸதி ஸ்த்திரைவ தயித
ப்ரஸ்தாவ தத்தாதரா !!—5-

குருவாயுரப்பா !! மகாலக்ஷ்மியின் நாயகனே !! பதியே !! உன்னுடைய திருமேனி அழகில் மிகவும் கவரப்பட்டு
உன்னுடன் இருக்கும் மகாலட்சுமி பிறரிடம் இருப்பதில்லை என்பதற்கு இன்னொரு ஆதாரம் உள்ளது.
உன்னைப் பற்றியும் உன் திருகல்யாண குனங்களைப் பற்றியும் நாம சங்கீர்த்தனம் செய்யும் அடியார்கள் –
இவர்கள் எனது கணவரைப் பற்றி அன்றோ கூறுகிறார்கள் என்று மகிழ்ந்து அவர்களிடமும் வாசம் செய்கிராள் அன்றோ !!
இதன் மூலம் உன்னைப் பற்றி கூறாதவர்களிடம் மட்டுமே இவள் நிலையாக இருப்பதில்லை என்று உணரலாம் .

ஏவம்பூத மனோஜ்ஞதா நவ ஸுதா
நிஷ்யந்த ஸந்தோஹனம்
த்வத் ரூபம் பரசித் ரஸாயன மயம்
சேதோஹரம் ச்ருண் வதாம்
ஸத்ய : ப்ரேரயதே மதிம் மதயதே
ரோமாஞ்சயதி அங்ககம்
வ்யாசிஞ்சத்யபி சீதபாஷ்ப விஸரை :
ஆனந்த மூர்ச்சோத்பவை :–6-

குருவாயுரப்பா !! கடந்த ஸ்லோகத்தில் கூறியது போல் உள்ள உனது அழகானது அமிர்தத்தை வழங்குவதாகவும் ,
ஆனந்த வடிவாகவும் , பார்ப்பவர்கள் உள்ளத்தை கவருவதாகவும் உள்ளது . உனது திருமேனி அழகை ஒருமுறை
யாராவது கூறக் கேட்டால் அதனைத் திரும்ப திரும்ப கேட்க மனம் துள்ளுகிறது .
அப்படி கேட்டவுடன் மனதை பரவசம் நிரப்புகிறது. உடல் எங்கும் மயிர்க்கூச்சல் உண்டாகிறது .
ஆனந்த கண்ணீர் பெருகி உடல் முழுவதும் நனைந்து விடுகிறது .

ஏவம் பூததயா ஹி பக்த்யபிஹிதோ
யோக : ஸ யோகத்வ்யாத்
கர்மஜ் ஞான மயாத ப்ருஷோத்தமதரோ
யோகீஸ்வரைர் கீயதே
சௌந்தர்யை க ரஸாத்மகே த்வயி
கலு பிரேம ப்ரகர்ஷாத்மிகா
பக்திர் நி : ச்ரமம் ஏவ விஸ்வ புருஷைர்
லப்ப்யா ரமாவல்லப !!—7-

லக்ஷ்மியின் நாயகனே !! குருவாயுரப்பா !! மேல உள்ள ஸ்லோகத்தின் நிலை நமக்கு உண்டாவதால் தான் பக்தி யோகமே
சிறப்பானது என்று கூறப்பட்டது . இது கர்மயோகம் ஞானயோகம் ஆகியவற்றைவிட உயர்ந்தது என்று யோகிகள் கூறுகின்றனர் .
அழகின் இருப்பிடமாகவே உள்ள உன்னிடம் காதலின் விளைவால் உண்டாகும் பக்தி யோகம் மனிதர்களுக்கு எளிதில் கைகூடும் அல்லவா !!

நிஷ் காமம் நியதஸ்வ தர்ம சரணம்
யத் கர்ம யோகா பிதம்
தத்தூரேத்ய பலம் யத் ஔபநிஷத
ஜ்ஞானோ பலப்யம் புன :
தத் அவ்யக்த தயா ஸுதர்க மதரம்
சித்தஸ்ய தஸ்மாத் விபோ
த்வத் பிரேமாத்மக பக்திரேவ ஸததம்
ஸ்வாதீயஸி ச்ரேயஸீ !! –8-

எங்கும் நிறைந்துள்ள குருவாயுரப்பா !! எந்த விதமான பலனையும் விரும்பாமல் தனக்கு விதிக்கப்பட்டுள்ள
கடமைகளை செய்வது கர்மயோகம் , இது பலனால் கழித்தே பலன் அளிக்கும் .
உபநிசத்துகளை நன்கு கற்பதன் மூலம் ஞான யோகம் பலனளிக்கும் . ஞானயோகத்தின் பலன் இந்திரியங்களால்
அனுபவிக்கவோ உணரவோ இயலாது . ஆக கடினமானது இந்த இரண்டைவிட உன் மீது வைக்கும்
பக்தி மூலம் கிட்டும் பக்தி யோகமே இனிமையானதும் சிறப்பானதும் ஆகும் .

அத்யாயாஸ கராணி கர்ம படலான்
ஆசர்ய நிரயந் மலா :
போதே பக்தி பதேபி அதவாபி உசிததாம்
ஆயாந்தி கிம் தாவதா
க்லிஷ்ட்வா தர்க்க பதே பரம் தவ
வபுர் ப்ரம்மாக்யம் அந்யே புன :
சித்தார்த் ரத்வம் ருதே விசிந்த்ய பஹுபி :
சஸுத்யந்தி ஜன்மாந்தரை : —9–

ஸ்ரீ அப்பனே !! மிகுந்த கடினத்துடன் தங்கள் கடைமைகளை செய்து , அதன் மூலம் தங்கள் மன இருளை நீக்கி ,
இதனால் ஞான யோகத்திற்கும் தங்களை தகுதி உடையவர்களாக சிலர் செய்து கொள்கின்றனர். இதனால் என்ன பயன் ?
உனது அழகால் உள்ளத்தில் நெகிழ்வு உண்டாகாமல் வேதாந்தம் தர்க்கம் ஆகியவற்றில் ஈடுபட்டு
பிரம்மம் என்று உன்னை தியானித்து பல பிறவிகள் கடந்து உன்னை அடைகின்றனர் .

த்வத் பக்திஸ்து கதா ரஸாம்ருதஜரி
நிர்மஜ்ஜனேன ஸ்வயம்
ஸித்த்யந்தீ விமல ப்ரபோத பதவீம்
அக்லேசத : தன்வதீ
ஸத்ய : ஸித்திகரீ ஜயத்யிவிபோ
சைவாஸ்துமே த்வத்பத
பிரேம ப்ரௌடி ரஸார்த்ரதற த்ருத்தரம்
வாதால யாதீச்வர !!–10-

பிரபுவான குருவாயுரப்பனே !! உன்னிடம் உள்ள பக்தி என்பது உனது லீலைகள் நிரம்பிய கதைகளில் அல்லவா உள்ளது ?
அவை அமிர்தம் போன்று உள்ளன . அவை (கதைகள்) எந்த சிரமமும் இன்றி உனது மார்கத்தை காண்பிக்கின்றன.
பிறவியின் பயனை உடனே அளிக்கின்றன .
உன்னுடைய திருவடிகளில் நான் பொதிந்து கிடக்கும் அந்த பக்தி சீக்கிரம் உண்டாக வேண்டும் .

இரண்டாவது தசகம் முற்றியது .

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கிருஷ்ணாவதார திவ்ய சேஷ்டிதங்களின் ஸ்வாபதேச அர்த்தங்கள் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

September 13, 2020

பிறப்பிலி அன்றோ
என்நின்ற யோனியுமாய்ப் பிறக்கிறான்
சாது சானத்தை நலியும் கஞ்சனை சாதிப்பதற்கு ஆதி யம் யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த –
கம்ச சிசுபாலாதிகளைக் களைந்து
மாலா காரர் விதுரர் அக்ரூராதிகளுக்கு தனது திவ்ய மங்கள விக்ரஹத்தை காட்டி வாழ்வித்து அருளி
கலி கஷ்மங்களைக் கழித்து க்ருத யுக தர்ம பிரசாரம் செய்யவே ஸ்ரீ கீதாச்சார்யனின் திவ்ய அவதாரம்

பிறந்து உலகம் காத்து அளிக்கும் பேர் அருட் கண்ணா-திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 50-
மண்ணின் பாரம் நீக்குதற்கே வட மதுரை பிறந்த பிறவியை-பிறந்தவாறும் -என்று ஈடுபடும்படி அவதரித்ததும்-
திருவவதரித்து ஜகத்தை ரஷித்து
நோக்கிப் போரும் நிரவதிக கிருபணாவானனான ஸ்ரீ கிருஷ்ணனே -நல்லருள் நம்பெருமான் –நிரவதிக தயாவானவன்

ஸ்ரீ கீதாச்சார்யன் திரு அவதரிக்கும் இடம் சிறைக்கூடம்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி யம் சிறையே -சம்சார மண்டலமே சிறைக்கூடம்
இருள் தரும் மா ஞாலம் ஆகையால் இருள் மலிந்த இடத்தில் ஆச்சார்யன் வந்து பிறக்கிறான்
இருள் நாள் பிறந்த அம்மான் -கலியன்
வேண்டித் தேவர் இரக்க –வீங்கிருள் வாய் வந்து பிறக்கிறான்
ஆச்சார்யர் திரு அவதரிக்கும் இந்நிலத்திலே பலரும் வந்து பிறந்தாலும் அவர்கள் பிறப்பும் இறப்பும் மட்டும் அறிவது போல்
மக்கள் அறு வரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில் சிக்கென வந்து பிறந்து
அனைத்தையும் செய்து முடித்து கிருதக்ருத்யனாய் -இன்னார் தூதன் என நிற்கிறான்
பழுதே பிறந்து இறந்தார் இடைத் தான் வீறு பெற்று
ஸ்ரீ பாண்டவர் தூதனாகவும் ஸ்ரீ பார்த்த சாரதியாகவும் இன்றும் இருந்து நிலை நின்று அருளுகிறான்

திரு அவதரிக்கும் பொழுதே சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையனாகவே சுடர் விளக்கத்துடன் திரு அவதரித்தான்
ஆச்சார்யர்கள் பிறக்கும் இடம் ஒன்றாய் வளரும் இடம் வேறு ஒன்றாய் தானே இருக்கும்
திரு மந்திரத்தில் பிறந்து த்வயத்தில் வளர்ந்து த்வய ஏக நிஷ்டராய் இருப்பது போல்
திரு வடமதுரையில் பிறந்து திரு ஆயர்பாடியில் வளர்ந்து -பிறந்தவாறும் வளர்ந்தவாறும் என்று
அறிவுடையார் எத்திறம் என்று மோஹிக்கும் படி பிறந்து வளர்ந்தான் ஆயிற்று –

வட மதுரையில் இருந்து திரு ஆய்ப்பாடிக்கு எழுந்து அருளும் போது பேர் ஆழமாக இருந்த தூய யமுனையும் முழந்தாள் அளவும் வற்றி
ஆச்சார்யர்கள் சஞ்சரிக்கத் தொடங்கும் போதே -பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால் -போல்
சம்சார ஸாகரமும் வற்றத் தொடங்கி -வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் –
பெருமைகளை அடக்கிக் கொண்டு நீறு பூத்த நெருப்பு ஆகி இடக்கை வலக்கை அறியாத ஆயர்கள் கொழுந்தாய் வளர்வது போல்
மிகு ஞான சிறு குழவியாய் -சிறு மா மானிடராய் -அறிவில்லா மனிதர்களோடு கலந்து பழகுவது ப்ரத்யக்ஷம் –

தீய புந்திக் கொஞ்சநாள் ஏவப்பட்ட பூதநா ஸ்தனங்கள் -மாயா பிரகிருதி –சப்தாதி விஷயங்களைக் காட்டி
மோஹிப்பிக்கும் கண்டு கேட்டு மோந்து உண்டு உழலும் சிற்றின்பங்களை வேரற அறிந்து
தனக்கு அபாய லேசமும் இன்றி விளங்கும் ஆச்சார்யர் படிக்கு ஸூ சகம்

கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி –
நல்ல சங்கடமும் இருப்பதாலே கள்ளச் சகடம் என்றது
சுக்ல கதி அர்ச்சிராதி மார்க்கமும் –கிருஷ்ண கதி என்ற தூ மாதி மார்க்கங்களும் உண்டே
ஆச்சார்யன் திருவடி ஸ்பர்சத்தாலே கள்ளச் சகடத்தை -தூமாதி கதி த்வம்ஸம்
உண்டாகியே தீரும் என்பதைக் காட்டியபடி

யாமளார்ஜுன பங்க விருத்தாந்தம்
இணை பிரியாதே இருக்கும் இரட்டைகள் -ஸூக துக்கங்கள் ஸீதோ உஷ்ணம் -அஹங்கார மமகாரங்கள்
காம க்ரோதம் புண்ய பாபங்கள் ஆகிய த்வந்தங்கள் ஆச்சார்ய திருவடி ஸ்பர்சத்தாலே இற்று ஒழியுமே
குபேர புத்ரர்கள் நள கூபரன் மணி க்ரீவன் -நாரத ரிஷி சாபத்தால் இரட்டை மருதுகள்
உபாதியால் இரட்டைகள் நம்மை நலிகின்றன என்பதுக்கு எடுத்துக் காட்டு
காமக்ரோதங்களுக்கு உத்தேச்ய ஆகாரமும் ஹேய ஆகாரமும் உண்டே
சேம நல் வீடும் பொருளும் தர்மமும் சீரிய நல் காமமும் இவை நான்கு என்பர் -நான்கினும் கண்ணனுக்கே ஆமது காமம்
கோபஸ்ய வசமாயும் ஜிதக்ரோதனாயும் தானே பெருமாளும்
சிற்றின்பம் ஹேயமாய் அந்தமில் பேரின்பம் உபாதேயமாயும் இருக்குமே
துக்கமும் சம்சார அளவில் ஹேயமாய்
சாயலோடு மணி மாமை தளர்ந்தேன் நான்
ஆடி ஆடி அகம் கரைந்து
நோயும் பசலையும் மீதூர -என்கிறபடி பகவத் விஷயத்தில் உபாதேயமுமாயும் இருக்கும் அன்றோ –

ஐந்தலை வாய் காளியன் யமுனை ஆற்றைக் கலக்கியது அபார்த்தங்களாலே வேதங்களையே கலக்கியத்துக்கு த்ருஷ்டாந்தம்
அத்தை நீக்கி யமுனையை சர்வ உஜ்ஜீவன மாக ஆக்கி
தூய பெரு நீர் யமுனைத்துறைவன் -இடையறாத பகவத் சம்பந்தம் -வேதைக சமைதி கம்யன் –
மறை நான்கின் உளாயோ
மாதாந்தரஸ்தர்கள் ஐந்து வித துர்வாதங்கள்
1-ஈஸ்வரனே இல்லை என்றும்
2-ஈஸ்வரன் உண்டு அவன் ஆனுமானிகனே -சாஸ்த்ர சித்தன் அன்று என்றும்
3-ஸாஸ்த்ர சித்தன் என்று அங்கீ கரித்தும் அவனுக்கு குண விக்ரஹாதிகள் இல்லை என்றும்
4-ஈஸ்வரன் ஒருவனே என்பது இல்லை -பல ஈஸ்வரர் உண்டு என்னுதல்
5-பிரபஞ்சம் எல்லாமே மாயைத் தோற்றமே என்னுதல்
காளியன் தலையிலே அடி இட்டு நட்டம் ஆடினால் போல்
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே -என்னப் பண்ணுவார் ஆச்சார்ய திருவடி சம்பந்தத்தாலேயே –

வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே
வாயுள் வையகம் கண்ட மட நல்லார்
ஆச்சார்யர்கள் திரு வாக்கில்
ஸ்ருதிகள்
ஸ்ம்ருதிகள்
இதிஹாஸங்கள்
புராணங்கள்
பாஞ்சராத்ர ஆகமங்கள்
அருளிச் செயல்கள்
பூர்வாச்சார்ய ஸ்ரீ வசன பூஷணங்கள் –ஆகிய ஏழையும் ஆஸ்ரிதர்க்குக் காட்டி அருளுவார்கள்

விளவின் காய் கன்றினால் வீழ்த்தி
புற மத நிரசனங்களை பரஸ்பர விரோதங்களைக் காட்டி ஆச்சார்யர்கள் நிரசனம்
அனைத்தும் பொய் என்று சொல்கிறீர்களே நீங்கள் சொல்லும் இந்த வார்த்தை மெய்யா பொய்யா
இதுவும் பொய்யானால் உங்கள் பஷமும் பொய்யாகுமே
இப்படி எதிரியைக் கொண்டே எதிரியை முடித்தமை உண்டே

கோவர்த்தன உத்தாரணம்
தேவதாந்த்ர பஜனம் கூடாதே
மறந்தும் புறம் தொழா மாந்தர்
திருவில்லாத் தேவரை தேறேல்மின் தேவு
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாக வந்தவனுக்கே பூவும் பூசனையும் தகும்
குற்றம் செய்தவர் பக்கல் கிருபையும் பொறையும் உகப்பும் சிரிப்பும் கிருதஜ்ஜா அனுசந்தானமும் நடக்க வேணுமே
குன்றம் எடுத்து ஆநிரை காத்த குணம் போற்றி
ஏழு நாள் பெரு மழையில் இருந்தும் காத்து அருளினான் கண்ணபிரான்
ஆச்சார்யர்களோ அநந்த சம்சார சாகரத்தில் இருந்தும் உத்தரித்து அருளுகிறார்

கேசி வதம்
ஜிதேந்த்ரியராக ஆச்சார்யர் நம்மைத் திருத்திப் பணி கொள்வார்கள்

இரண்டு மல்லர் நிரசனம்
நீர் நுமது என்ற இவை வேர் முதல் மாய்த்து
குவலயா பீட மதக்களிற்றை நிரசித்தது
மதக்களிற்று ஐந்திணையும் சேரி திரியாமல் செந்நி றீ இ -பொய்கையார்

மாலாகாரர் சூட்டிய புஷ்பத்தை உகந்தது
செண்பக மல்லிகை இத்யாதி
அஹிம்சா பிரதம புஷபம் இத்யாதி

ஏழு எருதுகளை அடக்கி ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டியை கடிமணம் புரிந்து அருளினான்
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பது ஒரு மங்கள ஸூத்ரம் போல் திருமந்திரம் கொண்டு
1-காமம்
2-க்ரோதம்
3-லோபம்
4-மோஹம்
5-மதம்
6-மாத்சர்யம்
7-அஸூயை –ஆகிய ஏழு விரோதிகளை தொலைத்து அருளுகிறார்

சிசுபாலாதிகளை முடித்து பாண்டவர்களை வாழ்வித்தது போல்
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான்மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் என்னும்படியாக நாட்டிய நீசச் சமயங்களை மாள்வித்து
அர்த்த பஞ்சகம் போன்ற விசேஷ அர்த்தங்களை எங்கும் விளங்காகி செய்து அருளும் ஆச்சார்யர்கள்படியே
ஸ்ரீ கீதாச்சார்யரின் அனைத்து சேஷ்டிதங்களும் என்றபடி
இங்கனம் அநேக விஷயங்கள் எங்கும் கண்டு கொண்டு களிப்புறுவோமாக

————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஔவையார் நூல்கள்–1. ஆத்திசூடி / 2. கொன்றை வேந்தன் /3. மூதுரை / 4. நல்வழி–

June 27, 2020

கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

உயிர் வருக்கம்

1. அறம் செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண் எழுத்து இகழேல்.
8. ஏற்பது இகழ்ச்சி.
9. ஐயம் இட்டு உண்.
10. ஒப்புரவு ஒழுகு.
11. ஓதுவது ஒழியேல்.
12. ஔவியம் பேசேல்.
13. அஃகம் சுருக்கேல்.

உயிர்மெய் வருக்கம்

14. கண்டொன்று சொல்லேல்.
15. ஙப் போல் வளை.
16. சனி நீராடு.
17. ஞயம்பட உரை.
18. இடம்பட வீடு எடேல்.
19. இணக்கம் அறிந்து இணங்கு.
20. தந்தை தாய்ப் பேண்.
21. நன்றி மறவேல்.
22. பருவத்தே பயிர் செய்.
23. மண் பறித்து உண்ணேல்.
24. இயல்பு அலாதன செய்யேல்.
25. அரவம் ஆட்டேல்.
26. இலவம் பஞ்சில் துயில்.
27. வஞ்சகம் பேசேல்.
28. அழகு அலாதன செய்யேல்.
29. இளமையில் கல்.
30. அரனை மறவேல்.
31. அனந்தல் ஆடேல்.

ககர வருக்கம்
32. கடிவது மற.
33. காப்பது விரதம்.
34. கிழமைப்பட வாழ்.
35. கீழ்மை அகற்று.
36. குணமது கைவிடேல்.
37. கூடிப் பிரியேல்.
38. கெடுப்பது ஒழி.
39. கேள்வி முயல்.
40. கைவினை கரவேல்.
41. கொள்ளை விரும்பேல்.
42. கோதாட்டு ஒழி.
43. கௌவை அகற்று.

சகர வருக்கம்
44. சக்கர நெறி நில்.
45. சான்றோர் இனத்து இரு.
46. சித்திரம் பேசேல்.
47. சீர்மை மறவேல்.
48. சுளிக்கச் சொல்லேல்.
49. சூது விரும்பேல்.
50. செய்வன திருந்தச் செய்.
51. சேரிடம் அறிந்து சேர்.
52. சையெனத் திரியேல்.
53. சொற் சோர்வு படேல்.
54. சோம்பித் திரியேல்.

தகர வருக்கம்
55. தக்கோன் எனத் திரி.
56. தானமது விரும்பு.
57. திருமாலுக்கு அடிமை செய்.
58. தீவினை அகற்று.
59. துன்பத்திற்கு இடம் கொடேல்.
60. தூக்கி வினை செய்.
61. தெய்வம் இகழேல்.
62. தேசத்தோடு ஒட்டி வாழ்.
63. தையல் சொல் கேளேல்.
64. தொன்மை மறவேல்.
65. தோற்பன தொடரேல்.

நகர வருக்கம்
66. நன்மை கடைப்பிடி.
67. நாடு ஒப்பன செய்.
68. நிலையில் பிரியேல்.
69. நீர் விளையாடேல்.
70. நுண்மை நுகரேல்.
71. நூல் பல கல்.
72. நெற்பயிர் விளைவு செய்.
73. நேர்பட ஒழுகு.
74. நைவினை நணுகேல்.
75. நொய்ய உரையேல்.
76. நோய்க்கு இடம் கொடேல்.

பகர வருக்கம்
77. பழிப்பன பகரேல்.
78. பாம்பொடு பழகேல்.
79. பிழைபடச் சொல்லேல்.
80. பீடு பெற நில்.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.
82. பூமி திருத்தி உண்.
83. பெரியாரைத் துணைக் கொள்.
84. பேதைமை அகற்று.
85. பையலோடு இணங்கேல்.
86. பொருள்தனைப் போற்றி வாழ்.
87. போர்த் தொழில் புரியேல்.

மகர வருக்கம்
88. மனம் தடுமாறேல்.
89. மாற்றானுக்கு இடம் கொடேல்.
90. மிகைபடச் சொல்லேல்.
91. மீதூண் விரும்பேல்.
92. முனைமுகத்து நில்லேல்.
93. மூர்க்கரோடு இணங்கேல்.
94. மெல்லி நல்லாள் தோள்சேர்.
95. மேன்மக்கள் சொல் கேள்.
96. மை விழியார் மனை அகல்.
97. மொழிவது அற மொழி.
98. மோகத்தை முனி.

வகர வருக்கம்
99. வல்லமை பேசேல்.
100. வாது முற்கூறேல்.
101. வித்தை விரும்பு.
102. வீடு பெற நில்.
103. உத்தமனாய் இரு.
104. ஊருடன் கூடி வாழ்.
105. வெட்டெனப் பேசேல்.
106. வேண்டி வினை செயேல்.
107. வைகறைத் துயில் எழு.
108. ஒன்னாரைத் தேறேல்.
109. ஓரம் சொல்லேல்.

————–

2. கொன்றை வேந்தன்

கடவுள் வாழ்த்து

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

உயிர் வருக்கம்

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.
8. ஏவா மக்கள் மூவா மருந்து.
9. ஐயம் புகினும் செய்வன செய்.
10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு.
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு.

ககர வருக்கம்
14. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை.
15. காவல்தானே பாவையர்க்கு அழகு.
16. கிட்டாதாயின் வெட்டென மற.
17. கீழோர் ஆயினும் தாழ உரை.
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்.
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்.
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.
22. கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி.
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு.
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை.

சகர வருக்கம்
26. சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை.
27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு.
28. சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு.
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு.
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.
31. சூதும் வாதும் வேதனை செய்யும்.
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்.
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு.
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்.
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.

தகர வருக்கம்
37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
40. தீராக் கோபம் போராய் முடியும்.
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.
43. தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்.
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு.
46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது.
47. தோழனோடும் ஏழைமை பேசேல்.

நகர வருக்கம்
48. நல்லிணக்கம் அல்லல் படுத்தும்.
49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை.
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை.
51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு.
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.
53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு.
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.
55. நேரா நோன்பு சீராகாது.
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்.
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்.
58. நோன்பு என்பதுவே (? என்பது) கொன்று தின்னாமை.

பகர வருக்கம்
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.
61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்.
62. பீரம் பேணி பாரம் தாங்கும்.
63. புலையும் கொலையும் களவும் தவிர்.
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்.
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்.
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.
67. பையச் சென்றால் வையம் தாங்கும்.
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்.

மகர வருக்கம்
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.
71. மாரி அல்லது காரியம் இல்லை.
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை.
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு.
77. மேழிச் செல்வம் கோழை படாது.
78. மை விழியார் தம் மனையகன்று ஒழுகு.
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்.
80. மோனம் என்பது ஞான வரம்பு.

வகர வருக்கம்
81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்.
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்.
83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்.
84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும்.
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்.
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.
88. வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை.
89. வைகல் தோறும் தெய்வம் தொழு.
90. ஒத்த இடத்து நித்திரை கொள்.
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்.

————-

3. மூதுரை-

கடவுள் வாழ்த்து
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கோல் என வேண்டா – நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால். 1

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே – அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர். 2

இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும்-இன்னாத
நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு. 3

அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும். 4

அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா . 5

உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ – கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான். 6

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு – மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகுமாம் குணம் . 7

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. 8

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே – தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. 9

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. 10

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம் – கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல். 11

மடல் பெரிது தாழை (;) மகிழ் இனிது கந்தம்
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா – கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும். 12

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் – அவைநடுவே
நீட்டோ லை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதவன் நன்மரம். 13

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் – தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி. 14

வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் – பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம். 15

அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா – மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு. 16

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு. 17

சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டால் அங் கென்னாகும்? – சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால். 18

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி – தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன். 19

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி – உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு. 20

இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் – இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும். 21

எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமே கருமம் – கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை. 22

கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே – விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம். 23

நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்தாற்போல்
கற்றாரைக் கற்றாறே காமுறுவர் – கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம். 24

நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு – நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர். 25

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் – மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு. 26

கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் – மெல்லிய
வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண். 27

சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடா (து;) ஆதலால் – தம்தம்
தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
மனம்சிறியர் ஆவரோ மற்று. 28

மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை
ஆகும்போ(து) அவளோடும் ஆகும்; அவள்பிரிந்து
போம்போ(து) அவளோடு (ம்) போம். 29

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் – மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம். 30

————

4. நல்வழி

கடவுள் வாழ்த்து
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா

புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல். 1

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி. 2

இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே
இடும்பொய்யை மெய்யென்(று) இராதே – இடுங்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு. 3

எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால் – கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு. 4

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமி(ன்) என்றால் போகா – இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில். 5

உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்
கடலோடி மீண்டும் கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு. 6

எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு. 7

ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் – தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம். 8

ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று)
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் – ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து . 9

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் – வேண்டா!
நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும்
எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும் 11

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் – ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது. 11

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே – ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு, 12

ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம் புவியதன் மேல். 13

பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை – சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும். 14

சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்
இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும். 15

தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் – பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி. 16

செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்?- வையத்து
“அறும்-பாவம்!” என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்? 17

பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் – மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம். 18

சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் – போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம். 19

அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும். 20

நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் – ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான். 21

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் – கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம். 22

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை. 23

நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் – மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் (;) பாழே
மடக்கொடி இல்லா மனை. 24

ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. 25

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம். 26

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் – ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல். 27

உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன – கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான். 28

மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை – சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர். 29

தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரை யோன் பொறிவழியே – வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி . 30

இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று(;) சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று – வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய்(;) பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி. 31

ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் – சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து. 32

வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்(;) வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது – நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும். 33

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் – இல்லானை
இல்லாளும் வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல். 34

பூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே – தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு. 35

நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் – ஒண்தொடீ
போதம் தனம்கல்வி பொன்றவரும் காலமயல்
மாதர்மேல் வைப்பார் மனம். 36

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை – நினைப்பதெனக்
கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க் கில்லை விதி. 37

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே – நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள். 38

முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் – செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு. 39

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். 40

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஔவையார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ கம்ப ராமாயணமும் ஸ்ரீ அருளிச் செயல்களும் -ஸ்ரீ அயோத்யா காண்டம் – —

March 11, 2020

ஸ்ரீ சீதா ராம ஜெயம்-

ஸ்ரீ கடவுள் வாழ்த்து –

வான்நின்று இழிந்து, வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும்,
ஊனும் உயிரும் உணர்வும்போல், உள்ளும் புறத்தும் உளன் என்ப-
கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை இழைப்ப, கோல் துறந்து,
கானும் கடலும் கடந்து, இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன்.-

சர்வமும் அவனது சரீரமே -வான் -மூல ப்ரக்ருதி –
வரம்பு இகந்து மா பூதத்தின் வைப்பொங்கும்–வரம்பு கடந்த பஞ்ச பூதங்களின் காரியமாய் பரவியுள்ள
பவ்திக பதார்த்தங்கள் தோறும் -உலகு எங்கும் உடலும் உயிரும் போலவும் உயிரும் உணர்வும் போலவும்
உள்ளும் புறமும் நிறைந்து இருப்பவன் –

திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசைப்
படர்பொருள் முழுவதும் ஆய்அவை அவைதொறும்
உடல்மிசை உயிர்எனக் கரந்துஎங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவைஉண்ட சுரனே.—1-1-7-

சுரர் அறிவு அருநிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாய் அவை முழுது உண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே–-ஸ்ரீ திருவாய் மொழி-1-1-8-

வான்நின்று இழிந்து–பால காண்ட நிகழ்ச்சி-ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த அவதாரம்
கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை இழைப்ப, கோல் துறந்து,–கைகேயி சொல்லால் தொன்னகரம் துறந்த அயோத்யா காண்ட செய்தி
கானும்–ஆரண்ய காண்ட நிகழ்ச்சி
கடலும் கடந்து–ஸூந்தர காண்ட நிகழ்ச்சி
இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன்.-இராவண வதப் பிரயோஜனம்
யாவரும் வந்து அடி வணங்க திரு அயோத்தியில் திறல் விளங்கு மாருதியுடன் வீற்று இருந்ததை அருளிச் செய்கிறார்

—————–

புக்க பின் நிருபரும் பொருவில் சுற்றமும்
பக்கமும் பெயர்க எனப் பரிவின் நீக்கினான்
ஓக்க நின்று உலகு அளித்து யோகம் எய்திய
சக்கரத்தவன் எனத் தமியன் ஆயினான் —மந்திரப் படலம்–5-

சக்ரவர்த்தி தனியன் ஆனமை-உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் 5-4-11-
ஆலினிலை யதன் மேல் பைய உயோகு துயில் கொண்ட பரம் பரனே –பெரியாழ்வார் திருமொழி 1-5-1-

———–

புறத்து நாம் ஒரு பொருள் இனிப் புகல்கின்றது எவனோ
அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான் என்பது அல்லால்
பிறத்தி யாவையும் காத்து அவை பின் துறத் துடைக்கும்
திறத்து மூவரும் திருந்திடத் திருத்தும் அத்திறலோன் -39-

மூவர் காரியமும் திருத்தும் முதல்வன் –பெரியாழ்வார் திருமொழி–4-4-1-
வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதி- –
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் -என்றுமாம் –

———

மண்ணினும் நல்லாள் மலர்மகள் கலைமகள் கலையூர்
பெண்ணினும் நல்லாள் பெரும் புகழ்ச் சனகியோ நல்லாள்
கண்ணிலும் நல்லான் கற்றவர் காற்றிலா தவறும்
உண்ணு நீரினும் உயிரினும் அவனையே யுவப்பார் —

வலிய சிறை புகுந்தாள் அன்றோ தேவ மாதர் சிறை விலக்க-
தன்னடியார் –இத்யாதி -பெரியாழ்வார் 4-9-2-
உண்ணும் சோறு பருகு நீர்
தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் 6-7-1-

——————

பெண்ணின் இன்னமுது அன்னவள் தன்னோடும் பிரியா
வண்ண வெஞ்சிலைக் குரிசிலும் மருங்கு இனிது இருப்ப
அண்ணல் ஆண்டு இருந்தான் கரு நற வெனத்தான்
கண்ணும் உள்ளமும் வந்து எனக் களிப்புறக் கண்டான் -சுமந்திரன் திவ்ய தம்பதிகளை கண்டமை-

வழு விலா அடிமை செய்யும் இளைய பெருமாளும் அகலகில்லேன் இறையும் என்று இருக்கும் பிராட்டி உடன்
பச்சை மா மலை போன்ற திருமேனியுடன்
நித்யர்கள் கண்டு அனுபவிக்குமா போலே அன்றோ சுமந்திரன் அனுபவித்தான் –
அவன் தவப்பயன் அன்றோ என்கிறார் –

நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே––ஸ்ரீ திருவாய் மொழி–5-5-3-

————–

கண்டு கை தொழுது ஐயவிக் கடலுடைக் கிழவோன்
உண்டு ஓர் காரியம் வருக என உரைத்தனன் எனலும்
புண்டரீகக் கண் புரவலன் பொருக்கென எழுந்து ஓர்
கொண்டல் புலவன் கொடி நெடும் தேர் மிசைக்கொண்டான் -53-

கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ
அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக் கண்ணன் செங்கனிவாய் கரு மாணிக்கம் 3-3-5–
திருகி செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும் செவ்வடியும் செய்ய கையும் -8-4-7-
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் –திரு விருத்தம் -45-

———–

ஏனை நிதியினையவும் வையகம்
போனகற்கு விளம்பிப் புலன் கொளீஇ
ஆணவனோடும் ஆயிர மௌலியான்
தானம் நண்ணினான் தத்துவம் நண்ணினான் -மந்தரை சூழ்ச்சிப் படலம்–22-

வையகம் போனகற்கு–சஹஸ்ர சீர்ஷா புருஷன் -இவனே பரம புருஷன் -பரம தத்வம்
ஸஹ பத்ந்யா விசாலாஷ்யா நாராயணம் உபாகமத்

தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க்கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய் தமியனேன் பெரிய அப்பனே 8-1-10-

————–

தொண்டை வாய்க் கேகயன் தோகை கோயிலின் மேல்
மண்டினாள் வெகுளியின் மடித்த வாயினாள்
பண்டை நாள் இராகவன் பாணி வில்லுமிழ்
உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உன்னுவாள்-41-

வால்மீகி அருளிச் செய்யாத விருத்தாந்தம்
ஞாநிதாசீ யதோ ஜாதா கைகேயியாஸ்து ச ஹோஷிதா
பிரசாதம் சந்த்ர ஸ்ங்காஸம் ஆருரோஹ யதிருச்சயா–அயோத்யா 7-1-
யதிருச்சயா –பகவத் சங்கல்பத்தால் வந்தாள்
கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன்
உண்டை கொண்ட அரங்கவோட்டி உள் மகிழ்ந்த நாதன் –திருச்சந்த -49-
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெரித்தாய் கோவிந்தா -1-5-5-
கூனகம் புகத்தெறித்த கொற்ற வில்லி –திருச்சந்த -30-

தீய மந்தரை இவ்வுரை செப்பலும் தேவி
தூய சிந்தையும் திரிந்தது சூழ்ச்சியின் இமையோர்
மாயையும் அவர் பெற்றுள்ள வரம் உண்மையாலும்
ஆய அந்தணர் இயற்றிய யரும் தவத்தாலும் -76-

அரக்கர் பாவமுமம் அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க நல்லருள் துறந்தனள் தூ மொழி மடமான்
இரக்கம் இன்மை யன்றோ இன்று இவ்வுலகங்கள் இராமன்
பரக்கும் தொல் புகழ் அமுதினைப் பருகுகின்றதுவே -78-

சிறை சிறந்தவள் ஏற்றம் சொல்ல வந்த படி கொண்ட கீர்த்தி ராமாயணம் எனும் பக்தி வெள்ள அமுதம் பருகுகிறோம்

வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழ் கடல்களும்
போனகம் செய்து ஆலிலைத் துயின்ற புண்டரீகனே
தேனகம் செய் தண்ணறு மலர்த் துழாய் நன் மாலையாய்
கூனகம் புகத்தெறித்த கொற்ற வில்லி யல்லையே –30-

—————-

மூவராய் முதலாகி மூலமதாகி ஞாலமும் ஆகிய
தேவ தேவர் பிடித்த போர் வில் ஒடித்த சேவகர் சேணிலம்
காவலன் மா முடி சூடு பேர் எழில் காணலாம் எனும் ஆசை கூர்
பாவை மார்முகம் என்ன முன்னம் மலர்ந்த பங்கய வாவியே -62-

முதலாவார் மூவரே அம்மூவருள்ளும் முதலாவான் முரி நீர் வண்ணன் –முதல் திருவந்தாதி -15-

மூவர் ஆகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சாவம் உள்ளன நீக்குவானைத் தடம் கடல் கிடந்தான் தன்னைத்
தேவ தேவனைத் தென் னிலங்கை எரி எழச் செற்ற வில்லியைப்
பாவ நாசனைப் பங்கயத் தடங் கண்ணனைப் பரவுமினோ–-ஸ்ரீ திருவாய் மொழி-3-6-2-

———————

என்றனள் என்னக் கேட்டான் எழுந்த பேருவகை பொங்கப்
பொன் திணி மாட வீதி பொருக்கென நீங்கிப் புக்கான்
தன் திரு உள்ளத்துள்ளே தன்னையே நினையுமற்றக்
குன்றிவர் தோளினானைத் தொழுது வாய் புதைத்துக் கூறும் -80-

தான் மேற்கொண்ட அவதாரத்தையும் செய்ய வேண்டிய செயல்களையும் நினைத்து குல தெய்வமான
ஸ்ரீ மந் நாராயணனைத் தியானித்து இருந்தான் –

————-

உயர் அருள் ஒண் கண் ஒக்கும் தாமரை நிறத்தை ஒக்கும்
புயல் மொழி மேகம் என்ன புண்ணியம் செய்த என்பார்
செயலரும் தவங்கள் செய்து இச்செம்மலைத் தந்த செல்வத்
தயரதற்கு என்ன கைம்மாறு உடையும் யாம் தக்கது என்பார் -89-

மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி ஒக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் –திரு விருத்தம் -32-

நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தான் என்று ஆலும்–திருவாய் -4-4-4-
கரும் பெரு மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏறப் பறக்கும்-4-4-9-

————–

நீல மா முகில் அனான் தன் நிறைவினோடு அறிவும் நிற்க
சீலம் ஆர்க்கு உண்டு கெட்டேன் தேவரின் அடங்குவனோ
காலமாகக் கணிக்கும் நுண்மைக் கணக்கையும் கடந்து நின்ற
மூலமாய் முடிவிலாத மூர்த்தி இம் முன்பன் என்பார் -91- முன்பன்-முதல்வன்

கெட்டேன் -வெறுத்துப் போய்க் கையை
நெரித்துக் கூறும் துயர மிகுதியைக் காட்டும் – விஷாத அதிசயம் —

வாளாவாகிலும் காணகில்லார் பிறர் மக்களை மையன்மை செய்து
தோளால் இட்டவரோடு திளைத்து நீ சொல்லப்படாதவன செய்தாய்
கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி கெட்டேன் வாழ்வு இல்லை நந்தன்
காளாய் உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-8 –

——————-

வேத்து அவை முனிவரோடு விருப்பொடு களிக்கும் மெய்ம்மை
ஏத்தவை இசைக்கும் செம் பொன் மண்டபம் இனிதின் எய்தான்
ஒத்து அவை உலகத்து எங்கும் உள்ளவை உணர்ந்தார் உள்ளவும்
பூத்தவை வடிவை ஓப்பான் சிற்றவை கோயில் புக்கான் -101-

உலகத்து எங்கும் உள்ளவை உணர்ந்தார் உள்ளவும் பூத்தவை வடிவை ஓப்பான் –
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்தது எப்பேர் மற்றப்பேர் -தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம்–44-

————

விநயத்துடன் இராமன் கைகேயி இடம் இருந்தமை –

வந்தவள் தன்னைச் சென்னி மண்ணுற வணங்கி வாசச்
சிந்துரப் பவளச் செவ்வாய் செங்கையில் புதைத்து மற்றைச்
சுந்தரத் தடக்கை தானை மடக்குறத் துவண்டு நின்றான்
அந்தி வந்து அடைந்த தாயைக் கண்டா ஆன் கன்றின் அன்னான் -104-

கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பி பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ –நாச் 7-1-
சர்வ கந்த சர்வரச
பச்சை மா மலை போல் மேனி பவளச் செவ்வாய் –திருமாலை -2-
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்பா நீ காண வாராய் -திருவாய் -9-2-4-
பவளம் போல் கனிவாய் சிவப்ப 9-2-5-

நின்றவன் தன்னை நோக்கி, இரும்பினால் இயன்ற நெஞ்சில்
கொன்று உழல் கூற்றம் என்னும் பெயர் இன்றிக் கொடுமை பூண்டாள்,
‘இன்று எனக்கு உணர்த்தலாவது ஏயதே என்னில் ஆகும்;
ஒன்று உனக்கு உந்தை, மைந்த! உரைப்பதோர் உரையுண்டு’ என்றாள். 109-

விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதி ஓன்று இல்லை இரும்பு போல் வலிய நெஞ்சம் –திருமாலை -17-

கரும்பன மொழியினர் கண் பனிக் கிலர்
வரம்பறு துயரினால் மயங்கியே கொலாம்
இருப்பன மனத்தினர் என்ன நின்றனர்
பெரும் பொரு விழுந்தனர் போலும் பெற்றியார் -நகர் நீங்கு படலம்–176-

—————

கையைக் கையினால் நெரிக்கும் தன் காதலன்
வைகும் ஆலிலை அன்ன வயிற்றினை
பெய்வளைத் தளிரால் பிசையும் பகை
வெய்துயிர்க்கும் விழுங்கும் புழுங்குவாள் -1-கோசலையார் வருந்துதல்

ஸ்ரீ ராமபிரான் பன்னிரு திங்கள் எழுந்து அருளிய திரு வயிறு -ஆலிலை அன்னதாக்க -சாமுத்ரிகா லக்ஷணம்
வடதள தேவகீ ஜடர வேத சிரஸ் கமலாஸ்தந சடகோப வாக் வபுஷி ரங்க்ருஹ்யே சயிதம் –பூர்வ சதகம் -78-
பெய் வளைக் கைகளைக் கூப்பிப் பிரான் கிடைக்கும் கடல் என்னும் -4-4-2-

—————

என்னின் முன்னம் வனம் நீ அடைதற்கு எளியேன் ஆலன்
உன்னின் முன்னம் புகுவேன் உயர் வானகம் யான் என்றான் -59-

தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும்
சுமித்ரையும் சிந்தை நோவ
கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட
கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த
வள நகரைதுறந்து நானும்
வானகமே மிக விரும்பி போகின்றேன்
மனு குலத்தார் தங்கள் கோவே! —-பெருமாள் திருமொழி –9-10–

பூணார் அணியும், முடியும், பொன்னா சனமும், குடையும்,
சேணார் மார்பும், திருவும், தெரியக் காணக் கடவேன்,
மாணா மரவற் கலையும், மானின் தோலும் அவைநான்
காணாது ஒழிந்தேன் என்றால், நன்று ஆய்த்து அன்றோ கருமம்? 65

பூ மருவி நறும் குஞ்சி சடையா புனைந்து
பூம் துகில் சேர் அல்குல்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது
அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று
செல தக்க வனம் தான் சேர்த்தல்
தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே!
வசிட்டனே! சொல்லீர் நீரே –9-7-

—————

கண்ணின் கடைத் தீயுக, நெற்றியில் கற்றை நாற,
விண்ணிற் சுடரும் சுடர் தோன்ற, மெய்ந்நீர் விரிப்ப,
உள் நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க, நின்ற
அண்ணல் பெரியோன் தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான். 112-பொங்கும் பிரிவால் இளைய பெருமாள்

ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி யாம் காண
வல்லமே யல்லமே மா மலரான் வார் சடையான்
வல்லரே அல்லரே வாழ்த்து––நான்முகன் திருவந்தாதி –10-

விடம் காலும் தீவாய் அரவணையான் -இரண்டாம் திருவந்தாதி -71-
பாசுரங்களை உட்க்கொண்டே கண்ணில் கடைத்தீ உக -என்கிறார்
ஆதிசேஷன் அழல் உமிழும் சேவை இன்றும் மெய்யானைத் தடவரை மேல் கிடந்த -திரு மெய்யத்தில் காணலாமே –

—————-

பின், குற்றம் மன்னும் பயக்கும் அரசு” என்றல், பேணேன்;
முன், கொற்ற மன்னன், “முடி கொள்க” எனக் கொள்ள மூண்டது
என் குற்றம் அன்றோ? இகல் மன்னவன் குற்றம் யாதோ?-
மின்குற்று ஒளிரும் வெயில் தீக்கொடு அமைந்த வேலோய்! 128–

தனது குற்றமாகவே ராமபிரான் -இதில் –
ந மந்தராயா ந ச மாதுரஸ்யா தோஷா ந ராஜ்ஜோ ந ச ராகவஸ்ய
மத் பாபமே வாத்ர நிமித்தம் ஆஸீத் வந பிரவேச ராகு நந்தனஸ்ய—வால்மீகி –அயோத்யா 86-1-
என்னும் பரதாழ்வானைப் போல
நானே தான் ஆயிடுக -பாசுரக் கருத்து –

நதியின் பிழை யன்று யரும் புனல் இன்மை யன்றே
பதியின் பிழை யன்று பயந்து நம்மைப் புரந்தாள்
மதியின் பிழை யன்று மகன் பிழை யன்று மைந்த
விதியின் பிழை நீ இதற்கு என்னை விழுந்தது என்றான் -134-

——————-

ஆகாதது அன்றால் உனக்கு; அவ் வனம் இவ் அயோத்தி;
மா காதல் இராமன் நம் மன்னவன்; வையம் ஈந்தும்
போகா உயிர்த் தாயர் நம் பூங் குழல் சீதை-என்றே
ஏகாய்; இனி, இவ் வயின் நிற்றலும் ஏதம்’ என்றாள். 146

பின்னும் பகர்வாள், ‘மகனே! இவன் பின் செல்; தம்பி
என்னும் படி அன்று அடியாரினில் ஏவல் செய்தி;
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா; அது அன்றேல்
முன்னம் முடி’ என்றனள், வார் விழி சோர நின்றாள். 147-

ராமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜனகாத்மஜாம்
அயோத்யாம் அடவீம் வித்தி கச்ச தாத யதா ஸூகம் –அயோத்யா -40-10-
அஹம் அஸ்ய அவரோ பிராதா குணைர் தாஸ்யம் –கிஷ்கிந்தா -4-11-

———–

வீற்றிடம் தாமரைச் செங்கண் வீரனை
உற்று அடைந்து ஐய நீ உருவி ஓங்கிய
கல் தடம் காணுதி என்னின் கண்ணகல்
மால் தடந்தானையான் வாழ்கிலான் என்றான் -166-

கல்லணை மேல் கண் துயிலக் கற்றனையோ –பெருமாள் 9-2-
எவ்வாறு நடந்தாய் எம்மிராமாவோ -9-3-
கல் நிறைந்து தீந்து கழை உடைந்து கால் கழன்று –பெரிய திருமடல் -48-

————-

நீர் உளஎனின் உள, மீனும் நீலமும்;
பார் உளஎனின் உள, யாவும்; பார்ப்புறின்,
நார் உள தனு உளாய்! நானும் சீதையும்
ஆர் உளர் எனின் உளம்? அருளுவாய்!’ என்றான். 152-

ந ச சீதா த்வயாஹீநா ந சாஹம் அபி ராகவா
முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலாந்மத்ஸ்யா விவோத்த்ருதவ் –அயோத்யா -53-31-

————

தகவு மிகு தவமும் இவை தழுவ உயர் கொழுநர்
முகமும் அவர் அருளும் நுகர் சிலர்கள் துயர் முதுகை
அகவும் இள மயிர்களும் உயிர் அலசியன அனையார்
மகவு முலை வருட இள மகளிர்கள் துயின்றார் -13-

இருமலை போல் எதிர்ந்த மள்ளர் இருவர் அங்கம் எரி செய்தாய் உன்
திரு மலிந்து திகழ் மார்பு தேக்க வந்து என் அல்குல் ஏறி
ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு
இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்து உணாயே -ஸ்ரீ பெரிய ஆழ்வார் திரு மொழி–2 2-8 – –

—————–

தேவியும் இளவலும் தொடரச் செல்வனைப்
பூவியல் கானகம் புக உய்த்தேன் என்கோ?
கோவினை உடன்கொடு குறுகினேன் என்கோ?
யாவது கூறுகேன், இரும்பின் நெஞ்சினேன்? 20–

புகழு நல் ஒருவன் என்கோ பொருவில் சீர்ப் பூமி என்கோ –திருவாய் 3-4-பதிகத்தை
பின்பற்றி அருளிச் செய்கிறார் –

அஞ்சனக் குன்றம் அன்ன அழகனும் அழகன் தன்னை
எஞ்சலில் பொன் போர்த்தன்ன இளவலும் இந்து என்பான்
வெஞ்சிலைப் புருவத்தாள் தன் மெல்லடிக்கு ஏற்ப வெண் நூல்
பஞ்சிடை படுத்தது என்ன வெண்ணிலாப் பரப்பப் போனார் -52-மூவரும் போனமை –

செந்தாமரைக் கண்ணோடும் செங்கனி வாயினோடும்
சந்தார் தடம் தோளொடும் தாழ் தடக் கைகளோடும்
வந்தார் அகலத்தோடும் அஞ்சனக் குன்றம் என்ன
வந்தான் இவனாகும் அவ்வளவில் இராமன் என்றாள் –சூர்ப்பனகை வர்ணனை -ஆரண்ய -மாரீச வதை படலம் -149-

கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ண மங்கையுள் நின்றானை
வஞ்சனப் பேய் முலை யூடு உயிர் வாய் மடுத்து உண்டானைச்
செஞ்சொல் நான் மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அஞ்சனக் குன்றன் தன்னை அடியேன் கண்டு கொண்டேனே–பெரிய திருமொழி-7-6-5-

வெஞ்சின வேழம் மருப்பொசித்த வேந்தர் கொல் ஏந்திழையார் மனத்தை
தஞ்சுடையாளர் கொல் யான் அறியேன் தாமரைக் கண்கள் இருந்தவாறு
கஞ்சனை யஞ்ச முன் கால் விசித்த காளையராவர் கண்டார் வணங்கும்
அஞ்சன மா மலையேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா –பெரிய திருமொழி–9-2-6-

மைந் நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றார்க்கு -10-6-8–

ஒன்றிய திங்களைக் காட்டி, ‘ஒளிமணி வண்ணனே!’ என்னும்;
நின்ற குன்றத்தினை நோக்கி, ‘நெடுமாலே! வா!’ என்று கூவும்;
நன்று பெய்யும் மழை காணில், ‘நாரணன் வந்தான்’ என்று ஆலும்;
என்று இன மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத்தையே–4-4-5-

————–

இந்திரன் முதல்வராய கடவுளர் யாரும் ஈண்டி,
சந்திரன் அனையது ஆங்கு ஓர் மானத்தின் தலையில் தாங்கி,
‘வந்தனன், எந்தை தந்தை!’ என மனம் களித்து, வள்ளல்
உந்தியான் உலகின் உம்பர் மீள்கிலா உலகத்து உய்த்தார். –தைலம் ஆட்டுப் படலம்–60-

வால்மீகி ஸ்வர்க்கம் போனதாக சொன்னதை கம்பர் வைகுண்ட மா நகரம் போனதாக அருளிச் செய்கிறார் –

————————

இராமன் சீதை இலக்குவனோடு காட்டில் செல்லல்
வெய்யோன் ஒளி தன்மேனியில் விரிசோதியின் மறையப்
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும், போனான்-
“மையோ, மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!” என்பதோர் அழியா அழகு உடையான். –கங்கைப் படலம்–1

நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே –அவனுடைய ஆனந்தத்துக்கு அவதி இன்றிக்கே
ஒழிகிறதும் வடிவில் வை லக்ஷண்யத்தால் அன்றோ –
நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே –பெரிய திருமொழி 1-5-9–

——————

பொழியும் கண்ணில் புதுப்புனல் ஆட்டினர்
மொழியும் இன் சொலின் மொய்ம்மலர் சூட்டினர்
அழிவில் அன்பு எனும் ஆரமிருது ஊட்டினர்
வழியின் வந்த வருத்தம் தணியவே -14-

புனையும் கண்ணி எனதுடைய வாசகம் செய் மாலையே -4-3-2-

——————

காயும் காணில் கிழங்கும் கனிகளும்
தூய தேடிக் கொணர்ந்தனர் தோன்றல் நீ
ஆய கங்கை யரும் புனலை ஆடினை
தீயை ஓம்பினை செய்யமுத்து என்றனர் -15-முனிவர்கள் ராமனுக்கு உபசாரம்

காடுகளூடு போய் கன்றுகள் மேய்த்து மறியோடிக் கார்க்கொடற்பூச்
சூடி வருகின்ற தாமோதரா கற்றுத் தூளி காண் உன்னுடம்பு
பேடை மயில் சாயல் பின்னை மணாளா நீராட்டம் அமைத்து வைத்தேன்
ஆடி அமுது செய் அப்பனும் உண்டிலன் உன்னோடு உடனே உண்பான் –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–3 3-3 –

வருந்தித் தான் தர வந்த அமுதையும்
அருந்து நீர் என்று அமரரை ஊட்டினான்
விருந்து மெள்ளடக்குண்டு விளங்கினான்
திருந்தினார் வாயின் செய்தது தேயுமோ -27-

அமுதம் அமரர்கட்க்கு இந்த நிமிர் சுடர் ஆழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீல் கடலானே -திருவாய் 1-6-5-

—————

விரி இருள் பகையை ஒட்டித் திசைகளை வென்று மேல் நின்று
ஒரு தனித் திகிரி உந்தி உயர் புகழ் நிறுவி நாளும்
இரு நிலத்து எவர்க்கும் உள்ளத்து இருந்து அருள் புரிந்து வீய்ந்த
செரு வலி வீரன் என்னச் செங்கதிர்ச் செல்வன் சென்றான் -49-அஸ்தமன சூர்யன் வர்ணனை

சீரரசாண்டு தன் செங்கோல் சில நாள் செலீ இ க்கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பாரளந்த
பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே – திரு விருத்தம் –80 – –
சூர்ய அஸ்தமனம் அரசன் ஆண்டு மறைந்தால் போலே என்றவாறு –

———–

குகன் இலக்குவனுக்குத் தன்னை அறிவித்தல்
கூவா முன்னம், இளையோன் குறுகி, ‘நீ
ஆவான் யார்?’ என, அன்பின் இறைஞ்சினான்;
‘தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென்;
நாவாய் வேட்டுவன், நாய் அடியேன்’ என்றான். 11

அன்னவள் உரை கேளா அமலனும் உரை நேர்வான்
என்னுயிர் அனையாய் நீ இளவல் உன் இளையான் இந்
நன்னுதல் அவள் நின் கேள் நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது நான் உன் தொழில் உரிமையில் உள்ளேன் -73-

அங்குள கிளை காவற்கு அமையின் உளன் ஊம்பி
இங்குள கிளை காவற்கு யார் உளர் இசையாய் நீ
உன் கிளை எனதன்றோ உறு துயர் உறலாமோ
என் கிளை இது கா என் ஏவலின் இனிது என்றான் -76-

ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1-

———–

தும்பியின் குழாத்தில் சுற்றும் சுற்றத்தன் தொடுத்த வில்லன்
வெம்பி வைந்து அழியா நின்ற நெஞ்சினன் விழித்த கண்ணன்
தம்பி நின்றானை நோக்கித் தலைமகன் தன்மை நோக்கி
அம்பியின் தலைவன் கண்ணீர் அருவி சோர் குன்றின் நின்றான் -54-

பொங்கும் பிரிவால் அதிசங்கை -இளையபெருமாள் ஸ்ரீ குகப்பெருமாளை அதிசங்கை பண்ண –
இருவரையும் அதிசங்கை பண்ணி ஸ்ரீ குகப்பெருமாள் பரிகரம் பெருமாளை நோக்கிற்று இறே-
தனித்தனியே கையும் வில்லுமாய்க் கொண்டு பெருமாளை ரஷித்தது அன்றோ
ஒரு நாள் முகத்திலே விழித்தவர்களை வடிவு அழகு படுத்தும் பாடாயிற்று இது –
ஆச சஷேத ஸத்பாவம் லஷ்மணஸ்ய மஹாத்மான
பரதாய அப்ரமேயாய குஹோ கஹந கோசர-86-1–
கழியின் பெருமையைக் கடலுக்குச் சொல்லப் போமோ –குகன் லஷ்மண பெருமையை பரதனுக்கு அறிவித்தமை –

————-

வான் புரை விழியாய் உன் மலர் புரை அடிமானத்
தாள் புரை தளிர் வைகும் தகை ஜிமிறு இவை காணாய்
கோள் புரை இருள் வாசக் குழல் புரை மழை காணாய்
தோள் புரை இள வேயின் தொகுதிகள் இவை காணாய் -17-

ஜிமிறு -வந்து மழை மேகம் வேய் மூங்கில் தொகுதிகளை சீதைக்கு ராமன் காட்டியது
கோள் புரை இருள் என்ற தொடர் -கொள்கின்ற கோள் இருள் –திருவாய் -7-7-9-

————

இராமனை எதிர்கொள்ள பரத்துவாச முனிவர் வருதல்
அருத்தியின் அகம் விம்மும் அன்பினன், ‘நெடு நாளில்
திருத்திய வினை முற்றிற்று இன்று’ எனல் தெரிகின்றான்,
பரத்துவன் எனும் நாமப் பர முனி, பவ நோயின்
மருத்துவன் அனையானை, வரவு எதிர்கொள வந்தான். 20-

எருத்துக் கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா மறு பிறவி தவிரத்
திருத்தி உன் கோயில் கடை புக பெய் திருமால் இரும் சோலை எந்தாய் –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–5-3 6-

——————–

வடம் கொள் பூண் முலை மட மயிலே மதக் கதமா
அடங்கு பேழ் வயிறு அரவு உரி அமை தொறும் தொடங்கித்
தடங்கல் தோறும் நின்று ஆடு தண்டலை அயோத்தி
முடங்கி மாளிகைத் துகில் கொடி நிகர்ப்பன நோக்கால் -4-சித்ர கூட இயற்க்கை வளங்களை காண்கிறாள்

இடி கொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும்
கடிய மா சுணம் கற்று அறிந்தவர் என அடங்கிச்
சடை கொள் சென்னியர் தாழ்விலார் தாம் மிதித்து ஏறப்
படிகளாம் எனத் தாழ்வரை கிடப்பது பாராய் -35-

கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட களிறு என்று
பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி எம்பெருமானை
வரி கொள் வண்டு அரை பைம் பொழில் மங்கையர் கலியனதொலி மாலை
அரியவின்னிசை பாடு நல்லடியவர்க்கு அருவினை யடையாவே ––பெரிய திருமொழி–1-2-10-

—————

உவரி வாய் அன்றிப் பாற் கடல் உதவிய அமுதே
துவரின் நீள் மணித் தடம் தோறும் இடம் தோறும் துவன்றிக்
கவரிப் பால் நிற வால் புடை பெயர்வன கடிதில்
பவளமால் வரை அருவியைப் பொருவன பாராய் -5-

அண்ணல் செய்து அலைகடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே -6-1-2-

சீதக் கடலில் உள்ளமுது என்றாரே பிராட்டியை பெரியாழ்வாரும்
எம்பெருமானும் பிராட்டியும் உடன் இருந்து இனிதாக மகிழ்ந்த இடமாகையாலே சித்ரகூட வளப்பங்களை
காணாய் பாராய் என்று காட்டுகிறார் –
ரசிகனானவன் நித்யவாஸம் பண்ணுகிற தேசம் திருத்தேவனார் தொகையே -பிராட்டியும் தானுமாக
சித்ரகூடத்திலே வர்த்தித்தாப் போலே -பெரியவாச்சான் பிள்ளை –

உருகு காதலின் தழை கொண்டு மழலை வந்து உச்சி
முருகு ஞாரு செந்தேனினை முலை நின்றும் வாங்கிப்
பெருகு சூழினும் பிடிக்கு ஒரு பிறை மருப்பு யானை
பருக வாயினில் கையின் அழிப்பது பாராய் -10-

கரை செய் மாக்கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த
அரை செய் மேகலை யலர் மகள் அவளோடும் அமர்ந்த நல்லிமயத்து
வரை செய் மாக்களிர் இள வெதிர் வளர்முளை அளை மிகு தேன் தோய்த்து
பிரச வாரி தன்னிளம் பிடிக்கருள் செய்யும் பிரிதி சென்று அடை நெஞ்சே –பெரிய திருமொழி-–1-2-5-
பிரசம் -தேன் கூட்டுக்கும் மதுகரங்களுக்கும் பெயர் -வாரி -அவற்றினுடைய தேன்

இங்குள்ள முனிவர்களை விண்ணுலகம் கூட்டிச் செல்லும் விமானங்கள் வருவதும் போவதுமாக இருந்தமை –
அசும்பு பாய் வரை யரும் தவ முடித்தவர் துணைக் கண்
தசும்பு வேய்ந்தவர் ஒத்தவர் தமக்கு விண் தருவான்
விசும்பு தூர்ப்பனவாம் என வெயிலுக விளங்கும்
பசும் பொன் மானங்கள் போவானா வருவன பாராய் -36-

இரு கண்களிலும் தாரைதாரையாக ஆனந்தக் கண்ணீர்
ஆஹ்லாத சீதா நேத்ராம்பு புளகீக்ருத காத்ரவான்
சதா பரகுண ஆவிஷ்ட த்ரஷ்டவ்ய சர்வ தேஹிபி –ஸ்ரீ விஷ்ணு தத்வம்

———-

கோசலை பரதனை வாழ்த்துதல்
முன்னை நும் குல முதலுளோர்கள்தாம்,
நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார்?
மன்னர் மன்னவா!’ என்று, வாழ்த்தினாள்-
உன்ன உன்ன நைந்து உருகி விம்முவாள். 119-

வாளேறு காணத் தேளேறு மாயுமாப் போலே மன்னர் மன்னவா -உத்திஷ்ட ராஜன் –

————-

பரதன் காய் கிழங்கு போன்றவை உண்டு, புழுதியில் தங்குதல்
இன்னர், இன்னணம் யாவரும், இந்திரன்
துன்னு போகங்கள் துய்த்தனர்; தோன்றல்தான்,
அன்ன காயும், கிழங்கும், உண்டு, அப் பகல்
பொன்னின் மேனி பொடி உறப் போக்கினான். 17-

பரதன் நிலையைக் கண்ட இராமன், இலக்குவனனிடம் கூறுதல்
தொழுது உயர் கையினன்; துவண்ட மேனியன்
அழுது அழி கண்ணினன்; ‘அவலம் ஈது’ என
எழுதிய படிவம் ஒத்து எய்துவான் தனை
முழுது உணர் சிந்தையான், முடிய நோக்கினான். 49-

பரதன் இராமனின் திருவடி வணங்குதல்
கோது அறத் தவம் செய்து குறிப்பின் எய்திய
நாதனைப் பிரிந்தனன், நலத்தின் நீங்கினாள்,
வேதனைத் திருமகள் மெலிகின்றாள், விடு
தூது எனப் பரதனும் தொழுது தோன்றினான். 52-

தந்தையை நினைத்து இராமன் புலம்புதல்
‘நந்தா விளக்கு அனைய நாயகனே! நானிலத்தோர்
தந்தாய்! தனி அறத்தின் தாயே! தயா நிலையே!
எந்தாய்! இகல் வேந்தர் ஏறே! இறந்தனையே!
அந்தோ! இனி, வாய்மைக்கு ஆர் உளரே மற்று?’ என்றான். 60

பரதன் இராமனின் திருவடிகளைப் பெற்று முடிமேற் சூடிச் செல்லல்
விம்மினன் பரதனும், வேறு செய்வது ஒன்று
இன்மையின், ‘அரிது’ என எண்ணி, ஏங்குவான்,
‘செம்மையின் திருவடித்தலம் தந்தீக’ என,
எம்மையும் தருவன இரண்டும் நல்கினான். 135

அடித்தலம் இரண்டையும், அழுத கண்ணினான்,
‘முடித்தலம் இவை’ என, முறையின் சூடினான்;
படித்தலம் இறைஞ்சினன், பரதன் போயினான்-
பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான். 136–

இராமனின் பாதுகை ஆட்சி செய்ய, பரதன் நந்தியம் பதியில் தங்குதல்
பாதுகம் தலைக்கொடு, பரதன் பைம் புனல்
மோது கங்கையின் கரை கடந்து முந்தினான்;
போது உகும் கடி பொழில் அயோத்தி புக்கிலன்;
ஓது கங்குலில் நெடிது உறக்கம் நீங்கினான். 139

நந்தியம் பதியிடை, நாதன் பாதுகம்
செந் தனிக் கோல் முறை செலுத்த, சிந்தையான்
இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான்,
அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான். 140-

இவன் அவனைப் பெற நினைக்கும் போது ப்ரபத்தியும் உபாயம் அன்று –
அவன் இவனைப் பெற நினைக்கும் போது பாதகமும் விலக்கு அன்று
இவை இரண்டும் ஸ்ரீ பரதாழ்வான் பக்கலிலும் ஸ்ரீ குகப்பெருமாள் பக்கலிலும் காணலாம்
ஸ்ரீ பரதாழ்வானுக்கு நன்மை தானே தீமை யாயிற்று -ஸ்ரீ குகப்பெருமாளுக்குத் தீமை தானே நன்மை யாயிற்று

தனக்குத் திருவடி சூட்டுமாறு வீடணன் வேண்டுதல்
விளைவினை அறியும் மேன்மை வீடணன், ‘என்றும் வீயா
அளவு அறு பெருமைச் செல்வம் அளித்தனை ஆயின், ஐய!
களவு இயல் அரக்கன் பின்னே தோன்றிய கடமை தீர,
இளையவற் கவித்த மோலி என்னையும் கவித்தி’ என்றான். –வீடணன் அடைக்கலப் படலம்—142

பரத தத் அநு பிரார்தித்தய லேபே லாப விதம் வர
காகுத்ஸ்த்த பாதுகா காரம் மஹார்க்கம் முகுடத்வயம் –சம்பூ ராமாயணம்

அரசு அமர்ந்தான் ஆதி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ணேண் மற்ற அரசு தானே –பெருமாள் -10-7-
அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா உன் கோலப் பாதம் –திருவாய் -10-3-6-

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்பநாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அருளிச் செயல்களில்-ஸ்ரீ பெரிய திருமொழியில் – காதல் -அன்பு-ஆர்வம் -வேட்கை -அவா- -போன்ற பத பிரயோகங்கள் –

September 6, 2019

ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் –98-

இருள் துயக்கு மயக்கு மறப்பு என்கிற
அனுதய சம்சய விபர்யய விஸ்ம்ருதிகள் அற்று
மலர்மிசை எழுகிற ஞானத்தை
காதல் அன்பு வேட்கை அவா என்னும்
சங்க காம அனுராக ஸ்நேகாத்ய அவஸ்தா
நாமங்களோடே
பரம பக்தி தசை ஆக்குகை –

————————-

திருக்கண்டேன் –பொன் மேனி கண்டேன் –என்று இவர் தமையனார் முன்பு அருளிச் செய்தது போலே

திருவல்லிக்கேணி கண்டேனே -பாசுரம் தோறும் அன்றோ -2-3-பாசுரம் தோறும் அன்றோ
கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தலைசயனத்தே –2-5- பாசுரம் தோறும் அன்றோ
செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே –2-10-பாசுரம் தோறும் அன்றோ
நறையூரில் கண்டேனே-6-8-பாசுரம் தோறும் அன்றோ
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-பாசுரம் தோறும் அன்றோ
கண்ண புரத்தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-பாசுரம் தோறும் அன்றோ
கண்ணபுரம் நாம் தொழுதுமே –8-6-பாசுரம் தோறும் அன்றோ-
கணபுரம் அடிகள் தம் இடமே -8-7-பாசுரம் தோறும் அன்றோ-
கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே -8-8-பாசுரம் தோறும் அன்றோ-
கண்ணபுரத்து உறை அம்மானே –8-10-பாசுரம் தோறும் அன்றோ-
திருக்கண்ணங்குடியுள் நின்றானே –9=1-பாசுரம் தோறும் அன்றோ
அச்சோ ஒருவர் அழகிய வா -9-2-பாசுரம் தோறும் அன்றோ
புல்லாணியே–9-3-பாசுரம் தோறும் அன்றோ
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் -9-5-பாசுரம் தோறும் அன்றோ-
குறுங்குடியே -9-6-பாசுரம் தோறும் அன்றோ–
வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-பாசுரம் தோறும் அன்றோ
மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே -9-8-பாசுரம் தோறும் அன்றோ-
திருக்கோட்டியூரானே -9-10-பாசுரம் தோறும் அன்றோ
கலியன் மங்களாசாசனம் –

செஞ்சொல் செந்தமிழ் இன்கவி பரவி அழைக்கும் என்று அன்யோன்யம் கொண்டாடி பேசிற்றே பேசும்
ஏக கண்டர்கள் -ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் -63-

நான்கு முகம் -தானாக -மகளாக -தாயாராக -தோழியாக -ஆழ்வார்கள் –

செந்நெல் –உமி தவிடு போக்க ஆச்சார்யர் ஞான அனுஷ்டானத்தால் போக்கி சர்வேஸ்வரன் அனுபவம் பண்ணும்படி –
இதனாலே அருளிச் செயல்களில் பல இடங்களில்
வண்டு-ஸ்ரீ பாஷ்யகாரர் போல்வாரை அன்றோ
மார்க்க சீர்ஷம் -ஆச்சார்ய அபிமானம் -நீர் ஆட வாரீர் -நீங்கள் குரவை கூத்தாட வாரீர்

மாதவ -மாசம் வைகாசி -மாதவிப்பந்தல் குயில் திருவாய் மொழி –
குயில் இனங்கள் -வியாக்கியான கர்த்தாக்கள் பூர்வாச்சார்யர்கள்

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
கையால் மா ஸூ ச -சரம ஸ்லோகம் /தாமரை -த்வயம் -செந்தாமரை-செம்மை திருமந்திரம் -ஒலிப்ப
சீரார் வளை ஒலிப்ப –தத்வ த்ரயம்
இல் -கோயில்- திரு இல்- தங்கள் திருக்கோயில்

——————————-

மீனமர் பொய்கை நாண மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த
கானமர் வேழம் கை எடுத்து அலறக் கராவதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே-2-3-9-

நெடுநாள் பூத் தேடி பெறாமையாலே இடர் பட்டுத் திரிந்த விது – பூத்த தடாகத்தைக் கண்டு –
ஷூத்ர மத்ஸ்யத்துக்கு மேற்பட துஷ்ட தத்வம் உண்டு என்று மதியாதே
வந்து செவ்விப் பூவைப் பறிக்கைகாக பெரிய அபிநிவேசத்தோடே வந்து இழிந்த –

——

மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும்
தென்னன் தொண்டையர்கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை
கன்னி நன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார் சுகமினி தாள்வர் வானுலகே—2-3-10-

காமரு சீர்க் கலிகன்றி -சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார்- ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை
உடைய ஆழ்வார் அருளிச் செய்த பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் –

———————-

அன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கை யொடன்பாளாவி அவுணர்க்கு
என்றானுமிரக்க மிலாதவனுக்கு உறையுமிடமாவது இரும் பொழில் சூழ்
நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடந்திகழ் கோவல் நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-1-

அன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கை யொடன்பாளாவி – முன்பு பண்டு ஒரு நாள் நப்பின்னை பிராட்டியாரோடும்
அழகிய தாமரைப் பூவை இருப்பிடமாக உடைய பெரிய பிராட்டியாரோடும் விரும்பிக் -கலந்து

————————

ஓதிலும் உன் பேர் அன்று மற்று ஓதாள் உருகும் நின் திரு வுரு நினைந்து
காதன்மை பெரிது கையற வுடையள் கயல் நெடுங்கண் துயில் மறந்தாள்
பேதையன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல்
ஏதலர் முன்னா வென் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே-2-7-5-

உருகும் நின் திரு வுரு நினைந்து –நாமத்த்வாரா தர்மியை அனுசந்தியா -நீர்ப்பண்டம் போலே மங்கி இருக்கும் –
காதன்மை பெரிது – வடிவு அழகின் அளவல்ல ஆயிற்று ஆசையின் பெருமை –
கையற வுடையள் –ஆசையின் அளவல்ல ஆயிற்று இழவின் கனம் –

—————–

தாங்கரும் போர் மாலி படப்பறவை யூர்ந்து தாரலத்தோர் குறை முடித்த தன்மையானை
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்கட்கு ஆரமுதமானான் தன்னை
கோங்கரும் புசுர புன்னை குரவர் சோலைக் குழா வரி வண்டு இசைபாடும் பாடல் கேட்டு
தீங்கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-4-

ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்புகூறும் அடியவர்கட்கு ஆரமுதமானான் தன்னை-ஸ்வ விஷயத்தில் பிரேமத்தால்
கண்ண நீர் அரும்பி -அது தான்-கண்ணை விட்டு சோர -பிரேம பரவசராய் இருக்கும் சேஷ பூதருக்கு
நிரதிசய போக்யனானவனை–முதல் ஆழ்வார் விஷயம்–ஆயனே கரும்பு-
தீங்கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே-நீர் பாய்ந்தாப் போலே இருக்கிற இனிய
கரும்பானது ஒரு கண் தேறி வளரா நிற்கும் ஆயிற்று

————

வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும்
என் சிந்தனைக்கு இனியாய் திருவே என்னார் உயிரே
அந்தளி ரணியார சோகின் இளந்தளிர்கள் கலந்து அவை எங்கும்
செந்தழல் புரியும் திருவாலி யம்மானே–3-5-1-

என் சிந்தனைக்கு இனியாய்- இப்படி புகுந்தவன் தானே போவேன் என்றாலும் விட ஒண்ணாதபடி யாயிற்று நெஞ்சுக்கு இனிமையான படி –
திருவே –திருவுக்கும் திரு -என்கிற படியே இவருடைய சம்பத் ஆயிற்று இவன் –
என்னார் உயிரே –சம்பத்து தானாய் தாரகம் வேறு ஒன்றாய் இருக்கை அன்றிக்கே எனக்கு தாரகன் ஆனவனே –
வ்யதிரேகத்தில் பிழையாத படியாய் இரா நின்றான் ஆயிற்று-

———————————

கொலைப் புண் தலைக் குன்ற மொன்று உய்ய அன்று கொடு மா முதலைக்கு இடர் செய்து கொங்கு ஆர்
இலைப் புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட அம்மானிடம் ஆளரியால்
அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும் அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி
மலைப்பண்ட மண்டத்திரை யுந்து நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !–3-8-3-

அவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட-அம்மானிடம்–பெரிய பிராட்டியாரோட்டை சம்ச்லேஷ சுகத்தை –
தன்னுடைய பிரேமம் உண்டு -ஸ்நேஹம்-அத்தோடு கூட அனுபவித்த சர்வேஸ்வரனுடைய ஸ்தானம் –

———————–

துளையார் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா
இளையார் விளையாட்டோடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மானிடம் வேல் நெடுங்கண்
முளை வாள் எயிற்று மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல்
வளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-8-

முற்றா இளையார் விளையாட்டோடு விளையாட்டுக்கு அவ்வருகு கார்யம் கொள்ள ஒண்ணாதபடி பருவத்தை உடையவர்கள்
யௌவனம் ஊசாடாத பருவம் அவர்களோடு உண்டான விளையாட்டோடு கூட காதல் வெள்ளம் விளைவித்த அம்மானிடம் –
அவர்களுக்கு பிரேம ஆகாரத்தை விளைத்த சர்வேஸ்வரன் உடைய வாசஸ் ஸ்தானம்

——————-

கண்ணன் என்றும் வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும்
எண்ணன் என்றும் இன்பன் என்றும் ஏழு உலகுக்கு ஆதி என்றும்
திண்ண மாடு நீடு நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப்
பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே—4-8-9-

கிருஷ்ணன் என்றும் ப்ரஹ்மாதிகள் ஸ்நேஹத்தைப் பண்ணி புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கும் படியாக
அவர்கள் மநோ ரதத்தே நிற்கிறவன் என்றும்–ஆனந்தாவஹன் என்றும்

————————

பேசுகின்றது இதுவே வையம் ஈரடியால் அளந்த
மூசி வண்டு முரலும் கன்னி முடியீர் உம்மைக் காணும்
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே—-4-9-3-

உம்மைக் காண வேண்டும் என்று ஆசைப் பட்டு பெறாமையாலே சிலர் முடிந்தார்கள் என்றால் உமக்கு இது போக்கி அவத்யம் உண்டோ
உம்மைக் காண வேணும் என்கிற ஆசை ஆகிற பெரும் கடலிலே புக்கு அகப்பட்டு அறிவு கெட்டோம்

————————–

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காயாய்த்து அடியோர்க்குத்
தேசம் அறிய வுமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக்
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம்பெருமான்
வாசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம் நீரே —4-9-4-

நாள் செல்ல செல்ல அஹன்ய ஹநி வர்த்ததே -என்கிறபடியே ஆசையானது கரை புரண்டு யேத்துகையே ஸ்வபாவம் ஆம்படியான
மகா பாபத்தைப் பண்ணின எங்களுக்கு இழுக்கு ஆய்த்து

————————

பெருகு காதல் அடியேன் உள்ளம்
உருவப் புகுந்து ஒருவரூர் போல்
அருகு கைதை மலரக் கெண்டை
குருகு என்றும் அஞ்சும் கூடலூரே–5-2-9-

நாள் செல்ல நாள் செல்ல ஆற்றுப் பெருக்கு போலே பெருகா நின்றுள்ள காதலை உடைய அடியேனுடைய
ஹிருதயமானது உருகும்படி யாகப் புகுந்த அத்விதீயனானவன் வர்த்திக்கிற தேசம் போலே இருந்தது –

————————–

வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து
காதலாதரம் கடலினும் பெருகச் செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும்
ஆதல் வேண்டும் என்று அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-2-

காதலாதரம் – இது புனர் உக்தம் அன்றோ என்னில் –அவ்யாப்தி அதிவ்யாப்தி ரஹீதமான லஷண வாக்யத்தில்
புனருக்தி தோஷமாவது-ஆற்றாமையும் ஆதரமும் சொல்லுவிக்கச் சொல்லுகிறது ஆகையாலே தட்டில்லை –
கிஞ்ச அபிசந்தி பேதத்தாலே புனர் உக்தமும் அன்று –
செந்தாமரை தடங்கண்-என்கிறது தன்னையே பல காலும் சொல்லுகிறதுக்கு தாத்பர்யம் இது இறே
காதலின் உடைய கார்யம் இறே ஆதரம் ஆகிறது-சங்காத் சஞ்ஜாயதே காம -என்கிறபடியே
கர்ம நிபந்தனமாக சிலவர்க்கு வருமத்தை இறே பெருமாளுக்கும் பிராட்டிக்கும் சொல்லுகிறது
பிராட்டிக்கு பெருமாளைக் கண்ட போதே வில்லை முறித்துக் கைப் பிடிக்க வல்லரே -என்று சங்கம் பிறந்தது
பின்பு அனுபவித்து அல்லது நிற்க ஒண்ணாத தசை -காமம்
அவருக்கு பித்ரு க்ருததாரம் -என்று பிறந்தது சங்கம்
குணென ரூபேண விலாஸ சேஷ்டிதை-என்கிறபடியே குண ரூப சேஷ்டிதங்களை பற்றப் பிறந்தது காமம் –

கடலினும் பெருக கடல் குளப்படியுமாம் படி பெருகுகிற சமயத்திலே இரண்டு ஆஸ்ரயமும் கடல்போலே காணும்
பெருகுகை யாவது -மர்யாதாபங்கம் பிறக்கை இறே
அதாவது தத் தஸ்ய -என்கிற நிலை குலைந்து வேண் யுத்க்ரத நத்திலே ஒருப்படுகையும் –
அவாக்ய அநாதர-என்னும் நிலை கழிந்து அவகாஹ்யார்ணவம் ஸ்வப்ஸ்யே-என்னும்படி யாகையும்-

————————–

ஒது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்
காதல் என் மகன் புகலிடம் காணேன் கண்டு நீ தருவாய் எனக்கு என்று
கோதில் வாய்மையினான் உனை வேண்டிய குறை முடித்தவன் சிறுவனைக் கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே —5-8-7-

காதல் என் மகன்–காதல் தான் வடிவு கொண்டது என்னும் படியான புத்திரன்

————————

துளங்கு நீண் முடி யரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழு உடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவர்க்கு அருளிச் செய்தவாறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-9-

உளம் கொள் அன்பினோடு –ஹித உபதேசத்துக்காக பண்ணின அன்பாகையாலே திரு உள்ளத்தைப் பற்றி இருக்கும் இறே
இன்னருள் –தன் பேறான அருள்-உதாரா -என்று பிரயோஜனாந்தர பரர் அளவிலும் இருக்கச் செய்தே
ஜ்ஞாநீத் வாத்மைவ -என்கிற விசேஷணம் உண்டு இறே

——————–

எட்டனைப் பொழுதாகிலும் என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ்
தட்டலர்த்த பொன்னே யலர் கோங்கின் தாழ் பொழில் திருமால் இரும் சோலை அம்
கட்டியைக் கரும்பு ஈன்ற இன் சாற்றைக் காதலால் மறை நான்கு முன்னோதிய
பட்டனைப் பரவைத் துயில் ஏற்றை என் பண்பனை அன்றி பாடல் செய்யனே –7-3-6-

காதலால் மறை நான்கு முன்னோதிய பட்டனைப் –இதுக்கு முன்பு ஒதப் போகாதவன்
அபி நிவிஷ்டனாய் ஓதுமா போலே சாந்தீபநீயோடே சாதாரமாக நாலு வேதத்தையும் அப்யசித்த பண்டிதனை –

—————————–

இனி எப்பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள் பெற்றமையால் அடும்
துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றதோர் தோற்றத் தொன் நெறியை வையம் தொழப் படும்
முனியை வானவரால் வணங்கப் படும் முத்தினைப் பத்தர் தாம் நுகர்கின்றதோர்
கனியைக் காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டு கொண்டேனே –7-3-8-

என் பக்கலில் தான் ஆசை உடையனாய்-என்னை சர்வாஸ்வாபஹாரம் பண்ணினவனை –
நான் அநாதி காலம் பண்ணிப் போந்த ஆத்மாபஹாரத்தை அரை ஷணத்திலே பண்ணினவனை
இன்று நினைவு இன்றிக்கே இருக்க காணப் பெற்றேன் –

—————————

வெள்ளத்துள் ஓர் ஆலிலை மேல் மேவி யடியேன் மனம் புகுந்து என்
உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும் நின்றார் நின்ற ஊர் போலும்
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடித் போன காதல் பெடையோடும்
அள்ளல் செறுவில் கயல் நாடு மணியார் வயல் சூழ் அழுந்தூரே –7-5-4-

குட்டிக்கு இரை தேடித் போகிற புள்ளானது தனியே போகாதே காதலை இட்டு நிரூபிக்க வேண்டும்
பெடையோடே போய் –

———————

உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்தேன் தொழுதும் எழு
முருகு வண்டுண் மலர்க்கைதையின் நீழலில் முன்னொரு நாள்
பெருகு காதன்மை என்னுள்ளம் எய்தப் பிரிந்தான் இடம்
பொருது முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே —-9-3-2-

என்னுடைய ஹிருதயமானது மிக்க காதலை உடைத்தாம் படி பண்ணி தன்னைக் கொண்டு கடக்க நின்றான் ஆயிற்று –

—————-

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–திருக் குறும் தாண்டகம்–18–

அன்பு அவர் கண்ணே வைத்து துளக்கமில் சிந்தை செய்து-அவிச்சின்ன ஸ்ம்ருதி ரூபமான பக்தியைப் பண்ணி –

—————–

உள்ளூரும் சிந்தை நோய் எனக்கே தந்து –
என்னொளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே
தெள்ளூரும் இளம் தெங்கின் தேறல் மாந்திச்
சேலுகளும் திருவரங்கம் நம்மூர் என்ன
கள்ளூறும் பைம் துழாய் மாலையானைக்
கனவிடத்தில் யான் காண்பது கண்டபோது
புள்ளூரும் கள்வா நீ போகல் என்பன்
என்றாலும் இது நமக்கோர் புலவி தானே–திரு நெடும் தாண்டகம்–23-

உள்ளில் நோய் –கண் கண்டு சிகித்ஸிக்கலாம் நோய் அன்று காண் தந்தது –
பாஹ்யமான நோயாகில் இறே கண் கொண்டு சிகித்ஸிக்கலாவது –
உள்ளூரும் நோய் –சர்ப்பம் ஊர்ந்தால் போலே சஞ்சரியா இருக்கை –
கண்ணுக்கு தெரியாது இருந்தாலும் ஒரு பிரதேசத்தில் ஆகில் அவ்விடத்தே அன்வேஷித்து சிகித்ஸிக்கலாம் இறே –
அது செய்ய ஒண்ணாதபடி கழலைக் காப்பான் போலே எங்கும் ஒக்க சஞ்சரிக்கும் நோய் -என்கை –
காதல் நோயாகையாலே கிலாய்ப்பைப் பற்றி நிற்குமோ –
பந்தத்தைப் பற்றி நிற்குமோ -இன்னபடி இருக்கும் என்று நிர்ணயிக்க ஒண்ணாத படியாய் இருப்பது –

சிந்தை நோய்–அபரிஹரணீயமான நோய் –
ஒரூருக்கு நோய் வந்தால் வைத்யனால் பரிஹரிக்கலாம் –
வைத்தியனுக்கு நோவு வந்தால் ஒருவராலும் பரிஹரிக்க ஒண்ணாது இறே –
அபிபூய மாநா வ்யசனை –
கர்ம ஷயம் இறே என்று தரித்து இருக்கலாம் –
நெஞ்சில் வியாதிக்கு பரிஹாரம் இல்லை இறே –

நோய்
இப் ப்ரேமம் தான் அவஸ்தா அனுகுணமாக-புருஷார்தமாய் இருக்கும் –
போக உபகரணமாய் இருக்கும்
நோயாயும் இருக்கும்
ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தார்க்கு புருஷார்தமாய் இருக்கும்
போக்தாவுக்கு போக உபகரணமாய் இருக்கும்
விச்லேஷித்தார்க்கு வியாதியாய் இருக்கும் –

——————————

செங்கால மட நாராய் இன்றே சென்று
திருக் கண்ணபுரம் புக்கு என் செங்கண் மாலுக்கு
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தி யாகில்
இது வொப்பது எமக்கு இன்பம் இல்லை நாளும்
பைம் கானம் ஈதெல்லாம் உனதே யாகப்
பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன் தந்தால்
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும்
இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே–27-

என் செங்கண் மாலுக்கு
என் மாலுக்கு
உபய விபூதியும் தாம் இட்ட வழக்காய் இருக்கிறவர் –
நான் இட்ட வழக்காம் படி என் அபிமானத்தே அடங்கி இருக்கிறவருக்கு

செங்கண் மாலுக்கு
கண் அழகைக் காட்டி என்னை ஜிதம் என்னப் பண்ணி-தன் அபிமானத்தே இட்டு வைத்தவருக்கு

செங்கண் மாலுக்கு
அநித்ரஸ் சத்தாம் ராம – என்கிறபடியே-என்னைப் பிரிகையாலே அவருக்கு உறக்கம் இல்லை –
அத்தாலே கண் குதறிச் சிவந்து இருக்கும்-அது உங்களுக்கு அடையாளம் -என்கிறாள் -ஆகவுமாம்

மாலுக்கு-பெரும் பித்தருக்கு –
தம்முடைய பித்தைக் காட்டி என்னை பிச்சேற்றினவருக்கு
பிச்சேறி இருக்கும் அத்தனை இறே இத்தலைக்கு உள்ளது –
பிச்சேறி இருக்கையும்-எதிர் தலையை பிச்சேற்றுகையும்-அத்தலைக்கு இறே உள்ளது –
மாலாய் பிறந்த நம்பியை-மாலே சேயும் மணாளனை -என்னக் கடவது இறே –

என் காதல்-
தம்முடைய காதல் போல் அன்று என்று சொல்லுங்கோள்-
மின்னிலங்கு திருவுருவு என்று -உடம்பு குறி அழியாத படி அன்றோ நீர் காதல் பண்ணிற்று –
பொங்கார் மென்னிளம் கொங்கை பொன்னே பூக்கும்படி அன்றோ அவள் காதல் பண்ணிற்று என்னுங்கோள் –

என் காதல்
யா ப்ரீதிர விவேகாநாம் விஷயேஷ்வ நபாயினி – என்கிறபடியே நாட்டார் காதல் போல் அன்று –
முக்தர் காதல் போல் அன்று காணும் இவளுடைய காதல்
ஞானம் பிறந்தவாறே த்யாஜ்யமான காதல் இறே சம்சாரிகளது –
சுக ஹேதுவான காதல் இறே முக்தரது –

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஞ்ச ராத்ர பிரபாவம் –

January 20, 2019

ஸூரிஸ் ஸூஹ்ருத் பாகவதாஸ் சத்வத பஞ்ச கால வித்
ஏகாந்திகாஸ் தன்மயாஸ் ச பஞ்ச ராத்ரிக இதி அபி –

மோக்ஷஸ்ய அநந்ய பந்தா ஏதத் அந்யோ ந வித்யதே
தஸ்மாத் ஏகாயனம் நாம ப்ரவதந்தி மனிஷினா –ஈஸ்வர சம்ஹிதை

மஹதோ வேத வ்ருஷஸ்ய மூல பூதோ மஹான் அயம்
ஸ்கந்த பூத ரிக் அத்யாஸ் தே சாகா பூதாஸ் ச யோகிந
ஜெகன் மூலஸ்ய வேதஸ்ய வாஸூதேவஸ்ய முக்யத
ப்ரதிபாதகாத சித்தா மூல வேதாக்யதா த்விஜா
ஆத்யம் பாகவதம் தர்மம் ஆதி பூதே க்ருதே யுகே
மானவ யோக்ய பூதாஸ் தே அனுஷ்டந்தி நித்யாசா

ரிக் வேதம் பகவோ த்யாமி யஜுர் வேதம் சாம வேதம் அதர்வணம் சதுர்த்தம் இதிஹாச புராணம்
பஞ்சமாம் வேதானாம் வேதாம் பித்ரயாம் ராஸிம் தெய்வம் நிதிம் வாகோ வாக்யம் ஏகாயனம் -சாந்தோக்யம் –

வேதம் ஏகாயனம் நாம வேதானாம் சிரசி ஸ்திதம்
தத் அர்த்தகம் பஞ்சராத்ரம் மோஷதம் தத் கிரியாவதாம்
யஸ்மின் ஏகோ மோக்ஷ மார்கோ வேத ப்ரோக்தஸ் சநாதந
மத் ஆராதன ரூபேண தஸ்மாத் ஏகாயனம் பவேத் –ஸ்ரீ ப்ரஸ்ன சம்ஹிதை

நாராயணம் தபஸ்யாந்தி நர நாராயண ஆஸ்ரமே சம் சேவன்தாஸ் சதா பக்த்யா மோஷாபாய விவித்ஸ்வ
ஸம்ஸ்திதா முநயஸ் சர்வே நாராயண பாராயண காலேந கேந சித் ஸ்வர்க்காத் நாராயண தித்ருக்ஷய
தத்ராவதீர்யே தேவ ரிஷி நாரதாஸ் ச குதூகல
த்ரஸ்த்வ நாராயணம் தேவம் நமஸ்க்ருத்ய க்ருதஞ்சலி
புலகாங்கித சர்வங்கா ப்ரக்ருஷ்ட வதநோ முனி
ஸ்துத்வ நாநாவித ஸ்தோத்ரை ப்ரணம்ய ச முகுர் முக
பூஜாயாமாச தம் தேவம் நாராயணம் அன்னமயம்
அத நாராயண தேவோ தம் ஆக முனி புங்கவம் முனையோ ஹி அத்ர திஷ்டந்தி பிரார்த்தயானா ஹரி பதம்
ஏதே சாம் ஸாஸ்த்வதாம் சாஸ்திரம் உபதேஷ்டும் த்வம் அர்ஹஸி
இத் யுக்தவ அந்தர்ததே ஸ்ரீ மன் நாராயண முநிஸ் ததா –ஈஸ்வர சம்ஹிதை -சாஸ்வத சாஸ்திரம் -பாஞ்ச ராத்ரம் –

ஸாத்வதா -சத் ப்ரஹ்மம் சத்வம் வா தத்வந்தஸ் ஸாத்வந்த ப்ரஹ்ம வித சாத்விகா வா தேசாம்
இதம் கர்ம சாஸ்திரம் வா சாஸ்வதம் -தத் குர்வானா தத் அஷானாஸ் ச வ சதாயதி சுகாயதி ஆஸ்ரிதந்
இதி சத் பரமாத்மா ச ஏதே சாம் அஸ்தி தி வா சத்வத ஸாஸ்வதோ வா மஹா பாகவதர் -ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாஷ்யம்

ஸ்ருதி மூலம் இதம் தந்திரம் பிரமாணம் கல்ப ஸூத்ரவத்

மஹா உபநிஷத் அக்ஷயஸ்ய சாஸ்த்ரஸ் யாஸ்ய மஹா மதே
பாஞ்ச ராத்ர சமாக்யாசன் கதம் லோகே ப்ரவர்த்ததே

பஞ்ச இதராணி சாஸ்த்ராணி ராத்ரியந்தே மஹாந்தி அபி
தத் சந்நிதிவ் சமாக்யாசவ் தேனை லோகே ப்ரவர்த்ததே —
விரிஞ்சன் -யோகம் /கபில -சாங்க்யம் /பவ்த்த / ஆர்ஹதன் -ஜைன / கபால சுத்த சைவ பசுபத -ருத்ரன் /
இவை ஐந்தும் அந்தகாரம் போலே அன்றோ பாஞ்சராத்ரம் ஓப்பு நோக்கினால்

பஞ்சத்வம் அதவா யத்வத் தீப்யமானே திவாகரே
ருஷந்தி ராத்ரயாஸ் தத்வத் இதராணி தத் அந்திகே

ஸாத்வதம் விதிம் ஆஸ்தாய கீதாஸ் சங்கர்ஷனேன யா
இதம் மஹோபநிஷிதம் சர்வ வேதா ஸமந்விதாம்

ராத்ரம் ச ஞான வசனம் ஞானம் பஞ்ச விதம் ஸ்மர்த்தம் தேன் ஏதம் பஞ்சராத்ரம் ச ப்ரவதந்தி மணீஷினா –
ஐந்து வித ஞானங்கள் –தத்வ / முக்தி பிரத / பக்தி பிரத / யவ்கிக / வைஷயிக/

ராத்ரிர் அஞ்ஞானம் இதி உக்தம் பஞ்சேதி அஞ்ஞான நாஸகம்
பக்ஷ-நாசகரம் -அஞ்ஞானத்துக்கு –
புரே தோதாத்ரி சிகரே சாண்டில்யோ அபி மஹா முனி
ஸமாஹிதா மனா பூத்வா தபஸ் தப்தவா மஹத்தரம்
அநேகாநி சஹஸ்ராணி வர்ஷானாம் தபசோ அந்தத
த்வாபரஸ்ய யுகஸ்யாந்தே ஆதவ் கலி யுகஸ்ய ச
சாஷாத் சமகர்ஷணாத் லப்த்வா வேதம் ஏகாயனாபிதம்
சுமந்தும் ஜைமினிம் சைவ ப்ருகும் சைவ ஓவ்பகாயனம்
மவ்ஞ்சயாயனாம் ச தம் வேதம் சம்யக் அத்யாபயத் புரா –ஈஸ்வர சம்ஹிதை –

தோதாத்ரி கிரியில் -யுக சந்தியில் –
சாண்டில்யர் -ஐவருக்கு உபதேசம் -சுமந்து -ஜைமினி– ப்ருகு -ஓவ்பகாயனர் -மவ்ஞ்சயாயனர் –

ஏகாந்தினோ மஹாபாகா சடகோப புரஸ்சாரா ஷோன்யாம் க்ருத அவதார ஏ லோக உஜ்ஜீவன ஹேதுநா
சாண்டில்யாத்யாஸ் ச ஏ ச அன்யே பாஞ்சராத்ர ப்ரவர்த்தக
ப்ரஹ்லாதஸ் சைவ சுக்ரீவோ வாயு ஸூநுர் விபீஷண
ய ச அன்யே ஸநகாத்யாஸ் ச பஞ்ச கால பாராயண —ஈஸ்வர சம்ஹிதை –

லோக உஜ்ஜீவன அர்த்தமாகவே -சடகோபர் -சனகர் -சாண்டில்யர் (சாண்டில்ய வித்யை–32 rd வித்யா ஸ்தானம்)-
பிரகலாதன் -சுக்ரீவன் – வாயுபுத்திரன் திருவடி -விபீஷணன் – -இவர்களும் பாஞ்சராத்ர ப்ரவர்த்தகர்
கிரேதா யுகத்தில் -நர நாராயண மூலம் நாரதருக்கும்
த்வாபர யுக முடிவில் -சங்கர்ஷணர் மூலம் சாண்டில்யருக்கும்
கலியுகத்தில் விஷ்வக் சேனர் மூலம் சடகோபருக்கும் –
ஆக இத்தை பிரவர்திக்க –
அவனும் -நித்யரும் – ருசியும் -சடகோபரும் -ப்ரஹ்லாதன் -சுக்ரீவன் -திருவடி -அதிகாரி நியமம் இல்லாமல் –

அஸ்தி தே விமலா பக்தி மயி யாதவ நந்தன
ப்ரதமம் சேஷ ரூபோ மே கைங்கர்யம் அகரோத் பவன்
ததாஸ் து லஷ்மனோ பூத்வா மாம் ஆராதிதவான் இஹ
இதாணீம் அபி மாம் யாஸ்தும் பலபத்ர த்வாம் அர்ஹஸி
கலவ் அபி யுகே பூய கச்சித் பூத்வா த்விஜோதம
நாநா விதைர் போக ஜலைர் அர்ச்சனம் மே கரிஷ்யசி –ஈஸ்வர சம்ஹிதை -278-80–கண்ணன் பலராமன் இடம் அருளிச் செய்தது
ஸ்ரீ ராமானுஜராக தென்னரங்கம் கோயில் மற்று எல்லாம் திருத்தி உகந்து அருளின நிலங்களில் கைங்கர்யமே பொழுது போக்காக –

த்விஜ ரூபேண பவிதா யா து சம்கர்ஷண அபிதா
த்வாபராந்தே காலேர் ஆதவ் பாஷண்ட பிராஸுர்ய ஜநே
ராமானுஜ யதி பவிதா விஷ்ணு தர்ம ப்ரவர்த்தக
ஸ்ரீ ரெங்கேச தயா பாத்ரம் விதி ராமானுஜம் முனிம்
யேன சந்தர்ஷித பந்தா வைகுந்தாஹ் யஸ்ய சத் மனா
பரம ஐகந்திகோ தர்ம பவ பாச விமோசக
யத்ர அநந்ய தயா ப்ரோக்தம் ஆவியோ பாத ஸேவனம்
காலேநாச்சாதிதோ தர்மோ மதியோ அயம் வராணாநே
ததா மயா ப்ரவர்த்தோ அயம் தத் கால உசித மூர்த்தின
விஷ்வக் சேனாதிபிர் பக்தைர் சடாரி ப்ரமுகைர் த்விஜை
ராமானுஜேந முனிநா கலன் ஸம்ஸ்தாம் உபேஸ்யதி–பிருஹத் ப்ரஹ்ம சம்ஹிதை –

ஆதி தேவோ மஹா பாஹோ ஹரிர் நாராயணோ விபு
சாஷாத் ராமோ ரகு ஸ்ரேஷ்டஸ் சேஷ லஷ்மனோ உச்யதே

அநந்தா ப்ரதமம் ரூபம் லஷ்மணாஸ் ச ததா பரம்
பலபத்ராஸ் த்ரேயதாஸ் து கலவ் கச்சித் ராமானுஜ பவிஷ்யதி

அப்யார்த்திதோ ஜகத் தாத்ரயா ஸ்ரீ ய நாராயணாஸ் ஸ்வயம் உபாதிஸாத் இமம் யோகம்
இதி மே நாரதாத் ஸ்ருதிம் -பரத்வாஜ சம்ஹிதை —
ஸ்ரீ லஷ்மி நாதன் ஸ்ரீ பிராட்டிக்கு உபேதேசம் -செய்து அருளியதை நாரதர் மூலம் கேட்டேன் -குருபரம்பரை பிரணாமம்

ஸ்ரீ விஷ்ணு லோகே பகவான் விஷ்ணு நாராயணாஸ் ஸ்வயம்
ப்ரோக்தவான் மந்த்ர ராஜாதின் லஷ்ம்யை தாபாதி பூர்வகம் –

ஸ்வோப திஷ்டன் அதி ப்ரீத்யா தாப புண்ட்ராதி பூர்வகம் விஷ்ணு லோகே அவதிர்நாய
ப்ரியாய சததம் ஹரே சேனேஸாயே ப்ரியா விஷ்ணோ மூல மந்த்ர த்வயாதிகம்

சேனேஸாஸ் ஸ்வயம் ஆகத்ய ப்ரீத்யா ஸ்ரீ நகரிம் சுபாம்
சடகோபாய முனையே திந்திரிணீ மூலே வாஸிநே
தாபாதி பூர்வகம் மந்த்ர த்வய ஸ்லோகா வரான் க்ரமாத்
விஷ்ணு பத்ந்யா மஹா லஷ்ம்யா ந்யோகாத் உபதிஷ்ட்வான்
புநாஸ் ச நாத முநயே பஞ்ச ஸம்ஸ்கார பூர்வகம்
பட்ட நாத ப்ரப்ர்திபி நிர்மிதைர் திவ்ய யோகிபி
திவ்யைர் விம்சதி ஸங்க்யாகை ப்ரபந்தஸ் ஸஹ தேசிக
ஸ்வ உக்த திராவிட வேதானாம் சதுரனாம் உபதேச க்ருத்

திராவிடேசு ஜனீம் லப்த்வா மத் தர்மோ யாத்ர திஷ்டதி
பிராயோ பக்த பவந்தி பாவ மம பத்தாம்பு ஸேவநாத்-பிருஹத் ப்ரஹ்ம சம்ஹிதை —
ஸ்ரீ பாத தீர்த்த மகிமையால் பக்தர்

காயத்பிர் அக்ரே தேவேஸ்ய திராமிடம் ஸ்ருதிம் உத்தமம்
பாதாயேத் த்ராமிடீம் ச அபி ஸ்துதிம் வைஷ்ணவ சதாமை —
அருளிச் செயல் கோஷ்ட்டி முன்னே போவதை ஈஸ்வர சம்ஹிதை சொல்லுமே

கிரேதாதிஷன் மஹா ராஜன் கலவ் இச்சந்தி சம்பவம் கலவ் கலவ் பவிஷ்யந்தி நாராயண பாராயண
க்வசித் க்வசித் மஹாராஜா திராவிடேசு ச பூரிச தாமிரபரணி நதி யத்ர க்ருதமாலா பயஸ்வினி காவேரி ச மஹா புண்ய –

ஞான -யோக -நிலை தாண்டி –மானஸ அனுபவம் தாண்டி
-கார்ய — க்ரியா -அவஸ்தைகள் கோயில் உத்சவம் -பாஹ்ய அனுபவம்

———————————

பகவான் -சுத்த -பரிசுத்த -பூத -பாவன -பவித்ர -புராண -பர –
perfect -glorious -blessed -divine -supreme -exalted -divine-excellent / best / perfect
ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம் சி அஷேசத பகவத் சப்த வாஸ்யானி வினா ஹேயைர் குணாதிபி
உபய லிங்க அதிகரணம்
ஞானம் -omni science-/ சக்தி – omni potence /பலம் / ஐஸ்வர்யம் – sovereignty /
வீர்யம் -endurance. /தேஜஸ்
அசப்த கோசரஸ்ய அபி தஸ்ய வை ப்ரஹ்மணோ த்விஜ
பூஜாயாம் பகவத் சப்த க்ரியதே ஹி உபசார -ஸ்ரீ விஷ்ணு புராணம்
தத்ர பூஜ்யா பதார்த்தோ யுக்தி பரி பாஷா சமன்வித
சப்தோ யம் நோபசாரேன து அந்யத்ர ஹி உபசார
ப -பாவானத்வம் / க நியமனத்தவம் / வன் -வியாபகத்வம் உள்ளும் புறமும்

கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரஷ்டாரம்
நார்ச்ச யிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ பஹதா ஜனா -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
க்வசித் க்வசித் மஹாராயா திராவிடேசு ச புருஷ தாமிரபரணி நதி யாத்ரா க்ருதமாலா
பயஸ்வினி காவேரி ச மஹா புண்ய –ஸ்ரீ மத் பாகவதம் –

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –