Archive for the ‘Thiruppaan Aazlvaar’ Category

அருளிச் செயல்களில் -கரணத்ரய அனுபவம்-

July 26, 2018

திருப்பல்லாண்டு –

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் -வந்து –கூடும் மனம் உடையீர்கள்–வந்து பல்லாண்டு கூறுமினோ -4-

————————————

பெரியாழ்வார் திருமொழி –

காறை பூணும் –ஆயிரம் பேர்த்தேவன் திறம் பிதற்றும் —
மாறில் மா மணி வண்ணன் மேல் இவள் மால் உறுகின்றாளே –3-7-8-

குருந்தம் ஓன்று ஓசித்தானோடும் சென்று கூடியாடி விழாச் செய்து –
திருந்து நான்மறையோர் இராப்பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர்
கரும் தட முகில் வண்ணனைக் கடைக் கொண்டு கை தொழும் பத்தர்கள் -4-4-7-

ஆசை வாய்ச சென்ற சிந்தையராகி –அன்னை யத்தன் ஏன் புத்திரர் –என்று மயங்கி வாய் திறவாதே —
கேசவா புருடோத்தமா வென்றும் –பேசுவார் எய்தும் பெருமை -4-5-1-

மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு –உய்யலும் ஆமே -4-5-3-

சித்தம் நன்கு ஒருங்கித் திருமாலைச் செய்த மாலை இவை பத்தும் வல்லார்
சித்தம் நன்கு ஒருங்கித் திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர்கள் தாமே -4-5-10-

————————————————————————————–

திருப்பாவை –

தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -5-

வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை உள்ளத்துக்கு கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து
அரி என்ற பேர் அரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் –6-

நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய் -25-

சிற்றம் சிறுகாலே வந்து உன்னைத் சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் —
உன் தன்னோடு உற்றோமே யாவோம்
உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் -29-

——————————————

நாச்சியார் திருமொழி
தொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூ மலர் தூய்த்து தொழுது ஏத்துகின்றேன் –
-பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழப் பெற -1-9-

——————————————————————————————–

பெருமாள் திருமொழி –

எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு
எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும் தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற -1-3-

தூராத மனக் காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமித் திருப் புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர நினைந்து உருகி ஏத்தி -1-9-

திருமாது வாழ் வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்டம் மேவி அலந்தழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள் தம் ஈட்டம் கண்டிடக் கூடுமேல் -2-1-

நிரை மேய்த்ததும் இவையே நினைந்து ஆடிப்பாடி அரங்கவோ என்று அழைக்கும் தொண்டர் அடிப் பொடி ஆட நாம் பெறில் -2-2-

என் அரங்கனுக்கு அடியார்களாய் நாத் தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்பத் தொழுது ஏத்தி
இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என்நெஞ்சமே -2-4-

மாலை உற்று எழுந்து ஆடிப் பாடித் திரிந்து அரங்கன் எம்மானுக்கே மாலை உற்று இடும் தொண்டர் வாழ்வுக்கு
மாலை உற்றது என் நெஞ்சமே -2-8-

மொய்த்துக் கண் பணி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடிப்பாடி இறைஞ்சி
என் அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையோர் முற்றும் பித்தரே -2-9-

——————————————————————————————-

திருச் சந்த விருத்தம் –

சோர்வில்லாத காதலால் தொடக்கறா மனத்தராய் நீர் அரவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும் வாரமாக ஓதுவார்கள் வல்லார் வானம் ஆளவே –78-

———————————————————————————–

திருமாலை
போதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன் -தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக் குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே –26-

—————————————————————————-

பெரிய திருமொழி –
சிக்கெனைத் திருவருள் பெற்றேன் உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பு எலாம் கண்ண நீர் சோர
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா வென்னும் நாமம் -1-1-5-

ஓதிலும் உன் பேர் அன்றி மற்றோதாள் -உருகும் நின் திருவுரு நினைந்து காதன்மை பெரிது கையறவுடையள்
-கயல் நெடும் கண் துயில் மறந்தாள்–என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே –2-7-5-

ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்கட்கு ஆரமுதமானான் தன்னை -2-10-4-

நீடு பன்மலர் மாலையிட்டு -நின் இணை அடி தொழுது ஏத்தும் -என் மனம் –3-5-5-

கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும் புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன் -3-5-6-

ஓதி யாயிர நாமமும் பணிந்து ஏத்தி நின்னடைந்தேற்கு -3-5-9-

ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஓளி மா மலர் பாத நாளும் பணிவோம் நமக்கே நலமாதலில் –9-3-9-

—————————————————————————————

திருவாய் மொழி –

உள்ளம் உரை செயல் -உள்ள இம் மூன்றையும் -இறை உள்ளில் ஒடுங்கே-1-2-8-

உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே –1-3-6-

ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து நன்று என நலம் செய்வது -1-3-7-

எந்தாய் என்பன் நினைந்து நைந்தே -1-5-1-

நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் -1-5-2-

கள்வா வெம்மையும் ஏழுலகும் நின்னுள்ளே தோற்றிய இறைவன் என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளூர்த்தி கழல் பணிந்து ஏத்துவரே -2-2-10-

குழாங்கள் ஆயிரத்துள் இவை பத்துமுடன் பாடி குழாங்களாய் அடியீருடன் கூடி நின்று ஆடுமினே -2-3-11-

ஆடியாடி அகம் கரைந்து இசை பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி
எங்கும் நாடி நாடி நரசிங்கா வென்று வாடி வாடும் இவ்வாணுதலே -2-4-1-

எம்பிரானைப் பொன் மலையை நா மருவி நன்கெத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட -2-6-3-

நின் புகழ் குடைந்து ஆடிப் பாடிக் களித்து உகந்து உகந்து உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்திருந்தே -2-6-4-

உன்னைத் சிந்தை செய்து செய்து உன் நெடு மா மொழி இசை பாடி யாடி
என் முன்னைத் தீ வினைகள் முழு வேர் அரிந்தனன் யான் -2-6-6-

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினான் காமனைப் பயந்தாய் என்று என்று
உன் கழல் பாடியே பணிந்து தூ மனத்தனனாய்ப் பிறவித் துழதி நீங்க
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-

சிரீஇதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப் பகல்வாய் வெரீஇ
ஆழமானது கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீஇயதீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என் இருடீகேசனே -2-7-9-

மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம் மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க வாராய் -2-9-6-

கண்ணன் எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார் தம்மால் கருமம் என் சொல்லீர் -3-5-1-

வார் புனல் அம் தண் அருவி வட திருவேங்கடத்து எந்தை பேர் பல சொல்லிப் பிதற்றி பித்தர் என்றே
பிறர் கூற ஊர் பல புக்கும் புகாதும் உலகர் சிரிக்க நின்றாடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே -3-5-8-

தேவபிரானை ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடி
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே -3-5-10-

கறை யணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த வம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டிலனே -3-10-2-

திருக்குருகூர் அதனை பாடி யாடிப் பரவிச் சென்மின்கள் பல்லுலகீர் பரந்தே-4-10-2-

மாதவன் பூதங்கள் மண் மேல் பண் தான் பாடி நின்றாடிப் பரந்து திரிகின்றனவே -5-2-2-

இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே -5-2-4-

நேமிப்பிரான் தமர் போந்தார் நன்று இசை பாடியும் துள்ளி யாடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுது உய்ம்மின் தொண்டீர் சிந்தையைச் செந்நிறுத்தியே–5-2-6-

திரு வண் வண்டூர் புணர்த்த பூந்தண் துழாய் முடி நம்பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே -6-1-5-

புகர்கொள் சோதிப்பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும் நுகர
வைகல் வைகப் பெற்றேன் எனக்கு என் இனி நோவதுவே -6-4-3-

தவள ஒண் சங்கு சக்கரம் என்றும் தாமரைத் தடம் கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமிறுமே -6-5-1-

தொலைவில்லி மங்கலம் கரும் தடம் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்
இருந்து இருந்து அரவிந்த லோசனை என்று என்றே நைந்து இரங்குமே -6-5-8-

பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள்
என்ன மாயம் கொலோ இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்து அவன் நின்று இருந்து உறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே -6-5-10-

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே
தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர் சடகோபன் –6-6-11-

உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று என்றே
கண்கள் நீர்கள் மல்கி மண்ணினுளவன் சீர் வளம் மிக்கவனூர் வினவி
திண்ணம் எண்ணிலமான் புகுமோர் திருக்கோளூரே– 6-7-1-

என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு அன்புருகி நிற்குமது நிற்க -7-1-10-

சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திருவாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே –7-10-10-

தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களை தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே -7-10-11-

பணங்கள் ஆயிரமுடைய பைந்நாகப் பள்ளியாய் பாற்கடல் சேர்ப்பா
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானு நீ தானே -8-1-8-

வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கதே ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே — 9-5-4-

நினைதொறும் சொல்லும்தோறும் நெஞ்சு இடிந்து உகும் வினைகொள் சீர் பாடிலும் வேம் எனதாருயிர்
சுனை பூஞ்சோலைத் தென்காட்கரை என்னப்பா நினைக்கிலென் நாண் உனக்கு ஆட் செய்யும் நீர்மையே –9-6-2-

வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திசை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற தகையான் சரணம் தமர்கட்கோர் பற்றே -10-4-10-

நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே -10-5-5-

திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே
அரு மா மாயத்து எனதுயிரே மனமே வாக்கே கருமமே
ஒரு மா நொடியும் பிரியான் என்னூழி முதல்வன் ஒருவனே -10-7-8-

——————————————

முதல் திருவந்தாதி –

பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய் செற்றார் படி கடந்த செங்கண் மால்
நற்றாமரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று –20 –

விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி யுரலோடு அறப்பிணித்த நான்று
குரல் ஓவாது ஏங்கி நினைந்து அயலார் காண இருந்திலையே ஓங்கோத வண்ணா உரை -24-

நகரமருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல் பகர மறை பயந்த பண்பன்
பெயரினையே புத்தியால் சிந்தியாது ஓதி யுரு வெ ண்ணும் அந்தியாலாம் பயன் அங்கு என் –33-

வகையறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும் புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி
திசை திசையின் வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த வூர் -37-

மனமாசு தீரும் அருவினையும் சாரா தனமாய் தானே கை கூடும்
புனமேய பூந்துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி தாம் தொழா நிற்பார் தமர் –43-

அயல் நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சி உய நின் திருவடியே சேர்வான்
நயநின்ற நன் மாலை கொண்டு நமோ நாரணா வென்னும் சொல்மாலை கற்றேன் தொழுது -57-

தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி எழுதும் ஏழு வாழி நெஞ்சே
பழுதின்றி மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான் அந்தரம் ஒன்றில்லை யடை -58-

இடரார் படுவார் எழு நெஞ்சே வேழம் தொடர் வான் கொடு முதலை சூழ்ந்த
படமுடைய பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும் கொய்ந்நாகப் பூம்போது கொண்டு -78-

நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும் பாடிலும் நின் புகழே பாடுவன்
சூடிலும் பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு என்னாகில் என்னே எனக்கு -88-

நா வாயிலுண்டே நமோ நாரணா வென்று ஓவாது உரைக்கும் உரை உண்டே
மூவாத மாக் கதிக் கண் செல்லும் வகை யுண்டே இன்னொருவர் தீக்கதிக் கண் செல்லும் திறம் -95-

——————————————————

இரண்டாம் திருவந்தாதி –

நகர் இழைத்து நித்திலத்து நாண் மலர் கொண்டு அங்கே திகழு மணி வயிரம் சேர்த்து
நிகரில்லாப் பைங்கமலம் ஏந்திப் பணிந்தேன் பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி -4-

அறிந்து ஐந்தும் உள்ளடக்கி ஆய்மலர் கொண்டு ஆர்வம் செறிந்த மனத்தராய்ச் செவ்வே
அறிந்தவன் தன் பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே காரோத வண்ணன் கழல் -6-

பழிபாவம் கையகற்றிப் பல் காலும் நின்னை வழி வாழ்வார் வாழ்வராம் மாதோ
வழுவின்றி நாரணன் தன் நாமங்கள் நன்கு உணர்ந்து நன்கு ஏத்தும் காரணங்கள் தாமுடையார் தாம் -20-

தா முளரே தம்முள்ளம் உளதே தாமரையின் பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே
வாமன் திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே அரு நரகம் சேர்வது அரிது -21-

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம் புகையால் நறு மலாரால் முன்னே
மிக வாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப்பட்டேனுக்கு என் பாக்கியத்தால் இனி -34-

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே தமக்கு என்றும் சார்வம் அறிந்து
நமக்கு என்றும் மாதவன் என்னும் மனம் படைத்து மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் ஒத்து -38-

சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம் மறந்தாரை மானிடமா வையேன்
அறம் தாங்கும் மாதவன் என்னும் மனம் படைத்து மற்றவன் பேர் ஓதுவதே நாவினால் உள்ளு -44-

திருமங்கை நின்று அருளும் தெய்வம் நா வாழ்த்தும் கருமம் கடைப்பிடிமின் கண்டீர்
உரிமையால் ஏத்தினோம் பாதம் இருந்த தடக்கை எந்தை பேர் நால் திசையும் கேட்டீரே நாம் -57-

பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால் அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்
துணிந்தேன் புரிந்து ஏத்தி உன்னைப் புகலிடம் பார்த்து அங்கே இருந்து ஏத்தி வாழும் இது -65-

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு வந்திவாய் வாய்ந்த மலர் தூவி வைகலும்
ஏய்ந்த பிறைக் கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான் இறைக்கு ஆட்படத் துணிந்த யான் -73-

அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும் அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும்
அமுதன்ன சொல்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட நன்மாலை ஏத்தி நவின்று -85-

——————————————-

மூன்றாம் திருவந்தாதி –

நாமம் பல சொல்லி நாராயணா வென்று நாம் அங்கையால் தொழுதும் நன்னெஞ்சே வா
மருவி மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய் கண்ணனையே காண்க நம் கண் -8-

அறிவு என்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில் செறிவு என்னும் திண் கதவம் செம்மி
மறை என்றும் நன்கு ஓதி நன்கு உணர்வார் காண்பரே நாடோறும் பைங்கோத வண்ணன் படி -12-

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான்
இலாத சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர் தூய்க் கை தொழுது முந்தையராய் நிற்பார்க்கு முன் -19-

வடிவார் முடி கோட்டி வானவர்கள் நாளும் கடியார் மலர் தூவிக் காணும்
படியானை செம்மையால் உள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே மெய்ம்மையே காண விரும்பு -22-

காண் காண் என விரும்பும் கண்கள் -கதிர் இலகு பூண்தார் அகலத்தான் பொன்மேனி
பாண் கண் தொழில் பாடி வண்டு அறையும் தொங்கலான் செம் பொற் கழல் பாடி யாம் தொழுதும் கை -35-

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம் தாழ்த்தி வணங்கத் தழும்பாமே
கேழ்த்த அடித்தாமரை மலர் மேல் மங்கை மணாளன் அடித்தாமரையாமலர் -96-

———————————————————–

நான்முகன் திருவந்தாதி –

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி
கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை யாங்கு -9-

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம் தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால்
சூழ்த்த துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை வழா வண் கை கூப்பி மதித்து -11-

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம் மலர் ஏற விட்டு இறைஞ்சி வாழ்த்த
வலராகில் மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர் நீற் கண்டன் கண்ட நிலை -15-

தரித்து இருந்தேனாகவே தாரா கணப்போர் விரித்துரைத்த வெந்நாகத்து உன்னை
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது -63-

நாக்கொண்டு மானிடம் பாடேன் நலமாகத் தீக்கொண்ட செஞ்சடையான் சென்று
என்றும் பூக்கொண்டு வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச் செல்வனார் சேவடி மேல் பாட்டு -75-

—————————————————————-

திருவாசிரியம்

உலகு படைத்து உண்ட வெந்தை அறை கழல் சுடர்ப் பூந்தாமரை சூடுதற்கு அவாவாருயிருகி யுக்க
நேரிய காதல் அன்பிலின்பீன் தேறல் அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருட்க்கு அசைவோர் அசைக-2-

————————

பெரிய திருவந்தாதி –

வாழ்த்தி அவன் அடியைப் பூப் புனைந்து நின் தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத
பாழ்த்த விதி எங்குற்றாய் என்றவனை ஏத்தாது என் நெஞ்சமே தங்கத்தானாமேலும் தங்கி -84-

——————————————————

இராமானுச நூற்றந்தாதி –

சார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்த தத் தாமரைத் தாள்களுக்கு உன்தன் குணங்களுக்கே
தீர்ந்த தென் செய்கை முன் செய்வினை நீ செய்வினையதனால்
பேர்ந்தது வண்மை யிராமானுசா ! எம் பெரும்தகையே !–71-

நையும் மனம் உன் குணங்களை யுன்னி என் நா இருந்து எம் ஐயன் ராமானுசன் என்று அழைக்கும்
அருவினையேன் கையும் தொழும் கண் கருத்திடும் காணக்
கடல் புடை சூழ் வையம் இதினில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே -102-

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

-அமலனாதி பிரான் – வியாக்யானங்களில் -அருளப்பெற்ற அமுத துளிகள் –

September 18, 2015

ஸ்ரீ யபதியான சர்வாதிக வஸ்துவினுடைய திவ்ய அங்கங்களை திருப்பாதம் தொடங்கி அனுபவித்த க்ரமம் சொல்லுகிறது
அயன் அலர் கொடு தொழுதேத்த -என்னும்படி -ஹம்ச வாஹனான சதுர முகன் பஹு முகமாக அனுபவித்தாப் போலே
முநி வாகநரான இவரும் ஏக முகமாக இரண்டு கண்ணாலும் கண்டு அனுபவித்தார் –
உவந்த உள்ளத்தார் ஆனார் —
சௌந்தர்ய சாகரத்திலே மக்நர் ஆனார் –
இவருக்கு அழகு அஜ்ஞ்ஞானத்தை விளைத்தது ஆய்த்து –
அத்ருஷ்டம் த்ருஷ்டம் ஆகையாலே த்ருஷ்டம் அத்ருஷ்டம் ஆய்த்து –
அணி அரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே –
சிந்தை மற்று ஒன்றின் திறத்தலா –
பாவோ நாந்யாத்ர கச்சதி –
கட்கிலீ என்னும் வடிவை இறே கண்ணால் கண்டு அனுபவித்தது
காணாதவையும் கண்ட வஸ்துவிலே உண்டு இறே –
மைப்படி மேனியை அனுபவித்து மற்ற விஷயங்களை காணாக்  கண்ணாய் இருக்குமவர்-

இவர் அடியார் ஆகையால் அடியே தொடங்கி அனுபவிக்கிறார்
ப்ரஹ்மா அபிமானி ஆகையால் முடியே தொடங்கி -அனுபவித்தான் –

——

வீணையும் கையுமாய் சேவிக்கிற இவர் -சேமமுடை நாரதனாரும் ஒரு வைகைக்கு ஒப்பாகார்
பெரியாழ்வார் அவதாரத்தில் அனுபவம் இவருக்கு அர்ச்சாவதாரத்திலே
அவர் -பாதக்கமலம் என்றத்தை -இவர் திருக் கமல-பாதம் என்றார்
அவர்-பீதகச் சிற்றாடை யொடும் -என்றத்தை -இவர் -அரைச் சிவந்த வாடையின் மேல் -என்கிறார்
அழகிய உந்தியை —-அயனைப் படைத்த தோர்  எழில் உந்தி –
பழம் தாம்பால்  ஆர்த்த உதரத்தை —–திரு வயிற்று உதர பந்தம் –
குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்வை -திரு வார மார்வு என்றும்
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டத்தை –முற்றும் உண்ட கண்டம் -என்றும்
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலத்தை -கையினார் சுரி சங்கு அனல் ஆழியர் -என்றும் –
செந்தொண்டை வாயை –செய்ய வாய் என்றும்
கண்கள் இருந்தவா –என்றத்தை -அப்பெரிய வாய கண்கள் என்றும்
உருவு கரிய ஒளி மணி வண்ணன் -என்றத்தை -எழில் நீல மேனி -என்றும்
குழல்கள் இருந்தவா -என்றத்தை -துளவ விரையார் கமழ் நீண் முடியன் -என்றும் அருளிச் செய்தார்-

கோவலனாய் வெண்ணெய்  உண்ட வாயன் இறே பெரிய பெருமாள் –
முனி ஏறி தனி புகுந்து –
இந்த மஹா போகத்திலே தாம் ஏகராய் உள் புகுந்து-பாட்டினால் —அநுபவத்துக்கு பாசுரம் இட்டுப் பேசின –
அமலனாதிபிரான் -என்கிற
பிரபந்தத்தின் பாட்டுக்களாலே —அண்டர் கோன் அணி அரங்கனைக் கண்டு வாழுமவர் யாய்த்து -இவர் –
பின்பு இவ் வநுபவத்துக்கு பட்டர் தேசிகர் ஆனார்-
கண்டு வாழும் –
காட்சியாக வாழ்ச்சியாக வாழுகிற
பாணர் தாள் பரவினோம்-

————————————————————————————————

பிரணவம் போலே அதி சங்குசிதமாய் இருத்தல்
வேதமும் வேத உபப்ரும்ஹணமான மஹா பாரதமும் போலே பரந்து துறுப்பு கூடாய் இருத்தல்
செய்யாதே பத்துப் பாட்டாய் -ஸூக்ரஹமாய் -சர்வாதிகாரமுமாய் இருக்கும்
திருவாய் -மொழியும்–அமர்சுவை -யாயிரம் -என்றும்–பாலோடு அமுதன்ன ஆயிரம் -என்றும் –
உரை கொள் இன் மொழி -என்றும் —ஏதமிலா ஆயிரமாய் இருந்ததே யாகிலும் –
அந்ய உபதேச ஸ்வா பதேசம் -என்ன–ஸாமாநாதி கரண்ய நிர்ணயகம் -என்ன —
த்ரி மூர்த்தி சாம்ய தத் உத்தீர்ண தத்வ நிஷேதம் -என்ன –
இவை தொடக்கமான அருமைகளை உடைத்தாய் இருக்கும் –

திரு நெடும் -தாண்டகமும்–பரப்பற்று முப்பது பாட்டாய் இருந்ததே யாகிலும்–அதுக்கும் அவ்வருமைகள் உண்டு –

திருமாலைக்கு–அவ்வருமைகள் இல்லையே யாகிலும்–தம்முடைய லாப அலாப ரூபமான
ப்ரிய அப்ரியங்களை–ப்ரதிபாதியா -நிற்கும்-
பிரணவம் போலே அதி சங்குசிதிமாய் -துர் ஞேயமாய் -இராமையாலே —
யதி ஹாஸ்தி ததத் அந்யத்ர யன்நே ஹாஸ்தி நத்க் வசிக் -என்கிறபடியே
ஆயிரத்தில் ஒன்றும் கடலில் குளப்படியும் போலே–புறம்பு இல்லாதவை எல்லாம் இதிலே உண்டாய்–
இதில் இல்லாதது ஒன்றும் புறம்பு இன்றியே இருக்கும் –

பர வியூஹ விபவங்களை பிரதிபாதிக்கை அன்றிக்கே —அர்ச்சாவதார ரூபேண வந்து அவதரித்து
திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர் பொன்னி திரைக் கையால் அடிவருட–
பள்ளி கொள்ளும் கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு
மணத் தூணே பற்றி நின்று வாயார வாழ்த்துகிற பிரபந்தம் ஆகையாலே–
எல்லா பிரபந்தகளிலும் இதுக்கு வை லஷண்யம் உண்டு –

—————————————————————-

வேதம் போலே முதல் ஆழ்வார்கள் மூவரும் பரத்வத்திலே மண்டி அர்ச்சையும் தொட்டுக் கொண்டு போந்தார்கள் –
ஸ்ரீ வால்மீகி பகவானைப் போலே ஸ்ரீ குலசேகர பெருமாள் ராமாவதாரத்திலே ப்ரவணராய்
அர்ச்சாவதாரத்தையும் அனுபவித்தார் –
ஸ்ரீ பராசர பகவானையும் ஸ்ரீ வேத வியாச பகவானையும் போலே
நம்மாழ்வாரும் பெரியாழ்வாரும் ஆழ்வார் திருமகளாரும் கிருஷ்ணாவதாரத்தில் மண்டி
அர்ச்சாவதாரத்தை அனுபவித்தார்கள் –
திரு மழிசைப் பிரான் -தேவதாந்தர பரதவ நிரசனத்திலே தத் பரராய் இருந்தார் –

திருமங்கை ஆழ்வார் பரத்வத்தை காற்கடைக் கொண்டு அர்ச்சாவதாரத்திலே இழிந்து –

அது தன்னிலும் -தான் உகந்த ஊரெல்லாம் தன் தாள் -பாடி பரபரப்பாய் திரிந்தார் –
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -பெரிய பெருமாளை அனுபவியா நிற்கச் செய்தே
பரோபதேசம் -பண்ணுவது பரத்வ ஸ்தாபனம் பண்ணுவது –
இவர் பெரிய பெருமாளை பூரணமாக அனுபவிக்கிறார்
மற்ற ஆழ்வார்களுக்கு முன்புள்ள ஜன்ம பரம்பரைகளில் உண்டான துக்க அனுபவ
ஸ்மரணத்தாலும்  -ஸ்வரூப அநுரூபமான பகவத் போகத்தின் உடைய அலாபத்தாலும்
கிலேச அனுபவம் கலாசி நடவா நின்றது –
இவருக்கு பெரிய பெருமாள் அர்ச்சா ரூபியாய் இருக்கச் செய்தேயும் தம்முடைய சௌந்தர்யத்தை
சாகரத்தை ஆவிஷ்கரிக்க லாவண்யம் ஆகிற மரக்கலத்தாலே எங்கும் ஒக்க அனுபவிக்கிறார் –
பல்லாண்டு போற்றி என்று பாவிக்க வேண்டாமல் இவருக்கு ஜன்ம சித்தம் ஆய்த்து-

———————————————————–

பாவோ நாந்யத்ர கச்சதி -என்று என்னை மீட்டீராகிலும் என்னுடைய நெஞ்சை மீட்க்கப் போகாது
அந்யத்ர-என்கிறது —மற்று ஆரானும் உண்டு -என்பார் என்னுமாபோலே–
கொடுபோக நினைத்த தேசத்தின் பேரும் கூட  தனக்கு அசஹ்யமாய் இருக்கிறபடி –
இப்படி ராமாவதாரம் அல்லது அறியாத திருவடியைப் போலே ஆய்த்து இவரும்
இவர் தேவாரமான பெரிய பெருமாளை அல்லது பர வ்யூஹ விபவங்களை—அறியாதபடியும்
பெரிய பெருமாள் உடைய அழகும் ஐஸ்வர்யமும் பரம பதத்தில் முகிளிதமாய் இருக்கும்
அவதாரத்திலே ஈரிலை பெறும் -இங்கே வந்த பின்பு தழைத்தது
தன்னை உகந்தாரை தாம் அனுபவிக்கை அன்றிகே தான் என்றால் விமுகராய் இருப்பாரும்
கூட-அனுபவிக்கலாம் படி இருக்கையாலே நீர்மையால் வரும் ஏற்றம் இங்கே உண்டே
வேதங்களுக்கு எட்டாத சர்வேஸ்வரனை ஆற்றில் தண்ணீரோ பாதி ஆற்றுக்கு உள்ளே
கண்டு அனுபவிக்கலாம் படி இருக்கிற இடம் இறே –
மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுர வாறான அவ்வாறு இவ்வாறாய்த்து காணும் –

இவர் தமக்கு ப்ராப்யரும் ப்ராபகரும் ருசி ஜனகரும் விரோதி நிவர்த்தகமும் எல்லாம்
பெரிய பெருமாளே என்று இருப்பர் .
அனுபாவ்யரான பெரிய பெருமாள் தம்மைப் பார்த்தாலும் –பரத்வம் போலே தேச விப்ரக்ருஷ்டமாய் இருத்தல் –
வ்யூஹம் போலே தத் ப்ராயமால் இருத்தல் –விபவம் போலே கால விப்ரக்ருஷ்டமாய் இருத்தல் –
அந்தர்யாமித்வம் போலே அசஷூர் விஷயமாய் இருத்தல் –அர்ச்சாவதாரங்கள் போலே –
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாது இருத்தல் –
அங்கு வர்த்திக்கும் பேர் -சிலைக்கை வேடரேயாய் பயங்கரராய் இருத்தல் –பெரிய ஏற்றமேற வேண்டி இருத்தல் –
வருந்தி பெரும் கூட்டத்தோடு போய் ஏறினால் -கானமும் வானரமும் வேடுமேயாய்-மேலை வானவர் இன்றிக்கே இருத்தல் –
செய்கை அன்றிக்கே
இத் தேசத்தில் -இக்காலத்தில் -எல்லார் கண்ணுக்கும் விஷயமாய்க் கொண்டு-
பத்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும்
சித்தர்களும் தொழுது இறைஞ்ச திசை விளக்காய் நின்ற திருவரங்கம் –என்கிறபடியே
எல்லார்க்கும் நின்ற நின்ற நிலைகளிலேயே ஆஸ்ரயிக்கலாம் படி-சர்வ சுலபருமாய்
வன் பெரு வானகம் -இத்யாதிப் படி -உபய விபூதியையும் நிர்வஹித்துக் கொண்டு-போருகிற மேன்மையை உடையராய் –
இப்படி சர்வாதிகாருமாய் -சர்வ சேஷியுமாய் -சர்வ ரஷகருமாய் -சர்வ சமாஸ்ரயணீ யருமாய் —
நிரதிசய போக்ய பூதருமாய் -இருப்பவர் –

———————————————————–

தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து –
கடைத் தலை யிருந்து வாழும் சோம்பராய் இருக்கிற லோக சாரங்க மஹா முனிகளை அருள் பாடிட்டு –
நம்பாடுவானை அழைத்துக் கொண்டு வாரும் -என்ன
அவரும் -அருள் பாடு அருள் பாடு -என்று சொல்ல –
இவரும் -அடிப் பாணன் அடிப் பாணன் -என்று இறாய்க்க –
அவரும் விடாதே தோள் மேலே எழுந்து அருளப் பண்ணுவித்து கொண்டு போக
வழியிலே ஒன்பது பாட்டு பாடி -திருப் பிரம்புக்கு உள்ளே பத்தாம் பாட்டு பாடித் தலைக் கட்டுகிறார்-
இதில் முதல் பட்ட மூன்று பாட்டுக்கு முதல் அஷரம் மூலமாகிய ஒற்றை எழுத்தின் முதல் -நடு -இறுதி யானவை-

———————————————————-

ஆகாசத்தின் நின்றும் சஹ்யத்தில் வர்ஷித்து -அங்கு நின்றும் காவேரி யாறாய் போந்து இழிந்து
கால்களாய் புகுந்து போய் நாட்டாருக்கு உபயுக்தமாம் போலே –
பரம பதம் ஆகிற பரம வ்யோமத்தின் நின்றும் -திருமலையிலே வந்து இழிந்து –
தெற்கு நோக்கி வந்து -பள்ள நாலியான கோயிலிலே தேங்கி
கீழ் மேலாக கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் ஆகிற மதுர வாற்றின் இடை புகுந்து
ஓடுகிற காலை அனுபவிக்கிறார் –

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1-

அமலன் –
தன்னை வந்து கிட்டின போதும்
பெரிய பெருமாளுக்கு பிறந்த வைலஷண்யம் கண்டு
அவனுடைய ஹேய ப்ரத்ய நீகதையை முதலில் –
என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதி –
துயர் அறு சுடர் அடி -இறே-

ஆதி –
கல்யாண குண யோகம் –
பெற்ற பாவிக்கு விடப் போகுமோ –
தாம் அடியான் என்றும் ஆதி சப்தம் சொல்லும் –
என் பேற்றுக்கு முற்பட்டவன்
அழிந்த ஜகத்தை உண்டாக்கினாப் போலே ஸ்வரூபத்தை அழித்துக்கொண்ட  என்னை உண்டாக்கி-
ஆக-அமலன்-ஆதி -இரண்டு -பதத்தாலும் -ஹேய ப்ரத்யநீகத்வமும் கல்யாண குண யோகமும் சொல்லுகிறது

பிரான்
எனது நிகர்ஷம் பாராதே கீழ் செய்து அருளிய -மேலும் பண்ணப் புகுகிற உபகாரகன்

அடியாருக்கு என்னை ஆட் படுத்த -விமலன்
எனக்கும் என்றும் பிறருக்கு என்றும் திரிந்த என்னை
தனக்கும் தன் அடியாருக்கும் ஆக்கின பரி சுத்த ஸ்வபாவன்
தலையைப் பிடித்து கால் கீழே இட்டுக் கொண்டான் -வஸ்துவின் சீர்மையாலே
அடியார்க்கு ஆம் இத்தனை என்று –
அடியாருக்கு -சேஷத்வமே பிரதம நிரூபகம்
பாகவத சேஷத்தளவும் சென்றால் மீளப் போகாதே
சேஷித்வத்தின் எல்லையில் தான் நின்று சேஷத்வத்தின் எல்லையில் என்னை ஆக்கி அருளினான்
தம்மை வஹித்த அளவில் லோக சாரங்க முனிவருக்கு இவர் சேஷ பூதர் ஆனது
திருத் துழாய் திரு அபிஷேகத்தில் இருந்தாலும் சேஷத்வம் குலையாதே-

விண்ணவர் கோன்
த்ரிபாத் விபூதியாக தன்ன தாலாட்ட இருக்கிறவன் கிடீர்
கதிர் பொறுக்கி ஜீவிப்பாரைப் போலே நித்ய சம்சாரியாய் இருக்கிற என்னை
நித்ய சூரிகள் ஒக்க ஆம்படி விஷயீ கரித்தான் –
உடன் கூடுவது என்று கொலோ ஆசைப்பட வேண்டாதபடி அங்குத்தை குழாத்தையும் காட்டித் தந்தான் –
கோன் -அவர்களாலும் எல்லை காண முடியாது -இருப்பவன்-

விரையார் பொழில் வேம்கடவன்
அர்ச்சாவதாரத்துக்கு பொற் கால் பொலிய விட்ட இடம்
சர்வ கந்த -என்கிற வஸ்து போலியான பரிமளத்தை கண்டு கால் தாழ்ந்தான் –
பெரிய பெருமாளை அனுபவிக்க இழிந்தவர் -ஆற்றில் அமிழ்ந்துகிறவன் இங்கே –

ஆழம் காலிலே இளைப்பாற தேடுமா போலே -அது மடு வாகிறது அறியாமல் –
வரத்து சொல்லி கவி பாடுகிறார்

நிமலன் –
அர்த்தித்வம் இன்றிக்கே -நிர்ஹேதுகமாக -தானே பச்சை இட்டு உபகரிகையால் வந்த ஔஜ்வல்யம் –
நின்மலன்
தன் பேறாக செய்தான் –
உடையவன் உடைமையை பெற்றால் நமக்கு என்ன -ஆத்ம லாபம் தன்னதாம் படி –

நீதி வானவன் –
இப்படி புகுர நிறுத்துகைக்கு அடி -சேஷ சேஷித்வங்கள் மாறாத நித்ய விபூதி வாசனை
அங்கு கலங்குவாறும் இல்லை கலக்குவாறும் இல்லை –

அளப்பரிய ஆரமுதை யரங்கமேய அந்தணனை போலே
நீதி வானவன் நீள் மதிள் அரங்கத்து அம்மான் –
இப் பாசுரம் கேட்டுப் போலே காணும் திருமங்கை ஆழ்வார் திரு மதிள் செய்தது
ரஷகமாகப் போரும்படியான மதிளை உடைய பெரிய கோயில் –
அம்மான்
ஈரரசு தவிர்ந்தால் இறே சேஷித்வம் பூரணமாவது
திருமலை போக்யதை நிலம் அல்லாமையாலே கோயிலிலே புகுகிறார்
வெள்ளத்தை கள்ள மடையாலே பள்ளத்தே விடுமா போலே திருவேம்கடமுடையான்
வடக்கு திருவாசல் வழியே வந்து புகுந்தான்

திருக் கமல பாதம்
ஆதித்யன் சந்நிதியில் தாமரை அலருவது போலே
ஆஸ்ரிதர் சந்நிதியில் அலரும் திருவடிகள் –
தளிர் புரையும் திருவடிகள் –
அம்மான் திருக் கமல பாதம்
பிராப்யமும் பிராபகமும்-

வந்து
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -வழி வந்தானும் தானே பற்றினானும் தானே –
உபாய பூர்த்தி சொல்லுகிறது-

என் கண்ணின் உள்ளன –
தொடர்ந்து வந்து செம்பளித்த கண்ணை யுறுத்து உள்ளே புகுந்து நிற்கையாலே –
கண்ணாலே பார்க்கை அவத்யம் என்று செம்பளித்தாலும் உள்ளே பிரகாசிக்க தொடங்கிற்று –

ஒக்கின்ற –
ப்ரத்யஷ சாமாநாகாரமாய் இருத்தல் –
பிரயோஜனம் இரண்டு தலைக்கும் ஒத்திரா நின்றது
அங்குத்தைக்கு சீல ஸித்தி -இங்குத்தைக்கு ஸ்வரூப ஸித்தி –

அமலன் -உயர்வற உயர் நலம் உடையவன்
ஆதி -யவன்
பிரான் -மயர்வற மதி நலம் அருளினன் –
அடியார்க்கு -பயிலும் சுடர் ஒளி
விண்ணவர் கோன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி
வந்து -அவர் தொழுது எழு -என்றார் இவர்க்கு அவை தானே வந்து நின்றன –

———————————————————————————————

அவன் இவரை விஷயீ கரித்து -தொடர்ந்து வந்து -தம் திரு உள்ளத்திலே ப்ரகாசித்த படியை சொல்லி
இனி தாம் மேல் விழுந்தபடி சொல்லுகிறார் –
வந்து உனதடியேன் மனம் புகுந்தாய் -புகுந்ததிற் பின் வணங்கும் என் சிந்தைனைக்கு இனியாய் –
தான் அறிந்து சேரில் விஷயத்தின் போக்யதைக்கு குற்றமாம் –
போக்யதை அளவு பட்டதும் அல்ல  -ஆசையும் அளவு பட்டது அல்ல –
கடலோதம் கிளர்ந்து அலைக்கப் புக்கால் -உள்ளே கிடந்த தோர் துரும்பு கடலை அளவிட்டு அல்லவே
ஈன்று அணித்தான நாகு -தன் கன்றுக்கு வாசனை இல்லாமையாலே முதலில் தானே தன்
முலையை அதின் வாயிலே கொடுக்கும் -பின்பு சுவடு அறிந்தால் கன்று தானே இது
காற் கடைக் கொள்ளிலும் மேல் விழும் இறே-

உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற
நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே —-2-

உவந்த உள்ளத்தனாய் –
பிரஜை பால் குடிக்கக் கண்ட மாதாவைப் போலே உகக்கிறான் -ஆழ்வாரை
அகப்படுதுகையால் வந்த ப்ரீதி
சர்வேஸ்வரன் -அவாப்த சமஸ்த காமன் -ஸ்ரீயபதி -அவாக்ய -அநாதர -பூரணன் –

உலகம் அளந்த
கதா புன -என்றும் -படிக்களவாக நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -என்றும்
அபேஷியாய் இருக்க -பெரிய பிராட்டியார் கூசிப் பிடிக்கும் மெல்லடிகளால் -காடு மேடுகள்
என்று பாராதே -சேதன அசேதன விபாகம் பாராதே –
வசிஷ்ட சண்டாள விபாகம் பாராதே -ஸ்த்ரி பும்ஸ விபாகம் அற -ஞான அஞ்ஞான விபாகம் அற பரப்பினால்
இப்படி உபகரிப்பதே என்று உகக்க பிராப்தமாய் இருக்க -இவர்கள் அறிவு கேடே ஹேதுவாக -விலக்காது
ஒழியப் பெற்றோமே என்று இரட்டிக்கப் புகுந்த திரு உள்ளத்தனாய் –
உகக்க அறியாமை -வன் மாய வையம் -என்பதால் இறே
பக்திமான்களும் பாதகிகளும் ஒக்க வாழ்ந்து போகும்படி திருவடிகளை வைத்து
எதிர்தலை அறியாது இருக்க தானே வைக்கிறது வாத்சல்யம் இறே
உறங்குகிற பிரஜையை தாய் கட்டிக் கொண்டு கிடக்கிறது வாத்சல்யம் அன்றோ
இவற்றை பிரிந்தால் வ்யசனமும் தன்னதே இறே-

அண்டம் உற
அண்ட கடாஹம் வெடித்து அடி பிடிக்க வேண்டும்படி அபேஷிதம் பெற்று வளர்ந்த படி –
அண்டம் மோழை எழ –
நிவர்ந்த
பூ அலர்ந்தால் போலே
நீண் முடியன் –
உபய விபூதிக்கும் நிர்வாஹகன் என்று தோற்றும் படி தரித்த முடி
ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து -என்று திருவடி
வளர்ந்ததை காட்ட இருக்க -திருவடி வளர்த்தி சொல்வது ப்ராப்தமான திருவடிகள் என்று தோற்ற –
அர்த்திதத்தை பெற்ற உகப்பு திரு உள்ளத்தில்
அவன் தான் அறிய உகக்க ஒண்ணாதே –
திருக்கையிலே நீர் விழுந்தவாறே அந் நீரே பற்றாசாக வளர்ந்து அளந்து கொண்டான்
நிகர்ஷம் பாராதே -அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து -புகுந்து
சித்தம் ராகாதி தூஷிதமாய் இருக்கையாலே கால் பொருந்தி இருக்க மாட்டானே
அந்த விரோதி போக்குபவனும் அவனே-

அன்று நேர்ந்த நிசாசரரை கவர்ந்த வெங்கணை -காகுத்தன்
கண்ட காட்சியிலே ஜிதம் என்று இருக்குமவன் -எதிரிட்ட பையல்களை முடிக்கைக்கு
செவ்விய சரத்தை உடையவன் –
விடும்  போது அம்பாய் படும் போது காலாக்னி போலே இருக்கை –
பெருமாள் கண் பார்க்கிலும் முடித்து அல்லாது நில்லாத வெம்மை –
அவன் தன்னைப் போலே ஆய்த்து அம்புகளும்
சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே –
கோ குணவான் -சீலம் சொல்லி கச்ச வீர்யவான் -வீரத்தை சொன்னது போலே
மாம் அஹம் இரண்டையும் சொன்னார்
உலகம் -அளந்து திருவடிகள் விக்ரமித்தபடி
கவர்ந்த வெங்கணை காகுத்தன் -திருத் தோள்கள் ப்ராக்ரமித்த படி –
காகுஸ்தன் -குடிப்பிறப்பால் தரம் பாராதே விஷயீ கரித்ததும் வீர ஸ்ரீ காட்டி -அருளியதும்-

கடியார் -பொழில் அரங்கத்தம்மான்
உலகம் அளந்த ஸ்ரமமும் -ராஷச வாத ஸ்ரமமும் தீர பரிமளம்
சோலை உடைய கோயிலே அந்த திருவடிகளையும் திருத் தோள்களையும் நீட்டிக் கொண்டு சாய்ந்து அருளினான்
கொடியார் மாடக் கோளூர் அகத்தும் புளிங்குடியும்
மடியாது இன்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ அன்றேல்
இப்படி தான் நீண்டு தாவிய அசைவோ பணியாயே –
கொடி கட்டிக் கொண்டு கிடக்க வேண்டுமோ என்று வயிர் பிடிக்க வேண்டாதபடி இவன் கண் வளர்ந்து அருளுகிற படி –
சர்வகந்த–கண் வளர்ந்து அருளுகையாலே கடியார் பொழில்
இத்தால் போக்யதை சொல்லிற்று-

என் சிந்தனை
திருவடிகளின் சுவடு அறிந்து பின்பு புறம்பு போக மாட்டாத நெஞ்சு
துறையிலே பிள்ளையைக் கெடுத்து திரு ஓலக்கத்திலே காண்பாரைப் போலே

முதல் -பாசுரம் -பாதம் -வந்து என்று சாதனா பாவம் சொல்லி -இதில்
சென்றதாம் -அதிகாரி ஸ்வரூபம் -தம் திரு உள்ளம் மேல் விழுந்ததாக சொல்கிறார்-

————————————————————

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3-

மந்தி பாய் –
வேரே பிடித்து தலை அளவும் பழுத்த பலா பழங்கள் தாவும் மந்தி போலே –
பெரிய பெருமாள் உடைய திவ்ய அவயவங்களிலே இவர் ஆழம் கால் படுவது -போலேயும்
பரமபதமும் திருமலையும் திரு அயோத்யையும் திருச் சோலையையும் இவனுக்கு ஒரு போகியாய் இருக்கிறபடி –
எங்கும் மாறி மாறி தங்குகை –

திரு பீதாம்பரத்தின் அழகின் மிகுதி திரு நாபீ கமலத்தில் வீச
தன்னுடைய மேன்மையும் அழகையும் காட்டி இவர் மனஸை தன் பக்கலிலே இழுத்துக் -கொள்ள
அனுபாவ்யதை எல்லை கண்டு மீளாமல் சாபல்யத்தால் இழுப்புண்கிறார்
அன்று ஞாலம் அளந்த பிரான் சென்று சேர் திருவேம்கடம் –
எந்நாளோ நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு -என்று திருவேம்கடமுடையான் திருவடிகளைக்
காண பிரார்த்தித்து –
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் -என்று தன் திருக்கையால்
உலகம் அளந்த பொன்னடியைக் காட்டிக் கொடு நிற்கிறவனுமாய்
தானோங்கி நிற்கின்றான் த்ண் அருவி -வேம்கடம்
அவனே இங்கு வந்து கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் என்கிறார்-

மா மலை
போக்யதையின் -மிகுதியை சொல்லுகிறது –
பரன்  சென்று சேர் -சேஷி ரஷகத்வ சித்த்திககவும்
முன்னம் -அடைமினோ -சேஷபூதர் ஸ்வரூப சிததிககாகவும்
வந்து சேரும் ஸ்லாக்யதையை சொல்லுகிறது ஆகவுமாம் –
சூரிகள் சீல குணம் அனுபவிக்க வரலாம்படி உயரத்தை சொல்லுகிறதாகவுமாம் –
உபய விபூதியும் ஒரு மூலையில் அடங்கும் என்றுமாம்-

அரங்கத்து அரவின் அணையான்
அங்கு நின்றும்  இங்கே சாய்ந்தபடி
பரம பதத்தின் நின்றும் அடி -ஒற்றினான் திருமலை அளவும் பயணம் உண்டாய் இருந்தது
அங்கும் நின்றும் வடக்கு திருவாசலாலே வந்து கோயிலிலே சாய்ந்தான்
இனி சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது கிளம்பான் –
ராமாவதாரத்தே பிடித்து அடி ஒற்றினான் -ராவண வதம் பண்ணி தெற்குத் திரு வாசலாலே வந்து சாய்ந்தான்
ஆற்றாமையைக் காட்டி சரணம் புக்கு கிடக்குமவர் இவர்

அந்தி போல் நிறத்தாடை அரைச் சிவந்த ஆடை -என்றது பின்னாட்டுகிறது
சிவந்த ஆடை ஆபரணம் போலே கழற்ற முடியுமே -அந்தி போல் நிறத்தாடை  சஹஜம் என்கிறார் –

ஓர் எழில் உந்தி –
பிரசவ அந்தமான அழகு போல் இன்றி -பிரமனை உண்டாக்கிய பின்பு ஒளியும் அழகும் மிக்கது -இளகிப் பதிக்கை –
சௌந்தர்யம் ஆகிய பெரிய ஆறு -திருமுடி யாகிற மலைத்தலை யினின்றும்
அகன்ற திரு மார்பாகிற தாழ் வரையிலே வந்து குதி கொண்டு -அங்கே பரந்து கீழ் நோக்கி
இழிந்து -சிற்றிடை யாகையாலே அங்கே இட்டளப் பட்டு -பின்பு
திரு நாபியாய் சுழி யாறு பட்டது

அடியேன்
இந்த அழகுக்கு தோற்று அடியேன் என்கிறார் -பதிம் விச்வச்ய பிரமாணாத்தால் அல்ல –
குணைர்த் தாஸ்யம் உபாகத ராய் சொல்லு கிறாரும் அன்று

உயிர் -என்கிறது மனஸை
வடிவு அழகு ரசித்து போக்யமாய் இருக்கையாலே இன் உயிர் என்கிறார்
சிலரை உண்டாக்குகிறது கிடீர் என்னை அழிக்கிறது
ப்ரஹ்மாதிகளை உண்டாக்கும் நாபி -அடியேன் -என்று இருப்பாரை அழிக்கும்

——————————————

சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-4-

நானும் என்னுடையது அன்று –
மற்றும் என்னுடையதாவன ஒன்றும் இல்லை -என்கிற நமஸ் ஸில் அர்த்தத்தை மறை பொருளாக
அனுசந்திகிறார்
மதுர மா வண்டு பாட –
வினை அற்றவாறே ஆடல் பாடலுக்கு இடம் கொடுத்த படி
சிலர் பாடினால் ஆடுவாரும் வேணுமே
மயில்கள் ஆடப் புக்கன
மா மயில் –
ஒரு மயில் தோகை விரித்தால் அத் திருச் சோலைக்கு அணுக்கன் இட்டாப் போலே இருக்கை
ருஷிகள் கொண்டைக் கோல் கொண்டு ஆடுகை தவிர்ந்து மயில்கள் ஆடப் புக்கன
குரங்குகள் கூத்தாட்டாதல் இவற்றின் கூத்தாட்டாதல் என்றும் திர்யக் யோநிகளுக்கு நிலமாகை-

வண்டு பாட மா மயில் ஆடு
ஸ்ரீ வைகுண்ட நாதன் பெரிய பெருமாள் ஆனவாறே
நித்யசூரிகளும் வண்டுகளும் மா மயில்களும் ஆனபடி
சர்வை பரி வ்ருதோ தேவைர் வாநரத்வ முபாகதை -என்னக் கடவது இறே
ராஜா வெள்ளைச் சட்டை இட்டால் அடியார் கறுப்புச் சட்டை இடும் இத்தனை இறே-

கோயிலிலே சோலைகள் நித்ய வசந்தமாய் மது ஸ்பீதமாய் இருக்கையாலே
அந்த மதுவை கழுத்தே கட்டளையாக பானம் பண்ணி
அந்த ஹர்ஷதுக்கு போக்கு வீடாக வண்டுகளானவை கல்வியால் வரும் அருமை இல்லாமையாலே
பாட்டை மதுரமாம் படியாக -தென்னாதெனா -என்று முரலா நிற்க
சிந்துக்கு ஆடுவாரைப் போலே ஸ்லாக்யமான மயில்கள் ஆனவை -இவ் ஊரில் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை யாகையாலே ஆலித்து ஆடா நிற்கும்-

என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே
அந்த திருப் பீதாம்பரத்திலும் செல்ல ஒட்டாதே -திரு நாபீ கமலத்தின் நின்றும் வர வீர்த்து
இதுக்கு ஆச்ரயமான திரு வயிற்றிலும் போக ஒட்டாதே தான் மேலே விழுந்து ரஷித்து
தன் ஏற்றம் அடைய தோற்றும்படி -மத்த கஜம் போலே செருக்காலே பிசகி நின்று உலவா நின்றது –

என்னுடைய பெரிய
ஹ்ருதயத்தில் நின்று அழகு செண்டேறா நின்றது

ப்ரஹ்மாதிகளை எல்லாம் அகம்படியிலே ஏக தேசத்திலே
வைத்து உய்யக் கொண்ட ஸ்ரீ மத்தையை உடைத்தான திரு வயிற்றின் உடைய
சிறுமை பெருமைகளால் உண்டான அகடி தகடநா சக்திகளுக்கு அடையவளைந்தான் போலே
யிருக்கிற உதர பந்தம் தம்முடைய சிறிய திரு உள்ளத்துக்கு உள்ளே வெளியில் போலே
இடம் கொண்டு உலவா நின்றது -இது ஒரு ஆச்சர்யம் என்கிறார்

————————————————————–

தம் திரு உள்ளம் திரு நாபீ கமலத்தில் சுழி யாறு படுகிற படியைக் கண்டு
திரு நாபீ கமலத்துக்கு ஆச்ரயமான திரு வயிறும் -இந்த திரு நாபீ கமலத்துக்கு
வெறும் ப்ரஹ்மா ஒருவனுக்கு இருப்பிடமான மேன்மையும் அழகும் அன்றோ உள்ளது –
இதுக்கு ஆச்ரயமான நம்மைப் பார்த்தால் –
பக்த முக்த நித்ய ரூபமான த்ரிவித சேதனருக்கும்
த்ரி குணாத் மகமாயும் சுத்த சத்வாதமகமாயும் -சத்வ சூன்யமுமாயும் உள்ள அசேதன வர்க்கத்துக்கும்
ஆரச்யமான மேன்மையும் -ஆஸ்ரிதர்க்கு கட்டவும் அடிக்க்கவுமாம் படி எளியோமான
சௌலப்ய நீர்மையையும் உடையோமான ஏற்றத்தாலே பட்டம் கட்டி அன்றோ நாம் இருப்பது
என்று தனக்கு திரு நாபீ கமலத்தில் உண்டான ஏற்றத்தையும் காட்டி -திரு நாபீ கமலத்தில்
ஆழங்கால் படுகிற் என்நெஞ்சை தன் பக்கலிலே வர இசிக்க -அத் திரு வயிற்றை ஆச்ரயமாகப்
பற்றி நிற்கிற திரு உதர பந்தநம் தன் பக்கலிலே வர ஈர்த்து மேலிட்டு நின்று தம் திரு உள்ளத்திலே
ச்வரை சஞ்சாரம் பண்ணுகிற படியைச் சொல்லுகிறார்-

சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-4-

சதுர மா மதிள் சூழ் –
ஈஸ்வரன் நேர் நிற்கவும் எதிரிடப் பண்ணின மதிள் இறே
இவ்வழகையும் அரணையும் விஸ்வசித்து இறே பையல் பெருமாளோடே எதிரிட்டது
இது தானிட்ட மதிள் என்று அறிந்திலன்
அரணுக்கு உள்ளே இருக்கச் செய்தே பெருமாளோடே எதிர்க்கையாலே இது தான் அழிகைக்கு உடல் ஆய்த்து –
அவ்வரணை விட்டுப் பெருமாள் தோளையே அரணாகப் பற்றின ஸ்ரீ விபீஷண ஆழ்வான்
கச்த ஏவ வ்யதிஷ்டத -என்று ஆகாசத்திலே நிலை பெற்று நின்றான் இறே-

ஓத வண்ணன் –
ராவண வதம் பண்ணி -ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு முடி கொடுத்து -க்ருதக்ருத்யனாய்
ப்ரஹ்மாதிகள் புஷ்ப வ்ருஷ்டியும் ஸ்தோத்ரமும் பண்ண -வீர ஸ்ரீ தோற்ற
ஸ்ரமஹரமான வடிவோடே நின்ற நிலை

ஓத வண்ணன் -என்று பெரிய பெருமாளை சொல்லுகிறது ஆகவுமாம் –
இத்தால் பிரதிகூலரை அம்பாலே அழிக்கும் -அநுகூலரை அழகாலே அழிக்கும் -என்கை-

ஓத வண்ணன் –
கண்டவர்களுடைய பாபத்தையும் தாபத்தையும் கழிக்க வற்றாம் சமுத்ரம் போலே ச்யாமளமான
திருமேனியை உடையவன் –

மதுர மா வண்டு பாட மா மயில் ஆட அரங்கத்தம்மான் –
ராவண வதம் பண்ணின வீர லஷ்மியுடனே நின்ற அழகைக் கண்டு
ப்ரஹ்மாதிகள் ஸ்தோத்ரம் பண்ண -அப்சரஸ் ஸூக்கள் மங்கள ந்ருத்தம் பணணினாப் போலே  –
ஆத்மாநாம் மாநுஷம் மன்யே -என்கிற பெருமாளுடைய பூமிகைக்கு அநுரூபமாக
முக்தரும் நித்தியரும் கூடி -ரூபாந்தரம் -கொண்டு வந்தார்கள் என்னலாம்படி
அதி மதுரங்களாய் -ஜஞாநாதி குண மகாத்தையும் உடையவையான வண்டுகள்
காலப் பண்கள் பாட -பாட்டுக்கு அநுகுணமாக குணாதிகங்களான நீல கண்டங்கள்
ந்ருத்தம் பண்ண -இக்கீத ந்ருத்தங்களாலே மங்களோத்தரமான கோயில் ஆழ்வாருக்கு
உள்ளே சர்வாதிபதியான படி தோற்றக் கண் வளருகிற பெரிய பெருமாள் உடைய

திரு வயிற்று உதர பந்தம் -என் உள்ளத்துள் உலாகின்றதே –
தாமோதரம் பந்த கதம் -என்கிறபடியே பந்தகதருக்கு மோஷ ஹேதுவான தாமோதரத்வத்தை
வெளி இடா நின்ற திரு வயிற்றில் -திரு உதர பந்தம் -என்று திரு நாமத்தை உடைத்தான
திரு வாபரணம் அதி ஷூத்ரனான என்னுடைய அதி ராக தூஷிதமான ஹ்ருதயதினுள்ளே
அதுவே நிவாஸ பூமி என்னும்படி நின்று -அளவற்ற போக்யதா ப்ரகாசக வ்யாபாரங்களைப்
பண்ணா நின்றது

இது திரு மந்த்ரத்திலும் திரு மேனியிலும் மத்யத்திலே வரும் அனுபவம் –

———————————————————

ஸ்ரீ நாராயண சப்தார்தம் உள்ளீடாகப்
பெரிய பிராட்டியார் உடைய நிவாஸத்தால் நிகரில்லாத திரு மார்பை அனுபவிக்கிறார் –

அந்த திரு வயிற்ருக்கு ஒரு கால விசேஷத்திலே காதா சித்கமாக சகல அண்டங்களையும்
வைத்ததால் உண்டான மதிப்பும் -ஒரு கால் யசோதைப் பிராட்டி கட்ட அத்தால் வந்த
சௌலப்யமும் இறே இருப்பது -அப்படி யன்றே திரு மார்பு –
ஸ்ரீ வத்ஸ ஸம்ஸ்தாந தரமநந்தேச சமாச்ரிதம் -ப்ரதாநம் –என்றும்
ஆத்மாநமஸ்ய ஜகதோ நிர்லேபம குணா மலம்
பிபர்த்தி கௌஸ்துப மணி ஸ்வரூபம் பகவான் ஹரி -என்றும் சொல்லுகிறபடியே
சர்வ காலமும் சேதன அசேதனங்களை ஸ்ரீ வத்ஸ கௌஸ்துப முகத்தாலே தரித்துக் கொண்டு இருக்கிற
பெரிய மதிப்பையும் -அவனுடைய ஸ்வரூபாதி களுக்கு நிரூபக பூதையாய் -நீர்மைக்கு
எல்லை நிலமாய் இருக்கிற பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாய் இருக்கிற
ஏற்றத்தையும் உபய விபூதி நாதன் என்று இட்ட தனி மாலையை தரித்துக் கொண்டு இருக்கிற
ஆகாரத்தையும் உடைத்தாய் –
அக்கு வடமுடுத் தாமைத்தாலி பூண்ட வனந்த சயனன் -என்கிறபடியே யசோதை பிராட்டி
பூட்டின ஆபரணங்களையும் உடைத்தாய் இறே இருப்பது-
ஆகையாலே –
அந்த திரு மார்பானது -திரு வயிற்றில் காட்டில் தனக்கு உண்டான ஆதிக்யத்தையும்
சௌலப்யத்தையும் திருவாரம் உள்ளிட்ட ஆபரண சேர்த்தியால் வந்த அழகையும் உடையோம் நாம் அன்றோ –

பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன்
வாரமாக்கி வைத்தான் வைத்த தன்றி யென்னுள் புகுந்தான்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான் திரு
ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே —–5-

பாரமாய –
மலக்கு நா வுடைய
நம்மாழ்வாரும் வகை சொல்ல மாட்டாதே -தொன் மா வல் வினைத் தொடர் -என்று திரளச்
சொன்னாப் போலே -இவரும் பாரமாய -என்கிறார் -கர்மத்தின் உடைய கனத்தினாலே

தன் வாரமாக்கி வைத்தான் –
தான் -என்றால் பஷ பதிக்கும்படி பண்ணினான் –
என் கார்யம் தனக்கு கூறாக என் பேரிலே தனக்கு இருப்பென்று தன் பேரிலே
எனக்கு இருப்பாக்கின படி –

வைத்ததன்றி –
இந்த நன்மைகளுக்கு மேலே –
என்னுள் புகுந்தான் –
பின்னையும் தன் ஆற்றாமையாலே விடாய்த்தவன் தடாகத்தை நீக்கி உள்ளே
முழுகுமா போலே -என் உள்ளம் புகுந்தான் -என் ஸ்வரூப ஜ்ஞானம் குலையாதபடி என் நெஞ்சிலே வந்து புகுந்தான்

கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் –
அநாதி காலம் இழந்த வஸ்துவைப் பெறுகைக்கு அகர்ம வச்யனான ஈஸ்வரன் தானே –
அவதார ஷேத்ரமான அயோத்யையும் விட்டு –
ஆஸ்ரீதன் இருப்பிடமான லங்கையிலும் போகாதே –
கங்கையில் புனிதமாய காவிரி  நடுவு பாட்டிலே –
அதி கோரமாய் -அதி மஹத்தாய்  இருப்பதொரு தபஸை பண்ணினானோ -அறிகிலேன்
அவன் தானே நதீ தீரத்திலே கிடந்து தபஸ் ஸூ பண்ணினானோ அறிகிறிலேன் –

திரு வார மார்பதன்றோ –
பெரிய பிராட்டியாரையும் ஹாரத்தையும் உடைத்தான -மார்வன்றோ
தமக்கு பற்றாசாகத் தாய் நிழலிலே ஒதுங்குகிறார்
சிறையில் இருந்தே சேர விடப் பார்க்கிறவள்
மார்பிலே இருந்தால் சேர விடச் சொல்ல வேணுமோ

ஆள் கொண்டது –
இழந்த சேஷத்வத்தை தந்தது –
அடியேனை ஆள் கொண்டதே –
ராஜ்யம் இழந்த ராஜ புத்ரனை அழைத்து முடி சூட்டுமா போலே –
அழகிலே அழுந்தின என்னை -அவன் குணம் கிடீர் பிழைப்பிததது -என்கிறார் –
அழகிலே அழுந்தினாரை குணத்தைக் காட்டிப் பிழைப்பிக்கலாம் –
குணத்திலே அழுந்தினார்க்கு குணமே வேணும் –
நீரிலே அழுந்தினார்க்கு நீரை இட்டுப் பிழைப்பிக்க விடும் இத்தனை யன்றோ உள்ளது

இத்தால் -நிர்ஹேதுகமாக விஷயீ கரித்தான் என்றபடி –
தம்மையையும் தம் உடைமையையும் நமக்கு ஆக்கினவர்க்கு
நம்மையையும் நம் உடைமையையும் அவர்க்கு ஆக்கின முறை
முதுகு தோய்த்தோம் இத்தனை யன்றோ என்று எல்லாம் செய்தும் தான் ஒன்றும் செய்திலனாய்
இறே அவன் இருப்பது –

அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி  நீ -என்னக் கடவது இறே –
அறியேன் -என்றவர் தாமே
சர்வதா இக் கனத்த பேற்றுக்கு ஒரு ஹேது வுண்டாக வேணும் என்று விசாரித்து
அறிந்தேன் என்கிறார் மேல் –
அரங்கத்தம்மான் திரு வார மார்பதன்றோ வடியேனை யாட் கொண்டதே –
இவருடைய விரோதியைப் போக்கி
உஜ்ஜீவிப்பைக்கைக்காக வாய்த்து இங்கு வந்து சாய்ந்து அருளிற்று –
இவருடைய பேறு தன்னதாம்படி தாம் பண்ணுகைக்கு உண்டான ப்ராப்தியைச் சொல்லுகிறது
இப் பேற்றுக்கு ஆற்றங்கரையைப் பற்றிக் கிடந்து தபஸ் பண்ணினானும் அவனாய் இருந்தது –
இல்லையாகில் எனக்கு இக்கனவிய பேற்றுக்கு வேறு உபாயம் உண்டாக மாட்டாதே-

அடியேனை –
ஞான ஆனந்தங்களுக்கு முன்னே சேஷத்வம் பிரதம நிரூபகமான என்னை யன்றோ-

ஆள் கொண்டது –
இழந்த சேஷத்வத்தை தந்தது –
முடிக்கு உரியவனை முடி சூட்டுமா போலே -என்னுடைய
ஸ்வரூப -விரோதியையும் ஆஸ்ரயண விரோதியையும் -உபாய விரோதியையும்
உபேய விரோதியையும் -போக விரோதியையும் -போக்கி
ஸ்வரூப அநுரூபமான கைங்கர்யத்தைக் கொண்டது –
தன்னுடைய மேன்மையையும் அழகையும் -காட்டி -என்னை அநந்யார்ஹமாம் படி பண்ணி
பெரிய பிராட்டியாரை இடுவித்து -ந கச்சின்நா பராத்யதி -என்னப் பண்ணி
பெரிய பெருமாளை யிடுவித்து -என்னுடைய விரோதி பாபங்களை சவாசனமாகப்
போக்குவித்து -அவர் தம்முடைய போக்யதையை என் நெஞ்சிலே பிரகாசிப்பித்துக் கொண்டு
புகுரும்படி பண்ணி என்னுடைய ஸ்வரூப அநு ரூபமான கைங்கர்யத்தைக் கொண்டது அந்தத் திரு மார்பு அன்றோ

என்னைப் போலே இருப்பார் -வேறே சிலரைத் திருத்தி அடிமை கொள்ளுகைக்கு
பாயும் நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட மாயனார் திரு நன் மார்வும்
மரகத வுருவும் தோளும் தூய தாமரைக் கண்களும் துவர் இதழ்ப் பவள வாயும் ஆய சீர்
முடியும் தேசும் -என்று தாம் கிடக்கிற ஊருக்கு அலங்காரமான ஆற்றழகு தொடங்கி
காட்ட வேண்டிற்று -எனக்கு மார்பு ஒன்றுமே யமைந்தது –

ஈஸ்வரன் உடைய
இரக்கத்தின் ப்ராதான்யத்திலே தாத்பர்யமாகவுமாம்

இப்படி ஷூத்ரனான என் திறத்தில் இறங்கினவன் தான் –
தேற ஒண்ணாத -திருவில்லாத் தேவரில் ஒருவன் அல்லன் –
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை யுறை மார்பன் -என்னும் -இடத்தையும் –
சேஷபூதரான தமக்கு -ஸ்ரீ தரனே கைங்கர்ய பிரதிசம்பந்தி என்னும் இடத்தையும்
திறம்பாத சிந்தைக்கு சிக்கெனக் காட்டிக் கொடுக்கிறார் –

அரங்கத்தம்மான் திரு வார மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே –
சர்வருக்கும் அனுபவிக்கலாம்படி -சர்வ சாஹிஷ்ணுவாய்க் கொண்டு -கோயில் ஆழ்வாருக்கு
உள்ளே சௌலப்ய காஷ்டையோடு விரோதியாத ஸ்வாமித்வ காஷ்டையை உடையரான
பெருமாளுடைய சேஷித்வ பூர்த்திக்கு லஷணமான திருவையும்
அழகு வெள்ளத்துக்கு அணை கோலினால் போலே இருக்கிற ஹாரத்தையும் உடைத்தான
திரு மார்வன்றோ ஸ்வா பாவிக சேஷித்வ அநுபவ ரசிகனாய்
அதுக்கு மேலே குணைர் தாஸ்ய முபாகதனுமான என்னை ஸ்வரூப அநு ரூபமான
ஸ்தோத்ராதி சேஷ வ்ருத்தியிலே மூட்டி அதுக்கு இலக்காய்  நின்றது –

இப்பாட்டில்
பதங்களின் அடைவே
நாராயண சப்தத்தில் விவஷிதமான அநிஷ்ட நிவர்த்தகத்வமும்
இஷ்ட -ப்ராபகத்வமும் –
உள்ளும் புறமும் வியாபித்து நிற்கும் -படியும்
நித்ய -கிருபையும்
உபாயத்துக்கு பிரதானமான சௌலப்யமும்
ப்ராப்யத்துக்கு பிரதானமான ஸ்வாமிதவமும்
சர்வ அநு குணமான ஸ்ரீயபதித்வமும்
பூஷண அஸ்த்ர ரூபங்களாக புவனங்களை தரிக்கிற போக்ய தமமான விக்ரஹ யோகமும்
நார சப்தார்த்தமான தாஸ பூதன் ஸ்வரூபமும்
தாஸ்ய பலமாக பிரார்த்திக்கப்படும் கைங்கர்யமும்
அனுசந்தேயம்

————————————————————–

இப் பாட்டில் ஐஸ்வர்யார்த்திகளாருடைய ஐஸ்வர்ய விரோதியான
பிஷூ தசையை கழிக்கும் படியை உதாஹரிக்கிறார்-

சர்வ லோகத்தையும் அமுது செய்து அருளின கண்டத்தின் அழகு என்னை
உண்டாக்கிற்று -என்கிறார் –
திருமார்பின் அழகு திருக் கழுத்திலே ஏறிட்டது -என்னவுமாம்-

ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலே இருக்கிற திருக் கழுத்தானது-

இந்த திரு மார்புக்கு உள்ளது -அலர்மேல் மங்கை யுறை மார்பா -என்கிறபடியே
பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாய் இருக்கிற -ஆகாரமும்
திருவாரத்தாலே அலங்க்ருதமான ஆகாரமுமே யன்றோ –
இவளைப் போலே -சங்கு தங்கு முன்கை நங்கையாய் இருப்பார் அநேகம் நய்ச்சிமார்
ஸாபரணமான தங்கள் கைகளால் அணைக்கை யாலே -அவ் வாபரணங்கள் அழுத்த
அவற்றாலே முத்ரிதராய் இருப்போமும் நாம் அல்லோமோ –
பிரளய ஆபத்து வர சகல அண்டங்களையும் தத் அந்தர்வர்த்திகளையும் ரஷித்தோமும்
நாம் அல்லோமோ -அது வும் கிடக்க பாண்டவர்கள் தூது விடுகிற போது கட்டிவிட்ட
மடக்கோலை இன்றும் நம் பக்கலிலே அன்றோ கிடக்கிறது –
அந்த ஹாரம் தனக்கும் தாரகம் நாம் அல்லோமோ –
என்றாப் போலே தன்னுடைய ஆபரண சோபையையும் -யௌவனத்தையும் -ஆபன் நிவாரகத்வத்தையும்
காட்டி என்னை சம்சாரம் ஆகிற பிரளயத்தின் நின்றும் எடுத்து உஜ்ஜீவிப்பித்தது என்கிறார் –

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —-6-

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் –
சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வாச நீர் கொடுத்தவன் -என்கிறபடியே
தீர்த்த சேவையாலும் -தன் தபசாலும் -தன் சக்தி மத்தையாலும் போக்க ஒண்ணாத வலிய துயரை
பிராட்டி புருஷாகாரமாக தன் மார்பில் வாச நீரால் போக்கினது -தம்முடைய துயரை போக்கினதுக்கு
நிதர்சநமாய் இருக்கையாலே அவனை உதாஹரணம் ஆக்குகிறார் –

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் -சந்த்ரனுடைய ஷயத்தைப் போக்கினான் என்றுமாம் –
அவனுடைய துயரத்தைப் போக்கினாப் போலே என்னுடைய துரிதத்தையும் போக்கும் என்று கருத்து-

பெரிய பெருமாளுக்கு ஆபரணமாய் ஊருக்கும் ஆபரணமாய் இருக்கும் சோலை
சோலைக்கு ஆபரணமாய் இருக்கும் வண்டுகள் –
வண்டுகளுக்கு ஆபரணமாய் இருக்கும் அழகிய சிறகு -என்கை

உண்ட கண்டம் -சேஷ பூதனுக்கு கைங்கர்யம் தாரகமாய் இருக்குமா போலே
இவற்றின் உடைய ரஷணம் தனக்கு தாரகமாய் இருக்கிறபடி
இப்பாட்டால் –
அந்தர்யாமி ப்ராஹ்மணத்தில் சொல்லுகிறபடியே சர்வ வ்யாபகத்வ சக்தியும் உண்டு என்கிறார் –

அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே-

அண்டாந்த வர்த்திகளான தேவாதி வர்க்கங்களையும் -அண்டங்கள் தன்னையும் –
அண்ட ஆவரணங்களையும் -அண்டங்களுக்கு உள்ளே பஞ்சாசதகோடி விச்தீரணையான
மஹா ப்ருதிவியாலும் குல பர்வதங்களாலும் உப லஷிதங்களான சர்வ கார்யங்களையும்
எல்லாம் திரு வயிற்றிலே வைத்து ரஷிக்கைக்காக விழுங்கின திருக் கழுத்து கண்டீர் –
ஸ்வரூபத்தை -உணர்த்தி என்னை ஸ்வ அனுபவத்தில் உஜ்ஜீவிப்பித்தது –
அண்டாதிகளைப் பற்ற சிறியலான குல பர்வதங்களை பிறியப் பேசுகையாலே
அவ்வளவு விழுங்குகையும் ஆச்சர்யம்

இவற்றைத் தனித் தனியே சொல்லுவான் என் என்னில்
தனியே சொல்லுகை போக்யமாய் இருக்கையாலே
பெரிய பெருமாள் திருக் கழுத்தைக் கண்டால் பிரளய ஆபத்தில் ஜகத்தை எடுத்துத்
திரு வயிற்றிலே வைத்தமை தோற்றா நின்றது ஆய்த்து –
அடியேனை உய்யக் கொண்டதே
முன்பு பெற்ற கைங்கர்யத்துக்கு விச்சேதம் பிறவாதபடி நோக்கிற்று
என்னை சம்சாரத்தில் ஒரு நாளும் அகப்படாதபடி பண்ணிற்று –
இப்பாட்டால்
ஆபத் ஸகனான சர்வேஸ்வரன் படியும் இங்கே உண்டு என்கிறார்

—————————————————-

திரு வதரத்திலே அகப்பட்ட படி சொல்லுகிறார் –
நீஞ்சாப் புக்குத் தெப்பத்தை இழந்தேன் என்னுமா போலே-

கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல்
மெய்யினார் துளப விரையார் கமழ் நீண் முடி யெம்
ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ——-7-

கையினார் சுரி சங்கனலாழியர்–ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்துக்கு சுரி ஸ்வபாவமானாப் போலே திரு வாழி யாழ்வானுக்கும்
ப்ரதி பஷத்தின் மேலே அனல் உமிழுகை ஸ்வபாவம்
ஸ கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயா நிவ்ய தாரயத் -என்றும் –
தீய அசுரர் நடலைப்பட -முழங்கும் என்றும் சொல்லுகிறபடியே விரோதி வர்க்கத்தை
தன் த்வநியாலே தானே நிரசிக்க வல்ல ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்
கருதுமிடம் பொருது -என்கிறபடியே விரோதி வர்க்கத்தை -கூறாய் நீறாய் நிலனாய் –
என்கிறபடியே அழியச் செய்யும் திரு வாழியையும் தரித்துக் கொண்டு இருக்கிறது
என்னுடைய அறுக்கலறாப் பாபங்களை போக்குகைக்கு அன்றோ –
திவ்யாயுத ஆழ்வார்கள் பெரிய பெருமாள் உடைய திருக்கைகளில் ரேகையில் ஒதுங்கிக் கிடந்தது –

நீள் வரை –
மலையை கடலை ஒப்பாக சொல்லும் இத்தனை இறே
நீட்சி போக்யதா ப்ரகர்ஷம் -பச்சை மா மலை போல் மேனி -அதுக்கு மேலே ஒப்பனை அழகு –
துளப விரையார் கமழ் நீண் முடி -பரிமளம் மிக்கு இருந்துள்ள திருத் துழாய் மாலையாலே
அலங்க்ருதமாய் ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை உடையருமாய்
எம்மையனார் -உறவு தோற்றுகை -எனக்கு ஜனகரானவர்

அணி அரங்கனார் –
ப்ராப்த விஷயமாய் இருக்கக் கடக்க விராதே சம்சாரத்துக்கு ஆபரணமான
கோயிலிலே வந்து அண்ணியருமாய் இருக்கிற படி-

துளப விரையார் கமழ் நீண் முடி –
பெரியவர்கள் கார்யம் செய்தவன் உம்முடைய கார்யம்
செய்யப் புகுகிறானோ என்ன -வெறும் ப்ரஹ்ம ருத்ராதி களுக்கே சேஷி என்று அன்றே அவன்
முடி கவித்து இருக்கிறது -பிசு நயந் கில மௌளளி -பதிம் விச்வச்ய -என்றும் சொல்லுகிறபடியே
உபய விபூதி நாதன் அன்றோ –
துளப விரையார் கமழ்-
சர்வ கந்த வஸ்துவுக்கு தன் கந்தத்தாலே மணம் கொடுக்க வற்றாய்
மேன்மைக்கு உடலாய் இருக்கிறபடி –
நீண் முடி -என்னளவும் வந்து என்னை விஷயீ கரித்த முடி –
எம்மையனார் –
ருத்ரனனுக்கு பௌத்ரனாய் இருப்பதொரு பந்த விசேஷம் உண்டே -உமக்கு அது
இல்லையே என்று சொன்னதுக்கு உத்தரம் சொல்லுகிறார் -அவனுக்கு பௌத்ரத்வ நிபந்தநம்
ஒன்றுமே யன்றோ உள்ளது -மாதா பிதா ப்ராதா -இத்யாதிப் படியே சர்வவித பந்துத்வமும்
உள்ளது எனக்கே யன்றோ –
எம்மையனார் –
என்னைப் பெற்ற தமப்பனார்
பிரஜை கிணற்றிலே விழுந்தால் கூடக் குதிக்கும் தாயைப் போலே இங்கு வந்து சாய்ந்து அருளிற்று
மாதா பிதா ப்ராதா நிவாஸச் சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண -என்கிற பொது வன்று
திரு வரங்கத்துள் ஓங்கும் -இத்யாதிப் படியே பெரிய பெருமாள் தாமே என்கிறார்
அணி அரங்கனார் –
அலங்காரமான கோயிலிலே வந்து சாய்ந்தவர்
ஆபரணம் ஆனது பூண்டவனுக்கு நிறம் கொடுக்கிறது -இவ் ஊரும் ரஷகனுக்கு நிறம்
கொடுக்கிறது ஆகையாலே சொல்லுகிறது

அணி அரங்கனார் –
ப்ராப்த விஷயமாய் இருக்கக் கடக்க விராதே சம்சாரத்துக்கு ஆபரணமான
கோயிலிலே வந்து அண்ணியருமாய் இருக்கிற படி-

செய்ய வாய் –
ஸ்திரீகளுடைய  பொய்ச் சிரிப்பிலே துவக்குண்டார்க்கு இச் சிரிப்பு
கண்டால் பொறுக்க ஒண்ணுமோ
திருப் பவள செவ்வாயானது -உலகமுண்ட பெரு வாயன் -என்கிறபடியே
ஆபத் சகத்வத்திலும் முற்பாடர் நாம் அல்லோமோ -ஆஸ்ரித ரஷணத்துக்கு உறுப்பாக
சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம -என்றும் –
மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந -என்றும் –
சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்றாப் போலே -சொல்லுகிற மெய்ம்மைப் பெரு வார்த்தைக்கு
எல்லாம் ப்ரதான கரணம் நாம் அல்லோமோ –
ஓர் ஆபரணத்தால் இடு சிவப்பன்றிக்கே ஸ்வாபாவிக சௌந்தர்யம் உடையோமும் நாம் அல்லோமோ –
கருப்பூரம் நாறுமோ -கமலப் பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ
என்று தேசிகரைக் கேட்கும்படியான சௌகந்தய சாரச்யம் உள்ளிட்ட போக்யதையை
உடையோமும் நாம் அல்லோமோ -என்றாப் போலே தம்முடைய ஏற்றத்தைக் காட்டி
தம்முடைய திரு உள்ளத்தை அந்தக் கழுத்தின் நின்றும் தன் பக்கலிலே வர இசித்து துவக்க

ஸ மயா போதித ஸ்ரீ மான் -எல்லாருக்கும் ஒன்றிலே சாய்ந்தவாறே பொல்லாங்குகள் தெரியும்
இங்கு பழைய வழகுகளும் நிறம் பெறும்

மாயனார் –
அங்கன் அன்றிக்கே கிடந்ததோர் கிடைக்கை கண்டும் -என்கிறபடியே இன்று
நாமும் சென்று அனுபவிக்கப் பார்த்தாலும் -ஒருக்கடித்து என்ன ஒண்ணாதே -மல்லாந்து
என்ன ஒண்ணாதே யிருக்கிற ஆச்சர்யத்தை சொல்லிற்று ஆகவுமாம்
மாயனார் செய்ய வாயையோ என்னை சிந்தை கவர்ந்ததுவே
ஸ்வ நிகர்ஷ அனுசந்தானத்தாலே பிற்காலிக்கிற என்னை -ஸ்வா பாவிக சௌந்தர்யத்தையும்
போக்யதையும் உடைய திருப்பவளமானது தன்னுடைய் ஸ்மிதத்தைக் காட்டி
அருகே சேர்த்துக் கொண்டு என்னுடைய மனஸ்ஸை அபஹரித்தது
என்னை சிந்தை கவர்ந்ததுவே -உழக்கைக் கொண்டு கடலின் நீரை யளக்கப் புக்கு
அது தன்னையும் பறி  கொடுத்தேன்

என்னை -கல்லை நீராக்கி -நீரையும் தானே கொண்டது
இப்பாட்டில் ஸ்ரீ வைகுண்ட நாதன் படியும் இங்கே காணலாம் என்கிறார் –

————————————————————-

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —-8

செய்ய வாய் ஐயோ -என்று இவர் தாமே சொன்னார் –
அப்படியே சிவப்பால் வந்த அழகு ஒன்றுமே யன்றோ அந்த திரு அதரத்துக்கு உள்ளது
சிவப்பும் கருப்பும் வெளுப்புமான பரபாகத்தால் உள்ள அழகு உடையோமாம் இருப்போமும்
நாம் அல்லோமோ -மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யஜேயம் -என்றாப் போலே சொல்லுகிற
வார்த்தைகள் எல்லாம் ஜீவிக்கை யாகிறது -ஜாயமாநம் ஹி புருஷம் யம் பச்யேத் -என்று
ஜாயமான தசையிலே நாம் கடாஷித்த பின்பு -சாத்விகனாய் -முமுஷுவான அளவிலே அன்றோ

அக வாயில் வாத்சல்யத்துக்கு பிரகாசமாய்
இருப்போமும் நாமும் அல்லோமோ -அது கிடக்க யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ -என்றும்
அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசனன் -என்றும் சொல்லுகிறபடியே மேன்மைக்கு
பிரகாசமாய் இருப்போமும் நானும் அல்லோமோ -அதுக்கு மேலே
புண்டரீகாஷா ரஷ மாம் -என்றும் –
புண்டரீகாஷா ந ஜாநே சரணம் பரம் -என்றும் சொல்லுகிறபடியே
தம்தாமுடைய ஆபன் நிவாரணத்துக்கு உபாயமாகப் பற்றுவதும் நம்மை புரஸ்கரிக்கையாலே
உபாய பாவத்தை பூரிக்கிறோமும் நாமும் அன்றோ –
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -என்று அவனுக்கு போக்யதா பிரகர்ஷம் உண்டாகிறது நம்மோட்டை
சேர்தியால் யன்றோ -என்றால் போலே தங்களுடைய ஏற்றத்தை காட்டி –
அவ்வாய் யன்றி அறியேன் -என்று இருக்கிற தம்மை -தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்து –
என்னும்படி பண்ணிக் கொண்ட படியைச் சொல்லுகிறார் –
செங்கனி வாயின் திறத்தாயும் செஞ்சுடர் நீண் முடித் தாழ்ந்தாயும் சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் –
என்ற அளவும் சொன்னார் கீழ் -தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்த படி சொல்லுகிறார் இதில்-

பகவத் பிரவணன் ஆக ஒட்டாதே விபரீதங்களை அனுஷ்டிப்பிக்க தேடின ஹிரண்யனை
தமோ ஹிரண்ய ரூபேண பரிணாம முபாகதம் -என்கிறபடியே தமோ குணம் ஹிரண்யன்
என்று ஒரு வடிவு கொண்டதாய் இறே -இருப்பது அப்படியே இருக்கிறவனை -அங்கு அப்பொழுதே
அவன் வீயத் தோன்றிய -என்கிறபடியே ந்ருசிம்ஹ ரூபியாய் வந்து தன் திருக்கையில்
உகிராலே கிழித்துப் பொகட்டாப் போலே -ஞானக் கையாலே என்னுடைய அவித்யையை
கிழித்துப் பொகட்டான் என்கிறார்

பரியனாகி வந்து –
பகவத்  குணங்களை அனுசந்தித்து நைந்து இராமே சேஷத்வத்தை அறிந்து மெலிந்து இராமே –
சர்வேஸ்வரனை ஆசைப்பட்டு தளர்ந்த உடம்பாய் ஒசிந்து இராமே –
பரிய –
நரசிம்ஹத்துக்கும் பிற்காலிக்க வேண்டும் படி இருக்கை -ஊட்டி இட்டு வளர்த்த
பன்றி போலே உடம்பை வளர்த்தான் இறே –
வந்த –
இப்போது தாம் வயிறு பிடிக்கிறார்-

அவுணன் உடல் கீண்ட -நரசிம்ஹத்தினுடைய மொறாந்த முகமும்-நா மடிக்கொண்ட
உதடும் -செறுத்து நோக்கின நோக்கும் -குத்த முறுக்கின கையும் கண்ட போதே பொசிக்கின
பன்றி போலே மங்கு நாரைக் கிழிக்குமா போலே கிழித்த படி-

பிரான் –
ப்ரஹ்லாதனுக்கு எளியனான நிலையும் ப்ரஹ்மாதிகளுக்கு அரியனான நிலையும்
இரண்டும் தமக்கு உபகாரமாய் இருக்கிறது
அரங்கத்தமலன் –
எல்லார்க்கும் உதவும்படி கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகையாலே வந்த சுத்தி —
ஒரு கால் தோற்றிப் போதல் -அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதித்துப் போதல்
செய்யாமையாலே வந்த சுத்தி ஆகவுமாம்
முகத்து –
அவனுடைய முகத்து
கரியவாகி –
விடாய்த்தார் முகத்திலே நீர் வெள்ளத்தை வெட்டி விட்டாப் போலே இருக்கை-

இப்படி தேவர்களுக்கு அரியனாய் இருக்கிறவன் உமக்கு எளியனாய் இருக்கைக்கு அடி என் என்னில் –
ஆதி –
காரண பூதன் -பஹூ புத்ரனானவன் விகல கரணனான புத்திரன் பக்கலிலே போர
வத்சல்யனாய் இருக்குமா போலே -இவனும் ஜகத் காரணனாய் இருக்கச் செய்தேயும்
என்னுடைய அஞ்ஞான அசக்திகளை திரு உள்ளம் பற்றி என்னளவிலே போர வத்சல்யனாய் இருக்கும் –
ஆதி –
தான் முற்கோலி உபகரிக்குமவன்-

அமரர்க்கு அரிய ஆதிப் பிரான் –
தமக்கு உபகரித்த படியை நினைத்து பிரான் என்கிறார் அல்லர்
தேவர்களுக்கு கிட்ட அரியனாய் இருக்கச் செய்தே ப்ரஹ்லாதனுடைய விரோதியை முற் பாடனாய்ச்
சென்று போக்கின உபகாரத்தை நினைத்துச் சொல்லுகிறார்
ஆதிப் பிரான் –
ப்ரஹ்லாதன் -சர்வ காரணம் -என்ன ஹிரண்யன் அதுக்கு பொறாமல் –
இந்தத் தூணில் உண்டோ அந்த காரண பூதன் -என்று துணைத் தட்டி கேட்க –
ப்ரஹ்லாதனும் சர்வ அந்தராத்மான் காண் அவன் -ஆகையால் இதிலும் உண்டு -என்ன –
அங்கு அப்பொழுதே -என்கிறபடியே அவன் தட்டின தூணிலே வந்து நரசிம்ஹ ரூபியாய் தோன்றி
அவன் தட்டின கையைப் பிடித்து -பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்பிடந்தான் -என்கிறபடியே
அவனைக் கதுப்பிலே அடித்து -அவன் மார்பைக் கிழித்து ப்ரஹ்லாதனுடையப்ரதிஜ்ஞா வாக்யத்தை க்ரயம் செலுத்தி
தன்னுடைய காரணத்வத்தையும் ஈச்வரத்வத்தையும் நிலை நிறுத்தின உபகாரத்தைப் பற்றி சொல்லுகிறார் ஆகவுமாம் –
அரங்கத்தம்மான் –
நரசிம்ஹ வ்யாவ்ருத்தி -அதாவது -ஒரு கால விசேஷத்திலே -ஒரு தூணின்
நடுவே வந்து தோன்றி ப்ரஹ்லாதன் ஒருவனுக்கு வந்த விரோதியைப் போக்கின வளவு இறே அங்கு உள்ளது –
இங்குக் கிடக்கிற கிடை-எல்லாக் காலத்திலும் எல்லாருடைய விரோதிகளையும் போக்குகைக்கு
அணித்தாக வந்து இரண்டு தூணுக்கும் நடுவே கிடக்கிற கிடையாகையாலே வ்யாவ்ருத்தமாய் இருக்கும் இறே-

புடை பரந்து –
கடலைத் தடாகம் ஆக்கினாப் போலே இடம் உடைத்தாய் இருக்கை
மிளிர்ந்து –
திரை வீசிக் கரையாலும் வழி போக ஒண்ணாது இருக்கை
செவ்வரி யோடி –
ஸ்ரீ ய பதித்வத்தாலும் வாத்சல்யத்தாலும் சிவந்து இருக்கை
நீண்ட -செவி யளவும் அலை எறிகை
அப்பெரிய வாய கண்கள் –
பின்னையும் போக்தாவின் அளவன்றிக்கே இருக்கையாலே
அப்பெரிய வாய கண்கள் -என்கிறார் –
இது என்ன ஒண்ணாதே பரோஷ நிர்த்தேசம் பண்ண வேண்டும்படி இருக்கை –

ஸ்ரீ பெரிய பெருமாள் உடைய திருக் கண்கள் ஆனவை திருச் செவி யளவும் செல்ல நீண்டு
இருக்கிறபடிக்கு ஒரு நினைவு உண்டு என்கிறார் ஸ்ரீ பட்டர் -அதாவது –
ஸ்ரீ பெரிய பெருமாள் உடைய திருக் கண்கள் ஆனவை மீனுக்குத் தண்ணீர் வார்ப்பாரைப் போலே நித்ய ஸூரிகளுக்கு
முகம் கொடுத்து கொண்டு இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கும் கண்கள் இரண்டாய்
ஸ்ரீ ராம ஸ்ரீ க்ருஷ்ணாத்யவதாரம் பண்ணி குஹாதிகள் விதுராதிகள் தொடக்கமானார் சிலர்க்கு அல்ப காலம்
முகம் கொடுத்து விஷயீ கரித்து வந்தாப் போலே வெறும் கையோடே போனவர்களுக்கும் கண் இரண்டாய்-
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது எழுந்திரேன் என்று கோயிலிலே அர்ச்சா ரூபியாய்
அவ்வவர் நிகர்ஷங்களைப் பாராதே முகம் கொடுத்துக் கொண்டு இருக்கிற ஸ்ரீ பெரிய பெருமாளுக்கும்
கண் இரண்டாய் இருக்கவோ -இவருடைய க்ருபையை பார்த்தால் உடம்பு எல்லாம் கண்ணாக
வேண்டாவோ என்று பார்த்து -எல்லா மண்டலங்களும் தங்களுக்கே ஆக வேணும் என்று
இருக்கிற ராஜாக்கள் முற்படத் தங்களுக்கு ப்ரத்யாசன்னரான வன்னியரை அழியச் செய்யுமா போலே
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய அவயவாந்தரங்கள் அடைய நாமேயாக வேணும் என்று பார்ஸ்வ
ஸ்தங்களாய் இருக்கிறன திருச் செவிகள் ஆகையாலே அவற்றை வென்று அவ்வருகே
போவதாக முற்பட அவற்றுடனே அலை எறிகிறாப் போலே யாய்த்து திருக் கண்கள் செவிகள் அளவும் நீண்டு இருக்கிறபடி –
அப்பெரியவாய கண்கள் –
பின்னையும் போக்தாவின் அளவன்றிகே இருக்கையாலே
அப்பெரியவாய கண்கள் -என்கிறார் –

பேதைமை செய்தனவே –
ஸ்ரீ ராம சரம் போலே முடிந்து பிழைக்க வொட்டுகிறன வில்லை –
மதி எல்லாம் உள் கலங்கும்படி பண்ணிற்று –
என்னைப் பேதைமை செய்தனவே -அவன் அக் கண்களாலே -அமலங்களாக விழிக்கும் –
என்று இருந்த கடாஷங்களுக்கு இலக்கானார்க்குத் தெளிவைப் பிறப்பிக்க கடவதாய்  இருக்க
எனக்குள்ள அறிவு தன்னையும் அழித்தது -இனி தாமரைக் கண்களால் நோக்காய் -என்பார்க்கு
எல்லாம் அழகிதாக ப்ரார்த்திக்கலாம்
என்னைப் பேதைமை செய்தனவே -இவ் வநுபவ ரசத்திலே அமிழ்ந்த என்னை அல்லாததொரு
ஜ்ஞான அனுஷ்டானங்களுக்கு அநர்ஹனாம் பண்ணிற்றன –

இத்தால் ஸ்ரீ நரசிம்ஹ அவதாரத்தின் படியும் இங்கே வுண்டு என்கிறார் –

————————————————————-

ஊரழி பூசல் போலே  திரு மேனியின் நிறமானது எல்லாவற்றையும் கூடக் கொண்டு வந்து
என் நெஞ்சைக் கொள்ளை கொண்டது என்கிறார்-
இவர் கலம்பகன் மாலை சூடுவாரைப் போலே இந்த அவயவங்களுக்கு
ஆச்ரயமான நம்மை அவற்றோடே கூட அனுபவிக்க பெற்றிலரே –
இனி மற்றை ஆழ்வார்களைப் போலே பரக்க பேசி நின்று அனுபவிக்கவும் அல்லர்
ஆன பின்பு இந்த அவயவங்களோடும் ஆபரணங்களோடும் சேர்ந்த சேர்த்தியால் வந்த அழகும்
ஸ்வாபாவிக சௌந்தர்யத்தால் வந்த அழகுமான நம்முடைய சமுதாய சோபையை
இவரை அனுபவிப்பிக்க  வேணும் என்று பார்த்து -ராஜாக்கள் உறு பூசலாய் கொலையிலே
பரந்து தங்களுடைய சதுரங்க பலத்தையும் சேர்த்துக் கொண்டு அணி அணியாகச் சிலர் மேலே ஏறுமா போலே –
இந்த திரு மேனியானது -அவயவங்களையும் -ஆபரணங்களையும்
சேர்த்துக் கொண்டு தன்னுடைய சமுதாய சோபையைக் காட்டி -உய்விட மேழையர்க்கும்
அசுரர்க்கும் அரக்கர் கட்கும் எவ்விடம் -என்று கொண்டு மேல் விழுந்து தம்முடைய
திரு வுள்ளத்தைக் தன் பக்கலிலே இழுத்துக் கொள்ள தாம் அதிலே யகப்பட்டு நெஞ்சு இழிந்த படியைச் சொல்லுகிறார் –

ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே —–9-

ஒரு பாலகனாய் –
யசோதாள் தநந்தயனான ஸ்ரீ கிருஷ்ணனனும் முரணித்து இருக்கும்படி
இவனுடைய பால்யம் செம்பால் பாயா நிற்கும்
பிரளயத்தில் தன் அகடிதகடநத்தோடு ஒக்கும் -என்னை அகப்படித்தன படியும்-
ஆலம் தளிரிலே கண் வளர்ந்து இந்த ஜகத்தை அடைய ரஷித்தருள அந்த அகடிதகடநா
சமர்த்யமுடைய வனுக்கு என்னுடைய விரோதியைப் போக்கி எனக்கு ஜ்ஞானத்தைப்
பிறப்பித்த விது சால அகடிதமாய் இருந்ததோ என்கிறார்-

அரங்கத்தரவினணையான் –
சம்சார பிரளயத்தின் நின்றும் எடுக்கக் கிடக்கிற படி
அந்த ஆலின் இலையில் நின்றும் இங்கே வரச் சருக்கின வித்தனை காணும்
அந்த உறவு ஒன்றுமே இவர் அச்சம் கெடுக்கிற வித்தனை காணும்
இப்ப்ரமாதத்தோடே கூடின செயலை செய்தான் என்று பயப்படுமவர்கள் அச்சம் கெடும்படி கிடக்கிற விடம்
அரவின் அணையான் –
பிரளயத்தில் தன் வயிற்றில் புகா விடில் ஜகத்து ஜீவியாதது போலே
சம்சாரிகள் தன் முகப்பே விழியா விடில் தனக்குச் செல்லாதான படி-

நிறை கொண்டது என் நெஞ்சினையே –
எனக்கு அகவாயில் காம்பீர்யத்தைப் போக வடித்தது
ஐயோ –
பச்சைச் சட்டை இட்டுத் தனக்கு உள்ளத்தைக் காட்டி எனக்கு உள்ளத்தை அடைய கொண்டான் –
நான் எல்லாவற்றையும் அநுபவிக்க வேணும் என்று இருக்க எனக்கு
அநுபவ பரிகரமான என் நெஞ்சைத் தன் பக்கலிலே இழுத்துக் கொள்வதே -ஐயோ -என்கிறார் –
ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே –
தனித்தனியே திவ்ய அவயவங்களை அநுபவித்த
என் நெஞ்சை சமுதாய அனுபவத்தாலே முன்புற்ற பூர்ணத்வ் அபிமான கர்ப்பமான காம்பீர்யத்தை
கழித்து இப்பூர்ண அனுபவத்துக்கு விச்சேதம் வரில் செய்வது என் -என்கிற அதி சங்கையாலே
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு -என்று நித்ய சாபேஷம் ஆம்படி பண்ணிற்று-

இப் பாட்டால் வட தள சயநமும் பெரிய பெருமாள் பக்கலிலே உண்டு -என்கிறது –

—————————————————————————-

நைச்யத்தாலே அங்குப் போக மாட்டாதே –
தம்முடைய நைச்யத்தாலே இங்குப் புகவும் மாட்டாதே ஆந்த ராளிகராய் –
உத்தரம் தீர மாசாத்ய கச்த ஏவ வ்யதிஷ்டத -என்ற ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே –
அக மகிழும் தொண்டர் வாழும்படி
அன்பொடு தென் திசை நோக்கிக் கொண்டு கண் வளருகிற பெரிய பெருமாளுடைய
த்ருஷடி பாதமான தென் ஆற்றங்கரையைப் பற்றி நின்றார்-

அந்த விபீஷணன் ராஜ்ய காங்ஷியாய் இருக்கையாலே அருகு நிற்கிற இளைய பெருமாள் நிற்க
ராஜ்ய காங்ஷியாய்-ஹரிச்ரேஷ்டரான மஹா ராஜரை இட்டு அழைத்துக் கொண்டாப் போலே
சென்றதாம் என சிந்தனையே –
அடியேன் உள்ளத்தின் இன்னுயிரே –
என்னுளத்துள் நின்று உலாகின்றதே –
நிறை கொண்டது என் நெஞ்சினையே -என்றாப் போலே இவை மனந பரராய் இருக்கையாலே
மனந பரராய் ஸ்ரேஷ்டராய் இருப்பார் ஒருவரை இட்டு அழைப்பித்துக் கொள்ள வேண்டும் என்று பார்த்து
அருகே சேவித்து இருக்கிற லோக சாரங்க மஹா முநிகளைப் பார்த்து -ஆநயைநம் -என்று திரு உள்ளமாக

அவரும் எப்போதும் பெரிய பெருமாளை சேவித்து இருக்கையாலே பெரிய பெருமாள்
அபிஜன வித்யா வருத்தங்களால் பூரணராய் இருப்பாரைப் பார்த்தருளி -ஏகாந்தங்களிலே
இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில் தொழுமினீர் கொடுமின் கொண்மின் -என்று
உபதேசிக்கக் கேட்டு இருக்கையாலும் –
நின் திருவெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றும் –
ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை யாள்வாரே -என்றும் –
பங்கயக் கண்ணனைப் பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறும் எம்மை யாளும் பரமரே -என்றாப் போலே
ஆழ்வார்கள் அருளிச் செய்ய கேட்டு  இருக்குமவர் ஆகையாலே கடுகப் போய் அவரை
அருள் பாடிட்டுத் தாம் சிரஸா வஹித்துக் கொண்டு வர

கடலிலே குழப்படி உண்டாமா போலே -பூர்ணம் -என்கிறபடியே பெரிய பெருமாள் பாடே
எல்லாம் இல்லையோ -ஆன பின்பு எனக்குப் பெரிய பெருமாளை ஒழிய வேறு ஒருவரை
அனுபவிக்க ச்ரத்தை யில்லை -எனக்கு உண்டானாலும் அவரை யநுபவித்த என் கண்கள்
மற்று ஒன்றினைக் காணாவே -என்கிறார் –

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —10-

கொண்டல் வண்ணனை –
தாபத் த்ரயத்தாலே விடாய்த்த தம் விடாய் தீரும்படியாய் –
அத்ரௌசயாளுரில சீதள காளமேக என்கிறபடியே வர்ஷூகமான காளமேகம் மேகம் போலே
இருக்கிற திரு நிறத்தை வுடையவனை –
பன்னீர்க்குப்பி போலே உள்ளுள்ளவை எல்லாம் புறம்பே நிழல் இட்டபடி-
கொண்டல் வண்ணனை-
தம்முடைய பர வ்யூஹ விபவ அர்ச்சாவதாரங்களை இவர் அனுபவிப்பதாக திரு உள்ளத்தில்
பாரிக்கிறபடியை அனுசந்தித்து இது என்ன ஔதார்யம் என்று அந்த ஔதார்ய குணத்தை
நினைத்து -கொண்டல் வண்ணன் -என்கிறார் –
அங்கன் இன்றிக்கே –
சாம்சாரிகமான தாப த்ரயத்தாலே விடாய்த்த விடாய் தீரும்படியாக
அத்ரௌ சயாளு ரிவ சீதள காள மேக -என்கிறபடியே வர்ஷுகமான காளமேகம் போலே
இருக்கிற நிறத்தை உடையவன் -என்கிறார் ஆதல்
ஸ்ரமஹரமான வடிவை நினைத்து -கொண்டல் வண்ணன் -என்கிறார் ஆதல் –
வண்ணம் -என்று ஸ்வபாவம் ஆதல் -நிறம் ஆதல் –
நம் ஆழ்வாரும் -முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி வுய்ந்தவன் -என்றார் இறே-

கோவலனாய் வெண்ணெய் வுண்ட வாயன் –
இடையனாய் வெண்ணெய் உண்ட திருப் பவளத்தை உடையவனை –
சக்ரவர்த்தித் திருமகன் ஆகில் வெண்ணெய் உண்ண ஒட்டார்கள் என்று கருத்து –
கோவலன் –
ஆபிஜாத்யம் -பெருமாளுக்கு கட்டுண்பது அடி வுண்பதாகக் கிடைக்குமோ –
வெண்ணெய் வுண்ட வாயன் -களவு கண்டு ஒளித்து வந்து கிடக்கிறவன்
பெரிய பெருமாள் கொறுட்டை மோந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் நாறா நிற்கும்-

கோவலனாய் வெண்ணெய் வுண்டாப் போலே -கொண்டல் வண்ணனாய் என்னுள்ளம் கவர்ந்தானை
யசோதைப் பிராட்டி வுடைய நெஞ்சிலே பண்ணின ச்ரத்தையை என் நெஞ்சிலே பண்ணி புஜித்தவனை
அந்த திருவாய்ப்பாடியிலே பெண்கள் உறிகளிலே வெண்ணெயை வைத்து கள்ளக்
கயிறு உருவி இட்டு வைத்துப் போவர்கள் அந்த உறிகளின் குறி அழியாது இருக்க
அந்த வெண்ணெய்களை வெறும் தரை யாக்கினாப் போலே யாய்த்து -அரங்கம் தன்னுள்
கள்வனார் நான் குறி அழியாது இருக்க என்னுடைய சிந்தையை அபஹரித்த படி-

என் உள்ளம் கவர்ந்தானை –
வைத்த குழி அழியாது இருக்க -வெண்ணெய் விழுங்கி வெறும் கலம் ஆக்கினாப் போலே
என்னுடைய சரீரம் குறி அழியாது இருக்க என்னுடைய மனஸை அபஹரித்தான் –
கலம் இருக்க வெண்ணெய் குடி போனாப் போலே யாய்த்து -இவர் உடம்பு இருக்க அகவாய் குடி போன படி –

என் உள்ளம் கவர்ந்தானை-என் நெஞ்சை அபஹரித்தவனை –
கோவலனாய் வெண்ணெய் வுண்டாப் போலே கொண்டல் வண்ணனாய் என் உள்ளம் கவர்ந்தவனை
யசோதைப் பிராட்டி வுடைய வெண்ணெயிலே பண்ணின ச்ரத்தையை என் நெஞ்சிலே பண்ணி புஜித்தவனை –
வைத்த குறி அழியாது இருக்க வெண்ணெய் குடி போனாப் போலே
யாய்த்து இவர் உடம்பு இருக்க அகவாய் குடி போன படி-

கண்ட கண்கள் –
என்கிற இதிலே- என் கண்கள் -என்னாமையாலே நிர்மமத்வம் தோற்றுகிறது -இப்படி
பாதித அநுவ்ருத்தி யில்லாதபடியான தத்வ ஜ்ஞானம் பிறந்து சர்வத்திலும் நிர்மமராய்
இருக்கிற இவர் முன்பு –
என் கண் –என்றும்
என் சிந்தனை -என்றும் –
அடியேன் உள்ளம் -என்றும்
என் உள்ளம் -என்றும்
மமகாரம் பின் துடர்ந்தது தோன்றப் பேசுவான் என் என்னில் –
ஸ்வதந்திர ஸ்வாமியான ஈஸ்வரன் சர்வ சேஷ பூதமான சேதன அசேதனங்களிலே
ஸ்வார்த்தமாக ஒன்றை ஒன்றுக்கு சேஷமாக அடைத்து வைத்தால் -அவன் அடைத்தபடி
அறிந்து பேசுவார்க்கு நிர்மமத்தோடே சேர்ந்த இம்மமகாரம் அநபிஜ்ஞர்  மமகாரம் போலே தோஷம் ஆகாது
பிரதானமான அனுபவத்திலே இழிந்த படியினாலே
ஸ்ரீ யபதிக்கு பிரகாரமாக வல்லது மற்று ஒன்றையும் தாம் அநுபவியாத படியிலே தாத்பர்யம் ஆகவுமாம்
ஸ்ரீ பெரிய பெருமாள் திரு மேனியிலே ஸ்ரீ திருமலை முதலாக ஸ்ரீ கோயில் கொண்ட அர்ச்சாவதாரங்களிலும்
ஸ்ரீ ராம ஸ்ரீ க்ருஷ்ண ஸ்ரீ வாமன ஸ்ரீ வட பத்ர சயநாதிகளிலும் உள்ள போக்யதை எல்லாம் சேர
அநுபவித்து இவ்வாபி ரூப்யத்திலே ஈடுபட்ட என் கண்கள் மற்றும் பர வியூஹ விபவாதிகளான
திருமேனிகளை எல்லாம் சேரக் காட்டினாலும் ஸ்தநந்தயத்துக்கு போக்யாந்தரங்கள் ருசியாதாப் போலே –
பாவோ நாந்யாத்ர கச்சதி -என்கிறபடியே அவை ஒன்றும் ருசியாது என்கிறார் ஆகவுமாம்
இது இவருடைய அநந்ய பிரயோஜனத்வ காஷ்டை யிருக்கிறபடி-

கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
அம்ருத பானம் பண்ணினாரை பாலையும் சோற்றையும் தீற்றப் போமோ –
இந்தக் கண்கள் புறம்பே சிலவற்றை காண வேண்டுவது இங்கே சில குறை வுண்டாகில் அன்றோ
இவர் பக்கல் ஔதார்யம் இல்லை என்று போகவோ –
வடிவில் பசை இல்லை என்று போகவோ –
சௌசீல்யம் இல்லை என்று போகவோ –
நெஞ்சுக்கு பிடித்து இருந்தது இல்லை என்று போகவோ –
மேன்மை இல்லை என்று போகவோ –
சௌலப்யம் இல்லை என்று போகவோ –
போக்யதை இல்லை என்று போகவோ –
அனுபவத்தில் குறை உண்டு என்று போகவோ –

இப்பாட்டில் கிருஷ்ணனுடைய படியும் இங்கே உண்டு என்கிறார் –

—————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருப்பாவை — உங்கள் புழைக்கடை – — வியாக்யானம் .தொகுப்பு –

August 19, 2015

அவதாரிகை
இவை எல்லாவற்றுக்கும் தானே கடவளாய்–எல்லாரையும் தானே எழுப்பக் கடவதாய்ச் சொல்லி வைத்து
அது செய்யாதே உறங்குகிறாள் ஒருத்தியை–எழுப்புகிறார்கள் –
இப்பாட்டில்–உங்கள் பாகவத சமுதாயத்துக்கு எல்லாம் தாமே கடவராய் இவர்களுக்கு எல்லாம் பகவத் சம்பந்த கடகர் தாமேயாம்படி-
ஜ்ஞான பக்தி வைராக்யங்களாலே பூரணரான பாகவதரை எழுப்புகிறார்கள் –
பாகவத சமுதாயத்துக்கு எல்லாம் தாமே கடவராய் அவர்களுக்கு எல்லாம் பகவத் சம்பந்த கடகர் தாமேயாம்படி
ஞான பக்தி விரக்திகளால் பூரணரான பாகவதரை எழுப்புதல் -எல்லாருக்கும் முன்னே எழுப்ப மறந்து வாய் பேசும் நங்காய் வாயாலே பேசி கார்யம் செய்யாமல் உறங்கும்
மூன்று பிரமாணங்கள் -பிரத்யஷம் அனுமானம் சப்தம் நமக்கு சாஸ்திரம் பிரதான பிரமாணம்
கண்ணின் தோஷம் பிரத்யஷம் தப்பாகலாம் காமாலை கண்ணால் சங்கு மஞ்சள் ஆகலாமே அந்த வேதாந்த அர்த்தம் இதில் காட்டி-
செங்கழு நீர் புழக்கடை தோட்டம் மலர -அனுமானம் கொண்டு சொல்லி
திருக் கோவில் சங்கிடப் போகின்றார் பிரத்யஷம்
வாய் பேசும் ஆப்த வாக்கியம் சப்தம் சாஸ்திரம் –
மூன்றையும் காட்டி பாசுரம் –

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்
தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கழு நீர் அலர்ந்து ஆம்பல் வாய் மொட்டிக்கும்படி–போது விடிந்தது உறங்குவதே இன்னம் -என்ன –
அல்லிக் கமலம் முகம் காட்டும் – தோ ட்டத்து வாவியுள் –
நீங்கள் வயலிலே போனீர்களோ என்ன – புழக்கடை தோட்டத்து வாவியுள் செங்கழு நீர் அலர்ந்து ஆம்பல் மொட்டித்து என்ன –
அது பின்னை நீங்கள் வலிய அலர்த்தினிகோள் -என்ன –உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
எங்களுக்கு புகுர ஒண்ணாதே அசூர்ய அம்பஸ்யமான உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் மொட்டித்தன –
வெயில் பட்டன்றிக்கே கால பாகத்தாலே -என்கை -இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியா பொழில்கள் திரு வல்லிக்கேணி
காலத்தின் பரிபாகத்தால் அலர்ந்தும் மொட்டிதவையும்–அனுமானத்தால் சொல்கிறார்கள்
இவள் எழுந்திராத இன்னாப்பாலே -உங்கள் புழக் கடை என்று வேறிட்டுச் சொல்கிறார்கள்

அஹங்காரம் த்யாஜ்யம் பகவத் சம்பத்தால் வரும் அஹங்கார உத்தேச்யம் மம அஹம் ஏகாஷரம்-மிருத்யு தள்ளும் ஆத்மா நாசம் நீர் நுமது வேர் முதல் வாய்த்து -நாம் எனது சொல்லாமல்-யானே என் தனதே என்று இருந்தேன் த்யாஜ்யம் இவை இவர்கள் உணர்ந்தவர்கள் உங்கள் எங்கள் சொல்வது வ்ருத்தம்
பாகவத சம்பந்தம் -அஹங்காரம் அபிமான துங்கன் -செல்வனைப் போல சாத்விக அஹங்காரம்
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பி -மின்னிடை மடவார் பதிகம் அச்சுதச்ய பக்தன் அஹம் –
ஆழ்வார் நான் சொன்னாலும் அடியேன் நாம் அடியேன் சொல்வது நான்
எம்பார் கொண்டாட்டம் இசைந்து -எம்பெருமானார் கடாஷத்தால் வந்த பெருமை
கால கத பரிமாணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருமே

ஆகார த்ரய விசிஷ்டரான உங்களுடைய விஹார ஸ்தானமான திருமந்த்ரத்தின் உடைய மத்யே வர்த்திக்கிற நமஸிலே-பாரதந்த்ர்யம் பிரகாசமாய் ஸ்வ தந்த்ர்யம் தலை மடிந்தது காண் –

செங்கழு நீர் –ஆம்பல் -என்றது
பரதந்த்ர ஞானம் பிறந்து -ஸ்வ தந்திரம் போக -புழக்கடை வேதம் -அதர்வண வேதம் -அஷ்டாக்ஷர மந்த்ரம் -ஓமித்யேகாஷாரம் –நாராயணா பஞ்சாக்ஷராணி -நாராயண உபநிஷத்தில் வரும் –

அலரப் புகுகிற அளவிலே கழிய அலர்ந்தது என்று சொல்லுகிறி கோள் வேறு அடையாளம் உண்டோ என்ன –
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர் தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார் –
அளற்றுப் பொடியிலே புடைவையைப் புரட்டி ப்ரஹ்மசர்யம் தோற்ற பல்லை விளக்கி
தண்ட பரிஹார்தமாக தபோ வேஷத்தை உடையரான சிவத்விஜரும் கூட தங்கள் தேவதைகளை ஆராதிக்கும் காலம் ஆய்த்து-
திருக் கோயில் -என்றது அவர்கள் சொல்லும் பாசுரத்தாலே சங்கு -என்றது ஆராதன உபகரணத்துக்கு உப லஷணம் – குச்சி இட என்றுமாம் –
இத்தால் அசூத்தரும் கூட எழுந்து இருக்கும் காலம் ஆய்த்து என்கை –
சன்யாசிகள் சந்த்யா வந்தனம் பண்ணித் தங்கள் உடைய அகங்களிலே திருவாராதனம் பண்ணும் காலம் ஆய்த்து என்றுமாம் –
தம பிரசுர அனுஷ்டானம் பிரமாணமோ -என்ன தர்மஜ்ஞையான உன்னுடைய சமயமும் பிரமாணம் அன்று இ றே-
தாமஸ பிரக்ருதிகள் என்பார் எம்பார்- சத்வ நிஷ்டர் என்பார் திருமலை நம்பி

சக்கரவர்த்தி திருமகன் அந்தபுர காவல்
காஷாய வேத்திர பாணி -கொம்பு கையில் காவல் -அலங்காரம் காஷாயம் அணிந்த வயசான கிழவர்கள் –
வ்ருத்தாம் – கைங்கர்ய த்வரையால் வஸ்த்ரம் பேண அவகாசம் இல்லாமல் –
நீர் காவி ஏறி காஷாயம் வைராக்கியம் விரக்தி – சகரவர்த்தியோபாதி பழையவர்
சக்கரவர்த்தி திருமகன் தழுவி குங்குமப் பூ சந்தனம் அலங்காரம் – வெண் பல் போக்ய த்ரவ்யங்களில் விரக்தி
தவா தவா என்பர் தவத்தவர் –யானே நீ என் உடைமையும் நீயே — கண்டபேர் இடம் பல்லைக் காட்டாமல் வெண் பல் தவத்தவர்-குறடு வேறு ஏறோம்-
சத்தம் கீர்த்தி யந்தாம்-எப்பொழுதும் ஸ்தோத்ரம் நித்ய யுக்தர் – அனவரதம் -விடிவுக்கு அடையாளம் இல்லை

ராக பிரயுக்தமான சேஷத்வ ஜ்ஞானம் உடைய மந்த ஸ்மிதம் உடையரான பிரபன்ன அதிகாரிகள்-தங்கள் தங்கள் எம்பெருமான் சந்நிதியிலே திருவாராதனம் பண்ணுகைக்குப் போந்தார்கள் –

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் –
எல்லாரையும் நானே எழுப்புகிறேன் என்று சொன்னது–உன் பக்கல் கண்டிலோமீ -என்கிறார்கள் –
வாய் பேசும் –
உக்தி மாத்ரமேயாய் -அனுஷ்டானம் இன்றிக்கே இருக்கை – கிருஷ்ணன் உடன் பழகின உனக்கு பொய் சொல்லுகை வம்போ –
எங்களை எல்லாம் நாங்கள் அபேஷிப்பதற்கு முன்னம் ஞானிகள் ஆக்கும்படி ஸ்ரீ சூக்திகளை அருளிச் செய்யும் பூர்த்தியை உடையவரே -எழுந்திராய் –

பிரத்யஷமும் பிரமாணம் இல்லை சாஸ்திரம் பிரதிகூலமாக இருந்தால் வாய் பேசும் -வாய் மட்டும் சொல்லி
மேலையார் செய்வனகள் சிஷ்டாசாரம் ஆப்த வாக்கியம் தர்மஞ்ஞாச்ய நடவடிக்கை வேதாஸ் ச கூட அபிரதானம் -ஆபஸ்தம்ப சூத்திரம் –
யச்தய தாசரதி ச்ரேஷ்டா -யதா ததே அவர்கள் போலே செய்ய வேண்டும் – சொன்னது செயலிலே கண்டிலோம் -அனுஷ்டான பர்யந்தம்
உக்தி மாதரம் ஹிருதயத்தில் நினைவும் செயலும் வேவேறே கண்ணன் ஸ்வபாவம் கடைக் கணித்து–அவளுக்கு
பாம்பணையாருக்கும் நாவு இரண்டு மனஸ் ஏகம்- வசஸ் ஏகம் வாய்-செயல் ஒன்றாக

நங்காய் –
பூரணை இ றே–எனக்கு உங்களை ஒழியச் செல்லாது என்று சொல்லும்படியும் –
உன் நைர பேஷ்யமும் எல்லாம் கண்டோம் இ றே – சொலவும் செயலும் பேராதார்க்கு ஒரு பூர்த்தியும் வேணுமோ –

எழுந்திராய் –
எங்கள் குறை தீர்க்க எழுந்திராய்

நாணாதாய்-
சொல்லி வைத்து சொன்னபடி செய்யப் பெற்றிலோம் என்னும் லஜ்ஜையும் இன்றிக்கே இருந்ததீ –
நீ இருந்த ஊரில் பூசணியும் காயாதே -என்கை – பூசணி உடைய சரசரப்பையும் சுணை என்பதால் –
சொல்லும் செயலும் ஒத்து இராதார்க்கு நாணமும் இன்றிக்கே ஒழிவதே இப்படி என்னை ஷேபித்துக் கொண்டாகிலும்
என்பக்கல் சாபேஷராய் வருவது என்ன –

நாவுடையாய் –
என்னை ஷேபித்துக் கொண்டாகிலும் வருகிறது என்-என்ன உன் பேச்சின் இனிமை கேட்க இவள் எல்லாம் படுத்தினாலும் விட ஒண்ணாத நா வீருடைமை
உங்களுக்கு செய்ய வேண்டுவது என் என்ன –
வாக் மாதுர்யமுடையவரே நீர் அஹ்ருதமாய் சொல்லிலும் பேச்சின் இனிமையைப் பார்த்தால் ச்வதஸ் சர்வஞ்ஞனான ஈஸ்வரனுக்கும் இது சஹ்ருதயம்
அவசியம் கர்த்தவ்யம் -யென்னும்படியாய் இருக்கை –
நா வுடையாய்
பாம்பணை யாருக்கும் தனது பாம்பு போலே நா வும் இரண்டு உளவாயிற்று-நீயும் அங்கனே
அன்றிக்கே
உன் பேச்சின் இனிமை கேட்க வந்தோம் நா வீறுடைமை-பெருமாள் திருவடியை புகழ்ந்தால் போலே-
ந ரிக் வேத -ந யஜுர் வேத -சொல்லின் செல்வன் விரிஞ்சனோ விடைவலானோ கம்பர் –
மதுரம் வாக்கியம் -திரு நாராயண ஐயங்கார் மதுரம் இனிமை தமிழ் பேசினார் தேவ பாஷை பேச மாட்டேன் -ராவணன் ஆள் என்று நினைக்கலாம்
வால்மீகியும் தமிழும் -வால்மீகி தமிழ் அறிவார்

நாணாதாய் –
நாணினார் போல் இறையே செய்யும் -திரு நெடும் தாண்டகம் பூணி —நாண் இத்தனையும் இல்லார் நப்பின்னை காணில் சிரிக்கும் –

புள்ளை கடாவுகின்ற -தென் திருப்பேரை 7-3-10-
கங்குலும் பகலும் வட்கிலள் இரையும் மணி வண்ணா என்னும் கட்கிலி உன்னை காணுமாறு அருளாய் வெட்கம் இல்லாதவள் –
பகவானை ஆஸ்ரையித்தவர் வெட்கம் – தலையினோடு ஆசனம் தட்ட வீதி யார ஆடி உலோகர் சிரிக்க
திரு சங்கணி துறை -ஆழ்வார் திருநகர் தாந்தன் -சாபம் -தீர தாமர பரணி தினம் நீராடி பரிகாசம் செய்தவர் கண் போக
சம்பந்தம் சங்கன் திரு செந்தூர் – ஆறு கடலில் கலக்கும் இடத்தில் சங்கமாக இரவில் பகலில் இங்கே மனிஷனாக வர –
வைகாசி மாசி விசாகம் தீர்த்தவாரி –
நாண் எனக்கு இல்லை தோழி மீர் காள் -சிகரம் அணி –மாயன் –
சோநேபூர்- கபிஸ்தலம் -கஜேந்திர வரதன்-அஷ்ட புஜ -ஓன்று பணித்தது உண்டு -காதல் -நெருங்க நோக்கி –
தொட்ட படை -குட்டத்து கோள் முதல் அஞ்ச தாளே சார்வு –

இடை -மத்திய -நமஸ் -மத்யமாம் பதம் போலே -என்னை நான் ரஷிக்க கூடாதே உன் இடையை காக்க தான் என்னுடைய எட்டுகைகள் என்றானாம் –
வெறும் வாய் பேச்சு இல்லை -ஓன்று பணித்தது உண்டு -மகா விசுவாசம் – உளன் எனில் உளன் உளன் அலன் எனில் உளன்
இலன் எனில் சொல்லாமல் வாக் அமர்த்தம் – நாஸ்தி -முன்பு வேறு இடத்திலோ வேற வஸ்து இருப்பதை காட்டுமே
ஏணி இல்லை -கதை நாஸ்தி -உளன் அலன் அவன் அருவம் விசிஷ்ட பிரமம் -இரு தகைமையோடு உளன் –

போதரிக் கண்ணினாய் கடாஷம் நா வுடையாய் உபதேசம்

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் ஏந்தி அந்த ஸ்பர்ச்யத்தா;லே வளர்ந்த திருக் கைகளை உடையவனாய்
-ஆழ்வார்களிலே வந்து அலை எறிகிற கண்களை உடையவனை-
திவ்ய ஆயுதங்களை கண்ணபிரான் மறைத்தது உகவாதர்களுக்கே–நெய்த்தலை சங்கும் நேமியும் நிலாவிய கைத் தலங்கள் வந்து காணீரே-பெருமாள் சங்கு சக்கரம் காட்டி அருளினை இடங்கள் நிறைய இல்லை -கண்ணனோ பிறக்கும் பொழுதே தாய் தந்தைக்கு காட்டி அருளினான் –சங்கு சக்கரம் -சூர்ய சந்திரன் -நாபி கமலம் அலரும் குவியும் -சந்த்ர மண்டலம் போல் -சங்கரய்யா -விருப்புற்று கேட்க்கின்றேன் சொல்லாழி வெண் சங்கே –

வாவியுள் பங்கயக் கண்ணானை -திரு மேனியே வாவி திருக்கண்கள் பங்கயம் –கப்யாசம் புண்டரீகம் அஷிணி-
கப் ஆயாசம் -கவி ஆயாசம் குரங்கின் பின் பகுதி இல்லையே

திருவாய்மொழி பாடுகையே பிரயோஜனம் எழுந்திராய் -என்கிறார்கள் –

இளவாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான் -என்று இவர்களைத் தோற்பித்துக் கொள்ளும் கண் இ றே
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்று அனுபவிப்பாரை பிச்சேற்ற வல்லக் கடவ திரு ஆழியையும்
திருமேனிக்கு பரபாகமான திரு பாஞ்ச ஜன்யத்தையும் முற்பட தன்னை எழுதிக் கொடுத்து பின்னை எழுதிக் கொள்கிற
திருக் கண்களையும் உடையவனை பாட
உன் ப்ரீதிக்கு போக்கு விட்டு எங்களையும் உஜ்ஜீவிப்பிக்க கிருஷ்ணன் கையில் இப்பொழுது ஆழ்வார்கள் உண்டோ -என்னில்
எப்போதும் உண்டு அது பெண்களுக்கு தோற்றும்–அல்லாதார்க்கு தோற்றாது –இவர்களுக்கு தோற்றத் தட்டில்லை இ றே
சங்கோடு சக்கரம் ஸ்பர்சத்தால் வளர்ந்த திருக் கைகள் தடக்கை ஆழ்வார்கள் அளவும் அலை எரியும் திருக் கண்கள்
பொன்னார் சார்ங்கம் அடிகள் -இன்னார் என்று அறியேன் மயக்க வைக்கும் அழகு கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய்
பங்கயக் கண்ணன் தன்னை எழுதி கொடுத்து வாங்கப்படும் தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி மயக்கி
விடலை தனம் விடவே செய்து குறும்பு காண பார்த்து
ஜிதந்தே
தாமரைக் கண்ணனை விண்ணோர் தோற்று பரவும் தோற்க வைத்து – உபய விபூதியையும் தோற்பிக்கும் திருக் கண்கள்
சந்திர ஆதித்யன் -திங்களும் ஆதித்யன் போலே அலருவதும் மொட்டி
உந்தி தாமாரை -சங்கு சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில் ஆங்கு மலரும் குவியும் மால் உந்தி வாய் கமலத்தின் பூ பேய் ஆழ்வார்
திருக் கண்களும் அலருவதும் மொட்டுவதும் கிருஷ்ணன் கையில் உண்டோ -மறைத்து கொண்டது
பெண்களுக்கு தோற்றும் உகவாதாருக்கு கூசி மறைத்து நெய்த்தலை நேமியும் கை தலம் வந்து காணீரே மெச்சூடு சங்கம் இடத்தாம் அப்பூச்சி காட்டி –
பரதவ சின்னம் காட்டாமல் பெருமாள் போலே இல்லையே கண்ணன்

பாடல் மாலை -சாற்றி அருளுகிறாள்
பங்கயக் கண்ணானைப் பாட -கரிவவாகி படை –நீண்ட அப்பெரியவாய கண்கள் என்றாரே
சங்கோடு சந்க்கரம் ஏந்தும் தடக்கையையனையும் பங்கயக் கண்ணானனையும்
தமஸ பரமோதாதா சங்க சகர கதாதரா – மண்டோதரி -யுத்த -114-15
ஆயதாஸ்ஸ ஸூ வ்ருத்தாஸ்ஸ பாஹவ பரிகோபமா சர்வ பூஷண பூஷார்ஹா கிமர்த்தம் ந விபூஷிதா -திருவடி -கிஷ்கிந்தா -3-15-
ஜாதோசி தேவதேவேச சங்கு சக்ர கதாதர — உப சம்ஹர விச்வாத்மன் ரூபமேதச் சதுர்புஜம்
ஜாநாதும் அவதாரம் தே கம்சோயம் திதி ஜன்மஜ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-1/10 வசுதேவர் தேவகி –
மெச்சூது பதிகம் அப்பூச்சி காட்டுகின்றான் – நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங்கள் வந்து காணீரே –
அஞ்சுடர் ஆழி யுன் கையகத்து ஏந்தும் அழகா நீ பொய்கை புக்கு நஞ்சுமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நானுயிர் வாழ்ந்து இருந்தேன் –
தேனைவ ரூபேண சதுர்புஜேந -அர்ஜுனன் ஸூஜாத ரேகாமய சங்கசக்ரம் தாம்ரோதரம் தஸ்ய கராரவிந்தம் -நாகப் பழக்காரி
பங்கயத் தாமரைக் கண்ணனே கண்ணா நீள் நயனத்து அஞ்சன மேனியனே க புண்டரீகநயன புருஷோத்தம க-

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பி–எம்பெருமானார் பரமான வியாக்யானம்
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -தத்வமஸி-ஸ்வாமி அர்த்த விசேஷம் கேட்டு யாதவ பிரகாசர் போல்வார் மூடிக் கொண்டது போலே
செங்கல் பொடிக் கூறை-காஷா யேண க்ருஹீத பீத வசநா-யதிராஜ சப்தத்தி
வெண் பல் -அச்யுத பதாம்புஜ யுக்மருக் மவ்யா மோஹதஸ் ததிராணி த்ருணாய மேன-என்னும்படி மகா விரகத சார்வ பௌமர்
தவத்தவர் -மம மம என்னாத தவ தவ -என்று சேஷத்வம் பரிமளிக்க நிற்பவர்
தங்கள் திருக் கோயில் -அமுதனார் ஆதீனத்தில் இருந்த கோயில் தங்கள் திருக் கோயில் என்னும்படி
சங்கிடுவான் -திறவு கோல்-ஆழ்வான் மூலமாக திரு கோவிலைப் பெற்ற இதிகாசம்-

ஞானம் பக்தி விரக்தி நம்பிகளுக்கு பூர்த்தி நாண் மடம் அச்சம் பயிர்ப்பு பூர்த்தி நங்காய்
அந்தணர் மாடு -செல்வம் -வேதாந்தாம் – தபோ தனம் ரிஷிகள் பிராமணர் வேததனம் ஸ்திரீகள் லஜ்ஜா தனம்
தெரிந்தும் தெரியாமல் பாவித்தல் மடம் –
நங்காய் -நாணாதாய் விரோதம் அடுத்து சொல்கிறார்களா -இல்லை –
நாண் கௌரவம் -அர்த்தம் -உண்டே –

வாசா தர்ம -பெருமாள் இடம் சிபார்சு செய்ய -பிராட்டி அவாப்நுகி -வாக்காலே தண்ணீர் பந்தல் வைக்க -நா வுடைமை –
நாவினில் நின்று மலரும் – உளன் சுடர் மிகு சுருதியுள் உளன் -பிரமாணம் -வைதிகர் வேதமே பிரமாணம்
ஸ்ருதி ஸ்மரதி மமை வாக்யா என்னுடைய கட்டளை மனு பராசராதிகள் வெளி இட்டாலும் சாஸ்திர யோநித்வாத் -சப்தமே பிரமாணம்
பிரத்யஷகம் சப்தம் விருத்தம் இல்லாத அனுமானம் பிரமாணம் -ஒரே ஜ்வாலையா -இரண்டு மூன்றா -திரி எண்ணெய் -குறைவதால் அனுமானத்தால் –
ஜ்வாலா பேதம் அனுமானத்தால் -இயம் ஜ்வாலா பூர்வ ஜ்வாலா -பின்னா –
மூன்று தண்டர் ஒன்ற்னர் அம் தண் அரங்கமே -சந்நியாசி பற்றி திரு மழிசை ஆழ்வார் மட்டுமே அருளி –
எம்பெருமானார் எதிகளை ஏற்படுத்தி -700 பேரை ஏற்படுத்தி -தவா சாத்திக்கு கொண்டே மம சாதிக்காமல் ஒரே சித்தாந்தம் -ஒன்றினார் –
என் கண்ணனுக்கே என்று ஈரியாய் -நெஞ்சு கசிந்து இருப்பார் வெண் பல் தவத்தவர் -தவ தவ சொல்லி

தீர்த்தங்கள் ஆயிரம் திருவாய் மொழி பரிசுத்தம் ஆக்குமே
திருப்புன்னை மரத்தில் சந்தை சொல்வார்களாம் -காலை -இத்தாலே வளர்ந்ததாம்
தர்சயம் தந்த பந்தி -அரங்கன் கையை இப்படி மறித்தாலும் அவன் குறடு தவிர வேறு எங்கும் ஏற மாட்டோம் –
வெண் பல் தவத்தர் –
த்ருநீக்ருத -ராமானுஜ பதாம் புஜ சமாஸ்ரையான சாதினாக –
சதுரா சதுரஷரீ -ராமானுஜ திவாகரா –
வெண் பல் -நின் சாயை அழிவு கண்டாய் -பெரியாழ்வார் –
உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் –
இனிப் பொய் ஒருவன் தனக்கு பணிந்து கடைத்தலை நிற்கை உன் சாயிக்கு அழிவு கண்டாய்
உனக்கு அவத்யம் -ராஜ மகிஷி உஞ்ச வருத்தி பண்ணி ஜீவிக்கும் காட்டில் ராஜாவுக்கே அவத்யம் –
தங்கள் திருக் கோயில்
தங்கள் இல்
திரு இல்
கோ இல்
திருமந்த்ரார்தம் -ஸ்வரூபம் பிரகாசித்து -தங்கள் -ஆத்மாவாலே பேறு 
த்வயத்தில் பெரிய பிராட்டியால் பேறு -திரு இல்
சரம ஸ்லோகம் ஈஸ்வரனால் பேறு என்கிறது –
முமுஷ்வுக்கு அறிய வேண்டும் ரகஸ்யங்கள் இவை –
சங்கிடுவான் -அர்த்தம் உள்ள ரத்னம் அருள –
ஞானக் கை தா காலம் களவு செய்யேல்
எங்களை முன்னம் சம்சாரிகளை எழுப்புவான் வாய் பேசும்
பசப்படும் -பேசின வார்த்தை பேசின ராமன் இரண்டு இடத்திலும் அன்வயிக்கும் –
உத்தரிப்பிக்க வந்து இருக்கிறோம் –
அபயபிரதானம் கேட்ட பிள்ளை உறங்கா வல்லி தாசர் அழ –
உம்மை நாம் கூட்டியே போவோம்
உனக்கு நான் உண்டு
எனக்கு பெரிய நம்பி உண்டு
ஆளவந்தார் உண்டு தொடர் சங்கிலி உண்டே –
ஆவதரிக்கப் போகிறார்கள் தத்வ தர்சனிகள் கீதை –
பேசப்படுபவர்கள் ஆசார்யர்கள்
சிஷ்யாசார்யா க்ரமம் குரு பரம்பரை அவனே கொடுத்து அருளி
உபேதசந்தி  ஞானம் –
அடுத்த வருஷம் என்ன சொல்லப் போகிறேன்  -ஸ்வாமி தள தள குரலில்
சங்கு சக்கரம் -உள்ளவரை உள்ள விட -கண்ணனே சொல்லி அருளி –
ந முத்தரை ந பிரவேஷ்டத்வய –
சங்கு போலே அவன் திருவடிகளில் இருந்து
சக்கரம் சுழன்று தீர்தகரராய் திரீந்து
பங்கய கண் -ஆசார்ய கடாஷமே உத்தாராகம் –

திருப்பாண் ஆழ்வார்
புழக்கடை தோட்டம் காலை எழுந்து பாட
லோக சாரங்க மகா முனி -செங்கல் பொடி -திருக் கோயில் சங்கு இடுவான் போனாரே
நங்காய் -பூர்த்தி நைச்யம் தான் பூர்த்தி -ஜன்ம சித்தம் -ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்
நாணாதாய்
நாண் கௌரவம் நாடுவோம் நாமே தேசிகன்
அஹங்காரம் படாமல் அடியார்க்கு ஆட்படுத்திய விமலன்
தோள் மேலே உட்கார லஜ்ஜை இன்றி
நா வுடையாய் சொல்ல வந்த விஷயம் -சுருக்கமாக
காண்பனவும் -கண்ணனையே கண்டு உரைத்த கடிய காதல்
பல மறையின் பொருள் -நாண் பெரியோம் அல்லோம் நன்றும் தீதும் உரைக்க உளர் என்று நாடுதுமே விநயத்துடன் இருப்பவள் நாணாதாய்
நாவுடையாய் – நா அசைந்தால் நாடு அசையும்-நன்றும் தீதும் உரைக்க உளர் என்று நாடுதுமே -தேசிகன் -முனிவாகன போகம் –

பிரணவம் சகாரம் பாதுகை
முன்னம் எழுப்புவான் அடியார்க்கு ஆட்படுத்த விமலன்
ஜன்ம சித்தம்
திருத் துழாய் திரு முடியில் இருந்தால் சேஷத்வம் குறையுமா ஏழு விசேஷணம் திருக் கண்ணுக்கு சொல்லி
கரிய வாகி -நீண்ட அப்பெரிய அ -சுட்டு பேதைமை செய்தன-

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸ்வாமி எம்பெருமானார் அருளிய சரணாகதி கத்யத்தில் -திருக்கல்யாண குண அனுபவம் -3—ஏரார் குணமும் -எழில் உருவும் -ஆராத அழகமுதம் – 43 பட்டம் -ஸ்ரீ அழகிய சிங்கர் -அருள் உரை சுருக்கம்–

August 6, 2015

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1-

திருக்கமல பாதம் -பிராப்யம் -பிராபகம் –போக்யம் பாவனத்வம் -குல தனம்
ஏகை கஸ்மின் பரம் அவயவே அநந்த சௌந்தர்ய மக்னம் சர்வம் த்ரஷ்யதே கதம் –
லாவண்யம் அனைத்தையும் அனுபவிக்கச் செய்யும் நீ ஒன்றிலே ஆழம் கால் பட்டாலும் -பட்டர் –
சௌந்தர்ய சாகரத்தை லாவண்யம் ஆகிற மரக் காலத்தாலே எங்கும் ஒக்க அனுபவிக்கிறோம் -நாயனார்
அஸ்வ மேத யாகத்தில் ஸ்ரீ தேவாதி ராஜன் ஆவிர்பவிக்க –
கிரீட கேயூரக ரத்ன குண்டலம் —தொடங்கி
நி குஞ்சி தோத்தா நித பாத யுக்மம் -பிரம்மா அனுபவித்தார்-

இரு பரிதி இயைந்த மகுடமும் -உலகடைய நின்ற கழல்களும்
ஆதித்ய சந்நிதியிலே அலரும் தாமரைப் பூ போலே ஆஸ்ரிதர்கள் சந்நிதியிலே மலருமாய்த்து திருவடிகள்
திரு கமல பாதம் -பாவனத்வ போக்யத்வங்கள் -ஸூ பாஸ்ரயமான -திரு வுக்கு லீலா கமலம் போலே இருக்கும் திருவடிகள் –

அரக்கன் பின்னே தோன்றிய கடன்மை தீர இளையவருக்கு அவித்த மௌலி என்னையும் கவித்தி
எம்மா வீடும் வேண்டாம் செம்மா பாத பற்பு-பால் தித்தித்தாலும் வேண்டா என்பாரை திருத்தல் ஆவாதே –
வேதங்களுக்கு எல்லாம் மேல் சாத்தாய்-சர்வ ஆத்மாக்களுக்கும் சாமான்ய தைவதமான பொது நின்ற பொன்னம் கழல்
ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் -பத்து விரலும் மணி வண்ணன் பாதங்கள் ஒத்திட்டு இருந்தவா –
அது நன்று இது தீது என்று ஐயப் படாதே மது நின்ற தண் துழாய் மார்பன் –
பொது நின்ற பொன்னம் கழலே தொழுமின் -முழு வினைகள் முன்னம் கழலும் முடிந்து -பேயாழ்வார்
அவனுக்கும் போக்யம் –பேதைக் குழவி பிடித்து சுவைத்து உண்ணும் பாத கமலங்கள் –
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ஸ–தேனே மலரும் திருப்பாதம் –
உகவையால் நெஞ்சம் உள்ளுருகி உன் தாமரைத் தடம் கண் விழிகளின் அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடிகளால் –
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாமடு சிறு சோறும் கண்டு நின் முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே –6-2-9-
அவனுடைய அபிமத சித்திக்கும் சாதனம் திருவடிகள் காணும் –
உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் -புறம்பு அந்ய பாதைகள் உண்டானால் அவற்றைக் குலைப்பதும் திருவடிகளாலே

——–

உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற
நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே —-2–

அரைச் சிவந்த ஆடை –
திருக் கமல பாதங்கள் தாமே வந்து ருசி உண்டாக்க -ருசி கண்ட ஆழ்வார் தாமே மேல் விழுந்து –
வந்து உனதடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும் சிந்தனைக்கு இனியாய் –
ஈன்று அணித்தான நாகு தன் கன்றுக்கு வாசனை இல்லாமையாலே முதலிலே தானே தன் முலையை அதன் வாயிலே கொடுக்கும்
சுவடு ருசி அறிந்து கன்று தானே பசு காற்கடைக் கொள்ளிலும் மேல் விழும் இறே –
அது போலே அரங்கத்தம்மான் அரைச் சிவந்த ஆடை மேல் சென்றதாம் என் சிந்தனையே
கடலில் விழுந்த துரும்பு கரைக்கு வருவது ஆழம் அளந்த பின்பு அன்றே -அழகு அலைகள் தாமே தள்ள
போக்யதை அளவு பட்டதும் அன்று -ஆசை தலை மடிந்ததும் இல்லை
ஒரு திரையிலே ஒரு திரை ஏற வீசும் அத்தனை இறே
அவன் பிரிவால் நெஞ்சுகளில் பிறந்த புண் எல்லாம் தீர்ந்து இத்தோடு பணி போரும்படி யாயிற்று பீதாம்பரம் இருப்பது
உடையார்ந்த ஆடை –கௌசேய புஷ்பித தடம் -திருவரையிலே புஷ்பம் பூத்தால் போலே -செக்கர் மா முகில் உடுத்து –
மின்னுக் கொடி உடுத்து விளங்கு வில் பூண்டு –நன்னிற மேகம் நிற்பது போலே –
படிச் சோதி யாடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன் கடிச் சோதி கலந்ததுவோ -என்னும்படி திகழா நின்ற திருவரையிலே
மது கைடப ருதிர படலத்தாலே போலே பாடலமாய் மரகத கிரிமேலே பாலாதபம் பரந்தால் போலே இருக்கிற திருப் பீதாம்பரம்

சோற்றிலே எனக்கு மனம் சென்றது என்னுமா போலே
ஆருடைய கூறை யுடை கண்டு உகக்கக் கடவ நெஞ்சு இதிலே அகப்பட்டது
த்ருஷ்டத்திலே லோக கர்ஹிதமாய் அத்ருஷ்டத்திலே வெம் நரகிலே தள்ளவும் கடவதான உடைகளிலே பிரவணமான என் மனஸூ
த்ருஷ்டத்தில் ஆகர்ஷகமாய் -அத்ருஷ்டத்தில் சதா பஸ்யந்தி விஷயமான திருப் பீதாம்பரத்தில் விழுந்து நசை பண்ணா நின்றது
என்னாலும் மீட்க ஒண்ணாதபடி திருப் பீதாம்பரத்தில் துவக்குண்டதே -திரு கமல பாதம் வந்து ஆட்கொண்ட பின்பு
தீர்த்தமாடா நிற்க துறையிலே பிள்ளையைக் கெடுத்து திரு ஓலைக்கத்திலே காண்பாரைப் போலே திருப் பீதாம்பரத்தைக் கண்ட படி
பிரணய கோபம் கொண்டாரையும் ஆற்ற வல்லது திருப் பீதாம்பரம்
தன் வசப்பட்டாரை மற்றவர் அறியாத படி மறைத்துக் கொண்டு போகப் பயன்படுமே
மின்னொத்த நுண் இடையாளைக் கொண்டு வீங்கு இருள் வாய் எந்தன் வீதியோடு பொன்னொத்த வாடை குக்கூடலிட்டு
போகின்ற போது நான் கண்டு நின்றேன் -பெருமாள் திருமொழி
இதற்காகவே ஸ்ரீ கிருஷ்ணன் திருப் பீதாம்பரத்துடனே திருவவதரித்து அருளினான் என்பர் பூர்வர்

———–

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3–

அயனைப் படைத்த எழில் உந்தி –
திரு நாபீ ஆழ்வாரை இழுத்துக் கொள்ள விரும்பி -எம்பெருமானே ஜகத் காரணம் என்பதை காட்டிக் கொடுத்து
இந்த முகத்தாலே மேன்மையையும் அழகையும் காட்டி மனசை இழுத்துக் கொண்டது
முதலாம் திரு உருவம் மூன்று என்பர் -ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர் -முதல்வா –
நிகரிலகு கார் உருவா நின்னகத்தன்றே புகரிலகு தாமரையின் பூ -பெரிய திருவந்தாதி -72
அஜ நிஷ்ட ச கஸ்ய நாபே -ஆளவந்தார்-

அந்தி போல் நிறத்து ஆடை -முன்பு அரைச் சிவந்த ஆடை -கழற்ற முடியுமே -இதில் கழற்ற ஒண்ணாத –
சந்த்யா காலத்து சிகப்பு மேகத்தை விட்டு பிரியாதே
கீழே ஆபரண கோடியில் -சாத்தவும் கழற்றவுமாய் இருக்கும் -இது சஹஜம் என்கைக்கு உடலாக -அந்தி போல் நிறத்து ஆடையும் என்கிறார் –
சந்த்யா ராக ரஞ்சிதமான மேகம் போலே யாய்த்து திருவரையும் திருப் பீதாம்பரமும் இருக்கிற படி
திருமேனி மயில் கழுத்து சாயலாய் இறே இருப்பது -அத்தோடு சேர்ந்த திருப் பீதாம்பரம் சந்த்யா கால ரஞ்சிதமான
காள மேகம் போலே ஆகர்ஷகமாய் இறே இருப்பது -நாயனார்
பூர்வ சந்தையால் இருள் விலகும் சாயம் சந்த்யாவால் தாபம் தீரும்

அதன் மேல் அயனைப் படைத்த எழில் உந்தி –
அழகு வெள்ளத்தின் நடுவே நீர்ச் சுழல் போலே கொப்பூழ் -கொப்பூழில் எழு கமலப் பூ அழகர்
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பத்ம நாபனையே
அழகுக்குத் தோற்று அடியேன் -என்கிறார்
பிள்ளை அழகிய மணவாள அரையர் -திரு வேங்கட யாத்ரை தவிர்ந்தது இந்த பாசுரத்தாலே –
அங்கே திரு நாபீ கமல சேவை இல்லையே
நம் பெருமாள் சேவித்தால் நின்ற திருவேம்கட முடையான் சேவை கிட்டுமே

—————-

சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-4-

திரு வயிறும் உதர பந்தமும் –
உலகம் முழுவதையும் தாங்கிய பெருமை திரு வயிற்றுக்கே
நாபீ கமலத்துக்கு ஆதாரமும் திரு வயிறே -மூன்று மடிப்புகள் -முவ்வகை சேதனர்-அசேதனங்கள் –
கஸ்ய இதரே ஹரே விரிஞ்சி முக பிரபஞ்ச -ஆளவந்தார்
மூன்று மடிப்புக்களினால் பரத்வமும் தாமோதர -தாம்பின் தழும்பினால் சௌலப்யமும் -திரு வயிற்றுக்கு உண்டே
பட்டம் கட்டி உள்ளதே -தனது இஷ்டப்படி –திரு உள்ளத்துள் -ச்வைர சஞ்சாரம் பண்ணிற்று –
திரு வயிற்று உதர பந்தம் உலாவுகின்றது
ஒரு பெரிய இடத்தில் மத்த கஜம் உலாவுமா போலே

பனைகளில் உடை நழுவ தழும்பைக் கண்டு தாவினவாறே இடைச்சிகள் சிரிக்க -அத் தழும்பு தோன்றாமைக்காக
நம் பெருமாள் கணையம் மேல் சாத்து சாத்துகிறது -நஞ்சீயர்
நவநீத சோர விருத்தாந்தம் அனைவரையுமே ஈர்க்கும் -எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே
சம்சாரிகளுக்காக கோயிலிலே சாய்ந்து அருளி தன்னுடைய ஸ்வாமித்வத்தை உதறிப் படுத்தவனுடைய திரு வயிற்று உதர பந்தம்
திருக் குறுங்குடி நம்பி உடைய சிற்றிடையும் வடிவும் பாவியேன் முன் நிற்குமே
மாயப் பிரான் -என் வல்வினை மாய்த்து அற நேசத்தினால் நெஞ்சம் நாடு குடி கொண்டான் –
கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகுண்டும் ஆரா வயிற்றான்-சிருஷ்டி தொடக்கமாக மோஷ பர்யந்தமாக ரஷ்ய வர்க்கத்தின்
உடைய சர்வ வித ரஷணத்தையும் பண்ணி பின்னையும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் -இருக்குமவன்
அவன் கட்டுண்டதை அனுசந்திக்க நாம் சம்சார கட்டில் இருந்து விடு படுகிறோம் நம் போலே
நடுவில் உதர பந்தம் திரு மந்த்ரத்திலும் திரு மேனியிலும் மத்திமத்தில் வரும் அனுபவம்

—————

பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன்
வாரமாக்கி வைத்தான் வைத்த தன்றி யென்னுள் புகுந்தான்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான் திரு
ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே —–5-

திரு ஆர மார்பு —
பிரளயம் மட்டும் தானே திரு வயிறு உலகைக் கொண்டது -நானோ எப்பொழுதும் தாங்குகிறேன்
ஸ்ரீ வத்ஸ சம்ஸ்தானதரம் அனந்தேன சமாஸ்ரிதம்
பிரதானம் புத்திரப் யாஸ்தே கதா ரூபேண மாதவ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-69-
பிரகிருதி -ஸ்ரீ வத்சம் /புத்தி -மஹான்-கதையிலும் எம்பெருமான் திரு மேனியில் இடம் பெற்று இருக்கும்
ஆத்மானம் அஸ்ய ஜகதோ நிர்லேபம் அகுணாமலம்
பிபர்த்தி கௌஸ்துப மணி ஸ்வரூபம் பகவான் ஹரி —ஆத்ம தத்வம் -ஸ்ரீ கௌஸ்துபம் – புருடன் மணி வரமாக
பொன்னா மூல பிரகிருதி மறுவாக -ஸ்ரீ தேசிகன் –

என்றோ நான் முகன் பிறந்த நாபி கமலப் பூ -இப்பொழுது சத்ய லோகத்தில் அவன் இருக்க –
அலர் மேல் மங்கை அகலகில்லேன் இறையும் என்று நித்ய வாசம் இங்கே அன்றோ செய்கிறாள்
பந்திருக்கும் மெல் விரலாள் பாவை பணி மலராள் வந்திருக்கும் மார்வன் எவ்வுள் கிடந்தானே
திருவில்லாத் தேவரை தேறேன் மின் தேவு -பிராட்டிக்கு கோயில் கட்டணம் -வாசஸ் ஸ்தானம் -லலித க்ருஹம் உபாசே -ஸ்ரீ பட்டர்
அனைத்து திரு திவ்ய ஆபரணங்களையும் தாங்குவதும் திரு மார்பு தானே -அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி பூண்ட
அநந்த சயனன் தக்க மா மணி வண்ணன் வா ஸூ தேவன் தளர் நடை நடவானோ
ஐம்படைத்தாலி ஆமைத்தாலி புலி நகம் பதித்த பதக்கம் யசோதை பிராட்டி சமர்ப்பிதவை இன்றும் திருவரங்கனுக்கு சாத்துகிறார்கள் –
ஆழ்வாரையும் பிராட்டி கடாஷித்து -அடியேனை ஆட கொண்டதே –முன்பு அவயவங்களை மட்டும் ஈர்த்தன –

திருக்கண் -சிந்தனை -உள்ளத்து இன்னுயிர் -உள்ளம் இவற்றை ஈர்த்தன –
உபய விபூதி நாதன் தனி மாலை வனமாலை சாத்தியும் உள்ளதும் திரு மார்பு தானே
விசாலமான தனக்கு சிற்றிடை தான் நிகரோ -இறுமாப்பைக் காட்டி இசித்துக் கொள்ள –
ஸ்வரூப ஜ்ஞாநாதிகளை பிறப்பித்து அடிமையும் கொண்டதே
இதற்கு அவன் தபஸ் –இந்த பேற்றுக்கு ஆற்றம் கரையைப் பற்றி கிடந்தது தபஸ் பண்ணினவனும் அவனே –
ஹிரண்ய பிரகாரம் -ஸ்ரீ லஷ்மி எழுந்து அருளி இருக்கும் இந்த திரு மார்பு திருக் கோயிலுக்கு தானே
சிறையில் இருந்து அருளும் போதே –தேன மைத்ரீ பவது தே – ந கச்சின் ந அபராதயதி என்பவள் இங்கே
சேஷத்வ ஜ்ஞானம் உண்டு பண்ணி அவனிடம் வைக்க சொல்ல வேண்டாம் இறே
சீதாம் ஆஸ்ரித தேஜஸ்வீ தன்னை ஸ்ரீ ராம தூதன் சொன்னதை மாற்றி ஸ்ரீ ராம தாசன் என்று சொல்ல வைக்கும் பண்ணினாள்
கைங்கர்ய சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் -அடியேனை ஆட்கொண்டதே -முன்பும் அடியேன் என்றார்
அவை எல்லாம் அழகுக்கு தோற்ற அடிமை –குண க்ருத தாச்யத்வம் – இங்கு தான் ஸ்வரூப க்ருத தாச்யத்வம் –

பாவு நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திரு நன் மார்பும் மரகத உருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவர் இதழ்ப் பவள வாயும்
ஆயசீர் முடியும் தேசும் அடியயோர்க்கு அகலலாமே –

சர்வருக்கும் அனுபவிக்கலாம் படி சர்வ சாஹிஷ்ணுவாய்க் கொண்டு கோயில் ஆழ்வாருக்கு உள்ளே சௌலப்ய காஷ்டையோடு
விரோதியாத ஸ்வாமித்வ காஷ்டையை உடையரான பெருமாளுடைய சேஷித்வ பூர்த்திக்கு லஷணமான திருவையும் –
அழகு வெள்ளத்துக்கு ஆணை கோலினால் போல இருக்கிற ஹாரத்தையும் உடைத்தான திரு மார்பு அன்றோ
ஸ்வா பாவிக சேஷத்வ அனுபவ ரசிகனாய் -அதுக்கு மேலே குணைர் தாஸ்யம் உபாகதனுமான என்னை
ஸ்வரூப அனுரூபமான சேஷ வ்ருத்தியிலே மூட்டி அதுக்கு இலக்காய் நின்றது

——————-

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —-6-

முற்றும் உண்ட கண்டம் –
திரு ஆபரணங்களை தாங்கும் பெருமை திருக் கண்டத்துக்கு தானே -ஸ்ரீ லஷ்மி தங்கும் ஸ்ரீ தாமரை பதக்கத்தையும் தரிப்பதும் –
நீண்டு பருத்து -உருண்டு -திரண்டுள்ள -திருக் கண்டம் அன்றோ
இளம் கமுகு மரத்தின் பசுமை -சங்கு போன்று வளையங்கள் கொண்டு -ஆலிங்கனம் செய்யும் ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய
திருவளையல்கள் அழுந்திய தழும்பு உள்ள திருக் கண்டம்
சங்கு தங்கு முன்கையராய் இருக்கும் ஸ்ரீ பூமி நீளா தேவிமார் ஆலிங்கனம் –இந்திரியா கனக வலய முத்ராம் -கண்ட தேச -ஸ்ரீ தேசிகன்
எம்பெருமான் அருளிச் செய்யும் ஸ்ரீ ஸூக்திகளும் திருக் கண்டம் மூலம் தானே
வாக்கியம் அப்யாததே கிருஷ்ண ஸூதம்ஷ்ட்ரோ துந்துபிச்வன
ஜீமூத இவ கர்மாந்தே சர்வம் சம்ஸ்ராவயன் சபாம் -துந்துபி போலே என்கிறார் வியாசர்
தூது செல்ல மடக்கு ஓலை கட்டுவதும் திருக் கண்டத்திலே தானே
பிரளயத்தில் உலகு எல்லாம் வயிற்றுக்குள் சென்றதும் திருக் கண்டம் மூலமே தானே

செஞ்சுடரும் நிலனும் பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருங்கிப் புக பொன் மிடறு அத்தனை போது அங்காந்தவன் காண்மின்
அண்டர் அண்ட பகிர் அண்டம் —முற்றும் உண்ட -ரஷித்த-
நெற்றி மெல் கண்ணானும் –வெற்றிப் போர் கடல் அரையன் விழுங்காமல் தான்
விழுங்கிக் கொண்ட கொற்றப் போர் ஆழியான் குணம் -பெரிய திருமொழி -11-6-3-
எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் அல்லாதார் தாம் உளரே –
யஸ்ய ப்ரஹ்ம ச ஷத்ரம் ச உபே பவத ஒத்தன -கட உபநிஷத் -ஜகத் ரஷணமே அவனுக்கு தாரகம்

அடியேனை உய்யக் கொண்டது -ஸ்வரூப ஞானத்தை பிறப்பித்து சம்சார ஆர்ணவத்தில் நின்றும் எடுத்து
ஏற்றி -சந்தம் ஏதம் -பண்ணிற்று –
குருஷ்வ மாம் அனுசரம் -என்று இருப்பாரை கூவிக் கொள்ளும் போது -ஸ்நிக்த கம்பீர மதுர நாதமாய்
கூவிப் பணி கொள்ள -ஆஜ்ஞ்ஞாபம்யிஷ்யதி

——————

கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல்
மெய்யினார் துளப விரையார் கமழ் நீண் முடி யெம்
ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ——-7–

திருப் பவளச் செவ்வாய் -என்னைச் சிந்தை கவர்ந்ததுவே
நுழை வாயிலே நான் தானே -திருக் கண்டத்துக்கும் திரு வயிற்றுக்கும் நீர் அருளிச் செய்த ரஷகத்வத்துக்கு
உலகம் உண்ட பெருவாயா -நம்மாழ்வார்
அச்சம் கேட்டு ஆஸ்ரயிக்க- வார்த்தை பேச்சு மெய்ம்மைப் பெரு வார்த்தை -எல்லாம் என் மூலம் தானே
கடல் கரை வார்த்தை -அபயம் சர்வ பூதேப்யோ –ததாம் ஏதத் வ்ரதம் மம
தேர் தட்டு வார்த்தை -சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி
உன் சோதி வாய் திறந்து தொண்டரோருக்கு அருளி -பூ அலருமா போலே யாயிற்று வார்த்தை அருளிச் செய்வது
திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ -ஸ்வாபாவிக சிகப்பு செவ்வாய்க்கு தானே –
அத்தையும் கருப்பூரம் நாறுமோ -இத்யாதி மூலம் ஆசார்யன் மூலம் அறிய விரும்பி ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வாரைக் கேட்கிறாள்
மாதவன் தன் வாயமுதம் பொதுவாக உண்பதனை புக்கு நீ உண்டக்கால் சிதையாரோ உன்னோடு செல்வப் பெரும் சங்கே
தெப்பத்தைக் கொண்டு கடக்க உள்ளவன் தெப்பம் இழந்தது போலே சிந்தையை கவர்ந்ததே –
தூ முறுவல் தொண்டை வாய் பிரானுடைய கோலத் திரள் பவளக் கொழும் துண்டம் கொல்
வலியதோர் கனி கொல் -இடைப்பென்கள் புல்லாங்குழல் ஸ்ரீ சங்கத் ஆழ்வான் என்று சர்வரும் அனுபவிக்கும் -பெருமை உண்டே –

———————

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —-8

பேதைமை செய்த பெரியவாய கண்கள் –
மது சூதனனுடைய ஜாயமான கடாஷம் -கடைக்கண்ணால் நோக்கி ஆள்வீர் செய்ய வாயில் சிந்தை பறி கொடுத்தீர் –
என்னிடம் சிகப்பும் கருப்பும் வெளுப்பும் உண்டே
தூது செய் கண்கள்
வசஸா சாந்த்வயிதவை நம் லோச நாப்யாம் பிபந்நிவ–விழுங்குபவன் போலே கடாஷித்து அருளி –
அனைத்துலகம் உடைய அரவிந்த லோசனன் -சர்வேஸ்வரத்வ ஸூசகம்
யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-புண்டரீக விசாலாஷா -ராம கமல பத்ராஜ -மத்ஸ்ய கமல லோசன
மஹா வராஹா ஸ்புட பத்ம லோசன -ராமோ ராஜீவலோசன -கிருஷ்ண கமல பத்ராஷ –
கோவிந்த புண்டரீகாஷ மாம் ரஷமாம் -பாஹிமாம் புண்டரீகாஷ–
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை
எம்பெருமான் நித்ய சூரிகளை கண் அழகாலே தோற்ப்பித்தான் –
இவரை கண்ணியாலே -கண் ஆகிற வலையாலே -அகப்படுத்தினான் –
வேறு அவயவத்துக்கு செல்லாத படி திருக் கண்களுக்கே அற்று தீர்ந்து -நிலைத்து நிற்கிறார்

செங்கனி வாயின் திறத்ததாயும் செஞ்சுடர் நீண் முடித் தாழ்ந்ததாயும் -சங்கோடு சக்கரம் கண்டு உகந்தும் –
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா அறாத தென் திருப்பேரியில் வீற்று இருந்த நங்கள் பிரானுக்கு
என் நெஞ்சம் தோழி நாணும் நிறைவும் இழந்ததுவே —
திருப்பவளத்திலே அபஹ்ருத ஹ்ருதயர் -சிந்தை பறி கொடுத்தவர் -அகவாயில் வாத்சல்யத்துக்கு பிரகாசமாய்
க புண்டரீக நயன -ஆளவந்தார்
திருமுகம் சந்திர மண்டலம் -அங்கு இரண்டு தாமரை மலர் பூத்தால் போலே திருக்கண்கள் –
திருமுகமே தாமரை -அதில் இரண்டு தாமரை மலர்கள் பூத்தால் போலே திருக் கண்கள்
போஜ ராஜன் -காளி தாசர் -குசூமே குசம உத்பத்தி ச்ரூயதே ந து த்ருச்யதே –
பாலே தவ முகாம் போஜே நேத்ரம் இந்தீவர த்வயம் –
விஷ்ணோ தவ முகாம் போஜ நேத்ரம் அம்போருக த்வயம்

கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி –
வெண் தாமரை போல் வெளுத்து இருக்கும் திருக் கண்களில் இரண்டு கரு விழிகள்
புடை பரந்து -பக்கங்கள் எங்கும் பரவி
மிளிர்ந்து -ஆசை அலை வீசும்படி ஆழ்வாரை அடையும் த்வரை விஞ்சி
செவ்வரிவோடி -சிவந்த கோடுகள் -ஸ்ரீ யபதித்வ ஸூ சகம் -வாத்சல்யம் விஞ்சி
நீண்ட -ஆழ்வார் அளவும் நீண்டு
திருச் செவி வரை நீண்டு -இவை அணை போலே -ஸ்ரீ வைகுண்ட நாதன் போலே இரண்டு திருக் கண்கள் போதாதே திருவரங்கனுக்கு
மீனுக்கு தண்ணீர் வார்க்கிறான் அவன்
சம்சாரம் கிழங்கு எழுத்தால் அல்லது எழுந்திரேன் என்று கண் வளரும் இவனுக்கு
திருமேனி முழுவது வியாபிக்கத் தொடங்கிற்று திருக் கண்கள் -முதலில் திருக் காதுகளை ஆக்கிரமித்தன
நேராக பார்த்தால் கண் எச்சில் என்று அப் பெரிய வாய கண்கள் என்கிறார் -அப்பாஞ்ச ஜன்யமும் பல்லாண்டே போலே
பேதைமை செய்தன -முன் சிந்தை கவரப் பட்டார் -ஞானம் பிறக்கும் வழியை இழந்தார் முன்பு இங்கு ஞானத்தையே இழந்தார்
அழகிலே ஈடுபட்டு அலமரும்படி செய்தனவே
மாதரார் கயற்கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை -இதற்கே அற்று தீரும்படி
அவன் கண்களாலே அமலங்களாக விளிக்கும் -1-9-9-எனபது என்னளவில் பொய்யானதே -இருந்த ஞானமும் இழந்தேன்
அனந்யர் பக்கலிலே அனுராகத்துக்கு கீற்று எடுக்கலாம் படி சிவந்த வரிகள் -ஈச்வரோஹம் என்பாரைத் தோற்ப்பித்து
நமஸ்தே என்று திருவடிகளில் விழப்பண்ணும்
ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றம் கொலோ அறியேன் ஆழி யம் கண்ணபிரான் திருக் கண் கொலோ –

——————-

ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே —–9-

நெஞ்சினை நிறை கொண்ட நீல மேனி –
பக்தர்கள் அவனைப் பெறாமையாலே முடிவார்கள் -த்வேஷிகள் பொறாமையாலே முடிவார்கள் –
கஞ்சைக் காய்ந்த கரு வில்லி கடைக்கண் என்னும் சிறைக் கோலால் –நெஞ்சு ஊடுற ஏவுண்டு நிலையம் தளர்ந்து நைவேனை
சிறகுகள் கொண்ட அம்பு போலே
ராவணன் பட்ட பாடு ஸ்ரீ ஆண்டாளும் படுகிறாள்
கலம்பகன் மாலையை சூடுவது போலே திரு மேனி முழுவதையும் அனுபவிக்கிறார் –
அனைத்து அவயவங்களுக்கும் ஆஸ்ரயம் திரு மேனி -ஸ்வா பாவிகமான லாவண்யம் -இத்துடன் திவ்ய ஆபரண சேர்த்தி அழகு –
சதுரங்க பலம் கொண்டு ஆழ்வாரை இழுத்துக் கொண்ட திரு மேனி -அவயவ ஆபரண சமுதாய சோபை பலம் கொண்டு

கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும்
முடிவில்லதோர் எழில் நீல மேனி –ஆபரணச்ய ஆபரணம் -ஆபரணங்களுக்கு அழகூட்டும் பெருமாள்
ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே
பச்சை ரத்ன மலை -பச்சை மா மலை போல் மேனி -சமுத்ரத்தில் நிற்க -அதனது -ஒளிக் கற்றைகள்
அலைகள் மூலம் நம்மை நனைக்கட்டும் -ஸ்ரீ பட்டர்
ஆதிசேஷன் மேலே கண் வளரும் பெரிய பெருமாள் -பொன் மலையுடன் சேர்ந்து விளங்கும் கரும் கடல்
நீல மேனி -தேஜஸ் நீக்கி செவிப்பவர் கண் குளிரும்படி மை இட்டு எழுதினால் போலே
தனக்கு உள்ளவற்றைக் காட்டி அருளி எனக்கு உள்ளவற்றை அபஹரித்தான் -நெஞ்கை தன் பக்கல் இழுத்துக் கொண்டான்
சொத்தை பறி கொடுத்து கதறுபவர் போலே ஐயோ என்கிறார் -சமுதாய லாவண்ய சோபை நெஞ்சின் காம்பீர்யத்தை அழித்தது
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு -என்று எப்போதும் மங்களா சாசனம் பண்ணச் செய்ததே

——————

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —10-

அணி யரங்கனைக் கண்ட கண்கள் –
சிட்டனே செழு நீர் திருவரங்கத்தாய் -இந்த திவ்ய தேச சம்பந்தத்தாலே பாவன பூதர் ஆக்கும் –
நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான் –
நாம் இங்கே புகுருகை மாலின்யாவஹம்-என்று பார்த்து அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் -என்கிறபடி
பிறருடைய நைச்யத்தாலே அங்கும் போகவும் மாட்டாதே
தம்முடைய நைச்யத்தாலே இங்கு திருவரங்கத்தில் புக மாட்டாதே ஆந்த ராளிகராய் நடுவில் இருந்தார்
ஆதி பிரான் விண்ணவர் கோன் நீதி வானவன் -பரத்வம் அனுபவித்தார்

உலகம் அளந்து அண்டமுற நிவந்த நீண் முடியன் –வெங்கணை காகுத்தன் -விபவ அனுபவம்
விரையார் பொழில் வேங்கடவன் -அர்ச்சா அனுபவம்
மாடுகளின் குளப்படிகள் கடலிலே ஏக தேசத்தில் அடங்கி இருப்பது போலே பெரிய பெருமாள் இடத்தில்
எல்லா அவதாரங்களும் அடங்கி இருப்பதால்
அணி அரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
இதற்கு அடை மொழிகள் –
கொண்டல் வண்ணன் –ஔதார்யம் இல்லை என்று போகவோ -வடிவில் பசையில்லை என்று போகவோ –
இன்னார் இனையார் என்று இல்லாமல் அனைவருக்கும் வாரி வழங்குபவன் அன்றோ
நீருண்ட கருத்த மேகம் போலே குளிர்ந்து தாப த்ரயம் போக்கி ஆனந்தம் தருபவன் அன்றோ
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் -சௌசீல்யம் -சௌலப்யம் -போக்யதை இல்லை என்று போகவோ
தூரத்தில் நின்று வர்ஷித்துப் போகாமல் -இடையர் இடைசிகளுடன் ஒரு நீராக கலந்து
வடிவு அழகை சர்வ ஸ்வதானம் பண்ணினவன் அன்றோ
என்னுள்ளம் கவர்ந்தான் -நெஞ்சுக்கு பிடிக்க வில்லை என்று போகவோ -அனுபவத்தில் குறை என்று போகவோ
வெண்ணெய் மட்டும் உண்டது போலே சரீரம் இருக்க மனசை மட்டும் கவர்ந்தான்
அண்டர் கோன் -மேன்மை இல்லை என்று போகவோ
அணி யரங்கன் -அருகிலே உள்ளான்
என் அமுதினை -பரம போக்கியம்
கண்ட கண்கள் -பூர்ண அனுபவம் பண்ணி -அரை வயிறாகில் புறம்பு போகலாம்
ஸ்ரீ அரங்கன் திவ்ய அனுபவத்திலேயே தம்மையே மறந்தார் -மற்று ஒன்றினை -மற்ற நிலைகளில் உள்ள எம்பெருமானையும் காணாவே
சமுதாய சோபையைக் கண்ட பின்பு மீண்டும் அவயவ அனுபவங்களும் வேண்டேன்
இந்த பெரிய பெருமாள் தம்மையே கேசாதி பாதாந்தமாக அனுபவிக்க வேணும் என்று பார்த்தாலும் சக்தன் அல்லேன்
அம்ருத பானம் பண்ணினார் பாலையும் சோற்றையும் தீற்றப் போமோ
தம்மை மறந்தாலும் -அடியேன் என்கிறார் -முக்தனுடைய சாம கானம் படி அநாதி காலம் பாஹ்ய அனுபவம் பண்ணின
கிலேசம் தீர்ந்து க்ருத்க்ருத்தராகிறார்

கொண்டல் வண்ணன் -மேகம் போலே வெறும் நீரை பொழிபவர் அல்லவே அருள் மாரி அன்றோ –
ஒரு காள மேகம் கடல் நீர் அத்தனையும் பருகி வயிறு பருத்து
காவேரி நடுவில் பள்ளி கொண்டால் போலே -சர்வருக்கும் ஸ்ரமஹரமான திரு மேனியைக் கொண்டு
ஜங்கம ஸ்தாவரங்கள் உஜ்ஜீவிக்கும் படி ஜல ஸ்தல விபாகம் அற காருண்ய ரசத்தை வர்ஷிக்கும் காள மேக ஸ்வ பாவன்
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்
சர்வ லோக ரஷகன் ஆஸ்ரிதர் உகந்த -ஆஸ்ரிதர் ஸ்பர்சம் பெற்ற வஸ்துவில் ஆசை கொண்டு -இடையனாகி
மத்யே விரிஞ்சி சிவயோ விஹித அவதார –
சூட்டு நன் மாலைகள் –ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து –
கர்ம வச்யரைப் போலே அழுக்கு கழல குளிக்கை அன்றிக்கே அங்கு உள்ளாருக்கு உஜ்ஜீவனமாக –
நாடு வாழ குளிக்கும் குளிப்பாயிற்று –
நம் பெருமாள் திரு மஞ்சனம் செய்து அருளுமா போலே
இப்படி நித்ய சூரிகள் அனுவர்த்தியா நிற்க -யசோதை பிராட்டி திரு மாளிகையிலே வெண்ணெய் திரண்டது என்று கேட்டவாறே
திரு உள்ளம் குடி போக –ப்ராப்த யௌவனர் ஆனால் பித்ராதி சந்நிதிகள் பொருந்தாது போலே –
கண்ணிக் குறும் கையிற்றால் கட்டுண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியான் இமையோர்க்கும்
என் அமுதினை -அநாயாசனமாக பேரின்பத்து இறுதியை பெற்றேனே
என் கண் -என் சிந்தனை -அடியேன் உள்ளத்து இன்னுயிரை -என் உள்ளத்துள் -என்று மமகாரம் தோற்ற அருளிச் செய்தவர்
இதில் அமுதினைக் கண்ட கண்கள் –
அந்த மமகாரம் தோஷம் அன்று -ஸ்வ தந்த்ரன் ஸ்வாமி ஒன்றைக் கொடுத்தால் –
அதை நாமும் நம்முடையது என்று அபி மாநித்துக் கொள்ள வேண்டுமே

————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய சிங்கர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

அமலனாதி பிரான் -திவ்யார்த்த தீபிகை சாரம் –

September 22, 2014

ஸ்ரீ வத்சம் அம்சம் கார்த்திகை ரோஹிணி
தென் திருக்கேவேரி தென் கரையிலே திரு முகத் துறையிலே
வீணையும்-யாழும்- கையுமாக
நம்பெருமாளை திசை நோக்கி தொழுது
திவ்ய கீதங்களை
கண்டமும் கருவியும் ஒக்க கேட்பவர் செவியும் மனமும் குளிர
எம்பெருமான் திரு உள்ளம் உகக்க
கின்னர கந்தர்வாதியர் வியப்புற பாடிக் கொண்டே இருக்க
பாண குல திலகர்
சில முரட்டு குணர் கல் வீச
இந்த்ரன் ஏக காலத்தில் பொழிவித்த சிலா வர்ஷத்துக்கு சற்றும் பின்னிடாத கோவர்த்தன மலை
போலே சிறிதும் சலியாது இருந்தார்-

அது கண்டு அமரர் கோன் போலே அஞ்சி அகன்றனர்
பக்தர்கள் அந்தரங்கத்தில் அமர்த்து இருக்கும் அரங்கன் திரு உள்ளம் கலங்கி திரு நெற்றியும் இரத்தப் பெருக்குற்றது
பகவத் பக்திக்கு ஜாதி முக்கியம் அன்று பக்தியே அமையும்
சகல சாஸ்திர சாரப் பொருளை காட்டி அருள
திரு லோக சாரங்கர் திரு முதுகில் எழுந்து அருளப் பண்ண நியமிக்க
ஆதி வாஹகர் எழுந்து அருளிவித்துக் கொண்டு திரு மா மணி மண்டபத்துக்கு போவது போலே
இருள் அகற்றும் எரி கதிரோன் மண்டலத்துள் ஏற்றி
வைத்தேணி வாங்கி அருள் கொடுத்திட்டு
அடியவரை ஆள் கொள்வான் அரங்கன்
திவ்ய மங்கள விக்ரஹத்தை பாதாதி கேசம் நேத்திர அந்தமாக சேவித்து
அதிலே ஆழ்ந்து
அதன் அழகை அனுபவித்து
அந்த அனுபவ அதிசயத்தை பின்புள்ளார்க்கும் விசதமாக்கும் பொருட்டு
அமலனாதிபிரான் திவ்ய பிரபந்தத்தை திருவாய் மலர்ந்து அருளி
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே
என்கிற தனது துணிவை வெளியீட்டு
உலகோரை வாழ்வித்து
உகப்போடு நிற்கையில்
பெரிய பெருமாள் அத் திருமேனியுடன் அவரை அங்கீ கரித்து அருள
அனைவரும் காண அரங்கன் திருவடிகளிலே அந்தர்பவித்து
காய்ந்த இரும்பு உண்ட நீரானார்

கோபாலன் குழல் இசையால் கோக்களை மகிழ்வித்தது போலே
அக் கோவிந்தனை யாழ் இசையால் மகிழ்வித்த இவ் வாழ்வார்
இவ்வுலகில் வாழ்ந்தது ஐம்பது வருஷ காலம் என்பர்-

————————————————————

காண்பனவும் உரைப்பனவும் மற்று ஓன்று இன்றி
கண்ணனையே கண்டுரைத்த கடிய காதல்
பாண் பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும்
பழ மறையின் பொருள் என்று பரவுமின்கள்

கார்த்திகையில் ரோகிணி நாள் காண்மின் என்று காசினியீர்
வாய்த்த புகழ் பாணர் வந்துதிப்பால் -ஆத்தியர்கள்
அன்புடனே தான் அமலனாதி பிரான் கற்றதன் பின்
நன்குடனே கொண்டாடும் நாள்

——————————————-

இந்த திவ்ய பிரபந்தம் திருப் பெயர் -அமலனாதி பிரான் -என்றது
முதல் குறிப்பு இலக்கண முறை படி
திருப்பல்லாண்டு -கண்ணி நுண் சிறுத் தாம்பு -போலே
முனி வாகன போஹம் -தேசிகன் அருளிச் செய்தது இந்த ஒரே திவ்வ்ய பிரபந்தத்துக்கு மட்டும் வியாக்யானம்
அருளிய காரணம் சத் சம்ப்ரதாயம் வல்ல பெரியோர் கூறுமாறு
நிஹீன ஜாதி கழியப் பெற்று பாகவத உத்தமர்கள் -அவர்கள் பண்டைக் குலம் நீங்கி -தொண்டக்குலம் அடைவர் –

தமது ரகஸ்ய த்ரய சாரத்தில் 25 – பிரபாவ வ்யவஸ்த அதிகாரத்தில்
அதோ ஜாதேர் நிஷ்க்ருஷ்டாயாஸ் சர்வச்யாவா விசாசத சாஜாத்யம்
விஷ்ணு பக்தா நா மிதி மந்த மிதம் வச வைஷ்ணவத்வே நமான்யத்வம்
சமாநம் முனி சம்மதம் ஜாத்யாதித்வம் சதச் சாம்யம் முக்தி காலே பவிஷ்யதிர் –
ரஜச்வலையாய் இருக்கும் காலத்தில் தாய் கூட அணுக தகாதவள் போலே
சரீரத்துடன் இருக்கும் அளவும் உபசர்யைகளுக்கு உரியர் அல்லர்
முக்தி பெற்ற பின்பு தான் விசேஷமாக கௌரவிக்கத் தக்கவர் ஆவார்
இத்தால் மதுரகவி ஆழ்வார் நம் ஆழ்வார் திருவடிகளில் பரிசர்யைகள் செய்து கொண்டிருந்த வாற்றிலும்
லோக சாரங்க முனிகள் திருப் பாண் ஆழ்வாரை தோளில் தூக்கி சந்நிதிக்கு எழுந்து அருளின வாற்றிலும்
சம்சய விபர்யய உணர்ச்சி நெஞ்சிலே குடி கொண்டு இருக்க

எம்பெருமான் இவரை சதாச்சார்யர் திருவடிகளில் ஆஸ்ரயிக்கச் செய்து அருள திரு உள்ளம் கொள்ள
எம்பெருமான் தேசிகன் கனவிலே தோன்றி
பிள்ளாய் உமக்கு இந்த விச்வாமித்ர சிருஷ்டி ஆகாது
நம் பூர்வர்கள் பிர பாவங்களைக் கேட்டு அறியீரோ
பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூக்திகளில் அசூயை ஒழித்து
புது வழிகளை விட்டு விடும் என்று நியமிக்க
தேசிகனும் கண் விளித்து
தன்யோச்மி க்ருதார்த்தோச்மி அனுக்ருஹீதோச்மி-என்று
பலவாறாக ஆனந்தித்திக் கொண்டு
கீழ் நின்ற நிலைக்கு நொந்து
கண்ணும் கண்ணநீருமாக
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளில் படுகாடு கிடைக்கையில்
அவரும் திருக் கைகளால் அனைத்து
உமக்கு இப்படி அனுதாபம் பிறந்த போதே சமஸ்த அபராதங்களும் கழிந்தன
இனி அஞ்சாதே கொள்ளும் என்று ஆஸ்வசிப்பிக்க
திரு இலச்சினையும் விசேஷார்த்தங்களையும் பெற்று
கண்ணை மூடி திருவாராத பெருமாள் ஒருவரை எழுந்து அருள பண்ண நியமிக்க
தூப்புல் பிள்ளையும் அப்படியே செய்ய
கண்ணை திறந்து பார்த்த அளவில்
அவர் எழுந்து அருளப் பண்ணிய பெருமாள் திருப் பாண் ஆழ்வாராக
சேவை சாதிக்க
உம்மை திருத்திப் பணி கொள்ள எம்பெருமான் இவ்வாறு அருள் புரிந்தான்
இவரை ஆராதனை செய்து அமலனாதி பிரானுக்கு வியாக்யானம் இடும்
ஜாதி நிரூபணம் அடியாக வந்த அபசாரம் எல்லாம் தீயினில் தூசாகும் என்று அருளிச் செய்ய
முனி வாஹ போகம் திருவவதரித்தது

பிள்ளை லோகாச்சார்யர் என்பாரும் உண்டு
தேசிகன் அருளிய லோகார்ய பஞ்சசாத் ஸ்தோத்ரம்- சேவிக்கத் தக்கது –

வடகலையார்
அதிகார சங்க்ரஹம் -முதல் பாட்டில் நம் பாண் நாதன் -என்கிற இடத்துக்கு உரையிட்டவர்
திருப் பாண் ஆழ்வார் ஆகிற நம்முடைய நாதன்
முனி வாஹனன்-என்று திருநாமம் ஆம்படியாகவும்
ஸ்ரீ வேதாந்தசார்யர் என்று திரு நாமம் சாத்தி அருளியும்
தங்கள் இருவர் இடத்தில் பெரிய பெருமாள் வ்யாமோஹம் செய்து அருளின
இச் சம்பந்தத்தை இட்டு விசேஷித்து நம்முடைய நாதன் என்று அனுசந்திக்கிறார்
இது காரணமாக முனி வாகன போகம் அருளிச் செய்து இருக்கிறார் என்பர்

பெரியோம் அல்லோம் நாம் நன்றும் தீதும் நமக்கு உரைப்பார் உளர் என்று நாடுவோமே -என்று
அருளிச் செய்து இருப்பதால் உண்மை விஷயம் உள்ளத்தே புகும்-

—————————————————————-

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ————————-1-

பதவுரை

அமலன்–பரிசுத்தனாய்
ஆதி–ஜகத்காரபூதனாய்
பிரான்–உபகாரகனாய்
என்னை–(இழி குலத்தவனான) என்னை
அடியார்க்கு–(தனது) அடியவர்களான பாகவதர்களுக்கு
ஆள்படுத்த–ஆட்படுத்துகையாலே வந்த
விமலன்–சிறந்த புகரை யுடையனாய்
விண்ணவர் கோன்–நித்யஸூரிகட்குத் தலைவனாயிருந்து வைத்து
(ஆச்ரிதர்கட்காக)
விரை ஆர் பொழில்–பரிமளம் மிக்க சோலைகளையுடைய
வேங்கடவன்–திருவேங்கடமலையில் வந்து தங்குமவனாய்
நிமலன்–ஆச்ரயிப்பார்க்கு அரியனாயிருக்கையாகிற குற்றமற்று, ஆச்ரித பாரதக்திரியத்தை வெளியிட்டு நிற்குமவனாய்
நின்மலன்–அடியாருடைய குற்றத்தைக் காண்கையாகிற தோஷமில்லாத வத்ஸலனாய்
நீதி வானவன்–சேஷசேஷி முறைவழுவாதபடி நியாயமே செல்லும் நிலமான பரமபதத்துக்கு நிர்வாஹகனாய்
நீள் மதிள்–உயர்ந்த மதிள்களையுடைய
அரங்கத்து–கோயிலிலே (கண் வளர்ந்தருளுகிற)
அம்மான்–ஸ்வாமியான அழகிய மணவாளனுடைய
திருக் கமல பாதம்–திருவடித் தாமரைகளானவை
வந்து–தானே வந்து
என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே–என் கண்ணுக்குள்ளே புகுந்தன போலிரா நின்றனவே

பெரிய பெருமாள் திருவடிகளிலழகு மேல்விழுந்து தம்மைப் பரவசமாக்கியவாறு கூறுகின்றார்,
இதில். அமலன், விமலன், நிமலன், நின்மலன் என்ற நான்கு சப்தங்களுக்கும் பொருள் ஒன்றே :
தாத்பர்ய பேதம் மாத்திரம் கொள்ள வேண்டும்.
பரம நிஹீநரான தாம் ஸந்நிதிக்குள்ளே புகுவதனால் பெருமாளுக்குப் பெருத்த அவத்யம் உண்டாயிடும என்று அஞ்சியிருந்தவர்.
அந்த நங்கை தவிர்ந்தமை தோற்ற அமலன் என்கிறார்.
ஹேய ப்ரதிபடன்-ஹேய வஸ்து ஸம்பந்தத்தால் தனக்கொரு கெடுதி விளையப் பெறாதவன் என்கை.

தமது சிறுமையை நோக்காதே தம்மைப் பாகவதர்க்கு ஆட்படுத்தி ஒரு சீரிய பொருளாக ஆக்குகையாலே
எம்பெருமானது திருமேனியிற்பிறந்த ஒரு விலக்ஷண தேஜஸ்ஸை அநுபவிப்பார் விமலன் என்கிறார்.
தன்னுடைய ஸ்வம்மான ஒரு சரக்கு மிக்க சிறப்புப் பெற்றால் ஸ்வாமியின் மேனி ஒளிபெற்றுத் தோன்றுமன்றோ.

பிரமன் சிவன் முதலானோரும் அஞ்சி அணுக வேண்டும்படியான ஐஸ்வரியம் மிகுந்திருக்கச் செய்தேயும்
குறும்பறுத்த நம்பிக்குக் கூசாதே நித்யஸம் ச்லேஷம் பண்ணலாம்படி தனது ஈச்வரச்சுணையாகிற
ஆச்ரயணவிரோதி தோஷத்தை மறைத்து
அர்ச்சகபராதீ நாகிலாத்மஸ்திதி:” என்றபடி
அடியார்க்கு எளியனாயிருக்குந் தன்மையை வெளியிட்டு நிற்குமவன் என்பார். நிமலன் என்கிறார்.

நின்மலன் என்றது-அடியார்களுடைய குற்றங்களைக் காண்கையாகிற குற்றமில்லாதவன் என்றபடி.
அடியார் குற்றங்களைக் கண்டாலும் அவற்றை போக்யமாகக் கொள்ளுமவனிறே எம்பெருமான்.

முதலடியில், ஆதி என்றவிடத்துக்கு வியாக்கியான மருளிச்செய்யா நின்ற தேசிகன்,
“இக்காரணத்வமும் மோக்ஷ ப்ரதத்வமும் சத்ர சாமரங்கள் போலே ஸர்வ லோக ஸரண்யனுக்கு விசேஷ சிஹ்நங்கள்”
என்று அருளிச் செய்திருப்பதைக் கண்டு வைத்தும், ஜகத் காரணத்வத்திலும் மோக்ஷ ப்ரதத்வத்திலும்
பிராட்டிக்கும் ஸாக்ஷாத் அந்வயமுண்டென்று சிலர் சொல்லுவர்கள்!.

லோகஸாரங்கமா முனிவரின் திருத்தோளின் மேல் ஏறின திருப்பாணாழ்வார் ஸேஷித்வத்தைக் கொண்டாடினாரே
யொழிய ஸேஷத்வத்தைப் பாராட்ட வில்லையே;
அப்படியிருக்க “அடியார்க்கென்னை ஆட்படுத்தவிமலன்” என்றது எங்ஙனே? என்று ஸங்கை பிறக்கக்கூடும்;
ஸேஷத்வத்துக்குத் தகுதியாகத் திருவடியிலே யிருக்க வேண்டிய திருத்துழாய் திருமுடி மேலேறியிருந்தால்
அவ்வளவாலே அதன் ஸேஷத்வம் குறைபடாதன்றோ; அதுபோலக் கொள்க

பிள்ளைதிருநறையூரரையரைச் சிலர்
“பெரிய பெருமாளை அனுபவிக்க இழிந்த இவ்வாழ்வார் திருவேங்கமுடையான் பக்கல் போவானேன்?” என்று கேட்க;
“ஆற்றிலே அழுந்துகிறவன் ஒரு காலைத் தரையிலே ஊன்றினால் பிழைக்கலாமோ என்று கால் தாழ்க்குமா போலே,
இவரும் பெரிய பெருமாளழகிலே அழுந்துகிறவராகையாலே திருமலையிலே கால் தாழ்ந்தார்” என்றாராம்.
“ஒருவனைக் கவிபாடும்போது அவனுடைய வரலாறு சொல்லிக் கவிபாடவேணும்;
பரமபதத்தில் நின்றும் ஸ்ரீமதுரையிலே தங்கித் திருவாய்ப்பாடிக்கு வந்தாப்போலே
ஸ்ரீவைகுண்டத்தில் நின்றும் திருமலையில் தங்கியாய்த்துக் கோயிலுக்கு வந்தது;
அவ்வரலாற்றைப் பாடுகிறபடி” என்றும் ஒருகால் அருளிச் செய்தாராம்.

அமலன் –
ஹேய பிரதி படன் -நீசனான தம்மை வந்து திருவடி அணுகிற்றே
தம்மை அடியாரவர்க்கு ஆட்படுத்தும் படி சீரிய பொருளாக ஆக்கிமையால்
வந்த புகர் தோற்ற திரு மேனியில் பிறந்த விலஷண தேஜஸ் அனுபவித்து –

விமலன்
ஆஸ்ரயணீய விரோத தோஷத்தை மறைத்து அடியவர்க்கு எளியனாய் சம்ச்லேஷித்த படி

நிமலன்
குற்றங்களை போக்யமாக கொள்கையாலே நின்மலன்

ஆதி –
காரணத்வமும் மோஷ பிரதத்வமும் சத்ர சாமரங்கள் போலே
சர்வ லோக சரண்யனுக்கு விசேஷ சிஹ்னங்கள் -தேசிகன்

திருவடி திரு முடி மேல் ஏறி இருந்தாலும் சேஷத்வம் குறைபடாது அன்றோ

பிள்ளை திரு நறையூர் அரையரை சிலர்
பெரிய பெருமாளை அனுபவிக்க இழிந்த இவ்வாழ்வார்
திருவேங்கட முடையான் பக்கல் போவான் என் என்ன
ஆற்றில் அழுந்தினவன் ஒரு காலை தரையிலே ஊன்றினால்
பிழைக்கலாமோ என்று கால் தாழ்க்குமா போலே
இவரும் பெரிய பெருமாள் அழகில் அழுந்துபவர் ஆகையாலே
திருமலையிலே கால் தாழ்ந்தார் -என்றாராம்-

ஒருவனைக் கவி பாடும் போது அவனது வரலாறு சொல்லிக் கவி பாட வேணும்
பரம பதத்தில் நின்றும்
ஸ்ரீ மதுரையில் தங்கி
திருவாய்ப்பாடிக்கு வந்தால் போலே
ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும்
திருமலையிலே தங்கி யாய்த்து
கோயிலுக்கு வந்தது
அவ்வரலாற்றைப் பாடுகிற படி -என்றும் ஒரு கால் அருளிச் செய்தாராம்-

———————————————————–

உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற
நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே —-2-

பதவுரை

உவந்த உள்ளத்தன் ஆய்–மகிழ்ச்சியோடு கூடிய மனத்தை யுடையவனாய்க் கொண்டு
உலகம் அளந்து–மூவுலகங்களையும் அளந்து
அண்டம் உற–அண்ட கடாஹத்தளவுஞ் சென்று முட்டும்படி
நிவந்த–உயர்த்தியை அடைந்த
நீள் முடியன்–பெரிய திருமுடியை யுடையவனாய்
அன்று–முற்காலத்தில்
நேர்ந்த–எதிர்த்து வந்த
நிசரசரரை–ராக்ஷஸர்களை
கவர்ந்த–உயிர் வாங்கின
வெம் கணை–கொடிய அம்புகளை யுடைய
காகுத்தன்–இராம பிரானாய்,
கடி ஆர்–மணம் மிக்க
பொழில்–சோலைகளை யுடைய
அரங்கத்து-ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனான
அம்மான்-எம்பிரானுடைய
அரை-திருவரையில் (சாத்திய)
சிவந்த ஆடையின் மேல்-பீதாம்பரத்தின் மேல்
என சிந்தனை-என்னுடைய நினைவானது
சென்றது ஆம் பதிந்ததாம்

கீழ்ப்பாட்டில், “திருக்கமலபாதம் வந்து” என்றதும்,
இப்பாட்டில் “ஆடையின்மேற் சென்ற தாமென சிந்தனை” என்றதும் உற்று நோக்கத்தக்கவை.
முதலில் எம்பெருமான் தானாக ஆழ்வாரை அடிமை கொள்ள மேல் விழுந்தபடியும்,
பிறகு ஆழ்வார் ருசி கண்டு தாம் மேல் விழுகிறபடியும் இவற்றால் தோற்றும்.
ஈன்ற நாகானது தன் கன்றுக்கு முதலில் முலைச் சுவை தெரியாமையாலே தானே தன் முலையை அதன் வாயிலே கொடுக்கும்;
பின்பு சுவடறிந்தால் நாகு காற்கடைக் கொண்டாலும் கன்று தானே மேல் விழும்;
அப்படியே, திருவடிகள் தானேவந்து போக்யமானவாறு கூறினர் முதற்பாட்டில்;
இதில், தம்முடைய நெஞ்சு சுவடறிந்து மேல்விழுமாறு கூறுகின்றனரென்க.

உலகமளந்த வரலாறு:-மஹாபலியென்னும் அஸூரராஜன் தன் வல்லமையால் இந்திரன் முதலிய யாவரையும் வென்று
மூன்று உலகங்களையும் தன் வசப்படுத்தி அரசாட்சி செய்துகொண்டு செருக்குற்றிருந்தபொழுது,
அரசிழந்த தேவர்கள் திருமாலைச் சரணமடைந்துவேண்ட, அப்பெருமான் குள்ள வடிவமான வாமநாவதாரங்கொண்டு
காச்யபமாமுனிவனுக்கு அதிதி தேவியினிடந் தோன்றிய பிராமண ப்ரஹ்மசாரியாகி, வேள்வியியற்றி
யாவர்க்கும் வேண்டிய அனைத்தையுங் கொடுத்துவந்த அந்த மாவலியிடஞ்சென்று,
தவஞ்செய்ததற்குத் தன் காலடியால் மூவடி மண்வேண்டி, அது கொடுத்தற்கு இசைந்து அவன் தாரைவார்த்துக்
தத்தஞ்செய்த நீரைக் கையிலேற்று உடனே திரிவிக்கிரமனாக ஆகாயத்தை அளாவிவளர்ந்து
ஓரடியால் பூலோகத்தையும் மற்றோரடியால் மேலுலகத்தையுமளந்து, தாநமாகப் பெற்ற மற்றோரடிநிலத்திற்கு இடமில்லாதொழியவே
அதற்காக் அவன் வேண்டுகோளின்படி அவனது முடியில் அடியை வைத்து அவனைப் பாதாளத்தில் அழுத்தி அடக்கினன் என்பதாம்.
பூலோகத்தை அளந்ததில் அதன்கீழுள்ள பாதாளலோகமும் அடங்கிற்று; எனவே எல்லா வுலகங்களையுமளந்ததாம்.
இச்சரித்திரத்தினால், கொடியவரை அடக்குவதற்கும், இயல்பில் அடிமையாகின்ற அனைத்துயிரையும்
அடிமைகொள்வதற்கும் வேண்டிய தந்த்ரம் வல்லவன் என்பது போதரும்.

உலகளக்கும்போது அடியாரோடு அஹங்காரிகளோடு வாசியற எல்லார் தலையிலும் திருவடியை வைத்து
அவர்களை தந்யராக்கப்போகிறோமென்று எம்பெருமான திருவுள்ளத்திற்கொண்ட உகப்பை வெளியிடுகிறார்.
உவந்த உள்ளத்தனாய் என்று.

நிசாசரர், காகுத்தன், சிந்தனை – வடசொற்கள். நிசாசரர்-இரவில் திரியுமர்களிறே ராக்ஷஸர்கள்.
காகுத்தன்-ககுத்ஸ்னென்று ப்ரஸித்தி பெற்ற அரசனது குலத்திற் பிறந்தவன்; (ஸ்ரீராமன்;)
எருதுவடிவங்கொண்ட இந்திரனது முசுப்பின் மேலேறி யுத்தஞ்செய்யச் சென்றதனால்
இவ்வரசனுக்குக் ககுத்ஸ்தனென்று பெயராயிற்று. (ககுத்-முசுப்பு; ஸ்தன்-இருப்பவன்.)

“நிமிர்ந்த நீண்முடியன்” என்பதும் பாடம்.

திருகமல பாதம் வந்ததும்
ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனை –
தானாகவே எம்பெருமான் அடிமை கொள்ள மேல் விழுந்த படியும்
பின்பு ஆழ்வார் ருசி கண்டு
தாம் மேல் விலுகிறபடியும் இவற்றால் தோற்றும்
ஈன்ற நாகு கன்றுக்கு முலைச் சுவை தெரியாமையாலே
தானே முலையை அதன் வாயிலே கொடுக்குமே
அனைத்து உலகையும் அடிமை கொள்ளவன் என்பதைக் காட்ட உலகு அளந்த வரலாறு
அனைவரையும் தந்யராக வாசி அற வைத்து அருளினதால் உகந்தவனும் அவனே -உவந்த உள்ளத்தனாய்
நிமிர்ந்த நீண் முடியன் -என்பதும் பாடம்-

———————————————————-

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3-

பதவுரை

மந்தி–குரங்குகளானவை
பாய்-(ஒரு கிளையில் நின்றும் மற்றொரு கிளையில்) பாயப்பெற்ற
வடவேங்கடம் மா மலை–வடதிசையிலுள்ள திருவேங்கடமென்னும் திருமலையிலே
வானவர்கள்-நித்ய ஸூரிகள்
சந்தி செய்ய நின்றான்–பூக்களைக் கொண்டு ஆராதிக்கும்படி நிற்பவனாய்
அரங்கத்து–கோயிலிலே
அரவு இன் அணையான்-திருவனந்தாழ்வானாகிற போக்யமான படுக்கையை யுடையனான அழகிய மணவாளனுடைய
அந்தி போல் நிறத்து ஆடையும்–செவ்வானம் போன்ற நிறத்தையுடைய திருப்பீதாம்பரமும்
அதன்மேல்–அப்பீதாம்பரத்தின் மேலே
அயனை படைத்தது ஓர் எழில் உந்திமேலது அன்றோ–பிரமனைப் படைத்த ஒப்பற்ற அழகையுடைய திருநாபிக் கமலமும் ஆகிய இவற்றின் மேற்படிந்ததன்றோ
அடியேன் உள்ளத்து இன் உயிரே-என்னுடைய மனஸ்ஸிலே விளங்குகிற இனிதான ஆத்மஸ்வரூபம்.

“அடியேனுள்ளத்தின்னுயிர் எழிலுந்திமேலதன்றோ” என இயையும்.
இங்கு வாநரங்களைக் கூறியது சபலரான ஸம்ஸாரிகளைக் கூறியவாறாம்.
“நின்றவா நில்லா நெஞ்சினையுடையராய் ஒன்றைவிட்டு ஒன்றைப் பற்றுகிற
க்ஷுத்ர பல காமிகளான ஸம்ஸாரிகளுக்கு வாநரங்களே ஒத்த நிதர்சநமாம்.

பரமபதத்திலே கைங்கர்ய ஸாம்ராஜ்யத்துக்கு முடிசூடி யிருக்கிற முக்தரும் நித்யரும் தேஸோசிதமான
தேஹங்களைப் பரிக்ரஹித்துக்கொண்டு திருமலையிலே வந்து கைங்கர்யங்கள் பண்ண,
அவற்றைப் பெறுகைக்காக அங்கே நித்ய ஸந்நிஹிதனாயிருக்கும் ஸ்ரீரங்கநாதனுடைய
திருப்பீதாம்பரத்திலும் திருநாபீகமலத்திலும் என் சிந்தை குடிகொண்டதென்கை.

‘வடவேங்கடமாலை நின்றான்’ என்றவுடனே,
வருந்தி ஏற வேண்டும்படியான திருமலையும் நம்போன்றவர்க்குப் பரமபதம்போல் அரிதேயன்றோ என்று சிலர் குறைபட,
உடனே, ‘அரங்கத்தரவினணையான்’ என்று எளிமையை அருளிச்செய்தபடி.

“அந்திபோல்நிறம்” என்பதற்கு-
அடியாருடைய அஜ்ஞான விருளைக் கழிக்கவல்ல நன்ஞானமாகிற ஸூர்யோதயத்துக்குக் கிழக்கு ஸந்த்யை போலவும்,
அவர்களுடைய தாபத்ரயத்தை ஆற்றுதற்கு மேற்கு ஸந்த்யைபோலவும் இராநின்ற, என்று கருத்துரைப்பர் தூப்புற்பிள்ளை.

முதற்பாட்டில் ஆதி என்ற அடைமொழியால் எம்பெருமானுக்குச் சொன்ன
ஜகத் காரணத்வத்தை இப்பாட்டில் மூன்றாமடி நிலைகாட்டுகின்றது போலும்.

த்ரயோதேவா ஸ்துல்யா, த்ரிதயமிதமத்வைதமதிகம்
த்ரிகாதஸ்மாத் த்த்வம் பரமிதி விதர்க்காந் விகடயந்
விபோர்நாபிபத்மோ விதிசிவ நிதாநம் பகவத
த்தந்யத் ப்ரூபங்கீபரவதிதி ஸித்தாந்தயதி ந–என்ற ஸ்ரீ ரங்கராஜஸ்தவ ஸூக்தி இங்கு அநுஸந்திக்கத்தக்கது.

“சந்திசெய்யநின்றான்“ என்றவிடத்து,
சந்தி என்பதற்கு ஆராதநம் என்று எப்படி பொருளாயிற்றென்னில்,
சந்தி என்று ஸந்த்யாவந்தனத்துக்குப் பேராய்
அது ஸ்ரீ பகவதாஜ்ஞயா பகவத் கைங்கர்யரூபமாகையாலே லக்ஷிதலக்ஷணை‘ என்னும் முறையால்
பகவதாராதநத்தைச் சொல்லிற்றாகிறதென்று கொள்ளலாம்.

நின்றான் – வினையாலணையும் பெயர்.

அடியேன் உள்ளத்து இன்னுயிர் எழில் உந்தி மேலது அன்றோ
வானரங்கள்
சபலரான சம்சாரிகள்
நின்றவா நில்லா நெஞ்சினை உடையராய்
வடவேங்கடமா மலை நின்றவன் -வருந்தி ஏற வேண்டும்படியான திருமலை
அரங்கத்து அரவின் அணையான் -எளிமையை அருளிச் செய்து
அந்தி போல் நிறம்
அஞ்ஞானம் இருளை கழிக்க வல்ல நல்ல ஞானம் ஆகிற சூர்யோததுக்கு
கிழக்கு சந்தை போலேவும்
தாபத் த்ரயம் ஆற்ற மேற்கு சந்தை போலேயும் இரா நின்ற -தூப்புல் பிள்ளை
அயனைப் படைத்ததோர் எழில் இத்தால் முதல் பாட்டில் –ஆதி -அருளினதை -நிலை நாட்டுகிறது
சந்தி செய்ய நின்றான் -சந்த்யா வந்தனம் -ஸ்ரீ பகவத் ஆஞ்ஞாயா -ஸ்ரீ பகவத் கைங்கர்ய ரூபம்
லஷித லஷணை முறையால் பகவத் ஆராதனம்
நின்றான் -வினையால் அணையும் பெயர்-

——————————————————-

சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-4-

பதவுரை

சதுரம்–நாற்சதுரமாய்
மா–உயர்ந்திருக்கிற
மதிள்சூழ்–மதிள்களாலே சூழப்பட்ட
இலங்கைக்கு–லங்கா நகரத்திற்கு
இறைவன்–நாதனான இராவணனை
ஓட்டி–(முதல்நாள் யுத்தத்தில்) தோற்று ஓடும்படி செய்து
(மறுநாட்போரில்)
தலைபத்து–(அவனது) தலைபத்தும்
உதிர–(பனங்காய்போல்) உதிரும்படி
ஓர்–ஒப்பற்ற
வெம் கணை–கூர்மையான அஸ்த்ரத்தை
உய்த்தவன்–ப்ரயோகித்தவனும்
ஓதம் வண்ணன்–கடல் போன்ற (குளிர்ந்த) வடிவை யுடையவனும்
வண்டு–வண்டுகளானவை
மதுரமா–மதுரமாக
பாட–இசைபாட
(அதற்குத் தகுதியாக)
மா மயில் ஆடு–சிறந்த மயில்கள் கூத்தாடப் பெற்ற
அரங்கத்து அம்மான்–திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமியுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய
திரு வயிறு உதரபந்தம்–திருவயிற்றில். சாத்தியுள்ள ‘உதரபந்த’ மென்னும் திருவாபரணமானது
என் உள்ளத்துள் நின்று–என் நெஞ்சினுள் நிலைத்து நின்று
உலாகின்றது–உலாவுகின்றது

குலபர்வதங்களையெல்லாம திரட்டிக் கொணர்ந்து சேர்த்து வைத்தாற்போல் செறிவும் திண்மையும் உயர்த்தியுமுடைத்தாய்
அஷ்டதிக்பாலகர்களுக்கும் எட்டிப்பார்க்கவொண்ணாத மதிள்களாலே சூழப்பட்டிருந்த இலங்கைக்கு அரசனான
இராவணனை முதல்நாட்போரில் மிகவும் இளைக்கப்பண்ணி “சசால சாபஞ்ச முமோசவீர:” என்றபடி-
அவன் சளைத்துப்போய் வில்லையும் பொகட்டு ஒன்றுஞ் செய்யமாட்டாது நின்றவளவிலே
அவன்மேல் இரக்கமுற்று ‘அப்பா! இன்று மிகவும் இளைத்தாய்; இப்போது உன்னை ஒரு நொடிப்பொழுதில்
உயிர்தொலைக்கக் கூடுமாயினும் அது தர்மமல்லவென்று விட்டிட்டேன்; இன்று போய் நாளை வா’ என்று சொல்லியனுப்பி,
அப்படியே அவன் மறுநாள் மிக வல்லவன் போல வந்து நின்றவாறே ப்ரஹ்மாஸ்த்ரத்தைப் பிரயோகித்து
அவன் தலைகளை அறுத்துத் தள்ளின வரலாற்றை அநுஸந்திக்கிறார முன் இரண்டடிகளில்.

ஓட்டி என்பதற்கு இராவணனையோட்டி என்று பொருள் கொள்ளாமல்,
ஓர் வெங்கணையை ஓட்டி என்று பொருள் கூறுவதும் ஒன்று.

ஓதவண்ணன்-
கண்டவர்களுடைய பாபத்தையும் தாபத்தையும் கழிக்க வல்ல கடல்போன்ற ச்யாமளமான திருமேனியையுடையவன்.
திருவயிறு உதரம் என்று புநருக்தியன்றோவென்று சங்கிக்கவேண்டா;
‘உதரபந்தம்’ என்பது திருவாபரணத்தின் பெயர் ;
அது திருவயிற்றிற் சாத்தப்பட்டுள்ளமையைக் கூறியிருப்பதாக உணர்க.

“திருவயிற்றுதாபந்தனம்” என்றும் பாடமுண்டு.

ஒட்டி
வெங்கணையை ஒட்டி
ராவணனை ஒட்டி என்றுமாம்
ஓத வண்ணன்
பாபம் தாபம் கழிக்க வல்ல கடல் போன்ற ச்யாமளமான திருமேனி
திரு வயிறு உதரம் -புநருக்தி சங்கை வேண்டாம்
உதரபந்தம் -திரு ஆபரணம்
அது திரு வயிற்றில் சாத்தப் பட்டுள்ளமையை அருளிச் செய்கிறார்
சாஸீச ரோஜ சத்ருசாய தேஷண-என்பதும் உண்டே
திரு வயிற்று உதர பந்தனம் -பாட பேதம்-

——————————————————

அடியார்களைப் பரிந்து காத்தருள வல்ல பெரியபிராட்டியாரும்,
ஸர்வரக்ஷகத்வத்தை வெளிப்படுத்தவல்ல ஹாரமும் திகழப்பெற்ற திருமார்பின் அழகே
என்னை ஆட்படுத்திக் கொண்டதென்கிறார்.

பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன்
வாரமாக்கி வைத்தான் வைத்த தன்றி யென்னுள் புகுந்தான்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான் திரு
ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே —–5-

பதவுரை
பாரம் ஆய–பொறுக்கமுடியாத சுமையாயிராநின்ற
பழ வினை–அநாதியான பாபங்களின்
பற்று அறுத்து–சம்பந்தத்தைத் தொலைத்து
என்னை-(அதனால் பாபம் நீங்கப் பெற்ற) அடியேனை
தன் வாரம் ஆக்கி வைத்தான்-தன்னிடத்தில் அன்பு உடையவனாகப் பண்ணி வைத்தான் (ரங்கநாதன்);
வைத்தது அன்றி–இப்படி செய்து வைத்ததுமல்லாமல்
என்னுள் புகுந்தான்–என் ஹ்ருதயத்திலும் ப்ரவேசித்து விட்டான்
(இப்படிப்பட்ட பாக்கியத்தைப் பெறுதற்கு உறுப்பாக, நான்)
கோரம் மா தவம்-உக்ரமான பெரியதொரு தபஸ்ஸை
செய்தனன் கொல்–(முற்பிறவியில்) செய்திருப்பேனோ என்னவோ?
அறியேன்-அறிகிறேனில்லை;
அரங்கத்து அம்மான்-ஸ்ரீ ரங்கநாதனுடைய
திரு ஆரம்-பிராட்டியையும் முக்தாஹரத்தையும் உடைத்தான
மார்பு அது அன்றோ-அத்திருமார்பன்றோ
அடியேனை-தாஸனான என்னை
ஆள் கொண்டது-அடிமைப்படுத்திக் கொண்டது.

காலமுள்ளதனையும் ப்ராயச்சித்தம் பண்ணினாலும் கழிக்க வொண்ணாதபடி வளர்ந்து செல்லுகிற
என் தொல்லைத் தீவினைகளை வாஸனையோடுகூட அடியறுத்து அடியேனை நிஷ்கல்மஷனாக்கித்
தன்னிடத்தில் பக்ஷபாதமுடையவனாக ஆக்கிக்கொண்ட மாத்திரத்தோடு நில்லாமல்,
இத்தனை காலமாய்ப் பாவங்களுக்கு இருப்பிடமாயிருந்த என்னெஞ்சை அப்பாவங்களை யோட்டிவிட்டுத்
தனக்கிருப்பிடமாக்கிக் கொண்டான் ஸ்ரீ ரங்கநாதன் என்கிறார் முன் அடிகளில்.

“கல்லும் கனைகடலும் வைகுந்தவானொடும், புல்லென்றொழிந்தனகொல் ஏபாவம்-
வெல்ல நெடியான் நிறங்கரியானுள் புகுந்து நீங்கான், அடியேனதுள்ளத்தகம்” என்ற
பெரிய திருவந்தாதிப் பாசுரம் இங்கு அநுஸந்திக்கத்தகும்.

தன்வீட்டைத் தான் தான் ஆளவொண்ணாதபடி நெடுநாளாக ஆக்ரமித்துப் போந்த குறும்பர்களைச் சீற்றத்தோடு ஓட்டித்
துரத்திவிட்டு மேனாணிப்புடன் தன் வீட்டில் விஜயஞ்செய்கின்ற மஹாராஜன்போல,
அடியேனுடைய நெஞ்சை எம்பெருமான் தன்னதாக அபிமானித்து அரியபெரிய காரியங்கள் செய்து
வந்து புகும்படிக்கீடாக நான் எந்த ஜந்மத்தில் என்ன தபஸ்ஸூ பண்ணினேனோ தெரியவில்லையே!
என்று தடுமாறுகிறார் மூன்றாமடியில்.

“பெண்ணுலாஞ் சடையினாலும் பிரமனுமுன்னைக் காண்பான், எண்ணிலாவூழியூழி தவஞ்செய்தார் வெள்கிநிற்ப” என்றபடி-
மெய்யே தவம்புரிந்த பெரியோர்களும் இப்போது பெறாமல் வருந்தி நிற்க,
தமக்கு அசிந்திதமாக இப்பேறு வாய்த்தது தீவ்ரமானதொரு அபூர்வ தபஸ்ஸின் பலனாயிருக்கவேணுமென்றும்,
அத்தபஸ்ஸூ தம் முயற்சியால் நிகழ்ந்தல்லவென்றும்,
எம்பெருமானே இதற்கு நோன்புநோற்றவன் என்றும் இவருடைய உட்கருத்தாமென்க.

இனி, செய்தனன் என்பதைத் தன்மைவினைமுற்றாகக் கொள்ளாமல் படர்க் கைவினைமுற்றாகக் கொண்டு,
இப்படி என் நெஞ்சினுள் புகுவதற்கு எம்பெருமான் உபயகாவேரி மத்தியத்திலே நின்று கொண்டு என்ன கடுந்தவம் புரிந்தானோ?
என்பதாக உரைத்தருளின தூப்புற்பிள்ளை வியாக்கியானமும் மிக்க பொருத்தமுடைத்தேயாம்.

அந்த முநிவாஹநபோகத்தில், “இது அதிவாத கர்ப்பமாக உத்ப்ரேக்ஷித்தபடி” என்று ஊடே ஒருவரி வரைந்து
அச்சிட்டிருப்பது ஆது நிகர்களின் கைச் சரக்காயிருக்க வடுக்கும்.
ஓரடியானைப் பெறுதற்கு எம்பெருமான் படுகிற பாடு இப்பிச்சுக்களுக்கு என்ன தெரியும்?
அநாவ்ருத்தி ஸூத்ர ஸ்ரீபாஷ்யத்தில்
நச பரமபுருஷஸ்ஸத்ய ஸங்கல்ப: அத்யர்த்தப்ரியம் ஜ்ஞாநி நம் ல்ப்த்வா” என்று எம்பெருமானார் அருளிச் செய்த
ஸ்ரீஸூக்தியில் லப்த்வா என்ற பரம ரஸத்தைப். பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளிற் பணிந்து கேட்கப் பெற்ற
நம் தேசிகன் திருந்தி உரைத்த இச் சுவடறிவார் ஆர் கொல்?

பாரம், கோரம், ஆரம் என்பவை வடசொற்களின் விகாரம். வாரம்-பக்ஷபாதம்.

பாரமாய
தொல்லைத் தீ வினைகளை வாசனை உடன் அடி அறுத்து
அடியேனை நிஷ் கல்மஷன் ஆக்கி
தன்னிடத்தில் பஷ பாதம் உடையன் ஆக்கிக் கொண்ட மாத்ரம் நில்லாமல்
தனக்கே இருப்பிடம் ஆக்கிக் கொண்டான்

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து
நீங்கான் அடியேன் உள்ளத்து அகம் -பெரிய திருவந்தாதி

பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா ஊழி ஊழி தவம் செய்தார் வெல்கி நிற்ப –
தமக்கு அசிந்திதமாக இந்த பேறு வாய்த்ததே
எம்பெருமானே இதற்கு நோன்பு நோற்றவன்
செய்தனன் -தன்மை வினை முற்று -படர்க்கை வினைமுற்று
ஒரு அடியானை பெற இவன் படும் பாடு யார் அறிவார்
அநாவ்ருத்தி சூத்திர ஸ்ரீ பாஷ்யம் எம்பெருமானார்
நச பரம புருஷஸ் சத்ய சங்கல்ப அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞானி நம் லப்த்வா –
லப்த்வா -பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளில் பணிந்து கேட்கப் பெற்ற தேசிகன்
திருந்தி உரைத்த சுவடு அறியாமல்
அதிவாத கர்ப்பமாக உத்ப்ரேஷித்த படி -என்று ஊடே வரி
ஆது நிகர்களின் கைச் சரக்காய் இருக்க அடுக்கும்-

வாரம் -பஷ பாதம்

———————————————-

ஒருகாலத்திலே, பரமசிவன், தன்னைப் போலவே பிரமனும் ஐந்து தலையுடையனா யிருப்பது பலரும் பார்த்து
மயங்குவதற்கு இடமாயிருக்கிறதென்று கருதி அவனது சிரமொன்றைக் கிள்ளியெடுத்துவிட,
அக் கபாலம் அப்படியே சிவன் கையில் ஒட்டிக் கொள்ளுதலும், அவன் ‘இதற்கு என் செய்வது?’ என்று கவலைப்பட,
தேவர்களும் முனிவர்களும் ‘இப்பாவந்தொலையப் பிச்சையெடுக்க வேண்டும்;
என்றைக்குக் கபாலம் நிறையுமோ, அன்றைக்கே இது கையைவிட்ட அகலும்’ என்று உரைக்க,
சிவபிரான் பலகாலம் பலதலங்களிலுஞ் சென்று பிச்சையேற்றுக்கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நீங்காதாக,
பின்பு ஒருநாள் பதரிகாஸ்ரமத்தையடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயண மூர்த்தியை வணங்கி இரந்தபோது,
அப்பெருமான்: ‘அக்ஷயம்’ என்று பிக்ஷையிட, உடனே அது நிறைந்து கையைவிட்டு அகன்றது என்பதாம்.

இவ்வரலாற்று முகத்தால், ஸ்ரீமந்நாராயணனுடைய பரத்வத்தை வெளியிட்டவாறு.
ஈஸ்வரனென்று பெயருடைய ருத்ரன் கர்மவச்யனென்பதும்,
தன்னைத் தான் ரக்ஷித்துக் கொள்ள மாட்டாத இவன் வேறொருவர்க்கும நிரபேக்ஷரக்ஷகனாக மாட்டானென்பதும்,
ஸ்ரீமந்நாராயணனே ஸர்வாநிஷ்ட நிவர்த்தகன் என்பதும் நன்கு வெளியாகும்–

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —-6-

பதவுரை

துண்டம்–ஒரு துண்டாயிருக்கிற (கலா மாத்ரமான)
வெண்பிறையன்–வெளுத்த சந்திரனை (முடியிலே) உடையனான சிவனுடைய
துயர்-(பிச்சை யெடுத்துத் திரிந்த) பாதகத்தை
தீர்த்தவன்–போக்கினவனும்
அம் சிறைய வண்டு–அழகிய சிறகையுடைய வண்டுகள்
வாழ்–வாழ்தற்கிடமான
பொழில் சூழ்–சோலைகள் சூழப் பெற்ற
அரங்கம் நகர்-திருவரங்கப் பெரு நகரிலே
மேய-பொருந்தி யிரா நின்ற
அப்பன்-ஸ்வாமியுமான ஸ்ரீரங்கநாதனுடைய
அண்டர்-அண்டத்துக்குட்பட்ட தேவாதி வர்க்கங்களையும்
அண்டம்–அண்டங்களையும்
பகிரண்டம்-அண்டாவரணங்களையும்
ஒரு மா நிலம்-ஒப்பற்ற மஹா ப்ருதிவியையும்
எழு மால் வரை-ஏழு குல பர்வதங்களையும்
முற்றும்-சொல்லிச் சொல்லாத மற்றெல்லாவற்றையும்
உண்ட-அமுதுசெய்த
கண்டம் கண்டீர்-திருக்கழுத்துக்கிடீர்
அடியேனை-தாஸனான என்னை
உய்யக் கொண்டது-உஜ்ஜீவிப்பித்தது

அஞ்சிறைய வண்டு என்றது ஞானானுட்டானங்கள் நன்கு அமைந்த ஆசிரியர்களைக் கூறியபடி.
பலவகை மலர்களிலு ஞ்சென்று அவற்றின் ஸாரமான தேனை அம்மலர்கள் கெடாதபடி கவர்ந்து
உண்ணுந்தன்மை யனவான வண்டுகளை, பலவகை சாஸ்த்ரங்களிலும் அவகாஹித்து அவற்றின் ஸாரமான
தத்துவப் பொருளை அந்நூல்கள் நலிவுபடாதபடி க்ரஹித்து அநுபவிக்குந் தன்மையரான ஆசிரியராகச் சொல்லத் தட்டில்லை.

சிறகுகள் வண்டுகளின் கமநத்துக்கு ஸாதநமாவதுபோல்
ஜ்ஞாநாநுஷ்டா நங்கள் உன்னதகதிக்கு ஸாதநமாமென்க.

காரணாவஸ்தையில் எல்லாக் காரியங்களையும் தன்பக்கலில் உபஸம்ஹரித்துப் பின்பு ஸ்ருஷ்டிக்குமாறு
“வெற்றிப்போர்க் கடலரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட” என்றபடி
ஸகல பதார்த்தங்களையும் பிரளயப் பெருவெள்ளத்தில் நின்றும் தப்ப வைத்துத் தன் திருவயிற்றிலே அடக்கி நோக்கின
பெரு நன்றியையும், இப்போதும் தம்மை ஸம்ஸார ஸாகரம் விழுங்காதபடி ஆட்படுத்திக்கொண்ட உபகாராதிசயத்தையும்
ஆநந்தமாகப் பேசுகிறார் பின்னடிகளில்.

பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில்-
“சந்த்ரனுடைய க்ஷயத்தைப்போக்கினானென்றுமாம்” என்று அர்த்தாந்தரமும் அருளிச் செய்யப்பட்டிருப்பதால்
“துண்டவெண்பிறையின்” என்றும் ஒருபாடமுண்டு போலே.

அண்டம், பஹிரண்டம், கண்டம்-வடசொற்கள்.

துண்டம்
அஞ்சிறைய வண்டு -ஞானம் அனுஷ்டானங்கள் நன்கு அமைந்த ஆரியர்கள்
சாஸ்த்ரங்களில் அவஹாகித்து
சாரமான தத்துவ பொருளை நூல்கள் நலிவு படாத படி க்ரஹித்து
அனுபவிக்கும் தன்மையான ஆச்சார்யர்

வெற்றிப் போர் கடலரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட –
பிரளய வெள்ளத்தில் நின்றும் திரு வயிற்றிலே அடக்கி நோக்கி அருளிய
சம்சார சாகரம் விழுங்காதபடி ஆட்படுத்திக் கொண்ட உபகார அதிசயம்

பிறையன் பிறையின்
சந்தரன் உடைய ஷயத்தை போக்கி அருளினவன் என்றுமாம்

————————————————————–

கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல்
மெய்யினார் துளப விரையார் கமழ் நீண் முடி யெம்
ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ——-7–

பதவுரை

கையின்–திருக் கைகளில்
ஆர்-பொருந்தியிருக்கிற
சுரி சங்கு-சுரியையுடைய திருச்சங்கையும்
அனல் ஆழியர்-தீ வீசுகின்ற திருவாழியையும் உடையராய்,
நீள் வரை போல்-பெரியதொரு மலை போன்ற
மெய்யனார்-திருமேனியை யுடையராய்
துளபம் விரை ஆர்-திருத்துழாயின் பரிமளம் மிகப்பெற்று (அதனால்)
கமழ்-பரிமளியா நின்றுள்ள
நீள்முடி–உயர்ந்த திருவபிஷேகத்தை யுடையராய்
எம் ஐயனார்–எமக்கு ஸ்வாமியாய்
அணி அரங்கனார்-அழகு பொருந்திய திருவரங்கத்திற் கண் வளர்ந்தருள்பவராய்
அரவு இன் அணை மிசை மேய–திருவனந்தாழ்வானாகிற இனிய திருப்பள்ளியின் மீது பொருந்திய
மாயனார்–ஆச்சரியச் செய்கைகளை யுடையரான ஸ்ரீ ரங்கநாதருடைய
செய்ய வாய்–சிவந்த திருப்பவளமானது
என்னை-என்னுடைய
சிந்தை-நெஞ்சை
கவர்ந்தது-கொள்ளை கொண்டது;
ஐயோ–(ஆநந்தாதிசயக் குறிப்பு.)

திருக்கைக்கு ஆயுதமாகவும் ஆபரணமாகவும் விளங்குகின்ற திருவாழி திருச்சங்குகளையுடையனாய்,
மாம்ஸ சக்ஷூஸ்ஸூக்களான நம் போன்றவர்களும் கண்ணாரக் காணும்படியாகப்
பெரிய பச்சைமாமலை போன்ற மேனியையுடையனாய்,
அனைவரையும் ரக்ஷிக்க ஸித்தனாயிருக்கும்படியை விளங்குகின்றனாய்,
திருவரங்கத்தில் திருவனந்தாழ்வான்மீது பள்ளிகொள்பவனான அழகிய மணவாளனுடைய
கொவ்வைக் கனி போற் சிவந்த திருவதரமானது என் நெஞ்சைக் கவர்கின்றதே! இதற்கு என் செய்வேன்! என்கிறார்.

எம்பெருமானை முழுக்க அநுபவிக்கப் பார்த்திருக்கையில் இடையிலே நெஞ்சைக் கொள்ளை கொண்டுவிட்டதே அதரம்!
இதற்கென் செய்வேன் என்பார் ஐயோ! என்கிறார்.

“பண்டே நெஞ்சு பறி கொடுத்த வென்னை அநியாயம் செய்வதே! என்று கூப்பிடுகிறார்” என்பர் பெரியவாச்சான்பிள்ளை.

“ஐயோ வென்றது-ஆச்சர்யத்தை யாதல், அநுபவிக்க அரிதான படியையாதல், அநுபவ ரஸத்தையாதல் காட்டுகிறது” என்பர் தூப்புற்பிள்ளை.

சுரி-சங்குக்கு உள்ளதொரு லக்ஷணம்.

கையினார்
சுரி -சங்குக்கு உள்ளதொரு லஷணம்
ஐயோ
பண்டே நெஞ்சு பறி கொடுத்த என்னை அநியாயம் செய்வதே
ஆச்சர்யம்
அனுபவிக்க அரிதான படியை யாதல்
அனுபவ ரசத்தை யாதல்

———————————————————-

எப்போதும் அழகிய மணவாளனுடைய திருக் கண்களின் பெருமையையே தாம் வாய் வெருவி,
பலரும் ‘இவன் பேயன்’ என்று ஏசும்படியான உன்மத்த நிலைமையை அடைந்துவிட்டதாக அருளிச் செய்கிறார்.

“ஏழையராவியு ண்ணுமிணைக் கூற்றங்கொலோவறியேன்,
ஆழியங்கண்ணபிரான் திருக்கண்கள் கொலோவறியேன்,
சூழவுந்தாமரை நாண்மலர்போல் வந்து தோன்றுங்கண்டீர்,
தோழியர்காளன்னைமீர்! என்செய்தேன் துயராட்டியேனே” என்று திருக் கண்களில் ஈடுபட்டு
நம்மாழ்வார் பட்டபாடு இவரும் படுகிறார் போலும்–

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —-8–

பதவுரை

பரியன் ஆகி–மிகவும் ஸ்தூலமான வடிவை யுடையனாய்க் கொண்டு
வந்த–(ப்ரஹ்லாதனை நலிய) வந்த
அவுணன்–அஸூரனான இரணியனுடைய
உடல்–சரீரத்தை
கீண்ட-கிழித்துப் பொகட்டவனும்,
அமரர்க்கு–பிரமன் முதலிய தேவர்கட்கும்
அரிய-அணுக முடியாதவனும்
ஆதி–ஜகத் காரண பூதனும்
பிரான்-மஹோபகாரகனும்
அரங்கத்து-கோயிலில் எழுந்தருளியிருக்கிற
அமலன்-பரமபாலநனுமாகிய எம்பெருமானுடைய
முகத்து–திருமுக மண்டலத்தில்
கரிய ஆகி–கறுத்த நிறமுடையவையாய்
புடை பரந்து–விசாலங்களாய்
மிளிர்ந்து–பிரகாசமுடையவையாய்
செவ்வரி ஓடி–செவ்வரி படர்ந்திருப்பனவாய்
நீண்ட–(காதுவரை) நீண்டிருப்பவனாய்
பெரிய ஆய-பெருமை பொருந்தியவையுமான
அக் கண்கள்–அந்தத் திருக்கண்களானவை
என்னை-அடியேனை
பேதைமை செய்தன–உந்மத்தனாகச் செய்துவிட்டன.

அவுணனுடல் கீண்ட வரலாறு:-
தனித்தனி தேவர் விலங்கு முதலிய பிராணிகளாலும் பகலிலும் இரவிலும் பூமியிலும் வானத்திலும்
வீட்டின் அகத்திலும் புறத்திலும் தனக்கு மரணமுண்டாகாதபடி வரம்பெற்ற இரணியன்,
தேவர் முதலியவர்களுக்கும் கொடுமைகள் இயற்றித் தன்னையே கடவுளாக அனைவரும் வணங்கும்படி செய்து வருகையில்,
அவனது மகனான ப்ரஹ்லாதாழ்வான், இளமை தொடங்கி மஹாவிஷ்ணுபக்தனாய் தந்தையின் கட்டளைப்படி
முதலில் அவனது பெயரைச் சொல்லிக் கல்வி கற்காமல் நாராயணநாமஞ் சொல்லி வரவே கடுங்கோபங் கொண்ட இரணியன்
ப்ரஹ்லாதனைத் தன்வழியில் இணக்குவதற்குப் பலவாறு முயன்றவளவிலும் அங்ஙனம் வழிபடாத
அவனைக் கொல்லுவதற்கு என்ன உபாயஞ்செய்தும் அவன் திருமாலருளால் இறவாதொழிய,
ஒருநாள் ஸாயங்காலத்தில் தந்தை மைந்தனை நோக்கி ‘அடா! நீ சொல்லும் நாராயணன் என்பான் எங்கு உளன்? காட்டு’ என்ன;
அப்பிள்ளை ‘தூணிலும் உளன் துரும்பிலும் உளன், எங்கும் உளன்’ என்று உறுதியாய்ச் சொல்ல,
உடனே இரணியன் ‘இங்கு உளனோ?’ என்று சொல்லி எதிரில் நின்ற ஒரு தூணைப் புடைக்க,
அதிலிருந்து திருமால் உடனே மனிதரூபமும் சிங்கவடிவமுங் கலந்த நரஸிம்ஹ மூர்த்தியாய்த் தோன்றி இரணியனைப் பிடித்து
வாசற்படியில் தன் மடிமீது வைத்துக்கொண்டு தனது திருக்கை நகங்களால் அவன் மார்பைப் பிளந்து அழித்திட்டு
ப்ரஹலாதனுக்கு அருள் செய்தான் என்பதாம்.

எம்பெருமானது அருள் ஒன்றையே நம்பி அவனுடைய சரணமே சரணம் என்ற உறுதியின்றித் தன் முயற்சியாலே
அவனைப் பெறலாம் என்று நினைப்பவர்கள் தேவர்களாயிருப்பினும் அவர்கட்கும் அருமைப்படுவான் எம்பெருமான் என்பார்,
அமரர்க்கு அரிய என்றார்.

திருக்கண்களை வருணிப்பன பின்னடிகள். கறுத்த நிறமுடைத்தாதல், விசாலமாயிருத்தல், ஒளிபொருந்தியிருத்தல்,
செவ்வரிபடர்ந்திருத்தல் (சிறுகொடிபோன்ற சிவந்தரேகை ஒடுதல்,) காதளவும் நீண்டிருத்தல்
இவை கண்களின் சிறப்புகுறிப்பா மென்க.

பேதைமை – அறிவில்லாமையும், உந்மத்தமும்.

திருக் கண்களில் ஈடுபட்டு பேதையேன் என்கிறார்
பேதைமை அறிவில்லாமையும் உன்மத்தமும்

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங்கொலோ அறியேன்
ஆழி யம் கண்ணபிரான் திருக் கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோற்றும் கண்டீர்
தோழியர்காள் அன்னைமீர் என் செய்கேன் துயராட்டியேனே-போலே –
கறுத்த
விசாலமான
ஒளி பொருந்தி
செவ்வரி படர்ந்து -சிறு கொடி போன்ற சிவந்த ரேகை
காதளவும் நீண்டு இருத்தல்
பல விசேஷணங்கள் கொண்டு அனுபவிக்கிறார்
அமரர்க்கும் அரியவன் –

—————————————————-

தனித்தனி ஒவ்வொரு அவயவத்திலும் ஈடுபட்டுபோந்த ஆழ்வார்,
அவயவியான திருமேனியை அநுபவித்துத் தமது நெஞ்சு பரவசமாகப் பெற்ற பெருமையைப் பேசுகிறார் இதில்.

ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே —–9-

பதவுரை

மா-பெரிதான
ஆல மரத்தின்–ஆல மரத்தினுடைய
இலை மேல்–(சிறிய) இலையிலே
ஒரு பாலகன் ஆய்-ஒரு சிறு பிள்ளையாகி
ஞாலம் ஏழும் உண்டான்–ஏழுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கினவனும்
அரங்கத்து-கோயிலிலே
அரவு இன் அணையான்-திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளியின் மீது சாய்ந்தருள் பவனுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய
கோலம்-அழகிய
மா–சிறந்த
மணி ஆரமும்–ரத்நங்களாற் செய்யப்பட்ட ஹாரமும்
முத்து தாமமும்–முத்து வடமும் (ஆகிய இவை போன்ற பல்லாயிரம் திருவாபரணங்கள்)
முடிவு இல்லது–எல்லை காண முடியாமல் அபரிமிதமாக விளங்கா நிற்கப் பெற்றதும்
ஓர் எழில்–ஒப்பற்ற அழகை யுடையதும்
நீலம்–கரு நெய்தல் மலர் போன்றதுமான
மேனி-திருமேனி யானது
எனது நெஞ்சினுடைய
நிறை–அடக்கத்தை
கொண்டது–கொள்ளை கொண்டு போயிற்று;
ஐயோ! இதற்கென் செய்வேன்? என்கிறார்.

ஓர் அவாந்தர ப்ரளயத்தில், ஸாகோபஸகமாக மிகப் பெரியதாய் வளர்ந்திருப்பதொரு ஆலமரத்தின்
ஒரு சிறு பசுந்தளிரிலே, தாயும் தந்தையுமில்லாததொரு தனிக்குழவியாய்ப் பள்ளி கொண்டு ஸகல லோகங்களையும்
திருவயிற்றிலே வைத்து நோக்கியருளின திருவரங்கமானது ஸகல திருவாபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ள
கரிய திரு மேனியானது எனக்கு ஸேவை ஸாதித்து என் நெஞ்சினது காம்பீர்யத்தைக் கொள்ளை கொண்டு போயிற்றே! என்கிறார்.

என் நெஞ்சினை
“ஐயோ!-பச்சைச் சட்டை யுடுத்துத் தனக்குள்ளதை யடையக் காட்டி எனக்குள்ளதை யடையக் கொண்டானே!”
என்பர் பெரியவாச்சான் பிள்ளை.

“நான் எல்லாவற்றையும் நின்று நின்று அநுபவிக்க வேணுமென்றிருக்க, அநுபவ பரிகரமான என் நெஞ்சைத்
தன் பக்கலிலே இழுத்துக் கொள்வதே! ஐயோ! என்கிறார்” என்பர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

கோலமா மணி யாரங்களையும்; முத்துத் தாமங்களையும், முடிவு இல்லாத அழகையும்,
நீலநிறமுடைய திருமேனி என்ற உரைத்தலுமாம்.

நெஞ்சை நிறை கொள்வதாவது-மோஹிக்கச் செய்கை என்க.
நெஞ்சினை- உருபு மயக்கம்.

ஆல மா
ஐயோ
பச்சை சட்டை உடுத்துத்
தனக்கு உள்ளதை அடையக் காட்டி
எனக்கு உள்ளதை அடையக் கொண்டானே -பெரியவாச்சான் பிள்ளை

நான் எல்லா வற்றையும் நின்று நின்று
அனுபவிக்க வேணும் என்று இருக்க
அது பவ பரிகரமான என் நெஞ்சை தன் பக்கலிலே
இழுத்துக் கொள்வதே
ஐயோ -என்கிறார் -நாயனார்

கோலமா மணி ஆரங்களையும்
முத்துத் தாமங்களையும்
முடிவு இல்லாத அழகையும்
நீல நிறத்தையும் உடைய திரு மேனி

நெஞ்சினை உருபு மயக்கம்
நெஞ்சை நிறை கொள்வது -மோஹிக்கச் செய்கை

——————————————————

இவ்வாழ்வார் ‘அடியேன்’ என்னுமதொழிய இப்பிரபந்தம் தலைக்கட்டுமளவிலும்
தம்முடைய பேரும் ஊரும் பேச மறக்கும்படி தாம்பெற்ற அநுபவத்துக்கு இனி ஒருவிச்சேதம் (இடையூறு)
வாராதபடி பெரிய பெருமாள் அருள் புரிந்தமையைக் கண்டு வியந்து
அப் பெரிய பெருமாளுடைய திருமேனியிலேயே தாம் ஒரு நீராக லயம் பெற்ற படியைப் பேசித் தலைக் கட்டுகிறார்.

ஸூந்தரபாஹூஸ்தவத்தில்,
-யசோதாங்குள் யக்ரோந்நமித சுபுகாக்ராணமுதிதௌ”
கபோலாவத்யாபி ஹ்யநு பரத தத்தரஷகமகௌ” என்ற ஆழ்வான்,
பண்டு யசோதைப் பிராட்டி முத்தங்கொடுத்த சுவடு இன்றும் அழகர் திவ்ய கபோலங்களில்
திகழா நிற்குமென்று அநுபவித்தாற் போல,
இவரும், பண்டு வெண்ணெயுண்ட முடை நாற்றம் இன்றும் பெரிய பெருமாள்
திருப்பவளத்திலே கமழா நிற்பதாக அநுபவிக்கிறார் –

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —10–

பதவுரை

கொண்டல் வண்ணனை–காள மேகம்போன்ற வடிவையுடையனும்
கோவலன் ஆய் வெண்ணெய் உண்ட வாயன்–கோபால குமாரனாகப் பிறந்து வெண்ணெயமுது செய்த திருவாயை யுடையனும்
என் உள்ளம்–என்னுடைய நெஞ்சை
கவர்ந்தானை–கொள்ளை கொண்டவனும்
அண்டர் கோன்–நித்யஸூரிகட்குத் தலைவனும்
அணி அரங்கன்–(பூமண்டலத்துக்கு) அலங்காரமான திருவரங்கத்தில் கண்வளர்ந்தருள்வபனும்
என் அமுதினை–எனக்குப் பரம போக்யமான அம்ருதமாயிருப்பவனுமான அழகிய மணவாளனை
கண்ட கண்கள்–ஸேவிக்கப் பெற்ற (பரமபத நாதனையும்)
காணா–காண மாட்டா.

கொண்டல் வண்ணன் –
கடலிலுள்ள நீரை யடங்கலும் முகந்து கொண்டு காவேரீ மத்தியில் வந்து படிந்ததொரு காளமேகம் போன்று
கண்டாருடைய விடாயைத் தீர்க்க வல்ல திருமேனியையுடையன்:
அன்றி,
மேடு பள்ள வாசி யின்றித் தாழ்ந்தார் உயர்ந்தாரனைவரும் உஜ்ஜீவிக்கும்படி
காருண்ய ரஸத்தை வர்ஷிக்குமவன் என்றுமாம்.
கொண்டல்-தொழிலாகு பெயர்.

கோவலனாய் இத்யாதி–
தசரத சக்ரவர்த்தி, தன்னுடைய ராஜைஸ்வர்யத்தைப் புஜிக்கைக்கு ‘எனக்கொரு பிள்ளை வேணும்’ என்று
நோன்பு நோற்றுப் பெருமாளைப் பெற்றாற் போலே,
ஸ்ரீநந்தகோபரும் “ கானாயன் கடிமனையில் தயிருண்டு நெய்பருக நந்தன்பெற்ற ஆனாயன்” என்றபடியே
திருவாய்ப்பாடியில் கவிய ஸம்ருத்தி யடங்கலும் பாழ் போக வொண்ணாதென்று இத்தை அமுது செய்கைக்காக
நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளையாய்த்து ஸ்ரீக்ருஷ்ணன்.
பெரிய பெருமாள் கொறுட்டை மோந்துபார்த்தால் இப்போதும் வெண்ணெய் நாறாநிற்குமாம்.

உப்புச்சாறாய் எட்டாநிலத்திலே யிருக்கும் தேவர்களம்ருதம் போலன்றிப்
பரம மதுரமாய்ப் பரம ஸூலபமாயிருக்கும் நான் கண்ட அமுதம் எனபார் என் அமுதினை என்கிறார்.

‘அமுதனை’ என்று சிலர் ஒதுவர்; அப்பாடம் ரஸமற்றதா மென மறுக்க;
ஆழ்வார்க்கு அம்ருததாதாத்மியம் விவக்ஷிதமே யல்லது அம்ருத தாத்ரூப்யம் விவக்ஷிதமன்று காணீர்.
“அளப்பரிய ஆரமுதை” என்றார் திருமங்கையாழ்வாரும்.

மற்றொன்றினைக் காணா –
அம்ருத பாநம் பண்ணினவர்கள் பாலையும் சோற்றையும் கண்ணெடுத்துப் பார்ப்பர்களோ?
பாவோ நாந்யத்ர கச்சதி” என்று திருவடி சொன்னாப்போலே இவரும் மற்றொன்றினை என்கிறார்-
பேர் சொல்லவும் கூசுகிறபடி பர வ்யூஹாதிகள், மற்றுள்ள அர்ச்சாவதாரங்கள் ஒன்றையும் காண மாட்டா என்கை.

“பண்கொள் சோலைவழுதிநாடன் குருகைக்கோன் சடகோபன்” என்றும்,
“அங்கமலத்தடவயல்சூழ் ஆலிநாடன் அருள்மாரி அரட்டமுக்கி அடையார் சீயம்,
கொங்குமலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன் கொற்றவேற் பரகாலன் கலியன்” என்றும்
மற்றுள்ள ஆழ்வார்கள் தம் ஊரையும் பேரையும் பாசுரக் கணக்கையும் பரக்கச் சொல்லிக் கொண்டாற்போலே
இவர் ஒன்றும் சொல்லிக் கொள்ளாதொழிந்ததென்? எனில்;
“மற்றொன்றினைக் காணா” என்ற மற்றொன்றில் இவையும் சேர்ந்து விட்டன போலும்
பர வ்யூஹாதிகளையும் வேறு அர்ச்சாவதார எம்பெருமான்களையும் மறந்தாற்போலே
தம்மையும் தம் ஊரையும் பாட்டையும் எல்லாவற்றையும் மறந்தொழிந்தாரென்ப.

அழகியமணவாளப்பெருமாள் நாயனார் வியாக்கியான ஸ்ரீஸூக்தி-
“அல்லாதார் திருநாமப் பாட்டுப் போலே தம்மைச் சொல்லிற்றிலர் –
‘விஸஸஹ– தஷாதா நா-விஸஸ்மார ததாத்மாநம்’ என்கிறபடியே தாம் போக ப்ரவணராய்த்
தம்மை மறக்கையாலே.
பலம்- ஸதாபச்யந்தி யாகையாலே அது இங்கே ஸித்திக்கையாலே
பலத்துக்குப் பலம் வேணுமோவென்று பலஞ் சொல்லிற்றிலர்.”

இப்பாட்டு அருளிச் செய்தவுடனே
பெரிய பெருமாள் அத் திருமேனியோடு ஆழ்வாரை அங்கீகரித்தருள,
அனைவருக்கான அப் பிரானது திருமேனியிலே அந்தர்ப்பவித்துக்
காய்ந்த இரும்பு உண்ட நீராயினர் என்று-
ஸம்ப்ரதாயம் வல்ல பெரியோர்கள் அருளிச் செய்யக் கேட்டிருக்கை யாயிருக்கும்.

கொண்டல்
அடியேன் என்னுமது ஒழிய
இப் பிரபந்தம் தலைக் கட்டும் அளவும்
தம்முடைய ஊரும் பேரும் பேச மறக்கும் படி
தாம் பெற்ற அனுபவத்துக்கு விச்சேதம் வாராதபடி
பெரிய பெருமாள் அருள் புரிந்தமை கண்டு வியந்து
பெரிய பெருமாள் திரு மேனியிலே நீராக லயம் பெற்ற படியைப் பேசித் தலைக் கட்டுகிறார்

ஆழ்வான் பண்டு யசோதை முத்தம் கொடுத்த சுவடு அழகர்
கபோலங்களில் திகழா நிற்கும்
என்று அனுபவித்தால் போலே
இவரும்
வெண்ணெய் உண்ட முடை நாற்றம் பெரிய பெருமாள் திருப் பவளத்தில் கமழா நிற்பதாக அனுபவிக்கிறார்
சக்கரவர்த்தி -ராஜ ஐஸ்வர்யம் புஜிக்க எனக்கு ஒரு பிள்ளை வேணும் நோற்றுப் பெற்றால் போலே
ஸ்ரீ நந்த கோபரும்
கானாயன் கடிமனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற ஆனாயன் -என்றபடி
இதற்கே நோன்பு நோற்று பெற்ற பிள்ளை அன்றோ

பரம மதுரமாய்
பரம சுலபமாய்
இருப்பதால் என்னமுதம் என்கிறார்
உப்புச் சாறு அல்லவே
அமுதனை -ரசம் அற்ற பாடம்
அமுதினை என்பதே சரி -ஆழ்வாருக்கு அம்ருத தாதாமியம் விவஷிதமே அல்லது
அம்ருத தாத்ரூபம் விவஷிதம் அன்று
அளப்பரிய ஆரமுதை -என்றார் திரு மங்கை ஆழ்வாரும் –

மற்று ஒன்றினைக் காணா
அம்ருத பானம் பண்ணினவர்கள்
பாலையும் சோற்றையும் கண் எடுத்துப் பார்ப்பார்களோ
பாவோ நான்யத்ர கச்சதி போலே
பேரையும் சொல்ல கூசி மற்று ஒன்றை என்று அருளுகிறார்
பர வியூஹாதிகள் மற்றைய அர்ச்சா ஸ்தலங்கள் எல்லாவற்றையும்
தம் ஊரையும் பேரையும் பாட்டையும் எல்லா வற்றையும் மறந்து அருளுகிறார்

அல்லாதார் திரு நாம பாட்டுப் போலே தம்மைச் சொல்லிற்றிலர்
விசஸ்மார ததாத்மா நம் -என்கிறபடி
தாம் போக பிரவணராய் தம்மை மறக்கையாலே
பலம் -சதா பஸ்யந்தி -யாகையாலே
அது இங்கே சித்திக்கையாலே
பலத்துக்கு பலம் வேணுமோ என்று பலம் சொல்லிற்றிலர்

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

அமலனாதி பிரான் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் -கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்–

May 26, 2013

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —10

—————————————————-

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-அவதாரிகை –

நிகமத்தில் -இவ்வளவும் ஜ்ஞான சாஷாத்காரம் -மேல் லோக ஸாரங்க மஹா முனிகள்
தோளில்  வந்து புகுந்து விண்ணப்பம் செய்கிறார் –
பெரிய பெருமாள் அழகைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா என்கிறார் –

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய–வியாக்யானம்-

கொண்டல் வண்ணனை –
தாபத் த்ரயத்தாலே விடாய்த்த தம் விடாய் தீரும்படியாய் –
அத்ரௌசயாளுரில சீதள காளமேக என்கிறபடியே வர்ஷூகமான காளமேகம் மேகம் போலே
இருக்கிற திரு நிறத்தை வுடையவனை –
பன்னீர்க்குப்பி போலே உள்ளுள்ளவை எல்லாம் புறம்பே நிழல் இட்டபடி-

கோவலனாய் வெண்ணெய் வுண்ட வாயன் –
இடையனாய் வெண்ணெய் உண்ட திருப் பவளத்தை உடையவனை –
சக்ரவர்த்தித் திருமகன் ஆகில் வெண்ணெய் உண்ண ஒட்டார்கள் என்று கருத்து –
கோவலன் –
ஆபிஜாத்யம் -பெருமாளுக்கு கட்டுண்பது அடி வுண்பதாகக் கிடைக்குமோ –
வெண்ணெய் வுண்ட வாயன் –
களவு கண்டு ஒளித்து வந்து கிடக்கிறவன்
பெரிய பெருமாள் கொறுட்டை மோந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் நாறா நிற்கும்-

என் உள்ளம் கவர்ந்தானை-
என் நெஞ்சை அபஹரித்தவனை –
கோவலனாய் வெண்ணெய் வுண்டாப் போலே கொண்டல் வண்ணனாய் என் உள்ளம் கவர்ந்தவனை
யசோதைப் பிராட்டி வுடைய வெண்ணெயிலே பண்ணின ச்ரத்தையை
என் நெஞ்சிலே பண்ணி புஜித்தவனை -வைத்த குறி அழியாது இருக்க வெண்ணெய் குடி போனாப் போலே
யாய்த்து இவர் உடம்பு இருக்க அகவாய் குடி போன படி-

அண்டர் கோன் –
திருவாய்ப்பாடியில் இடைக் குலத்துக்கு நிர்வாஹகன் -என்னுதல்
அண்டாந்தர வ்ர்த்திகளான ஆத்ம வர்க்கத்துக்கு நிர்வாஹகன் என்னுதல்
அணி யரங்கன் என் அமுதினை –
தேவர்களுடைய உப்புச் சாறு போல் அன்று இவருடைய அம்ருதம்
என் அமுதினை –
ப்ரஹ்மாதிகளுக்கு முதலியாய் இருக்கும்
எனக்குச் சாகாமல் காக்கும் அம்ருதமாய் இருக்கும்
கண்ட கண்கள் –
சுவை அறிந்த கண்கள் -ஸ்ரவண இந்த்ரிய மாத்ரம் அன்றியே விடாய் தீரக் கண்ட கண்கள்

மற்று ஒன்றினைக் காணாவே –
பாவோ நான்யத்ர கச்சதி -போலே கண்களுக்கு பச்சை இட்டாலும்
வேறு ஒரு அர்ச்சாவதாரம் அவதார விசேஷம் இவற்றை இப்படி விரும்பி போக்யம் என்று கருதாது
காட்சி ஒழிய வேறு ஒரு பலம் சொல்லா விட்டது பலமும் காட்சியாகையாலே
முக்த ப்ராப்யம் என்று ஒரு தேச விசேஷத்திலே போனாலும் சதா பஸ்யந்தி -இறே

தம்மைச் சொல்லுதல் பாட்டுக்கு சங்க்யை சொல்லுதல் செய்யில் கரை மேலே நின்ற
அல்லாத ஆழ்வார்களோ பாதி யாவர் -அஸ்தமி தான்ய பாவமாம்படி அழகிலே ஈடுபட்டுத் தம்மை மறந்தார்
நோ பஜனம் ஸ்மரன்நிதம் சரீரம் -என்கிறபடியே முக்த ப்ராப்யமான புருஷார்த்தத்தை
அனுபவித்தார் என்கையாலே எல்லாம் அவன் சொல்லேயாய் விட்டது –
இப் பாட்டில் கிருஷ்ணனுடைய படியும் இங்கே உண்டு என்கிறார் –

—————————————————–

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–அவதாரிகை –

நிகமத்தில் -இவ் வாழ்வார் இவ் வூருக்கு புறம்புள்ள தேசங்களில் உள்ளாருடைய ரஜஸ் தமஸ்
ப்ரசுரராய் -சப்தாதி விஷய ப்ரவணராய் -அது தானும் நேர் கோடு நேர் கிடையாமையாலே
அர்த்தார்ஜநாதிகளிலே இழிந்து -பெரியதோர் இடும்பை பூண்டு இருக்கிற படியையும்
இவ் வூரில் உள்ளார் பரம சாத்விகராய் நிரதிசய போக்யதராய் இருக்கிற பெரிய பெருமாளை
தொண்டு பூண்டு அமுதம் உண்டு களித்து இருக்கிற படியையும் கண்டு –

வரம் ஹூத வஹஜ் வாலா பஞ்ஜராந்தர் வ்யவஸ்திதி -ந சௌரி சிந்தாவி முகஜநசம்வாஸ வைஸஸம் –
என்று புறம்பு உள்ளாரோடு பொருத்தம் இன்றிக்கே -இவ் வூரைப் பார்த்தால்
சர்வ புண்ய மையோ தேச -என்கிறபடியே –
பவித்ராணாம் ஹி கோவிந்த பவித்ரம் பரம் -என்னும்
பரம பாவநரான பெரிய பெருமாள் தாமும் –
சிட்டனே செழு நீர்த் திருவரங்கத்தாய் -என்று இவ் வூரோட்டை சம்பந்தத்தாலே பாவன பூதர் என்னும்படியான
வைலஷண்யத்தை வுடைத்தாய் இருக்கையாலே –
நாம் இவ் வூரிலே புகுருகை இவ் வூருக்கு மாலின்யாவஹம் என்று பார்த்து –

அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்
என்கிறபடியே பிறருடைய நைச்யத்தாலே அங்குப் போக மாட்டாதே -தம்முடைய
நைச்யத்தாலே இங்குப் புகவும் மாட்டாதே ஆந்த ராளிகராய் –
உத்தரம் தீர மாசாத்ய கச்த ஏவ வ்யதிஷ்டத -என்ற ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே –
அக மகிழும் தொண்டர் வாழும்படி
அன்பொடு தென் திசை நோக்கிக் கொண்டு கண் வளருகிற பெரிய பெருமாளுடைய
த்ருஷடி பாதமான தென் ஆற்றங்கரையைப் பற்றி நின்றார்-

பெரிய பெருமாளும் –
ஈஸ்வரோஹமஹம் போகீ -நான்யோஸ்தி சத்ருசோ மயா -என்று தேசமாக
அஹங்கார க்ரஸ்தமாய் சப்தாதி விஷய ப்ரவணராய் நோவு படா நிற்க -இவர் இப்படி யாவதே
என்று மனசிலே போர உகந்து –
நிமக்ந ஆப ப்ரணவ -என்கிறபடியே இவர் அளவிலே திரு உள்ளம் பேராறு மண்டி –
நிஹீநாநாம் முக்கியம் சரணமான திருவடிகளைக் கொடு வந்து இவருடைய
திரு உள்ளத்திலே -என் கண்ணினுள்ளன வொக்கின்றவே -என்று ப்ரத்யஷ சாமாநா காரமாக
ப்ரகாசிக்கும் படி வைக்க –
அந்தத் திருவடிகளை அனுசந்தித்து தம்முடைய மனஸ் ஆனது
ஜ்ஞாநாஸ் பதமாகையாலே -அந்த திருவடிகளுக்கு மேலான் திருப் பீதாம்பரைத்தையும்
திருவரையுமான சேர்த்தியை மடி பிடித்து அனுபவித்து –
இப்படி கரணமும் நாமும் அனுபவிக்கும்படி நம்மை
உண்டாக்கிற்றுத் திரு நாபீ கமலம் அன்றோ அத்தை அனுபவித்து
மேன்மைக்கும் சௌலப்யத்தையும் பட்டம் கட்டி யிருக்கிறோம் நாம் அல்லோமோ என்று திரு வுதர பந்தனம்
தன் பக்கலிலே வர விசிக்க அத்தை அனுபவித்து-

அதுக்கு மேலே இருக்கிற திரு மார்பானது தன்னுடைய ஹாரத்ய ஆபரணங்களையும்
பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமான மேன்மையையும் காட்டி இசித்துக் கொள்ள
அந்தத் திரு மார்பை அனுபவித்து –
அந்த பிராட்டிக்கும் ஹாரத்ய ஆபரணங்களுக்கும்
ஆச்ரயமான திருக் கழுத்தை அனுபவித்து -அதுக்கு மேலே –
வாயில் -சர்வ பூதேப்யோ அபயம் ததாமி –
என்றாப் போலே சொல்லா நிற்கச் செய்தே அனுபவிக்கிற நாய்ச்சிமார்க்கு அகப்பட –
வாயழகர் தம்மை யஞ்சுதம் -என்று கண்களை செம்பிளித்து அனுபவிக்கும்படி ஸ்வா பாவிக
சௌந்தர்யத்தை உடைத்தான திருவதரத்தை அனுபவித்து –
இப்படி அவயவங்களை அனுபவியா நிற்கச் செய்தே
இடையில் திவ்யாயுதங்களும் இறாய்ஞ்சிக் கொள்ள அவற்றை அனுபவித்து –
அபயம் ததாமி – என்றாப் போலே சொல்லுகிற வார்த்தைகளை மேல் எழுத்து  இட்டு கொடுக்கிற குளிர்ந்த
கடாஷங்களை உடைத்தான திருக்கண்களை அனுபவித்து –
பாலும் பழமும் கண்ட சர்க்கரையுமான ரசவஸ்துக்களை சேர்த்து புஜிப்பாரைப் போலே
இந்த அவயவங்களோடு உண்டான சேர்த்தியால் வந்த அழகையும் ஸ்வா பாவிகமான
அழகையும் உடைத்தான திருமேனியின் பசும் கூட்டமான சமுதாய சோபையையும்
அனுபவித்தாராய் இறே கீழ் நின்றது –

இவருடைய இப்படிப்பட்ட மானஸ அனுபவத்தையும் -மன பூர்வகமான வாசிக அனுபவத்தையும்
கண்ட பெரிய பெருமாள் -இப்படி குணா விஷ்டராய் அனுபவிக்கிற படியைக் கண்டு –
த்ரஷ்டவ்ய சர்வ தேஹிபி -என்கிறபடியே அவரை அழைத்துக் கொண்டு இருக்க
வேண்டும்படி அவர் அளவிலே அபி நிவிஷ்டராகையாலும் –
க்ஷண அபி தே யத் விரஹோஸ்தி தஸ்சஹ –
என்கிறபடியே தம்மை ஒருகால் காண வேணும் என்னும் ஆசை உடையாரை ஷண காலமும்
பிரிந்து இருக்க மாட்டாமையாலும் அவரை அழைப்பித்துக் கொள்ள வேணும் என்று பார்த்தார்-
இனி நாம் போய்க் கொடு வர வென்றால் -அசங்கேத மநாலாபம் -என்றாப் போலே சொல்லுகிற சங்கல்பத்தைக்
குலைக்க வேண்டுகையாலே அது செய்ய ஒண்ணாதாய் இருந்தது –
இனி இவர் தாமே வர வென்றால்
அதுவும் தமக்கு ஸ்வரூப ஹாநியாய் இருந்தது -ஆன பின்பு விபீஷண ஆழ்வானை மஹா ராஜரை யிட்டு
ஆநயைநம் -என்றாப் போலே இவரையும் ஒருவரை யிட்டு அழைப்பிக்க வேணும் என்று பார்த்தார் –

அந்த விபீஷணன் ராஜ்ய காங்ஷியாய் இருக்கையாலே அருகு நிற்கிற இளைய பெருமாள் நிற்க
ராஜ்ய காங்ஷியாய்-ஹரிஸ்ரேஷ்டரான மஹா ராஜரை இட்டு அழைத்துக் கொண்டாப் போலே
சென்றதாம் என சிந்தனையே –
அடியேன் உள்ளத்தின் இன்னுயிரே –
என்னுளத்துள் நின்று உலாகின்றதே –
நிறை கொண்டது என் நெஞ்சினையே -என்றாப் போலே இவை மனந பரராய் இருக்கையாலே
மனந பரராய் ஸ்ரேஷ்டராய் இருப்பார் ஒருவரை இட்டு அழைப்பித்துக் கொள்ள வேண்டும் என்று பார்த்து
அருகே சேவித்து இருக்கிற லோக சாரங்க மஹா முநிகளைப் பார்த்து -ஆநயைநம் -என்று திரு உள்ளமாக

அவரும் எப்போதும் பெரிய பெருமாளை சேவித்து இருக்கையாலே பெரிய பெருமாள்
அபிஜன வித்யா வ்ருத்தங்களால் பூரணராய் இருப்பாரைப் பார்த்தருளி -ஏகாந்தங்களிலே
இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில் தொழுமினீர் கொடுமின் கொண்மின் -என்று
உபதேசிக்க கேட்டு இருக்கையாலும் –
நின் திருவெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றும் –
ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை யாள்வாரே -என்றும் –
பங்கயக் கண்ணனைப் பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறும் எம்மை யாளும் பரமரே -என்றாப் போலே
ஆழ்வார்கள் அருளிச் செய்ய கேட்டு  இருக்குமவர் ஆகையாலே கடுகப் போய் அவரை
அருள் பாடிட்டுத் தாம் சிரஸா வஹித்துக் கொண்டு வர-

இவரும் பெரிய பெருமாளுடைய கௌரவத்தைக் குலைக்க ஒண்ணாது என்று முநிவாஹநராய்
வந்து புகுந்து பெரிய பெருமாளைத் திருவடி தொழ  -பெரிய பெருமாளும் –
ஆவிர்ப்ப பூவ பகவான் பீதாம்பாதரோ ஹரி -என்று ஸ்தோத்ர பரனான ப்ரஹ்லாதனுக்கு
வந்து ஆவிர்ப்பவித்து அபேஷிதங்களைக் கொடுத்து -அவன் ராஜ்யாதிகளிலே போது போக்க
வல்லன் ஆகையாலே அவன் பார்த்துக் கொடு நிற்கச் செய்தே -தத்ரைவாந்தர தீயதே -என்று போக
பின்பு அந்த ராஜ்யாதிகளாலே ப்ரஹ்லாதனும் போது போக்கி இருந்தான் இறே-

இவர் அவனைப் போல் அன்றிக்கே அநந்ய சாதநராய் அநந்ய ப்ரயோஜனராய் இருக்கையாலே
நம் விச்லேஷம் பொறுக்க வல்லவர் அல்லர் என்று பார்த்தருளி தம்முடைய ஸ்வரூபாதிகளைக் காட்ட
இவரும் ப்ரீதரான வளவிலே இவர் மானஸ அனுசந்தானம் பண்ணுகிற தசையிலே –
ஆதி -விண்ணவர் கோன் -நீதி வானவன் –அரங்கத்தம்மான் என்றும் –
உலகம் அளந்து அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரைக் கவர்ந்த வெங்கணை காகுத்தன் –
என்றும் -விரையார் பொழில் சூழ் வேங்கடவன் -என்றாப் போலே தம்முடைய
பர வ்யூஹ விபவ அர்ச்சாவதாரங்களையும் தம் பக்கலிலே அனுசந்திக்கையாலே
இவற்றைத் தனித்தனியே அனுபவிக்க வேணும் என்கிற அபேஷை இவர்க்கு இல்லை என்கிற விடம்
ஹ்ருதயனாய்க் கொண்டு-

உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறியா நிற்கச் செய்தேயும் இவரைச் சோதிக்கைக்காக
இவற்றையும் இவர்க்குத் தனித்தனியே காட்டி இவர் அனுபவிக்கும்படி பண்ணுவோம் என்று
பார்த்தருளி -அது செய்யும் இடத்துப் புருஷார்த்தமாக வேண்டுகையாலே இவருடைய
அபேஷை யறிந்து செய்ய வேணும் -இல்லை யாகில் இவர் நாம் அத்தை பிரகாசிப்பித்துக் கொள்ள
ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே -என்னும் திரு மங்கை யாழ்வாரைப் போலே நிந்தித்தல்
தொண்டரடிப் பொடி ஆழ்வாரைப் போலே -அச்சுவை பெறினும் வேண்டேன் -என்று காற்கடைக் கொள்ளுதல் செய்வரோ
அறிய வேணும் என்று தம் திரு உள்ளத்திலே முன்னோர் அடிக் கொண்டத்தை அறிந்து -இவர் –
கடலிலே குழப்படி உண்டாமா போலே -பூர்ணம் -என்கிறபடியே பெரிய பெருமாள் பாடே
எல்லாம் இல்லையோ -ஆன பின்பு எனக்குப் பெரிய பெருமாளை ஒழிய வேறு ஒருவரை
அனுபவிக்க ச்ரத்தை யில்லை -எனக்கு உண்டானாலும் அவரை யநுபவித்த என் கண்கள்
மற்று ஒன்றினைக் காணாவே -என்கிறார் –

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–வியாக்யானம்-

கொண்டல் வண்ணனை –
கண்களுக்கு விஷயம் இருந்தபடி –
ந மாம்ஸ சஷூ ரபி வீஷதே தம் -என்றும் –
ந சஷூஷா பஸ்யதி கச்சநைநம் -என்கிற இலச்சினையை அழித்துத் தன் வடிவைக் காணும்படி
பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து சொல்லுகிறார் –
அங்கன் இன்றிக்கே
தம்முடைய பர வ்யூஹ விபவ அர்ச்சாவதாரங்களை இவர் அனுபவிப்பதாக திரு உள்ளத்தில்
பாரிக்கிறபடியை அனுசந்தித்து இது என்ன ஔதார்யம் என்று அந்த ஔதார்ய குணத்தை
நினைத்து -கொண்டல் வண்ணன் -என்கிறார் –
அங்கன் இன்றிக்கே –
சாம்சாரிகமான தாப த்ரயத்தாலே விடாய்த்த விடாய் தீரும்படியாக
அத்ரௌ சயாளு ரிவ சீதள காள மேக -என்கிறபடியே வர்ஷுகமான காளமேகம் போலே
இருக்கிற நிறத்தை உடையவன் -என்கிறார் ஆதல்
ஸ்ரமஹரமான வடிவை நினைத்து -கொண்டல் வண்ணன் -என்கிறார் ஆதல் –
வண்ணம் -என்று
ஸ்வபாவம் ஆதல் -நிறம் ஆதல் –
நம் ஆழ்வாரும் -முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி வுய்ந்தவன் -என்றார் இறே-

கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் –
அந்த மேகமானால் ஆகாசத்தே கடக்க நின்று நீரை வர்ஷித்துப் போம் இத்தனை இறே
அங்கன் இன்றிக்கே இடையரோடு இடைச்சியரோடு வாசியற ஒரு நீராகக் கலந்து
தன் வடிவு அழகை அவர்களுக்கு சர்வ ஸ்வ தாநம் பண்ணின படி –

கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் –
பர அவஸ்தனாய் வந்து வெண்ணெய் யமுது செய்யில் மாளிகைச் சாந்து நாறுமே –
சக்கரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்த அவஸ்தையில் மேன்மையாலே ராஜாவாக்கிச் சிலர்
சீராட்டுகையாலே வந்து வெண்ணெய் காண ஒண்ணாதே -அதுக்காக –
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் –
சக்ரவர்த்தி தன்னுடைய ராஜ ஐஸ்வர்யத்தை புஜிக்கைக்கு -எனக்கொரு பிள்ளை வேணும் -என்று
மஹதா தபஸா -என்கிறபடியே நோற்றுப் பெருமாளைப் பெற்றாப் போலே
ஸ்ரீ நந்த கோபரும் -கானாயர் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற வானாயன் –
என்கிறபடியே திருவாய்ப்பாடியிலே கவ்ய ஸம்ருத்தி யடைய பாழ் போக ஒண்ணாது என்று
இத்தை புஜிக்கைகாக நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளை யாய்த்து கிருஷ்ணன்-

வெண்ணெய் உண்ட வாயன் –
பெரிய பெருமாள் கொறுட்டை மோந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் நாறா நிற்கும் –
வெண்ணெய் உண்ட வாயன் —
ஆஸ்ரிதர் உடைமை யாகையாலே தத் ஸ்பர்சம் ஆகாதே என்று இன்றும் அகப்பட அந்தக் குணுங்கு
நாற்றம் வாயிலே தோன்றும்படி இறே  பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுவது –
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ -என்று சந்தேஹிக்க வேண்டாதபடி யாய்த்து
இன்றும் அகப்பட வாய் குணுங்கு நாறும்படி
வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை –
கோவலனாய் வெண்ணெய் வுண்டாப் போலே -கொண்டல் வண்ணனாய் என்னுள்ளம் கவர்ந்தானை
யசோதைப் பிராட்டி வுடைய நெஞ்சிலே பண்ணின ச்ரத்தையை என் நெஞ்சிலே பண்ணி புஜித்தவனை
அந்த திருவாய்ப்பாடியிலே பெண்கள் உறிகளிலே வெண்ணெயை வைத்து கள்ளக்
கயிறு உருவி இட்டு வைத்துப் போவர்கள் –
அந்த உறிகளின் குறி அழியாது இருக்க
அந்த வெண்ணெய் பானைகளை வெறும் தரை யாக்கினாப் போலே யாய்த்து -அரங்கம் தன்னுள்
கள்வனார் நான் குறி அழியாது இருக்க என்னுடைய சிந்தையை அபஹரித்த படி-

என் உள்ளம் கவர்ந்தானை –
வைத்த குழி அழியாது இருக்க -வெண்ணெய் விழுங்கி வெறும் கலம் ஆக்கினாப் போலே
என்னுடைய சரீரம் குறி அழியாது இருக்க என்னுடைய மனஸை அபஹரித்தான் –
கலம் இருக்க வெண்ணெய் குடி போனாப் போலே யாய்த்து -இவர் உடம்பு இருக்க அகவாய் குடி போன படி –
என் உள்ளம் கவர்ந்தானை —
தைவீம் சம்பதமபிஜாதரான -பெரியவர்கள் அகப்பட தம்தாமுடைய
மனஸை இவன் பக்கலிலே வைக்க வேணும் என்று பார்த்து -அது செய்யப் போகாமல்
சஞ்சலம் ஹி மன க்ருஷ்ண -என்றாப் போலே பெரும் காற்றைத் தாம் பிடிக்கலாம் –
என் மனஸை ஒரு அளவாக்கப் போகிறதில்லை -என்னும்படி இறே மனஸ்ஸினுடைய
சஞ்சலத்வமும் திமிரும்படியான மிடுக்கும் -அப்படி -நின்றவா நில்லாத மனஸ்சை
என் பக்கல் அபேஷை இன்றிக்கே இருக்க -நானும் அறியாதபடி –
அபஹரிதுத்து தன் பக்கலிலே சேர்த்துக் கொண்டான் –

அண்டர் கோன்
இப்படி இடையரோடும் இடைச்சிகளோடும் தண்ணியரான உம்மோடும் வாசியற வந்து கலந்து
வெண்ணெயையும் மனசையும் அவன் களவு கண்டது -புறம்பு ஆள் இல்லாமையாலும்
தன் குறையிலுமாவோ என்ன –
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி
அந்தூபந்தரா நிற்கச் செய்தே கிடீர் ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து அவதரித்தது என்கிறார் –
அன்றிக்கே –
அண்டர் -என்று
இடையர் என்னுதல் –
அண்டாந்தர்வர்த்திகள் என்னுதல்
அணி யரங்கன் –
என் நெஞ்சை அபஹரித்து -சேணுயர் வானத்திலே -போய் இருக்கை அன்றிக்கே
கண்ணிட்டு காணலாம்படி சம்சாரத்துக்கு ஆபரணமான கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறவன்
சம்சாரிகள் அறவைத்தனப் படாதபடி யாலே இறே இக்கிடை கிடக்கிறது
அணி யரங்கன் என் அமுதினை –
தேவர்கள் அம்ருதம் போலே உப்புச் சாறாய் எட்டா நிலத்திலே இருக்குமதன்று இறே இவருடைய அம்ருதம்-

அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினை –
அளப்பரிய வாரமுதை அரங்க மேய வந்தணனை -என்கிற வம்ருதம் இறே –
அமுதினைக் கண்ட கண்கள் –
இந்தக் கண்கள் இவரைக் காணாது ஒழியப் பெற்றதாகிலும் புறம்பே போகலாய்த்து –
காட்சி தான் அரை வயிற்று யாகிலும் புறம்பே போகலாய்த்து
அங்கன் இன்றிக்கே -பூர்ண அனுபவம் பண்ணின கண்கள் –
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
அம்ருத பானம் பண்ணினாரை பாலையும் சோற்றையும் தீற்றப் போமோ –
மற்று ஒன்றினைக் காணாவே –
பாவோ நாந்யாத்ர கச்சதி -போலே இந்தப் பெரிய பெருமாள் தம்மை கேசாதி பாதாந்தமாக
அனுபவிக்க வேணும் என்று பார்த்தாலும் சக்தன் அல்லேன்
என் உள்ளம் கவர்ந்தான் -என்கையாலே
சித்த அபஹாரம் பண்ணின படியைச் சொன்னார் –
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்கையாலே
த்ருஷ்ட்ய அபஹாரம் பண்ணின படியைச் சொல்லுகிறார்

அல்லாதார் திருநாமப் பாட்டுப் போலே தம்மை சொல்லிற்று இலர்
விஸஸ்மார ததாத்மாநம் -என்கிறபடியே தாம் போக ப்ரவணராய் தம்மை மறக்கையாலே –
பலம் -சதா பச்யந்தி -யாகையாகில் அது இங்கே சித்திக்கையாலே பலத்துக்கு பலம்
வேணுமோ என்று சொல்லிற்று இலர்
இந்தக் கண்கள் புறம்பே சிலவற்றை காண வேண்டுவது இங்கே சில குறை வுண்டாகில் அன்றோ
இவர் பக்கல் ஔதார்யம் இல்லை என்று போகவோ –
வடிவில் பசை இல்லை என்று போகவோ –
சௌசீல்யம் இல்லை என்று போகவோ –
நெஞ்சுக்கு பிடித்து இருந்தது இல்லை என்று போகவோ –
மேன்மை இல்லை என்று போகவோ –
சௌலப்யம் இல்லை என்று போகவோ –
போக்யதை இல்லை என்று போகவோ –
அனுபவத்தில் குறை உண்டு என்று போகவோ –

————————————————————————–

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை –

இவ் வாழ்வார் அடியேன் என்னுமது ஒழிய இப் ப்ரபந்தம் தலைக் கட்டுகிற அளவிலும்
தம்முடைய பேருமூரும் பேச மறக்கும்படி தாம் பெற்ற அனுபவத்துக்கு பெரிய பெருமாள் இனி ஒரு
விச்சேதம் வாராதபடி பண்ணின படியைக் கண்டு -தம்முடைய ஆத்மாவதியான
அநந்ய அநுபவ ரசத்தை முக்தனுடைய சாம கானத்தின் படியிலே பாடி அநாதி காலம்
பாஹ்ய அனுபவம் பண்ணின க்லேசம் தீர்ந்து க்ருத்தராகிறார் –

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம்-

கொண்டல் வண்ணனை –
கடலில் உள்ள நீரை எல்லாம் வாங்கி காவேரீ மத்யத்திலே படிந்ததொரு காளமேகம் போலே கண்டார்க்கு
ஸ்ரமஹரமான திருமேனியை உடையவனை -அங்கன் அன்றிக்கே –
ஜங்கம ஸ்தாவரங்களை எல்லாம் உஜ்ஜீவிக்கும்படி ஜல ஸ்தல விபாகமற காருண்ய ரசத்தை
வர்ஷிப்பதொரு காளமேகத்தின் ஸ்வ பாவத்தை வுடையவனை என்னவுமாம் –

கோவலனாய் வெண்ணெய் வுண்ட வாயன் –
எட்டும் இரண்டும் அறியாத இடையரையும் இடைச்சிகளையும் ரஷிக்கையாலே தன்னுடைய சர்வ லோக ரஷகத்வம்
வெளிப்படும்படி இடையரிலே ஒரு ரூபத்தைக் கொண்டு ஆஸ்ரீதர் உகந்த த்ரவ்யம் எல்லாம்
தனக்கு உகப்பு என்னும்படி தோற்ற அவர்கள் ஈட்டிய வெண்ணெய் -சூட்டு நன் மாலை -யில் படியே
அப்ராக்ருத போகம் போலே அனுபவித்து -அத்தாலே இப்போதும் குணுங்கு நாறும்படியான திரு முகத்தை வுடையவன்-

என் உள்ளம் கவர்ந்தானை –
இடைச்சிகள் வைத்த வெண்ணெய் போலே இவருடைய திரு உள்ளம் பெரிய பெருமாளுக்கு
நவநீதம் ஆயிற்று -ஜ்ஞானம் பிறந்த பின்பும் என்னது என்னும்படி அஹங்கார மமகாரங்கள்
வடிம்பிடுகிற என்னுடைய மனஸை -வடிவு அழகாலும் சௌலப்ய சௌசீல்ய வாத்சல்யாதிகளாலும்
வசீகரித்து -இனி என்னது என்ன ஒண்ணாதபடி கைக் கொண்டவனை –

அண்டர் கோன் –
இடையருக்கும் நியாம்யனாய் நின்ற எளிமை குணமாம்படி -அண்டாதிபதியான ப்ரஹ்மா
முதலாக மற்றும் அண்டாந்தர் வர்த்திகளான தேவாதிகளை எல்லாம் ஸ்வ அதீநராக்கி
வைத்து இருக்கிற ஸ்வாமித்வ ஸ்வா தந்த்ர்யாதிகளை உடையவன் –
கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியன் இமையோர்க்கும்
என்கிறார் ஆகவுமாம் –
அணி யரங்கன் –
ஸூரிகளும் ஸ்வ தேசத்தை விட்டு இங்கே வந்து சேவிக்கும்படி ஆகர்ஷமான அழகை
உடைத்தான ஸ்தாந விசேஷத்திலே அடியேனை அநுபவ ரச பரவசம் ஆக்கினவனை-

என் அமுதினை –
பரம பதத்திலும் ஷீரார்ணவத்திலும் ஆதித்ய மண்டலாதிகளிலும் அவ்வோ நிலங்களுக்கு
நிலவரானவர் அநுபவிக்கும் படியான அம்ருதமாய் நின்றாப் போல் அன்றிக்கே
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -என்கிற நானும் அநுபவிக்கும் படி எனக்கு அசாதாரணமாய்
ஜரா மரணாதி ப்ரவாஹத்தை நிச் சேஷமாக கழிக்க வல்ல நிரதிசய போக்யமானவனை –
ப்ராக்ருத போக ப்ரவணரான தேவர்கள் அநேக பிரயாசத்தோடே பெற்று அநுபவிக்கும் அம்ருதம்
போல் அன்றிக்கே -அனன்ய பிரயோஜனான நான் அயத்நமாக பெற்று அநுபவிக்கும் படியான
அம்ருதமானவனை என்னவுமாம்-

கண்ட கண்கள் –
என்கிற இதிலே- என் கண்கள் -என்னாமையாலே நிர் மமத்வம் தோற்றுகிறது -இப்படி
பாதித அநுவ்ருத்தி யில்லாதபடியான தத்வ ஜ்ஞானம் பிறந்து சர்வத்திலும் நிர்மமராய்
இருக்கிற இவர் முன்பு –
என் கண் –என்றும்
என் சிந்தனை -என்றும் –
அடியேன் உள்ளம் -என்றும்
என் உள்ளம் -என்றும்
மமகாரம் பின் துடர்ந்தது தோன்றப் பேசுவான் என் என்னில் –
ஸ்வதந்திர ஸ்வாமியான ஈஸ்வரன் சர்வ சேஷ பூதமான சேதன அசேதனங்களிலே
ஸ்வார்த்தமாக ஒன்றை ஒன்றுக்கு சேஷமாக அடைத்து வைத்தால் -அவன் அடைத்தபடி
அறிந்து பேசுவார்க்கு நிர் மமத்தோடே சேர்ந்த இம் மமகாரம் அநபிஜ்ஞர்  மமகாரம் போலே தோஷம் ஆகாது

மற்று ஒன்றினைக் காணாவே
இதுக்கு முன்பு எல்லாம் பாஹ்ய விஷயங்களிலே ப்ரவணங்களாய் -அவற்றைக் கண்ட போது
ப்ரீதியும் காணாத போது விஷாதமுமாய் சென்று இப்போது நித்ய தரித்ரனானவன்
நிதியைக் கண்டால் போலே அநந்த குண விபூதி விசிஷ்டமாக இம் மஹா விபூதியை
அநுபவிக்கப் பெற்ற கண்கள்-

மற்று ஒன்றினைக் காணாவே –
ப்ராப்த விஷயத்திலே பிரதிஷ்டிதமான சங்கத்தை உடைத்தான படியாலே பரிசர்யார்த்தமாக
வந்து பார்சவ வர்த்திகளாய் நிற்கும் பத்ம யோநி முதலானாரையும் பாராது
புருஷாணாம் சஹஸ்ரேஷூ யேஷூவை ஸூத்த யோநிஷூ
அஸ்மான்ந கச்சின் மனஸா சஷூ ஷா வாப்ய பூஜயத் -என்கிறபடியே ப்ரஹ்ம புத்ரர்களாய்
யூயம் ஜிஜ்ஞா சவோ பக்தா -என்னும் அளவான ஏகதர் த்விதர் த்ரிதர் திறத்தில் ஜ்ஞாநிகளான
ஸ்வேத தீப வாசிகள் உடைய அநாதாரத்தை இங்கே அனுசந்திப்பது –
ப்ராப்ய ச்வேதம் மஹாத்வீபம் நாரதோ பகவான் ருஷி
ததர்ச தாநேவ நரான் ச்வேதாம்ச் சந்திர ப்ரபான் ஸூபான்
பூஜயாமாச சிரஸா மனஸா தைஸ்  ஸூ பூஜித -என்று
ஸ்ரீ நாரத பகவான் அளவிலும் அவர்கள் பரிமாற்றம் சொல்லப்பட்டது
உவாச மதுரம் பூயோ கச்ச நாரத மாசிரம்
இமே ஹ்ய நிந்த்ரியா ஹாரா மத் பக்தாஸ் சந்த்ர வர்ச்சச
ஏகாக்ராச் சிந்தயே யுர்மாம் நைஷாம் விக்நோ பவேதிதி -என்று பகவான் அருளிச் செய்த
வார்த்தையையும் இங்கே அனுசந்திப்பது-

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐம் கருவி கண்ட வின்பம் -என்கிற
ஐஸ்வர்ய அனுபவத்திலும்
தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம் -என்கிற ஆத்ம மாத்ர அநுபவ ரசத்திலும்
தமக்கு நிஸ் ப்ருஹதை பிறந்த படியிலே இங்கு தாத்பர்யம்
அங்கன் அன்றிக்கே –
பிரதானமான அனுபவத்திலே இழிந்த படியினாலே
ஸ்ரீ ய பதிக்கு பிரகாரமாக வல்லது மற்று ஒன்றையும் தாம் அநுபவியாத படியிலே தாத்பர்யம் ஆகவுமாம்
பெரிய பெருமாள் திரு மேனியிலே திருமலை முதலாக் கோயில் கொண்ட அர்ச்சாவதாரங்களிலும்
ராம க்ருஷ்ண வாமன வட பத்ர சயநாதிகளிலும் உள்ள போக்யதை எல்லாம் சேர
அநுபவித்து இவ்வாபி ரூப்யத்திலே ஈடுபட்ட என் கண்கள் மற்றும் பர வியூஹ விபவாதிகளான
திருமேனிகளை எல்லாம் சேரக் காட்டினாலும் ஸ்தநந்தயத்துக்கு போக்யாந்தரங்கள் ருசியாதாப்
போலே -பாவோ நாந்யாத்ர கச்சதி -என்கிறபடியே அவை ஒன்றும் ருசியாது என்கிறார் ஆகவுமாம்
இது இவருடைய அநந்ய பிரயோஜனத்வ காஷ்டை யிருக்கிறபடி-

ஆதி மறை யென வோங்கு மரங்கத்துள்ளே
யருளாரும் கடலைக் கண்டவன் என் பாணன்
ஓதிய தோற இரு நான்கும் இரண்டுமான
வொரு  பத்தும் பத்தாக வுணர்ந்து உரைத்தோம்
நீதி யறியாத நிலை யறிவார்க்கெல்லாம்
நிலை யிதுவே யென்று நிலை நாடி நின்றோம்
வேதியர் தாம் விரித்து உரைக்கும் விளைவுக்கு எல்லாம்
விதையாகும் இது வென்று விளம்பினோமே

காண்பனவும் உரைப்பனவும் மற்று ஓன்று இன்றி
கண்ணனையே கண்டு உரைத்த கடிய காதல்
பாண் பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும்
பழ மறையின் பொருள் என்று பரவுகின்றோம்
வேண் பெரிய விரி திரை நீர் வையத்துள்ளே
வேதாந்த வாரியன் என்று இயம்ப நின்றோம்
நாம் பெரியோம் அல்லோம் நாம் அன்றும் தீதும்
நமக்கு உரைப்பார் உளர் என்று நாடுவோமே

இதி கவிதார்க்கி சிம்ஹ சம்யக் வ்யாநுஷ்ட சாத்விக ப்ரீத்யை
முநி மஹித ஸூக விகாதா தஸகமிதம் தேசிகோப ஜ்ஞம்
முநி வாஹந போகோயம் முக்தைச்வர்யரசோபம
க்ருபயா ரங்க நாதச்ய க்ருதார்த்தயது நஸ் ஸதா –

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

அமலனாதி பிரான் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் -ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய் –

May 24, 2013

ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே —–9-

——————————————————————————-

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-அவதாரிகை –

ஊரழி பூசல் போலே  திரு மேனியின் நிறமானது எல்லாவற்றையும் கூடக் கொண்டு வந்து
என் நெஞ்சைக் கொள்ளை கொண்டது என்கிறார்-

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-வியாக்யானம் –

ஆல மா மரத்தின் இத்யாதி –
பெரிய ஆல  மரத்தினுடைய சிற்றிலையிலே யசோதாள் தநந்தயமும் பெரியது என்னும்படி அத்விதீயனான பாலனாய் –
ஒரு பாலகனாய் –
யசோதாள் தநந்தயனான கிருஷ்ணனனும் முரணித்து இருக்கும்படி
இவனுடைய பால்யம் செம்பால் பாயா நிற்கும்
ஞாலம் இத்யாதி –
சிறு பிரஜைகள் புரோவர்த்தி பதார்த்தங்களை எடுத்து வாயிலீடுமா போலே
பூமிப் பரப்படைய வாயிலே வைத்தானாய்த்து பிள்ளைத்தனம் –
பிரளயத்தில் தன் அகடிதகடநத்தோடு ஒக்கும் -என்னை அகப்ப்டித்தன படியும்

அரங்கத்தரவினணையான் –
சம்சார பிரளயத்தின் நின்றும் எடுக்கக் கிடக்கிற படி
அந்த ஆலின் இலையில் நின்றும் இங்கே வரச் சருக்கின வித்தனை காணும்
அந்த உறவு ஒன்றுமே இவர் அச்சம் கெடுக்கிற வித்தனை காணும்
இப்ப்ரமாதத்தோடே கூடின செயலை செய்தான் என்று பயப்படுமவர்கள் அச்சம் கெடும்படி கிடக்கிற விடம்
அரவின் அணையான் –
பிரளயத்தில் தன் வயிற்றில் புகா விடில் ஜகத்து ஜீவியாதது போலே
சம்சாரிகள் தன் முகப்பே விழியா விடில் தனக்குச் செல்லாதான படி-

கோல மா மணி யாரமும் –
அழகியதாய் பெரு விலையனாய் இருந்துள்ள ரத்னங்களாலே செய்யப்பட ஆரமும்
முத்துத் தாமமும் –
முத்து மாலையும்
கோலம் –
இது பெருமாளைச் சொல்லுகிறது
முடிவு இல்லாதோர் எழில் நீல மேனி –
அவதி காண வொண்ணாத அழகை உடைய நெய்தத திருமேனி
ஐயோ –
பச்சை சட்டை உடுத்து -இட்டு -தனக்கு உள்ளத்தை அடையக் காட்டி எனக்கு உள்ளத்தை
யடையக் கொண்டான்
நிறை கொண்டது என் நெஞ்சினையே -எனக்கு அகவாயில் காம்பீர்யத்தைப் போக வடித்தது

இப் பாட்டால் வட தள சயநமும் பெரிய பெருமாள் பக்கலிலே உண்டு -என்கிறது –

——————————————————-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை –

ஊரழி பூசல் போலே  திரு மேனியின் நிறமானது எல்லாவற்றையும் கூடக் கொண்டு வந்து
என் நெஞ்சைக் கொள்ளை கொண்டது என்கிறார்-கீழ்ப் பாட்டில் –
கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே -என்று –
ப்ரஹ்ம தண்ட ப்ரகாசாநாம் வித்யுத் சத்ருச வர்ச்சசாம் -ஸ்மரன் ராகவ பாணாநாம் விவ்யதே ராஷசேஸ்வர –
என்கிறபடியே ராம சரம் போலே இருக்கிற அந்த கடாஷ பாதங்களாலே –
கடைக்கண் என்னும் சிறைக்கோலால் நெஞ் சூடுருவவே வுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை –
என்றாப் போலே இவர் படுகிற பாட்டக் கண்ட திரு மேனியானது –
தனிப் பூ சூடுவாரைப் போலே நம்முடைய அவயவ சௌந்தர்யத்தை தனித் தனியே அனுபவித்தார்
இத்தனை யன்றோ –
இவர் கலம்பகன் மாலை சூடுவாரைப் போலே இந்த அவயவங்களுக்கு
ஆச்ரயமான நம்மை அவற்றோடே கூட அனுபவிக்க பெற்றிலரே –
இனி மற்றை ஆழ்வார்களைப் போலே பரக்கப் பேசி நின்று அனுபவிக்கவும் அல்லர்
ஆன பின்பு இந்த அவயவங்களோடும் ஆபரணங்களோடும் சேர்ந்த சேர்த்தியால் வந்த அழகும்
ஸ்வாபாவிக சௌந்தர்யத்தால் வந்த அழகுமான நம்முடைய சமுதாய சோபையை
இவரை அனுபவிப்பிக்க  வேணும் என்று பார்த்து –
ராஜாக்கள் உறு பூசலாய் கொலையிலே பரந்து தங்களுடைய சதுரங்க பலத்தையும் சேர்த்துக் கொண்டு
அணி அணியாகச் சிலர் மேலே ஏறுமா போலே –
இந்த திரு மேனியானது -அவயவங்களையும் -ஆபரணங்களையும்
சேர்த்துக் கொண்டு தன்னுடைய சமுதாய சோபையைக் காட்டி –
உய்விட மேழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர் கட்கும் எவ்விடம் -என்று கொண்டு மேல் விழுந்து தம்முடைய
திரு வுள்ளத்தைக் தன் பக்கலிலே இழுத்துக் கொள்ள
தாம் அதிலே யகப்பட்டு நெஞ்சு இழிந்த படியைச் சொல்லுகிறார் –

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-வியாக்யானம் –

கீழ் ஐந்தாம் பாட்டாலே –
தம்முடைய துஷ் கர்மங்களை சவாசநமாகப் போக்கின படியைச்சொல்லி
எட்டாம் பாட்டாலே -பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட -என்று பிறந்த கர்மங்களுக்கு அடியான
அவித்யையை தமோ ரூபமான ஹிரண்யனை கிழித்து பொகட்டாப் போலே
ஞானக் கையால் நிரசித்தான் என்றும் இறே இவர் சொல்லி நின்றது -இத்தைக் கேட்டவர்கள்
இந்த தேசமாகிறது -இருள் தரும் மா ஞாலம் ஆகையாலே -தெளி விசும்பின் நின்றும்
சர்வேஸ்வரன் தானே அவதரிக்கிலும் அவனுக்கும் சோக மோகங்களை உண்டாக்குமதாய் இருக்கும்
காலத்தைப் பார்த்தவாறே அப்ரஜ்ஞா தண்ட லிங்காநி -என்கிறபடியே உள்ள அறிவையும் அழித்து
விபரீத அனுஷ்டானத்துக்கு உடலான லிங்கங்களையும் உதித்தாய் இருக்கும்
தேகத்தைப் பார்த்தால் -பகவத் ஸ்வரூப தீரோதா நகரீம் -என்கிறபடி பகவத் ஸ்வரூபத்தை
மறைத்து விபரீத ஜ்ஞானத்தை பிறப்பிக்குமதாய் இருக்கும்
வேதாந்த ஞானத்தால் அல்லது அஞ்ஞானம் போகாது -உமக்கு அந்த வேதாந்த ஸ்ரவணத்துக்கு
அதிகாரமே பிடித்தில்லை -வேதாந்த விஜ்ஞான ஸூ நிச்சிதார்த்தா -என்றாப் போலே சொல்லுகிற
வேதாந்த ஞானம் உடைய பெரியவர்கள் பாடே சென்று உபசத்தி பண்ணி அவர்களுக்கு
அந்தே வாசியாய் இருந்து இவ்வர்தங்களைக் கேட்டு அறிய ஒண்ணாதபடி நிஹீந ஜன்மத்திலே
பிறந்தவராய் இருந்தீர் –
ஆக தேசம் இது காலம் இது தேகம் இது உம்முடைய ஜன்மம் இது -இப்படி இருக்க

பகவானான கீதோப நிஷ தாசார்யன் கீதை பதினெட்டோத்திலும் -நெறி எல்லாம் எடுத்து உரைக்க –
தைவீம் சம்பதமவிஜாதனான அர்ஜுனன் இத்தைக் கேட்டு -நஷ்டோ மோஹ ஸ்ம்ருதிர் லப்தா –
என்றும் சொன்னாப் போலே நீர் உம்முடைய அஞ்ஞாநாதிகள் அடைய போய் ஜ்ஞானம் பிறந்ததாகச்
சொல்லா  நின்றீர் -இது அகடிதமாய் இருந்ததீ -என்ன -பிரளய காலத்திலே இந்த ஜகத்தாக
நோவு படப்புக இத்தை யடையத் தான் அதி சிசுவாய் இருக்கத் தன் சிறிய வயிற்றிலே வைத்து –
ஆலன்று வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு –
என்னும் படி யிருக்கிற ஓர் ஆலிலை ஓட்டைக் கோட்டை போராதாய் இருப்பதோர்
ஆலம் தளிரிலே கண் வளர்ந்து இந்த ஜகத்தை அடைய ரஷித்தருள அந்த அகடிதகடநா
சமர்த்யமுடைய வனுக்கு என்னுடைய விரோதியைப் போக்கி எனக்கு ஜ்ஞானத்தைப்
பிறப்பித்த விது சால அகடிதமாய் இருந்ததோ என்கிறார்-

ஆல மா  மரத்தின் இலை மேல் –
பாலாலிலை -என்கிறபடியே ஆல மா மரத்திலே
நெரியில் பால் பாயும்படி யிருக்கிற இளம் தளிரிலே
மா மரம் -என்று
விபரீத லஷணை யாய்ச் சிறிய மரம் என்றபடி –
இலை மேல் -என்கையாலே
இந்த இலைக்குள்ள அடங்கும்படி யாய்த்து வடிவின் சிறுமை யிருப்பது –
ஒரு பாலகனாய் –
யசோதா ஸ்த நந்த்யம் ப்ரௌட தசை என்னும்படி அத்விதீயனான பாலனாய் –
யசோதா ஸ்தநந்யமான கிருஷ்ணனும் முரணித்து இருக்கும்படி இவனுடைய பால்யம் செம்பால் பாயா நிற்கும் –
இந்த பால்யத்தை உபபாதிக்கிறார் மேல் –

ஞாலம் ஏழும் உண்டான் –
சிறுப் பிள்ளைகளாய் இருப்பார் -புரோ வர்த்தி பதார்த்தங்கள் அடைய எடுத்து
வாயிலே இடுமா போலே -மஞ்சாடு வரை ஏழும் ஈசன் -என்கிறபடியே -சப்த லோகங்களையும் இவற்றைச் சூழ்ந்த
கடல்கள் ஏழையும் குல பர்வதங்கள் ஏழையும் மற்றும் உள்ளவையும் அடைய எடுத்து அமுது செய்தான் –

தேவ திர்யக் மநுஷ்ய ஸ்தாவர ரூபமான ஜகத்தை யடைய வமுது செய்யா நிற்க
ஒரு ஸ்தாவரம் உண்டாய் -அதின் தளிரிலே இடம் வலம் கொண்டு கண் வளர்ந்து அருளுகை
யாகிற விந்த அகடிதங்களைச் செய்தவனுக்கு
அந்த தேச கால தேக ஜன்மங்களால் உண்டான
நிகர்ஷம் பாராதே எனக்கு ஜ்ஞானத்தைப் பிறப்பித்து -இதுக்கு விரோதிகளான அஜ்ஞாநாதிகளைப்
போக்கி சால அகடிதமாய் இருந்ததோ –
என்னால் போக்கிக் கொள்வது அன்றோ அரிது
அவனுக்கு அரியது உண்டோ -பிரளயத்தில் அகடிதகட நத்தொடு ஒக்கும் என்னை அகப்படுத்தின படி

அரங்கத் தரவின் அணையான் –
சம்சார பிரளயத்தின் நின்றும் எடுக்க கிடக்கிற படி
அவ்வாலிலை நின்றும் இங்கே வரச் சருக்கின வித்தனை –
இப் ப்ரமாதத்தோடே கூடின செயலை செய்தான்
என்று பயப்படுமவர்கள் அச்சம் கெடும்  படி கிடக்கிற இடம்-

அரவின் அணையான் –
அந்தப் பிரளய ஜலதியிலே இந்த ஜகத்தை யடைய தன் திரு
வயிற்றுக்கு உள்ளே வைத்து -தான் அத்யந்த சிசுவாய் -ஆலிலை என்று பேர் மாத்ரமான
ஓர் இளம் தளிரிலே இடம் வலம் கொண்டு கண் வளரா நின்றான் -இப்படி பெரிய ஜகத்தை
எல்லாம் அமுது செய்தால் அறாது ஒழித்தல் -அமுது செய்த அண்டத்தின் பெருமையாலும்
இவற்றின் சிறுமையாலும் வயிறு விரிதல் -ஆலம் தளிரிலே இடம் வலம் கொள்ளப் புக்கால்
கடலிலே புக்குப் போதல் செய்யில் செய்வது என் -என்று வயிறு பிடிக்க வேண்டாதபடி –
திருவரங்கப் பெரு நகராகிற பெரிய கோயிலிலே –
இருள் இரியச் சுடர் -அனந்தன் என்னும் அணை என்கிற
பெரிய படுக்கையிலே மொசு மொசு என்று வளர்ந்த பெரிய வடிவும் தாமுமாய்ப் பெரிய
பெருமாள் கண் வளர்ந்து அருளின படி –

அங்குப் பரிவர் இல்லை என்கிற குறையும் இல்லை இறே
படுக்கையான இவன் தான் -சிந்தாமணி மிவோத் வாந்த முத் சங்கே நந்த போகிந –
என்கிறபடியே ஜகத் உபாதாநமாய் இருப்பதொரு சிந்தாமணியை உமிழ்ந்து இத்தை யாரேனும் ஒருவர்
இறாய்ஞ்சிக் கொள்ளில் செய்வது என் என்று தன் மடியில் வைத்து -படியிலோ வைத்து –
கரண்டகம் இட்டு கொண்டு கிடக்கிறாப் போலே இருக்கிற –
தீ முகத்து நாகணை -என்றும் –
ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும் பூங்காரரவணை -என்றும் சொல்லுகிறபடியே
இவ் வஸ்துவுக்கு என் வருகிறதோ என்று தன்னுடைய பணா மண்டலங்களாலே விஷ அக்நியை
உமிழ்ந்து கொண்டு -நோக்கிக் கொண்டு -போருகையாலே அவாந்தர பிரளயத்திலே அகப்பட்டவர்களை
தன் திரு வயிற்றிலே வைத்து ரஷித்தான் –
சம்சாரம் ஆகிற மஹா பிரளயத்திலே புக்கவர்களை
ஸ்ரீமான் ஸூக ஸூப்த -என்றும் –
கிடந்ததோர் கிடக்கை -என்றும் சொல்லுகிற தன் கிடை யழகைக் காட்டி ரஷித்தான் –
இப்படி கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் வடிவு இருக்கிறபடியைச் சொல்லுகிறார் மேல்

கோல மா மணி யாரமும் –
ஸ்ரீ கௌஸ்துபம் போலே மஹார்க்கமாய்ப் பெரு விலையனான
மாணிக்கங்களாலே அழுத்தப் பட்டு திரு மேனிக்கு அலங்காரமான ஹாரத்தையும்
முத்துத் தாமமும் –
த்ரி சரம் பஞ்ச சரம் சப்த சரம் என்றாப் போலே சொல்லுகிற திருமேனியின்
மார்த்த்வத்துக்கு அநு ரூபமான குளிர்த்தியை உடைய முத்து வடங்களையும்

முடிவு இல்லாதோர் எழில் நீல மேனி –
அவதி காண ஒண்ணாத அழகை வுடைய நெய்தத திருமேனி –
அபரிச்சித்தமாய் அத்விதீயமான சமுதாய சோபையை உடையதுமாய்
நீல மேனி –
இந்த ஆபரணங்களாலும் சமுதாய சோபையாலும் ஓர் அழகு வேண்டாதபடி
இவை தனக்கு நிறம் கொடுக்கும் படி -மங்கு நீலச் சுடர் தழைப்ப -என்கிறபடியே
நீல தோயதா மத் யஸ்தா வித் யுல்லேகா -கல்பமான வடிவு –
த்ருதகந கஜ கிரி பரிமிள துததி ப்ரச லித லஹரி வத் –
என்கிறபடியே அந்தத் திருமேனி தன்னை பார்த்தாலும் அறப் பளபளத்து அத்தை நீக்கி
உள் வாயிலே கண்ணை யோட்டிப் பார்த்தால் காண்கிறவன் கண்களிலே குளிர அஞ்சனத்தை
எழிதினால் போலே யாய்த்து –அவனுக்கு ஆனந்தத்துக்கு அவதி இன்றிக்கே ஒழிகிறதும்
வடிவின் வைலஷண்யத்தாலே இறே

நிறை கொண்டது என் நெஞ்சினையே –
என்னுடைய ஹ்ருதயத்தில் உண்டான பூர்த்தியை அவஹரித்தது –
என் அகவாயில் காம்பீர்யத்தையும் போகவடித்தது -இந்த ஜகத்துக்கு கரண களேபரங்களை இழவாமல்
தன் திருவயிற்றிலே வைத்துக் காத்தவனாய் இருக்க அவனுக்கு அபிமதமான அவ்வடிவு
என்னுடைய கரணத்தை யழித்தது-

ஐயோ –
பச்சைச் சட்டை இட்டுத் தனக்கு உள்ளத்தைக் காட்டி எனக்கு உள்ளத்தை
அடைய கொண்டான் -நான் எல்லாவற்றையும் அநுபவிக்க வேணும் என்று இருக்க எனக்கு
அநுபவ பரிகரமான என் நெஞ்சைத் தன் பக்கலிலே இழுத்துக் கொள்வதே -ஐயோ -என்கிறார் –

————————————————-

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை –

அவயவ சோபைகளிலே ஆழம் கால் பட்ட தம்முடைய நெஞ்சு வருந்தி எங்கும் வியாபித்து
சர்வ அவயவ சோபைகளோடும் கூடின சமுதாய சோபையாலே பூரணமாய் -நித்ய அநுபவ
ஸ்ரத்தையாலே முன் பெற்றதாய் நினைத்து இருந்த பூர்த்தியை இழந்தது என்கிறார்-

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் –

ஆல மா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய் –
ஓர் அவாந்தர பிரளயத்திலே -ஆல் அன்று வேலை நீர் உள்ளதோ விண்ணதோ மண்ணதோ -என்று
அறிய அரியதாய் அநந்த சாகமாய் இருப்பதொரு வட வருஷத்திலே ஓர் இலையிலே தாயும் தந்தையும்
இல்லாத தொரு தனிக் குழவியாய்
ஞாலம் ஏழும் உண்டான் –
அடுக்குக் குலையாமல் மார்க்கண்டேயன் காணும்படி சர்வ லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்தவன் –

அரங்கத்து அரவின் அணையான் –
பிரளய காலத்திலே பாலனாய்க் கொண்டு ஆலிலை மேல் கண் வளர்ந்து அருளுகிற போதோடு
சர்வ காலத்திலும் கோயில் ஆழ்வார்க்கு உள்ளே ஸூரிகளுக்கு எல்லாம் தலைவரான
திருவனந்தாழ்வான் மேலே -உலகுக்கு ஓர் தனியப்பன் -என்னும்படி தன் பிரஜைகளான
ப்ரஹ்மாதிகள் ஆராதிக்க கண் வளர்ந்து அருளுகிற போதோடு வாசியறக்
காரணத்வ ரஷகத் வாதிகள் காணலாம்படியாய் இருக்கிற பெரிய பெருமாளுடைய

கோல மா மணி யாரமும் –
நாய்ச்சியாருக்கு கோயில் கட்டணமாய் இருக்கிற திரு மார்வுக்கு
ஒரு ரத்ன ப்ரகாரம் போலே -அபி ரூபமாய் -அதி மஹத்தாய் -மஹார்க்க ரத்னமான திருவாரமும் –
முத்துத் தாமமும் –
சந்நவீரமாயும் ஏகவாளியாயும் -த்ரி சரமாயும் -பஞ்ச சரமாயும்
உள்ள திரு முத்து வடங்களும்

முடிவு இல்லாதோர் எழில் நீல மேனி –
இவை தனக்கும் அதிசயகரமாய் -அநந்தமாய –
அத்விதீயமான ஆபி ரூப்யத்தை உடைத்தாய் -காளமேகம் போலே ஸ்ரமஹரமான திருமேனியும்
ஆபரணங்களுக்கு முடி இல்லாதோர் எழிலை உண்டாக்கும்படியான நீலமேனி என்னவுமாம்

ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே –
தனித்தனியே திவ்ய அவயவங்களை அநுபவித்த
என் நெஞ்சை சமுதாய அனுபவத்தாலே முன்புற்ற பூர்ணத்வ் அபிமான கர்ப்பமான காம்பீர்யத்தை
கழித்து இப்பூர்ண அனுபவத்துக்கு விச்சேதம் வரில் செய்வது என் -என்கிற அதி சங்கையாலே
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு -என்று நித்ய சாபேஷம் ஆம்படி பண்ணிற்று

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

அமலனாதி பிரான் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் -பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு –

May 23, 2013

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —-8

—————————————————

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-அவதாரிகை –
திருக் கண்கள் என்னை அறிவு கெடுத்தது என்கிறார்

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-வியாக்யானம்-

பரியனாகி வந்து –
பகவத்  குணங்களை அனுசந்தித்து நைந்து இராமே சேஷத்வத்தை அறிந்து
மெலிந்து இராமே -சர்வேஸ்வரனை ஆசைப்பட்டு தளர்ந்த உடம்பாய் ஒசிந்து இராமே –
பரிய –
நரசிம்ஹத்துக்கும் பிற்காலிக்க வேண்டும் படி இருக்கை -ஊட்டி இட்டு வளர்த்த
பன்றி போலே உடம்பை வளர்த்தான் இறே -வந்த -இப்போது தாம் வயிறு பிடிக்கிறார்-

அவுணன் உடல் கீண்ட –
நரசிம்ஹத்தினுடைய மொறாந்த முகமும்-நா மடிக்கொண்ட உதடும் -செறுத்து நோக்கின நோக்கும் –
குத்த முறுக்கின கையும் கண்ட போதே பொசிக்கின
பன்றி போலே மங்கு நாரைக் கிழிக்குமா போலே கிழித்த படி-

அமரர்க்கு அரிய ஆதிப் பிரான் –
தேவர்களுக்கு உத்பாதகனான மாத்ரமே -கையாளனாய் நிற்பது ஆஸ்ரிதர்க்கு
சிருக்கனுக்கு உதவி நிற்கிற நிலை தன்னிலே ப்ரஹ்மாதிகளுக்கு பரிச்சேதிக்க ஒண்ணாதபடி நிற்கிற ப்ரதாநன் –
க்வாஹம் ராஜா ப்ரக்ருதிர்ஸ தமோதி கேச்மின் ஜாதஸ் ஸூரே தர குலே த்வ தவாநுகம்பா
ந ப்ரஹ்மணோ  ந ச பவச்ய ந வை ரமாயா யோ மோப பிதச் ஸிரசி பத்ம கரப்ரசாத –
ஆதிப்பிரான் –
தான் முற்கோலி உபகரிக்குமவன்
பிரான் –
ப்ரஹ்லாதனுக்கு எளியனான நிலையும் ப்ரஹ்மாதிகளுக்கு அரியனான நிலையும்
இரண்டும் தமக்கு உபகாரமாய் இருக்கிறது-

அரங்கத்தமலன் –
எல்லார்க்கும் உதவும்படி கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகையாலே
வந்த சுத்தி –ஒரு கால் தோற்றிப் போதல் -அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதித்துப் போதல்
செய்யாமையாலே வந்த சுத்தி ஆகவுமாம்
முகத்து –
அவனுடைய முகத்து
கரியவாகி –
விடாய்த்தார் முகத்திலே நீர் வெள்ளத்தை வெட்டி விட்டாப் போலே இருக்கை-

புடை பரந்து –
கடலைத் தடாகம் ஆக்கினாப் போலே இடம் உடைத்தாய் இருக்கை
மிளிர்ந்து –
திரை வீசிக் கரையாலும் வழி போக ஒண்ணாது இருக்கை
செவ்வரி யோடி –
ஸ்ரீயபதித்வத்தாலும் வாத்சல்யத்தாலும் சிவந்து இருக்கை
நீண்ட –
செவி யளவும் அலை எறிகை
அப் பெரிய வாய கண்கள் –
பின்னையும் போக்தாவின் அளவன்றிக்கே இருக்கையாலே
அப் பெரிய வாய கண்கள் -என்கிறார் -இது என்ன ஒண்ணாதே பரோஷ நிர்த்தேசம் பண்ண
வேண்டும்படி இருக்கை –
என்னை –
பெரிய மனிச்சன் கிடீர் நான் -என் வைதக்த்யத்தைப் பறித்துப் பொகட்டு
மௌக்த்யத்தைத் தந்தன -ஒருவன் எய்தத்தை மற்றவனும் எய்யுமா போலே –
பேதைமை செய்தனவே –
ராம சரம் போலே முடிந்து பிழைக்க வொட்டுகிறன வில்லை –

இத்தால் நரசிம்ஹ அவதாரத்தின் படியும் இங்கே வுண்டு என்கிறார் –

————————————————————————————————-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை –
திருக் கண்கள் என்னை அறிவு கெடுத்தது என்கிறார்-கீழில்  பாட்டில் –
செய்யவாய் ஐயோ என்னை சிந்தை கவர்ந்தது-என்று திருப் பவளத்திலே இவர்
அப்ஹ்ருத ஹ்ருதயர் ஆகிற படியைக் கடைக் கணித்து கொண்டு கிடக்கிற
திருக் கண்கள் ஆனவை –
செய்ய வாய் ஐயோ -என்று இவர் தாமே சொன்னார் –
அப்படியே சிவப்பால் வந்த அழகு ஒன்றுமே யன்றோ அந்த திரு அதரத்துக்கு உள்ளது
சிவப்பும் கருப்பும் வெளுப்புமான பரபாகத்தால் உள்ள அழகு உடையோமாம் இருப்போமும்
நாம் அல்லோமோ –

மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யஜேயம் -என்றாப் போலே சொல்லுகிற
வார்த்தைகள் எல்லாம் ஜீவிக்கை யாகிறது -ஜாயமாநம் ஹி புருஷம் யம் பச்யேத் -என்று
ஜாயமான தசையிலே நாம் கடாஷித்த பின்பு -சாத்விகனாய் -முமுஷுவான அளவிலே அன்றோ
அது கிடக்க -அந்த வார்த்தை தான் -ஆயுதம் எடேன் -என்று ஆயுதம் எடுத்தால் போலே
அன்றிக்கே -மெய்ம்மை பெரு வார்த்தை -என்று விச்வசித்து இருக்கலாம்படி வாத்சல்யம்
அடியாக பிறந்த வார்த்தை என்று அந்த அகவாயில் வாத்சல்யத்துக்கு பிரகாசமாய்
இருப்போமும் நாமும் அல்லோமோ -அது கிடக்க
யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ -என்றும்
அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசனன் -என்றும் சொல்லுகிறபடியே மேன்மைக்கு
பிரகாசமாய் இருப்போமும் நானும் அல்லோமோ –
அதுக்கு மேலே

புண்டரீகாஷா ரஷ மாம் -என்றும் -புண்டரீகாஷா ந ஜாநே சரணம் பரம் -என்றும் சொல்லுகிறபடியே
தம்தாமுடைய ஆபன் நிவாரணத்துக்கு உபாயமாகப் பற்றுவதும் நம்மை புரஸ்கரிக்கையாலே
உபாய பாவத்தை பூரிக்கிறோமும் நாமும் அன்றோ –
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -என்று அவனுக்கு போக்யதா பிரகர்ஷம் உண்டாகிறது
நம்மோட்டை சேர்தியால் யன்றோ -என்றால் போலே தங்களுடைய ஏற்றத்தை காட்டி –
அவ்வாய் யன்றி அறியேன் -என்று இருக்கிற தம்மை -தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்து –
என்னும்படி பண்ணிக் கொண்ட படியைச் சொல்லுகிறார் –
செங்கனி வாயின் திறத்தாயும் செஞ்சுடர் நீண் முடித் தாழ்ந்தாயும் சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் –
என்ற அளவும் சொன்னார் கீழ் -தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்த படி சொல்லுகிறார் இதில்-

பாரமாய பழ வினை பற்று அறுத்து -என்று
தம்முடைய அஜ்ஞ்ஞாந ஆசாத் கர்மாதி  நிகர்ஷம் பாராதே -பெரிய பெருமாள் -பெரிய பிராட்டியார் புருஷகாரமாக –
தாம் அநாதி கால்ம் அர்ஜித்த பாபங்களை அடைய போக்கினபடியைச் சொன்னாராய்
அது கூடுமோ என்கிற அபேஷையிலே
கூடும் என்னும் இடத்துக்கு ருத்ரனை த்ருஷ்டாந்தமாகச் சொன்னாராய் -அநந்தரம்
விஷம த்ருஷ்டாந்தம் என்று சில ஹேதுக்களை சொல்ல –
அதுக்கு அடைவே உத்தரம் சொன்னார் கீழ் -பாட்டில்

இதில் அந்த -பாரமாய -என்கிற பாட்டைப் பற்றி ஓர் அபேஷை எழும்ப அதுக்கு உத்தரமாய் இருக்கிறது –
அதாவது அநாதி கால ஆர்ஜிதமான உம்முடைய பாபங்களை அடையப் போக்கினார் என்றீர்
அது மறு கிளை எழாதபடி போய்த்தாவது –
அவித்யா சஞ்சித கர்மம் என்றும் –
அநாத்ய வித்யா சஞ்சித புண்ய பாப கர்ம ப்ரவாஹ ப்ரவ்ருத்தம் என்றும் -சொல்லுகிறபடியே
அந்த கர்மத்துக்கு ஹேது பூதையான அவித்யை போனால் அன்றோ அது போய்த்தாவது –
அது போய்த்ததுவோ என்கிற அபேஷையில் –
அந்த அவித்யைவாது தன்னோடு அனுபந்தித்தாரை பகவத் பிரவணர் ஆக ஒட்டாதே
விபரீதங்களை அனுஷ்டிப்பிக்குமது இறே –
அப்படியே தன்னோடு அனுபந்தித பிரஹ்லாதனை பகவத் பிரவணன் ஆக ஒட்டாதே விபரீதங்களை அனுஷ்டிப்பிக்கத் தேடின
ஹிரண்யனை தமோ ஹிரண்ய ரூபேண பரிணாம முபாகதம் -என்கிறபடியே
தமோ குணம் ஹிரண்யன் என்று ஒரு வடிவு கொண்டதாய் இறே -இருப்பது
அப்படியே இருக்கிறவனை –
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய -என்கிறபடியே ந்ருசிம்ஹ ரூபியாய் வந்து தன் திருக்கையில்
உகிராலே கிழித்துப் பொகட்டாப் போலே –
ஞானக் கையாலே என்னுடைய அவித்யையை கிழித்துப் பொகட்டான் என்கிறார்

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-வியாக்யானம்-

பரியனாகி வந்து –
பகவத்  குணங்களை அனுசந்தித்து நைந்து இராமே
சேஷத்வத்தை அறிந்து மெலிந்து இராமே –
சர்வேஸ்வரனை ஆசைப்பட்டு தளர்ந்த உடம்பாய் ஒசிந்து இராமே –
பரிய –
நரசிம்ஹத்துக்கும் பிற்காலிக்க வேண்டும் படி இருக்கை-

ஆத்மா வஸ்து என்று ஓன்று உள்ளது -அதுக்கு அவன் சேஷியாய் இருக்கையாலே
அந்த சேஷியானவனை நம்முடைய சேஷத்வம் ஆகிற ஸ்வரூபத்தின் சித்திக்காகப் பெற வேணும் என்று –
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி உடம்பை இளைக்கப் பண்ணுகிறான் இறே
அங்கன் அன்றியிலே பரமாத்மாவை அநுபவிக்க ஆசைப்பட்டு பெறாமையாலே பக்தி தலை மண்டை இட்டு –
நின்பால் அன்பையே அடியேன் உடலம் நீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே – என்கிறபடியே
சரீரத்தை இளைப்பித்து மெலிந்து இருக்கிறான் அன்றே –
பரமேஸ்வர சம்ஜ்ஜோஸ் ஜ்ஞ கிமந்யோ மய்ய வஸ்திதே -என்கிறபடியே தன்னுடைய
அஹங்கார மமகாரங்களாலே பூண் கட்டி -பலவான் ப்ரஹ்ம ராஷஸ -என்னுமா போலே
பருக்கப் பண்ணின சரீரம் இறே
ராஜாக்களுக்கு சிலர் ஊட்டி இட்டு சில  காவல் பன்றி வளர்த்து வைக்குமா போலே
நரசிம்ஹத்தின் உகிருக்கு இரை போரும்படி தேவர்கள் வரங்களால் யூட்டி யிட்டு வளர்த்து வைத்தார்கள் –
மேல் இத்தால் வரும் அநர்த்தமும் அறியாமையாலே வரம் கொடுத்து பருக்க வளர்த்தார்கள் –
இது தானே தாம் அழிக்கைக்கு உறுப்பாய்த்து –
வந்த –
இப்போது தாம் வயிறு பிடிக்கிறார் -இன்றும் வருகிறானாகக் காணும் இவர்க்கு தோற்றுகிறது
அனுகூலனாய் வருகை அன்றிக்கே -பகவத் தத்வம் இல்லை என்றும் -உண்டு என்கிறவனை
நலிகைக்கு என்றும் வந்த க்ரௌர்யத்தை நினைத்து பயப்படுகிறார்-

அவுணன் –
இப்படி பகவத் பாகவத விஷயம் என்றால் அவன் சிவட்க்கு என்கைக்கு
ஹேது என் என்னில் -ஆசூரீம் யோ நிமா பன்னனாய் மூடன் ஆகையாலே -என்கிறார் –
உடல் கீண்ட –
திருவாழி யாழ்வானுக்கும் பிற்காலிக்க வேண்டும்படி இறே -ஊன் மல்கி
மோடி பருத்து இருக்கிறபடி -அப்படி இருக்கிற ஹிரண்ய சரீரமானது நர சிம்ஹத்தின் உடைய
மொறாந்த முகமும் -நா மடிக்கொண்ட வுதடும் -இறுத்து நோக்கின நோக்கும் -குத்த முறுக்கின
கையும் கண்ட போதே பொசுக்கு என பன்றி போலே உலர்ந்த தாழை நாரைக் கிழித்தாப் போலே கிழித்த படி
உடல் கீண்ட –
தன்னதான ஆத்ம வஸ்துவுக்கு அழிவு வாராமல் கிள்ளிக் களைந்தான் -என்னுமா போலே
அஹங்கார ஹேதுவான தேஹத்தைக் கிழித்துப் பொகட்டான்-

அமரர்க்கு அரிய –
இப்படி ப்ரஹ்லாதனுக்கு எளியனாய் நிற்கிற அவ்வளவு தன்னிலே
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு கிட்ட அரியனாய் இருக்கும்
க்வாஹம் ராஜா ப்ரக்ருதிர்ஸ தமோதி கேச்மின் ஜாதஸ் ஸூரே தர குலே த்வ தவாநுகம்பா
ந ப்ரஹ்மணோ  ந ச பவச்ய ந வை ரமாயா யோ மோப பிதச் ஸிரசி பத்ம கரப்ரசாத -ஸ்வ சாமர்த்தியம்
கொண்டு கிட்ட நினைப்பார்க்கு தயை பண்ணும் அளவிலும் கிட்ட வரிதாய் இருக்கும்
அநந்ய பிரயோஜனர்க்குச் சீற்றத்திலும் கிட்டலாய் இருக்கும் -அங்கன் இன்றியிலே –
தேவர்களுக்கு அரியனாய் இருக்கிறவன் தமக்கு எளியனாய் இருக்கறபடியைச் சொல்லுகிறார்
அதாவது -தம்முடைய நிகர்ஷம் பாராதே தம்மையே விஷயீ கரித்து தம்முடைய
துஷ்கர்மங்களை யடைய ஸ வாசனமாகப் போக்கி தம்மை முழுக்க அனுபவித்துக் கொண்டு
இருக்கிறபடியைச் சொல்லுகிறார் –

இப்படி தேவர்களுக்கு அரியனாய் இருக்கிறவன் உமக்கு எளியனாய் இருக்கைக்கு அடி என் என்னில் –
ஆதி –
காரண பூதன் -பஹூ புத்ரனானவன் விகல கரணனான புத்திரன் பக்கலிலே போர
வத்சல்யனாய் இருக்குமா போலே -இவனும் ஜகத் காரணனாய் இருக்கச் செய்தேயும்
என்னுடைய அஞ்ஞான அசக்திகளை திரு உள்ளம் பற்றி என்னளவிலே போர வத்சல்யனாய் இருக்கும் –

ஆதி –
தான் முற்கோலி உபகரிக்குமவன்-

அமரர்க்கு அரிய ஆதிப் பிரான் –
தமக்கு உபகரித்த படியை நினைத்து பிரான் என்கிறார் அல்லர்
தேவர்களுக்கு கிட்ட அரியனாய் இருக்கச் செய்தே ப்ரஹ்லாதனுடைய விரோதியை முற் பாடனாய்ச்
சென்று போக்கின உபகாரத்தை நினைத்துச் சொல்லுகிறார்
ஆதிப் பிரான் –
ப்ரஹ்லாதன் -சர்வ காரணம் -என்ன ஹிரண்யன் அதுக்கு பொறாமல் –
இந்தத் தூணில் உண்டோ அந்த காரண பூதன் -என்று துணைத் தட்டி கேட்க –
ப்ரஹ்லாதனும் சர்வ அந்தராத்மான் காண் அவன் -ஆகையால் இதிலும் உண்டு -என்ன –
அங்கு அப்பொழுதே -என்கிறபடியே அவன் தட்டின தூணிலே வந்து நரசிம்ஹ ரூபியாய் தோன்றி
அவன் தட்டின கையைப் பிடித்து -பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்பிடந்தான் -என்கிறபடியே
அவனைக் கதுப்பிலே அடித்து -அவன் மார்பைக் கிழித்து ப்ரஹ்லாதனுடைய ப்ரதிஜ்ஞா வாக்யத்தை
க்ரயம் செலுத்தி தன்னுடைய காரணத்வத்தையும்
ஈச்வரத்வத்தையும் நிலை நிறுத்தின உபகாரத்தைப் பற்றி சொல்லுகிறார் ஆகவுமாம் –

அரங்கத்தம்மான் –
நரசிம்ஹ வ்யாவ்ருத்தி -அதாவது -ஒரு கால விசேஷத்திலே -ஒரு தூணின்
நடுவே வந்து தோன்றி ப்ரஹ்லாதன் ஒருவனுக்கு வந்த விரோதியைப் போக்கின வளவு இறே அங்கு உள்ளது –
இங்குக் கிடக்கிற கிடை-எல்லாக் காலத்திலும் எல்லாருடைய விரோதிகளையும் போக்குகைக்கு
அணித்தாக வந்து இரண்டு தூணுக்கும் நடுவே கிடக்கிற கிடையாகையாலே வ்யாவ்ருத்தமாய் இருக்கும் இறே-

அரங்கத்தமலன் –
ப்ரஹ்லாதன் ஆகிறான் பகவத் சந்நிதி உண்டான வளவிலே –
யா ப்ரீதிர விவேகாநாம் -என்று பகவத் விஷய பிரேமத்தை யபேஷிக்கை யாகையாலும் –
மலைகளாலே கடலிலே யமுக்கு உண்டு போது ஸ்தோத்ரங்களைப் பண்ணுகை யாலும்
மயி பக்திஸ் தவாஸ் த்யேவ -என்கிற அனந்தரமே ஜ்ஞான பக்திகளை உடையவன் ஆகையாலே
அவன் அளவில் பண்ணின உபகாரம் அப்படி யாகையாலே வருவதொரு மாலின்யம் உண்டு அங்கு –
இங்கு –
ஏழை யேதலன் கீழ் மகன் என்னாது இரங்கி -என்கிறபடியே நிகர்ஷ அனுசந்தானம் பண்ணி
பிற்காலிப்பார் அளவிலும் அந்த நிகர்ஷம் பாராதே மேல் விழுந்து விஷயீ கரித்து விரோதிகளையும்
போக்கிப் பரம புருஷார்த்தத்தை கொடுக்கையாலே கீழ்ச் சொன்ன மாலின்யம்
பெரிய பெருமாளுக்கு இல்லை என்று இட்டு -அரங்கத்தமலன் -என்கிறார் –

அஸ்மத் தாதிகளும் திரு முகத்திலே விழித்து அவித்யா சௌசம போய் சுத்தராம் படியான அமலத்வம்
என்னையும் ஆளாம்படி லோக சாரங்க மஹா முநி களோடே கூட்டின அமலத்வம்
எல்லார்க்கும் உதவும் படி கோயிலிலே கண் வளர்ந்து அருளுகையால் வந்த ஸூத்தி –
சிட்டனே செழு நீர்த் திருவரங்கத்தாய் -என்னக் கடவது இறே
ஒரு கால் தோற்றிப் போதல் -அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதித்தல் -செய்யாமையால் வந்த ஸூத்தியுமாம்
விரோத்யம்சம் கழித்து ஸூத்தரானால் அநுபவ விஷயம் சொல்லுகிறது மேல் –
அரங்கத்தமலன் இத்யாதி –
இவை ஓர் ஒன்றே யமையும் என்னைப் பேதைமை செய்ய -என்கிறார்
வண்டினம் குரலும் இத்யாதிப் படியே -அண்டர்கோனும் பரமபதம் முதலான வாஸ ஸ்தானங்களையும் விட்டுப்
படுகாடு கிடக்கும்படியாய் யாய்த்து -இவ் வூரின் போக்யதை இருப்பது –
அதுக்கு மேலே கண் வளருகிறவருடைய அமலத்வம் –
மித்ர பாவேந சம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந –
என்று விபீஷண விஷயமான வார்த்தையை க்ரயம் செலுத்துகைக்காக –
செல்வ விபீடணற்கு வேறாக நல்லானாய்
சர்வ பிரகார நிக்ருஷ்டனான என் போல்வாரையும் ஸூத்தராக்குகைக்கு ஆகவாகையால்
கிடக்கிற சௌலப்யம் -அதுக்கு மேலே ஓன்று இறே திரு முகம் –

முகத்து –
சக்ய பச்யத க்ருஷ்ணச்ய முகம் -என்றும் –
உன் முகம் மாய மந்திரம் தான் கொலோ -என்றும்
சொல்லுகிறபடியே வெறும் முகம் தானே ஆகர்ஷகமாய் யிறே இருப்பது –
கீழ் -தாம்
அநுபவித்த திருப் பவளத்தின் வைலஷண்யம் பின்னாட்டுகையாலே அந்த திரு வதரத்தை உடைத்தான
திரு முகத்தைப் பிரித்துச் சொல்கிறார் –
அதுக்கு மேலே –
அத்யருனேஷணம்  -என்கிறபடியே
இரண்டு ஆழங்காலாய்த்து -சந்திர மண்டலத்திலே இரண்டு தாமரை பூத்தாப் போலேயும்-
ஒரு தாமரையிலே இரண்டு தாமரை பூத்தாப் போலேயும் இருக்கிற திருக் கண்கள்

கரியவாகி –
புண்டரீகம் போலே வெளுத்து இருக்கிற திருக் கண்களுக்கு பரபாகமாம்படி
இரண்டு கரு விழியை வுடைத்தாய் -அங்கன் அன்றிக்கே -அஞ்சனத்தாலே கறுத்து இருத்தல் –
கண்களைக் கண்ட போதே தாபத் த்ரயம் அடைய சகல தாபங்களும் போம்படி குளிர்ந்து
இருக்கும் என்னுதல் -விடாய்த்தார் முகத்திலே நீர் வெள்ளத்தை வெட்டி விட்டாப் போலே இருக்கை –

புடை பரந்து –
கடலைத் தடாகம் ஆக்கினாப் போலே இடமுடைத்தாய் இருக்கை -ஸ்வதஸ்
காண்கிற அளவுக்கு அவ்வருகே இரண்டு பார்ச்வமும் இடுங்கி யிராதே -பரந்து -இடம் உடைத்தாய்
அவித்யாதிகளைப் போக்கி அனுபவிப்பிக்கும் கார்யங்களைப் பற்றி வருகிற பரப்பு-

மிளிர்ந்து –
க்ருபா பரிதமாய் இருக்கையாலே கரை யருகும் வழி போக ஒண்ணாத படி
அலை எறிந்து திரை வீசுகை –
காண வேணும் என்கிற இவருடைய த்வரையில் காட்டிலும்
இவரை விஷயீ கரிக்கையில் உண்டான கண்களின் த்வரையைச் சொல்லுகிறது

செவ்வரி யோடி –
ஸ்ரீ யபதித்வத்தாலும் வாத்சல்யத்தாலும் சிவந்து இருக்கை –
ஐஸ்வர்யத்தாலும் வாத்சல்யத்தாலும் சிவந்து இருக்கும் என்னவுமாம் –

நீண்ட –
ஒழுகு நீண்டு இருக்கையும் தம்மளவும் கடாஷம் வந்து விஷயீ கரித்த படியும் –
க்ருபயா பரயா கரிஷ்ய மானே சகலாங்கம் கில சர்வ தோஷி நேத்ரே
ப்ரதமம் ச்ரவஸீ சமாஸ்த்ருணாதே இதி தைர்க்யேண விதந்தி ரங்க நேது –
பெரிய பெருமாளுடைய திருக் கண்கள் ஆனவை திருச் செவி யளவும் செல்ல நீண்டு
இருக்கிறபடிக்கு ஒரு நினைவு உண்டு என்கிறார் பட்டர் -அதாவது –
பெரிய பெருமாள் உடைய திருக் கண்கள் ஆனவை
மீனுக்குத் தண்ணீர் வார்ப்பாரைப் போலே நித்ய ஸூரிகளுக்கு
முகம் கொடுத்து கொண்டு இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கும் கண்கள் இரண்டாய்
ராம க்ருஷ்ணாத்யவதாரம் பண்ணி குஹாதிகள் விதுராதிகள் தொடக்கமானார் சிலர்க்கு அல்ப காலம்
முகம் கொடுத்து விஷயீ கரித்து வந்தாப் போலே வெறும் கையோடே போனவர்களுக்கும் கண்
இரண்டாய்-சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது எழுந்திரேன் என்று கோயிலிலே அர்ச்சா ரூபியாய்
அவ்வவர் நிகர்ஷங்களைப் பாராதே முகம் கொடுத்துக் கொண்டு இருக்கிற பெரிய பெருமாளுக்கும்
கண் இரண்டாய் இருக்கவோ -இவருடைய க்ருபையை பார்த்தால் உடம்பு எல்லாம் கண்ணாக
வேண்டாவோ என்று பார்த்து -எல்லா மண்டலங்களும் தங்களுக்கே ஆக வேணும் என்று
இருக்கிற ராஜாக்கள் முற்படத் தங்களுக்கு ப்ரத்யாசன்னரான வன்னியரை அழியச் செய்யுமா போலே
பெரிய பெருமாளுடைய அவயவாந்தரங்கள் அடைய நாமேயாக வேணும் என்று பார்ச்வ
ஸ்தங்களாய் இருக்கிறன திருச் செவிகள் ஆகையாலே அவற்றை வென்று அவ்வருகே
போவதாக முற்பட அவற்றுடனே அலை எறிகிறாப் போலே யாய்த்து திருக் கண்கள் செவிகள்
அளவும் நீண்டு இருக்கிறபடி –

அப் பெரியவாய கண்கள் –
பின்னையும் போக்தாவின் அளவன்றிகே இருக்கையாலே
அப்பெரியவாய கண்கள் -என்கிறார் –
இது என்ன ஒண்ணாதே பரோஷ நிர்த்தேசம் பண்ண வேண்டும்படி யிருக்கை –

கீழ் பரந்து நீண்டு –
என்று ஆயாம விச்தாரங்களை சொல்லுகையாலே இங்கு போக்யதா பிரகர்ஷத்தை சொல்லுகிறது –
போக்யதா அதிசயத்தாலே -அப் பாஞ்ச சன்னியம் -என்னுமா போலே
முகத்தை திரிய வைத்து சொல்லுகிறார் –

என்னை –
அறப் பெரிய மனிச்சன் கிடீர் நான் -என் வைதக்யத்தை பறித்துப் பொகட்டு மௌக்யத்தைத் தந்தன –
ஒருவன் எய்ய அதனை மற்றை யவனும் எய்யுமா போலே –
பேதைமை செய்தனவே –
ராம சரம் போலே முடிந்து பிழைக்க ஒட்டுகிறன வில்லை-
என்னைப் பேதைமை செய்தனவே –
கீழ்ப் பாட்டில் என்னைச் சிந்தை கவர்ந்ததுவே -என்று
ஜ்ஞான ப்ரரைத்வாரத்தை அபஹரித்த படியைச் சொல்லிற்று –
இங்கு ஞானத்தை அபகரித்த படியைச் சொல்லுகிறது -ஜ்ஞான அபஹாரம் ஆவது -அழகிலே அலமருகை –
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை தன் பக்கலிலே ஆதரத்தைப் பிறப்பித்து –
மதி எல்லாம் உள் கலங்கும்படி பண்ணிற்று –
என்னைப் பேதைமை செய்தனவே –
அவன் அக் கண்களாலே -அமலங்களாக விழிக்கும் –
என்று இருந்த கடாஷங்களுக்கு இலக்கானார்க்குத் தெளிவைப் பிறப்பிக்க கடவதாய்  இருக்க
எனக்குள்ள அறிவு தன்னையும் அழித்தது -இனி தாமரைக் கண்களால் நோக்காய் -என்பார்க்கு
எல்லாம் அழகிதாக ப்ரார்த்திக்கலாம்-

இப் பாட்டில் -நரசிம்ஹ அவதாரத்தின் படியும் இங்கே உண்டு என்கிறார் –

———————————————————————————————

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை –

தன்னை ஜிதந்த புண்டரீகாஷ -இத்யாதிகளில் படியே தோற்பித்து -திருவடிகளிலே
விழப் பண்ணி மேன் மேல் அனுபவத்தை உண்டாக்கின -தாமரைக் கண்களுக்கு
தாம் அற்றுத் தீர்ந்த படியை -ஆஸ்ரீத விரோதி நிராகரண வ்ருத்தாந்த பூர்வகமாக அநுபவிக்கிறார்-

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் –

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட –
சர்வ லோகத்தில் உள்ள தமஸ் எல்லாம் திரண்டு
ஒரு வடிவு கொண்டாப் போலே அதி ஸ்தூலனாய் -மஹா மேரு நடந்தாப் போலே எதிர்த்து வந்த
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆழம் ஒன்றையும் ஒரு வாழை மடலைக் கிழிக்குமா
போலே இரண்டு கூறு செய்தவனாய்
அமரர்க்கு அரிய ஆதிப் பிரான் –
தன்னாலே ஸ்ருஷ்டருமாய்  உபக்ருதருமான தேவர்கள் -தான் காரண பூதனாய்  -உபாகாரகனாய் நிற்கிற நிலை
அறிய மாட்டாமையாலே அவர்களுக்கு ப்ரஹ்லாதன்
அனுபவித்தாப் போலே அணுகவும் அநுபவிக்கவும் அரியனாய் இருக்கிற

அரங்கத்தமலன் முகத்து –
ஹேய பிரசுரமான சம்சாரத்துக்கு உள்ளே கோயில் ஆழ்வார் உடன் எழுந்தருளி வந்து –
அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு -என்று இருப்பார்
தம்முடைய திருவடிகளை அடைந்து அடி சூடி உய்யும் படி அவர்களுடைய
ஐயப்பாடு முதலான ஹேயங்களை அறுத்துத் தோன்றும் அழகை வுடையரான
பெரிய பெருமாள் உடைய கோள் இழைத் தாமரை -இத்யாதிகளால் பேசப்பட்ட
பேர் அழகை வுடைத்தே சந்திரனும் தாமரையும் ஒன்றினால் போலே இருக்கிற திரு முகத்தில்-

கரியவாகிப் புடை படர்ந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப் பெரியவாய கண்கள் –
நிகர் இல்லாத நீல ரத்னம் போலே இருக்கிற தாரைகையின் நிறத்தாலே நீலோத்பல வர்ணங்களாய் –
ஆஸ்ரீத தர்சன ப்ரீதியாலே அன்று அலர்ந்த தாமரைப் பூ போலே அதி விகசிதங்களாய் –
ஆசன்னர் எல்லாம் பக்கலிலும் ஆதரம் தோன்றும்படியான உல்லாசத்தை வுடையவையாய் –
அனந்யர் பக்கல் அநு ராகத்துக்குக் கீற்று எடுக்கலாம் படியான சிவந்த வரிகளாலே வ்யாப்தங்களாய் –
ஸ்வபாவ சித்தங்களானஆயாம விச்தாரங்கள வுடையவான திருக் கண்கள் –
அப்பெரிய -என்றதுக்கு
இப்போது காண்கிற வளவன்றிக்கே சாஸ்திர வேத்யமாய் அநவச் சின்னமான போக்யதா ப்ரகர்ஷத்தையும்
மஹாத்ம்யத்தையும் உடைய என்று தாத்பர்யமாக்கவுமாம்
என்னைப் பேதைமை செய்தனவே –
இவ் வநுபவ ரசத்திலே அமிழ்ந்த என்னை அல்லாததொரு
ஜ்ஞான அனுஷ்டானங்களுக்கு அநர்ஹனாம் பண்ணிற்றன –

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

அமலனாதி பிரான் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–ஸ்ரீ வேதாந்த தேசிகர்அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் -கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல் –

May 23, 2013

கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல்
மெய்யினார் துளப விரையார் கமழ் நீண் முடி யெம்
ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ——-7

——————————————————————-

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளைஅருளிய-அவதாரிகை –
திரு வதரத்திலே அகப்பட்ட படி சொல்லுகிறார் –
நீஞ்சாப் புக்குத் தெப்பத்தை இழந்தேன் என்னுமா போலே

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளைஅருளிய-வியாக்யானம் –

கையினார் -இத்யாதி வெறும் புறத்திலே -படவடிக்க வல்ல -ஆலத்தி வழிக்க வல்ல -கையிலே
அழகு நிறைந்து -சுரியை வுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -ப்ரதி பஷத்தின் மேலே அனலை
வுமிழா நின்றுள்ள திரு வாழி -இவற்றை வுடையராய் இருக்கை –
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்துக்கு சுரி ஸ்வபாவமானாப் போலே திரு வாழி யாழ்வானுக்கும் ப்ரதி
பஷத்தின் மேலே அனல் உமிழுகை ஸ்வபாவம் -திருக் கோட்டியூரிலே அனந்தாழ்வான் பட்டரை
ஸ்ரீ வைகுண்ட நாதன் த்வி புஜனோ சதுர் புஜனோ -என்ன -இருபடிகளும் அடுக்கும் என்ன
இரண்டிலும் அழகிது ஏது என்ன –
த்வி புஜனாகில் பெரிய பெருமாளைப் போலே இருக்கிறது -சதுர் புஜனாகில் நம் பெருமாளைப்
போலே இருக்கிறது -என்றார்

நீள் வரை –
மலையை கடலை ஒப்பாக சொல்லும் இத்தனை இறே
நீட்சி போக்யதா ப்ரகர்ஷம் -பச்சை மா மலை போல் மேனி -அதுக்கு மேலே ஒப்பனை அழகு –
துளப விரையார் கமழ் நீண் முடி –
பரிமளம் மிக்கு இருந்துள்ள திருத் துழாய் மாலையாலே
அலங்க்ருதமாய் ஆதி ராஜ்ய ஸூசகமான திரு அபிஷேகத்தை உடையருமாய்
எம்மையனார் –
உறவு தோற்றுகை -எனக்கு ஜனகரானவர்
அணி அரங்கனார் –
ப்ராப்த விஷயமாய் இருக்கக் கடக்க விராதே சம்சாரத்துக்கு ஆபரணமான
கோயிலிலே வந்து அண்ணியருமாய் இருக்கிற படி-

அரவின் அணை மிசை –
ரத்னங்களை எல்லாம் தங்கத்திலே புதைத்துக் காட்டுமா போலே
தன் அழகு தெரிய திருவநந்தாழ்வான் மேல் சாய்ந்து காட்டுகிற படி
மேய மாயனார் –
மின் மினி பறக்கிற படி –
ஸ மயா போதித ஸ்ரீ மான் -எல்லாருக்கும் ஒன்றிலே சாய்ந்தவாறே பொல்லாங்குகள் தெரியும்
இங்கு பழைய வழகுகளும் நிறம் பெறும்
செய்ய வாய் –
ஸ்திரீகளுடைய  பொய்ச் சிரிப்பிலே துவக்குண்டார்க்கு இச் சிரிப்பு
கண்டால் பொறுக்க ஒண்ணுமோ
ஐயோ –
திருவதரமும் -சிவப்பும் அநுபவிக்க அரிதாய் -ஐயோ –என்கிறார்
என்னை –
பண்டே நெஞ்சு பரி கொடுத்த என்னை அந்யாயம் செய்வதே -என்று கூப்பிடுகிறார்
என்னை –
கல்லை நீராக்கி -நீரையும் தானே கொண்டது
இப்பாட்டில் ஸ்ரீ வைகுண்ட நாதன் படியும் இங்கே காணலாம் என்கிறார் –

——————————————————————–

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை –
திரு வதரத்திலே அகப்பட்ட படி சொல்லுகிறார் –
நீஞ்சாப் புக்குத் தெப்பத்தை இழந்தேன் என்னுமா போலே-

கீழ்ப் பாட்டில் -முற்றும் உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டது -என்று திருக் கழுத்தானது
தன்னுடைய ஆபத் சகத்வாதிகளைக் காட்டி தம்மை எழுதிக் கொண்ட படியை இறே சொல்லிற்று –
இதுக்கு மேலான -திருப் பவள செவ்வாயானது -உலகமுண்ட பெரு வாயன் -என்கிறபடியே
ஆபத் சகத்வத்திலும் முற்பாடர் நாம் அல்லோமோ -ஆஸ்ரித ரஷணத்துக்கு உறுப்பாக
சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம -என்றும் –
மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந -என்றும் –
சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்றாப் போலே -சொல்லுகிற மெய்ம்மைப் பெரு வார்த்தைக்கு
எல்லாம் ப்ரதான கரணம் நாம் அல்லோமோ –
ஓர் ஆபரணத்தால் இடு சிவப்பன்றிக்கே ஸ்வாபாவிக சௌந்தர்யம் உடையோமும் நாம் அல்லோமோ –
கருப்பூரம் நாறுமோ -கமலப் பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ
என்று தேசிகரைக் கேட்கும்படியான சௌகந்தய சாரச்யம் உள்ளிட்ட போக்யதையை
உடையோமும் நாம் அல்லோமோ -என்றாப் போலே தம்முடைய ஏற்றத்தைக் காட்டி
தம்முடைய திரு உள்ளத்தை அந்தக் கழுத்தின் நின்றும் தன் பக்கலிலே வர இசித்து துவக்க

செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த அவ்வாய் யன்றி யான் அறியேன் -என்கிறபடியே
அந்த திருப் பவளச் செவ்வாயிலே தாம் அபஹ்ருதராய் அகப்பட்ட படியைச் சொல்லுகிறார்
ஆனால் -செய்ய வாயையோ என்னைச் சிந்தை கவர்ந்தது -என்ன அமைந்து இருக்க -கீழில்
விசேஷணங்களால் செய்கிறது என் என்பது என்னில் –
கீழ் -அஞ்சாம் பாட்டில் –
பாரமாயபழ வினை பற்று அறுத்து என்னைத் தன் வாரமாக்கி வைத்தான் -என்று அநேக ஜன்மார்ஜிதமான
பாபராசியை அடைய இத்தலையில் ஒரு ஹேது இன்றிக்கே இருக்கச் செய்தே -என்னுடைய
நிகர்ஷம் பாராதே ஸவாசனமாகப் போக்கினான் என்று சொல்லி -அது கூடுமோ என்கிற
அபேஷையிலே -ஈஸ்வர அபிமாநியாய் துர்மாநியாய் ருத்ரனுடைய துயரை அவன் தண்மை
பாராதே போக்கினாப் போலே -என்னுடைய நிகர்ஷம் பாராதே பாபங்களையும் போக்கினான்
என்று ருத்ரனை த்ருஷ்டாந்தமாக சொன்னாராய் இறே கீழ்ப்பாட்டில் நின்றது –
இத்தைக் கேட்டவர்கள் இது விஷம உதாஹரணம் காணும் -அந்த ருத்ரன் -ஆகிறான்
ததாதர்சித பந்தாநௌ ஸ்ருஷ்டி சம்ஹார கார கௌ -என்கிறபடியே சம்ஹார தொழிலிலே
புருஷோத்தமனாலே நியுக்தன் ஆகையாலே அதிகாரி புருஷனுமாய் -அவனுக்கு
ப்ரஹ்ம சிரஸ் க்ருந்த நத்தாலே வந்த ஆபத்து தானும் ப்ராமாதிகமாக ஒருகால்
பிறந்தது ஆகையாலே -தன் அலங்கல் மார்பில் வாசநீர் மாத்ரத்தாலே போக்கலாம் –
நீராகிறீர் -ச்ருதிஸ் ஸ்மருதிர் ம்மை வாஜ்ஞா -என்கிறபடியே பகவத ஆஜ்ஞா ரூபமான
வேத வைதிக மர்யாதையை அதிக்ரமித்தவருமாய் அதுக்கு மேலே அக்ருத்ய கரண
க்ருத்ய அகரண ரூபமான பாபங்களை அநாதி காலம் கூடு பூரித்தவருமாய் அன்றோ -இருப்பது

ஆன பின்பு உம்முடைய பக்கல் ஒரு கைம்முதல் இன்றிக்கே இருக்க உம்முடைய பாபங்களை அப்படிப் போக்க போமோ
அது கிடக்க -அந்த ருத்ரன் தானே தேவர்களுக்கு மேலாய் இருக்கையாலே ஆனை மேல்
இருந்தார் ஆனை மேல் இருந்தாருக்கு சுண்ணாம்பு இடுமோபாதி அவன் கார்யம் செய்யக் கூடும்
மனுஷ்யர்களுக்கும் கீழாய் இருக்கிற உம்முடைய பாபங்களை போக்கக் கூடுமோ -அது கிடக்க –
ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாயா -என்கிறபடியே ப்ரஹ்மாவுக்கு ஜ்யேஷ்ட புத்ரனான படியாலே
தனக்கு பௌத்ரன் என்று இட்டு அவன் கார்யம் செய்யலாம் -அப்படி இருப்பதொரு பந்த விசேஷம்
உமக்கு இல்லையே -அதுவும் கிடக்க அந்த ருத்ரன் தான் மூ வுலகும் பலி -திரிவோன்
என்கிறபடியே திருப்பாற் கடலிலே செல்ல பின்பன்றோ அவன் துயரைப் போக்கிற்று -நீரும் அப்படிப்
போனீரோ -என்ன அதற்க்கு அடைவே உத்தரமாய் இருக்கிறது

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-வியாக்யானம் –

கையினார் சுரி சங்கு அனல் ஆழியர் –
கரி முனிந்த கைத்தலம் என்றும் -பரிகோபமா -என்றும் வெறும் புறத்திலே விரோதிகளை
நிரசிக்க நிரசிக்க வற்றாய் இருக்கச் செய்தே -அசிந்த்ய சக்திகளான திவ்ய ஆயுதங்களை
தரித்துக் கொண்டு -எப்போதும் கை கழலா நேமியானாய் இருக்கிறது -நம் மேல் வினை கடிகைக்கு அன்றோ -என்கிறார்
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்துக்கு சுரி ஸ்வபாவமானாப் போலே திரு வாழி யாழ்வானுக்கும் ப்ரதி
பஷத்தின் மேலே அனல் உமிழுகை ஸ்வபாவம் -இறே

வெறும் புறத்திலே -படவடிக்க வல்ல -ஆலத்தி வழிக்க வல்ல -கையிலே
அழகு நிறைந்து -சுரியை வுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -ப்ரதி பஷத்தின் மேலே அனலை
வுமிழா நின்றுள்ள திரு வாழி -இவற்றை வுடையராய் இருக்கை –

ஸ கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயா நிவ்ய தாரயத் -என்றும் –
தீய அசுரர் நடலைப்பட -முழங்கும் என்றும் சொல்லுகிறபடியே விரோதி வர்க்கத்தை
தன் த்வநியாலே தானே நிரசிக்க வல்ல ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்
கருதுமிடம் பொருது -என்கிறபடியே விரோதி வர்க்கத்தை -கூறாய் நீறாய் நிலனாகி –
என்கிறபடியே அழியச் செய்யும் திரு வாழியையும் தரித்துக் கொண்டு இருக்கிறது
என்னுடைய அறுக்கலறாப் பாபங்களை போக்குகைக்கு அன்றோ –
பட்டர் திருக் கோட்டியூரிலே எழுந்து அருளி இருக்கிற காலத்திலேயே ஒரு விசேஷ
திவசத்தின் அன்று கோளரி ஆழ்வானைப் பார்த்து தெற்காழ்வார் சொன்ன வார்த்தையை ஸ்மரிப்பது –
திருக் கோட்டியூரிலே எழுந்து அருளி இருக்க அனந்தாழ்வான் பட்டரை
ஸ்ரீ வைகுண்ட நாதன் த்வி புஜனோ சதுர் புஜனோ -என்ன -இருபடிகளும் அடுக்கும் என்ன
இரண்டிலும் அழகிது ஏது என்ன –
த்வி புஜனாகில் பெரிய பெருமாளைப் போலே இருக்கிறது -சதுர் புஜனாகில் நம் பெருமாளைப்
போலே இருக்கிறது -என்றார்-
கையினார் சுரி சங்கு அனல் ஆழியர் -நம்மைப் போல் அன்றிக்கே தெளியக் கண்டவர்கள்
பெரிய பெருமாளையும் சதுர்ப் புஜராய் யிறே அநுபவிப்பது –
நீள் வரை போல் மெய்யினார் -திவ்யாயுதங்கள் தானும் மிகை என்னும்படி மேரு மந்தர மாத்ரமான
என்னுடைய பாப ராசிகளை மலையை இட்டு நெரித்தாப் போலே நெரிக்க வற்றான பெரிய
மலை போலே திண்ணிதான வடிவை வுடையவர் -மலையை கடலுக்கு ஒப்பாக சொல்லும் இத்தனை
நீட்சி -போக்யதா ப்ரகர்ஷம் -பச்சை மா மலை போல் மேனி -இந்த வடிவை அனுபவிப்பார்க்கு
பிரகாஸ ரூபமாய்த்து இவர்கள் இருப்பது -அதுக்கு மேலே ஒப்பனை அழகு

துளப விரையார் கமழ் நீண் முடி –
பெரியவர்கள் கார்யம் செய்தவன் உம்முடைய கார்யம் செய்யப் புகுகிறானோ என்ன –
வெறும் ப்ரஹ்ம ருத்ராதி களுக்கே சேஷி என்று அன்றே அவன்
முடி கவித்து இருக்கிறது -பிசு நயந் கில மௌளளி -பதிம் விச்வச்ய -என்றும் சொல்லுகிறபடியே
உபய விபூதி நாதன் அன்றோ –
துளப விரையார் கமழ்-
சர்வ கந்த வஸ்துவுக்கு தன் கந்தத்தாலே மணம் கொடுக்க வற்றாய்
மேன்மைக்கு உடலாய் இருக்கிறபடி –
நீண் முடி -என்னளவும் வந்து என்னை விஷயீ கரித்த முடி –
எம்மையனார் –
ருத்ரனனுக்கு பௌத்ரனாய் இருப்பதொரு பந்த விசேஷம் உண்டே -உமக்கு அது
இல்லையே என்று சொன்னதுக்கு உத்தரம் சொல்லுகிறார் -அவனுக்கு பௌத்ரத்வ நிபந்தநம்
ஒன்றுமே யன்றோ உள்ளது -மாதா பிதா ப்ராதா -இத்யாதிப் படியே சர்வவித பந்துத்வமும்
உள்ளது எனக்கே யன்றோ –
எம்மையனார் –
என்னைப் பெற்ற தமப்பனார்
பிதேவ புத்ரச்ய -இத்யாதிப் படியே இத்தலையில் குற்றங்களைப் பொறுக்க வேண்டும்படியான
பந்தம் உடையவன் அன்றோ –

அணி யரங்கனார் –
அந்த ருத்ரன் ஷீராப்தி யளவும் போய் அன்றோ கார்யம் கொண்டது -நீர் அவ்வளவும்
போந்திலீரே என்ன-அதுக்கு உத்தரமாக அவன் -மூ வுலகும் பலி திரிவோன் ஆகையாலே போய்க்
கார்யம் கொள்ள சக்தனானான் -அழும் குழவியாய் இருக்கிற என் போல்வாரை ரஷிக்கைக்கு அன்றோ
பிரஜை கிணற்றிலே விழுந்தால் கூடக் குதிக்கும் தாயைப் போலே இங்கு வந்து சாய்ந்து அருளிற்று
மாதா பிதா ப்ராதா நிவாஸச் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண -என்கிற பொது வன்று
திரு வரங்கத்துள் ஓங்கும் -இத்யாதிப் படியே பெரிய பெருமாள் தாமே என்கிறார்
அணி அரங்கனார் -அலங்காரமான கோயிலிலே வந்து சாய்ந்தவர்
ஆபரணம் ஆனது பூண்டவனுக்கு நிறம் கொடுக்கிறது -இவ் ஊரும் ரஷகனுக்கு நிறம்
கொடுக்கிறது ஆகையாலே சொல்லுகிறது

அணி அரங்கனார் –
ப்ராப்த விஷயமாய் இருக்கக் கடக்க விராதே சம்சாரத்துக்கு ஆபரணமான
கோயிலிலே வந்து அண்ணியருமாய் இருக்கிற படி-

அரவின் அணை மிசை மேய மாயனார் –
இவ்வளவேயோ உள்ளது –
யத்ர ராம ஸ லஷ்மண-என்றும் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்றும்
சொல்லுகிறபடியே புருஷகார பலமும் உண்டு என்கிறார்
அரவின் அணை மிசை மேய –
ரத்னங்களை சாடியிலே பதித்துக் காட்டுமா  போலே
தன் அழகு தெரியாதார்க்கு திருவந்தாழ்வான் மேல் சாய்ந்து காட்டின படி
அரவின் அணை மிசை மேய -தான் புருஷகாரமாக சிலரைக் காட்டிக் கொடுத்தால்
அவர்களை அவன் ரஷியாதே விடில் தானும் அவனை எடுத்து உதறிப் போக்கும்
அரவின் அணை மிசை மேய மாயனார் –
ஸ மயா போதிதா ஸ்ரீ மான் ஸூக ஸூப்த பரந்தப
என்கிறபடியே தான் எழுந்து இருந்து ஒரு வ்யாபாரம் பண்ண வேணுமோ

புலி கிடந்த தூறு என்றால் மிருகங்கள் எல்லாம் காடு பாய்ந்து போமா போலே
ஆஸ்ரிதர் உடைய விரோதி வர்க்கம் அடைய தான் கிடக்கிற படியைக் கண்ட போதே
கானோ ஒருங்கிற்று கண்டிலமால் -என்னும்படி கிடக்கிற ஆச்சர்ய பூதன் –
மாயனார் -மின் மினி பறக்கிறபடி

ஸ மயா போதித ஸ்ரீ மான் -எல்லாருக்கும் ஒன்றிலே சாய்ந்தவாறே பொல்லாங்குகள் தெரியும்
இங்கு பழைய வழகுகளும் நிறம் பெறும்

மாயனார் –
அங்கன் அன்றிக்கே கிடந்ததோர் கிடைக்கை கண்டும் -என்கிறபடியே இன்று
நாமும் சென்று அனுபவிக்கப் பார்த்தாலும் -ஒருக்கடித்து என்ன ஒண்ணாதே -மல்லாந்து
என்ன ஒண்ணாதே யிருக்கிற ஆச்சர்யத்தை சொல்லிற்று ஆகவுமாம்
மாயனார் செய்ய வாயையோ என்னை சிந்தை கவர்ந்ததுவே
ஸ்வ நிகர்ஷ அனுசந்தானத்தாலே பிற்காலிக்கிற என்னை -ஸ்வா பாவிக சௌந்தர்யத்தையும்
போக்யதையும் உடைய திருப்பவளமானது தன்னுடைய் ஸ்மிதத்தைக் காட்டி
அருகே சேர்த்துக் கொண்டு என்னுடைய மனஸ்ஸை அபஹரித்தது
என்னை சிந்தை கவர்ந்ததுவே –
உழக்கைக் கொண்டு கடலின் நீரை யளக்கப் புக்கு
அது தன்னையும் பறி  கொடுத்தேன்

என்னை சிந்தை கவர்ந்தது-
துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசனான
என்னைக் கிடீர் இப்படி அகப்படுத்திற்று என்கிறார் –
செய்ய வாய் –
ஸ்திரீகள் உடைய பொய்ச் சிரிப்பிலே துவக்கு உண்டார்க்கு இச் சிரிப்புக்
கண்டால் பொறுக்க ஒண்ணுமோ –
ஐயோ –
திருவதரமும் சிவப்பும் அனுபவிக்க அரிதாய் ஐயோ என்கிறார்
ஐயோ –
அவரும் தம்மை முழுக்க அனுபவிக்கப் பார்த்தார் -நானும் முழுக்க அனுபவிப்பேனாக
பாரித்தேன் -இத்தை திருவதரம் ஒட்டாதே இடையிலே இறாஞ்சிக் கொள்வதே ஐயோ என்கிறார் –
என்னை –
கல்லை நீராக்கி நீரையும் தானே கொண்டது -சித்த அபஹாரத்தைப் பண்ணி ஆத்ம
அபஹாரத்தை அழித்தது –
ப்ரதான சேஷியைக் கண்டவாறே த்வார சேஷி யளவில் நில்லாது இறே

இப்பாட்டில் ஸ்ரீ வைகுண்ட நாதன் படியும் இங்கே காணலாம் என்கிறார்

———————————————————–

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை-

மேல் நாலு பாட்டாலே ப்ரார்த்த நீயமான கைங்கர்யத்துக்கு ப்ரசாதகமான அநுபவம்
தம்மை இப்போது பரவசம் ஆக்கின படியைப் பேசுகிறார் –
அதில் -கையினார் -என்கிற பாட்டில் –
ஆழ்வார்களோடு பொருந்தின திருக் கையை அவலம்பநமாகக் கொண்டு
திரு முடி யளவும் சென்று மீண்ட சிந்தையை தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானுடைய
கோலம் திரள் பவளக் கொளுந்துண்டம் கொல் -என்னும்படியான திருப் பவளத்தில் அழகு
தன் வசம் ஆக்கிற்று என்கிறார்

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் –

கையினார் சுரி சங்கு அனல் ஆழியர் –
திருக் கைக்கு ஆயுதமாகைக்கும் ஆபரணம் ஆகைக்கும்
போரும் என்னும்படி ஆர்ந்த சந்நிவேசத்தை உடைத்தாய் -அவலம்புரியான வடிவாலே ப்ரணவ் சந்நிவேசமாய்
சப்த ப்ரஹ்ம மயமாய் -நிரதிசய ஆநந்த ஹேதுவான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் -தாநவ வநதா
வக்னியாய் -மனஸ் தத்வ அபிமானியான திருவாழி யாழ்வானையும் உடையராய் –
இத்தால் -மந்தரத்தையும் மனசையும் அநுகூல  சிந்தைக்கு அனுகுணம் ஆக்கவில்ல
உப கரணங்களை உடையவர் என்றது ஆய்த்து –

திவ்யாயுத ஆழ்வார்கள் பெரிய பெருமாள் உடைய திருக்கைகளில் ரேகையில் ஒதுங்கிக் கிடந்தது –
பெருமாள் திரு மேனியிலே தோன்றி நிற்பர்கள்

நீள் வரை போல் மெய்யனார் –
ஸ்வரூபம் போலே சூஷ்ம த்ருஷ்டிகள் காணும் அளவன்றிக்கே
மாம்ச சஷூஸ்ஸூக்களும் காணலாம் படி மலை இலக்கான திருமேனியை வுடையவர்

துளப விரையார் கமழ் நீண் முடி எம் ஐயனார் –
சர்வாதிகத்வ ஸூசகமான திருத் துளாயின் பரிமளத்தைப் பரி பூர்ணம் ஆக்கும்படி
கமழ்ந்து -விபூதி த்வய சாம்ராஜ்ய வ்யஞ்சகமான திவ்ய கிரீடத்தை வுடைய சர்வ லோக பிதாவானவர்
அணி அரங்கனார் –
பரம வ்யோம ஷீரார்ண வாதிகளைக் காட்டில் குணா திசயத்தாலே
ஆஸ்ரீதற்கு ஹ்ருத்ய தமமான படியாலே விபூதி இரண்டுக்கும் ஏக ஆபரணம் என்னலாய்
சௌலப்ய அதிசயம் உண்டாம் படியான ஸ்ரீ ரெங்க விமாநத்தை சயன ஸ்தானமாக உடையவர்
அணிமையாலே அணி அரங்கனார் -என்கிறது ஆகவுமாம்

அரவின் அணை மிசை மேய மாயனார் –
தம்முடைய ஜ்ஞான பலங்கள் வடிவு கொண்டால் போல
இருக்கிற திருவனந்தாழ்வான் ஆகிற ஆநுகூலதிவ்ய பர்யங்கத்தின் மேலே அளவறத்
தேங்கின அம்ருத தடாகம் போலே ஆஸ்ரீதர்கு அனுபவிக்கலாய் –
சிந்தாமணி வோத்வாந்த முத்சங்ககேஸ் அநந்த போகிந -என்னும்படி அத்ய ஆச்சர்ய பூதரானவருடைய
வாலியதோர் கனி கொல் -என்னலாம் படி வர்ண மாதர் யாதிகளை வுடைத்தாய்
வையம் ஏழும் உள்ளே காணலாம் படியான செய்ய வாய் என் சிந்தையைப் பறித்துக் கொண்டது
ஐயோ என்று ஆச்சர்யத்தை யாதல்
அனுபவித்து ஆற்ற அரிதான படியை யாதல்
அநுபவ ரசத்தை யாதல் -காட்டுகிறது

————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

அமலனாதி பிரான் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளைஅருளிய-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்அருளிய–ஸ்ரீ வேதாந்த தேசிகர்அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் -துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய –

May 22, 2013

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —-6

—————————————————-

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-அவதாரிகை-

சர்வ லோகத்தையும் அமுது செய்து அருளின கண்டத்தின் அழகு என்னை
உண்டாக்கிற்று -என்கிறார் –
திருமார்பின் அழகு திருக் கழுத்திலே ஏறிட்டது -என்னவுமாம்

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-வியாக்யானம் –

துண்டம் -இத்யாதி
கலா மாத்ரமாய் வெளுத்து இருந்துள்ள பிறையை -ஜடையிலே உடையனான –
ருத்ரன் தனக்கு பிதாவுமாய் லோக குருவுமாய் இருந்துள்ள ப்ரஹ்மா உடைய
தலையை அறுக்கையால் வந்த பாபத்தை போக்கினவன் –
சுமையராய் இருப்பார் சும்மாட்டுக்கு உள்ளே தாழை மடலை செருகுமா போலே
சாதகனாய் இருக்கச் செய்தே -ஸூக ப்ரதானாக அபிமானித்து இருக்குமாய்த்து –
ஆனாலும் ஆபத்து வந்தால் அவன் அல்லது புகல் இல்லையே –
சந்த்ரனுடைய ஷயத்தைப் போக்கினான் என்றுமாம்
அவனுடைய் துரிதத்தைப் போக்கினாப் போலே தம்முடைய துரிதத்தையும் போக்கும் என்று கருத்து-

அஞ்சிறைய வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்-
லோகத்தில் பிரதாநர் ஆனவர்கள் ப்ரஹ்ம ஹத்தியைப் பண்ணி அலைந்து கொடு கிடக்கப்
புக்கவாறே -தான் கடக்க நிற்க ஒண்ணாது என்று -இவர்களுடைய ரஷண அர்த்தமாக
கிட்ட வந்து கண் வளர்ந்து அருளுகிற உபகாரகன் –
அழகிய சிறகை உடைத்தான வண்டுகள் வாழா நின்ற சோலை சூழ்ந்த பெரிய கோயிலிலே
கண் வளர்ந்து அருளுகிற பிதாவானவன்
வண்டு வாழ் பொழில் –
வண்டுகள் அவன் பக்கல் செல்லாது –
திருச் சோலையின் போக்யதையிலே இள மணல் பாய்ந்து கால் வாங்க மாட்டாதே நிற்கும் –
அவ் வண்டுகளைப் போலே தம்மை அனுபவித்து விடாய் கெடுத்தான் -என்கிறார் –

அண்ட ரண்டம் இத்யாதி –
அண்டாந்தர் வர்த்திகள் உடைய அண்டம் –
பகிரண்டம் -புற வண்டம்
அத்விதீயமான மஹா ப்ருதிவி
பூமிக்கு ஆணி யடித்தால் போலே இருக்கிற ஏழு வகைப்பட்ட குல கிரிகள்
ஓன்று ஒழியாமே ஆடிக் காற்றில் பூளை போலே பறந்து திரு வயிற்றிலே புகும்படி
யுண்ட கழுத்து கிடீர்
இவற்றைத் தனித் தனியே சொல்லுவான் என் என்னில்
தனியே சொல்லுகை போக்யமாய் இருக்கையாலே
பெரிய பெருமாள் திருக் கழுத்தைக் கண்டால் பிரளய ஆபத்தில் ஜகத்தை எடுத்துத்
திரு வயிற்றிலே வைத்தமை தோற்றா நின்றது ஆய்த்து –
அடியேனை உய்யக் கொண்டதே
முன்பு பெற்ற கைங்கர்யத்துக்கு விச்சேதம் பிறவாதபடி நோக்கிற்று
என்னை சம்சாரத்தில் ஒரு நாளும் அகப்படாதபடி பண்ணிற்று –

இப்பாட்டால்
ஆபத் ஸகனான சர்வேஸ்வரன் படியும் இங்கே உண்டு என்கிறார் –

———————————————————

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–அவதாரிகை-

சர்வ லோகத்தையும் அமுது செய்து அருளின கண்டத்தின் அழகு என்னை
உண்டாக்கிற்று -என்கிறார் –
திரு மார்பின் அழகு திருக் கழுத்திலே ஏறிட்டது -என்னவுமாம்-

கீழ்ப் பாட்டில் திரு மார்பானது ஹராத்ய ஆபரண சோபையையும் –
பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாய் இருக்கிற மேன்மையையும் காட்டி
தம்மை திரு வயிற்றின் நின்றும் வர வீரத்துக் கொண்டு எழுதிக் கொண்ட படி யிறே சொல்லிற்று –
இதில் -அந்த திரு மார்புக்கு மேலாய் –
ரமயது ஸ மாம் கண்ட ஸ்ரீ ரங்க நே துரு தஞ்சி தக்ரமுக தருண க்ரீவாகம் புப்ர லம்பமலிம்லுச
ப்ரணய விலகல்  லஷ்மீ விச்வம் பராகர கந்தளீ கநக வலய க்ரீடா சங்கராந்த ரேக இவோல்ல சன் –
என்கிறபடியே கமுகுக் கன்றின் கழுத்துப் போலே பசுகு பசுகு என்று இருப்பதாய் -ரேகாத்ரயாங்கிதமாய் –
இரண்டருகும் நெருங்கி நடுவு பெருத்து இருக்கையாலும் -ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலே இருக்கிற திருக் கழுத்தானது-

இந்த திரு மார்புக்கு உள்ளது -அலர்மேல் மங்கை யுறை மார்பா -என்கிறபடியே
பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாய் இருக்கிற -ஆகாரமும்
திருவாரத்தாலே அலங்க்ருதமான ஆகாரமுமே யன்றோ –
இவளைப் போலே -சங்கு தங்கு முன்கை நங்கையாய் இருப்பார் அநேகம் நய்ச்சிமார்
ஸாபரணமான தங்கள் கைகளால் அணைக்கை யாலே -அவ் வாபரணங்கள் அழுத்த
அவற்றாலே முத்ரிதராய் இருப்போமும் நாம் அல்லோமோ –
பிரளய ஆபத்து வர சகல அண்டங்களையும் தத் அந்தர்வர்த்திகளையும் ரஷித்தோமும்
நாம் அல்லோமோ -அதுவும் கிடக்க பாண்டவர்கள் தூது விடுகிற போது கட்டிவிட்ட
மடக்கோலை இன்றும் நம் பக்கலிலே அன்றோ கிடக்கிறது –
அந்த ஹாரம் தனக்கும் தாரகம் நாம் அல்லோமோ –
என்றாப் போலே தன்னுடைய ஆபரண சோபையையும் -யௌவனத்தையும் -ஆபன் நிவாரகத்வத்தையும்
காட்டி என்னை சம்சாரம் ஆகிற பிரளயத்தின் நின்றும் எடுத்து உஜ்ஜீவிப்பித்தது என்கிறார் –

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–வியாக்யானம் –

துண்ட வெண் பிறையன்றுயர் தீர்த்தவன் –
கீழ்ப் பாட்டிலே என்னுடைய அஜ்ஞானத்தாலே -என்னாலும்  பிறராலும் பரிஹரிக்க
ஒண்ணாதபடி -அநாதி காலார்ஜிதமாய் -அவசியம் அனுபோக்ய தவ்யமாய் -பிடரியைப்
பிடித்து கொடு நிற்கிற துஷ் கர்மங்களை பெரிய பிராட்டியார் புருஷகாரமாக –
தத் ஷணா தேவ நச்யதி -என்கிறபடியே பெரிய பெருமாள் நசிப்பித்தார் என்று இறே சொல்லிற்று –

இத்தைக் கேட்டவர்கள் -பாரமாய பழ வினை யடைய அவள் புருஷகாரமாக போக்கினார்
என்னும் -இடம் ஆச்சர்யமாய் இருந்ததீ -இது உபபன்னம் என்று நாங்கள் அறியும் படி என் என்ன –
என்னைப் போலே தன்னுடைய அஜ்ஞ்ஞானத்தாலே ஈஸ்வர அபிமானியான ருத்ரன் ஆனவன்
லோக குருவுமாய் தனக்குப் பிதாவுமான ப்ரஹ்மா வினுடைய சிரஸை நகத்தாலே அறுத்து
இப்படி தன்னாலும் பிறராலும் பரிஹரிக்க ஒண்ணாத படியான துயரை சம்பாதித்து
அது போகைக்காக ஷீராப்தி நாதன் பாடேற வர -அவ்விடத்தே தானும் பெரிய ப்ராட்டியாருமாய் தோன்றி
ஸ்ரீமான் மயா  பிஷாம் ப்ரயாசித -என்கிறபடியே அபேஷ அநு குணமாக அவள் புருஷகாரமாக
அவனுடைய பிரமஹத்தையால் வந்த துயரைத் தீர்த்தாப் போலே -ஸ கலு ப்ரஹ்மஹா பவேத்
என்கிற என்னுடைய ப்ரஹ்மஹத்தையையும் போக்கினான் -என்கிறார்

இந்தச் சேவகன் -மஹா பாதகாதி பாபங்களைப் பண்ணி மஹா ரௌரவாதி நரகங்களிலே
யமபடர் கையிளைத்து விடுமளவும் அசித் கல்பனாய் கிடந்தது அனுபவித்து -அவர்கள் விட்டடித்தவாறே
முற்பட -ஸ்தாவர க்ரிமயோப் ஜாச்ச பஷிணச்ச ஸரீஸ்ருபா -என்கிறபடியே முற்பட
ஸ்தாவராதி யோநிகளிலே பிறந்து -மாநுஷ்யம் ப்ராப்ய லோகேஸ்மின் ந மூகோ பதிரோபி வா –
நா பக்ராமதி சம்சாராத் ஸ கலு ப்ரஹ் மஹா பவேத் -என்கிறபடியே மநுஷ்ய ஜன்மத்திலே
பிறக்கவும் பெற்று -ச்ரோத்ராதி கரணங்களும் விதேயமாகப் பெற்று வைத்து -இவற்றைக் கொண்டு
ஈஸ்வரனைப் பற்றி திரு நாம சங்கீர்த்தன முகத்தாலே இந்த சம்சாரத்தை கடவானாகில்
அவனை ப்ரஹ்ம -என்றது இறே -புழு நெருடுகிறவனுக்கும் -ப்ராஹ்மண சரீரத்தை
வதிக்கிறவனுக்கும் ஹிம்சை ஒத்து இருக்கச் செய்தே ப்ரஹ்மண வதம் ப்ரஹ்மஹத்யை
என்கிறது –
அவனுடைய ஜன்ம வ்ருத்த ஜ்ஞானங்களால் வந்த க்ரௌரவம் பற்ற விறே –
அப்படியே யச்யாத்மா சரீரம் -என்கிறபடியே பகவத் சரீர பூதமான ஆத்மாவை அபஹரித்து
நாராயணத்வத்தை ஒருவாய்ப் போக்குகிறவனை ப்ரஹ்ம என்னத் தட்டில்லை இறே-

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் –
சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வாச நீர் கொடுத்தவன் -என்கிறபடியே
தீர்த்த சேவையாலும் -தன் தபசாலும் -தன் சக்தி மத்தையாலும் போக்க ஒண்ணாத வலிய துயரை
பிராட்டி புருஷாகாரமாக தன் மார்பில் வாச நீரால் போக்கினது -தம்முடைய துயரை போக்கினதுக்கு
நிதர்சநமாய் இருக்கையாலே அவனை உதாஹரணம் ஆக்குகிறார் -தாழை மடலை சூடி
வருவாரைப் போலே ஒரு கலா மாத்ரமான வெளுத்த சந்த்ரனை சடையிலே வுடையனான
ருத்ரன் உடைய பாபத்தைப் போக்கினவன் -கலா மாத்ரமான சந்த்ரனை ஜடையிலே சூடி
வந்தான் ஆகில் இப்படி ஆபன்னனாய் வருகிற விடத்திலும் அலங்காரத்தோடே த்ருப்தனாய் வந்தான் என்கை –
வெண்மையாலே சிவந்த ஜடைக்கு பரபாகமாய் இருக்கிறபடி –
சுமையரராய் இருப்பவர் சும்மாட்டுக்குள் தாழை மடல் சொருகுமா போலே சாதகனாய் இருக்கச் செய்தே
சுக பிரதானாய் அபிமாநிதது இருக்குமாய்த்து -ஆனாலும் ஆபத்து வந்தால் அவன் அல்லது புகல்
இல்லை யிறே -இத்தால் ஒரு தேவதையை ஆபரணமாக உடையவன் ஆகையாலே வந்த மதிப்பும்
போக ப்ரதானன் என்னும் இடமும் முமுஷு வல்லன் என்னும் இடமும் சொல்லுகிறது —

வெண் பிறையன் துயர் –
தனக்கு தக்க வாதம் இறே
லோகத்துக்கு சங்கரனாய் இருக்கிறவனுக்கு வந்த துக்கம் இறே
இவன் தன்னுடைய கர்வத்தாலே ப்ரஹ்ம ஸிர க்ருந்தநம் பண்ணின வனந்தரம்
இவன் புத்ரத்வம் குலைந்தாலும் தான் பிதாவான படியாலே இவனை அழியாதே செருக்கு
வாட்டுகைக்காக –
கபாலீ த்வம் பவிஷ்யசி என்று ப்ரஹ்மா சபிக்க -இவன் கையிலே -முடை யடர்த்த
சிரம் ஏந்தி மூவுலகும் பலி திரிவோன் -என்கிறபடியே -கபாலத்தைக் கொண்டு பலி புக்கான
ஜெயந்தனைப் போலே த்ரீன் லோகான் சம்பரிக்ரம்ய -பண்ணிக் கொண்டு திருப் பாற் கடலிலே
சென்ற அளவிலே -இடர் கெடுத்த திருவாளன் -என்கிறபடியே -பிராட்டியும் தானுமாய் வந்து
துயரைத் தீர்த்தான் இறே –

ஸ பித்ரா ச பரித்யக்த ஸ ஸூரைச்ச ஸ மஹர் ஷிபி
த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத
ஸ -பெருமாள் திரு உள்ளத்திலே தீரக் கழிய அபராதத்தைப் பண்ண -அவர் குபிதராய்
ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட -அது பின் தொடர்ந்து கொடு திரிய -ஆவாரார் துணை -என்கிறபடியே
ரஷக அபேஷை உடைய காகமானது
பித்ரா ச பரித்யக்த-பெற்றவர்களுக்கு பரமன்றோ ரஷிக்கை-என்று பார்த்து இந்த்ரன் பாடே சென்றான் –

இந்த்ரோ மகேந்த்ரஸ் ஸூர நாயகோ வா த்ராதும் ந சக்தா யுதி ராமவத்யம் -என்கிறபடியே
எட்டுக் கதிரும் விட்டு எரிகிற பெரிய மதிப்பும் தானும் ஆனாலும் ராவத்யனை ரஷிக்கை
அரிதாகையாலே பூதாநாம் யோவ்யய பிதா -என்கிறபடியே -நிருபாதிகான்- தாய்க்கும் தகப்பனுக்கும் ஆகாதே
சர்வ பூத ஸூஹ்ருதான அவர் அளவிலே பிரதிகூல்யம் பண்ணி அவர்க்கு அவத்யன் ஆனவன் அன்றோ –

இவன் இங்கு புகுருகை யாவது என் -சேந்த்ராய -எண்ணிலோ என்று பயப்பட்டு
புத்ர மித்ர களத்ரங்களோடே எல்லோரும் காண நாற் சந்தியிலே குட நீர் வழித்து விட்டான் –
ஸூ ரைச்ச-
மாதா பிதாக்கள் கை விட்ட வளவிலும் இவர்களுக்குஉபாத்யர்த்தமாக
பந்து வர்க்கமான தேவதைகள் கொடு போய் சீராட்டக் கண்டு போருமே
அந்த வாசனையாலே அவர்கள் பாடே சென்றான் -கஸ்ய பிப்யதி தேவாச்ச ஜாத ரோஷச்ய சம்யுகே –
என்கிறபடியே அபராதம் அதுவாகையாலும் -பெருமாளுக்கு அஞ்சுகையாலும் -மாதா பிதாக்கள்
நேராக கை விட்டார்கள் என்று அறிகையாலும் அவர்களும் தள்ளிக் கதவடைத்தார்கள்

ச மஹர்ஷிபி –
இந்த்ரன் கை விட்ட த்ரிசங்குவையும் அகப்படத் தங்கள் தபஸை அழிய
மாறி ரஷித்து -ஆன்ருசம்ச்ய பிரதாநராய் இருக்கும் ருஷிகள் பாடே சென்றான் -அவர்களும்
சத்ய ஹிம்சையிலே பண்ணுவதோர் ஆன்ரு சம்சயம் உண்டோ என்று கை விட்டார்கள்-

த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய-
தமப்பனுக்கு செல்லும் தேசம் ஆகையாலே ஆரேனும் ஒருத்தர் ஒரு காலாகிலும் புத்தி பேதம் பிறந்து
பரிக்ரஹிக்கக் கூடுமோ என்று த்ரைலோக்யத்திலும் தச்சன் கட்டின வாசல்கள் தோறும்
ஒருகால் புக்கப் போலே ஒன்பதின் கால் புகுந்து திரிந்தான் -அங்கு ரஷகர் ஆவாரைப் பெற்றிலன் –

தமேவ சரணம் கத-
கோபித்தாரே யாகிலும் நாராயணத்வ ப்ரயுக்தமான குடல் தொடக்கு உண்டாகையாலே
அவர்கள் முகத்தில் காட்டில் அம்பு விட்டவர் முகமே குளிர்ந்து இருக்கையாலும்
சக்ருதேவ பிரபன்னாய -ஏதத் வ்ரதம் மம -என்று அருளிச் செய்து வைக்கையாலும்
அந்த சீறின பெருமாளே அமையும் என்று அவரையே தனக்கு உபாயமாகப் பற்றினான் –
சர்வ பூதேப்ய –
என்கிறவிடத்தில் -சர்வ சப்தம் அசங்குசித உக்தி யாகையாலே
பிறரால் வரும் பயத்தையும் -தன்னால் வரும் பயத்தையும் ரஷகனான என்னால் வரும்
பயத்தையும் போக்கி ரஷிக்க கடவேன் என்றபடி-இப்படி இக்காகம் பட்டது பட்டு
த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய -பண்ணித் திரிந்தான் இறே-

லோகத்துக்காக சம்ஹர்த்தாவாய் பெரிய மதிப்போடே கும்பீடு கொண்டு திரிந்து
ததாதர்சித பந்தாவாய்க் கொண்டு தன் புத்யா ஒருவனை சம்ஹரிக்கப் புக்குப் பட்டபாடு இறே இது-

தத்ர நாராயணச் ஸ்ரீ மான் மயா பிஷாம் ப்ரயாசித
விஷ்ணு பிரசாதாத் ஸூ ஸ்ரோணி கபாலம் தத் சஹஸ்ரதா
ஸ்புடிதம் பஹூதா யாதம் ஸ்வப்ந லப்த தனம் யதா –என்று துர்மாநியான தானே
தன் அபிமத விஷயத்தைப் பார்த்து சொல்லும்படி யி றே அவனுடைய துயரைப் போக்கின்படி
தத்ர –
அந்த பரம பதத்திலே -நாராயண -அபராதம் பாராமல் ரஷிக்கைக்கு அடியான பந்த
விசேஷத்தைச் சொல்லுகிறது –
ஸ்ரீ மான் –
அந்த பந்த விசேஷம் கிடக்கச் செய்தேயும் – ஷிபாமி -என்றால் பொறுப்பிக்கும் அவள் –
மயா பிஷாம் ப்ரயாசித –
நாட்டை யடைய கும்பீடு கொண்டு அபேஷித பல ப்ரதனை நான் இரந்தேன் –
விஷ்ணு பிரசாதாத் –
அகவாயில் இருந்து என் அலமாப்பை அடைய அனுசந்திதுக் கொண்டு போருகிறவனுடைய பிரசாதம் அடியாக
ஸூச்ரோணி-
உன்னுடைய சௌபாக்ய விசேஷம் இறே –
தத் கபாலம் –
ஒரு காலும் நிரம்பாதே விடாதே கிடந்தது –
சஹஸ்ரதா –
காண ஒண்ணாத படி யாய்த்து காண் -விரோதி போக்கும் இடத்தில்
புகுந்து போய்த்து என்று தெரியாதபடி வாசனையோடே போக்கும் இடத்துக்கு நிதர்சனம் இறே-

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் -சந்த்ரனுடைய ஷயத்தைப் போக்கினான் என்றுமாம் –
அவனுடைய துயரத்தைப் போக்கினாப் போலே என்னுடைய துரிதத்தையும் போக்கும் என்று கருத்து-

அஞ்சிறைய -இத்யாதி -லோகத்திலே பிரதாநர் ஆனவர்கள் ப்ரஹ்மஹத்யை பண்ணி அலைந்து
கொடு கிடக்கப் புக்கவாறே -நாம் கிடக்க ஒண்ணாது -என்று அவர்களுடைய ரஷண அர்த்தமாக
கிட்ட வந்து கண்  வளர்ந்து அருளுகிற உபகாரகன் -அழகிய சிறகை உடைத்தான வண்டு வாழா
நின்றுள்ள சோலை சூழ்ந்த பெரிய கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பிதாவானவன் –

அந்த ருத்ரன் -அலங்கல் மார்பில் வாச நீர் பெற்றுக் களித்தாப் போலே யாய்த்து இந்த வண்டுகளும்
அந்த சோலையிலே மது பானம் பண்ணினத்தால் பிறந்த ஹர்ஷம் சிறகிலே தொடை
கொள்ளலாம் படி களித்து வாழுகிறபடி-

வண்டு வாழ் பொழில் –
வண்டுகள் அவன் பக்கல் செல்லாது –
திருச் சோலையின் போக்யதையிலே இள மணல் பாய்ந்து கால் வாங்க மாட்டாதே நிற்கும் –
அவ் வண்டுகளைப் போலே தம்மை அனுபவித்து விடாய் கெடுத்தான் -என்கிறார் –

அங்கன் அன்றிக்கே -உபாப்யாமேவ பஷாப்யா மாகாஸே பஷிணாம் கதி -ததைவ
ஜ்ஞான கர்மப்யாம் ப்ராப்யதே புருஷோத்தம -என்கிறபடியே –
வண்டுகளோ வம்மின் -என்கிற முமுஷுக்களான சாத்விகர் சமயக் ஜ்ஞான
சத்கர்மங்கள் ஆகிற மோஷ பரிகரங்களைக் கொண்டு வாழுகிற படியை சொல்லிற்று ஆகவுமாம்-

பெரிய பெருமாளுக்கு ஆபரணமாய் ஊருக்கும் ஆபரணமாய் இருக்கும் சோலை
சோலைக்கு ஆபரணமாய் இருக்கும் வண்டுகள் –
வண்டுகளுக்கு ஆபரணமாய் இருக்கும் அழகிய சிறகு -என்கை

ருத்ரனானவன் வந்து அபேஷிக்க அவன் ஒருவனுக்கு உதவின படியை சொல்லிற்று -கீழ்
அபேஷா நிரபேஷமாக அநேக ஜனத்தினுடைய ஆபத்தைப் போக்கிற்று அன்றோ திருக் கழுத்து என்கிறார் மேல் –

அண்ட ரண்டம் –
அண்டாந்தர வர்த்திகளான சேதனரை உடைத்தான இந்த அண்டம்
பகிர் அண்டத்து -பஹி உண்டான அண்டங்கள்
ஈத்ரு சங்களான பறம்பில் உண்டான அண்டங்கள்
ஒரு மாநிலம் -ஈத்ரு சமான அண்டங்களை தரித்து கொண்டு இருக்கையாலே
அத்விதீயமான மஹா ப்ருதிவி
எழு மால் வரை -இவ் வண்டங்களையும் பூமியும் பாதாளத்தில் விழாதபடி சங்கு ஸ்தாபனம்
பண்ணினாப் போலே இந்த பூமியை ஊடுவிக்கிற குல பர்வதங்கள் ஏழும்-

முற்றும் உண்ட கண்டம் கண்டீர் –
இவற்றைத் தனித் தனியே சொல்லுவான் என் என்னில்
தனித் தனியே சொல்லுகை தான் போக்யமாய் இருக்கையாலே -பெரிய பெருமாள்
திருக் கழுத்தைக் கண்டவாறே ஜகத்தை எடுத்துத் திரு வயிற்றிலே வைத்தமை
தோன்றா நின்றதாய்த்து
உண்ட கண்டம் –
விடு காது தோடிட்டு வளர்ந்தது என்று தெரியுமா போலே
முற்றும்  உண்ட கண்டம் –
பஹிர் அண்டாந்த வர்த்தி சேதனரும் பாதாளாதிகளும்
உண்ட கண்டம் –
சேஷ பூதனுக்கு கைங்கர்யம் தாரகமாய் இருக்குமா போலே
இவற்றின் உடைய ரஷணம் தனக்கு தாரகமாய் இருக்கிறபடி

அத்தா சராசரக்ரஹணாத் –
யஸ்ய ப்ரஹ்ம ச ஷத்ரஞ்ச உபே பவத ஓதந -என்னக் கடவது இறே
அடியேனை உய்யக் கொண்ட — பிறப்பித்து -சம்சார ஆர்ணவத்தின் நின்றும் எடுத்து அக்கரை ஏற்றி
சந்த மேகம் என்னும்படி பண்ணிற்று இப்படிப் பட்ட திருக் கழுத்து அன்றோ

இப்பாட்டில்
ஆபத் சகனான சர்வேஸ்வரன் படியும் இங்கே உண்டு என்கிறார்

———————————————

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை –

கீழ்ப் பாட்டில் கைங்கர்ய அர்த்தியான தம்முடைய கைங்கர்ய விரோதிகளான
நிருபாதிக ஸ்வாமித்வ அபிமான மூலங்களை எல்லாம் நிராகரித்த படியை
அருளிச் செய்தார் -இப் பாட்டில் ஐஸ்வர்யார்த்திகளாருடைய ஐஸ்வர்ய விரோதியான
பிஷூ தசையை கழிக்கும் படியை உதாஹரிக்கிறார்-

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம் –

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் –
ஈஸ்வரன் என்று பேரைச் சுமந்த தனக்கும் பூரணத்வம் இல்லை என்கைக்கு ஜ்ஞாபகம் போலே
சகல மாத்ரமாய்க் கொண்டு பிரகாசிக்கிற சந்திர கலையை தரிக்கிற ருத்ரன் ப்ரஹ்மாவினுடைய புத்ரனாய் வைத்து –
பிதாவின் திறத்திலே அபராதம் பண்ணி -அத்தாலே மஹா பாதகாக்ராந்தனாய் –
இப்பாதகத்தை தீர்க்க வல்லார் ஆர் -என்று கரகலித கபாலனாய்க்
கொண்டு திரிந்து -ஓர் அளவிலே கெடு மரக்கலம் கரை சேர்ந்தாப் போலே காருணிகனான
சர்வேஸ்வரனை வந்து கண்டு -என்னெந்தாய் சாபம் தீர் -என்ன-இவனுடைய சாபத்தைத் தீர்க்க -வல்லவன் –

இத்தால் ஈஸ்வரன் என்று பேருடைய ருத்ரன் கர்ம வஸ்யன் என்னும் இடமும்
தன்னைத் தான் ரஷித்துக் கொள்ள மாட்டாத இவன் வேறு ஒருத்தருக்கு நிரபேஷை
ரஷகனாக மாட்டான் என்னும்  இடமும் சர்வேஸ்வரனே சர்வ அநிஷ்ட நிவர்த்தகன் என்னும்
இடமும் சொல்லிற்று ஆயிற்று-

அஞ்சிறைய வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன் –
ஆர்த்தி வுடையார் அபேஷித்தால் அவர்களுக்கு தூத க்ருத்யம் பண்ணுகைக்கும்
மாசில் மலரடிக் கீழ் அவர்களை சேர்க்கைக்கும் ஹேதுவான கதிக்கு சாதனங்களாய் –
அபி ரூபங்களான சிறகுகளை உடைத்தான வண்டுகள்
அபிமத போகத்தோடே வாழுகிற திவ்ய உத்யானங்களாலே சூழப்பட்ட ஸ்ரீ ரெங்க நகரத்திலே
நித்ய வாஸம் பண்ணுகிற சேவை லோக பிதாவானவன் –
இத்தால்-காரண பூதனாய் -கரண களேபரங்களை கொடுத்து உபகரித்தவன் கண்ணுக்கு
இலக்காய் வந்து கண் வளர்ந்து -கரணங்கள் பட்டி புகுராதபடி காக்கிற உபகார
அதிசயத்தை உதாஹரிக்கிறது -ஆகிறது –
ந ராஜ் ஜாதாநி தத்வான் -இத்யாதிகளின் அர்த்தமும்-இங்கே அனுசந்தேயம்

காரண அவஸ்தையில் எல்லாக் கார்யங்களையும் தன் பக்கலிலே உப சம்ஹரித்து
பின்பு ஸ்ருஷ்டிக்கும் படிக்கு உதாஹரணமாக -வெற்றிப் போர்க் கடலைரையன் விழுங்காமல்
தான் விழுங்கி உய்யக் கொண்ட உபகாரத்தைக் காட்டி -நெற்றி மேல் கண்ணானும் நான் முகனும் –
முதலாக -எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் அல்லாதார் தாமுளரே -என்னும்
அர்த்தத்தை பேசிக் கொண்டு தம்மை இப்போது சம்சார ஆர்ணவம் விழுங்காதபடி
உய்யக் கொண்ட படியை உபாலாளிக்கிறார்-

அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே-
அண்டாந்த வர்த்திகளான தேவாதி வர்க்கங்களையும் -அண்டங்கள் தன்னையும் –
அண்ட ஆவரணங்களையும் -அண்டங்களுக்கு உள்ளே பஞ்ச சத கோடி விஸ்தீரணையான
மஹா ப்ருதிவியாலும் குல பர்வதங்களாலும் உப லஷிதங்களான சர்வ கார்யங்களையும்
எல்லாம் திரு வயிற்றிலே வைத்து ரஷிக்கைக்காக விழுங்கின திருக் கழுத்து கண்டீர் –
ஸ்வரூபத்தை -உணர்த்தி என்னை ஸ்வ அனுபவத்தில் உஜ்ஜீவிப்பித்தது –
அண்டாதிகளைப் பற்ற சிறியலான குல பர்வதங்களை பிறியப் பேசுகையாலே
அவ்வளவு விழுங்குகையும் ஆச்சர்யம் என்று தோன்றுகிறது

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .