Archive for the ‘Stotrams/Slokams’ Category

ஸ்ரீ கோவிந்தன் என்ற திரு நாமத்தின் பெருமை–ஸ்ரீ சங்கராச்சாரியார் அருளிச் செய்த ஸ்ரீ கோவிந்த அஷ்டகம் —

April 26, 2021

ஓம் நமோ பகவதே மஹாஸுதர்ஷன:
வாஸுதேவாய, தந்வந்தராய,  அம்ருதகலஸ ஹஸ்தாய, சகல பய வினாஷாய,
சர்வ ரோக நிவாரணாய, த்ரிலோக பதயே, த்ரிலோக நிதயே, 
ஓம் ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூப, 
ஸ்ரீ தந்வந்தரி ஸ்வரூப,
ஓம் ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயண நமஹ.

———

கோதை பிறந்த ஊர்; கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடம் தோன்றுமூர்; நீதியால்
நல்ல பத்தர் வாழுமூர் நான் மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்

கோவிந்தன் என்ற திரு நாமத்தின் பெருமைகளைப் பார்ப்போம்.

மகாவிஷ்ணுவுக்கு ஆயிரம் திருநாமங்கள் இருந்தாலும், பஞ்ச நாமாக்கள் என்று சொல்லபடுகின்ற
ஐந்து திருநாமங்கள் புகழ்பெற்றவை. ராமா, கிருஷ்ணா, கோவிந்தா, நாராயணா, நரசிம்மா என்னும் ஐந்தில்
நடுநாயகமாக விளங்கும் கோவிந்த நாமமே இந்த வலைப்பதிவின் தலைப்பு.
திருமலை ஏறும் போது பக்தர்கள் பொதுவாக உச்சரிக்கும் திருநாமம் கோவிந்தா, கோவிந்தா.
திருப்பாவை என்ற திவ்யப்ரபந்ததில் ஆண்டாள் பெருமானின் பல திரு நாமங்களை சொல்லி இருக்கிறார்.
இருபத்தி ஏழு, இருபத்திஎட்டு மற்றும் இருபத்திஒன்பது பாடல்களில் ஆண்டாள், கோவிந்த என்ற திருநாமத்தினை மூன்று முறை, கூறுகிறார்.
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா
கறவைகள் பின் சென்று …… குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
சிற்றம் சிறு காலை….. அன்று காண் கோவிந்தா

பாஞ்சாலி உதவி என்று கண்ணனிடம் சரணாகதி அடையும் போது உபயோகித்த திருநாமம் கோவிந்தா.
“திரௌபதிக்கு, ஆபத்திலே புடவை சுரந்தது கோவிந்த நாமமிறே”..

ஆசமனம் என்ற ஒரு அரைநிமிட வைதிக சடங்கு எல்லா இந்துமத வைதிக கருமங்களிலும் பலமுறை திருப்பித் திருப்பிச் செய்யப்படும் ஒன்று.
அதில் கோவிந்தா என்பது, விஷ்ணுவின் பன்னிரண்டு நாமங்களில் ஒரு முறையும்,
அச்சுதா, அனந்தா, கோவிந்தா என்று முதலில் ஒரு முறையும் சொல்லவேண்டி வரும்.
இதில் விசேஷம் என்னவென்றால், பன்னிருநாமங்களிலும் ‘கோவிந்தா‘ ஒரு முறை வருவதால்,
இங்கு எல்லா நாமங்களிலும் கோவிந்தநாமம் ஒன்று மட்டுமே இரண்டு முறை வரும் நாமம் ஆகின்றது.

ஆன்மிக சொற்பொழிவுகளிலும் தெய்வபஜனை போதும் ஸர்வத்ர கோவிந்தநாமசங்கீர்த்தனம் கோவிந்தா, கோவிந்தா‘
என்று சொல்வது மிக பிரசித்திபெற்ற ஒன்றே.
ஆதி சங்கரர் என்ற மதாச்சாரியாரின் புகழ் பெற்ற ஓர் எளிய வேதாந்த ஸ்தோத்திரம் பஜ கோவிந்தம் என்பது.
இதில் ஆண்டவன் பெயராக ‘கோவிந்த’நாமம் எடுத்தாளப்பட்டது.
சங்கரரின் குருவின் பெயர் கோவிந்தர் என்று இருந்ததாலும், கோவிந்த நாமத்தின் பெருமை தான் அப்படி எடுக்க செய்தது என்று சொல்வதுண்டு.

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 189 (கோவிந்தோ கோவிதாம் பதி) மற்றும் 543 (மகா வராஹா, கோவிந்தக) நாமங்களாக வருகின்றன.
கோவிந்த நாமத்தின் பல மகத்துவங்களில் முக்கியமான ஒன்று என்ன வென்றால் கோவிந்தா என்ற நாமம்
திருமாலின் தசாவதாரங்களையும் குறிக்க வல்லது.

கோவிந்தாவில் வரும், கோ என்ற சப்தத்திற்கு வடமொழியில் பற்பல பொருள்கள் உண்டு.
வாக்கு
உயிர்கள் (கோ), காப்பாற்றுபவன் (விந்தன்)
பசு மாடு, கன்றுகுட்டிகள்
பூமி
மோட்ஷம் அளிப்பவர்
நீர்
அஸ்திரம் அல்லது ஆயுதம்
பர்வதம் அல்லது மலை
துதிக்கும் அல்லது துதிக்கப்படுவர்
புலன்கள். புலன்களை அடக்கி ஆள்பவன்
வேதமோதுவதால் அடையக்கூடியவர்
கூப்பிடுதூரத்தில் இருப்பவர்.

மச்சாவதாரம்: திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம். மச்சம் என்றால் மீன் என்று பொருள்.
மச்ச அவதாரத்தில் நீரில் இருந்து வேதங்களை காப்பாற்றியதால் கோவிந்தா என்று அந்த அவதாரத்தை குறிப்பிடலாம்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம்.
கூர்ம அவதாரத்தில் மந்திர மலையை தாங்கியபடி பாற்கடலில் பள்ளி கொண்டதால் கோவிந்தா என்று கூறலாம்.

திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு, அப்பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தார்.
நீரில் இருந்து பூமியை காப்பாற்றியதால் அந்த அவதாரத்தையும் கோவிந்தா என்றே அழைக்கலாம்.

பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார். பிரஹலாதனுக்கு மோட்ஷம் அளித்தார்.
அதே போல் சகல தேவதைகளும் நரசிம்ஹருக்கு கோபம் தணிய ஸ்தோத்திரம் செய்தார்கள் அல்லது துதித்தார்கள்.
ஆகவே அந்த அவதாரமும் கோவிந்தா எனக் கொள்ளலாம்.

பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம்.
தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.
பூமியை அளந்ததால் கோவிந்தா என்பர்.

தந்தை வாக்கை சிரமேல் கொண்டு செயல் பட்ட பரசுராம அவதாரத்தையும் கோவிந்தா என்றே கூறலாம்.

ரகுகுலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும்,
விச்வாமிதிரரிடம் இருந்து ஐநூறுக்கும் மேலான ஆயுதங்களைப் பெற்றதாலும்,
அகத்திய முனிவரிடம் இருந்து பற்பல அஸ்திரங்களை பெற்றதால் ஸ்ரீ ராமனையும் கோவிந்தா என்றே கொள்ளலாம்.

கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள்.
பலராமரின் ஆயுதம் கலப்பை – அதனை கொண்டு பூமியை தோண்டுவதால் பலராமரும் கோவிந்தரே.

வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம்.
மாடு கன்றுகளுடன் கூடிய ஸ்ரீ கிருஷ்ணரை கோவிந்தா என்றே கூப்பிடுவோம்.
கோவர்த்தன மலையை தாங்கி பசுக்களையும் மக்களையும் காப்பாற்றியதால் கோவிந்தன் ஆகிறார்.

கலி யுகத்தின் முடிவில் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு
செல்ல வருவார் என்பது சனாதன தர்மத்தின் நம்பிக்கை.
முக்திக்கு அழைத்து செல்வதாலும், பூமியில் தர்மத்தை நிலை நிறுத்துவதாலும் கல்கி அவதாரமும் கோவிந்தனே.

கோவிந்தா என்றால் போனால் திரும்ப வராது என்னும் அர்த்தத்தையும் கொண்டது. அதாவது பூவுலகில் மனிதப் பிறவியாய்
அவதரித்து அவதிப்படுபவன் இத் திருநாமத்தை விடாது பற்றிக்கொண்டால் மீண்டும்
இப்பூமியில் பிறப்பெடுக்க மாட்டான் என்பதையே குறிக்கும். கோவிந்த நாமம் சொல்ல சொல்ல போன உயிர்
மீண்டும் திரும்பாது என்பதே இதன் பொருள். அதாவது மறுபிறவி யில்லாத நிலை என்று சொல்லலாம்.

பக்தர்கள் அபயம் வேண்டி மனம் முழுக்க வேங்கடவனை நினைத்து கோவிந்தா என்று முழங்கினால்
செய்யும் பணிகளை விடுத்து தேடிவருவான் கோவிந்தப் பெருமாள்.
மகாபாரதத்தில் திரெளபதியின் சேலையை துரியோத னன் துகிலுரிந்த போது அதைப் பார்த்து
பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியார், விதுரர், பாண்டவர்கள் தலைகுனிந்தார்கள். ஒன்றும் செய்ய இயலாமல் அமைதியாக இருந்தார்கள்.
செய்வதறியாமல் திகைத்தார்கள். ஆனால் திரெளபதி கோவிந்தனை மட்டுமே நம்பினாள். கோவிந்தனின் திருநாமத்தை உச்சரித்தாள்.
இருகைகளையும் மேலே எழுப்பி கோவிந்தா கோவிந்தா என்னை காப்பாற்று என்றாள்.
கோவிந்தனின் திருநாமத்தால் அவளது ஆடையின் அளவும் நீண்டுக் கொண்டே சென்றது.
அவ்வளவு சக்தியைக் கொண்டது கோவிந்தனின் திருநாமம்.

—————–

ஸ்ரீ சங்கராச்சாரியார் அருளிச் செய்த ஸ்ரீ கோவிந்த அஷ்டகம் –

ஸத்யம்ʼ ஜ்ஞானமனந்தம்ʼ நித்யமனாகாஶம்ʼ பரமாகாஶம்ʼ
கோ³ஷ்ட²ப்ராங்க³ண-ரிங்க²ணலோல-மநாயாஸம்ʼ பரமாயாஸம் |
மாயாகல்பித-நாநாகாரமநாகாரம்ʼ பு⁴வனாகாரம்ʼ
க்ஷ்மாமாநாத²மநாத²ம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||–1-

சத்தியம் ஞானம் அனந்தம் நித்தியம்–இடைவெளியற்றது (அனாகாசம்)-இதயக் குகைவெளியிலுள்ளது (பரமாகாசம்)எனும் பொருள்
மாட்டுத் தொழுவத்தில் ஓடிவிளையாடிக் கொண்டிருக்கிறான்.
அனாயாசமானவன்–மாயையை அடக்கி அதனுள் இருப்போன் (பர-மாயாசம்).
தனது மாயையில் கற்பித்த பல்வேறு உருவங்களாகவும்–உருவமின்றியும்-உலகே உருவாகவும் திகழ்வோன்.

ஸ்ரீ-பூ-தேவியரின் நாதனும்–தனக்கு மேல் ஒரு தலைவன் அற்றவனும் (அ-நாதன்)
பரமானந்த வடிவும் ஆகிய அந்த கோவிந்தனை வணங்குவீர்.

———–

ம்ருʼத்ஸ்நாமத்ஸீஹேதி யஶோதா³-தாட³ந-ஶைஶவ ஸந்த்ராஸம்ʼ
வ்யாதி³த-வக்த்ராலோகித-லோகாலோக-சதுர்த³ஶ-லோகாலிம் |
லோகத்ரயபுர-மூலஸ்தம்ப⁴ம்ʼ லோகாலோகமநாலோகம்ʼ
லோகேஶம்ʼ பரமேஶம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமாநந்த³ம் ||–2-

இங்கு மண்ணைத் தின்கிறாயே என யசோதை அடிக்க வருகையில் குழந்தைப்பருவத்தின் பீதியை அடைந்தவன்.
திறந்த வாயில் லோகாலோக பர்வதங்களுடன் கூடிய பதினான்கு லோகங்களைக் காட்டியவன்.
மூவுலகிற்கும் ஆதாரத் தூணானவன். உலங்களுக்கு ஒளியூட்டுபவன் (லோகாலோகம்)
தனக்கு வேறு ஒளி வேண்டாதவன் (அனாலோகம்)
லோகேஸ்வரனும் பரமேஸ்வரனும் பரமானந்த வடிவும் ஆகிய கோவிந்தனை வணங்குவீர்.

புராணங்களின்படி, பதினான்கு உலகங்களில் ஒவ்வொரு உலகத்திற்கும் கிழக்கிலும் மேற்கிலும் உதய, அஸ்தமன பர்வதங்கள் உண்டு.
அவற்றின் ஒருபுறம் ஒளியும் மறுபுறம் இருளும் உள்ளதால், அவை லோகாலோக பர்வதங்கள் என அழைக்கப் படுகின்றன.
பாடலின் இரண்டாம் அடியில் பர்வதங்களைக் குறிக்கும் லோகாலோகம் என்ற சொல்,
அடுத்த அடியிலேயே பரம்பொருளான ஸ்ரீகிருஷ்ணனைச் சுட்டுமாறு வருகிறது – உலகங்கள் அனைத்திற்கும் ஒளியூட்டி
தன்னொளியால் தானே பிரகாசிப்பவன் (லோகான் ஆலோகயதி ஸ்வாத்மபா4ஸா ப்ரகாஶயதி இதி லோகாலோக:).
உலக இயக்கமனைத்திற்கும் ஆதாரமாக இருந்தும் அதில் பற்றுக் கொள்ளாது சாட்சியாக நின்று பார்த்துக் கொண்டிருப்பவன் என்பது வேதாந்த உட்பொருள்.

மூவுலகிற்கும் நிலைப்பொருளாக (அதிஷ்டானம்) விளங்கும் பிரம்மத்தின் சைதன்ய பிரகாசத்தினாலேயே அதனிடம்
கற்பிக்கப் பட்டவையான மூன்று உலகங்களும் ஒளிபெறுகின்றன.
கற்பிக்கப் பட்ட பொருள்களுக்கு தனியாக சொந்த இருப்பும் ஒளியும் கிடையாது.

அங்கு சூரியன் ஒளிர்வதில்லை–நிலவு நட்சத்திரங்கள் இல்லை –இந்த மின்னலும் ஓளிர்வதில்லை
எனில் நெருப்பிற்கு ஏது இடம் அவன் ஒளிர்கையில் அனைத்தும் பின்னொளிர்கின்றன
அவனது ஒளியினாலேயே இவையனைத்தும் ஒளிர்கின்றன–– கட உபநிஷதம் 2.5.9

——–

த்ரைவிஷ்டப-ரிபு-வீரக்⁴நம்ʼ க்ஷிதி-பா⁴ரக்⁴நம்ʼ ப⁴வ-ரோக³க்⁴நம்ʼ
கைவல்யம்ʼ நவநீதாஹாரமநாஹாரம்ʼ பு⁴வனாஹாரம் |
வைமல்ய-ஸ்பு²ட-சேதோவ்ருʼத்தி-விஶேஷாபா⁴ஸ-மநாபா⁴ஸம்ʼ
ஶைவம்ʼ கேவல-ஶாந்தம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||-3-

அமரர்பகையாம் அரக்கவீரரை அழிப்பவன் –புவியின் பாரத்தை அழிப்பவன்–பிறவிப்பிணியை அழிப்பவன்
தானொருவனேயானவன் (கைவல்யம்) –வெண்ணெய் உண்பவன் (நவநீதாஹாரம்)
உணவற்றவன் (அனாஹாரம்)-உலகனைத்தும் உண்பவன் (புவனாஹாரம்)
மாசற்றுத் தெளிந்து சிறந்த –மனவெளியில் தோன்றுபவன்–தோற்றமற்றவன்
மங்கள வடிவினன் (சைவம்) –தனித்து மாறுபாடற்றிருப்பவன் (கேவல சாந்தம்)
அந்தப் பரமானந்த வடிவாகிய கோவிந்தனை வணங்குவீர்.

கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் – பிறவிப்பிணிக்குக் காரணமான அக்ஞானத்தை குருவாக விளங்கி ஆத்மஞானம் எனும் மருந்தால் அழிப்பவன்.

அக்ஞானத்தினால் தோன்றும் பொய்ப்பொருள்கள் அனைத்திலிருந்தும் தனித்து நிற்கும் மெய்ப்பொருள் – கைவல்யம்.

பசி, தாகம் முதலியவை பிறவியில் கட்டுண்ட ஜீவன் உடலுடன் கொள்ளும் அபிமானத்தால் ஏற்படுபவை.
தளையற்ற பிரம்ம சொரூபத்திற்கு இவையேதும் இல்லை என்பதால் உணவற்றவன்.
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் விளையாட்டாக வெண்ணெய் உண்டவன். ஒடுக்கத்தின் போது (பிரளயம்) உலகனைத்தும்
அதன் நிலைப்பொருளாகிய (அதிஷ்டானம்) பிரம்மத்தில் சென்று ஒடுங்குவது உலகனைத்தையும் உண்பதாகக் கூறப்பட்டது.

மனவெளியில் தோன்றும் எண்ண அலைகள் சித்த வ்ருத்தி அல்லது சேதோ வ்ருத்தி எனப்படும்.
இவற்றை முழுவதுவாக அடக்குவதும் தடுப்பதுமே யோகம் (யோக3ஶ்சித்தவ்ருத்தி நிரோத4:) என்பது பதஞ்சலியின் முதல் சூத்திரம்.
இப்படி அனைத்து எண்ண அலைகளும் அடங்கிவிட்ட மனத்தில் பின்பு ஏதுமற்ற வெறுமையும் சூனியமும் தான் இருக்கும்
என்பதே பதஞ்சலி யோகம் மற்றும் பௌத்தம், ஜைனம் முதலான அவைதிக தரிசனங்களின் கோட்பாடு.
அது எந்தவிதமான சூனியம் என்பதில் தான் அவைகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு-
வேதாந்த மரபில் உணர்வற்ற அத்தகைய யோக நிலை ‘ஜட சமாதி’ என்று அழைக்கப் படுகிறது.
வேதாந்தத்தின் படி, பிரம்ம ஞானத்தேடலுடைய யோகியின் மனம் மற்ற எண்ண அலைகளனைத்தும் அடங்கிய பிறகு
சூனியத்தில் அல்லாமல் பூரணத்தில் நிலைக்கிறது – தனது நித்திய ஸ்வரூபவமான பிரம்மத்துவம் அன்றி வேறேதும் இல்லை
என்ற என்ற எண்ணம் உறுதிப்படும் நிலை. ‘பிரம்மாகார அகண்ட வ்ருத்தி’ என்று தத்துவ மொழியில் அது குறிப்பிடப் படுகிறது.
அத்தோற்றமே இங்கு ஸ்ரீகிருஷ்ணனுடையதாகக் குறிப்பிடப் பட்டது.

‘சாந்தம் சிவம் அத்வைதம்’ என்பது பிரம்மத்திற்குரிய அடைமொழியாக மாண்டூக்ய உபநிஷதத்தில் கூறப்பட்டது.
அதனையே ‘சைவம் கேவல சாந்தம்’ என்று இந்த சுலோகத்தின் கடைசி அடி குறிப்பிடுகிறது.

——

கோ³பாலம்ʼ பூ⁴லீலா-விக்³ரஹ-கோ³பாலம்ʼ குல-கோ³பாலம்ʼ
கோ³பீகே²லந-கோ³வர்த⁴நத்⁴ருʼதி-லீலாலாலித-கோ³பாலம் |
கோ³பி⁴ர்நிக³தி³த கோ³விந்த³-ஸ்பு²ட-நாமாநம்ʼ ப³ஹுநாமாநம்ʼ
கோ³-தீ⁴-கோ³சர-தூ³ரம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||–4-

கோபாலன்–விளையாட்டாய்ப் புவியில் கோபால உருவெடுத்தவன் –கோபால குலத்தவன்
கோபியருடன் விளையாடி கோவர்த்தனம் தூக்கி–கோபர்களை லீலைகளால் சீராட்டியவன்
பசுக்கள் கூவியழைக்கும் –கோவிந்தா என்ற சிறப்பான பெயருடையவன்–மிகப்பல பெயர்களுடையவன்
புலன்களும் புத்தியும் செல்லமுடியாத தூரத்திலிருப்பவன் அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை வணங்குவீர்.

கோ3 என்ற சொல்லுக்கு பசு, பூமி, சப்தம் (வேதம்), புலன், என்று பல பொருள் உண்டு.

கோபாலன் – பசுக்களை, பூமியை, வேதங்களை, பசுக்களைப் போன்ற உயிர்களைக் காப்பவன்.

கோவிந்தன் – வேதவாக்குகளால் அறியப்படுவன். வேதவாக்குகளை அருளியவன். வராகாவதாரத்தில் பூமியையும்,
கிருஷ்ணாவதாரத்தில் பசுக்களையும் காத்தவன். இவ்வாறு ‘கோவிந்த’ பதம் நிர்குண பிரம்மம் (அருவமான பரம்பொருள்),
ஸகுண பிரம்மம் (உருவமான பரம்பொருள்) இரண்டையும் குறிப்பதனால், இவ்விரண்டு பரம்பொருள் தத்துவங்களையும்
மாறிமாறி சுட்டும் வகையில் கோவிந்தாஷ்டகம் அமைந்துள்ளது.

கடைசி அடியில், கோ3-தீ4-கோ3சர-தூ3ரம் என்பதில் முதல் கோ3 புலன்களையும், அடுத்து வரும் கோ3சர என்பது செல்லுதலையும் குறிக்கிறது.

——-

கோ³பீ-மண்ட³ல-கோ³ஷ்டீ²-பே⁴த³ம்ʼ பே⁴தா³வஸ்த²மபே⁴தா³ப⁴ம்ʼ
ஶஶ்வத்³கோ³கு²ர-நிர்தூ⁴தோத்³க³த-தூ⁴லீ-தூ⁴ஸர-ஸௌபா⁴க்³யம் |
ஶ்ரத்³தா⁴-ப⁴க்தி-க்³ருʼஹீதாநந்த³மசிந்த்யம்ʼ சிந்தித-ஸத்³பா⁴வம்ʼ
சிந்தாமணி-மஹிமாநம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||–5-

சுற்றியாடும் கோபிகைகளின் வெவ்வேறு குழுக்களில் உறைபவன். –வெவ்வேறு உணர்வு நிலைகளை உடையவன்
வேற்றுமையற்றவன். –பசுக்களின் குளம்புகள் கிளம்பி எழுப்பும் புழுதி படிந்து மங்கிய மேனியழகுடையவன்.
சிரத்தையாலும் பக்தியாலும் அடையும் ஆனந்தமானவன். –அறியவொண்ணாதவன்.
சத்தியப்பொருளென அறியப்படுபவன். -சிந்தாமணியின் மகிமையுடையவன்.
அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை வணங்குவீர்.

தனது மாயையினால் வெவ்வேறு உணர்வு நிலைகளை (அவஸ்தைகள்) உடையவன். விழிப்பு, உறக்கம்,
கனவு (ஜாக்ரத் ஸுஷுப்தி ஸ்வப்னம்) ஆகிய மூன்று மாறுபட்ட நிலைகளிலும் தான் என்ற ஆத்ம ஸ்வரூபம் மாறாதிருப்பவன்.

பிரம்மத்தின் இயல்பே ஆனந்தம் என்பதால், அவன்மீது கொண்ட சிரத்தையாலும் பக்தியாலும் பக்தர்கள் ஆனந்தமடைகின்றனர்.

சிந்தாமணி வேண்டியதை எல்லாம் தருவது. அது போன்றே ஈசுவரனும்.

மற்ற பொருள்களைப் போலல்லாமல் நாம ரூபங்களுக்கு அப்பாற்பட்டதால், வேறு எந்த வகையிலும் அறியவொண்ணாதவன்.
ஆனால் உபநிஷத வாக்கியங்களாலும் வேதாந்த விசாரத்தாலும் அபரோக்ஷமாக (indirectly perceptible) அறிதற்குரிய ஞானமாயிருப்பவன்.

பிரம்மம் அறியவொண்ணாதது என்றவுடன், ஓ சரி, அதைத்தான் அறியவே முடியாதே வேறு வேலையைப் பார்க்கப் போகலாம் என்று அர்த்தமல்ல.
மாறாக, அந்த அறிதலுக்கான இச்சையே மானுட வாழ்க்கையின் மிக உன்னதமான இலட்சியம் என்கிறது வேதாந்தம்.
ஏனென்றால், சம்சாரம் என்னும் பிறவிச்சுழலிலிருந்து விடுபடுதல் (மோட்சம்) என்பது உண்மையில் தனது நிஜ ஸ்வரூபத்தைப் பற்றிய
முழுமையான அறிதலே (ஞானம்). “பிரம்மத்தை ஆய்ந்து அறிக” (அதா2தோ ப்3ரஹ்மஜிக்3ஞாஸா) என்று தான் பிரம்ம சூத்திரம் தொடங்குகிறது.
அறிதலே விடுதலை, அறிதல் அன்றி வேறேதும் விடுதலையன்று. வேதாந்த விசாரமே அந்த அறிதலுக்கான வழிமுறை.

“அன்பே, அந்த ஆத்மாவை (அறிவினால்) காணவேண்டும், கேட்கவேண்டும், சிந்திக்கவேண்டும், தன்னில் நிலைக்க வேண்டும்”
(ஆத்மா வா அரே த்3ரஷ்டவ்யோ ஶ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதி3த்4யாஸிதவ்ய:)– மைத்ரேயியிடம் யாக்ஞவல்கியர், பிரகதாரண்யக உபநிஷதம்.

வலிமையற்றோன் அடைவதில்லை–ஆத்மாவை ஆர்வமின்மையும் இலக்கற்ற தவங்களும் அடைவதில்லை.
சரியான உபாயங்களால் முயலும் அறிவுடையோனது ஆத்மா பிரம்மத்தின் இருப்பிடத்தில் சென்றடைகிறது.

சொல்விளக்கங்களால் அடைவதல்ல-அந்த ஆத்மா மேதமையால் அல்ல -கேள்வியின் மிகுதியாலும் அல்ல.-அதற்காக ஏங்குபவன்
அதனையடைகிறான். -அவனுக்கே தன்னியல்பை வெளிப்படுத்துகிறது ஆத்மா.– முண்டக உபநிஷதம்

—————-

ஸ்னான-வ்யாகுல-யோஷித்³-வஸ்த்ரமுபாதா³யாக³முபாரூட⁴ம்ʼ
வ்யாதி³த்ஸந்தீரத² தி³க்³வஸ்த்ரா தா³துமுபாகர்ஷந்தம்ʼ தா: |
நிர்தூ⁴தத்³வயஶோகவிமோஹம்ʼ பு³த்³த⁴ம்ʼ பு³த்³தே⁴ரந்தஸ்த²ம்ʼ
ஸத்தாமாத்ரஶரீரம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||–6-

குளியலில் ஆழ்ந்த யுவதிகளின்-ஆடைகளைக் கவர்ந்து மரத்திலேறிக் கொண்டு பின்பு திக்கே ஆடையாக நின்று
தரமாட்டாயா என்று வேண்டும் அவர்களை அருகில் அழைப்பவன்.
வேற்றுமையும் சோகமும் மோகமும் அற்றவன். [வேற்றுமையும் சோகமும் மோகமும் அழிப்பவன்]
அறிபவன் (புத்தன்) அறிவின் அகத்துள் இருப்பவன்-உண்மை ஒன்றே உடலாய்க் கொண்டவன்.
அந்தப் பரமானந்த வடிவாகிய கோவிந்தனை வணங்குவீர்.

ஸ்ரீகிருஷ்ணன் கோபியரின் ஆடைகவர்ந்த லீலையை முதலிலும், அதன் தத்வார்த்தமான உட்பொருளை அதன் பின்பும் குறிப்பிடுகிறார்.

இங்கு வேற்றுமை என்பது ஆத்ம சொரூபத்தை அறிந்து கொள்ளத் தடையாக இருக்கும் பேதபுத்தியைக் குறிக்கிறது.
இந்தப் பேத புத்தியினால் தான் சோகமும் மோகமும் தோன்றுகின்றன.
நிலையற்ற பொருள்களில் (அனாத்ம வஸ்து) நான், என்னுடையது என்று கொள்ளும் தோற்றப்பிழை மோகம்.
அதன் காரணமாக, அப்பொருள்களின் அழிவையும் இழப்பையும் தனது அழிவாகவும் இழப்பாகவும் கருதி அடையும் துன்பம் சோகம்.
‘நிர்தூ4த-த்3வய-ஶோக-விமோஹம்‘ என்ற சொல்லாட்சி, இந்தப் பிழைகள் அற்றவன், இவற்றை அழிப்பவன் என்று
இரண்டு அர்த்தங்களும் தருவதாக அமைந்துள்ளது.

உண்மை ஒன்றே உடலாய்க் கொண்டவன் (ஸத்தா மாத்ர ஶரீரம்) என்பதில் வரும் ‘ஸத்தா’ என்பது வேதாந்தத்தில்
முக்கியமானதொரு தத்துவச் சொல். மாறாமல் என்றும் இருப்பதான தன்மையே ஸத்தா எனப்படும்.
ஸத் எதுவோ அது ஸத்யம். உள்ளது எதுவோ அது உண்மை. இதுவே நேர்ப்பொருள்.
உண்மை என்றால் பொய் பேசாமலிருப்பது (வாய்மை) என்பது அச்சொல்லின் வழிப்பொருள் மட்டுமே.
பிரம்மம் இந்த ஸத் சொரூபத்தைத் தவிர வேறு எந்த சரீரத்தையும் (உருவையும்) உடையது அல்ல.
உலகமும் உயிர்களும் மற்றப் பொருள்கள் அனைத்தும் இந்த ‘பிரம்ம ஸத்தா’ என்ற மெய்ப்பொருளை ஆதாரமாகக் கொண்டு
பல சரீரங்களில் (உருவங்களில்) அறியப்படுகின்றன.

அனைத்துப் பொருள்களையும் நாம் அறிவது அறிவு (புத்தி) என்ற அகக்கருவியின் துணையைக் கொண்டு தான்.
பின்பு, அந்த அறிவின் அகத்துள் இருப்பவனை (பு3த்தே4ரந்த: ஸ்த2ம்) எப்படி அதே கருவியால் நேரடியாக அறிவது? அது சாத்தியமன்று.
பிம்பத்தை அதன் பிரதிபிம்பத்தைப் பார்த்து அறிந்து கொள்வது போல, அறிவின் பிரகாசத்தைக் கொண்டு அதனைப் பிரகாசிக்கச் செய்யும்
ஆத்மாவை உய்த்துணர்வது மட்டுமே சாத்தியம் என்கிறது வேதாந்தம். அறிவோனை அறிவது எங்ஙனம்?
(விக்ஞாதாரமரே கேன விஜானீயாத்) என்ற உபநிஷத் வாக்கியத்தின் பொருளே இங்கு சுட்டப் படுகிறது.
பிரகதாரண்யக உபநிஷதத்தின் புகழ்பெற்ற உரையாடலின் இறுதியில் இந்த வாக்கியம் வருகிறது.

“யாக்ஞல்கியர்: நீரில் போட்ட உப்புக் கட்டி, அதைத் திரும்ப எடுக்க முடியாதபடி அந்த நீரிலேயே கரைந்து விடுகிறது.
எப்பகுதியை சுவைத்தாலும் அது உப்பாகவே இருக்கும். அது போல, மைத்ரேயி, அந்தப் பேருயிர் முடிவற்றது,
அளவிட முடியாதது, தூய அறிவே உருக் கொண்டது. இப்பொருள்களினின்று ஆத்மா (தனிப்பட்டு) தோன்றுகிறது,
அவற்றிலேயே (தனிப்பட்ட தன்மை) அழிகிறது. (ஒருமையை) அடைந்தபின், அதற்கு அடையாளமில்லை, பெயரில்லை

மைத்ரேயி: என் தலைவனே, (ஒருமையை) அடைந்தபின் அடையாளமுமில்லை, பெயருமில்லை என்று கூறி
இங்கு என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்.

யாக்ஞவல்கியர்: நான் சொல்வதில் குழப்பம் ஏதுமில்லை. இது நிறைந்த அறிவு, மைத்ரேயி. இருமை என்பது இருக்கையில்,
வேறொன்றைப் பார்க்கிறான், வேறொன்றை முகர்கிறான், வேறொன்றைக் கேட்கிறான், வேறொன்றை வணங்குகிறான்,
வேறொன்றை உணர்கிறான், வேறொன்றை அறிகிறான். ஆனால், அனைத்தும் ஆத்மாவே என்கையில் எவ்வாறு வேறொன்றை நுகர்வான்,
எவ்வாறு வேறொன்றைக் காண்பான், எவ்வாறு வேறொன்றைக் கேட்பான், எவ்வாறு வேறொன்றை வணங்குவான்,
எவ்வாறு வேறொன்றை உணர்வான், எவ்வாறு வேறொன்றை அறிவான்? இவை அனைத்தையும் அறிவது எவனாலோ,
அவனை அறிவது எங்ஙனம்? அன்பே, அறிவோனை அறிவது எங்ஙனம்?”

—————-

காந்தம்ʼ காரணகாரணமாதி³மநாதி³ம்ʼ காலக⁴நாபா⁴ஸம்ʼ
காலிந்தீ³-க³த-காலிய-ஶிரஸி ஸுந்ருʼத்யந்தம்ʼ முஹுரத்யந்தம் |
காலம்ʼ காலகலாதீதம்ʼ கலிதாஶேஷம்ʼ கலிதோ³ஷக்⁴நம்ʼ
காலத்ரயக³திஹேதும்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமாநந்த³ம் ||

காந்தன் –காரணங்களுக்கெல்லாம் காரணமானவன்-முதலானவன் முதலற்றவன்
கருமேகச்சுடர் –காளிந்திப் பொய்கையில் காளியன் சிரத்தில்-மீளமீள அழகுநடனம் புரிபவன்
காலமானவன்-காலத்தின் செய்கைகளுக்கு அப்பாலிருப்பவன் –அனைத்தையும் தோற்றுவிப்பவன்
கலியின் தீங்குகளை அழிப்பவன் –காலங்கள் மூன்றின் இயக்கத்திற்கு ஏதுவானவன்
அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை வணங்குவீர்.

காந்தன்: அனைத்தையும் ஈர்க்கும் அழகுடையவன். Magnetic.

காரண காரிய வாதத்தின் படி, அனைத்துப் பொருள்களுக்கும் ஆதிகாரணமாக, சத்வம்-ரஜஸ்-தமஸ் ஆகிய முக்குணங்களின்
சேர்க்கையான மூல ப்ரகிருதி (ஆதி இயற்கை) உள்ளது என்று சாங்கிய தரிசனம் கூறுகிறது.
இந்த மூலப்ரகிருதி என்ற கருத்தாக்கத்தை ஒரு இறுதி உண்மை (ultimate reality) என்று கொண்டால்,
பின்பு உபநிஷதங்கள் கூறும் சத்-சித்-ஆனந்த வடிவமான ஆத்மா / பிரம்மம் என்பது மற்றொரு இறுதி உண்மை என்று ஆகிறது.
இங்ஙனம் இரண்டு இறுதி உண்மைகள் உள்ளதாகக் கருதுவது, இரண்டற்ற ஒருமை (ஏகம் அத்விதீயம்) என்ற
உபநிஷதக் கருத்துக்கு முரணானதாக அமையும். எனவே, இந்த மூலப்ரகிருதி என்பது முதற்காரணமல்ல,
மாறாக பிரம்மத்தில் கற்பிக்கப்பட்டு அது உலகமாகவும் (ஜகத்), அனைத்துப் பொருள்களாகவும் தோன்றுகிறது என்கிறது வேதாந்த தரிசனம்.

அரையிருட்டில் கயிற்றைப் பாம்பு என்று கருதி மயக்கம் ஏற்படுகிறது. இதன் பொருள் கயிறு, பாம்பு என
இரண்டு உண்மைப் பொருட்கள் உள்ளன என்பதல்ல. உண்மையான நிலைப்பொருளான (அதிஷ்டானம்) கயிற்றில், பாம்பு கற்பிக்கப் படுவது போல,
பிரம்மத்தில் மூல ப்ரகிருதி கற்பிக்கப் பட்டது. அதுபற்றியே பரம்பொருளை காரணங்களுக்கெல்லாம் காரணம் (காரணகாரணம்) என்று கூறுகிறார்.
பிரம்மமே முதற்காரணம் என்பது ஆதி, அனாதி (முதலானவன், முதலற்றவன்) என்ற இரண்டு பதங்களால் மீண்டும் விளக்கப் பட்டது.

குயவன் களிமண்ணைச் சக்கரத்தில் இட்டுச் சுழற்றுவதால் சட்டி, பானை, குடம் என்று பல்வேறு விதமான உருவங்களும் பெயர்களும்
கொண்ட அழியும் பொருட்கள் இடையறாது தோன்றுகின்றன.
அதே போல, காலச்சக்கரத்தின் சுழற்சியில் பல்வேறு பெயர்களும் உருவங்களும் (நாமரூபம்) கொண்ட சிருஷ்டியின் இயக்கம்
இடையறாது நடக்கிறது. ஆனால், பிரபஞ்ச இயக்கத்தில், குயவன், களிமண், சக்கரம் இவையனைத்தும் வேறுவேறாக அல்லாமல்
பிரம்மம் என்ற ஒற்றைப் பொருளே இவையனைத்துமாகப் பரிணமிக்கிறது என்கிறது வேதாந்தம். காலம் (காலமானவன்),
காலகலாதீதம் (காலத்தின் செய்கைகளுக்கு அப்பாலிருப்பவன்), கலிதாஶேஷம் (அனைத்தையும் தோற்றுவிப்பவன்),
கால-த்ரய-க3தி-ஹேதும் (காலங்கள் மூன்றின் இயக்கத்திற்கு ஏதுவானவன்) ஆகிய பதங்களால் இத்தத்துவம் குறிக்கப்பட்டது.
ஸ்ரீகிருஷ்ணன் காத்தல், படைத்தல், அழித்தல் (சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம்) ஆகிய முத்தொழில் புரியும் ஈசுவர சொரூபம் என்பதும் விளக்கப் பட்டது.
நவீன இயற்பியல் பரிச்சயமுள்ளவர்கள் singularity என்ற கருத்தாக்கத்துடன் ஒப்பிட்டு தோராயமாக இதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்
(வேதாந்தம் கூறும் பிரம்ம தத்துவத்தின் தளம் நவீன இயற்பியலிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, ஆழமானது. இந்த ஒப்பீடு ஒரு சாதாரண புரிதலுக்கு மட்டுமே).

கலியின் தீங்குகளை அழிப்பவன் (கலிதோ3ஷக்4னம்). இயற்கையின் நியதிக்கேற்ப நிகழும் உலக வியவகாரங்களின்
நெறிகள் பிறழ்ந்து, நிலைகுலையும் காலகட்டம் கலியுகம் என்று உருவகிக்கப் படுகிறது.
அதர்மத்தின் ஆட்சி ஓங்கி தர்மத்தின் ஆற்றல் குறையும்போது, தீமைகளை அழிக்க அவதரிப்பவன்.

——–

ப்³ருʼந்தா³வனபு⁴வி-ப்³ருʼந்தா³ரகக³ண-ப்³ருʼந்தா³ராதி⁴த-வந்த்³யாங்க்⁴ரிம்ʼ
குந்தா³பா⁴மல-மந்த³ஸ்மேர-ஸுதா⁴னந்த³ம்ʼ ஸுமஹானந்த³ம் |
வந்த்³யாஶேஷ-மஹாமுநி-மாநஸ-வந்த்³யாநந்த³-பத³த்³வந்த்³வம்ʼ
நந்த்³யாஶேஷ-கு³ணாப்³தி⁴ம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் ||–8-

பிருந்தாவன நிலத்தில் தேவர்களின் கூட்டங்களும் –பிருந்தா முதலான கோபியரும் வணங்கும் பாதங்களையுடையவன்.
குந்தமலர் போன்ற மாசற்ற புன்னகையின் அமுதத்தால் மகிழ்விப்பவன். –சிறந்த ஆனந்தமானவன்.
வணங்கத் தகுந்த மாமுனிவர்கள் மனதில் போற்றி ஆனந்தமடையும் இணையடிகளையுடையவன்.
போற்றத்தகுந்த எண்ணற்ற நற்குணங்களின் கடலென விளங்குபவன்.
அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை வணங்குவீர்.

இந்தப் பாடலில் ஸ்ரீகிருஷ்ணனின் சகுண ரூபம் போற்றப் படுகிறது.

பிருந்தா என்பது கண்ணன் மீது அன்பு கொண்ட கோபிகையின் பெயர். துளசியையும் குறிக்கும்.

மாமுனிவர்கள் மனதில் போற்றி ஆனந்தமடையும் இணையடி – புறத்தில் வெளிப்படையாக செய்யும் பூஜையைக் காட்டிலும்
(பாஹ்ய பூஜை) மனத்தினால் செய்யப் படும் பூஜை (மானஸ பூஜை) சிறந்தது என்பது கருத்து.

—–

கோவிந்தனிடத்தில் சித்தத்தைக் கொடுத்து கோவிந்தா அச்யுதா மாதவா விஷ்ணோ கோகுலநாயகா கிருஷ்ணா எனக் கூறி
இந்த கோவிந்தாஷ்டகத்தைக் கற்பவர் கோவிந்தனின் பாதகமலத் தியானம் எனும் அமுதநீரால் பாவமனைத்தும் நீங்கி
தன் அகத்துள் இருக்கும் பரமானந்த அமுதமான அந்த கோவிந்தனை அடைவர்.

எட்டு சுலோகங்களுக்குப் பின் பலசுருதியாக இப்பாடல் அமைந்துள்ளது. தோத்திரங்களின் வழக்கமான
பலசுருதிகளைப் போல லௌகீக பலன்களைக் கூறாமல், ஞானமே பலனாகக் கூறப்பட்டது.

தன் அகத்துள் உறையும் பரம்பொருளே கோவிந்தன் என்பதால், கோவிந்தனின் திருவடி தியானம் என்பது
ஆத்மஞானத்தினின்றும் வேறானதல்ல. அழிவற்ற ஆனந்தத்தை உண்டாக்குவதால், அதுவே அமுதநீர்.

அனைத்துப் பாவங்களும் காம குரோதங்களால் உண்டாகின்றன. அந்தக் காமகுரோதங்கள் அவித்யையாகிய அக்ஞானத்தில் பிறப்பவை.
எனவே, பாவத்திற்கு மூலகாரணமாகிய அவித்யையை அழிக்கும் ஞானத்தினால், பாவங்கள் அனைத்தும் கழுவப்படுகின்றன.

ஏற்கனவே தன்னிடம் இல்லாத ஒரு பொருளை அடைவது (ஸாத்ய வஸ்து) என்றால் சரி. ஆனால் தன் அகத்துள் நீங்காமல் நிற்கும்
பொருளை (ஸித்த வஸ்து) அடைவது என்றால்? பிரம்மாகிய அந்தப்பொருளும் ஆத்மாவாகிய தானும் வேறல்ல
என்ற *அறிதலை* (ஞானம்) அடைவது என்பதே இதன் பொருள். கீழ்க்கண்ட கீதை மொழிகள் இங்கு சிந்திக்கத் தக்கன.

இங்கு கூறப்பட்ட பகவானின் நாமங்களுக்கு நேரடியான பொருளுடன் கூட தத்துவார்த்தமான வேதாந்தப் பொருளும் உண்டு
என்பதால் பொருளுணர்ந்து அந்த நாமங்களைக் கூறுவதே வேதாந்த விசாரமாகவும் ஆகிறது.

அச்யுத – விலகாதவன்.-பக்தர்களின் இதயத்திலிருந்து விலகாதவன்.
பிரகிருதி குணங்களுக்கு வசமாகாமல் தன் நிலையிலிருந்து விலகாமல் (மாறாமல்) நிற்கும் பொருள்.
‘அச்’ என்பது இலக்கணத்தில் உயிரெழுத்துக்களையும், அதன் வழிப்பொருளாக உயிர்களையும் (ஜீவன்களை) குறிக்கும்.
அசி+யுத = ஜீவன்களிடம் பேதமற்றுப் பிணைந்திருக்கும் அத்வைதப் பொருள்.

மாதவ – மா என்பது திருமகளைக் குறிக்கும். திருமகள் கேள்வன்.
இனிமை தரும் வசந்தத்தின் (மாதவ) நாயகன்.
‘மா’ எனப்படும் மாயைக்குத் தலைவனாக, அதற்கு வசப்படாமலிருந்து அதனை இயக்குபவன்.
மா: அழகு. அழகுகளின் தலைவன்.

விஷ்ணு – வியாபித்திருப்பவன். நிறைந்த பூரண சொரூபன்.
எங்கும் எல்லோராலும் துதிக்கப் படுபவன்.
பிறவித்துயர் என்னும் விஷத்தை அகற்றுபவன்.

கோகுலநாயக – கோகுலம் எனும் ஆயர்பாடியின் தலைவன்
பசுக்கூட்டங்களின் (ஜீவர்களின்) தலைவன்
அக்கூட்டங்களுக்கு உரியதை அடையும்படி செய்பவன்.
அறிஞர் கூட்டங்களின் தலைவன்.

கிருஷ்ண – (பக்தர்களை) வசீகரித்து இழுப்பவன்.
பாவிகளை இழுத்து அழிப்பவன்.
காலச்சக்கரத்தை இழுத்து சுழலச் செய்பவன்.
(துஷ்ட மாடுகளையும் துஷ்ட ஜீவர்களையும்) இழுத்து நேர்வழியில் திருப்பி விடுபவன்.
அழகிய கருநிறமுடையவன்.

கோவிந்த என்ற பதம் முன்பே விளக்கப் பட்டது.

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ குழைக் காதர் பிரபந்தத்திரட்டு –1. ஸ்ரீ குழைக்காதர் கலம்பகம்–

April 16, 2021

ஸ்ரீ குழைக்காதர் கலம்பகம்—
திருமதி பத்மஜா அனந்தராமன் அவர்களால் தொகுத்துப் பிரசுரிக்கப்பட்டு வாசகர்களுக்கு அமுதமாக‌ அளிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ தென் திருப்பேரையில் எழுந்தருளியுள்ள மகரநெடுங்குழைக்காதரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு
கலம்பகம், பிள்ளைத்தமிழ் போன்ற சிறு பிரபந்தங்கள் தோன்றியுள்ளன.
அவைகளில் இதுவரை அச்சேறாத ‘குழைக்காதர்கலம்பக’மும், ‘குழைக்காதர் சோபன’மும் –

பராங்குச நாயகி தேடித் தேடி அலைந்து தன் மனம் குருகூருக்குக் கிழக்கே மூன்று கல் தொலைவில்
தாமிரவருணி ஆற்றங்கரையில் இருக்கும் தெந்திருப்பேரை நகரில் வீற்றிருந்த திருக்கோலத்தில் இருக்கும்
நிகரில் முகில்வண்ணணான, மகரக்குழைக்காதனிடம் சென்றுவிட்டது என்றும்,
இனி ஒரு கணம்கூட‌ தாமதிக்காமல் அவனிடம் செல்லவேண்டியதுதான் என்றும் உரைக்கிறாள்.

உற்றார்கள் தன் காதல் வேகத்தைத் தணிக்கச் சொன்ன‌ வழிகளையும் ஒத்துக்கொள்ளவில்லை,
செவி சாய்த்துக் கேட்கவுமில்லை. ஒரே பிடிவாதமாகத் தன் காதல் சுரம் நிவர்த்தியாக வேண்டுமென்றால்,
தன்னைகாக்க வேண்டில் “ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்”, என்று கோதையைப்போல் அங்கலாய்க்கிறாள்.

காதல் வெள்ளம் பீறிட்டு, “வெள்ளைச்சுரிசங்கோடாழியேந்தி” என்றும் ஆரம்பித்து,
“ஊழிதோறூழியுருவும் பேரும்” என்று தலைக்கட்டுகிறாள் பராங்குச நாயகி.
தெய்வீகக் காதலர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் அப்புறம் சோகம் ஏது? மோகம் ஏது?
‘தத்ர கோ மோஹ:? க: சோக:?’ என்கிறது உபநிஷத்து.

“வேத வொலியும் விழா வொலியும் பிள்ளைக் குழாவிளையாட்டொலியும் அறாத்” திருப்பேரை என்று
நம்மாழ்வாரால் போற்றப்பட்ட இத்திருப்பதி
இப்பதி திருப்பேரெயில், திருப்பேரை, வரலாறு கண்ட பேரை, தண்டமிழ்ப் பேரை, தென்பேரை எனப்
பலவாறாகப் பாராட்டப் பெற்ற ‘கலைமல்கு பேரை’யாகும். ‘பேரெயில்’ என்பது ‘பேரை’ என்று மருவி வழங்கி வருகிறது.
அஷ்டப்பிரபந்த ஆசிரியர் இவ்வூரைத் ‘தென்திருப்பேரை’ என்றே குறிப்பிடுகின்றார்.
மணவாள‌ மாமுனிகள் தமது வியாக்கியானத்தில் ‘மகாநகரமான‌ தென்திருப்பேரையிலே’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இராமவதாரத்தில் வெற்றியடைந்த ஜெயராமன் சோழநாட்டில் காவிரிநதி தீரத்தின் வடகரையிலும் தென் கரையிலும் உள்ள
பதினெட்டு ஊர்களைத் தலவகார‌ சாமவேதிகளுக்குத் தானம் செய்த‌தாகக் கூறப்படுகிறது.
அந்த பதினெட்டு ஊர்கள் காவிரிக்கு வடகரையில்எட்டும், தென்கரையில் பத்தும் என வெண்பாவே அறிவிக்கிறது.
“திட்டைக்குடி அன்பில் திரு பூறையூர் அதனூர் மட்டவிழ்பூந் தோகூர் வயவாலி—
சிட்டர் திருக்குன்ற மருதூர் குறைதீர்த்தார் அப்பனூர் என்று வடகரையில் எட்டு”

“இடையாற்றி னங்குடிசீர் எப்போதும் வாழூர் மிடைமணலூர் ஈரைந்தாம் வேலி —-
இடைமருதூர் நாணமங்கை பிள்ளைமங்கை நல்லபெருமாள் மங்கை பரணமங்கை தென்கரையிற் பத்து”

ஆதியில் தென் திருப்பேரையில் வாழ்ந்த நூற்றெட்டு குடும்பத்தினரும் ஜைமினி என்ற முனிவரைப் பின்பற்றிய
சாமவேதிகள் என நம்பப்படுகிறது. தற்போது இவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.
இந்த ஜைமினி சாமவேதிகள் ‘தலவ காரர்’ என்று அழைக்கப் படுவதுண்டு.
இவர்கள் ‘கேனோபநிஷத்’ என்னும் உபநிடத்தினைத் தங்கள் தனிச் சொத்தாகக் கருதி வருகின்றனர்.

தென்திருப்பேரையில் வீற்றிருக்கும் மகர நெடுங்காதரின் திருமுகத்தை ‘வாடாத செந்தாமரை’ என்று
கோயில் முன் மண்டபத்தில் எழுதப்பட்டுள்ள பாடல் ஒன்று வருணிக்கிறது. அதனை எழுதிய புலவரின் பெயர் தெரியவில்லை.

“கண்டாயோ சோதிக் கதிரவனே! நீயுமிந்த‌
மண்டலங்கள் எங்கும் போய் வந்தாயே – தண் தமிழ்ச்சீர்
கோடாத பேரைக் குழைக்காதர் நன்முகம் போல‌
வாடாத செந்தாமரை”

சூரியனே! நீ உலகமெங்கும் போகிறாய். எங்கள் குழைக்காத பெருமானின் ஜோதி முகம் போன்ற‌
‘வாடாத செந்தாமரை’ யினைப் பார்த்திருக்கிறாயா? என்று புலவர் ஒருவர் வினா எழுப்பினார்.
கோயிலுக்கு எதிரே கருடன் சந்நிதி போன்ற மறைவு ஒன்றும் இல்லாததால் ஆண்டின் ஒரு பகுதியில் சூரிய ஒளி
மூலவரின் முகச் சோதியில் விழுவதைக் கண்டு களித்த புலவர் ஒருவர் இப் பாடலை எழுதியதில் வியப்பொன்றுமில்லை.

பேரையில் பெருமாளின் திருவிளையாட்டினையும் அவருக்குத் துணை நின்ற பிராட்டியார் இருவரின் ஊடலைப் பற்றியும் ‘
தாமிரவருணி மகாத்மியம்’ என்னும் புராணம் விவரிக்கின்றது.
அன்றொரு நாள் வானுலக‌ வைகுந்தத்தில் திருமகளின் மணாளனான தாமரைக் கண்ணனிற்கும் ஓர் இக்கட்டான நிலை ஏற்பட்டது.
அன்றும் என்றும் போல் கருநிற காயா மலர் மேனியினையுடைய பூமாதேவியிடம் பிரான் மிகுந்த ஈடுபாடு கொண்டதனைக் கண்டு திருமகள் வெகுண்டாள்.
துர்வாச முனிவரின் உதவியினை நாடினாள். அவரும் இசைந்தார்; புறப்பட்டார். பூதேவி பெருமானுடன் மகிழ்ச்சியாக‌ உரையாடிக்
கொண்டிருக்கையில் முனிவர் வந்தார். தன்னைப் பூதேவி புறக்கணித்து விட்டாள் எனச் சீற்றங் கொண்ட முனிவர்,
‘எவ்வழகு காரணமாக நீ செருக்குற்றாயோ அவ்வழகு இல்லாதொழிக’ என சாபமிட்டார்
அவளும் நிறமிழந்து பின் சாப விமோசனமாக இத் திருப்பதியில் உள்ள நிகரில் முகில் வண்ணனின் கோயிலில்
‘பேரை’ என்னும் நாமம் தாங்கித் தவம் புரிந்து மீண்டும் தன் வண்ணத்தைப் பெற்றாள் என்பது வரலாறு

ஒரு பங்குனித் திங்கள் மதிநிறைந்த உத்திர மீன்கூடிய நன்னாளன்று தவமிருந்த திருப்பேரைச் செல்வி
வழக்கம் போல் பெருநை நதியில் தீர்த்தமாடிவிட்டுத் திரு மந்திரத்தை உருவேற்றித் தீர்த்தத்தை அள்ளினாள்.
அதிலே துள்ளும் கயல் போல மகர வடிவமான இரு குழைகள் சுடர் விடுவதைக் கண்டாள்.
அவள் உடலும், உள்ளமும் விம்மிச் சிலிர்த்தன. திருப்பேரைச் செல்வி தன் நாயகனான முகில் வண்ணனின் நீண்ட காதுகள்
இந்த மகரக் குண்டலங்களை யணிந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்தாள்.
அவர் திருக்கழுத்தின் இரு மருங்கிலும் அழகாக அசைந்தாடுமே என்று பூமகள் எண்ணினாள்.
உடனே பிரானும் தோன்றி தம் நெடிய செவிகளில் அணிந்து பூதேவிக்கு மகிழ்ச்சி யூட்டினாராம்.
இந்த இனிய, அரிய காட்சியினைத் தேவரும், முனிவரும் காணும் பேறு பெற்றனர். இவர்களும் இறைவனைப் போற்றிப் பரவினர்.

பேரையில் எழுந்தருளியிருக்கும் எம் பெருமான் அக் குழைகளை அணிந்த காரணத்தால் ‘மகர நெடுங்குழைக் காதர்’ என்னும் பெயர் பெற்றார்.
அக்குழைகள் கிடந்த தீர்த்தம் ‘மகர தீர்த்தம்’ எனப் பெயர் பெற்றது.
நிலமகள் ‘பேரை’ என்னும் பெயருடன் பயன்பெற்ற இடமாதலால் அவ்வூரும் திருப்பேரை என்னும் பெயர் பெற்றது.
இங்கு அதுமுதல் தன்நிறம் பெற்ற பூதேவியான திருப்பேரை நாச்சியாருடன், சீதேவியான குழைக்காத வல்லியுடனும்
பிரான் கோயில் கொண்டு காட்சி தருகிறார். திருப்பேரை நாச்சியாரின் மற்றுமொரு திருநாமம் பேராபுரி நாயகி.
இங்கு இறைவன் சங்கு, கதை, பதுமம் முதலியவற்றை யணிந்தவராய், ஏக வுருவமாய் எழுந்தருளியிருக்கிறார்.
இவரின் தன்னிகரில்லாத் தனிச்சிறப்பு மகர வடிவமான நீண்ட காதணிகளையணிந்து, குழைகின்ற காதுகளாக அமைந்து
அடியார்களின் அல்லல்களை நீக்கும் அன்புத் திருவுருவமாக விளங்குவது
இவ்வூரிலிருந்து எழும் வேத பாராயண ஒலியினையும் செந்தமிழ் வேதமாகிய திருவாய்மொழி, பாராயண ஒலியினையும்
எக்காலத்தும், எப்போதும் குழைக்காதரின் நெடிய காதுகள் குளிரக் குளிர கேட்டுக் கொண்டே யிருக்குமாம்.
மகரக் குழையானின் காதுகளுக்கு மற்றுமொரு விருந்தினையும் ஆழ்வார் படைக்கிறார்.
அதுதான் ‘பிள்ளைக்குழா விளையாட்டொலி’ யாகும். சிறார் சிறுமணல் வீடுகட்டி அழகனை அதிலே நிறுத்திச் சேவிப்பார்களாம்.
அந்த மாயனும் இந்த இளம் நெஞ்சுகளுடன் கைகோர்த்தும், காலடித்தும் விளையாடுகிறான் என்பது மக்கள் நம்பிக்கை.
விண்ணை முட்டும் இந்த விளையாட்டொலியினைக் கேட்டு மகிழத்தான் மகரக்குழைக் காதர் தம் கோயிலுக்கு முன்
வீற்றிருக்கும் கெருடனை வாய்க்கால் கரைக்கு அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

கருவறையில் கம்பீரமான தோற்றத்தில் மூலவரான ‘மகராயுத கர்ணபாச்சர்’ (மகர பூஷணம்) தமது தேவியர் இருவரான
குழைக்காத வல்லித் தாயாருடனும், திருப்பேரை நாச்சியாருடனும் எழுந்தருளியுள்ளார்.
கிழக்கே திருமுக மண்டலம் நோக்க வீற்றிருந்த திருக்கோலத்தில் வலது காலைத் தொங்கவிட்ட வண்ணம்,
இடது காலை மடித்து வைத்தவராய் வீராசனம் செய்தபடி காட்சியளிக்கிறார்.
மூலவருக்கு முன் இருமருங்கிலும் பிருகுரிஷியும், மார்கண்ட ரிஷியும் வீற்றிருக்கின்றனர்.
மூலவரின் அருளாசியினைப் பெற முழங்கு சங்கக் கையனான கௌதுகபேரர் அமர்ந்திருக்கிறார்.
கருவரைக்கு முன்பு மண்டபத்தில் மாண்புற உற்சவ மூர்த்தியான முகில் வண்ணன் சீதேவி, பூதேவித் தாயாருடன் காட்சி தருகிறார்.

பெருமாள் : மகர நெடுங்குழைக்காதர்
தாயார் : குழைக்காதுவல்லி
விமானம் : பத்திர விமானம்
தீர்த்தம் : சுக்கிர புஷ்கரணி
வீற்றிருக்கும் திருக்கோலம் கிழக்கே பார்த்த சந்நிதி
சுக்கிரன், பிரமன், ஈசானியருக்கும், ருத்திரருக்கும், பிரத்யக்ஷம்.

——–

பல்வேறு வகையான நிறமும், உருவமும், மணமும் கொண்ட மலர்களால் தொடுத்த மலர் மாலை போன்று
இப்பிரபந்தமும் பல்வேறு வகைப் பாக்களையும், பொருள்களையும், சுவைகளையும் கொண்டு வரும்
என்னும் உவமை நயம் பொருந்தவே இது ‘கலம்பகம்’ என்னும் பெயர் பெறுவதாயிற்று.

‘களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த‌ அலங்கலத் தொடையல் ‘என்ற தொண்டரடிப் பொடியார் பாத் தொடரால் இது புலப்படும்.

இங்கு இரண்டு கலம்பகங்கள் உள்ளன.
ஒன்று அபிநவ காளமேக அநந்த கிருஷ்ணையங்கார் எழுதி வெளியிட்ட ‘திருப்பேரைக் கலம்பக’ மாகும்.
பிறிதொன்று தான் ‘குழைக்காதர் கலம்பகம்’.
இதனை இயற்றிய ஆசிரியர் பெயர் பற்றிய விவரங்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. இதுவரை அச்சிடப்பட்டதாகவும் தெரியவில்லை.
‘அழகர் கலம்பகம்’ ‘ திருப்பேரைக் கலம்பகம்’ என்றார் போன்று தெய்வத்தினைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதுடன்,
தலத்தின் பெயரால் ‘திருவரங்கக் கலம்பகம்’ ‘திருவேங்கடக் கலம்பகம்’ போன்றன‌ எழுதப்பட்டன.

முதன் முறையாக அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ள‌ ‘குழைக்காதர் கலம்பகம்’ இனிய எளிய 101 செய்யுட்களைக் கொண்டது.
இது காப்புச் செய்யுளுடன் துவங்குகிறது-

பூ என்னும் மங்கலச் சொல்லுடன் “குழைக்காதர் கலம்பகம்” மங்களகரமாகத் துவங்கி இனிய எளிய ஆற்றொழுக்கு நடையில்
கலம்பக உறுப்புக்கள் விரவிவர 100 செய்யுட்களைக் கொண்டு விளங்குகிறது.
நூலின் இறுதியில் ஒரு வாழ்த்துப் பாடலுடன் நூல் முடிவடைகின்றது.
இந்நூல் முழுவதையும் கற்றுணர்ந்தால் புலவர் பெருமாளிடம் கொண்ட ஈடுபாடும், தமிழின் மீது கொண்ட பற்றும்,
இத்திருப்பதியின் மீதுள்ள பக்தியும் நன்கு புலனாகின்றன.
“பேரை மால் குழைக்காதர்” ‘மகரக் குழையனே’ ‘பேரை வாழ் முகிலே’ என்று பலவாறு எம்பெருமானை விளித்துப் பாடுகிறார்.
இராமாவதாரத்திலும், கிருஷ்ணாவதராத்திலும் நூலாசிரியர் கொண்ட மிகுந்த ஈடுபாட்டினை இக் கலம்பகம் எடுத்துக் காட்டுகிறது.

‘கானகம் புகுந்து விராதனை வதைத்துக் கவந்தனைக் கவர்ந்து சூர்ப்பனகை கரிய மூக்கரிந்து கரனுயிர் குடித்துக் கருங்கடல் வழிபடக் கடந்து”
என இராமபிரானின் சாதனைகளைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறார். சகடம் உடைத்தவன், மருதிடைப் பாய்ந்தவன்,
நரசிம்மாவதாரம் எடுத்தவன், குறள் வடிவானவன், இராவணனை வென்றவன்…
ஏன் எல்லாமே மகரக் குழையனே என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.
மேலும் அப்பிரானைப் ‘பேரேசர்’, ‘வழுதித் திருநாடன்’ எனவும் போற்றிப் பரவுகின்றார்.

————

1- குழைக்காதர் கலம்பகம்

காப்பு

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
செவிதொறுங் கனிந்த செந்தேன்
தெளிந்தசொல் தவறுண் டேனும்
புவிபுகழ்ந் தெடுத்த பேரைப்
புகழ்க்கலம் பகத்தைக் காக்க!
பவ‌விலங் கறுத்த புள்ளின்
பாகணைத் தொடர்ந்து பற்றிக்
கவிமதம் பொழியும் ஞானப்
பராங்குசக் களிறு தானே,

எடுத்துக் கொண்ட நூல் இனிது முடியும் பொருட்டுக் கடவுள் வாழ்த்துக் கூறுகிறார்.
காக்க-காவலாக இருக்கட்டும். வியங்கோள் வினைமுற்று. பராங்குசக் களிறு காக்க!
பவம்-பிறப்பு, விலங்கறுத்த-பற்று நீக்கின, புள்ளின் பாகன்-கருடனை ஊர்ந்து செல்வோன். தொடர்ந்து பற்றி- பற்றித் தொடர்ந்து;
கவி பொழியும்-கவிதையை மிகுதியாகச் செய்யும். பராங்குசன்-நம்மாழ்வார், தான், ஏ-அசை,
பிற சமயங்களாகிற யானைகளுக்கு அங்குசம் போன்றவன். ஆழ்வாரை யானையென்று உவமித்ததற்கேற்ப, கவிமதம் பொழியும் என்றும்,

———

அவையடக்கம்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மழைக்காவல் புரந்துலகம் தழைப்ப நீதி
மன்னவர்செங் கோலளிப்ப மறைநூல் வாழக்
குழைக்காதர் கலம்பகமென் றொருபேர் நாட்டிக்
கொழித்ததமிழ் சுழித்தெடுத்துக் கூறும் பாட‌
லுழைக்காவ லடிதொடைசீர் தளைமா ருடல்
ஒருபொருட்டு மொவ்வாத தெனினு மென்சொற்
பிழைக்காக விகழ்வரோ பெரியோர் ஞானப்
பெருமான்றன் திருநாமம் பெற்றக் காலே
நூல்

வண்ணக ஒத்தாழிசைக் கலைப்பா

பூமாது நலம்பெருக்கப் புவிமாது வளஞ்சுரப்பத்
தேமாலை புனைந்தேத்தித் தேவர்களும் தலைகுனிப்ப‌
நீதியரும் பிக்கருணை நிறைபுனலா நூற்றெட்டு
வேதியரும் திருப்பேரை வியனகநூற் தழைத்தோங்கக்

கவிச்செல்வர் மூதறிவிற் கனிந்துருகும் பழம்புலவர்
செவிச்செல்வந் தவறாது செந்தமிழின் தேனிறைப்ப‌
வரிவளைக்கை யரம்பையர்கள் மலர்க்கவரி யெடுத்தியக்கத்
தருமலர்ப்பூந் தாதருந்தித் தமிழ்த்தென்ற லடிவருட‌
வெளியகத்தே நின்றுயர்ந்த வீங்குமணித் தூணிரையின்
ஒளிகெழுமி யிருள்துடைத்த வோலங்கு மண்டபத்துட்
காய்சினத்த கோளரியின் கழுத்தளக்கச் சுமந்தேந்தும்
ஆசனத்துக் கடவுளருக் கரசெனவீற் றிருந்தனையே

இஃது பன்னீரடித்தரவு

———-

கோதுபிடித் தரித்தமுதங் கொடுத்தநீ யளைகவர்ந்து
சூதுபிடித் தடிச்சுவடு தொடர்ந்துபிடித் தசோதையெனு
மாதுபிடித் தடித்தவுடன் மண்ணையுண்ட வாய்மலர்ந்து
காதுபிடித் தழுதுமலர்க் கைபிடிக்க நின்றனையே

பெருவிருந்தா யொருவரைப் பிறந்துவளர்ந் தெதிர்ப்படுமுன்
னருகிருந்த மதலையைமற் றவுணனழித் திடுமென்றே
திருவுளந்தான் விரைவிரைந்து சிறுபொழுது மொருவயிற்றிற்
கருவிருந்து வளராமற் கற்றூணிற் பிறந்தனையே.

விரிகடலும் புவியுமுண்டு விசும்பளக்க நின்றுயர்ந்து
தரும்பிரம னடிவீழ்ந்து தலைதாழுந் தன்மையினால்
பெருகிவரும் பிரளயமுன் பேருருவம் போன்றதென்னே
திருவுருவ மீனாகிச் செலுவிலெடுத் தடக்கினையே

இவை மூன்றும் நாலடித்தாழிசை

———

பயிரவி யெனவரு படுகொலை யலகையின்
உயிரையு முலையுட னொருவழி பருகினை

பிடியென நொடியினிற் பிறையெயி னருடிபட‌
வடிமத கரியொடு வலிகொடு பொருதனை

ஒருபத சிரமொடு மிருபது கரமுடன்
பருவரை புறமிடு பரிபவ மருளினை

இதுபொரு ளிதுதவ மிதுகதி யெனமுது
சதுமறை படவற சமயமு மருளினை.

இவை நான்கும் ஈரடி அராகம்

————

மலைகுனிய விசும்பளக்கு மதிவிலங்கை வழிதிறப்பச்
சிலைகுனியப் புயநிமிரத் திருச்சரமொன் றெடுத்தனையே
மூவடிகேட் டீரடியான் மூவுலகு மளந்தசெழும்
பூவடியிற் பிறந்த கங்கைப் புனலாட நின்றனையே.

இவையிரண்டும் ஈரடி அம்போதரங்கம்

துட்டவா ளரவவடந் துவக்கிவரை திரித்தனையே
வட்டவான் குறலாமை வடிவெடுத்துக் கிடந்தனையே
முட்டவான் முகடதிர முழங்குகடற் கடைந்தனையே
பட்டவா ரமுதம‌ரர் பசிக்குவிருந் தளித்தனையே.

இவை நான்கும் நாற்சீரடி அம்போதரங்கம்

மருதொடு சகட மொடித்தனை மணிமுடி யரவினடித்தனை
பருவரை நிமிர வெடுத்தனை பரிமள துளப முடித்தனை

இவை நான்கும் முச்சீரடி அம்போதரங்கம்

மயிலு மறிவுநீ மலரு மணமுநீ யியலு மிசையுநீ யெளிது மரிதுநீ
உயர்வு மிழிவுநீ யுடலு முயிருநீ புயலு மழையுநீ புறமு மகமுநீ

இவையெட்டும் இருசீரடி அம்போதரங்கம்

என வாங்கு – இது தனிச் சொல்

அரும்பவிழ் குவளையும் சுரும்பவிழ் குமுதமும்
கருங்கொடி வள்ளையும் கமலமு மலர்ந்து
கண்ணும் வாயும் வண்ணவார் குழையும்
திருமுகச் செவ்வியு மொருமுகப் படுத்திக்
கண்டவர் துவளுங் காட்சியிற் றுவன்றி
நலங்கிளர் மணிநிறை நன்னீர்ப் பண்ணை

பொலங்கொடி மகளிரிற் பொலிந்த பேரையுண்
மகரக் குழையன் மலரடி நோக்கி
யுச்சியிற் றெழுதகை யுரியவ ருளரேல்
வச்சிரத் தடக்கை வருபெரு மன்னரிற்
சிறந்து விதிப்படி செங்கோ னடாத்தி
மதிக்குடை கவிப்ப மண்ணுமா கமுமே. 1

அரும்பவீழ் – மொட்டு விரிந்த, சுரும்பு – வண்டு, அவிழ்- மலர்த்தும்; வார் குழை- நீண்ட குழையணிந்த காது,
செவ்வி – அழகு, ஒருமுகத்து – ஒரு சேரக்காட்டி, பொலங்கொடி- அழகிய கொடி, மகளிரில் – பெண்கள் போன்று,
கவிப்ப – கவிப்பார்கள். (ஒரு குடைக்கீழ் ஆள்பவர்கள்) மாகம் – விண்ணுலகு.

—————

இது பன்னீரடி நிலை மண்டிலவாசிரியச் சுரிதகம்

நேரிசை வெண்பா

மாகவலைப் பட்டழிந்து மங்கைமார் தங்களனு
போகவலைப் பட்டமனம் போதாதோ – நாகவணைக்
கொன்புரக்கு நேமிக் குழைக்காத ரேயடியேற்
கன்புரக்கு மோவொருகா லம். 2

மா கவலை-மிகுந்த கவலை, கொன்புரக்கும் – பெருமையுடன் காக்கும், நேமி – சக்கரம், உரக்கும்-திடம் பெறும்.

——————–

கட்டளைக் கலித்துறை

ஒருகை முகக்குஞ் சரஞ்சொன்ன பேரென் றுரைக்கும் பொற்கா
தருகை முகக்கு மயில்விழி யீரருட் பேரையின்மான்
முருகை முசுக்கும் பசுந்தண் டுழாயென்று மொய் குழலச்
சருகை முகக்கு மிருக்குமுள் ளாவி தழைக்குமென்றே 3

ஒருகைமுகக்குஞ்சரம் – முகத்தில் துதிக்கையுடைய ஒப்பற்ற யானை (கஜேந்திரன்),
காதருகை முசக்கும் அயல்விழி – காதளவோடிய வேல் போன்ற கண், மான்- மான் போன்ற விழியுடைய என் மகள்,
முருகு- மணம், முகத்தல் – மோந்து பார்த்தல், சருகு – வாடல், மொய் குழல் – நெருங்கிய கூந்தலையுடைய பெண்,
என்றும் – என்று சொல்லுவாள்,
உண்ணாவிதழைக்கும் என்றே இருக்கு – உயிர் மட்டும் இருக்கிறது என்று சொல்லும்படி தளர்வுற்றிருக்கிறாள்.

————–

பதினான்குசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

தழைத்தெழுங் கிரணப் பனிநிலா மதியந்
தடங்கற்கடற் பரிதியென் றுதிக்கும்
தமிழுடன் பிறந்த மந்த மாருதமும்
தமுற்குழம் பெடுத்தெடுத் திறைக்கும்
குழைத்தகுங் குமச்செங் களபலே பனமுங்
கொதித்துயிர் குடிக்குமென் னளவிற்
கொடுவினை விளைந்த காலநல் லனவுங்
கொடியவா மென்பதின் றறிந்தேன்.
கழைக்குலந் தடிந்து சந்தனந் திமிர்ந்து
காழகிற் குழாமுறித் தெதிர்ந்து
கரிமுக மருப்புங் கவரியுஞ் சுமந்து
கனகமுந் தரளமுங் கொழித்து
மழைக்குலம் பிளிறு நெடுஞ்சுரங் கடந்து
வணிகர்போற் கடைநிலம் புரக்க
வருபெரும் பொருளைத் துறைவனே குவளை
வளைவயற் பேரைமா தவனே. 4

மதியம்: பரிதியென்றுதிக்கும் – சந்திரன் சூரியன் போன்று சுடுகின்ற கிரணங்களோடு உதிக்கும்,
களப லேபனம் – சந்தனப் பூச்சு, கொடுவினை விளைந்தகாலம் – போதாத காலம்,
கழைக்குலம் தடிந்து – மூங்கில் கூட்டத்தை ஒடித்து, சந்தனம் திமிர்ந்து – சந்தான மரத்தை முறித்து,
காழகில் குழாம் – வயிரம் கொண்ட அகில் மரத்தொகுதி, கரிமுக மருப்பு – யானைக் கொம்பு,
தரளம் – முத்து சுரம் – பாலைவனம், கடை நிலம் – நெய்தல்.

————

எழுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்

தவசரியை குரியையிது தவிரவினை கொலைகளவு
தனைநினையு மறிவிலி யைமா
கவலைபடு விகடபக டனையகப டனையுனது
கழலிணைக ளடிமை கொளுவாய்
நவமணியு மலர்மகளு மிளமதியு மதகளிறு
நறைகமழு மமுது மெடவே
திவலையெறி கடல்கடையு நிகரில்முகல் வணவமரர்
தெளியுமரு மறைமு தல்வனே. 5

தவசரியை – தவம், சரியை: விகடபகடு – நகைக்கிடமான மதயானை, கபடனை – வஞ்சகனை,
மதகளிறு – ஐராவதம், நறை – வாசனை, திவலை – துளி, முகில்வண – முகில்வண்ணனே.

—————

சந்தத் தாழிசை

மறைமுடித் தலையி லுறமிதித் தபத மருதிடைத்
தவழு மாயனார்
வழுதிநா டர்மக ரக்குழைக் கடவுள் மழைகொழித்
தொழுகி யருவியாய்
நிறைமுடித் தலையி லருவிகுப் புறநி லாவுதித்
தொழுகு வெற்பனே
நீயளித் தவீவை வேயின் முத்தமென நிச்சயப்பட
மொழிந்த தேன்
பிறைமுடித் தலையில் வடியவிட் டதொரு பின்னல்
பட்டசடை யில்லையே
பிணையெ டுத்ததிலை திரிபு ரத்தையழல் பிழிய
விட்டநகை யில்லைமா
கறைமுடித் தமிட றில்லை முக்கணொடு கரது
பாலமிலை யெங்கள்மால்
கழலினைத் தொழ மறந்த தாலெமர்கள் கைவீசக்
கடவ தாகுமே 6

மறைமுடி-உபநிடதம், உற-பொருந்த, வெற்பன்- குறிஞ்சி நிலத்தலைவன், வேயின் முத்தம்-மூங்கிலில் உள்ள முத்து;
சிவபெருமான்; பிணை-மான், மிடறு-கழுத்து, மாகறை முடித்த மிடறு-நீலகண்டம் கரகபாலம்-கையில் தலை யோடு.

————–

சந்தவிருத்தம்.

ஆகமொன் றிரண்டு கூறுகண்டு பண்டை யாடகன்ற னங்க மடுபோர்
வாகைவென்றி கொண்டு பேரைவந்த கொண்டல் மாயவன் துயின்ற கடலே
பாகையும் பிழிந்து தேனையுங் கவர்ந்து பாலுடன் கலந்த மொழிசேர்
கோகிலங்க ளின்றென் னாவிமென்று தின்று கூவுகின்ற தன்பர் குறையே. 7

ஆகம்-மார்பு, ஆடகன்-இரணியன், கொண்டல்- மேகம் போன்ற நிறமுடைய திருமால்,
கோகிலம்- குயில், அன்பர் குறை-தலைவர் குற்றம்.

————–

கட்டளைக் கலித்துறை

குறைக்கொழுந் தாயமு தின்கொழுந்தாரை கொழிக்கு மந்திப்
பிறைக்கொழுந் தார்மதிட் பேரைப் பிரான்தம்பி பின்வரவென்
முறைக்கொழுந் தாவெனு மென்மொழிச் சீதை முலைமுயங்கி
மறைக்கொழுந் தாயன்று கைம்மாறு செய்தனன் வானவர்க்கே. 8

குறைக்கொழுந்தாய்-குறைந்த கலைகளோடு கொழுந்து போன்று, தாரை-கிரணங்கள்,
பிறைக் கொழுந்து ஆர்-சந்திரமண்டலம் தொடும், தம்பி- இலக்குவன்.

———–

வண்ண விருத்தம்

வானவர் தானவர் மாமனு ஜாதிகள் வாழ்வது சாவதுமேல்
வானுல காள்வது கீழ்நர காள்வதுன் மாயையி னாலலவோ
ஏனமு மாயொரு வாமன னாகிய ராமனு மானவனே
ஞானவ ரோதய பேரைய ராதிப நாரண காரணனே. 9

ஏனம்-வராகம்.

———–

சந்தவிருத்தம்

கார ணங்குறி யாய்வ ழங்கிவள் காதன் மங்கையரே
வார ணந்தனில் வீதி வந்தனன் மாலை தந்திலனே
நார ணன்ஜக பூர ணன்றிரு ஞான சிந்தனையால்
ஆர ணம்புகழ் பேரை யம்பதி யாழி யம்புயலே. 10

வாரணம்-யானை, மாலை-துளவ மாலை ஆரணம், வேதம்.

———-

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆழி மாதவன் பேரை மாலளந் தவனி யுண்டவன்
பவனி கண்டபின்
தோழி மீரவன் துளப மாலையென் துணைமு
லைக்கிடார் குழல்மு டிக்கிலார்
ஊழி வேர்விழுங் கங்கு னட்டதும் உடுப திக்குவே
றழல்கொ டுத்ததும்
கோழி வாயையுங் கூவொ ணாமல்மண் கூறு
கொண்டதும் கொடிய தாயரே. 11

ஊழி வேல் விழும் கங்குல்-யுகமாக வேரூன்றிவிட்ட இரவு, உடுபதி-சந்திரன், அழல்-வெப்பம்,
மண் கூறு கொண்டது – மண்ணைக் கொண்டு அடைத்தது ஒப்பு: “கோழி வாய் மண் கூறு கொண்டதோ!”

——–

நேரிசை வெண்பா

ஏடவிழுங் கண்ணிக் கிரப்பா ளவள் கலைநாண்
கூடவிழுங் கண்ணீர் குறையாதோ – மாடமதில்
வீதிமக ரக்குழையும் வெண்மதியுந் தோய்பேரை
நீதிமக ரக்குழைய னே. 12

ஏடு-புற இதழ், கண்ணி-துளவ மாலை, மகரக்குழை-மகர தோரணம்..

———-

கட்டளைக் கலித்துறை

குழைத்திருப் பாரமு தக்கனி வாயிற் குழல் பதிக்குங்
கழைத்திருப் பாலிசை கண்டருள் வோர்குழைக் காதர் நன்னாட
டிழைத்திருப் பார்மணற் கூடலென்றாலு மிறப் பதன்றிப்
பிழைத்திருப் பாருமுன் டோவென்பார் சூள்பொய்த்த பின்னையுமே. 13

குழல்-புல்லாங்குழல், கழை – மூங்கில், பால் இசை- பால் போல இனிய கீதம்,
கூடல் இழைத்தல்- பிரிந்த தலைவி மணலில் கோடு இழைத்துத வருவனா என்று குறி பார்த்தல்,
சூள்- சபதம்; வருவதாக ஆணையிட்ட சொல்.

———-

தாழிசை

பின்னை யைத்தழு விப்பு ணர்ந்தருள் பெற்ற
செங்கனி வாயிர்னா
பெருமி தத்தமிழ் முறைகொ ழித்தறி பேரை
யம்பதி யன்னமே
யன்னை யிப்படி மலர ணைக்கு ளணத்த கையி
னெகிழ்த்துவே
றடைகொ டுத்த கபாட நீவியடிச்சி லம்பொழி
யாமலர்

முன்ன டித்தெரி யாதி ருண்டு முகிழ்ந்து கண்புதை
கங்குல்வாய்
முளரி யம்பத நோவ வன்பினில் மூத றிந்தவர்
போலவந்
தென்னை யிப்படி வாழ வைத்தது மின்ப மோகநல்
வாழ்வுபற
றியான்ம னுக்கிலு நான்ம றைக்கும திப்பி
றப்பினி லில்லையே. 14

பின்னை-நப்பின்னை, பெருமித்தமிழ்முறை கொழித்து அறிபேரை-தமிழை முறையாகக் கற்று
அதன் பெருமையை ஆராய்ந்து அறிந்த தென் திருப் பேரை, கபாலம் நீவி-தாழ்ப்பாளைத் திறந்து

———-

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

ஏது காரணத் தெவர்க ளேருமற் றிழிகு லத்தெழும்
புலை ரேனுமுட்
சாதிபேதமற் றவர்கள் மிச்சிலைத் தருவ ராயினும்
புனித வாழ்வுதா
னாத லாலருட் பேரை நாரணர்க் கடிமை யானவுத்
தமர்ச ரோருகப்
பாத தூளிபட் டுலகம் வாழ்தலிற் பரவு வார்பதத்
தளவி லாததே. 15

மிச்சில்-உண்ட மிச்சம், சரோருகம்-தாமரை.

————

தரவு கொச்சகம்
அளவறியாப் புனலிடைப்பட் டழுந்தினர்போ லணியிழையீர்
விளைவறியாப் பேதைமயல் வெள்ளத்தி லழுந்துவளேற்
களவறியாத் தயிர்நுகர்செங் கனிவாயர் மணிப் புயத்திற்
றுளவறிவாள் பின்னையொன்றுஞ் சொலவறிய மாட்டாளே.. 16

அளவு அறியாப் புனல்-ஆழம் தெரியாத வெள்ளம்,
விளவு அறியாப் பேதை-வாய் விட்டுச் சொல்லத் தெரியாத இளம்பெண், மயல் வெள்ளம் -காதல் வெள்ளம்.

——————-

அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

ஆளைப் பொருது கயங்கலக்கி யடியிற் படிந்து மதகிடிய
வாளைப் பகடு புகுந்துழக்கும் வயல்சூழ் வழுதித் திருநாடன்
ருளைத் தொழுது பசுந்துளபஸ் சருகுக் கிரந்து மடவீர்மா
றோளைக் கருதி மடலெழுதத் துணிவாள் விரைகொன் றறியாளே.. 17

வாளைப் பகடு-ஆண் வாளை மீன், பிரகு-வேறு உபாயம்.

————–

அருசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

அறிவி லேனொடு மேய நீதியி னிடைவி லேதிரியேன்
நெறியி லேனுறு கதியி லேறுனை நினையு மாறுளதோ
யிறைவ னேமறை முதல்வ னேதொழு மெமது நாயகமே
மறுவி லாமர புடைய பேரையில் மருவி வாழ்முகிலே.. 18

மறு-குற்றம், மரபு-ஆன்றோர் ஒழுக்கம்.

——–

ஊசல் – கலித்தாழிசை

வாழிவலம் புரிந்துநெடுங் குழைக ளாட
மலர்க்காந்தள் செங்கைவரி வளைக ளாட
வனமுலையிற் குடைந்த முத்து வடங்க ளாட
மழைகவிந்த குழலவிழ்ந்து மருங்கி லாடச்
சூழிவலம் புரிகளிற்று மைந்த ராடச்
சுரர்முனிவ ருயிரனைத்துஞ் சூறை யாடச்
சுடர்வயிர வடம் பிணைத்துக் கமுகி னெற்றித்
தூங்குமணிப் பொன்னூசல் துவக்கி யாட
மேழிவலம் புரிபழனப் பேரை நாட்டில்
மேதகுசீர் வளம்பாடி யாடி ரூசல்
விரைத்துளபச் செழும்புயலைத் தொழுநூற் றெட்டு
வேதியர்தம் புகழ்பாடி யாடி ரூசல்
ஆழிவலம் புரிபாடி யாடி ரூசல்
அவங்கருடக் கொடிபாடி யாடி ரூசல்
ஆழ்வார்கள் தமிழ்பாடி யாடி ரூசல்
அமுதனையீ ரணியிழையீ ராடி ரூசல்.. 19

வாழி-அசை, குடைந்த முத்து-முத்தைக் குடைந்து செய்த, மருங்குல்-இடை, சூழி-நெற்றிப் பட்டம்,
துவக்கி-கட்டி, மேழி-கலப்பை, ஆழிவலம்புரி- சக்கரம், சங்கு.

————

அறுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்

ஆடி லாள்கழலாடி லாள்கனை யாடி லான்பனிநீர்
போடி லாள்கலைதேடி லாள்வளை பூனி லாளவடான்
பீடு லாவிய வீதி கோலிய பேரை வாழ்முகிலே
நாடு வாளிசை பாடு வாணம நார ணாவெனவே 20

கழல் ஆடிலாள்- கழற்காய் விளையாடவில்லை. சுனை ஆடிலாள்-நீராடவில்லை,
கடை போடிலாள்- மேகலை அணியவில்லை, பீடு-பெருமை.

—————

நாராய ணாயவென வோதாமல் வீண்மொழிகோ
ணாவாலு மேதுபய ணவர்புகழே
யாராலு மோதிலவை கேளாத மூடர்செவி
யானாலு மேதுபய னறிவிலிகாள்
காரான சோதியழ காராத காதலொடு
காணார்க ணாலுமொரு பயனுளதோ
வாராழி மீதுதுயில் பேரேசர் கோயில்வலம்
வாராத காலுமொரு பயனிலையே.. 21

வீண் மொழி கொள்- வீம் வார்த்தை பேசுகின்ற, ஆராத-திருப்தி அடையாத, பேரேசர்-தென் திருப்பேரைக் கடவுள்.

————-

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

ஒருபிழைகண் டயர்ப்பா ருளாதாரவி லோதா
ருறவுநினைந் திருப்பார்கள் கோபமமை யாதோ
விருவருமிங் கிதத்தோடு கூடியணை யாநா
ளிளமைநலங் கிடைத்தாலிங் கேது பயனாமோ
முருகவிழ்செங்க கனிக்கோவை வாய்மொழியி னாலே
முனிவர்பெருங் குடித்தாழ்வு வளரதறி யீரோ
மருவியசந் தனக்காவின் மாமலர் கொய் வாரே
மகரநெடுங் குழைக்காதர் பேரையணை யாரே. 22

செங்கனிக் கோவை வாய்-கோவைப் பழம் போல் சிவந்த வாய்.

————-

கட்டளைக் கலித்துறை

ஆரய ராம லிருப்பா ரவருக் கருள் புரியும்
பேரைய ராதிபர் நங்குழைக் காதர் பிறங்கன் மின்னே
தாரை யராவிக் கடைந்தசெவ் வேலென்னஸ் சாய்ந்த குழற்
காரை யராவியென் னெஞ்சை யராவுங் கடைக் கண்களே. 23

அயராமல்-மறவாமல், பிறங்கலமின்னே-மலையிலுள்ள பெண்ணே, தாரை-முனை, குழல் காரை- கார் போன்ற கூந்தல்.

————-

பதினான்குசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

கண்ணகம் புதைப்ப வெளியிடஞ்ச சுவறக்
கருந்தடத் திருட்படாய் விரித்துக்
கடல்வீடக் குழம்பை யள்ளியிட் டுலகங்
கரந்துகொண் டனவெனத் தணிந்து
விண்ணகம் புதைத்த பரிதியு மதியும்
விழுங்கியுண் டொருபுடை செறிப்ப
வேர்விழுந் தூழி முடிவிலாக் கங்குல்
விடிவிலாத் தகைமையே துரையாய்
மண்ணகம் புதைத்த துணையடி முனிவர்
மனத்தகம் புதைப்ப வேழ்புலியும்
வயிற்றகம் புதைத்த பெருமவென் றிடைச்சி
மார்க்கமும் புதைப்பநீ வெருவிப்
பண்ணகம் புதைத்த பவளவாய் புதைத்துப்
பருமணிக் குழைபிடித் தாடப்
படித்தவர் சுருதி முடித்தவர் பேரைப்
பதிவளம் புரக்குமா முகிலே. 24

படாம்-துணி, குழை பிடித்து-குழையணிந்த காதை பிடித்து.

———–

நேரிசை வெண்பா
மாவளர்த்த வன்னையரு மாரன் குயில்வளர்க்கக்
காவளர்த்தா ரென்று குழைக் காதரே – நாவளைத்துச்
செற்றார் நகைவடிப்பத் தீவெடிப்பப் பூந்துளவின்
முற்றார் நகைவெடிக்கு மோ. 25

மாரன்-மன்மதன், கா-சோலை, செற்றார்- பகைவன்,
தீ வெடிப்ப வெடிக்குமோ-தீத் தோன்றுவது போலத் துளவ மலர்கள் சிவந்து தோன்றும்.

————

சுரம் போக்கு – கட்டளைக் கலித்துறை

வெடித்துச் சிவந்தவப் பாலைக்கப்பாலை வெளியில் வெப்பம்
பிடித்துச் சிவந்தன வோவந்த ணீர்கண்ணன் பேரைவெற்பில்
வடித்துச் சிவந்தசெம் பஞ்சோ டனிச்ச மலருறுத்தித்
தடித்துச் சிவந்தன கண்டீர் மடந்தைபொற் றாளினையே 26

வெடித்து – வெடிப்புகள் தோன்றி, பாலைக்கப் பாலை – பாலை நிலத்துக்கப்பாற்பட்ட, அந்தணீர் – முக்கோல் பகவர்களே,
செம்பஞ்சு – மருதோன்றி பூசிய சிவந்த நிறம், அனிச்ச மலர் – மென்மையான ஒரு வகைப் பூ,
தடித்துச் சிவந்தது – வீங்கிச் சிவந்து போயின, மடந்தை – என் மகள். முக்கோல் பகவரை வழிவினாதல் என்னும் அகப்பொருள் துறை.

————

மறம் – சந்தத் தாழிசை

தாளெடுத்துல களந்தபேரைமுகி றனதருட்குறு
நிலத்துளோர்
தையலைப்புது மணங்குறித்தெழுது சருகுகொண்டு
வருதூதனே

வேளெடுத்தவடி வேல்படப்பொருது வினையெடுத்தவர சரையெலாம்
வெட்டிவிட்டதிரு முகமலாதுதிரு முகமும் வேறறிவதில்லையே
நாளெடுத்தபடை பாடெடுத்ததிலை நாணயப்பிழையி வின்னமு
நரபதித்தலைவர் தலையெடுத்ததிலை நமனெதிர்த்துவரு மாயினும்
வாளெடுத்துவரி சிலைகுனித்துவளை தடிபிடித்து மெமெர் வெல்வராம்
மனுவரம்பழியு நாளுமெங்கள்குல மறவரம்பழிவ தில்லையே. 27

மறம்: இது கலம்பகத்தின் ஒரு துறை.
மணம் பேசத் தூது வந்தவனை மறவர்தம் குலப் பெருமை சொல்லி மகட்கொடை மறுத்தல். அரிட்குறு – அருளைப் பெற்ற,
தையலை – பெண்ணை, சருகு – ஓலை, வேள் – முருகன், வேல்பட – வேலாயுதமும் தோற்க, வினையொத்த – போர்த் தொழிலைச் செய்த,
நாகொடுத்த படை பாடெடுத்த நிலை – நாள் முழுவதும் எடுத்த ஆயுதத்தைப் பக்கத்தில் வைத்து விடுவதில்லை.
நாணயப்பிழை – நா நயப் பிழை; பேசுந்திறமையிலுள்ள பிழை. நரபதித் தலைவர் – தலைமை பெற்ற அரசர்கள்,
நமனெதிர்த்து வருமாயினும் – எதிரி எமனேயாயினும், மனு வரம்பு – மனித ஜாதியின் வரம்பு, மற வரம்பு – வீர மறவர் குலத்தின் ஒழுங்கு.

————-

பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

இல்லத் தடங்கா மடந்தையர்கற்
பெனவும் பசிக்கென் றிரந்தவர்கொன்
றீயா தவர்கைப் பொருள்போலு
மிரவிக் கிருள்போ லவுமடியார்
சொல்லத் தொலையா வெழுபிறப்புந்
துடைகுங் கருணைக் குழைக்காதர்
துணைத்தா ளளக்கும் புவிமருங்கிற்
சுற்றிக் கிடக்குங் கருங்கடலே
கொல்லத் துணியா தன்னையருங்
கொதியார் மதியு மதன்படையுங்
கூப்பிட் டழையாக் கருங்குயிலும்
கொடுமை படுத்தாக் குழலிசையு
மல்லற் படுத்தா வயலவரு
மளித்துப் பிரியீ ரெனவுரையா
தயர்த்துக் கொடுத்த மனமிருக்க
வாரை வெறுக்கக் கடவேமால். 28

இல்லத்தடங்கா – வீட்டினுள்ளே தங்கியிராத, பசிக்கென்று – பசி என்று, ஒன்று – ஒரு பொருளும்,
சொல்லத் தொலையா – சொல்லி முடிவு காணாத, எழு பிறப்பு – எழுவகைக் கதி, துடைக்கும் – நீக்கும்,
தாள் அளக்கும் – தாள்களால் அளந்து கொண்ட, புவி மருங்கில் – பூமியின் எல்லாப் புறங்களிலும்,
கொதியார் – கோபிக்கமாட்டார். மதன்படை – மன்மதன் படைக்கலங்கள், குழலிசை – வேய்ங்குழல் ஓசை,
அளித்து – தலையளி செய்து, அயர்த்துக் கொடுத்த – மறந்து பிரிவுக்குச் சம்மதித்த.

—————–

சம்பிரதம்

கடல டங்கவுறு மொருசி றங்கைபுனல்
கடுகி லும்புகுது மூசிவே
ரிடம்வ லஞ்சுழலும் வடத டங்கிரியு
மெமது சம்பிரத மீதெலா
முடனி ருந்துமகிழ் குருப ரன்பரவை
யுலக ளந்தமுகில் பேரைமா
லடல்பு ரிந்துபக லிரவு கொண்டதுவு
மரிய சம்பிரத மானதே. 29

சம்பிரதம் – ஜால வித்தை, கடலடங்கலுழிதொறு சிறங்காக புனல் கடுகிலும் புகுதும் – கடல் நீர் முழுவதும் ஒரு கைக்குள் அடக்குவோம்;
கடுகிலும் புகுவோம் என்றும், கடல் எல்லாவற்றிலும் ஒரு கை தண்ணீர் மொண்டு விரைந்து வந்திடுவோம் என்றும் பொருள் கொள்க.
வடமேருவும் ஊசிவேருடன் இடது புறமும், வலது புறமும் சுழலும்படி செய்வோம் என்றும் ஊசிவேரைக் கொண்டு
வடமேருவை இடது புறமும் வலது புறமும் சுற்றிச் செல்வோம் என்றும் பொருள் கொள்க.
பரவையுலகு – கடல் சூழ்ந்த உலகம், பகலிரவு கொண்டதும் – பகலை இரவாக்கியதும்.

—————–

நேரிசை வெண்பா

தேவகியார் பெற்ற திருவருத்தம் பாராமல்
கோவியர்தா மன்றுகுழைக் காதரே – தாவி
யடிக்குங்கைம் மாறோநீ ரஞ்சினர்போற் காது
பிடிக்கும்கைம் மாறோ பெரிது. 30

சோவியர் – இடைப் பெண்கள், அடிக்குங் கை மானோ – அடிப்பதற்குக் கையில் எடுத்த கோலோ,
காது பிடிக்கும் – தோப்புக்கரணம் போடுவதற்கு இரு கைகளால் காதுகளை மாற்றிப் பிடிக்கும், கைம்மாறு – உதவி.

———–

கலிவிருத்தம்

பெருவிட வரவணைப் பேரை மாதவன்
மருவிட நினைகிலான் மங்கை மாதரே
தருவிட வெண்ணிலாத் தழைத்த தெங்கணு
மொருவிட மிலைநமக் குறைவி டங்களே. 31

தருவிட – விடத்தைத் தருகின்ற

————-

கட்டளைக் கலித்துறை

உறைக்கோடு மாடவர் வாளா லொருகொம் பிறந்து மற்றைக்
குறைக் கோடு கொண்டுழல் குஞ்சரம் போலும் கொடியிடையீர்
துறைக் கோடு வாய்வைத்த மால்பே ரையிற் றென்னர் சூழ்ந்த பண்டைச்
சிறைக்கோடு மேகம் பிறைக்கோடு தாங்கிச் சிறக்கின்றதே. 32

உறைக் கோடும் வாள் – உறையில் விரைந்து புகும்வாள், ஒரு கொம்பிறந்து – கொம்பு வெட்டப்பெற்று,
குறைக் கோடு – கோடு, உழல் குஞ்சரம் – திரிகின்ற யானை, துறைக்கோடு – நீர்த் துறையில் கிடந்த சங்கு, தென்னர் – பாண்டியர்,
பண்டைச் சிறைக்கோடு மேகம் – பாண்டியர் சிறை வைத்த மேகம், பாண்டியர் மேகங்களைச் சிறையிலிட்ட திருவிளையாடல்,
பிறைக்கோடு – பிறை போலும் கொம்பு.

———–

தூது – எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.

சிறந்தார் தொழத்தரு மருந்தா மழைப்புயல்
செழும்பே ரையுத் தமர்பால்
அறந்தா னுறக்குரு கினங்காண் மடப்பெடை
யனங்கா ளுரைத் தருள்வீர்
இறந்தா மெனிற்பிழை யிருந்தா மெனிற்பழு
திரங்கா மனத்தவர் போன்
மறந்தான் மறக்கவு நினைந்தா னினைக்கவு
மனந்தா னெமக் கிலையே. 33

அறந்தானுற உரைத்தருள்வீர் – இப்பறவொழுங்கைப் பொருந்த எடுத்துரைப்பீர்.

———–

வெண்பா

எமக்குமுகம் வாட விருந்தா மரைகள்
தமக்குமுகம் வாடுஞ் சலிப்பென் – அமைத்துரையும்
பெண்மதியென் றோதாமற் பேதைநாட் டன்னங்காள்
தன்மதியி லுண்டோ தழல். 34

அழைத்துரையும் – பொருந்தச் சொல்லுங்கள், பெண் மதி – பெண்ணின் பேதைமை,
பேதை நாட்டு – பேதைமையுடைய என்னுடைய நாட்டிலுள்ள.

————-

பதினான்குசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

தழல்பிழிந்து சாறுகொண்டு சந்தனத்தி லிட்டதார்
தண்ணிலாவை யெரியெழஸ் சமைத்துவிட்ட பாவியார்
குழல் பிழிந்த விசையிலே குளிர்ந்தசிங்கி வைத்ததார்
கொடுமைவந்த காலமாசை கொண்டிருக்க வல்லமோ
நிழல்பிழிந்து பருகவென்று நினையுமசுர மருதமும்
நெறியவென்ற குரிசில்பேரை நீர்குளிக்கு நாரைகா
ளழல்பிழிந்த வேலரெம்மை யாணையிட் டகன்றதா
லந்தவாய்மை யுடல்பிழிந்தே னாவியுண்டு விட்டதே. 35

நிழல் பிழிந்து பருகவென்று நினையும் அசுர மருதம் -நிழலிலே* உயிரைப் பிழிந்து குடிக்க வேண்டுமென்று
நினைத்த அசுரர்களாகிய மருத மரங்கள், குரிசில் – சிறந்தவன், அழல் பிழிந்த வேலர் – நெருப்பைக் கக்குகின்ற வேலையுடையவர்,
ஆணை – சூள், சபதம் அந்த வாய்மை – தவறாத அந்தச் சொல்.

————

பின்முடுகு வெண்பா

ஆவியுண்டு மையுண் டறிவையுண்டு நிற்குமிரு
காவியுண்டு தாமரைக்கே கண்டீரோ – தேவியுடன்
மால்வளர்ந்த பேரையின்கண் வாவிகண்டு பூவையுண்டு
கால்கிளர்ந்த நீலவண்டு காள். 36

மையுண்டு – மை தீட்டப் பெற்று, அறிவுண்டு – மதியை மயக்கி, ஆவியுண்டு – உயிரைக் குடித்து;
காவி – நீலோத்பல மலர் போன்ற கண்கள், தாமரைக்கே – தாமரை போன்ற முகத்தில், வளர்ந்த – நீண்டகாலம் தங்கிய,
வாவி – குளம், பூவை – பூவிலுள்ள மதுவை, கால் கிளர்ந்த – சென்ற.

————–

அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

வண்டிருக்குங் குழற்புறத்து வாட்டிமடித் துப்பிடித்து வடிந்த வள்ளைத்
தண்டிருக்குங் குழைமடவீர் குழைக்காதர் பேரையின் முத் தமிழே போல
வுண்டிருக்க வுவட்டாத விதழமுது மிள நீரு முங்கள் பாலிற்
கொண்டிருக்கப் பெருங்காமப் பசிக்குதவா திருப்பதுவுங் கொடுமை தானே. 37

புறத்து – அருகில், வள்ளைத் தண்டு – வள்ளைத் தண்டு போன்ற காதுகள், வடித்து – பெருக்கி,
உவட்டாத – தெவிட்டாத, உங்கள் பாலில் – உங்களிடத்தில்.

——–

வஞ்சி விருத்தம்

கொடித்தேரினர் குழைக்காதினர் குலக்கார்வரை மேற்
பிடித்தீர்தழை கெடுத்தீர்கரி பிணைத்தேடுவ தேன்
அடித்தாமரை நடப்பீரவை யடைத்தாளுவ தோர்
தொடித்தோழியர் புனச்சார்பொரு தொழுத்தாலை வே 38

பிடித்தீர்தழை – வில்லையொழித்துக் கையில் தழையை வைத்திருக்கிறீர்,
கெடுத்தீர் கரி – யானையைத் தவறவிட்ட தாகக் கூறிக்கொள்கிறீர். பிணைத்தேடுவதேன் – ஆனால் ஏன் மானைத் தேடுகிறீர்.
அடித்தாமரை – தாமரை போன்ற மெல்லிய கால்கள் வருந்த, அடைத்தாளுவதோர் தொழு – அடைத்துக் காக்கின்ற தொழுவம்,
புனச் சார்பு – தினைப்புனம், தொடி – வளையலணிந்த.

———–

கட்டளைக் கலித்துறை

தொழும்பாக்கி யண்டர் தொழக்கற்ப காடவி சூழலர்த்தே
னெழும்பாக் கியமென் றிருப்பதெல் லாமிந்து விட்டந்தட்டித்
தழும்பாக் கியபொழில் சூழ்பேரை மால்சர ணாரவிந்தச்
செழும்பாக் கியமென் றவனடி யார்பண்டு செய்தவமே 39

அண்டர் – தேவர்கள், தொரும்பாக்கி – அடிமையாகி, அடவி – சோலை, அலர் – மலர்,
எழும் பாக்கியம் – பாக்கியம் கிட்டும், இந்து – சந்திரன், விட்டம் – அடிப்பாகம்,
சரணாரவிந்தம் – பாத தாமரைகள், பண்டு – முள்.

—————

அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

செய்யிற் கரும்பு வளர்பேரைத் திருமா றிருநா டனையீரும்
தொய்யிற் கரும்பு மலர்க்கணையுந் தொழிலுக் கரும்பு விழியுமதன்
கையிற் கரும்பு மலர்க்கணையுங் கைக்கொண் டதுபோற் கண்டவென்மேல்
எய்யிற் கரும்புங் கணையுமிலை இன்றைக் கிறவா திருப்பேனே. 40

செய் – வயல், தொய்யில் – மங்கையர் மார்பில் சந்தனத்தால் போடும் கோலம், தொழிலுக்கு – என்னை வருத்தும் செயலுக்கு,
அரும்பும் – தோன்றும், மதன் – மன்மதன், எய்தில் – எய்தால் (என்னைத் தழுவிக் கொண்டால்),
கரும்பும் கணையும் இலை – எனை வருத்தும் படைகள் உங்களிடம் இல்லாது போகும், இறவாதிருப்பன் – பிழைத்துப் போவேன்.

————

பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

இரும்பை நெறித்துத் துதிக்கைமடுத்
திளங்கோ மகளிர் வீரனெறிப்ப
வெதிர்த்தார் சிரத்தை நெறித்துமலை
யிடறி நெறித்துக் கடர்புறத்துச்
சுரும்பை நெறித்து வழிகறங்கச்
சுற்றும் தழைக்குஞ் செவிப்படலத்
துங்கக் களிற்றின் மிசைப்பவனி
தொழுதாள் விரகம் தொலையாதோ?
கரும்பை நெறித்து முடப்பலவின்
கனியை நெறித்து மடைமுதுகிற்
கதலிப் படலைக் குலைநெறித்துக்
கன்னிக் கமுகின் மடனெறித்துக்
குரும்பை நெறித்துத் தேனொழுகுங்
குவளை நெறித்துப் புடைத்துவரால்
குதிக்கும் புனற்பே ரையின் மகரக்
குழையே யெவர்க்குங் கோமானே. 41

இரும்பு – அங்குசம், துதிக்கை மடுத்து – யானைத் துதிக்கையில் மாட்டி, கோ மகளிர் – அரசகுலத்துப் பெண்கள்,
விரல் – விரலால், எதிர்த்தார் – பகைவர். சுரும்பு – வண்டு, வழிகறங்க – வழியில் சுழலும்படி, செவிப்படலம் – செவியின் பரப்பு,
துங்கம் – சிறப்பு, பவனி – குழைக்காதர் வரும் வீதியுலா, விரசம் – காதல் துன்பம், தொழுதாள் – தொழுத தலைவி,
முடப்பலவு – வளைந்த பலா, படலைக் குலை – பரந்த குலை, மடல் – பாளை, குரும்பை – இளநீர், வரால் – மீன்.

——-

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

மானென்பார் கலையென்பார் தொடுக்க லாகு
மலர்த்தழையா லெய்ததொரு மத்த வேழந்
தானென்பார் பதியென்பார் வழியே தென்பார்
தாமரைப்பூங் கோயிலென்று தவிர்ந்த தென்பார்
கோனென்பார் குலத்துதிக்குங் கருணை மேகங்
குழைக்காதர் பேரையிளங் கொம்பே வம்பே
யானென்பா ரல்லவென்பா ரில்லை யென்பா
ரிவர்கோட்டிக் கெதிருரைப்பார் யாவர் தாமே. 42

மத்த வேழம் – மதம் பிடித்த யானை, பதி – தலைவியின் ஊர், தாமரைப் பூ – இலக்குமி உறையுமிடம்,
கோனென்பார் – தலைவர்கள், கொம்பே – பெண்ணே, வம்பே – வீணாக,அல்ல – வேறொருவன், இல்லை – ஒன்றுமேயில்லை,
கோட்டி – வார்த்தை,எதிருரைப்பார் – பதில் சொல்வார்.

———

கழித் தாழிசை

தாமோதரர் மதுசூதனர் தருபேரையின் மடவீர்
நாமோதர மாமோகினி நலமோதர மறியீர்
ஆமோதர மலவோவெளி தடியேறுடன் முனிவாய்ப்
போமோதர நினையீர்கமழ் புதுவாய் மல ரமுதே. 43

நலம் – அழகு, முனிவாய் – கோபங் கொண்டு.

———-

கலிவிருத்தம்

தேனார் பொருனைத் திருமால் தமிழ்ப்பேரை
யானாத கல்வி யறிவார் பயனன்றோ
கானார் கருங்குழலார் காமத்தின் பால்மறந்து
போனாரறத்தின் பொருட்டுப் பொருட்பாலே. 44

அமுதுர நினையீர் என்று கூட்டுக.* ஆனாத – அழியாத, கானார் – மானம் நிறைந்த, காமத்தின் பால் -காதலின் பகுதி,
அறத்தின் பொருட்டு – இல்லறம் நடத்த விரும்பி, பொருட்பால் – பொருளைத் தேடி,
திருக்குறளில் காமத்துப்பால் சிறிது, அறத்துப்பால் நடுத்தரம், பொருட்பால் மிகப் பெரிது.

——————

கலித்தாழிசை

பால்வடியுந் திரண்முலையும் பச்சுடம்பும் பசுநரம்புஞ்
சூலவடிவுந் தோன்றாமற் றூண்வயிற்றிற் றோன்றியநாண்
மேல்வடிவா மிரணியனை வினைதொலைக்குந் தமிழ்ப்பேரை
மால்வடிவாந் திருவடிவ மரகதத்தின் மணிவடிவே. 45

சூல் – கருப்பம், மேல் வடிவு – பெரிய வடிவம், வினை தொலைக்கும் – அழிக்கும்.

————

கட்டளைக் கலித்துறை

வடித்தூது சங்கொப்ப வண்டோட்டு மல்லிகை வாயிற்கௌவிப்
பிடித்தூது வண்டோடும் பேசுகிலேன் பிரியாத வைவர்
குடித்தூது சென்ற குழைக்காதர்க் கென்மயல் கூறிவரும்
படித்தூது நீசெல்லு வாய்மழை சாடும் பனிக் கொண்டலே 46

தோடு – புற இதழ், ஐவர் – பஞ்ச பாண்டவர், சாடும் – சொரியும்.

————

கழித்தாழிசை

கொண்டலைக் கோதி வகிரிட் டிருண்ட குழலாரே
குங்குமச் சேறு பூசித் திரண்ட முலையாரே
தெண்டிரைப் பாயல் மீதிற் றுயின்ற ருளுமாமால்
தென்திருப் பேரை மீதிற் சிறந்த மடவீரே
அண்டற்பொற் பூமி தான்விட் டெழுந்த ருளினீரோ
அம்புயக் கோயில் வாழப் பிறந்த வருநாமோ
தண்டமிழ்ப் பாகி னூறிக் கனிந்த மொழிதாரீர்
சந்தனக் காவி னீழற் பொழிந்து மருவீரே. 47

கொண்டல் – மேகம், அண்டர் பூமி – தேவலோகம், நாமோ – நீங்களோ – முன்னிலைப் பொருளில் வந்த தன்மை.

——-

மருத்தேற லுண்ணுங் களிவண்டு காள்வம்மின் மாலறிந்து
கருத்தே மகிழவுங் கண்களி கூரவுங் காய்கதலிக்
குருத்தே விசும்பளக் கும்பேரை மால்குழைக்காதர்செம்பொற்
றிருந்தே ரிலுங்கடி தாய்வரு மோவன்பர் தேர்வரவே 48

மருந்தேறல் – மணம் பொருந்திய தேன், மால் – ஆசை,
கதலிக்குருத்தே விசும்பளக்கும் பேரை – வாழைக் குருத்துக்களே ஆகாயத்தை எட்டிப் பிடிக்கிற – உயர்வு நவிற்சி அணி.
கடிதாய் – விரைவாய், அன்பர் -தலைவர்.

———–

எழுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்

வரம்பறுங் கடற்பாயல் பிரிந்தநங் குழைக்காதர்
மகிழ்ந்ததென் திருப்பேரை வளவயல்சூழ்
கரும்பையுங் கசப்பாக விளைந்தமென் சுவைப்பாகு
கனிந்தசெந் தமிழ்ப்போலு மொழிமடவீர்
இரும்புநெஞ் சவர்க்காக நெகிழ்ந்தநெஞ் செமக்காக
விருந்துசஞ் சரித்தாவி யவர்பிறகே
வீரும்புநெஞ் செமக்காக மறந்தவன் பவர்க்காக
விரிஞ்சலும் படைத்தானென் விதிவசமே 49

பாயல் – படுக்கை, மகிழ்ந்த – விரும்பின, திருப்பேரையை மகிழ்ந்து பாற்கடலை விட்டு வந்தார் என்று பொருள் கொள்க.
கசப்பாக – கசப்பாக்கி, பாகு – தேன்பாகு, ஆவியிலிருந்து – உயிர் வாழ்ந்து, சஞ்சரித்து – நடந்து – திரிந்து,
விரிஞ்சன் – பிரமன், விரிஞ்சனும் படைத்தான்.

——–

பன்னிருசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

விதிக்குந் தொழிலாற் பலகோலம்
வெவ்வே றெடுத்து நடித்தொருவன்
விளையா டுவபோற் றொலையாத
வினையிற் சுழன்று தடுமாறி
எதிற்குந் சிறிதா மெறும்புகடை
யானை முதலாந் தொல்குலத்தி
லெல்லாப் பிறப்பும் பிறந்தலுத்தே
னினியுன் திருத்தா ளெனக்கருள்வாய்
குதிக்குங் கலுழிப் பெருஞ்சுவட்டுக்
குறுங்கட் பெருவான் மழைமதித்துக்
கொலைவேட் டெழுதெவ் வுடல்பிளக்கக்
குத்தும் பிறைக்கிம் புரியெயிற்று
மதிக்கும் புகர்மத் தகமுகத்து
வரிவண் டிரைக்கும் பணைக்கரத்து
மதவா ரணத்துக் கருள்புரியும்
மகரக் குழையெம் பெருமானே. 50

விதிக்கும் தொழில் – பிரமன் படைத்த செய்கையியினால், வெவ்வேறுபல – வேறுவேறானபல, கோலம் -வேடம்,
ஒருவனே பல கோலங்களில் நடிக்கிறான், அதுபோல ஒரு உயிர் பல உடல்களில் பிறக்கிறது, எதிர்க்கும் -எதற்கும்,
யானை முதல் எறும் பீறாக, குதிக்கும் கலுழி – வெள்ளமாகப் பொங்கி வரும், சுவடு – கால், குறுங்கள் – சிறிய கள்,
வேட்டு – விரும்பிதெவ் – பகைவர், மத்தகம் – யானைத் தலை, பனை – பெருத்த.

———

எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

மகரக்குழை மாயன் பொருனைத்துறை நாடன்
மண்டங்குடி யாளுந் தொண்டன்பணி வாதன்
பகதற்கரி தாகும் பரதத்துவ போதன்
பைம்பொற்கிரி வாழுஞ் செம்பொற்கொடி போல்வாய்
சிகரத்தன பாரங் குழையக்குறு வேர்வுஞ்
சிந்துங்கனி வாயின் பந்தத்துரை மாறுந்
தகரக்குழல் சோருங் களவித்தொழில் போகந்
தங்குஞ்சுனை தானிங் கெங்குங்கிடை யாதே. 51

தொண்டன் – தொண்டரடிப்பொடி ஆழ்வார்.

————

சந்தக்கலி விருத்தம்

எங்குங்கிடை யாதபே ரின்பந்தரு பேரைமால்
வெங்கண்களி யானைபோம் வேள்கண்டெழு மாதரார்
சங்கங்களை வாருகே சந்தத்துழல் வருமா
தங்கங்கணி யாகவே ளம்பின்னுயிர் வாடுமே. 52

வேள் – விருப்பம், சங்கம் – சங்கு வளையல், மாது – மாதர், அணி -வரிசை, வேள் – மன்மதன்.

———–

அறுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்

வாடு மனைத்துயிர் வாழ வளிப்பவர் மாமக
ரக்குழைமால்
கூடு புனற்றுறை யாடி யிளைத்துடல் கூறு
நரைக்குருகீர்
பேடையை விட்டக லாதிரு முத்தமிழ் பேரறி
விற்குணமே
யாடவ ரிப்படி போன பிழைக்கினி யாரை
வெறுப்பதுவே. 53

ஆடவர் – தலைவர்

———–

பதினாங்கு சீர்ச் சந்த விருத்தம்

ஆர்வெறுப்பினு மயல் வெறுப்பினு மன்னைமார்கள் வெறுப்பினு
மமுதசந்திர கலைவெறுப்பினு மந்திமாலை வெதுப்ப வேள்
போர்வெறுப்பினு மறலிவந்தொரு புடைவெறுப் பினும் வளைகடற்
புடவியேழும் வெறுப்பினுமொரு பொருளதாக நினைப்பனோ
வார்வெறுத்தெழு கொங்கையீமக ரக்குழைத்திரு
மாயனார்
மார்பிடத்தும் வரைப்புயத்தும் மணந்தணைந்து
முயங்குபைந்
தார்வெறித்துள வாயினுஞ் சருகாயினும்
பெற விட்டதோர்
சாமகீத மொழிச்சுரும்பொடு தான்வெறுப்பில
தாகியே. 54

அயல் – அயலார், வெதுப்ப – சுட, வேள்போர் -மன்மதன் செய்யும் போர், மறலி – எமன், புடை -பக்கத்தில்,
கடல் வளை – கடல்சூழ்ந்த, புடவி – பூமியிலுள்ளார், முயங்கு -உடலிற் கலந்த, வெறி -மணம்,
பெறவிட்டது – தலைவி பெறத் தலைவன் அளித்தது, சுரும்பு – வண்டு, வெறுப்பிலதாகி -விருப்பங்கொண்டு.

——–

அறுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்

இலதாகி யுளதாகி யுடலாகி யுயிராகி யிருளாகி
யொளியாகநீ
பலதாரை வெகுமாயை விளையாடு குணநீதி
பலதேவ ரறிவார்களோ
மலருடு கயல்சாட மதகூரு புனல்சாடி வருபேரை
நகராளனே
சிலபேர்க ளறிவார்கள் சதுவேத முதுபோத
தெளிஞான முடையோர்களே. 55

தாரை -ஒழுங்குமுறை.

—–

புய வகுப்பு

முப்பத்திரண்டு சீர்க் கழிநெடிலடியாசிரியச் சந்த விருத்தம்
உடையக் கலசத் தயிர் கொட் டியெடுத்
திதழ்வழி யொழுகிய திவலை பொழிந்தன
உரலைக் கதவுக் கடையிட் டுயரத்
துறிபல தடவிய நறுநெய் கவர்ந்தன
உடல்கட் டிறுகத் தொழில் மற் பிடியிட்
டசுரரை யெமபுர மளவு துரந்தன
உயிரைப் பருகக் களவிட் டலகைப்
பணைவரை முலைமுக நெருடி யிருந்தன.
படியிற் றுடைபட் டுழலக் கனகனை
நகநுனி யுழுதிடு செருவி யிடந்தன
பனையிற் கனியொத் திருபது முடியத்
தலையுருள் படவடு பகழி சொரிந்தன
பரிதிக் கதிருட்புதையத் தமணப்
படநிழல் கெழுமிய திகிரி சுமந்தன
பருமச் சிகரக் கயிலைப் பரனுக்
கிடுபலி கெடநிறை பரிசில் வழங்கின
கடலைக் கடையப் பருமத் துவலித்
திமையவர் பசியற வமுதம் விளம்பின
களபத் தெளியிற் றுளபத் தொடையில்
பரிமள ம்ருகபத முழுகி யளந்தன
கனவட் டமுலைத் திரள்பட் டுருவிப்
பொதுவியர் வரிவளை பொருது சிவந்தன
கமலத் தவளைத் தழுவிக் களவியி
லிளகிய புளகம தொழுகி மலிந்தன
மடையிற் கழியிற் பொருனைத் திரையினி
லுதறிய வரிமண லலகு நெடும்புழை
மதகிற் கதலிப் படலைக் குலையினில்
வளமுக கடவியில் மருவி வலம்புரி
வயலெக் கரிடப் புதுமுத் தமிழ்சொற்
குருகைய ரதிபதி பரவு நெடுந்தகை
மகரக் குழையுத் தமனித் தியனுயர்
பரகதி முத்லவ னணிபொற் புயங்களே. 56

திவலை – தயிர்த்துளி, கதவுக்கடை – கதவின் அருகில், உயரத்து – உயர்ந்த இடத்திலுள்ள,
மல்தொழில் பிடி – மற்போரில் செய்கின்ற பிடிகள், துரந்தன – செலுத்தின, களவிட்டு – வஞ்சகமாக வந்த,
அலகை – பேய்ப்பெண் பூதனை, பணைவரை – பெருத்த மலை, படியில் – பூமியில், துடை – தொடை,
கனகன் – இரணியன், உருள்பட – உருள, பகழி – அம்பு, கதிருட் புதை அத்தமனம் – சூரியன் மறைந்த அந்திப் பொழுது,
நிழல் கெழுமிய – ஒளி நிறைந்த, திகிரி – சக்கரம், பருமச் சிகரம் – உயர்ந்த உச்சி, பலி – பிச்சை,
பரிசில் – வெகுமதி, பருமத்து வலித்து – பெரிய மத்தை இழுத்து, விளம்பின -பறிமாறின, தெளி – குழம்பு,
தொடை – மாலை, மிருகமதம் – மான் மதம், கத்தூரி, பொதுவியர் – இடைச்சியர், கமலத்தவள் – இலக்குமி,
புளசம் – மயிர்க்கூச்செறிதல், புழை – துவாரம். வலம்புரி – சங்கு, எக்கர் -மணல், குருகையரதிபதி – நம்மாழ்வார்.
பரவுநெடுந்தகை – போற்றப்படும் பெரியோன், பரகதி – மோட்சம், முதலவன் – முதன்மையானவன், அளி – அழசிய.

——–

குறம் – பதினான்கு சீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்

புயங்க சேகர முயங்கு நாடதி
புகழ்ந்த பேரையை வணங்கியே
புரிந்த வாய்மையி னிகழ்ந்த மாகுறி
புகன்று வாழ்குற மடந்தை நான்
இயங்கு மாகெவு ளியும்பொ லாதல
விருந்த மாநில மிணங்கவே
யிசைந்து மாநிதி துலங்க வேயருள்
பொருந்தி வாழுவை யிலங்கிழாய்
வயங்கு மாதலை வரைந்து பேரதில்
வளங்கொள் சேவக ரிரண்டுபேர்
வளர்ந்த நாவல ரிரண்டு பேரோரு
வனுந்த ராதலம் வணங்குவோ
னுயங்கி நானுடல் வருந்தி னேனெழு
குழந்தை வாய்பசி யடங்கவே
யுடந்தை யாயொரு சிறங்கை கூழிடு
கிழிந்த தூசுரு ளுறங்கவே. 57

புயங்க சேகரம் – அரவளிந்த, முயங்கு – பொருந்திய, நாடகி – நடிக்கின்ற பெண், காளி, புரிந்த வாய்மை -சொன்ன சொல்,
கெவுளி – பல்லி சொல், பொலாதல – நன்மை செய்யும் குறிதான், இருந்த மாநிலம் – வாழ்கின்ற ஊர்,
இணங்கவேயிசைந்து – சம்மதம் பொருந்தி, இலங்கிழாய் – விளங்கும் ஆபரணத்தையுடைய பெண்ணே,
சேவகர் – வேலை செய்வோர், நாவலர் – புலவர், உயங்கி – வருந்தி, உடந்தையாய் – மனமிசைந்து, சிறங்கை – கைகொள்ளுமளவு,
தூசு – கூட்டத் தலவர் ஐந்து பேர் – நன்கு விளங்கவில்லை, திருமால், சிவன், அயன், விநாயகன், முருகன் இவர்களைக் குறிக்கலாம்.
பசியால் அழுத குழந்தை வாய்மூடச் சிறங்கை கூழிடு; உறங்கக் கந்தை கொடு என்பது பொருள்,

———-

கொற்றியார் – எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

அரங்கத்து ளேதுயிலு மருஞ்சக்ர பாணிவய
லகஞ்சுற்று பேரை நகர்வாய்
விரும்புற்ற தாமமுலை யரும்பித் தாமரையில்
விளைந்துக்க மாமணி கொலோ
கருங்கற்றை வார்குழலை முடிந்திட்ட நாமமொடு
கலந்திட்ட தாவடமு மாய்
வருங்கொற்றி யாரழகி னரங்கொற்றி யாடலது
மருங்கொற்றி யாரறி வரே 58

கொற்றியரா – கலம்பகத்தின் உறுப்பு,
வைணவ சின்னம் பூண்டு பிச்சைக்கு வருவோர்கள் மீது காதல் கொண்டு ஒரு காமுகன் கூறுவதாகச்
சிலேடை பொருள்பட வருவது இச்செய்யுள். வயலகம் – வயலிடம், தாமம் – மாலை,
தாமரையின் மாமணி – தாமரைக்காய் மாலை, அரும்பித்த – மலர்ந்த, நாமம் -திருமண் காப்பு,
தாவடம் – முத்து மாலை, அரங்கு – நாடக மேடை, ஒற்றி – இசைந்து, மருங்கொற்றி – அருகேயிருந்து கவனித்து.

————–

சந்தக்கலி விருத்தம்

வருகார்முகில திருபேரையி லமர்பூ வணைசேர்
பெருவாழ்வொடு மொருநாளவை பிரிவோ மலவே
திருவேயமு துருவேபொரு சிலைவேள் குருவா
முருவேறெம துடல் வேறெம துயிரோ குயிசரே. 59

பூவணை – மலர்ப்படுக்கை, அமுதுரு – அமுதம் போன்ற வடிவம்.

————

நேரிசை வெண்பா

உயிர்முடிக்குஞ் செவ்வந்தி யுண்டெனவே கோதை
மயிர்முடிக்குஞ் செவ்வந்தி வையாள் – அயனார்
பெருந்துளதிக் கேகமும் பேரைமால் சாத்து
மருத்துளதிக் கேமயலா வாள். 60

உயிர் முடிக்கும் – உயிரை அழிக்கும், செவ்வந்தி – சிவந்த அந்தி மாலை, மயிர் முடி – கூந்தல்,
செவ்வந்தி – செவந்திப்பூ, மருந்துளதி – வாசனை பொருந்திய துளசி, மயல் – ஆசை.

————-

எழுசீர்க் கழிநெடிலடி சந்த விருத்தம்

மயலற் றவைக்கருள்செய் மகரக் குழைக் கடவுள்
வயிரப் பொருப்பி னயல்சூழ்
முயலைத் துடைத்துமதி யதனைப் பதித்ததென
முகவட்ட மிட்டு வருவீர்
புயலிற் கறுத்தகுழல் வரையிற் பணைத்தமுலை
புளகிக்கி விற்று வீடும்வே
ரயலற்ற வற்பவிடை திருநெற்றி யிற்றலதே
மழியத் துடைப்ப தழகே. 61

பொருப்பின் – மலையிடத்தே, முயல் – சந்திரன் கறை, மதி – சந்திரன், முகவட்டம் – முகத்தில்பொட்டு,
புயல் – மேகம், புளகிக்கில் – புளகித்தால், கூச்சமடைந்தால், அற்பஇடைவேரற்றுவிடும்;
ஆகையால் திலகத்தை அழித்துவிடுவீர், அழகு – நல்லது.

—————–

அறுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்

அழகு தங்கிய மகர வண்குழை யமலர் தண்கிரிவாய்
நுழை நுழைந்தென துயிரை யுண்டது நுவல வும்படுமோ
மழை சுமந்தலை கடல் சுமந்திணை மலை சுமந்தருளே
தழைய வந்தொரு பொழிலி னின்றது தனியிளங் கொடியே 62

நுவலவும் படுமோ – சொல்லும் தரமோ. மழை – கூந்தல், கடல் – கண்,
மலை – கொங்கை, கொடி -பெண் கொடி காட்சி யென்னும் துறை.

———

ஒன்பது சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம்

இளங்கொடி யிணங்குமுது சூழல்
நெருங்கிய பொதும்பர்வெளி நீழல்
இதண்புடை யிருந்து விளையாடி நீர்
விளம்பிய குளிர்ந்த மொழி யூடு
கரைந்தது கருங்கலினை வீசி
வெறுங்கவ ணெறிந்துபய னாகுமோ
வளந்தலை மயங்குதமிழ் நாடர்
செகந்தனில் முகுந்தர்வரு பேரை
மடந்தையர் வணங்கு மபிஷேகமே
தெளிந்தசொ லினிங்களென நூறு
பசுங்கிளி விழுந்தபுன மீது
செழுந்தினை விளைந்துகரை யேறுமே. 63

பொதும்பர் – சோலை, இதண் – பரண், அபிஷேகம் – முடிபோறாள், புனம் – திணைப்புனம்,
கறையேறுமே – மாசூல் கைக்குக் கிடைக்குமோ?

————

களி – பதினான்குசீர்க் கழிநெடிலடிச் சந்தத் தாழிசை

கரைபடைத் தமடைமுது குடைப்ப வொரு
கயல் படைத் துலவு பேரை மால்
கருணையைப் புகழ வரு பரப்பிரமர்
களியர்கா னறியு நறவுமாய்
வரிசையிட்டன ளிலச்சி யாகினி
வலைச்சியைத் தொழு மடத்துளே
மதுக்குடந்தனை யெடுத்துவைத் ததனை
வளைய வைத்து நட மாடுவோம்
விரிசடைக் கடவுள் புரமெரித் ததுவும்
விடமிடற் றிடை செறித்ததும்
வேலுடைக் கடவுள் சூரனைச் சமரில்
வென்றதும் பொருது கொன்றதும்
அரிமலர்ப் பிரமனறுதலைக் குடுமி
யறுதலைக் குறை முளைத்ததும்
அன்று பஞ்சமிதன் மந்திரப் பெருமை
யன்றி வேறு வரமல்லவே. 64

களி – குடியர் கள்ளைச் சிறப்பித்துக் கூறுவது, களியர் – குடிகாரர், நறவு – கள்,
இலச்சி யாகினி வலச்சி – பரவும் தெய்வம், பஞ்சமி – கள், மந்திரப் பெருமை – மந்திர சக்தி.

————

பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

அல்லிக் கமல மடிபெயர வருகிற் குவளைக்
கழுத்தொடிய
வாம்பற் குழுவின் மடலுடைய வலையிற்
றுளைத்து கரையேறி
நெல்லிற் புகுந்து கொடிவள்ளை நெரியத் தவழ்ந்து
பணிலமணி
நிலவைப் பொழியுந் தமிழ்ப் பேரை நெடுமால்
பொருனைத் திருநாட்டின்
வல்லிக் கொடியே மடப்பிடியே வனசத் திருவே
யமுதுருவே
வயிரக் கொழுந்தே மரகதமே மயிலே யனையீர்
மழையருவி
கல்லிற் பொருத வரைச் சாரல் கடிகாவனைத்துந்
தொலைத்தன னென்
கையுந் தழையுமுகம் பார்த்துக் கருணை புரியக்
கடவீரே. 65-

அல்லி – அகவிதழ், பணிலம் – சங்கு, மணி – முத்து, வனசம் – தாமரை.

—–

வஞ்சித்துறை

வீர மாரனா

லார மாலை வேம்
நேர மாலை தா
நேர மாலை தா
பேரை மாயனே. 66-

ஆரம் – முத்து, வேம் – வெப்பந்தரும், நேர – எனக்குக் கிடைக்கும்படி.

———

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியத் தாழிசை

பேரை வளம்பதி மாலே பேதையை வந்தணை யாநா
ளீர நறுங்குழ லாரே பேதை நினைந்தினி நோவேன்
மார சரம்படு பூவோ வாரி விடும்பனி நீரோ
ஆர வடம்படு தூளோ வாவியை யுண்டது தானே. 67

மாரசரம் படு பூ – மன்மதன் அம்பாக விடுகின்ற பூ, ஆரவடம் – முத்துமாலை.

———–

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

கார் காலம்

தான் குதிக்கு மந்தியுமீ றந்தி மாலைத்
தழல் குதிக்கு மெனத் துணையே தழுவுங்காலம்
தேன் குதிக்கு மிதழியும் பொன் சிதறுங் காலம்
திருந்திழையார் விழித்தாளஞ் சிந்துங் காலம்
நாங்குதிக்கு மொழுங் குதிக்கும் படியே வந்த
ஞானவரோ தயன்பேரை நகர்வாய் வட்ட
வான் குதிக்குங் காலமவர் மறந்த காலம். 68

மந்தி – பெண் குரங்கு, இதழி – கொன்றை, தரளம் – முத்துப்போன்ற கண்ணீர், ஒழுங்கு – நியாயம்,
ஞான வரோதயன் – சிறந்த ஞானத்தால் அறியப் படுவோன்.

——————

தரவு கொச்சகக் கலிப்பா

மறம் புரியுந் திகிரியுடன் வலம்புரியுந்தரித்து நமக்
கறம் புரியுங் குழைக்காத ரருட்டேரை யுயர் நகர் வாய்ப்
புறம் புரிய மணிப் புரிசைப் பொறி சுமக்குந் துகிற் கொடிக
ணிறம் புரியும் புயல் குளித்து நீணிலவிந் துவக்குமே. 69-

புரிசை – மதில், புயல் – மேகம், துவக்கும் – கட்டும்.

———

அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

நீணி லாவெழும் பளிக்குமண் டபத்திடை
நின்றுதன் னிழற் கோலங்
காணி லாயிழை யொருத்தியென் றழைக்குமென்
கன்னியைத் தழுவாயோ
தூணி லாடக னுரம் பிளந் துயிருணத்
தோன்றிய நெடுமாலே
கேணுலாவிய தடம் பொழிற் பேரைவாழ்
திருந் தெழிற் குரியானே. 70-

எழும் – செய்யும், பளிங்கு மண்டபம் – கண்ணாடி மண்டபம், நிழற்கோலம் – பிரதிபிம்பம்,
ஆயிழை ஒருத்தி – வேறு ஒரு பெண், ஆடகன் – இரணியன், உரம் – மார்பு, திருந்தெழில் – சிறந்த அழகு.

————

அறுசீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்

உரிசை மாவுள வொழுகு தேனுள வுறைகொள் கூவலின் வாய்
விரியு நீருள பதியி னீரினி விடிய வேகுகவே
யரிவை வாடின ளிறைவ பேரையி லமர மால்வரைவா
யிரவி போனடி னொருவர் போகில ரெயினரோ கொடிதே. 71

உரிசை – ருசி, உறை – கிணற்று விரிசுவராகிய உறை, கூவல் – கிணறு, பதியில் – ஊரில் தங்கி,
எயினர் ஒருவர் போகிலர் – வேடர் ஒருவர் கூடப் போகவில்லை, ஓ!கொடிது – மிகவும் கஷ்டம்,

————–

கட்டளைக் கலிப்பா

கொடியளந்த வசோதைகை மாறஞ்சிக்
குழை தொடுங் கைக்குழைக்காத ரேயும
தடியளந்த வுயிர் யாவும் வாழவன்
றாழிகொண்ட மரக்கால் பதித்துநீர்
படியளந்தது போதாம லன்னமும்
படைத்திருப்பது பாலனென்றோதலால்
மிடியளந்த வறிஞரைப் போலன்று
வெண்ணெய் தொட்டுண்ட தென்ன விநோதமே 72-

கொடியள் அந்த அசோதை – கொடுமை செய்து பிரசித்தி பெற்ற அசோதை , மாறு – விளார், பிரம்பு;
குழைதொடும் – தோப்புக்கரணம் போடக் காதைப் பிடிக்கும், அடியளந்த – காலால் அளந்த, ஆழி – சக்கரம்,
அமரக்கால் – தெய்வத்தன்மை வாய்ந்த கால், படியளந்தது – பூமியை அளந்தது உணவு கொடுத்தது,
பாலன் – காத்தற் கடவுள், மிடியளந்த – வறுமையிலே வளர்ந்த, தொட்டுண்டது – களவிலுண்டது,

————-

பன்னிரு கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

என்னைத் தனியே புதுநிலவுக் கிரையிட்டிருக்கக் கடவீரோ
எரிவாய் மடுக்கும் பணிவாடை யிளமைப் பயனு மடநாணுந்
தின்னக் கொடுத்து விடுவீரோ தீரா விடும்பை யிவை யனைத்துந்
தீர்க்கும்படியே செழுந்துளபத் திருத்தார் கொடுத்து விடுவீரோ
கன்னற் கனிவாய்ப் பாலொழுகக் கதலிக் குலைவா யமுதொழுகக்
கருங்காவியின் வாய்த் தேனொழுகக் கமலத்தவர் வாய்த் தாதொழுகச்
செந்நெற் குலைவாய்ப் பாலொழுகச் செழுந்தாண் மேதி புகுந்து முக்குந்
திரைநீர் பெருகு வயற்பேரைச் செல்வக் கருணைப் பெருமாளே. 73-

வாய் மடுக்கும் – வாயிற் கொண்ட, இடும்பை – துன்பம், கனிவாய் – கனிந்து, செழுந்தாள் – பெருத்த கால்கள்

——-

கட்டளைக் கலித்துறை-

மாவாய்க் கிழிக்குங் குழைக்காதர் பேரை வளை கடனீர்
நாவாய் படைத்துப் பயனென் கொலோ நடுச் சொல்லறியாப்
பூவாய் குடைந்து செழுந்தா தளைந்து பொதிந்த தென்றற்
றீவாய் மறலி யெனவந் துலாவுமித் தென்றிசைக்கே 74

வளை – வளைந்த, நாவாய் – நாக்கையுடையவாய், தோணி, நடு – நடுவுநிலைமை.

————–

எண்சீர்க் கழிநெடிலடி சந்தத் தாழிசை-

தெற்குத் திசை நோக்கித்திரு வரங்கத்திடைத் துயில்மால்
தென்பேரையி லன்பாகிய செம்பொற்கிரி மடவீர்
அற்பத்தழை கண்டான்முலை யாளுக்கி டொணாதோ
அருமைப் பணி விடைபோதவு மடியேனுள நலனோ
கற்பித்தன செய்வேன்கடி காவிற்றழை கொய்வேன்
காமன்கையில் விலையோவிரு காதோலை யிலெழுதா
விற்கத்திரு வுளமோவெனை மேவத்திரு வுளமோ
வினையேனொரு பிழைநூறிது விண்ணப்ப முமக்கே. 75-

எழுதா -எழுதி.

——–

அறுசீர்க் கழிநெடிலடி விருத்தம்

கேச வாமழை வள்ளலே கேழ லாயதிர் கொண்டலே
யீச னேதிகழ் பேரைவா யிறைவனேயென வெண்ணியே
நாச வாழ்வை முனிந்துநீர் நாரணா நமவென்றுவாய்
பேசு வீரறி கின்றதே பிறவி வேரரிகின்றதே. 76-

கேடில் – வராகம், அறிகின்றதே பேசுவீர்.

———–

சித்து

ஐம்பத்து நான்கு சீர்க் கழிநெடிலடி வண்ண விருத்தம்

அரிபாளை நறவூறு முதுதாழை கொண்டல்
முடிசூடி வெளிகீறு சுடர்கால் குடைந்து
புனல்வேலி வலிஞாழல் கனிசூ ரலம்பு
முழுமூடு படமோதி வரைவா யிறங்கி
யழல்சீறி நிழல்மாறி மலைவேக வெம்பு
சுரமாறி நிரையாயர் நிலமே கடந்து
தத்திவீழ் பொருநை வந்தநாள்
அலையேறு புதுநீரி லெதிரேறி நின்று
வலைவாணர் புனல்சாய மணிவா லறைந்து\
கழைபாற விடுதோணி தடுமாற வுந்தி
வளர்யானை கொடுபோன சுழியூடலம்பி
யகிலார மணநாறு வெகுசே றளைந்து
முடிகூடு நரைபோலு நுரைமாலை சிந்த
முத்த வால்வளை கறங்கவே

மருவீதி மலராடை புனைமார் பணிந்து
துறைதோறு மருகோடி விளையாடி யங்க
ணலையாத கயமூழ்கி யணைகோடு கண்டு
மதகோடு மடைதாழ வினைமேலெழுந்து
வயலாமை கொழுமேழி முகவாய் முறிந்து
கடுமேதி தடுமாற வுளவான் மலங்க
வெக்கர் பாய்மணல் மருங்குறா

மடவாழை குலைசாய நிலைசூழ் கரும்பு
புடை போல வளர்பூக முடல்கூன மந்தி
தளை மீறி யுமிழ்தேனின் மறுகா றதும்ப
மடநாரை பெடையோடு மலர்மே லொதுங்க
வரிவாளை குதிபாயும் வளநா டுகந்த
நெடுமாய னருள்பேரை நகர் வாழ் வுகந்த
சித்தரேமடி பணிந்து கேள்

திருமாது பிரியாத மடமாது செம் பொன்
றுருவான தொருவேரி லதுமா லறிந்த
வொருமூலி தடவாமு னரனார் பசும்பொன்
னிறமான பிரமாண மறைநூலி லுண்டு
சிலையான வடமேரு வரனா ருகந்த
துரையாணி யொருகோடி யிழையாத செம்பொன்
வைத்த தார்பெருமை யும்பரூர்

சிறுகாலை நிறமான கனகாதி யெங்கள்
குருநாதர் பரிவான மதிபார முண்டு
மதராஜ னுபதேச மொருபூ மருந்து
மடமாத குறவோடு விளைபா டகங்கள்
திரைதாவு கடலூடு படுதீவி லொன்று
பெயரீழ நவகோடி மணிசாடு கின்ற
வித்தையோ புதுமை யின்று நீ

சருவாம லொருபூத ரணுகாம லஞ்சு
தலைவாச லடைதாழி டருகே யிருந்து
குகைமூடு யுமிபோடு கரிபோடு செம்பி
லரிதார மிடுதார முதலா மிரும்பு
தனிலூத விடிவேறு தவறாது செம்பொ
னதுவார முடனோது முபதேச மந்த்ரம்
அப்பனே அமுது கொண்டுவா.

தலைவாழை யிலைமீது படைகோழி கொன்று
பொரிகாடை கதுவாலி மிளகான நன்று
சருகாமை கொடுனாவென் றுயிர்கா னுடும்புசாளை
கயல்தேளி சிறுசாளை பொடிபாதி நண்டு
தயிர்மாறி பருமாறு திரன்பால் சொரிந்து
பணியார வகைபோடு நளபாக முண்ட
தப்படா களப சந்தமே. 77-

தாழை – தென்னை, ஞாழல் – குங்கும மரம், சூர் – மூங்கில், மூடு – மரம், சுரம் – பாலை நிலம், ஆயர் நிலம் – முல்லை,
வலைவாணர் – நெய்தல் நில மக்கள், கழை – தோணியைத் தள்ளும் மூங்கில் கம்பு, உந்தி – தள்ளி, ஆரம் – சந்தனம்,
முடிகூடு – மயிர் முடியில் ஏற்படும், வால் வளை – வெள்ளிய சங்கு,கோடு – உச்சி, மேழி – கலப்பை, மேதி – எருமை,
ஆன் – பசு, மலங்க – வருந்த, எக்கர் – மணல்மேடு, மறுகால் – நிறைந்த தண்ணீர் வடியுமிடம், உரையாளி – மாற்று அறிவிக்கும் ஆளி,
உம்பரூர் – தேவ லோகம், சருவாமல் – திகைக்காமல். ஒரு பூதர் – ஒரு மனிதர், அஞ்சுதலை வாசல் – ஐம்பொறி,
தாழிடு – தாழ்ப்பாள் போடு, குகை – பொன்னையுருக்குங் கூடு, அரிதாரம் -உருக்குவதற்குப் பொன்னுடன் கலக்கும் மருந்து,
விடிவேறு – விடியும் பொழுது, வாரம் – பட்சம், அமுது – உணவு, தலைவாழையிலை – பெரிய வாழையிலை,
என்னுயிர் – எனக்கு மிகுந்த விருப்பம், கயல், தேளி, சாளை – மீன்வகை, மாரி – மழைபோல,
பணியாரம் – பட்சணம், அப்பு – பூசு, சந்தரம் – சந்தனம்.

———-

எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.

சந்தனக் காவில் வந்துநிற் பீ்ர்தம் டங்குளித் தாசலாடுவீர்
பந்தடித் தானும் மருங்குபற் றாது பண்பலக காணுமாதரே
தெந்திருப் பேரை வண்குழைகா காதர் திண்கிரிச் சாரல்மீதிலே*
மைந்தரைச் சீறி யுங்கள் நீட்டுர வஞ்சகக்காவி தாவுமே* 78-

தடம் – சுனை, மருங்கு – இடை, நீட்டுரம் -கொடுமை, காவி – கண்கள்.

———–

மடக்கு-கட்டளைக் கலிப்பா-

தாவு யுண்ப துறிமுகப் பாலையே
சயன போகத் தலமுகப் பாலையே
தேவி யென்பது பங்கயத் தாளையே
தேவர் கோன்விரும் பங்கையத்தாளையே
யாவு மாய்வந் துதிப்பது மாயனே
யென்று பன்னித் துதிப்பது மாயனே.
நாவி லோதுவ துன்றிருப் பேரையே
நான் வணங்குவ துன்றிருப் பேரையே. 79-

உறிமுகப் பாலையே – உறியிலுள்ள பாலையே, சயன போகம் உகப்புத் தலம் – படுக்க இனிதாய் மகிழ்ச்சி தரும் இடம்,
ஆலையே – ஆலிலையையே, பங்கயத்தாளையே – தாமரை மலரில் வீற்றிருக்கும் இலக்குமியையே,
தேவர் கோன் அங்கை அத்தாளையே விரும்பும் என்று பொருள்,
ஆயனேயென்ற உதிப்பதும் – கண்ணனாக வந்து அவதரிப்பது. பன்னி – சொல்லி, மாயனே – மாயையுடையவனே,
திருப்பேரையே – அழகிய திருநாமங்களையே; திருப்பேரையென்னும் ஊரையே.

———–

வஞ்சி விருத்தம்

பேரி யம்பிலன் பேரைமால்
வேரி யம்புனல் வெற்பில் வேள்
காரி யம்பறை கண்கள் வேல்
வாரி யம்பெனன் மாறுமே. 80

இச்செய்யுள் கடைமடக்கு. வேரி – மணம், வேள் காரியம் பறை – மன்மதன் தொழிலைக் கூறும், வாரி – கடலை, மானுமே – நிகராகுமே.

————

பதினான்கு சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

மானுடன் பிறந்து கலையுடன் வளர்ந்து
மதியுடம் பழுக்கறத் துடைத்து
வள்ளையுங் குமிழுங் குமுதமும் பதித்து
மாசறக் கடைந்தவேல் கிடத்திக்
கூனுடன் கிடந்த தடஞ்சிலை தொடுத்துக்
கொடுங் கொலைத் திலதமிட் டெழுதிக்
குருகுலப் பிரமன் பெருமையிற் படைத்த
குளிர்முகத் திருவை நீ தருவாய்
கானகம் புகுந்து வீராதனை வதைத்துக்
கவந்தனைக் கவர்ந்து சூர்ப்பனகை
கரியமூக் கரிந்து கரனுக்குயிர் குடித்துக்
கருங்கடல் வழிபடக் கடந்து
போனது மரக்கன் புகுந்தது முடிவிற்
புரந்தரன் பெருந்தவ மெனமுன்
பொருதவா மகரக் குழையனே கருணைப்
புனல்வளம் பொழிந்தகார் முகிலே. 81-

மதி, வள்ளை, குமிழ், குமுதம், வேல், சிலை இவை முறையே முகம், காது, மூக்கு, வாய், கண், புருவம் இவற்றுக்கு உவமை.
மான் – சந்திரன் களங்கம், கலை – சந்திரகலை, குருகுலம் – குருகுல வாசம் பண்ணி,
திரு -இலக்குமி போன்ற மகள், வழிபட -வணங்கி வழிபட.

——–

அம்மானை – கலித்தாழிசை-

காரையூர் வண்ணர் குழைக் காதர்சிலைப் போர் விசயன்
தேரையூர் மாலாய்த் திரிந்தனர்கா ணம்மானை
பேரையூ ரென்றிவர்தாம் பேசுவதே னம்மானை
பின்னைமால் கொண்டிருந்தாற் பேசாரோ வம்மானை 82-

காரை ஊர் – மேகத்தில் பொருந்திய, வண்ணர் – நிறத்தை உடையவர். விசயன் – அருச்சுனன்,
தேரையூர்மால் – தேரை ஓட்டுகிற கண்ணன், தேரையூரிலுள்ள விஷ்ணு; பின்னை மால் – நப்பின்னைப் பிராட்டியிடம் காதல்,
மால் கொண்டிருந்தால் – அறிவு மயக்கம் கொண்டிருந்தால், பின்னைப் பேசாரோ – அதன் காரணமாகப் பேசமாட்டாரோ?

———-

கைக்கிளை மருட்பா-

அம்மா னகையு மடுகின்ற மால்பேரை
யெம்மாவி கொண்ட திவணகையே – பெம்மான்
வரிசிலை வடவரை வளைத்த பின்றைத்
திரிபுரஞ் செற்றதுந் திருமுன் னகையே 83-

அம்மான் – மாமனாகிய கம்சம், நகையும் சுடுகின்ற -சிரிப்பையும் ஒழித்துக் கொன்ற, பேரை – பேரையில்,
இவள் தலைவி, ஆவியுண்டது – உயிர் கவர்ந்தது, பெம்மான் – சிவபெருமான், சிலை – வில்லாக,
வடவரை – மகா மேருமலை, செற்றது – அழித்தது, முன் – முன்னே, தோன்றின, திருநகை – அழகிய சிரிப்பு.

——–

நேரிசை வெண்பா-

நகைத் தாமரை புரைதாள் நாயகனார் பேரை
யகத்தா மரையமுதே மன்னாள்–முதத்தழகு
தான் பிடித்த செல்வம் தாம் பிடிக்க மாட்டாமல்
வான் பிடித்த தன்றோ மதி 84-

நகை – ஒளி, புரையும் – ஒக்கும், பேரையகம் – பேரைத்தலம், தாமரையமுதம் – தாமரையில் இருக்கும் இனிய இலக்குமி
அன்னாள் – ஒபபானவள். பிடித்த – கொண்ட, தரம் பிடிக்க மாட்டாமல் – அழகின் தன்மையறிந்து ஒப்பாக மாட்டாமல்,
வாள் பிடித்தது – வானத்தில் ஓடி ஒளிந்தது.

————

ஒன்பதின்சீர் வண்ண விருத்தம்

மதிக்கும்பெரு மாள்மதி வார்சடை
முடிக்கும்பெரு மாளய னாரிரு
வருக்கும்பெரு மானெனு மாமறைநூல்
துதிக்கும்பெரு மானெளி யோர்பிழை
பொறுக்கும்பெரு மாளடி யார்வினை
தொலைக்கும்பெரு மாள்வரு பேரையிலே
குதிக்குங்கயல் போல்விழி யீரினி
யிறக்குங்குழை யார்முனம் வார்மனங்
கொதிக்கும்பத மானது தானறியீர்
அதிக்கும்பசி யென்னது தூதையில்
வடிக்குஞ்சிறு சோறிடு மாறிடும்
அறத்தின்பய னாவது தானிதுவே 85-

மதிக்கும் – எல்லோரும் பாராட்டும், மதிவார் சடை முடிக்கும் பெருமான் – சந்திரனை நீண்ட சடையிலே சூடும் சிவபெருமான்,
அயனார் – பிரமன், எனும் – என்று தலபுராணம் கூறும். மறைநூல் – வேதம். துதிக்கும் புகழைக் கூறும், தொலைக்கும் – தீர்க்கும்,
இறக்கும் குழை – நீண்டு தொங்கும் காதணி, கொதிக்கும் பதம் – மிகுந்த வெப்பம் தரும் நிலை,
அதிக்கும் – அதிகரித்துக் கொண்டே வரும். தூதை – பானை சோறிடும், பசி மாறிடும்; அறத்தின் பயனாவது இது தான். அறம் – இல்லறம்.

——————

அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

வேயிருந் திசைத்த செவ்வாய் விண்ணொடு பிறந்த மேகம்
பேயிருந் தலறக் கொங்கை பிசைந்துண்ட பேரை மாயர்
தூயபைந் துளப நாறுந் துணையடிக் கமலப் பூவே
மாயவெம் பிறவி நோய்க்கு வாகட மருந்து தானே. 86-

வேயிருந்திசைத்த – புல்லாங்குழலை வைத்து ஊதின, விண்ணொடு – விண்ணில், மேகம் – மேகம் போன்றவன்,
பேய் – பூதனை, நாறும் – கமழும், துணை -இரண்டு, வாசடம் – வைத்திய நூல்.

———–

மதங்கியார் – எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

மருதொடித்து நெடியசாடு மடிபடத் தவழ்ந்த மால்
வழுதிநாடு பாடியாடி வந்தமா மதங்கியார்
முருகெழக் கிடந்தலைந்து முகிலுலாவு மளகமும்
முனிவருக்கு மயலளித்த முகிழ்நகை ப்ரதாபமும்
இருகவட்டு முலைமுகத்தி லெழுதிவிட்ட தொய்யிலும்
இளைஞரைத் தொடர்ந்துகொல்லு மின்பவே லிரண்டுமற்
றொருபிறைக் கொழுந்திலன்னை ஓதியிட்ட திலகமும்
உயிர்பறிக்கு மியமனுக்கு பாயவித்தை காணுமே. 87-

மதங்கியார் – வாளைக் கையில் பிடித்துச் சுழற்றியிடுகின்ற பெண், சாடு – சகடு, வண்டி; மடிபட – இறந்து வீழ,
முருகு – வாசனை, உலாவும் – போன்ற. ப்ரதாபம் – புகழ், இருவெட்டு – இரண்டாகப் பிரிந்த
தொய்யில் – மகளிர் மார்பில் அணியும் சந்தனக் கோலம், பிறைக் கொழுந்து – சிறு பிறை போன்ற நெற்றி,
திலகம் – பொட்டு, இயமனுக்கு உயிர் பறிக்கும் உபாய வித்தையென்று கூட்டுக.

————

மேற்படி விருத்தம்-

மேலிருக்கு மதிக்குழவி முடித்தார் போற்ற
வீற்றிருக்குங் குழைக்ககாதர் விமலர் நாட்டிற்
சேலிருக்கும் விழியணங்கே நின்னை யல்லாற்
றெய்வ மாமகளிரையும் தீண்டு வேனோ
மாலிருக்கு மின்பதுன்ப மறிந்தா ரந்தோ
மணிவயிரங் குன்றவெள்ளி வள்ளத் துள்ளே
பாலிருக்க முகஞ்சுளிப்பப் பருவாய் கைப்பப்
படுகொலைசூழ் நஞ்சையள்ளிப் பருகுவாரே. 88-

மதிக்குழவி – பிறை, முடித்தார் – சிவபெருமான், மால் – விஷ்ணு, ஆசை; வயிரங்குன்ற – வயிரமும் ஒப்பாகாத,
வள்ளம் – கிண்ணம், சுளிப்ப – கோண, கைப்ப-கசப்பாக. படுகொலைசூழ்-கொடுமையான கொலையைச் செய்கிற, அள்ளி-முகந்து.

————

பருந்தாட் கொடியதென் றோகுழைக் காதர் பதிப்புரிசைப்
பெருந்தாட் கொடியை யணங்கே தண்சாரற் பிடியணங்கு
மிருந்தாட் கொடிய கடாயானை போலு மிறைவர் தம்மைக்
கருந்தாட் கொடியிற் றுவக்குநும் மூரிக் கழைக்குறவே சுரம் போக்கு 89-

புரிசை-மதில், அணங்கு-பெண், சுணங்கும்-வருந்தும், பிடி-பெண் யானை, கடா யானை -ஆண் யானை,
இறைவர்-தலைவன், கொடியில் -பூங்கொடி போல, துவக்கும்-கட்டும், மூரிக்கழை -வலிய மூங்கில், கழைக்கு-கழையில்,.
உறவே-பொருந்தும்படி, அணங்கே, நும் தாள் சாரல் கழைக்கு உறவே, புரிசைக் கொடியைத் துவக்கும்,
இறைவர் தம்மை கருந்தாள் கொடி துவக்குவது போலத் துவக்கும். ஏன்? பருந்தாட் கொடிய தென்றோ? என முடிவு காண்க,
தலைவனுடன் சுரம் போக்குக்கு உடன்பட்ட தலைவியைத் தலைவன் ஊர் அதி சமீபத்தில் இருக்கிறதென்று தோழி தேற்றுதல்,
ஊரளித் தென்றல் என்ற அகப் பொருள் துறை.

——–

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

கழைக்காவ லானதழல் கொதித்தேறு பாலைவழி
கழித்தோமிராமல் மயிலே
தழைக்காவ லார்கமல மலர்த்தாளு றாமலொரு
சரத்தூர மேகி லுளவே
குழைக்காதர் நாடுமவர் திருப்பேரை யூருமணி
கொழித்தேரு வாவி களுநீள்
மழைக்கா ருலாவும் வரி மணற்சூழல் வாவுமிள
மரச்சோலை நீழல் களுமே. 90-

கழைக்கு ஆவலான தழல்-மூங்கிலை விரும்பிப் பற்றுகிற தீ, கொதித்தேறு-வளர்ந்து கொண்டே செல்லுகிற,
பாலை வழி-பாலை நிலத்தினூடே போகிற பாதை. இராமல்-உட்கார்நது இளைப் பாறாமல்.
சரத்தூரம் அம்பு போடுகிற, கமல மலர்த்தாளுருமல்-தாமரை போன்ற அடிகள் வருந்தாமல்.
மணி-இரத்தினங்கள். மழைக்கார்-மழை மேகங்கள் சூழல்-மேடுகள், வாவும்-தாவி வருகின்ற, நீழல்களும் உளவே என்று முடிவு காண்க.

————

எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்-

மேதி பாசடைக் குவளை தின்றுவாய்
வேரி பாய் புனற் பேரை மாயனே
தீது போகவும் பிறவி போகவுந்
தேவரே தொழுஞ் செல்வமான தாள்
ஓதி மாதராற் கயிற்றி லிட்டதால்
உரல் பிணிக்கவுஞ் சகடு தைக்கவும்
தூது போகவுங் கடவதோ வெனாத்
தொழுது மா மறைச் சுருதி பாடுமே 91-

மேதி-எருமை, பாசடை-பசிய இலை, வேரி-தேன், தீது-தீவினை, ஓதி-கூந்தல்,
கயிற்றில்…உரல் பிணிக்கவும்-கயிற்றின் ஒரு நுனியைக் காலில் கட்டி, மற்றொரு நுனியை உரலைச் சுற்றிக் கட்டவும்,
சுருதி-வேதம். கேட்கப்படுவது.

————

நேரிசை வெண்பா-

பாடு குரலறியாப் பைங்கிளியே செந்தினையின்
காடு பூங்காலறியாக் காவலார் – நீடசுரர்
வேரரிந்த மால் பேரை வெற்பிற் சிலகுறவ
ராரரிந்த வாரறியா ரோ. 92

காடு-புனம், பூங்கால்-பூவைப்போல மென்மையான கால், காவலார்-காவல் செய்பவர், ஆரரிந்த-ஆர முழுவதும் அரிந்த.

———-

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

அறிவிருந்த சிறுமதலைக் கிர்ணியனா ரடர்த்தநாள்
வெடித்த தூணிற்
பிறிவிருந்த தேவகிபாற் கருவிருந்த திருவயிறும்
பிரிந்த வன்றே
செறிதரங்க நிறைபொருநைத் திருப்பேரை
வளநகருஞ் சேடன் மீதி
லெறிதரங்கப் பாற்கடலு மென்னெஞ்சு மவர்க்கலா
திடம தாமே. 93-

சிறுமதலை – சிறுபிள்ளை, மதலை – பிள்ளையின் பொருட்டு, தரங்கம் – அலை, பொருனை – தாமிரளருணி நதி.

———

எண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம்.

ககனர் முக் கணர் காண மதலையைச் சலியாது
தலை யறுத துடல் வேறு கறி சமைத் தவள் பாவியோ
விகடமிட் டொருதேவி தசரதற் கினிதான
மகன் வனத் திடையேக விளைய வைத் தவள் பாவியோ
மகனெனக் கருதாம னிலவிலிட் டிள வாடை
வளையவிட் டநியாய மதனை விட் டவள் பாவியோ
பகருமுத் தமிழ்ஞான கருணை பெற் றவர் பேரை
மடநடைப் பெடை நாரை பதிலினிச் சொல வேணுமே. 94-

ககனர் – ஆகாயத்திலுள்ளவர், முக்கணர் – சிவ பெருமான், மதலை – சிறு தொண்டன் பிள்ளை,
கறி சமைத்தவள் சிறுத்தொண்டன் மகன் இராமன், விளையவைத்தவள் – கைகேயி, மதனை விட்டவள் -தலைவன் தாய்.

———-

பாண் – மேற்படி விருத்தம்

மேருவைப் பிளந்தெடுத்து வேறு கூறு செய்த போல்
வெஞ்சினத்தி லிரண்யன்றன் மேனியைப் பிளந்து பேர்
கூருகிர்தி தடக்கை கொண்டு கூறு செய்த பேரை மால்
குரைகழற் புகழ்ந்து பாடல் கொண்டு பெற்ற வரிசையோ
மூரியற்ற விறலியர்க்கு முன்னடைந்து செல்கையால்
மொய் வினைத் துதிக்கை கொண்டு மூடிகளைச் சரிக்கையால்
பாரியற்கை கொண்டழிந்து பலகடம் பெருக்கையால்
பரிசில் பெற்ற யானை நீதி பாணருக்கு மொக்குமே. 95-

முரி – சோம்பல், விறலியர் – பாணன் மனைவிகள், பெருமையுடைய அரசியர்;
துதிக்கை கொண்டு -துதிப்பதினால், தும்பிக்கையினால்;
முடிகளைச் சரிக்கையால் – அரசர்களை வெல்லுகையால், தலைகளை வணங்கச் செய்கையால், கடம் – மதஜலம், கடன்.

———-

பதினான்குசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்-

பாண் வாய் மிழற்றுஞ் சுரும்பின் தொடர விரி
பங்கயத் தாதிறைத்தும்
பனி மலர்க் குவளை யஞ் சேயிதழ் சுரக்கும்
பசுந்துளித் தேனை மாந்திச்
கேண் வாய் தொடுத்த மதி வண்டுளியி னிற் சிதறு
மல்லிகை யவிழ்த்தும் வாகச்
செம்பொற் றகட்டுக் கருந்தாழை மடலிற்
செறித்த பொற் சுண்ணமாடித்
தூண் வாய் சுமக்கும் பளிக்கறைப் பத்திச்
சுவர்ப் புறத் திடைகு யிற்றுஞ்
சுடர் மணிச் சாளரக் கண் வழி நுழைந்து பைந்
துளவைப் பெறாத மடவார்
நாண் வாய் கிழித்துவேள் சிறுநா ணிறுக்கிட
நடக்குஞ் செழுந் தென்றல் பார்
ஞான புங்கவ விறைவ பேரையம் பதி முதல்வ
நந்தா வளக் கொண்டலே. 96-

பாண் – பண், இசை; மிழற்றும் – மழலையிற் பேசும், சுரும்பு – வண்டு, மாந்தி -குடித்து, மதி வண் குளி – சந்திகளின் துண்டுகள்,
அவிழ்த்தும் – மலரச் செய்தும், சுண்ணம் – வாசனைப் பொடி, பளிக்கறை – பளிங்கு மண்டபம், குயிற்றும் – அமைத்திருக்கிற,
சாளரம் – பலகணி, நாண் – நாணத்தை, வேள் – மன்மதன். நாண் – வில்லின் நாண், ஞான புங்கவ – அறிவிற் சிறந்தவனே, நந்தா – அழியாத.

—-

நேரிசை வெண்பா

நந்தா வளம் பிறந்த நம் பேரை மால் பவனி
வந்தார் வளம் பிறந்த வார்த்தைக்கே – செந்தழல் போல்
வண்ண மாயங்குதித்த மாமதி கண்டென் பசலைக்
கென்ன மாயங் குதித்ததே. 97-

நந்தா வளம் – அழியாத வளப்பம், பிறந்த – தோன்றிய மால் – குழைக்காதர், வந்தார் – வந்தார் என்ற,
வளம் பிறந்த – பெருமை தோன்றும், வார்த்தைக்கே -பேச்சுக்கே, வண்ணம் – நிறம், உதித்த – எழுந்த,
மாமதி – பூர்ண சந்திரன். பசலை – நிற வேறுபாடு, மாயம் – காரணம் அறிய முடியாத கொடுமை, குதித்தது – திடீரென்று தோன்றிற்று.

————-

எழுசீர்ச் சந்த விருத்தம்

குதிக்குங்கவுள் மதத் தண்டுளி மழைக் குஞ்சர மழைக்கும் புயல்
கொழிக்குந் தமிழ் வளர் பேரையிலே
மதிக்கும் பொருள் மிகப் பெண்டுகள் வெறுக்குங்குடி தழைக்கும்படி
வளர்க்குந் திரு மடமா மயிலே
வறிக்கும்படி படிக்குஞ்சிறி தனிச் சங்களும் பணிப்பஞ்சிலும்
வெறுக்கும் பத முனதா கையினால்
உதிக்குங் கதிர் வெறுக்கும் பால் கொதிக்குஞ் சுடர் நடக்குந்தொறு
முறைக்கும் பொழு துயிர் வாடுவையே. 98-

கவுள் கன்னம் – கவுளிலிருந்து குதிக்கும், துளிமழை -தூற்றல் முற்றிச் சொரியும் மழை, குஞ்சரன் – கஜேந்திரன் என்னும் யானை,
அழைக்கும் – ஆதிமூலமே என்று கூப்பிடும், புயல் – மேகம் போன்ற குழைக்காதர், கொழிக்கும் தமிழ் வளர்-தமிழ் செழித்து வளர்கின்ற,
பேரை-தென்திருப்பேரை, தழைக்கும்படி-மதிப்பில்லாத குடும்பம் சிறந்த மதிப்படையும்படி,
பெண்டுகள் வளர்க்கும் – பெண்களால் வளர்க்கப்பெற்ற, மயில்-மயில் போன்ற பெண்ணே,
சிறிதென்று விதிக்கும்படி படிக்கும் அனிச்சங்களும் -சிறிதென்று தீர்மானிக்கும்படி நாமறிந்த மென்மையான அனிச்சப் பூக்களிலும்,
பஞ்சினும் உற-பஞ்சிலும், பட்டாலும், உனது பதம் வெறுக்கும்-உனது கால்கள் நோகும்,
“அனிச்சமும், அன்னத்தின் தூவியும் மாதர், அடிக்கு நெரிஞ்சிப்பழம்,” என்ற குறளைக் காண்க.
உதிக்கும் கதிர் கொதிக்கும் சுடர் நடக்குந்தொறும், வெறுக்கும் பரல் உறைக்கும் பொழுது நீ உயிர் வாடுவை என்று கூட்டுக.
உயிர் வாடுவையே-தாங்கிக் கொண்டு உயிர் வாழ முடியுமா?

———-

இருபத்தைந்தடி நேரிசை யாசிரியப்பா

வாடை வந் தியங்கப் பீடை கொண்டுளதே
தென்றலங் கன்று மென்று தின் றுமிழ்ந்து
கோது பட வாருயிர்க் குறையையுஞ் சுழித்துக்
குழித்து விரல் குழைத்துச் சுழித்த மணற் கூடலும்
அள்ளி யிட்ட புள்ளியம் பசலையும்
துயிற்சுவை யறியாப் பயிர்ப்புறு தடங்களும்
மறவா வன்புந் துறவா வுள்ளமும்
அன்னப் பேடும் புன்னையங் காவும்
துணை பட விரிந்து துயர்படுங் காலத்தும்
பழுதிலா துயர்ந்த வழுதி நாட் டெவையும்
யாரையுந் தமிழ்ப் பேரயும் புரக்க
வளநகர் வார்குழைச் சிகரபூ தரத்தோன்
தெய்வ நாயக னைவர் தேர்ப் பாகன்
மலைமால் வரைத்தல மலைச் சாரலின் கண்
மணங்கொள் பூங்கொடி யணங்கு தண் பொதும்பரிற்
சிறந்த காட்சியிற் பிறந்த தண்ணளி போற்
கை தொட்டுத் தலைவர் மெய் தொட்டூப்பி யின்று
பணை முலைக் குரும்பை பிணை மலைப் புயத்தின்
ஊடுறப் பொருது பாடுறக் கிடப்ப
வரிவளைத் தழும்பு மார்பிடத் தழுந்தப்
பரிபுரச் சில்லொலி பல்கல னொலிப்பப்
புலவியுங் கலவியும் பொருந்திநற் சீருள்
நலமிகு பெருஞ்சுவை நமக்கினி தளிக்கச்
சிறுதுயிற் கனவு தந் தருளு
மகர நெடுங்குழை வாழி வா ழியவே. 99-

வாடை-வடக்கேயிருந்து வரும் காற்று, இயங்க-வீச, பீடை-வருத்தம், தென்றலங்கன்று-இளந்தென்றல்,
தென்றல்-தெற்கேயிருந்து வரும்காற்று. கோதுபட-கொத்தென்று நீக்கவைத்த, கூடல் – கூடலிழைத்தல்,
அள்ளியிட்ட-வாரிச் சொரிந்த, பயிர்ப்பு-பிறர் பொருளைத் தீண்டின வெறுப்பு,துணைபட-உயிர்த்துணை பிரிந்தால்,
இரிந்து- ஓடி, புரக்க-காக்க, வார்-நீண்ட, பூதரம்-மலை போன்ற தோள், ஐவர்-பஞ்ச பாண்டவர்,
அணங்கு-படர்ந்து வருத்தம் செய்கிற, பொதும்பர் – சோலை, தண்ணளி-தலையளி, குரும்பை-இளநீர் புயம்-தோள்,
பாகுற-பக்கத்தில் பொருந்த, பரிபுரம் -பாதசரம், சில்லொலி-சில்லென்ற ஒலி, பல்கலன்- பல ஆபரணங்கள், புலவி-ஊடல், கலவி-புணர்ச்சி,

————–

நேரிசை வெண்பா

வாழி புகழ்ப் பேரை மகரக் குழை வாழி
வாழி தமிழ் நூற்றெட்டு மாமறையோர் -வாழியவே
தேக்கும் பதக மலந் தீர்த்தெனது சிந்தையுள்ளே
பூக்கும் பத கமலப் பூ. 100-

பதக மலம்-குற்றமாகிய அழுக்கு, பத கமலம்-அடித்தாமரை, பூக்கும்-தோன்றும்.

————

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பதித்த நவ ரத்னமணி மோலி வாழி
பங்கயப்பூந் திருமுகச் செம் பவளம் வாழி
கதித்த சீர் நெற்றியில் வெண் டிருமண் காப்பு
கத்தூரித் திலகமிரு கண்கள்
துதித்தநறும் பசுந்துபைத் தோள்கள் வாழி
சுரிமுகச்சங் காழிவான் கதைவில் வாழி
மதித்தபீ தாம்பரஞ்சேர் அரைநூல் வாழி
மகரநெடுங் குழைக்காதர் வாழி வாழி. 101–

மோலி-கிரீடம், பவளம்-இதழ், சுரிமுகம்-வளைந்த அடிப்புறம், ஆழி-சக்கரம். கதை-தண்டாயுதம், பீதாம்பரம்-பொன்னாடை.

——

முற்றும்.

—————

ஸ்ரீ முகுந்தமாலாவில், ஸ்ரீ க்ருஷ்ணானுபவம்–

April 10, 2021

ஸ்ரீ முகுந்தமாலாவில், க்ருஷ்ணானுபவம்

குஷ்யதே யஸ்ய நகரே ரங்க யாத்ரா திநே திநே |
தமஹம் ஸி ரஸா வந்தே ராஜாநம் குலசேகரம். ||

எந்த ராஜாவின் நகரில், “ஸ்ரீ ரங்கத்துக்குப் போவோம், வாருங்கள்” என்று தினம், தினம் பறை என்கிற வாத்தியத்தின்
மூலம் அழைக்கப்படுகிறதோ, அந்த ராஜ்யத்தின் அரசனான ஸ்ரீ குலசேகரரைத் தலையால் வணங்குகிறேன்

————​

​ஸ்ரீ வல்லபேதி வரதேதி தயாபரேதி
பக்த ப்ரியேதி பவலுண்டந கோவிதேதி |
நாதேதி நாகசயநேதி ஜகந் நிவாஸே
த்யாலாபிநம் ப்ரதிபதம் குரு மே முகுந்த ||–1-

மே ….முகுந்த….என்கிறார். என்னுடைய முகுந்தனே என்று அழைக்கிறார். அழைத்து என்ன சொல்கிறார் தெரியுமா !
ஸ்ரீ வல்லபா ( லக்ஷ்மி பதி ), வரதா, தயாபரா , பக்த ப்ரியா , பவலுண்டன கோவிதேதி (பிறவித் துயரை அறுப்பவனே )
நாத இதி–காப்பாற்றுபவனே —நாதா, ( அவன்தான் நாதன், நாமெல்லாம் அல்ல ),
நாகசயனா , ஜகந்நிவாஸா —அடியேன் எப்போதும் உன்னுடைய திருநாமங்களையே———
ஆலாபிநம் ——–பேசுபனாக—பாடுபவனாக —அனுக்ரஹம் செய் என்கிறார்.
உன் திருநாமங்களை எப்போதும் நாமசங்கீர்த்தனமாகச் செய்ய–அருள்புரிவாயாக—என்கிறார்.

———-

ஜயது ஜயது தேவோ தேவகீ நந்த நோயம்
ஜயது ஜயது க்ருஷ்ணோ வ்ருஷ்ணி வம்ச-ப்ரதீப : |
ஜயது ஜயது மேக ச்யாமள கோமாளாங்கோ
ஜயது ஜயது ப்ருத்வீ –பாரநாஸோ முகுந்த : ||–2-

இவன் தேவகியின் மைந்தன்
இவன் வ்ருஷ்ணி குலத்தின் விளக்கு —ஆயர் குல விளக்கு
இவன் மேக ச்யாமளன்
இவன் கோமாளாங்கன்
இப்படிப்பட்டவன் வெற்றி அடைவானாக என்று , ஜயது ,ஜயது என்று எட்டு தடவை சொல்கிறார்
( இது அஷ்டாக்ஷரத்தை நினைவுபடுத்துகிறதா !)

————

முகுந்த! மூர்த்நா ப்ரணிபத்ய யாசே
பவந்த–மேகாந்த -மியந்த -மர்த்தம் |
அவிஸ்ம்ருதிஸ் -த்வச் -சரணாரவிந்தே
பவே பவே மேஸ்து பவத்-ப்ரஸாதாத் ||–3-

இந்த 3வது ஸ்லோகத்தில் முகுந்தனிடம் ஒன்றே ஒன்று யாசிக்கிறார்.
எவ்வளவு பிறவி எடுத்தாலும், முகுந்தனின் கிருபையாலே அவனுடைய திருவடிகளை மறக்காமல் இருக்க யாசிக்கிறார்.
அவிஸ்ம்ருதி —மறக்காமலிருப்பது—பகவத் ப்ரஸாதாத் –பகவானுடைய கிருபையால்.
பவே பவே—ஒவ்வொரு ஜன்மத்திலும். என்கிறார்.

———–

நாஹம் வந்தே தவ சரணயோர் த்வந்த –மத்வந்த –ஹேதோ :
கும்பீபாகம் குருமபி ஹரே ! நாரகம் நாபநேதும் |
ரம்யா ராமா ம்ருது தநு லதா நந்தநே நாபி ரந்தும்
பாவே பாவே ஹ்ருதய –பவநே பாவயேயம் பவந்தம் ||–4-

அவன், ஹரி—ஹரே என்று அழைக்கிறார். அஹே—அடியேன். தவ த்வந்தம் சரணயோ ——உன்னுடைய இரு திருவடிகளை .
எதற்காக நமஸ்கரிக்கவில்லை ,ஆனால் , எதற்காக நமஸ்கரிக்கிறேன் என்று விண்ணப்பிக்கிறார்.
மோக்ஷத்துக்காக அல்ல;கும்பீபாகம் என்கிற நரகவேதனையை நீக்கு என்பதற்காக அல்ல;
தேவலோக நந்தவனத்தில், கொடிபோன்ற மாதர்களுடன் ரமிக்க வேண்டும் என்பதற்காக அல்ல.
பிறகு எதற்காக என்றால்,
ஒவ்வொரு ஜன்மத்திலும் அடியேனின்— ஹ்ருதயபவநே–இதயக் கோயிலில் உன்னை நினைக்கவேண்டும்–
என்பதற்காகவே நமஸ்கரிக்கிறேன் என்கிறார். –

—————-

நாஸ்தே தர்மே ந வஸூ நிசயே நைவ காமோப —போகே
யத்யத் பவ்யம் பவது பகவந் ! பூர்வ கர்மாநுரூபம் |
ஏதத் ப்ரார்த்யம் மம பஹூமதம் ஜந்ம ஜந்மாந்த ரேபி
த்வத் –பாதாம்போருஹ —யுககதா நிஸ் சலா பக்தி ரஸ்து ||–5-

பகவந் ! பகவானே …என்று தாபத்துடன் அழைக்கிறார்.
இந்த ஸ்லோகத்தில் எவற்றில் ஆசை இல்லை ; ஆனால் எதில் ஆசைப்பட்டுப் பிரார்த்திக்கிறேன் என்பதைச் சொல்கிறார்.
தர்மே ஆஸ்தா ந—தர்மத்தில் ஆசை இல்லை;
வஸூ நிசயே ந —-குவியல், குவியலாக இருக்கிற பணத்தின்மீதும் ஆசை இல்லை;
காமோப –போகே நைவ—-காமம் என்கிற போகத்திலும் ஆசை இல்லவே இல்லை;
உடனே கர்மானுபவத்தைச் சொல்கிறார்.
பூர்வ கர்மானுரூபம் யத்யத் பவ்யம் பவது—பூர்வ ஜென்மங்களின் கர்மாக்களுக்கு ஏற்ப, எது எது எப்படி நடக்கவேண்டுமோ ,
அவைகள் அப்படியே நடக்கட்டும் ஆனால்
மம ஜன்ம ஜன்மாந்தரேபி ——அடியேனுக்கு, இந்த ஜன்மத்திலும் அடுத்த ஜன்மங்களிலும்,
பஹூ மதம் ப்ரார்த்யம் —-மிகவும் ஆசையான பிரார்த்தனை எதுவெனில்,
ஏதத் —- இதுவே —-( என்கிறார் )
த்வத் பாதாம் போருஹ –யுககதா——- உன்னுடைய திருவடித் தாமரைப் பற்றியதான
நிஸ்சலா பக்தி : அஸ்து—– அசையாத பக்தி தொடர்ந்து இருக்கவேண்டும். அதுவே அடியேனின் ஆசை.
அதற்கு அருள் புரிக என்கிறார்.

————-

திவி வா புவி வா மமாஸ்து வாஸோ
நரகே வா நரகாந்தக ! ப்ரகாமம் |
அவதீரித —ஸாரதாரவிந்தௌ
சரணௌ தே மரணேபி சிந்தயாமி ||–6-

இச் ச்லோகத்தில் , நரகாசுரனை அழித்தவனே என்கிறார்—-…..
மம -( என்னுடைய) வாஸம்,
திவிவா , புவிவா –தேவ லோகத்தில் இருந்தாலும், இந்தப் பூமியில் இருந்தாலும் —ஏன் நரகே வா—-நரகத்திலே இருந்தாலும் கூட,
அவதீரித –ஸாரதாரவிந்தௌ—- சரத்காலத்தில் பூத்திருக்கும் தாமரைப் புஷ்பத்தையே பழிக்கும்,
தே சரணௌ —உன்னுடைய திருவடிகளை ,
மரணே அபி சிந்தயாமி—–அடியேனின் மரண சமயத்திலும் நினைக்கிறேன் .
( நமக்கும், அப்படியே எப்போதும் நம்முடைய சிந்தனை ஸ்ரீ கிருஷ்ணனின் திருவடித் தாமரைகளிலேயே இருக்கவேண்டும்;
அதற்கு, அந்தக் கிருஷ்ணனே அருளவேண்டும் )

——————

கிருஷ்ண ! த்வதீய –பதபங்கஜ –பஞ்ஜராந்த–
மத்யைவ மே விஸது மாநஸ –ராஜ ஹம்ஸ : |
ப்ராண –ப்ரயாண–ஸமயே கபவாத –பித்தை :
கண்டா –வரோதந –விதௌ ஸ்மரணம் குதஸ் தே ||–7-

க்ருஷ்ணா…..
ப்ராண –ப்ரயாண —ஸமயே
கப–வாத–பித்தை :——–இந்த உயிர் ,ப்ராணன் , ப்ரயாணப்படும் சமயத்தில், உடலை விட்டுப் பிரியும் சமயத்தில்,
கபம் (சளி ) வாதம் ( வாய்வு ), பித்தம் —இவைகள் ,
கண்டாவரோதந விதௌ —-நெஞ்சை அடைக்கும் நேரத்தில், தே – ஸ்மரணம் –குத : —உன்னுடைய நினைவு எப்படி வரும் ( வராது )
அதனால்,
மே மாநஸ —ராஜ ஹம்ஸ :—–அடியேனுடைய மனமாகிய ராஜஹம்ஸம், அத்யைவ —இன்றே, இப்போதே
த்வதீய –பத பங்கஜ –பஞ்ஜராந்தம்–உன்னுடைய திருவடித்தாமரை என்கிற கூண்டுக்குள் ,
விஸது—-புகுந்து கொள்ளட்டும்

முந்தைய ச்லோகத்தில்,
மரணேபி …… மரணம் ஏற்படும் சமயத்திலும் —உன் திருவடிகளையே சிந்தனை செய்கிறேன் என்று சொன்ன ஆழ்வாருக்கு ,
ஒரு சந்தேகம் வந்தது. கபம், வாதம், பித்தம், இவையெல்லாம், நெஞ்சை நெருக்கி, குரலை ஒடுக்கி,
மனசைத் தடுமாறும்படி செய்துவிட்டால், மரணம் ஏற்படும் சமயத்தில் ஸ்ரீ கிருஷ்ணனை நினைக்காமல் தடுத்துவிட்டால்,
என்ன செய்வது என்று தோன்றி, இந்த ச்லோகத்தை அமைத்துள்ளாரோ !
அப்போதைக்கு, இப்போதே சொல்லி வைத்தாரோ ! ( இந்தச் சமயம் வராஹ சரம ச்லோகம் நினைவுக்கு வருகிறதா )

————–

சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம்
மந்த மந்த –ஹஸிதாநநாம்புஜம் |
நந்தகோப –தநயம் பராத்பரம்
நாரதாதி –முநிப்ருந்த –வந்திதம் ||–8-

மந்தஹாஸம் ததும்பும் ,அன்றலர்ந்த தாமரை திருமுகத்தை உடையவனும்,நந்தகோபரின் செல்வனும்,
பராத்பரம்—எல்லாரையும்விட உயர்ந்தவனும், நாரதர் முதலியமுனிக் கணங்கள் வணங்கும் , ஹரிமேவ—-ஸ்ரீ ஹரியையே
ஸந்ததம் சிந்தயாமி—-எப்போதும் ஸ்மரிக்கிறேன் ( நாமும் இந்த ச்லோகத்தைத் தினமும் சொல்லலாம் )

——–

கரசரண—ஸரோஜே காந்தி மந் —நேத்ரமீநே
ஸ்ரமமுஷி புஜவீசி –வ்யாகுலே காதமார்க்கே |
ஹரிஸரஸி விகாஹ்யா பீய தேஜோஜலௌகம்
பவமரு –பரிகிந்ந : கேதமத்ய த்யஜாமி ||–9-

இந்த ச்லோகத்தில், பகவானது திருமேனி தேஜஸ் என்கிற தீர்த்தத்தைப் பருகி, தாகத்தைப் போக்கிக்கொள்கிறேன் என்கிறார்.
அந்தத் தீர்த்தம் தடாகத்தில் இருக்கிறது; அது ஹரி என்னும் தடாகம்; அந்த ஹரியின் , திருக்கைகளும், திருவடிகளும் தாமரைகள் ;
அவை நிறைந்த தடாகம்; அவரது ஒளி வீசுகிற திருக்கண்கள் ,மீன்கள் அவை நிறைந்த தடாகம்;
அவரது திருப்புஜங்களே ச்ரமங்களை அகற்றிப் புயல் போல இருக்கும் தடாக அலைகள்;இந்தத் தடாகம் மிக ஆழமானது;
சம்சாரமாகிய பாலைவனத்தில் வருந்திய அடியேன் ,
இந்த ஹரி என்கிற தடாகத்தில் மூழ்கி, அவரது தேஜஸ் என்கிற ஜலத்தைப் பானம் செய்து,
அத்ய கேதம் த்யஜாமி—–இப்போது கஷ்டங்களை எல்லாம் விட்டு விடுகிறேன்
( பாலைவனத்தில் நீருக்காக அலைந்த நான், பகவானின் தேஜஸ் என்கிற ஜலத்தைப் பருகினேன் ,தாகம் தீர்ந்தது ,என்கிறார் )

————

ஸரஸிஜ –நயநே ஸசங்க —சக்ரே
முரபிதி மா விரமஸ்வ ! ரந்தும் |
ஸூகதரமபரம் ந ஜாது ஜாநே
ஹரிசரண — ஸ்மரணாம்ருதேந துல்யம் ||–10-

சித்த —என்று மனதைக் கூப்பிடுகிறார். தாமரைக் கண்ணனும், சங்குசக்ரதாரியும், முரன் என்கிற அசுரனை அழித்தவனுமாகிய
ஹரியிடம் பக்தி கொள்வதை விடாதே ; யத :—-ஏன் எனில், ஹரியின் திருவடிகளை ஸ்மரிக்கும்
அமிர்தத்தோடு அதற்குச் சமமான மற்றோர் உயர்ந்த சுகம், ஜாது ந ஜாதே ——எப்போதும் அறிந்திலேன் .

———

மாபீர்–மந்தமநோ விசிந்த்ய பஹூதா யாமீஸ்சிரம் யாதநா :
நாமீ ந : ப்ரபவந்தி பாபரிபவ : ஸ்வாமீ நநு ஸ்ரீதர : |
ஆலஸ்யம் வ்யப நீய பக்தி–ஸுலபம் த்யா யஸ்வ நாராயணம்
லோகஸ்ய வ்யஸநாபநோத நகரோ தாஸஸ்ய கிம் ந க்ஷம : ||–11

மனதே….பயப்படாதே என்கிறார். இந்த ஸ்லோகத்திலும். மனஸ் …..எதற்காகப் பயப்படவேண்டாம் ?
பதில் சொல்கிறார்…
பாபிகளுக்குப் பகைவன் —யமன் கொடுக்கும் தண்டனைகள். இந்த யம தண்டனைகள் சக்தியை இழந்தவை —-எப்போது தெரியுமா?
ஸ்ரீமன் நாராயணனைத் த்யானம் செய்தால், இவை சக்தியை இழந்தவை ஆலஸ்யம் இல்லாமல் த்யானம் செய்தால்,
பக்தியுடன் த்யாநித்தால், அவை நம்மைத் துன்புறுத்தாது. உலகத்தார் கஷ்டங்களைஎல்லாம் போக்குபவன் இவன்—-
அப்படி இருக்கிற கருணா சாகரன் , தன்னுடைய பக்தனுக்கு ( தாஸஸ்ய), ந க்ஷம : —–துன்பத்தை அழிப்பதில் வல்லமை இல்லாதவனா ! —

—————–

பவஜலதி —கதாநாம் த்வந்த்வ —வாதாஹதாநாம்
ஸுத துஹித்ரு —-களத்ர –த்ராண — – பாரார்திதாநாம் |
விஷம –விஷய –தோயே மஜ்ஜதா –மப்ல வாநாம்
பவது ஸரணமேகோ விஷ்ணு போதோ நராணாம் ||–12

பகவான் ,கரை ஏற்றுகிறான் —விஷ்ணு போத :—என்கிறார்–விஷ்ணு என்கிற ஓடமாகக் கரைஏற்றுகிறான்.
இந்த சம்சாரம் இருக்கிறதே—புனரபி ஜனனம், புனரபி மரணம் –இந்தக்கடலில்,
த்வந்த்வ வாதாஹதனாம்—குளிர்–வெய்யில், சுகம்–துக்கம் என்பன போன்ற இரட்டைகள் ,இவனைத் தாக்குகின்றன;
உறவுகள் —இவர்களைக் காப்பது என்கிற பாரத்தால், கஷ்டப்படுகிறான் ; விஷய சுகம் என்கிற ஜலத்தில் மூழ்குகிறான்;
இவனைக் கரையேற்ற ஓடம் இல்லை; இப்படிப்பட்டவர்களுக்கு, விஷ்ணுவே ஓடம் . அவன்தான் சரணம்

———–

பவஜலதி –மகாதம் துஸ்தரம் நிஸ்தரேயம்
கதமஹமிதி சேதோ மா ஸ்ம கா : காதரத்வம் |
ஸரஸிஜத்ருஸி தேவே தாவகீ பக்திரேகா
நரகபிதி நிஷண்ணா தாரயிஷ்யத்வஸ்யம் ||–13

மறுபடியும் மனஸ்ஸுக்குச் சொல்கிறார்.
ஹே சேத :—–மனசே…ஜனன, மரண சம்சாரக் கடல் –இது மிக ஆழமான கடல்;
இதைத் தாண்டுதல் எப்படி என்று …காதரத்வம் மா ஸ்மா கா :——பயப்படாதே –
தாமரைக் கண்ணன்; நரகாசுரனை அழித்தவன்; அப்படிப்பட்ட பகவானிடம் ,உனக்குப் பக்தி இருந்தால்,
ஏகா அவஸ்யம் தாராயிஷ்யதி– அது ஒன்றே , அவசியம் , தாண்டச் செய்துவிடும்

————–

த்ருஷ்ணா தோயே மதந–பவநோத்தூத–மோஹோர்மி- மாலே
தாராவர்த்தே தநய —சஹஜ –க்ராஹ –ஸங்காகுலே ச |
ஸம்ஸாராக்யே மஹதி ஜலதௌ மஜ்ஜதாம் நஸ்த்ரிதாமந்
பாதாம் போஜே வரத பவதோ பக்திநாவம் ப்ரயச்ச ||–14-

பக்திநாவம் , என்கிறார் ,இந்த ச்லோகத்தில்.
பக்திநாவம் ——பக்தி என்கிற ஓடம் .ப்ரயச்ச—கொடுங்கள் என்கிறார்.
அந்த பக்தி, பவது பாதாம்புஜே—-தேவரீரின் திருவடித் தாமரைகளின்மீது பக்தி என்கிறார்.
வரத —-வரம் அளிப்பவரே என்று பகவானைக் கூப்பிடுகிறார். பக்தியாகிய ஓடத்தை யாருக்காகக் கேட்கிறார் ?
மஹதி ஜலதௌ மஜ்ஜதாம் ந :—-பெரிய சமுத்ரத்தில் மூழ்கியுள்ள எங்களுக்கு,
அது என்ன சமுத்ரம் ? சம்சாரமென்னும் பெரிய சமுத்ரம்;
இந்த சமுத்ரத்தில் பேராசை என்கிற ஜலம்;காமமும், மோஹமும் , காற்றும் அலையும்
(காற்று வீசி சமுத்திர அலைகள் மேலே எழும்புவது போன்று காமம் என்கிற காற்று இந்த சம்சாரக் கடலில் வீசி,
மோஹம் என்கிற அலைகளை, மேலே மேலே எழுப்புகிறது );
தாராவர்த்தே—மனைவி என்கிற சுழல்; மக்கள், கூடப் பிறந்தவர்கள்-இவர்களெல்லாம், முதலைக் கூட்டங்கள்.
ஹே..த்ரிதாமந் —–ஹே,பரந்தாமா, இப்படிப்பட்ட சம்சாரக் கடலைத் தாண்ட, பக்தி என்கிற ஓடத்தை அருளும்படி விண்ணப்பிக்கிறார்.

——–

மாத்ராக்ஷம் க்ஷீண புண்யாந் க்ஷணமபி பவதோ பக்திஹீநாந் பதாப்ஜே
மாஸ்ரௌஷம் ஸ்ராவ்யபந்தம் தவ சரிதம பாஸ்யாந்ய தாக்யா நஜாதம் |
மாஸ்மார்ஷம் மாதவ ! த்வா மபி புவநபதே ! சேதஸா பஹ்நுவாநாந்
மாபூவம் த்வத் ஸபர்யா —வ்யதிகர –ரஹிதோ ஜந்மஜந்மாந்த ரேபி ||–15-

ஸ்ரீ குலசேகரர், இந்த ச்லோகத்தில், பகவத் பக்திக்கான முக்ய விவரங்களைச் சொல்கிறார்.
புவநபதே ! மாதவா! என்கிறார்.
உன் திருவடியில் (பவத: பதாப்ஜே பக்திஹீநாந்) பக்தி இல்லாதவர்களை, பாவிகளை
( க்ஷீண புண்யான் ) ஒரு க்ஷணமும் பார்க்கமாட்டேன்; உன் திவ்ய சரிதங்களைத் தவிர, மற்றக் கதைகளைக் கேட்கமாட்டேன் ;
உன்னை மனத்தால் வெறுப்பவரை நான் மனத்தாலும் நினைக்கமாட்டேன் (மாஸ்மார்ஷம் );
இந்த ஜன்மத்திலும்,மற்ற ஜன்மங்களிலும், உன்னை பூஜை செய்யாதவனாக இருக்கமாட்டேன் (மாபூவம்).
பார்க்கமாட்டேன்; கேட்கமாட்டேன்;நினைக்கமாட்டேன்;
உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றி செய்யப்படும் பூஜையைச் செய்யாமல் இருக்கமாட்டேன்—-என்கிறார்.

—————

ஜிஹ்வே ! கீர்த்தய கேசவம் முரரிபும் சேதோ ! பஜ ஸ்ரீதரம்
பாணித்வந்த்வ ! ஸமர்ச்சயாச்யுதகதா: ஸ்ரோத்ரத்வய ! த்வம் ஸ்ருணு |
க்ருஷ்ணம் லோகய லோசநத்வய ! ஹரேர் –கச்சாங்க்ரியுக்மாலயம்
ஜிக்ர க்ராண முகுந்தபாத –துளஸீம் மூர்த்தந்! நமாதோக்ஷஜம் ||–16-

நாக்கே—கேசவனைத் துதி; மனமே , முராரியைப் பஜனை செய்;கைகளே, ஸ்ரீதரனை அர்ச்சியுங்கள்;
காதுகளே, அச்சுதனின் சரிதங்களைக் கேளுங்கள்;கண்களே, கண்ணனைத் தர்சியுங்கள் ;
கால்களே , —ஹரே ஆலயம் கச்ச—ஹரியின் திருக்கோவிலுக்குச் செல்லுங்கள்;
மூக்கே ,முகுந்தனின் திருவடித் துளசியை நுகர்வாயாக; தலையே,விஷ்ணுவை வணங்குவாயாக .
இந்த ஸ்லோகத்தில்,பகவானின் திருநாமங்களாகிய , கேசவன், முராரி,ஸ்ரீதரன், அச்யுதன், கிருஷ்ணன்,
ஸ்ரீஹரி,முகுந்தன், விஷ்ணு —ஆக , எட்டுத் திருநாமங்களைச் சொல்கிறார்.

—————

ஹே லோகா : ஸ்ருணுத ப்ரஸுதி மரணவ்யாதேஸ் — சிகித்ஸாமிமாம்
யோகஜ்ஞா : ஸமுதா ஹரந்தி முநயோ யாம் யாஜ்ஞவல்க் யாதய : |
அந்தர் ஜ்யோதிரமேயமேக –மம்ருதம் க்ருஷ்ணாக்யமாபீயதாம்
தத்பீதம் பரமௌஷதம் விதுநதே நிர்வாணமாத்யந்திகம் ||–17-

க்ருஷ்ணாக்யம் அம்ருதம் ஆபீயதாம் தத் பரமௌஷதம் —-கிருஷ்ணன் என்கிற அம்ருதம் உயர்ந்த மருந்து என்கிறார்.
ஹே, லோகா :—லோகத்தில் உள்ளவர்களே, ஜனன, மரண வியாதிக்கு,
இமாம் சிகித்ஸாம், ஸ்ருணுத—-இந்த சிகிச்சையைக் கேளுங்கள் என்கிறார்.
யாஜ்ஞவல்க்யர் போன்ற மஹரிஷிகள் சொன்ன மருந்து என்கிறார்.
நமக்குள் அந்தர்யாமியாகவும், ஜோதிஸ்வரூபனாகவும் ,
அமேயம் ஏகம் க்ருஷ்ணாக்யம் —-அளவிட முடியாத , ஒன்றாக உள்ள, கிருஷ்ணன் என்கிற அம்ருதமே மருந்து;
அதைப் பானம் செய்தால்,கடைசியான மோக்ஷ சுகம் கிடைக்கும்
( முக்தி தரும் )இதைப் பானம் செய்யுங்கள்

————

ஹே மர்த்யா : ! பரமம் ஹிதம் ஸ்ருணுத வோ வக்ஷ்யாமி சங்க்ஷேபத :
ஸம்ஸாரார்ணவ —மாபதூர்மி –பஹுளம் ஸம்யக் ப்ரவிஸ்ய ஸ்திதா : |
நாநா –ஜ்ஞான –மபாஸ்ய சேதஸி நமோ நாராயணாயேத்யமும்
மந்த்ரம் ஸப்ரணவம் ப்ரணாமசஹிதம் ப்ராவர்த்தயத்வம் முஹூ : ||–18-

ஹே மர்த்யா:—-ஒ, மனுஷ்யர்களே , என்கிறார். இவர்கள் யார் ?
ஆபதூர்மி ஸம்ஸாரார்ணவம் ஸம்யக் ப்ரவிஸ்ய ஸ்திதா :—-ஆபத்தான அலைகலுள்ள, சம்சார சமுத்ரத்தில் நன்கு மூழ்கி உள்ளவர்கள் .
உங்களுக்கு, மிக உயர்ந்த ஹிதம் –நன்மையை ,சுருக்கமாக, வக்ஷ்யாமி—சொல்கிறேன். ஸ்ருணுத—-கேளுங்கள்.
பலவிதமான ஞானங்களைத் தள்ளிவிட்டு, ஸப்ரணவம்—–பிரணவத்துடன் கூடி இருக்கிற,
நமோ நாராயணாய இதி —“நமோ நாராயணாய” என்கிற மந்த்ரத்தை, நமஸ்காரத்துடன் , அடிக்கடி (முஹூ : ) ஜெபியுங்கள்

——————–

ப்ருத்வீ ரேணுரணு: பயாம்ஸி கணிகா : பல்கு –ஸ்புலிங்கோநலஸ்
தேஜோ நிஸ்வஸநம் மருத் தநுதரம் ரந்த்ரம் ஸு ஸுக்ஷ்மம் நப : |
க்ஷூத்ரா ருத்ர –பிதாமஹ –ப்ரப்ருதய : கீடா : ஸமஸ்தாஸ் –ஸு ரா :
த்ருஷ்டே யத்ர ஸ தாவகோ விஜயதே பூமாவதூதாவதி : ||–19–

உன்னுடைய மஹிமையைக் காணும்போது, பூமி, சிறிய தூசு; ஜலமெல்லாம் திவலை ( நீர்த் துளி);
தேஜஸ் என்பது சிறிய நெருப்புப் பொறி;காற்று, சிறிய மூச்சு ; ஆகாயம், மிகச் சிறிய த்வாரம்;
சிவன், பிரமன் முதலான சகல தேவர்களும் சிறிய புழுக்கள்; உன்னுடைய அளவில்லாத இந்த மஹிமை வெல்லட்டும்

————-

பத்தேநாஞ்ஜலிநா நதேன ஸிரஸா காத்ரை : ஸரோமோத்கமை :
கண்டேந ஸ்வரகத் கதேந நயநேநோத்கீர்ண –பாஷ்பாம்புநா |
நித்யம் த்வச்சரணாரவிந்த — யுகள –த்யாநாம்ருதாஸ்வாதிநாம்!
அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ! ஸததம் ஸம்பத்யதாம் ஜீவிதம் ||–20–

தாமரைக் கண்ணா ! கூப்பிய கரங்களோடும், வணங்கிய தலையோடும், மயிர்க்கூச்செடுக்கும் உடலோடும்,
தழு தழுத்த குரலோடும், ஆனந்தபாஷ்பம் பெருகும் கண்களோடும், உன் திருவடித் தாமரைகளை த்யானம் செய்கிற
அம்ருத ரஸத்தை, எப்போதும் பானம்செய்கிற , வாழ்க்கை நிறைவடையட்டும்

—————

ஹே கோபாலக ! ஹே க்ருபாஜலநிதே ! ஹே ஸிந்து கந்யாபதே
ஹே கம்ஸாந்தக ! ஹே கஜேந்த்ரகருணாபாரீண ! ஹே மாதவ ! |
ஹே ராமாநுஜ ! ஹே ஜகத்குரோ ! ஹே புண்டரீகாக்ஷ ! மாம்
ஹே கோபி ஜநநாத ! பாலயபரம் ஜாநாமி ந த்வாம் விநா ||-21-

ஹே, கோபாலா, ஹே கருணா சமுத்ரமே, ஹே சமுத்ரராஜனின் புத்ரியான லக்ஷ்மியின் பதியே ,
கம்சனை அழித்தவனே, கஜேந்த்ரனைக் கருணையோடு காப்பாற்றியவனே , மாதவா, பலராமனின் தம்பியே,
மூவுலக்கும் ஆசானே, தாமரைக் கண்ணா, கோபிகைகளின் அன்பனே, உன்னையல்லால் , வேறு யாரையும் அறியேன்,
மாம், பாலய—என்னைக் காப்பாற்று

—————-

பக்தாபாய –புஜங்க –காருடமணிஸ் –த்ரைலோக்ய –ரக்ஷாமணி :
கோபீலோசந –சாதகாம்புதமணி : சௌந்தர்யமுத்ரா மணி : |
ய : காந்தாமணி —ருக்மிணி —கநகுச –த்வந்த்வைக —பூஷாமணி :
ஸ்ரேயோ தேவஸிகாமணிர் திஸது நோ கோபால சூடாமணி : ||–22-

ய :—எவன் , தேவா—அந்தப் பகவான்,
அவன் தேவசிகாமணி—அவன், பக்தர்களுக்கு வரும் ஆபத்துக்களாகிய சர்ப்பத்துக்கு, காருடமணி (கருட ரத்னம்)
அவன், மூவுலகையும் ரக்ஷிக்கும் மணி (ரத்னம் ).
அவன், கோபிகைகளின் கண்களாகிற சாதகபக்ஷிகளுக்கு, மேகமாகிய மணி ( ரத்னம் ).
அவன், சௌந்தர்ய –முத்ரா மணி—அழகிற்கே அழகான மணி (ரத்னம் ).
அவன், பெண்கள் குல ரத்னமான ருக்மிணிக்கு ,அலங்கார மணி (ரத்னம்).
அவன், கோபால சூடாமணி ( யாதவ குலத்துக்கே சூடாமணி ).
அவன், அந்தக் கண்ணன், நமக்கு க்ஷேமத்தை அளிக்கட்டும்.
( அவன் ஏழு மணிகளாக, ஆழ்வாரால் போற்றப்படுகிறான் )

——————–

ஸத்ருச்சேதைக மந்த்ரம் ஸகலமுபநிஷத் —வாக்ய–ஸம்பூஜ்ய –மந்த்ரம்
ஸம்ஸாரோத்தார– மந்த்ரம் ஸமுபசித தமஸ் –ஸங்க –நிர்யாண –மந்த்ரம் |
ஸர்வைஸ்வர்யைக —மந்த்ரம் வ்யஸந –புஜக –ஸந்தஷ்ட–ஸந்த்ராண –மந்த்ரம்
ஜிஹ்வே!ஸ்ரீ-க்ருஷ்ண -மந்த்ரம் –ஜபஜப ஸததம் ஜந்ம –ஸாபல்ய –மந்த்ரம்–23-

வியாதிகள் தீர, மணி, மந்த்ரம், ஔஷதம் என்று மூன்று முறைகள் உள்ளதாக, ஆயுர்வேதம் சொல்கிறது.
ஆழ்வார், சம்சாரிகளின் பிறப்பு, மறுபடியும் இறப்பு, திரும்பவும் பிறப்பு என்பதான பிணி தீர , இந்த மூன்றையும் சொல்கிறார் .
இதற்கு முந்தைய ஸ்லோகத்தில் , மணி என்பதாகச் சொன்னார். இந்த ஸ்லோகத்தில், மந்த்ரம் என்பதைச் சொல்கிறார்.

ஹே…ஜிஹ்வே —ஸததம் ஜபஜப —-என்கிறார். அதாவது, ஏ , நாக்கே—-எப்போதும் ஜபித்துக்கொண்டிரு —என்கிறார்.
எந்த மந்த்ரத்தை—? ஸ்ரீ க்ருஷ்ண மந்த்ரம்—
இந்த மந்த்ர மஹிமையைச் சொல்கிறார்.
விரோதிகளை அழிக்கும் மந்த்ரம்
எல்லா உபநிஷத்துக்களும் போற்றுகிற மந்த்ரம்
சம்சார சமுத்ரத்தைத் தாண்ட வைக்கும் மந்த்ரம்
சேதனர்களிடம் மண்டியுள்ள அஞ்ஜானம் என்கிற இருட்டை அகற்றும் மந்த்ரம்
எல்லா ஐஸ்வர்த்தையும் அளிக்கும் மந்த்ரம்
துன்பமென்கிற சர்ப்பம் தீண்டியவரைக் காக்கும் மந்த்ரம்
ஜன்ம சாபல்ய மந்த்ரம்
இதுவே ஸ்ரீ க்ருஷ்ண மந்த்ரம்.–எப்போதும் ஜபிக்கச் சொல்கிறார்.

———————-

வ்யாமோஹ –ப்ரஸமௌஷதம் முநிமநோவ்ருத்தி–ப்ரவ்ருத்யௌஷதம்
தைத்யேந்த்ரார்த்திகரௌஷதம் த்ரிஜகதாம் ஸஞ்ஜீவநை கௌஷதம் |
பக்தாத்யந்தஹிதௌஷதம் பவபயப்ரத்வம்ஸநை கௌஷதம்
ஸ்ரேய : ப்ராப்திகரௌஷதம் பிப மந :ஸ்ரீ -க்ருஷ்ண –திவ்யௌஷதம் ||–24-

முந்தைய இரண்டு ஸ்லோகங்களில், மணி, மந்த்ரம் என்று இரண்டையும் சாதித்த ஆழ்வார்
இந்த ஸ்லோகத்தில் ,ஔஷthaம் என்பதாகச் சொல்கிறார்
மனஸ்ஸுக்குச் சொல்கிறார் ;—
உலக மயக்கங்களைத் தெளிவிக்கும் ஔஷதம்
ரிஷிகளின் மனஸ் சை பகவானிடம் திருப்பும் ஔஷதம்
அரக்கர்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்கும் ஔஷதம்
மூவுலக மக்களும் பிழைப்பதற்கான ஔஷதம்
பக்தர்களுக்கு மிக அனுகூலமான ஔஷதம்
சம்சார பயத்தை அழிக்கும் சிறந்த ஔஷதம்
எல்லாவிதமான நன்மைகளையும் கொடுக்கும் ஔஷதம்
இந்த ஔஷதம்— க்ருஷ்ண திவ்ய ஔஷதம்
பிப —பருகுவீர்களாக
க்ருஷ்ணன் என்கிற ஔஷதத்தைப் பருகுங்கள் ,இதுவே திவ்ய ஔஷதம் .என்கிறார்

————-

ஆம்நாயா ப்யஸநாந்யரண்யருதிதம் வேதவ்ரதான் யந்வஹம்
மேதஸ்சேதபலாநி பூர்த்தவிதயா ஸர்வே ஹூதம் பஸ்மநி |
தீர்த்தாநாம வகாஹநாநி ச கஜஸ்நாநம் விநா யத் பத
த்வந்த்வாம்போருஹ –ஸம்ஸ்ம்ருதீர்விஜயதே தேவஸ் ஸ நாராயண : ||–25-

பகவானின் திருவடிப் பெருமையைச் சொல்கிறார்.

பகவானின் திருவடிகளைத் த்யாநிக்காமல்,
வேத அத்யயனம்/ பாராயணம் செய்தல், காட்டில் புலம்புவதற்கு ஒப்பாகும்.
வைதீக விரதங்கள், உடல் கொழுப்பை அகற்றுமே அன்றி,வேறு பலனைக் கொடுக்காது.
குளம்./ கிணறு இவைகளை வெட்டுவது, நெருப்பே இல்லாத சாம்பலில், ஹோமம் செய்யப்பட்டதாகும்.
தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வது, யானைகள் குளிப்பது போலாகும்.
அதனால், ஸ : தேவா விஜயதே—அந்த பகவானுக்கே விஜயம்—வெற்றி

————-

ஸ்ரீமந் நாம ப்ரோச்ய நாராயணாக்யம்
கே ந ப்ராபுர் வாஞ்சிதம் பாபி நோபி |
ஹா ந : பூர்வம் வாக் ப்ரவ்ருத்தா ந தஸ்மின்
தேந ப்ராப்தம் கர்ப்பவாஸாதி துக்கம் ||–26

ஸ்ரீமந்நாராயணா என்கிற பகவன் நாமத்தைச் சொல்லிப் பாவியும்கூட ,அவர் விரும்பிய பலனை அடைந்திருக்கிறார்கள்.
ஹா—-முன் பிறவியிலேயே இதைச் சொல்லவேண்டுமென்றுத் தோன்றவில்லையே ?அதனால், கர்ப்ப வாஸம்
முதலான கஷ்ட துக்கங்கள் எல்லாம், ப்ராப்தம்—அடையப்பட்டது

———

மஜ்ஜந்மந : பலமிதம் மதுகைடபாரே
மத்ப்ரார்த்தநீய –மதநுக்ரஹ ஏஷ ஏவ |
த்வத் ப்ருத்ய –ப்ருத்ய –பரிசாரக–ப்ருத்ய –ப்ருத்ய
ப்ருத்யஸ்ய ப்ருத்ய இதிமாம் ஸ்மர லோகநாத ||-27-

மதுகைடபரை அழித்தவரே ! ஹே லோகநாதா ! அடியேன் உம்மை வேண்டி, தேவரீர் அனுக்ரஹிக்க வேண்டியது இதுவே !
உமது ,அடியார்க்கு, அடியாரின் அடியார்க்கு, அடியாரின் அடியார்க்கு, அடியாரின் அடியேன் என்று ,
மாம்—அடியேனை, ஸ்மர— நினைப்பீராக அதாவது , அடியாரின் வரிசையில், ஏழாவது நிலையில் உள்ள அடியானாக,
பகவானைத் திருவுள்ளம் பற்றச் சொல்கிறார்.

————-

நாதே ந புருஷோத்தமே த்ரிஜகதா மேகாதிபே சேதஸா
ஸேவ்யே ஸ்வஸ்ய பதஸ்ய தாதரி ஸுரே நாராயணே திஷ்டதி |
யம் கஞ்சித் புருஷாதமம் கதிபயக்ராமேஸமல் பார்த்ததம்
ஸேவாயை ம்ருகயாமஹே நரமஹோ மூகா வராகா வயம் ||–28-

மூவுலகங்களுக்கும் ஒரே தலைவன்; மனதால் ஸ்மரித்து அவனுக்கு அடிமையானாலேயே
தன் ஸ்தானத்தையே நமக்கு அளித்து விடுபவன்;
புருஷோத்தமன்; நாராயணன் என்னும் தேவன் நமக்கு நாதனாக இருக்கும்போது,
சில கிராமங்களுக்கு மட்டுமே தலைவன் ; சொற்பப் பணத்தைக் கொடுப்பவன்; தரக் குறைவான மனிதன் —இவனிடம்,
ஸேவாயை ம்ருகயாமஹே —-வேலை கொடுங்கள் என்று கெஞ்சி அலைகிறோமே —நாம், எவ்வளவு மூடர்கள் -அற்பர்கள்

———

மதந பரிஹர ஸ்திதிம் மதீயே
மனஸி முகுந்த–பதாரவிந்த —தாம்நி |
ஹர–நயந –க்ருஸா நுநா க்ருஸோஸி
ஸ்மரஸி ந சக்ர பராக்ரமம் முராரே ||–29-

மன்மதா! முகுந்தனின் திருவடிகள் என் மனத்தில் வசிக்கின்றன —நீ என் மனத்தில் இருங்காது நீங்கி விடு.
நீ, ஏற்கெனவே சிவபிரானின் நெற்றிக் கண்ணால் அழிந்திருக்கிறாய்;
முராரியின், சக்ராயுதத்தின் பராக்ரமத்தை நினைவு படுத்திக் கொள்ளவில்லையா ?

————

தத்த்வம் ப்ருவாணானி பரம் பரஸ்மாத்
மது க்ஷரந்தீவ ஸதாம் பலாநி |
ப்ராவர்த்தய ப்ராஞ்ஜலிரஸ்மி ஜிஹ்வே
நாமாநி நாராயண கோசராணி ||–30-

தன்னுடைய நாக்கைக் கை கூப்பி வணங்குகிறார்.
நாக்கே, உன்னை நமஸ்கரிக்கிறேன் . நாராயணனின் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டே இரு.
அந்தத் திருநாமங்கள் உயர்ந்தவைகளில் உயர்ந்ததான தத்வங்களைக் கூறுகின்றன.
தேனைப் பொழிகின்றன. நல்லவர்கள் விரும்புகின்ற பலன்களும் அவையே

——————-

இதம் ஸரீரம் பரிணாம பேஸலம்
பதத்ய வஸ்யம் ஸ்லத–ஸந்தி –ஜர்ஜரம் |
கிமௌஷதை: க்லிஸ்யஸி மூட துர்மதே
நிராமயம் க்ருஷ்ண –ரஸாயநம் பிப ||–31-

ஹே—மூடனே….இந்த சரீரம் ,வயதால் முதிர்ச்சி அடைந்து, இளைத்து, பூட்டுகள் தளர்ந்து, நிச்சயம் அழியப்போகிறது.
துர்மதே—-துர்புத்தியே ! இந்த சரீரத்தைக் காப்பாற்ற, பற்பல மருந்துகளை ஏன் சாப்பிடுகிறாய் ?
க்ருஷ்ண ரஸாயனம் பிப—-ஸ்ரீ கிருஷ்ணன் என்கிற திருநாமத்தை உச்சரிக்கின்ற மிக உயர்ந்த மருந்தைப் பானம் செய்

—————–

தாரா வாராகர வரஸுதா தே தநூஜோவிரிஞ்சி :
ஸ்தோதா வேதஸ்தவ ஸுர குணோ ப்ருத்ய வர்க்க : ப்ரஸாத :
முக்திர் மாயா ஜகத விகலம் தாவகீ தேவகீ தே
மாதா மித்ரம் வலரிபுஸுதஸ் –த்வய்யதேந்யந்த ஜாநே ||–32-

க்ருஷ்ணா….உன்னுடைய பத்னி, திருப்பாற்கடலில் உதித்த மஹாலக்ஷ்மி என்பதை அறிவேன்.
உனது தனயன், பிரம்மா என்பதை அறிவேன்
உன்னைத் துதிப்பது, வேதங்கள் என்பதை அறிவேன்
உனது வேலைக்காரர்கள், தேவர்கள் என்பதை அறிவேன்
உனது மாயை உலகம் என்பதை அறிவேன்
உனது தாயார் ,தேவகி என்று அறிவேன்
உனது சிநேகிதன் இந்திரனின் புத்ரனான அர்ஜுனன் என்பதை அறிவேன்
அத: அந்யத் ந ஜாநே —இவற்றைக்காட்டிலும் வேறு ஒன்றும் உன்னைப் பற்றி அறியேன்

—————–

க்ருஷ்ணோ ரக்ஷது நோ ஜகத்ரய குரு : க்ருஷ்ணம் நமஸ்யாம்யஹம்
க்ருஷ்ணேநாம ரஸத்ரவோ விநிஹதா:க்ருஷ்ணாய துப்யம் நம : |
க்ருஷ்ணாதேவ ஸமுத்திதம் ஜகதிதம் க்ருஷ்ணஸ்ய தாஸோஸ்ம்யஹம்
க்ருஷ்ணே திஷ்டதி ஸர்வமேததகிலம் ஹே க்ருஷ்ண ரக்ஷஸ்வ மாம் ||–33-

ஜகத்ரய குரு :க்ருஷ்ண :ந : ரக்ஷது —உலகத்துக்கெல்லாம் ஆசார்யனான ஸ்ரீ கிருஷ்ணன் நம்மை ரக்ஷிப்பானாக
அஹம் க்ருஷ்ணம் நமஸ்யாமி —-அடியேன் ஸ்ரீ கிருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன்
கிருஷ்ணனால் தேவர்களின் விரோதிகள் அழிக்கப்பட்டனர்;
க்ருஷ்ணாய துப்யம் நம:—-க்ருஷ்ணனான உனக்கு நமஸ்காரம்
இந்த உலகமெல்லாம், ஸ்ரீ க்ருஷ்ணனிடமிருந்து தோன்றியது;
அஹம் க்ருஷ்ணஸ்ய தாஸ :—அடியேன் க்ருஷ்ண தாஸன்.
எல்லாமே க்ருஷ்ணனிடத்தில் நிலை பெற்று இருக்கிறது.ஹே, கிருஷ்ண ! மாம் ரக்ஷஸ்வ —ஹே, க்ருஷ்ணா ,
அடியேனைக் காப்பாற்று

————–

தத்த்வம் ப்ரஸீத பகவந் ! குரு மய்ய நாதே
விஷ்ணோ ! க்ருபாம் பரம காருணிக : கில த்வம் |
ஸம்ஸார —ஸாகர –நிமக்ந –மநந்த தீநம்
உத்தர்த்துமர்ஹஸி ஹரே !புருஷோத்தமோஸி ||–34-

ஹே, பகவானான விஷ்ணுவே !அநந்த ஹரே —-முடிவே இல்லாத ஹரியே நீ, புருஷர்களில் சிறந்தவன் புருஷோத்தமன்.
பரம காருணிகன் –கருணைக்கடல் . அடியேன் பிறவிக் கடலில் மூழ்கியவன்; தீனன் ;
அடியேனைக் கரை ஏற்றத் தகுந்தவன்;அப்படிப்பட்ட நீ, அடியேனுக்கு அருள் புரிவாயாக

————–

நமாமி நாராயண பாத பங்கஜம்
கரோமி நாராயண –பூஜநம் ஸதா |
வதாமி நாராயண –நாம நிர்மலம்
ஸ்மராமி நாராயண –தத்வ மவ்யயம் ||–35-

எப்போதும், அடியேன் ஸ்ரீ நாராயணனின் திருவடித்தாமரைகளையே வணங்குகிறேன் .
ஸ்ரீமந்நாராயணனைப் பூஜிக்கிறேன் நாராயண நாமத்தைச் சொல்கிறேன் .
அழிவே இல்லாத, நாராயணன் என்னும் தத்வப் பொருளையே ஸ்மரிக்கிறேன்

———-

ஸ்ரீநாத நாராயண வாஸுதேவ
ஸ்ரீக்ருஷ்ண பக்த ப்ரிய சக்ரபாணே |
ஸ்ரீ பத்மநாபாச்யுத கைடபாரே
ஸ்ரீ ராம பத்மாக்ஷ ஹரே முராரே ||–36-

லக்ஷ்மிபதியே , நாராயணனே , வாஸுதேவனே , க்ருஷ்ணா , பக்தப்ரியா , சக்ரபாணியே , பத்மநாபனே ,
அச்யுதனே ,கைடபனை அழித்தவனே ( ஸ்ரீ ஹயக்ரீவா), ஸ்ரீராமா , தாமரைக் கண்ணனே , ஹரியே ,முராரியே-

————-

அநந்த வைகுண்ட முகுந்த க்ருஷ்ண
கோவிந்த தாமோதர மாதவேதி |
வக்தும் ஸமர்த்தோபி ந வக்தி கஸ்சித்
அஹோ ஜநாநாம் வ்யஸநாபி முக்யம் ||–37-

அநந்தா , வைகுந்தநாதா , முகுந்தா, க்ருஷ்ணா , கோவிந்தா, தாமோதரா , மாதவா,—–
இப்படியெல்லாம், சொல்வதற்கு ஸமர்த்தோபி—சாமர்த்யம் இருந்தும், ஜனங்கள் ,
உலக விஷயங்களில் ஊன்றி இருக்கிறார்களே—-என்ன ஆச்சர்யம் !

————-

த்யாயந்தி யே விஷ்ணுமநந்தமவ்யயம்
ஹ்ருத்பத்ம —மத்யே ஸததம் வ்யவஸ்திதம் |
ஸமாஹிதாநாம் ஸததாபயப்ரதம்
தே யாந்தி ஸித்திம் பரமாஞ்ச வைஷ்ணவீம் ||–38-

பகவான் ஸ்ரீவிஷ்ணு முடிவே இல்லாதவர்; ஹ்ருதயத் தாமரையில் எப்போதும் நிலையாக வீற்றிருப்பவர்;
ஐம்புலன்களையும் அடக்கியவருக்கு, எப்போதும் அபயம் அளிப்பவர்; அப்படிப்பட்ட
ஸ்ரீ மஹாவிஷ்ணுவை, த்யானம் செய்பவர்கள் மிக உயர்ந்ததும் ,சாச்வதமுமான ,
வைஷ்ணவீம் ஸித்திம் —உயர்ந்த லோகமான ஸ்ரீ வைகுந்தத்தை அடைவார்கள்.

———–

க்ஷீரஸாகர —தரங்க –ஸீகரா ஸார
தாரகித —சாரு –மூர்த்யே |
போகீபோக —ஸயநீய –ஸாயிநே
மாதவாய –மதுவித்விஷே நம : ||–39-

திருப்பாற்கடலில் ஆதிசேஷனின் திருமேனியில் பள்ளிகொண்டு பாற்கடலின் அலைத்துளிகள் , நக்ஷத்ரங்கள் போலப்
பட்டுத் திருமேனியை அலங்கரிக்கிற ஸ்ரீமந்நாராயணனும்,
மது என்னும் அரக்கரை அழித்தவரும் , ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் நாதனுமான( மாதவன்) ஸ்ரீமந் நாராயணனுக்கு நமஸ்காரம்

—————

யஸ்ய ப்ரியௌ ஸ்ருதிதரௌ கவிலோக வீரௌ
மித்ரே த்விஜந்மவர -பாராஸவா –வபூதாம் |
தேநாம்புஜாக்ஷ –சரணாம்புஜ —ஷட்பதேந
ராஜ்ஞா க்ருதா க்ருதிரியம் குலஸேகரேன ||–40-

தாமரைக் கண்ணனின் திருவடித் தாமரைகளில் வண்டு போன்ற ஸ்ரீ குலசேகர மன்னருக்கு, ப்ரியமானவர்களும்,
கேள்வி ஞானம் உள்ளவர்களும் கவிகளில் சிறந்தவர்களும் வீரர்களும் –
அந்தண -மிஸ்ர வர்ணத்தில் இரு நண்பர்களாக இருந்தார்களோ ,அந்தக் குலசேகர மன்னரால்,
இயம் க்ருதி : க்ருதா —-இந்த ஸ்தோத்ரம் செய்யப்பட்டது.

———

கும்பே புனர்வஸு பவம் கேரளே கோள பட்டணே
கௌஸ்துபாம்ஸம் ஸம்தராதீசம் குலசேகரமாஸ்ரயே

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ குலசேகராழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ யதிராஜ ஸப்ததி -மங்கள ஸ்லோகங்கள் —

March 25, 2021

ஸ்ரீபாஷ்யம் விரசய்ய ஸம்ய மிவரோ ஜித்வா ஸ்வயம் வாதிந :
பாஹ்யாம்ஸ்சாபி குத்ருஷ்டிகாந் புவிபுந : பாஷ்ய ப்ரதிஷ்டாஸயா |
ஸ்ரீமத் வேங்கடநாத தேஸிக சிரோ ரத்நாத்மநா வீர்பபௌ
இத்யேவம் ச வதந்தி ஹந்த !க்ருதிந :த்ரைகாலிக ஜ்ஞாநி ந : || –5-

ஸ்ரீ உடையவர், ஸ்ரீபாஷ்யத்தை அருளி அவைதிக மதங்களையும் ,பிற மதங்களையும் வாதிட்டு வென்றார்.
இவ்வுலகில், ஸ்ரீபாஷ்யம் நிலை பெற வேண்டும் என்கிற க்ருபையால்,அந்த ஸ்ரீ எம்பெருமானாரே
மறுபடியும், ஸ்ரீ வேதாந்த தேசிகனாக அவதரித்தார் என்று, முக்காலத்தையும் உணர்ந்த ஞாநிகள் கூறுகிறார்கள்.
ஸ்வாமி தேசிகன், எம்பெருமானாரின், அவதாரம் என்பதை, ஸ்வாமியின் திருக்குமாரரான ஸ்ரீ நயினாராசார்யர் –
ஸ்ரீமத் வேதாந்த தேசிக மங்களத்தில் புகழ்கிறார் —

வேங்கடசாவதாரோயம் தத் கண்டாம் ஸோதவா பவேத் |
யதீந்த்ராம் ஸோதவேத்யேவம் விதர்க்யா யாஸ்து மங்களம் || –6-

ஸ்வாமி தேசிகன், திருவேங்கடமுடையானுடைய அவதாரமோ?
அவரது திருமணி ஆழ்வாரின் ( கண்டை–கண்டாமணி )அவதாரமோ?
அல்லது, எம்பெருமானார், இப்படி அவதரித்தாரா ? என்று, ஸ்வாமி தேசிகனைத் தரிசிப்போர்
பலபடியாக யூகித்துப் புகழும் ஸ்வாமி தேசிகனுக்கு மங்களம் —–என்கிறார்

ஸ்ரீ பாஷ்யகார : பந்தாந மாத்மநா தர்ஸிதம் புந : |
உத்தர்த்து மாகமதோ நூந மித்யுக்தாயாஸ்து மங்களம் || –7-

உலகுக்கு முன்பு வெளிப்படுத்திய விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை, மீண்டும் உலகில் தழைக்கச் செய்ய அவதரித்த
யதிராஜரோ இவர் என்று, வித்வான்களெல்லாம் வியந்து பாராட்டும் வேதாந்தாசார்யருக்கு மங்களம் —————-என்கிறார்

இப்படி, யதிராஜரே , கவிராஜராக –கவி ச்ரேஷ்டராக–ஸ்வாமி தேசிகனாக அவதரித்தார் என்பது, பூர்வாசார்யர்கள் துணிபு.
இந்த கவிராஜருக்கு, யதிராஜரிடம் , அளவில்லாத பக்தி.

லக்ஷ்மீ பதேர் யதி பதேஸ்ச தயைக தாம்நோ :
யோஸௌ புரா ஸமஜநிஷ்ட ஜகத்திதார்த்தம் |
ப்ராச்யம் ப்ரகாஸியது வ :பரமம் ரஹஸ்யம்
ஸம்வாத ஏஷ சரணாகதி மந்த்ர ஸார : || கத்ய பாஷ்யத்தில், ஸ்வாமி தேசிகன் அருள்கிறார்—-

வாத்ஸல்ய குண பரனான லக்ஷ்மிபதிக்கும், யதிபதிக்கும்( யதிராஜர் ) உலகத்தாருக்கு நன்மையை அளிக்கும் பொருட்டு,
எந்த ஸம்வாதம் முன்பு நடந்ததோ, த்வய மந்த்ரமான அந்த ஸம்வாதம் ,
முன்னோர்கள் உபதேசித்த அந்தப் பரம ரஹஸ்யத்தை நமக்கு வெளிப்படுத்துவதாக———என்கிறார்.
( பங்குனி உத்ர நந்நாளில் யதிராஜர், திருவரங்கத்தில், திவ்ய தம்பதிகளிடம் சரணாகதி செய்ததையும்,
அப்போது நடந்த ஸம்வாதத்தையும் குறிப்பிடுகிறார் )

பத்யு ஸம்யமிநாம் ப்ரணம்ய சரணௌ தத்பாத கோடிரயோ
ஸம்பந்தேன ஸமித்யமாந விபவாந் தந்யாம்ஸ் ததாந்யாந்குருந் |
ஸுத்தம் ஸம்ஸ்ரித பாதராய ணதநோர் நாராயணஸ்யோக்திபி :
ஸ்ரீமாந் வேங்கடநாயக : ஸ்திதிபதம் நிர்மாதி நீதே :ஸுபம் || ந்யாய பரிசுத்தியில் , ஸ்வாமி தேசிகன் யதிராஜரை நமஸ்கரிக்கிறார்

ஸ்ரீ யதிராஜரை நமஸ்கரித்து, அவருடைய திருமுடி சம்பந்தத்தாலும் திருவடி சம்பந்தத்தாலும் ,
பெருமைகளையும் பாக்யங்களையும் பெற்ற ஆசார்யர்களை நமஸ்கரித்து ,
பாதராயணராகிய ஸ்ரீ வேத வியாஸரை சரீரமாகக் கொண்ட ஸ்ரீமந்நாராயணனுடைய ஸ்ரீஸுக்திகளைக் கொண்டு,
ஸ்ரீவேங்கடநாதன் ( ஸ்வாமி தேசிகன் ), ந்யாயபரிஸுத்தியை எழுதுகிறார் என்கிறார்.

காதா தாதாகதாநாம் களதி கமநிகா காபிலீ க்வாபி லீநா
க்ஷீணா காணாத வாணீ த்ருஹின ஹரதிர: ஸௌரபம் நாரபந்தே |
க்ஷாமா கௌமாரிலோக்திர் ஜகதி குருமதம் கௌரவாத் தூரவாந்தம்
காஸங்கா ஸங்கராதோர் பஜதி யதிபதௌ பத்ரவேதீம் த்ரிவேதீம் || -9. தத்வமுக்தா கலாபத்தில் , ஸ்வாமி தேசிகன் சொல்கிறார் –

யதிராஜர், வேதங்களாகிற பத்ர வேதியை அடைந்த போது,புத்த மதம் நழுவுகிறது ;
கபில மதம் ஓடி ஒளிகிறது ;கணாமதம் அழிகிறது;
ப்ரஹ்மாவால் தோற்றுவிக்கப்பட்ட யோக மதமும், பசுபதி மதமும் மணம் அற்றதாகிறது;
குமாரில மதம் நசிக்கிறது;குருமதம் , பெருமைக்கு வெகு தொலைவில் எறியப்படுகிறது.
இப்படியிருக்க, சங்கரர் முதலானவர்களின் மதங்களின் நிலையைப் பற்றிச் சந்தேகம் தேவையா ?

உக்த்யா தனஞ்ஜய விபீஷண லக்ஷ்யயாதே
ப்ரத்யாய்ய லக்ஷ்மண முநேர் பவதா விதீர்ணம் |
ச்ருத்வா வரம் ததநுபந்த மதாவலிப்தே
நித்யம் ப்ரஸீத பகவந் மயி ரங்கநாத ||ந்யாஸ திலகத்தில், யதிராஜருடைய ஸம்பந்தத்தால் ,செருக்கு வந்ததாகச் சொல்கிறார்.

பெருமை மிகு திருவரங்கச் செல்வனே ! அர்ஜுனனுக்குச் சொன்ன சரம ஸ்லோகத்தையும் ,
விபீஷணணுக்குச் சொன்ன சரம ஸ்லோகத்தையும் சொல்லி, நம்பச் செய்து,
ஸ்ரீ பாஷ்யகாரருக்கு உன்னால் அளிக்கப்பட்ட வரத்தைக் கேட்டு அறிந்து,
அவரது ஸம்பந்தத்தால் செருக்கு நிறைந்த எனக்கு, எப்போதும் வரம் தந்து அருள்வாயாக !
( வரம் யாதெனில் )
ஸ்ரீ பாஷ்யகாரரின் திருவடிகளிலோ அவரது சிஷ்ய பரம்பரை ஆசார்யர்களிடமோ ,
ப்ரபத்தியாகிய பரண்யாஸத்தைச் செய்தவர்கள் எல்லாருக்கும், பரமபதம் அளிப்பதே
( இன்னும் பல )

ப்ரதிஷ்டாபித வேதாந்த : ப்ரதிக்ஷிப்த பஹிர்மத : |
பூயாஸ் த்ரைவித்ய மாந்யஸ்த்வம் பூரி கல்யாண பாஜநம் || -சங்கல்ப ஸுர்யோதயத்தில் சொல்கிறார்–யதி சிஷ்யனுக்கு ஆசீர்வாதம் செய்கிறார்

நடாதூர் அம்மாள், ஸ்வாமி தேசிகனைப் பால்ய வயதில் அனுக்ரஹித்த ச்லோகம் .
ஸ்வாமி தேசிகன் , சிறு குழந்தையாகத் தன்னுடைய மாதுலர் ( மாமா) அப்புள்ளார் ( ஆத்ரேய ராமாநுஜர் )
கூடவே, நடாதூரம்மாளின் காலக்ஷேபத்துக்கு, கச்சி வாய்த்தான் மண்டபத்துக்குப் போன போது,
நடாதூரம்மாள், குழந்தையான ஸ்வாமி தேசிகனின் திருமுக காந்தியை–முக விலக்ஷணத்தைக் கடாக்ஷித்து ,
அநுக்ரஹித்து,ஆசீர்வாதமாக அருளிய ச்லோகம் .
இதைத் தான் இயற்றிய சங்கல்ப ஸுர்யோதய நாடகத்தில்,ஸ்வாமி தேசிகன் , யதி (ராஜன் ) தனக்கு ( சிஷ்யன் )
ஆசீர்வாதமாகச் சொன்னதாக, ஒரு காக்ஷியை ஏற்படுத்துகிறார்.
இது, ஸ்வாமி தேசிகனுக்கு, யதிராஜரிடம் உள்ள ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்துகிறது.

நம்முடையது…ராமாநுஜ ஸித்தாந்தம் –அப்படியென்றால் என்ன ?
சுருக்கமாக ஒரே வரியில் சொல்வதென்றால்,
ஸ்ரீ ராமாநுஜரால் தழுவப்பட்ட கொள்கை; இன்னும் சொல்வதென்றால்,
ஸ்ரீ ராமாநுஜரால் ப்ரமாணிகம் என்று நிச்சயிக்கப்பட்டு, பரப்பப்பட்ட வேதங்களின் அர்த்த விசேஷங்கள்.
இதுவே விசிஷ்டாத்வைத –ராமானுஜ ஸித்தாந்தம் .
ராமாநுஜ ஸித்தாந்தம் என்பது, ஆசார்ய–சிஷ்ய பரம்பரையாகத் தொடர்ந்து வரும் உபதேசங்கள்.

ஸ்தோத்ரங்கள், பாசுரங்கள் இவைகளைச் சொல்வதற்கு முன்பு , ஆசார்ய வந்தனம் செய்துப் பிறகு தொடங்குவது ,
தொன்று தொட்டு இருந்து வரும் மரபு.
ஸ்ரீ ஆளவந்தார், ஸ்தோத்ர ரத்னத்தில், முதல் மூன்று ச்லோகங்களில்,
ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு, மங்கள ச்லோகங்கள் இடுகிறார்.

நமோ சிந்த்யாத் புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஸயே |
நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே || –1-

சிந்தனைக்கெட்டாத ,ஆச்சர்யமான, அநாயாசமாகத் தோன்றிய ஜ்ஞாநமும், வைராக்யமும் நல்லறிவும்
சேர்ந்த குவியலாக, ஆழமான பகவத் பக்தியின் கடலுமான, ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு வந்தனம் (நமஸ்காரம்)

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநுராஹமஹிமா திசயாந்த ஸீம்நே |
நாதாய நாதமுநயேத்ர பரத்ர சாபி —
நித்யம் யதீய சரணௌ சரணம் மதீயம் || -2-

ஜ்ஞாந ,வைராக்ய, பக்தி நிறைந்தவரும் ,மது என்கிற அசுரனை அழித்த பகவானின் ( ஸ்ரீ ஹயக்ரீவரின்)
திருவடித் தாமரைகளில் உண்மையான ஜ்ஞாநம் உடையவரும், அன்புக்கும், மேன்மையின் சிறப்புக்கும் ,
அந்த ஸீம்நே —கடைசி எல்லையானவரும், ஸ்ரீ வைணவர்களுக்கு, நாதருமான ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு நமஸ்காரம்
யாருடைய திருவடிகள், இங்கும் அங்கும் ப்ரக்ருதி மண்டலத்திலும் பரமபதத்திலும் கூட .
மதீயம் சரணம்—எனக்கு உண்டான சரணமாகும்.

பூயோ நமோ பரிமிதாச்யுத பக்திதத்வ —
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ சுபைர் வசோபி : |
லோகேவதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி–
யோகாய நாத முநயே யமிநாம் வராய || –3-

அளவே இல்லாத அச்யுதன் ( ஸ்ரீ தேவநாதன் )விஷயமான பக்தி,தத்வ ஜ்ஞானம் , இவைகளின் அமுதத் தடாகத்தில்( தேக்கம் )
பரிவாஹ —மேலே ததும்புகிற, தமது ஸ்ரீஸுக்திகள், ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் , இவைகளால்,
இவ்வுலகில் இறங்கிய பகவானைப் பற்றிய பக்தி யோகியும்,
யோகி ஸ்ரேஷ்டருமான ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு, மேன்மேலும் நமஸ்காரம்.

ஸ்ரீ ஆளவந்தாரின் ஆசார்யன், ஸ்ரீ மணக்கால் நம்பி, இவரின் ஆசார்யன், ஸ்ரீ உய்யக்கொண்டார் ,
அவருடைய ஆசார்யன் ஸ்ரீமந் நாதமுனிகள்.
மேற்சொன்னவாறு, மூன்று மங்கள ச்லோகங்களை தம் ஆசார்யனின், ஆசார்யனுக்கு ஆசார்யன் ,
என்று மூன்று படிகளுக்கு மேலே –
ஆசார்ய சம்பந்தம் (பிறவியில்) ஏற்படுவதால்,ச்லோகம், ப்ராசார்யனுக்கு என்று–2ம் ச்லோகம்,
அதற்கும் மேலே ஆசார்யன் என்று 3ம் ச்லோகம் என்று மூன்று ச்லோகங்களிலும்
மணக்கால் நம்பியையோ (ஸ்ரீராமமிஸ்ரர் ), உய்யக் கொண்டாரையோ (ஸ்ரீ புண்டரீகாக்ஷர்) வந்திக்காமல்,
அவர்கட்கும் ஆசார்யரான ஸ்ரீமந் நாதமுனிகளைத் துதிக்கிறார்.

இதற்கு, ஸ்வாமி தேசிகன், ஸ்தோத்ர ரத்ன பாஷ்யத்தில் சொல்லும்போது,
ஆசார்யனுடன் ப்ராசார்யனும் இருப்பாரேயானால், ப்ராசார்ய வந்தனம் ப்ரதானம் என்கிறார்.
ஆளவந்தார், இப்படித் தன்னுடைய க்ரந்தங்களில் மங்கள ச்லோகம் இடும்போது,
ஸ்ரீ உடையவரோ கீதாபாஷ்யத்தின் தொடக்கத்தில்,

யத்பதாம் போருஹத்யான வித்வஸ்தா சேஷ கல்மஷ : |
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம் || என்று ஸ்ரீ ஆளவந்தாருக்கு மங்கள ச்லோகம் இடுகிறார்.

குரு பரம்பரைப்படி, ஸ்ரீ ராமாநுஜருக்கு முன்பு , பெரியநம்பிகள் (மஹா பூர்ணர் ); அவருடைய ஆசார்யன் ஸ்ரீ ஆளவந்தார்.
ஸ்ரீ இராமாநுஜர் , தன் ஆசார்யனின் ஆசார்யனுக்கு, மங்கள ச்லோகம் இடுகிறார்.

ஸ்வாமி தேசிகன், தன்னுடைய க்ரந்தங்களில் ( மேலே காண்பிக்கப்பட்ட சில உதாரணங்கள் )
இதே வழியைப் பின்பற்றி இருக்கிறார்.
ஆனால்,யதிராஜ ஸப்ததியில் ,
பிரதம ஆசார்யனான ஸ்ரீமன் நாராயணன் ,
பிறகு , பெரிய பிராட்டி,
பிறகு விஷ்வக்ஸேநர் ,
நம்மாழ்வார்,
நாதமுனிகள்,
உய்யக்கொண்டார்,
மணக்கால் நம்பி
ஆளவந்தார்,
பெரியநம்பி ( மஹா பூர்ணர் ),
யதிராஜர் என்கிற வரிசையில், மங்கள ச்லோகம் இடுகிறார்.

யதிராஜ ஸப்ததி

யதிராஜன் —யதிகளுக்கு ராஜன்; யதீச்வரர்களுக்குத் தலைவன்; அது யார் ! அவரே ஸ்ரீ ராமாநுஜன் .
இந்த யதிராஜரைப் போற்றிப் புகழ்ந்து ஸப்ததி –எழுபது ச்லோகங்கள் இதுவே, யதிராஜ ஸப்ததி
ஸப்ததி—-எழுபது என்று சொன்னாலும், 74 ச்லோகங்கள் அருளி இருக்கிறார், ஸ்வாமி தேசிகன்.

ஸ்ரீ ராமானுஜரைப் பற்றிச் ச்லோகம் இயற்றத் தொடங்கியதும், ஸ்வாமி தேசிகனுக்கு,
ஸ்ரீ உடையவர் 74 ஸிம்ஹாசநாதிபதிகளை நியமித்து,
விசிஷ்டாத்வைதத்தை வேரூன்றி வளரச் செய்தது நினைவுக்கு வர, 74 ச்லோகங்கள் இயற்றினாரோ ? ஸ்வாமி தேசிகனே அறிவார் !

ராமாநுஜ தயாபாத்ரம் ஞானவைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் |

நபஸ்ய மாசி ஸிஸ்ரோணாயாம் அநந்தார்ய குரூத்பவம் |
ஸ்ரீவேங்கடேச கண்டாம்சம் வேதாந்தகுரு மாஸ்ரயே ||

ப்ரணாமம் லக்ஷ்மணமுநி :ப்ரதிக்ருஹ்ணாது மாமகம் |
ப்ரஸாதயதி யத்ஸுக்தி : ஸ்வாதீநபதிகாம் ச்ருதிம் ||- ஸ்ரீ ராமாநுஜர் —ஸ்ரீ உடையவர் .

தயாநிக்நம் யதீந்த்ரஸ்ய தேசிகம் பூர்ணமாச்ரயே |
யேந விச்வஸ்ருஜோ விஷ்ணோ : அபூர்யத மநோரத : ||–ஸ்ரீ பெரிய நம்பிகள்

விகாஹே யாமுனம் தீர்த்தம் ஸாதுப்ருந்தாவநே ஸ்திதம் |
நிரஸ்த ஜிஹ்மக ஸ்பர்ஸே யத்ர க்ருஷ்ண : க்ருதாதர : ||–ஸ்ரீ ஆளவந்தார் என்கிற யாமுனாசார்யர்

அநுஜ்ஜித க்ஷமா யோகம் அபுண்யஜந பாதகம் |
அஸ்ப்ருஷ்ட மதராகம் தம் ராமம் துர்யம் உபாஸ்மஹே ||–ஸ்ரீ மணக்கால் நம்பி

நமஸ்யாமி அரவிந்தாக்ஷம் நாதபாவே வ்யவஸ்திதம் |
சுத்த ஸத்வமயம் சௌரே : அவதாரமிவாபரம் ||–ஸ்ரீ உய்யக்கொண்டார்

நாதேந முநிநா தேந பவேயம் நாதவாநஹம் |
யஸ்ய நைகமிகம் தத்த்வம் ஹஸ்தாமலகதாம் கதம் ||– ஸ்ரீமந்நாதமுநிகள்

யஸ்ய ஸாரஸ்வதம் ஸ்ரோதோ வகுலாமோத வாஸிதம் |
ச்ருதீநாம் விச்ரமாயாலம் சடாரிம் தம் உபாஸ்மஹே ||–ஸ்ரீ நம்மாழ்வார்

வந்தே வைகுண்ட ஸேநாந்யம் தேவம் ஸுத்ரவதீ ஸகம் |
யத்வேத்ர சிகரஸ்பந்தே விச்வ மேதத் வ்யவஸ்திதம் ||–ஸ்ரீ விஷ்வக்ஸேநர் .

ஸஹ தர்மசரீம் சௌரே : ஸம்மந்த்ரித ஜகத்திதாம் |
அநுக்ரஹமயீம் வந்தே நித்யமஜ்ஞாத நிக்ரஹாம் ||–10. ஸ்ரீ பெரிய பிராட்டி –ஸ்ரீ மஹாலக்ஷ்மி .

கமபி ஆத்யம் குரும் வந்தே கமலாக்ருஹ மேதிநம் |
ப்ரவக்தா சந்தஸாம் வக்தா பஞ்சராத்ரஸ்ய ய : ஸ்வயம் || ஸ்ரீ பகவான்-ஸ்ரீமன் நாராயணன்–ஆதிகுரு . .

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஶ்ரீ உத்தவ கீதை – அத்தியாயம் – 4

March 23, 2021

இவ்வுலக, மேலுலக இன்ப அனுபவ பயனின்மையை நிரூபித்தல்

ஶ்ரீ பகவான் உவாச

மயோதி3தேஷ்வவஹித: ஸ்வர்மேஷூ மதா4ஸ்ரிய |
வர்ணாசிரம குலாசாரமகாமாத்மா ஸமாசரேத் || 1

ஶ்ரீபகவான் கூறினார்

என்னால் உபதேசிக்கப்பட்டக் கருத்துக்களில் கவனத்தை செலுத்து.
வேதம், ஸ்ம்ருதி, ஆகம, புராணங்களில் என்னால் கூறப்பட்ட தர்மங்களை, உபதேசங்களை கவனத்துடனும் அனுசரிக்க வேண்டும்.
உன்னுடைய கடமைகளை என்னையே சரணடைந்தவனாக அனுசரிக்க வேண்டும்.
இறைவனிடத்தில் சரணாகதி என்பது அவரிடத்தில் வைக்க வேண்டிய முழுநம்பிக்கையை குறிக்கின்றது
ஸமாசரேத் – நன்கு செய்வாயாக
அகாமாத்மா – நிஷ்காமபாவம்
வர்ணாசிரம குல ஒழுக்கங்களை நிஷ்காம பாவத்துடனும், பலனில் பற்றுதலின்றி கவனத்துடனும் செய்ய வேண்டும்.

————

அன்வீக்ஷேத விஶுத்3தா4த்மா தே3ஹினாம் விஷயாத்ம்னாம் |
கு3ணேஷு தத்த்வத்யானேன ஸர்வாரம்ப4விபர்ய்யம் || 2

அன்விக்ஷேத – கவனமாக சிந்தித்துப் பார்
விஶுத்3தா4த்மா – மனத்தூய்மை அடைந்தவனாக
உலக சுகங்களில் ஈடுபாடுள்ள மனிதர்களின் செயல்களே இறுதி லட்சியம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள்
வெளிப்பார்வைக்கு சுகத்தை அடைந்திருந்தாலும், மனதளவில் விபரீதமான பலன்களையே அடைந்திருப்பார்கள்
என்று கூர்ந்து கவனித்து புரிந்து கொண்டு அனாத்மா விஷய, சுகங்களில் வைராக்கியத்தை அடைய வேண்டும்.

———–

ஸுப்தஸ்ய விஷயாலோகோ த்4யாயதோ வா மனோரத2: |
நானாத்மகத்வாத்3 விப2லஸ்ததா2 பே4தா3த்மதீ4ர்கு3ணை || 3

மனோரத2 – பகற்கனவு
உலக விஷயங்களில் கிடைக்கும் இன்ப, துன்பங்களை தூங்கும்போது காணும் கனவில் அடையும்
இன்ப, துன்பங்ளுக்கு பகவான் ஒப்பிடுகிறார். விழித்துக் கொண்டிருக்கும் போது காண்கின்ற கற்பனைகளில்
கிடைக்கின்ற சுகங்களை வெறும் எண்ணங்கள்தான் கொடுக்கின்றது. எனவே எண்ணங்கள்தான் சுக-துக்கத்தைக் கொடுக்கின்றது,
பொருட்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஸுப்தஸ்ய விஷயாலோகஹ – தூங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் காணும் பொருட்களும்
த்4யாயதோ வா மனோரதஹ விழித்துக் கொண்டிருப்பவனின் கற்பனை உலகத்தில்
நானாத்மகத்வாத்3 மனதில் பலவிதமான காண்கின்ற பொருட்களும்;
விபலஹ பொய்யானவை
ததா3 அவ்விதம்
கு3ணைஹி‘ இந்திரியங்களால்
பேதாத்மதீஹி பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கும் உலகமும் நிலையானதல்ல, உண்மையானதல்ல

————–

நிவிருத்தம் கர்ம ஸேவேத ப்ரவ்ருத்தம் மத்பரஸ் த்யஜேத் |
ஜிக்ஞாஸாயாம் ஸம்ப்ரவ்ருத்தோ நாத்ரியேத் கர்மசோத3னாம் || 4

ஒருவனுக்கு மேலான அறிவை அடைய வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டால் அதற்கேற்ற மனநிலையை அடைய வேண்டும்.
உலகத்தில் போகம் தரும் விஷயங்களிலோ, பொருட்களிலோ வைராக்கியம் வந்திருக்க வேண்டும். ’
ஜிக்ஞாஸாயாம் ஸம்ப்ரவ்ருத்தஹ – பரம்பொருளை புரிந்து கொள்ளும் ஆர்வம் உடையவன் அதையடைய தன்னை ஈடுபடுத்திக் கொண்டால்
ப்ரவ்ருத்தம் கர்ம நம்மை கர்த்தாவாக வைத்திருக்கும் உலக சம்பந்தபட்ட செயல்களையெல்லாம்
த்யஜேத் விட்டுவிடு, துறந்துவிட்டு
நிவிருத்தம் கர்ம ஸேவேத ஆன்மீக மேன்மைக்கான செயல்களையே செய்ய வேண்டும். உபாஸனை, ஜபம், தியானம் போன்ற செயல்களை செய்வாயாக.
சமுதாயத்திலிருந்து விலகியிருக்கும்போது சிறிது பயம் ஏற்படலாம். இந்த நேரத்தில் பகவானை முழுமையாக நம்பி அவரிடத்தில் நிலைபெற்றிட வேண்டும்.
மத்பரஹ அவர் என்னைப் பாதுகாப்பார் என்று நம்பிக்கையுடன் அவரை சரணடைந்திட வேண்டும்.
ந ஆத்3ரியேத் கர்மசோத3னாம் வேதத்தில், கர்ம காண்டத்தில் சொல்லப்பட்டுள்ள கர்மங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதே.

——————

யமானபீக்ஷணம் ஸேவேத நியமான்மாத்பர: க்வசித் |
மத3பி4க்ஞம் கு3ரும் ஶாந்தமுபாஸீத மதா3த்மகம் || 5

யமஹ – விலக்குதல்
நியமஹ – பின்பற்றுதல்
நியமம் – தூய்மை, சந்தோஷம், தவம், ஸ்வாத்யாயம், ஈஸ்வர ப்ரணிதானம்
க்ரியாயோகம் – தவம், ஸ்வாத்யாயம், ஈஸ்வரப்ரணிதானம்
யமம் – அஹிம்ஸா, சத்யம், அஸ்தேயம், பிரம்மச்சர்யம், அபரி3ரஹம்

யமத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், நியமங்களை முடிந்தவரையில் கடைப்பிடிக்க வேண்டும்.

ஶாந்தம் – மனவமைதி அடைந்தவரும்,
மத்3 அபி4க்3ஞம் – என்னைப்பற்றிய அறிவை அடைந்தவரும்
மத்3 ஆத்மகம் – என்னைப்பற்றிய அறிவில் நிலைத்தவரான குருவை நாடி
உபாஸீத் – சேவை செய்து அறிவை பெற்றுக் கொள்ள வேண்டும்.

————

அமான்யமத்ஸரோ த்3வேஷ நிர்மோ த்3ருட4ஸௌஹ்ருத3: |
அஸத்வரோsர்த2ஜிக்3ஞாஸுரநஸூயுரமோக4வாக் || 6 ||

வேதாந்த மாணவர்களிடத்து இருக்க வேண்டிய ஒன்பது பண்புகளைக் பகவான் கூறுகிறார்.

1. அமானி கர்வமற்றவன், பணிவுடன் இருப்பவன் (உடல், மனம், வாக்கு)

2. அமத்ஸரஹ பொறாமையற்றவன். பொறாமையானது மற்றவர்களின் நிலையோடு ஒப்பிட்டூ பார்ப்பதால் வருவது பொறாமை.
தாழ்வு மனப்பான்மையினாலும் பொறாமை வருகின்றது.

3. த3தஹ திற்மையுடன் செயல்படுபவன் – தமோகுணத்திலிருந்து விடுபட்டவனாக இருப்பவன்.
எதையும் சரியாக புரிந்து கொண்டு செயல்படும் திறமையுடையவன்

4. நிர்மமஹ மமகாரம் இல்லாதிருப்பவன்

5. த்3ருட4ஸௌஹ்ருத3: – எல்லோரிடமும் உறுதியான, மென்மையான உறவு வைத்திருப்பவன் (ஸௌஹிருத)

6. அஸத்வரஹ நிதானமாக செயல்படுபவன்; அவசரஅவசரமாக எதையும் செய்யாதவன்

7. அர்த2ஜிக்3ஞாஸு வேதாந்தத்தையும், பிரம்மத்தையும் அறிந்து கொள்ள விரும்புவன்

8. அனஸூயு: எதிலும் குறைகாணாதவன்; சாஸ்திரத்தில் குறை காணாதவன்

9. அமோக4வாக் பயனற்ற சொற்களை பேசாதவன், வீண்பேச்சு பேசாதவன்,

————-

ஜாயாபத்ய க்3ருஹக்ஷேத்ர ஸ்வஜன த்3ரவிணாதி3ஷு |
உதா3ஸீன: ஸம்ம் பஶ்யன் ஸர்வேஷ்வர்த2மிவாத்மன: || 7 ||

மனைவி, மகன், மகள், வீடு, நிலம், சொத்து, உறவினர்கள், நண்பர்கள் போன்றவற்றில் அதிக பற்றுடன் இருக்கக்கூடாது.
இவைகள் இல்லாமலும் வாழமுடிய வேண்டும். எல்லோரையும் சமநோக்குடன் பார்க்க வேண்டும்.
தன் நலனைப் போலவே எல்லோருடைய நலனிலும் சமநோக்குடன் இருக்க வேண்டும்.

————-

விலக்ஷண ஸ்தூலஸூக்ஷ்மாத்3 தே3ஹாதா3த்மேக்ஷிதா ஸ்வத்3ருக் |
யதா2க்3நிர்தா3ருணோ தா3ஹ்யாத்3 தா3ஹகோsன்ய: ப்ரகாஶக: || 8 ||

இதில் ஆத்ம-அனாத்ம விவேகத்தை கூறுகின்றார். நான் என்ற சொல்லினுடைய உண்மையான அர்த்தம் என்ன,
அது எதைக் குறிக்கின்றது என்று விசாரம் செய்ய வேண்டும். பொதுவாக நாம் இந்த சொல்லுக்கு உண்மைப் பொருளையும்,
உண்மையற்ற பொருளையும் சேர்த்துப் புரிந்து கொண்டிருக்கின்றோம். இதை நாம் பிரித்து உண்மையற்ற பொருளை நீக்க வேண்டும்.
அவைகள் ஸ்தூல, சூட்சும, காரண சரீரங்களே. இது எப்பொழுதும் நம் அனுபவத்திற்கு கொண்டு வரவேண்டும்.
ஆனால் நம் அனுபவமும், அபிமானமும் உண்மையற்ற விஷயத்தில்தான் இருக்கின்றது.
இந்த உடலுக்கு வருகின்ற அனுபவங்கள் நம்மை பாதிப்பால்தான் இதில் நாம் அபிமானித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை அறியலாம்.

பகவான் த்3ருக்-த்3ருஷ்யம் (அறிபவன்-அறியப்படும் பொருள்) என்ற முறையை பயன்படுத்தி ஆத்ம-அனாத்மாவை விளக்குகின்றார்.
அறிபவனும், அறியப்படும் பொருளும் வேறாகத்தான் இருக்க வேண்டும். இதை நம் உடலிலிருந்து ஆரம்பித்து விசாரம் செய்ய வேண்டும்.
ஸ்தூல, சூட்சும சரீரங்களிலிருந்து ஆத்மா வேறாக இருக்கின்றது. நாம் இந்த ஸ்தூல உடலையும் அனுபவிக்கின்றோம்.
கனவுலகில் நம்மை நாமே அனுபவிக்கின்றோம். இவையிரண்டையும் நினைத்துப் பார்த்து புரிந்து கொள்ளலாம்.

விலக்ஷணஹ வேறுபடுகின்றது.
ஈக்ஷிதா பார்ப்பவனாக இருக்கும் போது, வெறும் பார்வையாளனாக இருக்கும்போது
ஸ்வத்3ருக் தன்னுடைய இருப்புக்கு தானே சாட்சி. உதாரணமாக சூரியனை பார்ப்பதற்கு வேறு வெளிச்சம் தேவையில்லை,
அது தானாகவே தெரிந்து கொண்டிருப்பது போல ஆத்மாவை புரிந்துகொள்ள வேண்டும்.

இதை சரியாக புரிந்துகொண்டால் உடலுக்கும், மனதுக்கும் வருகின்ற கஷ்ட, நஷ்டங்கள், சுக-துக்கங்கள் நம்மை பாதிக்காது.

நெருப்புக்கு இரண்டு தன்மைகள் உண்டு. ஒன்று வெளிச்சம் மற்றொன்று உஷ்ணமாகும்.
மரக்கட்டையை எரிக்கும் நெருப்பு அதற்கும் வேறானது.
வெளிச்சத்தினால் காட்டிக் கொடுக்கப்படும் பொருட்களிலிருந்து வேறானதாக இருக்கின்றது.
எரிந்து கொண்டிருக்கும் அக்னியிலிருந்து வேறானது. அதேபோல இந்த சரீரத்தை விளக்கும் ஆத்மாவானது
அதற்கும் வேறானது என்பதை அக்னி உதாரணத்தோடு ஒப்பிட்டு புரிந்து கொள்ள வேண்டும்.

—————

நிரோதோ4த்பத்த்யணு ப்3ருஹன் நானாத்வம் தத்க்ருதான் கு3ணான் |
அந்த:பிரவிஷ்ட ஆத4த்த ஏவம் தே3ஹகு3ணான் பர: || 9 ||

உபாதி – எது தன்னுடைய குணத்தை வேறொன்றிற்கு பொய்யாக கொடுக்கிறதோ அதற்கு உபாதி என்று பெயர்.
இதன் அடிப்படையில் பார்த்தால் நம் உடலும், மனமும் அதனுடைய தர்மத்தை பொய்யாக ஆத்மாவில் ஏற்றி வைத்திருப்பதால்
இவைகள் ஆத்மாவின் உபாதிகள் என்று அறிந்து கொள்ளலாம்;.

நிரோத4ம் – அணைந்து விடுதல்
உத்பத்தி – தோன்றுகின்றது, உற்பத்தியாகின்றது.
அணு – சிறியதாக ,இருக்கின்றது
ப்4ருஹ – மிகப்பெரியதாக இருக்கின்றது
நானாத்வம் – விதவிதமான நெருப்புக்கள்
தத்க்ருதான் கு4ணான் – இந்த குணங்களெல்லாம் நெருப்பு எதை எரிக்கின்றதோ அதன் அடிப்படையில் கூறப்படுகின்றது.
ஆத4த்த – எடுத்து கொள்கிறது
அந்த:பிரவிஷ்ட – எதை எரிக்கின்றதோ அதன் வடிவத்தை ஏற்றுக் கொள்கிறது.
தே2ஹ கு3ணான் பரஹ ஆத4த்த – அனைத்து தேகத்தின் குணங்கள் மேலாத ஆத்மாவில் பொய்யாக ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது.
எந்தெந்த சரீரத்திற்கு ஆதாரமாக இருக்கின்றதோ அந்தந்த சரீரத்தின் குணங்களை பொய்யாக ஏற்றுக் கொண்டிருக்கின்றது.

——————-

யோsஸௌ கு3ணைர்விரசிதோ+ தே3ஹோsயம் புருஷஸ்ய ஹி |
ஸம்ஸாரஸ் தன்னிப3ந்தோ4யம் பும்ஸோ வித்3யாச்சி2தா3த்மன: || 10 ||

பும்ஸஹ தே3ஹ – இந்த ஜீவனுடைய உடலானது
புருஷஸ்ய குணைஹி விரசிதஹ – பகவானுடைய மாயையினுடைய முக்குணங்களின் துணைக் கொண்டு உருவாக்கப்பட்டது.
ச ஸம்ஸாரஹ தன்னிபந்தஹ – சம்சாரம் என்பது மூன்று உடலை நான் என்று அத்யாஸம் செய்யும்போது தோன்றுவது
யஹ அஸௌ – யாரொருவன் இதை புரிந்து கொள்கிறானோ அவனது
ஆத்மனஹ சி2த் வித்3யா – ஆத்மஞானமானது இந்த சம்சாரத்தை நீக்க உதவுகின்றது.

—————–

தஸ்மாஜ்ஜிக்3ஞாஸயாத்மானமாத்மஸ்த2ம் கேவலம் பரம் |
ஸங்க3ம்ய நிரஸேதே3தத்3வஸ்துபு3த்3தி4ம் யதா2க்ரமம் || 11 ||

தஸ்மாத் – ஆகவே ஆத்மஞானம் சம்சாரத்தை நீக்குகின்றது
ஜிக்ஞாஸயா – விசாரம்; விசாரத்தின் மூலமாக (சரியான பிரமாணத்தை பயன்படுத்த வேண்டும்)
ஆத்மஸ்தம் – இந்த உடலுக்குள் இருக்கின்ற
கேவலம் – இரண்டற்றதான
ஆத்மானம் – ஆத்மஸ்வரூபத்தை
ஸங்க3ம ய – புரிந்துகொண்டு, உணர்ந்துகொண்டு
பரம் – அழியாத, மேலான
ஏதத்3 வஸ்து பு3த்3தி4ம் – இந்த உடலே நானென்று நினைக்கின்ற எண்ணத்தை
நிரஸேத்3 – நீக்கிவிட வேண்டும்.
யதா2க்ரமம் – இந்த நிலையை படிபடியாக அடைய வேண்டும்

இதை பஞ்சகோச முறையில் செய்யும்போது முதலில் அன்னமயத்திலிருந்து ஆரம்பித்து
ஆனந்தமய கோசத்திற்கு படிப்படியாக செல்ல வேண்டும்.

————–

ஆசார்யோsரணிராத்3ய: ஸ்யாத3ந்தேவாஸ்யுத்தராரணி: |
தத்ஸந்தா4னம் ப்ரவசனம் வித்3யாஸந்தி4: ஸுகா2வஹ: || 12 ||

ஆசார்யஹ – குருவானவர்
அரணி ஆத்3யஹ ஸ்யாத் – அக்னி உண்டாக்க பயன்படும் நிலையாக இருக்கும் அடிமரக்கட்டையாக இருக்கிறார்.
அந்தேவாஸ்யஹ குருவிற்கு அருகே வாழ்பவர், குருவை அடைந்து ஆத்மஞானத்தை அடைய விரும்பும் சிஷ்யன்
உத்தர அரணி – மேலேயுள்ள அரணி கட்டையாக ,இருக்கிறான்
தத்ஸந்தானம் அரணிக்கட்டையை உரசுவதைப் போல இருப்பது
ப்ரவசனம் குரு உபதேசம் செய்தல்
வித்3யாஸந்தி4ஹி – ஞானம் பலனாக கிடைக்கின்றது, அக்னி உண்டாவதைப் போல
ஸுகா2வஹ இந்த ஞானத்தின் பலன் நிலையான மனநிறைவை, மோட்சத்தைக் கொடுக்கின்றது

—————-

வைஶாரதீ3 ஸாதிவிஶுத்3த4பு4த்3தி4ர்து4னோதி மாயாம் கு3ணஸம்ப்ரஸூதாம் |
கு3ணாம்ஶ்ச ஸந்த3ஹ்ய யதா3த்மமேதத் ஸ்வயம் ச ஶாம்யத்யஸமித்3 யதா2க்3னி: || 13 ||

இதில் ஆத்மஞான்த்தின் பலன் கூறப்படுகின்றது

வைஶாரதீ – திறமைமிக்க குரு-சிஷ்யன் இவர்களுடைய சேர்க்கையால் அடையப்படுகின்ற
அதி விஶுத்3த4 பு3த்3தி4ஹி – மிகமிக தூய்மையான இந்த ஆத்மஞானம்
மாயாம் கு3ணஸம்ப்ரஸூதாம் து4னோதி – நம்மிடத்தில் இருக்கும் முக்குணங்களினால் தோன்றும் மோகத்தையும், தவறாத அறிவையும் அழித்துவிட்டு.
அஸமித்3 யதா2க்3னி: – எப்படி அக்னி
யதா3த்மம் – அனைத்தையும் எரித்துவிட்டு
ஸ்வயம் ச ஶாம்யத் – எரிப்பதற்கு விறகில்லாமல் தானும் அடங்கிவிடுகின்றதோ
ஏதத் – அதுபோல ஆத்மஞானமும்
கு3ணாம்ஶ்ச ஸந்த3ஹ்ய – முக்குணங்களையும் எரித்துவிட்டு அதன் பலனை கொடுத்துவிட்டு சென்று விடுகிறது.

—————

அதை2ஷாம் கர்மகர்த்ரூணாம் போ3க்த்ரூணாம் ஸுக2து3:க2யோ: |
நானாத்வமத2 நித்யத்வம் லோககாலாக3மாத்மனாம் || 14 ||

அத2 ஏஷாம் – இப்போது பூர்வமீமாம்ஸ மதத்தின் கருத்துக்களைப் பார்ப்போமாக
கர்மகர்த்ரூணாம் – கர்மத்தை செய்பவர்கள் எல்லோரும்
போ3க்த்ரூணாம் ஸுக2து3:க2யோ: – இன்ப-துன்பங்களை அனுபவிக்கின்ற ஜீவர்களும்
நானாத்வமத2 – பலவிதமாகவும், வேற்றுமையுடையவராகவும்
நித்யத்வம் – தனித்தனியாக நிலையான கர்த்தாவாக இருக்கிறார்கள்
லோக – – இந்த உலகம்
கால – காலம் என்கின்ற தத்துவம்
ஆக3ம – கர்மத்தை போதிக்கின்ற சாஸ்திரம்
ஆத்மனாம் – இவை மூன்றும் நிலையானவைகள் என்பது அவர்களது கருத்து.

——————-

மன்யஸே ஸர்வபா3வானாம் ஸம்ஸ்தா2 ஹ்யௌத்பத்திகீ யதா2 |
தத்ததா2க்ருதிபே4தே3ன ஜாயதே பி4த்3யதே ச தீ4: || 15 ||

மன்யஸே – இவ்வாறு நீ கருதினால்
ஸர்வபா3வானாம் – நாம் அனுபவிக்கக்கூடிய அனைத்து பொருட்களும்
யதா2 ஔத்பத்தி ஸம்ஸ்தா2 – பிரவாக நித்யத்வமாக இருக்கின்றது
(ஓடும் நதி பிரவாக சத்யத்வத்திற்கு உதாரணமாகும். மாறீக்கொண்டே தொடர்ந்து இருப்பது பிரவாக நித்யம்.
இதை கிரகிக்கின்ற நம் மனதில் தோன்றுகின்ற எண்ணங்களும் பிரவாக சத்யம்.

தத் தத்2 ஆக்ருதி பே4த3ம் – நாம் பார்க்கும் பொருட்களின் உருவத்தின் அடிப்படையில்
ஜாயதே தீ4: – எண்ணங்கள் தோன்றுகிறது
பி4த்3யதே – இந்த எண்ணங்களும் வேறுபடுகின்றன

————-

ஏவமப்யங்க3 ஸர்வேஷாம் தே3ஹினாம் தே3ஹயோக3த: |
காலாவயவத: ஸந்தி பா4வா ஜன்மாத3யோsஸக்ருத் || 16 ||

அங்க3 இவ்வாறு கருதுபவர்களே!
ஏவம் அபி இப்படியொரு கருத்தை வைத்திருந்தால் அவையெல்லாம் தவறாகும்
ஸர்வேஷாம் எல்லா ஜீவர்களுக்கும்
தே3ஹினாம் தே3ஹயோக3த: உடலினுடைய சேர்க்கை தவிர்க்க முடியாததாக ,இருப்பதனால்
கால அவயவதஹ காலம் ஒரு உறுப்பாக ,இருப்பதனாலும்
ஜன்மாத3யஹ பா4வா ஸந்தி – பிறப்பு-இறப்பு போன்ற மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கும்.
அஸக்ருத் – எனவே மீண்டும் மீண்டும் ஏற்படும். சம்சார சுழலில்தான் இருப்பாய்.

————

அத்ராபி கர்மணாம் கர்துரஸ்தாதந்த்ர்யம் ச ல்க்ஷயதே |
போ4க்துஶ்ச து3: க2ஸுக2யோ: கோ ந்வர்தோ2 விவஶம் ப4ஜேத் || 17 ||

மீமாம்ஸகர்களுடைய கருத்துப்படி கர்மங்களை செய்து கொண்டிருக்கும் கர்த்தாவானவர்கள் சுதந்திரமற்றவனாக இருக்கிறார்கள்.
அடிமையாகவே இருக்கிறாற்கள். செயலின் பலனை சுக துக்கங்களை அனுபவிக்கும் போக்தாவும் சுதந்திரமற்றவனாக இருக்கிறார்கள்.
துயரத்தில்தான் அகங்காரத்தின் சக்தியின் எல்லையை அறிகின்றோம்.
எனவே இதிலிருந்து மேலானதாக இருக்கின்ற ஒரு சக்தியை நாடமுயற்சி செய்வோம்.
இவ்வாறு அடிமைப்பட்டிருக்கும் ஒருவனுக்கு எந்தப் பொருள்தான் மகிழ்ச்சியைத் தரும்.

———-

ந தே3ஹினாம் ஸுக2ம் கிஞ்சித் வித்3யதே விது3ஷாமபி |
ததா2 ச து3க2ம் மூடா4னாம் வ்ருதா2ஹங்கரணம் பரம் || 18 ||

இந்த உலகத்தில் அடைய வேண்டிய லட்சியமாக எதுவும் கிடையாது என்ற கருத்தானது இதில் சுட்டிக் காட்டப்படுகிறது.
அறிவுடன் செயல்பட்டு உலகத்தில் உள்ள செல்வங்களை அடைந்தவனாலும் சுகம் என்பது சிறீதளவு கூட காணப்படவில்லை.
அதுபோல அறிவில்லாதவர்கள் எப்பொழுதுமே துக்க;ப்படுகிறார்கள் என்பதும் இல்லை.
அதிக அறிவு, புகழ், செல்வம், சுகம் தரும் சூழ்நிலை இவைகளை அடைவதால் சுகமடையலாம் என்ற
இந்த அகங்காரம் கொள்வதால் பயனெதுவும் இல்லை.

————

யதி3 ப்ராப்திம் விகா4தம் ச ஜானந்தி ஸுக2து3:க2யோ: | S
தேSப்யத்3தா4 ந விது3ர்யோக3ம் ம்ருத்யுர்ன ப்ரப4வேத்3 யதா2 || 19

ஒருவேளை இன்பங்களை மட்டும் அனுபவிக்கும் நிலையை அடைந்தாலும் துக்கத்தை தவிர்க்கின்ற நிலையை
அடைந்தாலும் அவர்களும் கண்டிப்பாக எப்படி மரணத்தை நீக்குகின்ற உபாயத்தை அறியமாட்டார்கள்

————–

கோ ந்வர்த2: ஸுக2யத்யேனம் காமோ வா ம்ருத்யுரந்திதே |
ஆகா4தம் நீயமானஸ்ய வத்4யஸ்யேவ ந துஷ்டித3: || 20 ||

மரண தண்டனை நிறைவேற்ற அழைத்துச் செல்லப்படும் குற்றவாளிக்கு எந்தப் பொருள்தான் சுகத்தைக் கொடுக்கும்.
எந்த ஆசை நிறைவேறினாலும் முழுமனநிறைவைக் கொடுக்கமுடியும். அதேபோல மரணம் தன் பின்னாலேயே
தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் எந்தப் பொருள்தான் சுகத்தை கொடுக்கமுடியும்.

—————

ஶ்ருதம் ச த்3ருஷ்டவத்3 து3ஷ்டம் ஸ்பர்தா4ஸூயாத்யாவ்யயை: |
ப3ஹ்வந்தராயகாமத்வாத் க்ருஷிவச்சாபி நிஷ்ப2லம் || 21 ||

ஶ்ருதம் ச சாஸ்திரங்கள் மூலம் அறியப்பட்ட சொர்க்கம் போன்ற பரலோகத்திலும்
த்3ருஷ்டவத்3 நாம் பார்த்து அனுபவிக்கின்ற இந்த மனிதலோகத்தைப் போல
ஸ்பர்த்4 போட்டி
அஸூய பொறாமை
அத்ய அழிவுக்குட்பட்டது
அவ்யயை: தேய்ந்துகொண்டே போகுதல்
து3ஷ்டம் போன்ற குறையுடன் கூடியதாகத்தான் இருக்கிறது
ப3ஹ்வந்தராய காமத்வாத் பல தடைகளுக்கு அப்பால்தான் இன்பங்களை அடைய முடியும்.
நம் அறியாமையினால் இழப்புத்தான் அதிகம், கிடைக்கிறது.
சுகம் கொஞ்சம்தான் அடைகிறோம் என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
க்ருஷிவச்சாபி நிஷ்ப2லம் விவசாயி எவ்வளவு உழைத்தாலும் நல்ல பலன் கிடைக்கும் என்று உறுதியாக கூறமுடியாது.
அப்படி பலன் கிடைக்காமல் போய்விட்டால் உழைப்பு வீணாகி போய்விடுகிறது

———

இனி(22-26) பரலோக பலன்கள் அனைத்தும் நிலையற்றது என்று விளக்கப்படுகிறது.

அந்தராயைரவிஹதோ யதி3 த4ர்ம: ஸ்வனுஷ்டி2த: |
தேனாபி நிர்ஜிதம் ஸ்தா3னம் யதா2 க3ச்ச2தி தச்ச்2ருணு || 22 ||

அந்தராயை – தடைகள்
ஒருவேளை எந்த இடையூறுமில்லாமல் தர்மமானது நன்கு அனுஷ்டானம் செய்யப்பட்டு சுகம் தருகின்ற
மேலுகங்களை அடைந்தாலும், அந்த லோகத்தை அவன் எவ்விதம் அடைகிறான், எவ்வாறு இருக்கிறான் என்பதை சொல்கிறேன் கேள்.

———–

இஷ்டவேஹ தே3வதா யக்2ஞை: ஸ்வர்லோகம் யாதி யாக்3ஞிக: |
பு4ஞ்ஜீத தே3வ்வத்தத்ர போ4கா3ன் தி3வ்யான் நிஜார்ஜிதாத் || 23 ||

விதவிதமான வேள்விளைச் செய்து அதற்குரிய தேவதைகளை பூஜித்து இன்பம் கொடுக்கும் லோகங்களுக்கு செல்கிறான்.
அந்த தேவதை அடைந்ததைப் போல போகங்களை அனுபவிக்கின்றான்.

————–

ஸ்வபுண்யோபசிதே ஶுப்ரே விமான உபகீ3யதே |
க3ந்த4ர்வைர்விஹரன் மத்4யே தே3வீனாம் ஹ்ருத்3யவேஷத்3ருக் || 24 ||

ஹ்ருத்3யவேஷத்3ருக் மனதை கவர்கின்ற ஆடை அணிகலன்களுடன் கூடியவனாக இருக்கும் இவன்
ஸ்வபுண்ய உபசிதே அவனுடைய புண்ணியத்திற்கேற்ப
ஶுப்ரே விமான அழகிய விமானத்தில்
தே3வீனாம் மத்4யே விஹரன் தேவலோக பெண்களுடன் கூடிக் குலாவுகின்றான்
க3ந்த4ர்வ உபகீ3யதே கந்தர்வர்களால் புகழப்படுகிறான், புகழ்ந்துப் பாடப்படுகிறான்

———–

ஸ்த்ரீபி4: காமக3யானேன கிங்கினீஜாலமாலினா |
க்ரீட3ன் ந வேதா3த்மபாதம் ஸுராக்ரீடேஷு நிர்வ்ருத: || 25 ||

தேவலோக பெண்களுடன், விரும்பிய இடத்திற்கு அழைத்துச் செல்லக்கூடியதும், விதவிதமான மணிமாலைகளால்
அலங்கரிக்கப்பட்டிருக்கும் வாகனத்தில் அமர்ந்துகொண்டு இன்பமாக காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் போது
தேவலோக இன்பங்களில் மூழ்கியிருக்கின்ற அவன் தன்னுடைய வீழ்ச்சியை அறியமாட்டான்.
அவனிடம் இருக்கின்ற புண்ணியம் அழிந்து கொண்டிருப்பதை அறியமாட்டான்.

———-

தாவத் ப்ரமோத3தே ஸ்வர்கே3 யாவத் புண்யம் ஸமாப்யதே |
க்ஷீணபுண்ய: பதத்யர்வாக3நிச்ச2ன் காலசாலித: || 26 ||

எதுவரை புண்ணியம் இருக்கின்றதோ அதுவரை சொர்க்கத்தின் இன்பங்களை அனுபவிக்கின்றான்.
புண்ணியம் தீர்ந்தபின்னே அவன் விரும்பாவிட்டாலும்கூட காலம் அவனைக் கீழேத் தள்ளிவிடும்.

————-

யத்3யத4ர்மரத: ஸங்கா3த3ஸதாம் வாஜிதேந்த்3ரிய: |
காமாத்மா க்ருபணோ லுப்3த4: ஸ்த்ரைணோ பூதவிஹிம்ஸக: || 27 ||

பஶூனவிதி3னாSSலப்4ய ப்ரேதபூ4தக3ணான் யஜன் |
நரகாநவஸோ ஜ்ந்துர் க3த்வா யாத்யுல்ப3ணம் தம: || 28 ||

ஒருவேளை அதர்மத்தையே செய்து கொண்டிருப்பவன், அதர்மத்தை செய்துகொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்களின்
நட்பினால் தன்னுடைய புலன்களை வசப்படுத்தாதவனாக இருப்பவன், ஆசைவயப்பட்டவன்,

க்ருபணஹ தானம் செய்யாதவன் (லோபி, கஞ்சன்)
லுப்3த4ஹ பேராசைக்காரன், மற்றவர்களுடைய செல்வத்தை அபகரிக்கும் எண்ணமுடையவன்
ஸ்த்ரைணஹ உடலின்பத்திலே ஆசையுள்ளவன்
பூதவிஹிம்ஸக:ஹ எல்லா உயிரினங்களையும் வேண்டுமென்றே இம்சிப்பவன்

உயிரினங்களை பலியிட்டு செய்கின்ற யாகங்களை செய்பவன், துஷ்ட தேவதைகளை வழிபடுபவன்,
இப்படிப்பட்ட குணங்களுடன் அதர்மத்தையே செய்து கொண்டிருப்பவன் தன் வசமின்றி நரகத்தை,
அடர்ந்த இருளால் சூழப்பட்ட லோகங்களை அடைகிறான்.

————

லோகானாம் லோகபாலானாம் மத்3ப4யம் கல்பஜீவினாம் |
ப்3ரஹ்மணோSபி ப4யம் மத்தோ த்3விபரார்த4பராயுஷ: || 29 ||

பிறகு துயரத்தை பலனாக உடைய கர்மங்களை செய்து உடலின் துணைக்கொண்டு அதன் பலனாக
மீண்டும் உடலை அடைகின்றார்கள். அழிந்து போகும் இயல்புடைய உடலினால் என்ன சுகத்தை கொடுக்கமுடியும்!

—————-

கர்மாணி து3:கோ2த2ர்காணி குர்வன் தே3ஹேன தை: புன: |
தே3ஹமாப4ஜதே தத்ர கிம் ஸுக2ம் மர்த்யத4ர்மிண: || 30 ||

பூர்வமீமாம்சகர்களால் குறிக்கப்படும் மோட்சம் சம்சாரம்தான். எல்லா ஜீவராசிகளும், எல்லா தேவதைகளும்
உலகத்தை பரிபாலிக்கின்ற தேவதைகளும் ஒரு கல்பகாலம்தான் வாழ்வார்கள்.
அவர்களும் என்னிடத்தில்(பகவான் கிருஷ்ணனிடத்தில்) பயந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
பிரம்மதேவனும் என்னிடத்தில் பயம் கொண்டுதான் இருக்கிறார். இவரது ஆயுட்காலம் 100 ஆண்டுகள்.

————

கு3ணா ஸ்ருஜந்தி கர்மாணி கு3ணோSனுஸ்ருஜதே கு3ணான் |
ஜீவஸ்து கு3ணஸம்யுக்தோ பு4ங்க்தே கர்மப2லாந்யஸௌ || 31 ||

கு3ணாஹா – உடலும், மனமும் (ஸ்தூல, சூட்சும சரீரங்கள்)
ஸ்ருஜந்தி கர்மாணி – செயல்களை செய்து கொண்டிருக்கிறது.
கு3ணோ அனுஸ்ருஜதே கு3ணான் – சத்துவ, ரஜஸ், தமஸ் என்கின்ற மூன்று குணங்கள்தான் உடலையும், மனதையும் செயலில் ஈடுபட தூண்டுகின்றது.
ஜீவஸ்து கு3ணஸம்யுக்தஹ – இந்த ஜீவன் முக்குணங்களோடு கூடியிருக்கின்றன
அஸௌ கர்மப2லான் பு4ங்க்தே – அதனால் ஜீவன் கர்ம பலன்களை அனுபவிக்கின்றான்.

மோட்சம் என்பது நிலையான சுகத்தைத் தரும் ஒரு வஸ்துவாக நினைத்தால் அது தவறு.
மோட்சம் என்பது விசேஷ அனுபவத்திற்குட்பட்டதல்ல. அனுபவிப்பது எல்லாம் சம்சாரம்.
மோட்சம் என்பது சாமான்ய அனுபவம் எப்பொழுதும் மனநிறைவுடன் இருக்கின்றேன் என்ற உணர்வுடன் இருப்பதுதான் மோட்சம்.
நான் ஆத்மா, சாட்சி என்ற நினைப்புடன் இருப்பது. கர்த்தாவும் அல்ல, போக்தாவும் அல்ல.

————–

யாவத் ஸ்யாத்3 கு3ணவைஷம்யம் தாவன்நானாத்வமாத்மன: |
நானாத்வமாத்மனோ யாவத் பாரத்ந்த்ர்யம் ததை3வ ஹி || 32 ||

எப்பொழுது குணங்களின் வேற்றுமைகள் இருக்கின்றதோ அப்பொழுது விதவிதமான ஜீவர்கள் தோன்றுகிறார்கள்.
பலவிதமான ஸூட்சும சரீரங்கள் தோன்றுகின்றன. எப்பொழுது பலவிதமான ஜீவர்கள் தோன்றுகிறார்களோ
அப்போது பிறர் வசத்திற்கு அடிமையாகவே சென்று விடூகிறார்கள்.

————–

யாவத்3ஸ்யாஸ்வதந்த்ரத்வம் தாவதீ3ஶ்வரதோ ப4யம் |
ய ஏதத் ஸமுபாஸீரம்ஸ் தே முஹ்யந்தி ஶுசார்பிதா: || 33 ||

ஜீவனுக்கு எதுவரை ஒன்றை சார்ந்திருத்தல் என்ற நிலை இருக்கின்றதோ, அதாவது சுதந்திரம் இல்லாமல்
குணங்களுக்கு வசப்பட்ட நிலையில் இருக்கின்றானோ, அதுவரை இறைவனிடத்தில் பயம் இருக்கவே செய்யும்.
பகவானிடம் பயம் நீங்க பிரார்த்திப்போம். ஆனால் இந்த நிலையில் அவரிடத்திலே பயம் ஏற்படும்.
எவனொருவன் பூர்வமீமாம்ஸ மதக்கொள்கையை பின்பற்றுகிறார்களோ, குணங்களின் பிடியில் சிக்கியிருக்கிறார்களோ
அவர்கள் மோகத்தில் வீழ்ந்து விடுவார்கள். சோகத்திலும் மூழ்கடிக்கப்பட்டு விடுவார்கள்.

————-

கால ஆத்மாSSக3மோ லோக: ஸ்வபா4வோ த4ர்ம ஏவ ச |
இதி மாம் ப3ஹுதா4 ப்ராஹுர் கு3ணவ்யதிகரே ஸதி || 34 ||

குண மாற்றத்தினால் இந்த ஸ்ருஷ்டியானது இயங்கிக் கொண்டிருக்கும் போது இறைவனான என்னையே பலவாக பார்க்கின்றார்கள்.
காலமாகவும், அனைத்து ஜீவாத்மாகவும், வேத சாஸ்திரங்களாகவும், அனைத்து உலகமாகவும், ஒவ்வொரு பொருளிலிருக்கும்
பொதுவான தன்மையாகவும், சக்தியாகவும், மேலும் பாவ-புண்ணியங்களாகவும் நானே இருக்கின்றேன் என்றும் ஞானிகள் கூறுகிறார்கள்.

————-

உத்3த4வ உவாச:
கு3ணேஷு வர்தமானோSபி தே3ஹஜேஷ்வனபாவ்ருத: |
கு3ணைர்ன ப3த்3த்4யதே தே3ஹீ ப3த்3த்4யதே வா கத2ம் விபோ4 || 35 ||

உத்தவர் கேட்கிறார்:
விபோ4 பலவாக காட்சியளிக்கும் இறைவா!
கு3ணேஷு வர்தமான அபி உடலிலிருந்து கொண்டிருக்கும்போது அதிலிருந்து செயல் செய்து கொண்டிருந்த போதிலும்
அதனால் கட்டுப்படாமல், தாக்கப்படாமல், உடல்களாலும், செயல்களாலும் ஞானி எப்படி பந்தப்படாமல் இருக்கின்றான்?
மற்றவர்கள் எப்படி பந்தப்படுகிறார்கள்?

————–

கத2ம் வர்தேத விஹரேத் கைர்வா ஞாயேத லக்ஷணை: |
கிம் பு4ஞ்ஜீதோத விஸ்ருஜேச்ச2யீதஸீத யாதி || 36 ||

முக்தியடைந்தவன் நடத்தை எப்படியிருக்கும்?
ஞானி எவ்விதம் இருப்பான்? எப்படி நடந்து கொள்வான்? எந்தெந்த அடையாளங்களால் அவனை அறிந்து கொள்ள முடியும்?
எதை உட்கொள்வான்? போக்தாவாக இருக்கும்போது என்ன மனநிலையில் இருப்பான்?
கர்த்தாவாக இருக்கும்போது எவ்விதம் செயல்படுவான்? எப்படி உறங்குவான்? எப்படி அமர்ந்திருப்பான்? எப்படி, எவ்விதம் செல்வான்?

————-

ஏதத்3ச்யுத மே ப்3ரூஹி ப்ரஶ்னம் ப்ரஶ்தவிதா3ம் வா |
நித்யமுக்தோ நித்யப3த்3த4 ஏக ஏவேதி மே ப்4ரம: || 37 ||

அச்சுதா! இந்த கேள்விக்கு எனக்கு பதில் சொல்லுங்கள்.
கேட்கப்படுகின்ற கேள்விகளை சரியாக புரிந்து கொள்வதில் சிறந்தவரே!
ஒரே ஜீவன் எப்படி முக்தனாகவும், சம்சாரியாகவும் இருக்க முடியும்? இதுவே எனக்கு குழப்பமாக இருக்கிறது.

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உத்தவர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் –

March 13, 2021

தனியன்
துலா ரேவதி ஸம்பூதம் வரயோகி பதாஸ்ரிதம்
ஸர்வ வேதாந்த ஸம்பூர்ணம் அப்பாச்சார்ய மஹம் பஜே
ஐப்பசி ரேவதியில் அவதரித்தவரும் மணவாள மா முனிகளின் திருவடிகளைப் பற்றியவரும்
எல்லா வேதாந்தங்களாலும் நிறைந்தவருமான ஸ்ரீ எறும்பியப்பாவை வழிபடுகிறேன்.

தனியன்
சௌம்யஜா மாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம்
தேவராஜம் குரும் வந்தே திவ்யஜ்ஞாந ப்ரதம் ஸுபம்
அழகிய ஸ்ரீ மணவாள மா முனிகளின் திருவடித் தாமரைகளில் வண்டு போல் படிந்து ரஸாநுபவம் செய்பவரும்,
தம்மை அண்டினவர்களுக்கு உயர்ந்த ப்ரஹ்ம ஜ்ஞானத்தை அளிப்பவரும், அறிவினாலும் அநுஷ்டானத்தாலும்
சோபிப்பவருமான ஸ்ரீ தேவராஜகுரு என்னும் ஸ்ரீ எறும்பியப்பாவை வழிபடுகிறேன்.

—————————–

ஸ்ரீ ஸுவ்ம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரண அம் புஜ ஷட் பதம்
தேவ ராஜ குரு வந்தே திவ்ய ஞான பிரதம் ஸூபம் –

யோகிகளுக்குள் தலைவரான ஸ்ரீ மா முனிகளின் திருவடித் தாமரைகளில் படிந்த வண்டு
மது போன்ற திவ்யமான-அசாதாரணமான – ஞானம் அருளிய உபகாரகர் அன்றோ இவர் –

———

வரவரமுனிவர்ய பாது ரத்னம் வரதகுரும் குருமாச்ரயே குரூணாம் |
உபநிஷதுப கீதமர்த்த தத்வம் ததிஹ யதீய வசம் வதம் ஸமிந்தே || 1

வரவர முனிம் = மணவாள மாமுனிகளின்
பாது ரத்நம் = திருவடிகளுக்கு ரத்நம் போல் சிறந்த அடியார்
குரூணாம் குரு =ஆசார்யர்களுக்கு ஆசார்யராய் இருப்பவர்
உபநிஷதுபகீதம் அர்த்த தத்வம் = உபநிஷத்துகளில் ஓதப்படும் பொருளை
ததிஹ யதீய வசம் வதம் ஸமிந்தே =தம் அதீனமாக உடையவர் ஆகிய
வரதகுரும் ஆச்ரயே = வரதகுருவை வணங்குகிறேன்.

மணவாள மாமுனிகளின் திருவடிகளுக்கு ரத்னம் போல் சிறந்த அடியவர், ஆசார்யர்களுக்கு ஆசார்யராய் இருப்பவர்,
உபநிஷத்துகளில் ஓதப்படும் உண்மைப்பொருளைத் தம் அதீனமாக உடையவர் ஆன வரதகுருவை வணங்குகிறேன்.

—————

ஆகல்பமத்ர பவது ப்ரதயந் தரித்ரீம்
அஸ்மத் குருர் வரவர ப்ரவரோ முநீநாம் |
அந்தஸ்தமச் சமநம் அந்தத்ருசாம் யதீயம்
அம்லாந பல்லவ தலாருணம்அங்க்ரி யுக்மம் || 2

எந்த மணவாள மாமுனிகள் வாடாத தளிர்போல் சிவந்த இரண்டு திருவடிகள் பார்வை இழந்தவர்களுடைய
உள் இருளைப் போக்க வல்லதோ அந்த முனிவர்களின் தலைவர், எமது குருவான மாமுனிகள்
இந்த பூமியைப் ப்ரகாசப் படுத்திக்கொண்டு கல்பம் முடியும்வரை இங்கிருக்கவேண்டும்.

—————–

குணமணி நிதயே நமோ நமஸ்தே
குருகுல துர்ய நமோ நமோ நமஸ்தே |
வரவரமுநயே நமோ நமஸ்தே
யதிவர தத்வ விதே நமோ நமஸ்தே || 3

நமஸ்தே-தே நம -உமக்கு நமஸ்காரங்கள் -உனக்கே ஆட்பட்டு எனக்கு அல்லேன் -பல்லாண்டு
நமோ நமோ நமஸ்தே -ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் -பல்லாண்டு –

குண மணி நிதயே நமோ நமஸ்தே -கல்யாண குணங்களின் -பொக்கிஷம்
குருகுல துர்ய நமோ நமஸ்தே-குரு பரம்பரையில் ஸ்ரேஷ்டர்
வர வர முநயே நமோ நமஸ்தே –
யதி வர தத்த்வ விதே நமோ நமஸ்தே -உண்மையான -சரம உபாயம் அறிந்தவர் –
விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ -ஸ்ரீ யதீந்த்ர பிரவணர் அன்றோ

சிறந்த குணங்களுக்கு நிதியாக இருப்பவரின் பொருட்டு வணக்கம். ஆசார்யர்களில் சிறந்தவரே உமக்கு வணக்கம்.
மணவாள மாமுனிகளே உமக்கு வணக்கம். யதிராஜரின் திருவுள்ளம் அறிந்தவரே உமக்கு வணக்கம்.

———————-

மேலே தன்னுடைய ஆராதன பெருமாள் ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனுக்கும்
ஸ்ரீ ஸீதாப் பிராட்டிக்கும் பிராணாமங்களை அருளிச் செய்கிறார்

குரு மயி விமலம் த்ருகஞ்சலம் தே
குசல நிதாந தயா நிதே நமஸ்தே |
நிசிசர பரிபந்தி நித்ய யுக்தே
நிமிகுல மங்கல தீபிகே நமஸ்தே || 4

குசல நிதாந-குசலம் -ஸுவ்க்யம்-அதுக்கு நிதானம் -பெரிய பிராட்டியார் தானே –
இவள் புருஷகார பலமாகவே -பரம புருஷார்த்தம் கிட்டும்
இவருக்கும் மா முனிகள் திருப்பாதம் இவள் மூலமே தானே கிட்டியது –
நிமி அரச வம்சம் தானே ஜனகன் – -ஜனக குல ஸூந்தரி -ஸ்ரீ சீதாப்பிராட்டி –

க்ஷேமத்துக்குக் காரணமான கருணைக் கடலே! உமது சுத்தமான கடைக்கண் பார்வையை என்னிடம் செலுத்தும்.
உமக்கு வணக்கம். அரக்கர்களின் விரோதிகளுடன் கூடியவளே நிமிகுல தீபமானவளே! வணக்கம்.
(நிமிகுல தீபம்= சீதாப் பிராட்டி)

————————

ரவி ஸுத ஸுஹ்ருதே நமோ நமஸ்தே
ரகுகுல ரத்ந நமோ நமோ நமஸ்தே |
தச முக மகுடச் சிதோ நமஸ்தே
தசரத நந்தன ஸந்ததம் நமஸ்தே || 5

சுக்ரீவனுடைய நண்பனான உனக்கு வணக்கம். ரகுகுல ச்ரேஷ்டரான உமக்கு வணக்கம்.
பத்துத்தலை உடைய ராவணன் கிரீடத்தை அறுத்த உமக்கு வணக்கம். தசரத குமாரனான உமக்கு வணக்கம்.

—————-

யதி புனரபிதேய மத்விதீயம்
க்ருதிபிரத: பரமீக்ஷ்யதே நகிஞ்சித் |
விஜஹதி நஹிஜாது ஸூ க்தி முக்தம்
விசத சதி த்யுதி மௌக்திகம் விதக்தா: || 6

ஒப்புயர்வற்ற ஒரு பொருள் இருக்குமானால் இதற்கு மேல் முயற்சிகளால் ஒன்றும் காணப்படவில்லை என்றால்
நிர்மல சந்த்ரன் போன்ற காந்தியுள்ள முத்தை நிபுணர்கள் சிப்பியிலிருந்து வந்தது என்று ஒருபோதும் விட மாட்டார்கள்.

————————-

தேவ ப்ரஸீத மயி திவ்ய குணைக ஸிந்தோ: |
த்ருஷ்ட்யா தயாம்ருத துஹா ஸக்ருதீக்ஷிதும் மாம் ||
நைதேந க்ருத்வமஸிதேதி நசிந்தயித்வா |
நாராயணம் குருவரம் வரதம் விதந் மே || 7

தேவனே! திவ்ய குணங்களுக்குக் கடல் போன்றவரே! தயை எனும் அம்ருதத்தைப் பெருக்குகிற பார்வையால்
என்னை ஒரு தடவை பார்ப்பதற்கு தயை புரிவீராக. இந்த அஸத்தால் ஆக வேண்டியது ஒன்றுமில்லை என்று
நினைக்காமல் எனக்கு ஆசார்யர் வரத நாராயண குரு என்பதை அறிந்து அருள் புரிய வேண்டும்.

———————-

ஸ்ரீமத் ரங்கம் ஜயது பரமம் தாம தேஜோ நிதாநம் |
பூமா தஸ்மிந் பவது குசலீ கோபி பூமா ஸஹாய: ||
திவ்யம் தஸ்மை திசது பகவந் தேசிகோ தேசிகாநாம் |
காலே காலே வரவரமுநி: கல்பயந் மங்கலானி || 8-

மங்களா ஸாஸன ஸ்லோகம் இது
பூமா – உபநிஷத் சொல்லும் – அதிசய ஆனந்த குணக்கடல்
பூமா ஸஹாயா -ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமா தேவிமார்கள் உடன் –
அடியார்கள் வாழ அருளிச் செயல் வாழ குரவர் வாழ
வியாக்யானம் வாழ -அரங்க நகர் வாழ -மணவாள மா முனியே -நீர் நூற்று ஆண்டு இரும்

ஒளிக்கு நிதி போன்ற சிறந்த தலமான செல்வமுள்ள ஸ்ரீரங்க நகரம் விளங்க வேண்டும்.
அதில் ஒளிகளுக்கெல்லாம் ஒளி(யான எம்பெருமான்) க்ஷேமமாக வாழ வேண்டும்.
ஆசார்யர்களுக்கு ஆசார்யரான மணவாள மாமுனிகள் காலந்தோறும் மங்களங்களைச் செய்து கொண்டு
அவருக்கு ஓர் ஒளியை அளிக்க வேண்டும்.

——————–

தஸ்யை நித்யம் ப்ரதிசத திசே தக்ஷிணஸ்யை நமஸ்யாம் |
யஸ்யாமாவிர் பவதி ஜகதாம் ஜீவநீ ஸஹ்ய கந்யா ||
புண்யைர் யஸ்யா: க்ஷிதிஜல ஜுஷம் பூருஷம் ரங்க பூஷாம் |
பஷ்யந்தந்யோ வரவரமுநி: பாலயந் வர்த்ததே ந: || 9

எல்லா உலகத்தின் வாழ்வுக்கும் காரணமான காவிரி நதி எந்த திசையில் பெருகுகிறதோ
அந்தத் தெற்குத் திசையை நோக்கி, எந்தத் திசையின் புண்யங்களால் பூமியை அடைந்த
ரங்க நகருக்கு ஆபரணமான புருஷோத்தமனை ஸேவித்துக்கொண்டு தம்மைக் க்ருதார்த்தனாக நினைத்து
மணவாள மாமுனிகள் நம்மைக் காத்துக் கொண்டுள்ளாரோ அந்த திசையை தினமும் வணங்குங்கள்.

———————–

ஆசா பாசைரவதி விதுரை: ஸ்வைரமாக்ருஷ்யமாணம் |
தூராத் தூரம் புநரபி ந மே தூயதாமேவ சேத : ||
அந்த: க்ருத்வா வரவர முநே நித்யமங்ரி த்வயம் தே |
தாராகார ஸ்மரண ஸுபகம் நிஸ்சலீ பூய தத்ர || 10

முடிவில்லாத பல ஆசைகளால் தன் இஷ்டம் போல் வெகுதூரம் இழுக்கப்பட்ட என் மனம் மறுபடி வருந்த வேண்டாம்.
வரவர முநியே! தினந்தோறும் உமது திருவடிகளையே நினைப்பதால் புனிதமாகி அங்கேயே ஸ்திரமாக இருக்கக் கடவது.

————————

த்வம் மே பந்து: த்வமஸி ஜநக: த்வம் ஸகா தேஷிகஸ்த்வம் |
வித்யா வ்ருத்தம் ஸுக்ருதமதுலம் வித்தமப்யுத்தமம் த்வம் ||
ஆத்மாஷேஷீ பவஸி பகவந் ஆந்தர: ஷாஸிதாத்வம் |
யத்வா ஸர்வம் வரவரமுநே! யத்யத் ஆத்மாநுரூபம். || 11||

நீரே எனக்கு உறவினரும், காரணபூதரும், தோழரும், ஆசிரியரும், கல்வியும், நன்னடத்தையும், நிகரில்லாத புண்யமும்,
சிறந்த தனமும், ஆத்மா என்னும் தாரகமும், தேவரீரே அடியேனை உள் இருந்து நியமிக்கும் ஸேஷியும், ஸேஷனுக்கு ஏற்ற எல்லாமும் ஆவீர்.

———————

ஆம்நாயேஷு ஸ்ம்ருதிபிரமிதைஸ் ஸேதிஹாஸை : புராணை:
த்ருஷ்யம் யத்நை: யதிஹ விதுஷாம் தேஷிகாநாம் ப்ரஸாதாத் ||
ஸ்வைராலாபைஸ் ஸுலபயஸி தத் பஞ்சமோபாய தத்வம்
தர்ஷம் தர்ஷம் வரவரமுநே தைந்யம் அஸ்மத் விதாநாம். || 12||

ஆம்நாயே ஷு ஸ்ம்ருதி பிரமிதைஸ் ஸேத் இதிஹாஸை புராணை -ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாசம் இவற்றை
த்ருஸ்யம் யத்நைர் யதிஹ விதுஷாம் தேஸிகா நாம் ப்ரஸாதாத் –ஆச்சார்யர் உபதேசிக்க –
யத்னமும் செய்ய வேண்டும் -ஸ்ரவணம் மனனம் இத்யாதிகளால்
ஸ்வைராலா பைஸ் ஸூலபயஸி தத் பஞ்சம உபாய தத்வம் -ஆலாபங்கள் பேச்சுக்கள்
கால க்ஷேபங்களால்-பஞ்சம உபாயத்தை – சுலபம் ஆக்கி
தர்சன் தர்சம் வர வர முநே தைன்ய மஸ்மத் விதாநாம்-பரம காருண்யத்தால் –
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்று உபதேசித்து அருளினார் –

அளவற்ற ஸ்ம்ருதிகளாலும் இதிஹாசங்களுடன் கூடிய புராணங்களாலும் அறிஞர்களான ஆசார்யர்களுடைய
கருணையாலும் முயற்சிகளாலும் எது அறியப்படுகிறதோ அந்த ஐந்தாவது (பஞ்சம உபாயம்) உபாயத்தின்
உண்மையை என்னைப் போன்றவர்களின் எளிமையைப் பார்த்துப் பார்த்து ஸாதாரண பேச்சுகளால் எளிதாகப் புரியச் செய்கிறீர்!

————————

ஸத் ஸம்பந்தோ பவதி ஹித மித்யாத் மநைவோபதிஷ்டம் |
ஷிஷ்டாசாரம் த்ருடயிதுமிஹ ஸ்ரீ ஸகோ ரங்கதுர்ய: ||
த்வாரம் ப்ராப்ய ப்ரதித விபவோ தேவ தேவஸ்த்வதீயம் |
த்ருஷ்ட்வைவத்வாம் வரவரமுநே த்ருஷ்யதே பூர்ண காம: || 13||

நல்லோர் உறவு உபாயமாகிறது என்று தாம் உபதேசித்த சிஷ்டாசாரத்தை உறுதிப்படுத்த
பெரிய பிராட்டியுடன் கூடிய ஸ்ரீரங்கநாதன் ப்ரஸித்த மஹிமை உடைய தேவதேவர் உமது வாயிற்படியை அடைந்து
உம்மை ஸேவித்த பின்பே பூர்த்தி அடைந்த எண்ணம் உடையவராகக் காணப்படுகிறார்.

——————–

ஸோயம் பூய: ஸ்வயமுபகதோ தேஷிகைஸ் ஸம்ஸதம் தே|
ஷ்ருத்வா கூடம் ஷடரிபு கிராமர்த்த தத்வம் த்வ துக்தம் ||
ஆகோபாலம் ப்ரதயதி தராமத்விதீயம் த்விதீயம்|
வாசாம் தூரம் வரவரமுநே வைபவம் ஷேஷஷாயீ || 14||

அப்படிப்பட்ட இந்த அரவணைப் பள்ளியான் மறுபடி உம்மை ஆசார்யராக அடைந்து உம்மால் கூறப்பட்ட
ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளின் உண்மைப் பொருளை ரஹஸ்யத்தில் கேட்டு நிகரில்லாத
வாக்குக்கு எட்டாத உமது வைபவத்தை மூடரும் அறியப் பரவச் செய்கிறார்.

—————————

ஸித்தோபாயஸ்த்வமிஹ ஸுலபோ லம்பயந் பூருஷார்த்தாந்
அஞ்ஞாதாஷ்ச க்ரதயதி புந: யத்ததோ தேஷிகஸ்த்வம் ||
தேவீ லக்ஷ்மீர் பவஸி தயயா வத்ஸலத்வேந ஸத்வம் |
கோஸௌ யஸ்த்வாம் வரவரமுநே மந்யதேநாத்மநீநம். || 15||

ஸித்த உபாயஸ் த்வமிஹ ஸூலபோ லம்பயன் பூருஷார்த்தான் – மூன்றாகவும் இவரே –
ஸித்த உபாயமும் இவரே -அடைவிப்பவரும் இவரே ஸூலபமாக பெற்றுக் கொடுத்து அருளுபவர் –
அஞ்ஞாதாம்ஸ் ச ப்ரதயஸி புநஸ் யத்தகோ தேஸிகஸ் த்வம்-அஞ்ஞானங்களைப் போக்கும் ஆச்சார்யரும் இவரே
தேவீ லஷ்மீ பவஸி தயயா வத்சலத்வேந ச த்வம் -வாத்சல்யம் தயை மிக்கு உள்ள பிராட்டி -புருஷகாரமும் தேவரீரே
கோசவ் யஸ் த்வாம் வர வர முநே மன்யதே நாத்ம நீநம் -உயர்ந்த ஸித்த உபாயம் –
தேவரீர் என்று காட்டிக் கொடுத்து அருளினீர்

இப்போது புருஷார்த்த லாபத்தைச் செய்து கொண்டு சுலபமான ஸித்தோபாயமான நீர் அறியாதவைகளை அறிவிப்பிக்கிறீர்.
ஆகையால் நீர் ஆசார்யராகவும் இருக்கிறீர். வாத்ஸல்யத்தாலும் கருணையாலும் பிராட்டி தேவி ஆகிறீர்.
வரவர முநியே! உம்மைத் தம்முடையனாக நினைக்காதவன் யார்?

———————–

நித்யம் பத்யு: பரிசரணதோ வர்ணதோ நிர்மலத்வாத் |
வ்ருத்யா வாசாம் விபூதசரிதஸ் சாதுரீமுத்கிரந்த்யா ||
ஷேஷ ஸ்ரீமாநிதி ரகுபதேரந்தரேணாபி வாணீ: |
கோ நாமத்வாம் வரவரமுநே கோவிதோ நாவ கந்தும்.|| 16||

தினந்தோறும் சேஷியானவனுக்குப் பணிவிடை செய்வதாலும் சுத்தமான நிறம் பெற்றிருப்பதாலும்
தேவ கங்கையின் திறமையை வெளிப்படுத்துகின்ற வாக்கின் தன்மையாலும் சேஷன் ஸ்ரீமாந் என்று ரகுபதியான
ஸ்ரீராமருடைய வார்த்தையை விட்டு எவர்தான் உம்மை அறிய ஸமர்த்தன்?

————————-

ஸத்யம் ஸத்யம் புநரிதிபுரா ஸாரவித்பிர்யதுக்தம் |
ப்ரூம ஸ்ரோத்ரை: ஷ்ருணுத ஸுதியோ மத்ஸரம் வர்ஜயித்வா ||
தத்வம் விஷ்ணு: பரமநுபமம் தத்பதம் ப்ராப்யமேவம் |
தத் ஸம்ப்ராப்தௌ வரவரமுநி: தேஷிகோ தீர்க்கதர்சீ: || 17||

ஸாரத்தை அறிந்தவர்களால் முன்பு உண்மை உண்மை என்று எது கூறப்பட்டதோ சொல்லுகிறோம்
காதுகளால் கேளுங்கள் புத்திமான்களே! பகைமையை வீட்டுக் கேளுங்கள்; விஷ்ணுவே உண்மைப் பொருள்,
அவர் திருவடியே அடைய வேண்டியது, இப்படியே அதை அடைவதில் தீர்க்க தர்சியான ஆசார்யர் ஸ்ரீ மணவாள மாமுனிகள்.

————————

லக்ஷ்யம் யஸ்தே பவதி பகவந் சேதஸஸ் சக்ஷுஷோ வா |
துப்யம் த்ருஹ்யந்த்யபி குமதயோ யே வ்ருதா மத்ஸரேண ||
முக்திம் கச்சேந்முஷித கலுஷோ மோஹமுத்தூய ஸோயம் |
நாநா பூதாந் வரவரமுநே நாரகான் ப்ராப்நுயுஸ்தே. || 18||

ஹே பகவந்! உமது திருவுள்ளத்திற்கோ அல்லது பார்வைக்கோ எவன் குறியாகிறானோ அவன் பாபத்தைத் துறந்து
மோகத்தை விட்டு மோக்ஷத்தை அடைவான். உம்மை வீணாக த்வேஷத்துடன் பார்த்த கெட்ட புத்தியுடன்
த்ரோஹம் செய்பவர்கள் பலவகைப்பட்ட நரக துன்பத்தை அனுபவிப்பார்கள்.

——————–

ஸ்வப்நேபி த்வத் பத கமலயோரஞ்ஜலிம் கல்பயித்வா |
ஷ்ருத்வா யத்வா ஸக்ருதபி விபோ நாமதேயம் த்வதீயம் ||
நிஷ்ப்ரத்யூஹம் வரவரமுநே மாநவ: கர்ம பந்தாந் |
பஸ்மீ க்ருத்ய பிரவிஷதி பரம் ப்ராப்யமேவ ப்ரதேஷம்.|| 19||

உமது திருவடித் தாமரைகளில் கனவிலும் அஞ்ஜலி செய்தவன் அல்லது உமது திருநாமத்தை ஒரு தடவை கேட்டவனும்
தடையினின்றி ஹே வரவரமுநியே! கர்ம பந்தங்களைச் சாம்பலாக்கி மிகவும் அடைய வேண்டிய இடத்தையே அடைகிறான்.

——————–

யஸ்மிந் கிஞ்சித் விதி ரபி யதா வீக்ஷிதும் ந க்ஷம:ஸ்யாத் |
வக்தும் ஷக்த: க இஹ பகவந் வைபவம் தத் த்வதீயம் ||
ய: ஸர்வஜ்ஞ: ஸகலு பகவாந் ஈக்ஷதே தத் ஸமக்ரம் |
தஸ்யாபித்வம் வரவரமுநே மந்யஸே தத்வமேக: || 20||

எந்த விஷயத்தில் கொஞ்சம் ப்ரம்ஹனும் பார்ப்பதற்குத் திறமையற்றவனாகிறானோ ஹே பகவானே!
அந்த விஷயத்தில் உமது மஹிமையை யார் சொல்ல வல்லவன்?
எல்லாமறிந்த அந்த பகவானே அதை எல்லாம் பார்க்கிறான். அதற்கும் நீர் ஒருவரே தத்வமாக நிற்கிறீர்.

————————

காலோநந்த: கமல ஜனுஷோ ந வ்யதீதா: கியந்த:
திர்யங் மர்த்யஸ் த்ருண வந லதா: ப்ரஸ்தரோவாப்யபூவம்|
இத்தம் வ்யர்த்தைர் ஜநி ம்ருதி சதைரேநஸாமேவ பாத்ரம்
திஷ்ட்யா ஸோஹம் வரவரமுநே த்ருஷ்டி கம்யஸ்தவாஸம் || 21

காலமோ முடிவில்லாதது. ப்ரம்மனுக்கு எத்தனை காலம் கடக்கவில்லை. திர்யக், மனுஷ்யன், புல், காட்டில் கொடி, புதர் ,
இப்படிப் பலவகையாக இருந்தேன். இது போல் வீணான பிறப்பு இறப்புகளால் பாபத்துக்கு உறைவிடமானேன்.
அப்படிப்பட்ட நான் தெய்வாதீனமாக, வரவரமுநியே! உமது பார்வைக்கு இலக்காக ஆனேன்.

———————

முக்த்வைவத்வாம் வரவரமுநே ஸம்பதாம் மூல கந்தம் |
க்ஷேமம் கிஞ்சிந் ந கலு ஸுலபம் கேசவைகாந்த்ய பாஜாம் ||
த்ருஷ்டோ தைவாத் தவ புநரநுக்ரோசகோசைரபாங்கை: |
நிர் மர்யாத: பசுபரபிப்ருஷம் நீயதே நிர்மலத்வம் || 22

வரவர முநியே! செல்வங்களுக்கு மூல காரணமான உம்மை விட்டு, கேசவனிடத்திலேயே பக்தி செலுத்துபவர்களுக்கு
ஒரு வகை க்ஷேமமும் இல்லையன்றோ! விதி வசத்தால் உமது தயை நிறைந்த பார்வைகளால் பார்க்கப் பட்டவன்
ஒன்றும் அறியாத பசுவாயிருந்த போதிலும் மிகவும் பாபமற்றவன் ஆகிறான்.

———————-

மர்த்யங்கஞ்சந் வரவரமுநே மாந ஹீந ப்ரசம்ஸந் |
பாதௌ தஸ்ய ப்ரபதன பர: ப்ரத்யஹம் ஸேவமாந: ||
தச்சேஷத்வம் நிரயமபிய: ஷ்லாக்யமித்யேவ புங்க்தே |
ஸோயம் ப்ராப்த: கதமிவ பரம் த்வத்பதைகாந்த்யவ்ருத்திம் || 23

வரவரமுநியே! மனிதன் ஒருவனை அஹங்காரமற்ற எவன் ஒருவன் புகழ்ந்து அவனுடைய திருவடிகளில்
சரணாகதி நோக்குடன் தினந்தோறும் சேவை செய்துகொண்டு அவனுடைய அடிமையை நரகத்துக் கொப்பாக இருந்தும்
சிறந்ததாக அனுபவிக்கிறானோ அப்படிப்பட்ட நான் இதோ வந்தேன்;
எப்படியோ உம் திருவடிகளில் அடிமையையே தொழிலாகக் கொண்டேன்.

——————-

நித்யாநாம் யத் ப்ரதம கணநாம் நீயஸே ஷாஸ்த்ர முக்யை: |
க்ருத்யாSSக்ருத்யா பவஸி கமலா பர்துரேகாந்த மித்ரம் ||
தேவ:ஸ்வாமீ ஸ்வயமிஹ பவந் ஸௌம்யஜாமாத்ரு யோகீ |
போகீஷத்வத் விமுகமபிமாம் பூயஸா பஷ்யசி த்வம் || 24

எந்த நீர் சாஸ்த்ரமறிந்தவர்களால் நித்யர்களுக்குள் முதல்வராக எண்ணப் படுகிறீர்,
செய்கையாலும் உருவத்தாலும் கமலாபதியின் ரஹஸ்யத் தோழனாகிறீர் —
தேவனாகவும் உடையவனாகவும் உள்ள தாமே இங்கு வரவர முநியாகி ஹே அநந்தனே!
உம்மைப் பாராதிருந்தும் என்னை நிறையக் கடாக்ஷிக்கிறீர்.

——————-
அர்த்த ஒளதார்யாத் அபிச வசசாமஞ்சஸா ஸந்நிவேசாத் |
ஆவிர் பாஷ்பைரமல மதிபி: நித்ய மாராதநீயம் ||
ஆசாஸாநைர் வரவரமுநே நித்ய முக்தைரலப்யம் |
மர்த்யோ லப்தும் ப்ரபவதி கதம் மத்வித: ஸ்ரீமுகம் தே || 25

ஆழ்ந்த பொருளுடைமையாலும், வெகு சீக்கிரத்தில் வாக்கியங்களை அமைப்பதாலும்,
வெளித்தோன்றுகிற கண்ணீர்களை உடைய தூய புத்தி உள்ள மங்களாசாஸனம் செய்கின்றவர்களால்
தினந்தோறும் கௌரவிக்கத் தகுந்ததும்
நித்யர்களுக்கும் முக்தர்களுக்கும் கிடைக்காததுமான உமது திருமுக மண்டலத்தை என் போன்ற மனிதன் எப்படி அடைய முடியும்?

—————————

ஸாராஸார ப்ரமிதி ரஹித: ஸர்வதா ஷாஸநம் தே |
ஸத்ய ஸ்ரீமந் கபிகர க்ருதாம் மாலிகாமேவ குர்யாம் ||
நோசேதே தத் வரவரமுநே! தூர தூர: ச்ருதீநாம் ||
மௌலௌ குர்யாத் புருஷ வ்ருஷபோ மைதிலீ பாகதேயம் || 26

நன்று தீதென்றறிவற்றவனே எல்லா விதத்திலும் உமது நியமனத்தைக் குரங்குக்கை மாலையாகச் செய்பவன்.
ஸ்ரீமானே! இல்லாவிட்டால் உபநிஷத்தில் இந்த மைதிலியின் வைபவத்தை வெகு தூரத்தில் செய்பவன் புருஷர்களின் சிறந்தவன்.

———————-

லக்ஷ்யம் த்யக்த்வா யதபி விபவோ ஜாயதே ராம பாணோ |
வாணீ திவ்யா வரவரமுநே ஜாது நைதத் த்விதீயா ||
ஸோயம் ஸர்வம் மதபிலஷிதம் வர்ஷதி ஸ்ரீ முகாப்த: |
தஸ்யை நித்யம் ததிஹ பரமம் தாம கஸ்மாத் துராபம் || 27

வரவர முநியே! ஸ்ரீராம பாணமும் குறிதவறி வீணாக ஆனாலும் ஆகலாம்,
ஆனாலும் உமது வாக்கு ஒருபோதும் வீணாவதில்லை.
அப்படிப்பட்ட இந்த ஸ்ரீமுக வர்ஷம் என் இஷ்டத்தை எல்லாம் வர்ஷித்துக் கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்டவனுக்கு நித்யமான பரமபதம் ஏன் கிடைக்காமல் போகிறது?

——————

ப்ரேமஸ்தாநம் வரவரமுநே ஸந்து ஸந்த: ஷதம் தே |
துல்ய: கோ வா வரத குருணா தேஷு நாராயணேன ||
ஸாநுக்ரோஷஸ் ஸது மயி த்ருடம் ஸர்வ தோஷாஸ்பதேஸ்மிந் |
மாமேவம் தே மநஸி குருதே மத் ஸம: கோ ஹி லோகே || 28

வரவர முநியே! உமது அன்புக்குரிய பெரியோர்கள் பலர் இருக்கட்டும்.
அவர்களில் வரத நாராயண குருவுக்கு ஒப்பானவர்கள் எவர்?
அந்த வரத நாராயண குருவானவர் என்னிடம் திடமான அன்பு கொண்டவர்.
நானோ எல்லாக் குறைகளுக்கும் உறைவிடம். உமது திருவுள்ளத்தில் என்னை இவ்விதம் செய்கிறார்,
எனக்கு நிகர் இவ்வுலகில் யார் இருக்கிறார்கள்?

—————————-

பக்த்யுத்கர்ஷம் திஷதி யதி மே பாத பத்மே த்வதீயே |
தஸ்மாதஸ்மை பவதி வரதஸ்ஸார்த்த நாமா குருர்மே ||
யத்வா தஸ்மை வரவரமுநே யத்யஹம் ப்ரேமயுக்த: |
தந்யஸ்த்வம் மாம் அநு பஜஸி தத் கிந்நு மந்யே யதந்யை: || 29

உமது திருவடித் தாமரைகளில் எனக்கு பக்தியைத் தருகிற எனது வரதகுரு பொருள் செறிந்த பெயர் படைத்தவராவார்.
அல்லது, வரவர முநியே! அவர் பொருட்டு நான் அன்புடையவன் ஆனால் நீர் தந்யர் ஆகிறீர்,
என்னை அநுஸரித்தவர் ஆகிறீர். ஆகவே மற்றவர்களைப் பற்றி என்ன நினைப்பேன்!

—————————–

யத் ஸம்பந்தாத் பவதி ஸுலபம் யஸ்ய கஸ்யாபி லோகே |
முக்தைர் நித்யைரபி துரதிகம் தைவதம் முக்தி மூலம் ||
தம் த்வாமேவம் வததி வரதே ஸௌஹ்ருதம் மே யதி ஸ்யாத் |
தஸ்யைவஸ்யாத் வரவரமுநே ஸந்நிதௌ நித்ய வாஸ: || 30

இவ்வுலகில் எவன் ஒருவனுக்கும் எவருடைய ஸம்பந்தத்தால் முக்தர்களுக்கும் நித்யர்களுக்கும் அடையமுடியாத
முக்தி காரணமான தேவதை ஸுலபமாகக் கிடைக்கிறதோ அப்படிப்பட்ட உம்மை இவ்வாறு சொல்லுகிற
வரதகுரு வினிடத்தில் எனக்கு ஸ்நேஹம் இருக்குமானால் வரவரமுநியே! அவர் அருகிலேயே நித்ய வாஸம் உண்டாகட்டும்.

—————–

ஸர்வாவஸ்தா ஸத்ருச விவிதா சேஷகஸ்த்வத் ப்ரியாணாம் |
த்யக்த்வா பர்த்துஸ் ததபி பரமம் தாம தத் ப்ரீதி ஹேதோ: ||
மக்நாநக்நௌ வரவரமுநே மாத்ருசாநுந்நீநீஷன் |
மர்த்யாவாஸோ பவஸி பகவந் மங்கலம் ரங்கதாம்ந: || 31

எல்லா தசைகளிலும் தகுந்த பலவகையான கைங்கர்யத்தைச் செய்கிற வரவரமுநியே! பகவானே!
அவருக்குப் ப்ரீதி உண்டாவதற்காக அவருடைய அந்தப் பரமபதத்தையும் விட்டு (ஸம்ஸார) அக்னியில் மூழ்குகிற
என்னைப் போன்றவர்களை மீட்பதற்கு விரும்பி மனிதர்களுடன் வசிப்பவராக ஸ்ரீரங்கத்திற்கு மங்களாவஹமாக வந்திருக்கிறீர்.

——————–

ப்ரத்யூஷார்க்க த்யுதி பரிசய ஸ்மேர பத்மாபி தாம்ரம் |
பச்யேயம் தத் வரவரமுநே பாதயுக்மம் த்வதீயம் ||
பாதோ பிந்து: பரமணுரபி ஸ்பர்ச வேதீ யதீயோ |
பாவே பாவே விஷயமுஷிதாந் பாவயத்வேவ லோகாந் || 32

விடிந்த ஸூர்யன் கிரணத்தின் ஸம்பந்தத்தால் அழகிய தாமரைபோல் சிவந்த உமது இரண்டு திருவடிகளையும்
எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கக் கடவேன். அந்தத் திருவடி ஸம்பந்தம் பெற்ற நீர்த்துளியும் தனது ஸம்பந்தம் பெற்ற
உலகங்களை (மனிதர்களை) சுத்தப் படுத்துகிறது. உலகங்களால் அபஹரிக்கப்பட்ட மனிதர்களை அடிக்கடி சுத்தப் படுத்துகிறது.

———————

நித்யேலோகே நிவஸதி புந: ஸ்ரீமதி க்ஷ்மாகதாநாம்
தூரீ பாவம் ப்ரபவதி புரா துஷ்க்ருதை: துர்விபாகை: ||
ஸம்ப்ரத்யேவம் ஸகல ஸுலபோ யத்யபித்வம் தயாப்தே
மாமேவைகம் வரவர முநே மன்யஸே வர்ஜநீயம் || 33

நித்ய லோகமான பரமபதத்தில் நீர் வஸிக்கும்போது பூமியில் உள்ளவர்களுடைய பாபங்களால் அணுக முடியாதவராயிருந்தும்
இப்போது எல்லாருக்கும் ஸுலபராக இருக்கிறீர்.
கருணைக் கடலே! வரவர முநியே! என் ஒருவனையே விடாத் தகுந்தவனாக நினைக்கிறீர்.

——————-

த்வத் பாதாப்ஜ ப்ரணய விதுரோ தூரகஸ்த்வத் ப்ரியாணாம் |
த்வத் ஸம்பந்தஸ்மரண விமுகோ வீத ராகஸ் த்வதுக்தௌ ||
த்வத் கைங்கர்ய த்வத் உபஸதந த்வத் ப்ரணாமா நபிஞ்ஜோ |
தூயே தூரம் வரவரமுநே தோஷ லக்ஷைக லக்ஷ்யம் || 34

உமது திருவடித் தாமரைகளில் அன்பில்லாதவன், உமது ஸம்பந்தத்தை நினைக்காதவன்,
உமது பக்தர்களுக்கு வெகு தூரத்தில் இருப்பவன், உமது வார்த்தைகளில் ஆசையற்றவன்,
உமது கைங்கர்யம் உம்மை அநுஸரிப்பது உம்மை வணங்குவது முதலியன அறியாதவன் ஆன நான்
லக்ஷக் கணக்கான குற்றங்களுக்கிருப்பிடமாக வெகு தூரத்திலேயே வருந்துகிறேன்.

—————–

ப்ராதுர்பூத ப்ரசுர மதயோ யே பர ப்ரம்ஹஸாம்யாத் |
பச்யந்தஸ்தத் பதமநுபவம் யே புந: சுத்த ஸத்வா: ||
ஸர்வைரேதைர் வரவரமுநே சச்வதுத்திச்ய ஸேவ்யம் |
காங்க்ஷத்யேதத் கதமயமஹோ காம காம: பதாப்ஜம் || 35

மலர்ந்த புத்தியுடைய எவர்கள் பரமபதத்தைப் பரப்ரஹ்மத்துக்கு ஒப்பாகக் காண்கிறார்களோ
சுத்த ஸத்வ குணமுள்ளவர்கள் எவர்களோ அவர்கள் உமது திருவடியை வரவரமுநியே!
அடிக்கடி பூசித்து விரும்புகிறார்கள். இதென்ன ஆச்சர்யம் !

———————

ப்ராப்த: க்ஷேமம் ப்ரக்ருதி மதுரை: ப்ராகபி த்வத் கடாக்ஷை: |
ஸோயம் ஜந்து: ஸ்த்வதநுபஜநத்வத்த ஏவாப்துமிச்சந் ||
க்ரந்தத்யுச்சை: கலுஷமதிபி: ஸம்வஸந் காம காமை: |
காலக்ஷேபோ வரவரமுநே தத்கதம் யுஜ்யதே தே || 36

இயற்கையில் இனிமையான உமது கடாக்ஷங்களால் முந்தியே க்ஷேமத்தை அடைந்த இந்த பிராணி
உம்மைத் துதிப்பதை உம்மிடமிருந்தே அடைய விரும்பி உலக விஷயங்களில் பற்றுள்ள கலக்கமுள்ள
புத்தியுள்ளவர்களுடன் வசித்துக்கொண்டு கதறுகிறது.
வரவரமுநியே! உமக்குக் காலக்ஷேபம் எப்படி நடைபெறுகிறது?

————–

கோணைரக்ஷ்ண: குமநஸ மிமம் நிர்மலம் கல்பயித்வா |
ஹாதும் தூரே வரவரமுநே ஹா கதம் யுஜ்யதே தே ||
பாத: பாதும் ப்ரயதநபர: பங்கிலம் சோதயித்வா |
பங்கேமுஞ்சந் புநரிதமத: ப்ராப்நுயாதேவ கிம்வா || 37

வரவரமுநியே! தேவரீர் திருக்கண்களின் மூலையால் கெட்ட மனமுள்ள என்னைப்
பரிசுத்தப்படுத்தி விட்டுவிடுவதற்கு எப்படித் தகும்? தண்ணீர் குடிக்க முயற்சியுள்ள ஒருவன் கலங்கிய நீரை
சுத்தப் படுத்தி மறுபடி சேற்றில் விட்டு அதையே மறுபடி ஏற்றுக் கொள்வானா?

————-

கால: கிம்ஸ்விந்ந பவதி ஸமம் காங்க்ஷித: காங்க்ஷிதாநாம் |
யஸ்மிந் அஸ்மாத் அநல ஜலதேருப்லுதஸ்த்வாம் நமஸ்யந் ||
ஸிக்த: ஸ்ரீமந் வரவரமுநே சீதலை: த்வத் கடாக்ஷை:
முக்தஸ்தாபைரம்ருதமதுலம் காஹதே மோதமாந: || 38

விரும்பத் தகுந்தவைகளுக்குள் விரும்பாத தகுந்த காலம் நமக்குக் கிட்டாதா?
இந்த நெருப்புக்குக் கடலிலிருந்து மேலே கிளம்பி உம்மை வணங்கிக்கொண்டு வரவமுநியே
குளிர்ந்த உமது பார்வைகளால் நனைக்கப்பட்டு தாபங்களால் விடுபட்டவனாகி
நிகரற்ற அமுதக் கடலை சந்தோஷத்துடன் ப்ரவேசிப்பேன்.

—————–

பாரா வாரப்ல வந சதுர குஞ்ஜரோ வாநராணாம்
பத்மா பர்த்து ப்ரிய ஸஹ சர பத்ரிணா மீஸ்வரோ வா
வாயுர் பூத்வா ஸபதி யதி வா மார்க்க முல்லங்க்ய துர்க்கம்
காலே காலே வர வர முநே காமயே வீஷிதும் த்வாம்—

காற்றாகவோ
பெரிய திருவடியாகவோ
திருவடியாகவோ
இருந்தால் மா முனிகள் இருக்கும் ஸ்ரீ ரெங்கம் உடனே செல்வேனே

—————–

காமக்ரோத க்ஷுபித ஹ்ருதயா: காரணம் வர்ஜயித்வா
மர்த்யௌபம்யம்வரவரமுநே யே புநர் மந்வதே தே ||
துஷ்டம் தேஷாமபிமததயா துர்வஸந் தேசம்ருச்சந்
அந்த: ஸ்வாந்தம் கதமபி மிதோ பாவயேவம் பவந்தம் || 39

காம க்ரோதங்களால் கலங்கிய மனதை யுடையவர்கள் காரணமின்றியே வரவரமுநியே!
உம்மை மனிதர்களுக்கு ஸமமாக நினைக்கிறார்கள்.
அவர்கள் விருப்பத்திற்காகக் கெட்ட என் மனத்தில் உம்மை ச்ரமப்பட்டு நினைக்கக் கடவேன்.

———————

நாவை தத்தே நவநவ ரஸம் நாத ஸங்கீர்த்ய ந்ருத்யந் |
அந்த: கர்த்தும் வரவரமுநே நித்யமிச்சத்யயம் த்வாம் ||
அர்த்தம் நித்ரா ஹரதி திவஸஸ்யார்த்த மந்யந்ந்ருசம்ஸ
வாஸோ மூடைர் மலிநமதிபி: வாக் ப்ரவ்ருத்திம் நிருந்தே: || 40

வரவரமுநியே! நாதனே! புதிய ரஸமுள்ள இந்தத் திருநாமத்தைச் சொல்லி ஆடிக்கொண்டு
மனதிலேயே வைத்துக்கொள்ள இவன் எண்ணுகிறான். இதில் பாதி காலம் தூக்கத்தால் போகிறது.
பகலில் பாதி பாகம் வேறு வாஸத்தில் மூடமானவர்களால் வாக் ப்ரவ்ருத்தியையும் தடுக்கிறது.

—————–

அந்தர் த்யாயந் வரவரமுநே யத்யபி த்வாமஜஸ்ரம் |
விச்வம் தாபைஸ்த்ரிரபி ஹதம் வீக்ஷ்ய முஹ்யாம்யஸஹ்யம் ||
க்ஷுத்ஸம்பாத க்ஷுபித மநஸாம் கோஹி மத்யே பஹுநாம் |
ஏக ஸ்வாது ஸ்வயமநுபவந் நேதி சேத: ப்ரஸாதம் || 41

வரவரமுநியே! உம்மை எப்போதும் மனதில் த்யாநம் செய்துகொண்டு மூன்று வகையான தாபங்களால்
அடிபட்ட பொறுக்க முடியாத உலகத்தைக் கண்டு மோஹத்தை அடைகிறேன்.
பசி தாஹங்களால் கலங்கிய மனமுள்ள பலர் மத்தியில் உள்ள எவன் ஒருவன் தான்
ஸுகத்தை அநுபவித்து மனத்தெளிவைப் பெறுகிறான்?

தாபத் த்ரயத்தால் உள்ளோர் அறியும் படி
நல்லது தனி அருந்தேல் என்றபடி
மா முனிகளின் வைபவம் அருளிச் செய்யவே இந்த ஸ்துதி –

——————–

ஸத்வோதக்ரைஸ் ஸகல புவநச்லாகநீயைச் சரித்ரை: –
த்ரையந்தார்த்த ப்ரகடநபரை: ஸாரகர்ப்பைர்வசோபி: ||
லோகோத்தீர்ணம் வரவரமுநே லோக ஸாமாந்ய த்ருஷ்ட்யா |
ஜாநாநஸ்த்வாம் கதமபி ந மே ஜாயதாமக்ஷிகம்ய: || 42

ஸத்வ குணம் நிறைந்து, எல்லா உலகத்தவர்களும் புகழத்தக்க சரித்திரங்களாலும் வேதாந்தப் பொருளை
வெளிப்படுத்துவதில் நோக்கமுள்ள ஸாரமுள்ள வார்த்தைகளும் உடைய வரவரமுநியே!
உலகத்தில் ஸாமான்யமாக அறிந்து கண்களுக்குப் புலப்பட்டவராக எனக்கு ஆக வேண்டா.

————–

கல்யாணைக ப்ரவண மநஸம் கல்மஷோப ப்லுதாநாம் |
க்ஷாந்தி ஸ்தேம த்ரடிம ஸமதா சீல வாத்ஸல்ய ஸிந்தோ ||
த்வாமேவாயம் வரவரமுநே சிந்தயந்நீப்ஸதித்வாம் |
ஆர்த்தம் ஸ்ரீமந் க்ருபணமபி மாம் அர்ஹஸித்ராதுமேவ || 43

பொறுமை, உறுதி, மனோதிடம், ஸமத்வ புத்தி, நன்னடத்தை, அன்பு இவைகளுக்குக் கடல் போன்ற வரவரமுநியே!
பாபம் நிறைந்த ஜனங்களுக்கு சுபத்தையே விரும்புகின்ற திருவுள்ளத்தைப் படைத்த உம்மையே நினைத்து
விரும்பும் துக்கத்தால் பீடிக்கப்பட்ட இந்த க்ருபணனையும் ரக்ஷிக்கத் தகுந்தவராகிறீர்.

——————–

தோஷைகாந்தீ துரித ஜலதி: தேசிகோ துர்மதீநாம் |
மூடோ ஜந்து: த்ருவமயமிதி ஸ்ரீமதா மோசநீய: ||
பாதூயுக்மம் பவதநுசரை: அர்ப்பிதம் பக்தி நம்ரே |
மௌலௌ க்ருத்வா வரவரமுநே வர்த்ததாம் தத்ர தந்ய: || 44

தோஷங்கள் நிறைந்தவன், பாபக்கடல், கெட்ட புத்தி உள்ளவர்களுக்குக் குரு,
இந்தப் ப்ராணி மூடன் என்று நினைத்து தேவரீரால் விடத்தக்கவன்;
உமது பக்தர்களால் பக்தியால் வணங்கி தலையில் வைக்கப்பட்ட இரண்டு திருவடிகளை வைத்து அதனால் தன்யனானேன்.

——————–

நித்யம் நித்ரா விகம ஸமயே நிர்விஷங்கைரநேகை: –
த்வந்நாமைவ ச்ருதி ஸுமதுரம் கீயமாநம் த்வதீயை: ||
ப்ராயஸ் தேஷாம் ப்ரபதந பரோ நிர்ப்பரஸ் த்வத் ப்ரியாணாம் |
பாதாம்போஜே வரவரமுநே! பாதுமிச்சாம்யஹம் தே || 45

தினந்தோறும் தூங்கப் போகும்போதும் உம்முடையதான பல சங்கைகளால் காதுக்கு இனிமையான
உமது திரு நாமத்தையே பாடிக்கொண்டு உமது அன்பர்களான அவர்களின் ப்ரபத்தியில் நோக்கமுள்ளவனாக
நிர்ப்பரனாக நான் உமது திருவடித்தாமரைகளையே பானம் பண்ண விரும்புகிறேன்.

————————-

அந்தஸ்வாந்தம் கமபி மதுரம் மந்த்ரமாவர்த்தயந்தீ –
முத்யத்பாஷ்பஸ்திமிதநயநாமுஜ்ஜிதாசேஷவ்ருத்திம் ||
வ்யாக்யாகர்ப்பம் வரவரமுநே த்வன்முகம் வீக்ஷமாணாம் |
கோணே லீந: க்வசிதநுரஸௌ ஸம்ஸதம் தாமுபாஸ்தாம் || 46-

அந்தஸ் ஸ்வாந்தம் கமபி மதுரம் மந்த்ரம் ஆவர்த்த யந்தீம் –கால ஷேபம் கோஷ்ட்டி அனுபவம் —
ஸ்ரீ ரெங்கன் முன்னிலையில் ஈடு காலஷேபம் செய்து அருள
உள்ளே மந்த்ரம் -மந்த்ரம் சொல்பவரை ரக்ஷிக்கும் –
மதுரமாக மங்களா சாசனம் -செய்து கொண்டே இருக்கும் கோஷ்ட்டி
உத்யத் பாஷ்பஸ் திமித நயநாம் உஜ்ஜித அசேஷ வ்ருத்திம்–கண்களில் நீர் பெறுக –
ஸகல கைங்கர்யங்களும் செய்ய ஆசை கொண்டு
வ்யாக்யா கர்பம் வர வர முநே த்வன் முகம் வீக்ஷ மாணாம்-காலஷேபம் செய்து அருளும் மா முனிகள்
திரு முகம் அழகையே -சேவித்துக் கொண்டே
கோணே லீந க்வசி தநுரசவ் ஸம் சதம் தாம் உபாஸ் தாம்-சபையில் ஒரு மறைந்து என்றும்
சேவித்துக் கொண்டே இருக்கும் படி அருள வேணும்
பரிக்ஷித் இதுவே வேண்டும் என்று அருளிச் செய்த படியே இவரும் பிரார்திக்கிறார்

உள்ளத்துக்குள்ளேயே ஓர் இனிமையான மந்த்ரத்தை உருச் சொல்லிக் கொண்டு வெளிக் கிளம்புகிற
அசைவற்றுக் கிடக்கிற கண் விழிகளை உடையதாயும் மற்றெல்லாத் தொழில்களையும் விட்டு,
வரவரமுநியே! விளக்கிக் கூறுகிற உமது முகத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கிற
அந்த கோஷ்டியில் ஒரு மூலையில் இருக்க வேண்டும்.

————–

ஆபிப்ராண: சரணயுகளீமர்ப்பிதாம் த்வத் ப்ரஸாதாத் –
வாதம் வாதம் வரவரமுநே வந்தமாநேந மூர்த்நா ||
ச்ருண்வண்வாச: ச்ருதி சத சிரஸ் தத்வ சஞ்ஜீவிநீஸ்தே |
பச்யந் மூர்த்திம் பரிஷதி ஸதாம் ப்ரேக்ஷணீயோ பவேயம் || 47

வரவரமுநியே! உமது அருளால் வைக்கப்பட்ட இரண்டு திருவடிகளையும் வணங்குகிற தலையால்
அடிக்கடி சுமந்துகொண்டு, உமது பல உபநிஷத் வாக்யங்களின் உண்மைப் பொருளை விவரிக்கின்ற
வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு, உமது திருமேனியைப் பார்த்துக்கொண்டு
பெரியோர்கள் அவையில் பார்க்கத் தக்கவனாக வேணும்.

———————

காலேயஸ்மின் கமலநயனம் தேவமாலோகயிஷ்யன் –
நிர்யாஸித்வம் வரவரமுநே நித்யயுக்தைஸ்த்வதீயை : ||
அக்ரே ந்ருத்யந்நயமபி ததா காஹதாம் ஹர்ஷ ஸிந்தௌ
மஜ்ஜம் மஜ்ஜம் மதுமதந ஜூஷாம் வைபவம் யூதபாநாம் || 48

எந்த சமயத்தில் புண்டரீகாக்ஷனான எம்பெருமானை ஸேவிக்க உம்முடன் தினந்தோறும் கூடியிருக்கிற
அடியார்களுடன் நீர் புறப்படுகிறீரோ அந்த சமயம் உமக்கு எதிரில் இந்த அடியேனும் கூத்தாடிக் கொண்டு
ஆனந்தக் கடலில் அமிழ்ந்து அமிழ்ந்து மது வனத்தை அநுபவித்த வானரர்களுடைய வைபவத்தை நினைத்துப் ப்ரவேசிக்கட்டும்.

——————-

பூத்வா பச்சாத் புநரயமத வ்யோம்நி கோபாய மாநோ |
பூய: பார்ச்வத்விதய ஸுஷமா ஸாகரம் காஹமாந: ||
ஜல்பந்நுச்சை: ஜயஜய விபோ ஜீவ ஜீவேதி வாசம் |
சம்ஸந் மார்க்கம் வரவரமுநே ஸௌவிதல்லோபவேயம் || 49

பிறகு ஆகாயத்தில் க்ரஹம் போல மறுபடி பின்புறத்தில் வந்து இரண்டு பக்கங்களிலும் காந்திக் கடலில் ப்ரவேசித்து
உரத்த குரலில் ப்ரபுவே! நீ வாழ வேண்டும், வெற்றி உண்டாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு
உமது வழியில் வழிகாட்டியாய் இருக்கக் கடவேன்.

—————–

தேவீ கோதா யதிபதி சடத்வேஷிநௌ ரங்கச்ருங்கம் |
ஸேநா நாதோ விஹக வ்ருஷப: ஸ்ரீநிதிஸ் ஸிந்து கந்யா ||
பூமா நீளா குருஜந வ்ருத: பூருஷச்சேத்ய மீஷாம் |
அக்ரே நித்யம் வரவரமுநேரங்க்ரியுக்மம் ப்ரபத்யே || 50

தேவத்தன்மை குன்றாத கோதை, எம்பெருமானார், நம்மாழ்வார், ஸ்ரீரங்க விமானம், சேனை முதலியார்,
பக்ஷி ச்ரேஷ்டனான ஸ்ரீ பெரிய திருவடி, பெருமாள், பிராட்டி, ஸ்ரீதேவி பூதேவி நீளா தேவி முதலிய
ஆசார்யர்களுடன் கூடிய புருஷன், இவர்கள் எல்லார் எதிரிலும்
தினந்தோறும் உமது திருவடிகளைச் சரணாகதி அடைகிறேன்.

———–

ப்ருத்யைர் த்வித்ரை: ப்ரியஹித பரைரஞ்சிதே பத்ரபீடே |
துங்கம் தூலாஸந வரமலங்குர்வதஸ் சோபதாநம் ||
அங்க்ரிர்த்வந்த்வம் வரவரமுநேரப்ஜபத்ராபிதாம்ரம் |
மௌலௌ வக்த்ரே புஜ சிரஸி மே வக்ஷசிஸ்யாத் க்ரமேண || 51

உமது ப்ரியத்திலும் ஹிதத்திலும் நோக்கமுள்ள பரிசாரகர்கள் இருவர் மூவரால் அலங்கரிக்கப்பட்ட
பத்ர பீடத்திலுள்ள தலையணையுடன் கூடிய உயர்ந்த மெத்தையை அலங்கரித்துக் கொண்டிருக்கும்
ஸ்ரீ மணவாள மாமுனிகளின் தாமரை இதழ்போல் சிவந்த திருவடியிணை
சிரஸ்ஸிலும் முகத்திலும் தோளிலும் என் மார்பிலும் முறையே ஸ்பர்சிக்க வேணும்.

————–

அக்ரே பச்சாதுபரி பரிதோ பூதலம் பார்ச்வதோ மே |
மௌலௌ வக்த்ரே வபுஷி ஸகலே மானஸாம்போருஹேச ||
தர்ஷம் தர்ஷம் வரவரமுநே திவ்யமங்க்ரி த்வயம் தே |
மஜ்ஜந் மஜ்ஜந்நம்ருத ஜலதௌ நிஸ்தரேயம் பவாப்திம் || 52

முன்புறம், பின்புறம், மேலே, நாற்புறம், பூமி, என் பக்கங்கள், தலை, முகம், எல்லா உடல், உள்ளத் தாமரை
இவ்வெல்லா இடங்களிலும் வரவரமுநியே! உமது திவ்ய திருவடியிணையினைப் பார்த்து
அம்ருதக் கடலில் அமிழ்ந்து அமிழ்ந்து ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவேன்.

———————-

கர்மாதீநே வபுஷி குமதி: கல்பயந் நாத்ம பாவம் |
து:கே மக்ந: கிமிதி ஸுசிரம் தூயதே ஜந்துரேஷ: ||
ஸர்வம் த்யக்த்வா வரவரமுநே ஸம்ப்ரதி த்வத் ப்ரஸாதாத் –
திவ்யம் ப்ராப்தும் தவ பதயுகம் தேஹி மே ஸுப்ரபாதம் || 53

கர்ம வச்யமான இந்த உடலில் கெட்ட புத்தியுள்ள மனிதன் ஜீவ புத்தியை ஏற்படுத்திக்கொண்டு
துக்கத்தில் மூழ்கிக்கொண்டு இந்த ப்ராணி வெகு நாள்களாக வருந்துகிறான்.
வரவரமுநியே! எல்லாவற்றையும் விட்டு இப்போது உமது அநுக்ரஹத்தால் உமது திவ்யமான திருவடியிணை கிடைத்திருக்கிறது.
எனக்கு நல்லொளி என்னும் ஸுப்ரபாதத்தைக் கொடுப்பீராக!

—————–

யா யா வ்ருத்திர் மநஸி மம ஸா ஜாயதாம் ஸம்ஸ்ம்ருதிஸ்தே |
யோ யோ ஜல்பஸ் ஸ பவது விபோ நாம ஸங்கீர்த்தநம் தே ||
யா யா சேஷ்டா வபுஷி பகவந் ஸா பவேத் வந்தநம் தே |
ஸர்வம் பூயாத் வரவரமுநே ஸம்யகாராதநம் தே || 54

என் உள்ளத்தில் என்ன தொழில் உண்டாகிறதோ அது எல்லாம் உம் நினைவாகவே இருக்க வேண்டும்.
என் வாயில் என்ன பேச்சு உண்டாகிறதோ அவையெல்லாம் உமது திருநாமத்தைப் பேசுவதாகவே அமைய வேண்டும்.
என் உடலில் ஏற்படும் சேஷ்டைகள் எல்லாம் உமக்கு வந்தனமாகவே அமைய வேண்டும்.
எல்லாம் உமக்குத் த்ருப்தி அளிக்கும் திருவாராதாநம் ஆக வேண்டும்.

—————

காமாவேச: கலுஷ மனஸாம் இந்த்ரியார்த்தேஷு யோஸௌ |
பூயோ நாதே மம து சததா வர்த்ததாமேவ பூயாந் ||
பூயோப்யேவம் வரவரமுநே பூஜநேத்வத் ப்ரியாணாம் |
பூயோ பூயஸ் ததநு பஜனே பூர்ண காமோ பவேயம் || 55

பாப மனம் படைத்தவர்களுக்கு லௌகிக விஷயங்களில் எவ்வகையான ஆசை இருக்கிறதோ
அவ்வாசை நூறு மடங்காகப் பெருகி உம்மிடத்தில் உண்டாகட்டும்.
அப்படியே உமதன்பர்களைப் பூசிப்பதிலும், அவர்களை அநுவர்த்திப்பதிலும்
நிறைந்த மனம் படைத்தவனாக இருக்கக் கடவேன்.

————–

பக்ஷ்யாபக்ஷ்யே பய விரஹித: ஸர்வதோ பக்ஷயித்வா |
ஸேவ்யாஸேவ்யௌ ஸமய ரஹித: ஸேவயா தோஷயித்வா ||
க்ருத்யாக்ருத்யே கிமபி ந விதந் கர்ஹிதம் வாபி க்ருத்வா |
கர்த்தும் யுக்தே வரவரமுநே காங்க்ஷிதம் த்வத் ப்ரியாணாம் || 56

புசிக்கத் தக்கவை புசிக்கத் தகாதவை என்று பகுத்தறியாமல் பயமின்றி எல்லாவற்றையும் எல்லா இடத்திலும் புசித்தும்,
அடிமை செய்யத் தக்கவர்கள் செய்யத் தகாதவர்கள் என்கிற பேதமில்லாது எல்லாரையும் அடிமையினால் மகிழ்வித்து
வாசியறியாத நீசனுக்கு மணவாளமாமுநியே! உமதன்பர்களின் விருப்பத்தைச் செய்வது எப்படிப் பொருந்தும்?

————–

வ்ருத்திம் த்ராதும் வரவரமுநே விச்வதோ வீத ராகை: |
ப்ராப்யம் ஸத்பி: பரமிதமஸௌ நேச்சதி ப்ரஹ்ம ஸாம்யம் ||
நிர்மர்யாத: பதது நிரயே நிந்திதைரப்யனல்பை: |
லப்த்வா கிஞ்சித் த்வதநு பஜநம் த்வந் முகோல்லாஸ மூலம் || 57

வரவரமுநியே! உலகப் பற்றற்ற பெரியோர்களால் அடையத் தகுந்த ப்ரஹ்ம ஸாம்ராஜ்யத்தை இவன் விரும்புகிறதில்லை.
மர்யாதை இல்லாமல் தவறு புரிந்து அளவில்லா இழிதொழில்களால் நரகத்தில் விழட்டும் –
கொஞ்சம் உமக்குத் தொண்டு புரிந்து உமது முகத்துக்கு மகிழ்ச்சியை அளிப்பதையே விரும்புகிறேன்.

———————

நாஸௌ வாஸம் நபஸி பரமே வாஞ்சதி த்வத் ப்ரஸாதாத் |
மர்த்யா வாஸோ யதிஹ ஸுலப: கோபி லாபோ மஹீயாந் ||
கிஞ்சித் க்ருத்வா வரவரமுநே! கேவலம் த்வத் ப்ரியாணாம் |
பச்யந் ப்ரீதிம் பவதி பவதோ வீக்ஷிதாநாம் நிதாநம் || 58

இவன் உமது அருளால் பரமபதத்தில் வாஸத்தை விரும்புகிறதில்லை.
இந்த மனிதப் பிறவியே ஒரு சிறந்த லாபத்தைத் தருகிறது.
உமது பக்தர்களுக்குக் கொஞ்சம் பணிவிடை செய்து பார்த்துக்கொண்டு
உமது கடாக்ஷங்களுக்கு நிதியாக இருப்பேன்.

————————–

அஸ்மாத் பூயாந் த்வமஸி விவிதா நாத்மந: சோதயித்வா |
பத்மா பர்த்து: ப்ரதி திநமிஹ ப்ரேஷயந் ப்ராப்ருதாநி ||
தஸ்மிந் திவ்யே வரவரமுநே தாமநி ப்ரஹ்ம ஸாம்யாத் |
பாத்ரீ பூதோ பவது பகவந் நைவ கிஞ்சித் தயாயா: || 59

பிராட்டியின் கணவனான ஸ்ரீமந் நாராயணனுக்குப் பரிசாக இங்கு தினந்தோறும் பல ஜீவன்களைச் சுத்தி செய்து
எங்களை அனுப்பிக் கொண்டு நீர் மதிக்கத் தக்கவராக இருக்கிறீர்.
ஹே வரவரமுநியே! அந்தப் பரமபதத்தில் பரப்ரஹ்ம ஸமமாக இருப்பதால்
உமது கருணைக்குப் பாத்திரமாக ஒரு வஸ்துவும் ஆகிறதில்லை.

——————-

ஜப்யந்நாந்யத் கிமபி யதி மே திவ்ய நாம்நஸ்த்வதீயாத் –
நைவோபாஸ்யம் நயந ஸுலபாத் அங்க்ரி யுக்மாத்ருதே தே ||
ப்ராப்யம் கிஞ்சித் ந பவதி பரம் ப்ரேஷ்ய பாவாத்ருதே தே |
பூயாதஸ்மிந் வரவரமுநே பூதலே நித்ய வாஸ: || 60

ஹே வரவரமுநியே! உமது திருநாமத்தை யன்றி வேறு ஜபிக்கத்தக்க சொல் எனக்கில்லை.
கண்களுக்குத் தெரிந்த உமது திருவடியிணை யன்றித் த்யானம் செய்யத் தகுந்த வேறொன்று கிடையாது.
உமது அடிமையைத் தவிர வேறொன்று கதி எனக்கு இல்லை.
ஆகையால் இந்நிலவுலகிலேயே எனக்கு நித்ய வாஸம் உண்டாகட்டும்.

பூமியிலே நித்யவாஸம் செய்து -இருந்தாலும் குறை இல்லை
திவ்ய நாமம் ஜபித்துக் கொண்டே வாழ்வேன்
திருவடித் தாமரைகளையே த்யானம் செய்து கொண்டே இருப்பேன்
கைங்கர்யம் செய்து கொண்டே இருக்க வேண்டும்
முக்கரணங்களாலும் -கைங்கர்யம் செய்து கோரமான பூமியிலே இருப்பேன்

————————

மந்த்ரோ தைவம் பலமிதி மயா வாஞ்சிதம் யஸ்யபிஸ்யாத்
மத்யே வாஸோ மலிந மநஸாமேவமேவம் யதிஸ்யாத் |
யத்வா கிஞ்சித் த்வதநு பஜநம் ஸர்வதா துர்லபம் ஸ்யாத்
தேஹம் த்யக்தும் வரவரமுநே தீயதாம் நிச்சயோ மே. || 61

மந்த்ரம் தேவதை பலம் இவை என்னால் விரும்பத் தக்கவையாக இருந்தால்,
கெட்ட எண்ணமுள்ள மனிதர் மத்தியில் எனக்கு வாஸம் இருக்குமானால்,
அல்லது உமது ஸேவை எனக்கு எல்லா விதத்திலும் துர்லபமாக இருக்குமானால்
இந்த உடலை விட்டுப்போக எனக்கு நிச்சயத்தை உண்டாக்குவீராக!

கீழே சொன்னது –அழுக்கு படிந்த மனஸ்ஸால் -ஸாதுக்கள் சேர்க்கை கிட்டா விடில்
கைங்கர்யம் கிட்டா விட்டால் -இங்கே இருக்க முடியாதே
தேகத்தை போக்கி தேவரீரே அருள வேண்டும்
ஸீதா பிராட்டி -ராக்ஷஸிகள் மத்யம் இருந்து இழந்தது போல் ஆகக் கூடாதே –

———————

ஆசார்யத்வம் தததிகமிதி க்யாதம் ஆம்நாய முக்க்யை:
ஏஷ ஸ்ரீமாந் பவதி பகவாந்! ஈஸ்வரத்வம் விஹாய ||
மந்த்ரம் தாதா வரவரமுநே மந்த்ர ரத்நம் த்வதீயம்
தேவஸ்ரீமாந் வரவரமுநிர் வர்த்ததே தேசிகத்வே || 62

வேத வாக்யங்களால் ஆசார்யனாக இருப்பது ஈஶ்வரத் தன்மைக்கு மேற்பட்டது எனக் கூறப்பட்டது என்று
இந்த பகவான் ஈஶ்வரத்தன்மையை விட்டு ஹே வரவரமுநியே!
உம்மிடத்தில் மந்த்ரத்தைக் கொடுப்பவராயும்
உமது த்வயத்தையும் தேவனான ஶ்ரிய:பதியாகவும் ஆசார்யனாக இருப்பதிலும் இருக்கிறார்.

——————–

ஆத்மாநாமாத்ம ப்ரமிதி விரஹாத் பத்யுரத்யந்த தூரே
கோரே தாபத்ரிதய குஹரே கூர்ணமாநோ ஜநோயம் ||
பாதச்சாயாம் வரவரமுநே ப்ராபிதோ யத் ப்ரஸாதாத்
தஸ்மை தேயம் ததிஹ கிமிவ ஸ்ரீநிதே வித்யதே தே || 63

ஜீவன் ப்ரக்ருதி என்னும் அறிவில்லாமல் எம்பெருமானுக்கு வெகு தூரத்தில் கடுமையான
ஆத்யாத்மிகம், ஆதி தைவிகம், ஆதி பௌதிகம் என்று சொல்லக்கூடிய மூன்று வகையான தாபம் என்னும் பள்ளத்தில்
சுழன்று கொண்டிருக்கிற இந்த ஜநம் வரவரமுநியே! எவர் அநுக்ரஹத்தால் எம்பெருமான் திருவடி நிழலை அடைவிக்கப்பட்டதோ
அவருக்குக் கொடுக்க வேண்டியது (உமக்கு) இங்கு என்ன இருக்கிறது எம்பெருமானே!

—————-

விக்யாதம் யத் ரகுகுல பதேர் விச்வத: க்ஷ்மாதசேஸ்மிந்
நித்யோதக்ரம் வரவரமுநே நிஸ்ஸபத்நம் மஹத்த்வம் ||
பஶ்யந் நந்த ப்ரக்ருதி விவசோ பாலிஸோ யாத்ருசோயம்
தத்வம் தஸ்ய ப்ரகடயஸி மே தாத்ருசைரேவ யோகை: || 64

இந்நிலவுலகில் நாற்புறங்களிலும் சக்கரவர்த்தி திருமகனுடைய எந்தப் பெருமை தினந்தோறும் வளர்ந்து
ப்ரஸித்தமாக , எதிரில்லாமல் இருக்கிறதோ அதைப் பார்த்துக்கொண்டும் குருடனான இந்த பாலன்
இந்த ப்ரக்ருதி வசமாக இருப்பவனுக்கு அவருடைய உண்மைகளை அப்படிப்பட்ட யோகங்களாலேயே (எனக்கு) வெளிப்படுத்துகிறீர்.

——————–

லக்ஷ்மீ பர்த்ரு: பரம குருதாம் லக்ஷயந்தீ குரூணாம் |
பாரம்பர்ய க்ரம விவரணீ யாஹி வாணீ புராணீ ||
அர்த்தம் தஸ்யா: ப்ரதயதி சிராத் அந்யதோ யத்துராபம் |
திவ்யம் தன்மே வரவரமுநே வைபவம் தர்சயித்வா || 65

வரவரமுநியே! எந்தப் புராதன வாக்கான வேதம் குரு பரம்பரையை விவரிப்பதாகப் பிராட்டியின் கணவனுக்குப்
பரம குருவாக இருக்கும் தன்மையைக் குறிக்கிறதோ அதை வேறு ஒருவருக்கும் கிடைக்காத பொருளாக
அந்தத் திவ்யமான வைபவத்தைக் காட்டிக்கொண்டு பொருளை விளக்குகிறீர்.

லஷ்மீ பர்த்து பரம குருதாம் லக்ஷ யந்தீ குருணாம் -ரஹஸ்ய த்ரய ஞானத்தால் அறிந்து –
இது அன்றோ சரம ப்ரஹ்ம ஞானம்
பாரம்பர்ய க்ரம விவரணீ யா ஹி வாணீ புராணீ -அவிச்சின்னமான குரு பரம்பரை மூலம்
வந்த அஷ்டாதச ரஹஸ்ய அர்த்தங்கள்
அர்த்தம் தஸ்யா ப்ரதயசி சிரா தந்யதோ யத் துராபம் -இவற்றை அருளிச் செய்து அருளவே -ஸ்வாமி –
வேறே யாராலும் அருளிச் செய்ய முடியாதே
திவ்யம் தன்மே வர வர முநே வைபவம் தர்சயித்வா–வைபவம் எடுத்துச் சொல்லி
பக்குவம் படுத்தி பின்பு அன்றோ உபதேசம்
சித்த உபாயம் ஆச்சார்ய அபிமானமே என்று காட்டி அருளினார் –

———————

தத்வம் யத்தே கிமபி தபஸா தப்யதாமப்ய் ருஷீணாம் |
தூராத் தூரம் வரவரமுநே! துஷ்க்ருதை காந்திநோ மே ||
வ்யாகுர்வாண ப்ரதி பதமிதம் வ்யக்தமேவம் தயாவாந்
நாதோ நைதத் கிமிதி ஜகதி க்யாபயத் யத்விதீயம். || 66

தவத்தினால் தபிக்கப்படுகிற முனிவர்களுக்கும் வெகு தூரத்திலுள்ள தத்வம் (ஆகிய தேவரீர்) பாபத்தையே
நிரம்பப் பெற்றிருக்கும் எனக்கு அடிக்கடி தயையுடன் இவ்வாறு விவரித்துக் கொண்டு நாதனாக இருக்கிறீர்.
இது என்னவென்று இந்த உலகில் ஒருவராகவே வெளிப்படுத்துகிறீர்.

————-

காலே காலே கமலஜநுஷாம் நாஸ்தி கல்பாயுதம் கிம் |
கல்பே கல்பே ஹரிரவதரன் கல்பதே கிம் ந முக்த்யை ||
ம்ருத்வா ம்ருத்வா ததபி துரிதை ருத்பவந்தோ துரந்தை:
அத்யாபித்வாம் வரவரமுநே ஹந்த நைவாச்ரயந்தே || 67

ஹே வரவரமுநியே! அந்தந்தக் காலத்தில் ப்ரஹ்மாக்களுக்குப் பதினாயிரம் கல்பம் இல்லையா,
கல்பந்தோறும் எம்பெருமான் அவதரித்து அவர்களுக்கு முக்தி அளிக்க வல்லவராகவில்லையா?
முடிவில்லாத பாபங்களால் அவர்கள் இறந்து இறந்து பிறந்து கொண்டு இப்போதும்
தேவரீரை ஆச்ரயிப்பதில்லை. மஹா கஷ்டம்! ஆச்சர்யம்!

—————-

காரா காரே வரவரமுநே வர்த்தமானஸ் சரீரே |
தாபைரேஷத்ரிபிரபி சிரம் துஸ்தரைஸ் தப்யமாந: ||
இச்சந் போக்தும் ததபி விஷயானேவ லோக: க்ஷுதார்த்தோ |
ஹித்வைவ த்வாம் விலுடதி பஹிர்த்வாரி ப்ருத்வீ பதீநாம் || 68

ஹே வரவரமுநியே! உடல் என்னும் சிறையில் இருந்து கொண்டு தாண்ட முடியாத மூவகையான தாபங்களால்
வெகு காலமாகத் தடுக்கப்பட்டவனாக இருந்தபோதிலும் இந்த ஜனம் விஷயங்களை அநுபவிப்பதிலே ஆசை கொண்டு
பசியால் பீடிக்கப் பட்டவனாக உம்மை விட்டு அரசர்களுடைய வெளி வாயிற்படிகளில் புரளுகிறான்.

————————-

மத்யே மாம்ஸ க்ஷத ஜக ஹநம் விட் பூஜா மேவ போஜ்யம் |
தீநோ வோடும் த்ருடமிதி வபுஸ் சேஷ்டதேராத்ர்ய ஹாநி ||
பக்னே தஸ்மிந் பரிணமதிய: பாதகீ யாதநாப்யோ |
தேஹீ நித்யோ வரவரமுநே! கேன ஜிக்னாஸனீய: || 69

ஹே வரவரமுநியே! மத்தியில் மாம்ஸம் இரத்தம் இவைகளால் நிறைந்தும் அமேத்யத்தை ருசிப்பவர்களுக்கே
அனுபவிக்கத் தக்கதுமான இந்த உடலை சுமக்க திடமாக எண்ணி இந்த எளியவன் இரவும் பகலும் நடமாடுகிறான்.
அது முறிந்தவுடன் எந்தப் பாபி நரக வேதனைகளில் ப்ரவ்ருத்திக்கிறானோ அவனுக்கு
நிலையான உடலையுடைய ஜீவாத்மா எவனால் அறியத்தக்கது? ஒருவரும் அதை அறிய ஆவலுடையாரில்லை என்று பொருள்.

————————

அல்பாதல்பம் க்ஷணிகமஸக்ருத் துஷ்க்ருதான்யேவ க்ருத்வா
து:கோதக்ரம் ஸுகமபிலக்ஷந் துர்லபை ரிந்திரியார்த்தை: ||
மோஹம் க்ருத்வா வரவரமுநே! முக்திமூலம் ஶரீரம் |
மஜ்ஜத்யந்தே தமஸி மநுஜஸ் தவப்ரியஸ் த்வத் ப்ரியாணாம். 70

ஹே வரவரமுநியே! மிகவும் சிறியவையும் க்ஷணத்தில் செய்யக் கூடியவையுமான பாபங்களையே
அடிக்கடி செய்து விட்டு துக்கம் நிறைந்த ஸுகத்தை ஆசைப்பட்டு (அடைய முடியாத) இந்திரிய விஷயங்களால்
முக்திக்குக் காரணமான சரீரத்தை வீணாக்கி உமதன்பர்களுக்கு வெறுப்பை யூட்டிக் கொண்டு
அந்த தமஸ் என்னும் நரகத்தில் மூழ்குகிறான்.

———————-

பஶ்யந்நேவம் ப்ரபவதி ஜநோ நேக்ஷிதும் த்வத் ப்ரபாவம் |
ப்ராஞைருக்தம் புநரபி ஹஸந் தர்சயத்யப்யஸூயாம் ||
நஸ்யத்(யஸ்மின்) யேவம் வரவரமுநே நாதயுக்தம் ததஸ்மிந் ||
ப்ரத்யக்ஷம் யத் பரிகலயிதும் தத்வ மப்ராக்ருதம் தே. || 71

பார்த்துக் கொண்டிருக்கும் போதே உமது பெருமையை அறிய முடியவில்லை.
பெரியோர்கள் சொல்லக் கேட்டுச் சிரித்துக் கொண்டு பொறாமையைக் காட்டுகிறான்.
நாதா வரவரமுநியே இப்படி இவன் அழிகிறான். அது இவனிடத்தில் யுக்தமே.
ஏனென்றால் உமது அப்ராக்ருதமான உண்மையை இந்த்ரியங்களால் அறியப் போகாதல்லவா?

———————

ஸத்வோன்மேஷ ப்ரமுஷித மந:கல்மஷைஸ் ஸத்வ நிஷ்டை: |
ஸங்கம் த்யக்த்வா ஸகலமபிய: ஸேவ்யஸே வீத ராகை: ||
தஸ்மை துப்யம் வரவரமுநே தர்சயந் நப்யஸூயாம் |
கஸ்மை க்ருத்வா கிமிவ குமதி கல்பதாமிஷ்ட ஸித்யை: || 72

ஸத்வ குண வளர்ச்சியால் அபஹரிக்கப்பட்ட மன மலங்களையுடைய ஸத்வ நிஷ்டர்களால்,
எல்லாப் பற்றையும் விட்டு ஆசையற்றவர்களால் ஸேவிக்கப்படுகிற உமது விஷயத்தில்
பொறாமையைக் காட்டிக் கொண்டு கெட்ட புத்தியுள்ள நான் யாருக்கு இஷ்டமானதைச் செய்ய வல்லவன்?

——————–

திவ்யம் தத்தே யதிஹ க்ருபயா தேவதேவோபதிஷ்டம் |
தத்வம் பூயாத் வரவரமுநே ஸர்வ லோகோபலப்யம் ||
வ்யக்தே தஸ்மிந் விதததி பவத் த்வேஷினோயே |
த்வேஷம் த்யக்த்வா ஸபதி துரித த்வம்ஸிநீம் த்வத் ஸபர்யாம் || 73

ஹே வரவரமுநியே! எல்லா ஜனங்களாலும் அறியக்கூடிய எம்பெருமானால் க்ருபையுடன் உபதேசிக்கப்பட்ட
உமக்குத் தத்வமுண்டாக வேணும். வ்யக்தமான அந்தத் தத்வத்தில் உமது பெருமையை த்வேஷிக்கிறவர்கள்
உடனே பாபத்தைப் போக்குகின்ற உமது பூஜையை த்வேஷத்தை விட்டுச் செய்கிறார்கள்.

————–

கேசித் ஸ்வைரம்வரவரமுநே கேசவம் ஸம்ச்ரயந்தே |
தாநப்யந்யே தமபி ஸுதிய: தோஷயந்த்யாத்ம வ்ருத்யா ||
த்வத்தோ நான்யத் கிமபி ஸரணம் யஸ்ய ஸோயம் த்வதீய: |
ப்ருத்யோ நித்யம் பவதி பவத: ப்ரேயஸாம் ப்ரேம பாத்ரம் || 74

ஹே வரவரமுநியே சிலர் தாமாகவே எம்பெருமானை ஆச்ரயிக்கிறார்கள்.
அவர்களையும் எம்பெருமானையும் பிற புத்திமான்கள் தமது கர்மத்தால் மகிழ்ச்சி அடையச் செய்கிறார்கள்.
உம்மைத் தவிர வேறு ரக்ஷகர் இல்லாத எனக்கு மிக்க அன்புக்குரியவராயிருக்கிறீர்.

—————-

தீனே பூர்ணாம் பவதநுசரே தேஹி த்ருஷ்டிம் தயார்த்ராம் |
பக்த்யுத்கர்ஷம் வரவரமுநே தாத்ருசம் பாவயந்தீம் ||
யேந ஸ்ரீமந் த்ருத மஹமித: ப்ராப்ய யுஷ்மத் பதாப்ஜம் |
த்வத் விஶ்லேஷே தநு விரஹித: தத்ர லீனோ பவேயம் || 75

ஹே வரவரமுநியே உமது கருணை தோய்ந்த கடாக்ஷத்தைப் பூர்ணமாக எளியவனான
உமது பணியாளனான அடியேனிடத்தில் வைப்பீராக. அந்தக் கடாக்ஷமே உம்மிடத்தில் மேலான பக்தியைத் தரவல்லது.
அந்தக் கடாக்ஷத்தாலேயே இங்கிருந்து உமது திருவடித் தாமரையை அடைந்து
உமது பிரிவு ஏற்படும்போது சரீரமற்றவனாக அங்கேயே மறைந்தவனாவேன்.

——————

த்வத் பாதாப்ஜம் பவது பகவந் துர்லபம் துஷ்க்ருதோ மே |
வாஸோபிஸ்யாத் வரவரமுநே! தூரதஸ்த்வத் ப்ரியாணாம் ||
த்வத் வைமுக்யாத் விபல ஜநுஷோ யே புநஸ் தூர்ண மேஷாம் |
தூரீ பூத: க்வசந கஹநே பூர்ண காமோ பவேயம் || 76

மஹா பாபியான அடியேனுக்கு தேவரீர் திருவடித் தாமரை துர்லபமாகவே இருக்கட்டும்.
அடியேனுக்கு வாஸமோ உமது பக்தர்களுக்கு வெகு தூரத்திலேயே அமையட்டும்.
எவர்கள் உம்மிடத்தில் பராங் முகமாயிருந்து பிறந்த பயனை வீணாக்குகிறார்களோ அவர்களுக்கு
வெகு தூரத்தில் எங்காவது காட்டில் இருந்து கொண்டு என் விருப்பம் நிறைந்தவனாக வேணும்.

—————–

ஸிம்ஹ வ்யாக்ரௌ ஸபதி விபிநே பந்நக: பாவகோவா |
குர்யு: ப்ராணாந்தகமபி பயம் கோ விரோதஸ்ததோ மே ||
நை தே தோஷ க்ரஹண ருசயஸ் த்வத் ப்ரியைர் நிர்நிமித்தை: |
நாநா ஜல்பைர் வரவரமுநே நாசயந்த்யந்திகஸ்தாந் || 77

புலி சிங்கம் ஸர்ப்பம் நெருப்பு இவைகள் காட்டில் உடனே எனக்கு உயிருக்கு ஆபத்தைக் கொடுத்தாலும்
அவைகளிடத்தில் எனக்கு பயம் ஏது? வரவரமுநியே! குற்றங்களைக் காணும் இவர்கள் உமக்குப் ப்ரியமில்லாத,
காரணமற்ற பல வாதங்களால் அருகிலுள்ளவர்களை அழிப்பதில்லை.

———————

த்வத் ப்ருத்யாநா மநு பஜதி ய:ஸர்வதோ ப்ருத்ய க்ருத்யம் |
தத் ப்ருத்யாநாமபிலஷதி ய: தாத்ருசம் ப்ரேஷ்ய பாவம் ||
மத்ப்ருத்யோ ஸா விதிமயி ஸ சேத் ஸாநுகம்பை ரபாங்கை: |
க்ஷேமம் குர்யாத் வரவரமுநே| கிம் புன: ஶிஷ்யதே மே ||78

எல்லா விதத்திலும் எவர்கள் தேவரீரிடத்தில் அடிமைத் தொழில் புரிகிறார்களோ அவ்வடியவர்களிடத்தில்
அடிமையை எவர் விரும்புகிறார்களோ அவர் அடியேனை இவன் நமது அடியவன் என்று
தயையுடன் கடாக்ஷிப்பாரானால் அதுவே க்ஷேமகரம். அடியேனுக்கு வேறு என்ன தேவை?

——————-

க்வாஹம் க்ஷுத்ர: குலிஸ ஹ்ருதய: துர்மதிக்வாத்ம சிந்தா |
த்ரய்யந்தானாமஸுலபதாம் தத்பரம் க்வாத்ம தத்வம் ||
இத்தம் பூ தே வரவரமுநே யத் புநஸ்வாத்ம ரூபம் |
த்ரஷ்டும் தத்தத் ஸமய ஸத்ருசம் தேஹிமே புத்தி யோகம் || 79

மிகவும் அல்பனான நான் எங்கே! உறுதியான நெஞ்சும் கெட்ட புத்தியும் உள்ளவன் ஆத்ம சிந்தை எங்கே!
உபநிஷத்துகளுக்கே துர்லபமான ஆத்ம தத்வம் எங்கே! ஹே வரவரமுநியே!
நிலைமை இவ்வாறிருக்கும் போது ஸ்வாத்ம ரூபத்தை அறிவதற்கு அந்தந்த சமயத்துக்கு ஏற்றவாறு புத்தியை அளிப்பீராக.

————————

பரம பக்தி -பிரிந்தால் ஸஹியாமை –

ஸோடும் தாவத் ரகு பரிவ்ருடோ ந க்ஷமஸ்த்வத் வியோகம் |
ஸத்ய காங்க்ஷந் வரவரமுநே ஸந்நிகர்ஷம் தவைஷ: ||
ஸாயம் ப்ராதஸ் தவபத யுகம் ஸச்வ துத்திச்ச திவ்யம் |
முஞ்சந் பாஷ்பம் முகுளித கரோ வந்ததே ஹந்த மூர்த்நா || 80

ச்ரேஷ்டரான ஹே வரவரமுநியே! உமது பிரிவை ஸஹியாதவராக உடனே உமது ஸேவையை விரும்பி
ஸாயங்கால வேளையிலும் காலை வேளையிலும் உமது இரண்டு திருவடிகளையும் உத்தேசித்து
அடிக்கடி கண்ணீர் பெருக்கிக்கொண்டு கைகூப்பிய வண்ணம் சிரஸ்ஸால் வணங்குகிறார். ஆச்சர்யம்!

தனக்கு இந்த நிலைமை சக்ரவர்த்தி திரு மகன் அறிவித்தது
மா முனிகளை விட்டுப் பிரிய முடியாமல் பெருமாள் தரிக்க முடியாமல்
தலை மேல் கை கூப்பி அஞ்சலி பண்ணி இந்த நிலைமை அருளப் பிரார்திக்கிறார் இதில்

—————————

அந்தஸ்தாம் யந் ரகுபதி ரஸாவந்திகே த்வாமத்ருஷ்ட்வா |
சிந்தாக்ராந்தோ வரவரமுநே சேதஸோ விச்ரமாய ||
த்வந் நாமைவ ச்ருதி ஸுகமிதி ச்ரோது காமோ முஹுர்மாம் |
க்ருத்யைரந்யை: கிமிஹ ததிதம் கீர்த்தயேதி ப்ரவீதி || 81.

மனதிற்குள் தபித்துக் கொண்டிருக்கும் இந்த ரகுபதி அருகில் உம்மைக் காணாமல் கவலை யுற்றவராக,
உள்ளம் ஆறுதலடைய வந்து உமது திருநாமமே காதுக்கு இனிமையானது என்று கேட்க விரும்பியவராக,
அடிக்கடி வேறு வ்யாபாரங்களால் என்ன பயன்? அந்தத் திருநாமத்தையே கூறுவாயாக என்று சொல்லுகிறார்.

பிரிவால் -பெருமாள் -வருந்தி உமது திருநாமம் கேட்க ஆசைப்பட்டான்
ம்ருத் ஸஞ்சீவியான ராமரையும் உமது திரு நாமமே கேட்க ஆசைப்படுகிறான்

—————–

புங்க்தே நைவ ப்ரதமகபலே யஸ்த்வயா நோப புக்தே |
நித்ரா நைவ ஸ்ப்ருசதி ஸுஹ்ருதம் த்வாம் விநா யஸ்ய நேத்ரே ||
ஹீநோ யேந த்வமஸி ஸலிலோ க்ஷிப்த மீநோப மாந: |
கோஸௌ ஸோடும் வரவரமுநே! ராகவஸ்த்வத் வியோகம் || 82.

ஹே வரவரமுநியே! உம்மால் அநுபவிக்கப் படாத போது முதல் கவளத்தில் எவன் அநுபவிக்கிறதில்லையோ,
நண்பனான உம்மை விட்டு எவர் கண்களைத் தூக்கம் தொடுவதில்லையோ எவர் நீர் இல்லாமல்
ஜலத்திலிருந்து எடுத்துப் போடப்பட்ட மீன்போல் துடிக்கிறாரோ –
உமது பிரிவைப் பொறுக்கவல்ல இந்த ராகவன் யார்?

இளைய பெருமாளை விட்டுப் பிரியாமல் முன்பு இருந்தது போல்
தூங்காமல் உண்ணாமல் –
அக்குளத்து மீன் –
இவரது முன் அவதார லீலைகள் கைங்கர்யங்கள் எல்லாம் பட்டியல் இட்டுக் காட்டி அருளுகிறார் மேல்

—————

பத்ரம் மால்யம் ஸலில மபியத் பாணிநோ பாஹ்ருதம் தே |
மாத்ரா தத் தாதபி பஹுமதம் பத்யுரேதத் ரகூணாம் ||
சாகா கேஹம் வரவரமுநே ஸம்மதம் ஸௌரச்ருங்கம் |
பூத்வா வாஸோ மஹதபி வநம் போக பூமிஸ் த்வயா பூத் || 83

ஹே வரவரமுநியே! உமக்குக் கையால் அளிக்கப்பட்ட இலையாகிலும் புஷ்பமாகிலும் ஜலமேயாகிலும்
தாயால் அளிக்கப் பட்டதைவிட மேலாக எண்ணப்பட்டது.
இது ஸ்ரீராமனுக்கு விளையாடுகிற வீடு மாளிகையாகி பெரிய காடும் உம்முடன் வாழ போக பூமியாகிவிட்டது.

——————-

அத்வ ச்ராந்திம் ஹரஸி ஸரஸை ரார்த்ர சாகா ஸமீரை: |
பாதௌ ஸம்வாஹயஸி குருஷே பர்ணசாலாம் விசாலாம் ||
போஜ்யம் தத்வா வரவரமுநே! கல்பயந் புஷ்ப சய்யாம் |
பச்யந் தன்யோ நிசி ரகுபதிம் பாத்தி பத்நீ ஸஹாயம் || 84

ஹே வரவரமுநியே!
ஈரமான கிளைகளில் பட்டு வருகின்ற ரஸத்துடன் கூடிய காற்றால் வழி நடந்த ச்ரமத்தைப் போக்குகின்றீர்;
பாதங்களைப் பிடிக்கின்றீர்; விசாலமான பர்ணசாலையை அமைக்கின்றீர்.
உணவை அளித்து இரவில் புஷ்பப் படுக்கையை ஏற்படுத்தி தேவிகளுடனிருக்கும் ஸ்ரீ ராமனைக் கண்டு
புண்ய சாலியாக ரஸித்துக் கொண்டிருக்கிறீர்.

————————

பச்யந் நக்ரே பரிமித ஹித: ஸ்நிக்த வாக் வ்ருத்தி யோகம் |
ஸத்யச் சோக ப்ரஸமந: பரம் ஸாந்த்வயந்தம் பவந்தம் ||
ப்ராக்ஞயோ ரக்ஜியே ஸகலு பகவாந் தூயமாநோ வநாந்தே |
பஸ்சாத் கர்த்தும் வரவரமுநே ஜாநகீ விப்ரயோகம் || 85

ஹே வரவரமுநியே! சுருக்கமும், ஹிதமும், அன்பும் நிறைந்த, (வார்த்தை) தற்சமயம் சோகத்தைக் குறைக்க வல்ல
நல்வார்த்தை கூறுகிற உம்மை எதிரில் பார்த்து அந்த பகவானான ஸ்ரீராமனே
காட்டில் வருந்துபவராக இருந்தும் பிராட்டியின் பிரிவை மறைப்பதற்கு அறிஞராக ஆனார்.

——————–

ஸுக்ரீவோ ந: ஶரணமிதி ய: ஸூந்ருதம் ப்ராதுரர்த்தே |
பம்பா தீரே பவந ஜநுஷா பாஷிதம் சோபதே தே ||
காலாதீதே கபிகுல பதௌ தேவ தத்ரைவ பஶ்சாத் |
சாபம் தூந்வந் வரவரமுநே யத் பவாந் நிக்ரஹே பூத் || 86

ஹே வரவரமுநியே! தம் ப்ராதாவுக்காக எங்களுக்கு ஸுக்ரீவன் ரக்ஷகனாக வேண்டும் என்று
பம்பைக் கரையில் வாயு குமாரனான ஹநுமானுடன் வார்த்தை அழகாக இருக்கிறது.
காலம் கடந்தபின் அந்த ஸுக்ரீவனிடத்தில் அங்கேயே பிறகு வில்லை அசைத்துக்கொண்டு
அவனை அடக்குவதில் முயற்சி உள்ளவராக ஆனீர்.

———————-

யஸ்மின் ப்ரீதிம் மதபிலஷிதாம் ஆர்ய புத்ரோ விதத்தே |
யே நோ பேத: ஸ்மரதி ந பிது:ஸோS தி வீரோ கதிர்மே ||
இத்யேவம் த்வாம் ப்ரதி (ரகுபதி) ப்ரேயஸீ ஸந்திஸந்தீ |
வ்யக்தம் தேவீ வரவரமுநே தத்வமாஹ த்வதீயம் || 87

ஹே வரவரமுநியே! ஸ்ரீ ஸீதாப்பிராட்டி உம்மைப் பற்றிக் கூறுவது:
பெருமாள் எனக்குப் ப்ரியமான அன்பை எவரிடத்தில் செலுத்துவாரோ,
எவருடன் கூடிய போது தம் தந்தையையும் நினைப்பதில்லையோ, அப்படிப் பட்ட வீரரே எனக்குக் கதி ஆகிறார்–
என்று உம்மைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். வெளிப்படையான உமது விஷயமான உண்மையைக் கூறுகிறார்.

——————-

பாணைர் யஸ்ய ஜ்வலந வதநைர்வாஹிநீ வாநராணாம் |
வாத்யா வேக ப்ரமிதஜலதஸ் தோம ஸாதர்ம்ய மேதி ||
ஸோ யம் பக்நோ வரவரமுநே மேகநாதச் சரைஸ்தே
ரக்ஷோநாத: கதமிதரதா ஹான்யதே ராகவேண || 88

அக்நியை முகத்தில் வைத்துக் கொண்டுள்ள எவருடைய பாணங்களால் வாநரங்களுடைய சேனை
சுழற்காற்றின் வேகத்தால் சுழற்றப்பட்ட மேகக் கூட்டங்களின் ஸாம்யத்தைப் பெறுகிறதோ
அப்படிப்பட்ட இந்த்ரஜித் உம்மால் கொல்லப்பட்டான்.
இல்லா விட்டால் ராமனால் எப்படி ராவணன் கொல்லப்படுவான்?

—————–

ப்ருத்வீம் பித்வா புந ரபி திவம் ப்ரேயஸீ மச்னுவானாம் |
த்ருஷ்ட்வா ஸ்ரீமத் வதன கமலே தத்த த்ருஷ்டி: ப்ரஸீதந் ||
ப்ரேமோ தக்ரை: வரவரமுநே ப்ருத்ய க்ருத்யைஸ் த்வதீயை:
நீத: ப்ரீதிம் ப்ரதி திநமஸௌ சாஸி தாநை ருதாநாம். 89

ஹே வரவரமுநியே! மறுபடி பூமியைப் பிளந்து கொண்டு ஸ்வர்கத்தை அடைகின்ற காதலியைப் பார்த்துக் கொண்டு
ஒளி வீசுகின்ற முகத் தாமரையைப் பார்த்துக் கொண்டு அன்பு நிறைந்த உமது அடிமைக் கார்யங்களால்
அரக்கர்களுக்கு சிக்ஷகரான இந்த ஸ்ரீராமர் தினந்தோறும் ப்ரீதியை அடைவிக்கப் படுகிறார்.

—————–

சோதர்யேஷு த்வமஸி தயிதோ யஸ்ய ப்ருத்யுஸ் ஸுஹ்ருத்வா |
ஸோடவ்யோ பூத் த்வயி ஸஹ சரே ஜாநகீ விப்ரயோக: ||
த்யாயம் த்யாயம் வரவரமுநே! தஸ்ய தே விப்ரயோகம் |
மந்யே நித்ரா மரதி ஜநிதாம் மாநயத்யக்ரஜோயம் || 90

எவருடைய நண்பனோ பணியாளோ அந்த ராமனுக்கு ஸஹோதரர்களில் நீர் அன்புக்குரியவர் ஏனென்றால்
நீர் உடன் இருக்கும் போது பிராட்டியின் பிரிவு அவருக்குப் பொறுக்கத் தக்கதாக இருந்தது.
ஹே வரவரமுநியே! உமது பிரிவை நினைத்து நினைத்து வெறுப்பாலுண்டான நித்ரையாக
இந்த மூத்த ஸஹோதரர் கௌரவிக்கிறார்.

———————

முக்தாலோகம் முகமநுபவந் மோததே நைவ தேவ்யா: |
ஸ்நிக்தா லாபம் கபிகுலபதிம் நைவ ஸிஞ்ச்யத்யபாங்கை:||
த்வாமேவைகம் வரவரமுநே ஸோதரம் த்ரஷ்டு காமோ:|
நாதோ நைதி க்வசிதபி ரதிம் தர்சநே யூதபாநாம் || 91

அழகிய பார்வையுடன் கூடிய தேவியான பிராட்டியின் முகத்தை அநுபவித்து ஸந்தோஷிப்பதில்லை.
அன்பு நிறைந்த பேச்சாளரான ஸுக்ரீவனையும் கடாக்ஷங்களால் நனைப்பதில்லை.
ஹே வரவரமுநியே! உம்மை ஒருவரையே, ஸஹோதரனை, பார்க்க விரும்பி முதலிகள் தலைவரான
ஸ்ரீராமன் ஓரிடத்திலும் மகிழ்ச்சியைப் பெறுவதில்லை.

———————

ஏவம் தே ஸ்வயமபிலஷந் நேஷ தே ஸேஷவ்ருத்திம் |
ஜஃனே பூய: ததநு ஜகதாநந்தநோ நந்த ஸூநு: ||
தூரீ பாவம் வரவரமுநே துஸ்ஸஹம் பூர்வஜஸ்தே |
தந்யஸ் த்யக்த்வா தயது ந சிராத் சக்ஷுஸா ராகவஸ் த்வாம் || 92

இந்த மாதிரி தேவரான ஸ்ரீராமர் தாமாகவே செய்ய விரும்பி மறுபடி உலகத்துக்கு ஆனந்தத்தை
அளிக்க வல்ல நந்தகுமாரனாக ஆனார். ஹே வரவரமுநியே! பொறுக்க முடியாத இந்தப் பெருமையை
உமது தமையனான ஸ்ரீராமர் விட்டுக் கண்ணால் உம்மை மகிழ்விக்கட்டும்.

——————-

பாயம் பாயம் ப்ரணய மதுரே பாத பத்மே த்வதீயே |
பச்யேயம் தத் கிமபி மநஸா பாவயந்தம் பவந்தம் ||
காமக்ரோத ப்ரக்ருதி ரஹிதை: காங்க்ஷித த்வத் பிரஸாதை: |
ஸத்பிஸ்ஸாகம் வரவரமுநே! ஸந்ததம் வர்த்திஷீய || 93

அன்பு கனிந்த உமது திருவடித் தாமரையைப் பருகிப் பருகி, எதையோ மனத்தால் நினைத்துக் கொண்டிருக்கும்
உம்மைப் பார்க்க வேண்டும். காமத்துக்கும் கோபத்துக்கும் ப்ரக்ருதியில்லாத, வேண்டிய
உமது அருள் பெற்ற நல்லவர்களோடு எப்போதும் இருக்கவேண்டும், வரவரமுநியே!

——————

பச்யத்வேநம் ஜநகதநயா பத்மகர்பைரபாங்கை: |
ப்ராரப்தாநி ப்ரஸமயது மே பாகதேயம் ரகூணாம் ||
ஆவிர் பூயா தமல கமலோ தக்ர மக்ஷ்னோ: பதம் மே |
திவ்யம் தேஜோ வரவரமுநே ஸந்ததம் வர்த்திஷீய || 94

என்னைப் பிராட்டி குளிர்ந்த கடாக்ஷங்களால் பார்க்கவேண்டும்.
ஸ்ரீராமர் எனது ப்ராரப்த பாபங்களை ஒழிக்கட்டும். வரவரமுநியே!
எனது கண்களுக்கு உமது நிர்மலமான தாமரை போன்ற ஒளி எதிரில் எப்போதும் தோன்றுவதாக.

——————–

ராம: ஸ்ரீமாந் ரவி ஸுத ஸ கோ வர்த்ததாம் யூத பாலை: |
தேவீ தஸ்மை திசது குசலம் மைதிலீ நித்ய யோகாத் ||
ஸாநுக்ரோஶோ ஜயது ஜநயந் ஸர்வதஸ் தத் ப்ரஸாதம் |
ஸௌமித்ரிர் மே ஸகலு பகவாந் ஸௌம்யஜாமாத்ரு யோகீ || 95

ஸுக்ரீவ நண்பனான அந்த ஸ்ரீராமர் வாநர முதலிகளுடன் ஓங்கட்டும்.
நித்யம் உடனிருந்து பிராட்டி க்ஷேமத்தை அளிக்கட்டும்.
எல்லா வகையிலும் அவர் அருள் கூடிய ஸுமித்ரா புத்ரரான (உமக்கு) மணவாள மாமுனிகளுக்கு வெற்றி உண்டாகட்டும்.

———————

யஸ்மா தேதத் யதுப நிஷாதாம் அப்ரமேயம் ப்ரமேயம் |
குர்வாணஸ் தத் ஸகல ஸுலபம் கோமளைரேவ வாக்யை: ||
நீரோகஸ்த்வம் வரத குருணா நித்ய யுக்தோ தரித்ரீம் |
பாஹி ஸ்ரீமந் வரவரமுநே பத்ம யோநேர் திநாநி || 96

ஹே ஸ்ரீமானான வரவரமுநியே! எதிலிருந்து இந்த உலகம் ஏற்பட்டதோ,
எது உபநிஷத்துகளுக்கும் எட்டாத விஷயமோ அதை ம்ருதுவான வார்த்தைகளால் எல்லாருக்கும்
எளிதாக்கிக் கொண்டு நீர் ரோகமற்றவராக வரத குருவுடன் நித்யமாகச் சேர்ந்து கொண்டு
இந்த பூமியை ப்ரஹ்மா ஆயுள் உள்ளவரை பாலநம் செய்வீராக.

——————-

அபகத கதமாநைரந்திமோபாய நிஷ்டை:
அதிகத பரமார்த்தைரர்த்த காமாநபேக்ஷை: ||
நிகில ஜந ஸுஹ்ருத்பி: நிர்ஜித க்ரோத லோபை:
வரவரமுநி ப்ருத்யை ரஸ்து மே நித்ய யோக:|| 97

மதம் மானம் என்று சொல்லக்கூடிய துர்க்குணங்களற்றவர்கள்,
சரமோபாயம் என்று சொல்லக்கூடிய ஆசார்ய நிஷ்டை உள்ளவர்கள், உண்மைப் பொருள் அறிந்தவர்கள்,
அர்த்தம் காமம் இவற்றை வெறுத்தவர்கள், எல்லா ஜனங்களுக்கும் நண்பர்களாயுள்ளவர்கள், –
இவர்களுடன் எனக்கு ஸம்பந்தம் நித்யமாக இருக்க வேண்டும்.

——————-

வரவரமுநிவர்ய சிந்தா மஹம் தாம் உஷம் தாவகீம்
அவிரதமநுவர்த்த மாநா நமாநா வ மாநா நிமாந் ||
நிரவதி பத பக்தி நிஷ்டாந் அநுஷ்டா நநிஷ்டாநஹம்
ப்ரதி திந மநு பூய பூயோ ந பூயாஸ மாயா ஸ பூ: || 98

வரவரமுநியே! உமது விஷயமான சிந்தையை எப்போதும் அநுபவித்துக் கொண்டு ஓயாது
அஹங்காரம் அவமானம் இவைகளை விட்டு உமது திருவடிகளில் பக்தி செலுத்துகின்ற அநுஷ்டான நிஷ்டர்களான
இந்த பாகவதர்களை தினந்தோறும் அநுபவித்துக் கொண்டு மறுபடியும்
ச்ரமத்துக்குக் காரணம் ஆகாதவனாக ஆகக் கடவேன்.

—————-

வரவரமுநிவர்ய பாதாவுபாதாய ஸௌதாமிநீ
விலஸித விபவேஷு வித்தேஷு புத்ரேஷு முக்தேஷணா: ||
கதி ச நயதி வர்ய கோஷ்டீ பஹிஷ்டீ க்ருதஷ்டீ வநா:
விஜஹதி ஜநி ம்ருத்யு நித்யாநுவ்ருத்யாய தத்யாஹிதம் || 99

வரவரமுநியே! உமது திருவடிகளைச் சரணமாக ஏற்று, மின்னல் போல் விளங்குகிற பெருமைகளிலும்,
தனங்களிலும், புத்ரர்களிடத்திலும் ஆசையை விட்டவர்களுக்கு
எம்பெருமானாருடைய கோஷ்டியிலிருந்து கொண்டு சிலர்
பிறவி மரணம் இவை தொடர்ந்து வருவதால் ஏற்படும் பயத்தை விடுகிறார்கள்.

————————

நிரவதி நிகமாந்த வித்யா நிஷத்யாந வத்யாசயான் |
யதிபதி பத்ம பந்தாநு பந்தாநு ஸந்தாயிந: ||
வரவர முநிவர்ய ஸம்பந்த ஸம்பந்த ஸம்பந்தின: |
ப்ரதிதிநமநுபூய பூயோ ந பூயாஸமாயாஸபூ: || 100

எல்லையற்ற வேதாந்த வித்யையைக் கற்றவர்களும், குற்றமற்ற மனம் படைத்தவர்களும்,
எதிராசருடைய திருவடித் தாமரைகளில் ஸம்பந்தத்தை தினந்தோறும் நினைப்பவர்களும் (ஆன) –
ஹே வரவரமுநியே! உமது ஸம்பந்தம் பெற்றவர்களையும் தினந்தோறும் அநுபவித்துக் கொண்டு
மறுபடி ஆயாஸத்தை அடைந்தவன் ஆக மாட்டேன்.

————–

யன்மூலமாஸ்வயுஜமாஸ்யவதார மூலம் |
காந்தோ பயந்த்ரு யமிந:கருணைக ஸிந்தோ: ||
ஆஸீத ஸத்ஸுகணிதஸ்ய மமாபி ஸத்தா மூலம் |
ததேவ ஜகதப்யுதயைக மூலம் || 101

கருணைக் கடலான ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்கு ஐப்பசி மாதத்தில்
எந்த மூலம் அவதாரத் திருநக்ஷத்ரம் ஆகிறதோ –
அஸத் என்பவைகளில் கணக்கிடப்பட்ட எனக்கு ஸத்தைக்கு அதுவே காரணமாக ஆயிற்று,
அதுவே ஜகத்துக்கு க்ஷேம காரணமாகவும் ஆகிறது.

யந் மூலம் ஆஸ்வ யுஐமாஸ் யவதார மூலம் -ஐப்பசி மூலம் திரு அவதாரம்
காந்தோ பயந்த்ருய மிந கருணைக ஸிந்தோ -கருணைக் கடலாகவே அன்றோ தேவரீர்
ஆஸீத் அஸத் ஸூகணி தஸ்ய மமா அபி சத்தா -அசத்துக்களில் கடை நிலையில் உள்ள
அடியேனைக்கூட சத்தாக்கி-அருளிய திரு நக்ஷத்ரம்
மூலம் ததேவ ஜகத் அப்யுதயைக மூலம்-ஜகம் உஜ்ஜீவனத்துக்கு மூலம்
மந்த மதியில் உள்ள மானிடரை வானில் உயர்த்தவே அவதாரம்

—————

யதவதரணமூலம் முக்தி மூலம் ப்ரஜானாம் |
சடரிபு முநி த்ருஷ்டாம்நாய ஸாம்ராஜ்ய மூலம் ||
கலி கலுஷ ஸமூலோன் மூலனே மூலமேதத் |
ஸ பவது வரயோகீ ந: ஸமர்த்தார்த்த மூலம் || 102

எந்த வரவரமுநி அவதாரத் திருநக்ஷத்ரமான மூலமானது ப்ரஜைகளுடைய முக்திக்கு காரணமாகவும்,
நம்மாழ்வாருடைய திவ்ய ஸூக்தியான ஸாம்ராஜ்யத்துக்கு மூலமாகவும்
கலியுகத்தால் ஏற்பட்ட பாபத்தை வேருடன் களையக் கூடியதாகவும் இருக்கிறதோ
அப்படிப்பட்ட மணவாளமாமுனிகள் நமக்கு எல்லாப் பொருள்களுக்கும் மூலமாகிறார்.

———————-

மூலம் சடாரி முக ஸூக்தி விவேசநாயா: |
கூலம் கவேரதுஹிது: ஸமுபாகதஸ்ய ||
ஆலம்பநஸ்ய மம ஸௌம்ய வரஸ்ய ஜந்ம |
மூலம் விபாதி ஸதுலம் விதுலம் ச சித்ரம் || 103

ஆழ்வாருடைய திருமுகத்திலுதித்த வாக்குகளைப் பரிசீலிப்பதற்குக் காரணமாயும்
காவேரி நதியின் கரையை அடைந்த எனது ஆலம்பனமான ஸ்ரீ மணவாள மாமுனிகளுடைய
அவதாரமான மூல திருநக்ஷத்ரம் துலா மாதத்துடன் கூடி நிகரற்றதாக, ஆச்சர்யமாக இருக்கிறது.

———————

ஜயது யஸஸா துங்கம் ரங்கம் ஜக த்ரய மங்களம்
ஜயது ஸூ சிரம் தஸ்மிந் பூமா ரமா மணி பூஷணம்
வரத குருணா சார்த்தம் தஸ்மை ஸூபாந் யபி வர்த்தயன்
வர வர முநி ஸ்ரீ மான் ராமானுஜோ ஜயது ஷிதவ் –104-

————–

படதி சதக மேதத் ப்ரத் யஹம் ய ஸூ ஜநாந்
ஸ ஹி பவதி நிதாநம் ஸம்பதா மீப்ஸிதா நாம்
பிரசமயதி விபாகம் பாதகா நாம் குரூணாம்
ப்ரதயதி ச நிதாநம் பார மாப்தும் பவாப்தே –105-

அர்த்த அனுசந்தானம் வல்லவர்களுக்கு
பிரதம மத்யம சரம நிலைகளை இவர்களும் கிடைக்கும்
இவர்கள் கடாக்ஷத்தால் மற்றவர்களுக்கும் அருளுவார்
ஸித்த உபாய நிஷ்டர்கள் இங்கே இருக்கும் வரை கைங்கர்யம் செய்ய வேண்டியதை அருளும்
பாபங்கள் கழியும் -ஸம்ஸார கடல் கடத்தும் -ஞானம் பரப்பும் படி ஆவார்கள்

—————

அநுதிநமநவத்யை: பத்ய பந்தைரமீபி: |
வரவரமுநி தத்வம் வ்யக்த முத்கோஷயந்தம் ||
அநுபதமநுகச்சந் நப்ரமேயம் ச்ருதீநாம் |
அபிலஷித மஸேஷம் ச்ரூயதே ஸேஷசாயீ || 106-

தினந்தோறும் குற்றமற்ற இந்த ச்லோகங்களால் மணவாள மாமுனிகளுடைய உண்மையை
வெளிப்படையாகப் ப்ரகாசிப்பித்து க்கொண்டு அடி தோறும் பின் தொடர்ந்து கொண்டு
வேதங்களுடைய அப்ரமேயமான வஸ்து(வான) ஸேஷ சாயீ கேட்கப் படுகிறார்.

———————-

ஜயது யசஸா துங்கம் ரங்கம் ஜகத் த்ரய மங்களம் |
ஜயது ஸுசிரம் தஸ்மிந் பூமா ரமாமணி பூஷணம் ||
வரத குருணா ஸார்த்தம் தஸ்மை ஸுபாந்யபிவர்த்தயந் |
வரவரமுநி: ஸ்ரீமாந் ராமாநுஜோ ஜயது க்ஷிதௌ || 107

உயர்ந்த கீர்த்தியை யுடைய மூவுலகங்களுக்கு மங்களகரமான ஸ்ரீரங்க திவ்ய தேசம் ஜய சீலமாக இருக்கட்டும்.
வெகு காலமாக அங்கே பூ தேவி ஸ்ரீ தேவிகளுக்கு ஆபரணம் போன்ற பெருமாளும் ஜய சீலமாக இருக்கட்டும்.
வரத குருவுடன் அங்கே சுபங்களை வ்ருத்தி செய்து கொண்டு ஸ்ரீமானான ராமாநுஜ முநியும் மணவாள மாமுநியும் வாழட்டும்.

—————

படதி ஸததமேதத் ப்ரத்யஹம் ய: ஸுஜந்மா |
ஸஹி பவதி நிதாநம் ஸம்பதாமீப்ஸிதாநாம் ||
ப்ரஸமயதி விபாகம் பாதகாநாம் குரூணாம் |
ப்ரதயதி ச நிதாநம் பாரமாப்தும் பவாப்தே: || 108

எந்த நற் பிறவி எடுத்தவன் இந்த நூறு ச்லோகங்களையும் தினந்தோறும் படிக்கிறானோ அவனுக்கு,
இது விருப்பமான ஸம்பத்துகளுக்குக் காரணமாகிறது. பெரிய பாபங்களுடைய பரிபாக தசையைத் தணிக்கிறது.
ஸம்ஸார ஸாகரத்தின் கரையைக் கடக்க முக்ய காரணமாகத் திகழ்கிறது.

அர்த்த அனுசந்தானம் வல்லவர்களுக்கு
பிரதம மத்யம சரம நிலைகளை இவர்களும் கிடைக்கும்
இவர்கள் கடாக்ஷத்தால் மற்றவர்களுக்கும் அருளுவார்
ஸித்த உபாய நிஷ்டர்கள் இங்கே இருக்கும் வரை கைங்கர்யம் செய்ய வேண்டியதை அருளும்
பாபங்கள் கழியும் -ஸம்ஸார கடல் கடத்தும் -ஞானம் பரப்பும் படி ஆவார்கள்

————–

அநுதிந மந வத்யை பத்ய பந்தை ரமீபி
வர வர முநி தத்துவம் வியக்த முத்தோஷ யந்தம்
அநு பத மநு கச்சன் ந ப்ரமேய ஸ்ருதீ நாம்
அபி லஷிதம சேஷம் ஸ்ரூயதே சேஷ ஸாயீ –109-

தினந்தோறும் குற்றமற்ற இந்த ச்லோகங்களால் மணவாள மாமுனிகளுடைய உண்மையை
வெளிப்படையாகப் ப்ரகாசிப்பித்து க்கொண்டு அடி தோறும் பின் தொடர்ந்து கொண்டு
வேதங்களுடைய அப்ரமேயமான வஸ்து(வான) ஸேஷ சாயீ கேட்கப் படுகிறார்.

ஸ்ரீ ரெங்க நாதனே இப்பலன்களை அளித்து அருளுவான்
நமக்கு ஆசை இருந்தால் மட்டும் போதும் என்று அருளிச் செய்து நிகமிக்கிறார்

———

இதி வர வர முநி சதகம் ஸமாப்தம்

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஜீயர் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஸும்யோ பயந்த்ரு முனி பிரபத்தி —

March 13, 2021

ஸ்ரீ ஸ்வாமி உடைய திருக்குமாரர் ஸ்ரீ எம் ஐயன் ராமாநுஜனரது ஜ்யேஷ்ட திருக்குமாரர்
ஸ்வாமியே ஸூவ இச்சையால் திருப்பேரனாக திரு அவதாரம் –
இரண்டு தனியன்கள் –

ஸ்ரீ ஸுவ்ம்ய ஜாமாத்ரு முநே ஸூ பவுத்ரம்
ஸ்ரீ பாஷ்ய கார அங்கரி ஸரோஜ பக்தம்
தந் மங்களம் ஸ்தோத்ர முதாஹரத்ய
தம் ஸுவ்ம்ய ஜாமாத்ரு குரும் ப்ரபத்யே

ஸுவ்ம்யோ பயந்த்ரு முநி வர்ய பதார விந்தே
ஸம்யத் பிரபத்தி மத மங்கள மாத நோத்ய
தத் பவுத்ரம் ஆர்ய மபிராம வரம் ப்ரபத்யே
சத்வோத்தரம் ஸகல ஜீவ தயாம்பு ராஸீம் —

ஆர்ய -ஆச்சார்யர் -அபிராம வரம் -இயற் பெயர் –
நிகில ஜன ஸூஹ்ருத்துகள் -ஸ்ரீ மா முனி ப்ருத்ய சிஷ்யர்கள் போல் அன்றோ இவரும் சரம உபாய நிஷ்டர் அன்றோ –

————-

ஸ்ரீ மன் யதீந்த்ர சரண பிரவண அமலாத்மன்
தீ பக்தி சாந்தி கருணாதி குணாம்ருதாப்தே
ஸுவ்ம்யோ பயந்த்ரு முநி வர்ய ஸதாம் ஜநாநாம்
ப்ராப்யவ் த்வதீய சரணவ் சரணம் ப்ரபத்யே –1-

———–

பத்மாலயா ரமண திவ்ய பாதாப்ஜ யுக்ம
ப்ரேம அம்ருதாப்தி பரிவாஹ நிமக்ந சேத
சவும்ய யோ பயந்த்ரு முனி வர்ய ஸத் ஆஸ்ரிதநாம்
ஸேவ்யவ் த்வதீய சரணவ் சரணம் ப்ரபத்யே –2-

—————–

ஸ்ரீ மத் பராங்குச வஸோ அம்ருத பூர் அபாந
ஸம் புத்த ஸுவ்ரி சரண அநுபவ ப்ரவாஹ
ஸுவ்ம்யோ பயந்த்ரு முனி வர்ய ஜகத்திதார்ய
பவ்யவ் த்வதீய சரணவ் சரணம் ப்ரபத்யே –3-

—————

முக்தி பிரதவ் முரரி போரிவ பாத பத்மே
பக்த்யாத் யுபாய ரஹி தஸ்ய பரம் முமுஷோ
ஸுவ்ம்யோ பயந்த்ருமுனி வர்ய ஸமஸ்த லோக
சேவ்யவ் த்வதீய சரணவ் சரணம் ப்ரபத்யே –4-

————

ராமாநுஜார்ய வர தர்சன தூர்வ ஹேந்த்ர
காமாதி தோஷ குண தூரக தேஸி கேந்த்ர
ஸுவ்ம்யோ பயந்த்ரு முனி வர்ய ஸமஸ்த ஜீவ பந்தோ
த்வதீய சரணவ் சரணம் ப்ரபத்யே –5-

———–

வாநாத்ரி யோகி வர மானஸ ராஜ ஹம்ஸ
வாதூல நாத வரதார்ய வராபி வந்த்யவ்
ஸும்யோ பயந்த்ரு முனி வர்ய சரோஜா சங்க சிந்நவ்
த்வதீய சரணவ் சரணம் ப்ரபத்யே –6-

———-

ஸ்ரீ பட்ட நாத முனி வர்ய வர இஷ்ட தேவவ்
ஸ்ரீ தேவ ராஜ குரு புங்கவ பாரிஜாதவ்
ஸும்யோ பயந்த்ரு முனி வர்ய சத அந்தரங்க
சிஷ்ய த்வதீய சரணவ் சரணம் ப்ரபத்யே –7-

————–

ராமாநுஜார்ய வர வேங்கட யோகி வர்ய
ஸ்ரீ மன் நதார்த்தி ஹர ஸூரி பிராட்ய மாநவ்
ஸுவ்ம்யோ பயந்த்ருமுனி வர்ய ஸதாஸ் மதீய
பாக்யே த்வதீய சரணவ் சரணம் ப்ரபத்யே –8-

ராமாநுஜார்ய -அப்புள்ளார்-இயற் பெயர் ராமானுஜர் – -ஆர்ய -ஆச்சார்யர்
வர வேங்கட யோகி வர்ய-திருவேங்கட ராமானுஜ ஜீயர் –
மூன்று ஜீயர்களையும் இது வரை மூன்று ஸ்லோகங்களில் அருளிச் செய்கிறார்
ஸ்ரீ மன் நதார்த்தி ஹர-ப்ரணதார்த்தி ஹரர் -அப்பிள்ளை -அப்பாச்சியார் அண்ணா இவருக்கும் இதே திரு நாமம் –

—————————-

ஆம்லாந கோமல ஸூகந்தி ஸரோஜ ரம்யவ்
வார்யை நந்ய சரணைர் அநு பாவ்ய மானவ்
ஸுவ்ம்யோ பயந்த்ரு முனி வர்ய ஸதா சரண்ய நாதவ்
த்வதீய சரணவ் சரணம் ப்ரபத்யே –9-

————————

மஞ்சு ப்ரவாளம் ம்ருது லவ் மம பாபிநோ அபி
ஸம்ஸார சாகர ஸமுத்தரண ப்ரவீண
ஸுவ்ம்யோ பயந்த்ரு முனி வர்ய ஸூ ஷீல போக்ய
ஸ்வாமின் த்வதீய சரணவ் சரணம் ப்ரபத்யே –10-

————–

அஸ்மாத் குலாதிப குரூத்தம யோகி வர்ய
வாதீந்த்ர பீதர குரோர் மஹித ஆர்ய வர்ய
ஸூவ்ம்ய பயந்த்ரு முனி வர்ய பவத் க்ருபாயா
பாத்ரம் குருஷ்வ பகவன் சரணம் கதம் மாம் –11-பல ஸ்ருதி

கீழே ஏழு அஷ்ட திக் கஜங்களை அருளிச் செய்து
பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகளை இத்தால் அருளிச் செய்கிறார்
குலாதிபர் -கோமட குலம் -ஸ்ரீ கோமடத்தாழ்வான் -74 சிம்ஹாசனபதிகளில் -இருந்தவாறே மூல புருஷர்

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஜீயர் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸ்தவம் —

February 26, 2021

ஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்லோகங்கள்.
அனைத்து உலகுக்கும் தாயாரான ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஸ்ரீ ரங்கநாயகி தாயாரின்
பெருமைகளை சொல்லும் 11 ஸ்லோகங்கள்.

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம உக்தி மதீ மஹே |
யதுக்தய ஸ்த்ரயீ கண்டே யாந்தி மங்கள சூத்ர தாம் ||–தனியன் (ஸ்ரீ பராசர பட்டர் அருளியது)

“ஸ்ரீ நாராயண பரத்வமாகிய மங்கல நாண் பூண்டவள் வேத மாதா எனத் தம் ஸ்தோத்ரங்களால்
காட்டியருளிய ஸ்வாமி ஸ்ரீ கூரத்தாழ்வானுக்கு நம் வணக்கங்கள்.”

——–

ஸ்ரீ ஸ்தவம் – ஸ்லோகம் 1 ️
“ஸ்வஸ்தி ஸ்ரீர் திசதாத் அசேஷ ஜகதாம் ஸர்கோபஸர்க்க ஸ்திதி தீ:
ஸ்வர்க்கம் துர்கதிம் அபவர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வன் ஹரி:” |
“யஸ்யா வீக்ஷ்ய முகம் தத் இங்கித பராதீனோ விதத்தே சகிலம்
கிரீடேயம் கலு நான்ய தாசஸ்ய ரஸதா ஸ்யாதை கரஸ் யாத்தயா” ||

பகவான் ஹரி நாராயணன் உலகில் படைத்தல், அழித்தல் மற்றும் காத்தல் என்று எல்லாம் செய்யும்போது,
பிராட்டியின் அழகான முக குறிப்பு இணக்கத்திலேயே பகவான் இவைகளை செய்கிறான்.
இத்தகைய சக்தியுடைய, எல்லா காலங்களிலும், இடங்களிலும் அகல கில்லேன் இறையும் என்ற ‘ஸ்ரிய பதி’ பகவானுடன்
எப்போதும் சேர்ந்தே இருக்கிற விஷ்ணு பத்னியாகிய பிராட்டியே! மிகுந்த பக்தியும்,ஞானமும் அளித்து என்னை ரக்ஷிப்பாயாக!

———–

ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 2

ஹே ஸ்ரீர் தேவி சமஸ்த லோக ஜநநீம் த்வாம் ஸ்தோதுமீஹா மஹே
யுக்தாம் பாவய பாரதீம் ப்ரகுணய ப்ரேம ப்ரதாநாம் தீயம் |
பக்திம் பந்தய நந்தயாஸ்ரிதம் இமம் தாஸம் ஜனம் தாவகம்
லக்ஷ்யம் லக்ஷ்மி கடாக்ஷ வீசிவிஸ்ருதே: தே ஸ்யாம சாமீ வயம் ||

“ஹே ஸ்ரீரங்கநாயகி தாயாரே! அனைத்து உலகுக்கும் தாயானவளே! உனது பெருமைகளை புகழ்ந்து பாடுவதற்கு
வாக்கு, அன்பு கலந்த ஞானம் அருள வேணும். என்னுடைய பக்தியானது பரம பக்தியாக வளர அருள வேணும்.
உன் திருவடி தாமரையில் சரணடைந்து உனக்கு கைங்கர்யம் செய்பவனாக ஏற்றுக்கொண்டால்
நான் மிகுந்த ஆனந்தம் கொள்வேன்! உன்னுடைய கருணை மிக்க பார்வையை எங்கள் மேல் கடாக்ஷித்து அருள வேணும்”
என்று கூரத்தாழ்வான் பிரார்த்திக்கிறார்.

————-

ஸ்ரீ ஸ்தவம் – ஸ்லோகம் – 3

ஸ்தோத்ரம் நாம கிமா மநந்தி கவயோ யத் யந்யதீயான் குணாந்
அந்யத்ர த்வஸதோ சதிரோப்ய பணிதி: ஸா தர்ஹி வந்த்யா த்வயி |
ஸம்யக் ஸத்ய குணாபி வர்ணாநம் அதோ ப்ரூயு: கதம் தாத்ருசீ
வாக் வாசஸ்பதி நாபி சக்ய ரசநா த்வத் ஸத் குணார்ணோநிதௌ ||

“இருக்கிறதை இருக்கு என்று பாடுவது ஒரு வகை ஸ்தோத்ரம்..இல்லாததை இருக்கு எனபது ஏற்றி சொல்வது அடுத்த வகை.
தேவி! உன் இடத்தில் எல்லாம் உள்ளன. பல நிதி முத்துக்கள் கடலில் உள்ளது போல உயர்ந்த கல்யாண குணங்கள்
இருக்கும் போது எனது சின்ன வாக்கால் எப்படி பாட முடியும்? ஹயக்ரீவர் ஆக இருந்தாலும் முடியாது. ” என்கிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்.

பராசர பட்டர் ஆயிரம் நாக்கு கேட்டு பின்பு பாட சக்தி இல்லை என்றார்.
முடியாது என்று சொல்ல ஆயிரம் நாக்கு வேணும் என்பது போல. பெரிய பிராட்டியாரின் கல்யாண குணங்களை
பாடிக்கொண்டே இருக்கலாம், இதற்கு எல்லையே இல்லை.

————–

ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 4 –

யே வாசாம் மநஸாம் ச துர் க்ரஹதயா க்யாதா குணாஸ் தாவகா :
தாநேவ ப்ரதி ஸாம்பு ஜிஹ்வ முதிதா ஹை மாமிகா பாரதீ |
ஹாஸ்யம் தத்துந மன்மஹே ந ஹி சகோர் யேகா கிலம் சந்ரித்காம்
நாலம் பாதுமிதி ப்ரக்ருஹ்ய ரசநாம் ஆஸீத ஸத்யாம் த்ருஷி ||

“ஹே மஹாலக்ஷ்மி! உன்னுடைய கல்யாண குணங்களை என்னுடைய நாக்காலோ அல்லது மனதாலோ பாடி முடிக்க முடியாது!
பாடிக்கொண்டே இருக்கலாம், பாடுவதில் வாக்கு ஓடுகிறது. தண்ணீர் உடன் கூடிய ரசத்துடன் கூடிய நாக்கு துடிக்கிறது.

‘சகோரி’ என்னும் பறவை சந்திர கலை உருகுமா என்று கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கும்.
சந்திரனின் குளிர் கதிர்களை உணவு என்று எண்ணி குடிக்கும்,
தன்னால் முடியாது என்று தெரிந்தும் தன்னை முழுவதுமாக இதில் ஈடுபடுத்திக் கொள்கிறது.
இதேபோல், நானும் என் முயற்சியை விடாது, உன்னுடைய கல்யாண குணங்கள் அனைத்தையும் பாடி
போற்றிக்கொண்டே இருப்பேன்” என்று இந்த ஸ்லோகத்தில் பாடுகிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்.

———–

ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 5 –

க்ஷோதீயா நபி துஷ்ட புத்திரபி நிஸ் ஸ்நேஹோப்ய நீஹோபி தே
கீர்த்திம் தேவி லிஹன்நஹம் ந ச பிபேம் யஜ்ஞோ ந ஜிஹ்ரேமி ச |
துஷ்யேத் ஸாதுந தாவதா ந ஹிஸுனா லீடாபி பாகீரதீ
துஷ்யேச்ச்வாபி ந லஜ்ஜதே ந ச பிபேத் யார்திஸ்து ஶாம்யேச்சுந: ||

“ஹே மஹாலக்ஷ்மி! உன்னை போற்றிப் பாடுவதற்கு எனக்கு அறிவு இல்லை, அனுஷ்டானமும் இல்லை.
இந்த வரம்புகள் இருந்த போதிலும், என் வாக்கினால் உன்னை பாடிப் போற்றுவதால்
உன்னுடைய புனிதத்துவம் குறைந்து விடுவதில்லை யன்றோ.

நாய் தாகத்தால் கங்கையில் தண்ணீர் குடித்தால் கங்கைக்கும் தோஷம் இல்லை ..அதற்கும் தாகம் தீரும்..
அது போலவே நான் உன்னை பாட முற்படுவது. ராவணனையும் திருத்த முயன்ற தேவியே!
அடியேன் உன்னை பாட முற்பட்டால் அதை ஏற்க மாட்டாயா? லங்கையிலிருந்த ராக்ஷசிகள் சரணம் என்று சொல்லாமலே
அவர்களை ரக்ஷித்த பெருமையுடையவள் நீ அன்றோ! ” என்று இந்த ஸ்லோகத்தில் ஸ்ரீ கூரத்தாழ்வான் பாடுகிறார்.

————-

ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 6 –

முதல் ஐந்து ஸ்லோகத்தில் ஸ்ரீ கூரேஸர், தாம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை புகழ்ந்து பாடுவதற்கு
தகுதி யற்ற தன்மையை சொல்லுகிறார்.
ஆறாவது ஸ்லோகத்திலிருந்துதான் ‘ஸ்தோத்ர ஆரம்பம்’.

ஐஸ்வர்யம் மஹதேவவா அல்பமதவா த்ருஶ்யேத பும்ஸாம் ஹி யத்
தல்லக்ஷ்ம்யா: ஸமுதீக்ஷணாத் தவ யதஸ் ஸார்வத்ரிகம் வர்ததே |
தேநைதேந ந விஸ்மயே மஹி ஜகந்நாதோபி நாராயண:
தந்யம் மந்யத ஈக்ஷணாத் தவ யதஸ் ஸ்வாத்மாந மாத்மேஶ்வர: ||

ஹே ரங்கநாயகி! செல்வம் இரண்டு வகையானது என்று கூறப்படுகிறது. ஒன்று, பூமியில் அனுபவிப்பது.
மற்றொன்று ஸ்ரீ வைகுந்தத்தில் முக்தியடைந்தவர்கள் மற்றும் நித்திய சூரிகள் ஆகியோர் அனுபவிப்பது.
இந்த இரு வகையான செல்வங்களும் அவர்கள் மீது விழுந்த உம்முடைய கடாக்ஷத்தின் விளைவாக அன்றோ கிடைக்கப் பெற்றன!

‘பெரியதோ, சிறியதோ, லக்ஷ்மி கடாக்ஷத்தால் கிடைக்கப் பெற்றது’ என்கிற கூற்று கேட்டு எனக்கு ஆச்சர்யம் இல்லை.
ஆத்மேச்வரனாக, அதாவது தனக்கு ஈச்வரன் அற்றவனான, அந்த ஜகந் நாதன் உம்முடைய கடாக்ஷம் கிட்டி
தன்யனாக எண்ணுகிறான்” என இந்த ஸ்லோகத்தில் பாடுகிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்.

வாமன அவதாரத்தில் எம்பெருமான், பக்த ப்ரகலாதனின் பேரன் மகாபலியிடம் மூன்றடி மண் தானமாக கேட்கும்போது
தன்னுடைய மார்பை வஸ்திரத்தால் மூடிக்கொண்டு தானம் வாங்கினானாம்.
‘சிறிது நேரமும் விட்டுப் பிரியேன்’ என்று பெரிய பிராட்டியார் நித்தியவாசம் செய்கின்ற திருமார்பினையுடையவன் அன்றோ!
பிராட்டி கடாக்ஷம் பட்டால் மகாபலியிடம் சொத்தை வாங்க முடியாது.

‘திருவுக்கும் திரு வாகிய செல்வா’ என்று ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் பாடுகிறார். (பெரிய திருமொழி ஏழாம் பத்து)
அதாவது ‘ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கும் லக்ஷ்மீகரனான செல்வனே!’ என்று.
எம்பெருமான் ஸ்ரீக்கும் ஸ்ரீயாயிருப்பனென்றால் என்ன கருத்தென்னில்;
ஸ்ரீ என்றாலும் திரு என்றாலும் ‘அதிசயத்தை விளைவிப்பவள்’ என்று பொருள் கொள்ளத்தக்கது;
எல்லார்க்கும் அதிசயத்தை விளைப்பவளான அவள் தனக்கும் அதிசயத்தை விளைப்பவன் எம்பெருமான் என்றவாறு.
பிராட்டிக்கு எம்பெருமானுடைய ஸம்பந்தத்தினால் அதிசயம்; எம்பெருமானுக்குப் பிராட்டியின் ஸம்பந்தத்தினால் அதிசயம்.

—————–

ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 7-

ஐஸ்வர்யம் யத ஶேஷ பும்ஸி யதிதம் ஸௌந்தர்ய லாவண்ய யோ:
ரூபம் யச்ச ஹி மங்களம் கிமபி யல் லோகே ஸதித் யுச்யதே |
தத் ஸர்வம் த்வததீந மேவ யதத: ஸ்ரீரித்ய பேதேந வா
யத்வா ஸ்ரீமதி தீத்ருஶேந வசஸா தேவி ப்ரதாமஷ்நுதே ||

“ஸ்ரீ ரங்கநாச்சியாரே! இவ்வுலகில் செல்வம், அழகு, நற்குணம் போன்ற ஐஸ்வர்யங்கள் உன்னுடைய ஸம்பந்தத்தில்,
உனக்கு அடங்கியதாக உள்ளது. அவை அனைத்தும் “ஸ்ரீ” என்ற உன்னை விட வேறானது இல்லை –
என்பதன் மூலமாகவோ அல்லது ‘ஸ்ரீயை உடையது’ என்ற சொல் மூலமாகவோ அல்லவா பெருமை அடைகிறது!?”
என்று பாடுகிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்.

இங்கு ஸ்ரீ கூரேசர் இரண்டு வகையான ‘ஸ்ரீ’ சப்தத்தை குறிப்பிடுகிறார்.
“திருப்பதி”, “திருமங்கை”, “திரு விளக்கு” – இவை ஒருவகை.
“ஸ்ரீமத் பாகவதம்”, “ஸ்ரீமத் ராமாயணம்” – இவை இரண்டாவது வகை.

திருப்பதி மலையில் ஏறாமலே ஸ்ரீ அலர்மேல் மங்கை தாயார்,
திரு மேனி ஒளியை வீசி சேர்த்து ‘திரு’ மலை என்று சொல்ல வைத்தாள்

————

ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 8 –

தேவி தவந் மஹிமாதிர்ந ஹரிணா நாபி த்வயா ஜ்ஞாயதே
யத் யப்யேவ மதாபி நைவ யுவயோ: ஸர்வஜ்ஞதா ஹீயதே |
யந் நாஸ்த்யேவ ததஜ்ஞதாம் அநு குணாம் ஸர்வஜ்ஞதாயா விது:
வ்யோமாம் போஜ மிதந்தயா கில விதந் ப்ராந்தோய மித் யுச்யதே ||

“ஹே ஸ்ரீரங்க நாச்சியாரே! உம்முடைய மேன்மையின் எல்லையானது ஸ்ரீ ரங்கநாதனாலும் அறியப்படுவதில்லை.
உன்னாலும் உன்னுடைய மேன்மை என்பது எத்தன்மையது என்று அறியப்படுவதில்லை.
இப்படி இருந்தாலும் நீங்கள் இருவரும் அனைத்தையும் அறியும் தன்மையில் எந்தவிதமான குறையும் இல்லாமல் உள்ளீர்கள்.
இதன் காரணம் – எந்த ஒரு பொருளானது இல்லவே இல்லை என்பதை உணர்ந்து, அதனை அறிந்து
கொள்ள முயலாமல் இருப்பதையே அனைத்தும் அறிந்த தன்மையாக சான்றோர்கள் அறிகிறார்கள்.
‘ஆகாயத் தாமரை’, ‘முயல்கொம்பு’ ஆகியவற்றை உள்ளதாக அறிபவன் ‘பைத்தியக்காரன்’ என்றே
உலகத்தினரால் கூறப்படுகிறான்” என்று பாடுகிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்!

———————-

ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 9 –

லோகே வநஸ்பதி ப்ருஹஸ்பதி தாரதம்யம்
யஸ்யா: ப்ரஸாத பரிணாமம் உதாஹரந்தி
ஸா பாரதீ பகவதீ து யதீய தாஸி
தாம் தேவ தேவ மஹிஷீம் ஸ்ரியம் ஆஸ்ரயாம:

“இந்த உலகில் ஒருவன் ‘மரம்’ போன்ற ஜடப்பொருளாகப் பிறப்பதும் தேவகுருவான ‘ப்ருஹஸ்பதி’
போன்ற அறிவாளியாகப் பிறப்பதும் ஆகிய ஏற்றதாழ்வுகளை ஸரஸ்வதியினுடைய கடாக்ஷத்தின் பலனாகவே கூறுகின்றனர்.
பூஜிக்கத்தகுந்த அந்த ஸரஸ்வதி எந்த ஸ்ரீரங்க நாச்சியாரின் அடியாராக இருக்கிறாளோ,
அனைத்து தேவர்களின் அதிபதியான ஸ்ரீரங்கநாதனின் அந்த ஸ்ரீரங்கநாச்சியாரை நாம் சரண் அடைவோமாக”
என்று பாடுகிறார் ஸ்வாமி கூரத்தாழ்வான்

————-

ஸ்ரீஸ்தவம் ஸ்லோகம் 10 –

யஸ்யா: கடாக்ஷ ம்ருது வீக்ஷண தீக்ஷணேந
ஸத்ய: ஸமுல்ல சித பல்லவம் உல்ல லாஸ
விஸ்வம் விபர்யய ஸமுத்த விபர்யயம் ப்ராக்
தாம் தேவ தேவ மஹிஷீம் ஸ்ரியம் ஆஸ்ரயாம:

“பிரளய காலத்தில் ஸ்ரீரங்க நாச்சியாரின் கடாக்ஷம் கிட்டாத காரணத்தினால் இந்த உலகம் துவண்டு கிடந்தது.
அப்போது இவளது கடைக்கண் பார்வை என்னும் ஸங்கல்பம் காரணமாக, அந்த ஸங்கல்பம் உண்டான
க்ஷண நேரத்திலேயே பூமியானது தழைத்து விளங்கியது.
மாதவன் வங்க கடல் கடைய அமுதினில் பிறந்தவள்.
தேவர்களின் தலைவனான ஸ்ரீரங்கநாதனின் பட்ட மஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியாரை நாம் சரண் அடைகிறோம்”

————-

ஸ்ரீஸ்தவம் ஸ்லோகம் 11 –

யஸ்யா: கடாக்ஷ வீக்ஷா க்ஷண லக்ஷம் லக்ஷிதா: மஹேசா: ஸ்யு:
ஸ்ரீரங்கராஜ மஹிஷீ ஸா மாம் அபி வீக்ஷதாம் லக்ஷ்மீ:

“எந்த ஒரு பிராட்டியின் கடைக் கண் பார்வைக்கு ஒரு நொடிப்பொழுது இலக்கானாலும் மிகுந்த
கைங்கர்யச் செல்வம் பெற்றவர்கள் ஆவார்களோ அப்படிப்பட்ட,
ஸ்ரீரங்கராஜனின் பட்ட மஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியார் என்னையும் தனது கடைக் கண் கொண்டு பார்க்கவேண்டும்”
என்று மற்ற செல்வங்களை வேண்டாது கைங்கர்ய செல்வத்தையே ஸ்வாமி ஸ்ரீ கூரத்தாழ்வான் வேண்டுகிறார்.

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

ஸ்ரீமத் திருக்கச்சி நம்பி-ஸ்ரீ தேவராஜாஷ்டகம்-

February 22, 2021

ஸ்ரீ ந்யாய வேதாந்த வித்வான் தாமல் வங்கீபுரம் ஸ்ரீ உ வே பார்த்தஸாரதி ஐயங்கார் ஸ்வாமி
இந்தப் ப்ரபந்தத்திற்குத் தமிழில் ஒரு எளிய பொழிப்புரை அருளியுள்ளார்.

தனியன்கள்:-

ஸ்ரீமத் காஞ்சீ முனிம் வந்தே கமலாபதி நந்தனம் |
வரதாங்க்ரி ஸதா ஸங்க ரஸாயன பராயணம் ||

ஸ்ரீ கமலாபதி என்பவரின் புதல்வரும் ஸ்ரீ பேரருளாளன் திருவடிகளில் இடைவிடாத பற்று என்னும்
ரசாயநத்தையே கதியாகக் கொண்டவருமான ஸ்ரீமத் திருக்கச்சி நம்பியை வணங்குகிறேன்.

தேவராஜ தயா பாத்ரம் ஸ்ரீ காஞ்சீ பூர்ணமுத்தமம் |
ராமாநுஜ முநேர் மாந்யம் வந்தேஹம் ஸஜ்ஜநாச்ரயம் ||

ஸ்ரீ தேவப் பெருமாள் க்ருபைக்குப் பாத்ரமானவரும் ஸ்ரீ ராமாநுஜ முநி என்னும் எம்பெருமானாருடைய
மதிப்பைப் பெற்றவருமான நல்லவர்கள் ஆச்ரயிக்கத் தகுந்த ஸ்ரீ திருக்கச்சி நம்பியை வணங்குகிறேன்.

சென்னை அருகிலுள்ள பூவிருந்தவல்லியில், 1009ம் ஆண்டு ஸ்ரீ வீரராகவர், ஸ்ரீ கமலாயர்
தம்பதிகளுக்கு நான்காவதாக பிறந்தவர் ஸ்ரீ கஜேந்திர தாசர்

ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் அருளிச் செய்த ஒரே கிரந்தம் ஸ்ரீ தேவராஜ அஷ்டகம்;

8 ஸ்லோகங்களைக் கொண்டது.தம் ஆசார்யரும், ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜரின் பரமாசார்யருமான ஸ்ரீஆளவந்தார்
அருளிய “ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்” என்னும் கிரந்தத்தின் ஸாரத்தைக் கொண்டு
நித்யாநுஸந்தேமாயும்,ஸுலபமாயும்,ஸுக்ரமாயும்,சர்வ வர்ணார்ஹமாயும் ஆன ஸ்ரீ தேவராஜ அஷ்டகம் என்னும்
ஸ்தோத்ர மாலையை அருளிச்செய்தார்.

ஸ்லோகம்-1:
“நமஸ்தே! ஹஸ்திசைலேச!
ஸ்ரீமந் அம்புஜலோசன;
சரணம் த்வாம் ப்ரபன்னோஸ்மி
ப்ரணதார்த்திஹரா அச்யுத!!”

ஸ்ரீ ஹஸ்திகிரிக்கு நாதனே! ஸ்ரீபதியே! தாமரைக் கண்ணனே! உனக்கு வணக்கம்.
தன்னை வணங்கினவர்களின் துக்கத்தைப் போக்குபவனே! நழுவ விடாதவனே! உன்னைச் சரணமாக அடைந்திருக்கிறேன்.

ஸ்ரீபெருந்தேவித் தாயாருக்கு, வல்லபன் ஆனவனே,ஸ்ரீ அத்திகிரி என்னும் குன்றின் அதிபதியே!
அரவிந்தநிவாஸிநியான ஸ்ரீ பெருந்தேவித் தாயாரையும், அவருடைய ஆசனமான தாமரையையும்
பார்த்துப் பார்த்து,அவர் உருவத்தைத் தம் கண்மலர்களில் கொண்டவனே!
உன் திருவடிகளில் சரணமடைந்தோர் அனைவருடைய வருத்தங்களையும் நாசம் செய்பவனே!
உன்னை அண்டியவர்களை விடாதவனே! அச்சுதனாய், ப்ராப்யனாய்,
என் எதிரே அர்ச்சாவதரமாய், ஸுலபனாய் நிற்கிற உன்னையே-
சரணமாக-உபாயமாகப் பற்றுகிறேன்.நின் திருவடிகளில் தண்டம் சமர்ப்பிக்கிறேன்.

இந்த முதல் ஸலோகத்தில் அர்த்த பஞ்சகமும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
i)ஹஸ்திசைலேச–சர்வேஸ்வரத்வத்தைக் கொண்ட சர்வ காரணத்வம்-ப்ராப்யம்.
ii)ஸ்ரீமந் அம்புஜலோசன- ப்ராப்ய அநுரூபமான ஸ்வரூபம்-அபாத்யத்வம்.
iii)சரணம்- ஸ்வரூப அநுரூபமான உபாயத்வம்.
iv)அச்சுதா-உபாய பலமான ப்ராப்ய ப்ராப்தி
v)ப்ரணதார்த்தி ஹர-விரோதி ஸ்வருப நிரஸநம்.

1)ஸ்ரீமந்-பரத்வம்
2)ஸ்ரீ ஹஸ்திசைலேச–அர்ச்சாவதாரம் .
3 )ஸ்ரீ அம்புஜலோசன- தாமரைக்கண்ணன்-ராமம் கமலலோசனன் -விபவ அவதாரம்
4)ஸ்ரீ அச்சுதா-அந்தர்யாமித்வம்
5)ஸ்ரீ ப்ரணதார்த்தி ஹர-கூப்பீடு கேட்க்கும் வ்யூஹம்

———-

ஸ்லோகம் 2-8:
கீழே பர ஸ்வரூபத்தை பஞ்ச பிரகாரமாக அனுபவித்து
இந்த 7 ஸ்லோகங்களால் ப்ராப்ய, உபாய விரோதி நிராகரணத்தைப் பிரார்த்தித்து,
ஸ்வ ஸ்வரூபத்தைக் காட்டுகிறார்.

ஸ்லோகம் 2:
“சமஸ்த ப்ராணி ஸந்த்ராண ப்ரவீண கருணோல்பன;
விலசந்து கடாக்ஷாஸ் தே, மய் யஸ்மின் ஜகதாம்பதே!!”

எல்லா ப்ராணிகளையும் காப்பதில் திறமை உள்ளவனே! நிறைந்த கருணை உள்ளவனே!
உலகத்திற்கு ஸ்வாமியே! உனது பார்வை இந்த என்னிடம் மலரட்டும்.

உலகங்களுக்கு எல்லாம் ஸ்வாமியானவனே!எல்லா ஜீவராசிகளுக்கும் ரக்ஷ்ணம்/ஸமுஜ்ஜீவனம் அளிக்கும்
அளவற்ற சக்தியும்,கருணையும் உடையவனே!
பலத்தை/வரத்தைக் கொடுக்கத் தன்னையும்,பெருக்கி விஞ்சி கடாக்ஷங்களாய் நிற்பவனே!
உன்னுடைய கடாக்ஷமான பார்வை,நின் எதிரே சேவித்து நிற்கும் அடியேன் மீது முழுதும்
நன்றாக இருக்க வேண்டுகிறேன்.

இங்கு ஸமஸ்த ப்ராணி என்றது
அனைத்து ஜீவன்களுக்கும்-தேவதைகள்,மனிதர்கள்,பசுக்கள்,பட்சிகள்,செடி/கொடி மரங்கள்-என்று அனைத்தும்;
“லோகாஸ்ஸமஸ்தா:ஸுகிநோ பவந்து”என்கிறபடியே,
வரதரின் வரமும்,கடாஷமும் நம்பிகளிடம் வந்தால்,அதனால் உலகம் எல்லாம் வாழும்.
அப்படியே வரதர் அருளிய அந்த ‘ஆறு வார்த்தைகளை’ நம்பிகள் எம்பெருமானாருக்கு அளிக்க,
அவர் உலகோர் எல்லோருக்கும் அளித்து தர்சன ஸித்தியாலே வாழும்படி செய்தார்.
நம்பிகளின் ஆல வட்டக் கைங்கர்யமும், உடையவரின் தீர்த்தக் கைங்கர்யமும்,(சாலைக் கிணற்றிலிருந்து)
ஊருக்காகவும்,உலகத்துக்காகவும் பலன் தரவே யாகும்.

————

ஸ்லோகம் 3:
“நிந்தித ஆசார கரணம் நிர்வ்ருத்தம் க்ருத்யகர்மண:
பாபீயாம்ஸம் அமர்யாதம் பாஹி மாம் வரத ப்ரபோ!”

நல்லவர்களால் வெறுக்கப்பட்ட செயல் புரிபவனும், செய்ய வேண்டியதைச் செய்யாதவனும்,
பாபிஷ்டனும், மரியாதை இல்லாதவனுமான என்னை ஹே வரதராஜ! ரக்ஷிப்பாயாக.

நல்ல வரங்களைக் கொடுக்க வேண்டுமென்று, இங்கே எழுந்தருளியுள்ள ஸ்வாமி யானவனே!
நல்லவர்கள் விலக்கச் சொல்லும்,ஆசார நடைமுறைகளையே செய்யுமவனான,
செய்ய வேண்டும் என்பவற்றை செய்யாதவனான,
அவர்களை/அவைகளைப் பார்க்காமல் பின் காடடிப் போகிறவனான என்னை,
பாபங்களையே எல்லா வடிவிலும் நெஞ்சிலும்/வாயிலும் கொண்ட என்னை,
(லோகத்திலும் சாஸ்த்ரத்திலும் சொல்லுகிற) எந்தவொரு நியமத்துக்கும் கட்டுப்படாத என்னை
(‘என்னை’ என்று அஹங்காரத்தோடு சொல்லுமவனை)
இனி தேவரீர் ஸ்வாமிகளே காப்பாற்ற வேண்டும்.

———–

ஸ்லோகம் 4-8: இந்த 5 ஸ்லோகங்களால் ஆகிஞ்சந்யாதிகளை,முன்னிட்டு,
அபராத ஸஹஸ்ர பாஜநத்தை விளக்கி,சரணாகதத்தையும் விரிவாக்கிக் கொண்டு சொல்கிறார்.
இந்த ஸ்லோக வரிசையை குளகம் என்று கூறுவார்கள்.

ஸ்லோகம் 4:
“ஸம்ஸார மருகாந்தாரே துர் வியாதி ஆக்ரபீஷணே;
விஷய க்ஷத்ரகுல்மாட்யே த்ருஷ்ணாபாதபசாலினி !! ”

ஸம்ஸாரம் என்னும், நிதமும் நாம் வாழும் வாழ்க்கை, கொடிய பாலை வனங்களில் அங்கங்கே இடைப்படும்
காட்டினைப் போன்றது. தினமும் நமக்கு ஏற்படும் வித விதமான மனம் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட
நோய்களின் தீவிரம் காட்டுப் புலிகளினுடைய தாக்குதலுக்கு ஒப்பானது.

காட்டிலே மேலாக புற்களால் நிரப்பப்பட்ட புதர்களான ஆழப் பள்ளங்கள் அவற்றின் மேல் நடப்பவரை
உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளும் வண்ணம், நம்முடைய பல வித ஆசைகளும் அங்கங்களின் உணர்வுகளும்
கொடிய புதர்களாக நாம் வெளியே வர முடியாத வண்ணம் உள்ளே இழுத்துக் கொள்ளும் தன்மை யானவை. .

‘ஸம்ஸார மருகாந்தாரே’ என்னும் பதத்திற்கு ஸம்ஸார பாலை வனம் என்று பொருள்.
‘த்ருஷாபாதபசாலினி’ என்பது மரம் செடி கொடிகளைக் (பனை/ஈச்ச மரம்,முட்புதர்கள்) குறிப்பது.

நம்பிகள் இந்த வேறுபட்ட இரண்டு பதங்களைப் பிரயோகிக்கக் காரணம்,
பாலை வனத்து வெறுமையும் காட்டுப் பகுதியின் அந்தகாரமும், அடர்த்தியும் ஒன்று சேர்ந்தால்
எவ்வளவு கொடுமையாக இருக்குமோ,
அத்தகையது இந்த இருள் தரு மா ஞாலம் என்பதைக் குறிப்பிடத்தான்.

————

ஸ்லோகம் 5:
“புத்ர தார க்ருஹ க்ஷேத்ர, ம்ருகத் த்ருணாம்பு புஷ்கலே!
க்ருத்ய ஆக்ருத்ய விவேகாந்தம் பரிப்ராந்தம் இதஸ் தத:”

இப்பிறப்பில் நமக்கு ஏற்படும் புத்ர/புத்ரிகள் இல்லாள்(ன்), வீடு, நிலம் முதலிய சொந்த பந்தங்கள்,
காடுகளில் காணப்படும் கானல் நீரைப் போன்று தொடர்ந்து நம்மை ஏமாற்றிக் கிடக்கும்.
இந்த சொந்தங்களின் நலத்திற்கான ஒரே நோக்கில் எதைச் செய்தல்,எதை விலக்குதல் என்ற
ஞான விவேகங்கள் அற்று, இங்கும் அங்கும் சுழன்று கொண்டே இருப்போம்.

அருளிச் செயல் சொன்ன வண்ணம் ‘தாயே தந்தை என்றும், தாரமே கிளை மக்களென்றும்’ என்னும்
வகையில் வாழ்ந்து என்ன பயன்?
பந்துக்களைக் கண்டால் பாம்பைக் கண்டாற் போலவும்,
பாகவதர்களைக் கண்டால் பந்துக்கள் போலவும் இருக்க வேண்டும் என்பது பூர்வர்கள் உபதேசம்.

நம் ஆத்மாவின் உற்ற நிரந்தர உறவினன், எம்பெருமான் ஒருவனே என்று உணர்ந்திடும் சமயத்தில் தான்,
நாம் துக்கங்களிலிருந்து கரையேற முடியும், என்று நம்பிகள் விளிக்கிறார்.

————

ஸ்லோகம் 6:
“அஜஸ்ரம் ஜாத த்ருஷ்ணார்த்தம் அவஸந்நாங்கமக்ஷமம்;
க்ஷீணசக்த்தி,பலாரோக்யம் கேவலம் க்லேச சம்ச்ரயம்!”

எப்போதும் இடைவிடாத படி விஷ்யாந்தரங்களை விரும்பி அநுபவித்துக் கொண்டும்,
அவற்றை விட முடியாமல் வருந்திக் கொண்டும்,வேறு நல்ல காரியம் எதுவும் செய்யாமலும்,
வெறும் அங்கங்களை உடையவனாயும்,
ஆத்மஞானம்/பகவத்த்யானம் பெறாதவனாயும், குறைந்த சக்தி/பலம் உடையவனாய்,
ஆரோக்கியம் இருந்தும் எதற்கும் உதவாமல்,அடியேன், கேவலம் கஷ்டங்களிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.

————-

ஸ்லோகம் 7:
“சம் தப்த்தம் விவிதைர் துஃகை: துர்வசைரேவம் ஆதிபி:
தேவ ராஜ தயா ஸிந்தோ தேவ தேவ ஜகத் பதே!!”

இப்படிப்பட்ட பலவித துக்கங்களினால் சூழப்பட்டு, தாபங்கள் மிகுந்தவனாக வாழும் அடியேனை,
தேவாதி தேவர்களின் தேவனான, ஸ்ரீ தேவராஜ மஹா பிரபுவான
உந்தன் கருணையின் குளிர்ச்சி தான் சீர்படுத்த வேண்டும்.

———–

ஸ்லோகம் 8:
“த்வ தீக்ஷண ஸுதா ஸிந்து வீசிவிக்ஷேப கரை:
காருண்ய மாருதா நீதை ஸ்ஸீகரைர் அபிஷிஞ்ச மாம்!!”

காருண்யம் என்னும் மாருதத் தென்றலால் தள்ளப்பட்ட உம்முடைய கடாக்ஷம்,
குளிர்ச்சியுள்ள கடல் அலைகளில்/நீர்வீழ்ச்சிகளில், அடியேனை,உம்முடைய கைங்கர்யமாகிற ஸாம்ராஜ்யத்தில்
பட்டாபிஷேகம் செய்யும்படி நன்றாக திருமஞ்சனம் செய்து வைக்க வேண்டுகிறேன்.

இப்படி’நமஸ்தே’ என்று முதலில்,
ஜீவாத்ம ஸ்வரூப அநுரூபமான கைங்கர்யத்தையே,அநந்ய ப்ரயோஜன மாகக் காட்டி,
அந்த கைங்கர்ய சாம்ராஜ்யத்திலே பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்று முடிவிலே பிரார்த்திக்கிறார்;
மண்ணுலகிலும்,விண்ணுலகிலும் எங்கும் ஜீவாத்மாவுக்குக் கைங்கர்யமே தஞ்சமான புருஷார்த்தம் என்று
பரம காருணிகரான திருக்கச்சி நம்பி,நமக்கெல்லாம் தெரிவித்து
“ஸ்ரீ தேவராஜ அஷ்டகம்” என்னும் இந்தத் திவ்ய ப்ரபந்தத்தைக் தலைக் கட்டுகிறார்

தம் ஆசார்யர் ஸ்ரீ ஆளவந்தாருக்கு உத்தம சிஷ்யராய் இருந்து,
(ஸ்ரீ எம்பெருமானாருக்கு) அவரின் பிரதிநிதியாய் இருந்து,
ஸ்ரீ தேவப் பெருமாளுக்கு அந்தரங்கக் கைங்கர்யங்களைச் செய்து கொண்டு,
ஆழ்வார்கள் போலவே பகவானுடன் வார்த்தையாடிக் கொண்டிருந்து,
பரி பூர்ணராய் தம் ஸ்வரூபத்தையும், ஆர்த்தியையும்,உள்ளே அடக்கி வைக்க முடியாதே,
இந்த ஸ்தோத்ரத்தில் வெளிப்படுத்தினார்.

4-8 – இந்த ஐந்து ச்லோகங்களால் தமது நிலையை ஓர் உருவகத்தின் மூலம் விளக்கி,
தமது ரக்ஷணத்தை தேவப்பெருமாளிடத்தில் இரக்கிறார்.

ஸம்ஸாரம் என்பது ஒரு பாலைவனம், அந்த வனத்தில் புலிகள் போன்ற பயங்கரமான வியாதிகள்.
பாலைவனத்தில் முட்புதர்கள் போல் அற்ப சுகங்கள் நிறைந்திருக்கின்றன.
ஆசை என்னும் மரங்கள், மக்கள், மனைவி வீடு நிலம் இவைகள் கானல் நீர் போல் நிறைந்திருக்கின்றன.
இப்படிப்பட்ட வனத்தில் செய்யவேண்டியவை, செய்யத்தகாதவை என்னும் பகுத்தறிவில்லாத குருடனாகவும்
இங்காங்கும் அலைந்து இடைவிடாது பேராசை உடையவனும், மெலிந்து வாடிய அவயவங்களுடன் கூடினவனும்,
திறமையற்றவனும், தேஹ திடம், மநோ திடம், தேஹ ஆரோக்யம் இவைகளும், இவைகளால் குறைந்தவனும்
க்லேசத்துக்கே இருப்பிடம் ஆனவனும் இப்படி சொல்லத் தகாத பல வகை துக்கங்களால் தாபத்தை அடைந்தவனுமான
என்னை ஸ்ரீ தேவராஜனே! கருணைக்கடலே! தேவர்களுக்கும் தேவனே! உலகத்துக்கு ஸ்வாமியே!
உன் பார்வை என்னும் அமுத ஆற்றின் அலைகளைப் போடுவதால் உண்டான திவலைகளால்
கருணை என்னும் காற்றுடன் குளிர்ந்து கடாக்ஷிப்பாயாக.
குளிர்ந்த கருணை என்னும் காற்று கொண்டு வந்து உன் பார்வை என்னும் அமுத ஆற்றின் அலை ஏறிப்பதால்
ஏற்பட்ட துளிகளால் நனைப்பாயாக –
குளிரக் கடாக்ஷிக்க வேணும் என்பது பொருள்.

இந்த ஸ்ரீ தேவராஜாஷ்டகம் தன் 16 பகுதிகளில், ஒரு புருஷ ஸுக்தத்துக்கு சமமாய்
ஸம்ப்ரோஷணாதிகளில் சுத்தி மந்திரமாய் ஸம்பரதாயத்திலே விளங்குவதால்,
ஸகல ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் உபாதேயம்!!

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே பார்த்தஸாரதி ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்கச்சி நம்பி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரும் தேவித் தாயார் சமேத ஸ்ரீ பேர் அருளாளர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஆஞ்சநேய மூல மந்த்ரம் /ஸ்ரீ ஹனுமத் கவசம் /ஸ்ரீஹநுமான் சாலீஸா —

February 22, 2021

ஸ்ரீ ஆஞ்சநேய மூல மந்த்ரம் …

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹனுமதே ராம தூதாய
லங்கா வித்வம்ஸனாய
அஞ்சனா கர்ப்ப ஸம்பூதாய
சாஹினி டாஹினி வித்வம்ஸனாய
கில கில பூ காரினே விபீஷணாய
ஹனுமத் தேவாய
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹூம் பட் ஸ்வாஹா!

ப்ரார்த்தனா மந்த்ரம் …

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||

கார்ய சித்தி மந்த்ரம் …

அஸாத்ய ஸாதக ஸ்வாமிந் அஸாத்யம் தவ கிம்தவ
ராம தூத க்ருபாஷிந்தோ மத்கார்யம் ஸாதய ப்ரபோ.

நமஸ்கார மந்த்ரம் …

ஸ்ரீ ராமதூத மஹாதீர ருத்ரவீர்ய சமுத்பவ
அஞ்சனா கர்ப்ப ஸம்பூத வாயு புத்திர நமோஸ்துதே.

ஆஞ்சநேய பல ச்ருதி மந்த்ரம் …

ஓம் நமோ பகவதே ஆஞ்சனேயாய மஹா பலாய ஸ்ரீ ஹனுமதே ஸ்வாஹா.

ஆஞ்சநேயர் காயத்ரி …

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ : ஹநுமத் ப்ரசோதயாத்!

ஓம் தத் புருஷாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ மாருதி ப்ரசோதயாத்!

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்!

ஓம் ராமதூதாய வித்மஹே
அஞ்ஜனீ புத்ராய தீமஹி
தந்நோ மாருதி ப்ரசோதயாத்!

ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வா பத்கந வாரகம்
அபார கருணா மூர்த்திம் ஆஞ்சநேய நமாம்யஹம்

அஞ்சனா கர்ப்ப ஸம்பூதம் குமாரம் ப்ருஹ்மசாரிணம்
துஷ்டக்ருஹ வினாஸாய ஹனுமந்த முபாஸ்மஹே

நாமாம்யஹம் மாருதஸுநு மாநிலம் ஸ்ரீஜானகி ஜீவத ஜீவத ப்ரியம் |
ஸௌமித்ரி மித்ரம் கபிராஜ வல்லபம் ஸ்ரீராமதூதம் ஸிரஸா நமாமி ||

உத்ய தாதித்ய ஸங்காஸம் உதார புஜ விக்ரமம் |
கந்தர்ப்ப கோடிலாவண்யம் ஸர்வவித்யா விஸாரதம் ||

ஸ்ரீராம ஹ்ருதயா நந்தம் பக்தகல்ப மஹீருஹம் |
அபயம் வரதம் தோர்ப்யாம் கலயே மாருதாத்மஜம் ||

மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |
வாதாத்மஜம் வானரயூத முக்யம் ஸ்ரீ ராமதூதம் சி’ரஸா நமாமி ||

யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம் |
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் ||

ஆஞ்சநேயமதி பாடலாநநம் காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம் |
பாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமான நந்தனம் ||

அஞ்ஜநா நந்தனம் வீரம் ஜானகீ சோ’கநாசனம் |
கபீச’மக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம் ||

————–

ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.
—————
அஞ்சனை மைந்தா போற்றி ! அஞ்சினை வென்றாய் போற்றி !
அஞ்சினைக் கதிர்பின் சென்று அரு மறையுணர்ந்தாய் போற்றி !
அல்லலைப் போக்கிக் காக்கும் அனுமனை பாடியே போற்றி !
அஞ்ச லென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே.

———-

ஸ்ரீ ஹனுமத் கவசம் —

அஸ்ய ஸ்ரீ ஹனுமத்கவச ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய |
ஸ்ரீராமசந்த்ரருஷி: |
காயத்ரீச்சந்த: |
ஸ்ரீ ஹனுமான் பரமாத்மா தேவதா |
மாருதாத்மஜ இதி பீஜம் |
அஞ்ஜனாஸூனுரிதி ச’க்தி: |
ஸ்ரீராமதூத இதி கீலகம் |
மம மானஸாபீஷ்ட ஸித்யர்த்தே ஜபே வினியோக: ||

ஸ்ரீ ராமசந்த்ர உவாச :-

ஹனுமான் பூர்வத: பாது தக்ஷிணே பவனாத்மஜ: |
ப்ரதீச்யாம் பாது ரக்ஷோக்ன: ஸௌம்யாம் ஸாகரதாரண: ||–1-

ஊர்த்வம் மே கேஸரீ பாது விஷ்ணு பக்தஸ்துமேஹ்யத: |
லங்காவிதாஹக: பாது ஸர்வாபத்ப்யோ நிரந்தரம் ||–2-

ஸுக்ரீவ ஸ சிவ: பாது மஸ்தகே வாயுநந்தன: |
பாலம் பாது மஹாவீர: ப்ருவோர்மத்யே நிரந்தரம் ||–3-

நேத்ரே சாயாபஹாரீ ச பாது மாம் ப்லவகேச்’வர: |
கபோலௌ கர்ணமூலே து பாது மே ராமகிங்கர: ||–4-

நாஸாயாமஞ்ஜனாஸூனு: பாது வக்த்ரம் ஹரீச்’வர: |
பாது கண்டம் ச தைத்யாரி: ஸ்கந்தௌ பாது ஸுரார்சித: ||–5-

புஜௌ பாது மஹா தேஜா: கரௌ து சரணாயுத: |
நகான் நகாயுத: பாது குக்ஷௌ பாது கபீச்’வர: || –6-

வக்ஷௌ முத்ராபஹாரீச பாது பார்ச்’வே மஹாபுஜ: |
ஸீதா சோ’கப்ரஹர்தாச ஸ்தனௌ பாது நிரந்தரம் ||—-7-

லங்காபயங்கர: பாது ப்ருஷ்டதேசே’ நிரந்தரம் |
நாபிம் ஸ்ரீராமசந்தரோ மே கடிம் பாது ஸமீரஜ: ||–8-

குஹ்யம் பாது மஹாப்ராக்ஞ: ஸக்தினீ ச சி’வப்ரிய: |
ஊரூ ச ஜானுனீ பாது லங்கா ப்ராஸாத பஞ்சன: ||–9-

ஜங்கே பாது கபிச்’ரேஷ்ட: குல்பம் பாது மஹாபல: |
அசலோத்தாரக: பாது பாதௌ பாஸ்கர ஸன்னிப: ||–10-

அங்கான்யமிதஸத்வாட்ய: பாது பாதாங்குளீஸ்ஸதா |
ஸர்வாங்காநி மஹா சூ’ர: பாது ரோமாணி சாத்மவான் ||–11-

ஹனுமத் கவசம் யஸ்து படேத் வித்வான் விசக்ஷண: |
ஸ ஏவ புருஷச்’ரேஷ்ட: புக்திம் முக்திஞ்ச விந்ததி ||–12-

த்ரிகாலம் ஏககாலம் வா படேன் மாஸத்ரயம் நர: |
ஸர்வான் ரிபூன் க்ஷணாஜ்ஜித்வா ஸ புமான் ச்’ரியம் ஆப்னுயாத் ||–13-

அர்தராத்ரௌ ஜலேஸ்தித்வா ஸப்த வாரம் படேத்யதி |
க்ஷயாபஸ்மார குஷ்டாதி தாபத்ரய நிவாரணம் ||–14-

அச்’வத்தமூலே அர்கவாரே ஸ்தித்வா படதி ய:புமான் |
அசலாம் ச்’ரியமாப்னோதி ஸங்க்ராமே விஜயீபவேத் ||–15-

ஸர்வரோகா: க்ஷயம் யாந்தி ஸர்வஸித்திப்ரதாயகம் |
ய: கரே தாரயேந்நித்யம் ராமரக்ஷா ஸமன்விதம் ||–16-

ராமரக்ஷம் படேத்யஸ்து ஹனூமத் கவசம் வினா |
அரண்யே ருதிதம் தேன ஸ்தோத்ரபாடஞ்ச நிஷ்பலம் ||–17-

ஸர்வ து:க பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீ பவேத் |
அஹோராத்ரம் படேத்யஸ்து சு’சி: ப்ரயதமானஸ: ||–18-

முச்யதே நாத்ரஸந்தேஹ: காராக்ருஹகதோ நர: |
பாபோபபாதகான் மர்த்ய: முச்யதே நாத்ரஸம்ச’ய: ||–19-

அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்’வர மஹாதர்பாபஹாரீரணே
ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ: ||–20-

வைதேஹீ கன சோ’க தாபஹரணோ வைகுண்டபக்திப்ரிய: |
அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்’வர மஹாதர்பாபஹாரீரணே
ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ: ||–21-

ஸ்ரீ ராம விரசித ஸ்ரீ ஆஞ்சநேய கவசம் ஸம்பூர்ணம்.

ஆஞ்சநேய கவசத்தின் அர்த்தம் :

ஹனுமான் பூர்வத: பாது தக்ஷிணே பவனாத்மஜ: |
ப்ரதீச்யாம் பாது ரக்ஷோக்ன: ஸௌம்யாம் ஸாகரதாரண: ||–1-

கிழக்கு திக்கில் என்னை ஸ்ரீ ஹனுமான் ரக்ஷிக்கட்டும். தெற்குத்திக்கில் வாயுபுத்திரன் என்னை ரக்ஷிக்கட்டும்.
மேற்கு திக்கில் ராக்ஷசர்களை நாசம் செய்யும் ஸ்ரீ ஹனுமான் என்னை ரக்ஷிக்கட்டும்.
வடக்கு திக்கில் சமுத்திரத்தைத் தாண்டிய ஹனுமார் என்னை ரக்ஷிக்கட்டும். (1)

ஊர்த்வம் மே கேஸரீ பாது விஷ்ணு பக்தஸ்துமேஹ்யத: |
லங்காவிதாஹக: பாது ஸர்வாபத்ப்யோ நிரந்தரம் ||–2-

ஸ்ரீ கேஸரியானவர் என்னை ஆகாயத்தில் ரக்ஷிக்கட்டும்.
ஸ்ரீ விஷ்ணு பக்தியுள்ள ஹனுமார் என்னைக் கீழ்பாகத்தில் ரக்ஷிக்கட்டும்.
லங்கையை எரித்தவர் ஸர்வ ஆபத்துக்களிலிருந்தும் என்னை எப்பொழுதும் காக்க வேண்டும். (2)

ஸுக்ரீவ ஸ சிவ: பாது மஸ்தகே வாயுநந்தன: |
பாலம் பாது மஹாவீர: ப்ருவோர்மத்யே நிரந்தரம் ||–3-

சுக்ரீவ மந்திரியானவர் என்னைத் தலையில் ரக்ஷிக்கட்டும். வாயுபுத்ரர் எனது நெற்றியில் ரக்ஷிக்கட்டும்.
மகாவீரன் எனது புருவங்களின் நடுவில் ரக்ஷிக்கட்டும். (3)

நேத்ரே சாயாபஹாரீ ச பாது மாம் ப்லவகேச்’வர: |
கபோலௌ கர்ணமூலே து பாது மே ராமகிங்கர: ||–4-

எனது கண்களை சாயாக்ராஹீ என்னும் பூதத்தைக் கொன்றவர் ரக்ஷிக்கட்டும்.
வானரங்களுக்குத் தலைவர் எனது கன்னங்களை ரக்ஷிக்கவேண்டும்.
ஸ்ரீ ராம தூதன் எனது காதுகளின் கீழ்பாகங்களை ரக்ஷிக்கட்டும். (4)

நாஸாயாமஞ்ஜனாஸூனு: பாது வக்த்ரம் ஹரீச்’வர: |
பாது கண்டம் ச தைத்யாரி: ஸ்கந்தௌ பாது ஸுரார்சித: ||–5-

ஸ்ரீ அஞ்சனா புத்ரர் எனது மூக்கில் ரக்ஷிக்கட்டும். வானரர்களுக்கு அதிபர் எனது முகத்தைக் காக்கட்டும்.
அஸுரசத்ரு எனது கழுத்தை ரக்ஷிக்கட்டும். தேவர்களால் பூஜிக்கப்பட்டவர் எனது தோள்களை ரக்ஷிக்க வேண்டும். (5)

புஜௌ பாது மஹா தேஜா: கரௌ து சரணாயுத: |
நகான் நகாயுத: பாது குக்ஷௌ பாது கபீச்’வர: || –6-

மஹா தேஜஸ்வி எனது புஜங்களை ரக்ஷிக்கட்டும். கால்களை ஆயுதமாகக்கொண்டவர் எனது கால்களை ரக்ஷிக்கட்டும்.
நகங்களை ஆயுதமாகக்கொண்டவர் எனது நகங்களை ரக்ஷிக்கட்டும்.
வானரங்களுக்குத் தலைவர் எனது வயிற்றை ரக்ஷிக்க வேண்டும். (6)

வக்ஷௌ முத்ராபஹாரீச பாது பார்ச்’வே மஹாபுஜ: |
ஸீதா சோ’கப்ரஹர்தாச ஸ்தனௌ பாது நிரந்தரம் ||—-7-

ஸ்ரீ ராமாங்குளீயத்தை எடுத்துச் சென்றவர் எனது மார்பைக் காக்க வேண்டும்.
பெரும் கைகளை உடையவர் எனது இரு பக்கங்களையும் ரக்ஷிக்கட்டும்.
ஸீதையின் துயரத்தை அடியோடு போக்கியவர் எனது ஸ்தனங்களை எப்பொழுதும் ரக்ஷிக்கட்டும். (7)

லங்காபயங்கர: பாது ப்ருஷ்டதேசே’ நிரந்தரம் |
நாபிம் ஸ்ரீராமசந்தரோ மே கடிம் பாது ஸமீரஜ: ||–8-

லங்கைக்கு பயத்தை அளித்தவர் எனது பின்பாகத்தை ரக்ஷிக்கட்டும்.
ஸ்ரீ ராமச்சந்திரன் எனது தொப்புளைக் காக்க வேண்டும். வாயுபுத்ரன் எனது இடுப்பை ரக்ஷிக்கட்டும். (8)

குஹ்யம் பாது மஹாப்ராக்ஞ: ஸக்தினீ ச சி’வப்ரிய: |
ஊரூ ச ஜானுனீ பாது லங்கா ப்ராஸாத பஞ்சன: ||–9-

சிறந்த புத்திமான் எனது குஹ்யதேசத்தை ரக்ஷிக்கட்டும்.
சிவபக்தரான ஹனுமார் எனது துடையின் சந்திகளை ரக்ஷிக்கட்டும்.
எனது துடைகளையும் முழங்கால்களையும் லங்கையின் உப்பரிகைகளை உடைத்தவர் காக்க வேண்டும். (9)

ஜங்கே பாது கபிச்’ரேஷ்ட: குல்பம் பாது மஹாபல: |
அசலோத்தாரக: பாது பாதௌ பாஸ்கர ஸன்னிப: ||–10-

வானரர்களுள் சிறந்தவர் எனது ஆடு சதைகளைக் காக்க வேண்டும்.
மிகுந்த பலம் வாய்ந்தவர் எனது கணைக்கால்களைக் காக்க வேண்டும்.
சூரியனுக்கு ஒப்பானவரும், ஔஷத பர்வதத்தைத் தூக்கி வந்தவருமான ஹனுமார் எனதுகால்களை ரக்ஷிக்கட்டும். (10)

அங்கான்யமிதஸத்வாட்ய: பாது பாதாங்குளீஸ்ஸதா |
ஸர்வாங்காநி மஹா சூ’ர: பாது ரோமாணி சாத்மவான் ||–11-

அளவு கடந்த பலம் நிரம்பியவர் எனது அங்கங்களையும், கால் விரல்களையும் எப்பொழுதும் காக்க வேண்டும்.
மஹாசூரன் என்னுடைய எல்லா அங்கங்களையும், மனதை அடக்கியவர் எனது ரோமங்களையும் காக்க வேண்டும். (11)

ஹனுமத் கவசம் யஸ்து படேத் வித்வான் விசக்ஷண: |
ஸ ஏவ புருஷச்’ரேஷ்ட: புக்திம் முக்திஞ்ச விந்ததி ||–12-

படித்த எந்த அறிவாளி ஹனுமானின் கவசத்தைத் தரிப்பனோ அவனே மனிதர்களுக்குள் சிறந்தவன்.
போகங்களையும் மோக்ஷத்தையும் அடைவான்.(12)

த்ரிகாலம் ஏககாலம் வா படேன் மாஸத்ரயம் நர: |
ஸர்வான் ரிபூன் க்ஷணாஜ்ஜித்வா ஸ புமான் ச்’ரியம் ஆப்னுயாத் ||–13-

மூன்று மாத காலம் நித்தியம் மூன்று முறையோ அல்லது ஒரு முறையோ ஒரு மனிதன் படிப்பானேயாகில்,
அவன் எல்லா சத்துருக்களையும் ஒரு கணத்தில் ஜெயித்து ஐஸ்வர்யத்தை அடைவான். (13)

அர்தராத்ரௌ ஜலேஸ்தித்வா ஸப்த வாரம் படேத்யதி |
க்ஷயாபஸ்மார குஷ்டாதி தாபத்ரய நிவாரணம் ||–14-

நடுநிசியில் இந்த ஹனுமத் கவசத்தை ஏழு தடவை படித்தால் க்ஷயம்,அபஸ்மாரம்(வலிப்பு),
குஷ்டம் முதலிய ரோகங்கள், தாபத்ரயங்கள் யாவும் நீங்கும். (14)

அச்’வத்தமூலே அர்கவாரே ஸ்தித்வா படதி ய:புமான் |
அசலாம் ச்’ரியமாப்னோதி ஸங்க்ராமே விஜயீபவேத் ||–15-

ஞாயிற்றுக்கிழமையன்று அரசமரத்தினடியில் இருந்துகொண்டு இதை எவன் ஒருவன் படிப்பானோ
அவன் அழிவற்ற ஐஸ்வர்யத்தை அடைவான். யுத்தத்தில் ஜெயத்தையும் அடைவான். (15)

ஸர்வரோகா: க்ஷயம் யாந்தி ஸர்வஸித்திப்ரதாயகம் |
ய: கரே தாரயேந்நித்யம் ராமரக்ஷா ஸமன்விதம் ||–16-

ஸ்ரீ ராம ரக்ஷையுடன் கூடிய ஹனுமத் கவசத்தை எவனொருவன் கையில் தரித்துக் கொள்வானோ
அவனுக்கு வியாதிகள் யாவும் நீங்கும். எல்லா காரிய சித்தியும் ஏற்படும். (16)

ராமரக்ஷம் படேத்யஸ்து ஹனூமத் கவசம் வினா |
அரண்யே ருதிதம் தேன ஸ்தோத்ரபாடஞ்ச நிஷ்பலம் ||–17-

ஹனுமத் கவசத்தைப் படிக்காமல் ராம ரக்ஷையைப் படிப்பது வீணாகும். (17)

ஸர்வ து:க பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீ பவேத் |
அஹோராத்ரம் படேத்யஸ்து சு’சி: ப்ரயதமானஸ: ||–18-

முச்யதே நாத்ரஸந்தேஹ: காராக்ருஹகதோ நர: |
பாபோபபாதகான் மர்த்ய: முச்யதே நாத்ரஸம்ச’ய: ||–19-

எல்லா துக்கங்களும் நீங்கும். எங்கும் விஜயத்தை அடைவான். ஆசாரமாய்ப் பரிசுத்தமான மனதுடன்
ஒரு தினம் இரவு பகல் முழுவதும் திரும்பத் திரும்ப இந்த கவசத்தைப் படித்தானேயாகில் ஜெயில் வாசம் நிச்சயம் நீங்கும்.
இதில் சந்தேகமேயில்லை. மஹா பாபங்கள், உபபாதகங்கள், யாவும் நீங்கும். இதில் சந்தேகமேயில்லை. (18-19)

அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்’வர மஹாதர்பாபஹாரீரணே
ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ: ||–20-

வைதேஹீ கன சோ’க தாபஹரணோ வைகுண்டபக்திப்ரிய: |
அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்’வர மஹாதர்பாபஹாரீரணே
ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ: ||–21-

மிகுந்த பிரதாபம் வாய்ந்த எந்த ஹனுமார் சமுத்திரத்தை சின்ன குட்டையைப் போல் தாண்டி ஸ்ரீ ஸீதாதேவியின்
மிகுந்த சோகத்தால் ஏற்பட்ட தாபத்தைப் போக்கினாரோ, ஸ்ரீ வைகுண்டநாதரான ஸ்ரீ ராமனிடத்தில் பக்தி கொண்டாரோ,
அக்ஷய குமாரனை வதம் செய்தாரோ, யுத்தத்தில் ஜெயிக்கப்பட்ட ராக்ஷஸனான ராவணனுடைய
மிகுந்த கர்வத்தைப் போக்கினாரோ,அப்படிப்பட்ட வாயுகுமாரனும், வானர ஸ்ரேஷ்டருமான
ஸ்ரீ ஹனுமான் எப்பொழுதும் நம்மை ரக்ஷிக்கட்டும். (20-21)

ஸ்ரீ ராமரால் செய்யப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேய கவசம் முற்றிற்று.

———-

ஸ்ரீஹநுமான் சாலீஸா —

புத்தி ஹீன தனு ஜானி கே, ஸுமிரெள பவன குமார்|L
பல புத்தி வித்யா தேஹு மோஹிம், ஹரஹு கலேச விகார்||

ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர|
ஜய கபீஸ திஹுலோக உஜாகர||

ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார்
பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்||

ராமதூத அதுலித பலதாமா|
அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா||

மஹாவீர் விக்ரம பஜரங்கீ|
குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ||

கஞ்சன பரண விராஜ ஸுவேசா|
கானன குண்டல குஞ்சித கேசா||

ஹாத் வஜ்ர ஒள த்வாஜ விராஜை|
காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை||

சங்கர ஸுவன கேசரி நந்தன|
தேஜ ப்ராதப மஹா ஜகவந்தன||

வித்யாவான் குணீ அதி சாதுர|
ராம காஜ கரிபே கோ ஆதுர||

ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா|
ராம லஷண ஸீதா மன பஸியா||

ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா|
விகட ரூப தரி லங்க ஜராவா||

பீம ரூப தரி அஸுர ஸங்ஹாரே |
ராமசந்த்ர கே காஜ ஸ(ம்)வாரே ||

லாய ஸஜீவந லகந ஜியாயே |
ஸ்ரீ ரகுபீர ஹரஷி உர லாயே ||

ரகுபதி கீந்ஹீ பஹுத படாஈ |
தும மம ப்ரிய பரதஹீ ஸம பாஈ ||

ஸஹஸ பதந தும்ஹரோ ஜஸ காவை(ம்) |
அஸ கஹி ஸ்ரீபதி கந்ட லகாவை(ம்) ||

ஸநகாதிக ப்ரஹ்மாதி முநீஸா |
நாரத ஸாரத ஸஹித அஹீஸா ||

ஜம குபேர திக்பால ஜஹா(ம்) தே |
கபி கோபித கஹி ஸகே கஹா(ம்) தே ||

தும உபகார ஸுக்ரீவஹி(ம்) கீந்ஹா |
ராம மிலாய ராஜ பத தீந்ஹா ||

தும்ஹரோ மந்தர பிபீஷந மாநா |
லங்கேஸ்’வர ப ஏ ஸப ஜக ஜாநா ||

ஜுக ஸஹஸ்ர ஜோஜந பர பாநூ |
லீல்யோ தாஹி மதுர பல ஜாநூ ||

ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ(ம்) |
ஜலதி லாங்கி கயே அசரஜ நாஹீ(ம்) ||

துர்கம காஜ ஜகத கே ஜேதே |
ஸுகம அநுக்ரஹ தும்ஹரே தேதே ||

ராம துஆரே தும ரகவாரே |
ஹோத ந ஆஜ்ஞாயா பிநு பைஸாரே ||

ஸப ஸுக லஹை தும்ஹாரீஸரநா |
தும ரச்சக காஹூ கோ டர நா ||

ஆபந தேஜ ஸம்ஹாரோ ஆபை |
தீநோ(ம்) லோக ஹா(ந்)க தே கா(ம்)பை ||

பூத பிஸாச நிகட நஹி(ம்) ஆவை |
மஹாபீர ஜப நாம ஸுநாவை ||

நாஸை ரோக ஹரை ஸப பீரா |
ஜபத நிரந்தர ஹநுமத பீரா ||

ஸங்கட தே ஹநுமாந சுடாவை |
மந க்ரம பசந த்யாந ஜோ லாவை ||

ஸப பர ராம் தபஸ்வீ ராஜா |
திந கே காஜ ஸகல தும ஸாஜா ||

ஔர மநோரத ஜோ கோஇ லாவை |
ஸோஇ அமித ஜீவந பல பாவை ||

சாரோ(ம்) ஜுக பரதாப தும்ஹாரா |
ஹை பரஸித்த ஜகத உஜியாரா ||

ஸாது ஸந்த கே தும ரகவாரே |
அஸுர நிகந்தந ராம துலாரே ||

அஷ்ட ஸித்தி நௌ நிதி கே தாதா |
அஸ் பர தீந ஜாநகீ மாதா ||

ராம ரஸாயந தும்ஹரே பாஸா |
ஸதா ரஹோ ரகுபதி கே தாஸா ||

தும்ஹரே பஜந ராம கோ பாவை |
ஜநம ஜநம கே துக பிஸராவை ||

அந்த கால ரகுபர புர ஜாஈ |
ஜஹா(ம்) ஜந்ம ஹரி-பக்த கஹாஈ ||

ஔர தேவதா சித்த ந தர ஈ |
ஹனுமத ஸேஇ ஸர்ப ஸுக கர ஈ ||

ஸங்கட கடை மிடை ஸப பீரா |
ஜோ ஸுமிரை ஹநுமத பல பீரா ||

ஜை ஜை ஜை ஹநுமாந கோஸா ஈ(ம்) |
க்ருபா கரஹு குரு தேவ கீ நாஈ(ம்) ||

ஜோ ஸத பார பாட கர கோஈ |
சூடஹி பந்தி மஹா ஸுக ஹோஈ ||

ஜோ யஹ படை ஹநுமாந சாலீஸா |
ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஸா ||

துளஸீதாஸ ஸதா ஹரி சேரா |
கீஜை நாத ஹ்ருதய மஹ(ம்) டேரா ||

பவந தநய ஸங்கட ஹரந , மங்கல மூரதி ரூப |
ராம லஷந ஸீதா ஸஹித, ஹ்ருதய பஸஹு ஸுர பூப ||

———–

அசேஷ லங்காபதி ஸைத்யஹந்தா
ஸ்ரீராமஸேவா சரணைகக்ர்த்தா
அசேஷ து:காஹத லோக கோப்தா
த்வஸௌ ஹநுமாம்ஸ்த்வ ஸௌக்யகர்த்த

மந்த்ராத்மகம் ஸ்ரீ மாருதி ஸ்தோத்ரம் ….

ஓம் நமோ வாயுபுத்ராய பீமரூபாய தீமதே |
நமஸ்தே ராமதூதாய காமரூபாய தீமதே ||
மோஹசோ’க விநாசா’ய ஸீதாசோ’கவிநாஸிநே |
பக்நாசோ’கவநாயாஸ்து தக்தலங்காய வாக்மிநே ||
கதிநிர்ஜிதவாதாய லக்ஷ்மணப்ராணதாய ச |
வநௌகஸாம் வரிஷ்டாய வஷிநே வநவாஸிநே ||
தத்வஞானஸுதாஸிந்துநிமக்னாய மஹீயஸே |
ஆஞ்ஜநேயாய ஸூராய ஸுக்ரீவ ஸசிவாய தே||
ஜன்மம்ருத்யுபயக்நாய ஸர்வக்லேச’ஹராய ச |
நேதிஷ்டாய ப்ரேதபூதபிசா’ச பய ஹாரிணே ||
யாதநாநாஷநாயஸ்து நமோ மர்கடரூபிணே |
யக்ஷரக்ஷஸசா’ர்தூல ஸர்வ்விர்சி’சக பீஹிர்தே ||
மஹாவலாய வீராய சிரஞ்ஜீவிந உத்ததே |
ஹாரிணே வஜ்ரதேஹாய சோல்லங்கித மஹாவ்த||

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மண பரத சத்ருக்ந ஆழ்வார்கள் சமேத ஸீதா பத்தி சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –