ஸ்ரீ திருமலை நம்பி தனியன் –
பிதா மஹஸ் யாபி பிதா மஹாய ப்ராசேத சாதேச பலப்ரதாய
ஸ்ரீ பாஷ்கர உத்தம தேசிகாய ஸ்ரீ சைல பூர்ணாய நமோ நமஸ்து —
ஸ்ரீ வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ரும -தலே ஹைமே மஹா மண்டபே
மத்யே புஷ்ப்பக மாசநே மணி மயே வீராசநே ஸம்ஸ்திதம்
அக்ரே வாசயதி பிரபஞ்சன ஸூதே தத்வம் முனிப்ய பரம்
வ்யாக்யாந்தம் பராதிபி பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்
————–
அவதாரிகை –
இப்படி சொன்ன இடத்திலும் மஹா ராஜர் நேராகத் தெளியாதே
சலித ஹ்ருதயராய் இருக்கிற படியைக் கண்டு அருளி
ப்ரக்ருத்யநுகுணமாக ப்ரபன்ன பரித்ராண பிரதிஜ்ஞையைப் பண்ணி அருளுகிறார் –
ஸக்ருதேவ -என்கிற ஸ்லோகத்தாலே –
மித்ர பாவேந -என்கிற ஸ்லோகத்தில்
பிரகிருதி -தன்மையை -அருளிச் செய்தார் –
இதில் தத் அநு குணமாக பிரதிஜ்ஞையைப் பண்ணுகிறார்-
—
ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ் மீதி ஸ யாசதே
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் யேதத் வ்ரதம் மம –யுத்த -18-33-
ஸக்ருதேவ -ஒரு தரமே
ப்ரபன்னாய -பிரபத்தி பண்ணினவன் பொருட்டும்
தவாஸ் மீதி ஸ யாசதே –
தவ -உனக்கு அடியேனாய் –
அஸ்மி -ஆகிறேன் –
இனி -என்று -யாசதே -யாசிக்கிறவன் பொருட்டும்
சர்வ பூதேப்யோ-எல்லா பிராணிகள் இடத்தில் நின்றும்
அபயம் -பயம் இன்மையை
ததாமி-பண்ணிக் கொடுக்கிறேன்
யேதத் வ்ரதம் மம –இது எனக்கு விட முடியாத சங்கல்பம் –
ஸக்ருதேவ ப்ரபன்னாய-
ஸக்ருச் சப்தத்துக்கு –
சஹஸா ஆதேஸமாய் –
சஹ சைவ ப்ரபன்னாய -உடனே-என்கிறபடி
அதாகிறது –
தன் அயோக்யதையைப் பார்த்துத் தே-இது ஆழ்வான் நிர்வாஹம் –
கீழ் அநாதிகாலம் சம்சரித்துப் போந்தவன்
மேல் அநந்த காலம் பல அநு பவம் பண்ணப் புகுகிறவன் ஆகையாலே
யாவதாயுஷம் அநு வர்த்தித்தாலும் -சக்ருத் -என்கைக்கு போரும்
அத்தனை அன்றோ -என்று எம்பார் நிர்வாஹம் –
ஈஸ்வர விஷயீ காரத்துக்கு ஒரு கால் அமையும்
ஆவர்த்திக்கிறது உபாய வைபவத்தால் வந்த ரஸ்யதை யாகையாலே -என்று பட்டர் நிர்வாஹம் –
ஸக்ருதேவ -என்கையாலே
உபாயத்துக்கு விஹிதமான அசக்ருதா வ்ருத்தியை வ்யாவர்த்திக்கிறது –
தவாஸ் மீதி ஸ யாசதே –
இதுக்கு மேல் உனக்கு அடியேனாக வேணும் என்று உபேயத்தையும் ப்ரார்த்திக்குமவனுக்கு –
ஸக்ருதேவ ப்ரபன்னாய -என்கிறது பிரபத்தி
தவாஸ் மீதி ச யாசதே -என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தால் –
அநவரத பாவநா ரூபமான பக்தியைச் சொல்லுகிறது என்று நிர்வஹிப்பாரும் உண்டு
அபயம் சர்வ பூதேப்யோ ததாமி-
சர்வ பூதங்கள் நிமித்தமாக பய நிவ்ருத்தியைப் பண்ணிக் கொடுப்பன் –
பீத்ரார்த்தா நாம் பய ஹேது -பாணினி ஸூத்த்ரம் -1-4-25-
இதி ஹேதௌ பஞ்சமீ –
மஹா ராஜர் எதிரிடிலும் காட்டக் கொடோம் என்றபடி
யேதத் வ்ரதம் மம —
நமக்கு அநு பால நீயமான சங்கல்பம் இது
அமோக சங்கல்பரான நமக்கு சங்கல்பங்கள் அடையக் குலையிலும் குலையாத சங்கல்பமாகும் இது –
————————————————————————————————————————————————————————————-
தனி ஸ்லோக- வியாக்யானம்-
அவதாரிகை –
ஸ ராவண -யுத்த -11-33-என்று பெருமாளும் பரிகரமுமாகக் கடல் கரையிலே குறுகி
வந்து விட்டார்கள என்று கேட்ட ராவணன்
சசிவசா மந்த மந்த்ரி புரோஹிதாதி வர்க்கத்தைக் குறைவறக் கூட்டி
பவித்பிர் -12-26-என்று நியமித்து கார்ய விசாரம் பண்ணுகிறவன்
தான் செய்து நின்ற நிலைகளையும் செய்ய வேணும் கார்யங்களையும் சொல்லி
தஸ்ய காம பரி தஸ்ய -12-27-என்று இத்தைக் கேட்ட கும்ப கர்ணனும் குபிதனாய்
யதா து ராமஸ்ய -12-28-என்று இவன் அபஹரித்த வன்றே இப்படி விளையும் என்று அறுதி இட்டோமே என்று
ஸ்வ புத்தி சம்வாதத்தை சம்வதித்து
சர்வமேத -12-29-என்று செருக்கி நான் செய்த வற்றுக்கு ஒப்புண்டோ என்ற ராவணனை அதி ஷேபித்து
எங்கள் சொல் கேட்டுச் செய்ய இருந்தாய் ஆகில் இந்த சீதா அபஹாரத்துக்கு முன்பே அன்றோ செய்வது -என்றும்
ய -பஸ்சாத்-12-32- என்று பூர்வ உத்தர கார்யங்களை க்ரம ஹீனமாகப் பண்ணுகிறவன் நயாப நயங்களை அறியான் என்றும்
திஷ்ட்யா-12-34-என்று நஞ்சூட்டின பழம் போலே இனியராய் இருக்கச் செய்தேயும் அறக் கொடியர் பெருமாள்
அவர் உன்னைக் கொல்லாது ஒழிந்தது உன் புண்யம் -என்றும்
அதில் கோபித்து இவன் வெறுக்க ஒண்ணாது என்று சமீ கரிஷ்யாமி -12-35-என்று
பள்ளத்துக்கு மேட்டை நிரவுமா போலே உன் அநீதியை என் தோள் வலியாலே ஒக்க விடுகிறேன் -என்று சமாதானம் பண்ண
மஹா பார்ச்வனும் அவனுக்கு பிரியமாக சில வார்த்தைகளைச் சொல்லி -நிசாசர-14-1- என்று
அவர்கள் நிரர்த்தகமாகப் பிதற்றின வார்த்தைகளைக் கேட்டு விபீஷணப் பெருமாள் ஹிதரூபமாக
வ்ருதோ-14-2-என்று
பாம்போடு ஒரு கூரையிலே பயிலுவாரைப் போலே -பெரிய திருமொழி -11-8-3-
சீதை யாகிற பெரும் பாம்பின் அருகே கையை நீட்டுவார் உண்டோ –
யாவந்த -14-3/4-என்று தொடங்கி-குரங்குகள் கடலை அடைத்துப் படை வீட்டை அடைக்கப் பார்க்க புகுகிறார்கள்
ராம சரங்கள் குறும் தெருவும் நெடும் தெருவுமாக புகுந்து தலைகளைத் திருகப் புகுகிறது
அதுக்கு முன்னே பிராட்டியைப் பெருமாள் பக்கலிலே போக விடாய்-என்றால் போலே சில வார்த்தைகளைச் சொல்ல
ப்ரகுஅச்த இந்த்ரஜித் ப்ரப்ருதிகளும் அதுக்கு விபரீதமாக சில வார்த்தைகளைச் சொல்ல
ஸ்ரீ விபீஷணப் பெருமாளும் குபிதராய் –
ந தாத -15-9/10/11-என்று தொடங்கி உனக்கு இவற்றில் அபியோகம் இல்லை
பெற்ற பிள்ளை நீ தான் புத்ரன் என்று ஒரு சத்ருவாய் இருந்தாய்
தகப்பனார் அனர்த்தத்தை இப்படி இசைவார் உண்டோ
சத்ருக்களைக் கொல்லில் முற்பட உன்னைக் கொல்ல வேண்டும் என்று வார்த்தை சொல்லி
த நாநி -15-14-என்று உபஹார புரஸ் சாரமாகப் பிராட்டியை உடையவன் வசத்திலே விட்டு
உங்கள் முடியோடு நெஞ்சாறல் கெட்டிருக்கப் பாருங்கோள்-என்றுசர்வர்க்கும் ஹிதம் சொல்ல
இத்தைக் கேட்ட ராவணன் ஸூ நிவிஷ்டம் -16-1-என்று இப்படி ஹிதம் சொன்னால்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் -திருவாய்-2-7-8–என்றும்
அறியாதன அறிவித்த அத்தா நீ செய்தன -திருவாய் -2-3-2- என்றும்
காலிலே விழப் பிரார்தமாய் இருக்க
தன் வசம் இன்றியிலே கால பரவசனான படியாலே பருஷங்களைச் சொல்லி
த்வாம் து திக் குல பாம்சனம் –16-16-என்று திக்கரிக்க
உத்பபாத கதா பாணி -16-17-என்று
சோதர ப்ராதாவுமாய் ஹித உபதேசம் பண்ணின என்னை இப்படிச் சொன்ன இவன் என் படப் புகுகிறான் -என்று
தளர்ந்து தடியூன்றி எழுந்து இருந்து தனக்கு பவ்யராய் இருப்பார் நாலு பேரோடு கிளம்பி
ஆத்மானம் -16-26- என்று நாலு வார்த்தை சொல்லி
ஆஜகாம முஹூர்த்தே ந -17-1-என்று
நின்றவா நில்லா நெஞ்சு -பெரிய திருமொழி -1-1-4-புரிவதற்கு முன்னே
தம்பி சொல்லு ஜீவியாத ராவண கோஷ்டியில் நின்றும்
தம்பி சொல்லு ஜீவிக்கிற ராம கோஷ்டியை நோக்கி வந்து
நிவேதயாத மாம் ஷிப்ரம் ராகவாய மகாத்மனே -17-15-என்று
நெறி கெட மடுத்துக் கொண்டு புகலாகாது
அதி சங்கையும் பண்ணுவார்கள்
த்வார சேஷிகளை கொண்டு பெருமாளுக்கு விண்ணப்பம் செய்து
ஆனய-18-34-என்னப் புக வேணும் என்று நின்ற நிலையிலே நின்று விண்ணப்பம் செய்ய
இத்தைக் கேட்ட மஹா ராஜர் -யேதத்து -17-16-என்று இவன் வார்த்தையைக் கேட்டு
பெருமாள் முற்பாடராய் வருவதற்கு முன்னே தாம் நடை இட்டுச் சென்று ராஜ்ய கார்யங்கள் விசாரிக்க வேண்டாவோ –
ஓய்ற்றரியோ போக விட வேண்டாவோ -நம்மிலும் அவர்கள் முற்பட்டார்கள் –
ப்ரணிதீ -17-20-என்று இங்கு ஆகாசத்திலே நிற்கிற இவன் ஒற்றனாக வேணும் –
ராவணன் தமி -மூர்க்கன் -நலிய வந்தவன்
இவனைக் கழுத்திலும் காலிலும் கோக்க அடுக்கும் -என்பது –
அது பெருமாள் செவிக்குப் பொறுத்த வாறே –
வந்தவனையும் அவனையும் கொல்ல பிராப்தம் -என்று சொல்ல
இத்தைக் கேட்டு அருளின பெருமாள் திரு உள்ளம் தளும்பி முதலிகளைப் பார்த்து –
யதுக்தம் -17-30-என்று முதலிகளைப் பார்த்து
தோழனார் ராஜாக்களாய்ச் செருக்கிச் சொன்ன வார்த்தையை
சரணாகத ரஷணம் பண்ணின ஜாதியிலே பிறந்த நீங்களும் கேட்டிகோளே-
உங்கள் நினைவுகளை சொல்லுங்கோள்-என்ன
ஸ்வம் ஸ்வம் -17-32-என்று மாட்டார்கள் -மகா ராஜர்க்காக மாட்டார்கள் உபயாவிருத்தமாகப் பரீஷித்து
ஒழுக விசாரித்துக் கைக் கொள்ள பிராப்தம் -என்று சொல்லித் தலைக் கட்ட –
இத்தைக் கேட்ட திருவடியும் எழுந்து இருந்து ந வாதான் -17-50-என்று
இப் பஷங்களை அழிக்கப் புகுகிறவன் ஆகையாலே
சிலரோடு பிணக்கு யுண்டாய் அல்ல -சிலரோடு வெறுப்பு யுண்டாய் அல்ல –
எல்லார்க்கும் மேலாய் நியாமகனாய் அல்ல -பிரதிபன்ன வாதி யல்ல –
அப்யஹம் ஜீவிதம் ஐ ஹ்யாம் -ஆரண்ய -10-19-என்கிற பெருமாளை இழக்க வரும் என்று
பெருமாள் பக்கல் ஆதாரத்தால் சொல்லுகிறேன் -என்று அவை அடக்கம் சொல்லி
புகுர விட்டால் பரீஷிப்பது -பரீஷித்தால் புகுர விடுவது என்று அந்யோந்ய ஆஸ்ரயணம் வரும்
தாத்ரா -17-58-என்று சாம பேதம் பண்ணிக் குலைத்து அழைக்க ப்ராப்தமாய் இருக்க
தன்னடையே விஸ்வசித்து வந்தவனை அதிசங்கை பண்ணினால் குலைந்து போம்
அப்போது ராஜ நீதி அல்ல -சாஸ்திர விருத்தம் -என்று பர பஷ தூஷணம் சொல்லி
ந த்வச்ய-17-60/61-என்றும் இப்புடைகளிலே ஸ்வ பஷ ஸ்தாபனத்தையும் பண்ணி
திரு முன்பே நாமும் சில அறிந்தோமாகஒண்ணாது என்று யதா சக்தி -17-66-என்று
அடியேனுக்குத் தோன்றின அளவு விண்ணப்பம் செய்தேன் இத்தனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் இவ்வுலகத்து எல்லாம் அறிவீர் -என்று
தேவரீர் திரு உள்ளத்தில் அகலத்துக்கு இது எங்கே -இனி திரு உள்ளமான படி செய்து அருளீர் என்று தலைக் கட்ட
அத ராம-18-1-என்று காற்றின் மகனான திருவடியாலே லப்த சத்தரான பெருமாள்
தன் திரு உள்ளத்தில் கிடந்தது அருளிச் செய்வதாகக் கோலி
மித்ர பாவேந -18-3-என்கிற ஸ்லோகத்தாலே
மித்ர பாவேந சம்ப்ராப்தன் சதோஷனே யாகிலும் கை விடேன் என்று சொல்லி
தஸ்யாநு பந்தா பாபமாந சர்வே நச்யந்தி தத் ஷணாத்-அஹிர்புத்த -37-33-என்று
பிரபன்னன் ஆனபோதே நிர்த்தோஷன்
இப்படி -பிரபன்னனாய் நிர்த்தோஷன் ஆனவனுக்கு –
உம்மாலும் என்னாலும் பிறராலும் வரும் பயன்களைக் போக்கக் கடவேன் -என்கிறார் இந்த ஸ்லோகத்தால்
வேதோ உபப்ப்ரும்ஹணா ர்த்தாய தாவக்ராஹயாத பிரபு -பால -4-6-என்று
வேத ப்ரும்ஹண ப்ரவண ப்ரபந்தம் அன்றோ இது
இவ்விடத்தில் உபப்ரும்ஹிக்கிற வேதார்த்தம் எது -வேத வாக்கியம் தான் எது -என்னில் –
தம் ஹி தேவமாத்மபுத்தி பிரசாதம் முமுஷூவை சரணம் அஹம் ப்ரபத்யே -ஸ்வே-6-18-என்றும்
ப்ரயத பாணி சரணமஹம் ப்ரபத்யே ஸ்வஸ்தி சம்பாதேஷ்வபயம் நோ அஸ்து-ருக்வேத -என்றும் சொல்லுகிற
பிரபத்புபாய வைபவம் இவ்விடம் உபப்ரும்ஹிக்கிறது
வாக்யமும் ப்ரயதபாணி சரணமஹம் ப்ரபத்யே என்கிற இது
சரனௌ சரணமஹம் ப்ரபத்யே –என்று த்வயம்
சரணம் காடம் நிபீட்ய–அயோ என்றும்
திருவடிகளைக் கையாலே பிடிக்கும் போது ஸூத்த ஹஸ்தனாக வேணும்
அந்த ஸூத்த ஹஸ்ததையாவது –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்றும்
பிதரம் மாதரம் தாரான் புத்ரான் பந்தூன் சகீன் குரூன்
ரத் நாதி தந தான்யாநி ஷேத்ராணி ச க்ருஹாணி ச
சர்வ தர்மாமச்ச சந்த்யஜ்ய சர்வ காமாம்ச்ச சாஷரான்
லோக விக்ராந்த சரணு சரணம் தேவராஜம் விபோ -விஹா கேஸ்வர சம்ஹிதை -என்றும்
வீடு மின் முற்றவும் -திருவாய் -1-2-1- என்றும்
மற்றாரும் பற்றிலேன் -பெரிய திருமொழி -8-10-5-என்றும் உபாயாந்தரங்களை விட்டுப் பற்றுகை –
அத்தை இறே ப்ரயதபாணி -என்கிறது –
மாம் வ்ரஜ -சரணம் ப்ரபத்யே –
பிரார்த்தனா மதி சரணாகதி -என்று
உபாய பிரார்த நாரூப ஜ்ஞானத்தை -சரணம் பிரபத்யே -என்கிறது –
இவ்வாக்யத்தை இந்த ஸ்லோகம் உபப்ரும்ஹித்தபடி ஏன் என்னில்
சக்ருத் ஏவ -என்கிற பதங்களால்
அசக்ருதாவ்ருத்தி சாபேஷையான பக்தியை வ்யாவர்த்திக்கையாலே
சர்வ தர்ம தியாக பூர்வகமான ப்ரயுத பாணி என்கிற பதத்தையும்
பிரபன்னாய-என்கிற பதத்தாலே சரணம் பிரபத்யே -என்கிற பதங்களையும்
த்வாஸ் மீதி ச யாசதே -என்கிற பதங்களாலே ஸ்வஸ் த்யஸ்து -என்கிற பதங்களையும்
அபயம் ததாமி -என்கிற பதங்களாலே அபயமஸ்து-என்கிற பதங்களையும் உபப்ரும்ஹிக்கிறது
ஆகிறது -ப்ரபத்யே என்கிற பிரபதன தசையில்
ஏக வசனமாய் இரா நின்றது
பல தசையிலே ந என்று-எங்களுக்கு என்று – பஹூ வசனமாய் இரா நின்றது –
இது செய்யும்படி ஏன் என்னில்
வைஷ்ணவோ ந குலே ஜாத என்று ஏக வசனமாகச் சொல்லி
தே சர்வே முகத்திமா யாந்தி -என்று பஹூ வசனமாகவும்
யே ச வைஷ்ணவ சம்ஸ்ரயா தே நைவ தே பிராஸ் யந்தி -என்று ஏக வசன பஹூ வசனங்களாலும்
இப்படி பஹூ பிரமாணங்கள் உண்டாகையாலும் –
லோகத்தில் ஒருவன் ராஜ சேவை க்ருஷ்யாதிகளைப் பண்ண
அவன் யத்ன பலமான அன்ன தான தான்யா வஸ்த்ராதி பலங்களை
அவன் அபிமானத்திலே பார்யா புத்திர சிஷ்ய தாசாதிகள் வருத்தமற புஜிக்கக் காண்கையாலும்
இப்படி லோக வேதங்களிலே அநு பூத சரமாகையாலே
ஒருவன் பிரபன்னனாக
அவன் அபிமானத்திலே ஒதுங்கினார்க்கு எல்லாம் பலமாகக் கடவது -என்கிறது –
ஆகிறது -பிரபத்த்யுபாயம் என்பது
எம்பெருமான் உபாயம் என்பதாகா நின்றது –
பிரபத்தியாவது –
த்வமேவோ பாய பூதோ மே பவதி -ப்ரார்த்த நா மதி -சரணாகதி -என்று
சேதனனுடைய ப்ரார்த்த நா ரூப ஜ்ஞானமாய் இரா நின்றது –
எம்பெருமான் ஆகிறான்
ப்ரார்த்த நீயானாய் இருப்பான் ஒருவன் பரம சேதனனாய் இரா நின்றது –
இது செய்யும்படி என் என்ன –
ப்ராம்ருஷ்ட லிங்கம் அநு மானமாய் இருக்க –
லிங்க பராமர்சோ அநு மானம் -என்று பராமர்ச ப்ராதான்யத்தைப் பற்ற
ஔ பசாரிகமாகப் பராமர்சத்தைச் சொன்னால் போலவும்
நீலாம் ஜ்ஞானம் பேதம் ஜ்ஞானம் என்றால்
ஜ்ஞானத்துக்கு ஒரு நைல்ய பீதி மாதிகள் அற்று இருக்க
விஷயகதமான நைல்ய பீதி மாதிகளை விஷயியான ஜ்ஞானத்திலே உபசரித்து
நீளம் ஜ்ஞானம் பேதம் ஜ்ஞானம் -என்றால் போலேயும்
ஸ்வீகார ப்ராதான்யத்தைப் பற்ற
ஸ்வீ கார விஷயமான பகவத் கத உபாய வ்யவஹாரத்தை
விஷயியான ஸ்வீகார ரூப பிரபத்தி ஜ்ஞானத்திலே உபசரித்து சொல்லுகிறது
ஆகையால் ஒரு விரோதமும் இல்லை –
மலை நெருப்பை யுடையது புகை இருப்பதால் -அநு மானம்
மலை -பஷம்
நெருப்பு சாத்தியம்
ஹேது -லிங்கம் –
அடையாளம் காரணம் -ஆகிறது-
ஸ ஸ்வேநைவ பலப்ரத ஸ்வே நைவ நாராயண -அனர்க்க ராகவம் -3-20-என்றும்
மாம் வ்ரஜ -ஸ்ரீகீதை -18-66-என்றும்
மாமேவைஷ்யசி -ஸ்ரீ கீதை -18-65-என்றும்
இறைவா நீ தாராய் பறை -என்றும்
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நான் ஆட் செய்யோம் -என்றும்
எம்பெருமானே உபாயமும் உபேயமும் என்று இறே சொல்லுகிறது –
அந்த உபாய உபேயங்கள் ஆகிறது கார்ய காரணங்கள் இறே
யத நந்தரம் யத்த்ருச்யதே தத் தஸ்ய காரணம் -என்றும்
நியத பூர்வ பாவி காரணம் -என்றும்
பூர்வ பாவியுமாய் பூர்வ காலத்திலேயே சத்துமாய் இறே காரணம் இருப்பது
நியத பஸ்சாத் பாவித்வம் ச கார்யத்வம் -என்றும்
ப்ராக சத் சத்தா யோகித்வம் கார்யத்வம் -என்றும்
பூர்வ காலத்திலேயே சத்துமாய் இராதே
அத்தாலே பிறக்கக் கடவதுமாய் பஸ்சாத் பாவியுமாய் இறே கார்யம் இருப்பது
இப்படி இருக்க
நித்யம் விபும் -என்றும்
சத்யம் ஜ்ஞானம் என்றும்
ஏகமே யத்விதீயம் -என்றும்
நித்யமுமாய் ஏகமுமாய் இருக்கிற பகவத் வஸ்துவுக்கு
பரஸ்பர விருத்தமான பாவ அபாவத்மகத்வம் கூடும்படி என் -என்னில் –
ஸ தேவ சோம்யேத மக்ர ஆசீதே கமேவாத் விதீயம்ம்,-என்றும்
அவிகாரமுமாய் நித்யமுமாய் ஏகமுமான ப்ரஹ்மத்துக்கு
ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ஸ வ்ருஷ ஆஸீத் -என்றும்
ஸோ ஆகாமயத பஹூஸ்யாம் ப்ரஜாயேயேதி -என்றும்
ஸ ஏவ ஸ்ருஜ்ய ஸ ஸ சரக்க கர்த்தா ஸ ஏவ பாத்யத்தி ஸ பால்யதே -ஸ -என்றும்
த்ரிவித காரணத்வமும் ஸ்ருஷ்டுஸ்ருஜ்யத்வமும் பரஸ்பர விருத்தமுமாய் இருக்க
ஸூஷ்ம சிதசித் விசிஷ்ட பிரமம் காரணம்
ஸ்தூல சிதசித விசிஷ்ட ப்ரஹ்மம் கார்யம் -என்று
அவ்விருத்த தர்மங்கள் விசேஷணங்களிலேயாய் –
விசிஷ்ட ஐக்யத்தாலே நிர்வஹித்தால் போலே
இங்கும் –
தாது ப்ரசாதான் மஹிமா நமீ சம்-என்றும்
தஸ்மின் பிரசன்னே க்லேச சங்ஷய -என்றும்
ப்ரஹர்ஷயாமி-என்றும்
த்வத் ப்ரீதயே-என்றும்
திரு உள்ளம் இடர் கெடும் தோறும் வியக்க இன்புறுதும்-என்றும்
பிரசாத விசிஷ்டன் உபாயம்
ப்ரீதி விசிஷ்டன் உபேயம்
என்று விசேஷண பேதம் கிடக்கச் செய்தே விசிஷ்ட ஐக்யத்தாலே
உபாய உபேய எம்பெருமான் என்கிறது ஆகையாலே எல்லாம் கூடும்
இரக்கம் உபாயம் –
இனிமை உபேயம் -என்று இறே ஜீயர் அருளிச் செய்யும் படி –
அநந்ய சாத்யே ஸ்வா பீஷ்டே -என்று பிரபத்யாதி சாத்யம் இறே மோஷம்
சாத்யம் ஆவது முன்பு இன்றியிலே பின்பு உத்பன்னம் ஆவது
உத்பன்னச்ய வினாச யோகாத் -என்று உத்பன்னமாய் நசிக்கும் ஆகில்
உபேயமான பகவத் ப்ராப்தி ரூப மோஷ நசிக்குமாய் இருந்ததே என்னில் நசியாது
இதுக்கு இரண்டு பிரகாரம் உண்டு –
அதில் ஓன்று சாத்யம் தான்-
உத்பாத்யம் என்றும் –
ப்ராப்யம் என்றும் –
விகார்யம் -என்றும்
சம்ஸ்கார்யம் -என்றும் நாலு பிரகாரமாய் இருக்கும்
உண்டு பண்ணப் படுவது –
அடையப்படுவது –
விகாரம் அடைவிக்கப் படுவது –
சம்சரிக்கப் படுவது –
சாதிக்கப் படுபவை நான்கு வகை –
அவற்றில் உத்பாத்யமாவது –
கடம் கரோதி -படம் கரோதி போலே முன்பு இன்றியிலே பின்பு உண்டாவது
ப்ராப்யம் ஆவது –
க்ராமம் கச்சதி ராஜா நம் கச்சதி -என்றும்
காம் தோக்தி பய -என்று முன்பே சித்த ரூபமான வஸ்துவை அதிகாரிக்கு இடுகை –
விகார்யம் ஆவது –
ஷீரமப் யஞ்ஜயதி -என்றும்
தரபுசீசே ஆவர்த்தயதி –
பாலைத் தயிர் ஆக்குகையும் ஈயங்கள் உருக்குகையும்
சம்ஸ்கார்யம் ஆவது
வ்ரீஹீன் ப்ரோஷதி -என்றும்
வ்ரீஹீ நவ ஹந்தி -என்று தன்னைக் கார்யாந்தர யோக்யமாகப் பண்ணுகை-
மந்திர ஜலத்தால் பிரோஷித்து -நெல்லை உரலில் இட்டு குத்தி போல்வன
இங்கும்
ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும்
பராத்பரம் புருஷம் உபைதி திவ்யம் -என்றும்
பரம் ஜ்யோதிரூப சம்பாத்திய -என்றும்
உன்னை எய்தி -என்றும்
பண்டே சித்த ரூபனான பரமாத்மாவை இவன் கிட்டுகையாலே ப்ராப்யம் நித்தியமே யாகிறது
இனி மற்றை இரண்டாவது பிரகாரம் –
நிதிப் நித்யா நாம் -என்றும்
அஜோஹ்யேக-என்றும்
ந ஹாய் விஜ்ஞாதூர் விஜ்ஞாதேர் விபரிலோபோ வித்யதே -என்றும்
பர நல மலர்ச் சோதி -என்றும்
ஆத்மாக்கள் நித்யர் ஆகையாலும்
இவர்களுக்கு தர்மமான ஜ்ஞானா நந்தாதிகள் நித்யங்கள் ஆகையாலும்
தமஸா கூட மக்ரே பிரகேதம் -என்றும்
தயா திரோஹிதத் வாச்ச சக்தி ஷேத்ரஜ்ஞ சம்ஜ்ஞிதா-என்றும்
ஆத்ம ஸ்வரூப தர்மங்களுக்குத் திரோ தாயகமாய் பிரகிருதி சம்சர்க்கம் போய்
ஸ்வே ந ரூபே ணாபி நிஷ்பத்யதே -என்றும்
ஆவுர்ப்பூதஸ்வ ரூபஸ்து-என்றும்
அவபோதா தயோ குணா பிரகாஸ் யந்தே ந ஜன்யந்தே நித்யா ஏவாத்மநோ ஹி தே-என்றும்
ஸ்வா பாவிகாரம் விஸ்த்ருதமாய் உத்பாத்யம் அன்றிக்கே ஒழிகையாலும் நித்யம் ஆகிறது என்ற பிரகாரம் –
அவையும் அப்படி ஆகிறது –
இப் பிரதேசம் பிரபத்த்யுபப்ரும் ஹணம் பண்ணுகிறதாகில்
அஹம் அஸ்மா அபராதானாம் ஆலய –என்கிற
பிரபத்தி லஷணம் கிடந்ததோ என்னில்
ராவணோநாம துர்வ்ருத்தோ -17-19-என்று ராவண சம்பத்தாலும்
பீஷ யசே ஸ்மபீரோ-15-4-என்று நாம நிர்வசனத்தாலும்
ஸ்வ தோஷத்தை முன்னிடுகையாலே –
அஹம் அஸ்ம்ய அபராதானாம் ஆலய -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
ராஜ்யம் ப்ரார்த்தயமா நச்ச-17-65- என்று
தனக்கு ராஜ்யம் வேண்டி வந்தவனாய் பெருமாளுக்கு கிஞ்சித்காரம் பண்ண வந்தவன் அல்லாமையாலே
அகிஞ்சன -என்னும் அர்த்தம் சொல்லுகிறது
த்வாம் து திக் குல பாம்சநம் -16-15- என்று தள்ளி விடும்படி
ஸோ தரப்ராதாவுக்கு உட்பட ஆளன்றிக்கே போருகையாலே அகதி என்னும் அர்த்தம் சொல்லுகிறது
பவந்தம் சரணம் -19-4- என்கையாலே
த்வமேவ உபாய பூதோ மே பவதி ப்ரார்த்த நா மதி சரணாகதி -என்னும் அர்த்தம் சொல்லுகிறது
பாதயோ சரணான் வேஷீ நிபபாத -19-2- என்கையாலே
சா தேவே அஸ்மின் பிரயுஜ்யதாம் -என்னும் அர்த்தம் சொல்லலுகிறது
ஆகையால் இது நேராகக் கிடந்தது
ஆநு கூல்ய சங்கல்பாதிகளும் கிடந்ததோ என்னில் –
இந்த லஷணமும் புஷ்கலம்
ஆத்மாநாம் -16-25-என்று ராவணனுக்கும் படை வீட்டுக்கும் நன்மையை ஆசாசிக்கையாலே
ஆநு கூல்ய சங்கல்பம் சொல்லிற்று
உத்பபாத கதா பாணி -16-16- என்று கையிலே தடி இருக்க
பரிபவித்தனை கரைய வடித்து போராமையாலே ப்ராதி கூல்ய வர்ஜனம் சொல்லிற்று –
வாலி நஞ்ச –17-6-என்று ஸோ தா ஹரணமாக ராஜ்யம் த்ரவ்யம் என்று
அறுதி இட்டு வருகையாலே ரஷிஷ்யதீதி விஸ்வாசம் சொல்லிற்று
பவந்தம் சரணம் கத -19-4-என்று சொல்லுகையாலே
கோப்த்ருத்வ வரணம் சொல்லிற்று
பவத்கதம் -19-5-என்று அகில பர சமர்ப்பணம் பண்ணுகையாலே
ஆத்ம நிஷேபம் சொல்லிற்று –
பிராணா தச்ச-18-14-என்று ஸ்வரத்தில் தளர்த்தியாலும்
சீக்ரம் -17-7- என்று பெருமாள் பக்கல் போக ஒண்ணாத படி நடு வழியிலே கொல்ல நிற்கையாலும்
தைந்யம் கார்ப்பண்யம் உச்யதே -என்கிற
கார்ப்பண்யம் சொல்லிற்று
ஆகையாலே இந்த லஷணமும் புஷ்கலம் –
இப்படி
புஷ்கல லஷணையான பிரபத்தியைப் பண்ணி
இதுக்குப் பலமாக கொள்ளைக் குப்புக்கு கூலம் எடுத்தவோ பாதி
நாம் இருக்க பலாந்தரங்களை ஆசைப்படாதே
நம்மையே உகந்து வந்தவனுக்கு சகல பய நிவ்ருத்தியும் பண்ணுவேன்
இது நமக்கு வ்ரதம் என்கிறார் இந்த ஸ்லோகத்தாலே –
———————
இப்படி அபய பிரதானம் பண்ணுவது ஆருக்கு என்னில் –
சக்ருதேவ பிரபன்னாய –
ச லஷண பிரபத்தி பண்ணினவனுக்கு –
அதாவது -சக்ருதேவ பிரபன்னனாய் இருக்கை-
சக்ருத்-தனக்குப் பொருள் என் என்றால் –
ஆவ்ருத்தி ரசக்ருதுபதே சாத் -என்றும்
அநேக ஜன்ம சமசித்த -என்றும்
பக்தி போலே ஸ்வரூப நிஷ்பத்தியும் பல நிஷ்பத்தியும் சிரகால சாத்யை யன்றிக்கே
தத் த்வயம் சக்ருத் உச்சாரோ பவது -கடவல்லி -என்றும்
உபாயோசயம் சதிர்த்தஸ்தே ப்ரோக்த சீக்ர பலப்ரத-லஷ்மி தந்த்ரம் -17-76-என்றும்
ஸ்வரூப நிஷ்பத்தியும் பல நிஷ்பத்தியும் ஒரு காலேயாய் இருக்கை –
சக்ருதேவ -என்கிற அவதாரணம் –
பிரபன்னனே-என்றும்
ஒருகாலே -இருகால் மாட்டில்லை -என்றும்
அயோக வ்யவச் சேதமோ -அந்யயோக வ்ய்வச் சேதமோ
சங்கு வெளுப்பே –அயோக வ்யவச் சேதம் -அப்பொருள் அங்கே இருக்கிறது போலே
பார்த்தன் ஒருவனுமே வில்லாளி – ஒருவன் தான் என்பதை குறிக்கும் அந்ய யோக வயவச் சேதம் –
பிரபன்னனே -என்ற போது பிரபன்னனை அநு வதித்து
அவனுக்கு அபய பிரதானம் பண்ணுவன் என்று வாக்யத்துக்கு விதேயம் இத்தனை போக்கி
பிரபன்னனோ அபய பிரபன்னனோ என்று விமர்சமாய்
பிரபன்னனே என்று விதயம் அல்லாமையாலும் –
அயோக வ்யவச் சேத பொருள் பொருந்தாது
சக்ருச்சாரோ பவதி -என்றும்
சக்ருதேவ ஹி சாஸ்த்ரார்த்த -என்றும் பிரபத்தியாகில்
சக்ருத் பிரயோஜ்யையாய் -அசக்ருத் பிரயோஜ்யை அல்லாமையாலே
சக்ருத்தா வ்ருத்தியாய் இருப்பதொரு பிரபத்தியில் வ்யவச் சேதம் இல்லாமையாலும்
அயோக வ்யவச் சேதம் இல்லாமையாலும்
அபயங்கதோ பவதி என்று அப்பிரபன்னனான பக்தி நிஷ்டனுக்கும்
அபாய பிரதானம் பண்ணின படியாலே
அந்ய யோக வ்யவச் சேதம் அல்லாமையாலும்
வ்யாவர்த்தம் இல்லை என்று இட்டு வ்யர்த்தம்
இனி சக்ருதேவ -என்று இங்கே கூட்டின போது-
சக்ருதேவ குர்யான் ந அசக்ருத் -என்று
பிரபத்தி ஸ்வரூப அபிதானம் பண்ணுகிறது அன்றிக்கே
பிரபன்னன் அநூத்யனாய்
அபாய பிரதானத்திலே தாத்பர்யம் ஆகையாலே சக்ருத்தோடே கூட்டிலும் வ்யர்த்தம்
இந்த உபபத்திகளாலே சக்ருத் பிரயோகமும் வ்யர்த்தம்
சக்ருதேவா பயம் ததாமி -என்று
இங்கே அன்வயித்தாலோ என்னில்
ஒரு சரீரிக்குப் பிறக்கக் கடவ பயன்கள் எல்லாம் ஒரு காலே சஹிதமாய்
அவற்றினுடைய நிவ்ருத்தியை ஒரு காலே பண்ணுகிறதல்ல-
பூத காலத்தில் பயங்கள் பண்டே அனுபவித்துப் போயிற்றன –
ஆகாமி காலத்தில் பயங்கள் உத்பன்னம் அல்லாமையாலே
நிவ்ருத்தி இப்போது பண்ண ஒண்ணாது
இன்னமும் ததாமி -என்று ப்ராரப்தமாய் –
நிகழ கால பிரயோகம் -பரிசமாப்தம் அல்லாத பயங்கள் உத்பன்னங்கள் அல்லாமையாலே
மேல் வரும் அவை அடைய வர வரப் போக்குகிறேன் என்கிற வர்த்தமானத்துக்கும்
ஒரு கால் என்கிற சக்ருத் பதத்துக்கும் வ்யாஹதியும் வரும்
அபாய பிரதானம் பண்ணுகிற இன்று தொடங்கி ராவண வத பர்யந்தமாகவும்
பயங்களுக்கும் பரிஹாரங்களுக்கும் அவதி இல்லாமையாலே அனுஷ்டான விருத்தமும் ஆகையாலே
சக்ருத் என்றும்
ஏவ என்றும் ப்ரஸ்துத பதங்களுக்கு வையர்த்யம் வரும் என்னில்
வாராது –
1- சக்ருத் ஏவ –
பிரபன்னன் என்றார் பெருமாள் –
அதுக்கு அனுபபத்தியாக மஹா ராஜர் சக்ருத் பிரயோஜ்யை யான ப்ரபத்தியை –
ராகவம் சரணம் கத –17-14- என்றும்
பவந்தம் சரணம் கத-19-4- என்றும்
பாதயோ சரணான் வேஷீ நிபபாத -19-2- என்றும்
முக்கால் பண்ணி பிரபத்தி லஷண ஹாநியும்
ப்ரபத்த்ரு ஸ்வரூப ஹாநி யும்
பிரபத்தவ்ய ஸ்வரூப ஹாநி யும் -பண்ணினான் என்று தூஷணம் சொல்ல
சக்ருதேவ பிரபன்னாய –
அவன் பலகால் பண்ணிற்று இலன் –
ஒரு கால் பண்ணினான் -என்கிறார்-
நாலு மூன்று பண்ணை பண்ணிற்றாக எடுத்த பிரமாணங்கள்
செய்யும்படி என் என்னில்
ராஷசோ -17-5- என்று
அபிசாபம் -கடும் சொல் -சொன்ன உங்களைப் பார்த்து
ஸோ அஹம் —ராகவம் சரணம் கத -17-14- என்கிறபடி
விரோதியாய் வந்தவன் அல்லேன்
அவன் தானே பரிபவித்து போகச் சொல்ல –
அவனோட்டை சம்பந்தங்களையும் விட்டு பெருமாளை சரணம் புக வந்தேன்
என்று தன அருள்பாடு சொன்னான் முற்பட –
சரணம் கத-என்கிற நிஷ்டை
உம்முடைய வார்த்தைகளாலே கலங்கினோமே என்று சங்கித்து
நம்மைத் தெளிய விடுகைக்கு
பவந்தம் சரணம் கத -என்று விண்ணப்பம் செய்த படி
பாதகனாய் வந்தவன் அல்லன்
உம்மை சரணம் புகுவதாக வந்தவன் என்று நமக்கு பட்டாங்கு சொன்னான் இரண்டாம் பண்ணை –
ஆ நய-18-34-மேல் -என்று நாமும் அழைத்து
அஸ்மாபிஸ் துல்யோ பவது –18-38-என்றும்
ஸ்கித் வஞ்சாப்யுபைது ந-என்று நீர் அனுமதி பண்ணின பின்பாயிற்று –
காத் பபாதாவ நிம் -19-1- என்று பூமியிலே இழிந்து
பாதயோ சரணான் வேஷீ நிபபாத -19-2-என்று
நம் காலிலே விழுந்தது ஆகையாலே ஒரு காலே யாயிற்று அவன் சரணம் புகுந்தது –
ஒரு ஹானியும் பண்ணிற்று இலன் -என்கிறார் –
ஆகையாலே சக்ருதேவ -என்கிற பதம் பிரயோஜனம் ஆகிறது
2-அன்றியிலே -சக்ருதேவ பிரபன்னாய -என்று
அநேகஸ்மாத வ்யாவ்ருத்தோ தர்ம –அநேக தர்ம -என்கிறாப் போலே
சக்ருத்வ நிச்சித்ய ப்ரபன்னன்-என்றாய் –
மத்யம பத லோபி யான சமாசமாய் –
விசார்யா ச புன புன -என்று
துஷ்டனோ அதுஷ்டனோ –
மித்ரனோ அமித்ரனோ
வத்யனோ அவத்யனோ –
ஸ்வீகாரனோ பஹிஷ்கார்யானோ
என்று நாம் பட்டால் போலே
லங்கா மித்ர நாதிகளை விடுவேனோ பற்றுவேனோ
ராவணனை விடுவேனோ பற்றுவேனோ –
போகிற இடத்தில் கைக் கொள்ளுவார்களோ தள்ளுவார்களோ
ராஜ்யம் கிடைக்குமோ கிடையாதோ என்று
இப்புடைகளிலே பஹூ முகமாய் விசாரித்து அளப்பது முகப்பதாகை அன்றிக்கே
சக்ருத் சமீஷ்யைவ ஸூ நிச்சிதம் ததா -யுத்த -12-28-போலே
ஒரு காலே அறுதியிட்டு வந்தவன் என்கிறார் ஆகவுமாம் –
3- அன்றியிலே சஹஸா சப்தத்துக்கு சக்ருதேசமாய் –
சஹஹைவ பிரபன்னாய -என்றாய் –
அதாவது ஆஜகாம முஹூர்த்தேந -17-1-என்றும்
ஒல்லை நீ போதாய் -என்றும் சொல்லுகிறபடியே –
நின்றவா நில்லா நெஞ்சில் பிறந்த ஆநு கூல்யம் புரிவதற்கு முன்பே வந்தான் -என்கை
4- அன்றியிலே -சரணாகத ரஷணம் பண்ணுகிறீர் ஆகில் அடியேன்
சஹஸா பிரபன்னாயா -என்று ஒன்றையும் நிரூபியாதே
சாஹசிகனாய் வந்தான் –
அதாவது
ராவணன் கோஷ்டியில் நின்று கடல் கரையில் இருக்கிற பெருமாளை சரணம் புக்கால்
அவர் பிடித்துக் கொண்டு போய் விலங்கிலே இடில் செய்வதென் -என்று
பயப்படாதே பட்டது படுகிறது என்று அவன் வந்த சாஹசம் காணும் என்கிறார் ஆகவுமாம் –
5-இப்படி சரணாகதியில் சர்ப்பம்ருதி யுண்டோ என்ன –
சஹாச பிரபன்னாய –
அன்று ஈன்ற கன்றுக்காக முன்னீன்ற கன்றைக் கொம்பிலும் குளம்பிலும் கொள்ளும் தாயைப் போலே
பால்பாயப் பாய சரனாகதனாய் பலமும் பெறாத இவனுக்கே
யாம் அத்தனை போக்கி பூர்வ சரணாகதனாய்
ராஜ்ய தார பலமும் பெற்ற உமக்காகோம் –
இப்படியாவது அவன் தான் சரனாகதன் ஆகில் அன்றோ –
சீக்ரம் 17-7- என்றும்
வத்யதாம் -17-27- என்றும்
நாங்கள் சொன்ன வார்த்தையிக் கேட்டு வெருவிப் போக நிற்கிறவன் அன்றோ -என்ன
1- பிரபன்னா யைவ –
நாம் இப்படி விபரத்தி பின்னர் ஆன அளவிலும் அவன்
பிரபன்னனே -போகான் காணும் -என்கிறார்
பிரபன்னனே காணும் என்று அருளிச் செய்யா நின்றீர் –
அவன் பக்தி நிஷ்டனைப் போலே அங்கமாக சில தர்ம அனுஷ்டானம் பண்ணி –
ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ -14-3/4- என்று நல் வார்த்தை சொல்லுவதும்
தூத வதம் ஆகாது என்பதும் –
தன் மகள் அநலையை இட்டு நல் வார்த்தை சொல்லுவதுமாய்
அநேகம் புனஸ் சரணம் பண்ணி அன்றோ வந்தது –
ஆன பின்பு அவன் பக்தி நிஷ்டன் என்றார் மஹா ராஜர் –
பெருமாள் -2- பிரபன்னா யைவ –
அவன் நல் வார்த்தை சொல்லிற்று நமக்காக அல்ல –
விபீஷணஸ்து-17-24-என்று ப்ரக்ருத்யா தார்மிகன் ஆகையாலும்
குருத்வாத்தி தமிச்சதா -என்று தமையன் விஷயத்தில் ஹித பரன் ஆகையாலும்
ஆநு கூல்யச்ய சங்கல்ப -என்று பிரபத்த்யாதி காரியாகச் சொன்னான் இத்தனை –
ஆகையால் இது அந்யா சித்தம் -பக்தி நிஷ்டன் என்ன ஒண்ணாது
சேனயோர் உபயோர் மத்யே ரதம் சதாபய -ஸ்ரீ கீதை -1-21-என்று
பள்ளரும் பறையரும் பார்ப்பாரும் பார்க்கருமான இரு படைக்கு நடுவே தேரை நிறுத்திச்
சரம ஸ்லோகம் உபதேசித்த போது அர்ஜுனன்
எங்கே குளித்து குலை குடுமியும் தோதவத்தியுமாய் நின்றான் –
வெளுத்த உடுப்பை -தோதவத்தித் தூய மறையோர் -பெரியாழ்வார் -4-8-1-
இன்னமும் உறங்குதியோ -என்ன நங்கைமீர் போதர்கின்றேன் -என்றும்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான் -என்றும்
திருவாய்ப்பாடியிலே பெண்கள் நோன்புக்கு போகிற போது
அனந்தலிலே-தூக்கக் கலகத்தாலே -கண்ணையும் கடை வாயையும்
துடைத்து வந்தார்கள் அத்தனை போக்கி
எந்த உவர்க் குழியிலே குளித்து வந்தார்கள் –
அப்படியே இவனும் -யோ விஷ்ணும் சததம த்வேஷ்டிதம் வித்யா தந்த்யரே தசம் -என்று
விஷ்ணு த்வேஷியாய் கர்ம சண்டாளனான ராவணன் கோஷ்டியில் நின்று போருகிற போது
கஸ்ய ஏவ வ்யதிஷ்டத -17-8-என்று
ஆகாசத்திலே நின்றான் இத்தனை போக்கி என்ன கடலாடி புனலாடி வந்தான்
யதஹரேவ விரஜேத் ததஹரேவ பிரவ்ரஜேத்-ஜாபால உபநிஷத் -என்றும்
நாஸ்தி நஷத்ர சம்பந்தோ ந நிமித்த பரீஷணம் ஸ்ரத்தைவ காரணம் நித்ய மஷ்டாஷர பரிக்ரஹே-நாராதீய கல்பம் -என்றும்
போதுவீர் போதுமினோ -என்றும்
ருசி பிறந்த போதே வந்தான் அத்தனை –
கங்கை ஆடுவாருக்கு ஒரு உவர் குழியிலே குளிக்க வேணுமோ
பகவான் பவித்ரம் வாசு தேவ பவித்ரம் –
பவித்ராணாம் பவித்ரம் –
பாவனா சர்வ லோகா நாம் த்வமேவ ரகு நந்தன -என்று
பேசப்பட்ட நம் பக்கல் வருகிறவனுக்கு பெரு புரச் சரணம் வேண்டா –
ப்ரபன்னன் ஆகில் -என்கிறார்
அது இருந்தபடி என் –
பக்திக்கு சாஸ்திர விஹிதம் வர்ணாஸ்ரம தர்மங்கள் உண்டாய் இரா நின்றது –
இதுக்கு
சர்வ தரமான் பரித்யஜ்ய -என்று உள்ள தர்மங்களையும் விடச் சொல்லா நின்றது
ஆகையாலே பிரபத்தியில் பக்தி விலஷனையாய் தொடரா நின்றதீ என்னில் –
அது சொல்ல ஒண்ணாது
சப்த பிரமாணகே ஹ்யர்த்தே யதா சப்தம் வ்யவஸ்திதி-என்று
சாஸ்திர பிரமாண கரானால் அது சொன்ன படி கொள்ளக் கடவோம்
அதாவது –
பஹவோ ஹி யதா மார்க்கா விசந்த யேகம் மஹா புறம் –
ததா ஜ்ஞாநாநி சர்வாணி ப்ரவிசந்தி தமீஸ்வரம் -என்று
ஓர் ஊருக்குப் போகா வென்றால் பல வழியாய் இருக்குமாப் போலே
பகவத் ப்ராப்திக்கு பல உபாயங்கள் உண்டு என்று சொல்லி
ஒரு உபாயம் ஸ்வயம் அசக்தம் ஆகையாலே சில சஹ கார்யாந்தரங்களை விதித்து –
ஒரு உபாயம் சர்வ சக்தி யாகையாலே சஹ கார்யாந்தரங்களை வேண்டா என்கிறது
பிரகார பேதத்தாலே ஒன்றுக்கு ஓன்று வை லஷண்யம் வாராது
ஸ்வரூப நிரூபக தர்மங்கள் என்றும்
நிரூபித்த ஸ்வரூபத்துக்கு விசேஷ சமர்ப்பக தர்மங்கள் என்றும் யுண்டு
அநேக விசேஷ சமர்ப்பகங்களைப் பார்த்தால்
பிரபத்தியே விலஷணை -எங்கனே என்னில்
ஸோ அன்வேஷ்டவ்ய ச விஜிஜ்ஞாசி தவ்ய-என்றும்
ப்ரஹ்ம விடாப்நோதி பரம் -என்றும்
ஜ்ஞாத்வா தேவம் முச்யதே சர்வபாசை -என்றும்
தமேவைகம் ஜானதாத்மானம் அந்யா வாசோ விமுஞ்ச்சத அம்ருதச்யைஷ சேது -என்றும்
முமுஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே -என்றும்
வேதாந்த விஹிதத்வமும் மோஷாதி சாதனத்வமும் ஒத்து இருக்கச் செய்தேயும்
பக்த்யாபாய ஸ்வரூபம் போலே
சாத்திய பக்தயேக சோசா என்று இவனாலே சாத்தியமாக அன்றிக்கே
பிரபத்ய்யுபாய ஸ்வரூபம்
சித்தரூபம் பரம் ப்ரஹ்ம -என்றும்
நித்யம் நித்யாக்ருதிதரம் -என்றும்
பண்டே சித்த ரூபமாய்
த்யாயீத -என்றும்-
த்ருவா ஸ்ம்ருதி என்றும்
ஸ்ம்ருதி சந்தான ரூப ஜ்ஞானமாய் அசேதனமாகை அன்றிக்கே
யஸ் சர்வஜ்ஞ சர்வவித் –
சத்யம் ஜ்ஞானம் –
சர்வம் சர்வத்ர சர்வதா ஜாநாதி -என்று
ஜ்ஞாதாவாய் சதாதன ஜ்ஞான ஸ்வரூபமாய் –
ஸ்வீகரிக்கும் இடத்தில்
ஆவ்ருத்திர சக்ருதுபதேசாத் -என்று
அநேக ஜன்ம சித்தமாய் சிரகால சாத்தியமாய் இருக்கை அன்றிக்கே
தத் த்வயம் சக்ருத் உச்சாரோ பவதி –உபாய பூதோ மே பவதி ப்ரார்த்த நா மதி சரணா கதி –
தஸ்ய தாவதேவ சிரம் -யாவததிகாரம் -என்று
விளம்பித பலப்ரதமாகை அன்றிக்கே
உபாயோ அயம் சதுர்த்த் தஸ்தே ப்ரோக்த சீகர பலப்ரத –
தாவதார்த்திஸ் ததா வாஞ்ச தாவன் மோஹஸ் ததா ஸூ கம் யாவன்னயாதி சரணம் -என்று
சீகர பல பிரதமாய்
தபஸா அ நாஸ கேன் –
யஜ்ஞோ தானம் தபஸ் சைவ –
பஞ்சாக் நயோ யே ச திரிணா சிகேதா –
தபஸ் சந்தாப லப்தச்தே ஸோ அயம் தர்ம பரிக்ரஹ –
கார்யஸ் த்ரிஸ்வபி ஷேகச்ச காலே காலே ச நித்யச-என்றும்
ஓதி ஆமாம் குளித்து உச்சி தன்னால் ஒளி மா மலர்ப்பாதம் நாளும் பணிவோம் -என்றும்
மாரி கோடை இன்றியிலே
உப்பு நீரிலும் உவர் நீரிலும் சுட்ட நீரிலும் சுனை நீரிலும் தோய்ந்தும்
க்லேசிக்கும்படி யாகை அன்றிக்கே
ஆனந்தோ ப்ரஹ்ம –
ஆனந்தம் ப்ரஹ்ம –
கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம -என்றும்
சர்வ கந்த சர்வ ரச என்றும் ஸூக ரூபமாய்
மித்யா பிரயிக்தோ யஜமானம் ஹி நஸ்தி -என்றும்
ஜ்ஞான தோஷ பரிப்ரஷ்டஸ் சண்டாளீம் யோனி மா கத -என்றும்
அல்ப்பம் தப்பில் கர்த்தா நசிக்கை அன்றிக்கே
யதா ததா வாபி சக்ருத் க்ருதோஞ்சலி ததைவ முஷ்ணாத்ய ஸூ பான்ய சேஷத
ஸூ பாநி புஷ்ணாதி ந ஜாது ஹீயதே -என்றும்
துராசாரோபி சர்வாசீ கருதக் நோ நாஸ்திக புறா -சமாஸ்ரயே தாதி தேவம் சரத்தா சரணம் யது
நிர்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மன -என்றும்
பயனன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் -என்றும்
அடைவு கெடப் பண்ணினாலும் தோஷங்களைப் போக்கி திருத்தி
அனுஷ்டாதாவை உஜ்ஜீவிப்பிக்கக் கடவதாய்
அவித்யயா ம்ருத்யும் தீர்த்தவா வித்யயா அம்ருத மஸ் நுதே -என்றும்
கஷாய பக்தி கர்மாணி ஜ்ஞானம் து பரமாகதி -கஷாய கர்மபி பக்வே ததா ஜ்ஞானம் ப்ரவர்த்ததே-என்றும்
தரத்தும் ம்ருத்யு மவித்யயா -என்றும் -ஸ்வ உத்பத்தி பிரதிபந்தக நிவர்தகமாய்
அந்தவதே வாஸ்ய தத்பவதி -என்றும்
ந ஹ்யத்ருவை பராப்யதே -என்றும்
பலவா ஹ்யேதே அத்ரூடா யஜ்ஞரூபா -என்றும்
நஸ்யத் த்ரவ்ய உபகரணமாய்-நஸ்வர க்ரியா ரூபமுமாய் –
ஸ்வயம சக்த தேவதாத்மகமுமாய் ஸ்வர்க்க பசு புத்ராதி சாதாரணமான கர்மாதிகளை
அங்கமாக அபேஷிக்கை அன்றிக்கே
தமேவைகம் ஜானதாத்மான மன்யா வாசோ விமுஞ்சத் -என்றும்
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ -என்றும்
ததே கோபாயதாயாச்ஞா -என்றும்
மாமேவைஷ்யசி என்றும்
சிருஷ்டியில் த்ரிவித காராணமும் தானே யாகிறாப் போலே
ஆத்யந்திக பிரளயமான மோஷத்திலும்
அங்கமும் அங்கியும்
உபாயமும் உபேயமும் ஒன்றேயாய்
சர்வ முக்தி வை ஷம்யம் நைர்க்ருண்யாதிகள் வாராமைக்காக
அதிகாரி ஸ்வரூப யோக்யதாபாதகமான ஆநு கூல்ய சங்கல்பாதி மாத்ர சாபேஷையாய்
இப்படிக்கொத்த அநேக குண பௌஷ் கல்யங்களாலே
பக்தியில் பிரபத்தியே அத்யந்த விலஷணை –
இப்படிகொத்த பிரபத்தியைப் பண்ணினவனுக்கு –
3- பிரபன்னா யைவ –
மந்திர வ்யூஹே நயே சாரே யுக்தோ பவிதுமர்ஹதி-17-18–என்று
கர்ம யோக நிஷ்டரான உமக்கும் ஆகோம்-
ஜாம்பவாம்ஸ் த்வதசம்ப்றேஷ்ய சாஸ்திர புத்த்யா விசஷண -17-43-என்கிற
ஜ்ஞான யோக நிஷ்டரான ஜாம்பவானுக்கும் ஆகோம்
பக்திச்ச நியதா வீர -உத்தர -40-16-என்கிற
பக்தி யோக நிஷ்டரான ஹனுமானுக்கும் ஆகோம்
ராகவம் சரணம் கத -17-14- என்று பிரபன்னனான விபீஷணனுக்கே ஆகக் கடவோம் –
4- பிரபன்னா யைவ –
அகார்த்தாயைவ -அஷ்டச்லோகீ-3 என்றும்
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -திருவாய் -2-9-4-என்றும்
அவன் நமக்கேயாய் இருக்குமா போலே
எனக்கே தந்தைத் தந்த கற்பகம் -திருவாய் -2-7-11-என்று
அபியுக்தர் சொன்னபடியே பிரபன்னனுக்கே யாகக் கடவோம்
அவன் பிரபன்னனாவது ஷூத்ர பிரயோஜனத்துக்காக அன்றோ
ராஜ்ய -17-66-என்று
உம்முடைய ஹனுமான் அன்றோ சொன்னான் -என்ன
1-தவாஸ் மீதி ச யாசதே –
உனக்கே யாவேன் என்று யாசிப்பவனுக்கு
அநந்ய பிரயோஜனநாயே வந்தான் காணும் -என்கிறார்
அதாவது-ச காரம் அவதாரண அர்த்தமாய் –
தூத வதம் ஆகாது என்று தனக்குப் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரமாக
ராஜ்யம் கொடுக்க வேணும் என்று அபிப்ராயமாக ஹனுமான் சொன்னான் அத்தனை போக்கி
விபீஷணன் சொன்னானோ –
ந தேவ லோகா க்ரமணம் நா மரத்வமஹம் வ்ருனே ஐஸ்வர்யம் வாபி லோகா நாம் காமே ந த்வயா வி நா -என்றும்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய் -5-8-3- என்றும்
லஷ்மணனும் சடகோபனும் சொன்னால் போலே
த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச -17-14- என்றும்
பரித்யக்தா -19-5-என்றும்
புறம்பு உள்ளவற்றை அடைய விட்டுச்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும்
தாமேயாக-திருவாய் -5-1-8- வந்தவன் -என்கிறார் –
2- தவாஸ்மீதி ச யாசதே –
தவை வாச்ம்யஹ மச்யுத -என்றும்
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் -என்றும்
அநந்ய பிரயோஜனனாயே வந்தான் –
3- தவாஸ்மி
ந மம-ந ராவணஸ்ய-
ஸ்வா தந்த்ர்யமும் இல்லை -பர பாரதந்த்ர்யமும் இல்லை
மத பாரதந்த்ர்யமே ஏவ ஸ்வரூபம் -என்று வந்தவன் –
4-தவைவாஸ்மி-
அவன் நம்மை நோக்கி தவைவாஸ்மி -என்றான் –
நாமும்
புக்த்வா ச போகான் விபுலான் ததோ அந்தே மத பிரசாதாதாதா –
மம அநுஸ்மரணம் ப்ராப்ய மம லோகம் ச கச்சதி -என்றும்
போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய்-பெரிய திரு மொழி -5-8-5-என்று
லாங்கா ராஜ்யமும் கைங்கர்ய சாம்ராஜ்யமும் –
தவைவாஸ்து -என்னக் கடவோம் –
ஸ்ரீ மதா ராஜராஜோ லங்காயாம் அபிஷேசித-யுத்த -28-27-என்றும்
விபீஷண விதேயம் ஹி லங்கா ஐஸ்வர்யம் இதம் க்ருதம் -யுத்த -116-13-என்றும்
லப்த்வா குல தனம் ராஜா லங்காம் ப்ராயாத விபீஷண -யுத்த -131-9-என்றும்
இப்படி இரண்டும் கொடுத்து விட்டு அருளினான் இறே-
குல தனம் என்னக் கோயில் ஆழ்வாரைக் காட்டுகிறபடி என்-என்னில்
இதம் விமானம் ஆச்சர்யம் இஷ்வாகு குல தைவதம் -என்றும்
மநு வம்ச ப்ரசூதா நாம் ஷத்ரியாணாம் இதம் தனம் காமகம் காமதம் விமானம் ரங்க சம்ஜ்ஞிதம்-என்றும்
உப புராணத்திலும் ப்ரஹ்மாண்ட புராணத்திலும் ஸ்பஷ்டமானத்தை
இங்கே அநு வதிக்கிறது ஆகையாலே குறை இல்லை –
5- தவாஸ்மி –
ஸ்தித மாத்மநி சேஷத்வம் -என்றும் –
ஸ்வத்வமாத்மநி சஞ்ஜாதம -என்றும் –
ஆத்ம தாஸ்யம் -என்றும்
ஆத்ம சத்தையுண்டாகிற போதே சேஷமாய் அன்றோ இருப்பது –
6- தவாஸ்மி –
அஹம் ப்ரஹ்மாஸ்மி -போலே சாமா நாதி கரண்யத்தாலே சொன்னாலும்
சேஷ சேஷி பாவம் சித்திக்கும் இறே
அப்படிச் சொல்லாதே வ்யதிகரணமாகச் சொல்லிற்று –
பூர்வாபரங்களாலும் பிரமாணாந்தரங்களாலும் உபபாதிக்க வேண்டி
ஆபாதத்தில் ஸ்வரூப ஐக்கியம் போலே தோன்றி பிரமிக்க ஒண்ணாது என்று
ஜீவ பரமாத்மா பேதமும் வ்யக்தம் ஆகைக்காக
1-இதி –
இப்பாசுரம் ரசித்த படியாலே –
தவாஸ்மி-என்ற பிரகாரத்தைச் சொல்லுவதே -என்று
அநுபாஷித்து ப்ரீதராகிறார் –
2- இதி –
இத்யாஹா மால்யோப ஜீவந-என்றால் போலே
யாராகச் சொல்லக் கடவ பாசுரத்தை யார் சொல்லுகிறார் –
புலஸ்த்யன் புல ஹாதிகள் இதி ஹாசமாகச் சொல்லக் கடவ பாசுரத்தை
ஒரு ராஷசன் சொல்லுவதே –
ச –
உபாய மாத்ரத்தை அபேஷித்து விடாமே
பலத்தையும் வேண்டுவதே -என்று சமுச்ச்யார்த்த மாக வுமாம்
1-தவாஸ்மீதி ச –
சதுர்விதா பஜந்தே மாம் ஜநா-என்று
பல சதுஷ்ட்ய சாதாரணமான உபாயத்தை அபேஷித்தால்
உபேயங்களில் த்ரிவர்க்கத்தை அபேஷியாதே பரம புருஷார்த்தமான அபவர்க்கத்தை அபேஷிப்பதே-
2- தவாஸ்மீதி ச –
பூர்வார்த்தத்தில் உபாயத்தை அபேஷித்து-
சரணாகதனாய்ப் போகாதே -உக்த அர்த்தத்தில் கைகர்யத்தையும்
அபேஷித்து த்வய நிஷ்டன் ஆவதே –
3-தவாஸ்மீதி ச –
த்வாஸ்மீத் யபி என்றாய் –
அதாவது –
பரிபாலய நோ ராஜன் வத்யமாநான் நிசாசரை-என்ற ரிஷிகளையும்
த்ராணகாம இமாம் லோகம் சர்வம் வை விசசார ஹ -என்றும்
தரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத -என்ற ஜெயந்தனைப் போலே
ஷூத்ர சரீர ரஷணத்துக்காக அன்றிக்கே –
ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்தமான நம்மை -என்கை-
ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்தம் –
ஸ்ரீ மதே நாராயணாய -என்றும் –
சஹ வைதேஹ்யா–அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருவருமான சேர்த்தியிலே அன்றோ –
தனித்து இருக்கிறது உமக்கு சேஷமானால்
ஏகா யனனாகானோ -என்ன –
பித்ரா ச பரித்யக்த -என்கிற இடத்தில் –
மாத்ரா ச பரித்யக்த -என்று அநுக்த சமுச்சயமானால் போலே
இங்கும் தவாஸ்மீதி ச -என்றது –
வைதேஹ்யாஸ் சாஸ்மி அநுக்த சமுச்சயமாய் மிதுன விஷயத்திலே காணும் அபேஷித்தது என்கை-
அன்றியிலே-
உங்களைப் போலே சாகா ம்ருகமாய் சாகைக்கு மேலே சஞ்சரிக்கை அன்றிக்கே
அக்னி ஹோத்ராச்ச வேதாச்ச ராஷசானாம் க்ருஹே க்ருஹே -என்றும்
ஸூஸ்ராவ ப்ரஹ்ம கோஷாம்ச்ச விராத்ரே ப்ரஹ்ம ரஷசாம் -என்றும்
அகத்துக்கு உள்ளே சாகா சஞ்சாரியாய் -வேதம் ஓதி -இருப்பவனுக்குத் தெரியும் காணும்
அதாவது –
ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே -என்றும்
நித்யைவைஷாநபாயிநீ -என்றும்
அனன்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா -என்றும்
அப்ருதக் சித்த நித்ய தர்மமே-ச -வ்வுக்கு உள்ளே உண்டு என்று
அறிந்து சொன்னான் காணும் -என்கிறார் ஆகவுமாம் –
இப்படி எல்லாம் அறிந்து இருக்கிற இவன் பர தந்த்ரனாய் செய்த படி கண்டிருக்க ப்ராப்தம்
இத்தனை போக்கி நிர்பந்திக்கப் பெறுமோ -என்னில்
1- யாசதே –
தனக்கு இது அபிமதம் என்னும் இடம் தோற்ற இரந்தான்-இத்தனை –
2- யாசதே –
ரஷா பேஷாம் ப்ரதீஷதே -என்றும்
அர்த்திதோ –ஜஜ்ஞே -என்றும்
வேண்டித் தேவர் -இரக்க-திருவாய் -6-4-5-என்றும்
அத்தலையிலே இரப்பை நாம் பாரித்து இருந்த படியாலே இரந்தான் –
3- யாசதே –
கதாஹமை காந்திக நித்ய கிங்கரர் பிரகர்ஷ்யிஷ்யாமி -ஸ்தோத்ர ரத்னம் -46-என்றும்
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -திருவாய் -3-3-1- என்றும் பிரார்த்திக்கிறான்
அவன் கண் குழியும் பையாப்பும் கண்டால் ஆர்க்கு மறுக்கலாம்
இப்படி இருந்தால் அவனுக்குச் செய்து அருளப் புகுகிறது ஏது என்னில்
1-அபயம் ததாமி –
அத ஸோ பயங்க தோ பவதி -என்னும்படி பண்ணுவன்
அபயம் -தத் அந்ய– தத் அபாவ -தத் விரோதிகளை இறே கூட்டுவது –
ஆகையால் –
2-தத் அந்யமான மங்களங்களை கொடுப்பன்
3-தத் அபாவமான அச்சம் இல்லாமையைப் பண்ணுவன்
4-பரகரிஷ்யமான ஆபச் சிந்தை இறே பயம் –
தத் விரோதியான இவன் புஜபல ரஞ்சிதரான பரரால் பண்ணப் படுகிற
உபகார சந்துஷ்டியை உடையவனாம் படி பண்ணுவன் –
5-அபயம் –
அதீதே ஸோ க வர்த்தமா நே வ்யதா ஆகாமி நி பயம் -என்று இறே லஷணம்
சோகம் இறந்த கால துன்பம் –
வ்யதை-வதை – நிகழ் கால துன்பம் –
பயம் வரும்கால துன்பம் –
ஆகையால் மேல் ஒரு அநர்த்தம் வாராதபடி பண்ணுவன் –
ஆர் நிமித்தமாக-பய நிவ்ருத்தி பண்ணுவது -என்ன –
1- சர்வ பூதேப்ய –
ஏதேனுமாக பய ஸ்தானமாய் உள்ளவை எல்லாம் -நிமித்தமாக –
2- சர்வ பூதேப்ய –
பூதங்கள் ஆகின்றன அசித் சம்ஸ்ருஷ்டங்கள் இறே-
அதாவது
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவராத்மகமாய் இறே இருப்பது –
இவை இத்தனையும் நலியாதபடி பண்ணுவன் –
3- சர்வ பூதேப்ய –
ராவணனால் பட்ட பரிபவத்தாலே -அவன் தம்பி என்றும் இந்த்ராதிகளால் வருமது-
நம் பக்கலிலே பரிவாலே -வத்யதாம் -17-27-என்று திர்யக்கான உம்மால் வருமது –
ராவண விஜயத்தாலே பரிபூதரான மருத்தன் தொடக்கமான மனுஷ்ய ராஜாக்களால் வருமது –
பீடத்தோடு பிடுங்குண்ட ஸ்தாவரமான கைலாசம் அடியாக வரும் இவ்வாபத்தை அடியைப் பரிஹரிபபன்-
4- சர்வ பூதேப்ய –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-11- என்றும்
பௌதிகா நீந்த்ரியாண் யாகூ-என்னும் பிரக்ரியையால்
ப்ருதிவ்யாதி பூத கார்யமான சரீரேந்த்ரிய விஷயாதிகள் நலியிலும் பரிஹரிப்பன் –
5- சர்வ பூதேப்ய –
நானே நாநா வித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2- என்ற
உன்னால் வரும் பயமும்
ஜகத் சசைலபரிவர்த்தயாமி -ஆரண்ய -64-7- என்றும்
ஷிபாமி -ந ஷமாமி -என்றும் நம்மால் வரும் பயமும்
ஹிரண்ய ராவணாதி பித்ரு பிராத்ரு திகளால் வரும் பயமும் பரிஹரிபபன்
5- சர்வ பூதேப்ய –
என்று அசேதனமான பாபங்களும் –
அவ்வோ பாபங்கள் அடியாக பாதிக்கும் ஜந்துக்களும் –
இதடியாக வரும் பயமும் அடையப் போக்குவான்
இப்படி பீத்ரார்த்தானாம் பய ஹேது -பஞ்சமி யாக வுமாம்
அன்றியிலே
சதுர்த்தியாய் -பிரபன்னனாய் -தவாஸ்மீதி ச யாசதே -என்று
சரணாகதனாய் -பலார்த்தியான விபீஷணன் ஒருவனுக்குமோ பய நிவ்ருத்தி பண்ணுவன் -என்றால்
இதி ச -என்கிற சவ்வை இங்கே கூட்டி
6-சர்வ பூதேப்யச ச –
அவனுக்கே அல்ல -சதுர்ப்பிஸ் சஹ ராஷசை -17-5- என்று அவனோடு கூட வந்தவர்களுக்கும் –
அவர் தங்களைப் பற்றினார்க்கும் -அபய பிரதானம் பண்ணுவன் என்றாக வுமாம் –
பய நிமித்தம் சொல்ல வேண்டாவோ -என்னில் –
ராகவேணாபயே தத்தே -19-1-என்கிற இடத்தில் உண்டோ
பயம் பா நாம்ப ஹாரிணி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-36-என்கிற இடத்தில் உண்டோ
அது தன்னடையே வரும் –
அன்றியிலே –
பிரபன்னாய -என்று பிரபன்னருக்கயோ பண்ணுவது –
பக்தி நிஷ்டருக்கும் புருஷகார நிஷ்டருக்கும் இல்லையோ –
7- சர்வ பூதேப்ய –
பக்தி நிஷ்டரோடு புருஷகார நிஷ்டரோடு வாசி அற-
அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத சந்தமேனம் ததோ விது-என்று
பகவத் ஜ்ஞானத்தாலே சத்தை பெற்றார் எல்லார்க்குமாம்
இப்படி கைம்முதல் உடையரான விலஷண அதிகாரிகளுக்கோ கொடுத்து அருளுவது –
சரணாகதர் -பக்தர் -ஆச்சார்ய நிஷ்டர் -பகவத் ஞானம் உள்ளோர் -போன்றாருக்கு மட்டுமா –
கிம் பஹூ நா-பல சொல்லி என்
8-சர்வ பூதேப்ய
ச லஷண உபாய நிஷ்டராக வேண்டா –
அதி ப்ரசங்கம் வாராதபடி பவத் விஷய வாசிந-ஆரண்ய -1-20- என்று
நம் எல்லைக்குள் கிடக்கையே உள்ளது –
யதி வா ராவண ஸ்வயம் -18-34- என்று சத்ருவான ராவணனோடு
பாத மூலம் கமிஷ்யாமி யா நஹம் பர்யசாரிஷம் -ஆரண்ய -4-14- என்று-உதாசீனையான சபரியோடு
ஆவஹத் பரமாம் கதிம் -கிஷ்கிந்தா -17-8-என்று மிருகமான வாலியோடு
கச்ச லோகா ந நுத்தமான் -ஆரண்ய -68-30- என்று பஷியான ஜடாயுவோடு
பாஷாண கௌதம வதூ வபுராப்தி ஹேது -என்று ஸ்தாவரமான அஹல்யா சிலையோடு
பிரதிபேதே ஸ்வ மாலையம் -சுந்தர -38-38- என்று ஜங்கமமான ஜெயந்தனோடு
புற்பா முதலாப் புல் எறும்பாதி ஓன்று இன்றியே -நற்பால் அயோத்தியில் வாழும்
சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் -திருவாய் -7-5-1-என்று த்ருண குல்ம வீருதாதிகளோடு
பிதாமஹபுரோகாம்ஸ் தான் –பால -15-26-என்று அடியிலே நம்மைப் பெற வேணும் என்று அபேஷித்த ப்ரஹ்மாதிகளோடு
வாசி அற -ப்ரஹ்மாதி பிபீலீகாந்தமான சர்வ வஸ்துக்களுக்குமாம்
இவர்களுக்கு செய்து அருளுவது என் என்னில்
1- ததாமி –
த்யாகமும் அல்ல -ஔ தார்யமும் அல்ல -உபகாரமும் அல்ல –
தானமாகவே பண்ணுவேன் –
த்யாகமாவது –
கீர்த்தி முத்திச்ய யோகயே யோக்ய சமர்ப்பணம் -என்று
பிறர் அபேஷித்ததை கீர்த்தி பலமாக பசையறக் கொடுக்கை
ஔ தார்யமாவது –
சர்வ விஷய விதாரணம் ஔ தார்யம் -என்று விஷய வைஷம்யம் பாராதே
முலைக் கடுப்பு தீரச் சுரக்குமா போலே தன் பேறாகக் கொடுக்கை
உபகாரமாவது –
பிரத்யுபகாரதியா பந்து க்ருதிருபகார -என்று
பிரத்யுபகார பிரயோஜனமாக ஆசன்னருக்குக் கொடுக்கை –
அத்ருஷ்ட முத்திச்ய யோகயே யோக்ய சமர்ப்பணம் தானம் -என்று
விலஷண விஷயத்தில் விலஷண பதார்த்தங்களை அத்ருஷ்ட பலமாகக் கொடுக்கை
2- ததாமி –
மோஷயிஷ்யாமி போலே -தாஸ்யாமி-என்று கால விளம்பனம் பண்ணோம் –
வரும் கால பிரயோகம் செய்ய மாட்டேன்
3- ததாமி -கொடுக்கிறேன் –
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -போலே –
உபாசன ப்ராரம்பே மோஷ ப்ராரம்ப -என்று
அவன் நம்மை நோக்கிக் கிளம்பின போதே நாமும் உபக்ரமித்தோம்
இது யாவதாத்மா பாவியாகக் கடவது
ப்ராரப்தோ ஸ்பரிசமாப் தஸ்ச வர்த்தமான -தொடங்கியதாய் முடியாமல் இருப்பது உங்கள் காலம் -இறே-
4- பிரபன்னாய ததாமி –
நியாச மேஷாம் தபஸா மதிரிக்தமா ஹூ -என்றும்
தேஷாம் து தபஸாம் நியாச மதிரிக்தம் தபஸ்ருதம் -என்றும் –
இதர உபாயங்களில் பிரபத்தி விலஷணை யானால் போலே –
நார் ஹந்தி சரணஸ் தஸ்ய கலாம் கோடிதமீமபி -என்று
அல்லாத அதிகாரிகளில் ப்ரபன்ன அதிகாரி விலஷணனாய் இறே இருப்பது –
இவ் விலஷண அதிகாரியைக் கண்டால் தானம் பண்ணாது இருக்கப் போமோ –
அது தான் பாஷிகமோ -நியமம் உண்டோ -என்னில்
1- ஏதத் வ்ரதம் மம-
இது நமக்கு நியத அநு ஷ்டேயம்-
2-ஏதத் -பிரபன்னனுக்குப் பண்ணுகிற அபய பிரதானம் -அநு பல நீயஸ் ஸ-என்று ஏறிட்டுக் கொண்டால்
முடியும் அளவும் விடாதே நடக்குமது இறே வ்ரதம் ஆகிறது
ந து பிரதிஜ்ஞாம் சம்ஸ்ருத்ய ப்ராஹ்மணேப்யோ விசேஷத -ஆரண்ய -10-19-என்று
அடியிலே சொன்னோமே
3-ஏதத் வ்ரதம் –
பரித்ராணாய சாதூநாம் –சம்பவாமி –ஸ்ரீ கீதை -4-8-என்றும்
சரீரக்ர ஹணம் வ்யாபின் தர்மத் ராணாய கேவலம் – ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-1-50-என்றும்
பொழில் ஏழும் காவல் பூண்ட -திரு நெடும் -10-என்றும்
காக்கும் இயல்விணன் -திருவாய் -2-2-9- என்றும்
இது நமக்கு சத்தா பிரயுக்தம் –
இது அனுஷ்டேயம் ஆருக்கு என்ன
1- மம-
அர்த்திதோ மா நுஷே லோகே -அயோத்ய -1-7-என்றும்
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் -திருவாய் -6-4-5- என்றும்
பராபேஷையாய் அதுக்கு இட்டுப் பிறந்த நமக்கு –
2- மம –
ஸ்ரஷ்டாவான ப்ரஹ்மாவுக்கும் பணி அல்ல –
சம்ஹர்த்தாவான ருத்ரனுக்கும் பணி யல்ல
நஹி பாலன சாமர்த்யம் ருதே சர்வேஸ்வராத்ஹரே -ஸ்ரீ விஷ்ணு புரா -1-22-21- என்றும்
ரஷார்த்தம் சர்வ லோகா நாம் விஷ்ணுத்வம் உபஜக் மிவான் -உத்தர -104-9-என்றும்
ரஷணை நமக்கே பணி என்கிறார் –
3- மமைதத் வ்ரதம் –
நம் பக்கல் பரிவாலே விலக்குகையும் உனக்குப் பணி யானால் போலே
ஆஸ்ரீத ரஷணமும் நமக்குத் தொழில் காணும்
4- ஏதத் வ்ரதம் மம –
சதா மேத்த கர்ஹிதம் -18-3-போலே
சத்தா பிரயிக்தத்துக்கு பிரயோஜனம் இல்லை
செய்யாத போது கபோத வானர விச்வாமித்ராதிகள் இருந்து
எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம் என்று கதவை அடைப்பார்கள்-
அது செய்யாதே
சாது கோட்டியுள் கொள்ளப் படுகிறதே பிரயோஜனமாக இது நமக்கு அனுஷ்டேயம் என்கிறார்
5-ஏதத் வ்ரதம் மம –
இது நமக்கு அனுஷ்டேயம் –
இத்தத் தலைக் கட்டித் தாரீர் என்று மஹா ராஜரை இரக்கிறார்-
இப்படி பெருமாள் மஹா ராஜரைப் பார்த்து அபய பிரதானம் பண்ணி
ஆஸ்ரீதனான விபீஷண ரஷணம் பண்ண வேணும் என்று
இந்த ஸ்லோகத்தில் தாத்பர்யார்த்தம் அருளிச் செய்தார் ஆயிற்று –
—————————————————————–
ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —
————
ஸ்ரீ அபய பிரதான சாரம் —
ஸ்ரீ வால்மீகி பகவானால் திருஷ்டமாய் -இருப்பதாய் —
தாத்பர்ய லிங்கங்களை எல்லாம் பரிபூர்ணமாக உடையதாய் –
இருபதொரு சரணாகதி வேதம்
இதில் ஸ்ரீ அபய பிரதான பிரகரணம்
சர்வ ரஹஸ்ய சாரங்களையும் திரள வெளியிட்ட உபநிஷத் பாகம்
ஆறு காண்டத்திலும் சரணாகதி தர்மமே அஞ்சுறு ஆணியாகக் கோக்கப்பட்டுள்ளது
சரணாகதி ரக்ஷண தர்மமே ஸ்ரீ பெருமாளுக்கு அநுபால நீயம்
இது பத்து அதிகாரங்களை உடையது –
வேத உப ப்ரும்ஹண சா பேஷரான அல்ப ஸ்ருதர் பக்கல் இரக்கத்தாலும்-
அவர்களை பற்ற வேதங்களுக்கு உண்டான பிரதாரண பயத்தை சமிப்பிக்கைக்காகவும் —
உப ப்ரும்ஹண ரூபமான இப்பிரபந்தத்தை பிரவர்த்திப்பித்தான்
இது சர்வ சரண்ய பர தத்வ விஷயமாகவும் –
ஸர்வாதிகாரமான சரணாகதி ரூப பரம ஹித விஷயமாயும்
இரண்டு வகையாய் இருக்கும் –
பரம காரணமான பர தத்துவத்தை பிரதிபாதிக்கிற வேதங்களுக்கு உப ப்ரும் ஹணம் அன்றோ இது
சக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் சர்வ பூதேப்ய ததாம் ஏதத் விரதம் மம –யுத்த -106-53–
சக்ருதேவ ப்ரபந்நாயா -ஒருக்காலே சரணாக அடைகின்றார்க்கும்
தவாஸ்மீதி ச யாசதே –உனக்கு அடிமை ஆகின்றேன் என்றற்கு
சர்வ பூதேப்ய –அருக்காதே அனைவருக்கும் அனைவராலும்
அபயம் -அஞ்சேல்
ததாமி -என்று அருள் கொடுப்பவன்
ஏதத் -இது தான்
விரதம் -ஓதும் இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும் இவை அறிவார் செயலுடன்
என் இசைவினாலும் நெருக்காத நீள் விரதம்
மம -எனக்கு ஓன்று என்று
நெறி யுரைத்தார் நிலை உணர்ந்து நிலை பெற்றோமே –
——
முதல் அவதாரம் -பிரபந்தாவதாரம்
மங்களா சரணம் -ஸ்ரீ ராம சரம ஸ்லோக அர்த்த ஸங்க்ரஹம் –
ஸ்ரீ இராமாயண ப்ரவர்த்தந பிரகாரம் -ஸ்ரீ இராமாயண ப்ரவர்த்தந நோக்கம்
மங்களா சரணம்
ஜெயதி ஆஸ்ரித சந்த்ராச த்வாந்த வித்வம்சந உதய
பிரபாவாந் சீதயா தேவ்யாம் பரமா வ்யோம பாஸ்கர
பிராய ப்ரபதநே பும்ஸாம் பவ்ந புந்யம் நிவாரயந்
ஹஸ்த ஸ்ரீ ரெங்க பர்த்து மாம் அவ்யத் அபயமுத்ரித
நமஸ் தஸ்மை கஸ்மை சந பவது நிஷ் கிஞ்சன ஜந
ஸ்வயம் ரஷா தீஷா சமதிக சமிந்தான யஸசே
ஸூரா தீச ஸ்வை ரக்ஷண குபித சாபாயுதா வதூ
த்ருஷத்தா துர் ஜாத ப்ரசமந பதாம் போஜ ரஜஸே
வதூ த்ருஷத்தா-கௌதம மகரிஷி பார்யை -அகல்யை -கல்லாய் இருக்க
துர் ஜாத-கெட்ட ஜென்மத்தை
நமஸ் தஸ்மை கஸ்மை சந பவது- அந்த ஸ்ரீ ராமன் பொருட்டு நமஸ்காரம் இருக்கட்டும்
சோகம் தவிர்க்கும் ஸ்ருதிப் பொருள் ஓன்று சொல்லு கின்றேன்
நாகம் தனக்கும் இராக்கத்திற்கும் நமக்கும் சரணாம்
ஆ கண்டலன் மகனாகிய ஆவலிப்பு ஏறியதோர்
காகம் பிழைத்திடக் கண் அழிவே செய்த காகுத்தனே
ஒருக்காலே சரணாக அடைகின்றார்க்கும் உனக்கு அடிமை ஆகின்றேன் என்றற்கும்
அருக்காதே அனைவருக்கும் அனைவராலும் அஞ்சேல் என்று அருள் கொடுப்பவன் இது தான் ஓதும்
இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும் இவை அறிவார் செயலுடன் என் இசைவினாலும்
நெருக்காத நீள் விரதம் எனக்கு ஓன்று என்று நெறி யுரைத்தார் நிலை உணர்ந்து நிலை பெற்றோமே –
———
ஸ்ரீ இராமாயண ப்ரவர்த்தந பிரகாரம்
பரித்ராணாய ஸாதூ நாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம சமஸ்தாபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே –என்கிறபடியே
ஸ்ரீ சர்வேஸ்வரன் ஒரு த்ரேதா யுகத்தில் ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனாய் திரு அவதரித்த காலத்தில்
ஸ்ரீ வால்மீகி பகவான் ப்ரஹ்ம புத்திரனான ஸ்ரீ நாரத பகவான் பக்கலிலே இவ்வவதார வ்ருத்தாந்தத்தை
சங்க்ஷேபேண ஸ்ரவணம் பண்ணி
மச்சந்தா தேவ தே ப்ரஹ்மன் ப்ரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ—பால-2-32–என்கிறபடியே
ஸ்ரீ ஸரஸ்வதீ வல்லபனான ப்ரஹ்மாவினுடைய ப்ரஸாதத்தாலே ப்ரவ்ருத்தமான திவ்ய ஸாரஸ்வதத்தை யுடையனுமாய்
ரஹஸ்யம் ச பிரகாசம் ச யத் வ்ருத்தம் தஸ்ய தீமத
ராமஸ்ய ஸஹ ஸுவ்மித்ரே ராக்ஷஸா நாம் ச ஸர்வஸ
வைதேஹ்யாஸ் சாபி யத் வ்ருத்தம் பிரகாசம் யதி வா ரஹ
தச்சாப்ய விதிதம் சர்வம் விதிதம் தே பவிஷ்யதி
ந தே வாகந்ருதா காவ்யே காசி தத்ர பவிஷ்யதி –என்று ப்ரஹ்மாவால் தத்த வரனுமாய்
ஹசிதம் பாஷிதம் சைவ கதிர் யா யச்ச சேஷ்டிதம்
தத் சர்வம் தர்ம வீர்யேண யதாவத் சம் ப்ரபஸ்யதி–பால-3-4-என்கிறபடியே
தர்ம வீர்ய பிரஸூ தமான திவ்ய சஷுஸ் சாலே -இவ்வவதார வ்ருத்தாந்தத்தை
பாணவ் ஆம லகம் யதா -பால-3-6-என்னும்படி
நிரவசேஷமாக சாஷாத் கரித்து
தச இந்த்ரியா நநம் கோரம் யோ மநோ ரஜநீசரம்
விவேக சர ஜாலேந சமம் நயதி யோகிநாம் –என்கிறபடியே
முமுஷுவுக்குப் பரம உபகாரகமான
இவ்வவதார ரஹஸ்யத்தை வெளியிட்டு லோகத்தை உஜ்ஜீவிப்பைக்காகத் தன் கருணையால் ப்ரவ்ருத்தனாய்
————-
ஸ்ரீ இராமாயண ப்ரவர்த்தந நோக்கம்
இதிஹாச புராணாப்யாம் வேதம் சமுபப்ரும்ஹயேத்
பிபேத் யல்பஸ்ருதாத் வேதோ மா மயம் பிரதர்ஷயிதி –என்கிற சாஸ்திரத்தை அநு சந்தித்துக் கொண்டு
வேத உப ப்ரும்ஹண சா பேஷரான அல்ப ஸ்ருதர் பக்கல் இரக்கத்தாலும் அவர்களைப் பற்ற
வேதங்களுக்கு உண்டான பிரதாரண பயத்தை சமிப்பிக்கைக்காவும்
புண்யம் வேதைஸ் ச சம்மிதம் –பால-1-97-என்கிறபடியே
நாலு வேதங்களும் ஒரு தட்டிலும் தான் ஒரு தட்டிலுமாக நிற்கிற
ஸ்ரீ ராமாயணம் ஆகிற பிரபந்தத்தை அருளிச் செய்து
சிந்த யாமாச கோந் வேதத் ப்ரயுஞ்ஜீயாத் இதி பிரபு -பால-4-3-என்கிறபடியே
யாரைக் கொண்டு இந்த பிரபந்தத்தை ப்ரவர்த்திக்கக் கடவோம்-என்று சிந்தித்த சமயத்தில்
குச லவர் வந்து பாதோப ஸங்க்ரஹணம் பண்ண
தவ் து மேதாவிநவ் த்ருஷ்ட்வா வேதேஷு பரி நிஷ்டிதவ்
வேத உப ப்ரும்ஹணார்த்தாய தவ் அக்ராஹயத பிரபு -என்கிறபடியே
உசித அதிகாரி முகத்தால் உப ப்ரும்ஹண ரூபமான இப்பிரபந்தத்தை ப்ரவர்த்திப்பித்தான் –
ஸ்ரீ பிரபந்த அவதாரம் -முதல் அதிகாரம் முற்றுற்று –
————–
சரண்ய விரத விசேஷ பிரகாசம் என்னும் எட்டாம் அதிகாரம் –
சக்ருதேவ ப்ரபந்நாயா ஸ்லோகார்த்தம் –விபீஷணோ வா ஸ்லோகார்த்தம்
சக்ருதேவ ப்ரபந்நாயா ஸ்லோகார்த்தம் —
ஸ்ருதி ஸ்ம்ருதி சதாசார ஸ்வஸ்ய ச பிரிய மாத்மந
சம்யக் சங்கல்பஜ காம தர்ம மூலமிதம் ஸ்ம்ருதம் -யாஜ்ஞ ஸ்ம்ருதி -1-7-என்று
மஹரிஷிகள் சொன்ன தர்ம பிரமாணங்கள் ஐந்தில் நாலை அருளிச் செய்து காட்டி –
பஞ்சம தர்ம பிரமாணத்தை அருளிச் செய்கிறார் –
சக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் சர்வ பூதேப்ய ததாம் ஏதத் விரதம் மம –யுத்த -106-53–
சக்ருதேவ
மற்ற உபாயத்தில் ஆவ்ருத்தி சாஸ்த்ரார்த்தம் ஆனால் போலே காணும்
பிரபத்தியில் அநா வ்ருத்தி சாஸ்த்ரார்த்தமாய் இருக்கும் படி
ஏவ -கார்த்தாலே
நைரபேஷ்யம் சொன்னபடி
ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே
என்கிற இரண்டாலே கோப்த்ருத்வ வரணமும்
ஆத்ம நிக்ஷேபமும் சொன்னபடி
ப்ரபந்நாய-என்று மாசநமுமாய்
யாசதே -என்று வாஸிகமுமாய்-என்றுமாம்
த்வயத்தில் போலே அடைவே உபாயத்தையும்
பலத்தையும் சொல்லுகிறது ஆகவுமாம்
ப்ரபந்நாய-என்று
கோபலீ வர்த்த நியாயத்தாலே ப்ரயோஜனாந்தர பரனைச் சொல்லி
தவாஸ்மீதி ச யாசதே -என்று
அநந்ய ப்ரயோஜனனைச் சொல்லுகிறது ஆகவுமாம்
சரணம் ச ப்ரபந்நா நாம் தவாஸ் மீதி ச யாசதாம்
பிரசாதம் பித்ரு ஹந்த்ரூணாம் அபி குரவந்தி சாதவ –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -106-53-என்கிற ஸ்லோகத்திலும்
இப்படியே யசோசித விவஷையைக் கண்டு கொள்வது
சதுர்விதா பஜந்தே மாம் –ஸ்ரீ கீதை -7-16- என்கிற உபாசனம் போலே
தாவ தார்த்திஸ் ததா வாஞ்சா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-73-இத்யாதி பிரமாணங்களாலே
பிரபத்தியும்
சகல பல சாதகமாய் இருக்கும்
அபயம்-என்று
சங்கோசா பாவத்தால் சர்வ பயாபாவத்தையும் சொல்லுகிறது
சர்வ பூதேப்ய -என்கிற
இத்தை பஞ்சமீ என்று சிலர் வியாக்யானம் பண்ணினார்கள்
ஸ்ரீ சோமயாஜி யாண்டான் உள்ளிட்டார் சதுர்த்தீ என்று நிர்வஹித்தார்கள்
இரண்டு பக்ஷத்திலும் உள்ள குண தோஷ தத் சமாதானங்களைத் தத் தத் கிரந்தங்களில் கண்டு கொள்வது
அதில் பஞ்சமீ பஷத்தில் –
ப்ரபந்நாய-என்கிற இதுக்கு -சங்கோசம் இல்லாமையால்
ப்ரபத்தியினுடைய சர்வாதிகாரம் சித்திக்கும்
சதுர்த்தீ பக்ஷத்தில்
சர்வாதிகாரத்வம் கண்ட யுக்தமாம்
பஞ்சமீ யானால்
கேவல ராவணாதி மாத்ரத்தைப் பற்ற அன்றி
ப்ரஹ்ம ருத்ராதிகளையும் –
நம்மையும் -பற்ற
பயம் இல்லாதபடி பண்ணுவோம் என்று அருளிச் செய்தபடியாம்
சதுர்த்தீ யானால்
விபீஷணன் என்று நினைக்க வேண்டா –
ராவணன் தான் ஆகிலும் நாம் அவனுக்கு அபய பிரதானம்
பண்ணுவோம் என்றதாம்
இப்பொருள் கீழில் பிரகரணத்துக்கும்
மேலில் பிரகாரணங்களில் ஸ்லோகங்களுக்கும் சேரும்
இந்த யோஜனையில் சர்வரையும் பற்ற பயாபாவம் அர்த்த சித்தம்
நிதா நாம் சர்வ பூதா நாம் ஏக கர்ம பல ப்ரத
இதி பஸ்யந் கஸாதுல்யத் குதஸ்ஸிந் நபி பேதி ஹி
சர்வா பராத நிஷ் க்ருத்யா பிரபத்த்யா கருணா நிதிம்
ப்ரஸாதயன் ந ஹி புநச ததோபி பயம் ருச்சதி
அபாய சம்ப்லவே பூய யதார்ஹம் அநு சிஷ்யதே
பிராயஸ் சித்திரியம் ஸாத்ர யத் புந சரணம் வ்ரஜேத்–ஸ்ரீ தேசிகருடைய காரிகை ஸ்லோகம் இது
ஏதத் விரதம்
இது சர்வ பிராமண அநு மதமாய்-
தவறில் பிரத்யவாயம் வரும்படியான தர்ம்யமான சங்கல்பம் காணும்
மம —
நமக்கு சங்கல்பம் நடத்துகைக்கு விலக்கான
அஞ்ஞான அசக்தைகள் ஒரு காலும் வாரா காணும் –
ஆகையால் விலக்க ஒண்ணாத இவ்விரதத்தை
பரிவரான நீங்களும் இசைந்து ரஷியுங்கள் என்று திரு உள்ளம்-
———
அபதிஸ்ய வேங்கடேசம் ஸ்வ ஹஸ்த சம்சக்த தூலிகா துல்யம்
அபய பிரதான சாரம் குரு பிரசாத ஸ்வயம் வ்யலிக்த்
பொன்னை இகழ்ந்து விருகங்கள் புல்லிய புல் உகந்தால்
மன்னர் எடுப்பதப் பொன்னலதே மன்னு உலகு அனைத்தும்
தன்னை அடைந்திடத் தான் அருள் செய்யும் தனிச் சிலையோன்
பொன்னடி நாம் அடைந்தோம் புறமார் என் கொல் செய்திடிலே
மூ உலகும் தன் பிழையைத் தானே சாற்ற
முனிவர்களும் தேவர்களும் மினிந்த அந்நாள்
தாவரிதாய் எங்கும் போய்த் தளர்ந்து வீழ்ந்த
தனிக் காகம் தான் இரந்த உயிர் வழங்கிக்
காவல் இனி எமக்கு எங்கும் கடன் என்று எண்ணிக்
காண நிலை இலச்சினை யன்று இட்ட வள்ளல்
ஏவல் பயன் இரக்கம் இதுக்கு ஆறு என்று ஓதும்
எழில் உடையோர் இணை யடிக் கீழ் இருப்போம் நாமே
சக்ருதேவ ப்ரபந்நாயா -ஒருக்காலே சரணாக அடைகின்றார்க்கும்
தவாஸ்மீதி ச யாசதே –உனக்கு அடிமை ஆகின்றேன் என்றற்கு
சர்வ பூதேப்ய –அருக்காதே அனைவருக்கும் அனைவராலும்
அபயம் -அஞ்சேல்
ததாமி -என்று அருள் கொடுப்பவன்
ஏதத் -இது தான்
விரதம் -ஓதும் இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும் இவை அறிவார் செயலுடன்
என் இசைவினாலும் நெருக்காத நீள் விரதம்
மம -எனக்கு ஓன்று என்று
நெறி யுரைத்தார் நிலை உணர்ந்து நிலை பெற்றோமே –
வேதத் திரளில் விதி யுணர்ந்தோர்கள் விரித்து உரைத்த
காதல் கதியையும் ஞானத்தையும் கருமங்களையும்
சாதிக்க வல்ல சரணாகதி தனி நின்ற நிலை
ஒதத் தொடங்கும் எழுத்தின் திறத்தில் உணர்மின்களே
இத்தால் கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை உகத்தி என்னும் அர்த்தத்தை வெளியிட்டு அருளுகிறார் இவற்றால்
——————-
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —
——————————————————————————————————————————————————————————-——————————————————————————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –