Archive for the ‘Sri Vaishna Concepts’ Category

ஸ்ரீ வசன பூஷணம் -சூர்ணிகை–237/238/239/240/241/242/243–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

April 14, 2012

சூரணை-237-

ராஜாவான ஸ்ரீ குலசேகர பெருமாள்-திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை ஆசைப் பட்டார் –

பகவத் சம்பந்த ரஹிதமான ஜந்மாதிகள் சத் கர்ஹிதம் என்னும் அத்தை தர்சிப்பித்தார் கீழ் –
தத் சம்பந்த சஹிதமான திர்யக் காதி ஜந்மமும் சத் ப்ரார்த் நீயமாய் என்னும் அத்தை தர்சிப்பிக்கிறார் மேல் –
அதாவது –
த்வதீய வர்ணரான ஏற்றத்தை உடைய ஸ்ரீ குலசேகர பெருமாள் -திர்யக் ஸ்தாவர ஜன்மங்கள் ஆனவை -வாசிகை பஷி ம்ருகதாம் -இத்யாதிகளாலே
பாப யோநிகளாக சொல்லப்  படா நிற்க செய்தே –
வேம்கடத்து கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே –
மீனாய் பிறக்கும் விதி உடையேன்   ஆவேனே –
செண்பகமாய் இருக்கும் திரு உடையேன் ஆவேனே –
தம்பகமாய் இருக்கும் தவம் உடையேன் ஆவேனே -என்று
திருமலை ஆழ்வாரோடு சம்பந்தமுடைய திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை பெறாப் பேறாக ஆசைப் பட்டார் -என்றபடி-

—————————————————

சூரணை -239-

ப்ராஹ்மண உத்தமரான-பெரிய ஆழ்வாரும்-திரு மகளாரும்-
கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணினார்கள் –

இப்படி ஆசைப் பட்ட அளவு அன்றிக்கே -தாழ்ந்த ஜென்மத்தை
ஆஸ்தானம் பண்ணினவர்களை அருளிச் செய்கிறார் –

அதாவது –
இனி இதுக்கு மேல் இல்லை -என்னும்படியான வர்ணத்தில் அவதரித்து –
வித்யா மாஹாத்ம்யாதிகளாலே -தஜ்  ஜாதீய சகல உத்தமரான பெரிய ஆழ்வாரும் –
வேத பயன் கொள்ள அவர் தம்மை போலே பேதை பருவத்திலே வேத சாரார்த்த வித்தமையாய் இருக்கும் அவர் திரு மகளான ஆண்டாளும்-
ஸ்ரீ கிருஷ்ண அவதார அனுபவத்தில் -அபிநிவேச அதிசயத்தாலே –
மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய் –
என் மகன் கோவிந்தன் –
பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப் பாங்கினால் -இத்யாதியாலும் –
ஆயர்பாடி செல்வ சிறுமீர்காள் –
நாமும் நம் பாவைக்கு –
ஆய்க்குலத்து உன் தன்னை பிறவி பெரும் தனை புண்ணியம் யாம் உடையோம் -இத்யாதியாலும் –
தான் அவளாகப் பேசும்படி -தாங்கள் அவதரித்த வர்ணத்துக்கு மூன்றாம் வர்ணம் ஆகையால் தண்ணிதாய் இருந்துள்ள –
அறிவு ஒன்றும் இல்லாத கோப ஜென்மத்தை புரையற ஏறிட்டுக் கொண்டார்கள் -என்கை-

———————————————————–

சூரணை -239-

கந்தல் கழிந்தால் சர்வருக்கும் நாரீணாம் உத்தமை உடைய அவஸ்தை வரக் கடவதாய் இருக்கும் –

இப்படி ஆசைப் படுகையும் -ஆஸ்தானம் பண்ணுகையும் -ஒழிய -கந்தல் கழிந்தால்
ஸ்வரூபம் இருக்கும் படி தான் என்ன -என்ன -அருளிச் செய்கிறார் –
அன்றிக்கே –
இப்படி விசிஷ்ட வேஷ பிரயுக்தமான தாரதம்ய அவஸ்தைகள் இன்றிக்கே -கந்தல் கழிந்தால் சகல ஆத்மாக்களுக்கும்
வரும் அவஸ்தை தான் எது என்ன -அருளிச் செய்கிறார் ஆகவுமாம்-

அதாவது –
ஆத்மா ஸ்வரூபத்தை உள்ளபடி பிரகாசியாதபடி அநாதி காலம் அனுபவித்து போந்த வந்தேறியான -அவித்யாதி தோஷம் –
பகவத் பிரசாத விசேஷத்தாலே – பின்னாட்டாதபடி சவாசனமாக போனால் -சகல ஆத்மாக்களுக்கும் –
சர்வ லஷண சம்பன்னா  நாரீணா முத்தமாவதூ -என்கிறபடியே –
ஸ்த்ரீத்வ லஷணங்கள் எல்லாவற்றிலும் குறைவற்று – ஸ்வ இதர சகல ஸ்த்ரீண உத்தமையாய் இருக்கும் பெரிய பிராட்டியருடைய நிலை
தன்னடையே வரக் கடவதாய் இருக்கும் என்கை-

——————————————–

சூரணை -240-

ஆறு பிரகாரத்தாலே-பரி சுத்த ஆத்ம ஸ்வரூபத்துக்கு தத் சாம்யம் உண்டாய் இருக்கும் –

அது எங்கனே என்னும் அபேஷையிலே அத்தை உபபதிக்கிறார் –

அதாவது –
1-அனந்யார்க்க சேஷத்வம் –
2-அநந்ய சரணத்வம் –
3-அநந்ய போக்யத்வம் –
4-சம்ச்லேஷத்தில் தரிக்கை –
5-விச்லேஷத்தில் தரியாமை-
6-ததேக நிர்வாஹ்யத்வம் -ஆகிற ஆறு பிரகாரத்தாலே –
நிச்சேஷ நிவ்ருத்த அவித்யாதி தோஷ தயா பரிசுத்தமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு
பிரகார ஷட்க பரி பூரணையான பிராட்டியோடு சாம்யம் நை சர்கிகமாக உண்டாய் இருக்கும் என்கை –
இந்த சாம்ய ஷட்கத்தை நினைத்து இறே-
கடி மா மலர் பாவை ஒப்பாள் –பெரிய திருமொழி -3 -7 -9 -என்று ஆழ்வார் அருளி செய்தது –
ஆக இவ் இரண்டு வாக்யமும் ப்ராசங்கிகம்-

———————————————-

சூரணை -241-

த்ருஷ்டத்தில் உத்கர்ஷம்-அஹங்காரத்திலே-
அத்ருஷ்டத்தில் உத்கர்ஷம்-அஹங்கார ராஹித்யத்தாலே –

இனி அவர்கள் உத்க்ருஷ்டமான ஜன்மங்களை உபேஷித்து –
நிக்ருஷ்டமான ஜன்மங்களை விரும்புவான் என்  -என்ன அருளி செய்கிறார் –

அதாவது –
ஆபிஜாத்யாதிகளும் -ஐஸ்வர்யமும் ஆகிற த்ருஷ்ட புருஷார்த்தத்தில்-ஒருவனுக்கு உண்டாம் உயர்த்தி –
விச்வாமித்ராதிகளை போலே தான் நின்ற நிலைக்கு மேலே உத்கர்ஷம் தேடப் பண்ணும் அஹங்காரத்தாலே உண்டாம் –
சேஷத்வாதிகளும்-கைங்கர்ய சம்பத்தும் ஆகிற -அதருஷ்ட புருஷார்த்தத்தில் ஒருவனுக்கு உண்டாம் உயர்த்தி –
இவற்றினுடைய அபிவிருத்தியில் ஆசையாலே நிலைக்கு நிலை தாழப் போம் படியான அஹங்கார ராஹித்யத்தாலே உண்டாம் -என்கை –

——————————————————

சூரணை -242-

ப்ரஹ்மாவாய் இழந்து போதல்-இடைச்சியாய் பெற்று விடுதல்- செய்யும் படியாய் இருக்கும் –

இவ் அஹங்கார- தத் ராஹித்யங்கள்- இழவு பேறுகளுக்கு உடலாம் படியை அருளிச் செய்கிறார் –

அதாவது –
த்ருஷ்ட உத்கர்ஷ அதிசயத்துக்கு தக்க அஹங்கார அதிகனான ப்ரஹ்மாவாய்-
த்வி பரார்தா வாசனே மாம் பிராப்தும் அர்ஹசி பத்மஜ -என்றும் –
கடி கமலத்துக்குள் இருந்தும் காண்கிலான்-கண்ணன் அடிக் கமலம் தன்னை அயன் -மூன்றாம் திரு அந்தாதி -56 –
என்றும் சொல்லுகிறபடியே இழந்து போதல் –
அஹங்கார ஹேதுக்கள் ஒன்றும் இலாமையாலே தத் ரஹீதையாய் -இடக்கை வலக்கை அறியாத இடைச்சியான சிந்தயந்தியாய்-
முக்திம் கதான்ய கோப கன்யகா-என்னும்படி-அவன் திருவடிகளைப் பெற்று விடுதல் செய்யும் படியாய் இருக்கும்
இவ் அஹங்கார தத் ராஹித்யங்களின் ஸ்வாபம் என்கை –
இப்படி அஹங்கார தத் ரஹீத்யங்கள் அவனை-இழகைக்கும் பெருகைக்கும் உடல் ஆகையாலே
ஸ்ரீ குலசேகர பெருமாள் முதலானவர்கள் அஹங்கார ஹேதுவான ஜன்மங்களை அனாதரித்து
தத் ரஹித ஜன்மங்களை ஆதரித்தார்கள் -என்று கருத்து —

—————————————————-

சூரணை-243-

இப்படி சர்வ பிரகாரத்தாலும் நாச ஹேதுவான அஹங்காரத்துக்கும்-அதனுடைய கார்யமான
விஷய ப்ராவண்யத்துக்கும் விளை நிலம் தான்-ஆகையாலே –
1–தன்னைக் கண்டால் சத்ருவைக் கண்டால் போலேயும் –
2–அவற்றுக்கு வர்த்தகரான சம்சாரிகளைக் கண்டால் சர்ப்பத்தை கண்டால் போலேயும் –
3–அவற்றுக்கு நிவர்தகரான ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் பந்துக்களை கண்டால் போலேயும் –
4–ஈஸ்வரனைக் கண்டால் பிதாவைக் கண்டால் போலேயும் –
5–ஆசார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக் கண்டால் போலேயும் –
6–சிஷ்யனைக் கண்டால் அபிமத விஷயத்தை கண்டால் போலேயும் -நினைத்து –
அஹங்கார -அர்த்த- காமங்கள் மூன்றும்–(த்ரி த்வாரங்கள் இவை நரகத்தில் தள்ள )-அஹங்காரம் அனுகூலர் பக்கல் அநாதாரத்தையும்–அர்த்தம் -பிரதிகூலர் பக்கல் பிராவண்யத்தையும்-
காமம் – உபேஷிக்கும் அவர்கள்-(பைய நடமின் எண்ணா முன்) பக்கல் அபேஷையும்-பிறப்பிக்கும் என்று அஞ்சி –
ஆத்ம குணங்கள் நம்மாலும் -பிறராலும்-பிறப்பித்துக் கொள்ள ஒண்ணாது –
சதாசார்ய பிரசாதம் அடியாக வருகிற பகவத் பிரசாதத்தாலே பிறக்கும் அத்தனை என்று துணிந்து –
7–தேக யாத்ரையில் உபேஷையும் –
8–ஆத்ம யாத்ரையில் அபேஷையும் –
9–பிராக்ருத வஸ்துக்களில் போக்யதா புத்தி நிவ்ருத்தியும் –
10–தேக தாரணம் பரமாத்ம சமாராதான சமாப்தி பிரசாத பிரதிபத்தி என்கிற புத்தி விசேஷமும் -(-பிராசாதம் அடியாகவே இந்த தேக தாரணம் இதுக்கு என்ற பிரதிபத்தி உண்டாகும் )
11–தனக்கு ஒரு க்லேசம் உண்டானால் கர்ம பலம் என்றாதல்-
க்ருபா பலம் என்றாதல்-பிறக்கும் ப்ரீதியும் (-இந்த பூமி கஷ்டம் விலகாத பூமி என்ற எண்ணம் வேண்டுமே -இந்த பூமியில் கஷ்டம் வேண்டாம் என்று நினைக்காமல் -கிருபா பலத்தால் கஷ்டம் கொடுத்து மோக்ஷம் இச்சை பிறப்பிக்கிறான் என்ற எண்ணம் வேண்டுமே )
12–ஸ்வ அனுஷ்டானத்தில் சாதனத்வ புத்தி நிவ்ருத்தியும் –
13–விலஷணருடைய ஜ்ஞான அனுஷ்டானங்களில் வாஞ்சையும் –
14–உகந்து அருளின நிலங்களில் ஆதராதிசயமும் ,மங்களாசாசனமும் –
15–இதர விஷயங்களில் அருசியும் –
16–ஆர்த்தியும்
17–அனுவர்தன நியதியும் -(-45-விஷயங்கள் அனுவர்த்த நியதிகள் இதில் மேல் விவரிப்பார் )
18–ஆகார நியதியும் –
19–அனுகூல சஹவாசமும் –
20–பிரதிகூல சஹாவாச நிவ்ருத்தியும் –
சதாசார்ய ப்ரசாதத்தாலே வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் –

இரண்டாம் பிரகரணம் முற்றிற்று-
தன்னை தானே முடிக்கை யாவது -என்று தொடங்கி-இவ்வளவாக
அஹங்காராதிகளின் தோஷம் உபபாதிக்க பட்டது –
அநந்தரம் பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்று இருக்கும்
பிரபன்ன அதிகாரி உடைய திநசர்யா விசேஷம் சொல்லப் படுகிறது –

இப்படி சர்வ பிரகாரத்தாலும் -என்று தொடங்கி -சதாசார்யா பிரசாதத்தாலே
வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் -என்னும் அளவாக —
இப்படி -என்று கீழ் உக்தமான பிரகாரத்தை பரமார்சிக்கிறது –
சர்வ பிரகாரத்தாலும் நாச ஹேதுவாகை யாவது -ஸ்வரூபேண முடித்தும் –
பாகவத விரோதத்தை விளைத்து முடித்தும் -பகவல் லாப விரோதியையும் -எல்லாப் படியாலும் –
அசந்நேவ-என்கிறபடியே -அசத் கல்பமாம் படி ஸ்வரூபத்தை உருவு அழிய பண்ணுமதாய் இருக்கை-

அஹங்காரம் தான் தேக ஆத்ம அபிமான ரூபமாயும் –
தேஹாதிரிக்த  ஆத்ம விஷயத்தில் -ஸ்வாதந்திர அபிமான ரூபமாயும்-இரண்டு வகை பட்டு இறே இருப்பது –
இவ்விடத்தில் இவை இரண்டும் சேர சொல்லப் படுகிறது –
அதனுடைய கார்யமான விஷய பிராவண்யத்துக்கும் -தேக ஆத்ம அபிமானமும் -ஸ்வா தந்திர அபிமானமுமே விஷயங்களை
ஸ்வ போக்யத்வேன விரும்புகைக்கு மூலம் ஆகையாலே -விஷய பிராவண்யத்தை அஹங்கார கார்யம் என்கிறது –
விஷய சப்த்தாலே கீழ் அனுகூலமாகவும் பிரதி கூலமாகவும் சொல்லப்பட்ட -விஹித நிஷித்த தத் ரூப விஷய த்வத்தையும் சொல்லுகிறது –
விளை நிலம் தான் ஆகையாலே -என்றது -இவை இரண்டுக்கும் ஜன்ம பூமி பகவத் ஸ்வரூப திரோதாநாதிகளை பண்ணக் கடவ குண த்ரயாத்மாக –
பிரகிருதி பரிமாண ரூபமாய் -ஸ்வ கர்ம விசேஷா ரப்தமாய் இருக்கிற -சரீர விசிஷ்டனான தான் ஆகையாலே என்றபடி –
கர்ம அனுகுணமாக ரஜஸ் தமசுகளாலே கலங்க வடிக்கும் சரீர விசிஷ்டைதையாலே –
மதி மயங்கி-தான் அல்லாத தேகத்தை தானாகவும் -தனக்கு உரியன் அல்லாத தன்னை ஸ்வதந்த்ரனாகவும் அபிமானித்து தனக்கு
அநர்த்த கரமான விஷயங்களிலே அத்ய ஆதரத்தை பண்ணுவதாம் அவன் தானே இறே –
தன்னைக் கண்டால் -இத்யாதி -இப்படி அனாதிகாலம் போந்தவனாய் -இப்போதும் அதுக்கு யோக்யமான
சரீர விசிஷ்டனாய் இருக்கிற தன்னை தர்சித்தால்-கொன்று அல்லது விடேன் என்று –
ச ஆயுதராய் பல் கவ்வித் திரியும் சத்ருவை கண்டால் போலே -குடல் கரித்து -தனக்கு நாசகனாய் நினைத்தும் –

தங்களுடைய உக்தி விருத்திகளாலே -துர் வாசனையை
கிளப்பி -அஹங்காராதிகளை மேன்மேலும் வளரும்படி பண்ணும் -தத் உபய வஸ்ரான சம்சாரிகளை
கண் எதிரே கண்டால்-அணுகில் மேல் விழுந்து அள்ளிக் கொள்ளும் அதிக குரூரமான சர்பத்தை
கண்டால் போலேயும் அஞ்சி நடுங்கி பிற் காலித்து நமக்கு பாதகர் என்றே நினைத்தும் –

தங்களுடைய உபதேசம் அனுஷ்டானங்கள் இரண்டாலும் -அஹங்காராதிகளின் தோஷ தர்சனத்தை
பண்ணுவித்து -தத் பிரசங்கத்திலே பீத பீதனாம் படி பண்ணி -சவாசனமாக அவற்றை நிவர்திப்பிக்கும்
மத்யம பத (-நமஸ்-உகாரம் என்றுமாம்-) நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்களை காணப் பெற்றால்-தன்னுடைய அநர்த்த ஆப்யுதங்கள்
இரண்டும் தங்களதாய்-தீயது விலக்கி-நல்லத்தில் மூட்டி ரஷிக்கும் ஆப்த பந்துக்களை கண்டால் போலே
அத்ய ஆதரம் பண்ணி நமக்கு நல் துணை யானவர்கள் என்று நினைத்தும் –
அடியிலே கரண களேபரங்களை தந்து -அவற்றை கொண்டு வியபிசரியாமல் நல் வழி நடக்கும் படி சாஸ்த்ரங்களை காட்டி –
அக்ருத்ய கரணாதிகளில் சிஷித்து சர்வ அவஸ்தையிலும் தன்னுடைய ஹிதமே பார்த்து போரும் ஈஸ்வரனை
அர்ச்சா ஸ்தலங்களிலே கண்களார கண்டால் -உத்பாதகனாய் -வித்யாப்ரதனாய் –
அபேத பிரவர்தகனாதபடி நியமித்து நடத்தி கொண்டு போரும் ஹிதைஷியான
பிதாவை கண்டால் போலே -சிநேக சாத்வச வினயங்களை உடையனாய் கொண்டு -நமக்கு ஹித பரன்-என்று நினைத்தும் –

அநாதி காலம் அசந்நேவ என்னும் படி -கிடந்த தன்னை -பகவத் சம்பந்தத்தை அறிவித்து –
சத்தானாக்கி மென் மேலும் தன் உபதேசத்தாலே ஞான வைராக்ய பக்திகளை  விளைவித்து –
கையில் கனி என பகவத் விஷயத்தை காட்டித்தரும் -மகா உபகாரகனாய் –
உன் சீரே உயிர்க்கு உயிராய் -என்றும் –
உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலேன் -என்றும்
சொல்லும்படி -குண விக்ரஹங்களாலே தனக்கு தாரக போக்யனுமாய் இருக்கும்
சதாச்சார்யனை  கண்ணுக்கு இலக்காகும் படி கண்டால் -கண்ணாஞ்சுழலை இடும்
பெரும் பசியன் -தாரகமும் போக்யமுமான சோற்றை கண்டால் போலே
அத்ய அபிநிவேசதோடே அனுபவித்து -நமக்கு தார போக்ய விஷயம் என்றே நினைத்தும் –

சாத்யாந்தர நிவ்ருத்தாதி சமஸ்த ஸ்வாபவ  சம்பன்னதயா -சம்யக் ஞான பிரேமவானாய்
இருக்கும் சச் சிஷ்யனைக் கண்டால்-தனக்கு ஆனந்த ஆகவமான அபிமத விஷயத்தை
கண்டால் போலே -பகவத் குண அனுசந்தான தசையில் -நாம் சொல்லுகிற பகவத் குணங்களை
ஆதரித்து கேட்ப்பது -அனுபாஷிப்பது -வித்தனாவதாம் ஆகாரங்களாலே நமக்கு ஆனந்த அவஹன் என்று நினைத்தும் –

அஹங்கார அர்த்த காமங்கள் மூன்றும் -இத்யாதி –
இவை மூன்றிலும் வைத்து கொண்டு -அஹங்காரம் அனுகூலர் பக்கல் -அநாதாரத்தை பிறப்பிக்கும் –
அதாவது சேஷத்வத்தை தன் சன்னிதியில் ஜீவிக்க ஒட்டாத படி இறே அகங்காரத்தின் பலம் இருப்பது –
அஹங்காரி யானவன் -ந ந மேயம் கதஞ்சன-என்று இருக்குமது ஒழிய ஒரு விஷயத்திலும் தலை சாய்க்க இசையானே –
ஆகையாலே அஹங்காரம் மேல் இடுமாகில் -ஸ்வரூப வர்த்தகராய் கொண்டு அனுகூலராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை கண்டால் –
நம்முடைய சேஷிகள் என்று துடை நடுங்கி எழுந்து இருந்து பிரணமாதி பூர்வகமாக அனுவர்தகங்களை பண்ண ஒட்டாதே -தன்னை
அவர்களில் அதிகனாவாதல் -அவர்களை தன்னோடு சமராகவதால் -புத்தி பண்ணி அநாதாரிக்கும் படி பண்ணும் என்கை –

அர்த்தம் பிரதி கூலர் பக்கல் ப்ராவண்யத்தை பிறப்பிக்கும் -அதாவது –
ஆரையாகிலும் சென்று அநு வர்த்தித்து -ஒரு காசு பெற்றதாய் விட வேணும் என்னும் படி இறே அர்த்த ராகம்  இருக்கும் படி –
ஆகையால் அது ஸ்வரூப நாசகத்வேன-பிரதி கூலரான சம்சாரிகளைக் கண்டால் –
வெருவி ஓடிப் போக வேண்டி இருக்க -ஒரு காசை நச்சி அவர்களோடே உறவு பண்ணி –
அவர்கள் இருந்த இடங்களிலே -பலகாலம் செல்லுவது -அவர்களை அழைத்து விருந்து இடுவது –
அவர்கள் குண கீர்த்தனம் பண்ணுவதாம் படி -அவர்கள் விஷயத்தில் பிராவண்யத்தை  உண்டாக்கும் என்கை-

காமம் உபேஷிக்கும் அவர்கள் பக்கல் அபேஷையை பிறப்பிக்கும் -காமயத இதி காம -என்கிறபடி –
காம சப்தத்தாலே விஷய சம்போக சுகத்தை சொல்லுகிறது -அது ஈசி  போமின் – இத்யாதிப் படியே –
தாரித்ர்ய வார்த்தகாதிகள் அடியாக தன்னை முகம் பாராமல் தள்ளி -கதவடைத்து -உபேஷாவாதம் பண்ணும்
ஸ்திரீகள் பக்கலிலே -ஏழையர் தாம் இழிப்ப  செல்வர் -என்கிறபடியே -அவர்கள் உபேஷாவாதம்
முதலானவை தன்னையே உத்தேச்யமாய் கொண்டு செல்லும் படி -விலஷணர் கேட்டால் சிரிக்கும் படியான
ஹேய அபேஷையை விளைக்கும் என்கை –

ஆக இப்படி அஹங்காராதிகள் மூன்றும் –
ஸ்வரூப வர்த்தகரை அநாதரிக்கும் படியும் –
ஸ்வரூப நாசகரை ஆதரிக்கும் படியும் –
ஸ்வரூப நாசகதையோடே -உபேஷகருமாய் இருக்கும் அவர்களை அபேஷிக்கும் படியும் –
பண்ணும் என்று அவற்றின் கொடுமைகளை அநு சந்தித்து -என் செய்ய தேடுகிறதோ -என்று அஞ்சி –

அர்த்த காம அபிமானங்கள் மூன்றும் -என்று பாடம் ஆனாலும்-(கர்வ அபிமான அஹங்காரம் என்றும் உண்டே-) அபிமான
சப்தத்தாலே அஹங்காரத்தை சொல்லுகிறது ஆகையாலே -அனுகூலர் பக்கல் -இத்யாதியை –
நிரை நிரை ஆக்காதே -யதா யோகம் கொண்டு கீழ் சொன்ன பிரகாரத்திலே யோசிக்க கடவது –

ஆத்ம குணங்கள் -இத்யாதி -சம தமாதி ஆத்ம குணங்கள் -அநாதி காலம்  அஹங்காராதிகளுக்கு
விளை நிலமாய் -அநாத்ம குணங்களை கூடு பூரித்து கொண்டு -கர்ம பரதந்த்ராய் இருக்கிற
நம்முடைய யத்னத்தாலும் -ஆத்ம குண உதய விரோதிகளான அஹங்காராதிகளுக்கு வர்த்தகராய்-
அநாத்ம குண பரி பூரணராய் -கர்ம வஸ்ரராய் -இருக்கிற பிறருடைய யத்னத்தாலும் –
பிறப்பித்துக் கொள்ள  ஒண்ணாது -ஆத்ம குணங்களுக்கு எல்லாம் கொள்கலாமாய்-அடியிலே
தன்னுடைய நிர்கேதுஹ கிருபையாலே நம்மை அங்கீகரித்து அருளி -நமக்கு
ஆத்ம குணம் உண்டாவது எப்போதோ என்று பல காலும் கரைவது -பகவானை
அர்த்திப்பதாய் கொண்டு போரும் சதாச்சார்யன் உடைய பிரசாதம் அடியாக வருகிற நம்முடைய
ஆத்ம குண உதய விரோதி பாப ஷயம் பண்ணி -அமலங்களாக விழிக்கும் பகவானுடைய
பரிபூர்ண பிரசாதத்தாலே பிறக்கும் அத்தனை என்று அத்யவசித்து

தேக யாத்ரையில் உபேஷை யாவது -தேக ரஷண அர்த்தமான வியாபாரத்தில் விருப்பமற்று இருக்கை-
ஆத்ம யாத்ரையில் அபேஷை யாவது -சேஷத்வமே வடிவான ஆத்மாவுக்கு தாகரகாதிகளான
குண அனுபவ கைங்கர்ய பிரவ்ருத்தியில் -பெற்ற  அளவால் த்ருப்தனாய் இராதே -மேன்மேலும் ஆசைப் படுகை-
பிரக்ருத வஸ்துக்களில் போக்யதா புத்தி நிவ்ருத்தி யாவது -அசந ஆசாதனங்களுக்கு-(உண்ணவும் உடுக்கவும் உறுப்பான
பிராக்ருத பதார்த்தங்களில் ஆதரத்துக்கு அடியான போக்யத்வ புத்தி தவிருகை –
தேக தாரணம் -இத்யாதி -அதாவது -அந்த பிராக்ருத வஸ்துக்களில் தேகம் தரிக்கைக்கு  தக்க அளவு புஜிக்கை–
பரமாத்மாவான சர்வேஸ்வரனுடைய சமாராதனத்தின் சமாப்தி ரூபையான பிரசாத பிரதி பத்தி என்கிற -புத்தி விசேஷமும் என்கை –
அன்றிக்கே -பரமாத்ம சமாராதன சமாப்தி -என்கிற புத்தி விசேஷமும் -தத் பிரசாத பிரதி பத்தி என்கிற – புத்தி விசேஷமும் -என்னவுமாம் –

தனக்கு -இத்யாதி -அதாவது -முமுஷுவாய் -பிர பன்னன் ஆனாலும் -பிராரப்த சரீரம் இருக்கும் அளவும் -தாப த்ரயம் வருவது தவிராது இறே -ஆகையாலே
இச் சரீரத்தோடு இருக்கிற தனக்கு -தாப த்ரயங்களில் -ஏதேனும் ஒரு க்லேசம் உண்டானால் -இது அனுபவ விநாச்யமான பிராரப்த கர்ம பலமன்றோ –
ஏவம் பூதம் கர்மங்கள் உள்ளவை கழியும் அளவன்றோ -இச் சரீரத்தோடு எம்பெருமான் வைக்கிறது-
பிராப்தி பிரதிபந்தங்களில் ஒன்றாகிலும் கழியப் பெற்றோமே என்கிற அநு சந்தானத்தாலே ஆதல் –
துர் வாசனையாலே இவ் உடம்பை விட இசையாமல் -பிராக்ருத பதார்த்தங்களையும்
ஜீவித்து கொண்டு -சம்சாரத்துக்கு உள்ளே பொருந்தி இருக்கிற நம்மை -துக்க தர்சனத்தை
பண்ணுவித்து இதில் பற்று அறுத்து கொண்டு போக நினைக்கிற சர்வேஸ்வரனுடைய
கிருபையின் பலம் அன்றோ -இது என்கிற அநு சந்தானத்தாலே ஆதல்-உண்டாகக் கடவ ப்ரீதியும் என்கை –
பூர்வாகம் உத்தராகம் பிராரப்த கண்டம் எல்லாம் கழிக்கிற வனுக்கு -வர்த்தமான சரீரத்தில் அனுபாவ்ய கர்மம் இத்தனையும் கழிக்கை அரிதன்று இறே –
கர்ம பலமான துக்க பரம்பரைகளை அனுபவியா நின்றாலும் -இத் தேகத்தை விட என்றால்
இசையாத இவனை -நிர் துக்கனாக்கி வைப்போம் ஆகில் -இச் சரீரத்தோடு நெடும் காலம்
இருக்க இச்சித்தல் -இன்னும் ஒரு சரீரம் தன்னை இச்சிக்குதல் செய்யும் ஆகையால் –
இச் சரீரத்துக்கு உள்ள கர்மம் அனுபவித்தே இருக்கக் கடவன் என்று இறே வைக்கிறது –
ஆனபின்பு மற்று உண்டான கர்மங்கள் எல்லாம் கழித்தது சம்சாரத்தில் நின்றும் இவனை
கடுக திருவடிகளிலே சேர்த்து கொள்ளுகையில் உண்டான கிருபையாலே ஆனாப் போலே –
இத்தனையும் கழியாமல் வைத்ததும் கிருபையாலே  இறே –
அநாதி காலம் பரிக்ரஹித்த சரீரம் தோறும் அனுபவித்த துக்கம் -பகவன் நிக்ரஹ பலம் -இவன்
அனுக்ரஹ பலம் -யஸ்ய அனுக்ரகம் இச்சாமி -தஸ்ய வித்தம் ஹராம் யஹம் -என்றார் இறே– ஆகையால்-இத்தை கிருபா பலம் -என்கிறது –

ஸ்வ அனுஷ்டானத்தில் சாதனத்வ புத்தி நிவ்ருத்தி -யாவது -பிரபன்னனான தன்னுடைய
அதிகார அநு குணமாக அனுஷ்டித்து கொண்டு போரும் நல் ஒழுக்கங்களை-பேற்றுக்கு சாதனமாக நினையாது ஒழிகை –
விலஷணருடைய ஞான அனுஷ்டானங்களில் வாஞ்சை யாவது -நாட்டாரோடு இயல் ஒழிந்து
நாரணனை நண்ணி இருக்கையாலே -நிர்மல ஞான பக்திகராய் இருக்கும் -விலஷணரான பூர்வர்களுடைய –
விலஷணமான அந்த ஞானமும் அனுஷ்டானமும் நமக்கு உண்டாக வேணும் என்னும் ஆசை –

உகந்து அருளின நிலங்களில் ஆதார அதிசயம் -ஆவது -தான் உகந்த ஊர்  -என்கிறபடியே
சர்வேஸ்வரன் உகந்து வர்த்திக்கிற திவ்ய தேசங்கள் என்றாதல்-
கண்டியூர்  அரங்கம் மெய்யம் கச்சி பேர் மலை என்று மண்டினார் -என்றபடியே
மனஸ் அங்கே மண்டி விழும்படி மென்மேலும் பெருகுகிற  ஆதரம் –
மங்களா சாசனம் ஆவது -அவ்வோ திவ்ய தேசங்களில் விரும்பி வர்திக்கிறவனுடைய சௌகுமாரதையும் வாசி அறிந்து நோக்கும் பரிவர் இல்லாமையும் –
பிரதிகூலர் வர்க்கங்களின் அதிசயத்தையும் நினைத்து ஏங்கி -என் செய்ய தேடுகின்றது என்று வயிறு எரிந்து இரவும் பகலும் திருப் பல்லாண்டு பாடுகை –

இதர விஷயங்களில் அருசி யாவது -பகவத் வியதிரிக்தங்களான ஹேய விஷயங்களில் -தோஷ தர்ச நாதிகளாலே விருப்பம் அற்று இருக்கை –
ஆர்த்தி -யாவது -இதர விஷய ப்ராவண்ய ஹேதுவான இவ் உடம்போடு இருள் தரும்  மா ஞாலத்தில் இருக்கிற இதில் அடிக் கொதிப்பாலும் –
பிரப்ய வைலஷண்ய தர்சனத்தால் வந்த பிராப்தி விளம்ப அசஹத்வத்தாலும் படும் கிலேசம் –
அனுவர்தந நியதி யாவது -பகவத் பாகவத விஷயங்களில் -ஸ்வ சேஷத்வ அநு குணமாக –
நீச உக்தி நீச விருத்திகளாலே பண்ணும் அநு வர்த்தநத்தை -பிராக்ருத விஷயங்களில் மறந்தும் செய்யாது ஒழிகை —

ஆகார நியதி -யாவது -ஜாத்ய ஆஸ்ரய நிமித்த அதுஷ்டங்களாய் -சர்வேஸ்வரனுடையவும் ததீயருடையவும்
பிரசாதங்களான வஸ்துக்களையே ஆகாரமாகக் கொள்ளும் அது ஒழிய -தத் இதரங்கள் ஆனவை கொள்ளக் கடவோம் அல்லோம் என்று இருக்கை –

அனுகூல சஹவாசம்–ஆவது -ஸ்வ சம்சர்க்கத்தாலே ஜ்ஞானாதிகளை வர்திப்பியா நிற்கும் அனுகூலர் ஆனவர்களுடன் ஷண காலமும் பிரியாதே கூடி வர்த்திகை –
பிரதி கூல சஹவாச நிவ்ருத்தி -யாவது -ஸ்வ சம்சர்க்கத்தாலே -ஜ்ஞான அனுஷ்டானங்களை நசிப்பியா நிற்கும் பிரதிகூலரானவர்களுடன் ஷண காலமும் கூடி வர்த்தியாது ஒழிகை –
இங்கு சொன்ன அனுகூலரும் பிரதி கூலரும் இன்னார் என்னும் இடம் மேலே தாமே அருளிச் செய்ய கடவர் இறே —

சதாச்சார்யா பிரசதத்தாலே வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் -அதாவது –
கீழ் சொன்ன இவை இத்தனையும் – ஜ்ஞான அனுஷ்டான பரிபூர்ணனான சதாச்சார்யன் உடைய சர்வ மங்கள ஆவஹமான
பிரசாதத்தாலே தன்னடையே மேன்மேலும்  அபிவிருத்தமாம் படி செய்து கொண்டு-போரக்  கடவன் என்றபடி –
சதாச்சார்யா பிரசாதத்தாலே வர்த்திக்கும் படி இவன் பண்ணிக் கொண்டு போருகை யாவது – தத் பிரசாதகங்களை  செய்து கொண்டு போருகை –
தத் பிரசாதகங்கள் ஆவன -இதனுடைய உபபாதன ஸ்தலத்தில் அருளிச் செய்கிறவை –
போரக் கடவன் -என்று விதி ரூபேண அருளி செய்தது -இதனுடைய அவஸ்ய அனுஷ்டேத்யத்வம் தோற்றுகைக்காக-

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Advertisements

ஸ்ரீ ராமானுஜர் பணித்த–ஆறாயிரப்படி குரு பரம்பரா பிரபாவம் – 10–சரம சந்தேசங்கள் -/72- கட்டளைகள்-பிரபன்னாம்ருதம் படி-

April 11, 2012

ஆறாயிரப்படி குரு பரம்பரா பிரபாவம் -சரம சந்தேசம் –

1-ஒருவன் பிரபன்னன் ஆனால் அவனுடைய ஆத்மயாத்ரை  ஈஸ்வர ஆதீனம் ஆகையால் அதுக்குக் கரைய வேண்டா
2-இனி இவனுடைய தேக யாத்ரை கர்மாதீனம் ஆகையாலே அதுக்குக் கரைய வேண்டா -கரைந்தான் ஆகில் நாஸ்திகனாம் இத்தனை –
3- உபயாம்சத்திலே அந்வயியாதே ப்ராப்யமான பகவத் பாகவத கைங்கர்யத்திலே அந்வயித்து கால ஷேபம் பண்ண வேண்டும்
4-ப்ரபன்ன அதிகாரிக்கு முன்னடி பார்த்து வர்த்திக்க வேண்டியது மூன்று விஷயங்கள் உண்டு
அவை யாவன -அனுகூலர் என்றும் ப்ரதிகூலர் என்றும்  அனுபயர்-இரு வகுப்பிலும் சேராதவர் –
அனுகூலராவார் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
பிரதிகூலராவார் -பகவத் த்வேஷிகள்
அனுபயராவார் -சம்சாரிகள்
5-இவருள் அனுகூலரைக் கண்டால் சந்தன குசூம தாம் பூலங்களைக் கண்டால் போலேயும்
அபிமத விஷயத்தைக் கண்டால் போலேயும் உகந்து போர்க் கடவன்
பிரதிகூலரைக் கண்டால் சர்பாதிகளைக் கண்டால் போலே வெருவி வர்த்திக்க கடவன்
அனுபயரைக் கண்டால் காஷ்ட லோஷ்டாதிகளைக் கண்டால் போலே த்ருணீ கரித்து வர்த்திக்கக் கடவன்
அந்த சம்சாரிகள் அனுகூலித்தார்கள் ஆகில் ஆத்மஜ்ஞானத்தை உபதேசிக்கவும்
அனுகூலியார்கள் ஆகில்  ஐயோ என்று கிருபை பண்ணிப் போரவும்
6-இப்படி செய்ய ஒட்டாது ஒழிகிறது-அர்த்த காம ப்ராவண்யம் –
அர்த்த காமம் அடியாக ஸ்ரீ வைஷ்ணவர்களை அனாதரிக்கும் ஆகில் –
சார்வ பௌமனான ராஜ புத்ரனை ராஜ சந்நிதியில் பரிபவித்தால் ராஜா வெறுத்து இருக்குமா போலே எம்பெருமான் திரு உள்ளம் வெறுக்கும்
அர்த்த காமம் அடியாக பிரதிகூலரை ஆதரிக்குமாகில் சார்வ பௌமனான ராஜாவின் மகிஷி ஷூத்ர ஜந்துக்கள் பக்கல் மடி பிச்சை புக்கால்
ராஜாவுக்கு அவத்யமாகையால் ராஜா வெறுக்குமா போலே
அனுபயரை ஆதரிக்குமாகில் ரத்தத்துக்கும் பல கறைக்கும் வாசி அறியாதா போலே
பியாந்த ஜ்ஞானம் கார்யகரமாய்த்து இல்லை என்று எம்பெருமான் இவனை அநாதரிக்கும்-
7-     பின்பு பட்டரைப் பார்த்தருளி -கூரத்தில் ஆழ்வானையும் கந்தாடை ஆண்டானையும் போலே கூரகுலதிலகரான நீரும்
வாதூலகுல திலகரான கந்தாடை யாண்டானும்  நம்மதியாக யுண்டான
சௌப்ராத்ரத்தை யுடையராய்
மச்சித்தா மத்கத ப்ராணா போதயந்த பரஸ்பரம் -என்னும்படியாக இருக்க அருளிச் செய்தார்
8-ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பார்த்து இருக்கும் நாள் பண்ணலாம் கைங்கர்யங்கள் ஆறு யுண்டு –
அவை யாவன –
1-ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருகை
2-அதற்கு யோக்யதை இல்லாவிடில் அருளிச் செயலை ஓதியும் ஒதுவித்தும் போருகை
3-அதற்கும் யோக்யதை இல்லா விடில் உகந்து அருளின நிலங்களில் அமுதுபடி சாத்துப்படி முதலானவற்றை யுண்டாக்கி நடத்திக் கொண்டு போருகை –
4-திரு நாராயண புரத்திலே ஒரு குடில் கட்டிக் கொண்டு இருக்கை
5-அதற்கும் யோக்யதை இல்லையாகில் த்வயத்தை அர்த்தானுசந்தானம் பண்ணிப் போருகை
6-அதற்கும் யோக்யதை இல்லையாகில் -என்னுடையவன் -என்று அபிமாநிப்பான்
ஒரு பரம  பாகவதன்  -அவனுடைய அபிமானத்தில் ஒதுங்கிப் போருகை –

9-பிரிய பிரியதர பிரியா தாமங்கள் இன்னது என்றும்
ப்ராப்தி பிரதிபந்தகமான பகவத் பாகவத ஆச்சார்யா விஷயங்களில் அபசாரத்தை வருந்தியும் பரிஹரித்து போருங்கோள்-

10-ஸ்ரீ வைஷ்ணவ அதிகாரிக்கு த்வயத்தை ஒழிய மந்த்ரம் இல்லை
ஒரு மிதுனம் ஒழிய பற்றும் வஸ்து இல்லை
கைங்கர்யத்தை ஒழிய புருஷார்த்தம் இல்லை
ஆச்சார்யா அபிமானம் ஒழிய மோஷ யுபாயம் இல்லை
பாகவத அபசாரம் ஒழிய மோஷ விரோதி இல்லை-

இவை முதலானவைகளாய் உள்ள அநேக ஹிதங்களையும் பிரசாதித்து உபசம்ஹரித்து அருளினார் –

————————————————————————–

ஸ்ரீ வைஷ்ணவான் சமாஹூய தத்ததத்ர ஸ்திதான் பஹூன்
க்ருபாமாத்ரா பிரசந்தார்யோ யதிராஜோ ஜகத்குரு
சார்வ சாஸ்த்ரார்த்த சாராணி ஸூ வாக்யாநி த்விசப்ததி
சமாஹ்ருத்ய விதாயாசு பூரிதா நம் மகாயஸா
வைஷ்ண வேப்ய ப்ரோவாச சிஷ்யேப்ய கருணார்ணவா-

பிரபன்னாம்ருதம் படி ஸ்ரீ உடையவர் அருளிச் செய்த -72 வார்த்தைகள் –

1-ஆசார்யர் திருவடி பணிந்து போவது போல்
அனைத்து ஸ்ரீ வைஷ்ணவர்கள் இடம் நடக்க வேண்டும் –
2-சம்ப்ரதாய குருக்கள் வார்த்தையில்   நம்பிக்கை வேணும் –
3-புலன்கள் இழுத்த வழி செல்லாமல் இருக்க வேண்டும் –
4-மதசார்பற்ற ஞானம் அறிவுடன் போதும் என்று இராமல் இருக்க வேண்டும்
5 -பகவத் சரித்ரங்கள் சேஷ்டிதங்கள்  வாக்யங்களில்  உகந்த
ஈடுபாடுடன் இருக்க வேண்டும்
6-ஆசார்யர் உயர்ந்த பிரம ஞானம் அருளிய பின்பு -மீண்டும்
புலன்கள் கவர்ச்சியில் ஈடு படாமல் இருக்க வேண்டும் –
7-அனைத்து இந்திரிய வியாபாரங்களிலும் ஒதுங்கி
இருக்க வேண்டும்
8-சந்தனம் மலர் நறு மணம் இவற்றில் அதிக ஈடுபாடு
கொண்டு இருக்க கூடாது

-9-கைங்கர்ய பரர் திருநாமங்களை  உபயோக்கிக்கும் பொழுது
அவன் திருநாமங்களை உபயோக்கிக்கும் பொழுது
அடையும் இன்பம் அடைய வேண்டும் –
10-அடியார் அடியானே அவனை அவன் அடியானை விட
சீக்கிரம் அடைகிறான் என்பதில் உறுதி கொள்ள வேண்டும் –
11-ஞானவான் அவன் கைங்கர்யாமோ அவன் அடியார் கைங்கர்யாமோ
இன்றி அழிவான் –
12-வைஷ்ணவர் வாழ்வுமுறை அவனை அடையும்
உபாயம் என்று கருத கூடாது –
13-அவன் ஒருவனே அடையும் குறிக்கோள் –
14-கைங்கர்ய பரர்களை மரியாதை இன்றி நடத்த கூடாது –
15-ஸ்ரீ வைஷ்ணவரை பார்த்ததும் முதலில் அடி பணியாமல்
இருக்க கூடாது –
16-பகவத் சன்னதியிலோ அவன் அடியார்கள் இருந்தாலும்
ஆன்மிகர் கூட்டத்திலோ காலை நீட்டி இருக்க கூடாது-

17-திரு கோவிலை நோக்கியோ -ஆசார்யர் திரு மாளிகை நோக்கியோ –
கைங்கர்ய பரர் திரு மாளிகை நோக்கியோ -காலை நீட்ட கூடாது –
18-காலையில் எழுந்ததும் குரு பரம்பரை அனுசந்திகவும் –
19-பெருமாள் எழுந்து அருளும் பொழுது முன் வரும் திவ்ய பிரபந்த கோஷ்டி
பார்த்ததும் த்வயம்  மகா மந்த்ரம் அனுசந்தித்து கொண்டு
சேவிக்கவும் –
20-திருநாம சந்கீர்தனத்தின் நடுவிலோ -கைங்கர்ய பரர் களை   பாராட்டும் பொழுதோ
நன்றாக அடிபணிந்து வணங்க வேண்டும் -நடுவில் கூட்டத்தில் இருந்து போவது
மிக பெரிய பாவமாகும்
21-உன்னை தேடி ஸ்ரீ வைஷ்ணவர் வருகிறார் என்று அறிந்தால் முன்னமே
சென்று வர வேற்க வேண்டும் -அவர் விடை கொள்ளும் பொழுது நடுவழி வரை கூட
செல்ல வேண்டும் -இதை செய்யாவிடில் மிக பெரிய பாவமாகும்
22-அடியார் அடியானாக இருக்க ஆசை கொள்ள  வேண்டும் -அவர்கள்
திருமாளிகை சென்று கைங்கர்யம் செய்து -அவர்களை உனக்கு முன் மரியாதையாக நடத்த வேண்டும்
23-திருகோவிலையோ-திரு கோபுரத்தையோ -திரு விமானத்தையோ
கண்டால் கை கூப்பி வணங்க வேண்டும்
24-மறந்தும் புறம் தொழாமல் – அப்படி பட்ட கோவில்கள் கலை நயங்களுடன் இருந்தாலும்-காணாமல் இருக்க வேண்டும்

25-மற்றை தெய்வ செஷிடிதங்கள் ஆச்சர்யமாக இருந்தாலும்
ஈர்க்க கூடாதவை
26-அவனை புகழ்ந்து பேசி கொண்டு இருக்கும் பொழுதோ –
அவன் அடியார் கைங்கர்ய பரர்களை புகழ்ந்து பேசிக் கொண்டு
இருக்கும் பொழுதோ நடுவில் குருக்கேபேசி தடங்கல் செய்ய கூடாது

27-ஸ்ரீ வைஷ்ணவர் நிழலை கூட தாண்ட கூடாது –
28-நம் நிழலும் அவர்கள் மேல் படாமல் இருக்கும் படி கவனம் வேண்டும் –
29-நன்றாக நீராடிய பின்பே ஸ்ரீ வைஷ்ணவரை தொட்டு பரிமாற்ற வேண்டும் –
30-ஏழை ஸ்ரீவைஷ்ணவன் உன்னை முதலில் வணங்கினால்
அவரை அவமரியாதை உடன் நடத்த கூடாது -அப்படி நடத்தினால்
மிக பெரிய பாபம் வரும் –
31-ஸ்ரீவைஷ்ணவர் உன்னை  முதலில் வணங்கி -அடியேன் என்றால் –
அவருக்கு அவமரியாதை காட்ட கூடாது -அப்படி செய்தால் மிக பெரிய பாபம் ஆகும் –
32-ஸ்ரீ வைஷ்ணவர் பற்றிய குற்றம் குறைகள்-சோம்பல்தனம் -தூங்கி வழிவது –
தாழ்ந்த பிறவி -போன்றவை -அறிந்தால் அது பற்றி மற்றவர் இடம் பேசாமல் நமக்கு உள்ளேயே வைத்து-கொள்ள வேண்டும் -அவர்களின் நல்ல பண்பை மட்டுமே பேச வேண்டும் –
33- பெருமாள் தீர்த்தமும் ஸ்ரீவைஷ்ணவர் ஸ்ரீபாத தீர்த்தமும் சமாச்ரண்யம் ஆகாதவர் முன்னிலையில்-சுவீகரித்து கொள்ள கூடாது
34-தத்வ த்ரயம் ரகஸ்ய த்ரயம் அறியாத ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீபாத தீர்த்தம்
சுவீகரித்து கொள்ள கூடாது
35-ஞானம் அனுஷ்டானம் நிறைந்த ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீபாத
தீர்த்தம் நித்யம் எப்பாடு பட்டாலும் சுவீகரிக்க வேண்டும் –
36-கைங்கர்ய பரர்கள் உடன் நம்மை தாழவே பண்ணி கொள்ள வேண்டும் –
37-அறியாமல் நாஸ்திகர் மேல் தீண்ட பெற்றால் நீராடி ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ பாத
தீர்த்தம் சுவீகரித்து சுத்தி படுத்தி கொள்ள வேண்டும்
38-பற்றற்ற ஞானவான்கள் பகவான் ஒக்க எண்ணி அவர்களுக்கு
கைங்கர்யம் செய்ய வேண்டும் –

39-அப்படி பட்டவர்களின் பிறப்பு போன்றவற்றை மதியாமல்
நம்மை உய்ய கொள்ள வந்தவர்கள் என்று எண்ணி போக வேண்டும் –
40-நாஸ்திகன் வீட்டில் பெருமாள் தீர்த்தம் சுவீகரிக்க கூடாது –
41-அப்படி பட்டவர்கள் வீட்டில் பெருமாளை  சேவிக்க கூடாது-
42-ஆனால் திரு கோவில்களில் அப்படி பட்டவர்கள் இருந்தாலும்
பெருமாள் பிரசாதம் ச்வீகரிக்காமல் இருக்க கூடாது-
43-விரதம் அனுஷ்டிக்கும் பொழுதும் திரு கோவில் பிரசாதம் கொடுத்தால்
மறுக்க கூடாது –
44–பெருமாள் பிரசாதம் மிகவும் புனிதம்-பாபங்களை போக்கும் –
மறுக்க கூடாது -வேண்டாதவர் கொடுக்கும் பிரசாதம் என்றாலும் –
45-ஸ்ரீ வைஷ்ணவர் கூட்டத்தில் தற் புகழ்ச்சி கூடாது –
46-மற்றவரை வெட்க படுத்தும் படி செய்ய கூடாது –
47-அவன் அடியாரை புகழவும் கைங்கர்யம் செயவும் எல்லா
பொழுதும் போக வேண்டும் –
48-நித்யம் ஒருமணி நேரமாவது ஆசார்யர் புகழை பாட வேண்டும் –
49-திவ்ய பிரபந்தங்களிலும் குருபரம்பரையிலும் நித்யம் பல
மணி நேரம் ஈடுபட்டு அனுபவிக்க வேண்டும் –
50-தன்னை பற்றியே எண்ணி இருப்பாருடன் சேர வேண்டாம் –
51-வெளியில் மட்டும் ஸ்ரீ வைஷ்ணவ சின்னம் கொண்டு உள்ளே
ஸ்ரீ வைஷ்ணவ சிந்தனை இல்லார் உடன் நட்பு கூடாது –
52-பழி சொல்வார் வதந்தி பரப்புவார் உடன் நட்பு கூடாது –
53-மற்ற சமயத்தார் உடன் கலந்த பாபம் போக்க நல்ல ஸ்ரீ வைஷ்ணவர் சேர்க்கை வேண்டும் –
54-அவன் அடியாரை களங்க படுத்தும் -ஆச்சர்யர்களை இகழும் –
புலி தோல் போத்திய மானிடரை -மதிக்க கூடாது –
55-த்வயம் அனுஷ்டான நிஷ்டர்கள் கூட்டம் நாடி போக ஆசை பட வேண்டும் –
56-உபாயாந்தரன்களை நாடுவாரி விட்டு பிரபத்தி நிஷ்டர் சகவாசம் கொள்ள வேண்டும் -57-தத்வ த்ரயம் ரகஸ்ய த்ரயம் அறிந்தார் உடன் சேர ஆசை கொள்ள வேண்டும் –
58-ஐச்வர்யார்திகள் சேர்க்கை தவிர்த்து பகவல் லாபார்திகள் சேர்க்கைக்கு ஆசை பட வேண்டும் –
59-ஸ்ரீ வைஷ்ணர் நம் பக்கல் செய்த குற்றம் கணிசியாமல்  -அவர்களை
பழி வாங்க எண்ணாமல் கட்டு பட்டு இருக்க வேண்டும் –
60-பரம பத கைங்கர்யம் ஆசை பட்டால் ஸ்ரீ வைஷ்ணவர் நலத்துக்கு
பாடு பட வேண்டும் –
61-சரணாகதன்-கைங்கர்ய பரர் விதிக்கும்  கட்டளை படிக்கு மாறாக
-தனக்கு நன்மையே பயத்தாலும் -நடக்க  கூடாது –
62-பெருமாள் கண்டு அருளாத பிரசாதமோ -பெருமாளுக்கு சாத்தாத
சந்தனமோ -வெத்தலையோ புஷ்பமோ பானகமோ-சுவீகரித்து கொள்ள கூடாது –
63-ஐச்வர்யார்திகள் தானாகவே கொடுப்பவற்றை சுவீகரித்து
கொள்ள கூடாது –
64-நல்ல அனுஷ்டானம் குல பிறப்பு கொண்டவர் பிரசாதம் மட்டுமே
ச்வீகரிகலாம்
65-சாஸ்திரம் விதித்த ஒன்றையே பகவானுக்கு சமர்ப்பிக்க வேண்டும்
-கண்ணுக்கு அழகாக இருப்பவை விதிக்க படாவிடில் சமர்ப்பிக்க கூடாது –
66-சாஸ்திரம் விதித்த படியே கண்டு அருள பண்ண வேண்டும் –
67-பெருமாள் பிரசாதம் -புஷ்பம் -புனிதம் என்ற உணர்வுடன்
சுவீகரிக்க வேண்டும் -போக பொருளாக கொள்ள கூடாது –
68-சாஸ்திரம் விதித்த படி நடப்பதே அவனுக்கு நாம் செய்யும் கடமை என்று உணர வேண்டும் –
69-ரகஸ்ய த்ரய நிஷ்டர்களை அவமதித்தால் பேறு  இழப்பு நிச்சயம் –
அவர்கள் அனுக்ரகத்தால் பேறு  சீக்கிரம் நிச்சயம் பெறுவோம் –
70-அடியார் அடியார் கைங்கர்யமே நமது குறிக்கோள் ஆக கொள்ள  வேண்டும் –
அவர்கள் மனம் கோணும் படி நடந்தால் நாம் இழப்போம் –
71-திவ்ய திருமேனியை வெறும்  கல் என்றோ -ஆசார்யரை வெறும் மனிதர் என்றோ –
பாகவதர்கள் பிறப்பை இழிவாக எண்ணுபவனோ -புனித நீரை வெறும் தண்ணீர் என்று நினைப்பவனோ -திருமந்த்ரங்களை சொல் கூட்டம் என்று மட்டும் நினைபவனோ -பரமாத்மாவை தேவர்களில் ஒருவன் என்று-எண்ணுபவனோ -அகல பாதாள இருட்டு நரகம் புகுவான் –
72-ஆச்சார்யர் அபிமானமே உத்தாரகம் -பெருமாளை  திரு வடிகளை விட ஆச்சார்யர் அடி பணிபவனே-நிச்சயம் பேறு பெறுவான் -ஆச்சர்யர்களை மதிக்காதவன் பெருமாளை மதிகாதவனை விட அதிக-பாபம் செய்தவன் ஆகிறான் -ஆச்சார்யர் ஸ்ரீ பாத தீர்த்தம் அவன் திருவடி தீர்த்தம் விட புனிதம் ஆனது –
இதை நன்றாக நெஞ்சில் பதித்து கொண்டு ஆச்சார்யர் அடி பணிந்து வாழ வேண்டும் –

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கிருஷ்ணன் கதை அமுதம் -567-574-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் …

April 10, 2012

567-

பக்தி ஒன்றாலே அவனை அடைய முடியும்

அறிய காண அடைய பக்தி ஒன்றே வலி -வேறு ஒன்றிலும் ஆசை இன்றி

அவனை -உன் தன்னை பிறவி -புண்ணியம் உடையோம்
உறவேல் நமக்கு இங்கு ஒழியாது மற்றை நம் காமங்கள் மாற்று
பலாத்காரமாக பிடித்து கேட்டு பெறலாம்
பக்தர் பித்தர் பேதையர் -சிறுமிகள் அன்பினால் சிறு பேர் அழைத்தோம் –
கம்ப நாட்டு ஆழ்வான்-பிரகலாதன்-துருவன்-நம் ஆழ்வார் அவன் இடம் பித்தம்
புண்டரீகர் -திரு கடல் மலை-தல சயன பெருமாள்
புண் சிரிப்பு மாறாத திரு கண்கள்-
கடல் நீரை கைகளால் வற்று எடுக்க முயன்றார் -சேவிக்க ஆதரவு ஈடு பாடு –
நிலத்திலே சயனம்-பூதத் ஆழ்வார் திரு அவதாரம்
பூத தனமான சக்தி அவனை பாட
பக்தியால் கலங்கி -அறிவின் முதிர்ந்த நிலையே பக்தி அறிவுடன் அன்பு கலந்து -தாய் குழந்தை விஷயம் நாம் அறிவோம்
அவன் அருள் பெருமை செஷ்டிதம் நினைக்க அறிவுடன் அன்பு கலந்து -பக்தி ஒன்றே ப்ரீத்தி கொடுக்கும்
அதை பகவான் உத்தவருக்கு அருள்கிறார்
பீஷ்மர்-ஷாந்தி தர்மம் -ஆபத்  தர்மம் ராஜ தர்மம்
மோஷ தர்மத்தில் பக்தி -பற்றி
அவன் விஷயத்தில் அறிவும் அன்பும் மற்ற விஷயத்தில் வைராக்யமும்
விரித்து உரைக்கிறேன்
பக்தன் பெருமை
ஸ்ரத்தையால் -ஒன்றை செய்தால் மற்றவை தானாகவே வரும்
அமுத கதைகள் கேட்க விருப்பம் முதல்
மீண்டும்மீண்டும் கேட்க –
குழந்தைக்கு சொல்லி சொல்லி -நிறைய செஷ்டிதங்கள் உண்டு
கதை கேட்க விருப்பம்
திருநாம சங்கீர்த்தனம்
வீர தீர சரித்ரம் பாடி
திரு ஆராதனம் பூஜித்து
தொண்டு புரிதல்-
மத்பக்த -அனைவர் உள்ளும் சம தர்சனம் காண்பான்
 568

ஸ்ரவணம் கீர்த்தனம் -நவ லஷனம்
பிரகலாதன்-பக்தி செய்யும் முறை –
நாரதர் கற்ப வாசத்திலே உபதேசித்து –
பீஷ்மர் -தர்மர் -கண்ணன்-உத்தவர் -11 -20 /21 /22 .23 ஸ்லோகங்கள் முக்கியம் –
விழுந்து அபிவந்தனம்-செருக்கு இன்றி -சாஷ்டாங்க
பக்தர்கள் அனைவரையும் பூஜிக்க
மற்றவர் பூஜிப்பதை அனுமதித்து ஆனந்தம் அடைய வேண்டும் –
சர்வ வியாபி-அவனையே அணைத்து
நெறிமையால் தானும் வியாபித்து
தன்னுள் அனைத்து உலகதுள்ளும் நிற்க –
அங்க செஷ்டிதம்-நம் புலன்கள் அவனுக்கு
அணைத்து செயலும் அவன் இடம் அர்பணித்து
காயென வாச -செயல்பயன்செய்யும் நான் மூன்றும் அவன் இடம்சமர்பித்து
மூன்று வித த்யாகம்-அவன் செய்விக்கிறான் -என்ற எண்ணம்-
உண்ணும் பொழுது -இந்த உணவு அவன் கொடுத்தது –
திரு ஆராதனம் செய்தே
மற்றவை த்ருணம் புல் போல் அவனை  -அனைவரும் இப்படியே எண்ணுவார்
தள்ளி இல்லை யாரும்-நெஞ்சைதொட்டு பார்த்தால் அறிவோம் –
துரி யோதனன் போல்வார் தான்கண்ணன்  வேண்டாம் என்பர்
இஷ்டம் -கோவில் கட்டி குளம் கட்டி அனைத்தும் அவன் விஷயம் என்பர் பக்தர்
கண்ணனுக்கே ஆம் அது காமம் அறம் பொருள்  வீடு அனைத்தும் இதை பின் பற்றி செல்லும்
பிரேமமே உயர்ந்தது  -என்கிறார் எதிராஜரும் -ஞானம் உசந்தது சொல்ல வில்லை
அனைத்தும் மத் அர்த்தம் அவன் விஷயம்-
அன்பு பக்தியாலே அருளி செயல்-
பக்தி பிறக்க இவை அனைத்தும் காரணம்
தன்னடையே வளரும்
ஒன்றை செய்தால் மற்றவை கிட்டும்
வைராக்கியம்-வந்தால் அஷ்ட மகா சித்திகளும் புல்லுக்கு சமம் –
பக்தியாக மலரும் வழிசொல்லி –
எளிதான வழி -கை காட்டி /புஷ்பம் சமர்பித்து –
எளிய இனிமையான பக்தி செய்து –
யம -நியமம்-அஷ்டாங்க யோகம் என்ன கேள்வி கேட்கிறார் உத்தவர்
யமம்-சமம்-தமம்-திருத்தி தானம் தபம்வீரம் எதி சத்யம் -தஷினை பலம்-விதியை எது
வெட்கம் எதை கண்டு -செல்வா செழிப்பு பண்டிதன் நேர் வழி
 ஸ்வர்கம் நரகம் போல் பல கேள்விகள் கேட்கிறார் உத்தவர் நமக்கு அறிந்து கொள்ள
பொருள் அறியோம்-சொல் கேள்வி பட்டு இருக்கிறோம்
569

பாகவதம் ரசம்-வேதம் தேறிய பொருள் காட்டும்-திரட்டு பால் போல்
11 =-19 -இறுதி பகுதி பார்த்து வருகிறோம்
யமம் நியமம் தவம் தூய்மை பல கேள்விகள்-
33 -45 ஸ்லோகம் வரை
யமம்-நியமம்-ஆசனம் பிராணாயாமம் த்யானம் சமாதி -அஷ்ட அங்க யோகம்-
அடிப் படை கட்டுபாடுகள்-யோகத்துக்கு வேண்டும் அதை சொல்கிறார்
12கட்டுபாடுகள் அகிம்சை சத்யம் –
போது இலா -தப்பான புண் படும் வார்த்தை இன்றி -தீ விழி இன்றி -கனிவான பார்வை –
அகிம்சை வார்த்தையாலே கொல்லாமல்-மனசால் கூட இன்றி
சத்யம் -பொய் பேசாமல்
அஸ்தேயம் அசந்கேய -விலகி -உலக விஷயம் -கடமை செய்வதில் ஈடு பாடு வேண்டும்
வேண்டாத விஷயம் பற்று நீங்கி -இறை அன்பு மட்டுமே குறிக் கோள்
தப்புக்கு வெட்க படவேண்டும்-அதுவே பிராயச்சித்தம் –
ஆஸ்திக்யம்-பிரமம் உண்டு அவனால் தான் அனைத்தும் –
அவன் படைத்து ரஷித்து நம்மையும் அவன் காக்கிறான்-நம் நிலை அவன் இட்ட பிச்சை
வேதம் பிரமாணம் -அனைவரும் அவன் அடிமை
பிரமச்சர்யம் முக்கியம்-
கிரகச்தனனும் -பிரமத்தை நோக்கியே தர்ம சாஸ்திரம் படி –
கலக்கம் தடுமாற்றம் இன்றி -ஸ்திர புத்தி
பொறுமை உடன்-இருந்து
தூண்ட பட்ட பொழுதும்
அபயம்-பயம் இன்றி -யாரை பார்த்து நாமும் பயபடாமல் யாரும் நம்மை கண்டு பயப்படாமல்
இனி நியமம்
சுத்த மனச
ஜபம் -ரகஸ்ய த்ரயம்
தபஸ்
ஹோமம்-ஆகுதி -நித்ய பூஜையே ஹோமம் தான்
ஈடுபாடு சரத்தை வேண்டும் ஆர்வம்
ஆகித்யம் விரும்பு
அர்ச்சனம்
தீர்த்த யாத்ரை -அயோதியை முனிவர்கள் இருந்த இடம்
மற்றவர் பொருள் ஆசை இன்றி
நம் பொருள் கொண்டு திருப்தி
ஆச்சர்ய சேவனம்-திரு மாளிகை கைங்கர்யம்
பக்தர்கள் உடன் கூடி இருந்து
ஆக இப்படி 12 யமம்/12 நியமம் அடுக்கி விளக்கி இருக்கிறார்
 570
ஸ்ரத்தையால்-யோகிகள்-சித்தம் அவன் இடம் செலுத்தி –
பெருமாளை த்யாநித்தே யோகம்-
உயர்ந்த ஆனந்த மாயம் அவனை பற்றியே த்யானம்
பாபம் விலகி–11 -19 -33 –
சமம்-மனசை அடக்கி தமம்-புலன் அடக்குதல்
பொருள் சிந்தனை நிறுத்தாமல்-அதற்குள்ளும் அவன் இருப்பதை உணர்ந்து
மனம் ஓடி கொண்டே இருக்கும் –
அவனே லஷ்யமாக கொண்டு இருக்க வேண்டும் –
சிந்தனை அனைத்தும் -பொருள்கள் மக்கள் அனைவரையும்
அவன் அன்பு அறிந்து என் தாய் ஒரு மடங்கு பாசம் அவன் இருப்பதால்
புலன் அடக்குதல்-அவன் இடம் செலுத்தி
அவன் திரு நாமம் கேட்டுபாடி நுகர்ந்து இப்படி
மெதுவாக ஈடு படுத்துதல் மனஸ் தமம் சமம்
கவிழ்த்து வைத்த கூடை கொம்பு போல் இல்லை
அவனுக்கு பயன்  படுத்து அறிவு -வெளி புலன்- உள் புலன்-இரண்டையும் அவன் இடம்
ச்தித்ஷா பொறுமை-துக்கம் வரும் பொழுது
குழந்தை பெரும் தாய் பல்லை கடித்து பொறுமை-நாளை கொஞ்ச போகிறோம்
நல் வாழ்வு வரும் என்று பொறுமை உடன் துக்கம் வரும் பொழுதும் இருக்க வேண்டும் –
த்ருதி-உறுதி நாக்கை அடக்குதல்-காமத்தை அடக்குதல்-
குறைவாக பேசி-நிறைவாக உணர்த்தி-
காம சுகத்துக்கு அலையாமல்-
தானம்-தண்டனை -இன்றி மன்னிப்பதே குற்றம் உணர்ந்தால்
தவம்-அடங்கா ஆசை த்யாகம் செய்வதே -பிடித்த பொருளை யாரோ ஆசை உடன் கடக கொடுப்பதே தபஸ்
வீரம் சௌர்யம் இயல்பான தப்பை தவிர்ப்பது
இயல்வ்பான பழக்கம் மாற்றி -தாண்டி -வீரன்
உண்மை -சத்யம்-சம தர்சனம்-வித்யா வினைய சம்பனவ் பண்டிதன் சம தர்சன்
இவ் ஒன்றையும் எழுதி வைத்து நடை முறை பண்ணினால் முன்னேறலாம்
மெதுவாக  பேசி -இனிமையான வார்த்தை-
தூய்மை-கர்மம் செய்து -நான் செய்தேன் என்ற எண்ணம் இன்றி
த்யாகம் -சன் யாசம் பொறுப்பை அவன் இடம்
சரணா கதி இதுவே
571-
யக்ஜம் ஹோமம் முக்கியம்-எளிமையான பூஜையே யாகம் தான் -தர்மம் இஷ்ட கார்யம் –
கண்ணன் நானே யக்ஜம் போக்தா என்கிறான் -தஷிணை-ஞானம் உபதேசிப்பதே சிறந்த தஷிணை -உபதேசம் படி நடப்பது –
பிராணா யாமம் மூன்று வேளையும் செய்து -ஜீரணம் ஆகவும் ஆரோக்யதுக்கும் உதவும்-ஆசனங்களும் -உதவும் –
ஈஸ்வரன் கிருஷ்ணா பக்தி தான் மேல் நிலை லாபம் –
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -காலை மாலை கமல மலர் இட்டு –
ஏழு ஆள் காலும் பழிப்பு இலோம் -வித்யை அடைந்தவன் ஆத்மா சமமாக பார்ப்பவன் –
செய்ய கூடாததை செய்தால் வெறுக்க வேண்டும் -வெட்கமும் வேண்டும்
-செல்வம் எதையும் விரும்பாத குணம் –
சுகம் -இரட்டை கடப்பதே -துக்கம் காம சுகத்தில் விருப்பம் கொள்வது –
பண்டிதன் -பந்த மோஷம் அறிந்தவன்
மூர்க்கன் -தேக ஆத்மா ஓன்று என்று இருப்பவன்
அவன் விஷயம் சாஸ்திரம் படிப்பதே மொஷதுக்கு வழி
சத்வ குணம் வளர்ப்பதே சொர்க்கம்
தெளிவு வரும் குழப்பம் நீங்கும் -சாத்விக சரத்தை வேண்டும் –
தமோ குணம் வளர்ப்பதே நரகம்
குரு தான் சிறந்த நண்பன் -கீதா சாரின்
அன்று தேர் கடவிய பெருமான் கழல் காண்பது என்று கொலோ
சிறந்த பண்பு உள்ளவன் செல்வன்
இந்திரியங்கள் வெல்பவன் சிறந்தவன்
இது குணம் இது தோஷம் வேறு படுத்தி பாடுவதே தோஷம் –
19அத்யாயம் முடிகிறது
கர்ம ஞான பக்தி யோகம் இனி விளக்க போகிறார் மேல் .

572-

பக்தி யோகம் -மனம் மொழி மெய் மூன்றும் -கர்ம ஞான யோகம் அங்கம் –
கர்ம யோகம் இன்றியமையாது -உடலில் பிறந்து துக்க படுபவன் ஆத்மா இல்லை -இய்ரர்க்கை
உடல் சம்பந்தம் இல்லை -கர்மம் அடியாக வந்தேறி -பிறவி-கர்மம் அடியாக தானே-நோய் நாடி நோய் முதல் நாடி –
பிறவிக்கு மூலம் வேர் கர்மம் -தொலைக்க வலி கர்ம யோகம் -கடமை உணர்வு விருப்பத்துடன் செய்து
பக்தி செய்ய முற்ற பாபம் தொலையும்
ஞாந  யோகிக்கும் கர்மம் விடாது -உணவு சம்பாதிக்க கர்மம் வேண்டுமே –
மூன்றையும் 11 -20 சொல்கிறார்-வர்ணிக்கிறார்
குணம் தோஷம் வேறு பாடு பார்க்க கூடாது -சொன்னீர் -உத்தவர் கேட்கிறார் –
செய்யும் கிரிசைகள் -நெய் உண்ணோம் -மை இட்டு எழுதோம் -கண்ணன் சூட்டி விட சூடுகிரோமே
செய்வனவும் உண்டு
இதம் குறு வேதம் சொல்லுமே -அனைத்தையும் சமம்
குணா தோஷம் பிரித்து பார்த்தால் தோஷம் என்கிறாயே எப்படி
கங்கை நீராட்டம் சுத்தி
ஏகாதசி சாப்பிட கூடாதே
ஒரே செயல் வெவேறு மாதிரி உள்ளதே -புரிய வில்லை சொல்லு என்கிறார் உத்தவர் –
நமக்காககேட்கிறார் -தகுதி அடிபடியில் கர்ம ஞான பக்தி யோகம் விதிக்கிறார்
சுகர் அனுஷ்டானம் செய்தாரா -பக்தி தலை எடுத்தால்
புலன் அடக்கியவன் ஞான யோகி கட்டு படுத்தாவன் கர்ம யோகம் –
பழுது இன்றி கர்ம செய்ய வேண்டும் –
கர்மம் முக்தி கொடுக்காது –
கர்மங்களில் ஈடுபாடு இருந்தால் கர்ம யோகம் –
இரண்டு அடிப்படை -இத்தால் -கர்ம ஞான யோகி வாசி –
பக்தி பிறப்பது கர்ம ஞான யோகம் மூலம் தான் –
அவன் கைங்கர்யம் கர்மாசெய்த்து கொண்டு -முழுவதும் வெறுக்காமல் –
கர்மம் வெறுத்தவன் ஞான யோகி –
பகவான் இடம் ஆசை கொண்டவன் பக்தன் –

573

அடியார் கூட்டம் ஆசை படுகிறார் குலசேகர ஆழ்வார் –
பக்தி யோக நிஷ்டன்-
11-20 அத்யாயம் 8 /9 /10 ஸ்லோகம் -பார்க்கிறோம் –
ஸ்ரத்தை அவன் கதை கேட்க ஆசை இருக்கிற வரை கர்மம் –
பக்தன் என் பிரிவை சகியான் -அனைத்தும் எனக்கு தான் -என்று இருக்கிறான் –
அவனே கதி -இது ஒரு வர்க்கம் –
நினைத்தாலே உருகி கொண்டு இருப்பார்கள் –
உள்ளத்தில் பக்தி -வெளிபடுத்தாமல் இருக்கலாம் –
மெதுவாக வளர்ந்து -கேட்டு -நினைந்து ஆராய்ந்து இடைவிடாமல் சிந்தித்து –
உண்மையான பக்தி-இங்கிதம் நிமிஷ்தம் -உதட்டை புருவம் அசைப்பே ஆனந்தம் -கூரத் ஆழ்வான்
அறிவு முற்றி பக்தி உண்மையாக –
அழகர் தொட்டி திரு மஞ்சனம் -நிதானமாக சேவிக்கலாம் -பரிவுடன் பரிமாறுவார்கள் –
கர்மம் விடாமல் செய்ய-பாபம் போகும் -பக்தி வளரும் -மெய் மறந்து சேவிக்க பண்ணும் –
வர்ண ஆஸ்ரம கர்மம் விடாமல் செய்து கொண்டு இருக்க-பக்தி மலர ஆரம்பிக்கும் –
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுள்ளே-கேட்க்கும் பொழுதும் ரசிக்க ஆரம்பிக்கும் –
ரசிகர் மன்றம் வாழ்வில் பார்க்கிறோம் -இந்த உதாரணம்  சிரிப்பது யாரோ விஷயம் என்று காட்ட –
விளையாட்டு ஈடு பட்டு -நினைற விஷயம் முன்பு நடந்தது சொல்லுகிறார்களே –
கண்ணன் இடம் வேண்டும் இந்த ஈடுபாடு -இதுவே பக்தி –
ஞானம் முற்றி பக்தி ஆக மலரும் –
பக்தனுக்கு எப்படி உதவுகிறேன் என்று மேலே அருளுகிறார்

574-

மகாத்மா துர் லபம்-வாசுதேவனே சர்வம் என்று இருப்பார் –
ப;லஜன்மம் ஞானவான் பின்பு பக்தன் -அவனே உண்ணும் சோறு -தாரகம் போஷகம் போக்கியம் –
எல்லாம் கண்ணன் என்று இருப்பவன் பக்தன் –
அன்பு வளர்ந்து முற்றி காதல் -கைங்கர்யத்தில் மூட்டும் –
யாரும் இதற்க்கு தகுதி உடையவர் –
11 /20 /13 ஸ்லோகம் -சொர்க்கம் -புண்ணியம் தீர்ந்த பின்பு மீள வேண்டுமே –
கண்ணன் திருவடிகளே மீளா இன்பம் கொடுக்கும்
சரீரம் கருவி -இதை கொண்டு அதை அடைய வேண்டும் –
பிறவி -கர்ம ஞான பக்தி -சம்சாரம் நெருப்பு-பறவை -மரம் நெருப்பு கதை போல் –
உடம்புடன் வாழ ஆசை பறவை நெருப்பில் நாசம் அடைவது போல் -ரம்பம் மரம் அறுக்க-
அது போல் நாள் கழிய -நினைவு இன்றி கழிக்கிறோம் -ஜீவன் -ஓடம்-உடல் தான் ஓடம் –
ஓடக்காரர் -செலுத்துவது காற்று அனுகூலம் -ஆத்மா பிரயாணி
ஆச்சார்யர் ஓடக்காரர்
பகவத் அருள் காற்று போல் -அழகான உதாரணம் -திரை –புலன்கள் கடிவாளம் -மனம்
ஆத்மா -குதிரை காரர் -பிராணாயாமம் செய்து புலனை அடக்கி
மனத்தில் செலுத்தி அவன் இடம் சேர்க்க வேண்டும்
கர்மம் செய்யசெய்ய பாபம் தொலைந்து பக்தி வளர அவனை அடைவோம்
பக்தி யோகமே பிராயச்சித்தம் ஆக இருக்கும் –
இயற்கையான அன்பு பகவான் இடம் -உறுதியான திட சிந்தனை வேண்டும்
இந்த லோகம் ஆசை பட்டதும் அவன் திருவடியையும் கொடுத்து
உள்ளத்தில் விலகாமல் வசிக்கிறான் -விஷ்ணு பதம் -ஸ்ரீ வைகுண்டம் அடைகிறான் –

11-19

3–jïäna-vijïäna-saàsiddhäù
padaà çreñöhaà vidur mama
jïäné priyatamo ‘to me
jïänenäsau bibharti mäm

Those who have achieved complete perfection through philosophical and
realized knowledge recognize My lotus feet to be the supreme transcendental
object. Thus the learned transcendentalist is most dear to Me, and by his
perfect knowledge he maintains Me in happiness.

4–tapas térthaà japo dänaà
paviträëétaräëi ca
nälaà kurvanti täà siddhià
yä jïäna-kalayä kåtä

That perfection which is produced by a small fraction of spiritual knowledge
cannot be duplicated by performing austerities, visiting holy places, chanting
silent prayers, giving in charity or engaging in other pious activities.

9–täpa-trayeëäbhihatasya ghore
santapyamänasya bhavädhvanéça
paçyämi nänyac charaëaà taväìghridvandvätapaträd
amåtäbhivarñät

My dear Lord, for one who is being tormented on the terrible path of birth
and death and is constantly overwhelmed by the threefold miseries, I do not see
any possible shelter other than Your two lotus feet, which are just like a
refreshing umbrella that pours down showers of delicious nectar.

10–dañöaà janaà sampatitaà bile ‘smin
kälähinä kñudra-sukhoru-tarñam
samuddharainaà kåpayäpavargyair
vacobhir äsiïca mahänubhäva

O almighty Lord, please be merciful and uplift this hopeless living entity
who has fallen into the dark hole of material existence, where the snake of time
has bitten him. In spite of such abominable conditions, this poor living entity
has tremendous desire to relish the most insignificant material happiness. Please
save me, my Lord, by pouring down the nectar of Your instructions, which
awaken one to spiritual freedom.

13–tän ahaà te ‘bhidhäsyämi
deva-vrata-makhäc chrutän
jïäna-vairägya-vijïänaçraddhä-
bhakty-upabåàhitän

I will now speak unto you those religious principles of Vedic knowledge,
detachment, self-realization, faith and devotional service that were heard
directly from the mouth of Bhéñmadeva

14–navaikädaça païca trén
bhävän bhüteñu yena vai
ékñetäthäikam apy eñu
taj jïänaà mama niçcitam

I personally approve of that knowledge by which one sees the combination of
nine, eleven, five and three elements in all living entities, and ultimately one
element within those twenty-eight.

15–etad eva hi vijïänaà
na tathaikena yena yat
sthity-utpatty-apyayän paçyed
bhävänäà tri-guëätmanäm

When one no longer sees the twenty-eight separated material elements,
which arise from a single cause, but rather sees the cause itself, the Personality
of Godhead—at that time one’s direct experience is called vijïäna, or
self-realization

17–çrutiù pratyakñam aitihyam
anumänaà catuñöayam
pramäëeñv anavasthänäd
vikalpät sa virajyate

From the four types of evidence—Vedic knowledge, direct experience,
traditional wisdom and logical induction—one can understand the temporary,
insubstantial situation of the material world, by which one becomes detached
from the duality of this world.

19–bhakti-yogaù puraivoktaù
préyamäëäya te ‘nagha
punaç ca kathayiñyämi
mad-bhakteù käraëaà paraà

O sinless Uddhava, because you love Me, I previously explained to you the
process of devotional service. Now I will again explain the supreme process for
achieving loving service unto Me.

20/21/22/23/24–çraddhämåta-kathäyäà me
çaçvan mad-anukértanam
pariniñöhä ca püjäyäà
stutibhiù stavanaà mama
ädaraù paricaryäyäà
sarväìgair abhivandanam
mad-bhakta-püjäbhyadhikä
sarva-bhüteñu man-matiù
mad-artheñv aìga-ceñöä ca
vacasä mad-guëeraëam
mayy arpaëaà ca manasaù
sarva-käma-vivarjanam
mad-arthe ‘rtha-parityägo
bhogasya ca sukhasya ca
iñöaà dattaà hutaà japtaà
mad-arthaà yad vrataà tapaù
evaà dharmair manuñyäëäm
uddhavätma-nivedinäm
mayi saïjäyate bhaktiù
ko ‘nyo ‘rtho ‘syävaçiñyate

Firm faith in the blissful narration of My pastimes, constant chanting of My
glories, unwavering attachment to ceremonial worship of Me, praising Me
through beautiful hymns, great respect for My devotional service, offering
obeisances with the entire body, performing first-class worship of My devotees,
consciousness of Me in all living entities, offering of ordinary, bodily activities
in My devotional service, use of words to describe My qualities, offering the
mind to Me, rejection of all material desires, giving up wealth for My devotional
service, renouncing material sense gratification and happiness, and performing
all desirable activities such as charity, sacrifice, chanting, vows and austerities
with the purpose of achieving Me—these constitute actual religious principles,
by which those human beings who have actually surrendered themselves to Me
automatically develop love for Me. What other purpose or goal could remain for
My devotee?

40/41/42/43/44/45–bhago ma aiçvaro bhävo
läbho mad-bhaktir uttamaù
vidyätmani bhidä-bädho
jugupsä hrér akarmasu
çrér guëä nairapekñyädyäù
sukhaà duùkha-sukhätyayaù
duùkhaà käma-sukhäpekñä
paëòito bandha-mokña-vit
mürkho dehädy-ahaà-buddhiù
panthä man-nigamaù småtaù
utpathaç citta-vikñepaù
svargaù sattva-guëodayaù
1425
narakas tama-unnäho
bandhur gurur ahaà sakhe
gåhaà çaréraà mänuñyaà
guëäòhyo hy äòhya ucyate
daridro yas tv asantuñöaù
kåpaëo yo ‘jitendriyaù
guëeñv asakta-dhér éço
guëa-saìgo viparyayaù
eta uddhava te praçnäù
sarve sädhu nirüpitäù
kià varëitena bahunä
lakñaëaà guëa-doñayoù
guëa-doña-dåçir doño
guëas tübhaya-varjitaù

Actual opulence is My own nature as the Personality of Godhead, through
which I exhibit the six unlimited opulences. The supreme gain in life is
devotional service to Me, and actual education is nullifying the false perception
of duality within the soul. Real modesty is to be disgusted with improper
activities, and beauty is to possess good qualities such as detachment. Real
happiness is to transcend material happiness and unhappiness, and real misery is
to be implicated in searching for sex pleasure. A wise man is one who knows the
process of freedom from bondage, and a fool is one who identifies with his
material body and mind. The real path in life is that which leads to Me, and the
wrong path is sense gratification, by which consciousness is bewildered. Actual
heaven is the predominance of the mode of goodness, whereas hell is the
predominance of ignorance. I am everyone’s true friend, acting as the spiritual
master of the entire universe, and one’s home is the human body. My dear
friend Uddhava, one who is enriched with good qualities is actually said to be
rich, and one who is unsatisfied in life is actually poor. A wretched person is
one who cannot control his senses, whereas one who is not attached to sense
gratification is a real controller. One who attaches himself to sense gratification
is the opposite, a slave. Thus, Uddhava, I have elucidated all of the matters
about which you inquired. There is no need for a more elaborate description of
these good and bad qualities, since to constantly see good and bad is itself a bad
quality. The best quality is to transcend material good and evil.

11-20

6–çré-bhagavän uväca
yogäs trayo mayä proktä
nèëäà çreyo-vidhitsayä
jïänaà karma ca bhaktiç ca
nopäyo ‘nyo ‘sti kutracit

The Supreme Personality of Godhead said: My dear Uddhava, because I
desire that human beings may achieve perfection, I have presented three paths
of advancement—the path of knowledge, the path of work and the path of
devotion. Besides these three there is absolutely no other means of elevation.

7–nirviëëänäà jïäna-yogo
nyäsinäm iha karmasu
teñv anirviëëa-cittänäà
karma-yogas tu käminäm

Among these three paths, jïäna-yoga, the path of philosophical speculation,
is recommended for those who are disgusted with material life and are thus
detached from ordinary, fruitive activities. Those who are not disgusted with
material life, having many desires yet to fulfill, should seek perfection through
the path of karma-yoga.

0–sva-dharma-stho yajan yajïair
anäçéù-käma uddhava
na yäti svarga-narakau
yady anyan na samäcaret

My dear Uddhava, a person who is situated in his prescribed duty, properly
worshiping by Vedic sacrifices but not desiring the fruitive result of such
worship, will not go to the heavenly planets; similarly, by not performing
forbidden activities he will not go to hell.

11–asmiû loke vartamänaù
sva-dharma-stho ‘naghaù çuciù
jïänaà viçuddham äpnoti
mad-bhaktià vä yadåcchayä

One who is situated in his prescribed duty, free from sinful activities and
cleansed of material contamination, in this very life obtains transcendental
knowledge or, by fortune, devotional service unto Me.

20–mano-gatià na visåjej
jita-präëo jitendriyaù
sattva-sampannayä buddhyä
mana ätma-vaçaà nayet

One should never lose sight of the actual goal of mental activities, but rather,
conquering the life air and senses and utilizing intelligence strengthened by the
mode of goodness, one should bring the mind under the control of the self.

21–eña vai paramo yogo
manasaù saìgrahaù småtaù
hådaya-jïatvam anvicchan
damyasyevärvato muhuù

An expert horseman, desiring to tame a headstrong horse, first lets the horse
have his way for a moment and then, pulling the reins, gradually places the
horse on the desired path. Similarly, the supreme yoga process is that by which
one carefully observes the movements and desires of the mind and gradually
brings them under full control.

22–säìkhyena sarva-bhävänäà
pratilomänulomataù
bhaväpyayäv anudhyäyen
mano yävat prasédati

Until one’s mind is fixed in spiritual satisfaction, one should analytically
study the temporary nature of all material objects, whether cosmic, earthly or
atomic. One should constantly observe the process of creation through the
natural progressive function and the process of annihilation through the
regressive function.

27/28–jäta-çraddho mat-kathäsu
nirviëëaù sarva-karmasu
veda duùkhätmakän kämän
parityäge ‘py anéçvaraù
tato bhajeta mäà prétaù
çraddhälur dåòha-niçcayaù
juñamäëaç ca tän kämän
duùkhodarkäàç ca garhayan

Having awakened faith in the narrations of My glories, being disgusted with
all material activities, knowing that all sense gratification leads to misery, but
still being unable to renounce all sense enjoyment, My devotee should remain
happy and worship Me with great faith and conviction. Even though he is
sometimes engaged in sense enjoyment, My devotee knows that all sense
gratification leads to a miserable result, and he sincerely repents such activities.

29–proktena bhakti-yogena
bhajato mäsakån muneù
kämä hådayyä naçyanti
sarve mayi hådi sthite

When an intelligent person engages constantly in worshiping Me through
loving devotional service as described by Me, his heart becomes firmly situated
in Me. Thus all material desires within the heart are destroyed.

30–bhidyate hådaya-granthiç
chidyante sarva-saàçayäù
kñéyante cäsya karmäëi
mayi dåñöe ‘khilätmani

The knot in the heart is pierced, all misgivings are cut to pieces and the
chain of fruitive actions is terminated when I am seen as the Supreme
Personality of Godhead.

32/33–yat karmabhir yat tapasä
jïäna-vairägyataç ca yat
yogena däna-dharmeëa
çreyobhir itarair api
sarvaà mad-bhakti-yogena
mad-bhakto labhate ‘ïjasä
svargäpavargaà mad-dhäma
kathaïcid yadi väïchati

Everything that can be achieved by fruitive activities, penance, knowledge,
detachment, mystic yoga, charity, religious duties and all other means of
perfecting life is easily achieved by My devotee through loving service unto Me.
If somehow or other My devotee desires promotion to heaven, liberation, or
residence in My abode, he easily achieves such benedictions.

34–na kiïcit sädhavo dhérä
bhaktä hy ekäntino mama
väïchanty api mayä dattaà
kaivalyam apunar-bhavam

Because My devotees possess saintly behavior and deep intelligence, they
completely dedicate themselves to Me and do not desire anything besides Me.
Indeed, even if I offer them liberation from birth and death, they do not accept
it.

11-21

ஸ்ரீ வசன பூஷணம் —சூர்ணிகை—227/228/229/230/231/232/233/234/235/236–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

April 10, 2012

சூரணை-227-

ஷத்ரியனான விஸ்வாமித்திரன் பிரம ரிஷி ஆனான் .

இப்படி இதிகாசாதிகளிலே -பாகவத வைபவம் சொல்லப் பட்டதே ஆகிலும் –
ந சூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா சவிப்றேந்த்ரோ முநிஸ் ஸ்ரீ மான் சயதிஸ் சச பண்டித -என்று சொன்ன
விப்ருத்வாதிகள் – அர்த்த வாதமாம் இத்தனை அல்லது அபக்ருஷ்ட ஜன்மவானவன் –
அந்த சரீரம் தன்னில் உத்க்ருஷ்டனாக கூடுமோ என்ன –கூடும் என்னும் இடத்துக்கு உதாஹரண தயா
அருளிச் செய்கிறார் –

அதாவது
ஷத்ரிய குலோத்பவனான விஸ்வாமித்திரன் அந்த ஜன்மத்திலே தான் பண்ணின தபோ விசேஷம் அடியாக –
வசிஷ்ட வாக்யத்தாலே ஷத்ரியத்வம் பின்னாட்டாத படி பிரம ரிஷயாய் விட்டான் இறே-
ஆகையாலே அத்யந்த அபக்ருஷ்ட குலோத்பவர் ஆனாலும் அந்த சரீரம் தன்னோடே
அனவதிக சக்திக பகவத் சம்பந்த ரூப சம்ஸ்கார விசேஷத்தாலே அத்யந்த உத்க்ருஷ்ட
குலஜாத அனுவர்த நீயராம் படி உத்க்ருஷ்ட தமராகக் குறை இல்லை என்கை –
அல்ப சக்திக வசிஷ்ட வாக்கியம் செய்த படி கண்டால்- சர்வ சக்தி சம்பந்த விசேஷம்- என் செய்ய மாட்டாது-

————————————————————

சூரணை -228-

ஸ்ரீ விபீஷணனை குல பாம்சன் என்றான் –பெருமாள் இஷ்வாகு வம்ச்யனாக நினைத்து
வார்த்தை அருளிச் செய்கிறார் –

இதிகாசாதி பிரமாண முகத்தாலே பாகவத வைபவத்தை தர்சிப்பித்தார் கீழ் —
சிஷ்டர்களுடைய வாசார முகத்தாலும் பாகவத வைபவத்தை தர்சிப்பிக்கிறார்  மேல் –
தர்மஞ்ஞய சமய பிரமாணம் -என்று ஆப்த பிரமாணமான வேதத்துக்கு முன்னே எடுக்கும் படி இறே
சிஷ்டா சாரத்தினுடைய பிரமாண்யம் இருப்பது -அதில்
பிரதமத்திலே -அபக்ருஷ்ட ஜாதியார் ஆனவர்கள் அந்த சரீரத்தோடு சஜாதிய வ்யாவிருத்தராய் உத்க்ருஷ்ட தமர் ஆவார்கள் என்று
கீழ் சொன்ன அர்த்தத்தை ச்வீகரிக்கைகாக ராவண அனுஜனை குறித்து பெருமாள் அருளிச் செய்த வார்த்தையை அருளிச் செய்கிறார் –

அதாவது –
ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ-என்று தனக்கு ஹிதத்தை சொன்ன தர்மாத்மாவான ஸ்ரீ விபீஷண
ஆழ்வானை பாபிஷ்டனான ராவணன் -குபிதனாய் -த்வாந்து திக் குல பாம்ச்னம் -என்று
இக்குலத்துக்கு இழுக்காக பிறந்த உன்னை வேண்டேன் என்று பருஷித்து தள்ளி விட்டான் –
இஷ்வாகு குல நாதனான பெருமாள் -இவனை ஆதார பூர்வகமாக அங்கீகரித்த அநந்தரம்-
ஆக்க்யாஹி மம தத்வே நராஷா ஸாநாம் பலாபலம் -என்று
ராஷசர் உடைய பலாபலம் இருக்கும் படியை நமக்கு சொல்லும் -என்கையாலே -இவனை
ராஷச ஜாதியனாக நினையாதே திருத் தம்பிமாரோபாதி யாக அபிமானித்து வார்த்தை அருளிச் செய்த்தார் என்கை –
இவ்வாக்யத்தாலே ராவணன் பரித்யஜித்தமையும் பெருமாள் பரிகிரஹித்தமையும் சொல்லுகையாலே
பாகவத அனுகூல்யம் உண்டாகவே ப்ராக்ருதர் -இவன் நமக்கு உடல் அல்லன் -என்று கை விடுவார்கள் என்னும் இடமும் –
பகவான் விரும்பி மேல் விழுந்து பரிக்ரஹிக்கும்   என்னும் இடமும் சொல்லப் பட்டது-

——————————————–

சூரணை -229-

பெரிய உடையாருக்கு பெருமாள் ப்ரஹ்ம மேத சம்ஸ்காரம் பண்ணி அருளினார் –

இப்படி உக்தி மாத்ரத்தால் அன்றிக்கே -பாகவத வைபவத்தை விருத்தியாலும் –
பெருமாள் வெளி இட்ட படியை அருளிச் செய்கிறார் –

மர்யாதா நாஞ்ச லோகஸ்ய கர்த்தா காரயிதாச ஸ-என்கிறபடியே
லோக மர்யாதா ஸ்தாபனார்தமாக அவதரித்து பித்ரு வசன பரிபாலனாதிகளாலே
சாமான்ய தர்ம ஸ்தாபன சீலராய் இருப்பார் ஒருவர் இறே பெருமாள் –
ஏவம் பூதரானவர் -பிராட்டி பிரிவு கண்டு பொறுக்க மாட்டாமல் தம்மை அழிய மாறின பெரிய உடையாருக்கு –
ஜன்ம விருத்தாதிகளால் உத்க்ருஷ்டர் ஆனவர்களுக்கு தத் புத்ர சிஷ்யர்கள் பண்ணும் ப்ரஹ்ம மேத சம்ஸ்காரத்தை –
அவருடைய ப்ரஹ்ம ஆதிக்யமே ஹேதுவாக -திருத்தம்பியாரும் கூட இருக்க செய்தே -தாமே சாதாரமாக பண்ணி அருளினார் இறே –
இத்தால் ஜன்மாத் யுக்த்க்ருஷ்டரானவர்கள் அவற்றால் குறைந்து இருக்கும் விலக்ஷண பாகவத விஷயத்தில்
புத்ர க்ருத்தியம் அனுஷ்டிக்கலாம் என்னும் இடம் காட்டப் பட்டது

—————————————————–

சூரணை -230-

தர்ம புத்ரர் அசரீர வாக்யத்தையும் ஞான ஆதிக்யத்தையும் கொண்டு ஸ்ரீ விதுரரை
ப்ரஹ்ம மேதத்தாலே சம்ஸ்கரித்தார்–

இவ்வர்த்தத்தை தர்ம புத்ரர் அனுஷ்டானத்தாலும் தெளிவிக்கிறார் –

பெருமாள் பரார்த்தமாக சாமான்ய தர்மத்தை பண்ணிப் போந்தாரே ஆகிலும் -விசேஷ தர்மத்திலே ஊற்று இருக்கையாலும் அவருக்கு செய்யலாம் –
இவர் செய்தது இறே அரிது –
ஸ்வ வர்ண தர்மத்தையே உத்தேச்யமாக நினைந்து சர்வ அவஸ்தை யிலும் அதுக்கு ஒரு
நழுவுதல் வராத படி சாவதானமாக நடத்தி கொண்டு போரும் அவர் இறே  இவர் –
இப்படி இருக்கிற இவர் ஸ்ரீ விதுரரை சம்ஸ்கரித்த தசையிலே -அவருடைய வர்ணத்தை பார்ப்பது –
ஞான ஆதிக்யத்தைப் பார்ப்பதாய் -என் செய்யக் கடவோம் -என்று வியாகுல படா நிற்கச் செய்தே –
தர்மா ராஜஸ்து தத்ரை நம் சஞ்சிஸ் கார யிஷுஸ் ததா தகது காமோப்வத் வித்வான் அதா ஆகாசே வசோ
ப்ரவீத்-போபோ ராஜன் நாதக்த வ்யமேதத்  விதுர சம்ஜிதம் களேபரம் இஹதைத் தே நைஷ தர்மஸ்
சனாதய -லோக வை லக்ஷணயோ நாம பவிஷ்யத் யஸ்ய பார்த்திவ யதி தர்ம மவாப்தோ  சவ் ந சோச பரதர்ஷப —
என்று இவர் ப்ரஹ்மேத சம்ஸ்காரகர் என்று சொன்ன அசரீரி வாக்யத்தாலும் -சம்ப்ரதி பந்தமான
இவருடைய ஞான ஆதிக்யத்தாலும் சந்தேகம் அற்று விதிக்க அக்ரேசருக்கு செய்யக் கடவ
ப்ரஹ்மேத சம்ச்காரத்தாலே -சம்ஸ்கரித்தார் இறே-

————————————————-

ருஷிகள் தர்மவ்யாதன் வாசலிலே துவண்டு தர்ம சந்தேகங்களை சமிப்பித்து கொண்டார்கள் –

அநந்தரம்-ஜன்மாத் யுத்க்ருஷ்டரான ருஷிகள் தத் அபக்ருஷ்டன் பக்கலிலே தர்ம ஸ்ர வணம்
பண்ணின படியை அருளிச் செய்கிறார் –

சதுர வேத தரராய் சர்வோத்க்ருஷ்டராய் இறே ருஷிகள் இருப்பது -ஏவம் பூதமானவர்கள்
வேத ஸ்ரவண யோக்யதை இல்லாத குலத்திலே பிறந்துள்ளவனாய் -ஜாதி சம்ரூதியோடே ஜாதன்
ஆகையாலே -பூர்வ ஜன்ம சித்தமன ஞானத்தில் ப்ரசம் இல்லாமையாலும் -மாதா பித்ரு சுஸ்ருஷா
விசேஷத்தாலும்-சகல தர்ம சூஷ்ம ஞானவானாய் இருக்கும் தர்மவ்யாதன் வாசலிலே சென்று –
மாதா பித்ரு சுச்ரூஷை  பரனாய் இருக்கிற அவன் அவசரம் பார்த்து துவண்டு ஞாதவ்யங்களான
தர்மங்களிலே தங்களுக்கு சந்நிக்தங்கள் ஆனவை எல்லாம் அவன் பக்கலிலே கேட்டு அதில்
சந்தேகங்களை போக்கிக் கொண்டார்கள் என்கை-

கச்சித் த்விஜாதி ப்ரவரோ வேதாத்யா யீ தபோதன
தபஸ்வீ  தர்ம சீலச்ச கௌ சிகொநாம  பாரத ஸாங்கோ பநிஷாதான்
வேதான் அதீத த்வீஜா சத்தம சவ்ருஷ மூலே கச்மிம்ச்சித் வேத அனுச்சாரயன் ஸ்தித
உபரிஷ்டாச்ச வ்ருஷச்ய பலாகா சம்ன்யலீயாத தயா புரீஷ முத்ஸ்ருஷ்டம்
ப்ராஹ்மணஸ்ய ததோரசி-என்று தொடங்கி
கௌசிகன் என்று பேர் உடையனாய் (-மிதிலா தேச வாசியாய் ) -அதீத சாங்க சசிரச்க சகல வேதத்தை உடையனாய்
இருப்பான் ஒரு பிராமண உத்தமன் -ஒரு வ்ருஷ  மூலத்திலே -வேதங்களையும் உச்சரித்து கொண்டு
நிற்கச் செய்தே -அதின் மேல் இருந்த தொரு கொக்கு எச்சம் இட்டது தன மார்பிலே பட்டவாறே
க்ருத்தனாய்-பார்த்த பார்வையிலே அது பட்டு விழ -அத்தைக் கொண்டு தப்த சித்தனாய் – கனக்க சோகித்து –
ராகத்வேஷ பலாத்க்ருதராய் கொண்டு அக்ருத்யத்தை செய்தோம் -என்று
பலகாலும் சொல்லிக் கொண்டு ஆசன்னமான கிராமத்திலே -பிஷார்த்தமாகப் போய் -ப்ரதமம் ஒரு கரஹத்திலே சென்று –
பிஷாம் தேஹி -என்று யாசித்த அளவில் -அந்த க்ருஹீணியானவள்-
நில்லும் வருகிறேன் -என்று சொல்லி -கர சுத்தியாதிகளை  பண்ணி பிஷை கொண்டு வருவதாக
உத்யோகியா நிற்க செய்தே -பர்த்தாவானவன் -அதீவ ஷூதார்த்தனாய் வந்து புகுர -அவள் பதி வ்ரதையாகையாலே –
பிஷை கொண்டு வருவதை விட்டு -பாத்ய ஆசமனீய ஆசன ப்ரதாநாதிகளாலே-(பகவத் சமாராதானம் பண்ணும் ) அவனை சிஸ்ருஷிக்கிற பராக்கிலே –
பிராமணன் நிற்கிறதை மறந்து -நெடும் போது நின்று -பின்னை அவன் நிற்கிறதைக் கண்டு நடுங்கி -பிஷை கொண்டு வந்த அளவில் –
என்னை நிற்கச் சொல்லி இத்தனை போது நீ புறப்படாது இருப்பான் என்?-என்று அவன் குபிதன் ஆனவாறே –
அவள் அவனை சாந்த்வனம் பண்ணி -இத்தை பொறுக்க வேண்டும் -என்று வேண்டிக் கொண்டு –
-நான் பார்த்தாவே தெய்வம் என்று இருப்பாள் ஒருத்தி -அவன் இளைத்து வருகையாலே -தத் சிச்ருஷை பண்ணி நின்றேன் இத்தனை –
என்ன -உனக்கு பர்த்தாவை அன்றோ சத்கரிக்க வேண்டுவது –பிராமணர் அளவில் கௌரவ பிரபத்தி இல்லையே –
என்று வ்யவங்கமாக சொல்லி -க்ருக தர்மத்திலே வர்த்திக்கிற நீ பிராமணரை இப்படி அவமதி பண்ணலாகாது காண் -என்ன-
நான் ஒருகாலும் பிராமணரை அவமதி பண்ணேன் -பிராமணருடைய வைபவம் எல்லாம் நன்றாக அறிவேன் -என்று பரக்கச்
சொல்லிக் காட்டி -இவ் அவபராதத்தை பொறுக்க வேணும் -பார்த்தாவே தெய்வம் என்று இருக்கையாலே -தத் சுஸ்ருஷையிலே பரவசையாய்
நின்றேன் இத்தனை -என்னுடைய பதி சுஸ்ருஷை யினுடைய பலத்தை பாரீர் -உம்முடைய ரோஷத்தால் அந்த கொக்கு யாதொருபடி –
தக்தமாய்த்து -அதுவும் எனக்கு விதிதம் காணும் -என்று சொல்லி –

குரோதஸ் சத்ருஸ் சரீர சத்தோ மனுஷ்யாணாம் த்விஜோத்தம ய
க்ரோத மோஹவ் த்யஜதி தம் தேவா பிராமணம் வித்து-என்று தொடங்கி –
காம க்ரோதாதிகள் பிராமணனுக்கு ஆகாது -சத்யார்ஜவாதிகள் உண்டாக வேணும் –
என்று விஸ்தரேண தான் பிரதிபாதித்து –
பவநாபிச தர்மஞ்சஸ் ஸ்வாத்யாய நிரதச்சுசி
நது தத்வேன பகவான் தர்மான் வேத்சீதி மே மதி
மாதா பித்ருப்யாம் சுஸ்ருஷூஸ் சத்யவாதீ ஜிதேந்த்ரிய
மிதிலாயாம் வசந் வயாதஸ் ச தே தர்மான் ப்ரவஷ்யதி
தத்ர கச்சஸ்வ பத்ரம் தே யதா காமம் த்விஜோத்தம
வ்யத பரமதர்மாத்மா சதேஸ்  தேச்யதி சம்சயான்-என்று
நீரும் தர்மஞ்ஞர் -வேதாத்யயன நிரதர் -சுத்தராய் இருக்க செய்தேயும் –
தர்மங்களை உள்ளபடி அறியீர் -என்று எனக்கு நினைவு –
மாதா பித்ரு சுஸ்ருஷூவாய் -சத்யவாதியாய்-ஜிதேந்திரனாய் கொண்டு
மிதிலையில் இருக்கிற வ்யாதன் உமக்கு தர்மங்களை சொல்லக் கடவன் –
அங்கே போம் -உமக்கு நன்மை உண்டாவதாக -பரம தர்மாத்மாவாய் இருக்கிற
அந்த வியாதன் வேண்டினபடி உம்முடைய சம்சயங்களை எல்லாம் போக்க கடவன் -என்ன

அவன் ப்ரீதனாய் இவளை கனக்க ஸ்தோத்ரம் பண்ணி -அங்கு நின்றும் மிதிலையிலே சென்று –
பஞ்ச காநி பவித்ராணி சிஷ்டாசாரேஷூ நித்யதா-ஏதன் மகாமதே வ்யாத பரப்ரவீஹி யதாததம்-என்று –
சிஷ்டா ஆச்சாரங்களிலே எப்போதும் உளவாய் இருக்கிற பவித்தரங்கள் ஐஞ்சும் எவை -மகா மதியாணவனே –
இத்தைச் சொல்ல வேணும்-என்ன –
யஞ்ஞோ தானம் தபோ வேதஸ் சத்யஞ்ச த்வி ஜோத்தம
பஞ்சைதானி பவித்ராணி சிஷ்டாசாரேஷூ நித்யதா -என்று
யஞ்ஞமும் தானமும் தபஸ்ஸும் வேதங்களும் சத்தியமும் ஆகிற
பவித்தரங்கள் ஆன இவை ஐந்தும் சிஷ்டா சாரங்களில் எப்போதும்
உளவாய் இருக்கும் -என்று இத்யாதியாலே -அவன் இத்தை உபதேசிக்க –
இப்படி மென்மேலும் தனக்கு சம்சயம் ஆனவை எல்லாம் இவன் கேட்க கேட்க –
உபதேச முகத்தாலே–( தர்சன சம்பாஷணை மாத்திரத்தாலே சம்சயன்கள் தீர பெற்றானே ) -சகல தர்ம சம்சயங்களும் தர்ம வ்யாதன் அறுத்த பிரகாரத்தை
தர்மபுத்ரனுக்கு மார்கண்டேயர் அனுஹரித்ததாக ஆரண்ய பர்வத்தத்திலே -இரு நூறாம் அத்யாயம் தொடங்கி –
பதின் மூன்று அத்யாயத்தாலே -பரக்கச் சொல்லப் பட்டது இறே
இன்னமும் இப்படி பலரும் இவன் வாசலில் துவண்டு தர்ம சந்தேஹங்கள் சமிப்பித்து கொண்டமை பல இடங்களிலும் உண்டு –
இத்தால் ஜன்மாத்யுத்க்ருஷ்டனாவர்களுக்கு  தத் அபக்ருஷ்டரானவர்கள்
ஞானாதிகராய் இருக்கில் அவர்கள் வாசலிலே துவண்டு ஞாதவ்யார்த்தங்கள் கேட்கக் குறை இல்லை என்னும் இடம் காட்டப் பட்டது –

———————————————

சூரணை-232-

கிருஷ்ணன் பீஷ்மத் துரோணாதிகள் க்ரஹங்களை விட்டு
ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே அமுது செய்தான்-

அநந்தரம்-யத்யதாசரதி ஸ்ரேஷ்ட -என்று கிருஷ்ணன் ஆஸ்ரயித்த படியை
அருளி செய்கிறார் –

தர்ம சமஸ்தான அர்த்தமாக அவதரித்து அருளி -லோக சங்க்ரஹ மேவாபி சம்பச்யன்
கர்த்தும் அர்ஹசி-என்று ஞானி யானாலும் லோக சங்க்ரஹத்தை பார்த்து வர்ண ஆஸ்ரம தர்மங்களை
நன்றாக அனுஷ்டிக்க வேணும் -என்று உபதேசித்தும் -யதிஹ்யஹம் நவர்த்தேயம் ஜாது கர்மணிய தந்த்ரித
மாமாவர்த்தம் அநு வர்த்ததந்தே மனுஷ்யா பார்த்த சர்வச -என்று ஒருகால் கர்மத்தில் சோம்பாதே நான் ப்ரவர்த்தியேன்
ஆகில் மனுஷ்யர் எல்லாம் என் வழியே பின் செல்லும் -என்ற படி பரார்த்தமாக தான் குறிக் கொண்டு அனுஷ்டித்து போரும் ஸ்வாபன் இறே கிருஷ்ணன் –
ஏவம் பூதனானவன் ஸ்ரீ தூது எழுந்து அருளின போது-பீஷ்மத் துரோண அதி க்ரம்யா மாஞ்சைவ மது சூதன -கிமர்த்தம் புண்டரீகாஷா புக்தம் வ்ருஷல போஜனம் -என்னும் படி –
உத்க்ருஷ்ட வர்ண வ்ருத்தராய் இங்கே எழுந்து அருளுவர் என்று பார்த்து கொண்டு இருந்த
பீஷ்மாதிகளுடைய க்ருஹங்களை உபேஷித்து-வர்ணாத் யுத்கர்ஷ ரஹிதராய்-
அத்தாலே இங்கு எழுந்து அருளுவர் என்னும் நினைவும் அற்று இருந்த ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே சாதாரமாக சென்று புக்கு –
சம்ப்ரமைஸ் துஷ்ய கோவிந்த ஏதன் ந பரமம் தனம் -என்று பக்தி பரவசரான அவர் பண்ணின சம்ப்ரமங்களை எல்லாம் கண்டு உகந்து –
விதுரான் நாதி புபுஜே சுசீநி குணவந்திச-என்கிறபடியே அஹங்கார உபஹதம் அல்லாமையாலே -பரம பாவனமாய் பக்தி யுபஹ்ருதம்
ஆகையாலே பரம போக்யமாய் இருக்கிற அன்னத்தை -அந்த பாவனத்வ போக்யத்வங்கள் அடியாக அத்யாதரம் பண்ணி அமுது செய்தான் இறே –

———————————————

சூரணை -233-

பெருமாள் ஸ்ரீ சபரி கையினாலே அமுது செய்து அருளினார் –

ஏதத் பூர்வ அவதாரத்தாலும் இப்படி அனுஷ்டித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
ரகு குல திலகராய் ஆசார பிரதானரான பெருமாள் – சபர்யா பூஜிதஸ் சமயக் ராமோ தசரதாத் மஜா-என்னும் படி வேடுவச்சியாய் வைத்தே
குரு சுச்ரூஷ்யையிலே பழுத்து ஞானாதிகையாய் -தன் நாவுக்கு இனிதாய் இருந்த பல மூலாதிகள் எல்லாம் இங்குத்தைக்கு என்று சஞ்சயித்து கொண்டு
வரவு பார்த்து இருந்த ஸ்ரீ சபரி -தன் ஆராதன அநு குணமாக தன் கையாலே அமுது செய்யப் பண்ண –
அதி சந்துஷ்டராய் அமுது செய்தார் என்கை-
இத்தால் -அபிஜாதாதிகளால் வரும் அபிமான கந்தமற்ற ஞான ப்ரேமாதிகருடைய அபிமான ஸ்பர்சம் உள்ளவை ஆத்மா குணைக தர்சிகளான விசேஷஞர்க்கு
அதீத பாவன போக்யங்களாய் இருக்கும் என்னும் இடம் காட்டப் பட்டது –

———————————————————-

சூரணை -234-

மாறனேர் நம்பி விஷயமாக பெரிய நம்பி உடையவருக்கு அருளிச் செய்த
வார்த்தையை ஸ்மரிப்பது-

இப்படி ஸ்ரீ இராமாயண மகா பாரத சித்தமான சிஷ்டாச்சாரங்களாலே பாகவத வைபவத்தை பிரகாசித்தார் கீழ் –
இன்னமுமிவ் அர்த்த விஷயமாக பூர்வாச்சார்ய வசனத்தை ஸ்மரிப்பிக்கிறார்-

அதாவது –
அபிமான ஹேதுவான ஜன்ம வ்ருத்தாதிகள் அன்றிக்கே -ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தை உடையராய்
அத்யாத்ம ஞான பரி பூரணராய் இருக்கிற மாறனேர் நம்பி -தம்முடைய அந்திம தசையில் -ஆளவந்தார்
அபிமானித்து அருளின இத்தேஹத்தை பிரகிருதி பந்துக்கள் ஸ்பர்சிக்கில் செய்வது என் -என்று
அதி சங்கை பண்ணி ச பிரமசாரிகளான பெரிய நம்பியைப் பார்த்து -புரோடாசத்தை  நாய்க்கு இடாதே கிடீர் –
என்று அருளிச் செய்து திரு நாட்டுக்கு எழுந்து அருள -பெரிய நம்பியும் அப்படியே பிறர் கையில்
காட்டிக் கொடாதே தாம பள்ளி படுத்தி வந்து எழுந்து அருளி நிற்க -இத்தை உடையவர் கேட்டு அருளி –
பெரிய நம்பி ஸ்ரீ பாதத்தில் வந்து -ஜீயா மரியாதை கிடக்க கார்யம் செய்ய வேண்டாவோ -தேவரீர் செய்து அருள
வேண்டிற்றோ -என்ன -ஆள் இட்டு அந்தி தொழவோ-நான் பெருமாளில் காட்டிலும் உத்க்ருஷ்டனோ
இவர் பெரிய உடையார் காட்டில் அபக்ருஷ்டரோ -பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை
கடலோசையோபாதி யோ -ஆழ்வார் அருளிச் செய்த வார்த்தையை சிறிது குறைவாகிலும் ஆசரிக்க
வேண்டாமோ -என்று அருளிச் செய்த வார்த்தை –

——————————————————–

சூரணை -235-

ப்ராதுர்ப்பாவை -இத்யாதி

இனி பாகவத ஜென்மாதி ஸ்லாக்யதா  கதன பூர்வகமாக அபாகவத உத்கர்ஷ-நிந்த்யதையை பிரகாசிப்பிக்கிறார் –

ப்ராதுர்பாவைஸ் சூர நர சமோ தேவதேவஸ் ததீய ஜாத்யா வ்ருத்தைரபிச  குணதஸ் தாத்ருசோ நாத்ர கர்ஹா
கிந்து ஸ்ரீ மத் புவன பவன த்ரணதா   அன்யேஷு வித்யா வ்ருத்த ப்ராயோ பவதி விதவா கல்ப கல்ப ப்ரகர்ஷ –
இத்தால் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் ப்ராதுர்பாவங்களாலே சூர நர சஜாதீயன் ஆகா நிற்க்கும்-
ததீயரும் ஜாதியாலும் -வ்ருத்தங்களாலும் -குணத்தாலும் -அப்படியே இதர சமரா இருப்பார்கள் –
இதில் கர்ஹை இல்லை -ச்லாக்யையே உள்ளது -உபயரும் இப்படி நிற்கிறது இந்த லோக ரக்ஷண நிமித்தமாக –
இனி அபாகவதர் பக்கலில் உண்டான வித்யா வ்ருத்த பாஹுள்ய ரூபமான உத்கர்ஷம்
விதவா அலங்காரம் போலே நிந்த்யம் ஆகா நின்றது என்கிறது –

——————————————

சூரணை -236-

பாகவதன் அன்றிக்கே வேதார்த்த ஞானாதிகளை உடையவன் -குங்குமம் சுமந்த
கழுதை யோபாதி என்று சொல்லா நின்றது இறே –

பாகவதர்கள் அன்று என்ன-அவர்களுக்கு உண்டான வேத வித்யாதிகள்
வ்யர்த்தமோ என்ன -அப்படி பிரமாணம் சொல்லா நின்றது இறே -என்கிறார்-

அதாவது –
சதுர் வேத தரோ விப்ரோ வாசூதேவம் ந விந்ததி-வேத பார பராக்ராந்தஸ் சவை பிராமண கர்தப-என்று
வேத தாத்பர்யமான பகவத் ஞானாதிகள் இல்லாமையாலே -பாகவதன் அன்றிக்கே வேத அத்யயனத்தோடே
அதில் ஸ்தூலார்த்த ஞானாதிகளை உடையனாய் இருக்கும் அவன் -போகிகளாய் இருப்பார் விரும்பும்
பரிமள த்ரவ்யமான குங்குமத்தை சுமந்து திரியா நிற்கச் செய்தே அதின் வாசி அறியாத கழுதை போலே –
பூர்வோத்தர பாகங்களால் ஆராதன  ஸ்வரூபத்தையும் ஆராத்ய ஸ்வரூபத்தையும் பிரதிபாதியா நின்று கொண்டு –
பகவத ஏக பரமாய் இருக்கிற வேதம் ஆகிற விலக்ஷண வஸ்து -பாரத்தை கினிய சுமந்து கொண்டு
இருக்கச் செய்தே அதன் சுவடி அறியாத பிராமண கழுதை என்று -வேத உப ப்ரும்ஹணமான
பிரமாணம் சொல்லா நின்றது இறே -என்கை-

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம் –சூர்ணிகை–217/218/219/220/221/222-/223/224/225/226–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

April 10, 2012

சூரணை-217–

ஸ்வசோபி மஹீ பால

இவ் அர்த்தத்துக்கு பிரமாணம் காட்டுகிறார் –

ஸ்வ சோபி மஹீ பால – விஷ்ணு பக்தோ த்விஜாதிக-விஷ்ணு பக்தி விஹீநச்து யதிச்ச ஸ்வபசாதம -என்கிற படி
எத்தனை யேனும் நிக்ருஷ்ட ஜன்மாவாய் இருந்தானே ஆகிலும்–பகவத் பக்தனானவன் த்வைஜநிர் காட்டில் அதிகன்-
உத்க்ருஷ்ட ஜன்மவான் அளவு அன்றிக்கே -உத்தம ஆஸ்ரரமியுமாய்  இருந்தானே ஆகிலும்
பகவத் பக்தி ஹீனனானவன் -ஸ்வ பசனிர் காட்டிலும் அதமன் என்று
வர்ணாஸ்ரமங்களிலே சரக்கு அறுத்து பகவத் சம்பந்தமே உத்க்ருஷ்ட ஹேதுவாக-சொல்லுகையாலே –
பிரம சம்பாவனாதி களாலே தத் சம்பந்த விரோதியான ஜன்மங்களில் காட்டிலும் -தத் அனுரூபமான ஜன்மமே ஸ்ரேஷ்டம் என்று கருத்து
இங்கன் அன்றாகில் -கீழ் சொன்ன அர்த்தத்துக்கு இது பிரமாணம் ஆக மாட்டாது இறே

——————————————

சூரணை -218–

நிக்ருஷ்ட ஜன்மத்தால் வந்த தோஷம் சமிப்பது விலக்ஷண சம்பந்த்தாலே-

ஆக நிக்ருஷ்ட உத்க்ருஷ்ட ஜம்னங்கள் இன்னது என்று நிரூபிக்க பட்டது கீழே-
அதில் நிக்ருஷ்ட ஜன்மத்தால் வந்த தோஷம் சமிப்பது எத்தாலே என்ன -அருளி செய்கிறார் மேலே –

அதாவது
அகங்கார ஹேதுத்யா நிக்ருஷ்ட ஜன்மம் அடியாக வந்த நைச்யம் பாவிக்க வேண்டுகையாகிற தோஷம் மறுவலிடாதபடி மாறுவது  –
ஜன்ம சித்தமான நைச்ச்சயத்தை உடையராய் -உபாயாந்தர அன்வய யோக்யதா கந்த
ரஹிதராய் இருக்கும் விலக்ஷண அதிகாரிகளோடு உண்டான சேஷத்வ ரூப சம்பந்த்தாலே என்கை

——————————————-

சூரணை -219–

சம்பந்தத்துக்கு யோக்யதை உண்டாம் போது-ஜன்ம கொத்தை-போக வேணும் –

தத் சம்பந்த யோக்யதை சம்பவிக்கும் படி என் என்ன அருளி செய்கிறார் –

அதாவது
அவ் விலக்ஷணரோட்டை சம்பந்தத்துக்கு -அர்ஹதை இவனுக்கு உண்டாம் போது
தன்னுடைய ஜன்ம கதமான கொத்தை கழிய வேணும் என்ற படி

————————————-

சூரணை  -220–

ஜென்மத்துக்கு கொத்தையும் அதுக்கு பரிகாரமும் -பழுதிலா ஒழுகல்–என்ற பாட்டிலே அருளிச் செய்தார்-

ஜென்மத்துக்கு கொத்தை ஏது -அதற்க்கு பரிகாரம் ஏது ?-என்னும் ஆ காங்க்ஷையிலே அருளி செய்கிறார் –

அதாவது –
மயர்வற மதி நலம் அருளப் பெற்று -தத்வ ஹித அக்ரேசராய் -ததீய சேஷத்வ சீமா பூமியான
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -பழுதிலா ஒழுகல்-இத்யாதியாலே -பிரம்மா தொடங்கி தங்கள் அளவும் வர
நெடுக போகிற வம்ச பிரவாகத்தில் ஒரு தோஷம் இன்றிக்கே இருக்கும் அவர்களாய் -பலராய் இருக்கிற சதுர் வேதிகாள்
இதில் கீழ் பட்டது இல்லை என்னும் நிஹீன குலத்தில் பிறந்தார்களே  ஆகிலும்
என்னோடு உண்டான அசாதாராண சம்பந்தத்தை அறிந்து -அந்த ஞான அனுரூபமான ஸ்வ ஆசாரத்தை உடையார் ஆகில் –
நீங்கள் அவர்கள் காலில் விழுந்து ஆராதியுங்கோள் -அவர்கள் உங்கள் பக்கில் ஞான அபேஷை பண்ணில் -நீங்கள் ஆதரித்து சொல்லுங்கோள் –
அவர்கள் பகவத் ஞானத்தை உங்களுக்கு பிரசாதிக்கையில் -கேட்டு கிருதார்தர் ஆகுங்கோள் –
எனக்கு மேல் பூஜ்யரில்லாமையாலே -என்மாத்ரம் ஆகிலும் அவர்களை ஆராதித்து-நல் வழி போகுங்கோள் என்ற இத பரம ரகஸ்யத்தை –
பக்தி ரஷ்ட விதாஹ் ஏஷா யஸ்மின் ம்லேசேபி வர்த்ததே-தஸ்மை தேயம் ததோ க்ராக்யம் ச ச பூஜ்யோ யதாஹ் யஹம் -என்று
பரம ஆப்தரான தேவர் அருளி செய்த பின்பு இதில் ஒரு சம்சயம் உண்டோ ?
இப்படி உபதேச மாத்ரமாய் போகாதே -கோவிலிலே வந்து அருளி -லோக சாரங்க முனிகள்
தலையிலே திரு பாண் ஆழ்வாரை வைத்து இவ் அர்த்தத்தை வியாபரித்துக் காட்டிற்று இலரோ என்ன –
இப் பாட்டிலே அபிஜனாத்ய  அபிமான ஜன்ம கொத்தை -அந்த துர் அபிமானம் இல்லாத
விலக்ஷணரான ததீயர்கள் அளவில் பண்ணும் அனுவர்தன விசேஷம் அதுக்கு பரிகாரம் என்று
ஸூ வ்யக்தமாக அருளிச் செய்தார் என்கை

—————————————-

சூரணை -221–

வேதக பொன் போலே இவர்களோட்டை சம்பந்தம்-

ஏவம் பூதமான ஜன்ம கொத்தை கழிந்து -விலக்ஷணரோடு சம்பந்தம் உண்டாகவே
இவனும் விலக்ஷணனனாய் விடுமோ என்ன அருளி செய்கிறார் —

வேதகம் என்கிற இத்தை -வேதகம் என்று திராவிட உக்தியாலே அருளி செய்கிறார்-
வேதக பொன்னாவது-அநேக சித்த ஒவ்ஷதங்கள் இட்டு  -பல்கால் உருக்கி குளியையாக பண்ணி –
ரசவாதிகள் கையிலிருக்கும் ஸ்வ ஸ்பர்ச வேதியான பொன்–அது ஸ்பர்ச மாத்ரத்திலே இரும்பை பொன்னாக்குமே போலே ஆய்த்து–
ஜன்ம சித்தமான நைச்ச்யாதிகள் உடைய விலக்ஷணரான இவர்களோட்டை சம்பந்தம்
நிக்ருஷ்ட ஜன்மத்தால் வந்த தோஷத்தை போக்கி இவனையும் விலக்ஷணம் ஆக்கும் படி –

—————————————————

சூரணை -222–

இவர்கள் பக்கல் சாம்ய புத்தியும் ,ஆதிக்ய புத்தியும்நடக்க வேணும் —

ஸ்வ சாம்யா பத்தியை தரும் விலக்ஷணரான இவர்களை எங்கனே பிரதிபத்தி-இருக்க வேணும் என்ன அருளி செய்கிறார் –

இவர்கள் பக்கலிலே சாம்யா புத்தியும் -ஆதிக்ய புத்தியும்-நடக்க வேணும் என்று

——————————————-

சூரணை-223–

அதாவது ஆச்சர்ய துல்யர் என்றும் சம்சாரிகளிலும் தன்னிலும் ஈச்வரனிலும்
அதிகர் என்றும் நினைக்கை-

ஆச்சார்யர் துல்யர் என்று நினைக்கை ஆவது -குரு ரேவ பர ப்ரக்ம-இத்யாதி படியே-
தனக்கு சர்வ பிரகார  உத்தேச்யனனான ஆச்சார்யனோடு இவர்களை சமரராக பிரபத்தி பண்ணுகை –
சம்சாரிகளில் அதிகராக நினைக்கை யாவது -ஜாதி யாதிகளை இட்டு சம்சாரிகளோடு சம புத்தி பண்ணாதே –
ஞாநாதிகளால் வந்த வியாவ்ருத்தியாலே -தத் அதிகர் என்று பிரபத்தி பண்ணுகை –
தன்னில் அதிகர் என்று நினைக்கை யாவது -சம்சாரிகளில் வியாவ்ருத்தி தனக்கு உண்டு ஆகையாலே –
அத்தை இட்டு தன்னோடு ஒக்க நினைத்து இருக்கை அன்றிக்கே -தனக்கு சேஷிகளான ஆகாரத்தாலே -தன்னில் அதிகர் என்று பிரபத்தி பண்ணுகை –
ஈச்வரனில் அதிகர் என்று நினைக்கை யாவது -சேஷித்வத்தை இட்டு நமக்கு அவனும் இவர்களும் ஒக்கும் என்று இராதே –
கர்ம அனுகுணமாக லீலையிலும் விநியோகம் கொள்ளக் கடவனாய்- ஸ்வ சரண கமல சமாச்ராயண தசையில்  புருஷகாரம் வேண்டும் படியாய் –
உகந்து அருளின நிலங்களிலே -சந்நிஹதனாய் இருக்கச் செய்தேயும் -அர்ச்சாவதார சமாதியாலே -வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லக் கடவன் அன்றிக்கே –
இருக்கும் அவனைப் போல் அன்றியே -ஸ்வரூப அனுகுணமாகவே விநியோகம் கொள்ளும் அவர்களாய் –
ஸ்வ ஆஸ்ரயணத்தில் புருஷகார நிரபேஷராய்–வாய் திறந்து த்யாஜ்ய உபாதேயங்களை உபதேசித்து நோக்கிக் கொண்டு
போரும் அவர்கள் ஆகையாலே -ததிகர் என்று பிரபத்தி பண்ணுகை

———————————————
சூரணை -224-

ஆச்சார்ய சாம்யத்துக்கு அடி ஆச்சார்ய வசனம் –

ஆச்சர்யனோடு ஒரு விஷயத்தையும் சம புத்தி பண்ணுகை அயுக்தமாய் இருக்க –
ஆச்சர்ய சாம்ய புத்திக்கு அடி எது என்னும் ஆ காங்க்ஷையிலே அருளி செய்கிறார் –

அதாவது ஆச்சார்ய சாம்ய பிரபத்திக்கு மூலம் -ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் நம்மைக் கண்டாப் போலே காணும் – என்று
உபதேச சமயத்திலே ஆச்சார்யன் அருளிச் செய்த வசனம் என்கை-

————————————

சூரணை -225-

இப்படி நினையாது ஒழிகையும் அபசாரம் –

இப்படி நினையாத போது வரும் அநர்த்தம் உண்டோ என்ன அருளி செய்கிறார் –

அதாவது -ஜந்மாதிகளை இட்டு நிகர்ஷ புத்தி பண்ணுகை -அபசாரம் ஆனாப் போலே –
இப்படி நினையாது ஒழிகையும் அபசாரமாய் தலைக் கட்டும் என்ற படி

————————————–

சூரணை -226-

இவ் அர்த்தம் இதிகாச புராணங்களிலும் –பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமையிலும் –
கண் சோர வெம் குருதியிலும் -நண்ணாத வாள் அவுணரிலும் -தேட்டறும் திறல் தேனிலும் —
மேம் பொருளுக்கு மேலில் பாட்டுக்களிலும் -விசதமாகக் காணலாம் –

இப்படி பட்ட பாகவத வைபவம் ஆப்த வசனங்களில் விசதமாக காணலாம் இடங்கள் உண்டோ
என்ன அருளிச் செய்கிறார் –

இவ் அர்த்தம் என்று -கீழ் விச்த்ரேணே உக்தமான பாகவத வைபவத்தைப் பராமர்சிக்கிறது –
மகா பாரதத்தில் -மத் பக்தம் சூத்திர சாமான்ய தவமன்யந்தி யே நாரா நரகேஷ்வ வதிஷ்டந்தி
வர்ஷ கோடீர் நராதம -சண்டாள அபி மத் பக்தம் நாவமன்யேத புத்திமான் -அவமாநாத் பதத்யேவ ரவ்ரவே நரகேச ச –இத்யாதியாலும் 
ந சூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் சம்ருத –சர்வ வர்ணே ஷு தே சூத்ரா எக்ய பக்தா ஜனார்தனே -இத்யாதியாலும் –
மத் பக்த ஜன வாத்சல்யம்- பூஜா யாஞ்ச அனுமோதனம்-சுயம் அர்ப்ப அர்ச்சனஞ்சைவ- மதர்தே டம்ப வர்ஜனம்
மத் கதா சரவண பக்திஸ் ஸ்வர நேத்ராங்க விக்ரியா – மம அனு ச்ம்ரணம் நித்யம்- யச்சமாம் நோபா ஜீவதி-
பக்திர் அஷ்ட விதாக்யேஷா யஸ்மின் மிலேச்சேபி வர்த்ததே சவிப்ரேந்த்ரோ முனிஸ் ஸ்ரீமான் சயதிஸ் சச பண்டித
நமே பூஜ்யஸ் சதா சாசவ் மத் பக்தஸ் ச்வபசோபி யா -தஸ்மை தேயம் ததொக்ராக்யம் சசபூஜ்யோ  யதாக்யகம்-இத்யாதியாலும் –
பல இடங்களிலும் பாகவத வைபவம் பிரதிபாதிதம்
இதிகாச உத்தமத்தில் -சூத்ரம் வா பகவத் பக்தம் நிஷாதம் ச்வபசம் ததா வீஷாதே ஜாதி சாமான்யாத் ச யாதி நரகம் நர-இத்யாதியாலும் –
பாகவத பிரபாவம் பிரகீர்திதம் -இன்னும் இதிகாசங்களிலே பல இடங்களிலும் பாகவத மகாத்ம்ய பிரதிபாதனம் வந்த இடங்களிலே கண்டு கொள்வது
ஸ்ரீ வராஹ புராணத்திலே , “மத் பக்தம்  ச்வபசம் வாபி நிந்தாம்-குர்வந்தி யே  நரா:, பத்மகோடி  சதேநாபி ந ஷமாமி வஸுந்தரே ” இத்யாதியாலே -–பாகவத வைபவம் ப்ரோக்தம்
ஸ்ரீ பாகவதத்திலே – “ச்வபசோபி  மஹீபால விஷ்ணு பக்தோ த்விஜாதிக: விஷ்ணு பக்தி  விகீநச்து  யதிச்ச  ச்வபதாசம :”.
“விப்ராத்  த்விஷட் குணயுதாத்   அரவிந்த நாப பாதார விந்த  விமுகாச் ச்வபசம் வரிஷ்டம்–
மந்யே  ததர் பிதமேநா வசேந ஹிதாரத்த  ப்ராண: பு நாதி ஸகலம்  நது பூரி மாந:” இத்யாதிகளாலே  பாகவத வைபவம் பல விடங்களிலும் அபிஹிதம் –
லைங்கத்திலும் “வைஷ்ணவானாம்  விசேஷோச்த்தி விஷ்ணோ ராயாதனம்  மஹத
ஜங்கம ஸ்ரீ  விமாநாநி ஹிரு தயாதி மநீஷிணாம் . ய: பஸயதி சு பாசாரம்  வைஸ் ணவம்
வீத கல்மஷம் ,யஸ்மின் கஸ்மின் குடூலஜாதம்  பிரணமேத்  தண்டவத்புவி ” இத்யாதியாலே  – பாகவத வை பவம்  ப்ரதிபாதிதம்-
இப்படி  பாகவத மாஹாத்ம்ய ப்ரதிபாதநம்  பல புராணங்களிலும் உண்டாகையாலே , அந்த அந்த ஸ்தலங்களிலே-கண்டு கொள்வது-
இதிகாசாதிகளில் உபாதித்த வசனங்களிலே–
1- பாகவதர்களை ஜன்ம நிரூபேணன அவமதி செய்தால் வரும் அநர்த்த விசேஷமும் –
2-பாகவதர் ஆன போதே அவர்கள் அபக்ருஷ்ட ஜாதியர் அல்லர் -உத்க்ருஷ்ட ஜாதிய துல்யர் என்னும் இடமும் –
3–உத்க்ருஷ்ட ஜாதியரிலும் ஸ்ரேஷ்டராய் -அவர்களுக்கு ஞான பிரதாத் க்ருத்ய குருக்க்களுமாய் -பரம சேஷியான ஈச்வரனோபாதி பூஜ்யரும் ஆவர் கள் என்னும் இடமும் –
4–அவர்கள் திறத்தில் அபசாரம் கால தத்வம் உள்ளதனையும் ஈஸ்வரன் பொறான் என்னும் இடமும் –
5–கரண த்ரய வியாபாரத்தோடு -அர்த்தத்தோடு -பிராணாதிகளோடு-வாசியற பகவத் விஷயத்தில் சமர்ப்பித்து -நிர்  அபிமாநியராய் இருக்கும் அவர்கள் ஸ்பர்ச பாவனர் என்னும் இடமும் –
6–அவர்கள் ஹிருதயம் ஈஸ்வரனுக்கு ஜங்கம ஸ்ரீ விமானம் என்னும் இடமும் –
7–அவர்களை கண்டால்  தண்டவத் ப்ரணாமம் செய்வான் என்னும் இடமும் – சொல்லப் பட்டது இறே- இப்படி இதிகாச  புராணங்களிலும் –

நம் ஆழ்வார்
பாற் கடல் சேர்ந்த பரமனை பயிலும் திரு உடையார் பயிலும்-பிறப்பு இடை தோறும் எம்மை ஆளும் பரமர் -என்று தொடங்கி –
பகவத் குண சேஷ்டிதாதிகளிலே ( ஒன்பது பாசுரங்களில் குணங்களும் ஒரு பாசுரத்தில் சேஷ்டிதங்களையும் ) ப்ரவணரான பாகவதர்களே
தமக்கு சேஷிகள் என்னும் இடத்தைபிரதி பாதித்து அருளும் இடத்தில் –
யாவரேலும் அவர் கண்டீர் –
கும்பி நரகர்கள் எத்துவரேலும் அவர் கண்டீர் –
எத்தனை நலம் தான் இல்லாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் -என்று
ஜந்மாதிகள் எத்தனை ஏனும் தண்ணியரே ஆகிலும் -சேஷத்வ விரோதியான ஜன்மாத்ய அபிமானம் இல்லாதவர்கள் கிடீர் தமக்கு 
மிகவும் உத்தேச்யர் என்று அருளி செய்த -பயிலும் சுடரொளி யிலும் –

கொடு மா வினையேன் -அவன் அடியார் அடியே கூடும் இது அல்லால் -வியன் மூ உலகு பெறினும் விடுமாறு எனபது என் அந்தோ -என்று தொடங்கி –
பாகவதர்களே தமக்கு பரம ப்ராப்யர் என்னும் இடத்தை பிரதிபாதிக்கிற அளவில் –
ஜன்ம விருத்தாதி விபாகம் இன்றிக்கே –
சயமே அடிமை தலை நின்றார் –
அவன் அடியார் –
மணி மலை போல் கிடந்தான் தமர்கள் –
கோதில் அடியார் –
நீக்கமில் அடியார் –
என்று பகவத் சவ்ந்த்ர்யாதிகளில்-(கீழே ஸ்வரூப குணம் சேஷ்டிதங்களில் தோற்றவர்கள் புயல் மேகம் போல் / மன்மதனும் மடல் எடுக்கும் படி அழகு /)
தோற்று இருக்கும் ஆகாரமே அவர்களுக்கு நிரூபகமாக அருளிச் செய்த -நெடுமாற்கு அடிமையிலும் –

திரு மங்கை ஆழ்வார் –
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலார் -என்று தொடங்கி -(மா மதலை பெருமாளையும் சேவிக்கலாம் இங்கே )
அர்ச்சாவதார ப்ரவணரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் எனக்கு சிரசா வஹ்யர் -சதா த்யேயர் -சூரிகளிலும்
கைங்கர்ய ஸ்மிர்த்தி உடையவர்கள் -அவர்களை ஒரு ஷணமேலும் பிரிய ஷமன் அல்லேன் –
அவர்களுக்கு என் ஹிருதயம் தேனூறி எப்பொழுதும்  இனியதாக  நின்றது –
அவர்களை கண்ட மாத்ரத்திலே -கண்டீ கோளே என்னுடைய மநோ திருஷ்டிகள் களிக்கிற படி –
அவர்கள் அளவிலே ஆகா நின்றது என் அன்பானது –
அவர்களை நெஞ்சாலே நினைக்கவே ம்ருத்யுவுக்கும் பாபத்துக்கும் அஞ்ச வேண்டாம் –
என்னுடைய ஹிருதயம் அவர்கள் விஷயத்தில் ஈடுபட்டு கிடைத்தை கண்டீ கோளே-இப்படி பாசுரம் தோறும்
ஜென்மாதி பிரசங்கம் அற அருளிச் செய்தார் -நம்மாழ்வார் சண்டாள சண்டாள பிரசங்கம் உண்டே

கடல் மலை தல சயனமார் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை ஆள்வாரே – என்று
ஏதேனும் ஜன்ம விருத்தாதிகளை உடையராகவுமாம் -திருக் கடல் மலை தல சயனத்தை
அனுசந்திக்கும் அவர்கள் நின்ற நிலைகளிலே பிரமாணம் காட்டாதே நம்மை கார்யம் கொள்ள உரியார் என்று தொடங்கி –
ஞானத்தின் ஒளி உருவை நினைவார் என் நாயகர் –
அவர் எங்கள் குல தெய்வமே -என்று –
உகந்து அருளின நிலத்திலே ப்ரவணராய் இருக்கும் அவர்களே நமக்கு சேஷிகள் என்று
அருளிச் செய்த -நண்ணாத வாள் அவுணரிலும் –

ஸ்ரீ குலசேகர பெருமாள் –
மெய் அடியார்கள் தங்கள் ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயனாவது –
தொண்டர் அடி பொடி ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவது –
இத்யாதிகளால் தம்முடைய பாகவத பிரேம பிரகர்ஷத்தை  பிரதிபாதிக்கிற அளவில் –
ஜந்மாத் உத்கர்ஷ அபகர்ஷ பிரசங்கம் இன்றியே -பகவத் பக்தி பாரவச்யமே-(மால் கொள் சிந்தையராய் என்பதே ) அவர்களுக்கு
நிரூபகமாக அருளிச் செய்த -தேட்டரும் திறல் தேனிலும் –

ஸ்ரீ தொண்டர் அடிபொடி ஆழ்வார்
த்வய நிஷ்டர் பக்கல் ஈஸ்வரனுக்கு உண்டான உகப்பை அருளிச் செய்த – மேம் பொருள் -என்கிற பாட்டுக்கு மேலில் –
எத்தனை ஏனும் தண்ணிய ஜன்மங்களில் பிறந்தவர்களே ஆகிலும் –
1-மேம் பொருளிலே சொன்ன ஞானத்திலே நிஷ்டை உடையவர் ஆகில் –
திரு துழாயோபாதி ஈஸ்வரனுக்கு சிரஸ்  அவாக்யர் என்றும் –
2-ஜன்மத்தால் வந்த தண்மையே  அன்றிக்கே -எத்தனையேனும் தண்ணிய விருத்தம்
உடையாரும் -இந்த ஞான நிஷ்டர் ஆகில் -அந்த துஷ்க்ருத பலம் அனுபவியார் என்றும் –
3-தங்களுக்கு ஜன்ம விருத்தாதிகளால் வரும் குறை இல்லாமையே அன்று -தங்களோடு
சம்பந்த்தித்த சம்சாரிகளும் -தங்கள் பிரசாத ச்வீகாரத்தால் பரிசுத்தராம் படியான உத்கர்ஷம் உடையார் என்றும் –
4-ஜன்ம விருத்தாதிகளால் குறைய நின்ற இந்த ஞானம் உடையவர்கள் -இந்த ஞான விதுரராய்-
ஜன்ம விருத்தாதிகளால்  உயர்ந்தவர்களுக்கு சர்வேச்வரனோ பாதி பூஜ்யராய் -ஞான தான பிரதிக்ரகங்களுக்கு – அர்ஹர் ஆவார் என்றும் –
5-ஜன்ம விருத்தாதிகளுக்கு மேலே ஞான அதிகருமானவர்கள் -ஜன்ம விருத்தாதி வைலஷண்யம் இன்றிக்கே -இந்த ஞானம் உடையவர் ஆனவர்களை –
பகவத் பிரபாவத்தால் வந்த வைலஷன்யத்தை புத்தி பண்ணாதே – கர்ம நிபந்தனமான ஜன்மாத்ய அபகர்ஷத்தையே புத்தி பண்ணி
தாழ நினைத்தார்கள்  ஆகில் -அந்த ஷணத்திலே -அவர்கள் கர்ம சண்டாளர்கள் ஆவார்கள் என்றும் –
6-இப்படி பிரசாத்தித்த அர்த்தங்கள் சம்பவிக்கும் என்னும் இடம்  ப்ரஹ்மாதிகளுக்கும் துர்லபமான பேற்றை
திர்யக் ஜாதியிலே பிறந்தான் ஒருவன் -கஜேந்திர ஆழ்வான் -பெற்ற பின்பு சொல்ல வேணுமோ என்று — அருளிச் செய்த ஆறு பாட்டுகளிலும் –
விசதமாகக் காணலாம் என்றது -சம்சய விபர்யயமற தர்சிக்கலாம் என்ற படி –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம் -சூர்ணிகை–198/199/201/202/203/204/205/206/-207/208/209/210/211/212/213/214/215/216–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

April 10, 2012

சூர்ணிகை -198-

திரிசங்குவைப் போலே கர்ம சண்டாளனாய் -மார்விலிட்ட
யஜ்ஜோபவீதம் தானே வாராய் விடும் —

இவ்வாபசாரத்துக்குப் பலம் தக்த படம் போலே நஷ்ட கல்பனாய் இருந்து தேக அவசனத்திலே வுருமாய்ந்து போம் அளவே அல்ல –
இவ்வாபசாரம் பண்ணின போதே கர்ம சண்டாளனாய் விடும் என்கிறார் -திரிசங்குவைப் போலே-என்று தொடங்கி –

அதாவது -இஷுவாகு வம்சனாய் இருக்கிற திரிசங்குவாகிற ராஜா தன் குல குருவாய் இருக்கிற வசிஷ்ட மகரிஷியை –
ச சரீர ஸ்வர்க்க அவாப்த அர்த்தமாக என்னை யஜிப்பிக்க வேணும் -என்று அபேக்ஷிக்க –
மஹரிஷி நமக்கு அசக்யம் -என்ன –
அங்கு நின்றும் தத் புத்திரர்கள் தபஸ் ஸூ பண்ணுகிற இடத்திலே சென்று இச்செய்தியைச் சொல்லி அவர்களை மிகவும் அநு வர்த்தித்து –
நீங்கள் என்னை இப்படி யஜிப்பிக்க வேணும் -என்று நிர்பந்திக்க
நீ துர்புத்தியாய் இருந்தாய் -மஹரிஷி போகாது என்றத்தை எங்களால் செய்யப் போமோ என்ன
தேஷாம் தத் வசனம் ச்ருத்வா க்ரோத பர்யாகுலா ஷரம் ச ராஜா புநேரேவைதா நிதம் வசந அப்ரவீத் ப்ரத்யாக்கயாதோ பகவதா
குரு புத்ரைஸ் தத்தைவச அந்யாம் கதம் கமிஷ்யாமி ஸ்வஸ்தி வோஸ்து தபோதநா -என்று அவன் க்ருத்தனாய்
குருவானவரும் -தத் புத்ரர்களான நீங்களும் மாட்டோம் என்றிகோள் ஆகில் நான் மற்றொர் இடத்தில் போகிறேன் நீங்கள் ஸூ கமாய் இருங்கோள் -என்ன
ருஷி புத்ராஸ்து தச்ச்ருத்வா வாக்கியம் கோராபி சம்ஹிதம் சோபு பரம சங்க்ருதாச் சண்டாளத்வம் கமிஷ்யசி -என்று
ஸ்வாச்சார்யனையும் தத் புத்ரர்களான தங்களையும் இவன் அவமதி பண்ணிச் சொன்ன வார்த்தையைக் கேட்டு அவர்கள் மிகவும் க்ருத்தராய்
நீ சண்டாளனாகக் கடவாய் -என்று சபிக்க
அத ராத்ரியாம் வ்யதீதா யாம் ராஜா சண்டாள தாங்கத நீல வஸ்திர தரோ நீல புருஷோ த்வஸ்த மூர்த்தஜ சித்ரமால் யாங்க ராகாச்ச ஆயாசா பரனோ பவேத் -என்கிறபடியே
அநந்தரம் அவன் கர்ம சண்டாளனாய் விட்டான் இ றே
அப்படியே பாகவத அபசாரம் பண்ணின போதே கர்ம சண்டாளனாய் ப்ரஹ்ம வர்ச்சஸ்வத்துக்கு உறுப்பாக மார்பிலிட்ட யஜ்ஜோபவீதம் தான்
சண்டாள வேஷத்துக்கு அடைத்த வாராய் விடும் என்கை –
அங்கு சாப சித்தமாகையாலே ப்ரத்யக்ஷமாய்த்து -இங்கு சாஸ்த்ர சித்தமாகையாலே ஞான த்ருஷ்ட்டி விஷயமாக இருக்கும்
அநாசாராந் துரா\சாராந் அஞ்ஞாத்ருந் ஹீந ஜன்மன -மத் பக்தாந் ஸ்ரோத்ரியோ நிந்தந் சத்யச் சண்டாளதாம் வ்ரஜேத் -என்னக் கடவது இ றே

——————————————————–

சூர்ணிகை –199-

ஜாதி சண்டாளனுக்கு காலாந்தரத்திலே பாகவதனாகைக்கு யோக்யதை யுண்டு –
அதுவும் இல்லை இவனுக்கு –

சண்டாளனோபாதி யாகிலும் இவனும் ஒரு காலத்திலே ஈடேறும் என்று நினைக்கைக்கு அவகாசம் இல்லாதபடி –
ஜாதி சண்டாளனில் கர்ம சண்டாளனுக்கு உள்ள தண்மையை அருளிச் செய்கிறார் –

அதாவது ஜாத்ய சண்டாளனுக்கு தஜ் ஜென்மத்தில் யாதல் ஜன்மாந்தரத்திலே யாதல் பகவத் கடாக்ஷம் உள்ளதொரு கால விசேஷத்திலே
நாம ரூபங்களை யுடையவனாய் பகவத் சம்பந்த நிருபித்னாகைக்கு யோக்யதை யுண்டு
அந்த யோக்யதையும் இல்லை -பாகவத அபசார ரூப கர்மத்தால் சண்டாளனான இப் பாபிஷ்டனுக்கு

——————————————–

சூர்ணிகை –200-

ஆரூட பதிதனாகையாலே-

அதுக்கடி பாகவதத்வமாகிற உயர்ந்த நிலத்திலே ஏறி -பத்ம கோடி சதே நாபி ந ஷாமாமி என்னும்படி அதி குரூரமான பகவத் நிக்ரஹத்துக்கு
ஹேதுவான பாகவத அபசாரத்தாலே பாற வடியுண்டு அதி பதித்தவனாகையாலே

—————————————–

சூர்ணிகை –201-

இது தனக்கு அதிகாரி நியமம் இல்லை –

இது தான் ஜென்மாதிகளாலும் ஞானாதிகளாலும் அபக்ருஷ்டரானவர்கள் உத்க்ருஷ்டர் விஷயத்தில் பண்ணும் அளவிலேயே
அவற்றால் உத்க்ருஷ்டரானவர்கள் அபக்ருஷ்டர் விஷயத்தில் பண்ணும் அளவிலே ஒக்குமோ என்ன அருளிச் செய்கிறார்

அதாவது பாகவத அபசாரத்துக்கு அப்படி இருபத்தொரு அதிகாரி நியமம் இல்லை என்கை –

——————————————————–

சூர்ணிகை -202-

தமர்களில் தலைவராய் சாதி அந்தணர்களேலும் -என்கையாலே

இது தனக்கு பிரமாணம் உண்டோ என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –

அதாவது –ச அங்கமாக சகல வேதங்களையும் அத்யயனம் பண்ணி ததீய ஸ்ரேஷ்டருமாய் -உத்க்ருஷ்ட ஜன்மாக்களுமாய் இருந்தார்களே யாகிலும்
தேவரீர் திருவடிகளில் சம்பந்த ஏக நிரூபகரான ஸ்ரீ வைஷ்ணவர்களை ஜென்மாதிகளை இட்டு நிந்திப்பார்களாகில்
காலாந்தரே தேசாந்தரே அன்றிக்கே -அப்போதே அவ்விடம் -தன்னிலே அவர்கள் தாங்கள் சண்டாளரும் –
இவர்களுக்கு ஒரு போலி மாத்திரம் என்னும் படி அவர்களில் காட்டில் அத்யந்த நீசராவார் உஎன்று
தத்வ யாதாம்ய தர்சிகளான தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் அருளிச் செய்கையாலே என்கை –

————————————————–

சூர்ணிகை -203-

இவ்விடத்தில் வைநதேய விருத்தாந்தத்தைத்தையும்
பிள்ளைப் பிள்ளை யாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது

இவ்வார்த்தை விஷயமாக இரண்டு ஐதிக்யத்தை ஸ்மரிப்பிக்கிறார் –

வைநதேய விருத்தாந்தமாவது –விச்வாமித்ரன் பக்கலிலே வித்யைகள் எல்லாம் அதிகரித்த காலவன் என்கிற ப்ராஹ்மணன்
குரு தக்ஷிணை கொடுத்தால் ஒழிய நமக்கு இவ்வித்யைகள் நிலை நில்லாது என்று பார்த்து -நான் இங்குத்தைக்கு தக்ஷிணையாகத் தரத் தக்கது ஏது-என்று கேட்க
நீ நமக்கு ஒன்றுமே செய்ய வேண்டா -நாம் உன்னுடைய சுச்ருஷையாலும் பக்தியாலும் மிகவும் ப்ரீதரானோம்
இனி உன்னுடைய இஷ்டத்திலே போய் இரு -என்று பலகாலும் சொன்ன அளவிலும் -இவன் அது செய்யாதே ஸர்வதா என் பக்கலில்
தக்ஷிணை வாங்கிக் கொள்ள வேணும் என்று அதி நிர்பந்தம் பண்ணுகையாலே
கிஞ்சிதா கத சம்ரம்போ விச்வாமித்ரோ பிரவீதிதம் ஏக தச்சயாம கர்ணா நாம் சதான் யஷ்டவ் து தேஹி மே ஹயா நாம் சந்த்ர சுப்ராணம் கச்ச காலவ மா சிரம் -என்று
அவன் குபி தானாய் இவனைப் பார்த்து -உடம்பு எங்கும் சந்த்ர மண்டலம் போலே வெளுத்து ஒரு செவி பச்சையாய் இருக்கும் எண்ணூறு குதிரை நமக்கு கொண்டு வந்து தா
என்ன -இத்தைக் கேட்டு மஹா வ்யாகுலனாய் -இதுக்கு இனிச் செய்வது என் -என்று பஹு முகமாக விசாரித்து சர்வ அபேக்ஷித பிரதானனான சர்வேஸ்வரனை உபாசிப்போம் என்று
உத்யோகிக்கிற அளவிலே முன்பே இவனுக்கு சகாவாய் இருக்கிற பெரிய திருவடி நாயனார் இவனுக்கு முன்னே வந்து நிற்க அவரை ஸ்தோத்ரம் பண்ணி
இதுக்கு செய்ய அடுத்து என் என்று கேட்க
அவர் – உன்னை நான் இப்பூமி எங்கும் கொண்டு போகிறேன் இருவரும் கூட ஆராய்வோம் வா என்று இவனை இடுக்கிக் கொண்டு திரிகிற அளவிலே
இளைப்பானவாறே -இங்கே இளைப்பாறிப் போகக் கடவோம் என்று மேல் சமுத்ரத்திலே ரிஷபம் என்கிற பர்வதத்தின் மேலே வாசியா நிற்பவளாய்
ஞானாதிகையாய் இருந்த சாண்டிலி என்கிற பாகவதையைச் சென்று கண்டு அபிவாத நாதிகளை பண்ண -அவள் அத்யாதரத்தோடே மிகவும் சத்கரிக்க
அநந்தரம் விஸ்ராந்தராய் சயிக்கிற அளவிலே -இப்படி விலக்ஷணையாய் இருக்கிற இவள் ஒரு விலக்ஷண தேசங்களிலே வசிக்கப் பெற்றதில்லையே என்று
பெரிய திருவடி நாயனார் விசாரித்து இவளை இங்கு நின்றும் நாம் ஒரு திவ்ய தேசங்களிலே கொண்டு போய் வைக்கக் கடவோம் என்று
நினைத்துக் கொண்டு கிடக்கச் செய்தே அந்த பாகவதை இருந்த தேசத்தைக் குறைய நினைத்த இவ் வாபசாரத்தாலே சிறகுகளும் உதிர்ந்து நிஸ் சேஷ்டராய் விட
இத்தைக் கூடப் போன ப்ராஹ்மணன் கண்டு -கிந்னு தே மனசா த்யாதம் அசுபம் பததாம் வர நஹ்யயம் பவதஸ் ஸ்வல்போ வ்யபிசாரோ பவிஷ்யதி -என்று
ஏதேனும் உம்முடைய திரு உள்ளத்தால் தீங்கு நினைத்தது உண்டோ தேவரீருக்கு அல்பமும் வியபிசாரம் வருகைக்கு யோக்யதை இல்லை என்ன
உண்டாய்த்து காண் -என்று தாம் அந்த பாகத்தை விஷயத்தில் நினைத்த பிரகாரத்தை அவனுக்கு அருளிச் செய்து –
அநந்தரம் இத்தைப் பொறுக்க வேணும் என்று என்று அவளைச் சென்று வர்த்தித்து அவள் அனுக்ரஹத்தாலே
அவ்வபசாரம் நீங்கி முன்பு போலே ஆனார் என்கிறது
இது தான் கிருஷ்ணன் ஸ்ரீ தூது எழுந்து அருளினை போது நாரதாதி மஹரிஷிகள் பலரும் வந்து இருக்கிற அளவிலே கிருஷ்ணன் திரு உள்ளக் கருத்தை
பின் செல்லுகைக்கு உறுப்பாக த்ருதராஷ்ட்ரனைக் குறித்து பல கதைகளும் சொல்லி வருகிற பிரகரணத்திலே
ஸ்ரீ நாரத பகவான் அனுக்ரஹித்ததாக உத்யோக பர்வதத்தில் யுக்தமாகையாலே வேதாந்த உபபிரும்ஹண சித்தம் இ றே

பிள்ளைப் பிள்ளை யாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தை-யானது
பிள்ளைப் பிள்ளை ஆழ்வானை அங்கீ கரித்து நாளிலே -இவர் ஆபிஜாதியாதிகளாலே உத்க்ருஷ்டராகையாலே பாகவத விஷயங்களில் அவிநயமாக
வர்த்தித்திக் கொண்டு போகிறபடியைக் கண்டு –
இவருக்கு இப பாகவத அபசாரம் இவருடைய ஞான அனுஷ்டானங்கள் எல்லாவற்றையும் கீழ்ப் படுத்தி தானே மேலாய் விநாச பர்யந்தம் ஆக்கிவிடும்
அதுக்கு வேலியிட்டு வைக்க வேணும் என்று திரு உள்ளம் பற்றி ஓர் அயனத்தின் அன்று நீராடி ஏறின அளவிலே இவரைப் பார்த்து
எல்லாரும் தானம் பண்ணுகிற காலத்தில் நீரும் நமக்கு ஒரு தானம் பண்ண மாட்டீரோ என்ன -அடியேன் எத்தை தானம் பண்ணுவது -எல்லாம் அங்குத்தையாய் இருந்ததே என்ன
அர்த்த ஸ்திதி அன்றோ ஆவது -அவ்வளவு போராது-கரண த்ரயத்தாலும் பாகவத அபசாரம் பண்ணாமல் வர்த்திக்கக் கடவன் என்று நம் கையிலே உதகம் பண்ணித் தார வேணும் என்ன –
அப்படியே இவரும் உதகம் பண்ணிக் கொடுத்த அநந்தரம் ஒரு பாகவத தோஷத்தை பூர்வ வாசனையால் நினைத்து நாம் இனி முடிந்தோம் என்று பயப்பட்டு
மூடிக் கொண்டு தன் திரு மாளிகையில் கண் வளர இவர் முன்பு வருகிற காலத்தில் வரக் காணாமையாலே ஆழ்வான் இவர் திரு மாளிகையில் எழுந்து அருளி
ஏன் தான் முசிப்பு என் என்று வினவி அருள -தான் மனத்தால் நினைத்ததை விண்ணப்பம் செய்து கரண த்ரயத்தாலும் அபசாரம் புகுராதபடி
இத்தேகத்தோடே வர்த்திக்கை அரிதாய் இரா நின்றது என் செய்யக் கடவேன் என்று திருவடிகளைக் கட்டிக் கொண்டு கிலேசிக்க
இத்தனை அனுதாபம் இவருக்கு உண்டாகப் பெற்றோமே -என்று உகந்து அருளி மனசாலே நினைந்ததுக்கு அனுதாபம் உண்டாகவே
ஈஸ்வரன் ஷமித்து அருளும் -ப்ரத்யக்ஷ தண்ட பயத்தாலே காயிகமாக ஒருவரையும் நலியக் கூடாது –
ஆனபின்பு அவை இரண்டும் உமக்குக் கழித்துத் தந்தோம் -இனி வாக்கு ஒன்றையும் நன்றாகக் குறிக் கொண்டு வர்த்தித்துப் போரும் என்று அருளிச் செய்தது –

——————————————

சூர்ணிகை -204-

ஞான அனுஷ்டானங்களை ஒழிந்தாலும் பேற்றுக்கு அவர்கள் பக்கல் சம்பந்தமே அமைகிறாப் போலே
அவை யுண்டானாலும் இழவுக்கு அவர்கள் பக்கல் அபசாரம் போரும் –

பகவல் லாப ஹேதுவான ஞான அனுஷ்டானங்கள் இரண்டும் பரிபூர்ணனாய் யுடையான் ஒருவனுக்கு பாகவத அபசாரம் யுண்டாய்த்தாகிலும்
பகவான் அதுக்கு லகுவானதொரு தண்டனைகளைப் பண்ணிக் கூட்டிக் கொண்டு விடானோ
அவை இரண்டும் அசத் சமமாய் அபசாரம் பிரபலமாய் எம்பெருமானை இழந்தே போய் விடும் என்னலாமோ என்ன அருளிச் செய்கிறார் –

அதாவது -உபாப்யாம் ஏவ பாஷாப்யாம் ஆகாசே பக்ஷிணாம் கதி ததைவ ஞான கர்மப்யாம் ப்ராப்யதே பகவான் ஹரி -என்றும்
வீசும் சிறகால் பறத்தீர் விண்ணொடு நுங்கட்க்கு எளிது-திரு விருத்தம் -54- -என்றும் சொல்லுகிறபடியே
பகவல் லாப ஹேது வான தத்வ ஞானமும் தத் அனுரூப அனுஷ்டானம் இன்றிக்கே ஒழிந்தாலும்
பகவல் லாபத்துக்கு –பசுர் மனுஷ்ய பஷீ வா ஏச வைஷ்ணவ ஸம்ஸரயா தேநைவதே பிரயாஸ்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் –என்றும்
யம் யம் ஸ்ப்ருசதி பாணிப்யாம் யம்யம் பஸ்யதி சஷூஷா ஸ்தாவராண்யபி முச்யந்தே கிம் புநர் பாந்தவா ஜநா -என்றும் சொல்லுகிறபடியே
பாகவத சம்பந்தமே நிரபேஷ சாதனம் ஆகிறாப் போலே அந்த ஞான அனுஷ்டானங்கள் இரண்டும் குறைவற யுண்டாய்த்தாகிலும்
பகவத் விஷயத்தை இழந்து போகைக்கு பகவத் அபிமதரான அந்த பாகவத விஷயத்தில் பண்ணும் அபசாரமே நிரபேஷ சாதனமாகப் போரும் என்றபடி –

———————————————-

சூர்ணிகை -205-

இதில் ஜென்ம வ்ருத்தாதி நியமம் இல்லை

இதில் ஜென்ம வ்ருத்தாதி நியமம் யுண்டோ என்னும் ஆகாங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –

இதில் என்றது -பேற்றுக்கு பாகவத சம்பந்தமே அமையும் -இழவுக்கு அவர்கள் பக்கல் அபசாரமே போரும் என்று சொன்ன இவை இரண்டிலும் -என்றபடி –
ஜென்ம வ்ருத்தாதி நியமம் இல்லை -என்றது -ஜென்ம வ்ருத்தாதிகளால் உத்க்ருஷ்டரான பாகவதர்களோடு யுண்டான சம்பந்தமே பேற்றுக்கு ஹேது வாவது
அவற்றால் அபக்ருஷ்டரான வர்களோட்டை சம்பந்தம் பேற்றுக்கு ஹேதுவாகாது என்கிற நியமுமம் –
ஜென்ம வ்ருத்தாதிகளால் உத்க்ருஷ்டரானவர்கள் திறத்தில் பண்ணும் அபசாரமே இழவுக்கு உடலாவது
அவற்றால் அபக்ருஷ்டரானவர்கள் திறத்தில் பண்ணும் அபசாரம் அப்படி இழவுக்கு உடலாகாது என்கிற நியமம் இல்லை என்றபடி –

———————————-

சூர்ணிகை –206–

இவ்வர்த்தம் கைசிக வ்ருத்தாந்தத்திலும்
உபரிசர வ்ருத்தாந்தத்திலும் காணலாம் –

இவ்வர்த்தம் காணலாம் இடம் உண்டோ என்ன அருளிச் செய்கிறார் –

அதாவது -சரக குலோத்பவனான சோமா சர்மாவாகிற ப்ராஹ்மணன் யாகத்தைச் செய்வதாக உபக்ரமித்து -யதா க்ரமம் அனுஷ்டியாமல்
அது சமாபிப்பதுக்கு முன்னே மரிப்பதும் செய்கையாலே ப்ரஹ்ம ராக்ஷசனாய் பிறந்து திரியா நிற்க
மத்பக்தம் ஸ்வ வசம் வாபி-என்கிறபடியே ஜென்ம ஸித்தமான நைச்யத்தை யுடையராய் -பகவத் பக்தியே நிரூபகமாம் படி இருப்பார் ஒரு பாகவதர்
உத்தான ஏகாதசி யன்று ராத்திரி சித்தாஸ்ரமமான திருக் குறுங்குடியிலே நம்பியைப் பாடிப் பறை கொள்வதாக வீணா பாணியாய்க் கொண்டு போகா நிற்கச் செய்தே
அவரை பஷிப்பதாக வந்து அடர்க்க அவர் மீண்டு வருகைக்கு உறுப்பான அநேக சபதங்களைப் பண்ணிக் கொடுத்து தத் அனுமதி கொண்டு போய்
யதா மநோ ரதம் சேவித்து ஹ்ருஷ்டராய் அந்த ப்ரஹ்ம ராஷசன் நிற்கிற இடத்தில் மீளவும் விரைந்து வந்து யதேஷ்டம் இனி என் சரீரத்தை நீ புஜி என்ன
அவன் அவருடைய சத்யத்வாதி வைபவத்தை கண்டு -நீ இன்று பாடின பாட்டின் பலத்தை தா -நான் உன்னை பிராணனோடு போகவிடும்படி என்ன
அவர் அதுக்கு இசையாது ஒழிய -அர்த்த ராத்ரத்தில் பலம் -ஏக யாமத்தில் பலம் என்றால் போல் சொல்லிக் கொண்டு வந்த அளவிலும்
நான் அது செய்வது இல்லை -முன்பு நீ சொன்ன படியே என்னை பஷிக்கும் அத்தனை -என்று ஒரு நிலை நின்ற படியால்
த்வம் வை கீத பிரபாவேந நிஸ் தாரயிதும் அர்ஹஸி ஏவம் உக்த்வாத சண்டாள ராக்ஷஸம் சரணம் கத -என்கிறபடியே
நீ உன்னுடைய கீதா ப்ரபாவத்தாலே என்னை இப்பாபத்தின் நின்றும் கரை ஏற்ற வேன்டும் என்று சரணம் புகுர-அந்த பாகவதர்
யன்மயா பச்சிமம் கீதம் ஸ்வரம் கைசிமம் உத்தமம் -இத்யாதி படியே தாம் பின்பு பாடின கைசிகமாகிற பண்ணின் பலத்தை கொடுத்து
கர்ம தோஷத்தால் வந்த ராக்ஷஸ வேஷத்தை கழித்து முன்பு போலே ப்ராஹ்மணனாய் -அதுக்கும் மேலே பாகவதனுமாய்
உஜ்ஜீவிக்கும்படி பண்ணினார் என்கிற கைசிக வ்ருத்தாந்தத்திலே -ஜென்மாதிகளால் உத்க்ருஷ்டரான பாகவதர்களோட்டை சம்பந்தமே உஜ்ஜீவன ஹேது வாவது –
அவற்றால் அபக்ருஷ்டரானவர்களோட்டை சம்பந்தம் உஜ்ஜீவன ஹேதுவாகாது -என்கிற நியமும்ம் இல்லை என்னுமது காணலாம்

ரிஷிகளும் தேவர்களும் தன் பக்கலிலே தர்ம சந்தேகம் கேட்க்கும்படி வித்யாதிகனுமாய் -ஸ்வ வரண அனுரூப மாத்திரம் அன்றிக்கே
ஸாத்வத தந்த்ர நிஷ்ணாதனாய்-பாகவத ஆராதன தத் பரனாய்க் கொண்டு போருகையாலே வந்த வ்ருத்தாதிக்கனுமாய்
ஸ்வ தபோ பலத்தால் ச வாஹன பரிவாரனாய்க் கொண்டு அந்தரிக்ஷ சரனாய் திரியும் உபரி சரவஸூ என்கிற மஹா ராஜாவானவன்
யாகார்த்தமான பசு நிமித்தமாக ரிஷிகளும் தேவர்களும் தங்களிலே விவாதம் பண்ணுகிற அளவில்
மார்க்கா கதோ ந்ருப ஸ்ரேஷ்டஸ் தம் தேசம் ப்ராப்தவான் வஸூ -அந்தரிக்ஷ சர்ச் ஸ்ரீ மான் சமக்ர பல வாஹன
தம் த்ருஷ்ட்வா ஸஹாஸ யாந்தம் வஸூம் தேவந்தரிக்ஷகம் ஊசுர் த்வி ஜாதயோ தேவா ஏஷச் சேத்ஸ்யதி சம்சயம் -என்று
ஆகாசத்தில் போகா நின்ற இவனைக் கண்டு இவன் நம்முடைய ஸம்சயத்தை அறுக்க வல்லன் என்று அறுதி இட்டு இவனைச் சென்று கிட்டி செய்ய விடுப்பது ஏது என்று கேட்க –
அவன் உம் தாமுடைய மதங்களைச் சொல்லுங்கோள் என்ன
தாந்யைர் யஷ்டவ்ய மித் யேஷ பஷோ ஸ்மாகம் நராதிப தேவதா நாம் ஹி பசுபி பஷோ ராஜன் வதஸ் வன என்று
தான்யங்களாலே யஜிக்கப்படும் என்று எங்களுக்கு பக்ஷம் -பசுக்களாலே யஜிக்க வேணும் என்று தேவர்களுக்கு பக்ஷம் -நாங்கள் செய்வது என் சொல் என்று ரிஷிகள் கேட்க
தேவா நாத்து மதம் ச்ருத்வா வஸூநா பக்ஷ ஸம்ஸரயாத் சாகே நாஜேந யஷ்டவ்யமேம்வ யுக்தம் வசஸ் ததா என்கிறபடியே
அவன் தேவர் அளவில் பக்ஷபாதத்தால் -சாகத்தாலே யஜிக்க வேணும் என்ன
குபிதாஸ் தே ததா சர்வே முனயஸ் ஸூர்ய வர்ச்சச ஊசுர்வஸூம் விமாநஸ்த்தம் தேவ பஷார்த்த வாதிநம்
ஸூர பஷோ க்ருஹீதஸ் தே யஸ்மாத் தஸ்மாத் திவ பத அத்ய ப்ரப்ருதி தே ராஜன் ஆகாஸே விஹதா கதி அஸ்மச் சாபாபி காதேந மஹீம்
பித்த்வா பிரவேஷ்யஸி விருத்தம் வேத ஸூத்ராணாம் யுக்தம் யதி பவேந் ந்ருப வயம் வ்ருத்த வசநா யதி ததா பதா மஹே-என்று
ரிஷிகள் எல்லாம் குபிதராய்-தேவ பாஷாபாதியாய் வார்த்தை சொன்ன நீ த்யவ்வில் நின்றும் அதர்பதியாய்-இப்போது தொடங்கி யுன்னுடைய ஆகாச கமனமும் மாறி
பாதாளத்தில் விழக் கடவை-நாங்கள் தான் வ்ருத்த வசனம் சொன்னோமாகில் அப்படியே பாதாளத்தில் விழக் கடவோம் என்று சொல்லி சபிக்க
ததஸ் தஸ்மிந் முஹூர்தேது ராஜோ பரிசரச் ததோ அதோவை சம்ப பூவாசு பூ மேர் விகரகோ ந்ருப -என்கிறபடியே –
அப்போதே பாதாளத்தில் விழுந்தான் என்கிற உபரி சரவஸூ வ்ருத்தாந்தத்தில் ரிஷிகளும் தர்ம சந்தேகங்கள் கேட்க்கும் படி வித்யாதிகளில்
அவர்களிலும் உத்க்ருஷ்டனாவான் அவர்கள் திறத்தில் அபசாரத்தால் அதிபதித்தமை காண்கையாலே
ஜென்ம விருத்தாதிகளால் உத்க்ருஷ்டரானவர்கள் அபக்ருஷ்டர் பண்ணும் அபசாரமே இழவுக்கு உடலாவது –
அவற்றால் உத்க்ருஷ்டரானவர்கள் அபக்ருஷ்டர் திறத்தில் பண்ணும் அபசாரம் இழவுக்கு உடலாகாது என்கிற நியமம் இல்லை என்னுமது காணலாம் என்கை –
ஜென்ம ஆதிக்யம் ரிஷிகளுக்கு உண்டானாலும் ஞான ஆதிக்யம் இவனுக்கு உண்டாகையாலே அவர்களில் இவனுக்கு ஏற்றம் சொல்லக் குறை இல்லை
ஜென்மமும் ஞானாதிகளும் ஒரு தலையானால் ஞானாதிகள் பிரபலங்களாய் இ றே இருப்பது

கைசிக விருத்தாந்தம் ஸ்ரீ வராஹ புராணத்தில் ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு ஸ்ரீ வராஹ நாயனார் அருளிச் செய்தது ஆகையாலும்
உபரி சரவச ஸூ விருத்தாந்தம் பஞ்சம வேதமான மஹா பாரதத்திலே மோக்ஷ தர்மத்தில் தர்மபுத்ரர்க்கு ஸ்ரீ பீஷ்மரால் சொல்லப்பட்டது ஆகையாலும்
இவை தான் ஆப்த பிராமண சித்தம் இ றே

———————————————-

சூரணை -207-

பிராமணியம் விலை செல்லுகிறது-
வேதாத்யய நாதி முகத்தாலே-
பகவல் லாப ஹேது என்று –
அது தானே இழவுக்கு உறுப்பாகில் –
த்யாஜ்யமாம் இறே —

இப்படி ஜன்மாதிகளா வரும் உத்கர்ஷத்தில் பசை இல்லை என்று
சொல்லாமோ –சாஸ்திரங்கள் எல்லாம் பிராமணியத்தை அத்யாதரம்
பண்ணி சொல்லா நிற்க செய்தே என்ன -அருளி செய்கிறார் -மேல் –

விலை செல்லுகையாவது -விருப்பத்துக்கு விஷயமாக செல்லுகை –
வேதாத்யய நாதி முகத்தாலே பகவல் லாப ஹேது ஆகையாவது –
சர்வ வேதா யத்பத மாம நந்தி -என்றும் –
வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்யே -என்றும் சொல்லுகிறபடியே –
ஆராதன ஸ்வரூபத்தையும் -ஆராத்ய ஸ்வரூபத்தையும் -பூர்வோத்தர பாகங்களாலே
பிரதிபாதியா நின்று கொண்டு -பகவத் ஏக பரமாய் இருக்கிற வேதத்தை – ஸ்வத்யாயோ அத்யேதவ்ய-என்கிற
விதி பரதந்த்ரனாய் -அத்யயனம் பண்ணி -மீமாம்சாதிகளாலே ததர்த்த நிர்ணயம் செய்து –
பகவத் உபாசனாதிகளில் இழிந்து பகவத் விஷயத்தை பெருகைக்கு உறுப்பாகை-
அது தானே இழவுக்கு உறுப்பாகில்-என்றது -அந்த ப்ராஹ்மண்யம் தானே
அஹங்கார ஹேதுவாய் கொண்டு -மத பக்தான் ச்ரோத்ரியோ  நிந்தன் சத்யஸ் சண்டாளதாம் வ்ரஜேத் -என்கிறபடியே –
பகவத் அத்யந்த நிக்ரஹ ஹேதுவான பாகவத அபசாரத்தை பண்ணி –
பகவத் விஷயத்துக்கு அசலாய் போகைக்கு உறுப்பாகில் என்றபடி –
த்யாஜ்யமாம் இறே -என்று பிரசித்தி தோற்ற அருளி செய்தது –
யாதொன்று பகவல் லாபத்துக்கு உறுப்பு அது உபாதேயம் –
யாதொன்று தத் அலாபதுக்கு உறுப்பு அது த்யாஜ்யம் ஆய்த்த பின்பு
இதுவும் இழவுக்கு உறுப்பான போதே அப்படியாக குறை இல்லை என்கிற நிச்சயத்தாலே –

——————————————-

சூரணை -208-

ஜன்ம விருத்தங்களினுடைய
உத்கர்ஷமும் அபகர்ஷமும்
பேற்றுக்கும் இழவுக்கும்
அபிரயோஜகம் –

இப்படி உத்க்ருஷ்ட ஜன்மாதிகள் இழவுக்கு உறுப்பமாகில்
அபக்ருஷ்ட ஜன்மாதிகள் பேற்றுக்கு உடலாமோ என்ன –
அருளி செய்கிறார் –

அதாவது –
ஜன்ம விருத்தங்களினுடைய உத்கர்ஷமும் பேற்றுக்கும் இழவுக்கும் பிரயோஜகம் அன்று –
அவற்றினுடைய அபகர்ஷமும் இவை இரண்டுக்கும் பிரயோஜகம் அன்று -என்கை –
அன்றிக்கே –
இதில் ஜன்ம விருத்தாதி நியமம் இல்லை -எனபது -இழவுக்கு உறுப்பமாகில் த்யாஜ்யம் இறே –
என்பதாகா நின்றீர் -இங்கனே சொல்லலாமோ –
வேதத்யாய நாதி முகத்தாலே பகவல் லாப ஹேதுவாகையாலே-ஜன்ம விருத்தங்களினுடைய உத்கர்ஷம் பேற்றுக்கு உடலாகவும் –
அவற்றினுடைய அபகர்ஷம் அத்யய நாதிகளுக்கு அனர்ஹம் ஆகையாலே இழவுக்கு உடலாகவும்
கொள்ள  வேண்டாவோ என்ன -அருளி செய்கிறார் -ஜன்ம விருத்தங்களினுடைய -என்று -தொடங்கி-
அதாவது
ஜன்ம விருத்தங்களினுடைய உத்கர்ஷம் பேற்றுக்கு பிரயோஜகம் அன்று –
அவற்றினுடைய அபகர்ஷம் இழவுக்கு பிரயோஜகம் அன்று என்கை –
பேறு இழவுகள் ஆவன -பகவல் லாப -தத் அலாபங்கள் – பிரயோஜகம் ஆவது -பலிக்குமது
உத்க்ருஷ்ட ஜன்ம விருத்தங்கள் உடையவர்களில் சிலர் இழப்பாரும் – சிலர் பெறுவாருமாக காண்கையாலும் –
அபக்ருஷ்ட ஜன்ம விருத்தங்கள் உடையவர்களிலும் அப்படியே
இரண்டு வகையும் உண்டாக காண்கையாலும் இவை இரண்டும் இரண்டுக்கும் பிரயோஜகம் அன்று என்னும் இடம் பிரத்யஷ சித்தம் இறே

——————————————

சூரணை-209–
பிரயோஜகம் பகவத் சம்பந்தமும்-
தத் அசம்பந்தமும் –

ஆனால் பேறு இழவுகளுக்கு பிரயோஜகம் ஆவது
என்ன -என்ன அருளி செய்கிறார் –

அதாவது –
பகவல் லாபமாகிற பேற்றுக்கு பிரயோஜகம் -நாம் பகவத் அனந்யார்க்க
சேஷ பூதர் என்று இருக்கை யாகிற பகவத் சம்பந்தம் –
தத்  அலாபமாகிற இழவுக்கு பிரயோஜகம் -தத் அனந்யார்க்க சேஷத்வ
ஞான  அபாவம் ஆகிற தத் சம்பந்த அபாவம்  என்றபடி –

————————————-

சூரணை -210-

பகவத் சம்பந்தம்
உண்டானால்
இரண்டும் ஒக்குமோ என்னில் –

உத்க்ருஷ்ட அபக்ருஷ்ட ஜன்மாக்களில் இருவருக்கும் பகவத் சம்பந்தம்
உண்டானால் பாகவதத்வ சாம்யம் அன்றோ உள்ளது -அத்தோடு ஜன்ம உத்கர்ஷம் உடையவன்
மற்றை அவனைப் பற்ற விசிஷ்டன் அன்றோ என்று நினைத்து பண்ணுகிற
பிரசனத்தை அனுவதிக்கிறார் –

பகவத் சம்பந்தம் உண்டானால் இரண்டும் ஒக்குமோ என்னில் -என்று -இரண்டும் -என்று
உத்க்ருஷ்ட அபக்ருஷ்ட ஜன்மங்களை சொல்லுகிறது –

——————————————–

சூரணை -211-

ஒவ்வாது –

ப்ருஷ்டாவானவன் -உத்க்ருஷ்டமாக நினைத்ததை அபக்ருஷ்டமாகவும் –
அபக்ருஷ்டமாக நினைத்தத்தை உத்க்ருஷ்டமாகவும் திரு உள்ளம் பற்றி
அதற்க்கு உத்தரம் அருளி செய்கிறார் -ஒவ்வாது -என்று –

————————————-

சூரணை -212-

உத்க்ருஷ்டமாக பிரமித்த ஜன்மம்-
பிரசம்ச  சம்பாவனையாலே-
சரீரே ச -என்கிற படியே பய ஜனகம் –

ஆபிஜாதி யாதிகளாலே -அகங்கரித்து நசிக்கைக்கு உறுப்பு ஆகையாலே -அபக்ருஷ்டமாக இருக்கிற இத்தை –
உத்க்ருஷ்டமாக நினைத்து -பிரச்னம் பண்ணிற்று -அதச்மின் தத் புத்தியாலே -என்னும் இடம் தோற்ற –
உத்க்ருஷ்டமாக பிரமித்த ஜன்மம் -என்கிறார் –

பிரசம்ச  சம்பாவனையாவது –உபாயாந்தரங்களில் அன்வயத்தாலே அநந்ய உபாயத்வம்
வதிகாரத்தின் நின்றும் நழுவதல் வருகைக்கு யோக்யமாய் இருக்கை –
சரீரே ச -என்கிற படியே பய ஜனகம் –என்றது -காலேஷ் வபிச சர்வேஷு -என்று தொடங்கி –
உபாயாந்தர அனுஷ்டானந்தத்துக்கு யோக்யங்கள் ஆகையாலே -பய ஹேதுக்கள்  ஆன வற்றை சொல்லி வருகிற
அடைவிலே -அவை எல்லா வற்றிலும் பிரதானமாக -சரீரேச வர்த்ததே மே மகத்பயம் -என்று சொல்லுகிற படியே
ஸ்வரூப யாதாத்ம்ய வித்துகளாய்-உபாயாந்தர கந்த அசஹயராய் இருக்கும் அதிகாரிகளுக்கு இது இருக்க –
என் செய்ய தேடுகிறதோ -என்னும் பயத்தை விளைக்குமதாய் இருக்கும் என்ற படி–

——————————————–

சூரணை-213-

அதுக்கு ஸ்வரூப ப்ராப்தமான நைசயம் பாவிக்க வேணும் –

இன்னமும் இதுக்கு ஒரு தோஷம் அருளி செய்கிறார் –

அதுக்கு -என்று கீழ் சொன்ன ஜென்மத்தை பராமர்சிக்கிறது – ஸ்வரூப ப்ராப்தமான நைசயம் பாவிக்க வேணும் –என்றது-
பாகவத அனுவர்த்த நாதிகளில் வந்தால் சேஷத்வமாகிற ஸ்வரூபத்துக்கு தகுதியான தாழ்ச்சி –
பிறர் செய்கிறது கண்டு அனுகரித்து கற்க வேணும் என்ற படி –

—————————————-

சூரணை -214-

அபக்ருஷ்டமாக பிரமித்த
உத்க்ருஷ்ட ஜென்மத்துக்கு
இரண்டு தோஷமும் இல்லை-

ஏதத் பிரதிகோடியான ஜென்மத்தின் உடைய தோஷ பாவத்தை அருளிச் செய்கிறார்-

ஆபிஜாத்யாதிகளால் -வரும் அகங்கார யோக்யதை இன்றிக்கே -சேஷத்வ அனுகூலமாய் இருக்கையாலே –
உத்க்ருஷ்டமாய் இருக்கிற இத்தை அபக்ருஷ்டமாக நினைத்ததும் அதச்மிம்ச்தத் புத்தி என்னும் இடம் தோற்ற –
அபக்ருஷ்டமாக பிரமித்த உத்க்ருஷ்ட ஜென்மம்-என்கிறார்-
இரண்டு தோஷமும் இல்லை -என்றது பிரமச சம்பாவனையாலே வரும் பய ஜனகத்வமும் –
ஸ்வரூப பிராப்தமான நைசயம் பாவிக்க வேண்டுகையும் ஆகிற தோஷ த்வயமும் இல்லை என்ற படி-
——————————————

சூரணை -215-

நைசயம் ஜன்ம சித்தம்-

பிரசம்ச சம்பாவனை அன்றோ இல்லாதது -நைச்ய பாவனை இல்லையோ என்ன -அருளி செய்கிறார் –

அதாவது பாகவத அனுவர்தனாதிகளுக்கு உறுப்பான தாழ்ச்சி பிறந்து உடைமையாய் இருக்கையாலே –
பாவிக்க வேண்டாதே பள்ள மடையாய் இருக்கும் என்ற படி-

——————————————–

சூரணை -216–

ஆகையால் உத்க்ருஷ்ட ஜன்மமே ஸ்ரேஷ்டம்-

இவ்வர்த்தத்தை நிகமிக்கிறார்-

ஆகையால் -என்றது இப்படி அது சதோஷாமும் இது நிர் தோஷமும் ஆகையால் என்ற படி –
உத்க்ருஷ்ட ஜன்மமே ஸ்ரேஷ்டம் -என்றது –
சேஷத்வ உசிதமாய் கொண்டு உத்க்ருஷ்டமாய் இருக்கிற இந்த  ஜன்மமே ததுநிசித
ஜென்மத்தை பற்ற ஸ்ரேஷ்டம் என்ற படி

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம்—சூர்ணிகை-183/184/185/186/187/188/189/190/191/192/193/194/195/196/197–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

April 9, 2012

சூரணை -183–

பிரதிகூல விஷய ஸ்பர்சம் விஷ ஸ்பர்சம் போலே
அனுகூல விஷய ஸ்பர்சம் விஷ மிஸ்ர போஜனம் போலே

ஆக அகங்காரத்தின் கொடுமையை அருளிச் செய்தார் கீழ்–விஷயங்களின் கொடுமையை அருளிச் செய்கிறார் மேல்-

லோக விருத்தமுமாய் நரக ஹேதுவுமுமாய் இருந்து உள்ள நிஹித்த விஷயம் பிரதி கூல விஷயம்-
தத் ஸ்பர்சம் விஷ ஸ்பர்சம் என்றது -பிராணனையும் சொரூபத்தையும் முடிக்கும்-
அனுகூல விஷய ஸ்பர்சம் அநந்ய போகத் ரூபமான சொரூபத்தை அழிக்கும்–
விஷம் உண்டால் தான் முடிக்கும்– இதுவோ நினைத்தாலே முடிக்கும் -விஷயம் அதி கிரூரம்

———————————————–

சூரணை -184—

அக்னி ஜ்வாலையை விழுங்கி விடாய் கெட நினைக்குமா போலேயும்-
ஆடுகிற பாம்பின் நிழலிலே ஒதுங்க நினைக்குமா போலேயும்-
விஷய பரவண னாய் சுகிக்க நினைக்கை —

இப்படி விநாசகரமான விஷயங்களில் பிரவணனாய் ஸூகிக்க நினைக்குமது -விபரீத ஞான கார்யம் என்னுமத்தை
பிராமண பிரசித்த த்ருஷ்டாந்த முகேன அருளிச் செய்கிறார் –

அதாவது -ஆச்வாத்ய தஹந ஜ்வாலா முதன்யா சமனம் யதா ததா விஷய ஸம்ஸர்காத் ஸூ க சிந்தா சரீரிண–என்றும் –
விஷயாணாந்து ஸம்ஸர்காத் யோ பிபர்த்தி ஸூ கம் நர ந்ருத்யத பணி நச்சாயாம் விஸ்ரம் ஆஸ்ரயதே ச -என்றும்
சொல்லுகிறபடியே தண்ணீருக்கு விடாய்ப்பட்டவன் விபரீத ஞானத்தால் தாப ஹேதுவான அக்னி ஜ்வாலையை விழுங்கித் தன் விடாய் தீர நிலைக்குமா போலேயும்
ஆதித்ய கிரணங்களாலே அதி மாத்ர தப்தனானவன் அந்த தாபத்தை ஆற்றுகைக்காக நிழல் என்கிற மாத்ரத்தைக் கொண்டு ஆகாம்ய அநர்த்தத்தை நிரூபியாதே
அத்யந்த குபிதமாய் படத்தை விரித்து நின்று ஆடுகிற பாம்பின் நிழலிலே ஒதுங்க நிலைக்குமா போலேயும் இருப்பது ஓன்று –
பாதக விஷயங்களை சுகாவஹமாக பிரமித்து அவற்றில் பிரவணனாய்  அவற்றை அனுபவித்து ஸூ கிக்க நினைக்குமது என்றபடி –

—————————————–

சூரணை -185–
அசுணமா முடியுமா போலே பகவத் அனுபவைக பரனாய்-
ம்ருது பிரக்ருதயாய் இருக்கும் அவன் விஷய தர்சனத்தாலே முடியும் படி.–

விஷய ஸ்பர்சம் ஸ்வரூப நாஸகம் -விஷய ப்ரவணனாய் ஸூகிக்க நினைக்குமது விபரீத ஞான கார்யம் என்று இ றே கீழ்ச் சொல்லி நின்றது –
இவ் விஷய ஸ்பர்சம் வேண்டா -பகவத் குணங்களில் நைந்து இருக்குமவன் இவற்றை காணவே முடியும்-என்கிறார் -மேல்

அசுணமா என்கிற பஷி அதி மதுரமான கான ஸ்ரவணத்தாலே
நெஞ்சு நீர் பண்டம் ஆகி இளகின தசையிலே அதி கடினமான பறையை அடிக்கக் கேட்டு
பட்டு கிடக்கும் போல் ஆய்த்து
பகவத் அனுபவம் ஒன்றிலுமே தத் பரனாய்-தத் குண  ரசத்திலே நைந்து ,
இதர விஷய பேர் கேட்கிலும் மாய்ந்து போம் படி ம்ருது பிரக்ருதயாய் இருக்கும் அவன்
பகவத் ஏக போகத்வ ரூப  சொரூப நாசகங்களான விஷயங்களை கண்ட மாத்ரத்திலே ஏங்கி முடியும் படி என்கை

———————————————-

சூரணை -186–

காட்டி படுப்பாயோ என்ன கடவதிரே—

ஆப்த வசனத்தாலே இந்த அர்த்தம் இசைவிகிறார்-

அல்ப ரசங்களாய் அநேக விதங்களாய் இருக்கிற துர் விஷயங்கள் காட்டி
அவற்றுக்கு பொருந்தாத படியாய் அவற்றுக்கு பாங்கான நிலத்திலே இருக்கைக்கு ஈடான
பாபத்தை பண்ணின என்னை முடிக்க பார்கிறோயோ  -என்கிறார் ஆழ்வார்

——————————————-

சூரணை-187–

அஜ்ஞானான விஷய பிரவணன்
கேவல நாஸ்திகனை போலே –
ஞானவானான விஷய பிரவணன்
ஆஸ்திக நாஸ்திகனை போலே –

ஏவம் பூத விஷய தோஷத்தை அறியாமையாலே இதிலே பிரவணனனான அவனுக்கும் –
இத்தை அறிந்து வைத்தே பிரவணனான அவனுக்கும் வாசியை அருளி செய்கிறார் மேல் –

அஞ்ஞான விஷய பிரவணன் ஆகிறான் -விஷயங்களினுடைய தோஷ பூயஸ்தையும்-
ஸ்வரூப விருத்தத்தையும் அறியாதே -அவற்றை ஆசைப் பட்டு மேல் விழுகிறவன் –
கேவல நாஸ்திகன் ஆகிறான் -தர்ம அதர்ம பரலோக சேதன ஈச்வராதிகளுக்கு
பிரதிபாதகமான சாஸ்த்ரத்தில் பிரமாணிய புத்தி ஒன்றும் இன்றிக்கே –
ச்வரை சஞ்சார பரனாய் திரிகிற சுத்த நாஸ்திகன் –
ஞானவானான விஷய பிரவணன் ஆகிறான்-விஷயங்களினுடைய தோஷ
துஷ்டத்தையும் -ஸ்வரூப விருத்தத்தையும் அறிந்து வைத்தே -அவற்றை
விரும்பி மேல் விழுகிறவன் –
ஆஸ்திக நாஸ்திகன் ஆகிறான் -தர்ம அதர்மாதி சகல பிரதிபாதகமான சாஸ்த்ரத்தை
பிரமாணம் என்று இசைகையாலே -ஆஸ்திகன் என்று -சொல்லலாம் படி இருப்பானாய்-
அந்த சாஸ்திர மரியாதையில் அடங்காதே தோற்றிற்று செய்து திரிகையாலே -நாஸ்திக
சமனாய் இருக்கும் அவன் –

————————————————————-

சூரணை -188-

கேவல நாஸ்திகனைத் திருத்தலாம்
ஆஸ்திக நாஸ்திகனை
ஒரு நாளும் திருந்த ஒண்ணாது –

த்ருஷ்டாந்தர பூதரான இவர்கள் இருவருக்கும் விசேஷம் எது என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது –
சாஸ்த்ரத்தை இல்லை  என்று தோற்றிற்று செய்து திரிகிறவனை-
சாஸ்திர ஆஸ்திக்யம் பிறக்கைக்கு உறுப்பான உபதேசங்களைப் பண்ணி –
விதிநிஷேத வச்யனாம் படி திருத்தலாம் –
சாஸ்திர ஆஸ்திக்யம் உடையனாய் -தத் பிரதிபாத்ய பிரமேயங்களையும்
அறிந்து வைத்து -பாப பயம் இன்றியே -நாஸ்திகவத் ச்வைரம் சஞ்சரிக்கிறவனை
சொல்லி  அறிவிக்க தக்கது ஒன்றும் இல்லாமையாலே -உபதேச முகத்தால் ஒரு நாளும்
திருத்த ஒண்ணாது என்கை –
இத்தால் அஞ்ஞான விஷய பிரவணனை -விஷய தோஷத்வ உபதேச முகத்தாலே
விரக்தனாம் படி திருத்தலாம் -ஞானவானான விஷய பிரவணனை -விஷய தோஷாதிகளை
வ்யக்தமாக அறிந்து வைத்தே ப்ரவர்த்திக்கிறவன் ஆகையாலே -தத் உபதேசத்தால்
ஒருநாளும் திருத்த அரிது என்றது ஆய்த்து-
அஜ்ஞ்ஞஸ் சூகமாராத்யஸ் சூகதர மாராத்யதே விசேஷஞ்ச –
ஜ்ஞான லவதுர் விதத்தம் பிரஹ்மாபி நரம்  நரஞ்சபதி -என்னக் கடவது இறே-
ஆகையால் அவனிலும் இவன் நிக்ருஷ்ட தமன் என்று கருத்து –

————————————

சூரணை -189-

இவை இரண்டும் ஸ்வரூபேண முடிக்கும் அளவு அன்றிக்கே
பாகவத விரோதத்தையும் விளைத்து முடிக்கும் –

தன்னைத் தானே -சூரணை -180 – என்ற வாக்யத்தின் ஸ்வரூப நாசகங்களாகச் சொன்ன
அஹங்காரத்தின் உடையவும் -விஷயங்களின் உடையவும் க்ரௌர்யத்தை தனித் தனியே
அருளிச் செய்தார் கீழ் -உபயத்துக்கும் உள்ளதொரு க்ரௌர்ய விசேஷத்தை தந்த்ரேனே( சேரப் பிடித்து ஒரே வாக்கியமாக ) அருளிச் செய்கிறார் மேல் –

அதாவது –
உக்த தோஷ யுக்தமான இவ் அஹங்காரமும் விஷய பிரவணமும் ஆகிய இரண்டும்
தானான ஆகாரத்திலே நின்று நசிப்பிக்கும் அளவு அன்றிக்கே –
பாகவத அபசாரம் ஆகிற மகா அனர்த்தத்தையும் விளைத்து -ஸ்வரூப நாசத்தை பண்ணும் என்கை-
ஸ்வரூபேண என்றது -ஸ்வேன ரூபேண என்றபடி –
அஹன்காராதிகளிலே ப்ரவணனால் உள்ள அளவு அன்று இறே
பாகவத அபசாரம் பண்ணினால் உள்ள பகவத் நிக்ரஹம்

—————————————

சூரணை-190-

நாம ரூபங்களை உடையராய்
பாகவத விரோதம் பண்ணிப் போருமவர்கள்
தக்த படம் போலே –

ஆனால் பாகவத விரோதம் விளைந்த போதே ஸ்வரூப நாசம் பிறக்கும் ஆகில்
பாகவத விரோதத்தை பண்ணிப் போரா நிற்க செய்தே -ஸ்வரூப அநு ரூபமான
நாம ரூபங்களை உடையராய் கொண்டு இருக்கிற படி எங்கனே என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது வைஷ்ணத்வ சிஹ்னமான தாஸ்ய நாமத்தையும் -தத் அநு குணமான ரூபத்தையும்
உடையராய்க் கொண்டு -உள்ளொரு பசை இன்றிக்கே -அஹங்காராதி வச்யராய் பாகவதர்கள் திறத்தில்
விரோதியைப் பண்ணிப் போருமவர்கள் -உருக்குலைய வெந்து இருக்கச் செய்தே உருவுடைத்து
போலே தோற்று இருக்கும் தக்த படத்தோடு சத்ருசர் என்கை

————————————-

சூரணை -191–

மடி புடவை வெந்தால் உண்டையும் பாவும் ஒத்து கிடக்கும் .காற்று அடித்தவாறே பறந்து போம் –

தக்த படத்தின் படி தன்னை தர்சிப்பிகிறார் மேல் -மடி என்று தொடங்கி-

அதாவது தட்டி மடித்து இருக்கிற புடைவை யானது தட்டுருவ மெங்கும் வெந்து இருக்க செய்தே-
உண்டையும் பாவும் முன்பு போலே ஒத்திருக்கும் ..ஒரு காற்று வந்து சிதறிடித்த வாறே-
உருக் காண ஒண்ணாத படி பாறி பறந்து  போம் என்கை ..
அப்படியே அபசார அக்நி தக்தராய்-வைத்து நாம ரூபங்களோடு இருகிறவர்களும்-திருமண் தாசர் அடையாளம் இருந்தாலும் –
பகவத் நிக்ரக விசேஷத்தாலே பாற அடி உண்டு   ,  உருமாய்ந்து போவார்கள் என்று கருத்து

————————————–

சூரணை -192-

ஈஸ்வரன் பண்ணின ஆனை தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளி செய்வார்-

பாகவத அபசாரம் பண்ணினால் ஈஸ்வரன் அசஹமானாய் உசித தண்டம் பண்ணும் என்னும் அத்தை ஆப்த வசனத்தாலே
அருளிச் செய்கிறார் —

அதாவது சங்கல்ப மாத்ரத்திலே சர்வத்தையும் நிர்வஹிக்க வல்ல ,சர்வ சக்தியான சர்வேஸ்வரன் தன்னை-
அழிய மாறி  இதர ,சஜாதீயனாய் ,அவதரித்ததும் ,கை தொடானாய் நின்று செய்த ஹிரண்ய ராவணாதி நிரசன ரூபம் இத்யாதி
அதி மானுஷ சேஷ்டிதங்கள் எல்லாம் பிரகலாதன் மகரிஷிகள் தொடக்கமான அவ்வோ பாகவத விஷயங்களில் அவ்வவர் பண்ணின
அபசாரம் சகியாமையாலே என்று ஆப்த தமரான நஞ்சீயர் அருளிச் செய்வர் என்கை –

—————————————

சூரணை -193–

அவமாநக்ரியா–

இந்த பாகவத அபசாரத்தின் உடைய க்ரவ்யத்தில் பகவத் யுக்தியை தர்சிப்பிகிறார் இத்தால்-

யா பிரீதிர் மயி சம்விருத்தா மத பக்தேஷு சதாச்துதே அவமான க்ரியா
தேஷாம் ,சம்ஹரித் அகிலம் ஜகத் -மகா பாரதம்-என்று அருளினான் இறே

——————————————-

சூரணை -194-

பாகவத அபசாரம் தான் அநேக விதம் –

இப்படிப் பட்ட பாகவத அபசாரத்தின் வைவித்யத்தை அருளிச் செய்கிறார் இத்தால்-

அநேக விதம் என்றது –ஜன்ம நிரூபணம் ,ஞான நிரூபணம் ,விருத்த நிரூபணம்-
ஆகார நிரூபணம்- ,பந்து நிரூபணம்- வாச நிரூபணம் இத்யாதிகளால்- பல படிப் பட்டு இருக்கும்

———————————————————

சூரணை -195-

அவற்றில் ஓன்று தான் அவர்கள் பக்கல் ஜன்ம நிரூபணம் –

அவற்றில் வைத்து கொண்டு,ஜன்ம நிரூபணத்தின் உடைய க்ரைர்யத்தை அருளிச் செய்வதாக
அத்தை உபாதானம் பண்ணுகிறார் இதில் –

ஜன்ம நிரூபணம் ஆவது நிக்ருஷ்ட குலங்களிலே யவதீர்ணரான பாகவதர்களை
பகவதீயத்வ பிரயுக்தமான மகாத்ம்யத்தைப் பாராதே நிகர்ஷ புத்யா தத்தம் ஜன்மங்களை நிரூபிக்கை

———————————————–

சூரணை –196–

இது தான் அர்ச்சா அவதாரத்திலும்  உபாதான ஸ்ம்ருதியிலும் காட்டில் க்ரூரம்-

இதன் உடைய க்ரைர்யம் அருளி செய்கிறார் இத்தால்-

பாகவத ஜன்ம நிரூபணத்தை பராமர்சிகிறது –ஆஸ்ரிதர் உகந்த ஏதேனும் ஒரு த்ரவ்யத்தை
தனக்கு திருமேனியாகக் கொண்டு ,அதிலே அப்ராக்ருத திவ்ய விக்கிரகத்தில் பண்ணும் விருப்பத்தைப்
பண்ணி எழுந்து அருளி இருக்கும் வைபவத்தை அறியாதே ,நிகர்ஷ புத்தி பண்ணி ,விக்ரக உபாதான த்ரவ்யம் இன்னது
அன்றோ என்று சிந்திக்கை–அதிலும் காட்டிலும் க்ரூரம் ஆகையாவது -அத்தை பற்றவும் சர்வேச்வரனுக்கு அத்யந்த  நிக்ரஹ ஹேது ஆகை

—————————————

சூரணை -197–

அத்தை மாத்ரு யோனி பர்ஷை யோடு ஒக்கும் என்று சாஸ்திரம் சொல்லும் —

அது தன்னுடைய க்ரூரம் தான் எவ்வளவு என்கிறார்-

அர்ச்சாவதார உபாதான வைஷ்ணவ உத்பத்தி சிந்தனம் மாத்ரு யோனி பர்ஷா யஸ் துல்யம் ஆஹூர் மனீஷின-என்ன நின்றார் இறே –
இப்படி உபயத்தையும் மாத்ரு யோனி பரிஷா சமமாக சாஸ்திரம் சொல்லிற்றே ஆகிலும் அது அர்ச்சா அவதாரத்தில் உபாதான ஸ்ம் ருத்திக்கு நிதர்சனமாம் இத்தனை
வைஷ்ணவ உத்பத்தி அதிலும் குரூரம் என்று இவர் கருத்து
அந்நிய ஸ்திரீ யோனி வைசலஷண்யா வசிச லக்ஷண்ய நிரூபண வாசனையாலே ,இத்தையும் அப்படி நிரூபிக்கை
இப்படி நிரூபித்தால்,அதுக்கு எத்தனை பாபம் உண்டு ..அர்ச்சா அவதார உபாதான சிந்தையிலும் அத்தனை பாபம் உண்டு என்ற படி..

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம்–சூர்ணிகை -169/170/171/172/173/174/175/176/177/178/179/180/181/182–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

April 9, 2012

சூரணை -169–

பரம ஆர்த்தனான இவனுடைய
சரீர ஸ்திதிக்கு  ஹேது
கேவல பகவத் இச்சை இறே –

இன்னம் முகாந்தரத்தாலே இவன் தேஹத்தில்- அவன் விருப்பத்தை-தர்சிப்பிக்கிறார் –

பரம ஆர்த்தன் ஆகிறான் –
இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை -திருவிருத்தம் -1
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் -திருவாய்மொழி -3-2-2 –
எங்கு இனி தலை பெய்வன் -திருவாய்மொழி -3-2-9 – – –
நாளேல் அறியேன் -திருவாய்மொழி -9 -8 -4 –
தரியேன் இனி -திருவாய்மொழி – 5- 8- 7-
கூவிக் கொள்ளும்  காலம் இன்னம் குறுகாதோ -திருவாய்மொழி -6 -9 -9 – என்று
சம்சாரத்தில் அடிக் கொதிப்பாலும் –
பகவத் அனுபவத்தில் பெரு விடாயாலும் –
இதுக்கும் மேல் இல்லை என்னும்படி ஆர்த்தி விளைந்தவன் -ஏவம் பூதனானவனுடைய சரீர ஸ்திக்குக்கு ஹேது- பிராரப்த  கர்மம் என்ன ஒண்ணாது இறே –
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்றதோடு விரோதிக்கையாலே –
ஆர்த்தா  நா மாசுபலதா சக்ருதேவ  கருதா ஹ்யசவ் த்ருப்தா நாமபி ஜந்தூனாம் தேஹாந்தர  நிவாரிணீ-என்று இறே பிரபத்தி ஸ்வாபம் தான் இருப்பது –
ஆகையால் இவனுடைய  சரீர ஸ்திதுக்கு ஹேது -இன்னமும் சில நாள் இவனை  இச் சரீரத்தோடே வைத்து அனுபவிக்க வேணும் -என்கிற
ஈஸ்வர இச்சை ஒழிய வேறு ஓன்று இல்லாமையாலே -கேவல பகவத் இச்சை இறே -என்கிறார்-
பிராரப்த கர்மம் அடியாக இருக்கிற த்ருப்த விஷயத்திலும் -பகவத் இச்சை உண்டாகையாலே அத்தை வ்யாவர்த்திக்கிறார் கேவல சப்தத்தாலே

———————————————————————

சூரணை -170-

திருமால் இரும் சோலை மலையே -திரு வாய் மொழி – 10- 7- 8-
என்கிறபடியே உகந்து அருளின நிலங்கள்
எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை
இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும் –
இப்படி தன்  விஷயத்துக்கு விருப்பமான இவன் சரீரத்தை அவன்
விரும்பும் பிரகாரம் அருளி செய்கிறார் மேல் –
அதாவது –
தெற்கு திரு மலையும் திரு பாற் கடலையும் என் உத்தம அங்கத்தையும் ஒக்க
விரும்பா நின்றான் –
ஸ்ரீ வைகுண்டத்தையும் வடக்கு திரு மலையையும் என் சரீரத்தையும் ஒக்க
விரும்பா நின்றான் -என்றாரிறே ஆழ்வார் –
இப்படி ஓரோர் அவயவங்களிலே இரண்டு இரண்டு திருப்பதியில் பண்ணும் விருப்பத்தை
பண்ணினான்  என்ற இது -எல்லா திருப்பதிகளிலும் பண்ணின விருப்பத்தை ஓரோர் அவயவங்களிலே
பண்ணா நின்றான் என்னும் அதுக்கு உப லஷணம் –
ஆகையால்-அப் பாட்டில் சொல்லுகிறபடியே தனக்கு அபிமதமான திவ்ய தேசங்கள்
எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை -ஜ்ஞாநியான இவனுடைய சரீர ஏக தேசத்திலே
பண்ணும் என்கிறார் –

——————————————–

சூரணை -171-

அங்குத்தை வாசம் சாதனம் –
இங்குத்தை வாசம் சாத்யம் –

உகந்து அருளின தேசங்கள் எல்லா வற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவ் விஷயம்
ஒன்றிலுமே பண்ணும் என்றார் கீழ் -இவ் விஷயம் சித்தித்தால் உகந்து அருளின நிலங்களில்
ஆதாரம் அவனுக்கு சங்குசிதமாம் என்னும் இடம் அருளி செய்கைக்காக -இரண்டு இடத்துக்கும்
உண்டான வாசியை அருளி செய்கிறார்-

உகந்து அருளின நிலங்களில் விரும்பி வர்திக்கிறது -உசித உபாயங்களாலே சேதனரை
அகப்படுத்தி கொள்ளுகையாலே -அங்குத்தை வாசம் சாதனம் -என்கிறது –
இச் சேதனன் திருந்தி இவன்ஹ்ருதயத்தினுள்ளே தான் வசிக்க பெற்ற இது
அங்கு நின்று பண்ணின கிருஷி பலம் ஆகையாலே -இங்குத்தை வாசம் சாத்யம் -என்கிறது –
நாகத்தணை குடந்தை -நான்முகன் திரு வந்தாதி – -36 –
மலை மேல் தான் நின்று -திரு வாய் மொழி -10 -4 -4 –
பனிக் கடலில் பள்ளி கோளை -பெரிய ஆழ்வார் திரு மொழி -5 -4 -9 –
இத்யாதிகளிலே இவற்றினுடைய சாதன சாத்யத்வங்கள் தொடரா நின்றது இறே —

————————————————

சூரணை -172-

கல்லும் கனை கடலும் –பெரிய திருவந்தாதி – 68-என்கிறபடியே
இது சித்தித்தால் –
அவற்றில் ஆதாரம்
மட்டமாய் இருக்கும் –

இந்த சாதன சாத்யத்வ பிரயுக்தமான ஆதர தாரதம்யத்தை
அருளி செய்கிறார் –

அதாவது
தன் திரு உள்ளத்தில் புகுந்த பின்பு தனக்கு புறம்பு ஒன்றிலும் ஆதரம் இல்லை என்று தோற்றும்படி
அவன் இதிலே அத்ய ஆதரத்தை பண்ணி -நித்ய வாசம் பண்ணுகையாலே –
திரு மலையும் -தன் சந்நிதானத்தாலே கோஷிக்கிற திரு பாற் கடலும் – –
ஒருத்தருக்கும் எட்டாத பரம பதமான தேசமும்
புல்லிய வாய்த்தினவோ என்றார் இறே ஆழ்வார் –
இப்படியே சாத்தியமான இச் சேதன ஹ்ருதயம் சித்தித்தால் -இதுக்கு சாதன மாக முன்பு விரும்பி
போந்த திவ்ய தேசங்களில் ஆதரம் சங்குசிதமாய் இருக்கும் என்கை –
சாத்யம் கை புகுரும் அளவும் இறே சாதனத்தில் ஆதரம் மிக்கு இருப்பது –

——————————————–

சூரணை -173-

இளம் கோவில் கை விடேல் –இரண்டாம் திருவந்தாதி -54-என்று
இவன் பிரார்த்திக்க வேண்டும் படியாய் இருக்கும் –

ஆதரம் மட்டமாம் படிக்கு அவதியை தர்சிப்பிக்கிறார் –

அதாவது-
ஸ்ரீ பூதத்தார் தம்மை பெருகைக்கு உறுப்பாக முன்பு தான் விரும்பின
திவ்ய தேசங்களில் முன்புத்தை ஆதரம் இன்றிக்கே -தன் திரு உள்ளத்திலே
அத்ய ஆதரத்தை பண்ணி செல்லுகிற படியை கண்டு -அவ்வோ திவ்ய
தேசங்களில் கை விட புகுகிறானோ என்று அதி சங்கை பண்ணி –
என் ஹிருதயத்திலே புகுந்து இருக்கைக்கு பால ஆலயமான திரு பாற் கடலை
கை விடாது ஒழிய வேணும் என்றார் இறே –
ஆகையால்-
இப்படி இவன் பிரார்த்திக்க வேண்டும்படி ஆய்த்து அவனுக்கு அவற்றில் ஆதரம்
மட்டமாம் படி -என்கை-

———————————————–

சூரணை -174-

ப்ராப்ய ப்ரீதி விஷயத் வத்தாலும்
க்ருதஞ்சதையாலும்
பின்பு அவை
அபிமதங்களாய்  இருக்கும் —

இப்படி இவன் அர்த்திததாலும் -சாத்யம் சித்தித்த பின்பு அவனுக்கு அவை
அபிமதங்களாய்  இருக்குமோ என்ன -அருளி செய்கிறார் –

பிராப்ய ப்ரீதி விஷயத்வம் ஆவது -தனக்கு பிராப்ய பூதனான இச் சேதனனுடைய
உகப்புக்கு விஷயமாய் இருக்கை-
கண்டியூர் அரங்கம் மேயம் கச்சி பேர் மலை -திரு குறும் தாண்டகம் – 19-
என்று மண்டி இறே இவன் இருப்பது –
க்ருதஜ்ஜதையாவது -இவ்வோ தேச வாசத்தால் அன்றோ நாம் இவனை பெற்றது என்று
அத்தேசம் தமக்கு பண்ணின உபகாரத்தை அநு சந்திக்கை –
இவை இரண்டாலும் சாத்தியமான இச் சேதனன் கை புகுந்து இருக்க செய்தேயும்
அவனுக்கு அவ்வோ தேசங்கள் அபிமதங்களாய்  இருக்கும் -என்கை

————————————–

சூரணை -175–

ஆகையாலே தோஷ நிவ்ருத்தி போலே
ஆந்தர குணமும் விரோதியாய் இருக்கும் –

இப்படி தோஷ நிவ்ருத்தி பர அனுபவத்துக்கு விலக்கு என்னும் இடம் சுஸ் ஸ்பஷ்டமாம் படியான ஹேதுக்கள்–
பலவற்றையும் அருளிச் செய்கையாலே அத்தை சித்திப்பித்தராய்–,அது தன்னை திருஷ்டாந்தம் ஆக்கி
சிம்ஹா அவலோகன நியாயத்தாலே கீழ் சொன்ன சேஷத்வ பாரதந்த்ர்ய ரூப ஆத்ம குணத்தின் உடைய
பர அனுபவ விரோதித்வத்தை  ஸ்தீரிக்கிறார்—ஆகையாலே என்று தொடங்கி

ஆகையாலே என்று கீழே சித்திப்பித்த அர்த்தத்தை அனுவதிக்கிறார் –தோஷ நிவ்ருத்தி -போலே என்றது
தோஷம் கழிகை  ஸ்வரூப பவ்ஜ்வல்யத்துக்கு உறுப்பாய் இருக்க செய்தேயும் தோஷத்தையே போக்யமாய்
விரும்புகிற பிரணயியான   அவனுக்கு அபிமதம் ஆகையாலே யாதொரு படி பர அனுபவத்துக்கு விரோதி ஆகிறது-
அது போலே என்ற படி ..ஆந்தர குணம் -என்கிறது சேஷத்வ பாரதந்த்ர்யங்களை–இவற்றை ஆந்திர குணம் என்கிறது
ஞான ஆனந்தனகளிலும் காட்டில் ஆத்மாவுக்கு அந்தரங்கம் ஆகையாலே–
இதன் உடைய  பர அனுபவ விரோதி பிரகாரம்  கீழ் சொல்லப் பட்டது இறே–இவ் இடத்திலும் ஆந்தர குணம் என்றது பார தந்த்ர்யம் ஒன்றையுமாம்

——————————————–

சூரணை -176–

தோஷ நிவ்ருத்தி தானே தோஷமாம் இறே —

இப்படி சொல்லுகைக்கு தோஷ நிவ்ருத்தியில் வரும் தோஷம் ஏது என்ன ;வேறு ஒரு தோஷமும் வேண்டா
இது தானே தோஷமாம் என்கிறார் –தோஷ இத்யாதியால்-

அதாவது காமிநியானவள் தன உடம்பில் அழுக்கு கழற்றி போகத்தில் அந்வயிக்க இச்சிக்குமா போலே
ஸ்வத பரிசுத்தமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு வந்தேறியான தோஷத்தை கழித்து ஸ்வ சேஷிக்கு  போக்யமாக
விநியோக பட வேணும் என்ற ஸ்வ நிர்பந்தத்தாலே இவன் பண்ணுவித்து கொள்ளுகிற சேஷ நிவ்ருத்தி தானே
காமிநி உடைய அழுக்கு உகக்கும் காமுகனை போலே தோஷமே அபிமதமாய் இத்தோடே தன்னை புஜிக்க
ஆதரிக்கிற அவன் உடைய போகத்துக்கு விலக்கு ஆகையாலே தோஷம் ஆம் இறே என்கை–அவனுக்கு அநிஷ்டம் ஆவது
இறே தோஷம் ஆவது –இறே -என்று பிரசித்தி தோன்ற அருளி செய்தது கீழ் உபாதித்ததை எல்லாம் நினைத்து

——————————————————

சூரணை –177-

தன்னால் வரும் நன்மை விலைப் பால்-போலே
அவனால் வரும் நன்மை முலைப் பால் போலே—என்று பிள்ளான் வார்த்தை

ஆக நன்மை தானே தீமை ஆயிற்று என்றும் தனக்கு தான் தேடும் நன்மை தீமை யோபாதி விலக்காய் இருக்கும் -என்றும்
தோஷ நிவ்ருத்தி தானே தோஷமாம் இறே -என்றும் –தான் தனக்கு தேடும் நன்மை ஹேயம் என்னும் இடம் சொல்லுகையாலே
அவன் தேடும் நன்மையே உபாயதேயம் என்னும் இடம் பலித்தது இறே —
இப்படி தான் தனக்கு தேடும் நன்மை ஹேயம் அவன் தேடும் நன்மை உபாதேயம் என்னும் இடத்தை ஆப்த வசநத்தாலே தர்சிப்பிகிறார்  மேல்-தன்னால் -என்று தொடங்கி

ஸ்வயத்னத்தாலே தான் தனக்கு உண்டாக்கி கொள்ளும் நன்மை -விலைப் பால்-போலே -ஔபாதிகமாய் ,விரசமுமாய் அபிராப்தமுமாய் இருக்கும்
நிருபாதுக   ஸ்வாமியான அவன் தானே இவனுக்கு இது வேணும் என்று உண்டாக்கும் நன்மை முலைப் பால் போலே என்றது
நிருபாதிகமாய் ,சரசமுமாய்  பிராப்தமுமாய் இருக்கும் என்கை

———————————————–

சூரணை -178-

அவனை ஒழிய தான் தனக்கு நன்மை தேடுகை யாவது –
ஸ்தநந்தய பிரஜையை மாதா பிதாக்கள் கையில் நின்றும் வாங்கி
காதுகனான ஆட்டு வாணியன் கையிலே
காட்டி கொடுக்குமா போலே –
இருப்பது ஓன்று –

இவ்வளவு அன்றிக்கே -எம்பெருமானை ஒழிய தான் தனக்கு நன்மை தேட இழிந்தால்
ஸ்வ விநாசமே பலிக்கும் என்னும் இடத்தை சநிதர்சனமாக-அருளி செய்கிறார் –

அதாவது –
பிராப்தனுமாய்
ஆப்தனுமான அவன் இவனுக்கு நன்மை தேடுமது ஒழிய -அதற்க்கு எதிர் தட்டான தான்
தனக்கு உஜ்ஜீவன அர்த்தமான நன்மை சம்பாதிகையாவது -ஸ்வ ரக்ஷண உபயோகியான
ஞான சக்திகள் ஒன்றும் இன்றிகே -ஸ்வ மாத்ரதிகள்  உணர்ந்து நோக்க வேண்டும்படியான
ஸ்த நந்தய பிரஜையை -ரஷகரான மாதா பிதாக்கள் கையில் நின்றும் வலிய வாங்கி –
கொலைக்கு கூசாதே உயிர் கொலையாக கொன்று மாம்சங்களோடு கலசி விற்று விடும்
காதுகனான ஆட்டு வாணியன் கையிலே -இத்தை நோக்கி கொள் என்று -காட்டி கொடுக்குமா போலே
இருப்பது ஓன்று என்கை -இத்தால் சர்வேஸ்வரனே ரஷகன் -தான் தனக்கு நாசகன் –
என்னும் இடம் சொல்லப் பட்டது —

——————————–

சூரணை -179-

தன்னை தானே இறே முடிப்பான் –

இப்படி இவன் தன்னை தானே முடித்து கொள்ளுமோ என்ன –
அருளி செய்கிறார்-

அதாவது –
சர்வேஸ்வரனின் உஜ்ஜீவிப்பிகைக்கு அவசர ப்ரதீஷனாய் போரும் அவன் ஆகையாலே –
இவனுடைய விநாசதுக்கு ஒரு நாளும் அவன் ஹேது அன்று -இனி -அசந்நேவ  -என்னும்படி
தன்னை நசிப்பித்து கொள்ளுவான் தானே இறே என்கை –
யானே என்னை-திரு வாய் மொழி -2 -9 -7 – என்கிற பாட்டிலே யானே -என்று என் இழவு பகவத் க்ருதம் அல்ல –
அவன் எதிர் சூழல் புக்கு திரியா நிற்க நானே கிடீர் விநாசத்தை சூழ்த்து கொண்டேன் –
என்றார் இறே ஆழ்வார்

———————————

சூரணை -180-

தன்னை தானே முடிக்கை யாவது –
அஹங்காரத்தையும்
விஷயங்களையும்
விரும்புகை —

இவன் தன்னை தானே முடிக்கை யாவது ஏது-என்னும்
ஆகாங்ஷையிலே அருளி செய்கிறார் –

அஹங்காரம் ஆவது -தேக ஆத்மா அபிமானமும் -ச்வாதந்த்ர்யா அபிமானமும்
விஷயங்கள் ஆவன -விஹித நிஷித்த விஷயங்கள் –
இவற்றை விரும்புகையாவது -இவற்றிலே மிகவும் பிரவண னாய் இருக்கை –
ஆத்ம ஸ்வரூபம் தான் -பகவத் அனந்யார்க்க விசேஷமாய் -பகவத் ஏக போகமாய் இறே இருப்பது –
தாத்ருச ஸ்வரூபத்தை நசிப்பிகை இறே -இவற்றிலே இவன் பிரவணன் ஆகையாவது –
உத்தர வாக்ய நமஸ் சப்தார்த்தம் சொல்லுகிறார் ஆகில் -இவை எல்லாம் என் என்னில் –
உத்தர வாக்யத்திலே நமஸிலே-புருஷார்ததுக்கு  இடை சுவரான விரோதிகள் எல்லாம்
தள்ளுண்ணும் என்னும் இடம் தோற்ற இறே -மநோ வாக் காயை  -என்று தொடங்கி மூன்று
சூர்னையாலே சகல விரோதி நிவ்ருதியையும் பாஷ்ய காரர் அருளி செய்தது –
இவர் தாமும் முமுஷு படியில் -இந்த நமஸ் சப்தார்த்தம் சொல்லுகிற அளவில் –
இதில் அவித்யாதிகளும் கழி உண்ணும் -என்றார் இறே –
ஆகையால்-இவ்விடத்திலும் -தேகாத்ம அமிமானாதி ரூபமான அஹங்காரம் –
தத் கார்யமான விஷய ப்ராவண்யம் –
தத் உபய கார்யமான பாகவத அபசாரம் –
முதலான விரோதிகள் எல்லாம் பிரசக்த அனுபிரசக்தமாக அருளி செய்கிறார் –
ஆகையால் விரோதம் இல்லை-

————————————————

சூரணை -181-

அஹங்காரம் அக்நி ஸ்பர்சம் போலே –

இவ் அஹங்காராதிகளின் கொடுமையை விஸ்தரேண உபபாதிப்பதாக திரு உள்ளம் பற்றி
பிரதமம் அஹங்காரத்தின் கொடுமையை அருளிச் செய்கிறார் –

அக்நி ஸ்பர்சம் போலே என்றது -அக்நி ஸ்பர்சம் ஆனது அன்வயித்த இடம் எங்கும்
சுட்டு உரு அழிக்குமா போலே -இதுவும் ஆஸ்ரய அசியாய் ஸ்வரூபத்தை நேராக
உரு அழித்து விடும் -என்கை-

———————————

சூரணை -182–

ந காம கலுஷம் சித்தம் –
ந ஹி மே ஜீவிதே நார்த்த-
ந தேஹம் –
எம்மா வீட்டு திறமும் –

இவ் அஹங்கரத்தினுடைய க்ரௌர்யத்துக்கு பிரமாணங்கள் காட்டுகிறார் மேல் –

அதில் பிரதமத்தில் -ருக்வேதகிலமான ஜிதந்தா வசனத்தை அருளி செய்கிறார் –
ந காம கலுஷம் சித்தம் மமதே பாதயோஸ் ஸ்திதம்
காமயே வைஷ்ணவத்வந்து  சர்வ ஜன்மசூ  கேவலம் -இதுக்கு அர்த்தம் –
நிருபாதிக   சேஷியாய் நிரதிசய போக்யரான தேவரீர் திருவடிகளிலே
வ்யவச்திதமான என் நெஞ்சு ஆனது -ஸ்ரீ வைகுண்டாதிகள் ஆகிற வேறு ஒன்றை
ஸ்வயம் புருஷார்த்தமாக நினைத்து கலங்கி இருக்கிற தன்று -சர்வ ஜன்மங்களிலும்
தேவர்க்கே ரசமாம் படி இருக்கிற தாஸ்யத்தையே ஆசைப் படா நின்றது என்று –
கேவல பதத்தாலே -இத் தலைக்குமே இருக்கும் இருப்பை கழிக்கிறது-
து சப்தம் அவதாரண அர்த்தம் –
இத்தால் -மோஷ பர்யந்தமாக தான் உகப்பால் வரும் அது எல்லாம்
அஹங்கார கர்ப்பம் ஆகையாலே த்யாஜ்யம் என்னும் இடம் சொல்லப் பட்டது –

அநந்தரம் பிராட்டி வசனத்தை அருளி செய்கிறார்
நஹிமே ஜீவிதே நார்த்தோநைவார்த்தைர் நச பூஷணை
வசந்த்யா ராஷசீ மத்யே விநா ராமம் மகா ரதம் -இதுக்கு அர்த்தம்
மகா ரதரான பெருமாளை பிரிந்து ராஷசிகள் நடுவே வஸியா நிற்கிற
எனக்கு பிராணனால் ஒரு பிரயோஜனம் இல்லை –
அர்த்தங்கலாளுமொரு பிரயோஜனம் இல்லை –
ஆபரணங்களாலும் ஒரு பிரயோஜனம் இல்லை -என்று –
இத்தால் -பிராணாதிகள் எல்லாம் அத்தலையில் வினியோகத்துக்கான அன்றிக்கே –
தனக்கான போது-அஹங்கார ஸ்பர்சி ஆகையாலே -த்யாஜ்யம் என்னும் இடம் சொல்லப் பட்டது

அநந்தரம் பரமாச்சார்யான ஆளவந்தார் வசனத்தை அருளி செய்கிறார் –
ந தேஹம் ந பிராணான் ந ச சுக மசேஷாபிலஷிதம் நசாத்மானம்
நாந்யத் கிமபி தவ சேஷத்வ விபவாத் பஹிர்பூதம் நாத
க்ஷணம் அபி சஹே யாது சததா விநாசம் தத் சத்யம் மது மதன விஞ்ஞா பநமிதம்-
இதுக்கு அர்த்தம் -எனக்கு வகுத்த சேஷியானவனே-உன்னுடைய சேஷத்வம் ஆகிற ஐச்வர்யதுக்கு
புறம்பான தேகத்தையும் -ஷணமும் சஹியேன்இத் தேகத்துக்கு தாரகங்களானே பிரானங்களையும்
சஹியேன் -எல்லாராலும் ஆசைபடபட்ட சுகத்தையும் சஹியேன் –
புத்திர மித்ர களத்ராதிகளான மற்று ஒன்றையும் சஹியேன் –
இவை இத்தனைக்கும் போக்தாவான ஆத்மா தன்னையும் சஹியேன் –
இது எல்லாம் உருக் காண ஒண்ணாதபடி சததாவாக  நசித்து போக வேணும் –
இந்த விஜ்ஞாபனம் சத்யம் –
இங்கன் அன்றாகில் தேவர்க்கு பொய்யனான மது பட்டது படுகிறேன் என்று –
இத்தால் -இத்தலையில் சேஷத்வத்துக்கு புறம்பானது எல்லாம்
அஹங்கார துஷ்டம் ஆகையாலே த்யாஜ்யம் என்னும் இடம் சொல்லப் பட்டது —

அநந்தரம் -மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்களில் தலையானவர்
வசனத்தை அருளி செய்கிறார் -எம்மா வீட்டு திறமும் -என்று –
அதாவது –
ஆழ்வார் மோஷத்தை கொள்ளும் -என்ன-
என் உகப்புக்காக தரும் மோஷம் -எப் பிரகாரத்தாலும் விலக்ஷணமாய் இருந்ததே ஆகிலும்
அதின் இடையாட்டமும் பிரசங்கிக்கக் கடவோம் அல்லோம் என்கை –
இத்தால் -தன் உகப்பால் வரும் மோஷமும் அஹங்கார கர்ப்பம் ஆகையாலே
ஐஸ்வர்யாதிகலோபாதி த்யாஜ்யம் என்னும் இடம் சொல்லப் பட்டது –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம்–-சூர்ணிகை-157/158/159/160/161/162/163/164/165/166/167/168–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

April 8, 2012

சூரணை -157-

என்னை நெகிழ்க்கிலும்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய –

——————————————–

சூரணை -158-
கர்மணி வ்யுத்பத்தியில்
ஸ்வரூப குணங்களால் வருகிற
கர்த்ரு சங்கோச ராஹித்யத்தை
நினைப்பது –

ஸ சாஷிகமான இப்பந்தத்தை இல்லை செய்ய போகாது -என்றது –
சாஷியான புருஷகார விஷயத்தில் இருவருக்கும் உண்டான
நித்ய பாரதந்த்ர்யத்தை பற்ற வகையாலே -இருவருக்கும் இவ் விஷயத்தில் உண்டான
நித்ய பாரதந்த்ர்யத்தில் பிரமாணம் காட்டுகிறார் மேல் –

கர்மணி வ்யுத்புத்தி யாவது -ச்ரீன் சேவாயாம்-என்கிற தாதுவிலே –
ஸ்ரீ யதே -என்ற வ்யுத்புத்தி -இதுக்கு அர்த்தம் -சேவிக்க படா நின்றாள்  என்று இறே –
இவ் வ்யுத்பத்தியில் -ஸ்வரூப குணங்களால் வருகிற கர்த்ரு சங்கோச ராஹித்யம் ஆவது –
சேஷத்வம் ஆகிற ஸ்வரூபத்தாலும் -பிரணயித்வம் ஆகிற குணத்தாலும் -வருகிற சேதன
பரம சேதனர்கள் ஆகிற சேவா கர்த்தாக்களுக்கு சங்கோசம் இல்லாமை –
அதாவது –
இரண்டு தலைக்கும் இவள் விஷயத்தில் உண்டான சேவை அவிச் சின்னமாய் செல்லுகை-
இத்தை -நினைப்பது -என்றது -இவ் விஷயத்தில் இரண்டு தலைக்கும் உண்டான
பார தந்த்ர்யத்தை ஸ்மரிப்பது என்ற படி –

—————————————-

சூரணை -159-

அதிகாரி த்ர்யத்துக்கும் புருஷகாரம்
அவர்ஜநீயம் –

இப்படி இருக்கையால் இப் புருஷகாரம் எல்லாருக்கும் அவஸ்ய அபேஷிதம் என்கிறார் மேல் –

அதிகாரி த்ர்யமாவது -அஜ்ஞ்ஞர் ஞானாதிகர் பக்தி பரவசர் -என்கின்ற மூன்று அதிகாரிகளும் –
இவர்களுக்கு -புருஷகாரம் அவர்ஜ நீயம் -என்கிறது -குற்றத்தை சமிப்பிக்கை -முதலான வற்றுக்கு
புருஷகாரம் அந்வயம் வேண்டுகையாலே -சர்வதா கை விட ஒண்ணாது என்கை –
அதவா –
இப் புருஷகாரம் தானே -அநந்ய பிரயோஜனராய் பிரபத்தி பண்ணும் அவர்களுக்கு யேயோ –
பிரயோஜனந்த பரராய் பண்ணும் அவர்க்கும் வேணுமோ என்ன -அருளி செய்கிறார் –

அதிகாரி த்ரயம் என்கிறது -ஐஸ்வர்ய கைவல்ய பகவத் சரணார்த்திகள்-
இவர்கள் மூவருக்கும்  புருஷகாரம் அவர்ஜ நீயம்  என்றது -ஸ்வ ஸ்வ அபிலஷித
சித்திக்கு ஈஸ்வரனை உபாயமாக சுவீகரிக்கும் அளவில் -இவர்கள்
அபராதங்களை பொறுத்து அவனை அங்கீகரிக்கும் படி பண்ணுகைக்கு புருஷகாரம் அவஸ்ய அபேஷிதம் என்கை –
பூர்வ வாக்யத்திலே -புருஷகார பூர்வகமான உபாய வர்ணம் பிரயோஜனாந்த பரர்க்கும் பொதுவாகையாலே இறே –
உத்தர வாக்யத்தாலே அநந்ய பிரயோஜனத்வத்தை பிரகாசிப்பிக்க வேண்டுகிறது –
பூர்வ வாக்யத்தில் பிரதி பாதனமான சாதன விசேஷம் -பல சதுஷ்ட்ய சாதாரணமாய் இறே இருப்பது –
அதில் இவ் அதிகாரிக்கு அபிலஷிதமான பல விசேஷம் இன்னது என்னும் இடத்தை பிரகாசிப்பிகிறது இவ் வாக்கியம் -என்று -பரந்த படியிலும் –
கீழ் சொன்ன சாதனம் பல சதுஷ்ட்ய சாதாரணமாய் இருக்கையாலே  இவனுக்கு அபேஷிதமானபல விசேஷத்தை சொல்லுகிறது -என்று ஸ்ரீ யபதிப்  படியிலும் –
உத்தர வாக்யத்தாலே பிராப்யம் சொல்லுகிறது -பிராப்யாந்தரதுக்கு அன்று என்கை – இத்யாதியாலே முமுஷு படியிலும் -இவர் தாமே அருளி செய்தார் இறே –
திருமாலைக் கை தொழுவர் -முதல் திருவந்தாதி -52 –
அடியாரை சேர்த்தல் தீர்க்கும் திருமாலை -திரு வாய் மொழி -1 -5 -7 – என்கிறபடியே புருஷகாரம் முன்னாகப் பற்றி
பிரயோஜனங்களை கொண்டு அகலாதே அவற்றை ஒழிந்து-
ஒண் டொடியாள் திருமகளும் அவனுமான சேர்த்தியில்-திரு வாய் மொழி -4 -9 -10 –
அடிமையை பேறு என்று
கீழ் சொன்ன உபாய பலத்தை காட்டுகிறது பிற்கூறு -என்று இறே இவர்  திருத் தம்பியாரும்
அருளி செயல் ரஹச்யத்தில் அருளி செய்தது –

ஆக –
இவன் அவனை  பெற -சூரணை -142 – என்று தொடங்கி இவ்வளவாக –
ஸ்வகத ஸ்வீகார அநு உபாயத்வமும் பரகத ஸ்வீகார உபாயத்வமும் -தத் பிராபல்யமும் –
அவனே ஸ்வீகரிக்கும் அளவில் புருஷகாரம் முன்னாகவே -ஸ்வீ கரிக்கும் படியையும் –
இருவரும் இப் புருஷகாரத்தை முன்னிடுகிறது தனக்கு பிரயோஜனம் இன்னது என்னும் இடமும் –
பிரபத்தி அதிகாரிகள் எல்லாருக்கும் புருஷகாரம் அவர்ஜநீயம் என்னும் அதுவும்-சொல்லப் பட்டது –

பிரதம பிரகரணத்திலே புருஷகார வைபவ கதன முகேன ஸ்ரீமத் பத அர்த்தத்தையும் ,
உபாய வைபவ கதன முகேன -நாராயண சரணவ் சரணம் -என்கிற  பதங்களின் அர்த்தங்களையும்-பிரதி  பாதித்த அனந்தரம்-
பிரபத்திக்கு தேச நியமம் என்று தொடங்கி–பிரபத்யே என்கிற பதத்தால்
சொல்லப் படட பிரபத்தி உடைய தேச கால நியம அபாவத்தையும்-
அதுக்கு விஷயம் சொல்லுகைக்காக  -குண பூர்த்தி உள்ள இடமே விஷயம் ஆகை-என்று தொடங்கி
முக்த கண்டமாக மீளவும் நாராயண  -பத அர்த்தத்தையும்-
இதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் -என்று உத்தமனாலே ஆஷிப்தனான அதிகாரி யையும்-
பிரபத்தியில் சாதனத்வம்  இல்லாமையையும்-
பிரபத்தி அதிகாரி அபேஷிதமான சக்தி லஜ்ஜா யத்ன நிவ்ருத்தி சமதம அதிசயம் முதலான வற்றையும்
பிரபத்தி அங்கதயா த்யாஜ்யமான உபாயாந்தரத்தின் உடைய தோஷ பூயஸ்வத்தையும்
தத் பிரதிகோடிதயா பிரபத்தியினுடைய நைர்  தோஷ் யாதிகளையும்  –பிரபத்தி பிரசங்கத்தாலே-
முக பேதென ஸ்வகத ஸ்வீகார அனுபாயத் வத்தையும் -பர கத ஸ்வீகார உபாயத் வத்தையும் –
தத் பிராபல் யத்தையும் அவனே ஸ்வீகரிக்கும் அளவிலும் -புருஷ காரத்தை முன் இட்டே ஸ் வீகரிக்கும் என்னும் இடத்தையும் ,
உபயரும் புருஷ காரத்தை முன் இடும் அதுக்கு உண்டான பிரயோஜன விசேஷங்களையும் ,
அதிகாரி த்ரயத்துக்கும் புருஷகார அவர்ஜநீயம் என்னும் அத்தையும் பிரதி பாதிக்கை யாலே ,
இவ்வளவும் பூர்வ கண்ட அர்த்தத்தை அருளி செய்தார் ஆய்த்து-

———————————————————

சூரணை -160-
தனக்கு தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் –

அவதாரிகை –
இப் பிரகரண ஆதியிலே உபாயத்துக்கு என்று தொடங்கி ,உபேய அதிகாரமும் சில சொல்லிற்றே ஆகிலும் ,அது
பிராசங்கிகம் இத்தனை–இனி உபேய அதிகார பரமான பிரகரண சேஷத்தாலும் உத்தர கண்ட அர்த்தத்தை அருளி செய்கிறார்-
அது செய்கிற இடத்தில் ,பாஷ்ய காரர் கத்யத்தில் ,உத்தர கண்ட அர்த்தம் அனுசந்த்து அருளின காலத்திலே நம சப்த
அர்த்தம் முன்னாக அருளி செய்கிறார் ..அதில் இந்த நமஸ் தான் பிராப்ய விரோதி நிவ்ருத்தி ,பிரதி பாதம் ஆகையாலே ,
பிராப்ய விரோதிகள் ஆனவற்றை ,தர்சிப்பதாக திரு உள்ளம் பற்றி பிரதமம் அவற்றிலே ஒன்றை அருளி செய்கிறார் -தனக்கு தான் என்று தொடங்கி–

வியாக்யானம்-
கீழே  ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு நன்மை தானே தீமை ஆய்த்து -என்று ஸ்கவத பிரபத்தி
சரண்ய ஹ்ருதய அநுசாரி அல்லாத போது தீமையாய் தலைக்  கட்டும் படி சொன்ன இத்தாலே
உபாய தசையிலே தனக்கு தான் தேடும் நன்மை தீமை ஆம் என்னும் இடம் அருளி செய்தாராய்
இப் பிரசங்கத்திலே உபேய தசையிலும் தனக்கு தான் தேடும் நன்மை தீமையாய் விடும் என்னும் இடம்
அருளிச் செய்கிறார் என்று கீழோடு இதுக்கு சங்கதி —
தனக்கு -இத்யாதி –அதாவது சேஷி யானவன் போக தசையிலே தன் வியாமோஹத்தாலே
ஆர் உயிர் பட்டது என் உயிர் பட்டது -திருவாய்மொழி -9-6-9
என்னும் படி தன் திறத்தில் மிகவும் தாழ நின்று ,பரிமாறும் அளவில்,நாம் சேஷ பூதர் அன்றோ –நம் சேஷத்வத்தை நோக்க வேண்டாவோ
என்று ஸ்வ நைச்ச்ய அனுசந்தானத்தாலே பிற்காலித்து ,தனக்கு தான் தேடுகிற சேஷத்வம் ஆகிய நன்மை அநாதி காலம் – ஸ்வதந்த்ரோஹம்
என்று இருந்த தீமை யோபாதி அவன் போகத்துக்கு பிரதி பந்தகமாய் இருக்கும் என்கை —
தீமை என்று அக்ருத்ய கரணாதிகளை சொல்லவுமாம்

—————————————————

சூரணை -161—

அழகுக்கு இட்ட சட்டை அணைக்கைக்கு விரோதி யாமாப்  போல –161–

சேஷி உடைய விருப்பத்துக்கு உடலாய் ஆத்மாவுக்கு அலங்காரமாய் இருக்கும் சேஷத்வம்
போக விரோதி ஆகிற படி எங்கனே என்ன அருளிச் செய்கிறார்–அழகுக்கு -என்று தொடங்கி-

அதாவது ஸ்திரீக்கு அழகுக்கு இட்ட சட்டை நாயகன் உகப்புக்கு விஷயமுமாய் அவளுக்கு அலங்காரமாய் இருந்தது ஆகிலும் ,
போக தசையில், ஆலிங்கன விரோதியாம் போலே இதுவும் போக விரோதி யாம் என்ற படி-

——————————————-

சூரணை -162–

ஹாரோபி—162–
அழகுக்கு உடல் ஆனது அனுபவ விரோதி யாம் என்னும் இடம் சேஷி வசனத்தாலே ,தர்சிப்பிகிறார் மேல் ஹரோபி-என்று

ஹாரோபி  நார்பித கண்டே ஸ்பர்ச சம்ரோத பீருணா ஆவயோரந்தரே ஜாதா பர்வதாஸ் சரிதோ த்ருமா –    என்று-
சம்ச்லேஷ தசையில் ,ஸ்பர்ச விரோதி யாம் என்னும் அச்சத்தாலே ,பிராட்டி திருக் கழுத்தில் ஒரு முத்து வடம் உட்பட பூண்பது இல்லை
என்றார் இறே பெருமாள் –பீருணா என்கிற லின்கவ்யத்யயம்  ஆர்ஷம் ..
அன்றிக்கே அழகுக்கு இட்டது அணைக்கைக்கு விரோதியாம் என்னும் இடம்
அறிவிக்கையே பிரயோஜனமாக்கி லிங்க அனுகுணமாக பெருமாள் தம் அளவிலே யோஜிக்க்கவுமாம் –
பீருணா சொல் ஆண் பால் என்பதால் அச்சம் கொண்ட சீதையாலே -பெருமாள் எந்த வித நகையும் அணிய வில்லை என்றும் கொள்ளலாம்
பிரதி கூல விஷய   ஸ்பர்சம்  விஷ ஸ்பர்சம் போலே–

————————————————–

சூரணை -163–

புண்யம் போலே பாரதந்த்ர்யமும் பர அனுபவந்துக்கு விலக்கு –

ஆனால் பின்னை பாரதந்தர்யமேயோ நல்ல தென்ன அருளி செய்கிறார் மேல்-

புண்யம் என்றது கீழ் நன்மை என்கிற சொல்லாலே சொன்ன சேஷத்வத்தை ..அது கீழ் சொன்ன படியே
ஸ்வ நைச்ய அனுசந்தாதாலே இறாய்க்கைக்கு உறுப்பாய் கொண்டு யாதொரு படி போக விரோதியாய் நிற்கும்
அப்படியே போக தசையிலே ,அவனுக்கு எதிர் விழி கொடாதே அசித் போலே கிடைக்கைக்கு உறுப்பான
கேவல பாரதந்த்ர்யமும் எதிர் விழி சாபேஷனான ஈஸ்வரனுடைய போகத்துக்கு இடறு படியாம் என்ற படி-
அன்றிக்கே புண்யம் என்கிறது சத் கர்மத்தையாய் அது யாதொரு படி பாபத்தை காட்டில் –
வியாவிருத்தமாய் இருக்கச் செய்தே பகவத் பிராப்தி பிரதி பந்தமாய் நிற்கும் .அப்படியே இறாய்க்கைக்கு உறுப்பான
சேஷத்வத்தில் காட்டில் ,அசித்து போலே எதிர் தலை இட்டது வழக்காய் இருக்கைக்கு உறுப்பு ஆகையாலே
வ்யாவிருதமான பாரதந்த்ர்யம் எதிர் விழி கொடுக்கைக்கு உறுப்பு அல்லாமையினாலே பரனுடைய அனுபவத்துக்கு பிரதி பந்தகமும்மாம்-என்னவுமாம்
இத்தாலே கேவல சேஷத்வமும் கேவல பாரதந்த்ர்யமும் ஓரோர் ஆகாரங்களாலே  போக விரோதியாய் நிற்கும்-
பாரதந்தர்யதோடு கூடின சேஷத்வமே உத்தேசம் என்கை

———————————————————-

சூரணை -164–

குணம் போலே சேஷ நிவ்ருத்தி –164–

இப்படி உபேய தசையிலே சேஷத்வ பாரதந்தர்யங்கள் பர அனுபவத்துக்கு விலக்காம் படியை
அருளிச் செய்த அநந்தரம்
பிராப்தி தசையிலே இவன் உடைய நிர்பந்த மூலமாக உண்டான தோஷ நிவ்ருத்தி-
பர அனுபவத்துக்கு விலக்காம் படியை அருளிச் செய்கிறார் இத்தால்–

குணம் என்கிறது -கீழ் விரோதியாக சொன்ன சேஷத்வ பாரதந்த்ர்யங்கள் இரண்டையும்-
இவை தான் ஆத்மாவுக்கு அந்தரங்க குணமாய்  இறே இருப்பது —
இது போலே தோஷ நிவ்ருத்தி என்றது
இவ் ஆத்மா குண துயமும் கீழ் சொன்ன படியே யாதொரு படி பர அனுபவத்துக்கு விலக்கு ஆகிறது
அப்படியே இவன் நிர்பந்தித்துக் கொள்ளுகிற பிரகிருதி சம்பந்தம் ஆகிற தோஷத்தின் உடைய நிவ்ருத்தியும் –
சரம சரீரம் ஆகையாலே இத்தோடு சிறிது தான் வைத்து அனுபவிக்க இச்சிக்கிற அவனுடைய அனுபவத்துக்கு- விலக்காம் என்கை ..
குணம் போல என்று பாரதந்த்ர்யம் ஒன்றையும் திருஷ்டாந்தம் ஆகிறதாகவுமாம்–

—————————————————–

சூரணை -165–

ஆபரணம் அநபிமதமாய் அழுக்கு அபிமதமாய் நின்றது இறே  –

தோஷ நிவ்ருத்தியில் ஆத்ம ஸ்வரூபம் அத்யந்த பரிசுத்தமாய் போக்யமாயிருக்கும் அதனை அன்றோ-
ஆன பின்பு தோஷ நிவ்ருத்தி அநபிமதமாய் தோஷம் அபிமதமாய் இருக்க கூடுமோ என்ன அருளிச் செய்கிறார்-
ஆபரணம் என்று தொடங்கி-

அதாவது லோகத்தில் விஷய பிரவணராய் இருப்பார்க்கு அபிமத விஷயத்தின் உடைய ஒவ்ஜ்வல்ய ஹேதுவான ஆபரணம்
அநபிமதமாய் அனவ்ஜ்வல்ய ஹேதுவான அழுக்கு அபிமதமாயிரா நின்றது இறே என்கை-

——————————————–

சூரணை -166–

ஸ்நானம் ரோஷ ஜனகம் என்கிற வார்த்தையை ஸ்மரிபது  –166-

இது தான் லவ்கிகத்தில் அன்றிக்கே ,பிராட்டி திறத்தில் அவன் தனக்கும் இப்படி இருந்தமைக்கு
ஸூ சுகமான வார்த்தையை ஸ்மரிக்கிறார்-மேல் ஸ்நானம் -என்று தொடங்கி-

அதாவது பிராட்டி திரு மஞ்சனம் செய்து வந்தது -பெருமாளுக்கு ரோஷ ஜனகம் என்னும் அத்தை பிரகாசிப்பிக்கிற
தீபோ நேத்ரா துரச்யேவ பிரதிகூலாசி மே த்வம் –என்கிற வார்த்தையை இவ் அர்த்தத்துக்கு உடலாம் ஸ்மரிப்பது என்கை-
சபங்கா மலங்காரம் – இத்யாதி படியே –பத்து மாசம் திரு மஞ்சனம் பண்ணாமல் அழுக்கு அடைந்து இருந்த வடிவை காண ஆசை பட்டு இருந்தவருக்கு
இவள் திரு மஞ்சனம் பண்ண இது  ரோஷ ஜனகம் என்பது சொல்ல வேண்டா இறே ..
ஆனால் தீர்க்க முஷ்ணம் விநிச்வச்ய மேதிநீவ மவலோகயன்  உவாச மேகசங்காசம் விபீஷண உபச்திதம் —
திவ்ய அங்க ராகம் வைதேகீம் திவ்ய ஆபரண பூஷிதாம்  இஹா சீதாம் சிரச்ச்னான முபச்தாபாய மாசிரம்-என்று
இவர் தாமே அன்றோ திரு மஞ்சனம் பண்ணி அலங்கரித்து கொண்டு வரும்படி ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் பார்த்து அருளிச் செய்தது ..
இப்படி இருக்கச் செய்தே பின்னை ரோஷம் ஜனிப்பான் என் என்னில் ..  நாம் நல் வார்த்தை சொல்லி விடக் கடவோம்- தானே அறியாளோ
என்று சொல்லி விட்டார் இத்தனை போக்கி அது சஹ்ருதமாய் சொன்ன வார்த்தை இல்லை– அல்லாத போது ருஷ்டராக கூடாது இறே ..
அவன் தான் -அஸ்நாதா த்ரஷ்டும் இச்சாமி பர்தாரம் ராஷசாதிப –என்று இருக்கச் செய்தே ,
யாதாஹா ராமோ   பார்த்தா தே ததாதத் கர்த்து மர்கசி–என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் நிர்பந்தித்துச் சொன்ன பின்பு அன்றோ திரு மஞ்சனம் பண்ணிற்று என் என்னில் —
அவன் பெருமாள் திரு உள்ளக் கருத்தை அறியாதே ,அருளிச் செய்த வார்த்தையைக் கொண்டு ,சொன்னான் இத்தனை இறே
எல்லாம் செய்தாலும் பத்து மாசம் ராவண பவனத்திலே இருந்த இவள் சிறை இருந்த வேஷத்தோடே சென்று காணும் அத்தனை அல்லது ,
திரு மஞ்சனம் பண்ணேன் என்று இருக்க வேணும் இறே ..அது செய்யாதே சடக்கென திரு மஞ்சனம் செய்து வந்தாள் இறே
அது அவ் இருப்பு காண ஆசை பட்டு இருப்பார்க்கு ரோஷ ஹேது ஆயத்து –ஆகையாலே ஸ்நானம் ரோஷ ஜனகம் என்னக் குறை இல்லை
அன்றிக்கே-ஸ்நானம் ரோஷ ஜனகம் என்ற வார்த்தை யாவது-ஸ்ரீ விபீஷண ஆழ்வான் திரு மஞ்சனம் செய்து
அருள சொன்ன போது ,பெருமாள் திரு உள்ளத்தை அறியும் அவள் ஆகையாலே அவர்க்கு இது அநபிதம் ஆகையாலே
ரோஷ ஜனகமாய் வந்து முடியும் என்று நினைத்து -அஸ்நாதா த்ரஷ்டும் இச்சாமி பர்த்தாரம் ராஷச அதிப -என்று
பிராட்டி அருளிச் செய்த வார்த்தையும் ஆகவுமாம்..ரோஷ ஜனகம் என்னும் அத்தை பிரகாசிப்பிக்கும் வார்த்தை என்று கீழ் சொன்ன நியாயம் இங்கும் ஒக்கும்

——————————————————–

சூரணை -167–

வஞ்ச கள்வன் மங்க ஒட்டு —

இப்படி அபிமத விஷயத்தில் ,அழுக்கு உகக்குமா போலே
ஆத்ம ஞானம் பிறந்தவன் அழுக்கு உடம்பு என்று கழிக்கிற இத் தேகத்தை
ஈஸ்வரன் விரும்ப எங்கே கண்டது என்ன அருளிச் செய்கிறார் -வஞ்ச கள்வன் -இத்யாதியாலே-

வியாக்யானம்
அதாவது வஞ்ச கள்வன் என்று தொடங்கி மங்கவோட்டு என்னும் அளவாக தன்னுடைய திரு மேனியிலே ,
அத்ய ஆதரத்தைத் பண்ணி அவன் அனுபவித்த படிகளையும்.
அவ் அளவுக்கு இன்றிக்கே அதி சாபலத்தாலே இத் திருமேனியோடு தம்மை திரு நாட்டில் கொண்டு
போவதாக அவன் அபிவிநிஷ்டானாய் இருக்கிற படியைக் கண்டு ,–பிரானே இப் படி செய்து அருள ஒண்ணாது –
என்று நிர்பந்தித்து இதின் உடைய தோஷத்தை அவனுக்கு உணர்த்தி ,இப்படி ஹேயமான இது  மங்கும் படி இசைய வேணும் என்று கால் கட்டி ,
அவன் இத்தை விடுவித்து கொண்டு ,போம்படி வருந்தி இசைவித்துக் கொண்ட படியும் அருளி செய்தார் இறே ஆழ்வார் –திருவாய்மொழி -10-7–

——————————————————————–

சூரணை -168–

வேர் சூடும் அவர்கள் மண் பற்று கழற்றாது போல் ஞானியை விக்ரஹத்தோடு ஆதரிக்கும் —

ஆக- குணம் போல் தோஷ நிவ்ருத்தி என்று கீழ் சொன்ன சேஷத்வ பார தந்த்ர்ய ரூப ஆத்ம குணம் போல தோஷ  நிவ்ருத்தியும்
பர அனுபவத்துக்கு விலக்கு என்று பிரதிக்ஜை பண்ணி தத் உபாதான அர்த்தமாக அபிமத விஷயத்தில் அழுக்கு அபிமதமாய் இருக்கும்படியையும் —
இவன் அழுக்கு உடம்பு என்று கழிக்கிற இதிலே  அவன் அத் ஆதாரத்தை பண்ணும் படியையும் ஞானியான இவனை ச விக்ரஹமாக
ஆதரிக்கைக்கு ஹேது விசேஷத்வத்தையும் பரமார்தனான இவன் தேக ஸ்திதி கொண்டே   இவன் தேஹத்தில் அவன் விருப்பம் அறியலாம் என்னும் அத்தையும் ,
அவன் இவன் உடைய தேகத்தை விரும்பும் பிரகாரத்தையும் ,சாத்தியமானது இது சித்தித்தால் சாதன ஆதாரம் மட்டமாம் படியையும்
அதின் எல்லையையும் ,இவன் அவ்வோ தேசங்களை கை விடாது ஒழிய வேணும் என்று அர்தித்தால் ஸ்வசாத்யம் சித்தித்து இருக்கச் செய்தேயும்
ஹேது துவயத்தாலே அவனுக்கு அது அபி மதங்களாய் இருக்கும் படியையும் அருளிச் செய்தார் ஆயிற்று-

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வசன பூஷணம்–-சூர்ணிகை–142/143/144/145/146/147/148/149/150/151/152/153/154/155/156–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

April 8, 2012

சூரணை -142-

இவன் அவனைப் பெற நினைக்கும் போது
இந்த பிரபத்தியும் உபாயம் அன்று –

இப்படி பிரஸ்துதையான  பிரபத்தியினுடைய அநு உபாயத்வத்தையும் தத் பிரதி கோடியான பர கத ஸ்வீகார உபாயத்வத்தையும் –
இது தன்னை பார்த்தால் -சூரனை – 54-இத்யாதியாலும் -பிராப்திக்கு உபாயம் அவன் நினைவு -சூரனை -66 -இத்யாதியாலும் –
கீழ் அருளிச் செய்தபடி அன்றியே -முகாந்தரேண அருளிச் செய்கிறார் மேல் –

அதில் இப்படி ஸ்வரூப அனுரூபமான இத்தை சாதனம் ஆக்கிக் கொண்டு ஸ்வ தந்த்ரனான அவனை இவன் பெறப் பார்க்கும் அன்று –
அவன் நினைவு கூடாதாகில் -இது விபலிக்கும் என்கிறார் –
அதாவது –
உடைமையை உடையவன் சென்று கைக் கொள்ளுமா போலே -ஸ்வாமியான அவன் தானே வந்து அங்கீகரிக்க கண்டு இருக்க
பரதந்த்ரனான இச் சேதனன் -தான் பலியாய் -தன் ஸ்வீகாரத்திலே ஸ்வதந்த்ரனான அவனைப் பெற நினைக்கும் அளவில் –
அவன் நினைவு கூடாதாகில் -இப்படி விலக்ஷணையாய் இருக்கிற பிரபத்தியும் தல்லாப சாதனம் ஆகாது என்றபடி

————————————————-

சூரணை-143-

அவன் இவனை பெற நினைக்கும் போது
பாதகமும் விலக்கு அன்று —

இனி அவனே ஸ்வீகரிக்கும் அளவில் உள்ள வாசி சொல்லுகிறார் –

அதாவது –
ஸ்வாமியாய் -ஸ்வதந்த்ரன் ஆனவன் -ஸ்வம்மாய் பரதந்த்ரனாய் இருக்கிற இவனை
ஸ்வ இச்சையால் பெற நினைக்கும் அளவில் -பாபங்களில் பிரதானமாக எண்ணப்படும்
பாதகமும் பிரதிபந்தம் ஆக மாட்டாது என்கை-
இவை இரண்டாலும் ஸ்வ கத ஸ்வீகார அநுபாயத்வமும் –
பர கத ஸ்வீகார உபாயத்வமும் காட்டப் பட்டது —
சித பரம் சில்லாபே பிரபத்தி ரபி நோ பதி விபர்யேது நைவாச்ய பிரதி ஷேதாய   பாதகம் -என்னக் கடவது இறே–

——————————————-

சூரணை -144-

இவை இரண்டும்
ஸ்ரீ பரத ஆழ்வான் பக்கலிலும்
ஸ்ரீ குகப் பெருமாள் பக்கலிலும்
காணலாம் –

இப்படி இவை இரண்டும் காணலாம் இடமுண்டோ என்ன –
அருளிச் செய்கிறார் –

———————————————

சூரணை -145-

ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -நன்மை தானே தீமை ஆயிற்று –
ஸ்ரீ குகப் பெருமாளுக்கு தீமை தானே நன்மை ஆயிற்று –

அவர்கள்  தங்கள் பக்கல் இவை கண்டபடி என்னவென்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது –
பெருமாளை மீட்டுக் கொண்டு வந்து திரு அபிஷேகம் பண்ணுவித்து –
தன் ஸ்வரூப அநு ரூபமான அடிமையைப் பெற்று வாழுகைக்காக-
ஏபிச்ச  சசிவைஸ் ஸார்த்தம்-இத்யாதி படியே –
வழியே பிடித்து மநோ ரதித்து கொண்டு சென்று -பெரிய ஆர்த்தியோடே அவர்
திருவடிகளில் பிரபத்தி பண்ணிய ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -அவன் பண்ணின பிரபத்தி ஆகிற நன்மை தானே –
சரண்யரான பெருமாள் திரு உள்ளத்துக்கு அநிஷ்டம் ஆகையாலே தீமை யாய் விட்டது –
ஏழை ஏதலன்-பெரிய திரு மொழி -5 -8 -1- இத்யாதிபடியே பெருமாள்  தாமே வந்து
அங்கீகரிக்கப்   பெற்ற ஸ்ரீ குகப் பெருமாளுக்கு -தோஷமே பச்சையாக அங்கீகரிக்கையாலே –
பாதகம் ஆகிற தீமை தானே நன்மையாய் விட்டது என்கை –
யத் த்வத் ப்ரியம் ததிஹா புண்யம் அபுண்யம் அந்யத்-என்று இறே புண்ய பாப லஷணம்-
ஆகையால் இவர்கள் பக்கல் காணலாம் என்கை –

——————————————–

சூரணை -146-

சர்வ அபராதங்களுக்கும் பிராயச்சித்தமான
பிரபத்தி தானும் –
அபராத கோடி யிலேயாய்
ஷாமணம் பண்ண வேண்டும் படி
நில்லா நின்றது இறே —

இவன் பண்ணும் பிரபதனம் -சரண்ய ஹ்ருதய அநுசாரி அல்லாத போது –
அபராத கோடி கடிதமாம் என்னும் இடம் அருளிச் செய்தார் கீழ் –
இது தான் இவனுடைய பூர்வ விருத்தத்தை பார்த்தாலும் -அபராத கோடி யிலேயாய் இருக்கும்
என்னும் இடத்தை பிரகாசிப்பிக்கைகாக -பாஷ்ய காரருடைய அனுஷ்டான பிரகாரத்தை
அருளிச் செய்கிறார் மேல் –

அதாவது –
அஹம் அஸ்ய அபராதாநாம் ஆலய -என்கிறபடியே -அபராதங்களுக்கு எல்லாம் கொள்கலாமாய் இருக்கிற இச் சேதனன் பிரபத்தி பண்ணவே –
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்னும் படி இவன் அளவில் சர்வேஸ்வரன் திரு உள்ளம் பிரசன்னமாய் விடுகையாலே –
சர்வ அபராதங்களுக்கும் பிராயச் சித்தமாய் இறே பிரபத்தி தான் இருப்பது –
இப்படி இருந்துள்ள பிரபத்தியை -த்வத் பாதாரவிந்த யுகளம் சரணம் அஹம் பிரபத்யே -என்று
பண்ணி அருளிய பாஷ்ய காரருக்கு -ஸ்வ பூர்வ விருத்தத்தை அனுசந்தித்த வாறே -அது தானும் அபராத கோடி யிலேயாய் –
த்வமேவ  மாதாச -என்று தொடங்கி -இத் தலையில் அபராதத்தை பொறுக்கைக்கு உறுப்பான பந்த விசேஷங்களை எல்லாம் விண்ணப்பம் செய்து கொண்டு –
தஸ்மாத் பிரணம்ய-இத்யாதியாலே இப்படி திரு முன்பு கூசாமல் வந்து நின்று பிரபத்தி பண்ணின இவ் அபராதத்தை பொறுத்து அருள வேணும் என்று
ஷாமணம் பண்ண வேண்டும் படி நில்லா நின்றது இறே என்கை –
ஆகையால் இவ் வழியாலும் இது அபராத கோடி கடிதமாய் இருக்கும் -என்கை –
அநாதி காலம் அபராதத்தைப் பண்ணி பின்பு ஒரு நாளிலே ஆபிமுக்யம் பண்ணினானே ஆகிலும் –
ரிபூணாபி வத்சல –
யதிவா ராவணஸ் ஸ்வயம் -என்று
இருக்கும் ஈஸ்வர ஹ்ருதயத்தை பார்த்தால் அவன் கைக் கொள்ளக் ஒரு  குறை இல்லை –
அவன் அப்படி இருந்தானே ஆகிலும் -தன் பூர்வ விருத்தத்தை உணர்ந்தால்
இவன் இத்தை அபராதமாகவே நினைத்து ஷாமணம் பண்ண வேண்டும் படியாய் இறே இருப்பது –

——————————————-

சூரணை -147-

நெடு நாள் அந்ய பரையாய் போந்த பார்யை லஜ்ஜா பயங்கள் இன்றிக்கே –
பர்த்ரு சாகரத்தாலே நின்று -என்னை அங்கீகரிக்க வேணும் -என்று அபேஷிக்குமா போலே –
இருப்பது ஓன்று இது இறே-இவன் பண்ணும் பிரபத்தி –

இவன் பண்ணும் பிரபத்தி -ஸ்வ பூர்வ விருத்தத்தை அனுசந்தித்தால் –
அபராத கோடி யிலேயாய் இருக்கும் என்னுமத்தை -திருஷ்டாந்த முகேன தர்சிப்பிக்கிறார் -மேல் –
அதாவது –
நெடும்காலம் பர்த்தாவோடு ஓட்டற்று -பர புருஷ காமிநியாய் -தந் நிக்ரஹ பாத்ரமாய் -போந்தாள்  ஒரு பார்யை –
இப்படி பட்ட நாம் அவன் சந்நிதியிலே கூசாமல்  சென்று நிற்கும் படி என் -என்கிற லஜ்ஜையும் –
இத்தனை காலமும் நாம் செய்து திரிந்தது எல்லாம் கண்டு இருக்கிற இவன் -இப்போது  நம்மை வந்து இப்படி
நம்மை அபேஷிப்பதே என்று தண்டிக்கில்  செய்வது என் -என்னும் பயமும் இன்றிக்கே –
அவன் முன்னே சென்று நின்று என்னை அங்கீ கரிக்க வேணும் என்று அபேஷிக்கும் அளவில் –
எத்தனை அபராதம் உண்டு –அப்படியே இருப்பது ஓன்று இறே –
பகவத் அனந்யார்ஹனாய் வைத்து அநாதி காலம் அவனுடன் பற்று இன்றிக்கே அந்ய பரனாய் போந்த இவன் –
ஸ்வ பூர்வ விருத்த அனுசந்தத்தால் வரும் லஜ்ஜையும் –
ஸ்வ தந்த்ரனான அவன் தண்டிக்கில் செய்வது என் -என்ற பயமும் இன்றிகே
தத் சந்ந்நிதியிலே சென்று நின்று தன்னை அங்கீகரிக்க வேணும் என்று பண்ணுகிற சரண வரணம்-என்கை –

ஆக இவ்வளவும் ஸ்வகத ஸ்வீகார அநு உபாயத்வமும்-பரகத ஸ்வீகார  உபாயத்வமும் -பிரதி பாதிக்க பட்டது –

———————————————

சூரணை -148-

கிருபையால் வரும் பாரதந்த்ர்யத்தில் காட்டில்
ஸ்வாதந்த்ர்யத்தால் வரும் பாரதந்த்ர்யம் பிரபலம் –

இனி -இவன் ஸ்வீகாரம் கண்டு இரங்கி -அவன் இவனுக்கு பர தந்த்ரன் ஆவதிலும் –
தந் ஸ்வாதந்த்ர்யத்தால் வரும் பரதந்த்ரன் ஆவதே பிரபலம் என்கிறார்-

அதாவது –
ஆர்த்தராய் -அநந்ய சரண்யராய் தன் திரு அடிகளில் வந்து சரணம் புகுந்தவர் அளவில் –
தனக்கு உண்டான கிருபையாலே -அவர்கள் சொன்னதே செய்யும்படி பரதந்த்ரன் ஆகையும் –
பட்டத்துக்கு உரிய ஆனையும் அரசும் போலே தன் நிரந்குச ஸ்வாதந்த்ரத்தால் -நிர்ஹேதுகமாக சிலரை
அங்கீகரித்து -தன்னை அவர்கள் இட்ட வழக்காக்கி வைக்கையும்-
இரண்டும் ஈஸ்வரனுக்கு உள்ளது ஓன்று –
இதில் முற்பட்டது -ஒரோ திசைகளிலே ஸ்வாதந்த்ர்ய நிருத்தமாய் விபலிக்கவும்  கூடும் –
பிற்பட்டது -அப்ரதிகதம் ஆகையாலே ஒருக்காலும் கண் அழிவு இல்லை –
ஆகையால் அதிலும் காட்டிலும் இது பிரபலம் என்கை –

————————————————-

சூரணை -149-

இவ் அர்த்தத்தை வேத புருஷன் அபேஷித்தான்-

இவ் அர்த்தம் தான் வேத அபிமதம் என்கிறார் மேல் –

இவ் அர்த்தம் -என்கிறது -கீழ் பிரபலமாக சொல்லப் பட்ட பரகத ச்வீகாரத்தை –
வேதபுருஷன் இத்தை அபேஷித்தான் -என்றது –
நாய மாதமா பிரவசநேன லப்ய- நமேதையா ந பஹூன ச்ருதேன- யமேவைஷ வ்ருணத தேன லப்ய
தச்யைஷா ஆத்மா விவ்ருனதே தநூம் ஸ்வாம்-என்று
கட வல்லியிலும் -முண்டக உபநிஷத்திலும் சொல்லுகையாலே ஆதரித்தான் -என்கை –
அசக்ருத் கீர்த்தனம் அபேஷா கார்யம் இறே –

——————————————-

சூரணை -150-

அபேஷா நிரபேஷமாக
திருவடிக்கும் -ஸ்ரீ குகப் பெருமாளுக்கும்
இது உண்டாயிற்று –

இத்தலையில் அபேஷை  இன்றிக்கே  இருக்க -இவ் விஷயீகாரம்
சித்திக்கப் பெற்றவர்கள் உண்டோ என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது –
தம் தாம் பக்கல் அபேஷை இன்றிக்கே இருக்கச் செய்தே –
பம்பா தீரத்திலும் –
கங்கா கூலத்திலும் –
பெருமாள் தாமே சென்று அங்கீகரிக்கப் பெற்ற திரு வடிக்கும் ஸ்ரீ குகப் பெருமாளுக்கும்
இந்த பரகத ஸ்வீகாரம் உண்டாய்த்து -என்கை –
————————————-

சூரணை -151-

இவன் முன்னிடும் அவர்களை-அவன் முன்னிடும் என்னும் இடம்
அபய பிரதா நத்திலும் காணலாம் –

இப்படி ஸ்வதந்த்ரனானாய் இவர்களை அங்கீகரித்த இடத்திலும் –
தமப்ய பாஷ ஸௌ மித்ரே  சூக்ரீவ  சசிவம் கபிம் -கிஷ்கிந்தா காண்டம் -3 -27 –
மாழை மான் மட நோக்கி வுன் தோழி உம்பி எம்பி பெரிய திரு மொழி -5- 8- 1 என்று
இளைய பெருமாளையும் பிராட்டியையும் முன்னிட்டாப் போலே
மற்றும் புருஷகாரத்தை முன்னிட்டு அங்கீகரித்த இடம் காணலாமோ -என்ன
அருளிச் செய்கிறார் –

அதாவது –
இச் சேதனன் தான் ஆஸ்ரயிக்கிற போது புருஷகாரமாக முன்னிடும் அவர்களை
அவனும் அங்கீகரிக்கும் போதும் முன்னிடும் என்னும் இடம் –
திருவடியையும் ஸ்ரீ குகப் பெருமாளையும் அங்கீகரித்த ஸ்தலங்கள் மாத்ரம் அன்றிக்கே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானை அங்கீகரித்த ஸ்தலத்திலும் காணலாம் என்கை –
எங்கனே என்னில் –
சோஹம் பருஷி தச்தேன தாசவச் சாவமானித த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச ராகவம் சரணம் கத -என்று சரணம் புகுந்து –
சர்வ லோக சரண்யாய ராகவாய மகாத்மனே நிவேதயதே மாம் ஷிப்ரம் விபீஷணம் உபஸ்திதம்-என்று நின்ற விபீஷண ஆழ்வானை
அபய பிரதான பூர்வகமாக -அங்கீகரிக்கிற இடத்தில் –
ஆனையேநம் ஸ்வயம் -என்று முதலிகளுக்கு எல்லாம் மூல பூதரான மகா ராஜரை முன்னிட்டு இறே அங்கீகரித்தது –
திருவடியையும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானையும் அங்கீகரித்த இடத்தில் பிராட்டி சந்நிதிஹை
அல்லாமையாலே அவனை முன்னிட்டமை தோற்றிற்று இல்லை ஆகிலும் –
பிராட்டி இலங்கைக்கு எழுந்து அருளுகிற போது மகா ராஜரும் திருவடியும் நிற்கிற இடத்திலே –
திரு ஆபரணங்களை பொகட்டு கடாஷித்து வைத்துப் போகையாலும்-
இலங்கையிலே எழுந்து அருளின போது ஸ்ரீ விபீஷண ஆழ்வானை பெருமாள் திருவடிகளிலே வரும்படி கடாஷித்து அருளுகையாலும் –
பெருமாள் இருவரையும் அங்கீகரிக்கும் இடத்தில் பிராட்டியை முன்னிட்டு அங்கீகரித்தார் என்றே கொள்ள  வேண்டும் –
பரதந்த்ரையான அவளுக்கு இத்தலையில் நினைவு ஒழிய தனித்தொரு பிரவ்ருத்தி கூடாது இறே –
ஆகையால் இறே –
பரகத ஸ்வீகாரம் சொல்லுகிற இடத்திலே ஸ்ரீ விபீஷண ஆழ்வானை அங்கீகரித்த அத்தையும் சஹ படித்தது

———————————————–

சூரணை –152

இருவர் முன் இடுகிறது- தம் தாம் குற்றங்களை சமிப்பிக்கைகாக –

இவன் நிருபாதிக சேஷ பூதனாய் அவன் நிருபாதிக சேஷி பூதனாய் இருக்கையாலே-அவ்யவதாநேன , ஆஸ்ரயிக்கவும் அங்கீ கரிக்கவும் அமைந்து இருக்க –
இப்படி இருவரும் புருஷ காரத்தை முன் இடுகிறது எதுக்கு என்ன அருளிச் செய்கிறார்– இருவர் என்று தொடங்கி–

சேதனனுக்கு குற்றம் ஆவது -அநாதி காலம் அவன் பக்கல் விமுகனாய்,அந்ய விஷய பிரவணனாய்
ததாஜ்ஞா அதி லங்கமே பண்ணி    கூடு பூரித்து வைத்த அபராதம்
ஈஸ்வரனுக்கு குற்றம் ஆவது –அவர்ஜநீயமான சம்பந்தம் உண்டாய் இருக்க –
அபராததையே கணக்கிட்டு ,அநாதி காலம் இவனை அகல அடித்து இருந்தது இது
இவன் தன குற்றத்தை சமிப்பிக்கையாவது –இத்தை பார்த்து ஈஸ்வரன் சீறாத படி பண்ணுகை-
அவன் தன குற்றத்தை சமிப்பிக்கை யாவது -இத்தை நினைத்து சேதனன் வெருவாத படி பண்ணுகை

———————————————-

சூரணை-153 —

ஸ்வரூப சித்தியும் அத்தாலே –

இவ்வளவே அன்றி -இன்னும் இதுக்கு ஒரு பிரயோஜனம் உண்டு என்கிறார் -ஸ்வரூப இத்யாதியால்–

ஸ்வரூபம் ஆவது- இவனுக்கு ததீய பார தந்த்ர்யம் –தேவும் தன்னையும் என்று-
கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து-
தேவும் தன்னையும் பாடி ஆட திருத்தி என்னை கொண்டு என்-
பாவம் தனையும் பாற கைத்து எமர் எழ ஏழு பிறப்பும்-
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே-திரு வாய்மொழி -2-7-4-
ஆஸ்ரித பாரதந்தர்த்தை இறே

இவனுக்கு தானான தன்மையாக ஆழ்வார் அருளிச் செய்தது –இவை இரண்டும் இருவருக்கும் சித்திப்பது ,
புருஷ கார புரஸ் கரணத்தாலே என்கை–

—————————————

சூரணை-154–

ஒவ்பாதிகமாய்-நித்யமுமான-பாரதந்த்ர்யம் இருவருக்கும் உண்டு இறே—

கீழே ஸ்வரூபம் என்று சொன்னதை உபபாதிகிறார்-
அதாவது சேதனனுக்கு இவ் விஷயத்தில் பாரதந்த்ர்யம் ததீயத்வ பிரயுக்தம் ஆகையாலே —

ஒவ்பாதிககுமாய் – அவ் வுபாதி தான் நித்யம் ஆகையாலே ,நிருபாதிக பகவத் பாரதந்த்ர்யதோ பாதி-நித்யமுமாய் இருக்கும் —
ஈஸ்வரனுக்கு இவ் விஷயத்தில் பாரதந்த்ர்யம் ஆஸ்ரித்வ பிரயுக்தம் ஆகையாலே ஒவ்பாதிகமமாய்–
அவ் உபாதி நித்யம் ஆகையாலே அது தானும் நித்யமுமாய் இருக்கை என்கை–
இருவருக்கும் உண்டு என்னாதே- உண்டு இறே – என்றது இவ் அர்த்தத்திலே பிராமண பிரசித்தியை- தோற்று விக்கைகாக-
ஒவ்பாதிகம்-காரணத்தின் அடிப் படையில்-

———————————————–

சூரணை-155–

அநித்தியமான இருவர் பாரதந்த்ர்யமும்- குலைவது அத்தாலே —

இவ்வளவு இன்றி இன்னும் ஒரு பிரயோஜனம் உண்டு என்கிறார்-

அநித்தியமான பாரதந்த்ர்யம் ஆவது கர்ம பார தந்த்ர்யம்–
அதில் சேதனனுக்கு கர்ம பாரதந்த்ர்யம் ஆவது
அவஸ்யம் அனு போக்தவ்யங்களான சுப அசுப கர்மங்களின் வசத்தில் இழுப்புண்டு சம்சரிக்கை–
ஈஸ்வரனுக்கு கர்ம பாரதந்த்ர்யம் ஆவது –
தான் செய்த கர்மம் தான் அனுபவிக்கிறான் ஆகில் நாம் செய்வது என் என்று
இவன் செய்த கர்மத்தையே பிரதானம் ஆக்கி அதுக்கு ஈடாக நிர்வஹித்து போருகை–
இது நடப்பது -சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி-என்னும் அளவும் ஆகையாலே இத்தை அநித்தியம் என்கிறது .-
இவை புருஷ கார புரஸ் கரணத்தாலே குலைகை ஆவது –இவன் முன்னிட்டும் அளவில் அத் தலையை திருத்தியும் ,
அவன் முன்னிடும் அளவில் இத் தலையை திருத்தியும்
இரண்டு தலையும் ரஷ்ய ரஷக பாவேன சேரும் படி பண்ணுகையாலே இவை தன்னடையே நிவ்ருத்தம் ஆகை-

——————————————————-

சூரணை-156-

ஸ ஸாஷிகம் ஆகையாலே-
இப் பந்தத்தை இருவராலும் இல்லை செய்ய போகாது —

அநாதி கால ஸ்வதந்த்ரனாய் யாதானும் பற்றி நீங்கி திரிந்தவன் இன்று இறே ஆபிமுக்யம் பண்ணிற்று
பிரகிருதியோடு இருக்கையாலே துர் வாசனை மேல் இட்டு  ஆஸ்ரயண அங்கீ காரங்களாலே உத்பூதமான
இந்த ரஷ்ய ரஷக பந்தத்தை இல்லை செய்து -பழைய படியே போக பார்க்குதல்-
நிரந்குச ஸ்வதந்த்ரனாய் கர்ம அனுகுணமாக இவனை லீலையிலே அநாதி காலம்
விநியோகம் கொண்டு போந்த ஈஸ்வரன் தான் இப் பந்தத்தை இல்லை செய்து
முன்பு போலே இவனை கர்ம அனுகுணமாக நிர்வகிக்கப் பார்க்குதல் செய்யிலோ என்ன
அருளிச் செய்கிறார் -ஸ ஸாஷிகம் என்று தொடங்கி–

அதாவது இந்த ரஷக ரஷ்ய சம்பந்தம் இரண்டு தலையும் அறிந்ததாக வந்தது அன்றிக்கே -புருஷ கார
ரூப சாஷி சஹிதமாக வந்தது ஆகையாலே -இத்தை இருவராலும் அழிய மாறப் போகாது என்கை—

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்