Archive for the ‘Sri Vaishna Concepts’ Category

ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ சரமோபாய தாத்பர்யம்–

September 28, 2022

ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை அந்த வ்யாக்யானத்தை எழுதி முடிக்க, திருவாய்மொழிக்கான அவருடைய வ்யாக்யானமே
ஈடு முப்பத்தியாராயிரப்படி என்று பிரபலமாக வழங்கப்படுகிறது.
நம்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளையை, ஈயுண்ணி மாதவப் பெருமாளின் வழித் தோன்றல்களுக்கு கற்பிக்கும் பொருட்டு
அந்த வ்யாக்யானத்தை ஈயுண்ணி மாதவப் பெருமாளிடம் தருமாறு பணித்தார்.

“ஈதல்” என்ற தமிழ் சொல்லுக்கு தர்மம் என்று பொருள்.
“உண்ணுதல்” என்றால் சாப்பிடுவது.
ஈயுண்ணி என்பதன் பொருள் பிற ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு உணவளித்த பின்பே தாம் உண்பவர் என்பதாகும்,

ஈயுண்ணி மாதவப் பெருமாள் அவற்றை தம்முடைய மகனான ஈயுண்ணி பத்மநாபப் பெருமாளுக்கு உபதேசித்தார்.
ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள் அவற்றைத் தம்முடைய அன்பிற்கு பாத்திரமான சிஷ்யர் நாலூர் பிள்ளைக்கு உபதேசித்தார்.
இவ்வாறாக ஒவ்வொரு ஆசார்யரிடமிருந்து
சிஷ்யர் என்ற முறையில் இவை உபதேசிக்கப்பட்டு வந்தது.
நாலூர் பிள்ளையின் அன்பிற்கு பாத்திரமான சிஷ்யரும் மகனும் நாலூராச்சான் பிள்ளையாவார்.
நாலூராச்சான் பிள்ளை நாலூர் பிள்ளையின் திருவடித் தாமரைகளின் கீழ்மர்ந்து ஈடு முப்பத்தாறாயிரப்படியைக் கற்றார்.
நாலூராச்சன் பிள்ளைக்கு இருந்த பல சிஷ்யர்களில் திருவாய்மொழிப் பிள்ளையும் ஒருவர்.
நாலூர் பிள்ளையும் நாலூராச்சான் பிள்ளையும் தேவப் பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்யும் பொருட்டு காஞ்சிபுரம் செல்லும் பொழுது,
எம்பெருமானே நாலூராச்சான் பிள்ளையை திருவாய்மொழிப் பிள்ளைக்கு ஈடு வ்யாக்யானம் போதிக்குமாறு பணித்தார்.
திருவாய்மொழிப் பிள்ளையும் மற்றோரும் ஈடு வ்யாக்யானத்தை நாலூராச்சான் பிள்ளையிடம் பயின்று
அதனை ஈட்டுப் பெருக்கர் (ஈட்டு வியாக்கியானத்தை வளர்ப்பவர்) என்று கொண்டாடப்படும் மணவாள மாமுனிகளுக்கு கற்பித்தார்.
இவ்வாறாக ஈடு வ்யாக்யானம் மணவாள மாமுனிகளை அடையும் என்று அறிந்திருந்ததனாலேயே,
ஸ்ரீ நம்பிள்ளை அதனை ஸ்ரீ ஈயுண்ணி மாதவப் பெருமாளுக்குக் கொடுத்தார்.

சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால் மெச்சும் வியாக்கியை தான்-என்றது
ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை சந்நிதியிலே
ஸ்ரீ திருவாய் மொழி ஈடு தொடங்கி
அதன் தாத்பர்யமான ஸ்ரீ வசன பூஷண அர்த்தத்தையும்
ஸ்ரீ திரு நாராயணபுரத்தில் ஆய்
ஸ்ரீ திருவாய்மொழி யாச்சார்யர் (ஆச்சான் பிள்ளையும் )
ஸ்ரீ ஆயி சிஷ்யரான ஸ்ரீ நல்லப்ப நாயன்–இவர்களை தர்சிப்பிக்கிறது –

அதிஷ்டித சதுர் க்ராமாசார்யா தேவ பதேர் குரோ
சாஹார்த்தைர் லேபிரே யேன சர்வேச த்ராவிடாகமா-என்னக் கடவது இறே-

(தேவ பதேர் -நாலூர் ஆச்சான் பிள்ளையே தேவப் பெருமாள் )

ஈயுண்ணி மாதவப் பெருமாள் தனியன்

லோகாசார்ய பதாம்போஜ ஸம்ஸரயம் கருணாம்புதிம் |
வேதாந்த த்வய ஸம்பன்னம் பதவார்யம் அஹம்பஜே ||

ஈயுண்ணி பத்மனபாப் பெருமாள் தனியன்

மாதவாசார்ய ஸத்புத்ரம் தத்பாதகமலாச்ரிதம் |
வாத்ஸல்யாதி குணைர் யுக்தம் பத்மநாப குரும் பஜே ||

நாலூர் பிள்ளை தனியன்

சதுர்க்ராம குலோத்பூதம் த்ராவிட பிரஹ்ம வேதிநம் |
யஜ்ஞார்ய வம்சதிலகம் ஸ்ரீவராஹமஹம் பஜே ||

நாலுராச்சான் பிள்ளை தனியன்

நமோஸ்து தேவராஜாய சதுர்க்கிராம நிவாஸினே |
ராமானுஜார்ய தாஸஸ்ய ஸுதாய குணஸாலினே ||

—————-

ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ சரமோபாய தாத்பர்யம்

சரமோபாய தாத்பர்யம் யதீந்த்ர விஷயேகரோத் |

யஸ்தமார்ய வரம் வந்தே தேவராஜாஹ்வயம்குரும் ||

பகவத் ப்ராப்தி ப்ரதிபந்தகமான ஸம்ஸாரத்தில் அருசி பிறந்து பகவத் சரணாரவிந்த ப்ராப்தி ரூபமான மோக்ஷத்திலிச்சை பிறந்த வதிகாரி ,
தத் சித் யர்த்தமாக சரம பர்வமான எம்பெருமானார் அபிமானத் திலே ஒதுங்கி , தத் விஷய ப்ரபத்தி நிஷ்டையை யுடையவனாயிருக்க வேணும் .

பகவத் ப்ராப்தி ரூப மோக்ஷத்தை பெறுகைக்குடலாக வேதாந்தங்களிலே கர்மாத் யுபாய சதுஷ்டயத்தைச் சொல்லிப் போரா நிற்க ,
அத்தை விட்டு , அதில் லகுவான சரம பர்வ விஷயத்தில் ப்ரபத்தியை பேற்றுக்குடலாக அவலம்பிக்கும்படி எங்ஙனேயென்னில்;

1 ”யத்ய தாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்ததே வேதரோ ஜந: | ஸயத் ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே” என்கிற கணக்கிலே
ஞாநாதிகரான நம் பூர்வாசார்யர்கள் யாதொன்றை யநுஷ்டித்தார்கள், யாதொன்றை யதநுப்ரமாணமாக அங்கீகரித்தார்கள்,
அவையிரண்டு மிறே பின்புள்ள அஸ்மதாதிகளுக்கு க்ராஹ்யங்கள்

1 பகவத்கீதா அத்யா 3 ஶ்லோ 21 யத் யதா சரதி ஶ்ரேஷ்ட:

எல்லா ஶாஸ்த்ரங்களையும் அறிந்தவனென்றும் அநுஷ்டான ஸம்பந்நனென்றும் ப்ரஸித்தனான மனுஷ்யன்
யத்யதாசரதி — எந்தபடி யநுஷ்டிக்கிறான் ,
தத்ததேவ – அந்த அந்த படிகளையே ,
இதரோஜந: — பூர்ணஜ்ஞாநமில்லாதவனும் ,
ஆசரதி – அநுஷ்டிக்கிறான் ,
ச: — அந்த ஶ்ரேஷ்ட மநுஷ்யன் ,
யத் ப்ரமாணம் – ( இப்படி யநுஷ்டிக்கப்படுமவைகளை ) எவ்வளவாக வறுதியிட்டு ,
குருதே — அநுஷ்டிக்கிறானோ ,
தத் -– அத்தை அவ்வளவென்றே நினைத்து ,
லோக: — ஊர்ணஜ்ஞாநமில்லாத மனுஷ்யனும் ,
அநுவர்த்ததே -– அந்த ஶ்ரேஷ்டனை பின் சென்று அநுஷ்டிக்கிறான்.

2 “கர்ம ஞானஞ்ச பக்தி: ப்ரபதந மிதிச ப்ராப்ய சித்யர்த்த மேதானாலோச்யாலோச்ய ஹேதூந் புநரிஹ சுதராந் தோஷ த்ருஷ்டிம் விதாய | கர்தும் சக்தான பூர்வே யதிவர சரண த்வந்த்வ மூர்தாபி யுக்தாஸ்தத் காருண்யாபிமாநாத் ததநுச குரவோ

2 பூர்வாசார்ய ஸூக்தி ( கர்மஜ்ஞாநஞ்சேதி ) கர்மஜ்ஞாநஞ்ச பக்தி: ப்ரபதநமிதிச -– கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்திகளென்கிற ,
ஹேதூந் –- உபாய சதுஷ்டயத்தையும் ,
ப்ராப்ய -– அடைந்து , அதாவது பகவத் ப்ராப்திக்கு ஸாதநங்கள் என்று அறிந்து ,
புந: — திரும்பவும் ,
ஏதாந் -– இந்த உபாயங்களை ,
ஸித்யர்த்தம் –- பேற்றுக்குடலாமோவென்று ,
ஆலோச்யாலோச்ய –- உணர்ந்து உணர்ந்து பார்த்து ,
இஹ -– இந்த உபாயங்களில் ,
சுதராம் – மிகவும் ,
தோஷத்ருஷ்டிம் –- தோஷ தர்ஸநத்தை ,
விதாய —- செய்து( அதாவது கர்ம,ஜ்ஞாந,பக்திகளநுஷ்டிக்க வஸ்யங்களென்பதற்கு மேலே ,
இவை பர தந்த்ரமான ஸ்வரூபத்துக்கு விருத்தங்களென்கிற தோஷம் ப்ரதாநமாயிருக்கிற தென்றும் ;
ப்ரபத் யுபாயம் மஹா விஸ்வாஸ ரூபமா யிருக்கைக்கு மேலே நிரங்குசமான ஈஶ்வர ஸ்வாதந்த்ர்ய பயமிதற்கு நியதமாயிருக்கிறதென்றும் ;
( நன்றாக அறுதியிட்டு என்கை ) ,
கர்தும் – இவற்றையநுஷ்டிக்கைக்கு ,

முக்திமாப்தா மஹாப்தா: || என்று கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்திகளாகிற உபாய சதுஷ்டயத்தையும் பேற்றுக் குடலாக பற்றலாமோ
என்று உணர்ந்துணர்ந்து பார்த்த விடத்தில் ஸ்வரூப விருத்தத்வதுஸ்ஸகத்வ விஸ்வாஸபூயஸ்த்வாதி தோஷங்கள் காண்கை யாலே
இவைகளெல்லாம் அரும் தேவைகளாய் இருந்ததென்று பரித்யஜித்து எம்பெருமானார்க்கு முன்புள்ள ஆசார்யர்களும் பின்புள்ள ஆசார்யர்களும் தாங்கள் ஜ்ஞாநாதிகருமாய் ப்ரமாணிக அபக்ரேசருமா யிருக்கையாலே
பரம காருணிகராய் ப்ரபந்ந ஜந கூடஸ்தரான வெம்பெருமானாருடைய திருவடிகள் ஸம்பந்தத்தையும் திருமுடிகள் ஸம்பந்தத்தையும் பெற்றுடையராய்
எம்பெருமானாருடைய காருண்ய ப்ரவாஹ ஜநிதமான வபிமாநத்தாலே பேறு பெற்றார்களிறே

பூர்வர்களுடைய வநுஷ்டாநத்தை பிடித்து நடத்தும்போது அது ப்ரமாண புரஸ்ஸரமாகா விடில் நிரஸ்த கோடியில் அந்தர்பவிதாயோவென்னில் ;

திராதிறே , 1 விதயஶ்ச வைதிகாஸ் தவதீய கம்பீரா மனோனு சாரிண: “ என்றதிறே .

1 ஸ்தோத்ர ரத்நம் – ஶ்லோ 20 ( வ்யதயஶ்ச வைதிகா இதி ) வைதிகா:

விதயஶ்ச – இதம் குரு இதம் மாகார்ஷீ: என்று ஸ்வதந்த்ரமான வைதிக விதிகளும் ,
த்வதீய கம்பீர மனோனுசாரிண: – அநந்யப்ரயோஜநாராயாஶ்ர யித்தவர்களுடைய கம்பீரமான மநஸ்ஸை பின் செல்லா நின்றன ,
மநஸ்ஸுக்கு காம்பீர்யமாவது , ஷுத்ரமான ஐஶ்வர்யாதிகளில் கால் தாழாதே அநந்ய ப்ரயோஜநமாகை ,
“ நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும் “ என்னும்படி பகவத் விஷயத்தில் அபவகாஹியாதார்க்கிறே
வைதிகமான “ நிதித்யாஸிதவ்ய: “ – என்கிற விதி வேண்டுவது .

இதுக்கு மேலே முக்தகண்டமாக ப்ரமாண முண்டாகில் முக்யமன்றோ ? வென்னில் ; அது தானுமுண்டு ; எங்ஙனேயென்னில் ,

ஸ்ரீஶாஸ்த்ரத்திலே பெரிய பிராட்டியைக் குறித்து , ஈஶ்வரன் தன்னுடைய வவதார வைபவத்தைச் சொல்லு கிறவிடத்திலே

2 “ ஸம்யக் உக்தம் த்வயா விஷ்ணோ ஜந்மநாந்த வைபவம் | த்வதாசார்யா வவதாரத்வ ப்ரகாரம்பிமேவத ||

2 ( ஸம்யக் உக்தமிதி ) – ஹே விஷ்ணோ – ஸர்வாந்தர்யாமியாயிருக்கு மவரே ,
த்வயா – தேவரீராலே ,
தவ ஜந்மநாம் – தேவரீரதான அவதாரங்க ளினுடைய ,
வைபவம் – ப்ரபாவமானது ,
ஸம்ய குக்தம் – நன்றாக சொல்லப்பட்டது ,
த்வதாசார்யா வதாரத்வ ப்ரகாரம்பி – இனி தேவரீ ருடைய வாசார்ய ரூபமான வவதார விசேஷத்தினுடைய ப்ரகாரத்தையும் ,
மே – எனக்கு ,
வத – அருளிச் செய்யவேணும் , என்று
பிராட்டி பெருமாளை நோக்கி விண்ணப்பம் செய்தாரென்கை .

1 தர்மஜ்ஞ ஸமய: ப்ரமாணம் “ என்றும் “ மேலையார் செய்வன கள் “ என்றும் சிஷ்ட்டாசாரமே ப்ரபல ப்ரமாணமாகச் சொல்லக் காண்கையாலே , ப்ரமாண சித்தமாயிருக்கும் . இவர்கள் அநுஷ்டாந ப்ரமாணானு குணமாயல்ல

ந ஶக்தா — ஸமர்த்தர்களாகாமல் ,
மஹாப்தா: — ஜ்ஞாநாதிகராயும் ப்ரமாணிகாக்ரேசரருமாயுமிருக்கிற ,
பூர்வே குரவ: — நம் பூர்வாசார்யர்கள் ,
யதிவர சரணத்வந்த்வ மூர்தாபியுக்தாஸ்ஸந்த: — எம்பெருமானாருடைய திருவடி ஸம்பந்தத்தாலும் திருமுடி ஸம்பந்தத்தாலும் ஸமஸ்த ஶிஷ்ட ஜநபூஜ்ய ராய்க்கொண்டு ,
தத்காருண்யாபிமானாத் – அந்த வெம்பெருமானாருடைய நிர்ஹேதுக க்ருபையினாலுண்டான வபிமானத்தாலே ,
ததநுச – அந்த வாசார்யர்களை ( அதாவது தங்களை என்ற படி ) பின் சென்றவர்களோடு கூட ,
முக்திமாப்தா: — பேற்று பெற்றார்கள் .
——————–

3 த்வயாசார்யாவதாரஸ்து கிமர்தம் க்ரியதே ப்ரபோ |

க்ருதஸ்யாப்வயதாரஸ்ய பலம் வா கிமவாப்ஸ்யஸி ||

3 ( த்வயாசார்யாவதாரஸ்த்விதி ) – ஹே ப்ரபோ – ஓ ஸ்வாமீ
ஆசார்யாவதாரஸ் து – ஆசார்ய ரூப அவதாரமானது ,
( இவ் விடத்தில் து – என்கிற அவ்யம் பரத்வ , வ்யூஹ விபவாதிகளைக் காட்டிலும்
ஆசார்யாவதாரத்துக் குண்டான வைலக்ஷண்ய விசேஷத்தைக் காட்டுகிறது )
த்வயா – தேவரீராலே ,
கிமர்தம் க்ரியதே – எந்த ப்ரயோஜநத்துக்காக செய்யப் படுகிறது ,
க்ருத்ஸ்யாப் யவதாரஸ்ய – அப்படி செய்யப்பட்ட வந்த வவதார விசேஷத்துக்கு ,
கிம்வாபலம் – எந்த பலன் தான் ,
அவாப்ஸ்யஸி – அடையப் போகிறீர் .

4 இதி ப்ருஷ்டோ மஹாலக்ஷ்ம்யா பகவாந் புருஷோத்தம: |

குருரூபாவதாரஸ்ய மஹாத்ம்யம் வக்துமுத்யத: ||

4 ( இதி ப்ருஷ்ட இதி ) – பகவான் புருஷோத்தம: — ஷாட்குண்ய பரி பூர்ணனாயும் ,
நித்யஸூரி நிர்வாஹகனாயும் இருந்துள்ள எம்பெருமான் ,
மஹா லக்ஷ்ம்யா –- பெரிய பிராட்டியாராலே ,
இதி ப்ருஷ்டஸன் –- இந்த ப்ரகார மாக கேட்கப்பட்டவராய்க் கொண்டு ,
குருரூ பாவ்தாரஸ்ய –- ஆசார்ய ரூப மான அவதாரத்தினுடைய ,
வைபவம் –- வைபவத்தை ,
வக்தும் – சொல்லுகைக்கு ,
உத்யத: — ( ஆபூதிதிஶேஷத: ) யத்நித்தவரானார் .
மஹாத்ம்யம் வக்துமுத்யத

————–

ஸ்ரீபகவாந் | 1 ஸாது ப்ருஷ்ட்டஸ் ்வயா தேவீ ஸாராம்ஸார வித்தமே | ஸ்ருணு வக்ஷயே மதாசார்ய , ஜந்மநோ வைபவம் தவ ||

1 ( ஸாது ப்ருஷ்ட்ட இதி ) சார வித்தமே -– சாரஜ்ஞர்களில் ஶ்ரேஷ்ட்டை யான ,
ஹே தேவி -– ஸர்வ ஸமாஶ்ரயணீயையானவளே ,
ஸாது — ஶ்லாக்யமாய் இருந்துள்ள ,
ஸாராம்ஸ: — ஸார பூதமான விஷயம்,
ப்ருஷ்ட: — கேட்கப் பட்டது ,
மதாசார்ய ஜந்மந: — என்னால் செய்யப்பட்ட தான ஆசார்யாவதாரத்தினுடைய ,
வைபவம் -– மஹாத்ம்ய விஶேஷத்தை,
தவ – உனக்கு ,
வக்ஷ்யே -– சொல்லுகிறேன் ,
ஶ்ருணு – கேளாய் , என்று பெருமாள் அருளிச்செய்தாரென்கை .

2 ஸம்ஸார ஸாகரே மக்நாந், சேதநாநுஜ்ஜிஹீர்ஷயா | ஶ்ருதி ஸ்ம்ருதி புராணானீ சேதிஹாஸா: ப்ரதர்ஸிதா: | தேந மார்கேண கே நாபி முக்திர் லப்தா ந பூதலே ||

2 ( ஸம்ஸார ஸாகர இதி ) ஸம்ஸார ஸாகரே –- ஸம்ஸாரமாகிற பெருங் கடலிலே ,
மக்நாந் –- முழுகிக் கிடக்கிற ,
சேதநாந் –– பத்த சேதநரை ,
உஜ்ஜி ஹீர்ஷயா -– கரையேத்த வேணுமென்கிற விச்சையினாலே ,
ஶ்ருதி ஸ்ம்ருதி புராணாநி இதிஹாஸஸ்ச –- அபௌருஷேயமாய் நித்ய நிர்தோஷமாய் , ஸ்வத: ப்ரமாணங்களான ருகாதி வேதங்களும்
ததுபப்ருஹ்மணங்களான ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களும் ,
ப்ரதர்ஶிதா: — விஸதமாக வெளியிடப்பட்டது
( இத்தனையும் செய்த போதிலும் )
தேந மார்கேண – கீழ்ச் சொன்ன ஶ்ருத்யாதி மார்க்கத்தாலே
பூதலே -– லீலா விபூதியில் ,
கேநாபி – ஒருத்தனாலேயும் ,
முக்தி: — பகவத் ப்ராப்தி ரூப மோக்ஷமானது ,
ந லப்தா – அடையப் படவில்லை .

3 ததோ விபவரூபேண ஜந்மாநி ஸுபஹுநிமே || ஜாதாநிதேவி மோக்ஷஆர்த்த கோபி ந பவத் ||

3 ( ததோ விபவரூபேணேதி ) – இப்படி மத் ஆஜ்ஞா ரூபங்களான ஶ்ருதி ஸ்ம்ருத்யாதிகளால் நாம் நினைத்தபடி நடவாத பின்பு ,
விபவ ரூபேண – ராம க்ருஷ்ணாதி ரூபத்தாலே ,
ஸுபஹுநி -– அநேகங்களான ,
ஜந்மாநி – அவதாரங்களானவை ,
மே -– சேதநோஜ்ஜீவநார்தியான எனக்கு ,
ஜாதாநி –- என்னுடைய இச்சையினாலே உண்டாய்த்தன , ஹே தேவி -– சேதநோஜ் ஜீவநத்தில் எனக்கு முற்பாடளாய் ஸந்தோஷிக்கும் அவளே ,
தத்ராபி -– அப்படி யவதாரங்கள் செய்தவிடத்திலும் ,
( “ அவஜாநந்தி மாம் மூடாம் மாநுஷீம் தநுமாஸ்ரிதம் “ என்கிறபடியே , ஸஜாதீயத்வேந ஸுலபனாய் அவதரித்த
விவ்வளவே ஹேதுவாக சேதநர்கள் நம்மை யவமதி செய்கையாலே ) ,
கோபி — ஒருத்தனாவது , மோக்ஷஆர்த்தி — மோக்ஷஆபேக்ஷஐ யுடையவனாக , ந பவது — ஆகவில்லை .

————-

1 வேதாந்தே விவிதோபாய பக்த்யாத்யா விஹிதா மயா |

தேஷ்வப்யக்தாஸ்யாத் மாநஸ்ஸம்ஸரந்தி புந:புந: ||

1 ( வேதாந்தே விவிதோபாய இதி ) “ படாதன பட்டு “ என்கிறபடியே நாம் , எவ்வளவு பட்டது மன்னிக்கே ) ,
மயா — என்னாலே ,
வேதாந்தே — ப்ரஹ்ம ப்ரதிபாதந பரமான வேதாந்த ஶாஸ்த்ரங்களிலே ,
பக்த்யாத்யா: — பக்தி யோகம் முதலான ,
விவிதோபாயா: — அநேக விதமான உபாயங்கள் ,
விஹிதா: — விதிக்கப்பட்டவை ,
( இப்படி விதித்த விடத்திலும் ) ,
ஆத்மாந: — பத்த சேதநர்கள் ,
தேஷ்வபி — அந்த பக்த்யாத யுபாயங்களை யனுஷ்டிக்கும் விஷயத்திலும் ,
அஶக்தாஸ் ஸந்த: — ஶக்தி யில்லாதவர்களாய்க் கொண்டு ,
புந:புந: — அடிக்கடி ,
ஸம் ஸரந்தி — ஜன்ம மரணாதி க்லேஶ பாஹிகளாய்க் கொண்டு திரிகிறார்கள் .

2 ஏவம் பஹுவிதோபாயேஷ் வநிஷ்பந்ந பலேஷ் வஹம் |
ஸதாசார்ய ஸ்வரூபேண ஜநித்வா ஸர்வ சேதநாந் |
வ்யூஹ க்ராஹம் க்ருஹீத்வைவ கமிஷ்யா மீத்வ சிந்தயம் ||

2 ( ஏவம் பஹுவிதோபாயேஷ்விதி ) ஏவம் — இந்த ப்ரகாரமாக ,
பஹுவிதோபாயேஷு — சேதநோஜ்ஜீவனார்த்தமாக நாம் செய்த வுபாயங்க ளெல்லாம் ,
அநிஷ்பந்ந பலேஷுஸத்ஸு — நிஷ்பலங்களாய்ச் சென்றவளவில் ,
அஹம் — ஸர்வஜ்ஞனான நான் ,
ஸதாசார்ய ஸ்வரூபேண — ஜ்ஞாநமநுஷ்டாநமிவை நன்றாகவே யுடையனான வாசார்யனாய் ,
ஜநித்வா — அவதரித்து ,
ஸர்வ சேதநாந் — எல்லா சேதநர்க ளையும் ,
வ்யூஹ க்ராஹம் க்ருஹீத்வைவ — வாரிப் பிடியாக பிடித்துக் கொண்டே ,
கமிஷ்யாமீதி — நலமந்தமில்லதோர் நாடு புகுவோமென்று ,
அசிந்தயம் — எண்ணினேன் .

3 ஏவம் சந்சிந்த்ய பத்மாக்ஷஇ குருரூபேணவைபுரா |

அவதீர்ணோ ஜநாந் காம்ஸ்சித்ஜநாந் பவாதப்யுத்தரம் மே ||

3 ( ஏவம் ஸந்சிந்த்யேதி ) ஏ பத்மாஷீ — தாமரைப் பூப்போன்ற திருக் கண்களை யுடையவளாய் ,
ரமே — நமக்கு ஆனந்தவஹையாயும் ஸ்வயமாநம் நிர்பரையுமாயிருக்குமவளே ,
ஏவம் ஸந்சிந்த்ய — இந்த ப்ரகாரமாக வெண்ணி ,
புரா — முற்காலத்திலே ,
குரு ரூபேண — தத்தாத்ரேயாதி ரூபியாய் ,
அவதீர்ண: — அவதரித்தவனாய்க் கொண்டு ,
காம்ஸசித்ஜநாந் — சில பத்த சேதநர்கள் ,
பவாத் — ஜன்ம மரணாதி ரூபமான ஸம்ஸாரத்தில் நின்றும்
அப்யுத்தரம் — கரை யேத்தினேன் .

4 இத: பரம்சாபி கரிஷ்யதே | மயா யதா புராதேவி ஜநி: க்ருதா ததா| குரு ஸ்வரூபேண நிமக்நசேதநாந் ஸமுத்தரிஷ்யாமி நிஜப்ரபாவத: 

4 ( இத:பரமிதி ) ஹே தேவி — நமக்கு அபிமதமாயும் அநுரூபமாயும் இருந்துள்ள விக்ரஹ குணங்களும் ஆத்ம குணங்களுமுடையவளே ,
புரா — முன்பு ,
மயா — என்னாலே ,
ஜநி: — ஆசார்ய ரூபாவதாரமானது ,
யதா க்ருதா — எவ்விதமாக செய்யப் பட்டதோ ,
ததா — அவ் விதமாகவே ,
இத:பரஞ்சாபி — இனிமேலும் ,
கரிஷ்யதே — செய்யப்படப் போகிறது ,
குரு ஸ்வரூபேண — அப்படி செய்யப்பட்ட வந்த வவதாரத்தில் நாம் ஆசார்ய ரூபியாய்க் கொண்டு ,
நிமக்ந சேதநாந் — ஸம்ஸார ஸாகரத்தில் முழுகிக் கிடக்கிற பத்த சேதநர்களை ,
நிஜ ப்ரபாவத: — ஆசார் யாபிமான ரூபமான நம்முடைய ப்ரபாவத் தாலே ,
ஸமுத்தரிஷ்யாமி — “ ந ச புநராவர்த்ததே “ என்னும்படி கரை யேத்தப் போகிறேன் .

——————-

1க்ஷ்மீ: ||

1 ( லக்ஷ்மீ: )( இப்படி எம்பெருமானார் அருளிச்செய்த வார்த்தை களைக் கேட்டு ) பிராட்டி மீளவும் சொல்லுகிறார் .

2 கஸ்மிந் குலே பவாந் விஷ்ணோ கரிஷ்யதி. குரோர்ஜநிம் | கஸ்மிந் யுகேவதீர்ணஸ்த்வம் பவிஷ்யஸி வத

ப்ரபோ: ||

2 ( கஸ்மிந் குல இதி ) ஹே விஷ்ணோ — ஸர்வ வ்யாபியான ஸ்வாமீ ,
பவாந் — தேவரீர் ,
குரோர் ஜநிம் — ஆசார்ய ரூபமான விலக்ஷண அவதாரத்தை
கஸ்மிந் குலே — எந்த திரு வம்ஸத்திலே ,
கரிஷ்யதி — செய்யப் போகிறது ,
ஹே ப்ரபோ — ஸர்வ நியந்தாவான ஓ ஸ்வாமீ ,
த்வம் — தேவரீர் ,
கஸ்மிந் யுகே — எந்த யுகத்திலே தான் ,
அவதீர்ணோ பவிஷ்யஸி -அவதரிக்கப் போகிறீர் ?
வத — ( இவ் வர்த்தத்தை “ தான் யஹம் வேத ஸர்வாணி “ என்கிறபடியே , தேவரீர் தானே யறிந்திருப்பதால் )
தேவரீரே அருளிச் செய்ய வேணுமென்று பிராட்டி விண்ணப்பம் செய்தாரென்கை .

3 ஶ்ரீபகவான் || 4 அஹமாசார்ய ரூபேண பவிஷ்யாமி யுகே யுகே ||

3 ( ஶ்ரீபகவான் ) இப்படி விண்ணப்பம் செய்த பிராட்டியை நோக்கி எம்பெருமான் அருளிச் செய்கிறார் .

4 தத்ராபி யோகிநாம் பும்ஸாம் குலே மஹதி ஜந்ம மே ||

( அஹமிதி ) ஹே தேவி — நிரவதிக தேஜஸ்ஸை யுடையவளான பிராட்டி
( இந்த பதம் மேலில் ஶ்லோகத்திலிருந்து இவ் விடத்திற்கு ஆகர்ஷிக்கப் படுகிறது ) ,
அஹம் — ஸர்வ ஜ்ஞனான நான் ,
ஆசார்ய ரூபேண — ஆசார்ய ரூபியாய்க் கொண்டு ,
யுகே யுகே — யுகங்கள் தோறும் ,
பவிஷ்யாமி — அவதரிக்கப் போகிறேன் ,
தத்ராபி — அப்படி யவதரிக்கு மிடத்திலும் ,
யோகிநாம் பும்ஸாம் — பரம யோகிகளாயிருக்கிற மஹா புருஷர்க ளுடைய ,
மஹதி — ஸர்வ ஶ்லாக்யமாயிருந்துள்ள ,
குலே — திருவம்ஸத்திலே ,
மே — எனக்கு ,
ஜந்ம — அவதாரமானது ,
பவிஷ்யதி — உண்டாகப் போகிறது

1 விஶிஷ்யமே தேவிகலௌ யுகே குரோர்ஜநிர்பவித்ரீ கலு ஸத்குலே ரமே | த்ரிதண்ட காஷாய படோர்த்வ புண்ட்ர பாக் பவிஷ் யதி ஸா ஹி புஜிஷ்ய பூயஸீ ||

1 ( விஶிஷ்ய மே தேவீதி )
ஹே ரமே தேவி — நிரதிஶய ஆநந்த யுக்தையாய்க் கொண்டு நமக்கு பட்ட மஹிஷியாயிருக்குமவளே ,
கலௌ யுகேது — கலி யுகத்திலேயோ வென்றால் ,
( இவ் விடத்தில் பூர்வத்தில் காட்டிலும் விசேஷம் சொல்ல வேண்டுகையாலே ,
து — என்கிற அவ்யயம் அத்யாஹரிக்கப்பட்டது )
ஸத் குலே — ஒரு விலக்ஷணமான திரு வம்ஶத்திலே
மே — எனக்கு ,
விஶிஷ்ய — பூர்வ அவதாரங்களைக் காட்டில் விலக்ஷணமாக ,
குரோர்ஜநி: — ஆசார்ய ரூபாவதாரமானது ,
பவித்ரீகலு — உண்டாகப் போகிறது

( இவ்விடத்தில் கலு என்கிற அவ்யயமிருப்பதால் இவ்வர்த்தம் ப்ரமாண ப்ரதிபந்நமென்று சொல்லுகிறது ) , ஸா — அந்த அவதாரமானது

( “ அடையார் கமலத்தலர் மகள் கேள்வன் “ என்கிற பாசுரத்தின் படியே ,
மனோ புத்தி , ஞாநங்களுக்கும் , ஸாத்விக தாமஸ ரூபத் விவிதாஹங்காரங்களுக்கும் அபிமாநிகரான பஞ்சாயுதாழ்வார் ,
தம் நினைவைப் பின் சென்று தாமதிகரித்த கார்யத்துக்கு ஸஹகரிக்கையாலே ) ,
புஜிஷ்ய பூயஸீ ஸதி — அபரிமிதமான சிஷ்ய ஸம்பத்தை யுடைத்தானதாய்க் கொண்டு ,
த்ரிதண்ட காஷாய படோர்த்வ புண்ட்ர பாக் — “ காஷாயசோபி “என்கிற ஶ்லோகத்தின்படியே ,
த்ரிதண்டமென்ன , காஷாய வஸ்த்ர மென்ன , த்வாதச ஊர்த்வ புண்ட்ரங்களென்ன இவைகளையுடையது ,
பவிஷ்யதி — ஆகக் கடவது .
இது சத்ரந்த பதமா இவ்வர்த்தம் காட்டுகிறது ,
இவ்விடத்தில் , ஹி என்கிற அந்வயம் இருப்பதால் , இவ் வர்த்தத்தினு டைய ப்ரஸித்தி சொல்லப்படுகிறது .

2 ஸர்வோபாய தரித்ராணாம் சேதநாநாம் வராநநே | மமாபிமாநாத் ஸர்வேஷாம் முக்தி: குருஸரீரிண:

2 ( ஸர்வோபாய தரித்ராணாமிதி ) ஹே வராநநே ஸர்வோத்க்ருஷ்டமான திருமுக மண்டலத்தை உடைய பிராட்டி ,
ஸர்வோபாய தரித்ராணாம் — கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்திகளாகிற உபாயங்களென்கிற கைமுதலற்றவராயிருக்கிற ,
ஸர்வேஷாம் சேதநாநாம் — ஶ்ரீ வசநபூஷணத்திலருளிச் செய்த படியே , அஜ்ஞரும் ஞாநாதிகரும் பக்தி விவசருமான எல்லா சேதநர்களுக் கும் ,
( இவ்விடத்தில் பக்தி விவசரென்பது , ஆசார்ய ப்ரேமாதிஸயத்தாலே ஸிதில கரணராய்
ஆந்ரு ஶம்ஸத்தாலே பரார்த்தமாகவாவது , ஒன்றையும் அடவு படவநுஷ்டிக்க க்ஷமரல்லாதவரை ) ,
குரு ஸரீரிண: — பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து என்கிறபடியே , ஆசார்யரூபியாய் இருக்கிற,
மம — என்னுடைய ,
அபிமாநாத் — அபிமாநத்தாலே ,
முக்தி: — மோக்ஷ மானது ,
( பவிஷ்யதி ந ஶம்ஶய: ) நிஶ் ஶம்ஶயமாக உண்டாகக் கடவது
( இந்த பதங்கள் , மேல் சொல்லப்போகிற
மத்க்ருதோ யோபிமாநஸ் ஸ்யாத் , என்கிற ஶ்லோகத்திலிருந்து
ஆகர்ஷிக்கப்படுகிறது . )

1 மத்பக்தாஜ்ஞாந பூர்ணாயே பவிஷ்யந்தி கலௌ யுகே |
த்ரிதண்டிந அபிமாநாந் மே தே ஸர்வே குருரூபிண: |
முக்தி பாஜோ பவிஷ்யந்தி ஸத்யே நாஹம் ப்ரவீமிதே ||

1 ( மத் பக்தா இதி ) கலௌ யுகே — கலியும் கெடும் என்னும்படியான பெருமை பெற்று வந்த கலியுகத்திலேயே — யாதொருத்தர் ,
ஜ்ஞாந பூர்ணாஸ்ஸந்த — அர்த்த பஞ்சக ஜ்ஞாந பூர்த்தியுடையவர்களாய்க் கொண்டு,
( ஜ்ஞாநத்துக்கு பூர்த்தியாவது , “ எல்லாம் வகுத்த விடமே என்றிருக்கக் கடவன் “ என்கிற
ஸ்ரீ ஸூக்திபடியே யெல்லாமாசார்ய விஷயமாக வறுதியிடுகை ) ,
மத் பக்தா பவிஷ்யந்தி — ஆசார்யரூபியான வென்னிடத்தில் நிரதிஶய பக்தி யுடையவர்களாகிறார்களோ ,
தே ஸர்வே — அப்படிப்பட்டவர்களெல்லாரும்,
த்ரிதண்டிந: — த்ரிதண்டதாரியாயும் ,
குரு ரூபிண: — ஆசார்ய ரூபியாயுமிருக்கிற ,
மே — என்னுடைய ,
அபிமாநாத் — அபிமாநத்தாலே ,
முக்திபாஜோ பவிஷ்யந்தி — பேற்று பெற்றவர்களாகப் போகிறார்கள்
( இவ்வர்த்தத்தை ) ,
அஹம் —நான் ,
தே — உனக்கு ,
ஸத்யேந — ஸபத பூர்வமாக ,
ப்ரவீமி — சொல்லுகிறேன் .

2 மத் க்ருதோ யோபிமாநஸ்யாதாசார்யத்வே ஸுபாநநே |

யேவ முக்திதோ தேவி பவிஷ்யதி ந ஶம்ஶய: ||

2 ( மத்க்ருதோ யோபிமாநஸ்ஸ்யாத் இதி ) ஹே ஸுபாநநே — ஸர்வருக்கும் மங்களாவஹமான திருமுக மண்டலத்தை யுடையவர்களாயும் ,
தேவி — நம்முடைய விபூத்யைஶ்வர்யத்துக்கு ஸஹ தர்மசாரிணியாயுமிருக்கும் பிராட்டி ,
ஆசார்யத்வே — ஆசார்ய கார்யமான வுபதேச விஷயத்திலே
மத்க்ருத இதி — ( பின்புள்ளார் உபதேசத்தாலும் , அது க்ருபா மாத்ர ப்ரஸந்ந ரான ) நம்மால்
செய்யப்பட்டதென்று நாம் நினைத்திருக்கையாகிற ,
யோபிமாநஸ் ஸ்யாத் — யாதோரபிமாந விசேஷமுண்டோ ,
ஸயேவ — அதுவே தான் ,
முக்தி த: — ( உபதேசம் செய்யுமவர்களுடைய ஜ்ஞாநாநுஷ் டான பூர்த்தியைப் பாராமல் ) மோக் ஷப்ரதமாக ,
பவிஷ்யதி — ஆகப் போகிறது ,
ந ஶம்ஶய: — இது விஷயத்தில் ஸந்தேஹமில்லை .

3 குரு ரூபஸ்ய மே நாம்நா ஸமயோ விஜயீ பவேத் ||

3 ( குரு ரூபஸ்யேதி ) ஸமய: — ( அப்படிப்பட்ட வாசார்ய ரூபாவதாரத்தில் நம்மால் உத்தரிக்கப்பட்ட ) விஶிஷ்டாத்வைத ஸித்தாந்தமானது ,
குரு ரூபஸ்ய — ஆசார்ய ரூபியாயிருக்கிற ,
மே — என்னுடைய ,
நாம்நா — திரு நாமத்தாலே ,
விஜயீ பவேத் — “ இடங்கொள் ஸமயத்தையெல்லா மெடுத்துக் களைவன போலே நடந்தும் , பரந்தும் , குனித்தும் நாடகம் செய்கின்றனவே “ என்கிறபடியே
ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வாவஸ்தை களிலும் ஸர்வோத்க்ருஷ்டமாக , அபிவ்ருத்தி யடையக் கடவது ;
இவ் விடத்தில் என்னுடைய திரு நாமத்தாலே யென்னது ,
இராமாநுஜ , என்கிற திருநாமத்தாலே யென்றாய் , இத்தால் , இராமாநுஜ ஸித்தாந்தம் -( எம்பெருமானார் தரிசநம் ) என்று ஜய ஶீலமாகக் கடவதென்கை .

————-

1 மத்காலாதநு பத்மாக்ஷஈ ஸமயோ லோபமேஷ்யதி ||

1 ( மத்காலாதந் விதி ) ஹே பத்மாஷீ — தாமரை போன்ற திருக் கண் அழகை யுடைய பிராட்டி ,
ஸமய: — அப்படி வ்ருத்தி யடைந்து வருகிற பரம வைதிக ஸித்தாந்தமானது ,
மத்காலாதநு — நம்முடையதான வந்த வாசார்யாவதாரத்துக்குப் பின்பு ,
( இவ்விடத்தில் “ பூத்வா பூயோ வர வர முநிர்போகிநாம் ஸார்வபௌம: “ என்கிற வபியுக்தோக்திப்படியே ,
யதிவர புநரவதாரமான பெரிய ஜீயர் காலத்துக்கும் பின்பு , என்று கொள்ள வேணும்)லோபமேஷ்யதி — ஸங்கோசத்தை யடையப் போகிறது .

2 குரு ரூபஸ்ய மே ஶக்திம் தத்ரதத்ர நிதாயவை |

ஸமயம் ஸங்க்ரஹீஷ்யாமி நாதிலுப்தோ யதா பவேத் ||

2 ( குருரூபஸ்ய மே ஶக்தி மிதி ) — ( இவ்வர்த்தத்தை நாம் முன்னமே யறிந்து ) குருரூபஸ்ய — ஆசார்ய ரூபியாயிருக்கிற ,
மே — நம்முடையே ,
ஶக்திம் — திவ்ய ஶக்தியை ,
தத்ர தத்ர — ( நமக்கு வுத்தேஶ்யமாயிருக்கிற ) அந்த அந்த ஸ்தலங்களிலே ,
நிதாய — அர்ச்சா ரூபமாக ப்ரதிஷ்டிப்பித்து ,
ஸமயம் — லோபிக்கப்போகிற ஸித்தாந்தத்தை ,
யதா — எந்த ப்ரகாரமாக ,
நாதிலுப்தோ பவேத் — மிகவும் லோபத்தை யடையாமலிருக்குமோ ,
ததா — அந்த ப்ரகாரமாக ,
ஸங்க்ரஹீஷ்யாமி — சேரப் பிடிக்கப் போகிறோம் .

3 மமாசார்யாவதாரேது ஏஷாம் பக்திர்பவிஷ்யதி | தேஷாமேவ பவேந் முக்திர் நாந்யேஷாம் ஸுலபா பவேத் ||

3 ( மமாசார்யாவதாரேத் இதி ) யேஷாம்து — யவர்களுக்கானால் ,
மம — என்னுடையதான ,
ஆசார்யாவதாரே — ஆசார்ய ரூபமான வவதார விசேஷத்திலே ,
பக்தி: — ஸ்நேஹ பூர்வகமாய் , இடைவிடாத நினைவு ,
பவிஷ்யதி — உண்டாகக் கடவதோ ,
தேஷாமேவ — அவர்களுக்குத்தானே ,
முக்தி: — பகவத்ப்ராப்தியாவது ,
ஸுலபா — சுகமாக லபிக்குமது ,
பவேத் — ஆகக் கடவது ,
அந்யேஷாம் — அந்த வாசார்ய பக்தி யில்லாதவர்களுக்கு ,
ஸுலபா ந பவேத் — சுலபமாக மாட்டாது .

1 அஸ்மிந்நர்தேஹி விஸ்வாஸஸ்ர்வேஷாம் ந ஜநிஷ்யதி |

மத்கடாக்ஷஓ பவேத்யஸ்மிந் மைய்யேவ ப்ரவணோஹிய: | தஸ்ய தஸ்ய ஹ்ருதிஸ்தோயம் பவிஷ்யதி ந ஶம்ஸய: ||

1 ( அஸ்மிந்நர்த இதி ) அஸ்மிந் அர்த்தே — “ ஆசார்யாபிமாநமே வுத்தாரகம் “ என்னுமிவ்வர்த்தத்திலே ,
விஶ்வாஸ: — இது தான் பரமார்த்தம் என்கிற நினைவு ,
ஸர்வேஷாம் — எல்லாருக்கும் ,
ந ஜநிஷ்யதி: — உண்டாகப்போகிறதில்லை என்பது நிச்சயம் ;
( ஆனால் பின்னை யுஜ்ஜீவிக்கும் விறகேதென்னில் )
யஸமிந் — எந்த சேதநந் விஷயத்திலே ,
மத் கடாக்ஷ: — ஆசார்ய ரூபியாயிருக்கிற வென்னுடைய கடாக்ஷமானது ,
பவேத் — உண்டாகக் கடவதோ ,
ய: — எந்த சேதநன் தான் ,
மய்யேவ — என்னிடத்தலேயே,
ப்ரவண: — நெஞ்சிரக்கமுடையனாயிருப்பனோ ,
தஸ்ய தஸ்ய — அந்த வந்த வதிகாரிக்கு ,
ஹ்ருதிஸ்த: — நெஞ்சில் நிலை நின்றதாக ,
அயம் -– இந்த பாவ விசேஷமானது
( அதாவது “ ஆசார்யாபிமாநமே வுத்தாரகம் “ என்கிற நினைவென்கை ) ,
பவிஷ்யதி -– உண்டாகப்போகிறது,
ந ஶம்ஶய: — இவ்வர்த்தத்தில் ஶம்ஶயமில்லை ,
ஹி – இவ்வர்த்தம் ஸுப்ரசித்தம் .

என்றிப்படி ப்ரபல ப்ரமாணங்களை எம்பெருமான் தானே யருளிச்செய்து வைக்கையாலே ,
முக்த கண்டமாக முக்ய ப்ரமாணங்களும் இவ்வர்த் தத்தில் குறைவரக் காண்கின்றன .
இவை யெல்லாவற்றையும் முன் கொண்டு , இந்த ப்ரமாண ப்ரதிபாத்யமான வர்த்தங்களைத் தெளிய வறிந்து ,
நம்மாசார்யக ளனைவரும் தந்நிஷ்டராய் ,
தங்களைப் பற்றினார்க்கும் , இத்தையே யோக்யதாநுகுணமாக உபதேசித்துப் போந்தார்கள் .
இப்படி ஆசார்யாபிமாநமே உத்தாரகமென்றும் ,
த்ரிதண்டதாரியா யாசார்ய ரூபேண தானே அவதரிப்பனென்றும் , ஈஶ்வரனருளிச்செய்கையாலே
மற்றுமவனருளிச்செய்த வர்த்தங்க ளெல்லாம் எம்பெருமானாரிடத்திலே யாயிற்று நிலை நின்றிருப்பது ;
ஆகையால் ஆசார்யத்வ பூர்த்தி யுள்ளதும் அபவரிடத்திலேயேயிறே ,
அவர் அபிமானமே நமக்கெல்லா முத்தாரகமென்று. ஶம்ஶய விபர்யமற நம் பூர்வாசார்யர்களும் அறுதியிட்டார்களிறே ;
ஆகையாலே நம் பூர்வாசார்யார்களநுஷ்டாநமே நமக்கெல்லாம் ப்ரமாணமென்பது
“ தர்மஜ்ஞ ஸமய “ – ஸமயமென்னும் ப்ரபல ப்ரமாணப்ரதிபந்நமென் றும் , சொல்லிற்றாயிற்று .

—————-

இனி சரம பர்வமான எம் பெருமானார் அபிமாநத்திலே ஓதுங்கி
“ தேவுமற்றறியேன் “ என்னுமதிகாரிக்கு , பக்தி ப்ரபத்திகளிரண்டும் பயாவஹமாயிருக்கும் . எங்ஙனேயென்னில் ;
பக்தி தான் ஸ்வ யத்ந ஸாத்யமாகையாலும் , பகவத் பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு ஸ்வ ப்ர வ்ருத்தி விரோதியாகையாலும் ,
ஸ்வ ஸ்வாதந்த்ரிய ரூபமான வஹங்காரத்தை விளைவித்து பாரதந்த்ரிய ஸ்வரூபமான வாத்ம சத்தையை யழிக்குமென்று பயம் பிறக்குமிறே ;
பாரதந்த்ரிய ஸ்வரூபத்துக்கு அனு குணமாய் பகவத் விஷய விஸ்வாச ரூபமான ப்ரபத்யுபாயமும்
1 “ பவமோக்ஷணயோஸ்த்வயைவ ஜந்து: க்ரியதே ரங்கநிதே “ என்கிறபடியே
பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாய் நிரங்குச ஸ்வதந்த்ரனான வெம்பெருமான் தன்னுடைய ஸ்வாதந்த்ரியத்தாலே
மீளவும் ஸம்ஸரிப்பிக்கில் செய்வதென்னென்று பயப்படப்பண்ணும் .
இப்படி ஸ்வ ப்ரவ்ருத்தி ஸாத்யமான பக்த் யுபாயமும் , ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஸாத்யமான ப்ரபத்யுபாயமும் , பய ஜநகமாகையாலே
சரம பர்வநிஷ்டனுக்கு நெஞ்சில் தங்காது ;

1 ( பவமோக்ஷணயோஸ்த்வயைவ ஜந்து: க்ரியதே ரங்கநிதே ) ஹே ரங்க நிதே -– “ நிதயேர்த்திநாம் “ என்னுமாப் போலே
அர்த்திகளுக்கு நிதியாய்க் கொண்டு கோயிலிலே கண்வளர்ந்திருக்குமவரே ,
ஜந்து: — சேதநநாநவன்,
த்வயைவ –- உன்னாலே தான் ,
பவ மோக்ஷணயோ: — பந்த மோக்ஷங்க ளிரண்டுக்கும் விஷயமாக ,
க்ரியதே -– செய்யப்படுகிறான் ;
“ இல்லவல் லருள் நல்வினைகள் ” என்னும் மாசார்ய ஹ்ருதய ஸ்ரீஸூக்திப் படியே புண்ய பாப ரூப கர்மங்களடியாக ஸம்ஸரிப்பித்தும் ;
இப்படிப்பட்ட விந்த சேதநர்களுடைய துக்கதர்ஶந மாத்ரத்தாலே நிர் ஹேதுகமாக கடாஷித்து நிரதிசய ஆனந்த ரூப
ஸ்வ ப்ராப்தி பர்யந்தமாக விவர்களை யுஜ்ஜீவிப்பித்தும் போருகிற வீஶ்வரனுடைய செயல்களைக் கண்டால் ,
இத்தனையுமவனே செய்தமை , இவனுக்கு விசதமாக ப்ரகாசிக்குமென்னதாயிற்று ;
இதற்கு மேல் சொல்ல வேண்டுமவையாய் வருகிற வைஷம்ய நைர்க்ருண்ய தோஷ பரிஹாரங்கள் ஸ்ரீபாஷ்யாதிகளிலே கண்டு கொள்வது .

ஆகையாலிறே , இவ் வதிகாரிக்கு பக்தி ப்ரபத்திக ளுபாயமன்னென்றும் ,
எம்பெருமானாருடைய வபிமாநமே யுத்தாரகமென்றும் ,
நம் பூர்வாசார்யர்க ளறுதியிட்டதும் . (ப்ரயாண காலே ) இத்யாதி , —
அதாவது பக்தி ப்ரபத்திகள் உபாயமல்லாமையாலே , நிர் ஹேதுகமாக கடாஷித்து பவ்யனாக்கி கொண்டு போறும்
பரமகாருணிகராய் ஸதாசார்யரான வெம்பெருமானார் , இவன் நம்முடையவனென்று அபிமாநித்திருக்கும் அந்தவபிமாநமே ,
இவனுக்கு ஸம்சாரோத்தாரக மென்றபடி
ஆசார்யாபிமாநமே உத்தாரகமென்று , ஸ்தோத்ரத்தின் முடிவிலே பரமாசார்யரான ஆளவந்தாரும் அருளிச் செய்தார் இறே .

இனி இந்த வாசார்யாபிமாநந்தான் ஸ்வேதரோபாயங்களுக்கு அங்கமோ ! ஸ்வதந்த்ரோபாயமோ ! வென்னில் ,
உபயமுமாயிருக் கும் ; எங்ஙனேயென்னில் ,
மஹா விஸ்வாச ரூபையான ப்ரபத்தியானது , கர்ம ஜ்ஞாந பக்திகளாகிற உபாயாந்தரங்களுக்கு விச்சேதா பாதக
பாபஹரத்வேந தத்வர்த்தகமான வங்கமுமாய் ,
1 “ ஸாத்ய பக்திஸ்து ஸாஹம்த்ரி ப்ராரப்தஸ்யாபி பூயஸீ “ என்கிறபடியே ,
1 ப்ரபந்ந பாரிஜாதே –- பலோதய பத்ததௌ — ஶ்லோ 178
( ஸாத்ய பக்திஸ்து ஸாஹம்த்ரீ ப்ராரப்தஸ்யாபி பூயஸீ ) – இதற்கு பூர்வார்தம் ,

“ உபாய பக்தி: ப்ராரப்த வ்யதிரிக்தாக நாஸிநி “ என்று . இவ்விடத்தில்
பக்தியென்கிறது பற்றின விஷயந்தன்னில் அவ்யபிசாரிணியான சேவையை .
இதுதான் , உபாய விஷயத்திலாம்போது தந்நிஷ்டா விஶேஷத்தைச் சொல்லுகிறது ;
உபாயபக்தி: — ஸாங்கமான பக்த்யுபாயத்தில் அவ்யபி சாரிணியான நிஷ்டையானது ,
ப்ராரப்த வ்யதிரிக்தாஹ நாஸினீ – ப்ராரப்த கர்ம வ்யதிரிக்தங்களான பூர்வோத்தராகங்களை நஸிப்பித்துவிடும்;
பூயஸீ -– பாமரு மூவுலகத்தில் படியான பரமார்த்தரிடத்தி லதிசயித்திருக்கிற ,
ஸா -– ஸாத்ய பக்திஸ்து –
“ தஸ்மாந்யாஸமேஷாந் “ என்று
வேதாந்தங் களிலே ப்ரஸித்தமாயும் உபேயாந்தர பூதமாயுமிருக்கிற ப்ரபத்யுபாயமோ வென்னில் ,
ப்ராரப்தஸ்யாபி – கர்ம ஜ்ஞாந ஸஹ க்ருதையான பக்த்யுபாயத் தாலும் கூட அவிநாஸ்யமாயிருந்துள்ள ப்ராரப்த கர்மத்துக்கும் ,
ஹம்த்ரி – நாசகமாயிருக்கும் ;
து –- என்கிற அவ்யயம் பக்த்யுபாயத்தில் காட்டில் , இப்ரத்யுபாயத்துக்குண்டான வைலக்ஷண்ய விசேஷத்தைக் காட்டுகிறது ;

இவ்விடத்தில் ஆர்த்த ப்ரபந்நர் விவஷிதராகையாலே ,அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்ட ப்ராப்திக்கு ஸ்வதந்த்ரோபாயமு மாயிருக்குமாப் போலே ;
இதுவும் ஸ்வேதரோபாயங்களுக்கு உபதேஷ்ட்ருத்வ ப்ரவர்த்தகத் வாதிகளாலே , அங்கமுமாய் ,

“ 1 தேவமிவாசார்ய துபாஸீத “ ,

1 ஸ்ருதி ( தேவமிவேதி ) ஆசார்யம் – ஆசார்யனை , தேவமிவ -– ( எனக்கு மேல் பூஜ்யரில்லாமையாலே
என்மாத்ரமாகிலுமவர்களை யாராதித்து நல் வழி போங்கோளென்று சொல்லுகிற
“ சச பூஜ்யோ யதாஹ்யஹம் “ என்கிற உபப்ரும்மணத்தின்படியே
மனிசர்க்குத்தேவர் போலத் தேவர்க்கும் தேவனான வெம்பெருமானைப்போலே ,
உபாஸீத – உபாஸநம் ஸ்யாத்ரு வாநுஸ்ம்ருதி: “ என்கிற அத்யர்த்த ப்ரேமத்தோடே யநுவர்த்திக்கக் கடவன் .

2 “ ஆசார்யான் புருஷோ வேதா “ ,

2 ஸ்ருதி ( ஆசார்யவாநிதி ) –-
ஆசார்யவான் – ஜ்ஞாநாநுஷ்டான பரிபூர்ண னான வாசார்யனை யுடையனாயிருக்கிற ,
புருஷ: — முமுஷு வான புருஷன் ,
வேத -– அர்த்த பஞ்சகங்களை யலகலகாக வறியக் கடவன் .

3 “ உபாயோபேய பாவேந தமேவ சரணம் வ்ரஜேத் “

3 ப்ரபந்ந பாரிஜாதே –
குரூபாஸநபத்ததௌ – ஶ்லோ 18 ( உபாயோபேய பாவேநேதி ) – தமேவ -– அப்படிப்பட்ட ஆசார்யனையே ,
உபாயோபேய பாவேந — உபாயோபேயங்களிரண்டும் அவனே என்கிற நினைவோடே ,
சரணம் –- ரக்ஷகனாக ,
வ்ரஜேத் –- புத்தி பண்ணக் கடவன் .

என்று இத்யாதி களில் சொல்லுகிறபடியே
இஷ்டாநிஷ்ட ப்ராப்தி பரிஹாரத்தில் தனக்கு மேலற்ற ஸ்வதந்த்ரோபாயமுமாயிருக்கும் .
பக்தி ஸ்வதந்த்ரோபாயமுமாயிருக்க ப்ரபத்தி ஸ்வதந்த்ரோபாயமானாப் போலே
இந்த வாசார்யாபி மாநமாகிற சரம ப்ரபத்தியும் , ஸ்வதந்த்ரோபாயமாய் வந்தது ;
பக்திக்கந்தர்யாமி விஷயம் ,
ப்ரபத்திக்கச் சாந்வதாரம் விஷயம் ,
சரம ப்ரபத்திக்கு பகவதவதாரமான வெம்பெரு மானார் விஷயம் .
ப்ராக்ருத விக்ரஹ யுக்தரா யெழுந்தருளியிருக்கை யாலே ,அவர்களுக்குண்டான அவ்வார்த்தி விஶேஷத்தையே
ப்ராரப்த கர்ம:பல மாகக் கொண்டு ஈஶ்வரன் அந்த கர்மங்களை வஸிப்பிக்குமென்னபடி ;

“ ததப்ராப்தி மஹாது:கவிலீநாஶேஷ பாதகா “ என்று
சிந்தயந்திக்கு பகவத் ப்ராப்தி , நினைத்தபோதே கிடைக்க வில்லை யென்னும் ஆற்றாமையாகிற
மஹாது:காநுபவத்தாலே ஸமஸ்த பாபங்களும் வுருமாய்ந்து போயிற்றே என்று சொல்லிற்றே

ஸஜாதீய புத்தி பண்ணலாம்படி யிருந்ததேயாகிலும் ,
எம்பெருமானா ரிடத்திலே எம்பெருமான் ஸ்வரூபேண நின்று விஶேஷாதிஷ்டாநம் பண்ணுகையாலும் ,
இவ்வர்த்தத்தை ஸ்வயமேவ அருளிச் செய்கையாலும் ,
பகவதவதாரம் எம்பெருமானார் என்கிற வம்ஸத்தில் ஶம்ஶயமில்லை .

——————–

1 ததுக்தம் பாஞ்சராத்ரே பகவதா ஸேநேஸம் ப்ரதி ;

1 ( ததுக்தமிதி ) – த
த் -– கீழ்ச்சொன்ன பகவதவதார மெம்பெருமானாரென் கிற விவ்வர்த்தம் ,
பாஞ்சராத்ரே –- ஸ்ரீபாஞ்சராத்ர ஶாஸ்த்ரத்தில் ,
பகவதா -– ஈஶ்வரனாலே ,
ஸேநேஸம் ப்ரதி -– ஸேனை முதலியாரைக் குறித்து ,
உக்தம் – அருளிச்செய்யப்பட்டது .

2 மம ஸ்வரூபம் ஸர்வஸ்மாத் பரஸ்ய ஜகதீசிது: || ஷட்விதம் பரிபூர்ணந்த த்ஸேநேச பரிபட்யதே ||

2 எங்ஙனேயென்னில்
( மமஸ்வரூபமிதி ) –ஹே ஸேநேஸ –- வாரீர் ஸேனை முதலியாரே ,
ஸர்வஸ்மாத் பரஸ்ய -– ஸர்வ ஸ்வாமியாகவும் ,
ஜகதீசிது: — ஸர்வ நியந்தாவாகவுமிருக்கிற ,
மம -– என்னுடைய ,

தத் –-ஸகல வேதாந்தங்களிலும் ப்ரஸித்தமான ,
ஸ்வரூபம் -– அஸாதாரண திவ்யமங்கள விக்ரஹ விஶிஷ்ட ஸ்திதியானது ,
பரிபூர்ணம் –- “ இதம் பூர்ணமத:பூர்ணம் “ என்கிறபடியே ஜ்ஞாநபலைஶ்வர்யாதி கல்யாணகுண புஷ்கலமாயும் ,
ஷட்விதம் –- ஆறு ப்ரகாரமுடைத்தானதாயும் ,
பரிபட்யதே — ஶாஸ்த்ரங்களிலெங்கும் ப்ரதிபாதிக்கப்படுகிறது .

3 பரத்வ , வ்யூஹ , விபவமந் தர்யாமித்வ மே வ ச | அர்ச்சா சார்யாவதாரௌ த்வௌ ஷாட்வித் யம் மே ப்ரகீர்த்திதம் ||

3 ( பரத்வேதி ) -– அந்த ஷட்விதமான ஸ்வரூபமெப்படிப்பட்டதென்ன ,
பரத்வ வ்யூஹ விபவம் –- பரத்வமென்றும் , வ்யூஹமென்றும் , விபவ மென்றும் ,
அந்தர்யாமித்வமேவச – அந்தர்யாமித்வமென்றும் ;
( இவ்விடத் தில் , ஏவ—ச—என்கிற அவ்யவங்களிரண்டும் , வாக்யாலங்காரமாகக் கொள்வது )
அர்ச்சாசார்யாவதாரௌத்வௌ | — “ ஸர்வம் பூர்ணம் ச ஹோம் “ என்கிறபடியே
ஸமஸ்த கல்யாண குண புஷ்கலமாகையாலே ப்ரபத்திக்கு நியத விஷயமான வர்ச்சாவதாரம் ,
இப்படிப்பட்ட ஸித்தோபாயத்துக்கு பஹிர்பூதமன்றியே
தத்சரமாவதியான –- ஆசார்யரூபாவதாரம் , என்கிற விவையிரண்டுமென்றும் ,
மே -– என்னுடையதான ,
ஷாட்வித்யம் –- ஆறு ப்ரகாரமானது ,
ப்ரகீர்த்திதம் — ஶாஸ்த்ரங்களில் ப்ரதிபாதிக்கப்பட்டது .

—————-

1 பூர்வஸ்மாதபீ பூர்வஸ்மாத்ஸுலபோ ஹ்யுத்தரோத்தர: | தேஷ்வாசார்யாவதரணே காருண்யம் பரிபூரிதம் ||

1 ( பூர்வஸ்மாதபீ இதி ) –
பூர்வஸ்மாதபீ பூர்வஸ்மாத் -– பரத்வம் முதல் முன்முன்னானவைகள் காட்டில் ,
உத்தரோத்தர: — பின்பின்னான வவதாரம்,
ஸுலப: — ஒன்றைக் காட்டிலுமொன்றாஶ்ரிதற்கு ஸுலபமாயிருக்கும் ,
தேஷு – அவைகளில் வைத்துக் கொண்டு ,
ஆசார்யாவதரணே -– ஸர்வ ஸுலபமான ஆசார்யாவதாரத்திலே ,
காருண்யம் – ஆஶ்ரித ஸம் ரக்ஷணமே, ஸ்வபாவமாயிருக்கைக்கு ஈடான க்ருபையானது ,
பரிபூரிதம் –- வடிவிலே தொடைக் கொள்ளலாம்படி புஷ்கலமாயிருக்கும்

2 ஜ்ஞாநாதி குணதஸ் தத்ர விஶேஷா திஷ்டிதிர் பவேத் |
ஆசநந்த்வாத் தயாளுத்வாத் ஜ்ஞாநித்வாத் குரு பாவத: |
சரமஸ்ய வதாரஸ்ய குருரூபஸ்ய மே ஸதா ||

2 ( ஜ்ஞாநாதிகுணத இதி )
குருரூபஸ்ய –- ஆசார்ய ரூபத்தை யுடைத்தா யிருக்கிற ,
சரமஸ்யாவதாரஸ்ய –- கடைசி அவதாரமானது ,
ஆசந்த்வாத் –- “ நடமினோ தமர்களுள்ளீர் “ என்கிறபடியே சென்று ஸேவிக்க வேண்டியதான வர்ச்சாவதாரம் போலன்றிக்கே
“ பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து “ என்று ஆஶ்ரிதரிருக்குமிடம் தேடி வந்து கிட்டியிருப்பதாலும் ,
தயா ளுத்வாத் -– கர்மாநுகுணமாக விவனை ஸம்ஸ்கரிக்கவும் விடும் ஸ்வதந்த்ர மான தயை போலன்றிக்கே
ஸர்வ ப்ரகாரத்தாலு மிவனை யுஜ்ஜீவிப்பித்தே விடும் நிரதிஶய தயையை யுடைத்தாயிருக்கையாலும் ,
ஜ்ஞாநித்வாத் – “ ஜ்ஞாநீத்வாத்மயிவ மே மதம் “ என்கிறபடியே
நமக்கு தாரகமானதாயிருக் கையாலும் ,
குருபாவத: — அஜ்ஞாந நிவர்த்தகனென்கிறதே ஸ்வரூபமா யிருக்கையாலும் ,
தத்ர – அந்த அவதாரத்தில் ,
ஜ்ஞாநாதிகுணத: — ஜ்ஞாந பலைஶ்வர்யாதி குணங்களையுடைத்தான முந்தின வவதார பஞ்சகத்திற் காட்டில் ,
மே – என்னுடைய ,
விஶேஷாதிஷ்டிதி: — விஶேஷாதிஷ்டான மானது ,
ஸதா –- எப்போதும் ,
பவேத் –- உண்டாயிருக்கக் கடவது .

3 ப்ராப்யத்வ ப்ராபகத்வே த்வேஸ்வநிஷ்டே ந குணௌ மதௌ | தஸ்மாந்மத்பாதயுகளம் ஶரண்யம் மோக்ஷகாமிநாம் ||

3 ( ப்ராப்யத்வ ப்ராபகத்வே இதி ) –
(அந்தவவதாரத்தில்) ப்ராப்யத்வ ப்ராப கத்வே த்வே –- உபாயத்வம் – உபேயத்வம் ஆகிற விவையிரண்டும் ,
ஸ்வ நிஷ்டே -– நமக்கு ஸ்வரூபமாகவேயிருக்கும் ;
குணௌ – நமக்கவை குணங்களாக ,
நமதௌ – எண்ணப் பட்டதன்று ,
தஸ்மாத் -– ஆன படியாலே,

என்று பகவான் தானே யருளிச் செய்தாரிறே -இத்தாலும் , எம்பெரு மானார் திருவடிகளே ஸம்ஸாரோத்தரணோபாயம் .
இனி ஸ்வதந்த்ர னாயிருப்பானொரு மஹா ப்ரபுவைக் கண்டு கார்யம் கொள்ளுமவன்
அவன் கையைப் பிடித்து வேண்டிக்கொள்ளுமளவில் அவன் இனியனாய் இவன் கார்யம் செய்கைக்கும்
ஸ்வதந்த்ரனாய் சீறி யுதறி யுபேஷிக்கைக்கும் மஉடலாயிருக்கும் ;
அந்த ப்ரபு தன்னையே காலைப் பிடித்துக் கொள்ளுமளவில் ,அவன் தயா பரவசனாய் , உதறமாட்டா மல் , கார்யம் செய்து விடுமோபாதி ,
சரணஸ்தாநீயரான வெம்பெருமானாரை பற்றினால் , அவன் பரம தயாளுவாய் இவன் கார்யம் செய்யுமிடத்தில் ஸம்ஸயமில்லையிறே .

———————

1 “ லோகே ச பாதபதநம் பாணிஸங்க்ரஹணாதபி | தயா ஹேதுதயா த்ருஷ்டுமித்யுக்தம் சரணாவிதி “ என்றும் ;

1 ( லோகே ச பாதபதநமிதி ) லோகே ச -– இருள் தரு மா ஞாலமாகையாலே சரணாகத ஸம்ரக்ஷணம் பரம தர்மமென்றறுதி யிடமாட்டாத இந்த விபூதி யிலும் கூட ,
பாத பதநம் -– காலைப் பிடித்துக்கொள்ளுமது ,
பாணி ஸங்க்ர ஹணாதபி -– கையைப் பிடித்துக்கொள்ளுமதிலும்காட்டில் ,
தயா ஹேது தயா -– க்ருபை யுண்டாகுகைக்கு காரணமாக ,
த்ருஷ்டமிதி -– காணப்பட்ட தென்று ,
சரணாவிதி –- ( மந்த்ர ரத்நத்தில் ) “ சரணௌ “ என்று ( திருவடி களைப் பற்றும்படி ) ,
உக்தம் –- சொல்லப்பட்டது .

2 “ அநதிக்ரமணீயம்ஹி சரண க்ரஹணம் “ என்றும் , சொல்லுகிற படியே , சரணக்ரஹண மமோகோபாயமிறே |

2 ( அநதிக்ரமணீயமிதி )
சரணக்ரஹணம் – அஜ்ஞன் முதல் ஸர்வஜ்ஞன் வரையிலுள்ள யெல்லார்க்கும் காலைப் பிடித்துக் கொள்கையென்றால் ,
அநதிக்ரமணீயம்ஹி – அதிக்ரமிக்கக்கூடாத தாய் இருக்குமிறே ;

பட்டர் திருவணையாடி மீண்டெழுந்தருளுகிறபோது பாதிரி என்கிற கிராமத்திலே ஒரு வேடவனகத்திலே ஓர் இரவு தங்கின வளவிலே பிறந்த ( முசலின் விஷயமான ) வார்த்தையை இவ்விடத்திலநுஸந்திப்பது ; இத்தால் திருவடிகளைப் பற்றுமது அமோகோபாயமென்னதாயித்து .

நம்பெருமாள் , பெரிய திருவோலக்கமாக வெழுந்தருளியிருக்க , திருவடி தொழ வந்தவர்கள் , எம்பெருமானாரை நோக்கி தண்டனிட, தத்காலவர்த்தியான ராஜா , எம்பெருமானாரை தண்டனிட்டு , எல்லாரும் பெருமாளை விட்டு உம்மையே தண்டனிடா நின்னார்கள்

இதுக்கு இப்பொருளருளிச்செய்ய வேணுமென்ன ,
உம்முடைய பக்கலிலே சிலர் கார்யம் கொள்ள வந்தால் அவர்களில் , ஒருவன் உடுவரைக் கொண்டு வந்தான் ,
ஒருவன் உம்முடைய பாதுகையைப் பிடித்து நின்றான் , இதிலே யாருக்கு நீர் முந்துற கார்யம் செய்வீர் ! என்ன ;
காலைப் பிடித்தவனிடத்திலே ப்ரீதி விளையுமென்ன ,
அப்ப டியே நாம் நம்பெருமாளுக்கு திருவடிகளாயிருப்போம்
, அதனால் நம்மைப் பத்தினார்க்கு கார்யாம்ஶத்திலொரு குறையுமின்றியிலே யமோகமாகப் பலிக்குமென்றருளிச் செய்தார் .
உத்தாரகமான வெம் பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தம் தேவதாந்தர , மந்த்ராந்தர தோஷ ஸ்பர்ஶத்தாலே கலங்கி
குலையாமல் ஸத்தையுடன் கிடைக் கப்பெறில் , ஸ்வரூபாலங்காரமான தத்வஜ்ஞாநமும் , அநந்யபக்தி யும் , அந்யவைராக்யமும் இல்லாவிடிலும் ,
மேலந்த ஸம்பந்தத் தாலே யுண்டாக்கிக் கொள்ளலாம் ;
ம்ருதஸஞ்சீவினியான வெம் பெருமானாரோட்டை ஸம்பந்தம் நிஷித்தாநுஷ்டாநாந்வயலேஸத் தாலே யவன் கைவிடும்படி குலைந்தால் ,
அநர்தமே விளைந்து , அத்தால் ஜ்ஞாநாதிகள் சிலதுண்டானாப்போலே தோற்றிற்றாகிலும் , ப்ரயோஜநமில்லையாம் .
ஸதாசார்யரான எம்பெருமானாரோடு ஸம்பந்தமற்ற ஜ்ஞாநாதிகளுமிவனுக்கு , அவத்யகரமாய் தலைக்கட் டும் ;

அவத்யகரமாகையாவது , பகவந்நிக்ரஹத்தை விளைத்து யாவ தாத்மபாவி நரகத்திலே தள்ளிவிடுமென்றபடி , எம்பெருமானாரோ டுண்டான ஸம்பந்தம் ஸ்வரூபவிகாஸஹேது , ததபாவம் ஸ்வரூப விநாஶஹேது , என்று வங்கீபுரத்து நம்பி வார்த்தை .

1 “ மையாசார்யாவதாரேது யஸ்ய பக்திர் ந வித்யதே , தஸ்யாத்ம நாசஸ்ஸேநேஸ பவிஷ்யதி ந ஶம்ஸய: “ என்று எம்பெருமான் தானேயருளிச்செய்தானிறே .

1 விஶ்வக்ஸேந ஸம்ஹிதாயாம் — ( மய்யாசார்யாவதாரேத்விதி )
ஹே ஸேநேஸ -– வாரீர் ஸேனை முதலியாரே ,
ஆசார்யாவதாரே –- ஆசார்ய ரூபியாயவதரித்திருக்கிற ,
மயி -– என்னிடத்தில் ,
யஸ்யது –- எவனுக்கானால் ,
பக்தி: — அத்யந்த ஸ்நேஹத்தோடு ,
மோக்ஷகாமிநாம் முமுஷுக்களுக்கு ,
மத்பாதயுகளம் — அப்படி யாசார்ய ரூபியாயிருக்கிற நம் திருவடிகளிரண்டுமே ,
சரண்யம் — ரக்ஷகமாகக் கடவது .

1 “ ஸ்ரீமந் லக்ஷ்மண தேஶிகேந்த்ர சரணத்வந்த்வாஶ்ரயாஶ்ரீபதிர் மாமாத்ருத்ய மஹாபல ப்ரசவிதா ஜாதோஹி ரங்கேஸ்வர: |
தத் த்ருஷ்ட்வா மயி ரங்கநாதரமணீ ஸ்ரீரங்கநாயக்யஹோ ஸ்ரீராமாநுஜ பாதபாகயமிதி ப்ராசீகச ஸ்வாந்தயாம் “
என்று இறே நம்பிள்ளை யருளிச் செய்யும்படி ; அதாவது
எம்பெருமானாருடைய திருவடிகளில் ஸம்பந்தமுடையவனன்றோ வென்று பெரிய பெருமாள் , என்னை யாதரித்து
“ அந்தமில் பேரின்பத்தடியரோடிருந்தமை “ யாகிற மஹா: பலத்தைத் தருவாராக ஒருப்பட்டார் ;
அத்தைப் பெருமாளுக்கு பத்நியா யினிய விஷயமாயிருக்கிற ஸ்ரீரங்கநாச்சியார் கண்டு ,
எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தமுண்டான பின்பு தத் ஶத்ருஶமாகக் கொடுக்கலாவ திதுவன்று , வேறு தகுதியா யிருப்பதொரு பலம் கொடுக்க வேணும் என்று , நினைத்துக் காணாமையாலே ,
தம்முடைய நிர்ஹேதுகமான க்ருபையை , என் பக்கலிலேயொரு மடையாக வெளியிட்டாள் ;
இதென்ன வாச்சர்ய மென்று கண்டருளினாரென்றபடி ,
இத்தால் எம்பெருமானாரோடு ஸம்பந்தமுண்டாகவே , பிராட்டியும் எம் பெருமானு மொருவர்க் கொருவர் பரிந்து மேல் விழுவார்களென்று மர்த்தம் சொல்லப்பட்டது,
நிர்ஹேதுகமாக விஷயீகரிக்கும் பரம காருணிகரான வெம்பெருமானார் இவன் நம்முடையவன் , என்றபிமாநிக் குமபிமாநமே
ஸம்ஸாரோத் தாரகமென்று கூடிய தாஸ்யருசியானது ,
ந வித்யதே -– இல்லாமல் போகிறதோ ,
தஸ்ய –- அந்த சேதநநுக்கு ,
ஆத்மநாஶ: — ( ஶேஷத்வமில்லாத போது ஸ்வரூப மில்லை “ யாகையாலே ) ஸ்வரூபநாஶமானது ,
பவிஷ்யதி -– உண்டாகக் கடவது ;
ந ஶம்ஶய: — ( இவ்வர்த்தத்தில் ப்ரமாணங்கள் சுருக்கமறக் காண் கையாலே ) ஸந்தேஹமில்லை .
1 ( ஸ்ரீமந் லக்ஷ்மண தேஶிகேந்த்ரேதி ) -– இதுதான் ப்ரமாணிகாக்ரேசரரான நம்பிள்ளை யருளிச்செய்த ஶ்லோகமா யிருக்கும் ;
ஶ்ரீமந் லக்ஷ்மண தேஶிகேந்த்ர சரணத்வந்த்வாஶ்ரயாத் –- ஸ்ரீமத் –- ஸ்ரீவைஷ்ணவஸம்பத்தை யுடையராய் ,
அன்றிக்கே பகவதநுபவகைங்கர்யரூபமாகிற நிலைநின்ற ஸம்பத்தையுடையராய் ,
அஜ்ஞநுமன் றிக்கே நமக்கபேஷிதமான ப்ராப்யத்தை தருகைக்கீடான ஜ்ஞாநாதி ஸம்பத்தையுடையரா யென்றுமருளிச் செய்வர் ;

லக்ஷ்மண தேஶிகேந்த்ர – ஆசார்ய குல ஶிகாமணியான வெம்பெருமானாருடைய
( இவ்விடத்தில் “ லக்ஷ்மண ” என்கிற பதம் அவதாரத்தினுடைய ஊத்தக் காலைக் காட்டுகிறது ) ,
சரணத்வந்த் வாஶ்ரயாத் – இரண்டு திருவடி களை யாஶ்ரயித்த பலத்தாலே
( மந்த்ர ரத்ந்த்தில் “ சரணௌ “ என்கிற பதத்துக்குச் சொன்ன வர்த்தங்களெல்லா மிவ்விடத்துக்கு சேரும் ),
ஸ்ரீபதி: — ஸ்ரீய:பதியான ,
ரங்கேஶ்வர: — பெரியபெருமாளானவர் ,
மாம் — ( ஸ்வப்ந முகேன தம்முடைய திருவடிகளிரண்டுமே உபாயோபேயங்களென்று
எம்பெருமானார் தாமே காட்டிக் கொடுக்கும்படியான பாக்யமுடைய ) அடியேனை ,
ஆத்ருத்ய – விஶேஷ கடாக்ஷம் செய்தருளி ,
மஹா:பல ப்ரசவிதா – நித்ய கைங்கர்யமாகிற பரம புருஷார்த்தத்தைத் தருவாராக
( ப்ரதம பருவநிஷ்டருக்கு கொடுப்பது ஃபலம் , இவர்க்கு கொடுப்பது மஹாபலம் , அதாவது , அடியார்க்காள்படுத்துகை ) ,
ஜாதோஹி – ஒருப் பட்டாறிறே ,
தத் – அப்படிப்பட்ட பெரியபெருமாளுடைய திருவுள்ளக் கருத்தை ,
த்ருஷ்ட்வா – கடாஷித்தருளி ,
ரங்கநாத ரமணீ –( ஶம்ஶ்லேஷ தஸையிலீஶ்வரனையும் , விஶ்லேஷதஸையில் சேதநநையும் திருத்தி
சேதநரக்ஷணமே யாத்ரையா யிருக்கையாலே ) பெரியபெருமாளுக்கு ஆனந்தாவஹையாயிருக்கிற ஸ்ரீரங்கநாயகீ –-
பெரியகோயில் ஐஶ்வர்யத்துக்கெல்லாம் கடவுளான ஸ்ரீரங்கநாயகியாரானவர் ,
அயம் –- இந்த நம்பிள்ளை ,
ஸ்ரீராமாநுஜ பாத பாக் இதி –- பெரியபெருமாள் தாமே விரும்பி உபய விபூத்யைஶ்வர்யத்தையும் கொடுக்கும் படியான
ஜ்ஞாநாதி குணஸம்பத்தையுடைய வெம்பெருமானார் திருவடிகளை யாஶ்ரயித்தவ னென்று ,
மயி –- அடியேனிடத்தில் ,
ஸ்வாம் – தனக்கஸாதாரணமா யிருக்கிற ,
தயாம் – “ பாபாநாம் வா ஸுபாநாம் வா “ என்கிறபடியே , அஜ்ஞ , விஶேஷஜ்ஞ விபாகமறவெல்லாரும் வாழும்படியான நிர்ஹேதுக க்ருபையை ,
ப்ராசீகசத் – பரிபூர்ணமாக வெளியிட்டாள் ;
அஹோ – “ என்னைப் புவியிலொரு பொருளாக்கி “ இத்யாதியில்படியே ,
எம்பெருமானார் செய்தருளின விவ்வுபகாரம் ஆச்சர்ய கரமாயிருக்கிறதென்கிறார் .

சாரார்த சதுஷ்டய விவரணத்தில் அம்மங்கி யம்மாளுக்கு , எங்களாழ் வான் தாமுமருளிச் செய்தாறிறே .

ஸோமாஸியாண்டானும் ,

1 பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வப்ரவ்ருத்தி ஸாத்யாயா பக்தே: ஸ்வாதந்த்ர்யரூபாஹங்கார

1 ஸோமாஸியாண்டானருளிச் செய்த சரமோபாய விவரணத்திலே. (பகவத் ப்ரவருத்தி விரோதி இத்யாதி ) –
பகவத் ப்ரவ்ருத்தி விரோதி -–ஸ்வாமியாய் ஜநகத்வாத் பகவந்தமுபேத்ய – தத் சரணார விந்தயுகள
சரணாகதேரபி நிரங்குஶைஸ்வர்ய பகவத் ஸ்வாதந்த்ர்ய ஸ்மரணத்வாரா பீதிஹேது
ஸ்வதந்த்ரனானவன் ஸ்வயமாய் பரதந்த்ரனாயிருக்கிறவிவனைப் பெற நினைக்கையாகிற
பகவதி ப்ரவ்ருத்திக்கு ப்ரதிபந்தகமாயிருந்துள்ள , ஸ்வப்ரவ்ருத்தி
ஸாத்யாயா: — ஸ்வ யத்ந ரூப ப்ரவ்ருத்தி விஶேஷத்தாலே ஸாதிக்கப்படுமதான,
பக்தே: — கர்ம ஜ்ஞாந ஸஹக்ருதையான பக்தி யோகத்திற்கு ,
ஸ்வாதந்த்ர்ய ரூபாஹங்கார ஜநகத்வாத் — ஸ்வாதந்த்ர ரூபாஹங் கார ஜநகத்வமுண்டாயிருகையாலும் ,
( அதாவது , ஸ்ரீபாஷ்யத்திலறுதி யிட்டபடியே விவேக விமோதிகளாகிற நியமங்களையுடையனாய் ,
வர்ணா ஶ்ரம விஹிதக ர்மங்களைத் தானநுஷ்டித்த பின்பு “ த்ருவாநுஸ்ம்ருதி “ யென்கிற பக்தியோகத்தை
நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கை யாலே , இதில் ஸ்வ ஸ்வாதந்த்ர்ய ரூபமான வஹங்காரம் பிறக்குமென்ன படி )

( இவ்விடத்தில் ப்ராஸங்கிகமாக சில அர்த்தவிஶேஷங்கள் சொல்லப்படுகி றது ; அதாவது ,
“ ஸ்வஸ்வாதந்த்ர்ய பயத்தாலே பக்தி நழுவித்து “ என்கிற படியே ,
பக்தி யோகமானது நழுவும் போது ,
“ ஏவம் நியம யுக்தஸ் யாஶ்ரம விஹித கர்மாநுஷ்டாநேநைவ வித்யா நிஷ்பத்திரித் யுக்தம் பவதி “ என்று
அந்த பக்தி யோகத்துக்கு ஸாதகங்களாக வறுதியிடப்பட்ட விவேக விமோ காதிகளும் ,
தத் ஸாத்யையான பக்தி யோகத்தோடு , ஸ்வ ஸ்வாதந்த்ர்ய ரூபாஹங்கார ஜநகமென்று ,
இந்த சரமாதிகாரிக்கு த்யாஜ்யமாய்விடுமோ வென்னில் , ஆகாது ;
“ இவன் தானிவைதன்னை நேராக விட்டிலன் “ என்கிற க்ரமத்திலே ,
இவையெல்லாமிவனுக்கு வகுத்தவிடமான வெம் பெருமானாருடைய முகமலர்த்தியாகிற உபேயத்துக்கு ஶேஷமாய்க் கொண்டு ,
அத்தாலே யவர் விஷயத்தில் “ த்யாயேத்ஜபேந்நமேத் பக்த்யா பஜேதப்யர்ச்சயேந்முதா “ என்று ஶாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட
( நிரவதிக ப்ரேம ரூப த்ருவாநுஸ்ம்ருதியென்கிற ) பக்தி யோகத்துக்கு நாடோறு மதிஶயாவஹங்களாகையாலே ,
மிகவுமுத்தேஶ்யங்களு முபாதேயதமங்களு மாயிருக்கும் –

இவ்வர்த்தங்களை ” ஜ்ஞாநாநுஷ்டாநங்களிரண்டுமல்லாதார்க்கு பாயாங்கமாயிருக்கும் , இவனுக்குபேயாங்கமாயிருக்கும் “ என்று துடங்கி
ஸ்ரீ வசந பூஷண திவ்ய ஶாஸ்த்ரத்திலே பரக்க வருளிச் செய்தாறிறே –
இவ்வளவும் ப்ராஸங்கிகமாக சொல்லவேண்டித்து )

இனி ப்ரக்ருதார்த்தங் கள் சொல்லப்படுகிறது

பகவந்தமுபேத்ய தத் சரணாரவிந்த யுகள சரணா கதேரபி –
த்வா ச , ததுபயவிஷய பகவதவதாரபூத பரமகாருணிக ராமாநுஜ யோகி
சரணாரவிந்த சரணாகதிரேவ ஸர்வோஜ்ஜீவனாய பவதி இதி ஸமர்த்திதம் “ என்று
ஸ்வ ப்ரணீதமான சரமோபாய விவரணத்திலே யருளிச் செய்தார் இறே |

பகவந்தம் -– ஈஶ்வரனை ,
உபேத்ய –- கிட்டி ( இவ்விடத்தில் ப்ரபத்தி விவஷிதமாகையாலே யதுக்கு நியத விஷயமான வர்ச்சாவதாரத்திலே நோக்காய் ,
அதுதான் “பூர்ணம் “ என்கையாலே , ஆஶ்ரயண ஸௌகர்யாபாதகங்களான குணங்களோடு
ஆஶ்ரித கார்யாபாதகங்களான குணங்களோடு வாசியற
ஸகல கல்யாண குண பூர்ணமென்கிற விவ்வர்த் தத்தை இந்த பகவத் ஶப்தம் காட்டுகிறது ) ,
தத் சரணாரவிந்த யுகள சரணாகதேரபி —
தத்சரணாரவிந்தயுகள — அந்த வெம்பெருமானுடைய திருவடித் தாமரைகளிரண்டிலும் செய்யப்படுமதான ;
சரணாகதேரபி — உபாயாந்தர பரித்யாகமாகிற வங்கத்தோடே கூடி ,
ஸ்வதந்த்ரமாயிருந்துள்ள ப்ரபத்திக்கும் ; நிரங்குஶைஸ்வர்ய பகவத் ஸ்வாதந்த்ர்ய ஸ்மரணத்வாரா —
நிரங்கு ஶைஸ்வர்ய -– பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் தனக்கு மேலற்ற நிர்வாஹக னான ;
பகவத் – எம்பெருமானுடையதான ,
ஸ்வாதந்த்ர்ய -– கர்ம நிபந்தனமாக ஸம்ஸரிப்பிக்கவும் ,
காருண்ய நிபந்தனமாக முக்தனாக்கவும் வல்ல ஸ்வாதந்த்ர்யத்தினுடைய ;
ஸ்மரண த்வாரா -– அநுஸந்திக்கிற வழியாலே ;
பீதி ஹேது த்வாச்ச – பலத்தில் ஸம்ஶயத்தால் வரும் பயத்துக்கு காரண மாகையாலும் ;
ததுபயவிஷய பகவதவதாரபூத பரமகாருணிக ராமாநுஜ யோகி சரணாரவிந்த சரணாகதிரேவ ;
ததுபயவிஷய -– அந்த பக்தி ப்ரபத்தி களிரண்டுக்கும் விஷயபூதனான ;
பகவத் — ஈஶ்வரனுடைய ;
அவதாரபூத -–அவதார விஶேஷமான ,
பரமகாருணிக – ( பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயிருக்கையன்றிக்கே , மோக்ஷ ஏக ஹேதுவாயிருக்கையாலே )
ஈஶ்வரனிற்காட்டிலும் மேலான காருணிகராயிருக்கிற ,
ராமாநுஜயோகி – எம்பெருமானாருடைய ,
இவ்விடத்தில் யோகி என்கிற பதம் ஸுபாஶ்ரய மான வெம்பெருமானிடத்தில் தம் திருவுள்ளத்தை
ஸ்தாவர ப்ரதிஷ்டை யாக வைத்திருக்கும்படியைச் சொல்லுகிறது ) ,
சரணாரவிந்த – திருவடித் தாமரைகளிலே ( செய்யப்படுமதான ) ,
சரணாகதிரேவ – ப்ரபத்தி தானே ,ஸர்வோஜ்ஜீவனாய – அஜ்ஞ , விசேஷஜ்ஞ விபாகமறவெல்லாருடையவும் உஜ்ஜீவனத்தைப் பொருட்டு ,
பவதி இதி – ஆகிறதென்று ,
ஸமர்த்திதம் – நிர்வஹிக்கப்பட்டதென்கை |

வாதிகேசரி அழகிய மணவாளஜீயரும் 1 “ பார தந்த்ர்யம் ஸ்வரூபம் ஹி ஸர்வஜீவாத்மநாமபி | தத்வ்ருத்தா ஹி பக்திஸ்து ஜீவ யத்நாபி லாஷிணீ ||

1 வாதிகேஸரி அழகியமணவாளச் சீயரருளிச் செய்த சரம குரு சரிதையில், ( பாரதந்த்ர்யமிதி )
ஸர்வ ஜீவாத்மநாமபி –- பத்த , முக்த , நித்யரென்கிற த்ரிவிதாத்ம வர்க்கத்துக்கும் ,
பாரதந்த்ர்யம் – ஈஶ்வரனிட்ட வழக்காயிருக்கை ,
ஸ்வரூபம் ஹி – ஜ்ஞாநாநந்தங்களிற் காட்டிலும் அந்தரங்க நிரூபகமாகவே யிருக்கும் ,
ஜீவயத்நாபிலாஷிணி –- ( “ ஒன்றி நின்று நற்றவம் செய்து” என்கிற பாட்டிலும் ,“
புன்புல வழியடைத்து “ என்கிற பாட்டிலும் திருமழிசைப்பிரானருளிச் செய்த ) சேதந ப்ரயத்நங்களை யபேஷித்திருக்கிற
பக்திஸ்து — ( ஸர்வ க்ரமத்தாலே பரபக்த்யாதி ரூபேண ஸாதிக்கப்படுவதான)பக்தி யோகமோ வென்னில் ;
தத் விருத்தாஹி — அந்த பாரதந்த்ர்யமாகிற ஸ்வரூபத்துக்கு விருத்தமாகவே யிருக்கும் |

த்யாகோ நிவ்ருத்தி ஸாத்யோயம் நிர்மலாநந்த ஸாயிந: | ஸ்வாதந்த்ர்ய ஸ்ம்ருதிமாத்ரேண பீதிஹேதுர்பவிஷ்யதி || 1
தஸ்மாத் பக்திம் ப்ரபத்திம் ச விஹாய விமலாஶயா: | அஸ்மத் ஆர்யா மஹாத்மாந: சரணாஶ்ரயா:|

தத்க்ருதேந அபிமாநேந நிஸ்தரந்தி பவார்ணவம் ||

( த்யாக இதி ) – நிவ்ருத்தி ஸாத்ய: —
“ சிற்ற வேண்டா “ என்கிறபடியே பகவத் ப்ரவ்ருத்திக்கு விரோதியான ஸ்வ ப்ரவ்ருத்தியினுடைய நிவ்ருத்தியினாலே ஸாதிக்கப்படுமதான ,
அயம் த்யாக: — இந்த ப்ரபத்தியானது ; (
இவ்விடத்தில் புரோவர்த்தியாநத்தைக் காட்டுமதான “ அயம் “ என்கிற பதம் ப்ரயோகித்திருக்கையாலே ,
ப்ரபத்யுபாயமானது , ஸகல வேத வேதாந்தாதிகளிலும் புகழ் பெற்றதென்றும் ,
தர்மஜ்ஞ ருசி பரிக்ருஹீத மென்றும் ,
சரண்ய ஹ்ருதயாநுஸாரியென்றும் ,
பாரதந்த்ர்ய ஸ்வரூபத் துக்குசிதமானதென்றும் , இத்யாதிகளைக் காட்டுகிறது ),
நிர்மலானந்த ஸாயிந: ;
நிர்மல – அகிலஹேய ப்ரத்யநீகனாயும் ,
அநந்த ஸாயிந: — திரு வனந்தாழ்வானாகிற படுக்கையிலே சாய்ந்தருளுகிறவனாயுமிருக்கிற வெம் பெருமானுடைய ;
ஸ்வாதந்த்ர்ய ஸ்ருதி மாத்ரேண –
ஸ்வாதந்த்ர்ய – நிரங்குச ஸ்வாதந்த்ர்யத்தினுடைய ,
ஸ்ம்ருதி மாத்ரேண –ஸ்மரண மாத்திரத்தினாலே ,
பீதி ஹேது: — ஃபலஸித்தியிலே ஶம்ஶயமாகிற பயத்துக்கு காரண மாக ,
பவிஷ்யதி – ஆகக்கடவது |

( இந்த ஶ்லோகத்தில் “ நிர்மல “ என்கிற பதம் “
அநஸ்நந்யோ அபிசாகசீதி“ என்கிற ஸ்ருதியில் சொல்லுகிற
“ தத் கத தோஷைர ஸம்ஸ்புருஷ்டத் வத்தை “
( அதாவது சேதந தோஷங்கள் ஈஶ்வரனுக்கு தட்டாமையை ) சொல்லுகிறது ,
ஸ்ருதியில் “ அபிசாக சீதி “ என்றிருப்பதால் ,
அகில ஹேயப்ரத்யநீகனாய் என்று அர்த்தமெழுத வேண்டிற்று ;
இப்படி விளங்கா நின்றுள்ள வீஶ்வரன் தான் சேதனனோடே ஏக தத்வமென்னலாம்படி பொருந்தி யிருக்கச் செய்தேயும் ,
“ தயோரந்ய:பிப்பலம் ஸ்வாத்வத்தி “ என்று அந்த ஸ்ருதியில் சொல்லுகிறபடியே
சேதநந் கர்மஃபலத்தை யநுபவிக்குமிடத் தில் –- தன் கர்மஃபலத்தை தான் புஜிக்கிறானென்று , உபேஷித்திருக்கை யாலே ,
“ நிர்மல” என்கிற குணம் ஸ்வாதந்த்ர்ய பயத்துக்கு ஹேதுவாகிறது|

இனி “ அனந்தஸாயிந: “ என்கிற பதத்தினர்த்தத்தை ஆராயுமிடத்தில் –-
அது தான் , ஸ்ரீநாரத பகவான் போல்வாரையும் ,
கச்ச நாரதமாசிரம் | ஏகாக்ராச்சிந்தயேயுர்மாம் நைஷாம் விக்நோ பவேதிதி “ என்று
ப்ரேமம் இல்லாதவராக விலக்க வேண்டும்படி நித்ய நிரவத்ய நிரதிசய ப்ரேமமுடையராய் “
அஸ்தாநேபயஸங்கிகளா “ யிருக்கிறவர்களுக்குத் தன்னுடம்பை ஸர்வ ஸ்வதாநமாக கொடுத்துக் கொண்டிருக்கும்படியைச் சொல்லுகையாலே ,
அநாதி கர்ம பரவசராய்க்கொண்டு , பகவதி ப்ரேம கந்தமே கண்டறியாத
நம்மை “ ஷிபாமி “ என்று தள்ளி விடுகைக்கு ஹேதுவாயிருக்கிற ஸ்வா தந்த்ர்யத்தினுடைய பயம் ஸித்தம் ;
இதுக்கு மேலே , பரதந்த்ர ஶேஷியாய்,மோஷ ஏக ஹேதுவான ஆசார்யாவதாரத்துக்கு ஊற்றுவாயான திருவநந் தாழ்வானும் ,
பகவத் ப்ரேம பரவசராய் , அஸ்தாநே பயஶங்கைபண்ணி ,“
தஹ்யமாநா வநந்தஸ்ய விஷ ஜ்வாலா ப்ரவேஸ “ என்று ,
ஷீராப்தி நாதனைக் கிட்டத் தேடுகிற மதுகைடபரென்கிற அசுரரை , தன் விஷ ஜ்வாலைகளாலே
உறுமாய்ந்துபோம்படி பண்ணுகிறவவதாநத்தை காட்டுகையாலே
“ அநந்தஸாயிநா “ என்கிறது மிகவும் பய ஹேதுவாயிருக்கும் |
“ வத்யதா மேஷ தண்டேன தீவ்ரேண ஸஸிவைஸ்ஸஹ | ராவணஸ்ய ந்ருஸம் சஸ்ய ப்ராதா ஹ்யேஷ விபீஷண: “ என்றிறே ,
ப்ரேம பரவசருடைய பரி மாற்றமிருக்கும்படி |
( ஸ்ரீநாரத பகவான் ஸ்வேததீபத்துக்கு எழுந்தருளி அங் குள்ள திவ்ய புருஷர்களை ஸேவித்து தத்ஸமீபத்தில் நின்று ,
ஊர்த்வ பாஹுவாய் ஸமாஹித சித்தனாய் , ஸர்வேஶ்வரனை , ஸ்ரீமஹா புருஷ ஸ்தவமென்கிற
பரம குஹ்யமான ஸ்தோத்ரத்தாலே ஸ்துதிக்க , அப்போது ஸர்வேஶ்வரன் ,
இவருக்கு தன்னுடைய விஶ்வ ரூபத்தை அநேக வர்ண ஸம்ஸ்தாநத்தோடு விசித்ரதரமாகக் காட்டிக்கொடுத்து ,
ஏகதத்விதத்ரிதர்க ளுக்கும் கூடக் காணவரிதான இந்த திவ்ய ரூபத்தை , ஏகாந்தி ஸத்தமராகை யாலே நீர் காணப்பெற்றீர் .
இவ்விடத்திலிருக்கிற திவ்ய புருஷர்களுடைய பக்திபாரவஸ்யத்தைப் பார்த்தால் , உம்முடைய பக்தி
குளப்படியென்ன வேண்டும்படியா யிருக்குமாகையாலே , அவர்களுடைய த்ருவாநுஸ்ம்ரு திக்கு விக்நம் தட்டாதபடி நீர்
இவ் விடத்திலிருந்து கடுகப் புறப்பட்டுப்போ மென்று ஸர்வேஶ்வரனருளிச் செய்ததாக ,
ஸ்ரீமஹாபாரத சாந்தி பர்வாந்தர் கத மோக்ஷ தர்ம பர்வத்தில் 339-340 அத்யாயங்களில்
சொல்லப்பட்ட வர்த்தம், இவ்விடத்தில் அநுஸந்தேயமாகக் கடவது | )

1 ( தஸ்மாதிதி ) , தஸ்மாத் – அந்தக்காரணத்தாலே ;
விமலாஶயா: — பரிசுத்தமான அந்த:கரணத்தை யுடையராய்
மஹாத்மாந: — ஸர்வஜ்ஞரா யிருக்கிற ;
( இவ்விடத்தில் , விமலாஶயா: — மஹாத்மாந: என்கிற பதங் கள் ,
“ மநஸாதுவிஸுத்தேந “ என்கிறபடியே
“ அறியவேண்டு மர்த்தமெல் லாமறிகைக்கு “ அந்த:கரண ஸுத்தி தான் ப்ரதானகாரணமென்று மர்த்தத் தைக் காட்டுகிறது “ )
அஸ்மதார்யா: — நம் பூருவாசாரியர்கள் ;
பக்திம் – ஸ்வரூப விருத்தமான பக்தி யோகத்தையும் ,
ப்ரபத்திம் ச -– “ ப்ரபத்யுபாயத் திக்கிக் குற்றங்கள் ஒன்றுமில்லை “ என்கிறபடியே
நிர்தோஷமாயிருக்கச் செய்தேயும் , ஈஶ்வர ஸ்வாதந்த்ர்ய பயமுள்ளதான ப்ரபத்தியையும் ,
விஹாய –- விட்டு ,
ஸதாசார்ய சரணாஶ்ரயாஸ்ஸந்த: — அந்த ஸித்தோபா யத்துக்கு வேறாவதன்றியே தத் சரமாவதியான
ஸதாசார்யனுடைய திருவ டிகளே யுபாயோபேயமென் றாஶ்ரயித்தவர்களாய்க் கொண்டு ,
தத் க்ருதேந – அந்த ஸதாசார்யனாலே பண்ணப்பட்ட ,
அபிமாநேந -– இவன் நம்முடைய வனென்கிற அபிமாநத்தாலே ,
பவார்ணவம் –- ஸம்ஸார ஸாகரத்தை ,
நிஸ்தரந்தி -– கடக்கப் பாய்கிறார்கள் |

1 லகூபாயேந லப்தவ்யே:பலே மஹதி தேஹிநாம் |
குரூபாய த்வயாத் கிம்வா கர்த்தவ்யம்ஸ்யாந் முமுஷுபி: || என்று
சரமகுரு சரிதையிலே யருளிச் செய்தாறிறே |

1 ( லகூ பாயேநேதி )
தேஹிநாம் -– விரோதியான ப்ரக்ருதியோடு கூடி அதிட்டவழக்காயிருக்கிற சேதநவர்க்கத்திற்கு ,
மஹதி:பலே “ :பலமத உப பத்தே: “ என்று , எம்பெருமானாலேயே ஸித்திக்க வேண்டும்படியான
பெருமையை யுடையதாய் ஸகல புருஷார்த்த விலக்ஷணமான கைங்கர்ய ரூப :பலமானது ,
லகூபாயேந –- ( க்ருப மாத்ர ப்ரபந்நரான ஸதாசார்யரு டைய வபிமாநமாகிற ) ஸுலபோபாயத்தாலே ;
லப்த வ்யேஸதி –- அடைய த்தக்கதாயிருக்க ,
முமுஷுபி: — ப்ரக்ருதியினுடைய தோஷங்களையறிந்து ப்ராப்ய ருசி தலை யெடுத்திருக்குமதிகாரிகளாலே ;
குரூபாயத்வயாத் -– ஸ்வரூப விரோத பயத்தாலும் , ஈஶ்வர ஸ்வாதந்த்ர்ய பயத்தாலும் ,
துர்ல பங்களான பக்தி ப்ரபத்திகளால் ;
கர்த்தவ்யம் -– செய்யவேண்டுமது ;
கிம்வாஸ்யாத் -– என்னதானிருக்கும் |
ப்ரக்ருதி பரவசராகையாலே முமுஷுத்வமில்லாத சேதநர்களுக்கும் கூட , ஸதாசார்யாபிமாநத்தாலே பேறு லபிக்கத்தக்கதாயிருக்க ,
முமுஷுக்களாய் ஆசார்ய அபிமாநத்திலொதுங்கி யிருக்குமவர்களுக்குச் சொல்ல வேண்டா விறே ;
ஆகையாலே, இவர்களுக்கு பக்தி ப்ரபத்திகளால் கார்யமில்லை யென்றபடி |

ப்ராமாணிகாக்ரேசரரான பட்டரும் ,

2 பரம காருணிகச்ய பரமகுரோர் பகவத: ஸ்ரீமந் நாராயணஸ்ய புண்டரீக தளா மலாயதேக்ஷணமுக கமல விகாஸ

2 ஸ்ரீபராஶரபட்டார்ய ஸுக்தி |
( பரம காருணிகேத்யாதி )
பரமகாருணிகஸ்ய – ( “ ஈஶ்வரஶ்யச ஸௌஹார்த்தம் “ இத்யாதியில் படியே , ஆசார்ய ப்ராப்திக்கும் ப்ரதம ஹேது தானாகையாலே ) மேலான காருணிகனாய் ;
பரம குரோ: — “ லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் “ என்று குரு பரம்பராதியிலே தன்னை யநுஸந்திக்க வேண்டுகையாலே , மேலானவாசார்யனாய் ;
பகவத: — அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைகதானனாய் ;
ஸ்ரீமந் நாராயணஸ்ய –
ஸ்ரீமத் – புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரோடே நித்ய ஸம்யுக்தனாயிருக்கிற ,
நாராயணஸ்ய -– எம்பெருமானுடைய ;
புண்டரீக தளாமலாயதேக்ஷண முககமலவிகாஸ ஹேதுபூதம் ஹி -–
புண்டரீக தள – வெள்ளைத் தாமரை தளங்களைப் போன்றதாயும் ,
அமல — நிர்மலங்களாயும் ,
ஆயத – நீண்டதுகளாயு மிருக்கிற ,
ஈக்ஷண -– திருக்கண்களை யுடைத்தான ,
முக கமல — திருமுக மண்டலமாகிற செந்தாமரையினுடைய,
விகாஸ — மலர்கைக்கு ,
ஹேது பூதம் ஹி – காரணபூதமாகவேயன்றோ ?
பகவத் ராமாநுஜ சரணார விந்த சரணவரணம் —
பகவத் ராமாநுஜ “ ஸர்வ கல்யாண ஸம்பூர்ணம் , ஸர்வஜ்ஞாநோப ப்ரும்ஹிதம் ;
ஆசார்யமாஶ்ர யேத் “ என்கிற ஸர்வ கல்யாண குணங்களையும் ,
பரிபூர்ண ஜ்ஞாநத்தையும் உடையரான எம்பெருமானாருடைய ,
சரணாரவிந்த -– திருவடித் தாமரைகளிலே பண்ணும் ,
சரணவரணம் – சரணாகதி தானிருப்பது ; என்கை |
(இத்தால் எம்பெருமானார் திருவடிகளில் ஸமாஶ்ரயணமே ஸ்ரீமந்நாராயணனுடைய முக்கோல்லாஸ ஹேதுபூதமென்னதாயிற்று )
தஸ்மாத் -– அந்த ஹேதுவினாலே ,
ததேவ – அந்த எம்பெருமானாருடைய திருவடிகளிலே பண்ணும் ப்ரபத்தி தானே ,
அஸ்மாகம் – அஸ்மதாதிக ளுக்கு ,
உஜ்ஜீவனாய – உஜ்ஜீவிக்கைக்கு ,
அலமிதி -– போறுமென்று ,
அஸ்மத் தாதபாதா: — பூஜ்யரான நம் திருத்தகப்பனார் , மேநிறே – திருவுள்ளத்திலறுதியிட்டாரென்கை |

ஹேது பூதம் ஹி பகவத் ராமாநுஜ சரணாரவிந்த சரண வரணம் |
தஸ்மாத் ததேவாஸ்மாக முஜ்ஜீவனாயாலமித்யஸ்மத்தாத பாதாமேனிறே “ என்று
ஆழ்வானுடைய ஸித்தாந்தமாக குருப்ரபாவதீபி கையிலே யருளிச்செய்தார் |

1 க்ஷ்மணாசார்ய குருபாத ஸேவிநாம் ரக்ஷணாய …..கலு தத் க்ருபா பரம் | யத் க்ஷணேன நிஜ முக்யமாநி தாம் வ்யுத்ஷிணோதி ……..

1 ( லக்ஷ்மணார்யேதி ) –
இந்த ஶ்லோகம் தான் எழுபத்துநாலு ஸிம்ஹா ஸநஸ்தர்களிலே முதலியாண்டான் போல்வாரான ஆசார்யர் அருளிச் செய்ததாயிருக்கும் |
இதில் எம்பெருமானார் ஸ்வாஶ்ரிதர்க்கு “ வித்யா மதோ , தந மத ஸ்ததைவாபிஜநோ மத: “ என்கிற முக்குறும்பை
ஸவாஸ நமாக நிரஸித்தபடியைச் சொல்லி , எவ்வழியாலுமவரே ரக்ஷகரென்று சொல்லுகிறது |
தத் க்ருபா , பரம் என்கிற பதங்களால் அவருடைய க்ரு பையே அவரை ஆஶ்ரயித்தவர்களுக்கு ரக்ஷகமென்றும் ,
கலு , என்று இவ்வர்த்தத்தினுடைய ப்ரஸித்தியும் , சொல்லுகையாலே ,
ஆசார்ய ப்ராப்திக்கு பூர்வ பாவியான அத்வேஷாதிகள் மாத்ரமே பகவத் க்ருபையாலே உண்டாகிற தத்தனைப் போக்கி ,
ஆசார்ய ப்ராப்திக்குப் பின்பு “ செயல் நன்றாக திருத்துகை “ ஆசார்ய க்ருத்தமென்னதாயித்து ;
“ ஆசார்யன் சிச்ச னாருயிரைப் பேணுமவன் “ என்னக் கடவதிறே |
உடையவர் தாம் ப்ரமா ணங்களைக் கொண்டு ஸ்வாஶ்ரிதரைத் தாமே திருத்துகை யன்றிக்கே,
திருக்கோட்டியூர் நம்பியைக்கொண்டும் , முதலியாண்டானுக்கு ஸ்வரூப சிக்ஷஐ ப்ரஸாதிப்பித்தருளினார் ;
இவரைப் பின்சென்றவாழ்வானும் பிள்ளை பிள்ளையாழ்வானுக்கு ஸ்வரூப சிஷை ப்ரஸாதித்தருளினார் |

“ திருத்தித் திருமகள் கேள்வனுக்காக்கு “ மதிலும் காட்டில் ,
ததீயர்க்கும் அவர்கள் மிகவும் விரும்புகிற வாசார்யனுக்கும் இஷ்ட விநியோகார்ஹ னாம்படி செய்கை மிகவும் உத்தேஶ்யம் ;
ஸர்வேஶ்வரன் தானும் அடியார்க்காள்படுத்துமிறே |
இனி இவர்களைத் திருத்தி முக்குறும்பை ஸவாஸநமாக நிரஸித்தாலொழிய ,
அந்த உத்தேஸ்யம் தலைக் கட்டப் போகாது ; அதுவும் ஈஶ்வரனே செய்தா லோவென்னில் ?
அவன்தான் ஸ்வாதந்த்ர்யத்தாலே “ ந க்ஷமாமி “ என்று கொண்டு
“ அவமான க்ரியா தேஷாம் ஸம்ஹரத்யகிலம் ஜகத் “ என்று , சீறுகையாலே
இவர்களைத் திருத்த விசையமாட்டான் ;
இப்படிப்பட்ட வெம்பெருமான் திருவுள்ள மறிந்து இவர்களை யவன் கையில் காட்டிக் கொடுக்கில் என்படுமோ என்று வயிறெரிந்து
க்ருபா மாத்ர ப்ரஸந்நராய் இவர்களை வரிந்து திருத்துகையா லிறே
“ லக்ஷ்மணார்ய குருபாத ஸேவிநாம் ரக்ஷணாயகலு தத்க்ருபா பரம் “ என்றருளிச் செய்ததும் |
யத் – எந்த காரணத்தினாலே
( எம்பெருமானார் நிர்ஹேதுகமான தம்முடைய ஆஶ்ரித வாத்ஸல்யமே காரணமாக என்கை)
நிஜ முக்யமாநிதாம் –
நிஜ – தம்மைப் பற்றின ஆசார்யர்களிடத்தில் உண்டாகக் கடவதான ,
முக்யமாநி தாம் – முக்குறும்பை ,
ஃபலரீதி தத்வத: —
ஃபல — இவை இருப்பதாலும் , இவற்றை நிரஸிப்பதாலும் வரக் கடஃ:பலத் தினுடைய ,
ரீதி தத்வத: — ப்ரகார யாதாத்ம்யத்தாலே ,
( அதாவது ப்ரகா ரங்களை உள்ளபடிக் காட்டுகையாலே என்கை) |
க்ஷணேன – ஒரு நிமிஷத்திலே ஏக தேசமான அல்ப காலத்திலேயே ,
வ்யுத்ஷிணோதி –- ஸவாஸநமாக எடுத்துப் பொகடுகிறாரோ ,
தத் —அந்தக் காரணத்தினாலே ,
( யத்த தோர் நித்ய ஸம்பந்த: என்கிற ந்யாயத்தாலே இங்கு “தத்” சப்தம் வருகிறது )
லக்ஷ்மணார்ய குருபாத ஸேவிநாம் – லக்ஷ்மணார்ய குரு -– “ ஆசார்யோ வேதஸம்பந்ந:” இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
ஸர்வ லக்ஷண ஸம்பந்நராய் ஆஶ்ரிதர்க்கு அஜ்ஞாந நிவர்த்தகராயக் கொண்டு ,
உத்தாரக ஆசார்ய ரான எம்பெருமானாருடைய ,
பாதஸேவிநாம் – ( “ இராமாநுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ “ என்கிறபடியே , பரம ப்ராப்யமான )
திருவடி களை உபாயமாகப் பற்றினவர்களுடைய ,
ரக்ஷணாய – ரக்ஷணத்தின் பொருட்டு ,
தத் க்ருபா பரம் கலு – அந்த வெம்பெருமானாருடைய க்ருபை தானே யன்றோ ? அமைந்திருக்கிறது |
இப்படி ஸ்வரூப சோதநமே பிடித்து :பலரீதி த்த்வத: “ என்று பூர்வர்கள் சொல்லும் முக்தகமிறே |

1 “ ஸ்வ வ்யாபாரேண ஸாத்யா பஜநகதிரியம் ஸ்வாநுரூபத்வஹா நாத்யாஜ்யா பூஜ்யைஹி ப்ரபந்நைச் சரண வரணிதா தேஶிகைர் நாப்யுபாத்தா |
கிம்த்வாசார்யாபிமாநாத் பரமபதமஹோ லப்யதே நாந்யதோ , ந தஸ்மாத் ராமாநுஜாங்க்ரி த்விதீயமநுபமம் ஸாதநம் பாவயாம: “ என்று
பக்தி ப்ரபத்திகளை த்யாஜ்ய கோடியிலேயாக்கி
தத் க்ருபையினாலேயாயிருக்க ,
பேற்றுக்கவர் திருவடிகளே ஸாதநமென்பது , கிம் புநர் ந்யாய ஸித்தமிறே யென்கை |

1 நாயனாராச்சாம்பிள்ளை யருளிச்செய்த ஸ்ரீஸூக்தி | ( ஸ்வ வ்யாபாரே ணேதி ) –
ஸ்வ வ்யாபாரேண -– ஸ்வப்ரயத்நத்தாலே
( இங்குச் சொல்ல வேண்டிய வர்த்த விஶேஷங்களெல்லாம் , இதற்கு முன்னமே சொல்லப் பட்டிருக்கிறது ) ;
ஸாத்யா – ஸாதிக்கப்படுவதான ,
இயம் பஜநகதி: — இந்த பக்த்யுபாயமானது
( இவ்விடத்தில் ஸமீப வர்த்தியாநத்தைக் காட்டுகிற இயம் என்கிற பதம் ஸ்ரீபாஷ்யத்திலறுதியிட்ட
இந்த பக்த்யுபாயத்தின் ப்ராதாந்யம் இவர் திருவுள்ளத்திலோடுகின்ற படியைக் காட்டுகிறது )
ஸ்வாநு ரூபத்வ ஹாநாத் —
ஸ்வ – பரதந்த்ரனான தன்னுடைய ஸ்வரூபத்துக்கு ,
அநுரூபத்வ -– அநுகுணமாயிருக்கும்படியை ,
ஹாநாத் -– விட்டிருக்கை யாலே ,
பூஜ்யை: — பூஜ்யராயிருக்கிற ,
ப்ரபந்நை: — ஜ்ஞாநாதிக்யத்தாலே , ப்ரபந்நரான நாத யாமுந யதிவராதிகளாலே ,
த்யாஜ்யா -– த்யஜிக்கத் தக்க தாய்விட்டது ; ( அப்படியே )
தேஶிகை: — நம்முடைய உஜ்ஜீவநத்துக்கு கட வரான அந்த ஆசார்யர்களாலே ,
சரணவரணிதாபி -– பகவச் சரணாரவிந்த சரணாகதனாயிருக்கும்படியும் ,
ஸ்வாநுரூபத்வ ஹாநாத் –
ஸ்வ -– ஆசார்ய பரதந்த்ரனாயிருக்கிற தன்னுடைய ஸ்வரூபத்துக்கு ,
அநுரூபத்வ -– அநு குணமாயிருக்கும் படியை ,
ஹாநாத் -– விட்டிருக்கையாலே ,
நோபாத்தா –- அங்கீகரிக்கப்படவில்லை |
அதவா -–
பயாபயங்களிரண்டும் மாறி மாறி நடக்கும் ப்ரஶக்தியில்லாததாக அங்கீகரிக்கப்படவில்லையென்னுமாம் |
கிந்து -– பின்னையோவென்னில் ,
ஆசார்யாபிமாநாத் -– “ ஆசிநோதிஹி ஶாஸ்த்ரார்த்தான் “ இத்யாதி ப்ரகாரங்களாலே
பரிபூர்ணனான ஸதாசார்ய னுடைய வபிமாநத்தாலே |
பரமபதம் – நலமந்தமில்லதோர் நாடானது ,
லப்யதே –- அடையப் படுகிறது ; ( என்றும் )
அந்யத: — பகவத் பாரதந்த்ர்யத்துக்கு விரோதியான பக்த்யுபாயமென்ன
ஆசார்ய பாரதந்த்ர்யத்துக்கு விரோதியான பகவத் சரணாரவிந்த சரணாகதியென்ன ,
இவைகளாலே , ந லப்யதே – அடையப் படுகிறதில்லை ;
ந சேஜ்யயா “ )
பக்த்யா த்வநந்யயா ஸக்ய: ( இத்யாதி பரஸ்ஸதங்களான ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே |
“ உபய பரிகர்மித ஸ்வாந் தஸ்ய “
ஏவம் நியமயுக் தஸ்ய ; இத்யாதி ஜ்ஞாநாநுஷ்டான பரிபூர்ணனான வதிகாரியினாலே அடையப்படுமதான பரமபதமானது ,
ஆசார்யாபிமான ரூப ஸுலபோபாயத்தாலே லபிக்கப்படுகிறதென்கிறது ) ஆஶ்சர்யமென்னபடி |
தஸ்மாத் –- இப்படி ஆசார்யாபிமாநமே உத்தாரக மாகையாலே ,
ந: — அஸ்மதாதிகளுக்கு
இராமாநுஜாங்க்ரித்விதயம் — இராமாநுஜ –- ( உபாயாத்மகமானவாசார்யத்வ முள்ள ) எம்பெருமானா ருடைய ,
அங்க்ரித்விதயம் -– திருவடிகளிரண்டுமே,
அநுபமம் – இதர நிரபேக்ஷமாகையாலே நிகரின்றிக்கே இருக்கிற ,
ஸாதநம் -– உபாயமாக ,
பாவயாம: — அத்யவஸிக்கக்கடவோம் | 1
எம்பெருமானாருடைய வபிமாநத்தாலே பேறு தப்பாதென்று , தத் சரணார விந்தங்களை
யுபாயமாக வறுதியிட்டார் இறே நாயனாராச்சாம் பிள்ளையும் |

இப்படி நம் பூர்வ ஆசார்யார்களனைவரும் ப்ரமாண புரஸ் ஸரமாக வெம்பெருமானாரிடத்திலே யுத்தாரகக்வத்தை யறுதி யிட்டு ,
அவர் அபிமாநத்திலே யொதுங்கி “ தேவுமற்றறியேன் “ என்று ததேகநிஷ்டராய் போந்தார்களிறே |
ஆகையால் எம்பெருமானாரோடுண்டான ஸம்பந்தத்துக் கிசையாதே
“ தொண்டுக்கே கோலம் பூண்டு” என்கிறபடியே குழச்சியிடுவதும் , கும்பிடுவதுமாய் கொண்டு
பரப்ரா மகராய்த் திரியும் துர்மாநிகளான கள்ளக் கழணிமிண்டர்க்கு ,
யாவ தாத்மபாவி யீஶ்வரன் பல:ப்ரதனன்றிக்கே, ஸம்ஸார ஸாகரத்திலே யழுந்தி போரும்படி யிட்டு வைப்பன் |
இவ்வர்த்தத்தை , இராமாநுசன் மன்னு மாமலர்த்தாள் பொருந்தா நிலையுடை புன்மையினோர்க் கென்றும்
நன்மை செய்யா பெருந்தேவரைப் பரவும் பெரியோர் “ என்று ஸ்பஷ்டமாக வருளிச் செய்தார் இறே |

1 யஸ் ஸ்ரீலக்ஷ்மண யோகி வர்ய சரண த்வந்த்வாஶ்ரயீ நா பவத் தஸ்யாத்யந்த தயாதி ஸத் குணநிதிர் நாராயண ஸ்ரீபதி: |  நஞ்ஜீயரருளிச் செய்த ஸ்ரீஸூக்தி

( யஸ் ஸ்ரீலக்ஷ்மணேதி ) –
ய: — எந்த சேதநந் ,
ஸ்ரீலக்ஷ்மணயோகிவர்ய , சரண த்வந்த்வாஶ்ரயீ — ஸ்ரீ – ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயை யுடையராய் , லக்ஷ்மண யோகி வர்ய – சேஷாவதாரமென்று ஸூசிக்குமதான
லக்ஷ்மண னென்கிற திருநாமத்தையுடைய யோகிஶ்ரேஷ்டருடைய
( இளைய பெரு மாள் “ ந தேவ லோகாக்ரமணம் “ ) என்னிருந்தாப்போலே இவரும்
“ காகுத்தன் கடியார் பொழிலரங்கத் தம்மானை “ யல்ல தறியாரிரே ) |
சரணத்வந்த்வாஶ்ரயீ -– ஒன்றைக்காட்டிலுமொன்று போக்யமாய் ஸேர்த்தி யழகையுடைய இரண்டு திருவடிகளுமே
யுபாயோபேயத்வேந தாதும் முக்தி மனாதரோபவ ப்ருஹத் வாராஸயே ஸந்ததம் நிஷேப்யைவ ஹ்ருதாபிநோ
கணயதி ப்ராக் சித்த கர்மேரித: “ என்று நஞ்ஜீயர் இவ் வர்த்தத்தை யருளிச் செய்தார் ;

அதாவது
எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்த ரஹிதநாய் நான் வைஷ்ணவனென்று யாதொருத்தன்
ப்ரஸித்தி தோற்றவிருக்கிறான் , அவனுக்கு நிரவதிக வாத்ஸல்ய யுக்தனான ஸர்வேஶ்வரன் ,
புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரருகிலிருந்தாலும் தயாதி குண பரிபூர்ணனாயிருந் தாலும் ,
மோக்ஷபலம் கொடாமல் அநாதரித்து , யாவதாத்மபாவி ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே தள்ளியிட்டு வைத்து ,
அவன் தான் தன்னுடைய அநாதி சித்தமான கர்மத்துக்கு பரவசனாகி , இப்படி அநர்த்தப்பட்டானென்று கொண்டு ,
என் செய்தான் , என் பட்டான், என்று , திருவுள்ளத்தாலும் எண்ணானென்னபடி —
இப்படி பரம காருணிகராய் , பரமோத்தாரகரான வெம்பெருமானர் அபிமாநத்திலே யொதுங்கி வர்த்திக்கும் வைஷ்ணவாதிகாரி , த
னக்கு ஸஹவாஸ யோக்யரும் ஸதாநுபவ யோக்யரும் , ஸத்கார யோக்யரும் , உண்டாம்படி தேடிக் கொண்டிருக்க வேணும் ;
இல்லை யாகில் ஸ்வ ஸ்வரூப ப்ரத்யுதிவந்து அத:பதித்து விடுவன் ,
இதில் , ஸஹவாஸ யோக்யராகிறார் , மரு வற்ற சரம பர்வ நிஷ்டராய் , எம்பெருமானாருடைய பற்றினவனாக ,
ந பவத் — ஆகவில்லையோ ,
தஸ்ய — அந்த சேதநநுக்கு ,
( இந்த பதத்துக்கு தாதும் முக்திமநாதர: என்கிற பதங்களோடு ஸம்பந்தம் )
நாராயண: — நிரவதிக வாத்ஸல்யாதி கல்யாண குணயுக்தனான ஸர்வேஶ்வரன் ,
ஸ்ரீபதி: — புருஷகாரபூதையான பிராட்டி சொல்வழி வருமவனாயிருந்தாலும்
அத்யந்த தயாதி ஸத்குணநிதி: — நிரவதிக க்ருபாதி குண பரிபூர்ணனாயிருந்தாலும் ,
முக்திம் -– மோக்ஷத்தை ,
தாதும் -– கொடுக்கைக்கு ,
அநாதரஸ் ஸந் – ஆதரமில்லாதவனாய்க் கொண்டு( ராமாநுஜ பதாஶ்ரயனாகாத வந்த சேதனனை ) ,
ப்ருஹத்வாராஸயே -– ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே ,
நிஷேப்யைவ — “ ஷிபாமி “ என்கிற படியே மறுவலிடாதபடி தள்ளி விட்டு ,
( அயம் ) ப்ராக் ஸித்தி கர்மேரித: — ( இதி ) ( இவன் தான் ) தன்னுடைய அநாதி சித்தமான
கர்மத்தாலே ப்ரேரிதனாய் ( இப்படி அதோ கதி யடைந்தானென்று கொண்டு ) ,
ஹ்ருதாபி – ஒருக்காலும் மனஸ்ஸாலும் கூட ,
நோ கணயதி – ( இவன் என்பட்டான் என் செய்தான் என்று ) எண்ணமாட்டானென்கை |

# ( குண:ப்ரதிபாதகமான ) திவ்யஸூக்திகளை ப்ரஸங்கிக்கில் ,
இவையும் சில ஸூக்திகளிருந்தபடியே , பாவியேன் , இவற்றை யநாதி காலமிழந்து கெட்டேன் , என்று நெஞ்சுருகி
யீடுபட்டிருக்கு மவர்கள் ; ஸதாநுபவ யோக்யராகிறார் ,
எம்பெருமானார் திருநாம த்தை யுச்சரியா விடில் நாக்கு வற்றுமென்று ததேகாநுஸந்தான தத் பரராய் ,
ததுக்தி ஶ்ரவணத்தில் ப்ரணவராய் , ஸர்வநேத்ராங்க விக்ரி யையை யுடையவராய் ,
தத் விஷயத்தில் ப்ரவணராயிருக்குமவர்கள்; ஸத்காரயோக்யராகிறார் ,
தேஹயாத்ரையில் உபேஷை பிறந்து , ஆத்ம யாத்ரையில் மிக்க வபிநிவேஶத்தை யுடையராய் ,
ததீயாபிமா நத்திலே யொதுங்கி எம்பெருமானாருடைய திருநாமாநுஸந்தாநத் தாலே மாதுகரங்கொண்டு , தேஹதாரணம் பண்ணி வர்த்திக்குமவர்கள் |
எம்பெருமானாருடைய கல்யாண குணங்களிலே மக்நாஶயரல் லாதாரோடு ஸஹவாஸம் , சரம பர்வாதிகாரிக்கு அவத்யமாயிருக்கும் ;
“ இராமாநுசன் தன் பிறங்கிய சீர் சாரா மனிசரைச் சேரே னெனக்கென்ன தாழ்வினியே “, என்றும் , அருளிச்செய்து வைத்தார் இறே |
இவ் வதிகாரிக்கு க்ஷணமுமிடைவிடாமல் காலஷேபத்துக்கு விஷயமாகிறது

# ( குணப்ரதிபாதகமாக ) என்கிற குண்டலித க்ரந்தமில்லாவிடிலும் , அழகி யது .
1 ( த்வத் ப்ரபந்த பரிஶீலநைரிதி ) – இதுதான் எம்பெருமானார் விஷயமான ப்ரார்தநா பஞ்சகத்தில் ஶ்லோகமாயிருக்கும் .
இதில் எம்பெருமானாராலே ப்ரதிபாதிக்கப்பட்ட ஸ்ரீபாஷ்யாதி வேதாந்த க்ரந்தங்களுடைய பரிசீலநத்தால் கால யாபநம் பெறவேண்டுமென்று ப்ரார்த்திக்கிறது . “
பராங்குச முனீந்த்ராதி “ என்கிற ஶ்லோகத்திலே அருளிச் செயல்களில் ருசியை ப்ரார்த்திக்கிறவர்
அதற்கு முன் ஸ்ரீபாஷ்யாதி பரிசீலநத்தை ப்ரார்த்திப்பானெ னென்னில் ? —
“ 1 த்வத் ப்ரபந்த பரிஶீலநை: காலஷேபோஸ்து-என்கிறபடியே
தத் ப்ரதிபாதிதமான வேதாந்த க்ரந்தங்களும் , பகவத்  குணாநுபவரூபாதி திவ்ய ஸூக்திகளும் ;
திவ்யஸூக்திகளாவன –- ஆழ்வார்களுடைய வருளிச்செயல்களும் , திருப்பாவையும்
பூர்வா சார்யர்களருளிச் செய்த ரஹஸ்யங்களும் .
இனி யிந்த சரமாகாதிகாரிக்கு நாலு நிலையுண்டு , அதாவது ,
ஸ்வரூப ஜ்ஞாநமென்றும் ,
ஸ்வரூப நிஷ்டையென்றும் ,
ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநமென்றும் ,
ஸ்வரூப யாதாத்ம்ய நிஷ்டையென்றும் நாலுவகையாயிருக்கும் ;

இவற்றில் ஸ்வரூபஜ்ஞாநமாவது-
பகவத் பரதந்த்ரமாயிருக்கிற வசா தாரணாகாரத்தை யெவ்வழியாலும் ஸத்தை குலையாமல் நின்று ணர்ந்து ,
அதுதான் ததீயபர்யந்தமாகாவிடில் குலையுமாகையாலே
யெம்பெருமானாருக்கும் ததீயருக்கும் , அத்யந்த பரதந்த்ரமா யிருக்கு மென்றறுதி யிட்டு ,
ததேக நிஷ்டராயிருக்கு மிருப்பை யுள்ளபடியறிகை

ஸ்வரூபநிஷ்டையாவது , இஷ்ட விநியோகார்ஹ ஸ்வரூபமான-Two lines of handwritten Telugu manuscript–எழுதியது புரியவில்லை

“ மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் “ என்கிறவிடத்தில் ஸ்ரீபாஷ்யத்தை யருளிச் செயல்களுக்குக் காவலாகச் சொல்லுகையாலே .
இனி , இந்த ஶ்லோகத்தில் “ ஆமோக்ஷம் லக்ஷ்மணார்ய “ இத்யாதி பதங்களுமிருக்கையாலே , அவைகளையும் சேர்த்துக் கொண்டு அர்த்தமெழுதப்படுகிறது .
ஹே லக்ஷ்மணார்ய – அபியுக்தாக்ரேசரரான வெம்பெருமானாரே ,
ஸத்பி: — தேவரீரபிமாநத்திலே யொதுங்கியிருக்கும் ஸத்துக்களோடே ,
ஸஹவாஸம் — ஸஹவாஸத்தை ,
உபேயுஷாம் – அடைந்திருக்கிற ,
ந: — அடியோங்க ளுக்கு ,
த்வத் ப்ரபந்தபரிசீலனை –
த்வத் – தேவரீராலே ப்ரதிபாதிக்கப்பட்ட ,
ப்ரபந்த -– ஸ்ரீபாஷ்யாதி வேதாந்த க்ரந்தங்களினுடைய ,
பரிசீலனை –- பரிசீல நத்தாலே
( பரி என்கிற உபஸர்க்கத்தோடு கூடின இந்த பதம் அந்த க்ரந்தங்களி லறுதியிடப்பட்ட அர்த்தங்களில்
ஓன்றும் நழுவாதபடி அடிக்கடி ஸேவிக்கும்படியைச் சொல்லுகிறது ) ,
காலஷேப: — கால க்ஷேபமாக ,
அஸ்து –- ஆகக் கடவது ;
இப்படியெத்தனை நாள் வரையென்னில் ?
ஆமோக்ஷம் -– மோக்ஷமுண்டாகிற வரையிலும் . ( ப்ரக்ருதிஸம்பந்தமிருக் கிறவரையிலும் )
மந்யதா ப்ரதிபத்யாதிகள் துர்ஜயமாகையாலும் ,
அதுகளை ஸ்ரீபாஷ்யாதி ஸூக்திகளாலே பல படியாக நிரஸித்திருக்கையாலும் ,
மோக்ஷமுண்டாகிற வரையில் , இன்னமொரு ஜந்மமுண்டாகிலும் அப்போதும் இவற்றினுடைய பரிஶீலநமே
காலஷேபமாயிருக்க வேணுமென்று ப்ரார்த்திக்கிறார் ) .

ததீயஶேஷத்வம் ;
1 “ அகிஞ்சித் காரஸ்ய ஶேஷத்வாநுபபத்தி: “ என்கிறபடியே

1 ( அகிஞ்சித்கரஸ்யேதி ) —-
அகிஞ்சித் கரஸ்ய – கிஞ்சித்கரியாதவனுக்கு ,
ஶேஷத்வாநுபபத்தி: — ஶேஷத்வத்தினுடைய வுபபத்தியில்லை என்கை

கிஞ்சித்காரமில்லாதபோது அந்த ஶேஷத்வம் நிலை நில்லாமையாலே ,
தத் சித்யர்த்தமாக , தத் ப்ரதிஸம்பந்திகளாய் பரம ஶேஷிகளான எம்பெருமானாரபிமான நிஷ்டர் விஷயத்திலும் ,
த்ரிவித கரணத்தாலும் , கிஞ்சித்கரித்துப்போரும் நிலையிலேயொரு படப் பண்ணுகை .

ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநமானது
எம்பெருமானா ருடைய வபிமாநத்திலொதுங்கி , தத் விஷய கிஞ்சித்காரத்தாலே நிலையையுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் பக்கல் ,
அவ்யபிசாரிணியான பக்தியைப் பண்ணி , தத் விஷய விஷயீகாரத்திலே ஸ்வ ஸ்வரூபத்தைச் சொறுகியிட்டு ,
இந்த ஸ்வரூபம் அத்தலைக்கே யுறுப்பாய் விநியோகப்படவேணுமென்று
இவ்வர்த்தத்தினுடைய நித்ய ப்ரார்த் தனையிலே நிலையுடையனா யிருக்குமிருப்பை யுள்ளபடியறிகை ; “
உன் தொண்டர்கட்கே யன்புற்றிருக்கும்படி யென்னையாக்கியங்காட் படுத்தே “ என்று , அமுதனாரும் இவ்வர்த்தத்தை யருளிச்செய்தார் இறே

ஸ்வரூப யாதாத்ம்ய நிஷ்டையாவது ,
சரம பர்வமான எம்பெரு மானாருடைய முக விகாஸத்துக் குடலாக ததீய விஷய கிஞ்சித்காரத் தாலும்,
தன் முக விகாஸ ஹேதுவான தத் சேஷ விஷய கிஞ்சித்காரத் தாலும்,
ஸ்வரூபத்தை விநியோகார்ஹமாம்படி , தத்தத் சந்தாநு வர்த்தன பூர்வகமாக
அஶேஷ ஶேஷ வ்ருத்தியிலுமந்வயிப்பித்து , அதுதான் தத் தத் விஷய பூதரான ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
பரம்பரா பர்யந்தமாக த்ரிவித கரணத்தாலும் பர்யவஸிக்கும்படி பண்ணி ,
தத் விஷய கிஞ்சித்காராபாவத்தில் ஆத்ம ஸத்தையில்லை யென்னும் படியான நிலை பிறந்து ததேகநிஷ்டையிலே தத்பரனாயிருக்கை .
இனி இவ்வர்த்த நிஷ்டைதான் ஓரொருவர்க்கு சரம ஶேஷியான. வெம்பெருமானாருடைய கடாக்ஷ விசேஷத்தாலே
லபிக்குமதொழிய மற்றபடி துர்லபமாயிற்று ;
ஆகையாலேயிறே அந்த சந்தத்தில் சரம சேஷியான வெம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யம்
ஸார்வத்ரி கமன்றிக்கே , தேடிப் பிடிக்க வேண்டும்படி க்வாசித்க மாயிருக்கிறது .

“ அஸ்மிந்நர்தே விஶ்வாஸஸ் ஸர்வேஷாம் ந ஜநிஷ்யதி | மத் கடாஷோ பவேத் யஸ்மிந் மய்யேவ ப்ரவணோஹிய: |
தஸ்ய தஸ்ய ஹ்ருதிஸ் தோயம் பவிஷ்யதி ந ஶம்ஶய: “ என்று ,
எம்பெருமான் தானே சரம பர்வ விஷயமான ப்ரதிபத்தி , தத் கடாக்ஷமடியாக வுண்டாகவேணுமென்று சொல்லிவைத்தானிறே .
உஜ்ஜீவநேச்சுவான வதிகாரி , தனக்கு , ப்ரதமத்திலே சரம பர்வமான வெம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யம் விளைகைக் குடலாக ,
ததபிமாந நிஷ்டரான ஸ்ரீவைஷ்ணவர்கள் பக்கல் கரண த்ரயத்தாலுமநுவர்த்தநம் பண்ணி , ததவசர ப்ரதீக்ஷனாய் ,
தனக்கவர்கள் ஸ்வரூப ஸோதநம் கொடுத்து, தன்னை விரும்பி மேல் விழுந்து , தத் குண வைபவத்தை யுபதேசிக்க
சுக்கான் பாறை போலே கடின ஹ்ருதயனன்றிக்கே நெஞ்சிரக்கமுடை யனாய்ச் செவிதாழ்த்து ,
கண்ணும் கண்ணீருமா யிருக்கும் படியான பரிபாக தசை பிறந்தால் ,சரமசேஷி கடாக்ஷம் பிறந்து
தடையின்றி யிலே யிவன் பக்கல் ப்ரவஹிக்கும் ;
பின்பு , தத் ஸம்பந்தம் அபிச் சின்ன ஸ்ரோதோ ரூபேண நடந்து செல்லுமிறே .
இப்படிப்பட்ட ஸம் பந்தத்தை இவனுக்கவர்களுணர்த்தும்போது , இவன் அறியாததாய் ,
எம்பெருமானாரும் ததீயருமறிந்ததாயிருப்பன சில கைமுதலிவன் பக்கலுண்டாயிருக்கவேணுமிறே ;
அவையாவன : —
நிரங்குஸ ஸ்வ தந்த்ரனாய் நிருபாதிக ஶேஷியான வெம்பெருமான் ,
இவ்வதிகாரியி னிடத்திலே நன்மையை நினைக்கும் படியான குளிர்ந்த திருவுள்ள த்தை யுடையனாக வேணும் ;
அதுக்கடியாக விவனுக்கு ஜ்ஞாதமாய் , அவனுக்கு ஜ்ஞாதமா யிருப்பதொரு யாத்ருச்சிக ஸூஹ்ருதம் பிறந்திருக்க வேணும் ;
இவன் பக்கலேதேனும் யாத்ருச்சிகமாக ஒரு நன்மை காணும் போது என்றோவென்று ,
எங்குமொக்க வ்யாப்தி பண்ணி யவ காசம் பார்த்திருக்கும் ஸர்வேஶ்வரனுடைய கடாக்ஷ விஶேஷம்
இவன் பக்கல் அபிமுகமாயிருக்க வேணும் ;
இப்படி யெம்பெருமானுடைய விஶேஷ கடாக்ஷ மபிமுகமான தசையிலே , பகவத் ப்ரஸங்கம் வந் தால் ,
சிவிட்கென்று த்வேஷம் கொண்டாடாமல் , அநுமதி ப்ரதனா யிருக்கவேணும் ;
இதடியாக பகவத் குண விக்ரஹ விபூதி தர்சநத்தில் முகம் மாறாடாமல ,அபிமுகனா யிருக்கும் படியான நினைவு பிறக்க வேணும் ;
இதுக்கெல்லாமடியாக இவை இத்தனையும் பெற்று , பகவத் ஸ்வரூப ரூப குண விபூதி விஷய ஜ்ஞாநத்தையுடையராய்
நிஷ் க்ருஷ்ட ஸத்வ குண நிஷ்டரான ஸ்ரீவைஷ்ணவர்களோடு ஸம்பந்தத்துக்கு பூர்வபாவியான ஸம்பாஷணமுண்டாக வேணும் ;
இவையித்த னையுமுண்டாகிலிறே , இவனுக்கு ஸதாசார்யராய் சரம பர்வனான வெம்பெருமானாரோடு ஸம்பந்தம் சித்திப்பது .
“ ஈஶ்வரஸ்ய ச ஸௌஹார்தம்( ஈஶ்வரஸ்ய ச ஸௌஹார்தமிதி ) –
இந்த ஶ்லோகந்தான் இப் ப்ரபந்தத்துக்கு நாயக ரத்னமாயிருக்கிறது .
ஆசார்ய ப்ராப்திக்காக வீஶ்வரன் பண்ணுகிற க்ருஷி பரம்பரைகளைச் சொல்லுகையாலே , சரமோபாயவைபவத்தைப் பற்றி இதுக்குமேல் வக்தவ்யாம்ஶமில்லை .
ஆஶ்ரயண ஸௌகர்ய ஆபாத கங்களான வாத்ஸல்ய , ஸ்வாமித்வ , ஸௌஶீல்ய , ஸௌலப்யங்களும்,
ஆஶ்ரித கார்ய ஆபாதகங்களான ஜ்ஞாந , ஶக்திகளுமாக , பகவத் ப்ராப்திக்கு ஆறு குணங்கள் போலே ,
ஆசார்ய ப்ராப்திக்கும் இந்த ஶ்லோகத்தில் சொல்லுகிற ஆறு ஹேதுக்களும் அக் குணங்களோடு
இவற்றுக்கு உண்டான ஸாதர்ம்யத்தை க்ரந்த விஸ்தரபயத்தாலே இவ்விடத்தில் ப்ரதி பாதிக்கிக்கிறிலோம் .
ஈஸ்வரஸ்ய –- ஸர்வ நியந்தாவான வெம்பெருமா னுடைய ஸௌஹார்தம் –
சேதந விஷயத்தில் நன்மையை நினைப்பிடு கைக்கீடான நல்ல ஹ்ருதயமும் ,
( இவ்விடத்தில் , ஈஸ்வரபதம் “ மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞாநமபோஹ நம் ச “ என்று கர்மாநுகுணமாக
பந்தமோக்ஷங்க ளிரண்டுக்கும் கடவனாயிருக்கும்படியைக் காட்டுகிறது .
ச -– என்கிற , அவ்யவம் , இப்படிப்பட்டவனுக்கு ஸௌஹார்தம் ஜநிக்கை யறிதென்னும் படியான வதிஸங்கையைக் காட்டுகிறது ;
நிரங்குச ஸ்வாதந்த்ர்யத்தாலே இவனை ஸம்ஸார ஹேது வான நிக்ரஹ ஸக்திக்கிலக்காக்கி
“ ஷிபாமி “ என்று தள்ளி வைத்தமையை பார்த்தால் , இவனுக்கும் ஸௌஹார்த மென்பதுண்டோ என்று அதிசங்கை பண்ண வேண்டும்படியிறே யிருப்பது .
இனி ஸௌஹார்தம் என்கிற பதம் நிருபாதிக ஸ்நேஹத்தைக் காட்டு கிறது ;
பிதா புத்ர ஸம்பந்தத்தாலே ஸ்நேஹம் நிருபாதிகமாகவே இருக்கும் ;
“ ஷிபாமி “ என்பதும் ஹித பரனாய்ச் செய்தவித்தனை )
இப்படி நிருபாதிக ஸ்நேஹ யுக்தனான வீஶ்வரனிவனிடத்தில் நன்மை–
யத்ருச்சா ஸுஹ்ருதம் ததா | விஷ்ணோ: ப்ரஸாதாதத் வேஷ ஆபி முக்யம் ச ஸாத்விகை: ஸம்பாஷணம்
ஷடேதாநி ஹ்யாசார்ய ப்ராப்தி ஹேதவ: “ என்று இறே
இதுக்கு நினைக்கும்படியைச் சொல்லுகிறது மேல் ,
யத்ருச்சா ஸுஹ்ருதம் –
விடாயைத்தீர்த்தாய் , ஒதுங்க நிழலைக் கொடுத்தாய் ; என்றாப்போலே ஈஶ்வரனே உண்டாக்குகிற யாத்ருச்சிக ஸுஹ்ருதமும் ,
ததா –- ஸௌ ஹார்தத்தாலே யாத்ருச்சா ஸுஹ்ருதம் பிறந்தாப்போலே ,
விஷ்ணோ: ப்ரஸாதாத் -– ஸர்வ வ்யாபகனான , அவனுடைய அநுக்ரஹத்தாலே ,
அத்வேஷ அபிமுக்யம் ச –- பகவத் ப்ரஸங்கத்தில் த்வேஷமில்லாமை யென்ன
பகவத் குண விக்ரஹாதிகளி லாபிமுக்யமென்ன ,
விவை யிரண்டும் ,
ஸாத்விகை: ஸம்பாஷணம் – வேதங்கற்பான் போன்ற பரம ஸாத்வி கரோடு ஸம்பாஷணமும் , ஏதாநிஷட் -– ( ஆகிற ) இவையாறும் ,
ஆசார்ய ப்ராப்தி ஹேதவ: — ஆசார்ய ப்ராப்திக்குக் காரணங்களாகின்றன .
( இவற்றில் விஷ்ணோ: என்கிற பதம் ஸர்வத்ர வ்யாபித்து நிற்கும்படியைச் சொல்லுகையாலே
நிருபாதிக ஸ்நேஹ விஶிஷ்டனான வீஶ்வரன் சேதநனிடத்தில் யத்ருச்சா ஸுஹ்ருதம் கிடைக்கும்போது , என்றோ , என்று ,
அவசர ப்ரதீக்ஷனா யிருக்கும்படியைக் காட்டுகிறது .
ததா – என்கிற அவ்யயமும்,
ப்ரஸாதாத் என்கிற பஞ்சம்யந்த பதமும் நிருபாதிக ஸ்நேஹத்தாலே யத்ருச்சா ஸுஹ்ருதத்தைத் தேடிப் பிடித்தாப்போலே ,
க்ருபையாலே அத்வேஷாதிகள் உண்டாக்கினபடி சொல்லுகிறது .
அத்வேஷத்துக்கும் , ஆபிமுக்யத்துக்கும் ஹேது பகவத் ப்ரஸாதமே தவிர , யத்ருச்சா ஸுஹ்ரு தமன் னென்னுமிடம்
ஸ்ரீ வசந பூஷண திவ்ய ஶாஸ்த்ரத்திலே ஸுஸ்பஷ்டம் .
பகவத் ப்ரஸாதத்துக்கு யத்ருச்சாஸுஹ்ருதம் காரணமானதும் , வைஷம்ய நைர்க்ருண்யங்கள் வாராமைக்காக வாயிற்று ;
இல்லையாகில் ஸௌஹார் தத்தாலே பகவத் ப்ரஸாதமும்
அத்தாலே யத்ருச்சாஸுஹ்ருதமுமாக விப்படி பிறக்கவமையும் .
அத்வேஷ பதம் ஸம தமாதி ஸமஸ்தாத்ம குணங்களுக்கு முபலக்ஷணம் ;
“ ஆசார்ய லாபம் ஆத்மகுணத்தாலே “ என்கையாலே , அத்வேஷமும் ஆபிமுக்யமும் பகவத்க்ருபையாலே என்று சொல்லுகையாலே
“ ஆசார்யலாபம் பகவானாலே “ என்கிற சரம ஸூக்த் யர்த்தம் ஸூசிக்கப்படுகிறது .
ஸாத்விகைஸ் ஸம்பாஷணம் என்னுமிடத்தில் ஜந்ம வ்ருத்தாதிகளை யிட்டுச்சொல்லாதே ,
அவிஶேஷண ஸாத்விகை : என்கையாலும் ,
ஸம்பாஷணமாவது ஸம்யக் பாஷணமாகையாலும் ,
ஜந்ம வ்ருத்தாதி நிரூபணம் பண்ணாதே ஜ்ஞாந விஶேஷத்தையே பார்த்து
“ தொழுமினீர் கொடுமின் கொள்மின் “ என்கிற படியே ,
பரம ஸாத்விகரோடு கலந்து பலிமாறும்படியைச் சொல்லுகிறது .

இனி எம்பெருமானாருடைய வபிமாநத்திலே யொதுங்கி வர்த்திக்கும் சரமாதிகாரியான வைஷ்ணவனுக்கு வஸ்தவ்ய பூமியா வது ,
“ இராமாநுசனை தொழும் பெரியோரெழுந்திரைத்தாடுமிடம் அடியேனுக்கிருப்பிட “ மென்கையாலே ,
எம்பெருமானார் திருவடிக ளில் ப்ராவண்யமுடையவராய் , பெரியமதிப்பராய் ,
தத் ஸம்பந்த வைலக்ஷ்ண்யாபிவிருத்தி யுண்டாகப் பெற்றோமென்கிற ஹர்ஷ ப்ர ஹர்ஷத்தாலே ஸ
ஸம்ப்ரந்ருத்தம் பண்ணி வர்த்திக்கிற ஸாத்விக ஸ்ரீவைஷ்ணவர்களெழுந்தருளி யிருக்கும் பரமபாவனமான தேசம் .
“ அஸ்மத் தேஶிக பகவத் ராமாநுஜ யோகி சரணயுகள ———ஷடேதாநி , என்கையாலே ,
ஆசார்ய ப்ராப்திக்கு இவை யித்தனையும் வேண்டுமென்றதாயித்து ;
அவையாவன ; கர்மமடியாக , “ ஷிபாமி “ என்கிற பகவந் நிக்ரஹம் மாறி , நிருபாதிக ஸ்நேஹம் தலையெடுக்க வேணும் ;
அதடியாக யத்ருச்சா ஸுஹ்ருதமென்பதொன்னுண்டாக வேணும் ;
ஸர்வ முக்தி ப்ரஸங்கம் வாராமைக்காக இந்த யத்ருச்சா ஸுஹ்ருதத்தை ஹேதுவாகக் கொண்டு பகவத் க்ருபை பிறக்க வேணும் .
அத்தாலே அத்வேஷமும் , அத்தைப் பின் செல்லுமதான ஆபிமுக்யம் உண்டாக வேணும் .
அதுக்கு மேலே , ஆசார்ய ஸமாஶ்ரயணத்துக்கு ப்ரதாந அபேஷிதமான பாகவதர்களோடு ஸம்பாஷணமாகிற ஸம்பந்த முண்டாக வேணும் .
ஆகவிவையத்தனையும் வேணுமென்றதாயித்து .
ஆசார்யப்ராப்திஹேதவ: என்கிறவிதில் ஆசார்ய பதம் “ ஆசினோதிஹி ஶாஸ்த்ரார்தான் “ இத்யாதியில் சொல்லுகிறபடியே ,
ஞானமனுட்டான மிவை நன்றாகவே வுடையனான னாசார்யனைச் சொல்லுகிறது .
ப்ராப்தி , யென்கையாலே யிப்படிப்பட்ட வாசார்யன் லபிக்குமது பெறாப்பேறாயிருக்கு மென்கிறது .
ஈஶ்வரனைப் பார்த்தால் ஸௌஹார்தம் பிறக்கையே அரிதென்னும்படி இருக்கையாலும் ,
சேதநனைப் பார்த்தால் அத்வேஷமுள்பட பகவத் க்ருபையாலே உண்டாக வேண்டும்படி அஸூயா ப்ரஸவ பூவா யிருக்கையாலும் ,
கர்மங்களைப் பார்த்தால் ஒவ்வொன்றும் ப்ரம்ம கல்ப நியுதாநுபவேப்யநாச்யமா யிருக்கையாலும் ,
அத்வேஷ பதத்தாலே ஸூசிக்கப்பட்ட மற்ற வாத்ம குணங்களைப் பார்த்தால் அவை நம்மாலும் , பிறராலும் பிறப்பித்துக்கொள்ள வொண்ணாததுகளா யிருக்கையாலும் ,
ஆசார்ய லாபம் பெறாப் பேறாகவே யிருக்கும் )

நாயனாராச்சாம்பிள்ளை அருளிச்செய்த ஸ்ரீஸூக்தி , ( அஸ்மத் தேஶிகேத்யாதி )
அஸ்மத் தேஶிக பகவத்ராமாநுஜ யோகிசரணயுகளமாஶ்ரிதாநாம் –
அஸ்மத் தேஶிக – நம்மு டைய உஜ்ஜீவநத்துக்கு கடவரான ,
பகவத்ராமாநுஜயோகி – பகவத் ஸர்வமாஸ்ரிதாநாம் ததபிமாநைகநிஷ்டாநாம்
தத் குண ஸந்தோஹாநுப வாநந்தாம்ருத ஸாகரதரங்க ஷீகர ஸம்பந்த ஶீதலஹ்ருதயாநாம் ததீய திவ்ய கல்யாண குணங்களையும் ,
பரிபூர்ணஜ்ஞாநத்தையுமுடையரான , ராமாநுஜயோகி — “
அவை தம்மொடும் வந்திருப்பிடம மாயனிராமாநுசன் மனத்து “ என்கிறபடியே ,
ஸர்வேஶ் வரன் ஸ விபூதிகனாய்க்கொண்டு தம்முடைய திருவுள்ளத்தில் வீற்றிருக் கும்படியான யோக நிஷ்டையையுடைய வெம்பெருமானாருடைய ,
( யோக ரஹஸ்ய க்ரமம் குருகைக் காவலப்ப னோடே தீர்த்தம் ப்ரஸாதித்ததாயிருந்தாலும்
“ யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மனா |
ஶ்ரத்தாவான் பஜதே யோ மாம்ஸமே யுக்ததமோ மத: “ என்கிறபடியே
“ உணர்ந்த மெய்ஞ்ஞாநியர் யோகம் தொறும் “ என்கிற பாட்டில் சொன்ன நிரதிசய ப்ரேமத்தை
இவ்விடத்தில் யோக நிஷ்டையாக சொல்லுகிறது ;
இதுதான் “ நித்ய யுக்த ஏக பக்தி: “ என்றும் ,“
ஜ்ஞாநீத்வாத்மைவ “ என்றும்,
அவனே வாய் விட்டு புகழும்படியான பெருமையை யுடைத்தா யிருக்குமிறே ) .
சரண யுகளம் –- இரண்டு திருவடி களை ,
ஆஶ்ரிதானாம் -– உபாயோ பேயமென்று பற்றினவர்களாயும் ,
ததபிமானைகநிஷ்டாநாம் -– அந்த வெம்பெருமானாருடைய வபிமாநத்தி லேயே நிலைபெற்றவர்களாயும்,
தத்குண ஸந்தோஹாநுபவானந்தாம்ருத ஸாகர தரங்க ஷீகர ஸம்பந்த ஸீதல ஹ்ருதயாநாம் –
தத்குணஸந்தோஹ –
( “ செம்மை நூற்புலவர்க் கெண்ணருங் கீர்த்தி “ என்கிறபடியே
பேரளவு டையவர்களுக்கு பரிச்சேதிக்கவரிதான )
அவருடையதான கல்யாண குண ஸமூஹத்தினுடைய ,
அநுபவ – அநுபவத்தினாலுண்டான ,
ஆனந்த – ஆனந்தமாகிற ,
அம்ருத ஸாகர -– அம்ருதமய ஸமுத்திரத்தினுடைய ,
தரங்க -– அலைகளின் ,
ஷீகர – திவலைகளுடைய ,
ஸம்பந்த -– நித்ய ஸம்ஶ்லேஷத்தாலே ,
ஶீதல ஹ்ருதயாநாம் – குளிர்ந்த திரு வுள்ளத்தை யுடையவர்களாயும் ,
ததீய திவ்ய நாமோச்சாரண ஜநித ஹர்ஷ ப்ரகர்ஷ வஸாத ஸம்ப்ரம நர்த்தனம் குர்வதாம் –
ததீய – அந்த வெம்பெருமானா ருடையதான ,
திவ்ய நாம – ( “ சதுரா சதுரக்ஷரீ “ என்று அபியுக்தர் நெஞ்சுருகி கொண்டாடுமதான ) திருநாமத்தினுடைய ,
உச்சாரண – வாக் வ்யாபார மாத்ரத்தாலே ,
ஜநித -– உண்டான ,
ஹர்ஷ ப்ரகர்ஷ வஸாத் – ஆனந்தாதிஸயத்தாலே ,
ஸஸம்ப்ரமநர்த்தனம் குர்வதாம் –- ( ப்ரீதியுள்ள டங்காமையாலே ) பரவஸராய் ,
நர்த்தனம் குர்வதாம் – நர்த்தனம் செய்யு மவர்களாயும் ,
ஸாத்விகாக்ரேசராணாம் -– பரமஸாத்விகளில் உத்க்ருஷ்ட தமராயும் ,
ஸமதமாதிகுணேபேதாநாம் – ஸமதமாத்யாத்மகுண ஸம்பந்ந ராயும்
( இவ்விடத்தில் ஸமம் என்கிறது அந்த:கரண நியமனத்தை;
நாமோச்சாரண ஜநித ஹர்ஷ ப்ரகர்ஷ வஸாத் ஸம்ப்ரம நர்த்தனம் குர்வதாம் ஸ்வாதி காக்ரேசராணாம்
ஸம தமாதி குணே பேதாநாம் தத்வ வித்தமானாம் அஸ்மத் ஸ்வாமிநாம் ஆந்த்ர பூர்ண கோவிந்தார்ய துல்ய
ஸ்வபாவாநாம் உபாதேயதம திவ்ய ஜ்ஞாந பக்தி வைராக்ய நிஷ்டானாம் , ஸ்ரீவைஷ்ணவானாம் ஆவாசஸ்தான மேவ
அஸ்மதாதி சரமாதிகாரிணாம் அபி ஆவாஸபூமி: “ என்று
நாயனா ராச்சாம் பிள்ளை யருளிச்செய்தார் இறே .

இனி இந்த சரமாதிகாரிக்கு பரிஹரிக்க வேண்டும் அம் ஶங்கள் சிலவுண்டு ;
அவையாவன –1- பரம காருணிகரான வெம்பெருமானாருடைய குணானுஸந்தான
ஸ்ரவணத்தில் ஸிவிட்கென்று நெஞ்சிறக்க மற்றிருக்கும் துர்மாநிகளுடன் ஸம்பாஷணமும் ,
2-அவர்களுடன் ஸஹவாஸமும் ,
3-அவர்களுடன் கூடி புஜிக்குமதுவும் ,
4-தத் பாத தீர்த்தமும் ,
5-பாணி பக்வாந்நபோஜநமும் ,
ஶரீர ஸம்பந்த ப்ரயுக்தமாக வவர்களுடன்.
(தமமென்கிறது பாஷ்யகரண நியமனத்தை ) ,
தத்வ வித்தமாநாம் -– பராவர தத்வ யதாத்ம்யத்தை யறிந்தவர்களில் ஸ்ரேஷ்டராயும் ,
அஸ்மத் ஸ்வாமி நாம் -– அஸ்மதாதிகளுக்கு வகுத்த ஶேஷிகளாயும் ,
ஆந்த்ரபூர்ணகோவிந் தார்ய துல்ய ஸ்வபாவாநாம் -– வடுகநம்பி , எம்பார் , இவர்களோடொத்த வாசார்யநிஷ்டையை யுடையவர்களாயும் ,
உபாதேயதம திவ்ய ஜ்ஞாந பக்தி வைராக்ய நிஷ்டானாம் –
உபாதேயதம -– “ மூவரிலும் வைத்துக்கொண்டு மிகவும் வேண்டுவது ப்ரபந்நநுக்கு “ என்கிறபடியே மிகவும் வேண்டுமவை யான ,
திவ்யஜ்ஞாந -– ( கேவலனுடைய ஜ்ஞாநம் போலன்றிக்கே ,“ தாமரையாள் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு “ என்கிற ) ;
ஸ்ரீய: பதி விஷயமான ஜ்ஞாநமென்ன ,
பக்தி -– ( ஸர்வக்ரமத்தாலே பரபக்த்யாதி ரூபேண பரிணமிக்கக் கடவதான ) தத்விஷயத்தில் பக்தி யென்ன ,
வைராக்ய –- “ ப்ரபந்நனுக்கு விஹித விஷய நிவ்ருத்தி தன்னேற் றம் “ என்கிற வைராக்ய விஶேஷமென்ன ,
இவற்றில் , நிஷ்டானாம் -– நிலை நின்றவர்களாயுமிருக்கிற ,
( இவ்விடத்தில் , திவ்ய , என்கிற பதம் , ஜ்ஞாந பக்தி வைராக்யங்கள் மூன்றிலு மந்வயித்து ,
அவற்றினுடைய நிஷ்க்ருஷ்ட வேஷத்தைக் காட்டுகிறது ) .
ஸ்ரீவைஷ்ணவாநாம் – இராமாநு சனைத் தொழும் பெரியோர்களுடைய ,
ஆவாசஸ்தாநமேவ – எழுந்திரைத் தாடுமிடம் என்கிற விருப்பிடமே ,
ஆவாசபூமி( “ தேசோயம் ஸர்வ காம துக் “ என்கிறபடியே
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் , இஷ்டப்ராப்திக்கும் ஹேதுவாய்க்கொண்டு )
வஸ்தவ்யமான விடமாகக் கடவதென்னபடி அஸ்மதாதி சரமாதிகாரிணாமபி –-
அஸ்மதாதி — அடியேன் முதலான சரமாதிகாரிணாமபி ( ஸ்வாபிமாநத்தா லே யீஶ்வராபிமாநத்தைக் குலைத்துக்கொள்ளுகையாலே
போக்கற்ற செயல் மாண்டு “
6-த்வத் பாத பக்த இவ சிஷ்ட ஜநௌகமத்யே மித்யாசராமி “ என்கைக்குத் பரந்தவாஸக்தி யுண்டாகையும் ,
7-தத் க்ருத பகவத் குணாநுஸந்தான ஶ்ரவணமும் ,
8-தத் ததீய ஸத்காரமும் ,
9-தத் தத்த த்ரவ்ய ஸ்வீகார மும்,
10-தத் விஷய ப்ரணாமமும் ,
ஆக இந்த 10 க்ருத்யமும் ,
சரம பர்வமான வெம்பெருமானார் விஷயத்தில் மருவத்த ப்ராவண்யமு டையனாய் ,
ததபிமாநத்திலே யொதுங்கி வர்த்திக்கும் உத்தமாதிகாரி க்கு விஶேஷித்து பரிஹரிக்கவேணும் .
இல்லையாகில் , ஒருதலை த்வந்த்வ பக்தியும் , ஒருதலை # விழுப்புமாய் போருமிவனுக்கு , உபய ஸம்பந்தமும் குலைந்து ,
யாவதாத்மபாவி ஸம்ஸாரமநுவர்த் திக்குமொழிய , கரை காண்கிறதில்லை .

ஸ்ரீய:பதியாய் ,
பரம தயாளு வாய் ,
பரம ஶேஷியாய் ,
ஸர்வ ஶக்தி யுக்தனான வெம்பெருமானுடைய திருவடிகளை யுபாயமாகப்பற்றி ,
தத் குண ப்ரதிபாதிக திவ்ய ப்ரபந்தங்களை , யநுஸந்தாநத்துக்கு விஷயமாக்கி ,
“பொழுதெனக்கு மற்றது வெப்போது “ என்கிறபடியே போது போக்கி வர்த்திக்கிற நமக்கு ,
பேற்றில் கண்ணழிவுண்டோவென்று நினைத்து , சரம பர்வத்திலிறங்காமல் , துரபிமாநிகளாயிருக்கும் கழணிமிண்டரான ஸ்ரீவைஷ்ணவர்கள் ,
அவர்கள் தங்கள் தங்கள் நினைவாலே பேறுண் டென்றிருக்கிலும் ,

“ ஸ்ரீச ஸ்ரீமத் பதாப்ஜே சரணமிதி தியா @ தத்ர பக்தி தக்கவரா யிருக்கிற ) பஞ்சமோபாய நிஷ்டர்க்கும் 
ஈஶ்வரன் ஸர்வஜ்ஞனாகையாலே , சரம பர்வமான வெம்பெருமானார் பக்கல் கண் வையோமென்றிருந்த வதுவே ஹேதுவாக
வவர்களுக்கு , பேற்றைப் பண்ணிக் கொடாத மாத்ரமே யன்றியே ,
இவர்கள் ஸ்வரூபத்தையும் , கால க்ரமத்திலே , ஸங்குசிதமாம் படி பண்ணி விடுவன்

# யிழவு பாடாந்தரம் @ தத் ப்ரபத்தி பாடாந்தரம் .

எம்பார் ஸூக்தி – ( ஸ்ரீச ஸ்ரீமத் பதாப்ஜ இதி )
ஸ்ரீச ஸ்ரீமத் பதாப்ஜே –
ஸ்ரீச -– ஸ்ரீய:பதியினுடைய ,
ஸ்ரீமத் பதாப்ஜே –-
“ பிராட்டியுமவனும் விடிலும் திரு வடிகள் விடாது “ என்கிற பெருமையை யுடைத்தான “ திருவடித்தாமரைக ளிரண்டுமே
“ சரணமிதி -– இதர நிரபேக்ஷமான வுபாயமென்கிற ,
தியா –- புத்தியினாலே ,
தத்ர – அந்த திருவடிகளிலே பக்தி

த்வராணாம் ஸ்ரீமத் ராமாநுஜார்ய ப்ரணதிம் அபஜதாம் கூட சித்தா ஸயாநாம் |
காருண்ய ஷாந்தி ஸிந்து ஸ்வ பத நிவஸதிம் நேஸ்வரோ தாது மிச்சேதித்யேவம் சிந்தகாநாமபி பரமபதம் தாதுகா மஸ் ஸஜாது “ என்று ,
எம்பாரருளிச்செய்த இந்த திவ்ய ஸூக்தி ,
உக்தமமான வர்த்தத்துக்கு ப்ரமாணமாக அநு ஸந்தேயமாகக் கடவது .

த்வராணாம். –
“ ஸ்நேஹ பூர்வமநுத்யாநம் பக்தி: “ என்கிற ப்ரீதி பூர்வக ஸ்மரணத்தில் மேன் மேலும் அபிநிவேஸமாகிற த்வரையை யுடையவராய்க் கொண்டு ,
( பாடாந்தரம் தத் ப்ரபத்தி த்வராணாம் –- அந்த திருவடிக ளில் பண்ணக் கடவதான சரண வரண ரூப ப்ரபத்தியில்
த்வரையை யுடைய வர்களாய்க்கொண்டு ,
இந்த பக்ஷத்தில் , த்வரை , ஸாதநாந்தரங்களுடைய தோஷ தர்ஶநத்தாலும் , ஸம்ஸாரத்திலடிக் கொதிப்பாலும் உண்டாகிற தென்று கொள்ளவேணும் ) . ஸ்ரீமத்ராமாநுஜார்ய ப்ரணதிம பஜதாம் –
ஸ்ரீமத் –- அந்த ஸ்ரீய:பதியினுடைய திருவடிகள் தாமே யென்னும்படியான நிரவதிக ஸம்பத்தை யுடையராயிருக்கிற ,
ராமாநுஜார்ய -– எம்பெருமானாருடைய ,
ப்ரணதிம் –- ( திருவடிகளில் செய்யக் கடவதான ) சரணாகதியை ,
அபஜதாம் – செய்யாதவர்களாய் ,
கூடஸித்தாஸயாநாம் — இப்படி எம்பெரு மானாரை யுபேஷித்திருக்கிற தங்களுடைய வந்தரங்காபிப்ராயத்தை வெளிப்படுத்தாமல் ,
தம்மை எம்பெருமானார் தர்ஶநத்தில் நிஷ்டை யுடைய வரென்று பிறர் நினைக்கும்படி இருக்குமவர்களுக்கு ,
( எம்பெருமான் பரம பதத்திலிடம் கொடானென்கிற மேலில் வாக்யத்தோடி இதற்கு அந்வயம் ).
காருண்யஷாந்தி ஸிந்து: —
காருண்ய –- ( அத்வேஷம் துடங்கி யாசார்ய ப்ராப்தி பர்யந்தமாக செய்து கொடுக்கைக்கீடான ) க்ருபைக்கும் , ஷாந்தி: –

( “ தன்னடியார் “ என்கிற பாட்டின்படியே
“ என்னடியார் அது செய்யார் “ என்கைக்கீடான பொறுமைக்கும் ,
ஸிந்து: — ஸமுத்திரம் போலே யிருக்கு மவனான ,
ஈஶ்வர: — ஸர்வேஶ்வரன் ,
ஸ்வபதநிவசதிம் -– தனக்குப் படை வீடான பரமபதத்தில் ஸ்தானத்தை ,
தாதும் -– கொடுக்கைக்கு ,
நேச்சத் –- இச்சிக்க மாட்டான் .
( இவ்வளவேயன்றிக்கே )
இத்யேவம் -– இந்த ப்ரகார மாகவே ,
சிந்தகாநாமபி –- ( எம்பெருமானார் திருவடிகளை ஆஶ்ரயியோ மென்று ) மநஸ்ஸில் நினைக்குமவர்களுக்கும் கூட ,
ஜாது –- ஒருகாலும் ,
பரமபதம் -– நலமந்தமில்லதோர் நாட்டை ,
தாதுகாம: — கொடுக்க இச்சை யுடையவனாக ,
ந பவேத் -– ஆக மாட்டான் )
( இவ்விடத்தில் ந பவேத் என்கிற அவ்யயமும் , க்ரியையும் ஔசித்யத்தாலே அத்யாஹரிக்கப்படு கிறது .
இத்தால் கால க்ரமத்திலே இவர்களுடைய ஸாமாந்ய ஜ்ஞாநத்தையும் மலிநமாம்படி பண்ணி
ஸ்வரூபத்தை ஸங்குசிதமாக்கி விடுவதென்ற தாயித்து )

இன்னமும் ராமாநுஜ பதச்சாயையென்று புகழ் பெற்றவிவர்
“ ஸ்ரீமந் நாராயண சரணாரவிந்த சரணாகதிரேவ உஜ்ஜீவநாய பவதீதி புத்யா ,
பகவந்தம் பரம காருணிகம் பரமோதாரம் அபார கல்யாண குணாகரம்
அபரிமித வாத்ஸல்ய ஸௌஶீல்ய ஸாகரம் அசரண்ய அகில ஜந சரண்யம் அநவரதம்
ஆஶ்ரயணீய சரண கமல யுகளமபி மதாநுரூப நிரவதிக அனந்த சந்தோஹ ஜநக
“ நித்யஸூரி பரிஷ தந்தர் பாவ மஹா:பல ப்ரஸாதக மஸ்மதுத் தாரகம் அதி ரமணீய
விமலதர , லாவண்யகர திவ்ய மங்கள விக்ரஹமதிஶீதல விமல கம்பீர ஜலாஸயப்ரபவ
மிஹிரதருண கிரணநிகிர விகசித விராஜ மான கமலதளாயத திவ்யநயனயுகளம் ஸ்வவசகமிதி
சிதசிதீஶ்வர தத்வ த்ரய ஸூசக தண்ட த்ரய ரூப மண்டன மண்டித மஸ்மந்மாதர
மஸ்மத்பிதரமம்ருத லஹரீவதநுகூல நவ்ய திவ்ய கோமல விமல மதுராயமாண
நிஜஸூக்திகலாபைராஸ்ரி தாநகில ஜநாஹ்லாதயந்தம் ஸ்ரீமந்தமார்ய ஜநாபிவந்த்யம்
அஸ்மத் குலநாத மஸ்மத் அஸாதாரண ஶேஷிண மஸ் மதாதி ரக்ஷ்யவர்க ஸர்வ ப்ரகார ரக்ஷணைக தீஷாகுரும்
ஸ்ரீராமா நுஜாசார்யமநாத்ருத்ய , பரமகாருணிக: பகவாநேவ ஸ்வசரணகமல ஸமாஶ்ரிதாநாமஸ்மாகம்
ஸ்வப்ராப்திரூப பலம் ப்ரயச்சதீதி ஸ்வமதேந விசிந்த்ய வர்த்தமாநாநாம் ,
தத்வஜ்ஞாநலவலேஶ தேஶாதிகாநாம் துரபிமாநஸஹக்ருத ,
பரப்ராமக வ்ருத்தாநாம் ரூபவேஷதாரிணாம் வயமேவ ஸ்ரீவைஷ்ண வா இதி ,
ஸ்வமதேநாத்மாநம் பஹுமந்யமாநாநாம் சேதநாநாம் , அபார காருண்யௌதார்ய வாத்ஸல்ய
ஸௌஶீல்யைக நிதிரபி பகவான் புருஷோத்தம:

( 1 ) எம்பார் ஸ்ரீஸூக்தி ( ஸ்ரீமந்நாராயணேத்யாதி )
ஸ்ரீமந்நாராயண சரணார விந்த சரணாகதிரேவ — ஸ்ரீய:பதியான ஸர்வேஶ்வரனுடைய சரணாரவிந்த -– திருவடித் தாமரைகளில் பண்ணும் ,
சரணாகதிரேவ -– ப்ரபத்திதானே ,
உஜ்ஜீவநாய – ஆத்மோஜ்ஜீவநத்தைப் பொருட்டு ,
பவதீதி -– ஆகிறதென்கிற,
புத்யா — “ வ்யவஸாயாத்மிகா புத்தி: “ என்கிற ஜ்ஞாந விஶேஷத்தாலே ;
பகவந்தம் -– பரிபூர்ண ஜ்ஞாநத்தை யுடையராயும் ,
பரம காருணிகம் –- பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவான வீஶ்வரனிற்காட்டிலும் மேலான காருணிகராயும் ,
பரமோதாரம் –- ( ஸ்வாபிமாநாந்தர்பூதர்க்கு கார்யம் செய்யவேணும் “ என்று ஈஶ்வரனோடே மன்னாடுகையாலே )
இதுக்கு மேலில்லை யென்னும்படியான ஔதார்யத்தை யுடையராயும் ,
அபார கல்யாண குணா கரன் -– அபாரமான கல்யாண குணங்களுக்கு நிவாசஸ்தாந பூதராயும் ,
அபரிமித வாத்ஸல்ய ஸௌஶீல்ய ஸாகரம் –- அவற்றில் வாத் ஸல்ய ஸௌஶீல்யங்கள் அபரிமிதமா யிருக்கையாலே ,
அவற்றுக்கு ஸமுத்ரம் போன்றவராயும் ,
( வாத்ஸல்யம் தோஷபோக்யத்வம் ,
ஸௌஶீல்யம் -– தாழ்ந்தவர்களோடு கலந்து பரிமாறுகை )
அசரண்யாகில ஜநசரண்யம் –
அசரண்ய -– ( “ நன்மையென்று பேரிடலாவதொரு தீமையும் காணாத “ , ஸர்வேஶ்வரனும் கைவிடுகையாலே )
கத்யந்தரமில்லாத ,
அகில ஜந -– ஸமஸ்த சேதநர்களுக்கும் ,
சரண்யம் -– ரக்ஷகராயும் ,
அநவரதமாஶ்ரயணீய சரண கமலயுகளம் —
அநவரதம் -– “ அத்ர பரத்ராச் சாபி “ என்கிறபடியே ஸம்ஸாரத்திலும் , ப்ராப்யமான நித்ய விபூதியிலும் ,
ஆஶ்ரயணீய –- ஆஶ்ரயிக்கைக்கு யோக்யமான ,
சரணகமலயுகளம் –-திருவடித் தாமரைகள் இரண்டுமுடையவராயும் ,
அபிமதாநுரூப + மஹாப் பலப்ரஸாதகம் –
அபிமதாநுரூப – ( ஸ்வரூப ஜ்ஞாநமுடையவனுக்கு ) அபிமதமாயும் , அநுரூபமாயும் , இருந்துள்ள ,
நிரவதிகானந்த -– எல்லை யில்லாத ஆனந்தத்தினுடைய ,
ஸந்தோஹ -– ஸமூஹத்துக்கு ,
ஜநக –- மேன்மேலும் அபிவிருத்தியை யுண்டாக்குமதான ,
நித்யஸூரி பரிஷத் –- நித்யஸூரி கோஷ்டியில் ,
அந்தர்பாவ –- உடன் கூடுகையாகிற ,
மஹா:பல –- ஸர்வோத்தம்மான:பலத்தை ,
ப்ரஸாதகம் -– க்ருபை செய்தருளுமவராயும் ,
அஸ்மதுத்தாரகம் -– அடியே னுக்கு உத்தாரகாசார்யராயும்
( முதலிலே பெரியநம்பி தம்மை விஷயீகரித் ததற்கும் , உடையவர் காரணமாகையாலும் ,
அவர்தா முபாயோபேயங்களி ரண்டும் எம்பெருமானார் திருவடிகளேயென்று தமக்கு காட்டிக்கொடுக்கை யாலும் , அடியேனுக்கு உத்தாரகாசார்யனென்கிறார் ) .
அதிரமணீய + மங்க ளவிக்ரஹம் —
அதிரமணீய -– பரம போக்யமாய்
( “ உன்றன்மெய்யில் பிறங் கிய சீரன்றி வேண்டிலன் “ என்னும்படியிறே போக்யதைதானிருப்பது )
விமலதர -– ( ஜ்ஞாந பரிமளமெல்லாம் வடிவிலே தொடைக்கொள்ளலாம் படி ) மிகவும் நிர்மலமாய் ,
லாவண்ய கர – ( பகவத் குணாநுபவத்தாலே களித்திருக்கையாலே , திருமேனியெங்கும் நிறைந்த ) காந்தி வெள்ளத்துக் கிருப்பிடமாய் ,
திவ்யமங்கள -– ( “ திருமாலிருஞ்சோலைமலையே “ என்கி றபடியே , எம்பெருமான் விரும்புகையாலே ) அப்ராக்ருதமாய் விலக்ஷண மாயிருக்கிற ,
விக்ரஹம் –- திருமேனியை யுடையவராயும் ,
அதிஶீதல + நயனயுகளம் —
அதிஶீதல –- மிகவும் குளிர்ந்து ,
விமல –- தெளிந்து ,
கம்பீர –- ஆழங்காணவரிதாயிருக்கிற ,
ஜலாஶய –- ஏரியில் ,
ப்ரபவ –- பிறந்ததாய் ,
மிஹிரதருணகிரண –- பாலஸூர்ய கிரணங்களாலே ,
விகசித – அலர்த்தப்பட்டதாய் ,
விராஜமான – செவ்வி மாறாமல் ப்ரகாஸித்துக் கொண்டிருக்கிற ,
கமலதள -– தாமரை யிதழைப் போலே ,
ஆயத – கர்ணாந்த விஶ்ராந்தமான ,
திவ்ய நயன யுகளம் -– கண்ணுள் நின்றகலாதவனுக்கு கோயில் கட்டணமாயிருக்கிற திருக் கண்களை யுடையவராயும் ;
( இவ்விடத்தில் கண்ணென்று ஜ்ஞாநமாய் அதுதான் ஸ்ரீய:பதி விஷயமா யிருக்கையாலும்
இரண்டாயிருக்கையாலும் உபய வேதாந்த விஷய ஜ்ஞாநத் தைக் காட்டுகிறது ) .
ஸ்வ — வசகமிதி தம் வசமாக்கப்பட்ட ,
சிதசிதீஶ்வர -– சேதந த
த்வம், அசேதந தத்வம் , ஈஶ்வரதத்வமென்கிற , தத்வத்ரய -– மூன்று தத்வத்துக்கும் ,
ஸூசக –- ஸூசிக்குமதாயிருக்கிற ,
தண்ட த்ரய ரூப -– த்ரிதண்டரூபமான ,
மண்டன -– அலங்காரத்தாலே ,
மண்டிதம் –- அலங்க ரிக்கப்பட்டவராயும் ,
அஸ்மந் மாதரம் -– அடியேனுக்கு ப்ரியமே நடத்திக் கொண்டு போருகையாலே , மாத்ருபூதராயும் ,
அஸ்மத் பிதரம் -–இதத்தைச் செய்கையாலே தந்தையாயும் ,
அம்ருதலஹரீவத் + ஆஹ்லாதயந்தம் —-
அம்ருதலஹரீவத் — அம்ருதப்ரவாஹத்தினுடைய அலைகள் போலே , அநுகூல -– செவிக்கினய செஞ்சொற்களாய் ,
நவ்ய –- அபூர்வங்களாய் ,
திவ்ய –- “ கேட்டாரார் வானவர்கள் “ என்கையாலே திவ்யரான நித்ய ஸூரிகளுக்கு கேட்க யோக்யங்களாய் ,
கோமல –- ம்ருது ஶைலியோடுகூடி ,
விமல –- நிர்தோஷங்களாய் ,
மதுராயமாண -– (ஸ்ரீய:பதி , நித்யஹேயப்ரத்யநீகனாயும் , கல்யாணைகதானனாயும் இருப்பனென் றறுதியிடுகையாலே )
தேனும் பாலும் கன்னலும் அமுதும் போலிருப்ப தான ;
நிஜ ஸூக்திகலாபை: — ஸ்ரீபாஷ்யம் முதலான தம்முடைய திவ்ய ஸூக்தித்தொடைகளாலே ;
ஆஶ்ரிதான் -– தம்மை ஆஶ்ரயித்த ,
அகில ஜனான் –- ஸமஸ்த சேதநர்களையும் ;
ஆஹ்லாதயந்தம் –- ஆனந்திப்பித் துக் கொண்டிருக்குமவராயும் ,
ஸ்ரீமந்தம் — “ ஸம்ஸேவிதஸ் ஸம்யமி ஸப்தஸத்யா பீடைஸ்சதுஸ்ஸப்ததிபிஸ்ஸமேத: “ இத்யாதி படியே
அடியார்களுடைய நிரவதிக ஸம்பத்தை உடையவராயும் ,
ஆர்ய ஜநாபி வந்த்யம் -– நாதயாமுந ப்ரப்ருதி பூர்வாசார்யர்களால் புகழப்பட்டவராயும் ,
அஸ்மத் குல நாதம் -– நம்முடைய ப்ரபந்நகுலத்துக்கு நாதராயும் ,
அஸ்மதஸாதாரண ஶேஷிணம் -– அடியேனுக்கு வகுத்த ஶேஷியாயும் ,
அஸ்மதாதிரக்ஷ்யவர்க + தீக்ஷஆகுரும் ––
அஸ்மதாதி –- அடியேன் முத லான ,
ரக்ஷ்யவர்க -– ரக்ஷ்ய பூதருடைய திரளை ,
ஸர்வப்ரகார –- எல்லா ப்ரகாரத்தாலும் ,
ரக்ஷண -–ரஷிக்கை யென்கிற ,
ஏக –- முக்யமான ,
தீஷா – தீஷையுடைய ,
குரும் – ஆசார்யராயுமிருக்கிற ,
ஸ்ரீராமாநுஜா சார்யம் -– தர்ஶந ஸ்தாபநாசார்யரான வெம்பெருமானாரை ,
அநாத்ருத்ய -– அநாதரித்து ,
பரம காருணிக: — ( ஸ்ருஷ்ட்யவதாராதி முகத்தாலே , அடியே தொடங்கி க்ருஷி பண்ணிக்கொண்டு போருகையாலே ) தனக்கு மேலற்ற காருணிகரான ,
பகவாநேவ – ஆஶ்ரயண ஸௌகர்யாபாதகங்க ளோடு , ஆஶ்ரித கார்யாபாதகங்களோடு வாசியற
ஸமஸ்த கல்யாண குணங்களாலும் பரிபூர்ணனான ஸர்வேஶ்வரன்தானே ,
ஸ்வசரண கமலஸமாஶ் ரிதானாம் -– ( “ வணங்க வைத்த கரணமிவை “ என்னுமவர் வேண்டாதபடி
“ விசித்ரா தேஹ ஸம்பத்திரீஶ்வராய நிவேதிதும் “ என்று ஶாஸ்த்ரத்தாலறிந்து தம் திருவடித் தாமரைகளை ஆஶ்ரயித்தவர்களான ,
அஸ்மாகம் –- நமக்கு ,
ஸ்வப்ராப்திரூபபலம் –- தன்னுடைய ப்ராப்தியாகிற பரம்புருஷார்த் தத்தை ,
ப்ரயச்சதீதி — தருகிறானென்று ,
ஸ்வமதேந — ( அஹங்கார தூஷிதமான ) ஸ்வாபீப்ராயத்தாலே ,
விசிந்த்ய –- ஆலோசித்து ,
வர்த்த மாநாநாம் -– அந் நிலையில் நின்றும் பேராதவர்களாயும் ,
தத்வஜ்ஞாந லவலேஸ தேஸாதிகாநாம் —
தத்வஜ்ஞாந –- வேதாந்த ஜ்ஞாநத்தினுடைய,
லவலேஸ -– ஏகதேஶத்தில் அல்ப பாகமாவது நடையாடுகிற ,
தேஶ — ப்ரதேஶத்தை ,
அதிகாநாம் – அதிக்ரமித்து ( அதாவது அந்த ஜ்ஞாந மாத்ரமேயன்றிக்கே
தத்வ ஜ்ஞாநமென்பதொன்றுண் டென்றிருக்குமவர்கள் வஸிக்கும் ப்ரதேஶத்தையும் கூடவறியாமல் ) இருக்கிறவர்களாயும் ,
( “ பரஞ்சோதிரூப ஸம்பத்ய “ இத்யாதி ப்ரகாரமாக ஆவிர்பூதஸ்வரூப னான வாத்மாவுக்கு ஶேஷத்வமே ஸ்வரூபமாய்
அது தான் ததீய பர்யந்த மாயன்றி நில்லாதென்கிறவிதுவே வேதாந்த ஜ்ஞாநத்தினுடைய உள்கருத் தாய்
அந்த ததீயருடைய முகமலர்த்திக்குறுப்பாக வாசார்ய ஶேஷத்வம் ராகப்ராப்தமாய் தன்னடையே வருகிறதாகையாலே ,
ஆசார்யத்வ பூர்த்தி யுள்ள வெம்பெருமானாரை யனாதரித்தவர்களுடைய தத்வ ஜ்ஞாநம்
அஸத்கல்பமாகவேயிருக்குமென்று கருத்து )
துரபிமாந ஸஹக்ருத பரப்ராமக வ்ருத்தாநாம் — ( இப்படி தத்வயாதாத்ம்ய ஜ்ஞாநகந்தமே யில்லாதிருந்தாலும் )
துர்மாநத்தை யுள்கொண்டு , தம்மைப் பிறர் காணில் “ இந்தளத்தில் தாமரைபோலே யிவரும் சிலரேயென்று மோஹிக்கும்படி ,
பரமஸாத்விகருடைய வநுஷ்டாநத்தை யபிநயிக்குமவர்களாயும் ;
ரூபவேஷதாரிணாம் -– ( “ ஆக்ருதிமத்வச்சரணாரவிந்த ப்ரேம “ என்கிற தற்கு நேரே எதிர்தட்டாக )
க்ருத்ரிமமான ஸ்ரீவைஷ்ணவரூப வேஷங்களை யுடையவர்களாயும் ,
வயமேவ + மந்யமாநாநாம் —
வயமேவ – நாங்களே,
ஸ்ரீவைஷ்ணவா இதி -– வைஷ்ணவாக்ரேசரரென்று ,
ஸ்வமதேந -– அஹங் கார க்ரஸ்தமான தம்முடைய வபிப்ராயத்தாலே ,
ஆத்மாநம் -– தங்களை,
பஹுமந்யமாநாநாம் -– ( “ அமர்யாத: க்ஷஊத்ர: “ இத்யாதிக்கு நேரே எதிர் தட்டாக )
போரப் பொலியக் கொண்டாடிக் கொள்ளு மவர்களாயுமிருக்கிற ,
சேதநாநாம் -– சேதநர்களுக்கு , ( இவர்களை அசேதநர் என்னவேண்டியிரு க்க , “ சேதநாநாம் “ என்றது
அமங்கள வாரத்தை , மங்களவாரமென்றாப் போலே )
பகவான் -– அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைக தானனாய் ,
புருஷோத்தம: — “ யஸ்மாத் க்ஷரமதீதோஹ மக்ஷராதபிசோத்தம: |
அதோ ஸ்ரீமந்நாராயண: அஸ்மத்குல ஸ்வாமிநோ பகவத: ஸ்ரீமத்ராமாநுஜ குரோ:சரணயுகள
ஸம்பந்தராஹித்யம் ஹ்ருதிநிதாய கதாசிதபி ஸ்வப்ராப்திரூப மோக்ஷ:பலமகுர்வாண: ,
யாவதாத்ம பாவி ஸம்ஸார நிரயகர்த்தே
“ ஷிபாம்யஜஸ்ர “ மிதி வதன் நிஷேப்ய , கதாசிதபி தான் ஹ்ருதாநகணயன் ,
ராமாநுஜகுரு க்ருபாபிமாநாந்த் தர்பூத ஸாத்விக ஜநேஷு ஸ்மிலோகே வேதேச ப்ரதித: புருஷோத்தம: “ என்கிறபடியே
க்ஷர ஶப்த வாச்யரான பக்தசேதநரென்ன ,
அக்ஷர ஶப்தவாச்யரான முக்தசேதநரென்ன
இவர்களில் காட்டில் விலக்ஷணனாகையாலே புருஷோத்தமனென்று ப்ரஸித்தனாயிருக்கிற , ஸ்ரீமந்நாராயண: — ஸ்ரீய:பதியானவன் ,
அபார காருண்ய + நிதிரபி ,
அபார –- பாரமில்லாத ,
காருண்ய – ( “ க்ருபா காப்யுபஜாயதே “ என்கிறபடியே , ஸம்ஸாரி சேதநருடைய உஜ்ஜீவநத்துக்கு ஹேதுபூதமான ) காருண்யமென்ன ,
ஔதார்ய “ சேரும் கொடை “ என்கிற உதாரத்வமென்ன ,
வாத்ஸல்ய -– தோஷ போக்யத்வமென்ன ,
ஸௌஶீல்யதன் — பெருமை பாராதே தாழ்ந்தார்களோடு புரையறக்கலக்கும் ஸ்வபாவமென்ன , இவற்றுக்கு ,
ஏக –- அத்விதீயனான ,
நிதிரபி – நிவாச ஸ்தான பூதனாயிருந்தாலும் ,
அஸ்மத் குல ஸ்வாமிந: + ஹ்ருதிநிதாய —
அஸ்மத் குல ஸ்வாமிந: — “ ந: குலபதே: “ என்கிறபடியே அடியேனுடைய குலத்துக்கு ஸ்வாமியாய் ,
பகவத: ( நம்முடைய உஜ்ஜீவநத்துக்கு வேண்டும் கைமுதல்களான ) ஸர்வ கல்யாண குணங்களையும் ,
பரிபூர்ண ஜ்ஞாநத்தையும் உடையராய் ,
ஸ்ரீமத் ராமாநுஜகுரோ: — ( “ ஆசார்ய பதமென்று தனியேயொரு பதமுண்டு , அதுள்ளது எம்பெருமானார்க்கே , என்கிற )
நிலை நின்ற ஆசார்ய பத ஸம்பத்தை யுடையருமான வெம்பெருமானாருடைய ,
சரணயுகள ஸம்பந்த ராஹித்யம் —
சரணயுகள -– இரண்டு திருவடிகளில் ,
ஸம்பந்த ராஹித்யம் -– ஆஶ்ரயண ரூப ஸம்பந்தமில்லாமையை ,
ஹ்ருதி –- தன் திருவுள்ளத்திலே ,
நிதாய -– வைத்து ,
கதாசிதபி –- ஒருக் காலமும் ,
ஸ்வ:ப்ராப்தி ரூப மோக்ஷ:பலம் — தன்னுடைய ப்ராப்தியா கிற மோக்ஷ:பலத்தை ,
அகுர்வாண: — செய்து கொடுக்காமல் ,
யாவதாத்ம பாவி + நிஷேப்ய —
யாவதாத்ம பாவி – ஆத்ம ஸத்தை யுள்ளதனையும் ,
ஸம்ஸார நிரயகர்த்தே –- ஸம்ஸாரமாகிற நரக கூபத்திலே “ ஷிபாம்ய ஜஸ்ர “ மிதிவதன் , நிஷேப்ய -– அஹங்காரம் , பலம் , தர்ப்பம் , காமம் , க்ரோதம் ச ஸம்சிதா: “ என்று தொடங்கி
“ தாநஹம் த்விஷத: க்ரூரான் ஸம்ஸாரேஷு நராதமான் க்ஷஇபாம்யஜஸ்ரம் “ என்று
அஹங்காராதி தோஷ துஷ்டரான புருஷாதமரை ஜந்ம மரணாதி ரூபேண சுழன்று வருகிற ஸம்ஸாரத்தில்
க்ரூர ஸ்வபாவமுள்ளவராய் பிறக்கும் படியாகவே

நித்ய தத்தத்ருஷ்டி: தேப்யஸ்ஸர்வஸ்வதாந கரணேபி கிமபி ந தத்தமே வேத்யத்யாப்ய பரிதுஷ்ட: ,
ராமாநுஜகுரு சரணயுகள ப்ராவண்ய நைரந்தர்ய ப்ரதாநைக நிஷ்ணாதோ வர்த்ததே “ என்று
எம்பெருமானாரோடு ஸம்பந்தமில்லாதவர்களுக்கு , ஸர்வ ப்ரகாரத்தாலும் ஈஶ்வரன் ஸ்வ ப்ராப்தி பண்ணிக் கொடாமல் ,
யாவதாத்மபாவி ஸம்ஸாரமாகிற நரக குழியிலே தள்ளியிட்டுவைத்து ,
திருவுள்ளத் தாலும் அவர்களை நினையா நின்றருளிச் செய்தார் இறே .
ஆகையால் ஸர்வ ப்ரகாரத்தாலும் , உஜ்ஜீவிக்க வேணுமென்றும் நினைவுடைய வன் ,
அசரண்ய சரண்யராய் , பரம காருணிகராய் , பரமோதாரரான வெம்பெருமானாருடைய
வபிமாநமே , உத்தாரகமென்றறுதியிட்டு , ததேகநிஷ்டனாய்
“ தேவு மற்று அறியேன் “ என்று ஶேஷித்வ , சரண் யத்வ ப்ராப்யத்வங்களை
யெம்பெருமானார் பக்கலிலே யறுதியிட்டு ,நிக்ரஹித்துத் தள்ளி விடுவேனென்றாப்போலே சொல்லிக்கொண்டே தள்ளி விட்டு ,
கதாசிதபி — ஒருக் காலமும் ,
தான்— அவர்களை ,
ஹ்ருதா — திருவுள்ளத்தால் ,
ந கணயன் –- நினையாமல் ,
ராமாநுஜகுரு + தத்த த்ருஷ்டி:–
ராமாநுஜகுரு -– அஜ்ஞாநி வர்த்தகரான வெம்பெருமானாருடைய ,
க்ருபாபி மாநாந்தர்பூத நிர்ஹேதுக க்ருபையால் வந்த வபிமாநத்தி லொதுங்கின ,
ஸாத்விக ஜநேஷு –- பரம ஸாத்விகரான ஸ்ரீவைஷ்ணவர்க ளிடத்திலே ,
நித்ய தத்த த்ருஷ்டி: — வைத்த கண் வாங்காமல் பூர்ண கடாக்ஷமுடையனாயக் கொண்டு ,
தேப்யஸ்ஸர்வஸ்வ + பரிதுஷ்ட: —–
தேப்ய: — அவர்களுக்கு ,
ஸர்வஸ்தாந கரணேபி -– உபயவிபூதியோடு தன்னையே கொடுத்திருந்தாலும் ,
கிமபி ந தத்தமேவேதி -– ( “ அஸ்மை ந கிஞ்சிதுசிதம் க்ருதம் “ என்னாப் போலே ) இவர்களுக்குத் தகுதியாக
ஒன்றும் செய்யப் பெற்றிலோமே ? என்று ,
அத்யாப்யபரிதுஷ்ட: — இன்னமும் குறைவாளனாய் ,
ராமாநுஜா + வர்த்ததே —
ராமாநுஜகுரு – அப்படிப்பட்ட வெம்பெருமானாருடைய ,
சரண யுகள –- இரண்டு திருவடிகளிலும் ( உண்டாயிருக்கிற ) ,
ப்ராவண்ய -– நிரதிசய ப்ரீதிக்கு ,
நைரந்தர்ய –- தைலதாரா துல்யமான அவிச்சேதத்தை ,
ப்ரதான கொடுக் கையில் ,
ஏக -– அத்விதீயனான ,
நிஷ்ணாத: — உள் புக்காராயுமவனாய் ( அதாவது ஆண்களையும் பெண்ணுடை யுடுக்கப்பண்ணும்
வைர உறுக்கா கையாலே , இவ்வதிகாரிக்கு நித்ய சத்ருவான தன்னுடைய நிரதிசய
ஸௌந்தர்யத்தில் ஆழங்கால்பட்டு , இரு கரையராகாமல் நோக்கிக் கொண்டு போறுமவனாய் )
வர்த்ததே -– இதுவே பணியாக விருக்கிறான் , என்று எம்பார் அருளிச்செய்தாரென்கை .

சரமோபாய தாத்பர்ய ப்ரமாண வசநாயா: |

பூர்வாசார்ய லஸத்ஸூக்தீரூபஜீவ்ய விசோதிதா: ||.

பேற்றுக்குடலாக ப்ரதம பர்வத்தில் நெஞ்சு தாழ்ந்து , இருகரை யனாய் யாதாயாதம் பண்ணிய லமாவாதே ,
எம்பெருமானார் அபிமாநத்திலே ஓதுங்கி , நமக்குப் பேற்றில் கண்ணழிவில்லை யென்று நெஞ்சில் தேற்றமுடையவனாய் ,
எம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்ய சீமா பூமிகளான பரம ஸாத்விக வர்க்கத்துடன் ,
“ போதயந்த: பரஸ் பரம் “ பண்ணிக்கொண்டு ,
பரஸம்ருத்யைக ப்ரயோஜனனாய் ,
எம் பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யமுடையாரைக் கண்டால் , இந்தளத்திலே தாமரைப் பூத்தாப்போலே ,
இருள் தரு மாஞா லமான விக்கொடு உலகத்திலே , இங்ஙனேயும் சிலருண்டாகப் பெறுவதே யென்று
ஷர்ஷ புலகித ஶரீரனாய் , யாவச் சரீரபாதம் , த்ரிவித கரணத் தாலும் , ஒருபடிப்பட ஸ்வரூபத்தை நோக்கிக்கொண்டு .,
எம்பெருமா னாருடைய , திருநாமோச்சாரணமில்லாவிடில் நாக்கு வற்றும்படி யான நிலையோடு பொருந்தி ,
மநஸ்ஸை ஸாவதாநமாய்ப் பண்ணிக் கொண்டு , ஸ்வரூபாநுகுணமாக வர்த்திக்க வேணும் .

சரமோபாய தாத்பர்யம் ஸமாப்தம்

சரமோபாய தாத்பர்யம் தேவராஜகுரூதிதம் |

ஸம்ப்ரதாயாநுரோதேந யதாமதி விசோதிதம் ||

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ அனந்தனுக்கு ஆயிரம் திரு நாமங்கள்–ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்– 422-470-திரு நாமங்கள்–

September 26, 2022

(திருநாமங்கள் 422 [உக்ர:] முதல் 430[பீஜம் அவ்யயம்] வரை – கல்கி அவதாரம்)

(திருநாமங்கள் 436 [அநிர்விண்ண:] முதல் 445 [ஸமீஹன:] வரை – திருமாலின் சிம்சுமார வடிவம்)

(திருநாமங்கள் 446 [யக்ஞ:] முதல் 463 [ஜிதக்ரோத:] வரை – வேதச் சடங்குகளால் போற்றப்படுபவர் திருமால்)

(திருநாமங்கள் 457[ஸுமுக:] முதல் 470 [நைககர்மக்ருத்] வரை – தேவர்களுக்கு அமுதம் தந்த வரலாறு)

—————–

422. உக்ராய நமஹ (Ugraaya namaha)
(திருநாமங்கள் 422 [உக்ர:] முதல் 430[பீஜம் அவ்யயம்] வரை – கல்கி அவதாரம்)

பரீட்சித் மகாராஜாவுக்கு வியாசரின் மகனான சுகப்பிரம்மம், ஸ்ரீமத் பாகவதம் என்ற மிக உயர்ந்த புராணத்தை உபதேசம் செய்தார்.
அதில், பகவானின் வெவ்வேறு அவதாரங் களின் வரலாறுகளையும், இறையடியார்களின் வரலாறுகளையும் விவரித்த சுகப்பிரம்மம்,
குறிப்பாகக் கிருஷ்ணாவதாரத்தையும் கண்ணனின் லீலைகள் பற்றியும் விரிவாக உபதேசம் செய்தார்.
அவற்றை எல்லாம் கேட்ட பரீட்சித், கண்ணன் தனது அவதாரத்தை நிறைவு செய்து கொண்டு வைகுண்டம் சென்ற பின்
பூமியிலே என்ன நடக்கும் என்று சுகப்பிரம்மத்திடம் வினவினான். அதற்கான விடையை
ஸ்ரீமத் பாகவத புராணத்தின் நிறைவுப் பகுதியில் சுகப்பிரம்மம் வழங்குகிறார்.
கண்ணன் அவதாரத்தை நிறைவு செய்து வைகுண்டம் சென்றவாறே பூமியில் கலியுகம் தொடங்கிவிடும்.

கலியுகத்தில் வரும் மன்னர்கள் அதர்மத்திலும் பொய்மையிலும் பற்றுக் கொண்டவர்களாகவும், கருமிகளாகவும்,
கொடுங்கோபம் மிக்கவர்களாகவும், பெண்கள் குழந்தைகளைத் துன்புறுத்துபவர்களாகவும்,
பிறர் மனைவி பிறர் பொருளை விரும்புபவர்களாகவும், அற்ப ஆயுள் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
மேலும் அத்தகைய மன்னர்கள் தங்கள் பிரஜைகளைப் பலவாறு துன்புறுத்துவார்கள்.
நாளுக்கு நாள் மக்களிடத்தில் அறநெறி, வாய்மை, தூய்மை, ஆயுள், வலிமை ஆகியவை குறைந்து கொண்டே வரும்.
பணம் படைத்தவன் மேன்மையானவனாகக் கருதப்படுவான்.

வலிமை உள்ளவன் வைத்தது எல்லாம் சட்டமாக ஆகிவிடும். அந்தணர்களுக்குப் பூணூல் மட்டுமே அடையாளமாக இருக்குமே ஒழிய,
வேதம் ஓதுவதை மறந்துவிடுவார்கள். கையூட்டு கொடுக்காவிட்டால் நியாயம் பெற முடியாது.
ஓயாமல் பேசுபவனே பண்டிதனாகக் கருதப்படுவான். யார் திருடினாலும் அந்தத் திருட்டுப் பழி ஏழையின் மீதே விழும்.
வயிறு வளர்ப்பதையே லட்சியமாக மக்கள் கருதுவார்கள். குடும்பத்தைக் காப்பது மட்டுமே திறமை என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும்.
அறநெறியைப் பின்பற்றும் சிலர் பகட்டுக்காகவே பின்பற்றுவர். பஞ்சத்தாலும், அரசாங்கம் விதிக்கும் அதிக வரிகளாலும் மக்கள் துன்புறுவார்கள்.

பசி, தாகம் உள்ளிட்டவற்றாலும் மக்கள் துன்புறுவார்கள். துஷ்ட மன்னர்களின் ஆட்சியில், மக்கள் எல்லோரும் துன்புற்று
அதர்மம் மேலோங்கி இருக்கும் சூழலில்தான் பகவான் கல்கி அவதாரம் எடுப்பார்.
(கலியுகம் தொடங்கிய காலம் கி.மு. 3102 என்று பெரியோர்கள் காட்டியுள்ளார்கள்.
கலியுகத்தின் மொத்த அளவு 4,32,000 ஆண்டுகள்.
அந்தக் கலியுகம் முடிவடையும் தறுவாயில் கல்கியவதாரம் பகவானால் எடுக்கப்படும்.)

“சம்பள க்ராம முக்யஸ்ய ப்ராஹ்மணஸ்ய மஹாத்மன:
பவனே விஷ்ணு யசஸ: கல்கி: ப்ராதுர்பவிஷ்யதி”

சம்பளம் என்ற கிராமத்தில், மிகச்சிறந்த மகாத்மாவான விஷ்ணு யசஸ் என்பவர்க்கு மகனாகக்
கல்கி அவதாரத்தை பகவான் எடுக்க உள்ளார்.
தேவர்கள் அந்தக் கல்கி பகவானுக்குச் சிறந்த ஒரு குதிரையைக் காணிக்கையாக அளிப்பார்கள்.
அக்குதிரை மேல் ஏறிக்கொண்டு வேகமாகப் பூமியெங்கும் சஞ்சாரம் செய்து, அரசர்கள் வேஷத்தில் இருக்கும்
துஷ்டர்களை எல்லாம் கத்தியால் அழிப்பார் கல்கி பகவான். கல்கி பகவானின் திருமேனி நறுமணத்தை நுகரும்
மக்கள் அனைவரின் மனங்களிலும் உள்ள அழுக்குகள் யாவும் நீங்கி, அவர்கள் தூய்மை அடைவார்கள்.
அந்தக் கல்கி பகவான் அவதரித்த நேரத்தில் கலியுகம் முடிவடைந்து கிருதயுகம் தொடங்கும்.
சத்திய யுகம் என்றழைக்கப்படும் அந்தக் கிருதயுகத்தில் மக்கள் அனைவரும் சத்துவ குணம் நிறைந்த தர்மாத்மாக்களாகத் திகழ்வார்கள்.

இவ்வாறு கிருஷ்ணாவதாரத்துக்குப் பின் கலியுகத்தில் நடைபெற உள்ள சம்பவங்களைப் பரீட்சித்துக்குச் சுகப்பிரம்மம் உரைத்தார்.
கலியுகத்தில், அதர்மம் மேலோங்கி இருக்கும் வேளையில், கோபத்துடன் குதிரையில் வந்து துஷ்ட சக்திகளை அழிப்பதால்,
கல்கி பகவான் ‘உக்ர:’ என்று அழைக்கப்படுகிறார். ‘உக்ர:’ என்றால் உக்கிரமானவர் என்று பொருள்.
அறத்தை அழிக்க நினைக்கும் தீய சக்திகளுக்கு உக்கிரமானவராகத் திகழ்வதால், கல்கி பகவான் ‘உக்ர:’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 422-வது திருநாமம்.
“உக்ராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனங்களில் தீய எண்ணங்கள் தோன்றாதபடித் திருமால் காத்தருள்வார்.

——————-

423. ஸம்வத்ஸராய நமஹ (Samvathsaraaya namaha)

குலோத்துங்கச் சோழன் தனது ஆட்சிக் காலத்தில் நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள திருக்கண்ணபுரம் என்ற
திவ்ய தேசத்துக்குப் பலவாறான இடையூறுகளைச் செய்துவந்தான்.
முன்பு திருக்கண்ணபுரம் திருக்கோயிலைச் சுற்றி ஏழு மதில்கள் இருந்தன.
அதில் ஒரு மதிலுக்குள் வெள்ளி இருப்பதாக யாரோ சொன்ன செவி வழிச் செய்தியைக் கேட்டு அந்த மதிளை இடித்தான் சோழன்.
ஏதேதோ காரணங்களைச் சொல்லி மற்ற மதிள்களையும் இடிக்கத் தொடங்கினான்.
நாகைக் கடற்கரையில் கடற்படைத் தளம் அமைப்பதாகச் சொல்லித் திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளின்
தொண்டர்கள் தங்கி இருந்த இருப்பிடங்களை அழித்தான். திருக்கண்ணபுரத்திலே ஓர் அரையர் வாழ்ந்து வந்தார்.
அவர் அங்கே கோயில் கொண்டிருக்கும் சௌரிராஜப் பெருமாள் முன்னே ஆழ்வார் பாசுரங்களை இசையோடு பாடி,
அவற்றின் பொருளை அபிநயம் பிடித்துக் காட்டி விளக்குவார்.

சோழனின் செய்கைகளைக் கண்டு கடும் கோபம் அடைந்த அந்த அரையர், ஒருநாள் சௌரிராஜப் பெருமாளிடம் சென்று,
“இறைவா! உனக்குக் கண் இல்லையா? ஒருவன் இத்தனை தவறுகள் செய்து வரும் போது
நீ கண்டும் காணாமல் இருக்கலாமா?” என்று கேட்டார்.
மேலும், தனது கோபத்தின் வெளிப்பாடாகத் தனது கையில் இருந்த தாளத்தைப் பெருமாள் மீதே எறிந்தார்.
அது பெருமாளின் நெற்றியில் பட்டது. இன்றும் திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளின் நெற்றியில் அந்தத் தழும்பைத் தரிசிக்கலாம்.

சற்று கோபம் தணிந்தவாறே, “அடடா! பெருமாளை நாம் அடித்துவிட்டோமே! பெரும் தவறு செய்துவிட்டோமே!” என்று
தமது செய்கைக்கு வருந்திய அரையர், வருத்தத்துடன் தனது வீட்டுக்குத் திரும்பி, கண்ணீர் சிந்தியபடி சயனித்திருந்தார்.
அப்போது அரையரின் வீட்டு வாசல் கதவை யாரோ தட்டினார்கள். அரையர், கதவைத் திறந்து நீங்கள் யார் என்று கேட்டார். வந்தவர்,
“எனக்கு சபாநடேசன் என்று பெயர். நான் சிதம்பரத்தில் இருந்து வருகிறேன்!” என்றார்.
இவர் சோழனின் ஆளாக இருப்பாரோ என்று ஐயம் கொண்டார் அரையர்.
ஆனால், வந்தவர் யார் என்பதையும் அவரது பெயருக்கான காரணத்தையும் உணர்ந்து கொண்டார் அரையர்.

வந்தவர் சாட்சாத் சௌரிராஜப் பெருமாள் தான். ஆனால் தன் பெயரை சபாநடேசன் என்று சொன்னாரே,
அது பெருமாளின் திருப்பெயரா? ஆம். சபை என்பது இந்த மொத்தப் பிரபஞ்சத்தையும் குறிக்கிறது.
நட என்ற சொல் இந்தப் பிரபஞ்சமாகிய நாடகமேடையில் நடிக்கும் அனைத்து உயிர்களையும் குறிக்கிறது.
பிரபஞ்சத்தையும் அதில் உள்ள உயிர்களையும் தனது சொத்தாகக்கொண்ட திருமால் சபாநடேசன் எனப்படுகிறார்.
திருமாலின் அருளால் இதை உணர்ந்துகொண்ட அரையர், பரவசத்தோடு திருமாலை வரவேற்றார்.
“தேவரீரைக் கோபத்தில் அடித்து விட்டேன்! அடியேனை மன்னித்து அருள வேண்டும்!” என்று மனம் உருகி வேண்டினார் அரையர்.

அரையரைப் பார்த்து சௌரிராஜப் பெருமாள், “அரையரே! நான் சொன்ன பெயரின் மூலம்
நீங்களே ஒன்றை உணர்ந்திருப்பீர்கள். உலகமாகிய சபையும் என் சொத்து, அதில் நடமாடும் உயிர்களும் என் சொத்து.
என் சொத்தைக் காக்க வேண்டியது என் பொறுப்பு அல்லவா? சரியான நேரத்தில் அதைச் செய்வேன்.
விரைவில் கொடுங்கோல் ஆட்சி புரியும் அரசன் தொண்டையில் நோய் வந்து மாண்டு போவான்.
இந்த ராஜ்ஜியத்தில் பழைய நிலை மீண்டும் திரும்பும். தீய சக்திகளை அழிக்க எப்போதும் நான் தயார் நிலையில்
இருப்பேன் என்பதற்கு அடையாளமாக இனி இந்தத் திருத்தலத்தில் எனது சுதர்சனச் சக்கரத்தைப் பிரயோகச் சக்கர வடிவில் ஏந்தி இருப்பேன்!

அதர்மம் ஓங்குவதை என்றுமே நான் வேடிக்கை பார்க்க மாட்டேன்.உரிய நேரத்தில் அதர்மத்தை அழித்து
தர்மத்தை நிலைநாட்ட நான் என்றுமே தயார் நிலையில்தான் இருப்பேன்!” என்று கூறினார்.
அவ்வாறே திருக்கண்ணபுரம் திருத்தலத்தில் விரைவில் அமைதி திரும்பியது என்பது வரலாறு.
அதுபோலத்தான், கலியுகத்தில் நடைபெறும் அக்கிரமங்களை உரிய காலத்தில் அழிக்க விரும்பி,
கல்கி பகவான் இப்போதும் பாதாள லோகத்தில் ஆதிசேஷனில் சயனித்தபடிக் காத்திருக்கிறார்.

கலியுகம் முடிவடையும் காலம் வரும்போது, சம்பள கிரமாத்தில் விஷ்ணு யசஸ் மகனாகத் தோன்றி தீய சக்திகளை அழிப்பார்.
பராசர பட்டர், இந்தத் திருநாம விளக்கவுரையில் இதைத் தெளிவாகக் காட்டியுள்ளார் –
ஸம்வத்ஸரஸ் ஸ்யாத் பாதாளே அனந்தே ஸம்வஸதி இதி ஸ: என்று,
கல்கி பகவான் புதிதாகக் கலியுகத்தின் முடிவில்தான் தோன்றப் போகிறார் என்று பொருளல்ல,
அவர் ஏற்கனவே பாதாள லோகத்தில் ஆதிசேஷனில் சயனித்தபடி காத்திருக்கிறார்.
தனக்குரிய காலம் வரும்போது விஷ்ணு யசஸ் மகனாகத் தோன்றுவார்.

இப்படி தர்மத்தை நிலைநாட்டும் காலத்தை எதிர்நோக்கிப் பாதாளத்தில் வசித்து வருவதால்,
கல்கி பகவான் ‘ஸம்வத்ஸர:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘ஸம்வத்ஸர:’ என்றால் நன்றாக வசிப்பவர் என்று பொருள்.
பாதாளத்தில் வசிக்கும் கல்கி பகவான் ஸம்வத்ஸர எனப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 423-வது திருநாமம்.
“ஸம்வத்ஸராய நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு வாழ்வில் நல்ல காலம் பிறக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

————-

424. தக்‌ஷாய நமஹ (Dhakshaaya namaha)

அடியேனுடைய குருவின் குருவான ஆசுகவி வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள், நாச்சியார்கோவிலில் கோவில் கொண்டிருக்கும்
கல் கருடன் விஷயமாக க்ஷேமகாரி சதகம் என்ற நூறு சுலோகங்களை அருளி உள்ளார்.
நாச்சியார்கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்காகத் திருமங்கை ஆழ்வார் நூறு பாசுரங்கள் பாடினார்.
ஆனால், அந்தத் திருத்தலத்தில் பெருமாளை விடப் பிரசித்தி பெற்றவர் கல்கருடன் அல்லவா?
அதனால், திருமங்கை ஆழ்வாரின் மறு அவதாரமாகப் போற்றப்படும் வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள் கல் கருடனுக்காக
நூறு சுலோகங்கள் அடங்கிய அத்துதியைச் சமர்ப்பித்தார்.
அதிலே கல் கருடனுக்கும் வில்லூர் சுவாமிகளுக்கும் இடையே நடைபெறும் உரையாடலாகக் கீழ்க்கண்ட ஸ்லோகம் அமைந்துள்ளது.

“ரக்ஷாம் பக்ஷிபதே கஜஸ்ய கலயன் அம்ஸே த்வதீயே ஸ்தித
தேனே கர்ஷணம் அத்ர தத்ர பவத: கேதாய கிம் நாபவத்
மோதாயைவ யதார்த்த ரக்ஷண க்ருதே வேகோஸ்ய மான்யோ குண:
தேனைவாஸ்ய பதாம்புஜேஸ்மி நிதராம் தாஸ்யம் கதோ நிர்வ்ருத:”

வில்லூர் சுவாமிகள்: பட்சி ராஜனே!
உனக்குத் தளர்ச்சி ஏற்படவில்லையா?
கல் கருடன்: எதற்காகத் தளர்ச்சி ஏற்பட வேண்டும்?

வில்லூர் சுவாமிகள்: கஜேந்திரனைக் காப்பதற்காக உன் மீது ஏறித் திருமால் பயணித்தார் அல்லவா?
அப்போது தளர்ச்சி ஏற்படவில்லையா உனக்கு?
கல் கருடன்: எப்போதுமே பகவான் என் தோளில் தானே பயணிக்கிறார்? அது எனக்கு பாக்கியமே.
தளர்ச்சி ஏற்படுவதில்லை.வில்லூர் சுவாமிகள்: மற்ற சூழ்நிலைகள் வேறு.
கஜேந்திரனை விரைந்து காப்பதற்காகத் திருமால் உன்னை மிகுந்த வேகத்தோடு உன்னைப் பயணிக்கச் சொன்னார் அல்லவா?
எந்த ஒரு ஓட்டுநருமே பயணி தன்னை வேகமாக ஓட்டும்படிப் பணித்துக்கொண்டே இருந்தால், அதை விரும்ப மாட்டார்.
ஆனால், திருமாலோ உன்னைப் பார்த்து வேகமாகப் போ… வேகமாகப் போ… என்று சொல்லிக்கொண்டே
கஜேந்திரன் இருந்த குளத்தங்கரை நோக்கி உன்மீது பயணித்தார்.
அது உனக்குத் தளர்ச்சியை உண்டாக்கவில்லையா என்று கேட்டேன்.

கல் கருடன்: அது தளர்ச்சியை ஏற்படுத்தவில்லை, மகிழ்ச்சியையே ஏற்படுத்தியது.
வில்லூர் சுவாமிகள்: அப்படியா?
கல்கருடன்: ஆம், அடியார்களைக் காக்க வேண்டும் என்பதிலே பகவான் எவ்வளவு வேகம் காட்டுகிறான்?
அந்த வேகம் என்பது போற்றுதற்குரிய குணம் அல்லவா? அடியவன் துன்பப் பட்டுக்கொண்டிருக்க,
பகவான் பொறுமையாகக் காப்பாற்றலாம் என்று காத்திருந்தால் அது அவனது கருணைக்கேற்ற செயல் ஆகுமா?
பக்தனுக்கு ஆபத்து என்றவுடன் விரைந்து சென்று காப்பது தானே இறைவனின் கருணைக்கு அழகு?
இறைவனின் அத்தகைய குணத்தைப் போற்றவேண்டாமோ?
வில்லூர் சுவாமிகள்: நிச்சயமாக!

கல்கருடன்: அந்த வேகத்தால் ஈர்க்கப்பட்டுத் தான் அவர் திருவடியை விட்டு நீங்காமல் அவரது தொண்டனாக
அவர் திருவடிவாரத்திலேயே என்றென்றும் இருக்கிறேன். அவர் என்னை வேகமாகப் பயணிக்கச் சொன்ன விஷயம்
அடியேனுக்கு மகிழ்ச்சியையும் அவர்மீது மதிப்பையுமே அளித்தது.இப்படித் தன் பக்தர்களைக் காப்பதிலும்
தீயசக்திகளை அழிப்பதிலும் மிகுந்த வேகம் கொண்டவராக விளங்குகிறார் திருமால்.
கலியுகத்தில் நடக்கும் அக்கிரமங்களை இறைவன் வெறுமனே வேடிக்கை பார்ப்பதாக நாம் எண்ணி விடக் கூடாது.
அவ்வப்போது ஏதோ ஒரு வகையில் அவற்றைத் தடுத்துக் கொண்டே தான் இருப்பார் இறைவன்.

கலியுகம் நிறைவடையும் காலம் வருகையில், கல்கி பகவானாகத் தோன்றி ஒட்டுமொத்தமாக
அனைத்துத் தீய சக்திகளையும் விரைவாக அழித்து உலகில் அறநெறி தழைத்தோங்கும்படிச் செய்வார்.
எனவே, இறைவனைப் பொறுத்தவரையில் தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
தீய சக்திகளை விரைந்து அழிப்பதால் கல்கி பகவான் ‘தக்ஷ:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘தக்‌ஷா:’ என்றால் விரைந்து செயல்படுபவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 424-வது திருநாமம்.
“தக்‌ஷாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் விரைந்து அருள்புரிவார்.

———–

425. விஷ்ராமாய நமஹ (Vishraamaaya namaha)

ஓர் ஊரிலே ஒரு பிச்சைக்காரர் இருந்தார். அவர், “என்னிடம் காசு இல்லை, என்னிடம் பணம் இல்லை,
என்னிடம் சொத்து இல்லை!” என்று புலம்பிக்கொண்டே யாசகம் கேட்டுக்கொண்டிருந்தார்.
அவருக்குச் சொந்தமாக நூறு சதுர அடிக்குச் சிறிய நிலம் மட்டுமே இருந்தது. அதைத் தவிரத் தங்குவதற்கு வீடு கூட இல்லை.
“ஐயோ! இறைவன் என்னை இப்படி ஏழையாகப் படைத்து விட்டானே!” என்று தினந்தோறும் புலம்புவாராம்.
ஆனால், அந்தப் பிச்சைக்காரருக்கு ஒரு விஷயம் தெரியாது. அவருக்குச் சொந்தமாக நூறு சதுர அடி நிலம் இருக்கிறதே.
அதற்குக் கீழே மிகப்பெரிய தங்கச் சுரங்கமே உள்ளது என்று. அதில் உள்ள அத்தனை தங்கமும் இவருக்குத்தான் சொந்தம்.
ஆனால், மண்ணால் தங்கச் சுரங்கம் மூடப்பட்டிருப்பதாலே, தான் அமர்ந்திருக்கும் இடம் தங்கச் சுரங்கம் என்றே
அறியாமல் அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.

விஷ்ணு சஹஸ்ரநாம விளக்கத்தில் எதற்காக இந்தப் பிச்சைக்காரர் கதை? இது வெறும் பிச்சைக்காரர் கதை இல்லை,
இது சாந்தோக்ய உபநிஷத்தில் வரும் கதை. அந்தப் பிச்சைக் காரர் தான் ஜீவாத்மாக்காளாகிய நாம்.
ஆனந்தம் தான் நமக்குரிய செல்வம். அந்தப் பிச்சைக்காரர் காசு இல்லை என்று புலம்பியது போல்,
நாமும் நமக்கு வாழ்வில் ஆனந்தமே இல்லையே, துன்பப் படுகிறோமே என்று புலம்பிக்கொண்டே இருக்கிறோம்.

அந்தப் பிச்சைக்காரர் தங்கச் சுரங்கத்தின் மேலே அமர்ந்திருந்தார் அல்லவா?
அதுபோலத்தான் ஆனந்தத்தின் சுரங்கமான திருமாலே நமக்குள் எழுந்தருளியிருக்கிறார்.
சுரங்கம் மண்ணால் மூடப்பட்டிருப்பதால், பிச்சைக்காரருக்கு அது தங்கச்சுரங்கம் என்று தெரியவில்லை.
அதுபோல், நமது அறிவானது நம் முன்வினைகளாகிய பாபங்களால் மூடப் பட்டிருப்பதால், நமக்குள் எழுந்தருளி இருக்கும்
ஆனந்தத்தின் வடிவான இறைவனை நாம் அறியாமல், எங்கெங்கோ ஆனந்தத்தைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.
இதைக் கூறும் சாந்தோக்ய உபநிஷத் வாக்யம்:
“தத் யதா ஹிரண்ய நிதிம் நிஹிதம் அக்ஷேத்ரஜ்ஞா உபரி உபரி ஸஞ்சரந்தோ ந விந்தேயுரேவம் ஏவேமாஸ் ஸர்வா:
ப்ரஜா அஹரஹர் கச்சந்த்ய ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்தி அந்ருதேன ஹி ப்ரத்யூடா:”

நமக்குள் இறைவன் இருக்கிறான் என்று உபநிஷத் சொல்கிறது. ஆனால், அவன் உள்ளே இருப்பதற்கு ஏதாவது நேரடிச் சான்று உண்டா?
அதையும் காட்டுகிறது உபநிஷத். தினமும் காலை தூங்கி எழும்போது,
“நான் இப்போது புத்துணர்ச்சி பெற்றேன்!” என்று மனிதர்கள் சொல்கிறார்களே! அந்தப் புத்துணர்ச்சி எங்கிருந்து வந்தது?
தூங்குபவரால் எதையாவது சம்பாதிக்க முடியுமா? உறங்கியவரால் புத்துணர்ச்சியை எவ்வாறு சம்பாதிக்க முடிந்தது?

உறக்க நிலையில் ஜீவாத்மா பரமாத்மாவோடு தற்காலிகமாக இணைந்து இருக்கிறார்.
அந்தப் பரமாத்மா ஜீவாத்மாவை ஆசையுடன் தழுவிக்கொண்டு, ஓர் இளைப்பாறும் இடமாக இருந்து,
ஜீவாத்மாவின் களைப்பைப் போக்கிப் புத்துணர்ச்சி கொடுக்கிறார். அதன் விளைவாகத் தான் மறுநாள் காலை எழும் போது
புத்துணர்ச்சி பெற்றவனாக ஜீவாத்மா தன்னை உணர்கிறான். எனவே, காலையில் நாம் எழும்போது உணரும்
புத்துணர்ச்சியே உள்ளே இறைவன் இருக்கிறான் என்பதற்குச் சான்று என்கிறது உபநிஷத்.

உறக்க நிலையில் மட்டும் இல்லை, கலியுகம் முற்றிய நிலையில் அதர்மம் ஓங்கி, அறநெறி தாழ்ந்து,
உலகில் வாழும் மக்கள் எல்லாம் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், கல்கியாகத் திருமால் அவதாரம் செய்து
அந்தத் தீய சக்திகளில் இருந்தும் அதர்மத்தில் இருந்தும் மக்களைக் காத்து, அவர்களுக்குச் சிறந்த இளைப்பாறும் இடமாகத் திகழ்வார்.

உறக்க நிலையில் பரமாத்மாவோடு இணைந்திருக்கும் ஜீவாத்மாக்கள் புத்துணர்ச்சி பெறுவது போல்,
கல்கி பகவானின் திருமேனி நறுமணத்தை நுகர்ந்த அத்தனை பேரும் புத்துணர்ச்சியும் தூய சத்துவ குணமும் பெற்று,
அடுத்து தொடங்கும் கிருத யுகத்தில் தர்மாத்மாக்களாக வாழ்வார்கள்.இவ்வாறு கலியின் கொடுமையால் துன்புறுவோர்க்கெல்லாம்
இளைப்பாறும் இடமாகக் கல்கி பகவான் இருப்பதால், அவர் ‘விச்ராம:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘விச்ராம:’ என்றால் இளைப்பாறும் இடம் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 425-வது திருநாமம்.
“விஷ்ராமாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் களைப்பைத் திருமால் போக்கிப் புத்துணர்ச்சி தந்தருள்வார்.

——————

426. விஷ்வதக் ஷிணாய நமஹ:(Vishva-dhakshinaaya namaha)
(திருநாமங்கள் 422 [உக்ர:] முதல் 430[பீஜம் அவ்யயம்] வரை – கல்கி அவதாரம்)

சரஸ்வதி நதிக்கரையில் ஒரு வேள்வி செய்து வந்த சில மாமுனிவர்கள், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய
மும்மூர்த்திகளுக்குப் பரீட்சை வைத்துப் பார்க்க நினைத்தார்கள்.
அதன் பொருட்டு, பிரம்மாவின் மகனான பிருகு முனிவரை மும்மூர்த்திகளிடம் அனுப்பி வைத்தார்கள்.
இவ்வரலாறு ஸ்ரீ மத் பாகவத புராணத்தின் 10ம் ஸ்கந்தம் 89ம் அத்தியாயத்தில் வருகிறது.
இவ்வரலாறு வழக்கில் பலவாறாகச் சொல்லப்பட்டுவந்தாலும்,
ஸ்ரீ மத் பாகவத புராணத்தில் சொல்லப்பட்ட சரித்திரம் இங்கே அப்படியே எடுத்தாளப்படுகிறது.

முதலில், பிரம்மாவின் சபைக்குச் சென்ற பிருகு முனிவர், பிரம்மாவை வணங்காமல், துதிக்காமல் அப்படியே நின்று கொண்டிருந்தார்.
அதைப் பார்த்துக் கோபம் கொண்டார் பிரம்மா. ஆனாலும் பிருகு முனிவர் தனது மகன் என்பதால்,
கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாது மனதுக்குள் மறைத்துக் கொண்டார்.
ஆயினும், பிரம்மாவின் மனதில் கோபம் எழுந்ததை பிருகு முனிவர் அறிந்து கொண்டார்.

அடுத்து கயிலாசத்துக்குச் சென்றார் பிருகு. பரமசிவன் ஆசையோடு பிருகு முனிவரை ஆலிங்கனம் செய்து கொள்ள வந்தார்.
ஆனால், சிவனை ஆலிங்கனம் செய்துகொள்ள மறுத்துக் கோபத்துடன் பேசினார் பிருகு முனிவர்.
அதனால் கோபம் கொண்ட பரமசிவன், சூலத்தால் பிருகுவைத் தாக்க முற்பட்டார்.
எனினும் பார்வதிதேவி சிவபெருமானைச் சமாதானப் படுத்தி, அவரது கோபத்தைத் தணித்தாள்.
சிவபெருமானுக்கும் கோபம் வருகிறது என உணர்ந்தார் பிருகு முனிவர்.
அடுத்ததாகக் காரிய வைகுண்ட லோகத்துக்குச் சென்றார் பிருகு முனிவர்.
அங்கே மகாலட்சுமியின் மடியில் சயனித்தபடித் திருமால், பிருகு முனிவருக்குக் காட்சி அளித்தார்.
அதைக் கண்ட பிருகு முனிவர் என்ன செய்தார்? ஸ்ரீ மத் பாகவத புராணம் சொல்கிறது.

“சயானம் ச்ரிய உத்ஸங்கே பதா வக்ஷஸி அதாடயத்
தத உத்தாய பகவான் ஸஹ லக்ஷ்ம்யா ஸதாம் கதி:”
திருமாலின் திருமார்பிலேயே வேகமாக எட்டி உதைத்துவிட்டார் பிருகுமுனிவர்.
ஆனால், திருமாலுக்குக் கோபமே வரவில்லை. மகாலட்சுமியும் திருமாலும்
ஆதிசேஷப் படுக்கையில் இருந்து விரைந்து எழுந்தார்கள்.
திருமால், பிருகு முனிவரை நமஸ்கரித்தார். பிருகுவைப் பார்த்த திருமால்,
“வாருங்கள் முனிவரே! உங்கள் வரவு நல்வரவாகுக! நீங்கள் வந்ததைக் கவனிக்காமல் நாங்கள் இருந்தமைக்கு
எங்களை நீங்கள் மன்னிக்க வேண்டும். மேலும், உங்கள் மென்மையான பாதங்களால்
எனது கரடு முரடான மார்பை உதைத்துவிட்டீர்களே! உங்கள் பாதங்களுக்கு வலிக்கிறதா?” என்று கேட்டுவிட்டு,
பிருகுவின் பாதங்களை மெல்லப் பிடித்து அமுக்கிவிட்டார்.

திருமாலின் எளிமையை எண்ணிக் கண்ணீர் வடித்த பிருகு முனிவர், சரஸ்வதி நதிக்கரைக்கே திரும்ப வந்து
திருமாலின் பெருமையை எடுத்துச் சொன்னார். “மிகவும் உயர்ந்தவனாக இருந்தபோதும்,
அந்த பகவான் அடியேன் செய்த தவறுக்காகக் கோபம் கொள்ளாது என் பாதங்களை அமுக்கி விட்டார்.
அத்தகைய இறைவன்தான் உலகிலுள்ள அனைவர் மீதும் கருணை காட்டக் கூடியவன்!” என்று மற்ற முனிவர்களிடம் சொன்னார்.

அச்சமயம் அங்கே வந்த நாரதர், “பிருகு முனிவரே! சரியாகச் சொன்னீர்கள்.
பின்னாளில் கலியுகம் முற்றிய நிலையில் கல்கி பகவானாகத் திருமால் அவதாரம் செய்வார்.
அப்போது அவர் தீய சக்திகளை அழித்தாலும், உண்மையில் அவர்கள் மீதும் இரக்கம் காட்டித்
தனது வாள் வீச்சால் அந்தத் தீயவர்களின் பாபங்களைப் போக்கி அவர்களுக்கும் நன்மையைத்தான் செய்யப் போகிறார்.
எல்லா நிலைகளிலும், அனைவர் மீதும் கருணையையும் பொறுமையையும் இரக்கத்தையும் காட்டுபவர் அன்றோ திருமால்?” என்று கூறினார்.

இப்படி உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகள் மீதும் இரக்கம் காட்டுவதால்,
கல்கி பகவான் ‘விச்வதக்ஷிண:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘விச்வ’ என்பது உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் குறிக்கிறது.
‘தக்ஷிண:’ என்றால் தாட்சிண்யம், அதாவது இரக்கம் காட்டுபவர் என்று பொருள்.

ஈவு இரக்கம் என்ற தொடரை தயவு தாட்சிண்யம் என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது
அல்லவா அனைத்துயிர்களிடமும் இரக்கம் காட்டுவதால், கல்கி பகவான் ‘விச்வதக்ஷிண:’ எனப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 426-வது திருநாமம்.
“விஷ்வதக் ஷிணாய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு,
அவர்கள் செய்த பாபங்களைத் திருமால் மன்னித்து திருத்திப் பணிகொள்வார்.

—————

427. விஸ்தாராய நமஹ:(Visthaaraaya namaha)

உலகில் கலியுகம் தொடங்கிச் சுமார் நான்காயிரம் ஆண்டுகள் கடந்த அளவில்,
கலியுகம் கி.மு., 3102ம் ஆண்டு தொடங்கியதாகப் பெரியோர்கள் கணக்கிட்டுள்ளார்கள்.
உலகில் தருமங்கள் குறைந்துகொண்டேவந்தன. இதைக் கவனித்த திருமால், தனது படுக்கையான ஆதிசேஷனை அழைத்து,
“உலக நடைமுறையைப் பார்த்தாயா?” என்றார்.
ஆதிசேஷனும் “ஆம் பகவானே! அடியேனும் கவனித்துக்கொண்டு வருகிறேன்.
பூமியில் அறநெறி தொய்வடைந்து, அதர்மம் தலைதூக்கிவிட்டது.

நீங்கள் வழங்கிய வேதங்களை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள்.
வேறு சிலர் அந்த வேதங்களுக்கே தவறான பொருள் கூறிவருகிறார்கள்.
கருணைக் கடலாகிய உங்களுக்குக் குணங்களே இல்லை என்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள்.
ஆழ்வார்கள் அவதரித்துப் பாடிய ஈரத்தமிழ்ப் பாசுரங்கள் இப்போது வழக்கொழிந்து போய்விட்டன.
நீங்கள் பற்பல திவ்ய தேசங்களில் கோயில் கொண்டிருந்தாலும், உங்களை வந்து தரிசித்து உங்களுக்குத் தொண்டு
செய்யப் பெரும்பாலான மக்கள் முன்வரவில்லை. இவை அனைத்தையும் கவனித்து வருகிறேன் சுவாமி!” என்று பதிலளித்தார்.

திருமால் ஆதிசேஷனைப் பார்த்து, “அனந்தா! இவை மட்டும் இல்லை. வேத வியாசர் உலகுக்கு
எவ்வளவு நன்மைகள் செய்துள்ளார்? மகாபாரதம், புராணங்கள், பிரம்ம சூத்திரங்கள் இத்தனையும் வழங்கியவர் வியாசர்.
ஆனால், அவரை இப்போது நகைப்புக்கு உரிய பொருளாக மக்கள் மாற்றிவிட்டார்கள்.
அவரது பிரம்ம சூத்திரங்களைப் பயன் படுத்திக்கொண்டே வியாசரின் திருவுள்ளத்துக்கு முரணான கருத்துகளைப்
பிரச்சாரம் செய்துவருகிறார்கள். நான் ராமனாக அவதரித்த போது வெளிப்படுத்திய எனது மங்கல குணங்களைத் தொகுத்து
வால்மீகி முனிவர் ஸ்ரீ ராமாயணத்தை அருளினார்.
ஆனால், இப்போது வால்மீகியை ஒரு பொருட்டாகவே கருதாமல் தள்ளிவைத்து விட்டார்கள் மக்கள்.

ஸ்ரீ ராமாயணத்தையும் அதில் சொல்லப்பட்ட ராமனின் குணங்களையும், அடியோடு மறந்து விட்டார்கள்.
இவை மட்டுமா கிருஷ்ணனாக நான் அவதரித்துச் செய்த லீலைகளை எல்லாம் சுகப்பிரம்மம்
தேனினும் இனிய பாகவத புராணமாக வழங்கினார் அல்லவா?
அந்த சுகப்பிரம்மம் வழங்கிய பாகவத புராணத்தை ஏதோ விளையாட்டுக் கிளியின் உளறல் என்று
கருதித் தூக்கி எறிந்துவிட்டார்கள் மக்கள்.
வியாசரின் பிரம்ம சூத்திரங்களுக்குப் போதாயனர் என்ற மகான் விரிவான விளக்கவுரை வழங்கியுள்ளார்.
ஆனால் அந்தப் பெரியவரின் நூலையே மறுத்துப் பேசிக் குறைகூறி வருகிறார்கள் சில மக்கள்.
இப்படிப் பூமியில் தர்மம் க்ஷீணித்திருக்கும் நிலையில், ஆதிசேஷா! நீயே பூமியில் அவதாரம்
செய்து மீண்டும் தர்மம் தலைதூக்கும்படிச் செய்ய வேண்டும்.

அதற்கு முதல்படியாக வேத வியாசர் அருளிய பிரம்மசூத்திரங்களுக்குப் போதாயனர் அருளிய விளக்கவுரையின்
அடிப்படையில், ஓர் உரையை உருவாக்க வேண்டும்!” என்று சொல்லி ஆதிசேஷனைப் பூமிக்கு அனுப்பி வைத்தார் திருமால்.
திருமாலின் ஆணைக்கிணங்க பூமியிலே ராமானுஜராக அவதரித்த ஆதிசேஷன், பிரம்ம சூத்திரத்துக்குப் போதாயனர்
அருளிய விளக்கவுரையின் அடிப்படையில், “ஸ்ரீ பாஷ்யம்’’ என்ற அற்புதமான விளக்கவுரையை அருளிச்செய்தார்.

கலியுகத்தில் தருமங்கள் தழைத்தோங்கும்படிச் செய்து, மக்களுக்குள் ஏற்றத்தாழ்வு பாராது
பக்தியையும் ஞானத்தையும் எல்லோருக்கும் பரப்பினார் ராமானுஜர்.
ஆக, எப்போதெல்லாம் அதர்மம் தலைதூக்குவது போன்ற சூழல் ஏற்படுகிறதோ,
அப்போதெல்லாம் திருமால், நேராகவோ மறைமுகமாகவோ அந்த அதர்மத்தை அழித்துப் பூமியில் தர்மத்தை நிலைநாட்டிவிடுவார்.

கலியுகம் முற்றும்போது, தானே கல்கியாக அவதாரம் செய்து, ஒட்டுமொத்த அதர்மத்தையும் அழித்து,
பிரபஞ்சம் முழுவதும் தர்மத்தை நன்றாகப் பரப்பி, தர்மத்தைத் தழைத்தோங்கச் செய்வார்.
இவ்வாறு தர்மத்தைப் பரப்புவதால், கல்கி பகவான் ‘விஸ்தார:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘விஸ்தார:’ என்றால் பரப்புபவர் என்று பொருள்.
தர்மத்தைப் பரப்புவதால் கல்கி ‘விஸ்தார:’. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 427-வது திருநாமம்.

“விஸ்தாராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் உள்ளங்களில்,
அறநெறியும் அறச் சிந்தனைகளும் பெருகும்படித் திருமால் அருள்புரிவார்.

———————–

428. ஸ்தாவர ஸ்தாணவே நமஹ:(Sthaavara-Sthaanave namaha)

பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்ட சமயத்தில் காம்ய வனம் என்ற பகுதியில் தங்கி யிருந்தபோது,
கண்ணபிரான் அவர்களை வந்து சந்தித்தான்.
அப்போது, அங்கே மார்க்கண்டேயர், நாரதர் உள்ளிட்ட முனிவர்களும் வந்தார்கள்.
நாரதர் மார்க்கண்டேயரிடம் தர்மபுத்திரருக்கு நல்வார்த்தைகளை உபதேசித்து அருளுமாறு பிரார்த்திக்க,
மார்க்கண்டேயரும் பல புண்ணியக் கதைகளையும் நல் உபதேசங்களையும் தர்மபுத்திரருக்கு வழங்கினார்.
அவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டே வந்த தர்மபுத்திரர், மார்க்கண்டேயரைப் பார்த்து,
“முனிவரே! அடுத்து வர இருக்கும் கலியுகத்தின் நிலைமை எப்படி இருக்கும்?
பொதுவாகக் கலிகாலம் என்றாலே தர்மம் சீர்குலைந்திருக்கும் என்று எல்லோரும் சொல்கிறார்களே!
அவ்வாறு கலியுகத்தில் தர்மம் சீர்குலைந்தால் எப்போது அந்த நிலை சீரடையும்?
மீண்டும் கிருத யுகம் எப்படி உண்டாகும்? அறநெறி மீண்டும் எவ்வாறு தழைத்தோங்கும்?” உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டார்.

அதற்கு மார்க்கண்டேயர், “தர்மம் என்னும் காளை கிருதயுகத்தில் நான்கு கால்களோடும்,
திரேதாயுகத்தில் மூன்று கால்களோடும், துவாபரயுகத்தில் இரண்டு கால்களோடும்,
கலியுகத்தில் ஒரு காலோடும் இருக்கும். அதாவது, அறநெறியின் அளவு அப்படிக் குறைந்திருக்கும்.
கலியுகத்தில் மக்களின் ஆயுள், வீரியம், மனம், புத்தி, பலம், தேஜஸ் ஆகிய அனைத்தும் குறைந்திருக்கும்.
பிறரை ஏமாற்று வதற்காகவும், வெளிவேஷத்துக்காகவுமே மக்கள் அறநெறிகளைப் பின்பற்றுவார்களே தவிர,
உளமார அறநெறிப்படி வாழ்வோர் கலியுகத்தில் குறைந்துவிடுவார்கள்.

பேராசையும் அறியாமையும் மலிந்திருக்கும். கலியுகம் முடியும் தறுவாயிலில், சணல் நாரால் செய்யப்பட்ட
ஆடையே மிக உயர்ந்தது என்று மக்கள் கருதுவார்கள். மக்கள் ஒருவரை ஒருவர் துன்புறுத்திக்கொள்வார்கள்.
நதிக்கரையில், பூமியை வெட்டி அற்ப தானியங்களை விதைப்பார்கள்.
தந்தையின் பொருளை மகன்கள் கவர்ந்து செல்வார்கள். பசுக்களை வண்டி இழுக்க வைப்பார்கள்.
இளங்கன்றின் தலையில் மூட்டைகளை வைத்துச் சுமக்கச் செய்வார்கள்.

அரசர்களும் தீய எண்ணம் கொண்டவர்களாகக் கொடுங்கோல் ஆட்சிபுரிவார்கள். வியாபாரத்தில் நேர்மை இராது,
பொருளாசையால் வஞ்சனையே நடக்கும். சூரியன், சந்திரன், பிருகஸ்பதி ஆகிய மூன்று கிரகங்களும்
பூச நட்சத்திரத்தை அடைந்து ஒரு ராசியில் சேரும் சமயத்தில் கலியுகம் முடிவு பெறும்.
சம்பளம் என்னும் கிராமத்தில் விஷ்ணுயசஸ் என்பவர்க்கு மகனாகத் திருமால் கல்கி அவதாரம் எடுப்பார்.
அவர் மனத்தினால் நினைத்தவுடன் எல்லா வாகனங்களும், ஆயுதங்களும், படைவீரர்களும், கவசங்களும் அவரை வந்தடையும்.

குதிரை மேல் பயணித்து விஜயம் செய்து தீய சக்திகளை அழித்து, நல்லோர்களை அவர் மகிழ்விப்பார்.
குழப்பமுற்றுத் திரியும் மக்கள் யாவரும் அவரைத் தரிசித்து அவரது அருளால் தெளிவு பெறுவார்கள்.
ஒட்டுமொத்த தீய சக்திகளையும் அவர் அழித்தவாறே, உலகில் மீண்டும் நல்லோர்களின் எண்ணிக்கை கூடி
அறநெறி தழைத்து ஓங்கத் தொடங்கும். தீய சக்திகளை அழித்த பின், கல்கி பகவான் மிகப்பெரிய
அச்வமேத வேள்வி ஒன்றைச் செய்வார். அந்த வேள்வியின் நிறைவில் சான்றோர்களான நல்லோர்களுக்கு
இந்த மொத்த பூமியையும் தானம் செய்வார். அதன்பின் அந்த நல்லோர்கள் நல்லாட்சி செய்ய,
ஒட்டுமொத்த உலகமும் க்ஷேமமாக இருக்கும்.

இப்படிக் கிருதயுகத்தில் தர்மம் நன்றாக நிலைநாட்டப் பட்டபின், கல்கி பகவான் சாந்தமாக ஓய்வெடுக்கத் தொடங்குவார்.
இவ்வாறு அறநெறிகளை உலகில் நிலைநாட்டிய பின் சாந்தமாக இருப்பதால்,
கல்கி பகவான் ‘ஸ்தாவர ஸ்தாணு:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘ஸ்தாவர’ என்பது அறநெறியை நன்கு நிலைநிறுத்துவதைக் குறிக்கிறது.
‘ஸ்தாணு:’ என்பதற்கு சாந்தமாக இருப்பவர் என்று பொருள்.
‘ஸ்தாவர ஸ்தாணு:’ என்றால் அறநெறியை நிலைநாட்டியபின் சாந்தமாக இருப்பவர் என்று பொருள்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 428-வது திருநாமம்.
“ஸ்தாவர ஸ்தாணவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, மன அமைதி ஏற்படும்படித் திருமால் அருள்புரிவார்.

———–

429. ப்ரமாணாய நமஹ:(Pramaanaaya namaha)
அடியேனுக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்தருளிய ஆசார்யரான சிறுபுலியூர் ஸ்ரீ .உ.வே. திருவாழி அண்ணன் சுவாமிகளிடம்,
ஒரு சீடர் ஒருமுறை ஓர் ஐயம் கேட்டார். “சுவாமி! தினமும் கோயிலுக்குப் போய் இறைவனுக்கு நமஸ்காரம் செய்கிறோம்.
இறைவனை வலம் வருகிறோம். உண்மையில் இவையெல்லாம் நமக்கு விஞ்ஞான ரீதியாக
ஏதோ பலன்களைக் கொடுக்கின்றன போலும். அந்த அறிவியல் ரீதியான பலனை நேராகச் சொன்னால்
நாம் கேட்க மாட்டோம் என்பதற்காகத் தான் இப்படி மறைமுகமாகத் தெய்வம், சுவாமி என்றெல்லாம் சொல்லிச்
சில உடற்பயிற்சிகளை நம் முன்னோர்கள் செய்யச் சொல்லி இருக்கிறார்கள் போலும்.
எனவே நமஸ்காரம் செய்தல், கோயிலை வலம் வருதல் இதனால் கிடைக்கும்
அறிவியல் ரீதியான பலன்கள் என்ன சுவாமி?” என்று அந்தச் சீடர் கேட்டார்.

அதற்கு எங்கள் ஆசார்யன் அற்புதமான ஒரு விடையை அளித்தார்.
“குழந்தாய்! தெய்வத்தோடு தொடர்புடைய விஷயத்தையே நீ அறிவியல் ரீதியாகச் சொன்னால்தான் ஏற்பேன் என்று சொல்கிறாய்.
அப்படி இருக்கும் போது அறிவியல் ரீதியான ஒரு விஷயத்தைத் தெய்வத்தோடு தொடர்பு படுத்திச் சொல்ல வேண்டிய தேவை என்ன?
அறிவியல் ரீதியான, உடல் ரீதியான, உலகியல் ரீதியான பலன்களுக்காக மட்டுமே ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்
என்று நம் முன்னோர்கள் கருதி இருந்தால், அதை நேரடியாகத் தான் சொல்வார்களே தவிர,
அதில் தாமாகத் தெய்வத்தைச் சேர்த்துச் சொல்லவே மாட்டார்கள்.

கோயிலுக்குப் போவதும், அங்கே இறைவனை விழுந்து நமஸ்கரிப்பதும், இறைவனை வலம் வருவதும்,
இறைவனது உகப்பு என்ற ஒரே காரணத்துக்காகத்தான். இறைவனின் திருவுள்ளம் மகிழ வேண்டும் என்ற
ஒற்றை இலக்கோடு செய்யப்படும் செயலுக்கே கர்மயோகம் என்று பெயர்.
அதனால், நமக்குக் கிடைக்கும் உலகியல் பலனில் கண் வைத்துச் செயல் புரிந்தால், அது கர்மயோகமே ஆகாது.
காலை நீராடுவதோ, சந்தியாவந்தனம், பிராணாயாமம் போன்றவை செய்வதோ, இறை வனுக்குப் பூஜை செய்வதோ
என அத்தனையுமே இறைவனின் உகப்புக்காகத்தான் நாம் செய்கிறோம்.

அப்படியானால் இவற்றால் உலகியல் பலன் எதுவுமே கிடையாதா? இவை உடலுக்கு ஆரோக்கியம் தராதா? என்று நீ கேட்கலாம்.
நிச்சயமாக அவைகள் உடலுக்கு ஆரோக்கியம் தரலாம். அதை மறுக்கவில்லை.
ஆனால், இச்செயல்களின் முக்கிய நோக்கம் வெறும் தேக ஆரோக்கியம் மட்டும் கிடையாது.
அதைக் காட்டிலும் மிக உயர்ந்த பகவத் ப்ரீதி, இறைவனின் திருவுள்ள உகப்பு என்பதே இச்செயல் களால் கிடைக்கும் மிகமிகப் பெரிய பலன்.
ஒரு மாணவன் பள்ளிக் கூடத்துக்கு நடந்து சென்று வந்தால் அதன் விளைவாக
அவனது உடல் ஆரோக்கியம் பெறுகிறது என்று வைத்துக் கொள்வோம்.
அதை வைத்துக்கொண்டு, அவன் பள்ளிக் கூடம் போனதே உடல் எடையைக் குறைக்கத்தான் என்று சொல்லி விட முடியுமா?
பள்ளிக்கூடம் போவது கல்வி என்ற உயர்ந்த லட்சியத்துக்காக அல்லவா!.
அத்துடன் இலவச இணைப்பாக, உடல் ஆரோக்கியம் இவன் நடந்து சென்றதால் கிடைக்கிறது.
அதுபோலத் தான் இதுவும்!” என்று விளக்கினார்.

உடனே அந்தச் சீடர், “சுவாமி! அப்படி நம் சாஸ்திரச் சடங்குகளுக்கு அறிவியல் ஆதாரங்களைத் தேடாதே என்று
சொல்லி விட்டால், இளம் தலைமுறையினர் இவற்றை எப்படிப் பின்பற்றுவார்கள்?” என்று கேட்டார்.
அதற்கு ஆசார்யன், “நாம் அன்றாடம் பின்பற்ற வேண்டிய கடமைகளை வேத சாஸ்திரங்கள் சொல்கின்றன.
அந்த அறநூல்கள் யாவும் இறைவன் தானே திருவாய் மலர்ந்தருளிய வார்த்தைகள். இறைவன் விதித்த விதிகள்.
இறைவன் விதித்த ஒரு விதிக்கு யாரோ ஒரு விஞ்ஞானியின் அங்கீகாரம் எதற்கு?
நம் முன்னோர்களும் இறைவனும் என்ன விதித்திருக்கிறார்களோ, அதை அப்படியே பின்பற்றி நடப்பதற்குத் தான்
சிரத்தை, பக்தி என்று பெயர். யாரோ ஒரு விஞ்ஞானி அங்கீகரித்தால்தான் சாஸ்திரத்தை ஏற்பேன் என்று சொன்னால்,
இறைவன் மீது நமக்கு முழு நம்பிக்கை இல்லை என்று பொருள்படும்!” என்றார்.

மகாபாரதத்திலே ஒரு ஸ்லோகம் வருகிறது;
“தச்சீலம் அநுவர்தந்தே மநுஷ்யா லோகவாஸின:”
கலியுகம் முடியும்போது கல்கி பகவான் அவதாரம் செய்து தர்மத்தை நிலைநாட்டி கிருத யுகத்தைத் தொடங்கி வைக்கிறார்.
அந்தக் கிருத யுகத்தில் வாழ்வோர் எல்லாரும் எப்படி இது தான் தர்மம், இது அதர்மம் என்று அறிவார்கள்?
அதற்கு மகாபாரதம் விடை சொல்கிறது.
கல்கி பகவான் எதைச் செய்யச் சொல்கிறாரோ, அது தர்மம்,

கல்கி பகவான் எதிலிருந்து விலகி இருக்கச் சொல்கிறாரோ அது அதர்மம் என்று மக்கள் பின்பற்றுவார்கள். அப்படித்தான் கிருத யுகத்தில் தர்ம அனுஷ்டானம் தொடங்கும்.

ஆக, தர்மம் எது அதர்மம் எது என்பதைக் காட்டும் நம்பகத் தன்மைகொண்ட பிரமாணமாகக் (authority-ஆக)
கல்கி பகவான் திகழ்வதால், அவர் ‘ப்ரமாணம்’ என்று அழைக்கப்படுகிறார்.
ப்ரமாணம் என்றால் ‘நம்பத்தகுந்த ஆதாரம்’ என்று பொருள்.
தர்மம், அதர்மம் ஆகியவற்றை அறிவதற்குரிய ஆதாரமாக இருப்பதால், கல்கி பகவான் ‘ப்ரமாணம்’ எனப் படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 429-வது திருநாமம்.“ப்ரமாணாய நமஹ:” என்று தினமும் சொல்லி
வரும் அன்பர்களின் மனங்களில் சிரத்தையும் நம்பிக்கையும் தழைத்தோங்கும் படித் திருமால் அருள்புரிவார்.

———

430. பீஜாய அவ்யயாய நமஹ:(Beejaaya Avyayaaya namaha)

திருக்கோஷ்டியூரில் செல்வ நம்பிகள் என்ற மகான் வாழ்ந்து வந்தார்.
(ராமானுஜரின் குருமார்களுள் ஒருவரான திருக்கோஷ்டியூர் நம்பிகள் அல்லர் இவர்;
இவர் திருக்கோஷ்டியூர் நம்பிக்குப் பல நூறாண்டுகள் முற்பட்டவர்.)
ஒருமுறை செல்வ நம்பிகள் ஒரு முக்கியப் பணிக்காக வெளியூர் சென்றிருந்தார்.
அவரது மனைவி மட்டும்தான் வீட்டிலே இருந்தார். அச்சமயம் திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள்
திருக்கோயிலில் நடைபெறும் மாசி மக உற்சவத்தைத் தரிசிப்பதற்காகப் பல ஊர்களில் இருந்தும்
அடியார்கள் திருக்கோஷ்டியூருக்கு வந்திருந்தார்கள்.

அவர்கள் ஊர் மக்களிடம், “இவ்வூரில் எங்கே உணவு கிடைக்கும்?” என்று விசாரித்தபோது,
மக்கள் எல்லோரும் செல்வ நம்பிகளின் மாளிகையைக் காட்டி, “அந்தப் பெரியவரின் இல்லத்துக்குச் செல்லுங்கள்
நிச்சயமாக உணவு கிடைக்கும்!” என்று கூறினார்கள்.
அந்த அடியார்களும் செல்வநம்பிகளின் இல்லத்துக்கு வந்தார்கள். செல்வ நம்பிகளின் மனைவி அவர்களை
வரவேற்று உபசாரம் செய்தார். வந்திருந்த அடியார்கள், “நாங்கள் வெளியூரிலிருந்து இங்கே பெருமாளின்
உற்சவத்தைத் தரிசிப்பதற்காக வந்தோம். உங்கள் இல்லத்தில் உணவு கிடைக்கும் என்று கேள்விப் பட்டு வந்திருக்கிறோம்!” என்றார்கள்.

“அடியார்களான உங்களுக்கு உணவு பரிமாறுவது நாங்கள் செய்த பாக்கியம்!” என்று சொல்லி விட்டுச்
செல்வ நம்பிகளின் மனைவி சமையலறைக்குச் சென்றார்.
“சுமார் நாற்பது பேர் வந்திருக்கிறார்கள். இத்தனை பேருக்கும் சமைக்கும் அளவுக்கு நம் இல்லத்தில் அரிசி இல்லையே!
ஆனால், அதே நேரம் வந்திருக்கும் அடியார்களை வெறும் வயிற்றோடு திருப்பி அனுப்பு
வதும் பெரும் பாபம் ஆயிற்றே! என்ன செய்வது?” என்று சற்றுநேரம் சிந்தித்தார் செல்வ நம்பிகளின் மனைவி.

அவர் மனதில் ஓர் யோசனை தோன்றியது. “ஆஹா! அடுத்து வயலில் விதைப்பதற்காகக் கொல்லையிலே
விதை நெல்லை நம் கணவர் சேமித்து வைத்திருக்கிறாரே! அந்த விதை நெல்லைக் குத்தி அரிசி ஆக்கி
இவர்களுக்கு உணவளித்துவிடுவோம்!” என்று தீர்மானித்தார். அவ்வாறே உணவு தயாரித்து வந்திருந்தோர்
அனைவருக்கும் வயிறாரப் பரிமாறி விட்டார். அவர்களும் திருப்தியோடு புறப்பட்டுச் சென்றார்கள்.

வெளியூர் சென்றிருந்த செல்வ நம்பிகள் ஊர் திரும்பிய பின், அடுத்து வயலில் விதைப்பதற்காக
விதைநெல்லைச் சரிபார்க்கச் சென்றார். பார்த்தால் விதை நெல்லைக் காணவில்லை.
மனைவியிடம், “இங்கே வைத்திருந்த விதை நெல் எல்லாம் எங்கே போனது?” என்று கேட்டார் செல்வ நம்பிகள்.
“அவற்றை நான் வைகுண்டத்தில் விதைத்து விட்டேனே!” என்றார் மனைவி.
அதாவது, இறை அடியார்களின் வயிற்றில் அந்த நெல்லைச் சேர்த்தது வைகுண்ட லோகத்தில் விதைத்ததற்குச் சமம் என்பது தாத்பரியம்.

“அப்படியா? நல்ல காரியம் செய்தாய்! அடியார்கள் பட்டினியுடன் நம் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தால்,
அது மிகப்பெரிய பாபம்!” என்று சொல்லித் தன் மனைவியைப் பாராட்டினார் செல்வ நம்பிகள்.
அன்று இரவு செல்வ நம்பிகளின் கனவில் தோன்றிய அரங்கன்,
“இந்த உலகுக்கும் உலகில் நடைபெறும் தருமங்களுக்கும் நானே விதையாக இருக்கிறேன்.
என் அடியார்களுக்கு விதை நெல்லைக் கொண்டு உணவளித்த உங்களுக்கு நானே விதை தந்து அருள்வேன்!” என்று சொன்னான்.
கனவில் அரங்கன் சொன்னது போலவே மறுநாள் திருவரங்கத்தில் இருந்து பல மூட்டை களில் விதை நெல்
செல்வ நம்பிகள் இல்லத்துக்கு வந்து சேர்ந்தது. அதை அவர் வயலில் விதைக்கவே மிகச்சிறந்த விளைச்சலும் உண்டானது.

செல்வ நம்பிகளின் கனவில் அரங்கன் சொன்னது போல், இந்த உலகுக்கும் உலகில் நடைபெறும் தருமங்களுக்கும்
மூலக் காரணமாக, அதாவது விதையாக திருமால் இருக்கிறார்.
நம்மாழ்வாரும் “முதல் தனி வித்து” என்றும் “வேர் முதலாய் வித்தாய்” என்றும் திருமாலைப் பாடுகிறார்.
கல்கி அவதாரத்திலும், கிருத யுகம் நிலைபெற்று அதிலே தருமங்கள் செழிப்பதற்குரிய வித்தாகக் கல்கி பகவான் திகழ்கிறார்.
அவரது அருளால்தான் கலியுகம் முடிந்து, கிருதயுகம் தொடங்கி, தருமம் என்னும் பயிர் செழிக்கத் தொடங்குகிறது.

தருமமாகிய பயிர் செழிப்பதற்கு விதையாக இருப்பதால், கல்கி பகவான் ‘பீஜம் அவ்யயம்’ என்று அழைக்கப்படுகிறார்.
அவ்யயம் என்றால் அழியாத, பீஜம் என்றால் விதை.
‘பீஜம் அவ்யயம்’ என்றால் அழியாத விதை, தருமங்கள் அழியாமல் செழிக்கச்செய்யும் விதை என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 430-வது திருநாமம்.“பீஜாய அவ்யயாய நமஹ:” என்று தினமும் சொல்லி
வரும் அன்பர்களின் வயல்களில் விவசாயம் நன்றாகச் செழிக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

———–

431. அர்த்தாய நமஹ (Arthaaya namaha)
கும்பகோணத்தில் கோமளவல்லித் தாயாரோடு உறையும் ஸ்ரீசார்ங்கபாணிப் பெருமாளைப் பூஜித்து வரும்

அர்ச்சகர்களுள் ஒருவரான ஸ்ரீ.உ.வே. சௌந்தரராஜ பட்டாச்சாரியார் சுவாமியோடு அடிக்கடி

ஆகமங்கள் குறித்து உரையாடும் பேறு அடியேனுக்குக் கிட்டுவதுண்டு.

அப்போதெல்லாம் ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமத்தில் உள்ள பல நுட்பங்களை ஸ்ரீ.உ.வே. சௌந்தரராஜ பட்டாச்சாரியார் அடியேனுடன் பகிர்வார்.

ஒருமுறை அடியேன் அவரிடம், “சுவாமி! உங்களைப் போல் இவ்வளவு ஆழமாக ஆகமங்களைக் கற்ற வித்வான்கள்

நம் சார்ங்கபாணிப் பெருமாளுக்குப் பூஜை செய்வதை நினைத்துப் பார்க்கையில் பெருமையும் பெருமிதமும் ஏற்படுகின்றன!” என்று சொன்னேன்.

அதற்கு சௌந்தரராஜ பட்டாச்சாரியார், “அடியேனின் தாய்வழித் தாத்தாவான தேரழுந்தூர் ஸ்ரீ.உ.வே. கண்ணன் பட்டாச்சாரியார்

சுவாமிக்குத்தான் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்!” என்றார். ஏன் என்று அடியேன் கேட்க, அப்போது அர்ச்சகர் ஒரு கதை சொன்னார்:

நான் இளம் வயதில் அரைக்கால் சட்டை அணிந்தபடி விளையாடிக் கொண்டிருந்தேன்.

எனது நடவடிக்கைகளைக் கவனித்த என் தாத்தா என்னை அழைத்தார். “நீ என்ன படிக்கிறாய்?” என்று கேட்டார்.

விளையாட்டுச் சிறுவனான அடியேன், “நான் ஒன்பதாம் வகுப்பு படித்துவருகிறேன்!” என்று சொல்லிவிட்டு மீண்டும் விளையாட ஓடினேன்.

மீண்டும் அழைத்தார் தாத்தா. “குழந்தாய்! இங்கே வா! நீ எத்தகைய குடும்பத்தில் பிறந்திருக்கிறாய் தெரியுமா?

குடந்தையில் உள்ள திருக்கோவில்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த காலத்திலும்,

அந்நியப் படையெடுப்புகள் நடைபெற்ற காலத்திலும் உனது மூதாதையர்கள் தங்கள் குலதனமாகக் கருதிக்

கோவிலையும் பெருமாளையும் பூஜைமுறைகளையும் காத்து இன்றளவும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்.

அவ்வாறு அந்நாட்களில் கோவிலைக் காத்த உங்களைப் போன்ற சில குடும்பங்களுக்கு இங்கே பூஜை மிராசு வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய குடும்பத்தில் பிறந்துவிட்டு, வேதங்களையும் ஆகமங்களையும் பயிலாமல் இப்படி நீ விளையாடலாமா?” என்று கேட்டார்.

அவரது ஆழமான பேச்சைக் கேட்டவாறே என் மனம் அவர்பால் ஈர்க்கப்பட்டது.

“அடியேன் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டேன். தாத்தா மேலே சொல்லத் தொடங்கினார்,

“குழந்தாய்! அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.

முக்திக்கு வழிகாட்டும் பாரத தேசத்தில் மனிதனாகப் பிறப்பது என்பது அதைவிட அரிதானது.

அதிலும், ஆழ்வார்களின் அமுதத் தமிழ் ஆறாகப் பெருகி ஓடும் தமிழகத்தில் பிறப்பது மிகவும் அரிது.

திருமாலிடம் பக்தி நிறைந்தவனாக இருத்தல் அதனினும் அரிது.

அந்தத் திருமாலையே தீண்டித் திருவாராதனம் செய்யும் பாக்கியம் பெறுதல் என்பது அதை விடவும் அரிதானது.

அங்கே கோவிலில் ஆராவமுதாழ்வான் என்று அழைக்கப்படும் சார்ங்கபாணிப் பெருமாள் உன் கையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான்.

நாளை நீ பண்டிதனாகி வந்து அவனுக்குப் பூஜை செய்ய வேண்டும் என்று அவன் காத்திருக்க,

நீ வேத ஆகமங்களைப் பயிலாமல் விளையாடலாமா?

அனைத்து உலகங்களையும் அநாயாசமாகப் படைத்து, காத்து, அழிக்கும் இறைவன்,

தனது எளிமையை வெளிப்படுத்தும் விதமாகத் தன் பக்தர்களுக்குக் கட்டுப்பட்டு அர்ச்சாவதாரமாகக் கோவில்களிலே எழுந்தருளி உள்ளான்.

அனைத்து சக்திகளும் இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் உன் கையை எதிர்பார்த்து அவன் காத்திருக்கிறான்.

உலகிலுள்ள அத்தனை பேருக்கும் அடைய வேண்டிய மிக உயர்ந்த இலக்காக இருப்பவன் பகவான்.

கடோபநிஷத் “ஸா காஷ்டா ஸா பரா கதி:” என்று சொல்கிறது. ‘காஷ்டா’ என்றால் இலக்கு.

நாம் அடையவேண்டிய மிக உயர்ந்த இலக்கு இறைவனே.

‘கதி:’ என்றால் வழி. இலக்காகிய அந்த இறைவனை அடைவிக்கும் வழியும் அவனே.

இலக்கும் அவனே, வழியும் அவனே என்பதே இவ்வாக்கியத்தின் பொருள்.

எல்லோருக்கும் அடைய வேண்டிய இலக்காக இருக்கும் அந்த எம்பெருமான் தானே உனக்கும் அடையத்தக்க இலக்காவான்?

எனவே அவனை ஆராதிக்க, அவனை மகிழ்விக்க நீ வேத ஆகமங்களை நன்றாகப் பயின்று மிகச்சிறந்த அர்ச்சகனாக வர வேண்டும்!”

என்று என்னை ஆசீர்வதித்தார்.

இந்தக் கதையைச் சொன்ன அர்ச்சகர், “அடியேன் ஒருவனுக்கு மட்டும் இல்லை. இதுபோல் பல குழந்தைகளையும் அழைத்து,

குழந்தைகளுக்குப் புரியும் மொழியில் நல்ல உபதேசங்களைச் செய்து, இறைவனே நாம் அடைய வேண்டிய

மிக உயர்ந்த இலக்காவான் என்பதைப் பிஞ்சு மனங்களில் தெளிவாக விதைத்தார் அந்த மகானான ஸ்ரீ.உ.வே. கண்ணன் பட்டாச்சாரியார் சுவாமி.

அவருடைய வழிகாட்டுதலும் வாழ்த்துகளும்தான் அடியேனைப் போன்ற பலரையும் இந்த நன்னிலையில் இன்று வைத்திருக்கிறது.

கோமளவல்லித் தாயாரின் கேள்வனான ஆராவமுதாழ்வானின் உகப்பு மட்டுமே எங்களின் ஒரே இலக்கு என்று நாங்கள் அவனுக்குத் தொண்டாற்றுகிறோம்!” என்று உருக்கமாகச் சொன்னார் அர்ச்சகர்.

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 431-வது திருநாமமான ‘அர்த்த:’ என்ற திருநாமத்துக்கு என்ன கதை எழுதலாம்

என்ற கேள்வியுடன் கோவிலுக்குச் சென்ற அடியேனுக்கு அர்ச்சகர் மூலமாகவே

மிகச்சிறந்த கதையைக் காட்டி விட்டார்கள் கோமளவல்லித் தாயாரும் ஆராவமுதாழ்வானும்.

‘அர்த்த:’ என்றால் (இவ்விடத்தில்) அடைய வேண்டிய இலக்கு என்று பொருள்.

மிகச்சிறந்த பக்திமான்களுக்கு அடைய வேண்டிய இலக்காகத் திருமால் ஒருவரே இருப்பதால்,

திருமால் அர்த்த என்று அழைக்கப்படுகிறார்.

“அர்த்தாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் அடைய விரும்பும் இலக்குகள்

விரைவில் கைகூடும்படி ஸ்ரீஆராவமுதாழ்வான் அருள் புரிவான்.

———-

கண்ணனுக்கு மாலிகன் என்றொரு நண்பன் இருந்தான்

கேட்டதும் கொடுப்பான் கண்ணன் என்று எல்லோரும் கண்ணனைப் புகழ்வதைக் கவனித்த அந்த மாலிகன்,

கண்ணனிடம், “நான் கேட்பதை நீ தருவாயா?” என்று கேட்டான்.

கண்ணபிரானோ, “நீ என்னையே கேட்டாலும் உனக்குத் தருவதற்குத் தயாராக உள்ளேன்!” என்று விடையளித்தான்.

ஆனால், முன் பிறவிகளில் செய்த பாபங்களாலே அந்த அளவுக்குப் பக்குவம் பெறாத அந்த மாலிகன் கண்ணனிடம்,

“கண்ணா! எனக்கு நீ ஆயுதப் பயிற்சி வழங்க வேண்டும். உலகிலுள்ள அனைத்து விதமான ஆயுதங்களையும்

எப்படிப் பயன்படுத்தி எதிரிகளை வெல்ல வேண்டும் என்று நீ சொல்லித் தரவேண்டும்!” என்று கோரினான்.

தனது நண்பனின் கோரிக்கையை நிறைவேற்ற எண்ணிய கண்ணனும், அவனுக்கு உலகிலுள்ள அனைத்து விதமான

ஆயுதங்களிலும் பயிற்சி அளித்தான். கண்ணனிடம் பயிற்சி பெற்றுக் கொண்ட அவன்,

பல்வேறு ஆயுதங்களைக் கையில் ஏந்தி நல்லவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினான்.

பல சாதுக்கள் அவனால் இன்னலுக்கு ஆளாயினர்.

இவற்றைக் கவனித்த பலராமன் கண்ணனிடம், “என்ன கிருஷ்ணா? இந்த மாலிகன் செய்யும் அட்டூழியங்களைப் பார்த்தாயா?

சீக்கிரமாக அவனை வதைக்க வேண்டும்.

ஆனால் நீ அவனை அழித்தால், நண்பனைக் கொன்றவன் என்று உனக்குச் சிலர் பெயர் வைக்கக்கூடும்.

நீ நேரடியாகத் தொடர்பு படாமல் அவனை அழிக்க வழி உள்ளதா என்று பார்!” என்றார்.
கண்ணன் சிரித்துக் கொண்டே, “அண்ணா! இத்தகைய சில தீய சக்திகளை நான் கொஞ்சம் வாழ விடுவேன்.

சில வாய்ப்புகளும் தருவேன். அவனாகத் திருந்துகிறானா என்று சோதித்துப் பார்க்கவே இவற்றை நான் செய்கிறேன்.

இவன் திருந்தாவிட்டால் சரியான நேரத்தில் சரியான விதத்தில் இவனது தீமைகளுக்கு நான் முற்றுப்புள்ளி வைத்துவிடுவேன் பாருங்கள்!” என்றான்.
இந்நிலையில், மாலிகன் கண்ணனிடம் வந்து, “கண்ணா! இப்போது தான் நாரதர் மூலம் ஒரு செய்தி அறிந்து கொண்டேன்.

என்னவென்றால், எல்லா ஆயுதங்களிலும் எனக்குப் பயிற்சி அளித்த நீ, உன் கையில் ஏந்தி இருக்கும்

சக்கராயுதத்தில் மட்டும் எனக்கு இன்னும் பயிற்சியே அளிக்கவில்லை.

அதையும் உன்னிடமிருந்து கற்று வருமாறு நாரதர் சொல்லி அனுப்பினார்!” என்றான்.
கண்ணன் பலராமனைப் பார்த்துப் புன்னகை செய்யவே, பலராமன்,

“ஓ! நாரதர் மூலம் கிருஷ்ணன் செய்த லீலை போலும் இது!” என்று புரிந்து கொண்டார்.

மாலிகனைப் பார்த்துக் கண்ணன், “மாலிகா! சக்கராயுதத்தை மிகவும் ஜாக்கிரதையாகப் பிரயோகிக்க வேண்டும்.

கொஞ்சம் கவனம் குறைந்தாலும் உன் கழுத்தையே அது சீவிவிடும். அந்தப் பயிற்சி உனக்கு வேண்டாம் என நான் நினைக்கிறேன்!” என்றான்.

மாலிகனோ, “இல்லை இல்லை! அதையும் நான் கற்றே தீருவேன்!” என்று கண்ணனை வற்புறுத்தினான்.

இனி உன் விருப்பம் என்று சொன்ன கண்ணன், மாலிகன் கையில் தன் சக்கரத்தைக் கொடுத்து,

அதை ஏவும் முறையையும் சொல்லிக் கொடுத்து ஏவச் சொன்னான். சக்கரத்தை மாலிகன் ஏவ முயன்றவாறே,

அது நேராக மாலிகனின் கழுத்தில் பாய்ந்து அவன் தலையைக் கொய்து வதைத்துவிட்டது.

கண்ணன் பலராமனிடம், “அண்ணா! என் நண்பனை நான் கொல்லவில்லை.

அவனே சக்கராயுதத்தைத் தவறாகப் பிரயோகித்துத் தன் கையால் தானே மரணத்தைத் தேடிக் கொண்டான் பாருங்கள்!” என்றான்.

அச்சமயம் அங்கே வந்த நாரதர், “கண்ணபிரானே! உங்களைத் தரிசிக்கும் பேறு பெற்ற சான்றோர்கள்,

உங்களையே மிக உயர்ந்த இலக்காக வேண்டிப் பெறுவார்கள்.

ஆனால் இந்த மாலிகனைப் போன்றவர்கள், நீங்கள் உங்களைத் தருவதற்குத் தயாராக இருந்தபோதும்,

உங்களைத் தவிர்ந்த மற்ற விஷயங்களை நாடித் தங்கள் முடிவைத் தேடிக் கொள்கிறார்களே!” என்றார்.

இவ்வரலாற்றைப் பெரியாழ்வாரும்,
“சீமாலிகன் அவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய்
சாமாறு அவனை நீ எண்ணிச் சக்கரத்தால் தலை கொண்டாய்
ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சிப் பூச்சூட்ட வாராய்”-என்று பாடியுள்ளார்.

மாலிகன் தீயவன் என்றபோதும், கண்ணனுடன் தோழமை கொள்ளும் பேறு பெற்றவன் என்பதால்

ஸ்ரீ என்ற அடைமொழி சேர்த்துச் சீமாலிகன் (ஸ்ரீமாலிகன்) என்று குறிப்பிடுகிறார் பெரியாழ்வார்.

பக்திமான்கள், ஞானிகளுக்கு அடையத் தக்க மிகச்சிறந்த இலக்காக இருப்பதால்,

திருமால் அர்த்த: (431-வது திருநாமம்) என்று அழைக்கப்படுகிறார்.

அதே சமயம், மாலிகன் போன்ற தீய எண்ணம் கொண்டவர்கள் திருமாலைத் தவிர்ந்த மற்றைய விஷயங்களை

இலக்காக எண்ணி, திருமாலைத் தங்கள் இலக்காகக் கொள்ளாமல் போவதால், திருமால் ‘அனர்த்த:’ என்று அழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 432-வது திருநாமம்.

‘அனர்த்த:’ என்றால் இலக்காக இல்லாதவர் என்று பொருள்.

துர்பாக்கியசாலிகளுக்கு இலக்காக இல்லாத திருமால் ‘அனர்த்த:’ எனப்படுகிறார்.

“அனர்த்தாய நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களின் எண்ணங்கள் உயர்ந்து பக்குவம் அடையும்படித் திருமால் அருள் புரிவார்.

————-

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வடமொழிக் கவிச் சக்கரவர்த்தியான ஆசுகவி வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள்

வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம்.

1945ம் வருடம். ஸ்ரீநிதி சுவாமிகள் கும்பகோணத்தில் வசித்து வந்த காலம்.

அவரது மூத்த மகனுக்கு உபநயனம் என்ற வைதிகச் சடங்கு செய்து, காயத்திரி மந்திர உபதேசம் செய்ய வேண்டிய தருணம் வந்தது.

உபநயனச் சடங்கு செய்வதற்கு அக்காலத்தில் சுமார் 200 ரூபாய் தேவைப்பட்டது.

இன்றைய காலக்கட்டத்தின் அடிப்படையில் அது சுமார் 50,000 ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையாகும்.
ஸ்ரீநிதி சுவாமிகளோ என்றுமே உலகியல் செல்வத்தில் நாட்டம் கொள்ளாமல் குடந்தையில் உறையும்

கோமளவல்லித் தாயார் – ஸ்ரீஆராவமுதாழ்வான் திருவடிகளையே தனது செல்வமாகக் கொண்டிருந்தார்.

“கிம் கேஹை: கலிதை: தனை: அபி கதை: கேதாரஜாலை: ததா
கிம் வா தை: அபி வஸ்துபி: ப்ரியதமை: யாதை: மனோஹாரிபி:
பந்துப்யச்ச ஸமாகதை: பரிபவை: கிம் வா மம அத்ர ஆகதம்
ஸ்ரீமத் கோமளவல்லிகா ஸஹசரம் ஸ்ரீசார்ங்கிணம் பச்யத:”–என்று

அபர்யாப்தாம்ருத விம்சதி என்னும் துதியில் அவரே பாடியுள்ளார்.

கோமளவல்லித் தாயாரின் கேள்வனான ஸ்ரீஆராவமுதாழ்வானைத் தரிசிக்கும் பாக்யம் பெற்ற அடியேனுக்கு

மாளிகைகளாலோ, செல்வங்களாலோ, படாடோபப் பொருள்களாலோ, உறவினர்கள் கொடுக்கும் பரிசுகளாலோ

ஆக வேண்டியது ஒன்றுமே இல்லை. எனது மிகப்பெரிய சொத்தே திருமகள் கேள்வனாகிய திருமால் தான் என்பது இதன் பொருளாகும்.

ஆனால் குடும்ப வழக்கத்தையும் உலகியல் கட்டாயங்களையும் அனுசரித்து அக்காலத்தில் 200 ரூபாயாவது செலவு செய்தாலன்றி

உபநயனச் சடங்கை மகனுக்கு நிறைவேற்ற இயலாது. அந்தப் பணத்துக்கு என்ன செய்வது என்று சிந்தித்த நிலையில்

சார்ங்கபாணிப் பெருமாள் திருக்கோவிலுக்குச் சென்ற ஸ்ரீநிதி சுவாமிகள், கோமளவல்லித் தாயாரைப் பார்த்து ஒரு
ஸ்லோகத்தை விண்ணப்பித்தார்

“மாத: கோமளவல்லி மன்மன இதம் யுஷ்மத் கடாக்ஷாபிதம்
ப்ருங்கம் வாஞ்சதி ஜங்க்ருதி பரதரா யஸ்யேத்ருசீ ராஜதே
அன்யோன்யம் தன ஹேம ஸங்கதி வசாத் அஸ்மன் மன கர்ணயோ:
ஆனந்தம் தததீ ஜணஜ் ஜணதிதி ப்ரக்ராந்த லீலா ரஸா”

“கோமளவல்லித் தாயே! எனது மனமாகிய தாமரை உனது அருளாகிய வண்டின் ரீங்காரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.

உன்னருளால் விரைவில் பொன்னும் பொருளும் மழையாகப் பொழிகின்ற அந்த ஒலியைக் கேட்டு

அடியேன் ஆனந்தம் பெறும்படி நீ அருள்புரிய வேண்டும்!” என்று

கோமளவல்லித் தாயாரிடமும் சார்ங்கபாணிப் பெருமாளிடமும் இந்த ஸ்லோகத்தின் வாயிலாகப் பிரார்த்தனை செய்தார்.

அதன்பின் தனது உறவினரான திருப்புல்லாணி. திரு. ஸ்ரீநிவாசன் அவர்களைச் சந்திப்பதற்காக

மதுரையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்றார் ஸ்ரீநிதி சுவாமிகள்.

கம்ப ராமாயணத்தில் மிகப்பெரிய ஆராய்ச்சியாளரான ஸ்ரீநிவாசன் அவர்கள்,

ஸ்ரீநிதி சுவாமிகளைக் கண்டதும் மிகவும் மகிழ்ந்து வரவேற்றார். “உங்களைத் தான் காணவேண்டும் என்று கள்ளழகரிடம் வேண்டிக் கொண்டிருந்தேன்.

கண்முன்னே வந்து நின்று விட்டீர்களே!” என்றார் ஸ்ரீநிவாசன்.

“என்ன விஷயம்?” என்று கேட்டார் ஸ்ரீநிதி சுவாமிகள்.

“நீங்கள் இங்கே என் வீட்டில் வால்மீகி ராமாயணச் சொற்பொழிவு ஒன்றை ஆற்ற வேண்டும்.

வால்மீகி ராமாயணத்தையும் கம்ப ராமாயணத்தையும் ஒப்பிட்டு வேறுபடுத்தி அடியேன் எழுதி வரும்

ஆராய்ச்சி நூலுக்கு நீங்கள் ஆற்றும் சொற்பொழிவு மிகவும் உதவியாக இருக்கும்!” என்றார் ஸ்ரீநிவாசன்.
அவ்வாறே அங்கே தங்கிப் பதினைந்து நாட்கள் வால்மீகி ராமாயணச் சொற்பொழிவு ஆற்றினார் ஸ்ரீநிதி சுவாமிகள்.

சொற்பொழிவு நிறைவடைந்தவாறே ஸ்ரீநிவாசன் அவர்கள் சரியாக 200 ரூபாய் சன்மானத்தை நாணயங்களாக வழங்கினார்.

அந்த நாணயங்களின் ஒலி கோமளவல்லித் தாயாரின் சலங்கை ஒலிபோல் ஸ்ரீநிதி சுவாமிகளின் காதுகளில் ஒலித்தது.

குசேலர் கேட்காமலேயே கண்ணன் செல்வத்தைத் தந்தருளியது போல், நாம் தற்செயலாக வந்த இடத்தில்

இவர் மூலம் 200 ரூபாய் கிடைக்கும் படித் திருமாலும் திருமகளும் அருள்புரிந்ததை எண்ணி மனம் நெகிழ்ந்த

ஸ்ரீநிதி சுவாமிகள், மேற்கொண்டு தமது மகனுக்குச் செய்ய வேண்டிய உபநயனத்தைச் சீரும் சிறப்புமாக நடத்தினார்.

இந்த ஒரு சந்தர்ப்பம் என்று மட்டுமில்லை, ஸ்ரீநிதி சுவாமிகளின் வாழ்வில் பல தருணங்களிலும்

இவ்வாறு செல்வத்தைக் கொடுத்து அவரைக் காத்திருக்கிறார் திருமால்.

இப்படி அடியார்களுக்கு அருள்புரிவதற்கு ஏதுவாக எல்லையில்லாத தனத்தைக் கொண்டிருக்கும்

திருமால் ‘மஹாகோச:’ என்று அழைக்கப்படுகிறார்.

‘மஹாகோச:’ என்றால் அள்ள அள்ளக் குறையாத நிதிகளை உடையவர் என்று பொருள்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 433வது திருநாமம்.

“மஹாகோசாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் இல்லங்களில் செல்வச் செழிப்பு நிறையும்.

————–

கேரளாவில் உள்ள ஒரு திவ்யதேசமான திருவாறன்விளை என்ற திருத்தலத்தின் தல வரலாறு இது.

மகாபாரதப் போர் தொடங்கும் முன் பீஷ்மர் ஒரு சபதம் செய்தார்.

“கண்ணன் ஆயுதமே எடுக்காமல் பாண்டவர்களுக்கு உதவி செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்.

நான் எப்படியாவது கண்ணனை ஆயுதம் எடுக்க வைப்பேன்!” என்பதே பீஷ்மர் செய்த சபதம்.
மகாபாரதப் போர் தொடங்கியது. கையில் குதிரைகளை ஓட்டும் கோலுடன் பார்த்தசாரதியாக –

அர்ஜுனனின் தேரோட்டியாக – தேர்த்தட்டில் அமர்ந்திருக்கிறான் கண்ணபிரான்.

அர்ஜுனன் கௌரவ சேனையை எதிர்த்துப் போரிலே ஈடுபடுகிறான்.

கௌரவ சேனையை வழிநடத்தும் பீஷ்மர் ஆக்ரோஷமாகப் பாண்டவ சேனையைத் தாக்கினார்.

பீஷ்மர் மேல் உள்ள மரியாதையாலே அர்ஜுனனுக்கு அவர்மீது கொடிய பாணங்களை ஏவ மனம் வரவில்லை.

ஒன்பதாம் நாள் போரில் அர்ஜுனன் பீஷ்மரின் பாணங்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில்,

கண்ணன் கையில் பிடித்திருந்த கோலைக் கீழே போட்டு விட்டுச் சக்கராயுதத்தை ஏந்திக்கொண்டு பீஷ்மரை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

இதைக் கண்ட பீஷ்மர், தனது வில்லையும் அம்பையும் கீழே போட்டு விட்டு, “கண்ணா! உன் கையால் மரணிக்க நான்
தயாராக உள்ளேன்!” என்றார்.

ஆனால் கலங்கிப் போன அர்ஜுனன், கண்ணனின் திருவடிகளைப் பிடித்து மன்றாடி,

“என்னை மன்னிக்கவும்! நானே போர் புரிகிறேன்! வாருங்கள்!” என்று அழைத்து வந்து தேர்த்தட்டிலே அமர்த்திவிட்டான்.

ஏன் இவ்வாறு கண்ணன் சக்கராயுதம் ஏந்தி பீஷ்மரை நோக்கி நடக்க வேண்டும்?

இறைவன் தான் தோற்றாலும் தோற்பான், தனது பக்தனைத் தோற்க விடமாட்டான்.

ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று கண்ணன் சபதம் செய்திருந்தான்.

அவனை ஆயுதம் எடுக்க வைப்பேன் என்று பீஷ்மர் சபதம் செய்திருந்தார்.

தனது சபதத்தில் தான் தோற்றாலும் பரவாயில்லை, பக்தரான பீஷ்மர் அவரது சபதத்தில் தோற்கக்கூடாது என்பதற்காகத்தான்

இரண்டு முறை கையில் ஆயுதம் ஏந்தி பீஷ்மரை நோக்கி நடந்திருக்கிறான் கண்ணன்.

மேலும் பரமபக்தரான பீஷ்மருக்குத் தனது நடையழகைக் காட்டி அவரை மகிழ்விக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவும்

கண்ணன் பீஷ்மரை நோக்கி நடந்திருக்கிறான்.

இந்த ரகசியத்தை அம்புப் படுக்கையில் கிடந்த சமயத்தில் பீஷ்மர் அர்ஜுனனுக்கு எடுத்துச் சொன்னார்.

“நீ ராஜ்ஜியம், செல்வம் இவற்றால் எத்தகைய இன்பம் பெறுவாயோ, அதை விடப் பெரிய இன்பத்தை அருள வல்லவன் பகவான் கண்ணன்.

செல்வத்தால் பெறும் இன்பமும் உண்மையில் இறைவன் கொடுத்து வருவதே என்பதை உணர்ந்து கொள்!” என்று உபதேசித்தார் பீஷ்மர். அடியார்களுக்காகவும், அந்த அடியார்களை மகிழ்விப்பதற்காகவும் இறைவன் தன்னைத் தாழவிட்டுக் கொண்டு செய்யும் செயல்களை எண்ணி உருகினான் அர்ஜுனன்.

பின்னாளில், பாண்டவர்கள் தங்கள் வாரிசான பரீட்சித்துக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்து விட்டுத்

தீர்த்த யாத்திரை மேற்கொண்டார்கள்.

கேரளாவில் உள்ள பம்பை நதிக்கரையை அவர்கள் அடைந்தபோது, பாண்டவர்களுள் ஒவ்வொருவரும்

அப்பகுதியில் திருமாலுக்காக ஓரோர் கோவில் அமைத்தார்கள். அவற்றுள் அர்ஜுனன் நிர்மாணித்த
திருக்கோவில் தான் திருவாறன்விளை பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவில் ஆகும்.

ஆறு மூங்கில் கழிகளைக் கொண்டு கோவிலின் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கி, மேற்கொண்டு கோவிலைக் கட்டினான் அர்ஜுனன்..

பீஷ்மர் எனும் பக்தரை மகிழ்விக்கக் கையில்
சக்கரம் ஏந்திய திருக்கோலத்தோடு பார்த்தசாரதி
பெருமாள் அங்கே கோவில் கொண்டு அர்ஜுனனுக்குப் பெருமகிழ்ச்சி அளித்தார்.

“போரில் வென்று ராஜ்ஜியம் பெற்றபோது அடைந்த ஆனந்தத்தை விட

உன்னை இங்கே தரிசித்ததாலே பேரானந்தம் பெற்றேன்!” என்றான் அர்ஜுனன்.

நம்மாழ்வார் திருவாய்மொழியில் திருவாறன்விளை திருத்தலத்தைப் பாடுகையில்,
“இன்பம் பயக்க எழில்மலர் மாதரும் தானும் இவ்வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணிபொழில் சூழ் திருவாறன்விளை
அன்புற்று அமர்ந்து வலம்செய்து கைதொழும் நாள்களும் ஆகும்கொலோ”

திருக்குறளப்பன் என்றும் பார்த்தசாரதி என்றும் திருநாமம் கொண்டு, பத்மாசனித் தாயாரோடு ஆனந்தம் மேலிடும்படி

கோவில் கொண்டிருக்கும் திருமால், இந்த உலகனைத்துக்கும் ஆனந்தம் ஏற்படும்படி ஆட்சி செய்கின்ற தலைவர் ஆவார்.

அவர் கோவில் கொண்டிருக்கும் திருவாறன்விளை திருத்தலத்தைத் தொழும் நாள் எப்போது கைகூடுமோ என்று பாடுகிறார்.

இப்படி பீஷ்மர், அர்ஜுனன், நம்மாழ்வார் தொடக்கமாகத் தனது அடியார்கள் ஒவ்வொருவருக்கும் மிகப்

பெரிய ஆனந்தத்தை அருள்வதால், திருமால் ‘மஹாபோக:’ என்று அழைக்கப்படுகிறார்.

போகம் என்பது மகிழ்ச்சி, ஆனந்தத்தைக் குறிக்கும்.

செல்வச் செழிப்பால் ஒருவர் பெறும் ஆனந்தம் எதுவோ, அதுவும் கூட உண்மையில் இறைவனின் அருளால் தான் கிடைக்கிறது.

இப்படி அனைத்து வித ஆனந்தத்தையும் அருள்பவராகத் திகழ்வதால் திருமால் ‘மஹாபோக:’ என்று அழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 434வது திருநாமம்.
“மஹாபோகாய நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு வாழ்வில் ஆனந்தம் பெருகும்படித் திருமால் அருள்புரிவார்.

————

435. மஹாதனாய நமஹ: (Mahaadhanaaya namaha)
சண்டன்-மர்க்கன் என்னும் அசுர குருமார்களின் பாடசாலையில் பயின்று வந்த பிரகலாதன்,

அங்குள்ள அசுரப் பிள்ளைகளுக்கும் பக்தியைப் போதித்தான்.

“அன்பர்களே! அருமை நண்பர்களே! இந்தக் குருமார்கள் பணத்துக்காகத் தவறான பாடத்தை நமக்குச் சொல்லித் தருகிறார்கள்.

நான் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராது உண்மையைச் சொல்கிறேன்! கேளுங்கள்!

இந்த உலகில் சுகமாக இருப்பவை எல்லாம் காலப்போக்கில் துக்கமாக மாறும். துக்கமாக இருப்பவை சில நேரங்களில் சுகமாகவும் மாறும்.

ஆனால், நிலையான ஆனந்தத்தைத் தரவல்லவன் இறைவன் ஒருவனே!

நீங்கள் இந்த உடல்கள் அல்லர். உள்ளே உறையும் ஜீவாத்மாக்கள் நீங்கள்.

உலகியல் ஆசைகளை விடுங்கள் பரமனின் பாதங்களை நாடுங்கள்!

பகவானின் திருவுள்ளம் உகந்துவிட்டால், உலகில் வேறு என்ன தான் கிடைக்காது?” என்றெல்லாம் நல்வார்த்தைகள் சொன்னான் பிரகலாதன்.

பிரகலாதன் சொல்வது நியாயமாக அந்தப் பிள்ளைகள் மனதில் பட்டாலும், இரணியனுக்கு அஞ்சிய அவர்கள்,

பிரகலாதன் போதித்த விஷயங்களைக் குருமார்களிடம் கூறிவிட்டார்கள்.

இரணியன் காதுக்கு இச்செய்தி போனவாறே, விஷம் கொடுத்துப் பிரகலாதனைக் கொன்றுவிடச் சொன்னான் இரணியன்.

ஆனால், நாராயண நாமங்களைத் துணையாகக் கொண்ட பிரகலாதனை விஷம் எதுவும் செய்யவில்லை.

இதைக் கவனித்த குருமார்களான சண்டனும் மர்க்கனும் பிரகலாதனை அழைத்து,

“நீ ஏன் இப்படி உன் தந்தையின் கருத்துக்கு மாறாகச் செயல்படுகிறாய்? உன் தந்தைதான் சர்வேஸ்வரன்.

உலகைக் காப்பவர் அவரே! தேவர்களாலோ, தெய்வத்தாலோ அவருக்கு ஆகவேண்டியது ஏதுமில்லை.

நீ திருமாலைப் புகழ்ந்து பேசுவதை நிறுத்து. உன் தந்தையின் புகழ் பாடு.

உன் தந்தைக்குப் பின் நீ தானே தெய்வமாக எல்லோராலும் போற்றப்படப் போகிறாய்?

தந்தை தான் சிறந்த குரு. அவர் சொல்வதைக் கேள். உனது குருவான எங்கள் பேச்சையும் நீ மீறக்கூடாது!” என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள்.

ஆனால் பிரகலாதனோ, “குருமார்களே! தந்தையை வணங்க வேண்டும், குருவின் சொல்லைக் கேட்கவேண்டும் என்பவை சாமானிய தருமங்கள்.

அவற்றை அவசியம் அடியேனும் பின்பற்றுகிறேன். ஆனால், இறைவன் விசேஷ தருமம் ஆவான்.

அந்த விசேஷ தருமமான இறைவனுக்கு முரணாகச் சாமானிய தருமங்கள் இருக்குமாயின், விசேஷ தருமத்தையே கைக்கொள்ள வேண்டும் என்பது மரபு.

தந்தை என்ற முறையில் நான் அவரை இன்றளவும் வணங்குகிறேன்.

ஆனால், அதைக் கடந்து அவரையே முழுமுதல் கடவுள் என்று அவர் சொல்லிக்கொள்வதை அடியேனால் ஏற்கமுடியாது.

குரு என்ற முறையில் நீங்கள் சொல்வதை நான் கேட்டு நடப்பேன்.

ஆனால், மூலமான வேதத்துக்கு முரணாக நீங்கள் பேசலாமா என்று நீங்களும் சற்றே சிந்தித்துப் பாருங்கள்!” என்றான்.

இதைக் கேட்ட சண்டனும் மர்க்கனும், “திருமால் திருமால் என்று இவ்வளவு பேசுகிறாயே!

திருமாலை வணங்குவதால் என்ன பலன்?” என்று கேட்டார்கள்.

அதற்குப் பிரகலாதன்,
“தர்ம அர்த்த காம மோக்ஷாச்ச புருஷார்த்தா உதாஹ்ருதா:
சதுஷ்டயம் இதம் யஸ்மாத் தஸ்மாத் ச கிம் இதம் வ்ருதா
மரீசிமிச்ரை: தக்ஷேண ததைவ அன்யை: அனந்தத:
தர்ம: ப்ராப்த: ததா சான்யை: அர்த்த: காம: ததாபரை:”

“என்ன பலன் என்றா கேட்கிறீர்கள்? அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையுமே தன்னை அண்டிவரும்

அடியார்களுக்குப் பரிபூரணமாக வழங்க வல்லவர் திருமால்.

மரீசி போன்ற முனிவர்கள் திருமாலைப் பிரார்த்தித்துத் தருமத்தைப் பெற்றார்கள், அதாவது,

அறவழியிலான வாழ்க்கையை வாழும் பாக்கியத்தைப் பெற்றார்கள்.

குபேரன் போன்றோர் திருமாலைப் பிரார்த்தித்து மிக உயர்ந்த செல்வத்தைப் பெற்றார்கள்.

தேவர்கள், திருமாலின் அருளால் தேவலோக ராஜ்ஜியத்தையும் இன்பத்தையும் பெற்றார்கள்.

மிகச்சிறந்த ஞானியரும் யோகியரும் திருமாலைத் தியானித்து வீடுபேறாகிய முக்தியை பெறுகிறார்கள்.

திருமாலிடம் இல்லாத செல்வங்களே இல்லை. செல்வம் என்றால் நீங்கள் நினைக்கும் பணம், பொருள் என்று மட்டும் பொருள் இல்லை.

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய புருஷார்த்தங்கள் அனைத்தையுமே செல்வம் என்ற சொல் குறிக்கும்.

இந்த அனைத்துச் செல்வங்களையுமே நிறைவாகக்கொண்டவர் திருமால். அதை நாடி வரும் அடியார்களுக்கு

அவற்றை வாரி வழங்குபவர் அவர்!” என்று விளக்கினான்.

இப்படி வறுமையில் வாடும் அடியார்களுக்கு அருள்வதற்குரிய எல்லையில்லாத செல்வத்தைக் கொண்டிருப்பதால்,

திருமால் ‘மஹாதன’ என்று அழைக்கப்படுகிறார். ‘மஹாதன’ என்றால் அளவில்லாத செல்வம் கொண்டவர் என்று பொருள்.

அதுவே சஹஸ்ரநாமத்தின் 435-வது திருநாமம்.
“மஹா தனாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நற்செல்வத்தைத் திருமால் அருள்வார்.

—————

436. அநிர்விண்ணாய நமஹ:
(Anirvinnaaya namaha)
(திருநாமங்கள் 436 [அநிர்விண்ண:] முதல் 445 [ஸமீஹன:] வரை – திருமாலின் சிம்சுமார வடிவம்)

[விண்வெளியில் உடும்பு போன்ற வடிவில் ஒரு நட்சத்திரக் கூட்டம் உள்ளது. அதற்கு சிம்சுமாரச் சக்கரம் என்று பெயர். இந்த சிம்சுமாரச் சக்கர வடிவில் (galaxy) திருமாலே எழுந்தருளி உள்ளார். திருமாலின் நட்சத்திர மயமான இந்த வடிவின் வால் பகுதியில் தான் துருவ நட்சத்திரம் உள்ளது. இந்த சிம்சுமார வடிவைப் பற்றிய முழு விவரம் ஸ்ரீவிஷ்ணு புராணம் இரண்டாம் அம்சம் ஒன்பதாம் அத்தியாயத்தில் உள்ளது.]

“உடைமைக்கு ஒரு முழுக்கு என்றால் உடையவனுக்கு ஒன்பது முழுக்கு!” என்று கிராமப் புறங்களில் ஒரு பழமொழி உண்டு. இதன் பொருள் என்ன?
ஒரு வீட்டில் மருமகள் கிணற்றில் தண்ணீர் எடுக்கப் போனாள். அப்போது, வாளி கயிற்றில் இருந்து நழுவிக் கிணற்றில் விழுந்து விட்டது. அதைக் கண்ட மாமியார், “நீ வாளியை எடுக்காமல் வீட்டுக்குள் வரக்கூடாது!” என்று சொல்லி விட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய்க் கிணற்றடியில் அமர்ந்திருந்தாள் மருமகள்.

அவளது கணவர், அச்சமயம் அங்கே வந்தார். மனைவியின் சோகத்துக்கான காரணத்தை அறிந்துகொண்ட அவர், “நீ வருந்தாதே! நான் கிணற்றில் இறங்கி வாளியை எடுத்துத் தருகிறேன்!” என்றார். கிணற்றில் இறங்கிய கணவர் முதலில் ஒரு முழுக்கு போட்டுத் தேடினார். அப்போது வாளி கிடைக்கவில்லை, முன்பு கிணற்றில் விழுந்த பழைய சொம்புதான் கிடைத்தது.அடுத்து முழுக்கு போட்டார். அப்போதும் வாளி கிடைக்கவில்லை. முன்பு கிணற்றில் விழுந்திருந்த பழைய பெட்டி ஒன்று கிடைத்தது. அடுத்த முழுக்கு போட்டபோது கிணற்றில் விழுந்த பழைய பூட்டு ஒன்று கிடைத்தது. இப்படி ஒன்பது முழுக்குகள் போட்ட பின் தான், அவர் தேடிய வாளி கிடைத்தது. இந்தக் கதையைச் சற்றே கவனித்துப் பாருங்களேன். உடைமையாகிய வாளி ஒருமுறை தான் கிணற்றில் மூழ்கியது. ஆனால், அதை மீட்பதற்காக மூழ்கிய அதன் உடையவர், ஒன்பதுமுறை முழுக்குப் போட வேண்டி இருந்தது அல்லவா? இதன் அடிப் படையிலேயே உடைமைக்கு ஒரு முழுக்கு என்றால், உடையவனுக்கு ஒன்பது முழுக்கு என்ற பழமொழி ஏற்பட்டது.

இது அப்படியே இறைவனுக்கும் பொருந்தும். இறைவனின் உடைமைகள்தான் ஜீவாத்மாக்களாகிய நாம் அனைவரும். கிணறுதான் பிறவி என்னும் பெருங்கடல். உடையவன் இறைவன். இறைவனின் உடைமைகளாகிய நாம், பிறவி என்னும் கிணற்றுக்குள் விழுந்து கிடக்கிறோம். நம்மை மீட்பதற்காக இறைவன் இந்தப் பூமியிலே அவதாரங்களை  செய்கிறார்.
இதில், உடைமையான ஜீவாத்மா ஒருமுறை தான் பிறவிக் கிணற்றில் சிக்கிக்கொண்டது. ஆனால், உடையவனான இறைவனோ  ஜீவாத்மா என்னும் சொத்தை மீட்பதற்காக, இந்த உலகில் மீண்டும் மீண்டும் அவதரிக்கிறான்.

“மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த்தானாய்ப் பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க் கல்கியும்ஆனான்…”என்று திருமங்கை ஆழ்வார் பாடியதற்கேற்றபடி ஒவ்வோர் அவதாரமாக, மீண்டும் மீண்டும் இங்கே பிறந்துகொண்டே இருக்கிறார். அதில் இறைவன் களைப்படைவதே இல்லை. மேலும், இறைவன் உலகைப் படைப்பதும் கூட, நாம் எல்லோரும் இறைவனை அடைய வேண்டும், முக்தி அடைய வேண்டும் என்ற நோக்கில்தான். ஆனால், நாமோ இறைவனை நாடாது உலகியல் இன்பங்களையே நாடுகிறோம். இறைவன் அவதரித்து வந்து திருத்த முற்படும் போதும் கூட, நம்மில் பெரும்பாலானோர் அவன்பால் மனம் செலுத்துவதில்லை.

ஆனால், இதை எல்லாம் பொருட்படுத்தாமல், நம்மைக் காக்கும் முயற்சியில் தளர்ச்சி இன்றித் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே வருகிறான் இறைவன். இப்படி மனத்தளர்ச்சி இல்லாமல் உலகையும் உயிர்களையும் காத்து வருவதால், திருமால் ‘அநிர்விண்ண’ என்று அழைக்கப்படுகிறார். இதற்குச் சான்றாகத் தான், விண்வெளியில் சிம்சுமாரச் சக்கர வடிவில் திருமால் எழுந்தருளியிருந்து உலகையும் உயிர்களையும் அவர்களின் செயல்பாடுகளையும் கண்காணித்துக் காப்பாற்றிக் கொண்டு, அவர்கள் உயர்வதற்கான வழியைக் காட்டிக்கொண்டே வருகிறார்.

இப்படி சிம்சுமாரச் சக்கர வடிவில் இருந்து கொண்டு, தளர்ச்சி இல்லாமல் செயல்பட்டுக் கொண்டே இருப்பதால் ‘அநிர்விண்ண’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். ‘அநிர்விண்ண:’ என்றால் தளராமல் செயல்புரிபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 436-வது திருநாமம்.“அநிர்விண்ணாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் மனத்தளர்ச்சி ஏற்படாதபடித் திருமால் காத்தருள்வார்.

—————-

437. ஸ்தவிஷ்டாய நமஹ:
(Sthavishtaaya namaha)
துருவனின் வரலாற்றை அறியாதவர்கள் இருக்க முடியாது. உத்தானபாதன் என்ற மன்னனின் முதல் மனைவி சுநீதியின் மகனாகப் பிறந்தான் துருவன். ஐந்து வயது சிறுவனான அவன், தன் தந்தையின் மடியில் அமர வேண்டும் என்று ஆசையோடு சென்றான். ஆனால், உத்தானபாதனனின் இரண்டாவது மனைவியான சுருசி அவனைத் தடுத்து, “என் வயிற்றில் பிறந்த மகனுக்கு மட்டுமே இவரது மடியில் அமரும் உரிமை உண்டு. முதல் மனைவியின் மகனாகப் பிறந்த உனக்கு அந்த உரிமை இல்லை!” என்று கூறிவிட்டாள். தந்தையின் மடியில் அமரும் பாக்கியம் கிட்டவில்லையே என்று மிகவும் வருந்திய துருவன், திருமாலைக் குறித்துத் தவம்புரியக் காட்டுக்குச் சென்றான்.

(விஷ்ணு புராணத்தின் அடிப்படையில்) சப்த ரிஷிகள் என்ற ஏழு முனிவர்களின் உபதேசங்களைப் பெற்ற துருவன், அவர்கள் காட்டிய வழியில் மதுவனம் என்னும் இடத்தில் திருமாலைக் குறித்துக் கடுந்தவம் புரிந்தான்.வலக்காலை உயர்த்தி இடக்காலை ஊன்றி ஒற்றைக்காலில் அவன் தவம்புரிந்தபோது, பூமியே இடப்புறமாகச் சாய்ந்து விட்டது. பின் இடக்காலை உயர்த்தி வலக்காலை ஊன்றி அவன் தவம் புரிந்த போது, பூமியே வலப்புறமாகச் சாய்ந்தது. அவனது தவத்தைக் கலைக்க முற்பட்ட தேவர்கள், தங்கள் முயற்சியில் தோல்வியைத் தழுவினார்கள்.
அவனது தவத்துக்கு உகந்த திருமால் அவனுக்குக் காட்சி அளித்து, “உத்தானபாதன் பெற்றெடுத்த உத்தமனே! உனக்கு மங்கலம் உண்டாகுக! பேரருளாளன் என்று பெயர் பெற்ற நான் உனக்கு வரங்களை அருள வந்திருக்கிறேன்!” என்று சொன்னார். திருமாலின் குரலைக் கேட்ட துருவன் கண் திறந்து திருமாலைத் தரிசித்தான்.

முதலில், திருமாலின் கிரீடத்தைத் தரிசித்தான். அந்தக் கிரீடம், திருமால் மிகவும் உயர்ந்தவர் என்பதற்கு அடையாளமாக அவரது தலையில் திகழ்வதை உணர்ந்துகொண்டான். அந்தப் புரிதலோடு துருவன், “இறைவா! தந்தையின் மடி என்ற பதவி எனக்கு மறுக்கப்பட்ட நிலையில், மிகப்பெரிய பதவி ஒன்றை அடையவேண்டும் எனக்கருதித் தவம்புரியத் தொடங்கினேன். உன்னைத் தரிசித்தவாறே உன்னை விட உயர்ந்தது உலகினில் வேறேதும் இல்லை என உணர்ந்தேன்! உன்னைத் துதிப்பதற்குத் தேவையான ஞானத்தை நீ கொடு! இதுவே நான் கேட்கும்  வரம்!” என்றான். திருமால் தனது சங்கின் நுனியால் துருவனின் கன்னத்தை வருடினார்.

அடுத்த நொடியே திவ்ய ஞானம் பெற்ற துருவன், திருமாலைத் துதிக்கத் தொடங்கினான். “உலகையும் உயிர்களையும் உடலாகக் கொண்டு அவர்களுக்கு உள்ளே உயிராக உறைபவனே நீயே மிகவும் உயர்ந்தவன்’’!

“ப்ருஹத்வாத் ப்ரஹ்மணத்வாத் ச யத்ரூபம் ப்ரஹ்மஸம்ஜ்ஞிதம்
தஸ்மை நமஸ்தே ஸர்வாத்மன் யோகிசிந்த்ய அவிகாரிணே”

உனது சொரூபத்தாலும் சரி, குணங்களாலும் சரி, நீ மிக உயர்ந்தவனாக விளங்குகிறாய். `ப்ரஹ்ம’ என்றால் மிகப்பெரிய என்று பொருள். மிகப்பெரியவனாக இருப்பதால் நீ ப்ரஹ்மம் எனப்படுகிறாய். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என எல்லாக் காலங்களிலும் இருக்கும் அனைத்தையும் இயக்குபவன் நீயே!” என்று துதி செய்தான் துருவன்.
அவனது துதியைக் கேட்டு உகந்த திருமால், “இப்போது உலகில் எது உயர்ந்தது, எது தாழ்ந்தது என்ற தெளிவு உனக்கு ஏற்பட்டு விட்டது. நீ உன் அரண்மனைக்குத் திரும்பிப் போய் ஆட்சி புரிந்துவிட்டு, நான் அளிக்கும் மிக உயர்ந்த பதவியான துருவப் பதவியை அலங்கரிப்பாயாக. விண்வெளியில் சிம்சுமாரச் சக்கரம் என்ற நட்சத்திரக் கூட்ட வடிவில் நான் உள்ளேன். அந்த சிம்சுமாரச் சக்கரத்தின் வால் பகுதியில் உள்ள துருவ நட்சத்திரமாக மிக உயர்ந்த ஸ்தானத்தில் நீ திகழ்வாயாக!” என்று அருள்புரிந்தார்.

துருவனுக்குத் திருமால் உணர்த்தியபடி, உலகில் பெரியவை என நாம் நினைக்கும் அனைத்துப் பொருட்களை விடவும் பெரியவர் திருமால். தான் பெரியவன் என்பதற்கு ஒரு சான்றாகவே சிம்சுமாரச் சக்கரம் என்னும் மிகப்பெரிய வடிவோடு திருமால் விண்வெளியில் திகழ்கிறார்.

இப்படிப் பேருருவம் கொண்டிருப்பதால், ‘ஸ்தவிஷ்ட’ என்று திருமால் அழைக்கப்படுகிறார்.
‘ஸ்தவிஷ்ட’ என்றால் பேருருவம் கொண்டவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 437-வது திருநாமம்.“ஸ்தவிஷ்டாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குப் பெரிய பதவிகள் கிட்டும்படி திருமால் அருள்புரிவார்.

————–

438. புவே நமஹ: (Bhuvey namaha)
பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது, சௌகந்திகா என்னும் அதிசய மலரைப் பற்றிக் கேள்விப் பட்டாள் திரௌபதி. அந்த மலரைப் பற்றிய செய்திகளைப் பீமனிடம் கூறித் தனக்காக அம்மலரைப் பறித்து வருமாறு கேட்டுக் கொண்டாள் திரௌபதி. “திரௌபதி! கவலைப் படாதே! எனது வலிமையைப் பற்றி நன்றாக அறிவாய் அல்லவா? எனது வலிமையால் அந்த மலரை உன்னிடம் கொண்டு வந்து சேர்க்கிறேன்!” என்று முழங்கி விட்டு, சௌகந்திகா மலரைத் தேடிச் சென்றான் பீமன். காட்டுப்பாதையில் பீமன் நடந்து சென்றபோது வழியில் ஒரு வயதான குரங்கு படுத்திருந்தது.

“ஏ குரங்கே! வழி விடு!” என்று கருவத்துடன் சொன்னான் பீமன். அந்தக் குரங்கோ, “நான் மிகவும் களைப்போடு இருக்கிறேன்! நீ வேண்டுமானால் என்னைத் தாண்டிச் செல்!” என்று தழுதழுத்த குரலில் கூறியது.“ஏ குரங்கே! நீ வயதான குரங்கு போல் தெரிகிறாய். உன்னைத் தாண்டிச் செல்வது அவமரியாதை. எனக்கு நீ வழி விடுவதே முறை. வழி விடு!” என்றான் பீமன்.
“சரி, நீயே என் வாலைத் தள்ளி வைத்து விட்டுச் செல்!” என்று சொன்னது குரங்கு. குரங்கின் வாலை இரு கைகளாலும் பிடித்து நகர்த்தப் பார்த்தான் பீமன். ஆயிரம் யானை பலம் கொண்ட பீமனால் குரங்கின் வாலை அசைக்கக் கூட முடியவில்லை. அப்போது கருவம் குறையப்பெற்ற பீமன், பணிவோடு, “நீங்கள் யார்?” என்று குரங்கிடம் கேட்டான்.
“நீ யார்?” என்று அக்குரங்கு கேட்டது.

“நான் பீமன். வாயு தேவனின் அருளால் குந்தி தேவிக்குப் பிறந்த மகன்!” என்று சொன்னான் பீமன். “நான் உனது அண்ணன்!” என்றது குரங்கு. என்ன என்று பீமன் கேட்க, “ஆம்! வாயு தேவனின் அருளால் அஞ்ஜனா தேவிக்குப் பிறந்த ஆஞ்ஜநேயன் நான். நீ எனக்குத் தம்பி ஆவாய்!” என்று சொல்லித் தனது சுயரூபத்தைக் காட்டினார் அனுமான்.

பீமனது செருக்கு மொத்தமாக அடங்கி விட்டது. அனுமான் பீமனிடம், “நீ மலர் பறிக்கச் சென்ற பாதை தேவர்கள் பயணிக்கும் பாதை. அதில், பல ஆபத்துகள் உள்ளன. நான் கூறும் வழியில் செல்!” என்று சொல்லி அவரே பீமனைச் சௌகந்திகா மலர் இருக்கும் குளத்துக்கு அழைத்துச் சென்று மலர்களைப் பறித்துக் கொடுத்தார். மேலும், “பீமா! நீ போர்க்களத்தில் சிங்கம் போல் முழங்கும்போது, என் குரலும் உன் குரலோடு சேர்ந்து கொள்ளும். நமது ஒலி பாண்டவ சேனைக்குப் பலத்தையும் கௌரவ சேனைக்குப் பயத்தையும் கொடுக்கும். அர்ஜுனனின் தேர்க்கொடியிலும் நான் இருந்து உங்களுக்கு ஜெயத்தைத் தருவேன்!” என்று சொல்லிச் சௌகந்திகா மலர்களைப் பீமனுக்கு வழங்கினார் அனுமான்.

தான் பலசாலி என்றும், தன் பலத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று கருதிய பீமனிடம், “நீ பலசாலி என்று நினைப்பது எவ்வளவு தவறோ, அதே அளவு நான் பலசாலி என்று நினைப்பதும் தவறு. நம் இருவருக்கும் உள்ளே இருந்து கொண்டு நம்மைத் தாங்கிச் சக்தி அளிப்பவர் திருமால். இதை நீ மனதில் வைத்துக் கொள்!” என்று அறிவுரை சொல்லி அனுப்பினார் அனுமான்.

இவ்வரலாற்றை பாலகவி சுந்தரராஜன் சுவாமி ஹநூமத் பஞ்சாசத்தில்,
“புஷ்பம் ஸௌகந்திகாக்யம் ஹிமகிரிவிபினே க்ருஷ்ணயா ப்ரார்த்திதம் யத்
ப்ராத்ரே பீமாய தஸ்மை ததவசயக்ருதே: காம்யயா ப்ராம்யதே ப்ராக் |
ஸந்தர்ச்யானுக்ரஹம் யோ வ்யதரதபஹரன் ஸ்கந்தயோரஸ்ய கந்தம்
கந்தம் ஸம்ஸாரபந்தப்ரதமபஹரதாத் கந்தவாஹாத்மஜோ ந: ||”
என்று வர்ணித்துள்ளார்.

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருநறையூர் என்ற திவ்ய தேசத்தில் சௌகந்திகா அனுமார், தனிக்கோயில் கொண்டு காட்சி தருகிறார். கையில் சௌகந்திகா மலரை ஏந்திய வடிவில் காட்சி தரும் அந்த அனுமனைத் தரிசிக்கும் போதெல்லாம், “நாம் பெரியவர் அல்லர்! உள்ளிருந்து நம்மைத் தாங்கும் இறைவனே பெரியவன்!” என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது.

அனைவரையும் தாங்குபவன் என்பதற்குச் சான்றாகத் திருமால் சிம்சுமாரச் சக்கர வடிவில் விண்வெளியில் காட்சி தருகிறார். எந்த துருவ ஸ்தானம் நட்சத்திரங்கள், கிரகங்கள் உள்ளிட்டவற்றைத் தாங்குகிறதோ, அந்த துருவ ஸ்தானத்தைத் தனது வால்பகுதியில் கொண்ட சிம்சுமாரச் சக்கர வடிவில் திருமால் விளங்கி, அனைவரையும், அனைத்தையும் தாங்குபவர் என்பதை உணர்த்துகிறார். ‘பூ’ (Bhoohu) என்றால் தாங்குபவர். அனைத்தையும், அனைவரையும் தாங்குவதால் திருமால் ‘பூ’ எனப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 438-வது திருநாமம்.
“புவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் தாங்கிக் காத்தருள்கிறார்.

————–

439. தர்ம யூபாய நமஹ: (Dharma Yoopaaya namaha)

ஆயர்பாடியில் கண்ணன் எழுந்தருளியிருந்த சமயத்தில், சரத் காலம், இலையுதிர் காலம் வந்தது. அப்போது ஒருநாள், மாலை சந்திரோதயம் ஆனவாறே, கண்ணன் ஒரு மரத்தடியில் நின்றபடிப் புல்லாங்குழல் ஊதத் தொடங்கினான். அந்தக் குழலோசையைக் கேட்ட கோபியர்கள் அத்தனை பேரும், தங்களது பணிகளை எல்லாம் மறந்துவிட்டுக் கண்ணனை நாடிச் சென்றார்கள்.
இக்காட்சியை, ஸ்ரீமத் பாகவத புராணத்தில் சுக முனிவர் அழகாக வர்ணிக்கிறார்.

சில கோபிகைகள் வீட்டில் பால் கறந்துகொண்டிருந்தார்கள். சிலர் அடுப்பில் பால் காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். (திருமணம் ஆன) சில கோபிகைகள் தங்கள் கணவன்மார்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்கள். சிலர் குழந்தைகளுக்குப் பால் ஊட்டிக்கொண்டிருந்தார்கள். சிலர் நீராடிக் கொண்டிருந்தார்கள். சிலர் கண்களுக்கு மையிட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் மாமியார் மானாருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தார்கள்.

கண்ணனின் குழலோசையைக் கேட்டவாறே அத்தனை பேரும் கண்ணன் இருக்கும் இடத்தை நோக்கி ஓடி வந்துவிட்டார்கள். சிலரின் வீட்டில் உள்ள பெரியவர்கள் தடுத்தும் கூட அவர்கள் கேட்கவில்லை. அவர்களைக் கண்ட கண்ணன், “வருக! வருக! என வரவேற்று மாலைப் பொழுதில் வீட்டை விட்டுவிட்டு என்னைத் தேடி வந்து விட்டீர்களே! வீட்டில் உள்ளவர்கள் உங்களைத் தேட மாட்டார்களா? திரும்பச் செல்லுங்கள்! சென்று உங்கள் குடும்பத்தைக் கவனியுங்கள்! உங்கள் கடமையைச் செய்யுங்கள்! குடும்பத்தைப் பேணுவதுதானே உங்களுக்கு மிகச்சிறந்த தருமம்? அதை விட்டு விட்டு எதற்காக என்னைத் தேடி வந்தீர்கள்?” என்று கேட்டான்.

அதைக் கேட்டுக் கண்ணீர் விட்ட கோபிகைகள், “கண்ணா! நீ வீட்டுக்குத் திரும்பச் சென்று எங்கள் குடும்பத்தைப் பேணுவதே எங்களுக்குத் தருமம் என்று உபதேசம் செய்கிறாய். ஆனால் உண்மையில் எங்கள் குடும்பத்தில் உள்ள கணவர், மற்ற உறவினர்கள் என அனைவருக்குள்ளும் அந்தராத்மாவாக உறைந்திருப்பவன் நீ தானே? அவர்களுக்கு நாங்கள் பணிவிடை செய்தலாகிய தர்மத்தைப் பின்பற்றினாலும் அதற்கு உகந்து அருள்புரிபவன் நீ தானே? காதைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல், அவர்களுக்குப் பணிவிடை செய்து அவர்களுக்குள் இருக்கும் உன்னை மகிழ்விப்பதற்குப் பதிலாக நேரடியாகவே உனக்கு நாங்கள் பணிவிடை செய்து விடுகிறோம்! உன் திருவடிகளால் எங்களைத் தீண்டி உன் திருக்கரங்களை எங்கள் மேல் வைத்து எங்களது சாபத்தைத் தணித்து அருள்புரிய வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்கள்.

கோபிகைகளின் மிக உயர்ந்த பக்தி நிலையையும் அவர்கள் தன்மீது கொண்ட உலகியலுக்கு அப்பாற்பட்ட தெய்வீகக் காதலையும் புரிந்து கொண்ட கண்ணன், குரவைக் கூத்து என்ற நாட்டியத்தை அவர்களோடு ஆடி அவர்களுக்கு அருள்புரிந்தான். (ஆழ்ந்த வேதாந்தக் கருத்துகளை உணர்த்தும் இக்குரவைக் கூத்தை நாம் உலகியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறாகும்.) இரவு முழுவதும் கண்ணனோடு குரவைக் கூத்தாடிய கோபிகைகள், காலையில் வீடு திரும்பினார்கள். அவர்களை வீட்டில் யாராவது சேர்ப்பார்களா? இரவு எங்கே சென்றாய் உள்ளிட்ட கேள்விக் கணைகளைக் குடும்ப உறுப்பினர்கள் தொடுத்திருப்பார்களே! எதுவுமே இல்லை. அவர்கள் வீடு திரும்பியவாறே, எப்போதும் போல், தங்களது இயல்பான
நடவடிக்கைகளைத் தொடர்ந்தார்களாம்.

அதெப்படி சாத்தியம்?

கண்ணனை நாடிக் கோபிகைகள் சென்றவாறே, அத்தனை பேரின் வடிவங்களையும் கண்ணனே எடுத்துக்கொண்டு அவரவர் வீடுகளுக்குச் சென்று அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளைக் கண்ணனே செய்து முடித்து விட்டான். அதனால் கோபிகைகள் வீட்டில் இல்லை என்ற உணர்வு எந்த வீட்டில் உள்ள யாருக்குமே
ஏற்படவில்லை.

உலகியல் கண்ணோட்டத்தில் பார்ப்போருக்குத் தருமத்தை மீறிக் கோபிகைகள், கண்ணனை நாடிச் சென்று விட்டார்கள் எனத் தோன்றலாம். ஆனால், உண்மை என்னவென்றால் தருமத்துக்கெல்லாம் அதிபதியான, ‘க்ருஷ்ணம் தர்மம் ஸநாதனம்’ என்று போற்றப்படும் விசேஷ
தர்மமான கண்ணனையே நாடிச் சென்றுள்ளார்கள் அப்பெண்கள். விசேஷ தர்மமாகிய கண்ணனைப் பற்றி விட்டதால், அவர்கள் செய்ய வேண்டிய சாமானிய தர்மங்களை தானே
நடந்தேறி விட்டன.

ஆக, திருமால் தருமமே வடிவெடுத்தவராகத் திகழ்கிறார். அவரை மகிழ்விப்பதே அனைத்து வித தருமங்களின் நோக்காக உள்ளது. இதற்குச் சான்றாக சிம்சுமாரச் சக்கர வடிவில் இருக்கும் திருமால் தருமத்தையே தனது தலையாகக் கொண்டிருக்கிறார். அதனால் ‘தர்மயூப’ என்று அழைக்கப்படுகிறார். ‘தர்மயூப’ என்றால் தர்மத்தோடு கூடியிருப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 439-வது திருநாமம்.“தர்மயூபாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் என்றும் அறவழியில் இருந்து வழுவாதிருக்கத் திருமால் அருள்புரிவார்.

—————

440. மஹாமகாய நமஹ: (Mahaa Makhaaya namaha)
(திருநாமங்கள் 436 [அநிர்விண்ண:] முதல் 445 [ஸமீஹன:] வரை – திருமாலின் சிம்சுமார வடிவம்)[விண்வெளியில் உடும்பு போன்ற வடிவில் ஒரு நட்சத்திரக் கூட்டம் உள்ளது. அதற்கு சிம்சுமாரச் சக்கரம் என்று பெயர். இந்த சிம்சுமாரச் சக்கர வடிவில் (galaxy) திருமாலே எழுந்தருளி உள்ளார். திருமாலின் நட்சத்திர மயமான இந்த வடிவின் வால் பகுதியில்தான் துருவ நட்சத்திரம் உள்ளது. இந்த சிம்சுமார வடிவைப் பற்றிய முழு விவரம் ஸ்ரீவிஷ்ணு புராணம் இரண்டாம் அம்சம் ஒன்பதாம் அத்தியாயத்தில் உள்ளது.]

நர்மதா நதிக்கரையில் வேள்விசெய்து வந்த மகாபலியின் வேள்விச்சாலைக்குக் குள்ள வாமன வடிவில் எழுந்தருளிய திருமால், அவனிடம் மூவடி நிலத்தை யாசகமாகக் கேட்டார். மகாபலியும் அதைத் தாரைவார்த்துக் கொடுத்த அளவிலே, கிடுகிடு என ஓங்கி உலகங்களை எல்லாம் அளந்துவிட்டார் திருமால். ஓரடியால் மண்ணுலகையும் மற்றோர் அடியால் விண்ணுலகையும் அளந்த திருமால், மூன்றாம் அடி மண்ணைத் தராமைக்குத் தண்டனையாக மகாபலியைப் பூமிக்கு அடியில் உள்ள சுதலலோகத்துக்கு அனுப்பிவைத்தார். அப்போது மகாபலி தனது தவறை உணர்ந்து கர்வம் எல்லாம் நீங்கியவனாகத் திருமாலின் ஆணைக்கு அடிபணிந்தான்.

ஓங்கி உலகளந்த உத்தமனை அடிபணிந்த மகாபலி, “இறைவா! நான் இங்கே ஒரு வேள்வி தொடங்கி நடத்திவந்தேன். ஆனால் இப்போது நீங்கள் இடையில் வந்து என்னைச் சுதல லோகத்துக்கு அனுப்பி வைக்க உள்ளீர்கள். ஒரு யாகத்தைத் தொடங்கி விட்டு அதைப் பாதியில் நிறுத்துவது பெரும் குற்றமாகுமே! பாதியில் நின்றுபோன இந்த யாகத்தை நிறைவு செய்யத் தாங்களே வழிகாட்டி அருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தான்.

அப்போது திருமால், “மகாபலி! நீ வருந்த வேண்டாம். உன்னைப் பிடித்திருந்த ஆணவத்தை அகற்றவே இந்த லீலையை நான் புரிந்தேன். உனது யாகத்தை எனது அடியார்கள் நிறைவு செய்துவைப்பார்கள்!” என்று விடையளித்தார். “எப்படி?” என்று கேட்டான் மகாபலி. அதற்குத் திருமால், “வருடந்தோறும் கார்த்திகைத் தீபத் திருநாளன்று எனது திருக்கோயில்களில் சொக்கப்பனை என்பது எனது அடியார்களால் கொளுத்தப்படும். அந்தச் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வின் வாயிலாக நீ தொடங்கிய இந்த வேள்வியை எனது அடியார்கள் நிறைவு செய்து வைப்பார்கள்!” என்று கூறினார்.

இவ்வரலாறு ஸ்ரீபாஞ்சராத்ர ஆகமத்தின் ஒரு பகுதியான ஸ்ரீபிரச்ன சம்ஹிதையில் உள்ளது. இதன் அடிப்படையில்தான் விஷ்ணு ஆலயங்களில் கார்த்திகைதீபத் திருநாளன்று சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெறுவதாக ஆகமம் கூறுகிறது. பாஞ்சராத்திர ஆகமத்தைச் சீடர்களுக்கு உபதேசம் செய்தவர்களுள் ஒருவரான சௌனக முனிவரிடம் சில சீடர்கள், “அதெப்படித் திருமாலின் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தினால் மகாபலியின் யாகம் நிறைவு பெற்றுவிடுமா?” என்று கேட்டார்கள்.

அதற்குச் சௌனக முனிவர், “நிச்சயமாக நிறைவு பெறும். ஏனெனில் வேள்விகள் அனைத்தாலும் ஆராதிக்கப்படுபவர் திருமால். வேள்வியின் வடிவமாகவே திருமால் இருக்கிறார். உலகிலுள்ள அனைத்து வேள்விகளைக் காட்டிலும் மிகச்சிறந்த வேள்வி திருமாலுக்குச் செய்யக்கூடிய திருவாராதனமே ஆகும். எனவே அத்தகைய திருமாலைக் குறித்து அவரது திருக்கோவிலில் சொக்கப்பனை கொளுத்தினால், அதுவே மகாபலி தொடங்கி வைத்த வேள்வியை நிறைவு செய்தமைக்கு நிகராகும் என்பதிலே எள்ளளவும் ஐயமில்லை!” என்றார்.

இப்படி வேள்விகளைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டவராகவும், அனைத்து வேள்விகளுக்கும் தலைவராகவும் தான் இருப்பதற்கு அடையாளமாகவே சிம்சுமாரச் சக்கர வடிவில் விண்வெளியில் திருமால் காட்சி அளிக்கிறார். அந்தச் சிம்சுமாரச் சக்கரத்தின் உடல்பகுதியாக யாகங்களே இருக்கின்றன. ‘மக’ (makha) என்றால் யாகம் என்று பொருள். யாகங்களைத் தனக்கு உடலாகக்கொண்டிருப்பதால் சிம்சுமார மூர்த்தியான திருமால் ‘மஹாமக:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 440-வது திருநாமம்.“மஹாமகாய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அடியார்களுக்கு மிகச்சிறந்த வேள்விகளின் பலன்களைத் திருமால் அருள்வார்.

—————-

441. நக்ஷத்ர நேமயே நமஹ: (Nakshathra Nemaye namaha)
சுவாமி வேதாந்த தேசிகன் என்னும் மகான் காஞ்சிபுரத்தில் வாழ்ந்துவந்த சமயம். காஞ்சிக்கு அருகில் உள்ளே திருப்புட்குழி என்னும் பகுதியில் வாழ்ந்த மக்கள் திடீரெனக் கொடிய விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்கள். பெருந்தொற்றாகப் பரவிவந்த அந்த விஷக் காய்ச்சல் பல உயிர்களைப் பலி வாங்கியது. ஊர்மக்கள் எல்லோரும் ஒன்றுகூடிக் காஞ்சிபுரத்தில் எழுந்தருயிருந்த வேதாந்த தேசிகனின் திருவடிகளை அடிபணிந்து, “நீங்கள் மிக உயர்ந்த ஞானி என்று உங்களை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். நீங்கள்தான் ஏதாவது செய்து இந்த விஷக்காய்ச்சலில் இருந்து எங்கள் ஊரையும் ஊர் மக்களையும் காப்பாற்ற வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்கள்.

அவர்களின் துன்பத்தைச் செவியுற்ற வேதாந்த தேசிகனின் மனம் உருகியது. “உங்கள் ஊருக்கு நல்ல காலம் ஏற்பட ஒரு வழி உள்ளது. காலத்தை நிர்ணயிக்கும் நட்சத்திர மண்டலத்தைச் சுழற்றுபவர் திருமால். சிம்சுமாரச்சக்கர வடிவில் இருந்துகொண்டு நட்சத்திர மண்டலத்தின் சுழற்சியைத் திருமால் நடத்துகிறார். அதை நமக்கு உணர்த்தவே திருமால் திருக்கரத்தில் சுதர்சனச் சக்கரத்தை ஏந்தியுள்ளார். ‘காலச் சக்கரத்தோடு வெண்சங்கம் கை ஏந்தினாய்’ என்ற பாசுரத்தில் நம்மாழ்வார் திருமாலின் கையில் உள்ள சக்கரத்தைக் காலச் சக்கரம் என்றே அழைத்திருக்கிறார் பாருங்கள். எனவே அந்தச் சக்கரத்தாழ்வாரைத் துதி செய்வோம். அவரது திருவருளாலே உங்கள் ஊருக்கு நிச்சயமாக நல்ல காலம் ஏற்படும்!” என்று அவர்களைத் தேற்றினார் தேசிகன்.

திருப்புட்குழிக்கு வந்தார் தேசிகன். “எனது குருவின் குருவான நடாதூர் அம்மாள் முப்பத்திரண்டு முறை ஜய என்ற சொல் வரும் விதமாக ஹேதிபுங்கவ ஸ்தவம் என்று துதியை இயற்றி, சக்கரத்தாழ்வாரைத் துதி செய்துள்ளார். அவர் காட்டிய வழியில் முப்பத்திரண்டு முறை ஜய என்ற சொல் வரும்படி ஒரு துதியைச் சக்கரத்தாழ்வாரைக் குறித்து இயற்றுகிறேன் என்று சொல்லி,

“ப்ரதிபட ச்ரேணி பீஷண வரகுண ஸ்தோம பூஷண
ஜனிபய ஸ்தான தாரண ஜகத் அவஸ்தான காரண
நிகில துஷ்கர்ம கர்சன நிகம ஸத்தர்ம தர்சன
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன ஜய ஜய ஸ்ரீஸுதர்சன”

என்று தொடங்கி சுதர்சனாஷ்டகம் என்ற எட்டு ஸ்லோகங்களை இயற்றினார். ‘ஜகத் அவஸ்தான காரண’ – இந்தப் பிரபஞ்சம் நிலைபெற்று இருப்பதற்குக் காரணமானவர் என்று சக்கரத்தாழ்வாரை தேசிகன் இங்கே குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். நட்சத்திர மண்டலத்தையும் பிரபஞ்சத்தையும் திருமால் சுழற்றுவதற்கு அடையாளமாகவே அவரது கையில் சுழலும் சக்கரமாகச் சக்கரத்தாழ்வார் திகழ்வதால், உலகம் நிலைபெறக் காரணமானவர் என்று தேசிகன் அவரைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த எட்டு ஸ்லோகங்களுடன், சக்கரத்தாழ்வார் தனது திருக்கரங்களில் ஏந்தியிருக்கும் பதினாறு ஆயுதங்களைக் குறித்து ஷோடசாயுத ஸ்தோத்ரம் என்ற ஒரு துதியையும் இயற்றி அருளினார் தேசிகன். இந்த இரண்டு துதிகளையும் சொல்லிச் சக்கரத்தாழ்வாரைத் துதிக்குமாறு ஊர் மக்களிடம் சொன்னார் தேசிகன். ஊராரும் அவ்வாறு சக்கரத்தாழ்வாரைத் துதி செய்யவே, விஷக்காய்ச்சல் நீங்கி மக்கள் எல்லோரும் நலம்பெற்றார்கள்.

இதன்மூலம் காலத்தை நிர்வகிக்கும் காலச்சக்கரமாகச் சுதர்சனாழ்வார் இருப்பதை நம்மால் உணர முடிகிறதல்லவா? காலத்தை நிர்ணயிக்கும் நட்சத்திர மண்டலத்தின் சுழற்சியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையே, சுதர்சனச் சக்கரத்தைக் கையில் ஏந்தியிருப்பதன் மூலம் நமக்கு உணர்த்துகிறார் திருமால்.‘நேமி:’ என்றால் சுழற்றுபவர் என்று பொருள். ‘நக்ஷத்ர நேமி:’ என்றால் நட்சத்திர மண்டலத்தைச் சுழற்றுபவர் என்று பொருள். சிம்சுமாரச் சக்கர வடிவில் இருந்து நட்சத்திர மண்டலத்தின் சுழற்சியை நிர்வகிப்பதால் திருமால் ‘நக்ஷத்ரநேமி:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 441-வது திருநாமம்.

“நக்ஷத்ர நேமயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில்
எந்நாளும் பொன் நாளாய் இருக்கும்படி
திருமால் அருள்புரிவார்.

—————-

442. நக்ஷத்ரிணே நமஹ: (Nakshathriney namaha)

சிம்சுமாரச் சக்கர வடிவில் எழுந்தருளியிருக்கும் திருமாலிடம் பூரம், பூராடம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கு அதிபதியான தேவதைகள் வந்தார்கள். “முப்பூரம் என்றால் ஆகாது என்று சொல்லி எங்கள் மூன்று நட்சத்திரங்களையும் மக்கள் அமங்கலமாகக் கருதி வருகிறார்கள். நீங்கள்தான் எங்கள் மூவருக்கும் மங்கலத்தை அருள வேண்டும்!” என்று அவர்கள் பிரார்த்தித்தார்கள். அதைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்துக்கு அதிபதியான அங்காரகன் திருமாலிடம் வந்து, “எனது கிழமையான செவ்வாய்க்கிழமையை மங்கல வாரம் என்று அழைக்கும் வழக்கம் இருந்தாலும், அது அமங்கலமான கிழமையாகவே கருதப்படுகிறது. அந்தக் கிழமைக்கு மங்கலத்தை நீங்கள் தான் அருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்.
தட்சிணாயன புண்ணிய காலத்துக்குரிய தேவதை திருமாலிடம் வந்து, “எனது ஆறு மாத தட்சிணாயன காலம் தொடங்கும் மாதமாகிய ஆடி மாதத்தையும் மார்கழி மாதத்தையும் அமங்கலமான மாதங்கள் என்று மனிதர்கள் கருதுகிறார்கள். அவைகளுக்கு நீங்களே மங்கலத் தன்மையை அருள வேண்டும்!” என்று
பிரார்த்தித்தார்.

தென்திசையின் தலைவனான யமன் திருமாலிடம் வந்து, “மற்ற எல்லாத் திசைகளை விடவும் எனது திசையான தென்திசையைத் தான் அமங்கலமானது என்று எல்லோரும் சொல்கிறார்கள். எனக்குக் கொஞ்சம் மங்கலத் தன்மையை நீங்களே அருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்.அவர்களிடம் திருமால், “உங்கள் அனைவருக்கும் சேர்த்து எனது தேவியான பூமிப் பிராட்டி அருள்புரிவாள்!” என்று விடையளித்து அவர்களை அனுப்பி வைத்தார். பூமிதேவியிடம் இந்த விஷயத்தைத் திருமால் சொன்ன போது, மகிழ்ச்சியுடன், “அவர்கள் அத்தனை பேருக்கும் மங்கலத்தை அருள வேண்டியது என் பொறுப்பு!” என்று பதிலளித்தாள்.

காலங்கள் கடந்தன. கலியுகம் பூமியில் ஏற்பட்டபோது, மக்கள் இறைவனையும் அறநூல்களையும் பக்திநெறியையும் மறந்து மனம் போன போக்கில் வாழத் தொடங்கினார்கள். அவர்களைத் திருத்தி, இறைவனின் திருநாமங்களைப் பாடி, அவனுக்கு மாலைகளைச் சமர்ப்பித்து, அவனிடம் சரணடைந்து முக்தி அடையும் வழியை உபதேசிக்கப் பூமிதேவி அவதாரம் செய்தாள்.
முப்பூரம் எனப்படும்மூன்றுநட்சத்திரங்களுள் முதல் நட்சத்திரமான பூரநட்சத்திரத்தில் அவதாரம் செய்து பூரம், பூராடம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கும் மங்கலத்தைக் கொடுத்தாள்.

செவ்வாய்க்கிழமையில் அவதாரம் செய்து அதற்கும் மங்கலத்தைக் கொடுத்தாள்.ஆடி மாதத்தில் அவதாரம் செய்து, மார்கழி மாதத்தில் பாவை நோன்பு நோற்று அவ்விரண்டு மாதங்களுக்கும் மங்கலத்தைக் கொடுத்தாள்.தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதாரம் செய்து தெற்குத் திசைக்கும் மங்கலத்தைக் கொடுத்தாள்.இப்படிப் பூர நட்சத்திரம், செவ்வாய்க் கிழமை, ஆடி, மார்கழி மாதங்கள், தென் திசை ஆகிய அனைத்துக்கும் மங்கலம் தரும் விதமாக பூமிதேவி ஆண்டாளாக அவதரித்தபடியால், அவள் கோதா மங்கலத்தை அருள்பவள் என்று அழைக்கப்படுகிறாள். கோ என்றால் மங்கலம், தா என்றால் அருள்பவள்.

இவ்வாறு மங்கலம் பெற்று மகிழ்ந்த அந்த நட்சத்திரங்கள், கிழமை, மாதங்கள், தென்திசை அனைத்தும் திருமாலுக்கு நன்றி கூறின. “சிம்சுமார வடிவில் இருந்து எங்களைத் தாங்கி நிற்கும் நீயே, எங்களது அமங்கலத்தைப் போக்கி எங்களுக்கு மங்கலத்தையும் அருளி விட்டாய்!” என்று திருமாலின் கருணையைப் போற்றித் துதித்தனர்.

இப்படி நட்சத்திர மண்டலம் தொடக்கமாக மொத்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் சிம்சுமாரச் சக்கர வடிவில் தாங்கியிருப்பதால் திருமால் ‘நக்ஷத்ரீ’ என்று அழைக்கப்படுகிறார். ‘நக்ஷத்ரீ’ என்றால் சிம்சுமார வடிவிலான நட்சத்திர ரூபம் கொண்டவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 442-வது திருநாமம்.
“நக்ஷத்ரிணே நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு அனைத்து வித மங்கலங்களையும் திருமால் அருள்வார்.

————-

443. க்ஷமாய நமஹ: (Kshamaaya namaha)

ராம லட்சமணர்களை அழைத்துக் கொண்டு ஜனகரின் வேள்விச் சாலைக்கு வந்தார் விச்வாமித்ரர். ராம லட்சமணர்களின் தோற்றத்தைக் கண்டு வியப்படைந்த ஜனகர், “இவ்விரு பிள்ளைகளும் யார்?” என்று விச்வாமித்ரரிடம் கேட்டார். “இவர்கள் தசரதனின் மகன்கள். உங்கள் வேள்வியையும் வில்லையும் காண வந்துள்ளார்கள்!” என்று விச்வாமித்ரர் விடையளித்தார். ஜனகர் தனது பணியாளர்களை அழைத்து சிவ தனுஸ்ஸைக் கொண்டு வருமாறு அறிவுறுத்தினார். அவர்களும் வில்லை எடுத்து வந்தார்கள்.

“உறுவலி யானையை ஒத்த மேனியர்
செறிமயிர்க் கல் எனத் திரண்ட தோளினர்
அறுபதினாயிரர் அளவில் ஆற்றலர்
தறிமடுத்து இடையிடைத் தண்டில்
தாங்கினர்”
– என்று இக்காட்சியைக் கம்பர் பாடுகிறார். யானைபோல் வலிமை மிக்கவர்களும், மலைபோன்ற தோள்களைக் கொண்டவர்களுமான அறுபதாயிரம் வீரர்கள் வில்லை எடுத்து வந்தார்களாம். அந்த அறுபதாயிரம் வீரர்கள் தங்கள் தோள்களிலே பெரிய தண்டைத் தாங்கிக்கொண்டு, அந்தத் தண்டுக்கு மேலே தூண்களை நாட்டி, அந்தத் தூண்களுக்கு மேலே வில்லை வைத்துச் சுமந்துகொண்டு வந்தார்களாம்.

அப்போது மிதிலை மக்கள், “திருமாலைத் தவிர வேறு யாராலும் இந்த வில்லைக் கையால் எடுக்கக்கூட முடியாது!” என்று பேசிக் கொண்டார்கள். வேறு சிலர், “நம் ஜனக மகாராஜா எதற்காக இந்த வில்லைக்கொண்டு வந்து காட்டுகிறார்? ராமனைப் போல் ஒரு மாப்பிள்ளை கிடைக்கும் போது, அவரே வில் இருக்கிறதா என்று கேட்டாலும், இல்லை என்று சொல்லிப் பெண்ணை மணம் முடித்துத் தந்துவிடலாமே!” என்று பேசினார்கள்.

ஜனகரின் குருவான சதானந்தர், “விஸ்வாமித்ர முனிவரே! தட்சனின் வேள்வியைத் தாக்க வந்த சிவபெருமான் இந்த வில்லைக் கையில் ஏந்தியபடி வந்தார். அதைக் கண்டு தேவர்கள் அஞ்சியதால், கோபம் தணிந்த சிவபெருமான் இவ்வில்லை ஜனகரின் குல முன்னோரான தேவராதன் என்ற ராஜாவுக்கு அளித்தார். அதுதான் நம் ஜனக மன்னரிடம் இப்போது வந்துள்ளது! இந்த வில்லை ராமன் எடுத்து நாண் ஏற்றினால், நம் அனைவருக்கும் நலம்!” என்றார்.

விஸ்வாமித்ரர் ராமனை ஒரு பார்வை பார்த்தவாறே, ஹோமத் தீயில் நெய்யை ஊற்றினால் அக்னி பொங்கி எழுவதுபோல் ராமன் எழுந்தான். சிங்கத்தைப்போல் கம்பீரமாகவும், காளையைப் போல் வேகமாகவும், மேரு மலை போல் பெருமையோடும், யானையைப் போல் அழகாகவும் வில்லை நோக்கி நடந்தான் ராமன்.

“ஆடக மால்வரை அன்னது தன்னை
தேடரு மாமணி சீதை எனும் பொன்
சூடக வால்வளை சூட்டிட நீட்டும்
ஏடவிழ் மாலை இது என்ன எடுத்தான்”

– என்று பாடுகிறார் கம்பர். சீதையின் கழுத்தில் அணிவிக்கப்போகும் பூமாலையைத் தூக்குவதாக எண்ணி வில்லை அநாயாசமாகக் கையில் எடுத்து விட்டான் ராமன். “எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்” என்றபடி நாணேற்றி வில்லையும் முறித்துவிட்டான்.அறுபதாயிரம் பேர் கஷ்டப்பட்டு சுமந்து வந்த வில்லை எப்படி அநாயாசமாகத் தூக்கி நாண் ஏற்றினான் ராமன் என்று எல்லோரும் வியந்தார்கள். அப்போது சதானந்தர் ஜனகரிடம், “அரசே! வந்திருப்பவர் சாட்சாத் திருமால் என்பதை நிரூபித்துவிட்டார் பார்த்தீர்களா? இந்த மொத்தப் பிரபஞ்சத்தையும் எந்தச் சிரமமும் இல்லாமல் விளையாட்டாகவே சுமந்து கொண்டிருப்பவர் திருமால். உலகையே அநாயாசமாகச் சுமக்கும் அவருக்கு இந்த ஒரு வில்லைத் தாங்கிப் பிடிப்பது அரிதான செயலில்லையே!” என்றார்.

மொத்தப் பிரபஞ்சத்தையும் அநாயாசமாகத் தான் சுமப்பதை உணர்த்தவே திருமால் விண்வெளியில் சிம்சுமாரச் சக்கர வடிவில் இருந்து கொண்டு நட்சத்திர மண்டலத்தை நிலை
நிறுத்திவருகிறார். சிம்சுமார வடிவில் இருந்து உலகைத் தாங்க வல்லவராகத் திகழ்வதால் ‘க்ஷம:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். ‘க்ஷம:’ என்றால் வல்லமை மிக்கவர், இங்கே பிரபஞ்சத்தைத் தாங்கும் வல்லமை மிக்கவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 443-வது திருநாமம்.“க்ஷமாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் வல்லமை தந்தருள்வார்.

—————-

444. க்ஷாமாய நமஹ:
(Kshaamaaya namaha)
Matter can neither be created nor be destroyed என்கிற வாக்கியத்தை நம்மில் பலரும் கேட்டிருப்போம். உலகப் படைப்பை வேதம் விளக்கும் விதத்தை அடியொற்றியே இந்த வாக்கியமும் அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது.ராமானுஜரிடம் ஒரு சீடர், “இறைவன் இவ்வுலகை எங்கிருந்து எதை மூலப்பொருளாகக் கொண்டு படைக்கிறார்?” என்று கேட்டார். அதற்கு ராமானுஜர், “ஜடப்பொருட்கள், ஜீவாத்மாக்கள், இறைவன் ஆகிய மூவகைத் தத்துவங்களும் எப்போதுமே இருந்து வருகிறார்கள். அறிவில்லாத ஜடப்பொருட்களும், அறிவுள்ள ஜீவாத்மாக்களும் இறைவனுக்கு உடலாக இருக்கிறார்கள். ஊழிக் காலத்தில் உலகும் உயிர்களும் சூட்சும நிலையில், அதாவது நுண்ணிய நிலையில் இறைவனோடு ஒன்றி யிருப்பார்கள். படைப்புக் காலத்தில் அவற்றை ஸ்தூல நிலைக்கு இறைவன் மாற்றிப் பெயர் உருவ வேறுபாடு உள்ளவையாக ஆக்குகிறார். இதையே படைப்பு என்று சொல்கிறோம்.

மீண்டும் ஊழிக்காலம் வருகையில் உலகையும் உயிர்களையும் சூட்சும நிலைக்கு மாற்றி விடுவார் இறைவன். படைப்புக் காலம் வருகையில் மீண்டும் ஸ்தூல நிலைக்கு மாற்றி விடுவார். இந்த மாறுதலைத்தான் நாம் படைப்பு அழிப்பு என்றெல்லாம் சொல்கிறோமே ஒழிய, எதையும் புதிதாக இறைவன் உருவாக்குவதுமில்லை, இருப்பதை அழிப்பதுமில்லை!” என்றார்.
“எங்களுக்குப் புரியும்படி சற்றே விளக்க முடியுமா?” என்று மற்ற சீடர்கள் பிரார்த்தித்தார்கள்.

அதற்கு ராமானுஜர், “ஒரு குயவர் பானை செய்கிறார் என்றால், புதிதாக ஒருபொருளை அவர் உருவாக்குகிறார் என்பதை விட இருக்கும் பொருளின் நிலையை மாற்றுகிறார் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் களிமண் என்ற நிலையில் இருக்கும் பொருளைப் பானை என்னும் நிலைக்குக் குயவர் மாற்றித் தருகிறார். அதுபோலத்தான் சூட்சுமநிலையில் உள்ள உலகை ஸ்தூல நிலைக்கு இறைவன் மாற்றுவதைப் படைப்பு என்கிறோம்.

பானை அழிந்தால் மொத்தமாக அழிந்து போவதில்லை. பானை என்னும் நிலை மாறித் தூள்களாக ஆகி விடுகிறது. அங்கேயும் நிலைமாற்றம் தான் ஏற்படுகிறது. அவ்வாறே ஊழிக் காலத்திலும் உலகம் அழிந்துவிடுவதில்லை, சூட்சும நிலைக்கு அனைத்தையும் இறைவன் மாற்றிவிடுகிறார்!” என்று விளக்கினார்.“உலகும் உயிர்களும் இறைவனுக்கு உடலாக இருக்கிறது என்று சொல்லும் பட்சத்தில், இவைகளுக்கு ஏற்படும் நிலைமாற்றம் உள்ளிருக்கும் இறைவனைப் பாதிக்குமா?” என்று மற்றொரு சீடர் கேட்டார்.

அதற்கு ராமானுஜர்,
“ஆவிசேர் உயிரின் உள்ளால் யாதுமோர் பற்றிலாத
பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே”

என்ற நம்மாழ்வாரின் பாசுரத்தை மேற்கோள் காட்டி, “உடலுக்கு வரும் மூப்பு வியாதி உள்ளிட்ட மாறுதல்கள் எப்படி ஜீவாத்மாவைப் பாதிப்பதில்லையோ, அதுபோலத் தான் பிரபஞ்சத்துக்கு ஏற்படும் மாறுதல்களால் உள்ளிருக்கும் இறைவன் பாதிப்படைவதில்லை. தோகையுடன் கூடிய மயிலை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். ஸ்தூல நிலையில் உள்ள பிரபஞ்சத்தோடு கூடிய இறைவன் தோகையை விரித்தாடும் மயிலைப் போன்றவன் என்று கொள்ளலாம். ஊழிக் காலத்தில் சூட்சும நிலையில் உள்ள பிரபஞ்சத்தோடு கூடிய இறைவன் தோகை மூடிய மயிலைப் போன்றவன் என்று கொள்ளலாம். இரண்டு நிலைகளிலும் மயிலுக்கு எந்த மாற்றமும் இல்லை. தோகை தான் விரிந்த நிலையிலோ, அல்லது மூடிய நிலையிலோ உள்ளது. அதுபோல் ஊழிக் காலத்திலும் சரி, படைப்புக் காலத்திலும் சரி, இறைவன் மாறுவதே இல்லை. அவனுக்கு உடலாக இருக்கும் பிரபஞ்சம் மட்டுமே நிலைமாறுகிறது.

படைப்புக் காலத்தில் மொத்த நட்சத்திர மண்டலத்தையும் தாங்கியபடி சிம்சுமாரச் சக் கரம் திகழும். ஊழிக்காலத்தில், சிம்சுமாரச் சக்கரத்தில் உள்ள நான்கு நட்சத்திரங்கள் மட்டுமே அழியாது நிற்கும். சிம்சுமாரச் சக்கரம் தான் திருமால். படைப்புக் காலத்தில் தோகை விரித்த மயில் போல் அவர் தனது திருமேனியில் இருந்து பிரபஞ்சத்தை வெளியிடுவதை உணர்த்தவே படைப்புக் காலத்தில் பல நட்சத்திரங்களோடு சிம்சுமாரச் சக்கரம் விளங்குகிறது. ஊழிக் காலத்தில் தோகையை மூடும் மயில் போல் தனக்குள் பிரபஞ்சத்தை அவர் உள்வாங்கிக் கொள்வதை உணர்த்தவே ஊழிக்காலத்தில் சிம்சுமாரச் சக்கரமும் மெலிந்து நான்கு நட்சத்திரங்களோடு மட்டும் திகழ்கிறது.

இப்படிப் பிரபஞ்சத்தைச் சூட்சும நிலைக்கு மாற்றித் தனக்குள்ளே உள்வாங்கி வைத்துள்ளார் திருமால் என்பதை ஊழிக்காலத்தில் நான்கே நட்சத்திரங்களோடு மெலிந்திருக்கும் சிம்சுமாரச் சக்கரம் நமக்கு உணர்த்துகிறது. ஊழிக்காலத்தில் மெலிந்த வடிவுடைய சிம்சுமாரச் சக்கரமாகத் திருமால் காட்சி அளிப்பதால், அவர் ‘க்ஷாம:’ என்று அழைக்கப்படுகிறார். ‘க்ஷாம:’ என்றால் மெலிந்தவர் – நான்கே நட்சத்திரங்களோடு கூடிய மெலிந்த வடிவில் ஊழிக் காலத்தில் திகழ்பவர் என்று பொருள். அதுவே ஹஸ்ரநாமத்தின் 444-வது திருநாமம்.“க்ஷாமாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் தேய்பிறை இல்லாத வளர்பிறை ஓங்கும்படி திருமால் அருள்புரிவார்.

—————————-

445. ஸமீஹநாய நமஹ: (Sameehanaaya namaha)
(திருநாமங்கள் 436 [அநிர்விண்ண:] முதல் 445 [ஸமீஹன:] வரை – திருமாலின் சிம்சுமார வடிவம்)

[விண்வெளியில் உடும்பு போன்ற வடிவில் ஒரு நட்சத்திரக் கூட்டம் உள்ளது. அதற்கு சிம்சுமாரச் சக்கரம் என்று பெயர். இந்த சிம்சுமாரச் சக்கர வடிவில் (galaxy) திருமாலே எழுந்தருளி உள்ளார். திருமாலின் நட்சத்திர மயமான இந்த வடிவின் வால்பகுதியில்தான் துருவ நட்சத்திரம் உள்ளது. இந்த சிம்சுமார வடிவைப் பற்றிய முழு விவரம் விஷ்ணு புராணம் இரண்டாம் அம்சம் ஒன்பதாம் அத்தியாயத்தில் உள்ளது.]குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் பூஜிக்கத் தக்கவர்களான பீஷ்மர், துரோணர் போன்றவர்களையும், உறவினர்களான கௌரவர்களையும் எதிர்த்துப் போர் புரியத் தயங்கிய அர்ஜுனன், கலக்கம் அடைந்து காண்டீவத்தை நழுவ விட்டுத் தேரிலே அமர்ந்துவிட்டான். அவனைத் தேற்றுவதற்காக பகவத் கீதையை
உபதேசிக்கத் தொடங்கினான் கண்ணபிரான்.

“அர்ஜுனா! இவர்களின் உடல்களைத் தான் நீ அழிக்கப் போகிறாய், ஜீவாத்மாக்களை நீ அழிக்கப்போவதில்லை. ஜீவாத்மாக்களை ஆயுதங்களால் வெட்டமுடியாது, நெருப்பால் எரிக்க முடியாது, காற்றால் உலர்த்த முடியாது, நீரால் நனைக்க முடியாது. பரமாத்மாவாகிய நான் எப்படி எப்போதும் இருப்பேனோ அதுபோல் ஜீவாத்மாக்களும் நித்தியமாக எப்போதும் இருப்பார்கள். ஜீவாத்மாவின் தன்மையை அறிய வேண்டும் என்றால் உனக்கான கடமையைப் பலனில் பற்று வைக்காமல் செய். அவ்வாறு கடமையைச் செய்து கர்மயோகத்தில் ஈடுபட்டால், அது உன்னை ஞானயோகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும். ஞானயோகத்தைப் பயின்று ஜீவாத்மாவைத் தியானித்தால் ஆத்ம சாட்சாத்காரத்தை நீ அடைவாய்!” என்று அறிவுறுத்தினான் கண்ணன்.

இதைக் கேட்ட அர்ஜுனன், “கடமையைச் செய்தலாகிய கர்ம யோகத்தில் ஈடுபட வேண்டும் என்றால் நான் மன்னனாகிய எனக்குரிய கடமையாகிய இந்த கோரமான போரைச் செய்ய நேரிடும். அதற்குப் பதிலாக நான் ஞான யோகத்தைப் பின்பற்றி ஆத்மாவைத் தியானிக்கிறேன்!” என்று கண்ணனிடம் சொன்னான்.அதற்குக் கண்ணன், “கர்மயோகம் தான் செய்வதற்கு எளிதானது. ஞானயோகத்தைச் சிலகாலம் பின்பற்றிய பின் நீ நழுவ வாய்ப்புண்டு. ஆனால் பழகிய கர்மயோகத்தில் இருந்து நழுவுவதற்கு வாய்ப்பில்லை.

செயல் செய்தே பழகிய உன் போன்றவர்களால் செயல்களை நிறுத்தி விட்டு ஞானயோகம் பயில்வது மிகவும் கடினம். இயற்கையின் போக்கோடு இணைந்து செயல்புரிவதே நலம். ஜனகர் போன்றோர் எல்லாம் கர்மயோகத்தைப் பின்பற்றியே ஆத்ம சாட்சாத்காரம் பெற்றார்கள். எனவே உன் கடமையாகிய இந்தப் போரைச் செய். பிறரைக் கொல்ல வேண்டும் என்பதற்காக இதை நான் செய்யச் சொல்லவில்லை. அறத்தையும் நாட்டையும் மக்களையும் காக்கும் கடமை மன்னனாகிய உனக்கு உண்டு. அந்தக் கடமையை உணர்ந்து பலனில் பற்று வைக்காமல் போர் புரிக!” என்றான் கண்ணன்.

தனது கூற்றை மேலும் வலியுறுத்துவதற்காக மற்றொரு செய்தியையும் கண்ணன் இங்கே தெரிவித்தான். “ஆதி காலத்தில் இறைவன் (தன்னையே சொல்லிக் கொள்கிறான் கண்ணன்) உலகைப் படைக்கும் போது, வேள்விகளோடு மனிதர்களைப் படைத்தார். மனிதர்களே! வேள்விகளாகிய இந்தக் கடமைகளை நீங்கள் தவறாமல் செய்யுங்கள். இந்த வேள்வியினாலே உலகில் வாழ்வதற்குரிய செழிப்பையும், முக்தி பெறுவதற்குரிய பக்குவத்தையும் நீங்கள் பெறுவீர்கள்!

“ஸஹ யஜ்ஞை: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:
அனேன ப்ரஸவிஷ்யத்வம் ஏஷ வோஸ்து இஷ்ட காமதுக்”எனவே உலகைப் படைக்கும்போதே இறைவன் அவரவருக்கென்று சில கடமைகளைத் தந்துள்ளார். அவற்றைத் தவறாமல் ஒவ்வொருவரும் செய்யவேண்டும் என்பதே இறைவனின் ஆணை!  நீயும் உன் கடமையைச் செய்வாயாக!” என்று கூறினான்.

இப்படி ஒவ்வொருவருக்கும் அவரவருக்குரிய கடமைகளைத் தந்து அந்த கடமைகளை நிறைவேற்றும்படி அவர்களைத் தூண்டும் திருமால், ‘ஸமீஹன:’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸமீஹன:’ என்றால் அனைவரையும் அவரவர் கடமையில் ஈடுபடுத்துபவர் என்று பொருள். சிம்சுமாரச் சக்கர வடிவில் இருந்தபடி நட்சத்திரங்களும் கிரகங்களும் தங்களுக்கு உரிய முறையில் சுழலும்படி அவைகளையும் நிர்வாகிக்கிறார் திருமால். அதனால் ‘ஸமீஹன:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 445-வது திருநாமம். “ஸமீஹனாய நமஹ:”
என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் சிறந்த கடமை வீரர்களாக விளங்கும்படித் திருமால் அருள்புரிவார்.


அதற்குத் திருமால், “நாரதா! நீ ஒரு நாள் அந்த விவசாயியின் நடவடிக்கைகளைக் கவனித்து விட்டு வா!” என்று சொன்னார். அவ்வாறே விவசாயியின் நடவடிக்கையை ஒருநாள் முழுவதும் கவனித்தார் நாரதர். காலை, மாலை இரு நேரங்களில் மட்டும் அந்த விவசாயி திருமாலை வணங்குவதைக் கவனித்தார். மற்றைய நேரங்களில் அந்த விவசாயி தனது அன்றாடப் பணிகளைச் செய்துவருவதைப் பார்த்தார் நாரதர்.

திருமாலிடம் வந்து, “ஒருநாள் முழுவதும் அந்த விவசாயியைக் கவனித்துவிட்டேன். காலை எழுந்தவுடனேயும், இரவு உறங்கச் செல்லும் முன்பும் அவர் உன்னை வழிபடுகிறார். மற்ற நேரங்களில் அவர் தனது விவசாயத் தொழிலைத்தான் பார்க்கிறார். மற்றபடி அவர் பெரிய வேள்விகளோ மற்ற வழிபாடுகளோ செய்ததாகத் தெரியவில்லை. அவரைப் போய் உனக்குப் பிடித்தமான பக்தர் என்று எதை வைத்துச் சொன்னாய்?” என்று கேட்டார் நாரதர்.

அதற்குத் திருமால், “நாரதா! நான் உனக்கு ஒரு பரிசோதனை வைக்கிறேன். அதன்பின் நீ அந்த விவசாயியின் பெருமையை உணர்வாய்!” என்று சொல்லிவிட்டு நாரதர் கையில் ஒரு விளக்கைக் கொடுத்தார். “நாரதா! இந்த விளக்கில் இருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூடக் கீழே வழியாதபடி இந்த விளக்கைக் கையில் ஏந்தியபடி நீ உலகைச் சுற்றி வர வேண்டும்!” என்றார் திருமால்.

“உத்தரவு பகவானே!” என்று சொல்லி விட்டுக் கையில் விளக்கோடு மெதுவாகப் புறப்பட்டார் நாரதர். ஒருதுளி எண்ணெய் கூடக் கீழே சிந்தாமல் அனைத்துலகையும் சுற்றிவிட்டுத் திருமாலிடம் திரும்ப வந்தார். “

இறைவா! காரியத்தைக் கச்சிதமாக முடித்து விட்டேன் பார்த்தாயா?” என்று பெருமிதத்துடன் சொன்னார் நாரதர்.

நாரதரைப் பார்த்துச் சிரித்த திருமால், “நாரதா! விளக்கைக் கையில் ஏந்தியபடி உலகைச் சுற்றும் போது நீ எத்தனை முறை எனது நாராயண நாமத்தைச் சொன்னாய்?” என்று கேட்டார்.

திடுக்கிட்டுப் போனார் நாரதர். “இறைவா! விளக்கில் இருந்து எண்ணெய் வழியக் கூடாது என்று நீ சொன்னதாலே அதிலேயே மொத்தக் கவனத்தையும் செலுத்திவிட்டேன். நாராயண நாம உச்சரிப்பையே இன்று மறந்து விட்டேன்!” என்றார் நாரதர்.

திருமால், “நாரதா! ஆனால் அந்த விவசாயி இத்தனை கடின உழைப்புக்கு மத்தியிலும், எப்போதும் என்னை மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா? அவரது விவசாயத் தொழிலை எனக்குச் செய்யக் கூடிய பூஜையாக எண்ணி, அதனால் கிடைக்கும் உலகியல் பலன்களில் நாட்டம் வைக்காமல், எனது மகிழ்ச்சியே பெரிய பலன் என்ற எண்ணத்துடன் தனது கடமையை ஆற்றுகிறார். காலை மாலை என்னை அவர் தியானிப்பது மட்டும் அவர் செய்யும் பூஜையன்று. அவரது கடமையையும் என்னைத் தியானித்தபடி எனக்குச் செய்யும் பூஜையாகத்தான் செய்துவருகிறார்.

அவர் வேள்வி செய்தாரா என்று கேட்டாயே நாரதா! வேள்வியின் வடிவமே நான்தான். அத்தகைய என்னைத்தானே அவர் தினமும் வழிபடுகிறார்? அனைத்து வேள்விகளுக்கும் ஒரே பலன் என்னை மகிழ்விப்பதுதான். எனக்குப் பூஜையாகத்தான் வேள்விகள் யாவும் செய்யப்படுகின்றன. அப்படிப்பட்ட என்னைத் தன் கடமைகளுக்கு மத்தியில் இடைவிடாது தியானித்து, கடமையையே எனக்குச் செய்யும் பூஜையாக எண்ணிச் செய்துவரும் இந்த விவசாயி தினந்தோறும் வேள்வி செய்தவரே ஆவார்.

இவர் தான் எனக்குப் பிரியமான பக்தர்!” என்று விளக்கினார்.

வேள்வியின் வடிவமாகவும், வேள்விக்கான கருவியாகவும், வேள்வியின் பலனாகவும் திருமாலே இருக்கிறார் என்பதையும், திருமாலைத் தியானித்துப் பூஜிக்கும் அடியார்கள் அத்தகைய வேள்வியின் பலனைப் பெறுவார்கள் என்பதையும் இதன்மூலம் அறிகிறோம் அல்லவா?

வேள்வியின் வடிவமாகத் திருமால் இருப்பதால் அவர் ‘யக்ஞ:’ என்று அழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 446-வது திருநாமம். ‘யக்ஞ:’ என்றால் வேள்வியின் வடிவானவர் என்று பொருள்.

“யக்ஞாய நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் தனது சிறந்த பக்தர்களாக அங்கீகரித்து அவர்கள் செய்யும் வழிபாடுகளை மகிழ்ச்சியுடன் ஏற்றருள்வார்.


447. இஜ்யாய நமஹ: (Ijyaaya namaha)

ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் சீர்காழியை அடுத்த திருநாங்கூரில் பதினொரு கருடசேவை வைபவம் நடைபெறுவது வழக்கம். அந்தக் கருட சேவை வைபவத்தைத் தொடர்ந்து மறுநாள் காலை திருநாங்கூருக்கு அருகிலுள்ள அண்ணன் கோவில் எனப்படும் திருவெள்ளக்குளத்தில் கலியன் ஒலிமாலை என்ற வைணவ மாநாடு நடைபெறுவது வழக்கம். இம்மாநாட்டை அண்ணன் கோவில், ஸ்ரீஉ.வே. சடகோப கல்யாணராமன் சுவாமிகள் நடத்தி வருகிறார்.

2015-ம் ஆண்டு நடைபெற்ற அந்தக் கலியன் ஒலிமாலை மாநாட்டில் பேசுவதற்கு அடியேனை அழைத்திருந்தார்கள். திருமங்கை ஆழ்வார் மிகவும் ஈடுபட்ட திவ்ய தேசங்களுள் ஒன்றைப் பற்றிப் பேசுமாறு பெரியோர்கள் அடியேனைப் பணித்தார்கள். பற்பல மகான்கள் அலங்கரித்த அந்தச் சபையில், பொடியனான அடியேன் எங்கள் சொந்த ஊரான நாச்சியார்கோவில் எனப்படும் திருநறையூரில் கோவில் கொண்டுள்ள வஞ்சுளவல்லித் தாயார்-ஸ்ரீநிவாசப் பெருமாளிடம் திருமங்கை ஆழ்வார் கொண்டுள்ள ஈடுபாட்டைப்பற்றி உரையாற்றினேன்.

அதன் ஒரு பகுதியாக, திருமங்கை ஆழ்வார் வைணவராக ஆக விரும்பிய போது, நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாள் தான் ஆசார்ய ஸ்தானத்திலே இருந்து, திருமங்கை ஆழ்வாரின் தோள்களில் சங்க சக்கரப் பொறிகளை ஒற்றி, ஐஞ்சீர்ச் சடங்கைச் செய்து வைத்து திருமங்கை ஆழ்வாரை வைணவராக ஆக்கினார் என்பதைக் குறிப்பிட்டேன்.
இவ்வாறு பெருமாள் தனக்குச் சங்க சக்கரப் பொறிகளை ஒற்றி அருளியமையைத் திருவுள்ளத்தில் கொண்டே திருமங்கை ஆழ்வாரும்,

“வலங்கை ஆழி இடங்கைச் சங்கம் உடையான் ஊர்
நலங்கொள் வாய்மை அந்தணர் வாழும் நறையூரே!”

என்று பாடியுள்ளார் என்பதையும் குறிப்பிட்டேன். அத்தோடு நில்லாமல், இளங்கன்று பயம் அறியாது என்பதற்கேற்ப, திருமங்கை ஆழ்வாரின் தோள்களில் பெருமாள் சங்க சக்கரப் பொறிகளை அருளியமையை வேதமும் கொண்டாடுகிறது என்று சொன்னேன்.

“உத்தர்ஷய மகவன் ஆயுதானி உத் ஸத்த்வானாம் மாமகானாம் மஹாம்ஸி”
– என்ற யஜுர்வேத மந்திரத்தை மேற்கோள் காட்டினேன். அப்ரதிரதம் என்ற யஜுர்வேதப் பகுதியில் வரும் மந்திரம் இது.

“மகவன் – பற்பல மாயங்கள் செய்ய வல்ல நறையூர் நம்பியே!

ஆயுதானி உத்தர்ஷய – திருமங்கை ஆழ்வாரின் தோள்களில் சங்க சக்கரப் பொறிகளை ஒற்றி, அதன்மூலம் அந்த திவ்யாயுதங்களுக்கு மகிழ்ச்சி அளித்தவனே!” என்று கூட இந்த வேத வாக்கியத்துக்குப் பொருள் கொள்ள இடமுள்ளது என்று விண்ணப்பித்தேன்.

திருமங்கை ஆழ்வாரின் தோள்களின் ஸ்பரிசத்தால் பெருமாள் கையிலுள்ள திவ்யாயுதங்கள் மகிழ்ச்சி அடைந்தன என்று இந்த வேத வாக்கியம் குறிப்பிடுவதாக ரசிப்பதற்கு இடமுள்ளது என்றேன்.

ஆனால் பேசிய பின், “பல மகான்கள் நிறைந்த சபையில் வேத மந்திரத்துக்கு நாம் புதிதாக ஏதோ அர்த்தம் சொல்லி விட்டோமே! யாராவது கண்டிப்பார்களோ!” என்ற லேசான அச்சம் மனதில் உண்டானது.

அப்போது சபையில் வீற்றிருந்த திருச்சித்திரகூடம் டாக்டர் ஏவி ஆர் சுவாமிகள் சற்று நேரம் மௌனமாகவே இருந்துவிட்டு, அதன்பின், “உன்னைப் பாராட்ட வார்த்தைகள் தேடிக்கொண்டிருந்தேன். அதனால்தான் எதுவும் பேசவில்லை. உண்மையிலேயே இது மிகவும் பொருத்தமான, ஆழ்ந்த அர்த்தம்!” என்று பாராட்டினார்.

மேலும், “ராமாநுஜர் ஸ்ரீபாஷ்யத்தில் வைச்வானராதிகரணம் என்னும் பகுதியில், வேதங்களில் உள்ள அனைத்து தேவர்களின் பெயர்களுமே உண்மையில் நேரடியாகத் திருமாலைக் குறிப்பதாகக் கருதித் தியானிக்கலாம் என்ற வழியைக் காட்டி உள்ளாரே. அக்னி என்றால் (இலக்கண ரீதியில்) இருளில் முன்னே வழி நடத்திச் செல்பவர் என்று பொருள்.

ஞான ஒளி தந்து அறியாமை இருளைக் கடக்க உதவும் திருமாலையே அக்னி என்று வேதம் சொல்வதாகக் கொள்ளலாமே. இந்திரன் என்றால் அனைத்து உலகங்களுக்கும் தலைவன் என்று பொருள். பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் ஆளும் திருவரங்கநாதனையே இந்திரன் என்று வேதம் சொல்வதாகக் கொள்ளலாமே. இதுபோல் வாயு, வருணன், பிருகஸ்பதி உள்ளிட்ட எல்லாப் பெயர்களும் திருமாலைக் குறிக்கும் தன்மைகொண்டவை என்று ராமாநுஜரே காட்டியுள்ளார். அந்த வழியை அடியொற்றி நீ பேசி இருக்கிறாய்! பாராட்டுகள்!” என்று வாழ்த்தினார்.

எனவே, இந்திரன், சந்திரன், சூரியன், வாயு என எந்தத் தேவதையின் பெயரைச் சொன்னாலும் அது அவர்களுக்குள்ளே உறையும் திருமாலைக் குறிக்கும். அவர்களைக் குறித்துச் செய்யும் வேள்விகளால் உகப்பவரும் திருமாலே. அந்தந்த தேவதைகளுக்குள் திருமால் இருந்துகொண்டு அந்தந்த வேள்விகளுக்கான பலன்களை அவர்கள் மூலம் திருமாலே அருள்கிறார்.

இப்படி அனைத்துத் தேவதைகளைக் குறித்த வேள்விகளாலும் ஆராதிக்கப்படுபவராகத் திருமால் ‘இஜ்ய:’ என்று அழைக்கப்படுகிறார். ‘

இஜ்ய:’ என்றால் வேள்விகளால் ஆராதிக்கப் படுபவர் என்று பொருள்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 447-வது திருநாமம்.“இஜ்யாய நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் செய்யும் அனைத்து வழிபாடுகளையும் திருமால் ஏற்று அருள்புரிவார்.

——————

448. மஹேஜ்யாய நமஹ: (Mahejyaaya namaha)

தேவர்களின் பக்திக்கும் ஆழ்வார்களின் பக்திக்கும் என்ன வித்தியாசம்?
இதற்கான விடையை ஆசுகவி வில்லூர் நிதி சுவாமிகள் தமது
அம்ருத சார்தூலம் என்ற துதியின் ஒரு சுலோகத்தில் வழங்கியுள்ளார்.

“க்ஷீராப்தேரம்ருதம் பபாவிதி பரம் ஜானந்தி மந்தாஸ்ஸுரா:
யத் கிஞ்சித் ததஹோ ததங்க லலித ஸ்வேத த்ரவாணாம் கண
தன்மத்யே பயஸாம்நிதேரபி ததா கும்பகோணே புரே
சேதே மான்யம் இதம் விசித்ரம் அம்ருதம் தத்த்வம் து வித்மோ வயம்”

பாற்கடல் கடையப்பட்ட வரலாற்றை நாம் எல்லோரும் அறிவோம்.

அசுரர்களிடம் தேவர்கள் தோல்வி அடைந்த நிலையில், இழந்த தேவலோக ராஜ்ஜியத்தை மீண்டும் பெற என்ன வழி என்று பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த திருமாலின் உதவியை நாடினார்கள் தேவர்கள்.

அப்போது திருமால், “நீங்கள் பாற்கடலைக் கடைந்தால் அமுதம் கிடைக்கும். அமுதை உண்டால் நீண்ட ஆயுளும் உடல் வலிமையும் பெறலாம்.

அதன்பின் நீங்கள் எளிதில் அசுரர்களை வீழ்த்த முடியும்!” என்று ஆலோசனை சொன்னார்.

வலிமை இழந்திருந்த தேவர்களுக்கு உதவியாக அசுரர்களையும் பாற்கடலை கடைய அழைக்குமாறு தேவர்களிடம் சொன்னார் திருமால்.

ராஜநீதியின் அடிப்படையில், அமுதம் தருவதாகச் சொல்லி அசுரர்களை அழைத்து விட்டு அதன்பின் அமுதம் தராமல் ஏமாற்றி விடலாம் என்ற ஆலோசனையைத் திருமால் வழங்கினார்.

அவ்வாறே மந்தர மலையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கித் தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள்.

மந்தர மலை கடலில் மூழ்காமல் காக்கத் திருமாலே ஆமை வடிவில் கூர்மாவதாரம் எடுத்தார்.

தொடர்ந்து பாற்கடலைக் கடைந்த போது ஐராவதம் யானை, உச்சைசிரவஸ் குதிரை, பாரிஜாத மரம், ஆலகால விஷம் போன்ற பலவும் அதினின்று தோன்றின.

அமுதில் வரும் பெண்ணமுதான மகாலட்சுமி தோன்றித் திருமாலை மணந்தது தனி வரலாறு.

திருமால் தன்வந்தரி வடிவம் பூண்டு கையில் அமுதக் கலசத்துடன் பாற்கடலிலிருந்து உதித்தார்.

அமுதம் கிடைக்கப் போவதை எண்ணித் தேவர்கள் பேருவகை கொண்டார்கள்.

ஆனால் தங்களுக்கும் அமுதில் பங்கு வேண்டும் என்று அசுரர்கள் வரிசை கட்டி வந்து நின்றார்கள்.

அப்போது தான் திருமால் மோகினி அவதாரம் எடுத்து, அசுரர்களை மயக்கித் தேவர்களுக்கு அமுதம் கிடைக்கும்படிச் செய்துவிட்டார்.

அமுதை உண்டதால் வலிமை பெற்ற தேவர்கள் அடுத்து நடந்த போரில் அசுரர்களை வீழ்த்தினார்கள்.

அமுதைச் சுவைத்த தேவர்கள், தேவ லோக ராஜ்ஜியத்தை அனுபவிக்கத் தொடங்கிய தேவர்கள், தங்களது வெற்றிக்குக் காரணமான திருமாலை மறந்து விட்டார்கள்.

அற்ப இன்பம் துய்ப்பதிலேயே காலம் கழிக்கத் தொடங்கி விட்டார்கள்.

“இந்தத் தேவர்கள் பாற்கடலில் இருந்து அமுதம் வந்தது என்பதையே அறிவார்கள்.

ஆனால் அந்தப் பாற்கடலுக்கு அமுதம் எப்படி வந்தது? அதை நான் சொல்கிறேன்!” என்று இந்த சுலோகத்தில் கூறுகிறார் வில்லூர் சுவாமிகள்.

பாற்கடலுக்கு எப்படி அமுதம் வந்ததென்றால், பாற்கடலிலும் கும்பகோணத்திலும் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கிறாரே திருமால்!

அவரது திருமேனிக்கு வியர்த்தால் அந்த வியர்வைத் துளிகள் எங்கே சிந்தும்? பாற்கடலில்தான் சிந்தும்.

பாற்கடலில் சிந்திய திருமாலின் வியர்வைத் துளிகள் எல்லாம் ஒன்று கூடி அமுதமாக உருவாயின.

திருமாலின் வியர்வையே அமுதமாக உருவாகிறது என்றால் திருமால் எவ்வளவு இனியவராக இருப்பார்? அதனால்தான் அவர் ஆராவமுதம் என்று அழைக்கப்படுகிறார். அமுதம், ராஜ்ஜியம் உள்ளிட்ட பலன்களை விரும்பும் தேவர்களைப் போன்றோர், அதை மட்டும் பெற்றுக்கொண்டு திருமாலை மறந்து விடுகிறார்கள்.

ஆனால் ஆழ்வார்களைப் போன்ற மிக உயர்ந்த பக்தர்களோ, அமுதத்துக்கும் காரணமான ஆராவமுதம் திருமாலே என உணர்ந்திருக்கிறார்கள்.

அதனால் அவர்கள் மற்ற விஷயங்களில் கண் வையாது திருமாலையே இடைவிடாது வழிபட்டு வருகிறார்கள்.

அந்தத் திருமாலின் திருவடிகளுக்குத் தொண்டு செய்வதாகிய முக்தியையே பெரும் பேறாகக் கருதுகிறார்கள்.

இவ்வாறு வேறு பலனில் கண்வையாது இறைவனையே விரும்பும் மிக உயர்ந்த பக்திக்கு ‘மஹா இஜ்ய:’ என்று பெயர்.

இஜ்ய என்றால் வழிபாடு.

மஹா என்றால் மிக உயர்ந்த.

‘மஹேஜ்ய:’ (மஹா+இஜ்ய: = மஹேஜ்ய:) என்றால் மிக உயர்ந்த வழிபாட்டுக்கு இலக்காக இருப்பவர் என்று பொருள்.

உலகியல் பலனில் நாட்டம் வைக்காத ஆழ்வார்கள் போன்றவர்களின் உயர்ந்த பக்திக்கு இலக்காகத் திருமால் இருப்பதால், அவர் ‘மஹேஜ்ய:’ என்று அழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 448-வது திருநாமம்.

“மஹேஜ்யாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் பக்தியில் விரைந்து முன்னேறும்படி திருமால் அருள்புரிவார்.

——————-

449. க்ரதவே நமஹ (Krathavey namaha)

(திருநாமங்கள் 446 [யக்ஞ:] முதல் 463 [ஜிதக்ரோத:] வரை –

வேதச் சடங்குகளால் போற்றப்படுபவர் திருமால்)ராகவேந்திர சுவாமிகள் கும்பகோணத்துக்கு விஜயம் செய்த சமயம். தஞ்சை மாவட்டம் முழுவதுமே பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. மழை சரியாகப் பெய்யாததால் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. சுமார் பன்னிரண்டு ஆண்டுகளாக மழை பொழியாமல் பஞ்சம் நிலவி வருவதாக மக்கள் ராகவேந்திர சுவாமிகளிடம் தெரிவித்தார்கள்.

அப்போது ஆண்டுவந்த தஞ்சை மன்னர், ராகவேந்திர சுவாமிகளின் பெருமைகளைக் கேள்விப்பட்டு அவரை வந்து அடி பணிந்தார். “சுவாமி! சோழநாடு சோறுடைத்து என்பதற்கேற்ப, விவசாயத்தில் செழித்த இந்தத் தஞ்சைப் பகுதி இப்போது மழை பெய்யாததால் பஞ்சத்தில் தவித்து வருகிறது. தாங்கள்தான் இந்தப் பஞ்சம் நீங்குவதற்கு அருள்புரிய வேண்டும்!” என்று வேண்டினார் மன்னர்.அந்தப் பகுதி மக்களின் நடவடிக்கைகளைக் கவனித்த ராகவேந்திர சுவாமிகள், “மன்னனே! மனிதர்கள் ஐந்து வித வேள்விகளை அன்றாடம் தவறாமல் செய்து வரவேண்டும்.

அவற்றுக்குப் பஞ்ச மகா யக்ஞங்கள் என்று பெயர். அவை,

1) பிரம்ம யக்ஞம் – தினமும் வேதத்தில் இருந்து ஒரு பகுதியை ஓதுதல்.
2) தேவ யக்ஞம் – அக்னி ஹோத்ரம், ஔபாசனம் உள்ளிட்ட வைதிக கர்மாக்களால் தேவர்களை ஆராதித்தல்.
3) பித்ரு யக்ஞம் – முன்னோர்களுக்குச் செலுத்த வேண்டிய நீர்க்கடன் உள்ளிட்டவற்றை முறையாகச் செய்தல்.
4) மநுஷ்ய யக்ஞம் – வீடு தேடி வரும் விருந்தினருக்கும், ஏழையருக்கும் உணவு அளித்தல்.
5) பூத யக்ஞம் – மற்ற பிராணிகளுக்கு உணவு அளித்தல்

இந்த ஐந்து வித வேள்விகளாலும், வேதியர்கள் செய்யும் அக்னி ஹோத்ரம் ஔபாசனம் போன்ற வைதிகச் செயல்களாலும் ஆராதிக்கப் படுபவர் திருமால். இவற்றைச் சரியான முறையில் அனுஷ்டித்துத் திருமாலை மகிழ்வித்தால் மழை பொழியும், விளைச்சல் அதிகரிக்கும், செழுமை நிலைக்கும். இந்தக் கடமைகளைச் சரியாகச் செய்யாமல் போவதால்தான் பஞ்சம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுகின்றன!” என்று சொன்னார்.

பின் மன்னரைப் பார்த்து, “இங்கே உடனடியாக “காரீரேஷ்டி’’ என்னும் வேள்வியை இருபத்தொரு நாட்கள் நடத்துங்கள். மழை பொழியும்!” என்று சொல்லி அருளினார் ராகவேந்திர சுவாமிகள். மன்னரும் அவ்வாறே வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்தார். புரோகிதர்கள் மூலம் காரீரேஷ்டி வேள்வியை நடத்தி, அதனால் திருமாலை ஆராதித்து மகிழ்வித்தார் ராகவேந்திர சுவாமிகள். திருமாலின் திருவுள்ளம் மகிழ்ந்தவாறே சோழ நாட்டில் நல்ல மழை பொழிந்தது, பன்னிரண்டு ஆண்டுகாலப் பஞ்சம் நீங்கியது.

ராகவேந்திர சுவாமிகளின் பிரபாவத்தைக் கண்டு வியந்த தஞ்சை மன்னர், அவருக்கு ஒரு தங்கச் சங்கிலியைப் பரிசாக அளித்தார். தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாது, அனைத்தையும் திருமாலுக்கென்றே அர்ப் பணிப்பவரான ராகவேந்திர சுவாமிகள், அந்தத் தங்கச் சங்கிலியையும் வேள்வித் தீயில் திருமாலுக்கு அர்ப்பணித்தார். தான் கொடுத்த தங்கச் சங்கிலியைத் தீயில் இடுவதைக் கண்டு மன்னர் கோபம்கொண்டார்.

மன்னரின் முக பாவனையைக் கவனித்த ராகவேந்திர சுவாமிகள், முழு மனமில்லாமல் கொடுத்தவனின் பொருளை இறைவனுக்கு அர்ப்பணிக்கலாகாது எனக் கருதி, தம் கையை அக்னியில் விட்டு அந்தச் சங்கிலியை வெளியே எடுத்து மன்னரிடமே கொடுத்துவிட்டார். ராகவேந்திர சுவாமிகளின் கையிலோ, தங்க நகையிலோ அக்னி பட்டதற்கான எந்தச் சுவடுமே தெரியவில்லை. இதைக் கண்டு வியந்துபோன தஞ்சை மன்னர், ராகவேந்திரரின் பக்தரானார் என்பது வரலாறு. இதன்மூலம் நாம் அறிவது என்னவென்றால்;

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை – என்று வள்ளுவர் பாடியபடி, பிரம்ம யக்ஞம், தேவ யக்ஞம், பித்ரு யக்ஞம், மனுஷ்ய யக்ஞம், பூத யக்ஞம் ஆகிய ஐந்து வித வேள்விகளாலும் ஆராதிக்கப்படுபவர் திருமால். இவற்றால் ஆராதித்தால் திருமாலின் மனம் உவப்படைகிறது. இத்தகைய ஐம்பெரும் வேள்விகளுக்கு `க்ரதுக்கள்’ என்று பெயர். க்ரதுக்களால் ஆராதிக்கப்படுவதால் ‘க்ரது:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 449-வது திருநாமம்.

“க்ரதவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, வாழ்வில் எந்நாளும் செழிப்பு நிலைக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

——————————————
453. நிவ்ருத்தாத்மனே நமஹ (Nivrutthaathmaney namaha)

(குறிப்பு: சில பாடங்களில் இந்தத் திருநாமம் ‘விமுக்தாத்மா’ என்று வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பராசர பட்டரின் அதிகாரப் பூர்வமான விளக்கவுரையில் ‘நிவ்ருத்தாத்மா’ என்றே இத்திருநாமம் எடுத்தாளப்பட்டுள்ளது. அதையே நாமும் பின்பற்றுகிறோம்.)“என்ன யோசனையில் இருக்கிறீர்கள்?” என்று வைகுண்டத்தில் சிந்தனையில் ஆழ்ந்திருந்த திருமாலிடம் திருமகள் கேட்டாள். அதற்குத் திருமால், “உலகிலுள்ள மக்கள் எல்லோரும் உய்வடைய நாராயண நாமத்தை உள்ளடக்கிய `அஷ்டாக்ஷரம்’ என்னும் எட்டெழுத்து மந்திரத்தை உபதேசிக்க விழைகிறேன்!” என்றார். “விரைவில் அதைச் செய்ய வேண்டியது தானே!” என்று கேட்டாள் திருமகள். “தேவி! இம்மந்திரத்தை உபதேசிக்கும் குருவுக்கும், உபதேசம் பெறும் சீடனுக்கும் அனைத்து நற்பண்புகளும் நிறைந்திருக்க வேண்டும். அவர்கள் மூலமாக குரு சிஷ்ய பரம்பரையில் இம்மந்திரம் உலகில் பரவ வேண்டும். அத்தகைய குருவும் சிஷ்யனும் கிடைப்பார்களா என்று தான் தேடிக்கொண்டிருக்கிறேன்!” என்றார் திருமால்.

“குருவுக்கு என்னென்ன லட்சணங்கள் வேண்டும்?” என்று கேட்டாள் திருமகள். அதற்குத் திருமால், “முன்னோர்கள் காட்டிய நன்னெறியில் நிலை பெற்றவராகவும், சந்தேகம் இல்லாத தெளிவான ஞானம் பெற்றவராகவும், களங்கம் அற்றவராகவும், வேத வேதாந்தங்களில் ஆழங்கால்பட்டவராகவும், அசைக்க முடியாத பக்தி கொண்டவராகவும், சத்துவ குணம் நிறைந்தவராகவும், சத்தியத்தையே பேசுபவராகவும், தான் உபதேசம் செய்வதை வாழ்வில் பின்பற்றுபவராகவும், பொறாமை டம்பம் போன்ற தீய குணங்கள் அற்றவராகவும், மனதையும் புலன்களையும் வென்றவராகவும், சீடர்களுக்கு அனைத்து வித நன்மைகளையும் செய்ய வல்லவராகவும், கருணை மிக்கவராகவும், சீடர்கள் தவறு செய்கையில் சுட்டிக் காட்டித் திருத்துபவராகவும் இருப்பவரே நல்ல குரு ஆவார்!” என்றார்.

இதைக் கேட்ட திருமகள், “சுவாமி! இத்தனை லட்சணங்கள் பொருந்திய ஒரு குருவைத் தேடுவதை விட, அனைத்து மங்கல குணங்களுக்கும் இருப்பிடமான நீங்களே பூமியில் ஒரு குருவாக அவதாரம் செய்துவிடுங்கள்!” என்று ஆலோசனை சொன்னாள். அதன்பின், சீடன் எப்படி இருக்க வேண்டும் என்று திருமகள் கேட்க, “குருவுக்கு அனைத்துவிதப் பணிவிடைகளும் செய்பவனாகவும், நல்லொழுக்கம் மிக்கவனாகவும், ஞானம் பெறுவதில் ஆர்வம் கொண்டவனாகவும், அகந்தையற்றவனாகவும், குருவுக்கு அடங்கி நடப்பவனாகவும், பணிவோடு பேசுபவனாகவும், மனவடக்கமும் புலனடக்கமும் கொண்டவனாகவும், பொறாமை அற்றவனாகவும், குருவிடம் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்தவனாகவும், குருவிடம் நன்றி விஸ்வாசம் கொண்டவனாகவும் இருக்க வேண்டும்!” என்றார், திருமால்.

அதற்குத் திருமகள், “நல்ல குருகூட கிடைத்துவிடுவார். இத்தகைய குணங்கள் நிறைந்த சீடன் கிடைப்பது இன்னும் கடினம். உலக நன்மைக்காக நீங்கள் குருவாக அவதரிப்பதோடு நில்லாமல், சீடனாகவும் நீங்களே அவதாரம் செய்துவிடுங்கள்!” என்றாள். அதன்படி, பத்ரிநாத்தில் நாராயணன் என்னும் குருவாகவும், நரன் என்னும் சீடனாகவும் திருமாலே அவதாரம் செய்தார். நாராயண ரிஷி நரனுக்கு, எட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் செய்ய, அதன்பின் அம்மந்திரம் சிஷ்ய பரம்பரையில் பரவியது.

அந்த நர நாராயணர்களின் தவத்தைக் கலைக்க முற்பட்ட இந்திரன், தேவலோகத்தில் இருந்து பல தேவமாதுகளை அனுப்பி நடனம் ஆட வைத்தான். ஆனால் நாராயண ரிஷி அதற்கெல்லாம் கலங்காமல், தனது தொடையில் ஒரு பூவை வைத்தார். அந்தப் பூவில் இருந்து ஊர்வசி என்னும் பூவை வந்தாள். அவளது அழகைப் பார்த்து வெட்கப்பட்டு தேவமாதுகள் தேவலோகத்துக்கே ஓடி விட்டார்கள். அதன்பின் ஊர்வசி தேவலோகத்தில் நடனமாதாக ஆனாள் என்பதை நாம் அறிவோம்.

இப்படி உலகியல் ஆசைகளை வென்ற நாராயணன் என்னும் குருவாகவும், நரன் என்னும் சீடனாகவும் அவதாரம் செய்து, சரணாகதி செய்வோருக்கு அவசியம் அறியத் தக்கதான எட்டெழுத்து மந்திரத்தைப் பிரச்சாரம் செய்தார் திருமால். அந்த நர நாராயண அவதாரத்தில் தான், உலகியல் ஆசைகள் நீங்கிய மனம் படைத்தவர் என்பதைத் திருமால் உணர்த்தியதாலே, அவர் ‘நிவ்ருத்தாத்மா’ என்று அழைக்கப்படுகிறார். ஆத்மா என்பது இங்கே மனதைக் குறிக்கிறது. நிவ்ருத்த என்றால் நீங்கப்பெற்ற. ‘நிவ்ருத்தாத்மா’ என்றால் உலகியல் ஆசைகள் நீங்கப் பெற்ற மனதை உடையவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 453-வது திருநாமம்.“நிவ்ருத்தாத்மனே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் மனங்களில் தாழ்ந்த ஆசைகள் ஏற்படாதபடித் திருமால் காத்தருள்வார்.

—————–

———————–

457 (B) ஸுமுகாய நமஹ: (Sumukhaaya namaha)

(திருநாமங்கள் 457[ஸுமுக:] முதல் 470 [நைககர்மக்ருத்] வரை – தேவர்களுக்கு அமுதம் தந்த வரலாறு)[குறிப்பு: 456-வது திருநாமம் [ஸுவ்ரத:] முதல் 463-வது திருநாமம் [ஜிதக்ரோத:] வரை உள்ள 8 திருநாமங்கள் நர-நாராயண அவதாரங்களைக் குறிப்பதாக ஏற்கனவே ஸ்ரீபராசர பட்டர் விளக்கவுரை வழங்கினார். இனி, அவரே தமது விளக்கவுரையில், 457-வது திருநாமம் [ஸுமுக:] முதல் 463-வது திருநாமம் [ஜிதக்ரோத:] வரை உள்ள 7 திருநாமங்கள், தேவர்களுக்குத் திருமால் அமுதம் தந்த வரலாற்றையும் குறிப்பிடும் வகையிலும் அமைந்துள்ளன என்று காட்டி, அதைத் தொடர்ந்து 464-வது திருநாமம் [வீரபாஹு:] முதல் 470-வது திருநாமம் [நைககர்மக்ருத்] வரை உள்ள அடுத்த 7 திருநாமங்களும் கூட அதே அமுதம் கடைந்த வரலாற்றைச் சொல்வதாக விளக்கவுரை வழங்கியுள்ளார். ஆகவே, 457 முதல் 463 வரை உள்ள திருநாமங்கள் நர நாராயண அவதாரங்களையும் குறிக்கும், அமுதம் கடைந்த வரலாற்றையும் குறிக்கும்.]

துர்வாசரின் சாபத்தால் தேவர்கள் தங்கள் செல்வத்தையும், வலிமையையும் இழந்து நின்ற நிலையிலே, தேவர்கள் அனைவரும் திருமாலின் உதவியை நாடினார்கள். அசுரர்களோடு கூட்டணி சேர்ந்து திருப்பாற்கடலைக் கடையும் படி தேவர்களுக்கு அறிவுரை சொன்னார் திருமால். அதன்படி திருப்பாற்கடல் கடையப்பட்ட போது, முதலில் ஆலகால விஷம் வந்தது. அதன் வீரியத்தைக் கண்டு தேவர்கள் அஞ்சிய வேளையில், பரமசிவனின் உதவியை நாடும்படி அவர்களை அறிவுறுத்தினார் திருமால். தேவர்கள் பிரார்த்னைக்கு இணங்கி விஷத்தைக் குடித்துத் தேவர்களைக் காத்தார் சிவபெருமான்.

அதன்பின் பாற்கடல் மீண்டும் கடையப்பட்ட போது, காமதேனு வந்தது. தங்களது அக்னிஹோத்ரத்துக்காக ரிஷிகள் அந்தக் காமதேனுவைப் பெற்றுக் கொண்டார்கள். அதைத் தொடர்ந்து, `உச்சைசிரவஸ்’ என்ற குதிரை, ஐராவதம் என்ற யானை, கௌஸ்துப மணி பாரிஜாத மரம், அப்ஸரஸ் பெண்கள் போன்ற பலரும் திருப்பாற்கடலில் இருந்து தோன்றினார்கள். அமுதில் வரும் பெண்ணமுதாகத் தோன்றிய மகாலட்சுமி, திருமாலையே தனக்குக் கணவனாகத் தேர்ந்தெடுத்து மணம்புரிந்து, அவரது திருமார்பிலே ஏறி அமர்ந்து கொண்டாள். மேலும், தேவ – அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தவாறே, ஓர் அதிசய புருஷன் பாற்கடலில் இருந்து தோன்றினார். அவர்தான் திருமாலின் அவதாரமான தன்வந்தரி. ஸ்ரீமத் பாகவத புராணத்தில் தன்வந்தரியின் தோற்றத்தை சுக ப்ரம்மம் 8ஆம் ஸ்கந்தம் 8ஆம் அத்யாயத்தில் வர்ணிக்கிறார்.

*தீர்க்க பீவர தோர்தண்ட: – நீண்ட பருமனான திருத்தோள்கள்
*கம்புக்ரீவ:- சங்கு போன்ற கழுத்து
*அருணேக்ஷண:- தாமரை போல் சிவந்த திருக்கண்கள்
*ச்யாமள: – கருநீல வண்ணத் திருமேனி
*தருண: – இளைஞனின் தோற்றம்
*ஸ்ரக்வீ: – கழுத்திலே அழகிய மாலைகள்
*ஸர்வாபரணபூஷித: – திருமேனியில் அனைத்து வித ஆபரணங்கள்
*பீதவாஸா: – இடுப்பில் பீதாம்பரம் என்னும் மஞ்சள் பட்டாடை
*மஹோரஸ்க: – அகன்ற திருமார்பு
*ஸும்ருஷ்ட மணிகுண்டல: – காதுகளில் தூயரத்தினங்கள் பதித்த குண்டலங்கள்
*ஸ்நிக்த குஞ்சித கேசாந்த: – வழவழப்பான சுருட்டையான கேசம்
*ஸுபக:- பேரழகன்
*ஸிம்ஹவிக்ரம: – சிங்கம் போல் கம்பீரமான நடை

இத்தகைய தோற்றம் கொண்ட அந்தத் தன்வந்தரி பகவான் தனது திருக்கையில் அமுதக் கலசத்தை ஏந்திக் கொண்டு வந்தார். அந்த தேவாமுதத்தைத்தான், எடுத்து தேவர்களுக்குத் திருமால் வழங்கினார். கையில் கொண்டு வந்த அமுதம் எவ்வளவு இனிமையானதோ, அதை விட அந்த அமுதைக் கொண்டு வந்த தன்வந்தரியின் முகம் மிகவும் இனிமையாக இருந்ததாம்.

“ஆனந்தாம்ருத ஸம்பூர்ண வதனேன இந்துகாந்தினா கலசாக்ருதி ரூபேண கரஸ்தேன விராஜிதம்”

அமுதைப் பொழியும் நிலவை விட அழகிய, ஆனந்தம் தரவல்ல முகத்தோடு விளங்கிக் கையில் உள்ள அமுதைத் தன் முக அழகாகிய அமுதால் வென்றவராக தன்வந்தரி பகவான் விளங்கினார். அவர்தான், ஆயுர்வேத சாஸ்திரத்தை உலகுக்கு அளித்தவர். ‘வைத்யோ நாராயணோ ஹரி:’ என்றும் ‘மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணன்’ என்றும் போற்றப்படுபவர் அவரே. மருத்துவர்களால் வணங்கப்பட வேண்டிய திருமாலின் வடிவமாக தன்வந்தரி திகழ்கிறார். இப்படி அழகிய முகத்தோடு தன்வந்தரியாகத் தோன்றியதால், திருமால் ‘ஸுமுக:’ அழகிய முகம் படைத்தவர் என்று அழைக்கப்படுகிறார். அதுவே சஹஸ்ரநாமத்தின் 457வது திருநாமம்.

“ஸுமுகாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்நாளில், எந்நாளும் இனியநாளாக அமையும்படி திருமால் அருள்புரிவார்.

—————–

458 (B) ஸூக்ஷ்மாய நமஹ: (Sookshmaaya namaha)

ஒருமுறை திருமாலைத் தரிசிப்பதற்காகக் காரிய வைகுண்ட லோகத்துக்கு நாரதர் சென்றார். நாரதரைப் பார்த்தவாறே, மகாலட்சுமி தனது அறைக்குள்ளே சென்று விட்டாள். இதைக் கண்ட நாரதர், திருமாலிடம், “இறைவா! அடியேன் புலன்களை எல்லாம் வென்றவன். எந்தவித தாழ்ந்த ஆசைகளும் இல்லாதவன்! அப்படியிருக்க என்னைக் கண்டு ஏன் அன்னை விலகி நிற்கவேண்டும்?” என்று கேட்டார்.

அதற்குத் திருமால், “நாரதா! உலகியல் ஆசைகளை வெல்வது மிகவும் உயர்ந்த விஷயமே. ஆனால், உலகியல் ஆசைகளை வென்றவன் என்று கர்வம் கொள்வது தவறாயிற்றே. ஆசையை வென்றவன் என்று கர்வத்தோடு சொல்லிக் கொள்ளும் உன்னை, எனது ஆச்சரிய சக்தியாகிய மாயையால் நான் எப்போது வேண்டுமானாலும் மயக்க முடியும்!” என்றார். “அதெல்லாம் நான் மயங்க மாட்டேன்!” என்று கர்வத்துடன் சொன்னார் நாரதர். “அப்படியா? என்னுடன் வா!” என்று சொன்ன திருமால், நாரதரைத் தன்னோடு கருட வாகனத்தில் அமர்த்தி நர்மதா நதிக்கரைக்கு அழைத்துச் சென்றார். “நாரதா! நீ போய் நர்மதையில் நீராடிவிட்டு வா!” என்றார் திருமால். நாரதரும் நீராடிவிட்டு வெளியே வந்தார்.

வந்து பார்த்தால், நதிக்கரையில் திருமாலையோ கருடனையோ காணவில்லை. நாரதர் தன் நினைவையே மறந்தவர் போல் தெரிந்தார். மேலும், தண்ணீரில் அவரது முகத்தின் பிரதிபலிப்பைப் பார்த்த போது, அது பெண் உருவமாகத் தெரிந்தது. நாராயணனின் மாயையால் இப்போது நாரதர் பெண்ணாக மாறிவிட்டார். தான் நாரதர் என்பதையும் மறந்து விட்டார்.ஏதும் செய்வதறியாமல் நதிக்கரையில் அவர் நின்றிருக்க, அப்பகுதியை ஆட்சி செய்த மன்னன் தற்செயலாக அங்கே வந்தான். பெண்நாரதரின் வடிவில் மயங்கிய அவன், அவளைத் திருமணம் செய்து கொண்டான். தான்யார் என்ற புரிதலே இல்லாமல் மகாராணியாக வாழ்ந்து வந்தாள் பெண்நாரதர். அவளுக்குப் பன்னிரண்டு மகன்கள் பிறந்தனர். மன்னனும் பெண்நாரதரும் அப்பன்னிரண்டு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கித் திருமணமும் செய்து வைத்தார்கள். இந்நிலையில், அடுத்த நாட்டு அரசன் இவர்களின் நாட்டை எதிர்த்துப் போர் புரிய வந்தான். இவர்களின் பன்னிரண்டு மகன்களும் போர் புரியச் சென்று போர்க்களத்தில் மாண்டு போனார்கள்.

புத்திர சோகத்தால் மன்னனும் பெண்நாரதரும் கதறி அழுது கொண்டிருந்த வேளையில், ஒரு முனிவர் அங்கே வந்தார். இருவரையும் நர்மதா நதிக்கரைக்கு அவர் அழைத்துச் சென்றார். பெண்நாரதரைப் பார்த்து, “நீ நதியில் இறங்கி நீராடு!” என்றார். நீராடி விட்டு மேலே எழுந்தவாறே, பழைய தோற்றமும் பழைய நினைவும் நாரதருக்குத் திரும்பியது. நாரதரை வியப்புடன் பார்த்த மன்னனிடம் முனிவர், “மன்னா! நீ உன் மனைவியை எந்த இடத்தில் பார்த்தாயோ அதே இடத்தில் இப்போது பிரிகிறாய். நீ பலப்பல பிறவிகள் எடுத்து விட்டாய். அதில், எத்தனையோ மனைவிகளும் மகன்-மகள்களும் உனக்கு இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் நீ வேதனைப் படப்போகிறாயா? நீ இறைவனைக் குறித்துத் தவம் புரிந்து நற்கதி அடைவாயாக!” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தார் முனிவர்.

கரை சேர்ந்த நாரதருக்கு முனிவர் திருமாலாக காட்சி அளித்தார். “நாரதா! என் மாயை உன்னை எப்படி மயக்கும் என்பதை உணர்த்தவே உன்னைப் பெண்ணாக்கி இத்தகைய ஒரு லீலையைச் செய்தேன். புலன்களை வென்றால் மட்டும் போதாது. நான் வென்றேன் என்ற கர்வத்தை விடுத்து, இறைவன் அருளால் புலன்கள் வசப்பட்டன என்று சொல்லும் பணிவும் வர வேண்டும். இதை உனக்கு உணர்த்தவே நானும் திருமகளும் சேர்ந்த இந்த லீலையைச் செய்தோம். நீயும் மயங்கி விட்டாய்!” என்றார் திருமால்.

அப்போது நாரதர், “இறைவா நான் என்ற கர்வம் கொள்வதும் அசுரத் தன்மைகளுள் ஒன்று. அசுரத் தன்மை கொண்டவர்கள் உன் மாயையில் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களால் உன்னை அறிய முடியாது. என் மனதில் அசுரத் தன்மை எழுந்ததால், அடியேனும் உன்னை மறந்தேன், என்னையும் மறந்தேன்!  மன்னித்தருள்க!” என்று வேண்டினார்.திருமாலும் மன்னித்து அருள்புரிந்தார். பாற்கடல் கடைந்த போதும், அசுரர்களுக்குத் தன் திட்டம் தெரியாதபடி, அவர்களை மயக்கி நல்லவர்களான தேவர்களுக்கு அமுதம் கிட்டும்படிச் செய்தார் அல்லவா திருமால்? அதனால்தான் அவர் ‘ஸூக்ஷ்ம:’ என்று அழைக்கப் படுகிறார். ‘ஸூக்ஷ்ம:’ என்றால் இவ்விடத்தில் அறிய முடியாதவர் என்று பொருள். அசுரர்களால் அறிய முடியாத சிந்தனை கொண்டதால் அமுதம் தந்த திருமால் ‘ஸூக்ஷ்ம:’ எனப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 458வது திருநாமம்.

“ஸூக்ஷ்மாய நமஹ:” என்று தினமும் சொல்லி வந்தால், கர்வம் போன்ற தீய குணங்களுக்கு நாம் வசப்படாமல் இருக்க திருமால் அருள்புரிவார்.

————–

459 ஸுகோஷாய நமஹ: (Sughoshaaya namaha)

வைகுண்டத்தில் திருமாலுக்கு அணுக்கத் தொண்டர்களாக இருந்து கைங்கரியம் செய்யும் அடியார்கள் நித்திய சூரிகள் என்று அழைக்கப் படுகிறார்கள். ஒருநாள் அவர்களைத் தன் அருகில் அழைத்த திருமால், “பூமியில் துவாபரயுகம் முடிந்து கலியுகம் வரப்போகிறது. இதுவரையிலான யுகங்களில் நான் பூமியில் அவதாரம் செய்து மக்களைத் திருத்த முயன்றேன். கலியுகத்தில் உள்ளவர்கள் நானே இறங்கிப் போனாலும் திருந்துவார்களா என்று தெரியவில்லை. யானையைக் கொண்டே யானையைப் பிடிப்பது போல், ஜீவாத்மாக்களான உங்களை என் பிரதி நிதிகளாகப் பூமிக்கு அனுப்பி வைத்து உங்களைக் கொண்டு மக்களைத் திருத்தலாம் என்று நானும், திருமகளும் திட்டமிட்டுள்ளோம்!” என்று கூறினார்.

“எம்பெருமானே! நாங்கள் என்ன செய்ய வேண்டும்? கட்டளை இடுங்கள்!” என்று நித்தியசூரிகள் கேட்டார்கள். அதற்குத் திருமால், “நீங்கள் பூமியில் போய் எனது பக்தர்களாக அவதாரம் செய்து பக்தியில் ஆழ்ந்திருந்து என்னைப் பற்றிப் பாடல்கள் பாட வேண்டும். அரிய கடினமான வேதங்களை அறிய முடியாதவர்கள், உங்களது இனிய எளிய தமிழ்ப் பாடல்களால் என்னை எளிதில் உணர்ந்து கொள்வார்கள்! எனவே பூமியில் போய் என்னைப் பற்றி அமுதத் தமிழில் பாடுங்கள்!” என்றார். “அப்படியே செய்கிறோம்!” என்றார்கள் நித்தியசூரிகள்.

முதலில் தன் கையில் உள்ள பாஞ்சஜன்னிய சங்குக்கு அதிபதியான நித்தியசூரியை அழைத்த திருமால், “நீ பூமியில் பொய்கை ஆழ்வாராகப் பிறக்க வேண்டும். சங்கின் நிறம் போல் வெண்மையான தத்துவ குணத்தை உனது பாடல்களால் மக்களுக்கு ஊட்ட வேண்டும்!” என்றார். அடுத்தபடியாகத் தனது கௌமோதகி என்னும் கதாயுதத்திடம், “நீ பூதத்தாழ்வாராகத் தோன்றி, எப்போதும் என் கைப்பாவையாக இருப்பது போல், உயிர்கள் எல்லோரும் என்னையே தஞ்சம் புகுந்து என் கைப்பாவைகளாக இருந்தால், நான் அவர்களைக் காப்பேன் என்பதை உன் பாடல்களால் மக்களுக்கு நீ உணர்த்த வேண்டும்!” என்றார்.

நந்தகம் என்னும் தன் வாளிடம், “நீ பேயாழ்வாராகத் தோன்றி, அறியாமை என்ற இருளை வெட்டி ஞான ஒளியை உன் பாடல்கள் மூலம் மக்களுக்கு வழங்க வேண்டும்!” என்றார். சுதர்சனச் சக்கரத்திடம், “தீய சக்திகளை அழிக்கும் நீ, பூமியில் திருமழிசைப் பிரானாகத் தோன்றித் தவறான கொள்கைகளைக் களைந்து வேத நெறியை நிலைநாட்ட வேண்டும்!” என்றார். தம் படைத்தளபதியான விஷ்வக்சேனரிடம், “நித்தியசூரிகளின் தலைவரான நீங்கள், ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வாராக அவதாரம் செய்து சரணாகதி நெறியை உலகுக்கு உணர்த்த வேண்டும்!” என்றார். விஷ்வக்சேனரின் தொண்டரான குமுதனிடம், “நீ நம்மாழ்வாரின் சீடர் மதுரகவிகளாக அவதரித்து, குருபக்தியின் பெருமையை உலகுக்கு உணர்த்த வேண்டும்!” என்றார்.

தமது கௌஸ்துப மணிக்கு அதிபதியான நித்திய சூரியிடம், “நீ குலசேகரப் பெருமாளாகத் தோன்றி, என் நெஞ்சுக்கினிய பாடல்களைப் பாடவேண்டும்!” என்றார். கருடனைப் பார்த்து, “வேத சொரூபியான நீ, வேதம் வல்ல பெரியாழ்வாராகத் தோன்றி வேத சாரத்தை விவரிக்க வேண்டும்!” என்றார். பூமி தேவியிடம், “நீ கோதைப் பிராட்டியாக அவதரித்து, எனக்குப் பூமாலை மற்றும் பாமாலை சமர்ப்பிப்பதன் மேன்மையைப் பாடவேண்டும்!” என்றார். தனது வைஜயந்தி மாலையிடம், “நீ தொண்டரடிப் பொடி ஆழ்வாராகப் பூமியில் தோன்றி, எனக்கு மாலைகள் சமர்ப்பித்துத் தொண்டு செய்து, பாசுரங்கள் பாட வேண்டும்!” என்றார்.

தன் மார்பில் உள்ள ஸ்ரீவத்சம் என்னும் மறுவுக்கு அதிபதியான நித்திய சூரியிடம், “நீ திருப்பாணாழ்வாராகத் தோன்றி என் இதயத்தில் எப்போதும் குடியிருக்கும் இனிய பாடல்களைப் பாடவேண்டும்!” என்றார். தமது சார்ங்க வில்லிடம், “நீ திருமங்கை ஆழ்வாராகத் தோன்றி வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் என் திருக்கோயில்களுக்கெல்லாம் சென்று என்னைப் பாட வேண்டும்!” என்றார். “நித்தியசூரிகளே! பக்தியில் ஆழ்ந்திருக்கும் நீங்கள் ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுவீர்கள். நீங்கள் பாடும் தமிழ்ப் பாடல்கள் வடமொழி வேதங்களை விட ஏற்றம் பெற்று விளங்கும். பூமியிலும் சரி, வைகுண்டத்திலும் சரி, வேத கோஷம் என்னைச் சூழ்ந்திருப்பது போல், உங்கள் பாடல்களின் ஒலியும் என்னைச் சூழ்ந்திருக்கும்!” என்று அருள்புரிந்து அவர்களைப் பூமிக்கு அனுப்பி வைத்தார் திருமால்.

இப்படி வடமொழி மற்றும் தமிழ் வேத கோஷங்கள் எப்போதும் திருமாலைச் சூழ்ந்திருப்பதால், அவர் ‘ஸுகோஷ:’ என்று அழைக்கப்படுகிறார். நர நாராயண அவதாரத்திலும் எப்போதும் வேத மந்திரங்கள் அவரைச் சூழ்ந்திருந்து துதித்தன. ‘ஸுகோஷ:’ என்றால் மங்கல வேத ஒலிகளை உடையவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 459வது திருநாமம்.

“ஸுகோஷாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல இனிய குரல்வளம் ஏற்படும்படி திருமால் அருள்புரிவார்.

————

460 ஸுகதாய நமஹ: (Sukhadhaaya namaha)

கண்ணன் தனது அவதாரத்தை நிறைவு செய்து கொண்டு, வைகுண்டம் செல்லத் தயாரானான். அப்போது கண்ணனின் நெருங்கிய நண்பரும் பக்தருமான உத்தவர் கண்ணனை அடிபணிந்து, “கண்ணா! உன் திருவடித் தாமரைகளைப் பிரிந்து ஒரு நொடியும் என்னால் வாழ இயலாது. என்னையும் உன்னோடு அழைத்துச் செல்ல வேண்டும்!” என்று பிரார்த்தித்தார். அப்போது கண்ணன், “உத்தவா! எனது இருப்பிடமான வைகுண்டத்தை நீ எப்படியும் வந்து அடையத்தான் போகிறாய். ஆனால், அந்த வைகுண்டத்தை அடைவதற்கு பக்தி யோகம், சரணாகதி என்று இரண்டு வித வழிகள் உள்ளன. அவற்றுள் பக்தியோக தியான முறையை உனக்கு விளக்குகிறேன். அதைப் பின்பற்றி நீ என்னை வந்து சேர்வாயாக!” என்றார்.

“கண்ணா! உலகியல் விஷயங்களையே பார்த்து வந்த மனிதர்களான நாங்கள் பக்தியோக தியானத்தில் ஈடுபடுவது சாத்தியமா?” என்று வினயத்துடன் கண்ணனிடம் கேட்டார் உத்தவர். அதற்குக் கண்ணன், “பாஞ்சராத்ர ஆகமம், கீதை போன்ற நூல்களில் நான் விதித்தபடி எனக்குப் பூஜை செய்தல், அர்ச்சனை செய்தல், கோயில் களிலே தொண்டு செய்தல், என் நாமங்களைப் பாடுதல், என் கதைகளைக் கேட்டல், எனது வடிவைத் தியானித்தல் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். அவரவருக்கென்று விதிக்கப்பட்ட கடமையைப் பலனில் ஆசையின்றிச் சரியாகச் செய்ய வேண்டும். இதைச் செய்யச் செய்ய மனம் பண்பட்டு பக்தியோக தியானத்தில் ஈடுபடும் ஆற்றல் ஏற்படும்!” என்றார்.

மேலும் கண்ணன், “உத்தவா! கபடமும் கர்வமும் இல்லாமல், வெறுப்பு இல்லாமல், குருவிடம் பக்தி நிறைந்தவனாக, ஜீவாத்ம – பரமாத்மாக்களை அறிவதில் ஆர்வம் கொண்டவனாக, வீண்பேச்சு பேசாதவனாக இருப்பவனுக்கு பக்தியோகம் நன்றாகக் கைகூடும். சூரிய மண்டலத்துக்குள் இருக்கும் என்னை வேத மந்திரங்களாலும், அக்னியில் இருக்கும் என்னை அவிஸ் அர்ப்பணிப்பதாலும், வேதியர்களுக்குள் இருக்கும் என்னை அதிதி பூஜையாலும், பசுவுக்குள் இருக்கும் என்னைப் புல் அளிப்பதன் மூலமாகவும், பக்தனுக்குள் இருக்கும் என்னை உபசாரத்தின் வாயிலாகவும், இதயத்தில் இருக்கும் என்னைத் தியானத்தாலும், வாயுவுக்குள் இருக்கும் என்னை முக்கியப் பிராணனாக எண்ணியும், எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கும் என்னைச் சம புத்தியாலும் ஆராதிக்க வேண்டும்.

பக்தியோகத்தில் ஈடுபடுபவன் உலகியல் இன்பங்களையோ, இந்திர லோகத்தையோ, ஆத்ம அனுபவத்தையோ விரும்ப மாட்டான். என்னை அடைவதை மட்டுமே தனது உயரிய குறிக்கோளாகக் கொள்வான். அழகிய முகத்தோடும், நீண்ட அழகிய நான்கு தோள்களோடும், அழகிய கழுத்தோடும், அழகிய கன்னங்களோடும், அழகிய புன்னகையோடும், மகரக் குண்டலங்கள் ஒளிவீசும் காதுகளோடும், பட்டுப் பீதாம்பரத்தோடும், கார்முகில் போன்ற வண்ணத்தோடும், திருமார்பில் ஸ்ரீவத்சம் என்ற மறுவோடும், சங்கு சக்கரம் கதை தாமரை வனமாலை சிலம்பு கௌஸ்துபம் உள்ளிட்ட ஆபரணங்களோடும் திகழும் எனது வடிவத்தை இடைவிடாது தியானித்துக் கொண்டே இருந்தால் அது பக்தியோகம் ஆகும்.

உத்தவா! என்னை அடைய விரும்புகிறாய் அல்லவா? என் ஆணைப்படி நீ பத்ரிநாத்துக்குச் செல். எனது பாத நீரான கங்கா நதியில் நீ நீராடுவாயாக. கங்கையில் நீராடித் தூய்மை அடைந்து, அதன்பின் உலகியல் இரட்டைகளைப் பொருட்படுத்தாமல், மனதையும் புலன்களையும் அடக்கி, நான் சொன்ன முறையில் என்னைத் தியானித்து பக்தியோகத்தில் ஈடுபடுவாயாக. என் ஆணைப்படி பக்தியோகத்தில் ஈடுபடும் நீ, விரைவில் பேரானந்தத்தை அடைவாய்.

உன்னைப் போல் பக்தியோக தியானம் பயில்வோர்க்கு ஆனந்தம் வழங்கவே பத்ரிநாத்தில் நர நாராயணர்களாக நான் அவதாரம் செய்திருக்கிறேன். எனவே என்னைத் தியானித்து பத்ரிநாத்தில் பக்தியோகம் புரியும் நீ விரைவாகப் பேரானந்தமாகிய முக்தியை அடைந்து விடுவாய்!” என்று அருள்புரிந்தான். கண்ணனின் ஆணைப்படி பத்ரிநாத்தை அடைந்த உத்தவரும் அவ்வாறே பக்தி யோகத்தில் ஈடுபட்டுப் பேரானந்தமாகிய வைகுண்டத்தைப் பெற்றார்.

இப்படி பக்தியோக தியானத்தில் ஈடுபடுவோர்க்குப் பேரானந்தம் தருவதால் ‘ஸுகத:’ என்று நர-நாராயண வடிவிலான திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 460வது திருநாமம். ஸுகத என்றால் பேரானந்தத்தை வழங்குபவர் என்று பொருள்.

“ஸுகதாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் பேரானந்தத்தைத் திருமால் அருள்வார்.

—————

461. ஸுஹ்ருதே நமஹ (Suhrudhey namaha)
(திருநாமங்கள் 456 [ஸுவ்ரத:] முதல் 463 [ஜிதக்ரோத:] வரை – நர நாராயண அவதாரம்)

ஒரு மனிதனுக்கு நான்கு நண்பர்கள் இருந்தார்களாம். அவர்களுள் முதல் நண்பன், இந்த மனிதன் மீது மிகவும் அன்பு காட்டி அவனுக்கு அனைத்து வித நன்மைகளையும் செய்துவந்தான். ஆனால் அதை உணர்ந்து கொள்ளாத அந்த மனிதன், முதல் நண்பனைக் கண்டுகொள்ளாமலேயே தனது வாழ்வை நடத்தி வந்தான்.

இரண்டாவது நண்பன் இந்த மனிதனுக்கு ஆபத்து வரும் போதெல்லாம் உதவி செய்து கொண்டும், ஆலோசனைகள் வழங்கிக் கொண்டும் இருந்தான். அந்த ஆலோசனைக்காகவும் உதவிகளுக்காகவும் அந்த நண்பனிடம் நட்பு பேணி வந்தானே ஒழிய, அவன் மீது இந்த மனிதனுக்கு முழுமையான அன்பு இருப்பதாகத் தெரியவில்லை.

மூன்றாவது நண்பன் மிகப்பெரிய செல்வந்தன். அந்தப் பணத்தின் மீதுள்ள ஆசையாலே அந்த நண்பனிடம் இந்த மனிதன் நட்பு பாராட்டினான். அந்த நண்பனிடம் வேறு யாராவது நட்பு கொண்டால் கூட அவர்களும் அவனது செல்வத்தைப் பெற்று விடுவார்களோ என்று அஞ்சி அஞ்சி அந்த நண்பனோடு இவன் பழகிவந்தான்.

நான்காவது நண்பன், இவனுக்குப் பெரிதாக எந்த உதவியும் செய்யவில்லை. ஆனாலும், இந்த மனிதனோடு கூடவே இருந்து முகத்துதி பாடிக் கொண்டிருந்தான். உண்மையில் இந்த நான்காவது மனிதன்தான் தனக்கு அனைத்து வித நன்மைகளும் செய்யக்கூடியவன் என்று கருதிக் கொண்டு, ஆத்மார்த்தமாக அந்த நான்காவது நண்பனை நேசித்தான் இந்த மனிதன்.

இந்நிலையில், இந்த மனிதனின் மரணக் காலம் வந்தது. யம தூதர்கள் வந்து அவன் மீது பாசக் கயிற்றை வீசினார்கள். தான் மிகவும் நேசித்த நான்காவது நண்பன் தான் தன்னோடு வருவான் எனக்கருதி அவனை அழைத்தான் மனிதன். வர மறுத்தான் நான்காவது மனிதன். மூன்றாவது நண்பனை அழைத்தான். அவனும் வரவில்லை. இரண்டாவது நண்பனை அழைத்த போது, அவனும் மறுத்தான். ஆனால், இவன் அழைக்காமலேயே முதல் நண்பன் மட்டும் அவனுக்கு உதவியாக உடன் வந்தான். “நீ எங்கே சென்றாலும் நான் உன்னோடு வருவேன்! உன்னை விடமாட்டேன்! நான் உனக்குச் செய்த நன்மைகளை நீ உணராவிட்டாலும் நான் நன்மை செய்வேன்!” என்றான் முதல் நண்பன்.

யார் அந்த மனிதன்? யார் அந்த நண்பர்கள்? அந்த மனிதன்தான் ஜீவாத்மா (நாம் அனைவரும்). நான்காவது நண்பன் நமது உடல். நாம் வாழும்போது, இந்த உடல்தான் நமக்கு எல்லாம் என்று கருதிப் புறஉடலில் கவனம் செலுத்தி வாழ்கிறோம். ஆனால், இறுதிக் காலத்தில் யமன் நம்மைக் கொண்டு செல்லும் போது இந்த உடல் நம்மோடு வருவதில்லை.

மூன்றாவது நண்பன்தான் நமது செல்வம். வாழ்நாள் முழுவதும் பணத்தின் உதவி நமக்குத் தேவை என்று கருதிப் பணத்தைச் சேர்த்து வைக்கிறோம். பிறர் அதைக் கொண்டு செல்லாமல் பாதுகாக்க முயல்கிறோம். ஆனால், மரணித்தபின் அந்தப் பணம் நம்மோடு வருவதில்லை. இரண்டாவது நண்பன், நமது சொந்தங்களும் நண்பர்களும். உதவியும் ஆலோசனையும் வழங்கி சுற்றமும் நட்பும் உயிர் பிரியும் தறுவாயில் வருந்துவார்களே ஒழிய, உடன் வர மாட்டார்கள். ஆனால், நாம் கண்டுகொள்ளாத அந்த முதல் நண்பன்தான் இறைவன். நாம் அவனை மறந்தாலும், அவன் நம்மை மறவாது நமக்குள் நம்மோடு நமது நண்பனாக உடன் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் எல்லாவித நன்மைகளையும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல், நமக்கு நன்மைகளை செய்து கொண்டேயிருக்கிறான். என்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் துணைநிற்கும் ஒரே நண்பன் அவன்தான் என்பதை நாம் உணர்வதில்லை.

எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்பவனாக, உற்ற நண்பனாக இருக்கும் அந்த இறைவன், உலக நன்மைக்காக நர நாராயணர்களாக அவதாரம் செய்து உலக நன்மைக்காகத் தவம் புரிந்தான். அதனால் நர நாராயண அவதாரம் செய்த திருமால் ‘ஸுஹ்ருத்’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸுஹ்ருத்’ என்றால் நல்ல மனம் படைத்த நண்பர் என்று பொருள். அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்யும் நல்ல மனம் கொண்ட நண்பனாகிய திருமால் ‘ஸுஹ்ருத்’ எனப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 461வது திருநாமம்.

“ஸுஹ்ருதே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் சிறந்த நண்பனாக இருந்து அனைத்து நன்மைகளையும் செய்தருள்வார்.

————–

462. மனோஹராய நமஹ (Manoharaaya namaha)

ஒரு ஊரில் ஒரு பெரிய கலவரம் நடந்தது. அச்சமயம் அந்த ஊரில் இருந்த கலவரக்காரர்கள் அவ்வூர் கோயிலுக்குள் சென்று, அங்குள்ள விக்கிரகத்தை வெளியே கொண்டு வந்துதரையில் போட்டு உடைத்தார்கள். இக்காட்சியை அந்த ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞன் பார்த்தான், சிந்திக்கத் தொடங்கினான். “தங்களது பிரார்த்தனை எல்லாம் நிறைவேற வேண்டும் என்பதற்காக இந்தத் தெய்வத்திடம் எல்லோரும் வந்து வேண்டுகிறார்கள்.

தங்களைக் காக்க வேண்டும் என்று மக்களால் வேண்டப்படும் தெய்வத்துக்குத் தன்னைக் காத்துக் கொள்ளக் கூட சக்தியில்லையே! அதனால் தானே கலகக்காரர்கள் இந்தச் சிலையை உடைத்து விட்டார்கள்! அப்படியானால் கோயிலில் உள்ள சிலைகளில் இறைவன் உள்ளானா? இல்லையா? நாம் செய்யும் வழிபாடுகள் உண்மையில் இறைவனைச் சென்று சேர்கின்றனவா? இல்லையா? பல கோயில்கள் பல ஊர்களில் இருக்கும்போது, எந்த ஊரில் எந்தக் கோயிலில் உண்மையில் இறைவன் இருக்கிறான்?” என்று பலவாறு சிந்திக்கத் தொடங்கினான் அந்த இளைஞன்.

அவ்வூரில் வாழ்ந்த ஒரு பெரியவரை அண்டித் தனது சந்தேகங்களை விண்ணப்பித்தான் அந்த இளைஞன். அவர் இளைஞனிடம், “கோயிலில் உள்ள சிலைகளில் இறைவன் இல்லை. அவை இறைவனை நினைவூட்டும் சின்னங்களே!” என்றார். “அப்படியானால் நாம் சமர்ப்பிக்கும் பொருள்களை இறைவன் ஏற்பானா? மாட்டானா?” என்று கேட்டான் இளைஞன். “அதெல்லாம் இறைவன் ஏற்கமாட்டான். ஒரே நேரத்தில் பொள்ளாச்சியில் ஒருவரும் செங்கல்பட்டில் ஒருவரும் அர்ப்பணிக்கும் பொருள்களை எப்படி இறைவனால் ஏற்க முடியும்?” என்றார் பெரியவர்.

“அப்படியானால் இறை வழிபாட்டுக்கு என்ன தான் பலன்?” என்று கேட்டான் இளைஞன். “நீ சுவர்க்கம் போவதற்காக ஒரு வேள்வி செய்கிறாய் என்று வைத்துக்கொள்! உடனே சுவர்க்கம் போய் விடுவாயா? இல்லை. நீ செய்யும் வேள்வி அபூர்வம் என்பதை உருவாக்கும். அந்த அபூர்வம் மற்றொரு அபூர்வத்தை உருவாக்கும். இது சங்கிலித் தொடராகத் தொடர்ந்து, பரம அபூர்வம் என்பதை உருவாக்கி, பின்னாளில் அது வேண்டிய பலனாகிய சுவர்க்கத்தைத் தரும்.

அதுபோலத்தான் இறைவழிபாடு செய்யும்போது, அபூர்வம் ஒன்று உருவாகும். அது சங்கிலித் தொடராகப் பெருகி அதுவே பலன் தந்துவிடும். அதனால், இறைவழிபாடு வீண்போவதில்லை!” என்றார். இதைக் கேட்ட இளைஞன், தனக்கு ஏதோ நன்மை கிடைக்க வாய்ப்புள்ளது என எண்ணி இறைவழிபாட்டில் ஈடுபடத் தொடங்கினான். ஆனால், அவன் மனதில் பக்தியோ பெரிய நம்பிக்கையோ இல்லை.

ஆனால் அடிக்கடி கோயிலுக்குச் செல்வதால், நாளடைவில் கோயிலில் உள்ள இறை வடிவத்தை வெறும் குறியீடு என்று ஏற்க அவன் மனம் மறுத்தது. மேலும், நாம் சமர்ப்பிக்கும் பொருள்கள் இறைவனைச் சென்று அடையாது என்றும், அவை ஏதோ அபூர்வத்தை உருவாக்கும் என்றும் பெரியவர் சொன்ன கொள்கைகளிலும் ஏதோ பிழை இருப்பதாக உணர்ந்தான் இளைஞன். அதனால், அதே ஊரில் வடமொழி வேதம், தமிழ்மறை அனைத்தும் கற்ற ஒரு பெரியவரை அணுகி விளக்கம் கேட்டான்இளைஞன். அவர், “கோயிலில் இருப்பவன் சாட்சாத் இறைவனே. நம்மைக் காக்க ராமனாகவும், கண்ணனாகவும் அவதரித்த அதே பகவான்தான், நம்மைக் காக்கத் திருக்கோயில்களில் அர்ச்சாவதாரமாகத் தோன்றியுள்ளான்.

இறைவன் பல வடிவங்களை எடுக்கவல்லவன். ஒரே நேரத்தில் பத்ரிநாத்தில் ஒருவரும், மதுரையில் மற்றொருவரும் வழிபாடுசெய்தாலும், அந்தந்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று அவ்வழிபாட்டை ஏற்பான். கோயிலில் எழுந்தருளும் போது, அவனுக்குத் தொண்டு செய்யும் பாக்கியத்தை நமக்குத் தருவதற்காகவே தன்னைக் குறைத்துக் கொண்டு நம் கைப்பாவையாக, நம் கையை எதிர்பார்த்து இருக்கிறான். அவன்மீது ஊர்கின்ற புழுபூச்சிகளைக் கூட அகற்ற முடியாதவன் போல், நாம் அகற்ற வேண்டும் என எதிர்நோக்கி இருப்பது அவன் எளிமையால் மகிழ்ந்து ஏற்றுக் கொள்வதே.

கோயிலில் உள்ள விக்கிரத்தை யாரோ நாத்திகர் உடைத்ததால், இறைவனுக்கு எந்த நஷ்டமும் இல்லை. அதனால் அதைப் பொருட் படுத்தாமல் உதாசீனனாக அவன் இருந்து விடுகிறான். அதே சமயம் உள்ளார்ந்த பக்தியுடன் வரும் அடியார்களிடம் வாய் திறந்து பேசவும், உறவாடவும் செய்வான்!” என்று விளக்கினார். “ஆஹா சுவாமி! இந்த விளக்கத்தை அடியேனுக்கு முன்னமே இறைவன் காட்டி இருக்கலாமே! நான் வேறொருவரிடம் சென்று வேறு விதமான விளக்கத்தைப் பெற்றுக் குழம்பிப் போனேன்! உங்களால்தான் தெளிவுபெற்றேன்!” என்றான் இளைஞன்.

அப்போது அந்தப் பெரியவர், “இல்லை குழந்தாய்! இளமைத் துடிப்புடன் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் உனக்கு எடுத்த எடுப்பிலேயே இந்த ஆழ்ந்த வேதக் கருத்தைச் சொன்னால் புரியாது. அதனால், உன்னைப் பக்குவப் படுத்தவே அந்தப் பெரியவரிடம் இறைவன் உன்னை அனுப்பி வைத்தான். அவரது விளக்கங்களால், அதுவரை கோயிலுக்கே செல்லத் தயங்கிய நீ, முதல்முறையாக ஏதோ ஒருவித எண்ணத்துடன் கோயிலுக்கு வந்துவிட்டாய். நீ கோயிலுக்கு வந்தபின், உன் மனதில் மேலும் சில கேள்விகளை எழவைத்து என்னிடம் அனுப்பி வேதாந்தக் கொள்கையை உணர்த்தி, உன்னை முழு பக்தனாக ஆக்கிவிட்டான் பகவான்.

இது அத்தனையுமே அவன் உனக்குச் செய்த நன்மைகள். இவை மட்டுமன்றுஎத்தனையோ பிறவிகளுக்கு முன்பு, நீ ஒரு புல்லாகவோ, பூண்டாகவோ, ஈயாகவோ, எறும்பாகவோ இருந்திருப்பாய். அப்போது முதல் இறைவன் உனக்குப் படிப்படியாகப் பல நன்மைகள் செய்து செய்து உன்னைப் பகுத்தறிவு உள்ள மனிதனாக ஆக்கியுள்ளான். நீ கேட்காமலேயே உனக்கு இவ்வளவு நன்மைகள் செய்தவன் இறைவன்!” என்றார்.

இதைக் கேட்டவாறே இறைவன் மீது அந்த இளைஞனுக்குப் பேரன்பு ஏற்பட்டது. திருக்கோயிலுக்குள் ஓடிச்சென்று இறைவன் முன்னே நின்று அழத் தொடங்கினான். “அறியாக் காலம் தொட்டு அடியேன் மீது அன்பு வைத்து இத்தனை நன்மைகள் புரிந்திருக்கிறாயா நீ?” என்று கதறி அழுதான். அவன் மனம் மொத்தமாக இறைவன்பால் ஈடுபடத் தொடங்கியது. இப்படி அடியார்களுக்கு நன்மைகள் பல செய்து, அதன்மூலம் அவர்கள் மனங்களைத் தன்பால் ஈர்ப்பதால், ‘மனோஹர:’ என்றுதிருமால் அழைக்கப்படுகிறார்.

நர நாராயண அவதாரத்திலும், நமக்காகத் தவம்புரிந்து அதன் மூலம் நம் மனங்களை ஈர்த்ததால் ‘மனோஹர:’ என்று பகவானுக்குத் திருநாமம்.

‘மனோஹர:’ என்றால் மனங்களைக் கவர்பவர் என்று பொருள். அதுவே சஹஸ்ரநாமத்தின் 462வது திருநாமம்.

“மனோஹராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனங்களையும் திருமால் கவர்ந்தருள்வார்.

————————

463. ஜிதக்ரோதாய நமஹ (Jithakrodhaaya namaha)

சாட்சாத் சுவாமி என்ற பெரியவர் திருவரங்கத்தில் வாழ்ந்து வந்தார். அவர் தினந்தோறும் விடியற்காலையில் காவிரியிலே நீராடுவதுவழக்கம். நீராடிவிட்டுச் சுத்தமான ஆடைகளை உடுத்திக்கொண்டு, காவிரிக் கரையில் தமது அனுஷ்டானங்களைச் செய்துவிட்டு, அரங்கனை வழிபடுவதற்காகச் செல்வார். அவரது நடவடிக்கைகளை அப்பகுதியில் வாழ்ந்த சில இளைஞர்கள் கவனித்து வந்தார்கள். அவருக்கு எப்படியாவது கோபத்தை உண்டாக்கி அதன்மூலம் தாங்கள் மகிழ வேண்டும் என்று அந்த இளைஞர்கள் கருதினார்கள். அதனால் தங்கள் குழுவில் உள்ள ஒரு இளைஞனைத் தேர்ந்தெடுத்து, “நாளை அவர் நீராடிவிட்டு வரும் போது நீ அவர் மீது எச்சில் துப்ப வேண்டும்!” என்று சொன்னார்கள். அவனும் சரி என்று ஏற்றுக் கொண்டான்.

மறுநாள் விடியற்காலை சாட்சாத் சுவாமி காவிரியில் நீராடி விட்டுக் கரைக்கு ஏறினார். இந்த இளைஞன் திட்டமிட்டபடி அவர் மீது எச்சில் துப்பினான். மற்ற இளைஞர்கள் அங்கே ஒளிந்திருந்து, சாட்சாத் சுவாமி கோபப்படுவதைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று ஆவலோடு காத்திருந்தார்கள். ஆனால், சாட்சாத் சுவாமியின் முகத்தில் எந்தவித மாறுபாடும் இல்லை. துளி கூட கோபம் இல்லாமல், அமைதியாக மீண்டும் காவிரிக்குச் சென்று நீராடினார்.

நீராடிவிட்டுக் கரைக்குத் திரும்பிய சாட்சாத் சுவாமியின் மீது  மீண்டும் எச்சில் துப்பினான் இளைஞன். மீண்டும் அவர் காவிரிக்குப் போய் நீராடினார். மீண்டும் எச்சில் துப்பினான். மீண்டும் நீராடி விட்டு வந்தார்.அவரது பொறுமையைக் கண்டு வியந்த இளைஞன், அடுத்த முறை அவர் கரைக்கு வந்த போது அவரது பாதங்களில் விழுந்து, “சுவாமி! அடியேனை மன்னிக்க வேண்டும்! உங்களிடம் இவ்வளவு அபச்சாரப்பட்டேனே! அடியேன் மீது உங்களுக்குக் கோபமே வரவில்லையா?” என்று கேட்டான்.

சாட்சாத் சுவாமி, “உன் மீது ஏனடா நான் கோபப்படவேண்டும்? உனக்கு நான் நன்றி தானே சொல்ல வேண்டும்! உன்னால்தான் காவிரியில் பிரம்ம முகூர்த்தத்தில் ஐந்து முறை நீராடும் பாக்கியம் அடியேனுக்குக் கிடைத்தது? இப்போது ஐப்பசி மாதம் வேறு! துலா காவிரி ஸ்நானம் அவ்வளவு விசேஷம் தெரியுமா?நன்றிகள் பல!” என்றார்.“சுவாமி! சிலரின் தவறான வழிகாட்டுதலாலே தவறு செய்து விட்டேன்! என்னை மன்னித்து விடுங்கள்! உங்களுக்குக் கோபமே வராதா?” என்று கேட்டான் இளைஞன்.

அதற்கு சாட்சாத் சுவாமி, “நமக்கு ஒருவர் தீங்கு இழைத்தால், நாம் உடனே யோசிக்காமல் அவர்மீது நமது எதிர்வினையைச் செலுத்துகிறோம். அதுதான் தவறு. ஒருவர் தீங்கு செய்தாலும், சற்றே நிதானித்துக்கொண்டு அதனால் நமக்கு என்ன நன்மை கிடைக்கிறது என்று பார்க்க வேண்டும்.

அவ்வாறு நிதானித்து அனைத்திலும் உள்ள நன்மையைப் பார்க்கத் தொடங்கினால் கோபம் வராது. நர நாராயணர்களாகத் திருமால் அவதரித்து, பத்ரிநாத்தில் தவம் புரிந்தார். அப்போது இந்திரன், பல தேவ மாதுகளை அனுப்பி அவர்களின் தவத்தைக் கலைக்க முற்பட்டான். அப்போது, நர நாராயணர்கள் இந்திரன்மீது கோபப்படவில்லை. மாறாக, ஊர்வசி என்னும் தேவமாதைத் தன் தொடையில் இருந்து உருவாக்கி, இந்திரனுடைய தேவலோகத்துக்கு அனுப்பி வைத்து விட்டார் பகவான்!” என்றார்.

“சுவாமி! அடியேன் இனி உங்களுக்கு மெய்காப்பாளனாக இருக்கிறேன். ஏதாவது தொண்டு செய்யவேண்டும் என்றால்சொல்லுங்கள். என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது!” என்றான். “அப்படியானால், காவிரியின் இந்தப் படித்துறையை நன்றாகச் செப்பனிட்டு நீ கட்டிக் கொடுத்தால், பலருக்கும் பயன்படும்!” என்றார் சாட்சாத் சுவாமி. அதன்படி இன்று அம்மா மண்டபம் என்று அழைக்கப்படும் அந்தப் படித்துறையை அந்த இளைஞன் செப்பனிட்டுக் கட்டிக் கொடுத்தான்.

இப்படித் தனக்குத் தீங்கு செய்ய நினைப்பவர் மீது கோபம் கொள்ளாமல் இருந்து, கோபத்தை வெல்லவேண்டும் என்று உலகுக்கு உணர்த்திக் காட்டியவர் நர நாராயணர். அதனால்தான் நர-நாராயண பகவானுக்கு ‘ஜிதக்ரோத:’ என்று பெயர்.

‘ஜிதக்ரோத:’ என்றால் கோபத்தை வென்றவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 463வது திருநாமம்.

“ஜிதக்ரோதாய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களின் மனங்களில் கோபம் எழாதபடி பகவான் அருள்புரிவான்.

———–

464. வீரபாஹவே நமஹ (Veerabaahavey namaha)

(திருநாமங்கள் 457[ஸுமுக:] முதல் 470 [நைககர்மக்ருத்] வரை – தேவர்களுக்கு அமுதம் தந்த வரலாறு)

ஆழ்வார்களில் கடைக்குட்டியாக அவதரித்த திருமங்கை ஆழ்வார், திருவரங்கநாதனை மங்களாசாசனம் பண்ணும்பொழுது அற்புதமான ஒரு பாசுரம் பாடுகிறார்.

மாயிருங் குன்றம் ஒன்று மத்து ஆக மாசுணம் அதனொடும் அளவி
பாயிரும் பௌவம் பகடு விண்டு அலறப் படுதிரை விசும்பிடைப் படர
சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாம் உடன் திசைப்ப
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே
இந்தப் பாசுரத்திலே பகவான் ரங்கநாதன் மந்தர மலையை மத்தாக்கி, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகச் சுற்றி, மொத்தப் பிரபஞ்சமும் அலறும்படியாக,
யானையின் பிளிறல் ஓசை போல் கம்பீரமாக ஒலி பரவும்படி, திருப்பாற்கடலில் எழுந்த அலைகள் சுவர்க்கம் வரை தெளிக்கும் விதமாக,
அத்தகைய வேகத்தோடும் ஆற்றலோடும் திருப்பாற்கடலைக் கடைந்தார் என்று பாடுகிறார் திருமங்கையாழ்வார்.

மேலும், தனது ஆயிரம் தோள்களால் திருமாலே திருப்பாற்கடலைக் கடைந்ததாகவும், இதில் ஆழ்வார் குறிப்பிட்டுள்ளார். அவன் கடைந்த விதத்தைப் பார்த்துத் தேவர்கள், முனிவர்கள், சூரியன், சந்திரன் என அத்தனை பேரும் வியந்து போனார்களாம். தேவர்களும், அசுரர்களும் தானே திருப்பாற்கடலைக் கடைந்தார்கள்? திருமால் கடைந்ததாக இங்கே ஆழ்வார் பாடுகிறாரே என்ற ஐயம் உங்களுக்கு எழலாம். தேவர்களும் அசுரர்களும் தான் முதலில் கடைந்தார்கள். ஆனால் துர்வாசர் சாபத்தால் வலிமை இழந்திருந்த தேவர்களால் தொடர்ந்து கடைய முடியவில்லை. அவ்வாறே வாசுகியின் விஷம் பட்டு வலிமை இழந்தஅசுரர்களாலும் தொடர்ந்து கடைய முடியவில்லை.

இதைக் கண்ட திருமால், நாமே கடைவோம் என்று முடிவெடுத்து, தேவர்கள் மத்தியில் ஒரு உருவத்தோடும் அசுரர்கள் மத்தியில் மற்றோர் உருவத்தோடும் தோன்றினார் என்கிறது ஸ்ரீமத் பாகவத புராணம். ஏற்கனவே கூர்மாவதாரம் செய்து மந்தர மலையை முதுகில் தாங்கிநிற்கும் நாராயணன், இப்படியும் இரு வடிவங்கள் கொண்டாராம்.இப்படித் திருமால் தன் கையால் திருப்பாற்கடலைக் கடையத் தொடங்கியவாறே, பேரொலி உண்டானதாம்.

அந்த ஒலியைத் திருவாய்மொழியில் நம்மாழ்வார் வர்ணிக்கிறார்.

ஆறுமலைக்கு எதிர்ந்தோடும் ஒலி அரவு
ஊறுசுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறுபட அமுதம் கொண்ட நான்றே

கடலில் கலக்கும் ஆறுகள் எதிர்த்திசையில் சென்று மலையில் மோதிய ஒலியும், வாசுகி பாம்பும் மந்தர மலையும் உரசும் ஒலியும், கடல்நீர் சுழல்கின்ற ஒலியும் மூன்றும் சேர்ந்து ஒரே நேரத்தில் பேரொலியாக ஒலிக்கப் பாற்கடலைக் கடைந்தார் திருமால். அனைத்தும் சரி, ஆனால் ஆயிரம் தோள்களால் திருமால் பாற்கடலைக் கடைந்ததாகத் திருமங்கை ஆழ்வாரின் பாசுரம் சொல்கிறதே. திருமாலுக்கு நான்கு கைகள் தானே என்று நமக்குத் தோன்றலாம். நான்கு திருத்தோள்களால் தான் திருமால் கடைந்தார். ஆனால், அவர் கடைந்த வேகத்தில் அந்த நான்கு திருக்கைகள் ஆயிரம் திருக்கைகள் போல் தெரிந்தனவாம்.

அதாவது, நம் வீடுகளில் உள்ள மின்விசிறிகளில் மூன்று அல்லது நான்கு இறக்கைகளே இருக்கும். ஆனால் மின்விசிறி வேகமாகச் சுற்றுகையில் அவை பல இறக்கைகள் போலத் தெரியும். அத்தகைய வேகத்தில் திருமால் கடைந்தார் என்பதைக் குறிப்பிடவே, ஆயிரம் தோளால் அலைகடல் கடைந்தான் என்று திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார்.

பாஹு என்றால் தோள் என்று பொருள். வீரபாஹு: என்றால் வலிமை மிக்க தோள்களை உடையவர். திருப்பாற்கடலை வேகமாகவும், பேரொலி எழும் வகையிலும் கடைந்து அமுதை எடுத்த வலிமை மிக்க தோள்களை உடைய திருமால் வீரபாஹு : என்று அழைக்கப்படுகிறார். அதுவே சஹஸ்ரநாமத்தின் 464வது திருநாமம்.வீரபாஹவே நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல வலிமையோடு வாழும்படித் திருமால் அருள்புரிவார்.

————–

465. விதாரணாய நமஹ (Vidhaaranaaya namaha)

திருப்பாற்கடலில் இருந்து அமுதம் வெளிவந்தபோது, அது தேவர்களுக்கா அசுரர்களுக்கா என்ற மிகப்பெரிய போட்டி எழுந்தது. திருமாலின் உதவியை நாடினார்கள் தேவர்கள். அப்போது திருமால் மோகினி என்னும் பெண் வடிவம் பூண்டார். அழகிய தோற்றம் கொண்ட அந்த மோகினி, தன் அழகால் அசுரர்களை மயக்கி விட்டாள். அமுதின் மேல்பகுதி வெறும் சக்கைஎன்றும் அடிப்பகுதியே சாறு என்றும் சொன்ன மோகினி, “நானே அவரவருக்கு ஏற்றபடிபிரித்துத் தருகிறேன்!” என்று கூறினாள். அவளது அன்பைச் சம்பாதிக்க விரும்பிய அசுரர்கள் அவள் சொன்னதை அப்படியே தலை ஆட்டி ஏற்றுக்கொண்டார்கள்.

முதலில் சக்கையான மேல்பகுதியைத் தேவர்களுக்கு அளிக்கப் போகிறேன் என்று சொன்ன மோகினி, தேவர்களுக்கு அமுதை வழங்கத் தொடங்கினாள். அசுரர்கள் அவள் அழகில் மயங்கியபடி அப்படியே அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சுவர்பானு என்ற ஒரு அசுரன் மட்டும் சூரியன் சந்திரன் ஆகிய இரு தேவர்களுக்கும் நடுவே தேவர் வேடத்தில் வந்து நின்று கொண்டான்.

“தேவ லிங்க ப்ரதிச்சன்ன: ஸ்வர்பானு: தேவஸம்ஸதி-ப்ரவிஷ்டஸ் ஸோமம் அபிபத் சந்த்ர அர்க்காப்யாம் ச ஸூசித:”–என்கிறது ஸ்ரீ மத் பாகவத புராணம்.
மோகினி கொடுத்த அமுதை அந்த சுவர்பானும் வாங்கி உண்டு விட்டான். ஆனாலும், தேவன் வேடத்தில் இருந்த அந்த அசுரனைச் சூரியனும் சந்திரனும் அடையாளம் கண்டு, மோகினி வடிவில் இருந்த திருமாலிடம் காட்டிக் கொடுத்தார்கள்.

உடனே மோகினி,–“சக்ரேண க்ஷுரதாரேண ஜஹார பிபதச் சிர:”-என்கிறபடி, தனது கூரிய சக்ராயுதத்தால் அவனது தலையைக் கொய்துவிட்டாள்.

அவனது உடல்பகுதிக்கு அமுதம் இன்னும் செல்லவில்லை என்றாலும் தலைப்பகுதிஅமுதத்தை உள்வாங்கிக் கொண்டுவிட்டது. அதனால் வெட்டப்பட்ட தலை மரணம் அடையாமல் அப்படியே இருந்தது. அவன்மீது கருணை கொண்ட பிரம்மா, ஒரு பாம்பின் உடலை அவனது தலையோடு ஒட்ட வைத்தார். அவனை ஒரு கிரகமாக, ராகு என்ற பெயருடைய ஒரு கிரகமாக பிரம்மதேவர் ஆக்கினார். சூரியனும் சந்திரனும் தன்னைக் காட்டிக் கொடுத்தார்கள் என்ற கோபத்தில் கிரகணக் காலங்களில் சூரியனையும் சந்திரனையும் ராகு விழுங்கிவிட்டு அதன்பின் விடுவிக்கிறான்.

இந்த வரலாறு நமக்கு ஒரு முக்கியத் தத்துவத்தை உணர்த்துகிறது.
திருப்பாற்கடல் என்பது நம் மனம்.
அதிலிருந்து எழுந்த அமுதம்தான் நம் மனதில் எழுகின்ற பரமாத்மாவைப் பற்றிய ஞானம்.
அச்சமயம் இறைவன் அந்த ஞானமாகிய அமுதை நம் நல்லெண்ணங்களாகிய தேவர்களிடம் தர முயல்கிறார்.
அமுத மயமான ஞானத்தை நல்லெண்ணங்கள் நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொண்டால், நாம் உய்வடையலாம்.
ஆனால், அப்போதும் கூட சுவர்பானு என்ற அசுரன் வந்தது போல், சில தீய எண்ணங்கள் எழுந்து நம் அமுதமயமான அறிவை வேறு பக்கம் திசைதிருப்பப் பார்க்கின்றன.
அவனது தலையைச் சீவிய பின்னும் அவன் சூரியனை விழுங்கப் பார்ப்பது போல், எவ்வளவு தான் பல தீய எண்ணங்களை நாம் அழித்தாலும்,
ஒரு சில தீய எண்ணங்கள் மீண்டும் மீண்டும் எழுந்து வந்து நம் மனதைக் கலைக்கப் பார்க்கின்றன.
சூரியனை ராகு விழுங்குவது போல் நம்புத்தியையும் தீயஎண்ணங்கள் அடிக்கடி விழுங்க முயல்கின்றன.
ராகு சூரியனை விழுங்கினாலும், அதிலிருந்து சூரியன் விரைவில் வெளிப்படுவது போல், நம் புத்தியை எத்தனை தீய எண்ணங்கள் கலைத்தாலும்,
நாம் இறைவனைச் சரணடைந்து அவன் அருளையே எதிர்நோக்கி இருந்தோமானால், நிச்சயமாக அந்த இறை அருளால்
தீய எண்ணங்கள் அனைத்தையுமே நாம் வென்று, அவற்றிலிருந்து வெளிவந்து பக்தியில் ஈடுபட்டுப் பரமனை அடைய முடியும்.

இதை உணர்த்தவே சுவர்பானு என்ற அசுரனின் தலையைச் சீவிக் காட்டினார் திருமால். அதுபோல் நம் மனதில் உள்ள தீய எண்ணங்களையும் வெட்டுபவர் அவர் என்பதை நமக்கு உணர்த்துகிறார். இப்படித் தீய சக்திகளை வெட்டுவதால், திருமால் விதாதா – வெட்டுபவர் என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 465வது திருநாமம். விதாத்ரே நமஹ என்று தினமும் சொல்லி வந்தால் நம் மனதில் எழும் எல்லாத் தீய எண்ணங்களையும் திருமால் வெட்டி அருள்வார்.

—————–

459 (B). ஸுகோஷாய நமஹ:(Sughoshaaya namaha)

(திருநாமங்கள் 457[ஸுமுக:] முதல் 470 [நைககர்மக்ருத்] வரை – தேவர்களுக்கு அமுதம் தந்த வரலாறு)[குறிப்பு: 457 முதல் 463 வரை உள்ள திருநாமங்கள் நர நாராயண அவதாரங்களையும் குறிக்கும். அமுதம் கடைந்த வரலாற்றையும் குறிக்கும்.]மகாலட்சுமியின் பிரசாதமான ஒரு மாலையை துர்வாச முனிவர் இந்திரனுக்கு வழங்கினார். இந்திரன் அதை அனாயாசமாக வாங்கித் தனது யானையான ஐராவதத்திடம் வழங்கினான். அந்த யானையும் பிரசாத மகிமையை உணராது மாலையைக் கீழே போட்டு மிதித்துவிட்டது.

இதைக் கண்டு கோபம் கொண்ட துர்வாசர், இந்திரனும் தேவர்களும் லட்சுமி கடாட்சத்தை இழப்பார்கள் என்று சாபம் தந்துவிட்டார். துர்வாசரின் இந்தச் சாபத்தால் தங்களது ராஜ்ஜியத்தையும், செல்வத்தையும், வலிமையையும் இழந்து நின்றார்கள் தேவர்கள். அசுரர்கள் தேவலோக ராஜ்ஜியத்தைக் கைப்பற்றிவிட்டார்கள். இந்நிலையில் இந்திரனும் மற்ற தேவர்களும் பிரம்மாவின் உதவியை நாடினார்கள். “திருமாலைத் தவிர வேறு யாராலும் உங்களைக் காக்க முடியாது!” என்று தேவர்களுக்கு அறிவுரை கூறிய பிரம்மா, அனைவரையும் அழைத்துக் கொண்டு திருப்பாற்கடலின் கரைக்குச் சென்றார்.பாற்கடலுள் பையத்துயின்ற பரமன், தங்களுக்குக் காட்சி அளிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடு மனதாரத் திருமாலை பிரம்மாவும் தேவர்களும் வேண்டினார்கள்.

“நமாமி ஸர்வம் ஸர்வேசம் அனந்தம் அஜம் அவ்யயம் லோகதாம தராதாரம் அப்ரகாசம் அபேதினம்”என்று தொடங்கித் திருமாலைத் துதித்தார் பிரம்மதேவர்.
அவரைத் தொடர்ந்து மற்ற தேவர்களும்;
“பகவன் பூதபவ்யேச! யஜ்ஞமூர்த்திதராவ்யய! ப்ரஸீத ப்ரணாதானாம் த்வம் ஸர்வேஷாம் தேஹி தர்சனம்”என்று துதித்துத்
திருமால் திருவடிகளிலே சரணாகதி செய்தார்கள். அப்போது, பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாள் தேவர்களுக்குக் காட்சி அளித்தார். தாங்கள் இழந்த ராஜ்ஜியத்தை மீண்டும் பெறுவதற்கு வழிகாட்டுமாறு திருமாலிடம் வேண்டினார்கள் தேவர்கள். தேவர்களைப் பார்த்துப் புன்னகை செய்த திருமால், “தேவர்களே! நீங்கள் பாற்கடலைக் கடையுங்கள். அதிலிருந்து தேவாமிர்தம் கிடைக்கும். அதை உண்டால் நீங்கள் நல்ல வலிமையும் நீண்ட ஆயுள் ஆரோக்கியமும் பெற்றுவிடுவீர்கள்.

அதன்பின் நீங்கள் எளிதில் அசுரர்களை வீழ்த்திவிட முடியும். உங்களால் மட்டும் இப்போது பாற்கடலைக் கடைய முடியாது. அதனால், அசுரர்களையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு பாற்கடலைக் கடைவீர்களாக!” என்று ஆலோசனை கூறினார்.அதன்படி, மந்தர மலையை மத்தாக்கி, வாசுகி நாகத்தை நாண் ஆக்கி, தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடையும் வேளையில், திருமாலே கூர்மாவதாரம் செய்து மந்தர மலையைத் தன் முதுகில் தாங்கினார். பாற்கடல் கடைந்த தேவர்களும் அசுரர்களும் சிறிது நேரத்தில் சோர்ந்து போன போது, திருமாலே அவர்களுக்குப் பதிலாகக் கடையத் தொடங்கி விட்டார். அவர் கடையும் அழகைக் கண்டு தேவர்களும் அசுரர்களும் வியந்ததை ஸ்ரீமத் பாகவத புராணத்தில் சுகமுனிவர் வர்ணிக்கிறார்;

“உபர்யகேந்த்ரம் கிரிராட் இவான்ய: ஆக்ரம்ய ஹஸ்தேன ஸஹஸ்ர பாஹு:
ஹஸ்தௌ திவி ப்ரஹ்ம பவேந்த்ர முக்யை: அபிஷ்டுவத்பி: ஸுமனோபிஹ்ருஷ்ட:”

மந்தர மலைக்கு எதிரே மற்றொரு மலை திகழ்வது போல், திருமால் தனது மலை போன்ற தோள்களாலே திருப்பாற்கடலைக் கடையும் அழகைப் பார்த்து வியந்த பிரம்மா, சிவன், இந்திரன், தேவர்கள், முனிவர்கள், அசுரர்கள் என அத்தனை பேரும் துதி செய்தார்கள். அத்தனை பேரும் செய்த அந்தத் துதிமொழிகள் பாற்கடல் கடைந்த பகவானைச் சூழ்ந்திருந்தன. இத்தகைய துதிகளால் சூழப்பட்டு விளங்கியமையால் திருப்பாற்கடல் கடைந்த திருமால் ‘ஸுகோஷ:’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸுகோஷ:’ என்றால் நல்ல ஒலிகளால் சூழப்பட்டவர் என்று பொருள். தேவர்கள், அசுரர்கள் என அனைவராலும் துதிக்கப்பட்டு, அத்தகைய துதிகளால் சூழப்பட்டு விளங்கிய திருமால் ‘ஸுகோஷ:’! அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 459வது திருநாமம்.

அசுரர்கள் செய்த துதியை நல்ல வார்த்தை என்று எடுத்துக் கொள்ள முடியுமா? யார் சொன்னார்கள் என்பதை விட, யாரைப் பற்றிச் சொன்னார்கள் என்பதே முக்கியம் அல்லவா? திருமாலைக் குறித்த துதி என்பதால் அசுரர்கள் செய்த துதியையும் கூட தாழ்ந்த சொற்களாக நாம் கருத வேண்டியதில்லை.“ஸுகோஷாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் செய்யும் அனைத்துத் துதிகளையும் திருமால் ஏற்று அருள்புரிவார்.

—————-

460 (B). ஸுகதாய நமஹ:(Sukhadhaaya namaha)

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்த வேளையில், அசுரர்கள் கடலுக்கு அடியில் ஒளிந்து கொண்டார்கள். தேவர்கள் பலவாறு தேடியும் அவர்களால் அசுரர்கள் கடலுக்கு அடியில் ஒளிந்திருக்கும் இடத்தைக் கண்டறிய முடியவில்லை. இந்நிலையில் தேவர்கள் அகத்திய முனிவரின் உதவியை நாடினார்கள். குறுமுனிவரான அகத்தியர் கடற்கரைக்கு வந்தார். “அச்யுதாய நமஹ:” என்று சொல்லிக் கையளவு நீரை எடுத்து உட்கொண்டார். உடனே ஏழு கடல்களும் வற்றிப்போயின. கடல் மொத்தமாக வற்றிய நிலையில், அசுரர்கள் ஒளிந்திருந்த இடத்தைத் தேவர்கள் கண்டறிந்துவிட்டார்கள். அவர்களை வீழ்த்திவிட்டார்கள்.

இந்நிலையில் ஏழு கடல்நீரையும் சுவைத்துப் பார்த்த அகத்திய முனிவர், அந்த ஏழு கடல் நீருக்கும் சாரமாக இருக்கும் அமுதைச் சுவைத்துப் பார்த்தாராம். “ஆஹா! இது மிகவும் இனிய அமுதமாக இருக்கிறதே! தேவர்களுக்கும்கூட கிடைத்தற்கரிய அமுதம் ஆயிற்றே இது! திகட்டாத அமுதம் ஆயிற்றே இது! இதை நாம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்!” என்று கருதினார் அகத்தியர்.

அதனால், தன் தாயான குடத்திடம் அந்த அமுதைக் கொடுத்துப் பத்திரப்படுத்தி வைக்கச் சொன்னார். ஆனால், அகத்தியரின் தாயான குடத்தால் அதை ரகசியமாக வைத்துக்கொள்ள மனமில்லை. ஆகையால், குடம் அந்த அமுதைக் குடமூக்கின் வாயிலாக வெளியிட்டுவிட்டது. குடமூக்கு என்பதுதான் கும்பகோணம் என்னும் திருத்தலம். அது வெளியிட்ட ஆராவமுதம்தான் திருமாலின் ஆராவமுதன் என்ற திருநாமம்.

இக்கருத்தை ஆசுகவிவில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள், அம்ருத சார்தூலம் என்னும் துதியில்,-“மன்யே ஸப்தபயோநிதீன் அபி முனி: பீத்வா தத் உத்தாம்ருதம்
லாவண்யாதி ரஸாஸ்பதம் திவிஷதாம் அப்யந்ததோ துர்லபம் கூடம் மாதரி குப்தம் அத்ர தத் இதம் சக்ரே ததா தத்புன:லோகேப்யோ விவ்ருதம் ரஹஸ்யம் இதி ஹி த்ராதும் ந சக்தாஸ் ஸ்த்ரிய:”-என்ற ஸ்லோகத்தில் தெரிவிக்கிறார். இந்தக் கதைக்குள்ளே ஒரு தாத்பரியம் உள்ளது.

இங்கே ஏழு கடல் என்பது உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் குறிக்கிறது. அகத்தியர் தமிழுக்கு இலக்கணம் தந்த தமிழ் முனிவர் ஆவார். ஏழு கடல் நீரையும் அகத்தியர் பருகினார் என்றால், உலகிலுள்ள அனைத்து மொழிகளில் உள்ள அனைத்துச் சொற்களையும், சொல்லிப் பார்த்தார் தமிழ்த் தாயின் தவப் புதல்வரான அகத்தியர். ஆனால், அனைத்துக்கும் சாரமாக, அனைத்து வார்த்தைகளை விடவும் மிகமிக இனியதாக இருக்கும் ஒரு சொல் உண்டென்றால், தமிழ் மொழியில் உள்ள திருமாலின் திருப்பெயரான ‘ஆராவமுதன்’ என்பது. இத்தகைய அமுதம் தேவர்களுக்கும் கிடைக்காத படி அகத்தியர் ஒளித்து வைத்தார் என்றால், தேவ பாஷை எனப்படும் வடமொழியிலும் இத்தகைய இனிய சொல் கிடைக்காதபடி, தன் தாயான தமிழ்மொழியில் அதை ஒளித்து வைத்தார் அகத்தியர்.

ஆனால் தமிழ்மொழியோ, தனது மற்றொரு தவப்புதல்வரான நம்மாழ்வார் வாயிலாக, அவர் திருக்குடந்தை திவ்யதேசத்தைப் பற்றிப் பாடிய பாசுரமான,“ஆராவமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாலே-நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே”
என்ற பாசுரம் வாயிலாக வெளியிட்டு விட்டது. மேலும், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் என்ற அருளிச்செயல் அமுதத்தையே உலகுக்கு வெளியிட்ட திருத்தலமும் கும்பகோணமே ஆகும். இப்படித் தன்னையும் தனது திருநாமத்தையும் தன்னைக் குறித்த பாசுரங்களையுமே அமுதம் என்று கருதும் அடியார்களான நமக்கு, திருக்குடந்தையில் திருமால் ஆராவமுதனாகக் காட்சி தந்து, ஆராவமுதம் போல் இனிய திருநாமமும் பூண்டு, `ஆராவமுதே’ என்ற பாசுரத்தால் துதிக்கப்பட்டு விளங்குகிறார். தேவாமிர்தமே தங்களுக்கு இலக்கு எனக் கருதும் தேவர்களுக்கு அந்த அமுதைக் கொடுத்து அவர்களையும் மகிழ்விக்கிறார்.

இப்படி அவரவர் விரும்பும் அமுதத்தை அவரவர்க்கு அளித்து அவர்களுக்கு மகிழ்ச்சி தருவதால், திருமால் ‘ஸுகத:’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸுகத:’ என்றால் அமுதம் தந்து மகிழ்விப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 460வது திருநாமம்.“ஸுகதாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் ஆராவமுதைப் பருகி இன்புறும் பேற்றை ஆராவமுதனின் அருளால் பெறுவார்கள்.

—————

461 (B). ஸுஹ்ருதே நமஹ:(Suhrudhey namaha)

துர்வாசர் சாபத்தால் ராஜ்ஜியம், செல்வம், வலிமை அனைத்தையும் இழந்த தேவர்கள் திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட திருமாலை அடிபணிந்து துதித்தார்கள் என்று நாம் ஏற்கனவே பார்த்தோம். அவர்களுக்குத் திருமால் தரிசனம் தந்தார். அவருடைய திருமேனி அழகில் ஈடுபட்டு ஆனந்தக் கண்ணீர் சிந்திய தேவர்கள், அவரது திருவடிகளிலே விழுந்து வணங்கினார்கள்.

“நமோ நமோ விசேஷஸ்த்வம் த்வம் ப்ரஹ்மா த்வம் பினாக த்ருக் இந்த்ரஸ்த்வம் அக்னி: பவன: வருணஸ் ஸவிதா யம:
த்வம் ப்ரஸாதம் ப்ரஸன்னாத்மன் ப்ரபன்னானாம் குருஷ்வ ந: தேஜஸா நாத ஸர்வேஷாம் ஸ்வசக்த்யா ஆப்யாயனம் குரு”

“திருமாலே! நீயே கதி என்று உன்னையே நாங்கள் சரணமாகப் பற்றி அடைக்கலம் புகுகிறோம். எங்களுக்கு அனைத்து நன்மை களையும் நீயே செய்தருள வேண்டும்!” என்று சரணாகதி செய்தார்கள். இவர்கள் சரணாகதி அடைந்ததால், அவர்கள் இதுவரை செய்த தவறுகளை மன்னித்தார் திருமால். “தேவர்களே! எப்போது என் பாதங்களில் நீங்கள் விழுந்து சரணடைந்து விட்டீர்களோ இனி நான் உங்களுக்கு நண்பன். ஒரு நண்பனாக இருந்து உங்களுக்கு அனைத்து நன்மைகளையும் நான் செய்கிறேன்!” என்றார் திருமால்.

“நீங்கள் முதலில் பாற்கடலைக் கடைந்து அமுதம் பெறுவீர்களாக! அதை உண்டால் நீங்கள் வலிமையும் நீண்ட ஆயுளும் பெற்று அசுரர்களை வீழ்த்த முடியும்!” என்றார் திருமால். “வலிமையில்லாத நிலையில் எங்களால் எப்படி இவ்வளவு பெரிய பாற்கடலைக் கடைய முடியும்?” என்று கேட்டார்கள் தேவர்கள். உடனே திருமால், “நீங்கள் அசுரர்களையும் கூட்டு சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு அமுதில் பங்கு தருவதாகச் சொல்லி அழையுங்கள். பின்னால், அமுதம் கொடுக்காமல் ஏமாற்றி விடலாம். இது ராஜநீதிப்படி சரிதான். பசுவைக் காப்பதற்காகப் புலியை வஞ்சிப்பதில் தவறில்லை!” என்று மீண்டும் நண்பனாக இருந்து ஆலோசனை வழங்கினார்.

பாற்கடலை எப்படிக் கடைவது என்று யோசித்தார்கள் தேவர்கள். மீண்டும் திருமாலே ஆலோசனை சொன்னார். “பச்சிலைகளை இட்டுப் பாற்கடலை நிரப்புங்கள்!” என்றார் திருமால். அவ்வாறே செய்தார்கள் தேவர்கள். மத்துக்கும் கயிறுக்கும் எங்கே போவது என்று சிந்தித்தார்கள் தேவர்கள். திருமாலே கருடனின் தோள் மீது மந்தரமலையைத் தூக்கிவைத்து, அவரே அந்த மலையைத் திருப்பாற்கடலில் மத்தாகக் கொண்டு வந்து நாட்டினார்.

வாசுகிப் பாம்பைக் கயிறாகச் சுற்றினார் திருமால். அதன் தலைப்பகுதியில் நின்றால் அதன் விஷம் தங்களைப் பாதிக்குமோ என அஞ்சினார்கள் தேவர்கள். திருமால் அங்கேயும் உதவி செய்து அசுரர்களைத் தலைப்பகுதியில் நிறுத்தி தேவர்களை வால் பகுதியில் நிறுத்தி விட்டார். வாசுகி கக்கிய விஷம் அனைத்தும் அசுரர்கள் மேலேயே பட்டது. தேவர்களும் அசுரர்களும் கடையத் தொடங்கியபோது, மலை கடலுக்குள் அழுந்தியது. அப்போதும் திருமாலின் உதவியையே நாடினார்கள் தேவர்கள். ஆமைவடிவில் கூர்மாவதாரம் எடுத்து அந்த மலையை முதுகில் தாங்கி அருளினார் திருமால். மேலும், தானே தன்வந்தரியாக அவதரித்து அமுதத்தைக் கொண்டுவந்து அளித்து, மோகினி அவதாரம் செய்து அசுரர்களை மயக்கி, அந்த அமுதம் தேவர்களுக்கே கிடைக்கும்படி செய்தார் திருமால்.

இப்படி ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு ஆலோசனைகள் வழங்கி உதவிகள் செய்வது போல், தேவர்களுக்கு நல்ல நண்பனாக இருந்து ஆலோசனைகளும் வழங்கி, அமுதம் பெறுவதற்கான அனைத்து உதவிகளும் செய்தபடியால் திருமால் ‘ஸுஹ்ருத்’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸுஹ்ருத்’ என்றால் நலம்விரும்பியாய் இருக்கும் நண்பர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின்461-வது திருநாமம் .“ஸுஹ்ருதே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல நண்பராக இருந்து அனைத்து நலங்களையும் திருமால் தந்தருள்வார்.

————

462 (B). மனோஹராய நமஹ:(Manoharaaya namaha)

ஆசுகவி வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள் கும்பகோணம் சாரங்கபாணிப் பெருமாளைக் குறித்து அருளிய “அபர்யாப்தாம்ருத விம்சதி’’ என்னும் துதியிலே ஒரு கவிநயம் மிக்க அற்புத ஸ்லோகம்

“அம்ருதம் அம்ருத! தத்வா மோஹினீ பாவதஸ்த்வம்-கிமிதி பரிணதோபூ: பூருஷஸ் ஸுந்தராங்க:
இதம் இதம் இதி தத்த்வம் ப்ருஷ்டதோ தேவதேவ! த்வயி விநிஹித த்ருஷ்டிர் வக்த்யஸௌ கும்பநாத:”

கும்பகோணம் திருத்தலத்துக்கு வந்த சிவபெருமான், நகரின் மத்தியில் கோயில் கொண்டிருக்கும் சாரங்கபாணிப் பெருமாளைக் கண்டாராம். குடத்துக்குள் சாரமாக அமுதம் இருப்பது போலே, கும்பகோணம் எனும் குடத்தினுள்ளே ஆராவமுதமாக இனிக்கும் சாரங்கபாணியின் அழகால் ஈர்க்கப்பட்டார் சிவபெருமான். அந்தப் பெருமாள் முன்னே வந்து நின்று தனது இரு கண்களாலும் சாரங்கபாணியின் அழகைப் பருகினாராம். பருகிய நோக்கென்னும் பாசத்தால் ஆராவமுதப் பெருமானை அப்படியே தனது மனத்தினுள்ளே நிலைநிறுத்திக் கொண்டார் பரமசிவன்.

ஆராவமுதனை அப்படியே வலம் வந்து அவனுடைய பின்னழகை ரசிக்கப் புகுந்தார் சிவபெருமான். அந்தப் பின்னழகைப் பார்த்தவாறே பரமசிவன், குடத்துக்குள் உள்ள அமுதம் போலே இங்கே திருமால் விளங்குகிறார். இவரது பின்னழகைப் பார்க்கும்போது ஏதோ ஒரு காட்சி என் நினைவுக்கு வருகிறதே என்று சிந்தனையில் ஆழ்ந்தார். அது என்ன காட்சி திருப்பாற்கடல் கடைந்து அமுதம் வந்த வேளையில், அந்த அமுதக் குடத்தைப் பெறுவதற்காக தேவர்களும் அசுரர்களும் போட்டி போட்டுக்கொண்டார்கள். அச்சமயம் அசுரர்கள் கையில் அமுதம் கிடைக்காமல் நல்லவர்களான தேவர்களின் கையில் அது சேர வேண்டும் என்பதற்காக மோகினி அவதாரம் எடுத்தார் திருமால்.

அந்த மோகினியின் வடிவழகில் அசுரர்கள் மொத்தமாக மயங்கி விட்டார்கள். நான் அமுதைப் பகிர்ந்தளிக்கிறேன் என்று சொன்ன மோகினி, கையில் அமுதக் குடத்தை ஏந்தியபடி தேவர்களுக்கு மட்டும் அமுதைக் கொடுத்தாள் என்பது வரலாறு. அந்த மோகினியின் அழகில் பரமசிவனும் மயங்கினார் என்று புராணத்தில் பார்க்கிறோம் அல்லவா?

இப்போது ஸ்ரீ சாரங்கபாணிப் பெருமாளின் பின்னழகைப் பார்த்த பரமசிவனுக்கு, அந்த மோகினியின் அழகுதான் நினைவுக்கு வந்ததாம். “ஓ திருமாலே!  மோகினி அவதாரம் எடுத்த நீ, அப்படியே அந்தப் பெண் வடிவத்தில் இருந்து ஆண் வடிவத்துக்கு மாறி விட்டாய் போலும்! அதுதான் சாரங்கபாணியாகிய உனது இவ்வடிவம் போலும்!” என்று வியப்புடன் சொன்னார் பரமசிவன். இந்தப் பின்னழகை எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பிய பரமசிவன், கும்பேஸ்வரர் என்ற பெயரோடு அப்படியே சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலுக்குப் பின்னே கோயில் கொண்டு அமர்ந்து, ஆராவமுதனின் அழகை ரசிக்கத் தொடங்கினாராம். (கும்பேஸ்வரருக்குப் பிரசித்தமாக வழங்கப்படும் தல வரலாற்றை நாம் மதிக்கிறோம், மறுக்கவில்லை. ஒரு கவியின் கண்ணோட்டத்திலே இக்கருத்து வழங்கப்பட்டுள்ளது.)

கும்பேஸ்வரருக்கு அருகிலிருந்த பார்வதி தேவியான மங்களாம்பிகை, “என் அண்ணன் சாரங்கபாணியின் அழகில் மயங்கி விட்டீரோ? நீங்கள் மயங்கியதில் வியப்பில்லை. தீய சக்தி களான அசுரர்களே அவரது மோகினி அவதாரத்தைப் பார்த்து மயங்கிய போது, தூய மனத்துடன் எப்போதும் தவத்தில் ஈடுபடும் உங்கள் மனம் அவரது அழகில் ஈடுபட்டதில் வியப்பில்லையே!” என்று பரமசிவனைப் பார்த்துச் சொன்னாராம்.

இப்படி மனத்தூய்மை மிக்கவர்கள் முதல் தொடங்கி, தீய எண்ணம்கொண்ட அசுரர்கள் வரை அத்தனை பேரின் மனங்களையும் தனது மோகினி அவதார வடிவால் மயக்கியதால், திருமால் ‘மனோஹர:’ என்று அழைக்கப்படுகிறார். ‘மனோஹர:’ என்றால் மனங்களைக் கவர்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 462-வது திருநாமம்.“மனோஹராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனங்களையும் திருமால் தனது அழகால் கவர்ந்து தன்னிடம் ஈடுபடும்படி அருள்புரிவார்.

———-

463 (B). ஜிதக்ரோதாய நமஹ:(Jithkrodhaaya namaha)

அடியேனும் அடியேனின் ஸ்ரீபாஷ்ய குருவான ஸ்ரீ.உ.வே. கருணாகராச்சாரியார் சுவாமியும் கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணிப் பெருமாள் திருக்கோயிலுக்குச் சென்றோம். அப்போது எங்களோடு வந்த ஒரு நபர், அந்தத் திருக்கோயிலின் பிரம்மாண்ட ராஜகோபுரத்தைச் சுட்டிக் காட்டி, ஸ்ரீ .உ.வே. கருணாகராச்சாரியார் சுவாமியிடம், “இந்தக் கோபுரத்தின் கீழ்த்தளத்தில் கண்ணன் கோபிகைகளோடு புரியும் சிருங்கார லீலைகள் சித்தரிக்கப் பட்டுள்ளனவே! எங்களைப் போன்றவர்களின் பார்வைக்கு முகம் சுளிக்க வைக்கும் சித்திரங்களாக இவை தெரிகின்றன! இந்த அமைப்புக்கு என்ன காரணம்?” என்று கேட்டார்.

அதற்குக் கருணாகராச்சாரியார் சுவாமி அற்புதமான ஒரு பதிலை வழங்கினார்; நம் மனித மனமானது அற்பமான உலகியல் சுகங்களையே நாடிக்கொண்டிருக்கின்றது. நேராக அப்படியே உலகியல் விஷயங்களை விடுத்து இறைவனை நாடு என்று சொன்னால், நம் மனம் அதற்கு உடனே இணங்காது. அதனால் நம் பெரியோர்கள் நம்மைப் பார்த்து, “நீ காதலைத் தானே பார்க்க விரும்புகிறாய்? உலகியல் காதலைப் பார்க்காதே! அந்த தெய்வீகமான இறைவனின் காதலைப் பார்!” என்கிறார்கள்.

இறைவனுக்கும் இறைவிக்கும் இடையே நடக்கும் காதல் என்பது தெய்வீகமான சிருங்கார ரசம். அது உலகியலுக்கு அப்பாற்பட்டது. உலகியல் காதலில் உள்ள ரஜோகுணம், தமோகுணம் போன்ற தோஷங்கள் ஏதுமே இறைவனுக்கும் இறைவிக்கும் இடையே நடக்கும் சிருங்கார ரசத்தில் இல்லை. அது உலகியலுக்கு அப்பாற்பட்ட சுத்த சத்துவ மயமாக இருக்கிறது. அதைத் தியானிக்கத் தியானிக்க நம் மனதில் உள்ள அழுக்குகள், ரஜோகுணம், தமோகுணம், பாபங்கள் அனைத்தும் நீங்கி மனத்தூய்மையை நாம் அடைகிறோம்.

அதனால்தான் சுவாமி வேதாந்த தேசிகன், “ஆஸீத் அநுத்யேயதமம் முனீனாம்” – முற்றும் துறந்த முனிவர்களுக்கும் தியானிக்கத் தக்கதாக இறைவன் – இறைவியின் சிருங்கார ரசம் இருக்கிறது என்கிறார். ஆசைகளைத் துறந்த முனிவர்களும் தங்களுக்கு முழுமையான வைராக்யம் கைகூட வேண்டும் என்றால் இந்த சிருங்கார ரசத்தைத் தியானிக்க வேண்டும். அத்தகைய சிருங்கார ரசத்தைக் காட்டி முதலில் நம் மனதைக் கோயில் பக்கம் ஈர்க்கிறார் திருமால். அதனால்தான் கோபுரத்தின் கீழ் தளத்திலே சிருங்கார ரசம் நிறைந்த சிற்பங்கள் காணப்படுகின்றன.

அதன்மூலம் நம் மனதை ஈர்த்தபின் மேலே தனது தெய்வீகப் பேரானந்தத்தில் நம்மை ஆழ்த்துகிறார் பகவான். அதனால்தான் அடுத்தடுத்த மேல் தளங்களில் பகவானின் மற்ற லீலைகளை விளக்கும் சிற்பங்கள் அமைந்திருக்கும். கோபுரம் போல் நம் மனதையும் எண்ணங்களையும் உயர்த்த முதல்படியாக சிருங்கார ரசத்தைச் செய்து காட்டுகிறார் இறைவன் என்பதே தாத்பரியம்.

“கோயில் என்றால் கோபுரம் காட்டும் தெய்வம் உண்டு அங்கே!-உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் வேண்டும் இங்கே!”-என்று திரு. பூவை செங்குட்டுவன் என்னும் கவிஞர் பாடியுள்ளார். நம் எண்ணங்களையும் உள்ளத்தையும் கோபுரம் போல் உயர்த்த வல்லது இறைவனின் சிருங்கார சேஷ்டிதம். மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களைத் திருமால் மயக்கினார் அல்லவா? அதன்மூலமும் இந்தத் தத்துவத்தையே உணர்த்தினார். நம் மனமே பாற்கடல். அதில் உள்ள நல்ல எண்ணங்கள் தேவர்கள், தீய எண்ணங்கள் அசுரர்கள். வேதம் என்னும் மத்தைக் கொண்டு, இறையருள் என்னும் கயிற்றால் நம் மனமாகிய பாற்கடலைக் கடைந்தால், ஜீவாத்மா – பரமாத்மா பற்றிய அமுதமயமான ஞானம் ஏற்படும். அந்த ஞானமாகிய அமுதம் தீய எண்ணங்களாகிய அசுரர்கள் கையில் கிட்டாமல் நல்ல எண்ணங்களாகிய தேவர்கள் கையில் கிடைக்கவே மோகினி வேடம் தரிக்கிறார் திருமால். அதாவது, தனது தெய்வீக சிருங்கார ரசத்தால் அசுரர்களாகிய நம் தீய எண்ணங்களை மயக்கி, நல்லெண்ணங்கள் அமுதமயமான ஞானத்தைப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்கிறார்.

இந்த விளக்கத்தை ஸ்ரீ .உ.வே. கருணாகராச்சாரியார் சுவாமி அருளியவாறே, கேள்வி கேட்ட நண்பர் தெளிவுபெற்று நன்றி தெரிவித்து விட்டுச் சென்றார். தேவர்களுக்கு அமுதம் கிடைத்துவிடக்கூடாது என்று அசுரர்கள் கோபத்துடன் அவர்களைத் தாக்கப் பார்த்தார்கள். ஆனால், மோகினியாக பகவான் தோன்றி அவர்களை மயக்கியவாறே, அவர்களின் கோபம் மொத்தமாக அடங்கிவிட்டது. இதுபோலத்தான் நமது மனதில் எழும் தீய எண்ணங்களையும் தனது அழகைக் காட்டி சாந்தப்படுத்தி நீக்குகிறார் திருமால். இப்படி அசுரர்களின் கோபத்தை வென்றதால் ‘ஜிதக்ரோத:’ என்று திருமால் அழைக்கப்படு கிறார். ‘க்ரோத’ என்றால் கோபம், ‘ஜிதக்ரோத:’ என்றால் தேவர்கள் மீது அசுரர்கள்கொண்ட கோபத்தை வென்றவர். அதுவே ஸஹஸ்ர நாமத்தின் 463-வது திருநாமம்.“ஜிதக்ரோதாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் மனதில் தீய எண்ணங்கள் எழாதபடி திருமால் அருள்புரிவார்.

————

466. ஸ்வாபநாய நமஹ (Swaapanaaya namaha)

(திருநாமங்கள் 457[ஸுமுக:] முதல் 470 [நைககர்மக்ருத்] வரை – தேவர்களுக்கு அமுதம் தந்த வரலாறு)

பாற்கடலில் இருந்து அமுதம் வெளிவந்தவாறே, அது தேவர்களுக்கா அசுரர்களுக்கா என்ற பெரும் போட்டி நடைபெற்றுவந்தது. ஒப்பீட்டு அளவில் நல்லவர்களான தேவர்களுக்கு அமுதைச் சேர்க்க நினைத்த திருமால், மோகினி என்ற பெண் வடிவம் தரிப்பது என்று முடிவெடுத்தார். அற்புதமான, அழகு மிக்க தோற்றத்தோடு மோகினியாக வடிவம் பூண்டார் திருமால். மதுரைக்கு அருகில் உள்ள திருமோகூர் என்ற திருத்தலத்தில்தான், திருமால் இந்த மோகினி வடிவைத் தரித்தார் என்று அத்தலத்தின் தலவரலாறு சொல்கிறது.

அந்த மோகினியை பாகவத புராணத்தில் அழகாக வர்ணித்துள்ளார் சுகமுனிவர். மிகவும் அழகான காயாம்பூ வண்ணத் திருமேனியோடும், அழகு மிளிரும் அங்கங்களோடும், காதுகளில் இணையான குண்டலங்களோடும், அழகிய கன்னங்களோடும், உயர்ந்த முகத்தோடும், சிறுத்த இடையோடும், தாமரை போல் நறுமணம் வீசும் முகத்தோடும், மலர்ந்த மல்லிகைப் பூக்கள் சூட்டிய கூந்தலோடும், அழகிய ஆபரணங்களோடும், தூய ஆடையோடும், வெட்கத்தோடு கூடிய புன்னகையோடும், புருவ நெரிப்போடும் அசுரர்களை நோக்கி வந்தாள் மோகினி.

அவளைப் பார்த்த அசுரர்களின் உள்ளத்தில் காமம் ஏற்பட்டது. இதுவரை அமுதம் வேண்டும் என்று தேவர்களை எதிர்த்துச் சண்டை போட்டுக் கொண்டிருந்த அசுரர்கள் மோகினியிடம் ஓடி வந்தார்கள். “பெண்ணே! நாங்கள் இவ்வளவு நேரம் சண்டை போட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்து எங்களை வெறுத்துவிடாதே. நாங்களும் தேவர்களும் பங்காளிகள்தான். நீயே பார்த்து எங்களுக்கு அமுதைப் பங்கு போட்டு அளித்து விடு!” என்று மோகினியிடம் அசுரர்கள் சொன்னார்கள்.

அதைக் கேட்ட மோகினி, “ஒரு பெண்ணின் புறத்தோற்றத்துக்கு மயங்கி இப்படியா பேசுவீர்கள்? நான்தான் அமுதைப் பங்கிட்டுத் தரவேண்டும் என்றால், நான் நியாயமாகவோ அநியாயமாகவோ எப்படிப் பிரித்துத் தந்தாலும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?” என்று கேட்டாள். அசுரர்கள், “உன்னைப் போன்ற ஒரு பெண்ணின் அன்பு எங்களுக்குக் கிடைக்குமானால், வேறென்ன வேண்டும் உலகத்திலே? உன் இஷ்டப்படி செய்!” என்றார்கள்.

மோகினி, “அப்படியானால் தேவ அசுரர்களே! நீங்கள் எல்லோரும் நீராடி ஆசமனம் செய்து, ஹோமம் செய்து, விரதம் இருந்து, தர்ப்பைப் புல்லைத் தரையில் பரப்பி, அதன் மீது கிழக்கு முகமாக அமர்வீர்களாக. நானே அமுதைச் சரியாகப் பிரித்துத் தருகிறேன்!” என்றார். தேவர்களும், அசுரர்களும் அப்படியே செய்தார்கள். ஹோமம், விரதம் போன்றவற்றைப் பெரிதாக அறியாத அசுரர்களும் கூட, மோகினி தங்கள் மீது கோபித்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக அவள் சொன்னபடி அனைத்தையுமே செய்துவிட்டுக் காத்திருந்தார்கள்.

முதலில் தேவர்களுக்கு அமுதைத் தருவதாகச் சொன்ன மோகினி, வரிசையாகத் தேவர்களுக்கு அமுதை வழங்கி வந்தாள். அதை அசுரர்கள் அத்தனை பேரும் வேடிக்கை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார்கள். யாருமே மறுத்துப் பேசவில்லை. மொத்த அமுதமும் தேவர்களுக்கே சென்று சேர்ந்துவிட்டது. உறங்கியவர் செயல்படாது இருப்பது போலவே அசுரர்கள் அப்படியே இருந்துவிட்டார்கள்.இப்படி மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை மயக்கி உறங்க வைத்ததால், (இங்கே உறக்கம் என்பது செயல்படாதிருக்கும் நிலையைக் குறிக்கிறது) மோகினி அவதாரம் செய்த திருமால் ஸ்வாபன என்று அழைக்கப்படுகிறார்.

ஒரு நாட்டில் யாருமே செயல்படாமல் இருந்தால், நாடு உறங்குகிறதா என்று கேட்கிறோம் அல்லவா? அதுபோல் மோகினியின் அழகில் மயங்கிச் செயல்படாமலேயே அசுரர்கள் இருந்ததால், அவர்களின் நிலையை உறக்கத்தோடு பெரியோர்கள் ஒப்பிட்டுள்ளார்கள்.

‘ஸ்வாபன:’ என்றால் உறங்கச்செய்பவர் என்று பொருள். தீயசக்திகளான அசுரர்களை மயக்கிச் செயல்பட முடியாமல் செய்த மோகினிக்கு ‘ஸ்வாபன:’ என்று பெயர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 466-வது திருநாமம்.

“ஸ்வாபனாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் எந்நாளும் தெளிவு ஏற்படும்படித் திருமால் அருள்புரிவார்.

—————-

467. ஸ்வவசாய நமஹ (Swavashaaya namaha)

`ஸ்ரீமகா பக்த விஜயம்’ என்னும் நூலில் இடம்பெற்றுள்ள ஒரு வரலாறு. பண்டரிபுரத்தில் கோயில் கொண்டுள்ள பாண்டுரங்கனின் சிறந்த பக்தர் நாமதேவர் என்பவர் நாமதேவரின் இளமைக் காலத்தில், அவரது தாயான குணாபாய், நாமதேவரிடம் ஒரு பாத்திரத்தில் பாயசத்தைக் கொடுத்து அதைப் பாண்டுரங்கனுக்கு நிவேதனம் செய்துவிட்டு வருமாறு அனுப்பிவைத்தாள்.நாமதேவரும் கையில் பாத்திரத்தோடு சென்றார். அந்த வீதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களின் பந்து, மூடாமல் நாமதேவர் கொண்டு சென்ற பாயச பாத்திரத்தில் விழுந்து விட்டது. தெருமுனையில் நடந்த இந்த காட்சியை வீட்டுவாசலில் இருந்து பார்த்த குணாபாய், “நாமதேவா! இங்கே வா! பந்து விழுந்த பாயசத்தைப் பாண்டுரங்கனுக்கு நிவேதனம் செய்யாதே!” என்று அழைத்தாள்.

விவரம் அறியாச் சிறுவனான நாமதேவர், “அதெல்லாம் ஒன்றும் பிரச்னை இல்லை அம்மா! நான் சென்று வருகிறேன்!” என்று வேகமாகச் சென்றுவிட்டார்.கோயிலுக்குள் நாமதேவர் சென்று பார்த்த போது, கோயிலில் யாரையுமே காணவில்லை. “யாராவது பெரியவர்கள் இருந்தால், அவர்களிடம் கொடுத்துப் பாண்டுரங்கனுக்கு நிவேதனம் செய்யச் சொல்லலாம் என நினைத்தேன். ஆனால் இங்கே யாரையுமே காணவில்லையே! என்ன செய்வது? என்று சிந்தித்தார் நாமதேவர்.

“சரி! நாமே நிவேதனம் செய்வோம்!” என முடிவெடுத்த அவர், பாண்டுரங்கனுக்கு அருகில் சென்று, “பாண்டுரங்கா! என் தாய் உனக்காக இந்தப் பாயசத்தைக் கொடுத்து அனுப்பி யிருக்கிறாள். நீ இதைச் சாப்பிட வேண்டும்!” என்றார். பாண்டுரங்கன் அசையாமல் அப்படியே இடுப்பில் கைவைத்தபடி நின்றிருந்தான்.“ஏய் பாண்டுரங்கா! நீ மட்டும் உண்ணாமல் இருந்தால், பந்து விழுந்ததால்தான் நீ உண்ணவில்லை என்று என் தாய் என்னிடம் கோபித்துக் கொள்வாள். தயவுசெய்து சாப்பிடு!” என்றார் நாமதேவர். அப்போதும், பாண்டுரங்கன் எந்தப் பதிலும் சொல்லவில்லை.

மீண்டும்மீண்டும் பாண்டுரங்கனிடம் வேண்டி அழுத நாமதேவர், “நீ இப்படி என்னைத் தண்டிக்க நினைக்கிறாய் என்றால், நானே என்னை மாய்த்துக்கொள்கிறேன்!” என்று சொல்லித் தன் தலையைப் பாண்டுரங்கனின் திருவடிவாரத்தில் உள்ள செங்கல்லில் மோதப் போனார். “நில்!” என்ற குரல். பாண்டுரங்கன் எதிரே நிற்கிறான். “நாமதேவா! வா! இருவருமாகப் பாயசத்தை உண்போம்!” என்றான் பாண்டுரங்கன்.

பாண்டுரங்கனும் நாமதேவருமாகச் சேர்ந்து பாயசத்தை உண்டார்கள். நாமதேவர் தன் கையால் சந்தனம் பூச, அதைத் தன் திருமார்பில் ஆனந்தமாக ஏற்றுக்கொண்டான் பாண்டுரங்கன். தனது மாலையை, நாமதேவருக்கு அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தான் பாண்டுரங்கன். குதூகலத்துடன் வீடு திரும்பினார் நாமதேவர். பாத்திரத்தைப் பார்த்த குணாபாய், “என்ன நாமதேவா? பாத்திரத்தில் பாயசம் எங்கே?” என்றாள். “பாண்டுரங்கன் உண்டுவிட்டான்!” என்றார் நாமதேவர்.

வெளியே சென்றிருந்த நாமதேவரின் தந்தை தாம்சேட்டி வீட்டுக்கு வந்தார். மகன் சொல்வதை அவரிடமும் சொன்னாள் குணாபாய். நாமதேவரே சாப்பிட்டு விட்டுப் பாண்டுரங்கன் உண்டதாகப் பொய் சொல்கிறாரோ என்று பெற்றோர்கள் சந்தேகப்பட்டார்கள்.“நாமதேவா கோயிலுக்கு வா! இறைவன் உண்மையிலேயே உண்டானா என்று பார்ப்போம்!” என்றார்கள். பெற்றோருடன் கோயிலுக்குச் சென்றார் நாமதேவர். அப்போது, அசரீரியாகப் பேசிய பாண்டுரங்கன், “தாம்சேட்டி! உங்கள் மகன் தந்த பாயசத்தை நான் உண்டது உண்மை. என் பக்தர்களோடு ஆனந்தமாக என் இஷ்டப்படி நான் விளையாட விரும்புவேன். அதற்காக அதற்கு இடையூறாக இருக்கும் மற்றவர்களை எல்லாம் உறங்க வைத்துவிடுவேன்.

அப்படித்தான் இன்றும் கோயிலில் எல்லாரையும் உறங்க வைத்துவிட்டு, நாமதேவரோடு இஷ்டப்படி உறவாடினேன்!” என்றான். தங்கள் மகனுக்குக் கிடைத்த அருளை எண்ணித் தாம்சேட்டியும் குணாபாயும் பேரானந்தம் அடைந்தார்கள்.அதுபோலத்தான், தன் பக்தர்களான தேவர்களுக்கு அமுதம் தந்து அவர்களை வாழ்வித்து அவர்களோடு உறவாடிய திருமால், அதற்கு இடையூறான அசுரர்களை எல்லாம் மோகினியின் அழகால் மயக்கித் தூங்க வைத்துவிட்டார்.

இப்படி மற்றவர்களை உறங்கச் செய்துவிட்டு, தன் இஷ்டப்படி அடியார்களோடு உறவாடுவதால், ‘ஸ்வவச:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். ‘ஸ்வவச:’ என்றால் தன் இஷ்டப்படி அடியாரோடு விளையாடுபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 467-வது திருநாமம்.

“ஸ்வவசாய நமஹ:” என்று தினமும் சொல்லி வந்தால், நம்மோடும் திருமால் விளையாடி நமக்கும் நல்லருள்புரிந்தருள்வார்.

—————–

468. வ்யாபினே நமஹ (Vyaapiney namaha)

வைணவக் குருவான ஆளவந்தார் திருவரங்கத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு எழுந்தருளினார். காஞ்சியில் வரதராஜப் பெருமாளுக்கு விசிறி வீசித் தொண்டாற்றி வந்த திருக்கச்சி நம்பிகள் மூலம் காஞ்சியில் யாதவப் பிரகாசரிடம் வேதாந்தம் பயிலும் ராமானுஜரைப் பற்றிய செய்திகளை அப்போது ஆளவந்தார் அறிந்தார். யாதவப் பிரகாசர் வேதங்களுக்குத் தவறான பொருள் சொல்வதையும், குருவை மிஞ்சிய சிஷ்யராக ராமானுஜர் அவரைத் திருத்திச் சரியான பொருளை உரைப்பதையும் திருக்கச்சி நம்பிகள் ஆளவந்தாரிடம் எடுத்துச் சொன்னார்.

இதைக் கேட்ட ஆளவந்தாருக்கு ராமானு ஜரைக் காணவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அதைத் திருக்கச்சி நம்பிகளிடம் சொல்லிக் கொண்டே, வரதராஜப் பெருமாள் திருக்கோயிலுக்குள் சென்றார் ஆளவந்தார். அங்கே கரியமாணிக்க வரதர் சந்நதிக்கு அருகில் திருக்கச்சி நம்பிகளோடு ஆளவந்தார் நின்று கொண்டிருந்தபோது, யாதவப் பிரகாசர் தன்னுடைய சீடர்களோடு கோயிலுக்குள்ளே நுழைந்தார்.

உடனே திருக்கச்சி நம்பிகள் ஆளவந்தாரிடம், யாதவப் பிரகாசரின் கோஷ்டியைச் சுட்டிக்காட்டி, “சுவாமி! அதோ ஒரு கோஷ்டி வருகிறதே! அதில் நெடுகி சிவந்து ஆஜாநுபாகுவாகி வருகிறவர்தான் ராமானுஜர்!” என்றார். அதாவது எதிரே வரும் கோஷ்டியில், நல்ல உயரத்தோடும், சிவந்த வண்ணத்தோடும், முழங்கால் வரை நீண்ட கைகளோடும் கூடியவராக இருக்கும் அந்த இளைஞரே ராமானுஜர் என்று ஆளவந்தாருக்கு அடையாளம் காட்டினார் திருக்கச்சி நம்பிகள்.

முதன்முறையாக ராமானுஜரைப் பார்த்த ஆளவந்தார், “ஆம் முதல்வன் இவன்!” என்று சொல்லி ராமானுஜரை வாழ்த்தினார். ஆம் முதல்வன் இவன் என்ற தொடர் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரத்தில் இடம்பெற்ற தொடராகும்.

திருமால் தமக்குப் புரிந்த அருளை நம்மாழ்வார் பாடும்போது;

“ஆம் முதல்வன் இவன் என்று தற்றேற்றி என்
நாமுதல் வந்து புகுந்த நல் இன்கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய்முதல் அப்பனை என்றும் மறப்பனோ?”-என்று பாடுகிறார்.

“உலகில் உள்ள மக்களை எல்லாம் திருத்தி பக்தியில் ஈடுபடுவதற்குரிய தலைவன், முதல்வன் இவனே என்று அடியேனைத் தேர்ந்தெடுத்து, என் நாவிலே வந்து திருமால் அமர்ந்து கொண்டு, தன் பெருமையை அடியேன் மூலமாகப் பாடவைத்து, தமிழ்வேதமாகிய திருவாய்மொழியை உருவாக்கியுள்ளார்!” என்பது இப்பாடலின் கருத்து.

அதன் அடிப்படையில், “நம்மாழ்வாரை முதல்வர் என்று தேர்ந்தெடுத்து, அவர் நாவில் அமர்ந்து அவரை இயக்கிப் பாடல்கள் பாட வைத்தார் அல்லவா திருமால், அதே திருமால்தான் இப்போது ராமானுஜரை முதல்வர் என்று தேர்ந்தெடுத்து, இவர் மூலமாக உலகம் உய்வடைய வேண்டும் எனக்கருதி ராமானுஜரின் உள்ளத்திலேயே குடிவந்து அவர்மூலம்தான் விரும்புவனவற்றை நடத்திக்கொள்ளப் போகிறான்!” என்று ஆளவந்தார் திருக்கச்சி நம்பிகளிடம் கூறியிருக்கிறார்.

இதுபோலவே திருப்பாற்கடல் கடைந்த போதும், அமுதம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்தாகச் சுழலும் மந்தர மலைக்குள்ளும், கயிறாகக் கட்டப்பட்ட வாசுகி பாம்புக்குள்ளும், கடைகின்ற தேவர்களுக்குள்ளும், அசுரர்களுக்குள்ளும் திருமால் நுழைந்து, அவர்களுக்குள்ளே நிறைந்திருந்து அவர்கள் மூலம் அமுதம் கடைதல் என்னும் செயல் நடைபெறும்படிச் செய்தார்.

இப்படி அனைவருக்குள்ளும் நுழைந்து உள்ளே நிறைந்திருந்து அவர்களைச் செயல்பட வைப்பதால் திருமால் ‘வ்யாபீ’ என்று அழைக்கப்படுகிறார்.

‘வ்யாபீ’ என்றால் உள்ளே நுழைந்து நிறைந்திருப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 468-வது திருநாமம்.

“வ்யாபினே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குள் எப்போதும் திருமால் எழுந்தருளியிருந்து அவர்களை வழிநடத்துவார்.

—————

469. நைகாத்மனே நமஹ (Naikaathmaney namaha)

ஆசுகவி வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள் அருளிய `அம்ருத சார்தூலம்’ என்ற துதியில் உள்ள ஒரு ஸ்லோகம்;

கும்பம் பூஜயிதும் ச ரக்ஷிதும் அமுதம் யோக்யம் புராரிம் வ்யதாத்
ஸர்வஜ்ஞம் த்ருதகங்கம் ஏனம் அனகம் கும்பேச்வரோயம் யத:
ஸ்வஸ்யாதோ பஹுபிஸ்ஸமை: கலயிதும் பூஜாம் ஸ சாலாபத:
ஸஞ்ஜாதோ பஹுதா ஸ்வயம் ஹி பரிதஸ் த்வாம் கும்பகம் ஸேவதே

திருப்பாற்கடலைக் கடையும் போது, முதலில் தேவர்கள் ஒரு குடத்தில் திருமாலை ஆவாகனம் செய்து வழிபட நினைத்தார்களாம். எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்பு, வேத மந்திரங்களால் இறைவனை வழிபட்டு விட்டுச் செய்தால் முழு வெற்றி கிட்டும் என்கிற அடிப்படையில் தேவர்கள் மேற்கொண்ட முயற்சி இது.கும்பத்தினுள்ளே திருமாலை எழுந்தருளச் செய்த பின், யார் மூலமாக இந்தப் பெருமாளுக்குப் பூஜைகளை நடத்தலாம் என்று சிந்தித்த தேவர்கள், சிவபெருமானைத் தேர்ந்தெடுத்தார்களாம். ஏனென்றால், சிவபெருமான் வேதங்களில் வல்லவர்.மேலும், தலையில் கங்கையைச் சுமந்தபடி எப்போதும் தூய்மையாகவே இருப்பவர்.
இத்தகைய ஞான அனுஷ்டான சீலர் தானே ஆராதகராக இருக்க முடியும்? அந்தக் குடம்தான் கும்பகோணம் அல்லது குடமூக்கு என்று அழைக்கப்படும் திருத்தலம். அக்கும்பத்தில் உள்ள திருமாலைப் பூஜித்தபடியால் கும்பேஸ்வரர் என்று கும்பகோணத்தில் சிவபெருமான் பெயர்பெற்றார் என்று இங்கே குறிப்பிடுகிறார் நிதி சுவாமிகள். (கும்பகோணத்தின் சைவ ஸ்தல புராணங்களில் கூறப்பட்ட மற்றொரு கோணத்திலான கதையை நாம் இங்கே மறுக்கவில்லை. இந்தத் திருநாமத்தை விளக்கும் கோணத்திலும் அம்ருத சார்தூல சுலோகத்தின் அடிப்படையிலும் மட்டுமே இது விவரிக்கப் படுகிறது).

மேலும், குடத்துக்குள் உள்ள அமுதம் போல் கும்பகோணத்தின் மத்தியில் எழுந்தருளிய திருமால், ஆராவமுதன் என்று பெயர் பெற்றார். கண்களால் பருகும் திகட்டாத அமுதமாய் இருக்கும் ஆராவமுதப் பெருமானின் அழகில் சிவபெருமான் ஈடுபட்டார். இவரைப் பூஜிக்க வேண்டும் என்றால் ஒரு வடிவம் எடுத்துக்கொண்டு பூஜித்தால் போதாது, பலப்பல வடிவங்கள் கொள்வோம் என்று முடிவெடுத்தார். அதன்படியாக, ஆராவமுதப் பிரானின் திருக்கோயிலைச் சுற்றிப் பற்பல சிவாலயங்களிலே கோயில்கொண்டு ஆராவமுதனைச் சுற்றிச்சுற்றி வந்து பூஜித்து மகிழ்ந்தாராம் சிவபெருமான். இன்றும் கும்பகோணத்தில் ஆராவமுதன் சந்நதியைச் சூழ்ந்து பல சிவாலயங்கள் இருப்பதைக் காணலாம்.

இதைக் கண்ட ஆராவமுதன், “சிவபெருமானே! நீங்கள் பல வடிவம்கொண்டு என்னை ஆராதித்தீர்கள். நானும் இப்போது பல வடிவங்களில் காட்சிதந்து உங்களுக்கும் தேவர்களுக்கும் அருள்புரியப்போகிறேன்!” என்று சொல்லி, சார்ங்கவில் ஏந்திய சாரங்கபாணி எனும் ஆராவமுதாழ்வானாகவும், சக்ராயுதம் ஏந்தியபடி சக்ரபாணியாகவும், கோதண்ட பாணியாகிய ராமனாகவும், செண்டு என்னும் மாடு மேய்க்கும் கோல் ஏந்தி யஷ்டிபாணியான ஸ்ரீ ராஜகோபாலனாகவும் காட்சி அளித்தார்.

பாணி என்றால் திருக்கரம். இப்படி நான்கு வித திவ்யாயுதம் தரித்த திருக்கரங்களோடு, நான்குவிதப் பாணிகளாகத் தேவர்களுக்குக் காட்சி தந்து அருள்புரிந்து திருப்பாற்கடல் கடைய அருள்புரிந்தாராம் திருமால்.அவ்வாறே திருப்பாற்கடல் கடையும்போதும், மந்தரமலையைச் சுமக்க ஆமை வடிவம் கொண்ட கூர்ம மூர்த்தியாகவும், பாற்கடலைக் கடைவதற்காக அஜிதன் என்ற மூர்த்தியாகவும், அமுதைக்கொண்டு வர தன்வந்திரியாகவும், அசுரர்களை மயக்குவதற்காக மோகினியாகவும் பலப்பல வடிவங்கள் எடுத்து அமுதத்தைத் தேவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தார் திருமால்.

இப்படிப் பலப்பல வடிவங்கள் தரித்து அடியார்களுக்கு அருள்புரிவதால், `நைகாத்மா’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். ஆத்மா என்பது இவ்விடத்தில் உடலை (வடிவைக்) குறிக்கிறது.

ஏக என்றால் ஒன்று, நைக என்றால் பல. நைக + ஆத்மா = நைகாத்மா என்றால் பலப்பல வடிவங்கள் தரிப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 469-வது திருநாமம்.

நைகாத்மனே நமஹ: என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களை எல்லாத் திசைகளில் இருந்து வரும் ஆபத்துகளை நீக்கி திருமால் எப்போதும் காத்தருள்வார்.

——————-

470. நைக கர்ம க்ருதே நமஹ  (Naika Karma Kruthey namaha)

(திருநாமங்கள் 457 [ஸுமுக:] முதல் 470 [நைககர்மக்ருத்] வரை – தேவர்களுக்கு அமுதம் தந்த வரலாறு)

நவ திருப்பதிகளுள் மூன்று திருத்தலங்
களான திருப்புளிங்குடி, வரகுணமங்கை, ஸ்ரீவைகுண்டம் ஆகிய திருத்தலங்களை,

புளிங்குடி கிடந்து வரகுண மங்கை இருந்து, வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகங் கழியாதே என்னை யாள்வாய்
–என்று திருவாய்மொழியில் நம்மாழ்வார் பாடியுள்ளார்.

திருப்புளிங்குடி திவ்யதேசத்திலே சயனித்து,
வரகுணமங்கை திவ்யதேசத்திலே அமர்ந்து,
ஸ்ரீவைகுண்டம் என்னும் திருத்தலத்திலே நின்று,
நம்மாழ்வாரைப் பெறுவதற்காகத் திருமால் காத்திருக்கிறாராம்.
இக்கருத்தை `ஆசார்ய ஹ்ருதயம்’ என்னும் நூலில், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், போக்ய பாகத்வரை தெளிந்த சந்தைக்கு முன்னில் மூன்றிலும் பிரகடம் என்று விளக்குகிறார்.
அதாவது, ஒரு வீட்டில் சமையலறையில் சமையல் ஆகிக் கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
அந்த வீட்டில் உள்ள ஒருவருக்குப் பசி அதிகமாக இருந்தால், உணவு தயாராகிவிட்டதா என்று அறியும் ஆர்வத்தோடு அவர் அடிக்கடி சமையல் அறைப் பக்கம் சென்றுசென்று வருவார் அல்லவா?

அதிலும் ஆரம்பநிலையில், சமையல் அறைப் பக்கமாக வந்து நிற்பார்.
இன்னும் தாமதம் ஆகிக்கொண்டே இருந்தால், சமையல் அறையிலேயே அவர் அமர்ந்துவிடுவார்.
உணவு தயாராகி அதை உண்டபின் இங்கிருந்து எழுவோம் என்ற எண்ணத்திலே அமர்ந்திடுவார்.
இன்னும் தாமதம் ஆகிக் கொண்டே போனால், சமையல் அறையிலேயே படுத்துவிடுவார்.
உணவு வந்து அதை உண்ட பின் தான் எழுவேனே ஒழிய, அதுவரை இங்கிருந்து நகருவதில்லை என்ற உறுதியால் சயனித்துவிடுகிறார்.

இதைப்போலத்தான் நம்மாழ்வார் என்ற ஜீவாத்மாவைத் தனக்கு உணவாகப் பெறவேண்டும் என்று திருமால் ஆசைப்பட்டாராம்.
அந்த நம்மாழ்வாரின் பக்தியானது பரபக்தி, பரஞானம், பரம பக்தி என்று அடுத்தடுத்த நிலைகளைக் கடந்து, பக்குவப்பட்டுச் சமைக்கப்பட்டு வரவேண்டும் என்று திருமால் காத்திருக்கிறாராம்.
நீண்ட நாள் பசியில் வாடியவர் உணவை விரைந்து பெறத் துடிப்பது போல், திருமாலே எனக்கு எல்லாம் என்று சொல்லும் உயர்ந்த பக்தரைத் தேடிக்கொண்டிருக்கும் திருமால்,
நம்மாழ்வாரைக் கண்டவாறே அவரை விரைந்து பெற வேண்டும் என்று வேட்கை கொண்டாராம்.

அந்த வேட்கையில்தான், முதலில் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டத்தில் வந்து நின்றாராம் திருமால்.
ஆழ்வார் திருநகரி புளிய மரத்தின் அடியில் சமைக்கப்பட்டுவரும் நம்மாழ்வார் என்ற தன் உணவுக்குப் பரமபக்தி முழுமை பெற்றுவிட்டதா என்று பார்த்தாராம்
திருமால். ஆழ்வாரின் பக்தி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தாலும் கூட, அவரை விரைந்து அடைய வேண்டும் என்ற துடிப்பால்,
திருமால் விஜயாசனப் பெருமாளாக வரகுணமங்கையிலே அமர்ந்து கொண்டாராம்.
இன்னும் சற்று தாமதம் ஆகவே, திருப்புளிங்குடியிலே காய்சின வேந்தனாக வந்து பள்ளி கொண்டு, ஆழ்வாரைப் பெறாமல் இங்கிருந்து நகருவதில்லை என்று உறுதியோடு காத்திருந்து ஆழ்வாரைப் பெற்றாராம்.

ஆக, தன் பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும் என்பதற்காக நிற்றல், இருத்தல், கிடத்தல் உள்ளிட்ட பல செயல்களைச் செய்கிறார் திருமால்.
அவ்வாறே திருப்பாற்கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமுதைக் கொடுப்பதற்காகப் பற்பல செயல்களைச் செய்தார் திருமால்.
மந்தர மலையைச் சுமந்து, தானே திருப்பாற்கடலைக் கடைந்து,
தன்வந்தரியாக அமுதைக் கொண்டு வந்து, மோகினியாக அசுரர்களை மயக்கி –
இப்படிப் பற்பல செயல்களைச் செய்து தேவர்களுக்கு அமுதைப் பெற்றுத் தந்தபடியால் அமுதம் தந்த திருமால் நைக கர்ம க்ருத் என்று அழைக்கப்படுகிறார்.
கர்ம என்றால் செயல், க்ருத் என்றால் செய்பவர்,
ஏக என்றால் ஒன்று, நைக என்றால் பல.
‘நைக கர்ம க்ருத்’ என்றால் பலப்பல செயல்களைச் செய்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 470-வது திருநாமம்.
“நைககர்மக்ருதே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைப் பலவிதங்களில் எப்போதும் திருமால் காத்தருள்வார்.

———–——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமலை நம்பி -ஸ்ரீ திரு குருகைப்பிரான் பிள்ளான் வைபவங்கள் –

September 26, 2022

ஸ்ரீ பெரியதிருமலை நம்பி ஸ்ரீ திருவேங்கடமுடையானின் இன்னருளால் திருமலையில் திருவவதரித்தார். ஆளவந்தாரின் முக்கியமான சிஷ்யர்களுள் இவரும் ஒருவர். இவருக்கு ஸ்ரீசைல பூர்ணர் என்ற திருநாமமும் உண்டு.
இவர் எம்பெருமான் மீது வைத்திருக்கும் பற்றைப் பார்த்து திருவேங்கடமுடையானே இவரை “பிதாமஹர்” என்று மிகவும் கௌரவித்தார்.
திருநக்ஷத்திரம் : வைகாசி, ஸ்வாதி

“தாதா” என்ற பதம்
திருமலை திருவேங்கடமுடையான் தனது பரம பக்த ஸ்ரேஷ்டரான ஸ்ரீ பெரிய திருமலை நம்பியைப் பார்த்து ஒரு ஸமயம்,
“தாதா” என்று கூப்பிட்டதிலிருந்து ஏற்பட்ட அருள் வாக்கு.
இந்த தாதாசாரியர் எனப்படும் ஆசார்ய புருஷ வம்சம் ஸ்ரீ சுமார் 1000 வருஷ காலமாக ஸ்ரீ வைஷ்ணவ ஸித்தாந் தத்தை பரப்புவதற்கும் பாதுகாப்பதற்கும்
அளவிலா பங்கு கொண்டது.

ஆளவந்தார் தன்னுடைய சிஷ்யர்களுள் 5 பிரதானமான சிஷ்யர்களை அழைத்து, எம்பெருமானாருக்கு சம்பிரதாயதில் உள்ள சகல அர்த விசேஷங்களையும் கற்றுக்கொடுக்குமாறு நியமித்தார்.
அந்த 5 பேரில், பெரியதிருமலை நம்பியை ஸ்ரீராமயணத்தை கற்றுக்கொடுக்குமாறு நியமித்தார்.
இதுவே நமது சம்பிரதாயத்தில் பிரபலமாக சரணாகதி சாஸ்திரம் என்று அழைக்கப்படும்.
திருமலைநம்பி ராமானுஜருடைய தாய்மாமன். மேலும் இவரே ராமானுஜர் அவதரித்த போது “இளையாழ்வார்” என்ற திருநாமத்தை அவருக்கு சூட்டினார். திருவேங்கடத்தில் இருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களில் இவரே முதன்மையானவராக பாராட்டப்பட்டார்.
இவர் திருவேங்கடமுடையானுக்கு நித்ய கைங்கர்யபரராக இருந்தார்.
தினமும் திருவேங்கடமுடையானுக்காக இவர் ஆகாச கங்கையிலிருந்து (திருமலையில் உள்ள நீர் ஆதாரம்) தீர்த்தம் கொண்டு வருவார்.
கோவிந்தப் பெருமாளை (எம்பார்) நமது சம்பிரதாயத்திற்கு (ஏனெனில் அவர் வரணாசி யாத்திரைக்கு சென்ற போது உள்ளங்கை கொணர்ந்த நாயனாராக மாறி,
காலஹஸ்தியில் தேவதாந்தரத்திற்குத் தொண்டு செய்து கொண்டிருந்தார்) கொண்டு வரவேண்டும் என்று எம்பெருமானார் ஆசைப்பட்டார்.
கோவிந்தப் பெருமாளைத் திருத்திப் பணிகொள்ள வேண்டும் என்று ஒரு ஸ்ரீவைஷ்ணவர் மூலம் எம்பெருமானார் பெரிய திருமலை நம்பியிடம் கேட்டுக் கொண்டார்.
உடனே பெரிய திருமலை நம்பி தனது சிஷ்யர்கள் மற்றும் அந்த ஸ்ரீவைஷ்ணவரை (இவர் பின்னர் திருவரங்கத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை எம்பெருமானாரிடம் விவரிக்கிறார்)
அழைத்துக் கொண்டு கோவிந்தப் பெருமாளை பார்க்க காலஹஸ்திக்குச் சென்றார்.
கோவிந்தப் பெருமாள் வழக்கமாக நடந்து செல்லும் பாதையில் உள்ள ஒரு மரத்தினுடைய நிழலில் நம்பியும் அவருடைய சிஷ்யர்களும் உட்காந்திருந்தார்கள்.
கோவிந்தப் பெருமாள் சிவபக்தர் போல் ஆடைகள் அணிந்து கொண்டு, உடம்பில் திர்யக் புண்ரம் (சாம்பல்) மற்றும் ருத்ராக்ஷ மாலையை அணிந்து கொண்டு அந்த வழியாக வந்தார்.
நம்பி எம்பெருமானுடைய பெருமைகளைப் பாடிக்கொண்டிந்தார், அதை கோவிந்தப் பெருமாள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்தார்.
சில நாட்கள் கழித்து, அதே நேரத்தில் அதே இடத்தில் நம்பி ஆளவந்தாருடைய ஸ்தோத்ர ரத்னத்தில் உள்ள 11வது ச்லோகத்தை
(இந்த ச்லோகமே ஸ்ரீமந் நாராயணனுடைய பரத்வத்தையும், இதர தேவதைகள் எம்பெருமனை எப்படிச் சார்ந்து இருக்கிறார்கள் என்பதையும் விளக்குவதாக அமைந்துள்ளது)
பனை ஓலையில் எழுதி அந்த இடத்தில் கீழே விட்டார்.
கோவிந்தப் பெருமாள் அதை எடுத்துப் படித்து விட்டு கீழே போட்டு விட்டார். திரும்பி வரும்பொழுது அந்த பனை ஓலையை தேடிக் கண்டுபிடித்தார்.
அந்த ச்லோகத்தினுடைய ஆழமான அர்த்தத்தைச் சிந்தித்து, நம்பியிடம் சென்று இது உம்முடையதா? என்று கேட்டார்.
கோவிந்தப் பெருமாள் மற்றும் பெரிய திருமலை நம்பிக் கிடையே ஒரு சிறிய உரையாடல் நடந்தது.
அப்பொழுது கோவிந்த பெருமாளுக்கு ஸ்ரீமந் நாராயணனுடைய பரத்வத்தில் இருந்த சந்தேகங்கள் அனைத்தையும் பெரிய திருமலை தெளிவுபடுத்தினார்.
அவர் வார்தைகள் அனைத்தையும் கேட்டு உறுதியான நம்பிக்கையுடன் கோவிந்தப் பெருமாள் அந்த இடத்தை விட்டு சென்றார். பின்னர் நம்பி மீன்டும் அந்த இடத்திற்கு வந்தார்.
அப்பொழுது கோவிந்தப் பெருமாள் மரத்தில் ஏறி ருத்ரனுக்காக புஷ்பங்கள் பறித்துக் கொண்டிருந்தார்.
நம்பி திண்ணன் வீடு பதிகத்தை விளக்கமாக உபந்யஸிக்க ஆரம்பித்தார். அந்த பதிகத்தில் எம்பெருமானுடைய பரத்வத்தைப் பற்றி ஆழ்வார் விளக்கமாகக் கூறியுள்ளார்.
அவர் 4வது பசுரத்தை மிகவும் அழகாக விவரித்தார். அதாவது புஷ்பமும், பூஜையும் (திருவாராதனமும்) எம்பெருமானுக்கு மட்டுமே தகும் என்று நம்மாழ்வார் மிகவும் அழகாக நிர்வஹித்துள்ளார் என்று கூறினார்.
இதைக் கேட்டவுடன் கோவிந்தப் பெருமாள் மரத்திலிருந்து கீழே குதித்து, வேரற்ற மரம் விழுவது போல நம்பியினுடைய திருவடித் தாமரைகளில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.
தேவையற்றவர்களுடைய சம்பந்தமே தன்னை இப்படி மாற்றியது என்றும் தன்னை நம்பியினுடைய திருவடிகளில்
கைங்கர்யம் பண்ணுவதற்கு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அழுதுகொண்டே கேட்டுக் கொண்டார்.
நம்பி அவரை மேலே எழுப்பி ஆறுதல் கூறினார். கோவிந்தப் பெருமாள் காளஹஸ்தியில் உள்ள அனைத்து சம்பந்தத்தையும் விட்டு, கருவூலத்தின் சாவியை ருத்ர பக்தர்களிடம் ஒப்படைத்தார்.
அந்த சமயத்தில் ருத்ர பக்தர்கள் கோவிந்தப் பெருமாளிடம் “நேற்று இரவு ருத்ரன் கனவில் வந்தார். இந்த உலகத்தில் உள்ள எல்லோருக்கும்
உண்மையான அறிவைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே எம்பெருமானார் அவதரித்திருக்கிரார்.
கோவிந்தப் பெருமாள் நம் மீது உள்ள பற்றை விட்டால் யாரும் தடுக்க கூடாது என்று ருத்ரன் கூறியதாக” கூறினார்கள். அதனால் மிகவும் சந்தோஷத்துடன் அவரை அனுப்பி வைத்தார்கள்.

அவர்கள் இருவரும் திருமலைக்கு வந்த பிறகு, நம்பி கோவிந்தப் பெருமாளுக்கு உபனயன சம்ஸ்காரமும், பஞ்ச ஸம்ஸ்காரமும் செய்து வைத்து
அவருக்கு ஆழ்வார்களுடைய அருளிச் செயலைக் கற்றுக் கொடுத்தார்.
எம்பெருமானார் ஒருமுறை திருமலைக்குச் சென்றார். எம்பெருமானார் திருமலையில் ஏறிச் சென்ற பொழுது, நுழைவு வாயிலில் நம்பி தாமே வந்து அவரை வரவேற்றார்.
நம்பி மிகவும் கற்றுத் தேர்ந்தவர், முதியவர் மேலும் எம்பெருமானாருக்கு ஆசார்யன் அதனால்,
எம்பெருமானார் “அடியேனை வரவேற்க யாரேனும் தாழ்ந்தவர் இல்லயோ?” என்று கேட்க,
அதற்கு நம்பி பெருந்தன்மையுடன் “எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தேன், என்னை விடத் தாழ்ந்தவர் யாருமே இல்லை” என்று நம்பி கூறினார்.
எம்பெருமானார் திருவேங்கடமுடையானை மங்களாசாசனம் பண்ணிவிட்டு திருமலையில் இருந்து இறங்கினார்.
ஸ்ரீ ராமானுஜர், நம்பியிடம் ஸ்ரீராமாயணம் கற்றுக் கொள்வதற்காகத் திருப்பதிக்கு வந்தார்.
ஒரு வருடம் முழுவதும் அங்கே இருந்து ஸ்ரீ ராமாயண காலக்ஷேபம் கேட்டார்.
காலக்ஷேபத்தின் முடிவில், திருமலை நம்பி எம்பெருமானாரிடம் ஏதாவது பரிசைத் தன்னிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுகொண்டார்.
அதற்கு எம்பெருமானார் கோவிந்தப் பெருமாளை தன்னுடன் அனுப்பிவைக்குமாறு கேட்டார். நம்பியும் சந்தோஷத்துடன் அதை ஏற்றுக் கொண்டார்.
எம்பெருமானாரும், கோவிந்தப் பெருமாளும் திருப்பதியை விட்டுச்சென்றார்கள்.
ஆனால் கோவிந்தப் பெருமாள் தன்னுடைய ஆசார்யனுடைய பிரிவைத் தாங்க முடியாமல், மீண்டும் திருப்பதிக்கு வந்தார்.
ஆனால் திருமலை நம்பி கோவிந்தப் பெருமாளிடம் ஒரு வார்தை கூட பேச விருப்பமில்லாமல், அவர்
எம்பெருமானாருக்குச் சொந்தமானவர் என்று கூறி உடனே அவரை எம்பெருமானரிடம் செல்லுமாறு அனுப்பி வைத்தார்.
பின்னர் கோவிந்தப் பெருமாள் ஸந்யாஸாச்ரமம் ஏற்றுக்கொண்டு எம்பாராக என்று பிரபலமாக விளங்கினார்.

திருப்பாவை 14வது பாசுரம் – அழகிய மணவாள பெருமாள் நாயனார் – “செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்” என்பதற்கு
நம்பியினுடைய ஆச்சர்யமான விளக்கத்தை இங்கே காட்டுகிறார்.
கோபிகைகளை எழுப்பும்பொழுது விடியற்காலை வேளையில் நடக்கும் சுப நிகழ்வுகளை இந்த இடத்தில் காட்டவேண்டியதால்,
இவர்களை சன்யாசிகளாக நினைக்க வேண்டும்.
அவர்கள் தான் விடியற்காலையில் எழுந்து, கோயிலுக்குச் சென்று எம்பெருமானை மங்களாசாஸனம் செய்வார்கள் என்பது நம்பியினுடைய நிர்வாஹம்.

நாச்சியார் திருமொழி – 10.8 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம். “மழையே மழையே” மற்றும் அடுத்த பாசுரமான “கடலே கடலே”, ஆகிய இரண்டு பாசுரங்களும்
நம்பிக்கு மிகவும் பிடித்த பாசுரமாக அடையாளம் காட்டப் பட்டுள்ளது.
ஆண்டாள் தான் எம்பெருமானிடம் இருந்து பிரிந்து தவிக்கும் உணர்வை, திருவேங்கடமுடையானிடம் கூறுவதற்காக மேகத்தைத் தூது விடுகிறாள்.
ஒவ்வொருமுறை நம்பி இந்த பாசுரத்தைச் சேவிக்கும் பொழுதும், மிகவும் உணர்ச்சி வசப்பட்டு ஒன்றுமே பேச முடியாத படி இருப்பார்.
நம் ஆசார்யர்கள் அனைவரும் நம்பி மீது பற்று வைத்துள்ளதால், அவர்களும் இந்தப் பாசுரத்தின் மீது மிகவும் ஈடுபாடு வைத்திருந்தார்கள்.

திருவிருத்தம் – 3 – நம்பிள்ளை வ்யாக்யானம் – ஆழ்வாருடைய பகவத் அனுபவம் மானஸ சாக்ஷத்காரமா? (மனதுக்குள்ளேயே அனுபவிக்கும் பகவத் அனுபவம்)
அல்லது வெளியில் நேராக அனுபவிக்கும் பகவத் அனுபவமா? என்று ஆழ்வார் ஆச்சர்ய படுவதாக ஆழ்வாருடைய மனதை பெரிய திருமலை நம்பி வெளிப்படுத்தினார்
என்று பிள்ளை திருநறையூர் நம்பி விளக்கமாகக் கூறினார்.

திருவாசிரியம் – 1 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – எம்பெருமானுடைய அழகை வர்ணிக்கும்பொழுது,
ஆழ்வார் “செக்கர் மா முகிலுடுத்து …. கண்வளர்வது போல்” என்கிறார்.
அவர் “தூங்குவது” என்ற வார்தைக்கு பதிலாக “கண்வளர்வது” என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி உள்ளார்.
கண்வளர்வது என்பது ஸம்ப்ரதாய வார்த்தை, ஆனால் “தூங்குவது” என்பது பேச்சு வழக்கில் உள்ள வார்த்தை.
பெரிய திருமலை நம்பி இப்படி உயர்ந்ததான ஸம்ப்ரதாய வார்த்தைகளை உபயோகப்படுத்துவதில் மிகவும் நிபுணராக இருந்தார் என்பதை பெரியவாச்சான் பிள்ளை இங்கு எடுத்துரைக்கிறார்.
நம்பி ஒருமுறை எம்பெருமானாருக்கு ஒருவரை அடையாளம் காட்ட “பொன்னாலே தோடு செய்தாலும் அணிந்துகொள்ள முடியாத காதை உடையவர்” என்று உணர்த்துகிறார்.
அதாவது நல்ல உபதேசங்களையும் கேட்காதவர் என்பதை இப்படி நய்மாகக் கூறுகிறார்.

திருவாய்மொழி – 1.4.8 – நம்பிள்ளை வ்யாக்யானம் – இந்தப் பாசுரத்தில் ஆழ்வார் நாயிகா பாவத்தில் “தான் எம்பெருமானிடத்திலிருந்து பிரிந்ததால்
தனது உடல் வலிமை மற்றும் அழகையும் இழந்து மிகவும் பலவீனமாக இருப்பதாக” பறவையிடம் கூறினார்
(தன்னுடைய நிலைமையை எம்பெருமானிடம் கூறுவதற்காகத் தூதாக அனுப்பினார்).
தான் பலவீனமாக இருப்பதால் அந்த பறவையைத் தானே உணவை தேடிக்கொள்ளுமாறு ஆழ்வார் கூறினார்.
இதில் நம்பிள்ளை, பெரிய திருமலை நம்பியினுடைய சரித்திரத்தை எடுத்துக்காட்டினார்.
தன்னுடைய கடைசி காலத்தில் நம்பி தன்னுடைய திருவாரதனப் பெருமாளிடம், அதாவது வெண்ணைக்காடும் பிள்ளையிடம் சென்று,
தான் மிகவும் தளர்ந்து விட்டதாகவும், அதனால் எம்பெருமான் அவரை பார்த்துக்கொள்ளத் தானே வேறு ஒருவரைத் தேடிக்கொள்ள வேண்டும் என்று அவரிடம் கூறினார்.

ஸ்ரீ பெரிய திருமலை நம்பியின் தனியன்

பிதா மஹஸ் யாபி பிதா மஹாய ப்ராசேத ஸாதேச பல ப்ரதாய
ஸ்ரீபாஷ்யகா ரோத்தம தேசிகாய ஸ்ரீசைல பூர்ணாய நமோ நம: ஸ்தாத்

இதன் பொருள்: திருவேங்கடமுடையான் ‘தாத’ என்றழைத்தான்.
அதனால் ப்ரஹ்மனுக்கு பிதாமகன்-தாத்தாவானவரும், வால்மீகியின் ஸ்ரீமத்ராமாயணத்தில் 18 அர்த்த விசேஷங்கள் அருளியவரும்,
பகவத் ராமாநுஜருக்கு உத்தம ஆசார்யனுமாக இருந்தவரான ஸ்ரீசைலபூர்ணர் என்கிற திருமலை நம்பிகளுக்குஅடியேனுடைய நமஸ்காரங்கள் உரித்தாகட்டும்.

6000 படி குரு பரம்பரா ப்ரபாவம் மற்றும் பெரிய திருமுடி அடைவில் நம்பியினுடைய திருநக்ஷத்திரத்தை சித்திரை-சுவாதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் வாழி திருநாமத்தில் வைகாசி-சுவாதி என்று இருப்பதால் அன்றே அவருடைய திருநக்ஷத்திரம் கொண்டாடப்படுகிறது.

சமீபத்தில் நடந்தேறிய திருமலை நம்பியின் 1049-வது அவதார மஹோத்சவம் சிறப்பாக நடந்தேறியது

ராமானுஜரின் தாய்மாமனான திருமலை நம்பி தான் முதலில் திருமலைக்கு வந்து, ஏழுமலையானுக்கு தீர்த்த கைங்கர்யங்கள் செய்துள்ளார்.
இவரது வழி வந்த வாரிசுதாரர்கள், இன்றளவும் திருமலையில் சுவாமிக்கு தீர்த்த கைங்கர்யங்களை பல நூற்றாண்டுகளாக
தினமும் அதிகாலை செய்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் வீற்றிருக்கும் திருக்கோயிலுக்கு சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள பாபவிநாசம் எனும் தீர்த்தத்தில் இருந்து தான்
ஸ்வாமிக்கு தீர்த்த கைங்கர்யங்களுக்காக தீர்த்தம் கொண்டு வருவது வழக்கம்.
திருமலை நம்பி தினமும் இவ்வளவு தூரம் நடக்கிறாரே என உணர்ந்த பெருமாள், பாபவிநாசத்துக்கு முன் ஆகாச கங்கை என்னும்
மற்றொரு தீர்த்தத்தை உருவாக்கி கொடுத்துள்ளார்.
தற்போது இங்கிருந்து தான் ஸ்வாமி கைங்கர்யத்துக்கும், அபிஷேக ஆராதனைகளுக்கும் புனித தீர்த்தம்
திருமால் நம்பியின் வாரிசுதார்கள் மூலம் கொண்டு செல்லப் படுகிறது.

———————

ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்

இந்த ஸ்வாமி திருமலையில் (திருப்பதியில்) ஸ்ரீமுக வருஷம்  ஐப்பசி மாதம் பூர்வாஷாடா நக்ஷத்திரத்தில் சடமர்ஷண கோத்திரத்தில்
திருமலை நம்பி குமாரராய் அவதரித்து எம்பெருமானாருக்குப் பிறகு, ஞாநபுத்திரரான இந்த ஸ்வாமி
தனக்குத் தாயபாகமாகக் கிடைத்த ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவனை ஆராதித்துக்கொண்டு ஸம்பிரதாய ப்ரவசநம் செய்து வந்தார்.
பிள்ளானுக்குப் பிறகு சடமர்ஷண வம்சத்தவர்களான (1)புண்டரீகாக்ஷ தேசிகர்
(2) சடகோப தேசிகர்
(3) பத்மாக்ஷ தேசிகர் இவர்கள் வரையில் புத்ர பௌத்ரக்ரமமாய் வந்த ஹயக்ரீவனை – பத்மாக்ஷ தேசிகர் தன் குமாரரான
திருமலை ஸ்ரீநிவாஸாசாரியாரை (ப்ரபந்த நிர்வாஹ க்ரந்த கர்த்தா)யும் லக்ஷ்மீ ஹயக்ரீவனையும் ஸ்வாமி தேசிகனிடம் ஒப்படைத்து ரக்ஷணம் பண்ணும்படி நியமித்தார்.
இவர் அருளிய க்ரந்தம்;
பகவத் விஷயம்,
ஆறாயிரப்படி.

விக்யாதோ யதிஸார்வ பௌம ஜலதே: சந்த்ரோப மத்வேத ய:
ஸ்ரீபாஷ்யேண யதந்வயாஸ்ஸு விதிதா: ஸ்ரீவிஷ்ணு சித்தாதய:|
வ்யாக்யாம் பாஷ்ய க்ருதாஜ்ஞ யோபநிஷதாம் யோ த்ராவிடீநாம் வ்யதாத்:
பூர்ணம் தம் குருகேச்வரம் குருவரம் காருண்ய பூர்ணம் பஜே||

திருக் குருகைப்பிரான் பிள்ளான் என்பார் ராமனுஜரின் மாமாவான பெரிய திருமலை நம்பியின் குமாரர் ஆவார்.
ராமானுஜருடைய ஞான புத்திரனாக அனைவராலும் மதிக்கப்பட்டவர்.
ராமானுஜருக்கு நம்மாழ்வார் மீதான பிரதிபக்தியையும் ஆளவந்தாரின் திருவுள்ளப்படியும், குருகைப்பிரான் பிள்ளானின் நம்மாழ்வார்
மீதான மிகுந்த ஈடுபாட்டையும் குறித்தே பிள்ளான் என்ற பெயருடன் திருக்குரு கை என்ற நம்மாழ்வாரின் அவதாரத் தலத்தின் பெயரையும் சேர்த்து
திருக் குருகைப்பிரான் பிள்ளான் என்றே பெயரிட்டு அழைத்து வந்தார்.

ஒரு சமயம் ராமானுஜர் தமது மடத்தில் ஏகாந்தமாக ஓர் அறையில் தாளிட்டுக்கொண்டு நம்மாழ்வாரின் பாசுரம் ஒன்றைத் தம் மனதிலேயே
நினைத்துக் கொண்டு அதற்கேற்ப அரையர் போல் அபிநயம் செய்து கொண்டிருந்ததைக் கதவின் சாவித் துவாரம் மூலம் கண்ட பிள்ளான்,
அந்தக் குறிப்பிட்ட பாசுரத்தை உரக்க கூறி, ராமானுஜரின் திருவுள்ளம் பற்றி அறிய விரும்பினார்.
அதைக் கேட்ட மாத்திரத்தில் ராமானுஜர் உடனடியாக வெளியே வந்து பிள்ளானை மிகவும் பாராட்டி அவருக்கு
நம்மாழ்வாரின் திருவாய்மொழி மீதான பற்றுதலை யறிந்து அவரையே திருவாய் மொழிக்கு வியாக்கியானம் (விளக்கவுரை)
அருளப் பொருத்தமானவர் என்று கருதி பிள்ளானுக்குக் கட்டளையிட்டார்.

அவரும் அதன்படியே ‘ஆராயிரப்படி’ என்ற வியாக்கியானத்தை அருளிச் செய்தார்.
இதுவே முதன்முதலில் கிரந்த ரூபமாக அவதரித்த ஸ்ரீ கோசம் (நூல்)
இதில் நாதமுனிகள், ஆளவந்தார், திருமலை யாண்டான், திருவரங்கப் பெருமாள் அறையர், ராமானுஜர் ஆகியோருடைய கருத்துகளைக் கொண்டதும் முதன் முதலாக ஸ்ரீ வைணவ சம்பிரதாய மொழியான மணிப்பிரவாள நடையில் அமைந்ததுமான கிரந்தமாகும்.

இவர் நம்பெருமாள் சன்னிதியில் விசேஷ கைங்கர்யங்களைச் செய்து கொண்டும் உபய வேதாந்தியாக விளங்கியவர்.
ராமானுஜர் திருநாடலங்கரித்த போது அவருக்கு இறுதிக் கடன்களை செய்யும்படியான பாக்கியம் இவருக்குக் கிட்டியது.
திருவஹிந்திரபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீநிவாசர் திருக் கோயிலில் திருக் குருகைப்பிரான் பிள்ளான், ராமானுஜருடனும் கிடாம்பி யாச்சானுடனும் இணைந்து திருச் சிலா ரூபமாகக் காட்சி அளிப்பதை இன்றும் தரிசிக்கலாம்.

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மாணிக்க வாசகர் -பாடி அருளிய -ஸ்ரீ திருவெம்பாவை -ஸ்ரீ திருப்பள்ளி எழுச்சி —

September 25, 2022

பன்னிரு திருமுறைகளில் 17 ஆசிரியர்கள் பாடிய மொத்தம் 18,266 பாடல்கள் காணப்படுகின்றன.
இதில் தேவாரம் எனப் போற்றப்படும் ஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் 4,158,
திருநாவுக்கரசர் 3,066,
சுந்தரர் 1,026
ஆக மொத்தம் 8,250 ஆகும்.
திருவாசகம் எனக் கொண்டாடப்படும் மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் 1,058 ஆகும்.
திருமூலர் பாடிய பாடல்கள் 3,000,
சேக்கிழார் பாடிய பாடல்கள் 4,286 ஆகும். (பாடல்களின் மொத்த எண்ணிக்கை நூலுக்கு நூல் சிறிது வேறுபடுகின்றன)

திருவெம்பாவை, 900 ஆயிரம் ஆண்டுகளாக சைவக்கோயில்களில் ஓதப்படும் பெருமையுடையது.
“தமிழ் மந்திரம்” என்ற பெயரில் அந்தக் காலத்தில் அது கடல் கடந்து சயாம் நாட்டிற்குச் சென்றிருக்கிறது.
அரசனுக்கு முடிசூட்டும் காலத்திலும் சில திருவிழாக் காலத்திலும் சயாமியர் திருவெம்பாவையை ஓதுகின்றனர்.

ஒவ்வொரு திருவெம்பாவைப்பாடலின் முடிவிலும் “ஏலோர் எம்பாவாய்!” என்ற சொற்றொடர் காணப்படும்.
அது மருவி இப்போது சயாமியரால் ” லோரி பாவாய்” என்று பாடப்படுகிறது.

வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சாற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்
ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!

வாட்டமிலா மாணிக்க வாசக நின் வாசகத்தை
கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறும் என்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே!

சிவனே குருவாக வந்து மாணிக்கவாசகரை தடுத்தாட் கொண்டார் என்பது கதை.
மார்கழி மாதத்தில் அவர் சிவனைக் குறித்துத் தீந்தமிழில் பாடிய திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும் ஓதப்படுகின்றன.

————

திருவெம்பாவை என்ற சொல்லில் திரு – தெய்வத் தன்மையைக் குறிக்கின்றது.
எம் – என்பது உயிர்த் தன்மையை உணர்த்துகின்றது.
பாவை – வழிபாட்டிற்கு உகந்த உருவம்.
ஆகவே திருவெம்பாவையின் திரண்ட பொருள், தெய்வத்தன்மை வாய்ந்த திருவருள் எங்களோடு இணைந்து இயங்குகின்றது.
எங்களுக்குத் துணையாய் நிற்கின்றது.
நாங்கள் செய்யும் நோன்பினைப் பாவைத் திருவுருவில் நின்று ஏற்கின்றது. ஏற்றுப் பயனளிக்கிறது என்பதாகும்.
இப்பாடல்களில் பாவை சிறப்பிடம் பெற்றதால் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ‘எம் பாவாய்’ என்று அமைந்துள்ளது.
ஏலோரெம்பாவாய் என்பதில் ஏலும் ஓரும் அசைகள்;
பாவாய் – விளித்தல்.
பாவை நோன்பு நோற்கும் பெண்கள் ‘பாவாய்’ என அழைக்கப்படுகின்றனர்.

திருவெம்பாவையில் 20 பாடல்கள் உள்ளன.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன் செவியோ நின் செவி தான்
மா தேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதி வாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம் மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.–1-

மாது - பெண்; வளருதி - தூங்குகின்றாய்; போது - மலர்;

தோழியர்: துவக்கம் இறுதி இல்லாத அரிய பெரிய சோதியை நாங்கள் பாடுகின்றோம்.
அதைக் கேட்டும் வாள் போன்ற அழகிய கண்களை உடைய நீ தூங்குகின்றாயே !
உன் காதுகள் உணர்ச்சி யற்றுப் போய்விட்டனவா ?
பெருந்தேவனான சிவபெருமானின் அழகிய கழல்களை வாழ்த்திய வாழ்த்தொலி வீதியின் துவக்கத்தில் கேட்ட
அந்தக் கணத்திலேயே விம்மி விம்மி மெய்ம் மறந்து தான் இருக்கும் மலர் நிறைந்த படுக்கையிலேயே தன்னை மறந்து ஒருத்தி கிடக்கிறாள்.
அவள் திறம் தான் என்னே ! இதுவோ உன்னுடைய தன்மை, எம் தோழி ?!

———-

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப் பகல் நாம்
பேசும் போதெப்போதிப் போதா ரமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடமீதோ விண்ணோர் களேத்துதற்குக்
கூசு மலர்ப் பாதந் தந்தருள வந்தருளுந்
தேசன் சிவ லோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார் யாம் ஆரேலோ ரெம்பாவாய்!–2-

போது - மலர்; அமளி - படுக்கை; தேசன் - ஒளி யுருவன்.

தோழியர்: இரவு பகலெல்லாம் – நாம் பேசும் பொழுதெல்லாம், “எனது பிணைப்பு (பாசம்) பரஞ்சோதியான சிவபெருமானிடம்” என்று சொல்வாய்.
ஆனால் இந்த மலர் நிறைந்த படுக்கையின் மேல் தான் உன் விருப்பத்தை உண்மையில் வைத்தாயோ ?

படுத்திருப்பவள்: சீ சீ ! இப்படியா பேசுவது ?

தோழியர்: இதுவா விளையாடுவதற்கும் பழிப்பதற்கும் இடம் ?
(அதன் பெருமையைக் கண்டும் தம் கீழ்மை கண்டும் நாணி)
விண்ணவர்களும் வணங்கக் கூசுகின்ற மலர் போன்ற பாதங்களை நமக்குத் தந்தருள் செய்ய வரும் ஒளியே உருவான,
சிவலோகனான,தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு அன்பு எங்கே ! நாம் எங்கே !

————

முத்தன்ன வெண் நகையாய் முன் வந்தெதி ரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். –3-

பத்து - தச காரியங்கள் ; பாங்கு - நட்பு;புன்மை - கீழ்மை.

தோழியர்: முத்துப் போன்ற ஒளியான புன்னகையை உடையவளே !
எல்லார்க்கும் முன்பாகவே எழுந்திருந்து, “என் அத்தன், ஆனந்தன்,அமுதன்” என்று வாய் திளைக்க இனிக்க இனிக்கப் பேசுவாய் !
(இன்று என்ன ஆயிற்று உனக்கு ?) வந்து கதவைத் திற !

படுத்திருப்பவள்: பத்து குணங்களை உடையவர்களே !
இறைவனின் அடியாகளாய் முதிர்ச்சி பெற்றவர்களே !
(என்னிடம்) நட்புடையவர்களே !
புதியவளாகிய என்னுடைய குற்றத்தை நீக்கி என்னையும் அடியார் ஆக்கிக்கொண்டால் குற்றமா ?

தோழியர்: நீ இறைவன் பால் வைத்துள்ள அன்பு எங்களுக்குத் தெரியாதா என்ன ?
உள்ளம் ஒழுங்கு பட உள்ளவர்கள் நம் சிவபெருமானைப் பாடாது போவாரா என்ன ?
எங்களுக்கு இதெல்லாம் தேவை தான் !

———


ஒண்ணித் தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளி மொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழுப் பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள் நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். –4-

ஒண்ணித்திலநகையாய் - முத்துப் போன்ற புன்னகையாய் (ஒள் நித்தில நகையாய்).

தோழியர்: முத்துப் போன்ற புன்னகை உடையவளே ! -இன்னுமா விடியவில்லை ?

படுத்திருப்பவள்: (அழகிய கிளி போன்ற சொற்களைப் பேசும்)தோழியர் எல்லாரும் வந்து விட்டார்களா ?

தோழியர்: உள்ளதையே எண்ணித் தான் சொல்லுகின்றோம்.
கண் துயின்று வீணாகக் காலத்தைப் போக்காதே !
விண்ணுலகும் போற்றும் ஒரே மருந்தை, வேதத்தால் மேன்மையாக உணரப்படும் பொருளை,
காண இனிய சிவபெருமானை நெக்குருகக் கசிந்து பாட வந்துள்ள நாங்கள் இதெல்லாம் செய்ய மாட்டோம்.
வேண்டுமானால் நீயே வந்து எண்ணிக் கொள். குறைந்தால் தூங்கிக் கொள் !

————

மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன் வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மை ஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். –5–

பொக்கம் – பொய்; படிறீ – ஏமாற்றுக்காரி; ஞாலம் – உலகம்;–ஏலக்குழலி – மணம் சேர் கூந்தலை உடையவள்.

தோழியர்: “திருமாலும் நான்முகனும் காண முடியாத மலையை நாம் அறிவோம்” என்று (உணர்ந்தவர்களைப் போன்று)
பொய்யாகவே பேசிக் கொண்டிருக்கும் பாலும் தேனும் போன்ற (இனிய சொற்களைப் பேசும்) வஞ்சகியே, கதவைத் திற !
இவ்வுலகமும், விண்ணுலகமும், பிறவுலகங்களும் அறிவதற்கு அரிய பெருமானுடைய திருக்கோலமும்,
அவர் நம்மை ஆட்கொண்டு குற்றங்களை நீக்கும் பெருமையையும் பாடி
“சிவனே! சிவனே!” என்று நாங்கள் ஓலமிட்ட போதும், சற்றும் உணர்ச்சியில்லாமல் இருக்கிறாயே !
மணம் நிறைந்த கூந்தலை உடையவளே, இதுவோ உனது தன்மை ?!

————-

மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய். –6–

நென்னலை – நேற்று; தலை யளித்து – கருணை கூர நோக்குதல்;ஊன் – உடல்.

தோழியர்: மான் போன்று அழகியவளே ! நீ நேற்று,
“நாளை உங்களை நானே வந்து எழுப்புகிறேன்” என்று கூறிவிட்டு,
வெட்கமே இல்லாமல் இன்று எங்கு போய்விட்டாய் ? இன்னுமா பொழுது புலரவில்லை ?
வானுலகும், பூமியும், பிற எல்லாமும் அறிதற்கு அரிய பெருமான், தானே வந்து கருணையோடு நோக்கி நம்மை ஆட்கொண்டருளுகிறான்.
அவனுடைய வானென நெடிய கழலடிகளைப் பாடி வந்த எமக்கு பதில் சொல் !
உடல் உருகத் தொழாது இருக்கின்றாய் ! இது உனக்குத் தான் பொருந்தும் !
எங்களுக்கும் ஏனைய எல்லாருக்கும் ஒரு தலைவனான சிவபெருமானைப் பாடு !

————

அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
என்னானை என்அரையன் இன்னமுது என்று எல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். –7–

உன்னல் – நினைத்தல்; இருஞ்சீர் – மிக நேரிய தன்மை; சின்னங்கள்— சிவச் சின்னங்கள் (சங்கு முதலான ஒலிகள்); அரையன் – மன்னன்;
வாளா – சும்மா; பரிசு – தன்மை.

தோழியர்: அம்மா ! இவையும் உன் குணங்களில் ஒன்றோ ?!பலபல தேவர்கள் நினைத்தலுக்கும் அரியவனான செம்பொருளாம்
பெருமானின் சின்னங்கள் கேட்ட மாத்திரத்திலேயே “சிவ சிவ” என்று சொல்லுவாய்.
“தென்னாடுடைய பெருமானே” என்று சொல்லி முடிப்பதற்குள்ளேயே தீயிலிட்ட மெழுகு போல உருகி விடுவாய்.
எம்பெருமானை, “என் அரசே ! இனிய அமுதம் போன்றவனே !”என்று நாங்கள் எல்லோரும் பலவேறு விதமாகச் சொல்லுகின்றோம்.
இன்னும் நீ தூங்குகிறாயோ ! (உணர்வற்ற) கடுமையான நெஞ்சம் கொண்டவரைப் போல சிறு அசைவும் இன்றிக் கிடக்கின்றாயே !
தூக்கத்தின் தன்மை தான் என்னே !

———–

கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய்.– 8–

குருகு – பறவை; ஏழ் – ஏழு சுரங்களால் ஆன இசை(க்கருவி);
கேழ் – ஒப்பு; விழுப்பொருள் – மேன்மை தங்கிய பொருள்; ஆழி – சக்கரம்;ஏழை – பெண்(சக்தி).

தோழியர்: கோழி கூவப் பிற பறவைகளும் கீச்சிடுகின்றன.-இசைக் கருவிகள் ஒலிக்க வெண் சங்கும் ஓலிக்கின்றது.
ஒப்பற்ற பரஞ்சோதியான பெருமானையும், ஒப்பற்ற அப்பெருமானின் பரங்கருணையையும்,
ஒப்பற்ற மேன்மையான (சிவம் சார்ந்த) பொருட்களையும் பாடினோம். அவையெல்லாம் கேட்க வில்லையா ?
அப்படி இது என்ன உறக்கமோ, சொல்வாய் ! திருமாலைப் போன்ற பக்தி செய்யும் விதமும் இப்படித்தானோ !
ஊழிகள் எல்லாவற்றிற்கும் முன்னரே தொடங்கி (அழிவின்றி) நிற்கும் மாதொருபாகனைப் பாடு !

————-

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய். 9

பேர்த்தும் – புதுமையான; பாங்கு – நட்பு; பரிசு – முறை; தொழும்பு – அடிமை

பழமையான பொருட்களுக்கெல்லாம் பழமையான முதல்வனே !
இப்போது தோன்றிய புதுமையானவற்றுக்கும் புதுமையானவனே !
உன்னைப் பிரானாகப் பெற்ற உன்னுடைய நேர்த்தியான அடியாரான நாங்கள், உன்னுடைய அடியவர்களை வணங்குவோம்;

அவர்களுக்கே நண்பர்களாவோம்;
அத்தகையவரையே நாங்கள் மணம் செய்து கொள்வோம்;
அத்தகையோர் சொல்லும் வகைப்படியே அவர்க்கு அடியவர்களாய்ப் பணி செய்வோம்.
இவ்வாறே எங்களுக்கு எம்பிரான் அருள் செய்தால் எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை !

————

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். 10

அவனுடைய பாதமாகிய மலர்கள் பாதாளங்கள் ஏழிற்குக் கீழும் சென்று சொல்லுதற்கும் எட்டா வகை உள்ளன;
அவனுடைய மலர் நிறைந்த கட்டிய சடையும் பொருள்கள் எல்லாவற்றின் எல்லைப் புறத்தன;
அவன் பெண்ணை ஒருபாகம் உடையவன்; அவன் திருவுருவங்களோ ஒன்றிரண்டல்ல !
வேதங்கள் முதலாக விண்ணோரும், மண்ணோரும் துதிக்கின்ற போதும் ஒருவராலும் இவ்வாறு எனச் சொல்லப்பட முடியாதவன்;
ஒரே துணைவன்; தொண்டர் உள்ளத்து இருப்பவன்; குற்றமற்ற குலப்பெண்களான சிவன் கோயிற் பணி செய்யும் பெண்களே !
அவனுடைய ஊர் எது ? பேர் எது ? யார் உறவினர்கள் ? யார் உறவினரல்லாதவர்கள் ? அப்படிப்பட்டவனை எவ்வாறு பாடுவது ?!

————–

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போற்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 11

மொய் – மொய்க்கின்ற வண்டு; தடம் – நீர்நிலை; பொய்கை – குளம்;அழல் – தீ; மருங்குல் – இடை; எய்த்தல் – இளைத்தல்.

வண்டுகள் மொய்க்கின்ற குளத்தில் கைகளால் குடைந்து நீராடும் பொழுது உன் திருவடிகளைப் பாடி,
வழி முறையாக வந்த அடியவர்களாகிய நாங்கள் வாழ்வுபெற்றோம்.
ஐயனே ! ஆர்க்கின்ற நெருப்பு போன்று சிவந்தவனே ! திருநீறு பூசும் செல்வனே !
சிறிய இடையையும், மை நிறைந்த அகன்ற கண்களையும் உடைய உமையின் மணவாளனே !
ஐயா, நீ ஆட்கொண்டருளும் திருவிளையாடலில் உய்யும் அடியார்கள் உய்யும் வகையில் நாங்களும் உய்ந்து விட்டோம் !
நாங்கள் தளர்வுறாமல் காப்பாயாக !

————

ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய். 12

குவலயம் – பூமி; கரத்தல் – உள் வாங்குதல்; குழல் – கூந்தல்.

பேராரவாரம் செய்கின்ற பிறவித் துன்பம் கெடுவதற்காக நாம் விரும்பி வழிபடும் தீர்த்தன்;
தில்லைச் சிற்றம்பலத்தில் தீயேந்தி ஆடுகின்ற கூத்தப்பிரான்;
இந்த விண்ணையும், மண்ணையும், நம் எல்லோரையும் விளையாட்டாகவே காத்தும், படைத்தும், கவர்ந்தும் வருபவன்;
அவன் புகழைப் பேசியும், வளைகள் ஒலிக்கவும், மேகலைகள் ஆராவரிக்கவும், கூந்தல் மேல் வண்டுகள் ரீங்காரமிடவும்,
பூக்கள் நிறைந்த இக்குளத்தில் ஈசனின் பொற்பாதத்தை வாழ்த்திக் கொண்டே நீராடுங்கள் !

———————

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்குமடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 13

கார் – கறுப்பு; போது – மலர்; கொங்கை – பெண்ணின் மார்பகம்; பங்கயம் – தாமரை; புனல் – நீர்.

குவளையின் கறுத்த மலராலும், தாமரையின் சிவந்த மலராலும்,சிறிய உடலை உடைய வண்டுகள் செய்யும் ஒலியாலும்,
தம்முடைய குற்றங்களை நீக்க வேண்டுபவர்கள் வந்து தொழ,எங்கள் பிராட்டியான சக்தியும், எம்பிரான் சிவபெருமானும் இருப்பது
போலக் காட்சியளிக்கும் நீர் நிறைந்த இம்மடுவில் பரவி அளைந்து,நாம் அணிந்துள்ள சங்குகள் சலசலக்க, சிலம்பு அத்துடன் இணைந்து ஒலிக்க, மார்பகங்கள் விம்ம, அளைந்தாடும் நீரும் விம்மி மேற்பொங்க,
தாமரை மலர் நிறைந்த இந்நீரில் ஆடுங்கள் !

————–

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனல் ஆடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள் பாடி அப் பொருள் ஆமா பாடி
சோதி திறம் பாடிச் சூழ் கொன்றைத் தார் பாடி
ஆதி திறம் பாடி அந்தம் ஆமா பாடிப்
பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். 14

பைம்பூண் – பொன்னாபரணம்; கோதை – பூமாலை; குழாம் — கூட்டம்; சீதம் – குளுமை; தார் – மாலை.

காதில் அணிந்துள்ள குழைகள் ஆட, பொன் அணிகலன்கள் ஆட, பூமாலையணிந்த கூந்தல் ஆட,
(அதைச் சுற்றும்) வண்டுக் கூட்டம் ஆட, குளிர்ந்த நீராடிச் திருச்சிற்றம்பலத்தைப் பாடி,
வேதத்தின் பொருளை -சிவபெருமானைப் – பாடி,மிறைவன் அந்த வேதத்தின் பொருள் ஆகும் திறத்தினைப் பாடி,
அவனுடைய சோதி வடிவின் பெருமையைப் பாடி,அவன் அணிந்துள்ள கொன்றைக் கொத்தினைப் பாடி,
எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்ற வல்லமையைப் பாடி, அவனே எல்லாவற்றிற்கும் இறுதியும் ஆவதைப் பாடி,
(மும்மலம் ஆகிய) பிறவற்றை நீக்கி நம்மை வளர்த்தெடுத்த இறையருட் சத்தியின் பாதத் தத்துவத்தையும் பாடி நீராடுங்கள் !

————————

ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொரு கால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீரொரு கால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்
பாரொரு கால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆமாறும்
ஆர் ஒருவர் இவ் வண்ணம் ஆட் கொள்ளும் வித்தகர் தாள்
வாருருவப் பூண் முலையீர் வாயார நாம் பாடி
ஏருருவப் பூம் புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 15

ஓவாள் – ஓயமாட்டாள்; களி – மகிழ்ச்சி; பனித்தல் – ஈரமாக்குதல்; பார் – உலகம்; அரையர் – அரசர்.

அவ்வப்போது “எம்பெருமான்” என்று சொல்லிச் சொல்லி,நம்பெருமானின் பெருமையையே வாய் ஓயாமல்
எப்போதும் உள்ளமெல்லாம் மகிழச் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
எப்பொழுதும் விடாது வழிந்துகொண்டிருக்கும் தாரைதாரையான கண்ணீரில் தோய்ந்து,
(இறைவனையே எண்ணி எப்போதும் அவனுடன் இருக்கும்) இவள் இவ்வுலக நினைவுக்கே திரும்புவதில்லை !
வேறு தேவர்களை இவள் பணிவதில்லை !
பேரரசனாகிய இறைவன்பால் இவ்வாறு பித்துப் பிடிக்கும் தன்மையையும், அவ்வாறு செய்து ஆட்கொள்ளும் வல்லவராகிய
சிவபெருமானின் திருப்பாதத்தையும் வாயாரப் பாடி,கச்சை அணிந்த மார்பகம் உடைய பெண்களே,
நாம் நேர்த்தியான,மலர் நிறைந்த இந்நீரில் ஆடுவோம் !

————–

முன் இக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடி மேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப் புருவம்
என்னச் சிலை குலவி நந் தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். 16

இட்டிடை – சிறிய இடை; சிலை குலவுதல் – வில்லென வளைதல்; முன்னி – முற்பட்டு.

மழையே ! இந்தக் கடலில் உள்ள நீரின் ஆவியாய்த் திரண்டு வானில் எழுந்து, உடையவளகிய உமையம்மையைப் போல் (கார் நிறத்தில்) திகழ்க !
எங்களை ஆளுடைய அவளின் மெல்லிய இடை போல மின்னைலாய்ப் பொலிக !
எம்பிராட்டியின் திருவடியில் திகழும் பொற்சிலம்பின் ஓசை போல (இடியாய்) ஒலிக்க !
அவளுடைய திருப்புருவம் வளைந்தது போல வான்வில்லாய் வளைக !
நம்மை ஆளுடைய அவளோடு எப்போதும் பிரிவின்றி விளங்கும் எம்பிரானாகிய சிவபெருமானுடைய அன்பர்களுக்கு,
முனைப்போடு தான் வந்து அவள் விரைவாகவே அளிக்கின்ற இனிய அருள் என்பது போலப் பொழிக !

———————

செங்கணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம் பாலதாக்
கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 17

கொங்கு – தேன் (உண்ணும் வண்டு); கோதாட்டி – குற்றம் நீக்கி;சேவகன் – ஊழியன்; பங்கயம் – தாமரை.

வண்டு தேன் உண்ணும் கரிய கூந்தலை உடையவளே !
சிவந்த கண்ணை உடைய திருமாலிடமும், திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களை உடைய பிரமனிடமும்,
தேவர்களிடமும் எங்குமே இல்லாத அரிய இன்பம் நம்முடையது ஆகுமாறு,
நம்முடைய குற்றங்களெல்லாம் போக்கி, நம் ஒவ்வொருவர் இல்லங்களிலும் இருந்து செந்தாமரை போன்ற பொற்பாதங்களைத் தந்தருள் செய்யும் தொழில் உடையவனை,
அழகிய கண்களை உடைய நம் அரசனை, அடிமைகளாகிய நமக்கு ஆரமுதமானவனை,
நம்பிரானைப் பாடுவதால் நலம் ஓங்க, தாமரைகள் நிறைந்த இந்நீரில் பாய்ந்தாடுவோம் !

—————-

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 18

வீறு – ஒளி/பெருமை; கார் – இருள்; கரப்ப – நீக்க; தாரகை – விண்மீன்;பிறங்கொளி – மின்னும் ஒளி.

அண்ணாமலையாரின் திருவடிகளைச் சென்று தொழும்,விண்ணவர்களின் மகுடங்களில் உள்ள மணிகள் எல்லாம்
(இறைவரின் திருவடியின் ஒளியின் முன்னம்) தம் ஒளி குறைந்து தோன்றுவது போல், (இறைவன் பேரொளிக்கு முன்
மற்றெவரும் சிறு ஒப்புமைக்கும் உரியவரல்லர்.) கண்ணான கதிரவனின் ஒளி தோன்றி இருட்டினை நீக்க, அந்நிலையில் தம் குன்றிய ஒளி மறைக்கப்பட்டு,விண்மீன்கள் காணாது போகின்றன.
பெண், ஆண், அலி மற்றும் ஒளி வெடிப்புகள் நிறைந்த விண்ணும் மண்ணுமாகி நின்று,
இவை அத்தனையிலிருந்தும் தான் வேறாகவும் நிற்கின்றானை, கண்கள் பருகி மகிழும் அமுதமாக நின்றானுடைய கழல் பூண்ட
திருவடிகளைப் பாடி, இந்தப் பூம்புனலில் பாய்ந்தாடலாம், பெண்ணே !

———————

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். 19

கொங்கை – மார்பகம்; கங்குல் – இரவு; பரிசு – வகை; ஞாயிறு – கதிரவன்.

“உன் கையில் உள்ள பிள்ளை, உன்னுடைய கட்டுப்பாட்டில்”,என்ற பழமொழி நிகழ்ந்துவிடும் என்ற எம்முடைய அச்சம் காரணமாக,
எம்பெருமானே உன்னிடத்தில் ஒன்று கேட்போம்.
எம்முடைய மார்பகங்கள் உன் அன்பர் அல்லாதவருடைய தோளைக் கூடக்கூடாது. (உன் அன்பரையே நாங்கள் திருமணம் செய்யவேண்டும்).
எம்முடைய கைகள் உனக்கு அல்லாது வேறு எந்த வேலையையும் செய்யக்கூடாது.
இரவும் பகலும் எம்முடைய கண்கள் வேறு எதையும் கண்டு நிற்கக்கூடாது.
எமக்கு இவ்வகை எம் கோமானாகிய நீ அருளினால், சூரியன் எத்திசையில் உதித்தால் தான் எங்களுக்கென்ன ?

———————–

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய். 20

ஈறு – முடிவு; புண்டரிகம் – தாமரை.

போற்றி – எல்லா உயிர்களுக்கும் தோற்றம் ஆன பொற்பாதத்திற்கு !
போற்றி – எல்லா உயிர்களுக்கும் இன்பமாகும் பூப்போன்ற கழல்களுக்கு !
போற்றி – எல்லா உயிர்களுக்கும் முடிவாகும் இணையான இரு பாதங்களுக்கு !
போற்றி – திருமாலும், நான்முகனும் காணாத திருவடித் தாமரைக்கு !
போற்றி – நாம் உய்வுறுமாறு ஆட்கொண்டருளும் பொன்மலரான திருவடிகளுக்கு !
போற்றி ! போற்றி ! மார்கழி நீராடுவோம் !

————-

ஸ்ரீ திருப்பள்ளி எழுச்சி

போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே ! புலர்ந்தது; பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்;
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே !
ஏற்றுயர் கொடியுடையாய் ! எனையுடையாய் ! எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !–1-

சேறு – கள்/ தேன்; ஏறு – இடபம்.

போற்றி ! என் வாழ்விற்கு முதலாக அமைந்த பொருளே !-பொழுது புலர்ந்தது. உம்முடைய பூப்போன்ற கழலடிக்கு
அதுபோன்ற மலைகளைக் கொண்டு வழிபட்டு, உம்முடைய திருமுகத்தில் எங்களுக்கு அருள் செய்யும்பொருட்டு மலர்கின்ற அழகிய புன்னகையைக் கண்டு,
அதனால் (உறுதி பெற்று) உம் திருவடிகளைத் தொழுகின்றோம்.
தேன் தவழும் இதழ்களைக் கொண்ட தாமரைகள் மலர்கின்ற குளுமையான வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே !
காளை பொறித்த உயர்ந்த கொடியை உடையவனே ! என்னை உடையவனே !எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

————–

அருணண் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய் அகன்றது; உதயம் நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடிமலர் மலர, மற்று அண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் ! திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே ! அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே !–2-

அருணன் – சூரியனின் தேர்ப்பாகன் (காலையில் சூரியன் தோன்றும் முன் தோன்றும் செந்நிறம் அருணோதயம் எனப்படும்);
இந்திரன் திசை – கிழக்கு;நயனம் – கண்; கடி – மணம்; அறுபதம் – வண்டு.

அருணன் இந்திரனின் திசையை அடைந்தான். (கிழக்கில் விடியற்காலையின் செந்நிறம் படர்ந்தது.) அதனால் இருள் அகன்றது.
உம்முடைய மலர் போன்ற திருமுகத்தில் கருணையின் சூரியன் எழுவதால் உதயமாகின்றது.
கண்களைப் போன்ற மணமுள்ள மலர்கள் மலர்கின்றன.
மேலும் அண்ணலே, உங்கள் அழகிய கண்மணி போன்ற வண்டுகள் திரள் திரளாக ரீங்காரமிடுகின்றன.
திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே, இதனை உணர்வீர் !
அருளாகிய செல்வத்தைத் தர வரும் மலை போன்ற ஆனந்தம் உடையவனே !
(ஓயாது வந்துகொண்டிருக்கின்ற) அலைகடலே ! பள்ளி எழுந்தருள்க !

————

கூவின பூங்குயில்; கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் ! திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் ! எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !–3-

குருகு – பறவை; ஓவுதல் – மறைதல்; தாரகை – நட்சத்திரம்; ஒருப்படுதல் – முன்னேறுதல்/மேலோங்குதல்.

குயில்கள் பாடின. கோழிகள் கூவின. பறவைகள் சலசலத்தன;சங்கு ஒலித்தது. விண்மீன்களின் ஒளி மறைந்தது.
காலையின் ஒளி மேலோங்குகிறது. தேவனே, விரும்பி எங்களுக்கு உம்முடைய நல்ல செறிந்த கழலணிந்த இரு திருவடிகளையும் காட்டுங்கள் !
திருப்பெருந்துறை வீற்றிருக்கும் சிவபெருமானே ! யாராலும் அறிவதற்கு அரியவனே !
(அடியவராகிய) எங்களுக்கு எளியவனே ! எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

—————-

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ; தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ; திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !–4-

துன்னிய – செறிந்த; சென்னி – தலை; அஞ்சலி – வணக்கம்.

ஒரு பக்கம், வீணை மற்றும் யாழ் கொண்டு இனிய இசை செய்பவர்கள்;
ஒரு பக்கம், இருக்கு வேதமும் மற்றும் பல தோத்திரங்களும் சொல்பவர்கள்;
ஒரு பக்கம், நிறைய மலர்களைக் கையில் பிடித்தவர்கள்;
ஒரு பக்கம், தொழுவார்களும், (அன்பின் மிகுதியால்) அழுவார்களும், (விடாது அழுது) துவண்ட கைகளை உடையவர்களும் ;
ஒரு பக்கம், சிரத்தின் மேல் கை கூப்பி வணக்கம் செய்பவர்கள்;திருப்பெருந்துறையில் உள்ள சிவபெருமானே !
(இவர்களோடு) என்னையும் ஆண்டுகொண்டு இனிய அருள் செய்கின்ற எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

————

பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால் போக்கிலன் வரவிலன்” என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா ! சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன் வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம் பெருமான் பள்ளி யெழுந்தருளாயே !–5-

சீதம் – குளிர்ச்சி; ஏதம் – குற்றம்/துன்பம்.

“பூதங்கள் எல்லாவற்றிலும் கலந்து இருப்பது அல்லாமல்,இறைவனுக்குத் தோற்றமோ நீக்கமோ இல்லை” என உம்மைப் பண்டிதர்கள்
புகழ்ந்து பாடுவதும் ஆடுவதும் அன்றி, உம்மைக் கண்டு அறிந்தவர்களை நாங்கள் கேட்டுக்கூடத் தெரிந்துகொண்டதில்லை !
குளிர்ந்த வயல்களுடைய திருப்பெருந்துறைக்கு அரசே ! நினைத்துப் பார்க்கக் கூட அரியவனே !
(எனினும் எளியவனாகி) எம்முடைய கண் முன்னே எழுந்தருளிக் குற்றங்கள் நீக்கி
எம்மை ஆண்டு அருள் புரிகின்ற எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

———————

பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார் பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின் வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா !
செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே !
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !–6-

பப்பு – பரப்பு; அணங்கு – பெண்; செப்புறு – செம்மை உடைய.

விரிந்து செல்லுதல் இல்லாது (ஒருமைப்பட்ட மனத்துடன்),வீடுபேற்று நிலையில் உணர்கின்ற உம்முடைய
அடியவர்கள் பந்தமாகிய கட்டுக்களை அறுத்தனர்.
அவர்கள் பலரும் மையணிந்த கண்களை உடைய பெண்களைப் போலத் தம்மைக் கருதி உம்மைத் தொழுகின்றனர்
(காதலனாக),(உமையாகிய) பெண்ணின் மணவாளனே ! சிவந்த தாமரை கண் விழிக்கின்ற (இதழ்களை விரிக்கின்ற) குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த
திருப்பெருந்துறைச் சிவபெருமானே ! இந்தப் பிறவியை நீக்கி எம்மை ஆண்டு அருள் புரிகின்ற எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

————–

“அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு அரிதென, எளிதென”, அமரும் அறியார்,
“இது அவன் திருவுரு; இவன் அவன்” எனவே; எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில் திருஉத்தர கோச மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா !
எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்; எம்பெருமான் பள்ளி யெழுந்தருளாயே !–7-

ஆறு – வழி.

“அந்தப் பரம்பொருள் பழத்தின் சுவைபோல இனியது,அமுதம் போன்றது, அறிந்து கொள்வதற்கு அரியது, எளியது” என
அறிவால் உறுதி பெற தேவர்களுக்கும் இயலவில்லை ! (அப்படிப்பட்ட தாங்கள்) “இதுவே அந்தப் பரம்பொருளின் திருவுருவம்.
இவர் தான் அந்தப் பரம்பொருள்.” என்று (கூறத்தக்க எளியமுறையில்) எங்களை ஆண்டுகொண்டு இங்கே எழுந்தருளியுள்ளீர் !
தேன் மிகுகின்ற சோலைகள் உள்ள திருஉத்தரகோச மங்கையில் வீற்றிருப்பவனே !
திருப்பெருந்துறைக்கு அரசே ! எது எங்களைப் பணி கொள்ளும் வகை ? அதன்படியே நடப்போம் !
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

————-

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்; மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் !
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே !
செந்தழல் புரை திருமேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்; ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !–8–

மூவர் – பிரமன், விஷ்ணு, உருத்திரன்; குடில் – இல்லம்; தழல் – தீ; புரை – போன்ற.

முன்னரே இருக்கும் துவக்கமும், இடைனிலையும், இறுதியும் ஆனவரே !
உம்மை மும்மூர்த்திகளும் அறியவில்லை. பிறகு வேறு யார் தான் அறிய முடியும் ?!
(பூமியாகிய) பந்தினை விரலில் அணிந்தவளும் (உமை), நீயும், உன் அடியார்களின் (பலகாலமாக அன்பு செய்துவந்த)
பழைமை வாய்ந்த (மனத்து) இல்லங்கள்தோறும் எழுந்தருளுகின்ற பரமனே !
சிவந்த நெருப்புப் போன்ற அழகிய மேனியும் காட்டி, திருப்பெருந்துறையில் கோயிலும் காட்டி,
அந்தணனாக அமரும் கோலமும் காட்டி என்னை ஆண்டாய் ! விரும்பி உண்ணும் அமுதம் போன்றவனே ! பள்ளி எழுந்தருள்க !

—————

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே ! வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே ! கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்
எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய் ! எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே !–9-

நண்ணுதல் – நெருங்குதல்; விழு – மேன்மை; தொழுப்பு (தொழும்பு) – அடிமைப்பணி; வண் – அழகிய; களி – மகிழ்ச்சி.

விண்ணுலகில் உள்ள தேவர்கள் அணுகக் கூட முடியாத மேன்மையான பொருளே !
உமக்கு அடிமை பூண்ட அடியார்களாகிய நாங்கள், இந்த மண்ணுலகில் வந்து வாழ வழிவகை செய்தவனே !
அழகு மிகுந்த திருப்பெருந்துறையுடையவனே !வழியடியார்களாகிய எங்கள் கண்ணினுள் நின்று ஆனந்தம் தருகின்ற தேனே !
கடலிலிருந்து தோன்றிய அமுதமாகத் தோன்றுபவனே ! கரும்பே ! விரும்பித் தொழும் அடியவர்களின் எண்ணத்தில் நிறைந்தவனே ! உலகுக்கு உயிரானவனே !
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

————–

“புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம் போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறு” என்று நோக்கித் திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ! ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !

புவனி – பூமி; மலரவன் – பிரமன்; அவனி – உலகம்.

“இந்த மண்ணுலகம் சிவபெருமான் வழியாக உய்யக் கொள்கின்றது (சிறந்த இடம்). அப்படிப்பட்ட இப்பூவுலகில் பிறவாமல் நாம் நாட்களை
வீணாகக் கழித்துக்கொண்டிருக்கிறோம்.” என்று திருமால் விருப்பப்பட்டுப் பிறக்குமாறும்,
பிரமன் ஆசைப்படுமாறும், திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே, உம்முடைய மிக மலர்ந்த மெய்க் கருணையுடன் நீங்கள்,
இவ்வுலகில் வந்து எம்மை ஆட்கொள்ள வல்லவர் ! அத்தகைய விருப்பம் தரும் அமுதமே ! பள்ளி எழுந்தருள்க !

———————————————————————–

 

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ கோயில் கந்தாடையப்பன் ஸ்வாமிகள் -கன்னி மகம் திரு அவதாரம் —

September 23, 2022

ஸ்ரீ கோயில் கந்தாடையப்பன் ஸ்வாமிகள் -தனியன்

வரதகுரு சரணம் சரணம் வரவர முநிவர்ய கந க்ருபா பாத்ரம் |
ப்ரவகுண ரத்ண ஜலதிம் ப்ரநமாமி ஸ்ரீநிவாஸ குருவர்யம் ||
தேசிகம் ஸ்ரீநிவாஸாக்யம் தேவராஜ குரோஸ் ஸுதம் |
பூஷிதம் ஸத் குணைர் வந்தே ஜீவிதம் மம ஸர்வதா||

திருநக்ஷத்திரம்: புரட்டாசி (கன்னி) மகம்

தீர்த்தம்: கார்த்திகை சுக்ல பஞ்சமி

அவதார திருத்தலம்: ஸ்ரீ ரங்கம்

ஆசாரியன்: மணவாளமாமுநிகள்

பிரபந்தம் : வரவரமுநி வைபவ விஜயம்

————–

எறும்பியப்பா மணவாளமாமுநிகளின் அன்றாட வழக்கங்களைக் கொண்டாடும்
தனது பூர்வ தினசர்யையில் கீழ்க்கண்டவாறு மிகவும் அழகாக சாதிக்கிறார் ,

பார்ச்வத: பாணி பத்மாப்யாம் பரி க்ருஹ்ய பவத் ப்ரியௌ
விந்யஸ்யந்தம் சநைர் அங்க்ரீ ம்ருதுலௌ மேதிநீதலே (பூர்வ தினசர்யை 4 )

இந்த சுலோகத்தில் எறும்பியப்பா மணவாளமாமுநிகளை பார்த்து இவ்வாறாகக் கூறுகிறார் ,
“தேவரீரின் அபிமான சிஷ்யர்களை (கோயில் அண்ணன் மற்றும் கோயில் அப்பன் )
இருபுறங்களிலும் தேவரீரின் திருக்கரங்களான தாமரைகளாலே பிடித்து,
தேவரீரின் திருவடித் தாமரைகளை மேதினியில் மெல்ல மெல்ல ஊன்றி எழுந்தருளுகிறீர் “.

தினசர்யைக்கான தனது வியாக்யானத்தில், திருமழிசை அண்ணாவப்பங்கார்,
“இந்த சுலோகத்தில் இரண்டு அபிமான சிஷ்யர்கள் என்று எறும்பியப்பா  -கோயில் அண்ணன் மற்றும் கோயில் அப்பன் -என்று காட்டி அருள்கிறார்

கோயில் அண்ணனின் பெருமைகள் எல்லாம் அறிந்த பலர் , அவரிடத்திலே தஞ்சம் அடைய விரும்பினர்.
“காவேரி தாண்டா அண்ணனாய் ” ,கோயில் அண்ணன் எழுந்தருளி இருந்ததால் ,
அவர் தனது திருத் தம்பியாரான கோயில் அப்பனை , பல இடங்களுக்கு சென்று அனைவரையும் திருத்தி பணி கொள்ள நியமித்தார்.
இதனை சிரமேற்கொண்டு கோயில் அப்பன் தானும் திருவரங்கத்திலிருந்து பல இடங்களுக்கு சென்று பலரை பணி கொண்டார்.

————-

திரு முடி வர்க்கம்

1-எம்பெருமானார் -திரு நக்ஷத்ரம் – சித்திரை திருவாதிரை
2-முதலியாண்டான் -திரு நக்ஷத்ரம் – சித்திரை -புனர்வசு –
3-கந்தாடையாண்டான் -திரு நக்ஷத்ரம் -மாசி புனர்வசு –
4-துன்னு புகழ் கந்தாடைத் தோழப்பர்–திரு நக்ஷத்ரம் -ஆடி பூரட்டாதி
5-ஈயான் ராமானுஜாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -புரட்டாசி -திருவோணம்
6-திருக்கோபுரத்து நாயனார் -திரு நக்ஷத்ரம் -மாசி -கேட்டை
7-தெய்வங்கள் பெருமாள் -திரு நக்ஷத்ரம் -ஆவணி -திருவோணம்
8-தேவராஜ தோழப்பர் -திரு நக்ஷத்ரம் –சித்திரை- ஹஸ்தம்
9-பெரிய கோயில் கந்தாடை அண்ணன்-திரு நக்ஷத்ரம் -புரட்டாசி -பூரட்டாதி

10-பெரிய கோயில் கந்தாடை அப்பன் -திரு நக்ஷத்ரம் -புரட்டாசி மகம்
தீர்த்தம் -கார்த்திகை சுக்ல பஞ்சமி

11-அப்பு வய்ங்கார் -திரு நக்ஷத்ரம் -வைகாசி -திருவோணம்
தீர்த்தம் -மார்கழி கிருஷ்ணாஷ்டமி
12-அப்பூவின் அண்ணன் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -சித்திரை – மூலம்
தீர்த்தம் –மாசி -கிருஷ்ண பக்ஷ த்ருதீயை
13-அப்பூவின் அண்ணன் வேங்கடாச்சார்யார்-திரு நக்ஷத்ரம் -சித்திரை -விசாகம் –
14-சாரீரிக தர்ப்பணம் அண்ணன் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆனி -ஸ்வாதி –
15-பிரணதார்த்தி ஹராச்சார்யர் –
16-வேங்கடாச்சார்யார் –
17-அப்பூர்ண அப்பங்கார் வேங்கடாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -ஆனி -அனுஷம்
18-அப்பூர்ண அப்பங்கார் வரதாச்சார்யர் –
19-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஸ்வாதி –
20-வரதாச்சார்யர்

22-வேங்கடாச்சார்யார்
23-வரதாச்சார்யர்
24-பிரணதார்த்தி ஹராச்சார்யர்
25-பெரிய அப்பன் வேங்கடாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -சித்திரை -கார்த்திகை –
26-பெரிய அப் பூர்ண அப்பயங்கார் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆடி -விசாகம்
27-வேங்கடாச்சார்யார் –
28-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -பங்குனி மகம்
29-பெரிய ஸ்வாமி வேங்கடாச்சார்யார் -ஆனி ரோஹிணி
30-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆவணி -உத்திரட்டாதி
தீர்த்தம் -மார்கழி சுக்ல பக்ஷ பிரதமை

31-வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -மாசி -மூலம்
தீர்த்தம் -புரட்டாசி -சிக்கலை பக்ஷ தசமி

32-அப்பன் ராமானுஜாசார்யார்–திரு நக்ஷத்ரம்-மார்கழி மூலம்

அவதார ஸ்லோகம்
ஸ்ரீ மத் கைரவணீ சரோ வரதடே ஸ்ரீ பார்த்த ஸூத உஜ்ஜ்வல
ஸ்ரீ லஷ்ம்யாம் யுவவத்சரே சுப தனுர் மூலே வதீர்ணம் புவி
ஸ்ரீ வாதூல ரமா நிவாஸ ஸூகுரோ ராமாநுஜாக்யம் குணை
ப்ராஜிஷ்ணும் வரதார்ய சத் தனய தாம் பிராப்தம் பஜே சத் குரும்

ஸ்வாமி தனியன் –
வாதூல அந்வய வார்தீந்தும் ராமானுஜ குரோ ஸூதம்
தத் ப்ராப்த உபாய வேதாந்தம் ப்ரணதார்த்தி ஹரம் பஜே

ஸ்ரீ மத் வாதூல வரதார்ய குரோஸ் தனூஜம்
ஸ்ரீ வாஸ ஸூரி பத பங்கஜ ராஜ ஹம்ஸம்
ஸ்ரீ மந் நதார்த்தி ஹாரா தேசிக பவுத்ர ரத்னம்
ராமானுஜம் குரு வரம் சரணம் ப்ரபத்யே

ஸ்வாமி வாழித் திரு நாமம்
சீர் புகழும் பாஷியத்தின் சிறப்புரைப்போன் வாழியே
செய்ய பகவத் கீதை திறன் உரைப்பான் வாழியே
பேர் திகழும் ஈடு நலம் பேசிடுவோன் வாழியே
பெற்ற அணி பூதூருள் பிறங்கிடுவோன் வாழியே
பார் புகழும் எட்டு எழுத்தின் பண்பு உரைத்தோன் வாழியே
பண்பு மிகு மூலச் சீர் பரவ வந்தோன் வாழியே
ஆர்வமுடன் சீடர்க்கே அருள் புரிவோன் வாழியே
அன்பு மிகு ராமானுஜர் அடியிணைகள் வாழியே

ஸ்வாமி நாள் பாட்டு –

பூ மகளின் நாதன் அருள் பொங்கி மிக வளர்ந்திடும் நாள்
பூதூர் எதிராசா முனி போத மொழி பொலிந்திடு நாள்
நேம மிகு சிட்டர் இனம் நேர்த்தியாய்த் திகழ்ந்திடு நாள்
நீள் நிலத்துள் வேத நெறி நீடூழி தழைத்திடு நாள்
பா மனம் சூழ் மாறன் எழில் பாடல் இங்கு முழங்கிடு நாள்
பார் புகழும் வயிணவத்தின் பண்பு நிதம் கொழித்திடு நாள்
சேம மிகு ராமானுஜர் தேசிகர் இவண் உதித்த
செய்ய தனுர் மதி மூலம் சேர்ந்த திரு நன்னாளே —

ஸ்ரீ ஸ்வாமி திருக்குமாரர்கள் மூவர்

———-

33-ஜ்யேஷ்ட திருக்குமாரர் -ஸ்ரீ பிரணதார்த்தி ஹராச்சார்யர் –திரு நக்ஷத்ரம் -மார்கழி -விசாகம் –

ஸ்ரீ ப்ரணார்த்தி ஹரா சாரியார் –நம் வர்த்தமான ஸ்வாமி திரு நக்ஷத்ரம் -மார்கழி விசாகம்

தனியன்
வாதூலான்வய வார் தீந்தும் ராமானுஜ குரோஸ் ஸூதம்
தத் ப்ராப்த உபய வேதாந்தம் ப்ரணதார்த்தி ஹரம் பஜே

மார்கழி விசாகத்தில் வந்து உதித்தான் வாழியே
மா வளரும் பூதூரான் வண் கழல் பணிந்தோன் வாழியே
பேர் திகழும் பேர் அருளாளன் பதம் பணிவோன் வாழியே
மறையோர் தொழும் தக்கானை மனனம் செய்வோன் வாழியே
ஆராமம் சூழ் அரங்க நகர் அப்பன் போற்றுமவன் வாழியே
ஈங்கு வாதூல குலத்து வந்து உதித்தோன் வாழியே
ஆர்வமுடன் அருளிச் செயலை ஆதரிப்போன் வாழியே
ஆர்த்த புகழ் ப்ரணதார்த்தி ஹரர் அடியிணைகள் வாழியே

வண் புதுவை நகர்க்கோதை சீர் அருளைச் சேர்ந்து இருப்பான் வாழியே
பூவார் மனம் கமழும் புல்லாணி தொழுது எழுவோன் வாழியே
கண்ணனூர் கண்ணபுரம் தொழும் மலர்ப்பதத்தோன் வாழியே
தனுர் விசாகத்தில் வந்து உதித்த வள்ளல் வாழியே
தெண்டிரை சூழ் திருவல்லிக்கேணியில் அவதரித்தோன் வாழியே
தான் உகந்த எதிராசன் கழல் தொழுவோன் வாழியே
அண்ணல் அருளாளன் அடி அடைந்தோன் வாழியே
அப்பன் ப்ரணதார்த்தி ஹரர் திருவடிகள் அவனியில் வாழியே

————-

ஸ்ரீ வாதூல குலத் தோன்றல் ஸ்ரீ முதலியாண்டானுக்கு
ஆறு திருக் குமாரத்திகள் -ஒரு திருக் குமாரர்

ஆறு திருக் குமாரத்திகளை -74- ஸிம்ஹாசனபதிகளான
முடும்பை நம்பி
முடும்பை அம்மாள்
ஆஸூரிப் பெருமாள்
கிடாம்பிப் பெருமாள்
கொமாண்டூர் இளைய வல்லி யச்சான்
வங்கி புரத்து நம்பி
வம்சத்தில் வந்த திருக் குமாரர்களுக்கு திருமணம் முடித்தார்

மாசி புனர்வஸு திருநக்ஷத்ரத்தில் கந்தாடை ஆண்டான் -திருக் குமாரர் அவதாரம்

கந்த வாடை -சொல்லே -கந்தாடை -என்று மருவிற்று –
அணுக்கச் சேவகம் செய்ததால் கந்த வாடை-நறுமணம் வீசும் பொன்னாடை – போல் கமழ்ந்தவர்

அவர் திருக் குமாரருக்கு பச்சை வாரணப் பெருமாள் பெயரைச் சூட்ட
அரங்கன் கந்தாடை தோழப்பர் -என்று மறுபெயர் சார்த்தி அருளினான் –

கந்தாடை தோழப்பருக்கு நான்கு திருக்குமாரர்கள்
பெரிய வரதாச்சார்யர்
சிறிய வரதாச்சார்யர்
ஈயன் ராமானுஜாச்சார்யர்
அம்மாள் -என்கிற தேவராஜ குரு –தோன்ற

அரங்கன் –
பெரிய வரதாச்சார்யருக்கு –பெரிய ஆயி –என்றும்
சிறிய வரதாச்சார்யருக்கு –சிறிய ஆயி -என்றும்
திரு நாமம் இட்டுப் பணி கொண்டு அருளினார் –தாய் போல் பரிந்து பணி செய்ததால் ஆயி –

ஈயன் ராமானுஜாச்சார்யருக்கு –
திருக் கோபுரத்து நாயனார் -நரசிம்மாச்சார்யார் -என்ற திருக்குமாரரும்
அவர்க்குப் பின் தேவப்பெருமாளும் தோன்றினார்கள்

திருக் கோபுரத்து நாயனாருக்கு –
பெரிய அண்ணன்
சிற்றண்ணன்
தெய்வங்கள் பெருமாள் தோழப்பர் –என்ற மூவர் அவதரித்தனர்

மூன்றாவது திருக் குமாரர் -தெய்வங்கள் பெருமாள் தோழப்பர்-ஆவணி திருவோணத்தில் அவதரித்தவர்
இவருக்கு
போரேற்று நாயன்
அழைத்து வாழ்வித்த பெருமாள் அண்ணர்
தேவராஜ தோழப்பர் -அவதரிக்க

மூன்றாவது திருக் குமாரரான தேவராஜ தோழப்பரை வாதூல தேசிக பதம் அளித்து ஸ்ரீ கார்யம் நிர்வஹிக்கச் செய்து அருளினார்

தேவராஜ தோழப்பருக்கு
போரேற்று நாயன்
நாராயண அப்பை
அழைத்து வாழ்வித்த பெருமாள்
வரத நாராயண குரு –புரட்டாசி பூரட்டாதி –
ஸ்ரீ நிவாஸாச்சார்யர்
திருக்கோபுரத்து நாயனார் என்னும் அழகிய சிங்கர்
தோழப்பர்
ஈயான் –என்பதாக எண்மர் திரு அவதரித்தனர்

எண்மரில் வரத நாராயண குருவே -வாதூல தேசிகர் பட்டம் பெற்றார்

கூர நாராயண ஜீயரும் கூர குலத்துப் பட்டரும் முதலியாண்டானின் முன் வரிசையைத் தள்ளி
தங்களை முற்படுத்திக் கொண்டதால் -திருவோலக்கம் -கோஷ்டிக்கு -எழுந்து அருள முடியாமல் தனித்து
பெரிய பெருமாளை சேவித்து வர
நம் பெருமாள் இவரை அண்ணனாக அபிமானித்து அருளினான்
மணவாள மா நுனிகளால் மீண்டும் வாதூல தேசிகர் பொறுப்பு ஏற்றார்

தோழப்பரின் ஐந்தாவது திருக்குமாரரே நம் அப்பன் ஸ்வாமிகள்
இவர் திரு அவதாரம் -புரட்டாசி மகம்

திரு நக்ஷத்ர தனியன்
ஆங்கிரஸே வர்ஷர் க்கே கன்யா ராசிங்கதே த்ரயோதஸ்யாம்
ஜாதம் மகாக்ய தாரே ப்ரணமாமி ஸ்ரீ நிவாஸ குரு வர்யம்

ஸ்ரீ நிவாஸ -கைங்கர்ய ஸ்ரீ யின் இருப்பிடம் என்றவாறு
தனது திருத் தமையனாரையே ஆச்சார்யராகப் பற்றி இருந்தார்

மா முனிகளின் இடம் கொண்ட ஞான பக்தி வைராக்யங்களாலே
வரவர முனி கன கிருபா பாத்ரம் -என்று போற்றப் பட்டவர் –
இவர் மா முனிகளுக்கு உஸாத் துணையாக இருந்த பக்தி பாங்கினை –
வரவர முனி வைபவ சம்பூ –நூலில் காணலாம்

வரத குரு சரணவ் சரணம் வரவர முனி வர்ய கன க்ருபா பாத்ரம்
ப்ரவர குண ரத்ன ஜலதிம் ப்ரணமாமி ஸ்ரீ நிவாஸ குரு வர்யம்

வரத குரு சரணவ் சரணம் -என்று சரம பர்வ நிஷ்டையில் இருந்தவர்

கோயில் அன்னான் -காவேரி கடவா கந்தாடை அண்ணன் -என்று ஸ்ரீ ரெங்கத்தை விட்டு வெளியேறாமல்
கைங்கர்யம் ஒன்றிலே ஊன்றி இருந்தார்

ஆகையால் கந்தாடை வம்சத்து சிஷ்யர்களை உஜ்ஜீவிக்க பல இடங்களுக்குச் செல்லும் பொறுப்பை நம் அப்பன் ஸ்வாமிகள் மேற்கொண்டார்

நாயக்க மன்னர் காலத்தில் சேர்க்கையை அடுத்த திருமேனியில் காஞ்சியின் நினைவாக
தேவராஜன் -பேர் அருளாளன் -திரு நாமம் விளங்க
பெரும் தேவித் தாயார் சமேதராய் ஸ்ரீ கல்யாண வரத ராஜப்பெருமாளை இத்தலத்தில் எழுந்து அருளிச் செய்தான் –
இது முதல் இத்தலம் வரத நாராயண புரம் -என்று வழங்கலாயிற்று –
பின்னர் நம் ஸ்வாமி அப்பன் வழித்தோன்றலான அப்பூர்ண ஐயங்கார் ஸ்வாமியிடம்
செப்பேடுடன் வழங்கப் பெற்று வழிபாட்டுக்கு உரிய நில புலன்களும் மானியமும் வழங்கப் பட்டன –

அப்பூர்ண ஐய்யங்காருக்கு இரண்டு திருக் குமாரர்கள்
மூத்தவர் -வரதாச்சார்யர்
இளையவர் –ப்ரணதார்த்தி ஹரர்
ஸ்ரீ அப்பன் ஸ்வாமியின் ஆறாவது தலைமுறை இது –
இத்தலை முறையில்
திருமணி ஸ்வாமி திருமாளிகை என்றும்
அப்பன் வேங்கடாச்சார்யார் திருமாளிகை என்றும் இரண்டாக்கப் பிரிந்தது

இந்த புகழ் பெற்ற அப்பன் வேங்கடாச்சார்யார் காலத்தில் ஸ்ரீ எறும்பி அப்பா திருவாராதனப் பெருமாளான சக்கரவர்த்தி திருமகன்
எழுந்து அருளி அருளினார்
ஸ்ரீ சோளிங்க புரம் 2 வது தீர்த்த மரியாதையும் இத் திருமாளிகைக்கு ஏற்படுத்தப் பட்டு இன்றும் தொடர்கிறது –

அப்பன் வேங்கடாச்சார்யர் திருக் குமாரர் ப்ரணதார்த்தி ஹராச்சார்யர் காலத்தில்
ஸ்ரீ காஞ்சிபுரம்
ஸ்ரீ பெரும்பூதூர்
ஸ்ரீ வில்லிபுத்தூர் –முதலான இடங்களில் திருமாளிகைகள் ஏற்படுத்தப் பட்டன –

ப்ரணதார்த்தி ஹராச்சார்யரின் திருக்குமாரர் வரதாச்சார்யர்
அவருக்கு வழித் தோன்றல் இன்மையால் திருமணி ஸ்வாமி கிளையில் உத்தம சீலர் கோயில் கந்தாடை வாதூல தேசிக அப்பன் ஸ்வாமியின்
மூன்றாவது திருக் குமாரர் ஸ்ரீ ராமானுஜாச்சார்யரை ஸ்வீ காரம் பெற்று திருமாளிகை பொலிவடைந்தது-

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் வாழித் திரு நாமம்

எந்தை மணவாள மா முனி இணை அடியோன் வாழியே
எழில் கந்தாடை அப்பனுக்கு ஹிதம் உரைத்தான் வாழியே
அந்தமில் சீர் திருவரங்கத்து அமர்ந்த செல்வன் வாழியே
ஆர்ந்த புகழ் சடகோபன் அருள் பெறுவோன் வாழியே
கந்தாடைக் குலம் விளங்கும் கருணை வள்ளல் வாழியே
கன்னியில் பூரட்டாதி கனிந்து உதித்தோன் வாழியே
பந்தம் அறும் எதிராசன் பதம் பணிவோன் வாழியே
பாராள் கந்தாடை அண்ணன் பதம் இரண்டும் வாழியே

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் வாழித் திரு நாமம்

எந்தை மணவாள மா முனி இணை அடியோன் வாழியே
எழில் கந்தாடை அப்பனுக்கு ஹிதம் உரைத்தான் வாழியே
அந்தமில் சீர் திருவரங்கத்து அமர்ந்த செல்வன் வாழியே
ஆர்ந்த புகழ் சடகோபன் அருள் பெறுவோன் வாழியே
கந்தாடைக் குலம் விளங்கும் கருணை வள்ளல் வாழியே
கன்னியில் பூரட்டாதி கனிந்து உதித்தோன் வாழியே
பந்தம் அறும் எதிராசன் பதம் பணிவோன் வாழியே
பாராள் கந்தாடை அண்ணன் பதம் இரண்டும் வாழியே

———

நாள் பாட்டு

சீர் மலி நான்மறை அந்தணர் சிந்தை சிறந்து மகிழ்ந்திடு நாள்
தென் அரங்கம் முதல் நல் பதி கண் மிகு தேசு பொலிந்திடு நாள்
பார் தனிலே வர மா முனி தன்னருள் பாத்திரமாகிய நாள்
பாடியமும் திரு மந்த்ரமும் தினம் பாயொளி மேவுறு நாள்
தார் மலி மார்பர் அழைத்து வாழ்வித்தவர் சதிர் மிக ஓங்கிய நாள்
தக்க புகழ் வாதூலர் குலத்தவர் சந்ததம் வாழ்வுறு நாள்
கார் மலி வண் கைக் கருணையில் அப்பன் காசினியில் தோன்றிய நாள்
கன்னி தனில் திரு மா மகம் என்னும் கவினுறு தனி நாளே

———

வெண்பா

மந்திரங்கள் வாழ மணவாள முனி வாழ யுயர்
எந்தை எதிராசன் எழில் வாழ சந்தமுடன்
மன்னு புகழ்க் கந்தாடை மன்னன் எனும் அப்பனே
இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ அரையர் சேவை பற்றி ஸ்ரீ ரெங்கம் அரையர் ஸ்வாமிகள் –ஸ்ரீ ஆண்டாள் கேட்கும் “முத்துகுறி” –முனைவர் ஸ்ரீராம்–அவர்கள் –

September 22, 2022

“நாலாயிர திவ்யப் பிரபந்தங்களைத் தொகுத்த நாதமுனிகள் காலத்திலிருந்து எங்களின் அரையர் மரபு தொடங்குகிறது.
நாதமுனிகளின் தங்கை தன் இரு மகன்களைத் தான் திவ்யப் பிரபந்தங்களைப் பெருமாள் கோயில்களில் பாட அர்ப்பணிக்கிறார்.
அவர்கள் மேலகத்து ஆழ்வார், கீழகத்து ஆழ்வார் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களுடைய வழிவந்த வாரிசுகள்தான் நாங்கள்.

பெருமாள் கோயில்களில் ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களைப் பாடும் அரையர்கள் குடும்பங்கள்
ஸ்ரீவில்லிப்புத்தூர், மேல்கோட்டை, திருநாராயணபுரம் (கர்நாடகா), ஆழ்வார் திருநகரி ஆகிய இடங்களில் இருக்கிறார்கள்.
ஸ்ரீரங்கத்தில் இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கிறோம். இன்னொரு குடும்பம் ராமானுஜம் அரையருடையது.

என்னோட 11-வது வயதிலிருந்து நாலாயிர திவ்யப் பிரபந்தங்களைப் பாடி வருகிறேன்.
வைகுண்ட ஏகாதசியின்போதான 20 நாள் விழாவில் ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களைப் பாட கோயிலில் இருந்து வந்து அழைத்துச் செல்வார்கள் இதுதான் மரபு.
எங்களின் பாடல்களைக் கேட்டு பெருமாள் தன்னுடைய பரிவட்டத்தையும் குல்லாவையும் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
அதனால், பாடலைப் பாடும்போது குல்லா அணிந்துகொண்டு பாடுவோம்.
நாங்கள் பாடல்களை நேரடியாக பெருமாள் முன்பு நேரடியாகப் பாடுவதாக உணர்கிறோம்.

பகல்பத்து விழாவின் முதல் ஐந்து நாளில் பெரியாழ்வார் திருமொழி, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி பாடுவோம்.
வைகுண்ட ஏகாதசி முதல் நம்மாழ்வார் மோட்சம் வரைக்கும் திருவாய்மொழி பாடுவோம்.
இயல், இசை, நாடகம் என்கிற அடிப்படையில் பாடல்களைக் காட்சிகளாக்க அபிநயமும் நடத்துவோம்.
அதற்கு அடுத்த நாள் இயற்பா என நாலாயிரம் பாடல்களையும் பாடி முடித்துவிடுவோம்.
இதைத்தவிர அரங்கநாதர் உற்சவ காலங்களிலும் பாடுவோம்.

தம்பிரான் படி வியாக்கியானம், பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை போன்றவர்களின் வியாக்கியானப் படிகள் வழிவழியாக எங்களிடம் மட்டுமே இருக்கிறது.
இதை எங்கள் குடும்பங்களுக்கு மட்டுமே சொல்லித் தருகிறோம். வேறு யாருக்கும் சொல்வதில்லை. அரங்கநாதர் கோயிலில் மட்டுமே நாங்கள் பாடுவோம்.

இயற்பா பாடுவதற்கு இருந்த அமுதானார் என்பவரின் குடும்பத்தில் வாரிசு இல்லாததால்
அவருக்குப் பின் இயற்பாவையும் 24 ஆண்டுகளாக நாங்கள்தான் பாடுகிறோம்” என்றார் சம்பத் அரையர்.
உங்கள் மகன்களும் பாடுவார்களா என்று கேட்டபோது, “நிச்சயமாக, எங்கள் குடும்பத்தில் சிறு வயதிலிருந்தே பயிற்றுவிக்கிறோம்.
என் மகன் பரத்வாஜ் விமான பைலட்டாக இருக்கிறார். ஆனாலும் நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதும் அவர் பாடுவார்.
இளைய மகன் இன்ஜினியர், அவரும் பாடுவார். எங்களுக்கு அரசு உதவித்தொகை தருவதாகச் சொன்னார்கள்.
நாங்கள் அதை மறுத்துவிட்டோம். இதை பெருமாளுக்கு செய்யும் சேவையாக மட்டுமே நினைக்கிறோம்” என்றார்.
அருகிலிருந்த பரத்வாஜும் நிச்சயமாக இதை நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்று உறுதியாகச் சொன்னார்.

ஆழ்வார்களின் இனிமையான பக்திப் பாசுரங்களால் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமியையும், கோயிலையும்
மந்திர கனத்திற்கு ஒப்பான அதிர்வைத் தந்து வரும் அரையர்களின் சேவை ஒரு நீண்ட பாரம்பரியமாக தொடர்ந்து வந்திருக்கிறது.
கோயிலில் இருந்து புறப்பட்ட போது அரையர்கள் என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டதற்குப் ‘பாட்டுக்கு அரசன்’ என்று பெருமை பொங்கச் சொன்னார் பரத்வாஜ்.

அரங்கனுக்கு நடக்கும்அனைத்து விழாக்களும் பொதுவாக 10 நாட்களே நடக்கும். மார்கழிவைகுண்ட ஏகாதசி விழா மட்டும் 22 நாட்கள் நடக்கும். இதனாலேயே இது பெரிய திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.

மார்கழி உற்சவத்தின் முதல் பத்து நாட்கள் திருமொழித் திருநாள் எனவும் பின்னால் வரும் 10 நாட்கள் திருவாய்மொழித் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இதில் முதல் பத்து நாட்கள் பகல் நேரத்தில் அரையர் சேவை நடைபெறும். திருவாய்மொழித் திருநாளின் போது அரையர் சேவை இரவு நேரத்தில் நடைபெறும். இந்த அரையர் சேவை நடைபெறும் காலத்தை வைத்து இதை பகல்பத்து இராப்பத்து என்றும் அழைக்கின்றனர்.

 • திருமங்கையாழ்வார் காலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட பத்துநாள் திருவாய்மொழி திருநாளாக ஆரம்பிக்கப்பட்டது
 • நாதமுனிகள் காலத்தில் மற்ற ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு ஏகாதசிக்கு முன்னதாக பத்து நாட்கள் சேர்க்கப்பட்டு 21 நாள் திருநாளாக அரையர் சேவையுடன் ஆரம்பிக்கப்பட்டது.
 • ஜகதசாரியன் சுவாமி ராமானுஜர் நம்மாழ்வார் தொடக்கமாக அனைத்து ஆழ்வார்களின் உற்சவ மூர்த்திகளை எழுந்தருளச் செய்து விழாவிற்கு மேலும் பொலிவு ஊட்டினார்.
 • பராசரபட்டர் காலத்தில் மார்கழி பெரிய திருநாள் தொடக்க விழாவாக திருநெடுந்தாண்டகம் சேர்க்கப்பட்டு இன்றுவரை 22 நாட்கள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
 • மணவாள மாமுனிகள் காலத்தில் தம்பிரான் படி வியாக்கியானம் அரையர் சேவையில் சேர்க்கப்பட்டது.
 • நம்பெருமாள் வீணை வாசிப்பு கைங்கரியம்
  முத்தமிழ் விழாவில் தமிழ்வேதமான, திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை அரையர்கள் தாளம் இசைத்துப் பாடுவார்கள்.
  வீணை இசைக் கலைஞர்கள்,
  சில பிரபந்தப் பாசுரங்களை பலவகை அமிர்தமான ராகங்களில்,யாழ்(வீணை) இசைத்தும், வாய்ப்பாட்டாகவும் பாடுவார்கள்.

  இராப்பத்து நாட்களில் நம்பெருமாளின் இரவுப் புறப்பாட்டில், நாழிகேட்டான் வாசலிலிருந்து, மேலப்படி ஏறும்வரை,
  நம்பெருமாள் சுமார்1.30 மணி நேரம் இந்த அற்புதமான இசையைக் கேட்டுக்கொண்டு வருவார்.

  சாந்தோக்ய உபநிஷத்தின்படி, வீணையில் இசைக்கப்படும் இசை எல்லாம் சேர்ந்து பரப்ரம்மமான ஸ்ரீமந்நாராயணனை போற்றுமாம்.

  மேலும் வீணை இசையே மஹாலக்ஷ்மித் தாயாரின் ஒரு வடிவம் என்கிறது உபநிஷத்.

  உடையவர் நியமித்து அருளிய வீணாகானச் சேவை:
  திவ்யப் பிரபந்தங்களில் பெரிதும் ஈடுபட்டிருந்த உடையவர்,
  பல பாசுரங்களிலும் ஆழ்வார்கள் யாழிசையை பாடியுள்ளார்கள்.
  எனவே, ஸ்வாமி இராமானுஜரும் பெரியபெருமாள் கேட்டு உகக்க வேண்டும் என்று கருதி, வீணை இசைக்கும் கைங்கரியத்தை ஏற்பாடு செய்தார்.

  பெருமாள் வீணை கானம் கேட்டருளும் சமயங்கள்:

  திருப்பள்ளி எழுச்சியின் போது – ‘கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்’ எனும் திருப்பள்ளி எழுச்சி பாசுரம்.
  இரவில் திருக்காப்பு சேர்க்கும் போது – ‘மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே என்னும் பெருமாள் திருமொழி பாசுரம்.
  வைகுண்ட ஏகாதசி இராப்பத்தில்
  மற்ற சில உற்சவங்களில் பெருமாள் புறப்பாட்டின் போது வீணை கானம் சேவிக்கப்படும்.

  —————————–

ஸ்ரீ ஆண்டாள் கேட்கும் “முத்துகுறி”

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கும் உற்சவங்களில் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு முத்து குறி.
ஆண்டாள் எம்பெருமானையே எப்பொழுதும் நினைப்பவள்.
கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனைப்
புண்ணிற் புளிப் பெய்தாற் போலப்புறம் நின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையிற் பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே- – என்பது ஆண்டாளின் நிலை.
“தோழியர்களே. கண்ணனெனும் கருந்தெய்வத்தின் அழகையும், அவனுடன் கூடிமகிழும் காட்சியையும் எப்போதும் கண்டு கிடக்கின்றேன்.’’
“புண்ணிலே புளியைப் பூசுவதைப் போல், அயலில் நின்று என்னைக் கேலி செய்யாமல் என் வருத்தத்தை அறியாமல் விலகி நிற்கின்ற அந்தப் பெருமான்
தன் இடையில் கட்டியிருக்கும் மஞ்சள் பட்டுடையை கொண்டு வந்து என் வாட்டம் தீருமாறு வீச மாட்டீர்களா?’’ என்பது இந்தப் பாசுரத்தின் பொருள்.

ஆண்டாள் எம்பெருமானை அடைவதற்கு வழி இருக்கிறதா என்று துடிக்கிறாள். அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் வீதி வழியே குறி சொல்லும் ஒரு குறத்தி போகிறாள்.
அவளை அழைத்து தோழிகள் சூழ்ந்திருக்க தன் கவலைக்கான காரணத்தையும், அது தீர்வதற்கான
வழியையும் கேட்பது போல அமைந்த நிகழ்ச்சிதான் முத்துகுறி கேட்கும் நிகழ்ச்சி.
ஆண்டாள் கவலையோடு கேள்வி கேட்பதும், அவள் நோய்க்கு கட்டுவிச்சி நீண்ட பதில் சொல்வதும், சுவாரசியமாக இருக்கும்.

அதற்காகவே வடிவமைக்கப்பட்ட உரையாடலை அபிநயத்தோடு அரையர்கள் பேசுவார்கள்.
நெல்லை மாவட்ட இலக்கியங்களில், குறிகேட்கும் இந்த நிகழ்ச்சிகள் நிறைய வரும். `
`குற்றாலக் குறவஞ்சி’’ என்ற சிற்றிலக்கியமே, இந்த உரையாடலில் அடிப்படையில் அமைந்ததுதான்.
இந்த நிகழ்ச்சி ஆடிப்பூர உற்சவத்தில் நடைபெறும். பத்தாம் நாள் உற்சவத்தில், சப்தாவரணம் நடக்கும்.
அன்று ஆண்டாள் முத்துகுறி கேட்கும் வைபவம் நடைபெறும்.
கட்டுவிச்சி பாவனையில் அபிநயம் பிடிக்கும் அரையர் சுவாமி வாயால் ஆண்டாள் இதைக் கேட்டு மகிழ்வாள்.

அரையர் சுவாமி ஒரு கருப்பு பட்டுத்துணியில் சோழிகளை போட்டு குறி சொல்வதுபோல் அபிநயம் செய்வார்.
ஆடித் திருநாளிலும், பங்குனித் திருநாள் ஒன்பதாம் நாள் விழாவுக்கு பிறகு, திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த திருநெடுந்தாண்டகம் என்கிற பாசுரத்தில்
“பட்டுடுக்கும் அயர்த்திரங்கும் பாவை பேணாள்’’ என்று தொடங்கும் பாடலுக்கு அபிநயம் பிடிப்பர்.
மார்கழி மாதத்தில் ஆண்டாள் கோயில் பிராகாரத்தில் ஆண்டாள் மட்டும் தனியாக எழுந்தருளி இருக்க,
தலையில் பட்டு குல்லாய் அணிந்து அரையர் அபிநயம் செய்து முத்து குறி செய்வார்.
இதில், இரண்டு பேர் கிடையாது. அவரே கேள்வி கேட்டு, அவரே பதில் சொல்ல வேண்டும். ஓரங்க நாடகம் போலிருக்கும்.

“சூழ நீர் பாயும் தென்னங்குறுங்குடி, திருமாலிருஞ்சோலை, சுக்கு குத்தி
கழத்தட்டி, வஞ்சி நகரம் என்னும் இஞ்சி நறுக்கி,
ஞானசாரம் பிரமேய சாரம் என்கின்ற சாற்றை எடுத்து,
ஸ்ரீசைலேச தயாபாத்திரத்தில் சேர்த்து
அச்சுதன் என்னும் அடுப்பை வைத்து,
உத்தமன் என்னும் உமியைத் தூவி,
வேங்கடம் என்னும் விறகை முறித்திட்டு,
நீர்மலை என்னும் நெருப்பை மூட்டி,
மணி மந்திரம் என்னும் துடிப்பினாலே,
வானமாமலை என்னும் வட்டிலில் சேர்த்து,
திருமணி கூடத்திலே இறக்கி,
உபதேசரத்தினமாலை என்னும் உரை கலத்தில் இட்டு,
கண்ணி நுண் சிறுத்தாம்பினால் மாத்திரை தேய்த்து,
விண்ணகரம் என்னும் மேல்பொடி போட்டு,
கண்ணபுரம் என்னும் கரண்டியால் கலக்கி,
திருவாய்மொழி என்னும் தேனைக் கலந்து,
திருப்பள்ளி எழுச்சி என்று திகழக் கலக்கித்
திருக்குடந்தை என்று எடுத்து புசி. உன் நோய் தீரும்.”

இதை நீட்டி முழக்கி சொல்லி முடித்ததும், இப்பொழுது கோதையின் தோழிகள் கேட்கிறார்கள்.
“என்ன மருந்து சாப்பிட்டாய்?’’

கோதை பதில்,“எங்கும் இல்லாத மருந்து. விலையில்லா மருந்து.
வடக்கே சென்று வாயு புத்திரன் கொணர்ந்த மருந்து.
தெற்கே சென்று தேவர்கள் கொணர்ந்த மருந்து.
அனுமன் அங்கதன் கொணர்ந்த மருந்து. ஆழ்வார்கள் ஆசாரியர்கள் அனுசந்தித்த மருந்து.
“ஸ்ரீமன் நாராயணா…” என்று தொடங்கும் திவ்யமந்திர மருந்து’’ என்கிறாள்.

இப்படிப் போகும் அரையர் நிகழ்ச்சி. அரையர் சேவை உள்ள ஒரு சில தலங்களில் ஸ்ரீவில்லிபுத்தூரும் உண்டு.
நாதமுனிகள், ஆழ்வார்களின் அருளிச் செயலை, இயல், இசை, நாடகமாகத் தொகுத்தார்.
பொதுவாக தனித்தனியாக இருக்கும்.
இம்மூன்றும், ஒன்றாக கலந்து இருக்கும் நிகழ்ச்சிதான் அரையர் சேவை.
அவர்கள் பாடல் பாடுவார்கள். அதற்கான உரையையும் சொல்லுவார்கள். அபிநயம் பிடிப்பார்கள். வெறும் கைத்தாளம் கொண்டு மட்டும்தான் பாடுவார்கள்.
பக்கவாத்தியம் எதுவும் இருக்காது. இவர்கள் பாடலுக்கு உரை சொல்லும் பொழுது தனி உரையை பயன் படுத்துவார்கள்.
தம்பிரான்படி வியாக்கியானம் என்று பெயர்.

————-

“கோயிலுடைய பெருமாளரையர்” என்றோ,
“வரந்தரும் பெருமாளரையர்” என்றோ,
“மதியாத தெய்வங்கள் மணவாளப்பெருமாளரையர்” என்றோ.
“நாத விநோத அரையர்” என்றோ அரங்கனின் கைங்கர்யபரர்களால் ,அரையர் ஸ்வாமிகளுக்கு அருளப்பாடு சாதிக்கப்படும்.

(பகல்பத்து ,இராப்பத்து விழாக்காலங்களில்,அரையர் ஸ்வாமிகளுக்கான அருளப்பாடு,மேற்சொன்னவாறே சாதிக்கப்படும்)

அரையர்களுக்கு ஸ்தாநீகர் ,தீர்த்தம், சந்தனம், தொங்குபரியட்டம்,மாலை ஆகியவற்றை சாதிப்பார்…

பிறகு அரங்கன் பள்ளிகொண்டு இருக்கும் கர்ப க்ருஹத்தின் (மூலஸ்தானத்தின்) மேற்கு பகுதியில்,அரையர் ஸ்வாமிகள் இருந்துகொண்டு,

“பொங்குசீர் வசனபூடணமீந்த உலகாரியன் போற்றிடத் திகழும் பெருமாள்”
“போதமணவாள மாமுனி ஈடுரைப்பது கேட்டுப் பூரித்து நின்ற பெருமாள்”–என்ற கொண்டாட்டங்களைச் சொல்லி,
திருநெடுந்தாண்டகத்தின் முதல் பாட்டு “மின்னுருவாய்” என்பதை பலதடவை இசைப்பர்.

பிறகு,அரையர்கள் சந்தனமண்டபத்திற்கு எழுந்தருளி, திருநெடுந்தாண்டகத்தின் முதல் பாட்டு “மின்னுருவாய்”
என்று தொடங்கும் முதல் பாசுரத்தினை இசையுடன் அபிநயம் செய்வர்.

பிறகு முதல் பாட்டிற்கு ,”ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை” சாதித்த,வ்யாக்யான(விரிவுரை) அவதாரிகைகளும்,
இரண்டாம் பாட்டிலிருந்து,11 பாட்டான,”பட்டுடுக்கும்”என்னும் பாசுரம் வரை,”தம்பிரான்படி” வியாக்யானமும் சேவிக்கப்டும்.

திவ்ய பிரபந்த பாசுரங்களுக்கு, நாதமுனிகள் தொடங்கி, அவரின் வம்சத்தில் உதித்த, அரையர் ஸ்வாமிகள்
(இன்றைய அரையர் ஸ்வாமிகளின் முன்னோர்கள்) எழுதி வைத்த, வ்யாக்கியானங்களுக்கு (விரிவுரை) “தம்பிரான் படி வியாக்யானம்” என்று பெயர்.
இந்த தம்பிரான்படி வியாக்கியானம் ஓலைச் சுவடிகளில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, பரம்பரையாக பாதுகாக்கப் பட்டு வருகிறது.
இந்த தம்பிரான்படி வியாக்கியானம் அச்சு வடிவில் இல்லை.
தற்பொழுது அரையர் கைங்கர்யம் செய்யும், அரையர் ஸ்வாமிகளிடம் உள்ள ஓலை ச்சுவடிகளில் இருந்து இந்த தம்பிரான்படி வியாக்கியானம் சேவிக்கப்படும்.

இந்த தம்பிரான் படி விரிவுரை, சொல்லழகும், பொருளழகும் கொண்ட, கருத்தாழமிக்க, சொற்றொடர்களாகும்.
இவற்றை கேட்கக் கேட்க, பக்தர்களின் உள்ளத்திலே பக்தியும், மகிழ்ச்சியும் பொங்கும்.

திவ்யப் பிரபந்தச் சொற்கள் பின்னிப் பிணைக்கப் பட்டு, சந்தத்தோடு அவைகள்,அரையர் ஸ்வாமிகளால் சேவிக்கப்படும் போது,
அதைக் கேட்போரின் உள்ளத்தில், நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் சொல்லழகு புலப்படும்…..

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

பண்டைய தமிழ்நூல்களில் திருமால் வழிபாடு பற்றிய குறிப்புகள்–பேராசிரியர் ஸ்ரீ ந. சுப்புரெட்டியார் அவர்கள் —

September 22, 2022

1. தொல்காப்பியம்

மாயோன் மேய காடுறை உலகமும்—என்ற பழந்தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்தால் அறியலாம்.

மாயோன் – கண்ணன், கருநிற முடையோன்! இதனால் மாயோன் என்று முன்னோர்களால் குறிப்பிடப் பெறும் தெய்வம் திருமாலின் பூர்ண அவதாரமான கண்ணனே என்பது பெறப்படுகின்றது. இவ்வுரிமைத் தலைமை அப் பெருமானுக்கு அமைந்ததற்கு அவனது இறைமைப் பண்புகளே காரணமாகும் என்று கருதலாம்.

மாயோன் மேய மன்பெறுஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ் பூவை நிலையும்-

என்ற நூற்பா ‘பூவை நிலை’ என்ற புறத்திணையினை விளக்குவது. இதனை மாயோனுடைய காத்தற் புகழை மன்னர்க்கு உவமையாகக் கூறும் ‘பூவை நிலை’ என்று விளக்குவர் நச்சினார்க்கினியர். மேலும் அவர்,

கடல்வளர் புரிவளை புரையு மேனி
யடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்
மண்ணுறு திருமணி புரையு மேனி
விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்–என்னும் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டுவர்.

இப் பாடலில் பலதேவனும் திருமணி (திருமறு-ஶ்ரீவத்சம்) யையுடைய திருமாலும் வருதலைக் காணலாம்.
பலதேவனைத் தமிழ்நூல்கள் நம்பிமூத்தபிரான் என்று குறிப்பிடும்.

———

2. பத்துப்பாட்டு
தொல்காப்பியத்தை அடுத்துப் பத்துப்பாட்டும் எட்டுத் தொகை நூல்களும் எழுந்தன.
இவை கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியனவாகக் கூறுவர்.
முதற்கண்கூறிய பத்துப்பாட்டில் மாயோனைப்பற்றிய குறிப்புகள் பல காணலாம். அவற்றுள் சில :
‘புள்ளனி நீள்கொடிச் செல்வன்’
‘நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலையிய ‘உலகங் காக்கும் ஒன்றுபுரி கொள்கை’
‘இருநிலங் கடந்த திருமறு மார்பின் ‘முந்நீர் வண்ணன் பிறக்கடை’
‘அவ்வயின், அருந்திறல் கடவுள் வாழ்த்தி’–[அத்திரு வெஃகாவணையில் அரிய திறலினை யுடைய திருமாலை வாழ்த்தி]
இது பிரம்ம தேவர் செய்த வேள்வியினை அழிக்க வந்த வேகவதி நதியைத் தடுத்தற்பொருட்டுத் திருமால் பள்ளி கொண்டு அணைபோற் கிடந்த தலம்;
இங்கே கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருமாலுக்கு வேகாசேது என்பது திருநாமம்.

‘காந்தளஞ் சிலம்பில் கயிறு நீடுகுலைப் படிந்தாங்குப்
பாம்பனைப் பள்ளியமர்ந்தோன் ஆங்கண்.’
‘வலம்புரி பொறித்த நேமியொடு மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போல’[16]

[நேமியொடு, வலம் புரிதாங்கு தடக்கை மாஅல் -சக்கரத்தோடே வலம் புரியைத் தாங்கும் பெரிய கையையுடைய மால்.
மா- பொறித்தமா. அல் – திருமார்பிடத்தே திருமகளை வைத்த மால்.
நீர்செல நிமிர்ந்த மாஅல் போல – மாவலி வார்த்த நீர் தன் கையிலே சென்றதாக உயர்ந்த திருமால் போல]
‘கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் மாயோன் மேய ஓண‌ நந்நாள்’
இந்த மேற்கோள்களிலிருந்து
(i) மாயோனது கொடி கருடக்கொடி என்றும்
(ii) அவன் காப்புக் கடவுள் என்றும், (
iii) திருமார்பகத்தே திருமறுவை (ஸ்ரீ வத்சம்) அணிந்த கடல் நீர் வண்ணன் என்றும்
(iv) திருவெஃகாவில் (காஞ்சியில்) கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பவன் என்றும்,
(v) அங்குப் பாம்புப் படுக்கையில் சயனத் திருக்கோலமாகக் காட்சி அளிக்கின்றான் என்றும்,
(vi) நான்கு முகத்தையுடைய ஒருவனைப் பெற்ற திருவுந்தியையுடையவன் என்றும்,
திருவாழியையும் திருச்சங்கையும் தன் கைகளில் தாங்கியவன் என்றும், (
vii) மாவலியிடம் மூவடி மண் வேண்டிச் சென்று கேட்டபொருளை நீர் வார்த்துக்கொடுக்க, பேருருவங்கொண்டு காட்சி அளித்தவன் என்றும்,
(viii) அவுணர்களை அழித்தவனும் மாமை (கருமை) நிறமுடையோனுமாகிய அவன் பிறந்த நாள் திருவோணம் என்றும்
அறியப் பெறும் செய்திகளாகும்.

————

3. எட்டுத்தொகை
எட்டுத் தொகை நூல்களில் — பரிபாடலில்– இப்போதுள்ள பதிப்பில் திருமாலுக்குரியவையாக ஆறு பாடல்களும் (1,2,3,4,13,15)
பரிபாடல் திரட்டில் ஒன்றும் ஆக ஏழு பாடல்கள் உள்ளன.
இவற்றில் கூறப் பெறும் செய்திகள் :
திருமால் ஆயிரம் பணாமுடிகளைக் கொண்ட ஆதிசேடன்மீது பள்ளி கொண்டவன்;
பூவைப் பூவண்ணன்;
திருமகள் விரும்பியமர்ந்த திருமார்பினன்;
திருமார்பில் கெளத்துவ மணியை (ஸ்ரீ வத்சம்) யுடையவன்;
பொன்னாடை புனைந்தவன்;
கருடக் கொடியையுடையவன்;
நான்முகனுக்கும் காமனுக்குத் தாதை,
திருவாழியை வலக்கையில் தரித்திருப்பவன் (1).

கேழல் உருவைக் கூறும் உயிர்கள் உளவாதற்பொருட்டு வராகத் திருக்கோலம் கொண்டவன்;
வெண்ணிற முள்ளவனுக்குப் பிறப்பு முறையால் முதியவன்;
உயிர்கள் தோறும் அந்தர்யாமியாய் இருப்பவன்;
ஆழிப்படையால் அவுணர்களின் தலைகளைப் பனங்காய்கள் போல் உருளச்செய்தவன்;
ஆழிப்படையின் உருவம் பகைவர் உயிருண்ணும் கூற்றையும், அதன் நிறம் சுட்ட பொன்னோடு விளங்கிய நெருப்பையும் ஒக்கும்;
திருமேனி நீலமணியையும் கண்கள் தாமரை மலர்களையும் ஒக்கும்;
கருடக் கொடியையுடையவன்;
தேவர்கட்கு அமிழ்தம் வழங்க வேண்டும் என்று திருவுள்ளத்தில் கொண்ட அளவில் அதன் பயனால்
மூவாமையும் ஒழியா வலியும் சாவாமையும் உரியனவாயின (2).

அன்பராயினார் பிறவிப் பிணியை அறுக்கும் மாசில் சேவடியை உடையவன்;
நீலமணி போன்ற திருமேனியையுடையவன்;
கருடனின் அன்னையாகிய விநதையின் இடுக்கண் தீர்த்தவன்,
கேசி என்னும் அரக்கனை மாய்த்தவன்;
மோகினி உருவம் கொண்டு அமரர்கட்கு அமுதம் அளித்தவன்;
இவனுக்கு ‘உபேந்திரன்’ என்ற திருநாமமும் உண்டு;
நான்முகனின் தந்தை; அவனைத் தனது திருவுந்தியில் தோற்றுவித்தவன்.

‘கீழேழ் உலகமும் உற்ற அடியினன்’(20)என்பதால் திருமால் திரிவிக்கிரமனாக உலகளந்த செயல் குறிக்கப் பெற்றதால் வாமனாவதாரமும் நுவலப் பெற்றதாகும்.
தனி நின்று உலகைக் காப்பவன்.
இருபத்தைந்து தத்துவங்களாலும் ஆராயப்பெறும் பெருமையை உடையவன்.
பிறவாப் பிறப்பு இல்லாதவன்;
அவனைப் பிறப்பித்தோரும் இலர்.

மாவிசும்பு ஒழுகுபுனல் வறள அன்னச் சேவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோய் (25-26)

செங்கட் காரி கருங்கண் வெள்ளை-பொன்கட் பச்சை பைங்கண் மாஅல் (181–182)–என்ற அடிகள்
சிவந்த கண்ணையும்,கரிய மேனியையும் உடைய வாசுதேவன், கரிய கண்ணையும் வெள்ளிய திருமேனியையும் உடையச ங்கர்ஷணன்,
சிவந்த திருமேனியையுடைய பிரத்திம்யுனன்,
பசிய உடம்பையுடைய அதிருத்தன் என்ற திருமாலினது நான்கு வகை வியூகங்களும் இப் பாடலில் நுவலப் பெறுகின்றன. (3)

நீலமேனியையும் அலையடங்கிய கடலையும் நீர் நிறைந்த மேகத்தையும் ஒத்த திருமேனியையுடையவன்.
பிரகலாதன் பொருட்டுத் தூணிலிருந்து நரசிம்மனாகத் தோன்றி இரணியனின் மார்பைக் கிழித்த நகத்தையுடையவன்.
பண்டைக் காலத்தில் பூமி வெள்ளத்தில் அழுந்திய போது வராக வடிவம் கொண்டு அந் நிலத்தைத் தன் கோட்டால்
எடுத்து நிறுத்திய செயல் உலகம் தாங்கும் மேருமலையின் செயலோடு ஒக்கும்.
பனை, கலப்பை, யானை முதலிய கொடிகள் இருப்பினும் கருடக் கொடியே சிறந்தாகத் திகழும்.
அன்பர் நெஞ்சிற் கருதிய வடிவமே அவனது வடிவம்;
தனி வடிவம் இல்லாதவன் வனமாலை அணிந்தவன். தன்னினும் சிறந்த திருவடிகளையுடையவன்;
நிறைந்த கடவுள் தன்மையையுடையவன். வேறு பண்புகளும் நிறைந்தவன்.
ஆலின் கீழும் கடம்பினும் ஆற்றிடைக் குறையினும், மலையிடத்தும் பிறவிடத்தும் பொருந்திய தெய்வங்களாக
வேறுவேறு பெயரும் உருவமும் கொண்டு விளங்குபவன், “ஆர்வலர் தொழுகைகளில் அமைதியாக அமர்ந்திருப்பவன்.
அவரவர் ஏவலனாகவும் அவரவர் செய்த பொருளுக்குக் காவலனாகவும் இருப்பவன்”(4)

பீதாம்பரத்தையும் திருமுடியையும் மாலையையும் கருடக்கொடியையும்கொண்டவன்.
காத்தல் தொழிலையும் உடையவன்.
திருஆழியையும், திருச்சங்கையும் ஏந்திய கைகளையுடையவன்.
தன்னைத் தொழுவோர்க்கு வைகுண்ட பதவியை வழங்குபவன்.
ஐந்து பூதங்களும் மூவேழு உலகத்து உயிர்களும் அவனிடத்து உண்டாயின.
பாற்கடல் நடுவே ஆயிரம் தலையையுடைய ஆதிசேடன் மீது அறிதுயில் கொள்பவன்.
கலப்பையைப் படையாக உடையவன்.
பூமியை நடுக்கமற எடுத்த ஆதிவராகன்,மேகம், காயாம் பூ, கடல், இருள், நீல மணி என்னும் ஐந்தையும் ஒக்கும் திருமேனியையுடையவன்.
காலக் கூறுபாடுகளைக் கடந்து நிற்பவன். அவனுடைய திருவடி, திருக்கை, திருக்கண், திருப்பவழம் இவை தாமரை மலரையொக்கும்,
நெருப்பையொத்த வெட்சிமலரை இடையிட்டுக் கட்டின திருத்துழாய் மாலையையுடையவன்,
அவரவர் செய்த தவப்பயனால் தியானிக்கத்தக்கவன். (13)

மலைகளில் சிறந்த திருமாலிருங் குன்றத்தில் மாயோனாகவும் பலதேவனாகவும் சேவை சாதிப்பவன்.
அவன் அருளின்றி வீடுபேறு அடைதல், துறக்கம் பெறுதல் அரிது.
திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளியிருக்கும் திருமால் துளவமாலையை அணிந்தவன்.
நீலமணிபோன்ற மேனியையுடையவன் ஒளி மிக்கவன், ஒற்றைக் குழையையுடையவன்; கருடக் கொடியையுடையவன்.
கலப்பையை ஆயுதமாகக் கொண்டவன், திருவாழி, திருச்சங்கு முதலிய ஐந்து படைகளையுடையவன்.

————

(ஆ) பரிபாடல் திரட்டு :
இருந்தையூர் என்னும் திருப்பதியில் எழுந்தருளியிருப்பவன். இதில் அமுதம் கடைந்த செய்தி கூறப்பெற்றுள்ளது.
(இருந்தையூர் என்பது மதுரையில் உள்ள திருக்கூடல் என்னும் திருப்பதி)

————-

(இ) கலித்தொகை :

இதில் திருமாலைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஒருகுழை யொருவன்போல் இணர் சேர்ந்த மராமரமும் (கலி-27) என்ற அடியில் நம்பி மூத்தபிரான் குறிப்பிடப்பெற்றுள்ளான்.
‘கொடுமிடல் நாஞ்சிலான்’ (கலி 36) என்று கூறப்பெறுபவன். ‘மல்லரை மறஞ்சாய்த்தமால்’ (கலி-52) என்று மாயோன் குறிப்பிடப்பெறுகின்றான்.
ஒரு பாடலில் (கலி-103) ‘மாயோன்’ என்ற சொல் வருகின்றது.
முல்லைக் கலியொன்றில் (104),
பால்நிற வண்ணன்போல் பனைக் கொடிப் பழிதிரிந்த வெள்ளையும்
பொருமுரண் மேம்பட்ட பொலம்புனை புகழ்நேமித் திருமறு மார்பன்போல் திறல் சான்ற காரியும் (8-10) என்ற அடிகளில்
பனைக் கொடியைக் கொண்ட பால் நிற பலதேவனைப் பற்றிய குறிப்பும் திருவாகிய மறுவினையுடைய (ஶ்ரீ வத்சம்) திருமாலைப் பற்றிய குறிப்பும் வருகின்றன.

இதே பாடலில்,
பால்மதி சேர்ந்த அரவினைக் கோள்விடுக்கும் நீணிற வண்ணன்(37-38)–என்ற அடிகளில் திருமாலைப்பற்றிய குறிப்பும் காணப் பெறுகின்றது.

அடுத்த பாடலில் (கலி.105),
வள்ளுரு நேமியான் வாய்வைத்த வளைபோலத் தெள்ளிதின் விளங்கும் களிநெற்றிக் காரியும் (9-10)–என்ற அடிகளில்
மாயோன் ஆழி தாங்கிய கையன் என்றும் அவன் வாய் வைத்து ஊதும் சங்குபோல் கரி கொண்ட நெற்றியையுடைய கரிய ஏறு என்ற குறிப்பும்,
அதே பாடலில் நம்பி மூத்த பிரானைப் பற்றிய குறிப்பும் (11-12) வருகின்றன.

நெய்தற் கலியின் ஒரு பாடலில் (கலி-124)
ஞாலமூன் றடித்தாய முதல்வர்க்கு முதுமறைப் பாலன்ன மேனியான் அணிபெறத் தைஇய (1-2) என்ற அடிகளில்
உலகம் மூன்றும் தன் திருவடியால் அளந்தவனைப்பற்றிய குறிப்பினையும்
இவனுக்கு மூத்த முறையினையுடைய நம்பி மூத்தபிரானைப் பற்றிய குறிப்பினையும் காணலாம்.

திருமாலின் அவதாரச் செயல்களைப்பற்றிக் கூறும் பாரத இராமாயணக் குறிப்புகள் பலவற்றைக் கலித்தொகையில் கலி-101, கலி-104, கலி-106, கலி-134 காணலாம்.

——————-

(ஈ) அகநானூறு :
(1) அகம் -39இல் குறிக்கும் செய்தி: ஆயமகளிர் யமுனையாற்றில் நீராடுங்கால் அவர்கள் கரையில் இட்டு வைத்த ஆடைகளைக் கண்ணபிரான்
விளையாட்டாக எடுத்துக்கொண்டு குருந்தமரத்தேறியிருக்க அப்பொழுது நம்பிமுத்த பிரான் அங்குவர,
அம்மகளிர் ஒரு சேர மறைதற்கு வேறு வழியின்மையால் கண்ணன் தான் ஏறியிருந்த மரத்தின் கொம்பைத் தாழ்த்துக் கொடுத்தான் என்பது.
இச்செய்தியைச் சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையில் இளங்கோ அடிகளும் குறிப்பிடுவர்.
(ii) அகம் -70 இல்,
வென்வேற் கவுரியர் தொன்முது கோடி முழங்கி வரும் பெளவம் இரங்கு முன்றுரை
வெல்போர் இராமன் அருமறைக் குவித்த வல்வீ லாலம்போல ஒலியவிந் தன்றிவ் வழுங்க லுரே–என்ற அடிகள் குறிப்பிடும் செய்தி :
இராமன், தானும் மற்ற வாணர வீரர்களும் இலங்கைமேற் செல்லுதற்பொருட்டுத் திருவணைக்கரையில் (கோடிக்கரை) இருந்த
ஒரு பெரிய ஆலமரத்தின் கீழே அரியமறைகளை ஆராய்ந்த பொழுது அங்குள்ள பறவைகள் ஒலிக்காதவாறு தன் ஆணையால் அடக்கினான் என்ற வரலாறு குறிப்பிடப் பெற்றுள்ளது.
இது தமிழ் நாட்டு வழக்கு இராமாயணங்களில் காணப்படாதது.
(iii) அகம் -220இல் வரும் வரலாறு :
பரசுராமன் தன் தந்தையான யாமதங்கியை (ஐமதக்கினிமுனிவர்) கொன்ற கார்த்த வீரியனை மட்டுமில்லாது
இருபத்தொரு தலைமுறை மன்னர் மரபினைக் கொன்றழிப்பதாக மேற்கொண்ட கொடுஞ்சூளுரை குறிக்கப் பெற்றுள்ளது.
(iv) அகம்-137 இல் திருவரங்கத்தில் நடைபெறும் பங்குனி உத்திர விழா குறிக்கப் பெறுகின்றது.
பங்குனித் திங்களில் உத்திர நட்சத்திரமும் நிறைமதியும் கூடிய நன்னாளில் உறையூரில் பங்குனி உத்திர விழா சிறப்புற்றிருந்ததென்பது இறையனார் நூற்பா (நூற்பா-15) உரையில்,
“இனி ஊர் துஞ்சாமை என்பது ஊர் கொண்ட பெருவிழா நாளாய்க் காண்பாரில்லை யாமாகவும் இடையீடாம் என்பது;
அவை மதுரை ஆவணி அவிட்டமே, உறையூர்ப்பங்குனி உத்தரமே, கருவூர் வள்ளிவிழாவே என இவையும்
இவை போன்ற பிறவும் எல்லாம் அப்பெற்றியான பொழுது இடையீடாம் என்பது” என வருதலான் அறியப்படும்.

—————-

(2) புறநானூறு : புறநானூற்றில் வரும் குறிப்புகளைக் காண்போம்
(i) புறம்-174ல் அசுரர் சூரியனை ஒளித்ததும், திருமால் அதனை மீட்டதும் கூறப் பெற்றுள்ளன.[20]
இந்த வரலாற்றைப் பற்றி அறியக்கூடவில்லை.
இன்னொரு பாடலில் (ii) (புறம்-378) இராமாயண நிகழ்ச்சிபற்றி ஒருகுறிப்பு வருகின்றது.
சோழன் செருப்பாழியெறிந்த இளஞ்சேட்சென்னி ஊன் பதி பசுங்குடையாருக்குச் சில பரிசிற் பொருளை நல்கினான். அவை பல அணிகலன்களாகக் கொண்டிருந்தன.
அவை பொருநர்க்கெனச் சமைக்கப் பெறாதவை;
அரசர்க்கும் செல்வர்க்குமெனச் சமைக்கப் பெற்றவை; போரில் பகைவர்பால் கொண்டனவும் அவற்றுள் அடங்கியிருந்தன.
அவற்றைப் பசுங்குடையாருடன் போந்த சுற்றத்தினர் பகிர்ந்து கொண்டு தாம் தாம் அணிந்து மகிழ்ந்தனர். இதனைக்கிணைப் பொருநன் கூற்றில் வைத்துக் கூறுவான்.
இராமனுடன் போந்த சீதையை இராவணன் கவர்ந்து சென்றபோது அவள் கழற்றி எறித்த அணிகலன்களைக் குரங்குகள் எடுத்து
அணிந்து கொண்டதைக் கண்டோர் சிரித்து மகிழ்ந்ததைப் போல பொருநனின் கிளைஞர்கள் அந்த அணிகலன்களை அணிந்து கொள்ளும் வகையறியாது
விரலில் அணிபவற்றைச் செவியிலும், செவியில் அணிபவற்றை விரலிலும், கழுத்திலணிபவற்றை இடுப்பிலும் அணிந்து கொண்டு
நகைப்புக்கு இடமாயினர் என்று கூறும்போது இராமனைப் பற்றிய குறிப்பு வருகின்றது.

———————-

(ஊ) நற்றிணை : இத் தொகை நூலில் கடவுள் வாழ்த்துப் பாடல் தத்துவத்தின் கருத்துகளை மிக அழகாக விளக்குகின்றது.
மாநிலம் சேவடி யாகத் தூநீர் விளைநரல் பெளவம் உடுக்கை யாக
விசும்புமெய் யாகத் திசைகை யாகப் பகங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரி யோனே-(நற்.1)

இதில் திருமால் மறைகளால் போற்றப்படும் நிலையும் அவர் எங்கும் பரந்து நிற்கும் நிலையும் (வியாபகத்துவம்)
எள்ளுக்குள் எண்ணெய்போல் எவ்வுயிர் மாட்டும் (உயிரல்லாத பொருள்களிலும் கூட) நிற்கும் நிலையும் (அந்தர் யாமித்துவம்)
அவன் ஆழிதாங்கி நிற்பதும் பிறவும் கூறப் பெற்றிருப்பதை ஆழ்ந்து நோக்கித் தெளியலாம்.
என்ற பெரிய திருமொழிப் பாசுரப் பகுதியில் இக்கருத்து நிழலிடுவதைக் காணலாம்.
இதில் ஸ்ரீ வைணவத்தின் உயிர்நாடி போன்ற சரீர – சரீரி பாவனை தத்துவம் அமைந்திருப்பதைக் கண்டு மகிழலாம்.

————-

(எ) பதிற்றுப்பத்து : பதிற்றுப்பத்தில் ஒரு பாடலில் (நான்காம் பத்து-1) ஒரு குறிப்பு காணப்படுகின்றது.
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடிய இப்பாடற் பகுதியில்
திருவனந்தபுரத்தில் கோயில் கொண்டுள்ள திருமாவின் வழிபாட்டுச் சிறப்புக் கூறப் பெறுகின்றது.
திருக்கோயிலின் நாற்புற வாயிலின் வழியாகத் தலைமேல் கைகூப்பி ஒருங்கு கூடிச் செய்யும் பேராரவாரம் நான்கு வேறு திசைகளில் பரந்து ஒலிக்கின்றது.
கோயிலில் தொங்கும் மணியை இயக்கிக் கல்லெனும் ஒசையை உண்டாக்குவர்;
உண்ணா நோன்பு மேற்கொண்ட விரதியர் குளிர்ந்த நீர்த்துறையில் நீராடி மார்பில் புதிதாகத் தொடுக்கப் பெற்ற திருத்துழாய் மாலையையும்,
காண்பவர் கண்கூசும் ஒளி திகழ் திருவாழியையும் உடைய செல்வனான திருமாலை வணங்கி வாழ்த்தி
நெஞ்சு நிறைந்த மகிழ்ச்சியுடன் தத்தம் இருப்பிடம் திரும்பிச் சேர்வர்.
இப்பாடலில் செல்வன் என்பது திருவனந்தபுரத்துத் திருமாலை என்று கூறுவர் பழைய உரைகாரர்.

————–

4. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்:
இப்பகுதியில் அடங்கிய நூல்களை நோக்குவோம்.
(அ) திருக்குறள் : இஃது உலகப் பொது மறையாகக் கருதப் பெறுவது. இதில் வரும் வைணவம் பற்றிய குறிப்புகளை,
(1) இறைவன் பெயர்கள்
(2) அவதாரங்கள்
(3) இருவகை உலகுக்கும் தலைவன் என்று மூன்று பகுதிகளாக நோக்கலாம்.

(1) இறைவனின் பெயர்கள் :
முதல் குறளில் வரும் ஆதிபகவன் என்னும் பெயரை நோக்குவோம்.
இதனை ஆதியாகிய பகவன் என்று ஒரு பெயராகவும் ஆதியும் பகவனும் என்று இரு பெயராகவும் கொள்ளலாம்.
சிவஞான சித்தியார் பரபக்கம் பாஞ்சராத்திரி (வைணவ) மதமறுதலையில் “ஆதியாய் அருவுமாகி” என்ற செய்யுளாலும்
“பாஞ்சராத்திரி நீ உன் கர்த்தாவை ஆதி என்று கூறினாய்
அங்ஙனம் ஆதியாயின் ஆதிக்கு முடிவுண்டாய் கர்த்தாவும் அல்லனாவான்’ என்ற அதன் உரையாலும்
‘ஆதி என்ற பெயர் திருமாலுக்கு உரிய பெயராகும்.’ஆதிமூலம் என்ற பெயரும் நோக்கற் பாலதாகும்.
நம்மாழ்வாரும் ‘அந்தமில் ஆதியம் பகவன் என்பர்.
பகவான் அருளிய கீதை பகவத்கீதை பகவான் வரலாறு கூறும் நூல் பாகவதம், பகவான் அடியார்கள், பாகவதர்கள் எனும் வழக்காறுகளால்
‘பகவத்கீதை’ ‘பாகவதம்’ ‘பாகவதர்’ எனும் பெயர்களுக்கு மூலமாகிய பகவான் என்ற சொல் திருமாலுக்கே உரிய பெயரைக் குறிக்கின்றது என்பது உறுதி.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (5)
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் (10)

என்னும் குறட்பாக்களில் இறைவன் என்னும் சொல் உள்ளது.
இறைவன் என்பதற்கு எல்லாப் பொருள்களிலும் தங்குகின்றவ்ன் என்பது பொருள்.
இது ‘நாராயணன் ‘விஷ்ணு’, ‘வாசுதேவன் எனும் பெயர்களின் தமிழ் வடிவமாதலை உணரின் இறைவன் எனும் சொல் திருமாலுக்கே உரியதாம்.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் (6)என்பதில் காணப் பெறும்.
ஐந்தவித்தான் எனும் பெயர் ரிஷிகேசன்’ (இருடிகேசன்) என்ற திருநாமத்தின் தமிழ் வடிவமாகும்.
ரிஷிகம்-இந்திரியம்: இந்திரியங்களின் தலைவன் என்னும் பொருளுடையது. அ
வித்தல் என்பது ஈண்டுத் தன் வயமாக்குதல் என்னும் பொருளைத் தரும்.
ஓராயிரமாய் உலகேழிற்கும்-பேராயிரம் கொண்டதோர் பீடுடைய திருமாலுக்குச் சிறந்தனவாய் திருநாமங்கள் ‘பன்னிரு திருநாமம்’ எனப்படும்.
அவற்றுள் ‘ரிஷிகேசன்’ என்பதும் ஒன்று. ஆகவே, பொறிவாயில் ஐந்தவித்தான் என்பது திருமாலுக்கு உரியதேயாகும்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது (8) என்பதனுள் வரும் ‘
அறவாழி அந்தணன்’ என்பதும் அறவனை ஆழிப்படை அந்தணனை, ‘அறமுயல் ஆழிப்படையவன்’ என்னும்
திருவாய்மொழித் தொடர்களால் திருமாலுக்கு உரியது என்று உணரலாம்.
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வனங்காத் தலை (9) என்பதில்
எண்குணத்தான்’ ‘எளிமைக் குணமுடையவன்’ என்று பொருள்படும்.
இஃது இப்பொருளாதலை,
எண்பதத்தான் ஒரா முறை செய்யா மன்னவன் (548)
எண்பதத்தால் எய்தல் எளிதென் (991) என்பவற்றில் இவற்றின் சொற்பொருளால் அறியலாம். ‘
எளிவரும் இயல்வினன்’ (1;2;3)
“யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான்(1;3;4) எனவரும் திருவாய்மொழித் தொடர்களால் உறுதியாகும்.
மேலும் இறைவனின் திருக்குணங்களுள் செளலப்பிய குணம் (சுலப குணம்) என்பதனை அடியார்கள் சிறப்பித்துக் கூறுவதும் இதனை வலியுறுத்தும்.
தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு (1103)-என்பதில்
தாமரைக் கண்ணான் என்ற பெயர் திருமாலுக்கன்றி வேறு எத்தெய்வத்துக்கும் இல்லாமை உய்த்தறியத்தக்கது.

—————–

(2) அவதாரங்கள் :
எம்பெருமான் எடுத்த அவதாரங்கள் எண்ணற்றவை. அவற்றுள் பத்து அவதாரங்கள் மிகு புகழ் வாய்ந்தவை.
ஆனால் திருக்குறளில் குறிப்பிடப்பெற்றவை மூன்று அவதாரங்களே.
அவை இராமாவதாரம், கிருட்டினா அவதாரம், திரிவிக்கிரமாவதாரம்.
நீதியை உரைக்க வந்த திருக்குறளில் வெளிப்படையாகவும், குறிப்பாகவும் இவற்றைக் காட்டியுள்ளதை நோக்கின் திருவள்ளுவரின் சமயம் இன்னதென்பதை உணரலாம்.
திருமால் இராமாவதாரத்தில் மனிதன் வையத்துள் வாழ்வாங்கு வாழும் முறையைத் தாமே நடத்திக் காட்டினார். அங்ஙனம் நடந்து காட்டிய ஒழுக்க நெறி ஒன்று.
கிருட்டிணாவதாரத்தில் வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் எங்ஙனம்? என்பதை உபதேச வாயிலாகச் (பகவத்கீதை) சொன்ன ஒழுக்கநெறி மற்றொன்று
இராமனாக வந்து நடந்து காட்டியருளிய ஒழுக்க நெறி எனவும்,
கண்ணனாக வந்து சொல்லியருளிய ஒழுக்க நெறி எனவும் இரட்டுற மொழிதல் என்னும் உத்தி வகையால்,
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் (6)–என்னும் குறளில் திருமாலின் இரண்ட வதாரத்தையும் கட்டுதல் அறியலாம்.
கிருட்டினாவதாரத்தில் துரியோதனனிடம் “படை எடேன் அமரில் எனப் பணித்ததை” மீறி
வீடுமனின் விருப்பிற்கிணங்க அவன் நடத்திய போரில் ‘ஆனதெனக்கினியாக எனத் தனியாழி எடுத்தமையும்
பொய்யே அறியா’ தருமனை ‘அசுவத்தாமன் என்னும் யானை இறந்தது’ எனத் துரியோதனன் செவிபடச் சொல்லச் செய்து
அதற்குத் துரியோதனன் வேறு பொருள் கொள்ளுமாறு மயங்கச் செய்தமையும்,
பிறந்த பொழுதே இறந்த நிலையில் இருந்த பரீட்சித்து, பெண்களை நோக்காத பேராண்மையையுடைய ஒருவன் திருவடியால் உய்வான் எனக் கண்ணபிரான் உரைக்க,
அந்நிலையில் யாவரும் முன் வராமை கண்டு ‘யானே பெண்களை நோக்காதவன்’ எனத் தன் திருவடியைப் பதிய வைத்து அவனைப் பிழைக்கச் செய்தமையும் முதலிய வரலாறுகளை மனத்திற் கொண்டே,
வாய்மை எனப்படுவதி யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல் (291)
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். (292) என்ற திருக்குறளைக் கூறினர் எனக் கருதலாம். ‘
புரை தீர்ந்த நன்மையைப் பொய்மை பயவாது, அங்ஙனம் பயக்கின்ற அப்பொய்மையும் வாய்மை இடத்த’ என்று கூற வந்தது.
கண்ணபிரானின் வரலாற்றை நோக்கியே எனக் கருதலாம்.
‘இராமனது மெய்யும் கிருட்டிணனது பொய்யும் நமக்குத் தஞ்சம்’ எனும் வைணவ சம்பிரதாய ஆன்றோர் வாக்கும் இதனை அரண் செய்யும்.

திருமால் திருக்குறள் அப்பனானபின் ‘மண்முழுவதும் அகப்படுத்து நின்ற பேருருவத்தைத் திரிவிக்கிரமன்’ என்பர்.

விக்கிரமம்-பெருவலி, திரிவிக்கிரமம்-மூவகைப் பெருவலி, இதனை அறியாது ஒருசிலர் ‘திருவிக்கிரமம்’ என்று பிழைபட எழுதுவர்.
முதலாவது உலகளந்தது; அடுத்தது விண்ணளந்தது. மூன்றாவது மாவலித் தலையில் தன் திருவடியை வைத்து அவனைப் பாதளத்தில் ஆழ்த்தியது.
எனவே, இவ்வகையான மூவகை வலியையும் காட்டுவதற்காகவே ‘உலகளந்தான்’ எனக் கூறாது
‘தன்னடியாலே எல்லா உலகங்களையும் அளந்தான்’ எனப் பொருள் கொள்ளுமாறு ,
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு. (610)-என விளக்கிய நுட்பம் உணரத் தக்கது.

—————–

(3) இருவகை உலகுக்கும் தலைவன் :
நாம் வாழும் உலகு மண்ணுலகு. வானவர் வாழும் உலகு வானுலகு.
“இருள்சேர்ந்த இன்னா உலகு”
‘அளறு ஆரிருள்’ எனப்படும் கீழுலகு -இவையாவும் மக்கள் பிறவிச்சுழலில் சிக்கித் தவிக்கும் விளையாட்டுலகு எனவும்,
இறைவனுடைய விளையாட்டுலகம் எனவும் பொருள்படுமாறு இவ்வனைத்துலகையும் ‘லீலாவிபூதி’ என்பர்.
எம்பெருமானும் அவன் அடியார்களும் நித்தியமாய் இன்பத்தோடு வாழும் உலகு ‘முக்தி உலகு’. இதனை ‘நித்திய விபூதி’ என்பர்.
இவ்வாறு கூறுவது வைணவமரபு.
இருவகை உலகிற்கும் தலைவன் திருமாலே என்பதைக் குறிக்கத் திருமாலை ‘உபயவிபூதி நாதன்’ என்பர் ஆன்றோர்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி’
பகவன் முதற்றே உலகு (1)
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு (610)
எனும் இருகுறள்களால் இவ்வுலகிற்கு அவன் தலைவன் என்பதனை விளக்கினார்.

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு (1103)
எனும் குறளில் முற்றும் துறந்தார் எய்தும் தாமரைக் கண்ணானுடைய ‘(முக்தி) உலகு’ எனக் குறித்தலால்
‘அந்தமில் இன்பத்து அழிவில்வீடு’,
‘நலம் அந்தம் இல்லதோர் நாடு’,
‘வானோர்க்குயர்ந்த உலகு’ என்றெல்லாம் ஆழ்வார்கள் சிறப்பித்துக் கூறும் நித்திய விபூதிக்கும் திருமாலே தலைவன் என்பதைக் கூறினர்.
எனவே ‘உபயவிபூதிநாதன்’ திருமாலே என உறுதி செய்தாராயிற்று.
இம்முக்தியுலகிற் சென்றவரை ‘புனை கொடுக்கிலும் போக ஒட்டார்’ என்றபடி
அவ்வுலகிலேயே நிலைபெறுவாரன்றி ஈண்டுத் திரும்பிவாரர் என்பது வைணவ சமயக் கோட்பாடு.
இதனை
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி (356)-என்று விளக்கினார் என்பது சிந்திக்கத்தக்கது.

—————

(ஆ) திருவள்ளுவமாலை: இதில்இரண்டு பாடல்கள் உள்ளன.
மாலும் குறளாய் வளர்ந்திர