Archive for the ‘Sri Bhashyam’ Category

ஸ்ரீ பாஷ்யம்— 1-1-6-ஆனந்த மய அதிகரணம் (ஸூத்ரங்கள் 13-20 ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்— –1-1-5-ஈஷத் அதிகரணம்- (ஸூத்ரங்கள் 5-12 )
1-1-6-ஆனந்த மய அதிகரணம் (ஸூத்ரங்கள் 13-20 )
1-1-7-அந்தர் அதிகரணம் (ஸூத்ரங்கள் 21-22 )
1-1-8-ஆகாசாத் அதிகரணம் (ஸூத்ரம் 23 )
1-1-9-பிராணாதிகரணம் – (ஸூத்ரம் 24 )
1-1-10-ஜோதிஸ் அதிகரணம் (ஸூத்ரங்கள் 25-28 )
1-1-11 இந்திர பிராணா அதிகரணம் (ஸூத்ரங்கள் 29-32 ) -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

—————-

ஈஷத் ஆனந்தமயா இரண்டும் -பிரகிருதி விலக்ஷணம் ஈஷத் சொல்லி -இதில்- ஆனந்தமய- ஜீவாத்மா விலக்ஷணம் சொல்லும்
சூத்ரம் -13–20-
பேடிகா சங்கதி –
இவற்றை அறிந்தால் ஸ்ரீ பாஷ்ய சாரம் அறிந்ததாகும் –
ப்ரஹ்மமே ஜகத் காரணம் ஏவ காரிய விளக்கம் –
குப்த சித்திரம் -ஜீவாத்மாவின் அனைத்தும் பதிவு -மூளைகளில் உண்டே -14 சாஷிகள் -ஆதித்யன் -சந்திரன் அக்னி -பஞ்ச பூதங்கள்
இவற்றுக்கும் சாக்ஷி அந்தர்யாமி இவை –
இதர பின்னத்வேன ஞானம் வியாவ்ருத்தி- பிரகிருதி குணி -முக்குணங்கள் கொண்டவை -குண குனி அபாயம் சாங்கிய வாதம்
சேதன போக்ய பூதம் சத்வ ரஜஸ் தமஸ் பூத பிரகிருதி -என்பர் –
த்ரவ்யம் -அத்ரவ்யம் பிரித்து -த்ரவ்யம் ஆஸ்ரமத்தை கொண்டது -முக்குணங்கள் ஜீவாத்மாவிலும் பிரக்ருதியிலும் உண்டு நம் சித்தாந்தம்
த்ரிகுணாத்மகம் -தாமரை இலைத் தண்ணீர் போலே ஜீவாத்மாவில் இவை –
கர்மா வஸ்யாத்-பிரகிருதி சம்சர்க்கம் -நாநாவித அநந்த துக்க சாகரம் -ஜீவாத்மா இருக்குமே -நிமர்ஜநே ந -மூழ்கி இருக்குமே –
சுத்த ஆத்மா பிரத்யாகம் -பரமாத்மா சாஷாத்காரம் -சம்பூர்ண சாத்மீகம் -அங்கே- நிகில ஹேய ப்ரத்ய நீகன் அவன் –
ஆனந்த மய வித்யை- தைத்ரிய உபநிஷத் -திருமஞ்சனம் பொழுது சேவிப்பதால் பிரசித்தம் -விசேஷ ஸ்தானம் –
மூன்று வல்லிகள்–சிஷா ஆனந்த பிருகு சொல்லி -அம்பஸிய 10 வாக்கியம் சொல்லி முடிக்க வேண்டும் –
ப்ரஹ்ம வித்யை ஆப்நோதி பரம் -அறிந்தவன் -அடைகிறான் -ப்ரஹ்ம சொல்லாமல் பரம் -குஹ்யம் அர்த்தம் உண்டே என்பர்
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -விஹிதாம் குஹாயம்-அதி சூஷ்மம் -பரம வியோமம் -ஸ்ரீ வைகுண்டம் வாசன் -ஆகாசம் -தகராகாசம் என்றுமாம் -அறிந்தவன் –
ஸர்வான் காமான் அஸ்னுதே —
ஆனந்த வல்லி -தைத்ர்ய உபநிஷத் – முதல் ப்ரஸ்னம்
அன்ன மய பிராண மய மநோ மய விஞ்ஞான மய ஆனந்த மய பஞ்ச கோஷம் –
ஆனந்த மயா அப்யாசாத்-முதல் சூத்ரம் -யதோ வாசோ நிவர்த்தந்தே-
1-3-1- -ஆத்ம சப்தம் பரமாத்மாவை தான் குறிக்கும் -என்பர்-மேலே –
அன்னத்தால் உண்டான புருஷன் அன்னத்திலே லயமாகும் -முதலில் -அந்நாத் புருஷ ஏஷ-அன்ன ரசமய -அயம் இதம் சப்தம் சொல்லி
-அயம் தக்ஷிண பக்ஷ அயம் உத்தர பக்ஷ அயம் ஆத்மா -அன்ன மய கோசம் –
பிராண மய கோசம் -அடுத்து –விஞ்ஞான மயம் வரை சொல்லும் -ஸ்ரத்தை ஒன்றாலே உஜ்ஜீவனம் -ஸ்ரத்தா ஸூ க்தம்-உதக சாந்தி
-ரிதம் சத்யம் -ப்ரஹ்ம பர்யாயம் பரம் ப்ரஹ்மம் –
ரிதம் சத்யம் பர்யாய சப்தம் என்பர் -ரிதம் தக்ஷிண பக்ஷம் சத்யம் உத்தர பக்ஷம் வாசி உண்டே –
புத்தி -விஞ்ஞானம் -மஹத் – தத்துவமே இது என்பர் –
மோத-ஆமோத -பிரமோத-யுவ -பலிஷ்டன் -ஆசிஷ்டன் -ஜீரண சக்தி உக்தன் —தொடங்கி யதோ வாசோ நிவர்த்தந்தே முடிக்கும் –
மூன்று பூதங்கள் – த்ரிவித கரணம் –ஐந்து பூதங்கள் – பஞ்சீ கரணம் -தத்வ முக்தா கலாபம் தேசிகன் -இரண்டுக்கும் ஒப்புமை காட்டி அருளுவார்

சிரஸ்-இரண்டு பக்ஷம் –குச்சம் பஞ்ச தசையும் ஒவ் ஒன்றுக்கும் காட்டி மேலே —தஸ்ய அந்தர ஆத்மா -ஆனந்த மய கோசம் –
யதோ வாசோ நிவர்த்தந்தே -சொல்லி -அதுவே பரமாத்மா என்று காட்டும்
ஆனந்த நந்த தாது -மோத பிரமோத -ஸூ கம் -தாது -பிரத்யயம் பொறுத்து -அர்த்தம் மாறும்
ஸூகம் வ்யக்தி தோறும் மாறும் -அனுகூல தயா வேதநீயம் ஸூகம் பிரதி கூலத்தாயா வேதநீயம் துக்கம்
ஆனந்தம் -அப்படி இல்லை -அனைவருக்கும் பொது -துக்க மிஸ்ரம் இல்லை
யுவா சத்புருஷன் வேதம் அத்யயயன் பண்ணி -உலக ஐஸ்வர்யம் -வியாதி உள்ளும் வெளியிலும் இல்லாமல் –
மனுஷ்ய ஆனந்தம் -மனுஷ்யகந்தர்வ -100 மடங்கு –

ஆனந்த வல்லி -; பிரஹ்மத்தினுடைய ஆனந்தம் எப்படிப்பட்டது என்று அளவிட முயற்சிக்கிற வேத பாகம் இது .
ஸவா ஏஷ புருஷ: அன்ன ரஸ மய : என்று புருஷ ஆனந்தத்தை அளவாக வைத்துக்கொண்டு
பிரஹ்மத்தினுடைய ஆனந்தம் எப்படிப்பட்டது என்று அளவிட முயற்சிக்கிறது எனலாம்.

பஞ்ச கோசம் :
1. அன்னம் ( அன்ன மய கோசம் சரீரம் – Body )
2. பிராணம் (பிராண மய கோசம் வாயு ஸஞ்சாரம் – breath energy )
3. மனம் (மனோமய கோசம் – mind )
4. விக்ஞானம் ( விக்ஞான மய கோசம் – intellect )
5. ஆனந்தம் (ஆனந்தமய கோசம் – bliss )
கோசம் = புஸ்தகம், உறை – sheath .

ஐந்து கோசத்துக்கும் ஒரு பக்ஷியை உருவகப் படுத்தி , அதன் ஐந்து பாகங்கள்
வலது பக்ஷம் – ரெக்கை
இடது பக்ஷம்
தலை
ஆத்மா
வால்
என்று அதற்கான ஆகாரத்தை விவரிக்கிறது உபநிஷத்.

அந்த பிராண கோசத்துக்கு
சிரஸு – பிராண வாயு
வலது கை – வியான வாயு
இடது கை – அபான வாயு
ஆத்மா – ஆகாசம்
புச்சம் (அ ) பின்பகுதி – பிருதிவி

அந்த மனோமய கோசத்ததுக்கு
சிரஸு – யஜுர் வேதம்
வலது கை – ருக் வேதம்
இடது கை – ஸாம வேதம்
ஆத்மா – ஆதேசம்
புச்சம் – அதர்வ மஹரிஷி + ஆங்கீரஸ மஹரிஷி (who propagated the Vedas).

விக்ஞானமய கோசம்: ஜீவாத்மா. அதற்கு
சிரஸு – ஸ்ரத்தை
வலது கை – சத்யம்
இடது கை – உண்மை (ரிதம்)
ஆத்மா – யோகம்
புச்சம் – மஹான் (புத்தி தத்வம்)

ஆனந்தமயமான ஆத்மா என்பது உண்டு. அதற்கு
சிரஸு – பிரியம்
வலது கை – பிரமோத :
இடது கை – மோத :
ஆத்மா – ஆனந்தம்
புச்சம் – பிரஹ்மம்

1 unit of மனுஷ்ய ஆனந்தம் X 100 = 1 unit of மனுஷ்ய கந்தர்வ ஆனந்தம்.
1 unit of மனுஷ்ய கந்தர்வ ஆனந்தம் X 100 = 1 unit of தேவ கந்தர்வ ஆனந்தம்.
1 unit of தேவ கந்தர்வ ஆனந்தம் X 100 = 1 unit of பித்ரு தேவதா ஆனந்தம்
1 unit of பித்ரு தேவதா ஆனந்தம் X 100 = 1 unit of ஆஜானஜ தேவ ஆனந்தம்
1 unit of ஆஜானஜ தேவ ஆனந்தம் X 100 = 1 unit of கர்ம தேவ ஆனந்தம்
1 unit of கர்ம தேவ ஆனந்தம் X 100 = 1 unit of தேவ ஆனந்தம்
1 unit of தேவ ஆனந்தம் X 100 = 1 unit of இந்திர ஆனந்தம்
1 unit of இந்திர ஆனந்தம் X 100 = 1 unit of பிரஹஸ்பதி ஆனந்தம்
1 unit of பிரஹஸ்பதி ஆனந்தம் X 100 = 1 unit of பிரஜாபதி ஆனந்தம்
1 unit of பிரஜாபதி ஆனந்தம் X 100 = 1 unit of பிரம்மண ஆனந்தம்

தைத்ரீய உபநிஷத் முதல் பிரச்சனத்தில் உள்ள சீக்ஷவல்லி, பிரஹ்ம வல்லி, ஆனந்த வல்லி என்கிற வரிசையில்,
மூன்றாவதாக உள்ள ஆனந்த வல்லியில் சொல்லப்பட்ட ஆனந்தமய வித்யை அடிப்படையில் இந்த அதிகரணம் பேசப்படுகிறது.
இதில் மொத்தம் 8 சூத்திரங்கள் உண்டு.

1-13–ஆனந்தமய: அப்பியாஸாது
1-14-விகார சபித்தாந் நேதிசேத் ,ந பிராசுர்யாத்
1-15-த்ததேது வியாபதேஸாஸ் ச
1-16–மாந்த்ர வர்ணிக மேவ ச கீயதே
1-17-நேதர அனுபபத்தேஹே
1-18–பேத வியபதேசாஸ்ச
1-19–காமாச்ச நானுமாத் யேஷா
1-20–அஸ்மின் நஸ்யச தத் யோகம் ஷாஸ்தி

ஆனந்தமய: அப்பியாஸாத் என்கிற சூத்ரத்தை –
ஆனந்தமய: பரமாத்மா அப்பியாஸாத் என்று வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த இடத்தில் பரமாத்மா என்கிற சப்தம் அத்யாஹர்த்தவ்யம் (understood, implied அத்யாஹார: தர்கா ஊகாத் ).
அப்யாஸாத் ; புனர்புன அனுசந்தானம்

பின்னப் பிரவிருத்தானாம் ஏகாஸ்மின் வர்த்ததே சாமானாதிகரண்யம் -பிரஹ்ம சத்யம், நித்யம், அனந்தம்

ஸ்வார்த்தே மயட்–விகார மயட்–பிராசுர்யாத் மயட்

மனுஷ்ய -மனுஷ்ய கந்தர்வ -விசேஷ கர்மங்களை செய்து கந்தர்வர்கள் ஆனவர்கள் -சூஷ்மமான கார்யம் செய்பவர்கள் –
தேவ கந்தர்வ -பித்ரு -ஆஜனஜா தேவாஸ் –
கர்மா தேவ -இந்திரன் -பிரஹஸ்பதி -பிரஜாபதி -ப்ராஹ்மண ஆனந்தம் –
விஷய வாக்கியம் -தைத்ரிய உபநிஷத் -ஆனந்தம் ஆத்மா ப்ரஹ்மம் குச்சம் பிரதிஷ்ட்த்தா
முதல் நான்கும் ஜீவா பரம் சொல்லி அந்நிய ஆனந்தமயம் பரமாத்மா -சம்சயம் –
ஜீவ சப்தம் – பிராண தாரணி என்பதால் -ப்ரதகாத்மா-

நியாய சிந்தாஞ்சனம் -தேசிகன் -பிராமண விசாரம் –
பிரமேய விசாரம் -தத்வ முக்த கலாபம் -த்ரவ்யம் அத்ரவ்யம் -ஜடம் அஜடம்–

பிரத்யகாத்ம -நான் இருக்கேன் என்று அஹம் அஸ்மி காட்டுமே -இதுவே ஜீவாத்மா –
பந்தம் மோக்ஷம் இரண்டும் -பூர்வ பக்ஷிகள் -சாரீரத்வம் உள்ள ஜீவாத்மாவைக் குறிக்கும் இது என்பர் –
கர்மக்ருதமான சரீரம் உள்ள ஜீவனைக் குறிக்கும் -என்பர்
அநேக ஜீவனே ஆத்மனா அனுபிரவேச மூன்றும் சொல்லி -சாமா நாதி காரண்யம் -சோயம் தேவதத்தன்
சம்ஸ்காரம் – ஸ்மரணம்-ச யம்-நேற்று பார்த்த அதே -சஹா யஹி இயம் யஹி -பிரத்யபிஞ்ஞா -என்பர் இத்தையே -முன் அனுபவம் இப்பொழுது கிட்ட –
சக அயம் தேவதத்தா-புச்ச ப்ரஹ்ம வாதம்
ரூபம் இத்யாதி –ஜீவாத்மா உண்டு -அகண்ட வஸ்து இல்லை -புத்தர்கள் ஐந்து -சேர்ந்த -பரமாத்மா இல்லை -சங்க விஞ்ஞான சந்ததி -சர்வம் க்ஷணிகம் –
வாசனை தொடர்ந்து -அறிகிறோம் என்பர் -சத்ருச தீப ஜ்வாலை -தைலம் சுவீகரிப்பட்டு –சாதிருசம் மூலம் வாசனை ஸங்க்ரஹம்
உசித தரம் -ஜீவாத்மாவை விட்டு பரமாத்மாவை கொள்ள சங்கரர் -சகுண விஷயம் —
புச்சா ப்ரஹ்ம வாதம் -சங்கரர் -ஆனந்தமயம் -வால் தான் பரமாத்மா -ப்ரஹ்மம் புச்சா பிரதிஷ்டா -ஸ்ருதி வாக்கியம் என்பதால் -ரூபிதமான பஷியின் வால் தான் –
சேஸ்வர சாங்கியம் நிரீஸ்வர சாங்கியம் இரண்டும் உண்டே -ஈஸ்வர அங்கீகாரம் சாங்கியம் கொள்ளாதே
-யோக தரிசனத்தில் கொள்ளுவார்கள் -ஈஸ்வரன் தேவை பட மாட்டார் சாங்கியருக்கு
சங்கரர் இரண்டு ப்ரஹ்மம்
நிர்விசேஷம் பரம் ப்ரஹ்மம் சாஷாத் கர்த்தும்-பண்ண முடியாதே – வேத்யம் ந யோக்யம் –
மந்தர்கள் அறிய ச விசேஷ ப்ரஹ்மம் –
வாயைத் திறந்தால் அத்வைதி போவான் கார்ப்பங்காடு ஸ்வாமிகள் அருளிச் செய்வாராம் –
அஸத் ப்ரஹ்ம வேத பவதி அசன்னேவா பவதி -சத் வேத -சந்தமேனம் பவதி
விஞ்ஞானமயம் -ஜீவாத்மாவை சொன்ன பின்பு ஆனந்தமயம் பரமாத்மா வாகத் தானே இருக்க வேணும் -அதை காட்டிலும் அந்தர சூஷ்மம் என்பதால்
ஜீவ விசேஷணமே பரமாத்மா என்பர் -அவர்கள் -தத்வ த்ரயமே நம் சம்ப்ரதாயம் —
கிரீடம் வெங்கடாச்சார்யார் -சமஸ்தானம் 400 வருஷம் முன்பு விசிஷ்டாத்வைதம் கிரீடம் த்வத்தையும் அத்வத்தையும் இரண்டு பாதங்களில் வைத்து
விலக்ஷணமாக உள்ளதை ஆனந்தமயம் ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே சாதிப்பாராம்

மயம் பிரத்யயம் – ஸ்வார்த்தே -தாசாரதி -தசரத திருக் குமாரன் –
விகாரார்த்தே மயம் -ஹிரண்மயம் போலே -அத்யாகாரா-பரமாத்மாவையையே ஆனந்தமயம் குறிக்கும் –
அநந்த துக்க மிஸ்ர -கல்யாணிக்கை தான -ஸ்ரேஷ்ட தமமான=விஞ்ஞானம் ஆத்மாவை விட -அப்யாஸம் புனர் புனர் அனுசந்தானம்

ஸூத்ரம் 2- விகார சப்தாத்– ந –ஆனந்தம் மயம் பிரத்யயம் -இதி சேத் ந -விகாசம் உத்தேச்யம் -விகாரம் த்யாஜ்யம் -கமலம் விகஸதி –
ஆனந்த பிரசுரமாகவே இருக்கும் -பரமாத்வையே குறிக்கும்
பிராணமய -ஸ்வார்த்தே மயம் -பிராணன் சப்தமே குறிக்கும்
விகாரார்த்தே மயம் ஹிரண்மயம் பாத்திரம் -போலே -கொஞ்சம் கலப்படம் உண்டே -விகாரம் -கட்டிப்பொன் இல்லை பணிப்பொன்
திலமயம் எண்ணெய் –கௌடங் கோ மயம் -கோ உடைய விகாரம்
அவயவார்த்தம்-மயம் –
பிராஸுர்யார்த்தே -முழுவதுமே கன ஸ்வரூபம் ரச கனம் அன்ன மயம் அண்ணா பிரஸுர்யம்-
ஆனந்தமயம் -இப்படி ஆனந்தமே வடிவாக கொண்டபடி என்றபடி
இத்தையே விகார சப்தாத் இல்லை என்கிறது ஸூ த்ரம் -ஆ -வ்ருத்த சப்தம் -பிராஸுர்யார்த்தே மயமே கொள்ளும் –
பரமாத்மா நிர்விகாரம் தானே -ஆனந்த மயம் சொல்ல முடியாதே விகாரம் காண்பிப்பதால் பூர்வ பக்ஷிகள் –
பிரயோக பாஹுல்யம் விகாரார்த்தித்திலே என்பர் பூர்வ பக்ஷிகள் -விகார வாஸின ஜீவனையே குறிக்கும் –

ஜீவஸ்ய ஆனந்த ரூபஸ்ய -சம்சாரிகத்தில் ஆழ்ந்து மக்கி போன பின்பு மீண்டும் விகாரம் பெற்று
ஆனந்த மயன் ஆகும் என்கிறது என்பர் -பூர்வ பக்ஷிகள் –
பிராண மன விஞ்ஞான மயம் பிரதானம் -இவற்றில் எல்லாம் பிராணம்-பிராண பிரசுர -விகாரம் இல்லை –
அதே போலே ஆனந்த மயமும் -பிராஸுர்யார்த்தம் தான் இவை எல்லாம் -விகாரார்த்தம் இல்லை –
ப்ரஹ்மம் எந்த வஸ்த்துவின் விகாரம் இல்லையே –
பிராசர்யம் விதி பாணினி பின்பே அருளிச் செய்வதால் அதுவே பொருந்தும் வியாகரண சாஸ்திரம் படியும்-
அன்னமயம் யஞ்ஞம் -விகாரார்த்தம் இதிலும் இல்லை -அன்னமே பிராஸூர்யம் என்றவாறு –
அந்தர்யாமி யாராதனம் ஆனதா -சாப்பிட்டாயா -போலே
ஆனந்தம் பிரதானம் துக்க மிஸ்ரமும் உண்டோ என்னில்-அப்படி அல்ல -ஆனந்தமே -என்றவாறு –
அன்னமயத்தில் வேறு சிலவும் உண்டோ போலே அன்று
பாபமே இல்லை என்றால் அதின் பரிணாமமான துக்கமே வராதே -அபஹத பாப்மாதிகள் உண்டே –

தத் ஹேது வியாபதேசாத் ச -அடுத்த சூத்ரம் -ஜீவாது அந்நிய என்பதாலும் -விஷய வாக்கியம் ஸூ த்ரத்துக்கு-
சர்வ கந்த சர்வ ரச -பரமாத்வாவே ரச ரூபம் -அயம் ஆனந்தீ பவதி-அவனை அடைந்து ஆனந்தீ பவன் ஆனோம் என்பர் -ஆழ்வார்கள்
ஆனந்தப்படுத்துமவன்-தஹாராசா ஸ்வரூபி தான் ஆனந்தம் உண்டு பண்ண முடியும் ஸ்ருதி வாக்கியம்
கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோதிலா தந்திடும் என் வள்ளலே –
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே –
நரம்பின் முதிர்ந்த சுவையே பன்னலார் பயிலும் –
சேஷி ஒருவனே -ஆனந்த மயம் அவனையே குறிக்கும் -ஆனந்தம் -ஆனந்த மயம் இரண்டாலும் அவனையே சொல்லும் –
மாந்த்ர வர்ணிகம் ஏவ ச –சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம் -அக்ஷரங்களும் பரமாத்வாவே ஆனந்தமயம் என்கிறது –
ப்ரஹ்மவித் ஆப்னோதி பரம் -ப்ரஹ்மத்தை -அறிந்தவனே ப்ரஹமத்தை அடைகிறான் -ததேசா அப் யுக்தா -இத்தையே ஸ்ருதி சொல்லும்
பரம் -அத்யந்த ஸ்ரேஷ்டம் அடைகிறான் -ப்ரஹ்மம் -விதி ஆப்னோதி பரம் நான்கையும் விவரிக்க –
ப்ரஹ்மம் -சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம் என்கிறது மேலே –
விதி -யோ வேத -விகிதம் குஹாயம் பரமம் வியோமம் -ஹிருதயாகாசத்திலே உள்ளான் என்று அறிந்து -தகார ஆகாசம் –

அஸன்னேவ ஸபவதி அஸத் பிரஹ்மேதி வேதசேத்
அஸ்தி பிரஹ்மேதி வேதசேத் ஸந்த மேநம் ததோ விதுஹு

அஸ்தி பிரஹ்மேதி சேத் வேதா = பிரஹ்மம் உண்டு என்று யார் புரிந்து கொன்டு இருக்கிறார்களோ ,
அவர்களே இருப்பவர்களாக ஆகிறார்கள்.
”அஸத் பிரஹ்மேதி வேதசேத்” என்பதை = ”பிரஹ்ம ஸது இதி அவேத சேத்” என்று மாற்றிப் படிக்க வேண்டும்
பரமாத்மா இருக்கிறான் என்று யார் புரிந்து கொள்ளவில்லையோ அவர்கள் இல்லாதவர்களாகவே கருதப் படுவர்.

ப்ரஹ்ம வித் ப்ரஹ்மாவை அடைகிறான் என்பதால் இரண்டும் ஒன்றும் இல்லை -என்றதாயிற்று
மந்திரங்களால் இப்படியே சொல்லப் படுவதால் ஆனந்தமய பரமாத்மா வேறு பட்டவன் -என்றதாயிற்று -ஜீவ விலக்ஷணம் –

அடுத்த சூத்ரம் ந இதர அனுபவத்தி -தர்க்க ரூபமான சாஸ்திரம் இது
யார் எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்லி மேலே செல்லுமே –
ஆக்ஷேப சங்கதி –தடஸ்த லக்ஷணம் ஸ்வரூப லக்ஷணம் இரண்டு சொல்வர் –
சந்திரன்-சாகா அக்ரே -மரத்தின் சாகைக்கு அருகில் பரிச்சயம் காட்ட
ஸ்ரேஷ்டமான பிரகாசம் ஸ்வரூப லக்ஷணம் -சந்திரன் இடம் பிரகாசம் சொல்ல மாட்டார் அத்வைதி
குண குணி இரண்டும் இல்லையே அவர்களுக்கு
சுத்தம் ஸ்வரூபம் -தோஷம் போனால் -பரமாத்மாவாய் ஆகிறான் -பேதம் இல்லை என்பர் –
விபர்சித்-என்பது ஜீவாத்மாவுக்கு பொருந்தாது –அதனால் அனுபவத்தி -விவிதம் பச்யதி -விபரசித்
பரமம் சாம்யம் உபைதி -அபஹத பாப்மாதிகள் -முக்தி அவஸ்தையில் -கூட விபரசித் ஆகா மாட்டாதே -பரமாத்மாவையே தான் கிட்டும்
சங்கல்ப ஆதீனமாக தான் முக்தர் நித்யருக்கு -ஸ்வத ஸித்தம்-
யோ வேத்தி சர்வம் யுகபத் பிரத்யக்ஷம் சதா ஸ் வதா -சர்வஞ்ஞத்வம் -விபரசித் அவனுக்கே பொருந்தும் —
நிருபாதிகம் விவஸ்திதம் -பஹுஸ்யாம் இத்யாதி –
மேலில் உள்ள அதிகரணங்கள் இந்த இரண்டின் விஸ்தாரம் -பிரகிருதி ஜீவ வி லக்ஷணம் என்பதை விவரிக்கும் –
தாஸ்யம் இ றே அந்தரங்கம் -அஹம் அர்த்தத்துக்கு -ஞானாநந்தன்கள் தடஸ்தம் என்னும் படி -தடஸ்த லக்ஷணம்
-ஸ்வரூப லக்ஷணம் காட்டும் -தாஸ பூத -அந்தரங்க நிரூபணம் –
அந்நாத் புருஷ -சொல்லி பிராணன் மனா விஞ்ஞானம் ஜீவாத்மாவை சொல்லி ஆனந்தமயம் -பரமாத்மா வரை சொல்லி

தே வ்யபதேஷாத் ச – 6 சூத்ரம்
காமத் நா ச அனுமான அபேஷா –சூத்ரம் -7-பஹுஸ்யாம் என்று சங்கல்பித்து என்பதால் -பிரகிருதி ஆனந்தமயம் ஆகாதே-
இதஸ்தா ஜீவாது அந்நிய -8 சூத்ரம் –
ஜீ வஸ்ய அவித்யா பரவஸ்ய -கர்மா பரவஸ்யன் என்றபடி –
ஜகத் காரணம் என்றால் -அசித்தைக் கொண்டு ஸ்ருஷ்ட்டித்தான் என்றால் அவ்ரஜணீயம் ஆகுமே –
சதுர்முக பிரமன் அவன் ஆஞ்ஞஜை படியே ஸ்ருஷ்டிக்கிறான்
ஜீவாத்மா அசித் உதவி கொண்டே கொஞ்சமாவது ஸ்ருஷ்டிப்பான் –
ஒன்றுமே இல்லாமல் சங்கல்ப ஞானத்தால் பர ப்ரஹ்மமே ஸ்ருஷ்டிக்க வல்லவன் –
ஆனந்தமயன் அவன் ஒருவனே –

இதச்ச-கடைசி சூத்ரம் –
அஸ்மின் ஆனந்தமய -அஸ்ய சா பிரத்யோகம் -சாஸ்தி சாசனம் பண்ணி –ஐந்து பதங்கள்-ஆனந்தம் நிருபாதிகம் –
ஆனந்தம் உண்டு பண்ணுபவன் -அவன் அனுக்கிரகத்தால் தானே ஜீவாத்மா ஆனந்தம் அனுபவிக்கிறான்
அவனே ரஸ ஸ்வரூபன் -ஆனந்த மயன்-ஆனந்தம் மேலே உயர்ந்த நிலை இல்லை என்பதால் மீண்டும் தகப்பனார் இடம் போக வில்லையே –
அன்னம் பிராணன் மனம் விஞ்ஞானம் அப்புறம் போனது போலே –
ஆனந்தம் -என்றாலும் ஆனந்தமயம் என்றாலும் பரமாத்மாவே தான் –
சூர்யன் ஒளி /நாளம் உள்ள /தண்ணீரில் உள்ள கமலம் மூன்று அர்த்தங்களும் உண்டே
கம்பீராம்ச -ஸமுத்பூதம் – ஸும்ரு ஷ்ட நாளம் புண்டரீக தளம் -ரவி கர விகசிதம் -மூன்றையும் அருளி செய்து –
அமலாயா-தோஷம் இல்லாத -ஏவம் அக்ஷிணீ

————————————————

அந்தர் அதிகரணம் -ஏழாவது -சூர்யா -கண்ணுக்கு உள்ளே உள்ளவன் ப்ரஹ்மம் —

அந்தராதி விதியையும் -அந்தராதிஷ்ய விதியையும் -ப்ரஹ்ம வித்யைகள் –
இது முந்திய அதிகரண-சேஷ பூதம் -ஜீவ விலக்ஷணம் சொல்லப் படுகிறது –
அனுபவம் விஷயம் இருந்தால் தானே ஸ்ரமணம் வரும் -உபாசனம் த்யானம் -ஸ்ம்ருத்தி சம்பத் தைலதாராவத் –
அசித் சரீரத்வாத் – சித் சரீரத்வாத் -நேராக அசாதாரண விக்ரஹம் மூன்றும் உண்டே –
கண்ணுக்கு உள்ளே -சாந்தோக்யம் – தஸ்ய ஏக கப்யாசம் புண்டரீகாக்ஷம் -ஏவம் அஷீணீ தஸ்ய உதித நாம – –
அந்தர் ஆதித்யே -ஹிரண்மய புருஷ -ஹிரண்ய கேச -சர்வ ஏவ ஸ்வர்ணம் -கால் கட்டை விரல் நுனியில் இருந்து –
உத் -ஊர்த்தம் -வித்யா குரு-யாதவ பிரகாசர் -கப்யாசம் -புண்டரீகம் -அடை மொழி -இருப்பதால் -கபி -17 அர்த்தம் –
கம் -ஜலம்-சூர்யன் ஒளியால் விகஸிக்கும் புண்டரீகம் -நாளம்-கபி –
ஹிரண்யம் -ரமணீயம் போக்யத்வம் -யோகி ஹ்ருத்யத் த்ருச்யதே -அதி தைவதம்
சாம கானம் செய்து மோக்ஷம் -சாம கானம் அதிகாரி -பலம் பெற -சர்வாதிகாரம் இல்லை-ந்யாஸ வித்யை சரணாகதி பிரபன்னர் -சர்வாதிகாரம் –
தண்ணீர் ஒட்டாத தன்மை -சம்சாரத்தில் பந்தம் இன்றிக்கே -தாமரை -ஆபோ நாராயண –
தஸ்ய உதிதி நாம -உத் -ஸ்வதகா பாபம் இல்லாத -பாபங்களை தண்டு விக்க -ஊர்த்தம் – உச்சரத்தி
இந்த பர ப்ரஹ்மம் உத் -சத் வித்யையில் சத் – என்கிற பர ப்ரஹ்மம் –
விலக்ஷண புண்யானாம் ஆதித்யா இந்திராதி பிரஹஸ்பதி -பயப்பயா ஹேதுத்வம் இல்லாத -அதிசய ஆனந்த யோகம் உள்ளவர் பலர் உண்டே
ஜகத் ஸ்ருஷ்ட்டி இவர்கள் பண்ணைக் கூடாதோ என்னில் -அவர்களிலும் விலக்ஷணம் பர ப்ரஹ்மம் -இவன் –
சாம வேத -பிரமணம் உத்கீதம் —
ஈஸ்வரஸ்ய பாவம் ஐஸ்வர்யம் -புண்யம் அடியாக -நிருபாதிக்க ஐஸ்வர்யம் அவனது -இவர்களுக்கு புண்யத்தின் காரணமாக பெற்ற ஸ்தானம் –
ஜகத் ஸ்ருஷ்ட்டி செய்தவனுக்கு சரீரம் உண்டு என்கிறதே ஸ்ருதி -அதனால் இவர்கள் ஸ்ருஷ்ட்டி செய்தார்கள் என்னலாமே -பூர்வ பக்ஷி
சரீரம் எதுவரை உள்ளதோ அவனுக்கு பிரியாபிரியங்கள் உண்டு என்கிறதே ஸ்ருதி
அதனால் இந்த அந்தராத்மா விசேஷ புண்யம் செய்த ஜீவாத்மாவே தான் என்பர் பூர்வ பக்ஷி –
கர்மா அனுகுணமாக -சரீரம் -கர்மா சம்பந்த ரஹிதம் –
ஹிரண்ய கசிபு பிரகலாதன் சம்வாதம் -நானே எல்லாமே கொடுப்பேன் என்பான் -எல்லா சக்தியும் இருக்க என்னையே உபாசிக்கலாமே என்பான் –
கோவர்த்தன உத்தாரணம்-கிருஷ்ணனே இடையர்கள் இடம் -கண்ணுக்கு தெரியும் கோவர்த்தன உபாசனம் பண்ணுவதே ஸ்ரேஷ்டம்-
இந்திரனை பண்ண வேண்டாம் என்பான் –
பிஷாத்த்மாத் வாதத் பவது -பீஷோது சூ ர்ய –பய ஹேதுத்வம்-அபாயம் பிரதிஷ்டா -பய அபய ஹேதுத்வம் பாரா ப்ரஹ்மத்துக்கே தானே –
சப்தம் அர்த்தம் வாசி உண்டே -நெருப்பு என்றால் வாய் சுடாதே -நாத முனிகள் -பிரணவம் 125000 அக்ஷரம் உபாசனம் உத்கீதம் –
யோகிகள் -பிரணவம் அனுபவமும் பர ப்ரஹ்மம் அனுபவமும் ஒன்றே -யோக சாஸ்திரம் -அக்ஷரமே பலன் கொடுக்கும் –
வேதமே அவனே -தத் யஜுவ்ஸ் ஸூ தத் ப்ரஹ்மம் -தத்ய வாசகம் பிரணவம் –
அதிகாரிக புருஷர்கள் -புண்ணியம் பலனாக -ஸூ கம் துக்கம் சுவர்க்கம் நரகம் விரக்தி தோறும் மாறுபடும் –
சரீரம் கொண்டே அனுபவிக்க -சரீர சரீரி பாவம் –
முக்தன் அநேக சரீரம் இச்சித்து கைங்கர்யம் செய்வான் –

——————-

ஜீவாத் அன்ய: பரமாத்மா ஆனந்தமய: என்பதை மேலும் ஒரு சூத்ரத்தால் விளக்குகிறார் ரிஷி.

தத்தே துவ்வியபதேசாத் ச – சூத் .1-1-15. இந்த ஆறாவது அதிகாரணத்தில் மூன்றாவது சூத்ரம்

ஜீவாத்மாவின் ஆனந்தத்துக்கு காரணமாய் இருப்பவன் ஆனந்த ஸப்த வாச்யன்.
எனவே , ஆனந்தம் , ஆனந்தமய: என்ற சப்தம் பரமாத்மா வாகத்தான் இருக்க முடியும்.
இந்த ஜீவாத்மா பரமாத்மாவுக்கே சேஷபூதான் என்கிறபோது ஒரு ஜீவாத்மா இன்னொரு ஜீவாத்மாவுக்கு தஞ்சம் ஆகமுடியாது,
ரக்ஷண சாமர்த்தியம் இல்லாமையாலே.

விஷய வாக்கியம் :

ரஸோவை ஸஹ – சர்வ கந்த ஸர்வ ரஸ: – பரமாத்ம சாஷாத் காரம் ஆனவர்கள் விஷயத்தில் பகவான் பலவித ரசங்களின் அனுபவமாக இருக்கிறான்.
ரஸம் ஹ்யேவ அயம் லப்தவா – அப்படிப்பட்டவன் ரசரூபமான பகவானை அடைந்து
ஆனந்தி பவதி –ஆனந்தத்தை உடையவனாக ஆகிறான்.
ஏஷஹ்யேவ ஆனந்த யாதி — அந்த பரமாத்மாவேதான் இவனை ஆனந்தம் அடையச் செய்கிறான்.
ஸோ ஹ்யேவா அன்ய – ஒரு ஜீவாத்மா இன்னொரு ஜீவாத்மாவுக்கு பௌதிகமான சிலவரைக் கொண்டு,
கொடுத்து சந்தோஷத்தை உண்டு பண்ணமுடியுமானாலும், இதைக் காட்டிலும் அதிரிக்த்த ஆனந்தம் இல்லை என்னும்படியான
மாஹதானந்தத்தை பகவான் ஒருவனால்தான் அடைவிக்க முடியும்.
ததேஷா ஆகாஸா ஆனந்தோ நஸ்யாத் – தகராகாச வர்த்தியான பகவானாலேயே அப்படிப்பட்ட பிரஹ்மானந்தத்தை அளிக்க முடியும்.

ஆனந்த தவ்ய: – ஜீவாத்மா-
ஆனந்தயிதா – பரமாத்மா
என்று இருக்கிற படியால், ஆனந்தமய: ஆனந்த: என்பதெல்லாம் பரமாத்மாவைத்தான் குறிக்கும்.

——————–

மாந்த்ர வர்மேணிக மேவ ச கீயதே – சூத். 1-1-16. -இந்த ஆறாவது அதிகரணத்தில் நாலாவது சூத்ரம்

பிரஹ்ம விதா ஆப்னோதி பரம் – பிரஹ்ம வேத்தி இதி பிரஹ்ம விது . அப்பேர்ப்பட்ட பிரஹ்மத்தை யார் புரிந்து கொண்டு
இருக்கிரானோ அவன், அத்யந்த ஸ்ரேஷ்டமானதை அடைகிறான்.
ததேஷா அப்யுக்தா -> பிரஹ்மம் என்றால் என்ன ? தெரியவில்லையே என்பவர்களுக்கு இப்படியா பதில் அளிக்கப்படுகிறது :
சத்யம், க்ஞானம், ஆனந்தம் பிரஹ்ம ; சத்தியத்துக்கு ஆச்ரயமாக இருப்பது. ஞானத்துக்கு ஆஸ்ரயமாக இருப்பது.
ஆரம்பம், முடிவு இல்லாதது எதுவோ, அந்த வஸ்துதான் பிரஹ்மம் . சரி, விது என்றால் என்ன?
யோ வேத நிஹிதம் குஹாயாம் ; நம்முடைய ஹிருதயத்தில் உள்ள தகராகாசம் என்று சொல்லப்படுகிற இடைவெளியில்
பரமே வியோமந் – பரம வியோம (பரவாசுதேவனுடைய) ஸ்வரூபமாய்
சோஷ்ணுதே ஸர்வான் காமாந் – அனைத்து விருப்பங்களும் அடைந்தவனாகிறான்.
ஸகா பிரஹ்மணா விபஸ்ச்சிதேதி – விபஸ்ச்சித் = ஞான ஸ்வரூபநாக இருக்கிற பரமாத்வோடே சேர்ந்து, அனுபவிக்கிறான்.

சத்யம், க்ஞானம், ஆனந்தம் பிரஹ்ம என்கிற இந்த பிரஹ்ம வல்லி (மாந்த்ரீக வர்ணம் = பிராஹ்மணகம் ) மந்த்ர வர்ணத்தில்
இருந்து தெரிவது யாதெனில்,-ஜீவாத் அன்ய: பரமாத்மா ஆனந்தமய: என்பதாக.

——————-

ந இதர : அநுபபத்தே : – சூத் . 1-1-17 –இந்த ஆறாவது அதிகரணத்தில் ஐந்தாவது சூத்ரம்

ஸ்ரீபாஷ்யமாகிற இது தர்க ரூபமான கிரந்தமாகையால், யார் எந்த கேள்வி கேட்டாலும்,
அதற்கு பதில் சொல்லிய பின்பே மேலே செல்ல வேண்டும். கேட்பவர் இந்த பக்ஷத்தை சேர்ந்தவர் என்று இல்லாவிட்டாலும்,
தடஸத சங்கிய: என்று ஆக்ஷேபம்-விவிரணம் கொடுக்கப்படும். அந்தவகையில், சங்கராச்சாரியருடைய அனுயாயிகள்

அவர்களுடைய சம்பிரதாயத்தில் பரமாத்மா என்பவன் அவித்யை என்கிற தோஷத்துக்கு உட்பட்டு, ஜீவ பாவத்தை அடைகிறான்.
பிறகு, வாக்கிய ஜன்ய க்ஞானத்தால், தன்னுடைய சுத்த புத்த முத்த ஸ்வரூபத்தை உணர்ந்து மோக்ஷத்தை அடைகிறான்.
அதனால் பந்தமும் பரமாத்மாவுக்குத்தான். மோக்ஷமும் பரமாத்மாவுக்குத்தான், ஜீவாத்மா என்று தனித்து இல்லை.
உபாதைக்கு உட்பட்ட பரமாத்மாவே ஜீவாத்மாவைப் போல தோற்றுகிறது.
அப்படியாக, ஆனந்தமய: பரமாத்மா இல்லை ஜீவாத்மாதான் என்பதற்கு ஜீவாத்மா என்ற ஒன்று இருந்தால்தானே என்கிற கேள்வி பிறக்க

ந இதர: பரமாத்மா அன்ய: ஆனந்தமய: என்று சொன்னால் அநேக தோஷங்கள் ஏற்படும் என்று அவாந்தர சங்கதியாக சூத்ரம் அமைகிறது.

அத்வைதிகள் பிரஹ்ம லக்ஷ்ணங்களை இரண்டு வகையாகக் கூறுகின்றனர்.
தடஸ்த லக்ஷ்ணம் : உ.ம். சாகாக்ரே சந்திர : – மரக்கிளையில் சந்திரன். என்று ஒரு அடையாளத்துக்காக உணர்த்தப் படுவது.
யதோவா இமானி பூதாநி ஜாயந்தே . . .என்று ஸ்ருஷ்டி, ஸ்திதி லய காரகத்வம், பிரஹ்மத்துக்கு தடஸ்தமான (அ ) கௌணமான அடையாளங்கள்.
ஸ்வரூப லக்ஷ்ணம் : உ.ம். பிரகிருஷ்ட பிரகாச: சந்திர: – பட்டொளி வீசி பிரகாசிப்பவன்தான் சந்த்ரன் என்று
வானத்திலுள்ள நிலவை குழந்தை க்குக்காட்டுவதைப் போல வாஸ்தவமான அடையாளங்களை குறிப்பது.

சத்தியம் க்ஞானம் அனந்தம் பிரஹ்ம என்பது (வி)சோதக (ஸ்வரூப) லக்ஷ்ணம். ஸ்ருஷ்டி, ஸ்திதி லய காரகத்வம்,
பிரஹ்மத்துக்கு ஏற்பட்ட தோஷமாய்க் கொண்டு அவை ஸ்வரூப லக்ஷ்ணம் இல்லை.
யதோ வாசோ நிவர்த்தந்தே , அபிராப்பியா மனசா ஸக என்று சொன்னபடி,
அவேதயமான பிரஹ்மம் தோஷம் விலகின பிரஹ்மமாய் , அதைச்சொல்கிற
சத்தியம் க்ஞானம் ஆனந்தம் பிரஹ்ம என்பதே (நிர்விசேஷ) ஸ்வரூப லக்ஷ்ணம் என்பது அவர்கள் பக்ஷம்.

கீழில் சொன்ன ஸூத்ரத்தில் உள்ள ”மாந்த்ர வர்ணிகம் ” பரமாத்மாதான். அது ஜீவாத்மாவை குறிக்காது.
காரணம் – சோஷ்ணுதே ஸர்வான் காமாந் ஸகா பிரஹ்மணா விபஸ்ச்சிதேதி என்கிற இடத்திலுள்ள
”விபஸ்ச்சிதா” என்பது ஜீவாத்மாவைச் சொல்லாது. விபஸ்ச்சித் = ஞான ஸ்வரூபநாக இருக்கிற பரமாத்மாவையே சொல்லும்.
விசேஷ்யம் – விசேஷணம் இரண்டிலும் ஒரே லிங்கம், ஒரே வசனம், ஒரே வேற்றுமை உறுபு இருக்கிற படியால்
விபஸ்ச்சித் சப்தம் பிரஹ்மத்தூக்கே அது விசேஷணமாகும்.

சத்தியம் ஞானம் அனந்தம் என்கிற விசேஷணங்கள் ”நிரஞ்ஜன : பரமம் சாம்யம் உபயிதி ” என்று பேசப்படுகிற
அஷ்டகுண ஆவிர்பவ ஸம்பன்னனான முக்த ஜீவாத்மாவை குறிக்காது.
காரணம் சத்ய ஸங்கல்பத்துவம் , ஸத்யகாமத்வம் இத்யாதி குணங்கள் முக்த ஜீவனுக்கு பகவத் அதீனமாக அவன் கிருபையால் ஏற்படுவது.
பகவனுக்கோ ஆவை ஸ்வதஸ் சித்தம்.

பிராதிபதிகம் – வியுதப்பன்ன சப்தம் – Etymological words derived out of a root word + pirathyayam
உ.ம். ராம: – ரமு கிரீடாயம் என்கிற தாதுவிலிருந்து வந்தது.
திருஷோதராதி கணம் – அவியுதப்பன்ன பிராதிபதிகம் – சித்த ரூபம் (அ ) சாது சப்தம். -> where root + pirathyayam need not be analysed .

விபஸ்ச்சிது இதுவும் திருஷோதராதி கண சப்தமாகும். ஆனாலும் வியுத்பத்தி காட்டப்படுகிறது.
விவிதம்+பஸ்யதி = விபஸ்ச்சிது = ஸர்வக்ஞத்வம் . எல்லாம் தெரிந்தவன்.
யோ வேத்தி விவிதம் ஸர்வம் = யஹ யுகபது ஸர்வம் பிரத்யக்ஷேண ஸதா ஸ்வயம் வேத்தி , நைவ கிஞ்சித் பரோக்ஷந்தே (ஜிதந்தே ஸ்தோத்ரம்).
என்பதான ஞானம் பரமாத்வுடையது நிருபாதிகமானது . அதையே விபஸ்ச்சிது என்கிற சப்தத்தால் சொல்கிறது.
இப்படிப்பட்ட ஞானம் ஜீவாத்மாவிடத்தில் ஸம்ஸார தசையில் கிடையாது.
நம்மால் பிரத்யக்ஷம், பரோக்ஷம் ஆகிய இரண்டு விஷயத்தை ஒரே சமயத்தில் அறிய முடியாதாகையால்.
முக்த தசையிலே தான் ஜீவாத்மாவுக்கு விகசித்த க்ஞானம் ஏற்பட்ட வாய்பு ஆகையால், அது ஸோபாதிகம் .ஸர்வஜ்ஞத்வம் ஈஸ்வரனுக்கு நிருப்பாதிகம்.

ஆக இதர ஸப்தத்தால் பேசப்படுகிற, ஜீவாத்மாவுக்கு ஆனந்த ஸப்தம் பொருந்தாது.

—————

பேத வியபதேஸாத் ச – சூத் . 1-1-18 (இந்த ஆறாவது அதிகாரணத்தில் ஆறாவது சூத்ரம் )

பத்த தசை , முக்த தசை என்று இரண்டு வேறு ஸ்திதியை உடையவன் ஜீவாத்மா .
பரமாத்மா உபய அதீதன். என்கிற வேற்றுமை இந்த ஸ்ருதியில் சொல்லப்பட்டு இருக்கிறபடியால்,
ஆனந்தமய : என்பது ஜீவ அதிரிக்த பரமாத்மாவையே குறிக்கும்.

தஸ்மாத் வாயே தஸ்மாத் ஆத்மந: ஆகாஸத் ஸம்பூத : என்று தொடங்கி
ஆகாஸாத் வாயு – வாயுர் அக்நி – அக்நிர் ஆப : – அப்பப் பிருதிவி – பிருதிவ்யாம் ஓஷதி: – ஓஷதீப்யாம் அன்ன :
அந்நாத் புருஷ: என்று பரமாத்மாவிலிருந்து ஸ்தூலமான புருஷன் வரை சொல்லி, பிறகு
அன்னமய – புருஷ சரீர – கோசத்துக்கும் ஸூக்ஷ்மமானது பிராணமய கோசம் , அதுக்கும் ஸூக்ஷ்மமானது மனோமய கோசம்,
அதுக்கும் ஸூக்ஷ்மமானது விஜ்ஞானமய கோசமாகிற ஆத்மா, அதுக்கும் ஸூக்ஷ்மமானது ஆனந்தமய: பரமாத்மா என்று
மறுபடியும் பரமாத்மாவிலேயே கொண்டு முடிக்கிறது வேதம்.

தஸ்மாத் வாயேவ விஜ்ஞான மயாத் அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய:
எப்படி அன்னமய, பிராணமய, மனோமய கோசத்துக்கு அன்ய: அந்தரக: என்கிற பேதத்தை சொல்லி விளக்கப்பட்ட
விஜ்ஞானமய கோசமே ஆத்மாவோ , அந்த ஆத்மா வியாதிரிக்த ஆனந்தமய: பரமாத்மா. ஜீவாதாபி தஸ்ய பேதம் வியபதிஷதி.

சத்யம், கஞானம், அனந்தம் என்கிற மந்திர வர்ணத்தால் சொல்லப்பட்டதும்,
அப்படியே ஆனந்தமய: என்கிற வார்த்தையால் சொல்லப்பட்ட வஸ்து எதுவோ , அது ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறு பட்டது .
அந்த வஸ்து எது என்றால், அதுதான், பரமாத்மா = மாந்தரே வர்ணிக: ஆனந்தமய: அன்ய ஏவா இதி ஞாயதே.

—————

காமாத் ச ந அநுமாநாபேக்ஷஆ – சூத் . 1-1-19 -இந்த ஆறாவது அதிகாரணத்தில் ஏழாவது சூத்ரம்

ஈக்ஷத் அதிகரணத்தில் ஸ்ருஷ்டி ஒரு சங்கல்பத்தால் வந்தது என்றபடியால், அது ஒரு சேதன காரியம் என்பது புரிகிறது.
ஆனந்தமய: என்கிற வஸ்து எதுவோ அதுவே ”பஹுஸ்யாம் ” என்கிற சங்கல்பத்தைப் பண்ணித்தான படியால்,
அசேதனமான பிரக்ருதி ஸ்ருஷ்டி காரணம் என்று அனுமானிக்க முடியாது.
எனவே ஆனந்தமய: என்பது பரமாத்மாவையே குறிக்கும், அத்தாலேயே அது ஜீவாத்மாவை காட்டிலும் வேறுபட்டது என்றும் விளங்கிக் கொள்ளலாம்.

பரமாத்மா ஸ்ருஷ்ட்டிக்கும்போது அசித் ஸம்ஸர்கம் இல்லாமலேயே , சொல்லப் போனால் வேறு எந்த வஸ்துவினுடைய
சககார அபேக்ஷையும் இல்லாமலேயே, பண்ணுகிறான்.
அதுவே, பிரம்மாவுடைய ஜகத் ஸ்ருஷ்டி அசித் உதவியோடேதான் பண்ணப் படுகிறது.
அதுவே சேதன சிருஷ்டிக்கும், பரம சேதன ஸ்ருஷ்ட்டிக்குமான வேறுபாடு.
அதனாலேயே ஆனந்தமய:பரமாத்மா, ஜீவ அதிரிக்தன் என்பது தெளிவு.

அஸ்மின் அஸ்ய ச தத்யோகம் ஷாஸ்தி – சூத் .1-1-20 -இந்த ஆறாவது அதிகாரணத்தில் -எட்டாவது -இறுதி சூத்ரம்

அஸ்மின் — ஆனந்தமய: என்கிற பரமாத்மாவிடத்திலே
அஸ்ய ஜீவஸ்ய — ஜீவாத்மாவுக்கு
தத்யோகம் — ஆனந்திக்கிற யோகம்
ஷாஸ்தி — அனுகிரமாகிறது.

ராஸோவை ஸக – ரஸ கனமானவன் பரமாத்மா..
ரஸஹ்யேவா லப்த்வா ஆனந்தீ பவதி — பரமாத்மா ரஸ ஸ்வரூபன். அந்த பரமாத்மாவை அடைந்து, இந்த ஜீவாத்மா ஆனந்தவானாக ஆகிறான்.
ஜீவாத்மாவுக்கும் ஆனந்தம் உண்டு. அது பரமாத்ம அனுக்கிரகத்தால் ஏற்படுவது.
ஜீவாத்மா ஆனந்திப்பவன். பரமாத்மா ஆனந்தத்தை அளிப்பவன்.
அப்பேர்பட்டவனும், ஜீவாத்மாவும் ஒன்று என்று சொல்லமுடியுமா? என்றால் இல்லை.

சில இடங்களில் ஆனந்த: என்றும், சில இடங்களில் ஆனந்தமய: என்றும் சப்தங்கள் உள்ளன.
ஆனந்தோ பிரஹ்மே திவ்ய ஜ்ஞானாது என்று பிருகு வல்லியிலும், ஆனந்தமய: பிரஹ்மே திவ்ய ஞானாது என்றும் உள்ளபடியால்,
ஆனந்த: சப்தமும் பரமாத்மாவையே குறிக்கிறதா? என்றால் ஆம்.
ஆனந்த: என்பது ஆன்ந்தவான் என்பதைக் குறிக்கும்.
ஹர்ஷ சப்தத்தோடு ஆரம்பமாகிற வார்த்தைகளில் அச் பிரத்யயம் சேர்க்கப்பட்டு லோபமடையும். அச் = உடைய என்ற பொருளில் வரும்.
ஆனந்த: என்றால் ஆனந்தத்தை உடைய என்ற பொருளில் ஆனந்தவான் என்றாகும்.

———————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— 1-1-7-அந்தர் அதிகரணம் (ஸூத்ரங்கள் 21-22 ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்— –1-1-5-ஈஷத் அதிகரணம்- (ஸூத்ரங்கள் 5-12 )
1-1-6-ஆனந்த மய அதிகரணம் (ஸூத்ரங்கள் 13-20 )
1-1-7-அந்தர் அதிகரணம் (ஸூத்ரங்கள் 21-22 )
1-1-8-ஆகாசாத் அதிகரணம் (ஸூத்ரம் 23 )
1-1-9-பிராணாதிகரணம் – (ஸூத்ரம் 24 )
1-1-10-ஜோதிஸ் அதிகரணம் (ஸூத்ரங்கள் 25-28 )
1-1-11 இந்திர பிராணா அதிகரணம் (ஸூத்ரங்கள் 29-32 ) -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

————

அந்தர் அதிகாரணம் :

இது கீழே சொல்லப்பட்ட ஆனந்தமயா அதிகரணத்துக்கு சேஷபூதமாக இருப்பது.
அதாவது ஆனந்தமயா திகாரணத்தில் சொல்லப்பட்ட ஜீவ விலக்ஷணத்வமே இதிலும் சொல்லப்படுகிறது.

இதை தனி அதிகரணமாக வைத்தின் காரணம், விஷய வாக்கியம் மற்றும் அது சொல்லப்பட்ட பிரஹ்ம வித்தைகள் வேறானபடியாலே,
அதிகரணமும் தனியாக வைக்கப்பட்டது எனலாம்.
சொல்லப்போனால், முதல் இரண்டு அத்யாயமுமே இந்த பிரகிருதி-ஜீவ விலக்ஷணன் பரமாத்மா என்று சொல்ல வந்தவையே.

சரி. கீழே பார்த்த ஆனந்தமயாதிகரணத்துக்கும் இந்த அந்தர் அதிகரணத்துக்கும் விசேஷமாக வேறுபாடு எதுவும் உண்டா எனில் ,
கீழே 1. அல்ப புண்யம் 2. பிரஹ்மாநுபவத்துக்கு துல்யமான அதிசியானந்த பரிசயம் இல்லாதவன்
3. பீஷாஸ்மாத் வாதப்பவதே , பீஷோ தேதி சூர்யா: பீஷாத் தே அக்நி சேந்த்ரிஸ்ச மிருத்யுத் தாவதி பஞ்சம : என்றபடி
பெருப்பெருத்த தேவதைகள் யாருக்கெல்லாம் பயம் இருக்கிறதோ அவர்கள் யாரும் ஜகத்காரணமாக முடியாது .
யார் பிறருக்கு அபயம் அளிக்க முடியுமோ அவன்தான் ஜகத்காரணமாக முடியும் என்பதாக சொல்லப்பட்டது.

அப்படியானால், பிரஜாபதி,இந்திரன் சூரியன் முதலான தேவதைகள் ஆதிகாரிகர்கள்.
அவர்கள் புண்யத்திலும் , அபயத்திலும் குறைவு கிடையாதே, இவர்கள் ஏன் ஐகத்காரணமாக முடியாது என்று
பூர்வ பூர்வ பக்ஷ கேள்வி கேட்க அதற்கு பதில் இந்ததிகரணத்தில் சொல்லப்படுகிறது .

1. அந்த : தத் தர்மோபதேசாத்:: சூத் .21.

அந்த:
உள்ளே – ஏஷோ அந்தர் ஆதித்யே என்றும் ஏஷோ அந்தர் அக்ஷி என்றும் இருக்கிற விஷய வாக்கியங்களில் உள்ள
அந்தர் என்பது சூரியமண்டலத்துக்குள்ளேயும், நம்முடைய கண்ணுக்குள்ளேயும் இருக்கிற புருஷன், பரமாத்மாதான் , ஏனென்றால்
தத் தர்மோபதேசாத் –
ஜீவாத்மாவில் சகஜமாக இருக்கலாகாது , பரமாத்மாவில் மட்டுமே இருக்கக்கூடிய அபகதபாபத்வாதி தர்மங்கள்
ஸயேஷு ஸர்வேஷு பாப்மப்ய : உதித : என்கிற புருஷன் இடத்திலே இருப்பதாக சொல்லி இருக்கிறபடியால்.
பாப்மா = அபகத பாபத்வம் (or) அபகத கர்மத்வம் அதாவது கர்ம வஸ்யகந்த லவலேசமும் இல்லாதவன்.
பாபம் என்றது புண்யத்துக்கும் உபலக்ஷணம்.
ஜீவாத்மாக்களோ, கர்ம வஸ்யர்கள் . அதாவது, அபகத பாபத்வம் ஜீவாத் அன்ய ஏவ தர்ம: என்றால் பரமாத்ம தர்மம் என்று தொனிப்பொருள்.
லோகேஸத்வம்
காமேஸத்வம்
ஸர்வ காமத்வம்
ஸர்வ பூத அந்தராத்மத்வம்
விஜர:
விமிருத்யுஹு :
விசோக :
விஜிகிச்ச:
அபிபாசா :
சத்யா காம :
சத்யா சங்கல்ப:
இவை அபகத பாபத்மத்துடைய அனுசாரிகள்.

தனவான் ஸுகீ தேவதத்த : என்ற இதில் உள்ள தனவான், ஸுகீவான் என்கிற விசேஷணங்கள் இரண்டுக்கும் கார்ய-காரண பாவம் சொல்லலாவது,
பணம் இருப்பதால் சுகபோகி என்று பொருள் படும் படியாக . அதுபோல, அபகத பாப்மா என்று சொல்ல, மற்ற 7ம் கூடவே சித்திப்பனவாகும் .

ஸ ஏஷ: ஸர்வ பூத அந்தராத்மா , அபகத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண: – ஸுபாலோபநிஷத்
பஹுஸ்யாம் பிரஜா யேதி என்கிற சத்ய சங்கல்பத்வ பூர்வக -ஸமஸ்த சிதசித் வஸ்து ஸ்ருஷ்டி யோகம்
நிருபாதிக பயாபய ஹேதுத்வம் -அதிசயானந்த யோகம் -வாங்மனஸ் பரிமித பரிச்சேத ரஹிதத்வம்
இவை ஒரு ஜீவாத்மாவுக்கு சகஜமாக சம்பவிக்குமா? என்றால் ஏற்படாது.
அசித்துக்கோ ஏற்படுகிற பிரசக்தியே இல்லை என்றே சொல்ல வேண்டும் .
பரமாத்மாவுக்கோ என்னில் இவை அனைத்தும் அகர்ம சம்பாத்தியம் . ஸ்வாபாவிகம்.

எனவே அப்படிப்பட்ட பரமாத்மா ஸ்ருஷ்டி கர்த்தா ஆக முடியும்.
நிரம்ப புண்யம் சம்பாதித்தாலும், பிரம்மா , இந்திரன், அக்கினி, சூர்யன் இவர்கள் ஸ்ருஷ்டிகர்த்தா ஆக முடியாது.
ஸ்ருஷ்டி கர்த்தா ஆகமுடியாது என்றால், ஸ்திதி கர்த்தா, லய கர்த்தாவாகவும் ஆகமுடியாது என்பது தொக்கி நிற்கும்.

பரமாத்மாவுக்கான அசாதாரண தர்மங்கள், ஒரு ஜீவாத்மாவிடத்தில், இருக்க விழியில்லை யாதலால்,
ஆதித்ய மண்டல வர்த்தியாகவும், அந்தர் அக்ஷி புருஷனுமாக உள்ளவன் பரமாத்மாவேயாக வேணும்.
ஜீவாத்மா ஆகமுடியாது, அவன் எவ்வளவு உயர்ந்த புண்யசாலியானாலும், என்பதாக.
பரமாத்மாவுடைய சரீரம் இச்சா கிருஹீத அபிமத தேகமாதலால், அதனை திவ்விய மங்கள விக்கிரகம் என்று கூறலாவது.
அவனுடைய பிறப்பும் அவதாரம் என்று அழைக்கப் படுகிறது. காரணம்,
தந்தைதாய் யார் என்பதும்,
எப்போது எங்கே பிறப்பது என்பதும்
எப்போது அவதாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்பதும் தான் முடிவு செய்கிறபடியால்.
எனவே, சரீரம் இருக்கிறது என்பதனாலேயே, அவனுக்கு கர்ம வசியத்தை உண்டு என்பது தவறு.

சரீர எப்போதும் குணத்ரயாத்மகமானது ஆகையால், கர்மத்துக்கு அனுகுணமாக ஏற்படுவது என்பது பரமாத்மா விஷயத்தில் ஒவ்வாது.
காரணம், அவனுடய அவதாரம் கர்ம வஸ்யமானது அன்று. கிருபா வஸ்யமானது.
அவனுடையது திவ்ய மங்கள விக்ரகம் , சுத்த சத்வ மயமானது. பத்த ஜீவர்களுக்கான பாஞ்ச பௌதிக சரீரம்போல் அன்று.
ஸ்வாபிமத ஸ்வாநுரூப, அபிராக்ருத திவ்ய மங்கள விக்ரகம் அவனுடையது.
எனவே, சரீர சம்பந்த இருப்பதனாலேயே அவன் ஜீவாத்மாக இருக்க வேண்டும் என்பது இல்லை.

2. பேத வியாபதேசாத் ச அந்ய : சூத். 22.

பரமாத்மா, பரம்ஜோதி என்று சொல்லப்படுகிறவன் ஆதித்யாதி ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறு பட்டவன், என்பதாக
வேத வாக்கியங்கள் ஓதுகிறபடியால். எங்கே சொல்லியிருக்கு என்று கேட்டால்

”ய ஆதித்யே திஷ்ட்டன்னு, ஆதித்யாது அந்தர: யம் ஆதித்யோ ந வேத யஸ்ய ஆதித்ய: சரீரம், யா ஆதித்யோ அந்தரோ யமயிதி ”
–அந்தர்யாமி பிராஹ்ம்மணம் , பிரஹதாரண்யகம் .

சாந்தோக்கிய உபநிஷத்தில் ”தத்வமஸி ” என்பது 9 முறை ஓதப்பட்டு இருக்கிறபடியால், ”அபேதமே” ஒளபநிஷத சித்தாந்தம்
என்று அத்வைதிகள் சொன்னாலும், இந்த அந்தர்யாமி பிராஹ்மணத்தில்,
”யஸ்ய ஆத்மா சரீரம், யஸ்ய பிருதிவீ சரீரம் ” என்பதான சரீராத்மா பரமான சப்தங்கள் 22 முறை ஒத்தியிருக்கிறபடியால்,
” ஜீவ-பர: பிரகாரத்தயா அபேதமே ” ஒழிய, கேவல அபேதம் அன்று என்பது ஸுஸ்பஷ்ட்டம்.
இதை அவலம்பித்தே பகவத் ராமானுஜர் தம்முடைய பிரதி தந்த்ர சித்தாந்த (unique, unassailable) மாகிற
ஸவிசேஷ பிரஹ்ம வாதத்தை முன்னிருத்தினார் என்னத்தகும்.

ய யோ அக்ஷரம் அந்தரே ஸஞ்சரதி-அந்தரன்னு யஸ்ய அக்ஷரம் சரீரம்-யம் அக்ஷரம் ந வேத
யோ மிருத்யுர் அந்தரே ஸஞ்சரன்னு-யஸ்ய மிருத்யுர் சரீரம்-யம் மிருத்யுர் ந வேத
ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா-அபகத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண: இதி-தஸ்ய அபகத பாப்மன பரமாத்மன:
ஸர்வான் ஜீவான் சரீரத்வேன வியபதிஷ்ய-தேஷாம் அந்தராத்ம ஸ்வேனயேயம் வியபதிஷ்யதி–ஸுபாலோபநிஷத்

எனவே ஜீவாத்மா சரீரம், பரமாத்மா ஆத்மாவினுடைய ஸ்தானத்தில் இருப்பவன் என்பதை இந்த ஸ்ருதி வாக்கியங்கள்
விஸதமாக ஓதி இருப்பதால், அத: ஸர்வேப்ய: ஹிரண்யகர்பாதி ஜீவேப்ய: அன்ய: ஏவ பரமாத்மா இதி ஸூக்தம் .

பக்தியா மாம் அபிக்ஞானாதி யாவாம் யத் யாஸ்தி தத்வத: — பகவத் கீதை.
என்று உபாசனத்தாலேயே பகவானை அடைய, பக்தியே பரமோபாயம் . அத்தைய பக்தியைத் தவிற வேறு உபாயம் கிடையாது
என்பது நம்முடைய சித்தாந்தத்துக்கும் சம்மதமானதே.
இந்த விஷயத்தில் பகவானுடைய ஸ்வரூப, ரூப, குணங்களை நானாவித பிரஹ்ம வித்யைகள் மூலம் பரிசயம் செய்துகொள்வது சககாரியாகும்.
அந்த திருஷ்டியில் ஒவ்வொரு அதிகரணமும் உதவியாகிறது.

அந்த: தத் தர்மோபதேசாத் – சூத் .1-1-21 (அதிக .7 சூத் 21-22) ::

பரமாத்மாவுக்கான அசாதாரண தர்மங்கள், ஒரு ஜீவாத்மாவிடத்தில், இருக்க விழியில்லை யாதலால்,
ஆதித்ய மண்டல வர்த்தியாகவும், அந்தர் அக்ஷி புருஷனுமாக உள்ளவன் பரமாத்மாவேயாக வேணும்.
ஜீவாத்மா ஆகமுடியாது, அவன் எவ்வளவு உயர்ந்த புண்யசாலியானாலும், என்பதாக.

சித்தாந்த ஸூத்ரங்கள்-இரண்டும் –
அந்தக -தர்மஉபதேசாத்-அந்தஸ்த தர்ம உபதேசாத்- அபஹத பாப்மாதி ஸூதகா அவனுக்கே உண்டு –
நிருபாதிக பாப ரஹித்தவம் -அவனையே உபாஸிக்க சொல்கிறது –உதித என்பதால் –கர்ம வஸ்யம் கந்தமும் இல்லாதவன் அவன் ஒருவனே
கர்மானுகுணமான சுக துக்கங்கள் ஜீவர் அனுபவிக்க –
அபஹத பாப்மா -மற்றை அனைத்துக்கும் உப லக்ஷணம் -ஸர்வேச்வரத்வம் -சரவஞ்ஞத்வம் -சத்யகாமத்வம் சத்யா சங்கல்பம் –
சர்வ பூத அந்தராத்மா -அவன் –
தனவான் ஸூ கி தேவதத்தன் -தனம் வந்தால் ஸூ கம் என்பது இல்லையே -லவ்கிக உதாரணம்
பஹுஸ்யாம் -நிருபாதிக பய அபய ஹேதுத்வம் -அவனுக்கே –
வாக் மனஸ் அபிரிச்சேத்யன் அவனே -அனவதிக அதிசய ஆனந்த யோகன் அவன் ஒருவனே -இச்சா க்ருஹீத அபிமத திவ்ய மங்கள விக்ரகன்-
கரண களேபரங்களை கொடுத்து தன்னை அடைய -சரீரம் ஹேயமானாலும் இந்த த்ருஷ்டியில் உபாதேயம் அன்றோ

வேதையை ச வியாபதேசாத் ச அந்நிய -அடுத்த ஸூத்ரம் -சூத் .1-1-22 (அதிக .7 சூத் 21-22) ::
பரப்ரஹ்மம் பரஞ்சோதி வேறுபட்டவன் -ஸ்ருதி சொல்லுமே -யஸ்ய ஆதித்ய சரீரம் ஆதித்ய திஷ்டன் -யா ஆதித்ய ந வேத –
உள்ளே இருந்து நியமிக்கும் -அந்தர்யாமி ப்ரஹ்மம் –யஸ்ய ஆத்மா சரீரம் போலே–நமக்கும் ஆத்மாவாக இருப்பவன் –
தத்வமஸி 9 தடவை -உண்டே -அந்தர்யாமி -22 தடவை சொல்லும் ஸ்ருதி -ஒரு தடவை சொன்னாலும் புரியும் –
வலியுறுத்தி சொல்லி புரிய வைக்கும் -சரீர சரீரி பாவம்
ப்ருஹதாரண்ய உபநிஷத் சொல்லும் 22 தடவை -சரீரம் சரீரி பாவம் சொல்லி –
யஸ்ய அக்ஷரம் சரீரம் –சர்வ பூத அந்தராத்மா -ஸர்வான் ஜீவன் சரீரத்தவேன
இதை அந்தர் கரண்யம்-சொல்லி நிகமிக்கிறார் –

————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— 1-1-8-ஆகாசாத் அதிகரணம் (ஸூத்ரம் 23 ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்— –1-1-5-ஈஷத் அதிகரணம்- (ஸூத்ரங்கள் 5-12 )
1-1-6-ஆனந்த மய அதிகரணம் (ஸூத்ரங்கள் 13-20 )
1-1-7-அந்தர் அதிகரணம் (ஸூத்ரங்கள் 21-22 )
1-1-8-ஆகாசாத் அதிகரணம் (ஸூத்ரம் 23 )
1-1-9-பிராணாதிகரணம் – (ஸூத்ரம் 24 )
1-1-10-ஜோதிஸ் அதிகரணம் (ஸூத்ரங்கள் 25-28 )
1-1-11 இந்திர பிராணா அதிகரணம் (ஸூத்ரங்கள் 29-32 ) -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

———————

ஆகாசாத் அதிகரணம் -1-1-8 –இன்னும் மூன்று அதிகரணங்கள் முதல் பாதத்தில் –
பிராண ஜோதிர் இந்த்ர பிராணா -அதிகரணம் /விபரீதம் நிராகரிக்கிறார்
சம்சயம் முன்பு பிரகிருதி ஆத்ம இல்லை என்று காட்டி -இந்த நான்காலும் விபரீதம்
தர்மம் தர்மி -சம்சயம் விபர்யயம் போக்கி அருளுகிறார் –

ஆகாச வித்யை விசாரிக்கப் படுகிறது -சாந்தோக்யம் -பிரணவ உத்கீதம் வித்யைகள் -இவை எல்லாம் –
குரு சிஷ்ய சம்வாதம் மூலம் வித்யைகள் காட்டுவார்கள்
ஆகாசமே திட விசும்பு -,முதலிலே உண்டாகி இறுதியில் லயம்– ஆகாசம் பாராயணம் -உத் கீதம் உபாசனம் என்று ஸ்ருதி சொல்ல –
ஆகாச ரூபமான உத்கீதம் பெற ப்ரஹ்மம் -ஸ்ரீ ரெங்கராஜ முனி வியாக்யானம் கொண்டு அறியலாம் –
ஜன்மானி பூதாநி –ஜகத் காரண பூதன் -சத் -ஆத்மா சாதாரண –சப்த -ஈஷணை ஆனந்த விசேஷணம் -பிரகிருதி ஜீவ விலக்ஷணம்
ஆகாசாதி விலக்ஷணம் -பாத சேஷம் -மேலே இது முதல் நான்கு அதிகரணங்கள் –
ஆகாசம் பிரயாணம் ஜோதிஸ் இவை பெற ப்ரஹ்மமே காட்டும் விபர்யயம் போக்கி –
சர்வாதிகாரம் -ஆகாசம் உப லக்ஷணம் –

பிரசித்த ஈதர் ஆகாசம் சப்தம் -பூர்வ பக்ஷிகள் -ஈஷா பூர்வக ஸ்ருஷ்டிகள் பஹுஸ்யாம் பொருந்தாதே –
மகா சங்கல்பம் புத்தர் -அவதாரம் -தசாவதாரம் -கிருஷ்ணன் அப்புறம் புத்தர் -முதலில் வேத விரோதம் இல்லாமல் இருந்ததாம்
பின்பு வேத விரோதம் புத்த மதம் ஆனதாம் என்பர் -இதனால் தான் -சிலர் பலராமனை சேர்த்து –தசாவதாரம் என்பர் – -24 அவதாரம் பாகவதம் –
நேதி நேதி மார்க்கம் -நிர்குண உபாசனம் என்பர் அத்வைதிகள் -இல்லை இல்லை என்று சொல்லியே –
சுபாஸ்ரயமான மூர்த்தி உபாஸ்யம் நம் சம்ப்ரதாயம் –
நிராகாரம் சொல்லலாம் நிர்குணம் சொல்ல முடியாதே -ஜகத் காரகத்வம் தவிர அசாதாரண திவ்ய மங்கள விக்ரஹம் உண்டே
தல்லிங்காத்–பஞ்சமி விபாதயாத் -ஆகாசாம் -நிகில ஜகத் ஏக காரணத்வம்-போன்ற -லிங்கம் –
லீனம் அர்த்தம் காமநீயது லிங்கம் -புகை -நெருப்பு போலே அறியக் கூடிய காரணங்கள்
உபய லிங்காதிகாரணம் மேலே வரும் லிங்கம் சின்னங்கள் அகில ஹேய ப்ரத்ய நீக்கம் கல்யாணி ஏக குணகன்
அசேதனமான வஸ்து சேதனம் உண்டாக்க முடியாதே
குண க்ருத உத்க்ருஷம் -சக்தி க்ருத உத்க்ருஷம் –
பரஞ்சுடர் அவனே -ஆ சமந்தாத் ஆகாசம் -மற்றவற்றை பிரகாசிக்கப் பண்ணுமவன் — பிரகாசம் -ஞானம்
பிரயோஜக கர்த்ருத்வம் -பரப்ரஹ்மத்தையே குறிக்கும்
ஆ உப சர்க்கம் -ஆ சமந்தாத் காஷாயதே
ஏவம் – வாக்ய விசேஷ -சேஷ -இதே அர்த்தத்தில் வேற வாக்கியங்கள் உண்டே -சேஷாத் –
அநந்ய சாதாரண அநேக அப்போரவா -நிகில ஜகத் ஏக காரணம் -அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட
7 பில்லியன் solaar systems உண்டு என்று கண்டு பிடித்து உள்ளார்கள் இப்பொழுது –
சதைவ ஸோம்யா — சத் சப்த வாச்யன் பரப்ரஹ்மத்தையே குறிக்கும் —

உபாஸாத் த்ரை வித்யாத்
1. சித் சரீரக உபாஸனா – ஒரு சேதன வஸ்து அந்தர்யாமியான தியானம்.
2. அதி சரீரக உபாஸனா – அசேதன வஸ்து அந்தர்யாமியாக தியானம்.
3. ஸ்வரூபதயா உபாஸனா – பகவத் ஸ்வரூபதயா தியானம்
என்பதாக மூன்று. அந்தவகையில் வேறு வேறு வித்யைகள் சொல்லப் பட்டுள்ளன. அதிலே ஒன்றுதான்

அந்தர் ஆதித்ய வித்யா – த்யேய ஸதா ஸவிதுரு மண்டல மத்யவர்த்தி நாராயண: கேயூரவான் மகர குண்டலவான் கிரீடி
ஹாரி ஹிரண்மய வபுஹு என்று ஆதித்ய மண்டல மத்திய வர்தியான பகவானை தியானித்தல் சொல்லப்படுகிறது.

அதய ஏவோ அந்தராதித்ய புருஷோ திருஸ்யதே — ஆதித்ய மண்டல மத்திய வர்தியான பகவான்
ஹிரண்ய ஸ்மஸ்ருஹு ஹிரண்ய கேச: – கமனீய, விரும்பத்தக்க மீசை, கேசம்
ஆபிரணகாத் ஸர்வ ஏவ ஸுவர்ண : — கால் நகம் முதல் தலை மயிர் வரை தங்கம்போல் ஜொலிப்பும்
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணி — ஆதவனால் அலற்றப்பட்ட தாமரைபோல் கண்களும்
தஸ்ய உதிதி நாமா (சாந்தோ. அத் 1- கண் 6 ) — ” உது” என்ற பெயரால் அழைக்கப்படுமவனை தியானித்தல் இங்கு சொல்லப்படுகிறது.
கப்யாசம் — கம் + பிபதி – சூரியன் + ஆசம் – ரவிகர விகஸித புண்டரீகம் – தாமரை.
கப்யாசம்— கம்+பிபதி – கபி + ஆசம் – நாளத்தன்மேல் அமர்ந்திருக்கும் புண்டரீகம்- தாமரை.
கப்யாசம் — கம் + ஆசம் – ஐலாஸ்ரய புண்டரீகம் – தாமரை.
கம்பீராந்த ஸமத்பூதம் ஸுமுருஷ்ட நாள ரவிகர விகஸித புண்டரீக தள அமலாயதாக்ஷண:-என்பதாக பகவத் ராமாநுஜர் பங்தி.
கப்யாசம் – கபி + ஆசம் – மர்கட பிருஷ்டம் என்பதாக சங்கராசாரியர் பங்தி.
தஸ்ய உதிதி நாம — உது – ஊர்த்வம் என்கிற அர்த்தத்தில் – மேல் இருப்பவன்.
அதாவது புண்யபாப அஸம்ஸ்பிருஷ்டன். தன்னை அண்டினவர்களையும் புண்யபாபங்களிலிருந்து தாண்டுவிப்பவன்.
உது – உத்காயதே என்கிற அர்த்தத்தில் அவனை ஸாமகானம் மூலமாக உபாசனம் பண்ண வேண்டும் என்று இங்கு சொல்லப்படுகிறது.
அப்படிப் பேசப்பட்ட ஆத்மா ஜீவாத்மாவா, பரமாத்மாவா என்பது அதிகரணத்துக்கு விஷயம். இந்த ஸ்ருதி வாக்கியம் விஷய வாக்கியம்.

இந்த பிரகரணத்தில் அவனுக்கு ” உது” என்பதாக பெயர்.
ஸத் வித்யா பிரகரணத்தில் அவனுக்கு ” “ஸது” என்பதாக பெயர்.

ஆகாஸ : தல்லிங்காத்:: சூத்.1-1-23 அதிக.8-23–

ஆகாச இதி ஸர்வாணி இமானி பூதானி ஆகாசாத் ஸமுத்பத்யந்தே -ஆகாசம் பிரதி அஸ்தம் இதி ஆகாச ஏவ ஏப்ய: தியாயாம் ”என்கிற
இந்த விஷய வாக்கியத்தில் சொல்லப்பட்ட ”ஆகாசம் ” என்பது பிரசித்தமாக இருக்கிற / நம்மால் பார்க்கபப்டுகிற ஆகாசமா?
அல்லது ”யதோவா இமானி பூதாநி ஜாயந்தி . . . ” என்கிற வாக்கியத்தால் குறிப்பிடப்படுகிற பரமாத்மாவா? என்பது இங்கு சந்தேகம்.

பூர்வ பக்ஷம் : இங்கு சொல்லப் பட்ட ஆகாசம் என்கிற வார்த்தைக்கு வியுத்பத்தி சித்தமான, பிரசித்த ஆகாசமே பொருளாகும்.
பரமாத்மா இல்லை என்பதாக பூர்வ பக்ஷம்

சித்தாந்திகள் சொல்லும் பதில் :
ஆகாஸ தந்லிங்காத் – தஸ்ய லிங்காத் = தந்லிங்காது. லிங்காத் என்று 5ஆம் வேற்றுமை உருபு கொண்டு முடிந்திருப்பதால்,
அது ஹேதுத்வத்தைச் சொல்லுகிறது. Because என்ற பொருளில்.
இதிலுள்ள ஆகாச சப்தம் பரமாத்மாவைக் குறிக்கிறது. எப்படி? என்றால் தந்லிங்காத்.
“ஆகாசாத் ஏவ ஸமுத்பத்யந்தே” என்பதான வேத வாக்கியங்கள் ஜகத் காரணத்வத்தை ஆகாசத்துக்குச் சொல்லி இருப்பதால்.
குதஸ்தாத்? எப்படி என்றால் தந்லிங்காத் லிங்கம் = காரணம். கூட விஷயத்தை கண்டுகொள்ள உதவும் அடையாளம்.
( – பாஞ்சராத்ர ஆகமத்தில் விஷ்ணுவுக்கும் சிவனைப்போல லிங்க பூஜை உண்டு என்பதாக சொல்கிறது.
அதேபோல பிரம்மாவுக்கம் லிங்க பூஜை உண்டு என்பதாகும் தெரிகிறது.
ஆனால், அந்தந்த தேவதைகளுடைய லிங்க வடிவத்தில் வித்யாசங்கள் உண்டு என்பதும் நோக்கத்தக்கது .)
1. நிகில ஜகத் ஏவ காரணத்வம் – சேதன, அசேதனங்களாக பரிணமித்தல்.
2. ஸர்வஸ்மாத் தியாயத்வம்- அனந்தமான கல்யாண குணங்களால் ஸர்வோத்கர்ஷனாக இருத்தல்.
3. பராயணத்வம் – சேதநானாம் பரம பிராப்யத்வம்.–வாஸுதேவ பராயண–ஆகிய அசாதாரண அடையாளங்களைக் கொண்டு எனலாம்.

பிரஸ்துத வேத வாக்கியத்திலுள்ள
ஆகாசாத் ஸமுத்பத்யந்தே
ஆகாசாத் பிரலீயந்தே
ஆகாசத் பராயாணம்–இத்யாதி சப்தங்கள் பரமாத்மாவையே குறிக்கும்.

ஆசமந்தாது, காஸதே இதி ஆகாச: . இந்த இடத்தில் காச = தீப்தெள என்கிற ரூடி அர்த்தம்தான் கொள்ள வேண்டும்
யோக அர்த்தத்தைக் கொள்ளக் கூடாது.
”நாராயண பரோ ஜ்யோதி ஆத்மா நாராயணப் பர:” , ”பரம் சுடர் சோதி” (நம்மாழ்வார் 10-10-10) அவன்.
பரமாத்மா தான்பிரகாசிப்பதோடு, ஞான மயமான ஆத்மாக்களை பிரகாசிப்பிக்கிறான்
ஞானம் பிரகாச ரூபமாக இருக்கும். மத்த ஸ்மிருதி ஞானம் அபோகநஞ்ச – பகவத் கீதை. பிரக்ருஷ்ட்டேன காச இதி = பிரகாச:

—————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— 1-1-9-பிராணாதிகரணம் – (ஸூத்ரம் 24 ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்–

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்— –1-1-5-ஈஷத் அதிகரணம்- (ஸூத்ரங்கள் 5-12 )
1-1-6-ஆனந்த மய அதிகரணம் (ஸூத்ரங்கள் 13-20 )
1-1-7-அந்தர் அதிகரணம் (ஸூத்ரங்கள் 21-22 )
1-1-8-ஆகாசாத் அதிகரணம் (ஸூத்ரம் 23 )
1-1-9-பிராணாதிகரணம் – (ஸூத்ரம் 24 )
1-1-10-ஜோதிஸ் அதிகரணம் (ஸூத்ரங்கள் 25-28 )
1-1-11 இந்திர பிராணா அதிகரணம் (ஸூத்ரங்கள் 29-32 ) -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

—————

பிராணாதிகரணம் –
கமகம்-சர்வே சப்தாகா பரப்ரஹ்மம் -ஒருவனையே குறிக்கும் –
ப்ரஹ்ம வித்யை வேற அதனால் தனி அதிகாரணம் -பிராண வித்யை இதில்
விஷய வாக்கியம் சித்தாந்தம் சொல்லி -பூர்வ பக்ஷம் சம்சயம் இவற்றை சொல்லாமல் -ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்திகள் –
சங்கதி தனியாகவும் இல்லை -பூர்வ அதிகரண சேஷம் என்பதால் –
ஓம் உக்தியாலே யோகி ஜென்மம் கடந்து -உத்கீதம் -நாத விசேஷம் -என்பர்
உத்கீதம் -உள்ளே புகுந்து -ஆழ்ந்த -ஊர்த்தம் -உபாசனம் –
யஜ்ஞம் ஞானம் உடனே தானே பண்ணுவது -ஞான விசேஷங்கள் ஆகாசம் பிராணன் இத்யாதி –
உஷாசி சங்கராயணர் சொல்லும் வித்யை -மூர்த்தா தேவி உபாஸ்யதே -தலை வெடிக்காது -பிரதான உத்தம அங்கம்
பரமாத்மா ஞானம் தான் பிரதானம் என்பதே தாத்பர்யம் என்று சுதாப்பிரகாசர் காட்டி அருளுகிறார் –

ஆகாச சப்தமானது பரமாத்மாவைதான் குறிக்கும். எந்த ஜீவாத்மாவையோ, பிரசித்தமான ஆகாசத்தையோ குறிக்காது என்று பார்த்தோம்.
அதே நியாயம் இந்த பிராணாதிகரணத்திலும் கையாள படுகிறது.
இதற்கு நியாய அதிதேசம் (applying same rule) என்று பெயர்.
இந்த பிராணாதிகரணத்தை தனி அதிகரணமாக அமைப்பான் என்? என்னில் இதில் சொல்லப்பட்ட பிரஹ்ம வித்தை வேறு என்பதால்.
என்றாலும் ஒரு அதிகரணத்துக்கு உண்டான அமைப்பான
விஷய வாக்கியம்
சம்சயம்
பூர்வ பக்ஷம்
ஆட்சேபம்,
சித்தாந்தம்
என்கிற நியதிப்படி இங்கு பேசப்பட வில்லை.
விஷய வாக்கியம், சித்தாந்தம் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.
எனவே இந்த அதிகரணம் ஆகாசாதிகரணத்தின் சேஷம் – தொடர்ச்சியாகவே கருதப்படுகிறது. எனவே சங்கதி தனிப்பட சொல்லவில்லை.
பூரவாதிகரணத்துடைய சங்கதியே இந்த பேடிகாவில் உள்ள மற்ற 3 அதிகரணத்துக்கும் பொருந்தும் என்பதால்.

விஷய வாக்கியம் ::
சாந்தோ. அத்.1 கண்ட.9 மந்திரம் 9.
ஓம் இத் ஏதது அக்ஷரம் உத்கீதம் உபாசீதா . . . .ஓம் இதி உத்காயதி ஏவம் தஸ்ய (அக்ஷரஸ்ய) உபவியாக்கியானம் என்று தொடங்கி
உபாஸனா ஸ்வரூப பலம் இப்படி இன்னது என்று விவரிக்கப் படுகிறது மேல்.
அகார உகார மகாரமிதி தான்ஏகதா சமபர ததா ஓம் இதி யமுக்த்வா முச்சதே யோகி ஜன்ம ஸம்சார பந்தநாத்

நாராயண மந்திரத்தோடு ஓம் என்கிற பிரணவத்தை சேர்த்துப் படிப்பதுபோல்
சிவ பஞ்சாக்ஷரத்தில் பிராம்மணர்கள் “ஓம்” என்கிற ஆக்ஷரத்தை சேர்ப்பதில்லை . வீர சைவர்கள் அத்தை ஷடாக்ஷரியாகப் படிப்பது சரியா என்றால், அது சரி இல்லை. காரணம்
அ = அகாரார்த்தோ விஷ்ணுஹு:
ம = ஜீவ:
உ = தத் சம்பந்தம் அநயோஹோ
என்று இருக்கிற படியால், பிரணவத்தால் சிவ பாரம்யம் சொல்ல வழி இல்லையாதலால்.

அத்வைதிகள் பிரணவத்தை மாத்திரம் தனித்து உச்சரிப்பது கூடும் என்ற விதத்தில் அதை அனுஷ்டிக்கின்றனர்.
அதில் நமக்கு உடன்பாடு இல்லை. காரணம் :
அஷ்டாக்ஷரியில் உள்ள, மந்திர சேஷாத்தின் ”ஆய ” என்கிற 4 ஆம் வெறுமை உருபு , பிரணவத்தின் ஏறிக் கழியும் . அதன்படி
அ + உ (+ஆய) + ம = அ + வுக்காகவே + ம = என்கிற லுப்த சதுர்த்தி எறிகழிந்த பிராணவத்தால் தேறுகிற அர்த்தம்
”ஆத்மாவுக்கு அழியாத பெயர் அடியான்” என்பது.
இது அஹம்பிரஹ்மாஸ்மி என்பதை பிரஹ்ம பிரகாரோஸ்மி – பிரஹ்ம இஹ பவதி என்று படிப்பதோ டொக்கும் .

அப்படி அன்றிக்கே , தனிப் பிரணவம்
அ + உ + ம = அ + வே + ம = என்பதில் அஹம் பிரஹ்மைக பவதி என்பாதாக அத்வைதம் சித்திக்கும்.
எனவே தனிப் பிரணவம் நம்முடைய அனுசந்தானத்தில் இல்லை.

இப்படி பிரணவத்தை விளக்குகிற சந்தர்பத்தில், இந்த பிராண விதயா, ஆகாச வித்யா, அந்தர அஷி வித்யா போன்ற வித்யைகள்
படிக்கப்படுவதால் பிரணவ உபாசனம் இவைகளுக்கு அங்கமாகிறது.

உஷஸ்திசாக்ராயணருக்கும் ஒரு ராஜாவுக்கும் ஏதோ ஒரு யக்ஞம் செய்கிற சமயத்தில் நடந்த சம்வாதம்தான் இந்த பிராண வித்யா என்பது.
இதன் விஷயம் என்னவென்றால் ,
யஜ = தேவ பூஜாயாம் என்கிற தான்யங்களைக் கொண்டு செய்கிற யஜ்ஞத்தை விட
அந்தர் யஜ்ஞம் பற்றி தைத்ரீய உபநிஷத் 4வது ”அந்தஸி ” அத்யாயத்தில்
”தஸ்ய ஏவம் விதுஷோ யக்ஞஸ்ய ஆத்மா எஜமானன் ஷ்ரத்தா பத்தி சரீரம் . . . .என்பதாக யஜ்ஞத்தில் சேர்க்கக்கூடிய
நெய் – காமம்
பசு – மன்யு (கோபம்)
யாக அக்நியில் ஹவிசாக்கிச் செய்கிற
ஹோதா – பிராண
உத்காதா – ஸக்ஷுர்
பிரம்மா – மனஸ் என்றும்,
ஸ்ரேயான் திரவ்ய மயா யஜ்ஞாது ஞான யஜ்ஞ : என்று பகவத் கீதையிலும் சொல்லப்பட்டபடி-
ஞான யஜ்ஞம் திரவ்ய யஜ்ஞத்தைக் காட்டிலும் ஸ்ரேஷ்டமானது.

பிரஹ்ம ஞானியாக இருப்பவன், யுக்தமான சிஷ்யனுக்கு வேண்டியும் பிரஹ்ம ஞானத்தை அளிக்காவிட்டால்,
அதேபோல் சிஷ்யன் ஒரு சதாசாரிய னிடமிருந்து பிரஹ்ம ஞானத்தைப் பெற்று அதைப் புரிந்துகொண்டு செயல் படாவிட்டால்,
அந்த ஞானம் , மூர்த்தாது வியபதிஷ்யதி (தலை அறுந்து விழும்) என்கிற கணக்கில் இருவருக்கும் காரியகரம் ஆகாது.
பிரஹ்ம ஞானம் சித்திக்காமல் போய்விடும். பரமாத்மா சாஷாத் காரம் ஏற்பட்டிருந்தாலும், அதற்கான பலன் கிட்டாது வியர்த்தமாய்ப் போய்விடும்.

என் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாசுதேவோ ந சிந்தியதே
ஸாஹாநிஹி , மஹத் துக்கம், ஸ : பிராந்திஹி ஸச விக்ரியா -என்கிற நிலையை –
மூர்த்தாது வியபதிஷ்யதி (தலை அறுந்து விழும்) – என்று சொல்வதாகக் கொள்ள அமையும்.

அத: ஏவ பிராண : சூத் . 1-1-24. (அதிக. – 9-24) –என்றவாறு

அதைப் போலவே பிராண ஸப்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இனி இதுக்கு விஷய வாக்கியம் பின் வருமாறு :

பிராண இதிஹோ வாச : ஸர்வாணி நவா இமானி பூதாநி பிரணமேவா அபிசம் விசந்தி பிராணம் அப்யுஜ்ஜுகதே
சைஷா தேவதா பிரஸ்தாவம் மன்வா எத்தா தான் சேத் வித்வான் பிரஸ்தோஷ்ய : மூர்தாது வியபதிஷ்தபோ தஸ்ய மயா இதி –
ஸர்வாணி இமானி பூதாநி பிராணத்திலிருந்து உண்டாகிறது. பிராணத்தாலேயே ஜீவிக்கிறது. பிராணத்திடமே போய் சேருகிறது.

அதிகா ஸங்கா :

பூத ஜாதமெல்லாம் பிராணாதீனம். பிராணன் இருக்கும் வரைதான் அவை உயிர் வாழும் என்பது தெரிந்ததே.

ந பிராணஓ வாயு மாத்திரம் . ந கிரியா . உள் இழுத்து வெளி விடும் வியாபாரம் அன்று.
தேஜஸ் போன்று அதுவும் ஒரு வஸ்துவா என்றால் அப்படியும் இல்லை ஆனால் திரவியம் .
நாக : கூர்மம் கிருதர: தேவதத்த தனஞ்ஜய : என்றும்,
பிராண, வியான, அபான, உதான , ஸமான : என்றும் அதனதன் இட சஞ்சாரங்களைப் பொருத்து நம் உடலில் நாட்டையாடும் வாயு 10 விதம்.
ஒருவர் இறந்து விட்டாரா அல்லது நாடித்துடிப்பு இருக்கிறதா என்பதை அறிய, மூக்கருகில் நூல் பிடித்துப் பார்ப்பது வழக்கம்.
உஸ்வாச – நிஸ்வாசம் இல்லாதபோது இறந்து விட்டார் என்று அறிகிறோம்.
பிராணன் என்றால் என்ன? பிராணாபான சம்யோகம் என்றால் என்ன? இந்த பிராணன்தான் ஆத்மாவா அல்லது அதற்கும் மேற்பட பரமாத்மாவா ?
இவை எல்லாம் புரிந்து கொள்வது சுலபம் இல்லை.

சித்தாந்தம் :
எப்படி (கீழ் சூத்திரத்தில் சொல்லப்பட்ட) ஆகாச சப்தம் பிரஸித்த ஆகாசத்தைக் குறிக்காதோ , அதேபோல இந்த இடத்திலும்
பிராண சப்தம் பிரஸித்த பிராணனாகிற வாயு சஞ்சாரத்தைக் குறிக்காது –
பிரஸித்த பிராண வியதிருக்கத பரஸ்மின் ஏவ வர்த்ததே – காரணம்
தத் அசாதாரண நிகில ஜகத் பிரவேச, நிஷ்கிரமணாதி லிங்காத் பிரசித்தவந் நிர்தேச: –
ஸ்ருஷ்டி, ஸ்திதி லிங்கத்தை அசாதாரணமாக உடையது பிரஹ்மம் என்கிற பிரபலர் வாக்கியம்.
”தத் சிருஷ்டா ததேவ அனுப்பிராவிஸது” , ”பிரணமேவா அபிசம் விசந்தி” என்ற இந்த அடையாளங்கள்
பிராணனிடத்தில் உள்ளது என்றால், பிராண சப்தம் பரமாத்ம வாசி என்பதாகவே பொருள் படும்.

பரஸ்மின் ஏவ ப்ரஹ்மம் குறிக்கும் என்று சித்தாந்தம் –
பிராண-என்பது – வாயு மட்டும் இல்லை -க்ரியா ரூபமும் இல்லை -விலக்ஷணமான -பஹு வித உபக்ரியா-உத்க்ருஷ்டமான தத்வம் -சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் –
யோகிகள் மட்டும் அறிவார்கள் -திவ்யம் -புலன்களால் அறிய முடியாத –
வாக் -மனஸ் -சம்பாத்தித்ததே –மனஸ் ப்ராணே -பிராணன் தேஜஸ் -தேஜஸ் பரஸ்யா-பரப்ரஹ்மம் இடம் லயம் –
சேதன ஸ்வரூபத்துக்கு மட்டும் -அசேதனத்துக்கு இல்லை –
ஹரணம் -அபஹரணம் -பிராணம்-எதிர்மறை -மன பிராணே தாது –
ஆகாசம் பிராணம் -ஜோதி இந்திர– நான்கும் -விபர்யயம் தவிர்த்து பர ப்ரஹ்மம் ஒன்றையே காட்டும் –
நிகில ஜகத் ஏக காரணன் -அபஹத பாப்மாத் -சர்வாதிகன் –சத்ய சங்கல்பாதி-

—————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— 1-1-10– ஜோதிஸ் அதிகரணம் —(ஸூத்ரங்கள் 25-28 ) —ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்-

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்— –1-1-5-ஈஷத் அதிகரணம்- (ஸூத்ரங்கள் 5-12 )
1-1-6-ஆனந்த மய அதிகரணம் (ஸூத்ரங்கள் 13-20 )
1-1-7-அந்தர் அதிகரணம் (ஸூத்ரங்கள் 21-22 )
1-1-8-ஆகாசாத் அதிகரணம் (ஸூத்ரம் 23 )
1-1-9-பிராணாதிகரணம் – (ஸூத்ரம் 24 )
1-1-10-ஜோதிஸ் அதிகரணம் (ஸூத்ரங்கள் 25-28 )
1-1-11 இந்திர பிராணா அதிகரணம் (ஸூத்ரங்கள் 29-32 )

—————-

ஜோதிஸ் அதிகரணம் -1-10-ஸூத்திரங்கள் 25-28-

ஜியோதிர் அதிகரணம் ::

விபர்யய வியூதாகத விஷயமான இந்த அதிகரணமும் பரமாத்மாவை தவிர்ந்த வேறு வஸ்து ஜகத் காரணம் என்கிற
தவறான புரிதலை போக்க வந்தது ஆகும்.
இந்த அதிகரணமும் , அடுத்து வரும் இந்திரபிராணா திகரணமும் சேர்ந்து ஒரு உப-பேடிகா.

ஜோதி என்றவுடன் நினைவுக்கு வருவது ”ஜோதிஷாணம் அகம் ஆதித்ய:” – பகவத்கீதை , என்று சொல்லப்பட்ட சூரியன்.
உண்மையில் இந்த சப்தம் ”பரம் சுடர் சோதி ” என்று பேசப்பட்ட, பரமாத்மாவையே குறிக்கும்.

இந்த பேடிகாவில் உள்ள 4 அதிகரணங்களும்
ஆகாச
பிராண
ஜோதி
இந்திர :
என்ற கிராமத்தில் அமைவானென் என்றால் , உபநிஷத்தானது
”தஸ்மாத் வா ஏதத் தஸ்மாது -ஆத்மன:ஆகாஸ ஸம்பூத :-ஆகாசாத் வாயுஹு வாயுர் அக்நிஹி . . .”
என்கிற வரிசையில் ஸ்ருஷ்டியைச் சொல்லி இருக்கிறபடியால்.

ஆத்ம சப்தம் பரமாத்மன் ஏவ முக்கிய விருத்த : என்கிறபடி,
ஜீவாத்மா, பரமாத்மா என்று விசேஷித்துச் சொல்லாமல் – ( ஜீவ அல்லது பரம என்பதன் உப-பதமாக அல்லாமல் )
நிருப-பதமாக – , ”ஆத்மா ” என்று மட்டும் சொன்னால், அது பரமாத்மாவையே குறிக்கும்.
எனவே ”ஆத்மன : ஆகாஸ ஸம்பூத:” என்றால், பரமாத்மாவிடம் இருந்து ஆகாசம், அதிலிருந்து வாயு, அதிலிருந்து அக்கிநி என்று கொள்ள வேண்டும்.

இந்த அதிகரணத்தில் சொல்லப் பட்ட விஷயம் சாந்தோக்கிய உபநிஷத்தில் 9 வது பிரச்னம் வருகிற
1. கௌக்ஷேய ஜோதிர் வித்யா
2. காயத்ரீ வித்யா
என்கிற இரண்டு வித்யைகளைப் பற்றியது.

காயத்ரீ வித்யா (அத்யா 3 – கண்ட 12)
காயத்ரீ வா இதம் ஸர்வம் பூதம் . . . .ஸ்ரீரயம் பவதி யயேவம் வேதா

சந்தஸு (Meter ) பலவிதம்:
1 அக்ஷரம் – உக்தா
2 அக்ஷரம் – அத்யுக்தா
3 அக்ஷரம் – மத்யா
4 அக்ஷரம் – பிரதிஷ்டா
5 அக்ஷரம் – ஸுபிரதிஷ்டா
6 அக்ஷரம் – காயத்ரீ
7 அக்ஷரம் – உஷ்ணிகு
8 அக்ஷரம் – அநுஷ்டுப்

வேத மந்திரங்கள் எல்லாம் பெரும்பாலும் காயத்ரீ சந்தஸில் அமைந்தவை.
பிரஹ்ம ஞான ஸித்திக்கு அடிகோலுகிற காயத்ரீ மந்திரத்துக்கு அதனுடை சந்தஸின் பெயரையே வைத்துள்ளது நோக்கத் தக்கது.
உபநிஷத வாக்கியங்கள் அதன் அர்த்ததைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம் , காரணம் அவை மிகவும் பழமை வாய்தன.

ஜோதிர் வித்யா
இதிலுள்ள மந்திரங்கள், பரமாத்மாவை ஒரு ராஜாவாகச் சொல்லி , அவனுடைய 5 வாயில் ஸ்வர்க்க த்வார அரண்மணைக்குள் பிரவேசிக்க,
அரண்மணை கபாடங்களில் உள்ள ரந்தரம் (The word ”Sushi” referred here means ”hole”) –
சாவித் துளை வழியாக நுழைந்து உள்ளே செல்ல வேண்டும். அந்த 5 வாயில்கள் எவை என்றால்
பிராண – சக்ஷுர் ரந்தரம் – ஆதித்யோ தேஜஸ்வி அன்தோநா பவதி
வியான – ஸ்ரோத்ர ரந்தரம் – ஸ்ரீமான் யஷஸ்வீ பவதி
அபான – பிரஹ்ம வற்சசி அந்நாதோ பவதி
சமான – கீர்த்திமான் உஷ் பவதி
உதான – தேஜஸ்வீ மஹஸ்வான் பவதி என்பதாக
உஸ்வாச
நிஸ்வாஸ
கும்பக
ரேதக
தாரணம் என்று இப்படி உபாசிப்பவன் ”க்ஷீணே புண்யே மிருத்ய லோகம் விஸந்தி ” என்பதாக – அவன் மோக்ஷத்தை அடைகிறான்.

ஸம்சயம் :
இங்கு பிரயோகிக்கப் பட்டுள்ள ஜ்யோதிஸ் சப்தம் பரமாத்மாவைச் சொல்லுமா அல்லது
ஜ்யோதிஷ் பதார்த்தமான ஆதித்யனைச் சொல்லுமா என்று.

ஆகாசம் வாயு அக்னி ஸ்ருஷ்ட்டி -பிரகிரியையால் அடுத்து அடுத்து –
1-3-1- ஆத்ம சப்தம் பரமாத்வாய் முக்கியமாக காட்டும் -என்று காட்டுவார்
அவாந்தர பேடிகை -ஜோதிஸ் இந்திர-அதிகரணங்களுக்கு –ஜகத் காரண வியாப்தமான வேறு
கௌஷேகிய ஜோயாத்திஸ் வித்யை -காயத்ரி வித்யை -இரண்டும் ஜோதிஸ் -அதிகரணத்தில் -காட்டி அருளுகிறார் –
8 bit code அனுஷ்டுப் binary code லகு குரு தானே -அதனாலே அனுஷ்டுப் சந்தஸ் நினைக்க உதவுவதால் நிறைய ஸ்லோகங்கள் –
ஒரு சந்தஸிலே பல விருத்தங்கள் உண்டே
காயத்ரி-காயத்ரீம் – சந்தஸாம் மாதா -பீஷாஷாரம் சேர்த்து -sound value உண்டே –
கா இதம் சர்வம் பூதம் -வாக் -வார்த்தை காயத்ரி இடம் இருந்து தானே வரும் -அதனால் பர ப்ரஹ்மம் ஒருவனையே காட்டும்
-manifest -த்ராணம் ரக்ஷணம் -சர்வம் பூதம் ப்ரதிஷ்டிதம் –
பஞ்ச பிராணன் -துவாரம் -உபாசனத்துக்கு -பர ப்ரஹ்மம் சிம்ஹாசனத்தில் இருக்க
-ப்ரத்யக்ஷ பசு அஹிம்சா -விசாரங்கள் உண்டே -3-1-25-மேலே வரும் –
சேனா யாகம் -சத்ரு ஒழிக்க -கோபம் காமம் ஐயத்துக்கு தபஸ் -விதிப்பது போலே சாதனம் விதிக்கலாம் பலம் விதிக்க முடியாதே
சடன் வசீகர்த்தும் சேனா யாகம் -வேதம் ஒத்துக்க கொள்ளாதவர்களை -அவர்கள் வழியிலே சென்று
-மாதாவத் வாத்சல்யய் வேதம் என்பதால் இத்தை விதிக்கிறது -சாதனா விதி தான் இது -பல விதி இல்லை –
ந ஹிம்ஸா ஸர்வான் பூதான் -கூட விரோதிக்காது -இது பொது விதி -சேனா யாகம் விதி விலக்கு
பசு -சாகா -ஆடு -சொல்லும் –
தர்ம வியாதன்-மஹா பாரதம் -தர்ம சங்கை தீர்ப்பான் -ஹிம்சை பற்றி விஸ்தாரமாக -கௌஷிகன்-கதை –
யாக நிமித்த ஹிம்சை -இங்கு –

பிரத்யக்ஷ பசு Vs பிஷ்ட பசு (மாவினால் ஆடு பால செய்து, அதை யாக திரவ்யமாக சேர்த்தல்).
யஜ்ஞங்களில் பசுவதை கூடுமா? கூடாதா? என்பது கேள்வி.
மா ஹிம்சா ஸர்வா பூதாநி – என்பது , வைதிகர்கள் உள்பட, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டதே.
இதில் பூதம் = சேதன வஸ்து (Being ) – ஜீவராசி.

சேனேன அபிசரண் யஜேத – சாதநேந விதிஹி , ந பலாது–மூர்க்கனை அவர்கள் வழியில் சென்று வசீகரிக வேண்டும்.

அக்னீஷ ஹோமீயம் பஸூன் ஆலபேத -ஆடு பலி கொடுப்பதான பிராணி ஹிம்சை அபவாதம்
பந்தி தர்மம் எல்லோருக்கும் சமமாக பரிமாறுவது என்றாலும் சில பதார்தம் சிலருக்கு ஆகாது என்றால் ,
அதை அவர்களுக்கு கொடாமை தவறாகாது. அது பந்தி மீறல் ஆகாது.
அது போல ஹோமீயமான பசு வதை பாபமாகாது என்பது மீமாம்ஸகர்கள் பக்ஷம்.

அக்னீஷ ஹோமீயம் பஸூன் ஆலபேத- என்பது விசேஷ விதி மீறலாகாது.
பிராயசித்த விதிகளை அநுஷ்டிப்பதன் மூலம் பாபம் பரிகாரமாகிவிடும் என்பது சாங்கிய பக்ஷம்.

ஸ்ரௌஷ்ட யாஜ்ஞிகர்கள் – யஜ்ஞ ரூபமான பசு ஹிம்சை, – ஸஸ்திர சிகிஸ்சாதி வது – அத்வரம் என்பதாக பகவத் ராமாநுஜருக்கும் சம்மதம்,
அந்த பிராணிக்கு மோக்ஷம் சித்திக்கிற படியால்.
“வாளால் அறுத்து சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன் போல். . .” (பெருமாள் திருமொழி).
ஹிம்சையும் விரும்பத்தக்கது, அதனால் மிக்க பயன் உண்டாமால்.

மஹாபாரதத்தில் உபரிசர வசு ( வியாசர் தாயார் சத்யவதி, அவள் தந்தை) கதை:
பிராம்மணர்கள் இரண்டு பேருக்கள் பிஷ்ட பசு யாகம் செய்ய வேண்டுமா? அல்லது பிரத்யக்ஷ பசு யாகம் பண்ண வேண்டுமா? என்று சர்ச்சை வர,
அவர்கள் உபரசரவசுவை அணுகி வினவ, தானே ஒருசமயம் பிஷ்டபசு யாகம் பண்ணினவராக இருந்தாலும், இவர்களுக்கு இடையில் மத்யஸ்தம் பண்ணும்போது,
நீங்கள் இஷ்டபசு யாகம்தான் பண்ணவேண்டும், ஏனென்றால் உங்களுக்கு ஹிம்சையைப்பற்றி மனதில் எந்த சலனமும் இல்லாதபடியால்-என்று சமாதானம் செய்தாராம்.
இது விஷயாமாக பகவத் ராமாநுஜரை சிலர் கருத்து கேட்க,
அவர் அதற்கு பதில் இன்னொரு சமயம் சொல்கிறேன் என சந்தேகத்தை பரிகரிக்க மறுத்துவிட,
வேறொரு சமயத்தில், ததியாரதனா நிமித்தமாக, கூரத்தாழ்வினிடம் வாழயிலை அறுத்து வரச் சொல்ல,
அவரும் கொல்லையில் சென்று தாரிலிருந்து இலையை வெட்டவும், அதிலிருந்து நீர் வடிந்தது.
இதைக் கண்டு அவர் மரத்துக்கு ஹிம்சை ஆயிற்றே என வருந்தி இளகி மீளா நிற்க,
இலை கொய்துவர இவ்வளவு நேரமா என அறிய எல்லோரும் புழக்கடையில் சென்று நடந்ததை அறிந்தனர்.
அப்போது பகவத் ராமாநுஜர் , உபரிசரவசு உபாக்யானத்தைச் சொல்லி, ஆழ்வான் போன்ற வியக்த்திக்கு பிஷ்ட யாகமே தகும்.
மற்றையோர்க்கு பிரத்யக்ஷ பசு யாகம் தப்பாது என்றாராம்.
நெருப்பிடை நின்றும், வெற்பிடை சென்றும் தவம் செய்தல் கிருத யுக தர்மம் .
யாக யஜ்ஞங்கள் திரேதா யுக தர்மம் . அப்போது இருந்தவர்கள் அக்நியின்,
காலி
கராளி
மனோஜவா
புலோஹிதா
தூம்ர வர்ணா
புலிங்கினி
விஸ்வ ரூபி– 7 நாக்குகளில் , எந்த நாக்கில் எந்த ஆகுதியை சேர்க்க வேண்டும் என்கிற (யஜ்ஞ விஜ்ஞானம்) அறிந்து இருந்தனர்.
புத்தனுடைய காலத்திலிருந்து, யாக யஜ்ஞங்கள் தடைபட்டு, அதை சரிவர செய்ய ஆளில்லாமல் போக,
யஜந்தே நாம யக்ஞேன
டம்பேன அவிதி பூர்வகம்
அப்படி விதிப்படி செய்யாத யாகம் டம்ப காரியமாகும் என விலக்கத் தொடங்கினர்.
அதனால், துவாபர யுகத்தில் அர்சனமும், கலியகத்தில் கீர்தனமும் பக்திக்கு அங்கமாக யுகதர்மமாய் சொல்லப்படுகின்றன.
எனவே மாறிவிட்ட யுக தர்ம சூழலில், யாக யஜ்ஞங்களுக்கே நேர்த்தி இல்லாதபோது, பிரத்யக்ஷ பசு யாகம் என்பது ஏட்டு சுரைக்காய் கூட்டுக்கு ஆகாதாப்போலே.
அப்படிச் செய்ய வேண்டிய அவஸ்யம் ஏற்பட்டால் , பிரத்யக்ஷ பசுவுக்குப் பதிலாக , பாஞ்சராத்ர ஆகமத்தில்-மநு ஸ்மிருதியிலிருந்து உதாகரிக்கப்பட்ட
குர்யேயாத் கிருத பசும் சங்கியே
குர்யாத் பிஷ்ட பசும் ததா
நத்வே வாஹம் விருத்தாந்தம்
பசுமிச்சேத் கதாசந
வாக்கியத்தின் படி, நெய்யில் பசுவை ஆவாகனம் செய்து, அதனை யஜ்ஞத்தில் சேர்க்லாம்
அல்லது அஜதானியம் என்கிற அரிசிமாவில் செய்த பசுவைக் கொண்டு அப்படிப்பட்ட யாகங்களைச் செய்கிற சிஷ்டாசாரமும் உண்டு.

வேத விதிகள் அதிகாரிகளுக்கு தக்கபடி தர்மாதர்மங்கள் மாறும் என்பதே நியதி.

இங்கு சொல்லப்பட்ட பிராணன் என்பது பரமாத்மாவையே குறிக்கும்.

பிராணயதி ஸர்வாணி பூதானி இதி பிராண: என்கிற (gross meaning) அர்தத்தின் படியும் பிராண சப்தம் பரமாத்மாவையே சொல்லும்,
காரணம் ” உயிரளப்பான் என்னின்ற யோநியுமாய்ப் பிறந்தாய், இமையோர் தலைவா!” என்று பேசினாப் போலே,
பிராண தாதா (source of sustenance) பரமாத்மா ஒருவனே யாகையாலே.

ஸ்ருஷ்டி விஷயமாக அதற்குக் காரணம் இது என்று எந்த சப்தத்தை இட்டுச் சொன்னாலும்,
அது பரமாத்மாவையா குறிக்கும் என்பது Thumb rule- ஸர்வதா அந்வயம்.

பிரகிருதத்திலுள்ள 4 அதிகரணங்களிலும் ஒரேமாதிரி போக்கு,
ஆகாசமே, பிராணனே, ஜியோதியே, இந்திரப் பிராணனே, ஸர்வாணி இமானி அபிஸம் விஸந்தி,
ஸர்வான் பரலீயந்தே என்பதாக ஸ்ருஷ்டி காரணம் இதுவே, இதுவே என்பதிலே நோக்கு.
அதிலும், முதல் இரண்டு , ஆகாச ப்ராண அதிகரணங்கள் ஒரு உபபேடிகா.
அடுத்த, ஜியோதிர் இந்திர ப்ராணா திகரணங்கள் ஒரு உப பேடிகா.
இதில் சொல்லப்பட்ட ஆகாச, பிராண, ஜியோதிர், இந்திர சப்தங்கள் பிரத்யேக வஸதுவைச் சொல்லும் என்கிற தர்மி ஸம்சயத்தை –
விபர்யய ஞானத்தை (incorrect knowledge) போக்க வந்தவையாகும். அந்த எல்லா சப்தத்தாலும்
நிகில ஜகத் ஏக காரண
அபகத பாப்மத்வ
ஸார்வஜ்ஞ
ஸத்ய சங்கல்பத்வாதி
அனந்த கல்யாண குண
பரமாத்மாவே ஆகாச பிராண சப்தங்களால் சொல்லப்படுகிறான் என்பது சித்திக்கிறது.

திருவாய் மொழி அரையர் -சாளக்கிராமம் வாயில் வெத்திலை -வ்ருத்தாந்தம் –
ஸஸ்த்ர சிகிட்ஷா -என்று ஸ்ரீ பாஷ்யகாரர் எழுதி -சிக்ட்ஸைக்கு பண்ணுவது போ -ஜீவாத்மாவுக்கு சுவர்க்கம் -யோகத்தால்
-மந்த்ர உச்சாரணத்தால் -மயங்கி -anestheesiyaa போலே -ஹிம்சை இருக்காதே அந்த ஆட்டுக்கு –
மாவில் பசு ஆகாரம் செய்து -பிஷ்ட பசு யாகம் -ப்ரத்யக்ஷ பசு யாகம் உபரிச்ரவசு உபாக்யானம் –இதுவா அதுவா
-சர்ச்சை வியாசர் தாயார் –சத்யவதி தகப்பனார் உபரிச்ரவசு –தானே பிஷ்ட பசு யாகம் பண்ண இவர்களுக்கு ப்ரத்யக்ஷ பசு யாகம் பண்ண சொல்லி –
கூரத் ஆழ்வான் -வாழை இல்லை அறுத்து -ஹிம்சை என்று மயங்கின ஐதிக்யம் -இப்படி பட்டவர்களுக்கு பிஷ்ட பசு யாகம் -என்றாராம் பாஷ்யகாரர் –
குக்ஷி -வயிறு -ஜோதி -வைசுவாரண அக்னி -ஆகாரம் பக்குவம் பண்ணி -இத்தை குறிக்கும் -பூர்வ பக்ஷம் –
ஜ்யோதிஸ் பர ப்ரஹ்மம் -நிரதிசய தீப்தியுக்தம் -சித்தாந்தம் -பாதாஸ்ய விச்வா பூதாநி -சர்வா பூதாநி த்ரிபாதஸ்ய அம்ருதம் -சாந்தோக்யம் –
லீலா விபூதி கால் வாசி திருவடிக்கு சாம்யம் -குஷி யில் உள்ள ஜோதிஸ் கூட அவனது அம்சம் தானே –
கீதையில் அஹம் வைஸ்ராவணி-அக்னி என்கிறார் -15-14-சதுர்விதம் அன்னம் -பஷ்யம்-லேகியம் -சோஷ்யம் போல்வன –
சந்தோபிநாத ந -அடுத்த சூர்ணிகை -சந்தஸும் அவனையே குறிக்கும் –
தேவி காயத்ரி நாம் சொல்வது மூன்று பாதம் கொண்டது -த்ரிபதா காயத்ரி -யாதிகளுக்கு நாலாவது பாதம் அனுசந்தேயம் என்பர்

இதைச் காயத்ரீ சப்தேனே- அடுத்த -சூர்ணிகை
புருஷ ஸூ க்தம் -புருஷ -நாராயணன் மட்டுமே குறிக்கும்
-ஸ்வாமித்வம் ஆத்மீத்வம் சேஷித்வம் -வஸீத்வம் பும்ஸத்வம் -அவனுக்கு
தாஸத்வம் தேஹத்வம் -ஸ்த்ரீ பிராராய் நாம்
புருஷோத்தம உத்தமன் -என்பர் -ப்ரஹ்மன் ஏவ அந்வயம்-காயத்ரீ சப்தம்
பூதாதி ஸூ பாத வியபதேச உபபத்தே –
ததாகி லக்ஷணம் – அடுத்த -சூர்ணிகை -ஜோதிஸ் வித்யை சம்பந்தம் -பூர்வ வாக்ய -உபதேச பேதாத் –
இரண்டு வித்யைகளும் சேர்த்து ஒரே அதிகரணம்
புருஷ /புருஷோத்தமன் /புருஷோத்தம உத்தமன் என்றாலும் -அவனையே தான் குறிக்கும் –
சோயம் தேவதத்தன் -பிரத்யபிஞ்ஞா -நினைவு படுத்தி அவனே இவன் என்பதை போலே யஞ்ஞதத்தன் -tom dick hary -ஏகார்த்தம் -என்றவாறு –
வேதாஹமேதம் புருஷன் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தாமஸ் தாண்டி -அப்ராக்ருத பர தேஜஸ் உடைய -அவனையே தேஜஸ் சப்தம் குறிக்கும் என்றவாறு –
புடைவை சுரந்தது திரு நாமம் இ றே –நாம மஹிமை நாமி மஹிமை விட என்பது போலே -தேஜஸ் அவனிலும் விஞ்சி இருக்கும் என்றபடி –
அவனும் தேஜஸும் -பிரிக்க முடியாத தத்வங்கள் -என்றவாறு –
முதல் நான்காவது தேஜஸ் விஷயம் 2 /3 காயத்ரீ விஷயம் -இரண்டுமே பர ப்ரஹ்மத்தையே காட்டும்

ஜ்யோதி: சரணாபிதாநாத் – சூத் 1-1-25 (அதிக 10 சூத் 25-28)

விஷய வாக்கியம் :
அத இத பரோர் திவோ ஜ்யோதிர் தீப்த்யதே–இதிதம் அஸ்மின் அந்தப் புருஷே ஜோதிஹி . .. தத் ஸ்பர்ஷேண புருஷேண விஜானாதி .
(சாந்தோ அத்யா 1 மந் 7-8)

ஸம்சயம் :
இங்கு ஜோதி என்கிற சப்தம் வானத்தில் ஒளிவிட்டுக் கொண்டிருக்கிற ஜ்யோதிஷ் பதார்த்தமான பிரசித்த சூரியனைச் சொல்லுகிறதா?
அல்லது ”ஜோதிஷாம் பதயே ” என்கிற பரமாத்மாவைக் குறிக்கிறதா ? என்பது கேள்வி.

பூர்வ பக்ஷம்
இதில் எது சரி? கிம் யுக்தம்? பிரசித்தமேவ ஜியோதிர் இதி, பிரசித்தவன் நிர்தேசாது.
பரமாத்மா ஜோதிர் ரூபமானாலும், பிரதமோ உபஸ்திதம் பிரசித்தமான சூரியனே முதலில் நினைவில் வருவது.
தவிரவும்,
ஆகாஸ :, பிராண: என்று சொல்கிற இடத்தில் எல்லாம் பரமாத்மாவுக்கே உரிய ஜகத் காரண லிங்கத்தை சுட்டிக்காட்டியதுபோல்,
இப்பாது இந்த ஜியோதிர் சப்தத்தோடும் சேர்த்து சொல்லவில்லை என்பதால் ,
பரமாத்மாதான் இங்கு விஷயம் என்கிற பிரத்யபிஜ்ஞா ஏற்பட்ட வழியில்லை. பிரசித்த சூரியனே கொல்லப்பட்டான் ஆவான் என்பது பூர்வ பக்ஷம்

சித்தாந்தம் :
பரமாத்மாவே சூரியன் என்று சொன்னால் தவறு இல்லை. ஆனால், சூரியனே பரமாத்மா என்று சொன்னால், அது பிரக்ரிருதத்துக்கு சேராது.
எனவே ஜியோதிர் சப்தம் சூரியனைச் சொல்லாது. குக்க்ஷியில் உள்ள காடராக்நி போன்றது இந்த ஜோதி என்றதும்,
”கௌக்ஷேயர் ஜியோதிர் ததாத்மகத்வம் ” என்று பகவத் கீதையில்
அஹம் வைஷ்வாநரோ பூத்வா பிராணினாம் தேகமாஸ்ருத : பிராணாபான ஸமாயுகத : பசாம் அன்னம் சதுர்விதம்
தானே சொல்லி இருப்பதோடு இது பொருந்தும்.

பக்ஷியம், போக்யம், சோஷ்யம், லேக்யம் – சதுர் விதான்னம்

நிரதிசய தீப்தியுக்தம் ஜியோதிஹி பரமபுருஷ ஏவ |

எப்படி என்றால்
பதோஸ்ய ஸர்வா பூதாநி த்ரிபாதஸ்ய அமிருதம் திவி -> சாந்தோ (அத் -கண் -மந் – 3-6-12)
பாதோஸ்ய விஸ்வா பூதாநி த்ரிபாதஸ்யஅமிருதம் திவி -> புரு.ஸூக்

கீழ் உலகம் – லீலா விபூதி 1/4 (ஒரு திருவடி) – ஊர்த்வ பாகேன பரிமிதம் , அதோ பாகேன நிஸ்ஸீமிதம் – என்றால் limitless இல்லை.
மேல் உலகம் – நித்ய வீபூதி 3/4 (மற்றோர் திருவடி ) – அதோபாகேன ஸீமிதம் ஊர்த்வ பாகேன அபரிமிதம் .
மேல் – கீழ் என்பது உயர்ந்த – தாழ்ந்த என்ற பொருளில். Not above and below, Because the Universe is supposed to be circular.

இப்படி லீலா விபூதி, நித்ய வீபூதி இரண்டையும் சரணா விதானமாக சொல்லி இருப்பதால்,
இதுவே பரமாத்மாவுக்கான அசாதாரண லக்ஷணமாய் ஜியோதிர் சப்தம் சூர்யாதி ஜியோத்தியைக் (பிரசித்த சூரியனைக்) குறிக்காது.

————

சந்தோபிதாநாத் ந இதிசேத் ந ததா சேதோர்பண நிகமாத் ததாஹி தர்சனம் – சூத் 1-1-26

ஆக்ஷேபம் :
சந்தோபிதாநாத் — காயத்ரீ மந்திரம்,
சந்தஸ் (meter ) ரூபமாக இருக்க, திருவடிகளை உடைய பரமாத்மாவேதான் அந்த காயத்ரீ மந்த்ரம் என்று எப்படிச் சொல்வது? என்றால்
ந – இதிசேத் ந-ததா சேதோர்பண நிகமாத் –
நம்முடைய மனதை காயத்ரீ சப்த வாச்சியமானவனுக்கு அர்ப்பிக்கவேண்டும் ,
காயத்ரீ என்பது எல்லா வஸ்துவுக்கும் ஆத்மா என்று சொல்லப்பட்டிருப்பதால், காயத்ரீ சப்தம் ”சந்தஸ் ” என்ற பொருளில் சொல்லப்பட்டது அன்று.
அதுவும் பரமாத்மாவையே குறிக்கும்.
மந்திரத்துக்கும் , மந்திரத்துக்குள்ளீடான வஸ்துவுக்குமான ஸதிருச பாவத்தால் எழுந்த வார்த்தை.

1. காயத்ரீ மந்திரத்துக்கு 4 பாதம். பரமாத்மாவுக்கு 4 பாதம் (லீலா விபூதி1 பாதம், நித்ய விபூதி 3 பாதம்).
2.சிம்மோ மாணவக : போலே . ததாஹி தர்சனம் – என்பதிலே நோக்கு.

தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந பிரசோதயாத்
என்று -3-பாதமும்
ஓம் பூ புவர் ஸுவ:
என்று வியாஹர்த்தியுமாக இருப்பது தேவி காயத்ரீ (அ ) பிரஹ்ம காயத்ரீ .
இதற்கு பாத பூர்ணார்தமாக, 4வது பாதம் உண்டு. அது யதிகளுக்கு மட்டும் அனுசந்தேயம். மற்ற 3 ஆஸ்ரமத்தார்களுக்கு உபதேசிக்கலாகாது.

பூதாதி பாத வியபதேஸோபபத்தே : ச ஏவம் – சூத் 1-1-27 (அதிக 10 சூத் 25-28) ::

பூத பிருதிவி சரீர ஹ்ருதயாநி நிர்திஸ்ச சைஷா சதுஷ்பாதானி வியபதேஸாத்ச: பிரஹ்மண்யேவ காயத்ரீ சப்தா ஏவம் உபபத்யதே.

விஷய வாக்கியம் :
சைஷா சதுஷ் பதா ஷட் விதா காயத்ரீ – 4 பாதங்களைக் கொண்டது. 6 விதமாக இருப்பது .
காயத்ரீ வா இதம் ஸர்வம் பூதம் etc.

தாவானஸ்ய மஹிமா தாதோ தியாயாதிஸ்ச புருஷ: பாதோஸ்ய ஸர்வா பூதாநி த்ரிபாதஸ்ய அமிருதம் திவி (மந்-6)
ஆனுபூர்வியாக புரு. ஸூக்தத்தில் இதேபோல்
ஏதாவாநஸ்ய மஹிமா தாதோதியாகுஸ்ச புருஷ: பாதோஸ்ய விஸ்வா பூதாநி த்ரிபாதஸ்ய அமிருதம் திவி -என்பதாக பார்க்கிறோம்.
புருஷ ஸூக்தத்தில் சொல்லப்பட்ட – புருஷ: நாராயண:
இதையே பகவானும் புருஷோத்தம: என்று கீதையில் தன் வாயால் சொல்லிக் கொள்கிறான்.
ஸுக மகரிஷியும் அவனை புருஷோத்தமோத்தம : என்பதாக பாகவதத்தில் விளிக்கிறார்,
ஸ்வாமித்வம் , ஆத்மத்வம் , வசிஸ்த்வம் , பும்ஸ்த்வம் இவை எல்லாம் பரமாத்மாவைச் சொல்லும். அதேபோல
சேஷத்வ, தேகத்வ , வசஸ்த்வம் , ஸ்த்ரீத்வம் இவை எல்லாம் ஜீவாத்மாக்களை சொல்லும் என்றிருப்பதால்

காயத்ரீவா இதம் ஸர்வம் பூதம்
யாவை இயம்வா பிருதிவி
யாவை இயம்வா அஸ்மின் சரீரே
யத்வா புருஷ சரீரே ஹ்ருதயம்
சைஷா சதுஷ்பதா ஷட்விதா காயத்ரீ என்பது கீழ் சொன்ன 4 மந்திரங்களில் இருந்து எடுக்கப்பட்ட
பூத பிருதிவி சரீர ஹ்ருதயாநி சதுஷ்பாதா பரமாத்மாவைக் குறித்து சொல்லப்பட்வை யாகும்.
இதஸ் ச காயத்ரீ சப்தேன பிரஹ்ம இவ அபிதீயதே, பூதாதி பாத சப்தஸ்ச ஏவம்.

————–

உபதேச பேதாத் ந, இதி சேத் ந, உபயஸ்மிந் அபி அவிரோதாத் – சூத்.1-1-28(அதிக.10)::

இந்த சூத்திரத்தாலும் ஜியோதிர் வித்யை பேசப்படுகிறது.
அதிகரணத்தின் 1 – 4 -சூத்- கௌட்சேய-ஜியோதிர் வித்யா விஷயமானவை. 2 – 3 காயத்ரீ வித்யா விஷயமானவை.

கேள்வி :
உபதேச பேதாத் –
ஒரு இடத்தில் “த்ரிபாதஸ்ய அமிருதம் திவி ” என்று பிரஹ்மத்துக்கு விசேஷணமாக சொல்லி .
வேறு ஒரு இடத்தில் “திவப் பரோ ஜ்யோதஹி” என்று சொல்லும் போது,
”ஸோயம் தேவதத்த:” என்பதான ”பிரத்யபிஜ்ஞா” ஏற்படவில்லை, என்றால்

ந –
இப்படி ஒரே பிரகரணத்தில் பரமாத்மாவை இரண்டு விதமாக சொல்லி இருப்பதால் ,
”ஜியோதிர்” சப்தம் பரமாத்மாவைக் குறிக்காது என்கிற பூர்வ பக்ஷம் சரியில்லை.

இதி சேத் ந –
அப்படி சொல்லப் போகாது . கீழே புருஷக: , புருஷோத்தம: என்பது நாராயண : என்றாப்போலே கொள்க.
புருஷ: என்பது லௌகிக புருஷனைக் குறிக்குமோ என சந்தேகம் வராத படிக்கு புருஷோத்தம: என வலியுறுத்திற்று.

உபயஸ்மின் அஸ்ய அவிரோதாத், –
“திவப் பரோ ஜ்யோதஹி ” என்று சொன்னாலும்,
” த்ரிபாதஸ்ய அமிருதம் திவி ” என்று சொன்னாலும் இரண்டுக்கும் விரோதம் எதுவும் இல்லை.

விருட்சாக்ரே (மரக்கிளையில்) பக்ஷி: என்பதற்கும்,
விருட்சாக்ரே பரத (அது பறந்து போகும்போது – மரக்கிளைக்கு மேல் பறந்து கொண்டிருக்கிற) பக்ஷி: என்பதற்கும்
எப்படி வித்யாசம் இல்லையோ அதுபோல, “திவப் பர: ” என்றாலும், “த்ரிபாதஸ்ய அமிருதம் திவி ” என்றாலும் வித்யாசம் இல்லை.

திரௌபதிக்கு ஆபத்திலே புடவை சுரந்தது திருநாமமிறே என்பதாக நாமிக்கான பெருமை, நாமத்துக்கும் உண்டு.
இரண்டாலும் ஓரே பரமாத்மாவைக் குறிப்பதுபோலே
“திவப் பரோ ஜ்யோதஹி ” என்று சொன்னாலும், ” த்ரிபாதஸ்ய அமிருதம் திவி ” என்று சொன்னாலும்
இரண்டுக்கும் விரோதம் எதுவும் இல்லை.

இதித் த்யேவ ஜியோதிர் சப்தம் நிரவத்தியம்.

——————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— 1-1-11– இந்திர பிராணா அதிகரணம் (ஸூத்ரங்கள் 29-32 ) -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —-ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்-

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்— –1-1-5-ஈஷத் அதிகரணம்- (ஸூத்ரங்கள் 5-12 )
1-1-6-ஆனந்த மய அதிகரணம் (ஸூத்ரங்கள் 13-20 )
1-1-7-அந்தர் அதிகரணம் (ஸூத்ரங்கள் 21-22 )
1-1-8-ஆகாசாத் அதிகரணம் (ஸூத்ரம் 23 )
1-1-9-பிராணாதிகரணம் – (ஸூத்ரம் 24 )
1-1-10-ஜோதிஸ் அதிகரணம் (ஸூத்ரங்கள் 25-28 )
1-1-11 இந்திர பிராணா அதிகரணம் (ஸூத்ரங்கள் 29-32 )

———————

ஸ்ரீபாஷ்யம் – அதிக.11 சூத்.29-32 ::

இந்திரப்ரணதிகரணம் ::

ப்ராண: ததா அநுகமாத் – சூத் .1-1-29 (அதிக.11-சூத் . 29-32)

ஆகாசாதிகரணம், பிராணாதிகரணம், ஜ்யோதிர் அதிகரணம் போல இதுவும்,
பரமாத்ம பின்னமான வஸ்து ஜகத் காரணம் என்கிற விபர்யயத்தை போக்க வந்தது. எனவே இந்த 4 அதிகரணங்களும் ஒரு பேடிகா என்று பார்த்தோம்.

ஆகாச,ப்ராண , ஜ்யோதிர் சப்தங்கள் பிரஹ்ம வாச்சியமே ஒழிய, நம் கண்ணுக்குப் புலப்படுகிற பிரசித்தமான நீலவானமோ,
பிராண வாயு சஞ்சாரமோ, சூரியனோ இல்லை என்பதுபோல , இந்த அதிகாரணத்திலும் அதே-
”பிரசித்தவந் நிர்திஷ்ட”- நியாயத்தின் அடிப்படையில், இந்திர சப்தம், தேவர்கள் தலைவனான தேவேந்திரனைச் சொல்லாது,
பரமாத்மாவையே சொல்லும் என்பதாக இங்கு

விஷய வாக்கியம் :
கௌஷீதகி பிராஹ்மணத்தில் உள்ள பிரதர்தன வித்யாவைப் பற்றியது. இது தசோபநிஷத் கணக்கில் இல்லாவிட்டாலும்,
சங்கராச்சாரியார் அநுவாகம் பண்ணியிருக்கிறபடியால் , பரபக்ஷ பிரசங்காது , அனுசந்தேயம்.
தவிர, ஸுபாலோபநிஷத், ஸ்வேதஸ்வேதர உபநிஷத், அந்தர்யாமி பிராஹ்மணம் இத்யாதி ஸ்வகோஷ்ட்டி விசாரணீயம்.

கௌஷீதகி உபநிஷத், ருக்வேத சாகையைச் சேர்ந்தது. சாங்காயன ஆரண்யகத்தின் ஒருபகுதி.
கோஷீதகி ஆரண்யகத்திலுள்ள 15 அத்தியாயத்தில், 4 அத்தியாயங்கள் கௌஷீதகி உபநிஷத் பாகமாகும். பத்ய, கத்ய ரூபத்தில் அமைந்தது.
கத்ய, பத்ய மயம் காவியம்
சம்பு இத் அபிதீயதே.
இந்த, 4 அத்தியாயங்கள் முறையே 6, 15,9,20 கத்யங்களைக் கொண்டவை.
பிரதர்தன வித்யா என்பது, 3வது அத்தியாயத்தில் வருமது .
பிரதர்தனன் என்கிற ராஜாவுக்கு தியான விஷயமாக, இந்திரன் செய்த உபதேச பாகம்தான் இங்கு பேசப்படுகிறது.

பிரியம், ஹிதம் :
கிம் கர்ம ? கிம் அகர்மா? கவையோர் தத்ர மோஹிதா:
லௌகிக கர்மாக்கள்
பிராம்மண்ய பிரயுக்த கர்மாக்கள்
ஸ்ரீவைஷ்ணவ பிரயுக்த கர்மாக்கள்
எது எவ்வளவு தூரம் செய்ய வேண்டும் என்பது, பண்டிதர்களுக்கு கூட புரியாத புதிர்.
நம்முடைய மந்த புத்திக்கு, எது ஆத்மாவுக்கு பிரியம் எது ஹிதம் என்று அறிய முடியாதாகையால்,
அதை பகவானே செய்யக் கடவன். இதே விஷயத்தை, பிரதர்தன மஹா ராஜா, இந்திரனை வேண்டுகிறான்.

”யம் தம் மனுஷ்யாய ஹித தமம் மன்யது தமேவ பிரஸீத” என்று வேண்ட,
இந்திரன் ”த்வமேவ மாம் வரம் விருணீஷ்வ ” , ”த்வாம் மாம் விஜாநீத ” என்று சொல்வதாக அமைந்த இடம்
”ஸஹோவாச பிரானோஸ்மி பிரக்ஞாத்மா தம் மாம் ஆயுர் அமிருதம் இத் உபாஸ்வ”
நானே பிராணன். நானே க்ஞான ஸ்வரூபமான ஆத்மா. இந்திரனாக இருக்கக் கூடிய என்னையே அமிருதத்வ பிராப்திக்கு –
மோக்ஷ உபாயமாய் பற்றக்கடவாய். இதுவே உனக்கு ஹித தமமானது என்று சொன்னான்.

சித்ரயா யஜேத பசு காம:-ஜ்யோதிஷ்ட ஹோமேன ஸ்வர்க்க காமோ யஜேத
என்பதுபோல அல்லாமல்
மீமாம்ஸா ஸாஸ்திரத்தில் பலனைச் சொல்லாமல் கர்மாவை விதித்தால்,
தத் ஸ்வர்க : ஸர்வான் பிரதி அவிசிஷ்டத்வாத் – அதற்கு ஸ்வர்க்கம் தான் பலம் என்பது பொதுவான விதி.
எனவே எல்லோருமே ஆசைப்படக் கூடிய அமிருதத்வ பிராப்தி உபாய: ஹித தமம்

எது காரணமோ அது அமிருத்வ பிராப்திக்கு உபாயம். எது அமிருத்வ பிராப்திக்கு உபாயமோ, அதுவே உபாஸ்யம்.
இங்கு பிரசித்த ஜீவா பாவ இந்திரனே மோக்ஷித்துக்கு உபாயம் என்று சொல்லப்பட்டதால்
இந்திர பிராண : பரமாத்மா இல்லை. ஜீவாத்மாவே என்பது

ஸம்சயம்:
பிரதர்த்தன சம்வாதம் இந்திரன் ”மாம் உபாஸ்வ ” என்று தன்னைக்காட்டி சொன்னபடியால்,
இந்திர பிராண ஸ்ப்தங்கள் , தேவர்கள் தலைவனான இந்திரனையே குறிக்கும், பரமாத்மாவைக் குறிக்காது என்பது பூர்வ பக்ஷம் .

சித்தாந்தம் :
ப்ராண: – இந்திர பிராண சப்த நிர்திஷ்ட : ந ஜீவா மாத்ரம் . இந்திரா: பிராண: என்ற இரண்டு சொற்களாலும்
குறிக்கப் பட்டவன் ஜீவன் இல்லை. ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறு பட்டவனான பரமாத்மா தான் – எப்படி ?என்றால்
ததா அநுகமாத் — முன்னும், பின்னுமாக வரும் வார்த்தைகள்,
ஸ ஏஷ : பிராண ஏவ பிரக்ஞாத்மா ஆனந்த: அஜர : அமிருத : என்பதான சப்தங்கள் சாமான்யாதிகரணத்தாலே பரமாத்மாவுக்கே ஏற்கும்.
ஆக, இந்திரன், பிராணன் என்கிறது இந்திரனுக்கு அந்தர்யாமியாக உள்ள, பரமாத்மாவையே குறிக்கும்.

————

இதற்கு எதிர் கேள்வி கேட்பதாக அமைந்த பூர்வ பக்ஷம் சூத்.

1-1-30. ந வக்து: ஆத்மோபதேசாத் இதி சேத் , அத்யாத்ம சம்பந்த பூமா யஸ்மின்

ந –
இந்திர பிராண சப்தம் பரமாத்மாவைக் குறிக்கும் என்று சித்தாந்திகள் சொல்வது தவறு.

வக்து: ஆத்ம உபதேசாத் –
வக்தாவான இந்திரன் ”த்ரீ சீர்ஷாணம் த்வஷ்டா வாதார்பிஹி” ”மாம் உபாஸ்வ” , ”மாம் ஏவ விஜானீத ” என்று
தன்னுடைய வார்த்தைகளாக சொல்லியள்ள படியால்

முக்கிய பிரயோகம் – literal meaning
கௌண /லாக்ஷணிக பிரயோகம் -;implied meaning
உ.ம். கங்காயாம் கோஷ: என்றால் கங்கா தீரே கோஷ :
ந விதெள பர சப்தார்த்த: என்பது மீமாம்ஸா நியாயம்.
விதி வாக்கியங்களில் derived meaning / கௌண பிரயோகம் கூடாது. முக்கிய பிரயோகமாவே கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.
”மாம் உபாஸ்வ ” என்பது விதி வாக்கியம் . எனவே அந்தர்யாமியான பரமாத்மாவை சொல்வதாக கருத்தாக் கூடாது என்பது பூர்வ பக்ஷம்

இதி சேத் –
இந்த பூர்வ பக்ஷம் சரிப்படாது.

அத்யாத்ம சம்பந்த பூமா ஹி யஸ்மின் —
ஆத்மன்யேவ முக்கிய விருத்த: பரமாத்மா. ஆத்மாநம் ஆகிருத்ய அத்யாத்மம். பரமாத்மாவுக்கே அசாதாரணமான
ஆனந்த: அஜர : அமிருத : என்பதான சின்னங்களை யிட்டு சொல்லித் தன்னை இந்திரன் காட்டி இருப்பதாலும் ,
எப்படி வண்டி சக்கரத்தின் ஆரங்கள் அதன் மத்தில் இணைக்கப் பட்டுள்ளனவோ,
அதுபோல பூதங்கள் எல்லாம் ஆத்மாவிலும், ஆத்மா பரமாத்மாவிலும் பர்யவாசிக்குமாகையாலும் ,
இந்திர, பிராண சப்தம் அவனுக்கு அந்தராத்மாவான பரமாத்மாவையே சேரும்.
அவன்தான் ஶ்ரீமன் நாராயணன். அவனே இந்திர ப்ராணன்.

ஸ்வாயத்தே சப்த பிரயோகே , கிமிதித் அவாசகம் பிரயுஞ்ஜீதா ? — பேசக்கூடிய வார்த்தை நம் ஆதீனமாக இருக்க,
ஏன் சுற்றி வளைத்து பேச வேண்டும்?
இந்திரன் ”மாம் உபாஸ்வ ” என்று சொல்லாமல், ”மத் சரீரகம், பரமாத்மாநம் உபாஸ்வ ” என்று சொல்லி இருக்கலாமே என்றால்
அயம் உபதேச: சாஸ்திர திருஷ்டியா கிராஹ்யவது – சாஸ்திர திருஷ்டி படி என்றால்,
சரீர-சரீரி பாவ பிரயுக்தமாகவே ”அஹம் பிரஹ்மாஸ்மி ” அனுபவம் ஏற்படுகிறது.
”ஸோ-ஹம் ” என்கிற இந்த அனுபவம், வேத காலத்தில் வாம தேவர்க்கும், புராண காலத்தில் பிரஹ்லாதனுக்கும்,
சரித்திர காலத்தில் நம்மாழ்வாருக்கும் ஏற்பட்டது என்று கீழே பார்த்தோம்.

”த்ரீ சீர்ஷாணம் த்வாஷ்ட்ட ஹனனம் ” என்று இந்திரன் தன்னை காட்டி
”மாம் உபாஸ்வ ”, ”அஹமேவ விஜானீதா ” என்பன ”அஹம் பிரஹ்மாஸி ” என்கிற அநுபவ தசையில் நின்று
பேசினான் என்பதாகக் கொள்ள வேண்டும்.

”ஸோ ஹம்” என்கிற ”அஹம் பிரஹ்மாஸ்மி ” நிலையும் ,
”தாஸோகம் ” என்கிற சரீராத்மா நிலையம் ஒரு வியக்தியுள் பார்ப்பது, சரீரக சம்பிரதாயமான, விசிஷ்டாத்வைதத்தில் மட்டுமே சாத்தியம்.
அத்வைதத்தில் ”தாச” பாவமும் , துவைத்ததில், ”அஹம் பிரஹ்ம” பாவமும் கூடா வழக்கு.

அத்வைதி -ஸோஹம்/ விசிஷ்டாத்வைதி-தாஸோஹம்
அத்வைதி -ஸதாஸோஹம் / விசிஷ்டாத்வைதி- தாஸதாஸோஹம்.

பிரத்யகர்தஸ்ய பரமாத்மநி பர்யவாஸாநா – என்று இரண்டுமே சமன்வயம் ஆவது பகவத் இராமானுஜ சித்தாந்தத்தில் மட்டுமே எனலாம்.
இதுவே சமாதி ஸ்திதி -; ஸோஹம் ஸ்திதி – Raising above bodily state and bestowed in நிஷ்கிருஷ்ட ஆத்ம ஸ்திதி.
வியுத்தான ஸ்திதி – தாஸோஹம் ஸ்திதி – Cognizant of bodily state and endowed in விசிஷ்ட ஆத்ம ஸ்திதி. வியுதானம் = down grade.

எனவே, இந்திரன் , பிரதர்தனனுக்கு ”மாம் உபாஸ்வ” என்றது,
சாஸ்திர திருஷ்டியில் செய்த உபதேசம் ஆகும். வேத காலத்தில் வாம தேவருக்கு ஏற்பட்ட
” பிரதிபதே அஹம் மநுரபவம் சூரியஸ்சாஹம்” என்பதான அனுபவம் போலே நிஷ்கிருஷ்ட ஆத்ம ஸ்திதியில் நின்று பேசின வார்த்தை.

எல்லா சப்தங்களும் பிரஹ்மத்திடத்தில் பர்யவசிக்கும் என்று சொன்னால் ,
பிறரைப் பார்த்து த்வேஷத்தில் சொல்லும் ‘ஹம்’ ‘த்வம்’ இத்யாதி நீச சப்தங்களும் பரமாத்மாவைச் சேருமா ? என்றால்
பிரஹ்ம தாஷா: பிரஹ்ம தாசா: பிரஹ்மைமே கிதவா: என்று ஏழை, ஏதலன், கீழ்மகன் இவர்களிடத்திலும்,
ஞானியானவன் பிரஹ்மத்தையே பார்க்கிறான்.
வித்யா வினய சம்பந்நா: கவி ஹஸ்திநி–ஸுநீசி ஸ்வபாகேச பண்டிதா: சமதர்ஸின:
யார் பண்டிதன் என்றால்
யஸ்ய ஸர்வே ஸமாரம்பா: காம சங்கல்ப வர்ஜிதா:-ஞானாக்நி தத்த கர்மாணம் தமாஹு பண்டிதம் புதா:
கியாதி லாப பூஜைகளுக்கு ஆசைப்படாமல், பல அபேக்ஷை இல்லாமல், பரமாத்ம ஞானத்தால் கர்மங்கள் தகிக்கப்பட்டவனை
பண்டிதன் என்று சொல்லலாம். அப்படிப்பட்டவர்கள் சொல்லும் அபசப்தங்களும் பிரஹ்மத்திடமே போய்ச் சேரும்.
எனவே அவர்கள் அதிலிருந்து விலகி இருப்பர்.
ஸர்வம் கல்விதம் பிரஹ்ம, ஸர்வம் பரமாத்ம அந்தரயாமிதம் என்பதாய்
“ஸோஹம்” என்கிற ஆந்தர-ஞானம் சரீர-ஆத்ம பாவத்தை ஒத்துக் கொண்டால் மட்டுமே சரிபடும்.
பாஹ்ய-பிரஜ் ஞை இருக்கும்போது அவர்களுக்கே “தாசோகம்” என்கிற நினைவுமாகிற, இரண்டு நிலையும் ஒரு வியக்தியிலே உண்டு.

———–

1-1-31 சாஸ்திர திருஷ்டியா து உபதேச: வாமதேவ வத்

யஸ்ததக்ரே விஷமிவ பரிணாமே அமிர்தோபம – ஹித தமம் என்பதாக கீதை.
யத் ஹிதம் மம தேவேச, தத் ஆக்ஞாபய மாதவா -> ஜிதந்தே ஸ்தோத்திரம்.
மனுஷ்யாய ஹிததமம் மன்யதே தமேவ ப்ரூயம்- என்று கேட்ட பிரதர்தன மஹா ராஜாவுக்கு,
இந்திரன் “மாம் உபாஸ்வ” என உபதேசித்தான். மாம் என்றது தன்னையா? தனக்குளிருக்கிற பரமாத்மாவையா? என்பது கேள்வி.
காரணம்-இந்திரன் ஒரு ஆதிகாரிக புருஷன். இந்திர பதவியில் இருக்கிற கர்ம சம்பந்தமுடைய ஜீவாத்மா.
ஒரு ஜீவாத்மா இன்னொரு ஜீவாத்மாவை உபாசிப்பது சரிபடாது அல்லவா? நாமக்கு எது ஹிதம் என்றால்,
“நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபயிதி” என்று விஜர: விமிருத்யு: விசோக: என பரமாத்ம சாம்யத்தை வேண்டி,
பரமாத்மாவையே உபாசிக்க வேண்டும். எனவே “மாம் உபாஸ்வ” என்பதற்கு பரமாத்மாவை உபாசிக்க வேண்டும்
என்பதாக புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் எப்படி? என்பதாக பூர்வ பக்ஷம் –

பரமாத்மாவுக்கு அசாதாரணமான விஷயங்களை கூடவே சொல்லி இருப்பதால்,
இந்திர பிராண சப்தத்துக்கு பரமாத்மா என்றுதான் அர்த்தம் , என்ன
துவஷ்டாவின் பிள்ளை, துவாஷ்டாசுரனைக் கொன்றவன் எனவும் கூறி இருப்பதால் ,
வக்து: ஆத்மோபதேசாத் – உண்மையில் இந்திரன் தன்னைச் சொல்லிக் கொள்வதாவன்னோ தேறும்? என மீண்டும் ஆஷேபம்

ஆத்யாத்ம விஷய பூமா – எப்படி ஒரு வண்டி சக்கரத்தின் ஆரம் (spokes) அதன் அச்சோடு இணைக்கப்பட்டு சுழல்கிறதோ அதுபோல,
ஆத்மாவின் அம்சங்கள் வெகுவாக பரமாத்மாவையே சேரும் என்பதால், இந்திரன் தன்னைச் சொல்லிக்கொண்டாலும்
அது பரமாத்மாவரை பர்யவசிக்கும் என்பது சமாதானம். பூமா = பஹுத்வம்.

விஸ்வ ஜிதா யஜேத – என்கிற பூர்வ மீமாம்ஸா சூத்ரத்தில் காட்டப்பட்ட
“விஸ்வ ஜிதா ” நியாயம் = எந்த இடத்தில் யார் அதிகாரி, என்ன பலன் என்று சொல்லப்பட வில்லையோ,
அங்கு ஸவர்கப் பிராப்தி தான் பலம். ” தத் ஸ்வர்க: ஸர்வாந் அவிசிஷ்ட:” என அனைவருக்கும்
ஸ்வர்கப் பிராப்தி இஷ்டமாய் இருக்கக் காண்கையாலே, அதற்கு இச்சிப்பவர்கள்தான் அதிகாரி என்கிற விஸ்வஜிந் நியாயப்படி
ஹித தமமான மோக்ஷ பிராப்த்திக்கு பரமாத்மாவே கடவன். பலத்தை வைத்து, உபாஸ்யம் இந்திரன் என்றாலும்,
இந்திர சரீரியான பரமாத்மாவையே குறிக்கும்.

எந்த ஜீவாத்ம விஷயத்தில் பகவதநுகிரகம் (உந்மீஷதி= ஊர்துவம் நேதும் இச்சதி – நயாமி பரமாம் கதிம் என்பதாக) பிரசவிக்குமோ,
அவர்களைக் கொண்டு ஸாதுகாரியங்களையும்,
யார் விஷயத்தில் நிக்ரகாவேசமோ, அவர்களைக் கொண்டு துஷ்ட காரியங்களையும் செய்விக்கிறான் என்கிற
ஸர்வ நிர்வாஹக சாமர்த்தியம், பகவானுக்கன்றி இந்திரன் போன்ற ஜீவாத்மாவுக்கு இல்லை என்பதாலும்,
“மாம் உபாஸ்வ” என்றால் பரமாத்மா ஏவ உபாஸயம் என்று கொள்ள வேண்டும்.

அப்படியானால், ஜீவாத்மாவுடைய அனைத்து காரியங்களும் தெய்வ இச்சை – பூரவ நியோஜிதம் (predetermined) மட்டுமா?
ஸ்வயிச்சை (free will) என்பது கிடையாதா? என்றால் புருஷ பிரயத்ன சார்தக்கியம் பகவதநுகிரகத்தாலே என்றே சொல்லவேண்டும்.
Human efforts are needed but that will fructify, if only God destines என்பதே சாரம்.
ஜீவாத்மாவுடைய புண்ய பாப பலிதமான கர்த்ருத்வம், பகவத் அதீனம். இதன் வியாபகம் அதிகாரி பேதத்துக்கேற்ப மாறும்.
சைதன்யா உசித பிரதம ப்ரவிருத்தி ஸ்வாதந்திரியம் எல்லா ஜீவாத்ம்மாவுக்கு உண்டு.
ஆனாலுல் அதை உத்தரோத்ரம் நடத்துவது பகவததீனம் அத்தனையே.
கடவுளை நம்பாத நாத்திகனும், விதி என்ற பெயரால் இத்தை ஒப்புக் கொள்வதைப் பார்க்கலாம்.

துவமேவ ஸாது கர்ம காரயிதும் இமே லோகேப்பிய : உந்மீஷதி
துவமேவ அஸாது கர்ம காரயிதும் இமே லோகேப்பிய: அதோன்மீஷதி
இதி ஸர்வஸ்ச கர்மண: காரயித்தும்ச்ச பரமாத்மா

நாம் கெட்ட விஷயங்களைச் செய்யும்போது, பகவான் அதற்கு துணையோ ?
ஸர்வ பூத ஸுஹ்ருதனான அவன் தீச்செயலில் ஒருவனைச் செலுத்தி, பாபத்தை ஏன் சேர்க்க வேண்டும் என்கிற கேள்வியும் எழலாம் .
அது அவன் விஷயத்தில் வைஷம்யத்தைக் காட்டாதா என்றால்,
அவன் நம்முடைய கர்ம பலவியாப்திக்கு அநுசரணையாக செய்கிறானே ஒழிய, நைர்கிருண்யத்தால் அன்று.

மஹாபாரதத்தில் ஏகலைவனுடைய விருத்தாந்தத்தில், துரோணர் அவன் கடைவிரலை வாங்கியது மேல் ஜாதி ஆதிக்கியத்தால்
என்பன போன்ற தூஷணங்களுக்கு இடமாக, அவனுக்கு ஒரு அநியாயத்தை பண்ணினது,
பின்நாளில் வரப்போகும் பாரதப்போரில் தர்மம் நிலைபெற, இவன் கர்ணனைப்போல் துரியோதனன் பக்கல் விலைபோகாமல்
இருக்க செய்யப்பட்ட துரோகம்
அதுவும், பகவத் சங்கல்பத்தை அநுசரித்தே, ஒரு நாட்டைக் காக்க சிலரைப் பணயம் வைக்கலாம் என்பதுபோல.
When greater melody is fixed, lesser is scarcely less felt.

ஆனந்த: அஜர : அமிருத : என்பதான பரமாத்மாவுக்கே அசாதாரணமான சின்னங்களை யிட்டு சொன்னதோடல்லாமல்
ஏஷ லோகாதிபதி: ஏஷ ஸர்வேஷ: ” என்றும் காட்டி ”மாம் உபாஸ்வ ” என்று ஏன் சொல்லவேண்டும்?
ஸ்வாயத்வே ஸப்த பிரயோகம் கிமித் அவாசகம் பிரயுஞ்ச ? என்கிற பூர்வ பக்ஷம்- ஆக்ஷேபம் முடிந்த பாடில்லை.

இங்கு ”மாம் ” என்பது ”அஸ்மத் ” (Me) சப்தத்தினுடைய 2ஆம் வேற்றுமை உருபு.
”மம ” (My) என்பது 6ஆம் வேற்றுமை உருபு . ”அஹம் ” என்றால் யாரு?
அஹமர்த்த : ஆத்மத்வ வாதம்
அஹமர்த்த : அநாத்மத்வ வாதம் –என்பதாக இரண்டு பக்ஷம்.
ஜிக்ஞாசா அதிகரணத்தில் அஹமர்த்தம் ஆத்மா என்று பார்த்தோம். அத்வைதிகள் அஹமர்த்தம் ஆத்மா இல்லை என்பர்.
அஹமர்த்த விநாசம் மோக்ஷம் என்பது அவர்கள் வாதம்.
ஆத்ம-பரமாத்மாவுக்கான சம்பந்தம் சரீர-சரீரி பாவமாகையால், அஹமர்த்தம் ஆத்மாவோடு நில்லாமல்
சரீரியான பரமாத்மாவளவும் காட்டும் என்பதான விசிஷ்டாத்வைத சித்தாந்ததுக்கு உயிரான சூத்ரம் இது.

வாமதேவர் பகவத் ஸாட்சாத்காரமான ஒரு மஹரிஷி. அவர் “எல்லாம் நான்தான்” என்றால் வாஸ்தவமான வார்தையாக இருக்கும்.
அடியேனைப் போன்ற அல்பஜ்ஞர்கள் அதே வார்த்தையைக் சொன்னால், அது புரட்டு அல்லால் வேறு இல்லை.
எல்லாம் நான்தான் என்கிற வார்த்தை “அஹம் பிரஹ்மாஸ்மி” என்பதான அநுபவம்.
“அஹம் அநுரபவம் சூர்யஸ்ச” (பிரஹதாரண்யம்),
” கட்சீவாந் சிரஸ்ய விப்ர:” (ருக்) என்பது அவர் வார்த்தை.
இதில் பிரஹ்ம சப்தம் குறிப்பிடப்படவில்லை யானாலும் , அவனுக்குறிய சின்னங்களைக் கூறினபடியால்,
இது “அஹம் பிரஹ்மாஸ்மி” அநுபவம்.

“நான்” என்கிற வியக்தித்வத்தில், மநுவாக, சூரியனாக இருக்கிற தன்மையும் (தர்மம்) சேருமானால்,
அதற்கு அஹம் பிரஹ்மாஸ்மி போன்ற அநுபவம் என்று சொல்லலாம். அப்போது இரண்டு தர்மமும் சத்யமானதாகவே
சாமான்யாதிகரணத்திலே இருக்க வேண்டும்.
அஹம் என்பது பொய்யானால், பிரஹ்மா “அஸ்மி” என்று சொல்லப்போகாது.

சத்ரி, குண்டலி, வாஸஸ்வி, தேஜஸ்வி தேவதத்த: என்ற வார்த்தை ஏற்புடைத்து.
சத்ரி, குண்டலி, வாஸஸ்வி, ஸ்த்ரீ: தேவதத்த என்பதான வார்த்தை சரிபடாது,
காரணம் பும்ஸ்துவமும், ஸ்த்ரீத்வமும் ஒரே வியக்தியில் இருக்க முடியாது.
சொல்லப்பட்ட 5 தர்மங்களில், தேவதத்தனாக இருக்கிற தர்மத்தோடு, ஸ்த்ரீத்வமாகிற-மித்யாபூதமான ஒரு தர்மம் சேர்ந்தாலும்,
அந்த ஞானம் அயதார்த்த ஞானமாகும்.
அதுபோல, அத்வைத சித்தாந்ததின்படி, அஹமர்த்தம் ஆத்மா இல்லை, அது மித்யா என்றால்-
சத்யமான பிரஹ்ம தத்வத்தோடு/தர்மத்தோடு அசத்யமான ஆத்ம தத்வம்/தர்மம் சேர்வதால் ஏற்படும் ஞானமும் அசத்யமாகும்.
அஹமர்த்தம் ஆத்ம தத்வத்தை சொன்னால் அல்லது “அஹம் பிரஹ்மாஸ்மி” என்கிற அநுபவம் சாத்யமாகாது.

ஆத்ம ஞானம் கை வராதவர்களுக்கு, ஆத்மா = தேகம் (நான்); அஹம் = தேகம்.
ஞானிக்கு , நிஷ்கிருஷ்ட ஆத்மா – தேகம் (இது) ; அஹம் = ஆத்மா.
சமாதி ஸ்திதியில்
ய ஆத்மாநம் அந்தரோ யமயதி, பரமாத்மா (சரீரி) – ஆத்மா (சரீரம்) ; அஹம் = பரமாத்மா.
மூன்றாவது நிலையே “அஹம் பிரஹ்மாஸ்மி” என்கிற அநுபவத்தில் பிரத்யகரத்தம் பரமாத்மநி பர்யவஸாநாத்.
பிரத்யக் = ஸ்வயம் பிரகாஸ்யம். தான் ஒளி விடுவது. தனக்கு ஒளி விடுவது.
பராக் = ஸ்வஸ்மை பிரகாஸ்யம். தான் ஒளி விடுவதோடு, தனக்கும் பிறர்க்குமாய் ஒளி விடுவது.

இந்திரனைத் தவிற இப்படிப்பட்ட அநுபவத்தை, வேத, புராண, சரித்ர காலத்தில், கண்டவர்கள் குறிப்பாக சொல்லப் போனால் :-
வாம தேவர் – “அஹம் அநுரபவம் சூர்யஸ்ச” (பிரஹதாரண்யம்), ” கட்சீவாந் சிரஸ்ய விப்ர:” (ருக்)
பிரஹ்லாதன் – “ஸ ஏவ அஹம், மத்த ஸர்வம், அஹம் ஸர்வம், மயி ஸர்வம்”
நம்மாழ்வார் – கடல் ஞாலம் செய்வேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
அபின்ன நிமித்த, உபாதான, சககாரி காரணம் பிரஹ்மம் என்பதாகச் சொன்னவர்.

இந்த திருஷ்டியில் “மாம் உபாஸ்வ” என்பதான இந்திரனுடைய உபதேசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

——–

இந்த திருஷ்டியில் நம்முடைய சித்தாந்ததுக்கே உயிரான சூத்ரம் இது எனலாம்.

1-1-32 ஜீவ முக்கிய பிராண லிங்காத் ந , இதி சேத் , ந உபாசாத்ரைவித்யாத் ஆஸ்ருதாத் அஸீதத்வாத் இஹதத் யோகாத் ::

ஜீவ பிராண லிங்காத், ந –
இவ்வளவு சொன்னாலும் சமாதானம் ஆகாத பூர்வ பக்ஷம் .
“மாம் உபாஸ்வ” என்று சொன்னதற்கான விளக்கங்கள் சரி,
ஜீவாத்ம லிங்கமான ‘த்ரீசீர்ஷாணம் த்வாஷ்ட ஹநனம்’ என்பதை ஏன் சொல்ல வேண்டும்? என மீண்டும் ஆஷேபம் எழுப்ப,

சிலசமயம் பெருமையான விஷயங்களை தன் பேரிலும், தானே செய்திருந்தாலும் அடாது செய்தன ‘பகவதிச்சை’ என
அவன் பேரில். பழியிடுபவர்கள் உண்டு. அதுபோல இந்திரன் இங்கு பேசியிருப்பனோ? என்பது கேள்வி.
இதிசேத் ந –
அங்கனில்லை.
உபாசநாத் திரைவித்யாது-
பகவத் உபாசனம் மூன்று வகையாக பண்ணலாம்.

1. ஸ்வரூப உபாசனம் –
நேராக பகவானை உபாசிப்பது. ”சத்யம், க்ஞானம், ஆனந்தம் பிரஹ்ம – ஆனந்தம் பிரஹ்மே திவ்ய க்ஞானத் ” இத்யாதி
குணாஸ்ரய ஸ்வரூப அநுசந்தானம் .
ஒவ்வொரு பிரஹ்ம வித்யையிலும் ஒவ்வொரு பகவத் குணத்தை தியான விஷயமாக சொல்லியுள்ளாதால்,
இப்படி எல்லா வித்யைகளையும் ஒருவன் அத்யேனம் பண்ணவேண்டுமா? என்றால் இல்லை.
எல்லா பிரஹ்ம வித்யைக்கும் பகவத் பிராப்தியாகிற பலம் ஒன்றுதானாகையால்,
அவரவர் இச்சை, சக்திக்கு உசிதமான ஒரு பிரஹ்ம வித்யையே போதுமானது, விகல்ப : அவிசிஷ்ட பலத்வாத் .

2. சித் சரீரக உபாசனம் — தன்னதேயான ஜீவாத்மாவுக்கு அந்தர்யாமியாக உபாசனம்.
போக்த்ரு வர்க துவாரா – குறிப்பாக இங்கு சொல்லப்பட்ட இந்திரனுக்கு அந்தர்யாமியாக அநுஸந்தானம்.

3. அசித் சரீரக உபாசனம் — கல்லு, கட்டை போன்ற (பிரகிருதிக்கு) அசித்துக்கு அந்தர்யாமியாக உபாசனம்.
ஆரண்ய ரூபமாக, ஜல ரூபமாக, பிரசாத ரூபமாக,கோவர்தன ரூபமான உபாசா – போக்கிய போபோகோபகரண வர்க துவாரா –
சொல்லப்பட்ட பிராண வாயுவுக்கு அந்தர்யாமியாக அநுஸந்தானம் .

போக்த போக்கியம் பிரேரிதாரம் ச மத்வா |
ஸர்வம் புரோக்தம் த்ரிவிதம் பிரஹ்ம ஏதது ||
என்பதாக நம்முடைய சம்பிரதாயம் போக்தா (சித்து), போக்கியம் (அசித்து), பிரேரிதா (ஈஸ்வரன்) என்கிற தத்வ த்ரய வாதம்.
அவை மூன்று தத்துவங்களாக இருந்தாலும், மற்ற இரண்டும் ”த்ரிவிதம் புரோக்தம்
பிரஹ்ம ” என்று பிரஹ்மத்தினிடத்திலேயே பிரகாரமாக இருப்பன.
சித்தசித் விசிஷ்டம் பிரஹ்ம ஏகமேவ தத்வம் என்கிற ஸ விசேஷ அத்வைதம் நம்முடையது.

ஏக தத்வ வாதிகள் 4 பேர் .
பிரஹ்ம விவர்த்த வாதம் – சங்கரர்.
விஜ்ஞான விவர்த்த வாதம் – யோகாசார பௌத்தன்.
சூன்ய விவிர்த்த வாதம் – மாத்யமிக பௌத்தன்.
சப்த விவர்த்த வாதம் – பர்த்ரு ஹரி

த்வி தத்வ வாதிகள் – சாங்கியர்கள்
பிரகிருதி (Matter) + புருஷன் (Mind)

”ஸது ஏவ சௌம்ய ! இதம் அக்ரே ஆஸீத் ” என்ற வாக்கியத்தில்,
அக்ரே – சிருஷ்டிக்கு முன்னால் , ஸ்திதிக்கு வெகு பின்னால் , மூன்று தத்துவமும் – ஒரு தத்வமேயோ என்று சொல்லாம்பட்டி –
”ஸது” என்ற பெயரோடு இருந்தது.
ஏக மேவ அ-திவிதீயம் – ஸ்வேநாபி ஸ்வ சரீரதயா பிரதத் பிரதிபத் அநர்ஹ ஸூக்ஷ்மதஸா சமம் –
தனக்கும் தன் தன்மை அறியக்கில்லா – நாம ரூப விபாக மற இருக்கிற பிரளய கால ஸ்திதி — விசிஷ்டேன ஏகம் .

ஸ்வரூப உபாஸனம் மட்டுமே போதாதா? மற்ற இரண்டும் எதற்கு? என்றால்
ஸ்வரூப உபாஸனம் கடினமானது. உபாசனம், தியானம் இவை செய்ய முதலில் தரிசன சமானாகார அனுபவம்
( நெஞ்சென்னும் உட்கண்ணால் காணும் உணர்வு ) ஏற்பட வேண்டும். பிறகு தான் அதைக் கொண்டு அவனை ஸ்மரிக்க முடியும்.

பிள்ளை உறங்காவில்லி – தனுர் தாசர் – சரித்திரத்தை இங்கு ஸ்மரிப்பது .
மனைவியின் கண்ணழகுக்கு வாட்டம் வராமல் குடைப்பிடிப்பவரை , பெரிய பெருமாள் கண்ணழகை சேவிக்கப் பண்ணி ,
அவரை நம்பெருமாள் மெய்க்காப்பாளராக , பகவத் ராமானுஜர், மாற்றிய விருத்தாந்தம் போல் ஈடுபாடு ஏற்பட
அர்சா அவதாரம் உகந்ததும், ஸுலபமானதும் ஆகும். இது அசித் சரீரக உபாசனா கோடியிலே சேரும்.

சித் சரீரக துவரா உபாசனமாவது, தம்முடைய ஆத்மாவுக்கு அந்தர்யாமியாக இருக்கிற பிரஹ்மத்தை தியான, யோக முறையில் ஆராதிப்பது.
அல்லது யாக, யக்ஞங்கள் மூலம் செய்யப்படும் அந்தர்யாமி ஆராதனம்.
ஆகாஸாத் பதித்தம் தோயம் யதா கச்சதி ஸாகரம் |
ஸர்வதேவ நமஸ்காரம் கேசவம் பிரதி கச்சதி ||

அதிகாரி பேதேந உபாஸாத் த்ரை வித்யேந. இதற்கு உபநிஷத அங்கீகாரமும் உண்டு என்பதாக பூர்வ பக்ஷத்துக்கு சமாதானம்.

பகுஸ்யாம் பிரஜாயே ஏதி
இதகும் ஸர்வம் அஸ்ருஜ
தத் ஸ்ருஷ்ட்வா ததேவா அநுபிராவிஸது
தது அநுபிரவிஸ்ய தத் ஸச்சா பவது
நிருக்தஞ்ச அநிருக்தஞ்ச
நிலயநஞ்ச அநிலயநஞ்ச
விஜ்ஞானஞ்ச அவிஜ்ஞானஞ்ச
சத்யம்ச அநிருதம்ச சத்யமவபவது
சத்யமும் (நிஜமும்) அநிருத்மும் (பொய்யும்) சேர்ந்து சத்யமாயித்து என்றால் அசத்கல்பமாய் இருந்த சித்து, அசித்து
இரண்டினுள்ளும் அவைகளின் ஸத்தாபிரயுக்தமாக புகுந்து நாம ரூபே வியாகரவாணி என்பதாக ஸிருஷ்டியும்,
அவனுடைய அந்தர்யாமித்வமும் கொண்டு சித்ரூபமான உபாசனமும், அசித் ரூபமான உபாசனமும் ஸ்ருதியை அநுசரித்தே எனலாம்.

இந்திரன் “மாம் உபாஸ்வ” என்றாலும், இந்திர சரீர அந்தர் வர்தியான பரமாத்ம உபாசனமே செய்யத் தக்கது.
ஏதத் உக்தம் பவதி.
இதி பிரதமஸ்ய அத்யாயஸ்ய பிரதம பாத:

இந்திர பிராணா அதிகரணம் -முதல் பாதம் இறுதி அதிகரணம் -தேவதைகளுக்கு அரசன் -இதுவும் பர ப்ரஹ்மத்தை காட்டும் -கௌஷீகித்த உபநிஷத் சாரம் –
தச உபநிஷத்துக்களில் சேராது -இது -ரிக் வேத உபநிஷத் -கௌஷீதக ப்ராஹ்மணோ உபநிஷத் -சம்ஹிதா / ஆரண்யம் /ப்ராஹ்மணோ உபநிஷத் பாகங்கள் –
ப்ரதர்தன அரசன் இந்திரன் வாலப்யம் பெற்று உபாசனத்துக்கு கேட்க சொல்லுவது
ஜிதந்தே ஸ்தோத்ரம் -நித்யபடி திரு நாராயண புரத்தில்-ஜிதந்தே புண்டரீகாக்ஷ -ஆரம்பித்து –ஹிதம் சுரேஷிடம் நமக்கு தெரியாதே
ராவணன் ஹிரண்யகசிபு போலே வரம் ஆல்பமாக பெற்று முடியும் படி ஆகுமே
அஹம் அறியாதவன் -யத் ஹிதம் நீயே அறிவாய் அருளுவாய் என்று முடிக்கும்
மாம் உபாஸ்யம் என்பான் -இந்திரன் -ஹித தமம்-மாம் ஏவ விஜாநீயே-
பரம புருஷ ஏவ இந்திர பிராண இதுக்கும் காரணத்வமே உபாஸ்யத்துக்கு யோக்யம் என்பதால் –
அம்ருதத்வ பிராப்தம் -காரணத்வ வியாப்தம் என்பதால் -இதுவே சங்கதி நான்கு அதிகரணங்களுக்கும்
வித்யை அனுகுணமாக 4 ஸூ த்ரங்கள் இதிலும் -ஆதிகாரிக புருஷர்கள் இந்த்ராதிகள் -100 அஸ்வமேத யாகம் செய்து இந்திர பதவி பெறுவான்
பரிணாம வாதம் -நிரஸனம் த்வதிகள் சொல்லுவர் -தோஷம் -உபாதானம் -நாம் ஸ்வரூப ஸ்வ பாவ பரிணாமம் சொல்லுவோம்
உபாதானம் புரிவது சிரமம் -சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் -நிமித்த காரணம் மட்டும் போதும் என்பர் த்வைதிகள் –
வேதாந்த சாஸ்திரம் விரோதிக்கும் –
வாதிராஜர் -ஹயக்ரீவர் ப்ரத்யக்ஷமாக வந்து பிரசாதம் கொடுத்து -மத்வர் அடுத்த இந்திர பதவி
வாதி ராஜர் வாயு பகவான் ஆவார் -ஆதிகாரிக புருஷர்கள் –
சங்கரர் -32 வருஷம் -782-820 சிலர் சொல்வார் –சிலர் தப்பாக -வித்யாராணர் -எழுதிய சங்கர விஜயம் விவரிக்கும் –
இந்திர சப்தம் ஜீவ விசேஷம் -பூர்வ பக்ஷம் -நானே பிராணன் -சாமா நாதி காரண்யத்தில் இந்திர பிராண —
பிராண இந்திர -பர ப்ரஹ்மம் -இரண்டு சப்தங்களாலும் -ஜீவா அர்த்தாந்தர பூதம் -ஆனந்த -ஸ்வரூபம் -ஞான ஸ்வரூபம் -அம்ருதம் ஜரா மரணம் இல்லாமல்
implied meaning -கங்கா தீரே தேசம் -மாஞ்சா க்ரோசம் போலே விதி வாக்கியங்களில் இவை கூடாதே –
ஆத்ம உபதேசம் சொல்லுவதால் அந்தர்யாமி சொல்லக் கூடாதே பூர்வ பக்ஷம்
ஸ்வரூபேண–சித்த சரியாக -அசித் சரீரி பகவத் உபாசனம் மூன்று வகை உண்டே -சித்தாந்தம் –
மாட்டை கை அடித்தது கைக்கு அதிதேவதை இந்திரனுக்கு பாபம் சேரும் -பூ வைத்த பலன் எனக்கே சொல்ல இந்திரன் வேஷத்தில் வந்து காட்டிய கதை
அத்யாத்ம சம்பந்தம் பூமா -பஹூத்த்வம் என்று -ஆத்மனி ஆதேயத்தயா சம்பந்தம் பரமாத்மா ஏவ –
பரமாத்மா அசாதாரண சம்பந்தம் அத்யந்தமா சம்பந்தம் என்றுமாம் -இத்தையே மாம் உபாஸ்ய -என்கிறார்
இரண்டாவது வர்ணக்கம் இது -ஸ்வர்க்க காமன் ஜோதிஷ்ட யாகம் -பூர்வ மீமாம்சை -விஸ்வஜின் நியாயம் –
பலன் சொல்லாமல் இருந்தால் சுவர்க்கம் பலன் என்பர்
ஹித தர்மம் மனுஷ்யருக்கு மோக்ஷம் தான் பரம புருஷார்த்த லக்ஷணம் தானாகவே இருக்கும் -உத்க்ருஷ்ட ஸ்ரேயஸ்
-இந்திரன் உபாசனையால் இது பெற முடியாதே ஜனார்த்தனன் ஒருவனே மோக்ஷ ப்ரதன்
கர்த்ருத்வம் ஜீவாத்மாவுக்கு இல்லை என்றால் விதி நிஷேத சாஸ்திரங்கள் வியர்த்தமாக போகுமே –
தெய்வ பிரயத்தனம் -புருஷ ஜீவ பிரயத்தனம் -இரண்டும் உண்டே -எல்லாம் பூர்வ நியோயிதம் இல்லையே –
ஸூ ஹ்ருதம் சர்வ பூதானாம் -அவனே
ஏஷ ஸர்வேஷா -அவனுக்கே உள்ள அசாதாரண லக்ஷணங்கள் -இந்திரா பிராண சப்தம் அவனையே குறிக்கும்
சாஸ்த்ரா த்ரஷ்டாயா -வாமதேவர்
அஸ்மத் அஹம் சப்தம் -மாம் -உபாஸ்யம் சொல்லி -அஹம் அர்த்தம் ஜீவாத்மா -அஹம் அர்த்த வி நாசம் புரிந்தால் மோக்ஷம் அத்வைதி
மோக்ஷ கதா பிரஸ்னம் -கந்தம் -சரீர சரீரி பாவத்தால் -அஹம் பரமாத்மாவையும் குறிக்கும் அஹம் ப்ரஹ்மாஸ்மி -ஸம்ப்ரதாயார்த்தம் –

சாஸ்த்ரா த்ருஷ்டாயா -வாமதேவயா –சம்பிரதாய ஸூத்ரம்-வாம தேவர் போலே -மாம் என்று பரமாத்மாவையே இந்திரன்
உபாஸ்யமாக கொள்ள சொல்கிறான் -அஹம் ப்ரஹ்மாஸ்மி
அஹம் ஏவ இதம் சர்வம் –
அவிபாத்தேனா திருஷ்டத்வாத் மேலே -வரும் -அஹம் ப்ரஹ்மாஸ்மி அனுபவம் -அஹத்வமும் இன்றைய நிலையும்-வாஸ்த்வம்
இரண்டும் பொய்யானால் சேராதே -அதனால் அஹம் ப்ரஹ்மாஸ்மி அத்வதாம் பாரமான சுருதி இருக்க முடியாதே
சாத்ரி குண்டலி தேஜஸ்வி தேவ தத்வா –தர்மங்கள் சேர்ந்து -உள்ள வியக்தி-என்றவாறு -ஸ்த்ரீத்வம் சொல்லி -அது மட்டும் பொருந்தாதே
யதார்த்த ஞானம் ஆகாதே ஒரே தப்பு இருந்தாலும் -அஹம் ப்ரஹ்மச்சாரி -கல்யாணம் ஆன பின்பு மாறும் -அஹம் அர்த்தம் ஆத்மா
சாமானாதி கரண்யம் வராதே -மித்யா பூதமான வார்த்தை இல்லை –
ஸ்த்தூலஹம் -தேஹாத்ம அபிமானத்தால் அஹம் உடம்பு என்று பிரமிக்கிறோம்
பரமை யோகி -சமாதி நிலை -இல்லை -ஆத்ம யாதாம்யா ஞானம் வந்த பின்பு -அறிகிறோம்
இது -உடம்பு -இதுக்கு சிரமமாக இருக்கு -சரீரம் ஸூ கம் துக்கம் அனுபவிக்காதே -ஆத்மாவுக்கு ஜுரம் வராதே
இது எனக்கு எப்படி சொன்னாலும் ஞானம் மாறாதே -சரீரம் /ஆத்மா /பரமாத்மா பர்யந்தம் அஹம் அர்த்தம் வருமே
மூன்று நிலைகள் -அந்தர்யாமியாக இருப்பதை அறிந்த பின்பு
அஹம் -பரமாத்மா -ப்ரத்யக் -ஆத்மா ஸ்வயம் பிரகாசம் -அவன் வரை -பர்யவசிக்கும்-
மம சரீரம் என்னுடைய சரீரம் -ஜீவாத்மா சரீரம் வேறாக உணர்ந்து -பரமாத்மா வரை ஞானிகள் உணர்வார்கள் –
வேத காலத்தில் -வாம தேவர் -புராண காலத்தில் -பிரகலாதன் — நம்மாழ்வார் -கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் -போல்வார் –
திருமங்கை ஆழ்வாரும் அர்ச்சையில் அனுகரித்து ஒரு பாசுரம் அருளிச் செய்து உள்ளாரே -சரீர சரிரீ பாவம் -அசாதாரண விசிஷ்டாத்வைத கொள்கை –

அஹம் ப்ரஹ்மாஸ்மி -நம் சித்தாந்தத்துக்கே பொருந்தும் –அஹம் மோடி -அஹம் பிரதான மந்த்ரீத்வம் ஆனார்
இரண்டும் வெவ்வேறே முன்பு -இப்பொழுது ஒன்றாக -அஹத்வமும் பிரதான மந்த்ரீத்வமும் சேர —
அஹம் இல்லை என்பது இல்லையே -அகமும் ப்ரஹ்மமும் ஒன்றும் இல்லை என்பது இல்லையே –
சைத்ரீ குண்டலி வாசவீ தேஜஸ்வீ தேவதத்தா —
அஹம் -மித்யா -ப்ரஹ்மம் சத்யம் -இரண்டும் சேருமோ -அத்வைதி வாதம் தேவ தத்வம் ஸ்த்ரீத்வம் மித்யா போலே அன்றோ
அஸ்மி -வர்த்தமானம் -இதுவும் பெரிய விஷயம் —
அஹம் -தேகமா ஆத்மாவா -ஜீவஸ்ய சரீராதி வியாவ்ருத்தம் அன்றோ -ஞான அவஸ்தையில் அஹம் ஆத்மா –
சரீரம் நோய் -இது படுத்தும் பாடு -என்பார் –ஆத்மாவுக்கு நோய் இல்லையே -இது எனக்கு சொன்னாலும் -ஒன்றே தானே –
மேல் நிலை அந்தர்யாமி அந்தராத்மா ப்ரஹ்மம் உணர்வது -இப்படி மூன்று நிலைகள் -அஹம் -தேகம் /ஆத்மா /ப்ரஹ்மா என்றவாறு –
ப்ரத்யக் பரமாத்மா பர்யவசிக்கும் என்றவாறே –
வாம தேவர் / ப்ரஹ்லாதன் -அனந்தன் -மத்தஸ் சர்வம் -அஹம் சர்வம் மயி சர்வம் / நம்மாழ்வார் -திருமங்கை ஆழ்வார்
உபாசனம் சஹா அஹம் -சோகம் -அத்வைதி சொல்ல –
சோகம் /தாஸோஹம் –/-மீண்டும் -சதா சோகம் –எப்போதும் நானே அவன் //தாஸ தாஸோஹம் —
சாஸ்திர ஸித்தமான உபதேசம் -என்றபடி -/ சரீராத்மா பாவம் -நம் சம்பிரதாயத்தில் அசாதாரண யுக்தி -சர்வம் கல்விதம் ப்ரஹ்ம —

அடித்த சூர்ணிகை –ஜீவ முக்கிய பிராண லிங்காத்–இந்த்ர-ஜீவாத்மா -தன் புகழுக்காக சொன்னானோ -இல்லை
உபாசனம் -உபாஸா-த்ரை வித்யா -மூன்று விதம் -பரமாத்மா உபாசனம் மூன்று விதம் என்றபடி —
ஸ்வரூபேண உபாசனம் / சித் சரீரத்தால் / அசித் அந்தர்யாமி -நீராய் நிலனாய் போலே
கிராமத்தில் வெளியப்ப ஸ்வாமி கோயில்கள் -கல்லையும் மரத்தையும் வணங்குவார்களே –
கோவர்த்தன மலைக்கே-சொன்னதும் அசித் அந்தர்யாமி —
புஷ்கரம் / நைமிசாரண்யம் /பூரி — நீர் ஆரண்யம் பிரசாத ரூபி -மூன்றிலும் உண்டே –
இந்த இரண்டு சூரணைகளும் நம் சம்பிரதாய முக்கிய சூரணைகள் என்பர் –

சர்வகாரணத்வ / போக்த்ரு வர்க்க /-போக உபகரண /-தத்வ த்ரய வாதம் ஒட்டி மூன்று வித உபாசனம்
விஞ்ஞான விவர்த்த வாதம் /சூன்ய வாதம் /–போன்ற ஏக தத்வ
சாங்கியர் பிரகிருதி புருஷன் –mind -mattar -போக்தா போக்யம் ப்ரேரிதா –சர்வம் ப்ரோக்தம் -த்ரிவிதம் ப்ரஹ்மம் –
ச விசேஷ அத்வைதம் -விசிஷ்டா அத்வைதம் –
அக்ரே -பிரளய காலத்தில் –சத் -ஒன்றே -ஸூ ஷ்ம தசையில் –நாம ரூப விபாகம் அநர்ஹம் -/
ஏக மேவ அத்விதீயம் -நிகில காரண பூதஸ்ய
கோடி ஜென்ம –பாபம் கிருஷ்ண ஸ்மாரித்து போகும் -அனுபவம் இருந்தால் தானே ஸ்மரணம்
அனுபவம் தர்சனம் சமானாதிகாரம் -சாஷாத்காரம் மானஸ அனுபவம் –
அர்ச்சா மூர்த்தி -பிள்ளை உறங்கா வல்லி தாசர் -தனுர் தாசர் விருத்தாந்தம் –
நெஞ்சு என்னும் உட் கண்ணால் காணும் உணர்வு -வேண்டுமே -ஜீவ பர யாதாம்யதா ஞானம் பூர்வகமாக சாஷாத் கரித்து –
த்ரிவித அனுசந்தானம் பிரமாணம் உண்டே -சத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம -ஸ்வரூப உபாசனம் /
ஆனந்தோ -திவ்ய உபாசனம் -தத் ஸ்த்ருஷ்ட்வா –தத் அனுபிரவேச -போக்த்ரு சரீர தயா –பஹுஸ்யாம் -பிரஜாயேயா —
ப்ரஹ்ம வித்யை பல குணங்களில் ஒவ் ஒன்றைக் கொண்டே அடையலாம் அது போலே -இம் மூன்றும் -பலம் கொடுக்கும்
பரமாத்மா பிராப்தி அனைத்துக்கும் சமம் –விகல்ப அவிசிஷ்டா பலத்வாத் -மேலே வருமே -பலம் து அவிசிஷ்டம் –
ஜீவ விசேஷண –அசாதாரண –சாமா நாதி கரண்யம் –அந்தராத்மா அனுசந்தானம் இது -நிகமிக்கிறார்–

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— -1-4–8-சமந்வய அத்யாயம்- சர்வ வியாக்யான அதிகரணம்–1-ஸூத்ரம்–ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்-

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்— -1-4—சமந்வய அத்யாயம்- 29–ஸூத்ரங்கள் / 8-அதிகரணங்கள் /
ஐந்தாவது -ஜகத்வாசித்வாதி கரணம் -3-ஸூத்ரங்கள்-/
ஆறாவது – வாக்ய அந்வயாதி கரணம்-ஸூத்ரங்கள் -4 ஸூத்ரங்கள்/
ஏழாவது பிரக்ருத்யதிகரணம்-6 ஸூத்ரங்கள் /
எட்டாவது -சர்வ வியாக்யான அதிகரணம்–1-ஸூத்ரம்-ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்-

—————

1-4-8-சர்வ வியாக்யான அதிகரணம் -ஸ்ரீ மன் நாராயணனே அனைத்தும்-1-ஸூத்ரம்-

1-4-29-ஏதேந சர்வே வ்யாக்யாதா வ்யாக்யாதா

இதன் மூலம் ப்ரஹ்மமே அனைத்துக் காரணமும் என்றும்
ஸ்ரீ மன் நாராயணனே ப்ரஹ்மம் என்றும் படிக்கப் பட்டது –

ஜகத் காரண உபநிஷத் வாக்கியங்கள் அனைத்தும் -எல்லா அதிகரண நியாயங்களாலும் –
ப்ரஹ்மமே அபின்ன நிமித்த உபாதான காரணம் என்று சொல்வதைக் காட்டினோம்
அப்பியாசம் -இரண்டு தடவை -வ்யாக்யாதா-technique-of interpretation–

சர்வ வியாக்யான அதிகரணம்-சம்பூர்ணம்

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -சம்பூர்ணம்

முதல் அத்யாயம் மட்டுமே நிகமனம் ஆனாலும் – ஸ்ரீ பாஷ்யத்தில் கிட்டத்தட்ட பாதி பகுதி பார்த்தோம் —

——————————–——————–——————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— -1-4–7-சமந்வய அத்யாயம்- பிரக்ருத்யதிகரணம்-6 ஸூத்ரங்கள்–ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்-

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்— -1-4—சமந்வய அத்யாயம்- 29–ஸூத்ரங்கள் / 8-அதிகரணங்கள் /
ஐந்தாவது -ஜகத்வாசித்வாதி கரணம் -3-ஸூத்ரங்கள்-/
ஆறாவது – வாக்ய அந்வயாதி கரணம்-ஸூத்ரங்கள் -4 ஸூத்ரங்கள்/
ஏழாவது பிரக்ருத்யதிகரணம்-6 ஸூத்ரங்கள்

———–

1-4-7-பிரக்ருத்யதிகரணம் -ப்ரஹ்மமே உபாதான காரணம் –6 ஸூத்ரங்கள்-

1-4-23-பிரகிருதி ச பிரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் —

ப்ரஹ்மமே உபாதான காரணமாக இருந்தால் மட்டுமே பிரதிஞ்ஞை எனப்படும் உண்மையான வரிகள் பொய்யாகாது
ஸ்வேதாஸ்வதார உபநிஷத்தில் –
அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்-என்று மாயையான பரம் பொருள்
மாயையான பிரகிருதி கொண்டு உலகைப் படைக்கிறான்

பூர்வ பஷி –
இதனால் நிமித்த காரணமும் உபாதான காரணமும் வெவ்வேறே என்பர்
ப்ரஹ்மத்தை உபாதான காரணமாகக் கொண்டால் மாறுதல் அடைய வேண்டி வரும் –
அவிகாராய என்றது பொய்யாகும் என்பர்

சித்தாந்தம்
பிரதிஜ்ஞை -உததமாதே சம்ப்ராஷ்ய யே நாஸ்ருதம் ஸ்ருதம் பவத்யமதம் மதம் அவிஜ்ஞாதம் விஜ்ஞாதம் -என்று
பரம்பொருளைக் குறித்து சொல்லிற்று
எதை ஒன்றைக் கேட்டால் கேட்க்கப் படாதது கேட்க்கப் படுகிறதோ நினைத்தால் நினைக்கப் படாதவை
நினைக்கப் படுகிறதோ அறிந்தால் அறிந்தது ஆகின்றதோ -அதுவே பரம்பொருள்
சாந்தோக்யம் –
திருஷ்டாந்தம் -யதா சோம்ய ஏகேந மருத் பிண்டேந சர்வம் ம்ருண்மயம் விஜ்ஞாதம் ஸ்யாத்
குயவன் என்று மட்டும் கொண்டால் அனைத்தையும் அறிந்தது ஆகாதே
ப்ரஹ்மத்தை உபாதானமாக் கொண்டு ஏற்படும் மாறுதல்கள் அவனது உடலாக உள்ள நமது சரீரத்தில் நிகழ்வதால் அவனுக்கு தோஷம் தட்டாதே
இத்தையே அஸ்மான் மாயீ ஸ்ருஜ்யதே -என்கிறது

உயிரான அதிகரணம் இதுவும்
பிரதி தந்த்ர சித்தாந்தம் –
ப்ரஹ்மமே நிமித்த காரணம் எல்லாரும் ஒத்துக் கொண்டு -மேலே உபாதானம் பற்றிய விசாரம் –
அபின்ன நிமித்த உபாதான காரணம் ப்ரஹ்மமே –
நியாய சாஸ்திரம் சமவாயி என்பர்
பிரகிருதி ச-உபாதான காரணமும் ப்ரஹ்மமே -உம்மைத் தொகை நிமித்த காரணமும் ப்ரஹ்மமே
மூன்று -முக்கிய -24-கிளைகள் உண்டே
உபாதானத்வம்-உபேயதானத்வம் -மண் பானை -தங்கம் வளையல் –
உரம் -கழிவு கொண்டு-sewage- தானியம் -விளைய -பரிணாம வாதம் -ஹேயமான வஸ்துவில் இருந்து –
அ மேத்யம் -யாகத்துக்கு ஆகாதது -உண்ணுவதும் யாகம் –
பிராண அக்னி ஹோத்ரம் -வைஸ்வாரன அக்னிக்கு ஆஹுதி -ப்ராணாயஸ்வாஹா இத்யாதி
பிராயச்சித்தம் பண்ணி உண்ண வில்லையே
ஆரம்பவாதம் -தார்க்கிகள் -காரண -கார்ய –
பரிணாம வாதத்திலும் சாங்க்ய நம் சம்ப்ரதாயம் வாசி உண்டே
சங்காத வாதம் புத்தர்கள் –
மாத்வர்-உபாதானம் ஒத்து கொள்ளாமல் நிமித்த காரணமே ப்ரஹ்மம் என்பர்
சங்கரர் -உபாதேயம் மித்யை -உபாதானம் இருந்தாலும்
மண்ணே சத்யம் -பானை இத்யாதி மித்யை -ஜகாத் மித்யை ப்ரஹ்மம் ஒன்றே சத்யம் –
மித்யா பூதமான வஸ்துவுக்கு காரணம் சொல்ல வேண்டுமா -உபாதான காரணம் வருமா –
அபின்ன நிமித்த உபாதானம் நமக்கு மட்டுமே -இதனாலே –

விஷய வாக்கியம் -சத் வித்யை சாந்தோக்யம் -அருணா -குரு ஸ்வேதகேது சிஷ்யர் பிள்ளை சம்வாதம்
நிரீஸ்வர சாங்க்யர் -சேஸ்வர சாங்க்யர் -இரண்டு விதம் -யோகம் -சேஸ்வர சாங்க்யர் -சாங்க்ய காரிகை -இவர்கள் பிரமாணம்
பிரகிருதி-பிரகர்ஷேன க்ருத்யம் -பிரக்ருதி ஸ்வயமேவ காரணம் -நிரீஸ்வர சாங்க்ய நிரசனம் இது வரை –
இனி சேஸ்வர சாங்க்ய நிரசனம் -26-தத்வம் யோகம் -என்பர் இவர்கள் –
ஸ்ரீ மத் பாகவதம் -மூன்றாவது ஸ்கந்தம் -கபிலர் தேவபூதை சம்வாதம் -உண்டே –
யோகம் தவிர சேஸ்வர சாங்க்யர் உண்டு என்பாரும் உண்டே

ப்ரஹ்ம வஸ்து ஈஷதே பஹுஸ்யாம் பிரஜாயேதி -சங்கல்பித்து -பலவாக கடவேன்-
நிஷ்கலம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்சனம் நிர்விகாரம் –போன்ற சுருதி வாக்கியங்கள் விரோதிக்குமே -பூர்வ பக்ஷம்
கடம் படம் -நிமித்த காரணம் சேதனம் உபாதானம் அசேதன வஸ்து தானே
பிரக்ருதியே உபாதானம் என்றால் சரியாகும்
மாயா -பிரகிருதி என்னும் அசேதனத்தை கொண்டு நிமித்தமாக ப்ரஹ்மம் என்பர் –
நிமித்த உபாதான பேதம் நியமம் உண்டே -லோக சித்தம் -பரமாத்மாவால் அதிஷ்டமான பிரக்ருதியே உபாதானம் என்பர் –
சேஸ்வர சாங்க்யர் பூர்வ பக்ஷம் -சாங்க்ய காரிகையில் ஈஸ்வர நிராகரணமும் ஈஸ்வர பிரஸ்தாபமும் இல்லை

ஈஸ்வர ஜகத் நிமித்த காரணம் இவர்களும் ஒத்துக் கொண்டார்கள்
கிலேசம் கர்மம் விபாகம் இல்லாமல் இருப்பவன் ஈஸ்வரன் -புருஷ விசேஷம் ஈஸ்வரன் என்பர் இவர்
நாம் ஜகத் காரண பூதன் -அனந்த கல்யாண குணாத்மகன் உபய லிங்கத்தவம்-
உபரோதம் -வியாதாக -விருத்தமான வார்த்தைகள் -சொல்லுவது –
ப்ரதிஜ்ஜை அருணர் ஸ்வேதகேதுவுக்கு -ஏக விஞ்ஞானம் சர்வ விஞ்ஞானம் -மூன்று த்ருஷ்டாந்தங்கள் சொல்லி –
நமக்கு ஸ்ருதியே பரம பிரமாணம் -தர்க்கம் -யுக்தி பிரதானம் இல்லை –logic-does-not-have—final -say-
சாஸ்த்ரீக சமைதி கம்யம்-
தங்கம் -வளையல்–உபாதான காரணத்துக்கும் உபாதேயத்துக்கும் -இரண்டுக்கும் அபேதம் -காண்கிறோம் –
ப்ரஹ்மம் அறிந்தால் அனைத்தையும் அறியலாம் என்பது -உபாதானமாக இருந்தால் தான் ப்ரதிஜ்ஜைக்கு ஒத்து வரும் –
பிரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத்-
உபாதானம் -material-cause–அவஸ்தா -மண் -குடம் -பிண்டத்வா அவஸ்தா -கடத்வா அவஸ்தா -லோஷ்டம் அவஸ்தை உடைத்தால் –
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டப்ரஹ்மம் காரண அவஸ்தை -ஸ்தூல சித் அசித் விசிஷ்டப்ரஹ்மம் காரிய அவஸ்தை
ஆகந்துகம் அப்ருதக் சித்த தர்மம் -அவஸ்தைகள் -பரிணாமங்கள் -இரண்டும் வேண்டும் உபாதானத்துக்கு –
ப்ரதிஜ்ஜை த்ருஷ்டாந்தம் யோகம் -இரண்டும் ஒத்து போக வேண்டுமே –

————————————————————————————-

1-4-24-அபித்யோப தேஸாத் ச-

தனது சங்கல்பத்தை ப்ரஹ்மம் –
ததைஷத பஹூஸ்யாம் -சாந்தோக்யம் என்றும்
ஸோ காமயத பஹூஸ்யாம் -தைத்ரியம் -என்றும்
சொல்லுவதால் உபாதான காரணமும் ப்ரஹ்மமே என்று அறியலாம்-

ஆதேசா–என்று ப்ரஹ்மத்தை சொல்லும்
காரணம் -கார்யம் -பாவம் -கரணம் சாதக சமம் -அதிசயிதமான காரணம் கரணம் என்பர் -காரணம் கர்த்தா –
ஆதிஷ்யதே-ப்ரதிஷ்யதே–ஆதேசா -பரமாத்மா -சாதக சாமார்த்யம் –
சர்வஞ்ஞன் சர்வவித் -சமூக ஞானமும் ஒவ் ஒன்றின் ஞானமும் -ஏக விஞ்ஞானம் சர்வ விஞ்ஞானம் –
மண் -தங்கம் -திருஷ்டாந்தம் -ஸத்வித்யா பிரகரணம்
பாதிதமான அர்த்த வாக்கியம் -யானை ஆகாசத்தில் பறக்கிறது – -புலி புல்லை சாப்பிடுகிறது -போல்வன-
த்ருஷ்டாந்தத்தில் மண் குயவன் பானை -தங்கம் தட்டான் மோதிரம் -இங்கு ப்ரஹ்மம் ஒன்றே ஒவ்வாதே-பாதிதமான அர்த்த வாக்கியம் இது என்பர்
ஸர்வதா பொருத்தம் -த்ருஷ்டாந்தத்துக்கும் தார்ஷ்டாந்தத்துக்கும் இருக்க வேண்டாமே -சந்திரன் இவ முகம்-போலே உண்டே
சகல இதர விலக்ஷனான் ப்ரஹ்மம் -த்ருஷ்டாந்தம் கொண்டு விளக்க முடியாதே -சர்வ சக்தன் -சர்வேஸ்வரன் -ஸத்யஸங்கல்பன் –

அபித்யோப தேஸாத் ச-அபித்யா உபதேசாத் ச —இரண்டு பிரமாணங்கள் –
தைத்ரியம் -சாந்தோக்யம் ஸத்வித்யை -அஹம் ஏவ -I-will-transform-myself–into -many-பஹஸ்யாம் பிரஜாயேதி
ததைஷத பஹூஸ்யாம்-ஐஷத-சங்கல்பம் -பூர்வகம் -transformation-
சதேவ –சத் சப்த வாஸ்யம் மட்டுமாகவே இருந்தது
ஏகமேவ -ஒன்றாகவே இருந்தது
அத்விதீயம் -இரண்டாவது இல்லாமல்
தன்னையே தான் மாற்றிக் கொண்டு -அநேகமாக ஆக்கிக் கொண்டு -உபதேசம் –

——————————————————————————————–

1-4-25-சாஷாத் உபயாம்நா நாத் ச

வேத வரிகளும் ப்ரஹ்மமே உபாதான காரணம் என்று சொல்லுகின்றன
யஜூர் வேதம் –
ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வருஷ ஆஸீத் யதோ த்யாவாப்ருதிவீ நிஷ்ட தஷூ
மநீஷிணோ மநஸா விப்ரவீமி வோ ப்ரஹ்மாத் யதிஷ்டத் புவ நாதி தாரயன்-என்று
காடு போலே ஆதாரமாக உள்ளவனும் ப்ரஹ்மமே –
உபாதான காரணமாக இருக்கும் மரமும் ப்ரஹ்மமே
நிமித்த காரணமும் ப்ரஹ்மமே -என்றதாயிற்று-

சாஷாத் உபயாம்நா நாத் ச–சாஷாத்தாக உபய ஆம்நாநாத் -வேதமே சொல்லுமே –
வேதம் ஆம்னாயம் -பர்யாய சப்தங்கள்
வனம் த்ருஷ்டாந்தம் -வ்ருக்ஷங்களும் வனமாக இருப்பதும் ப்ரஹ்மமே –

—————————————————————————————–

1-4-26-ஆத்ம க்ருதே

தன்னைத் தானே படைத்துக் கொண்டதாலும் உபாதான காரணமும் ப்ரஹ்மமே
தைத்ரியம் –
ஸோ காமயத பஹூஸ்யாம் -என்றும்
ததாத்மானம் ஸ்வயமக்ருத-என்றும் கூறப்பட்டது
உலகில் உள்ளவற்றை தனது உடலாகக் கொண்டு-அவற்றை படைக்கும் கர்த்தாவாகவும்
தன்னால் படைக்கப் பட்ட தானே உருவாக்கப் பொருளாகவும் ப்ரஹ்மம் உள்ளது
இத்தாலும் உபாதான காரணமும் ப்ரஹ்மமே -என்னலாம்-

ஆத்ம க்ருதே–தன்னையே தானே மாற்றிக் கொள்கிறான் -ஸ்ருஷ்டும் இச்சா -முமுஷு இச்சை போலவே –
தாதுவுக்கு அநேக விருத்திகள் -பஞ்ச விருத்தி சமஸ்க்ருதம் –
கர்த்தா -கர்மம் -ராமன் பழத்தை சாப்பிடுகிறான் -கிரியா பதம் -கர்த்ரு பதம்-பாணினி விளக்கம் –
ஆத்மாநாம் ஸ்வயம் க்ருத -ஒரே பதம் கர்த்தாவுக்கும் –
தன்னைத் தான் பரிணாமம் உண்டு பண்ணும் படிப் பண்ணிக் கொண்டது –
தனக்காகவே தன்னுள்ளே -பண்ணிக் கொண்டதே -புரிவது ஞானிகளுக்கு மட்டும் –
விலக்ஷணம் -தானே த்ரிவித காரணம் மட்டும் அல்ல காரியமும் தானே –

————————————————————————————

1-4-27-பரிணாமாத்–

பரிணாமத்தைக் கூறுவதால் ப்ரஹ்மம் குறையற்றது
ப்ருஹத் உபநிஷத்தில் –
தத் ஹ இதம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் தத் நாம ரூபாப்யாம் வ்யாக்ரியத
ஸூஷ்ம விசிஷ்ட ப்ரஹ்மம் –ஸ்தூல விசிஷ்ட ப்ரஹ்மம் -எப்பொழுதும் அந்தர்யாமியாக ப்ரஹ்மம் உள்ளது
தோஷங்கள் தட்டாது-

பரிணாம வாதம் -transformation- பால் தயிராக மாறுவது –ஆதஞ்சனம்-காய்ச்சி -உறை குத்தி –த்ருஷ்டாந்தம் –
நாம ரூப விபாகம் –
உபாதான காரண வஸ்து தானே பரிணாமம் அடையும் –
அவாப்த ஸமஸ்த காமன் -லீலா கார்யம் -சங்கல்பம் -நிரங்குச ஐஸ்வர்யம் -தோஷ ரஹிதம் –
பரிணாமம் என்றாலே தோஷ பூயிஷ்டம் -புத்தர் வாதம் -பால் தயிர் -கெட்ட வாசனை நாள் செல்ல செல்ல –
தோஷத்துக்கு ஆஸ்பதம் ஆகும் -அநித்யமாகும் -துஷ்டமாகும் -தர்மம் மாறி வஸ்து விகாரம் –

அகிலஹேய ப்ரத்ய நீகம் -கல்யாணை குண ஏக -உபய லிங்கம் -தோஷம் தட்டாத அமலன் –
ஸூவ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் -சர்வஞ்ஞன் சத்ய சங்கல்பம் அவாப்த ஸமஸ்த காமன் அனவதிக அதிசய ஆனந்த மயன்
சரீர பூத பிரபஞ்சம் –தமஸ்-மூலமாக வைத்து பரிணாமம் -black-hole-இந்த தமஸ் -பூர்வவத் -ஸ்ருஷ்ட்டி -ஆத்மாநம் பரிணாமம்

வைசேஷிகம் நியாயம்–இவை இரண்டும் தர்க்க சாஸ்திரம்
சாங்க்யம் யோகம் -இவை இரண்டும்
பூர்வ உத்தர மீமாம்சிகர் -இவை இரண்டும் ஆஸ்திக புற மதங்கள்
அதாதோ ப்ரஹ்ம ஞிஞ்ஞாச்சா –ஈஸ்வர-ஆத்ம பகவத் நாராயண சப்தம் இல்லாமல் ப்ரஹ்ம சப்தம் –
அமர நிர்ஜரா தேவர் பர்யாய சப்தங்கள் –

புருஷ -பூர்ஷ-சேத்- சரீரத்துக்குள் அந்தராத்மா -ப்ரஹ்மம் என்றவாறு -புருஷோத்தம -லௌகிக புருஷர்களின் வியாவிருத்தம்
புருஷோத்தம உத்தமன் -ஸ்ரீ மத் பாகவதம்-
பும்ஸத்வம் அவன் ஒருவனுக்கே -ஜீவாத்மா அனைவரும் சேஷ புத்தர் ஸ்த்ரீத்வம் -மணி வல்லிப் பேச்சு வந்தேறி இல்லை –
ஆத்மா ஞானமயம் என்பதையே கொண்டு நியாய சாஸ்திரம் த்விதம் ஜீவாத்மா பரமாத்மா -நம்மது தத்வ த்ரய வாதம் –
சாங்க்யம் யோகம் வேத பாஞ்சராத்ரம் பாசுபதம் ஐந்தும் ஆத்ம பிரமாணங்கள்
சில அம்சங்களே க்ராஹ்யம் இல்லை
அனுக்தம்-யுக்தம் -சிலவும் உண்டே இவற்றில் –
பேதம் ஆமுக்தே ரேவ பாஞ்சராத்ரம் சொல்லும் -ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் முத்தி அடையும் வரையில் தான் பேதம் –
முக்த தசையில் பேதம் போகும் – பேத ஹேது இல்லாததால்
பர்வத பரமாணு வாசி பிரகிருதி ஸ்வரூபம் ஜீவ ஸ்வரூபம் பரமாத்மா ஸ்வரூபம் -போக்தா போக்யம் பிரேரிதா-
பரிணாம விவரணம் -சிருஷ்ட்டி பிரகிரியை விவரிக்கிறார் ஸ்ரீ பாஷ்யத்தில் -கர்ம நிபந்தம் சரீரம் –
ஷட்பாவ விகாரங்கள் -சரீரத்துக்கு தான்-அநித்தியம் –நிரங்குச ஐஸ்வர்யம் –
ப்ரஹ்மத்துக்கு-இந்த வ்யாப்த கத தோஷம் விகாரம் தட்டாதே

அவயவி அவயவ பாவ விசாரங்கள்
பரிணாம வாதம் -கார்ய காரண பாவம் -ஆரம்ப வாதம் தார்க்கிகள் -சங்காத வாதம் புத்தர்கள் -கேவல யுக்திகளை வைத்து –
ஸத்கார்ய வாதம் -அஸத்கார்ய வாதம் –
ஸ்ருஷ்ட்டி -ஸ்திதி -ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் – ஸ்தூல சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம்-
ஸூஷ்மத்வம்- நாம ரூப விபாக அனர்ஹத்வம் -ரூபம் -ஸ்வரூபம் -form-நாமம் –
எழுத்துக்களின் சேர்க்கை -ஆனுபூர்வி -முயல் கொம்பு இல்லை நாஸ்தி -முயல் அறிவோம் -கொம்பு அறிவோம் –
முயல் கொம்பு இல்லையே -முயலுக்கு கொம்பு இல்லை என்பதே முயல் கொம்பு இல்லை என்பது –
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் -undivided–whole-முன்பு ப்ரஹ்மம்
இவை அவனில் அடங்கி உள்ளவை – விபாகம் இல்லை -சர்வஞ்ஞனான ப்ரஹ்மமும் அறியாதபடி —
அஞ்ஞானம் இல்லையே முயல் கொம்பு இல்லை என்று அறிவதே ஞானம் –
தஸ்மாத் விபாக அனர்ஹாத் ஏகி பூதம் அத்யந்த ஸூஷ்மம் –

தைத்ரியம் பர ப்ரஹ்மம் தபஸ்ஸை பண்ணி -ஸ்ருஷ்ட்வா அநு பிரவேசித்து –
தபஸ் சப்தம் ஞானம் வருவதற்கு இல்லையே சர்வஞ்ஞனனுக்கு -யதா பூர்வம் ஸ்ருஷ்டிக்க -நாநா ரூபம் –
நரத்வம் ஸிம்ஹத்வம் கோத்வம் ஜாதி -நிறைய தர்மங்கள் இருப்பதால் -நரசிம்ஹத்வம் ஜாதியா -தர்க்க சாஸ்திரம் கேள்வி –
ஜாதி தான் -யுகம் தோறும்-கல்பங்கள் தோறும் உண்டே –
அசத் கல்பம் -லீல உபகரணங்கள் -சரீரதயா–தேவாதி -தத் யச்சா பவதி -யதா பூத -ஆத்மபூத -தயாவான் –
ருதம் சத்யம் – அசத்தியம் அருதம் -சேதன அசேதனங்கள் -ப்ரஹ்மா மூலம் வந்தவற்றுக்கு எப்படி தோஷம் -கேள்விகள் வருமே –
சப்த மூலத்வாத் -சுருதிகள் படியே -எதற்க்காக ஸ்ருஷ்ட்டி -லோகவத் லீலாவத்-அவாப்த ஸமஸ்த காமனுக்கு
என்ன பிரயோஜனம் இருக்க முடியும் இதனால் -ஸ்வயம் பிரயோஜனம் வியாபாரம் லீலா -க்ரீடைக்காகவே -குழந்தை விளையாட்டு போலே –

அநு பிரவேசம் ஏழு வித பிரவேசம் -தேவதத்தன் கிருஹத்துக்குள் போவது போல இல்லை –
குடத்துக்குள் ஜலம் போவது போலே -இப்படி விசாரம் சங்கரர் பாஷ்யத்தில் -அந்தர்யாமித்வம் -subtle-issue-
ஏகத்துவம் நாநாத்வம்-அறிந்து கொள்வது துர்லபம் -தர்க்க பாதம் மேலே பல கேள்விகளும் பதிலும் உண்டே –
தோஷ பூயமானவை எவ்வாறு பரமாத்மா இடம் வந்தவற்றுக்கு வரும்
இங்கும் ஸ்ரீ பாஷ்யத்தில் கொஞ்சம் காட்டி அருளுகிறார் –

———————————————————————————-

1-4-28-யோநிஸ் ஸ கீயதே ஹி-

ப்ரஹ்மத்தை யோநியாகவும் கூறுவதாலும் அவனே உபாதான காரணமாவான்
முண்டக உபநிஷத் –
யத் பூத யோநிம் பரிபஸ்யந்தி தீரா -ஞானம் உடையவர்கள் பூதங்களின் யோனியாக காண்கின்றார்களோ -என்றும்
கர்த்தாரமீசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் -படைப்பவனும் புருஷனும் யோநியும் ஆக உள்ள ப்ரஹ்மம் -என்றும்
யதோர்ணநாபி ஸ்ருஜதே கிருஷ்ண தேச
யதா ப்ருதிவ்யாமொஷதய சம்பவந்தி
யதா சத புருஷாத் கேசலோ மாநி ததா ஷராத் சம்பவதீஹ விச்வம் -என்று
சிலந்தி நூலை தன்னுள்ளே இழுத்துக் கொள்வது போலேயும் -பயிர்கள் பூமியில் இருந்து தோன்றுவது போலேயும் –
பரம் பொருளின் இடத்தில் இருந்து உலகம் தோன்றுகிறது-

கர்த்தா என்கிற பதம் நிமித்த காரணத்தையும்
யோநி என்கிற பதம் உபாதான காரணத்தையும் குறிக்கும்-

கர்த்தாரமீசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம்-அவனே கர்த்தா -யோநி -புருஷன் -ப்ரஹ்மாதிகளுக்கும் காரணம்
யதோர்ணநாபி ஸ்ருஜதே கிருஷ்ண தேச-spaider-த்ருஷ்டாந்தம் –
யதா ப்ருதிவ்யாமொஷதய சம்பவந்தி–பூமியில் இருந்து ஓஷதிகள் வருமா போலே
சாந்தோக்யம் -குரு சிஷ்ய சம்வாதம் -ஆலமரம் -வித்து -உடைத்து -பார்த்து -பெரிய ஆலமரம் -பீஜம் -root–cause-
பகவத் சங்கல்பத்தால் தானே -sprout-வரும் -திவ்யமான விஷயம் இதிலே பார்க்கலாம்
அக்ஷரம் -ப்ரஹ்மம் -தானே யோநி -கர்த்தா –
பூத யோநி -எல்லாவற்றுக்கும் உபாதான காரணமும் ப்ரஹ்மமே –
நிமித்த காரணம் அனைவரும் விவாதம் இல்லாமல் ஒத்துக் கொண்டார்களே

பிரக்ருத் யதிகரணம் சம்பூர்ணம்

——————————————————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— -1-4–6-சமந்வய அத்யாயம்- வாக்ய அந்வயாதி கரணம்-ஸூத்ரங்கள் -4 ஸூத்ரங்கள்–ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்-

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்— -1-4—சமந்வய அத்யாயம்- 29–ஸூத்ரங்கள் / 8-அதிகரணங்கள் /
ஐந்தாவது -ஜகத்வாசித்வாதி கரணம் -3-ஸூத்ரங்கள்-/
ஆறாவது – வாக்ய அந்வயாதி கரணம்-ஸூத்ரங்கள் -4 ஸூத்ரங்கள்/
ஏழாவது பிரக்ருத்யதிகரணம்-6 ஸூத்ரங்கள் /
எட்டாவது -சர்வ வியாக்யான அதிகரணம்–1-ஸூத்ரம்-ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்-

———-

ஆறாவது வாக்ய அந்வயாதி கரணம்-ஸூத்ரங்கள் -4 ஸூத்ரங்கள்

1-4-6-வாக்ய அந்வயாதி கரணம் -காணப்படுபவன் ப்ரஹ்மமே –

1-4-19-வாக்ய அந்வயாத்

ப்ருஹத் ஆரண்யாகாவில்-6-5-
நவா அரே பத்யு காமாய பதி ப்ரியோ பவதி ஆத்ம நஸ்து காமாய பதி ப்ரியோ பவதி -என்றும்
ஆத்மா வரே அரே த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசி தவய -மைத்ரேயி ஆத்ம நி கல்வரே த்ருஷ்டே
ஸ்ருதே மதே விஞ்ஜாதே இதம் சர்வம் விதிதம் -என்றும்
அனைத்தும் அறிந்தவை ஆகும் –
இதம் சர்வம் யதயமாத்மா -இந்த ஆத்மாவே அனைத்தும் என்பதால் பரமாத்மா என்று உணர்ந்தால் மட்டுமே பொருந்தும்-

வேதாந்த சாரமான அதிகரணம் இது
மைத்ரேய ப்ராஹ்மணம் -நித்ய வாழ்வுக்கு உபயோகமான பலவும் உண்டே –
அஸ்வமேதம் கர்மம் பற்றி இருப்பதால் -மூன்றாவது அத்தியாயத்தை முதல் அத்யாயம் சேர்த்து அத்வைதி –
ஆகவே இந்த விஷய வாக்கியம் அவர்களுக்கு நான்காவது அத்யாயம் -நமக்கு ஆறாவது அத்யாயம் – –
யாஜ்ஜ்வக்யர் -காத்யாயினி மைத்ரேயி இருவரும் பத்தினிகள் -செல்வம் பிரித்துக் கொடுத்து சன்யாசம் போக யத்னிக்க –
க்ரஹஸ்த ஆஸ்ரமம் தாண்டிப் போக -அந்த கர்மங்களை முடித்து -வான ப்ரஸ்ன ஆஸ்ரம கர்மங்களையும் முடித்து சன்யாசம்
ரிஷிகள் யாருமே சந்யாசிகள் இல்லை -தப்பாக லௌகிக வேஷம் போடுகிறார்கள் –
மைத்ரேயி -அமிர்தத்வம் -மோக்ஷம் கிடைக்குமா -யதைவ உபகரணம் -போக சாதனங்கள் -கொண்டு அத்தைப் பெற முடியாதே –
இந்த ஐஸ்வர்யம் கொண்டு நான் என்ன பண்ணுவேன் -அமிர்தத்வம் பெறுவதை சொல்லும்
பிரியையாய் இருப்பதால் அனுகம்பயா-வா -உட்கார் -சொல்லி உபதேசம் -வேறே விஷயம் இல்லாமல் கவனமாக கேள்
அடுத்தது விஷய வாக்கியம்
நவா அரே பத்யு காமாய பதி ப்ரியோ பவதி ஆத்ம நஸ்து காமாய பதி ப்ரியோ பவதி-இப்படி ஒவ் ஒன்றுக்கும் சொல்லி
பத்து விஷயங்களை சொல்லி
ஆத்மா வரே அரே த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசி தவய -மைத்ரேயி ஆத்ம நி கல்வரே த்ருஷ்டே
ஸ்ருதே மதே விஞ்ஜாதே இதம் சர்வம் விதிதம்
ஆத்மா என்று இதில் -சாஷாத்காரம் -அடைய ஸ்வரூபம் பற்றி கேட்டு மனனம் பண்ணி இடைவிடாத த்யானம் -அநு சிந்தனம் பண்ணி

பதி பத்னி இச்சாதீனம் இல்லை -ஆத்ம நஸ்து காமாய–ஆத்மாவுக்கு இஷ்டம் சங்கல்பம் -அடியாகவே –
இதே போலவே -புத்திரர் விஷயத்திலும்-ஐஸ்வர்யம் விஷயத்திலும் -irresponsiblity -ப்ரஹ்மண தேவதா விஷயத்திலும் —
புகழ்ச்சியிலும் -க்யாதி-fame- லாப- பூஜா விஷயத்திலும் -லோகா ப்ரீதி விஷயத்திலும் –
இப்படி ஒன்றுக்கு மேல் ஒன்றாக சொல்லிக் கொண்டு போய்
அதி தைவம் அதி பூதம் -சர்வமும் இப்படியே –
ஆத்மாவின் சங்கல்பம் -அத்தை சாஷாத்காரம் பண்ண-சொல்லிக் கொடுத்து
ஆத்ம ஞானம் -சுருதி வாக்யங்களைக் கேட்டு ஆலோசனை பண்ணி த்யானம் -விவித ஞானம் விஞ்ஞானம் –
மேலும் –இதம் சர்வம் யதயமாத்மா-வரை -சர்வம் ப்ரஹ்மம் -ஞானம் வருமே இந்த ஸ்வரங்களைக் கேட்டாலேயே-
ஆத்ம தர்சனமே கிட்டும் –
இத்தை அறிந்தவன் வேறே எங்கும் போக மாட்டான் -அறியாதவன் எவ்வளவு வேறே அறிந்தாலும் அறியாதவன் ஆகிறான்
கண்டவன் வேறே எதையும் காண மாட்டான்
கேட்டவன் வேறே எதையும் கேட்க மாட்டான்
த்வைதம் -இருவர் இருந்தால் தான் ஒருவர் ஒருவரை பார்க்கலாம் அறியலாம்
ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ பாஷ்ய வியாக்கியானங்களைக் கொண்டு ஸ்ரீ ராகவாச்சார்யார் தொகுத்து -35-வருஷங்களுக்கு
முன்பு அருளிச் செய்துள்ளார் –
அனைத்தும் பகவத் சங்கல்ப அதீனமே என்றதாயிற்று –

தர்சனத்தால் -ஸ்ரவணத்தால் மனனத்தால் விஞ்ஞானம் –

சர்வேஸ்வரன் சர்வஞ்ஞன் ஸத்யஸங்கல்பனையே குறிக்கும் –
பூர்வ பஷி -தந்த்ர சித்த புருஷன் -பிரகிருதி -இரண்டையும் -கபில நிரீஸ்வர வாதம் –
mind-matter-/ ஞான யோக நிஷ்டையால் பிரகிருதி புருஷ விபாகம் அறிந்து –கர்த்ருத்வம் போக்த்ருத்வம் விலகி
பந்தம் நீங்கி மோக்ஷம் -சாங்க்ய காரிகை -realaisation-ஒன்றே வேணும் என்பர்
ஜீவன் முக்தன் -இரண்டும் ஒன்றாக முடியாதே -மலடியின் புத்ரன் போலே –
சரீரம் இருந்தால் தான் ஜீவன் -இல்லை என்றால் முக்தன்
inertia-ஞானம் வந்த பின்பும் தொடரலாம் -ப்ரவ்ருத்தி சம்பந்தம் அறுத்து -முக்தன் –
முதலிலும் நடுவிலும் இறுதியிலும் ஜீவாத்மாவே என்பர் பூர்வ பஷி –
ஜீவாத்மா தான் கர்ம வஸ்யன்-
விஞ்ஞான கன–ஞானமயன் -ஆத்மாவையே குறிக்கும் -crystal-form–of-விஞ்ஞானம் –
பூதம் வேறே பவ்திகம் வேறே பூத ஸூஷ்மம் -பூதங்களால் ஆக்கப்பட்டவை இவை –ஸூஷ்ம பூதம் அறிவது ஸ்ரமம்
சித்ர குப்தன் -குப்த சித்திரம் -record-of-karmas-
பிருத்வி -பல ஆகாரங்கள் -நீர் -ஆகாரம் அற்று பாத்திரம் வடிவில் -அதுக்கு மேலே தேஜஸ் –தணலால் தேஜஸ்ஸின் ஆதாரம் –
வாயு ஆகாசம் இவற்றை விட ஸூஷ்மம்
பஞ்ச பூதங்களையே அறியாமல் -இருக்க ஆத்மஞானம் பெறுவது ஸ்ரமம் தானே
தந்த்ர சித்த புருஷனே சொல்லப்படுகிறது இங்கே பூர்வ பக்ஷம் –

ஆனால் அமிருதத்துக்கு காரணம் -மோக்ஷம் எதனால் -ஜீவாத்மஞானம் ப்ரஹ்ம ஞானத்துக்கு அங்கம் தானே –
ப்ரஹ்மம் அறிந்து தானே மோக்ஷம் –
மைத்ரேயா கேட்டது முதலில் மோக்ஷம் எதனால் -ஆகவே இது ஒவ்வாது

இதுக்கு பூர்வ பஷி -வாதம் -பிரகிருதி சம்பந்தம் அற்றவன் -சுத்தனான ஜீவாத்ம ஞானம் பெற்றதும் -ஸ்வரூபம் அறிந்ததும் –
முக்தனாக யோக்யதை அடைகிறான் என்கிறது இது என்பர் –
ஜகத்துக்கு ஜீவ அதிஷ்டானமான பிரகிருதி தான் உபாதானம் -என்பர் பூர்வ பஷி-புருஷன் என்றது ஜீவனையே சொல்லும் –

நிதித்யாஸ தவ்ய –try-to-meditate-இதுக்கு மட்டும் -யத்னிக்கவே வேண்டியது -கீழே கேட்கவும் மனனம் பண்ணவும் இப்படி இல்லையே
ஞானம் வேறே விஞ்ஞானம் வேறே -சாருவாகர்-ஆத்மா பிரக்ருதியில் இருந்து வந்து அதிலே லயிக்கிறான் -என்பர் –

வாக்ய அன்வயம் -ஆத்மா -பர ப்ரஹ்மத்தையே குறிக்கும் -விசேஷணங்கள் இவனுக்கே பொருந்தும் -அப்பொழுது தான் எல்லாம் சமஞ்சஸா பவதி –
சர்வேஸ்வரன் -அம்ருதத்வம் -ப்ராப்ய உபாயம் -பரமாத்மா ஏவ -ஸூவ வியதிரிக்தங்களில் அநாதாரம் காட்டி மைத்ரேயீ-
தர்சனம் -சாஷாத்காரம் -ப்ரத்யக்ஷம் -பர்யாய சப்தங்கள் –
ஸ்வேதர- தமேவ அதி மிருத்யு -தாண்டி -தமேவ வித்வான் அம்ருதம் பவதி -புருஷ ஸூக்தம்
பரம புருஷ விபூதி -ஜீவாத்ம யாதாம்ய ஞானமும் இதுக்கு அங்கமாக வேண்டும் –
அர்த்த பஞ்சக ஞானமும் வேண்டுமே -அபவர்க்கம் மோக்ஷ சாதனமான பரம புருஷன் அறிய இவை வேண்டுமே

சிந்தவ் பிந்து –drop -in–ocean-காஞ்சி ஸ்வாமி காசியில் உபன்யாசம் —
பிந்தவ் சிந்து -பிரணவத்துக்குள் கடல் -மஹா உபாத்தியாயர் விருத்தி கொடுத்தார்கள்
அநந்தா வேதா -இதற்குள்ளே அடங்கும் –
பர ப்ரஹ்மத்துடைய -உச்வாசம் நிச்வாஸம் -வேதம் -திவ்ய மங்கள விக்ரகத்தில் இருந்து ஆவிர்பாவம்
ஹிரண்ய மயம் கேசம் –சர்வ ஏவ ஸ்வர்ணயம் -கமநீய திவ்ய மங்கள விக்ரஹம்
இந்த விசேஷணங்கள் பரமாத்மாவுக்கே அன்வயம் -ஜகத் வியாபாரங்கள் இவனுக்கே அன்வயம்
ஏக விஞ்ஞானம் சர்வ விஞ்ஞானம் இவனுக்கே பொருந்தும் -ஜீவாத்மா என்றால் பொருந்தாது –
பகவத் சங்கல்பமே அனைத்துக்கும் காரணம் -boss-is-always-right–கர்ம பரவசன் அல்லவே –
சர்வ நிரங்குச ஸூதந்த்ரன் -புண்ய பாபங்களும் அவனது ப்ரீதியும் அப்ரீதியுமே –
சர்வ நியாந்தா -ஒவ் ஒருவருக்குள்ளும் உள்ளே புகுந்து நியமிக்கிறார் -சர்வ ஸ்வாமியாக இருந்தாலும் –
அனந்த கோடி ஜீவாத்மாக்கள் இருந்தாலும் ஒவ் ஒருவருக்கும் உள்ளே இருந்து நியமித்து தனது நிரதிசய ஆனந்தம் கொடுக்கிறான் –
கர்ம அனுகுணமாக பிரதி நியதி தேச கால ஸ்வரூப பரிமாணம் ஒவ் ஒருவருக்கும் அளிக்கிறான் –
வித்யை கர்மம் பூர்வ பிரகிரியை அடிப்படையாக பகவத் நியமனம் —

பதி பத்னி புத்ர ஐஸ்வர்யாதிகள் பல விஷயங்களை கீழே சொல்லி இவை எவ்வாறு பரமாத்மாவுக்கு பொருந்தும்
என்பதை அடுத்த ஸூத்ரம் விளக்கும் ஆப்த வசனத்தால் –
ஜீவ சப்தங்கள் பரமாத்மாவையே சொல்லும் என்பதை மூன்று ரிஷிகளின் ஆப்த வசனம் காட்டும் –

————————————————————————————-

1-4-20-பிரதிஜ்ஞா சித்தே லிங்கம் ஆஸ்மரத்ய-

ஆஸ்மரத்யர் என்பவர் இதம் சர்வம் விதிதம் -ஒன்றை அறிந்தால் அதனைச் சார்ந்த அனைத்தையும் அறிந்தது போலே
ஆகும் என்பதால் பரமாத்மாவே என்கிறார்

ஜீவ சப்தம் -பிராண தாரணம் -ஜீவித்து இருப்பது என்றாலே பிராணனை தரித்து இருப்பவன் தானே
தாது பிரத்யயம் கொண்டே அர்த்தங்கள் –
கரோதி காரயதி-செய்பவன் செய்விப்பவன் -பிராணன் தரிக்கப் பண்ணும் என்று கொண்டாலே பரமாத்மாவையே சொல்லும் –
ஆத்ம சப்தம் பரமாத்மாவேயையே முக்கிய விருத்தமாக அர்த்தமாக கொள்ளும்
ஸ்வாமித்வம் -சேஷித்வம் ஆத்மத்வம்-அவனுக்கு -தாஸஸத்வம் சேஷத்வ சரீரத்வம் ஜீவனுக்கு –
பகவத் சங்கல்பம் இல்லாமல் ஒன்றுமே இல்லையே
ஜீவ உத்பத்தியும் லயமும் அவன் இடமே
ஏக விஞ்ஞானம் சர்வ விஞ்ஞானம் முன்பே பல இடங்களில் பார்த்தோம் –
உபாதானம் பரமாத்மாவே அனைத்தைக்கும் -ஆகவே உத்பத்திக்கும் அவனே காரணம் -உபாதான உபாதேய பாவம் –
ஒரே சப்தத்தால் இரண்டையும் சொல்லலாமே -இதம் ஜகத் ப்ரஹ்மம் -ஜகத்துக்கும் ப்ரஹ்மமும் இதே சம்பந்தம்

பிரதிஜ்ஞா சித்தே லிங்கம் ஆஸ்மரத்ய–பரமாத்மாவின் இடம் இருந்து உத்பத்தியே ஜீவாத்மா -என்றவாறு
காரண கார்ய சம்பந்தம் -உண்டே -ஏகத்வம் ஸ்ருஷ்டிக்கு முன்னால்-உத்பத்தியும் லயமும் -ஸ்பஷ்டமாக சுருதிகள் சொல்லுமே –
ஆகவே ஜீவ சப்தத்தால் பரமாத்மாவையே குறிக்கும் –
ஆஸ்மரத்ய-ரிஷி -நித்யர்களுக்குள் நித்யர் பரமாத்மா -ஜீவர்களும் நித்யர் -விநாசமே இல்லையே -உத்பத்தி எப்படி –
நித்யோ நித்யானாம் சேதன அசேதனாம் -ஸ்ரீ கீதை –

———————————————————————————–

1-4-21-உத்க்ரமிஷ்யத ஏவம் பாவாத் இதி ஔடுலொமி

ந ஜாயதே ம்ரியதே -கட உபநிஷத் -கர்ம வினைகளால் தோன்றி மறைகின்றான் –
தனது உருவம் மட்டும் மாறும் மண் குடம் போலே அன்றி ப்ரஹ்மத்துடன் ஒன்றி விடுகிறான்
இந்த ஔடுலொமி கருத்து படியே -சாந்தோக்யம் –

ஏஷ சம்ப்ரசாத அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரஞ்ஜ்யோதி ரூப
சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே -என்றும்
முண்டக உபநிஷத்தில்
யதா நத்ய ச்யந்தமாநா சமுத்ரே அஸ்தம் கச்சந்தி நாம ரூபே விகாயா
ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த பராத் பரம் புருஷம் உபைதி திவ்யம் -என்று
ஜீவன் முக்தி அடையும் பொழுது ப்ரஹ்மமாகவே மாறுகின்றான் என்பதை உணர்த்தும்-

ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி –
ஆமுக்த மோக்ஷம் அடையும் -வரையில் தான் பேதம் -முக்த அவஸ்தையில் பேதம் இல்லை –
பேத ஹேது இல்லையே -பாஞ்சராத்ரம் –
நதிகள் கடலில் கலந்த பின்பு வேறு பாடு இல்லையே -நாம ரூபங்கள் இழந்து லயம்
எனவே ஜீவ சப்தங்கள் பரமாத்மாவையே குறிக்கும் -பானை மண் -போலே கார்ய காரண பாவத்தை சொன்னபடி –

—————————————————————————————

1-4-22-அவஸ்திதே–இதி காசக்ருத்சன

ஜீவன் ப்ரஹ்மமாக இல்லாதது இயற்கையா -அப்படியானால் மோட்ஷம் அடையும் பொழுது ஜீவ ஸ்வரூபம் அழிய வேண்டும்
ஜீவன் தன் ஸ்வரூபம் அழிய முயலாதே
ஏதோ ஒரு காரணத்தினால் ப்ரஹ்மமாக இல்லை என்று கொண்டால் முன்பு ப்ரஹ்மமாக இருந்து இருக்க வேண்டும்
மோஷத்தின் பொழுது ப்ரஹ்மம் ஆகிறான் என்றது தவறாகும் –பரம் பொருள் ஜீவன் உள்ளேயே இருப்பதாக உணர்த்தவே
ஜீவனைக் குறித்த பதங்கள் கூறப்பட்டன
ப்ருஹத் ஆரண்யாகாவில்-
ய ஆத்மா நி திஷ்டன் யச்யாத்மா சரீரம் -போன்ற பல வாக்யங்கள் உண்டே –
இதையே காசக்ருத்ச்னர் எடுத்துக் காட்டுகிறார்-

அஜா நித்ய ஸாஸ்வதா புராணா-சப்தங்கள் -ஜகத் ஸ்ருஷ்டியே ஜீவாத்மாவின் கர்ம பலன்களை அனுபவிக்கவே –
ஆகவே முக்தன் ஐக்கியம் என்றது ஒன்றாக என்பது இல்லை -சாம்யா பத்தியைச் சொன்னபடி
அஹம்- ஜீவ நாசம் என்றால் முமுஷு மோக்ஷம் ஆசைப்படுவார் உண்டோ -கடம் உடைந்து மண் ஆவதே மோக்ஷம் என்றால்
அது அபுருஷார்த்தம் ஆகுமே -இத்தை ஆசைப்பட மாட்டார்களே –
பரஞ்சோதி -ஸ்வேன ரூபேண -ஸ்வரூப ஆவிர்பாவம்
வித்வான் -ப்ரஹ்ம ஞானம் அடைந்தவன் -உதக்ரமணம் -பரமாத்மா பாவம் அடைந்து -ஜீவ சப்தமே இல்லாமல் இருக்குமே –
ஆத்ம ஞானம் இல்லாமல் விஷ்ணோர் லோகம் சம்பு லோகம் சத்ய லோகம் தாண்டினேன் என்றாலும் பயன் இல்லையே -சங்கரர்
ஜீவ பர யாதாம்யா ஞானம் பூர்வகமாகவே மோக்ஷம் –
தேக ஆத்ம பிரமம் போக வேண்டும் என்றும் சொல்லி -நாம் அவன் சரீரம் என்று உணர வேண்டும் –
ஜீவாத்மா அகண்டம்–ரூபம் விஞ்ஞானம் வேதனம் சம்ஸ்காரம் சம்பந்தம் –
ஆகவே நித்யம் என்பதையும் உத்பத்தி என்பதையும் சமன்வயப் படுத்தி உணர வேண்டும் –
சப்தத்தால் வரும் உபதேசம் கொண்டு உணர முடியாது –
சப்தம் காதில் சொல்லி பத்து பேர் கடந்து மீண்டும் நம்மிடம் வரும் பொழுது மாறுதல்களை உணர்வோம்
குரு கடாக்ஷம் -பிரதானம் -ஆத்மாவுக்கும் ஆத்மாவுக்கும் நேராக சம்பந்தம் -பிரதானம் –
யஸ்யா மதம் தஸ்ய மதம் -நேராக அனுபவமே வேண்டியது -தெரியாது என்று சொன்னாலே தெரிந்தவர் ஆகிறோம் –

தம்முடைய சித்தாந்தம் இந்த முனிவருடைய ஆப்த வசனமாக இதில் –
பலாதிகரணம்–கர்மங்கள் பலன்களைக் கொடுக்கும் பூர்வ பஷி -ஜைமினி -பாதராயணர் அபிப்ராயம் அது இல்லை –
என்று சில இடங்களிலும் உண்டே
அந்தர்யாமி ப்ராஹ்மணம் -ப்ரச்னம் -ப்ருஹதாரண்யம் உபநிஷத் –
யஸ்ய ஆத்மா சரீரம் -22-தடவை -பிருத்வி -ஜலம் தேஜஸ் ஆகாசம் -கடைசியில் ஆத்மா –ஸ்பஷ்டமாக சரீர சரீரி பாவத்தை காட்டும்
பரஸ்பர சா பேஷா சப்தங்கள் -இவை -பிதா பித்ரு போல்வன -சம்பந்தம் -விசிஷ்ட புத்தி நியாமகத்வம் -யானை யானைப்பாகன் –
Husain Sahar separate unite Secundrabad Hydraabad –
கடக சுருதி -இது கொண்டே சமன்வயம் –
சர்வே சப்தா பரமாத்மா வாசா -குண கிரியா வாஸ்ய சப்தங்கள் இல்லை -சங்கோசம் பண்ணிக் கொண்டு
த்ரவ்ய வாஸ்ய சப்தங்கள் எல்லாம் என்று கொள்ள வேண்டும்

ஒன்றாக ஆகிறது என்பது தப்பு என்று முன் சொன்ன ரிஷி வாக்ய குற்றங்களை காட்டி -இதில் -இவர் வசனம் -விகல்ப்ய தூஷணம்
ஸ்வா பாவிகம்-ப்ரஹ்மத்துக்கே –திரோதானம் நீக்கி ஸ்வரூப ஆவிர்பாவம் -முக்தர்களுக்கு –
பேதம் -ஸ்வ பாவ சித்தி -பாடம் குடம் -இரண்டுக்கும் -பேதம் ஸ்வா பாவிகம்-
குடத்து நீர் சொம்பு நீர் -இரண்டுக்கும் பேதம் உபாதி அடியாகவே -உபாதி போக்கவே ஐக்கியம் உண்டாகும்
உபாதி பாரமார்த்திகமா இல்லையா -விசாரம் -ஜலத்வத்துக்கு உபாதி அபாரமார்த்திகம் தானே –
ஸ்வா பாவிகமா -உபாதி அடியாகவா -பரமாத்மா ஜீவாத்மா பேதம்
ஸ்வரூப ப்ரயுக்தம் -இவற்றுக்கு -என்றுமே ஒன்றாகாதே –

உபாதி -பாரமார்த்திகமா இல்லையா -அடுத்த கேள்வி –real- un-real-
முன்பே ஒன்றாக இருந்தால் இப்பொழுது உபாதி நீங்கி மறுபடியும் எப்படி ஒன்றாக முடியும்
முக்தன் முமுஷு ஆக முடியாதே / ப்ரஹ்மம் உபாதி இரண்டுமே உள்ளது ஜீவாத்மா இல்லை -என்றதாகுமே –
எது வந்து ப்ரஹ்ம பாவம் அடைகிறது என்ற கேள்வியும் வருமே –
பரமாத்மாவே அவித்யை உபாதையால் ஜீவாத்மா ஆகிறது -பந்தம் மோக்ஷம் இரண்டும் ப்ரஹ்மத்துக்கே -ஒவ்வாதே –
சரீர சரீரி பாவத்தால் தானே அனைத்தையும் சமன்வயப்படுத்தலாம்

ஆத்மனி திஷ்டன் -ஆத்மன அந்தர -யம் ஆத்மா ந வேத -யஸ்ய ஆத்மா சரீரம் -ஆத்மாநாம் அந்தரோ யமையதி-நியமிக்கிறான்-
அந்தர்யாமியாக அமிர்தமாக இருக்கிறான்
ஜீவ சப்தம் பரமாத்மாவை குறிக்கலாம் அந்தர்யாமியாக இருப்பதால் –
ஸூத்ரகாரர் இந்த மதத்தை ஒத்துக் கொண்டுள்ளார் -பரஸ்ய ப்ரஹ்மணம்-
சோக மோகங்கள் பக்த ஜீவனுக்கு -ப்ரஹ்ம ஞானம் பெற்று -அவை நீங்கப் பெற்று ஸ்வரூப ஆவிர்பாவம் அடைகிறான் என்றவாறு

ஸங்க்ரஹம் பண்ணி இந்த அதிகரணம் நிகமிக்கிறார் ஸ்ரீ பாஷ்யகாரர்
பரமாத்மா உபாசனம் அமிருதத்வம்-மோக்ஷ உபாயம் –
உபாசன லக்ஷணம் -துந்துபி த்ருஷ்டாந்தம் -உபாசானம் த்யானம் –ப்ரத்யாஹாரம் இதுக்கு பூர்வகம் –
ஐந்து குணங்களை ஐந்து இந்த்ரியங்களால் க்ரஹிப்பது ஆஹாரம்
இவற்றில் இருந்து விலக்குவதே ப்ரத்யாஹாரம் -துந்துபி -drum-இந்திரியங்கள் விலகாமல் ப்ரஹ்மம் பற்றி
உபாசனம் பண்ண முடியாதே –

நிகில காரணம் -சகல விஷய ப்ரவ்ருத்தி மூல கரண க்ராமம்- இந்திரிய சமூகம் –
நாராயண சப்த உச்சாரணமே மோக்ஷ ஹேது -பகவத் வைபவம் சொல்ல வந்தது–
சாஷாத்காரம் அடைந்தாள் தான் வித்வான் -இந்திரியங்கள் கட்டுப்படுத்தாமல் -கிட்டாதே –
ப்ரத்யாஹாரம் பண்ணியே தாரணம் -அஷ்டாங்க யோகம் -தைலதாராவத் த்யானம் –
அபரிச்சின்ன ஞான ஆனந்த மயன்–பூத பரிணாம திரோதானம் போக்கி சாம்யா பத்தி -ஐக்கியம் இல்லை –
சத்யம் -சத்யதரம் -சத்யதமம் -சத்யத்திலும் தாரதம்யம் உண்டே
அதே போலே பரமாத்மாவும் ஜீவாத்மாவும் -அங்கும் வாசி உண்டே –
தனியாக பேச -இருவர் வேண்டும்
பார்க்க இரண்டு வஸ்து வேண்டுமே –
ஒன்றாகவே இருந்தால் சதா பஸ்யந்தி ஸூரயா-எப்படி –
ப்ரஹ்மாத்மகமான வஸ்து இல்லை என்றவாறு –
நேதி நேதி -ஜகத் மித்யை என்பது இல்லையே -ஸர்வஸ்ய ப்ராஹ்மாத்மகம் -என்றவாறு –

பரமாத்மா ஞானம் வந்தால் அனைத்தையும் அறிந்ததாகுமே -சர்வஞ்ஞனை அறிவது எப்படி –
சர்வேஸ்வரன் -ஸ்வ இதர விலக்ஷணன் -உபாசனம் மூலமே அறிய வேண்டும் –
அவனை த்யானிப்பதே அவனை அடைய வழி-ப்ரஹ்ம உபாசனமே உபாயம் – -ப்ரஹ்ம பிராப்தி பலம் –
அவனே ஜகத்காரணம் சொல்லும் வியாஜ்யத்திலே பலவும் சொல்லும் இந்த அதிகரணத்தில் –
உயிரான அதிகரணம் இது என்பர் –

வாக்ய அந்வயாதி கரணம் சம்பூர்ணம்

——————————————————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— -1-4-4–காரணத்வாதிகரணம்–2-ஸூத்ரங்கள்—- ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

July 8, 2020

ஸ்ரீ பாஷ்யம்— -1-4—சமந்வய அத்யாயம்- 29–ஸூத்ரங்கள் / 8-அதிகரணங்கள் —
இரண்டாம் அதிகரணம்-சமச அதிகரணம் –3-ஸூத்ரங்கள்—
மூன்றாம் அதிகரணம்—சங்க்ய உப ஸங்க்ரஹ அதிகரணம் -3-ஸூத்ரங்கள்-
நான்காம் அதிகரணம்— காரணத்வாதிகரணம்–2-ஸூத்ரங்கள்- ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாசாரர்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

——————————–

நான்காம் அதிகரணம்— காரணத்வாதிகரணம்-2-ஸூத்ரங்கள்-

விஷயம்
வேதங்கள் அனைத்தும் ப்ரஹ்மம் ஒன்றையே ஜகத் காரணமாக கூறுகின்றன என்று
உரைக்க முடியும் என்பது நிரூபணம்

1-4-14-காரணத்வேன ச ஆகாசாதிஷூ யதா வ்யபதிஷ்ட உக்தே –

ஆகாசம் போன்றவற்றுக்குக் காரணமாக உள்ளது என்று கூறப்பட்டதையே மீண்டும் கூறுவதால் –
ஆகாயம் உட்பட அனைத்துக்கும் காரணமாக பர ப்ரஹ்மமே உள்ளது என்று கூறப்பட்டதால்
ப்ரஹ்மமே உலகின் காரணப் பொருள் –

பூர்வ பக்ஷம்
பிரதானமே அனைத்துக்கும் காரணம் என்று சொல்லும் சாங்க்யர்கள் இங்கு மீண்டும் ஒரு ஆஷேபம்
வேதாந்தங்களில் ஒரு வஸ்துவிடம் இருந்து மட்டுமே ஸ்ருஷ்ட்டி ஏற்படுவதாகக் கூறப்படுவது இல்லை –
ஆகவே ப்ரஹ்மம் மட்டுமே ஜகத் காரணம் என்று கூற இயலாது என்பர்

சாந்தோக்யம் -6-2-1-
சத் ஏவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் –என்று தொடக்கத்தில் சத் என்பது மட்டுமே காணப்பட்டது என்பதால் –
சத் என்பதில் இருந்தே ஸ்ருஷ்ட்டி தொடங்கியது என்று கூறப்பட்டது –

தைத்ரிய உபநிஷத்தில் -2-7-1-
அசத் ஏவா இதம் அக்ர ஆஸீத் -என்று தொடக்கத்தில் இந்த அசத் மட்டுமே இருந்தது -என்பதால் –
அசத் என்பதில் இருந்தே ஸ்ருஷ்ட்டி தொடங்கியது என்று கூறப்பட்டது –

வேறு ஒரு இடத்தில் சாந்தோக்யம் -3-19-1-
அசத் ஏவ இதம் அக்ர ஆஸீத் தத் சத் ஆஸீத் தத் சம்பவத் -என்று
முதலில் அசத்தாக இருந்தது -பின்பு சத் என்று ஆனது -தொடர்ந்து உத்பத்தி அடைந்தது -என்று உள்ளது
ஆகவே வேதாந்தங்களில் ஸ்ருஷ்ட்டிக்கு காரணம் இன்னது என்று கூறப்படாதலால்
ஜகத்துக்கு ப்ரஹ்மமே காரணப் பொருள் என்று உறுதியாக கூற இயலாதே

மாறாக -ப்ருஹத் உபநிஷத்தில் -1-4-7-
தத் ஏதத் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் -என்று ஜகத் அப்போது அவ்யாக்ருதமாக –
நாம ரூப வேறுபாடுகள் இல்லாமல் – இருந்தது -என்று தொடங்குவதன் மூலம்
ஜகத்து பிரளயத்தில் அவ்யாக்ருதத்தில் லயிப்பதாக கூறப்பட்டு
தொடர்ந்து 1-4-7-தந் நாம ரூபாப்யாம் ஏவ வியாக்ரியதே-என்பதன் மூலம்
அவ்யாக்ருதத்தில் இருந்தே ஜகத் ஸ்ருஷ்ட்டி யாகிறது என்று கூறப்பட்டது
இந்த அவ்யாக்ருதமே பிரதானம் -நித்யம் –அனைத்து வித பரிணாமங்களுக்கும் இதுவே இருப்பிடம்
இந்த காரணத்தால் தான் ஜகத் காரணமாக இதனைக் கூறும் இடங்களில் சத் என்றும் அசத் என்றும்
இரண்டு விதமாகக் கூறினாலும் முரண்பாடு ஏற்படவில்லை
ஆனால் ப்ரஹ்மம் என்றால் இரண்டு சொற்களையும் முரண்பாடு இல்லாமல் உபயோகிக்க இயலாது

இப்படியாக அவ்யாக்ருதம் என்பதே அனைத்துக்கும் காரணம் என்று நிச்சயித்த பின்பு -ஈஷணம்-அதாவது
பார்த்தல் -சிந்தித்தல் -பஹுஸ்யாம் -பலவாகக் கடவேன்-என்பது போல உபநிஷத்தில் கூறப்பட்ட
ஜகத் காரண வஸ்துவுக்கு இருக்கும் தன்மைகள் அவ்யாக்ருதமானத்துக்கு பொருந்தும்
பிரதானம் மிகப் பெரியதாகவும் பரந்தும் உள்ளதால் -ப்ரஹ்ம சப்தம் ஆத்ம சப்தம் பிரதானத்துக்கு பொருந்தும்
ஆகவே ஸ்ம்ருதிகள் மற்றும் நியாயம் ஆகியவற்றால் உணர்த்தப்படும் பிரதானமே ஜகத்காரணமாகும்
என்றே வேதாந்த வாக்கியங்களும் நிரூபிக்கின்றன என்பர்

ப்ரஹதாரண்யம் -தத் ஏதத் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத்-அவ்யக்தம் -சாங்க்யர்
பின்பு நாம ரூபங்களை அடைந்தது -name-form-பிரக்ருதியே காரணம் என்பர் பூர்வ பஷி-
இதனால் -ப்ரஹ்மமே காரணம் என்று சொல்ல முடியாது என்பர்
சாந்தோக்யம் -சத் ஏவ சோம்ய இதம் அக்ர ஆஸீத்-சத் என்ற வாஸ்துவில் இருந்தும் என்றும்
அசத் ஏவ இதம் அக்ர ஆஸீத் தத் சத் ஆஸீத் தத் சம்பவத்-அசத்தில் இருந்தும் -என்றும் பல வாசிகள் –
வ்ருத்தமான சுருதி வாக்கியங்கள் உண்டே
சத் அசத் என்று பிரக்ருதிக்கே சொல்லலாம் என்பர்
ஈஷத் அதிகரணத்திலே சத் அசத் என்பது பரமாத்மாவையே குறிக்கும் -சொன்ன விஷயம் தானே என்ன
அது கௌணம்-simbolical- பர்வதம் நதி சாக்ஷி சொல்வது போலே -பிரகிருதி பார்த்தது என்கிறது என்பர்
ப்ரஹ்மம் ப்ருஹத்வாத் சொல்வது பிரக்ருதிக்கும் பொருந்தும்
ஆத்ம சப்தமும் இதுக்கு சொல்லலாம் என்பர்
ஸ்ருஷ்ட்டி கர்த்தாவுக்கு விவஸ்தை இல்லை -ப்ரஹ்மம் மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது
பிரக்ருதியும் காரணம் -அவ்யாக்ருதம் -என்று இருப்பதால் பரிணாமம் அடையாமல் வியக்தமாக இருந்து பின்பு
பரிணாமம் அடைந்து நாம ரூபம் அடைந்து வியக்தம் -அவ்யக்தம் பிரதானம் ஏவ ஜகத் காரணம் என்பர்

சித்தாந்தம்
காரணத்வேன ச ஆகாசாதிஷூ யதா வ்யபதிஷ்ட உக்தே –
இதில் ச -என்பது -து –ஆனால் -என்ற பொருளில் வந்துள்ளது –
ஸர்வஞ்ஞத்வ – ஸர்வேஸ்வரத்வ -ஸத்ய ஸங்கல்பத்துவம் -அகில ஹேய பிரத்ய நீகத்வம்-இவை
அனைத்தும் பொருந்திய பர ப்ரஹ்மத்துக்கே ஜகத் காரணத்வம் நிச்சயமாக உரைக்க இயலும் –
ஆகாசாதிஷூ காரணத்வேன ச யதா வ்யபதிஷ்ட உக்தே -ஆகாசம் போன்றவற்றுக்கு ப்ரஹ்மமே காரணம்
என்று கூறப்படுவதால் ஆகும் –
ஸ்ருஷ்டிக்குத் தேவையான அனைத்தும் அறிந்த தன்மை போன்ற சிறப்புக்களுடன் ப்ரஹ்மம் உள்ளதாக
ஜந்மாத் யஸ்ய யத-1-1-2- என்பது போன்றவற்றால் முன்பே கூறப்பட்டது

மேலும் ப்ரஹ்மமே ஆகாசம் போன்றவற்றுக்கு காரணமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது
தைத்ரியம் -2-1-1-
தஸ்மாத் வா ஏதஸ்மாத் ஆத்மந ஆகாசஸ் ஸம்பூத–என்று அந்த ஆத்மா எனப்படும்
ப்ரஹ்மம் இடம் இருந்தே ஆகாசம் உண்டானது -என்றும்
சாந்தோக்யம் -6-2-3-
தத் தேஜஸ் அஸ்ருஜத–என்று அந்த தேஜஸ்ஸை உண்டாக்கியது என்று அனைத்தும் அறிந்த
ப்ரஹ்மமே காரணமாக உள்ளது என்றும்
தைத்ரியம் -2-1-1-
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்-ஸூ சோஸ்னுதே சர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா –என்று
சத்யம் ஞானம் அநந்தம் என்பதாக உள்ள ப்ரஹ்மம் ஜூ -முக்தாத்மா -இப்படிப்பட்ட அனைத்தும் அறிந்த
ப்ரஹ்மத்துடன் கூடி இருந்து அனைத்து விருப்பங்களையும் அனுபவிக்கிறான் என்பதால் சர்வஞ்ஞன் என்று கூறப்பட்டு
தஸ்மாத் வா ஏ தஸ்மாத் ஆத்மான ஆகாச சம்பூத் -என்று அந்த ஆத்மாவான ப்ரஹ்மத்திடம் இருந்து தொடங்கி
மேலே உள்ளவை சொல்லிற்று
இது போன்று -சாந்தோக்யம் -6-2-3-
தத் ஐ ஷத பஹூச்யாம் –நான் பலவாக தோன்றுவேன் என்று சங்கல்பம் செய்தது-என்று கூறப்பட்ட சர்வஞ்ஞனான ப்ரஹ்மமே
சாந்தோக்யம் -6-2-3-
தத் தேஜஸ் அஸ்ருஜத –அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்டித்தது -என்பதில் கூறப்பட்டது –
இப்படியே அனைத்து ஸ்ருஷ்ட்டி குறித்த வாக்யங்களுக்குப் பொருள் கொண்டு
சத் அசத் அவ்யாக்ருதம் போன்றவையும் ப்ரஹ்மத்தை குறிக்கும் பதங்கள்
ப்ருஹத் உபநிஷத்தில் -1-4-7-
தத் நாம ரூபாப்யம் வ்யாக்ருத யதா -என்று இத்தையே குறிக்கும் -பர ப்ரஹ்மமே காரணம் என்றதாயிற்று

ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்று நிரூபிக்கப் பட்டது

கர்த்தா -கார்ய உபாதானம் -கடத்துக்கு குயவன் மண் -படத்துக்கு நெசவாளி நூல் –
கர்த்ருத்வம் -ஞானம் பிரயத்தனம் சேதன தர்மங்கள் பிரக்ருதிக்கு கூடாதே
பஹஸ்யாம் ப்ரஜாயேய -என்று சங்கல்பித்து -த்ரிவித காரணம் -அடையக் கடவேன்-சங்கல்பித்து -ஸ்ருஷ்ட்டி –
சர்வஞ்ஞத்வம் வேணுமே -சர்வ ஸ்ருஷ்டிக்கு -சர்வ சக்தித்வமும் வேணும் –
து சகாரார்த்தம் -இங்கு -அவ்யய த்துக்கு அநேக அர்த்தம் கொள்ளலாமே –

பூர்வ பக்ஷம்
தைத்ரிய உபநிஷத்தில் -2-7-1-
அசத் ஏவா இதம் அக்ர ஆஸீத் -என்று உள்ள போது சர்வஞ்ஞனான -ஸத்யஸங்கல்ப விசிஷ்டனான ப்ரஹ்மமே
காரணம் என்பது எப்படி நிச்சயிக்கப்படும்

இதற்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்

—————-

1-4-15-சமாகர்ஷாத் –

தொடர்ந்து கூறப்படுவதால் -என்றபடி –

இந்த ஸூத்ரத்துக்கு -அநு கர்ஷம் அபகர்ஷம் -அதி கர்ஷம் -மூன்று வித பொருள்கள்
முந்தைய இடத்தில் உள்ளத்தை பிந்தைய இடத்தில் சேர்த்துக் கொள்ளுவது அநு கர்ஷம் ஆகும் –
பிந்தைய இடத்தில் உள்ளதை முந்தைய இடத்தில் சேர்த்துக் கொள்ளுவது அபகர்ஷம் ஆகும்
புதிதாக ஒன்றைச் சேர்த்தல் அதி கர்ஷம் ஆகும்
தைத்ரியத்தில் உள்ள -ஸோ அகாமயத–தத் சத்ய மித்யா சஷதே -என்பதில் கூறப்பட்ட பொருளையே
அசத்வா இதம் அக்ர ஆஸீத் -என்பதில் உள்ள அசத் என்னும் சொல்லால் கூறத் தொடங்குவதால் இது அநு கர்ஷம் ஆகும்
சாந்தோக்யத்தில் அசத் ஏவ இதம் அக்ர ஆஸீத் என்பதில் தத் சத் ஆஸீத் -என்று பின்னர் வரும் இடத்தில்
உள்ள சத் என்பதற்கு கூறப்பட்ட பொருளை முன்பு உள்ள அசத் என்பதற்கு எடுப்பதால் இது அபகர்ஷம் ஆகும்
பிருஹத் உபநிஷத்தில் –
தத் ஏதம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் தந் நாம ரூபாப்யாம் வியாக்ரியத-என்பதில் வியாக்ரியத என்பதான
செயல் புரியும் சொல் உள்ளதால் -புதிதாக ஒரு கர்த்தாவைச் சேர்ப்பதால் இது அதிகர்ஷம் ஆகும் –

சித்தாந்தம்
சர்வஞ்ஞனான -ஆனந்த மாயா -ஸத்யஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மமே
தைத்ரியம் -3-7-1-அஸத்வா இதம் அக்ர ஆஸீத் -என்ற வாக்யத்திலும் தொடர்ந்து கூறப்பட்டது –
எப்படி என்றால் முந்திய பகுதியில் -அநு கர்ஷ முறை –
தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞான மயாத்-அந்ய அந்தரே ஆத்மா ஆனந்த மய—2-5-என்று
ஜீவாத்மாவை விட வேறுபட்ட ப்ரஹ்மம் என்றும்
ஸோ காமயத பஹுஸ்யாம் ப்ரஜாயேய–2 6-என்றும்
இதம் சர்வம் அஸ்ருஜத யதிதம் கி ஞ்ச டு தத் ஸ்ருஷ்ட்வா-தத் ஏவ அநு பிராவிஸத்-தத் அநு பிரவிஸ்ய –
சத் த்யத் ச அபவத்-என்று அனைத்தையும் ஸ்ருஷ்டித்து புகுந்து அனைத்துக்கும் ஆத்மாவாகவே
ப்ரஹ்மம் -என்று கூறப்பட்டது –

தொடர்ந்து -2-6- தத் அபி ஏஷ ஸ்லோகோ பவதி -என்று
இதுவரை கூறிய அர்த்தத்தில் பின்வரும் மந்த்ரமும் உள்ளது -என்றுள்ள வரி மூலமாக இதுவரை கூறப்பட்டவற்றை விளக்க –
அதற்கு சாட்சியாக பின் வரும் மந்த்ரமும் உள்ளது என்று கூறிய பின்னர்
அசத் வா இதம் அக்ர ஆஸீத்–2-7- -என்று தொடக்கத்தில் இவை அனைத்தும் அசத்தாகவே இருந்தன
என்னும் வாக்கியம் உள்ளது

அடுத்து இந்த மந்திரத்தின் அடுத்த வரியை குறைப்பதால் -அபகர்ஷம் தோன்றுகிறது
இத்தைத் தொடர்ந்து பீஷாஸ்மாத் வாத பவதே–தை -2-8- போன்ற வாக்யங்களால் அதே ப்ரஹ்மம் கூறப்பட்டு
ஸர்வேச்வரத்வம் சர்வ ஆனந்த விசிஷ்டத்வம் போன்ற பலவும் உரைக்கப் படுகின்றன
ஆகவே இந்த மந்த்ரம் -அசத் குறித்த வாக்கியம் -ப்ரஹ்மத்தைக் குறித்த விஷயமே யாகும் என்றதாகிறது
அப்போது -ஸ்ருஷ்டிக்கு முன்பு நாம ரூப வேறுபாடுகள் என்பதால் ப்ரஹ்மத்துக்கு சத் -அதாவது -இருக்கின்ற பொருள்
சம்பந்தம் இல்லை என்பதால் ப்ரஹ்மம் அஸத் சப்தத்தால் கூறப்படுகிறது
அஸத் ஏவ இதம் அக்ர ஆஸீத் –சாந்தோ 3-19-1-/6-2-1–போன்ற வாக்யங்களுக்கும் இதே கருத்தே

அடுத்து பூர்வ பக்ஷத்தில்
ப்ருஹி–தத் ஏதத் அவ்யாக்ருதம் ஆஸீத் 1-4-7-என்பது பிரதானமே ஜகத் காரணம் என்பர் -அது கூடாது –
இங்கும் அவ்யாக்ருதம் என்ற சொல்லால் கூறப்படுவது அவ்யாக்ருத சரீரம் கொண்ட ப்ரஹ்மமே –
ப்ருஹ -1-4-7-
ச ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆநகாக் ரேப்ய -பஸ்யம்ச் சஷு ச்ருண்வஞ்சரோத்ரம் மந்வாநோ மந –
ஆத்ம இதி ஏவ உபாஸீத்-என்று ச ஏஷ -என்று உணர்த்தப்படுகிற -தத் -அது என்பதன் மூலம் அவ்யாக்ருதம் என்ற சொல்லால்
கூறப்பட்ட ப்ரஹ்மமே அனைத்துக்கும் உட் புகுந்து நியமிக்கிறார் –
இப்படி முன்னம் கூறப்பட்ட விஷயம் இங்கு சேர்க்கப்பட்டதால் இது அநு கர்ஷம் ஆகும்

மேலும் தை -2-6-1-
தத் ஸ்ருஷ்ட்வா தத் ஏவ அநு ப்ராவிஸத்-என்றும்
சாந்தோக்யம் -6-3-2-
அநேந ஜீவேந ஆத்மநா அநு பிரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி -என்றும் உள்ளவற்றால்
சர்வஞ்ஞனான பர ப்ரஹ்மமே உட் புகுந்து நாம ரூபங்களை ஏற்படுத்துகிறான் என்றதாயிற்று
மேலும் தைத்ரியம் 3-11-2-
அந்த ப்ரவிஷ்டா சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா -என்றும் உள்ளதால்
உட் புகுந்து நியமித்தல் பிரதானத்துக்கு சம்பவிக்காது –
ஆகவே அவ்யாக்ருதம் என்று கூறப்படுவது அவ்யாக்ருத சரீரம் கொண்ட ப்ரஹ்மமே ஆகும்

அடுத்து அதிகர்ஷ முறையில் விளக்கம்
பிருஹு -1-4-7-
தந் நாம ரூபாப்யாம் வியாக்ரியதே –என்று அதே ப்ரஹ்மம் -பல சரீரங்கள் கொண்டதாக தன்னை மாற்றிக் கொண்டது
பஹுஸ்யாம் ப்ரஜாயேய -போன்ற சங்கல்பம் -ஈஷதே-போன்ற பார்வை
இப்படி பல மேன்மைகளை கொண்ட தன்மை பிரதானத்துக்கு இல்லை என்பதால் ப்ரஹ்ம ஆத்மா சொற்களால் கூற இயலாது
ஆகவே ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்று நிரூபணம்

மற்ற உபநிஷத்களிலும் கூறப்பட்டவற்றை குறிப்பிடுவதாலும் பர ப்ரஹ்மமே காரணம்
தைத்ரிய உபநிஷத் –
சோகா மயத பஹூச்யாம் பிரஜா யேய-என்றும்
அசத் வை இதம் அக்ர ஆஸீத் -என்றும்
ப்ருஹத் ஆரண்யாகாவில் –
தத் ஏதம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் என்றும்
அதே உபநிஷத் –
ச ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆனகாக்ரேப்ய-என்று உள்ளே புகுந்து நகக் கண்கள் வரையில் உள்ளான் -என்கிறது-

ஆனந்தவல்லி தைத்ரியம் -அசத்-சுருதி வாக்கியம் -அனைத்தையும் ப்ரஹ்மம் குறிக்கும் என்பதைக் காட்ட வந்தது
ப்ராஹ்மண ஷத்ரியம் வைஸ்யம் சூத்திரர் அனைத்திலும் நான்கு வர்ணங்களும் உண்டே
நான்கு வர்ணங்களுக்கு நான்கு வேதங்கள் -யஜுர் க்ஷத்ரியர் -சாம வேதம் ப்ராஹ்மணர் ரிக் வேதம் வைசியர் –
முகத்தில் இருந்து ப்ராஹ்மணர் -அது வேறே விஷயம் -விராட் புருஷன் மூலம் வாதத்தை சொன்னபடி
தைத்ரியம் உபநிஷத் -திருமஞ்சனம் சமயம் -சொல்லுவார்
ராமாயணத்திலும் மனு சாஸ்திரம் quote-உண்டே
நாம ரூப விபாகம் இல்லாததால் அசத் -அவ்யாக்ருதம் இதுவே
தைத்ரியம் -அசன்நேவஸ் ய பவதி -இல்லாமலே ஆகிறான் -ப்ரஹ்மத்தை அறியாதவன் -அசத் ப்ரஹ்ம வேத ச –
ப்ரஹ்ம சத் அவேத ச -என்று கொண்டு கூட்டிப் பொருள் இங்கு
அஸ்தி –சந்தமேனம்-பவதி –
சர்வே சப்தா பரமாத்மாவாவையே குறிக்கும் -அசத் சப்தமும் அவனையே சொல்லலாமே –
அவ்யாக்ருதமான சரீரம் உடைய பர ப்ரஹ்மம் -சொன்னபடி -ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் –

——————–———————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-