Archive for the ‘Sri Bhashyam’ Category

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை — மூன்றாம் அத்யாயம் — முதல் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————————————————-

சாதனா அத்யாயம்–55 அதிகரணங்கள்–181 ஸூத்ரங்கள்

————————————————————-

முதல் பாதம் -வைராக்ய பாதம்-ஜீவனுக்கு உள்ள தோஷங்களை விளக்கி –
இவை இல்லாத ப்ரஹ்மத்தை அடைய வைராக்கியம் ஏற்பட இவை முதலில் கூறப்படுகின்றன –
6 அதிகரணங்கள்-27-ஸூத்ரங்கள்-

——————————————————————-

முதல் இரண்டு அத்யாயங்களால்
குத்ருஷ்டிகளின் கோணல் யுக்திகளால் அசைக்க ஒண்ணாத ஸமஸ்த ஜகத் ஏக காரணத்வத்துடன்
அகில ஹேய ப்ரத்ய நீகனாய் -ஸித்த வஸ்துவாய் உள்ள பரம புருஷனான ஸ்ரீயப்பதியை விசாரித்து
பின் இரண்டு அத்யாயங்களாலே
சேதனன் செய்யத்தக்க பரம புருஷன் திருவடிகள் விஷயத்தில் பக்தி பிரபத்தி என்ற ஸாத்ய உபாயங்களையும்
அதன் பலமான பரம புருஷ பரிபூர்ண அனுபவ ஜெனித கைங்கர்யங்களையும் விசாரிக்கிறார்
என்று த்விக சங்கதி

மூன்றாம் அத்யாயம் மூன்றாம் பாதத்தில் விசாரிக்கப் போகும் ஸாத்ய உபாய ரூபமான பக்திக்கு
அதிகாரம் ஸித்திக்க வேண்டி
ஐஸ்வர்யம் கைவல்யம் முதலியவற்றில் வைராக்யம் தோன்றக் காரணமான ஸம்ஸார தோஷத்தை
முதல் பாதத்தில் விவரிக்கிறார் என்று சங்கதி –

இம் மூன்றாம் அத்யாயம் முதல் இரண்டு பாதங்களால்
வைராக்கியமும்
உபய லிங்கமும் -அகில ஹேய ப்ரத்ய நீகத்வமும் -ஸமஸ்த கல்யாண குண கரத்வமும்
பின் இரு பாதங்களாலே
அங்க ஸஹிதமான ப்ரஹ்ம வித்யையையும் பற்றி
ஸூத்ரகாரர் காட்டி அருளுகிறார் –

முதல் வைராக்ய பாதத்தில்
ஐஸ்வர்யாதிகளில் வைராக்யம் உண்டாகும் பிரகாரத்தைக் காட்டுகிறார் என்று த்விக சங்கதி

———–

இங்கு ஒருவர் கேட்க்கிறார் -முக்தி நம்மால் சாதிக்கக் கூடியதா அன்றா –
சாதிக்க முடியாது என்றால் சாதன அத்யாயத்துக்குப் பலனே இல்லையே –
அதை ஆரம்பிப்பதே வீணாகுமே
சாதிக்கத் தக்கதே என்றால் ஸ்வர்க்காதிகள் போல் அதுவும் அழிவுள்ளதாகும் –
ஆகையால் முக்தியை நித்யை என்று கூற முடியாதே
இந்த விஷயத்தில் என்ன வழி என்று கேட்க்கிறார்
அதுக்கு விடை -ப்ரஹ்ம அனுபவம் முன்பு இல்லாததே -உபாஸகனாலே சாதிக்கப்படுவது –
ஆதலின் முக்கியர்த்தம் சாதன அத்யாயம் தொடங்குவதில் தவறு இல்லை –
முக்தி அந்த்யமாகுமோ என்னில்
அபாவம் என்பதும் ஒரு பாவமே என்பது நம் சித்தாந்தம் -பாவாந்தர அபாவ பக்ஷம் –
சம்சாரத்தில் ஞான சங்கோச தசைக்கு த்வம்சமே அழிவே முக்தி -விஸிஷ்ட ப்ரஹ்ம அனுபவமே முக்தி
தார்க்கிகர் மதத்தின் படி த்வம்சத்துக்குத் தொடக்கம் பூர்வ அவதி உண்டாம் -முடிவு உத்தர அவதி இல்லை –
ஆதலின் நித்யத்வம் ஸித்தமாகிறது –
ஆனால் கர்மவசத்தால் ஞான ஸங்கோசம் விலகவே ஸ்வரூப ஆவிர்பாவம் -மலர்ச்சி -ஏற்பட்டு
நச புநராவர்த்ததே -என்று கூறிய நித்யத்வமும் -ஸ சா நந்த்யாய கல்பதே-என்று
முக்தி தசையில் வரக்கூடும் ஞான வியாப்தியைக் கூறும் ஸ்ருதியால் நேரில் கூறப்பட்டது
எனவே இந்த சாதன அத்யாயம் ஆரம்பத்தில் தவறு இல்லையே என்பர் ஸ்வாமி தேசிகன் –

———-

முதல் அதிகரணம் -ததந்திர பிரதிபத்த்ய அதிகரணம் -7 ஸூத்ரங்கள் –
ஜீவன் இந்த உடலை விட்டு கிளம்பும் பொழுது
பஞ்ச பூதங்களுடன் கூடிய சூஷ்ம ரூபத்துடன் செல்வதை சாந்தோக்யம் -கருத்து நிரூபிக்கப்படுகிறது –

இரண்டாவது அதிகரணம் –க்ருதாத்ய யாதிகரணம்–4 ஸூத்ரங்கள்-
அனுபவிக்க வேண்டிய எஞ்சிய கர்ம பலன்களுடன் ஸ்வர்க்கத்தில் இருந்து ஜீவன் வருகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது-

மூன்றாம் அதிகரணம் –அநிஷ்டாதிகார்யாதிகரணம்-10- ஸூத்ரங்கள்–
பாபம் செய்தவர்கள் சந்திர மண்டலம் செல்வது இல்லை என்பதுநிரூபிக்கப் படுகிறது-

நான்காவது அதிகரணம் –தத் ஸ்வா பாவ்யாபத்த்யதிகரணம் – 1 ஸூத்ரம்-
மேலே கிளம்பிய ஜீவன் ஆகாசம் போன்றவற்றுடன் தொடர்பு மட்டுமே அடைகின்றான் என்று நிரூபிக்கப் படுகிறது

ஐந்தாம் அதிகரணம் -நாதிசிராதி கரணம்- 1 ஸூத்ரம்-
ஆகாசம் போன்றவற்றில் ஜீவன் சிறிது காலமே தங்கி விட்டுக் கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –

ஆறாவது அதிகரணம் -அந்யா திஷ்டிதாதி கரணம் -4-ஸூத்ரங்கள்–
மற்ற ஜீவன்களுடன் தொடர்பு மட்டும் கொள்கின்றான் என்கிறதாயிற்று-

—————————————————————————————————————————

முதல் அதிகரணம் -ததந்திர பிரதிபத்த்ய அதிகரணம் –
ஜீவன் இந்த உடலை விட்டு கிளம்பும் பொழுது பஞ்ச பூதங்களுடன் கூடிய
ஸூஷ்ம ரூபத்துடன் செல்வதை சாந்தோக்யம் -கருத்து நிரூபிக்கப்படுகிறது –

இந்த தேஹியானவன் இந்த மனித சரீரத்தை விட்டு வேறு சரீரத்தை அடையும் பொழுது
சரீர காரணங்களான பூத ஸூஷ்மங்களுடன் சேர்ந்து செல்கிறானா –
அல்லது தனியே செல்கிறானா என்ற சம்சயம்
கூடப் போவது இல்லை என்று பூர்வ பக்ஷம்
போகும் இடங்களில் பூத ஸூஷ்மங்கள் ஸூலபமுமாய் இருப்பதாலே உடன் கொண்டு செல்வது இல்லை
என்று பூர்வ பக்ஷம்
இத்தை நிரசிக்கிறார்

284-ததந்திர ப்ரதிபத்தௌ ரம்ஹதி சம்பரிஷ்வக்த ப்ரசன நிரூபணாப்யாம்-3-1-1-

ஜாக்ரத் -விழிப்பு நிலை /ஸ்வப்னம் -கனவு நிலை /ஸூஷுப்தி -தூக்க நிலை /மூர்ச்சை -மயக்க நிலை
பூத ஸூஷ்மங்களுடன் சேர்ந்தே செல்வதை நிரூபிக்கிறார்-

2-4-17-சம்ஜ்ஞா மூர்த்திக் லுப்தி -பெயர் ரூபம் மாறுதல் -பற்றி சொல்லி
மூர்த்தி பதம் உடலைக் குறிக்கும் அதையே இங்கே தத் பதம் சொல்லும்

முன் அதிகரணத்தில் ஸம்ஜ்ஞா மூர்த்தி க்லுப்தி -ஸூத்ரத்தில் உள்ள
மூர்த்தி சப்தத்துக்குப் பொருளான சரீரத்தை இங்கு தத் சப்தத்தால் காட்டுகிறது –
ததந்திர ப்ரதிபத்தௌ -மற்று ஒரு உடலை அடையும் பொழுது
சம்பரிஷ்வக்த -முன் தேகத்தில் கடைந்து எடுத்த பூத ஸூஷ்மங்களுடன் இணைந்து
ரம்ஹதி -செல்கிறான்
ப்ரசன நிரூபணாப்யாம் -கேள்வி பதில்களால் அவ்வாறே தோன்றுகிறது
சாந்தோக்யம் பஞ்சாக்னி வித்யையில் உள்ளவை கொண்டு நிரூபணம்-

ஆருணி என்பவரின் பிள்ளை ஸ்வேதகேது-என்பவன் பாஞ்சால தேசம் சென்று ப்ரவாஹணன் அரசன் இடம்
1-யாகம் முதலானவற்றை இயற்றினவர்கள் உயிர் பிரிந்த பின்பு எங்கு செல்கின்றனர்
2-மீண்டும் எந்த பாதையில் உலகிற்கு வருகின்றார்கள்
3-தேவ யானம் பித்ரு யானம் வலிகளின் வேறுபாடு
4-ஸ்வர்க்க லோகத்தை அடையாதவர்கள் யார்
5- கேள்வியாக சாந்தோக்யம் -5-3-3- வேதத யதா பஞ்சம் யா மாஹூதாவாப் புருஷ வசசோ பவந்தி -என்று
ஐந்தாவது ஆஹூதியாக அளிக்கப் படும் நீர் எனபது எவ்விதம் புருஷன் என்று கூறப்படுகிறது என்று அறிவாயா

இதற்கு -ஸ்வர்க்கம் என்பதையே அக்னியாகக் கொண்டு பதில் உள்ளது –
ஸூரியன் சமித்துக் கட்டை -ஸூர்ய கிரணங்கள் புகை -சந்தரன் தணல் நட்ஷத்ரங்கள் பொறிகள்
சாந்தோக்யம் இதனை தொடர்ந்து -5-4-2-தஸ்மின் ஏ தஸ்மின் அக்னௌ தேவா ஸ்ரத்தாம் ஜூஹ்வதி தஸ்யா ஆஹூதே சோமராஜாபவதி-என்று
ஸ்வர்க்கம் என்னும் அக்னியில் தேவர்கள் -இந்த்ரியங்கள் -அனைத்தும் இணைந்து ஸ்ரத்தை என்னும் நீரை
ஆஹூதியாக அளிக்க சோம ராஜா என்ற பெயருடன் அழகிய உடலை அடைகிறான் என்கிறது

கர்ம பலன்கள் முடிவைந்த நிலையில் பர்ஜன்யம் என்ற அக்னியில் பிராணன்கள் சோமராஜாவை இட
உடல் நீராக மாறி ஜீவனுடன் சேர்ந்து மழை ஆகிறது
அந்த மழையை பூமி என்ற அக்னியில் அதே இந்த்ரியங்கள் இட -ஹோமம் செய்கின்றன என்ற கருத்து –
மழை நீர் நெல் போன்ற உணவாக மாற -அந்த உணவை புருஷன் என்ற அக்னிக்கு அதே இந்த்ரியங்கள் ஹோம திருவ்யமாக இட
புருஷன் இடம் சென்ற அன்னம் ரேதசாக மாறி அந்த விந்துவை இந்த்ரியங்கள் பெண் என்ற அக்னியில் ஆஹூதியாக இட கர்ப்பம் ஆகிறது

சாந்தோக்யம் -5-9-1-இதி து பஞ்சம்யாமாஹூதா வாப புருஷவசசோ பவந்தி –
இப்படியாக ஐந்தாவது ஆஹூதியாக விடப்படும் நீர் -விந்து -புருஷனாக பெயர் அடைகின்றது
புதிய உடல் எடுக்க பூதங்களுடன் ஸூஷ்மமாகவே செல்கின்றான் என்று உணரலாம்

ஆப புருஷ வசஸ -சாந்தோக்யம்-5-9-1-நீரான ரேதஸ் புருஷன் ஆகிறது

பஞ்ச பூதங்களுடன் செல்வதாக சொல்ல முடியுமோ –
இதற்கு பதில் அடுத்த ஸூத்ரம்

——————————————————————————————————————————-

ஆப புருஷ வசஸ-என்னும் இடத்தில் அப் ஸப்தத்தால்
ப்ருத்வீ முதலிய வேறு பூதங்களுக்கும் எப்படி வ்யவஹாரம் ஏற்படும் என்றால்
அந்த சங்கையைப் பரிஹரிக்கிறார்

285-த்ர்யாத்மகத்வாத் து பூயஸ்த்வாத்–3-1-2-

து -சங்கையை நிவர்த்திப்பிக்கிறது -நீர் மட்டும் கொண்டு உடல் உண்டாக வாய்ப்பில்லையே
பூயஸ்த்வாத்–அப் -பெரும் பகுதி யாகையாலே இந்த சப்தத்தால் சொல்லிற்று

தாஸாம் த்ரிவ்ருத்தம் த்ரிவ்ருத்தம் ஏகைகாம் -சாந்தோக்யம் -6-3-3-
நீர் நெருப்பு நிலம் -ஒவ் ஒன்றிலும் மற்ற இரண்டின் பகுதியைச் சேர்த்து உருவாக்குவதே த்ரிவ்ருத்தம் ஆகும்
ஸ்தூல நீர் -பாதி ஸூஷ்ம நீரும் கால் பகுதி ஸூஷ்ம நெருப்பும் கால் பகுதி ஸூஷ்ம நிலமும் சேர்ந்தது ஆகும்-

இவ்விதமே பஞ்சீ கரண ப்ரக்ரியையும் காணத் தக்கது

———————————————————————————————————————————-

286-பிராண கதே ச–3-1-3-

பிராணன்களும்-இந்த்ரியங்களும் -செல்வதால் இந்த்ரியங்களுக்கு ஆதாரமாக உள்ள
பூத ஸூ ஷ்மங்களுடன் ஜீவன் செல்கின்றான்

ப்ருஹத் உபநிஷத் -4-4-2-
தம் உத்க்ராமந்தம் பிராண அநூத்க்ராமாதி பிராணம் அநூத்க்ராமந்தம் சர்வே பரானா அநூத்க்ராமந்தி -என்றும்

ஸ்மர்யதே ச –ஸ்ம்ருதியும் இப்படியே சொல்கிறது என்றவாறு –

ஸ்ரீ கீதை 15-7/8-
மன ஷஷ்டானி இந்த்ரியாணி பிரகிருதி ஸ்தானி கர்ஷதி சரீரம் யத் அவாப் நோதி யத் ச அபி
உக்த்க்ரமாதீச்வர க்ரஹீத்வைதானி சம்யாதி வாயுர் கந்தா நிவாசயாத் – என்று
காற்று மலர்களில் உள்ள நறு மணத்தை கவர்ந்து செல்வது போலே
ஜீவன் அனைத்தையும் எடுத்துச் செல்கிறான்
இவற்றுக்கு ஆஸ்ரயமாக பூத ஸூஷ்மங்களும் கூட செல்கின்றன –

ஸ்தூல சரீரத்தை விட்டுப் போகும் ஜீவனை பிராணன் பின் பற்றுகிறது –
பிராண வாயுவை இந்த்ரிய ஸூஷ் மங்களும் பின் செல்கின்றன -என்றே பொருள் இவற்றுக்கு

————————————————————————————————————————————-

287-அக்னி நயாதி கதி ஸ்ருதே இதி சேத ந பாக்தத்வாத் –3-1-4

மரண காலத்தில் இந்த்ரியங்கள் அக்னியுடன் இணைவதாகக் கூறுவதால்
பிராணன் ஜீவனுடன் செல்வது இல்லை எனபது பூர்வ பஷம்

பிருஹத் உபநிஷத் -5-12-13-யத்ர அஸ்ய புருஷஸ்ய ம்ருதச்ய அக்னிம் வாக் அப்யேதி வாதம் பிராண சஷூராதித்யம் -என்று
இறந்த பின்பு வாக்கு அக்னியிலும் பிராணன் வாயுவிலும் கண்கள் சூரியனிலும் இணைகின்றன
எனவே ஜீவனுடன் இந்த்ரியங்கள் செல்வது இல்லை என்பர்

தம் உத்க்ராமந்தம் சர்வே ப்ராணா உத்க்ராமந்தி -என்று
அந்த அந்த அபிமான தேவதைகள் அவற்றின் மீது தங்கள் தொடர்பை கை விடுகின்றன என்றே கொள்ள வேண்டும்

அதே உபநிஷத்தில் -ஓஷதீர் லோமா நி வனச்பதீன் கேசா –
தலை முடிகள் மரங்களிலும் கைமுடிகள் செடிகளிலும் கலக்கின்றன என்கிறது

அக்னி நயாதி கதி ஸ்ருதே –அக்னி வாயு ஸூர்யன் முதலிய அதிஷ்டான தேவதைகள் இடம் லயம் அடைவதாகச் சொல்வதால்
இந்திரியங்கள் ஜீவனுடன் செல்வதாகச் சொல்லும் சுருதிகள் உபசார வழக்காகவே கொள்ள வேண்டும்
என்னில்
இதி சேத ந -அது தவறு
பாக்தத்வாத் –ஓஷதீர் லோமா நி வனச்பதீன் கேசா –
தலை முடிகள் மரங்களிலும் கைமுடிகள் செடிகளிலும் கலக்கின்றன என்பதால்
அக்னியை வாக்கு அடைகிறது போன்ற வாக்கியங்கள் அமுக்கியமாகவே கொள்ள வேண்டும்
இவற்றுக்கு லயம் என்றால் ரோம கேசாதிகளுக்கும் லயம் ஏற்க நேரிடும்
ஆகவே இந்திரியங்கள் ஜீவனுடன் செல்வத்தைச் சொல்லும் ஸ்ருதிகளே முக்யமாகக் கொள்ள வேண்டும் என்று கருத்து –

ஆக
அந்த அந்த தேவதைகளின் கட்டுப்பாட்டை நீக்கி
ஜீவன் இந்த்ரியங்களுடன் அவற்றின் பூதங்களுடன் செல்கின்றான் –

—————————————————————————————————————————————-

288–ப்ரதமே அஸ்ரவணாத் இதி சேத் ந தா ஏவ ஹி உபபத்தே –3-1-5-

ப்ரதமே -பஞ்சாக்னி வித்யையில் முதலான தேவ லோக ரூபமான அக்னி ஹோமத்திலே
அஸ்ரவணாத் -அப்புக்கள் ஹோமம் செய்யத் தக்கனவாகக் கூறப்படாமையாலே
பிற பூதங்களுடன் சேர்ந்து அப்புக்கள் செல்கின்றன என்பது தகாது
இதி சேத் ந -இது தவறு

சாந்தோக்யம் -5-4-2-தஸ்மின் ஏ தஸ்மின் அக்னௌ தேவா ஸ்ரத்தாம் ஜூஹ்வதி –
தேவ லோகம் –ஸ்ரத்தை நீர் அல்லவே

நீர் என்பதே ஸ்ரத்தை -சோமராஜா -வர்ஷம் -அன்னம் -ரேதஸ் -கர்ப்பம் பல விதமாக மாறும் –
இத்தையே ஏவம் ஆப புருஷவசச தைத்ரீய பிரமாணம் –3-2-4- அப பிரணயதி ஸ்ரத்தா வா ஆப -என்று
அவன் நீரை எடுக்கிறான் -ஸ்ரத்தை என்பதே நீர்
ஜீவன் சோம ராஜாவாக மாறுவது நீரால் தான் என்பதை
சாந்தோக்யம் -5-4-2-ஸ்ரத்தாம் ஜூஹ்வதி தஸ்யா ஆஹூதி சோமோராஜா சம்பவதி -என்று கூறியது

உபபத்தே -விடைக்கு வினாவுடன் பொருத்தமாய் இருப்பதால்
கேள்வியிலும் -நீர் ஐந்தாம் ஆஹுதியில் புருஷன் எனப்படுவதை அறிவீரோ
விடையில் தேவலோகம் என்னும் அக்னியில் பிராணங்கள் ஸ்ரத்தையை ஹோமம் செய்கின்றன என்று கூறுவதால்
ஸ்ரத்தை என்பது அப்பையே குறிக்கும் –

எனவே நீர் முதலான பூத ஸூஷ்மங்களுடன் இணைந்து ஜீவன் கிளம்புகின்றான்

———————————————————————————————————————————————-

289-அஸ்ருத்வாத் இதி சேத் ந இஷ்ட அதிகாரிணாம் பிரதீதே –3-1-6-

இஷ்டம் பூர்த்தம் தானம் -பலனை விரும்பி யாகம் செய்பவர்கள் –

சாந்தோக்யம் -5-10-3-அத ய இம க்ராமே இஷ்டாபூர்த்தா தத்தம் இதி உபாசதே தே தூமம் அபி சம்பவந்தி –
குளம் வெட்டுதல் போன்ற -புண்யம் செய்துது மார்க்கம் வழியாக ஸ்வர்க்கம் செல்கிறார்கள் –

இதை முடிக்கும் பொழுது -5-10-4/5-
பித்ரு லோகன் ஆகாசம் ஆகாசாத் சந்த்ரமசம் ஏஷ சோமோராஜா தத் தேவா நாமந்தம் தம் தேவா பஷயந்தி
தஸ்மின் யாவத் சம்பாதம் அத ஏவம் எத அத்வானம் புன நிவர்த்தந்தே
யோ யோ ஹி அந்தமத்தி யோ யோ ரேத சிஞ்சதி தத் பூய ஏவ பவதி-என்று
பித்ரு லோகம் -ஆகாயம் -சந்திர மண்டலம் -சோமராஜா வாகிறான் அங்கு உணவாகிறான்

சாந்தோக்யம் -5-4-2-ஸ்ரத்தாம் ஜூஹ்வதி தஸ்யா ஆஹூதி சோமோராஜா சம்பவதி

இத்தால் ஸ்ரத்தை போன்ற மன நிலையை கொண்டு யாகம் செய்த ஜீவனே
தம் தேவா பஷயந்தி -5-10-4-சோமோ ராஜாவை உண்கிறார்கள் –

அசருத்வாத் – ஆபஸ் புருஷ வசஸோ பவந்தி ஸ்ரத்தாம் ஜூஹ்வதி –என்று
த்யு லோக அக்னியாதிகளிலே அப்பே ஹோமம் செய்வதாகக் கூறப்படுகின்றதே அன்றி
ஜீவன் அவ்வாறு சொல்லப்பட வில்லையே
ஆதலின் பூத ஸூஷ் மங்களுடன் கலந்த ஜீவன் செல்கின்றான் என்பது தவறாகும்
இதி சேத் ந -என்று சொல்வது தவறாகும்
இஷ்ட அதிகாரிணாம் பிரதீதே –இதே ஸ்ருதியில் மேலே
அத ய இம க்ராமே இஷ்டாபூர்த்தா தத்தம் இதி உபாசதே தே தூமம் அபி சம்பவந்தி –என்று தொடங்கி
ஆகாசம் ஆகாசாத் சந்த்ரமசம் ஏஷ சோமோராஜா சம்பவதி -இது போன்ற வாக்யங்களால்
இஷ்டா பூர்த்தங்களை அனுஷ்ட்டிக்கும் ஜீவன்கள் சந்திரன் போலே
அம்ருதமயமான சரீரங்களைப் பெறுகிறார்கள் என்று சொல்வதால்
தேவாஸ் ஸ்ரத்தாம் ஜூஹ்வதி தஸ்யா ஆஹூதி சோமோராஜா சம்பவதி என்று
முதல் வாக்யத்தில் கூறிய சோமராஜன் என்ற ஸப்தத்தின் அடையாளத்தால்
அச் சப்தம் பூத ஸூஷ்ம யுக்தனான ஜீவனையே சொல்கிறது என்று தோன்றுகிறது –

ஜீவனை உண்ண முடியுமா கேள்விக்கு பதில் அடுத்த ஸூத்ரம்

———————————————————————————————————————————————

ஏஷ சோமோ ராஜோ தம் தேவா பஷயந்தி -5-10-4—என்று தூமாதி மார்க்கத்தாலே
ஸ்வர்க்கத்தை அடைந்தவனுக்கு தேவர்களின் உணவு நிலை -பஷ்யத்வம் -சோமோ ராஜாவை உண்கிறார்கள்-என்பது
கூடாமையாலே இஷ்டாதி காரி வாக்யத்தில் ஜீவன் சொல்லப்பட வில்லை
என்ற சங்கையைப் பரிஹரிக்கிறார் இதில் –

290-பாக்தம் வா அநாத்ம வித்த்வாத் ததா ஹி தர்சயதி-3-1-7-

பாக்தம் வா அநாத்ம வித்த்வாத் ததா ஹி தர்சயதி-
இங்கு வா ஸப்தம் சங்கையை விலக்குகிறது
பாக்தம் து -தேவ பஷ்யத்வம் கூறப்படுவது -அமுக்யார்த்தம் -உபசார வழக்கு
அநாத்ம வித்த்வாத் -ஸ்வர்க்காதிகளை உத்தேசித்து யஜ்ஞாதிகளைப் பண்ணும் ஜீவர்கள்
பரமாத்ம வித்துக்கள் அல்லாமையாலே
தேவர்கள் ஏவியதைச் செய்வார்கள் என்னும் அபிப்ராயத்தாலே சொன்னதாம் அத்தனை
ததா ஹி தர்சயதி-அநாத்ம வித்துக்களான த்ரை வர்ணிக்கர் இந்த்ராதிகளை அடைந்து
உபகாரிகளாய் இருப்பர் என்றவாறு

ப்ரஹ்மத்தை பற்றி அறிவில்லாத காரணத்தால் அந்த அதிகாரிகள் தேவர்களுக்கு உணவாகிறார்கள்
வா -என்கிற பதம் இத்தைக் காட்டும்
ப்ருஹத் உபநிஷத் -1-4-10-யதா பசு ஏவம் ச தேவா நாம் –
மனிசர்களுக்கு பசு உணவாவது போலே தேவர்களுக்கு இவர்கள் உணவாகிறார்கள்

இத்தையே ஸ்ரீ கீதை -7-23–தேவான் தேவ யஜோ யாந்தி மத்பக்தா யாந்தி மாம்பி –
ஆக தேவர்களுக்கு பணிவிடை செய்வார்கள் என்ற கருத்து

இதனையே சாந்தோக்யம் -3-6-1-ந வை தேவா அச்நந்தி ந பிபந்தி எதத் ஏவ அம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யந்தி -என்றபடி
தேவர்கள் உண்ணாமல் பருகாமல் –அமிர்தத்தை கண்களால் பார்த்த படி மகிழ்ந்து இருப்பார்கள் மன நிறைவும் அடைவார்கள்

ஆக ஜீவர்கள் பூத ஸூஷ்மங்களுடனே கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் பட்டது-

இந்த பஞ்ச அக்னி வித்யையில் ப்ரக்ருதியை விட வேறுபட்ட பரிசுத்த ஆத்ம ஸ்வரூபத்தை
ப்ரஹ்மாத்மகமாகவே உபாஸிக்க வேண்டும் என்று கருத்து

இவ் வித்யைக்குப் பலம் ஸ்வ ஆத்ம அனுபவத்துடன் கூடிய பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவம்
மதுவித்யா நிஷ்டனுக்கு வஸூவாதி பத பிராப்தி இடைப்பட்ட பலன் போல் இவனுக்கு ஸ்வ ஆத்ம அனுபவம்

இங்கு ஸ்வாமி தேசிகன் –
தேவ லோகம் -மேகம் -ப்ருத்வீ புருஷன் ஸ்த்ரீ என்று ஐந்து அக்னிகளைக் கல்பித்து
அவற்றில் ஸ்ரத்தை என்னும் பூத ஸூஷ்மம் க்ரமமாக பரிணாமம் அடைந்து
சோமன் மழை அன்னம் ரேதஸ் என்ற ஹவிஸ்ஸை ஜீவனுடன் தேகத்தில் உள்ள ப்ராணன்கள்
ஹோமம் செய்கின்றன -என்பது பஞ்ச அக்னி வித்யை என்று
த்யவ் பர்ஜன்யோ அத ப்ருத்வீ ஜூஹ்வதீதி ப்ரவீதி -என்ற ஸ்லோகத்தால் அருளிச் செய்கிறார்

——————————————————————————————————————————————

இரண்டாவது அதிகரணம் –க்ருதாத்ய யதிகரணம்-

கீழே சரீரம் உள்ளவரை சம்பந்தத்தைச் சாதித்தது
இதில் கர்ம சம்பந்த நியமத்தைச் சாதிக்கிறார் என்று சங்கதி –

அனுபவிக்க வேண்டிய எஞ்சிய கர்ம பலன்களுடன் ஸ்வர்க்கத்தில் இருந்து
ஜீவன் வருகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது

3-1-8-க்ருதாத்யயே அநு சயவான் த்ருஷ்ட சம்ருதிப்யாம் யதேதேம் அநேவம் ச –

தூமாதி மார்க்கத்தாலே ஸ்வர்க்கம் சென்ற இஷ்டாதிகாரி ஜீவர்கள் மறுபடி மனித உலகில் திரும்பும் பொழுது
அங்கு அனுபவித்தது போக மிஞ்சிய கர்மாக்களுடன் வருகிறார்களா இல்லையா என்று சங்கை

யாவத் சம்பாதம் உஷித்வா-என்று கர்மா தொலையும் வரை வசித்து –
ப்ராப்யாந்தம் கர்மண தஸ்ய-என்று கர்மா முடியும் நிலையைப் பெற்று
என்று எல்லாம் ஸ்ருதி சொல்வதாலேயே
மிச்சத்துடன் திரும்புவது இல்லை என்று பூர்வ பக்ஷம்
இதை நிரஸனம் செய்கிறார் –

க்ருதாத்யயே அநு சயவான் –ஸ்வ க்ருதமான புண்ய கர்மாக்கள் பல அனுபவத்தால் அழிந்த பிறகு
அனுபவித்த பின் எஞ்சிய கர்மாவுடன் அனுசயத்துடன் -பூமியில் ஜனிக்கிறார்
ஏன் எனில்
த்ருஷ்ட சம்ருதிப்யாம்–சுருதி ஸ்ம்ருதிகளால் என்றபடி
நல்ல நடத்தை உள்ளவர் -புண்ய கர்மாக்களைச் செய்தவர் நல்ல ப்ரஹணாதி ஜென்மங்களை அடைகிறார்கள் என்று ஸ்ருதியும்
கர்ம சேஷத்துடன் நல்ல ரூபத்தையும் ஜாதியையும் அடைகிறார்கள் என்று ஸ்ம்ருதியும் சொல்லுமே
யதேதேம் -ஸ்வர்க்கத்துச் சென்ற வழிப்படியேயும் -சந்திரனில் இருந்து ஆகாசம் செல்வது –
அநேவம் ச -வேறு வழிகளிலும் திரும்புகிறான் என்பதாம் –
வாயு மேக அப் ராதிகளை அடைவதால் அநேகஞ்ச என்கிறது
நீரைத் தங்கி நிற்கும் நிலையை அப்ரம் என்றும்
பொழியும் நிலையை மேகம் என்றும் கூறுவதால் புநர் யுக்தி தோஷம் இல்லை –

புண்யம் செய்தவர்கள் தூ மாதி மார்க்கம் தொடங்கி பித்ரு மார்க்கம் அடைந்து சந்திர மண்டலம் செல்கிறார்கள்
புண்ய பலன்களை அனுபவித்த பின்பு
சாந்தோக்யம் -5-10-5-யாவத் சம்பாதம் உஷித்வா அத ஏதமேவ அத்வானம் புன நிவர்த்தந்தே -என்று
கர்ம பலன் உள்ள வரையில் ஸ்வர்க்கத்தில் வாழ்ந்து எஞ்சிய கர்மங்களுடன் உலகிற்கு திரும்புகின்றார்கள்

யாவத் சமபாதம் உஷித்வா -என்று எந்த கர்மத்தின் மூலமாக ஸ்வர்க்கம் புகுந்தாரோ
அந்த கர்ம பலன் அனுபவித்த பின்பு என்றபடி
இதனை ப்ருஹத் உபநிஷத் -4-4-6-
ப்ராப்யாந்தம் கர்மண தஸ்ய யத் கிஞ்சேஹ கரோத்யாயம் தஸ்மாத் லோகாத் புனரேத்யச்மை லோகாய கர்மணே-என்றது-

த்ருஷ்ட ஸ்ம்ருதி ப்யாம்–ஸ்ருதியும் ஸ்ம்ருதியும் இப்படியே கூறும்
சாந்தோக்யம் -5-10-7-
தத்ய இஹ ரமணீய சரணா அப்யாசோ ஹ யத் தே ராமணீயாம் யோநிம் ஆபத்யேரன் ப்ராஹ்மண யோநிம் வா
ஷத்ரிய யோநிம் வா வைசிய யோநிம்வா அத யே இஹ கபூய சரணா
அப்யாசோ ஹ யத் தே கபூயாம் யோ நிம் ஆபத்யேரன் ஸ்வ யோ நிம் வா ஸூகர யோநிம் வா சண்டாள யோநிம் வா -என்று
பிராமணன் ஷத்ரியன் வைஸ்யன் நாய் பன்றி சண்டாளன் ஆக பிறக்கிறார்கள்

இதே கருத்தை கௌதம ஸ்ம்ருதி -2-11/12/13-
வர்ண ஆச்ரமாச்ச ஸ்வ கர்ம நிஷ்டா ப்ரேத்ய கர்மபலம் அநுபூய தத சேஷேண விசிஷ்ட தேச ஜாதி குல ரூப ஆயு ஸ்ருத வித்த வ்ருத்த
ஸூ க மேதசா ஹி ஜன்ம பிரதிபத்யந்தே விஷ்வஞ்ச விபரீதா நச்யந்தி -என்றும்

ஆபஸ்தம்ப தர்ம ஸூத்ரமும்-2-1/2/3–
தத பரிவ்ருத்தௌ கர்ம பல சேஷேண ஜாதிம் ரூபம் வர்ணம் பலம் மேதாம் பிரஜ்ஞாம் த்ரவ்யாணி தர்ம அனுஷ்டானம் இதி
பிரதிபத்யந்தே தத் சக்ரவத் உபயோர் லோகயோ ஸூ கே ஏவ வர்த்ததே -என்றும் கூறும்

சாந்தோக்யம் -5-10-5-யாவத் சமபாதம் என்றது பலன் அளிக்கத் தொடங்கிய கர்மங்கள் ஆகும் –

ப்ருஹத் உபநிஷத் 4-4-6–யத் கிஞ்சேஹ கரோத்யம் இதே பொருளில் சொல்லும்

எஞ்சிய கர்மங்களுடன் திரும்புகிறான் –
மேலே கிளம்பும் பொழுது
தூமம் -புகை-இரவு கிருஷ்ண பஷம் தஷிணாயணம் -பித்ரு லோகம் ஆகாயம் சந்தரன் பாதையிலும்
கீழே வரும் பொழுது
சந்தரன் ஆகாயம் வாயு தூமம் அப்ரம் மேகம் மழை தான்யங்கள் புருஷன் ரேதஸ் ஸ்திரீயின் கர்ப்பம் –
என்று ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்கிறார்

—————————————————————————————————————————————

292-சரணாத் இதி சேத ந தத் உப லஷணார்த்தா இதி கார்ஷ்ணாஜிநி –3-1-9-

ஆசாரம் என்பதே கபூய சரணா ரமணீய சரணா பதங்கள் கூறப்பட்டது
அவை கர்மங்கலையே குறிக்கும் என்று கார்ஷ்ணாஜி நி முனிவர் கூறுகிறார்

தைத்ரிய சம்ஹிதை -1-11-12-
யானி அனவத்யானி கர்மாணி தானி சேவிதவ்யாநி நோ இதராணி யானி அஸ்மாகம் ஸூ சரிதானி தானி த்வயா உபாச்யாநி–

இதனால் இன்ப துன்பங்கள் புண்ய பாப கர்மாக்களே ஆகும்

சரணாத் -ரமணீய சரணா என்னும் ஸ்ருதியில் ரமணீயம் என ஸ்ம்ருதியால் விதிக்கப் பட்ட
ஸந்த்யா வந்தனாதி ஆசாரங்களால் ப்ரஹணாதி பிறப்பை யுடையவர் என்று சொல்வதால்
அனுபவித்து மிஞ்சிய கர்மத்தால் நல்ல கெட்ட பிறப்புக்கள் என்பது இல்லை
இதி சேத ந –என்பது தவறு
தத் உப லஷணார்த்தா இதி கார்ஷ்ணாஜிநி –இவை உப லக்ஷணமாகக் கர்மாக்களையே குறிக்கும்
என்பதே கார்ஷ்ணாஜிநியின் திரு உள்ளம்
ஸந்த்யா வந்தனாதிகளை அங்கங்களாகக் கொண்ட யஜ்ஞாதி புண்ய கர்மாக்களாலேயே
ஸ்வர்க்க பிராப்தி என்று அவர் திரு உள்ளம்

இதையே மேலும் காட்டி அருளுகிறார் –

—————————————————————————————————————————————–

293-ஆநர்த்தக்யம் இதி சேத் ந தத் அபேஷத்வாத்–3-1-10-

இதி சேத் ந -ஸ்ம்ருதி விஹிதமான ஆசாரம் சுகத்தின் சாதனை இல்லை என்னில்
ஆ நர்த்தக்யம் -பயன் அற்ற தன்மை ஏற்படும் என்பது இல்லை
தத் அபேஷத்வாத்-அவ் வாசாரத்தை அங்கமாக அபேக்ஷித்தித்து தான் புண்ய கர்மம் சுகத்தை சாதிக்கும்
ஸ்ம்ருதி -ஸந்த்யா ஹீனன் ஸர்வ கர்மாக்களுக்கும் அர்ஹதை அற்றவன் என்று அல்லவோ கூறுகிறது
என்பது கார்ஷ்ணாஜிநியின் மதம் –

புண்ய பாப கர்மங்கள் ஆசாரத்தையே சார்ந்து உள்ளன –

தஷ ஸ்ம்ருதி -2-027-சந்த்யா ஹீநோ அசுசி நித்யம் அனர்ஹா சர்வ கர்மஸூ –
சந்த்யா வந்தனம் செய்யாதவன் அசுத்தமானவன் -அவன் எந்தக் கர்மங்களை செய்ய தகுதி அற்றவனாகிறான் –

வசிஷ்ட ஸ்ம்ருதி -6-3-ஆசார ஹீநம் ந புநந்தி வேதா –
ஆசாரம் இல்லாதவனை வேதத்தாலும் புனிதன் ஆக்க முடியாது –

———————————————————————————————————————————————–

294-ஸூஹ்ருத துஷ்ஹ்ருதே ஏவ இது து பாதரி —3-1-11-

புண்யம் கர்ம ஆசரதி பாபம் கர்ம ஆசரதி- யானி அனவத்யானி கர்மாணி தானி சேவிதவ்யாநி
நோ இதராணி யானி அஸ்மாகம் ஸூ சரிதானி என்று
சரண என்ற பதமும் கர்ம என்ற பதமும் தனித் தனியே சொல்லப்பட்டன –

யானி அன்வத் யானி கர்மாணி -என்று ஸ்ருதிகளில் நேராகக் கூறப்பட்ட கர்மங்கள் உணர்த்தப் பட்டன –

யானி அஸ்மாகம் ஸூ சரிதானி -ஆசாரம் மூலமாக செய்யும் கர்மங்கள் –
கோபலீவர்த்த ந்யாயம்-மாடுகளை அழைத்து வா எருதுகளை அழைத்து வா சிறப்பித்து சொல்வது போலே

ஸூஹ்ருத துஷ்ஹ்ருதே ஏவ இது து பாதரி
து ஸப்தம் முன் பக்ஷத்தை நிவ்ருத்தி செய்து
ஸூஹ்ருத துஷ்ஹ்ருதே ஏவ-ரமணீய சரணா கபூ சரணா என்னும் ஸ்ருதியில்
புண்ய கர்மாவை ஆசரிக்கிறான் பாப கர்மாவை ஆசரிக்கிறான் என்ற பிரயோகம் போலே
சரண ஸப்தத்தாலே ஸூஹ்ருத துஷ்ஹ்ருத கர்மங்களே குறிக்கப்படுகின்றன
அது தவிர ஸதாசார துராசாரங்கள் குறிக்கப் படுவது இல்லை
இது பாதரி -என்பது பாதிரி முனிவர் திரு உள்ளம்
இதுவே ஸூத்காரரின் திரு உள்ளமும்
கர்மங்கள் ஆசாரத்தை அபேக்ஷிப்பவையே என்ற கார்ஷ்ணாஜிநி திரு உள்ளமும் ஸூத்ர காரரின் திரு உள்ளமே

ஆக இத்தால்
எஞ்சிய கர்மங்களுடன் ஜீவன் மீண்டும் வருகிறான் என்றதாயிற்று –

———————————————————————————————————————————————-

கீழே வெறும் இஷ்டா பூர்த்தத்த புண்ய அதிகாரிகள் சந்திரனை அடைந்து கர்ம சேஷத்துடன்
திரும்புகிறார்கள் என்று ஸ்தாபித்தார்
இதில் விதித்ததை அனுஷ்டிக்காத அதிகாரிகளும் யமயாதனை அனுபவித்து சந்திரனை அடைந்து
மறுபடியும் திரும்புகின்றார்களா இல்லையா என்று சங்கை
கௌஷீதகீ உபநிஷத் -1-2- யே வை கே ச அஸ்மாத் லோகாத் ப்ரயந்தி சந்த்ரமசம் ஏவ தே சர்வே கச்சந்தி
இந்த உலகில் இருந்து அனைவர்களும்-புண்யவான்களும் -பாபிகளும் – சந்திர மண்டலம் செல்கிறார்கள்
என்று கூறுவதால் பாபிகள் யமலோக யாதனைகளை அனுபவித்தே சந்த்ர லோகம் ஏறுவதும் இறங்குவதும்
தவிர்க்க முடியாதவை என்ற பூர்வ பக்ஷத்தை
ஐந்து ஸூத்ரங்களாலே விளக்குகிறார் –

மூன்றாம் அதிகரணம் –அநிஷ்டாதிகார்யாதிகரணம்-
பாபம் செய்தவர்கள் சந்திர மண்டலம் செல்வது இல்லை என்பது நிரூபிக்கப் படுகிறது

295-அநிஷ்டாதிகாரிணாம் அபி ச ச்ருதம்-3-1-12-

யாகம்-இஷ்டங்கள் -குளங்கள் வெட்டுதல் -பூர்த்தம் -தத்தம் தானம் – போன்றவற்றை செய்யாமல்
பாபம் செய்தவர்களும் சந்திர மண்டலம் செல்வது கூறப்படுகிறது –

பூர்வபஷ ஸூத்ரங்கள்-இதுவும் அடுத்த நான்கும் –

கௌஷீதகீ உபநிஷத் -1-2- யே வை கே ச அஸ்மாத் லோகாத் ப்ரயந்தி சந்த்ரமசம் ஏவ தே சர்வே கச்சந்தி
இந்த உலகில் இருந்து அனைவர்களும் சந்திர மண்டலம் செல்கிறார்கள்

அனைவருக்கும் சந்த்ர மண்டல கமநம் ப்ரஸித்தம்

—————————————————————————————————————————————-

296-சம்யமனே து அனுபூய இதரேஷாம் ஆரோஹ அவரோஹா தத்கதி தர்சநாத்–3-1-13-

து சப்தம் புண்யசாலி பாபிகளுக்கு வேறுபாட்டைக் காட்டுகிறது
இதரேஷாம் சம்யமனே அனுபூய ஆரோஹ அவரோஹா பவத -பாபிகள் யமனின் ஆட்சியில்
பாபங்கள் பலனை அனுபவித்து பின் சந்திரனை அடைந்து அங்கிருந்து இரக்கம் ஏற்படுகிறது
தத்கதி தர்சநாத்–பாபிகளுக்கு யமலோகம் செல்வதாக சொல்லப்படுவதால்

யமனின் ஆணைக்கு ஏற்ப தண்டனை அனுபவித்த பின்பே சந்திர மண்டலம் செல்வதும் இறங்குவதும் நடக்கும்

கட உபநிஷத் -அயம் லோகோ நாஸ்தி பர இதி மாநீ புன புன வசமாபத்யே மே-என்றும்

தைத்ரீய ஆரண்யகம் -2-1-வைவஸ்வதம் சங்கமனம் ஜனா நாம் யமம் ராஜா நாம் –

—————————————————————————————————————————————–

297-ச்மரந்தி ச–3-1-14-

பராசரர் போன்ற மகரிஷிகள் -ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் -3-7-5–
சர்வே சைதே வசம் யாந்தி யமச்ய பகவன்கில -என்று
அனைவரும் யமனின் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்பர்

——————————————————————————————————————————————

298-அபி சப்த –3-1-15-

ரௌரவம் மஹா ரௌரவம் தாபனம் அவீசி சம்ஹாரம் கால சூத்ரம் கும்பீபாகம் ஆகிய
ஏழு நரகங்கள் ஸ்ம்ருதிகளில் ரிஷிகளால் கூறப்படுகிறது

ஏழு நரகங்களுக்குச் செல்பவராக சொல்லி யமனிடம் செல்வதாக எங்கனம் சொல்ல முடியும் என்றால்

——————————————————————————————————————————————

299-தத்ர அபி தத் வ்யாபாராத் அவிரோத —3-1-16-

யமனுடைய ஆணைக்கு உட்பட்டே நரகங்கள் உள்ளதால் விரோதம் இல்லை

தத்ர அபி -அந்த ஏழு நரகங்களிலும்
தத் வ்யாபாராத் -அந்த யமனின் உத்தரவால் நடப்பதால்
அவிரோத -முன் கூறிய யமவசத்துக்குக் குற்றம் இல்லை

பாபிகள் யமலோக யாதனைகளை அனுபவித்தே சந்த்ர லோகம் ஏறுவதும் இறங்குவதும்
தவிர்க்க முடியாதவை என்ற பூர்வ பக்ஷத்தை நிரஸனம் செய்கிறார்
இனி இந்த பூர்வ பஷங்களுக்கு பதில் கூறப்படுகிறது

——————————————————————————————————————————————-

300-வித்யா கர்மணோ இதி து பிரக்ருதத்வாத்–3-1-17-

து -ஸப்தம் பூர்வ பக்ஷத்தை விலக்குவது
பாபிகளுக்கு எவ்வாறு அர்ச்சிராதி கதி மார்க்கத்தால் ப்ரஹ்ம ப்ராப்தி இல்லையோ
அவ்வாறே தூமாதி மார்க்கத்தால் சந்த்ர பிராப்தியும் இல்லை
வித்யா கர்மணோ -அந்த ப்ரஹ்மத்தையும் சந்த்ரனை அடைதலும் –
ப்ரஹ்ம வித்யைக்கும் புண்ய கர்மத்துக்கும் பலமாய் இருப்பதால் என்றபடி
இதி து பிரக்ருதத்வாத்-இப்படி ப்ரக்ருதமாய் இருக்கையாலே என்றபடி

ப்ரஹ்ம வித்யை உள்ளவர்களுக்கு அர்ச்சிராதி மார்க்கமும்
கர்மங்களை சரிவர இயற்றுபவர்களுக்கு தூமாதி மார்க்கமும் கிட்டும் என்றே படிக்கப் படுகிறது

தேவயானத்தைப் பற்றிக் கூறும் பொழுது சாந்தோக்யம் -5-10-1-
தத்ய இத்தம் விது யே ச இமே அரண்யே ச்ரத்தா தப இதி உபாஸ்யதே–தே அர்ச்சிஷம் அபி சம்பவந்தி அர்ச்சிஷ அஹ -என்றும்

பித்ருயானத்தைப் பற்றிக் கூறும் பொழுது சாந்தோக்யம் -5-10-3-
அத யே இமே க்ராமா இஷ்டாபூர்த்தா தத்தம் இதி உபாசதே –தே தூமம் அபி சம்பவந்தி -என்றது

கௌஷீதகி உபநிஷத் -யே கே ச அஸ்மாத் லோகாத் ப்ரயந்தி சந்த்ரமசம் ஏவ தே சர்வே கச்சந்தி -என்று
அனைவரும் சந்திர மண்டலம் செல்கின்றனர்

பரமபுருஷ உபாஸன ப்ரஹ்ம வித்யா நிஷ்டர்கள் அர்ச்சிராதி மார்க்கம் சென்று திரும்பி வராமல்
பரம புருஷனை அனுபவிக்கிறார்கள் என்றும்
கிராமத்தில் இருந்து தேவாலயம் தடாகாதிகள் நிர்மாணம் யாகம் தானம் செய்பவர்
தூ மார்க்கம் மூலம் ஸ்வர்க்கம் அடைந்து திரும்புவார்கள் என்றும் இந்த ஸ்ருதிகளின் பொருள் –

பாவம் செய்தவர்கள் சந்திர மண்டலம் செல்லா விடில்
ஐந்தாவது ஆஹூதி ஏற்படாமல் உடலும் தோன்றாதே என்ன அடுத்த ஸூத்ரத்தில் சமாதானம்

——————————————————————————————————————————————–

301-ந த்ருதீயே ததா உபலப்தே–3-1-18-

ந த்ருதீயே -வித்யா நிஷ்டர் கர்ம நிஷ்டர் தவிர்த்த மூன்றாவதான பாபிகள் விஷயத்தில்
தேஹம் தொடங்க ஐந்தாவது ஆஹுதி தேவை இல்லை
ததா உபலப்தே-அவ்வாறு சுருதியில் காணப்படுவதால்

மூன்றாவது இடமாகிய நரகம் செல்லும் பாபம் செய்தவர்களுக்கு பொருட்டு ஐந்தாவது ஆஹூதி
அவசியம் இல்லை என்று ஸ்ருதி கூறும்

சாந்தோக்யம் -5-3-3-வேத்த யதா கே நா சௌ லோகோ ந சம்பூர்யதே –என்று கேட்டு
பஞ்ச அக்னி வித்யையில் பாஞ்சால மன்னன் -ஸ்வர்க்க லோகம் பூர்ணபம் ஆகாமைக்குக் காரணம் தெரியுமா என்று கேட்க

விடையாக -5-10-8-அத எதையோ பதோர்ந கதரேண ச தானி இமானி ஷூத்ராணி அசக்ருதா வர்த்தீநி பூதானி பவந்தி
ஜாயாஸ்ய ம்ரியச்வேதி ஏதத் த்ருதீயம் ஸ்தானம் தே நா சௌ லோகோ ந சம்பூர்யதே

அற்பமாய் அடிக்கடி திரும்பி வரும் பூதங்கள் பிறந்தும் இறந்தும் தவிப்பவையான பாபிகள்
இவர்களால் ஸ்வர்க்க லோகம் பூர்த்தி அடைவது இல்லை -அவர்களை மூன்றாம் இடம் -த்ருதீய ஸ்தானம் என்றும்
அவர்கள் தேவ யான பித்ரு யான மார்க்கங்களை விட்டு நரகங்களை அனுபவித்து
அடிக்கடி ஜனன மரணங்களை அடைந்து தவிக்கின்றனர் என்கிறார் –

ஆகையால் அந்த பாபிகளுக்கு பஞ்சம ஆஹுதியின் அபேக்ஷை இல்லை என்று தெரிகிறது –

ஐந்தாவது ஆஹூதி இல்லாமலேயே உடல் எடுத்தவர்கள் உண்டே -என்கிறது-

——————————————————————————————————————————————–

302-ஸ்மர்யதே அபி ச லோகே —3-1-19-

த்ரௌபதி திருஷ்டத்யும்னன் போன்ற புண்ணியம் செய்தவர்களுக்கு
ஐந்தாவது ஆஹூதி இல்லாமலே உடல் உண்டானதே –
அக்னியில் இருந்து தோன்றியதாக மகாபாரதம் சொல்லும்

——————————————————————————————————————————————–

303-தர்சநாத் ச –3-1-20-

ஸ்ருதியிலும் இதே கருத்தைக் காணலாம் –
சாந்தோக்யம் -6-3-1-தேஷாம் கலு ஏஷாம் பூதானாம் த்ரீண்யேவ பீஜானி பவந்தி அண்டஜம் ஜீவஜம் உத்பிஜ்ஜம்-என்று

கொசு போன்றவை ஸ்வே தஜம்
செடி கொடி மரம் போன்றவை உத்பிஜ்ஜம்
மனுஷ்யர் போன்றோர் ஜீவஜர்
இந்த மூன்றில் அண்டஜத்துக்கும் உத்பிஜ்ஜத்துக்கும்-கருவின் தொடர்பு வேண்டாம்

தேஜஸ் உஷ்ணம் மூலம் முட்டை உடைந்து உயிர் பிறப்பதும்
ரேதஸ் விந்து மூலம் கர்ப்பம் மூலம் பிறப்பவை –

பூமியை பிளந்து செடி போன்றவை பிறப்பதும் –
வியர்வை மூலம் போன்றும் கிருமிகள் -போன்றவை ஐந்தாவது ஆஹூதி இல்லாமல் உண்டானவை

———————————————————————————————————————————————

304-த்ருதீய சப்தாவரோத சம்சோகஜச்ய-3-1-21-

இந்த ஸ்ருதியில் பேன் போன்ற ஸ்வேதஜங்களுக்கு எப்படி அடக்கம் என்ற சங்கை வர
அத்தை நிவர்த்திப்பிக்கிறார்

சாந்தோக்யம் -அண்டஜம் ஜீவஜம் உத்பிஜ்ஜம்-என்று
உத்பிஜ்ஜம் பதம் மூலம் வெப்பத்தாலும் வியர்வையாலும் உண்டாகும் கிருமிகள் பற்றிக் கூறப்பட்டது

த்ருதீய சப்தாவரோத சம்சோகஜச்ய–உத்பிஜ்ஜம் என்ற மூன்றாம் சொல்லாலே சம்சோகஜமான ஸ்வேதத்திற்கும்
அவராக கிரஹணம் பொருள் கொள்ளப் படுகிறது

ஆகையால் பாபிகள் சந்த்ர மண்டலம் செல்வதோ திரும்பி வருத்தலோ கிடையாது என்பது ஸித்தம் –

எனவே பாபம் செய்தவர்களும் சந்திர மண்டலம் செல்வது எனபது பொருந்தாது என்றது ஆயிற்று –

———————————————————————————————————————————————-

நான்காவது அதிகரணம் –தத் ஸ்வாபாவ்யாபத்த் யதிகரணம் –
மேலே கிளம்பிய ஜீவன் ஆகாசம் போன்றவற்றுடன் தொடர்பு மட்டுமே அடைகின்றான் என்று நிரூபிக்கப் படுகிறது –

305- தத் ஸ்வா பாவ்யாபத்தி உபபத்தி-3-1-22-

தூமாதி மார்க்கத்தால் சந்திரனை அடைந்த புண்ய கர்மனுக்குத் திரும்பி வரும் வழி கூறப்படுகிறது
யதேத்தம் -சென்ற வழிப்படியே –ஆகாசம் வாயு தூமம் அப்ரம் -பரவிய மேகம் -பின் மழை பொழியும் மேகம் -என்ற
முறையைக் கூறும் ஸ்ருதியில் கூறப்படும் ஆகாசாதித் தன்மை தெய்வத்தன்மை மனுஷ்யத்தன்மை முதலியன போல்
ஆகாசாதிகளைச் சரீரமாகக் கொண்டு ஜனனம் என்னும் தன்மையதா
அன்றி ஆகாசாதிகளுக்கு சமத்துவம் பெறுவதா
என்ற சம்சயம்

ஆகாசாதி சரீரிகத்வ ரூபமே என்பது பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
ஸ்ரத்தையை -நீரை -ஹோமம் செய்கின்றனர்
அந்த ஆஹுதியால் ஸோம ராஜன் ஆகிறான் என்பது போலே ஆகாச பாவம் சொல்லப் படுகிறது –
ஸோம பாவம் என்பது சந்திரனுக்கு சமமான சரீரம் கொண்டு இருத்தல்
அவ்வாறே ஆகாசாதி சரீரம் என்ற
பக்ஷத்தைக் கண்டிக்கிறார் –

ஆகாயம் போன்றவற்றின் ஸ்வ பாவம் அடைகிறான் என்று கூறுவதே பொருந்தும்
சாந்தோக்யம் ஜீவன் திரும்பும் வரிசையை -5-10-5/6-
அத ஏவம் ஏவ அத்வானம் புன -நிவர்த்தந்தே யத் ஏதம் ஆகாசம் –ஆகாசாத் வாயும் வாயுர்பூத்வா தூமோ பவதி
தூமோ பூத்வா அப்ரம் பவதி -அப்ரம் பூத்வா மேகோ பவதி -மேகோ பூத்வா ப்ரவர்ஷதி–
சோமராஜா சரீரம் போலே ஆகாயம் முதலான சரீரங்களை எடுக்கின்றான்
பூர்வ பஷம்

ஸ்வா பாவ்யா பதி என்பதால் சரீரம் எடுக்க வில்லை –
தன்மைகளை மட்டுமே அடைகின்றான் எனபது சித்தாந்தம்-

வேறு உலகத்தில் இருந்து இறங்கி வரும் ஜீவனுக்கு ஆகாச வாயு தூமாதி பாவம் என்பது
தத் ஸ்வா பாவ்யாபத்தி –ஆகாசாதிகளுக்கு சமத்துவம் அடைதலே
ஆகாசாதி சரீரிகத்வம் இல்லை
ஏன் எனில்
உபபத்தி-ஸூக துக்க அனுபவங்களின் அபாவத்துக்கு -இன்மை -பொருத்தம் இருப்பதால் –
ஸோமாதி பாவத்தால் உண்டாகும் ஸூக துக்காதிகளின் அனுபவம் ஆகாசாதி பாவத்தில் இல்லாமையால்
ஆகாசாதிகளுடன் சாம்யம் வரும் என்று கருத்து –

———————————————————————————————————————————————-

ஐந்தாம் அதிகரணம் -நாதிசிராதி கரணம்
ஆகாசம் போன்றவற்றில் ஜீவன் சிறிது காலமே தங்கி விட்டுக் கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –

306-நாசிசிரேண விசேஷாத்-3-1-23-

ஆகாசாதி இடங்களில் நீண்ட காலம் தங்கி இருக்கிறானா
அல்லது விரைவிலே திரும்பி இறங்கி வருகிறானா
என்று சம்சயம்
நீண்ட காலம் கூட இருக்கிறான் என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
விசேஷமான வசனம் இல்லாமையாலே
என்ற பக்ஷத்தை நிரஸிக்கிறார்

மேலே வ்ரீஹ் யாதி பாவம் கூறிய இடத்தில்
சாந்தோக்யம் -5-10-6-அதோவை கலு துர் நிஷ் பிரபதரம்
சிரமப்பட்டு அரிசியில் இருந்து வெளியேறுகின்றான்-என்று கூறுவதால்

ஆகவே ஆகாசம் தொடங்கி வர்ஷம் வரை ஜீவன் விரைவிலேயே வெளியேறுவதாகத் தோன்றுகிறது

—————————————————————————————————————————————

ஆறாவது அதிகரணம் -அந்யாதிஷ்டிதாதி கரணம் –
மற்ற ஜீவன்களுடன் தொடர்பு மட்டும் கொள்கின்றான் என்கிறதாயிற்று

307-அந்யா திஷ்டிதே பூர்வவத் அபிலாபாத் —3-1-24-

தொடர்பு மட்டுமே கொள்கின்றான்

சாந்தோக்யம் -5-10-6-
மேகோ பூத்வா ப்ரவர்ஷதி தா இஹ வ்ரீஹியவா ஓஷதி வனச்பதய திலாமாஷா இதி ஜாயந்தே
தேவா ஜாயந்தே-மனுஷா ஜாயந்தோ போலே இங்கும் கூறப்படுவதால்
தாவர உடல்களுடன் பிறக்கிறான்
என்பர் பூர்வ பஷி –

தேவ பாவம் மனுஷ்ய பாவம் போல் தான்யாதிகளைச் சரீரமாகக் கொண்ட தன்மையா
அல்லது சம்பந்தம் மட்டுமா -என்ற சங்கை
நெல் முதலிய சரீரங்களைக் கொண்டு தோன்றுகிறார்களா
அன்றி பிற ஜீவன்களால் அதிஷ்டிதமான வ்ரீஹி முதலியவற்றுடன் சம்பந்திக்கிறார்களா
என்று சம்சயம்
மேகமாகப் பொழிகிறான்
பின் நெல் சாமை பச்சிலை வனஸ்பதிகள் எள் உளுந்து என்பனவாக மாறுகிறான் என்று சொல்வதால்
வ்ரீஹி முதலிய ஜென்மங்களை அடைகிறான்
என்பதே பொருந்தும் என்று பூர்வ பக்ஷம்

இதனைக் கண்டிக்கிறார்

அப்படி அல்ல –
ஆகாயம் மழை மேகம் போலே தொடர்பு மட்டுமே கொள்கிறான்-

அந்யா திஷ்டிதே -சம்பந்தம் மட்டுமே
ஏன் எனில்
பூர்வவத் அபிலாபாத் –ஆகாசாதி பாவம் போலே வ்ரீஹ் யாதி பாவம் சொல்லுகையாலே
அதற்க்கு காரணமான கர்மாவைச் சொல்லாமையாலே

சாந்தோக்யம் –
ரமணீய சரணா கபூய சரணா -சந்திர மண்டலத்தில் பலன்கள் தொடங்கப் பட்ட கர்மங்கள் முடிந்தன
என்று ஜென்மத்தின் காரணமான புண்ய பாப ரூபமான கர்மம் கூறப்படுகிறது
உண்டாகின்றன என்ற சொல் உபசார வழக்கு

பஞ்ச ஆஹூதிக்கு பின்பு எடுக்கும் உடலிலே மீண்டும் கர்ம பலன்கள் அனுபவிக்க வேண்டும்
இடைப் பட்ட காலத்தில் அனுபவிக்க கர்மங்கள் இல்லை என்பதால்
தொடர்பு மட்டுமே என்றதாயிற்று-

—————————————————————————————————————————————-

308-அசுத்தம் இதி சேத ந சப்தாத் –3-1-25-

அக்னி ஷோமம் போன்ற பசு ஆடு வதையுடன் கூடிய யாகங்களால் பெற்ற பாவங்களால்
தான்ய உடல் கொள்வான் என்பர் பூர்வ பஷி
ந ஹிம்ச்யாத் சர்வ பூதானி -சாந்தி பர்வம் -278-5–சாஸ்திர விதி என்பதால்
பாபம் வாராது என்றாலும்
ஏதாவது பலனை குறித்து செய்யும் யாகத்தில் பசு வதை பாபம் ஆகுமே என்றால்

தைத்ரிய சம்ஹிதை -2-5-5-ஸ்வர்க்க காமோ யஜேத-என்றும்

ஆபஸ்தம்ப ஸூத்ரம்-2-1-2-2-சர்வ வர்ணானாம் ஸ்வ தர்ம அனுஷ்டானே பரம் அபரிமிதம் ஸூகம் –

மனு ஸ்ம்ருதி -1-2-9-சரீரஜை கர்ம தோஷை யாதி ஸ்தாவரதாம் நர -என்றும் சொல்லும்

ஆக ஆசை விருப்பத்தின் அடியாகவே யாகம் செய்வதால்
பாபம் கிட்டி தான்ய உடலை பெறுகிறான் என்பர் பூர்வ பஷி

நெல் முதலிய தன்மைகளுடன் தோன்றுகிறார்கள் என்று பிறப்பின் காரணமான
கர்மாக்கள் ஸ்ருதி கூறா விடிலும் அசுத்தம் –
யாகாதி காம்ய கர்மங்கள் ஹிம்சை நிறைந்தமையால் அசுத்தமாகுமே என்னில்
இதி சேத ந -அது அல்ல
சப்தாத் –யாகத்தில் பயன்படுத்துவது ஹிம்ஸை இல்லை என்றும்
அதுக்குப் பொன் மயமான சரீரத்துடன் ஸ்வர்க்க கமனமும் பலமாகச் சொல்லப்பட்டு இருப்பதால்
யாகாதிகளில் ஏதும் அசுத்தமான அம்சம் இல்லை என்பதாகும் –

சித்தாந்தம் –
பசு வதை இல்லை -ஸ்வர்க்கம் செல்லவே -என்பர் –
ஹிரண்ய சரீர ஊர்த்வம் ஸ்வர்க்கம் லோகமேதி -என்று சொல்லுவரே

தைத்ரிய பிராமணமும் -நா வா வு ஏதன் ம்ரியதே ந ரிஷ்யசி தேவான் இதேஷி பதிபி ஸூ கேபி
எத்ர யந்தி ஸூ க்ருதோ நாபி துஷ்க்ருத தத்ர த்வா தேவ சவிதா ததாது என்று
சவிதா என்னும் ஸூர்யன்
அந்த மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் இடம் அழைத்துச் செல்வான் -என்றதே-

—————————————————————————————————————————————-

309-ரேதஸ் சிக்யோக-அத —3-1-26-

அத —வ்ரீஹ் யாதி தன்மை அடைந்த பின்பு
ரேதஸ் சிக்யோக-ஸ்ரூயதே -தான்யாதிகளை உண்டவன் இந்திரியத்தை யுடைய புருஷனாக மாறுகிறான்
ஆஹுதி செய்யப்பட்டு மழையாய் வந்த நீர் தான்யமாகி
மனிதன் உடலில் உணவான பின்பு இந்த்ரியமாக மாறுகிறது
இதனால் புருஷ சம்பந்தம் கூறுவதால் வ்ரீஹ் யாதி பாவத்திலும் ஸம்பந்தம் மட்டுமே ஸித்திக்கிறது

விந்துவை விடுபவனாக கூறுவது போன்று –
சாந்தோக்யம் -5-10-6-யோ யோ ஹி அந்தமத்தி யோ யோ ரேத சிஞ்சதி தத் பூய ஏவ பவதி -போலே
நெல் போன்றவைகளுடன் சேர்த்தி அடைகின்றான் என்றே கொள்ள வேணும்

—————————————————————————————————————————————–

310- யோ நே சரீரம்–3-1-27-

கர்ப்பத்தை அடைந்த பின்னரே உடல் தோன்றுகிறது
ஆகாயம் போன்றவற்றுடன் சேர்த்தி மட்டுமே கொள்கிறான் என்றதாயிற்று-

யோ நே சரீரம்-பெண் உறுப்பை அடைந்த பிறகே சரீரம் தோன்றுகிறது –
அங்கு தான் ஸூக துக்க அனுபவங்கள் உண்டாகின்றன

இதனால் ஆகாசாதிகளில் அனுபவித்து எஞ்சிய கர்மாக்களை யுடையவனுக்கு
சம்பந்தம் மட்டுமே கூறப்படுகிறது என்பதாம்

இந்தப் பாதத்தில் ஜீவனுக்கு ஸம்ஸார பந்தம் உண்மையானது என்று கூறுவதால்
சாங்க்யர்கள் -மித்யா வாதிகள் மாதங்கள் நிரசிக்கப் பட்டவை ஆகின்றன –

—————————————

இப்பாதத்தில் ஆறு அதிகரணங்களின் பொருள்களை

1-ததந்திர பிரதிபத்த்ய அதிகரணத்தில் தேஹத்தை விடும் ஜீவன் பூத ஸூஷ்மங்களுடன் போகிறான் என்றும்
2-க்ருதாத்ய யாதிகரணத்தில் -ஸ்வர்க்கத்தை அனுபவித்த ஜீவன் போன வழியிலும் வேறு வழியிலும் திரும்புகிறான் என்றும்
3-அநிஷ்டாதிகார்யாதிகரணத்தில் நரகம் அடைந்தவர்களுக்கு சந்த்ர பிராப்தி இல்லை என்றும்
4-தத் ஸ்வா பாவ்யாபத்த்யதிகரணத்தில் ஆகாசாதிகளுடன் ஸாம்யமே தவிர ஆகாசாதிகளாக ஜென்மம் இல்லை என்றும்
5-நாதிசிராதி கரணத்தில் -ஆகாசாதிகளில் இருந்து சீக்கிரம் இறங்குகிறான் என்றும்
6-அந்யா திஷ்டிதாதி கரணத்தில் -பர சரீர பூதமான வ்ரீஹ் யாதிகளிலே ஸம்பந்தம் மாத்ரமே
என்றும் விளக்கப்பட்டன என்று ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்கிறார் –

————————————————————————————————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை –இரண்டாம் அத்யாயம் –மூன்றாம் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————————————————-

வேத பாஹ்யங்களான ஸாங்க்யாதி தந்திரங்கள் நியாய ஆபாஸத்தை மூலமாகக் கொண்டவை –
முன் பின் முரண்பாடு உள்ளவை-அசமஞ்சஸம் என்று ஸ்தாபித்த பின்னர்
இந்த பாதத்தில் தன் பக்ஷத்துக்கு தோஷ லேசமும் இல்லை என்று காட்டி அருள
ப்ரஹ்மத்தின் கார்யமான சித் அசித் ஆத்மகமாம் பிரபஞ்சத்துக்கு
கார்யத்வம் எந்த வகையில் என்பது நிரூபிக்கப் படுகிறது
என்பது பாத சங்கதி –

முதல் அதிகரணம் –வியதத் அதிகாரணம் –

ஸ்ரீ பாஞ்ச ராத்ர அதிகரணத்தில்
ஜீவனின் உத்பத்தி வாதமானது ஜீவனுக்கு அபிமானியான ஸங்கர்ஷணாதிகளைக் குறிப்பது ஆதலின்
உபசார வழக்கு எனப்பட்டது
அப்படியாகில்
அதே நியாயத்தில் ஆகாசத்துக்கு உத்பத்தி வாதமும் உபசார வழக்கு ஆகட்டுமே என்ற சங்கையில்
இந்த அதிகரணம் எழுகிறது என்று சங்கதி –

ஸூத்ரம் –213–ந வியத் அஸ்ருதே –2-3-1-

ஆகாசம் உண்டாகிறதா இல்லையா என்று சம்சயம்
அது உண்டாவது இல்லை
அஸ்ருதே -ஆத்மாவைப் போலவே நிர் அவயவமான ஆகாசத்துக்கு உத்பத்தி எங்கும் கேட்கப்படாமையால்
என்ற பூர்வ பக்ஷத்தைக் கண்டிக்கிறார்

———-

ஸூத்ரம் –214–அஸ்தி து –2-3-2-

து -பக்ஷம் மாறுவதைக் காட்டுகிறது
அஸ்தி -ஆகாசத்துக்கு உத்பத்தி உண்டு
ஏன் எனில்
ஆத்மன ஆகாஸஸ் ஸம்பூத -என்று
உத்பத்தி ஸ்ரவணத்தாலே பிரமாணாந்தரத்தாலே அப்ராப்தமான ஆகாச உத்பத்தியை ஸ்ருதி விளக்குவதால்
வஹ்னினா சின்ஜேத்-நெருப்பினால் நனைக்க வேண்டும் என்பது போலே
இதுக்குத் தகுதி இன்மை -அயோக்யதை -இல்லை என்று கருத்து –

————-

ஸூத்ரம் –215-கௌண்ய சம்பவாத் ஸப்தாச்ச –2-3-3-

மேலும் பூர்வ பக்ஷத்தை உபந்யசிக்கிறார்
ஆத்மன ஆகாஸஸ் ஸம்பூத-என்கிற ஸ்ருதி
கௌணீ –முக்யப் பொருள் அற்றது -உபசார வழக்கு
ஸூஷ்ம அவஸ்தமான தன்னிடம் இருந்து ஸ்தூல அவஸ்தமான தான் உண்டாகிறது என்ற
முக்கியமற்ற அர்த்தத்தைக் கூறுகிறது
ஏன் எனில்
அசம்பவாத் -தத் தேஜோ அஸ்ருஜத -என்று
ஜகத்தின் ஸ்ருஷ்டிக்கு முன்பு தேஜஸ்ஸூ உண்டாகிறது -என்பதால்
ஸப்தாச்ச -வாயுச் சாந்த ரிஷஞ்ச ஏதத் அம்ருதம் -என்று
ஆகாசத்துக்கு அம்ருதத்வ சப்தத்தாலேயும் வ்யுத் உத்பத்தி கௌணீ யாகும் -உபசார வழக்கே என்றவாறு –

———————

ஸூத்ரம் –216-ஸ்யாச்ச ஏகஸ்ய ப்ரஹ்ம சப்தத்வத் –2-3-4-

ஏகஸ்ய ஸ்யாச்ச –ஆத்மன ஆகாஸஸ் ஸம்பூத-ஆகாசாத் வாயு -வாயோர் அக்னி —
முதலிய இடங்களில் அனு ஷக்தமாய்க் கொண்டுள்ள ஒரு ஸம்பூத சப்தத்துக்கு
ஆகாசஸ் சம்பூத -என்பதில் கௌணத்வமும் –
வாயுஸ் ஸம்பூத-என்பதில் அனு ஷக்தமான அதே பதத்துக்கு முக்யத்வமும் இருக்கலாம்
ப்ரஹ்ம ஸப்த வத்தஸ்மாதேதத் ப்ரஹ்ம நாம ரூபம் அன்னஞ்ச ஜாயதே தபஸா சீயதே ப்ரஹ்ம
என்ற இடங்களில்
பிரதானத்தில் கௌணமாகவும் பர ப்ரஹ்மத்தில் முக்யமாகவும் கொள்வது போலே
இதுவும் கூடலாம் என்பது பூர்வ பக்ஷ ஸூத்ரம்

இந்த சங்கையை மேல் நிரஸனம் செய்கிறார் –

———————-

ஸூத்ரம் –217–ப்ரதிஜ்ஜா ஹாநி அவ்யதி ரேகாத் –2-3-5-

யேநா ஸ்ருதம் ஸ்ருதம் பவதி -என்று சொன்ன ப்ரஹ்ம விஞ்ஞானத்திலே
ஆகாசம் முதலான சர்வ விஞ்ஞான ப்ரதிஜ்ஜைக்கு
அஹாநி -தடை இல்லை
அவ்யதி ரேகாத் -ஆகாசமும் ப்ரஹ்மத்தினிடம் தோன்றியத்துய ஆதலின்
ப்ரஹ்ம கார்யமான ஜகத்தில் அந்தர் பூதம் ஆகையால் உப பன்னமே யாகும் என்பதாம் –

—————————-

ஸூத்ரம் –218–சப்தேப்ய –2-3-6–

ஐததாத்ம்யம் இதம் ஸர்வம் -என்ற ஸ்ருஷ்டியில்
ப்ரஹ்மத்துக்கு ஸ்ருஷ்டிக்கு முன்பு ஏகத்வத்தை உறுதிப் படுத்தலையும் சர்வாத்மத் வாதிகளையும் சொல்லும்
ஸப்தங்களாலேயும் ஆகாசத்துக்கு உத்பத்தி உண்டு என்று தோற்றுகிறது
தத் தேஜஸ் அஸ்ருஜத-என்கிற வாக்கியத்தில்
ஆகாசத்துக்கு உத்பத்தி கூறப்படவில்லை என்பது வேறு ஸ்ருதியால் விளக்கப்பட்டது
அதன் உத்பத்தியைத் தடுக்க மாட்டாது என்பது கருத்து

—————–

ஸூத்ரம் -219-யாவத் விகாரந்து விபாகோ லோகவத் –2-3-7–

சாந்தோக்யத்தில் -தத் தேஜஸ் அஸ்ருஜத-என்று
தேஜஸ்ஸூக்கு ஸ்ருஷ்டி சொன்னது போலே ஆகாசத்துக்கு வெளிப்படையாகக் கூறப்பட வில்லை
அப்படி இருந்தாலும் அங்கேயே
ஐததாத்ம்யம் இதம் ஸர்வம்-என்று
யாவற்றும் ஸமஸ்த ஜகத்தும் ப்ரஹ்மத்தின் விகாரம் என்றே கூறப்பட்டுள்ளமையால்
விபாக -உத்பத்தி சொல்லப்பட்டதாகிறது
லோகவத் -உலகில் யாவரும் தேவதத்தன் புதல்வர்கள் என்று சொல்லிப் பின் குறிப்பிட்ட சிலரை மட்டும் சுட்டி
இவர்கள் தேவதத்த புதல்வர்கள் என்று சொன்னால் மற்ற எல்லாரும்
அவனுடைய புதல்வர்கள் என்பதைக் காட்டுவதாகிறது –
அதேபோல் இங்கும் க்வசித் தேஜஸ்ஸு க்கு உத்பத்தி சொன்னது
ஆகாசத்தில் உத்பத்தையைக் காட்டுவதற்க்கே யாகும் என்று அபிப்ராயம் –

——————

ஸூத்ரம் –220-ஏதேந மாதரிச் வாவ் வ்யாக்யாத –2-3-8–

ஏதேந –ஆகாசத்துக்குக் கூறிய நியாயத்தாலே
மாதரிச் வாவ் வ்யாக்யாத-வாயுவும் விளக்கப்பட்டது
ப்ரஹ்மத்தின் காரியமே என்று கூறப்படுகிறது
மேலே தேஜோ அத ததாஹ் யாஹ 2-3-10-என்ற ஸூத்ரத்தில்
அத -என்ற சொல்லாலே வாயுவை பாரமர்சிக்கைக்காக
ஏதேந மாதரிச் வாவ் வ்யாக்யாத–என்று தனி ஸூத்ரம் செய்தார் என்று கருத்து –

—————-

ஸூத்ரம் –221-அசம்ப வஸ் து ஸதோ அனுப பத்தே –2-3-9–

து -என்பது ஏவகார பொருளில் வந்தது
ஸத் அஸ்து அஸம்பவ –ஸத் என்ற ப்ரஹ்மத்துக்கு உத்பத்தி -அஸம்பவ-இல்லாமை –
ப்ரஹ்மத்தைத் தவிர வேறே எதற்கும் உத்பத்தி இல்லாமை கூற முடியாது -என்பதாயிற்று
அனுப பத்தே -ஏக -விஞ்ஞானத்தால் ஸர்வ விஞ்ஞானம் என்ற
ப்ரதிஜ்ஜைக்கு அனுபவத்தி வாராமைக்காக ப்ரஹ்மத்தைத் தவிர்த்த ஆகாசாதி ஜகத்து முழுவதற்கும்
உத்பத்தி சித்தித்தது –

————————

இரண்டாவது அதிகரணம் –தேஜோ அதிகரணம் –

மஹத் முதலியவற்றுக்கும் ப்ரக்ருதியாதிகளைச் சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்திடம் இருந்து உத்பத்தியை
இவ்வதிகரணத்தில் சாதிக்கிறார் என்று சங்கதி
நான்கு ஸூத்ரங்கள் பூர்வ பக்ஷம்

ஸூத்ரம் –222-தேஜோ அதஸ் ததாஹ்யாஹ –2-3-10-

ப்ரஹ்மத்தால் அனு பிரவேசிக்கப்பட்ட மஹான் அஹங்காரம் முதலிய கார்யங்கள்
தனி ப்ரக்ருதி முதலியவற்றில் இருந்து உண்டாகின்றனவா
அல்லது ப்ரக்ருதியை சரீரமாகக் கொண்ட பரமாத்மாவின் இருந்து உண்டாகின்றனவா
இவ்வாறு ஆகாசாத் வாயு -என்கிற இடத்தில்
வெறும் ஆகாசத்தில் இருந்து வாயு தோன்றுகிறதா
அல்லது ஆகாசத்தை சரீரமாகக் கொண்ட பரமாத்மா விடம் இருந்து தோன்றுகிறதா என்று சங்கை
கேவலம் பிரகிருதி முதலியவற்றில் இருந்தே தோன்றுகின்றன என்பது பூர்வ பக்ஷம்
ஆகாசாத் வாயு -வாயோர் அக்னி -என்று கேவலம் ஆகாசாதிகளே காரணங்கள் என்று
சொல்லுகையால் என்னும் பக்ஷத்தை உபந்நியாசிக்கிறார்

அத-கேவல வாயுவில் இருந்து
தேஜஸ் -தேஜஸ் உண்டாகிறது
ததாஹ்யாஹ-ஸ்ருதி அப்படித்தான் கூறுகிறது –

——–

ஸூத்ரம் –223-ஆப –2-3-11-

அதஸ் ததாஹ்யாஹ -என்று கூட்டிக் கொள்ள வேண்டும்
அத-கேவலம் இந்த தேஜஸ்ஸில் இருந்தே
ஆப -ஜலம் உண்டாயிற்று
ததாஹ்யாஹ -ஸ்ருதி அப்படித்தான் கூறுகிறது –

————

சூத்ரம் –224-ப்ருத்வீ –2-3-12-

இவ்வாறே பிருத்வீயும் கேவலம் அப்புக்களில் இருந்து -ஜலத்தில் இருந்தே உண்டாகிறது
என்று ஸ்ருதி கூறுகிறது –
தா அன்னம் அஸ்ரு ஜந்த –என்னும் இடத்தில்
அன்ன -சப்தத்தால் எப்படி பிருத்வீ கூறப்படுகிறது என்றால்

———

ஸூத்ரம் –225-அதிகார ரூப சப்தாந்த ரேப்ய–2-3-13-

த அன்னம் அஸ்ருஜந்த -என்னும் இடத்தில் அன்னம் என்று பிருத்வீ கூறப்படுகின்றது
ஏன் எனில்
அதிகாரத்தால் -மஹா பூதங்களில் ஸ்ருஷ்டி பிரகாரணம் ஆகையால்
ரூபாத் யத் க்ருஷ்ணம் ததந் நஸ்ய -என்று
மேல் வாக்யத்தாலே பிருத்வியின் க்ருஷ்ண ரூபத்தை அன்னத்துக்குச் செல்வதாலும்
சப்தாந்தராச்ச –இந்த சாந்தோக்யத்துக்கு சமான பிரகரணமான தைத்ரியத்திலே
அத்ப்ய ப்ருத்வீ –ஜலத்தில் இருந்து பிருத்வீ உண்டாகிறது என்று கூறும்
வேறு சப்தத்தாலும் அன்னம் என்பது பிருத்வீயே ஆகும்

இந்த பூர்வ பக்ஷத்தை நிரஸனம் செய்கிறார் –

———–

ஸூத்ரம் –226-ததபித்யானா தேவது தல் லிங்காத் ஸ –2-3-14-

து சப்தம் பூர்வ பக்ஷத்தை விலக்குவது
கேவலம் மஹத் அஹங்காரம் ஆகாச தேஜஸ் வாயு முதலியவை தம் கார்யங்களை உண்டாக்குபவை அன்று –
ஆனால் ஸ ஏவ -மஹத்தாதிகளைச் சரீரமாகக் கொண்ட பரமாத்மாவே அஹங்காராதிகளுக்கு காரணம்
தல் லிங்காத் –தத் அபி -த்யானத் –
பரமாத்மாவே அஹங்காராதிகளின் காரணம் என்பதற்கு லிங்கமான
பரமாத்மாவின் அபித்யான ரூபமான ஸங்கல்பத்தாலே
தத் ஈஷத
பஹுஸ்யாம் ப்ரஜாயேய யேதி
தத் தேஜோ அஸ்ருஜத
தத் தேஜ ஈஷத –தா ஆபா ஈஷாந்த
பலவாக ஆவோம் -உத்பத்தி செய்வோம்
இது முதலிய இடங்களிலே பஹு வான ஸங்கல்ப ரூபமான அபித்யானம் பரமாத்ம லிங்கம்
என்று அன்றோ சொல்லப்படுகிறது
இங்கு தேஜஸ் முதலிய சொற்கள்
தேஜஸ் முதலியவற்றைச் சரீரமாகக் கொண்ட பர ப்ரஹ்ம பரங்கள் என்று
நாம ரூப வியாகரண ஸ்ருதியாலே ஸித்தித்தது
கேவலமான அசேதனங்களுக்கு இத்தைய ஸங்கல்பம் கூடாது என்று கருத்து –

————–

ஸூத்ரம் –227–விபர்ய யேண து க்ரமோ அத உபபத்யதே –2-3-15-

து -என்பது ஏவகாரப் பொருளில் வந்தது –
விபர்ய யேண-க்ரமமும் இதனாலே பொருந்துகிறது
ஆகாசாத் வாயு -முதலியவற்றில் பரம்பரையாகக் கூறப்பட்ட ஸ்ருஷ்டி க்ரமத்தை விட
ஏதஸ் மாஜ் ஜாயதே பிராணா -மனஸ் -ஸர்வ இந்திரியாணி ச -முதலிய ‘இடங்களில் சொன்ன
ப்ரஹ்மத்தின் இடத்தில் இருந்தே எல்லாம் உண்டாகிறது என்கிற விபரீத க்ரமமும்
அத ஏவ உப பத்யதே –அதை அதை சரீரமாகக் கொண்ட பரமாத்வின் ஸங்கல்பத்தாலே
ஸ்ருஷ்டி என்று சொன்னால் தான் பொருந்தும் –

—————–

ஸூத்ரம் –228-அந்தரா விஞ்ஞான மனஸீ க்ரமேண தல் லிங்காத் இதி சேந் ந அவிசேஷாத் –2-3-16-

விஞ்ஞான காரணங்களாக இந்திரியங்கள் மனம் என்பவை
ஏதஸ்மாஜ் ஜாயதே ப்ரானோ மன ஸர்வ இந்திரியாணி ச
கம் வாயுர் ஜ்யோதிர் ஆப ப்ருத்வீ –முதலிய ஸ்ருதிகளிலே
ஏதஸ்மாத் -என்பது பரப்ரஹ்மம் அன்று -தன்மாத்ரத்தைக் குறிப்பது
ஆகவே ஆகாசத்திற்கும் ஐந்து தன்மாத்ரைக்கும் நடுவே இந்திரியங்களும் மனஸும் பிராணனும்
க்ரமப்படி உண்டாகின்றன என்று இந்த க்ரம ஸ்ருஷ்டி விவஷிக்கப் படுகிறது

தல் லிங்காத் -பிருத்வி அப்யஸூ ப்ரலீயதே என்று தொடங்கி –
வாயு ஆகாச ப்ரலீயதே -ஆகாசம் இந்த்ரியேஷூ ப்ரலீயதே —
இந்திரியாணி தன்மாந்த்ரேஷு ப்ரலீயதே — -தன்மாத்ராணீ பூதாதவ் ப்ரலீயந் தே —
என்று கூறிய பிரளய க்ரமத்தை நினைவுறுத்தும் லிங்கத்தால் அவ்வாறே தோன்றுகிறது
இதி சேந் ந -என்பது தவறு
அவிசேஷாத்–பூதங்களுக்கும் தன்மாத்திரைகளுக்கும் இடையில் விஞ்ஞானங்களும் மனமும் உண்டாகிறன என்றாலும்
தேஜஸ் முதலிய சொற்கள் அவற்றைச் சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தையே குறிப்பவை என்றால் போலே
இந்திரிய மனஸ் பிராண சப்தங்களும் அவற்றை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தையே குறிப்பவை யாதலின்
அனைத்திற்கும் ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே ஸ்ருஷ்டி என்ற பொருள் முடிவதால்
ஏ தஸ்மாத் ஜாயதே பிராண-என்பதற்கும்
ஏ தஸ்மாத் ஜாயதே கம் -என்பதற்கும்
வேறுபாடு ஏதும் இல்லாமையாலே ப்ரஹ்மத்திடம் இருந்தே சாஷாத்தாக சர்வமும் உண்டாகின்றன
என்பதற்கு இவ் வாக்கியம் ப்ரமாணமாம்

உலகில் தேஜஸ் அக்னி முதலிய சொற்களுக்கு ப்ரஹ்மமே பொருள் என்று கூறியது
முக்யமில்லாமல் கௌணமாகி விடுமே என்னும் சங்கையை அடுத்தபடி நீக்குகிறார் –

———-

ஸூத்ரம் –229–சராசர வ்யபாஸ்ரயஸ் து ஸ்யாத் தத் வ்யப தேசோ பாக்த தத் பாவ பாவித்வாத் –2-3-17-

து -என்பது சங்கையை விலக்குகிறது
சராசர வ்யபாஸ்ரயஸ் -ஜங்கம ஸ்தாவர வஸ்துக்களைச் சொல்லுகிற
தத் வ்யப தேச-அந்த ஜங்கம ஸ்தாவர வாசகமான சொற்கள்
ப்ரஹ்மணி அபாக்த -ஜகத்தின் அந்தர்யாமியான ப்ரஹ்மத்தையே முக்கியமாகக் குறிப்பன
தத் பாவ பாவித்வாத்–ப்ரஹ்மத்தின் அநு ப்ரவேசத்தால் நடப்பதால்
இதனால் தேஜஸ் முதலிய சப்தங்களும் ப்ரஹ்ம பர்யந்தம் குறிப்பிடுவன என்பதற்கும்
ப்ரஹ்மம் சர்வத்துக்கும் அந்தர்யாமீ என்பதே காரணம் என்பதாகிறது

அநேந ஜீவே நாத்மன் அனு ப்ரவிஸ்ய நாம ரூபே வியாகரவாணி தத் அனு பிரவிஸ்ய சச்ச த்யச்சா பவத் -என்னும்
ஸ்ருதிகளில் லோகத்தில் புத்ராதிகளுக்கு நாம ரூபாதி வியாகரணம் செய்யும் பெற்றோர்கள் போல் அன்றிக்கே
செய்யப்படும் நாம ரூபங்கள் தன் வரையாக வேண்டும் என்று எம்பெருமான் அவற்றுள்
அந்தப்பிரவேசம் செய்வதாலேயே ஸர்வ ஸப்தங்களும் அந்தர்யாமியான விசேஷ்யம்-ப்ரஹ்மம் -வரை போதிப்பவை
ஆகையால் ப்ரஹ்ம போதகத்வம் என்பதே முக்யம் என்பது கருத்து –

—————

மூன்றாம் அதிகரணம் -ஆத்ம அதிகரணம்

இப்படி அசேதனத்திற்கு ஸ்வரூப பரிணாம ரூபமான ப்ரஹ்ம கார்யத்தைக் கூறி
ஜீவனுக்கு அசேதனம் போலே அத்தகைய கார்யத்வம் இல்லாவிட்டாலும்
ஸ்வ பாவ அந்யதா பாவம் -மாற்றம் -என்னும் கார்யம் கூடுமாதலின் –
ப்ரஹ்ம கார்யத்வம் பொருந்துவதை இவ்வதி கரணத்தில் ஸ்தாபிக்கிறார்
என்று சங்கதி –

ஸூத்ரம் –230–ந ஆத்மா ஸ்ரூதே நித்யத் வாச்ச தாப்ய–2-3-18-

ஆத்மா உத் பன்னம் ஆகிறதா இல்லையா என்று சம்சயம்
ஆகிறது என்று பூர்வ பக்ஷம்
தோயேன ஜீவான் விஸ சர்ஜ பூம்யாம் பிரஜாபதி -ப்ரஜா அஸ்ருஜதே -முதலிய
ஸ்ருதிகளில் ஜீவனுக்கு உத்பத்தி சொல்லப்பட்டு இருப்பதால் -என்றபடி
ஆனால்
நித்யோ நித்யாநாம் சேதனச் சேதநாநாம் -என்று ஜீவன் நித்யனாகக் கூறப்பட்டு இருக்கிறதே என்றால்
வாயுச் சாந்தரிஷஞ்சை தத் அம்ருதம் -என்பது போலே
நீண்ட காலம் நிற்பது என்ற கருத்தைக் கொண்டது எனலாம்
ஆத்மாவுக்கு உத்பத்தி உண்டு என்பதை ஒத்துக் கொள்ள விட்டால் ப்ரஹ்ம கார்யத்வம் கூடாமையாலே
ஏக விஞ்ஞானத்தால் ஸர்வ விஞ்ஞானம் வரும் என்ற ப்ரதிஜ்ஜை பொருந்தாது
என்று கூறும் பக்ஷத்தை நிராகரிக்கிறார் –

ந ஆத்மா ஸ்ரூதே –ஆத்மா உத்பத்தி உள்ளது அன்று
ந ஜாயதே ம்ரியதே வா விபச்சித் -என்பது போன்ற
ஸ்ருதிகளால் உத்பத்தி இல்லை எனப்படுவதால்
தாப்யநி த்யத் வாச்ச -நித்யோ நித்யாநாம் முதலிய ஸ்ருதிகளில் ஆத்மாவுக்கு
நித்யத்வம் சொல்லப்படுவதால் என்றபடி
ஜீவர்களுக்கு ஸ்ருஷ்டியைச் சொன்னது ஸூக துக்க அனுபவத்துக்கு ஏற்றபடி
ஞானத்துக்கு சுருக்கமும் விரிவுமாகிற ஸ்வ பாவ மாற்றம் என்னும் காரியத்தைக் கருத்தில் கொண்டதே யாகும் –
இத்தகைய வேறு அவஸ்தையைப் பெறலாகிற உத்பத்தி கூடுமாகையாலே
ஜீவனுக்கு ப்ரஹ்ம கார்யத்வம் தடை அற்றதாதலின்
ஏக விஞ்ஞானத்தால் ஸர்வ விஞ்ஞானமும் வரும் என்கிற ப்ரதிஜ்ஜை தவறு அற்றதாகிறது
ஸ்ருஷ்டிக்கு முன்பு ப்ரஹ்மம் ஏகமே இருந்தது என்பது
தேவர் முதலிய நாம ரூப விபாகம் அற்ற ஸூஷ்ம ஜீவ சரீரகம் என்று கருத்து –

இவ்விடம் முக்கியமானதொரு விஷயம்
நம் சித்தாந்தத்தில் ஸர்வ த்ரவ்யங்களின் ஸ்வரூபம் நித்தியமாய் இருந்தாலும்
அநித்யங்களான அவஸ்தா பேதங்களை இட்டு அநித்யம் என்று கூறுகிறோம்
இப்படி அநித்யங்களான மஹத்வாதி அவஸ்தா மூலமான த்ரவ்யங்கள் அநித்யங்கள் ஆனாலும்
அவயவியை ஒப்புக் கொள்ளாமையாலே ஸ்வரூப பத நித்யத்வம் ஸித்தமாயிற்று
அப்படியே த்ரவ்யங்களிலே அடங்கிய ஆத்மாவுக்ககும் ஸ்வரூப பத நித்யத்வம் ஸித்தமாயிற்று இருக்க
ந ஆத்மா ஸ்ருதே -என்று மறுபடியும் ஆத்மாவுக்கு நித்யத்வத்தை ஏன் கூறுகிறார் எனில்
இவ்விஷயத்தில் சிறிது வேறுபாடு உள்ளது
நாமாந்தர பஜன காரணமான அவஸ்தைகள் ஸ்வரூபத்தைச் சார்ந்தவை
அது போல் ஆத்மாவின் ஸ்வரூபமே நிர்விகாரமாதலின் ஞான சங்கோச ரூப அவஸ்தையும்
தேவத்வம் முதலிய அவஸ்தையும் ஆத்ம ஸ்வரூபத்தைச் சார்ந்தவை அல்ல என்னும் பேதத்தைக் காட்டவே
திரும்ப ஆத்மாவின் நித்யத்வத்தை இங்கே கூறுகிறார்
இதனால் த்ரிகுணாத்மக த்ரவ்யம் போலே ஜீவனுக்கு ஸ்வரூப விகாரம் இல்லை என்று கூறியது ஆகிறது

தேவாதிகளான அவஸ்தைகள் ஸ்வரூபத்தைச் சாராதவை
ஆனால் ப்ரத்யக்த்வம் ஞாத்ருத்வம் என்ற இரு தர்மங்கள் நித்யங்கள்
சம்சார தசையில் பல சரீரங்களை எடுக்கையிலும் ஸ்வரூபத்தை விடுவது இல்லை
இந்தப் ப்ரத்யக்த்வம் இரண்டு விதம்
நான் என்று தனக்குத் தோற்றுகை -பிறவற்றுக்குத் தான் தோற்றுகை
நான் நான் என்று தனக்குத் தோற்றுகை ஸ்வரூபத்தால் ஏற்படுவது
இது தான் ஸ்வஸ்மை ஸ்வயம்பா சமானத்வம் எனப்படும்
நான் உறங்கினேன் நான் இத்தகையவன் என்று
வேறு விசேஷங்களுடன் கூடித் தோன்றுகை பரதஸ் ஸ்வஸ்மை பா சமானத்வம்
இது தர்ம பூத ஞானத்தால் ஆவது -இவ்விரண்டும் சித்தாந்தத்துக்கு ஏற்றது
இவ்வபிப்ராயத்தாலேயே ஸூத்ர காரர் மறுபடி ஆத்ம நித்யத்வத்தை அருளிச் செய்தார் என்பதாம்

————–

நான்காம் அதிகரணம் –ஜ்ஞாதி கரணம்

ப்ரசங்கத்தால் ஜீவனின் ஸ்வரூபத்தை நிரூபிக்கிறார் –
ஜீவன் சைதன்ய மாத்ர -ஞான மாத்ர -ஸ்வரூபனா
ஜட ஸ்வரூபனாய் இருந்து வைத்து புதிதாக வந்த ஞானத்தைப் பெற்றவனா
அல்லது ஞாத்ருத்வத்தையே ஸ்வரூபமாகக் கொண்டவனா என்று சம்சயம்
ஞான மாத்ர ஸ்வரூபம் என்று முதல் பக்ஷம்
விஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே -என்று ஞான ஸ்வரூபன் என்கிறது –
ஸூஷதி மூர்ச்சாதிகளில் ஆத்மாவுக்கு ஞானம் தோன்றாமையால்
சைதன்ய குணம் வரப்பெற்று கல் போன்று இருக்கிறான் என்பது இரண்டாம் பக்ஷம்
இவ்விரண்டையும் நிரசிக்கிறார் –

ஸூத்ரம் –231-ஜ்ஞ அத ஏவ –2-3-19-

ஜ்ஞ –ஜீவன் ஞான ஆஸ்ரயனே
அத ஏவ -அதயோ வேத இதம் ஜிக்ராணீ திச ஆத்மா நபஸ்யோ ம்ருத்யும் பஸ்யதி –போன்ற ஸ்ருதிகளால்
பக்தன் முக்தன் என்றும் இரு வகை ஜீவனும் ஞாதா என்று கூறுவதாலே ஆத்மா ஞாதாதே என்பது ஸித்தாந்தம்
ஞான மாத்ரம் என்று ஸ்ருதி கூறியது நித்தியமான தர்மபூத ஞானம் ஆத்மாவுக்கு ஸ்வரூப நிரூபக குணமாகையாலும்
ஆத்ம ஸ்வரூபம் ஸ்வயம் ப்ரகாசகமாகையாலும் என்றபடி
ஸூஷூப்த்யாதிகளிலே தர்ம பூத ஞானம் கர்மத்தால் சங்குசிதமாய் இருக்கிறது –
ஆதலின் ஆத்மா ஞாத்ரு ஸ்வரூபன் என்று தேறுகிறது

————-

ஜீவாத்மா விபு என்னும் வைசேஷிகன் இரண்டாம் பக்ஷத்தை நிரசிக்கிறார்

ஸூத்ரம் –232–உத் க்ராந்தி கத்யாக தீ நாம் –2-3-20-

ஸ்ருதே -என்று கூட்டிக் கொள்ள வேண்டும்
உத் க்ராந்திக்குப் பின் கதி -ஆகமனம் பற்றிய ஸ்ருதி உள்ளமையால் என்றபடி
அணு ஸ்வரூபோ ஜீவ –தேந ப்ரத்யோ தேந ஏஷ ஆத்மா நிஷ் க்ராமதி -என்று
ஜீவனுக்கு தேகத்தில் இருந்து உத் க்ராந்தி -வெளியேற்றம் -ஸ்ருதியில் ப்ரஸித்தமானது
ஆத்மா விபுவானால் இது எப்படிக்கூடும்
யேவை சாஸ்மாத் லோகாத் ப்ரயந்தி சந்த்ர மச மேவ தே கச்சந்தி -என்று
தேகத்தில் இருந்து வெளிக்கிளம்பும் ஜீவன் ஸ்வர்க்கத்துக்குச் செல்லலும்
புனரேதி அஸ்மை லோகாய கர்மணே -என்று
மறுபடியும் பூமியில் கர்ம சேஷத்தை அனுபவிக்கைக்காக வருகிறான் என்று வருகையும்
கூறப்படுவதால் ஆத்மாவுக்கு விபுத்வம் பொருந்தாது ஆதலின் ஜீவன் அணு ஸ்வரூபனே –

————-

ஸூத்ரம் –233-ஸ்வாத்ம நா ச உத் தரயோ –2-3-21-

ச -என்பது ஏவகாரார்த்தம் உடையாது
உத் தரயோ -உத் க்ராந்திக்குப் பின் கதியும் ஆகதியும் -இரண்டும்
ஸ்வாத்ம நா ச -ஸ்வரூபத்துடனேயே ஆத்ம ஸ்வரூபம் பர லோகம் செல்கிறது
இந்த லோகத்துக்கு வருகிறது என்ற நிர்வாஹம் பொருந்தும்
ஆத்மா விபு என்றால் சரீரத்தில் இருந்த ஆத்மாவுக்குச் சரீரத்தில் இருந்து பிரிவு தான்
உத் க்ராந்தி என்று ஸ்ரமப்பட்டு நிர்வகித்தாலும்
பின்னர் வரும் கமன ஆகமனங்கள் பொருந்தாது -என்பதாம் –

————-

ஸூத்ரம் –234–ந அணுர் அதத் ஸ்ருதேர் இதி சேந் ந இதர அதிகாராத் –2-3-22-

ந அணுர் -ஜீவன் அணு அல்லன்
அதத் ஸ்ருதேர் -அணுத்வத்திற்கு எதிரான மஹத்வத்தைக் கூறும் ஸ்ருதி இருப்பதால்
யோ அயம் விஞ்ஞான மய –எனத் தொடங்கி
ஸ வா ஏஷ மஹான் அஜ ஆத்மா –என்று ஜீவனுக்கு மஹத்வம் கூறுவதால்
இதி சேந் ந -என்பது தகாது
இதர அதிகாராத் –இந்த வாக்கியத்தில் ஜீவனுக்கு மஹத்வம் கூறவில்லை –
பரமாத்மாவுக்கே மஹத்வம் கூறப்படுகிறது
யஸ்யா னுவித்த பிரதிபுத்த ஆத்மா -என்று நடுவில் ஜீவனைக் காட்டிலும் இதரனான பரமாத்மாவைப் பற்றி பேசுவதால்
பிரகரணம் முழுவதும் பரமாத்மாவைப் பற்றியதே
யஸ்ய பரம புருஷஸ்ய அனு வித்த -உபாஸக ஆத்மா பிரதி புத்தோ பவதி -ஸர்வஞ்ஜோ பவதி
என்பது ஸ்ருதியின் பொருள் –

————–

ஸூத்ரம் –235–ஸ்வ சப்தோந் மானாப் யாஞ்ச –2-3-23–

ஏஷோ அணுர் ஆத்மா யஸ்மின் ப்ராண பஞ்சதா சப் விபேச -என்று
ஸாஷாத் அணு ஸப்தம் கூறப்படுவதாலும்
உன்மனத்தாலும்
ஆரா என்ற தானியத்தின் நுனி அளவு என்று வாலாக்ர பாகத்தின் பதினாயிரத்தில்
ஒரு பங்கு ஜீவன் என்று சொல்வதால்
ஜீவன் அணுவே ஆவான் –

———-

ஸூத்ரம் -236–அவிரோத சந்தன வத்–2-3-24–

அணுவான ஜீவன் உடலின் ஏக தேசத்தில் இருந்தாலும் உடல் முழுவதுமான
ஸூக துக்க அனுபவத்தில் விரோதம் இல்லை
சந்தன வத்-சந்தனத்துளி உடலில் ஒரு பகுதியில் பூசப்பட்டாலும் உடல் முழுவதும் பரவலாய்
இன்பத்தைக் கொடுப்பது போலேவே ஆத்மாவும் அனுபவிக்கலாம் –

—————-

ஸூத்ரம் –237–அவஸ்திதி வைசேஷ்யாத் இதி சேந் ந அப்யுபகமாத் ஹ்ருதி ஹி –2-3-25–

சந்தன பிந்து மார்பில் வைக்கப்படுவதால் இன்பம் பயக்கிறது –
ஆத்மாவுக்கோ அவ்வாறு ஓர் இடம் இல்லை என்பதால் எப்படி அவ்வனுபவங்கள் கூடும்
இதி சேந் ந -என்பது பொருந்தாது
அப்யுபகமாத் -ஆத்மாவுக்கு தேஹத்தில் மார்பிலே சிறப்பான இருப்பு ஏற்கப்பட்டு இருக்கையாலே
உடல் முழுவதும் பரவும் இன்ப துன்பங்களின் அனுபவம் கூடும் –
இதயத்தில் யோ அயம் விஞ்ஞான மய ப்ராணேஷு ஹ்ருத் யந்தர் ஜ்யோதி -என்னும் ஸ்ருதியில்
ஆத்மா ஹ்ருதயத்தில் இருப்பதாக கொள்ளப் படுகிறான் அல்லவா –

—————

ஸூத்ரம் –238–குணாத வ ஆலோக வத் –2-3-26–

வ -ஸப்தம் மதாந்தரத்தை விலக்குகிறது –
குணாத் -அணுவான ஆத்மா தன் குணமாயும் விபு வாயும் உள்ள தர்ம பூத ஞானம் மூலம்
எல்லா தேஹத்தையும் வியாபித்து இருக்கிறது –
ஆலோகவத் –ஓர் இடத்தில் உள்ள ஸூர்யன் தீபம் மணி முதலியவற்றின் ஒளி குணமாய் மிகுந்த பிரதேசத்தை
வியாபித்து இருப்பது போலே ஆத்மாவின் தர்ம பூத ஞானமும் வியாபித்து இருப்பதில் தடையில்லை –
விஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே -முதலிய ஸ்ருதிகளில் விஞ்ஞான ஸ்வரூபனாய்ப் பேசப்பட்ட ஆத்மாவுக்கு
ஞானம் குணம் என்பது எவ்வாறு என விளக்குகிறார் –

—————-

ஸூத்ரம் –239–வ்யதிரேகா கந்தவத் ததா ச தர்சயதி–2-3-27–

வ்யதிரேக –ஞான ஸ்வரூபனான ஆத்மாவைக் காட்டிலும் -குணமான தர்ம பூத ஞானத்திற்கு
வேறுபாடு அவஸ்யம் ஏற்கத் தக்கது
கந்தவத் -கந்தமுடையது பிருத்வீ என்றால் பிருத்வீயைக் காட்டிலும் அதன் குணமான கந்தத்திற்கு
வேறுபாடு சித்தித்தால் போலே தர்ம பூத ஞானத்திற்கும் ஸித்திக்கும்
ததா ச தர்சயதி–ஜாநாத் யே வாயம் புருஷ –என்பது போன்ற ஸ்ருதிகளும்
குணியாயும் குணமாயும் பிரித்துக் காட்டுகின்றன —

—————-

ஸூத்ரம் –240-ப்ருதக் உப தேசாத் –2-3-38–
ந விஞ்ஞாதுர் விஞ்ஞாதேர் விபரி லோபோ வித்யதே -என்று
தர்மியான ஞானத்தைத் தனிப்படுத்தி
ஞானம் நித்யம் என்று சொல்வது எப்படிக்கூடும் என்பதற்கு விடை தருகிறார்

———–

ஸூத்ரம் –241-தத் குண சாரத்வாத் து தத் வியபதேச ப்ராஞ்ஜவத்–2-3-29–

து சப்தம் சங்கையை விலக்க வல்லது
தத் குண சாரத்வாத் -அந்த ஞான ரூப குணத்தை சாரமாக ஸ்வரூப நிரூபகமாகக் கொண்டு இருப்பதால்
தத் வியபதேச –ஆத்மாவை ஞானம் என்று வ்யவஹரிப்பது
ப்ராஞ்ஜவத்-ப்ரஹ்மணா விபச்சிதா என்று ப்ராஞ்ஞன் எனப்பட்ட பரம புருஷன்
ஸத்யம் ஞானம் என்று ஞான ஸ்வரூபனாக வியவஹரிக்கப் படுகிறானோ
அப்படியே ஜீவனும் என்பதாம் —

————-

ஸூத்ரம் –242–யாவதாத்ம பாவித் வாச்ச ந தோஷ தத் தர்சனாத் –2-3-30-

ஞானம் ஆத்மாவுக்கு ஸ்வரூபம் உள்ளளவும் நிற்பதாகையாலும் அந்த நித்யமான தர்ம பூத ஞானத்தாலே
அந்த ஆத்மாவை வியவஹரிப்பதில் குற்றம் ஒன்றும் இல்லை
தத் தர்சனாத்-கண்ட முண்டமான பசுவின் இனத்திற்கு பசுத்வம் என்ற தர்மம்
அந்த ஸ்வரூபம் உள்ள அளவும் நிற்பதாகையால்
அந்த பசுத்வத்தினைக் குறிப்பதான பசு என்ற சொல்லால்
கண்டாதிகளான இனம் அனைத்தையும் குறிப்பதால் இங்கும்
விஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே -என்று விஞ்ஞான ஸப்தத்தாலே ஆத்மாவைக் குறைப்பதில் தவறு இல்லை –
ச காரத்தாலே
ஆத்ம ஸ்வரூபம் ஸ்வ ப்ரகாசமாகையாலும் ஞானம் என்று குறிப்பிடலாம் என்று காட்டப் படுகிறது

ஆத்மாவுக்கு ஞானம் நித்யமாகில் ஸூஷூப்தி முதலிய தசைகளில் ஏன் அது தோன்றவில்லை
என்னும் சங்கையை மேலே பரிஹரிக்கிறார் –

—————-

ஸூத்ரம் –243–பும்ஸ்த்வாதி வத் வஸ்ய ததோ அபி வ்யக்தி யோகாத் –2-3-31–

து ஸப்தம் சங்கையை விலக்குகிறது
அஸ்ய ஸத -ஸூஷூப்யாதிகளிலும் மறைவாயுள்ள இந்த ஞானத்திற்கு விழிப்பு நிலையில்
அபி வ்யக்தி யோகாத் –வெளியீடு உள்ளமையால் ஞானம் பிரகாசிப்பதால் ஞானம் ஆத்மாவுக்கு நித்தியமான தர்மம்
பும்ஸ்த்வாதி வத்–சரீரத்தில் இருக்கும் ஆண்மைக்கான தாது பால்யத்தில் வெளிப்படாமல் இருந்து
யவ்வனத்தில் வெளித் தோன்றுவது போலே இங்கும் குறையில்லை –

——————–

இவ்வாறு ஆத்மாவுக்கு ஞாத்ருத்வத்தையும் அணுத்துவத்தையும் சாதித்து
விபுத்வம் கூறி வரும் குற்றத்தையும் எடுத்துக் காட்டுகிறார் –

ஸூத்ரம் –244–நித்யே பலப்த் யநுபலப்தி பிரசங்கோ அந்யதா நியமோவா அந்யதா –2-3-32–

அந்யதா -ஆத்மா ஞான மாத்ர ஸ்வரூபன் என்னும் பக்ஷத்திலும்
ஆத்மா சர்வகதன்-விபு -என்னும் பக்ஷத்திலும்
நித்யமாயும் உப லப்தியோ – புலப்படலோ -அனுப லப்தியோ – புலப்படாமையோ -ஏற்படும் –
அதவா அந்யதர நியம -அல்லது அவ்விரண்டில் ஓன்று எப்போதும் கட்டாயம் இருக்க வேண்டும்

ஞான மாத்ர ஸ்வரூபன் என்னும் பக்ஷத்தில்
ஆத்மா புலப்படுகைக்கும் புலப்படாமைக்கும் ஆத்ம ஸ்வரூபமே காரணம் ஆதலின்
வேறு ஹேது இல்லாமையால் ஸ்வரூபம் நித்யமாதலின் இரண்டும் நித்யமாய் இருக்கும் –
ஆனால் புலப்படுகையும் புலப்படாமையும் ஒன்றோடு ஓன்று முரண் பட்டவை யாதலின்
இரண்டில் ஒன்றுக்கே ஆத்ம ஸ்வரூபம் ஹேது என்று சொல்லில்
இரண்டில் ஓன்று இருந்தே தீர வேண்டும் நியமம் வந்து சேரும்

ஆத்மா விபு என்னும் பஷத்திலும்
ஞானத்துக்கு ஹேதுவான ஆத்ம மனஸ் ஸம்யோகங்கள் விபுக்கள் அனைவருக்கும் பொது யாதலின்
ஒரு ஆத்மாவுக்கு ஞானம் உண்டானால் எல்லாருக்கும் அது புலப்பட வேண்டி இருக்கும்
ஒருவருக்குப் புலப்பட வில்லை என்றால் எல்லாருக்கும் புலப்படாமலே போக வேண்டி இருக்கும்
ஆகையால் இந்த இரண்டு மதமும் சரியானவை அல்ல என்பதாம் –

——————

ஐந்தாம் அதிகரணம் –கர்த்ர் அதி கரணம் –

இப்படி ஆத்மாவுக்கு கர்த்ருத்வத்தை சாதிக்க வல்ல ஞாத்ருத்வத்தை நிரூபித்து
கர்த்ருத்வம் நிரூபிக்கிறார் என்று சங்கதி

ஸூத்ரம் –245-கர்த்தா ஸாஸ்த்ர அர்த்தவத் வாத் –2-3-33-

ஆத்மாவுக்கு ஞாத்ருத்வம் போலே கர்த்ருத்வம் உண்டா இல்லையா என்று சம்சயம்
அஹங்கார விமூடாத்மா கர்த்தா அஹமிதி மன்யதே -என்று சொல்வதால் ஆத்மா கர்த்தா அன்று
ப்ரதானமே கர்த்தா என்பது பூர்வ பக்ஷம்
இந்த சாங்க்ய மதத்தை நிரசிக்கிறார் –

ஆத்மாவே கர்த்தா -பிரதானம் அன்று –
ஏன் எனில்
ஸாஸ்த்ர அர்த்த வத் வாத் –ஆத்மா கர்த்தா வானால் தான்
யஜேத -உபா ஸீ த -என்று யாக உபாஸனாதிகளை விதிக்கும் ஸாஸ்த்ரம் பிரயோஜனம் உள்ளதாகும்
சாஸனாத் ஸாஸ்த்ரம் என்கிறபடி -கர்த்தா செய்ய வேண்டிய கர்மங்களை விதித்துத் தூண்டுகிறது –
இதனால் ஞாதாவை உத்தேசித்துத் தானே இதைச் செய் -இதைச் செய்யாதே என்று
விதி நிஷேதங்களைக் கூறுவது பொருந்துகிறது
அசேதனமான பிரதானம் கர்த்தாவானால் அவ்வாறு விதிப்பது பொருந்தாது
ஆதலின் கர்த்தாவான ஆத்மாவைக் குறித்தே ஸாஸ்த்ரம் போதிக்கிறது –
பிரதானத்தைக் குறித்து அன்று

————–

ஸூத்ரம் –246–உபாதா நாத் விஹார உபதேசாச்ச –2-3-34–

ஏவ மேவைஷ ஏதான் பிராணான் க்ருஹீத்வா ஸ்வே சரீரே யதா காமம் பரி வர்த்ததே –என்று
ஆத்மா ப்ராணனைக் க்ரஹித்தல் கூறப்படுவதானால்
யதா காமம் பரி வர்த்ததே-என்று சரீரத்தில் ஆத்மாவின் விஹாரத்தை உபதேசிப்பதாலும்
ஆத்மாவே கர்த்தா பிரதானம் அன்று –

——————-

ஸூத்ரம் –247–வ்யபதேசாச்ச க்ரியா யாம் நசேந் நிர்தேச விபர்யய –2-3-35–

க்ரியா யாம் வ்யபதேசாச்ச கர்த்தா -விஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே கர்மாணி தநுதே அபி ச -என்று
வைதிக லௌகிக கிரியைகளில் ஆத்மாவுக்கு கர்த்ருத்வம் சொல்லப்படுவதாலும்
ந சேத் –கர்த்தா இல்லை எனில்
விஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே-என்னும் ஸ்ருதியில் விஞ்ஞான ஸப்தம் ஆத்மாவைச் சொல்லவில்லை
அந்தக்கரணம் என்னும் பக்தியைச் சொல்லுகிறது என்றால்
நிர்தேச விபர்யய ஸ்யாத் –விஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே-என்று
மூன்றாம் வேற்றுமையுடன் நிர்தேசிக்கப் பட்டு இருக்கும்
கிரியையில் புத்தி காரணம் ஆகையால் –

—————-

ஸூத்ரம் –248–உப லப்தி வத் அநியம –2-3–36–

பிரதானத்துக்கே கர்த்ருத்வம் -ஆத்மாவுக்கு போக்த்ருத்வம் என்னும் பக்ஷத்தில்
உப லப்தி வத் அநியம–முன்பு சொன்ன உப லப்த்ய நியம ப்ரசங்கம் போலே
போக்த்ருத்வத்துக்கு அநியமமும் ப்ரசங்கிக்கும்
பிரதானம் ஸர்வ காரணமாதலால் போக்த்ருத்வமும் சர்வ ஆத்மாக்களுக்கும் பொதுவாக ப்ரசங்கிக்கும் –

—————–

ஸூத்ரம் –249-சக்தி விபர்யயாத் –2-3-37–

ப்ரக்ருதியே கர்த்தா என்றால் கர்த்தாவுக்கே போக்த்ருத்வம் யுக்தமாதலின்
ப்ரக்ருதிக்கே போக்த்ருத்வ சக்தியும் பிரசங்கிக்கும்
ஆதலின் ஆத்மாவுக்கு போக்த்ருத்வ சக்தியின்மை ஏற்க வேண்டி வரும் –

————

ஸூத்ரம் –250–ஸமாத்ய பாவாச்ச –2-3-38–

பிரக்ருதிக்கு கர்த்ருத்வத்தை அங்கீகரித்தால் மோக்ஷத்துக்கு சாதனமான சமாதி இல்லாததாகி விடும்
ப்ரக்ருதியை விட நான் வேறானவன் என்னும் ஸமாதியில் -ஸித்த விருத்தி நிரோதத்திலே –
ப்ரக்ருதி கர்த்தாவாதல் பொருந்தாது ஆதலின் பிரதானம் கர்த்தா அன்று –

—————-

ஸூத்ரம் –251–யதாச தக்ஷ உபயதா –2-3-39-

ஆத்மா கர்த்தா என்றால் அவன் ஸூகாதி அனுபவங்களை இச்சிக்கையில்
வைதிக லௌகிக கர்மாக்களைச் செய்கிறான்
இச்சியாத போது செய்வது இல்லை -என்று இரு விதமாகவும் வியவஸ்தை கூடும்
யதாச தக்ஷ உபயதா-தச்சன் விரும்பும் போது செயல் ஆற்றுகிறான் –
விரும்பாத போது செயல் ஆற்றுவது இல்லை –
இப்படி இச்சா மூலமாகச் செய்தலும் செய்யாமையும் என்ற வ்யவஸ்தை கூடாது என்பது கருத்து –

——————

ஆறாம் அதிகரணம் –பரா யத்த அதிகரணம்

ஸூத்ரம் –252–பராத்து தத் ஸ்ருதே –2-3-40–

து ஸப்தம் சங்கையை விலக்குகிறது
பராத் -பரம புருஷ ஸங்கல்பத்தாலே
தத் -கர்த்ருத்வம் ஏற்படுகிறது
ஸ்ருதே-அந்தப் பிரவிஷ்டச் ஸாஸ்தா ஜனானாம் ஸர்வாத்மா ய ஆத்மாநம் அந்தரோ யமயதி -என்று
பரமாத்மாவுக்கு அதீனமான கர்த்ருத்வம் ஸ்ருதியில் கூறப்படுவதால்
இப்படி ஜீவன் பராதீன கர்த்தா என்றால் -ஈஸ்வரனே எல்லாரையும் தூண்டுவதால்
ப்ரயோஜக கர்த்தா ஆதலின் கர்மாவின் பலம் கர்த்தாவையே சாரும் என்பதால்
அவனுக்கே விதி நிஷேத வாக்யங்களுக்கு வச்யத்வம் ஏற்படும் என்ற சங்கையை நிரசிக்கிறார் –

——————-

ஸூத்ரம் –253–க்ருத ப்ரயத்ன அபேக்ஷஸ் து விஹித பிரதி ஷித்த அவையர்த் யாதிப்ய –2-3-41-

து -ஸப்தம் சங்கையை விலக்குகிறது
முதல் ப்ரவ்ருத்தியிலே ஜீவன் செய்யும் ப்ரயத்னத்தை அபேக்ஷித்துப் பரம புருஷன் ஜீவனை ப்ரவர்த்திப்பிக்கிறான்
ஏன் எனில்
விஹித பிரதி ஷித்த அவையர்த் யாதிப்ய–ஜீவனுக்கு முதல் பிரவிருத்தியில்
ஸ்வ தந்தர்ய தன்மையை அங்கீ கரிக்கா விட்டால்
இதைச் செய் செய்யாதே என்னும் விதி நிஷேத ஸாஸ்த்ரங்களுக்கு வியர்த்தத் தன்மை வரும் –
ஜீவன் தண்டனைக்கோ அனுக்ரஹத்துக்கோ ஆளாகாமல் போவான்
அக் குறைகள் வாராமைக்காக ஜீவனின் முதல் முயற்சியை எதிர்பார்த்தே
பகவான் இவனைப் பிரவர்த்திப்பிக்கிறான் –
அந்த முதல் முயற்சியிலும் ஸ்வா தந்தர்யம் ஈஸ்வரனால் கொடுக்கப் பட்டது
அதுவும் முன் பின் கர்மாக்களின் பலம் அளிப்பதாகக் கருதப்படுகிறது –

ஆச்சார்யர் அருளிய முறையில் பாகுபாடு-இரக்க மின்மை இவற்றைப் பரிஹாரம் செய்யும் முறை கூறப்படுகிறது
கர்த்ருத்வம் இருவகைப்படும் -அவை ப்ரயோஜக கர்த்ருத்வம் -ப்ரயோஜ்ய கர்த்ருத்வம் -என்பன
முதல் கர்த்ருத்வம் ஈஸ்வரனுக்கும் இரண்டாவது ஜீவனுக்கும் உரியது –
இதனால் அந்தப் பிரவிஷ்டச் சாஸ்தா ஜனானாம் சர்வாத்மா ய ஆத்மாநம் அந்தரோ யமயதி –முதலிய
ப்ரமாணங்களில் சொல்கிறபடி சுருக்கம் இன்றி எப்போதும் எவ்வகையான ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபமான
கார்யங்களுக்குமான கர்த்ருத்வம் உண்டு என்னப்பட்டது

இந்நிலையில் ஜீவனின் தவறான ப்ரவ்ருத்திகளுக்கும் அதனால் ஏற்படும் துக்க அனுபவத்திற்கும்
காரணமாகையால் ஈஸ்வரனுக்கு வைஷம்யமும் நைர் க்ருண்யமும் பிரசங்கிக்கும் என்றால் அவை வாரா
பலவகை முளைகளுக்கும் ஜலம் சாதாரண காரணமாவது போலவும்
முளைகளின் வேறுபாட்டுக்கு விதை வேறுபாடே காரணமாவது போலேயும்
ஜீவனின் விஷம ப்ரவ்ருத்திக்கும் துக்க அனுபவத்துக்கும் அவன் கர்மாவே காரணமாதலின்
ஜலம் போலே பொதுக் காரணமான ஈஸ்வரனிடம் அத்தோஷங்கள் ஓட்டுவது இல்லை –
தோஷங்கள் கர்மங்களாலே ஏற்படுபவையே
ஸமோஹம் ஸர்வ பூதேஷூ என்றான் அல்லவா
அதன்படி ஜீவனின் கர்ம பரம்பரையே காரணமாக
ஈஸ்வரன் உயர்த்துவது தாழ்த்துவது-உந்நி நீஷா அதோ நி நீஷா-என்ற
பாகுபாடு ஏற்படுகிறது என்பதில் குறையில்லை –

ஆமாம் -ஜீவனின் கர்ம பரம்பரையே இஷ்டத்துக்கு கஷ்டத்துக்கும் காரணம் என்றால்
ஈஸ்வரனின் கிருபைக்கு இடையில் என்ன கார்யம் என்றால்
சகல காரியங்களுக்கும் கர்மாதீனம் என்றாலும் சிறு வியாஜத்தை முன்னிட்டே
ஏராளமான குறைகளையும் -அபராதங்களையும் -பொறுத்து
முக்தி பர்யந்தமான ஐஸ்வர்யத்தைக் கொடுத்தல் கிருபையின் கார்மம் ஆதலால் கிருபைக்கு விசேஷ பிரயோஜனம் உண்டு —
ஆனாலும் ஈஸ்வரனுக்கு ஜீவனைத் தண்டித்தல் குற்றம் அன்றோ என்னில் -அது யாருக்குத் தோஷம் –
ஈஸ்வரன் ஸர்வ நியந்தா வாதலின் இது அவனுக்குத் தோஷம் அன்று -ஜீவனுக்கு கஷ்டம் தருவதே யாயினும்
ஈஸ்வரனுக்கு அது கேடு அல்ல
உலகில் துஷ்ட நிக்ரஹம் செய்து இஷ்ட பரிபாலனம் செய்யும் மஹா ராஜாவைப் புகழ்வது போலவே
கிருபை மிக்க ஈஸ்வரனை தங்கள் தோஷங்களை நீக்குவதற்காக ஆஸ்ரயிப்பதில் தடை ஏதும் இல்லை
ஆகையால் அனுக்ரஹம் நிக்ரஹம் இரண்டுக்கும் விஷயம் வெவ்வேறு யாதலால் தோஷம் இல்லை –

இதே போல் பகவானுக்கு உரிய உதாசீனத்தவம் -நடு நிலைமை -ப்ரேரகத்வம் -தூண்டும் தன்மை –
ஸாஷித்வம் -அனுமந்த்ருத்வம் -அனுமதித்தல் முதலிய தர்மங்கள்
ஒன்றோடு ஓன்று முரணாகத் தோன்றினாலும் இவை லக்ஷணத்தால் பொருத்தமானவை யாதலால்
விரோதம் இல்லை

ரக்ஷணம் ஏதோ ஒரு காலத்தில் யாதலின் கிருபையும் ஏதோ ஒரு கால விசேஷத்தே தானோ என்று சங்கிக்க வேண்டாம்
கருணை நித்யம் அநித்யம் என்று இருவகைப்படும்
எல்லா ஜீவன்களின் ஸ்வரூபம் ஸ்திதி முதலியவற்றைக் காக்கும் கிருபை நித்யை
அவரவர் அறியாமலே செய்யும் ஸூஹ் ருதாதி மூலக மான கர்மாக்களுக்கு உசிதமான
விசேஷ பலன்களைக் கொடுக்கும் கிருபை அநித்யை
ஆதலின் ஸர்வ விஷயத்திலும் ஸகல பல பிரதான சங்கல்ப ரூபமான சாமான்ய கிருபையே
நித்யமும் நிர்ஹேதுகமாகவும் ஆகும்
விசேஷ பல பிரதான ஸங்கல்ப ரூபமான அநித்ய கிருபையே ஸ ஹேதுகமாகும்
இத்தால் நித்ய க்ருபாவத்வம் ஸித்திக்கிறது –

முன் கூறிய கர்த்ருத்வாதி தர்மங்களுக்கு முரண்பாடு இல்லை -எப்படி எனில்
1-ஈஸ்வரன் ஸ்வதந்த்ரனான படியால் கர்த்ருத்வம்
2-ப்ரயோஜ்ய கர்த்தாவான ஜீவன் மூலம் செய்விப்பதால் ப்ரேரகத்வம்
3-ப்ரவர்த்தனான சேதனனை மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டுவதால் அனுமந்த்ருத்வம்
4-முளைகளுக்கு ஜலம் போலே சர்வத்திற்கும் பொதுக் காரணம் ஆதலின் உதா சீனத்தவம்
5- எப்போதும் எல்லாவற்றையும் காண்கையாலே ஸாஷித்வம்
6-அவனவன் கர்மத்துக்கு ஏற்றவாறு செய்விப்பதால் சஹகாரித்வம்
7- சர்வ ஸ்வாமியாய் ஆஸ்ரித ரக்ஷண பலத்தைத் தானே ஏற்பதால் பலித்தவம்
8-பலமதே உப பத்தே என்பதால் ஸர்வ கர்மா பல பிரதத்வம்
என்ற இவை அனைத்தும் ஓர் ஓர் காலத்தில் இன்றியிலே சர்வ காலத்திலும் இருப்பதால் ஒன்றுக்கு ஓன்று விரோதம் இல்லை

இங்கு ஒரு பூர்வ பக்ஷம்

ஜீவனின் முதல் பிரவிருத்தி ஈஸ்வரனின் தூண்டுதல் இல்லாமலே நடப்பதால் பகவானை அபேக்ஷிக்காமல்
ஜீவன் தானே கர்த்தா ஆகிறான்
அப்படி இல்லை எனில்
கர்த்தாவே போக்தா வாதலின் ஜீவனிடம் பகவத் நிக்ரஹம் பிறக்க வழி இல்லை
ஈஸ்வரனுக்கே கர்ம பல போக்த்ருத்வம் பிரசங்கிக்கும் என்கின்றனர்
இந்த வினா மற்றவர் பக்கலிலும் சமம்
முதல் பிரவிருத்தியில் நிரபேஷ கர்த்ருத்வம் இருந்தாலும் இரண்டாம் ப்ரவ்ருத்தியில் ஈஸ்வரன் அனுமந்தா என்று
அவர்கள் சொல்வதால் நிர்த்தயத்வம் வரலாம்
கிணற்றில் குதிக்கத் தொடங்கும் சிறுவனை இரக்கம் மிக்க பெரியோர்கள் தடுத்து ரஷிப்பதைப் பார்க்கிறோம்
அவ்வாறு இல்லாமல் தவறாகப் பிரவர்த்திப்பவனை ஈஸ்வரன் தடுக்காமல் அனுமதிப்பது தயை அற்ற காரியமே ஆகும்
சர்வ நியாந்தா என்னும் ஸ்ருதியை இத்தகையோர் விஷயத்தில் விலக்கி -சுருக்கிக் கொள்ள வேண்டி இருப்பதாலும்
முதல் பிரவ்ருத்தியில் ஈஸ்வரன் உபேக்ஷித்து இருக்கிறான் என்பது பொருந்தாலும்
மேலும் கல்ப காலத்தின் ஆதியில் ஜீவனின் முதல் ப்ரவ்ருத்தி ஈஸ்வரனை அபேக்ஷிக்காது என்று சொன்னால்
அத்தகைய விஷயமான ப்ரவ்ருத்தி ஞானத்தையே ஆகாரமாகக் கொண்ட ஜீவ ஸ்வரூபத்தால் ஏற்பட்டது அன்று

பின் என் எனில்
பூர்வ கல்பத்தில் செய்யப்பட அவரவர் களுடைய பாப கர்மாவைக் காரணமாக் கொண்டது எனல் வேண்டும்
இதனால் சம்சாரம் அநாதி யாதலின் ஜீவனின் பிரவிருத்தி முதலானது என்பது பொருந்தாது
ப்ரவ்ருத்தியோ கர்ம அதீனமானது என்றால் அதில் ஈஸ்வரனுக்கு என்ன இடம் என்பது பூர்வ பக்ஷம்

இதுக்கு விடை –

கர்மமே ஈஸ்வர சங்கல்ப ரூபம் -ஆகையால் ப்ரவ்ருத்தியும் அந்த சங்கல்ப அதீனம் என்று பலிக்கிறது
முதல் ப்ரவ்ருத்தி ஈஸ்வர அதீனம் அன்று என்பவராலும் ஓர் அளவுக்கு ஈஸ்வர அதீனம் ஏற்கப்பட்டு இருப்பதாலும்
எல்லா ப்ரவ்ருத்திகளும் அவனது அதீனமடியாகவே என்றதாகிறது

இப்படியாகில் ஸ்ரீ பாஷ்யத்தில் தத்ர உபேஷ்ய ததோ அனுமத்ய என்பது முதலியவை
முதல் க்ஷணத்தில் உபேக்ஷிக்கிறான் என்றும்
இரண்டாம் க்ஷணத்தில் அனுமதிக்கிறான் என்றும் எப்படிக்கூறலாம் என்றால்

முதலில் என்பது
ஸ்ருஷ்டி காலத்தைப் போன்றது
கர்மாவைப் போலே வைஷம்ய காரணம் இன்றி ஜலம் போலே சாமான்ய காரணம் ஆகிறான் என்ற கருத்தால்
உபேக்ஷிக்கிறான் என்றதே தவிர அக்காலத்தில் ஈஸ்வரன் பிரேரகன் அல்ல என்ற கருத்தால் அன்று –

அப்படியானால் அவனுக்கு கர்த்ருத்வ -காரயித்ருத்வ -உபேக்ஷகத்வாதிகள் எப்போதும் இருப்பது
விருத்தம் அன்றோ என்னில்
கீழ்ச சொன்னவாறு கர்த்ருத்வாதி சர்வ லக்ஷணமும் பொருந்துவன வாதலின்
ஒரே பொருளில் த்ரவ்யத்வம் கடத்வம் ப்ருத்வீத்வம் முதலியவற்றுக்கு விரோதம்
இல்லாமையைப் போலவே இங்கும் விரோதம் இல்லை

ஆகையால் ஜீவனுடைய கர்மத்தை அபேக்ஷித்து ஸ்ருஷ்டியாதிகளைச் செய்வதால்
ஈஸ்வரனுக்கு வைஷம்யமும் நைர் க்ருண்யமும் கிடையாது என்பது கருத்து –

—————

ஏழாம் அதிகரணம் -அம்ச அதிகரணம் –

இப்படி ஜீவனுக்கு கர்த்ருத்வம் பராதீனமாகில்
அப்போது ராஜ பிருத்ய நியாயத்தாலே பரமாத்மாவின் அம்சம் என்பது உபசார வழக்கு ஆகலாம்
என்ற சங்கையை இந்த அதிகரணத்தில் பரிஹரிக்கிறார் –

ஜீவன் பரமாத்மாவை விட மிக வேறு பட்டவனா
அல்லது அஞ்ஞனான பரமாத்மாவா
அல்லது உபாதி சம்பந்தம் பெற்ற பரமாத்மாவான
அல்லது பரமாத்மாவின் அம்சம் ஆனவனா
என்ற நான்கு வகை சங்கைகள்

1-மிகவும் வேறுபட்டவன் என்பது வைசேஷிகன் மதம்
ப்ருதக் ஆத்மானம் ப்ரேரிதாரஞ்ச மத்வா -என்ற
சுருதி வாக்கியம் அவர்களுக்குத் துணை நிற்கிறது
இப்படி பேத பக்ஷத்திலே அரசனே உலகம் முழுவதும் என்பது போலே
அபேத ஸ்ருதிகளை உபசார சொற்களாகக் கொள்ள வேண்டும்

2- அஞ்ஞான ப்ரஹ்மமே ஜீவன் ஆகிறது என்பது சங்கரர் பக்ஷம்
தத் தவம் அஸி
அயம் ஆத்மா ப்ரஹ்ம -முதலிய
அபேத ஸ்ருதிகள் இதுக்குப் பிரமாணங்கள்
இப்பஷத்தில் பேத ஸ்ருதிக்கு அஞ்ஞான க்ருதமான பேதம் விஷயம்

3-உபாதியுடன் சம்பந்தம் உள்ள ப்ரஹ்மமே ஜீவ பாவத்தை அடைகிறது என்பது யாதவ பாஸ்கர பக்ஷம்
இதற்கு அபேத ஸ்ருதி முக்யத்வமே காரணம்

இம்மூன்று பக்ஷங்களையும் நிரசிக்கிறார்

ஸூத்ரம் –254–அம்சோ நாநா வியபதேசாத் அந்யதா ச அபி வியபதேசாத் தா சகித வாதித்வ மதீயத ஏ கே –2-3-42-

அம்சோ –ஜீவன் அம்சமே -பரமாத்மாவின் சரீரமாய் இருந்து கொண்டே
விசேஷணமாய் இருப்பதால் அம்சம் ஒரு பகுதி ஆகிறான்
நாநா வியபதேசாத் அந்யதா ச அபி வியபதேசாத் –ப்ருதக் ஆத்மானம் முதலிய
ஸ்ருதியால் பேதம் கூறப்படுவதாலும்
தத் தவம் அஸி
அயம் ஆத்மா ப்ரஹ்ம -முதலிய வேறுபட்ட வ்யபதேசத்தாலும்
இவ்வாறு அபேத ஸ்ருதி பேத ஸ்ருதிகளுக்கு முக்கிடமாக அர்த்தம் ஸித்திக்க
சித் அசித் விசிஷ்டமான ப்ரஹ்மம் என்று ஒரே வஸ்துவில் பரமாத்மாவில்
விசேஷணமான ஜீவன் அம்ச பூதன் என்றே கொள்ள வேண்டும்
பேத ஸ்ருதிகள் விசேஷணமான ஜீவனுக்கும் விசேஷ்யமான ப்ரஹ்மத்துக்கும்
ஸ்வரூபத்திலும் ஸ்வ பாவத்திலும் பேதத்தைக் காட்டுகின்றன
தத் தவம் அஸி
அயம் ஆத்மா ப்ரஹ்ம -முதலியஅபேத ஸ்ருதிகள்
ஜீவ சரீரகனான பரமாத்மா ஒருவன் என்று சொல்லுகின்றன –
இந்த இரு ஸ்ருதிகளும் முக்ய அர்த்தங்கள்
அஞ்ஞனான ப்ரஹ்மமே ஜீவன் என்கிற வாதத்திலும்
உபாதியுடன் கூடிய ப்ரஹ்மம் ஜீவன் என்கிற வாதத்திலும்
பரமாத்மாவுக்கு ஸர்வஞ்ஞத்வம் நிர்தோஷத்வம் முதலியவற்றைப் போதிக்கும் ஸ்ருதிகள் விரோதிக்கும்
தா சகித வாதித்வ மதீயத ஏ கே –சில ஸ்ருதிகள்
ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்மே மே கிதவா உத -முதலிய வாக்யங்களால்
ப்ரஹ்மம் ஸர்வ ஜீவ அந்தர்யாமியாய் இருக்கையால் ஸர்வ ஜீவ ஸமூஹமும்
ப்ரஹ்மாத்மகமே என்று கூறும் –

——————

ஸூத்ரம் –255—-மந்த்ரவர்ணாச்ச||2.3.43||

——–

ஸூத்ரம் –256—அபி ச ஸ்மர்யதே||2.3.44||

———–

ஸூத்ரம் –257–ப்ரகாஷாதிவந்நைவஂ பரஃ||2.3.45||

————-

ஸூத்ரம் –258–ஸ்மரந்தி ச||2.3.46||

———–

ஸூத்ரம் –259–அநுஜ்ஞாபரிஹாரௌ தேஹஸம்பந்தாஜ்ஜ்யோதிராதிவத்||2.3.47||

————–

ஸூத்ரம் –260–அஸந்ததேஷ்சாவ்யதிகரஃ||2.3.48||

————–

ஸூத்ரம் –261–ஆபாஸ ஏவ ச||2.3.49||

————

ஸூத்ரம் –262–அதரிஷ்டாநியமாத்||2.3.50||

—————-

ஸூத்ரம் –263–அபிஸந்த்யாதிஷ்வபி சைவம்||2.3.51||

————

ஸூத்ரம் –264–ப்ரதேச பேதா ததி சேந் நாந்தர் பாவாத்||2.3.52||

ப்ரஹ்மம் அசேத்த்யமானாலும் உபாதி ஸம்யுக்த ப்ரதேசமும்
உபாதி சம்பந்தம் அற்ற பிரதேசமும் என இரண்டும் உள்ளன
ஆகையால் போக வ்யவஸ்தை பொருந்தும்
இதி சேத் ந -என்று சொல்வது பொருந்தாது
அந்தர் பாவாத் -விபுவான ப்ரஹ்மம் சலியாது -அணுக்களான உபாதிகளே சலிக்கும்
அப்போது ஸர்வ ப்ரஹ்ம ப்ரதேசமும் உபாதியின் ஸ்பர்சத்தில் உள் அடங்கி விடுவதால்
கூறிய குற்றங்கள் அதே நிலையில் உள்ளன

ஆகையால் மற்றவை யாவும் அசமஞ்ஜஸங்கள்
ஸ்ரீ பாஷ்யகாரரின் சித்தாந்தமே முழுவதுமாக சமஞ்ஜஸம்

————-

இப்பாதத்தில் உள்ள ஏழு அதிகரணங்களின் சாரம்

1-வ்யத் அதி கரணத்தில் ஆகாசத்துக்கு க்லுப்தியும் உத்பத்தியும் பேசப்பட்டன
2-தேஜ அதிகரணத்தில் க்ரமமாகத் தோன்றும் மஹத்தாதி காரியங்களுக்கு
முந்தைய தத்வ விசிஷ்டனான ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே உத்பத்தி என்றதாயிற்று
3-ஆத்ம அதிகரணத்தில் நித்யனான ஜீவனுக்கு உத்பத்தி லயங்களாவன
தேஹச் சேர்க்கையும் தேஹ வியோகத்தையும் அடிப்படையாகக் கொண்டமையும் பேசப்பட்டன
4-ஞாத் அதிகரணத்தில் ஜீவனுக்கு ஞான குணாகாதவமும் ஞாத்ருத்வமும் பேசப்பட்டன
5-கர்த்ரு அதிகரணத்தில் ஜீவனுக்கு கர்த்ருத்வம் பேசப்பட்டது
6-பராயத் அதிகரணத்தில் ஜீவனுக்கு கர்த்ருத்வம் பகவத் அதீனம் என்று பேசப்பட்டன
7-அம்ச அதிகரணத்தில் -குணங்களும் தேஹங்களும் -குணம் ஜீவனுக்கு அம்சமாய் இருப்பது போல்
ப்ரஹ்மத்துக்கும் சித் அசித் ரூபமான ஜகத்தும் அம்சமானது என்று

ஆக ஏழு அர்த்தங்கள்
ஸ்ருதிகளில் பரஸ்பர விரோதத்தைப் பரிஹரிக்கும்
இந்த வியத் பாதத்திலே சாதிக்கப் பட்டன –

————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை –இரண்டாம் அத்யாயம் –இரண்டாம் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————————————————-

தன் பக்ஷத்தில் சாங்க்யாதிகள் கூறிய அனுபபத்திகளை -பிழைகளைக் -காட்டி
இந்த தர்க்க பாதத்தில் எதிரி மதங்களைக் கண்டிக்கிறார் என்பது பாத சங்கதி

————

முதல் அதிகரணம் -ரசன அனு பபத்ய அதிகரணம்

முன் அதிகரணத்தில் அவாப்த ஸமஸ்த காமனுக்குப் பல அபேக்ஷை இராமையாலே
நிமித்த காரணத்வம் பொருந்தாது என்ற சங்கை தீர்க்கப் பட்டது
இவ்வதி கரணத்தில் பிறரது யுக்தி தவறு என்று காட்டப்படுகிறது என்பது அதிகரண சங்கதி

சாங்க்யர்கள் கூறும் பிரதானம் காரணம் என்கிற வாதம்
நல்ல யுக்தியை ஆதாரமாகக் கொண்டதா இல்லையா என்று சம்சயம்
நல்ல யுக்தியை ஆதாரமாகக் கொண்டதே
ஸத்வ ரஜஸ் தமோ மயமான ஜகத்துக்கு அம்மூன்று குணங்களில் சம நிலையை யுடைய
பிரதானமே காரணம் என்பது தான் பொருத்தம் உள்ளது
என்ற பூர்வ பக்ஷத்தைக் கண்டிக்கிறார் –

ஸூத்ரம் –171–ரசன அனு பபத்தேச் ச ந அனு மானம் ப்ரவ்ருத்தேச் ச –2-2-1-

அனுமானம் -பிரதானமானது
ந -ஜகத் காரணம் அல்ல
ரசன அனு பபத்தேச் ச -ப்ராஞ்ஞனான பரம புருஷனாலே அதிஷ்டிதம் இல்லாத
அசேதனமான பிரதானத்திற்கு விசித்ரமான ஜகத்தின் ஸ்ருஷ்டி கூடாததால்
ப்ரவ்ருத்தேச் ச -ரதம் முதலியவற்றுக்குக் காரணமான த்ரவ்யங்கள் -அசேதனங்கள் –
ரதத்தைப் படைக்கத் தெரிந்து கொண்ட சேதனனால் தலைமை தாங்கப்பட்டு -அதிஷ்டிதமாய் –
தான் அதன் படைப்பு தொடங்கப்படுவதால் ஒரு பொருளின் குணங்களான
வெண்மை முதலிய போலவே த்ரவ்யங்களான ஸத்வ ரஜஸ் தமஸ் என்பவற்றுக்கும்
உபாதான காரணத்வம் கூடாது என்று
ச என்ற சொல்லால் குறிக்கப் படுகிறது

———

ஸூத்ரம் –172-பய அம்புவத் சேத் தத்ராபி –2-2-2-

பய -பாலும்
அம்புவத் -தண்ணீரும்
ப்ராஞ்ஞனான ஜீவனது அதிஷ்டானம் இன்றியே தயிராகவும்
இளநீர் மா முதலிய பற்பல சுவை உடையனவாகவும் மாறுவதே போல்
தனி பிரதானமும் ஜகாத்தாக மாறுவது பொருத்தமே
என்றால்
தத்ராபி -அந்தப்பாலிலும் தண்ணீரிலும் கூட ஜீவனின் அதிஷ்டானம் -தலைமை -உள்ளது என்பதை
யோக அப் ஸூ திஷ்டன் -முதலிய
ஸ்ருதிகளிலே ஸித்தமாகக் காண்பதால் அதுவும் நம் பக்ஷத்தில் சேர்ந்ததே என்பதாம்

——–

ஸூத்ரம் –173– வ்யதிரேக அந வஸ்திதேச் ச அநபேஷத்வாத் –2-2-3–

வ்யதிரேக அந வஸ்திதே-
எப்போதும் ஸ்ருஷ்டியே ஏற்படுமாதலின் ப்ரதிவர்க்கம் என்னும் பிரளய அவஸ்தைக்கு இல்லாமை -அபாவம் -வரத்
தோன்றுவதால் என்றபடி
அதனால் பிரஞ்ஞனால் தலைமை தாங்கப்படாத பிரதானம் காரணம் இல்லை
மேலும்
அநபேஷத்வாத்
பிரதானத்துக்கு சேதன அபேக்ஷை இல்லாமையால் எப்போதும் ஜகத்தின் ஸ்ருஷ்டி நடந்து கொண்டே இருக்க நேரிடும்
ப்ராஞ்ஞ-ஜீவனுக்கு -அதீனமான பரிணாமத்தை ஏற்றுக் கிண்டல் ப்ராஞ்ஞனின் ஸங்கல்பத்துக்கு
அனுகுணமாக ஸ்ருஷ்டி ப்ரளயங்கள் கூடும் என்பது தாத்பர்யம்

————-

ஸூத்ரம் –174-அந் யத்ர அபாவாச்ச ந த்ருணாதி வத் –2-2-4–

த்ருணாதி வத்-
பசுக்கள் முதலியவை உட் கொண்ட புல் போன்றவை பாலாக மாறுவது போல்
கேவலம் பிரதானம் காரணம் ஆகட்டுமே என்னில்
தகாது
அந் யத்ர அபாவாச்ச-
காளை போன்றவை தின்னும் புல் போன்றவை பாலாக மாறக் காணாமையாலே
அப்படி மாற -ப்ராஞ்ஞனான பகவானின் அதிஷ்டானம் அவசியம் ஆதலின்
அது இல்லாத பிரதானம் காரணம் ஆகாது –

—–

ஸூத்ரம் –175–புருஷாச் மவதிதி சேத் தத்ராபி –2-2-5-

பிரதானம் ப்ராஞ்ஞனான பகவானால் அதிஷ்டானம் பெறா விடினும் ஜீவன் தன் ஸந்நிதானத்தால்
அதை ஜகத்தின் ஸ்ருஷ்டியில் பிரவர்த்திக்கிறான் -தூண்டுகிறான் –
எப்படி எனில்
புருஷாச் மவத் -புருஷர் போலும் கல் போலும்
அதாவது
நடக்க சக்தி அற்றுப் பார்வை உள்ள புருஷன் -நடக்க சக்தி உள்ள கண் பார்வை அற்ற புருஷனின் உதவியால் நடந்து
விரும்பும் இடத்துக்குச் செல்வது போலவும்
காந்தக்கல் தன் நெருக்கத்தால் இரும்பை அசைத்துத் தன்பால் ஈர்ப்பது போலவும்
பிரதானமும் ஜீவனின் சேர்க்கையால் உழகைப் படைக்கலாம்
தத்ராபி -அப்படியும் ஜகத் ஸ்ருஷ்டியாதிகள் கூடா
குருடன் நடக்கவும் நொண்டி வழி காட்டவும் சக்தி உள்ள சேதனர்கள்
இரும்புக்கும் காந்தத்துக்கும் எப்போதாவது தான் நெருக்கம் ஏற்படுகிறது
இவ்விடமோ புருஷனுடைய ஸந்நிதானம் -அருகில் இருத்தல் -தவிற வேறு விசேஷம் ஏதும் இல்லை
அந்த ஸந்நிதானம் மட்டுமே காரணம் என்றால் எப்போதும் ஸ்ருஷ்டி ஏற்பட வேண்டும்
அல்லது ஒரு போதும் ஸ்ருஷ்டியே இல்லை என்று ஏற்க வேண்டி வரும் –

——————-

ஸூத்ரம் –176-அங்கித்வ அனுபபத்தேச் ச –2-2-6–

குணங்களின் ஏற்றத் தாழ்வுகளால் அங்க அங்கி பாவத்தைக் கல்பித்து ஜகத்தின் ஸ்ருஷ்டி உன்னால் ஏற்கப்படுகிறது
பிரளய தசையிலோ சமநிலையில் உள்ள சத்வாதி குணங்களுள் ஒன்றுக்கு ஓன்று ஏற்றது தாழ்வை அடிப்படையாகக் கொண்ட
அங்க அங்கி பாவம் கூறுவது பொருந்தாது ஆதலின் ஜகத்தின் ஸ்ருஷ்டி பொருந்தாது
அந்த நிலையிலும் வேறுபாட்டை ஏற்றுக் கொண்டால் வேறுபாடு -விசேஷம் -இன்மையால் எப்போதும் ஸ்ருஷ்டியே ஏற்படும்
ஆகையால் ப்ராஞ்ஞனால் அதிஷ்டிதம் இல்லாத பிரதானம் காரணம் அன்று –

——-

ஸூத்ரம் –177-அந்யத அனுமிதவ் சஞ்ஞ சக்தி வியோகாத் –2-2-7-

கூறியதை விட்டு வேறு வழிகளில் பிரதானத்தை அனுமித்தாலும் பிரதானத்துக்கு ஞாத்ருத்வம் இல்லாமையால்
ரசன அனுபவத்தி முதலிய தோஷங்கள் அப்படியே உள்ளன –

————

ஸூத்ரம் –178- அப்யுபகமேப் யர்த்தா பாவாத் –2-2-8-

கேவல பிரதானத்தை காரணமாக ஏற்றுக் கொண்டாலும் பயன் இல்லாமையால் அதை அனுமானிக்க வேண்டாம்
புருஷனின் போக அப வர்க்கங்களுக்காக பிரதானம் ப்ரவர்த்திக்கிறது என்று உங்கள் கருத்து –
அது பொருந்தாது –
சைதன்யமே ஸ்வரூபமாக ஒரு வியாபாரமும் அற்ற புருஷனுக்கு அசேதன தர்மத்தின் அத்யாசத்தாலே
ப்ரக்ருதி தர்சன ரூபமாக போகமும் ப்ரக்ருதி விவேக ரூபமாக அப வர்க்கமும் சம்பவிக்கா –

——————

ஸூத்ரம் –179-விப்ரதிஷேதாச் ச அசமஞ்சஸம் –2-2-9–

ஒன்றோடு ஓன்று முரண் பட்ட வாதங்களாலும் இந்த சாங்க்ய மதம் நேர்மை அற்றது
ப்ரக்ருதி புருஷனின் போக அபவர்க்கங்களுக்காக ப்ரவர்த்திக்கிறது என்பது சாங்க்யர் கூற்று
அசேதனமான ப்ரக்ருதி தானே புருஷனிடம் உள்ள சைதன்யத்தைத் தன்னிடமும்
தன் பால் உள்ள கர்த்ருத்வத்தை புருஷன் இடமும் அனுசந்தானம் செய்து பந்தத்தை அடைகிறது
மோக்ஷ சாதனத்தையும் அனுஷ்டிக்கிறது என்றும் கூறுகிறார்கள்
அசேதனமான பிரதானத்துக்கு சேதன தர்மமான அத்தி யாஸம் எப்படிப் பொருந்தும்
இப்படி முரண் பட்ட பேச்சுக்களால் பிரதான காரிய வாதம் அடியோடு அசமஞ்சஸமாகும் –

இங்கு ஸாஸ்த்ர யோநித்வாத் அதிகரணத்துக்கும்
இவ்வதிகரணத்துக்கும் முரண்பாட்டை நீக்கும் வழி சிறிது விளக்கப்படுகிறது
ஸாஸ்த்ர யோநித்வாத் அதிகரணத்தில் அனுமானத்தால் ஈஸ்வரனைச் சாதிக்க முடியாது என்று கூறப்பட்டது
ரசனானுபத் யதிகரணத்தில் அசேதனங்களுக்கு சேதன அதிஷ்டானம் முக்யம் என்றுள்ள வியாப்தியால் -நியமித்தால் –
அந்தச் சேதனன் ஈஸ்வரனே என்று அனுமானத்தால் ஸாதிக்கப்பட்டது
ஆகவே இரண்டு அதிகரணங்களுக்கும் முரண்பட்டு உள்ளது என்ற சங்கைக்கு விடையாவது
ஸாஸ்த்ர யோநித்வாத் அதிகரணத்தில் அனுமானத்தால் ஈஸ்வரனைச் சாதிக்க முடியாது என்று கூறப்பட்டது
இங்கு ஈஸ்வரன் அனுமானத்தாலே பாதிக்கவும் முடியாதவன் என்று கூறப்படுகிறது
ஆகவே இரண்டுக்கும் முரண் ஏதும் இல்லை
அதாவது
எந்த வஸ்து எந்த ப்ரமாணத்தால் சாதிக்கத் தக்கதோ
அந்த வஸ்துவே அந்த ப்ரமாணத்தாலேயே பாதிக்கவும் தக்கதாகும்
ப்ரத்யக்ஷத்தால் காணத்தக்க குடம் அதே ப்ரத்யக்ஷத்தால் தான் பாதிக்கவும் படக்கூடும்
ப்ரத்யக்ஷத்துக்கு விஷயமாகாத பரமாணு முதலியவை ப்ரத்யக்ஷத்தால் பாதிக்கவும் படமாட்டா
அதேபோல் அனுமானத்துக்கு விஷயமாகாத ஈஸ்வரன் அந்த அனுமானத்தால்
சாதிக்கவோ பாதிக்கவோ இயலாதது என்பதே ஸூத்ர காரரின் திரு உள்ளம்
என்று ஸ்ரீ தேசிகன் -நன்வத்ரா சேத நானாம் -என்று தொடங்கும் ஸ்லோகத்தாலே அருளிச் செய்கிறார் –

————————-

இரண்டாம் அதிகரணம் –மஹத் தீர்க்க அதிகரணம்

அனுமானத்தால் சித்திப்பது பிரதானம் போல் பரமாணுவும் ஆதலின்
நிரீஸ்வர சாங்க்யன் ஏற்ற பிரதான காரணத்வத்தைக் கண்டித்த பின்
கணாதர் ஏற்ற பரமாணு காரண வாதத்தைக் கண்டிக்கிறார் என்பது சங்கதி
சேஸ்வர சாங்க்யன் நிராகரிக்க வேண்டாதவன்
யோக மதமும் மிக்க விரோதம் இல்லாமையால் கண்டிக்க வேண்டியது இல்லை
பரமாணு காரண வாதியான புத்த மதஸ்தரும்
பிரதான காரணவாதியான பாசுபதனும் வேதத்தை நம்பாதவர்கள்
ஆதலின் சாங்க்யர் வைசேஷிகர்களுக்குப் பின் கண்டிக்காத தக்கவர்

கநாதர் கூறும் பரமாணு காரண வாதம் சரியானதா இல்லையா என்று சம்சயம்
பூர்வ பஷீ அந்த வாதம் சரியானதே என்பதற்க்கு காரணம்
நூல் முதலிய அவயவங்கள் சேர்க்கையால் துணி முதலிய அவயவிகள் உண்டாக்க காண்கையாலே
அவயவங்கள் சிறுமை பெருமைகளுக்கு ஏற்ப கடுகுக்கும் மலைக்கும் வேறுபாடு காணப்படுவதால்
அந்த அவயவங்கள் சிறுமைக்கு எல்லையான பரமாணுவே காரணம் என்பதாகும்
இதனைக் கண்டிக்கிறார் –

ஸூத்ரம் –180-மஹத் தீர்க்கவத் வா ஹ்ரஸ்வ பரி மண்டலாப்யாம் –2-2-10-

இங்கு வா என்பது ச என்னும் பொருளில் வந்தது
அசமஞ்சஸம் என்று வருவித்துக் கொள்ள வேண்டும்
ஹ்ரஸ்வ பரி மண்டலாப்யாம்-மஹத் தீர்க்கவத்-
த்வய அணுகம் போலே
பரம அணுக்களால் த்வ அணுகம் -த்வய அணுக்களால் த்ரி அணுகம் –
இவற்றின் உத்பத்தி எவ்வாறு பொருந்தாதா அவ்வாறே அவர்கள் கூறிய எல்லா விஷயங்களும்
அநவஸ்தை முதலிய தோஷங்களால் பொருந்தாதவையே என்று கருத்து
எப்படி என்றால்
நூல் முதலிய அவயவங்கள் நான்கு பக்கம் -நான்கு திசைகளிலும் மேலும் கீழும் என்று
ஆறு பக்கங்களுடன் சேர்ந்து -ஒன்றோடு ஓன்று அளவில் பெரிய காரியப்பொருளை –
துணி முதலிய அவயாவியைப் படைக்கின்றன
அதே போல் பரமாணுக்களும் ஆறு பக்கங்களுடன் சேர்ந்தே -ஒன்றோடு ஓன்று -த்வி அணுகம் முதலிய
கார்யங்களை நிறைவேற்றும் உண்டாக்கும் என்று சொல்ல வேண்டும்
அந்தப் பக்கங்கள் அவயவங்களை உடையவற்றுக்கே கூடுமாதலால்
பரமாணுக்களும் ச அவயவங்களாகவே இருக்க வேண்டும் என்று நேரிடும்
இப்படி ஏற்றால் முடிவே இல்லாமல் அநவஸ்தை வரும்
எந்தச் சிறு அவயவத்துக்கும் ஓர் அவையாவும் உண்டு என்று ஏற்க வேண்டி வரும் என்பதால்
உன் இஷ்டம் நிறைவேறாது –

————-

ஸூத்ரம் –181-உபய தாபி ந கர்மாத தத் அபாவ –2-2-11-

மற்றும் எது அசமஞ்சஸம் என்ற வினாவிற்கு விடை தருகிறார் இந்த ஸூத்ரத்தாலே
த்வய அணுகத்தைப் படைக்கப் பரமாணு செய்யும் முதல் செயல் ஒரு அத்ருஷ்டத்தால் -புண்யத்தால்
செய்விக்கப்படுகிறது என்று ஒப்புக் கொள்கின்றனர்
அந்த அத்ருஷ்டம் அணுவில் உள்ளதா -அன்றி ஜீவனிடம் உள்ளதா
இரண்டு இடங்களிலும் அது பொருந்தாது
பரமாணுக்கள் சேருவதற்கான கர்மா -அத்ருஷ்டம் -ஈர் இடங்களிலும் உள்ளது ஆகாது
அத்ருஷ்டம் ஜீவனின் கர்மாவால் உண்டாவது ஆதலின் பரமாணுவில் அது வராது
அதில் உண்டு என்று ஏற்றால் எப்பொழுதும் ஸ்ருஷ்டி நடந்து கொண்டே இருக்க வேண்டும்
ஜீவனிடம் உள்ளதாக ஏற்றுக் கொண்டால் அத்ருஷ்டம் வெவ்வேறு இடத்தில் இருப்பதால்
பரமாணுவில் கர்மாவை உத்பத்தி செய்ய இயலாது
அத்ருஷ்டமுள்ள ஆத்மாவின் சேர்க்கையால் பரமாணுவில் கர்மா உத்பத்தி ஆகிறது என்றால்
அந்த சம்யோகம் நித்யமாகையாலும் எப்போதும் ஸ்ருஷ்ட்டியை ஏற்க நேரிடும் –

————

ஸூத்ரம் –182-சமவாயாப் யுபகமாச்ச ஸாம யாத அநவஸ்திதே –2-2-12–

கணாத மதம் ஸமவாயம் என்ற சம்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாலும் அசமஞ்சஸம்
ஏன் எனில்
ஸாம யாத -ஜாதிக்கும் வ்யக்திகளுக்கும் குணங்களுக்கும் த்ரவ்யங்களுக்கும் இடையே
விட்டுப் பிரிக்க முடியாத நிலைக்கு -அப்ருதக் ஸ்திதி -ஹேதுவாக ஸமவாயம் என்ற
சம்பந்தம் அங்கீ கரிக்கப் பட்டுள்ளது
அதே போல் அந்த ஸமவாயத்திற்கும் ஜாதி முதலியவற்றுக்கு இடையே
அதே அப்ருதக் ஸித்துக்கு ஹேதுவாக ஓன்று தேவைப்படுகிறது
அங்கோர் ஸமவாயம் ஏற்க வேண்டும்
இப்படி வியவஸ்தையே முடிவு இல்லாமல் போகும்
அதற்காக வேறே ஒரு சம்பந்தத்தை ஏற்காமல் ஸ்வ அப்ருதக் ஸித்தி-நிர்வாஹகத்வம்
தன்னை விட்டுப் பிரியாமையைத் தானே ஜாதியாதிகள் நிர்வஹிப்பவை என்று ஏற்றுக் கொண்டால் போதும்
ஸமவாயம் எனத்தனி சம்பந்தம் ஏற்பது அசமஞ்சஸம் ஆகும் –

—————-

ஸூத்ரம் –183-நித்யமேவச பாவாத் –2-2-13–

ஸமவாய சம்பந்தம் நித்தியமாக இருப்பதாக ஒப்புக் கொள்வதால்
சம்பந்திகளும் நித்யம் என்று ஏற்க வேண்டி வரும்
ஆக சமவாயத்தின் சம்பந்திகளான ஜாதி வியக்த்யாதிகளும் த்ரவ்ய குணாதிகளும் அவயவ அவயவிகளும்
நித்யமானவை என்று ஏற்படுவதால் ஒன்றுக்கும் காரண கார்ய பாவமே ஸித்தியாது –

———————

ஸூத்ரம் –184-ரூபாதி மத்வாச் ச விபர்யயோ தர்சனாத் –2-2-14–

பரமாணுக்களுக்கு ரூபாதிகள் உண்டு என்று ஏற்றுக் கொள்வதாலும்
விபர்யய -நித்யத்வம் நிர் அவயவத்வம் முதலியவற்றுக்கு முரண் ஏற்பட்டு விடும்
தர்சனாத் -ரூபாதிகளைக் கொண்ட குடம் முதலியவை அநித்யமாயும் ஸ அவயமாயும் காணப்படுவதாலும்
காண்பதற்கு ஏற்ற படியே கல்பிப்பதாலும்
பரமாணுக்களுக்கு அவர்கள் கூறும் நித்யத்வமும் நிர் அவயவாதமமும் பொருந்தாது என்பதாம் –

————

ஸூத்ரம் –185–உபயதா ச தோஷாத் –2-2-15-

பரமாணுக்களுக்கு அநித்யத்வாதிகள் வந்து விடுமே என்று பயந்து ரூபாதிகள் இல்லை என்று ஒப்புக் கொண்டால்
காரியத்தின் குணங்களுக்குக் காரண குணம் மூலம் என்ற நியமம் ஸித்திக்காது
அது ஸித்திக்க வேண்டி பரமாணுக்களுக்கு ரூபாதிகளை ஒப்புக் கொண்டால் அநித்யம் முதலானவை வந்து சேரும்
ஆகவே இரு வழிகளாலும் அசமஞ்சஸமாகும் –

————-

ஸூத்ரம் –186–அபரிக்ரஹாச் சாத் யந்தமநபேஷா –2-2-16–

காபில மதத்தில் ஸ்ருதி நியாய விரோதம் இருந்தாலும் ஸத் காரிய வாதிகளான வைதிகர்கள்
அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்
காணாத மாதத்திலோ ஒரு அம்ஸத்தையும் வைதிகர்கள் ஏற்காமையாலே அனுபபத்தியாலும்
க்ஷேமார்த்திகளால் அடியோடு ஏற்கக் கூடாததாகும் –

————–

மூன்றாவது அதிகரணம் –ஸமுதாய அதிகரணம்

ஸூத்ரம் –187-ஸமுதாய உபய ஹேது கே அபி தத் அப்ராப்தி –2-2-17-

உபய ஹேது கே அபி-ஸமுதாய -பரமாணுக்களால் உண்டாகும் ப்ருத்வீ சமுதாயத்திலும் –
ப்ருதிவ்யாதிகளால் உண்டாகும் சரீர இந்திரிய விஷய சமுதாயத்திலும்
தத் அப்ராப்தி -ஜகத் ரூபமான சமுதாயத்தின் உத்பத்தி கூடாது
ஏன் எனில்
க்ஷணிகமான பரமாணுக்கள் ஒன்றோடு ஓன்று சேரும் வேளையில் தாமே நசித்துப் போவதால்
ப்ருத்வீ யாதி சமுதாயத்தை எப்படி உண்டாக்கும்
அஸ்திரமானவற்றில் ஸ்திரம் என்னும் பிரமத்தால் சமுதாயத்தின் உத்பத்தி கூடும் என்றால்
சக்தி சிப்பியில் வெள்ளி என்ற பிரமத்தால் வெள்ளியின் உத்பத்தி கூடாதது போலே
சமுதாய உத்பத்தி கூடாது
ஆகையால் அந்த மதம் அசமஞ்சஸம்

இவ்விடம் கணாதரும் புத்த மதஸ்தரும் ஒரே விதமாய் நான்கு விதமான பரமாணுக்களை ஒப்புக் கொள்கிறார்கள்
ஆகையால் கணாதரைக் கண்டித்தும் புத்த மதஸ்தர் கண்டிக்கப் படுகின்றனர்
ஸூ கதர் என்னும் புத்தரின் சிஷ்யர் நால்வர்
வைபாஷிகர் -ஸுத்ராந்திகர் -யோகாசரர் -மாத்யமிகர் –
வைபாஷிகர் என்பவர் ப்ருத்வீ முதலிய ஸ்தூல த்ரவ்யங்கள் ப்ரத்யக்ஷ சித்தங்கள் என்பர்
ஸுத்ராந்திகர் -அவை ஞானத்தால் அனுமானம் செய்யத் தக்கவை என்பர்
யோகாசரர் -வெளிப்படையாக பாக்யங்களான ப்ருத்வீ யாதிகள் இல்லை என்பர்
ஆந்தரமான ஞான சந்தான மாத்ரமே ஸத்யம் என்கின்றனர்
இம்மூவரும் தாம் ஏற்றுக் கொண்ட பொருள்கள் க்ஷணிகம் என்பர்
மாத்யமிகர் –சர்வ வஸ்துக்களும் சூன்யம் என்பர்

இதில் வைபாஷிகனும் ஸுத்ராந்திகனும் கூறும் ஜகத்தின் உத்பத்தி பிரகாரம்
நன்கு உப பாதனம் செய்யத் தக்கதா இல்லையா என்ற சம்சயம்
உபபாதிக்கத் தக்கதே –
பிருத்வீ ஜலம் தேஜஸ் வாயுக்களின் பரமாணுக்கள் நான்கும்
கந்தம் ரஸம் ரூபம் ஸ்பர்சம் இவற்றை யுடையவனாய் ப்ருதிவ்யாதி ரூபங்களாகக் கூடுகின்றன
அவற்றில் இருந்து சரீர இந்திரிய விஷய ஸமுதாயங்கள் தோன்றுகின்றன
இதில் ஆந்தரமான விஞ்ஞான ஸந்தானமே ஆத்மாவாகும்
இவை க்ஷணிகமே யாயினும் ஸ்திரம் என்ற பிரமத்தாலே உலக வ்யவஹாரங்கள் கூடும் என்ற
பூர்வ பஷியை மேற்கொண்ட ஸூத்ரத்தால் கண்டிக்கிறார்

———–

ஸூத்ரம் –188–இதர தர ப்ரத்ய யத்வாத் உப பன்னம் இதி சேந்ந ஸங்காத பாவா நிமித்தத்வாத் –2-2-18-

ஸகல வஸ்துக்களும் க்ஷணிகமாய் இருந்தாலும் அஸ்திரத்தை ஸ்திரம் என்று
பிராந்தியாகிய அவித்யை யாலே ராக த்வேஷாதிகள் உண்டாகின்றன
அவற்றில் இருந்து பிருதிவ்யாதிகள்
அவற்றில் இருந்து அவித்யை
இவ்வாறு ஒன்றில் இருந்து மாற்று ஒன்றாக ஹேதுவாய் இருப்பதால் எல்லாமே பொருந்துமே என்றால்
இல்லை

ஸங்காத பாவா நிமித்தத்வாத்-ஸமுதாய பாவத்துக்கு அவித்யை நிமித்தமாக மாட்டாமையால் –
அஸ்திரத்தை ஸ்திரம் என்ற காரியத்தை எப்படி உண்டாக்கும்
இந்த அவித்யை யுடைய ஆத்மா அப்போதே நசிக்கையாலே
யாருக்கு ராக த்வேஷாதிகளை உண்டாக்குகின்றது
ஆகையால் இம்மதம் தவறானது

—————

ஸூத்ரம் –189-உத்தரோத் பாதேச பூர்வ நிரோதாத் –2-2-19–

உத்தரமான குடம் உண்டாகப் போகும் க்ஷணத்தில் முந்தைய மண் பிண்டத்தின் க்ஷணம் நசிப்பதால்
உத்தர குட க்ஷணத்துக்கு அபாவமே சூன்யமே ஹேது என்று சொல்ல வேண்டி இருப்பதால்
வியாவர்த்தகமான -பிரித்துக் காட்டத் தக்க விசேஷம் இல்லாமையாலே
குடத்தின் ஷணத்தால் துணி உண்டாகலாம் -அல்லது சர்வ ஜகாத்தும் உண்டாகலாம் என்று கருத்து
க்ஷணம் என்ற சொல் ஷண்யதே என்ற வ்யுத்பத்தியாலே குடம் முதலியவற்றைக் குறிப்பிடும் –

—————–

ஸூத்ரம் –190-அஸதி ப்ரதிஜ்ஜோ பரோதோ யவ்க பத்ய மன்யதா –2-2-20-

அஸதி
காரணம் இல்லாமலே கார்யம் உண்டாகில்
ப்ரதிஜ்ஜோ
அதிபதி ஸஹ காரி முதலியவைகள் விஞ்ஞானத்தின் உத்பத்தி ஹேது என்று சொல்லுகிற
உங்கள் ப்ரதிஜ்ஜைக்குத் தடை வரும்
அந்யதா -இந்த சங்கையைப் பரிஹரிக்கைக்குப் பூர்வமான குட க்ஷணம் இருந்து கொண்டே
உத்தரமான குடத்தின் க்ஷணத்தை உண்டாக்குகின்றது என்று சொன்னால்
யவ்க பத்யம் -இரண்டு குட க்ஷணங்களும் ஒரே நேரத்தில் தோன்றக் கூடும்
அது உண்மையில் தோன்றுவது இல்லை –

————–

ஸூத்ரம் –191–ப்ரதி சங்க்யா ப்ரதி சங்க்யா நிரோதா ப்ராப்திர் அவிச்சேதாத் –2-2-21-

உலக்கையால் அடிபட்டு ஸ்தூலமாகத் தோன்றும் குடத்தின் அழிவு ப்ரதி சங்க்யா நிரோதம் -எனப்படும்
ஒவ்வோர் ஷணத்திலும் கண்களுக்குப் புலப்படாமல் அழிகிற அழிவு குடத்தில் ஏற்படுகிறது
அதை அப்ரதி சங்க்யா நிரோதம் என்பர்
இத்தகைய இருவகை விநாசங்களுக்கும் பிராப்தி இல்லை
ஏன் எனில்
அவிச்சேதாத் –உத்பத்தி விநாசம் என்னும் தர்மத்தை யுடைய மண் கட்டி முதலிய த்ரவ்யங்களுக்கு
விச்சேதம் -இடையூறு -இல்லாமையால் –
ஆகவே மண் கட்டிக்கு அடியகன்ற தோர் தோற்றமாதலால் குடத்தின் உத்பத்தி குடம்
கபாலம் ஓடு போன்ற நிலை அடைதலே அழிவு என்பது ப்ரத்யக்ஷமாகத் தோன்றுவதால்
கீழ்ச் சொன்ன இருவகை விநாசங்களும் நிரன்வய விநாசம் எனக் கூடாது
நிரன்வய விநாஸம் என்பது அழிவு
ஒரு நிலையிலே அந்வயிக்காமல் -சம்பந்திக்காமல் -இருத்தல் என்பதாம்
தீபத்தின் நாசம் என்பதும் தீபத்தின் ஸூஷ்ம அவஸ்தையே யாகும் –

—————

ஸூத்ரம் –192–உபயதா ச தோஷாத் –2-2-22-

உத்பன்னமான த்ரவ்யத்துக்கு தும்சத்வம் சூன்யத்வம் சொன்னாலும்
துச்சத்தில் இருந்தே ஜகத்துக்கு உத்பத்தி சொன்னாலும்
ஜகத்தே துச்சம் சூன்யம் என்று ஒப்புக் கொள்ள நேரிடும் –

————–

ஸூத்ரம் –193–ஆகாசே ச அவிசேஷாத் –2-2-23-

ஆகாசத்திலும் துச்ச ஸ்வரூபத்வம் சொல்லக் கூடாது
அவிசேஷாத் –பிருதிவ்யாதிகளைப் போலே ஆகாசத்திற்கும் அபாதிதமான ப்ரதீதி ஸித் தத்வம் சமம்
ஆகையால் விசேஷம் இல்லை
அத்ரஸ்யேந பததி-இங்கு கழுகு விழுகிறது என்று
கழுகு விழுவதற்கு ஆஸ்ரயமாகவே ஆகாசம் தோன்றுவதால் அதற்குப் பாதகம் இல்லை –

————

ஸூத்ரம் –194-அனுஸ் ஸ்ருதேச் ச –2-2-24–

இது அதே குடம் என்ற நினைவு -ப்ரத்யபிஜ்ஜை -ஏற்படுவதாலும்
குடம் முதலியவை க்ஷணிகம் என்பது தகாது
ப்ரத்யபிஜ்ஜை -என்பது சென்ற காலத்திலும் நிகழ் காலத்திலும் இருக்கிற
ஒன்றைப் பற்றிய ப்ரத்யக்ஷ ஞானம் –
அதே இது என்பது போன்றது
அதில் அதே என்பது ஸ்மரண அம்சம் -இது என்பது கிரஹண அம்சம் என்றும் கூற இயலாது
அதே இது என்ற விசேஷண விசேஷ்ய பாவத்தால் -ஸாமா நாதி கரண்யத்தால் –
க்ரஹண அம்சமே ஒரு பொருளில் தோன்றுவதால் ப்ரத்யக்ஷ ரூபம் தான்
அதற்குக் காரண ஸாமக்ரீ எது என்றால்
முன் அனுபவத்தால் உண்டான ஸம்ஸ்காரத்துடன் கூடிய இந்திரியங்களின் சேர்க்கை
இதனையுடைய மனிதனுக்கு இந்த ப்ரத்யபிஜ்ஜை ஏற்படுகிறது –
குடம் முதலிய விஷயங்களும் அறிபவனும் க்ஷணிகம் என்றால்
இந்த ப்ரத்யபிஜ்ஜை உண்டாகவே மாட்டாது

——————

ஸூத்ரம் –195–ந அஸத் அத்ருஷ்டத்வாத் –2-2-25–

அஸத ந -நசித்துப் போன குடம் முதலியவற்றின் குடத்தன்மை -கடத்தவம் -போன்ற தர்மமானது
குடம் முதலியவற்றின் ஞானத்தில் சங்கமிக்கிறது -ஒட்டிக் கொள்கிறது என்பதும் பொருந்தாது –
ஏன் எனில்
அத்ருஷ்டத்வாத்-பொருள் நசித்த பின் அதன் தர்மம் மட்டும் வேறு ஒன்றில் ஒட்டிக் கொள்வது என்பது
எங்குமே காணப்படாமையாலே
ஸுராந்திகர் கூறுவது –
நீலம் மஞ்சள் முதலிய பல நிற அறிவைக் கொண்டு அவ்வறிவுக்கு முன் இருந்த நீலம் முதலியவை பற்றிய அறிவில்
நீலமான குடம் தான் அழியும் போது தன் நீல நிறத்தை ஒப்படைத்து விட்டு அழிகிறது
பின்னர் நீலக்குடம் முதலிய பொருள் அனுமானத்தால் தீர்மானிக்கப் படுகிறது என்பதாம்
இத்தகைய மதமும் அசங்கதம் என்பதாம் –

———–

ஸூத்ரம் –196–உதா ஸீநா நாம் அபி சைவம் ஸித்தி –2-2-26–

வைபாஷிகனுக்கும் ஸுந்த்ராதிகனுக்கும் பொதுவான தோஷம் இந்த ஸூத்ரத்தில் கூறப்படுகிறது
ஏவம் –இப்படி சர்வ த்ரவ்யங்களுக்கும் க்ஷணிகம் கூறினால்
உதா ஸீநா நாம் அபி ஸ்த்திதி ஸ்யாத் –ஒரு முயற்சியும் இல்லாதவர்களுக்கும்
இம்மை மறுமை பலன்கள் யாவும் சித்தித்து விடும்
புண்ய கர்மாக்களை அனுஷ்ட்டித்து புருஷன் க்ஷணிகனாய் நசித்துப் போவதால்
அந்த புண்ய பலனை வேறே ஒரு மனிதனே அனுபவிக்க நேரிடும்
ஆகையால் வைசேஷிக ஸுத்ராந்திக மதம் அசமஞ்சேஸமே என்று கருத்து –

————-

நான்காம் அதிகரணம் –உப லப்த் யதிகரணம்

இவ்வாறு பாஹ்யார்த்தங்களின் இருப்பைப் பற்றி பேசுவோரைக் கண்டித்து
விஞ்ஞானம் மட்டுமே உள்ளது என்னும் யோகாசாரநைக் கண்டிக்கிறார் என்று சங்கதி
யோகாசாரனின் ஞானம் மட்டுமே -ஸத் -என்கின்ற வாதம் யுக்தமா அயுக்தமா என்ற சங்கையில்
யுக்தமே என்கிறான் பூர்வபஷி
ஏன் எனில்
இது குடம் இது வஸ்திரம் என்று குடம் முதலியவற்றின் ஞானத்துக்கும் பொதுவாகக்
குடம் முதலிய ஆகாரம் தோன்றுகிறது
பாஹ்யார்த்தங்களே ஸத் என்பாரும் குடம் முதலியவற்றில் உள்ள குடத்தன்மை கடத்வம் முதலியவற்றை
குடம் முதலியவற்றின் ஞானத்துக்கு ஆகாரமாக ஏற்று
வஸ்திரம் முதலியவற்றின் ஞானத்தில் இருந்து பேதம் சொல்கின்றனர்
ஆதலின் குடத்தன்மை முதலியவற்றின் தோற்றம் ஞானத்தின் உடையனதே தவிர
பாஹ்யார்த்தமான குடம் போன்றவற்றினுடையது அன்று
அப்படிப்பட்ட ஆகாரத்தோடு பாஹ்யார்த்த ப்ரதீதி -குடம் முதலியவற்றுக்கு பிராந்தி ரூபம் என்கின்றனர்
இம்மதத்தை இங்கு கண்டிக்கிறார் –

ஸூத்ரம் –197–ந பாவ உப லப்ர்தே–2-2-27-

அபாவ ந -ஞானத்தைத் தவிர வேறே பதார்த்தம் இல்லை என்று கூற இயலாது
ஏன் எனில்
உப லப்தே -நான் குடத்தை அறிகிறேன் என்று குடம் பற்றிய ஞானத்துக்கு
குடம் விஷயமாகவும்
ஆத்மா ஞாதாவாகவும் தோன்றுவதால்
விஷயங்களையும் ஞாதாவையும் இல்லை என்றால் ஞானமும் ஸித்திக்க மாட்டாது —

—————

ஸூத்ரம் –198-வை தர்ம் யச்ச ந ஸ்வப் நாதி வத் –2-2-28–

ஸ்வப் நாதி வச்ச ந-ஸ்வப்னத்தில் உண்டாகும் ஞானம் மித்யா விஷயமானால் போலவோ என்றால்
விழிப்பில் பெரும் ஞானமும் மித்யா விஷயமே என்பது பொருந்தாது
ஏன் எனில்
வை தர்ம்யாத் –ஸ்வப்ன ஞானத்தைக் காட்டிலும் விழிப்பு நிலை ஞானத்துக்கு வேறுபாடு உள்ளமையால்
அதாவது
ஸ்வப்ன ஞானத்திற்கு நித்ராதி தோஷம் காரணம்
ஸ்வப்னத்துக்கு பிந்திய நிலையில் இல்லை என்கிற பாதகமான எண்ணமும் உள்ளது
விழிப்பு நிலை ஞானத்திற்கு இவ்விரண்டும் இல்லை
இவ்வாறு தோஷம் அற்று பாதகமும் அற்றுள்ள குடம் முதலியவை பற்றிய ஞானத்தை –
மித்யா விஷயம் -அஸத்ய விஷயம் -என்று கூறுவது அயுக்தம்
ச -காரத்தால்
ஸ்வப்ன பதார்த்த ஞானமும் யதார்த்த விஷயகம் என்று ஸூ சிக்கப் படுகிறது –

—————–

ஸூத்ரம் –199–நா பாவோ அனு பலப்தே –2-2-29–

அபாவ ந –பொருள் அற்ற அர்த்த சூன்யமான ஞானத்திற்கு உண்மையும் இருப்பும் இல்லை
ஏன் எனில்
அனு பலப்தே-ஓர் இடத்திலும் அது தென்படாமையாலே பாதிக்கப்பட்ட ப்ரதீதியால்
ஸித்தமான அர்த்தத்தைக் கழித்து விட்டால்
ஞானத்தையும் கழிக்க வேண்டும் என்று கருத்து –

——————–

ஐந்தாம் அதிகரணம் –ஸர்வத அனுபபத் யதிகரணம்

ஸூ கத மதத்தினர் கூறும் ஸர்வ சூன்யத்வ வாதத்தை இதில் நிரஸனம் செய்கிறார்

ஸூத்ரம் –200–ஸர்வத அனுபபத்தேச் ச –2-2-30-

மாத்யமிகன் சொன்ன ஸர்வ சூன்ய வாதம் கூடுமா கூடாதா என்கிற சம்சயம் எழ
பூர்வ பஷீ கூடும் என்று வாதிக்கிறான்
மண் கட்டி முதலியவற்றை பிசையாமல் குடம் முதலியவற்றை உண்டாக்க இயலாது –
பிசைந்தாலோ கட்டி நசிந்து விடுகிறது
ஆகவே பிண்ட அபாவத்தால் உண்டான குடம் முதலியவை அபாவாத்மகங்களே என்று
கொள்ளுவது தான் பொருத்தமானது என்கிறான்
அதனைக் கண்டிக்கிறார் –

சர்வ சூன்யவாதி சர்வத்தையும் ஸத் என்று ப்ரதிஜ்ஜை செய்து தன் விருப்பத்தைச் சாதிக்கிறானா
அன்று அஸத் என்று கூறி சாதிக்கிறானா
அல்லது வேறு வழியிலா
ஸர்வதா -எல்லா வகைகளாலும் அவன் கூறும் ஸர்வ சூன்யத்வம் சித்திக்காது
அனுப பத்தே -எல்லா விதத்திலும் அனுப பத்தி இருப்பதால் -பாவம் அபாவம்-என்ற சொற்கள்
ஒரு பொருளின் அவஸ்தா விசேஷத்தையே குறிப்பவை என்று முன்னமே நிரூபித்து உள்ளோம்

மண் -அகன்ற அடிப் பாகத்தையும் மத்ய பாகத்தையும் உடைய பாத்திரமாக மாறும் அவஸ்தையே
குடம் இருக்கிறது என்ற புத்திக்கு விஷயமாகிறது
மண் கட்டி நிலை இங்கு குடம் தோன்றப் போகிறது என்ற புத்திக்கு விஷயம்
பானையின் ஓடு குடம் அழிந்தது என்ற புத்திக்கு விஷயம் ஆகிறது
ஆகவே உள்ள பொருளின் தர்மமே சத்த்வமும் அசத்த்வமும் என்று விளக்குவதால்
நீ கூறும் சர்வ சூன்யத்வ வாதம் சித்திக்க மாட்டாது –

—————

ஆறாவது அதிகரணம் –ஏகஸ் மின்ன ஸம்பவாதி கரணம்

அசத்துக்கு அஸத் சொல்லும் வாதியைக் கண்டித்து
ஸத்யத்வத்தையும் அஸத்யத்வத்தையும் சேர்த்துச் சொல்லும் ஜைன மதத்தைக் கண்டிக்கிறார்
என்று சங்கதி

ஸூத்ரம் –201- ந ஏகஸ் மின்ன ஸம்பவாத் –2-2-31-

ஜைன மதம் யுக்தமா அயுக்தமா என்ற சம்சயத்தில்
யுக்தமே என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
ஜீவன் என்றும் அஜீவன் என்றும் கூறப்படும் முழு ஜகத்தும்
சத்தாயும் அசத்தாயும் நித்யமாயும் அநித்யமாயும் பின்னமாயும் அபின்னமாயும் உள்ளதாகத் தோற்றுகிறது
த்ரவ்ய ஸ்வரூபம் ஸ்திரமாயும் ஏகமாயும் இருக்கும்
கடத்வம் கபாலத்வம் போன்ற பர்யாயங்களான அவஸ்தைகளாலே அநேகமாயும் அசத்தாயும் அஸ்திரமாயும் இருக்கும்
அதனால் இந்த மண் குடம் இந்த மண் கபாலம் -ஓடு – இது முதலிய ப்ரதீதி -எண்ணம் -தோன்றும்
என்னும் பஷத்தை நிரஸிக்கிறார்

ந -ஜைன மதம் பொருத்தமானது அல்ல
ஏன் எனில்
ஏகஸ்மின் அஸம்பவாத்-ஒரே த்ரவ்யத்தில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு ஓன்று
முரணான தர்மங்கள் சம்பவிக்காதவை என்பதால்
குடம் வாணாய் என்பவற்றின் பேதங்களும் பிருத்வியின் பிரதேச பேதத்தால் அல்லது
ஒரு பிரதேசத்தில் பேத அபேத ஆஸ்ரயித்தவம் இல்லை
ஆகவே ஒரு வஸ்து தானே இரு வடிவுள்ளதாக இருக்கும் என்பது சரியில்லை

—————–

ஸூத்ரம் –202–ஏவாஞ்ச ஆத்ம அகார்த்ஸ்ன்யம் –2-2-32-

இப்படி ஒப்பும் கொள்ளும் பக்ஷத்தில் ஆத்மாவுக்கு அகார்த்ஸ்ன்யம் வந்து விடும்
அது எப்படி என்றால்
ஆத்மாவே சரீர பரிணாமமாய் இருக்கிறான் என்று ஜைன மதம்
அப்படியாகில் யானையின் உடலில் உள்ள ஜீவன் கொசுவின் உடலில் நுழைகையில்
ஆத்மாவுக்கு அகார்த்ஸ்ன்யம்-அபூர்ணத்வம் வரக்கூடும் –

—————–

ஸூத்ரம் –203-ந ச பர்யாயா தப்ய விரோதோ விகாராதிப்ய –2-2-33-

ந ச பர்யாயா தபி அவிரோதோ
ஆத்மாவுக்கு அல்பத்வ அவஸ்தை என்னும் பர்யாயத்தாலும்
கீழ்க் கூறிய விரோதம் வராது என்பது பொருந்தாது
ஏன் எனில்
விகாராதிப்ய -குடம் முதலியவற்றுக்கும் போலவே ஆத்மாவுக்கும் பெருமை சிறுமை முதலிய
விகாரங்கள் என்னும் தோஷம் சம்பவிக்கக் கூடுமாகையாலே
அவஸ்தா பேதத்தை ஏற்றாலும் ஆத்மாவுக்குத் தோஷத்தைப் பரிஹரிக்க முடியாது என்றபடி –

————–

ஸூத்ரம் –204-அந்த்யா வஸதி தேச் ச உபய நித்யத் வாத விசேஷ –2-2-34–

அந்த்யா வஸதி தேச் ச –ஜீவனுக்கு மோக்ஷ தசையில் வரக்கூடிய இறுதியான பரிமாணம்
பிற்பாடு ஒரே விதமாக இருப்பதால்
உபய நித்யத் வாத் –ஆத்ம ஸ்வரூபமும் -அந்திய இறுதிப் பரிமாணமும் நித்யமாயும் இருப்பதாலும்
அவிசேஷ -முன் தசையிலும் பின் தசை போலே ஆத்ம ஸ்வரூப பரிமாணங்கள் இருக்க வேண்டியவை யாதலால்
ஆத்மாவுக்குத் தேகம் போன்ற பரிமாணம் என்ற விசேஷம் இல்லை
ஆகையால் ஜைன மதம் பொருந்தாது என்பதாம் –

—————-

ஏழாம் அதிகாரணம் –பசுபத் யதிகரணம்

பசுபதி மதத்தில் ப்ரக்ருதி காரணம் என்று ஒப்புக் கொண்டாலும்
காணாத சாக்ய பாஷண்டை த்ரயீ தர்மோ விலோபித-என்கிறபடியே
வேதத்தை ஏற்காதவர்களுடன் சேர்ந்து இருப்பதால் ஜைனர்களைக் கண்டித்ததும்
பசுபத மதத்தைக் கண்டிக்கிறார் என்று சங்கதி

பசுபதியால் இயற்றப்பட்ட மதம் முமுஷுக்களால் ஆதரிக்கத் தக்கதா அல்லவா என்ற சங்கையில்
ஸர்வஞ்ஞனான ருத்ரனால் இயற்றப்பட்ட தாதலின் ஆதரிக்காது தக்கதே என்பதே பூர்வ பக்ஷம்
அதனை இங்கு நிரஸனம் செய்கிறார்

ஸூத்ரம் –205–பத்யுர அஸாமஞ் ஜஸ்யாத் –2-2-35–

ந ஏகஸ்மின்ன சம்பவாத் – என்கிற ஸூத்ரத்தில் இருந்து ந -தருவித்துக் கொள்ள வேண்டும்
பத்யு ந -பசுபதியின் மதம் சரி இல்லை
அஸாமஞ் ஜஸ்யாத்–வேதாந்த சித்தனான பரமபுருஷனை கீழானவனாகவும்
ருத்ரனை நிமித்த காரணமாகவும்
கள் குடத்தை ஸ்தாபிப்பது போன்ற வேத விருத்தமான ஆசாரங்களை விளக்குவதாலும்
பசுபதி மதம் அசமஞ்சஸம் ஆதலின் ஆதரிக்கத் தக்கது ஆகாது –

———–

ஸூத்ரம் –206–அதிஷ்டான அனுப பத்தேச் ச –2-2-36-

அனுமான சித்தனான பசுபதி என்னும் ஈஸ்வரன் பிரதானத்தை அதிஷ்டிக்கிறான் என்று சொல்வதால்
சரீரமுள்ள குயவன் போன்றவனுக்கே மண் உருண்டை முதலியவற்றை அதிஷ்டித்தல் காணப்படுவதால்
சரீரம் அற்ற பிரதானத்தை அதிஷ்டித்தல் ஆகாது –
அதற்காக பசுபதிக்கு சரீரத்தை ஒத்துக் கொண்டால்
ஸ அவயவமான சரீரத்துக்கு ஒரு காரணம் அபேக்ஷிக்கப் படுவதால் ஓர் முடிவு இராமல் போகும் —

——————-

ஸூத்ரம் –207–கரண வத் சேத் ந போகாதிப்ய –2-2-37-

கரண வத் சேத் ந -ஷேத்ரஞ்ஞன் – ஜீவன் -சரீரம் இன்றியே தன் கரண களேபரங்களை
அதிஷ்டிப்பது போலவே பசுபதியும் அதிஷ்டிக்கலாம் என்பது தகாது
போகாதிப்ய-அவ்வாறே ஷேத்ரஞ்ஞனைப் போலவே
பசுபதிக்கும் புண்ய பாப ரூப கர்ம பல போகாதிகள் வந்து சேரும் –

——————

ஸூத்ரம் –208–அந்த வத்த்வம் அஸர்வ ஜ்ஞதாவா –2-2-38–

வா என்பது உம் -ச என்ற பொருளில்
பசுபதிக்கு புண்ய பாபங்கள் உண்டு என்றால்
அந்த வத்த்வமும்-விநாசமும் -ஸ்ருஷ்டிக்கும் ஸம்ஹாரத்துக்கும் விஷயமாதலும் –
ஸர்வஞ்ஞத்வம் இன்மையும் ஏற்படுமாகையால் பசுபதி மதமும் அசமஞ்சஸம் –

———————-

எட்டாவது அதிகரணம் –உபபத்ய சம்பவ (பாஞ்சராத்ரம் )அதி கரணம்

ஸூத்ரம் –209-உபபத்ய சம்பவாத் –2-2-39-பூர்வ பக்ஷ ஸூத்ரம்

வாஸூ தேவாத் சங்கர்ஷ்னோ நாம ஜீவோ ஜாயதே -என்று
-ந ஜாயதே ம்ரியதேவா விபச்சித -போன்ற ஸ்ருதிக்கு விரோதமான ஜீவ உத்பத்தியைச் சொல்வதால்
பாஞ்சராத்ரம் பிரமாணம் இல்லை என்பர்
நான்கு வேதங்களாலும் புருஷார்த்தம் அடையப்பெறாதவர் இதனால் பெறுகிறார் என்று
வேதங்களை அலட்சியப்படுத்திச் செல்வதாலும் பிரமாணம் இல்லை என்பர்

———

ஸூத்ரம் –210- ந ச கர்த்து கரணம் –2-2-40-பூர்வ பக்ஷ ஸூத்ரம்

சங்கர்ஷணாத் ப்ரத்யும்ன சம்ஞ்ஞம் மநஸ் உத்பத்தே என்று
மனஸ்ஸுக்கு ஸங்கர்ஷணன் என்ற பெயர் கொண்ட கர்த்தா வாகிய
ஜீவனிடம் உத்பத்தி கூறுவது ஸ்ருதிக்கு விருத்தமாகையாலும் பாஞ்ச ராத்ரம் அப்ரமாணம்
கர்த்து கரணம் நச -கர்த்தாவான ஜீவன் இடத்திலிருந்து மனஸ் ஸர்வேந்திராணி ச என்று
மனஸ் ப்ரஹ்மத்தினிடம் இருந்து தோன்றுவதாகவே ஸ்ருதி சொல்வதால்

இந்த இரண்டு பூர்வ பக்ஷ ஸூத்ரங்களுக்கு அடுத்த இரண்டும் ஸித்தாந்த ஸூத்ரங்கள் –

ஸூத்ரம் –211-விஞ்ஞானாதி பாவே வா தத் அப்ரதிஷேத –2-2-41-

வா ஸப்தம் பூர்வ பஷத்தை விலக்கிக் காட்டுகிறது
விஞ்ஞானஞ்ச தத் ஆதிச விஞ்ஞானாதி -என்று விக்ரஹம்
அதனால் விஞ்ஞானாதி என்பது -ஞானமே ஸ்வரூபமாய்க் கொண்ட ஜகத் காரணமான பரமாத்வைச் சுட்டுகிறது
அதன் பாவம் -விஞ்ஞானாதி பாவம் -அவனது அவதார ரூபமாய் இருத்தலாம்
ஆகவே ப்ரத்யும்ன அநிருத்த ஸங்கர்ஷணாதிகள்
விஞ்ஞான ஸ்வரூபமாய்
ஜகத்தின் ஏக காரணமான பரப்ரஹ்மத்தின் அவதார ரூபமே என்பது ஸித்தம் –

அதைத் தடுக்க வில்லை -அந்த விஷயத்துக்கு ப்ராமாண்யத்தைத் தடுக்கவில்லை
முழு பாஞ்ச ராத்ர ஸாஸ்த்ரமும் பிராமண தர்மம் என்பதாகிறது
அஜயமானோ பஹுதா விஜாயதே -என்று ஸூவ இச்சையாலேயே அவதாரங்கள் தான்
வாஸூதேவாத் ஸங்கர்ஷனோ நாம ஜீவோ ஜாயதே -சங்கர்ஷணாத் ப்ரத்யும்ன ஸம்ஜ்ஞம் மனோ ஜாயதே
இத்யாதிகளால் சொல்லப்படுகிறது -ஜீவனின் உத்பாதிகளைப் பற்றிச் சொல்லவில்லை
இங்கு ஜீவாதி சப்தங்கள் விசேஷ்யங்களாயும்
ஸங்கர்ஷணாதி சப்தங்கள் விசேஷணங்களாயும் இருக்கும் என்கின்றனர் பூர்வ பக்ஷிகள்
ஸித்தாந்தத்தில் ஜீவனின் அதிஷ்டாவாதான ஸங்கர்ஷணன் என்றும் பொருள்
ஸங்கர்ஷணாதி பதங்கள் விசேஷ்யங்கள் -ஜீவாதி பதங்கள் விசேஷணங்கள் என்று கருத்து
நான்கு வேதங்களாலும் புருஷார்த்தங்கள் கிட்ட வில்லை என்பது
உதயத்துக்கு முன் ஹோமம் செய்பவர் பொய் பேசுபவராம் என்ற வேத வாக்கியம் -உதயத்துக்கு பின் அக்னி ஹோத்ரம்
செய்வதை போற்ற வந்த அர்த்த வாதம் என்பது போல் பாஞ்ச ராத்ரம் சிறந்தது என்பதைக் காட்டவே –
அதாவது
வேதாந்தத்தில் கூறப்பட்ட பரம புருஷனின் உபாசனத்தையும் அவனை அர்ச்சிப்பதையும்
பாஞ்ச ராத்ரம் விளக்குவதால் அது முழுவதுமே பிரமாணம் என்பது சித்தம் –

ஸூத்ரம் –212–விப்ரதிஷேதாச் ச -2-2–42-

இந்த பாஞ்சராத்ரத்திலும் ஜீவனின் உத்பத்தியை விசேஷமாக நிஷேதித்து இருப்பதால்
இது வேதத்துக்கு முரண் அற்றது

அசேதநா பரார்த்த ச நித்யா சதத விக்ரியா
த்ரி குணா கர்மிணாம் க்ஷேத்ரம் ப்ரக்ருதே ரூப முச்யதே
வ்யாப்தி ரூபேண ஸம்பந்த தஸ் யாச்ச புருஷஸ் யச
ஸஹ்ய நாதி ரநத் தச்ச பரமார்த்தே நிச்சித -என்று

பாஞ்ச ராத்ரத்திலே ஜீவனுக்கு உத்பத்தி நிஷேதிக்கப்பட்டது
ஆகையால் ஸ்ருதியுடன் சிறிதும் முரண்பாடு இல்லை

கீழே பூர்வ பக்ஷிகள் கூறிய முக்தி பிரகாரத்தை விளக்க அதிகரண ஸாரா வளியில் ஸ்வாமி தேசிகன்
ஸ்வா தந்தர்யம் ப்ரஹ்மண ஐக்யம்– –கல்பதாம் ஜல்பதாம் வ-என்ற ஸ்லோகத்தின் கருத்து

ஸ்வா தந்தர்யம் பசுபதி ஸமத்வம் -இவ்விரண்டும் பாசுபத பேதங்கள் -இவை முக்தியில் பிரகாரங்கள்
ப்ரஹ்மத்துடன் ஐக்யமும் அவித்யா நிவ்ருத்தியும் அத்வைதிகள் கூறும் முக்தி பிரகாரங்கள்
புத்தமத ஒரு சாரார் விஷய வாசனை தொலைவதே அது என்பர்
பிரபாகரர் -மித்யா ஞான சந்ததியின் அழிவே அது என்பர்
நையாயிகரில் சிலர் தன் புத்தி சுகங்களை நித்யம் நெருக்கமான நிலையே முக்தி என்பர்

பாட்ட மீமாம்சகர் சித்தத்தால் தன் ஆத்ம ஸுக்யத்தை அனுபவிப்பதே முக்தி என்பர்
காணாதர்கள் -கல் -பாஷாணம் -போன்றதே முக்தி என்பர்
ஜைனர்களோ நித்யம் மேல் நோக்கிப் பயணம் அனைத்து மக்களின் மத்தகத்தின் கூடிய சரீர பிரவேசம் முக்தி என்பர்
சூன்ய அத்வைதமே முக்தி என்பது
கேவல ஆத்ம அனுபவமே முக்தி என்பர் சாங்க்யர்
உபாதை நிவ்ருத்தியே முக்தி -யாதவ பாஸ்கர மதஸ்தர்
தேக விச்சேதம் ஆயிரம் யுவதிகளை அனுபவிப்பதே முக்தி என்பர் சாருவாகர்

இப்படி விபரீத உக்திகளைக் கூறும் உங்களை சுருதி உபகரிக்கட்டும் என்று
இகழ்ச்சியாக சொல்லும் ஸ்லோகம்
கீழ் சொன்ன யுக்திகள் எல்லாமே ஸ்ருதி ஸ்ம்ருதி அனுமானம்
அனைத்துக்குமே விருத்தமானவை என்று கருத்து

————–

பாதேஸ்மின் –காபிலஸ்தை –பஞ்சம ஆம்நாய தர்சீ —

முதல் அதிகரணம் –ரசனா னுப பத்தி -காபிலர்கள் செய்த விரோதம்
இரண்டாம் அதிகரணம்-மஹத் தீர்க்கம் –காணாதர்கள் செய்த விரோதம்
மூன்றாம் அதிகரணம் -சமுதாயம் -வ்ருத்த வைபாஷிகன் செய்த விரோதங்கள்
நான்காம் அதிகரணம் –உபலப்தி -யோகாசாரர் செய்த விரோதங்கள்
ஐந்தாம் அதிகாரணம் -ஸர்வதா அனுபபத்தி -மாத்யமிக சூன்ய வாதி ப்ரசக்தி
ஆறாம் அதிகரணம் —ஏகஸ்மின்ன ஸம்பவம் -ஜைனர்கள் செய்த விரோதங்கள்
ஏழாம் அதிகரணம் -பசுபதி -பசுபதி மதஸ்தர் செய்த விரோதங்கள்
இவற்றைக் கண்டித்த பின்
எட்டாம் அதிகரணம் –உத்பத்ய சம்பவம் -பாஞ்சராத்ரம் -பாஞ்ச ராத்ரமே வேதாந்த மார்க அநுசாரி என்று ஸ்தாபித்தார்

ஸ்ரீ மத் பாரதத்தில் ஆனுசாசநிக பர்வத்தில் -ஞான காண்டத்தில் பல ஸ்லோகங்களால் மூழ்குவதுமே
பாஞ்ச ராத்ர சாஸ்திரம் ப்ரமாணமே என்று ஸ்தாபித்த
வியாசர் பாஞ்சராத்ரத்தின் ஒரு பகுதி அப்ரமாணம் என்று சொல்கிறார் என்பது பொருந்தாது
தன் சொல்லுடனும் முரணானதாகும்
ஆகையால் பாஞ்ச ராத்ரத்தில் சுருதி விரோதத்தை அங்கீகரித்து விரோதம் இல்லாத அம்சம் மட்டுமே பிரமாணம்
என்று சங்கரர் கூறுவது கண்டிக்கப்பட்டது என்பதே ஸ்ரீ பாஷ்யகாரர் திரு உள்ளம்
ஸ்ரீ ஆளவந்தாரும் ஆகம ப்ராமாண்யத்தில் இத்தை நன்கு ஸ்தாபித்தார்

————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை –இரண்டாம் அத்யாயம் –முதல் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————————————————-

இதுவரை சர்வ வேதாந்தங்களும்
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண கதான ஸ்வரூப ஸ்ரீ யபதியான பரம புருஷன் ஸ்ரீ மன் நாராயணன்
என்று அவனுடைய பரத்வத்தை வெளிப்படுத்தி காரணத்வம் நிரூபிக்கப் பட்டது
அது எந்தப் பிரமாணத்தாலும் பாதிக்காத தக்கது அன்று
என்று அபாத்யத்வம் என்ற அம்சம் இரண்டாம் அத்யாயத்தால் நிரூபிக்கப் படுகிறது –

இதில் முதல் இரண்டு பாதங்களில் –
காரண பூதமான பர ப்ரஹ்மம் பற்றி பூர்வ பக்ஷங்களால் கூறப்படும் பாதகங்கள் பரிஹரிக்கப் படுகின்றன
பின்னுள்ள இரண்டு பாதங்களில் (வியத்பாதம் -பிராண பாதம் )
கார்யத்வத்தை ஹேது வாகக் கொண்டு வரும் விரோதத்தை
வேதாந்த வாக்யங்களுக்கு பரஸ்பரம் முரண்பாட்டை நீக்குவதன் மூலம் பரிஹரிக்கிறார் என்று சங்கதி

முதல் அத்தியாயத்தின் முடிவில் இரண்டு வகையான சாங்க்யர் நிரசனம் ஆனதால்
இங்கு முதலில் இங்கு சாங்க்யன் வேதாந்த விரோதத்தைச் சொல்கிறான்
அடுத்தபடி யோக வாதீ என்று இங்கு அதிகரண சங்கதி

ஸ்ம்ருதி அதிகரணம் –2-1-1-

ஸூத்ரம் –135-ஸ்ம்ருத் யந வகாச தோஷ ப்ரசங்க இதி சேந் ந அந்ய ஸ்ம்ருத்யந வகாச தோஷ ப்ரசங்காத்–2-1-1-

முன் கூறப்பட்ட பரம புருஷனே காரணம் என்ற விஷயம் கபிலர் முதலியோரின் ஸ்ம்ருதிகளோடு
விரோதத்தால் மாற்றி விட -விலக்கி விடத் தக்கதா -இல்லையா என்ற சங்கை
விலக்கத் தக்கதே என்பதே சாங்க்யர்களின் பூர்வ பக்ஷம்

ஏன் எனில்
ஸ்ருதி விருத்தமான அர்த்தம் கொண்ட ஸ்ம்ருதி ஆதரிக்கத் தகாதது என்று
பூர்வ மீமாம்ஸையில் ஸ்திரப் படுத்தப் பட்டு இருந்தாலும்
வேதாந்த அர்த்தம் எளிதில் அறிய முடியாதது ஆதலின் ஆப்தரான கபிலராலே அருளப்பட்ட கேவலம்
தத்வ ப்ரதிபாதனம் செய்யும் சாங்க்ய ஸ்ம்ருதி கொண்டே வேதாந்த அர்த்தங்களை நிர்ணயம் செய்ய வேண்டும்
அவ்வாறு இல்லா விட்டால் கபில ஸ்ம்ருதிக்கு முற்றிலும் வையர்த்தம் பயன் அற்ற தன்மை ஏற்படும் என்றார்கள் –

ஸ்ம்ருத் யந வகாச தோஷ ப்ரசங்க இதி சேந் ந
கபில ஸ்ம்ருதிக்கு இடமே இல்லை என்ற தோஷம் வந்து விடுமே என்றால்
அது அல்ல -ஏன் எனில்
கபிலர் கூறிய பிரதானம் ஜகத் காரணம் என்பது தகாது
ஏன் எனில்
ஆப்த தமர்களான பல மஹரிஷிகள் அருளிய வேறு வேதாந்த அர்த்தத்துக்கு முரண் இல்லாத
பற்பல ஸ்ம்ருதிகளுக்கு இடம் இல்லாமை என்ற அதே தோஷம் வந்து விடும் –
ஆதலின் அது அன்று என்கிறோம் –

அவற்றுக்கு எப்படி இடம் இல்லாமை ஏற்படும்
மனு ஸ்ம்ருதி முதலியவை தர்மாதிகளை விளக்குவதால் அவகாசம் உள்ளவை ஆகலாமே என்றால்
அந்தத் தர்மங்களும் பரம புருஷ ஆராதன அர்த்தங்கள் என்று
இஷ்டா பூர்த்தம் பஹூதா ஜாதம்
ஜாய மானம் விஸ்வம் பிபர்த்தி புவனஸ்ய நாபி ததே வாக்நிர் இதி யஞ்ஜைஸ் த்வ மிஜ்யஸே நித்யம் ஸர்வ தேவம யாச் யுத —
இது முதலிய ஸ்ருதி ஸ்ம்ருதிகளாலே ஸித்திப்பதாலும்

ஆஸீ திதம் தமோ பூதம் -என்று தொடங்கி
ஆபோ நார இதி ப்ரோக்தா ஆபோவை நர ஸூ நவே
தா யதஸ் யாயனம் பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருத–என்றும்
விஷ்ணோஸ் ஸகாசா துத் பூதம்– என்ற இது போன்ற
மனு பராசர ஸ்ம்ருதிகளால் பரம புருஷனே ஜகத் காரணன் என்று ஸித்திப்பதாலும்
பரம புருஷனுக்கு காரணத்வம் சொல்லாவிட்டால் மன்வாதி ஸ்ம்ருதிகளுக்கு இடம் இல்லை
என்ற தோஷம் வரும் என்பதாம்

இந்த்ரியங்களுக்குப் புலப்படாதவற்றை ஸாஷாத் கரிக்க வல்லவர் கபிலர் ஆதலின்
அவருக்குத் தோன்றாத ப்ரஹ்ம காரணத்வம் கூடாது என்று மேலே தோன்றும் சங்கைக்கு உத்தரம் கூறுகிறார் –

———–

ஸூத்ரம் –136-இதரேஷாம் சாநு பலப்தே –2-1-2-

வேதார்த்தங்களை ஸாஷாத் கரிக்க வல்லவர்களாய்
யத்வை கிஞ்சந மனுரவ தத் தத் பேஷஜம் -என்று ஸ்ருதியில் ப்ரசித்தரான
மனு போன்றாருக்கு பிரதானம் காரணம் என்று தோன்றாமையாலே
வேதாந்தார்த்த விருத்தமான கபிலரின் ஸ்ம்ருதி அல்லது தோற்றம் பிராந்தியை மூலமாகக் கொண்டது என்று கருத்து

——————————

இரண்டாம் அதிகரணம் –யோக ப்ரத்யுக்த் யதி கரணம் –

ஸூத்ரம் –137–ஏதேந யோக ப்ரத் யுக்த –2-1-3-

வேதாந்தங்களுக்கு ஹிரண்ய கர்ப்பனால் அருளப்பட்ட யோக ஸ்ம்ருதி
ப்ரமாணமா அல்லவா என்பது சம்சயம்
ப்ரமாணமே –
ஏன் எனில்
முழு வேதங்களையும் ப்ரவர்த்திப்பித்த ஹிரண்ய கர்ப்பன் -பிரமதேவன் – அருளியதாலும்
யோக ஸ்ம்ருதி பகவானை ஏற்றுக் கொள்வதாலும்
என்பது பூர்வ பக்ஷம் –

ஆகவே யோக ஸ்ம்ருதிப் படி பிரதானமே உபாதான காரணமாகும் -ஈஸ்வரன் நிமித்த காரணமே
என்ற பூர்வ பக்ஷத்தை நிரஸனம் செய்கிறார்
அந்த ஸூத்ரத்தாலே

ஏதேந யோக ப்ரத் யுக்த
கபில ஸ்ம்ருதிக்குக் கூறிய முறையால் யோக ஸ்ம்ருதிக்கும் வேதாந்த வாக்யங்களுடன் விரோதம் வருவதால்
அதுவும் பிரமாணம் இல்லை என்று கூறப்படுகிறது
சதுர் முகனானாலும் ஜீவனே யாதலின் அவருக்கு ஏற்பட்ட தோற்றமும்
ப்ராந்தியை மூலமாகக் கொண்டதே என்பதாகும் –

————

மூன்றாம் அதிகரணம் –ந விலக்ஷணத்வாதி கரணம்

ஸூத்ரம் –138– ந விலக்ஷணத்வா தஸ்ய தாத் வஞ்ச சப்தாத் –2-1-4-

இவ்வாறு கபில ஸ்ம்ருதியையும் யோக ஸ்ம்ருதியும் முரணானவை ஆதலின்
அவற்றால் வேதாந்த அர்த்தம் பாதிக்கப்படாது என்று காட்டி
பிறர் கூறும் தர்க்கங்களால் ஏற்படும் பாதத்தை இங்கு பரிஹரிக்கிறார் என்று சங்கதி –

வேதாந்தங்களுக்கு ப்ரஹ்மம் காரணம் என்பதில் நோக்கமா -அன்றி -பிரதானம் காரணமா என்று ஸந்தேஹம் தோன்றுகிறது
அங்கு பிரதான காரணத்வமே யுக்தமானது
ஏன் எனில்
ஜகத் ஜடமாய் இருப்பதால் ப்ரஹ்மத்தை விட ஸஜாதீயமான பிரதானம் காரணமாகத் தக்கது
என்ற பூர்வ பக்ஷத்தை நிரசிக்கிறார்

ந விலக்ஷணத்வாத்
அபிமானி வ்யபதேசாச் சான்ய
என்கிற இரண்டு ஸூத்ரங்களாலும் நிரஸனம் செய்கிறார்
இவை இரண்டும் பூர்வ பக்ஷ ஸூத்ரங்கள்

இதி சேத் ந –என்று கூறுவது பொருந்தாது
ஏது எனில்
அஸ்யக -இந்த ஜகத்துக்கு
விலக்ஷணத் வாத் -ஜடத்வாதிகளால் ப்ரஹ்மத்தை விட வேறுபாடு இருப்பதால் என்றபடி
ஸ லக்ஷணங்களுக்கே ம்ருத் கடாதிகளைப் போலே கூடும் என்பதால்
அத– ஆகையால் –ஜகத்துக்கு சமமான ப்ரதானமே
காரணம்
ததாத் வஞ்ச சப்தாத் -ப்ரஹ்மத்துக்கு ஜகத் விலக்ஷணத்வமும்
விஞ்ஞானம் சா விஞ்ஞானஞ்ச -முதலிய சப்தங்களால் அறியப்படுகிறது

ஆபோ வா அகா மயந்த –தம் ப்ருதி வ்ய ப்ரவீத் -முதலிய வாக்கியங்களில்
பிருத்வீ முதலிய அசேதனங்களுக்கும் ஞான கார்யமான காமனை முதலியவை கூறப்படுவதால்
ஞானாச்ரயம் என்ற முறையில் ப்ரஹ்மத்துடன் ஸாம்யம் உள்ளபடியால் உத் பத்தி தவறு இல்லையே என்றால்
அதற்கும் பூர்வ பக்ஷி விடை கூறுகிறார்

———————-

ஸூத்ரம் –139-அபிமானி வ்யபதேசஸ்து விசேஷ அனு கதிப்யாம் –2-1-5-

து -என்கிற சப்தம் சங்கையை நிவர்த்திக்கிறது
ப்ருத்வீ அப்ரவீத் -முதலிய இடங்களில் ப்ருத்வீ யாதிகளின் அபிமானி தேவதைகளைக் குறிப்பதாகும்
பிருத்வீ முதலிய அசேதனங்களைக் குறிக்க வில்லை
ஏன் எனில்
விசேஷ அனு கதிப்யாம் –ஹந்தா ஹமிமா -திஸ்ரோ தேவதா -என்று
ப்ருத்வீ யாதிகளை தேவதை என்று விசேஷயத்தால் குறிப்பதாலும்
அக்னிர் வாக் பூத்வா முகம் ப்ராவிஸத் -முதலியவற்றால்
அக்னி முதலியவற்றுக்கு வாகாதிகளுக்கு அனு கதி -பின் பற்றிச் செல்லுதல் கூறுவதாலும்
அசேதனத்வேந ஜகத்துக்கு ஸஜாதீயமான பிரதானம் காரணம் என்பது பூர்வ பக்ஷம்

இதற்கு ஸித்தாந்தி கூறும் விடை –

—————

ஸூத்ரம் –140-த்ருஸ்ய தேது –2-1-6-

து சப்தம் பூர்வ பக்ஷத்தை நிரஸனம் செய்கிறது
ப்ரஹ்மத்தை விட விலக்ஷணமான ஜகத்துக்கு ப்ரஹ்ம கார்யத்வம் என்பது கூடும்
ஏன் எனில்
உலகில் தேனடையில் இருந்து விலக்ஷணமான கிருமி போன்றவை தோன்றக் காணப்படுகிறது அல்லவா
அப்படியே காரியமும் காரணமும் விலக்ஷணமாய் இருப்பது தவறு அல்லவே
ஆகவே ப்ரஹ்மம் ஜகத்துக்குக் காரணமாய் இருக்கலாம் –

———————

ஸூத்ரம் –141-அஸத் இதி சேந்ந ப்ரதிஷேத மாத்ரத் வாத் –2-1-7-

கார்யம் காரணத்தைக் காட்டிலும் விலக்ஷணமாய் இருக்கலாம் என்று ஏற்றுக் கொண்டால்
காரணத்தில் கார்யம் இல்லாததால் அஸத் காரிய வாதம் சரி என்றதாகும்
அசத்தான பொருள் தானே தோன்றுகிறது எனக்கொள்ள நேரும்
அப்படியாயின்
ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம என்று
ஜகத்தையும் ப்ரஹ்மத்தையும் சாமா நாதி கரணமாகச் சொன்னது பொருந்தாது
இதி சேந்ந–இப்படிக் கூறுவது பொருந்தாது
ப்ரதிஷேத மாத்ரத் வாத் –கார்ய காரணங்கள் ஒரே விதமாகவே இருக்க வேண்டும் என்கிற நியமம் மட்டும் தடுக்கப் பட்டது அன்றி
அவை ஒரே த்ரவ்யம் என்பது தடுக்க வில்லை
காரண அவஸ்தையில் இருக்கும் ஒரே த்ரவ்யமே காரியமான அவஸ்தையை அடைந்து கொண்டு
ஸஜாதீயமாகவும் விஜாதீயமாகவும் இரண்டு அவஸ்தைகளையும் அடைகிறது என்பது கருத்து

—————–

ஸூத்ரம் –142-அபீதவ் தத்வத் பிரசங்காத் அசமஞ்சஸம் –2-1-8-

இது பூர்வபக்ஷ ஸூத்ரம்
அபீதவ் -ஜகத்துக்கு ப்ரஹ்மத்தினிடம் -அப்யய -பிரளய காலத்திலும் -உத்பத்தியிலும்
தத்வத் பிரசங்காத் -முன் போலவே பிண்டத்தவம் கடத்தவம் முதலிய அவஸ்தைகளை யுடைய மண் போலே
ப்ரஹ்மத்துக்கும் ஸர்வஞ்ஞத்வம் அஞ்ஞத்வம்–முதலிய நிலைகள் வந்துவிடுமாதலால்
முரணான அர்த்தத்தைச் சொல்லும் வேதாந்தங்களுக்கு
அசமஞ்சஸம் -என்ற நிலை வந்துவிடும்
சர்வஞ்ஞதிகளை யுடைய ப்ரஹ்மமே
அஞ்ஞத்வ விசிஷ்ட ஜகத்தாகிறது-என்று
வேதாந்தங்கள் கூறுகின்றன என்றால்
ப்ரஹ்மம் காரணம் என்று சொல்வது தகாது என்பது பூர்வ பக்ஷம்

இந்த சங்கையை பரிஹரிக்கிறார்

————

ஸூத்ரம் –143-ந து த்ருஷ்டாந்த பாவாத் –2-1-9–

ந -ப்ரஹ்மத்தினிடம் அஞ்ஞத் வாதிகள் பிரசங்கிக்க மாட்டா
அதனாலேயே வேதாந்தங்களை அசமஞ்சஸ்த்வம் இல்லை
து -ஸப்தம்
அஞ்ஞத்வ பிரசங்கம் அசம்பாவிதம் என்று காட்டுகிறது
ஒரு வஸ்துவுக்கு இரு அவஸ்தைகள் ஏற்பட்டால் குண தோஷங்களின் வ்யவஸ்தைகளில் த்ருஷ்டாந்தம் இருப்பதால்
ப்ரஹ்மத்திடம் காரணத்வம் கார்யத்வம் என்கிற இரு அவஸ்தைகள் இருப்பதாக சரீரகதமான கர்ம வஸ்யாதிகளும் அதில் ஓட்டுவது இல்லை
ஆதலால் தவறு ஏதும் இல்லை
மனிதன் எப்படி பிறந்தபின் பாலனாகவும் யுவாவாகவும் முதியனாகவும் ஆகிறானோ அதே போல்
அசேதனமான மனித சரீரத்தில் பிறப்பும் பாலத்தவாதிகளும் ஏற்படினும் ஆத்மாவில் ஏற்படுவது இல்லையே
ஆத்மாவிடம் ஏற்படும் சுக தூக்காதிகளும் சரீரத்துக்கு இல்லை அல்லவா
இதே போல் அவஸ்தா பேதம் அடையும் ப்ரஹ்மத்தினிடன் சேதன அசேதன தோஷங்கள் கலப்பது இல்லை
ஆகவே வேதாந்தங்கள் ஸமஞ்சசமே –

—————–

ஸூத்ரம் –144-ஸ்வ பக்ஷ தோஷாச் ச –2-1-10-

ப்ரஹ்ம காரணவாதம் தோஷம் அற்றது என்பது மட்டும் அன்று
பிரதான காரண வாதம் மிக்க தோஷங்களை யுடையது என்பதால் அதை விட்டு ஒழிக்க வேண்டும்
அவர் மதத்தில் நிர்விகாரமான புருஷனுக்கு பிரகிருதியின் சேர்க்கையால்
பிரகிருதியின் தர்மத்தைத் தன்னிடம் உள்ளதாய் பிரமித்து அதனடியாக ஜகத்தின் ஸ்ருஷ்டி கூறப்படுகிறது
பிரகிருதியின் இருப்பை மட்டும் சன்னிதானம் என்றால் முக்தனுக்கும் அத்யாஸம் வரும்
விகாரங்கள் சன்னிதானம் என்றால் எல்லா விகாரங்களை அத்யாசத்தாலே ஏற்படுவதால்
அத்யாசத்திற்கு விகாரம் ஹேது என்று கூறுவது முரணாகும்
இவ்வாறு மிகவும் அசமஞ்சஸமான பிரதான காரகத்வம் இகழத் தக்கதாம் –

———-

ஸூத்ரம் –145-தர்க்க அப்ரதிஷ்டா நா தபி–2-1-11-

கபில சித்தாந்தம் தர்க்கத்தை மூலமாகக் கொண்டது ஆதாலால்
புத்த மதஸ்தர் கூறிய தர்க்கங்களால் அது பாதிக்கப்பட்ட படியால்
தர்க்கத்துக்கு ஓர் முடிவே இராமையாலே அது யுக்தமான சித்தாந்தம் அன்று

————————

ஸூத்ரம் –146-அந்யத அநு மேயம் இதி சேத் ஏவமபி அநிர் மோக்ஷ ப்ரசங்க –2-1-12-

அந்யத அநு மேயம்
இதற்கு முன் உள்ள தர்க்கங்களாலே பாதிக்க ஒண்ணாதபடி
பிரதான காரணத்தை அனுமானிக்கிறோம் என்று கூறினால்
இதி சேத் ஏவமபி அநிர் மோக்ஷ ப்ரசங்க
இப்படியும் உன்னை தர்க்கத்தில் திறமை உள்ளவன் ஒருவன் ஏற்படக்கூடுமாதலின்
தோஷத்துக்கு விமோசனமே – –

——————-

நான்காவது அதிகரணம் –சிஷ்டா பரிக்ரஹா அதிகரணம்

ஸூத்ரம் –147-ஏதேந சிஷ்டா பரிக்ரஹா அபி வ்யாக்யாதா –2-1-13-

ஏதேந -கபில ஸ்ம்ருதியை நிராகாரணம் செய்த ஹேதுவான
நிலையற்றது என்ற ஹேதுவால்
சிஷ்டா பரிக்ரஹா அபி -சிஷ்டர்கள்
கணாதிகளின் ஸ்ம்ருதிகளும்
வ்யாக்யாதா -நிரஸனம் செய்யப்பட்டன என்று வ்யாக்யாதங்கள் என்பது கருத்து –

——————

ஐந்தாம் அதிகரணம் –போக்த்ரா பத்தி அதிகரணம்

ஸூத்ரம் -148–போக்த்ரா பத்தேர விபாகஸ் சேத் ஸ்யால் லோகவத் –2-1-14-

ப்ரஹ்மத்துடன் ஜகத்தில் உள்ள விகாரங்கள் ஒட்டாது என்பதற்கு ஜீவனை த்ருஷ்டாந்தமாக –
ந து த்ருஷ்டாந்த பாவாத் -என்கிற ஸூத்ரத்தில் காண்பித்தது
அப்படியானால் ஜீவனுக்கு உள்ளது போல் சர்வ சரீரத்வம் உள்ளமையால் ப்ரஹ்மத்துக்கு
சுக துக்க போக்த்ருதம் உண்டோ என்கிற சங்கையிலே
இவ்வதி கரணம் ப்ரவ்ருத்தம் ஆகிறது
ஸர்வாத்ம பூத ப்ரஹ்மத்துக்கு தன் சரீரமான ஜீவனைக் காட்டிலும்
நிரதிசய ஆனந்த ஏக ஸ்வரூபமான பேதம் கூறுவது
பொருந்துவதா இல்லையா என்ற சங்கைக்கு
பொருந்தாது என்பது பூர்வ பக்ஷம்

ப்ரஹ்மத்துக்கு ஜகத்து சரீரமானால் ஜீவனுக்குப் போலே ஸ போக்த்ருத்வம்
வந்து சேரும் என்பதால் பேதமில்லை -அபேதமே
அபஹத பாப்மத்வாதி ரூபமான விபாகம் கூடாது
இதி ஸ்யாத் -என்றால் விபாகம் வரத்தான் வரும்
ப்ரஹ்மம் கர்ம வஸ்யம் இல்லையால் ஜீவனைக்காட்டிலும் விபாகம் கூடும்
சுக துக்க போக்த்ருத்வங்கள் ச சரீரத்வம் காரணம் அன்று
கர்ம வஸ்யத்வமே காரணம்
அகர்ம வஸ்ய முக்தனுக்கு போக்த்ருத்வம் காணப்படாமையாலே -அதே போன்று
ஈஸ்வரனுக்கு சுக துக்க போக்த்ருவான்கள் பிரசங்கியாது
லோகவத் –
லோகத்தில் ராஜ வஸ்யர்களான ப்ருத்யர்களும் சாசகனான ராஜாவுக்கும் ஸ சரீரத்வம் இருந்தாலும்
ஸாஸனத்தை மீறினால் துக்கம் ப்ருத்யர்கட்க்கு இருக்க
ராஜாவுக்கோ தன் ஸாஸனத்தை மீறியதாக துக்கம் ஏற்படுவது இல்லை
அது போலவே ஸர்வ லோக நியந்தாவான ஈஸ்வரனுக்கு சுக துக்கங்கள் இல்லை என்பது திரு உள்ளம் –

————–

ஆறாம் அதிகரணம் -ஆரம்பணாதி கரணம் —

ந விலக்ஷணத்வாதி கரணத்தில்
கார்ய காரணங்கள் ஸ லக்ஷணமாகவே இருக்க வேண்டும் என்று நியமம் சொல்லும்
சாங்க்யனை நிரஸனம் செய்து
இதில்
கார்ய காரணங்களுக்கு விலக்ஷணதை சாதிப்பது போல் ஸ்வரூப பேதமும் சித்திக்கட்டும் என்று
எழுந்த வைசேஷிகன் கேள்விக்கு
காரியமும் காரியங்களும் அநந்யங்கள் -அபின்னங்கள் -என்று விளக்குவதன் மூலம்
கண்டனம் செய்கிறார் -என்று சங்கதி

ஸூத்ரம் –149–தத் அந்நயத்வம் ஆரம்பண சப்தாதிப்ய –2-1-15-

ப்ரஹ்மத்தின் கார்யமான ஜகத் ப்ரஹ்மத்தை விட வேறானதா -ஓன்று பட்ட்டதா -என்று சம்சயம்
வேறானதே என்று பூர்வ பக்ஷம்
ஏன் என்றால்
மண் முதலியவற்றுக்கும் குடம் முதலியவற்றுக்கும்
அறியப்படும் தன்மை
கூறப்படும் தன்மை
முதலியவற்றால் பிற இடங்களில் கார்ய காரணங்களுக்குப் பிற இடங்களில் பேதம் கங்கையாலும்
மண் குடம் முதலியவற்றைப் போல் ப்ரஹ்மத்துக்கும் ஜகத்துக்கும் பேதம் ஒப்ப வேண்டும்
ஆகையால் அபேத ஸ்ருதிகள் லக்ஷண தயா வேறே தாத்பர்யம் கொண்டவை என்னும்
பக்ஷத்தை நிரஸனம் செய்கிறார் –

தத் அந்நயத்வம் ஆரம்பண சப்தாதிப்ய

தத் அந்நயத்வம் -அந்த ப்ரஹ்மத்தின் இடம் வேறுபாடு இன்மை -ஜகத்துக்குச் ஸித்திக்கிறது என்று பொருள்
ஆரம்பண சப்த ஆதி –ஏஷாம் தாநி -ஆரம்பண சப்தாதீநி தேப்ய –
வாசாரம்பணம் -விகாரோ -நாமதேயம் –
ம்ருத்தி கேத்யேவ ஸத்யம்
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் -முதலிய
ஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் அபேதம் கூறும்
வாக்யங்களாலே
ஜகத்துக்கு ப்ரஹ்மத்தை விட வேறுபாடு இன்மை ஸித்தித்தது
அதாவது
விகாரம் -குடம் முதலிய அவஸ்தைகளும்
நாம தேயம் -குடம் முதலிய பேர்களும்
வாசாரம்பணம் -குடத்தால் தண்ணீர் கொண்டு வா என்ற சொற்களை உச்சரித்து
ஒன்றை ஏற்பது
மற்ற ஒன்றை விடுவது
முதலிய ப்ரவ்ருத்தி நடைபெற ஏற்பட்டவை
ஆரம்பணம் -கொள்ளுதல் மண் என்ற பொருளாலே விகாரமும் நாமதேயமும் கொள்ளப்படுகின்றன
குடம் என்ற நிலையும் பெயரும் ஏற்கப்படுகின்றன

ம்ருத்தி கேத்யேவ ஸத்யம் –கார்யப் பொருளாய் மாறிய நிலையிலும்
நேற்று நாம் பார்த்த மண்ணே குட வாணாயகவும் மாறி விட்டது என்று காரணமான மண் நினைவு படுவதாலும்
மண்ணின் அவஸ்தைகள் பல இருப்பினும் த்ரவ்யம் ஒன்றே என்பது ப்ரத்யக்ஷ ஸித்தமாம்
மண்ணைத் தவிர வேறே பொருள் தேவை இல்லை என்பதாம்

ஒரே மண் என்னும் த்ரவ்யம் -பிண்டம் கட்டி உருண்டை குடம் முதலிய அவஸ்தை மாறுபாடுகளால்
மண் கட்டி குடம் ஓடு முதலிய பெயர்களைப் பெறுகுவது போல்
புத்தி பேதம் ஸப்த பேதம் முதலிய அவஸ்தா பேதங்களை சார்ந்து இருப்பதால் அவை வஸ்து பேதத்தை சாதிக்க மாட்டாதவை
ஆகவே மண் என்ற ஒரே பெயர் காரண காரியமாக இருப்பது போல்
சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் ஸூஷ்ம அவஸ்தையில் காரணமாயும் ஸ்தூல அவஸ்தையில் கார்யமாயும் இருப்பதால்
ஜகத்துடன் அநந்யத்வம் -பேதமற்ற தன்மை என்று பெறுகிறது

இங்கு
வாசா ரம்பண சப்தாதிப்ய -என்று கூறாமல்
ஆரம்பண சப்தாதிப்ய-என்று ஸூத்ரம் செய்யப்பட்டதால்
வாசா ரம்பண-என்பதை ஒரே பதமாகக் கூறிய ஸ்ரீ சங்கர மதம் தவறு என்று உணர்த்தப்படுகிறது

ஸ்ரீ பாஷ்யத்தில் இந்த அதிகரணத்தில்
முதலில் கார்ய காரணங்களுக்குப் பேதம் கூறும் கணாத மதம் காட்டப்படுகிறது
அதற்கு -அத்ராஹு -என்று தொடங்கி சங்கரர் தம் சித்தாந்தப்படி கூறும் சமாதானம் கூறப்பட்டது
அந்த சங்கரரை ஜீவனுக்கு அஞ்ஞானம் சொல்பவன் எதிர்த்தான்
கேசித் -என்று தொடங்கியது அவ்வெதிர்ப்பு
பிறகு மாயாவி இரண்டிற்கும் பேதம் சொல்பவனை எதிர்த்தான்
பின் இவ்வதிகரண பூர்வ பக்ஷி -காணாதன் -சங்கர மதத்தைக் கண்டிக்கவே
இறுதியாக காணாதனை நம் பாஷ்யகாரர் நிரசனம் செய்கிறார் என்பது ஸாரம் –

———

ஸூத்ரம் –150–பாவே சோப லப்தே –2-1-16-

குடம் முதலிய கார்ய அவஸ்தையிலும் அந்த மண் காணப்படுவதால்
அந்த மண்ணே இந்தக்கூடமாய் மாறி இருக்கிறது என்று
காரணம் காரியம் பாவம் தோன்றுவதால் கார்யம் வேறானது அன்று
பால்யம் யுவா கிழவன் போன்ற அவஸ்தைகள் மாறினாலும்
தேவ தத்தன் ஒருவனே அன்றி வேறே ஒருவன் அல்ல
அதே போல் ஜகத்தும் ப்ரஹ்மமும் ஒன்றே அன்றி வேறு அல்ல –

——–

ஸூத்ரம் –151-ஸத்வாச் ச அபரஸ்ய –2-1-17-

அபரஸ்ய–காரியத்துக்கு
ஸத்வாச் ச –காரணத்தில் இருப்பு தோன்றுவதால்
காரணத்தை விட கார்யம் வேறு அன்று
இந்தக் குடம் இத்யாதி எல்லாம் நேற்று மண்ணாகவே இருந்தன என்று காரண கார்ய பாவம் தோன்றுகிறது
இப்போது குடம் முதலிய உருவங்களில் தோன்றும் மண்
முன் பிண்ட வடிவமாய் இருந்தது என்பது உறுதியான கருத்து

——–

ஸூத்ரம் –152-அஸத் வ்யபதேசான் நேதி சேந்ந தர்மாந்தரேண வாக்ய சேஷாத் யுக்தேச் சப்தாந் தராச்ச–2-1-18-

ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் என்று
காரண அவஸ்தையில் கார்யம் -அஸத்- இல்லை என்று பேசுவதால்
காரணத்தில் கார்யம் இல்லை என்றால் அது சரி அன்று
தர்மாந்தரேண–அஸத் என்ற வழக்கிற்குக் காரணமான ஸூஷ்ம அவஸ்தை வேறு தர்மத்தாலே
அஸத் ஏவ இதம் -என்ற வழக்கு ஏற்படுகிறது
அதற்கு ஹேது எது என்றால்
வாக்ய சேஷாத் யுக்தேச் சப்தாந் தராச்ச–தத் அஸத் ஏவ சந் மநோ குரு தஸ்யாம் இதி
அஸத் என்று சொல்லப்பட்ட வஸ்து தானே ஸத்ஸ்யாம் என்று ஸங்கல்பம் பண்ணியது என்று
வாக்ய சேஷத்தில் சொல்லுகையாலே
அஸத் என்று வழங்குவது ஸூஷ்ம அவஸ்தை என்று வேறு தர்மத்தின் சம்பந்தத்தால் ஏற்பட்டது –
ஒன்றும் இல்லாதது -துச்சம் -என்ற பொருளில் இல்லை
யுக்தேச் ச -குடம் இருக்கிறது குடம் இல்லை என்ற இருவகை வழக்குகளும் ஒன்றுக்கு ஓன்று முரணான
குடத்தன்மை கபாலத்தன்மை என்னும் இவை தவிர தோன்றாதான
துச்சத்வத்தை-அஸத் -வ்யபதேசத்துக்கு ஹேதுவாகக் கற்பித்தல் அடியோடு தவறானது
சப்தாந்தராச்ச
இதம் வா அக்ரே நைவ கிஞ்சனாஸீத் -முதலிய
காரண வாக்யங்களுக்குச் சமமான
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத்-என்பது முதலான காரண வாக்கியத்தில்
ஸச் ஸப்தத்தாலே காரணத்தைச் சொல்வதால்
அந்த அஸத் ஸப்தத்துக்கும் ஸூஷ்ம அவஸ்தா விசிஷ்டமான ப்ரஹ்மமே அர்த்தம் என்று தோன்றுகிறது
ஸத் -என்றால் பிராமண சித்தம் என்று பொருள் –

—————

ஸூத்ரம் –153–ஸூ பட வச்ச –2-1-19-

நூல்கள் விசேஷ சம்பந்தத்தைப் பெற்று வஸ்திரம் என்று
பெயர் -தோற்றம் -கார்யாந்தரங்கள் -முதலியவற்றை அடைகின்றனவே
அதே போல்
ப்ரஹ்மமும் நாம ரூப விபாகங்களைப் பெற்றமையால் கார்யம் என்னும் தன்மையை அடைகிறது

——————

ஸூத்ரம் –154–யதா ச ப்ராணாதி –2-1-20-

ஒரே வாயு எவ்வாறு உடலிலே வெவ்வேறு வியாபாரத்தைப் பெற்று
பிராணன் அபானம் முதலிய பெயர்களைப் பெறுகிறதோ
அது போலவே
ப்ரஹ்மமும் நாம ரூப விபாகத்தால் கார்ய பாவத்தை அடைகிறது என்பதாம்

—————

ஏழாம் அதிகரணம்–இதரவ்யபதேஷாதிகரணம்||

ஸூத்ரம் –155-இதரவ்யபதேஷாத்திதாகரணாதிதோஷப்ரஸக்திஃ||2.1.21||

ஸூத்ரம் –156-அதிகஂ து பேத நிர்தேஷாத்||2.1.22||

ஸூத்ரம் –157-அஷ்மாதிவச்ச ததநுப பத்திஃ||2.1.23||

—————–

எட்டாம் அதிகரணம்–உப ஸஂஹார தர்ஸந அதி கரணம்||

ஸூத்ரம் –158-உபஸஂஹார தர்ஷநாந்நேதி சேந்ந க்ஷீரவத்தி||2.1.24||

ஸூத்ரம் –159-தேவாதிவதபி லோகே||2.1.25||

——————

ஒன்பதாம் அதிகரணம் –க்ருத்ஸன ப்ரஸக்தி யதி கரணம்

ஸூத்ரம் –160-க்ருத்ஸன ப்ரஸக்தி நிர்வயத்வ சப்த கோபோவா –2-1-26-

காலம் என்னும் வெளி உதவியை மட்டும் கொண்டு ப்ரஹ்மம் ஜகத் காரணம் ஆகட்டும்
அப்படி இருந்தாலும் ஒரு அவயவமும் இல்லாத பிரம்மா ஸ்வரூபம்
எப்படி பலவாறாக மாறுவேன் என்று சங்கல்ப்பிப்பது –
எப்படி பல பொருளாக மாறுவது
என்ற சங்கையால் சங்கதி

ப்ரஹ்மத்துக்கு ஜகத் காரணத்வம் கூடுமா கூடாதா என்ற சம்சயம் கூடாது –
ஏன் எனில்
நிர் அவயவமான ப்ரஹ்மம் ஜகத்துக்கு உபாதானம் என்று ஏற்றுக் கொண்டால்
ப்ரஹ்மம் முழுவதுமே ஜகத்தாகப் பரிணமிப்பதால் நித்ய விபூதியில் வியாபித்து உள்ளது
என்ற தன்மை ப்ரஹ்மத்துக்கு ஒவ்வாது போகும்
இந்த தோஷம் நீங்க ப்ரஹ்மம் ஸ அவயவம் என்று ஏற்கப் பட்டால்
ஏகமேவ அத்விதீயம் என்று
நிர் அவயவத்வம் சொல்லும் ஸ்ருதியுடன் முரண்பாடு ஏற்படும் என்பது பூர்வ பக்ஷம்

க்ருத்ஸன ப்ரஸக்தி
ப்ரஹ்மம் காரணம் ஆகில் அது முழுவதுமாகக் காரியமாக மாறுவதாக ஏற்க வேண்டி வரும்
அதற்காக ஸ அவயவம் என்று ஏற்றால்
நிர்வயத்வ சப்த கோபோவா —
நிர் அவயத்வம் சொல்லும் ஏகமர்வ அத்விதீயம் என்ற
சுருதி வாக்யத்துடன் விரோதம் -நிர்வயத்வ சப்த கோபம் -வரும்
என்று இப் பூர்வ பஷத்தை நிரஸனம் செய்கிறார் –

———

ஸூத்ரம் –161-ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத் –2-1-27-

து சப்தம் பக்ஷத்தை விலக்குவது
ஸ்ருதேஸ்–ப்ரஹ்மத்தின் இருப்புக்கு ஸ்ருதியே பிரமாணம் ஆகையாலே -இப்படி நேராது
சப்த மூலத்வாத்-ஸ்ருதி என்னும் சப்தத்தையே ஆதாரமாக -நம்பிக்கை காரணமாக -ஏற்று இருப்பதால்
பிரமாணாந்தரங்களுக்கு விஷயமாகாத ப்ரஹ்மத்திற்கு ஸ்ருதி கூறியபடி
நிர் அவயவத்வம் -காரணத்வம் -சர்வ சக்தத்வம் -முதலிய தர்மங்களை ஏற்றுக் கொள்வதால் எல்லாம் பொருந்தும்
இதனால் விரோதம் இல்லை
பரிமித சக்திகமான ஷீராதிகளை உதாரணம் காட்டி வினவுதல் கூடாது என்று திரு உள்ளம் –

—————–

ஸூத்ரம் –162-ஆத்ம நிச ஏவம் விசித்ராச் சஹி –2-1-28-

ஆத்ம நிச ஏவம்
ஜீவாத்மாவிடம் சகல இதர வை லக்ஷண்யத்தாலே தோஷம் ஏதும் வாராமை போலே
தேஹாதி வை லக்ஷண்யத்தாலே தோஷம் ஏதும் வாராது என்று பரிஹாரம் கூற வேண்டும்
விசித்ராச் சஹி
அசேதனமான அக்னி ஜலம் முதலியவையும் விசித்ரங்களாகவே காணப்படுகின்றன
அக்னியில் உள்ள வெப்பம் நீரில் இல்லை
நீரில் உள்ள குளிர்ச்சி நெருப்பில் இல்லை
அப்படியே சித் அசித் விலக்ஷணமான ப்ரஹ்மத்திடம் ஸாஸ்த்ரத்தால் மட்டுமே அறியத்தகும்
ஸர்வ சக்திமத்வம் கூடும் என்பது கருத்து –

————-

ஸூத்ரம் –163-ஸ்வ பக்ஷ தோஷச் ச -2-1-29-

அனுமான கம்யமாய்
அசேதனமான பிரதானத்தில் கீழ்ச சொன்ன தோஷம் யாவும் மற்றும் பலவும் ப்ரஸக்தமாகும் –

—————

ஸூத்ரம் –164-ஸர்வோ பேதா ச தத் தர்சனாத் –2-1-30-

பரதேவதையானது மற்ற யாவற்றையும் விட வி லக்ஷண தன்மையால் மட்டும் ஸர்வ சக்தி யுக்த்தை அன்று
பின் ஏன் எனில்
தர்சனாச் ச -ஸ்ருதியாலும் கூறப்பட்டதால் சர்வ சக்தி உள்ளதாம்
தர்சய தீதி -தர்சனம் -ஸ்ருதி -வேதம்
பராஸ்ய சக்தி விவிதைவ ஸ்ரூயதே ஸ்வ பாவிகீ ஞான பல க்ரியா ச
இது முதலிய ஸ்ருதி பலத்தாலும் -உபாதானத்வம் நிமித்தத்வம் இரண்டும் கூடிய சக்தி யோகத்தவம் ஸித்திக்கிறது
ஆகவே ப்ரஹ்மத்துக்குக் காரணத்தவம் தடை அற்றது

————–

ஸூத்ரம் –165-விகரணத் வாந் நேதி சேத்ததுக்தம் –2-1-31–

சொன்ன அர்த்தத்தை உறுதி படுத்த மேலும் சங்கையை எழுப்பி சமாதானம் கூறுகிறார்
விகரணத் வாத் -சரீரம் இன்மையால்
நேதி சேத்-ப்ரஹ்மத்துக்குக் காரணத்வம் கூடாது என்றால்
ந தஸ்ய கார்யம் கரணஞ்ச வித்யதே -என்று
சரீர இந்திரியாதிகள் அவனுக்கு இல்லை என்றபடியால்
தத் யுக்தம் -பரிஹாரம் முன்னே கூறப்பட்டது
ஸ்ருதேஸ் து ஸப்த மூலத்வாத்
விசித்ராச் சஹி -என்ற ஸூத்ரங்களால்
சர்வ சக்தி உள்ளவன் என்று கூறப்பட்ட படி ஸர்வவித காரணத்வமும் கூடும் என்பதாம் –

—————–

பத்தாம் அதிகரணம்–ப்ரயோஜனவத்வ அதிகரணம்

ஸூத்ரம் –166-ந ப்ரயோஜனவத்வாத் –2-1-32-

அவாப்த ஸமஸ்த காமனான பரம புருஷனுக்கு ஜகாத் ஸ்ருஷ்டியாதிகளில் பிரயோஜனம் இல்லாமையால்
காரணத்வம் கூடாது என்கிற சங்கையை இங்கு பரிஹரிக்கிறார் என்று சங்கதி

ப்ரஹ்மத்துக்கு ஜகத் காரணத்வம் கூடுமா கூடாதா -என்று சம்சயம்
அது கூடாது
ந ப்ரயோஜனவத்வாத்-ப்ரஹ்மம் அவாப்த ஸமஸ்த காமனான படியால்
ஸ்ருஷ்டியால் அதற்கு ஒரு பிரயோஜனமும் இல்லாமையால் அது பொருந்தாது
உலகில் குயவர் போன்றவர் ஒரு ப்ரயோஜனத்தை எதிர்பார்த்தே குடம் முதலியவற்றைப் படைப்பதை பார்க்கிறோம் –
ஆகவே கர்ப்பவாசாதி துக்க ரூபமான ஜகத்தின் ஸ்ருஷ்ட்டியை கருணையால் செய்கிறான் என்பது அயுக்தம் ஆதலின்
ப்ரஹ்மத்துக்கு காரணத்வம் பொருந்தாது என்று பூர்வ பக்ஷம் இந்த ஸூத்ரத்தில் கூறப்படுகிறது

அதற்கு விடை மேல் –

———————-

ஸூத்ரம் -167-லோக வத் து லீலா கைவல்யம் –2-1-33-

து சப்தம் சங்கையை விலக்குகிறது
லீலா கைவல்யம்-கேவலம் லீலையே பிரயோஜனம்
கேவலம் என்கிறது -வேறே பயன்கள் இல்லை என்கிறது
ஆகவே கேவல லீலை ஸ்ருஷ்ட்டியை ஆரம்பிக்கவே பயன்படுகிறது
அவன் அவாப்த ஸமஸ்த காமன் ஆனாலும் லீலாரஸ மாத்ரத்திற்காக ஜகத் ஸ்ருஷ்டியாதிகளைச் செய்வது பொருந்தும்
லோகவத்
லோகத்தில் மஹா ராஜாவுக்கு கேவலம் பந்து விளையாட்டு சூதாட்டம் முதலியவற்றில் ஈடுபாடு காணப்படுகிறது
அப்படியே ப்ரஹ்மத்துக்கும் காரணத்வம் கூடும் –

———

ஸூத்ரம் –168–வைஷம்ய நைர் க்ருண்யே ந சாபேக்ஷத்வாத் ததாஹி தர்சயதி–2-1-34–

இங்கு ஒரு ஆஷேபம் தோன்றுகிறது
ஸர்வ சமனாய் பரம காருணிகனான பரம புருஷனுக்கு தேவ மனுஷ்யாதிகளான விஷமமான ஸ்ருஷ்டிகளைச் செய்வதால்
வைஷம்யமும் -பக்ஷபாதமும்
துக்கம் மிக்க ஜகத்தைப் படைப்பதால்
நைர் க்ருண்யம் -இரக்கம் இன்மை
என்ற தோஷமும் வருமே என்பதே அது
அதுக்கு இந்த ஸூத்ரம் விடை தருகிறது

வைஷம்ய நைர் க்ருண்யே ந
இவ்விரு தோஷங்களும் வாராது
ஏன் எனில்
சாபேக்ஷத்வாத்
ஜீவர்களின் முந்திய கர்மங்களை அநு சரித்து தேவர் மனுஷ்யர் போன்ற வேறுபட்ட ஸ்ருஷ்ட்டியை செய்வதனால்
ஸ்வத ஸர்வ சமனான ஈஸ்வரனுக்கு தேவாதி விஷம ஸ்ருஷ்டியிலும்
துக்க மிக்க ஸ்ருஷ்டியிலும்
அவ்வோ ஜீவர்களின் பூர்வ ஜென்ம கர்மமே ஹேது என்று கருத்து
ததாஹி தர்சயதி
ஸாது காரீ -சாதுர் பவதி -அஸாது காரீ பாபோ பவதி -முதலிய சாஸ்திரங்கள்
பூர்வ கர்மாவுக்கு ஏற்பவே -ஸாது பாபீ என்ற வைஷம்யம் ஏற்படுவதைக் காட்டுகிறது

————

ஸூத்ரம் –169–ந கர்மா அவி பாகாத்தி சேந்நா நாதித்வாத் உப பத்யதே சாப் யுபலப்யதே ச –2-1-35-

ந கர்மா
ஸ்ருஷ்டிக்கு முன்னால் கர்மா இல்லை
ஏன் எனில்
அப்போது ஜீவர்கள் இல்லாமையாலே
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் என்னும் ஸ்ருதி
ப்ரஹ்மதுக்கும் ஜீவனுக்கும் விபாகம் இல்லை
ப்ரஹ்மம் ஒன்றே அப்போது இருக்கிறது என்று சொல்வதால்
ஜீவர்களின் கர்மாவை அநு சரித்தே ஸாதுத்வமும் பாபித்வமும் போன்ற வைஷம்யம் ஏற்படுகிறது என்பது அனுப பன்னம்

இதி சேத் ந
என்று கூறுவது சரி அன்று
ஏன் எனில்
அநாதித்வாத்
ஜீவர்களின் கர்ம ப்ரவாஹமும் அநாதியாய் இருப்பதாலே

உப பத்யதே ச
ஜீவர்கள் அநாதிகளாய் பிரளய காலத்தில் இருந்தாலும் ஏகமேவ என்ற ஸ்ருதி பொருந்தலாம்
ப்ரஹ்மம் ஏகம் என்பது நாம ரூப விபாகத்திற்குத் தகாத ஸூஷ்ம அவஸ்தையில் உள்ள சேதன அசேதன சரீரகத்வம்
இத்தால்
அந்த ஸூஷ்ம அவஸ்தை ப்ரஹ்ம பர்யந்தம் குறிப்பிடுவதால் ப்ரஹ்மம் ஏகம் என்பது பொருந்துமே

யுபலப்யதே ச
ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே ஜீவர்களுக்கு அவர் தம் கர்மாக்களுக்கும் அநாதித் தன்மை தோன்றுகிறது
ஞ்ஞாஞவ் த்வவ் அஜாவிச நீசவ்
நித்யோ நித்யாநாம் சேதன அசேதனானாம் –முதலிய ஸ்ருதிகள்
ப்ரக்ருதிம் புருஷஞ்சைவ வித்தி அநாதி உபா வபி முதலிய ஸ்ம்ருதிகள் –

—————

ஸூத்ரம் –170–ஸர்வ தர்மோ பபத்தேச் ச –2-1-36-

சாங்க்ய வைசேஷாதிகளின் பக்ஷங்களில் காரணமாக ஏற்கப்பட்ட பிரதான பரமாணுக்களில்
அஸம்பாவிதமாயும்
காரணத்வத்துக்கு இன்றியமையாதவையுமான
ஸர்வஞ்ஞத்வம் – ஸர்வ சக்தித்வம் முதலிய தர்மங்களுக்குப் பரம புருஷன் இடத்தில் பொருத்தம் இருப்பதால்
அவனே ஸூஷ்ம சித் அசித் சரீரகனாய் இருந்து
ஸகல ஜகத்துக்கும் ஸர்வ வித காரணமாவான் என்பது சித்தமாயிற்று –

————

நம் ஆச்சார்யர் அருளிய முறையில் வைஷம்யம் நைர் க்ருண்யங்களை நீக்கும் முறை ஓன்று வருமாறு
நிச்சேஷாத்ம பவர்க்கே –குத்ர சிந் நித்யமஸ்து –அதிகரண ஸாரா வளி
அதாவது
நித்ய ஸம்ஸாரி ஒரு சாரார் -வரும் காலத்தில் சம்சாரம் அற்றவர் ஒரு சாரார்
ஷிபாம் யஜஸ்ரம சுபான் -என்றபடி ஒரு காலமும் ஸம்ஸாரம் நீக்கம் அற்றவன் நித்ய ஸம்ஸாரி
இத்தகைய நித்ய சம்சாரியை ஏற்றுக் கொள்ளா விட்டால்
லீலா விபூதி நித்யை என்ற ஸ்ரீ ஸூக்தி யுடன் முரண்பட்டு ஏற்படும்
ஆகவே நித்ய சம்சாரியை ஏற்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றார்கள்

மற்றும் சிலர் எல்லா ஜீவர்களுமே முக்திக்கு யோக்கியர்கள் என்று கூறும் சுகர் போன்றவர்க்கு
ஸஹ காரி காரணம் சித்தித்தால் முக்தியில் சந்தேகம் இல்லை என்றும்
ஷிபாம் யஜஸ்ரம சுபான்
மாமப்ராப்யைவ கௌந்தேய
அவிச்சின்னாஸ் தத
மூடா ஜன்ம நிஜன் மநி -என்கிற
பிரமாணங்கள் விளம்ப மிகுதியைக் கூறுகின்றன என்றும்
ததா ஸம்ஸாரி பாந்தஸ்ய யாதி மோஹ ஸ்ரம சமம் -முதலிய பிரமாணங்கள் எல்லா ஸம்ஸாரிகளுக்கும் உபாயத்வ சம்பந்தத்தால்
ஸம்ஸார மோஹ நிவ்ருத்தியைச் சொல்வதாலும் நித்ய ஸம்ஸாரியே இல்லை என்கிறார்கள்
இந்த இரண்டு பாசத்திலும் வைஷம்ய நைர் க்ருண்யத்தைப் பரிஹரித்து அருளுகிறார் –

நித்ய சம்சாரியை ஏற்கா விட்டால் ஜீவர்கள் அனந்தர்களாய் இருப்பினும் எல்லாரும் முக்தி யோக்கியர்கள் ஆதலின்
கால க்ரமத்தில் முக்தர்களாகும் பக்ஷத்தில் லீலா விபூதி இல்லாமல் போவதால் பகவானுக்கு லீலை ஒய்வு பெற்று விடும்
அதை விலக்க நித்ய சம்சாரியை ஏற்றால் அவனிடம் பகவானுக்குத் தயை இல்லாமையால்
நைர் க்ருண்யம் என்கிற தோஷம் வரும் என்ற பூர்வ பாசத்துக்கு சமாதானம்
முன் பக்ஷத்தில் லீலை அற்றுப் போம் என்பது தோஷம் அன்று
ஏன் எனில்
சுயேச்சையான செயலே லீலை யாதலின் ஸ்ருஷ்டியில் ஈடுபடுவது போல்
அதில் இருந்து விலகி நிற்றலும் லீலையே யாதலின் பிறரின் உபத்திரவத்தினால் அல்லது
தன் இச்சையால் மட்டும் வந்தபடியால் லீலையில் ஒய்வு குறையாகாது –
நித்ய ஸம்ஸாரி பக்ஷத்தில் அந்த ஜீவர்களின் முன் கர்மாவுக்கு ஏற்ப பகவானின் தயை விரோதியாய் இருப்பதால்
நைர் க்ருண்யாதி தோஷங்கள் இல்லை என்று பொருள்

ஸ்ரீ பாஷ்யம் ஆரம்பணாதி கரணத்தில் –பூர்வ பக்ஷத்தில் வந்த
லீலா விபூதியின் ஏற்க முடியாத நிலையாகிற தோஷத்துக்கு
இவ்வர்த்தம் இங்கு வேறு முறையில் பரிஹாரமாக எழுதப்படுகிறது –

—————-

இந்த ஸ்ம்ருதி பாதத்தில் பத்து அதிகரணங்களில் பத்து பொருள்கள் கூறப்படுகின்றன
1-ஸ்ம்ருதி அதிகரணத்தில் -சாங்க்ய ஸ்ம்ருதி விரோதம் வருமே என்பது பூர்வ பஷியின் யுக்தி
2-யோக அதிகரணத்தில் –பிரஜாபதியின் மதத்தில் விரோதம் வரும் என்பது யுக்தி
3-ந விலக்ஷணத்வ அதிகரணத்தில் காரண பூத ப்ரஹ்மத்துக்கும் கார்யமான ஜகத்துடன் வேறுபாடு
4-சிஷ்டா பரிக்ரஹத்தில் பரமாணு காரணத்வத்துக்குப் பாதகம்
5-போக்த்ரா பத் யதிகரணத்தில் தேஹ சம்பந்தத்தால் சுக துக்க அனுபவம் தவிர்க்க முடியாது என்பது யுக்தி
6-ஆரம்பணாதி கரணத்தில் -காரியமும் உபாதான காரணமும் பின்னமாய் இருக்க வேண்டும் என்கிற யுக்தி
7-இதர வ்யபதேச அதிகரணத்தில் -தனக்கு ஹிதத்தைச் செய்யாமை அஹிதத்தைச் செய்வதால்
காரணத்வம் தகாது என யுக்தி
8-உப ஸம்ஹாரா தர்சன அதிகரணத்தில் -ஸஹ காரிகள் இல்லாமையால் காரணத்வம் தகாது எனும் யுக்தி
9-க்ருத்ஸன ப்ரஸக்தி அதிகரணத்தில் -ப்ரஹ்மம் பூர்ணமாய்க் காரணமா -ஏக தேசம் காரணமா என்கிற விகற்பம்
இவ்வாறு பத்து பூர்வ பக்ஷ யுக்திகளையும் முன் காட்டிய யுக்திகளால் ஸூத்ர காரர் நிராகரிக்கிறார் என்று திரு உள்ளம்
10-ந ப்ரயோஜனத்வ அதிகரணத்தில் -பயன் இன்மையால் ஸ்ருஷ்டியாதிகள் பொருந்தாது என்று ஆஷேபம்

————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை –முதல் அத்யாயம் –நான்காம் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————————————————-

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-
நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-
8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

————–

ஆகாசம் என்ற சொல் முக்தனைக் குறிக்காமல் அவ்வாக்கியத்தில் சொல்லப்படும்
ப்ரஹ்ம லோகத்தைச் சொல்லும் என்று
கீழ் அதிகரணத்தில் கூறியது போலே -இங்கும்
அவ்யக்தாத் புருஷ பர -என்ற இடத்தில் அவ்யக்தம் என்ற சொல்லும்
ப்ரஹ்மாத்மகம் அல்லாத பிரதானத்தைக் குறிக்கலாம் என்று சந்தேகித்து
உருவகமாக வைத்து வர்ணிக்கும் வாக்யாந்தரத்தில் கூறப்பட்ட
சரீரத்தைக் குறிப்பதாக ஸ்தாபிக்கப் படுகின்றது என்று சங்கதி –

1-4-1-ஆநுமாநிகாதி கரணம் -பிரகிருதி உலகின் காரணம் இல்லை

107–ஆநுமாநிகம் அபி ஏகேஷாம் இதி சேத் ந சரீர ரூபக விந்யஸ்த க்ருஹூதே தர்சயதி ச –1-4-1-

பிரக்ருதியும் காரணப் பொருளாக உபநிஷத் வாக்யங்கள் உள்ளன என்பர் -அது சரி அல்ல –
உடலை உருவகப் படுத்தவே அப்படி சொல்லப் பட்டது

கட உபநிஷத் –
இந்த்ரியேப்ய பரா ஹ்யர்த்தா அர்த்தேப் யஸ்ஸ பரமமந
மநசஸ்து பரா புத்திர் புத்தேராத்மா மஹான்பர
மஹத பரம வ்யக்த மவ்யக்தாத் புருஷ பர
புருஷான்ன பரம் கிஞ்சித் சா காஷ்டா சா பராகதி –என்று
புலன் -பொருள்கள் -மனம் -அறிவு -மஹான்-அவயகதம் உடல் -புருஷன் -இதை விட மேல் ஒன்றும் இல்லை –

இது சாங்க்ய மதம் ஈஸ்வர தத்தவத்தை ஒத்துக் கொள்ளவது இல்லை –
ஸூத்ர காரர் இந்த சங்கையை அனுவதித்துக் கண்டிக்கிறார்

ஏகேஷாம் -கடகர்களுடைய சாகையிலே -இந் த்ரியேப்ய பரா ஹ்யர்த்தா-இத்யாதியிலே
ஆநுமாநிகம் அபி -அனுமானிக்கப்படும் அப்ரஹ்மாத்மக பிரதானமும் ஜகத்துக்குக் காரணமாக
மஹத பரம் அவ்யக்தம் -எனப்பட்டது
இதி சேத் ந -என்பது தகாது -அப்ரஹ்மாத்மக பிரதானம் காரணம் என்று கூறப்படவில்லை
சரீர ரூபக விந்யஸ்த க்ருஹூதே தர்சயதி ச –உருவகத்தால் அவ்யக்தம் பிரதானம் சரீரமே
ஜீவனும் அல்லன்
பரம புருஷனே அந்தர்யாமியாய் இருந்து உபாஸனத்தை நடத்தி வைக்கிறான் என்று
அவனே வசீகரிக்க வேண்டியவற்றுள் பரம காஷ்டை -பேர் எல்லை -என்று கூறப்படுகிறது
அவன் இடம் சரணாகதி செய்வதே அவனை வசீகரிப்பது
யச்சேத் வாங் மனஸீ ப்ராஞ்ஞா -என்று இவ்வர்த்தத்தையே ஸ்ருதி காட்டுகிறது

சித்தாந்தம் –
முன்னால் அதே உபநிஷத்தில் யமன் நசிகேதனிடம்
ஆத்மானம் ரதினம் வித்தி சரீரம் ரதமேவ ச
புத்திம் து சாரதிம் வித்தி மன பிரக்ரஹமேவ ச
இந்த்ரியாணி ஹயா நா ஹூர் விஷயாம்ஸ் தேஷு கோசாரான்-என்றும்

விஜ்ஞாந சாரதிர் யஸ்து மன ப்ரக்ரஹ வான் நர
சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்

உடலைத் தேராகக் கொண்டு மன உறுதியை தேர் ஒட்டுபவனாகவும் -மனத்தை கடிவாளமாகவும்
புலன்களை குதிரைகளாகவும் உலக விஷயங்களை பாதையாகவும்
யார் ஒருவனுக்கு இந்த தேர் சரியாக ஓடுகின்றதோ அவன் பரமபதம் சென்று அடைகின்றான்

இத்தால்
பூர்வ பஷ வாதங்கள் உடைக்கப் படுகின்றன-

அவ்யக்தம் என்பதற்கு சரீரம் என்று எப்படி பொருள் வரும் என்பதை மேலே காட்டுகிறார் –

————————————————————-

108–ஸூஷ்மம் து ததர்ஹத்வாத் –1-4-2-

ஸூட்சும தசையில் உள்ள பிரகிருதி ஒருவகையாக மாறுதலை அடைந்து உடலாகி –
ஸ்தூல உடலாலே கார்யங்கள் செய்ய வேண்டுமே –
இந்த உடலே ஜீவன் என்னும் என்னும் தேரினை அதன் இலக்குக்கு எடுத்துச் செல்ல உதவும்-

து சப்தம் ஏவ என்ற பொருளில் வந்தது
ஸூஷ்மந்து-அவ்யக்தம் தான் -வேறு அவஸ்தை பெற்று சரீரம் ஆகிறது
ததர்ஹத்வாத்-அந்த சரீர அவஸ்தமான ப்ரதானமே உபாசன அனுஷ்டானத்துக்குத் தகுதி உள்ளதாக ஆகின்றது
அதனால் காரண வாசக ஸப்தம் கார்யத்தைக் குறிக்கிறது

ரூபகம் செய்யப்பட ஆத்மாதிகள் வசீகரிக்கத் தக்கவையில் சிறந்த
இந்த்ரியம் அர்த்தம் முதலியவற்றால் க்ரஹிக்கப் பெற்றால்
அவ்யக்தாத் புருஷ பர -என்று
புருஷனை ஏன் கிரஹிக்க வேண்டும் என்பதற்கு மேல் விடை அளிக்கிறார் –

————————————————————

109-தத் அதீனத்வாத் அர்த்தவத் –1-4-3-

பிரகிருதி எனபது பரம் பொரூடன் தொடர்பு கொண்டால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்
சாங்க்ய மதம் போலே பிரகிருதி மாறும் என்பதை ஒத்துக் கொண்டாலும் தன்னிச்சையாக செயல்பட முடியாது
பரம் பொருளின் ஆணைக்கு இடங்க நடந்தால் மட்டுமே பயனுள்ளதாகும்-

தத் அதீனத்வாத் -ஆத்ம சரீராதிகள் அந்தர்யாமியான புருஷனுக்கு ஆதீனம் ஆகையாலே
அர்த்தவத் –பிரயோஜனம் உள்ளதாகிறது
ஆகவே உபாசனம் கை கூடுவதற்கு வசப்படுத்த வேண்டிய இந்திரியாதிகளுக்கு எல்லை நிலனாயும்
பரம ப்ராப்யனாயும் இருக்கிறான் என்ற சொல் புருஷனைப் பற்றிக் கூறியது என்பது வேதாந்த தீபத்தின் விடை
ஸ்ரீ பாஷ்யத்திலோ பிரதானத்தை ஏற்பதும் மறுப்பதும் முரண் பட்டதாதலால் எப்படிக் கூடும் என்று சந்தேகித்து
ஸ்வ தந்திரமாக பிரதானத்தை ஏற்க வில்லை
பின் என் எனில் பரம புருஷன் பிரேரணனையால் ஸ்ருஷ்டியாதிகளில் ப்ரவர்த்திப்பதால் பிரயோஜனம் உள்ளது
என்று விடை கூறப்படுகிறது –

——————————————————————–

110-ஜ்ஞேயத்வா வசநாத் ச–1-4-4-

சாங்க்ய மதத்தின் படி அவ்யக்த-பிரகிருதி – ஞானம் பற்றியே
மோட்ஷம் என்று உபநிஷத் கூற வில்லை-

தந்த்ர சித்த ப்ரக்ரியை இவ்வாக்கியத்தில் சம்மதமானால் அவ்யக்தம் ஜேயம் என்று எண்ண வேண்டும்
வ்யக்தம் அவ்யக்தம் ஜேயன் -இவை பற்றி அறிவதால் என்று அல்லவோ சாங்க்யர்களின் முறை
இந்த சாகையில் அவ்யக்தம் ஜேயமாம் முமுஷுக்கு என்று கூற வில்லை
சாங்க்ய ப்ரக்ரியைக்கு இங்கு ஸம்பந்தமே இல்லை –

———————————————————————-

111–வததி இதி சேத் ந ப்ராஜ்ஞோ ஹ பிரகரணாத்–1-4-5-

கடவல்லி -3-15-
அசப்தம் அஸ்பர்சம் அரூபம் அவ்யயம் தத் அரசம் நித்யம் அகந்த வச்ச யத்-
அநாதி அநந்தம் மஹத பரம் த்ருவம் நிசாய்ய தம் ம்ருத்யுமுகாத் ப்ரமுச்யதே–

இந்த வரிகளுக்கு முன்னால்
விஜ்ஞான சாரதி யஸ்து மன ப்ரக்ரஹ வான்னர
சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம்-என்றும்

அதற்கு கீழே –
ஏஷ சர்வேஷூ பூதேஷு கூடோத்மாந பிரகாசதே
த்ருச்யதே த்வகர்யயா புத்த்யா ஸூ ஷ்மயா ஸூஷ்ம தர்சிபி – என்று இருப்பதால்

சாங்க்ய வாதம் புருஷர்களை விட மேல் இல்லை எனபது உடைக்கப்பட்டு
பரம் பொருள்
யத்த தத்ரேச்யம் -முண்டகம் -என்றும் –
புத்தரோத்மா மஹான் பர -என்றும்
மேலானவன் என்று உணர முடியலாம்-

இவற்றால் பரம புருஷனே சொல்லப்படுகிறான் -பிரதானம் அன்று
பரம் ஆப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் என்று ப்ராஞ்ஞனுக்கு உரிய பிரகரணம் ஆகையாலே

—————————————————

112-த்ரயாணாம் ஏவ ச ஏவம் உபன்யாச ப்ரசன ச –1-4-6-

மூன்றைப் பற்றிய கேள்வியும் பதிலுமே உள்ளதால் பிரக்ருதியைப் பற்றிக் குறிப்பிட வில்லை என்று அறியலாம்
உபாயமும் உபேயமும் உபேதாவையும் -மூன்றையும் பற்றியே உண்டு –

யமனிடம் இருந்து மூன்று வரங்களைப் பெற்ற நசிகேதன்
முதல் வரத்தின் முலம் தந்தையை அருகில் கேட்டான்–
இரண்டாம் வரத்தின் முலம் அக்னியைக் குறித்துக் கேட்டான் –
மோட்ஷம் பெற்றவர் சென்று அடையும் இடம் –மோட்ஷம் பெற விரும்புவர்களின் தன்மைகள் -வழி ஆகியவற்றை பற்றி –
ந ஜாயதே ம்ரியதே வா -அணோர் அணீயான்–இத்தா வேத யத்ரச-துர்க்கம் பதஸ்தத் கவயோ வதந்தி-

இந்தப் ப்ரகரணத்தில் -யேயம் ப்ரேத விசிகித்சா மனுஷ்யே-என்று தொடங்கி
இறுதி வரை உபாஸ்யன் -உபாஸகன் -உபாஸனம் -மூன்று அர்த்தங்களும்
இவ்வாறு அறியத்தக்கன என்று உபந்யாஸமும் வினாவும் உள்ளன
ஆதலால் அப்ரஹாத்மகமான பிரதானத்தை ஜேயம் என்று கூற வில்லை –

ஆக மூன்றிலும் பிரக்ருதியைப் பற்றி இல்லை-

——————————————————

113-மஹத்வத் ச –1-4-7-

மஹத் என்று கூறும் இடத்திலும் பிரக்ருதியைப் பற்றி கூறவில்லை
புத்தேராத்மா மகான் பர –
மஹத் தத்துவத்தை விட அது உயர்ந்தது என்று கொண்டால் -சாங்க்ய மத மஹான் பற்றி இல்லை
புத்திக்கு மேலே உள்ள ஆத்மாவைப் பற்றி -என்று ஆத்மாவுக்கு விசேஷணமாகவே கொள்ள வேண்டும்

ஆத்மா எல்லாவற்றையும் விட மஹத்தான பரம் என்று திரு உள்ளம்

மேலும் மஹத பரம் அவ்யக்தம் -என்று மஹானை விட மேலானது அவ்யக்தம்-
இங்கு சாங்க்ய மத அவ்யக்தம் பிரகிருதி பற்றி இல்லை-

ஆநுமாநிகாதி கரணம் சம்பூர்ணம்

———————————————————

1-4-2-சமசாதிகரணம் -ப்ரஹ்மத்தை அந்தர்யாமியாகக் கொண்டு உள்ளது பிரகிருதி-

பரிசேஷ க்ரமத்தாலும் ஸ்தான ப்ரமாணத்தாலும் அவ்யக்தம் என்பது அவ்யக்தத்தின் -பிரதானத்தின் -கார்யமான
சரீரத்தைச் சொல்வது என்று முன் ஸ்தாபித்தார்
அதே காரணத்தால் அஜாமேகம் என்ற இடத்திலும் அஜா ஸப்தம் அவ்யக்த்தத்தைக் குறிப்பிட்டதாகட்டும்
என்ற பூர்வ பக்ஷம் கூறி
அப்ராஹ்மத்மகமான பிரதானம் அதன் பொருள் அன்று என்று
இவ்வதி கரணத்தில் ஸ்தாபிக்கிறார் –

114-சமசவத் அவிசேஷாத்-1-4-8-

உபநிஷத்தில் சமசம் -பதம் தெளிவாக கூறப்பட்டுள்ளது –
ஸ்வேதரா-4-5-
அஜாம் ஏகம் லோஹித ஸூக்ல கிருஷ்ணாம் பஹ்வீ பிரஜா ஸ்ருஜமா நாம் சரூபா
அஜோ ஹி ஏகோ ஜூஷமாண அநு சேதே ஜஹாத் யேநாம் புக்த போகாம் அஜ அன்ய-
சமசம் எனபது யாகங்களில் உதவும் ஒரு பாத்ரம் –

பிருஹு –4-2-3-
இதம் தச்சிர ஏஷ ஹி அர்வாக்பிலஸ் சமச ஊர்த்வ புத்ன–என்று-இப்படி மேலே பருத்து கீழே துளை உள்ளது
தலையே -மண்டை ஓடே -ஆகும் நமது தலையைக் குறிக்கும்
அஜா பிறப்பற்ற பிரக்ருதியைக் குறிக்கும்-

ப்ரக்ருதி என்றே பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
அஜாம் என்று உத்பத்தி இல்லாமை கூறப்படுவதாலும்
ஏராளமான பிரஜைகளுக்குத் தானே ஸ்ருஷ்டி கர்த்தா என்று கூறியதாலும்
என்ற இந்த பூர்வ பஷத்தை நிரசிக்கிறார் –

இந்த அஜா சப்தம் சாங்க்யர்கள் கூறும் பிரதானத்தை அன்று என்ற வாக்யத்தைத் தருவித்திக் கொள்ள வேண்டும் –
சமசவத் அவிசேஷாத்—அர்வாக்பிலஸ் சமச ஊர்த்வ புத்ன–என்ற மந்திரத்தில் சமசத்திற்கு -பஷிப்பதற்கு சாதனம்
என்ற காரணத்தால் சமஸ பதம் சிரசைச் சொல்வது போல்
அஜா மேகம் என்றதில் அஜாம் என்ற ஸப்தம் அப்ரஹ்மத்மக பிரதானத்தைச் சொல்வது என்கையில்
விசேஷ காரணம் இல்லாமையால் அது பொருந்தாது
ஸ்வ தந்திரமாக ஸ்ருஷ்டிப்பது என்ற ஒரு விசேஷணமும் இல்லை

ப்ரஹ்மாத்மிகை யானால் ப்ரக்ருதி ஸ்ருஷ்டி ஹேதுவாய் அஜா என்று கூப்பிடலாமே
ப்ரஹ்மாத்மிகையான அஜையைச் சொல்லுகையில் விசேஷ ஹேதுவை அருளுகிறார் மேல்

———————————————————————–

115-ஜ்யோதிர் உபக்ரமா து ததா ஹி அதீயதே ஏகே –1-4-9-

ஜோதியான பரம் பொருளைச் சார்ந்தே அஜா என்னும் பிரகிருதி உள்ளது –
தைத்ரியம் –
அணோர் அணீயான் மஹதோ மஹூயா நாத்மா–திஷ்டத் யந்தராத்மா-என்று
அஜா எனபது பரம் பொருளைச் சார்ந்த பிரக்ருதியே என்றதாயிற்று –

ஜ்யோதிர் உபக்ரமாது- ஜ்யோதி -ப்ரஹ்மம் -அத்தைக் காரணமாக் கொண்டதே இந்த அஜை
ததா ஹி அதீயதே ஏகே -தைத்ரியம் சொல்லுமே -பர ப்ரஹ்மத்தை உபபாதித்து -ஸப்த ப்ராணா ப்ரபவந்தி என்று
சகல ஜகத்தும் ப்ரஹ்மத்தில் இருந்து தோன்றுகின்றன -என்கிறதே
இதே போலவே ஸ்வேதாஸ்வர மந்த்ரமும் கூறும்

அப்படியாயின் ஒரே வஸ்துவுக்கு அஜாத்வமும் -ஜ்யோதி ரூப க்ரமாத்வமும் -ப்ரஹ்ம காரணத்வமும் –
பொருத்துவதற்கு ஹேது மேலே அருளிச் செய்கிறார் –

—————————————————————————-

116-கல்பந உபதேசாத் ச மத்வாதி வத் அவிரோத –1-4-10-

பிரகிருதி பிறப்பற்றது என்றும்
கல்பாதியிலே உருவாக்கப் பட்டது என்பதும் முரண் பட்டது இல்லை –

தைத்ரிய உபநிஷத்தில் -5-7-
சூர்யா சந்திர மசவ் ததா யதா பூர்வம் கல்பயந் -என்றும்

ஸ்வேதாஸ்வதார உபநிஷத்தில் –
அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்–4-9 -என்று படைக்கப் பட்டதை சொல்லிற்று –

சாந்தோக்யம் -மது வித்யையில்-
பிரளயம் முடிந்து உலகம் படைக்கப் பட்ட பின்பு –
அசௌவா ஆதித்யோ தேவமது -என்று தேவர்களுக்கு மதுவாக உள்ளதையும்
பிரளய காலத்தில் –
நை வோதே தா நாஸ்த மேதா-என்று சூரியன் மறைவதும் இல்லை உதிப்பதும் இல்லை -எனபது போலே –
இரண்டு நிலைகளுக்கும் முரண்பாடு இல்லை-

கல்பந உபதேசாத் ச -ஸ்வேதாஸ்வதார உபநிஷத்தில் –
அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்–என்று ஸ்ருஷ்ட்டியை உபதேசிகையாலே
பிரளய சமயத்தில் இந்த ப்ரக்ருதியானது பரம புருஷனுக்கு சரீரமாய் ஸூஷ்மமாய் உள்ளது
அந்த அவஸ்தையைக் கருதியே பிரக்ருதியை அஜா எனப்படுகிறது
ஸ்ருஷ்டி சமயத்தில் ஸ்தூல அவஸ்தை ஏற்படுவதால் ஜ்யோதிர் ரூப க்ரமாத்வம் -பொருந்துமே

மத்வாதி வத் அவிரோத –மது வித்யையில் கார்ய அவஸ்தையில் -அசௌவா ஆதித்யோ தேவமது-என்று மதுவாகக் கல்பனமும்
அதே ஆதித்யனுக்கு –அத தத ஊர்த்வ உததி அனேநை வோதேதா நாஸ்த மேதா-என்று முதலில்
காரண அவஸ்தையில் நாம ரூபங்களை விட்டமையால் ஸூஷ்ம ரூபமான இருப்பும் எப்படி முரண் பட்டவை இல்லையோ
அப்படியே இங்கும் இரண்டு தன்மைகளும் முரண் இல்லை –

சமசாதிகரணம் சம்பூர்ணம்

———————————————————————

1-4-3-சங்க்ய உப சங்க்ரஹாதி கரணம் -இந்த்ரியங்களுக்கு ப்ரஹ்மமே அந்தர்யாமி –

முன் அதிகரணத்தில் சாங்க்யர் கூறிய அப்ரஹ்மாத்மக அவ்யக்தத்தை விளக்கும்
அஜாமேகம் -ஸ்ருதியில் ஏற்பட்ட பூர்வ பக்ஷம் நிரசிக்கப் பட்டது
இதில் சாங்க்யர் கூறும் தத்வ சங்க்யை -எண்ணிக்கை யைக் கொண்டு
ஸ்ருத் யர்த்தத்தில் ஏற்படும் பூர்வ பக்ஷம் கண்டிக்கப் படுகிறது என்று சங்கதி –

117-ந சங்க்ய உப சங்கரஹாத் அபி நாநா பாவாத் அதிரேகாத் ச –1-4-11-

ப்ருஹத் ஆரண்யாகாவில்-4-4-17-
யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜனா ஆகாசாஸ்ஸ ப்ரதிஷ்டித தமேவ மன்ய ஆத்மானம் வித்வான் ப்ரஹ்மாத்ருதோம்ருதம் –
என்று
5 தன்மாத்ரைகள் -5-ஞான இந்த்ரியங்கள் -5 கர்ம இந்த்ரியங்கள் -பிரகிருதி -மனம் -அஹங்காரம் -ஆத்மா
என்று 25 தத்வமாக ஜீவனைக் குறித்து
இவற்றை அறிந்தால் மோஷம் பெறலாம் என்கிறது உபநிஷத்

25 கூறப்படுகின்றன என்று பூர்வ பக்ஷம்
பஞ்ச பஞ்ச ஜனா என்று ஐந்து ஜனங்களால் ஆரம்பிக்கப் பட்ட கார்யங்கள் ஐந்து ஆக 25 என்று
விசேஷிப்பதால் தத்வங்கள் தோன்றுகின்றன
மோக்ஷ ப்ரகரணத்தாலே அந்த ஸங்க்யை சாங்க்ய தந்த்ர யுக்தங்கள் என்று தோன்றுகிறது
தமேவ மன்ய ஆத்மானம் வித்வான் ப்ரஹ்மாத்ருதோம்ருதம் –என்றதும்
25 வது தத்வமான ஆத்மாவை ப்ரஹ்மம் என்று அறிந்தவன் முக்தன் ஆவான் என்கிறது
என்னும் பக்ஷத்தைக் கண்டிக்கிறார் –

சாங்க்ய மதம் போலே சுதந்திரமான தத்வங்கள் அல்ல
யஸ்மின்-என்று பரம் பொருளைச் சார்ந்தே உள்ளவை-

ந சங்க்ய உப சங்கரஹாத் அபி –25 எண்ணிக்கையை ஏற்றாலும் இந்த தத்வங்கள் அப்ராஹ்மத்வங்கள் அல்ல
நாநா பாவாத் –யஸ்மின் -என்று குறிப்பிட்ட ப்ரஹ்மம் அந்த தத்துவங்களுக்கு ஆதாரமான படியாலே
அப்ரஹ் மாத்மகமான தத்வங்களைக் காட்டிலும் இந்த தத்துவங்களுக்கு ப்ரஹ்மாத் கத்வத்தாலே பேதம் தோன்றுவதால்
அதிரேகாத் ச-யத் ஸப்தத்தால் சொல்லப்படும் ப்ரஹ்மமும் ஆகாசமும்
வேறாய் இருப்பதால் -அதிகமாய் இருப்பதால் -தத்வங்கள் 27 ஆகின்றன
ஸூத்ரத்திலே அபி ஸப்தத்தாலே ஸங்க்யையை அங்கீ கரிக்க வில்லை என்று ஏற்படுகிறது
ஆத்மாவுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்யமும் -ய ஆத்மனி திஷ்டன் -இத்யாதி ஸ்ருதியோடு முரண் பட்டது என்று முன்பே கூறப்பட்டது
பஞ்ச ஜனங்கள் என்பது கண் முதலிய இந்திரியங்கள் அவை ஐந்து என்பதே பஞ்ச பஞ்ச ஜனா என்பதின் பொருள் –
ஸப்த ஸப்தர்க்ஷய-என்பது போலே -என்பது திரு உள்ளம் –

———————————————————————–

118-ப்ராணாதய வாக்ய சேஷாத்-1-4-12-

பஞ்ச பஞ்ச ஜனா -ஐந்து பொருள்கள் –
ப்ருஹத் ஆரண்யாகாவில் 4-4-18-
பிராணஸ்ய பிராணமுத சஷூஷஸ் சஷூ ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரம்-
அந்நஸ் யாந்னம்- மநஸோ யே மநோ விது—என்று –
பிராணன் கண் காது அன்னம் அல்லது நாக்கு மனம் என்பவை ஆகும்-

ஜனநாத் -ஜனங்கள் என்ற வ்யுத்பத்தியாலே இந்திரியங்கள் கூறப்படுகின்றன என்று கருத்து

அன்னஸ் யான்னம் -என்ற வாக்கியம் இல்லாமையால் பஞ்ச ஜனங்கள் ஐந்து என்று
எப்படி அறியப்படுகிறது
என்ற சங்கையை பரிஹரிக்கிறார் மேல் –

—————————————————————————

119-ஜ்யோதிஷா ஏகேஷாம் அஸத் அந்நே –1-4-13-

காண்வ முனிவரின் உபநிஷத் வரியில் அன்னம் என்று கூறவில்லை என்றாலும்
அதற்கு முந்திய வரியில்
தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதிராயூர் ஹோபாசதேம்ருதம் -ஜ்யோதிகள் அனைத்துக்கும் ஜ்யோதி என்று
புலன்கள் ஐந்துக்கும் ஜ்யோதியான பர ப்ரஹ்மத்தை சொல்லிற்று-

ஜ்யோதிஷா ஏகேஷாம் அஸ்தி அந்நே –
ஏகேஷாம் -காணவர்களின் வாக்ய சேஷத்தாலே
அஸத் அந்நே-அன்னம் என்ற பாடம் இல்லா விட்டாலும்
ஜ்யோதிஷா-தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதி -என்று தொடக்கத்தில் ஆறாம் வேற்றுமையான
ஜ்யோதிஸ் ஸப்தம் ப்ரஹ்மத்தைக் குறித்தால் ப்ரகாசகங்களுக்கும் ப்ரகாசங்கள் ப்ரஹ்மமே என்று தோன்றுகிறது
அந்தப் ப்ரகாசங்கள் எவை என்றால் -பஞ்ச பஞ்ச ஜனா என்று பொதுவாகச் சொன்ன பஞ்ச ப்ரகாசங்களை
பிராணஸ்ய பிராணம் முதலியவற்றிலே விசேஷிக்கிறது
பிராணஸ்ய-என்று த்வக் இந்திரியம் சொல்லப்படுகிறது
அன்னஸ்ய -என்று மூக்கும் க்ராண இந்த்ரியமும் ரசன இந்த்ரியமும் சேர்த்து கூறப்படுகின்றன
ஆகவே ஐந்து என்பதற்குத் தடையில்லை எனத் திரு உள்ளம்
ஆகவே யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜனா என்ற மந்திரத்தில் இந்த்ரியங்களுக்கும் ஆகாசாதி பூதங்களுக்கும்
ப்ரஹ்ம ஆஸ்ரயத்வம் கூறப்படுவது சாங்க்யரின் கருத்து அன்று –

சங்க்ய உப சங்க்ரஹாதி கரணம் சம்பூர்ணம்

——————————————————————————

1-4-4-காரணத்வாதி கரணம் -ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் –

இப்படி மூன்று அதிகரணங்களால்
சாங்க்யர் கூறின சாகையை அனுசரித்த வாக்கியங்கள் பரமாத்மாவையே போதிப்பவை
என்று ஸ்தாபித்தவுடன்
அவர்கள் அப்ராஹ்மாத்மக பிரதானத்தையே போதிப்பதாகக் கூறும்
அவ்யாக்ருதம் முதலிய சொற்களும் பரமாத்மாவே பொருள் என்று
ஈஷத் யதிகரணாதிகளில் சொன்ன அர்த்தத்தை
இங்கு சிங்க நோக்கு முறையில் -ஸிம்ஹ அவலோகந-காட்டி ஸ்தாபிக்கிறார் –

120-காரணத்வேன ச ஆகாசாதிஷூ யதா வ்யபதிஷ்ட உக்தே –1-4-14-

ஆகாயம் உட்பட அனைத்துக்கும் காரணமாக பர ப்ரஹ்மமே உள்ளது என்று கூறப்பட்டதால்
ப்ரஹ்மமே உலகின் காரணப் பொருள் –

சாந்தோக்யம் -2-7-1-
சத் ஏவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் -சத் என்பதே காரணப் பொருள்

தைத்ரிய உபநிஷத்தில் -3-19-1-
அசத் ஏவா இதம் அக்ர ஆஸீத் -என்று முதலில் அசத் என்பதே காரணப் பொருள்

ப்ருஹத் உபநிஷத்தில் -1-4-7-
தத் ஏதத் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் -என்று காரணப் பொருள் அவ்யாக்ருதமாக இருந்தது
சாங்க்ய மதத்தில் அவ்யாக்ருதம் பிரகிருதி

ஜகத்துக்குக் காரணத்தைக் கூறும் -தத்தே தந்தர் ஹி அசதே வேதம் –இத்யாதி வாக்கியங்கள்
பிரதானத்தைக் காரணமாக் கூறுபவைவா
அன்றி ப்ரஹ்மத்தைக் காரணமாக் கூறுபவையா என்று சம்சயம்
பிரதான காரண வாத பரங்களே -பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் -என்று சில இடங்களில் ஸத் காரணம் எனப்படுகிறது

சில இடங்களில் அசதே வேதம் அக்ர -என்று அஸத் காரணம் எனப்படுகிறது
அவ்வாறே தத்தே தந்தர் ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் -என்று அவ்யாக்ருதம் காரணம் எனப்படுகிறது
அவ்யாக்ருதம் என்பதே பிரதானம்
ஆதலின் பிரதானம் காரணமாகையாலே ஸகல வாக்கியங்களும் பிரதானத்தையே காரணம் என்கின்றன
என்ற பூர்வ பக்ஷத்தைக் கண்டிக்கிறார் –

தைத்ரியம் -2-1-1-
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்-என்றும் தஸ்மாத் வை ஏ தஸ்மாத் ஆத்மான ஆகாச சம்பூத் -என்று
பரமாத்வா விடம் இருந்து ஆகாசம் தோன்றிற்று என்றும்

சாந்தோக்யம் -6-2-3-
தத் ஐ ஷத பஹூச்யாம் -பலவாக தோன்றுவேன் என்பதால் சத் அசத் அவ்யாக்ருதம்
போன்றவையும் ப்ரஹ்மத்தை குறிக்கும் பதங்கள்

ப்ருஹத் உபநிஷத்தில் -1-4-7-
தத் நாம ரூபாப்யம் வ்யாக்ருத யதா -என்று
இத்தையே குறிக்கும் -பர ப்ரஹ்மமே காரணம் என்றதாயிற்று

காரணத்வேன ச -ஆகாசாதிஷூ யதா வ்யபதிஷ்ட உக்தே –-ஆகாசம் முதலிய பதம் கொண்ட வாக்யங்களில் –
தஸ்மாத் வை ஏ தஸ்மாத் ஆத்மான ஆகாச சம்பூத் -முதலிய எல்லா வாக்யங்களிலும்
யாதவ்ய பதிஷ்டைஸ்யைவ காரணத்வேந யுக்த –சர்வஞ்ஞன் ஸர்வ சக்தன் என்று
எல்லாம் ஈஷத் அதிகரணாதிகளிலே ஸ்தாபிக்கப் பட்ட பரம புருஷனே காரணம் என்று சொல்வதால்
அவனுக்கு தேவாதி நாம ரூபங்கள் இல்லாமையால் அஸத் -அவ்யாக்ருதம் -எனப்படுகிறான்
ஆதலால் எல்லா காரணாதி வாக்கியங்களும் பர ப்ரஹ்மத்தையே காரணமாக் கூறுவன என்று திரு உள்ளம்

அப்படியாகில்
அஸத் வா இதம் அக்ர ஆஸீத் என்பதற்கு என்ன பொருள் என்பதைக் கூறுகிறார் அடுத்து –

——————————————————————————-

121-சமாகர்ஷாத் –1-4-15-

மற்ற உபநிஷத்களிலும் கூறப்பட்டவற்றை குறிப்பிடுவதாலும் பர ப்ரஹ்மமே காரணம்
தைத்ரிய உபநிஷத் –
சோகா மயத பஹூச்யாம் பிரஜா யேய-என்றும்
அசத் வை இதம் அக்ர ஆஸீத் -என்றும்

ப்ருஹத் ஆரண்யாகாவில் –
தத் ஏதம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் என்றும்

அதே உபநிஷத் –
ச ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆனகாக்ரேப்ய-என்று
உள்ளே புகுந்து நகக் கண்கள் வரையில் உள்ளான் -என்கிறது-

தைத்ரிய உபநிஷத் –சோகா மயத பஹூச்யாம் பிரஜா யேய-என்று
பஹு பவன சங்கல்பத்துடன் ஜகாத்தை ஸ்ருஷ்ட்டி செய்யும்
ஸர்வஞ்ஞனான பர ப்ரஹ்மத்தையே அஸத் வா இதம் -என்ற வாக்யத்தில் ஆகர்ஷித்துக் கொள்வதால்
ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்டனான ப்ரஹ்மத்துக்குக் காரண அவஸ்தையில் நாம ரூப சம்பந்தம் இல்லாமையால்
இத்தைப் பின் பற்றி அஸத் என்று ப்ரஹ்மத்தைச் சொல்கிறது
தத்தே தந்தர் ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் என்று ப்ருஹத் ஆரண்யாகாவிலும்
அதிலே ச ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆனகாக்ரேப்ய பஸ்யன் சஷு -போன்ற
முன் பின் வாக்கியங்களை ஆராயும் போது ஸர்வஞ்ஞனாய் ஸர்வ ஸக்தியுக்தனாய் உள்ள பர ப்ரஹ்மமே
அவ்யாக்ருத சரீரமாய்க் கொண்டு ஜகாத்தை ஸ்ருஷ்டிக்கையாலே
அவ்யாக்ருதம் என்று பிரதான சரீரிகமான பர ப்ரஹ்மமே கூறப்படுகிறது என்பது ஸித்தமாயிற்று –

காரணத்வாதி கரணம் சம்பூர்ணம்

———————————————————————————

1-4-5-ஜகத்வாசித்வாதி கரணம் -ப்ரஹ்மமே அறியத்தக்கது –

இப்படி முன் அதிகரணத்தில் வேறாகக் கூற முடியாத பிரகரண பலத்தாலே
அப்ரஹ்மாத்மக ப்ரதான காரணத்வத்தை நிரஸனம் செய்து
யஸ்ய சைதத் கர்ம என்று கர்மவான் என்னும் சிறப்பான லிங்கத்தைத் துணை கொண்டு
முன் அதிகரண நியாயத்தின் படி ஸமாகர்ஷிக்கப் பட்ட ஜீவனே பிரதானத்தின் அதிஷ்டா யாதலின்
பரனாகட்டும் என்று சங்கித்து
அவனுக்கும் காரணத்வம் இல்லை என்று நிரூபிக்கிறார்
என்று சங்கதி

முன்பு அவ்யாக்ருத ஸப்தத்துக்கு ப்ரக்ருதி என்ற பொருளை விலக்கி பரமாத்மா என்ற
பொருள் தீர்மானிக்கப் பட்டது
தற்போது கர்ம ஸப்தத்திற்கு புண்ய பாப ரூபமான கர்மா என்ற பொருளை விலக்கி
படைக்கப்படும் ஜகத் என்ற பொருள் நிறுவப்படுகிறது
என்று மற்றோர் சங்கதி –

121-ஜகத் வாசித்வாத்–1-4-16-

யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வைதத் கர்ம ச வை வேதிதவ்ய –
பாலாகி என்னும் ஒருவன் அஜாத சத்ரு என்ற அரசன் இடம் வந்து ப்ரஹ்மத்தை குறித்து கூறுவதாக சொல்லி
ப்ரஹ்ம தே ப்ருவாணி யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வைதத் கர்ம ச வை வேதிதவ்ய –
யஸ்யா வா ஏதத் கர்ம -யாருக்கு இது கர்மமோ -இது என்றது உலகம் –
கர்மம் -உலகை உருவாக்கும் செயலையும் சொல்லி
பர ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் என்றதாயிற்று-

யஸ்ய சைதத் கர்ம -ப்ரக்ருதி வ்யுக்தனான புருஷனே வேதிதவ்யன் –
அவனுக்கு புண்ய பாப ரூப கர்ம சம்பந்தம் சொல்வதால்
என்கிற பூர்வ பக்ஷத்தைக் கண்டிக்கிறார்

ஜகத் வாசித்வாத்-பரம புருஷனே வேதி தவ்யன் -அறியத்தக்கவன் என்று வருவித்துக் கொள்ள வேண்டும்
ஏன் எனில்
கர்ம -என்று ஏதத் ஸப்தத்தோடு ஒரே வேற்றுமையில் உள்ள கர்ம ஸப்தம் –
க்ரியதே இதி கர்ம என்ற வ்யுத்பத்தியால் ஜகத்தைச் சொல்லுவதால்
இது புண்ய அபுண்ய ரூப கர்மாவைக் குறிப்பதால்
ஏதத் என்ற ஸப்தம் வீணாகும் என்று கருத்து –

—————————————————————————

122-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத தத் வ்யாக்யாதம் –1-4-17-

அதாஸ்மின் பிராண ஏவ ஏகதாபவதி-என்றும்

தத்யதா ச்ரெஷ்டீ ஸ்வைர்ப்புங்க்தே யதா ஸ்வா ஸ்ரேஷ்டி நம் புஞ்ஜந்தி
ஏவமேவைஷா பிரஜ்ஞாத்மா ஏதைராத்மயிர் புங்க்தே
ஏவமேவைத ஆத்மான எனம் புஞ்ஜந்தி -என்றும்

ப்ரஹ்மேதே பிரவாணி -என்றும்

சர்வான் பாப்மநோப ஹத்ய சர்வேஷாம் பூதானாம் ஸ்ரைஷ்ட்யம் ஸ்வா ராஜ்ய மாதிபத்யம் பர்யேதி யா ஏவம் வேத -என்று
பிராணனை உடலாக உடைய ப்ரஹ்மத்தை உபாசனை செய்ய வேண்டும் என்றதாயிற்று –

ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத -ஜீவ லிங்கத்தாலும் முக்ய ப்ராண லிங்கத்தாலும்
வேதி தவ்யன் பரமாத்மா அல்லன் என்றால்
தத் வ்யாக்யாதம்-ப்ரதர்த்தன வித்யையில் அது விரித்து உரைக்கப் பட்டது
ப்ரகரணத்தை முன் பின் ஆராய்வதால் பரமாத்ம பரம் இவ்வாக்கியம் என்று நிச்சயித்தால்
ஜீவாதிகளைக் குறிப்பிடும் சொற்களும் ஜீவாதிகளைச் சரீரமாகக் கொண்ட பரமாத்மாவையே போதிப்பவை என்று
ப்ரதர்தன வித்யா நியாயம் இங்கே நோக்கத் தக்கது

தவ்ஹ ஸூப்தம் புருஷமா ஜக்மது –என்று தொடங்கி
உறங்கும் மனிதனிடம் நெருங்கி பிரம்பால் அடித்து எழுப்பி
சரீரம் இந்திரியம் பிராணன் இவற்றை விட வேறான ஜீவன் இருப்பதை விளக்குவது இந்த வாக்யம்
என்ற சங்கைக்கு
உத்தரம் சாதிக்கிறார் மேல் –

—————————————————————————–

123-அன்யார்த்தம் து ஜைமினி ப்ரசன வியாக்யா நாப்யாம் அபி ச ஏவம் ஏகே –1-4-18-

அஜாத சத்ருவும் பாலாகியும் தூங்கிக் கொண்டு இருந்த மனிதனை எழுப்ப –
உடலில் வேறுபட்டவன் ஜீவன் -ஜீவனில் வேறுபட்டவன் பர ப்ரஹ்மம்
க்வ ஏஷ ஏதத் பாலாகே புருஷோசயிஷ்ட -தூங்கி எழுவதற்கு முன்னால் எங்கு இருந்தான்

விடையாக
அதாஸ்மின் பிராண ஏவ ஏகதா-தூங்கும் பொழுது பிராணனில் ஒன்றி விடுகிறான்

சாந்தோக்யம் -சதா சோம்ய ததா சம்பன்னோ பவதி –தூங்கும் பொழுது சத்துடன் ஒன்றி விடுகிறான்
பிராணன் என்றது ப்ரஹ்மமே

ப்ருஹத் உபநிஷத் -ய ஏஷோந்தர் ஹ்ருதய ஆகாசஸ் தஸ்மின் சேதே-என்று தூங்குபவன் இதயத்திலுள்ள
ஆகாயம் ஆகிய பரம் பொருளிடம் தூங்குகின்றான்
பிராணன் போன்ற சொற்கள் ப்ரஹ்மமே என்றதாயிற்று-

து என்ற சொல் சங்கையை மாற்றுகிறது
ஜீவனைக் குறிப்பது ஜீவனை விட்டு வேறான ப்ரஹ்மம் இருப்பதை விளக்குவதற்க்கானது
கேள்வியாலும் பதிலாலும் அவ்வாறே புலப்படுகிறது
இவ்வினா விடைகளாலே ஜீவனைக்குறிப்பது ப்ரஹ்மத்தை விளக்கவே என்று ஜைமினி கூறுகிறார்
ஸ்ரீ வியாசருக்கு இதுவே திரு உள்ளம்
அபி ச ஏவம் ஏகே –வாஜசநேயிகள் இவ்வினா விடைகளை பரமாத்ம பரமாகவே ஓதுகிறார்கள்
ய ஏஷோந்தர் ஹ்ருதய ஆகாசஸ் தஸ்மின் சேதே–தஹர ஆகாசம் பரமாத்மாவே என்று முன்னமே நிரூபணம் ஆயிற்று –

————————————————————————————

1-4-6-வாக்ய அந்வயாதி கரணம் -காணப்படுபவன் ப்ரஹ்மமே –

முன் அதிகரணத்தில்
சாங்க்யனால் லிங்கமாக ஒப்புக் கொள்ளப்பட்ட கர்ம ஸப்தம்
புண்ய பாப ரூப கர்மாக்களையும் ஜகத்தையும் குறிப்பதால்
பக்தனான ஜீவனுக்குப் பரத்வம் கிடையாது என்று ஸ்தாபிக்கப் பட்டது
இந்த அதிகரணத்தில்
மைத்ரீ ப்ராஹ்மண ப்ரகரணத்தில் ஆத்ம ஸப்தத்தால் குறிக்கப்படுவதாகிய சிறப்பான லிங்கத்தாலும்
ஸர்வம் தம் பரா தாத் யோ அந்யத்ராத் மனஸ் சர்வம் வேத -என்னும் ஸ்ருதியில்
ஜீவனைக்காட்டிலும் வேறான தத்வம் தடுக்கப்படுவதாலும்
கணவன் மனைவி புதல்வன் என்னும் சம்பந்தம் ஜீவனுக்கே சிறப்பானததாலும்
முக்த ஜீவனே மைத்ரேயீ ப்ராஹ்மணத்தில் பேசப்படுகிறான்
என்ற சங்கையால் என்று சங்கதி

124-வாக்ய அந்வயாத்-1-4-19-

ப்ருஹத் ஆரண்யாகாவில்-
நவா அரே பத்யு காமாய பதி ப்ரியோ பவதி ஆத்ம நஸ்து காமாய பதி ப்ரியோ பவதி -என்றும்
ஆத்மா வரே அரே த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசி தவய -மைத்ரேயி ஆத்ம நி கல்வரே த்ருஷ்டே
ஸ்ருதே மதே விஞ்ஜாதே இதம் சர்வம் விதிதம் -என்று
அனைத்தும் அறிந்தவை ஆகும் –
இதம் சர்வம் யதயமாத்மா -இந்த ஆத்மாவே அனைத்தும் என்பதால்
பரமாத்மா என்று உணர்ந்தால் மட்டுமே பொருந்தும்-

வாக்ய அந்வயாத்-காணத்தக்கவன் என்று குறித்தது பரமாத்மாவையே
அது ஏன் என்றால்
மைத்ரேயீ ப்ராஹ்மணத்தில் எல்லா வாக்கியங்களும் பரமாத்மாவிடமே அன்வயம் -பொருந்தும் –
ஸர்வ காரணத்வம் சொல்வதால்
ஜகத் வியாபார வர்ஜம் -ஸூத்ரப்படி முக்தாத்மாவுக்குக் கூட ஸம்பாவிக்காதே
ஒவ்வொரு வாக்யத்திலும் ஆத்ம ஸப்தம் மைத்ரேயிக்கு அம்ருதத்வத்தை சாதிப்பவனாகக் காண வேண்டியவன்
என்று உபதேசிக்கப்பட்ட பரமாத்மாவையே போதிக்கும் என்பதால் வாக்யங்களுக்கு அந்வயம் பொருத்தம் ஏற்படும்

அந்த அந்த ஜீவன்களின் கர்ம அனுகுணமாக பரமபுருஷன் தனது ஸங்கல்பத்தாலே
பத்யாதிகளைப் பத்னீ முதலியவர்களுக்குப் பிரியமாக்குகிறான் –

ஆத்மன காமாயா என்று பரமாத்மாவின் ஸங்கல்பம் ஸித்திக்கவே என்றே பொருள் –
தங்கள் காமம் நிறைவேற என்ற பொருள் அன்று

ஆத்ம சப்தத்துக்கு ஜீவாத்ம பாரமாகவும் பொருள் கொண்டு வேறே நிர்வாகமும் ஸ்ரீ பாஷ்யத்தில் காட்டப்பட்டு உள்ளது –
விஞ்ஞான கன ஏவ ஏதேப்யோ பூதேப்ய சமுதாய தான்யே வானு விநஸ்யதி -என்னும் வாக்யத்தில்
ஜீவ லிங்கமான விஞ்ஞான கன ஸப்தத்துக்கு பிற மதம் கொண்டும் நிர்வாஹம் அருளிச் செய்துள்ளார் –

————————————————————————————-

125-பிரதிஜ்ஞா சித்தே லிங்கம் ஆஸ்மரத்ய-1-4-20-

ஆஸ்மரத்யர் என்பவர் இதம் சர்வம் விதிதம் -ஒன்றை அறிந்தால்
அதனைச் சார்ந்த அனைத்தையும் அறிந்தது போலே
ஆகும் என்பதால் பரமாத்மாவே என்கிறார்-

ஜீவன் பரமாத்மாவின் கார்யமாகையாலே அவனை விட வேறு படாதவன் என்பதால்
ஜீவனைச் சொல்லும் பதம் பரமாத்மாவைக் குறிக்கும் என்பர் ஆஸ்மரத்யர்
ஜீவ வாசகமான ஞான கனமும் அவ்வாறே ஆகும் என்று கருத்து
இது சங்கர மதத்துக்கு ஆதாரம் –

———————————————————————————–

126–உத்க்ரமிஷ்யத ஏவம் பாவாத் இதி ஔடுலொமி-1-4-21-

ந ஜாயதே ம்ரியதே -கட உபநிஷத் -கர்ம வினைகளால் தோன்றி மறைகின்றான் –
தனது உருவம் மட்டும் மாறும் மண் குடம் போலே அன்றி ப்ரஹ்மத்துடன் ஒன்றி விடுகிறான்
இந்த ஔடுலொமி கருத்து படியே –

சாந்தோக்யம் –
ஏஷ சம்ப்ரசாத அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரஞ்ஜ்யோதி ரூப
சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே -என்றும்

முண்டக உபநிஷத்தில்
யதா நத்ய ச்யந்தமாநா சமுத்ரே அஸ்தம் கச்சந்தி நாம ரூபே விகாயா
ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த பராத் பரம் புருஷம் உபைதி திவ்யம் -என்று
ஜீவன் முக்தி அடையும் பொழுது
ப்ரஹ்மமாகவே மாறுகின்றான் என்பதை உணர்த்தும்-

உத்க்ரமிஷ்யத –ஸ்வந ரூபேண அபி நிஷ் பத்யதே -சரீரத்தை விட்டுச் செல்லும் ஜீவனுக்கு
ஏவம் பாவாத் -முக்தியை ஐக்யம் ஏற்படுவதால்
இதி ஔடுலொமி-ஜீவ ஸப்தம் பரமாத்மாவைக் குறிக்கும் என்று அருளிச் செய்கிறார்

—————————————————————————————

127-அவஸ்திதே–இதி காசக்ருத்சன-1-4-22-

ஜீவன் ப்ரஹ்மமாக இல்லாதது இயற்கையா –
அப்படியானால் மோட்ஷம் அடையும் பொழுது ஜீவ ஸ்வரூபம் அழிய வேண்டும்
ஜீவன் தன ஸ்வரூபம் அழிய முயலாதே

ஏதோ ஒரு காரணத்தினால் ப்ரஹ்மமாக இல்லை என்று கொண்டால்
முன்பு ப்ரஹ்மமாக இருந்து இருக்க வேண்டும்
மோட்சத்தின் பொழுது ப்ரஹ்மம் ஆகிறான் என்றது தவறாகும் –

பரம் பொருள் ஜீவன் உள்ளேயே இருப்பதாக உணர்த்தவே
ஜீவனைக் குறித்த பதங்கள் கூறப்பட்டன
ப்ருஹத் ஆரண்யாகாவில்-
ய ஆத்மா நி திஷ்டன் யச்யாத்மா சரீரம் -போன்ற பல வாக்யங்கள் உண்டே –
இதையே காசக்ருத்ச்னர் எடுத்துக் காட்டுகிறார்-

ய ஆத்மனி திஷ்டன் -இத்யாதிகளில் ஜீவாத்மாவுக்கும் ஆத்மாவாக பரமாத்மாவின் ஸ்திதியைக் கூறுவதால்
விஞ்ஞான கன சப்தங்கள் பரமாத்மாவின் முடிவதால் பரமாத்ம வாசகங்கள் தான்
தேவன் மனுஷ்யன் ஸப்தங்கள் ஜீவாத்மாவைக் குறிப்பது போலவே
சரீர வாசக ஸப்தங்கள் ஸர்வ சரீரிகனான பரமாத்மாவைக் குறிப்பவை என்று காசக்ருஸ்தனரின் திரு உள்ளம் –

வாக்ய அந்வயாதி கரணம் சம்பூர்ணம்

———————————————————————————————-

1-4-7-பிரக்ருத்யதிகரணம் -ப்ரஹ்மமே உபாதான காரணம் –

கீழே பரமாத்மா ஜீவர்களின் நியாமகன் -என்பதால் ஸப்த ஸாமாநாதி கரண்யம் சொன்னதைக் கொண்டு
ஸேஸ்வர மீமாம்சகன் -ராஜாவே ராஜ்யம் என்றால் -உபசார வழக்காகவே தேறும் -ஐக்யம் அன்று
ராஜ்யத்துக்கு ராஜா உபாதான காரணம் அல்லன்
அதே போல் ஜகத்துக்கும் ப்ரஹ்மம் உபாதான காரணம் இல்லாமல் நிமித்த காரணமே ஆகும் என்பான்
இதற்கு விடை கூறலே சங்கதி

128-பிரகிருதி ச பிரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் —1-4-23-

பிரமமே உபாதான காரணமாக இருந்தால் மட்டுமே பிரதிஞ்ஞை எனப்படும் உண்மையான வரிகள் பொய்யாகாது
ஸ்வேதாஸ்வதார உபநிஷத்தில் –
அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்-என்று மாயையான பரம் பொருள்
மாயையான பிரகிருதி கொண்டு உலகைப் படைக்கிறான்

பூர்வ பஷி –
இதனால் நிமித்த காரணமும் உபாதான காரணமும் வெவ்வேறே என்பர்
ப்ரஹ்மத்தை உபாதான காரணமாகக் கொண்டால் மாறுதல் அடைய வேண்டி வரும்
அவிகாராய என்றது பொய்யாகும் என்பர்

சித்தாந்தம்
பிரதிஜ்ஞை -உததமாதே சம்ப்ராஷ்ய யே நாஸ்ருதம் ஸ்ருதம் பவத்யமதம் மதம் அவிஜ்ஞாதம் விஜ்ஞாதம் -என்று
பரம் பொருளைக் குறித்து சொல்லிற்று
எதை ஒன்றைக் கேட்டால் கேட்க்கப் படாதது கேட்க்கப் படுகிறதோ நினைத்தால் நினைக்கப் படாதவை
நினைக்கப் படுகிறதோ அறிந்தால் அறிந்தது ஆகின்றதோ -அதுவே பரம்பொருள்

சாந்தோக்யம் -திருஷ்டாந்தம் –
யதா சோம்ய ஏகேந மருத் பிண்டேந சர்வம் ம்ருண்மயம் விஜ்ஞாதம் ஸ்யாத்
குயவன் என்று மட்டும் கொண்டால் அனைத்தையும் அறிந்தது ஆகாதே
ப்ரஹ்மத்தை உபாதானமாக் கொண்டு ஏற்படும் மாறுதல்கள் அவனது உடலாக உள்ள
நமது சரீரத்தில் நிகழ்வதால் அவனுக்கு தோஷம் தட்டாதே
இத்தையே அஸ்மான் மாயீ ஸ்ருஜ்யதே -என்கிறது

பூர்வ பஷத்தை நிரசிக்கிறார்
பிரகிருதி ச -நிமித்தமான ப்ரஹ்மமே உபாதானமும் ஆகிறது
ஏன் எனில்
பிரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் —ஏக விஞ்ஞானத்தால் ஸர்வமும் அறியப்படும் என்ற ப்ரதிஜ்ஜைக்கும்
மண் -ம்ருத் -போன்ற த்ருஷ்டாந்தங்களுக்கும் விரோதம் வாறாமைக்காக
நிமித்த காரணம் மட்டும் ப்ரஹ்மம் என்றால் குயவனைப் பற்றிய அறிவால் குடத்தின் தன்மையை அறிய முடியாதே
உபாதான காரணமும் ப்ரஹ்மமாய் இருந்தால் தானே நேற்று இருந்த மண் இன்று குடமானது போல் ஜகத்தின் ஞானம் சித்திக்கும் –
ஸாஸ்திரத்தால் மட்டுமே அறியக் கூடிய ப்ரஹ்மம் காரமும் கார்யமுமாய் இருப்பதாக ஸ்ருதி சொல்வதால்
நிமித்தமும் உபாதானத்வமும் முரண் ஆகாது
விகாரங்கள் சித் அசித் வஸ்துக்களையே சார்ந்தவை –
இவற்றின் சரீரிகமான ப்ரஹ்மத்துக்கு விகாரம் இல்லை -என்பதைக் காட்டவே
அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத் -என்று ப்ரக்ருதியையும் புருஷனையும் வெவ்வேறாகக் கூறுகிறது

இனி வைசேஷிகர் வாத நிரஸனம்
நிமித்தமும் உபாதானமும் ஒருவருக்கே கூடாது -நிமித்த காரணம் ஸமவாயி காரணத்தை விட வேறானதே என்பர்
மாயாந்து ப்ரக்ருதிம் வித்யாத் மாயினம் து மஹேஸ்வரம் என்று
உபாதானமாயும் நிமித்தமாயுமாய் உள்ள ப்ரக்ருதிக்கும் ஈஸ்வரனுக்கு பேதத்தை நன்கு காட்டுகிறது

சமவாயி காரண பின்னமாய் இருக்க வேண்டும் என்றால் ஏதேனும் ஒரு சமவாயி காரணத்தைக் காட்டிலும் பேதமா
அனைத்து சமவாயி காரணங்களின் பேதமா என்று விகல்பித்து
முதல் பக்ஷத்தில் ஜகத்தின் உபாதானமான ப்ரஹ்மத்தினிடம் ஏதேனும் உபாதான பேதம் ஸூ லபமாகையாலே
உன் நோக்கம் நிறைவேறாது
இரண்டாம் பக்ஷத்தில் குடத்தின் நிமித்தமான தண்டத்தில் தன் ரூபாதிகளான உபாதானத்தில் இருந்து
பேதம் வராதலால் லக்ஷணத்து அவ்யாப்தி தோஷம் வரும்
ஆகவே நிமித்த லக்ஷணம் கூறியது பொருந்தாது –

நாங்கள் அப்படிக்கூற வில்லை -அதன் நிமித்தத்தை விட உபாதானத்துக்கு பேதம் என்றே கூறுகிறோம்
குடம் முதலியவற்றில் உபாதானமான மண் முதலியவற்றில் இருந்து பேதம் வருவதால் அவ்யாப்தி தோஷம் வராது
ப்ரஹ்மத்தினிடமும் இந்த லக்ஷணம் இல்லை என்றால் இதுவும் கூடாது
ஏன் எனில் துவம்சம் அழிவு என்னும் கார்யம் நிமித்தத்தால் உண்டாவதால்
த்வம்ச நிமித்தமான தண்டத்தை விட உபாதான பேதம் பிரசித்தம் இல்லாததால் லக்ஷணம் அப்ரஸித்தம் ஆகிறது

ப்ரஹ்மத்தில்
ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் உபாதானம்
ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம் நிமித்தம்
ஆகவே வெவ்வேறானவையே
முன் மண் இருந்த ஞானம் இப்போது குடத்தைக் கண்டு உபாதாய ஞானத்தால் உபாதிய ஞானம்
சர்வம் ம்ருன் மயம் விஞ்ஞாதம் ஸ்யாத்
அவஸ்தைகளுடைய பேதம் என்ற ஞானம் போலவே இங்கும்

இங்கு இன்னும் ஒரு பூர்வபக்ஷம்
உபாதானமும் உபேதேயமும் ஒன்றாக இருந்தால் சர்வ வாஸ்து இல்லாமையால்
சர்வ விஞ்ஞான ப்ரதி விஞ்ஞானமும் இல்லாமல் போகுமே
தனது ஞானத்துக்கு தனது ஞானமே ஹிந்து என்றதாகுமே -ஆத்மாஸ்ரய தோஷம் வரும்

ஸூஷ்ம ஸ்தூல பேதம் உண்டே -இரண்டு ஞானங்களுக்கும் பேதம் சித்தம் அன்றோ
காரணம் ஒன்றே யானாலும் காரியப்பொருள்கள் பலவாக இருப்பதால் சர்வ விஞ்ஞான ப்ரதிஜ்ஜைக்கு விரோதம் இல்லையே –
தேவதத்தன் முதலானோருக்கு பாலத்வம் யுவத்வம் அவஸ்தா பேதம் உண்டே

ஆகந்து காப்ருக் சித்த தர்மோ அவஸ்தே தீ கீர்த்யதே
விசேஷ்ய அபி ச வைசிஷ்ட்ய பேதோ அவஸ்தாந்தராயதே -என்று
புதிதாய் இணை பிரியாதோர் தர்மம் வந்து பெறுவதே அவஸ்தை என்கிறார்
விசேஷ்யமான பொருளில் ஒரு தர்மத்தை யுடைமை என்ற பேதம்
வேறு அவஸ்தையாகக் கருதப்படுகிறது என்பதாலும் பொருந்தும்

————————————————————————————-

129-அபித்யோப தேஸாத் ச-1-4-24-

தனது சங்கல்பத்தை ப்ரஹ்மம் –
ததைஷத பஹூச்யாம் -சாந்தோக்யம் என்றும்
ஸோ காமயத பஹூச்யாம் -தைத்ரியம் -என்றும்
சொல்லுவதால் உபாதான காரணமும் ப்ரஹ்மமே என்று அறியலாம்-

——————————————————————————————–

130-சாஷாத் உபயாம்நா நாத் ச–1-4-25-

வேத வரிகளும் ப்ரஹ்மமே உபாதான காரணம் என்று சொல்லுகின்றன
யஜூர் வேதம் -ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வருஷ ஆஸீத் யதோ த்யாவாப்ருதிவீ நிஷ்ட தஷூ
ம நீ ஷி ணோ மநஸா விப்ரவீமி வோ ப்ரஹ்மாத் யதிஷ்டத் புவ நாதி தாரயன்-என்று
காடு போலே ஆதாரமாக உள்ளவனும் ப்ரஹ்மமே -உபாதான காரணமாக இருக்கும் மரமும் ப்ரஹ்மமே
நிமித்த காரணமும் ப்ரஹ்மமே -என்றதாயிற்று-

—————————————————————————————–

131-ஆத்மக்ருதே–1-4-26-

தன்னைத் தானே படைத்துக் கொண்டதாலும் உபாதான காரணமும் ப்ரஹ்மமே
தைத்ரியம் -ஸோ காமயத பஹூச்யாம் -என்றும்
ததாத்மானம் ஸ்வயமக்ருத-என்றும் கூறப்பட்டது

உலகில் உள்ளவற்றை தனது உடலாகக் கொண்டு-அவற்றை படைக்கும் கர்த்தாவாகவும்
தன்னால் படைக்கப் பட்ட தானே உருவாக்கப் பொருளாகவும் ப்ரஹ்மம் உள்ளது

இத்தாலும் உபாதான காரணமும் ப்ரஹ்மமே -என்னலாம்-

————————————————————————————

ப்ரஹ்மம் தன்னைத் தானே ஜகத்தாகப் பண்ணினான் என்றால்
அபஹத பாப் மத்வாதிகளுக்கு முரண் படாதோ –
ஜகத்து துக்கியாய் அன்றோ இருக்கிறது என்னில்
அதற்கு சமாதானம் இதில்

131-பரிணாமாத்–1-4-27-

பரிணாமத்தைக் கூறுவதால் ப்ரஹ்மம் குறையற்றது
ப்ருஹத் உபநிஷத்தில் -தத் ஹ இதம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் தத் நாம ரூபாப்யாம் வ்யாக்ரியத
ஸூஷ்ம விசிஷ்ட ப்ரஹ்மம் –ஸ்தூல விசிஷ்ட ப்ரஹ்மம் -எப்பொழுதும் அந்தர்யாமியாக ப்ரஹ்மம் உள்ளது
தோஷங்கள் தட்டாது-

———————————————————————————-

132-யோ நிஸ்ஸ கீயதே ஹி-1-4-28-

ப்ரஹ்மத்தை யோநியாகவும் கூறுவதாலும் அவனே உபாதான காரணமாவான்
முண்டக உபநிஷத் –
யத் பூத யோநிம் பரிபஸ்யந்தி தீரா -ஞானம் உடையவர்கள் பூதங்களின் யோனியாக காண்கின்றார்களோ -என்றும்
கர்த்தாரமீசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் -படைப்பவனும் புருஷனும் யோநியும் ஆக உள்ள ப்ரஹ்மம் -என்றும்

யதோர்ணநாபி ஸ்ருஜதே கிருஷ்ண தேச
யதா ப்ருதிவ்யாமொஷதய சம்பவந்தி
யதா சத புருஷாத் கேசலோ மாநி ததா ஷராத் சம்பவதீஹ விச்வம் -என்று
சிலந்தி நூலை தன்னுள்ளே இழுத்துக் கொள்வது போலேயும் -பயிர்கள் பூமியில் இருந்து தோன்றுவது போலேயும் –
பரம் பொருளின் இடத்தில் இருந்து உலகம் தோன்றுகிறது

கர்த்தா என்கிற பதம் நிமித்த காரணத்தையும்
யோநி என்கிற பதம் உபாதான காரணத்தையும் குறிக்கும்-

யோ நிஸ்ஸ கீயதே ஹி-யோனி ஸப்தம் உபாதான காரணம் என்னும் பொருளில் வந்தது
ஹி -ஹேதுப் பொருளைக் காட்டும்
எக் காரணத்தால் யோனி என்று ப்ரஹ்மம் கூறப்படுகிறதோ அதே காரணத்தால்
அது நிமித்தமும் உபாதானமும் என்று ஸித்திக்கிறது –

பிரக்ருத்யதிகரணம் சம்பூர்ணம்

———————————————————————————

1-4-8-சர்வ வியாக்யான அதிகரணம் -ஸ்ரீ மன் நாராயணனே அனைத்தும்-

ஸாஸ்த்ர ஆரம்பத்தில் ஜந்மாத் அதிகரணத்தில் தொடங்கிய நிமித்த உபாதானத்வம்
ப்ரக்ருதி அதிகரணத்திலே உறுதி செய்யப் பட்டது
இனி ஹிரண்ய கர்ப்பஸ் சமர்த்த தாக்ரே பூதஸ்ய ஜாத –
பதிரேக ஆஸீத்
ந சந் ந சாஸத் சிவ
ஏவ கேவல –இத்யாதிகளில்
முன் கூறிய அதிகரணப் பொருள்களையே ஊகித்து அறிய வேண்டும் என்று சங்கதி –

134-ஏதேந சர்வே வ்யாக்யாதா வ்யாக்யாதா–1-4-29-

இதன் மூலம் ப்ரஹ்மமே அனைத்துக் காரணமும் என்றும்
ஸ்ரீ மன் நாராயணனே ப்ரஹ்மம் என்றும் படிக்கப் பட்டது –

ஏதேந -முன் கூறப்பட்ட நியாய கலாபத்தாலே
சர்வே -இதுவரை காட்டப்படாத -ஹிரண்ய கர்ப்பஸ் சமர்த்த தாக்ரே -இத்யாதி வாக்கியங்களும்
வ்யாக்யாதா வ்யாக்யாதா-ஸ்ரீயப்பதியான பரமபுருஷ காரணத்வ பரங்களாகவே வ்யாக்யாதங்கள்
இரட்டிப்பு அத்யாய பூர்த்தியைக் காட்டும்

ஸதேவ -என்ற ஏவகாரத்தாலே காரணத்வத்தையும் உபாஸ்யத்வத்தையும் போதிக்கும்
வாக்கியங்களில் உள்ள சாமான்ய ஸப்தங்கள் அருகே விசேஷ சப்தம் இருப்பதால்
சாக பசு நியாயப்படி அதையே குறிக்கும் என்பதாக ஸித்தம்

சர்வ வேதாந்தகளும்–ஸத் -ப்ரஹ்மம் -அக்ஷரம் –ஆத்மா முதலிய பதங்களும் –
சிவ சம்பு ஹிரண்ய கர்ப்பாதிகளும் ஸ்ரீ மன் நாராயணனையே போதிப்பதாகும்

மஹா உபநிஷத் -ஏகோ ஹை வை நாராயணா ஆஸீத் ந ப்ரஹ்மா நேசான
ஸ முனிர் பூத்வா சம சிந்தயத் த ஏத வ்யாஜ யந்த விச்வே ஹிரண்ய கர்ப்போ அக்னீர் யம
வருண ருத்ர இந்த்ரா விஷ்ணுஸ் ததா ஸீத் ஹரி ரேவ நிஷ்கள

ருத்ராதிகளுக்கு கார்யத்வமும் கர்ம வஸ்யத்வமும் ஸ்ருதிகள் கோஷிக்குமே
ஸ்ரீ மன் நாராயணனே மோக்ஷ பிரதன் -அந்தர்யாமியானவனுக்கே -ஸஹஸ்ர சீர்ஷா புருஷன்

விஷ்ணுக்கும் உத்பத்தி உண்டே காரணத்வம் சொல்லலாகாதே என்னில்
ரஷார்த்தம் ஸர்வ பூதா நாம் விஷ்ணுத்வம் உப ஜஜ்ஜிவான்
அஜாயமானோ பஹுதா விஜாயதே -என்று இச்சா பரிஹ்ருஹீதா திவ்ய மங்கள விக்ரஹம் –
ஆதியம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தவன்
இதம் பூர்ணம் –இத்யாதி

—————

சர்வ வியாக்யான அதிகரணம்-சம்பூர்ணம்

———

இப்பாத அதிகரண அர்த்தங்களை

1-அனு மாதிக அதிகரணத்தில் –சாங்க்யர் கூறும் ப்ரக்ரியா பிரகாரங்களும்
2-சமஸ அதிகரணத்தில் -அவர்கள் ஏற்கும் ஸ்ருஷ்டி க்ரமமும்
3- சாங்க்ய உப ஸங்க்ரஹ அதிகரணத்தில் -அந்த எண்ணிக்கை அமைப்பும்
4-காரணத்வ அதிகரணத்தில் -அவர்கள் கூறும் அவ்யாக்ருதத்துடன் ஐக்யமும்
5- ஜகத் வாசித்வ அதிகரணத்தில் -தன் பாபம் பற்றிய வசனமும்
6-வாக்ய அந்வய அதிகரணத்தில் -கர்ம பலமான தோஷ சம்பந்தமும்
7-ப்ரக்ருத் யதிகரணத்தில்-உபாதான நிமித்த பேதமும்
8-சர்வ வியாக்யான அதிகரணத்தில் -ப்ரஹ்மாதிகளுக்குக் காரணத்வமும் –

ஆக எட்டு பூர்வ பக்ஷ யுக்தி ஆபாஸ மூலகமான கருத்துக்களால் முன் மூன்று பாதங்களின் கருத்துக்கள் தாக்கப்படவே
ஸ்ருதி தாத்பர்யங்களை வெளிப்படுத்தி
அவற்றின் யதார்த்த அர்த்தங்களைக் காட்டி
ஸூத்ர காரர் ரக்ஷித்து அருளினார் என்று திரு உள்ளம் –

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -சம்பூர்ணம்

————————————————————————————————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை –முதல் அத்யாயம் –மூன்றாம் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

———-

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-மூன்றாம் பாதம் — 44 ஸூத்ரங்கள் –

கீழ் இரண்டு பாதங்களால்-
அஸ்பஷ்ட தரமாயும் அஸ்பஷ்டமாயும் உள்ள ஜீவாதி லிங்கங்கள் உடைய வாக்கியங்கள் நிரூபிக்கப்பட்டு
இதில்
ஸ்பஷ்டமான -பலவாறு தோன்றுதல் -நாடீ சம்பந்தம் -முதலிய லிங்கங்கள் உடைய வாக்கியங்கள் நிரூபிக்கப்படுகின்றன
முன் பாதத்தோடு சங்கதி

முன் அதிகரணத்தில் த்யு ப்ருத்வீ யாதி சம்பந்த புருஷன் பரமாத்மாவே என்று கூறப்பட்டது
இதில் பலவாறு தோன்றுதல் -நாடீ சம்பந்தம் -முதலிய லிங்கங்களால் ஆக்ஷேபித்து
ஜீவனாகத்தான் இருக்கக் கூடும் என்று
பூர்வபக்ஷம் செய்ய
அதுக்கு உத்தரம் இது என்று சங்கதி

மேலும் அத்ருஸ்யத் வதி கரணத்தில் முண்டக வாக்யங்களுக்கு த்ரை லோக்ய சரீர பரமாத்ம பரத்வம் ஸ்தாபிக்கப் பட்டது
அதை ஒட்டி வைஸ்வநர அதிகரணத்தில் சாந்தோக்யத்தில் உள்ள வைச்வானர வித்யா வாக்கியங்களும்
த்ரை லோக்ய சரீரத்வம் என்னும் லிங்கத்தால்
வைச்வானர ரூப ஜீவ பரத்வத்தை சங்கித்து பரமாத்ம பரத்வமே ஸ்தாபிக்கப் பட்டது –
இந்த அதிகரணத்தில் ப்ரசங்கத்தால் ப்ராப்தமான வேறு உபநிஷத் வாக்ய விசாரம் முடிந்த பின்
அத்ருஸ்யத் வதிகரண விஷயத்தை ஸ்தாபிக்க அதன் சேஷமாக முண்டகத்தில் உள்ள த்யுப் வாதி வாக்யமே
இங்கு சமாதானம் செய்யப்படுகிறது

முதல் பாதத்தை விட்டு மூன்றாம் பாதத்தில் அது ஏன் சொல்லப்படுகிறது -என்றால்
விலக்கத்தக்க ஜீவ லிங்கங்கள் இங்கு ஸ்பஷ்டமாய் இருப்பதால் அது பொருந்துவதாகும்
இதற்கு -ஸூத்ரம் -68– பிரகரணாத்–1-3-5—என்னும் ஸூத்ரத்தில் பலன் ஸ்பஷ்டமாய் உள்ளது –

1-3-1-த்யுத்வாத்யதிகரணம் -தேவலோகம் பூமி ஆகியவற்றின் இருப்பிடம் ப்ரஹ்மமே –

ஸூத்ரம் -64 –த்யுத்வாதி ஆயாதநம் ஸ்வ சப்தாத் –1-3-1-

பூமி தேவலோகம் பரம் பொருளுக்கே இருப்பிடம்
முண்டக –
யச்மிந்த்யௌ ப்ருத்வீ சாந்தரிஷ மோதம் மன சஹ பிராணைச்ச சர்வை தமேவைகம் ஜானதாத்மா நம் அந்யா வாசோ
விமுஞ்சத அம்ருதஸ் யைஷசேது–முண்டகம் 2-2-5–என்றும்

அரா இவ ரத நாபௌ சம்ஹதா யத்ர நாட்ய -ச ஏஷோ அந்தஸ் சர்தே பஹூதா ஜாயமான –முண்டகம்-2-2-6–என்றும்
மன சஹ பிராணை ஓதம் -என்றும்

நாராயண வல்லி உபநிஷத்தில்-1-3-2–
சந்ததம் சிராபிஸ்து லம்பத்யா கோச சந்நிபம் தச்யாந்தே ஸூஷிரம் சூஷ்மம் தஸ்மின் சர்வம் ப்ரதிஷ்டிதம் -என்று
ஜீவன்களின் நாடிகளுக்கும் பரம் பொருளே ஆதாரம் என்றும்

அதர்வணத்தில் முண்டக –யச்மிந்த்யௌ ப்ருத்வீ சாந்தரிஷ மோதம் -என்று தொட்ங்கும் வாக்கியத்தில்
தேவலோகம் பிருத்வீ இவற்றுக்கு ஆதாரமாக கூறப்படுபவன் ஜீவனா பரமாத்மாவா என்று சம்சயம்
ஜீவன் என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
அரா இவ ரத நாபௌ சம்ஹதா யத்ர நாட்ய ச ஏஷோ அந்தஸ் சர்தே பஹூதா ஜாயமான –முண்டகம்-2-2-6-ஸ்லோகங்களில்
நாடீ சம்பந்தமும்
பஹுதா ஜாயமானத்வமும்
மனஸ் ப்ராண ஸம்பந்தமும்
ஜீவ லிங்கங்களாகக் காணப்படுவதால் ஜீவனே யாக்கலாம் என்று பூர்வ பக்ஷம்

இதுக்கு விடை
த்யுத்வாதி ஆயாதநம் ஸ்வ சப்தாத் –
த்யுத்வாதி ஆயாதநம் -இவற்றுக்கு ஆயதனமாகக் கூறப்படுபவன் பரமாத்மாவே -ஜீவன் அல்லன்
ஸ்வ சப்தாத்-அம்ருதஸ் யைஷசேது–முண்டகம் 2-2-5–என்ற படி தனக்கு அசாதாரணமான சப்தத்தால் கூறுகிற
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயனாய வித்யதே -ஸ்வேதாஸ்வர -3-8–இத்யாதிகளாலே
மோக்ஷ ஹேதுத்வம் பரமபுருஷனுக்கே தானே ப்ரஸித்தமாய் உள்ளது –

ஸ்ரீ கீதையில் –
அஜோ அபிசன் நவ்ய யாத்மா பூதா நாம் ஈஸ்வரோ அபிசன் ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய சம்பவாம் யாத்மமாயயா -என்றும் –
அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்யா நாராயண ஸ்தித -என்றும்

ஸ்வேஸ்வதார உபநிஷத்தில் –
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயனாய வித்யதே -ஸ்வேதாஸ்வர -3-8–என்றும்

முண்டக உபநிஷத்தில் –
யஸ் சர்வஜ்ஞ சர்வவித்–முண்டகம்-1-2-9–என்று அனைத்தும் பரம் பொருளையே ஆதாரமாகக் கொண்டது என்கின்றன –
பிறப்பற்றவன் -அழிவற்றவன் -சர்வேஸ்வரன் -சங்கல்பம் அடியாக -பஹுதா ஜாயமான-முண்டகம் -2-2-6-என்றும்
அஜாயமாநோ பஹுதா விஜாயதே தஸ்ய தீரா பாரிஜாநந்தி யோனிம்-தைத்ரியம் -3-13-என்றும்
சொல்லுகிறபடி நித்ய மங்கள விக்கிரகத்துடன் திருவவதரித்து
அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கிறான் -ஜீவனுடைய அனைத்து உபகரணங்களும் ஆதாரம் என்றபடி –

——————————————-

ஸூத்ரம் -65–முக்தோ உபஸ்ருப்ய வ்யபதேசாத் ச –1-3-2-

முண்டக உபநிஷத் –
யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரமீசம் புருஷம் ப்ரஹ்மயோநிம் ததா வித்வான் புண்ய பாபே
விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி–முண்டக -3-1-3- -என்றும்

யதா நத்ய ஸ்யந்தமாநா சமுத்ரேஸ் தம் கச்சந்தி நாம ரூபே விஹாய ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த
பராத்பரம் புருஷன் உபைதி திவ்யம் -முண்டக -3-1-8–என்றும்

நதிகள் ரூப நாமம் இல்லாமல் கடலை அடைவது போலே முக்தாத்மாக்கள்,பரம்பொருளை அடைகின்றனர்-

பொன்னிறம் கொண்டவன் -நியமிப்பவன் -காரணமானவன் -அவனைக் கண்டதும்
புண்ய பாபங்கள் அற்று பரம சாம்யம் அடைகிறான் –

முக்தனுக்கு பரம புருஷனே பரம ப்ராப்யன் என்றதாயிற்று

——————————————-

ஸூத்ரம் -66–ந அநு மாநம் அதச் சப்தாத் பிராண ப்ருச் ச –1-3-3–

ந அநு மாநம் -இந்தப் ப்ரகரணத்தில் அனுமான பிராமண கம்யமான பிரதானம் இவற்றுக்கு ஆயதனம் ஆகாது
அதச் சப்தாத் -அந்தப் பிரதானத்தைக் குறிக்கும் ஸப்தம் இல்லாமையாலே
பிராண ப்ருச் ச –இவ்வாறே ஜீவனும் ஆக மாட்டான்

முன்பு உள்ள ஸூத்ரங்களில் பிராண வாயுவைக் குறிப்பிடாதலால் –
இங்கு பிரக்ருதியையும் ஜீவனையும் கூறப்பட வில்லை –

———————–

ஸூத்ரம் -67–பேத வ்யபதேசாத் –1-3-4-

ஜீவனின் தன்மைகளில் இருந்து இவனை வேறுபடுத்தி சொல்வதாலும் இவன் பரம் பொருளே –
முண்டக –
சாமா நே வ்ருஷே புருஷோ நிமக் நோ அநீசயா சோசதி முஹ்ய மான –
ஜூஷ்டம் யதா பச்யத் யந்யமீசம் அஸ்ய மஹிமானம் இதி வீத சோக

மரம் போன்ற அழியக் கூடிய சரீரத்தில் அழுந்தி மயங்கிய ஜீவன் –
அதே சரீரத்தில் உள்ள பரமாத்மா -தன்னிலும் வேறுபட்டவன்-நியமிப்பவன் –
மேன்மை உடைய பரமாத்மா -என்று உணர்ந்து வருத்தம் நீங்குகிறான் என்றபடி –

இது போன்ற வாக்யங்களாலே ப்ரக்ருதிக்கு அதீனனான இந்த ஜீவனின்
சோகத்தை நீக்குபவனாக வேறுபடுத்திக் கூறுவதால்
அந்த ஆயதனன் ஜீவன் அல்லன்

—————

ஸூத்ரம் -68– பிரகரணாத்–1-3-5-

முண்டக உபநிஷத்தில் பரம் பொருளின் தன்மைகள் கூறப்பட்டு
வேறு எதையும் கூறப்படாத காரணத்தால் இங்கு கூறப்படுகிறவன் பரம் பொருளே –
1-2-22-அத்ருச்யத்வாதி குணக தர்மோக்த-அவனுக்கே உரித்தான தன்மைகளுடன்
யாராலும் காணப்படாமல் உள்ளவன்-

முண்டக உபநிஷத் –
அத பரா யயா ததஷரமதி கமே யத்ததத்ரேஸ்ய மக்ராஹ்ய மகோத்த்ரம வர்ணம் அசஷூ ஸ்ரோத்ரம்
தத பாணி பாதம் நித்யம் விபும் சர்வகதம் ஸூ ஸூஷ்மம் ததவ்யயம் யத் பூத யோ நிம் பரிபச்யந்தி தீரா -என்றும்
சொல்லப்படுபவர் பரமாத்மாவே என்றவாறு –

இங்கும் இத்தைச் சொல்வான் என் என்னில்
நாடீ சம்பந்தம் -பஹுதா ஜாயமானத்வம் -மனஸ் பிராணங்களின் ஆதாரத்வம் இவற்றால் நடுவில்
பர ப்ரஹ்ம பிரகாரணத்துக்குத் தடை -இடையூறு -ஏற்பட்டு விட்டதோ என்ற
சங்கையைத் தீர்க்கவே இந்த அதிகரணம் ஆரம்பிக்கப் பட்டது என்று கருத்து —

————————

ஸூத்ரம் -69–ஸ்தித்யத நாப்யாம் ச –1-3-6-

முண்டக உபநிஷத்தில் இந்த உடலில் இருக்கும் தன்மை
பரம் பொருளுக்கு உடலில் இருக்கும் இருப்பு மட்டுமே –
ஜீவாத்மாவுக்கு மட்டுமே கர்ம பலன் அனுபவிக்க வேண்டும் –

த்வா ஸூ பர்ணா சாயுஜா சகாயா சமானம் வ்ருக்ஷம் பரிக்ஷஸ்வ ஜாதே தயோர் அந்நிய பிப்பலாம் ஸ்வாத் வத்தி
அனஸ்ந்னந்தயோ அபிசாகாதீதி-முண்டகம் -3-1-1-என்கிறபடி –
உண்ணாமல் தேஜஸ் மிக்கு -இருப்பவன் பரமாத்மா என்றபடி

இத்தாலும் இவற்றுக்கு ஆயதனம் பரமாத்மாவுக்கே
அஜாயமானோ பஹுதா விஜாயதே என்றபடி ராம கிருஷ்ணாதி அவதாரங்களுடன் ஆவிர்பாவமும்
நாடீ ஆதாரத்தவாதிகளும் பரம புருஷனுக்கே பொருத்தம் என்றபடி –

முதல் அதிகரணம் -த்யுத்வாத்யதிகரணம்- முற்றிற்று

————————————-

இரண்டாம் அதிகரணம் –பூமாதிகாரணம்

பரமாத்ம ப்ரகரண தொடர்ச்சியால் முண்டகம் முழுவதும் -அடி முதல் -முடிவு வரை பரமாத்ம பரமே என்று நிரூபிக்கப் பட்டது
அப்படியாகில் சாந்தோக்யத்தில் பூம வித்யையில் ஜீவ ப்ரகரண தொடர்ச்சியாலே ஜீவன் நிரூபிக்கப் படுகிறான்
என்று பூர்வ பக்ஷம் தோன்றவே
பிரமாணங்கள் மூலம் நிரூபிக்கும் இந்த அதிகரணம் பொருந்துகிறது

முன் அதிகரண விஷயமாக முண்டகத்தில்
யே ந அக்ஷரம் புருஷன் வேத ஸத்யம்-என்று
ஸத்ய அக்ஷர சப்தங்களால் குறிக்கப்படும் பரமபுருஷனே ஸத்ய ஸப்த வாஸ்யன் -என்பதை
இந்த அதிகரணத்தில் சாதிக்கிறார் என்று சங்கதி –

ஸூத்ரம் -70–பூமா சம் ப்ரசாதாத் தத் உபதேசாத் –1-3-7-

பூமா -பெரியவன் -ஜீவனை விட உயர்ந்த பெருமை யுடைய பர ப்ரஹ்மம் –

சாந்தோக்யம் ஏழாம் அத்தியாயத்தில் –
யத்ர நாந்யத் பஸ்யதி நாந்யத் ச்ருணோதி நாந்யத் விஜா நாதி ச பூமா அத யத்ர நாந்யத் பச்யத்
அந்யஸ் ச்ருணோதி அந்யத் விஜா நாதி தத் அல்பம் -என்று
பூமா பற்றியும் அல்பம் பற்றியும்
சாந்தோக்யத்தில் நாரத முனிவர் சனத் குமாரரிடம் ப்ரஹ்மம் பற்றி விளக்கி சொல்ல கேட்க

வாக்கு மனம் ஈடுபாடு புத்தி ஞானம் வலிமை உணவு நீர் ஆகாயம் ஞாபக சக்தி குறிக்கோள் -பிராணன் -என்று சொல்லி

ஏவம் விஜானன் அதிவாதீ பவதி -என்று பிராணனை ப்ரஹ்மம் என்று உணர்ந்தவன் அதிவாதி –
உயர்ந்த ஞானம் உடையவன் ஆகிறான்

சாந்தோக்யத்தில் மேலும் ஏஷ து வா அதிவததி யஸ் சத்யேன அதிவததி என்று
சத்யம் என்று ப்ரஹ்மத்தை உணர்ந்தவன் அதிவாதி ஆகிறான்

சம் ப்ரசாதா என்றது
ஜீவனையா என்கிற சங்கைக்கு –
ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே என்று
இந்த உடலை விட்டு நீங்கி அந்த உயர்ந்த ரூபத்தை அடைகிறான்
இதன் மூலம் ஸம் ப்ரசாதனன் என்பது ஜீவனைக் குறிக்கும் என்று உணரலாம்

ஆத்மாவை அறிய விரும்பும் நாரதருக்கு ஸநத்குமார்
நாமம் முதல் பிராணன் வரை பலவற்றையும் உபாசிக்கத் தக்கவையாக உபதேஸிக்கிறார்
பிராணனை விட எது உயர்ந்தது என்ற வினாவோ விடையோ இல்லை
ஆகையால் பிராணன் என்னும் ஜீவன் வரையிலும் ஆத்ம உபதேஸம் என்று தோன்றுகிறது
இதற்கு மேலும் பூமா என்பதும் ப்ரத்யகத்மாவே என்பதே பூர்வ பக்ஷம் –

இனி ஸித்தாந்தம்
பூமா -பூம குண விசிஷ்டன் பரமாத்மாவே
ஏன் எனில்

சம் ப்ரசாதாத் தத் உபதேசாத்-சம் ப்ரசாதன் என்னும் ஜீவனை விட உயர்ந்தவனாக
ஸத்யம் எனப்படும் பரமபுருஷனையே உபதேஸிக்கையாலே
ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே என்று சொல்லி
ஏஷ து வா அதிவததி யஸ் சத்யேன அதிவததி ஸூகம் த்வேவ விஜிஜ்ஞாஸி தவ்யம்
பூமாத் வேவ விஜிஜ்ஞாஸி தவ்ய-என்று
ஏராளமான ஸூகம் உடையவனாய் சத்யம் எனப்படுபவனாய் உள்ள பரம புருஷனை உபதேசிப்பதால்
பூமா எனப்படுபவன் பரமாத்மாவே என்று தேறுகிறது

பிராண ஸப்தத்தின் பொருளே ஆத்மா என்று எண்ணி ஆத்மாவை விட எது பெரியது என்று கேட்க வில்லை
ஆச்சார்யரும் கிருபையாலே சத்யமே அறியத்தக்கது என்று
ஏஷது வா அதி வததி-முதலிய வாக்யத்தால் உபதேஸிக்கிறார்
அதி வாதித்வம் என்பது தான் உபாசிக்கும் பொருளையே எல்லாவற்றையும் விடச் சிறந்தது என்று கூறுதல் –

——————

ஸூத்ரம் -71-தர்மோபபத்தே ச-1-3-8-

பூமா என்பதற்கு பல தன்மைகள் சொல்லப் பட்டுள்ளன அது பரம் பொருளை மட்டுமே குறிக்கும்

அந்த பரமாத்மா எதில் பிரதிஷ்டை செய்யப் பெற்று இருக்கிறார் –
தனது மஹிமையில் முதலிய வாக்கியங்களில் விளக்கப்பட்ட
தன் மஹிமையை பிரதிஷ்டை பெறுதல்
ஸர்வ காரணத்வம்
ஸர்வாத்மத்வம் -முதலிய தர்மங்கள் பகவானிடம் உப பன்னம் -பொருந்தும் -என்பதால்
பூமா என்பது பரமாத்மாவே என்பது உறுதி யாயிற்று

இந்த வித்யையில் தியானிக்க வேண்டியவைகளை சொல்லும் கிரமத்தில்
தஸ்மின் யதந்த ததன்வேஷ்டவ்யம் -என்று தேட வேண்டிய பொருளுக்கு ஆதாரமான
தஹர ஆகாசத்தைச் சொல்லுகையாலும்
பூத ஆகாசமே என்பது முதல் பக்ஷம்

இதற்கு விடை கூறுகிறார் இந்த ஸூத்ரத்தில்
தஹர ஆகாசம் பர ப்ரஹ்மம் தான் பூத ஆகாசம் அன்று
ஏன் எனில்
உத்தரேப்ய -மேல் வாக்கியங்களில் சொல்லப்படும் ஹேதுக்களால்
ஏஷ ஆத்மா அபஹத பாப்மா விஜரோ விமிருத்யு -என்று தொடங்கும் வாக்கியம்
யம் காமம் காமயதே ஸோ அஸ்ய ஸங்கல்பா தேவ சமுத் திஷ்டாதி -முதலிய வாக்யங்களால் கூறப்படும்
குணங்கள் பூத ஆகாசத்துக்குப் பொருந்தாதவை

இப்படி தஹர ஆகாசத்தைப் பூத ஆகாசம் அன்று என்று நிரூபித்து
மேலே ப்ரத்யகாத்மாவாக இருக்கலாமோ என்ற சங்கையையும் நிராகாரணம் பண்ணுகிறார்

அத ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதேஎன்கிற வாக்கியத்தில்
இதர பராமர்சாத் -ப்ரஹ்மத்தைத் தவிர வேறே ஜீவனைப் பேசுவதால்
ஸ இதி சேத் -இந்த தஹர ஆகாசம் ஜீவனே என்றால்
ந -அது தவறு
அசம்பவாத் -கூறிய அபஹத பாப் மத்வாதிகள் ஜீவனிடம் சம்பாவிதம் அல்லவே
ஸம்ப்ரஸாதன் என்றது பகவானின் சம்பந்த ஞானத்தால் ரசிகனான ஜீவனைக் குறிக்கிறது

ஸங்கல்ப -நாம -த்யானம் -விஞ்ஞானம் -பலம் -அன்னம் – நீர் -தேஜஸ் -ஆகாசம் -மன்மதன் -திசை -பிராணன் என்னும் ஜீவன்
இவை அனைத்துக்கும் மேல் ஸத்ய ஸப்த பொருளாக பரமாத்மாவே பூம குண விசிஷ்டானாயும்
த்யானிக்கத் தக்கவனாயும் கொல்லப்படுகிறான் என்று கருத்து –

சாந்தோக்யம் –ஏதத் அம்ருதம்-பூமா அழிவற்றது என்றும்
சர்வே மஹிம் நி -மற்று எதையும் சாராமல் தன்னுடைய பெருமையால் விளங்கி நிற்கும் என்றும்
ச ஏவாத ஸ்தாத் ச ஏவேதம் சர்வம் -என்று
அதுவே மேலும் கீழும் முன்னும் பின்னும் தெற்கும் வடக்காகவும் உள்ளது
போன்ற தன்மைகள் பூமா பரம் பொருளுக்கே பொருந்தும் என்றதாயிற்று –

பூமாதி கரணம் சம்பூர்ணம்

——————————————–

1-3-3-அஷர அதிகரணம் -அஷரம் எனபது ப்ரஹ்மமே –

கீழ் அதிகரணங்களில் -ஸத்யம் அக்ஷரம் என்ற சொற்களுக்கும் பொருளாகக் கூறப்பட்ட பரம புருஷனே
பூமாதி கரணத்தில் -ஸத்யம் ஸப்தத்தின் பொருள் என்று ஸ்தாபித்து
இவ்வதி கரணத்தில் அக்ஷரம் என்ற சொல்லின் பொருளும் அவனே என்று ஸ்தாபிக்கப் படுகிறது –

அஷரம் அம்பராந்த த்ருதே-1-3-9-

ப்ருஹத் ஆரண்யாகாவில் –
ச ஹோவாச ஏதத்வை தத் அஷரம் கார்க்கி ப்ராஹ்மணா அபிவ தந்தி அஸ்தூலம் அநணு
அஸ்ரஸ்வம் அதீர்க்கம் அலோஹிதம் அஸ்நேந ஹமச்சாயம் –(ப்ரு -3–8–8-)
வசக்னு மகா ரிஷியின் பெண் கார்க்கி என்ற பெண் யாஜ்ஞவல்க்யர் இடம் -கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் )-என்று
அஷரம் பருத்ததும் அல்ல சிறியதும் அல்ல குட்டியும் அல்ல நெட்டையும் அல்ல நிழலும் அல்ல இருளும் அல்ல
காற்றும் அல்ல ஆகாசமும் அல்ல-எதனுடன் சேர்ந்ததும் அல்ல எதையும் உண்பவன் அல்ல -இப்படி பலவாறு சொல்லி –

யயா தத் அக்ஷரம் அதிகம்யதே–முண்டகம் –1–1–5-
முண்டக-2-1-2- அஷராத் பாரத பர -என்று அஷரம் என்பதை பிரக்ருதியாக சொல்லி

இவ்வாக்கியத்தில் -அக்ஷரம் -பிரதானமா ஜீவனா பரமாத்மாவா என்ற சங்கை வர
முதலில் பிரதானம் என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
அக்ஷராத் பரத பர -என்ற இடத்தில்
அக்ஷர சப்தத்துக்குப் பிரதானம் என்ற பொருளில் பிரயோகம் காணப்படுகிறது
இதற்கு விடையே
அஷரம் -அக்ஷர ஸப்தத்தின் பொருள் பர ப்ரஹ்மமே
ஏன் எனில்
அம்பராந்த த்ருதே-ஆகாசத்தில் எல்லையான -முடிவான -காரணமான ஆகாசத்தினைத் தாங்குவதாகக் கூறுவதால்
எதில் ஆகாசம் பின்னப்பட்டு உள்ளது
சர்வ விகாரப் பொருள்களுக்கும் காரணமாய் -ஆகாசம் என்னும் சொல்லின் பொருளாய்
பிரதானத்துக்கும் ஆதாரமாகச் சொல்லப்பட்ட அக்ஷரம் பிரதானமாக இருக்க முடியாது
பரமாத்மா தான் -அது பிரதானத்துக்கு ஆதார பூதம் -அவனே அன்றி பிரதானம் எப்படி இருக்க முடியும்

ப்ருஹத் ஆரண்யாகாவில்-
யத் ஊர்த்வம் கார்க்கி திவோ யதர்வாக் ப்ருதிவ்யா யத் அந்தரா த்யாவா ப்ருத்வீ இமே யத் பூதஞ்ச பவச்ச
பவிஷ்யச் சேத்யா சஷதே-ஆகாச ஏவ தத் ஓதம் ச ப்ராதம் ச –5-8-4–என்று கேட்டு

ஆகாச ஏவ ததோதஞ்ச ப்ரோதஞ்ச -என்று அந்த பொருள்கள் சார்ந்து உள்ளது ஆகாசமே என்று பிரக்ருதியே ஆகும்
அது அஷரத்தை ஆதாரமாக கொண்டது என்பதால் அஷரம் ப்ரஹ்மமே-

—————————————————

ஆனால் ஜீவனுக்கும் அசேதனமான பிரதானத்துக்கான ஆதாரத்வம் கூடுமே
அக்ஷரம் என்பது ஜீவனாகலாம் என்கிற பக்ஷத்தை அடுத்துக் கண்டிக்கிறார் –

ஸூத்ரம் -73-சா ச பிரசாச நாத் –1-3-10-

அஷரம் ஸூரியனையும் சந்திரனையும் நியமிப்பதாக சொல்வதால் அது ப்ரஹ்மமே
யஸ்ய அஷரம் சரீரம் -என்பதால்
உடலுடன் தொடர்பு கொண்ட ஜீவனோ என்னில் –
ப்ருஹத் ஆரண்யாகாவில்-
ஏதஸ்ய வா அஷரஸ்ய பிரசாச நே கார்க்கி ஸூர்யா சந்திர மசௌ வித்ருதௌ திஷ்டத-என்று
ஸூரியனையும் சந்திரனையும் இயக்குவது என்பதால் ப்ரஹ்மமே

சா ச -அம்பராந்தமான பிரதானத்தின் த்ருதியும் -தாங்குதலும்
பிரசாச நாத் –இந்த அக்ஷரத்தின் நியமனத்தாலே ஏற்படுகிறது
ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய இத்யாதி -என்ற இது முதலியவற்றில்
தன் நியமத்துக்கு உள்பட்ட ஸர்வ வஸ்துக்களையும் தாங்குதல் பக்தனுக்கோ முக்தனுக்கோ கூடாது
ஆதலின் புருஷோத்தமன் ப்ர ஸாஸ்தா வான அக்ஷரமாம் –

———————

ஸூத்ரம் -74-அந்ய பாவ வ்யாவ்ருத்தே ச –1-3-11-

அஷரம் மிக உயர்ந்தது ஒப்பார் மிக்கார் இல்லாதது –
ப்ருஹத் ஆரண்யா காவில் கார்க்கி என்பர் கேட்க –
தத்வா ஏதத் அஷரம் கார்க்கி அத்ருஷ்டம் த்ரஷ்ட்ரு அஸ்ருதம் ஸ்ரோத்ரு-என்றும்
நான்யதோ அஸ்தி த்ரஷ்ட்ரு நான்யதோ அஸ்தி ஸ்ரோத்ரு-என்பதால்
அஷரம் பரம் பொருளே –

அந்ய பாவ -வேறு தன்மை -ப்ரதாநத்வமும் ஜீவத்வமும்
வ்யாவ்ருத்தே ச –விலக்கப்படுவதால் -அக்ஷரம் என்பது பரமாத்மாவே யாகும்
கார்கி இந்த அக்ஷரத்தின் இடமே ஆகாசம் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னப் பட்டுள்ளது
இந்த அக்ஷரமே பிறவற்றால் காணப்படாமல் தான் அனைத்தையும் காண்கிறது என்று சொல்லுகையால்
இப்படி ஸர்வஞ்ஞனாயும் ஸர்வ அந்தர்யாமியான ஸர்வ ஆதரன் எனும் அஷரம்
பிரதானத்தில் இருந்தும் ஜீவனிடம் இருந்தும் பிரிதாய் விலக்கிக் கூறப்படுகிறது என்று ஸித்தாந்தம் –

அஷர அதி கரணம் சம்பூர்ணம்

———————————————–

1-3-4-ஈஷதி கர்மாதிகரணம் -கானப்படுபவன் ப்ரஹ்மமே-

அத்ருஷ்டம் த்ரஷ்ட்ரு -என்று பரமாத்மா இதரங்களால் காணப்படாதவன் என்று கூறப்பட்டது
அப்படியாயின் -பராத்பரம் புரி சயம் புருஷம் ஈஷதே -என்று காணப்படுபவனாகக் கூறப்படுபவன்
பரமாத்மாவாய் இருக்க முடியாது என்ற சங்கை இந்த அதிகரணத்தில் தீர்க்கப்படுகிறது என்று சங்கதி –

ஸூத்ரம் -75-ஈஷதி கர்ம வ்யபதேசாத் ச –1-3-12-

ஜீவனுக்கும் மேலான புருஷன் என்று ப்ரஹ்மத்தை சொல்லிற்று –
ப்ரசன உபநிஷத்தில் -சத்யகாமன் என்பவனது கேள்விக்கு விடையாக
ய புநரேதம் த்ரிமாத்ரேண ஒம் இதி ஏதே ஏவ அஷரேண பரம்புருஷம் அபித்யாயித ச தேஜஸி ஸூர்யே சம்பன்ன-
யதா பாதோதரஸ் த்வாச்சா விநிர் முச்யதே ஏவம் ஹை வ ச பாப்மநா விநிர்முக்தி ச சமாபி உந்நீயதே ப்ரஹ்ம லோகம்
ச ஏதஸ்மாத் ஜீவநாத் பராத்பரம் புரிசயம் புருஷம் ஈஷதே – -என்று

புருஷன் என்ற ஹிரண்யகர்ப்பன் உபாசித்து ப்ரஹ்ம லோகம் அடைவதைச் சொல்லிற்று
என்பர் பூர்வ பஷத்தில்

அதர்வணத்தில் சத்யகாம ப்ரஸ்தானத்தில் -பராத்பரம் புரிசயம் புருஷம் ஈஷதே என்னும் பகுதியில்
தியானிக்கவும் பார்க்கவும் படும் புருஷன்
ஜீவ சமஷ்ட்டி ரூபமான நான்முகனா அல்லது பரம புருஷனா என்ற சம்சயம்
சமஷ்டி ரூபமான -ஜீவனான -சதுர்முகன்பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
ஒரு மாத்திரை அளவுள்ள ப்ரணவ உபாசன பலம் மனுஷ்ய லோகம் என்றும்
இரண்டு மாத்ரை அளவுள்ள ப்ரணவ உபாசன பலம் அந்தரிக்ஷ பிராப்தி என்றும்
மூன்று மாத்ரை உபாசன பலம் ப்ரஹ்ம லோக பிராப்தி என்றும் கூறப்பட்டு இருப்பதால்
அந்த லோகத்தை அடைந்து காணப்படுபவன் நான்முகனே என்று பூர்வ பக்ஷம்
இதுக்கு விடை –

ஆனால் மேலே –
யத்தத் சாந்தம் அஜாம் அம்ருதம் அபயம் பரஞ்ச –
என்பதால் உள்ள
யத்தத் கவயோ வேத யந்த -என்று
நித்ய ஸூரிகள் பார்க்கும் இடம் என்பதால் பரம புருஷனையே சொல்லிற்று-

ஈஷதி கர்ம -பார்வைக்கு விஷயமானவன்
ஸ -அந்த ஸ்ருதி ப்ரதிபாத்யனான பரமாத்மாவே -சதுர்முகன் அன்று ஏன் எனில்
வ்யபதேசாத் ச –சாந்தமாய் ஜாரை மரணம் அற்று அம்ருதமாய் அபயமாயும் பரமமான ப்ரஹ்மத்தை அடைகிறான்
என்று மேலே சொல்வதால்
இத்தகைய தர்மங்கள் பர ப்ரஹ்மத்துக்கே பொருந்தும்
அந்தரிக்ஷ லோகத்துக்கு மேலே நான்முகன் லோகம் என்பது சரி அல்ல
நடுவில் மஹர் லோகாதிகள் உண்டே
ஆகவே சர்வ பிராகிருத லோகங்களுக்கும் மேலே ஸ்ரீ வைகுண்டம் -யத்தத் கவயோ வேத யந்த -என்று
நித்ய ஸூரிகள் பார்க்கும் இடம் என்பதால் பரம புருஷனையே சொல்லிற்று-
ஆகவே நான்முகன் லோகம் அன்று என்று திரு உள்ளம் –

ஈஷதி கர்மாதிகரணம் சம்பூர்ணம்

——————————————————————-

1-3-5-தஹராதி கரணம் -தஹரா ஆகாயம் என்பதுவும் ப்ரஹ்மமே-

இப்படி கார்க அக்ஷர வித்யையில் அறியத் தக்க புரிசயனான புருஷனுக்கு பரமாத்மா நிலையை ஸ்தாபித்து
தஹர வித்யையில் ஆகாசம் எனப்படும் புரிசய புருஷனுக்கும் அப்ரமாத்மத் வம் இல்லை –
அவன் பரமாத்மாவே என்பது சங்கதி

ஸூத்ரம் -76-தஹர உத்தரேப்ய-1-3-13-

இதயத்தில் உள்ள தஹர என்னும் ஆகாயத்தில் உள்ளவனும் பர ப்ரஹ்மமே
சாந்தோக்யம் –8-1-1–அத யதிதம் அஸ்மின் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹரோ அஸ்மின் அந்தரே ஆகாசாஸ்
தஸ்மின் யதந்தஸ் தத் அன்வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ்ஞாசி தவ்யம் -என்று
ஆகாயமா பரம் பொருளா ஜீவனா –

பஞ்சபூதங்களில் ஒன்றே என்பது முதல் பூர்வ பக்ஷம்
ஏன் என்னில்
ஆகாசம் என்ற சொல் அந்தப்பொருளிலே பிரசித்தம்
தஸ்மின் யதந்தஸ் தத் அன்வேஷ்டவ்யம் -என்று
தேட வேண்டிய பொருளுக்கு ஆதாரமான தஹர ஆகாசத்தைச் சொல்லுகையாலும் பூதாகாசமே என்பது முதல் பூர்வ பக்ஷம்
இதுக்கு விடை

தஹர -தஹர ஆகாசம் பர ப்ரஹ்மம் தான் பூத ஆகாசம் அல்ல
ஏன் என்னில்
உத்தரேப்ய-மேல் வாக்யங்களால் சொல்லப்படும் ஹேதுக்களாலே

அதே உபநிஷத்தில் மேலே –
ஏஷ ஆத்மா அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யூர் விசோகோ விஜிகத்சோ அபிபாபசஸ்
சத்ய காம சத்ய சங்கல்ப -என்பதால் பரம் பொருளே

மேலும் அதே உபநிஷத்தில் மேலே –
யாவான் வா அயமாகா சாஸ்தா வா நேஷோ அந்தர் ஹ்ருதய ஆகாச-8-1-3- -என்று
ஆகாயம் போலே என்பதால் தஹரா எனபது ஆகாசம் இல்லை-

அன்வேஷ்டவ்யம்-என்று சொன்னதும் கல்யாண குணங்களைப் பற்றியே
அத யதிதம் அஸ்மின் ப்ரஹ்மபுரே-என்ற விஷய வாக்கியத்தின் பொருள் மேலே சொல்லப்படும் –

——————————————————————-

ஸூத்ரம் -77-கதி சப்தாப்யாம் ததா ஹி த்ருஷ்டம் லிங்கம் ச –1-3-14-

அனைவரும் சென்று அடையும் இடம் என்பதாலும்
ப்ரஹ்ம லோகம் என்பதாலும்
தஹரா பர ப்ரஹ்மமே -பரம் பொருளே

சாந்தோக்யம் –
தத் யதா ஹிரண்ய நிதிம் நிஹித ம ஷேத்ரஜ்ஞா உபர்யுபரி சஞ்சரந்தோ ந விந்தேயுர் யேவ ஏவேமாஸ் சர்வா பிரஜா
அஹர் அஹர் கச்சந்த்ய ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்தி அந்ருதேன ஹி பிரத்யூடா–8-3-2–என்றும்
ஏவமேவ இமா சர்வா பிரஜா சதி சம்பத்ய ந விதுஸ் சதி சம்பத்யா மஹயிதி-என்றும்

ப்ருஹத் ஆரண்யாகாவில்–
ஏஷ ப்ரஹ்ம லோகஸ் சம்ராடிதி ஹோவாச -என்பதால்
தஹரா என்றது பர ப்ரஹ்மமே-

நிலத்துக்குள் புதைந்து கிடைக்கும் புதையலை அறியாத மக்கள் அந்த நிலத்தின் மேலே அடிக்கடி நடமாடியும் அறிவது இல்லை
கதி சப்தாப்யாம் –
உபநிஷத் வாக்கியத்தில் ஏதம் என்று தஹர ஆகாசத்தைக் குறிப்பிட்டு ஸூ ஷுப்தி தசையில் செல்லும் -செல்லத்தக்க
தஹர ஆகாசத்தை ப்ரஹ்ம லோகம் என்று
இப்படி கமனத்தாலும் ப்ரஹ்ம லோக ஸப்தத்தாலும் குறிப்பது ப்ரஹ்மமே என்று சாதிக்க வல்லது
ததா ஹி த்ருஷ்டம்
இப்படி வேறு உபநிஷத்திலும் -ஏவமேவ இமா சர்வா பிரஜா சதி சம்பத்ய ந விதுஸ் சதி சம்பத்யா மஹயிதி-
முதலான வாக்கியங்களில் காணப்படுகிறது
லிங்கம் ச –
மற்ற ஸ்ருதிகளை விட்டு இதே ஸ்ருதியில் சொல்லும் கதியும் -ப்ரஹ்ம லோக ஸப்தமும்
வேறு எதையும் அபேக்ஷிக்காத லிங்கங்கள் என்றவாறு

———————————————-

ஸூத்ரம் -78-த்ருதேச்ச மஹிம் ந அஸ்ய அஸ்மின் உபலப்தே –1-3-15-

அனைத்துக்கும் ஆதாரமாக பற்றாக உள்ளவன் தஹரா என்பதால் பர ப்ரஹ்மமே –

சாந்தோக்யம் –
அத ய ஆத்மா ச ஹேதுர் வித்ருதி ரேஷாம் போகாநாம் சம்பேதாய-8-4-1–என்று
உலகங்கள் அனைத்துக்கும் ஆதாரம் என்றும்

ப்ருஹத் ஆரண்யாகாவில்–4-4-22- –
ஏஷ சர்வேஸ்வர ஏஷ பூதாதிபதி ரேஷ பூதபால ஏஷ சேதுர் விதரண
ஏஷாம் லோகா நாம சம்பேதாய -என்பதால் தஹரா என்றது பர ப்ரஹ்மமே-

த்ருதேச்ச மஹிம் ந அஸ்ய –இந்த பரமாத்மாவுக்கு ஜகத்தினைத் தங்குவது என்னும் மஹிமை
அஸ்மின் -இந்த தஹர ஆகாசத்தில்
உபலப்தே –தோன்றுகையாலே இந்த மகிமைக்கு ஆஸ்ரயமான தஹர ஆகாசம் பரமாத்மாவே தான்
யஸ் ஆத்மா ஸ சேதுர் வித்ருதி என்றும்
ஏஷாம் லோகாநாம் அசம்பேதாய இத்யாதி வாக்யங்களால் தாரணா ரூபமான மஹிமை சொல்லப்படுகிறது –

——————————————–

ஸூத்ரம் -79-பிரசித்தே ச –1-3-16-

ஆகாயம் என்று பரம் பொருளை ஒட்டியே பல இடங்களிலும் சொல்லப் பட்டதால்
தஹரா பர ப்ரஹ்மமே –

தைத்ரீய ஆனந்த வல்லியில் —
கோ ஹி ஏவ அந்யாத்க ப்ராணயாத் -யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத்-2-7-

மேலும் -சாந்தோக்யம்-1-9-1-
சர்வாணி ஹ வா இமானி பூதானி ஆகாசாத் ஏவ சமுத்பத்யந்தே– -என்று
ஆகாயம் பரம் பொருள் என்ற காரணத்தால்
தஹரா என்றது பர ப்ரஹ்மமே –

ஸ்ருதி ப்ரசித்தமும்
அபஹத பாப் மத்வாதிகளுடன் கூடிய ப்ரஸித்தி ப்ரபலம்

இப்படி பூத ஆகாசம் இல்லை என்று நிரூபித்து
மேலே பிரத்யக்தமா இல்லை என்று நிரூபிக்கிறார்

———————————————–

ஸூத்ரம் -80-இதர பராமர்சாத் ச இதி சேத ந அசம்பவாத் –1-3-17-

தஹரா ஜீவனாக இருக்க முடியாது -ஜீவனுக்கு பொருந்தாத தன்மைகள் சொல்லப் படுவதால்

சாந்தோக்யம் –
அத ய ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண
அபி நிஷ்பத்யதே ஏஷ ஆத்மேதி ஹோவாச ஏதத் அம்ருதம் அபயம் யேதத் ப்ரஹ்ம-8-3-3- -என்று
ஆத்மா சம்பிரசாதன் என்றும்
பரம் பொருளைக் காட்டிலும் வேறு ஒருவனாக சொல்லப் பட்டதால்
சாந்தோக்யத்தில் சொல்லப்பட்ட தஹரா ஆகாயத்தின் தன்மைகள்
பர ப்ரஹ்மத்துக்கு மட்டுமே பொருந்தும்-

அத ய ஏஷ சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண-என்கிற வாக்கியத்தில்
இதர பராமர்சாத் -ப்ரஹ்மத்தைத் தவிர வேறு ஜீவனைப் பேசுவதால்
ச இதி சேத் -இந்த தஹர ஆகாசம் ஜீவனே என்றால்
ந-அது தவறு
அசம்பவாத் –கூறிய அபஹத பாப் மதவாதி கல்யாண குணங்கள் சம்பாவிதம் அல்ல என்பதால்
ஸம் ப்ரஸாதன் என்றது பகவத் சம்பந்த ஞானத்தால் ரசிகனான ஜீவனைக் குறிக்கிறது –

——————————————–

ஸூத்ரம் -81-உத்தராத் சேத் ஆவிர்ப்பூத ஸ்வரூப து –1-3-18-

பிரஜாபதி ரிஷி இந்த்ரனிடம் ஜீவனுக்கும் உயர்ந்த தன்மைகள் ப்ரஹ்மத்தின் அருளால் –
சம்ப்ரசாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண நிஷ்பத்யதே –

ஆனால் தஹரா ஆகாயத்துக்கு இந்த தன்மைகள் மறையாமல்
இயற்கையாகவே உள்ளன –
எனவே தஹரா ஜீவன் அல்ல பரம் பொருளே-

உத்தராத் சேத் -பிரஜாபதி வாக்யத்தால் -மேலே ஜீவனுக்கும் இந்த அபஹத பாப் மத்வாதிகள் கூறுவதால்
ஜீவனுக்கு அவை சம்பாதிக்காது என்று கூறுவது சரியில்லை
ஆவிர்ப்பூத ஸ்வரூப து –முதலில் கர்ம சம்பந்தத்தால் மறைக்கப்பட்ட ஸ்வரூபத்தை யுடைய ஜீவன்
பின்பு பரமாத்மா ஸம்பத்தியால் ஸ்வரூப ஆவிர்பாவம் அடைகிறான் என்று பிரஜாபதி வாக்கியம்
து -தஹர ஆகாஸனோ என்னில் -மறைக்கப்படாத ஸகல கல்யாண குணங்களும் ஸ் வாபாவிகமாக
இவனது ஸ்வரூப ஆவிர்பாகத்துக்கும் காரணமான பரமபுருஷனே -ஜீவன் அல்லன்
ஸத்யன் என்ற சொல்லின்படி சேதன அசேதன நியாமகன்
ஆகவே பரமாத்மாவே அன்றி ஜீவன் அல்லன்

இப்படியாகில் ஜீவனை ஸம் ப்ரஸாத என்று ஜீவனை ஏன் பிரஸ்தாபிக்க வேண்டும் என்றால் -மேல் –

——————————————

ஸூத்ரம் -82-அன்யார்த்த ச பராமர்ச –1-3-19-

ஜீவனுக்கு பரம் பொருளின் கடாஷத்தால் உயர்ந்த தன்மை அடைவதை சொல்லி
பரம் பொருளின் உயர்ந்த தன்மை காண்பிக்கப் பட்டது-

அன்யார்த்த ச பராமர்ச –
பராமர்ச -தஹர வாக்கியத்தில் ஜீவனை பிரஸ்தாபித்தது
அன்யார்த்த ச -தஹர ஆகாச ப்ராப்தியாலே முக்தனுடைய ஸ்வரூப ஆவிர்பாவம் ஏற்படுகிறது என்று
அவனது கல்யாண குணத்தை விளக்கவே என்றவாறு –

———————————————

ஸூத்ரம் -83-அல்ப ஸ்ருதே இதி சேத் தத் உக்தம் –1-3-20

தஹரா ஆகாயம் சிறியது என்பதால் பர ப்ரஹ்மம் அல்ல எனபது சரியல்ல –
இதயத்தில் உள்ளான் -1-2-7 ஸூத்ரம் சொல்லவே
சிறிய உருவம் உள்ளவனாக சொல்லப் பட்டது-

அல்ப ஸ்ருதே –ஆராக்ர சத பாகஸ்ய -இத்யாதி வாக்கியப்படி அணு பரிணாமம் ஜீவனுக்கே கூடும் என்றால்
இதி சேத்–அது தவறு
தத் உக்தம் -ஸர்வத்ர ப்ரஸித்த அதிகரணத்தில் -நிசாயத்வா தேவம் என்ற ஸூத்ரத்தில் இது விளக்கப்பட்டு விட்டது
உபாஸகர்கள் அனுக்ரஹத்துக்காக கட்டை விரல் அளவுள்ள
திருமேனி உள்ளவன் என்பதால் அல்பத்வம் சொல்லப்படுகிறது என்று திரு உள்ளம் –

———————————————–

ஸூத்ரம் -84-அநு க்ருதே தஸ்ய ச –1-3-21-

முண்டகம் –
யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரம் ஈசம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் ததா வித்வான்
புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யமுபைதி –3-1-3–என்பதால்
இயற்கையாக அந்த தன்மைகளைக் கொண்ட தஹரா ஜீவன் இல்லை பர ப்ரஹ்மமே-

அநு க்ருதே தஸ்ய ச
தஸ்ய -அந்த பரமாத்மாவின்
அநு க்ருதே -ஸாம்யத்தை அடைகையாலும்
சாம்யத்தை அடையும் ஜீவனைக்காட்டிலும் சாம்யத்தை உண்டாக்கும் பரமாத்மாவுக்கு தஹரத்துக்கு –
பேதம் ஸித்தமாயிற்று
நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி -என்று முக்தனுக்கு ஸாம்யா பத்தி -சொல்லிற்றே –

————————————————-

ஸூத்ரம் -85-அபி ஸ்மர்யதே-1-3-22-

ஸ்ரீ கீதை –
இதம் ஜ்ஞானம் உபாஸ்ரித்ய மம சாதர்ம்யம் ஆகாதா–சர்க்கே அபி நோபே ஜாயந்தே
பிரளயே ந வ்யதந்தி ச -14-2- -என்று இதே கருத்து சொல்லப் பட்டதே-

இங்கும் பகவத் உபாஸனத்தாலே அவனுடன் ஸாம்யம் உடைய அனுக்ரஹம்
பகவானால் என்று சொல்லப்படுகிறதே

அதயதிதம் அஸ்மின் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம என்று அனுவதித்து
தஹரோ அஸ்மின் அந்தர ஆகாச என்ற வாக்கியத்தில் அஸ்மின் -இந்த அற்பமான இதயம் என்னும் தாமரையில்
அந்தர ஆகாச -உள்ளிருக்கும் ஆகாசம் எனப்படும் பரமாத்மா
ய -எவன் உள்ளானோ
தஸ்மின் -அவனிடம்
யத் -எந்த எந்த கல்யாண குணம் உள்ளதோ
தத் -அந்த ப்ரஹ்மமும் அந்த கல்யாண குண ஜாதங்களும் இரண்டும் உபாசிக்கத்தக்கவை
என்று யத் சப்தத்தை அத்தியாஹரம்-வருவித்திக் கொண்டும் கொள்ளாமலும் பொருள் சொல்லலாமே –

1-3-5-தஹராதி கரணம் சம்பூர்ணம்

——————————————–

1-3-6-ப்ரமிதாதி கரணம் -கட்டை விரல் அளவுள்ளவன் ப்ரஹ்மமே –

அல்ப ஸ்ருதே –ஸூத்ரத்தில் கூறிய அல்ப பரிமாணத்வம்
ஜீவனுக்கும் கடவல்லியில் கூறப்பட்டுள்ளதால்
அங்குஷ்ட ப்ரமிதன் ஜீவனாகவே இருக்கலாமே
என்ற சங்கையைப் பரிஹரிக்கவே
இந்த அதிகரணம் என்று சங்கதி –

ஸூத்ரம் -86-சப்தாத் ஏவ ப்ரமித–1-3-23-

கடவல்லியில் -அங்குஷ்ட மாத்ர புருஷ மத்ய ஆத்மனி திஷ்டதி என்றும்
ஈஸானோ பூத பவ்யஸ்ய ந ததோ விஜூ குப்சதே -என்றும்
அங்குஷ்ட மாத்ர புருஷோ ஜ்யோதிரிவா தூமக என்றும்
ஹ்ருதய ஸம் நிவிஷ்ட என்றும்
முதலிலும் நடுவிலும் இறுதியிலும் கூறப்பட்ட அங்குஷ்ட ப்ரமிதன்
ஜீவனா பரமாத்மாவான என்ற சங்கை
ஜீவனே என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்

ஸ்வேதாச்வதார உபநிஷத்தில்-
பிராணாதி ப சஞ்சரதி ஸ்வகர்மபி அங்குஷ்ட மாத்ர-என்றும்
அங்குஷ்ட மாத்ர ரவி துல்ய ரூப என்றும்
பிராண வாயு கர்ம வினைகள் சம்சாரம் என்பதால்
அங்குஷ்ட மாத்ர என்றது ஜீவனே பூர்வ பஷம்

சப்தாத் ஏவ ப்ரமித–பரமாத்மாவுக்கு அசாதாரணமான ஈஸானோ பூத பவ்யஸ்ய என்னும் ஸப்தத்தாலேயே
பிராணாதி ப சஞ்சரதி ஸ்வகர்மபி-என்ற வாக்கியத்தில் கர்ம சம்பந்தமாகிய ஜீவ லிங்க சப்தம் இருப்பது போல்
பரமாத்ம லிங்கம் இங்கு இருப்பதாலேயே
பரமாத்மாவே தான் ஜீவன் அல்லன் என்று திரு உள்ளம்

கடோ உபநிஷத்தில் –
ஈசா நோ பூத பவ்யச்ய ந ததோ விஜூ குப்சதே -என்று
முக் காலங்களையும் நியமிக்கும் தன்மை பரம் பொருளுக்கே உண்டு -எனவே
அங்குஷ்ட மாத்ரன் பரம் பொருளே-

ஆனால் விபுவான பரமாத்மாவுக்கு
அங்குஷ்ட ப்ரமிதத்வம் எவ்வாறு பொருந்தும் என்பதற்கு மேல் ஸூத்ரம்

———————————————————–

ஸூத்ரம் -87-ஹ்ருதி அபேஷயா து மனுஷ்யாதிகாரத்வாத்-1-3-24-

மனிதர்கள் இதயத்தில் பர ப்ரஹ்மம் உள்ளான் என்பதைக் காட்டவே கட்டை விரல் அளவு உள்ளவன் -என்கிறது –
உபாசனைக்கு ஏற்றவாறு என்றவாறு –

ஹ்ருதி அபேஷயா து மனுஷ்யாதிகாரத்வாத்
து சப்தம் சங்கையை விலக்குவது
ஹ்ருதி –மனிதனின் ஹ்ருதயத்தில் உபாஸனார்த்தமாக
தத் அபேஷயா -அத்தை அபேக்ஷித்து விபுவான பர ப்ரஹ்மத்துக்கு அந்த அளவு கூறப்பட்டது
மனுஷ்யாதிகாரத்வாத்-உபாஸனம் விதிக்கும் ஸாஸ்த்ரம் மனிதர்களை உத்தேசிக்கையாலே
அவர்கள் இருதயத்தை முன்னிட்டே இந்த அளவு என்று ப்ரஹ்மத்துக்குக் கூறப்பட்டது –

ப்ரமிதாதி கரணம் சம்பூர்ணம்

————————————————————-

மனிதர்களுக்கு உபாசனத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டு
பின்பு தேவத அதிகரணம்
மத்வாத் யதி கரணம்
அப ஸூத்ர அதிகரணம்
ப்ரசங்க சங்கதியால் இடையே வந்தன
இப்படி விசேஷ அதிகாரம் பற்றி நிரூபிப்பதால் ஸாமான்யமான அதிகாரத்தைப் பற்றிப் பேசும்
மூன்றாம் அத்யாயம் -நான்காம் பாதத்துடன் சாங்க்யம் -கலப்பு -என்ற தோஷம் இல்லை

இப்படி பிரசங்காத் வந்த மூன்றில் முதலில் தேவத அதிகரணத்தில்
தேவதைகளுக்குப் பொதுவாக உபாஸனத்தில் அதிகாரம் உண்டா என்று கேட்டு
அத்தை ஸ்தாபிக்கிறார் –

1-3-7-தேவாதிகரணம் -தேவர்களுக்கு ப்ரஹ்ம உபாசனை உண்டு

ஸூத்ரம் -88-தத் உபரி அபி பாதராயண சம்பவாத்-1-3-25-

உபாசனை மனிதர்களுக்கு மட்டும் அல்ல தேவர்களுக்கும் பொருந்தும் என்கிறார் பாதராயணர்-

உடல் இல்லையே துன்பம் வாராதே உபாசனை வேண்டாம் -என்பர் பூர்வ பஷிகள்

தத் -அந்த ப்ரஹ்ம உபாஸனம்
உபரி அபி -ஸ்வர்க்க லோகத்தில் உள்ள தேவர்களுக்கும்
பாதராயண -உண்டு என்று பாதாரயணர் கூறுகிறார்
சம்பவாத்-அநேந ஜீவேந அநு ப்ரவிஸ்ய நாம ரூப வியாகரவாணி -என்பதால்
தேவதைகளுக்கும் சரீரம் உண்டு
மோஷையில் ஆசையும் சாமர்த்தியமும் கூடுவதால் உபாஸனம் உண்டு –

நாம ரூப வியாகரணம் -தேவர்களுக்கும் பொருந்துமே –

சாந்தோக்யம் –
தௌ சமித் பாணி பிரஜாபதி சகாசமா ஜக்மது -என்பதால்
தேவர்களுக்கும் உடல் உண்டு உபாசிப்பார்கள் என்றதாயிற்று-

———————————————————–

ஸூத்ரம் -89-விரோத கர்மணி இதி சேத் ந அநேக பிரதிபத்தே தர்சநாத்–1-3-26-

தேவர்கள் பல உடல்களை எடுத்துக் கொள்ள முடியுமே –
ஒரே நேரத்தில் பல உடல்களை எடுத்துக் கொண்டு ஹவிர்பாஹம் பெறலாம்

சௌபரி பல உடல்களை கொண்டதும் உண்டே-

விரோத கர்மணி இதி சேத் ந
தேவதைகளுக்கு சரீரம் உண்டு என்று ஏற்றால் யாகாதி கர்மங்களில் எந்த இடத்துக்கு அவர்கள் செல்வார்கள்
என்னும் ஆஷேபம் தவறு
அநேக பிரதிபத்தே தர்சநாத்–ஒரே நேரத்தில் பல உடல்களை எடுத்துக் கொள்ளும் சாமர்த்தியம் உண்டே
எனவே விரோதம் வராது என்றவாறு

————————————————–

ஸூத்ரம் -90-சப்தே இதி சேத் ந அத பிரபவாத் ப்ரத்யஷ அநுமா நாப்யாம்-1-3-27-

தேவர்கள் உடலுடன் உள்ளவர்கள் என்றால் வேத வாக்யங்களுக்கு பங்கம் வருமோ என்றால் வாராது
இந்த்ரன் பொதுப் பெயர் வேத ஒலியைக் கொண்டே பிரஜாபதியைப் படைக்கின்றான் –
பூ என்ற சொல்லின் மூலம் பூமியைப் படைக்கின்றான்
ஆரம்பத்தில் வேத வாக்யங்கள் படைக்கப் பட்டன -அதில் இருந்தே அனைத்தையும் படைத்தான் -மனு ஸ்ம்ருதி-

விரோத -சொல்லை முன் ஸூத்ரத்தில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்
சப்தே -வைதிக சப்தத்தில் விரோதம் வரும்
சரீரம் உண்டு என்றாலே அவயவங்களுடன் இருந்து உத்பத்தி விநாசம் வரும்
உத்பத்திக்கு முன்னும் விநாசத்துக்குப் பின்னும் இந்திராதி சொற்களுக்கு உரிய பொருள் இல்லாமல் போகும்
அநித்யத்வமும் ஏற்க நேரிடுமே என்றால்
இதி சேத் ந -இப்படிச் சொல்வது தவறு
அத பிரபவாத் -இந்த்ராதிகள் நசித்தவுடன் நித்தியமான வேதங்களால் இந்த்ராதியின் ஆக்ருதிகளை நினைத்து
நான்முகன் புது புது இந்த்ராதிகளைப் படைக்கிறான்
ததா யதா பூர்வமே கல்பயத்
இதுக்குப் பிரமாணம் ஏது என்றால்
ப்ரத்யஷ அநுமா நாப்யாம்-ஸ்ருதியாலும் ஸ்ம்ருதியாலும் தெரிந்து கொள்கிறோம் –
ஆகையால் அவையே பிரமாணம்

வேதத்தில் –
வேதே ந நாம ரூபே வியாகரோத் ஸதா ஸதீ பிரஜாபதி என்றும்
ஸ்ம்ருதியில்
ஸர்வேஷாஞ்ச ஸ நாமானி கர்மாணி விவிதானி ச
வேத ஸப்தேப்ய ஏவாதவ் ப்ருதக் ஸம்ஸ் தாச்ச நிர்மமே -என்றும் உள்ளனவே –

———————————————–

ஸூத்ரம் -91-அத ஏவ ச நித்யத்வம் —1-3-28-

விஸ்வா மித்ரர் வசிஷ்டர் கூறியது போன்றவை –
இவர்கள் கல்ப காலத்தில் கர்ம பலன்களுக்கு தக்க படி தோன்றுகின்றனர்
அவர்களுக்கு வேதத்தில் குறிப்பட்ட பகுதிகள் தானாகவே தெரியத் தொடங்கும்
ஆக வேத வரிகள் ஒவ்வொரு கல்பத்திலும் தொடர்ச்சியாக ஒருவருக்குப் பின் ஒருவருக்கு உபதேசிக்கப் படும்

அத ஏவ -ப்ரஹ்ம தேவன் வைதிக சப்த்தத்தாலே ஜகத்தில் ஆகாரத்தை நினைத்து ஸ்ருஷ்டி செய்வதாலேயே
ச நித்யத்வம்-நித்யத்வம் ஸித்திக்கிறது
நைமித்திக பிரளயம் முடிந்த உடன் ப்ரஹ்ம தேவன் வஸிஷ்ட விச்வாமித்திராதியரின் பதவிகளுக்கு
உரிய புண்யம் மிக்க ஜீவர்களை நினைத்து
விச்வாமித்ரஸ்ய ஸூ க்தம் பவதி -முதலிய வேத பாகங்களையும் ஆராய்ந்து முன் கல்பங்களின் படியே
இந்த கல்பத்திலும் ஸ்ருஷ்டித்து அவர்கள் மூலமாக மந்த்ரங்கள் ஸூ க்தம் இவற்றைப் பரப்பச் செய்தார்

ஆனால் பிராகிருத பிரளயத்தில் ப்ரஹ்மாதிகள் யாவரும் நசித்த படியால்
பிராகிருத ஸ்ருஷ்டி தொடங்கும் போது நித்யம் எப்படிப் பொருந்தும்
என்ற சங்கையை மேல் பரிஹரிக்கிறார் –

————————————————-

ஸூத்ரம் -92-சாமான நாம ரூபாத்வாத் ச ஆவ்ருத்தௌ அபி அவிரோத தர்சநாத் ஸ்ம்ருதே ச —1-3-29-

பிரளய காலத்துக்கு பின்புமுன்பு உள்ளது போலே தோன்றுவதால் வேதங்கள் நித்யம் –
தைத்ரியம் –
ஸூர்யா சந்த்ரமசௌ தாதா யதா பூர்வமகல்பயத் -என்றும்

ஸ்வே தாஸ்வதார உபநிஷத்தில் –
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை -என்றும்

ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் –
யதர்த்துஷ் வ்ருது லிங்காநி நாநா ரூபாணி பர்யயே த்ருச்யந்தே தாநி தான்யேவ ததா பாவா யுகாதிஷூ -என்றும்
கல்பத்திலும் முன்பு இருந்தவை போலே அனைத்தும் தோன்றும் -என்றதே –

வேதங்களை முன் வரிசை மாறாமல் பிரமனுக்கு உபதேசிக்கிறார்
வேதத்துக்கு நித்யத்வம் என்பது முன்பு உச்சரித்த க்ரமத்தை நினைத்து
அதே க்ரமப்படி மறுபடியும் உச்சரிக்கப் படுவதே
அக்ஷரங்கள் நித்யம் என்பது அன்று –

தேவாதிகரணம் சம்பூர்ணம்

—————————————————-

1-3-8–மத்வதிகரணம் -தேவர்களுக்கு மதுவித்யை உண்டு-

கீழே தேவாதி சாமான்யத்துக்கு பகவத் உபாசன அதிகாரம் ஸ்தாபிக்கப் பட்டது
இதில் வஸ்வாதி தேவதா விசேஷங்களுக்கு மது வித்யை என்னும்
ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் உண்டு என்று ஸ்தாபிக்கிறார் –

ஸூத்ரம் -93-மத்வாதிஷூ அசம்பவாத் அநதிகாரம் ஜைமிநி-1-3-30-

மது வித்யை போன்ற விதைகளுக்கு தேவர்களுக்கு அதிகாரம் இல்லை -என்பர் ஜைமிநி
ஸூரியன் தேனை சேகரிக்கின்றான்-வேத ஓசைகளே தேன் –
நான்கு திசைகள் நான்கு வேதங்கள்-கிழக்கில் இருந்து ருக் வேதம்
இந்த அமிர்தம் போன்ற தேவை உபாசிப்பவன் வஸூக்களில் ஒருவன் ஆகிறான் –

சாந்தோக்யம் மது வித்யையில்
அசவ் வா ஆதித்யோ தேவ மது -என்று தொடங்கி
தத்யத் பிரதமம் அம்ருதம் தத் வசவ உப ஜீவந்தி –என்று கூறி –
ஸ ஏதத் அம்ருதம் வேத வஸூநா மேகோ பூத்வா அக்னிநைவ முகேந ஏத தேவ அம்ருதம்
த்ருஷ்ட்வா த்ருப் யந்தி –முதலிய வாக்யங்களால்
ருக் யஜுஸ் சாமாதி வேதங்களில் சொல்லப்பட்ட
கர்மாக்களால் ஏற்படும் ரசத்துக்கு ஆதாரம் ஆதலின்
ஆதித்யனை தேவமது என்றும்
கிழக்கில் வஸூக்கள்
தெற்கில் ருத்ரர்கள்
மேற்கே ஆதித்யர்கள்
வடக்கே மருத்துக்கள் சாத்யர்கள் போக்யமாக அனுபவிப்பதாகச் சொல்லி
அவர்கள் அனுபவிக்கும் ஆதித்யனின் அம்சங்களை உபாசிக்கத் தக்கவை யாகவும்
ப்ராப்யங்களாகவும் உபதேசிக்கிறது –

தேவர்கள் முன்பே வஸூக்களாய் உள்ளதால்
எப்படி தங்களையே உபாசிக்க முடியும் -எனவே பொருந்தாது –
பலனான வஸூத்வம் முன்னமே அடையப் பெற்று இருப்பதாலும் அதிகாரம் இல்லை என்பதே பொருந்தும்
என்பதும் பூர்வ பக்ஷம்
இதையே இரண்டு பூர்வ பக்ஷ ஸூத்ரங்கள் கூறும் –

மத்வாதிஷூ அசம்பவாத் -தாமே தம்மை உபாசித்து அசம்பாவிதம்
கர்மாவும் கர்த்தாவுமாய் இருக்காய் சம்பவியாது
அநதிகாரம் ஜைமிநி-
எனவே அதிகாரம் இல்லை என்று ஜைமினி

—————————————————-

ஸூத்ரம் -94-ஜ்யோதிஷி பாவாத் ச –1-3-31-

உயர்ந்த ஜ்யோதி ரூபமான பரம்பொருளை தேவர்கள் உபாசிப்பதால் –
ப்ருஹத் ஆரண்யாகாவில் –
தம் தேவா ஜ்யோதிஷாம் ஜயோதிராயுர் ஹோபாசதே அம்ருதம் -என்று சொல்லப்பட்டதே

அதனால் ப்ரஹ்ம உபாசனை தேவர்களுக்கும் மனுஷ்யர்களுக்கும் சொல்லப் பட்டாலும்
தேவர்களுக்கு அது சிறப்பு மது வித்யை பொருந்தாது-

ஜ்யோதிஷி -பர ப்ரஹ்மத்தின் இடம்
பாவாத் ச –தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதி -என்ற பர ப்ரஹ்ம உபாஸனம்
மனுஷ்ய தேவ இருவருக்கும் பொதுவாய் இருந்தும்
ஜ்யோதிஸ்ஸான பர ப்ரஹ்மத்தை தேவர்கள் உபாசிக்கிறார்கள் என்ற சிறப்பான வசனம்
வஸூ வாதிகளுக்கு மது வித்யையில் அதிகாரம் இல்லை என்று காட்டுகிறது என்பர் பூர்வ பக்ஷி

———————————————————

ஸூத்ரம் -95-பாவம் து பாதராயண அஸ்தி ஹி —1-3-32-

தேவர்களுக்கு மது வித்யையில் அதிகாரம் உண்டு என்று பாதராயணர் கருதுகின்றார் –
30/31 சூத்ரங்கள் பூர்வ பஷமாக்கி
இது சித்தாந்தம்

மது வித்யை மூலம் வஸூக்கள் தங்கள் அந்தர்யாமியாக உள்ள பரம் பொருளை உபாசிக்கிறார்கள் –
தங்களையே அல்ல-
இந்த கல்பத்தில் வஸூவாக உள்ளவர்கள் அடுத்த கல்பத்திலும் வஸூவாக இருக்க உபாசிக்கின்றனர்-
எனவே அவர்களுக்கும் அதிகாரம் உண்டு-

து சப்தம் ஜைமினி பக்ஷத்தை மறுதலிக்கிறது
பாவம் து பாதராயண -அதிகாரம் உண்டு என்று பாதராயணர் கூறுகிறார்
ஏன் எனில்
அஸ்தி ஹி-உபாஸ்யத்வமும் ப்ராப்யத்வமும் உள்ளன
ய ஏதா மேவம் ப்ரஹ்ம உபநிஷதம் வேத -என்று க்ருத்ஸன முழு மது வித்யைக்கும் ப்ரஹ்ம வித்யை என்றே பெயர்
இவர்களை சரீரமாகக் கொண்ட பர ப்ரஹ்ம உபாசனை என்றவாறு
கல்பாந்தரத்தில் தங்கள் தேஹ முடிவில் ப்ரஹ்மத்தை அடைவதில் விரோதம் இல்லையே –

————————————————————

2-9- அப ஸூத்ர அதிகரணம்

கீழே தேவாதிகளுக்கும்
வ ஸூ முதலிய தேவ விசேஷங்களுக்கும்
ஆர்த்தித்தவமும் சாமர்த்தியமும் இருப்பதால் ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் உண்டு என்று ஸ்தாபித்தார்
அப்படி என்றால் நான்கு வர்ணத்தாருக்கும் ஏற்கலாமே
என்ற சங்கையை நீக்குகிறார் இதில்

ஸூத்ரம் -96-ஸூகஸ்ய தத நாதர ஸ்ரவணாத் ததா ஆத்ரவணாத் ஸூச்யதே ஹி –1-3-33

அன்னப் பறவைகளின் பேச்சைக் கேட்ட ஜானஸ்ருதியின் சோகம் -அவன் உடனே
ரைக்வ ரிஷியிடம் ஓடியதில் இருந்து புரிகின்றது
இது முதல் 39- வரை ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம ஆராய்ச்சி பொருந்துமா என்றது பற்றி விளக்கும்

இரண்டு அன்னப் பறவைகள் -அவரை ரைக்வர் என்று நினைத்தாயோ என்றதும் ஓடி
ரைக்வரும் ஸூத்ரா உன்னுடைய மரியாதையைக் கண்டு மகிழ்ந்து உபதேசிக்கின்றேன் என்றார்
இது ஜாதி வாக்கியம் அல்லை
அன்னப் பறவைகள் பேச்சை கேட்டு மனம் வருந்தியதால் என்பதே பொருள்-

அர்த்தித்தவமும் சாமர்த்தியமும் ஸூத்ரர்களுக்கும் சம்பவிக்கலாமே
அக்னி கிடையாது என்றாலும் மனஸ்ஸாலே உபாஸிக்கலாமே
இதிஹாஸ புராணங்களைக் கேட்ட மாத்ரத்தாலேயே ப்ரஹ்ம ஸ்வரூபாதி ஞானம் ஏற்படலாமே
விதுரர் போன்றவர் ப்ரஹ்ம நிஷ்டர்கள் என்பது பிரசித்தம் அன்றோ
ஸம் சர்க்க வித்யையில் -ஆஜஹார இமாச் ஸூத்ர -என்று ஸூ த்ர சப்தத்தால்
ஞான சுருதியை அழைத்து ரைக்குவர் ப்ரஹ்ம வித்யையை உபதேஸிக்கையாலே
ஸூ திறனுக்கும் அதிகாரம் உண்டு என்பர் பூர்வ பக்ஷி
அதை நிரஸனம் செய்கிறார்

உபநயனம் செய்து வேத அத்யயனம் செய்து வேதாந்த ஞானத்தால் தான் ப்ரஹ்ம ஞானம் என்பது ஸாஸ்த்ர சித்தம்
இதிஹாஸ புராணாதிகள் ஸ்வ தந்திரமான உபாயங்கள் அல்ல -வேதாந்த விளங்கங்களே
விதுராதிகள் முன் ஜென்மத்தில் ப்ரஹ்ம வித்யா நிஷ்டர்கள் -அந்த ஸம்ஸ்காரமே இப்பிறவியிலும் தொடர்ந்தது
ஸூத்ர என்று அழைத்தது சோகம் அடைந்தவன் என்றவாறு -ஜாதி வசனம் அல்ல
தத நாதர ஸ்ரவணாத்-அந்த ஹம்ஸ ரூபம் கொண்ட இரு ரிஷிகளின் அநாதர வாக்யத்தைக் கேட்டு
ததா ஆத்ரவணாத்—ஜானை சுருதி ராஜா ரைக்குவரைத் தேடி ஓடி வந்ததால்
அஸ்ய -அந்த ஞான சுருதிக்கு
ஸூக் ஸூஸ்யதே ஹி –சோகம் காணப்படுகிறது அன்றோ

——————————————————————-

ஸூத்ரம் -97-ஷத்ரியத்வ கதே -ச-1-3-34-

தானம் அன்ன தானம் போன்றவை ஞானஸ்ருதி செய்ததால் அவன் ஷத்ரியன்-
ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம உபாசனை அதிகாரம் இல்லை

ஸம் வர்க்க வித்யையின் தொடக்கத்தில்
ஜானஸ்ருதிர் ஹ பவ்த்ராயண பஹு தாயீ -முதலிய வாக்யங்களால்
சிறந்த கொடையாளி -கிராமங்களை தானம் பண்ணினவன்
அன்னம் உண்பித்தவன் -என்று
ஷத்ரிய வர்ணாஸ்ரம நிறைந்தவன் என்பதாலும்
ஸூத்ரன் என்ற சங்கை வேண்டாம் –

———————————————————————

ஸூத்ரம் -98-உத்தரத்ர சைத்ரரதேன லிங்காத் —1-3-35-

உத்தரத்ர -இந்த வித்யையின் மேல் பகுதியில் ப்ராஹ்மண ஷத்ரியர்களுக்கே சம்பந்தம் காணப்படுகிறது
அதக ஸுநகம் காபேய மபி பிரதாரிணஞ்ச -இத்யாதி வாக்கியத்தில்
அபி ப்ரதாரீ என்று சைத்ரதரன் எனப்படும் ஷத்ரியன் சொல்லப்படுகிறான்
சைத்ரரதேன லிங்காத் —காபேயம் என்பதுடன் தொடர்பால் -லிங்கத்தால் -அபிப்ரதாரி என்பவன்
ஷத்ரியன் என்றும் சைத்ரதரன் என்றும் தோன்றுகிறது
மற்றோர் பிரகரணத்தில் காபேயனுடன் சம்பந்தம் உள்ளவன் சைத்ரரதன் ஷத்ரியனே என்றும் காணப்படுகிறது
ஏதே நவ சைத்ர ரதம் காபேயோ அயா ஜயன் -என்ற இடத்திலும்
சைத்ர ரதோ நாம ஏக க்ஷத்ர பதிர ஜாயத -என்கிற இடத்திலும் அவ்வாறே

ஆகவே இவ் வித்யையில் ப்ராஹ்மணரான ரைக்குவரை விட்டு
வேறான ஞானஸ்ருதியும் ஷத்ரியனாகவே இருக்க வேண்டும் என்று கருத்து –

சைத்த்ரரதன் என்பவன் ஷத்ரியன் என்பதற்கு அடையாளங்கள் உண்டே –
சம்வர்க்க வித்யையில்-சௌனகன் மகனான காபேயனும்-
காஷ சே நி என்பவரின் மகனான அபிப்ராதாரி இருவரும் உணவு உன்ன அமர்ந்த போது
ஒரு பிரமச்சாரி வந்து பிச்சை கேட்க –
இங்கு காபேயன் பிராமணன் என்றும் அபிப்ரதாரி ஷத்ரியன் என்றும்
ஏதேர வை சைத்ரரதம் காபேயா அயாஜயன் -என்பதன் மூலம் காபேயன் பிராமணன் என்றும்
சைத்ரரதோ நாம ஏக ஷத்ரபதி ஜாயத -என்பதன் மூலம்
அபிப்ரதாரி ஷத்ரியன் என்று அறியலாம்

இத்தால் காபேயனுடன் ப்ரஹ்ம விதியை பயின்ற அபிப்ரதாரி -சைத்ர ரத வம்சத்தில் வந்தவன் -ஷத்ரியன் என்றும்
ரைக்ருவர் உடன் தொடர்புடைய ஞான ஸ்ருதியும் ஷத்ரியனாக இருக்க வேண்டும் –

அதனால் ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்றதாயிற்று

————————————————————–

ஸூத்ரம் -99-சம்ஸ்கார பராமர்சாத் தத பாவாபி லாபாத் ச –1-2-36-

ப்ரஹ்ம வித்யை கூறும் வரிகளில் உப நயனம் பஞ்ச சம்ஸ்காரங்கள் கூறப்படுவதாலும்-
சாந்தோக்யம் உபத்வா நேஷ்யே-உப நயனம் செய்து வைக்கின்றேன் -என்று உள்ளது
ப்ரஹ்ம விதியை பற்றி சொல்லும் பகுதியில் –
ந ஸூத்ரே பாதகம் கிஞ்சித் ந ச சம்ஸ்காரம் அர்ஹதி –
ஸூத்ரர்களுக்கு உப நயனம் போன்றவை பொருந்தாது என்பதாலும் அவர்களுக்கு
ப்ரஹ்ம உபாசனைக்கு அதிகாரம் இல்லை

சம்ஸ்கார பராமர்சாத் -வித்ய உபதேச பிரகரணத்தில் -உபத்வா நேஷ்யே -என்று உபநயனத்தைக் கூறுகையாலே
தத பாவாபி லாபாத் ச – ந ஸூத்ரே பாதகம் கிஞ்சித் ந ச சம்ஸ்காரம் அர்ஹதி –என்று
ஸூத்ரனுக்கு உப நயனம் இல்லை என்று சொல்வதால் ஞானசுருதி ஸூத்ர ஜாதியன் அல்லன் –

எனவே ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்றதாயிற்று-

—————————————————————-

ஸூத்ரம் -100-தத் பாவ நிர்த்த்தாரேண ச ப்ரவ்ருத்தே —1-3-37-

நைதத் அப்ரஹ்மணோ வேத்தும் அர்ஹதி
ஸூத்திரன் அல்ல என்பதை உறுதி செய்த கொண்ட பின்பே ப்ரஹ்ம வித்யை உபதேசிக்கப் பட வேண்டும்

ஜபாலை என்பவரின் குமாரன் சத்யகாமன் ஒரு குருவிடம் ப்ரஹ்ம வித்யை கற்க செல்ல –
உனது கோத்ரம் என்ன என்று கேட்டதும் தெரியாது என்று சொன்னதும்
இத்தை கேட்டதும் பிராமணன் மட்டுமே இப்படி உண்மை சொல்வான் –
எனவே உனக்கு ப்ரஹ்ம வித்யை உபதேசிக்கிறேன் -என்றார் –

——————————————————————-

ஸூத்ரம் -101-ஸ்ரவணாத் யய நார்த்த பிரதிஷேதாத் —1-3-38-

ஸூத்ரர்கள் வேதத்தைக் கேட்பதும் பொருளை ஆராய்வதும் அதன் பலனை பெறுவதும் கூடாது என்று வேதங்கள் கூறும்
தஸ்மத் ஸூத்ர சமீபே நாத்யேதவ்யம்-என்பதாலும்
ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம உபாசனைக்கு அதிகாரம் இல்லை –

——————————————————————–

ஸூத்ரம் -102-ச்ம்ருதே ச-1-3-39-

ஸ்ம்ருதிகளும் ஸூத்ரர்கள் வேதம் கேட்டால் காதை அறுக்க வேண்டும் –
வேதம் ஓதினால் நாக்கை அறுக்க வேண்டும்
மனப்பாடம் செய்தால் உடலை அறுக்க வேண்டும் என்பதால் அதிகாரம் இல்லை-

அத ஹாஸ்ய வேதம் உப ஸ்ருண்வதஸ் த்ரபு ஜதுப்யாம் ஸ்ரோத்ர பரிபூரணம் –இத்யாதி
ஸ்ம்ருதியாலும் ஸூத்ரனுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்று ஸித்தம்

அப ஸூத்ராதி கரணம் சம்பூர்ணம்

—————————————————————–

ஸூத்ரம் -103–ப்ரமிதாதி கரணம் சேஷம்-1-3-39-

அங்குஷ்ட ப்ரமித அதிகரணத்தில் மனுஷ்ய உபாஸன அதிகாரம் பற்றிய பேச்சால்
ப்ராசங்கிகமாக மூன்று அதிகரணங்களில் தேவதாதி அதிகாரத்தை பிரஸ்தாபித்து
ப்ரக்ருதமான அங்குஷ்ட பிரமிதனுக்குப் பரமாத்மத் வத்தை
இரண்டு ஸூத்ரங்களாலே சாதிக்கிறார் –

ஸூத்ரம் -104-கம்ப நாத் –1-3-40

அங்குஷ்ட மாத்ரனைக் கண்டு தேவர்களும் அஞ்சி நடுங்குவதால் அவனே பரம் பொருள் –

கட உபநிஷத் –
யதிதம் கிஞ்ச ஜகத் சர்வம் பிராண எஜதி நிஸ்ஸ்ருதம்
மஹத்பயம் வஜ்ர முத்யதம் ய ஏதத் விதுரம் ருதாஸ்தே பவந்தி
பயதா ச்யாக் நிஸ் தபதி பயாத் தபது ஸூர்ய
பயா இந்திரஸ்ஸ வாயுஸ்ஸ ம்ருத்யுர் தாவாதி பஞ்சம-

தைத்ரிய உபநிஷத் –
பீஷாஸ்மாத் வாத பவதே பீஷோ தேதி ஸூர்ய
பீஷாஸ் மாதக் நிஸ் சேந்த்ரஸ்ஸ ம்ருத்யும் தாவதி பஞ்சம –

இப்படிப்பட்ட பெருமைகளை யுடையவனே பர ப்ரஹ்மம்-

——————————————-

ஸூத்ரம் -105-ஜ்யோதிர் தர்சநாத் –1-3-41-

அங்குஷ்ட மாத்ரனை மிகுந்த ஒளி உள்ளவனாகச் சொல்லுவதால் அவனே பரம் பொருள் –

கட உபநிஷத் –
ந தத்ர ஸூர்யோபாதி ந சந்திர தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோயம் அக்னி –
தமேவ பாந்த மநு சர்வம் தஸ்ய பாஸா சர்வமிதம் விபாதி –

இப்படிப்பட்ட பெருமை உடையவன் பரம் பொருளாகவே இருக்க முடியும்-

ப்ரமிதாதி கரணம் சேஷம் சம்பூர்ணம்

————————————————–

1-3-10-அர்த் தாந்தரத்வ அதி வ்யபதேச அதிகரணம் -ஆகாயம் எனபது ப்ரஹ்மமே-

முன்பு அங்குஷ்ட பிரமிதம் பரமாத்மா என்று சாதிக்கப் பட்டது
அதற்கு முன் தஹர வித்யை புத்தியில் இருப்பதால்
அதற்கு அடுத்த ப்ரகரணத்தில் உள்ளதும்
தஹர வித்யைக்கு அங்கமுமான
ஆகாஸோ ஹவை நாம ரூபயோர் நிர்வஹிதா என்னும் வாக்யத்தில் முக்தாத்மாவே பேசப்படுகிறான்
என்று சங்கித்து
நிராகரிக்கிறார் என்று சங்கதி

ஸூத்ரம் -106-ஆகாச அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் —1-3-42-

ஆகாசத்துக்கும் மற்றவற்றுக்கும் வேறுபாடுகள் தெளிவாகக் காட்டப் பட்டுள்ளதால் ஆகாயம் எனபது பரம் பொருளே

முக்தி பெற்ற ஜீவனே ஆகாசம் என்பர் பூர்வ பஷி –

சாந்தோக்யம் –
அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் சந்திர இவ ராஹோர் முகாத் ப்ரமுச்ய
தூத்வா சரீரமக்ருதம் க்ருதாத்மா ப்ரஹ்ம லோகமபி சம்பவாமி –

சித்தாந்தம் –
ஆகாயத்தைக் கூறும் பொழுது –
நாம ரூபயோர் நிர்வஹிதா -பெயர் மற்றும் உருவங்களை நிர்வஹிப்பவன்
என்பதால் ஆகாயம் ஜீவன் அல்ல பரம் பொருளே –

ஆகாச -ஆகாசம் எனப்படுவது பரமாத்மாவே -முக்தன் அல்லன்
ஏன் எனில்
அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் —பரமாத்மாவுக்கு அசாதாரணமான நாம ரூபங்களை நிர்வஹித்தலும்
அவற்றால் ஸம்பந்தப்படாமையும் கூறப்படுவதாலும்
மேலும்
நிருபாதிக ப்ரஹ்மத்வம் அம்ருதத்வம் ஆத்மத்வம் இவற்றாலும்
ஆகாசம் என்பது பரமாத்மாவே –

———————————————————

தத்வ மஸி -என்று ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்யம் சொல்லுவதாலும்
நேஹ நா நாஸ்தி -என்று பேதத்தைத் தடுப்பதாலும்
ஜீவனைக் காட்டிலும் பரமாத்மாவுக்கு அர்த்தாந்தரம் சொன்னது தகாது என்ற சங்கை தோன்ற
விடை தருகிறார் –

ஸூத்ரம் -107-ஸூஷூப்த்யுத் க்ராந்த்யோ பேதேந –1-3-43-

தூங்கும் பொழுது உள்ள ஜீவனும் உயிர் பிரியும் பொழுது உள்ள ஜீவனும் வெவ்வேறு என்பதால்
ஜீவன் வேறு பரம்பொருள் வேறு

பூர்வ பஷி –
தத்வ மஸி–
அஹம் பிரம்மாஸ்மி –
நேஹ நா நாஸ்தி -என்பர்

சித்தாந்தம் –
ப்ருஹத் உபநிஷத் –
ப்ராஜ்ஞே நாத் மநா சம்பரிஷ்வக்தோ ந பாஹ்யம் கிஞ்சன வேத நாந்தரம் –
ஜீவன் உறங்கும் பொழுது பரம் பொருளால் அணைத்துக் கொள்ளப் படுகிறான் –
அப்பொழுது அவனுக்கு எதுவும் தெரியாத நிலையில் உள்ளான் என்றும்

ப்ராஜ்ஞே நாத் மநான் வாரூட உத்சர்ஜன்யாதி -என்று
பரம் பொருளுடன் சென்று சேர்த்தி பெறுகின்றான்

எனவே ஜீவனும் பரம் பொருளும் ஓன்று அல்ல -ஆகாயம் பர ப்ரஹ்மமே ஜீவன் அல்ல-

வ்யபதேசாத்-என்ற பதத்தைக் கூட்டிக் கொள்ள வேண்டும்
ஸூ ஷூப்த்யுத் க்ராந்த்யோ பேதேந –ஸூ ஷூப்ததி தசையிலும் யுத்க்ராந்தி தசையிலும்
அத்யந்த அஞ்ஞனனான ஜீவனைக் காட்டிலும்
யோ பேதேந –அதே சமயத்தில் ஸர்வஞ்ஞனான ஜீவனைக் குறிப்பிடுவதால் இரண்டும் வெவ்வேறே
பரமாத்மா அர்த்தாந்தர பூதனானவனே என்றவாறு –

————————————————————-

ஸூத்ரம் -108-பத்யாதி சப்தேப்ய —1-3-44-

பதி என்ற பதம் மூலம் ப்ரஹ்மம் அழைக்கப் படுவதால் அவனும் ஜீவனும் ஓன்று அல்ல

ப்ருஹத் உபநிஷத் -சர்வஸ்யாதி பதிஸ் சர்வஸ்ய வஸூ சர்வஸ் யேசாந-என்று
அனைத்துக்கும் நாயகன் -நியமிப்பவன் -சர்வேஸ்வரன் என்பதால்
பரம் பொருளும் ஜீவனும் வேறு -ஆகாசம் எனப்படுபவன் பரம் பொருளே –என்றதாயிற்று-

பத்யாதி சப்தேப்ய -ஸர்வஸ்ய அதிபதி –ஸர்வஸ் ஈஸாநா –ஸர்வஸ்ய வஸீ –இத்யாதிகளால்
தழுவப்படும் ப்ராஞ்ஞனை பதி என்றும் -ஈஸாநா என்றும் வஸீ என்றும் சொல்வதால்
ஆகாசம் பரமாத்மாவே என்று ஸித்தமாயிற்று
ஐக்யம் கூறியதும்
பேதத்தைத் தடுத்ததும்
ஸர்வ ஜகத்துக்கும் அந்தர்யாமி ஒருவனே
ஆதலாலும் ப்ரஹ்ம சரீரம் இல்லாத வஸ்துவே உலகில் இல்லாமையாலும் பொருந்தும் என்று
ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலான் -என்ற ஸ்ருதியிலே நன்கு கூறப்பட்டது என்று திரு உள்ளம்

அர்த் தாந்தரத்வ அதி வ்யபதேச அதிகரணம் சம்பூர்ணம்

———-

பத்து அதிகரணங்களால் கூறப்பட்ட கருத்துக்கள்

1-த்யுப் வாத் யாயதனம் –விஸ்வமே பகவானுக்கு ஆத்மா
2-பூமா -எல்லையற்ற கருணை
3-அக்ஷர -நியமனமும் ஸர்வ ஆதாரத்வமும்
4-ஈஷதி கர்ம வ்யபதேசம் -முக்தர்களுக்கு போக்யமான ஸ்வ பாவம்
5-தஹர -தஹரமான தன்னை ஆதாரமாகக் கொண்ட அனைத்தையும் கொண்டமை -தஹர ஸ்வாதார ஸர்வத்வம்
6-ப்ரமித -ஹ்ருதயத்தில் பரிமிதனாய் இருந்து ஸர்வ நியாந்தாவாதல்
7-தேவதா -தேவதைகளால் உபாஸிக்கப் படுதல்
8-மத்வதி கரணம் -வஸூ வாதி தேவதைகளால் ஸ்வ சரீரக பரமாத்மா உபாஸிக்கப் படுத்தல்
9-அப ஸூத்ர –ஸூ த்ராதிகளால் உபாஸிக்கக் தகாத தன்மை
10-அர்த்தாந்தரத்வா திவ்ய பதேச -நாம ரூபாதி ஏக கர்த்ருத்வம்

என்ற பத்து கல்யாண குணங்களாலே பூஷிதனான ஸ்ரீயப்பதி புருஷோத்தமன்
இந்த மூன்றாம் பாதத்தால் விசாரித்து ஸ்தாபிக்கப் பட்டான் –
என்று ஸ்வாமி தேசிகன் அருளுகிறார் –

————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை –முதல் அத்யாயம் –இரண்டாம் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவிநீம்
பூர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூமதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

———-

முதல் பாதத்தில் மிகவும் தெளிவற்ற -அஸ்பஷ்ட தரமான -ஜீவாதி லிங்கங்களையுடைய
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் -முதலிய வேதாந்த வாக்கியங்களை
பரம புருஷனே காரணம் என்று விளக்குவன என்று ஸ்தாபித்த ஸ்ரீ பாஷ்யகாரர்
பின்வரும் மூன்று பாதங்களால்
அஸ்பஷ்டமாயும்
ஸ்பஷ்டமாயும்
ஸ்பஷ்ட தரமாயும் உள்ள
ஜீவாதி லிங்கங்களைக் கொண்ட வாக்கியங்களை முறையே
பரம புருஷ காரணத்வத்தை விளக்குவன என்று ஸ்தாபிக்கிறார் என்று இவ்விடம் சங்கதி

மேலும் முதல் பாதத்தால் வேதாந்த வாக்யங்கள் ப்ரஹ்ம பரம் அல்ல என்ற யோகம் விலக்கப்பட்டது -அயோக வ்யச்சேதம் –
மேல் வரும் மூன்று பாதங்களாலும் -அவ்வாக்கியங்கள் ப்ரஹ்மத்தைத் தவிர வேறு ஒன்றையும் விலக்காதவை
என்று அந்ய யோக வ்யச்சேதம் -என்று மற்றோர் சங்கதி

மேலும் முதல் பாதத்தில் சர்வ வேதாந்த வாக்கியங்களும் ப்ரஹ்மத்தைப் போதிப்பது வல்ல என்று ஆக்ஷேபித்து
ப்ரஹ்ம போதகங்களே என்று நிரூபிக்கப் பட்டது
பின் வரும் மூன்று பாதங்களிலோ ஒவ்வொரு வாக்கியம் ப்ரஹ்ம பரமானாலும் மற்றோர் வாக்யம் அப்படி அல்ல என்று
க்ரமமாகப் பல வாக்கியங்களையும் ஆக்ஷேபித்து ப்ரஹ்ம பரமே என்று சாதிக்கப் படுகிறது என்று மூன்றாவது சங்கதி –

இதனால் முதல் பாதம்
அடுத்து த்ரீ பாதீ -என்று இரு பிரிவாக்கப் பேசப்படுகிது

இரண்டாம் பாதத்தில் ஜகத்து ப்ரஹ்ம சரீரம் என்றும்

மூன்றாம் பாதத்தில் ப்ரஹ்மம் உலகின் ஆதாரமானவன் என்றும்

நான்காவதில் தாம் சொல்லும் கருத்துக்களுக்கு விரோதமாக வாதம் செய்யும் சாங்க்யாதிகளின்
பர பக்ஷிகளின் பக்ஷம் கண்டிக்கப்படுகிறது என்றும் சங்கதி –

————

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்- இரண்டாம் பாதம் -ஆறு அதிகரணங்கள் —33 ஸூத்ரங்கள் –

——–

முதல் அதிகரணம்-சர்வத்ர பிரசித்த அதிகரணம்-ப்ரஹ்மமே அனைத்தும் எனபது பரம் பொருளே-

முன் அதிகரணத்தில் –ப்ரதர்த்தன வித்யையில் –
இந்த்ர ப்ரணாதி ஸப்தங்கள் மஹா வாக்ய ஸ்வாரஸ் யத்தாலே எவ்வாறு ப்ரஹ்ம பரங்கள் ஆகின்றனவோ
அப்படியே சாண்டில்ய வித்யையும் மஹா வாக்ய ஸ்வாரஸ் யத்தாலே ஜீவாத்ம பரம் என்ற சங்கையால்
இவ் வதிகரணத்திற்கு சங்கதி

ஸூத்ரம் -33-சர்வத்ர பிரசித்த உபதேசாத்-1-2-1-

சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலா நிதிசாந்த உபாசீத -அனைத்தும் ப்ரஹ்மமே
தோஷங்களும் கூட -கர்மம் தொடர்பு -தோன்றி மறைந்து -இவையுமா ப்ரஹ்மம்
அந்த்ர்யாமிதயா-என்பதால் –
எந்த ஒன்றிடம் இருந்து அனைத்தும் தோன்றுகிறதோ -எதனைச் சார்ந்து வாழ்கின்றதோ –
எதனிடம் சென்று மறைகின்றதோ அதுவே ப்ரஹ்மம்-

சாந்தோக்யம் -3-14-1- சர்வம் கல்விதம் ப்ரஹ்ம–தஜ்ஜலாநிதி
தைத்ரிய -3-1- யதோ வா இமாநி பூதா நி ஜாயந்தே யேன ஜாதாநி ஜீவநதி யத்ப்ரத்யபி சம்விசந்தி தத்விஜ்ஞாச ஸ்வதத் ப்ரஹ்ம –
தைத்ரிய உபநிஷத் –6-9-ஆனந்தோ ப்ரஹ்மேதி வ்யஜா நாத் ஆனந்தாத் ஏவ கல்வி மானி பூதானி ஜாயந்தே -என்று
ஆனந்தமாகவே ப்ரஹ்மத்தை அறிய வேண்டும்
ஸ்வேதாஸ்வர உபநிஷத் -6-9- ச காரணம் கரணாதி பாதிபோ ந சாஸ்ய கஸ்சித் ஜா நிதா ந சாதிப –அவனே காரணம் –
அனைத்து ஆத்மாக்களுக்கும் ஆத்மாவாக உள்ளவனும் அவனே -என்கிறது-

சாந்தோக்யம் இரண்டாம் அத்தியாயத்தில் ஜ்யோதிர் வித்யைக்குப் பிறகு சாண்டில்ய வித்யை
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம–தஜ்ஜலாநிதி-என்று தொடங்குகிறது
தன் கருத்தையும் பிறர் கருத்தையும் பின் பற்றி இங்கு பாஷ்யத்தில் இரண்டு நிர்வாஹங்கள் காட்டப்படுகின்றன

சர்வம் கல்விதம் ப்ரஹ்ம–தஜ்ஜலாநிதி -என்னும் இடத்தில்
ப்ரஹ்ம சொல் ஜீவனைக் குறிக்கிறதா பரமாத்மாவையா என்று சங்கை
இங்கு பரமாத்மா அல்ல -ப்ரத்யகாத்மா -ஜீவனே -என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
ஜீவனுக்கே ஸர்வ பாபங்களுடன் ஸமமான இடத்தில் இருக்கும் நிலை உண்டு –
ஸர்வம் என்று குறிப்பிடும் ப்ரம்மா முதல் ஸ்தாவரம் வரையான ஜகத்தின் வடிவம் என்பது
ஜீவனுக்கே கூடும் என்கிறார்

இதனைக் கண்டிக்கிறார் ஸூத்ரகாரர் –

சர்வத்ர -ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம -இதில் ஸர்வம் என்று குறிப்பிடும் ஜகத்தில் –
ப்ரஹ்ம என்று சொல்லப்படும் ஜகத்தில் -ஆத்மா -ப்ரத்ய காத்மா -ஜீவன் அன்று –
பிரசித்த உபதேசாத்-வேறு ஸ்ருதிகளிலும் ப்ரஸித்தமான ஜன்ம ஸ்திதி லய காரணத்வத்தை
ஜகதாத் மத்வத்துக்கு ஹேதுவாக தஜ்ஜலான் -என்று உபதேஸிக்கையாலே
தஜ்ஜமாயும்
தல்லமாயும்
ததனமாயும்
இருப்பதால் மூன்று ஹேதுக்கள் ஆகின்றன
தஜ்ஜலான்–என்கிற பதம் நகாராந்தம்
ஜகத்தில் ஜன்மாதி ஹேதுத்வம் -ஏகோ ஹை வை நாராயண ஆஸீத் –முதலிய இடங்களில்
ப்ரஹ்மத்துக்குத் தானே ப்ரஸித்தம்
ப்ரஹ்மம் ஜகதாத்மகம் என்றது இரண்டும் ஸ்வரூபத்தால் ஓன்று என்று அன்று
சர்வத்துக்கும் காரணம் அந்தர்யாமி என்ற காரணத்தால் ஜகதாத்மகம் என்கிறோம்
இப்படி தாதாத்ம்யம் -அபேதம் -கூறினால் சரீரமான ஜகத்தில் உள்ள தோஷங்கள்
ப்ரஹ்மத்திடம் ஒட்டாதவை என்று திரு உள்ளம் –

———————

ஸூத்ரம் -34–விவஷித குணோபபத்தே —1-2-2-
குணங்கள் பொருந்த வேண்டும் என்றால் பரம் பொருளைக் குறித்தே ஆக வேண்டும்

சாந்தோக்யம் -3-14-2-
மநோமய பிராண சரீரோ பாருப சத்ய சங்கல்ப ஆகாசாத்மா சர்வ கர்ம சர்வ காம சர்வ கந்த
சர்வ ரசசர்வ மிதயப்யாத்த அவாக்ய அநாதர-
அனைத்து குணங்களும் பரமாத்மாவிடம் மட்டுமே பொருந்தும்
மநோ மயா -தூய்மையான மனத்தால் மட்டுமே அறியப்படுபவன்
பிராண சரீர -உயிர்களுடைய பிராணனை தாங்கி உள்ளவன்
யாரிடம் பிராணன் கட்டுப்பட்டு உள்ளதோ யாரிடம் அடங்கி உள்ளதோ யாருக்கு அடிமையாக உள்ளதோ
யாருக்கு சரீரமாக உள்ளதோ அவனே பிராண சரீரன் எனப்படுகிறான் –
சரீரம் எனபது -ஒன்றைத் தன்னுள் கொண்டும் -ஒன்றுக்கு அடங்கி -ஒன்றுக்கு அடிமையாக உள்ளது -என்பரே –

பாருப -என்றால் பிரகாசத்துடன் கூடியவன் -அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹம் -ஸமஸ்த கல்யாண குணாத்மகன்
சத்ய சங்கல்ப -தடையற்ற உறுதி -சங்கல்பத்தாலேயே செயல் ஆற்றும் தன்மை
ஆகாசாத்மா -தெளிவு ஸூஷ்மம் சர்வ வ்யாபி -அனைத்துக்கும் ஆத்மா
சர்வ கர்ம -இந்த உலகங்கள் அனைத்தும் அவன் செயல்கள்
சர்வ காம -அனுபவிக்கும் பொருள் அனுவ அனைத்தும் தூய்மை
சர்வ கந்த சர்வ ரச-இத்தால்
கட 3-15-அ சப்தம் அ ஸ்பர்சம் -இவ்வுலகில் காணப்படும் மணம் சுவை போன்றவை அல்லவே அவனது
தோஷம் அற்ற -எல்லை அற்ற -மங்களமானவை-அவனாலே மட்டும் அனுபவிக்கக் கூடிய பல என்றவாறு
சர்வ மிதயப்யாத்த -இந்தத் தன்மைகள் வந்தேறி அல்ல -ஸ்வா பாவிகம்
அவாக்ய அநாதர-அவாப்த ஸமஸ்த காமன் அன்றோ -சர்வேஸ்வரேஸ்வரன் அன்றோ

—————–

ஆனால் இத்தகைய குணங்கள் பத்தரான ஜீவாத்மாக்களுக்குக் கூடா விட்டாலும்
முக்தாத்மாவுக்குப் பொருந்தலாமோ என்னில்

ஸூத்ரம் -35–அநுபபத்தே து ந சாரீர –1-2-3-

முன்பு கூறப்பட்ட குணங்கள் யாவும் ஜீவாத்மாவுக்கு பொருந்தாது என்பதால் –
இவன் ஜீவன் அல்லன் -என்றவாறு

து ஸப்தம் சங்கையை செய்கிறது
முன் நிலையில் தீய குணங்களுக்கு இருப்பிடமாய் இருந்த முக்தனுக்கும்
இந்தக் கல்யாண குணங்கள் தகாதவை யாதலின்
சரீர சம்பந்த யோக்யனான முக்தனும் ப்ரஹ்மம் அல்லன்

———–

ஸூத்ரம் -36-கர்ம கர்த்ரு வ்யபதேசாத் ச –1-2-4-

பரமாத்மாவை அடையப்படுபவனாகவும்
ஜீவாத்மாவை அடைபவனாகவும் கூறுவதால் பரமாத்மாவே ஆகும்

சாந்தோக்யம் -3-14-4-ஏதமித ப்ரேத்ய அபி சம்பவி தாஸ்மி-என்று
அந்த பரமாத்மாவை இந்த உலகை விட்டு நான் சென்ற பின்பு அடைகின்றேன் -என்பதால் –

இங்கு இருந்து சென்று நான் இப் ப்ரஹ்மத்தை அடைகிறேன் –
ஏதமித ப்ரேத்ய அபி சம்பவி தாஸ்மி–என்று
ப்ரஹ்மம் ப்ராப்யமாகவும்
முக்தன் ப்ராப்தா அடைபவன் என்றும் சொல்வதால்
அடைபவனான ஜீவனும் அடையப்படும் ப்ரஹ்மமும் ஒன்றாக முடியாது –

—————————

ஸூத்ரம் -37-சப்த விசேஷாத் –1-2-5-

ஒரு விதமான சப்த காரணமாக இவன் ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறானாவான்

சாந்தோக்யம் -3-14-3-ஏஷ மே ஆத்ம அந்தர்ஹ்ருதயே -என்று
இதயத்தில் உள்ளவன் என்னுடைய ஆத்மா என்றும்

இதே பிரகரணத்தில் உள்ள மற்ற ஒரு வாக்கியத்தில்
மே என்று ஜீவாத்மாவை ஆறாம் வேற்றுமையாலும்
ஆத்மா என்று பரமாத்மாவை முதல் வேற்றுமையாலும் –

சதபத ப்ராஹ்மணத்தில்-10-6-3-2-
வ்ரீஹீர்வா யாவோ வா சயாமாநோ வா ச்யாமாக தண்டுலோ வா ஏவமய மந்த்ராத்மன் புருஷோ
ஹிரண்மயோ யதா ஜ்யோதிர்தாமம் –
நெல் மணி பார்லி ஸ்யமாக மணி போன்ற புருஷன் ஆத்மாவில் புகை இல்லாத ஜ்யோதி போன்று இருக்கிறான்
இங்கு ஆத்மாவை அந்தராத்மன் என்று ஆறாம் வேற்றுமையிலும்
புருஷ ஹிரண்மய -என்று உபாசிக்கப்படும் வஸ்துவை முதல் வேற்றுமையிலும் கூறி இருப்பதும் காண்க

இத்தால் பரமாத்மா ஜீவாத்மாவை விட வேறானவன் -என்றதாயிற்று –

———————

ஸூத்ரம் -38-ஸ்ம்ருதேச் ச–1-2-6-
ஸ்ம்ருதிகளிலும் இவ்வாறே கூறப்பட்டுள்ளதால் –

சர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்த ச்ம்ருதிர் ஞான அபோஹனம் -ஸ்ரீ கீதை -15-15-
யோ மாமேவ சம்மூடோ -15-19-
ஈஸ்வர சர்வ பூதா நாம் ஹ்ருத்தேச அர்ஜுன திஷ்டதி ப்ராமயன் சர்வ பூதானி யந்திர ரூடானி மாயயா–18-61-
தமேவ சரணம் கச்ச -18-62-

இவற்றில் ஜீவனை உபாசகனாகவும்
ப்ரஹ்மத்தை உபாஸ்யமாகவும் சொல்லிற்றே

————————–

ஸூத்ரம் -39-அர்ப்ப கௌகசஸ்வாத தத் வ்யபதேசாத் ஸ நேதி சேத ந நியாயத்வாத் ஏவம் வ்யோமவத் ஸ-1-2-7-

அர்ப்ப கௌகசஸ்வாத -மிகவும் சிறிய இடத்தில் இருத்தல்
சிறியதான ஹ்ருதயத்தை இருப்பிடமாகக் கொண்டதாலும் -சிறியவன் என்று ஓதப்படுவதாலும்
பரமாத்மா அல்ல என்று கூறுவது சரி இல்லை
உபாசன ஸுகர்யத்துக்காக தன்னை இப்படி அமைத்துக் கொள்கிறான் -ஆகாயம் போன்ற விபுவே அவன்

பூர்வ பக்ஷம்
சாந்தோக்யம் -3-14-3-ஏஷ ம ஆதமானந்தர் ஹ்ருதயே
அணீயான் வ்ரீஹேர் வா யாவத்
சர்வகதம் ஸூ ஸூ ஷ்மம் பரிபச்யந்தி தீரா-
இவற்றால் அவனே ஜீவாத்மா -என்பர்

சித்தாந்தம் –
ஜீவாத்மா அல்ல -உபாசனையின் பொருட்டே பரமாத்மாவே தான் சொல்லப் படுகிறான் –
அவன் ஆகாசம் போன்று மிகப்பெரியவன் என்பதை
சாந்தோக்யம் 3-14-3-
ஜ்யாயாந் ப்ருதிவ்யா ஜ்யாயான் அந்தரிஷாத் ஜ்யாயான் திவோ ஜ்யாயாத் அப்யோ லோகேப்ய–என்று சொல்லுமே

சந்தோக்ய உபநிஷத் -3-14-1-
சர்வே கல்விதம் ப்ரஹ்மம் தஜ்ஜலாநிதி சாந்த உபாசித-என்று
இவை அனைத்தும் ப்ரஹ்மமே – -காரணம் அனைத்தும் இதிலே உத்பத்தியாகி இதிலே லயிக்கிறது
ஆத்மாவாகவும் அந்தர்ப்ரேவேசித்து தரிக்க வைப்பதும் ப்ரஹ்மமமே -உபாசன வஸ்துவும் அவனே
சாந்தோக்யம் -3-14-1-
அத கலு க்ரதுமயோயம் புருஷோ யதா க்ரதுரஸ்மின் லோகே புருஷோ பவதி ததேத ப்ரேத்ய பவதி -என்று
புருஷன் நம்பிக்கை வடிவன் ஆவான் -அதே நம்பிக்கையுடன் இங்கு இருந்து செல்கிறான்
உபாசனை எவ்விதம் செய்யப்படுமோ அவ்விதமாகவே பலன் கிட்டும்
ஸ க்ரதும் குர்வீத -என்று சிறந்த நம்பிக்கையுடன் உபாசிப்பானாக –
சந்தோக்ய உபநிஷத்-3-14-4-
மநோ மய பிராண சரீரோ பாருப சத்யசங்கல்ப ஆகாசாத்மா சர்வகர்மா
சர்வகந்த சர்வரச சர்வ மிதமப்யாத்த அவாக்ய அநாதர-என்று
தூய்மையான மனத்தால் அறியத் தக்கவன் -பிராணனை சரீரமாகக் கொண்டவன் -பிரகாசம் ஆனவன் –
தடையில்லா சங்கல்பம் கொண்டவன் -ஆகாசம் போன்ற ஸூ ஷ்மரூபம் கொண்டவன்
அனைத்து செயல்களையும் செய்பவன் -தான் விரும்பும் அனைத்தையும் கொண்டவன் –
அனைத்து கல்யாண குணங்களையும் ஏற்றுக் கொண்டு யாரையும் சார்ந்து இராமல் யாரிடமும் வாய் பேசாமல் -என்கிறது
சாந்தோக்யம் -3-14-3-
ஏஷ ம ஆத்மாந்தர் ஹ்ருதயே அணியான் வ்ரீஹேர்வா யவாத்வா சர்ஷபாத்வா ச்யாமாகாத்வா ச்யாமாக தண்டுலாத்வா -என்று
இதயத்துள் ஆத்மாவாக உள்ள இவன் நெல்லைக் காட்டிலும்
கோதுமையைக் காட்டிலும் -கடுகைக் காட்டிலும் சயாமாகத்தைக் காட்டிலும் சிறியவன் என்றும்
சாந்தோக்யம் -3-14-3/4-
ஏஷ ம ஆத்மாந்தர் ஹ்ருதயே ஜ்யாயாத் ப்ருதிவ்யா ஜ்யாயாத் அந்தரிஷாத் ஜ்யாயாத் தயவோ ஜ்யாயாத்
அப்யோ லோகேப்ய சர்வ கர்ம சர்வகாம சர்வகந்த சர்வமிதப்யாத்தோ அவாக்ய அநாதர -என்று
இதயத்தில் உள்ள அவன் ஏன் ஆத்மா -பூமி -அந்தரிஷம் தேவ லோகம் அனைத்து லோகங்கள் காட்டிலும் முகப் பெரியவன்
அனைத்து செயல்களையும் செய்பவன் -அனைத்து விருப்பங்களும் நிறைவேற்றப் பெற்றவன்
அனைத்து நறுமணம் சுவைகள் கொண்டவன்
யாரையும் ஆதரீக்க வேண்டிய அவசியம் அற்றவன் –
உபாசிக்கப் படும் வஸ்து அவனே -அவனே அடைய வேண்டிய இலக்கு –

சாந்தோக்யம் –3-14-4-
ஏஷ மே ஆத்மா அந்தர்ஹ்ருதயே ஏதத் ப்ரஹ்ம —
இந்த ஆத்மா எனது இதயத்தில் உள்ளது -இது ப்ரஹ்மம்-
கருணை அடியாக நமது இதயத்தில் வந்து அமர்கின்றான்
சாந்தோக்யம் -3-14-4-
ஏதமித ப்ரேத்யாபி சம்பவி தாஸ்மி -என்று
இங்கு இருந்து புறப்படும் நான் அவனைச் சென்று அடைவேன் -உபாசனை மூலம் கிட்டப் பெறுவதைக் கூறும்
சாந்தோக்யம் -3-14-5-
யஸ்ய ஸ்யா தத்தா ந விசிசித் சாஸ்தி –என்று இத்தகைய உறுதி உள்ளவன் குறித்து எந்த சங்கையும் இல்லை

அர்ப்ப கௌகசஸ்த்வம் –சிறிய இடத்தைக் கொண்டு இருக்கை -இருதயத்தின் உள்ளே இருப்பதாகக் கூறுவதால்
அல்பமான ஹ்ருதயத்தை இடமாகக் கொண்டவன் ஆகையாலும்
தத் வ்யபதேசாத் -தானியன்களைக் காட்டிலும் சிறிய அணு ஸ்வரூபன் என்று கூறப்படுவதாலும்
இவன் விபுவான பரமாத்மாவாகக் கூடாது -ஜீவனாகத் தான் இருக்க வேண்டும்
ஸ நேதி சேத ந -இவ்வாறு கூறுவது தவறு
நியாயத்வாத் ஏவம் -பரம புருஷன் தானே உபாஸ்யனாகப் பேசப்படுகிறான்
வ்யோமவத் ஸ-விபுவான பரமாத்மாவே உபாசகர்களை அனுக்ரஹிக்க ஹ்ருதயத்துக்குள் அடக்கிய திருமேனியை யுடையவனாக்கிக் கொள்கிறான்
ஆதலால் அவனை இப்படி உபாஸிக்க வேண்டும் என்பது அல்பமாய்ச் சொல்வதின் கருத்து என்றவாறு –

———————

ஸூத்ரம் -40-சம்போக ப்ராப்திரிதி சேத் ந வை சேஷயாத்–1-2-8-

சரீரத்துக்குள் இருப்பதால் சுக துக்கங்கள் ஏற்படுமோ என்றால் அல்ல -வேறுபாடு உள்ளதால் ஆகும் –

பூர்வ பக்ஷம்
சரீர சம்பந்தம் அடியாக ஸூக துக்கங்கள் ப்ரஹ்மம் அனுபவிக்க வேண்டி வருமே

சித்தாந்தம்
அப்படி அல்ல –
கர்மங்கள் அடியாகவே ஜீவாத்மா ஸூக துக்கங்கள் அனுபவிக்கிறான்
ஸ்வாபாவிகமாக அபஹத பாப்மத்வாதி கல்யாண குணங்கள் கொண்ட ப்ரஹ்மம் வ்யாப்திகத தோஷம் அற்றவன்

சம்போக ப்ராப்திர் -சுக துக்கங்கள் ஏற்படுமே என்றால்
இதி சேத் ந -அது அல்ல
வை சேஷயாத்–விசேஷமான ஹேது இருப்பதால்
சுக துக்க போகத்திற்கு சரீரத்தின் உள் இருக்கு ஹேதுவல்ல -புண்ய பாப ரூப கர்ம பரவஸ்யமே
அது கர்ம சம்பந்தம் அற்ற ப்ரஹ்மத்துக்குப் பொருந்தாதே
ஸ்ருதியும் இத்தையே கூறுகிறது –
முண்டக உபநிஷத் -3-1-1-
தயோரன்ய பிப்பலம் ஸ்வா து அத்தி அநஸ்நன் அன்யோ அபி சாகசீதி -என்று
மரத்தில் இரண்டு பறவைகள் ஓன்று பழங்களை உண்கிறது மற்று ஓன்று அதனை நோக்கியபடி உள்ளது —

———–

2-2-அத்தா அதிகரணம் -உண்பவனாக கூறப்படுபவன் ப்ரஹ்மமே-

இப்படி பரமாத்மா கர்ம பல போக்தன் அல்லன் என்றால் கட வல்லியில் போக்தாவாகத் தோன்றுபவனும் ஜீவனாகவே ஏற்க நேரும்
என்ற சங்கையை பரிக்ரஹிக்கிறார் என்று சங்கதி
மேலும் கீழே ஹ்ருதயத்துக்குள் அல்ப ஸ்தானத்தில் பரம புருஷன் சிந்திக்கப் பட்டான்
இதில் குஹாம் ப்ரவிஷ்டவ்-என்று ஹ்ருதய குஹைக்குள் உள்ள பரமாத்மா சிந்திக்கப்படுகிறான் -என்பது கருத்து –

ஸூத்ரம் -41-அத்தா சராசர க்ரஹணாத்–1-2-9-

அனைவரையும் உண்பவனாகக் கூறப்படுபவன் பரமாத்மாவே -சேதன அசேதனங்களை உணவாகக் கூறப்படுவதால் ஆகும் –

விஷயம்
கடவல்லி –1-2-24-
யஸ்ய ப்ரஹ்ம ஸ ஷத்ரம் ஸ உபேபவத ஓதன –ம்ருத்யுர் யஸ்ய உபசேசநம் க இத்தா வேத யத்ர ஸ —
யாருக்கு அந்தணர் மற்றும் ஷத்ரியர் இருவரும் உணவாகிறார்களோ
யமன் யாருக்கு ஊறுகாய் ஆகிறானோ
அவன் எங்கு உள்ளான் என்று யார் அறிவார் -என்கிறது

பூர்வ பஷம் –
உண்பவனாக சொல்பவன் ஜீவாத்மாவே தான் -கர்ம பலன்களை அனுபவிப்பதால்

சித்தாந்தம்
சராசர க்ரஹணாத்-அனைத்தையும் உண்பவன் பரமாத்மாவே தான்
உண்பது என்றது கர்மம் காரணமாக அல்ல
படைத்து காத்து அழிக்கும் தன்மையைச் சொல்லும்
கடவல்லி -3-9-
ஸோ அத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்பதால்
அந்த விஷ்ணுவின் மிக உயர்ந்த இடத்தை அடைகிறான் என்பதால்
யமன் அனைவரையும் சம்ஹரிக்கிறான் -அந்தணர் ஷத்ரியர் என்றது அனைத்துக்கும் உப லஷணம்
ஆகவே இங்கு உண்பவனாக கூறப்படுவது பரமாத்வே தான் -எனபது சித்தாந்தம் –

அத்தா -அன்னத்தைப் பூஜிப்பவன் பரமாத்மாவே -ஜீவன் அன்று
ஏன் எனில்
சராசர க்ரஹணாத்-ஸமஸ்த சராசர ரூபமான ஜகத்தையும் ஒத்தனமாகக் கிரஹிக்கையாலே
இந்த போக்த்ருத்வம் கர்ம நிமித்தம் அன்று
ஜகத்தின் ஜென்ம ஸ்திதி லயங்களுக்குக் ஹேதுவான ஸம்ஹரிக்கும் தன்மையைக் குறிக்கிறது
மேலே வழியைக் கடந்து எம்பெருமானின் பரம பதத்தை அடைகிறான் என்று குறிப்பிடுவதாலும்
மிருத்யுவை உபசேசனமாகக் குறிப்படுவதாலும் அனைத்து சராசரங்களையும் போக்யமாகச் சொல்கிறது
இப்படியான அத்தாவின் -போக்தாவின் -தன்மை ஜீவனுக்கு கூடாது –

——————————

ஸூத்ரம் -41-ப்ரகரணாத் ஸ –1-2-10-

இங்கு உள்ள பிரகரணத்தாலும் பரமாத்மாவே ஆவான் –
இந்தப் பிரகரணமும் பரமாத்மா விஷயமே -அனைத்திலும் பரமாத்மாவே ப்ரக்ருதமாய் இருக்கிறான்

கடவல்லி -1-2-22-
மஹாந்தம் விபு மாதமா நம் மத்வா தீரோ ந சோசதி –
உய்ரந்தவனும் -எங்கும் வியாபித்து உள்ளவனும் ஆகிய பரமாத்மாவை உபாசிக்கும் அறிவாளி
ஒருத்தன் எதற்கும் வருத்தம் அடைய மாட்டான் –
கடவல்லி -1-2-23-
நாயமாத்மா ப்ரவசநேந லப்ய–ந மேதயா ந பஹிநா ச்ரு நேந யமைவைஷ வ்ருணுதே தநூம் ஸ்வாம்-என்று
பரமாத்மா சரவணம் மனனம் த்யானம் மூலம் மட்டுமே அடையச்ப் படுபவன் அல்லன் –
யார் ஒருவனைப் பரமாத்மா தேர்ந்து எடுக்கிறானோ அவனால் மட்டுமே அடையப் படுபவனாக உள்ளான் –
அவனுக்கு மட்டும் தனது ஸ்வரூபத்தைக் காண்பிக்கிறான்
கடவல்லி -1-2-24-
க இத்தா வேத யத்ர ஸ –
பரம்பொருள் இப்படிப் பட்டது என்பதை யார் அறிவார்கள் –
முன் கூறப்பட்ட பரமாத்மாவின் கருணையாலே மட்டுமே அவனை அடைய முடியும் என்றதாயிற்று –

பூர்வ பக்ஷம்
இங்கு உணவாக கொள்பவன் -என்று கர்ம பலனை அனுபவிப்பவனாகச் சொல்வது பரமாத்மாவாக இருக்க முடியாது
ஜீவாத்மாவாகவே தானே இருக்க முடியும்-
கடவல்லி -1-3-1-
ருதம் பிபந்தௌ ஸூ க்ருதச்ய லோகே குஹாம் பிரவிஷ்டௌ பரார்த்தே சாயதபௌ
ப்ரஹ்ம விதோ வதந்தி பஞ்சாக்நயோ யே ஸ த்ரிணா சிகேதா -என்று
கர்ம பலன்களை அனுபவிப்பவர் புண்ய லோகமான இந்த உலகில் இதயம் என்ற குகையில் நுழைந்து
இருப்பவர் என இருவர் உண்டு
இருளும் ஒளியும் போன்று -என்று இப்படி பஞ்சாக்னி செய்பவர்களும் மூன்று அக்னி கார்யம் செய்பவர்களுமான
ப்ரஹ்ம வித்துக்கள் கூறுவார்கள்-
இரண்டாவது என்றது புத்தி பிராணனை என்பவர் -பரமாத்மாவுக்குப் பொருந்தாது என்பர் –
இங்கு ஜீவாத்மாவும் புத்தி பிராணன் சொல்வதாகக் கொள்ள வேண்டும்-

—————————

மேலே ஒரு சங்கை
அத்தா என்றது பரமாத்மா ஆகாது
கீழே ருதம் பிபந்தௌ ஸூ க்ருதச்ய லோகே குஹாம் பிரவிஷ்டௌ பரார்த்தே சாயதபௌ
ப்ரஹ்ம விதோ வதந்தி பஞ்சாக்நயோ யே ஸ த்ரிணா சிகேதா -என்று
கர்ம பல போக்தாவான ஜீவனும் பிராணனும் ஹிருதய குகையுள் பிரவேசித்து உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது
ருதம் பிபந்தௌ-கர்ம பலனை அனுபவிப்பவர்கள் என்று பொருள்
கர்ம பல போகத்துக்கு உபகாரணமான பிராணனையும் கர்த்தா என்று உபசாரமாகக் கூறி
பிபந்தௌ-என்று ஜீவனையும் பிராணனையும் கூடச் சொல்கிறது என்ற
இந்த சங்கைக்கு விடை அடிசுத்த ஸூத்ரம் –

ஸூத்ரம் -42-குஹாம் பிரவிஷ்டை ஆத்மா நௌ ஹி தத் தர்சநாத் —1-2-11-

இதயம் என்கிற குகைக்குள் நிறைந்து இருப்பவர்கள் பரமாத்மாவும் ஜீவாத்மாவுமே —
புத்தியும் ஜீவாத்மாவும் அல்லர்-இவர்களுக்கு அவ்விதம் நுழைந்தது காணப்படுவதால்

சித்தாந்தம்
ஹ்ருதய குகையில் புகுந்து பலனைப் பருகுபவர்கள் பிராணனும் ஜீவாத்மாவுமோ புத்தியும் ஜீவாத்மாவுமோ அல்லர்
மாறாக ஜீவாத்மாவும் பரமாத்மாவுமே ஆவர் -ஏன் -என்றால்
தர்ச நாத் -இப்படியே காணப்படுவதால் ஆகும்

பரமாத்மாவைக் குறித்து
கடகவல்லி –2-12-
தம் துத்தச்சம் கூட மதுப்ரவிஷ்டம் குஹாஹிதம் கஹ்வரேஷ்டம் புராணம் அத்யாத்ம யோகாதி கமேன தேவம் மத்வா
தீரோ ஹர்ஷசோசௌ ஜஹாதி-என்று
காண்பதற்கு அரியவனும் -நம்முடைய கர்மம் காரணமாக மறைவாக உள்ளவனும் எங்கும் வியாபித்து உள்ளவனும்
இதயம் என்னும் குகையில் உள்ளவனும் -அந்தர்யாமியாக உள்ளவனும் -புராணமானவனும் தேவாதி தேவனும்
ஆகிய பரமாத்மாவை அறியும் ஒருவன் இன்ப துன்பங்களை விடுகிறான்

ஜீவாத்மாவைக் குறித்து
கடக வல்லி -4-7-
யா ப்ராணேந சம்பவதி அதிதிச் தேவதா மயீ குஹாம் பிரவிச்ய திஷ்டந்தீ யா பூதேபிர் வ்யஜாயத-என்று
கர்ம பலத்தை உண்பதால் அதிதி என்று கூறப்படும் எந்த ஒரு ஜீவாத்மா -அதிதி-
பிராணனுடன் வாழ்கின்றானோ -ப்ராணேந சம்பவதி-
தாமரை போன்ற இதயம் என்கிற குகையில் நுழைந்து -பிரவிச்ய திஷ்டந்தீ-உள்ளானோ –
தேவர்கள் எனப்படும் இந்திரியங்கள் மூலம் இன்பங்களைப் பெறுகிறானோ -தேவதா மயீ
பஞ்ச பூதங்களுடன் பிறக்கிறானோ -யா பூதேபிர் வ்யஜாயத–தேவாதி ரூபமாக பிறக்கிறான் –
என்று ஜீவாத்மாவைப் பற்றி கூறியது
ஆகவே
ருதம் பிபந்தௌ-இருவரும் புஜிக்கிறார்கள்-ஜீவாத்மா புஜிக்க பரமாத்மா புஜிக்கச் செய்கிறான் என்கிறது-

குஹாம் பிரவிஷ்டை –என்றும் -ருதம் பிபந்தௌ-என்றும் ஆத்மா நௌ ஹி -ஜீவனும் பிராணனும் கூறப்படவில்லை
ஜீவனும் பரமாத்மாவுமே குறிப்பிடப்படுகின்றனர்
ஏன் எனில்
தத் தர்சநாத் —அப்படிக் காண்கையாலே
இந்தப்பிரகரணத்தில் இரு ஆத்மாக்கள் குகையில் பிரவேசிப்பதாகவே குறிப்பிடப்படுகின்றனர்
தம் துத்தச்சம் கூட மதுப்ரவிஷ்டம் குஹாஹிதம் கஹ்வரேஷ்டம் புராணம் அத்யாத்ம யோகாதி கமேன தேவம் மத்வா
தீரோ ஹர்ஷசோசௌ ஜஹாதி–கடக வல்லி -2-12–என்று பரமாத்மாவுக்கு குஹ பிரவேசம் கூறப்படுகிறது –
யா ப்ராணேந சம்பவதி அதிதிச் தேவதா மயீ குஹாம் பிரவிச்ய திஷ்டந்தீ யா பூதேபிர் வ்யஜாயத-கடக வல்லி -4-7-என்று
ஜீவனுக்கு குஹ பிரவேசம் கூறப்படுகிறது
அத்தி -என்ற காரணத்தால் -கர்ம பலன்களை சாப்பிடுபவன் -அதிதி -எனப்படுபவன் ஜீவன்
ப்ராணேந சம்பவதி-ப்ராணனுடன் கூடி இருக்கிறது
தேவதா மயீ-இந்திரியங்களுக்கு அதீனமான போகங்களை யுடையது
குஹாம் பிரவிச்ய திஷ்டந்தீ யா -ஹ்ருதய கமலத்தினுள் இருப்பது
பூதேபிர் -பஞ்ச பூதங்களுடன்
வ்யஜாயத-தேவாதி ரூபங்களில் பலவாறாகத் தோன்றுகிறான் என்றபடி –

————————

ஸூத்ரம் -43-விசேஷணாத் ச –1-2-12-

ஜீவன் பரம்பொருள் தன்மைகள் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளதால்
சிறப்பித்துக் கூறப்படுவதால் -பரமாத்மாவே

கடவல்லி -1-7-
ப்ரஹ்மஜஜ்ஜம் தேவ மீட்யம் விதித்வா நிசாய்யே மாம் சாந்தி மத்யந்த மோதி -என்று
ஜீவாத்மா உபாசிப்பவன் என்று அதன் தன்மையை அறிந்த பின்னர் அவன் சாந்தியைப் பெறுகிறான்
ப்ரஹ்மஜஜ்ஜம்-ப்ரஹ்மத்தில் இருந்து வெளிப்பட்டவன் -ஞானம் நிறைந்தவன் -என்று ஜீவாத்மாவைக் குறிக்கும்
தேவ மீட்யம் விதித்வா-உபாசிப்பவன் -ப்ரஹ்மத்தை ஆத்மாவாக உள்ளவன்
கடவல்லி -3-2-
ய சேதுரீ ஜாநாநா மக்ஷரம் ப்ரஹ்ம யத்பரம் அபயம் ததீர்ஷதாம் பாரம் நாசிகேதம் சகேமஹி –என்று அடைபடும் ப்ரஹ்மம்
கடவல்லி -3-3-
ஆத்மாநம் ரதி நம் வித்தி சரீரம் ரதமேவ ச –என்று தொடங்கும் வரி மூலம் உபாசிப்பவனாக ஜீவாத்மா -என்றும்
கடவல்லி -3-9-
விஞ்ஞான சாரதீர் யஸ்து மன ப்ரக்ரஹ்வான் நர சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
கடவல்லி -3-1-
சாயாதபவ் -நிழலாகவும் ஸூர்ய ஒளியாகவும் -என்று அஞ்ஞாந மய ஸர்வஞ்ஞத்வ-
ஜீவாத்மாவைப் பற்றியும் பரமாத்மாவையும் பற்றி உண்டே –

பூர்வ பக்ஷம்
கடவல்லி-1-20-
யேயம் ப்ரேயதே விசிகித்சா மனுஷ்யே அஸ்தீத் ஏக நாயமஸ்தீந சைகே -என்று ஒரு மனிதன் மரணம் அடைந்த பின்னர்
சிலர் இதுவே அவன் என்றும் இது அவன் அல்லன் என்றும் சொல்வது ஜீவாத்மாவைப் பற்றியே

சித்தாந்தம்
அப்படி அல்ல -இங்கு சரீரத்தில் இருந்து கிளம்பிய ஜீவாத்மா உள்ளதா இல்லையா என்ற சங்கை பற்றிய கேள்வி இல்லை –
இப்படிக் கேட்க்கப் பட்டது என்று கொண்டால் கீழ் கேட்கப்பட்ட இரண்டு வரங்கள் பொருந்தாமல் இயலாமலுமாகும்
வாஜஸ்வரஸர் புத்ரன் நசிகேதஸ் -விஸ்வஜித் யாகம் நடத்தும் பொழுது கிழட்டுப்பசுக்கள் தானம் –
யமன் -மூன்று வரம் -வ்ருத்தாந்தம் கதை
இங்கு மரணத்தின் பின் மோக்ஷமான பரம புருஷார்த்தம் அடைவதையும் அடையாளத்தையும் பற்றிய கேள்வியே இது
பிருஹத் -2-4-12-ந ப்ரேத்ய சம்ஜ்ஞாஸ்தி -என்று உயிர் பிரிந்து ஸ்வரூப ஆவிர்பாவம் -அடைந்து
குறைவற்ற ஞானம் இல்லை என்கிறதே

சம்சார பந்தத்தில் விடுபட்ட பின்னர் உள்ளானா இல்லையா என்று ஸ்வரூபத்தைப் பற்றிய கேள்வி இது
மோக்ஷம் பற்றி பல தப்பான கருத்துக்கள் உண்டே
புத்தன் -அத்வைதி -நையாயிகன் -பாஸ்கரன் -நம் சித்தாந்தம் –
யமன் அவனை பரிஷித்த பின்பே உபதேசம்
கட 2-12-தம் துர்த்தர்சே கூட மநு ப்ரவிஷ்டம் -தொடங்கி -3-9-சோத்வன பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -முடிய
உபாசனம் பற்றியும் நசிகேதஸ் அறிய வேண்டியதைக் குறித்தும் உபதேசம்
ஆக இங்கு அனைத்தும் பொருந்தும் -சராசரங்களை உண்பவனாகக் கூறப்படுபவன் பரமாத்மாவே –

உபாசிப்பவன் உபாசிப்பிக்கப்படுபவன் -அடைபவன் -அடையப்படுபவன் -என்று கூறப்படுவதைக் காணலாமே
கட உபநிஷத் -ஜீவனைக் குறித்து –
ந ஜாயதே ம்ரியதே வா விபஸ்சித்-ஞானம் உள்ளவன் பிறப்பதும் இறப்பதும் இல்லை என்றும்
மஹாந்தம் விபு மாத்மானம் மத்வாதீரோ ந சோசதீ-என்று பரம்பொருளை
மிகப் பெரியவன் -எங்கும் உள்ளவன் -வருத்தப் படாதவன் -என்றும்
அணோர் அணீயான் மஹதோ மஹீயான் என்றும் கூறுவதால்
முன்பு சொல்லியவை ப்ரஹ்மத்தையும் ஜீவனையும் பற்றியவையே
பிராணன் அல்லது புத்தி பற்றியவை அல்ல என்கிறது-

இந்தப் ப்ரகரணத்தில் ஜீவனும் பரமாத்மாவும்
உபாஸகன் உபாஸ்யன் என்றும்
ப்ராப்தா ப்ராப்யன் என்றும்
விசேஷண விசேஷ்யங்கள் என்றும் கொண்டு விளக்கப்படுகிறார்கள்
ப்ரஹ்மஜஜ்ஜம் தேவ மீட்யம் விதித்வா நிசாய்யே மாம் சாந்தி மத்யந்த மோதி-என்று
ப்ரஹ்மத்தின் இடம் இருந்து தோன்றியதால் ப்ரஹ்மஜம் -ஜீவன் -என்பது ஞாதா
இத்தகைய ஜீவனை–ஈட்யம் தேவம் விதித்வா-வாஸூ தேவ ரூபியாக அறிந்து
நிசாய்யே -உபாஸித்து
மாம் சாந்தி மத்யந்த மோதி-அத்யந்த சம்சார நிவ்ருத்தியை அடைந்து விடுவான்
விஞ்ஞான சாரதீர் யஸ்து மன ப்ரக்ரஹ்வான் நர சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம்-என்று
விஷ்ணுவைப் ப்ராப்யம் என்றும் ஜீவனைப் ப்ராப்தா வாகவும் சொல்கிறதே
இந்த ருதம் பிபந்தவ் மந்த்ரத்திலும் -சாயாதபவ் என்று ஜீவனும் பரமாத்மாவும்
அஞ்ஞனும் ஸர்வஞ்ஞனுமாக முறையே குறிப்பிடுகின்றனர்

ஆகையால் பரமாத்மாவே அத்தா -ஜீவன் அல்லன் என்று தெரிகிறது –

ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்தி —

த்ரயந்த ஒஷ்ணா தஸ்து நிகில ஜகத் ஏக காரணஸ்ய -அசேஷ ஹேய ப்ரத்ய நீக -அனந்த ஞான ஆனந்த ஏக ஸ்வரூபஸ்ய-
ஸ்வ பாவிக அனவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கரஸ்ய -சகல இதர விலக்ஷனஸ்ய –
சர்வாத்ம பூதஸ்ய–பரஸ்ய ப்ரஹ்மண –ஜீவஸ்ய –பரமாத்மா அனுபவம் ஏவ மோஷமா சஷதே
யுக்தம் பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷ சாதனதயா ஜிஜ்ஞாஸ்யம் ஜெகஜ் ஜென்மாதி காரணம்
ப்ரஹ்ம அசித் வஸ்துன –பிரதான ரத –சேதநாச்ச -பக்த முக்த உபாய வஸ்தாத் விலக்ஷணம் –
நிரஸ்த ஸமஸ்த ஹேய காந்தம் சர்வஞ்ஞம் சர்வ சக்தி ஸத்யஸங்கல்பம்
ஸமஸ்த கல்யாண குணாத்மகம் சர்வாத்ம அந்தராத்மா பூதம் நிரங்குச ஐஸ்வர்யம் இதி

————-

2-3-அந்த்ராதிகரணம் -கண்களில் உள்ளவன் ப்ரஹ்மமே –

இப்படி ப்ரஹ்மத்துக்கு
தம் துர்த் தர்சம் கூடம் –க இத்தாவேத -என்று காண முடியாதவன் என்று செல்வதாலும்
ய ஏஷோ அக்ஷணி புருஷோ த்ருஸ்யதே -என்று கண்ணின் உள்ளே காணக் கூடியவன் என்று செல்வதாலும்
பரமாத்மா அல்ல என்ற சங்கை தோன்ற
அத்தைப் பரிஹரிக்கிறார்

முன் அதிகரணத்தில் உபாஸகன் ஹ்ருதயக் குகையில் இருக்கும் புருஷன் பரமாத்மா என்று நிரூபிக்கப் பட்டது
அதில் உபாஸகன் கண்ணில் இருக்கும் புருஷன் பரமாத்மா என்று நிரூபிக்கப் படுகிறது என்று சங்கதி –

ஸூத்ரம் -44-அந்தர உபபத்தே –1-2-13-

கண்ணில் இருப்பவனாக கூறப்படுபவன் பரம்பொருளே-அங்கு கூறுவது அவனுக்கு மட்டுமே பொருந்தும்

விஷயம்
சாந்தோக்யம் -4-15-1-
ய ஏஷோ ஷிணி புருஷோ த்ருச்யதே ஏஷ ஆத்மேதி ஹேவாச ஏதத் அம்ருதம் அபயமேதத் ப்ரஹ்ம-
அவனே ஆத்மா -அம்ருதம் -அபயம் -ப்ரஹ்மம்

சங்கை
கண்ணில் இருப்பதாகக் கூறப்படும் புருஷன்
ப்ரதிபிம்ப ஸ்வரூபமா
சஷுர் இந்த்ரிய அதிஷ்டான தேவதையா
ஜீவாத்மாவா
பரமாத்மாவா–என்று நான்கு வித சங்கைகள்

ய ஏஷ -என்று பிரசித்தம் போ சுட்டிக் காட்டுவதால் ஜீவனாகவும் இருக்கலாம்
ஜீவனுக்கும் கண்ணினுள்ளே சிறப்பாக இருப்பு பொருந்தும்
கண் திறந்தால் தானே சரீரத்திலஜீவனுக்கு ஸ்திதியையும் கதியையும் ஜனங்கள் நிச்சயிக்கிறார்கள்
கண்ணுக்கு அதிஷ்டான தேவதையாகவும் இருக்கலாம்
ஸூர்ய தேவதையாக -பிருஹத் 5-5-2-ரஸ்மி ப்ரேஷ -அஸ்மின் ப்ரதிஷ்டித -என்று
வேதப்பிரசித்தி இருப்பதால்
என்று பூர்வ பக்ஷம்

பூர்வ பக்ஷம்
காணப்படுபவன் என்பதால் அங்கு பிரதிபலிக்கும் ஒருவனே -ஜீவாத்மாவே –
உயிர் இருக்கிறதா இல்லையா என்று திறந்த கண்கள் மூலம் அறிவதால் அபிமான தேவதையே
பிருஹத் 5-5-2-ரஸ்மி ப்ரேஷ -அஸ்மின் ப்ரதிஷ்டித -என்று ஸூரயனில் காணப்படும் புருஷனே
இந்த மூவரில் ஒருவனே கண்ணில் உள்ளான்

சித்தாந்தம்
இதற்கு விடையாக
அந்தர -கண்ணுக்குள்ளே இருப்பவனான புருஷன் பரமாத்மாவே
ஏன் எனில்
உபபத்தே –
அங்கு கூறப்படும் விஷயங்கள் பொருந்த வேண்டும் என்பதால் -பரமாத்மாவே
சாந்தோக்யம்–4-15-3-
ஏஷ ஆத்மேதி ஹோவாச ஏததம்ருதமபயமேதத் ப்ரஹ்மேதி
ஏதம் சம்யத்வாம இத்யா சஷதே ஏதம் ஹி சர்வாணி வாமான்யபி சம்யந்தி
ஏஷ உ ஏவ வாமநீ ஏஷ ஹி சர்வாணி வாமானி நயதி
ஏஷ உ ஏவ பாம நீ ஏஷ ஹி சர்வேஷூ லோகேஷூ பாதி -சாந்தோக்யம் -என்று
அந்த பரம் பொருளே ஆத்மாவாகவும் -அமிர்தமாகவும் -அச்சம் இல்லாதவனாகவும் –
கல்யாண குணங்கள் நிரம்ப உடையவனாயும்–எல்லா நன்மை அளிப்பவனாயும் -எங்கும் உள்ளவனாயும் – போன்ற
பல தன்மைகள் உள்ளவனாய் சொல்லியதால் ப்ரஹ்மத்தையே சொல்லிற்று-

சமயத் வாமத்வம் என்பது -சிறந்த சுகமான புருஷார்த்தங்களுக்கு எல்லாம் இருப்பிடம் –
ஸம் யந்தி வாமாநி ஸூகாநி -என்று வ்யுத்பத்தி
வாம நீத்வம் -ஆஸ்ரிதர்களை அபீஷ்ட ஸூ கங்களை அடைவித்தல்
பாம நீத்வம் -எல்லையில்லா பிரகாசமுடைமை
இந்தக் கல்யாண குணங்கள் பரம புருஷனுக்கே கூடும் என்று திரு உள்ளம் –

————————

ஸூத்ரம் -45-ஸ்தா நாதி வ்யபதேசாத் ச –1-2-14-
கண்களில் இருப்பவன் -கண்களை ஆள்பவன் -போன்ற தன்மைகளால் அவனே பரம் பொருள்

ப்ருஹத் ஆரண்யகாவில் -3-7-18-
யச் சஷுஷி திஷ்டன் -என்று கண்ணில் உள்ளவன் -நியமிப்பவன் -என்று இருப்பதால்
சாந்தோக்யம் 4-15-1- ய ஏஷ அஷிணி புருஷ -கண்ணில் உள்ள புருஷன் பரமாத்மாவே
மேலும் சாந்தோக்யம் 4-15-1-த்ருஸ்யதே -காணப்படுகிறான் -என்பதால்
யோகிகளால் கண்ணில் இவனைக் காண இயலும் என்பதால் பொருத்தமே யாகும்

கண்ணுக்குள் ஸ்திதி நியமனம் முதலியவை பரமாத்மாவுக்கே கூறப்படுகின்றன
ப்ருஹத் ஆரண்யகாவில் -3-7-18-யச் சஷுஷி திஷ்டன்–முதலிய ஸ்ருதிகளில் காணப்படுகிறான் என்று
ப்ரத்யக்ஷமாகக் குறிப்பிடுவது யோகிகளால் காணப்படுகிறான் என்பதாகப் பொருந்துவதே –

——————

ஸூத்ரம் -46-ஸூ க விசிஷ்டாதிபா நாத் ஏவ ச –1-2-15-

சாந்தோக்யம் -4-10-5–கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம ப்ரஹ்மம் –
சுகத்துடன் பெரியதாக உள்ளவன் -ப்ரஹ்மமே
ய ஏஷோ அஷிணி –சுகமாக உள்ளவன் என்பதால் ப்ரஹ்மமே

மேலும் யாரிடம் அனைத்து விரும்பத்தக்க தன்மைகளும் உள்ளதோ அந்த ப்ரஹ்மம் என்றும் இங்கு உணர்த்தப்படுகிறது –
ஏவ -என்று இங்கு எடுக்கப்படும் வாதங்கள் மற்றவற்றுடன் தொடர்வு உடையவை அல்ல -இங்கு தனி வாதம்
கீழே -12–13-ஸூத்ர வாதங்கள் -18-ஸூத்ரத்தத்தில் நிகமனம்

பூர்வ பக்ஷம்
சாந்தோக்யம்-4-10-5- -கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம ப்ரஹ்மம் —தொடர்ந்து
சாந்தோக்யம்-4-15-1–ய ஏஷோ அஷிணி இரண்டையும் இணைக்க இயலாது
இரண்டுக்கும் நடுவில்-4-11-/-4 -13-முடிய உள்ளவற்றில் -மூன்று அக்னிகள் குறித்த வித்யை உபதேசம் -உபகோஸலனுக்கு –
அத ஹை நம் கார்ஹபத்யோ அநுச சாஸ -4-11-1-கார்ஹபத்யம் என்ற அக்னி தேவதை உபதேசம்
இதனால் பெற்ற ஞானம் பலமாக நீண்ட ஆயூஸூ -பரம்பரை இத்யாதிகள் ப்ரஹ்ம வித்யையின் பலன்களுக்கு
விருத்தியாகும் -என்பர் பூர்வ பக்ஷிகள்

சித்தாந்தம்
உபக்ரமம் உபஸம்ஹாரம் இரண்டிலும் ப்ரஹ்ம பதம் தெளிவாக உண்டே
சாந்தோக்யம் -4-10-5-ப்ரானோ ப்ரஹ்ம -என்று தொடங்கி
சாந்தோக்யம் -4-15-1-ஏதத் அம்ருதம் அபயம் ப்ரஹ்ம –
மேலும் சாந்தோக்யம் -4-14-1-ஆச்சார்யஸ்து தே கதிம் வக்தா -என்று பரம கதிக்கு ஆச்சார்யர் உபதேசிப்பார் –
என்பதால் ப்ரஹ்ம விதியையே உபதேசம்

மேலும் -அத ஹை நம் கார்ஹபத்யோ அநுச சாஸ -4-11-1-என்று ப்ரஹ்ம வித்யைக்குத் தகுதி உள்ள
ஒருவனுக்கே அக்னி வித்யை உபதேசிக்கப்படுகிறது
மேலும் சாந்தோக்யம் 4-10-3–வ்யாதிபி பிரதி பூர்ணோஸ்மி -என்று உலகவிஷய பீதனாக இருக்கும் படி சொல்லி
சாந்தோக்யம் -4-14-1-ஏஷா சோம்ய தே அஸ்மாத் வித்யா ஆத்மவித்யா ச -என்பதால்
இந்த அக்னி வித்யையானது ப்ரஹ்ம வித்யையின் அங்கமே
இவ்வாறு அறிந்த பின்பு மற்ற பலன்கள் குறித்த வாக்கியங்கள் அர்த்தவாதம் -வெறும் புகழ்ச்சி வாக்கியங்கள்
மட்டுமே என்று கொள்ள வேண்டும் –

மேலும் மோக்ஷத்துக்கு விரோதமாக எந்த ஒரு வாக்கியமும் காணப்பட வில்லை
சாந்தோக்யம் -4-11-2-
அபஹதே பாப க்ருத்யாம் லோகீ பவதி சர்வமாயுரேதி ஜ்யோக்ஜீவதி நாஸ்யா பர புருஷா ஷீயந்தே உபவயம்
தம் புஞ்ஜாமோ அஸ்மிச்ச லோகே அமுஷ்மிச்ச –என்று
அபஹதே பாப க்ருத்யாம்-ப்ரஹ்ம பிராப்தி பிரதிபந்தங்கள் நீங்கப் பெற்ற பின்னர்
லோகீ பவதி-நீங்கிய பின்பு பரமபதம் அடைகிறான்
சர்வமாயுரேதி-ப்ரஹ்ம உபாஸனைக்கு தக்க ஆயுசைப் பெறுகிறான்
ஜ்யோக்ஜீவதி-நோய் இல்லாமல் வாழ்கிறான்
நாஸ்யா பர புருஷா ஷீயந்தே -அவர்கள் சீடர்கள் பரம்பரைகளும் பர ப்ரஹ்மம் அடைகிறார்கள்

இது தவிர ப்ரஹ்ம வித்யையின் பலமாக முண்டக -3-2-9-/ மாண்டூக்ய -3-3-
நாஸ்யா ப்ரஹ்ம வித் குலே பவதி –என்று அவனுடைய குலத்தில் ப்ரஹ்ம வித்யை அறியாதவர்கள் பிறப்பது இல்லை
உபவயம் தம் புஞ்ஜாமோ அஸ்மிச்ச லோகே அமுஷ்மிச்ச —
வயம் என்றால் இங்கு -அக்னி என்று பொருள்
தம் -மோக்ஷ அதிகாரி
உப புஞ்ஜாமோ-ப்ரஹ்ம பிராப்தி வரை அனைத்து பிராப்தி பிரதிபந்தகங்களிலும் இருந்து காப்பாற்றுவோம் –

இதற்கு பூர்வ பக்ஷம்
சாந்தோக்யம் -4-14-1-ஆச்சார்யஸ்து தே கதிம் வக்தா –
ஆச்சார்யர் உனக்கு மார்க்கத்தைக் குறித்து உபதேசிப்பார்
என்பதால் போகும் பாதையை மட்டும் உபதேசம் –
மாறாக ப்ரஹ்ம உபாசனத்துக்கு இருப்பிடமோ அதன் குணங்களோ இந்தப்பகுதியில் சொல்வதாகக் கொள்ள முடியாது

சித்தாந்தம்
சாந்தோக்யம் -4-14-1-ஆச்சார்யஸ்து தே கதிம் வக்தா -என்று
உபாஸனை பற்றி இல்லாமல் அர்ச்சிராதி பற்றி சொல்வது
அவன் வருந்தி இருக்க -அவனது கைங்கர்யத்தால் மகிழ்ந்த அக்னிகள் அவனைத் தேற்ற ப்ரஹ்ம ரூபம் குறித்து
ப்ரஹ்ம வித்யையின் அங்கமாக அக்னி வித்யை உபதேசித்தன-

அதன் பின்னர் –சாந்தோக்யம் -4-9-3- ஆச்சார்யாத் ஏவ வித்யா விதிதா சா திஷ்டம் ப்ராப்யதி–என்று
ஆச்சார்யன் மூலம் பெரும் வித்யையே சிறந்தது என்ற வார்த்தை எண்ணிப் பார்க்க —
ப்ரஹ்ம உபாசனம் பூர்ணம் ஆச்சார்யனாலே என்றும் –
ப்ரஹ்மம் அனைத்தையும் தன்னுள் கொண்டது என்றும்
ப்ரஹ்மம் இருப்பிடம் இன்னது என்றும்
அர்ச்சிராதி மார்க்கம் பற்றியும் இந்த உபதேசம்-
ஆகவே கதி -மார்க்கம் மூலம் -எஞ்சிய பகுதிகள் என்றவாறு

இதனால் தான் ஆச்சார்யனும் –
சாந்தோக்யம் -4-14-3-அஹம் து தே தத் வஹ்யாமி –என்றும்
யதா யுஷ்கரபலாச ஆபோ ந ஸ்லிஷ்யந்த ஏவமேவம் விதி பாபம் கர்ம ந ஸ்லிஷ்யதே–என்றும்
கல்யாண குணங்கள் விஸிஷ்ட ப்ரஹ்மம் கண்ணின் உள்ளே இருப்பதாக உபதேசிக்க -ஆகவே
சாந்தோக்யம் -4-10-5-கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம என்ற வரியில் கூறப்பட்ட ப்ரஹ்மமே
கண்ணில் உள்ள பரமாத்மா என்றதாயிற்று

இதுக்கு பூர்வ பக்ஷம்
சாந்தோக்யம் -4-10-5-கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம என்று உபதேசிப்பதன் பொருட்டு –
ஒன்றை மற்ற ஒன்றின் மேலே ஏறிட்டு -7-1-5-நாம ப்ரஹ்ம என்றும் -7-3-2-மநோ ப்ரஹ்ம என்றும்
போன்றதே என்பர்

இதுக்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்

—————————————————–

ஸூத்ரம் -47-அத ஏவ ச ச ப்ரஹ்ம —1-12-16-
இத்தகைய காரணங்களால்–க என்ற சப்தம் மூலம் கூறப்படும் ஆகாசமும் – ப்ரஹ்மம் என்றதாயிற்று

அத ஏவ ச -யத் வாவ கம் ததேவ கம் என்று அளவற்ற ஸூக ஸ்வரூபமான ப்ரஹ்மத்தைச் சொல்லி இருப்பதாலேயே
அந்த கம் என்னும் ஆகாசம்
ச ப்ரஹ்ம-ப்ரஹ்மமே
பிரசித்த ஆகாசமோ பிரசித்த ஸூ கமோ அன்று என்பதாம் –

உபகோசலனுக்கு -ப்ரஹ்ம வித்யையை அக்னி தேவன் -பிராணனே ப்ரஹ்மம் சுகமே ப்ரஹ்மம் ஆகாசமே ப்ரஹ்மம் –
சாந்தோக்யம் –4-10-5–
யதேவ கம் ததேவ கம் யதேவ கம் ததேவ கம் -என்று
ஆகவே கம் -ஆகாசத்தைக் குறிக்காது -ஸூகத்தையே குறிக்கும் –
ஆகாயம் போன்ற அளவற்ற சுகத்துடன் இருப்பவனே ப்ரஹ்மம் -என்பதால்
ஜீவனுக்கு பொருந்தாது -பரம் பொருளுக்கே பொருந்தும் —

இங்கே கூறப்படுவது இதுவே ஆகும் –
அக்னிகள் சாந்தோக்யத்தில் 4-10-5-
ப்ரானோ ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம -பிராணனே ப்ரஹ்மம் ஸூகமே ப்ரஹ்மம் -ஆகாசமே ப்ரஹ்மம் -என்று கூற
அப்போது உபகோஸலன் -சாந்தோக்யம் 4-10-5-
ஜீவனாம் யஹம் யத் ப்ரானோ ப்ரஹ்ம கம் ச து கம் ச ந ஜீவா நாமி –என்று
நான் முக்கிய பிராணன் ப்ரஹ்மம் என்று அறிவேன் –
ஆனால் அத்தகைய ப்ரஹ்மம் ஸூகம் என்றும் ஆகாசம் என்றும் நான் அறிய வில்லை என்றான்

ஸூகம் ஆகாசம் இவை ப்ரஹ்மத்தின் சரீரமே -ப்ரஹ்மத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவையே –
தனித்தனியே இவை உள்ளதால் ப்ரஹ்மத்தின் அபரிமித ஆனந்தத்தை சொல்லுமோ
இத்தை அறிந்த அக்னிகள் -சாந்தோக்யம் -4-10-5-
யதேவ கம் ததேவ கம் யதேவ கம் ததேவ கம்-என்று ப்ரஹ்ம ஸ்வரூபம் நிரதிசய ஆனந்த மயம் என்று சொல்லி நிறைவில் —
பிராணம் ச ஹாஸ்மை ததாகாசம் சோசு-என்றும் சொல்லி இந்த ப்ரஹ்மமே கண்ணுக்குள் உள்ளதாக சாந்தோக்யம் கூறும்

ஆகவே கண்ணுக்குள் உள்ளவன் பரமாத்மாவே தான் -என்றதாயிற்று

—————————————————————

ஸூத்ரம் -48-ஸ்ருத உபநிஷத் காக கத்யபி தா நாத் –1-2-17-
உபகோசலனுக்கு அக்னி தெளிவாக கூறியதால் கண்களில் உள்ளவன் பரம்பொருளே
பரமாத்மாவைக் குறித்து யாதாத்ம்ய ஞானம் உள்ளவன் அர்ச்சிராதி கதி சிந்தனம் எப்போதும்
பண்ணியபடியே இருக்க வேண்டும் என்பதால் கண்ணில் உள்ளவன் பரம புருஷனே ஆவான் –

சித்தாந்தம்
சாந்தோக்யம் -4-15-5-
தே அர்சிஷமே வாபி சம்பவந்தி அர்ச்சிஷோ அஹரஹ்ந அபூர்த்த்யமான பக்ஷம் என்று தொடங்கி
சாந்தோக்யம் -4-15-5-/6–
சந்த்ரமஸோ வித்யுதம் தத் புருஷோ அமாநவ ச ஏதாந் ப்ரஹ்ம கமயத்யேஷ தேவபதோ ப்ரஹ்ம பத ஏதேந
பிரதிபத்யமாநா இமாம் மாநவமாவர்த்த நாவர்த்தந்தே–-அர்ச்சிராதி கதி என்று உபதேசிக்கப்பட்டு நிகமிக்கப்பட்டது–

இந்தக் காரணத்தாலும் கண்களில் உள்ளவான் பரமாத்மாவே ஆவான் –
பரம்பொருளை அறிந்தவர்கள் அர்ச்சிராதி கதி மூலம் அவனை அடைகிறார்கள்

————————————————————

ஸூத்ரம் -49-அனவஸ்திதே அசம்பவாத் ச–1-2-18-
ஜீவன் எப்போதும் கண்களில் நிலை பெற்று இல்லையே –
மரணம் இன்றி இருப்பவன் என்பதும் ஜீவனுக்கு பொருந்தாது –

அனவஸ்திதே -ப்ரதிபிம்பாதிகளுக்கு கண்ணில் எப்போதும் ஸ்திதி இல்லாததாலும்
அசம்பவாத் ச-நிருபாதிகமான அம்ருதத்வம் முதலிய குணங்கள் பிரதி பிம்பாதிகளுக்கு சம்பவியாது என்பதாலும்
நேதர -அஷி புருஷன் அல்ல
ஆகவே அஷி புருஷன் என்பது பரம புருஷனே ஆகும் –

சித்தாந்தம்
கண்களால் காணப்படும் பொருள்களின் பிரதிபிம்பம் கண்களில் எப்போதும் இருப்பது இல்லை –
அம்ருதத்வம் போன்ற தன்மைகளும் அவற்றுக்கு இல்லையே
இந்திரியங்களை நியமிக்க ஜீவாத்மா ஹ்ருதயத்தில் உள்ளான் – கண்களின் உள்ளே இல்லையே –
இதே போன்று சூரியனும் கண்களின் உள்ளே இல்லை –

ப்ருஹத் ஆரண்யகா -7-5-10-
ரச்மிபிரேஷே அஸ்மின் ப்ரதிஷ்டித -ஒளிக்கதிர் மூலமாக சூரியன் கண்களில் உள்ளான் -கண்களுக்குப் புறப்படுகிறான்
அல்லாமல் கண்களில் உள்ளவனாக கூறப்பட வில்லை
மேலும் அம்ருதத்வம் போன்ற தன்மைகள் பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும் -மற்றவர்களுக்குப் பொருந்தாது –
ஆகவே கண்களில் உள்ளவன் பரமாத்மாவே ஆவான் -என்று நிரூபணம்

————

முந்தைய மூன்று அதிகரணங்களிலும்
உபாஸகனின் சரீரம் -ஹ்ருதயம் -முதலியவற்றில் குறிப்பிட்ட அளவு இடமுள்ள
பரமாத்மாவே உபாஸ்யன் என்று சொல்லி
மேல் மூன்று அதிகரணங்களிலும்
விஸ்தாரமான பிரதேசத்தோடு கூடிய பரமாத்மா உபாஸ்யன் என்று கூறுவது
என்று பேடிகா

கீழே1-2-14-ஸ்தா நாதி வ்யபதேசாத் ச –என்று
கண்ணுக்குள் ஸ்திதி நியமனம் முதலியவற்றால் அஷி புருஷன் பரமாத்மா என்று சாதித்து
இந்த அதிகரணத்தில் அந்த ஸ்திதி நியமனாதிகளை ஸ்தாபிக்கிறார் என்று சங்கதி –

2-4-அந்தர்யாமி யதிகரணம் -அந்தர் யாமியாகக் கூறப்படுபவன் ப்ரஹ்மமே –

ஸூத்ரம் -50-அந்தர்யாமீ அதிதைவாதி லோகாதிஷூ தத் தர்ம வ்யபதேசாத்–1-2-19-

அதிதைவம் அதிலோகம் அந்தர்யாமியாக உள்ளவன் பரம் பொருளே-அவனுக்கே உரிய தர்மங்கள் கூறப்படுவதால்

அந்தர்யாமீ அதிதைவாதி லோகாதிஷூ –இவற்றால் கூறப்படும் அந்தர்யாமி அபஹத பாப்மாவான பரமாத்மாவே –ஜீவன் அல்லன்
ஏன் எனில்
தத் தர்ம வ்யபதேசாத்-பரமாத்மாவுக்கே உரிய சிறந்த தர்மங்கள் பேசப்படுவதால்
சர்வ லோக சர்வ பூத சர்வ தேவாதிகளையும் ஒருவனாகப் புகுந்து அந்தர்யாமியாய் நியமிக்கை
ஸ்ரீ மன் நாராயணனின் தர்மமாகவே ப்ரஸித்தம்
அப்படியே உத்தாலகர் சர்வலோக பூதங்களையும் நியமனம் செய்யும் அந்தர்யாமியைப் பற்றி எனக்கு கூறும் என்கிறார் –

விஷயம் –
1-2-14-ஸ்தா நாதி வ்யபதேசாத் ச –
கண்களில் இருப்பவன் -கண்களை ஆள்பவன் -போன்ற தன்மைகளால் அவனே பரம் பொருள்-என்பதன் மூலம்
ப்ருஹத் ஆரண்யாகாவில்-3-7-18-
யச் சஷுஷி திஷ்டன் — என்பதில் பரமாத்மாவே கண்ணில் உள்ளதாக ஓதப்படுகிறது என்று நிச்சயிக்கப்பட்டு –
அது மெய்யானதே ஆகும் என்று கூற உள்ளார் –
வாஜசநேயர்களில் இரண்டு பிரிவுகளான காண்வம் மற்றும் மாத்யந்தினம் ஆகிய இரண்டிலும்
பிருஹத் 3-7-3-
ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ப்ருதிவ்யா அந்தர யம் ப்ருத்வீ நீ வேத
யஸ்ய ப்ருத்வி சரீரம் ய ப்ருத்வீமந்தரோ யமயதி ஏஷ தா ஆத்மா அந்தர்யாமி யம்ருத -என்று
யார் ஒருவன் இந்த பூமியிலே நிற்கிறானோ -பூமியின் உள்ளே உள்ளானோ -அப்படி அவன் உள்ளதை பூமி அறியாமல் உள்ளதோ –
யாருடைய உடலாக இந்த பூமி உள்ளதோ -பூமியில் உள்ளே இருந்து இயக்குபவன் யாரோ
அந்த பரம் பொருளே ஆத்மாவாகவும் மரணம் அற்றவனாகவும் உள்ள அந்தர்யாமி யாவான் என்று படிக்கப்பட்டது –
இதன் பின்னர் – நீர் நெருப்பு வானம் -அந்தரிக்ஷம் -காற்று -த்யு லோகம் – சூர்யன்- திசைகள் சந்தரன் ஆகாசம் இருள் ஒளி–
போன்றவற்றின் அபிமான தேவதைகளின் உள்ளே வசிப்பவனாகவும் -அவனே அனைத்து உயிர்களின் உள்ளும் வசிப்பவனாகவும்
பிராணன் வாக்கு கண்கள் காதுகள் மனம் தோல் விஞ்ஞானம் புத்தி ரேதஸ் போன்ற அனைத்திலும் அந்தர்யாமியாக உள்ளவன்-
இப்படி ஒருவன் உள்ளதாகக் கூறி -ஒவ் ஒன்றின் உள்ளிலும் உள்ளவனாகப் படிக்கப் பட்டு –
அவ்விதம் அவன் உள்ளதை அவை அறியாமல் –ஒவ் ஒன்றும் அவன் சரீரமாக உள்ளன என்றும்
அவற்றை அவன் நியமிப்பவனாகவும் கூறி முடித்து
அவனை ஏஷ த ஆத்மா அந்தர்யாமி அம்ருத –என்று முடிக்கப்பட்டது

ஆனால் மாத்யான சாகையில் மேலும் சில கருத்துக்கள் உள்ளன -அதாவது
ய சர்வேஷு லோகேஷு திஷ்டன் சர்வேஷு வேதேஷு ய சர்வேஷு யஜ்ஜேஷு -என்று
லோகங்கள் வேதங்கள் யஜ்ஜ்ங்களிலும் உள்ளான் என்றும் படிக்கப்பட்டுள்ளது
காண்வ சாகையில் -ப்ருஹு 3-7-22-
யோ விஞ்ஞாநே திஷ்டன் –யார் விஞ்ஞானத்தில் உள்ளானோ என்று படிக்கப்பட்டுள்ளது –
மேலும் ஏஷ த அந்தர்யாமி அம்ருத என்பதற்குப் பதிலாக
ச த அந்தர்யாமி அம்ருத -என்னும் வேறுபாடும் உள்ளது

இதில் சங்கை -அந்தர்யாமி ஜீவாத்மாவா பரமாத்மாவா –

பூர்வ பக்ஷம்
அந்தர்யாமியாகக் கூறப்படுபவன் ஜீவாத்மாவே –
அவனே–பிருஹத் -3-7-23- த்ரஷ்டா ஸ்ரோதா –என்று
அந்தர்யாமியாக உள்ளவன் கண்ணால் பார்ப்பவன் காதால் கேட்பவன்
இப்படி இந்திரிய ஜன்ய ஞானம் ஜீவாத்மாவுக்கே
மேலும் ப்ருஹ 3-7-23–
ந அந்ன்யோ தோஸ்தி த்ரஷ்டா -இவனை விடப் பார்ப்பவன் வேறே யாரும் இல்லை –
ஆக இங்கு அந்தர்யாமி ஜீவாத்மாவே தான் என்பர் பூர்வ பக்ஷிகள்

சித்தாந்தம்
1-2-19-அந்தர்யாமீ அதிதைவாதி லோகாதிஷூ தத் தர்ம வ்யபதேசாத்
அதிதைவம் -மற்ற தேவதைகளுக்கும் தைவம்
அதி லோகம் -அனைத்து லோகங்களுக்கும் தெய்வம் –
இவற்றால் அந்தர்யாமியாக சொல்பவன் பரமாத்மாவே
காண்வ சாகையில் உள்ள அதி தைவம் மாத்யந்தின சாகையில் உள்ள அதி லோகம் பதங்களை ஒட்டியே இந்த ஸூத்ரம்-
தர்ம வ்யபதேசாத்–பரமாத்மாவுக்கே உரிய தர்மங்கள் ஓதப்பட்டுள்ளதால் ஆகும்

இந்தப் பகுதியில் உத்தாலகர் ஒரு கேள்வி -பிருஹத் 3-7-1-
ய இமம் ச லோகம் பரம் ச லோகம் ஸர்வாணி பூதாநி யோ அந்தரோ யமயதி –என்று தொடங்கி
பிருஹத் 3-7-2-தம் அந்தர் யாமிணம் ப்ரூஹி -என்று முடித்து
அதுக்குப் பதிலாக யஜ்ஞவல்க்யரால் 3-7-3-ய ப்ருதிவ்யாம் திஷ்டன் –இத்யாதியால்
அனைத்தையும் நியமிக்கும் தன்மையும் சர்வாத்மாவாக உள்ள தன்மையும் பரமாத்மாவுக்கு பொருந்தும்
தைத்ரியம் ஆனந்த வல்லீ -3-11-2-
அந்த ப்ரவிஷ்டா சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா -என்றும்
தைத்ரியம் -2-6-
தத் ஸ்ருஷ்ட்வா தத் அநு ப்ராவிசத் தத் அநு பிரவிஸ்ய சச்ச த்யச்சா பவத் -என்றும் ஸ்ருஷ்டித்து புகுந்து சத் த்யத் ஆனான்
மேலும் ஸூ பால உபநிஷத்தில் -6-
நை வேஹ கிஞ்ச நாக்ர ஆஸீத் அமூலமநா தாரா இமா பிராஜா பிரஜா யந்தே திவ்யோ தேவ ஏகே நாராயண
சஷுச் ச த்ரஷ்டவ்யம் ச நாராயண ஸ்ரோத்ரம் ச ஸ்ரோதவ்யம் ச நாராயண —
ஸூ பால உபநிஷத்தும் –
ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயணா-என்றும்
ச்வேதாஸ்வதார உபநிஷத்தில் –
அந்த சரீரே நிஹிதோ குஹாயோ மஜ ஏகோ நித்யோ யஸ்ய ப்ருத்வீ சரீரம் ய ப்ருதிவீம் அந்தரே சஞ்சரந்யம்
ப்ருத்வீ ந சேத் யஸ்ய ஆப சரீரம் -என்றும்
ச்வேதாஸ்வதார உபநிஷத்தில்
யஸ்ய ம்ருத்யு சரீரம் யோ ம்ருத்யும் அந்தரே சஞ்சரந்யம் ம்ருத்யுர் ந வேதைஷ சர்வ பூத அந்தராத்மா
அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்றும் உள்ளதே

ஆக சர்வாத்மாவால்வும் அனைத்தையும் சரீரமாகக் கொண்டும் அனைத்தையும் நியமித்தல்
பரமாத்மாவுக்கே பொருந்தும்

மேலும் த்ரஷ்டா -காண்பவன் என்றாலும் பரமாத்மாவைச் சொல்வதில் குறை இல்லையே
ஸ்வபாவிக சர்வஞ்ஞத்வம் ஸத்யஸகல்ப்பத்வம் உண்டே
ஸ்வேதாஸ்வர -3-19-
பச்யத்ய சஷூ ச ஸ்ருணோத்ய கர்ண –அபாணி பாதோ ஜவநோ க்ருஹீதா –
இந்திரியங்களின் அவசியம் இல்லையே அவனுக்கு

மேலும் பிருஹத் -3-7-23-
நாந்யே அதோ அஸ்தி த்ரஷ்டா என்று இவனைப் போலே இல்லையே
இவனே நியமிக்கிறான்-இவனை நியமிப்பவர்கள் யாரும் இல்லை —
யாராலும் பார்க்கப்படாமல் பார்க்கிறான்

மேலும் காணவ சாகை பிருஹத் -3-7-23-ஏஷ த ஆத்மா -இது உனது ஆத்மா என்றும்
மாத்யாந்தின சாகையில் -ச த ஆத்மா அவன் உனது ஆத்மா என்று வெவ்வேறு விதமாகவும் உண்டு
ஜீவாத்மாவுக்கு ஆத்மாவாக தே என்று வேற்றுமை உருபால் பிரித்து சொல்வதால்
ஜீவாத்மாவின் அந்தராத்மாவாக ஜீவாத்மாவே இருக்க முடியாதே

————————————————————-

ஸூத்ரம் -51-ந ச ஸ்மார்த்தம் அதத்தர்மாபி லாபாத் சாரீர ச–1-2-20-

பிரக்ருதியும் ஜீவன்களும் அந்தர்யாமியாக இருக்க ஓயயலாதே-அவர்களுக்கு பொருந்தாத தன்மை கூறப்படுவதால்

சித்தாந்தம்
ந ச ஸ்மார்த்தம் அதத்தர்மாபி லாபாத் சாரீர ச
ஸ்மார்த்தம்-என்பது ப்ரக்ருதி-கபில ஸ்ம்ருதியில் கூறப்பட்ட
சாரீர-என்பது ஜீவாத்மா
இந்த இரண்டும்
ந ச -அந்தர்யாமி அல்ல
ஏன் எனில்
அதத் தர்மாபி லாபாத்-ஜீவனுக்கும் பிரதானத்துக்கும் சம்பவிக்காத சர்வ நியாமகத்வம்
போன்ற தன்மைகளைப் பேசுவதால்
எப்படி அசேதனமான பிரதானம் சர்வஞ்ஞாதிகள் கூடாமையாலே அந்தர்யாமி அன்றோ
அப்படியே சாரீரனும் ஜீவனும் என்று கருத்து –
கீழே சொல்லப்பட்ட தன்மைகள் இவற்றுக்குப் பொருந்தாதே

———————————————————–

ஸூத்ரம் -52-உபயே அபி ஹி பேதே ந ஏநம் அதீயதே-1-2-21-

இரண்டு சாகைகளிலும் அந்தர்யாமியாய் வேறுபட்டவனாக கூறப்பட்டுள்ளதே

உபயே அபி ஹி -காண்வர்களும் மாத் யந்தினர்களும்
ஏநம் -இந்த அந்தர்யாமியாய்
பேதே ந -ஆத்ம நியாந்தா என்றும் நியாம்யன் என்றும் பேதத்தாலே
அதீயதே-ய ஆத்ம நி திஷ்டன் -இத்யாதி வாக்யங்களாலே படிக்கிறார்கள்
ஆதலின் அந்தர்யாமி ஸ்ரீ மன் நாராயணனே என்று உறுதி யாயிற்று –

ப்ருஹத் ஆரண்யாகவில் -மாத்யந்தின சாகையில் -3-7-22-
ய ஆத்ம நி திஷ்டன் ஆத்ம நோ அந்தர யமாத்மா நவேத யச்யாத்மா சரீரம்
யா ஆத்மா நமந்த்ரோ யமயதி ச தா ஆத்மா அந்தர்யாம் அம்ருத -என்றும் –
காண்வ சாகையில் -3-7-22-
யோ விஜ்ஞான திஷ்டன் -என்றும் சொல்லி இருப்பதால் பரமாத்வையே சொன்னதாயிற்று –

2-4-அந்தர்யாமி யதிகரணம் சம்பூர்ணம்

——————————————————————-

2-5-அத்ருத்யச்வாதி குணாதிகரணம் -அஷரம் எனப்படுபவனும் ப்ரஹ்மமே-

முன் அதிகரணத்தில் அந்தர்யாமி வித்யையில் பரம புருஷனுக்கு ஜீவ நியாமகத்வம்
அத்ருஷ்டமாய் த்ருஷ்டா வாதல்-பிறரால் காணப்படாமல் தான் காண்பவனாய் –
இவை கூறப்பட்டமையால் ஜீவன் அந்தர்யாமி அல்லன் எனப்பட்டது
அதர்வண சைகையில் முண்டக உபநிஷத்தில் -பர வித்யையில் இத்தகைய
அத்ருஷ்டனாய் த்ருஷ்டா என்று கூறப்படவில்லை -அத்ருஸ்யன் என்று மட்டும் கூறப்பட்டு உள்ளது –
ஆதலின் அத்ருஸ்யனாயும் அஷராத் பரத பரனாயும் உள்ளவர் ப்ரக்ருதி அல்லது ஜீவனே யாகக் கூடும்
என்ற சங்கையால் சங்கதி

ஸூத்ரம் -53-அத்ருச்யத்வாதி குணக தர்மோக்த-1-2-22-

அவனுக்கே உரித்தான தன்மைகளுடன் யாராலும் காணப்படாமல் உள்ளவன்

முண்டக உபநிஷத் –
அத பரா யயா தத் அஷரம் அதி கமே யத் தத் த்ரேஸ்யம் அக்ராஹ்யம் அகோத்த்ரம் அவர்ணம் அசஷூ ஸ்ரோத்ரம்
தத் அபாணி பாதம் நித்யம் விபும் சர்வகதம் ஸூ ஸூஷ்மம் தத் அவ்யயம் யத் பூத யோநிம் பரிபச்யந்தி தீரா -என்றும்
முண்டக உபநிஷத்-2-1-2-
அஷராத் பாரத பர -என்றும்-

சங்கை -இங்கே காணப்படாத தன்மைகளுடன் கூடிய அக்ஷரம் இரண்டு இடங்களில் படிக்கப்படுகிறது –
ப்ரக்ருதியும் புருஷனுமா -இரண்டுமே பரமாத்மாவா

பூர்வ பக்ஷம்
இங்கு பிரக்ருதியும் புருஷர்களும் சொல்லிற்று
பிருஹத் 3-7-23-அத்ருஷ்டோ திருஷ்டோ –
முண்டக -2-1-2-அஷராத் பரத பர -என்று அஷரத்துக்கு காணப்படாத தன்மையும் –
ஸ்தூல மூல பிரக்ருதியைச் சொல்லி -இந்த பிரதானத்தைக் காட்டிலும் மேலான சமஷ்டி புருஷனையும் சொல்லிற்று
இப்படி புருஷனால் நிர்வகிக்கப்படும் பிரதானமானது மஹத்தாதி அனைத்தையும் ஏற்படுத்துகிறது என்பர் –

இதனை அடி ஒட்டியே முண்டக 1-1-7-
யதோர்ணாபி ஸ்ருஜதே க்ருஹ்ணேதே ச யதா ப்ருதிவ்யாம் ஒளஷதய சம்பந்தி யதா சதா புருஷாத் கேஸலோமாநி
ததா ஷராத் சம்பவ தீஹ விஸ்வம் –என்று
சிலந்திப்பூச்சி வலை -மண் தாவரம் -உடலில் முடி நகம் -போலே அக்ஷரத்தில் இருந்து உலகம் –
ஆகவே இங்கு பிரதானமும் ஜீவாத்மாவும் சொல்லப்பட்டது

சித்தாந்தம்
புருஷனால் அதிஷ்டிதமான ப்ரதானமே மஹத்தாதி விகாரங்கள் ஹேது என்பதைக் கண்டிக்கிறார்

அத்ருச்யத்வாதி குணக -அத்ருஸ் யத்வாதி குணங்களை யுடையவனும் அஷராத் பரதப்பரனும் பரமாத்மாவே
அத்ருச்யத்வாதி குணக -புல்லிங்காத்தால் -அஷராத் பரதப்பரன் வாக்கியமும் இங்கு விஷயம் என்று குறிப்பால் உணர்த்தப்படுகிறது –
தர்மோக்த-யஸ் ஸர்வஞ்ஞ ஸர்வவித் முதலிய வாக்யங்களால் ஸர்வஞ்ஞத்வம் சொல்லப்படுவதால்

முண்டகம் 1-1-5-யயா தத் அக்ஷரம் அதிகம்யதே-என்று எந்த ஒரு வித்யையால் அக்ஷரம் அறியப்படுகிறதோ -என்றும்
முண்டக -1-1-7-தத் அஷராத் சம்பவ தீஹ விஸ்வம் -இந்த அக்ஷரத்தில் இருந்து இந்த உலகம் வெளிப்படுகிறது
என்பதால் இந்த அக்ஷரமே காரணம்

தொடர்ந்து -முண்டக -1-1-9-
ய சர்வஞ்ஞ சர்வவித் யஸ்ய ஞானமயம் தபஸ் தஸ்மாத் ஏதத் ப்ரஹ்ம நாம ரூபம் அன்னம் ச ஜாயதே -என்று
அனைத்துக்கும் பிறப்பிடம் அவனே என்றும்
ததாஷராத் சம்பவதீஹ விச்வம் -என்றும்
பரம் பொருளில் இருந்து அஷரம்-அழிவு இல்லாத -உலகில் உள்ள அனைத்தும் தோன்றின-

மேலும் முண்டக -2-1-2-அஷராத் பரத பர-என்று அஷரத்துக்கும் அப்பால் பட்டவன்
இங்கு கீழே சொன்ன அக்ஷரம் இல்லை
இங்கு அக்ஷரம் அசேதனமான பிரக்ருதியையே சொல்லும்

————————————————————–

ஸூத்ரம் -54-விசேஷண பேத வ்யபதேசாப்யாம் ச ந இதரௌ-1-2-23-

தனித்துக் கூறுவதாலும் -வேறுபாட்டினை உரைப்பதாலும் -பிரகிருதி மற்றும் புருஷர்கள் கூறப்பட வில்லை

சித்தாந்தம்
முண்டகம் 1-1-1-
ச ப்ரஹ்ம வித்யாம் சர்வ வித்யா ப்ரதிஷ்டாம் அதர்வாய ஜ்யேஷ்ட புத்ராய பிராஹா -என்று
நான்முகன் தனது மூத்த புத்திரனான அதர்வனுக்கு ப்ரஹ்ம வித்யை உபதேசிக்க
அந்த பரம்பரையில் வந்த அங்கிரஸ்ஸும் ப்ரஹ்ம வித்யை அறிந்து இருந்தான்

முண்டக -1-1-3-
ஸுவ்நகோ ஹ வை மகாசாலோ அங்கிரஸம் விதிவத் உபசன்ன பப்ரச்ச கஸ்மிந்து பகவோ விஞ்ஞாதே
ஸர்வமிதம் விஞ்ஜாதம் பவதி -என்று மகாசாலர் என்னும் ஸுவ்நக பகவான் அங்கிரஸ்ஸு இடம் கேட்க

முண்டக 1-1-4-
தஸ்மை ச ஹி உவாச த்வே வித்யே வேதி தவ்யே இதி ஹ ஸ்ம யத் ப்ரஹ்ம விதோ வதந்தி பரா ச ஏவ அபரா ச -என்று
உயர்ந்த தாழ்ந்த இரண்டு ப்ரஹ்ம வித்யை பற்றிச் சொல்ல -ப்ரஹ்மத்தை நேராகவும் ஆழ்ந்த த்யானத்தாலும் –
உபாசனத்தால் அந்தர்யாமி தயாவாகும் இரண்டு விதம்
நேரடியாக -அபரோக்ஷ ஞானம் -பக்தி ரூபா பன்ன ஞானம் –

இதனை முண்டகம் -3-2-3-
யமே வைஷ வ்ருணுதே தேந லப்ய-என்று சொல்லுமே
உபாசனம் -சாதன சப்தகம் -விவேகாதிகள் -இதனை பிருஹத் -4-4-22-
தமேதம் வேதாநு வசநேந ப்ரஹ்மணா விவிதஷயந்தி யஜ்ஜேன தாநேந தபஸா நாசகேந -என்று சொல்லும்

இவை இரண்டையும் ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-60-60-
தத் பிராப்தி ஹேதுர் ஞானம் ச கர்ம சோக்தம் மஹா முநே ஆகமோத்தம் விசோகச்ச த்விதா ஞானம் ததோச்யதே–என்று
வேத ஜன்ய ஞானமும் -விவேகாதி ஜன்ய கர்மம் -என்றும் உண்டே

முண்டக -1-1-5-தத்ர அபரா ருக்வேதா யஜுர் வேதா -அபார வித்யை ருக் யஜு வேதங்களால் கிட்டும் -என்றும்
தர்ம சாஸ்த்ராணி -ப்ரஹ்ம ஞானம் பெற்று -அத பரா யயா தத் அக்ஷரம் அதிகம் யதே -என்று
எந்த ஒரு மேலான வித்யையில் அக்ஷரம் என்ற ப்ரஹ்மம் அறியப்படுகிறதோ -என்றும் சொல்லுமே

தொடர்ந்து -1-1-6-யத் தத்ரேஸ்யம் -எதனைக் காண இயலாதோ -என்று பரோக்ஷ அபரோக்ஷ ஞானங்கள் இரண்டுக்கும்
விஷயமான ப்ரஹ்ம ஸ்வரூபம் சொல்லி -1-1-7-யதோர்பண நாபி ஸ்ருஜதே க்ருண்ஹதே ச –என்று
சிலந்திப் பூச்சி நூலை உமிந்து இழுத்துக் கொள்வதைப் போலே பிரபஞ்ச ஸ்ருஷ்ட்டி –
என்பதை -1-1-8-தபஸா சீயதே-( சீயதே என்றால் வளருகிறது ) ப்ரஹ்ம ததோ அன்னம் அபி ஜாயதே அந்நாத் பிரானோ
மன சத்யம் (சத்யம் என்று அனைத்து சரீரங்கள் ) லோகா கர்மஸூ சாம்ருதம் -என்று
தபஸ்ஸால்-ஞானத்தால் – ப்ரஹ்மம் -ப்ரஹ்மத்தில் இருந்து அனைத்து -உத்பத்தி
யஸ்ய ஞான மாயம் தபஸ் 1-1-9-

அடுத்து முண்டக -1-1-9-ய சர்வஞ்ஞ சர்வ வித் -என்று அனைத்தையும் அறிபவன் -எண்ணியதை முடிக்க வல்லவன்
அக்ஷர ஏதத் கார்ய ஆகாரம் ப்ரஹ்மம் நாம ரூபம் ச ஜாயதே -உயர்ந்த ப்ரஹ்மத்தில் இருந்தே வெளிப்படுகிறது

தத் ஏதத் சத்யம் –ப்ரஹ்மத்தின் ஸ்வபாவிக சத்யத் தன்மை சொல்லி
மந்த்ரேஷு கர்மாணி கவயோ யாந்யபஸ்யன் தாநி த்ரேதாயாம் பஹுதா சந்த தாநி தாந்யா சரத நியதம் சத்ய காமா -என்று
ப்ரயோஜனாந்தரங்களை விட்டு ப்ரஹ்ம ப்ராப்திக்கே -ஏஷ வா பன்ன-இதுவே உனது மார்க்கம்
ப்லவா ஹி ஏதே அத்ருடா யஜ்ஜ ரூபா அஷ்டாத ஸோக்தமவரம் ஏஷு கர்ம ஏதச்சேயோ யே அவி நந்ததி மூடா
ஜரா ம்ருத்யும் தே புனரேவாபி யந்தி –என்று மூடர்கள் அல்ப பலன்களுக்கு யாகம் செய்கிறார்கள்

முண்டக 1-2-11-தபஸ் ஸ்ரத்தே ஹி உபவஸந்தி –என்று பலத் த்யாக பூர்வக தபஸ்ஸால் ப்ரஹ்ம பிராப்தி
பரீஷ்ய லோகான் – அல்ப அஸ்திரத்வாதி தன்மைகள் கொண்ட லோகங்களைப் புரிந்து கொண்டு
முமுஷுவாக குருவை அணுக அவனுக்கு குரு உபதேசம்
முண்டக -2-1-1-ததே தத் சத்யம் யதா ஸூ தீப்தாம் -என்று தொடங்கி
முண்டக -2-1-10-ஸோ அவித்யா க்ரந்திம் விக்ர தீஹ ஸோம்ய-என்று அறியாமை என்னும் முடிச்சுகளை அவிழ்த்துக் கொள்கிறான்
முண்டக -2-2-1–ஆவி சந்நிஹிதம்-யோகிகளால் காணப்படுகிறான்
சாம்யாபத்தி பெறுகிறான் -இப்படியாக சுருதியில் பிரகரணம் முடிகிறது

இவ்வாறு பல அசாதாரண விசேஷணங்களையும் சொல்லி மேலே ப்ரஹ்மத்துக்கும் பிரகிருதி ஜீவ வேறுபாட்டை
முண்டக -2-1-2-
திவ்யோ ஹி அமூர்த்த புருஷ ச பாஹ்யாப் யந்தரோ ஹி அஜ அப்ரானோ ஹி அமாந சுப்நோ ஹி அஷராத் பரத பர-என்றும் சொல்லுமே

கஸ்மிந்து பகவோ விஞ்ஞாதே ஸர்வமிதம் விஞ்ஜாதம் பவதி -முதலிய இடங்களில்
காரணத்தை அறிவதால் காரியப்பொருள்கள் அனைத்தையும் அறியலாம்
என்ற ப்ரதிஜ்ஜையால்
இந்த பூத யோனியான அக்ஷரத்தை விசேஷ்யமாகக் குறிப்பதாலும்
ந இதரௌ-பிரதானமும் ஜீவனும் குறிப்பிடப்பட வில்லை
இங்கு யயாத தக்ஷரம் என்று ப்ரஹ்மமே கூறப்படுகிறது
அஷராத் பரத்பரம் -என்ற இடத்தில் ஐந்தாம் வேற்றுமை ஈறான அக்ஷர பாதத்தால் பிரதானம் கூறப்பட்டது
பிரதானத்தை விட பரனான ஜீவனை விட மேம்பட்டவன் என்று இவ்வாக்கியம்பரமாத்மாவையே குறிப்பதாகும்-

ஆகவே அக்ஷரம் என்பது பரமாத்மாவே தான் –
அச் -தாது -பரவி இருப்பதை குறிக்கும்
ஷர -வெளி வருதல் -உண்டாக்குதல் பொருளில்
அக்ஷரம் -வேறு ஒன்றால் உண்டாக்கப்பட்டு வருதல் இல்லாதது என்றுமாம்

ஆகவே நாம ரூபம் வேறுபாடு இல்லாத பிரதானம் அக்ஷரம் என்ற சொல்லால் கூறப்பட்டாலும்
ஸூஷ்ம நிலையில் அனைத்திலும் பரவி உள்ளது என்பதாலும் –
மஹத்தாதிகள் போலே உண்டாவது இல்லை என்பதாலும்
இவ்விதம் அக்ஷரம் என்ற பதம் கொண்டு கூறப்பட்டாலும் அது எதில் இருந்தும் வெளி வருவது இல்லை என்பதால்
தனிப் பெயர் கொண்டு அழைக்கப்பட வேண்டிய தகுதி அதற்கு இல்லையே

——————————————————————-

ஸூத்ரம் -55-ரூப உபன்யா சாத் ச –1-2-24-

உலகம் அனைத்தும் -அக்ஷரத்தின் சரீரம் -பரம்பொருளின் அங்கம் என்பதால் அஷரம் எனபது பரம் பொருளே

முண்டக உபநிஷத் -2-1-4-
அக்னிர் மூர்த்தா சஷூஷீ சந்திர சூர்யௌதிச-ஸ்ரோத்ரே வாக்விவ்ருதாச்ச வேதா
வாயு பிரானா ஹ்ருதயம் விச்வமச்ய பத்ப்யாம் ப்ருத்வி ஹ்யேஷ சர்வ பூதாந்தராத்மா -என்று
அவனுக்கு அக்னி எனப்படும் த்யுலோகம் தலை -சந்திர ஸூர்யர்கள் கண்கள்-திசைகள் காதுகள் -வேத ஒலியே பேச்சு-
வாயு மூச்சு – உலகம் இதயம் -பூமியே கால்கள் -அனைத்துக்கும் அந்தராத்ம்னா-

அனைத்து உலகங்களையும் சரீரமாகக் கொண்டுள்ள இப்படிப்பட்ட வடிவம் –
அனைத்துக்கும் அந்தராத்மாவாக உள்ள பரமாத்மாவுக்கே மட்டுமே கூடும்

இவ்வாறு விஸ்வ ரூப உபந்யாசத்தாலும்
பரமபுருஷனே அத்ருஸ் யத்வாதி குணகன் அஷராத் பரதப் பரன் என்றும் நிரூபிதமாயிற்று –

ஆகவே அத்ருஸ்யத்வம் -காணப்படாமை -போன்ற தன்மைகள் கொண்டதாகக் கூறப்படும்
பூத யோனி அக்ஷரம் என்பது பரமாத்மாவையே குறிக்கும் –

2-5-அத்ருத்யச்வாதி குணாதிகரணம் சம்பூர்ணம்

————————————————————-

2-6-வைச்வா நராதிகரணம் -வைச்வா நரன் எனப்படுபவனும் பரம் பொருளே-

இப்படிக் கூறப்பட்ட விஸ்வ ரூபம் ப்ரஹ்மத்தைத் தவிர வைச்வா நரனுக்கும் காணப்படுவதால்
இந்த ரூபத்தால் பர ப்ரஹ்மத்தைச் சாதிக்க முடியாது என்று சங்கித்து
அந்த வைச்வா நரனும் பரமாத்மாவே என்று சாதிக்கிறார் என்று சங்கதி

மேலும் ரூபோ பன்யா ஸாச்ச –என்ற ஸூத்ரத்தில்
விஸ்வரூப உபந்யாசத்தாலலே த்யு மூர்த்தத்வாதி –ஆகாயமே தலை கற்பனையாலும்
பகவானுக்கு பரமபுருஷத்வம் சாதிக்கப் பட்டது
இந்த அதிகரணத்தில் மேற்படி கற்பனையால் வைச்வா நரன் என்பதும் பரமபுருஷன் என்று சாதிக்கப் படுவதால்
ப்ரசங்க சங்கதி –

ஸூத்ரம் -56-வைச் வா நர சாதாரண சப்த விசேஷாத்-1-2-25-

சாந்தோக்யத்தில் வைச்வா நரன் எனப்படுபவனும் பரம் பொருளே-பொதுவான பதத்தைச் சிறப்பித்து கூறுவதால்

விஷயம்
சாந்தோக்யம் -5-11-6-
ஆத்மா நமேவேமம் வைச்வா நரம் சம் ப்ரத்யத்யேஷி தமேவ நோ ப்ரூஹி –நீர் உபாசிக்கும் வைச்வா நாராத்மாவை
எங்களுக்கு உபதேசிப்பீராக -என்று தொடங்கி
சாந்தோக்யம் -5-18-1-
யஸ் த்வேவ மேதம் ப்ராதே சமாத்ரமபி விமானமாத்மாநம் வைச்வாநரம் உபாஸ்தே -என்று எங்கும் பரந்து –
அதனால் அளவற்ற வைச்வாநராத்மாவை –யார் உபாசிக்கிறானோ -என்று நிகமனம்

சங்கை
வைச்வாநராத்மா பரமாத்மாவா அல்லது வேறே யாரையேனும் குறிக்குமோ

பூர்வ பக்ஷம்
வைச்வாநரன் என்னும் பதம் நான்கு வித பொருள்களில் வரும்
ஜாடராக்னியும்
பஞ்சபூதங்களில் மூன்றாவதான அக்னியும்
அக்னி தேவதையிலும்
பரமாத்மாவிலும் என்ற நான்கு

பிருஹத் -5-9-1-
அயம் அக்னிர் வைச்வா நரோ யேநேதம் அன்னம் பச்யதே யதிதமத்யதே தஸ்யைஷ கோஷா பவதி யமேதத் கர்ணாவபிதாய
ஸ்ருனோதி ச யதோக்தபிஷ்யன் பவதி நைநம் கோஷம் ஸ்ருனோதி –என்று ஜடாராக்னி பொருளில் உண்டு

ரிக்வேதத்தில்
விச்வாத்ம அக்னி புவநாய தேவ வைச்வா நரம் கேதுமஹம் க்ருண்வன்-என்று தேவர்கள் பகல் இரவு வேறுபடுத்த
அக்னியை உண்டாக்கி என்று பஞ்ச பூத அக்னியே வைச்வா நரன் என்கிறது இங்கு

ருக்வேதம் 1-98-1-
வைச்வா நரஸ்ய ஸூமதவ் ஸ்யாம ராஜா ஹி கம் புவாநாநாமவி ஸ்ரீ –என்று அவன் ராஜா –
அவன் இடம் நற் பெயர் பெறுவோம் என்று தெய்வம் பொருளில்
தைத்ரிய ப்ராஹ்மணம் 3-11-8-
ததாத் மந்யேவ ஹ்ருதயே அக்நவ் வைச்வா நரே பிராஸ்யத்-என்றும்
ப்ரஸ்ன உபநிஷத் -1-7-
ச ஏஷ வைச்வா நரோ விஸ்வ ரூப ப்ரானோ அக்னிருதயதே -என்று
பரமாத்மா பொருளில் படிக்கப்படுகிறது
ஆக இங்கு பரமாத்மாவையே கூறும் என்று உறுதியாகக் கூற முடியாது என்பர் பூர்வ பக்ஷி

சித்தாந்தம் –
வைச்வா நரம் பரமாத்மாவையே சொல்லும்
நான்கு பொருள்களுக்கும் சாதாரணமான இந்த சப்தத்தை பரமாத்மாவுக்கு –
அசாதாரணமான தர்மங்களாலே விசேஷமாகச் சொல்லுகையாலே
அந்த தர்மங்களாவன
சாதாரண சப்த விசேஷாத்-பொதுவான சப்தம் சிறப்பித்துக் கூறப்படுவதால்

ப்ராசீன சாலர் – சத்ய யஜ்ஜர் இந்த்ரத்யும்னர் -ஜனர் -புடிலர் -ஐந்து மஹ ரிஷிகளும்
சாந்தோக்யம் -5-11-1-
கோ ந ஆத்மா கிம் ப்ரஹ்ம -என்ற கேள்வி கேட்டு விவாதம் தொடங்கி
அவர்களுக்கு ஆருணி என்பவரின் புத்திரர் உத்தாலகர் என்பவர் ஆத்மாவை வைச்வா நரன் என்று கருதி உபாசிக்கிறார் –

சாந்தோக்யம் 5-11-2-
உத்தாலகோ வை பகவந்தோ அயம் ஆருணி ஸம்ப்ரதீ மாமாத்மா நம் வைச்வா நரமத்யேதி தம் ஹந்தாப்யா கச்சாமி –என்று
இவர்கள் வர தனக்கு முழுமையான ஞானம் இல்லாமையால்

சாந்தோக்யம் -5-11-4-
அச்வபதிர்வே பகவந்தோ அயம் கேகய ஸம்ப்ரதீ மமாத்மாநம் வைச்வா நரமத்யேதி தம் ஹந்தாப்யா கச்சாமி –என்று
கேகேய நாட்டு அரசன் அஸ்வபதி இத்தை நன்கு அறிந்து உபாசிக்கிறார் -அவர் இடம் செல்வோம் என்று
ஆறு பெரும் சேர்ந்து அங்கே சென்றனர் –

அஸ்வபதி அவர்களை வரவேற்று கௌரவித்து சாந்தோக்யம் 5-11-5-ந மே ஸ்தேந –என்று தொடங்கி
யஷயமானோ ஹ வை பவந்தோ அஹம் அஸ்மி -என்றும்
யாவேதைகை காத்மா ருத்விஜே தானம் தாஸ்யாமி தாவத் பகவத்ப்யோ தாஸ்யாமி வசந்த பகவந்தோ –என்றும் உபசரித்து —
கோ ந ஆத்மா கிம் ப்ரஹ்ம –என்று இவர்கள் அவன் இடம் கேட்க –
ஆத்ம ப்ரஹ்ம சப்தத்தால் வைச்வா நரன் பரமாத்மாவே என்றதாயிற்று

மேலும் சாந்தோக்யம் 5-18-1-
ச சர்வேஷு லோகேஷு சர்வ வேஷு பூதேஷு சர்வேஷ் வாத்மஸ் வந்ந மத்தி -என்று
அவன் அனைத்திலும் உள்ளான் என்றும்

சாந்தோயம் -5-24-3-
தத்ய சேஷீகாத் லபக்நவ் ப்ரோதம் ப்ரதூயேத ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மாந ப்ராதூயந்தே –என்று
எஜமானின் பாபங்கள் போகின்றன –

பரமாத்மாவே என்பதற்கு மேலும் ஒரு காரணம் அடுத்த ஸூத்ரத்தில்

————————————————————————

ஸூத்ரம் -57-ஸ்மர்ய மாணம் அநு மாநம் ஸ்யாத் இதி –1-2-26-

இவ்விதமாக உலகம் அனைத்தையும் உருவமாகக் கொண்டதாக அறிவுறுத்தப்படுவதால்
வைச்வா நரன் பரமாத்மாவே -என்று கூறப்படும் விஷயத்தில் அடையாளமாகக் கூடும்

சித்தாந்தம்
அதர்வண வேதம் -முண்டக -2-1-4-
அக்னிர் மூர்த்தா சஷுஷி சந்த்ர ஸூர்யவ் திச ஸ்ரோத்ரே வாக் விவ்ருதாச்ச வேதா வாயு பிரானோ ஹ்ருதயம்
விஸ்மஸ்ய பத்ப்யாம் ப்ருத்வீ ஹி ஏஷ சர்வ பூத அந்தராத்மா –இங்கு அக்னி த்யு லோக அர்த்தம்

சாந்தோக்யம் -5-4-1-
அசவ் வை லோக அக்னி -என்றும்
த்யாம் மூர்த்தா நாம் யஸ்ய விப்ரா வதந்தி கம் வை நாபி சந்த்ர ஸூர்யவ் ச நேத்ரே திச ஸ்ரோத்ரே வித்தி பாதவ்
ஷுதி ச ஸோ அசித்யாத்மா சர்வ பூத ப்ரணேதா -என்றும்

சாந்தி பர்வம் -47-68-
யஸ் யாக்னி ராஸ்யம் த்யவ் மூர்த்தா கம் நாபிச் சரணவ் ஷிதிஸ் ஸூர்யச் சஷுர் திச ஸ்ரோத்ரம்
தஸ்மை லோகாத்மநே நம -என்றும் உண்டே

த்யு லோகம் முதல் பிருத்வீ லோகம் வரை வைச்வா நரனுக்கு மூர்த்தாதி அவயவமாக உபதேசிக்கப் படுகிறது
இந்த ரூபம் ஸ்ருதியிலும் ஸ்ம்ருதியிலும் பரம புருஷன் ரூபமாக பிரஸித்தம்

இதி -சப்தம் பிரகாரத்தைச் சொல்லுகிறது
இதி ஸ்மர்ய மாணம்-இந்தப் பிரகாரமான ரூபம்
அநு மாநம் ஸ்யாத் -இந்த வைச்வானர வித்யையில் ஸ்மரிக்கப் படுவதாய்க் கொண்டு
பரமாத்மாவே என்பதில் அனுமானம் சாதக லிங்கம் ஆகின்றது
ஆகையால் இத்தகைய தலை முதலியன கொண்ட வைச்வானரன் பரம புருஷனே என்று கருத்து

மேலும் இதுக்குப் பரிஹாரம் கூறுகிறார் –

————————————————————————–

ஸூத்ரம் -58-சப்தாதிப்ய அந்த பிரதிஷ்டா நாத் ச ந இதி சேத ந ததா தட்ருஷ்த்யுபதேசாத் அசம்பவாத் புருஷம் அபி ஏ நம் அதீயதே –1-2-27-

சப்தம் போன்றவற்றாலும் சரீரத்தின் உள் இருப்பவன் என்பதாலும் வைச்வா நரன் பரமாத்மாவே ஆவான் என்று கூற இயலாது
என்று சொல்வாய் ஆனால் அது சரி அல்ல –
ஜாடராக்னியைச் சரீரமாகக் கொண்டதாகவே பரமாத்ம உபாசனம் கூறப்படுவதாலும் –
அந்த ஜடராக்கினிக்கு மூன்று லோகத்தையும் சரீரமாகக் கொண்டு இருத்தல் என்பது பொருந்தாது என்பதாலும்
வைச்வா நரனே பரமாத்மா ஆகிறான் -இவனையே புருஷன் என்று வேதம் கூறும்

பூர்வ பக்ஷம்
வைச்வா நரன் பரமாத்மாவே என்று கூறப்பட்டது சரி யல்ல –
சப்தாதிப்ய அந்த பிரதிஷ்டா நாத் ச -சப்தம் போன்றவற்றாலும் உள்ளே இருப்பவன் என்பதாகும் –
யஜுர் வேதம் பின்பற்றும் வாஜசநேர்களின் வைச்வானர வித்யை பகுதியில் அக்னி என்பது வைஸ்வானரனுடன்
ஒத்தது போன்றே படிக்கப்பட்டுள்ளது –

சதபத ப்ராஹ்மணத்தில் 13-6-1-11–ச ஏஷ அக்னிர் வைச்வா நர -என்றும்
சாந்தோக்யம் -5-18-2-ஹ்ருதயம் கார்ஹபத்யோ மநோந் வாஹார்யபசந ஆஸ்யமாவஹநீய-என்று
வைச்வா நரனுடைய இதயம் கார்ஹபத்ய அக்னியாகவும் -மனம் அன்வாஹார்ய அக்னியாகவும் –
வாய் ஆஹவனீய அக்னியாகவும் -மூன்று வித அக்னிகளாக படிக்கப்படுகிறான் –

மேலும் சாந்தோக்யம் -5-19-1-
தத் யத் பக்தம் ப்ரதமம் ஆகச்சேத் தத்தோமீயம் ச மாம் பிரதமா மாஹிதம் ஜூஹூ யாத் ப்ராணாய ஸ்வாஹா –என்று
ப்ராணனுக்கு ஆதாரமாக வைச்வா நரன் கூறப்படுகிறான்

இது போன்று சதபத ப்ராஹ்மணம் 10-6-1-11-
ச யோ ஏதமேவ மாக்நிம் வைச்வா நரம் புருஷவிதம் புருஷேந்த ப்ரதிஷ்டிதம் –என்று புருஷனின்
சரீரத்துக்குள்ளே இருப்பதாக ஓதப்பட்டுள்ளது

இந்தக் காரணங்களால் வைச்வா நரன் வயிற்றில் உள்ள ஜாடராக்நியாக உள்ளான் –
எனவே பரமாத்மாவாக இருக்க முடியாது

இந்த சங்கையைப் பரிஹரிக்கிறார் இதி சேத் ந என்று

சித்தாந்தம்
ததா தட்ருஷ்த்யுபதேசாத் -இவ்விதம் பரமாத்ம உபாசனம் என்பது
ஜாடராக்கினியைச் சரீரமாகக் கொண்டுள்ள -என்றே கூறப்பட்டதால் –
வைச்வா நரவித்யா பிரகரணம் –
ச ஏஷா அக்னிர் வைச்வா நர -என்றும்

சாந்தோக்யத்தில் –
ஹ்ருதயம் கார்ஹபத்யோ மநோ அன்வா ஹார்யப ஆஸ்யமா ஹவ நீய-என்றும்
யாம் ப்ரத மாமா ஹூதிம் ஜூஹூயாத் தாம் ஜூஹூயாத் பிராணாய ஸ்வாஹா -என்றும்
ஏதமே வாக்னிம் வைச்வா நரம் புருஷவிதம் புருஷே அந்த ப்ரதிஷ்டிதம் -என்றும்-

அசம்பவாத் -ஜாடராக்னிக்கு மூன்று லோகங்களையும் சரீரமாகக் கொண்டு இருத்தல் பொருந்தாதே
எனவே ஜாடராக்னியை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தையே குறிக்கும்

புருஷம் அபி ஏ நம் அதீயதே –
இந்தக் கருத்தையே ஸ்ரீ பகவானும் ஸ்ரீ கீதையில் -15-14-
அஹம் வைச்வா நரோ பூத்வா பிராணி நாம் தேஹம் ஆஸ்ர த பிராண அபாந சமாயுக்த பசாம் யந்நம்
சதுர்விதம் –நான்கு வித உணவுகளை ஜீரணிக்கிறேன் -கடித்து -உறிஞ்சி -நாக்கில் தடவி குடிப்பது -என்றும் சொல்லுமே
இங்கும் ஜாடராலானத்தைச் சரீரமாகக் கொண்டு என்றே பொருள்

மேலும் சதபத ப்ராஹ்மணம் 10-6-1-11-
ச ஏஷோ அக்னிர் வைச்வா நரோ யத் புருஷ -என்று அந்த புருஷனே இந்த அக்னி
ஸ்வேதாஸ்வர -3-14-
சஹஸ்ரசீர்ஷா புருஷ -என்றும் –
ஸ்வேதாஸ்வர -3-15-
ததா புருஷ இத்யபி ஏவேதம் சர்வம் -என்றும் பரம் பொருளையே சொல்லிற்று-

புருஷம் அபி ஏ நம் அதீயதே
இந்த வைச்வாநரனையே வாஜஸனேயிகள் வைச்வாநர புருஷனாகப் படிக்கிறார்கள்
நிருபாதிக புருஷன் பரமாத்மா தான்

———————————————————————————

ஸூத்ரம் -59-அத ஏவ ந தேவதா பூதம் ச –1-2-28-

மேற் கூறிய காரணங்களால்
தேவதையான அக்னி தேவதையும்
பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியும் வைச்வா நரன் அல்ல

——————————————————————————–

ஸூத்ரம் -60-சாஷாத் அபி அவிரோதம் ஜைமினி –1-2-29-

வைச்வா நரன் அக்னி இரண்டுமே பரம் பொருளையே குறிக்கும் என்று ஜைமினி கூறுகின்றார் –
அக்னி என்ற பதத்துக்கு நேராகவே பரமாத்மா என்று பொருள் கொண்டாலும் விரோதம் இல்லை என்றபடி

சித்தாந்தம்
ஸ ஏஷோ அக்னிர் வைச்வானர என்பதுக்கு
அக்னி சப்தம் அக்னி சரீரக பரமாத்மா பரம் என்பது பாதராயணரின் திரு உள்ளம்

அக்னி என்பது அக்ரம் நயதி என்று கொண்டு
நேராகவே பரமாத்மாவைக் குறிக்கும் என்கிறார் ஜைமினி

வைச்வா நரன் அக்னி இரண்டுக்கும் சாமா நாதி கரண்யத்தால் ஒற்றுமை கூறப்பட்டு –
அக்னியே பரமாத்மா வாகும்-ஜாடராக்கினியை பரமாத்மாவை சரீரமாக கொண்டதால் –
ஆகவே பரமாத்மாவையே உபாஸிக்க வேண்டும் என்கிறார் ஜைமினி

விச்வேஷாம் நராணாம் நேத வைச்வா நர–அனைத்து உயிர்களையும் வழி நடத்துபவன் -என்றும்
அக்ரம் நயதீத் யக்நி-என்றும் நல்ல நிலைக்கு அழைத்து செல்பவன் என்றும் ஜைமினி கூறுகிறார்-

பரமாத்மாவை போலே அக்னி உயர்ந்த கதியான அர்ச்சிராதி கதிக்கு அழைத்து செல்வதால்
அக்னி பதமும் பரமாத்மாவையே குறிக்கும் என்றவாறு –

பூர்வ பக்ஷம்
சாந்தோக்யம் -5-18-1-
யஸ்த்வேவ மதம் ப்ராதேச மாத்திரம் அபி விமானம் –என்று
யார் ஒருவன் அளவற்றவனாக வைச்வா நரனை இப்படியாக த்யு லோகம் போன்ற பிரதேசங்களில் மட்டும்
அளவுபட்டவனாக உபாசிக்கிறானோ என்று உள்ளதே

அளவற்ற ப்ரஹ்மத்துக்கு இவ்வாறு அளவுள்ளது என்பது உபாசகர்களுக்கு
தெளிவு -அபி வ்யக்தி -ஏற்படவே என்பர் ஆஸ்மரத்யர்

தலையில் இருந்து பாதம் வரை அவயவ விசேஷங்கள் உடைய புருஷனாய் விளக்கியது
மோக்ஷம் விரும்புவோர் உபாசிக்கவே என்பர் பாதரி
இதுவும் தவறு அன்று
அனால் ஒரு சங்கை

ஆகவே உயர்ந்த ப்ரஹ்மம் அளவு படாதாக உள்ள போது பூமி மற்றும் த்யு லோகம் ஆகியவற்றுக்கு இடையே
அளவு கொண்டதாகக் கூறப்பட்டது எப்படி
ஆகவே வைச்வா நரன் ப்ரஹ்மம் அல்ல -என்பர் பூர்வ பக்ஷி

இதுக்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்

————————————————————————————

ஸூத்ரம் -61-அபி வ்யக்தே இதி ஆஸ்மத்ரய-1-2-30-

உபாசகனுக்கு சங்கை இன்றி இருக்க ஆஸ்மத்ரயர் கூறுகின்றார் –

சித்தாந்தம்
சாந்தோக்யம் 5-18-1-
யஸ்த்வேவமேதம் ப்ராதேச மாதரம் அபி விமா நம் –
பிரதேச மாதரம் -பரம்பொருளின் உடலின் அங்கங்களாக-
ஸ்வர்க்கம் தலை என்றும் -ஆதித்யன் கண்கள் என்றும் -வாயு பிராணன் என்றும் -ஆகாசம் சரீர நடுப்பாகம் என்றும்
நீர் மூத்திரப்பை என்றும் -பூமி பாதங்கள் என்றும் –
உபாசகனுக்கு தோற்றுவதற்காக மட்டுமே இவ்விதம் அளவுபடுத்திக் கூறப்பட்டது

இதுக்கு பூர்வ பக்ஷம்
பரம புருஷனுக்கு தலை போன்றவை உள்ளதாக அவனை புருஷ ரூபியாக ஏன் கூற வேண்டும்

இதுக்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்

————————————————————————————–

ஸூத்ரம் -62-அநு ச்ம்ருதே பாதரி-1-2-31-

பாதரி உபாசகனுக்கு -எளிதாகும்படி –அளவில்லாத பரம்பொருளை அளவு படுத்தி கூறுகின்றார்-

சித்தாந்தம்
சாந்தோக்யம் 5-18-1-
யஸ்த்வேவமேதம் ப்ராதேச மாதரம் அபி விமாந மாத்மா நம் வைச்வா நரம் உபாஸ்தே ச சர்வேஷு லோகேஷு
சர்வேஷு பூதேஷு சர்வேஷ்வாத்ம ஸ்வந் நமத்தி –என்று ப்ரஹ்மம் அடைய உபாசனம் கூறப்பட்டது
ஏதம் ஏவம் -இந்த ரூபம் கொண்ட அவன்
சர்வேஷு லோகேஷு சர்வேஷு பூதேஷு சர்வேஷ்வாத்ம-அனைத்து லோகங்களிலும் அனைத்து பூதங்களிலும்
அனைத்து ஆத்மாக்களிலும் உண்கிறான்
ப்ரஹ்மம் இது போன்று இருப்பதால் உபாசகன் பேர் ஆனந்தம் அடைகிறான்
கர்ம வஸ்யர் கர்ம பலமான அன்னத்தை உண்கிறார்கள் -முமுஷு அனுபவிக்கும் அன்னம் வேறாகும் –
அவன் மற்ற ஜீவாத்மாக்கள் அனுபவிக்கும் அன்னத்தைக் கை விட வேண்டும்

இதுக்கு பூர்வ பக்ஷம்
வைச்வா நரனே பரமாத்மா என்றால் உபாசகனுடைய ஹ்ருதயம் போன்ற அவயவங்களை ஏன் பலி பீடம்
போன்றவையாகக் கூற வேண்டும்
ஆனால் ஜடராக்னியைக் கூறுகிறது என்றால் சரியாகும்

இதற்கு சமாதானம் அடுத்த ஸூத்ரம்

————————————————————————————-

ஸூத்ரம் -63-சம்பத்தே இதி ஜைமினி ததா ஹீ தர்சயதி –1-2-32-

சம்பத்தே இதி ஜைமினி -இந்த வைச்வானர வித்யைக்கு அங்கமான ப்ராணாஹுதிக்கு
அக்னி ஹோத்ரத்தை நிரூபிக்கவே மார்பு முதலியவை வேதி முதலியவையாக உபதேசிக்கப் பெற்றன
என்று ஜைமினி கூறுகிறார்
ததா ஹீ தர்சயதி-பரமாத்ம உபாசனம் ஸர்வ பாப நிவர்த்தகம் என்றும் –
ப்ராணாஹுதியே அக்னி ஹோத்ரம் என்றும் ஸ்ருதியே காட்டுகிறது –

உபாசகனுடைய பல்வேறு அங்கங்களை பலி பீடம் போன்றவையாக உரைப்பது என்பது
வைச்வா நர வித்யையின் அங்கமாக உள்ள ப்ராணாஹுதியை அக்னி ஹோத்ரம் ஆக்குவதற்காகவே ஆகும்
என்று ஜைமினி எண்ணுகிறார் -ஸ்ருதியும் அப்படியே

சாந்தோக்யத்தில் –
உர ஏவ வேதிர் லோமாநி பர்ஹிர் ஹ்ருதயம் கார்ஹபத்ய-என்று
மார்பே வேதி என்னும் இடம் – -மயிர்களே தரப்பை -இதயமே கார்ஹபத்யம் என்றும்

சாந்தோக்யம் -5-24-1-
ய ஏததேவம் விதவாந் அக்னி ஹோத்ரம் ஜூஹோதி தஸ்ய
சர்வேஷூ லோகேஷூ பூதேஷு சர்வேஷ்வாத்மஸூ
ஹிதம் பவதி தத்யா சேஷீ கதூல மக்னௌ ப்ரோதம்
ப்ராதூயேத ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மா ந ப்ரதூயந்தே -என்று
ஐந்து முறை மந்த்ரம் சொல்லி பிரானா ஹூதி செய்பவன் வைச்வா நரனின் அக்னி ஹோத்ரமாக கொள்ளலாம்-

—————————————————————————-

ஸூத்ரம் -64-ஆமநந்தி ச ஏவம் அஸ்மின் –1-2-33-

இப்படி உபாசனம் செய்பவனின் உடலிலே வைஸ்வ நரன் உள்ளதாக உபநிஷத் சொல்லும்

ஆமநந்தி ச ஏவம் அஸ்மின்
ஏநம் -இந்தப் பரம புருஷனை
அஸ்மின்-இந்த உபாசகனின் சரீரத்தில் ப்ராணாஹுதியின் ஆதாரமாக
ஆமநந்தி -வேதங்கள் பேசுகின்றன

உபாசகன் தலையே பரமபதம் -கண்களே சூர்யன் -மூச்சுக் காற்றே வாயு -இடுப்பே ஆகாயம் –
மூத்திரப் பைகளே நீர் -கால்களே உலகம்
இப்படிப்பட்ட வைஸ்வ நரனுக்கு அக்னி ஹோத்த்ரம் அளிக்க வேண்டும் என்றதாயிற்று-

சித்தாந்தம்
சாந்தோக்யம் -5-18-2-
தஸ்ய ஹ வா ஏதாஸ்ய ஆத்மாநோ மூர்த்தவை ஸூ தேஜா –என்று உபாசகனுடைய தலையே
த்யு லோகம் என்னும் ஸ்வர்க்கம்

சாந்தோக்யம் 5-18-1-
யஸ்த்தேவமதம் ப்ராதேச மாத்ரபி விமான மாத்மாநம் வைச்வா நரம் உபாஸதே -என்று மூன்று லோகங்களையும்
சரீரமாகக் கொண்டதாக பரமாத்மா உபாசனம் சொல்லப்படுகிறது

தொடர்ந்து சாந்தோக்யம் -5-18-2-
தஸ்ய ஹ வா ஏதாஸ்ய ஆத்மாநோ மூர்த்தவை ஸூ தேஜா –என்று தொடங்குவதன் மூலம் ப்ராணாஹூதியை
அக்னி ஹோத்ரமாக கொள்ளப்பட வேண்டும் என்று கூறி வைச்வா நர உபாஸனையின் அங்கம் எனப்பட்டது —

உபாசகனின் தலை -ஸூ தேஜஸ் -த்யு லோகம்
உபாசகனின் கண்கள் -ஸூர்யன் -விஸ்வரூபம்
உபாசகனின் மூச்சுக்கு காற்று பிராணன் -வர்த்தமான்
உபாசகனின் இடைப்பகுதி பஹுளம்-ஆகாசம்
உபாசகனின் மூத்திரப்பை -வைச்வா நரேனின் மூத்திரப்பை
உபாசகனுடைய பாதங்கள் -வைச்வா நரனுடைய பாதங்கள் -பூமி
உபாசகனுடைய மார்பு -வேதி -பலி பீடம்/சரீர முடி -தர்பை /இதயம் கார்ஹபத்ய அக்னி /
மனாஸ் -அன்வாஹார்ய அக்னி /முகம் ஆஹவனீய அக்னி /
இவற்றைக் கொண்டு அக்னி ஹோத்ரம் செய்து ப்ராணாஹுதியை பரமாத்மாவுக்கு அளிக்கிறான்
இத்தை நிரூபிக்கவே அவயவங்கள் இது போன்று கூறப்படுகின்றன

இவ்விடம் ஸ்வர்க்கம் இத்யாதிகள் எல்லாம் பரமாத்மா என்றும் உபாசகன் சரீரத்தில்
உபாஸ்யனின் ஸ்வரூபமாக த்ருஷ்ட்டி பண்ணியும் உபாசன விதி
ஒன்றை மற்ற ஒன்றாக என்னும் பிராந்தி அன்று
அனைத்தும் ப்ரஹ்மமே என்னும் த்ருஷ்ட்டி தான்
அந்ய பொருள்களை த்யேயமாகக் கூறவில்லை
ஆகவே சங்கைக்கு இடம் இல்லை

இப்படியாக பரமாத்மாவான புருஷோத்தமனே வைச்வா நரன் என்று நிரூபிக்கப் பட்டான் –

—————–

1-ஸர்வத்ர பிரதீ ஸித்த அதிகரணத்தில் -தனக்கு அதீனமாக ஜகத் ஸ்தித்யாதிகளைக் கொண்டு
ஸர்வ பாவத்துடன் இருக்கும் கல்யாண குணம் அனுசந்தேயம்
2-அத்த அதிகரணத்தில் -உலகமுண்ட பெரு வாயன் என்னும் மங்கள குணம்
3-அந்தர் அதிகரணத்தில் -கண்களில் என்றும் நிலை பெற்று இருத்தல் என்ற திருக்குளம்
4-அந்தர்யாமி அதிகரணத்தில் சர்வத்தையும் சரீரமாகக் கொண்ட கல்யாண குணம்
5-அத்ருஸ்யத்வ அதிகரணத்தில் கல்பிதமான அக்னியாதி சரீரிகத்வ கல்யாண குணம்
6- வைச்வானர அதிகரணத்தில் ஸ்வர்க்காதி லோகங்களை அங்கமாகக் கொண்ட
வைச்வானர பதத்துக்கு விஷயமாகும் கல்யாண குணம்

இவ்வாறு ஆறும் என்று ஸ்வாமி தேசிகன் அருள் மொழி –

————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை –முதல் அத்யாயம் –முதல் பாதம் —

November 26, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

———-

எம்பெருமானே உலகு உய்ய வேத வ்யாசராய் சாரீரீரக சாஸ்திரத்தை நான்கு அத்தியாயங்களாக அருளிச் செய்தார்
அதுக்கு போதாயன பகவான் அறுபதினாயிரம் படி வறுத்த க்ரந்தமும்
கலியுக தொடக்கத்தில் டங்கர் ஆராயிரப்படியாக சுருக்கி அருளி
த்ரமிட முனிவர் அதற்கு பாஷ்யமும் அருளிச் செய்தனர்
நம் ஸ்வாமி அருளிச் செய்ததுக்கே ஸ்ரீ பாஷ்யம் என்று ஸ்ரீ சரஸ்வதி தேவியே திரு நாமம் சாத்தி அருளினாள்

ஸ்ரீ பாஷ்யம்
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே -மங்கள ஸ்லோகமே ஸ்ரீ பாஷ்ய சாரம்
சமன்வய -காரணத்வ
அவிரோதித்தவ -அபாத்யத்வ
உபாயத்வ
பலத்தவ –அதிகாரங்கள் நான்கும்

இரண்டாவது மங்கள ஸ்லோகத்தால்
இங்கு ப்ரஹ்ம விஷயமே விசாரம் என்றும்
அவனே நாம் அடையும் பயன் என்றும் விசாரிக்கப்படும் பொருள் என்றும் சம்பந்தம் காட்டி
போதாயனர் விஸ்தாரமாக அருளிச் செய்ததை -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் விளக்க
மங்களா ஸாஸனம் பண்ணி அருளுகிறார்

வேதார்த்த விசாரம் -ஒரே ஸாஸ்த்ரம்
4 அத்தியாயங்கள் –
1-சமன்வய -காரணத்வ
2-அவிரோதித்தவ -அபாத்யத்வ
3-உபாயத்வ
4-பலத்தவ –அதிகாரங்கள் நான்கும்

16 பாதங்கள்
1-ஜீவ மிக அஸ்பஷ்ட மாயும்
2-ஜீவ அஸ்பஷ்ட மாயும்
3-ஜீவ ஸ்பஷ்ட மாயும்
4-ஜீவ ஸ்பஷ்ட மாயும்
5-ஸாங்க்யாதி ஸ்ம்ருதி மூலமான தோஷ பரிஹாரம் காட்டுவது
6-ஸாங்க்யாதி பக்ஷங்கள் கண்டனம்
7-ஆகாசாதி த்ரவ்யங்களுக்கு ஸ்வரூப பரிணாம ரூபமான கார்யத்வம் கூறுவது
ஆத்மாக்களுக்கு ஸ்வ பாவ அந்யதா பாவ ரூப கார்யத்வம் கூறுவது
8-ஜீவ உபகரணமான இந்திரியாதிகளின் உத்பத்தி க்ரமம் கூறப்படுவது
9-வைராக்ய நிமித்தமாக புருஷனுக்கு ஏற்படும் தோஷங்கள்
10-ப்ராப்யத்தில் ஆசை தோன்ற ப்ரஹ்மத்துக்கு நிர்த்தோஷமும் கல்யாணைக தானத்வமும்
11-பகவானிடம் செய்யும் பக்தியின் பிரகாரங்கள்
12–பக்திக்கு வர்ணாஸ்ரம தர்மங்களை அங்கங்களாக விதித்தல்
13-உபாஸனா ஸ்வரூபமும் அநுஷ்டான க்ரமமும் விளக்கப்படுத்தல் -வித்யா மகிமையும் கூறுதல்
14-ஜீவன் உடலை விட்டுப் புறப்படுதல் -உத் க்ரமணம்
15-ஜீவனின் மோக்ஷ கதி சிந்தனம்
16-பிராப்தி -பலம் -மோக்ஷம் –

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வ நிஷ்டா –ஸ்லோகத்தால் ஸ்ரீ தேசிகன் 16 குணங்களுடன்
இப்பாதங்கள் விளக்குவதைக் காட்டி அருளுகிறார்

முதல் அத்தியாயத்தில்-11+6+10+8=35 அதிகரணங்கள்

முதல் நான்கு அதிகரணங்கள் -ஒரே ஸூத்ரம் ஒவ்வொன்றும்
1-1-1- அததோ ப்ரஹ்ம ஜ்ஞ்ஞாச –
1-1-2- ஜந்மாதி அஸ்ய யத–
1-1-3- சாஸ்திர யோநித்வாத்-
1-1-4-தத் து சமன்வயாத் –

முதல் இரண்டும் சித்த ரூபமான ப்ரஹ்மத்தில் பிரமித்திதி ஏற்படுத்தவும்
அடுத்த இரண்டும் ஸாஸ்த்ரமும் அதனால் ஏற்படும் புத்தியும் வீண் என்ற வாத நிரஸனம்

அதிகரணம் என்பது
1-விஷயம்
2-சம்சயம்
3-பூர்வபக்ஷம்
4-சித்தாந்தம்
5-பிரயோஜனம்
என்ற ஐந்து பொருள்களைக் கொண்டது

————

முதல் அதிகரணம் -ஜிஜ்ஞாஸாதி அதிகரணம்

இதில் ப்ரஹ்ம விசார ஸாஸ்த்ரம் விஷயம்
அது ஆரம்பிக்க வேண்டியதா இல்லையா என்று சம்சயம்
ஆரம்பிக்க வேண்டாம் என்பது பூர்வ பக்ஷம்
ஆரம்பிக்க வேண்டுவதே என்பது ஸித்தாந்தம்
ஸாஸ்த்ரத்தை நிர்ணயம் செய்வதே பலம்

ஸூத்ரம் -1- அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா –1-1-1-

இதில் விஷய வாக்கியம்
பரீஷ்ய லோகான் கர்மசிதான் ப்ராஹ்மணோ நிர்வேத மாயாத் –தத் விஞ்ஞானர்த்தம் ஸ குருமே வாபி கச்சேத் –என்பது
கர்மாக்களால் பெறப்படும் லோகங்களை எல்லாம் ஆராய்ந்த ப்ராஹ்மணன்
அக்கர்மங்களால் அக்ருதனான -செயலுக்கு விஷயமாகாத -எம்பெருமான் பெறப்பட முடியாதவன் என்று நிர்வேதம் பிறந்து
ப்ரஹ்ம நிஷ்டனான ஸ்ரோத்ரியனை ஆச்சார்யராக வரித்து சமித்தாதிகளைக் கையிலே உபஹாரமாகக் கொண்டு
எம்பெருமானை அறிந்து கொள்ள பிரார்த்திப்பது ஆகும்

இங்கு ஒருவன் ப்ரஹ்ம விசாரம் செய்வது என்பது அவனது ஆசையாலேயே ஏற்படக் கூடிதயதாகையால்
கிடைக்காத ஒன்றை கிட்ட அபூர்வ விதி ஆகாது
பின் என் என்னில்
ப்ரஹ்ம விசாரம் செய்ய விரும்புபவன் அத்தை ஆச்சார்ய முகேன
உபதேச பூர்வகமாகவே செய்ய வேண்டும் என்ற நியமத்தை விதிப்பதால்
நியம விதியே யாகும்

பூர்வ மீமாம்ஸையில் கடைசி ஸூத்ரம் –
ஸ விஷ்ணு ராஹ ஹிதம் ப்ரஹ்மேத்யா சஷதே தம் ப்ரஹ்மேத்யா சஷதே-என்று உள்ளது
அந்த ப்ரஹ்மத்தின் விசாரம் தொடங்குகிறது என்று இதில் வ்யாஸர்

அத -பிறகு
அத– இக்காரணங்களாலே
ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -ப்ரஹ்மத்தைப் பற்றி விசாரம் ஆராய்ச்சி செய்யத்தக்கது

கர்ம விசாரம் முடிந்து அவை அல்ப அஸ்திர பலன்களையே கொடுக்கும் என்றும்
ப்ரஹ்ம ஞானமே முடிவற்ற எல்லை இல்லா நிலையான பலனைக் கொடுக்கும் என்று
மேல் எழுந்தவாரி உணர்ந்து ப்ரஹ்ம விசாரத்தில் இழிகிறார் என்றவாறு

கர்ம விசாரம் செய்த பின்பே ப்ரஹ்ம விசாரம் என்பதற்கு -அத்வைதி பூர்வம் நடந்தது கர்ம விசாரமே அல்ல
1-நித்ய அநித்ய வஸ்து விவேகம்
2- சமதமாதி சாதன ஸம்பத்
3-இம்மை மறுமை பல போகத்தில் வைராக்யம்
4-மோக்ஷம் அடைய விருப்பம்
ஆகிய சாதன சதுஷ்டயமே பூர்வ விருத்தம் என்பர்

யாதவ பிரகாசரும் பாஸ்கரரும் முந்தையது தாப த்ரயத்தால் ஏற்பட்ட ஸ்ரமமே என்பர்
லகு பூர்வ பாசத்துக்கு லகு சித்தாந்தம் -மஹா பூர்வ பாசத்துக்கு மஹா சித்தாந்தம்
ப்ரஹ்ம ஆத்ம ஐக்ய ஞானமே உபாயம் என்றும்
நிர்விசேஷ ப்ரஹ்மமே ப்ராப்யம் என்றும்
இந்த ஐக்ய ஞானத்தால் அநிர் வஸநீய அஞ்ஞானமும் –
அதன் அடியாக பிரபஞ்சமும் நீக்கப்படுபவை என்றும் கூறுவார்
ஸ குண சாஸ்திரங்கள் குணங்களை அபேக்ஷிக்கையாலே துர்லபம் என்றும்
நிர்குண சாஸ்திரங்கள் பலம் மிக்கவை என்றும்

ஸத்யம் ஞானம் அநந்தம் -சோதக வாக்கியமும் நிர்குண ப்ரஹ்மத்தையே கூறும் என்பர்
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏக மேவம் அத்விதீயம் ப்ரஹ்மம் என்பதில்
ஸதேவ -விஜாதீயங்களான அசேதனங்களை விட்டு பேதத்தையும்
ஏகமேவ -என்று சஜாதீயன்களான சேதனங்களை விட்டு பேதத்தையும்
அத்விதீயம் என்று ப்ரஹ்மத்திடம் உள்ள ஸத்யத்வம் ஞானத்வம் போன்ற ஸ்வ கத தர்மங்களில் நின்றும் பேதத்தையும்
விலக்கி நிர்விசேஷ ப்ரஹ்மமே நிரூபிக்கப் படுகிறது
எனவே யஸ் ஸர்வஞ்ஞ ஸர்வவித்
தஸ்மாத் ஏதத் ப்ரஹ்ம நாம ரூப மன்னஞ்ச ஜாயதே முதலிய வாக்கியங்களில் உள்ள குணங்களை இல்லையாக்கி
நிர்க்குண ப்ரஹ்மமே கூறப்படுகிறது என்று காரண வாக்யத்துடன் ஐக்ய அர்த்தம் கொள்ள வேண்டும் என்பர் –

பிரமாணம் தர்க்கம் உபபாத்திகளைக் காட்டி நம் சித்தாந்தமான
பக்தி ரூபா பன்ன ஞானமே முக்தி உபாயம் -வெறும் தத்வ ஞானம் மட்டும் அல்ல
அது ஆசையால் கிட்டும் கேள்வி அறிவாலே கிட்டக்கூடியது விதிக்க வேண்டாம் என்று மஹா சித்தாந்தம்

இதுக்கு
ப்ரஹ்மத்தை அறிந்தவன் ப்ரஹ்மத்தை அடைகிறான் -அம்ருதம் ஆகிறான் சர்வ பாதங்களில் நின்றும் விடுபடுகிறான்
போன்ற வாக்யங்களிலே தத்வ ஞானமே முக்திக்கு வழி என்ற சங்கை
ஸ்ரவணம் மனனம் நிதித்யாஸனம்
காரணந்து த்யேய -என்பதால்
ஞானம் வேதனம் சொற்களுக்கு த்யானம் உபாஸனம் என்றே கொள்ள வேண்டும்
பக்தி ரூப ஞானமே முக்திக்கு சாதனம்
தஸ்மின் த்ருஷ்டே பராவரே -இதில் த்ருஷ்டே தர்சன சமானாகார சாஷாத்காரம் பெற தியானமே வழி
பேதங்களை ஏற்கக்கூடாது என்னும் பூர்வ பக்ஷிகளின் வாதத்தைக் கண்டித்து ஏற்க வேண்டும் என்று ஸ்தாபிக்கிறார்
தர்மமும் தர்மியும் எப்போதும் பேதம் உள்ளவையே

சத்யம் ஞானம் அநந்தம் ஸ்ருதி சஜாதீய பேதங்களைக் கண்டிக்க வில்லை
ஸதேவ -என்று ஸத்கார்ய வாதம்
ஏகமேவ -ஸூஷ்ம அவஸ்தை -உபாதான காரணம் காட்டும்
அத்விதீயம் -தன்னைத் தவிர வேறு நிமித்தம் இல்லை
கீதா வசனம் விஷ்ணு புராண வசனங்களைக் காட்டி அவன் ஒருவனே சமஸ்தத்துக்கும் அந்தர்யாமி என்று
நிர்விசேஷ ப்ரஹ்ம வாதத்தைக் கண்டித்தார்

ஏழுவித அனுபபத்திகள்
1- ஆஸ்ரய அனுப பத்தி -ஞானத்தால் பாதிக்கப்படும் அவித்யை ஞான ஸ்வரூபமான ப்ரஹ்மத்தையே
ஆஸ்ரயிப்பது பொருந்தாதே
ஸ்வரூப ஞானம் அவித்யைக்கு விரோதம் இல்லை என்பர்
இவன் தேவதத்தன்-இவனே தேவதத்தன் என்ற ப்ரத்யபிஜ்ஜை நினைவு ரூபமான ஞானத்துக்கும்-
இரண்டு நபர்கள் இல்லை என்று ஸ்தாபிக்கும் ஞானத்துக்கும் வாசி உண்டே
நீங்கள்கூறும் உதாரணம் வேறு வேறு காலத்து ஞானம்
ஆனால் இங்கோ ஒரே விஷயம் -நிர்விசேஷ ப்ரஹ்மம் பற்றிய ஞானம்
ஸ்வரூப ஞானமே ஜகத் என்னும் பிரமத்தைத் தடுக்கும் என்று கண்டிக்கிறார்
2-திரோதான அனுப பத்தி -ப்ரகாசமே வடிவான ப்ரஹ்மம் அவித்யையால் மூடப்பட்டது என்பது பொருந்தாதே
3-ஸ்வரூப அனுப பத்தி -ப்ரஹ்மத்திடம் அவித்யை தோஷம் உண்மையா சத்தியமா
உண்மை என்றாலே இரண்டு வஸ்துக்கள் கொண்டதாகும் அசத்தியம் என்றால்
அந்த அவித்யை பார்வையா பார்ப்பவனிலா பார்க்கப்படுபத்திலா –
ப்ரஹ்மமே தோஷம் என்றால் தோஷ நிவ்ருத்தியே ப்ரஹ்ம நாசமாகும்
4-அநிர்வசனீயத்வ அனுப பத்தி -அத்வைதிகள் அவித்யை ஸத் என்றோ அஸத் என்றோ
சொல்ல முடியாமல் அநிர்வசனீயம் என்பர்
ப்ரதீதி -உள்ளத்துக்குப் புலப்படுதலைக் கொண்டே அது ஸித்திக்க வேண்டும்
அது ஸத் என்றோ அஸத் என்றோ தோன்றுவதால் அநிர்வசனீயம் இல்லை
சத்தும் அசத்தும் இல்லாதது தான் அவித்யையின் விஷயம் என்றால் தோன்றாதது கூட ப்ரதீதியில் விஷயம் ஆகலாம்
அப்போது விஷயம் எது என்ற வ்யவஸ்தையே அற்றுப் போகும்
5-பிராமண அனுப பத்தி பாவ ரூபமான அஞ்ஞானம் உண்டு என்று ஏற்றுக் கொள்ள
அறிவற்ற நான் என்னையும் பிறரையும் அறிந்திலேன் -என்கிற ப்ரத்யஷம் பிரமாணம்
இந்தப் ப்ரத்யக்ஷம் உண்டாவதற்கு முன் இல்ல அபாவ -இன்மையை -விஷயமாகக் கொண்டது என்றால் பொருந்தாது
ஏன் எனில்
ஞானத்தின் பிராக் அபாவத்தை அதன் சம்பந்தியான பிரதியோகி ஞானத்தைக் கொண்டே நிரூபிக்க வேண்டும்
க்யாதி வாதங்கள்
சிப்பியைப்பார்த்து வெள்ளி என்ற பிரமம் -அநிர்வசநீயமான வெள்ளி உண்டாகிறது என்னும் அத்வைதி வாதம் நிரஸனம்
அக்யாதி
அந்யதா க்யாதி
ஆத்ம க்யாதி
அஸத் க்யாதி –பஷன்களில் அந்யதா க்யாதி சிறந்தது என்று விளக்கல்
அக்யாதி யோடே கூடிய யதார்த்த க்யாதியே சிறந்தது என்பதே ஸ்ரீ மன் நாத முனிகள் உகந்தது
சிப்பியில் வெள்ளியின் அம்சம் உண்டே
ஸ்வப்ன பொருள்களும் ஸத்யங்களே
கண்கள் ப்ரவ்ருத்தி விரலால் தடைப்பட்டு இரண்டு சந்திரன்கள் என்கை
மாயாந்து ப்ரக்ருதிம் –மாயா -விசித்ரார்த்த ஸ்ருஷ்ட்டி =மித்யா ஞானம் அல்ல
6- நிவர்த்தக அனுப பத்தி
தத் தவம் அ ஸி
அயம் ஆத்மா ப்ரஹ்ம
நிர்விசேஷ ப்ரஹ்மாத்மைகத்வ ஞானம் அவித்யை நிவ்ருத்தி செய்யும் என்பர்
இது தவறு
ஜகத்தின் சரீரியான ப்ரஹ்மத்தையே குறிக்கும்
அம்ச அதிகரணத்தில் விளக்கம் உண்டே
பாஸ்கரன் உபாதி பேத அபேத வாதி
யாதவப்ரகாசர் ஸ்வ பாவிக பேத அபேத வாதி
தார்க் கிகன் ஸ்வ நிஷ்ட பேத வாதி
பிரகாரம் அப்ருதக் சித்தம் என்று உணராமல் பிதற்றல்கள் இவை
7- நிவ்ருத்தி -அனுப பத்தி -ஐக்ய ஞானத்தால் பந்த நிவ்ருத்தி என்பது பொருந்தாது
பகவத் பக்தியாலேயே நிவ்ருத்தி என்பதே சுருதி சித்தம்
ஐக்ய ஞானத்துக்கும் ஞாதா தனியே இருக்க ஒண்ணாதே
ஞானம் ஞாதா ஜேயம்-மூன்றும் வேண்டுமே
ப்ரஹ்ம ஞானமே அநந்தமான ஸ்திர பலனைக் கொடுக்கும்

இனி ஸித்த வஸ்து ரூபமான ப்ரஹ்மத்தை போதிக்கும் சக்தி இல்லை என்னும் மீமாம்ஸகனை நிரசிக்கிறார்
ப்ரஹ்ம ப்ராப்திக்கு ப்ரஹ்மத்தை உபாஸிக்க வேண்டும் என்னும் வேத வாக்கியங்கள் பிரமாணங்களே
ப்ரஹ்ம விசாரம் தொடங்குவதில் எந்தவித விரோதமும் இல்லை –

1-அததோ ப்ரஹ்ம ஜ்ஞ்ஞாச –1-1-1-

அறிவதில் ஆராய்வதில் உள்ள விருப்பம் -எதனை ஆராய்வதில் எதனால் –
அத -இந்த காரணத்தினால் -மோஷ பலனை அளிக்க வல்ல

ப்ரஹ்ம சப்தேன ச ஸ்வ பாவதோ நிரஸ்த நிகில தோஷ –அனவதிக அதிசய அசங்க்யேய
கல்யாண குண கண -புருஷோத்தம -அபிதீயதே –

அத -வேதத்தின் ஒரு பகுதியான கர்ம காண்டத்தை விசாரித்த பின்பு
அத -ப்ரஹ்ம ஞானம் இல்லாதவன் கர்மங்கள் அல்ப அஸ்திர பலன்களையே கொடுக்கும் என்பதால்
ப்ரஹ்ம ஞானம் அநந்த ஸ்திரம் ஆகையாலும்
ப்ரஹ்ம விஷயகமான மீமாம்ஸை -விசாரம் –
கர்த்தவ்ய -என்ற பதம் வருவித்துக் கொண்டு செய்யப்பட வேண்டும்
ப்ரஹ்ம -அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைக குணதானனாய் -ஸ்ரீயப்பதியான புருஷோத்தமன்
ஆகவே ப்ரஹ்ம விசாரம் செய்யத்தக்கதே –

அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா
ப்ரஹ்ம சப்தேன ஸ்வ பாவதோ நிரஸ்த நிகில தோஷ
அநவதிக அதிசய அசங்க்யேய புருஷோத்தம அபிபீதயதே
அநவதிக அதிசய -உயர்வற
அசங்க்யேய -உயர்
கல்யாண குண-நலம் உடையவன்
புருஷோத்தமன் -யவனவன்—

————

ப்ரஹ்மத்துக்கு லக்ஷணம் யாது என்ற கேள்வி எழ
இது தோன்றுகிறது

இரண்டாம் அதிகரணம் ஜந்மாத்யாதி அதிகரணம்

2- ஜந்மாதி அஸ்ய யத–1-1-2-

தைத்ரிய உபநிஷத் –
ப்ருகு தந்தை வருணனிடம் கேட்க வருணன் அளித்த பதில் –
யதோ வா இமாநி பூதா நி ஜாயந்தே -யேன ஜாதாநி ஜூவந்தி யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி
தத்வி ஜ்ஞ்ஞாச ஸ்வ தத் ப்ரஹ்மேதி —என்பதே விஷய வாக்கியம்

உலகில் பிறப்பு முதலியவற்றுக்கு காரணமாய் இருத்தல்
இது ப்ரஹ்மத்துக்கு லக்ஷணமாக இருக்கலாமா கூடாதா சம்சயம்
ஸ்ருஷ்டி காரணத்வம்
ஸ்திதி காரணத்வம்
லய காரணத்வம்
என்று விசேஷணங்கள் பலவாய் இருப்பதால்
விசேஷ் யாமும் பலவாகி விடுமே
ப்ரஹ்மமும் பலவாகி விடுமே
ஆகையால் லக்ஷணம் என்று ஏற்க முடியாது -பூர்வ பக்ஷம்

ஜன்மாதி –அஸ்ய –யத –மூன்று பதங்கள்–
இந்த விசித்திரமான ஜகத்துக்கு -ஸ்ருஷ்டி ஸ்திதி -ப்ரளயங்கள் -எந்த ப்ரஹ்மத்தினிடம்
இருந்து உண்டாகின்றனவோ அவனே ப்ரஹ்மம் -என்றவாறு
ப்ரஹ்மம் -காரணப்பெயராகக் கொண்டால் உபய லிங்கமும்
இடுகுறிப் பெயராகக் கொண்டால் ஸ்ரீயப்பதித்வமும் ஸித்திக்கும்
ஜன்மாதி காரணத்வம் விசேஷணமாகவும் உபலக்ஷணமாகவும் கொள்ளலாம்
ப்ரஹ்ம வித்யைகள் பல உண்டே
உபாஸ்ய குண பேதத்தால் உபாஸ்யமும் பின்னமாகலாம்

காரணந்து த்யேய
சதவித்யையில் காரணத்வம் அறிய வேண்டும் என்பதால் விசேஷணமாக கொள்ள வேண்டும்
தஹர உபாஸனத்தில் ப்ரஹ்மத்தில் தோற்றம் ஏற்படுகையில் பொருந்தியும் இருப்பதால் காரணத்வம் உப லக்ஷணம் ஆகும்
இதில் அபஹத பாப்மத்வாதிகளே அறியத்தக்க ஆதாரம் ஆகையால் ஸ்ம்ருதி வ்யக்தி தோறும் தொடர்ந்து
விசேஷணம் ஆகின்றன என்று வித்யா பேதத்தாலே விஷயமும் வெவ் வேறு ஆவதால்
பாஷ்யத்தில் இரண்டு வகைகளும் காட்டப்பட்டது பொருந்தும்

யதோவா இமானி பூதாநி –சேதன அசேதனாத்மகமான ஸமஸ்த வஸ்துக்களுடைய ஸ்வரூபத்தை நிரூபிப்பது
ஸத்யம் ஞானம் அநந்தம் வாக்கியம் வேறுபட்ட ஸ்வரூபத்தை விளக்கும்
ஆகையால் இரண்டு லக்ஷண வாக்யங்களுமே பயனுள்ளவையே –

———-

உபாதான காரணமாயும் நிமித்த காரணமாயும் உள்ள ப்ரஹ்மமே வேதாந்த வாக்யங்களால்
விளக்கப்படுகிறது என்று கூறுவது பொருந்தாது
ஏன் எனில்
ப்ரஹ்மம் அனுமானத்தாலேயே ஸித்திப்பதால்
அந்த அனுமானமே தர்மியான ப்ரஹ்மத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய பிரமாணமாகையாலே
பிரபலமாதலின் வேறு ப்ரமாணங்களாலே சாதிக்க முடியாததையே ஸாஸ்த்ரம் ஸாதிப்பதில் பயன் உண்டு என்பதால்
அனுமான ஸித்தமான ப்ரஹ்மத்தை ஸாஸ்த்ரம் உபாதான காரணனுமாகும் என்று கூற ஒவ்சித்யம் இல்லை
ஆதலின் ஸாஸ்த்ரம் ஆரம்பிக்கத் தேவை இல்லை என்று பூர்வ பக்ஷம்
அந்த அனுமானத்தைக் கண்டித்து
ஸாஸ்திரமே பிரமாணம் என்றும்
அதனால் ஆரம்பிக்கப் பட வேண்டியதே என்றும்
அடுத்தபடி ஸாதிக்கிறார் –

3-சாஸ்திர யோநித்வாதிகரணம்-

சாஸ்திர யோநித்வாத்–1-1-3-

ஸாஸ்த்ரத்தையே ப்ரமாணமாகக் கொண்டது ப்ரஹ்மம் என்றவாறு

பூமி முதலியவை கர்த்தாவைக் கொண்டவை -செய்யப்படும் பொருளாய் இருப்பதால் –குடம் முதலியவை போலே –
செய்யப்படாதவைக்குக் கர்த்தா கிடையாது –ஆத்மாவைப் போலே
என்று இவ்வாறு அந்வய கேவல வ்யாதிரிகி அனுமானங்களால் ஜகத் காரணமான ப்ரஹ்மம் அறியக்கூடுமாதலின்
யதோவா இமானி -இத்யாதி வாக்கியங்கள் ப்ரஹ்மத்தை உள்ளபடி அறிவிக்க மாட்டா என்பது பூர்வபக்ஷம்

ஜகத் என்பது கார்யம் -செய்யப்படுவதே என்றாலும்
ஒரே காலத்திலே ஒரே புருஷனாலே சர்வ ஜகத்தும் படைக்கப்பட்டது என்பதில் பிரமாணம் இல்லாதபடியால்
விச்வாமித்திராதிகளைப் போன்ற ஜீவர்களுக்கே விசித்ர ஸ்ருஷ்டி சம்பவிக்குமாகையாலே
ஜீவனை விட்டு வேறான ஸர்வஞ்ஞத் வாதி குணங்களை யுடைய ப்ரஹ்மம் அனுமானத்தால் ஸித்திக்காது
அதற்கு ஸாஸ்திரமே பிரமாணமாக வேண்டும் என்பது ஸித்தாந்தம்

அனுமானாதிகளாலே உள்ளவாறு அறிய ஒண்ணாமையாலே
யதோவா இமானி -என்ற வாக்கியம்
உபாதான காரணமாயும் நிமித்த காரணமாயும் உள்ள ப்ரஹ்மத்தைப் போதிப்பதால் ஸாஸ்திரமே பிரமாணம் ஆகிறது –
ஆகவே ப்ரஹ்மம் ஸாஸ்த்ர யோனியாகிறது
பிற பிரமாணங்கள் போதிக்காது என்பதாம் –

————-

ப்ரஹ்மம் ஸாஸ்த்ரத்தால் மட்டுமே அறியக் கூடியதாய் இருப்பினும் –
ஸப்தம் ஸித்த வஸ்துக்களைப் போதிக்கும் திறனைப் பெற்று இருப்பினும்
ப்ரவ்ருத்தி என்பது -அறிய வேண்டும் என்னும் விருப்பத்துக்குக் காரியமாக இருப்பதாலும் –
அவ்விருப்பும் பிரயோஜனம் பற்றிய ஞானத்தைச் சார்ந்து ஆதலாலும் –
அந்த பிரயோஜனமும் அதற்கான சாதனங்களை அனுஷ்ட்டிப்பத்தைச் சார்ந்து இருப்பதாலும்
ஸித்த பரமான வாக்யத்துக்கு பிரயோஜனமான சுகமும் -துக்க நிவ்ருத்தி -அவற்றின் சாதனத்தை அனுஷ்டித்தல்
இவற்றின் விஷயத்தில் போதனத்தினால் ப்ரவர்த்தகத்வம் என்பது இல்லாததால்
ப்ரயோஜனத்தில் முடிவு பெறுதல் என்பது இல்லை
ஆதலால் வேதாந்த வாக்யங்கள் ஸித்தமான வஸ்துவைப் போதிக்கும் கருத்துடையவை அல்ல என்பது சங்கை
இத்தை நீக்கவே இந்த அதிகரணம் –

4-சமந்வயாதிகரணம்-

தத் து சமன்வயாத் –1-1-4–

சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் போன்ற வாக்கியங்கள் ப்ரவ்ருத்திக்கும் நிவ்ருத்திக்கும்
விஷயமாகாத ப்ரஹ்மத்தை போதிக்க மாட்டா
ஆகையால் வேதாந்த அர்த்த விசார ரூபமான ஸாஸ்த்ரம் ஆரம்பிக்க வேண்டியது இல்லை
என்பது பூர்வ பக்ஷம்

வீட்டுக்குள் புதையல் இருக்கிறது போல் ஈடற்ற ஆனந்த ரூபமான ப்ரஹ்மத்தை
இந்த வாக்கியங்கள் போதிக்கும் சக்தி கொண்டவையே
ஆதலின் ஸாஸ்த்ர விசாரம் ஆரம்பிக்கத் தக்கதே என்பது சித்தாந்தம்

உபாசகனுக்கு பயனாக ப்ரஹ்மமும்-ப்ரஹ்மத்துக்கு பயனாக உபாசகனும் ஆவதால்
கர்மங்களையும் பலன்களையும் சொல்லும் வேதங்கள் பிரமாணங்கள் ஆகும்

தத் து சமன்வயாத் -மூன்று சொற்கள்
து பூர்வ பக்ஷ நிரஸனம்
தத் -சாஸ்திரத்தையே ப்ரமாணமாகக் கொண்டமை ஸம்மபவிப்பதே
சமன்வயாத்-ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்
ஆனந்தோ ப்ரஹ்ம
முதலிய வாக்யங்களுக்கு ப்ரயோஜன பூதமான ப்ரஹ்மத்தை ஆனந்த ரூபமாக விளக்கும் தன்மையால்
சமன்வயம் -பொருத்தம் ஏற்படுவதால்
ஸாஸ்த்ர யோனித்வம் கூடும் –

——————-

இவ்வாறு நான்கு அதிகரணங்களால் ஸாஸ்த்ர ஆரம்பத்தைச் சரியானதே என்று நிலை நாட்டி
ப்ரஹ்ம விசாரத்தை தொடங்குகிறார்

5-ஈஷத் யதிகரணம்

இதில் எட்டு ஸூத்ரங்கள்

கீழே வேதாந்த வாக்யங்களுக்கு ப்ரஹ்மத்தை பரம புருஷார்த்த ரூபமாக விளக்குவது
சமன்வயமே பொருத்தமே என்பதை பூர்வ பக்ஷி மறுக்கிறார்
புருஷார்த்தம் அல்லாத பிரதானம் முதலானவற்றை காரணமாக விளக்குவதால் என்று ஆக்ஷேபித்து
இந்த அதிகரணம் தொடங்குகிறது என்பது சங்கதி –

5- ஈஷதேர் ந அ சப்தம் –1-1-5-

சாந்தோக்யத்தில் -ஸ்வேதகேதுர் ஹாருணேய ஆச -என்று தொடங்கும் ஆறாம் அத்தியாயத்தில்
ஜகத் காரணமாகக் கூறப்படும் ஸத் -என்பது
அனுமானத்தால் சித்திப்பதும் சாங்க்யர்கள் கூறும் பிரதானம் -பிரகிருதியா அல்லது ப்ரஹ்மமா என்று சங்கை
பிரதானம் தான் என்று பூர்வ பக்ஷம்

ஏன் எனில்
இதம் என்ற சொல்லால் கூறப்படும் சேதனர்களின் போக்யமான ஸத்வ ரஜஸ் தமோ மயமான ஜகத்துக்கு
அதே விதமான பிரதானம் காரணம் என்கை உசிதமானது
ஜகாத்தை விட விலக்ஷணமான ப்ரஹ்மம் காரணம் என்பது பொருந்தாது
பிரதானம் ஜகத்துக்குக் காரணம் என்பதற்கு அனுமானம்
இந்த ஜகத்து தன்னைத் தவிர வேறே அல்லாமல் தன்னையே உபாதான காரணமாகக் கொண்டது
காரியமாய் இருப்பதால் குடம் போல் என்பதும்
இந்த ஜகத்து தன் காரணம் ஒன்றை அறிவதாலேயே முற்றும் அறியப்படுவது -காரியமாய் இருப்பதால்
ஒரு மண் உருண்டையால் தொடங்கப்பட்ட குடம் போல் என்பதும் ஆகிய இரண்டு அனுமானங்களாலும்
சாதனமானவை என்பது பூர்வ பக்ஷம் –

பரம புருஷனே ஜகத் காரணம் என்றும் ஸத் என்றும் சொல்லப்படும் பர ப்ரஹ்ம ஸ்வரூபம்
அவனே ஸூஷ்ம சேதன அசேதனங்களுடன் சேர்ந்தவன் என்ற ரூபத்தால் காரணமானாலும்
ஸ்தூலமான சேதன அசேதனங்களுடன் சேர்ந்தவன் என்ற ரூபத்தால்
காரியமாகிய ஜகத்தின் ரூபத்தில் உள்ளவன் என்பதால் காரியமும்
காரியமும் காரணமும் ஒரே விதமானமையால் பரமபுருஷனே ஸத் எனப்படும்
ஜகத் காரணம் என்பது சித்தாந்த யுக்தி –

ஈஷதேர் ந அ சப்தம் –
இதில்
அ -சப்தம் மட்டும் ப்ரமாணமாகக் கொள்ளாத அனுமான பிராமண கம்யமான பிரதானம்
ந -ஸத் எனப்படும் ஜகத் காரணம் அன்று
ஏன் எனில்
ஈஷதேர்-நான் பலவிதமாக மாறப்போகிறேன் என்று சங்கல்பித்துக் கொண்டார்
தத் ஈஷதே பஹுஸ்யாம் ப்ரஜாயேய -என்ற சங்கல்பம்
அசேதனமான ஜகத்துக்குச் சேராதே என்பதால்
ஸர்வஞ்ஞத்வம் முதலியவற்றுடன் கூடிய ப்ரஹ்மமே ஜகத்தின் காரணமாகும் என்பதாம் –

——–

6- கௌண சேத் ந ஆத்ம சப்தாத் –1-1-6-

தேஜஸ் பார்த்தது தண்ணீர் பார்த்தது முதலிய வாக்கியங்களில்
ஈஷ என்ற வினைப்பகுதியால் சங்கல்பம் என்பதை உபசார வாக்காக -கௌணமாக -கொள்வது போல்
இங்கும் கொண்டால் பிரதானம் காரணம் என்பதில் தடை இல்லையே
ஈஷணம் என்பது ஸ்ருஷ்டிக்கு முந்திய நிலையாகிய முக்கியமில்லாத ஈஷணத்தைச் சொல்வது என்றால்

கௌண சேத் ந -அஃது இல்லை
ஏன் எனில்
ஆத்ம சப்தாத் -ஐததாம்யம் இதம் ஸர்வம் தத் ஸத்யம் ச ஆத்மா என்று –
சேதன அசேதன ரூபமான சர்வ ஜகத்துக்கும் ஸத் என்பதே ஆத்மா என்பதால்
பிரதானம் ஸர்வ ஜகத்துக்கும் அந்தர்யாமியான ஆத்மாவாய் இருத்தல் பொருந்தாது என்று கருத்து –

———

7-தந் நிஷ்டஸ்ய ச மோஷ உபதேசயாத் –1-1-7-

தந் நிஷ்டஸ்ய ச -சத்தே ஆத்மா என்றது -சந்திக்கும்
மோஷ உபதேசயாத் –புருஷனுக்கு உடலை விட்டதும் ப்ரஹ்மத்தை அடைதல் என்கிற மோக்ஷத்தை உபதேசிப்பதால்
அசேதனமான பிரதானம் காரணம் -காரணமே த்யானிக்கப் படுவதால் –
எதை உபாஸிக்கிறானோ அதே பலம் -தத் க்ரது -நியாயத்தால் –
தாப த்ரயங்களுக்கு காரணமான அசேதனத்தை அடைதலே -சம்பத்தியே -மோக்ஷம் -என்றதாகும்
பிரதானத்தைக் காரணமாக் கூறும் சாங்க்யர்களும் இதனை ஏற்பது இல்லையே என்று கருத்து –

யாதாக்ரது ரஸ்மின் லோகே புருஷோ பவதி ததேத ப்ரேத்ய பவதி -சாந்தோக்யம் -3-14-1–என்றபடி
பிரக்ருதியை எவ்வாறு உபாசிக்கிறானோ இறந்தபின் அப்படியே ஆகிறான் -எனவே சத் எனபது பிரகிருதி அல்ல-

சத் வித்யா பிரகரணத்தில்-சாந்தோக்யத்தில் –
ஆச்சார்யவான் புருஷ வேத -தஸ்ய தாவதேவ சிரம் யாவன்ன விமோஷ்யே அத சம்பத்ஸ்யே-என்று
சத் உபாசனமே மோக்ஷ உபாயமாக சொல்லப்பட்டது –
எவனுக்கு உபதேஷ்டாவான ஆச்சார்யன் இருக்கிறானோ அவனே ப்ரஹ்ம வித்தாவான் –
சரம சரீரத்தில் இருந்து விடுபடலாம் அளவே அவனுக்கு கால தாமதம் –
சரம சரீரம் விழுந்த உடனே சத் சப்த நிஷ்டானாய் ஜகத் காரண பூதனான பரம புருஷனை அடைகிறான்
சத் உபாசன நிஷ்டனுக்கு சரீரம் விழும் அளவு தான் மோக்ஷ ப்ராப்தியில் தாமதம் –
சரீரம் தொலைந்த உடன் முக்தன் ஆகிறான் –
அதனால் நாராயணனே ஸச் சப்த வாச்யன் என்று அறுதி விடப்படுவதால்
ப்ராக்ருதமான வஸ்து பிரதானம் அன்று என்பதே ஸூத்ரத்தின் தாத்பர்யம்

தமேவ வித்வான் அம்ருத இஹ பவதி -இத்யாதிகளால்–இதே தத் சப்தம் –
இதே தத் சப்தம் -தன்னிஷ்டஸ்ய -வாக்யத்திலும்
எனவே – நாராயண உபாசனமே மோக்ஷ உபாயம் -என்றதாயிற்று

————

8-ஹேயத்வா வச நாத் ச –1-1-8-

சத் என்பதை தாழ்வாகவும் தவறாகவும் சொல்ல வில்லை –
உபாசனை செய்யலாம் -எனவே அது ப்ரஹ்மமே

ப்ரதானமே ஸத் எனும் ஜகத் காரணமாகில்
மோக்ஷம் விரும்புகிற ஸ்வேதகேதுவுக்கு தன்னை பிரதான ஆத்மகன் என்று உபாஸிப்பது
மோக்ஷ விரோதியாதலின் அது விலக்கத் தக்கது என்று உபதேசித்து இருக்க வேண்டும் –
அவ்வாறு உபதேசிக்காமையாலும் பிரதானம் காரணம் அன்று –

———–

9-பிரதிஜ்ஞ்ஞா விரோதாத் –1-1-9-

சத் -ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்றோம் அதனால் அது பிரகிருதி இல்லை ப்ரஹ்மமே –
அறிவற்ற பொருள் அறிவுடையார்க்கு உணர்த்தாதே –

பிரதானம் காரணம் என்னில் செய்த ப்ரதிஜ்ஜையும் விரோதிக்கும் –
அதாவது முதலில் -யேநா ஸ்ருதம் ஸ்ருதம் பவதி –என்று
காரணத்தை அறிந்தால் கார்யங்கள் அனைத்தும் அறியப்பட்டு விடும் என்று ப்ரதிஜ்ஜை செய்யப் பட்டது
ஸத் என்பது ப்ரஹ்மமே என்று கொண்டால் தான் இந்த ப்ரதிஜ்ஜை பொருந்தும்
பிரதானம் ஸத் என்னும் சொல்லின் பொருள் என்றால்
அந்த சேதனம் சேதனத்துக்குக் காரணம் ஆக மாட்டாதே என்பதால்
ஜகத் அத்தனையும் அறியலாம் என்ற ப்ரதிஜ்ஜை பொருந்தாது ஆகும் –

———–

10 –ஸ்வாப்யயாத்–1-1-10-

தூங்கும் பொழுது சத் உடன் கலக்கிறோம்
சத் ப்ரஹ்மமே

சாந்தோக்யம் -6-8-1-
யத்ரை தத் புருஷ ஸ்வ பிதி நாம சதா சோம்ய ததா சம்பந்நோ பவதி ஸ்வ மபீதோ பவதி
தஸ்மா தேநம் ஸ்வ பி தீத்யாஸ் ஷதே ஸ்வம் ஹயபீதோ பவதி –

ஸதா சோம்ய ததா சம்பந்நோ பவதி ஸ்வ மபீதோ பவதி-முதலிய வாக்யங்களில் ஸூஷுப்தி தசையில் ஜீவன்
ஸத்திலே லயித்து இருப்பதாகக் காண்கிறது
பிரளயம் என்பது காரியப்பொருள் காரணத்திலே லயம் அடைதலே
இதனாலும் பிரதானம் காரணம் அன்று
எங்கு இந்த ஜீவன் உறங்குகிறானோ என்னும் இடத்தில் புருஷ என்னும் சொல்
விழித்து இருக்கும் ஜீவனை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தைக் குறிப்பிடுகிறது
அந்த ப்ரஹ்மம் ஸூஷுப்தி காலத்தில்
மனுஷ்யாதி நாம ரூப சம்பந்தத்தை விட்டு வெறும் ஸத் என்ற சொல்லின் பொருளாகிறது என்பதாம் –

————-

11-கதி சாமான்யாத் –1-1-11–

ஐத் ரேய உபநிஷத் -1-1-
ஆத்மா வை இதம் ஏக ஏவாக்ர ஆஸீத் -ஆத்மா என்னும் பொருளாக இது -சத் -இருந்தது –
தைத்ரியம் -2-1-1-
ஆத்மன ஆகாச சம்பூத -இந்த பிரமத்தில் இருந்து ஆகாசம் யுண்டாயிற்று
இவற்றால் ஸ்ரீ மன் நாராயணனே சத் என்றும் உலகின் காரணம் என்றதும் ஆயிற்று –

கதி சாமான்யாத்-
கதியாவது -பிரவ்ருத்தி -அதாவது அர்த்த போதகத்வம் –
சாமான்யாத்-அது சாமானமாய் இருக்க வேண்டியது அவசியம் ஆகையால் -என்றவாறு
காரண வாக்கியங்கள் எல்லாம் ஒரே மிடறாக இருக்க வேண்டியதாகையாலே என்றவாறு
அத புருஷோ ஹ வை நாராயணோ காமயத -என்றும்
ப்ரஜாஸ் ஸ்ருஜ்யேதி-என்றும் –
ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் –என்றும்
ந ப்ரஹ்மா நேசாநோ நேம த்யாவா ப்ருத்வீ -என்றும்
நாராயணனுக்கே ஜகத் காரணத்வம் ஓதப்பட்டுள்ளதே
ஸச் சப்த தேவதா வாக்கியங்கள் -சப்தங்கள் நாராயணன் இடமே பர்வசிக்கும் –
பிரதானம் பிரகிருதி ஸச் சப்த வாஸ்யம் அன்று-

இது போன்ற பல உபநிஷத் வாக்யங்களுக்கு எந்த கதியோ -நியாயமோ -அதே கதி
முன்பு ஸத் ஒன்றாய் இருந்தது முதலிய வாக்யத்துக்கும் சமானம்
அவற்றில் எல்லாம் பரம புருஷனே ஜகத் காரணம் என்று நிச்சயித்து இருக்கிற படியால்
பரம புருஷனே ஸத் என்ற சொல்லின் பொருளாம் –

———-

12- ஸ்ருதத்வாச்ச –1-1-12–

ஆத்மத பிராண ஆத்மத ஆகாச ஆத்மத ஏவேதம் சர்வம்–சாந்தோக்யம் -7-26-1- என்று
இந்த ப்ரஹ்மத்தில் இருந்து சுவாசம் ஆகாசம் அனைத்தும் உண்டானது என்பதால்-

அத சர்வஞ்ஞ -சர்வ சக்தி -சர்வேஸ்வரேஸ்வர-நிரஸ்த நிகில தோஷ கந்த -அனவதிக அதிசய அசங்க்யேய
கல்யாண குண கணவ் மஹார்ணவ -புருஷோத்தமோ நாராயண ஏஷ நிகில
ஜகத் ஏக காரணம் ஜிஜ்ஞ்ஞாஸ்யம் ப்ரஹமேதி ஸ்திதம்

இந்த ஸத் வித்யையிலும் ஸத் என்பதே ஆத்மா என்ற பெயருடன் நாம ரூபங்களை ஏற்படுத்தியது என்றும்
ஸர்வஞ்ஞன்–பாபங்கள் ஒட்டாதவன் -போன்ற பல கல்யாண குணங்கள்
இந்த ஜீவாத்மாவுடன் அனுபிரவேசம் செய்து நாம ரூபங்களை விளக்குகிறேன்
இந்த எல்லா பிரஜைகளும் சத்தை காரணமாக் கொண்டவையே
பாபம் அற்றவன் ஜரா மரணாதிகள் அற்றவன் முதலிய வாக்யங்களால் பொருத்தமாகக் கூறப்படுபவன்
ஸத் எனப்படும் ஸகல ஜகத் காரணமான பரம புருஷனே என்று ஸித்தாந்தம்

இந்த அதிகரணத்தால் கல்யாண குண பூர்ணனான பர ப்ரஹ்மமே ஸத் என்பதால்
நிர் குணம் நிர் விசேஷமாய் உள்ள ப்ரஹ்மம் என்ற அத்வைதி வாதம் நிரசிக்கப் பட்டது –

———–

6-ஆனந்த மயாதிகரணம்-

கீழே ஈஷணம் -சங்கல்பம் இல்லாத அசேதனத்தை விட ப்ரஹ்மம் விலக்ஷணம் என்று நிரூபணம்
ஈஷணம் சத்துக்கு வேண்டும் என்றால் அதுக்குத் தகுதி உள்ள ஜீவனே ஸத் என்றும் காரணம் ஆகட்டும்
அல்லது ஸத் வித்யையில்
அநேந ஜீவேந ஆத்மநா
தத் த்வம் அஸி என்று
விசேஷண விசேஷ்ய பாவ சாமானாதி கரண்யத்தால் ஜீவ ப்ரஹ்மங்களுக்கு ஐக்யம் சொல்லுவதாலும்
பக்தன் முக்தன் இரு நிலைகளை உடைய ஜீவனே காரணமாகட்டுமே
என்ற சங்கையை நிரஸிக்க
ஸத் எனப்படும் ப்ரஹ்மத்துக்கு ஜீவனைக் காட்டிலும் வேறு பாட்டை நிரூபிக்கிறார் இதில்
என்று அதிகரண சங்கதி –

13- ஆனந்த மய அப்யாசாத் –1-1-13-

தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஜ்ஞானமயா தன்யோந்தர ஆத்மாநந்தமய தே நைஷபூர்ண -ஆனந்த வல்லி–என்று
விஷய வாக்யம்

முந்திய வரில் ஆத்மாவிடம் இருந்து ஆகாயம் -ஆகாயத்தில் இருந்து காற்று -காற்றில் இருந்து அக்னி -அக்னியில் இருந்து நீர்
நீரில் இருந்து பூமி -பூமியில் இருந்து தாவரங்கள் -தாவரங்களில் இருந்து உணவு -உணவில் இருந்து உடல் –
விஜ்ஞான மயம் மட்டும் அல்ல ஆனந்தமே உருவாக ஓன்று உள்ளது –

ஆனந்த மயம் என்பது பக்தனும் முக்தனும் அல்லாத பரமாத்மாவா அல்லது ஜீவனா என்ற சங்கை
ஜீவனே என்று சாங்க்யன் -பூர்வபஷி
ஏஷ ஏவ சாரீர ஆத்மா
தத் த்வம் அஸி -என்பதாக ஜீவ ப்ரஹ்ம ஐக்யம் தோன்றுவதால் ஜீவனே என்பது பூர்வ பக்ஷம்
சாரீரத்வம் சரீர சம்பந்தம் ஜீவனுக்கே பொருந்தும் என்பர்

இவ்வாறு கூறும் சாங்க்யனை ப்ரஹ்மத்துக்கு அஞ்ஞானம் கூறும் அத்வைதி எதிர்க்க
நநுச ப்ரஹ்ம புச்சம் ப்ரதிஷ்டா என்று அத்தை சாங்க்யன் எதிர்க்க
அந்த சாங்க்யனையும் -நைவ -என்று தொடங்கி சித்தாந்தி கண்டிக்கிறார் –

இந்த அதிகரணத்தில் பூர்வ பக்ஷ ஹேதுக்கள் இரண்டு –
தத் த்வம் அஸி-என்றும் சாமானாதி கரண்யமும் -சாரீரத்வமும்
நிர் விசேஷமே பொருள் என்றால் பிரகரணத்தின் விரோதமும் –
இரண்டு பதங்களின் பரியாலோசனையுடன் சாமானாதி கரண்யம் பற்றி ஆலோசியாமையும் குற்றமாகின்றன
சாமானாதி கரண்யம் என்பதற்கு வையாகரணர் கூறிய லக்ஷணம் –
வெவ்வேறு பொருளுள்ள பதங்கள் ஒரே பொருளை விளக்கும் நிலை -என்றபடி
விசிஷ்டமான அர்த்தத்தைக் காட்டுவதாக சமர்த்திக்கின்றார்

அந்த லக்ஷணமாவது –
பின்ன பிரவ்ருத்தி நிமித்தானாம் ஸப்தானாம் ச ஏகஸ்மின்னர்த்தே வ்ருத்தி
அதாவது
ப்ரவ்ருத்தி என்றால் ஒரு சொல் இந்த அர்த்தத்தைப் போதிக்கும் என்ற நியதி
சிறப்பாக விசேஷ் யமான சொல்லின் பொருளையே விசேஷணமும் போதிக்கை தான் ப்ரவ்ருத்தி
அதுக்கு நிமித்தம் -த்வாரம் -விசேஷமான ஜாதி இனம் குணம் முதலியவை
அவற்றைக் குறிப்பிடும் சொற்கள் ஒரே விசேஷ் யமான அர்த்தத்தை
வ்ருத்தி -போதித்தல்

இந்த சாமானாதிகரண்யம் நிர் விசேஷத்தைப் போதிக்க மாட்டாது என்று கண்டித்ததுடன்
தன் மதத்தில் மீமாம்சகர் கூறும் அருணாதி கரண நியாயம் பொருத்தமாய் இருப்பதையும்
அவ்வதிகரணத்துக்கு நிரீஸ்வர மீமாம்சகன் அர்த்தத்தைக் கண்டித்து
தம் மதப்படியான பூர்வ பக்ஷ சித்தாந்தகளையும் கூறி அருளுதல்
பின்னர் தத் த்வம் இரு சொற்களுக்கும் விஸிஷ்ட அர்த்தமே பொருள் என்று நிறுவி
ஜாதி இனம் குணம் இவற்றைக் குறிக்கும் சொற்கள் கோ பசு முதலியவை குறிப்பிட்ட
வியக்தியை – பொருளை -விளக்கும் ஆற்றல் பெற்று இருப்பது போலவே
சரீரத்தைக் கூறும் சொற்களும் சரீரியான ஆத்மா வரை பொருளைக் காட்டுமவை எனக் காட்டல்
இவ்வாறு சாமானாதி கரண்யம் என்ற ஹேதுவைக் கண்டித்து
பின் சாரீரத்வம் -சரீர சம்பந்தம் -என்ற ஹேதுவையும் கண்டிக்கிறார்

பரம புருஷனே – தச்யைஷ ஏவ சாரீர ஆத்மா –தைத்ரியம்
ஞான மயன் ஆத்மா-ஜீவன் தான் அவனுக்குள்ளும் இருக்கும் ஆனந்த மயன் பரமாத்மா –
சாரீரம் எனப்படுபவன் ஆதலின்
அவனது ஆனந்தத்தை அளக்க இயலாது –

சைஷா நந்தஸ்ய மீமாஸ் ஸா பவதி –
மனுஷ்ய ஆனந்தத்தை விட பல கோடி நூறாயிரம் மடங்கு ஆனந்தம்

யஸ்யாத்மா சரீரம் சுருதி வாக்யத்தால்
அந்த பரம் பொருளுக்கு உடல் தொடர்பு உண்டே -எனவே
ஆனந்த மயனாக சொல்லப் படுபவன் பரம் பொருளே-

————-

14-விகார சப்தாத் ந இதி சேத் ந ப்ராசுர்யாத் –1-1-14-

ஆனந்த மய என்பதில் மய என்ற விகுதி புலப்படுதலால்-விகாரம் என்ற பொருளில் அவ் விகுதி உள்ளமையால்
நிர் விகாரமான ப்ரஹ்மத்தை ஆனந்த மயம் என்ற சொல் பொருந்தாது
இயற்கையாய் ஆனந்த ரூபமான ஜீவனுக்கு சுக துக்கங்களுக்குக் காரணமாக சம்சார நிலை விகாரமாதலின்
ஆனந்தமயன் என்பது ஜீவனே
பரம புருஷன் ஆனந்த மயன் அல்லன் என்றால்

இதி சேத் ந -இவ்வாறு கூறுவது பொருந்தாது
ப்ராசுர்யாத் –யாத்ரை முழுவதும் வண்டி மயம் போல் ப்ராசுர்யம்-மிகுதி என்ற பொருளிலும்
மயட் -என்ற விகுதி பயன்படுத்தப் படுவதால்
நிகரற்ற ஆனந்தம் நிறைந்தவனான பரம புருஷனே ஆனந்த மயன் ஆவான்

ஆனால் ஆனந்தம் பிரசுரம் -மிகுதி என்றால்
துக்கமும் ஸ்வல்பம் உண்டு என்று பொருளாகுமே
அப்போது ப்ரஹ்மம் துக்கம் கலந்து என்னலாகாதோ என்னில்
அப்படி அன்று
கிரணங்கள் மிகுந்தவன் கதிரவன் என்றால் இருளும் சிறிது கலந்தவன் என்ற பொருள் எப்படி ஆகாதோ
அப்படியே அபஹத பாப்மா விஜர முதலிய வாக்யங்களால் துக்கம் அல்பமும் ஒட்டாது என்று கருத்து –

———–

15-தத்தேது (ஹேது)-வ்யபதேசாத் ச-1-1-15–

ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்று அவன் ஆனந்தம் அளிப்பவன் என்றும்
கோ ஹ்யேவான்யாத் கே ப்ராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத்-என்று
அவன் இல்லை என்றால் யாராலும் ஆனந்தம் அனுபவிக்க முடியாது என்றும் தைத்ரியம் கூறுவதால்
ஆனந்தம் அடையும் ஜீவனை விட ஆனந்தத்தில் காரணமான பரமாத்மா வேறானவன் என்றவாறு

———-

16-மாந்த்ர வர்ணிக மேவ ச கீயதே–1-1-16-

தைத்ரியம் –
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -என்றும்
ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும் ப்ரஹ்மம் ஜீவனை விட உயர்ந்தது என்கிறது

ஜீவனுக்கு ப்ரஹ்மமே ப்ராப்யம் -என்று கூறி
ததேஷாப்யுக்தா -முதலிய ப்ராஹ்மணம் மந்த்ரவர்ணம் முதலிய வாக்யங்களாலே சொல்லி
அந்த ப்ரஹ்மமே ஆனந்த மயன் -ஜீவனில் வேறு பட்டவன் என்று உறுதி ஆகிறது

————–

இவ்வாறு ப்ரஹ்மத்துக்கு பக்தனான ஜீவனில் பேதத்தைக் கூறி
மேல் முக்த ஜீவனில் பேதத்தைக் காட்டுகிறார் –

17-ந இதர அநுபபத்தே –1-1-17-

தைத்ரியம் –
சோஸ்நுதே சர்வ காமான் சஹ ப்ரஹ்மணா விபஸ்தேதி -என்று
மிகுந்த ஞானம் உள்ள ப்ரஹ்மத்தின் இடம் இருந்து ஜீவன் தான் விரும்பும் அனைத்தையும் பெறுகிறான் –
என்பதால் ஆனந்த மயன் ஜீவன் அல்ல –

இதர -பரமாத்மாவின் வேறுபட்ட முக்தாத்மாவும்
ந -மந்த்ர வர்ணத்தால் கூறப்படுபவன் அல்லன்
அநுபபத்தே –சோஸ்நுதே சர்வ காமான் சஹ ப்ரஹ்மணா விபஸ்தேதி-என்று கூறப்படும் இயற்கையான விபச்சித்த்வம்
அதாவது இயற்கையான ஸத்ய ஸங்கல்பம் முக்தனுக்குக் கூடாததாலால்
ஸோ காமாயத பஹுஸ்யாம் ப்ரஜாயேய-என்று குறிப்பிடும் விபச்சித்வம்
முந்தைய நிலையில் சம்சாரியாய் இருந்த முக்தனுக்கும் பொருந்தாது என்று கருத்து –

———-

18-பேத வ்யபதேசாத் ச–1-1-18-

தஸ்மாத்வா ஏதஸ்மாத் விஜ்ஞான மயாத் அந்ய அந்த்ர ஆத்மா ஆனந்தமய –தைத்ரியம்- என்று
ஆனந்தமயன் விஜ்ஞான மயனை விட மாறுபட்டவன் என்பதால்-ப்ரஹ்மமே -ஜீவன் அல்ல என்றதாயிற்று –

தஸ்மாத்வா ஏதஸ்மாத்மான ஆகாசஸ் ஸம்பூத –போன்ற வாக்யங்களாலே
அன்னமயம் பிராண மயம் மநோ மயங்களைக் காட்டிலும்
வேறான விஞ்ஞான மயனான ஜீவனைக் காட்டிலும் வேறு பட்டவனாக
அந்ய அந்த்ர ஆத்மா ஆனந்தமய–என்று
பரமாத்மாவுக்கு பேதத்தைக் கூறுவதால் மந்திர வர்ணத்தில் கூறப்படும் ஆனந்தமயன்
ஜீவன் அல்லன் என்பது தெளிவாகிறது –

———-

19-காமாத் ச ந அநுமாநாபேஷா –1-1-19-

பஹூச்யாம் சங்கல்பத்தால் -உடல் புலன்கள் இல்லாமல் பிரகிருதி உதவி இல்லாமல் செய்பவன் –
என்பதால் ப்ரஹ்மமே-ஜீவன் இல்லை-

காமாச்ச –பஹுஸ்யாம் என்று அருளிய ஸங்கல்பத்தால் தான் விசித்திரமான ஜகத்தின் ஸ்ருஷ்டி சொல்லப்படுகிறது
அதற்கு அனுமான அபேஷா ந –பிரதானத்தின் அபேக்ஷை இல்லை
சதுர்முகாதிகளுக்கு சரீர நிலையை அடைந்த பிரதானத்தின் சேர்க்கை தேவைப்படுவது போலே
பரமாத்மா சங்கல்பத்தால் ஸ்ருஷ்டிப்பதற்குப் பிரதானத்தின் தேவையில்லை –
ஆதலால் ஆனந்த மயன் என்பது ஜீவனின் வேறு ஆனவனே –

———–

20-அஸ்மின் அஸ்ய ச தத் யோகம் சாஸ்தி –1-1-20-

ஆனந்த மயனுடன் சேரும் பொழுது ஜீவனுக்கும் ஆனந்தம் உண்டாகும்

இவ்வாறு ஆனந்த மயன் முக்தனுக்குக் கிட்டிய வுடன்
தத் யோகம் -அந்த ஆனந்தத்துடன் சம்பந்தத்தை
சாஸ்தி -ஸாஸ்த்ரம் கூறுகிறது
ஸாஸ்த்ரமாவது –ரஸோ வை ஸ ரஸம் ஹ்யே வாயம் லப்தவா ஆனந்தீ பவதி -என்பது
ஆகையால் பக்த முக்த விலக்ஷணனான பரம புருஷனே ஆனந்த மயன் என்பதாகும்

முன் தத் ஹேது வ்யபதேசாத் -என்ற ஸூத்ரம்
உபாஸன தசையில் ஆனந்தப்படுத்துகிறான் என்பதைக் கூறியது
இதில் முக்தி தசையில் ஆனந்தப்படுத்துகிறான் என்பதைக் கூறுகிறது
ஆகையால் புநர் யுக்தி தோஷம் இல்லை –

———–

1-7-அந்தர் அதிகரணம்–ஸூரியனுக்கு உள்ளே உள்ளவனும் ப்ரஹ்மமே .

ஸ்வல்ப புன்யர்களான ஜீவர்களால் ஸங்கல்ப மாத்ரத்தைக் கொண்டு
ஜகத் ஸ்ருஷ்ட்டியையும்
மிகுந்த ஆனந்தத்தையும்
பய அபய ஹேதுத்வமும் பெற முடியாமல் போகலாம்
ஆயினும் விலக்ஷண புண்யம் கொண்ட ஆதித்யன் இந்திரன் பிரஜாபதி முதலியோருக்கு
இந்த குணங்கள் சம்பவிக்கலாமே
என்ற சங்கையை இங்கு நீக்குகிறார் என்று சங்கதி

மேலும் இவ்வதிகரணத்தில் அந்தர்யாமி என்ற தன்மையால் மட்டும் சரீராத்ம பாவம் சொல்லப்பட வில்லை -பின் என் எனில்
பாணி பாத அஷி கேசாதிகளான பிரிவுகள் போல் சரீர சம்பந்தம் உள்ள புருஷன் கூறப்படுகிறான்
அந்தப் புருஷன் ஜீவன் தான் என்று பூர்வ பக்ஷம் தோன்றுவதே இங்கு சங்கதி

காரண வாக்கியங்கள் பரமாத்ம போதகங்கள் என்று ஸ்தாபிப்பதே இவ்விடம் பிரஸக்தம்
காரண வாக்கியம் இல்லாத அந்தராதித்ய வித்யா நிரூபணம் அயுக்தமே
ஆயினும் முன் அதிகரணத்தின் சேஷமாக நிரூபிப்பதில் தவறு இல்லை
எப்படி எனில்
ஆனந்தவல்லியில் -ஸ யச்சாயாம் புருஷே யச்சா ஸ ஆதித்யே ஸ ஏக -என்று
ஆனந்த மயனுக்கு ஆதித்யனின் உள் இருப்பு கூறப்பட்டது
சாந்தோக்யத்தில் சொன்ன ஆதித்ய மண்டை அந்தர்வர்த்தியான புருஷனுக்கு கர சரணாதி விஸிஷ்ட
தேஹ சம்பந்தம் சொல்லுகையாலே இரண்டு இடங்களிலும் ஒருவனே பேசப்படுபவன்
ஆகையால் ஆனந்தமயனும் ஜீவன் தான் என்கிற சங்கையை நிவர்த்திக்க
முன் அதிகரண சேஷமாக இங்கு நிரூபிக்கிறார் என்று விடை –

அதற்கு சேஷமாவது அங்கங்கு தேவையான பொருளை விளக்குதல்
அப்படி என்றால் வெவ்வேறு அதிகரணங்கள் என்று எவ்வாறு பேதம் கூற முடியும் எனில்
கூறிய நியாயத்துக்கு விஷயமான உபநிஷத்து மாறுபட்டதால் பேதம் வருவது பொருந்துமே

21-அந்த தத் தர்மோபதேசாத் –1-1-21-கண்கள் உள்ளும் சூரியன் உள்ளும் இருப்பவன் ப்ரஹ்மமே-

ய ஏஷ யந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்யஸ் மஸ்ரூர் ஹிரண்ய கேசக ஆப்ரணகாத்
சர்வ ஏவ ஸூ வர்ண -தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணி என்றும் –
ய ஏஷ அந்தர் அஷிணி புருஷோ த்ருஸ்யதே தஸ்யை தஸ்ய ததேவ ரூபம் யதமுஷ்யரூபம்
ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித-என்று பாபங்களால் தீண்டப்படாமல் இருப்பவன் -என்றும்
சைவ ருக் தத் சாமததுக்க்கம் தத்ய ஜூ ஸ் தத் ப்ரஹ்ம-என்றும்
இவை விஷய வாக்கியங்கள் –

இங்கு கீழ்ச் சொன்னபடி ஜீவர்கள் அல்ல ப்ரஹ்மமே-

அந்தஸ் -கண்ணின் உள்ளும் ஸூர்ய மண்டலத்தின் உள்ளும் இருப்பவனாகச் சொல்லப்படும் புருஷன்
ஜீவனைக் காட்டிலும் இதரனான பரமாத்மாவே
எப்படி என்றால்
தத் தர்மோபதேசாத் –ஸ்ருத் யந்தரங்களில் பிரசித்தமான பரமாத்மாவின் தர்மங்களை உபதேஸிப்பதால்
அவை -அபஹத பாப்மா -அஜர -அசோக —ஸத்ய காம –ஸத்ய ஸங்கல்ப -சர்வ லோக சர்வ காம நியந்த்ருத்வம் –
புண்டரீகாக்ஷத்வமும் திவ்ய மங்கள விக்ரஹம்முதலிய தர்மங்களும் உபதேசிக்கப்படுகின்றன
எனவே ஜீவ விலக்ஷண ஸ்ரீயப்பத்யே ஆதித்ய மண்டலத்தில் ஒளிரும் புருஷன்
இங்கு கூறும் சரீரம் கர்ம நிமித்தம் அன்று -அதுவே ஹேயமாகும் –
முமுஷுக்களுக்கு ஹேய நிவ்ருத்தமான திவ்ய மங்கள விக்ரஹம் என்பதேயாகும்
யதோவா இமானி பூதானி ஜாயந்தே ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம முதலிய பிராமண பலத்தாலே
ஸத்யத் ஞானத் வாதிகள் ஸித்திப்பது போல்
வித்யுத் புருஷாததி
ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத்
அஜயமானோ பஹுதா விஜாயதே
அஜோபிசன் அவ்யயாத்மா
ஸம்பவாமி ஆத்ம மாயயா –முதலிய ப்ரமாணங்களால்
ஆஸ்ரிதர்களை அநுக்ரஹிக்க திவ்ய மங்கள விக்ரஹ ரூபமான தர்மமும்
தத் தர்ம உபதேசாத் -என்கிற பதத்தில் கருதப்படுகிறது என்று திரு உள்ளம் –

————-

22- பேத வ்யபதேசாத் ச அந்ய –1-1-22-

ப்ருஹத் ஆரண்யகாவில் –
ய ஆதிதயே திஷ்டன் ஆதித்யாத் அந்த்ரோயம் ஆதித்யோ நவேத யஸ்யா தித்ய சரீரம் ய ஆதித்யம் அந்தரோ யமயதி -என்று
யார் சூரியனில் அந்தர்யாமியாக உள்ளானோ -அவன் சூரியனுக்கு தெரியாமல் அப்படி உள்ளவன் யாரோ –
அவனுக்கு சூர்யன் உடம்பாக உள்ளான் -அவனே சூர்யனை வழி நடத்துகிறான்

ஸூபால உபநித்தும் இது போலே ஜீவர்களுக்குள் அந்தர்யாமாவாக உள்ளத்தை சொல்லும் –
அவனே பரம்பொருள் ஜீவன் அல்ல என்றதாயிற்று-

அபஹத பாபனான இப்பரமாத்மா
அந்ய–ஆதித்யாதி ஜீவர்களைக் காட்டிலும் வேறானவன்
பேத வ்யபதேசாத் ச
ய ஆதித்யே திஷ்டன் –யம் ஆதித்யோ ந வேத -யஸ்ய ஆதித்யச் சரீரம் -ய ஆதித்யம் அந்தரோ யமயதி
ய ஆத்மனி திஷ்டன்
யஸ்ய அக்ஷரச் சரீரம்
யஸ்ய ம்ருத்யுச் சரீரம் –என்று இப்படியாக ஹிரண்ய கரப்பான் முதலிய ஸகல ஜீவர்களையும் சரீரமாகக் காட்டி
நாராயணனை அந்தராத்மாவாகப் பேதப்படுத்திக் காட்டுவதால்
பரமாத்மா ஜீவனைக்காட்டிலும் அந்நியன் தான் என்பதாம் –

——–

இப்படி யதோவா இமானி பூதாநி ஜாயந்தே என்கிற வாக்யத்தால் ஜகத்தின் காரணம் ப்ரஹ்மம் எனப்பட்டது
அத்தகைய ப்ரஹ்மம் எது என்ற ஐயம் எழுந்தால்
ஸதேவ சோம்யே இதம் அக்ர ஆஸீத்
ஆத்மாவா இதம் ஏகம் ஏவ அக்ர ஆஸீத் –முதலிய வாக்யங்களால்
சாமான்யங்களான -ஸத் -ப்ரஹ்மாதி சப்தங்களால் -ஸத் -ப்ரஹ்மாதிகள் காரணங்கள் என்று குறிக்கப்பட்டன

அடுத்து ஸ்ருதி லிங்க வாக்ய ப்ரகரண ஸ்தான சமாக்யைகளில் முந்தியது பிந்தையதை விட பலம் மிக்கது என்றபடி
லிங்கத்தை விட ஸ்ருதி பலம் மிக்கது என்றாலும் -விசேஷமான லிங்கத்தைக் காட்டிலும் ஸ்ருதி துர்ப்பலை யாதலின்
விசேஷ லிங்கங்கள் பிரதானாதிகளை விலக்குவனவாய் பிரபலமாய் இருப்பதால்
ஈஷத் அதிகரணத்தில் முக்கியமான ஈஷணமும்
ஆனந்த மய அதிகரணத்தில் ஆனந்த விசேஷமும்
அந்தராதித்ய அதிகரணத்தில் திவ்ய மங்கள விக்ரஹமும் ஆகிய
அர்த்த ஸ்வ பாவமான -லிங்கங்களாலே -அடையாளங்களாலே –
ப்ரஹ்மத்துக்கு -பிரதானம் -ஜீவாத்மா -இவை இரண்டிலும் இருந்தும் பேதம் தீர்மானிக்கப் பட்டது –

அப்படி இருப்பினும்
விசேஷ ஸ்ருதிக்கு விசேஷ லிங்கத்தை விட ப்ராபல்யம் இருப்பதால்
சர்வாணி ஹ வை இமானி பூதானி ஆகாசதேவ சமுத்பத்யந்தே ஆகாசம் ப்ரத்யச்தம் யந்தி=போன்ற இடங்களிலே
ஆகாசம் போன்ற விசேஷ சப்தங்களாலே சொல்லப்பட்ட ப்ரஸித்தமான ஆகாசம் பிராணன் முதலியவை
காரண ப்ரஹ்மம் என்கிற சங்கையை நீக்கி
கல்பிக்கப்பட்ட யோக காரணப்பெயர் -கல்பிக்க வேண்டிய ரூடி இடுகுறிப்பெயரை பாதிக்கும் என்ற நியாயப்படி
யோக சக்தி-காரணத்தை அடிப்படையாகக் – கொண்டு
ஆகாசம் முதலிய சொற்கள் பரமாத்மாவையே போதிக்க வல்லவை
என்பதை கீழ் வரும் அதிகரணங்களால் விளக்குகிறார் –

———–

1-8-ஆகாசாதி கரணம் -ஆகாயம் எனப்படுவதும் ப்ரஹ்மமே –

23-ஆகாஸ தல் லிங்காத் —1-1-23-

சர்வாணி ஹ வை இமானி பூதானி ஆகாசதேவ சமுத்பத்யந்தே ஆகாசம் ப்ரத்யச்தம் யந்தி என்று
ஆகாசமே மூல காரணம் என்றும் பரம ப்ராப்யம் என்றும் சொல்லிற்று
இதில் ஆகாசம் -பூத ஆகாசமா -அல்லது முன் லக்ஷணம் கூறப்பட்ட ப்ரஹ்மமா என்று சங்கை
பிரசித்தமான
ஆகாசமே என்று பூர்வ பக்ஷம்
ஈஷணம் -சங்கல்பம் பற்றிய லிங்கத்தை விட விசேஷ ஸ்ருதி பலம் வாய்ந்ததாகையாலும்
ஆகாசம் என்பது பூத ஆகாசத்தில் ப்ரஸித்தமாகையாலும்
ஸத் -ப்ரஹ்மம் -முதலிய சாமான்ய சப்தங்களும் பிரசித்த ஆகாசத்தையும் கூறுபவை என்பதே பூர்வ பக்ஷம் –

சித்தாந்தம்
ஆகாஸ -அசேதனமான ஆகாசத்தை விட வேறு பட்டவனாக பரமாத்மாவே ஆகாசம் என்று கூறப்படுகிறான்
தல் லிங்காத் —அந்தப் பரம புருஷனின் லிங்கங்கள் அடையாளங்கள் காணப்படுவதால் –
அவை யாவன
அனைத்துக்கும் காரணமாதல்
எல்லாவற்றையும் விட பழமை
அனைத்துக்கும் பரம அடைக்கலம் –முதலிய தர்மங்கள்
தஸ்மாத் விராட் அஜாயத
ஏகோஹவை நாராயண ஆஸீத் –முதலிய உபநிஷத் வாக்கியங்களில் கூறப்பட்ட
விராட் புருஷத்வம் -நாராயணத்வம் -முதலிய தர்மங்கள்
ஆ –நாற்புறமும்
காச -பிரகாசிப்பது
என்ற காரணப் பெயராகக் கொண்டு பரம புருஷன் தான் ஆகாசம் என்பதாம் –

இங்குள்ள சிறப்பாவது
காரணப்பெயரை -யோகப்பெயரை -விட இடுகுறிப்பெயரே -ரூடியே -மேலானது என்ற நியாயம் இருந்தாலும்
கல்பிதமான யோகம் கல்பிக்கப்பட இருக்கிற ரூடியைப் பாதிக்கும் என்ற நியாயத்தால்
இங்கு -யதேஷ ஆகாச ஆனந்தோ நஸ்யாத்-என்ற வாக்யத்தில்
ஆகாச சப்தத்துக்கு யோகத்தால் -காரணத்தால் -பொருள் கல்பிக்கப்பட்டு இருப்பதால்
இந்த யோகாசக்தி பொருளை ரூடி சக்தி பாதிக்க மாட்டாது –
ஆகையால் முன் கூறிய லக்ஷணங்கள் –
ஈஷணம் -ஆனந்த விசேஷம் திவ்ய மங்கள விக்ரஹம் -முதலான சிறப்பான லிங்கங்களால்
ஸத் -ப்ரஹ்ம -பொதுச் சொற்களும்
ஆகாசம் போன்ற சிறப்புச் சொற்களும்
ஸமஸ்த ஜகத் காரணனாய் -சர்வஞ்ஞாதி கல்யாண குணங்களை யுடைய பரம புருஷனையே
விளக்குகின்றன என்பது திரு உள்ளம் –

———-

அடுத்தபடி -ஆகாசம் என்பது பரமாத்மா என்ற காரணம் இருக்கட்டும் –
சகல ஜனங்களுக்கும் ஸ்திதியோ ப்ரவ்ருத்தியோ ப்ராணனைச் சார்ந்து இருப்பதால்
சாந்தோக்யம் முதல் அத்யாயம் ஒன்பதாவது கண்டத்தில்
பிரஸ்தோ தர்யோ தேவதா ப்ரஸ்தாவ மன்வாயத்தா -என்று தொடங்கி
இந்த பூதங்கள் அனைத்தும் ப்ராணனையே சார்ந்து இருக்கின்றவை என்று கூறப்பட்டு இருப்பட்டு இருப்பதால்
பிரசித்தமான பிராணனே ஜகத் காரணம் என்று கூறலாமே என்று மேற்கொண்டு அதிகமான ஓர் சம்சயம் தோன்ற
அதைக் கண்டிக்கவே இந்த அதிகரணம் –

1-9-ப்ராணாதி கரணம்–பிராணம் எனப்படுவதும் ப்ரஹ்மமே

24-அத ஏவ பிராண –1-1-24-

சர்வாணி ஹ வா இமானி பூதானி பிராணமேவாபி சம்விசந்தி பிராணமப் யுஜ்ஜிஹதே –

தோன்றி மறையும் தன்மை பரம் பொருளுக்கே உண்டு-

அத ஏவ -பிரசித்தம் போலே நிர்தேசம் இருப்பதினாலேயே
பிராண -பிராண சப்தத்தால் சொல்லப் படுபவன்
அந்நிய -பிராண வாயுவில் காட்டில் வேறுபட்டவன் –

சர்வாணி ஹி வா இமானி பூதாநி ப்ராணம் ஏவ அபி சம்விசந்தி ப்ராணம் அப்யுஜ்ஜி ஹதே
சைஷா தேவதா ப்ரஸ்தாவம் அந்யாவத்தா –ஹை வை -பிரதித்தம் -சாந்தோக்யம்
பிராணன் இடத்திலே லயம் அடைகின்றன -பிராணன் இடத்தில் இருந்தே வெளிவருகின்றன
ப்ராணயதி– ஜீவயதி என்கிற வியுத்பத்தியால் பர ப்ரஹ்ம பர சப்தம்
உத்பத்தி ஸ்திதிகளை பிராண அதீனமாக கண்டாலும் சேதன ஸ்வரூபத்தின் ஸ்திதி
பிராண அதீனமாக அல்லாமையாலே இதுவும் பரமார்த்த பரமே

அத –ஆகாசத்தில் கூறியபடியே சகல ஜலத்தின் உள் நுழைதல் வெளியேறுதல் முதலிய பரமாத்ம லிங்கம் இருப்பதாலேயே
ப்ராண –பிராணன் என்ற சொல்லால் கூறப்படுபவனும்
பரமாத்மாவே என்று பொருள்
சேதனர்களிடம் பிரசித்தமான பிராணன் உள் நுழைவதும் வெளி ஏறுவதும் இருப்பினும்
அசேதனமான கல் மரக்கட்டை முதலியவற்றில் அது சம்பவிக்காது
ஆதலின் பரமாத்மாவுக்கே அது பொருந்தும் என்பதைக் கொண்டு
எதிலும் உள் நுழையவும் வெளியேறவும் வல்ல பரமாத்மாவே பிராணன் என்றதாகும் –

———-

1-10-ஜ்யோதிர் அதிகரணம் -ஜோதி என்பதும் ப்ரஹ்மமே –

இனி காரணத்வத்தை நிரூபிக்க வல்ல நிரதிசயமான தீப்தி -பிரகாசம் –
ஹித தமமான உபாசனத்துக்கு உரிய கர்மா -செயப்படு பொருள் என்னும் தன்மை
இவற்றுடன் கூடிய ஜ்யோதிஸ் என்பதும்
இந்த்ரன் பிராணன் முதலிய சொற்களும் கூறப்படுவதும்
உலகில் பிரசித்தமான ஒளி இந்திரன் இவற்றை விட்டு விலக்ஷணமான ப்ரஹ்மமே என்பதை
இந்த ஜ்யோதிர் அதிகரணத்திலும்
அடுத்த இந்திர பிராணாதி கரணத்திலும்
நிலை நாட்டுகிறார் என்று சங்கதி –

அது மட்டும் இன்றியே ஸ்ருதியிலே
ஆகாசாத் வாயு வாயுர் அக்னி -என்று கூறியுள்ள க்ரமப்படி
முதலில் ஆகாசம்
பின் வாயு -பிராணன் –
அடுத்து அக்னி –
என்ற க்ரமத்தைப் பின் பற்றி
ஆகாசாதி கரணத்தின் பின்
பிராணன் பற்றியும்
பின் ஜ்யோதிஸ் பற்றியும் விசாரிக்கிறார் என்றும் சங்கதி –

1-2-25-ஜ்யோதி சரணாபிதா நாத் —
ஜோதியும் ப்ரஹ்மமே -மற்றவை அதன் பாதங்களில் பணியும்-

அத்யதத பரோதிவா ஜ்யோதிர் தீப்யதே விஸ்வத ப்ருஷ்டேஷூ சர்வத ப்ருஷ்டேஷூ அனுததமேஷூ
உத்தமேஷூ லோகேஷூ இதம் வாவ ஸர்வத தத் யதிதம் அஸ்மின் அந்த புருஷே ஜ்யோதி –சாந்தோக்யம் -மூன்றாம் அத்தியாயத்தில்
மது வித்யைக்குப் பிறகு காயத்ரீ ஸப்தப் பொருளான பரமாத்மா ஜ்யோதிர் வித்யையிலே பேசப்படுகிறார்
இதுவே விஷய வாக்கியம்

இங்கு ஜ்யோதிஸ் என்பது பிரசித்தமான ஸூர்யாதிகளான ஜ்யோதிஸ் ரூபங்களைக் குறிப்பிடுகிறதோ
அல்லது உலக காரணமான எல்லையில்லா ஒளி வடிவமான பரமாத்மாவையே குறிப்பதா என்பதே சம்சயம் –

ஆகாசம் பிராணன் போன்ற வாக்கியங்களை போலே இதில்
நிகில ஜகத் ஏக காரணத்வம் போன்ற பரமாத்மாவின் சிறப்பான லிங்கம் ஏதும் இல்லாமையால்
இதம் வாவதத் என்று தொடங்கி புருஷனின் வயிற்றில் உள்ள ஜ்யோதியுடன்
இந்த ஜ்யோதியை ஒன்றாகக் கூறுவதால்
பிரசித்தமான ஜ்யோதிஸ்ஸாகவே இருக்கலாம் என்று பூர்வ பக்ஷம்
அதைக் கண்டிக்கிறார்

ஜ்யோதி -தேவ லோக சம்பந்தியாகக் கூறப்பட்ட ஏராளமான ஒளி உள்ள ஜ்யோதி என்பது பரம புருஷனே
ஏன் எனில்
சரணாபிதா நாத் –பாதோஸ்ய விச்வா பூதாநி த்ரிபதாஸ் யம்ருதம் திவி -என்று
சர்வ பூதங்களும் இந்த ஜ்யோதிஸ்ஸுக்கு ஒரு பாதமாகவும்
பரமபதத்தில் மூன்று பாதங்களும் இருப்பதாகச் சொல்வதால்
பிரசித்தமான எந்த சோதிக்கும் அது பொருந்தாது
பரமபுருஷனே ஜ்யோதிஸ் ஸப்த பொருளாவான்

இந்த தேவலோக சம்பந்தியான ஜ்யோதிசை ஜாடராக்னி சரீரமாகக் கொண்டது என்று உபாசித்தால்
ஆபி ரூப்யாதிகள் -பொருத்தமான அழகு போன்றவை ஸித்திக்கும் என்பதால்
கௌஷேய-வயிற்று ஜ்யோதிஸ்ஸுடன் ஐக்யம் கூறுகிறது என்று திரு உள்ளம் –

உயர்வற உயர்ந்த ஒளி உள்ளதாக ஓதப்பட்ட ஜ்யோதிஸ்ஸூக்கு –
பாதோஸ்ய சர்வ பூதாநி த்ரிபதாஸ் யாம்ருதம் தீவி -என்ற புருஷ ஸூக்த்தத்தின்
மந்திரத்தின் பொருள் நினைவூட்டப் படுகிறது –
ஆகையால் வேதாந்தமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமசஸ் து பாரே –
பரம புருஷன் பரமாக கொள்ள வேண்டும்
அஹம் வைச்வா நரோ பூத்வ பிராணி நாம் தேஹமா ஸ்ரீ தா -ஸ்ரீ கீதை –
உடம்பில் உள்ள அக்னியும் ப்ரஹ்மமே

————–

26-சந்தோ அபிதா நாத் ந இதி சேத் ந ததாசே தோர்ப்பண நிஹமாத் ததாஹி தர்சனம்–1-1-26-

காயத்ரி சந்தஸில் கூறப்படுபவன் ப்ரஹ்மமே-காயத்ரி போலே ப்ரஹ்மத்தையும் மனசில் கொள்ள வேண்டும் –
காயத்ரிவா இதம் சர்வம் -காயத்ரி சந்தஸ் பிரமத்தைப் போலே நான்கு பாதங்கள் உடையது –

சந்தோ அபிதா நாத் ந
அத்யதத பரோதிவா ஜ்யோதிர் தீப்யதே–இத்யாதி வாக்யத்துக்கு முன்பு காயத்ரி சந்தஸ்ஸை சொல்லி
பின்பு ததே தத் ருசாப் யுக்தம் –என்று கூறிய ருக்குக்கும் காயத்ரீ என்னும் சந்தஸ்ஸே விஷயமாகையாலே
இங்கு பரமபுருஷனைப் பற்றிய பேச்சே இல்லை என்று ஐயம் தோன்றிற்று
இதி சேத் ந -இவ்வாறு கூறுவது தவறு என்கிறார் –
ஏன் எனில்
ததாசே தோர்ப்பண –அவ்வாறு சித்தத்தாலே அனுசந்தானம் விதிக்கப்படுவதால்
அந்த காயத்ரியைப் போலவே பரம் ஜோதிசை நான்கு பாதங்கள் உள்ளதாக அனுசந்திக்கச் சொல்கிற படியால்
நிஹமாத் -நிச்சயிக்கப் படுவதனால் ஸப்த ரூபமான காயத்ரீ சர்வ பூதாத்மிகை என்பது பொருந்தாமையால்
பரம புருஷனை காயத்ரீ துல்யனாக நான்கு பாதம் உள்ளவனாக அனுசந்திக்க வேண்டும் என்று
நிச்சயிக்கிற படியால் பரம புருஷனே காயத்ரீ சப்தத்தின் பொருளாம்
ததாஹி தர்சனம்-அவ்வாறு நான்கு பாதங்கள் உள்ள காயத்ரியும் சில இடங்களில் காணப்படுகிறது
இந்த்ரச் சசீபதி வலே ந பீடித துச்சய வநோ வ்ருஷா ஸமித் ஸூ ஸஹி – என்று காணலாம் –

————-

27-பூதாதி பாத வ்யபதேசா அபபத்தே ச ஏவம்–1-1-27-

சாந்தோக்யத்தில்
பூதங்கள் பூமி உடல் இதயம் ஆகிய நான்கு பாதங்கள் உள்ளதாக சொல்வதால்
காயத்ரி என்றதும் ப்ரஹ்மமே –

பூத ப்ருத்வீ சரீரங்களைச் சுட்டி இது நான்கு கால் உள்ளது என்பதற்குப் பொருத்தம் வர வேண்டுமானால்
ஏவம் -இவ்வாறு ப்ரஹ்மமே காயத்ரீ என்ற சொல்லின் பொருள் என்றாலே பொருத்தம் ஏற்படும்
பூத ப்ருத்வீ சரீர ஹ்ருதயங்களை-என்பதில்
பூதம் -ஆத்ம வர்க்கம்
ப்ருத்வீ -இந்த லோகம்
சரீரம் -கர்மாக்களால் ஆர்ஜிதமான போகத்திற்கு உரிய இடமும் -அதன் உபகரணமும்
ஹ்ருதயம் -ஆத்மா தங்குவதற்கான இடம் –

———–

28-உபதேச பேதாத் ந இதி சேத் ந உபய அஸ்மின் அபி அவிரோதாத் –1-1-28-

பரம் பொருளின் மூன்று பாதங்கள் பரம பதத்தில் இருப்பதாகவும் 1-1-25- சொல்லி –
சாந்தோக்யம் பரோதிவ ஜ்யோதி -என்று
பரம பதத்துக்கு மேலே உள்ளதாகச் சொல்லப் பட்டுள்ளது –
இரண்டுக்கும் பேதம் இல்லை
மரத்தின் மேலே பறவை என்பதும்
மரத்தில் பறவை என்பதும் ஓன்று போலே –

உபதேச பேதாத்
பூர்வ வாக்கியத்தில் த்ரி பாத் ஸ்யாம்ருதம் திவி என்று த்யு லோகத்தை ஆதாரமாகவும்
இந்த வாக்கியத்தில் திவ என்று த்யு லோகத்தைக் காட்டிலும் என்று எல்லையாகவும் உபதேசம் வேறு வேறாய் இருப்பதால்
முன் வாக்கியத்தில் கூறிய ப்ரஹ்மம் இந்த வாக்யத்தில் தோன்றவில்லை

இதி சேத் ந-என்று கூறுவது சரியில்லை

உபய அஸ்மின் அபி அவிரோதாத் –இரண்டுக்கும் அர்த்த ஸ்வ பாவம் ஒன்றே யாதலின் நினைவுக்கு விரோதம் இல்லை
மரத்தின் நுனியில் பருந்து என்றாலும்
மரத்தின் நுனிக்கு மேலே பருந்து என்றாலும் போலே இங்கும் அர்த்தம் ஒன்றே யாதலின்
ஏதாவான் அஸ்ய மஹிமா பாதோஸ்ய விஸ்வா பூதாநி-என்ற புருஷ ஸூக்த நினைவாலே
ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் -என்கிற எல்லையில்லா ப்ரகாசமுடைய புருஷோத்தமனே
அத யதத பரோ திவோ ஜ்யோதி என்று கூறப்படுகிறான் என்று திரு உள்ளம் –

ஸ்ரீ பாஷ்யத்தில் இவ்வதிகரணத்தின் அவதாரிகையில்-எல்லையில்லா பிரகாசம் என்னும்
லிங்கத்தாலே பூர்வ பக்ஷம் தோன்றுகிறது என்று காட்டி
பின்பு ப்ரசித்தவத் நிர்தேசம் இருந்தாலும் ஆகாசம் பிராணன் இவற்றைப் போலே
தன் வாக்கியத்தில் எடுக்கப்பட்ட பரமாத்மாவுக்கான லிங்கம் இல்லாமையால் என்று அருளியது
முன் பின்னாக முரணாக உள்ளதே என்னில்

அத யதத பரோ –என்னும் வாக்கியத்தில் காரணத்தைக் காட்டவல்ல
ஸர்வத ப்ரகாசமயமான தன்மை எனும் லிங்கம் உள்ளது
அப்படி இருந்தாலும் உபய லிங்கத்வாதிகள் கூடியதும் -பரமபுருஷனை நிலை நிறுத்தக் கூடியதுமான
ஜகத் காரணத்வம் என்னும் லிங்கம்
அத யத்த பாரோ வாக்கியத்தில் கிடையாது என்னும் பூர்வ பசியின் கருத்தால்
அருளிச் செய்வதால் முரண்பட்டு இல்லை
அப்படியான சிறப்பான லிங்கம் தன் வாக்கியத்தில் இருப்பதாகத் திரு உள்ளம் –

————

1-11-இந்திர பிராணாதி கரணம்-

இதில் காரணத்தோடு வியாப்தமான -முமுஷுக்களால் உபாஸிக்கத் தன்மை கொண்ட
இந்திரப் பிராணன் -என்று சொல்லப்படுபவனும் பரம புருஷனே என்று ஸ்தாபிக்கிறார்

1-1-29-ப்ராணா ததா அநுகமாத் –

ஹித தமமாக உபாசனம் செய்யத்தக்க இந்த்ர பிராணன் என்று
கௌஷீதகி ப்ராஹ்மணத்தில் சொன்னது ஜீவனா அல்லது பரமாத்மாவான என்று சம்சயம்
ஜீவன் தான் என்பது பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
இந்த்ர சப்தம் ஜீவனைக் குறிப்பதாகவே ப்ரஸித்தம்
தான் என்று குறிப்பிடும் இந்த்ரனாகவும் பிராணனாகவும் உள்ளது
பிரசித்தமான இந்த்ரனைக் குறிப்பது என்பது பொருந்தாது

பிராணனாக நான் உள்ளேன் என்று இந்த்ரன் கூறியதும் ப்ரஹ்மத்தை தான் –
கௌஷீதகி ப்ராஹ்மணத்தில்
தன்னை உபாசித்த ப்ரதர்த்தனன் என்பவன் இடம் –
சா ஹோவாச ப்ராணோஸ்மி ப்ராஜ்ஞாத்மா தம் மாம் ஆயுர் அம்ருதம் இத் உபாஸ்வ –
உயிராகவும் அமிர்தமாகவும் சொன்னான்
அதே கௌஷீதகி ப்ராஹ்மணத்தில்-
ச ஏஷ ப்ராணா ஏவ ப்ராஜ்ஞாத்மா ஆனந்தோஜரோம்ருத-என்று
பிராணன் ஆனந்தமாயும் இளமையுடனும் அழியாமலும் உள்ளதாக சொல்லி இருப்பதால்
பிராணன் என்றது இந்த்ரன் தனக்கு உள்ளே உள்ள ப்ரஹ்மத்தை தான்-

ப்ராணா –ப்ராணோஸ்மி ப்ராஜ்ஞாத்மா -என்று சொன்ன இந்த்ரப்ரண ஸப்த வாஸ்யன் ஜீவன் அல்லன்
அவனை விட விலக்ஷணமான பர ப்ரஹ்மமே ஆகும்
ஏன் எனில்
ததா அநுகமாத் –அப்படியே தொடர்வதால்
ச ஏஷ ப்ராணா ஏவ ப்ராஜ்ஞாத்மா ஆனந்தோ ஜர அம்ருத-என்று
ஆனந்தம் முதலிய தர்மங்களுக்கு தர்மியாகப் பிராணனைத் தொடர்வதாலே
ப்ரஸித்தமான இந்த்ரனுக்கு ஆனந்த் வாதிகள் கூடாமையாலே பரம புருஷனே
இந்த்ர பிராணன் என்ற சொல்லின் பொருள் ஆகும் –

————-

30-ந வக்து ஆத்ம உபதேசாத் இதி சேத் அத்யாத்ம சம்பந்த பூமா ஹ்யஸ்மின்-1-1-30-

ஏஷ ஏவ சாது கர்ம காரயதி தம் யமேப்யோ லோகேப்ய உன்நிநீஷதி ஏவசாது கர்ம காரயதி தம் யமதோ நிநீஷதி-என்று
நன்மை தீமைகள் பரம் பொருளால் விளையும் என்றும் –
தத் யதா ரதஸ் யாரேஷூ நேமி ரர்ப்பிதா நாபாவர அர்ப்பித்தா ஏவ மேவைதா பூத மாத்ரா ப்ராஜ்ஞா மாத்ரா ப்ராணே அர்ப்பிதா-என்று
தேரின் சக்கரத்தில் உள்ள கம்புகள் சக்கரத்தின் நடுவில் சேர்க்கப் பட்டது போலே
அசேதனங்கள் சேதனங்களின் இடமும் சேதனங்கள்
ப்ரஹ்மத்திடமும் இணைக்கப் பட்டுள்ளன என்பதால் இந்த்ரன் பிராணன் ஆகியவை பரம்பொருளையே குறிக்கும்-

ந -இந்த்ர ப்ராண சப்தத்தின் பொருள் பர ப்ரஹ்மம் அன்று
ஏன் எனில்
வக்து ஆத்ம உபதேசாத் இதி சேத் –தொடக்கத்தில் -மூன்று தலையுள்ள த்வாஷ்ட்ரனைக் கொன்றேன் என்று கூறி
விஸ்வ ரூப வதம் முதலியவற்றால் ப்ரஸித்தமான ஜீவ பாவத்துடன் ப்ரஞ்ஞாத்மாவான பிராணனாய் இருக்கிறேன்
என்று பேசும் தன் ஆத்மாவை உபாஸீ என்று உபதேஸிப்பதால் ஜீவன் தான் என்றால்
அத்யாத்ம சம்பந்த பூமா ஹ்யஸ்மின்-பிராண ஸப்தத்தால் குறிப்பிடும் இந்த ப்ரஹ்மத்திடம் உள்ள குணங்கள் -தர்மங்கள் –

அத்யாத்ம தர்மங்கள் -அவற்றின் சம்பந்தங்கள் -அவற்றின் பூமா -மிகுதியாய் உள்ளது அல்லவா
உபக்ரமத்தை விட மஹா வாக்யம் பிரபலமாகையால் இந்த ப்ரதர்தன வித்யையில்
ஆதி முதல் அந்தம் வரை பரமாத்வாவின் சிறப்பான தர்மங்கள் பேசப்படுகின்றன
அதாவது ப்ரதர்தன் இந்த்ரனிடம் -நீயே மனிதர்க்கு ஹித தமமாய் எண்ணும் வரத்தைத் தருக–என்று கூறிப் பின்
அனைத்து நல்ல காரியங்களையும் நிறைவேற்றுபவனாகவும் தேரின் குடத்தில் -ஆரங்களில் -சக்ரம் நிலை பெற்றது போல்
உலகிற்கே ஆதாரமாய் இருப்பவனும் -ஆனந்த வடிவாய் ஜரை மரணம் முதலியவை அற்றவனாய் –
உலகின் தலைவனாய் ஸகல கல்யாண குணா கரனுமாக இந்த வித்யையில் சொல்லப்படுகையாலே
பரம புருஷனே இந்த்ர பிராணன் என்பது கருத்து

————

ஆனால் இந்திரன் தன்னையே உபாஸிக்கச் சொல்வதால் பொருந்துமோ
என்ற சங்கைக்கு மேலே விடை தருகிறார் –

31-சாஸ்திர த்ருஷ்ட்யா து உபதேச வாமதேவவத் –1-1-31-

வாசுதேவரைப் போலே இந்த்ரனும் வேதங்கள் மூலம் உண்டான ஞானத்தினால் இவ்வாறு கூறினான் –
சாந்தோக்யம் –
அநேன ஜீவேன ஆத்ம நா அநு பிரவிச்ய நாம ரூபே வ்யாகரவாணி -என்று ஜீவன் மூலமாக
அசித்துக்களை ஆக்கிரமித்து பெயரும் ரூபமும் கொடுக்கிறேன் என்றும்
ப்ருஹத் ஆரண்யா காவில்-
ய ஆத்மினி திஷ்டன் ஆத்ம நோந்தர யமாத்மா ந வேத யச்யாத்மா சரீரம் ய ஆத்மாநமந்திரோ யமயதி -என்று
எந்த பரம்பொருள் ஜீவாத்மாவில் உள்ளதோ -எந்த பரம்பொருளை ஜீவாத்மா அறியவில்லையோ -யாருக்கு ஜீவாத்மா உடலாக உள்ளதோ –
உள்ளே புகுந்து ஜீவாத்மாவை யார் இயக்குகின்றானோ -என்று தனக்கு உள்ளே உள்ள பரம்பொருளை இந்த்ரன் குறிப்பிட்டான்-
ப்ருஹத் ஆரண்யா காவில் –
தத்தைதத் பஸ்யன் ருஷிர் வாமதேவ பிரதிபதே அஹம் மநுரபவம் ஸூர்யச்யாஹம்-என்று
ப்ரஹ்மத்தை உணர்ந்த வாமதேவர் தானே மனுவாகவும் ஸூர்யனாகவும் –
பரம்பொருளே அந்தர்யாமியாகவும் உணர்ந்து -இப்படிக் கூறினார்-

து -சங்கையை நீக்குகிறது
உபதேஸ முமுஷுக்கள் தன்னை உபாஸிக்க வேண்டும் என்று உபதேசித்தல்
சாஸ்திர த்ருஷ்ட்யா–ஆத்மநி திஷ்டன் -ஆத்மநோ நந்தர -யம் ஆத்மா ந வேத –
யஸ்ய ஆத்மா சரீரம் -முதலிய ஸாஸ்திரத்தாலே
உபதேச -ஜீவ சரீரிகனான பரமாத்மாவை அறிந்து ஜீவனைக் குறிக்கும் அஹம் த்வம் முதலிய சொற்களும்
பரமாத்மாவையே போதிப்பது என்று அறிந்து
என்னையே அறிந்து உபாஸனை செய் என்று தன் ஆத்மாவைச் சரீரமாகக் கொண்ட பரமாத்மாவை உபாஸிக்கிறான் இந்த்ரன் –
வாமதேவவத் –வாமதேவர் என்ற மஹ ரிஷி இப்படியே ஸாஸ்த்ர கண்ணோட்டத்தாலே
அஹம் மனுரபம் ஸூர்யச்ச -நானே மனுவாகவும் ஸூர்யனாகவும் இருந்தேன் என்று இருக்கிறார்
அப்படியே இந்த்ரனும் கூறுகிறான் -என்றபடி
ப்ரஹ்லாதனும் இப்படியே எம்பெருமான் எங்கும் நிறைந்து இருப்பதால் அவனாகவே நானும் இருக்கிறான் –
என்னிடம் இருந்தே எல்லாம் தோன்றுகிறது
நானே எல்லாமுமாய் ஆவேன் என்று கூறுகிறான் என்று கருத்து
கடல் ஞாலம் செய் தேனும் யானே என்னும் என்றாரே ஆழ்வாரும் –

———-

இந்தப் ப்ரகரணத்தில் ஜீவாத்மாவைக் குறிக்கும் சொற்களாலும்
ப்ராணாதி சப்தங்களாலும்
உபாஸ்யமான பர ப்ரஹ்மத்தைச் சொல்லுகையில்
காரணத்தைச் சந்தேகம் தெளிவிப்பதன் மூலம் அருளுகிறார்

32-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத் ந உபாசாத்ரை வித்யாத் ஆஸ்ரிதத்வாத் இஹ தத் யோகாத் –1-1-32-

கௌஷீதகி ப்ரஹ்மணத்தில்-
ந வாசம் விஜிஜ்ஞா சீத வக்தாரம் வித்யாத் -என்றும்
த்ரிசீர்ஷாணம் த்வாஷ்ட்ரம் அஹம் அருன்முகான் யதீன் சாலாவ்ருகேப்ய ப்ராயச்சம் -என்றும்
இந்திரனைப் பற்றி சொல்லிற்று –
யாவதஸ்மின் சரீரே ப்ராணோ வசதி தாவதாயு -என்றும் பிராணனைக் குறித்தும் சொல்லிற்று
பரம்பொருளை உபாசிப்பது -தைத்ரியம்
ஆனந்தோ ப்ரஹ்ம-சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம- -உள்ளபடியே உபாசிப்பது ஒரு முறை –
ஜீவாத்மாவை உடலாக உடையவன் -என்று உபாசிப்பது ஒரு முறை –
பிராண வாயுவை உடலாக உடையவன் -அந்தர்யாமியாக உள்ளவன் என்பதையே சொல்லும் —

ஜீவ முக்ய பிராண லிங்காத் ந –த்வஷ்ட்ர வதம் முதலான ஜீவ லிங்கங்களாலேயும்
இவ்வுடலில் பிராணன் உள்ள வரையிலும் தான் ஆயுள் என்று கூறும் பிராண லிங்கத்தாலும்
பரமாத்ம விஷய சம்பந்தம் மிகுதி என்பது இல்லை

இதி சேத் ந -என்று கூறுவது தவறு

உபாசாத்ரை வித்யாத் –மூன்றுவிதமாக உபாஸிக்க வேண்டும் என்றே உபதேஸிக்கிறார்
மூன்று வித உபாஸனமாவது
1- ஸமஸ்த காரணனான ப்ரஹ்மத்தை சத்யத்வ ஞானாதிகள் உடையதாய் உபாஸிப்பது
2-போக்த்ரு வர்க்கமான- ஜீவர்களை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தை உபாஸிப்பது
3-போக்ய போக உபகரணமான -அசேதனங்களைச் சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தை உபாஸிப்பது –
என மூன்று வித உபாஸனங்கள்

ஆஸ்ரிதத்வாத் –தைத்ய ஸ்ருதியிலும் ஆஸ்ரயிக்கப் படுகிறது
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம-என்றும்
ஆனந்தோ ப்ரஹ்ம-என்றும் பகவத் ஸ்வரூப அனுசந்தானம் கூறப் படுகிறது
பின்னர் தத் ஸ்ருஷ்ட்வா ததே அநு ப்ரவிசேத் -என்று தொடங்கி
சேதன சரீரகமாயும் அசேதன சரீரிகமாயும் அனுசந்தானம் கூறப்படுகிறது

இஹ தத் யோகாத்-இந்த உபநிஷத்திலேயும் அந்த மூன்று வித உபாஸனங்களும் கூடும்
எப்படி என்றால்
என்னை உபாஸி -என்றதால்-என்னைச் சரீரமாகக் கொண்ட பரமாத்மாவை உபாஸி என்று
சேதன சரீரிக ப்ரஹ்ம அனுசந்தானமும்
ப்ராஞ்ஞாத்மாவான பிராணனாய் இருக்கிறேன் என்றதால்
அசேதன சரீரிக ப்ரஹ்ம அனுசந்தானமும்
சொல்லப் படுகின்றன
ஆனந்தோ -அஜரா -அம்ருத -என்று ப்ரஹ்ம ஸ்வரூப அனுசந்தானம் சொல்லப் படுகிறது
இவ்வாறு வேறு உபநிஷத்துக்களிலும் பரமாத்மாவின் சிறப்பான தர்மங்கள் சொல்லப்பட்டன
ஹிரண்ய கர்பாதிகளைக் குறிக்கும் சொற்களும் பரமாத்மாவையே குறிக்குமாம்

ஆகையால் இந்த்ர ப்ராண சப்தத்தால் குறிக்கப் படுபவன் ஜீவனை விட வேறுபட்ட பரமாத்மாவே என்று தேறிற்று –

இந்திர பிராண அதிகரணம் சம்பூர்ணம்

——–

இந்தப்பாதத்தில்
ஆகாசாதிகரணம் முதல் இறுதி வரை நான்கு அதிகரணங்களிலும்
ஆகாசம் -பிராணம் -என்ற சொற்கள் பிரித்துப் பொருள் கொள்ளும் காரணப் பெயராய்
யதேஷ ஆகாஸ ஆனந்தோ நஸ்யாத்–முதலிய ஸ்ருதிகளிலே க்லுப்தமான படியாலே
ரூடி சக்தியை விட்டு ஸர்வார்த்ர்யாமியாய் –ஸர்வ பிராணிகளையும் உயிரூட்டுபவனாய் உள்ளான் -என்பதாக
நிமித்த பேதம் காரணமாக ஸ்ரீ மன் நாராயணனையே போதிப்பவை என்றும்

ஜ்யோதிஸ் ஸப்தம் குஷி கதமான ஜ்யோதிஸ்ஸுடன் ஒன்றாக உபதேசித்து விசேஷ லிங்கம் இருந்தாலும்
ரூடி சக்தியால் பரம புருஷனையே குறிக்கிறது

இந்த்ர ப்ராணாதி ஸப்தங்களும் -த்வாஷ்ட்ர வதாதி லிங்கங்கள் இருப்பினும் அத்தகைய லிங்கங்களுடன் கூடிய
இந்த்ராதி சரீரகனான பரமாத்மாவையே போதிப்பன என்பதாக ஆச்சார்யர்கள் நிரூபித்து உள்ளனர்

பர வித்யாஸூ ஜீவோக்தி நிரூக்த்யாதே பராஸ்ரயா
தல்லிங்கா நந்யதா ஸித்தவ் தத் விஸிஷ்டாபி தாயினீ –என்று விளக்கினார்கள்
அதாவது
பரவித்யைகளில் காணும் ஜீவனைக் குறிக்கும் சொற்கள் பரமாத்மாவையே குறிப்பவை
அதன் லிங்கங்கள் மாற்ற முடியாமல் நிற்கையில் சேதனாதிகளைச் சரீரமாய்க் கொண்ட ப்ரஹ்மம்
என்ற பொருளைக் குறிப்பிடுவனவாம் என்றவாறு –

இந்தப்பாதத்தில் அதிகரணங்கள் -11-
முதல் நான்கும் உபோத்காதம் -முன்னுரை
அடுத்த ஏழிலும் ஸ்ரீயப்பதியின் கல்யாண குணங்கள் அனுபவிக்கப் படுகின்றன
1-ஈஷத் அதிகரணத்தில் -ஸ்வ இச்சையால் சர்வத்துக்கும் காரணத்வமும்
2-ஆனந்தமய அதிகரணத்தில் சுபமான குண கணங்களுடன் எல்லையில்லா ஆனந்தம் உடைமையும்
3-அந்தராதித்ய அதிகரணத்தில் கர்ம சம்பந்தம் அற்ற ஸுத்தமான திவ்ய மங்கள விக்ரஹ யோகமும்
4-ஆகாஸ அதிகரணத்தில் எல்லையற்று நாற்புறங்களிலும் பிரகாசித்தலும்
5-ப்ராண அதிகரணத்தில் சேதன அசேதன சகல ஜகத்தையும் உயிர் வாழ்விக்கும் திறனையும்
6-ஜ்யோதிர் அதிகரணத்தில் திவ்யமாய் நிகரற்ற ஜ்யோதிஸ் ஸ்வரூபமும்
7-இந்த்ர ப்ராண அதிகரணத்தில் இந்த்ரன் பிராணன் முதலியவற்றுக்கு அந்தராத்மாவாய் விளங்குவதுமாகிய
கல்யாண குணங்கள் ஏழும் உடைய பரம புருஷன் முதல் பாதத்தில் விளக்கப்படுகிறான் –

————

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-முதல் பாதம் -அயோக வ்யவச்சேத பாதம்-சம்பூர்ணம்-

————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யார்த்த தீபிகை –இரண்டாம் அத்யாயம் –நாலாம் பாதம் —

November 13, 2021

ஸ்ரீ பாஷ்யம் -மங்கள ஸ்லோகம்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா –

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூர்வாச்சார்ய ஸூரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷாஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————————————————————-

ஜகத்து முழுவதும் ப்ரஹ்மத்தின் கார்யம் என்பதை சமர்த்திக்க
சில ஸ்ருதிகளில் மேல் எழுந்த வாரியாக இந்திரியங்கள் நித்யங்கள் என்னும் எண்ணம்
சில மாந்தர்களுக்குத் தோன்ற இடம் இருப்பதால் அவ்வெண்ணத்தை நீக்க
ஜீவனின் உப கரணமான இந்திரியங்களுக்கு கார்யத்வத்தை சாதிக்கிறார் என்பது சங்கதி

இந்திரியங்கள் ஜீவன் போல் உண்டாவது இல்லையா –
ஆகாசாதிகள் போல் உண்டாகின்றனவா என்று சம்சயம்
உண்டாவது இல்லை என்பது பூர்வ பக்ஷம்

அஸத்வா இதம் அக்ர ஆஸீத் ததாஹு கிம் ததா ஸீத் இதி ருஷயோ வாவதே அக்ர ஆஸீத்
ததாஹு கேதே ருக்ஷய இதி ப்ராணா வாவ ருஷய இதி –
பிரளய காலத்தில் பிராண ஸப்த வாஸ்யங்களான இந்திரியங்களுக்கு இருப்பு கூறுவதால்
உத்பத்தி இல்லை என்பதாம் –

ஸூத்ரம் –265-கதா ப்ராணா –2-4-1- பூர்வ பக்ஷ ஸூத்ரம்

ஜீவன் எவ்வாறு உத்பத்தியும் மரணமும் இல்லாதவனோ
ந ஜாயதே ம்ரியதே வா விபச்சித்
அப்படியே பிராணா -இந்திரியங்களும்
அஸத்வா –என்னும் ஸ்ருதிகளால் உத்பத்தி ஆவது இல்லை என்பது பூர்வ பக்ஷம்

அதைக் கண்டிக்கிறார் –

—————

ஸூத்ரம் –266-கௌண்ய சம்பவாத் தத் ஸ்ருதேச் ச –2-4-2-

ச என்றது து என்ற பொருளாய் பூர்வபக்ஷத்தை நிரசிக்கிறது
இந்திரியங்களும் வ்யத் யாதிகளைப் போலே உத் பன்னங்களே
தத் ப்ராக் ஸ்ருதேச் ச -அந்த பரமாத்மாவுக்கே பிரளய காலத்தில் இருப்பு ஸ்ருதியில் கூறப்படுவதால்
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் –இத்யாதி ஸ்ருதிகளில்
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் -ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே பிரளய காலத்தில் இருக்கிறான் என்பது ப்ரஸித்தம்
ப்ராண ஸப்தமும் பிராணம் அபி ஸம் விசந்தி -என்ற ஸ்ருதியால் பரமாத்மாவைக் குறிப்பது
எல்லாவற்றையும் ஸாஷாத் கரிக்க வல்ல ரிஷி என்ற தன்மையும் அவருக்கே கூடும்
இப்படியாகில் ப்ராணா வாவ ரிஷயே என்ற பஹு பன்மை வசனம்
கௌணீ -உபசார வார்த்தை
ஏன் எனில்
அசம்பவாத் -இந்திரியங்கள் பிரளய காலத்தில் இல்லாமையால் –

————————–

ஸூத்ரம் –267-தத்வ பூர்வகத்வாத் வாச –2-4-3-

வாச -பரமாத்மேதரமான எல்லா நாமதேயங்களும்
தத்வ பூர்வகத்வாத் -அந்த அந்த வஸ்துவின் ஸ்ருஷ்ட்டியை முன்னதாகக் கொண்டு இருப்பதால்
தத்தே தந்தர் ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் -தன் நாம ரூபாப்யாம் வியாக்ரியத -என்கிற ஸ்ருதி
அந்த வஸ்துக்களையும் நாமங்களையும் ப்ரஹ்மமே படைத்தது என்று சொல்வதால்
இந்திரியாதி ஸ்ருஷ்டிகளும் முன் உள்ள பிராணன் என்பது பரமாத்மாவே என்று சித்திக்கிறது –

——————

இதில் இந்திரியங்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறார்
என்று சங்கதி

ஸூத்ரம் –268–ஸப்தகதேர் விசேஷி தத்வாச்ச–2-4-4-பூர்வ பாஷ ஸூத்ரம்

இந்திரியங்கள் ஏழா பதினொன்றா என்று சம்சயம்
ஏழே என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்

கதே ஸப்தப் ப்ராணா ப்ரபவந்தி-என்று
ஜீவனுடன் சேர்ந்து கதி சொல்வதால்
விசேஷி தத்வாச்ச
யதா பஞ்ச அவதிஷ்டந்தே ஞானாமி மனஸா ஸஹ –புத்திச்ச ந விசேஷ்டேதே தமாஹு பரமாம் கதிம் -என்று
ஏழு விஞ்ஞானங்களும் ஸ்திரமாய் இருந்தால் யோகம் ஸித்திக்கும் என்று விசேஷித்து
ஞானி என்று ஞான ஸாதனங்களான இந்திரியங்களை விசேஷிக்கையாலும்
ஸ்ரோத்ரம் -த்வக் -சஷுஸ்-ஜிஹ்வா -கிராணம் -மனஸ் -புத்தி -என்று ஏழு இந்திரியங்கள்
வேறே இல்லை என்பது பூர்வ பக்ஷம் –

——————–

ஸூத்ரம் –269-ஹஸ்தாத யஸ்து ஸ்திதே அதோ நைவம் –2-4-5-

அவ்வாறு அல்ல -இந்திரியங்கள் ஏழு என்பது சரி யல்ல
ஸ்ரோத்ரம் முதலிய ஞான இந்திரியங்கள் ஐந்து
மனம் ஓன்று -கர்ம இந்திரியங்கள் ஆக -11 இந்திரியங்கள்
அவற்றுள் ஐந்து ஞான இந்திரியங்களும் ஜீவனுடன் வேறு சரீரத்தில் கூட இணைந்தே செல்கின்றன
ஹஸ்தாத யஸ்து–கர்மா இந்த்ரியங்களோ எனில்
ஸ்திதே -உடல் உள்ளவரை உள்ளன -சரீரம் தோன்றும் போது தோன்றி மறையும் போது மறைபவை
அதோ நைவம்-ஆகையால் இந்திரியங்கள் ஏழு என்பது இல்லை
புத்தி அஹங்காரம் சித்தம் என்ற வளாகங்களை மநோ விருத்தியின் பேதங்களே யாதலின் வேறே அல்ல
ஆக இந்திரியங்கள் பதினொன்றேயாது

இவ்வாறு வியாக்யானம் தீபத்தைத் தழுவியது –

இங்கு ஓர் பூர்வ பக்ஷம்
ஜீவன் இருக்கையில் ஹஸ்தாதிகள் அவனுக்கு உபகாரமாய் இருப்பதாலும் எடுப்பது வைப்பது போன்ற
செயல்கள் இயற்றுவதாலும் இந்த்ரியத்தில் தடை இல்லை
ஆகையால் அவை ஏழு தான் என்று கூறப்படுவது இல்லை -அவை பதினொன்றே
ஜீவன் சரீரத்தை அடையும் போது கர்ம இந்திரியங்கள் உண்டாகி சரீரம் நசிக்கும் போது அடியோடு நசிக்கின்றன
ஜீவன் லோகாந்த்ரம் தேஹாந்த்ரம் அடையும் போது ஞான இந்த்ரியங்களே உடன் போகின்றன
கர்ம இந்திரியங்கள் போவது இல்லை என்ற இவ் வர்த்தங்களைச் சாதிக்க வில்லை

ஸ்ருத பிரகாசிகையிலோ -பதினோரு இந்த்ரியங்களுமே அஹங்காரத்தில் இருந்து தோன்றியவை யாதலின்
ஜீவனின் லோகாந்தர தேஹாந்தர கமனத்திலும் இவை கூடவே செல்கின்றன என்றும்
பிரளய தசையில் தவிர மற்ற காலங்களில் இவற்றுக்குப் பிரிவே கிடையாது என்றும் கூறி
ஏழே இந்திரியங்கள் என்பதைக் கண்டிக்கிறார்

சிந்தாமணியிலும் -ஸப்த இமே லோகா யேஷு சரந்தி பிராணா -என்கிற சுருதியில்
ஜீவனுடன் செல்லுதல் ஞான இந்திரியங்களுக்கு மட்டும் கூறினாலும்
கர்ம இந்திரியங்களுக்கு உப லக்ஷணம் என்று கூறப்பட்டுள்ளது
இப்படி இருக்க தீப அனுசாரியாக வியாக்யானம் செய்யலாமோ என்பது பூர்வ பக்ஷம்

இவ்விஷயத்தில் நியாய பரிசுத்தி கிரந்தம் சமாதானமாகக் கூறும் வழியைக் காண்போம்
யாதவ பிரகாசர் மதத்தைப் போல் கர்ம இந்திரியங்களுக்கு ஒவ்வோர் சரீரத்திலும்
உத்பத்தி விநாசங்களை ஏற்றுக் கொண்டாலும் அவற்றுக்கு இந்த்ரியத்வம் ஸித்தமாகிறது என்பதால்
இந்த ஸூத்ரத்துக்குப் பொருத்தமான பொருள் ஓன்று கூறப்பட்டது
ஆகையால் பதினோரு இந்த்ரியங்களுமே வேறே சரீரங்களிலும் தொடர்கின்றன என்பதே
ஸ்ரீ பாஷ்யகாரர் திரு உள்ளம் என்று அறிகிறோம்
சரீரே ஸ்திதே -என்றும் பிரயோஜனந்தரத்தாலும் பிறர் மதத்தை அனுவதித்து
இந்திரியங்கள் பதினொன்றே என்று ஸ்தாபித்தாலும்
தீபத்தில் சொல்லியதத்திற்கும் விரோதம் இல்லை என்பதாம் –

—————

மூன்றாம் அதிகரணம் –பிராண அணுத்வ அதிகரணம்

ஸூத்ரம் –270-அணவச்ச –2-4-6-

இந்திரிய பரிமாணம் இதனால் கூறப்படுகிறது
இந்திரியங்கள் ஸர்வ கதங்களா அணுக்களா என்று சம்சயம்
ஸர்வ கதங்களே –ஏதே ஸர்வ ஏத சமாஸ் ஸர்வே அநந்தா -என்று அனந்தத்வம் சொல்வதால் –
என்று பூர்வபக்ஷம்

அத்தை நிரசிக்கிறார்
அணவச்ச –இந்திரியங்கள் அணுக்களே
பிராணம் அனூத்க்ரா மந்தம் சர்வே ப்ராணா அனூத் க்ராமந்தி -என்று
இந்திரியங்கள் ஜீவனுடன் செல்வது கூறப்பட்டுள்ளதால் அணுவே
அநந்தம் -என்று சொன்னதோ -அதஹை தாந நந்தானு பாஸ்தே -என்று
இந்திரியங்களின் உபாஸனத்தால் வரும் பலன்களின் மிகுதியைக் காட்டவேயாம் –

————–

ஸூத்ரம் –271-ஸ்ரேஷ்டச்ச –2-4-7–

இந்திரியங்களுக்கு நிர்வாஹகம் ஆகையால் ஸ்ரேஷ்டமான பிராண வாயுவும் உண்டாகிறது
ஏதஸ் மாஜ் ஜாயதே பிராண மன -என்று சொல்வதால்
இங்கு ப்ராணனைச் சொன்னது மேலே பிராணனின் ஸ்வரூபத்தை விசாரிக்க வாம் –

———

நான்காம் அதிகரணம் -வாயு க்ரிய அதிகரணம் —

ஸூத்ரம் –272- ந வாயு க்ரியே ப்ருதக் உபதேசாத் –2-4-8-

இந்த ஸ்ரேஷ்ட பிராணன் கேவல வாயு ஸ்வரூபமா -அல்லது வாயுவின் சலனாதி கிரியையா
அல்லது தேஹாதி தாரணத்துக்கு அனுகுணமான ஒரு அவஸ்தா விசேஷத்தோடு கூடின வாயுவா என்று சம்சயம்
கேவல வாயுவே –முதல் பக்ஷம் –யஸ் பிராணா ச வாயு -என்று சொல்வதால்
இரண்டாவது பக்ஷம் -உஸ்வாச நிச்வாஸ ரூபமான வாயுவின் கிரியையே பிராணன் என்பது
இவற்றை நிரசிக்கிறார்

ந வாயு க்ரியே -வாயு மாத்ரமோ அதன் கிரியையோ அன்று
ப்ருதக் உபதேசாத்–ஏதஸ் மாஜ் ஜாயதே பிராண மனஸ் ஸர்வ இந்த்ரியாண ச
கம் வாயு -என்று
வாயுவும்
பிராணனும்
ப்ரஹ்மத்தின் இடம் இருந்து உண்டாகின்றன என்று தனித்தனியே சொல்வதால் என்றபடி
ஆகையால் தேஹ தாரண யோக்யதா ரூபமான விசேஷத்தை யுடைய வாயுவே பிராணன் என்று சித்தம்

———–

இப்படி வாயுவைக் காட்டிலும் தனியாகச் சொல்லப்பட்ட அக்னியாதிகளைப் போலே
வேறே ஒரு பூதமோ என்னும் சங்கையைப் பரிஹரிக்கிறார்

ஸூத்ரம் –273-சஷுராதி வத் து தத் ஸஹ சிஷ்ட் யா திப்ய –2-4-9-

து சப்தம் சங்கையை நிவர்த்திப்பிக்கிறது
பிராணன் தேஜஸ் முதலியவை போல் பூதம் அல்ல
சஷுராதி வத்–கண்–இந்திரியங்கள் போல் ஜீவனுக்கு உபகரணம் ஆகாது
தத் ஸஹ சிஷ்ட் யா திப்ய–உபகரணங்களான அவற்றுடன் சேர்ந்து உபதேசம் செய்யப்பட்டு இருப்பதால்
பிராண சம்வாதத்தில் -ஸர்வே ப்ராணா அஹம் ஸ்ரேயஸே விவத மானா -என்று
ச ஷுராதி இந்த்ரியங்களையும் பிராண வாயுவையும் கூட்டி பிராண ஸப்தத்தாலே உபதேசிக்கிறது
ச ஷுராதிகளைப் போலே பிராண வாயுவும் உபகரணம் என்ற வகையில் சமமானால் தான் பொருந்தும்
யோ அயம் முக்ய ப்ராணா -என்று ப்ராண சப்தத்தால் குறிப்பிடப்பட்டுள்ள கரணங்களுள்
பிராண வாயு முக்கியம் என்று கூறியது
ஸஹ சிஷ்ட் யா திப்ய-என்று ஆதி ஸப்தத்தின் பொருள் –

————–

ஸூத்ரம் –274-அகரணத் வாச்ச ந தோஷ ததாஹி தர்சயதி–2-4-10-

அகரணத் வாச்ச ந தோஷ –ஜீவனுக்கு உபகரிக்கை என்னும் காரணம் இல்லாமையாலே
ப்ராணனுக்கு உபகரணத்வம் கூடாது என்ற தோஷமும் இல்லை
ததாஹி தர்சயதி–யஸ்மின் உத் க்ராந்தே இதம் சரீரம் பாபிஷ்ட தரமிவ த்ருச்யதே ஸவை ஸ்ரேஷ்ட –என்றும்
ஸ்ருதி தானே பிராண வாயுவுக்கு தேஹ இந்திரியாதி அசை தில்ய கரண ரூபமான உபசாரத்தைக் காட்டுகிறது
ஆகையால் தோஷம் இல்லை என்பதாம் –

——————-

ஸூத்ரம் –275–பஞ்ச வ்ருத்திர் மநோ வத் வ்யபதிஸ்யதே–2-4-11–

பஞ்ச வ்ருத்திர்-ஒரே பிராண வாயு தான் பிராண அபா நாதி வ்ருத்தி பேத மூலமாக
ஐந்து பெயர்களால் கூறப்படுகிறது
மநோ வத்-ஒரே மனம் எப்படி காம நாதி வ்ருத்தி பேதத்தால்
காமம்
சங்கல்பம் விசிகித்சா
ஸ்ரத்தா
அஸ்ரத்தா
த்ருதி
அத்ருதி ‘
ஹ்ரி -வெட்கம்
தீ புத்தி
பீ பயம்
என்று வெவ்வேறாக கூறப்படுகிறது அப்படியே பிராணனும் ஐந்து இடங்களில் இருப்பைக் கொண்டு
பிராணன் அபானன் இத்யாதி பெயர்களால் குறிக்கப் படுகிறது

———————-

ஐந்தாம் அதிகரணம் –அணுச் ச அதிகரணம்

இந்தப் பிராணன் வாயுவா அல்லவா என்று சம்சயம்
சர்வகதன்-விபு -என்று பூர்வ பக்ஷம்
ஸ ஏபி த்ரி பி லோகை சம என்று அனந்தயம் சொல்வதால் என்று பூர்வ பக்ஷ ஹேது
இதை நிரசிக்கிறார்

ஸூத்ரம் –276–அணுச் ச –2-4-12–

தம் உத் க்ரமாந்தம் பிரானோ அனூத் க்ரமாதி –என்று உத் க்ராந்தி சொல்வதால்
இந்திரியங்கள் போலவே பிராணனும் ஸூஷ்ம பரிணாமம் உள்ளது
த்ரி பி பிராணை சம -என்றது பிராணனை ஸ்துதிப்பது அன்று வேறு இல்லை –

———–

ஆறாம் அதிகரணம் -ஜ்யோதிராத் அதிகரணம்

பராத் து தத் ஸ்ருதே -என்னும் அதிகரணத்தில் சொன்ன அர்த்தத்தை
இதில் ஸ்திரப்படுத்துகிறார் என்று சங்கதி

ஸூத்ரம் –277-ஜ்யோதிராத் யதிஷ்டா நந்து ததா மனனாத் ப்ராண வதா சப்தாத் –2-4-13–

ப்ராண வதா-பிராணனின் நியந்தா என ஜீவனுடன் கூடி
ஜ்யோதிராத் யதிஷ்டாநம் -அக்னி யாதி தேவதைகளுக்கு வாகாதி இந்த்ரியங்களில் அதிஷ்டானமானது
ததா மன நாத் து –ஆபி முக்யேந மனனம் ஆ மனனம் ஸங்கல்பம் –
அந்த பரம புருஷனின் சங்கல்பத்தாலே ஏற்படுகிறது என்று கருத்து
ஏன் எனில்
சப்தாத்-யோ அக்னவ் திஷ்டன் அக்னி மந்தரோ யமயதி ய ஆத்மனி திஷ்டன் –இத்யாதி
சப்தங்களால் என்றபடி –

——————–

ஸூத்ரம் –278- தஸ்ய ச நித்யத் வாத் –2-4-14–

தஸ்ய -ஸமஸ்த வஸ்துக்களும் பரமாதிஷ்டிதம் என்பதற்கு
நித்யத் வாச் ச -ஸ்வரூப அனு பந்தியாய் நியதத்வம் இருப்பதால்

ஆகவே பகவத் ஸங்கல்பத்தாலே தான் அக்னி யாதி தேவதைகளுக்கு
இந்திரிய அதிஷ்டாத்ருத்வம் தவிர்க்க முடியாததாகிறது –
தத் ஸ்ருஷ்ட்வா ததே வா அனு ப்ராவிசத் தத் அனு ப்ரவிஸ்ய சச்சத் யச்சா பவத் என்று
சர்வ நியாந்தாவாய் இருந்து அனு பிரவேசம் செய்தார் என்ற ஸ்ருதி இருப்பதால் என்று கருத்து –

————

ஏழாம் அதிகரணம் –இந்த்ரிய அதிகரணம்

ஸூத்ரம் –279-த இந்த்ரியாணி தத் வ்யபதேசாத் அந் யத்ர ஸ்ரேஷ்டாத் –2-4-15–

ஸர்வே பிராணா -என்று சஷு ராதிகளையும் பிராண வாயுவையும் பிராண சப்தத்தாலேயே சொல்லுகையாலே
முக்ய பிராணனையும் இந்த்ரியம் என்னலாம்
என்பதைக் கண்டிக்கிறார்
ஸ்ரேஷ்டாத் அந் யத்ர-ஸ்ரேஷ்ட பிராணன் அல்லாத பிற ப்ராணங்கள்
த இந்த்ரியாணி-அவையே இந்த்ரியங்கள்
தத் வ்யபதேசாத் -அவற்றையே அவ்வாறு வழங்குவதால்
இந்திரியாணி தசை கஞ்ச -என்று முக்ய பிராணனை விட்டு -சஷுராதி மனம் வரையானவற்றையே
இந்த்ரியம் எனக் குறிப்பிடுவதால்
முக்ய ப்ராணனுக்கு இந்த்ரியம் என்ற பெயர் கிடையாது என்பதாம் –

——————

ஸூத்ரம் –280-பேத ஸ்ரு தேர் வை லக்ஷண்யாச் ச–2-4-16–

பேத ஸ்ரு தேர்
ஏதஸ் மாஜ் ஜாயதே பிரானோ மனஸ் ஸர்வ இந்த்ரியாணி ச -என்று
பிராணனையும் இந்திரியங்களை வேறாகச்
சொல்லுகையாலும்
வை லக்ஷண்யாச் ச–இந்திரியங்கள் லயம் அடைந்த பிறகும் பிராண வ்யாபாரத்தைக் காண்கையாலே
இவற்றின் இடையே வேறுபாடு இருப்பதாலும் என்றபடி

இத்தாலும் ஸ்ரேஷ்ட ப்ராணனைத் தவிர்த்த ஏனைய சஷு ராதிகளே இந்த்ரியங்கள் என்று ஸித்தம் –

———–

எட்டாம் அதிகரணம் –ஸம்ஞா மூர்த்தி க்லுப்த் யதி கரணம்

வ்யத் அதிகரணம் தொடங்கி இது வரை -14- அதிகரணங்களாலே
பூத இந்திரியாதிகளின் சமஷ்டி ஸ்ருஷ்டியை நிரூபித்து
இவ்வதி கரணத்திலே
தேவ மனுஷ்யாதி வ்யஷ்டி ஸ்ருஷ்டியை இங்கு நிரூபிக்கின்றார் என்று சங்கதி

ஸூத்ரம் -281–ஸம்ஞா மூர்த்தி க்லுப்திஸ் து த்ரி வ்ருத் குர்வத உபதேசாத் -2-4-17-

பிரபஞ்ச ஸ்ருஷ்டியை சதுர்முகன் செய்கிறானா
சதுர்முக சரீரக பரமாத்மா செய்கிறானா
என்ற ஸம்சயத்தில்
அநேந ஜீவேந ஆத்ம நா அனு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி -என்று
ஜீவனைத் த்வாரமாகக் கொண்டு நாம ரூப வியாகரணம் சொல்லுகையாலே
சதுர் முகனே வ்யஷ்டி ஸ்ருஷ்டியை செய்பவன் என்று பூர்வ பக்ஷம்
ஏன் எனில்
த்ரி வ்ருத் குர்வத உபதேசாத் –
நாம ரூப வ்யாகரவாணி தாஸாம் த்ரி வ்ருதம்
த்ரி வ்ருதம் ஏகை காம் கரவாணி -என்று த்ரி வ்ருத கரணம் பண்ணுபவனுக்கே நாம ரூப வியாகரணம் உபதேசிக்கையாலே
த்ரி வ்ருத் க்ருதங்களான தேஜோ அப்பு அன்னங்களால் உத் பன்னமான அண்டத்தில் உள்ள சதுர்முகன்
அந்த த்ரி வ்ருத் கரணத்தின் கர்த்தா ஆக மாட்டான்
த்ரி வ்ருத் கரணமும் வ்யஷ்டி ஸ்ருஷ்டியும் பரம புருஷனால் தான் செய்யப் பட்டன என்றாலே
வ்யாகரவாணி என்ற உத்தம புருஷனும் -தன்மை ஒருமை வினை முற்றும் -பொருந்தும்
ஜீவேந ஆத்ம நா என்ற சாமா நாதி கரண்யமும் -விசேஷண விசேஷ்ய பாவமும் முக்கியப் பொருளாகும்
ஜீவேந ஆத்ம நா–ஜீவ சரீரகனான என்னால் என்றபடி–

————-

ஆமாம் அன்ன மசிதம் த்ரேதா விதீயதே என்று தொடங்கி
சதுர்முகன் படைத்த அன்னாதிகளிலும் த்ரி வ்ருத் கரண பிரகாரம் உபதேசிக்கப் படுகிறதே
ஆகையால் அவனும் த்ரி வ்ருத் கரணம் செய்யச் சக்தன் தானே என்ற சங்கையைப் பரிஹரிக்கிறார்

ஸூத்ரம் –282–மாம் ஸாதி பவ்மம் யதா ஸப்தம் இதர யோச்ச 2-4-18–

மாம் ஸாதி பவ்மம் -மாம்சமும் மனமும் பவ்மம்-பூமி சம்பந்தம் உள்ளவை
அவை ஆப்யமோ தைஜஸமோ அல்ல
யதா ஸப்தம் -ஆப -பீதா தேஜோ அஸிதம் -என்று ஸ்ருதி சொன்னபடியே
இதர யோச்ச-அன்னம் மசிதம் என்ற பிரதம பர்யாயம் தவிர்த்த
ஆப -பீதா தேஜோ அஸிதம் -என்ற இரண்டு பர்யாயங்களிலும் மூத்ர பிராணங்களுக்கு ஆப்யத்வமும்
அஸ்தி மஜ்ஜைகளுக்கு தைஜஸத்வமும் உபதேசிக்கப் படுகின்றன
இதன் பொருளாவது

தாஸாம் த்ரி வ்ருதம் என்று ஆண்ட ஸ்ருஷ்டிக்கு என்று குறிப்பிடப்பட்ட த்ரி வ்ருத் கரணம்
அன்ன மசிதம் த்ரேதா விதீ யதே -என்பதால் விதிக்கப்பட வில்லை
ஆனால் அண்டத்துக்குள் இருக்கும் ஸ்வேதகேது எளிதில் புரிந்து கொள்ள மனிதனால் உட் கொள்ளப்படும்
அன்னம் ஜலம் முதலியவற்றில் மூன்று வகைப்பிரிவு கூறப்பட்டது
தஸ்ய யஸ் ஸ்தவிஷ்டோ பாக தத் புரீ ஷம் யோ மத்யம் தன் மாம்ஸம் யோ அ ணிஷ்ட தன் மன –என்று
மாம்சமும் புரீ ஷமும் மனஸ்ஸும் போல் பவ்மம் என்று உபதேசிக்கப் படுகிறது
ஏன் எனில்
அன்ன மசிதம் த்ரேதா விதீ யதே–என்று தொடக்கத்தாலும்
அன்ன மயம் ஹி சோம்ய மனஸ் –என்று வாக்ய சேஷத்தாலும் என்றபடி

தேஜோ ஆபன்னங்களுக்குத் த்ரி வ்ருத் கரண பிரகாரம் இதில் சொல்லப் படுகிறது எனில்
மாம்சமும் மனஸ்ஸும் பவ்மமான புரீ ஷத்தைக் காட்டில் அணீ யஸ்ஸாகையாலே
ஆப்யத்வமும் தைஜஸத்வமும் ப்ரஸக்தமாகும்
அவ்வாறே ஆப பீத தேஜோ உசிதம் என்ற இரு பர்யாயங்களிலும்
லோஹிதம் மூத்ரம் பிராணன் இம் மூன்றுக்கும் ஆப்யத்வமும்

தேஜஸ் பர்யாயத்தில் அஸ்தி மஜ்ஜை வாக்கு இவை மூன்றுக்கும் தைஜஸத்வமும் சொல்லப்படுகிறது
ஏன் எனில்
பீதா என்று தொடங்குவதாலும் ஆபோ மய ப்ராண என்ற வாக்ய சேஷத்தாலும்
அப்படியே தேஜோ உசிதம் என்ற தொடக்கத்தாலும்
தேஜோ மயீ வாக் என்ற வாக்ய சேஷத்தாலும்
என்றபடி

இப்படி இல்லாமல் த்ரி வ்ருத் கரணத்தை உபதேசிக்கிறது என்றால் மூத்ரம் ஸ்தவிஷ்டமாகையாலே பவ்மம் ஆகிவிடும்
பிராணனும் அணீ யஸ் யாதலின் தைஜஸம் ஆகி விடும்
தேஜோ அஸிதம் என்ற மூன்று பர்யாயத்தாலும் அஸ்தி -பவ்மமாயும் மஜ்ஜை ஆப்யமாகவும் ஆகும்
உபக்ரம வாக்ய சேஷங்களுக்கு விரோதம் வருமாதலின் முன்பே த்ரி வ்ருத் க்ருதமான அன்னாதிகளுக்கு
ஜாட ராக்னி யாலே மூன்று விதமாகப் பரிணாமம் உபதேசிக்கப் படுகிறது

—————-

முன்பே த்ரி வ்ருத்தமானால் வெறும் அன்னம் முதலிய சொற்களால் எப்படி வழங்கலாம்
என்பதற்கு விடை தருகிறார்

ஸூத்ரம் –283-வைசேஷ்யாத் து தத் வாத தத் வாத –2-4-19–

து சப்தம் சங்கையை நிவர்த்திப்பதாம்
வைசேஷ்யம்–விசேஷ பாவ -ப்ருத்வீ ஜலாதிகள் முன்னரே த்ரி வருத் க்ருத்யங்கள் ஆயினும்
பிருத்வீயில் தன் அம்சம் பாதியும் ஜல தேஜோ அம்சங்கள் கால் காலும் உள்ளது என்பது போலே
அந்த அ ந்த பூதத்தில் விசேஷமானது தன் பாகம் ஆதலாலும் அன்னம் அப்பு தேஜஸ் என்கிற வ்யவஹாரம் ஏற்பட்டது

தத் வாத தத் வாத -இரு முறை கூறி அத்யாய முடிவைக் காட்டுகிறது

இங்கு ஸ்வாமி தேசிகன்
அநேந ஜீவேந ஆத்மனா அனு ப்ரவேஸ்ய-என்ற ஸ்ருதியும்
அந்தராத்மா வேறு என்றும்
மற்றவன் சரீரம் என்றும் பேதத்தைக் ஊறி இருப்பதால்
ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்யத்தைக் கூறவில்லை
ஆகையால் எம்பெருமான் சேதன அசேதன சரீர விசிஷ்ட ஸ்வ பாவனாய் அனு ப்ரவேசத்திலும் கர்த்தா ஆகிறான்
அனு ப்ரவேசத்தில் கர்த்தா பின்னர் ஆவதால் த்வா ப்ரத்யயம் ஜீவனுக்கு கர்த்ருத்வத்தைக் காட்டாது என்று அருளினார்
ஒருவன் அனு பிரவேசம் செய்வதாயும்
மற்றவன் வியாகரணம் செய்வதாயும்
கர்த்தா வேறான -சமான கர்த்ருகத்வம் இல்லாமையாலே
த்வா ப்ரத்யயம் வாராது என்பதாகும் –

————-

இப்பாதத்தில் எட்டு அதிகரணங்களால் கூறப்பட்ட கருத்துக்கள்

1-பிராண அதிகரணத்தில் இந்திரியங்களின் உத்பத்தியும்
2-ஸப்த கத் யதிகரணத்தில் அவற்றுக்கு பதினோரு எண்ணிக்கையும்
3-பிராணஅணவ-அதிகரணத்தில் -அவற்றின் பரிமாணமும்
4-வாயு க்ரியா அதிகரணத்தில் பிராண வாயு ஸ்வரூபமும்
5-அணுச்ச அதிகரணத்தில் -பிராணனின் ஸூஷ்மத்வமும்
6-ஜ்யோதிராத் அதிகரணம் –அக்னி தேவதைகளின் வாகாதி அதிஷ்டானத்தில் பகவத் பாரதந்தர்யத்வமும்
7-த இந்த்ரிய அதிகரணம் -ப்ராணனுக்கு அதீந்த்ரத்வமும்
8-ஸம்ஞா மூர்த்தி க்லுப்த் யதி கரணம் -தன் நாபியில் தோன்றிய சதுர்முக சரீரகனாய் ஆத்யனாய்
பஞ்சீ கரண கர்த்தாவான பரம புருஷனிடம் சித் அசித் என்னும் வ்யஷ்டி நாம ரூப உத்பத்தியும்
என்பவை எட்டு அதிகரணங்களால் விளக்கப்பட்டன –

————–—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்– — மீமாம்ச சாஸ்த்ரம்– பாடம் -41–

August 5, 2021

பாடம் -41-மீமாம்ச சாஸ்த்ர சுருக்கங்கள் பார்த்து –
அவை வேதாந்த பாடத்துக்கு உதவு மவற்றைப் பார்த்து நிகமிப்போம் –

————-

மீமாம்ஸா -ஞாதும் இச்சா -அறிய வேண்டும் ஆசை -பூஜ்ய விஷய ஆராய்ச்சி –
அறிய ஆசை உடையவர்கள் செய்யும் கார்யம் -வேத விசாரம்
ஒன்றைச் செய்ய செயல் முறை -இதி கர்தவ்யா –
தர்ம ஞானம் பெறவே மீமாம்ஸா ஸாஸ்த்ரம் கொண்டு வேத விசாரம் செய்து பெறுவதற்காக –

மகா ரிஷி ஜைமினி -மீமாம்ஸா ஸாஸ்த்ர ஸூத்ரங்கள் -சாம வேதம் பிரசாரம் செய்ய இவர் வேத வியாசர் சிஷ்யர்
சபரர் -சபர பாஷ்யம்
குமாரில பட்டர் -பாட்ட மதம் -ஸ்லோக வார்திகம் -தந்த்ர வார்த்திகம– டுப்டீகா
பிரபாகரர் -பிரபாகர் மதம் -லக்வீ -ப்ருஹதீ –
முராரி மிஸ்ரர் -மிஸ்ர மதம் -அங்கத்வ நிருக்தி

ஜைமினி மகரிஷி நமது நன்மைக்காக ஸூத்ரங்கள் தந்து அருளி உள்ளார்
12 அத்தியாயங்கள் -60 பாதங்கள் –907 அதிகரணங்கள் -2745 ஸூத்ரங்கள்

இதுக்கும் மேல் -சங்கர்ஷ காண்டம் தேவதா மீமாம்ஸா -நான்கு அத்தியாயங்கள் –
பூர்வ மீமாம்ஸா ஸாஸ்த்ரம் இதுவே
உத்தர மீமாம்ஸா -வேதாந்த விசாரம்
ப்ரஹ்ம காண்டத்துக்கு வேத வியாசர் ஸூத்ரங்கள் -நான்கு அத்தியாயங்கள் இதிலும் -பாதராயணர் இவரே –
இரண்டும் ஒரே ஸாஸ்த்ரம்

முதல் அத்யாயம் –
முதல் பாதம் -8 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -4 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -10-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -20-அதிகரணங்கள்

இரண்டாம் அத்யாயம் –
முதல் பாதம் -18 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -13 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -14-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -2-அதிகரணங்கள்

மூன்றாம் அத்யாயம் –
முதல் பாதம் -15 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -19 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -20-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -21-அதிகரணங்கள்
ஐந்தாம் பாதம் –20 அதிகரணங்கள்
ஆறாம் பாதம் -16 அதிகரணங்கள்
ஏழாம் பாதம் -23-அதிகரணங்கள்
எட்டாம் பாதம் -23-அதிகரணங்கள்

நான்காம் அத்யாயம் –
முதல் பாதம் -17 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -13 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -20-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -13-அதிகரணங்கள்

ஐந்தாம் அத்யாயம் –
முதல் பாதம் -18 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -12அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -15-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -9-அதிகரணங்கள்

ஆறாம் அத்யாயம் –
முதல் பாதம் -13 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -11 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -21-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -14-அதிகரணங்கள்
ஐந்தாம் பாதம் –21 அதிகரணங்கள்
ஆறாம் பாதம் -7 அதிகரணங்கள்
ஏழாம் பாதம் -13-அதிகரணங்கள்
எட்டாம் பாதம் -19-அதிகரணங்கள்

ஏழாம் அத்யாயம் –
முதல் பாதம் -5 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -1அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -14-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -3-அதிகரணங்கள்

எட்டாம் அத்யாயம் –
முதல் பாதம் -19அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -6 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -8-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -4-அதிகரணங்கள்

ஒன்பதாம் அத்யாயம் –
முதல் பாதம் -18 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -20 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -14-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -15-அதிகரணங்கள்

பத்தாம் அத்யாயம் –
முதல் பாதம் -11 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -34 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -30-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -27-அதிகரணங்கள்
ஐந்தாம் பாதம் –26 அதிகரணங்கள்
ஆறாம் பாதம் -22 அதிகரணங்கள்
ஏழாம் பாதம் -20-அதிகரணங்கள்
எட்டாம் பாதம் -19-அதிகரணங்கள்

பதினொன்றாம் அத்யாயம் –
முதல் பாதம் -11அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -16 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -16-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -21-அதிகரணங்கள்

பன்னிரண்டாம் அத்யாயம் –
முதல் பாதம் -21 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -15 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -16-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -16-அதிகரணங்கள்

ஸூத்ரம்
குறைந்த எழுத்துக்கள் கொண்டது
சந்தேகத்துக்கு இடம் இல்லாதது
ஆழ்ந்த பொருளை யுடையது
பல இடங்களிலும் பயன்படுத்தப் படுவது
பயன் அற்ற எழுத்துக்கள் இல்லாதது
பிழை இல்லாதது

ஸூத்ரங்கள்
எளிதாயும்
பல பொருள்களைக் கோடி காட்டுவதாகவும்
குறைந்த எழுத்துக்களையும் சொற்களையும் யுடையதாகவும்
ரசமாகவும் இருப்பதையே ஸூத்ரங்கள்

அதிகரணம்
ஒரே விஷயத்தை ஆராயும் ஸூத்ரங்களின் கூட்டங்கள் கொண்டது அதிகரணம்
இதில் ஐந்து பகுதிகள் உண்டு
1-விஷயம் -ஆராயப்படும் வேத வாக்கியம்
2-விஷயம் -அந்த வாக்கியத்தின் பொருளில் உள்ள சந்தேகம்
3-பூர்வ பக்ஷம் -எதிராளி கூறும் யுக்திகள்
4-சித்தாந்தம் -நாம் சொல்லும் யுக்திகளை முடிவும்
5-சங்கதி -முன் அதிகரணத்துடன் இந்த அதிகரணத்துக்குத் தொடர்பு

12 அத்தியாயங்களின் ஒரே பொருள் தர்மம் -அதில் –
சோதனா ச உபதேச ச அர்த்த -கட்டளை வாக்கியம் நன்மை ஏற்படுத்தும் -லக்ஷணம்

1-பிரமாணம் -தர்மங்களை அறியும் பிரமாணங்களை பற்றியது
2-பேதம் -தர்மங்களுக்குள் உள்ள வேறுபாட்டை அறியும் முறைகள்
3-சேஷத்வம் -ஒரு பொருள் மற்ற ஒன்றுக்கு அங்கமாக துணையாக உறுப்பாக ஆகுதல்
யாகம் -தியாகம் -ஒரு தேவதையைக் குறித்து ஒரு த்ரவ்யத்தை சமர்ப்பித்தல் தான் –
மானஸ வியாபாரம் தான் இது -மற்றவை எல்லாம் அங்கங்கள்
4-ப்ரயுக்தம் -பல இடங்களில் உபயோகப்படுத்தும் ஒரு பொருளின் முக்கியமான கார்யம் எது என்று நிரூபித்தால்
5-க்ரமம் -வைதிகச் செயல்களை செய்யும் வரிசை
6-அதிகாரம் -வைதிகச் செயல்களை செய்யத் தகுதிகள்
7-ஸாமான்ய அதி தேசம் -ஓர் இடத்தில் உபதேசிக்கப்பட்ட செயல் முறையை மற்றவர் இடத்தில் ஏறிடுதல்
8-விசேஷ அதி தேசம் -எங்கிருந்து எங்கு ஏறிட வேண்டும்
9-ஊஹம் -ஏறிடும் பொழுது செய்ய வேண்டிய சிறிய மாற்றங்கள்
10-பாதம்-ஏறிடும் பொழுது தவிர்க்கப்பட வேண்டியவை -நிறுத்தப்பட வேண்டியவை
11-தந்திரம் -பலவற்றுக்காக உபயோகப்படும் ஒரு செயலை அனைத்துக்காகவும் ஒரே முறை செய்தல்
12-பிரசங்கம் -ஒன்றுக்காகச் செய்யப்பட செயலால் மற்ற ஓன்று பயன் பெற்ற படியால் அதற்காகத் தனியாக செய்ய வேண்டாமை

அத்யாயம் -1- தர்மத்தைப் போதிக்கும் பிரமாணங்கள் எட்டும் முதல் அத்தியாயத்தில் சொல்லப்பட்டு உள்ளன
1-விதி -வேதத்தில் இருக்கும் நேரடியான கட்டளைகள்
2-அர்த்த வாதம் -செய்ய வேண்டிய செயலைப் போற்றுவதன் மூலம் செயலில் தூண்டும் சொல் தொடர்கள்
3-மந்த்ரம் -அடுத்து அடுத்து செய்ய வேண்டிய செயல்களை நினைவூட்டும் சொல் தொடர்கள்
4-ஸ்ம்ருதி -வேதத்தை அறிந்த ரிஷிகளின் நூல்கள்
5-ஆசாரம் -வேதத்தை அறிந்து அதன்படி நடப்பவர்கள் நடத்தை
6-நாமதேயம் -வைதிகச் செயல்களுக்கு கொடுக்கப் பட்ட செயல்கள்
7-வாக்ய சேஷம் -ஒரு கட்டளையை தொடர்ந்து வரும் மற்ற சொல் தொடர்கள்
8-சாமர்த்தியம் -கட்டளை இடப்படும் செயலின் தன்மை திறமை –

அத்யாயம் -2- கர்ம பேதத்தைக் காட்டும் ஆறு பிரமாணங்கள் இரண்டாம் அத்தியாயத்தில் உள்ளன
1-ஸப்தாந்தரம் -வெவ்வேறு வினைச் சொற்களால் குறிக்கப்படும் செயல்கள் வெவ்வேறு கர்மங்கள் தான்
2-அப்யாஸம் -ஒரு கட்டளையை வேறே எந்த பிரயோஜனம் இல்லா விட்டாலும் திரும்ப திரும்ப வேதம் சொன்னால்
அது வெவ்வேறு கர்மங்களை விதிக்கிறது என்றே கொள்ள வேண்டும்
3-சம்க்யா -வேதமே சில கர்மங்களின் எண்ணிக்கையை சொல்லி விடும் –
அப்போது தெளிவாக அறியலாம் இவை வெவ்வேறு கர்மங்கள் என்று –
4-ஸம்ஜ்ஞா -பெயர் மாறினால் கர்மம் மாறும் -பெயர் -நாமதேயம் -என்பது
ஒரு யாகத்தை ஸூ லபமாகக் குறிப்பிட என்று பார்த்தோம்
ஆகையால் ஒரு கர்மத்துக்கு ஒரு பெயர் போதுமானது
5-குணம் -ஒரு யாகத்தில் ஒரு த்ரவ்யம் தான் உபயோகிக்கப்பட முடியும் –
ஆகையால் முன்னமே த்ரவ்யம் விதிக்கப்பட்ட ஒரு யாகத்தில் மற்ற ஒரு த்ரவ்யத்தை நுழைக்க முடியாத படியால்
அது வேறொரு யாகத்தில் தான் பயன் பயன் படுத்தப்பட வேண்டும்
ஆகையால் கர்மங்களுக்குள் வேறுபாடு த்ரவ்யங்களைக் கொண்டும் ஏற்படலாம்
6-ப்ரகாரணாந்தரம்–ஒரு கர்மத்தை ஒரு பிரகரணத்தில் நூலின் ஒரு பகுதியில் – விதித்து விட்டு
மற்ற ஒரு ப்ரகரணத்தில் அதே பெயரை யுடைய ஒரு கர்மத்தை விதித்தாலும் அவை ஒன்றாக மாட்டா
ஏன் என்றால் பிரகரணம் மாறி விட்ட படியால் முன் கர்மத்தின் நினைவு சடக்கென ஏற்படாது –

அத்யாயம் -3- அங்கத்தவத்தைக் காட்டும் ஆறு பிரமாணங்கள்-ஸ்ருதி
மூன்றாம் அத்தியாயத்தில் சொல்லப் பட்டுள்ளன
1-ஸ்ருதி -நேரடியாக வேதமே சொற்களால் சொல்லுதல்
2-லிங்கம் -ஸப்த ஸாமர்த்யம் -ஒரு சொல்லின் திறமை –சொல்லுக்கு இருக்கும் ஸாமர்த்யம் –
தன் பொருளை அறிவிக்கும் ஸாமர்த்யம்
3-வாக்யம் -ஸமபி வ்யாஹார -இரண்டாம் வேற்றுமை முதலான ஸ்ருதி பிரமாணம் இல்லாத போது
இரண்டு பொருள்களுக்கு இருக்கும் சேர்ந்த உச்சரிப்பு
4-ப்ரகரணம் -உபய ஆகாங்ஷா -இரண்டு கர்மங்களுக்கு இடையில் -பரஸ்பரம் ஒன்றுக்கு ஓன்று இருக்கும் எதிர்பார்ப்பு
5-ஸ்தானம் -தேச ஸாமான்யம் -இடத்தில் ஒற்றுமை
6-ஸமாக்யா -யவ்கிக ஸப்த -காரணப்பெயர் –

அத்யாயம் -4-ப்ரயோஜகத்வம்
ஒரு செயல்பொருள் பலவற்றுக்கு அங்கமாக இருக்கலாம் –
அந்த அங்கிகளுக்குள் ஏதோ ஓன்று தான் அந்தக் கர்மத்துக்கு ப்ரயோஜகமாக இருக்கும்
அதாவது அனுஷ்டாபகமாக-முக்கிய பயனாக இருக்கும்
யாகங்களில் ஒரே பொருள் செயல் பலவற்றுக்கு அங்கமாக இருக்கலாம் ஆனால் அவற்றுள் ஓன்று தான்
அதற்கு பிரயோஜகமாக செய்விப்பதாக இருக்கும் -அதற்குத் தான் பிரயோஜகம் என்று பெயர் –
இந்த கர்மத்துக்கு பிரயோஜ்யம் என்று பெயர் –
எடுத்துக் காட்டு
தர்ச பூர்ண மாசம் என்ற யாகத்தில் புரோடாசம் -தோசை என்ற த்ரவ்யத்தை தேவதைக்கு சமர்ப்பிக்க வேண்டும்
அதற்காக அதை சமைப்பதற்கு கபாலம் என்ற சுட்ட மண் தகடுகளை பயன்படுத்த வேண்டும்
இதை வேதம் -கபாலங்களில் புரோடாசத்தை சமைக்க வேண்டும் -என்ற விதியில் சொல்லுகிறது
அதே கபாலங்களைக் கொண்டு தான் நெல்லில் இருந்து பிரிந்து விழுந்த உமியை நீக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது –
புரோடாசத்திற்கான கபாலத்தால் துஷங்களை நீக்க வேண்டும் -என்ற கட்டளையால்
கபாலத்தைச் செய்வது புரோடாசத்தை சமைக்கத் தான் -அதே கபாலம் உமியை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது அவ்வளவே
ஆகையால் புரோடாசம் செய்வது ப்ரயோஜகமும் அங்கியும்
கபாலம் பிரயோஜ்யமும் அங்கமும்
கபாலத்துக்கு உமியை நீக்குதல் என்ற செயல் அங்கி ஆகுமே தவிர ப்ரயோஜகம் ஆகாது –

அத்யாயம் -5- க்ரமம் -பூர்வ அபவ்ர்யம் -முன் பின் தன்மை -இந்தச்செயலுக்கு அடுத்து இந்தச்செயல் -க்ரமம் -வரிசை
1-ஸ்ருதி – நேரடியாக வேதமே செயல்களின் வரிசையைச் சொல்லுதல்
2-அர்த்தம் -ஒரு செயலின் ப்ரயோஜனத்தைக் கருதி அதைச் செய்ய வேண்டிய காலத்தை நிர்ணயித்தல்
3-பாடம் -வேதத்தில் செயல்களில் படிக்கப்பட்ட வரிசையிலேயே அவற்றைச் செய்தல்
4-ஸ்தானம் -வெவ்வேறு காலங்களில் செய்யப்பட வேண்டிய பல செயல்களை சில காரணங்களால்
சேர்ந்து செய்யும் பொழுது எந்தச் செயலின் இடத்திலாவற்றைச் சேர்த்து செய்கிறோமோ
அச்செயலை முதலில் செய்து விட்டு பின்னால் மற்றவற்றைச் செய்ய வேண்டும் –
5-முக்யம் -பல பிரதான கர்மங்களும் அவற்றின் அங்கங்களும் செய்யப்படும் பொழுது பிரதான கர்மங்களை
எந்த வரிசையில் செய்யப் போகிறோமோ அதே வரிசையில் தான் அங்கங்களை செய்ய வேண்டும்
6-ப்ரவ்ருத்தி -பல பிரதான கர்மங்களுக்காக ஒரே அங்கங்களைத் திரும்ப திரும்ப செய்யும் பொழுது
அவற்றுள் முதல் அங்கத்தை எந்த வரிசையில் செய்தோமோ அதே வரிசையில் தான் பின்பு உள்ளவையும் செய்ய வேண்டும் –

அத்யாயம் -6-அதிகாரம்
வைதிக கர்மங்களை செய்ய மூன்று அடிப்படைத் தேவைகள் –
இவை நேரடியாக விதி வாக்கியங்களில் சொல்லப்படா விட்டாலும் இவை இல்லாமல் கர்மங்களை
செய்ய முடியாத படியால் இவை அதிகாரத்தில் சேர்கின்றன
1-வித்யை -அத்யயனம் செய்து வேதங்களையும் அவற்றின் பொருளையும் கற்று இருக்க வேண்டும்
இது இருந்தால் தான் அடுத்து அடுத்து என்ன செயல் செய்ய வேண்டும்
என்பதையும் சொல்ல வேண்டிய மந்திரங்களையும் அறிய முடியும்
2-அக்னி -யாகம் ஹோமம் முதலியவற்றில் ஒரு த்ரவ்யத்தை அக்னியில் சேர்க்க வேண்டும் என்பதால்
அதற்காக ஆதாநம் என்ற கர்மத்தைச் செய்து
கார்ஹபத்யம் ஆஹவ நீயம் தஷிணாக்னி என்ற மூன்று அக்னிகளும் ஒருவன் இடத்தில் இருந்தால் தான்
அவன் யாகம் முதலானவற்றைச் செய்ய முடியும்
3-சாமர்த்தியம் –யாகம் முதலியவற்றை செய்யும் திறமையும் பண வசதியும் -உடல் ஆரோக்யமும்
நன்கு செயல்படக்கூடிய புலன்களும் இருந்தால் தான் ஒருவனால் யாகம் செய்ய முடியும்
ஆகையால் பார்க்க முடியாதவர்கள் பேச முடியாதவர்கள் நடக்க முடியாதவர்கள் ஆகியவர்களுக்கு
யாகம் முதலான வற்றில் அதிகாரம் கிடையாது
ஆணுக்கும் யாகம் முதலானவற்றில் அதிகாரம் உண்டு -பெண்ணுக்கும் உண்டு
ஆனால் அவர்களுக்குத் தனித்தனியே யாகம் செய்யும் உரிமை கிடையாது
இருவரும் சேர்ந்து தான் ஒரு யாகத்தைச் செய்ய வேண்டும் –

அத்யாயம் 7-8-அதி தேசம்
அதி என்றால் மீதூர்ந்து -கடந்து -தாண்டி என்று பொருள்
தேசம் என்றால் போதித்தல் அறிவித்தல்
அதி தேசம் -கடந்து போதித்தல்
ப்ரக்ருதிக்கு அங்கமாக விதிக்கப்பட்ட ஒரு கர்மத்தை அதைக் கடந்து மற்ற விக்ருதி யாகங்களும்
அங்கமாக போதிக்கும் சொல் தொடருக்குத் தான் அதி தேசம் என்று பெயர்

வேறொரு இடத்தில் சொல்லப்பட்ட காரியக்கூட்டம் -இதி கர்தவ்யதா -செயல்முறை –
தான் செய்யும் உபகாரத்தை மூலமாக வேறு இடங்களுக்குச் சென்று அடைவது தான் அதிதேசம் ஆகும்

எந்த ஒரு சொல் தொடரால் ப்ரக்ருதி என்று அழைக்கப்படும் கர்மத்தில் இருந்து அதோடு ஒத்த
ஸத்ருசமான -ஒற்றுமை யுடைய மற்ற கர்மங்களுக்கு அங்கங்கள் சென்று அடைகின்றனவோ
அந்த சொல் தொடர் அதி தேசம் என்று அழைக்கப்படுகிறது –

அத்யாயம் –9-ஊஹம்
ப்ரக்ருதி யாகத்தில் ஒன்றைக் குறித்து செய்யப்பட ஒரு செயல் விக்ருதி யாகத்தில்
வேறு ஒன்றைக் குறித்து செய்யப்படுவதற்கு ஊஹம் என்று பெயர்
ப்ரக்ருதி யாகத்தில் இருந்து ஒரு அங்கத்தை விக்ருதி யாகத்துக்கு அதி தேசம் செய்யும் பொழுது
அந்த அங்கம் விக்ருதியில் வேறொரு பொருளைக் குறித்தும் செய்யப்படலாம்
இதற்கு ஊஹம் என்று பெயர்

ஸம்ஸ்காரத்தில் ஊஹம்
மந்திரத்தில் ஊஹம்
சாமத்தின் ஊஹம்
என்று மூன்று வகைகள் உண்டு

அத்யாயம் -10-பாதம் –
ப்ரக்ருதி யாகத்துக்கு அங்கமான ஒரு செயல் விக்ருதி யாகத்துக்கு அங்கமாக இல்லாமல் போவதற்கு பாதம் என்று பெயர்
அதி தேசம் செய்யப்படும் செயலை சிறு மாற்றத்தோடு செய்வது ஊஹம்
அந்தச் செயலை முழுவதுமாக விடுவது பாதம் –
இது மூன்று காரணங்களால் ஏற்படலாம்
ப்ரத்யாம் நாநம் -முரண் பட்ட வேறே ஒரு கட்டளை
அர்த்த லோபம் -பிரயோஜனம் இன்மை
ப்ரதி ஷேதம் -செய்யாதே என்ற கட்டளை

அத்யாயம் -11- தந்திரம் -பிரயோகத்தைப் பற்றிய விசாரம்
தந்திரம் என்றால் பலவற்றைக் குறித்து ஒரு முறை அனுஷ்டித்தல்
பிரயோக விதியானது அங்கங்களையும் பிரதானங்களையும் சேர்த்து விதிக்கிறபடியால் அதிலிருந்து நமக்கு ஒரு சேர்க்கை தோற்றுகிறது
அச்சேர்க்கை ஒரே க்ஷணத்தில் அவை அனைத்தையும் செய்தால் தான் ஏற்படும் ஆனால் எங்கு அது இயலாதோ
அங்கு இடைவிடாமல் அடுத்து அடுத்து அனுஷ்டானம் செய்ய வேண்டும் என்று வேதமே கூறுகிறது
ஆனால் எங்கு எங்கு முடியுமோ அங்கெ சேர்த்தே அனுஷ்ட்டிக்க வேண்டும்
இதுவே தந்திரம்
1-பிரதான யாகங்களில் தந்திரம் -வெவ்வேறு தேவதைகளைக் குறித்து செய்யும் யாகங்களில் ஒரே நொடியிலே சேர்த்து செய்ய முடியா விட்டாலும்
ஒரே தேவதைக்காகச் செய்யப்படும் பல யாகங்களை ஒரே க்ஷணத்தில் சேர்த்து செய்யலாம் இது தந்திரம் ஆகும்
2-அங்கங்களுக்குள் தந்திரம் -பல யாகங்களை அங்கமாக ஒரே செயல் இருக்கும் பொழுது அவற்றுள்
காலத்தாலோ தேசத்தாலோ எந்த வேறுபாட்டையும் வேதம் காட்டா விட்டால் வேறுபாடு அறியாத படியாலே
அந்த செயலை ஒரே முறை செய்வதன் மூலம் அனைத்து யாகங்களும் உதவலாம்
இது அங்கங்களில் தந்த்ரம் ஆகும் –

அத்யாயம் -12–ப்ரஸங்கம்
ஒரு யாகத்துக்கு தன் அங்கம் ஒன்றில் இருந்து கிடைக்க வேண்டிய உதவி
வேறே ஒரு வழியில் கிடைத்து விட்டால் அந்த அங்கத்தைச் செய்யாமல் இருப்பது
எடுத்துக்காட்டு –
அக்னீ ஷோ மீயம் யாகம் -தர்ச பூர்ண மாசத்தில் இந்திரனுக்காகச் செய்யப்படும் தயிர் யாகத்தின் விக்ருதி ஆகும்
அந்த அக்னீ ஷோ மீயம் யாகத்துக்கு அங்கமாக புரோடாச யாகம் உள்ளது
அதுவும் தர்ச பூர்ண மாசத்தின் விக்ருதி தான்
தர்ச பூர்ண மாசங்களுக்கு எல்லாம் ப்ரயாஜங்கள் என்ற அங்கம் இருக்கிறபடியால் அதி தேசத்தின் மூலம்
இந்த அக்னீ ஷோ மீயத்துக்கும் புரோடாச யாகத்துக்கு கூட ப்ரயாஜங்கள் அங்கமாகின்றன –

பாட்ட மீமாம்சையில் ஆறு பிரமாணங்கள்
1-ப்ரத்யக்ஷம் -புலன்களுக்கும் பியருள்களுக்கும் உள்ள தொடர்பால் ஏற்படும் ஞானம்
2–அனுமானம் -ஒரு பொருள் மற்ற ஒரு பொருளை விட்டுப் பிரியாமல் இருந்தால் அதுக்கு வியாப்தி என்று பெயர்
இப்படி வியாப்தி உடைய பொருளை நாம் ஓர் இடத்தில் கண்டால் மற்ற ஒரு பொருள் இருப்பதை ஊஹித்து அறிகிறோம் –
புகை நெருப்பு மலைமேல் போல்
3- சப்தம் -சொற்களுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு -சக்தி -பதார்த்த ஸ்மரணம்–வாக்யார்த்த ஞானம் –
4-உப மானம் -சத்ருஸ்ய ஞானம்
5-அர்த்தா பத்தி – பொருந்தாத இரண்டு பிரமாணங்களை பொருந்த வைக்க ஒரு விஷயத்தை கல்பித்து தான் அர்த்தா பத்தி
எது பொருந்தாமல் இருக்கிறதோ அது உப பாத்யம்
அதை பொருந்த வைக்க எது கல்பிக்கப் படுகிறதோ அது உப பாதகம்
6-அநுப லப்தி -முதல் ஐந்து பிரமாணங்களால் அறியப்பட முடிந்த ஒரு பொருளை பற்றின அறிவு ஓர் இடத்தில்
நமக்கு ஏற்பட வில்லை என்றால் அவ்விடத்தில் அந்தப் பொருள் இல்லை என்று அறிகிறோம்
உப லப்தி -என்றால் அறிவு
அநுப லப்தி என்றால் அறிவு தோன்றாமை
ஆகவே அறியக்கூடிய ஒரு பொருளை பற்றின அறிவு தோன்றாமல் இருப்பதே அநுப லப்தி

பாட்ட மீமாம்சையில் ஐந்து பதார்த்தங்கள்
1- த்ரவ்யம் –
ப்ருத்வீ ஜலம் தேஜஸ் வாயு ஆகாசம் காலம் திக்கு ஆத்மா மனஸ் தமஸ் ஸப்தம் என்ற 11 த்ரவ்யங்கள்
தேஜஸ் அபாவம் தமஸ் நியாய மதத்தில்
சப்தம் ஆகாச குணம் நியாய மாதத்தில்
இவர்கள் இத்தை த்ரவ்யம் என்கிறார்கள்
ஒன்பது த்ரவ்யங்கள் நியாய மாதத்தில்

2-ஜாதி சாமான்யம் என்ற பொதுத் தன்மை -குடத் தன்மை மாட்டுத் தன்மை போல்வன

3-குணம் என்ற பண்புகள் -இவர்களும் 24
நியாய -தர்மம் அதர்மம் சப்தம் மூன்றையும் விட்டு
மீதி 21 இவர்கள் கொண்டு
இவற்றுக்குப் பதில்
ப்ராகாட்யம்
த்வனி
சக்தி

மீமாம்ஸா தகர்சனத்தில் 24 குணங்கள்
1-ரூபம் -நிறம்
2-ரஸம் -சுவை
3-கந்தம் -மணம்
4-ஸ்பர்சம் -குளிர்த்தி வெப்பம் இரண்டும் இல்லாமை என்ற தொடு உணர்ச்சி
5-சம்க்யா-எண்ணிக்கை
6-பரிமாணம் -அணு மஹத் விபு போன்ற அளவுகள்
7-பிருத்தக்த்வம் -வேறுபாடு
8-சம்யோகம் -சேர்க்கை
9-விபாகம் -பிரிவு
10-பரத்வம் -தொலைவு முதுமை
11-அபரத்வம் -அருகில் இளைமை
12-குருத்வம் -எடை
13-த்ரவத்வம் -நீர்மை
14-ஸ்நேகம் -பசைத்தன்மை
15-புத்தி -அறிவு
இது நியாய மதத்தில் ப்ரத்யக்ஷம்-மனசால் அறியப்படுவது
மீமாம்சையில் இதை அனுமானம் தான் செய்யலாம்
16-ஸூகம் -ஐஹிகம் -ஆமுஷ் மிகம் -ஸ்வர்க்கம் -அப வர்கம் -மூ வகைப்பட்டது
17- துக்கம் – ஐஹிகம் -ஆமுஷ் மிகம்-நரகம் -இரண்டு வகைப்பட்டது
18-இச்சை -ஆசை
19-த்வேஷம் -வெறுப்பு
20-பிரயத்தனம் -முயற்சி
21-சம்ஸ்காரம் -வேகம் பாவனை ஸ்திதி ஸ்தாபனம் என்று மூன்று வகைப்படும்
22-த்வனி இது வாயுவின் குணம் -நம் தொண்டை வாயின் வியாபாரத்தால் வாயுவில்
இந்த குணம் ஏற்பட்டு இது தான் சப்தத்தை வெளிப்படுத்து கிறது
23-ப்ராகட்யம் -ஒரு பொருளில் உள்ள அறியப்படுதல் -பயின்ற குணம் –
இதைக் கண்டு தான் நமக்கு அறிவு ஏற்படுவதை நாம் அனுமானம் செய்யலாம்
24-திறமை -இது இரண்டு வகைப்படும்
லௌகிக சக்தி -நெருப்புக்கு எரிக்கும் சக்தி நீருக்கு நெருப்பை அணைக்கும் சக்தி போல்வன
வைதிக சக்தி ஜ்யோதிஷ்டோமம் முதலானவற்றுக்கு ஸ்வர்க்கம் கொடுக்கும் சக்தி போல் வன

4-கிரியை என்ற செயல்
கர்மம் கிரியை செயல்
இது விபு அல்லாத த்ரவ்யங்களில் மட்டும் இருக்கும்
விபு த்ரவ்யங்களால் நகர முடியாதே
இது புலன்களால் க்ரஹிக்கக் கூடியது
உத்ஷேபநம் மேலே செல்லுதல் போல்வன -நியாய மதம் போலவே
சம்யோகத்துக்கும் விபாகத்துக்கும் காரணமானது –

5-அபாவம் என்ற இன்மை
ப்ராபகரர்கள் அபாவம் ஏற்க வில்லை

ப்ராக் அபாவம்
ப்ரத்வம்ஸா அபாவம்
அத்யந்த அபாவம்
அந்யோன்ய அபாவம்

இது பிரபாகர் மீமாம்சகரால் எபிற்கப்படுவது இல்லை
பாட்ட மீமாம்ஸகர்கள் அநுப லப்தி ப்ரமாணத்தால் இது அறியப்படுகிறது -க்ரஹிக்கப் படுகிறது – என்பர்

நியாய மதத்தில் ஏற்கப்பட்ட
விசேஷம்
சமவாயம்
பதார்த்தங்களை இவர்கள் ஏற்க வில்லை –

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்