Archive for the ‘Ramayannam’ Category

ஸ்ரீ இராமாயண -அபய பிரதான சாரம் -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது -சீக்ரம் வ்யாதிச –யுத்த -17-7-/தேஷாம் சம்பாஷமாணா-யுத்த -17-8/உவாசஸ மகாப்ராஜ்ஞ-யுத்த -17-9-/ராவணோ நாம துர்வ்ருத்தோ -யுத்த -17-10-/தோ ஸீதா ஜனஸ்தாநாத் –யுத்த -17-11–

January 26, 2015

சீக்ரம் வ்யாதிச  நோ ராஜன் வதாயைஷாம் துராத்மா நாம்
நிப தந்து ஹதா யாவத் தரண்யா மலப தேஜஸ–யுத்த -17-7-

சீக்ரம் வ்யாதிச -விரைவாக ஆணையிடும்
ந ராஜன் -எங்களை -அரசனான சுக்ரீவனே
வதாயைஷாம் துராத்மா நாம் -துஷ்டர்களுடைய அழிவின் பொருட்டு
நிப தந்து-விழட்டும்
ஹதா யாவத் தரண்யா -இருப்பவர்கள் எல்லாம் எங்களால் அழிக்கப் பட்டவர்களாய் பூமியில்
மலப தேஜஸ–தாழ்ந்த பலமுள்ள இவர்கள்-

அவதாரிகை –
எதிரியான ராவணனுக்குப் பரிபவமாகப் பிடித்துக் கட்டியிட்டு வைத்தல்
இவனைத் தொடுத்த அம்போடு விடுதல் செய்யக் கடவோம் அல்லோம்
வதத்திலே அனுமதி பண்ணீர் என்கிறார்கள்-

சீக்ரம் வ்யாதிச-
இவர்கள் கொலை யுண்டார்கள் அத்தனை –
அனுமதி விளம்பிக்கும் ஆகில் ஸ்வ தந்த்ரராய்க் கொன்றோம் எனும் ஸ்வரூப ஹாநி வரும் –
அது வாராதபடி சடக்கென ஏவ வேணும் –
ந  -சால அனுத்யம்ய  சைலாம்ச்ச -என்று வதத்திலே உத்யுக்தரான எங்களை
வதத்திலே உத்யோகித்தி கோளாகில் நம் அனுஜ்ஞை என் என்னில்
ராஜன் –
ராஜா ஆஜ்ஞையை அனுவர்த்திதோம் ஆகைக்காக
வதாய-
உயிர் உடன் பிடித்துக் கட்டி வைத்தாலும் இங்கே இருந்து சில அனர்த்தங்களை விளைக்க ஒண்ணாது –
வதார்த்தமாக அனுமதி பண்ண வேணும் என்கை
ஏஷாம் துராத்மா நாம்-
இவர்களுடைய துர் மநோ ரதம் வடிவிலே தோற்றுகிறது இல்லையோ
நிப தந்து ஹதா யாவத் –
எல்லாரும் பட்டு விழுந்தார்களாக புத்தி பண்ணும் –
யாவத்தா வச்ச சாகலே -அமர கோசம் -3-3-246-
தரண்யாம் –
ஆகாசத்தில் தொடுத்த அம்போடு போக விடோம்
பூமியிலே பட்டு விழும்படி பண்ணக் கடவோம் –
யுத்தத்தில் ஜெயா பஜயங்கள் பாஷிகம் அன்றோ என்னில்
அல்ப தேஜஸ-
அல்பபலர்
நம்முடைய பலத்துக்கு இவர்கள் ஆனைவாய்க் கீரை அன்றோ -என்கை

———————————————————————————————————————————————————–

தேஷாம் சம்பாஷமாணா நாமான் யோந்யம் ஸ விபீஷண
உத்தரம் தீரம் ஆசாத்ய கச்த ஏவ வ்யதிஷ்டத –யுத்த -17-8-

தேஷாம் சம்பாஷமாணா நாம் -அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது
ஸ விபீஷண-அந்த விபீஷணன்
அந்யோந்யம் -ஒருவருக்கு ஒருவர்
உத்தரம் தீரம் -கடலின் வடகரையை
ஆசாத்ய கச்த ஏவ வ்யதிஷ்டத –அடைந்து ஆகாயத்தில் நின்றவனாக நிலை நின்றான்-

அவதாரிகை –
தன்னுடைய நிரசனத்திலே வார்த்தை சொல்லுகிற முதலிகளுடைய வார்த்தையை அனாதரித்து
தாய் முலையைக் கணிசித்துச் செல்லும் கன்று போலே
பெருமாள் சந்நிதியிலே உத்தேச்யமான வடகரையை அடைந்து தரித்தான் -என்கிறது –

தேஷாம் –
தன்னுடைய நிரசனத்திலே விரைந்தவர்களுடைய
அநாதரே சஷ்டி –
ஸம்பாஷமாணா நாமான் யோந்யம் -அந்யோந்யம் சம்பாஷமாணா நாம் –
தன்னுடைய வத்யத்வ அநு கூலமாக அந்யோந்யம் வார்த்தை சொல்லா நிற்க
இதுக்கு சம்யக்த்வமாவது -நிர்வாஹகரான மகா ராஜரோடு நிர்வாஹ்யரான முதலிகளோடு வாசியற ஏக கண்டராய் சொல்லும்
தன்னுடைய வதத்தில்உத்யுக்தரானவர்களுடைய
வார்த்தையை அநாதரிக்கைக்கு ஹேது சொல்லுகிறது
ஸ விபீஷண-
பாவ சுத்தியையும் த்வரையையும் உடையவன் என்கை
சுத்தியாவது அவர்ஜ நீயமான சம்பன்னம் உண்டானாலும் பிரதி கூலனான ராவண கோஷ்டியில் பொருந்தாமையும்
பாதகரானாலும் விட மாட்டாத தார்மிகரான ராம கோஷ்டியில் பொருத்தமும்
த்வரையாவது-ஆஜகாம முஹூர்த்தேந-யுத்த -17-1-என்று வந்தவன் தரிக்க மாட்டாத பதற்றம்
உத்தரம் தீரம் ஆசாத்ய –
பெருமாளைக் காட்டில் அக்கரை உத்தேச்யம் என்று இருக்கிறான் –
இலங்கையிலே இருந்து முடி சூடி இருப்பதில் காட்டில் பெருமாள் எல்லையில் போய்க் கொலை யுண்டு போனால் போரும் என்று இருக்கிறான்
திரு வாழிக் கல்லுக்கு உள்ளே -ஸூ தர்சன ஆழ்வானால் ரஷிக்கப் படும் பிரதேசத்தின் எல்லை -வருகையாலே
பய ஸ்தானத்தில் நின்றும் ஒரு கணையத்துக்கு உள்ளே புகுந்தால் போலே யும்
காட்டுத் தீயின் நின்றும் ஒரு கடலிலே புகுந்தால் போலேயும் நினைத்து இருக்கிறான்
கச்த ஏவ வ்யதிஷ்டத –
முதலிகள் விஷயீ காரம் பெற்று கரையிலே கால் பாவுவதற்கு முன்னே ஆகாசத்தில் தரித்தமை தோற்ற நின்றான்
இவர்களுடைய விஷயீ காரத்துக்கு உடலாக தன வெறுமையே ஆலம்பனமாக நின்றான் -என்று பிள்ளான் நிர்வாஹம் –

————————————————————————————————————————————————————————————

உவாசஸ மகாப்ராஜ்ஞ ஸ்வரேண மஹதா மஹான்
ஸூ க்ரீவம் தாம்ஸ்ஸ சம்ப்ரேஷ்ய கச்த ஏவ விபீஷண -யுத்த -17-9-

உவாசஸ-ஒருவார்த்தையும் சொன்னான் -மகாப்ராஜ்ஞ -நல்ல புத்திமானாய்
ஸ்வரேண -குரலோடு
மஹதா -உரத்த
மஹான்-பெரியோனான
ஸூ க்ரீவம் – ஸூ க்ரீவனையும்
தாம்ஸ்ஸ -வானரர்களையும்
சம்ப்ரேஷ்ய -பார்த்து
கச்த ஏவ விபீஷண-ஆகாசத்தில் நின்றானாகவே விபீஷணன்-

அவதாரிகை –
தன்னுடைய நிரசனத்திலே உத்யோகித்த மகாராஜரையும் பரிகரத்தையும் குறித்து
தன் ஆர்த்தி எல்லாம் மிடற்றோசையிலே தோற்றும் படியாக வார்த்தை சொல்லுவதும் செய்தான்-
உவாசஸ –
பெருமாளிடைய விஷயீ காரத்துக்கு தன் வரவு அமைந்து இருக்கச் செய்தே
ஒரு வார்த்தையும் சொன்னான் என்கிறான் -ரிஷி
அர்ச்சிதாஸ் சைவ ஹ்ருஷ்டாச்ச பவதா சர்வதா வயம்
பத்ப்யாமாபி கமாச்சைவ சிநேக சந்தர்ச நே ண் ஸ -அயோத்யா 50-41-
என்று வரவு தானும் மிகை என்று இருக்குமவர் –
அதுக்கு மேலே வார்த்தை சொல்லுகை வரண ஷாரம் போலே இ றே-
மகாப்ராஜ்ஞ-
ஜ்ஞானனாகை யாவது -ஹேய உபாதேய விபாக ஜ்ஞானாகை
ப்ராஜ்ஞனாகை யாவது-ஹேய த்யாக பூர்வகமாக உபாதேயம் இன்னது என்று அறிகை
மஹா பிரஜ்ஞானாகை வாவது -ஹேய த்யாக பூர்வகமான  உபாதேய லாபத்துக்கு சரதமான உபாயத்தை அறிகை -அதாவது ராவணன் தண்மையையும் -பெருமாள் பெருமையையும் அறிகையும்
அவனை விட்டே எம்பெருமானைப் பற்ற வேண்டும் என்று இருக்கையும்
அவர் லாபத்துக்கு அவர் திருவடிகளே சரதமான உபாயம் என்று இருக்கையும் –
ஸ்வரேண மஹதா-
ஸ்வரத்துக்கு மஹத்தை யாவது -மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணாவோ என்று கூவுமால் -திருவாய் -6-5-9- என்கிறபடியே
த்வணியைக் கேட்ட போதே சரண்யனுக்கே அன்றி வழிப் போக்கரும் இரங்க வேண்டும் படி மிக்க ஆர்த்தியை யுடைத்தாய் இருக்கை
மஹான்-
ஸ்வரத்தாலே தோற்றுகிற ஆர்த்தி அளவன்றிக்கே ஆஸ்ரயத்தில்ஆர்த்தி அபரிச் சிந்தையாய் இருக்கை –
ஆஸ்ரய ஆர்த்திக்கு அசைவு என்கை –
மஹா மநா -என்னவுமாம்
வாசு தேவஸ் சர்வமிதி ஸ மஹாத்மா ஸூ துர்லபம் -ஸ்ரீ கீதை -7-19-என்கிறபடியே
பெருமாள் திருவடிகளே சர்வவித பந்துவாய் இருக்கை
ஸூ க்ரீவம் தாம்ஸ்ஸ சம்ப்ரேஷ்ய –
அஸ்மான் ஹந்தும் ந சம்சய –யுத்த -17-6- என்கிற மகாராஜரையும்
சால  நுத் யம்ய சைலாம்ச்ச -யுத்த -17-6-என்று தன்னுடைய வத உத்யரான முதலிகளையும் பஹூமானமாகப் பார்த்து –
அதறக்கடி என் எனில் -பெருமாள் பக்கல் பரிவர்தமக்கு உத்தேச்யர் ஆகையாலும்
அவர்களே தமக்கு புருஷகாரமாக வேண்டுகையாலும்
ஆஸ்ரயிக்கிறவன் ஏதேனும் குற்றவாளனே ஆகிலும்
ஜ்ஞா நீ த்வாத்மை மே மதம் -ஸ்ரீ கீதை-7-18-என்று தனக்கு தாரகராகச் சொல்லுமவர்களுடைய
வார்த்தையை மறுக்க மாட்டாமையாலே
கச்த ஏவ விபீஷண
நின்ற இடத்திலே நின்று வார்த்தை சொன்னான் –

——————————————————————————————————————————————————————————

ராவணோ நாம துர்வ்ருத்தோ ராஷசோ ராஷ சேஸ்வர
தஸ்யா ஹமநுஜோ ப்ராதா விபீஷண இதி ஸ்ருத -யுத்த -17-10-

ராவணோ நாம-ராவணன் என்று பிரசித்தி பெற்றவன்
துர்வ்ருத்தோ -கெட்ட நடத்தை யுடையவனாய்
ராஷசோ-அரக்கனாய்
ராஷ சேஸ்வர-அரக்கர்களுக்கு அரசனாய்
தஸ்யா ஹமநுஜோ-அவனுக்கு பின் பிறந்தவனாய்
ப்ராதா விபீஷண இதி ஸ்ருத -விபீஷணன் என்று பெயர் பெற்ற தம்பி யாவேன் –

அவதாரிகை –
அநந்தரம்-
சரணாகதிக்கு அங்கமான
ஸ்வ நிகர்ஷத்தையும்
பரிக்ரஹ பரித்யாகத்தையும் –
சொல்லி சரணம் புகுகிறான் மேல் ஐந்து ஸ்லோகத்தாலே
இதில் -முதல் ஸ்லோகத்தால் –
பிரதிகூல சேஷத்வத்தால் வந்த நிகர்ஷமும்
பிரதிகூலனோடு அவர்ஜ நீய சம்பந்தத்தால் உண்டான நிகர்ஷமும்
ஸ்வரூபேண வந்த நிகர்ஷமும்
உண்டு என்கிறான் –
ராவணோ நாம –
ராவயதி இதி ராவண -சர்வ லோகங்களும் கூப்பிடும்படி ஹிம்சகன் ஆகையாலே ராவணன் என்னும் குண நாமம் –
நாம -என்று ப்ரசித்தியாய் பர கோஷ்டியிலும் ஹிம்சகன் என்னும் இடம் பிரசித்தம் அன்றோ என்கை –
துர்வ்ருத்தோ –
வ்ருத்தமாவது ஆசாரம் –
துர்வ்ருத்தம் ஆவது -ஆகார நித்ரா பயம் மைதுன நாதிகளிலே வரையாமை –
நிஹீ நாசாரோஹம் ந்ருப ஸூ -ஸ்தோத்ர ரத்னம் -என்றார் ஆளவந்தார் –
புத்தி ராசார வர்ஜிதா -சுந்தர -21-9-என்றாள் பிராட்டி
ராஷசோ –
உக்தமான தோஷங்கள் ஜாதி பிரதியுக்தம் ஆகையாலே தோஷம் என்றுசொல்லி நிவர்திப்பிக்க ஒண்ணாது ஒழிகை
அபிஜாதனுக்கு யுண்டான வ்ருத்தஹாநி ஜென்மத்தை யுணர்த்தி நிவர்திப்பிக்கலாம்
நிஹீன ஜாதிக்கு அது குல தர்மம் ஆகையாலே அபரிஹரணீயம் இ றே  –
ராஷ சேஸ்வர-
ஸ்வ தந்த்ரன் ஆகையாலே ஒருத்தன் ஹிதம் சொன்னால் செவி தாழ்க்குமவன் அல்லன்
சஜாதீரர் பண்ணும் பாபத்துக்கும் ப்ரவர்த்தகன் என்றுமாம் –
வழி யடித்து மூலை யடியே நடப்பார்க்கு எல்லாம் ஒதுங்க நிழலாய்  இருப்பவன் -என்கை –
அத்தால் உனக்கென்-என்கிற சங்கையிலே சொல்லுகிறது உத்தரார்த்தம்
தஸ்யா ஹம் –
சேஷ ஷஷ்டி –அவனுக்கு அதிசயத்தை விளைக்கை இ றே சேஷ பூதனுக்கு ஸ்வரூபம்
ராஜ்யஞ்சா ஹஞ்ச ராமஸ்ய -அயோத்யா -82-12- என்று ஸ்வரூப ப்ராப்தமான சேஷத்வத்தை ராவணன் பக்கல் பண்ணிப் போந்தேன்
அநுஜோ ப்ராதா –
அவனால் தூஷிதமான குடலிலே கிடந்தான் ஒருவன்
ப்ராதா ஸ்வா மூர்த்திராத்மந -மனு -2-226-என்னும்படி சரீரம் போலே அவனுடைய அநீதிக்கு எல்லாம் உபகரண பூதன் என்கை
விபீஷண இதி ஸ்ருத –
ராவண சம்சர்க்கத்தாலே வந்த தோஷத்து அளவன்றிக்கே
விவிதம் பீஷயதீதி விபீஷண -என்கிறபடியே -பஹூ பிரகார பயங்கரனாக லோகபிரசித்தம் –
அவனுக்கு தன்னால் வந்த தோஷமே உள்ளது
எனக்கு ஸ்வ தோஷத்து அளவன்றிக்கே அவநோட்டை சம்சர்க்கத்தால் வந்த தோஷமும் யுண்டு என்கை
விபீஷணஸ்து தர்மாத்மா -ஆரண்ய -1-24-என்று லோக பிரசித்தனாய் இருக்கச் செய்தேயும் தன்னைத் தான் அனுசந்தித்த படி -இ றே –

————————————————————————————————————————————————————————-

தோ ஸீதா ஜனஸ்தாநாத் த்ருதா ஹத்வா ஜடாயுஷம்
ருத்தா ஸ விவஸா தீ நா ராஷசீ பிஸ் ஸூ ரஷிதா –யுத்த -17-11

தேந -அந்த ராவணனாலே
ஸீதா ஜனஸ்தாநாத் த்ருதா -ஜனஸ்தானத்தில் இருந்து அபஹரிக்கப் பட்ட ஸீதா தேவி
ஹத்வா ஜடாயுஷம் -ஜடாயுவைக் கொன்று
ருத்தா -அசோகவனத்தில் -சிறையிடப் பட்டாள்
ஸ விவஸா தீ நா -பரா தீனியாய் -வருந்தத் தக்கவளாய்
ராஷசீ பிஸ் ஸூ ரஷிதா –ராஷசிகளால் நன்றாக ரஷிக்க பட்டவளாய்-

அவதாரிகை –
கீழ்ச் சொன்ன தோஷங்கள் பிராயச்சித்த சாத்தியங்கள்
மத்பக்தம் —ந ஷமாமி -வராஹ புராணம் என்கிறபடியே துஷ் பரிகரமான பாகவத அபசாரமும் யுண்டு என்கிறான்
துர்வ்ருத்த -என்று பிராட்டி பக்கல் பண்ணின அபசாரம் ப்ரஸ்துதம் ஆஹையாலே அத்தை விவரிக்கிறதாகவுமாம்-

தேந ஹ்ருதா –
உகத சகல தோஷங்களுக்கும் ஆகாரனாய் இருந்துள்ளவனாலே
இவ்வதிக்ரமத்தில் இழியும் போது அப்படி பாப பிரசுரனாக வேணும் இ றே
ஹ்ருதா –
அனந்யா ராகவே ணாஹம்-சுந்தர -21-15-என்றும்
ஜலான் மத்ஸ்யாவிவோத் த்ருதௌ-அயோத்யா -53-31-என்றும்
பிரியப் படாதவள் பிரிக்கப் பட்டாள் –
ஸீதா ஹ்ருதா –
கர்ப்ப வாசாதி க்லேசமும் இன்றிக்கே
பரமபதத்தில் இருக்கும் சௌகுமார்யம் குலையாத படி பிறந்த ஸூ குமாரியைப் பிரித்தான்
ஜனஸ்தாநாத் ஹ்ருதா –
திரு அயோத்யையில் இருப்பு சிறை என்னும்படி புஷ்பாப சயாதி போகங்களுக்கு ஏகாந்தமான
ஜனஸ்தானத்தில் நின்றும் ஹரிக்கப் பட்டாள்
ஹ்ருதா –
மா நிஷாத பிரதிஷ்டாம் த்வமகம சாச்வதீ சமா யத் க்ரௌஞ்ச மிது நா தே கமவதி காம மோஹிதம் -பால -2-15- என்று
வீத ராகர்க்கும் அசஹ்யமானவற்றை இ றே செய்தது
உஷையையும் அநிருத்த ஆழ்வானையும் கூட்டிச் சிறையிலே வைத்தால் போலே
இருவரையும் கூட்டு வைத்தானாகிலும் ஆம் இ றே –
ராஜ குமாரர்களை மாரீச மாயையாலே பிரித்து இ றே நலிந்தது
ஜடாயுஷம் ஹத்வா ஹ்ருதா –
மம ப்ராணா ஹி–பார- உத் -91-27- என்றும்
ஜ்ஞா நீ த்வாத்மைவ மே மதம் -ஸ்ரீ கீதை -7-18- என்னும்படி
அபிமதரான பெரிய யுடையாரை மீட்கலாம் படி சிறை செய்யும் அளவன்றிக்கே அந்வய விநாசத்தை பண்ணி இ றே பிரித்தது
சக்கரவர்த்தி திருமகநோடே ஆழவிருந்த பகை கொள்ளுகையாலே
சபரிகரனாகத் தான் நசிக்கும் படி சூழ்த்துக் கொண்டான் -என்கை –
ருத்தா ஸ –
இப்படி பிரித்தாலு ம் அநு தாபம் பிறந்து மீள விடலாம் இ றே
துஷ் ப்ராபமான அசோகா வநிகையிலே மூச்சு விட ஒண்ணாத படி ருத்தை யானாள்
விவஸா –
இட்ட கால் இட்ட கைகளாய் -திருவாய் -7-2-4-என்னும்படி
பெருமாளைப் பிரிந்த இழ வு எல்லாம் தோற்றப் பரவசையாம் படி இருந்தது –
தீ நா-
இவ்வளவில் நமக்கு ஆஸ்வாசகர் ஆரோ வென்று தன்னுடைய பலஹாநி தோற்றப் பரவசையாம் படி இருந்தது –
பெருமாளோ ட்டை போக பரம்பரையாலே ஹ்ருஷ்டையாய் இருக்குமவளை
இவ்விருப்பு இருக்கும் படி பண்ணினான் -என்கை –
ராஷசீ பிஸ் ஸூ ரஷிதா —
விக்ருத பயங்கர  வேஷ வசோ வ்ருத்தைகளான  ஏகாஷ்யேக கரணே ப்ரப்ருதிகளான ராஷசிகளாலே

ஆஸ்வாச கரான  திருவடிக்கும் செல்ல ஒண்ணாத படி நெருக்குண்டாள்-

ஆக
இரண்டு ஸ்லோகத்தாலும்
சகல வாங் மநஸா  கோசரமான மஹா பாபங்களைப் பண்ணினவர்களுக்கும்
பகவத் ப்ராப்தியில் அதிகாரம் யுண்டு என்னும் இடம்
அகில வேதார்த்த தர்சியான ஸ்ரீ வால்மீகி பகவானாலே ஸூசிதமாயிற்று  –
சரணம் த்வாம் பிரபன்னா நாம் த்வாஸ் மீதிச யாசதாம்
பிரசாதம்  பித்ரு சந்த்ரூணாம் அபி குர்வந்தி சாதவ -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -106-53-என்றும்
குயோ நிஷ்வபி சஞ்ஜாதோ யஸ் சக்றுச் சரணம் கத
தம் மாதா பித்ரு ஹந்தாரம் அபி பாதி பவார்த்திஹா -சனத்குமார சம்ஹிதை -என்றும்
துராசாரோபி சர்வாசீ கருதக்நோ நாஸ்திக புரா
சமாஸ்ரயேதாதி தேவம் ஸ்ரத்தயா   சரணம் யதி
நிர்தோஷம் வித்தி  தம் ஜந்தும் பிரபாவாத் பரமாத்மன -சாத்வாத சம்ஹிதை -16-23- என்றும்
தேவா வை யஜ்ஞாத் ருத்ர மந்தராயன் ஸ ஆதித்யா நன்வாக்ரமத
தேத்விதை வத்யாத் ப்ராபத் எந்த தான்  ந பிரதிப்ராயச்சன்
தஸ்மாதபி வத்யம் பிரபன்னம் ந பிரதி யச்சந்தி -யஜூஸ் சம்ஹிதை -6-5-20- என்றும்
தேவேன த்வஷ்ட்ரா சோமம் பிபேத்யாஹ
த்வஷ்டா வை ப ஸூ நாம் மிதுனா நாம் ரூபக்ருத் ரூபமேவ ப ஸூ ஷூ ததாதி
தேவா வை த்வஷ்டார மஜி காம்சன் ஸ பத்னீ ப்ராபத்யத
தம் ந பிரதிப்ராயச்சன் தஸ்மாதபி வத்யம் பிரபன்னம் ந பிரதி ப்ரயச் சந்தி -யஜூஸ் சம்ஹிதை -6-5-29-என்றும் சொல்லக் கடவது இ றே –

—————————————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண -அபய பிரதான சாரம் -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது -தம் ஆத்ம பஞ்சமம் த்ருஷ்ட்வா–யுத்த -17-3-/சிந்தயித்வா முஹூர்த்தந்து–யுத்த -17-4-/ஏஷ சர்வாயுதோ பேதஸ்–யுத்த -17-5-/ஸூக்ரீவஸ்ய வச ஸ்ருத்வா-யுத்த -17-6/

January 26, 2015

தம் ஆத்ம பஞ்சமம் த்ருஷ்ட்வா ஸூ க்ரீவோ வாநராதிப
வாநரைஸ் சஹ துர்த்தர்ஷஸ் சிந்தயாமாச புத்தி மான் -யுத்த -17-3-

தம்-அந்த விபீஷணனை
ஆத்ம பஞ்சமம் -துணைவரான நால்வரோடு கூடி -தாம் ஐந்தாமவனாயும்   இருக்கிற
த்ருஷ்ட்வா-பார்த்து
ஸூ க்ரீவோ -ஸூ க்ரீவன்
வாநராதிப-குரங்கரசனும்
வாநரைஸ் சஹ -வானவர்களோடு கூட
துர்த்தர்ஷஸ் -ஒருவரால் வெல்ல ஒண்ணாத வனும்
சிந்தயாமாச -ஆலோசனை செய்தான் –
புத்தி மான்-நுண்ணிய அறிவை யுடையவனாயும் இருக்கிற –

அவதாரிகை –
பெருமாள் பக்கல் பரிவாலே வந்தவனுடைய ஆனு கூல்யம் நெஞ்சில் படாதே
இவன் ஆரோ என்கிற அதி சங்கையிலே இழிந்து
மகா ராஜர் முதலிகளோடே மந்த்ரத்திலே இழிந்தார் -என்கிறது தம் ஆத்ம -இத்யாதியாலே –
தம் –
பெரிய  அபி நிவேசத்தோடே வந்து அல்லது தரிக்க மாட்டாதபடி வந்த அநு கூலனைக் கிடீர் -அவன் சங்கித்தது -என்கை-
ஆத்ம பஞ்சமம்-
ஸ்ரீ விபீஷண பெருமாள் சங்க்யாபூரகரான மாத்ரமே –
அவர்களோடு சம பிரதானராய் இருக்கை-அதாவது அந்யோந்யம்உண்டான பவ்யதையும் செறிவும் –
அதிஷ்டானம் ததா கர்த்தா கரணம் ச ப்ருதக்விதம்
விவிதா ச ப்ருதக் சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம் -ஸ்ரீ கீதை -18-14-என்கிறபடியே
அவர்களுடைய சத்தை ஸ்வ அதீனையாம் படியான பிரதான்யத்தைச் சொல்லிற்று ஆகவுமாம் –
த்ருஷ்ட்வா ஸூ க்ரீவோ –
இவர் கண்டு துணுக என்று தலை எடுத்துப் பார்த்த போது
க்ரீவா சோபை -கழுத்து அழகு -இருந்த படி ஏன் என்று ரிஷி கொண்டாடுகிறான் -என்று பிள்ளை திரு நறையூர் அரையர் பணிப்பர் –
ஸூ க்ரீவன் -அழகிய கழுத்து யுடையவன் அர்த்தமும் உண்டே –
வாநராதிப-
துணுக என்னுகைக்கு அடி  வானர சேனையை அடைய தமக்கு குழைச் சரக்காக  யுடைய ராகையாலே –
ராஜ குமாரர்கள் பக்கல் பரிவு -ராகவார்த்தே பராக்ராந்தா ந ப்ராணே குருதே தயாம்-யுத்த -27-1-
என்கிறவர்கள் அளவும் செல்லக் கடவது இ றே
துர்த்தர்ஷஸ்-
சரணம் புகுந்தவனுக்கும் பிற்காலிக்க வேண்டும் படி
அநபிவ நீயராய்  இருந்தார் -என்கை
சிந்தயாமாச –
அதாகிறது தம்முடைய அநபவ நீயம் தோற்றாதேகூச்சமே மேற்பட்டு சிந்தையிலே இழிந்தார் என்கை –
புத்தி மான் வானரைஸ் சஹ சிந்தயாமாச –
தாமே சிந்திக்க ஷமராய் இருக்க
கார்ய கௌரவத்தாலே முதலிகளையும் கூட்டிக் கொண்டு சிந்தித்தார் –
புத்திமான் சிந்தயாமாச –
தூதனோ
ஆர்த்தனோ
எதிரியோ –
என்று சிந்தித்தார் –
பிரசச்த புத்திகளாகையாலே சிந்தித்தார் என்றுமாம் –
வருகிறவனுடைய முக விகாராதி லிங்க அங்கங்களாலே கண்ட போதே

ஆநு கூல்ய ப்ராதிகூல்யமுக விகாராதி லிங்க அங்கங்களாலே கண்ட போதே ஆநு கூல்ய ப்ராதிகூல்யங்களை நிர்ணயிக்க வல்ல

பிரசஸ்தி புத்திகளாய் இருக்கச் செய்தே
ஸ்வாமிபக்கல் பரிவாலே கலங்கிச் சிந்தையிலே இழிந்தார் -என்றுமாம் –
பிரசஸ்தி புத்தி யாகையாலே சிந்தித்தார் என்றுமாம்
ஸ்வாமிக்கு என் வருகிறதோ என்கை இ றே  பிரசச்த புத்தி என்கிறது
சம்ச்ப்ருசன் நாசனம் சௌரேர் மகாமதி ருபாவிசத் -பார -உத் -என்னக் கடவது இ றே
மகா புத்திமானான விதுரர் தடவிப் பார்த்தார் இ றே –

———————————————————————————————————————————————————————–

சிந்தயித்வா முஹூர்த்தந்து வாநராம் ஸ்தாநுவாச ஹ
ஹநூமத ப்ரமுகான் சர்வாநிதம் வசனமுத்தமம் -யுத்த -17-4-

சிந்தயித்வா -முடிவு கட்டி
முஹூர்த்தந்து -சீக்கிரத்திலேயே
வாநராம் ஸ்தாநுவாச ஹ -அவர்கள் அனைவரையும்
ஹநூமத ப்ரமுகான் -ஆஞ்சநேயர் முதலான
சர்வாநிதம் வசனமுத்தமம் -இந்த மிகச் சிறந்த சொல்லை உரைத்தான் கிடீர்-

அவதாரிகை –
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சபரிகரராய் கொண்டு சடக்கென கிட்டிக் கொண்டு புகுகையாலே
மந்த்ரத்திலே விளம்பிக்கக் கடவோம் அல்லோம் என்று பார்த்து
சடக்கென நிர்ணயித்து முதலிகளைக் குறித்து நிர்ணயித்த  அர்த்தத்தை சொல்ல்லுகிறான்-

சிந்தயித்வா-
சிந்தை நிர்ணயாந்தம் ஆகையாலே இவ்விடத்தில் சிந்தா சப்தம் நிர்ணயத்தைச் சொல்லுகிறது –
சாரனும் அல்லன் -தூதனும் அல்லன் -பாதகன் -என்று நிர்ணயித்து –
முஹூர்த்தம் –
எதிர்த் துறையிலே அரண் மிக்க இலங்கை
அரண் இல்லாத வெளி நிலத்தில் பெருமாள் என்று இவனை நலிய வரக் கிட்டினான் –
மந்த்ரத்தில் விளம்பிக்கில் பையல் மேலிடும் என்று சடக்கென நிர்ணயித்தார் -என்கை
து-
எதிரி என்று நிர்ணயித்த பின்பு கூச்சத்தாலே
பூர்வ அவஸ்தையில் காட்டில் வந்த வேறுபாடு
தான் வாநரா நுவாச ஹ-
மகா ராஜர் காண வந்த சோழர் என்னும்படி பரிவில் பிரதான ரானவர்களை குறித்துச் சொன்னார்
ஹ –
ஒரு ஸ்வாமியும் பரிகரமும் இருக்கும் படி என் -என்று ரிஷி கொண்டாடுகிறான் –
ஹநூமத ப்ரமுகான்-
பழைமை பார்க்கில் ஜாம்பவத் ப்ரமுகான் -என்ன வேணும்
பரிய்ட்ட முறை பார்க்கில் அங்கத ப்ரமுகான் -என்ன வேணும்-
ஆபத்துக்களில் திருவடியின் திறமையைப் பற்ற ஹநுமத ப்ரமுகான் -என்கிறான்
சர்வாந-
பெருமாள் பக்கல் பரிவிலே பிரதானாரோடு அப்ரதானாரோடு வாசி இல்லாமையாலே சர்வான் -என்கிறது –
இதம் வசனம் –
அர்த்த விதுரமாக ரிஷி வசன சந்நிவேசத்தை கொண்டாடுகிறான் –
உத்தமம்-
அர்த்தத்தைப் பார்த்தால் சர்வ உத்க்ருஷ்டமானதை உடைத்தாய் இருக்கும் என்கை -அதாவது
சர்வ உத்க்ருஷ்டமான கலக்கத்தை  அர்த்தமாகயுடைத்தாய் இருக்கும் என்கை-
வந்தவன் அநு கூலன் அல்ல பிரதி கூலன் என்று கலங்குகை உத்க்ருஷ்டம்
வந்தவன் நம் அளவு அறிந்து போக  வந்தவன் என்னும் அளவன்றிக்கே
நம்மைக் கொல்ல வந்தான் -என்று தம்மைப் பாராதே கலங்குகை உத்க்ருஷ்ட தரம்
பரிகர பூதரான நம் அளவன்றிக்கே சரேணை கேந ராகவ -பால -1-69-என்று
ஓர் அம்பாலே வாலியை அழியச் செய்த பலத்தை விஸ்மரித்து
நமக்கு எல்லாம் வேர்ப் பற்றான பெருமாளை நலிய வந்தான் என்னுமது உத்க்ருஷ்ட தமம் –

———————————————————————————————————————————————————–

ஏஷ சர்வாயுதோ பேதஸ் சதுர்ப்பிஸ் சஹ ராஷசை
ராஷசோ அப்யேதி பச்யத் வமஸ்மான் ஹந்தும் ந சம்சய -யுத்த -17-5-

ஏஷ -இந்த
சர்வாயுதோ பேதஸ்-எல்லா ஆயுதங்களோடும் கூடின
சதுர்ப்பிஸ் சஹ ராஷசை -நாலு ராஷசர்களோடு கூட
ராஷசோ அப்யேதி -அரக்கனான விபீஷணன் எதிர் நோக்கி வருகிறான்
பச்யத்வம் -காணுங்கள்
அஸ்மான் ஹந்தும் -நம்மைக் கொல்ல –
ந சம்சய -சந்தேகம் இல்லை —

அவதாரிகை –
சிந்தயித்வா முஹூர்த் தந்து -என்று நிர்ணயித்த பிரகாரத்தை
சோப பத்திகமாக வெளியிடுகிறான்-

ஏஷ –
பாதகத்வத்துக்கு ஏகாந்தமான உள்வாயில் க்ரௌர்யம் இவன் வடிவிலே தோற்றுகிறது இல்லையோ –
சர்வாயுதோ பேதஸ் –
நெஞ்சில் க்ரைர்ய அநு கூலமான ஹிம்சா பரிகரங்களாலும் பூரணன் -என்கை
உத்பபாத கதா பாணி -யுத்த -16-18-என்று ஒரு தடியைக் கொண்டு வந்தான் என்னச் செய்தே சர்வாயுதா பேத -என்பான் என் என்னில்
அநு கூலனை பிரதி கூலனாய் சங்கித்தால் போலே ஓர் ஆயுதமே பல ஆயுதமாக தோற்றலாம் இ றே
தோடு  வாங்கின காது தோடு இட்ட காது என்னுமாபோலே
கையும் ஆயுதமும் பொருந்திய படியாலே
சர்வ ஆயுதங்களிலும் சரமம் யுண்டு என்கிறான் -என்னவுமாம் –
பெருமாளை நலிக்கைக்கே நேரே பிரம்மாஸ்திரமான சரணா கதியும் இவன் கையிலே உண்டு என்கிற
நினைவாலே -சர்வாயுதோ  பேத  -என்கிறார் என்னவுமாம் –
சதுர்ப்பிஸ் சஹ ராஷசை-
சர்ப்ப ஜாதிரியம் க்ரூரா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-71-என்கிறபடியே
கீழ் சொன்ன க்ரௌர்யம் ஜாதி பிரயுக்தம் என்கை –
இவனுடைய யுத்த கௌசலம் கண்டிலி  கோளோ-
பெரும் படையோடு செல்லில் கால் கட்டு படுவுதோம்
தனியே வரில் மீண்டு போக ஒண்ணாது -என்று பரிமித பலனாய் வந்த படி கண்டிலி கோளா-
தன் கௌர்யத்தைப் பின் செல்லும் சஜாதீயரையே கொண்டு வந்தான் -என்கை –
ராஷசோ அப்யேதி –
பிற்காலியாதே தன் நிலத்தில் புகுருமா போலே மதியாதே புகுந்த படி
இத்தால் சடக்கென பரிஹரிக்க வேண்டும்படி வந்தான் என்கை –
பச்யத்வம் –
உபதேசிக்க வேணுமோ –
உங்கள் முகத்திலும் கண் இல்லையோ
அஸ்மான் ஹந்தும்-
நம்மில் சிலரை அவியில்அல்லாதார்க்குப் பிழைக்கலாம்
நமக்கு எல்லாம் வேர்ப்  பற்றான பெருமாளை நலிய வந்தான் –
அவர் உளராகில் நாம் எல்லாம் இல்லை யாகிலும் உண்டாக்க வல்லார் –
ந சம்சய-
சர்வாயுதனாய் சபரிகரனாய் வருகையாலே பாதகன் என்னும் இடத்தில் சந்தேகம் இல்லை
தூதராயிருப்பார் சாயுதராய் பரிகரராய் இன்றிக்கே இ றே வருவது –

——————————————————————————————————————————————————————

ஸூக்ரீவஸ்ய வச ஸ்ருத்வா சர்வே தே வாநரோத்தமா
சாலா நுத் யம்ய சைலாம்ஸ் ச இதம் வசனமப் ருவன் –யுத்த -17-6-

ஸூக்ரீவஸ்ய வச ஸ்ருத்வா -ஸூ க்ரீவனுடைய வார்த்தையைக் கேட்டு
சர்வே தே வாநரோத்தமா -அந்த சிறந்த வானவர் அனைவரும்
சாலா நுத் யம்ய சைலாம்ஸ் ச-மரங்களையும் மலைகளையும் எடுத்துக் கொண்டு
இதம் வசனமப்ருவன் -இந்த வார்த்தைகள் உரைத்தனர் –

அவதாரிகை –
மகா ராஜர் -அஸ்மான் ஹந்தும் ந சம்சய -என்று கூசி வார்த்தை சொன்ன படியைக் கேட்டு
அவருடைய கூச்சம் தீர
முதலிகள் பரிகரத்தோடே ஸ்ரீ விபீஷண ஆழ்வானை நலிவார்களாக  வ்ருஷாதிகளைக் கையிலே கொண்டு இவ்வார்த்தையை சொன்னார்கள் –

ஸூக்ரீவஸ்ய வச ஸ்ருத்வா –
தங்கள் துணிவிலே நிர்வாஹகரான மகா ராஜருடைய அனுமதியும் பெற்றார்கள் -என்கை
சர்வே தே வாநரோத்தமா-
இவர்களுடைய வத உத்சாஹத்திலே பிரதானரோடு அப்ரதனாரோடு வாசி அற்று இருந்த படி –
தே -என்றது –
அவர்கள் என்னும் இத்தனை போக்கி அவர்களுடைய உத்சாஹத்தைப் பரிச்சேதிக்க ஒண்ணாது என்கை
வானரோத்தமா-
பெருமாள் பக்கல் பரிவில் மகாராஜரிலும் அதிக்ரமித்து இருந்த படி
உத்கர்ஷ அபகர்ஷங்களில் சேஷித்வ சேஷத்வங்கள் அல்ல பிரயோஜகம் சாஷாத் உத்கர்ஷ ஹேதுவான ராம பக்தியே -என்கை
சாலா நுத் யம்ய சைலாம்ஸ் ச –
மலையோடு மரங்களோடு வாசி அறக் கைக்கு எட்டினவை அடங்க எடுத்தார்கள்
இவர்களுடைய வதத்தில் தங்களுக்கு யுண்டான ஆதர அதிசயத்தாலே தனித் தனியே உபய பரிகர யுக்தரானார்கள் -என்கை –
பெருமாளுடைய அநு கூல வ்ருத்தியிலே இளைய பெருமாள் சத்திர சாமர பாணியானாப் போலே
இவர்களைக் கொல்லுகை ராம கைங்கர்யம் என்று இவர்கள் இருக்கிறார்கள் –
இதம் வசனம் -தங்களுடைய சேஷத்வ சித்திக்காக இவருடைய அனுமதி அபேஷிதமாய் இருக்க
அத்தை ஒழியவே அவர்களுடைய வத நிச்சையோ பாதகமான வார்த்தையை –
அப்ருவன்-
குண பிராதன பாதகமும் ஔ சித்யமும் பாராதே திரளாகச் சொன்னார்கள் –

————————————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண -அபய பிரதான சாரம் -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது -ஸூநிவிஷ்டம் ஹிதம்-யுத்த -16-1/இத்யுக்த்வா பருஷம் வாக்யம் –யுத்த -17-1-/தம் மேரு சிகராகாரம்-யுத்த -17-2-/

January 25, 2015

தௌது மேதாவி நௌ த்ருஷ்ட்வா வேதேஷூ பரிநிஷ்டிதௌ
வேத உபப்ரும்ஹணார்த்தாய தாவக் ராஹயாத பிரபு -பால -4-6-என்று
வேத உபப்ரும்ஹணார்த்தமாக பிரவ்ருத்தமான பிரபந்தம் ஆகையாலே ஜகத் காரண பூத பரவஸ்து பிரதிபாதகமான
அத்ப்யச் சம்பூத ப்ருதிவ்யை ரசாச்ச -புருஷ ஸூ  கதம் -உத்தர அநுவாகம் -இத்யாதி வாக்யங்களையும்
அந்த வஸ்துவினுடைய அவதார உபபாதகமான
அஜாயமா நோ பஹஊதா விஜாயதே -புருஷ ஸூ  கதம் -உத்தர அநுவாகம் -இத்யாதி வாக்யங்களையும்
அவதார பிரயோஜனமான சாது பரித்ரான துஷ்க்ருத் விநாசங்களைக் சொல்லுகிற
யோ தேவேப்ய ஆதபதி யோ தேவா நாம் புரோ ஹித -புருஷ ஸூ  கதம் -உத்தர அநுவாகம் –என்னும்
எவமாதி வாக்யங்களையும் உபப்ரும்ஹிக்கிறது ஸ்ரீ ராமாயணம் –

அது தான் என் என்னில்
வ்யக்தமேஷ மஹா யோகி பரமாத்மா ஸநாதநம் -யுத்த -114-14- என்றும்
பவான் நாராயணோ தேவ ஸ்ரீ மான் சக்ராயுதோ விபு -யுத்த -120-13-என்றும்
அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணு ஸநாதந -அயோத்யா -1-7- என்றும்
பரதத்வம் ராமாத்மநா அவதரித்தது என்னும் இடம் கண்டோம் –

விச்வாமித்ராத் வரத்ராணம்-ஸ்ரீ தண்ட காரண்யவாசிகளான ரிஷிகளுடைய சம்ரஷணம்-
ராவணாதிகள் உடைய வாரபல புஜ பலங்களாலே நோவு பட்ட இந்த்ராதிகளுடைய பரிபாலனம்
இவை தொடக்கமான வற்றாலே சாமான்ய ரஷணத்தையும்
ராமோ ராமோ ராம இதி பிரஜா நாம பவன் கதா ராம பூதம் ஜகத்பூத் ராமே ராஜ்யம் பிரசாசதி -யுத்த -131-122-என்றும் –
திர்யக் யோநிக தாஸ் சாபி   சர்வே ராமம் அநு வ்ரதா-உத்தர -109-22- என்றும்
தம்முடைய அழகாலும் சீலத்தாலும் தம்மை ஒழியச் செல்லாத படி திருத்தி மோஷ பிரதானம் பண்ணினார் என்று சாஷாத் அவதார பிரயோசனமான விசேஷ ரஷணத்தையும் சொல்லுகையாலும்
சாது பரித்ரானம் கண்டோம்
தத் விரோதிகளான தாடகா தாடகேய பிரமுகர் என்ன
கர தூஷண திரிசிரஸ் ஸூ க்கள் என்ன
ராவண கும்பகர்ண ப்ரப்ருதிகள் என்ன இவர்களுடைய வதத்தாலே துஷ்க்ருத் வி நாசமும் கண்டோம்
பித்ரு வசன பரிபாலனமும் ரிஷி தேவதாத்ய அநு வர்த்தனம்
சிறியதை பெரியது நலியாதபடி ரஷித்த ஷாத்ரமான தர்மம் சாமான்யமான தர்மங்களையும்
ஸூ க்ரீவம்  சரணம் கதா -கிஷ்கிந்தா -4-19- என்றும்
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி யுத்தம் -19-31-என்று விசேஷ தர்மத்தையும்
மர்யாதா நாம் லோகஸ்ய கர்த்தா காரயிதா ஸ ஸ -சுந்தர -35-11-என்றும்
ஸ்வே ஸ்வே தரமே நியோஷ்யதி -பால-1-96- என்றும்
பிறரை அனுஷ்டிப்பைக்காக அனுஷ்டித்த படியாலே தர்ம சம்ஸ்தாபனம் பண்ணக் கண்டோம் –
இப்படி வேத இப ப்ரும்ஹணமானஸ்ரீ ராமாயணத்துக்கு பிரதான ப்ரமேயமான
நயாச இத்யாஹூர் மநீஷிணோ ப்ரஹ்மணம்-தஸ்மான் நியாச மேஷாம்  தபஸா மதிரிக்த   மா ஹூ -தைத் நா -என்று
தர்மங்களில் பரம தர்மமாகச் சொல்லப் பட்ட சரணாகதி தர்மத்தை உப ப்ரும்ஹிக்கிறான் ஸ்ரீ வால்மினி பகவான் –
இது பிரதான பிரமேய மானபடி என் -என்னில்
இந்த பிரபந்தத்தில் சக்ரவர்த்தி திருமகனைக் குறித்து சொல்லுகிற பரத்வமும்
சம்சாரி சஜாதீயராய் தன மேன்மை பாராதே குஹ சபரீ ஸூக்ரீவ ப்ரப்ருதிகளோடே ஒரு நீராகக் வந்த சீலாதிகளும்
சாது பரித்ராணம் தர்ம சம்ஸ்தாபனம் துஷ்க்ருத் வி நாசனம் என்று
முக பேதன சொல்லப் படுகிற் சர்வ ரஷகத்வமுமாக இவை இ  றே சரண்ய ஸ்வ பாவம் ஆவது
ஆகையாலே இப்பிரபந்த க்ரமம் அடைய விபீஷன வ்ருத்தாந்தத்தில் சொல்லுகிற சரணாகதியினுடைய பிரதி சம்பந்தி ஸ்வ பாவ பிரதிபாதகம் ஆகையாலே சரணா கதி பிரதான பிரமேயம் –

இப்பிரகரணத்தில் சரண்யனுக்கு சரணாகத ரஷணத்தில் யுண்டான நிர்ப்பந்தத்தையும்
சரணாகத ரஷண காலத்திலும் ஆஸ்ரீதபராதீ நனாய் இருக்கும் என்னும் இடமும்
தத் விஷயத்தில் ஆ ஸ்ரீ தருடைய பரிவையும்
இந்த சரணாகதிக்கு அவயமான ஸ்வ பாவங்களையும் பிரதி பாதியா நின்று கொண்டு
சரணாகதி வைபவத்தை பிரதிபாதிக்கிறான் –

————————————————————————————————————————————————————————————–

ஸூநிவிஷ்டம் ஹிதம் வாக்ய முக்த வந்தம் விபீஷணம்
அப்ரவீத் ப்ருஷம் வாக்யம் ராவண கால சோதித -யுத்த -16-1-

ஸூநிவிஷ்டம் -செவிக்கு இனியதாகவும்
ஹிதம் வாக்ய முக்த வந்தம் -நன்மை பயப்பதான சொல்தொடரை சொன்னவனான
விபீஷணம் -விபீஷண னைக் குறித்து
அப்ரவீத் ப்ருஷம் வாக்யம் -கடுமையான வாக்யத்தை சொன்னான்
ராவண கால சோதித -ராவணன் யமனால் தூண்டப் பட்டவனாய் —

அவதாரிகை –
முதல் ஸ்லோகத்தாலே-ஆண் பிள்ளையான சக்ரவர்த்தி திருமகனோடே வைரம் பிறந்து நின்ற தசையிலே
இத்தை நிஸ்தரிக்கலாம் படி ப்ராதாவானவன் பரம ஹிதத்தை உபதேசிக்க
இத்தைக் கால் கடைக் கொண்டு
நாசகனான காலனுடைய வார்த்தையைக் கேட்டு அவன் பின் போவதே -என்று ரிஷி வெறுக்கிறான்-

ஸூநிவிஷ்டம் –
அர்த்தத்தளவும் செல்ல வேண்டாதே -சம்ஸரவே மதுரம் -ஆம்படி அழகிய சந்நிவேசத்தை யுடைத்தாய் இருக்கும் வார்த்தையை –
அதாகிறது –
அநபிமதம் ஆனாலும்  விட ஒண்ணாது இருக்கை –
அன்றிக்கே –
ஸூநிவிஷ்டம் -முக்த வந்தம் -என்று க்ரியா விசேஷணம் ஆகவுமாம் –
வார்த்தை அழகியதானாலும் நெஞ்சில் படா விடில் கால் கடைக் கள்ளலாம் இ றே
அங்கன் அன்றிக்கே நெஞ்சிலே அழகியதாக நிவிஷ்டமாம் படி சொன்னான் -என்கை-
ஹிதம் –
வெறும் செவிக்கு இனிதாய் இருக்கை அன்றிக்கே துர்த்தசையை நிஸ்தரிக்கலாம் படி பத்தியமாய் இருக்கும் வார்த்தையை –
அநபிமதம் ஆனாலும் விட ஒண்ணாது இருக்கும் வாக்ய சந்நிவேசத்தைப் பார்த்தால் –
சரவண கடாரம் ஆனாலும் விட ஒண்ணாது பத்யதையைப் பார்த்தால்
இது ஒருவனுக்கு அசஹ்யம் ஆவதே -என்கை-

வாக்யம்-
சொல்ல வேண்டும் ஹிதம் பரிபூரணமாய் இருக்கை-
வாக்யமாவது அர்த்தத்தைப் பரிபூரணமாகச் சொல்லுமது இ றே
உக்தவந்தம் –
நா சம்வத்சரம் வாசினே ப்ரப்ரூயாத் -என்று அத்யாதரம் பண்ணில் கால் கடையிலே துவளுவார்க்குச் சொல்லும் வார்த்தையை
இவன் துர்க்கதி கண்டு தன செல்லாமையாலே சொன்னவனை –
விபீஷணம்-
தூரஸ்தன் சொன்ன வார்த்தையாகில் ஆப்தாமோ அநாப்தாமோ என்று சந்கித்துக் கை விடலாம் –
ப்ராதா ஸ்வா மூர்த்திராத்மான -மனு -2-226-என்கிறபடியே ஹிதம் சொன்னவன் ப்ரத்யா சன்னன் என்கை-

ப்ருஷம் வாக்யம் அப்ரவீத் –
சரவண சம நந்தரம்-ஸ்திதோ அஸ்மி கத சந்தேக –ஸ்ரீ கீதை -18-73- என்று கலக்கம் தீர்ந்து ஸ்திதனாதல்-
த்வத்தோஹாய்  வேதாத்யயனம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-1-2- என்று உபகார ச்ம்ருதியாலே புகழுதல்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -திருவாய் -2-7-8-என்று பிரத்யுபகாரம் காணாமையாலே தெகடாடுதல் செய்ய வேண்டும் அளவிலே
சத்ருக்களைச் சொல்லும் வார்த்தையைச் சொன்னான் –
வாக்யம் –
அவன் சொல்ல வேண்டும் ஹிதங்களை பரக்கச் சொன்னால் போலே ப்ருஷங்களிலும் இனிச் சொல்லலாவது இல்லை என்னும்படி சொன்னான் –
ப்ருஷம் அப்ரவீத்
அவன் ஹிதம் சொன்ன போது ஸூ நிவிஷ்டமாம்படி சொன்னால் போலே இவனும் நெஞ்சிலே புண்படும்படி அவ்யக்தமாக ப்ருஷித்தான்
இதுக்கு ஹேது சொல்லுகிறது மேல் பதத் த்வயம் –
ராவண –
ராவயதி ரோதயாதி -என்று பர ஹிம்சை யாலே நாட்டைக் கூப்பிடப் பண்ணுதல் –
அஸ்தானே காலிட்டுக் கொண்டு தானும் கூப்பிடக் கடவனாய் இருக்கை
இத்தால் தனக்கும் பிறர்க்கும் -ஹிதம் அறியாதவன் -என்கை-
கால சோதித –
ப்ராதா சொன்ன வார்த்தை செவி படாதபடி ப்ரத்யா சன்னனான காலன் பிடரி தள்ள அவன் பின் போனான் –
ப்ராதா -பெருமாள் திருவடிகளில் சரணம் புகு -என்றான் –
காலன் -அது கடவது அல்ல -என் வழியே போ -என்றான் –
ப்ராதாவின் வார்த்தை -த்விதா பஜ்யேய மப் யேவம் ந ந்மேயம் -யுத்த -36-11-என்ற தன பிரக்ருதிக்குச் சேராமையாலே காலன் வழி போனான் -என்கை –

—————————————————————————————————————————————————————————————

இத்யுக்த்வா பருஷம் வாக்யம் ராவணம் ராவணா நுஜ
ஆஜ காம முஹூர்த்தேன யத்ர ராம ச லஷ்மண -யுத்த -17-1-

இத்யுக்த்வா பருஷம் வாக்யம்-இப்படியாக கடுமையாக சொல் தொடரை சொல்லி
ராவணம் -ராவணனைக் குறித்து
ராவணா நுஜ-ராவணனுக்கு தம்பியான விபீஷணன்
ஆஜ காம முஹூர்த்தேன-விரைவாக வந்தார் –
யத்ர ராம ச லஷ்மண –எவ்விடத்திலே ஸ்ரீ ராம பிரான் லஷ்மணன் உடன் கூடியவராய் எழுந்து அருளி இருக்கிறாரோ -அங்கே-

அவதாரிகை –
ராவணன் அதிக்ரமத்தில் கை வளர்ந்து இருக்கச் செய்தேயும்
நமக்கு கர்த்தவ்யம் ஏது  என்று மந்த்ரத்திலே இழிந்த இதுவே அவகாசமாக
இந்த துர்க்கதியை நிஸ்தரிக்கலாம் படியான பரம ஹிதத்தை சொல்லச் செய்தே
இவனுக்கு அசஹ்யமாய் இருக்கக் கண்டவாறே
இவன் இருந்த தேசமும் நமக்கு த்யாஜ்யம்
பரம தார்மிகரான பெருமாள் இருந்த தேசமே நமக்கு பிராப்யம் என்று புறப்பட்டு
வேகிற அகத்தின் நின்றும் துடித்துக் கொண்டு புறப்படுவாரைப் போலே போந்தான் என்று
இவனுடைய தர்ம ருசியைக் கண்டு கொண்டாடுகிறான் ரிஷி –

இத்யுக்த்வா பருஷம் வாக்யம்-
இதி -என்று ப்ரதீயதாம் தாசரதாய மைதலீ-யுத்த -14-3-என்று கர்த்தவ்யத்தினுடைய சௌகர்யத்தையும் –
யாவன் நக் ருஹ்ணந்தி சிராம்சி பாணா-யுத்த -14-4- என்று அகரணே பிரத்யவாயத்தையும் சொன்ன பிரகாரத்தை சந்தோஷத்தாலே அநு வதிக்கிறான் ரிஷி
பருஷம் –
சர்வ ஆஸ்வாச கரமான தென்றல் ச்ரு காலத்துக்கு அசஹ்யமாப் போலே
ஆஸ்ரய தோஷத்தால் இந்தப் பரம ஹிதம் ராவணனுக்கு பருஷமாயிற்று
வாக்யம் –
ஹிதோபதேசம் பரிபூரணமாய் இருக்கை
உக்த்வா –
ஹித ஜ்ஞனுமாய் ப்ராதாவாயும் இருக்கிறவன் இந்த துர்க்கதியிலே கை விட்டுப் போனான் என்கிற குறை தீர
சொல்லும் வார்த்தை அடைவே சொல்லி அவன் பக்கல் அவகாசம் இல்லாமையாலே போந்தான்
இவ் வநு பாஷணத்துக்கு பிரயோஜனம்  -ராவணனுடைய அதிக்ரமத்தைக் கண்ட போதே கால் வாங்க ப்ராப்தமாய் இருக்க
ஹிதம் சொல்லி மீட்கலாமோ என்று இவனுக்கு உண்டான வழி அடையச் சொல்லுகை  –

சொன்ன ஹிதம் பருஷமாகைக்கு ஹேது சொல்லுகிறது
ராவணம் –
வர புஜ பலங்களாலே பிரபலரோடு துர்ப்பலரோடு   வாசி அற எல்லோரையும் நலிந்து போந்தவனுக்கு –
எதிரிகளுடைய பலம் சொன்னால் பருஷம் என்னும் இடம் சொல்ல வேணுமோ –
ராவணா நுஜ-
அவன் கிடந்த குடலிலே சஹவாசம் பண்ணிப் போந்தவன் கிடீர் சத்வோத்தரன் சொல்லும் ஹிதத்தைச் சொல்லுகிறான்
என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் உடைய ஏற்றத்தைச் சொல்லுகிறான் ரிஷி
ஹிதம் சொல்லும் இடத்தில் ஜ்யேஷ்டக நிஷ்ட விபாகம் இல்லை
அறியுமவன் அறியாதவனுக்கு சொல்லும் இத்தனை -என்றுமாம்-

ஆஜ காம-
ஜ காம -என்ன அமைந்து இருக்க ஆஜ காம என்றது
ராவண கோஷ்டியில் தனக்கு சம்பந்தம் இல்லாமையும்
ராம கோஷ்டி தன்னிலமாய் இருக்கிற படியையும் தோற்றச் சொல்ல்லுகிறான் ரிஷி –
முஹூர்த்தேன-ந சௌரி சிந்தா விமுக ஜன வாசவை சசம்  வரம் ஹூதவ  ஜ்வாலா பஞ்சராந்தம் வ்யவஸ்திதி-காருட பூர்வ -என்கிறபடியே
நெருப்புப் பட்ட அகத்தில் கால் வாங்குமல்லது நிற்க மாட்டாதாப் போலே
ராவண கோஷ்டியில் தரிக்க மாட்டாத படியைச் சொல்லுதல்
கட்டி நின்ற கன்றை விட்டால் தாய் முலையில் வாய் வைத்து அல்லது தரிக்க மாட்டாதாப் போலே
ராம கோஷ்டியில் புகுந்து அல்லது தரிக்க மாட்டாதானாய்ப் புகுந்தான் -என்னுதல்
வத்சோ காமிவ மாதரம் -என்றும்
தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கே போய் நாடிக் கொள்ளும் புரிந்து -முதல் திரு -3-என்றும் சொல்லக் கடவது இ றே-
யத்ர ராம –
ராம சம்பந்தத்தைக் காட்டில் ராம சம்பந்த தேசமே உத்தேச்யம் -என்கை –
யத்ர பூர்வே சாத்யா சந்தி தேவா -புருஷ ஸூ க்தம் -என்றும்
ஸூ பக்ஸ் சித்ர கூடோ அசௌ-அயோத்யா -98-12-என்றும் சொல்லக் கடவது இ றே –
ச லஷ்மண-
இளைய பெருமாள் பெருமாளுக்கு நிரூபகராய் இருக்கிற படியைச் சொல்லுகிறது
இத்தால் -ஆ ஸ்ரீ தனுக்கு ஆஸ்ரயணீயனை ஒழியச் செல்லாது என்கை –
அபூர்வர் என்று இருக்க வேண்டாதபடி செல்லுகிறவனுக்கு அங்கே புருஷகாரம் உண்டு என்னவுமாம்
மகாராஜர் வத்யதாம் -யுத்த -17-29- என்ன
லஷ்மணம் புண்ய லஷணம்-யுத்த -18-7-பெருமாள் இவனைக் கைக் கொள்ளுவது காண் என்று தன திரு உள்ளத்திலே தண்ணளி தோற்ற இருந்தான் இ றே
தன சொல் ஜீவியாத ராவண கோஷ்டியில் வர்த்தித்த நெஞ்சாறல் தீரத்
தம்பியிட்ட வழக்கான ராம கோஷ்டியில் புகுந்தான் -என்னவுமாம் –

இச் ஸ்லோகத்தாலே
பகவத் ருசி யுடையவனுக்கு
தத் விமுகரிருந்த இடமும் த்யாஜ்யம் என்னும் இடமும்
பகவத் சந்நிதி யுண்டான இடமே ப்ராப்யம் என்னும் இடமும்
சொல்லிற்று ஆயிற்று –

——————————————————————————————————————————————————————————————-

தம் மேரு சிகராகாரம் தீப்தாமிவ சதஹ்ரதாம்
கக நச்தம் மஹீஸ் தாஸ் தே தத் ருஸூர் வாநராதிபா -யுத்த -17-2-

தம் -அவ விபீஷணனை
மேரு சிகராகாரம் -மேரு மலையின் முடி போன்ற தன்மையை யுடையவனாய்
தீப்தாமிவ சதஹ்ரதாம் -பற்றி எரிகின்ற மின்னலைப் போன்று
கக நச்தம் -ஆகாயத்தில் நிற்கிறவனான
மஹீஸ் தாஸ்-பூமியில் நிற்கிற
தே தத் ருஸூர் வாநராதிபா -அவ்வானரர்   தலைவர்கள் கண்டனர் –

அவதாரிகை –
ராவண கோஷ்டியில் நின்றும் கிளம்பி ஆகாசஸ் தனான போதே
இவனை முதலிகள் கண்டார்கள் -என்கிறான்-

தம்-
காட்டுத் தீயைத் தப்பினவன் மடுவிலே விழுமா போலே
தன அபி நிவேசம் எல்லாம் தோற்ற வந்தவனை –
மேரு சிகராகாரம் –
பிரதிபஷத்தை விட்டுப் பேரப் பெறுகையாலே  ஸ்திரனான படியும்
ஒளி பெற்ற படியும்
பாரதந்த்ர்யம் தோற்ற வந்த படியுமாகிற
இஸ் ஸ்வ பாவன்களாலே மேரு சிகராகாரம் -என்கிறான் –
இத்தலை பிரதான அவயவமான ஸ்ருங்கம் பெற்றது என்றும்
ராவணனுக்கு ஒரு ஸ்ருங்க பங்கம் பிறந்தது என்றும் நினைக்கிறான் –
தீப்தாமிவ சதஹ்ரதாம்-
முதலிகளுடைய பரிவைக் கண்டு பெருமாளை திருவடி தொழ ஒண்ணாது ஒழிகிறதோ என்கிற நடுக்கமும்
புகுந்து அல்லது தரிக்க மாட்டாத தவறையும் தோற்றி இருக்கை –
இவனுடைய ஒளிக்கு மின்னலானது திருஷ்டாந்தம் ஆகப் போராமையாலே தீப்தாம் -என்கிற விசெஷனம் அபூதோபமை-பற்றி எரிகிற மின்னல் இல்லையே –
இத்தால் நேரு சிகராகாரம் என்கிற பதத்தில் ஆர்த்தமாக நினைத்த தீப்தியை இங்கே  சாப்தம் ஆக்கினான்
கக நச்தம் –
இலங்கையில் நின்றும் கால் வாங்கின போதே கண்டார்கள் -என்கை
மஹீஸ் தாஸ் –
பூமியில் காவலுக்கு அடைத்தவர்கள் தாம்தாம் அதிகரியாத ககன ரஷணத்திலும் அவஹிதரானார் என்று
அவர்களுடைய காவல் குறிக்கோள் சொல்லுகிறது
தே தத் ருஸூர்-
ஒருத்தர் கண்டுஒருத்தருக்கு சொன்னாலும் எல்லாரும் கண்டாராவார் இ றே
அங்கன் அன்றிக்கே
எல்லாரும் ஒக்க கண்களால் கண்டார்கள் என்கை –
வாநராதிபா –
காவல் அடைப்புண்ட முதலிகளுக்கு முன்பே
காவல் அடைத்த முதலிகள் விட்ட இடத்தே இருந்து கண்டார்கள் என்கிறது –
பெருமாள் பக்கல் இவர்களுக்கு யுண்டான பரிவு ஆளிட்டு அந்து தொழுமது அன்றிக்கே
காவல் தான் இவர்களுக்கு உஜ்ஜீவனமாய் இருக்கிறபடி –
வாநராதிபா —
இவர்கள் பரிவிலே அவஹிதரான படி கண்டு ரிஷி கொண்டாடுகிறான் -என்னவுமாம் –

இஸ் ஸ்லோகத்தாலே
ப்ரதிகூலர் சமூஹத்தில் நின்றும் வரப் பெற்ற லாபத்துக்கு மேலே
அனுகூலர் கடாஷத்துகும் விஷயமானான் -என்று கருத்து-

——————————————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது -ஸ்வப்நேபி யதயஹம் வீரம் ராகவம்-சுந்தர –34-23-/ஸ பித்ரா ஸ பரித்யக்த -சுந்தர -38-33-/ஸத்யம் ராஷஸ ராஜேந்திர-சுந்தர -51-38—

January 25, 2015

ஸ்வப்நேபி யதயஹம் வீரம் ராகவம் சஹ லஷ்மணம்
பச்யேயம யதி ஜீவேயம் ஸ்வப்நே அபி மம மத்ஸரீ -சுந்தர –34-23-

ஸ்வப்நேபி-கனவு கூட
யதயஹம் -நான்
வீரம் ராகவம் -வீரரான ஸ்ரீ ராம பிரானை
சஹ லஷ்மணம் -லஷ்மணனோடு கூடிய
பச்யேயம யதி ஜீவேயம் -காண்பேனே யானால் பிழைத்து இருப்பேன்
ஸ்வப்நே   அபி-கனவிலேயாவது
மம மத்ஸரீ -எனக்கு எதிரியாய் இருந்தது –

ஸ்வப்நேபி யதயஹம் வீரம் –
ஸ்வப்னத்திலே கண்டாலும் துக்க நிவர்த்தகராக வல்லார் ஆயிற்று –

ராகவம் சஹ லஷ்மணம்-
பிரிகிற போது இருவரையும் கூடப் பிரிகையாலே
காணும் இடத்திலும் இருவரையும் கூடக் காண வேணும் என்று இ றே ஆசைப்படுவது
அப்போது இருவரும் பிரிகையாலே தங்களில் கூடினார்களோ இல்லையோ என்றும் அதி சங்கை பண்ணி இருக்குமே –

பச்யேயம யதி ஜீவேயம் ஸ்வப்நே அபி மம மத்ஸரீ –
என் அவஸ்தை அறிந்து முகம் காட்டாமைக்கு அவரே அன்றிக்கே
இதுவும் என்னை நலிய வேணுமோ என்றாள் இ றே –

———————————————————————————————————————————————————-

ஸ பித்ரா ஸ பரித்யக்த ஸூ ரைச்ச சமஹர்ஷிபி
த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத –சுந்தர -38-33-

ஸ -அந்த காகா ஸூ ரன்
பித்ரா ஸ -தந்தையாலும் தாயாலும்
பரித்யக்த -நன்கு கை விடப் பட்டவனாய்
ஸூ ரைச்ச சமஹர்ஷிபி -மகாரிஷிகளோடே கூடி இருக்கிற தேவர்களாலும்
த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய -மூ வுலகங்களையும் நன்றாகச் சுற்றித் திரிந்து
தமேவ சரணம் கத –அந்த ஸ்ரீ ராமனையே உபாயமாகப் பற்றினான் –

அவதாரிகை –
சித்திர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட அத்திரமே கொண்டு எறிய அனைத்து யுலகும்
திரிந்தோடி வித்தகனே இராமாவோ நின்னபயம் என்று அழைப்ப -பெரியாழ்வார் -3-10-6-என்கிறபடியே
பிராட்டி திறத்திலே தீரக் கழிய  அபராதத்தைப் பண்ணி சாபராதனான காகத்தைக் குறித்துப் பெருமாள் ப்ரஹ்மாஸ்த்ரத்தை பிரயோகித்து அருள
அவனும் அதுக்கு அஞ்சித் தனக்குப் புகலாம் இடம் எல்லாம் போய்த் தட்டித் திரிந்து போக்கற்று
எங்கும் போய்க் கரை காணாது எரி கடல் வாய் மீண்டேயும் வங்கத்தின் கூம்பேறும்  மாப்பறவையாய் -பெருமாள் திரு -5-5-
விஷ்ணு போதமான பெருமாள் திருவடிகளிலே வந்து விழுந்த படியைச் சொல்லுகிறது –

சம்சார ஆராணவம் மக்நாநாம் விஷயாக் ராந்த சேதஸாம் விஷ்ணு போதம் விநா நாந்யத் கிஞ்சித சதி பராயணம் -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -1-59-

வியாக்யானம் –
1-ஸ-
சாபராதர் பிழைகளைப் பொறுப்பிக்கைக்குப் புருஷகார பூதையான பிராட்டி திறத்திலே
அபராதம் பண்ணி நேராக வத்யனாய் இருக்கிறவன் –
2- ஸ –
பாகவத அபசாரம் பண்ணி – ந ஷமாமி க்கு இலக்காய் இருக்கிறவன்
மத்பக்தம் ச்வபதம் வாபி நிந்தாம் குர்வந்தி யே நரா பத்மகோடி சதேநாபி  ந ஷமாமி வஸூ ந்தரே -ஸ்ரீ வராஹ புராணம் –
3- ஸ –
பரம புருஷார்த்தத்தை விட்டு
தாரயன் ஸ சமாம் காகஸ் தத்ரைவ பரிலீயதே ந சாப்யுபரமன் மாம்சாத் பஷ்யார்த்தீ பலி போஜன -சுந்தர -38-16-என்று
சூத்திர புருஷார்த்ததைப் பற்றி
அரு நரகத்து அழுந்தும் பயன் படித்தேன் -பெரிய திரு -6-3-4- என்றபடி இருக்கிறவன் –
4- ஸ –
அபராதம் பண்ண சங்கல்ப்பித்த போதே  தேவத்வம் போய் காகமாய் ஸ்வரூப ஹாநி பிறந்து இருக்கிறவன்
5-ஸ –
ந கைஸ் சருதி ரை-சுந்தர -38-28-என்கிறபடியே ஆர்த்த அபராதனாய் உதிரக் கையனாய் இருக்கிறவன்  –
6-ஸ –
தராந்தர சர -சுந்தர -38-28- என்று இதுக்கு முன்பு எல்லாம் பொதும்புகளிலே அடங்கி வாழ்ந்து இப்போது அபராதம் பண்ணின படியாலே
பவனச்ய கதௌ சம -சுந்தர -38-29-என்று ஆகாசத்திலே காற்று போலே திரிகிறவன் –
7-ஸ-
பந்துச்ச பிதா ஸ மம ராகவ -அயோத்யா -58-31-என்று நிருபாதிக பந்துவாய் இருக்கிற பெருமாள் கை விட்ட படியாலே
ஸோ பாதிக்க பந்துக்களும் கைவிடும்படி இருக்கிறவன் –

ஸோ பாதிக்க பந்துக்கள் கை விட்டபடி எங்கனே என்னில்
1-பித்ரா ஸ பரித்யக்த ஸூ ரைச்ச சமஹர்ஷிபி-
கொண்டான் -ஸ்வாமியின்-விளிவைக் கண்டார் விளித்து அடையக் கை விட்டார்கள்
உள் மனிதர் புற மனிதர் எனும் வாசி யுண்டோ என்னில் –
2-பித்ரா ஸ பரித்யக்த-
முற்பட உள் மனிதர் கை விட்டார்கள் என்கிறது –
3- பித்ரா ஸ பரித்யக்த-
பிரஹ்மாஸ்திரம் துடர்ந்து முடுக்கின படியாலே பெற்ற தகப்பன் ரஷிக்குமோ என்று அங்கே போனான் –
அவனும் கை விட்டான் –
த்ரை லோக்யாதிபதயாய் இருக்கிற அவன் கைவிடுகைக்கு அடி என் என்னில்
4- பித்ரா
இந்த்ரோ மஹேந்த்ரஸ் ஸூ ர நாயகோ வா தராதும் ந சக்தா யுதி ராமவத்யம் -சுந்தர -51-45-என்று
பெருமாள் முனிந்தவர்களை ரஷிக்கைக்கு தனக்கு சக்தி இல்லாமை யாலே கை விட்டான் –
அன்றிக்கே
5-பித்ரா  பரித்யக்த-
ஹித பரனான படியாலே இவன் செய்த அவி நயத்துக்கு அத்தனையும் வேணும் என்று கை விட்டான் என்றுமாம்
6-பித்ரா –
அன்றிக்கே -பிரஷ்ட ஐஸ்வர்யனான தன்னை லாபத ஐஸ்வர்யன் ஆக்கினாள் நாச்சியார் ஆகையாலே –
த்வயா தேவி பரித்யக்தம் சகலம் புவன த்ரயம் விநஷ்ட பராயம பவத் த்வயேதா நீம் சமேதிதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-123-என்றபடியே
அந்த க்ருதஜ்ஞதை யாலே அவ்விஷயத்தில் அபராதம் பண்ணின படியாலே கை விட்டான் என்றுமாம் –
7-பித்ரா –
சர்வேஷா மேவ லோக நாம் பிதா –பார ஆற -189-52- என்றும்
தேவதேவோ ஹரி பிதா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-126-என்றும்
சகல ஜகத் பிதாவான பெருமாள் கை விட்ட படியாலே
இவன் பிதாவும் கை விட்டான் என்றுமாம் –
8- பித்ரா –
அன்றிக்கே
விஷ்ணோ புத்ரத்வமா கச்ச -பால -15-20- என்று அபேஷித்தவன் அவதார ரஹஸ்யத்தை அறியுமவன் ஆகையாலே
புத்திர ச்நேஹத்திலும் -தேசே தேசே ஸ பாந்தவா -யுத்த -102-12-
பிராத்ரு ச்நேஹம் -தம் து தேசம் ந பச்யாமி யத்ர ப்ராதா சஹோதர -யுத்த -102-12- என்றபடி
கனவியதாகையாலே கை விட்டான் என்றுமாம் –
8-பித்ரா –
அன்றிக்கே பெருமாளாலே தன் குடியிருப்பும் பெற்று பரிபவமும் தீரத் தேடுகிறவன் ஆகையாலே அவ்விஷயத்திலே அபராதம் பண்ணின படியாலே கை விட்டான் என்றுமாம் –
9-பித்ரா –
அன்றிக்கே -மாம் உபாஸ் ஸ்வ -கௌ ஷீதகீ -என்று தன்னை பகவத் பர்யந்தமாக அனுசந்திக்கும் ஜ்ஞானவான் ஆகையாலே –
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் -திருவாய் -5-6-1- ஆழ்வாரைப் போலே
பகவத் த்ரோஹி என்று கை விட்டான் ஆகவுமாம்
கை விட்ட படி தான் மேல் எழவோ  என்னில் –
10- பரித்யக்த
லோக யாத்ரைக்காக அன்றிக்கே புத்தி பூர்வகமாகக் கை விட்டான் –
11-பரித்யக்த –
இவன் தன் அளவன்றிக்கே இவனைச் சூழ்ந்த பார்யா புத்ராதிகளையும் அகப்படக் கை விட்டான்

ஹித பரனாகையாலே இவன் கை விடுகிறான்
ப்ரியபரையான தாயார் செய்தபடி என் என்னில்
சகாரத்தாலே அவளும் கை விட்டாள்-என்கிறது
சகாரம் அநுக்த சமுச்சாயகம்
இவள் கை விடுகைக்கு அடி என் என்னில்
சீதா  நாரீ ஜனஸ் யாச்ய யோக ஷேமம் விதாச்யதி -அயோத்யா -48-19-என்று
பெண் பிறந்தார்க்கு ரஷகையான பிராட்டி திறத்திலே அபராதம் பண்ணிய படியாலே கை விட்டாள்
ஸ –
மாத்ராச பரித்யக்த
த்வம் மாதா சர்வ லோகா நம் -ஸ்ரீவிஷ்ணு புராணம் -1-9-126-என்று சர்வ லோகமாதாவான பிராட்டி கை விட்ட படியாலே
இவன் மாதாவும் கை விட்டாள் –

இவள் இப்படி கை விட்ட அளவில் புறம்பு புகலானோர் யுண்டோ என்னில்
1- ஸூ ரை –
சஜாதீயரான தேவர்கள் பக்கலிலே சென்றான்
அவர்களும் தள்ளினார்கள் –
இவர்கள் தள்ளுகைக்கு அடி என் என்னில்
கஸ்ய பிப்யாதி தேவாச்ச சாத ரோஷஸ்ய சம்யுகே -பால -1-4- என்று பெருமாள் கண் சிவந்தால் பயப்படுமவர்கள் ஆகையாலே கை விட்டார்கள்
2- ஸூ ரை –
கல்லிட்டுக் கொட்டினாலும் சாவாமைக்கு அம்ருத பானம் பண்ணினவர்கள் –
ஆகையாலே பெருமாள் திருச் சரத்தாலே முடிந்து போகிறோமோ என்று பயத்தாலே கை விட்டார்கள் ஆகவுமாம் –
3- ஸூ ரை –
தேவை -விஷ்ணு பக்தி பரோ தேவ -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -109-74-என்று
அனுகூல பிரகிருதிகள் ஆகையாலே பிரதிகூலனான இவனைக் கை விட்டார்கள் ஆகவுமாம் –

பூர்வ அவஸ்தைக்கு சஜாதீயரான தேவர்கள் கை விட்டார்கள்
இப்போதைக்கு சஜாதீயங்களான பஷிகள் செய்தபடி என் என்ன
சகாரத்தாலே
1-பஷிகளும் கை விட்டன -என்கிறது -அவை கை விடுகைக்கு அடி என் என்னில்
பஷிணோ அபி ப்ரயா சந்தே சர்வ பூதா நுகம்பிநம் -அயோத்யா -45-31-என்றும்
பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப -பெரியாழ்வார் -3-6-8- என்றும்
பஷிகளும் பெருமாள் பக்கலிலே பஷபாதிகள் ஆகையாலே கை விட்டன
அன்றியிலே
2-பறவை யரையா -பெரியாழ்வார் -5-2-9-என்றும்
புள்ளரையன் -திருப்பாவை -6-என்றும்
தங்களுக்கு நியாமகனான பெரிய திருவடி நாயனார்க்கு வெறுப்பாம் என்று கை விட்டன என்றுமாம் –
அன்றிக்கே
3-அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் -பெரிய திரு -5-7-3-என்றும்
அன்னமாய் நூல் பயந்தாற்கு -பெரிய திரு -9-4-2-என்றும்
தங்களுக்கு எல்லாம் கூடஸ்தமாய் இருப்பதொரு பஷி விசேஷத்துக்குக் குற்றம்  செய்தபடியாலே
சஜாதீயங்கள் எல்லாம் கை விட்டன என்றுமாம் –
அன்றிக்கே
4-விஷ்ணு பதத்தைப் பற்றித் திரிகிறவை யாகையாலே –
விஷ்ணுவின் திருவடியை -வியத் விஷ்ணு பதம் ப்ரோக்தம் என்கிறபடி ஆகாசத்தை –
பெருமாள் திருவடிகளிலே அபராதம் பண்ணினான் என்று கை விட்டன ஆகவுமாம் –

இவை இப்படிச் செய்தால் ஆன்ரு சம்சய பிரதானரான ரிஷிகள் செய்த படி என் என்னில்
1-ஸ மஹர்ஷிபி –
தேவர்கள் கை விடுகிற இடத்திலே ரிஷிகளோடு ஒக்கக் கை விட்டார்கள் -என்னும்படி விட்டார்கள்
தார்மிகரான இவர்கள் கைவிடுகைக்கு அடி என் என்னில்
ரிஷிகள் ஆகிறார் காண வல்லவர்கள்
மஹா ரிஷிகள் ஆகிறார் தூரக் காண வல்லவர் கள்
அதாவது
இத்தால் நாம் இவனைக் கைக் கொண்டால் இவன் தானும் இவனோடு சம்சர்க்கித்த நாமும் நசிப்போம் என்றும்
நான் கை விட்டால் இது ஒரு அநந்ய கதியே என்று பெருமாள் தானே இரங்குவார் என்றும்
அவ்வளவும் செல்லக் காண வல்லவர்கள் ஆகையாலே கை விட்டார்கள் –
2- ஸ மஹர்ஷிபி –
யோ விஷ்ணும் சததம் த்வேஷ்டி தம் வித்யா தந்தய ரேதசம் -விஹகேந்திர சம்-24-11- என்று பகவத் த்ரோஹிகள் சண்டாளர் எண்டு அறியுமவர்கள் ஆகையாலே
சண்டாள பஷிணாம் காக -என்கிற சண்டாளன் இங்குப் புகுரலாகாது என்று கை விட்டார்கள் ஆகவுமாம் –
3- ஸ மஹர்ஷிபி –
ரிஷிகள் ஆகிறார் கேவலம் பகவத் வைபவம் அறியுமவர்கள்
மஹ ரிஷிகள் ஆகிறார் -ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திரு -67-என்கிற

இந்த வைபவம் உணர்ந்து இருக்குமவர்கள்
ஆகையாலே புருஷகார விஷயத்திலே அபராதம் பண்ணின படியாலே கை விட்டார்கள் ஆகவுமாம் –

இவர்கள் இப்படி கை விட்டது அவன் தங்கள் பக்கல் வாராமையோ -என்னில் –
1-த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய –
இருந்த இடம் தோறும் செல்லச் செல்லச் தள்ளினார்கள் -என்கிறது
2-த்ரீன் லோகன்-
அனைத்துலகும் திரிந்தோடி -பெரியாழ்வார் -3-10-6-என்கிறபடியே கண்ணுக்கு எட்டின இடம் எல்லாம் போனான்
3- த்ரீன் லோகன்-
பூம் யந்தரிஷ ச்வர்க்கங்கள் ஆகிற தேசம் அடைய திரிந்தான்
பூமி எங்கும் தட்டித் திரிந்த அளவில் -மஹர் ஷிபி பரித்யக்த -என்று மஹர் ஷிகள் கை விட்டார்கள் –
அந்தரிஷம் அடையத் தட்டித் திரிந்த அளவில் ஆகாச சாரிகளான பஷிகளும் கை விட்டன
ஸ்வர்க்க லோகம் அடையத் தட்டித் திரிந்த அளவில் மாதா பிதாக்களும் தேவர்களும் கைவிட்டார்கள் –
ஸம் பரிக்ரம்ய-
ஒரு கால் தட்டித் திரிந்த இடத்திலே ஒன்பது கால் தட்டித் திரிந்தான்
அகமுடையவர்கள் அறியாதபடி கைப் புடைகளிலே ஒதுங்கிக் கிடப்பதும் செய்தான் –

இப்படித் திரிந்த விடத்திலே மேல் செய்தது என் என்னில்
1-தமேவ சரணம் கத-
இவன் தஞ்சம் என்று பிரமித்துப் போனவர்களிலும் காட்டில் கொள்ள நின்ற பெருமாள் முகம் தானே குளிர்ந்து இருந்தது –
அவர் தம்மையே பற்றினான் –
2- தமேவ –
யதி வா ராவண ஸ்வயம் –யுத்த -18-33- என்று சரணாகதனான விபீஷணன்  இருக்க
ப்ராதி கூல்யம் பண்ணினவனை விரும்பக் கடவரான அவர் தம்மையே பற்றினான்
3- தமேவ –
சரணாகத வத்சலா -சுந்தர -21-21-என்று சரணாகதிக்கு எல்லையானவர் தம்மையே பற்றினான்
அசரண்யரானவர்களை பற்றித் திரிந்த நெஞ்சாறல் தீர சர்வ லோக சரண்யர் ஆனவர் தம்மையே பற்றினான்
4- தமேவ –
தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும் -பெரியாழ்வார் -4-9-2- என்று
பிராட்டி குற்றம் சொல்லிலும் மன்றாடி ஏறிட்டுக்க் கொண்டு ரஷிக்கும் அவர் தம்மையே பற்றினான்
5- தமேவ் சரணம் கத –
சரணாகதனான கந்தர்வனையும் பாணனையும் காட்டிக் கொடுத்தவர்களைப் போல் அன்றிக்கே
தோஷோ யத்யபி ந த்யஜேயம் -யுத்த -18-3-என்று தோஷமே பற்றாசாகக் கைக் கொள்ளும் அவர் தம்மையே பற்றினான்
6-சரணம் கத –
உபாய புத்த்யா பற்றினான் அல்லன் –
கண்டவிடம் எங்கும் தட்டித் திரிந்தவன் ஆகையாலே கால் முறிந்து ஒதுங்க நிழல் தேடி வந்தான்
அவ்விடம் நிவாஸ வருஷமாய் இருந்தது
அல்லது
பூ மௌ நிபதிதம் -சுந்தர -38-34-என்று தறையிலே தலையும் மடியிலே காலுமாய் விழுந்தவன் சரணாகதி பண்ணினான் அன்று இ றே –

இத்தால்
சர்வேஸ்வரன் ரஷிக்கைக்கு முதல்
அபராத பூயிஷ்டதையும்
அநந்ய கதித்வமும்
என்று சொல்லிற்று ஆயிற்று –

————————————————————————————————————————————————————————————

ஸத்யம் ராஷஸ  ராஜேந்திர குருஷ்வ வசனம் மம
ராம தாஸஸ்ய தூதஸ்ய வானரஸ்ய விசேஷத -சுந்தர -51-38-

ஸத்யம் -உண்மையான
ராஷஸ  ராஜேந்திர -ராஷச ராஜாக்களுக்கு ஸ்வாமியே
குருஷ்வ -அனுஷ்டிப்பாயாக
வசனம் மம -என்னுடைய சொல்லை –
ராம தாஸஸ்ய -ஸ்ரீ ராம பிரானுக்கு அடியவனாய்
தூதஸ்ய-தூதனாய்
வானரஸ்ய -குரங்கான
விசேஷத -விசேஷித்து –

அவதாரிகை –
ஸூ ஜாத மஸ்யேதி ஹாய் சாது புத்தே -சுந்தர -9-73-என்று
நொந்தாரைக் கண்டால் ஐயோ என்னும் சத் பிரகிருதி யாகையாலும்
யக்சீல ஸ்வாமீ தச் சீலா பிரகிருதி -என்று
பரம காருணிகரான பெருமாள் அடிமை யாகையாலும்
ராவணனுடைய அனர்த்தம் கண்டு அவனுக்கு ஹிதோ பதேசம் பண்ணுகிறான் –

வியாக்யானம் —
1-ஸத்யம்-
சத்ரு பஷத்தில் நின்றும் வந்த இவன் சொல்லுகிற வார்த்தை விப்ரலம்ப கரம் என்று நினைத்திராதே
உண்மை என்று நினைத்திரு
2- ஸத்யம் –
சதைக ரூபம்
சிறிது நாள் ஒரு படியாய் பிறகு வேறு ஒரு படியாகை யன்றிக்கே
ஒருபடிப் பட நடக்கும் என்று நினைத்திரு
3-ஸத்யம் –
வெறும் உனக்கே  யன்றிக்கே
எங்களுக்கும் கார்யகரம் ஆகையாலே பொய்யாய் இராது காண்
4- ஸத்யம் –
ராம கோஷ்டியில் வாசனையாலே நான் சொல்லுகிறது சத்தியமாய் அல்லது இராது காண்
வார்த்தையில் பொய்யில்லை யாகிலும் அநபிமதமாய் இருக்குமோ என்னில்
5- சத்யம் –
சத்யம் பூத ஹிதம் ப்ரோக்தம் -என்கிறபடியே
சர்வ பிராணிகளுக்கும் ஹிதமாய்க் காண் இருப்பது –

நாட்டார்க்கு ஹிதம் சொல்லப் போந்தோமோ என்ன
1-ராஷஸ  ராஜேந்திர –
இத்தனை பேருக்கு கடவனான உனக்கு அவர்களுடைய ஹிதம் செய்ய வேண்டாவோ –
அன்றியிலே –
2-ராஷஸ  ராஜேந்திர —
இப்படிகொத்த உண்மையான வார்த்தை கேட்டன்றோ இவ் வைச்வர்யம் உனக்கு உண்டாயிற்று
3- ராஷஸ  ராஜேந்திர —
அளவுபட்ட ஐஸ்வர்யம் அன்றோ உன் ஐஸ்வர்யம்
நாட்டில் ராஷசராய்ப் பிறந்தார்க்கும்
ராஜாக்களாய் பிறந்தார் எல்லார்க்கும் மேலானவன் அன்றோ நீ
4- ராஷஸ  ராஜேந்திர –
ராசாச ராஜாக்கள் உன் காலி
5- ராஷஸ  ராஜேந்திர —
இதி பரம ஐஸ்வர்யே -இ றே
ராஷச ராஜாக்கள் ஐஸ்வர்ய யுகதர்
நீ பரம ஐஸ்வர்ய யுகதன் –

நம்மை இப்படி இப்போது உபச்லோக்கிகிறது என் -என்ன
1-குருஷ்வ –
நான் சொல்லுகிற வார்த்தையை அனுஷ்டிப்பாயாக வேணும்
2- குருஷ்வ –
செய்வேனோ தவிருவேனோ என்று விசாரித்தல் தவிர்த்தல் செய்ய ஒண்ணாது
பத்தும் பத்தாய் அனுஷ்டிக்க வேணும் –
3- ஸத்யம் குருஷ்வ –
ப்ரஹச்தாதி ஸ்வ பஷம் அல்லன் இவன்
பரபஷம்
வசிஷ்டாதி ஜ்ஞாதா அல்லன்
இவன் ஒரு குரங்கு ஆகையாலே அனாப்தம் என்று நினைத்து இராதே என்றான்
உண்மையாகச் சொல்லுகிற வார்த்தையை நீ இசைய வேணும்
4- ராஷச ராஜேந்திர குருஷ்வ –
உன் கீழே ஒதுங்கின பிராணிகளை ரஷிக்கும் போது இத்தனையும் செய்ய வேணும் காண் –

இப்படிச் செய்யச் சொல்லுகிறது தான் ஏது என்னில்
1-வசனம்-
நான் சொல்லுகிற வார்த்தையை
2- வசனம் –
அர்த்தம் வக்தீதி வசனம் என்று பாசுரப் பரப்பற்று அர்த்த கர்ப்பமான வார்த்தையை –
நீ சொல்லுகிற பாசுரத்தை நான் அனுபாஷிக்கவோ -என்ன
3- வசனம் –
வாக் வியாபாரமான வ்ருத்தி அல்ல
அந்த வாக் பிரதிபாத்யார்த்தத்தை –

யாருடைய வாக்  பிரதிபாத்யம் என்ன –
1-மம-
தூம் ராஷாதி வார்த்தை போலே துக்க கரமாகை அன்றியே
பரதுக்க அசஹிஷ்ணு வான என்னுடைய வார்த்தை –
2- மம –
முன்பு அசோக வநிகையில்  வாளை யுருவிப் பிராட்டியை நலியப் புக்கவற்றை அகப்படக் கண்டு கார்யப் பாட்டாலே அதைப் பொறுத்துப் போந்த என்னுடைய
3- மம –
அஹோ ரூபமஹோ வீர்யம் -சுந்தர -49-17-என்றும்
புநச்ச ஸோ அசிந்ய தார்த்த ரூப -சுந்தர -49-18- என்றும்
உன்னுடைய யோக்யதையைக் கண்டு ஆச்சர்யப் பட்டும் உன்னுடைய அனர்த்தத்தைக் கண்டு வெறுத்தும் இருக்கிற என்னுடைய
4- மம –
சர்வ ஆத்மாக்களுக்கும் பிராண பூதனான வாயு புத்ரனாய் வைத்து
நீ அனுகூலிக்கும் பஷத்தில் உன்னுடைய பிராண ஹானியைச் சொல்லுவேனோ
5- மம –
ஐந்தர வ்யாகரணத்தை அதிகரித்து ஆதித்ய சிஷ்யனாய் என்னுடைய வார்த்தையும் பொய்யாமோ
6- மம –
பிங்கா தி பதேரமாத்யம் -சுந்தர -31-19- என்று
காட்டரசனான மஹா ராஜரையும் அகப்பட ஈடேற்றும் படி
ஒரு ராஜாவுக்கு மந்த்ரியான என்னுடைய வார்த்தையும் பொய்யாமோ –
உன்னைக் கண்டு வைத்தன்றே நான் சந்தேஹிக்கிறது ஆயிருக்க
– மம வசனம் -என்று இது ஒரு ஹேதுவாகச் சொல்லுவான் என் என்னில்
வானரமான ஆகாரம் உனக்கு சாமான்யமாக இருந்ததாகில் என் வார்த்தை விசவஸ  நீயம் ஆகைக்கு  ஹேதுக்களைச் சொல்லுகிறேன்
1-ராம தாஸஸ்ய தூதஸ்ய வானரஸ்ய விசேஷத-
இவற்றில் ஓர் ஒன்றே போரும்
இவை மூன்று ஆகாரம் யுடைய என் வார்த்தை பொய்யாகாது காண்
2-ராம தாஸஸ்ய தூதஸ்ய வானரஸ்ய –
என்னுடைய ஆப்தத்வம் முப்புரியூட்டினதாய் அன்றோ இருக்கிறது
3-விசேஷதோ ராம தாஸஸ்ய –
பொய் சொல்லாமைக்கு நானே போரும்
விசேஷித்துப் பெருமாள் அடியானும் பொய் சொல்ல்லுமோ
4- ராம தாஸஸ்ய-
ராமோ த்விர் நாபி பாஷதே -அயோத்யா -18-30 என்றும்
சத்யா வாதி ஸ ராகவ -அயோத்யா -2-32- என்றும்
சத்யவாதியான பெருமாளோடு வாசனை பண்ணின என் வார்த்தையும் பொய்யாமோ –
5- ராம தாஸஸ்ய-
ராமயதீதி ராம -என்று எல்லாரோடும் பொருந்துகிற பெருமாள் அடியானாய் இருக்கிற நான் வெறும் வார்த்தை சொல்லுவேனோ
6- ராம தாஸஸ்ய-
யதி வா ராவண ஸ்வயம் -யுத்த -18-33- என்னும்படியான பெருமாள் திரு உள்ளம் அறியும் என்னுடைய வார்த்தை அன்றோ
7- ராம தாஸஸ்ய-
நான் இங்கே பொய் சொன்னேன் -என்று பெருமாள் கேட்டு அருளினால் என்னை தலையைச் சிரைத்து விலங்கு இடாரோ
8- ராம தாஸஸ்ய-
ஏதேனுமாகப் பரோபதேசம் பண்ணி ஆச்சார்யபதம் நிர்வஹிப்பார்க்குத் திரு நாமம் போலே வேண்டி இருந்தது இ றே -தாஸ்ய நாமம் –

இப்படி உரிய அடியனாய் உன் நாயன் பக்கல் பரிவாலே புரட்டிச் சொல்லுகிற வார்த்தையை மெய் என்று இருப்பேனோ -என்ன
1- தூதஸ்ய –
இப்படிக்குரிய அடியானே யாகிலும் ஏறிட்டுக் கொண்ட அதிகாரத்துக்கு ஈடாக நடக்க வேண்டாவோ –
2-தூதஸ்ய –
தூதன் ஆவான் -அத்தலைக்குப் பொருந்த வார்த்தை சொல்லி ஸ்வாமி நினைவைத் தலைக் கட்டுமவன் இ றே
அப்படிக்கு உன்னோடு குளிர வார்த்தை சொல்லிப் பிராட்டியைக் கொண்டு போக வந்த என்னுடைய வார்த்தை
3- தூதஸ்ய –
தூதன் ஆவான் அங்குச் சொன்ன வார்த்தையை இங்கே சொல்லி
இங்குச் சொன்ன வார்த்தையை அங்கே சொல்லி உக்தார்த்த -யதார்த்த -வாதியாம்  இத்தனை போக்கி இட்டுச் சொல்லுவானோ
4- தூதஸ்ய —
அங்கு கட்டின ஓலைத் தாலியை இங்கே பொகட்டு இங்கே கட்டின ஓலைத் தாலியை அங்கே
பொகட்டுத் -திரிகிற எனக்கும் ஒரு கௌ டில்யம் வஞ்சனை உண்டோ –

அதுவோ நீ ஓலை தூதனாய் அபிமதனாய் ஆ ஹூதனாய் வந்தது
தோப்பை முறித்து சேனாபதிகளைக் கொல்லுவது மந்த்ரி ஸூ தரைக் கொல்லுவது
குமாரனைக் கொல்லுவதாய் நீ செய்யாத் தீம்புகள் உண்டோ
உன் வார்த்தையை விஸ்வசிக்கலாமோ என்ன
1-வானரஸ்ய  –
அதுவோ ஜாதி பிரயுக்தமான வார்த்தை
குரங்காட்டம் இத்தனை போக்கி
தௌத்யத்துக்குக் குறை யன்று காண்
கையிலே பழத்தைக் கொடுக்கிலும் உறும்பிப் பறிக்கை குரங்குகளுக்கு ஸ்வ பாவம் அன்றோ –
2- வானரஸ்ய  —
தோப்பை முறிப்பது சாகாம்ருகமாகையாலே
பணை யோடு பணை  தாவித் திரிந்தேன்
மரங்கள் துர்ப் பலங்கள் ஆகையாலும்
மஹா கபே என்னும்படி  நான் பலவான் ஆகையாலும்
என்னைப் பொறுக்க மாட்டாமல் முறிந்தது இத்தனை
சேனாதிபதி பிரமுகரும் பிரதம அபகாரம் பண்ணி நலிந்தார்கள்
என்னை நோக்குகைக்காக சில வ்யாபரித்தேன்
பின்னையும் நாடோடியான குரங்கு போல் அன்றியே என்னுடைய அத்புதா பதானங்களைக் கண்டு அஞ்சினார்கள்
அஞ்சினாரை இரங்கி ஓரறை அடித்துப் பொகட்டேன் அத்தனை -என் மேல் குறை இல்லை
3-வானரஸ்ய –
விவேகிகளா ன மனுஷ்ய ஜாதி அல்லேன்
ராஷச ஜாதி அல்லேன்
அறிவில்லாத திர்யக்  ஜாதியான என்னுடைய வார்த்தையில் யுண்டோ பொய்
4-வானரஸ்ய –
வ்யாக்ரவா நர சம்வாதம் கேட்டறியாயோ
பாதகனான வேடனுக்கு அகப்பட ரஷகமான ஜாதியிலே பிறந்த என்னுடைய வாக்கியம் பாதகமாமோ –

ஆக இத்தால்
மம வசனம் சத்யம் -என்று வாத மா மகன் -பெரிய திரு -5-8-2-என்கிறபடியே
தேவ யோநிஜனான என் வார்த்தை பொய்யாகாது என்று சாமான்ய வசனம் சொல்லி
விசேஷதோராம தாஸஸ்ய தூதஸ்ய வானரஸ்ய வசனம் சத்யம் -என்று
ருஜூக்களான பெருமாள் அடியான் ஆவது
உக்தார்த்த வாதியான தூதனாவது
இட்டுச் சொல்லுகைக்கு அடியான விவேகம் இல்லாத திர்யக்காவதாய்
இருக்கிற என்னுடைய வார்த்தை அன்றோ  என்று
விசேஷ  ஹேதுக்களையும் சொல்லி
நீ தான் ஒரு பெரியோன் ஒருத்தனுமாய்
உனக்கு ரஷணீயமான குழைச் சரக்கும் உண்டாய் இருந்தது
ஆனபின்பு
நான் சொன்னபடியே அனுஷ்டிக்கப் பாராய் -என்கிறான் –

——————————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது -இஹ சந்தோ ந வா ஸந்தி-சுந்தர -21-9-/சா திர்யகூர்த்வஞ்ச ததாப்யத-சுந்தர -31-19—

January 24, 2015

இஹ சந்தோ  ந வா ஸந்தி  ஸதோ வா நா நுவர்த்தஸே
ததாஹி விபரீதா தே புத்தி ராசார வர்ஜிதா -சுந்தர -21-9-

இஹ -இந்த இலங்கையில்
சந்தோ  ந -நல்லோர்கள் இல்லையோ –
வா -அல்லது
ஸந்தி -இருக்கிறார்களோ –
ஸதோ வா நா நுவர்த்தஸே-இருக்கும் நல்லோர்களைத்   தான் நீ அநு வர்த்திப்பது இல்லையோ
ததாஹி -என் எனில்
விபரீதா தே புத்திர்  -உன்னுடைய அறிவு சாஸ்திர முறைக்கு மாறுபட்டதாயும்
ஆசார வர்ஜிதா -நன்னடைத்தையோடு கூடி இராததாயும் இருக்கிறது –

அவதாரிகை –
பிராட்டி ராவணன் தன்னை நோக்கிப் பிதற்றின பரப்பைக் கேட்டு
கோப கிருபைகள் பிறந்து
ஹிதம் சொன்னால் மீண்டான் ஆகில் -அங்கு ஆகாது என்று விலக்குவார் இல்லையோ –
அவர்கள் இரங்கும்படி அநு வர்த்தியாயோ –
அப்படி இருந்தது காண் உன் புத்தியும் அனுஷ்டானமும் -என்கிறாள் –

வியாக்யானம் –
1-இஹ –
நல்ல மனிதர் நடையாடாதபடி ராஷச பூயிஷ்டமான இந்த தேசத்திலே
2-இஹ –
பள்ளரும் பறையருமாய்ப் பத்துக் கோடி பிரஜா வர்க்கம் நடையாடுகிற இத் தேசத்தில்
3- இஹ -உட்படை வீடும் புறப்படை வீடும் படங்கும் பாளையுமுமாய்ப் பெரும் பரப்பான இத் தேசத்தில்
4- இஹ –
உண்பாரும் உடுப்பாரும் பூசுவாரும் முடிப்பாரும் நல்லது தீயது அறிந்து இருக்கிற இத் தேசத்தில்
5-இஹ –
அக்னி ஹோத்ராச்ச வேதாச்ச ராஷசா நாம் க்ருஹே  க்ருஹே -என்றும்
சுஸ்ராவ  ப்ரஹ்ம கோஷாம்ச்ச விராத்ரே ப்ரஹ்ம ரஷ ஸாம்-சுந்தர -18-2-என்றும்
ஓதுவார் ஒத்துச் சொல்லுவாராய் வேத வைதிக மர்யாதை நடத்துகிறதாக பாவிக்கிற இத் தேசத்திலே
6-இஹ –
தபஸ் சந்தா பலப் தஸ்தே சோயம் தர்ம பரிக்ரஹ -சுந்தர -51-25-என்றும்
ப்ராப்தம் தர்மபலம் தாவத் பவதா -சுந்தர -51-29-என்றும்
தபஸ் சந்தப்த பலமும் அறிந்து நடத்துகிற இத் தேசத்தில் –
7-இஹ –
ராஜாக்களும் மந்த்ரிகளும் புரோஹிதரும் சடங்கிகளும் சிஷ்டர்க்களுமாய்ப்
பாரிப்புண்டான இத் தேசத்திலே

இப்பாரிப்புக்கு இப்பொது வந்த குறை என் -என்னில்
1-சந்தோ  ந -நல்லோ இல்லை –
பதர்க்கூடு  உண்டத்தனை போக்கி சார பூதரைக் கண்டிலோமே –
2- சந்தோ ந -நல்லோர் இல்லை –
பரா நர்த்த பரரான ப்ரஹச்த தூம் ராஷ வஜ்ரதம்ஷ்ட்ர பிரமுகரான  அசத்துக்களைக் கண்டோம் இத்தனை –
பரஹித பரராய் சத்தை யுண்டாக்குகிற சத்துக்களைக் கண்டிலோம் –
3-சந்தோ ந ஸந்தி -உள்ளவர் இல்லை –
அஸ்தி ப்ரஹ்மேதி  சேத வேத சந்தமே நம் ததோ விது -தை -ஆனா -6-என்று
பகவத் ஜ்ஞானத்தாலே தாங்களும் உளராய் பிறரையும் உண்டாக்குமவர்கள் இல்லையாய் இருந்தது –
4-சந்தோ ந -நல்லோர் இல்லையா –
ஒரு சத்து உண்டானால் த்வாம் து திக் குல பாம்சனம் -யுத்த -16-15-என்று எண்ணித் தள்ளிக் கதவை யடைப்பார்களோ
பலர் உண்டாகில்   இ றே ஈடேறலாவது-
அப்படிக்குப் பலர் இல்லையாய் இருந்தது –
தம் சந்த ச்ரோ துமர் ஹந்தி சதசத் வ்யக்தி ஹேதவ -ரகுவம்சம் -1-10-என்று
சார அசார விவேகிகள் இல்லையோ –

சிறிது நிரூபியா -வா என்று -அல்லது -என்று பூர்வ பஷத்தை வ்யாவர்த்திப்பிக்கிறாள்
வா -இல்லை என்ன ஒண்ணாது-
இல்லை என்ன ஒண்ணா தாகில்   சொல்லும்படி என் என்னில்
ஸந்தி -உண்டே
1-ஸந்தி –
இப்படை வீட்டிலே இத்தனை விஜய சம்பத் புத்ராதி சம்ருத்தி யுண்டாகையாலே
இதுக்கடியான தர்ம அனுஷ்டானமும்
அதுக்கு உபதேஷ்டாக்களான சத்துக்களும் உண்டாக வேணும் –
அப்படி ஆகாத போது அகாரண கார்யோத்பத்தி பிரசங்கம் வரும்
2-ஸந்தி –
சத்துக்கள் என்று சில ஜாதி அன்றே –
அநீதியைச் சொல்லுதல் – செய்தல் -செயலில் போந்து இ றே அசத்துக்கள் ஆவது
சதர்த்தோ பதேசம் பண்ணின போது சத்துக்கள் இ றே
ஆகையாலே அவனுக்கு நல் வார்த்தை சொன்ன
அகம்பன -மாரீச -மால்யவத் -கும்பகர்ண -விபீஷண-ப்ரப்ருதிகள் உண்டாகையாலே சத்துக்கள் உண்டே
3- ஸந்தி
சத்தா மாத்ரமே உள்ளது
கார்யகரத்வம் இல்லை —
சத்தை யுண்டாகில் உபதேசியார்களோ -என்ன –
1-ஸதோ வா நா நுவர்த்தஸே-நல்லோருக்கு சுஸ்ருஷை செய்வது இல்லையா –
உண்டானாலும்
நா ப்ருஷ்ட கஸ்யசித் ப்ரூயாத் -மனு -2-110-என்றும் –
ப்ரணி பாதேன பரி ப்ரச் நே ந சேவயா உபதேஷ்யந்தி -ஸ்ரீ கீதை -4-34- என்றும்
ப்ரணிபாத ப்ரச்நாத் யநுவர்த்த நம் பண்ணிக் கேட்டால் இ றே அவர்கள் சொல்லுவது
அப்படிக்கு அநு வர்த்தி யாகாதே –
2-ஸதோ வா நா நுவர்த்தஸே-
த்ரிவர்ஷ பூர்வ ச்ரோத்ரி யோ அபிவாத ந மர்ஹதி -ஆபஸ்தம்ப -1-14-13-என்றும்
ஜ்ஞான விஜ்ஞான சம்பன்னா பக்தி மந்தோ ஜநாரத்தநே
ப்ரண ந்தவ்யா விசேஷேண சாத்விகைர் தர்ம சாரிபி -என்றும்
தண சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -பெரிய திருமொழி -7-4-1-என்றும்
யோகா அநு வர்த்தனம் விஹிதமாய் இருக்க அது செய்யாய் ஆகாதே -என்கிறாள் –
3- ஸதோ வா நா நுவர்த்தஸே-
அப்ரியஸ்ய து பத்யஸ்ய வக்தா ச்ரோதா ஸ துர்லப -யுத்த -26-21- என்றும்
துர்லபோ மாநுஷோ   தே யாவது
பெற்று வைத்து அழைக்கிறாய் ஆவது ஆகாதோ –
4-ஸதோ வா நா நுவர்த்தஸே–
பூர்வ அவஸ்தையில் இரங்கும்படி ப்ரணி பத்யாபி வாத்ய ஸ -ஸ்ரீ விஷ்ணு  -1-1-1- என்று அநு வர்த்திக்க வேணும்
உத்தர அவஸ்தையில் க்ருதஜ்ஞனாகையாலே
த்வத்தோ ஹி வேதாத்யய நமதீ தமகிலம் – ஸ்ரீ விஷ்ணுபுராணம் -1-1-2-என்றும்
என்னைத் தீ  மனம் கெடுத்தாய்  உனக்கு என் செய்கேன் -திருவாய் -2-7-8-என்றும் அனுவர்த்திக்க பிராப்தம் -அது செய்யாகாதே –
5-நா நுவர்த்தஸே–
ப்ரத்யஷ குரவே ஸ்துத்யா-என்று ஸ்தோத்ரம் பண்ண வேண்டி இருக்க
சோஹம் பருஷிதஸ்  தேன தாசவச்சாவ மா நித –யுத்தம்-17-16-என்று நிந்திப்பாயாகாதே –
அன்றியிலே
-6-நா நுவர்த்தஸே-
பிரணி பாதாதிகளை ஒழிய -யதாதே தேஷு வரத்தே ரந்ததா தேஷு வர்த்தேதா -தைத்சீஷா -11- என்றும்
யத் யதா சரதி ஸ்ரேஷ்டஸ் தத் ததே வேதரே ஜநா -ஸ்ரீ கீதை -3-21- என்றும்
பேசிற்றே பேசலல்லால் -திருமாலை -22- என்றும்
கௌரவர் சொன்ன வார்த்தையும் -அஞ்செய்-அழகியது -என்று
நாடி அப்படிக்கே செய்யா யாகாதே என்றுமாம் –
7-சதோ வா நா நுவர்த்தஸே-
அவர்கள் சத்தை யுண்டானபோது சொல்லி அல்லது நில்லார்கள் –
நீ அனுஷ்டியாகாதாய் இருந்தது –

நேற்று வந்து நின்றாள் -அநு வர்த்திப்பனோ அநு வர்த்தியானோ என்று அறிந்த படி என் -என்ன
1-ததாஹி –
அப்படி இருந்தது காண்-ஸூ பிரசித்தம் –
2- ததாஹி –
சம்ப்ரதிபத்திலேயாய் இவ்வர்த்தத்தில் விப்ரதிபத்தி யுண்டோ
சர்வ லோக பிரதிபன்னம் அன்றோ -ஹி-அனைவருக்கும் உடன்பாடு
3- ததாஹி –
ஹி தேஹ தௌவா தேதாத் வாத -என்று அநு வர்த்தியாய் என்கிற சாத்தியத்துக்கு ஹேது சொல்லுகிறாள் ஆகவுமாம் –
4- ததாத்வாத் –
அப்படி யாகையாலே -ததாத்வாத் -என்று தச் சப்தம் பிரக்ருத பராமர்சியாகையாலே கீழ்ச் சொன்ன சாத்தியத்தை பராமர்சித்து
அநு வர்த்தியாமையால் -என்றபடி இ றே
அப்போது அநு வர்த்தியாமல் என்ற ஹேது சாத்யாவிசிஷ்டம் ஆகாதோ என்னில் ஆகாது
பிரக்ருத பராமர்சத்துக்கு குறை இல்லை
பிரகிருதம் தான் உகதம் என்றும் புததுச்தம் என்றும் இரண்டு –
1-விபரீதாதே புத்தி -என்று லஷ்யமாணமாயே புத்திஸ்திதையாய்
பிரக்ருதத்தைப் பராமர்சிக்கையாலே ஒரு குறை இல்லை
எங்கனே என்னில்
அநு வர்த்த நாபாவ சாத்யமாயும் புத்திவை பரீத்ய ஹேதுவாயும் இருக்கையாலே சாத்யாவிஷிஷ்டம் ஆகாது
ததாத்வாத் -தனக்குப்   பொருளாய் வைத்தது என் என்னில்
உன்னுடைய அநு வர்த்தனத்துக்கு சாதனமாய் இருப்பதொரு ஹேதுவை உடைத்தாகையால் -என்றபடி –
ததாத்வாத் என்று புத்திஸ்தத்தை அருளிச் செய்தது இத்தனை அன்றோ -அந்த ஹேது ஏது என்னில்
2-விபரீதாதே புத்தி
உன்னுடைய புத்தி விபரீதையாய் இரா நின்றதே
நதி பூரத்தைக் கண்டு பர்வத பர்சரத்தில் வ்ருஷ்டியை அநு மிக்குமா போலே
தவ புத்திவை பரீத்யாத் -என்று காவ்யா லிங்கா நு மானம் சொல்லுகிறாள் –
3- விபரீத புத்தி –
சாஸ்திர விஹித பிரகாரத்துக்கு விருத்தமாய் இரா நின்றது
4- விபரீதா –
பரதார பரத்ரவ்ய பர ஹிம்சாதிகள் நிஷித்தமாய் இருக்க
அவை கர்த்தவ்யங்கள் என்று நினைவு நடவா நின்றதே –
5- விபரீதா புத்தி –
புத்த்யா ஹ்யஷ்டாங்கயா யுகத -கிஷ்கிந்தா -54-2-
சுஸ்ருஷா சரவணம் சைவக்ரஹணம் தாரணம் ததா ஊஹா போஹார்த்த விஜ்ஞானம் தத்தவ ஜ்ஞானம் சதீ குணா -அங்கதன் அறிவின் எட்டு குணங்கள் –
புத்திமான் மதுரா பாஷீ-அயோத்யா -1-13- என்றும்
உத்தாரக ஸூ ச்ரூஷாதிகளால் சம்பன்னை அன்றிக்கே இருந்ததே –
6- விபரீதா
புத்தி நாஸாத் ப்ரணச்யதி -ஸ்ரீ கீதை -2-63-என்று அநர்த்த ஹேதுவாயே இருந்தது
7-விபரீதா –
ப்ரீதம் துதிநம் ப்ரோக்தம் -என்று நாளாய் விஹதமான தினத்தை யுடையதாய் இருந்தது
அதாவது ஆயுர் ஹாநியை யுடைத்தாய் இருந்தது -என்கை-
8-தே புத்தி –
அறிவுடையாரை அநு வர்த்தியாதே இருக்கிற உன்னுடைய புத்தி
நீதிமான் புத்தி சமபன்னோ தீரோ தஷ ஸூ சிர் ந்ருப -என்று ராஜாக்கள் ஆகில் ஏவம் குண யுத்தராய் ப்ராப்தராய் இருக்க -அவை இல்லாத புத்தி –
9- தே புத்தி விபரீதா –
பிரக்ருதயா ராஷசோ ஹ்யேஷ-யுத்த -17-25- என்றும்
தவிவிதோ பூத சர்க்கஸ்து தைவ ஆசூர ஏவச விஷ்ணு பக்தி பரோ தேவோ  விபரீதச் ததா சூர –  ஸ்ரீ விஷ்ணு தர்மம் -109-74-என்றும்
புத்தி வைபரீத்யத்துக்குத் தகுதியான ஜன்மம் உடைய உன்னுடைய புத்தி –

என்னுடைய புத்தி விபரீதை என்று அறிந்த படி என் -அந்தர்யாமி யன்றே அறிவதற்கு -என்ன
1-ஆசார வர்ஜிதா –
அதுவும் கார்ய கல்ப்யம் அன்றோ என்கிறான் –
2- ஆசார வர்ஜிதா –
ஆசாரம் ஆவது -சுருதி சம்ருத்தி விஹித வர்ணாஸ்ரம நிஷ்டா நுஷ்டானம்
அது உன் பக்கல் கண்டிலோமே
3- ஆசார வர்ஜிதா –
இது முற்பட இல்லை என்ன ஒண்ணாது
பர தார பர தேவதா த்ரோஹாத்ய நாசாரம் ப்ரத்யஷ சித்தமே
4-புத்திராசார வர்ஜிதா -என்னா நின்றாய்
புத்தியாவது ஆந்திர வியாபாரம்
ஆசாரமாவது பாஹ்ய காயிக வியாபாரம்
ஆனால் சாமா நாதி கரண்யம் கூடுமோ என்னில்
யத்தி மநஸா த்யாயதி தத் கர்மணா கரோதி -என்றும்
ஜ்ஞாதே ஹீச்சா இஷ்டே ஹி ப்ரவ்ருத்தி -என்றும்
புத்தியை ஒழியக் கர்மம் கூடாமையாலும்
புத்தி பிறந்து அல்லது நில்லாமையாலும்
இவ்வவிநாபாவ சம்பந்தத்தை நினைத்து சம்பந்த ஹாநியை வர்ஜிதா -என்கிறது
5- புத்திராசார வர்ஜிதா –
பரதாராபஹாரம் காண்கையாலேஇதுக்கடியான புத்தி கண்டோம் இத்தனை
உன் புத்தியிலே சதாசாரம் இல்லை என்கிறாள்
ஆக இத்தால் துராசாரம் கொண்டு துர்ப்புத்தியை அநு மித்தேன்
புத்தியைக் கொண்டு சத்புத்தி ஜனகரான சத்துக்களை அநு வர்த்தியாய் என்னும் இடம் அநு மித்தேன் என்கிறாள்
6- ஆசார வர்ஜிதா –
நை நம் சூர்ய பிரதிபதி பார்ச்வே வாதி ந மாருத
ஜலோர்மிசாலீ தம த்ருஷ்ட்வா சமுத்ரோபி ந கம்பதே -பால -15-10-என்றும்
தரச்யதயபி புரந்தர -யுத்த -14-3- என்றும்
பிறந்தவன்று தொடங்கி சகல தேவதை களும் நிலை குலையும்படி இருக்கையாலே
முதலுக்கு இவ்வாஸ்ரயத்தில் ஆசாரம் புகுந்தமையும் இல்லை
என்றும் ப்ராக பாவமே இருந்தது
7- ஆசார வர்ஜிதா
ப்ராக பாவம் என்றால் மேல் ஒரு காலாகிலும் வரக் கூடும்  இ றே
அங்கன் இன்றியிலே ஆசாராத யந்த பாவமே யாய் இருந்தது
அத்யந்த பாவமாம் படி ஏன்
ப்ரஹ்மாவை நோக்கித் தபஸ் சைப் பண்ணுவது
ருத்ரனை நோக்கித் தபஸ் சைப் பண்ணுவதாய் சதாசாரம் பண்ணிற்றிலனோ என்னில்
8- புத்திராசார வர்ஜிதா –
சைத்யம் ஹியத சா பிரக்ருதிர் ஜலச்ய -என்று ஜல தத்வத்துக்கு சைத்யம் சவ பாவமாய் இருக்கச் செய்தே

உஷ்ண ஜலம் என்று அக்னி ஸ்பர்சத்தாலே ஔ ஷ்ண்யம் ஔ பாதிகமாமாப் போலே
இவனுக்கும் ஐஸ்வர்ய அவத்ய த்வாயுதாத்ய பேஷயா ஔபாதிகமா கசதாசாரம் வந்தேறி  இத்தனை
இவன் புத்திக்கு சதா சார ஹாநி ஸ்வத ப்ராப்தமே -என்கிறது
சந்த்ருஷ்டே திஸ்ருணாம் புராமாபிரி பௌ கண்டூலதோர்  மண்டல க்ரீடா க்ருத்த புன புரரூட சிரசோ வீரஸ்ய லிப்சோர்வரம்
யாச்ஞா சைதன்ய பிராஞ்சி யஸ்ய கலஹா யந்தே மிதஸ் த்வம் வ்ருணுத்வம்

வருண் விதபிபி தோ முகா நி சதா சக்ரீவ கதம் கதயதே -அனர்க்க ராகவம் -3-41-என்று
தபஸ் ஸூ பண்ணி சாந்தனாய் இருக்கிற போதகப்பட
பரா பேஷா தசையில் ஒரு முகத்துக்கு ஒரு முகம் தோஷ கலுஷிதமாய் விப்ரதிபத்தி பண்ணிற்று இ றே –

—————————————————————————————————————————————————————————————–

சா திர்யகூர்த்வஞ்ச ததாப்யத ஸ்தாத் நிரீஷமாணா  தம சிந்த்ய புத்திம
ததர்ச பிங்காதி   பதேர மாத்யம் வாதாத் மஜம் ஸூர்யமிவோத யஸ்தம் –சுந்தர -31-19-

சா -அந்த சீதா பிராட்டி
திர்யகூர்த்வஞ்ச ததாப்யத ஸ்தாத் -திர்யக்  ஊர்த்வம் ததா அத ஸ்தாத் அபி -பக்கங்களிலும் மேலும் அப்படியே கீழும்
நிரீஷமாணா  -பார்ப்பவளாய் இருந்து கொண்டு
அசிந்த்ய புத்திம-மனத்தால் எண்ணத் தகாத புத்தி யுடையவளாயும்
ததர்ச -பார்த்தாள்
பிங்காதி   பதே-வானவர் அரசனுடைய
அமாத்யம் -மந்த்ரியாயும்
தம வாதாத் மஜம்-வாயுவின் புத்ரனமாயுமுள்ள அந்த அனுமானை
ஸூர்யமிவோத யஸ்தம்-உதயஸ்தம் ஸூ ர்யம் இவ -உதய கிரியில் உள்ள   சூரியனைப் போலே-

அவதாரிகை —
அஸோக வநிகா மத்திய கதையான பிராட்டி ராவண ப்ரேரிதை களான ராஷசிகள் உடைய தர்ஜன பர்த்ச நாத்ய சஹாதையாலும்
ராம விரஹ வ்யசன அதிசயத்தாலும்
பிராண த்யாக வ்யவசித மனஸ் சையாய்
சிம்சூபா சாகி சாகா வலம்பி நியாய எழுந்து அருளி நின்ற சமயத்திலே திருவடி கண்டு
முன்பு பெருமாள் அருளிச் செய்த வை லஷ்ண்ய ஜாதங்களை  முழுக்கத் திரு மேனியிலே காண்கையாலே பிராட்டி என்று அறுதி இட்டு
அர்த்தகதி சம்பாஷிக்கில் பீத்யா சத்தா நாசம் பிறக்கும்
சம்பாஷியாதே மீண்டிடில் அவிதித வ்ருத்தாந்தை யாகையாலே சரீர விச்லேஷம் பண்ணக் கூடும் என்று
ஐ ந்த்ர வியாகரண பண்டிதன் ஆகையாலே தன் நெஞ்சாலே தர்க்கித்து
க்ரமச பொறுப்பிப்போம்-என்று நிர்ணயித்து
வாதோபஹதனைக் கீழே வைத்து தான் உன்னத பிரதேசத்திலே இருந்து தாரை பொழியுமா போலே
சிம்சூபா வருஷத்தின் மேலே இருந்து
ராஜோ தசரதோ நாம -சுந்தர -31-2-என்று தொடங்கி கதா சரீரத்தை அம்ருத தாரை யாக வர்ஷிக்க
சிரகாலம் அவநதியாலே ஸ்தப்தமான திருக் கழுத்தை மஹதா பிரயாசேன உன்னமித்து
பிராட்டி திருவடியைத் திருக் கண் சாத்தின படியைச் சொல்லுகிறது இஸ் ஸ்லோகம்
ஸ்லோகத்துக்கு வாக்யார்த்தம்
அவள் திருக் கழுத்தை இருமருங்கும் புரட்டி
மேலும் கீழும் பார்த்து
மீ ண்டு மேலே நோக்கிப் பாரா நின்று கொண்டு
உதயகிரி சிகரஸ்தனான ஸூ ர்யனைப் போலே
ஸூ கரீவ சசிவனான மாருதாத் ம்ஜனைக் கண்டாள் -என்கிறது-

1-சா –
பூர்வ ஷணத்திலே சரீர விநியோக அத்யவசாயம் பண்ணினவள்
2- சா –
மாரீச பரிப்ரமம் தொடங்கி உபரிதந  வ்ருத்தாந்தா நபிஜ்ஞையாகையாலே அத்யந்தம் விஷண்ணையாய் உள்ளவள் –
3-சா –
அருகே ஒரு சருகு இலை ஒசைப்படிலும் ஹ்ருதயம் குலைந்து பறை யறையா நிற்குமவள்-
4- சா –
ராவண கரருஹீதையான அன்று துடங்கி செம்பளித்த கண் விழிக்க அறியாதவள் –
திர்யக்-
திருக் கழுத்தை இருமருங்கும் புரட்டிப் பார்த்தாள்-
சிரகாலம் சேஷ்டியாக கழுத்தாகையாலே இப்போது  இருமருங்கும் விதேயமாக்கினாள்-
நம்முடைய அத்யவசாயத்தைக் கண்டு முலை எழுந்தார் வ்யசனம் முலை எழுந்தார்க்குப் பொறுக்க ஒண்ணாமை யாலே
திக் அங்கனைகள் சொன்ன வார்த்தையோ என்று இருமருங்கும் புரிந்து பார்த்தாள்-
ஊர்த்வம் –
சசி பரப்ருதிகளும் நம்மைப் போலே அகப்பட்டு பிராண த்யாக அத்யவசாயம் பண்ணி
மீண்டும் ஸ்வ ஸ்வ பர்த்தாக்களை ப்ராபித்தவர்கள் ஆகையாலே
இப்போது நம்முடைய அத்யவசாயம் தவரிக்கைக்காக அவர்கள் சொன்ன வார்த்தையோ -என்று மேலே பார்த்தாள் –
2- ஊர்த்வம் –
எழுந்த சப்தத்தின் யுடைய முழக்கத்தாலே
ஆகாச குண சப்த -என்கிறபடியே சப்த குணகமான ஆகாசம் செவிக்கு இனிதாகப் பழுத்துக் கொடுத்த பழமோ என்று பார்த்தாள் –

ச-காரம்
சமுச்சயார்த்தமாம் போது வஷ்யமாணமான திக் அந்தரங்கள்சேரச் சொல்ல வேண்டாவாகையாலே
பூர்வம் நிரீஷித்த பாகங்களைப் புநர் நிரீஷணம் பண்ணினாள் சம்பரமத்தாலே –

1-ததாப்யத ஸ்தாத் –
அப்படியே கீழும் -பார்த்தாள் –
தன் கால் அடியிலே இருந்து சிலர் ஒரு வார்த்தை சொல்ல சம்பாவனை இன்றிக்கே இருக்க
கீழே பார்க்கைக்கு உபபத்தி சொல்லுகிறது ததா சப்தம் –
க்ருத்ரரும் மஹா பூதங்களும் சொல்லக் கடவதாக முற்படவே கற்பித்தார்கள் -அந்த வாசனையாலே பார்த்தாள் –
அவேஷ மாணாம் பஹூசோ வைதேஹீம் தரணி தலம் -ஆரண்ய -52-45-
ககோத்தம வாநச்பதி கத ஸ்ரீ மான்  வ்யாஜஹார சுபாம் கிராம் -ஆரண்ய -50-2-
இதி சர்வாணி பூதானி கணச பர்யதே வயன் -ஆரண்ய -52-42-
2-அதஸ்தாத்-
தன்னுடைய கிலேச  அதிசயத்தைக் கண்டு ஆச்சி தன் வயிறு எரிச்சலாலே சொன்னாளோ என்று பார்த்தாள் –

அபி –
மீண்டு மேலே பார்த்தாள் –
கீழே சொன்னவற்றுக்கு சமுச்சயம் ஆனாலோ என்னில்
நிரீஷமாணா  என்கிற மேலோடு கடியாது
கண்டது கீழே யல்லாமையாலே-

நிரீஷமாணா  –
என்கிற வர்த்தமானத்தாலே சாதாராதிசயமாக வைத்த கண் வாங்கிற்று இலள்-என்கிறது
நிரீஷ மாணா ததர்ச -இத் யந்வய-

தம் –
என்கிற பதம் திருவடியினுடைய சர்வ அனுபவத்தையும் சொல்லுகிறது –

அசிந்த்ய புத்திம்-
திரு யுள்ளத்தில் இடமுடைமை திரு மேனியிலே நிழல் எழுகை –

ததர்ச –
சமுத்திர லங்கா நாத் யாயாசம் எல்லாம் போம்படி
ஸ்ரீ மத கடாஷத்தாலே பூரணமாகப் பார்த்தாள் –

பிங்காதி   பதேர மாத்யம் –
ஒரு மஹா ராஜாவினுடைய ஆணைக்கு கீழே இருந்தான் ஒரு மந்த்ரி என்னும் இடத்தை
அவன் தானாய் இருந்த இருப்பு கோட் சொல்லிக் கொடுத்தது
யாவன் ஒருவனாலே மஹா ராஜாவினுடைய பிங்காதி  பத்யமும்
தன்னுடைய அமாத்யத்வமும் பெருமாள் உடைய பிரதம கடாஷத்தினாலே உண்டாக்கப் பட்டது -அவனை –

வாதாத் மஜம் –
கண்டகத பிராணையான பிராட்டிக்கு திருவடி திருமேனி பொறுப்பித்த படியாலே
ரிஷி தென்றல் கன்று -காமதேனுவின் கன்று -என்கிறான் –

ஸூர்யமிவ-
பிரதிபஷம் கண்டு வெருவும்படி வீர்யம் புறப்பட்டுப் பரம்புகையாலே அந்த காரத்தில் ஆதித்யனைக் கண்டதுபோலே என்கிறான் –

வாதாத் மஜம் –
மகன் என்று சட்டை இட்டு வாராதே
காற்று தானே வந்ததாகில் கண் வைக்க ஒண்ணாதே
ரூபம்   அற்றும் -விரஹிதிகள் பொறுக்க ஒண்ணாது -காற்று –

உதய யஸ்தம்-
அபூதோபமை-
பழைய ஆதித்யனைப் போலே அன்றியிலே உதயகிரியிலே உதித்து
ராவணனுக்கு அஞ்சி செல்லா நில்லாதே உதயகிரியிலே காலூன்ற வல்லான் ஒரு ஆதித்யனைப் போலே திருஷ்டாந்தம் சொல்லலாம் –

——————————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது –மித்ரமௌபயிகம் கர்த்தும்–சுந்தர – 21-19-/

January 23, 2015

மித்ரமௌபயிகம் கர்த்தும் ராம ஸ்தாநம் பரீப்ஸதா
வதம் சா நிச்சதா கோரம் த்வயாசௌ புருஷரஷப –சுந்தர – 21-19-

மித்ர மௌ பயிகம் கர்த்தும்-மித்ரம் கர்த்தும் ஔ பயிகம் -நண்பனாகச் செய்து கொள்ளத் தகுந்தவர் –
ராம -ஸ்ரீ ராம பிரான்
ஸ்தாநம் பரீப்ஸதா-உன் குடியிருப்பை விரும்புகிறவனாயும்
வதம் சா நிச்சதா கோரம் -கோரம் வதம் அ நிச்சதா -பயங்கரமான சாவை விரும்பாதவனாயும் இருக்கிற
த்வயா -உன்னாலே
அசௌ புருஷரஷப -இந்த புருஷ ஸ்ரேஷ்டரான-
அவதாரிகை –
அசோகவ நிகையிலே எழுந்து அருளி இருக்கிற பிராட்டி சந்நிதியிலே ராவணன் சென்று
தன்னுடைய அபி ஜன வித்யா விநோதங்களில் நாட்டாரைக் காட்டில் தனக்குள்ள மினுக்கத்தைச் சொல்லியும்
பஹூ விதமான ஷேத்ர தன தான்ய ரத்ன வஸ்த்ர பூஷண பரிகர பரிபர்ஹா   தாச தாசிகளைத் தருகிறேன் என்றும்
பிராட்டி நிலை பேர்க்கலாமோ என்று ஏற்றி வார்த்தை சொல்ல
பிராட்டியும் இவன் சொல்லுகிறவை ஒன்றையும் பாராதே இவனுடைய அனர்த்தத்தையே பார்த்து
இவனுக்கு ஒரு நல் வார்த்தை சொல்லுவார் இல்லாமை இ றே இவன் இப்படி பிதற்றுகிறது என்று
ஆசார்ய பரம்பரா வதியாய் பரமாசார்ய பூதை யாகையாலே இவனுக்கு ஹிதம் சொல்லுகிறாள்
சொல்லுகிற இடத்தில்
த்ருண மந்தரத க்ருத்வா -சுந்தர -21-3-என்று
1-பரபுருஷ முகம் பார்த்து வார்த்தை சொல்லக் கடவதல்ல என்னும் மர்யாதையாலே யாதல்
2-த்ருணத்தோ பாதியும் அவனை மதியாமையாலே யாதல்
3-அசேதனமான இத்துரும்பு  பிரதிபத்தி பண்ணினால் அன்றோ நான் சொன்ன வார்த்தையை இவன் பிரதிபத்தி பண்ணுவது என்னும் நினைவாலே யாதல்
4-யம் தவம் தேவி நிரீஷசே ஸ குலீன ஸ புத்தி மான் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-என்று தான் பார்த்தவர்கள் புத்தி யுக்தர்ஆவார்கள் என்னும் நினைவாலே யாதல்
5- பெருமாள் துரும்பைக் கொண்டு காகத்தை ஓட்டினால் போலே இவளும் இத்துரும்பைக் கொண்டு இவனை ஓட்ட வேணும் என்னும் நினைவாலே யாதல்
6-ஸ்ருகாலசசம் போலே பசு பிராப்யனான நரி முயல் போலே -பிராணியை ஒத்த -உனக்குப் போக்யம் இது அன்றோ என்னும் நினைவாலே ஆதல்
7-சீதோ பவ ஹனூமத -என்று தாஹகமான அக்னியை சீதளமாகப் பண்ணப் புகுகிறாப்   போலே  -அசேதனமான துரும்பை சேதனமாகப் பண்ணுவோம் என்னும் சங்கல்பத்தாலே ஆதல்
8-ஆசன்னமாய் -அருகில் இருக்கும் இவனுக்கும் நமக்கும் ஒரு வ்யவதானம் -தடை -வேணும் என்னும் நினைவாலே ஆதல்
9-துரும்பைத் தூணாக்கி அத்தூணில் நின்றும் ராகவ சிம்ஹத்தைப் புறப்படுவிக்க வேணும் என்னும் நினைவாலே யாதல்
10-மித்ர மௌ பயிகம் -அநிச்சதா-என்று சொல்லப் புகுகிற இவள் வீர பத்நியாகையாலே இப்புல்லைக் கவ்வி
அவ்வாண் பிள்ளை காலிலே விழ என்னும் நினைவாலே யாதல்
11- என்னைப் போரப் பொலியச் சொன்ன உன்னையும் நீ அடுக்கின தன தான்ய ரத்ன வஸ்த்ராதிகளையும் இத் துரும்போ பாதி காண் நினைத்து இருப்பது
என்னும் நினைவாலே யாதல்
துரும்பை முன்னே பொகட்டு
நாஹ மௌபயிகீ பார்யா பர பார்யா சதீ தவ -சுந்தர -21-6-என்று
இத்துர் புத்தி உனக்கு ஆகாது காண்
ஸ்வேஷூ தாரேஷூ ரம்யதாம் -சுந்தர -21-8-என்று உனக்கு வகுத்த பெண்டுகள் வயிறு எரியாதபடி அவர்களோடு பொருந்தி  வர்த்திக்கப் பாராய் -என்று சொல்லி
இஹ சந்தோ நவா ஸந்தி-சுந்தர -21-9-என்று
பள்ளரும் பறையருமாய்ப் பெரும் பரப்பான இத்தேசத்துக்கு உள்ள ஒருவன் அனர்த்தப் பட்டால்
இங்கனே செய்யல் ஆகாது காண் என்று ஹிதம் சொல்லி மீட்கைக்கு ஒரு நன் மனிதர் இல்லை யாகாதே –
வா ஸந்தி ஸ்ரீ விபீஷண ஆழ்வான் தொடக்கமான பரம தார்மிகர் உண்டாகையாலே சத்துக்கள் இல்லை என்ன ஒண்ணாது –
உண்டு
சதோ வா நா நுவர்த்த சே – என்றும்
பிரணி பாதேன பரி பிரஸ்நேந சேவயா உபதேஷ் யந்தி -ஸ்ரீ கீதை -4-84-என்று
தங்கள் காலிலே குனிந்து அனுவர்த்திக்கிறவர்களுக்கு இ றே அவர்கள் நல்லது சொல்வது
அப்படிக்கு அவர்கள் காலிலே குனிந்து அறியாயோ
அடியே தொடங்கிநீ இவ் ஊரில் இருந்தவள் அல்ல -நேற்று வந்த நீ குனியேன் என்று அறிந்த படி என் என்ன
ததாஹி விபரீதா தே புத்தி -உன் புத்தியின் பொல்லாங்கு தானே அதைச் சொல்லுகிறது காண் என்ன
புத்தியின் பொல்லாங்கு அறிக்கைக்கு நீ அந்தர்யாமி அன்றே -என்ன
ஆசாரவர்ஜிதா -உன்னுடைய அனுஷ்டானத்தாலே அநு மித்தேன் காண் என்று
ஹிதம் சொல்லுமவர்கள் சொல்லாத படியான இவனுடைய துராசாரத்தைக் கண்டு வெறுத்து
இனி ஒருவரையும் அநு வர்த்திக்க வேண்டா –
அனுவர்த்தன நிரபேஷமாக நான் உனக்கு ஹிதம் சொல்லுகிறேன்
நான் சொன்னபடியே அனுஷ்டிக்கப் பாராய் -என்கிறாள் –

வியாக்யானம் –
ஆமாகில் அனுஷ்டிக்கிறேன் -அந்த ஹிதம் தன்னைச் சொல்லல் ஆகாதோ -என்ன
1-மித்ரமௌபயிகம் கர்த்தும் ராம –
பெருமாளோடு உனக்கு விரோதம் பண்ணினால் பலியாது
அவரோடு உறவு பண்ணக் காண் அடுப்பது -என்கிறாள் –
2-மித்ரமௌபயிகம் கர்த்தும் ராம –
தீரக் கழிய அபராதம் பண்ணின உனக்கு அவர் திருவடிகளிலே சரணம் புக வேணும் காண்
மித்ரம் என்னா நிற்கச் செய்தே சரணம் என்பான் என் என்னில்
மேல் ஸ்லோகத்தில்
விதித சஹி தர்மஜ்ஞ  சரணாகத வத்சல தேந மைத்ரி பவது தே -சுந்தர -21-20-என்று
அவர் சரணாகத வத்சலர் காண் ஆனபின்பு நீயும் சரணம் புகை என்ற அர்த்தத்திலே மைத்ரி சப்த பிரயோகம் பண்ணுகையாலே –
சரண சப்த பர்யாயமாகக் கடவது –
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் சகயம் ஆத்மநிவேதனம் -பாகவத -7-5-23-என்று
சக்யத்தை பக்தி பிரகாரமாகவும் சொல்லிற்று இ றே
ஆகையாலே அவரை சரணம் புகை -என்கிறாள் –
தமேவ சரணம் கச்ச சர்வ பாவென பாரத -ஸ்ரீ கீதை -18-62-என்று பிராட்டியைப் போலே தார்மிகராய் இருப்பார் வேறு சிலரும் இப்பாசுரம் சொன்னார்கள் இ றே
ஆனால் நேர் கொடு நேர் சரணம் என்னாதே -மித்ரம் என்பான் என் என்னில்
ஷூத்ரரைப் போலே தம்தாமை உயரப் பார்த்து பிறரை தண்ணியராகசொல்லும்படியான புன்மை இல்லாத பிராட்டி நீர்மையாலே சொல்ல்லுகிறாள்
இவள் அன்றே இப்படி சொன்னாள்-
பெருமாள் தாமும் ராஷசனை மித்ர பாவேன-யுத்தம் -18-3-என்றும்
ஒரு குரங்கை சகா ஸ மே-என்றும்
ஒரு ஒட்டையோடக் காரனை ஆத்மசக சகா -யுத்தம் -128-4 என்றும்
உகந்த தோழன் நீ -பெரிய திரு -5-8-1- என்றும் அருளிச் செய்தார் இ றே
இன்னம் ஒரு ஆகாரத்தாலே மித்ர சப்தம் சொல்லுகிறாள்
அது என் என்னில்
ந நமேயம் -யுத்த -36-13-என்று வணங்கமில் அரக்கனை துர்மாநியான இவனை சரணம் புகை என்றால் இசையான் என்னுமத்தாலே தோழமை கொள்ளாய் என்கிறாள்
3-மித்ரமௌபயிகம் கர்த்தும்-
மிதாத் த்ராயத இதி மித்ரம் -என்று-ஞிமிதா சிநேக நே –என்கிற தாதுவிலேயாய்
பெருமாளுக்கு த்வேஷ விஷயம் ஆகாதே சிநேக விஷயமாகை அழகிது காண்
நேராக இவருக்கு சத்ருவுமாய் பிரபலனுமாய் இருக்கிற நான்
சாபேஷனாய் பெருமாளுக்கு த்வேஷ விஷயமாகாதே இவர் பக்கல் உறவு கொண்டாடப் புகுகிறேனோ -என்ன
4-மித்ரமௌபயிகம் கர்த்தும்-
இப்படி ப்ராதி கூல்யம் பண்ணின உனக்கு பத்தும் பத்தாக உறவு செய்தற வேணும் காண்
இது பண்ணினால் பிரயோஜனம் என் என்ன
5-மித்ரமௌபயிகம் கர்த்தும்-
உன் பிராண ரஷணத்தில் விநியோகம் கொள்ளலாம்
ஔ பயிகம் -உபாய
இம்மித்ர கரணம் உன்னுடைய உஜ்ஜீவனத்துக்கு உபாயம்
உபாயாத் ஹ்ரச்வத் வஞ்ச -என்று உபாய சப்தம் உபய சப்தமாய் ஸ்வார்த்தே டக்காய் இகா தேசமாய் ஆதி வ்ருத்தியாய் அகாரலோபமாய் ஔ பதிகம் என்று பதம் ஆகிறது
இப்படிக்கு இது உபாயம் என்னும் இடம்
ஸ்தானம் பரீப்சதா வதஞ்சா நிச்சதா -என்று மேலே பலம் சொல்லுகையாலே ஸ்பஷ்டம் இ றே

ஆனால் நான் உறவுக்கு இசையைக் கொள்ள முகம் தாராதே பிரதாபிகளாய் உதறிலோ -என்ன
1- ராம -வரையாதே பொருந்தும்படியான நீர்மை  யுடையவர் காண்
2- ராம –
கை வர்த்தரோடும் காகத்தோடும் குரங்கோடும் உறவு செய்கிறவர் இத்தனை யோக்யதை யுடைய உன்னை விடுகிறாரோ
3- ராம –
நீ அல்லேன் என்னிலும்
யதி வா ராவண ஸ்வயம்  ஆநயைநம் -யுத்த -18-25- என்று அழைத்து விடுவது
ஆபத்து முடுகினவாறே
கச்ச -யுத்த -59-143 என்று விட்டு அடிப்பதாகிற பெருமாள்
இத்தனை நீ இசைவாய் ஆனால் விடுகிறாரோ
4- ராமோ மித்ரம் கர்த்தும் ஔ பபிகம் –
துர் ஹ்ருதயராய்துர்  உபதேஷ்டாக்க்களுமான ப்ரஹச்தாதிகளை விட்டு
ஸூ ஹ்ருதம் சர்வ பூதா நாம் –ஸ்ரீ கீதை -5-29- என்றும்
நிவாச சரணம் ஸூ ஹ்ருத்  -ஸூ பால -என்றும் சொல்லுகிற
சர்வ பூத ஸூ ஹ்ருத்தான பெருமாளோடு உறவு செய்யப் பார்
5- ராம –
ராமயதீதி ராம
நேய மஸ்தி புரி லங்கா ந யூயம் ந ஸ ராவண -சுந்தர -43-25-என்று
உன்னை விட்டு அகன்று நிற்கிற உன்னுடைய ஊரும் உறவு முறையும் உன்னுயிரும் உன் பக்கலிலே
பழைய படியே பொருந்தும்படி பண்ண வல்லர் காண்

பண்டே என்னதாய் இருக்கிற வற்றை இவர் பொருந்தும்படி தரிக்கப் பண்ண வேணுமோ என்ன
1-ஸ்தாநம் பரீப்ஸதா வதம் சா நிச்சதா –
இதுக்கு முன்பு உன்னதே யாகிலும்
உன் குடி இருப்பும் பிராணனும் மேலும் வேண்டி இருந்தாய் ஆகில் அவரைப் பற்ற அடுக்கும் –
2-ஸ்தாநம் பரீப்ஸதா-
ஸ்தானம் -ஆவாச -இருப்பிடம்
அபி ஷிச்ய ஸ லங்கா யாம் ராஷா சேந்தரம் விபீஷனம் -பால -1-85-என்று
உன் தம்பிக்கு இப்படை வீடு கொடுக்க வாயிற்று புகுகிறார்
அது செய்யாதபடி
நீயே இப்படை வீடு ஆளவேண்டி இருந்தாய் ஆகில் -என்றுமாம்
3-ஸ்தாநம் பரீப்ஸதா-
ஸ்தானம் -ஸ்திதி -நிலை நிற்பது
தரீன் லோகன் சம்பரிக்ரம்ய- சுந்தர -38-33- என்று
காக்கை போலே கண்ட இடம் எங்கும் பரந்து திரியாதே நிலை கொள்ள வேண்டி இருந்தாய் ஆகில் -என்றுமாம் –
4-ஸ்தாநம் பரீப்ஸதா
ஸ்தானம் -சமஸ்தானம் அதாவது சதுரங்க பரிகரமும் நீயும்
கோப்புக் குலையாமல் இருக்க வேண்டி இருந்தாய் ஆகில் -என்றுமாம் –
5- ஸ்தாநம் பரீப்ஸதா-
ஸ்தானம் -அதிஷ்டானமாய் -ஆஸ்ரயம் –
ஸவாம்ய மாத்ய ஸூ ஹ்ருத் கோசாதி யாகிற
ப்ரஹச்தாதி மந்த்ரி வர்க்கமும் கும்பகர்ண இந்த்ரஜித் பிரமுகரான பிராத்ரு புத்ராதி வர்க்கமும்
தேடித் படைத்த அர்த்தமும்
இது நெடும் காலம் குடியாக்கின படை வீடும் ஆகிற இவ் வதிஷ்டானம் குலையாமல் இருக்க வேண்டி இருந்தாய் ஆகில் என்றுமாம்
படை வீடும் அதிஷ்டானமும் பார்த்து இருக்கிறேனே
வேறே ஓர் இடத்தில் போயிருக்கிறேன் என்ன
ஸ்தானம் பரீப்சதா –
பரித ஸ்தானம் ஈப்சதா -என்றும்
ரசாதலம் வாப்ரவிசேத பாதாளம் வாபி ராவண -பிதாமஹச காசம் வா ந மே ஜீவன் ஹி மோஷ்யதே-யுத்த -19-20-என்று
பூமி தன்னிலும் மலை மு ழைஞ்சுகளிலும் போகவுமாம்
உனக்கு ஜன்ம பூமியான பாதாளத்திலே போகிலுமாம்
உன்னை இப்படி வரம் தந்து வாழ்வித்த பிரம்மா லோகத்திலே போகிலுமாம்
அவ்வோ இடங்களில் உனக்கு உயிர் கொண்டு நிற்க ஒண்ணாது
சுற்றிலே போய் இருக்கப் பார்த்தாயாகிலும் அவர் உறவாக வேணும் காண்-

பிரசித்த ஸ்தலங்களிலே போயிருக்கிற போதன்றோ அவர் வேண்டுவது
அஜ்ஞாத வாசமாக ஓரிடத்திலே மறைய இருக்கிறேன் என்ன
1-வதம நிச்சதா –
உன்னை உயிர் உடன் விடில் அன்றோ நீ ஒளிந்து இருப்பது
அப்படி சாகாமல் இருக்கைக்கு வேண்டி இருந்தாய் ஆகிலும் அவரைப் பற்ற வேணும் –
2-வதம நிச்சதா –
ஒரு வ்யாத்யாதிகளால் பிறக்கிற மரணமொழிய ஒரு சத்ரு பலத்தினாலே புகுந்து தலை அறுப்புண்டாய் என்கிற பரிபவம் வாராதே ஒழிய வேண்டி இருந்தாய் ஆகில் என்றுமாம்
வீரனுக்கு சத்ருவின் கையில் படுகை அன்றோ தரம் -என்கிறாய் ஆகில் –
3- கோரம் வதம் நிச்சதா –
நாட்டாரைப் போலே சாமாறு சாம் போதும் அவரைப் பற்ற வேணும் காண்
4- கோரம் வதம் –
உன்னைக் கொல்லும் போதும் எளிதாக விடுவாரோ -ஆளை வரவிட்டு நிலை நாட்டி அந்த தூதனைக்
கொண்டு தறைக்கீடாகத் தோப்பை முறித்து உன் பசலைத் திருகி உன் ஓலக்கத்திலே மதியாதே புகுந்து
தன் நாயன் பெருமையையும் உன் தாழ்வையையும் சொல்லி
உன் படை வீடு பொறியும் புகை எழும்படி சுட்டுக் கரிக் கூடாக்கி மீண்டு வந்து விசேஷம் சொல்லும்படி பண்ணி
அனந்த பரிகரத்தை யுடைத்து
காண்பாரைக் காண்பித்துக் கொண்டு உன் ஆழிய நெஞ்சிலே கழித்தால் போலே உனக்கு நீர்ச் சிறையான கடலிலே
கல்லிட்டு அடைத்து பெரு வழி யாக்கி -குரங்குகளை கால் நடையே அக்கரைப் படுத்தி
உன் படை வீட்டை அடை மதிள் படுத்தி நீ ஆண்ட பரிகரம் அடைய வெறும் த்றையாக்கி
உன் உறவு முறையாரை மூக்கை அறுப்பது தோளைத் துணிப்பது காலைத் தறிப்பது தலையை அறுப்பதாய்
பனம் கனி உதிர்த்தால் போலே உன் தலைகளை உதிர்ப்பது
தோள்களை கழிப்பது உடலைத் துளைப்பது
இவ் வுதிரக்கு கூறையை உன் பெண்டுகளுக்கு கட்டுவதாக
கச்ச –யுத்தத் -59-143-என்று விட்டு அடிப்பதே
இப்படி சித்ரவதம் பண்ணிக் காண் உன்னை அவர் கொல்லுவது
இப்படிக்குக் கொடும் கொலை வேண்டிற்றிலை யாகில் அவரைப் பற்று என்றாகவுமாம் –

இவர் வெறுத்த மனிதர் இதற்கு முன் இப்படிப் பட்டார் உண்டோ -என்ன
1- த்வயா –
இப்படி வேறு ஒருவர் இத்தனை அபராத பண்ணினாரும் இல்லை
இப்படி பட்டவர்களும் இல்லை
ஆததாயியாய் அசஹ்ய அபசாரம் பண்ணிச் சித்ரவத ப்ராப்தனான உனக்கு இத்தனையும் வேணும்
2- ஸ்தானம் பரீப்சதா வதஞ்சா நிச்சதா த்வயா –
நீ இருக்குமாறு இருக்கும் போதும் அவர் வேணும்
நீ சாமாறு சாமபோதும் அவர் வேணும்

அவர் தாம் இங்கே சந்நிஹிதராக வேண்டாவோ -என்ன
1- அசௌ-
இந்தா இங்கே
இத்தால் இங்கே நிற்கிறார் -என்கிறாள்
2- அசௌ –
ராமமேவா நு பச்யதி -சுந்தர -16-25- என்றும்
ராமேதி ராமேதி சதிவ புத்தா விசிந்தய -சுந்தர -32-11- என்றும் எப்போதும் பெருமாளையே பாவிக்கையாலே
உரு வெளிப் பாடாய்த் தனக்கு எப்பொழுதும் சந்நிஹிதராய் இருக்கையாலே இவர் -என்று காட்டுகிறாள்
இவனுக்கு இதுக்கு முன் அவரோடு வாசனை இல்லாமையாலும்
சிநேக பூர்வா நுத்யானம் இல்லாமையாலும்
அந்ய பரநாகையாலும் தோற்றாது இ றே
பிரதி கூலனான மாரீசனுக்கு வாசனை யுண்டாகையாலே-வ்ருஷே வ்ருஷே ஹி பச்யாமி -ஆரண்யம் -39-14- என்று
பார்த்த பார்த்த இடம் எங்கும் பெருமாளாய்த் தோற்றிற்று இ றே-
ராவணன் தானும் பூசலிலே வாசனை பண்ணின பின்பு திருச் சரங்கள் நெஞ்சிலே பட்டு
ஸ்மரன் ராகவ பாணா நாம் – யுத்தம் -60-3- என்று நினைத்துக் கொண்டு பட்டான் இ றே –
3- அசௌ-உவர் –
சந்நிஹித தேச வர்த்த கால சம்பந்தியை இ றே -அயம் -இங்கே -எனபது
இங்கு புத்தியில் அதூரத்வத்தாலும் தேச கால விப்ர கர்ஷத்தாலும் அதூர விப்ர கர்ஷ வாசி யான அத-ச்ச் சப்தத்தாலே சொல்லுகிறாள் –
4-அசௌஇவர்
அச்யா தேவ்யா மனஸ் தஸ்மின் தஸ்ய சாஸ்யாம் ப்ரதிஷ்டிதம் -சுந்தர -15-52-என்றும்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னிலிட்டேன் -பெரியாழ்வார் -5-4-8- என்றும் சொல்லுகிறபடியே
இருவர் திரு உள்ளமும் இருவர் பக்கலிலே தட்டு மாறிக் கிடக்கையாலே பிராட்டிக்கு ஒரு போகியாகத்   தோற்றக் குறை இல்லைஇ றே –

ஆசன்னராக்கி அவரைப் பெறும்போது நான் பண்ணின விரோதங்களை நினைத்து விக்ருதரராய் இருக்கிறவர் என்னைக் கைக் கொள்ளுவாரோ -என்ன
1- புருஷர்ஷப –
செய்தார் செய்த குற்றங்களை நினைத்து இருக்குமவர் அல்லர்
பிழை அறியாத பெருமாள் கான் –
2- புருஷர்ஷப –
அவிஜ்ஞாதா -என்றும்
ந ஸ்மரத் யப காராணாம் சதமப்யாத் மவத்தயா -அயோத்யா -1-11- என்றும்
அபராதா நபிஜ்ஞ  சந் சதைவ குருதே தயாம் -என்றும் கவி பாட்டுக் கொண்டவர் காண்-
3- புருஷர்ஷப –
பிழை யறியாத வாழவே யல்ல
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்-யுத்த -18-3- என்றும்
குன்றனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும் -முதல் திரு -11-என்றும்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே -திருச்சந்த -111-ளும் படியான உத்தம புருஷர் காண் –
பிழை அறியுமவன் -அதமன் -பிழை அறியாதவன் மத்யமன் -பிழையை நன்மையாக கொள்ளுமவன் உத்தமன் –
4- புருஷர்ஷப –
யதிவா ராவண ஸ்வயம் -யுத்த -18-33-என்றும்
கச்சா நு ஜா நாமி -யுத்தம் -59-143-என்றும்
பிரதிகூல தசையிலே யகப்பட உன்னை ரஷிக்கைக்கு அழைத்து விடுவது -போக விடுவதாகப் புகுகிறவர்
நீயும் அனுகூலித்தால் விடுவரோ –
5- புருஷர்ஷப –
நீ புருஷர்களில் அதமனாய் இருக்குமாபோலே காண்
அவரும் புருஷர்களில் உத்தமனாய் இருக்கும் படி –
6- புருஷர்ஷப –
புருஷோத்தம -என்றபடி
அதமனாகிறான் -செய்த குற்றத்தை நினைத்து இருக்க்குமவன்
மத்யமனாகிறான் -குற்றத்தை நாளோட்டத்தோடே பொறுக்குமவன்-
உத்தமன் ஆகிறான் குற்றம் காண்பான் என் மறப்பான் என் என்று முதலுக்குக் காணாதவன்
6- புருஷர்ஷப –
இப்படி அனுகூலியாத பஷத்தில்  அவருடைய சாரங்க வ்யாபாரத்தாலே  உனக்கு வ்யாபாதனம் என்று நினைத்து இரு –
7- புருஷர்ஷப –
அவருடைய கொம்பாலே உனக்குக் கொலை என்று நினைத்திரு –

இத்தால்
இவனுக்கு இப்படி உபதேசம்  பண்ணும் படியான பிராட்டியினுடைய
நீர்மையின் ஏற்றமும்
இப்படிப்பட்ட இந்த நீர்மையை யகப்படக் கை தப்பும் படியான
ராவணனுடைய பாப ப்ராசுர்யமும் சொல்லிற்று ஆயிற்று –

——————————————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது –த்ருணமந்தரத க்ருத்வா–சுந்தர -21-3/

January 22, 2015

த்ருணமந்தரத க்ருத்வா பிரத்யுவாச ஸூ சிஸ்மிதா
நிவர்த்தய மநோ   மத்த ஸ்வ ஜநே ப்ரீயதாம் ம்ந  -சுந்தர -21-3-

த்ருணம் -புல்லை
அந்தரத -தனக்கும் ராவணனுக்கும் இடையிலே
க்ருத்வா -இருக்கும்படி செய்து
பிரத்யுவாச -பிராட்டி பதில் சொன்னாள்
ஸூ சிஸ்மிதா-பரி சுத்தமான புன்சிரிப்பை யுடையவளாய்
நிவர்த்தய-திருப்பிக் கொள்
மநோ -மனத்தை
மத்த -என்னிடத்தில் இருந்து
ஸ்வ ஜநே-உன் மனைவியர் இடத்தில்
ப்ரீயதாம் ம்ந-ப்ரீதி பண்ணட்டும்

த்ருணம் மந்தரத க்ருத்வா பிரத்யுவாச ஸூ சிஸ்மிதா
நிவர்த்தய மநோ   மத்த ஸ்வ ஜநே ப்ரீயதாம் ம்ந
அவதாரிகை –
ஸ்ரஸ்தா மால்யாம் பரதரோ வைதேஹீ மநு சிந்தயன் ப்ருசம் நியுக்தஸ் தச்யாஞ்ச மத நேந மதோத் கட -சுந்தர -18-4-என்று
உறங்கி உணர்ந்து எழுந்து இருந்த ராவணன் மதன பரவசனாய்
தீபிகா காஞ்ச நீ காச்சித் -சுந்தர -18-10-11-12-13-14-என்று
கனக தீபிகா களா சீ வாலவ்யஜன தாள வ்ருந்த  ப்ருங்கார சாமார ரமணீ யத்வஜ சத்ராதி பரி பர்ஹங்களைக் கொண்டு அங்க நா சதம் சேவிக்க
ராவணஸ் யோத்தமா ஸ் த்ரிய-சுந்தர -18-15-என்று பிரதான மகிஷிகளிலே சிலர் பின் செல்ல நிதர அசேஷ மந்த கதியாய்க் கொண்டு அசோகா வநிகையில் செல்ல

க்ருபாளுவான பெருமாளுக்கு -ராமஸ்ய வ்யவஸா யஜ்ஞா -சுந்தர -38-35-என்று கருத்து அறிந்த மகிஷி யாகையாலும்
தவம் மாதா சர்வ லோகா நாம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-126-என்றும்
அகில ஜகன் மாதரம் -சரணாகதி கத்யம் -என்றும்
உபாய பூதஸ்ய வல்லபா ப்ராப்தி யோகி நீ -பாஞ்சராத்ரம் -என்றும்
லஷ்மீ புருஷ காரத்வே நிர்திஷ்டா பரமர்ஷிபி -பாஞ்சராத்ரம் -என்றும்
விசேஷித்து புருஷகாரம் ஆகிற சம்பந்தத்தாலும்
தன பரி பவங்கள் கிடக்க இவ்வநர்த்தத்தைக் கண்டு பிராட்டியும் இவன் சொன்னவற்றுக்கு பிரதி வசனமும்
ஹிதமும்
சொல்லுகிறார் இஸ் சர்க்கத்தாலே-

காமயே த்வாம் விசாலாஷி -சுந்தர -20-3- என்றும்
யத் யத் பச்யாமி தி காதரம் சீதாம் ஸூ சத்ருசா  நநே
தஸ்மின் தஸ்மின் ப்ருது ஸ்ரோணி சஷூர் மம நிபத்யதே -சுந்தர -20-15-என்றும்
ஸ்வ சாபலம் சொன்னவற்றுக்கு
நிவர்த்தய மநோ மத்த -21-3- என்றும்
சாது தர்ம மவே ஷஸ்வ ஸாது ஸாது வ்ரதம  சர – சுந்தர -21-7- என்றும்
பொல்லாங்குகளைத் தவிர்த்து நன்மைகளை ஆசரி என்று உத்தரம் சொல்லியும்
புங்க்க்ஷ்வ போகான் யதா ஸூ கம் -சுந்தர -20-35- என்றும்
ஏக வேணி தாரா சய்யா த்யானம் மலி நம்பரம் அஸ்தா நேப்யுபவாசச்ச நைதான் யௌபயிகா நி தே-சுந்தர -20-8- என்றும் சொன்னதற்கு
அகார்யம் ந மயா கார்யமேக பத்ன்யா விகர்ஹிதம்
குலம் சம்ப்ராப்தயா புண்யம் குலே மஹதி ஜாதயா-சுந்தர -21-4-என்றும்
நாஹம் ஔபயிகீ பார்யா பரபார்யா சதீ தவ  -சுந்தர -21-6 என்றும் உத்தரம் சொல்லியும்
அசக்ருத் சம்யுகே பக்நா நா  மயா விமருதி தத வஜா
அசக்தா ப்ரத்ய நீ கேஷூ ஸ்தாதும் மம ஸூ ரா ஸூ ரா -சுந்தர -20-20- என்று
தன் ஆண் பிள்ளைத் தனம் சொன்னதற்கு
ஜனஸ் தானே ஹதஸ் தானே நிஹதே ரஷ சாம்பலே
அசக்தேன த்வயா ரஷ கருதமேதத சாதுவை
ஆஸ்ரமம து தயோ ஸூ ந்யம் பிரவிச்ச நரசிம்ஹயோ
கோசரம கதயோர் ப்ராதரோ ரபா நீதா த்வயாதமா
நஹி கந்த முபாக்ராய ராம லஷ்மண யோஸ் த்வயா
சகயம் வந்தர்சனே ஸ்தாதும் ஸூ நா சார்தூல யோரிவ -சுந்தர -21-29/30/31-என்றும்
பெருமாள் கண் வட்டத்திலே நிற்கும் நீ தப்புவையோ
புலி முன்னே நிற்கும் நாய் போலே
பதினாலாயிரம் பேரைத் தனியே நின்று கொன்று சூறை யாடின -கூறை யாடின -தனி வீரத்துக்கு
பிரதிக்ரியையாக மாரீசனைக் கொண்டு நீ பண்ணின க்ருத்ரிமத்திலே கண்டிலோம்
அவ வாண் பிள்ளைகள் நாற்றம் கேட்டு நின்றால் பின்பன்றோ உன்னுடைய வெற்றியும் ஆண் பிள்ளைத் தனமும் காணலாம் -என்று
பெருமாளுடைய பிள்ளைத் தனமும் பேசி உத்தரம் சொல்லியும்
லோகேப்யோ யா நி ரத் நானி சம்ப்ரமத்யா ஹ்ருதா நி மே
தானி தே பீரு சர்வாணி ராஜ்யம் சைததத ஹஞ்ச தே -சுந்தர -20-18-என்றும்
யானி வைஸ்ரவணே  ஸூ ப்ரூ ரத் நானி ச தாநானி ச -சுந்தர -20-33-என்றும்
ராஜ்ய ரத்ன தான தான்ய பத்த நாதிகளைத் தருகிறேன் -என்று ப்ரலோபித்தற்கு
சக்பா லோபயிதும் நா ஹமைச் வர்யேண தநேந வா
அனந்யா ராக வேணாஹம் பாஸ்கரேண  பிரபா யதா -சுந்தர -21-15–என்றும்
யம் த்வம் தேவி நிரீஷசே ச ச்லாக்ய ச குணீ தன்ய ச குலீன ச புத்திமான் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-131- என்றும்
மஹா தனத்தைப் பிரியாதே இருக்கிற என்னையா நாலு காசிட்டு வசீ கரிக்கத்தேடுதி -என்று உத்தரம் சொல்லியும்
பஹூ மன்ய ஸ்வ மாம் -சுந்தர -20-3- என்றும்
மாஞ்ச புங்ஷ்வ யதா ஸூ கம் -சுந்தர -20-33- என்றும் என்னையும் ஆதரித்துக் கொண்டு அணைய வேணும் காண் என்றதற்கு
உபதாய புஜம் தஸ்ய லோகா நா தஸ்ய சதக்ருதம் கதம் நாமோ பதாஸ்யாமி புஜமன் யஸ்ய கஸ்ய சித் -சுந்தர -21-16- என்று
அணிமிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய்-திருவாய் -10-3-5- என்று
எல்லாரும் தலையாலே சுமக்கும் படியான உலகுடைய பெருமாள் தோளிலே தலைவைத்த நான்
வேறு ஒரு ஷூ த்ரனைத் தீண்டுவதோ -என்று உத்தரம் சொல்லியும்
பஹூ மன்யஸ்வ மாம் -சுந்தர -20-3-என்றும்
நஹி வைதே ஹி ராமச் த்வாம் த்ரஷ்டும் வாப்யுபலப்ச்யதே -சுந்தர -20-27- என்றும்
ந சாபி மம ஹஸ்தாத் த்வாம் ப்ராப்து மர்ஹதி ராகவ -சுந்தர -20-28- என்றும்
என் கையிலே அகப்பட்ட உன்னைப் பெருமாள் காணவும் கிட்டவும் வல்லரோ-என்பதற்கு
அப நேஷ்யதி மாம் பார்த்தா தவத்த சீக்ரமரிந்தம-
அ ஸூ ரேப்ய ஸ்ரீ யம் தீப்தாம் விஷ்ணுஸ் தரிபிரிவ க்ரமை-சுந்தர -21-28-என்று
அ ஸூரா பஹ்ருத ஸ்ரீ யை மீட்டால் போலே    உன்னெதிரே என்னையும் மீட்கப் புகுகிற படி பார் -என்று உத்தரம் சொல்லியும்
ருத்தும் மமா நு பசய த்வம் ஸ்ரீ யம் பதரே யசச்ச மே -சுந்தர -20-25- என்று
என் ஐஸ்வர்ய சம்பத் கீர்த்திகளைப் பாராய் -என்றதற்கு
சம்ருத்தா நி வினச்யந்தி ராஷ்ட்ராணி ந கராணி ச
ததேயம் த்வாம் சமா சாத்ய லங்கா  ரத்னௌ க சங்குலா  அபராதாத் தவை கஸ்ய நசிராத வின சிஷ்யதி -சுந்தர -21-12-என்று
நசியாத இவை யடைய நசிக்கப் புகுகிறபடி பார் -என்று உத்தரம் சொல்லியும்
நிஷிப்த விஜயோ ராமோ கத ஸ்ரீர் வன கோசர வ்ரதீ ஸ்தண்டி லசாயீ ச சங்கே ஜீவதி வா ந வா -சுந்தர -20-26-என்று
ப்ரஷ்டைச்வர்யராய் சத்தை தன்னிலே யகப்பட சந்தேஹிக்கும் படி இருக்கிறார்  -என்று சொன்னதற்கு
ஷிப்ரம் தவ ச நாதோ   மே ராம சௌமித்ரிணா  சஹ
தோய மல்பமிவாதித்ய ப்ராணா நா தாஸ்யதே சரை -சுந்தர -21-33- என்று
அவர் தம்பியும் தாமுமாக உன் தலையை அறுத்து ஸூகமாய் இருக்கப் புகுகிறபடி பாரீர் -என்று உத்தரம் சொல்லியும்
ந ராமஸ் தபஸா தேவி ந பலேன ந விக்ரமை
ந தா நே ந மயா துல்யஸ் தேஜஸா யசசாபி வா -சுந்தர -20-34- என்று
புஜ பல விக்ரமதந தேஜ கீர்த்திகளாலே நமக்கு ஒரு தரம் போராது என்று சொன்னதற்கு
வர்ஜயேத் வஜ்ர முத்ஸ்ருஷ்டம் வர்ஜயே தந்த கச் சிரம்
த்வத் விதம் ந து சங்க்ருத்தோ லோகா நா தஸ் ச ராகவ
ராமஸ்ய தனுஷ சப்தம் ச்ரோஷ்யசி த்வம் மஹாஸ்வ நம
இஷவோ நிபதி ஷயந்தி ராம லஷ்மண லஷணா -சுந்தர -21-23/24/26-என்று
பெருமாள் ஆண்மைக்கு நீ தோற்றினால் உன்னை உயிர் உடன் விடுவாரோ
அவர் தாம் வேணுமோ
அவருடைய வில்லில் சிறு நாண் ஒலி யைக் கேட்டுப் பொறுத்தால் அன்றோ
திரு நாமம் சாத்தின அம்புகள் அன்றோ காட்டு காட்டு என்று சொல்லுகின்றன -என்று உத்தரம் சொல்லியும்
இப்படி இவனை மீட்கலாமோ என்று பார்க்கிறாள் இஸ் சர்க்கத்தாலே –

முதல் ஸ்லோகத்திலே
தஸ்ய தத வசனம் ச்ருத்வா ஸீதா ரௌத்ரச்ய ரஷச ஆர்த்தா தீநஸ் வரா தீ நம பிரத்யுவாச ச நைர் வாச -சுந்தர -21-1- என்று
கொடியானான பையல் வார்த்தையைக் கேட்டுத் தான் சில வார்த்தை சொன்னாள்-என்கிறது
இரண்டாம் ஸ்லோகத்திலே –
துக்கார்த்தா ருததீ ஸீதா வேபமா நா தபஸ்விநீ சிந்த யந்தி வராரோஹா பதிமேவ பதிவ்ரதா -சுந்தர -21-2- என்று
பதிரேகா கதிஸ் சதா -என்றும்
கதி என்றும் தானாவான் -நாச் திரு -8-9-என்றும்
எல்லா அவஸ்தையிலும் ரஷகர் பெருமாள் ஆகையாலே நீ இப்படி படாத படி ரஷித்துக் கொள்ளீ-என்றாள்-
இந்த ஸ்லோகத்திலே
அவர் தூரஸ்தர் வந்து ரஷிக்கும் தனையும் இவனுக்கு ஹிதம் சொல்லி மீட்கலாமோ என்னும் நினைவாலே
கிடந்த துரும்பை முன்னே பொகட்டு என் பக்கல் நின்றும் உன் நெஞ்சை மீட்டு
வகுத்த உன் பெண்களோடு பொருந்தி வர்த்திக்கப் பார் -என்கிறாள்-

வியாக்யானம் –
1-த்ருணமந்தரத க்ருத்வா பிரத்யுவாச
வார்த்தை சொல்லுகிற இடத்தில் துரும்பை முன்னே பொகட்டுச் சொன்னாள் –
வார்த்தை சொல்லுவார்க்கு எல்லாம் அங்கன் அன்றே துரும்பு போடுகை-
இதுக்கு வாசனை என் என்னில்
ஆசனம் அன்னம் உதகம் தேயம் -ஆபஸ்தம்ப -2-4-1-என்று ராஜாக்களுக்கு   ஆசனம் இடுகை விஹிதம் ஆகையாலும்
உபசரித்தாள் தான் பிரசன்னனாய் மீளுமோ என்கிற சங்கை யாலும்
அபாவே பூமிருதகம் தருணா நி -ஆபஸ்தம்ப -2-4-14-என்கிற மர்யாதையாலே ஆசனம் இட்டாள்  ஆகவுமாம்
2-த்ருணமந்தரத க்ருத்வா –
ருஜூ ப்ரணாம க்ரியயைவ தன்வீ ப்ரத்யாதி தேச -ரகுவம்சம் -6-25-என்று
நெஞ்சில் இருக்கிறதற்கு அந்ய வதுபசரித்தால் -இவள் விரக்தை என்று நிராசனாமோஎன்கிற நினைவாலே ஆகிலுமாம் –
அன்றியிலே –
3-த்ருணமந்தரத க்ருத்வா –
சமீபமுபா சங்க்ராந்தம்-சுந்தர -18-25-ஏற்று அணுக விடாதே ராவணன் ஆசன்னனாகப் புகுந்த படியாலே வ்யவதானம் வேண்டி தா அபி ஜாயதே -என்கிற ந்யாயத்தாலே துரும்பை நடுவே  பொகட்டாள் ஆகவுமாம் –
அன்றியிலே –
4-த்ருணமந்தரத க்ருத்வா –
ந பரமுக நிரீஷணம் நாபி சம பாஷணம்-என்று
ஸ்திரீகளுக்குப் பர புருஷ நிரீ ஷணம் பண்ணுதல் -வார்த்தை சொல்லுதல் செய்யலாகாது
ஆகையாலே தருணத்தை முன்னே பொகட்டு அத்தை வ்யாஜீ கரித்து அவன் உபஸ்ரோதா வாகைக்கு ஆகிலுமாம்
அன்றியிலே –
5-த்ருணமந்தரத க்ருத்வா —
பத்ய முக்தம் விசஷணை ராஷசா நாம பாவாய த்வம் வா ந பிரதிபத்யசே -சுந்தர -21-10- என்று
பண்டும் ஹித பரரான அகம்பன மாரீச மால்யவத் பிரமுகர் சொன்ன வார்த்தையும் கேட்டிலை
இப்போது இத் துரும்பு பிரதிபத்தி பண்ணில் இ றே நீ பிரதிபத்தி பண்ணுவது என்று
நிதர்சன ம்  சாராணாம் லகுர் பஹூ தருணம் நர -மாகம் -2-50-என்று
த்ருஷ்டாந்தீ கரித்துப்  பொகட்டாள் ஆகவுமாம் –
6-த்ருணமந்தரத க்ருத்வா –
அருமந்த அர்த்தத்துக்கு பிரதிபத்தாவாக வேணும் என்று
ச குலீன ச புத்தி மான் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-131- என்று
தான் பார்த்தவை   புத்தி யுக்தங்கள் ஆகையாலே ப்ரதிகூலியாத தருணத்தை சேதனம் ஆக்குவோம் என்னும் நினைவாலே யாகவுமாம்
7- த்ருணமந்தரத க்ருத்வா –
தருணத்தை சேதனம் ஆக்கி ஸ்வ சக்தியை இட்டு இந்த வைபாவத்தாலே பீதனாய் மீளுமோ என்கிற நினைவாலே ஆகவுமாம் –
8- த்ருணமந்தரத க்ருத்வா –
அஜ்ஞனாய் இருக்கிற உன்னை
த்ருணமிவ லகு  மே நே -என்று இத் த்ருணத்தோ பாதியாக நினைத்து இருப்பது என்று பொகட்டாள் ஆகவுமாம் –
9- த்ருணமந்தரத க்ருத்வா –
ஹ்ருதயே க்ருத்வா -அந்தர சப்தம் -நெஞ்சைக் குறிக்கும் -என்று கொண்டு
பிரதிகூலா சரணம் பண்ணாத இவ்வளவாலே தருணத்தை குவாளாக நெஞ்சில் கொண்டு
ந த்வா த்ருணத்வம் மன்யே -ந த்வா த்ருணாய மன்யே மஹா பாஷ்யம் -2-13-17-என்னுமா போலே
உன்னை இத் துரும்போ பாதியாகவும் நினைத்து இரேன் காண் -என்றாகவுமாம்
10- த்ருணமந்தரத க்ருத்வா –
அஜ்ஞனாய் இருக்கிற நீ
ஜ்ஞா நே ண ஹீந ப ஸூபி சமா ந-நரசிம்ஹ -16-13-என்று
இப்புல்லைத் தின்கிற பசு அன்றோ என்று பொகட்டாள் ஆகவுமாம்
11-த்ருணமந்தரத க்ருத்வா —
த்வம் நீஸ் சசவத் ஸ்மிருத -சுந்தர -22-16- என்றும்
யதந்தரம் சிம்ஹாஸ் ருகாலயோர் வ நே -ஆரண்யம் -47-45-என்றும்
திர்யக் ஜாதீயனான உனக்கு போக்யம் புல்லன்றோ-
நாஹ மௌபயிகீ பார்யா பரபார்யா சதீ தவ -என்கிற நான் ஆமோ என்று பொகட்டாள் ஆகவுமாம் –
12- த்ருணமந்தரத க்ருத்வா —
விசித்ராணி ச மால்யாநி  சாந்த நான்ய கரூணி ச
விவிதானி ச வாஸாம்சி திவ்ய அந்ய ஆபரணாநிச -சுந்தர -20-33- என்றும்
யாநி வைஸ்ரவணே  ஸூ ப்ரூ ரத்நானி ச தநா நி  ச -சுந்தர -20-33- என்றும் -என்றும்
நீ அடுக்கின வற்றை இத் த்ருணத்தோ பாதியாகக் காண் நினைத்து இருப்பது என்று பொகட்டாள் ஆகவுமாம் –
13-த்ருணமந்தரத க்ருத்வா —
தாரயத் யாத்மா நோ தேஹம் தத் சமாகம காங்ஷிணீ -சுந்தர -16-24-என்று
அவர் வருவாரோ என்கிற நசையாலே இருந்தேன் அத்தனை
உத்பத்ய வேண் யுத்க்ரத நே ந ஸீ கிராமஹம் கமிஷ்யாமி யமச்ய மூலம் -சுந்தர -28-17- என்றும்
தருணம் ஸூ ரஷ்ய ஜீவிதம் -என்றும்
த்ருணத்தோபாதி உயிரில் சரக்கில்லை காண் முடியப் காண் புகுகிறேன் என்று  பொகட்டாள் ஆகவுமாம்-
14-த்ருணமந்தரத க்ருத்வா —
லங்கா  ரத்னௌ கே சங்குலா  அபராதாத் தவை கஸ்ய நசிராத் வின சிஷ்யதி -சுந்தர -21-22-என்று
உன் குற்றத்தாலே இலங்கை நசிக்கப் புகுகிறது
அப்போதைக்கு இத்துராலைத் திரட்டி ஒரு குடிலைப் பண்ணிக் கொள்ள வல்லீ-என்று பொகட்டாள் ஆகவுமாம் –
15-த்ருணமந்தரத க்ருத்வா —
தருண  உலப ந்யாயத்தாலே சாமான்ய விசேஷ ரூபமான கார்யங்களை உபதேசிக்கிறேன் காண் -என்றுமாம் -உலபம் -கொடி
16-த்ருணமந்தரத க்ருத்வா —
நீ உபதேசிப்பது அவர் என் குற்றங்களைப் பொறுக்கில் அன்றோ -என்று நினைக்கிறானாக கருதி
கடலிலே இத்துரும்பைப் பொகட்டால் இது நடுக்  கிடவாதாப் போலே
அவர் திரு உள்ளத்திலே கிடவாது காண் –
ந  ச்மரத்யப காராணாம் சதமப்யாத்மவத்தயா – அயோத்யா -1-4- என்று பிழை அறியாத பெருமாள் காண் -என்கிற நினைவாலே யாகிலுமாம்
17-த்ருணமந்தரத க்ருத்வா —
நடுக் கிடந்த துரும்பை எடுத்துப் பொகட்டு இப்படியே
ஈர்ஷ்யா ரோ ஷௌபஹிஷ்க்ருத்ய -அயோத்யா -27-7-என்று நெஞ்சில் ரோஷாதிகளைப் பொகட்டு அவரைப் பற்று என்றாள் ஆகவுமாம்
18-த்ருணமந்தரத க்ருத்வா —
மித்ர மௌபயிகம் கர்த்தும் ராம ஸ்தானம் பரீப்சதா வதஞ்சா நிச்சதா கோரம் -சுந்தர -21-19-என்று
உன் குடியிருப்பும் உன் உயிரும் வேண்டி இருப்பதாகில் இப்புல்லைக் கவ்வி
அவ வாண் பிள்ளை காலிலே விழாய் என்று பொகட்டாள் ஆகவுமாம்
19-த்ருணமந்தரத க்ருத்வா —
துரும்பை தூணாக்கி அத தூணிலே ராகவ சிம்ஹத்தை புறப்பட விட்டுப் பொல்லாங்கு நினைத்த
நெஞ்சைப் பிளப்பிக்கும் நினைவாலே ஆகிலுமாம்
20-த்ருணமந்தரத க்ருத்வா —
தருண லோஷ்டாதிகளை முன்னே முடி எறிந்து பிரதிஜ்ஞை பண்ணக் கடவது இ றே
அந்த மர்யாதயாலே துரும்பை முன்னே எறிந்து
ஷிப்ரம் தவ ச நா தோ மேராம சௌமித்ரிணா சஹ
தோய மல்பமிவாதி தய ப்ராணா நாதாஸ் யதே ஸ்ரை-சுந்தர -21-83-என்று
உன் உயிரைத் தீண்டார் -கோலிட்டுக் குத்தி எடுத்துப் போகப் புகுகிற படியைப் பார் என்று பிரதிஜ்ஞை பண்ணுகிறாள் ஆகவுமாம்
21-த்ருணமந்தரத க்ருத்வா —
கிள்ளி-என்று கொண்டு-ந சாபி மம ஹஸ்தாத் த்வாம் ப்ராப்தும் அர்ஹதி ராகவ -சுந்தர -20-28- என்ற உன் முன்னே
அப நேஷ்யதி மாம் பார்த்தா தவத்த சீக்ரமரிந்தம-சுந்தர -21-28-என்று உன்னைத் தலை அறுத்துக் கொண்டு போகப் புகுகிறபடி பாராய் என்றாகவுமாம்
22-த்ருணமந்தரத க்ருத்வா —
விப்ர பீடாகரம் சேத்தியா மங்கம் ப்ராஹ்மணஸ்யது-என்று சாஸ்திரம் சொல்லுகையாலே
ப்ருங்கார தாரா ரோத்து ச்ச சூ க்ரச்யாஷி ச தஷிணம் பவித்ரஸ்ய சிரோக்ரேண ஷோபயாமாச வாமன -என்றும்
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய -பெரியாழ்வார் -1-8-7-என்றும்
துரும்பாலே சுக்கிரன்  கண்ணைக் கலக்கினால் போலே
தஸ்மின் தஸ்மின் ப்ருச்ரோனி சஷூர் மம நிபதயதே -சுந்தர -20-15-என்று
பரதார தர்சனம் பண்ணின உன் கண்ணைத் துரும்பை இட்டுக் கலக்குகிறேன் -என்றாகவுமாம்
23-த்ருணமந்தரத க்ருத்வா —
ச தர்ப்பம் சம்ச்தராத் க்ருஹ்ய -சுந்தர -38-30-என்றும்
ஹி நச்து ஸ்ம ச தஷிணம் -சுந்தர -38-37- என்று
தர்ப்பத்தை இட்டுக் கண்ணறையனான காகத்தைக் கண்ணரை யாக்கினால் போலே
இத் துரும்பை இட்டு உன் கண்ணைக் கலக்குவிக்கிறேன் -என்று  பொகட்டாள் ஆகவுமாம் –
24-த்ருணமந்தரத க்ருத்வா —
நர நாராயணர்களில் நாராயணன் இஷீகத்தைக் கொண்டு டம்போத் பாவனை கொன்றால் போலே இத்துரும்பை இட்டு உன்னைக் கொல்லுகிறேன்-என்று  பொகட்டாள் ஆகவுமாம் –
25-த்ருணமந்தரத க்ருத்வா —
சீதாயாஸ் தேஜஸா தகதாம் -சுந்தர -51-36-என்றும்
ந த்வா குர்மி த சக்ரீவ பாச்ம பச்மார்ஹா தேஜஸா -சுந்தர -22-20- என்றும்
என் பாதி வ்ரத்ய தேஜஸ் ஸிலே இத்தூரலை இட்டு மூட்டி உன்னைச் சுடுகிறேன் என்று  பொகட்டாள் ஆகவுமாம் –
26-த்ருணமந்தரத க்ருத்வா —
க்ருதி சேத நே -என்கிற தாதுவிலேயாய் கிடந்த துரும்பை நடுவே கிள்ளிப் பொகட்டு
இப்படியே அங்குள் யக்ரேண தான்ஹன்யாம் -யுத்தம் -18-24- என்றும்
பொல்லா  அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை -திருப்பாவை-13- என்றும் சொல்லுகிறபடியே
உன் தலையைக் கிள்ளிப் போக்குவிக்கிறேன் -என்று  பொகட்டாள் ஆகவுமாம் –
ஆக இப்படி துரும்பைப் பொகட்டு மேல் செய்தது என் என்னில்
1-பிரத்யுவாச –
பிரதி வசனம் பண்ணினாள்
2- பிரத்யுவாச
கேட்ட வார்த்தைக்கு உத்தரம் சொன்னாள்
அவன் சொன்ன வற்றுக்கு இசைந்து ஓம் என்றாலும் உத்தரமாம் இ றே
அப்படியோ என்னில்
3- பிரத்யுவாச –
பிரத்யாக்யானம் பண்ணினாள் -மறு வார்த்தை
அதாவது -நாஹம் ஔபயிகீ பார்யா-சுந்தர -21-6-என்றும்
ந மாம ப்ரார்த்தயிதும் யுக்தம் ஸூ சித்திமிவ பாபக்ருத் அகார்யம் ந மயா கார்யம் -சுந்தர -21-4-என்றும் பிரதி ஷேதித்துச் சொன்னாள்
4- பிரத்யுவாச –
நிஷேதித்த அளவன்றிக்கே பிரதி கூலமாகவே சொன்னாள் -அதாவது
ப்ராணா நாதாஸ் யதே சரி -சுந்தர -21-33- என்றும்
ராஷ சேந்திர மகா சர்ப்பான் ச ராம கருடோ மகான் உத்தரிஷ்யதி வேகேன-சுந்தர -21-27- என்றும்
அவனுக்கு பருஷமாகவே சொன்னாள் -பொறுக்க ஒண்ணாத படி வார்த்தை சொன்னாள் –
உவாச –வசபரிபாஷணே- பரக்கச் சொன்னாள் -ஒரு வார்த்தை சொன்னாள் ஆகை அன்றிக்கே
பரித-
பரக்க விட்டு வார்த்தை சொன்னாள் -அதாவது –
சாது தர்ம மவே ஷஸ்வ சாது சாது வ்ரதம் சர -சுந்தர -21-7- என்றும்
யதா தவ ததான் யேஷாம்தாரா ரஷ்யா நிசாசர-சுந்தர -21-14- என்றும் பொறுமை சொல்லியும்
ஏவம் த்வாம்  பாப கர்மாணம் வஷ்யந்தி நிக்ருதா ஜனா
திஷ்ட்யைதத் வ்யசனம் ப்ராப்தோ ரௌத்ர இத்யேவ ஹர்ஷிதா -சுந்தர -21-14-என்று
ஹ்ருதய பேதம் பிறக்கும் படி சொல்லியும்
மாஞ்சாச்மை பூத்வா நிர்யாதயிதுமர்ஹசி -சுந்தர -21-22- என்றும்
விதித சஹ தர்மஜ்ஞ சரணாகத வத்சலா தேன மைத்ரீ பவது -சுந்தர -21-20- என்று
ஜ்ஞான தானம் பண்ணியும்
அந்யதா த்வம் ஹி குர்வாணோ வதம் ப்ராப்ச்யசி -சுந்தர -21-33 என்றும்
ப்ராணா நாதச்யதே சரை- -சுந்தர -21-33 என்றும் தண்டம் சொள்ளையும்
இப்புடைகளிலே
சாம
பேத
தான
தண்ட
ரூபமான சதுர் உபாயங்களையும் சொன்னாளே-

இப்படிக்கன்றி சொல்லுகிற போது முக விகாசம் இருந்த படி என் என்னில்
1-ஸூ சிஸ் மிதா –
எதிரி கனவியனாகில்-தர்மம் வீர்யம் பலம் இவற்றால் கணத்தவனாக -இருந்தால் அன்றோ  இ றே
சம்ரம்பம் பண்ண வேண்டுவது – கோபம் போன்றகுணன்களைக் காட்ட வேண்டியது
அநீதி யாலே தன்னடியே  நசிக்கப் புகுகிற இவன் இ றே இப்படிச் சொல்லுகிறான் -என்று சிரித்தாள்
2- ஸூ சிஸ் மிதா —
ஹ சந்நிவ ந்ருபோ ஹந்தி -என்று ராஜாக்கள் குற்றவாளரை வெட்டி வைக்கச் சொல்லும் போதும் சிரித்து இ றே சொல்லுவது –
இவள் தானும் -அபிஜ்ஞா ராஜ தர்மாணாம்-அயோத்யா -26-4- என்று ராஜ மரியாதை அறியுமவளாய் ராஜ புத்ரியுமாய் ராஜ மஹிஷியுமாய் இ றே இருப்பது
அவன் தருகிறேன் என்ற தான தான்ய ரத் நாதிகளைக் கேட்டு ஸ்திரீ சாபல்யத்தாலே உகந்து சிரித்தாளோ என்னில்
3- ஸூ சிஸ் மிதா –
அர்த்த சாப்ள நிபந்தனம் அல்ல வைராக்ய நிபந்தனம் என்கிற பாவ சுத்தி சிரிப்பின் படியிலே காணலாய் இருந்தது
4-ஸூ சிஸ் மிதா —
ஆஸ்ரமம் து தயோ ஸூ ந்யம் பிரவிச்ய நரசிம்ஹயோ கோசரம் கதயோர் ப்ராத்ரோர்ப நீதா த்வயாதம -சுந்தர -21-30- என்று
அவ் வாண் பிள்ளை முன்னேறித் தோற்பித்து என்னைச் சிறை கோலமாட்டாத அபாலன் தான் கிடீர்  –
ந ராமஸ் தபஸா தேவி ந ப லேந ந விக்ரமை
ந த நேந மயா துல்ய -சுந்தர -21-33-என்று
பெருமாளைத் தரம் அல்லர் என்கிறான் என்று சிரித்தாள்
5-ஸூ சிஸ் மிதா –
வதம் ப்ராப்ச்யசி -சுந்தர -21-23- என்று கழுகும் பருந்தும் கவ்வக் கிடக்கிறவன் தான் கிடீர்
சங்கே ஜீவதி வா ந வா -சுந்தர -20-26- என்று பெருமாள் திரு மேனிக்குத் தீங்கு சொல்லுகிறான் -என்று சிரித்தாள் –
6-ஸூ சிஸ் மிதா –
விபீஷண  விதேயம் ஹி இலங்கைச் வர்யமிதம் க்ருதம் – யுத்த -116-13- என்றும்
ஸ்ரீ மதா ராஜ ராஜேன லங்காயா ம்பி ஷேசித -யுத்த -28-27-என்று
விபீஷணனுக்குப் பெருமாள் கொடுத்த ஐஸ்வர்யத்தை இ றே
ருத்திம் மமா நு பஸ்ய த்வம் ஸ்ரீ யம் பத்ரே  -சுந்தர -20-25- என்று தன்னதாக பிரமித்துப் பிதற்றுகிறான் என்று சிரித்தாள் ஆகவுமாம்
7-ஸூ சிஸ் மிதா –
உபதாய புஜம்  தஸ்ய லோக நாதச்ய சதக்ருதம் கதம் நாமோ பதாஸ் யாமி -சுந்தர -21-16- என்று இருக்கிற என்னை இ றே இப்பையல்
மாஞ்ச புங்ஷவ -சுந்தர -20-33- என்று பிதற்றுதல் -என்று சிரித்தாள் ஆகவுமாம்
8-ஸூ சிஸ் மிதா –
குசலீ யதி காகுத்ச்த கிந்நு  சாகர மேகலாம்  மஹீம் தஹதி -சுந்தர -36-13-என்று பெருமாள் குறி யசங்கா தே இருக்க நானோ இவ்விருப்பு இருப்பேன் என்று
தத சா ஹ்ரீமதீ -சுந்தர -36-6-போலே வ்ரீளா ஸ்மிதம் பண்ணினாள் ஆகவுமாம் –
அன்றியிலே
9-ஸூ சிஸ் மிதா –
ததோ மலிந சம்வீதாம் -சுந்தர -15-18-என்றும்
மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப்புறம் வெளுத்து -நாச் திரு -1-8-என்றும்
விரஹ விஷண்ணை  யாய் இலையமுது செய்யாமை யாலே ஸ்மிதம் பண்ணின போது
வெளுத்த திரு முத்து ஒளியை உடையளாய் இருந்தாள் என்றுமாம்
10-ஸூ சிஸ் மிதா –
என்று பிராட்டியை அபஹரித்தான் என்று கேட்ட போது
க்ருதம் கார்யமிதி  ஸ்ரீ மான் வ்யாஜஹார பிதா மஹா -ஆரண்ய -52-13-என்று
இனி ராவணன் பட்டான் என்று ப்ரஹ்மா பிரியப் பட்டால் போலே இவளும் இவன் அபராதம் பண்ணின போதே பட்டான் என்று
ப்ரீதி ஸ்மிதம் பண்ணினாள் ஆகவுமாம் –

இப்படி ஸ்மிதம் பண்ணிச் சொன்ன பாசுரம் ஏன் என்னில்
நிவர்த்த யேத்யாதி-
அக்ருத்யங்களை தவிர்த்து
க்ருத்யங்களை அனுஷ்டி -என்கிறாள் –
1-நிவர்த்தய மந-
மநோ வியாபாரம் ஆத்மா தீனம் அன்றோ -ஆனபின்பு நெஞ்சை மீள் -என்கிறாள்
2- மநோ நிவர்த்தய –
நல்ல குதிரை யாட்கள் குதிரையைக் கசை தாங்குமா போலே
மந  ப்ரவாஹத்தை மீட்கப் பார் –
3- மநோ நிவர்த்தய –
மநோ ஹி ஹேது சர்வேஷாம் இந்த்ரியாணாம் ப்ரவர்த்தநே  என்கிறபடியே –
கொத்து முதலியான மனஸை மீட்கவே பாஹ்ய இந்த்ரியங்களும் மீளும் காண்
4-நிவர்த்தய ம ந –
உன் நெஞ்சை மீட்டு பிராணன்களை மீட்டுக் கொள்ளாய்-
4- நிவர்த்தய ம் ந –
ஆத்மைவ ஹ்யாத்மாநோ பந்து ராத்மைவ ரிபுராத் மந -ஸ்ரீ கீதை -6-5-என்று நித்ய சத்ருவை ஜெயிக்கப் பாராய்
5-மநோ நிவர்த்தய –
நாட்டில் வேகவத் பதார்த்தங்களுக்கு மநோ ஜவம் என்று திருஷ்டாந்தம் சொல்லலாம் படி
கடுவிசையாய் ஆயிற்று இருப்பது -கை கழிந்தால்   மீட்க ஒண்ணாது
கரணாதிபனான நீ மீட்கப் பார்
மம த்வச்சா நிவ்ருத் தஸ்ய ந ப்ராவர்த் தந்த வர்த்தம நி -அயோத்யா -59-1- என்று
அஸ்வ ஹ்ருதயம் அறியும் ஸூ மந்தரன் தப்பச் சொன்னான்  இறே-

கிடக்கிற ராஜ கார்ய மேடு பள்ளமும் மந பிரவ்ருத்தியைத் தவிரப் போமோ -என்ன –
1-மத்தோ நிவர்த்தய –
புறம்புள்ளவற்றை  தவிரச் சொன்னேனோ -என் பக்கலில் நின்றும் மீள்
2-மத்தோ நிவர்த்தய –
பஞ்சாஸ் யாமிவ பன்னகீம் -சுந்தர -51-23-என்று விஷவத் பதார்த்தங்கள் போலே உனக்கு விநாச ஹேதுவான என் பக்கல் நின்றும் மீள்
3- மத்தோ நிவர்த்தய –
நயந்தி நிக்ருதி ப்ரஜ்ஞம் பரதாரா பராபவம் -சுந்தர -21-9- என்று
எப்படியும் பரிபவ  சீலைகளாய் யாயிற்று பரதாரம் இருப்பது
ஆனபின்பு என் பக்கல் நின்றும் மடை மாறாய்-

உன்பக்கல் நின்றும் மாறினால் மனஸ் ஸூ நிர் விஷயமாய் இருக்குமோ என்னில்
1-ஸ்வ ஜநே ப்ரீயதாம் –
வகுத்த விஷயத்திலே உகக்கும் படி பாராய்
2-ஸ்வ ஜநே ப்ரீயதாம் –
ஸ்வேஷூ தாரேஷூ ரதிம்  நோபலபாம் யஹம் -சுந்தர -20-30- என்கிற நினைவை மாறி
ஸ்வேஷூ தாரேஷூ ரம்யதாம் -சுந்தர -21-8- என்கிறபடியே
அக்னி சாஷிகமாகக் கைப்பிடித்த தர்ம தாரங்களை ரமிக்கப் பார்
3-ஸ்வே ஷூ தாரேஷூ-
விஜாதீயரான மனிதரை விட்டு
சஜாதீயர்களான ராஷச ஸ்திரீகளோடே புஜிக்கப் பார் –
ப்ரீயதாம் -என்று ராக ப்ராப்தமாக வருமத்தை பலத்திலே ச்நேஹிப்பிக்கலாமோ என்னில்
ப்ரீயதாம் என்று பிரசாதிக்கிறாள்
மந ப்ரீயதாம் –
நீ பிரியப் பட்டாய் ஆகில் மனஸ் ஸூ தான் பிரியப் படுவதாக –
ஸ்வ ஜநே -என்று விஷய சப்தமி -ஏழாம் வேற்றுமை -யாகை அன்றிக்கே
அதி கரண சப்தமி யாக்கி ஸ்வ ஜனத்தில் வர்த்திக்கிற மனஸ் ஸூ பிரியப் படுவதாக என்று பொருளாம் –
அதாவது -தாஸ்த்வாம் பரிசரிஷ் யந்தி -சுந்தர -20-32- என்றும்
யாவத்யோ மம சர்வாசாம் ஐஸ்வர்யம் குரு ஜானகி -சுந்தர் -20-31-என்றும்
என்னை அவர்கள் சேவிக்கும் படி சொன்ன படியாலே அவர்கள் வெறுத்தாயிற்று இருப்பது
அது தவிர்ந்து உன்னளவிலே அவர்கள் நெஞ்சு குளிரும்படி பண்ணு என்றுமாம் –
4-ஸ்வ ஜநே மந ப்ரீயதாம் –
ஸ்வ ஜனத்தில் மனஸ் ஸூ பிரியப் படுவதாக
ஸ்வ ஜனத்தினுடைய மனஸ் ஸூ என்றபடியே
பரி பூதா விஷண்ணா சேத பார்யா பர்த்தா விநச்யதி -என்று
நீ பண்ணின பாராமையாலும் உபேஷையாலும் அவர்கள் வெறுத்தால் உனக்கு அநர்த்தம் வரும்
அது வாராதபடி அவர்கள் நெஞ்சு குளிரும்படி நிவர்த்தய -என்றாகிலுமாம்-

மத்தோ மநோ நிவர்த்தய
த்யேயோ நாராயணஸ் சதா -பாரதம் -ஆநு -என்றும்
த்யேயஸ் சதா சவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயண -நாரசிம்ஹ புராணம் என்றும்
ச்ம்ருதோ யச்சதி சோபநம்  -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-78-என்றும்
ராமேதி ராமேதி சதைவ புத்த்யாவி சிந்தய -சுந்தர -33-11- என்றும்
ஜகாம மநஸா ராமம் -சுந்தர -15-54- என்றும்
நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் -பெரியாழ்வார் -5-4-8-என்றும்
அடிகள் தம் அடியே நினையும் அடியவர் -பெரிய திரு -2-6-10-என்றும்
உஜ்ஜீவனமான விஷயத்தை அநவரத பாவனை பண்ண ப்ராப்தம் அத்தனை போக்கி
அநர்த்த ஹேதுவாக என்னை நினையாதே காண்
நிவர்த்தய
ப்ரவ்ருத்தி தர்மம் ஒருகாலும் ஆகாது
நிவ்ருத்தி தர்மமே உத்தாரகம் காண் –
மநோ நிவர்த்தய –
நிவ்ருத்திக்கு விஷயம் நிஷித்தம்
பிரவ்ருத்திக்கு விஷயம் சம்சாரம்
ஆனபின்பு நிஷித்தங்களை விட்டு விஹிதங்களிலே ப்ரவர்த்திக்கப் பார் –

ஆக
இந்த ஸ்லோகத்தாலே
ஸ்வ அநர்த்தம் கிடக்க -பர அநர்த்தம் பொறுக்க மாட்டாத பிராட்டியுடைய
நீர்மையும்
கிருபையும்
சொல்லுகிறது –

————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது –துஷ்கரம் க்ருதவான் ராமோ-சுந்தர -15-23-/ராமஸ்ய வ்யவஸா யஜ்ஞா-சுந்தர -16-4-/ஹிமஹத நளி நீவ நஷ்ட சோபா –சுந்தர -16-30-

January 22, 2015

துஷ்கரம் க்ருதவான் ராமோ ஹீநோ யத நயா ப்ரபு
தாரயத் யாத்மநோ தேஹம் ந சோகே நா வசீததி-சுந்தர -15-23-

துஷ்கரம் க்ருதவான் ராமோ -ஸ்ரீ ராமபிரான்  செயற்கரிய செயலை செய்தார்
ஹீநோ யதநயா ப்ரபு -அநயா ஹீ ந -ப்ரபு -இந்த சீதா தேவியைப் பிரிந்து இருந்த போதிலும் பிறர் வருத்தம் அறியாத ப்ரபுவாய்
தாரயத் யாத்மநோ தேஹம் -ஆத்மந   தேஹம் -தாரயதி யத் -தன் திருமேனியைத் தரிக்கிறார் என்பதுவும்
ந சோகே நாவசீததி-சோகேந ந அவசீததி யத் -துன்பத்தால்-நசிக்க வில்லை என்பதும் செயற்கரிய செயல் –

அவதாரிகை –
அந்யத்ர பீஷ்மாத் காங்கேயா  தந்யத்ர ச ஹநூமத -ஹரிணீ குரமாத்ரேண சர்மணா மோஹி தம் ஜகத் -என்று
பீஷ்மனோடு ஒக்க மான் குளப்படியோடு ஒத்த ஸ்திரீயின் அவயவ விசேஷத்தில் அகப்படாதே
அத்யந்த விரக்தனான திருவடி அகப்பட பிராட்டியைத் திருவடி தொழுது
பிராட்டி வை லஷண்யத்தையும்
இவள் எழுந்து அருளி இருக்கிற தைன்யத்தையும் கண்டு
இவளை இப்படி இருத்துவதே -என்று
பெருமாளை சிஷ்ட கர்ஹை பண்ணுகிறான் –

துஷ்கரம் க்ருதவான் ராமோ-
நாம் பெரிய கடலைக் கடந்து அரும் தொழில் செய்தோமாக நினைத்து இருந்தோம் –
பெருமாள் நம்மிலும் அரும் தொழில் செய்தாராய் இருந்தது –
1-ராம –
ஏக தார வ்ரதராய்
பிராட்டியை ஒழிய வர்த்தியாத பெருமாளுக்கு துஷ்கரம் பிரணயிகளாய்ப் பிறந்தாராகச் செய்ய அரிது ஒன்றைச் செய்தார்
துஷ்கரம் –
காட்டுக்குப் போகிற போது அகப்பட கூடக் கொண்டு போன பெருமாள் தமக்கும்
இதுக்கு முன்பு செய்ய வரிது
இஸ் சாஹசத்தைச் செய்யக் கோலி தவிர்ந்தாரோ என்னில்
க்ருதவான்
பத்தும் பத்தாக அனுஷ்டித்திலரோ
இப்படி இவர் செய்தது தான் ஏது என்னில்
2-ராம –
பிராட்டியைப் பிரிந்து குறி அசங்காமல் இருந்தார்
3-ராம –
பிராட்டியைப் பிரிந்தால் புகர் அழிந்து எழில் குலைந்து முகம் வெளுத்து உடம்பு இளைத்து
இட்ட கால் இட்ட கைகளாய் -திருவாய் -7-2-4-இருக்க வேண்டாவோ –
இத்தைப் பற்ற இ றே பிராட்டியும்
கச்சினன தத்தேம சமாந வர்ணம் தஸ்யா நநம் பத்ம சமாந கந்தி -சுந்தர -37-28-என்று
அம்முகத்தில் ஒளியும் மணமும் மாறாதே  -பொன் போல ஒளியும் -தாமரை போலே மணமும் -செல்லா நின்றதோ என்று கேட்டது
4- ராம –
பொடி மூடு தணலாய் இருந்தார்
வடிவில் பச்சையைக் காட்டித் துவக்குக் கொண்டு போய் நடுக் காட்டிலே தள்ளுவதே –

கர்மத்தாலே அபஹ்ருதை யானாள் அல்லது இவர் தள்ளினாரோ -என்ன
இவளைக் கண்டு வைத்தால் அவர் தாம் அகலப் பெறுவாரோ
1-ஹீநோ யத நயா-
இவர் இவளை விட்டு மான் பின்னே போகப் பட்டன்றோ இவ்வபஹாரம் தான் பிறந்தது –
2-அநயா ஹீந –
இறையும் அகலகில்லேன் -திருவாய் 6-10-10–என்கிற இவளையா பிரிவது
3-அநயா ஹீந –
மதுப்பினுடைய நித்ய யோகத்தையும் குலைத்திலரோ
4-அநயா ஹீந —
அநந்ய பாவாம நு ரக்த சேத நாம் த்வயா விஹீ நாம் மரணாய நிச்சிதாம் -அயோத்யா -27-22-என்று
சொன்ன இவளை யன்றோ பிரிவது
5- அநயா ஹீந —
ச்ரத்தயா தேவோ  தேவத்வமச்நுதே -யஜூ காட -3-3-என்றும்
அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய சா ஜனகாத்மஜா -ஆரண்ய -37-18-என்றும்
அனந்யா ராகவேணாஹம பாஸ்கரேண ப்ரபாயதா -சுந்தர -21-16-என்றும்
எல்லாப் படியாலும் தனக்கு மினுக்கம் உண்டாக்குகிற இவளையா விடுவது-
1-ப்ரபு-
ஒன்றும் அறியாதாரே இருந்தார் –
ப்ரபுத்வமாவது அறியாத்தனம் இ றே-
2- ப்ரபு –
மேன்மை யுண்டு இத்தனை போக்கி நீர்மை இல்லையே இருந்தது
3- ப்ரபு –
ஆனை குதிரை கட்டவும்
படையாளவும்
கணக்குக் கேட்கவும்
ஆயுதம் வஹிக்கவும்
கற்றார் இத்தனை போக்கி பிரணயித்வத்தில் புதியது உண்டிலராய் இருந்தது
4-ப்ரபு –
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் -நாச் திரு -13-1-என்றும்
பஹூதா விஜாயதே -புருஷ ஸூ க்தம் -என்றும்
ப ஹூநி மே வ்யதீதாநி ஜன்மாநி -ஸ்ரீ கீதை -4-5-என்றும்
பிறப்பில் பல்பிறவிப் பெருமான் -திருவாய் -2-9-5-என்றும்
பிறக்கிற பிறவி வெள்ளத்தில் ஒரு பெண் பிறவி பிறந்தானாகில்  இ றே
இவ்வினையாளனாய் பெண் பிறந்தார் எய்தும் பெரும் துயர் அறிவது-

இப்படி பிரபுக்களாய் இவர் செய்ததுஎன் என்னில்
1-தாரயத் யாத்மநோ தேஹம் –
பிராட்டியைப் பிரிந்த பெருமாள் கடலிலே புக்காராய் முடிந்தார் என்று பேர் படைக்க வேண்டாவோ
2-தாரயதி –
தரித்து இருப்பதே
இத்தனை போது சத்தை அழிய வேண்டாவோ
நித்தியமான ஸ்வரூபத்தை அழிக்கப் போமோ -என்ன
3-ஆத்மா நோ தேஹம் –
நித்தியமான ஸ்வரூபம் இருக்க
இச்சா க்ருஹீதாபி மதோருதேக-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-84-என்று
வந்தேறியான உடம்பை விடலாகாதோ –
நித்யம் நித்யாக்ருதிதரம் -சாத்வதம் -என்று  -ஸ்வரூபத்தோபாதி ரூபமும் நித்யம் அன்றோ என்ன
4-ராம ஆத்மா நோ தேஹம் –
அப்ராக்ருதமான சரீரத்தைச் சொன்னேனோ –
ஆதி அஞ்சோதி வுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த படியை விட்டால் ஆகாதோ
5- ஆத்மா நோ தேஹம –
தாம் ஒரு பிராட்டி யாய்-
பராதீ நா ஸ்த்ரிய சர்வா -என்றும்
மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே -திருவாய்-5-4-3-என்றும்
பரத்ரவ்யமாய் நோக்கி  இருக்கிறாரோ
தம்மைத்தான உடம்பைப் போக விட்டால் ஆகாதோ
6- ஆத்மா நோ தேஹம்
தம்முடம்பு தம்மதோ
பக்தா நாம் -ஜிதந்தே -1-5-என்று பிறரது அன்றோ
பிறர் உடம்பை என் செய்யச் சுமக்கிறார் –

அவர் செய்வது என் முடிக்கைக்கு கருவி இல்லை யாகில் -என்ன
1-ந சோகே நா வசீததி-
சோகம் இருக்க வேறு கருவி வேணுமோ –
2- ந சோகே நா வசீததி-
சோகாக்நி பிரதஷ்யதி -என்று சோகம் ஆகிற பெரு நெருப்பு இருக்க வேறு கேட்க வேணுமோ –

—————————————————————————————————————————————————————

ராமஸ்ய வ்யவஸா யஜ்ஞா லஷ்மணஸ்ய ச தீ மத
நாத்யர்த்தம் ஷூப்யதே தேவீ கங்கேவ ஜலதாகமே -சுந்தர -16-4-

ராமஸ்ய -ஸ்ரீ ராமபிரானுடைய
வ்யவஸா யஜ்ஞா -உறுதியை அறிந்தவளான
லஷ்மணஸ்ய ச -லஷ்மணனுடையவும்
தீ மத -பக்திமானான
நாத்யர்த்தம் ஷூப்யதே தேவீ கங்கேவ -அத்யர்த்தம் கங்கா இவ ந ஷூப்யதே -மிகவும் கங்கா நதி போலே கலங்குகிறாள் அல்லள்
ஜலதாகமே -மழைக்   காலத்தில்-

ராமஸ்ய வ்யவஸா யஜ்ஞா –
ஏதத் வரதம் மம-யுத்தம் -18-33-என்றும்
அவகாஹ்யார்ண வம் ஸ்வப்ஸ்யே-யுத்த -5-9- என்றும்
சொல்லுகிற படியை அறிந்து இருக்குமவள் ஆகையாலே தரித்து இருந்தாள்
ஆசாலேசம் உடையாரை ஒரு நாளும் விடேன் என்றும்
அவர்களை விட வேண்டிற்று ஆகில் நான் உளேன் ஆகேன் என்றும் இ றே

-ந ஜீவேயம் ஷணம் அபி -சுந்தர -66-30–அவர் சொல்லி வைப்பது

அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா
சீதீ ச லஷ்மணாம் ந து பிரதிஜ்ஞாம் சம்ஸ்ருத்ய  ப்ராஹ்மணேப்யோ விசேஷத்த -ஆரண்ய -10-19-என்றும் இருக்கும் அவர் இ றே

லஷ்மணஸ்ய ச தீ மத-
அவர் தம்முடைய ஏவலாலே மாயாமிருகத்தின் பின்னே
அது மாயை என்று அறியாதே பிடிக்க ஒருப் பட்ட போதும்
இது மாயாமிருகம் என்று சொல்லும்படி
அவ்வளவிலும் தெளிந்து இருக்கும் இளைய பெருமாள் படியை அறிந்து இருக்கையாலும்-

நாத்யர்த்தம் ஷூ ப்யதே தேவீ
அவர் தலையாலே சுமக்கும் படி வல்லபையாய் போந்தவள் ஆகையாலே
ஷோப ஹேதுக்கள் உண்டாய் இருக்கச் செய்தேயும் ஷூபிதையாயிற்று இலள்-

கங்கேவ ஜலதாகமே –
நிரந்தரமாக வர்ஷதாரை விழா நிற்கச் செய்தேயும் கங்கை தெளிந்து இருக்குமா போலே-

——————————————————————————————————————————————————————————

ஹிமஹத நளி நீவ நஷ்ட சோபா வ்யசந பரம்பரயாதி பீட்யமாநா
சஹ சரரஹி தேவ சக்ரவாகீ ஜனக ஸூதா க்ருபணாம் தசாம் பிரபன்னா –சுந்தர -16-30-

ஹிமஹத நளி நீவ-பனியினால் வாடிய தாமரை போலே
நஷ்ட சோபா -அழகு இழந்தவளாய்
வ்யசந பரம்பரயா -அடுத்து அடுத்து வரும் துன்பத் தொடர்களாலே
அதி  பீட்யமாநா-மிகவும் துன்புறுத்த பெற்றவளாய்
சஹ சரரஹி தேவ சக்ரவாகீ -ஆண் துணையை இழந்த சக்ரவாகப் பஷியைப் போலே
ஜனக ஸூதா -ஜனக ராஜன் திரு மகளான பிராட்டி
க்ருபணாம் தசாம் பிரபன்னா -வருந்தத் தக்க நிலையை அடைந்தாள்-

அவதாரிகை –
பெருமாளைப் பிரிந்த ஆற்றாமை தோற்ற எழுந்து அருளி இருந்த பிராட்டிக்குப் போலி சொல்லுகிறார்-

ஹிமஹத நளி நீவ நஷ்ட சோபா-
நாற்றம் மென்மை -மேன்மை-குளிர்த்தி செம்மை செவ்வி விகாசம் என்கிற ஸ்வ பாவங்களை யுடைத்தாய் –
வைத்த கண் வாங்காத படி தர்ச நீயமாய் –
முன்பு அழகியதாய் இருந்த தாமரைப் பூவானது பனியிலே நோவு பட்டு இருக்கிறாப் போலே இவளும் நோவு பட்டு இருக்கிறபடி –

வ்யசந பரம்பரயாதி பீட்யமாநா-
இது தான் பிரகிருதியாக மேல்வரும் வ்யசந பரம்பரைகள்
ஆஸ்ரயத்த அளவன்றிக்கே
நோவு படுத்தா நின்றது-
சஹ சரரஹி தேவ சக்ரவாகீ –
நின் அஞ்சிறைய சேவலுமாய் -திருவாய் -1-4-1-என்கிறபடியே
பிரிவு பொறாத பிரகிருதியைக் கொண்டு தனியே இருந்தாள்-

ஜனக ஸூதா –
துக்கங்களுக்கு ஈடுபடாத பிறப்பை யுடையவள் கிடீர் இப்படி நோவு படுகிறாள்
ஜனக ஸூ தா –
பெருமாளைக் கைப்பிடித்த செல்வம் அன்று
பிறப்பினுடைய செல்வம்-

க்ருபணாம் தசாம் பிரபன்னா-
படக் கடவதில் ஒன்றும் குறையாமல் பட்டாள்-

—————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது –தம் த்ருஷ்ட்வா ஸத்ரு ஹந்தாரம்-ஆரண்ய -30-39-/அஸ்மின் மயா சார்த்த முதார-ஆரண்ய -63-12–

January 20, 2015

தம் த்ருஷ்ட்வா ஸத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம்  ஸூகாவஹம்
பபூவ ஹ்ருஷ்ட்வா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே-ஆரண்ய -30-39-

தம் த்ருஷ்ட்வா -அவ்விராமனைப் பார்த்து
ஸத்ரு ஹந்தாரம் -எதிரிகளை அழித்தவரும்
மஹர்ஷீணாம்  ஸூகாவஹம் -மகார்ஷிகளுக்கு ஸூ கம் அளிப்பவருமான
பபூவ -சத்தை பெற்றாள்
ஹ்ருஷ்ட்வா -ப்ரீதி அடைந்தாள்
வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே-ஸீதா பிராட்டி கணவனான அவரை நன்கு தழுவினாள்-

அவதாரிகை –
சதுர்தச சஹஸ்ராணி ரஷசாம்  பீமா கர்மாணாம் ஹதான் ஏகேன மாநுஷேண பதாதி நா-ஆரண்ய -26-35-இதி பிரக்ரியையாலே
ராஷச வேட்டை யாடின பெருமாளுடைய யுத்தாயாச பரிஸ் விந்னமான திரு மேனியில்
ராஷச சர வ்ராத வ்ரணாரோபண திவ்ய ஔஷதமான காடா லிங்கனத்தைப் பண்ணி
பிராட்டி சத்தை பெற்றாள் -என்கிறது –

1-தம்-
ஸ்தரியம் புருஷ விக்ரஹம் -அயோத்யா -30-3- என்று விண்ணப்பம் செய்ய வேண்டும்படி
ராஷச பூயிஷ்ட மான தேசத்தில் உன்னைக் கொண்டு போக அஞ்சுவேன் -என்றவரை –
2-தம் –
ஸ்தரியம் புருஷ விக்ரஹம் -அயோத்யா -30-3- என்று பிராட்டி வாயாலே அநநுமதமாக ஆண்ட அன்று துடங்கி திரு உள்ளத்திலே கருவி இருந்தது –
பதினாலாயிரம் ராஷசரையும் முடியும் உடலுமாகத் தறித்து
உதிர வெள்ளத்திலே  மிதக்க விட்டுப்
பிராட்டியைக் கையைப் பிடித்துக் கொண்டு காட்டினவரை
3-தம் –
ஆதித்ய இவ தேஜஸ –சுந்தர -34-28-இத்யாதிப்படியே
வீரப்பாட்டுக்கு சிறு விரல் முடக்கும் படி அவதீர்ணரானவரை
4-தம் –
படுக்கைத் தலையிலே விடு பூ விழுந்து திரு மேனி சிவக்கும் சௌகுமார்ய அதிசயத்தை யுடையவரை
5-தம்-
உகப்பாலே அடுத்துப் பார்க்கில் நாயனமான தேஜஸ் ஸூ க்கும் அசதானமான திரு மேனியை யுடையவரை –
6- தம் –
ரிஷிகளுக்குபண்ணின பிரதிஜ்ஞ்ஞையை கடலோசை யாகாத படி தலைக் கட்டுகையாலே
பூர்ண மநோ ரதரானவரை
7- தம் –
ரத்ன கசிதமான பொன்னரி மா மலை போலே சத்ரு சர வ்ராத வ்ரஹாங்கிதமான
திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவராய் உள்ளவரை –

1-த்ருஷ்ட்வா –
கருமுகை மாலையைப் பன்னீரிலே தோய்த்து எடுப்பாரைப் போலே
யுத்தாயாச பரிஸ் விந்னமான திரு மேனியைத் தன பார்வை யான பன்னீராலே வழிய வார்த்து –
2- த்ருஷ்ட்வா –
ஆதாபிபூதருடைய சீத தடாகப் பிரவேசம் போலே
ராஷசாச நிகராபி பூதமான திருமேனியைத் தன் பார்வை யாகிற
பூர்ண தடாகத்திலே தோய்த்து எடுத்து –

ஸத்ரு ஹந்தாரம் –
ப்ரதிபஷ நிரசனத்தாலே வந்த புகருடைமை
சமோஹம் சர்வ பூதேஷு -ஸ்ரீ கீதை -9-29-என்கிற பெருமாளுக்கு சத்ருக்கள் உண்டோ என்னில்
ஜ்ஞாநீ த்வாத்மைவ -ஸ்ரீ கீதை -7-18-
த்விஷ தன்னம் ந போக்தவ்யம் த்விஷ நதம்நைவ போஜயேத் பாண்டவான்
த்விஷசே ராஜன்  மம ப்ராணா ஹி பாண்டவா -பாரத -உத் 74-27-இத்யாதிகளாலே
ஆ ஸ்ரீ த விரோதிகள் தனக்கு விரோதிகளாம் அத்தனை இ றே-

1-மஹர்ஷீணாம்  ஸூகாவஹம்-
யுத்த ப்ராரம்பம் துடங்கி கிம் பவிஷ்யதி -என்று வயிறு பிடித்து
துக்கிதராய் இருந்த மஹா ரிஷிகளுடைய பயம் தீர
சத்ருக்கள் அடங்கக் கொன்று
அவர்களுக்கு ஸூ காவஹராய் இருப்பவரை –
2-மஹர்ஷீணாம்  ஸூகாவஹம்–
தம்முடைய போஷ்ய குடும்பத்துக்கு ஸூ கத்தைப் பண்ணி
தம்முடைய -பிராட்டியையும் சேர்த்து –
சத்திக்கு ஆபாதகரனவரை-

பபூவ –
மாலையும் மனமும் போலே அத்யந்தம் ஸூ குமாரரான விக்ரஹத்தையும்
ஸ்வபாவத்தையும் யுடைய பெருமாள் –
கடிந காத்ர ஸ்வ பாவரான முரட்டு ராஷசரோடேயுத்தம் ப்ராரம்பித்த போது துடங்கி –
பிரேம அதிசயத்தாலே மாண்டு கிடந்த பிராட்டி
திரு மேனியிலே தீங்கு இன்றியிலே நின்ற பெருமாளைக் கண்டு சத்தை பெற்றாள் -என்கிறது-

-ஹ்ருஷ்ட்வா-
தர்மி யுண்டானால் தர்மம்  பிறக்கக் கடவது இ றே
ராம சௌந்த்ர்யத்தைமுழுக்கக் கண்டு திரு உள்ளம் ஈடுபட்ட படி –

1-வைதேஹீ –
ஐயர் வயற்றிலே பிறந்திலேன் ஆகில் எனக்கு இப் பேறு இல்லையே
2-வைதேஹீ –
இக்குடியில் பிறந்திலேன் ஆகில் பெருமாள் என்னைக் கைப்பிடியாரே –
3-வைதேஹீ –
இந்நிலத்தில் பிறந்திலேன் ஆகில் இவ்வில்லோட்டை சௌ ப்ராத்ரம் கிடையாதே –
அவில்லோட்டை சௌ பிரார்த்ரம் இல்லையாகில் வீர்ய ஸூ ல்கையாக -இவ்விவாஹம் -இவ்வாகாரம் -கூடாதே
4-வைதேஹீ –
தநுர் பங்க மாத்ரத்திலே என்னையும் தம்முடைய வம்சத்தையும் பெருமாளுக்கு அடிமையாக எழுதிக் கொடுத்த ஐயர்
இந்த ஆகாரம் கண்டால் என்ன படுவரோ –
5- வைதேஹீ –
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-அயோத்யா -3-29-என்றபடியே
சர்வ லோக ஆகர்ஷகமான இந்நிலையை ஐயரை ஒழிய நான் காண்பதோ என்று பித்ரு ஸ்ம்ருதி பண்ணுகிறாள்-

பர்த்தாரம் –
பாணிக்ரஹண வேளை துடங்கி பதித்வ பிரதிபத்தி பண்ணிப் போந்தாள்-
இப்போது இ றே தாத்வர்த்தம் ஜீவித்தது-

பரிஷஸ்வஜே-
சஸ் வஜே -ஆலிங்கனம் பண்ணினாள்-
1-பரிஷஸ்வஜே–பரி பூரணமாகத் தழுவினாள்
2-பரிஷஸ்வஜே–பர்யாப்தமாகத் தழுவினாள்
தழும்பு மாறும் அளவும் தழுவினாள்
சரவ் ரணங்களாலே வந்த தழும்பு எல்லாம் மாறும் அளவும் திரு முலைத் தடத்தாலே வேது கொண்டாள் –
தான் கை கண்ட மருந்து இ றே
சர வ்ரணங்களுக்கு ஆலிங்கனமாம் இடத்தில் ஐந்தோடு ஐநூறோடு வாசி இல்லையே –
அந்தரங்கர் உள்ளுற எய்த புண்ணுக்கு மருந்தான இது .
தோல் புரை எய்த புண்ணுக்கு மருந்தாகச் சொல்ல வேணுமோ -என்று இருந்தாள்-
ஒரு கொடியாகில் கொள் கொம்பைத் தழுவி அல்லது நில்லாதிறே-

பர்த்தாரம் பரிஷஸ்வஜே –
நித்ய சம்யோக ஸ்திதி ரூபமான பர்த்ருத்வாகாரம் ஒரு கொள் கொம்புக்கு உண்டானால் –
கோல் தேடி யோடும் கொழுந்து -இரண்டாம் திரு -27-
ததாதாரமாய்க் கொண்டு கொள் கொம்பை மூட்டப் படர்ந்து அத்தைச் சிறப்பித்துக் கொண்டல்லது
ஸ்வரூபம் இல்லையே பார்யாத்வா காரமான கொடிக்கு-
பர்த்தாரமவ லம்ப்யைவ பார்யாயா ஸ்திதி ரிஷ்யதே
அவலமப்யதருமம் வல்லி ஸ்தீயதே ந வினா த்ருமம்-என்னுமா போலே –

தம் -என்கிற பதம் பெருமாளுடைய சர்வாகாரங்களையும் காட்டுகிறது
த்ருஷ்ட்வா -என்கிற பதத்தால் பெருமாளுடைய சர்வாகாரங்களையும் நோக்கிக் காணக் கண்ணுடையாள் பிராட்டி -என்கிறது –
சத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸூ கவாஹம் -என்கிற பதங்களாலே
தன்னோடு குடல் துவக்கு யுண்டான சேதனர்க்கு அநிஷ்ட நிவ்ருத்தியையும்
இஷ்ட பிராப்தியையும் பண்ணின போது அல்லது இவரைக் -இவனைக் -இவளைக் -காண கண்ணில்லை -என்கிறது
பபூவ -அத்தலைக்கு அதிசய அவஹையாய் சத்தை பெற்ற படி
ஹ்ருஷ்டா -ஸதிதர்மிணி தரமாச் சிந்தயந்தே -தர்மியான தான் சத்தை பெற்ற பின்பு தர்மமான உகப்பு தானாகவே யுண்டாயிற்று
பர்த்தாரம் -தன் கார்யம் சுமந்து நடத்தினார் என்கிறாள்
தன் கார்யம் சுமந்து நடத்துகை யாவது
பிதுர் தச குணம் மாதா -என்கையாலே -தன் புத்திர ரஷணம் பண்ணுகை இ றே
பரிஷஸ்வஜே -ஆ ஸ்ரீ த ரஷணத்தால் வந்த களிப்புக்கு போக்கு வீடு
ஆலிங்கனம் போலே இருந்தது
அவருக்கும் பிரயோஜனம் அது போலே காணும் –

————————————————————————————————————————————————————————–

அஸ்மின் மயா சார்த்த முதார  ஸீலா-சிலாதலே பூர்வமுபோப விஷ்டா
காந்தஸ்மிதா லஷ்மண ஜாதஹாசா த்வாமாஹா ஸீ தா பஹூ வாக்ய ஜாதம் -ஆரண்ய -63-12-

அஸ்மின் -இந்த
மயா சார்த்த -என்னோடு கூட
முதார  ஸீலா-உடம்பு கொடுப்பதில் உதாரத் தன்மையை உடையவளாய்
சிலாதலே -பாறையின் மேலே
பூர்வமுபோப விஷ்டா–பூர்வம் உபோபவிஷ்டா முன்னதாகவே -நாலா புறமும் மாறி மாறி உட்காருமவளாய்
காந்தஸ்மிதா -இனியபுன்சிரிப்பை யுடையவளான
லஷ்மண-லஷ்மணனே
ஜாதஹாசா -பெரிய சிரிப்பை யுடையவளாகி
த்வாமாஹா -உன்னை நோக்கி
ஸீ தா -ஸீ தா தேவி
பஹூ வாக்ய ஜாதம் -பலவிதமான வசன சமூகங்களைச் சொன்னாள் –

அவதாரிகை –
முன்பு தாமும் பிராட்டியும் ஜல  க்ரீடாடிகள் பண்ணி சரசமாகப் பரிமாரிற்றோர் இடத்திலே
பிராட்டியைப் பிரிந்து தாமும் இளைய பெருமாளுமாய் தேடிக் கொண்டு வாரா நிற்கச் செய்தே
அவ்விடத்தைக் கண்டு இளைய பெருமாளைப் பார்த்து அருளிச் செய்கிறார் –

அஸ்மின் –
இப்படி வெறும் தரையாய் இருக்கிற இடத்திலே காண் அன்று நாம் எடுப்பு எடுத்தது
மயா சார்த்தம் –
ப்ரணய தாரையில் தம்மைத் தாமே சால மதித்து இ றே இருப்பது
நாமும் கூட காண வந்த சோழரோ பாதியாகக்  கடக்க நிற்கும்படி
அவளுடைய அளவுடைமையும் விதக்தமாக பரிமாறின படியும் காண் –
உதார  ஸீலா-படை வீட்டில் இருந்த நாள் மாமனார் மாமியார்க்கு கூசிப்
படி விடுவாரோபாதி அளவுபட வாயிற்று போகம் செல்லுவது
இப்போது அவ்வளவு அன்றிக்கே ஏகாந்த ஸ்தலம் ஆகையாலே
தன்னை முற்றூட்டாக சர்வ ஸ்வ தானம் பண்ணிக் கொண்டு இருந்தார்கள் ஆயிற்று
சிலாதலே பூர்வம் -ஜலக்ரீடை பண்ணுகிற தோர் இடத்திலே சிலா தலமாய்
இளைத்த இடத்திலே ஏறுவதாகப் பெருமாள் முற்கோலிக் கணிசிக்க
ப்ரேஷி தாஜ்ஞாச்து கோசலா -என்கிற அதிலேயும் ஒரு சம்பந்தம் உண்டு இ றே இவளுக்கு
அத்தை இவருடைய இங்கிதாதிகளை கொண்டு அறிந்து
இவரை இளைப்பிக்க வேணும் என்று பார்த்து பெருமாள் ஏறுவதாகக் கணிசித்த  துறையை அடைத்துக் கொண்டு இருந்தாள்
உபோப விஷ்டா-அப்படியே இருக்கும் இறே ஏற்றம் –

காந்தஸ்மிதா –
வெறும் புறத்திலே தானே துவக்க வல்லவள் –
முறுவலைச் சேர்த்தால் போலே யாயிற்று முகம் தான் இருப்பது
அதுக்கு மேலே பிறந்த வெற்றியாலே ஜாதஹாசை யானாள் ஆயிற்று –

த்வாமாஹ-
இதுக்கு முன்பு தொடங்கினவற்றில் தலைக் கட்டாதே  மீளுமதில்லை இ றே
அத்தாலே லஜ்ஜித்து கவிழ்  தலை இட்டார் பெருமாள்
அவரை விடா -அவரைப் போரப் பொலியச் சொல்லிக் கொண்டாடும் இளைய பெருமாள் முகத்தைப் பார்த்தாள்-
பாரீரோ தம்பியீர் நீங்கள் நினைத்தது எல்லாம் தலைக் கட்டினி கோள் இ றே
நீங்கள் வல்ல வலிய ஆண் பிள்ளைகள்
நாங்கள் பெண் பெண்டுகள்
நீங்கள் வேட்டைக்கும் வினைக்கும் போய் வியாபாரிக்குமவர்கள் –
நாங்கள் வீடு விட்டுப் புறப்பட்டு அறியோம் தலைக்  கட்டலாம் இ றே
உங்கள் தமையனார் வென்றார் இ றே
என்று பஹூ முகமாகக் கொண்டு இவ்வார்த்தை அருளிச் செய்தாள் ஆயிற்று-

——————————————————————————————————————————————————————————–

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது -பாவஜ்ஞேந க்ருதஜ்ஞேந தர்மஜ்ஞேந-ஆரண்ய -16-29-/தருனௌ ரூபசம்பன்னௌ ஸூகுமாரௌ-ஆரண்ய -19-14–

January 19, 2015

பாவஜ்ஞேந க்ருதஜ்ஞேந  தர்மஜ்ஞேந  ஸ லஷ்மண
த்வயா புத்ரேண தர்மாத்மா ந சம்வ்ருத்த பிதா மம–ஆரண்ய -16-29-

பாவஜ்ஞேந -நினைவை அறிந்தவனாய்
க்ருதஜ்ஞேந  -தந்தை ராமனுக்குச் செய்தவற்றை அறிந்தவனாய்
தர்மஜ்ஞேந –
சேஷத்வ தர்மத்தை அறிந்தவனாய்
ஸ லஷ்மண-
த்வயா -உன்னாலே
புத்ரேண -நரகத்தில் இருந்து ரஷிக்கும் புத்ரனான
தர்மாத்மா -மஹா தார்மிகரான
ந சம்வ்ருத்த பிதா மம–எனக்கு தந்தையார் இறந்து போக வில்லை –

அவதாரிகை –

ஸ்வயம் து ருசிரே தே சே க்ரியதாம் இதி மாம் வத-ஆரண்ய -15-7-என்று சொல்லுகிறவர் இ றே இளைய பெருமாள்
இப்படிச் செய்ய வல்ல நீர் நம்மைக் கேட்டது என் -என்கிறார்
பர்ண சாலையைச் சமைத்த அநந்தரம் சொல்லுகிற வார்த்தை இ றே –

பாவஜ்ஞேந –
அல்லாதவை சொன்னாலும்
தாமும் பிராட்டியுமாய் ஏகாந்தமாய் இருக்கும் இடங்கள்
சமைக்கும் படி இளைய பெருமாளுக்கு பெருமாள் அருளிச் செய்யார் இ றே
நெஞ்சாலே நினைக்கும் அத்தனை இ றே
இந்நினைவு அறிந்து செய்தார் –

க்ருதஜ்ஞேந  –
அதுவே அன்றிக்கே -செய்து போரும்படி அறிந்து செய்தார்
அறுபதினாயிரம் ஆண்டு ஜீவித்த சக்ரவர்த்தி நெடு நாள் மலடு நின்று பிள்ளை பெற்றவன் ஆகையாலே
இவர் என் நினைத்து இருக்கிறாரோ என்று நினைவை ஆராய்ந்தும்
இவர்க்கு எத்தாலே என்ன குறை வருகிறதோ என்று பொருந்தும் இடங்கள் பார்த்தும்
அவன் செய்து போரும் அடைவு அறிவார் ஆயிற்று –
தர்மஜ்ஞேந  –
நினைவு அறிந்தாலும்
செய்து போரும் அடைவு அறிந்தாலும்
தானும் ராஜ புத்ரனான பின்பு -எனக்கும் ஓர் இருப்பிடம் வேண்டாவோ -என்று இருக்குமவனுக்கு
இது செய்ய ஒண்ணாது  இ றே
அங்கன் அன்றிக்கே
அத்தலையிலே தாதர்யத்தமே நமக்கு ஸ்வ ரூபமான பின்பு
பின்னை அத்தலைக்கு உறுப்பாக செய்து போருமதே நமக்கு வகுத்தது என்று
அத்தலைக்கு செய்யும் அத்தையே தமக்கு கர்த்தவ்யம் என்று இருப்பர்-
ஸ லஷ்மண த்வயா –
தாம் உள்ளவன்று தாம் உளராய்
தாம் போன வந்ற்றைக்கும் உம்மை வைத்துப் போனாரே -என்கிறார் –

புத்ரேண –
புத-என்று ஒரு நரக விசேஷமாய் அதில் புகாதபடி நோக்கும் என்று ஆயிற்று புத்ரன் என்று பேராகிறது-
ஐயருக்கு நம்முடைய அபிமதி சித்தி இன்றிக்கே ஒழிகை –
தனக்கு மேற்பட நிரயம் இல்லை இ றே
அவர்க்கு அது வாராதபடி நோக்குகிறீர் நீர் இ றே-

தர்மாத்மா –
சக்ரவர்த்தி பிரச்துதன் ஆனவாறே நம் ஐயரை ஒப்பார் உண்டோ
அவரும் ஒருவரே
தாம் இருந்த நாள் நாம் வேண்டுவன எனக்குச் செய்து
தாம் போன அன்று நமக்கு வேண்டுவன செய்கைக்கு உம்மைப் பெற்றுத் தண்ணீர் பந்தல் வைத்துப் போவதே –

மம-
இருவருக்கும் பிதாவானமாய் ஒத்து இருக்கச் செய்தே
மம -என்கிறார் ஆயிற்று
அவர் நமக்குச் செய்யுமத்தை நீர் இருந்து செய்கையாலே நாம் அவரை இழந்திலோம்-நீர் இழந்தீர் ஆகில் இத்தனை இ றே –

——————————————————————————————————————————————————————-

தருனௌ ரூபசம்பன்னௌ ஸூகுமாரௌ மஹாபலௌ
புண்டரீக விசாலாஷௌ சீரக்ருஷ்ணாஜிநாம் பரௌ–ஆரண்ய -19-14-

தருனௌ -வாலிபர்களாய்
ரூப சம்பன்னௌ -அழகு நிறைந்தவர்களாய்
ஸூகுமாரௌ -மிகவும் மிருதுவான தன்மையை யுடையவர்களாய்
மஹாபலௌ-பெரிய பலத்தை யுடையவர்களாய்
புண்டரீக விசாலாஷௌ-தாமரை போல் பரந்த கண்களை யுடையவர்களாய்
சீரக்ருஷ்ணாஜிநாம் பரௌ-மரவுரியையும் மான் தோலையும் உடுப்பாக யுடையவர்களாய் –
ராம லஷ்மணர்கள் இருக்கிறார்கள் –

அவதாரிகை –

ஸ ஹி தேவை ருதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி
-அர்த்திதோ மா நுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணு ஸ நாதன-அயோத்யா -1-7-என்கிறபடியே
தச கண்ட குண்டித சக்திகளான தேவர்கள் ராஷசர்கள் உடைய ரஜஸ் ஸைப் போக்கும்படி
ரஜோ தூஸரமான வடிவுகளும்
ராஷச ஸ்திரீகள் மாங்கல்யங்கள் வாங்கும்படி கழுத்திலே கட்டின கப்படங்களும் -தோற்றவர்கள் கழுத்தில் அணியும் சக்கரங்கள் –
ராவண பந்தி க்ருதைகளான தங்கள் ஸ்திரீகளுடைய விரித்த தலை
விமுக்த்த கேச்யோ துக்கார்த்தா -யுத்த -115-2-என்று ராஷசிகள் தலையிலே யாம்படி தாங்கள் விரித்த தலை மயிரும்
ஹா புத்ரேதி ஸ வாதிந்யோ ஹா நாதேதி ஸ சர்வச -யுத்த -113-9-என்கிறபடியே
அவர்கள் முகங்களிலே விலாபாஷாரங்களாம்படி தங்கள் முகங்களிலே ஸ் புரிச்கிற சரணஷா ரங்களும்
உத்த்ருத்ய சபு ஜௌகாசித் -யுத்த -113-9-என்கிறபடியே
அவர்கள் கையெடுத்துக் கூப்பிடும்படி தாங்கள் கொடுத்த அஞ்சலி புடங்களும்
ஸ்நாபயந்தீ முகம் பாஷ்பைஸ் துஷாரைரிவ பங்கஜம் -யுத்த 113-10-என்கிறபடியே
அவர்கள் கண்களிலே கண்ணீர் பாயும்படி தாங்கள் கண்ணும் கண்ணீருமாய்
தஸ்மின் நவசரே தேவா பௌலச்த்யோ பப்லுதா ஹரிம்
அபி ஜக்மூர் நிதாகார்த்தா சாயா வ்ருஷமிவாத் வகா -ரகுவம்சம் -10-5-என்றும்
சகோரா இவ சீதாம் ஸூம் சாதகா இவ தோயதம்
அத நா இவ தாதாரம தேவா ஜக்மூர் சனார்த்த நம – என்றும் சொல்லுகிறபடியே
அஸ்வத் ராந்தர் ஆனவர்கள் சாயா வ்ருஷத்தை சென்று சேருமா போலேயும்
சகோரங்கள் ஆனவை சரச் சந்த்ரனை அணுகுமா போலேயும்
சாதகங்கள் ஆனவை வர்ஷூக வலா ஹகங்களை சென்று கிட்டுமா போலேயும்
தரித்ரரானவர்கள் தாத்தாவைச் சென்று கிட்டுமா போலேயும்
ஸ்ரீ யபதியைச் சென்று கிட்டி
தம ப்ருவன் ஸூ ரா சர்வே சமபிஷ்டூய சநநதா-பால -15-17-என்று
ஸ்தவ ப்ரியனானவனை ஸ்தோத்ரம் பண்ணுவார்களாக தொடங்கி
சதைக ரூப ரூபாய -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-1- என்று அவிக்ருதரான தேவர்
நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா -திருவாய் -7-5-2- என்கிறபடியே
அழிவுக்கிட்டு
த்ரிபாத் விபூதியிலே இருக்கக் கடவ தேவர்
சதுஷபாத்தாய் ஹிரண்யா ஷஷபணம் பண்ணிற்றும்
கேவலம் த்ரியக்த்வத்தாலே போராது என்று நரம் கலந்த சிங்கமாய் ஹிரண்ய நிரசனம் பண்ணிற்றும்
மஹதோ  மஹீயான் -என்கிற வடிவைக் குறள் உருவாக்கி
அல்லி மலர் மகள் போக மயக்குகளை -திருவாய் -3-10-8-மறந்து ப்ரஹ்ம சாரியாய்
தத் யாந்ந ப்ரதிக்ருஹ்ணீயாத்  ந ப்ரூயாத் கிஞ்சித ப்ரியம்
அபி ஜீவித ஹேதோர் வா ராம சத்ய பராக்ரம -சுந்தர -33-26-என்றும்
கோ சஹச்ர ப்ரதாதாரம் -யுத்த -21-8- என்றும்
அலம் புரிந்த நெடும் தடக்கை அமரர் வேந்தன் அஞ்சிறைப் புள் தனிப்பாகன் -திரு நெடு -6- என்றும் சொல்லுகிறபடியே
ப்ரஹ்மாத் யனேகா பதப்ரதரான தேவர்
மகாபலி பக்கலிலே பதத்ரயத்தை அர்த்தித்தும்
ப்ராஹ்மாணோஸ்ய முகம் ஆஸீத் பாஹூ ராஜன்ய க்ருத-புருஷ ஸூ க்தம் -என்று
ப்ரஹ்ம ஷத்ரங்களுக்கு உத்பாதகரான தேவர்
பித்ர்யமம் சமுபவீத லஷணம் மாத்ரு  கஞ்ச தநு ரூர்ஜிதம் தத்த -ரகுவம்சம் -11-64- என்கிறபடியே
ஜமதக்நி ரேணுகைகள் பக்கலிலே ப்ரஹ்ம ஷத்ரியராய் வந்து தோன்றி இருப்பத்தொரு கால் துஷ்ட ஷத்ரியரைப் பரசுவுக்கு ப்ராதரசநம் ஆக்கிற்றும்
பக்தாநாம் -ஜிதேந்தே -என்றும்
வரத சகல   மேதத் சமச்ரிதார்த்தம சகரத்த -ஸ்ரீ வர ஸ்தவம் -68-என்றும்
அடியோங்களுக்காக அன்றோ என்று ஸ்தோத்ரம் பண்ணி
சாபமா நய -யுத்த -21-22-என்று கையிலே ஆயுதம் எடுக்கும் படி
தங்களுடைய வஜ்ர பரசு தண்ட பாசாத்யா யுதங்களை பொகட்டும்
அவன் சாகரம் ஷோஷயாமி -யுத்த -21-22- என்னும்படி கண்ணீரைக் காட்டியும்
ஸூ கிரீவம் சரணம் கத -கிஷ்கிந்தா -4-19-என்றும்
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி -யுத்த -19-30-என்றும்
அவன் சரணம் புகும்படி தாங்கள் சரணம் புக்கும்
அஞ்ஜலிம் ப்ராங்முக க்ருத்வா -யுத்த -21-1-என்று அவன் அஞ்சலி பண்ணும்படி தாங்கள் அஞ்சலி பண்ணியும்
ப்ரஸீ தந்து பவந்தோ மே-ஆரண்ய -10-9- என்று அவன் ஸ்தோத்ரம் பண்ணும் படி தாங்கள் ஸ்தோத்ரம் பண்ணியும்
சர்வே சந்நதா-பால -15-17-என்று தமையனான இந்த்ரனும் முர்பாடநாம் படி திருவடிகளிலே நம்ரராய்
ந நமேயம் -யுத்த -36-11-என்று இருக்கிறவர்களை தலை அழித்துத் தர வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய
பரமகாருணிகனான சர்வேஸ்வரனும்-நித்ய அநபாயிநியான பிராட்டியும்
பிதரம் ரோசசயாமாச ததா தசரதம் ந்ருபம்-பால -15-21- என்றும்
ஜன்கச்ய குலே ஜாதா-பால -1-27- என்றும் சொல்லுகிறபடியே
தாம் தாசரதியாயும் அவள் ஜனககுல ஸூ ந்தரியாயும் திருவவதரித்து
இருவரும் இரண்டு இடத்திலுமாக வளர்ந்து அருளுகிற காலத்திலேயே
இம்மிதுனம் இப்படி அகல விருக்கப் பெறாது
இப்படி அகல விருந்த போது ரஷகர் ஆகாமை அன்றிக்கே
புரேவ மே சாருத தீம நிந்திதாம் திசந்தி ஸீதாம யதி நாதா மைதிலீம்
சதேவ கந்தர்வ மநுஷ்ய பன்னகம் ஜகத் சசைலம் பரிவர்த்தயாம் யஹம் -ஆரண்ய -64-78-என்றும்
குசலீ யதி காகுத்ஸ்த கிம் நு சாகர மேகலாம்
மஹீம் தஹதி காகுத்ஸ்த க்ருத்தஸ் தீவ்ரேண சஷூஷா-சுந்தர -36-13-என்றும்
உவர்கள் தங்களாலே ஜகத்துக்கு அழிவு வரும் என்றும் சேர்ந்த போது
ஆவாபயாம் கர்மாணி கர்த்தவ்யானி பிரஜாச் சோத்பாதயித வ்யா-என்றும்
உபேதம் சீதயா பூயச்  சித்ரா சசினம் யதா  -அயோத்ய -16-8- என்றும்
ஜகத்துக்கு மங்கள வஹமாய் இருக்கையாலும்
இம்மிதுனத்தை சேர்க்க வேணும் என்கிற அபிசந்தியாலும்
விநாசாய ஸ துஷ்க்ருதாம் -ஸ்ரீ கீதை -4-8-என்றும்
சம்பவாமி யுகே  யுகே -ஸ்ரீ கீதை -4-6- என்றும்
யஜ்ஞ விக் நகரம் ஹன்யாம்-என்றும்
அவருடைய அவதார ரஹஸ்ய சங்கல்பத்தை  அடி ஒற்றினவன் ஆகையாலும்
விச்வாமித்ர பகவான் ஆனவன் தசரத ரத்னாகரத்தைக் கிட்டி ராம ரத்னத்தை அபெஷிக்க
அவனும் வாத்சல்யத்தாலே மதி எல்லாம் உள் கலங்கி -திருவாய் -1-4-3- பெருமாளை உள்ளபடி அறியாதே
ஊந ஷொடச வர்ஷோ மே -பால -20-2- என்று இன்னம் பதினாறு பிராயம் நிரம்பிற்று இல்லை –
பால ஆஷோட சாத் வர்ஷாத் பௌ  கண்டச்சேதி கீர்த்யதே -என்கிறபடியே
அப்ராப்த வ்யவஹாரராகையாலே தனித்து ஒரு கார்யத்துக்கு ஆள் அல்லர்
சதுரங்க பலைர்யுக்தம மயா ஸ சஹிதம் நய-பால -20-10- என்கிறபடியே
முது கண்ணாக என்னையும் கூட்டிப் போ -என்ன
விச்வாமித்ரனும்
இவர் பருவத்தின் சிறுமை கண்டோ நீ வார்த்தை சொல்லுகிறது –
சிருமையுன் வார்த்தையை மாவலி இடைச் சென்று கேள் -பெரியாழ்வார் -1-4-8-என்று முறித்தாய் ஆகில்
வசிஷ்டோபி மஹா தேஜோ யே செமே தபசி ஸ்திதா -பால -19-15-என்று
அறியுமவர்களாய் சந்நிஹிதருமாய் பலருமான இவர்களைக் கேட்க மாட்டாயோ என்று
ஈடேற்றி இசைவிக்க -இவனும் இசைந்து
ஸ புத்ரம் மூர்த ந்யுபாக்ராய ராஜா தசரத ப்ரியம்
ததௌ குசிக புத்ராயா ஸூ ப்ரீதே நாந்த ராதம நா -பால -22-3-என்று
இவனுக்கு இஷ்ட விநியோக அற்ஹமாய்
பிள்ளைகள் இருவரையும் கொடுக்க
அவனும் ராம லஷ்மனர்களைக் கொண்டு போய்க் கர்ம ஞானங்களாலே அவித்யையை நிரசிக்குமா போலே
அவர்களை இடுவித்து தாடகையை நிரசிப்பித்து
அநந்தரம்
அவித்யா சஞ்சிதமாய் புண்ய பாப ரூபமான உபயவித கர்மங்களையும் போலே
தாடக ஜநிதர்களான ஸூ பாஹூ மாரீசர்களையும் அளித்து
அது தன்னில்
உத்தர பூர்வாக யோராச லேஷ விநா சௌ -ஸ்ரீ ப்ரஹ்ம சூத்ரம் -4-1-13-என்னுமா போலே
ஒருத்தனைக் கொன்று ஒருத்தனை அக
ஸ்ரீ யம் இச்சேத ஹூதாச நாத் -ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணம் -என்றும்
ஜாத வேதோ மமாவஹா லஷ்மீம் -ஸ்ரீ ஸூ க்தம்-1- என்று
லஷ்மியைப் பெரும் போது அக்னி புரச்சரமாகப் பெற வேண்டுகையாலே
விச்வாமிதரேண சஹிதோ யஜ்ஞம் த்ரஷ்டும் சமாகத -அயோத்யா -118-44- என்று
ஜனகனுடைய யஜ்ஞ சமயத்திலே சென்று
அக்னி த்ரவ்யங்களைப் பாவித்து
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் -திரு நெடு -13-என்று சொல்லுகிறபடியே
ரௌ த்ரமான வில்லை அழைப்பித்து தேவதாந்திர ஸ்பர்சத்தாலே வண்ட அதினுடைய தோஷம் போம்படி திருக்கையிலே வாங்கி
குணாரோபணம் பண்ணி -நாண் ஏற்றி –
பங்க ஸூ ல்கையான பிராட்டியையும் கைப் பிடித்து மீண்டு வருகிற அளவில்
ராமத்வம் ஈரசு பட்டதோ என்று அதி குபிதனாய் வந்த பரசுராமனைக் கண்டு
புத்திர வத்சலனான சக்ரவர்த்தி சகிதனாய்
அபயம் சர்வ பூதேப்யோ ததாமி -யுத்த -18-34- எண்ணக் கடவ பெருமாள் தமக்கு அதி சங்கை பண்ணி
பாலா நாம் மம புத்ராணாம் அபயம் தாதும் அர்ஹசி-பால -75-6- என்று
பேர் வாசிக்கு பிணங்கி வந்தவன் ஆகையாலே பெருமாள் திரு நாமம் சொல்ல அஞ்சி சாதாரணமாக என் பிள்ளைகளுக்கு
அபார பிரதானம் பண்ண வேணும் என்று இரக்க
இவ்வார்த்தையைக் கேட்டு ப்ரவர்க்யம் போலே கிளர்ந்து எரிகிற இவனைக் கண்டு தனிய விடுவோம் என்று பார்த்து
வசிஷ்டாதி ரிஷிகளும்
தம் த்ருஷ்ட்வா பீமா சங்கா சம ஜ்வலந்தம் இவ பாவகம்
ருஷயோ ராம ராமேதி வசோ மதுரம ப்ருவன் -பால -74-21/22-என்கிறபடியே
உன்னை ஒழிய ராமாந்தரம்   உண்டோ என்றுபெருமாளுடைய ராமத்வத்தையும் அவன் தலையிலே இரட்டிக்க மாட்டெறிந்து
நெருப்பிலே நீரைச் சொரிவாரைப் போலே குளிர வார்த்தை சொன்ன இடத்திலும்
அவன் ஜானதக்நி யாகையாலே -ஜமதக்னி புத்திரன் -ஆறாத நெருப்பு -இரண்டு அர்த்தங்கள் -ஆறாமையாலே-
பெருமாளும் இவன் கையிலே இந்தக் காஷ்டம் -கட்டை -வில் குச்சி -விறகு -இரண்டு அர்த்தங்கள் –
இருக்கை யாலே இ றே இவன் எரிகிறது என்று பார்த்து
மேல் எழுந்த ஷத்ர தேஜஸ்ஸோடே -உயரக் கிளம்பின -வந்தேறியான -அத்தை வாங்கி
சஹஜமான ப்ராஹ்மாண்யமே சேஷிக்கும் படி பண்ணி
அஷயம் மது ஹந்தாரம் ஜா நாமி த்வாம் ஸூ ரோத்தமம்
தநுஷோ அஸ்ய பராமர்சாத் ஸ்வ ஸ்திதே அஸ்து பரந்தப-பால -76-17- என்று
அவனும் தன் ஸ்வாபாவிகமான ப்ராஹ்மண்யத்துக்கு ஈடாக ஸ்வஸதி சொல்ல -மங்களா சாசனம் பண்ண
தன்னுடைய வைஷ்ணவமான வில்லை வாங்குகையாலே
பெருமாளுடைய வைபவம் சர்வ லோக சித்தமாம் படி மழு ஏந்திப் -ஆணை இட்டு -மழு ஆயுதம் ஏந்தி -போக
பெருமாளும் -ப்ராஹ்மணோ  சீதி பூஜ்யோ மே -பால -76-6-என்று இவன் ஸ்வ ஸ்தி சொல்லுகையாலே
பிராமணன் என்று அறுதி இட்டு
அறுகும்-தர்ப்பம் -தாளியையும் -கொடியையும் -பறித்து
இவன் காலிலே போகத்துக் கும்பிட்டு
மாரில் நூலே கடகாக விட்டு ரஷித்து
மீண்டு திரு அயோத்யையிலே புக்கு
இச்சரக்கு பெறுகைக்கு பட்ட வருத்தம் அறியுமவர் ஆகையால் இவள் சீர்மையை அறிந்து
ராமஸ்து சீதயா சார்த்தம் விஜஹார பஹூன் ருதூன் -பால -77-26-என்கிறபடியே
பெருமாளும் பிராட்டியும் இனிது அமர்ந்து எழுந்து அருளி இருக்கக் கண்ட ஸ்ரீ பூமிப் பிராட்டி யானவள்
லோக பாலோப மம நாத மகாமயத மேதி நீ -அயோத்யா -1-34/2-48-என்று தானும் நாச்சியாரோபாதி அம்ச பாகிநி யாகையாலும்

யதா து பார்க்கவோ ராமச் ததா  சீத் தரணீ த்வியம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-143-என்று
தனக்கு வகுத்த பரசுராமாவதாரத்தின் உடைய தேஜஸ்ஸூம் இங்கே சங்க்ரமிக்கையாலும்
தன் கூற்றுக்கு ஒக்கப் பெருமாளை ஸ்வயம் வரமாக வரிக்க
ராஜாவும்
இது காந்தர்வமான விவாஹமாக ஒண்ணாது
சமந்தரமாகக் கரக் க்ரஹணம் பண்ணி வைக்க வேணும் -என்று பார்த்து
பௌரஜாநபத மந்த்ரி புரோஹிதர்களைத் திரட்டி மந்தரித்து
மந்திர யித்வா ததச்சக்ரே நிச்ச யஜ்ஞ ஸூ நிச்சயம்
ச்வ ஏவ புஷ்யோ பவிதா ச்வோ அபி ஷிஞ்சாமி நே ஸூ தம்
ராமம் ராஜீவதாம் ராஷம் யௌவராஜ்ய இதி பிரபு -அயோத்யா -4-3–என்கிறபடி
சம்பன்ன நஷத்ரமான பூசத்திலே பெருமாளை அபிஷேகம் பண்ணக் கடவது என்று நிச்சயித்து  பண்ண –
ஸோ அஹம் விச்ரம் இச்சாமி -அயோத்யா -2-10- என்றும்
யௌராஜ்யேன சமயோக்து மைச்சத்-பால -1-21- என்றும்
நாட்டாரோடு ராஜாவோடு பண்ணின ஆசைப்பாடுகள் தாங்கள் பண்ணினது ஆகையாலே -எண்ணின   வாறாக இக்கருமங்கள் -திருவாய் -10-6-3-என்கிற படியே –
அசத்ய சங்கல்பமாய்
ஆவாஹம் த்வஹம் இச்சாமி பிரதிஷ்டம் இஹ  கா நநே -ஆரண்ய -5-34/7-14-என்றும்
தபஸ்வி நாம் ரணே சத்ருன் ஹந்தும் இச்சாமி ராஷசான் -ஆரண்ய -6-25-என்றும்
சத்யா சங்கல்பரானவர் தம்முடைய சங்கல்பமே சங்கல்பமாம் படி
கைகேயி மந்த்ர அந்தர்யாமியாய் நின்று கலக்கி
காட்டிலே எழுந்து அருளி தண்ட காரண்ய வாசிகளான பரம ரிஷிகளைக் காணும் போது
ரிக்த ஹஸ்தேன நோபேயாத் -என்கிறபடியே வெறும் கைக் கொண்டு காணலாகாது என்று பார்த்து
விராத வத புரஸ் சரமாகச் சென்று காண
அவர்களும் மகா ராஜரைப் போலே பெருமாளுடைய வீர்யத்திலே அதி சங்கை பண்ணிப் பரீஷித்துத் தெளிய வேண்டாதபடி விராதவதத்திலே த்ருஷ்ட உதாஹரணர் ஆகையாலே விநீதராய் வந்து
பரி பாலய நோ ராம வதயமா நான் நிசாசரை-ஆரண்ய -6-19-என்று எங்களை ரஷிக்க வேணும் என்று சரணம் புக –
பவதா மாத்த சித்த்யர்த்தமாக தோஹம்யத்ருச்சயா -ஆரண்ய -7-24- என்று ஓம் கொடுத்து
ஜாகாம சாஸ்ரமாம் ஸ்தேஷாம் பர்யாயேண தபஸ்வி நாம் -ஆரண்ய -11-24-என்கிறபடியே
சரபங்க  ஸூ தீஷ்ண அகஸ்த்ய தத் பிராத்ரு பிரமுகரான ரிஷிகள் ஆஸ்ரமத்திலே பர்யாயேண எழுந்து அருளி இருக்கிற
பெருமாள் அகஸ்த்யர் உபதேசத்தாலே கோதாவரீ தீரமான  பஞ்சவடி பரிசரத்திலே பர்ணசாலையும் சமைத்து
ச ராம பர்ணசாலா யாமாஸீநஸ் சஹ சீதயா
விரராஜ மஹாபா ஹூ ச்சித்ரயா சந்த்ரமா இவ –
லஷ்மணேன சஹ ப்ராதரா -ஆரண்ய -17-4-என்று
நாச்சியாரோடும் இளைய பெருமாளோடும்கூட இனிது அமர்ந்து எழுந்து அருளி இருக்கிற அளவிலே
தமதேசம் ராஷசீ காசிதா ஜகாம யத்ருச்சயா -சா து ஸூர்ப்பணகா நாம -ஆரண்ய -17-5-என்று
சூர்பணகை யாய் இருக்கிற ராஷசி யானவள் யாத்ருச்சிக ஸூ க்ருதம் அடியாக வந்து கிட்டி
ப்ராப்த விஷயமாய் இருக்கச் செய்தேயும் கடகனான ஓர் ஆச்சார்யன் அடியாக
விசேஷ ஜ்ஞானம் பிறவாமையாலே
புருஷகாரம் முன்னாக பற்றாத அளவன்றிக்கே அவ்விஷயத்திலே அசஹ்ய அபசாரத்தைப் பண்ணி
ந ஷமாமி  -க்கு இலக்காக
இத யுக்தோ லஷ்மணஸ் தஸ்யா கருத்தோ ராமஸ்ய பசித
உத்த்ருத்ய கட்கம் சிச்சேத கர்ண நாசம் மஹா பல-ஆரண்யம் -18-21- என்றும்
கூரார்ந்த வாளால் கொடி மூக்கும் காதிரண்டும் ஈரா விடுத்து -சிறிய திருமடல் -39-என்றும்
காதோடு கொடி மூக்கன்று உடன் அறுத்த கைத்தலத்தா -பெரிய திருமொழி -7-4-3- என்றும் சொல்லுகிறபடியே
தஷிண பாஹூ வான இளைய பெருமாளாலே தாம் கை தொடராய் வைரூப்யத்தை விளைப்பிக்க
விரூபணஞ்சாத்மநி சோணி தோஷிதா சசம்ச சர்வம் பகி நீ கரஸ்யசா -ஆரண்ய -18-26- என்று
வார்ந்த மூக்கும் வடிகிற உதிரமுமாய் தன் ப்ராதாவான காரனுக்கு அறிவிக்க அவனும் குபிதனாய்
வ்யக்தமாக்யாஹி கேன த்வமே வம்ரூபா விரூபிதா -ஆரண்ய -19-2-என்று
உன்னை இப்படிச் செய்தவர்கள் யார் என்று தெளியச் சொல் என்று கேட்க
அவர்களை இன்னார் என்று அடையாளம் தெரியச் சொல்லுகிறாள்
தருனௌ-என்று தொடங்கி-
புத்ரௌ தசரதஸ் யாஸ்தாம் ப்ராதரௌ ராம லஷ்மனு-ஆரண்ய -19-15-என்று
இன்னார் மகன் என்றும் இன்ன பேரை யுடையவன் என்றும் சொல்ல ப்ராப்தமாய் இருக்க
தருனௌ ரூபா சம்பன்னௌ-என்று பருவத்தை இட்டுச் சொல்லுவது
வடிவு அழகை இட்டுச் சொல்லுவது என் என்னில்
இவளுக்கு வைரூப்யம் பிறந்தது அத்தனை போக்கி வைராக்கியம் பிறந்தது இல்லைஇ றே-
ஆகையாலே காம மோஹிதா -ஆரண்ய -17-9- என்கிற தன் அபி நிவேசம் வடிவிட்டு ப்ராதாக்கள் முன்னென்று பாராதே தன்னுடைய ஹ்ருதகதத்தைச் சொல்லுகிறாள்
அனுகூலர் ஆகிலுமாம் பிரதிகூலர் ஆகிலுமாம் இவ்விஷயத்தில் அகப்பட்டவர்களுக்கு பணி இ றே இது –
யானி ராமஸ்ய சிஹ் நாநி -சுந்தர -35-3- என்று அடையாளம் தெரியச் சொல் -என்று பிராட்டி திருவடியைக் கேட்க
த்ரிஸ்  ஸ்திரஸ் த்ரிப்ரலமபச்ச -சுந்தர -35-27- என்று சொல்லுவதற்கு முன்னே
ராம கமல பத்ராஷ சர்வ சத்வ மநோ ஹர -சுந்தர -35-8-என்று சொன்னான் இ றே –
இவை தனக்கு பிரயோஜக ரூப நாமங்கள் சொல்ல வென்றும் உண்டு இ றே
அதிலே ரூபாணி விசிதய தீர நாமா நி க்ருத்வா -புருஷ ஸூக்தம் -என்கிற கிராமத்திலே பிரதமபாவியான ரூபத்தை முற்படச் சொல்லுகிறாள் ஆகவுமாம்
அன்றியிலே
ஸூ ப்த ப்ரமத்த குபிதா நாம பாவ ஜ்ஞானம் த்ருஷ்டம் -என்று குபிதை யாகையாலே ஹ்ருத்கதார்த்தத்தை
அவசமாக தன்னையும் அறியாமல் வெளியிடுகிறாள் ஆகவுமாம்
இதிலே -ராமமிந்தீ வரச்யாமம கந்தர்ப்ப சத்ரு சப்ரபம்
ப்பூ வேந்த்ரோபமம் த்ருஷ்ட்வா ராஷசீ காம மோஹிதா -என்கிறபடியே
தான் அவரைக் கண்டு காமுகையாவதற்கு அடியாய் இருப்பதொரு ஆகர்ஷகமான ஆகாரமும்
தன் பரிபவத்தால் உண்டான கோபாதி சயத்தாலே
தயோஸ் தச்யாச்ச ருதிரம் பிபேயமஹம்-ஆரண்யம் -19-20-என்றும் சொல்லுகிறவள் ஆகையாலே
கோயமேவம் மஹா வீர்ய -ஆரண்ய -19-6-என்று இவர்களை அளவிட மாட்டாதே அருகிருக்கிற ப்ராதாவான கரனுக்கு
பலமூலா ஸி நௌ தாந்தௌ தாபசௌ தர்ம சாரினௌ-ஆரண்ய -19-15-என்று
அவர்கள் எளிமை சொல்லுகிறதோர் ஆகாரமும்
ராமஸ்ய ச மஹத் கர்ம மஹாம் சதரா ஸோ அபவந்மம-ஆரண்ய -21-10-என்று இவர்களுக்கு
அஞ்சினவள் ஆகையாலும் அவன் நெஞ்சில் எரிச்சல் பிறக்கைக்காகவும்
புத்த்யாஹ  மநு பச்யாமி ந த்வம ராமஸ்ய சமப்ரதி
ஸ்தாதும் பரதிமுகே   சக்தஸ் சசாபசைய மஹா ரணே -ஆரண்ய -21-16-என்று
கையும் வில்லுமாய் அவ்வாண் பிள்ளை புறப்பட்டால் நீயோ அவர் முன்னே நிற்கிறாய் என்று
அவர்களுடைய ஆண்மை சொல்லுவது ஆகாரமும்
ஆக ஆகாரத்ரயமும் விவஷிதம் –

வியாக்யானம் –
அதில் முற்பட ஆகர்ஷக ஆகாரத்தில் யோஜனை இருக்கிறபடி –
தருனௌ ரூப சம்பன்னௌ ஸூ குமாரௌ மஹா பலௌ
புண்டரீக விசாலா ஷௌ சீரச்ருஷிணாஜிநாம்பரௌ-
அவர்களுடைய
பருவம் இருக்கிறபடியும்
வடிவு அழகு இருக்கிறபடியும்
செயலிருக்கிறபடியும்
மிடுக்கு இருக்கிறபடியும்
கண் அழகு இருக்கிற படியும்
ஒப்பனை அழகு இருக்கிறபடியும்
அவர்கள் இருவருக்கும் உண்டு இத்தனை போக்கி -வேறு ஒருவருக்கும் இல்லை கான் -என்கிறாள் –
என்னை இது விளைத்த ஈரிடண்டு மால் வரைத் தோள் மன்னன் -பெரிய திரு மடல் -என்று
என்னை அகப்பட இப்படி யாக்கிற்று அந்த குண சமுதாயம் அன்றோ –
1-தருனௌ –
யுவா குமார -ருக் -2-8-25-என்றும்
ய பூர்வ்யாய வேதசே நவீயசே ஸூ மஜ்ஜா நயே விஷ்ணவே ததாசதி யவீயசே -யஜூ ஆ -2-4-3-29-என்றும்
அரும்பினை அலரை-பெரிய திருமொழி -7-10-1-என்றும்
வேத சித்தமான அர்த்தத்தை இவளொரு ராஷசி கையாட்சியாகச் சொல்ல்லுகிறாள் இ றே-
இது தான் ராஷசிகளுக்கு பணியாய்இருந்தது இ றே –
வ்யகதமேஷ மஹா யோகீ பரமாத்மா சநாதன
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர -யுத்த -114-14-என்றாள் இ றே  மண்டோதரியும்
2-தருனௌ –
முக்தரானவர்களோடு பத்தரானவர்களோடு தசரத  வாமதேவாதிகளோடு வாசி அற
கரியான் ஒரு காளை–பெரிய திருமொழி -3-7-1-என்றும்
கோவிந்தன் என்பானோர் காளை புகுதக் கனாக் கண்டேன் -நாச் திரு -6-2-என்றும்
பிரணயிநிகளை அகப்படுத்திக் கொள்ளுவது பருவத்தை இட்டே இ றே
அப்பருவத்தில் ஆயிற்று இவளும் ஈடுபட்டது
3-தருனௌ –
இவள் பத்த பாவை யாயிற்று பெருமாள் பக்கலிலே யாகில் வைரூப்யம் விளைந்தது இளைய பெருமாள் பக்கலிலே யாகில்
இரண்டு பஷத்திலும் ஒருத்தரே அமைந்திருக்க த்வி வசனமாக சொல்லுவான் என் என்னில்
அந்யோந்ய சதருசௌ வீரௌ-கிஷ்கிந்தா -3-12- என்று அழகுக்கும் ஆண் பிள்ளைத் தனத்துக்கும் ஒருவருக்கு ஒருவர் குறையாமையாலும்
க்ருததா ரோஸ்மிபவதி பார்யேயம் தயிதா மம-ஆரண்ய -18-2-என்றும்
ஸ்ரீ மா நக்ருத தாரச்ச லஷ்மணோ நாம வீர்ய வான்
அபூர்வ பார்யா ப்ரார்த்தீ ச தருண பிரிய தர்சன
ஏனம் பஜ விசாலாஷி பாத்தாரம-என்றும்
நான் க்ருத விவாஹனுமாய் ஸ்நிகத பார்யனுமாகையாலே உனக்கு யோக்யன் அல்லன்
இவன் அக்ருத விவாஹனுமாய் விவாஹம் பண வேணும் என்கிற ஆசையை யுடையனுமாய் இருக்கிறான்
ஆனபின்பு இவனை பர்த்தாவாக வரி -என்று பெருமாள் திரு உள்ளமாக
அவ்வழியாலே இளைய பெருமாள் பக்கலிலே இவள் பத்த பாவையாக
கதம் தாஸ ஸய மே தாஸீ பார்யா பவிது மர்ஹசி
ஆர்யச்ய த்வம் விசாலாஷி பார்யா பவ யவீ யஸீ-என்று
அவர் அடிமையான எனக்கு ஸ்திரீ யானால் நீயும் அடிமையாவாய் இத்தனை
அது ந நமேயம் து கஸ்ய சித் -வணங்கல் இலி வரக்கரான உங்களுக்கு சேராது
நாச்சியாராக வாழலாம் படி அவர் தமக்கு இளைய நங்கையாராகப் பாராய்  -என்று இளைய பெருமாள் சொல்ல பெருமாள் பக்கலிலும் துவக்குண்டு இப்படி பத்த பாவை யாகையாலும்
வைரூப்ய கரணத்திலும் -விரூபயிதும் அர்ஹசி-ஆரண்ய -18-20-என்று பிரயோஜன கர்த்தாவாயும்
உத்தருத்ய கட்கம் சிச்சேத கர்ண நாசம மஹா பல-ஆரண்ய -18-21-என்று
இருவரையும் கூட்டாகச் சொல்லுகிறாள் ஆகையாலும்
இங்கு இருவரையும் ஒக்கச் சொல்லுகிறாள்
4-தருனௌ-
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்  -என்னுமா போலே ஒருவர் இருவராய் வந்து அன்றோ என்னை ஈடழித்தது-
5- தருனௌ –
தம்பி தமயனானால் பர்வத்திலேயும் சிறிது வேறுபாடு காணலாம் இ றே
அப்படி அன்றியிலே ஒரு படியாய்க் காண்இருக்கிறது
புனர்பூசம் பூசமாய் பின்னாளும் முன்னாளும் ஆனால் அத்தனை வாசி தெரியாது இ றே –

இப்படி பருவத்தை யிட்டு மயக்கும் இத்தனையாய் வடிவு தன்னைப் பார்த்தால் போலியாய் இருக்குமோ என்னில்
1- ரூப சம்பன்னௌ-
ரூபத்தைப் பார்த்தால் அழகு வேண்டி இருப்பார்க்கு அவர்கள் பக்கலிலே இரந்து கொண்டு போக வேண்டும்படியாய்க் காண் கூடு பூரித்துக் கிடந்தபடி
2- ரூப சம்பன்னௌ –
காமனார் தாதை -பெரிய திருமொழி -1-1-3-என்று அந்த காமன் அகப்பட
அங்கா தங்காத் சம்பவசி -மந்திர பிரச்னம் -2-11-33-என்று இவர் திரு மேனியில்
ஏக தேசத்தில் உத்பன்னன் ஆகையால் அன்றோ  அவ் வழகு தான் யுண்டாயிற்று
3- ரூப சம்பன்னௌ –
உத்பன்னம் த்ரவ்யம் ஷணம்நிர்க்குணம் திஷ்டதி -என்கிறபடியே முற்பட ஆஸ்ரயம் யுண்டாய் -அதிலே குணங்கள் யுண்டாகை அன்றிக்கே
ரூப தாஷிண்ய சம்பன்ன ப்ர ஸூதா -சுந்தர -35-8-என்கிறபடியே
ரூபத தாஸ்ரயங்கள் சஹ உத்பன்னங்களாய் காண் அவர்கள் பக்கல் இருக்கிறது –
4-ரூப சம்பன்னௌ-
வடிவுடை வானோர் தலைவனே -திருவாய் -7-2-10- என்றும்
அச்சோ ஒருவர் அழகிய வா -பெரிய திருமொழி -பெரிய திருமொழி -9-2-என்றும்
என் முலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாய்  -பெரிய திருமொழி -3-6-9-
காரார் திருமேனி கண்டதுவே காரணமா பேராப் பிதற்றாத் திரி தருவான் -சிறிய திருமடல் -என்றும்
ராமேதி ராமேதி சதைவ புத்த்யா விசிந்த்யா வாசா ப்ருவதீ -சுந்தர -32-11-என்று
பெண் பிறந்தாரைப் பிச்சேற்றி வாய் வெருவப் பண்ணும் வடிவு காண் அவரது
இவர்கள் இருவருடையவும் வடிவு அழகிலே காண் நான் உழலுகிறது –

இவ் வழகேயாய்-அணைத்துப் பார்த்தால்  உறைத்து இருக்குமோ என்னில்
1- ஸூ குமாரௌ
முரட்டு ராஷசரான உங்களைப் போலே அன்று காண்-அவர்கள் மார்த்வம் இருக்கிறபடி –
பூவிலே அணைந்தால் போலே காண் இருப்பது –
திருஷ்டாந்தம் சொல்லுமவர்களும்
அதஸீ புஷ்ப சங்கா சம -பாரதம்-சாந்தி -46-118- என்றும்
ராமம் இந்தீவரச் யாமம் -ஆரண்யம் -17-9-என்றும்
பூவைப் பூ வண்ணா -என்றும்
காயம் பூ வண்ணா -என்றும் புஷ்பத்தை இட்டு இ ரே சொல்லிற்று
2- ஸூ குமாரௌ –
வடிவு இணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -திருவாய் -9-2-10-என்று பூவில் பரிமளத்தையும்
மண்ணில் பரிமளத்தையும் உபாதாநமாக யுடைய பிராட்டிமாரும் அகப்பட அணைக்கை அன்றிக்கே
அடுத்து அடுத்து பார்க்கவும் போராத -பொறாத -படியாய்க் காண் அவர்கள் மார்த்த்வம் இருக்கும் படி –
3- ஸூ குமாரௌ –
நடந்த கால்கள் நொந்தவோ -திருச் சந்த -61- என்றும்
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ அன்றேல் இப்படிதான் நீண்டு தாவிய அசைவோ -என்றும்
தாளால் உலகம் அளந்த அசைவே கொல்-என்றும்
ஸ்வா பாவிகமான வியாபாரமாகப் படத் திரு மேனிக்குப் பொறாது என்று அனுகூலர் வயிறு பிடிக்கும் படியாய்க் காண அவர்கள் மார்த்த்வம் இருக்கும் படி –
4- ஸூ குமாரௌ –
திவ்யனான காமன் ஒருவன் இ றே
இவர்கள் பௌ மராய் இருப்பார் இரண்டு காமராய்க் காண தோற்றுகிறது-
5- ரூப சம்பன்னௌ ஸூ குமாரௌ –
அவன் அனங்க னாய் இ றே இருப்பது
கந்தர்ப்ப இவ மூர்த்தி மான் -சுந்தர -34-30- என்கிறபடியே
ரூபவான்களாய் காண இந்தக் காமர்கள் இருப்பது
ராம மன்மத சரேண தாடிதா துஸ் ஸ்ஹேந ஹ்ருதயே நிசாசரீ-ரகுவம்சம் -11-20-என்று
காமனாகவே பரிக்ரஹித்துச் சொன்னான் இ றே –

இப்படி எழிலும் அழகுமாய் தூரத்திலே அகப்படுத்தும் அளவேயாய்-கிட்டி அனுபவிக்கப் பார்த்தால்
உடல் கொடுக்க -ஆடல் கொடுக்க-சம்ச்லேஷிக்க – மாட்டாத துர்ப்பலராயோ இருப்பது -என்னில்
1-மஹா பலௌ-
வையாத்யத்தில் வந்தால் தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு -திருவாய் -2-1-7–என்றும்
வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளை-பெரிய திருமொழி -8-3-1-என்றும்
பெண் பிறந்தோர் தோற்று எழுதிக் கொடுக்கும் படியாய்க் காண் இருப்பது
2- மஹா பலௌ-
ராமஸ்து சீதயா சார்த்தம் விஜஹார பஹூன் ருதூன் -பால -77-26- என்றும்
மைந்தனை மலராள் மணவாளனை -திருவாய் -1-10-4- என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ருங்கா ரத்தில்   வந்தால் அநேக ருதுக்களை ஒருபடிப்பட நடத்தா நின்றாலும்
எதிர்த்தலை அப்ரதானமாம் படி  காண் அவர்கள் பிராபல்யம் இருக்கும் படி –
அன்றிக்கே
3- மஹா பலௌ –
காதல் கடல் புரையவிளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் தோழி கடியனே -திருவாய் -5-3-4-என்கிறபடி
பருவத்தையும் வடிவு அழகையும் செவ்வியையும் இட்டுப்
பிறரை படுகுலைப் படுத்தித் துடிக்கும் படி பண்ணி பின்னை அவர்கள் நினைவில் ஓரடியும்
புகுராத படியாய்க் காண் அவர்கள் அத்யவசாய பிராபல்யம் இருக்கும் படி என்னவுமாம் –

ஆக இப்படி சமுதாய சோபையிலும்-அவயவ சோபை மட்டமாய் இருக்குமோ என்னில் –
1- புண்டரீக விசாலாஷௌ-
அது கண் அழகைத் தப்பினால் அன்றோ வேறொரு அவயவத்தில் இழிய ஓட்டுவது –
2- புண்டரீக விசாலாஷௌ-
அவை -யௌவனம் -வடிவழகு -மென்மை-பலம் – எல்லாம் கிட்டினால் அழிக்குமவை-
இனி இது அங்கன் அன்றிக்கே தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி -திருவாய் -9-9-9-என்றும்
தாமரைக் கண்கள் கொண்டீர்தியாலோ -திருவாய் -10-3-1-என்றும்
தூரத்திலே தோற்றின போதே அழிக்கும் படியாய்க் காண் கண்கள் இருப்பது
3-  புண்டரீக விசாலாஷௌ-
புண்டரீகம் சிதாம்போஜம் -அமர -1-10-41- இ ரே
சம்ரக்த நய நா கோரா -ஆரண்ய -20-12- என்று உங்களைப் போலே எரி விழியாய் இருக்கை அன்றிக்கே
ஸூ பிரசன்னத வளமான அக்கண்கள் இருந்தபடி காண்
4-  புண்டரீக விசாலாஷௌ-
ரஷண உபயோகியான கரு விழியும் செவ்விழியும் கண் பரப்பும் –
தமோ குண உத்ரேகத்தால் நித்ராகஷாயிதம் ஆதல்
ரஜோ குண உத்ரேகத்தாலே கோப சம்ரக்தமாதல் அன்றிக்கே
சத்வ பிரசுரர் ஆகையாலே அவர்களுடைய த்ருஷ்டி பிரசாதமும் இருந்த படி காண் –
5-புண்டரீக விசாலாஷௌ-
அவர் தாம் ஆத்மானம் மானுஷம் மன்யே -யுத்தம் -120-11-என்று தம்மை மறந்தார் ஆகிலும்
யதா கப்யாசம் புண்டரீகமேவ மஷி ணீ-சாந்தோக்யம் -1-7- என்கிறபடியே
அகவாயில் கிடந்த பரத்வத்தைக் கோட் சொல்லித் தாரா நின்றது ஆய்த்தும் கண்கள் தான் –
6-புண்டரீக விசாலாஷௌ-
பாற் கடல் போலே அக்கண்களுக்கு உள்ள அகலம் ஒருவரால் கரை காண ஒண்ணாத படியாய்க் காண் கண்கள் இருப்பது –
7-புண்டரீக விசாலாஷௌ-
கண்ணில் யுண்டான தெளிவுக்கு புண்டரீகத்தை ஒரு போலி சொன்னோம் இத்தனை போக்கி
அகலத்தைப் பார்த்தால் கடலில் புக்கார் கரை காண மாட்டாதே மயங்குமா போலே
புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட வப் பெரிய வாய கண்கள் -என்னும் இத்தனை போக்கி வேறொரு பாசுரம் இட ஒண்ணாது காண் –
8-புண்டரீக விசாலாஷௌ-
உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் -பெரிய திருமொழி -7-1-9- என்றும்
தடம் கொள் தாமரைக் கண் விழித்து–இடம் கொள் மூவுலகும் தொழ இருந்து அருளாய் -திருவாய் -9-2-3- என்றும் சொல்லுகிறபடியே
பத்த முக்த நித்யாத்மகமாய்
த்ரிவித கோடியானஉபய விபூதியும் ஏக உத்தியோகத்திலே கடாஷிக்க வற்றாய் காண் கண்கள் இருப்பது
9-மஹா பலௌ புண்டரீக விசாலாஷௌ-
பலத்தைக் காட்டி அவர்களைத் தோற்பித்து-அவர்களை ஜிதந்தே புண்டரீகாஷா -ஜிதந்தே -1-1-என்றும்
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் கலைமகனை -திருவாய் -2-7-3-என்றும்
எழுதிக் கொள்வது கண் அழகை இட்டு இ றே-
10- மஹா பலௌ புண்டரீக விசாலாஷௌ-
அவர்கள் அளவிலே ஈடுபட்டவர்கள் நேராகக் கை வாங்க மாட்டாதே
அவலோக நாதா நேந பூயோ மாம் பாலய -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-16- என்றும்
தாமரைக் கண்களால் நோக்காய் -திருவாய் -9-2-1-என்றும்
தெரிய நசை பண்ணிக் கால் கட்டும்படி பண்ணுவது இக்கண் களில் தண்ணளி காண் –
11- புண்டரீக விசாலாஷௌ-
ஸூ குமாரௌ -என்கிற பதத்தாலே காமர்கள் என்று சொல்லிற்று இ றே
ஆனால் புஷ்ப பாண ராக வேணுமே
அப்படிக்குக் கண்டது என் என்னில் -கடைக்கண் என்னும் சிறைக்கோலால் நெஞ்சூடுருவ வேவுண்டு நிலையம் தளர்ந்து நைவேனை -நாச் திரு -13-3-என்னும்படி -என்னை நிலை குலைத்த புஷ்ப பாணங்கள் இருக்கிறபடி காண் –

அவ்வவய சோபை மாத்ரத்தாலேயோ அகப்படுத்துவது -என்னில்
1-சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ-
ஒப்பனை அழகாலும் அழிப்பார்கள் காண் அவர்கள் என்கிறாள்
2-சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ-
செவ்வரத்த வுடையாடை அதன் மேல் ஓர் சிவளிக்கைக் கச்சு -பெரிய திரு -8-1-7-என்கிறபடியே
உள்ளுடுப்பது மரவுரி -மேல் சாத்துவது கலைத் தோலுமாயிற்று-இருப்பது
3-சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ-
தாருண்யாதியான  குண சமுதாயத்தை -யௌவனம் -வடிவழகு -மென்மை -பலம் -கண்ணழகு -என்னும்
சமுதாயத்தை பொதிந்த ஒரு கிழிச் சீரை இருந்த படி காண் –
4-தருனௌ-ரூப சம்பன்னௌ-ஸூ குமாரௌ -மஹா பலௌ-புண்டரீக விசாலாஷௌ    சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ-
கிமவ ஹி மதுராணாம்மண்ட நம நாக்ருதீ நாம் -சாகுந்தலம் -1-19-என்கிறபடியே
வறை முறுகலான  ரிஷிகளும் அகப்பட விக்ருதராம் படி இருக்கக் கடவ
அம்மரவுரியும் தோலும் அவர்கள் வடிவிலே சேர்ந்த படியாலே அழகு பெற்று இருந்தபடி -காண் –
5- சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ
ஏதேனுமாக அங்கே சாத்த அமையும் இ றே -ஆகர்ஷகமாகைக்கு
தாஸாமா விர பூச் சௌரி ஸ்மயமா நமுகாம்புஜ பீதாம் பரதர ச்ரக்வீ சாஷான் மன்மத மன்மத -ஸ்ரீ பாகவதம் -10-32-2- என்கிறபடியே
பீதக வாடை யுடை தாழ விருந்தாவனத்தே கண்டோமே -நாச் திரு -14-5-என்றும்
செய்யவுடையும் திருமுகமும் செங்கனி வாயும் குழலும் கண்டு -பெருமாள் திரு -6-7-என்றும்
பெண் பிறந்தார் வாய் புலர்த்தும் படியாய்க் காண் உடை அழகு இருப்பது
6-சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ-
உடுத்துக் களைந்த நின் பீதகவாடை யுடுத்துக் கலத்ததுண்டு -திருப்பல்லாண்டு -9-என்று
ச்வரூபஜ்ஞர்ஆசைப்படுவதும்
பெருமான் அறையில் பீதக வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே-நாச் திரு -13-1-என்று
போகபரர் ஆசைப்படுவதும் பரிவட்டத்தை இ றே –
7-சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ–
ரூப சம்ஹ நநம் லஷ்மீம் சௌகுமார்யம் ஸூ வேஷதாம் தத்ரு ஸூர் விஸ்மிதாகாரா-ஆரண்ய -1-13- என்று
ஸ்வரூப த்யானபரரான ரிஷிகள் அகப்பட இவிக்ரஹ குணத்திலே உடை குலைப்படா நின்றார்கள்
கன்யா காமயதே ரூபம் -என்றும்
பெற்றக்கால் அவனாகம் பெண் பிறந்தோம் உய்யோமோ -பெரிய திரு -8-1-8-என்றும்
உடம்பை உகக்கக் கடவ ஸ்திரீகள் ஆழம் கால் படச் சொல்ல வேணுமோ –

எளிமை சொல்லுகிற யோஜனையில்
1-தருனௌ –
அவர்கள் பக்கலிலே சரக்குண்டாக நினைத்து இருக்க வேண்டா காண்-
ந யுத்த யோக்யதாமச்ய பச்யாமி -பால -20-2-என்கிறபடியே
பூசலுக்கு ஆளாகாதார் சில பாலராய்க் காண் இருப்பது
நானேயோ இது சொன்னேன் –
பாலோ ஹ்யக்ருத வித்யச்ச ந ச வேத்தி பலாபலம்
ந சாஸ்திர பல சம்பன்னோ ந ச யுத்த விசாரத -பால -20-7-என்று பெற்ற தகப்பன் அகப்பட நெஞ்சாறல் பட்டிலனோ –
2- தருனௌ –
யௌவனே விஷயை ஷிணாம்-ரகுவம்சம் -1-8-என்கிறபடியே அந்ய பரராய் திரிகிரவர்களுக்கும் ஒரு பூசல் உண்டோ பொருவது

பாலரான இவ்வளவும் அன்று காண் –
1-ரூப சம்பன்னௌ-
கன்யா காமயதே ரூபம் -ஸூ பாஷிதம் -என்றும்
ரூபேண வநிதா ஜனம் -என்றும் ஸ்திரீகள் அகப்படுகைக்கு
மேனி மினுக்கி திரியும் அத்தனை போக்கி
புருஷர்கள் அகப்ப்படும்படியான ஆண்மை யுடையவர்கள் அல்ல காண்
2- ரூப சம்பன்னௌ –
மூங்கில் பொந்து போலே தொழில் பச்சை இத்தனை போக்கி அகவாயில் உள்ளீடு இல்லை காண் –

அதுக்கடி என் எனில்
1-ஸூ குமாரௌ-
ஸ்ரீ மத் புத்ரர்கள் ஆகையால் செல்வப் பிள்ளைகளாய்க் காண் இருப்பது
2- ஸூ குமாரௌ –
பரஸ்வத ஹதச்யாத்ய மந்த பிராணச்ய பூதலே -ஆரண்ய -22-5-என்கிறபடியே
கடைக் கண் சிவந்து நீ பார்க்கும் பார்வையிலே மாயும்படி இருக்கிறவர்களோ
உன்னுடைய அத்யுக்ரமான ஆயுதங்களைப் பொறுக்கப் புகுகிறார்கள்

வடிவைப் பார்த்தால் திறவியர் அல்லராகிலும்  கார்யத்தில் வந்தால் திறவியராய் இரார்களோ என்னில்
1- மஹா பலௌ-
பல ஹீனர் ஆனவளவே அன்று காண் –
க்ரமாகதமான ராஜ்யத்தை கொடுக்கச் செய்தேயும் அகப்பட ஆள்மாட்டாதே ஒதுங்கி
பெண்டாட்டிக்கு அஞ்சி பொகட்டுப் போரும்படி அந்ய நதா பலராய்க் காண் இருப்பது
அன்றியிலே
2- மஹா பலௌ-
பலவான்கள் தான் ஆனாலும் இவர்கள் இருவரும் இத்தனை போக்கி
இவைகளுக்கு பலமாய் வரப் புகுகிறார்கள் உண்டோ
த்ருஷ்ட்வா தத்ர மயா நாரீதயோர் மத்யே ஸூ மத்யமா -ஆரண்ய -20-17-என்கிறபடியே
கால் கட்டாம் படி குழைச் சரக்கை இருப்பாள் ஒரு பெண்டாட்டியையும் முதுகிலே கொண்டு
திரிகிறவர்களோ பூசல் ஆடப் புகுகிறார்கள் –

பூசலாட மாட்டார்கள் அறிந்தபடி என் என்னில்
1-புண்டரீக விசாலாஷௌ-
விளைவது அறியாமையாலே -இவளுக்கு வைரூப்யம் விளைத்தோம்
மேல் என்னாகப் புகுகிறதோ என்று அவர்கள் வெளுக்க வெளுக்க விழிக்கிறது விழியிலே கண்டேன் காண் –
2- புண்டரீக விசாலாஷௌ-
நீரில் தாமரையை வறளிலே இழுப்பாரைப் போலே தன்ன்லமான நாட்டுக்கு அவர்கள் ஆளித்தனை போக்கி
வேற்று -வெற்று-நிலமான -காட்டுக்கு அவர்கள் ஆளல்லர்
என்னும் இடம் அவர்கள் கண்கள் தானே சொல்லித் தருகிறன காண் –

அவர் தாங்கள் அசக்தர் ஆனால் ஐச்வர்யத்தாலே படை யாண்டு போரத்  தட்டென்-என்று இருக்க வேண்டா –
1-சீர கிருஷ்ணாஜிநாம்பரௌ-
உடுக்கைக்கு ஒரு புடவை அகப்படல் அன்றியிலே காட்டில்
மரத் தோலையும் மான் தோலையும் உடுத்தித் திரிகிறவர்களோ காசு நேர்ந்து படையாளப் புகுகிறார்கள் –
2-சீர கிருஷ்ணாஜிநாம்பரௌ-
உடுக்கிற புடைவை இரண்டும் ஏக ஜாதீயமாகப் பெற்றதோ –
உள்ளுடை ஒன்றும் மேலுடை ஒன்றுமாய் அன்றோ இருக்கிறது –
3-சீர கிருஷ்ணாஜிநாம்பரௌ-
ஸ்தாவரம் ஓன்று கொடுக்க
ஜங்கமம் ஓன்று கொடுக்க
இப்படி பலர் பக்கலாக  இரந்து அன்றோ இது தானும் உடுக்கிறது –

பௌருஷ உபபாதன யோஜனையில்
1- தருனௌ-
ஊந ஷோடஸ வர்ஷ -பால -20-2–எண்ணும்படியான பிள்ளைப் பருவமும் அன்றியிலே
அநேக வர்ஷசாஹஸ்ரோ வ்ருத்தஸ் த்வமஸி பார்த்திவ -அயோத்ய -2-21-என்னும்படி முதிர்ந்த பருவமும் அன்றியிலே
பூசல் என்றால் காட்டு காட்டு என்று வரும்படியான நல்ல பருவம் காண்-
2- தருனௌ –
யௌவநே விஷயை ஷிணாம்-ரக்வம்சம்-1-8-என்றும்
ராஜ்ய காம விஷயா விபேதிரே-என்றும்
பவத் விஷய வாஸிந -என்றும்
விஷய சப்தம் ராஜ்ய வாஸி யாகையாலே
இன்னம் ராஜ்ஜியம் கொள்ள வேணும் என்று மேலே விஜிகீ ஷூ க்களாம் பருவம் காண் –
3- தருனௌ –
இப்பருவம் யுடையார் ஒருவர் அமைந்து இருக்க இருவர் கூடினால் இயலாதது உண்டோ –

இப்பருவமும் யோக்யதையுமாய் வடிவு பார்த்தால் இவர்கள் என்ன பூசல் பொருவது என்னும்படி ஆபாசமாய் இருக்குமோ -என்னில்
1-ரூப சம்பன்னௌ-
சிம்ஹோ ரச்கம் மஹா பாஹூம் -ஆரண்யம் -17-7-என்கிறபடியே
வேறொரு ஆயுதம் வேண்டாதபடி அவர்கள் தோளையும் மார்பையும் கண்ட போதே எதிரிகள் கால்
வாங்கும் படியாய்க் காண் இருப்பது
2- ரூப சம்பன்னௌ –
ரூபம் என்று மதிப்பாய் இப்பருவம் கொண்டு அநுமிக்கை  அன்றிக்கே
கதவா சௌமிதரி  சஹி தோ நா விஜித்ய நிவர்த்ததே -அயோத்யா -2-37-என்றும்
யசச சசைக பா ஜனம்-கிஷ்கிந்தா -15-19- என்றும் சொல்லுகிறபடியே
அயோத்யா பரிசாரம் துடங்கி ஸூ பாகூ மாரீசாதி வதம் பண்ணினத்தாலே
பெ ரு மதிப்பராய் இருக்கிறவர்கள் அல்லவோ -என்றாகவுமாம் –

இப்படி விரோதி வதம் பண்ணும் இடத்தில் வருத்தத்தோடு க்லேசித்தோ பண்ணுவது -என்னில்
1-  ஸூகுமாரௌ-
அவர்கள் ஆண்மைத் தனத்தில் வந்தால் ஒரு வகைக்கு சிறிது சொல்லலாம் இத்தனை போக்கி
வடிவு அழகைப் பார்த்தால் பஹூ முகமாய் பொல்லாதாய் இருக்கை அன்றிக்கே
அத்யந்தம் அபி ரூபமாய்க் காண் இருப்பது -ஸூ -மிகவும் பொருளில்
2- ஸூ குமாரௌ-
அவர்க்களுமாய்ச் சீறிப் புறப்பட்டார்கள் ஆகில் முன்னே வந்த நாலிரண்டு பேரைக் கொன்று விடும் அளவேயோ
கு -சப்தம் பூமியில் உள்ளார் என்னும் பொருளில் –
சதேவ கந்தர்வ மனுஷ்ய பன்னகம் ஜகத் ச சைலம் பரிவர்த்தயாமி -ஆரண்யம் -64-78-என்றும்
சாகர மேகலாம் மஹீம் தஹதி கோபே ந -சுந்தர -36-13-என்றும் பூமியை இருந்ததே குடியாக நசிப்பியார்களோ –

இப்படி நசிப்பிப்பது எது கைம்முதலாக-என்னில்
1- மஹா பலௌ-
தோள் வலியே கைம்முதலாய்க் காண் இருப்பது
2- மஹா பலௌ –
மஹச் சப்தத்தாலே கேவலம் பாஹூ பலமே யன்று
மநோ பலம் யுடையவர்கள் –
கேவலம் மநோ பலமே அன்று
பஹூ பலமும் யுடையவர்கள் -என்று இரண்டையும் நினைத்துச் சொல்லுகிறாள்
3- மஹா பலௌ –
உன்னுடைய சதுரங்க பலமும் அசத் கல்பமாம் படி காண் அவர்கள் பலத்தின் மிகுதி இருக்கும் படி
4-மஹா பலௌ –
நெடும் போது யுத்தம் பண்ணினாலும் ஸ்ரமம் தட்டாத படி பலாதி பலைகள் என்கிற வித்யைகள் உடையராய்க் காண் இருப்பது
விஸ்வாமித்ரர் இடம் பலை அதிபலை என்னும் வித்யைகள் கற்றவர்கள் அன்றோ-

இப்படி ஸ்ராந்தி தட்டாது என்று அறிந்த படி என் என்னில் –
1-புண்டரீக விசாலா ஷௌ-
வேற்று -வெற்று-நிலமான இக்காட்டிலே திரியச் செய்தேயும் தன்னிலத்திலே நின்ற
தாமரைப் போலே அக்கண்ணில் செவ்வி தானே சொல்லா நின்றது காண்
2-புண்டரீக விசாலா ஷௌ–எதிரிகள் என்றால் அவர்கள் பக்கலிலே ஒரு கௌ ரவத்தைப் பண்ணிச் சிறுத்தல் பெருத்தல் செய்கை அன்றிக்கே
அவிக்ருதமாய்க் காண் கண்கள் இருப்பது
3-புண்டரீக விசாலா ஷௌ–
ப்ரீதி விஸ் பாரிதே ஷணம்-என்று எதிரிகளைக் கண்டால் உறாவுகை அன்றிக்கே
மேனாணிப்பாலே ஒரு காலைக்கு ஒரு கால் விஸ்த்ருதங்களாய்க்  காண் கண்கள் இருப்பது –

எதிரிகள் என்றால் இப்படி முகம் மலருகைக்கு அடி என்ன –
பூசலுக்கு என்று கட்டி யுடுத்து
சன்னத்தரானால் அன்றோ அப்படியே இருக்கலாவது
அனவசரத்தில் வந்து தோற்றினார் யுன்டாகில் செய்யுமது என் என்னில்
1- சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ-
சன்னத் தௌ விசரிஷ்யத -என்கிறபடியே உள்ளுடையும் இறுக்கி
உடும்புக்கீடும் இட்டு சந்னத்தராய்க் காண் அவர்கள் இருப்பது
2-சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ–
காட்டிலே சர்வவித சத்வங்களையும் வேட்டையாடித் திரிகிறவர்கள் ஆகையால்
உடைத் தோலும் மரச் சட்டையுமாயக் காண் அவர்கள் இருப்பது –

ஆக இப்படி –
சத்யேன லோகன் ஜயதி தீநான்  தாநேந ராகவ
குரூன் ஸூ ச்ரூஷ்யா வீரோ தநுஷா யுத்தி சாத்ரவான் -அயோத்யா -12-29-என்கிறபடியே
அபலைகளை -அழகாலே அழித்தும்-தருனௌ-ரூப சம்பன்னௌ-ஸூ குமாரௌ-என்பதாலே
அரிகளை பலத்தாலே அழித்தும் -மஹா பலௌ-என்பதாலே
அகதிகளை அருளாலே அழித்தும் -புண்டரீக விசால ஷௌ-என்பதாலே –
தக்கார்க்குத் தக்க கருவிகளை உடையவராய்க் காண் அவர்கள்  இருப்பது –
ஆனபின்பு –
வல்லாளன் தோளும் வாளரக்கன்  முடியும் தனை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் -பெரியாழ்வார் -4-2-2- என்கிறபடியே
நான் மூக்கு அறுப்புண்டு போமித்தனை போக்கி
அவர்களோடு புக்கால் பலியாது காண் என்று பரிபவித்துச் சொல்லுகிறாள் -கரனை அவமதித்துச் சொல்லுகிறாள் –

———————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .


Follow

Get every new post delivered to your Inbox.

Join 72 other followers