பாபாநாம்வா சுபாநாம்வா வதார்ஹானாம் ப்லவங்கம்
கார்யம் கருணம் ஆர்யேன நகச்சின்னா பராயதி-யுத்த 116-44-
கருணை உடன் செயல் பட்டால் ஆர்யன் என்று சொல்லி –ஜாதி பிரயுக்த கர்மம் அவர்களது என்றும் –
பிலவங்கம் உன் ஜாதிக்கு மன்னிக்காதது ஸ்வரூபம் என்றும் சொல்லி மன்றாடினாள் –
திருவடியை பொறுப்பிக்கும் அவள் தன் சொல் வழி வரும் அவனை பொறுப்பிக்க
சொல்ல வேண்டா இறே–முமுஷுப்படி -என்று திருவடி விஷயமாகவும் புருஷி கரித்தமையை
அருளி செய்தார் இறே இவர் தானே —
மித்ரம் ஔ பயிகம் கர்த்தும் ராம ஸ்தானம் பரீப்சதா
வதம் தா நிச்சதா கோரம் த்வயா அசௌ புருஷர்ஷப -சுந்த -21-20-
ராவணன் பிராட்டி முன் நின்று ஜல்பிக்க புக்கவாறே -பிரஜை நலிந்தால் தாய் சீறாள்- அன்றோ
தாயான முறையாலே அவன் கேட்டினைக் கண்டு ஹிதம் செய்து அருளுகிறாள்–
சரணாகத வத்சலன் -சரணாகதன் சொல்லாமல் மித்ரன் -என்றாவது போக ஹிதம் செய்து அருளுகிறாள்–
அவர் திருவடிகளிலே சரணம் புகு என்றால் அவன் தாழ்வாக நினைத்து இசையான் என்பதாலே -தோழமை கொள் என்கிறாள் –
அன்றிக்கே அவர் -தோழைமை -என்ற அளவாலே -என்றார் ஆதலின் -இவள் -தோழமை கொள் -என்கிறாள் என்னுதல்
அவ்வருகு போனாலும் பரம சாம்யா பத்தியை தான் அவன் கொடுப்பது-
எனக்கு பகைவராய் இருப்பாரோடு உறவு செய்ய வேண்டுகிறது என் என்னுமே
ஸ்த்தானம் பரீப்சதா -கெடுவாய் வழி பரிப்பாருக்கும் தரையிலே கால் பாவி நின்று கொள்ள வேணுமே –
ஆதலால் உன் குடி இருப்பை ஆசைப்பட்டாயாகில் இத்தனையும் செய்ய வேண்டும்–
எனக்கு ஒரு குடி இருப்பு வேண்டுமோ
ஆகாசத்தில் சஞ்சரிக்கிறவனாய் அன்றோ இருப்பது நான் என்பது–ராவணனுக்கு கருத்தாக அருளிச் செய்கிறாள்
வதம் சா நிச்சதா –கோரம்
அவர் அம்புகள் ஆகாசத்தில் நடவாவோ -என்கிறாள்
கோரம் -சிங்க விளக்கை எரித்து கொல்லாதே நற்கொலையாக கொல்லும் போதும்–அவரைப் பற்ற வேண்டும் காண் –
த்வயா
பல சொல்லி என் உனக்கு அவர் வேண்டும்
அசௌ
அவர்படி உனக்கு தோற்றுகிறது இல்லையா
உரு வெளிப்பாட்டிலே முன்னிலை இவளுக்கு–அச்சத்தாலே முன்னிலையாக தோற்றும் அவனுக்கு
தீரக் கழிய அபராதம் செய்து நிற்கும் என்னைக் கை கொள்ளுவாரோ -என்ன
புருஷ ரிஷப –
நீ செய்தவற்றை ஒன்றாக நினைத்து இருப்பவர் அல்ல –புருஷோத்தமன் காண் -என்கிறாள்-
————-
தேவிமார் ஆவார் திருமகள் -திவு கிரீடா விஜிகீஷிர் -தாது
அவர்கள் புருவம் நெறித்த இடத்தில் உனக்கு கார்யம் செய்யும்படி–வல்லபைகளாய் இருக்கிற
பெரிய பிராட்டியாரும் ஆண்டாளாரும்-என்றது
குற்றம் செய்யாதவன் யாவன் -என்று பொறைக்கு உவாத்தாய் இருக்கும் ஒருத்தி-
பொறுப்பது எதனை – குற்றம் தான் உண்டோ என்று
அந்த பொறை விளையும் பூமியாய் இருக்கும் ஒருத்தி என்ற படி-
ஆக -அவர்கள் இங்கே இருக்க எனக்கு இழக்க வேண்டுகிறது என்
———-
பிராட்டி சரம ஸ்லோகம் -யுத்த காண்டம் -116-45
பாபானாம் வா சுபானாம் வா
உம் அபிப்ராயம் பாபம் -எம் அபிப்ராயம் சுபம்
கார்யம் கருணம் ஆர்யேன
வதகார்ஹயம்-கொல்லத்தக்க
ந கச்சின் ந அபராத்யதி
கண்டேன் கண்களால்
அஸி தேக்ஷிணா –
கண்ணே ஸர்வ அவயங்களும் சமம்
லகு தரா ராமஸ்ய கோஷ்ட்டி
—————–
ஸ்ரீ யதே -அனைவராலும் ஆஸ்ரயிக்கப் படுகிறாள்
ஸ்ரயதே ச பரம் பரம் –தான் நாராயணனை ஆஸ்ரயிக்கிறாள்
அமுதனினில் வரும் பெண்ணமுது தானே சென்று திரு மார்பிலே அமர்ந்தாளே
தேவர்கள் கூட்டம் பார்த்துக் கொண்டே இருக்கச் செய்தேயும் -வெட்கப்படாமல் -பெண்கள் நடுவில் வெட்கப்பட வேண்டாமே
அவன் ஒருவனே புருஷோத்தமன்
மணி வல்லி பேச்சு வந்தேறி அல்லவே
விஷ்ணு பத்னி -ஜெகன் மாதா இரண்டையும் காட்டிய படி
ஸ்ரீ -ஸ்ருனோதி -நமது விண்ணப்பங்களைக் கேட்க்கிறாள்
ஸ்ரீ ஸ்ராவயதி -அவனையும் கேட்ப்பிக்கிறாள் -அவனிடம் உசித உக்திகளைச் சொல்லிக் கேட்ப்பிக்கிறாள்
ஸ்ரீ -ஸ்ருணாதி-தோஷங்களைப் போக்குவித்து அருளுகிறாள் -தாய் அன்றோ
ராக்ஷஸிகளை தண்டிக்க விரும்பிய -திருவடியை
பிலவங்கமே -சீதா ராமர் கோஷ்ட்டி அறியாமல் பேசுகிறாயே -என்றாளே
ஸ்ரீ நாதி ச குணை ஜகத் -குண பரிபூர்ணை
அநசூயை ஸீதா பிராட்டி சம்வாதம் அறிவோமே
த்ரிஜடை இருப்பு அறிவோமே
வடக்கு வாசல் வழியாக செருப்பையும் பையில் வைத்து தெற்கு வாசல் வழியாக வந்து
கடைகளில் பொருள்கள் வாங்கு மீண்டு வரும் பொழுது வாசலிலே இருந்து வெறும் அஞ்சலிக்கே
ஐஸ்வர்யம் அக்ஷரம் பரமம் பதம் அளித்தும் மேலும் கொடுக்க ஒன்றுமே இல்லையே என்று
வெட்கம் அடைந்து தலை குனிந்து -பட்டர்
———–
ஸ்ரீ வசன பூஷணம்
இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது –-சூரணை-5-
இவை இரண்டாலும் புருஷகார வைபவமும் –உபாய வைபவமும் -சொல்லிற்று ஆய்த்து –சூரணை-6-
புருஷகாரம் ஆம் போது கிருபையும் பாரதந்த்ர்யமும் அநந்யார்ஹத்வமும் வேணும்-சூரணை -7-
பிராட்டி முற்பட பிரிந்தது தன்னுடைய கிருபையை வெளி இடுகைக்காக –
நடுவில் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளி இடுகைக்காக –
அநந்தரம் பிரிந்தது அனந்யார்ஹத்வத்தை வெளி இடுகைக்காக –சூரணை-8-
சம்ச்லேஷ விஸ்லேஷங்கள் இரண்டிலும் புருஷகாரத்வம் தோற்றும் –சூரணை-9-
ஸம்ஸ்லேஷ தசையில் ஈஸ்வரனைத் திருத்தும்
விஸ்லேஷ தசையில் சேதனனைத் திருத்தும் –சூரணை-10-
இருவரையும் திருத்துவதும் உபதேசத்தாலே –சூரணை-11-
உபதேசத்தாலே இருவருடையவும் கர்ம பாரதந்த்ர்யம் குலையும் –சூரணை-12-
உபதேசத்தாலே மீளாத போது சேதனனை அருளாலே திருத்தும் –
ஈஸ்வரனை அழகாலே திருத்தும் –சூரணை -13-
—————
ஸ்ரீ வசன பூஷணம்–வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள் –
இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது –-சூரணை-5-
பிராட்டி என்னாதே-சிறை இருந்தவள் -என்று அருளி செய்தது –
அவளுடைய தய அதிசயத்தை பிரகாசிப்பைக்காக –
தேவ தேவ திவ்ய மகிஷியான தன் பெருமையும் –
சிறை இருப்பின் தண்மையையும் பாராதே -தேவ ஸ்திரீகள் சிறையை விடுவிக்கைக்காக தான்
சிறை இருந்தது தயா பரவசை யாய் இறே -பிரஜை கிணற்றில் விழுந்தால் ஒக்க குதித்து எடுக்கும் மாதாவை போலே –
இச் சேதனர் விழுந்த சம்சாரத்திலே தானும் ஒக்க வந்து பிறந்து -இவர்கள் பட்டதை தானும் பட்டு -ரஷிக்கையாலே –
நிருபாதிக மாத்ருவ சம்பந்தத்தால் வந்த நிரதிசய வாத்சல்யத்துக்கு -பிரகாசகம் இறே இது –
இந்த குணாதிக்யத்தை வெளி இடுகைகாக இறே பரமாச்சார்யரான
நம் ஆழ்வார் தனி சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள்-என்று -திரு வாய் மொழி -4 -8 -5 -அருளி செய்தது –
அவருடைய திவ்ய சூக்தி இறே இவர் இப்படி
அருளி செய்கைக்கு மூலம் –சிறை இருந்ததாலே விளப்புற்றாளே-
சிறை இருப்பு தண்மை ஆவது -கர்ம நிமந்தம் ஆகிலே இறே –
ஆஸ்ரிதரான தேவர்கள் உடைய ஸ்த்ரீகள் சிறையை விடுவிக்கைக்காக தன் அனுக்ரகத்தாலே தானே வலிய செய்தது ஆகையாலே –
ஏற்றத்துக்கு உடலாம் இத்தனை இறே -சம்சாரிகளோடு ஒக்க கர்ப வாசம் பண்ணி பிறக்கிற இது –
பல பிறப்பாய் ஒளி வரும் -திரு வாய் மொழி -1 -3 -2-என்னும் படி சர்வேஸ்வரனுக்கு தேஜஸ் கரமாகிறது –
கர்ம நிமந்தம் அன்றிக்கே அனுக்ரக நிபந்தனம் ஆகை இறே –
ஆன பின்பு -இதுவும் அனுக்ரக நிபந்தனம் ஆகையாலே -இவளுக்கு தேஜஸ் கரமாம் இத்தனை –
இத்தை ராவண பலாத்காரத்தாலே வந்ததாக நினைப்பார் இவள் சக்தி விசேஷம் அறியாத ஷூத்ரர் இறே –
சீதோ பவ -என்றவள் நஷ்டோபவ -என்ன மாட்டாள் அன்றே –
ஆகையால் இது தன் அனுக்ரகத்தாலே பர ரஷண அர்த்தமாக செய்த செயலாகையாலே இதுவே இவளுடைய தயாதி
குணங்களுக்கு பிரகாசம் என்று திரு உள்ளம் பற்றி ஆய்த்து இவள் -சிறை இருந்தவள் -என்று அருளி செய்தது –
ஸ்ரீ ராமாயணம் எல்லாம் இவள் ஏற்றம் சொல்லுகிறது என்னும் இடம் –
காவ்யம் ராமாயணம் க்ருத்ச்னம் சீதாயாஸ் சரிதம் மஹத் -என்று ஸ்ரீ வால்மீகி பகவான் தானே வாயோலை இட்டு வைத்தான் இறே –
ஸ்ரீ மத் ராமாயண மபி பரம் ப்ரானிதி தவச் சரித்ரே -என்று அருளி செய்தார் இறே பட்டர் –
உம்முடைய சரித்ரத்தாலே பிராண தாரணம் -என்கிறார் -பிரகர்ஷமாக உஜ்ஜீவிக்கிறது –
———–
இவை இரண்டாலும் புருஷகார வைபவமும் –உபாய வைபவமும் -சொல்லிற்று ஆய்த்து –சூரணை-6-
அபராத பூயிஷ்டரான சேதனருக்கு ஆஸ்ரயணீயை யாம் அளவில் –
அகில ஜகன் மாதா வான சம்பத்தாலும் –த்வம் மாதா சர்வ லோகாநாம் – –
க்ருபாதிகளாலும் –நிருபாதிக நித்ய -பிரியம் ஏக – தண்ட கரத்வ ஸ்வா தந்தர்ய கந்தமே இல்லையே பிராட்டிக்கு –
அவனுக்கு அபிபூதமாக மறைக்கப்பட்டு இருக்குமே —
நடுவொரு புருஷகாரம் வேண்டாதபடி -தண்ணீரை ஆற்ற தண்ணீர் வேண்டாமே –வந்து ஆஸ்ரயிகலாம்படியாய்-
அபராதங்களை பார்த்து சீறி –ஷிபாமி -ந ஷமாமி -என்னும் ஈஸ்வர ஹ்ருதயத்தை திருத்தி
பெருமாளை திருத்தி என்னாமல் ஈஸ்வரனை என்றது -இவனுடைய பெருமையைக் காட்டி
அவனையும் நியமிக்கும் இவளது பெருமையைக் காட்ட –
அவர்களை அங்கீகரிப்பிக்கும் புருஷகார பூதை யானவள் வைபவமும்
எல்லாருக்கும் இவளை பற்றி ஸ்வரூப லாபம் -இவளுக்கு அவனைப்பற்றி ஸ்வரூப லாபம்
அங்கீகரித்தால் பின்னை அவள் தானே சித குரைக்கிலும்-என் அடியார் அது செய்யார் -என்று
மறுதலித்து தான் திண்ணியனாய் நின்று ரஷிக்கும்-
என் அடியார் அது செய்யார் -எப்பொழுது இவன் அடியார் ஆனார் -நம் அடியார் என்னாமல் -என் அடியார் -என்பதால்
பிராட்டி மகிழ்ந்து -தன் புருஷகாரம் இல்லாமலும் கைக் கொள்ளுவேன் –என்கிறான் –
இது தன்னை –
மத் ப்ராப்திம் பிரதி ஜன்நூனாம் சம்சாரே பததாமத லஷ்மீ புருஷகாரத்வே நிர்திஷ்டா பரமர்ஷிபி
மமாபிச மதம்ஹ்யதேத் நான்யதா லஷணம் பவேத் –பாஞ்சராத்ரம் -என்றும் –
என்னை அடைய -சம்சாரத்தில் ஆழ்ந்த ஜனங்களுக்கு லஷ்மி புருஷகாரமாக -ரிஷிகள் சொல்வார் –
என் திரு உள்ளமும் அதுவே –
அந்நிய லக்ஷணம் நாஸ்தி –
அஹம் மத் ப்ராப்த் உபாயோவை சாஷாத் லஷ்மீ பதிஸ் ஸ்வயம்
லஷ்மீ புருஷகாரேன வல்லபா ப்ராப்தி யோகி நீ
ஏஹச்யாச்ச விசேஷோயம் நிகமாந்தேஷூ சப்த்யதே -என்றும் –
லஷ்மி பதியான நான் உபாயமாக இருக்கிறேன் -பிரசித்தம் –
நானே உபாயம் -வை சப்தம் -அவளை புருஷகாரமாக இருக்கும் பொருட்டு வைத்துள்ளேன் –
இந்த பாவனைகள் வேதாந்தத்தில் உள்ளதே
அகிஞ்சன்யைக சரணா கேசித் பாக்யாதிகா புன மத்பதாம் போருஹத் வந்தவம் ப்ரபத்யே ப்ரீத மானசா
லஷ்மீம் புருஷகாரேன வ்ருதவந்தோ வரானன மத் ஷாமாம் ப்ராப்ய சேநேச ப்ராப்யம் ப்ராபகம் ஏவ மாம்
லப்த்வா க்ருதர்த்தா ப்ராப்ச்யந்தே மாமே வானன்ய மானசா -என்று
சேனாபதி ஆழ்வானுக்கு பாஞ்சராத்ரத்தில் -ஆகிஞ்சன்யம் பற்றாசாக -திருவடிகளை பற்றி -ப்ரீதியான மனதுடன் –
அவளை புருஷகாரமாக பற்றி –
என்னுடைய க்ஷமையை ஏற்றுக் கொண்டு -பிரப்பயமான என்னை பிராபகமாக கொண்டு –
கருமுகை மாலையை சும்மாடு ஆக்கி –பகவத் சாஸ்த்ரத்திலே தானே அருளி செய்தான் இறே –
பூ மேல் இருப்பாள் வினை தீர்க்கும் என்னும் இடங்களில் -புருஷகாரமாகவே பர்யவசிக்கும் –
உபாயத்வம் த்வனிக்கும் சப்தங்களுக்கு பிரதி நீயத்வ தர்மமே சித்தம் —
இச் சேதனனுக்கு இருவரோடும் சம்பந்தம் உண்டாய் இருக்க ஈஸ்வர சமாஸ்ரயணதுக்கு இவள் புருஷகாரமாக வேண்டுகிறது என் என்னில் –
மாத்ருத்வ பிரயுக்தமான வாத்சல்யாதி ரேகத்தாலும் -அவனை போல காடின்ய மார்த்தவங்கள் -கலந்து இருக்கை-அன்றிக்கே –
கேவல மார்த்தவமே யாய் -பிறர் கண் குழிவு காண மாட்டாதே பிரகிருதி யாகையாலும் —
ஹித புத்தியால் திருத்த தண்டித்தாலும் -இவன் துக்கப்பட்டு கண் கலங்க விட மாட்டாள் இவள் –
விமுகரையும் அபிமுகர் ஆக்குகைக்கு கிருஷி பண்ணும் அவள் ஆகையாலும்
குற்றவாளர்க்கும் கூசாமல் வந்து காலிலே விழலாம் படி இருப்பவளாய்—பும்ச்த்வ பிரயுக்தமான காடின்யத்தோடே பித்ருத்வ
பிரயுக்தமான ஹித பரதையாய் உடையவனாய் –இரண்டும் உண்டே புருஷோத்தமனுக்கு -குற்றங்களை பத்தும் பத்துமாக கணக்கிட்டு
க்ரூர தண்டங்களை பண்ணுகையாலே -குற்றவாளர்க்கு முன் செல்ல குடல் கரிக்கும் படி-அத்யந்த பயங்கரமாய் – இருக்கும்
ஈஸ்வரனை உசித உபாயங்களாலே குற்றங்களைஅடைய மறப்பித்து கூட்டி விடும் அவளாய் இருக்கையாலே
அபராதமே வடிவான இச் சேதனன் அவனை ஆஸ்ரயிக்கும் அளவில் இவள் புருஷகாரமாக வேணும் –
ஆகை இறே அவனை உபாயமாக வரிக்க இழிகிற அளவில் இவளை புருஷகாரமாக முன் இடுகிறது-
———
புருஷகாரம் ஆம் போது கிருபையும் பாரதந்த்ர்யமும் அநந்யார்ஹத்வமும் வேணும்-சூரணை -7-
இம் மூன்று குணத்திலும் வைத்து கொண்டு -கிருபையானது -ஸ்ரிங் சேவாயாம்-என்கிற தாதுவிலே
நிஷ்பந்தமான ஸ்ரீ சப்தத்தில் ஸ்ரீ யதே என்கிற கர்மணி வ்யுத்த பத்தியிலும் –
ஸ்ரியதே ஸ்ரீ –பாரதந்த்ர்யா அனந்யார்ஹத்வங்கள் இரண்டும் –
ஸ்ரீ யதே என்கிற கர்த்தரி வ்யுத்பத்தியிலும் -ஸ்ரேயதே –நித்ய யோக வாசியான மதுப்பிலும் -ஸ்ரீ மத்-சித்தம் இறே –
ஸ்ரீ -நித்ய யோக மத் ப்ரத்யயம் – –அவனை ஆஸ்ரயிக்கிறாள் -பாரதந்தர்யம் அநந்யார்ஹத்வம் -இருப்பதால்
நாம் ஆஸ்ரயிக்கிறோம் -கிருபை இருப்பதால் –
தேவ்யா காருண்யா ரூபாயா -என்று தத் குண சாரத்வத்தாலே காருண்யம் தானாக சொல்லும்படியான
தன்னுடைய பரம கிருபையை பிரகாசிப்பைக்காக —என்கை
தேவ ஸ்திரீகள் சிறையை விடுவிகைக்காக தான் சிறை இருக்கையாலும் -அவ் இருப்பில் தன்னை
அல்லும் பகலும் தர்ஜன பர்ஜநம் பண்ணி அருவி தின்ற க்ரூர ராஷசிகள் -ராவணன் பராஜிதனாகவும்
பெருமாள் விஜயீகளாகவும்-திரிஜடை சொப்பனம் கண்டதாலே பீத பீதைகளாய் நடுங்குகிற தசையில் -சரணாகதி பண்ணாத திசையிலும் –
லகுதரா ராம கோஷ்ட்டி -இதனாலே பரம கிருபை என்றார் —
பவேயம் சரணம் ஹி வ -என்று நீங்கள் நோவு படுகிற சமயத்துக்கு நான் இருந்தேன் -நீங்கள் அஞ்ச வேண்டா என்று –
அபய பிரதானம் பண்ணுகையாலும்-அது உக்தி மாத்ரமாய் போகாமே -ராவண வத அநந்தரம்
தனக்கு சோபனம் சொல்ல வந்த திருவடி அவர்களை சித்ர வதம் பண்ணும்படி காட்டித் தர வேணும் என்ன –
அவனோடே மன்றாடி ராஜ சம்ஸ்ரைய வச்யானாம்-இத்யாதியாலே–சாமான்யமாக சொல்லி – அவர்கள் குற்றத்தை குணமாக
உபபாதித்தும் -மர்ஷயா மீஹா துர்பலா -என்று பிறர் நோவு கண்டு பொறுத்து இருக்க தக்க நெஞ்சுரம்
தனக்கு இல்ல்லாமையை முன்னிட்டும் –
கார்யம் கருண மார்யென ந கச்சின் நா பராத்யதி -என்று
அவனுக்கும் இரங்கி அல்லது நிற்க ஒண்ணாதபடி உபதேசித்தும் –
இப்படி ஒரு நிலை நின்று தான் அடியில் பண்ணின பிரதிக்ஜை அநு குணமாக
ஆர்த்ரா பராதரைகளை ரஷிக்கையாலும்-கையில் உள்ள ஈரமும் காயாத முன்பு -என்றபடி -தன்னுடைய கிருபையை வெளி இட்டாள் இறே-
அனன்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா -அன்யாஹி மயா சீதா –
————-
பிராட்டி முற்பட பிரிந்தது தன்னுடைய கிருபையை வெளி இடுகைக்காக –
நடுவில் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளி இடுகைக்காக –
அநந்தரம் பிரிந்தது அனந்யார்ஹத்வத்தை வெளி இடுகைக்காக –சூரணை-8-
சம்ச்லேஷ விஸ்லேஷங்கள் இரண்டிலும் புருஷகாரத்வம் தோற்றும் –சூரணை-9-
ராவண வத அநந்தரம் ராஷசிகளை சித்ர வதம் பண்ணுவதாக உத்யுக்தனாய் நிற்கிற
திருவடியை குறித்து -பாபானாம்வா சுபானாம்வா வதார்ஹானாம் ப்லவங்கம
கார்யம் கருண மார்யென ந கச்சித் ந பராத்யதி -என்று அவன்-திருவடி – இரங்கத் தக்க
வார்த்தைகளை சொல்லி அவர்கள் அபராதங்களை பொறுப்பிகையாலும்-இங்கு புருஷகாரம் பண்ணுவது திருவடி இடம் -ரஷிக்க-
இது தேறுமோ என்னில்- சேதனர் அநிஷ்டம் போக்குவதே –
உபய தசையிலும்-இவள் புருஷகாரத்வம் தோற்றா நின்றது இறே திருவடி ராஷசிகளை அபராத அநு குணம்
தண்டிக்கும் படி காட்டித் தர வேணும் என்ற அளவில்
பிராட்டி அவனுடன் மன்றாடி ரஷித்த இத்தனை அன்றோ –
மாதர் மைதிலி ராஷசீஸ் த்வயி ததை வார்த்த்ர அபராதாஸ் த்வயா ரஷந்த்யா
பவனாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா காகம் தஞ்ச விபீஷணம்
சரணமித் யுக்தி ஷமவ் ரஷதாஸ் சா நஸ் சந்திர மகா கசஸ் சூகயது ஷாந்தீ ச்தவாகச்மிகீ -என்று
பவனாத்மஜன் நிமித்தமாக ரஷித்தாள் என்று அன்றோ பட்டரும் அருளி செய்தது –
கருணை உடன் செயல் பட்டால் ஆர்யன் என்று சொல்லி –ஜாதி பிரயுக்த கர்மம் அவர்களது என்றும் –
பிலவங்கம் உன் ஜாதிக்கு மன்னிக்காதது ஸ்வரூபம் என்றும் சொல்லி மன்றாடினாள் –
திருவடியை பொறுப்பிக்கும் அவள் தன் சொல் வழி வரும் அவனை பொறுப்பிக்க
சொல்ல வேண்டா இறே–முமுஷுப்படி -என்று திருவடி விஷயமாகவும் புருஷி கரித்தமையை
அருளி செய்தார் இறே இவர் தானே —
——–
ஸம்ஸ்லேஷ தசையில் ஈஸ்வரனைத் திருத்தும்
விஸ்லேஷ தசையில் சேதனனைத் திருத்தும் –சூரணை-10-
இருவரையும் திருத்துவதும் உபதேசத்தாலே –சூரணை-11-
ஈஸ்வரனை திருத்துவது -இச் சேதனனுடைய குற்றங்களை கணக்கிட்டு நீர் இப்படி தள்ளிக்
கதவடைத்தால் இவனுக்கு வேறு ஒரு புகல் உண்டோ -உமக்கும் இவனுக்கும் உண்டான பந்த
விசேஷத்தை பார்த்தால் -உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -என்கிறபடியே-
என் பிழையே நினைந்து அருளி -ஏவகாரத்தால் மற்றவை எல்லாம் மறந்தீர் —
நாரமும் அயனும் சம்பந்தம் அறியாமல் அந்த நாரங்களுக்குள் உள்ள ஸ்ரீ சொல்ல வேண்டும் படி –
குடிநீர் வழித்தாலும் போகாதது ஓன்று அன்றோ -உபாதி மூலம் வந்த தாஸ்யமானால் கும்ப நீர் உடைத்து அறுக்கலாம் –
ஆத்மசம்பந்தம் இத்தாலும் போகாதே —
ஸ்வம்மான இவனை லபிக்கை ஸ்வாமியான
உம்முடைய பேறாய் அன்றோ இருப்பது -எதிர் சூழல் புக்கு திரிகிற உமக்கு நான் சொல்ல வேணுமோ –
ரக்ஷணா சாபேஷனாய் வந்து இவனை ரஷியாத போது -உம்முடைய சர்வ ரஷகத்வம் விகலம் ஆகாதோ —
நல்கித் தான் காத்து அளிக்கும் நாரணன் —
லோக பார்த்தாராம் -லோகத்துக்குள் நான் இல்லையோ -சீதை கேட்டால் போலே -என்னையும் உளள்-போலே
அநாதிகாலம் நம்முடைய ஆஞ்சாதி லங்கனம் பண்ணி நம்முடைய சீற்றத்துக்கு இலக்காய் போந்த இவனை
அபராத உசித தண்டம் பண்ணாதே -அத்தை பொறுத்து அங்கீகரித்தால் சாஸ்திர மரியாதை குலையாதோ
என்று அன்றோ திரு உள்ளத்தில் ஓடுகிறது -இவனை ரஷியாதே அபராத அநு குணமாக நியமித்தால்
உம்முடைய க்ருபாதி குணங்கள் ஜீவிக்கும்படி என்-அவை ஜீவித்தாவது இவனை ரஷித்தால் அன்றோ –
நியமியாத போது சாஸ்திரம் ஜீவியாது -ரஷியாத போது க்ருபாதிகள் ஜீவியாது -என் செய்வோம் என்ன வேண்டா –
சாஸ்த்ரத்தை விமுகர் விஷயம் ஆக்கி -க்ருபாதிகளை அபிமுகர் விஷயம் ஆக்கினால் இரண்டும் ஜீவிக்கும் –
ஆன பின் இவனை ரஷித்து அருளீர் என்னும் உபதேசத்தாலே —
இவ் உபதேச க்ரமம் இவர் தாம் அருளி செய்த பரந்தபடியிலும் –
ஆச்சான் பிள்ளை அருளி செய்த பரந்த ரஹச்யத்திலும் விஸ்தரேன காணலாம் –
பிதேவ த்வத் பிர யேத் ஜன நி பரிபூர்ணா கஸி ஜனே ஹிதே ஸ்ரோதோ வ்ருத்தையா
பவதிச சுதாசித் கலுஷதீ -கிமேதன் நிர்தோஷ -க இஹா ஜகதீதி த்வமுசிதைரூபாயைர்
விஸ்மார்ய ச்வஜநயசி மாதா ததாசி ந–ஸ்ரீ குண ரத்ன ஸ்லோகம் -என்று
அபராத பரிபூர்ண சேதன விஷயமாக ஹித பரனான சர்வேஸ்வரன் திரு உள்ளம் சீரும் படியையும் –
அத்தசையில் இச்சீற்றத்துக்கு அடி என் எனபது -இவன் தீர கழிய செய்த அபராதம் என்றவன் சொன்னால் –
மணல் சோற்றிலே கல் ஆராய்வார் உண்டோ –
இந்த ஜகத்தில் அபராதம் அற்று இருப்பார் யார் -என்பதே உசித உபாயங்களால் -அபராதங்களை
மறப்பித்து பிராட்டி சேர்த்து அருளும்படியையும் அருளி செய்கையாலே உபதேசத்தாலே
ஈஸ்வரனை திருத்தும் படி ஸங்க்ரஹேன பட்டரும் அருளி செய்தார் இறே-
தம் பிழையும் படைத்த பரப்பும் –அபராத சஹத்வம் பாராமல் – –மறப்பித்த தூது நாலுக்கும் விஷயம் –
அவதார தசையிலும் -பிராண சம்சய மா பன்னம் த்ருஷ்ட்வா சீதாத வாயசம்
த்ராஹி த்ராஹீதி பார்த்தார முவாச தாயாய விபும் -என்று வாசா மகோசரமான மகா அபராதத்தை பண்ணின
காகத்தை தலை அறுப்பதாக விட்ட ப்ரஹ்மாச்த்தரத்துக்கு ஒரு கண் அழிவு கற்ப்பித்து பெருமாள் ரஷித்து
அருளிற்றும்-இவள் உபதேசத்தாலே என்னும் இடம் -பாதம புராணத்திலே சொல்லப் பட்டது இறே –
த்ராஹி த்ராஹி -காப்பாற்ற வேண்டும் -என்பதே உபதேசம் -கிருபையை ரஷித்து அருள வேண்டும் என்றபடி
இனி சேதனனை திருத்துவது –
உன் அபதாரத்தின் கனத்தை பார்த்தால் உனக்கு ஓர் இடத்தில் காலூன்ற இடமில்லை –
ஈச்வரனானவன் நிரந்குச ச்வாதந்த்ரன் ஆகையாலே -அபராதங்களை பத்தும் பத்தாக கணக்கிட்டு
அறுத்து அறுத்து தீர்த்தா நிற்கும் -இவ் அனர்ததத்தை தப்ப வேண்டில் -அவன் திருஅடிகளில் தலை
சாய்க்கை ஒழிய வேறு ஒரு வழி இல்லை -அபராத பரி பூர்ணனான என்னை அவன் அங்கீகரிக்குமோ
தண்டியானோ என்று அஞ்ச வேண்டா -ஆபிமுக்க்ய மாத்ரத்திலே அகில அபராதங்களையும் பொறுக்கைக்கும்-
போக்யமாக கொள்கைக்கும் ஈடான குணங்களாலே–ஷமா வாத்சல்யம் – புஷ்கலன் என்று லோக பிரசித்தனாய் இருப்பான் ஒருவன் –
ஆனபின்பு நீ சுகமே இருக்க வேணும் ஆகில் அவனை ஆஸ்ரயிக்க பார் -என்றும் பரம ஹித உபதேசத்தாலே –
அப்படி எங்கே கண்டோம் என்னில் –அவனும் ஹித காமன் -இவள் பரம ஹிதை-
பாபிஷ்டனாய் வழி கெட நடந்து திரிகிற ராவணனை குறித்து –
1-மித்ரா மவ்பயிகம் கர்த்தும் ராம / -2-ஸ்தானம் பரீப்சதா /-3-வதஞ்ச அநிச்சதா கோரம்
4-த்வயா ஸௌ புருஷர்ஷப–இந்த நாலையும் கீழே விவரித்து அருளுகிறார் –
விதிதஸ் சஹி தர்மஞ்சச் சரணாகத வத்சல
தேன மைத்ரீ பவது தே யதி ஜீவிது மிச்ச்சசி-என்று
1-பெருமாள் உடன் உறவு கொண்டாடுகை காண் உனக்கு பிராப்தம் -உசிதம் –
2-அது செய்ய பார்த்திலை யாகில் வழி யடிப்பார்க்கும் தரையில் கால் பாவி நின்று-வழி அடிக்க வேணுமே –
உனக்கு ஓர் இருப்பிடம் வேண்டி இருந்தாய் ஆகிலும் அவரைப் பற்ற வேணும் –அவர் அல்லாத ஒரு ஸ்தலம் இல்லை காண்
3–எளிமையாக எதிரி காலிலே குனிந்து இவ் இருப்பு இருப்பதில் காட்டில் –
பட்டு போக அமையும் என்று இருந்தாயோ -உன்னை சித்ரவதம் பண்ணாமல் நல் கொலையாக கொல்லும்
போதுமவரை பற்ற வேணும் காண்
4–நான் பண்ணின அபதாரத்துக்கு என்னை அவர் கைக் கொள்வாரோ
என்று இருக்க வேண்டா -ஆபிமுக்க்யம் பண்ணினால் முன்பு செய்த அபராதத்தை பார்த்து சீரும்
அந்த புன்மை அவர்பக்கல் இல்லை காண் -அவர் புருஷோத்தமர் காண் -சரணாகதி பரம தர்மம் என்று அறிந்தவராய் –
சரணாகத தோஷம் பாரத வத்சலராக எல்லாரும் அறியும் படி காண் பெருமாள் இருப்பது –
நீ ஜீவிக்க வேண்டும் என்று இச்சித்தாய் ஆகில் அவரோடு உனக்கு உறவு உண்டாக வேணும் என்று
இப்படி அச்சம் உறுத்தி உபதேசித்தாள் இறே —
மைத்ரே– நட்ப்புக்கும் சப்தம் தர்மம் -சரணாகதியை இவனுக்கு தர்மம் -அறிந்தவன்
அவன் திருந்தாது ஒழிந்தது இவளுடைய உபதேச குறை அன்றே –
அவனுடைய பாப பிரசுர்யம் இறே இப்படி உபயரையும் உபதேசத்தாலே என்கையாலே
ஸ்ரூஸ்ரா -என்கிற தாதுவிலே
நிஷ்பன்னமான ஸ்ரீ சப்தத்தில்
ச்ருணோதி ச்ராவயதி என்கிற வ்யுத்பத்திகளில் -வைத்து கொண்டு –
ச்ராவயதி என்கிற வ்யுத்பத்தி அர்த்தம் சொல்லப் பட்டது-
ச்ராவயதி -என்கிறது ஈஸ்வர விஷயமாக
பூர்வர்கள் கிரந்தங்களில் பலவற்றிலும் காணப் பட்டதாகிலும்
அதவா
விமுகா நாமபி பகவத் ஆஸ்ர்யேன உபதேச ஸ்ராவயித் ர்த்வம்
விதிதஸ் சஹி தர்மனஜஸ் சரணாகத வத்சல
தேன மைத்ரீ பவது தே யதி ஜீவிது மிச்சசி
இதி ராவணம் பிரத்யு உபதேசாத் -என்று தத்வ தீபத்திலே சேதன விஷயமாகவும்–கேட்ப்பிக்கிறாள்- வாதி கேசரி அழகிய மணவாள
ஜீயர் அருளி செய்கையாலே இவ் இடத்திலும் சேதன விஷயமாகவும் சொல்லக் குறை இல்லை –
ச்ருணோதி -கேட்க்கிறாள்-
ச்ராவயதி -கேட்க்கும் படி செய்கிறாள்-இருவரையும் –
—-
உபதேசத்தாலே இருவருடையவும் கர்ம பாரதந்த்ர்யம் குலையும் –சூரணை-12-
உபதேசத்தாலே மீளாத போது சேதனனை அருளாலே திருத்தும் –
ஈஸ்வரனை அழகாலே திருத்தும் –சூரணை -13-
ஈஸ்வரனை அழகாலே திருத்துகை யாவது –
ஒம் காண் போ உனக்கு பணி அன்றோ இது -என்று உபதேசத்தை உதறினவாறே
கண்ணைப் புரட்டுதல்-கச்சை நெகிழ்த்துதல்-செய்து தன் அழகாலே அவனை
பிச்சேற்றி தான் சொன்னபடி செய்து அல்லது நிற்க மாட்டாத படி பண்ணி
அங்கீகார உன்முகன் ஆக்குகை-
ஆக -புருஷகாரம் ஆம் போது-7- -என்று தொடங்கி-இவ்வளவாக
புருஷகாரத்வ உபயோகிகளான குண விசேஷங்களையும் –
அவை தன்னை தானே வெளி இட்டபடியையும் –
சம்ச்லேஷ விச்லேஷங்கள் இரண்டிலும் புருஷீகரிக்கையும் –
தத் பிரகார விசேஷங்களையும் –
சொல்லிற்று ஆய்த்து-
—————————
அருள் தரும் அடியார் பால் மெய்யை வைத்துத்
தெருள் தர நின்ற தெய்வ நாயக நின்
அருள் எனும் சீர் ஓர் அரிவை யானது என
இருள் செக வெமக்கோர் இன்னொளி விளக்காய்
மணி வரை யன்ன நின் திரு வுருவில்
அணி அமர் ஆகத்து அலங்கலாய் இலங்கி
நின் படிக்கு எல்லாம் தன் படி ஏற்க
வன்புடன் நின்னோடு வதரித்து அருளி
வேண்டுரை கேட்டு மிண்டவை கேட்பித்து
ஈண்டிய வினைகள் மாண்டிட முயன்று
தன்னடி சேர்ந்த தமர் உனை அணுக
நின்னுடன் சேர்ந்து நிற்கும் நின் திருவே –-மும்மணிக்கோவை -1-
ஸ்ரீ தேசிகன் தெய்வ நாயகனைச் சரணம் அடையத் திரு உள்ளம் கொண்டு முதலில் செங்கமல வல்லித்தாயார் இடம்
செய்யும் புருஷகார ப்ரபத்தியை முதல் பாசுரத்தால் வெளியிடுகிறார் -ஸ்ரீ சப்தார்த்தம் அருளுகிறார் –
அருள் தரும் அடியார் பால் மெய்யை வைத்துத் தெருள் தர நின்ற தெய்வ நாயக நின்
1-அருள் எனும் சீர் ஓர் அரிவை யானது என
2-இருள் செக வெமக்கோர் இன்னொளி விளக்காய்
ஓர்–ஒப்பற்ற விலக்ஷணமான -நந்தா விளக்கு -தானே தனக்கு விளங்கும் நமக்கும் காட்டும் –
இன்–மங்களம் -மாசு படியாத- குளிர்ந்த- அனுகூலமான விளக்கு – ஒளி விளக்கு -அதிக தேஜஸ்
உண்மை காட்டும் -நாலா பக்கமும் – தன்னையும் காட்டும் விளக்கு
ஆபீ முக்கியம் மாத்திரத்தாலே –அவனை காட்டுபவள்–தீபம் பின் பக்கம் இருளாக காட்டும் -அது போலே இல்லையே
அவனுக்கே விளக்காக இருந்து விளங்குபவள் –விளக்கின் ஒளி -இவள் -தீர்க்க சமஸ்
கார் இருள் -போக்கும் -தீப பிரகாசர் -மிதுனம் –மஹத்தியா பிரபை
3-மணி வரை யன்ன நின் திரு வுருவில் -அணி அமர் ஆகத்து அலங்கலாய் இலங்கி
குன்றில் இட்ட விளக்கு -குடத்தில் வைத்த விளக்கு இல்லை – மேல் இருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனனே —
வரை -மலை என்றும் –பர்யந்தம் அதுவரை இதுவரை
கடலின் அடி வரை மந்தரம் வரை சென்றது -அது தாங்குமவரை கூர்ம மூர்த்தியை நாம் வணங்குவோம் –
பகவான் திரு உருவம் ரத்ன பர்வதம் –பத்து ஒற்றுமைகள் உண்டே –
தோஷம் இல்லா-அகில ஹேய ப்ரத்ய நீக
பெருமை நிலைப்பாடு -கௌரவம் கொடுக்கும் -தன்னை தொழுவார்க்கு நின் வடிவு அழகு மறவாதார் பிறவாதார் –
ஸ்திரம் -நிலை நிற்குமே – போக்யம்-மனத்துக்கு இனியான்-அஸ்ப்ருஷ்ட சிந்தா பதம் –
பிரகாசகம் -இயல்பாகவே -அணையா -ரத்ன தீப பிரகாசம் –அறிவு மலர வைக்கும் – மஹார்க்கம் விலையனான –
மங்களம் -பாராட்டுக்கு உரியவை – ஸூ ரக்ஷம்–எளிதில் ரஷிக்கலாமே –
ஸூ க்ரம்-முந்தானையில் முடிந்து ஆளலாம்-மனசில் கிரகிக்க எளியவன்
இந்த பத்து சாம்யம்
மணி வரை –அன்ன நின் திரு உருவம் –
பச்சை மா மலை போல் மேனி
திகழ் பசும் சோதி –மரகத்தைக் குன்றம் –கண் வளருவது போல் -திருவாசிரியம் –
மணி வரையும் மா முகிலும் –போல் இருந்த மெய்யானை மெய்ய மலையானை –கை தூக்கி தொழா கை அல்ல கண்டோமே –
என்னுள் திகழும் மணிக் குன்றம் ஓத்தே நின்று -திருவாய் மொழி – அவனே திரு மலை -ஸ்வரூபமும் ரூபமும் –
ரத்ன பர்வத –யதா ரத்னம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம் —கிருஷ்ணன் இடம் மனோ ரதங்கள் சக்திக்கு ஏற்க கொள்கிறான்
ரத்ன பர்வத்தில் ஏறி சக்திக்கு தக்க கொள்வது போலே -இங்கே ஸ்வரூபம் உவமை –
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை -திரு நறையூர் நம்பி –நின் -மணி வரை -நீ மணி வரை -உன்னிடம் திரு –
மணியும் வரையும் போல -மணிவரை என்றுமாம்-
மணியும் வரையும் அன்ன என்றுமாம் –நீள் வரை போல் மெய்யனார் -நம் பாணனார் –
விட்டிலங்கு –மலையே திரு உடம்பு -திரு வாய் மொழியிலும் —
கருவரை போல் நின்றானை கண்ணபுரத்தம்மானை -பெரிய திருமொழி
நீரார் மழை முகிலே நீள் வரையே ஒக்கும் -தனித் தனியாகவும்
நீல மரதகம் மழை முகில் – வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே தெய்வ நாயகனை
இமயம் மேய எழில் மணித் திரளை – -குடந்தை மேய குரு மணித் திரளை -முத்துஒளி மரகதமே –
கலியன் உரை தேசிகன் கருத்தில் குடி கொண்டு இருக்குமே -பை விரியும் –திருச்சேறை
கூற்றினை குரு மா மணிக் குன்றினை -படு கடலுள் மணி வரை போல் மாயவன் -மை விரியும் -திரு மேனி -கருமை மிக்கு
படுக்கையில் பை விரியும் -பணங்கள்- பள்ளி கொண்ட பரமன் –
மணி வரை யன்ன நின் திரு வுருவில் -அணி அமர் ஆகத்து அலங்கலாய் இலங்கி
திரு மார்பில் -மலை போன்ற மார்பில் –ஸ்வரூபம் -விக்ரகம் -மார்பு -மூன்றுக்கும் –
மணி வரை யன்ன -நின் – மணி வரை யன்ன -நின் திரு உருவில் –
மணி வரை யன்ன நின் திரு வுருவில் -அணி அமர் ஆகத்து -என்றபடி –
பண்புகள் பொது -மூன்றுக்கும் –மலைக்கு –
1-ஓங்கி நிற்கும் / 2-சிலா மாயம் -/ 3-திண்மை உறுதி /4- செல்ல அறியாது துர்லபம் /5-தபஸ்விகள் ரிஷிகள் நாடுவார்கள் /
6-ஷமா ப்ருத் -மலை-பூமியை தாங்கிக் கொண்டு இருக்கும்-பொறுமை – / 7- எல்லா உலகும் தாங்கு/
8-கயவர் கவர்ந்து போக முடியாதே -/9-இயற்க்கை எழில் /10-நதிகள் -குரு பரம்பரை ஆரம்பம் -பத்தும் உண்டே
உயரம் -உன்னதி உத்துங்கதி -நித்ய உன்னதர்கள் –வான மா மலையே அடியேன் தொழ வந்து அருளே –ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம் –
ப்ராம்சூ-நெடிய உயர்ந்தவன் -வான் அளாவியவன் –பெற்றி-ஸ்வபாவம் –நெடியானே வேங்கடவா –நின் கோயிலின் வாசல் –
4-நின் படிக்கு எல்லாம் தன் படி ஏற்க -வன்புடன் நின்னோடு வதரித்து அருளி
5-வேண்டுரை கேட்டு
மீண்டவை கேட்பித்து –
ஈண்டிய வினைகள் மாண்டிட முயன்று
தன்னடி சேர்ந்த தமர் உனை அணுக –
நின்னுடன் சேர்ந்து நிற்கும் நின் திருவே
————————————————
ரமாவின் பெருமை சொல்ல வந்ததே ராமாயணம் -சீதாயா சரிதம்
கந்தம் கமழும் குழலீ -அவனுக்கும் வாசம் கொடுக்கும்
உந்து மத கயிற்றில் ஆறு அர்த்தங்களும் உண்டே
———–
அநுபவ ரசிகர்களான ஆழ்வார்கள் எம்பெருமானை யானையாகவே பல இடங்களில் பேசுவார்கள்.
யானைக்கும் எம்பெருமானுக்கும் பல விதங்களில் ஒத்த கருத்து நிலவும்
1.யானையை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அபூர்வ வஸ்து போலவே இருந்து பரமாநந்தம் பயக்கும்.
எம்பெருமானும் எப்பொழுதும் நாள், திங்கள், ஆண்டு ஊழி யூழி தோறும்
*அப்பொழுதைக்கு
அப்பொழுது*
என்னாராவமுதம் என்னும்படி யிருப்பான்.
2.யானையின் மீது ஏற வேண்டியவன் யானையின் காலைப் பற்றியே ஏறவேண்டும்.
எம்பெருமானிடம் சென்று சேர வேண்டியவர்களும் அவனது திருவடியைப் பற்றியே சேர வேண்டும்.
3.யானை தன்னை கட்ட தானே கயிற்றை எடுத்துக் கொடுக்கும். எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் (திருச்சந்த விருத்தம்) என்கிறபடியே,
எம்பெருமானை கட்டுப் படுத்தும் பக்தியாகிற கயிற்றை அவன் தந்தருள்வான்.
4. யானையை நீராட்டினாலும் அடுத்த ஷணத்திலேயே அழுக்கோடு சேரும் எம்பெருமான் சுத்த ஸத்த்வ மயனாய் பரம பவித்ரனாய்
இருக்கச் செய்தேயும் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குமுடைய நம் போல்வாரோடு
சேர திருவுள்ள மாயிருப்பான் வாத்ஸல்யத்தாலே.
5.யானையைப் பிடிக்க வேண்டில் பெண் யானையைக் கொண்டே பிடிக்க வேண்டும்
அதன் போன்றே பிராட்டியின் புருஷாகாரமின்றி எம்பிரான் வசப்படான் .
6.யானை பாகனுடைய அனுமதியின்றி தன்னிடம் வருபவர்களை தள்ளி விடும்.
எம்பெருமானும் வேதம் வல்லார் துணைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து என்கிறபடியே
பாகவதர்களை முன்னிட்டு புகாதாரை அங்கீகரித்தருளான்.
7. யானையின் மொழி யானைப் பாகனுக்குத் தெரியும், எம்பெருமானின் மொழி திருக்கச்சி நம்பிகள் போல்வார்க்கே தெரியும்
(பேரருளானப் பெருமானோடே பேசுபவர் நம்பிகள்).
8. யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடி நூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும்
எம்பெருமான் அமுது செய்து சேஷித்த பிரசாதத்தாலே பல கோடி பக்த வர்கங்கள் உஜ்ஜீவிக்கக் காண்கிறோம்.
9.யானைக்கு கை நீளம் எம்பெருமானும் அலம் புரிந்த நெடுந்தடக்கையன் இறே
நீண்ட அந்தக் கருமுகிலை யெம்மான் தன்னை”(பெரிய திருமொழி 205-2)
10.யானை இறந்த பின்பும் உதவும் எம்பெருமானும் தீர்த்தம் பிரசாதித்துத் தன்னுடைய சோதிக்கு எழுந்தருளின பின்பும்
இதிஹாச புராணங்கள் உணர்த்தி உதவுகின்றன.
11. யானை ஒரு கையே உள்ளது எம்பெருமானுக்கும் கொடுக்கும் கையொழிய கொள்ளும் கையில்லை
12. யானை பாகனுக்கு ஜீவனங்கள் சம்பாதித்துக் கொடுக்கும். எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகம் ப்ரப்ருதிகளுக்கு சம்பாத்யத்திற்கு வழி செய்கிறார்.
13. யானை மெல்ல அசைந்து அசைந்து செல்லும். எம்பெருமானும் உலா வரும் பொழுது அசைந்து அசைந்து வருவார்.
14. யானை சாதுவானது எம்பெருமானும் சாதுவானவரே
—————————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-