Archive for the ‘Raamaanujar’ Category

ஸ்ரீ அருளிச் செயல்களைக் கொண்டே ஒருங்க விடுவார் ஸ்ரீ பாஷ்யகாரர் –

November 5, 2020

ஸ்ரீ லக்ஷ்மிகாந்த பதாரவிந்தயுகலைகாந்தாப்ரமேயாத்புத
சடகோபஸூரிமத தத்ஸுக்த்யப்திமக்நாசயம் |
ஸ்ரீமத்பாஷ்யக்ருதம் யதீந்த்ரமத தத்பூயோ’வதாராயிதம்
ஸ்ரீமத்ரம்யவரோபயந்த்ருயமிநம் ஸம்சிந்தயே ஸந்ததம் ||

ஸ்ரீமத்வரவரயமிந: க்ருபயா பரயா ப்ரபோதிதாநர்த்தாந் |
ஸம்தர்ஷ்யந் லிகாமி த்ரமிடோபநிஷத் ப்ரபாவ ஸர்வஸ்வம்||

ப்ராதாந்யேந ப்ரபந்தே த்விஹ யதிபதிநா த்ராவிடாம்நாயவாசாம்
ஸாஹாய்யேநைவ பாஷ்யாத்யநக க்ருதிததிர்நிர்மிதேதி ப்ரஸித்தா|
வார்த்தா யுக்த்யா ப்ரமாணைரபி ச ஸுவிஷதம் ஸம்ப்ரதிஷ்டாப்யதே போ:
மாத்ஸர்யம் தூரதோ ஸ்யந் விபுதஜந இதம் வீக்ஷ்ய மோமோத்தும் தந்ய:||

திவ்யப்ரபந்தேஷு ந வேததௌல்யம் ந சாபி வேதாததிகத்வமஸ்தி|
ராமானுஜார்யோ பி ந தத்ர ராகீத்யேவம் லிகந்த: குத்ருசோ நமந்து|

ஏய்ந்த பெருங்கீர்த்தி யிராமானுச முனிதன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன்
ஆய்ந்த பெருஞ் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெற

வான் திகழுஞ் சோலை மதிளரங்கர் வண்புகழ் மேல் ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும்
ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன்

“எங்கள் கதியே இராமானுச முனியே ! சங்கை கெடுத்தாண்ட தவராசா !
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும், தங்குமனம் நீயெனக்குத் தா!”

“ மாறனுரை செய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே!”

“உறு பெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர்குருவும் வெறிதரு பூமகள்நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறிதருஞ் செந்தமிழாரணமே யென்றிந் நீணிலத்தோர்அறிதரநின்ற இராமானுசனெனக் காரமுதே”!

வேதங்களில் பௌருஷ மானவ கீதா வைஷ்ணவங்கள்போலே, அருளிச்செயல் ஸாரம்.

ருக் ஸாமத்தாலே ஸரஸமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே சொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவையாயிரமாயிற்று.

ஆதித்ய ராமதிவாகர அச்யுதபாநுக்களுக்குப் போகாத வுள்ளிருள் நீங்கி ஶோஷியாத பிறவிக்கடல் வற்றி
விகஸியாத போதிற்கமல மலர்ந்தது வகுளபூஷணபாஸ்கரோதயத்திலே”.

ப்ரஜ்ஞாக்யே மந்தசைலே ப்ரதிதகுணருசிம் நேத்ரயந் ஸம்ப்ரதாயம்
தத்தல்லப்தி-ப்ரஸக்தை: அநுபதி-விபுதை: அர்த்திதோ வேங்கடேச: |
தல்பம் கல்பாந்தயூந: சடஜிதுபநிசத்-துக்த-ஸிந்தும் விமத்நந்
ஸ்வாது-காதா-லஹரி-தச-சதீ-நிர்கதம் ரத்நஜாதம்||

காலத்தைக் கடந்த இளமையுடையரான ஸ்ரீமந்நாராயணின் திருக்கல்யாண குணங்களாகிற ரத்தினங்களைத் தன்னில் கொண்டதாய்,
அவன் துயிலும் பாற்கடல் போன்றதாய், ஆயிரம் அலைகள் போல் எழும் இனிமையான ஆயிரம் பாடல்(காதா)களைக் கொண்டதாய்,
சடகோபரின் திருவாயிலிருந்து புறப்பட்ட மொழிக்கடலை, வேங்கடேசனாகிய நான், இதில் அடங்கியுள்ள அமுதப் பொருள்களை
அநுபவிக்க வேண்டும் என்று ஆசையுற்ற அடியார்களால் வேண்டப்பட்டு, பெரியோர்கள் வழிவந்த அறிவின் மத்தைக் கொண்டு கடைகிறேன்.

யத்கோஸஹஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம், நாராயணோ வஸதி யத்ர ஸசங்கசக்ர | யந்மண்டலம் ச்ருதிகதம் ப்ரணமந்தி விப்ரா: தஸ்மை நமோ வகுளபூஷண பாஸ்கராய|| “

“த்யேயஸ்ஸதா ஸவித்ருமண்டல மத்யவர்த்தீ நாராயண: ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட: கேயூரவாந் மகரகுண்டலவாந் கிரீடீ ஹாரீ ஹிரண்மயவபு: த்ருதசங்கசக்ர: “

பண்டருமாறன் பசுந்தமிழ்ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்களிராமானுசமுனி வேழம் ….என்றும்

கலிமிக்க செந்நெற்கழனிக் குறையல் கலைப்பெருமான் ஒலிமிக்க பாடலையுண்டு
தன்னுள்ளம் தடித்து அதனால் வலிமிக்க சீயம் இராமானுசன் ….

————————–

ஸ்ரீபாஷ்யம் இரண்டாம் அத்யாயம் தொடக்கம் –
“ப்ரதமே அத்யாயே ப்ரத்யக்ஷாதி ப்ரமாண கோசராத் அசேதநாத் தத் சம்ஸ்ருஷ்டாத் வியுக்தாச்ச சேதநாத்
அர்தாந்தர பூதம் நிரஸ்த நிகில அவித்யாதி அபுருஷார்த்த கந்தம் அனந்த ஞானானந்தைக தானம் அபரிமிதோதார
குண ஸாகரம் நிகில ஜகத் காரணம் சர்வாந்தராத்ம பூதம் பரம் ப்ரஹ்ம வேதாந்த வேத்யம் இத்யுக்தம்”.

இதன் பொருளாவது… வேதாந்த சூத்ரத்தில் முதல் அத்யாயத்தில் பர ப்ரம்ஹம் புலன்களால் அறியப் படுமவற்றிநின்று
வேறு பட்டு, பௌதிகப் பொருள்களுக்குக் கட்டுப் பட்ட ஜீவாத்மாவில் நின்று வேறுபட்டு, இப்பொருள்களினின்றும்
விடுபட்ட ஜீவாத்மாவிலிருந்தும் வேறுபட்டு அஞ்ஞானம் போன்ற அனைத்துக் குறைகளிலிருந்தும் நீங்கி,
எல்லையற்ற ஞானத்துக்கும் ஆனந்தத்துக்கும் இருப்பிடமாய் நற்குணக் கடலாய் அண்ட சராசரங்கள் அனைத்துக்கும் தானே
ஒரே காரணமாய் யாவற்றுக்கும் அந்தர்யாமியாய் வேதாந்தத்தால் அறியப்படுகிறது.

எம்பெருமானே கடல்; நீர்க் கடல் அல்லன், திவ்யகுணக்கடல் என்பது தத்புருஷ சமாசத்தின் பொருள்.
பஹுவ்ரீஹி சமாசத்தில் குணங்களே கடல், அக்கடலொத்த குணங்களை உடையவன் எம்பெருமான்

“அகாத பகவத் பக்தி சிந்து”, நாதமுனிகள் பக்தியாகிற ஆழ் கடலை உடையவர் என்று ஸ்தோத்ரம் செய்து தொடங்குகிறார்.
இங்கு, நாதமுனிகளே பக்திக்கடலா? (தத்புருஷம்) அல்லது பக்தி என்னும் கடலை உடையவரா? (பஹுவ்ரீஹி) என்கிற கேள்வி எழுகிறது.
வியாக்யான சக்ரவர்த்தியான பெரியவாச்சான்பிள்ளை இதை ஆழ்வார்கள் மரபில் நின்று பஹுவ்ரீஹியாகவே நிர்வஹிக்கிறார்.
இதற்கு அவர் நம்மாழ்வாரின் “காதல் கடலின் மிகப் பெரிது” (திருவாய்மொழி 7-3-6) பாசுரத்தையும்
திருமங்கை ஆழ்வாரின் “ஆசை என்னும் கடல்” (பெரிய திருமொழி 4-9-3) பாசுரத்தையும் மேற்கோள் காட்டுகிறார்.
இவ்விளக்கம் சுவாமி வேதாந்த தேசிகனாலும் ஆதரிக்கப்பட்டது.
அவர் தம் உரையில் முதலில் தத்புருஷ அர்த்தமும் பின்பு பஹுவ்ரீஹி அர்த்தமும் சாதித்தருளுகிறார்.
“பக்திம்வா சிந்துத்வேன ரூபயித்வா பஹுவ்ரீஹி”, பக்தியை ஒரு கடலாக உருவஹித்தல்.

—————————–

அந்தஸ்தத் தர்மோபதேசாத்” (1-1-21) என்பதை விளக்கும்போது
ஸ்வாமி -பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே-
கீதை ஸ்லோகத்தை மேற்கோள் காட்டியருளுகிறார்.
பிறகு, ஸ்வாமி “ஸாதவோஹி உபாசகா:, தத் பரித்ராண மேவோத்தேச்யம், ஆநுஷங்கிகஸ்து துஷ் க்ருதம் விநாச,
ஸங்கல்ப மாத்ரேணாபி ததுப பத்தே” என்றருளிச் செய்கிறார்.

அவதாரத்தின் ப்ரதான நோக்கம் லக்ஷ்யம் உபாசகனை, பக்தியோடு வணங்குபவனைப் பாதுகாப்பதேயாம்.
தீயோரை அழிப்பது இரண்டாம்பக்ஷமே ஏனெனில்
அவதாரம் செய்யாமல் எம்பெருமான் தன ஸங்கல்ப மாத்ரத்தாலேயே அதைச் செய்து முடிக்கவல்லவன்.

மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே”

“நாஹம் கலேவரஸ்யாஸ்ய த்ராணார்த்தம் மதுசூதன! கரஸ்த கமலான்யேவ பாதயோர் அர்ப்பிதம் தவ” (மதுசுதன!
என் சரீரத்தைக் காத்துக்கொள்ள நான் உன்னை அழைக்கவில்லை.
என் துதிக்கையில் உள்ள இந்தத் தாமரை மலர்களை உனக்கு ஸமர்ப்பிக்கவே அழைத்தேன்”)

———–

ஸ்ரீரங்க கத்யம், “ஸ்வாதீநத்ரிவித சேதனா சேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம்” என்று தொடங்குகிறது.

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது
வீம் அவை இவையுவை அவை நலம் தீங்கவை
ஆம் அவை ஆய் அவை ஆய் நின்ற அவரே

அவரவர் தமதமது அறிவறிவறி வகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நினைவரியவ்ர்
என்றும் ஓர் இயல்வொடு நின்றவெம் திடரே,

———————–

“கிரீட மகுட சூடா வதம்ச” என்ற சொற்கள் வருகின்றன.

பாரளந்த பேரரசே! எம் விசும்பரசே! எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே!” என்கிறார்.
ஆழ்வார் அரசே அரசே அரசே என மும்முறை விளிக்கிறார்..

பாரளந்த பேரரசே என்பதில் சௌலப்யத்தில் அரசன் என்றபடி.
த்ரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது அவன் தன் திருவடியை ஒவ்வொருவர் தலையிலும் வைத்தருளினான்.

எம் விசும்பரசே என்றதில் பரத்வம் சொன்னபடி.
அவன் ஸ்ரீவைகுண்டத்தில் நித்யசூரிகளின் தலைவனைத் திகழ்கிறான்.

எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே என்றதில் அவன் கலப்பதும் பிரிவதுமாக ஆழ்வார் பால் பூண்ட பிரணயித்வம் தெரிகிறது.

ஆசார்ய ஹ்ருதயத்தில் “பாரளந்த என்னும் மூன்று முடிக்குரிய இளவரசுக்கு” என்று காட்டுகிறார்.

———————————–

“அடியேனுள்ளான் உடனுள்ளான்

“ஞானவான்” என்பான் வருமிடங்களிலெல்லாம் கீதா பாஷ்யத்தில் மேற்கொள்கிறார்.
ஸ்ரீ சங்கரர் பொதுவாகவே தெளிவுற்ற சேதனனைப் பற்றி
“விஷ்ணோ: தத்த்வவித்” (விஷ்ணுவின் உண்மைநிலை அறிந்தவன்) என்கிறார்.
ஸ்வாமியோ “பகவத் சேஷதைக ரஸ ஆத்ம-ஸ்வரூபவித் -ஞாநி “ என்கிறார்.
தெளிந்த அறிவுடையோன், ஆத்மா ஈச்வரனுக்கு சேஷப்பட்டவன் என அறிந்தவனே என்பதாம்.

ஸ்ரீ ஆழ்வார் “நான்” என்னாமல் “அடியேன்” என்றருளிச் செய்ததை அடியொற்றியே
ஸ்ரீ ஸ்வாமியும் ஞானத்தைப் பார்க்கிலும் சேஷத்வமே மேன்மையுடைத்தென்பதைக் காட்டியருளினார்.

————-

“மஹா விபூதே! ஸ்ரீமன் நாராயண! ஸ்ரீவைகுண்டநாத!”

”அபார காருண்ய ஸௌசீல்ய வாத்ஸல்யௌதார்ய ஸௌந்தர்ய மஹோததே!”.
ஸ்ரீ எம்பெருமான் ஓர் ஆழ் பெருங்கடல். அவன் கல்யாண குணங்களாலான கடல்
“ஆச்ரித வாத்ஸல்ய ஜலதே!” என.

வாத்ஸல்யம் அவனது எண்ணற்ற கல்யாண குணங்களில் ஒன்றே. ஆனால் அது தன்னிகர் அற்ற தனிப் பெரும் குணம்.
“நிகரில் புகழாய்!”

——————–

அருளிச்செயல் “செவிக்கினிய செஞ்சொல்” என அறியப்படுகிறது.
ஸ்ரீ நம்மாழ்வார் திருவாய்மொழி 10-6-11ல் “கேட்பார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே” என்கிறார்.

ஸ்ரீ ஆழ்வாரின் திருவாய்மொழியின் ஈரச்சொல்லிலேயே சிந்தை நனைந்து கிடந்த ஸ்வாமி ,
“ஸ்ரீ ஸூக்தை: ஸ்தோத்ரை: அபிஸ்தூய” என்கிறார்.
அருளிச்செயல் என்பது ஒரு சொற்றொடர். அது ஸ்தோத்ரம் ,
ஏதோ ஒரு ஸ்தோத்ரம அன்று அது ஸ்ரீ ஸூக்த ஸ்தோத்ரம் …செவிக்கு இனிய செஞ்சொல்.

—————————–

ஸ்ரீ ஆழ்வார், “உடல் மிசை உயிர் எனக கரந்தெங்கும் பரந்துளன்” என்றார். (திருவாய்மொழி 1-1-7).
உபநிஷத வாக்யங்களின் அர்த்த விசேஷத்தை ஸ்ரீ ஸ்வாமி போல் விசிஷ்டாத்வைதிகள்,
ஸ்ரீ ஆழ்வார் அருளிசெயல்களில் கண்டனர் எனில் மிகையே அன்று.

ஸ்ரீ எம்பெருமானார் ப்ரஹ்மம் எனும் சொல்லை ஆழ்வார் வழியில் விளக்குவதாவது:

உயர்வற=அநவதிகாதிசய
உயர்=அஸந்க்யேய
நலம் உடையவன்=கல்யாண குணகண
யவனவன்=புருஷோத்தமன்

ஸ்ரீ ஸ்வாமியின் திருவாக்கில் ஸ்ரீ ஆழ்வார் திருமிடறு எதிரொலிப்பதைக் காணக் கூடியவர்களே பாக்யசாலிகள்.

———–

செய்ய தமிழ் மறைகளை நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!”

இக்கருத்தை அவர், த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளி நாலாம் ச்லோகத்தில்,
“யத் தத் க்ருத்யம் ச்ருதீநாம் முநிகண விஹிதைஸ் ஸேதிஹாசை: புராணை: தத்ராஸு ஸத்வ ஸீம்னா:
சட மதா நாமுநேஸ் ஸம்ஹிதா ஸார்வ பௌமி“ என வலியுறுத்துகிறார்.

முனிவர்களருளிய இதிஹாச புராணங்களால் வேதங்களின் பொருள் அறிய எளிதாகிறது.
ஆகிலும் இவற்றில் சில போதுகளில் இவ்வர்த்தங்கள் ரஜஸ்ஸும் தமஸ்ஸும் கலந்தே வரும்.
மாறாக ஸ்ரீ ஆழ்வார் திருவாக்குகளோ சுத்த ஸத்வமே வடிவெடுத்து வேதப்பொருள் விளக்குவன.
இதையே ஸத்வ ஸீம்னா என்றார். ஆகவே ஸ்ரீ சடகோப ஸம்ஹிதையே சாலச் சிறந்தது என்றபடி.

இறுதியாக ஸ்ரீ தேசிகன் தம்மையே “திராவிட வேதாந்த வித்வான்” என்று கூறிக்கொள்கிறார்.
“சந்தமிகு தமிழ் மறையோன் தூப்பில் தோன்றும் வேதாந்தகுரு” என்பது அவர் திருவாக்கு,

ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி
ஏழ்பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்த்து

இன்பம் என்னும் பனிமூட்டத்திலும், இருள் என்னும் துன்பத்திலும், அருளிச்செயல் என்னும் ஒளி
நம் மனத்தில் ப்ரகாசமாக எப்பொழுதும் மலரட்டும்.

ஸ்ரீ எம்பெருமானாரே! இதை மட்டும் அளித்து அருள்.

—————————–

ஸ்ரீ கோயில் அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஆச்சார்யர் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஷ்ய அம்ருதம் -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

November 5, 2020

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர மங்கள ஸ்லோகம் –

அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே
விநத-விவித -பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே
ச்ருதி -சிரஸி-விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்திரூபா

அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே” எனும் சொற்கள் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
இரண்டாவதான “ஜன்மாத்யஸ்ய யத:” என்பதும்,
அந்த ஸூத்ரமே “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே” என்கிற உபநிஷத் வாக்யம் அடியானது என்பதும் தெளிவு.

இவற்றில். ஸ்தேம எனும் சொல் பாதுகாத்தல், தொடர்ந்து வைத்திருத்தல் இரண்டையும் குறிக்கும்.
இதில் எம்பெருமானின் இயல்வாகிய லோக ரக்ஷணம் அடங்கும்.
இப்படி ரக்ஷணம் பற்றி ஏற்கெனவே தெரிவித்த ஸ்ரீ ஸ்வாமி மீண்டும்,
”விநத-விவித-பூத-வ்ராத ரக்ஷைக -தீக்ஷே” என்கிறார்
ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீநிவாசனின் முதல் குறிக்கோள் தன் அடியார் அனைவரையும் ரக்ஷிப்பதே.

ஸ்ரீ ஆழ்வார் திருவாய்மொழி 1-3-2ல் “எளி வரும் இயல்வினன்” பாசுரத்தில்
ஸ்ரீ எம்பெருமானின் குணாநுபவம் செய்கிறார். அவனது அளவற்ற அப்ராக்ருத கல்யாண குணங்களை அனுபவிக்கிறார்.
மீண்டும் அவனது மோக் ஷப்ரதத்வம் எனும் எக் காலத்தும் வீடு பேறளிக்கும் மஹா குணத்தை
“வீடாந் தெளிதரு நிலைமை அது ஒழிவிலன்” என்கிறார்.
முன்பே சொன்ன குணங்களோடு இதுவும் சேராதோ மீண்டும் சொல்வானென் என்று கேட்டதற்கு நம் பூர்வர்கள்,
மோக் ஷப்ரதத்வம் ஸ்ரீ எம்பெருமானின் மிகத் தனித்ததொரு குண விசேஷம் என்பதால் இது புனருக்தியன்று என்றனர்.

அணைவதரவணை மேல்”லில் மோக்ஷ ப்ரதத்வத்தை அனுபவிக்கிறார்.
ஸ்ரீ ஸ்வாமி தேசிகனும் த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியில் திருவாய்மொழியின் பிரதம நோக்கு மோக்ஷ ப்ரதத்வமென்று சாதிக்கிறார்.
ஆகவே மோக்ஷப் ப்ரதத்வம் தனியே அனுபவித்தற்குரிய ஒரு குணாதிசயம் என்று தேறுகிறது.
இதிலிருந்து, “விநத விவித வ்ராத ரக்ஷைக தீக்ஷே” என்றதில் ரக்ஷணம் என்பது பொதுவானதன்று
மோக்ஷ ப்ரதத்வத்தை அடக்கியது என்று தெரிகிறது.

ஸ்ரீபாஷ்ய பங்தியில் ஸ்ரீ ஸ்ருதப் பிரகாசிகா பட்டரும்,
“ஜகதுத்பவ-ஸ்திதி-பிரணாச-ஸம்ஸார விமோசன” என ஆளவந்தாரை உதாஹரிக்கிறார்.

வினத-விவித- பூத-வ்ராத- ரக்ஷைக-தீக்ஷே

இந்த கூட்டுச்சொல்லின் நேர்பட்ட பொருள்தான் என்ன?
வினத=சமர்ப்பிக்கப்பட்ட
விவித=வெவ்வேறுபட்ட
பூத=உயிர்வாழிகள்/ஆத்மாக்கள்
வ்ராத=குழுக்கள்
ரக்ஷைக தீக்ஷா=இவற்றின் ரக்ஷணம் ஒன்றே குறிக்கோளாய் உள்ளவன்

பசுர் மனுஷ்யப் பக்ஷிர்வா ஏ ச வைஷ்ணவ ஸமாச்ரயா:
தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்

ஒரு விலங்கோ, மனிதனோ, பறவையோ ஒரு வைஷ்ணவனிடம் புகல் பெற்றால்
அந்தத் தொடர்பினாலேயே அவ்வுயிர் மிக உயர்ந்த பரமபதம் அடைகிறது.

இவ் வர்த்தத்தை ஸ்ரீ ஆழ்வார்கள் “பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரியவானுள் நிலாவுவரே” (திருவாய்மொழி 6-10-11),
“எமர் கீழ் மேல் எழுபிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே” போன்ற பல இடங்களில் உணர்த்தியுள்ளனர்.

ஸ்ரீநிவாச

ஸ்ரீ ப்ரஹ்ம சூத்ரங்களில் எங்குமே ப்ரஹ்ம லக்ஷ்மீ சம்பந்தம் குறிப்பிடப்படக் காணோம்.
ஆகிலும் ஸ்ரீ எம்பெருமானார் நூல் சுருக்கமே போலத் தோற்றும் முதல் ச்லோகத்திலேயே ஸ்ரீ எம்பெருமானை ஸ்ரீ நிவாசன் என்றார்.
இது ஸ்ரீ ஆழ்வார்கள் எல்லார்க்கும் மிக்கோனான எம்பெருமானை ச்ரிய:பதி என்றே கண்டதாலும்,
திரு இல்லாத் தேவரைத் தேரேன்மின் தேவு என்றதாலுமே ஆகும்.

பக்தி ரூபா சேமுஷீ பவது

ஞானியர்க்கு இது ஒரு விசித்திரமான ப்ரார்த்தனை.
ஸ்ரீனிவாசனைப் பற்றிய என் ஞானம் வளர்வதாக என்றோ
ஸ்ரீனிவாசனிடம் நான் பக்தியோடு இருப்பேனாக என்றோ கூறாது,
ஸ்ரீநிவாசனிடம் என் உணர்வு பக்தி ஆகக் கடவது என்று அருளுகிறார்.
ஸ்ரீ ஆழ்வாரின் “மதிநலம்” எனும் சொல்லின் நேர் மொழியாக்கமே எம்பெருமானாரின் “சேமுஷீ” .
அமரகோசம் நூலின்படி மதி சேமுஷீ இரண்டும் ஒரே பொருள் தரும் சொற்களாகும். நலம் என்பது பக்தி.
ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமான் தமக்குச் செய்த அருளால் ஞானம் பிறந்து அதனால் பக்தி பிறந்தது,
பக்தி என்பது ஸ்ரீ எம்பெருமானைப் பற்றிய ஞானம் என்கிறார்.
ஸ்ரீ ஆழ்வார் காட்டிய நெறியை ஸ்ரீ எம்பெருமானார் நன்கு பின்பற்றினார்.
அவர் உலகுக்கு ஒளிவழி காட்டினார், அவருக்கு வழிகாட்டினார் ஆழ்வார்.

அதே மங்கள ச்லோகம் ஸ்ரீ நம்மாழ்வாரையும் எப்படிக் குறிக்கிறது என்பதைப் பார்ப்போம்.

அகில-புவன -ஜந்ம -ஸ்தேம -பங்காதி -லீலே

அகில புவன ஸ்தேம பங்காதியாய் இருப்பவன் ஸ்ரீ எம்பெருமான்.
“தேன ஸஹ லீலா யஸ்ய” இந்த ஸ்ரீஎம்பெருமானோடு அவனாகிய லீலையை விளையாடுபவர் ஸ்ரீ ஆழ்வார்.
ஆகவே அகில புவன ஜந்ம ஸ்தேம பங்காதி லீலா எனும் அடைமொழி ஸ்ரீ ஆழ்வாரைக் குறிக்கிறது.

ஸ்ரீ எம்பெருமானுடனான விளையாட்டை ஸ்ரீ ஆழ்வாரே பாடுகிறார்
”என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ” என்றும்,
“விளையாடப் போதுமின் என்னப் போந்தமை” என்றும்.

இந்தச் சொற்களின் தேர்வு இன்னொரு விளக்கத்துக்கும் ஹேதுவாகிறது –
புவன ஜந்ம ஸ்தேம பங்காதி லீலா அகிலம் யஸ்ய. புவன ஜந்ம ஸ்தேம பங்காதி லீலையே இவ்வண்ட சிருஷ்டியின் ப்ரதான காரணம்,
அதாவது ஸ்ரீ எம்பெருமான். இவன் யாருக்கு இப்படி எல்லாமாய் இருக்கிறான் எனில், ஸ்ரீ ஆழ்வாருக்கே.
ஏன் எனில் அவர் ஒருவரே “உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” என்றார்.
நமக்கு உயிர் பிழைக்கச் சில, வளர்ச்சி பெறச்சில, இன்பம் அனுபவிக்கச் சில எனப் பொருள்கள் தேவை.
ஆனால் ஸ்ரீ ஆழ்வாருக்கு ஸ்ரீ கிருஷ்ணனே இம் மூன்றுமாய் உள்ளான்.

விநத-விவித-பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே

இவ்வெல்லாவற்றையும் காப்பவன் எம்பெருமானே. ஆயினும் பக்தன் நோக்கில் ஸ்ரீ எம்பெருமான் பூரணமாகத் தேவைப்படுவதில்லை.
ஸ்தனன்ஜயப் ப்ரஜைக்கு அதன் பசி தீரப் பால் கிடைப்பதால் அதன் நோக்கு தாயின் ஸ்தனத்திற்போலே
ஸ்ரீ எம்பெருமானை வணங்கும் அடியானுக்கு அவன் திருவடியிலேயே கைங்கர்யம் பற்றி நோக்கு.

ஸ்ரீ எம்பெருமானின் திருவடி நிலைகளே ஸந்நிதிகளில் ஸ்ரீ சடாரி அல்லது ஸ்ரீ சடகோபம் என ஆழ்வார் பேராலேயே வழங்கப் பெறுகிறது.
ஆகவே ஸ்ரீ ஆழ்வாருக்கும் ஸ்ரீ எம்பெருமான் திருவடிக்கும் வேறுபாடில்லை.
ரக்ஷை வேண்டும் அடியாருக்குத் திருவடிகளாகிய ஸ்ரீ ஆழ்வாரே கிடைக்கிறார்.

ச்ருதி சிரஸ்ஸாவது வேதாந்தம். ச்ருதி சிரஸி விதீப்தே எனில் வேதாந்தத்தில் நன்கு உணர்ந்தவர்,
வேதாந்தம் ஸ்ரீ எம்பெருமானை அறியவே என்று உணர்ந்தவர் ஸ்ரீ ஆழ்வார். ஆகவே இச்சொற்றோடரும் அவர்க்கு இசையும்.

வேதமே ஆழ்வாரை, “தத் விப்ராஸோ விபந்யவோ ஜாக்ரவாக்ம்ஸஸ் ஸமிந்ததே” விப்ரா எனும் சொல் ஆழ்வாருக்கே பொருந்தும்.
“ந சூத்ரா பகவத்பக்தா விப்ரா பாகவதாஸ்ம்ருதா” என்றபடி அடியானாக உள்ள ஒருவர் மாய மயக்குகளில் சிக்கி உழலமாட்டார்.
“பண ஸ்துதௌ” என்பதால் விபன்யவோ என்பதற்கு எம்பெருமான் திருக்குணங்களைப் பாடுபவர் என்றதால்
அவ்வகையிலும் ஈடு இணையற்ற பாசுரங்கள் பாடிய ஆழ்வாரையே குறிக்கும்.
“தேவிற் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்”.
“ ஜாக்ர வாக்ம் ஸ” என்பது எப்போதும் விழிப்புணர்ச்சியோடிருப்பது. எம்பெருமானையன்றி வேறொன்றும் பாராது,
அவனையன்றி மற்றொன்று உணராது நினையாது அவனையே அனுபவித்திருக்குமவரான
ஆழ்வாரே இச்சொற்றொடருக்கு இலக்கும் இலக்கியமும். தானே ஸத்தையாயும் எப்பொருளாயும் இருந்து ஒளிரும்
எம்பெருமான் விஷயமாகவன்றோ ஆழ்வார்
“கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே” என்று பாடினார்?
இவ்வேத வாக்யத்துள்ள “வி” என்பதை ஸ்ரீபாஷ்யச்லோக இறுதிச்சொல்லான ஸமிந்ததேவிலுள்ள “ஸம்” காட்டுகிறது.

ப்ரஹ்மணி

எல்லாவிதத்திலும் பெரியது எனக்காட்டும் “ப்ரு” எனும் சொல்லின் அடியாக வந்த சொல் ப்ரஹ்மம்.
பரப்ரஹ்மமே அவரிடம் கட்டுண்டுள்ளதென்பதே ஆழ்வாரின் பெருமை.
பெரிய திருவந்தாதியில் ஆழ்வார் இதனை,
“யான் பெரியன், நீ பெரியை என்பதனை யார் அறிவார்” என்று காட்டுகிறார். ஆகவே ப்ரஹ்மம் என்பதன் சரியான பரியாயம் பெரியன்.

ஸ்ரீநிவாஸே

இதெல்லாம் சரி….ஆனால், ஸ்ரீநிவாசே என்பதை ஆழ்வார் பரமாக நிர்வஹிக்க முடியாது,
ஏனெனில் ஆழ்வார்க்கு ச்ரிய:பதித்வம் இல்லையே எனலாம்.

ச்ரிய:பதித்வம் எம்பெருமானின் ஏகதேசமான உரிமைதான், எனினும் ஆழ்வார் ஸ்ரீ நிவாசனே
மேலும் சம்பிரதாயத்தில் ஸ்ரீநிவாசர்கள் பலர் உளர்.

லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பன்ன – லக்ஷ்மணன் லக்ஷ்மியை உடையவன்,

ஸ து நாக வர ஸ்ரீமான் – கஜேந்த்ரனும்ஸ்ரீமான்,

அந்தரிக்ஷ கத ஸ்ரீமான் – விபீஷணன் நடு வானில் நின்றவன் ஸ்ரீமான் ஆனான்.

இவ்வொவ்வோரிடத்திலும் ஸ்ரீ அல்லது லக்ஷ்மி என்பது வெவ்வேறு பொருள் தருவதாகும்.
லக்ஷ்மணனுக்கு ஸ்ரீ கைங்கர்யம்,
கஜேந்திரனுக்கு ஸ்ரீ அவன் கைம்மலரை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க விரும்பிய மனத்தூய்மை,
விபீஷணனுக்கு ஸ்ரீ அவன் மனதில் துயரம் இருப்பினும் எல்லா செல்வமும் விட்டுப் பெருமாளை சரண் புக்கது.

ஆழ்வார் விஷயமாகவோ எனில் வ்யாக்யாதாக்கள் அவரிடம் ஸ்ரீ இருப்பது போக அவரே ஸ்ரீ, பிராட்டி என்றார்கள்.
ஆழ்வார் முன் சொன்ன பிரபன்னாதிகாரிகளின் ஒவ்வொரு குணமும் நிரம்பப் பெற்றதால் ஸ்ரீநிவாசர்,
தாமே பிராட்டி போலானதாலும் ஸ்ரீநிவாசர் என்று எண்ணத்தகும்.

இவ்வாறாக, எம்பெருமானார் எம்பெருமானை அனுபவிக்கு முகமாக இச்லோகத்தால் ஆழ்வாரை அனுபவித்தார் என்பது தெளிவு.
ஆழ்வார் ப்ரபாவம் ஸ்ரீ பாஷ்யம் முதலில் தொடங்கி, இறுதி வரை, ஆம் கடைசி ஸூத்ர பாஷ்யம் வரை செல்கிறது.

ஸ்ரீ பாஷ்யம் விவரிக்கும் கடைசி ஸூத்ரம் “அநாவ்ருத்தி அநாவ்ருத்திஸ் சப்தாத்” என்பது.
இதில் அநாவ்ருத்தி சொல்லின் பொருளாவது, விடுபட்ட ஜீவாத்மா மீண்டும் இம்மாயாவுலகுக்கு வருவதில்லை என்பது.

திரும்ப வராததற்குக் காரணம், சப்தாத், அதாவது இவ்வாறு வேதம் சொல்வதால்.
வேதம், “ந ச புநராவர்த்ததே ந ச புநராவர்த்ததே” என்கிறது:விடுபட்ட ஜீவாத்மா மீண்டும் இவ்வுலகுக்கு வருவதில்லை.

பரம சேதனன் சேதனனைக் காதலோடு ஆரத்தழுவும் நிலை.
ஜீவனின் நிலையைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் வெறும் ஆதாரமாய் இருக்கும் நிலையன்றி,
பரம சேதனன் சேதனனை அடையப் பல வடிவுகளும் முயற்சிகளும் ஏற்கிறான்.
அவன் ஆரா அன்புள்ள காதலன், ஒருபோதும் கைவிடாத காதல் கொண்டவன்.
“ஸ ச மம ப்ரிய:” என்று சொல்பவன். ஜீவன் என் அன்புக்குரியவன் எனும் இதைப் பொருளில்லாமல் சொல்வானா?

ஆழ்வார் அநுபவத்தை முன்னாகக் கொண்டு ஸ்வாமி,
“ந ச பரமபுருஷ ஸத்ய ஸங்கல்ப அத்யர்த்தப்ரியம் ஞாநிநாம் லப்த்வா கதாசித் ஆவர்தயிஷ்யதி”.

நழுவாத ஸங்கல்பங்கொண்ட பரமபுருஷன் தனக்கு மிகப்ரியமான மயர்வறப்பெற்ற சேதனனை மிக்க பரிச்ரமத்துடன்
அடைந்தபின் விடுவானா? கிருஷ்ணனை வெண்ணெய் திரும்பத் தா எனில் தருவானோ?

சேதனனை அடைந்து அநுபவிப்பதில் எம்பெருமானுக்குள்ள ஆசையை ஆழ்வார்,
“என்னை முன்னம் பாரித்துத் தானென்னை முற்றப் பருகினான்” என்கிறார், அவன் என்னை முழுதுமாக அநுபவித்தான்.
இந்தக் காதலை வார்த்தைகளால் விளக்கமுடியாது, உணரவே முடியும்.
இவ்வாறான திருத்தவொண்ணாத காதல் நோயாளன் பெற்ற சேதனனைத் திரும்பவிடுவனோ!

ஸ்ரீ ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யத்தை ஒரு பேருரையாய் நிகமிக்கிறார் –
”வாசுதேவஸ் ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸு துர்லப:” எனும் கண்ணன் எம்பெருமானின் தன்னை விட்டு விலகும்
சேதனனைப் பற்றிய நிர்வேத ப்ரகடணத்தை உதாஹரிக்கிறார்.
ஸ்ரீ எம்பெருமான் உத்தராயணத்தில் கிளம்பிச் சென்றபின் ஸ்ரீ ஆழ்வார் தக்ஷிணாயனத்தில்
“உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” எனக்
கண்ணனே எனக்கு எல்லாமும் எனச் சொல்லிப் போந்தார்.
ஸ்ரீ கண்ணனின் திருப்பவளம் உதிர்த்த சொற்களே ஸ்ரீ ஆழ்வார் பாசுரமாக வந்தன.

———————————————————————-

ஸ்ரீ கோயில் அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஆச்சார்யர் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா பாஷ்ய அம்ருதம் -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

November 5, 2020

“யத் யத் ஆசரதி ச்ரேஷ்ட: தத் தத் ஏவேதரோ ஜனா:
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகாஸ் தத் அநு வர்த்ததே “ || 3-21

ஸ்ரீ சங்கரர் ,
“ஸ: ச்ரேஷ்டா: யத் ப்ரமாணம் குருதே – லௌகிகம் வைதிகம் வா, லோக: தத் அநு வர்த்ததே –
ததேவப்ராமாணிக ரோதி இதி அர்த்த:” . என்றார்.
லௌகிக, வைதிக விஷயங்கள் இரண்டிலுமே
ஸாமான்யர் பெருமக்களால் எது ப்ரமாணமாகக் கொள்ளப் படுகிறதோ அதையே பின்பற்றுகிறார்கள் என்றபடி.

ஸ்ரீ ஆனந்த தீர்த்தர் இதை,
“யத் வாக்யாதிகம் ப்ரமாணீ குருதே – யதுக்த ப்ரகாரேண திஷ்யதி இதி அர்த்த:” என விளக்கினார்.
இவ்விரண்டு விளக்கங்களிலுமே “யத்-ப்ரமாணம்” என்னும் பகுதி “யத்” என்றும் “ப்ரமாணம்” என்றும் பிரிக்கப்பட்டது.

ஸ்ரீ ஸ்வாமி இராமாநுசர்
தம் பாஷ்யத்தில் இதற்குத் தனியொரு ஏற்றமிகு விளக்கம் அருளிச் செய்கிறார்.
அவர் “யத் ப்ரமாணம்” என்பதை ஒரே பன்மைக் கூட்டுச் சொல்லாகக் (பஹு வ்ரீஹி சப்தம்) கருதி விளக்குகிறார்.
இந்த விவரங்களைக் காணுமுன் இச்லோகத்துக்கு ஸ்ரீ ஸ்வாமியின் உரையைக் காண்போம்:

ச்ரேஷ்ட: – க்ருத்ஸ்ந சாஸ்த்ரஜ்ஞாத்ருதயா அநுஷ்டாத்ருதயா ச ப்ரதித:

பெருமக்கள் என்போர் சாஸ்த்ரங்களைத் தெளிவாகக் கற்றுணர்ந்து, அதற்குத் தக்க மாசற்ற ஒழுக்கம் உடையோர்.

யத்யத் ஆசரதி தத்ததேவ அக்ருத்ஸ்ந விஞ்ஞான அபி ஆசரதி

சாஸ்த்ரங்களை நன்கு அறியாத ஸாமாந்யர் இப்பெருமக்களின் வழியையே பின்பற்றுவர்

அனுஷ்டீயமானம் அபி கர்ம ச்ரேஷ்டோ, யத் ப்ரமாணம் யத்-அங்கயுக்தம் அநுதிஷ்டதி
தத் அங்கயுக்தம் ஏவ அக்ருத்ஸ்ந வில்லோகோநுதிஷ்டதி

இவ்வாறு செய்யப்படும் கர்மங்களில் ஸாமாந்யர் பெருமக்களால் செய்யப்படும் கர்ம பாகங்களை மட்டுமே அனுசரிக்கிறார்கள்.

ஸ்ரீ திருப்பாவை இருபத்தாறாம் பாசுரத்தில் ஸ்ரீ ஆண்டாள்,
”மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்” என்கிறாள்.
“வேண்டுவன” எனும் சொல்லே இங்கு “யத் ப்ரமாணம்” என்பதற்கு ஸ்ரீ ஸ்வாமியின் விளக்கமாய்ப் பொருந்துகிறது.

————————————

நான்கு நல்லோர்கள் காட்டப்படுகிறார்கள் – (1) ஆர்த்தா: (2) ஜிஜ்ஞாஸு: (3) அர்த்தார்த்தி (4) ஞாநி

எம்பெருமான் தன்னிடம் சரணம் புகுவோர் நான்கு வகைப் பட்ட அடியார்கள் என்கிறான்.
சரணம் புகுந்தோர் “ப்ரபத்யந்தே” என்றவன், இப்போது “பஜந்தே” என்கிறான்.
பஜந்தே என்பதை ஸ்ரீ சங்கரர், “சேவந்தே” = பணிபுரிவோர் என்று விளக்கினார்.
பக்தி, சரணம் புகுவது இரண்டின் உள்நோக்கம் பணிபுரிவது.
இந் நான்கு வகை நல்லோர்களுமே கிருஷ்ணனின் அடியார்களே.

இதற்கு விளக்கம் தருகையில், ஸ்ரீ சங்கரர், “ஆர்த்தா: = தஸ்கர வ்யாக்ர ரோகாதினா அபிபூதா:
ஆபன்ன: ; ஜிஞ்ஞாசு = பகவத் தத்த்வம் ஞாதுமிச்சதி ய: ; அர்த்தார்த்தி = தனகாம: ;
ஞானி = விஷ்ணோ ஸ்தத்வவித்“ என்றெழுதினார்.

ஸ்வாமி இவ்வாறு பக்தர்கள் நால்வகைப் படுவதன் காரணம் வேதாந்தத்தில்
மூன்று தத்வங்கள் சித், அசித், ஈச்வரன் என்றிருப்பதே என நிறுவுகிறார்.

ஆத்மா, தாமே ஈச்வர ஸ்வரூபமான அசித்தை விரும்பித் தேடுகிறது,
இதிலேயே ஈச்வரனடியார்களின் வேறுபாடு தொடங்குகிறது. ஐச்வர்யத்தை தேடுவதில் இருவகைகளுண்டு –
ஒன்று முன்பு இருந்து தற்போது இழக்கப்பட்டுள்ளது (ப்ரஷ்டைச்வர்யம்),
மற்றது முற்றிலும் புதிய ஐச்வர்யம் (அபூர்வைச்வர்யம்). இப்பகுப்பு தனக்கும், ஈச்வரனுக்கும் பொருந்தாது.
ஏனெனில் கைவல்ய ப்ராப்தியோ பகவத்ப்ராப்தி மோக்ஷமோ நிரந்தரமானது,
அதை மீண்டும் பெறவோ இழக்கவோ முடியாது. அதைப் புதிதாகக் கேட்டுபெறலாம்.
ஆகவே இந்நான்கு பகவத் அடியார்களும் ப்ரஷ்டைச்வர்ய காமர், அபூர்வைச்வர்யகாமர், கைவல்யகாமர், பகவத்காமர் என்றாகிறார்கள்.

ஸ்வாமிக்கு இந்தத் தனிப்பெரும் விளக்கம் எங்ஙனம் பெற முடிந்தது?

திருப்பல்லாண்டில் பெரியாழ்வார் பக்தர்களை நால்வகையாகப் பகுத்ததிலிருந்து ஸ்வாமிக்கு இச்செம்பொருள் கிட்டியது.
முதல் இரு பாசுரங்களுக்குப்பின் மும்மூன்று பாசுரங்களில் இப்பொருள் வெளிப்படுகிறது.
ஒவ்வொரு மூன்று பாசுரமும் ஒருவகை பக்தரை விவரிக்கிறது.

பெரியாழ்வாரின் திருமுகத்தாமரையை உகப்பித்து மலர்த்தும் சூர்யன் “ஸ்ரீ பட்டநாத முகாப்ஜ மித்ரர்

———

உக்த் லக்ஷண-தர்ம சீலா வைஷ்ணவாக்ரேஸர: மத் ஸமாச்ரயேண ப்ரவ்ருத்தா:
மந்நாமகர்ம-ஸ்வரூபாணாம் வாங்மநஸாகோசாரதயா மத்தர்சநேந விநா ஸ்வாத்மதாரண போஷநாதி கமலபமாநா:
க்ஷண மாத்ர காலம் கல்ப ஸஹஸ்ரம் மந்வாநா ப்ரசிதில-ஸர்வ-காத்ரா பவேயுரிதி
மத்ஸ்வரூப சேஷ்டிதாவலோகநாலாபாதிதாநேந தேஷாம் பரித்ராணாய”–ஸாது

————————————————-

மன்மனா பவ மத பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யசி யுக்த்வைவமாத்மானம் மத்பராயணா:

மன் மனா பவ –
மயி ஸர்வேச்வரே நிகில ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாந ஸர்வஞ்ஞே ஸத்ய ஸங்கல்பே
நிகிலஜதேககாரணே பரஸ்மிந் ப்ரம்மணி பு௫ஷோத்தமே புண்டரீகதலாமலாயதேக்ஷணே
ஸ்வச்சநீலஜீமுதஸங்காக்ஷே யுகபதுதிததினகரஸஹஸ்ர ஸத்ருசதேஜஸி லாவண்யாம்௫தமஹோததே
உதாரபீவரசதுர்பாஹோ அத்யுஜ்ஜவலபீதாம்பரே அமலகிரீடமகரகுண்டலஹாரகேயுரகடகபூஷிதே
அபரகா௫ண்யஸெளசீல்யஸெளந்தர்யமாதுர்ய காம்பீர்ய ஔதார்ய வாத்ஸல்யஜலதௌ
அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யே ஸர்வஸ்வாமினி தைலதாராவதவிச்சேதேன நிவிஷ்டமநா பவ

—————————

பகவத்கீதை பத்தாம் அத்யாயம், ஒன்பதாம் ச்லோகம் சொல்கிறது:

“மத் சித்தா மத்கதப் ப்ராணா போதயந்தப் பரஸ்பரம் கதயந்தஸ்ச மாம் நித்யம் துஷ்யந்திச ரமந்திச “

ஸ்ரீ சங்கரர், “துஷ்யந்தி-பரிதோஷம் உபாயந்தி, ரமந்தி-ரதிம் ச ப்ராப்னுவந்தி ப்ரிய ஸங்கத்யா இவ”
(துஷ்யந்தி என்பது ஸந்தோஷத்தை அடைவது, ரமந்தி என்பது விரும்பிய பொருளை அடைவது)

இதற்கு ஸ்வாமியின் வ்யாக்யானமாவது
“வக்தார: தத்வசநேந அநந்யப்ரயோஜநேந துஷ்யந்தி | ச்ரோதாரச்ச தச்ச்ரவணேந அநவதிகாதிசயப்ரியேண ரமந்தே |”.
ஸ்வாமி இச்லோகத்துக்கு அருளிய விரிவுரை தன்னிகரற்றது

இவ்விளக்கம் மிகச் சீரியது. ஏனெனில் இது ச்லோகத்திலுள்ள இரு சொற்களையும் விளக்குகிறது.
க்ருஷ்ணன் “போதயந்த: பரஸ்பரம்” என்றான். அவர்கள் பரஸ்பரம் என்னைப் பற்றியே எழுகிறார்கள்.
அவன் மேலும் , “மாம் நித்யம் கதயந்தி” என்கிறான். அவர்கள் என்னைப் பற்றியே பேசுகிறார்கள்.
இந்தப் பரஸ்பர பேச்சுப் பற்றிய விவரணத்தில், ஒருவர் பேசுகிறார், மற்றவர் கேட்கிறார்.
ஒருவர் வக்தா, மற்றவர் ச்ரோதா. இருவரும் தத்தம் நிலையை மாற்றிக் கொள்ளவும் செய்கிறார்கள்.
ஆகவே, இருவருமே பேசும் ஆனந்தமும் அடைகிறார்கள், கேட்கும் ஆனந்தமும் அடைகிறார்கள்.

வேதாந்த தேசிகர் தம் தாத்பர்ய சந்திரிகையில் “கதாயா ச்ரவணயோ ஏகச்மின்னேவ கால பேதேன ஸம்பாவிதவத்” –
இருவரும் பேசுவதும் கேட்பதும் வெவ்வேறு காலங்களில் நடப்பன என்கிறார்.

நான்முகன் திருவந்தாதியில்,
“தெரித்தெழுதி வாசித்தும் கேட்டும் …..போக்கினேன் போது” என்று அருளினார்.
தெரிக்கை என்பது தெரிவிக்கை அல்லது பேசுதல் எனப் பொருள் படும்-
துஷ்யந்தி – கேட்டும் எனில் காதால் கேட்டும். ரமந்தி: – போக்கினேன் போது என்பது இதுவே
அவர் தம் நித்ய வியாபாரமாய் இருந்தது எனக் காட்டுகிறது. மாம் நித்யம் கதயந்தா.
அதே பாசுரத்தில் ஆழ்வார், “தரித்திருந்தேனாகவே” – இதைச் செய்தே நான் உயிர் தரித்தேன் என்கிறார்.
“மச்சித்தா மத்கதிப் ப்ராணா என்பதை ஸ்வாமி
மயா விநா ஆத்மா தாரணம் அலாபமானா: – நானின்றி தரித்து உயிர் வாழ மாட்டாதவர்கள் என்றார். .

——————-

ஸ்ரீ கோயில் அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஆச்சார்யர் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுஜர் நியமித்த -74- ஸிம்ஹாஸனாதி பதிகள் வைபவம் –31-41-

October 22, 2020

31- ஸ்ரீ உக்கல் அம்மாள் ஸ்வாமி
ஸ்ரீ உடையவருக்கு திரு ஆல வட்ட கைங்கர்யம் செய்தவர்

———–

32- ஸ்ரீ சொட்டை அம்மார் ஸ்வாமி
இவர் ஸ்ரீ திரு நாராயண புரத்தில் ஸ்ரீ உடையவர் ஸந்நிதியில்
ஸ்ரீ நடுவில் ஆழ்வான் இடம் ஸ்ரீ வங்கி புரத்து ஆச்சி உடன் ஸ்ரீ பாஷ்யம் கேட்டவர்
அவர் இவர்களை ஆசீர்வதித்து ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று
இருங்கோள் -என்று அருளிச் செய்தார் –

————-

33-ஸ்ரீ கிடாம்பிப் பெருமாள் ஸ்வாமி
இவர் ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் உடன் சேர்ந்து திரு மடப்பள்ளி கைங்கர்யம் செய்தவர்
ஸ்ரீ பாஷ்யம் முடித்த பின்பு ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாஷ்ய கோசத்துடன் ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் உடன்
காஷ்மீர் சென்று சாரதா பீடத்தில் வைத்து அங்கீ காரம் பெறச் செய்தார்

————————–

34-ஸ்ரீ ஈச்சம் பாடி ஆச்சான் ஸ்வாமி

ஸ்ரீ ஈச்சம்பாடி ஸ்ரீ திரு மலைக்கு அருகில் உள்ளது
இவர் திருத் தகப்பனார் -ஸ்ரீ சுந்தர தேசிகர் என்ற ஸ்ரீ அழகப் பிரான் –
திருத்தாயார் -ஸ்ரீ திருமலை நம்பியின் திருக்குமாரத்தில்
இருவரும் ஸ்ரீ ஆளவந்தார் நியமனப்படி திருமலையில் கைங்கர்யம் செய்து கொண்டு இருந்தார்கள்
ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ திருமலைக்கு எழுந்து அருளிய போது அவருக்கு ஸ்ரீ சுந்தர தேசிகர்
ஸ்ரீ தாப நீய உபநிஷத்தையும் ஸ்ரீ நரஸிம்ஹ நிமந்த்ரத்தையும் உபதேசித்தார்
அவருக்கு 1026 தை மாசம் ஹஸ்தம் இவர் பிறக்க
ஆச்சான் ஸ்ரீ நிவாஸாசார்யார்-என்ற பெயர் சாற்றி அருளினார்
இவர் ஸ்ரீ ராமானுஜரை ஆஸ்ரயித்து தர்சன ப்ரவர்த்தனம் செய்து அருளினார் –

ஏராரும் தை யத்தம் இங்கு உதித்தான் வாழியே
சுந்தரேசன் திரு மகனாய் துலங்குமவன் வாழியே
பார் புகழும் யதி ராஜன் பதம் பணிவோன் வாழியே
சீராரும் வேங்கடத்தில் திகழுமவன் வாழியே
பார் மகிழும் பாடியத்தை பகருமவன் வாழியே
உத்தமமாம் குலமதனில் தொல் புகழோன் வாழியே
தொண்டர் குழாம் கண்டு உகக்கும் தொல் புகழோன் வாழியே
நல் ஈச்சம்பாடி வாழ் நம் ஆச்சான் வாழியே

——————

35- ஸ்ரீ ஈச்சம் பாடி ஜீயர் ஸ்வாமி

இவர் ஸ்ரீ ஈச்சம் பாடி ஆச்சானின் இளைய சகோதரர்
இவர் 1030 ஆனி திருவோணம் திரு அவதாரம்
ஸ்ரீ வேங்கடேசன் திரு நாமம் இயல் பெயர்
ஐவரும் ஸ்ரீ ராமானுஜரை ஆஸ்ரயித்து தரிசன பிரவர்தனம் செய்து கொண்டு இருந்தார்
அவர் இடமே சந்யாச ஆஸ்ரமம் ஸ்வீ காரம் பெற்று ஸ்ரீ ஈச்சம் பாடி ஜீயர் ஆனார்

ஆனி தனில் ஓணத்தில் அவதரித்தான் வாழியே
வேங்கடத்தைப் பாதியாக விரும்புமவன் வாழியே
பூவார்ந்த கழல்களையே போற்றுமவன் வாழியே
பதின்மர் கலை உட் பொருளை பகருமவன் வாழியே
அநவரதம் அரி யுருவன் அடி தொழுவோன் வாழியே
எப்பொழுதும் யதி பதியை ஏத்துமவன் வாழியே
முக்தி தரும் முந்நூலும் முக்கோலும் வாழியே
எழில் ஈச்சம் பாடி உறை ஜீயர் தாள் வாழியே –

————

36–ஸ்ரீ காராஞ்சி சோமயாஜியார் ஸ்வாமி

இவர் ஸ்ரீ உடையவரை ஆஸ்ரயித்தவர்
ஸ்ரீ உடையவர் இருக்கும் இடம் சென்று கைங்கர்யம் செய்ய இவர் மனைவி இடம் தராததால்
ஸ்ரீ உடையவர் விக்ரஹம் பண்ணி பூஜை செய்ய விரும்பினார்
விக்ரகம் சரிவர அமையாததால் அதை அழித்து வேறே ஒரு விக்ரஹம் பண்ணினார்
ஒரு நாள் இரவில் ஸ்ரீ உடையவர் ஸ்வப்னத்தில் தோன்றி ஏன் இப்படி செய்கிறீர் -என்று கேட்டார்
கண் விழித்து நேரே ஸ்ரீ ரெங்கம் புறப்பட்டுச் சென்று ஸ்ரீ உடையவராய் தண்டம் சமர்ப்பித்து நடந்தத்தைச் சொன்னார்
ஸ்ரீ உடையவர் முறுவல் செய்து அபயம் அளித்து இவருடைய கவலைகளைத் தீர்த்தார்

——————-

37-ஸ்ரீ ஆஸூரிப் பெருமாள் ஸ்வாமி

இவருக்கு ஆஸூரித் தேவர் -ஆஸூரி புண்டரீகாக்ஷர் -என்ற திரு நாமங்கள் உண்டு
ஹாரித கோத்ரம்
ஸ்ரீ நடுவில் ஆழ்வானுடைய சிஷ்யர்
ஸ்ரீ திரு நாராயண புரம் இருந்து தர்சன நிர்வாஹம் செய்து வந்தார்
இவரது திருவம்சத்தில் திரு அவதரித்தவர் ஸ்ரீ ஆய் ஜெகந்நாதாச்சார்யார் -என்ற பிரசித்தி பெற்ற வர் –

—————-

38- ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் ஸ்வாமி

ராமானுஜ பதாம் போஜ யுகளீ யஸ்ய தீமத
ப்ராப்யம் ச ப்ராபகம் வந்தே ப்ரணதார்த்தி ஹரம் குரும்

ஆஸ்திகா அக்ரேசரம் வந்தே பரிவ்ராட் குரு பாஸகம்
யாசிதம் குரு கேசேந ப்ரணதார்த்தி ஹரம் குரும்

சித்திரை ஹஸ்தம்
ஆத்ரேய கோத்ரம்
தளிகைக் கைங்கர்யம் -திருக் கோட்டியூர் நம்பி நியமனம் பிரசித்தம்
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் உடைய அத்தை கணவர்
ஸ்ரீ திரு விருத்தத்துக்கு தனியன் சாதித்து உள்ளார்

அபராத ஸஹஸ்ர பாஜநம் –அகதிம் -சொல்ல அழகர் நீ ராமானுஜன் அடியவராக இருக்க
அகதி சொல்லக் கூடாதே என்று அருளிச் செய்த விருத்தாந்தம் –
தீர்த்தம் சாதிக்க -பணிமானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட -பாசுரம் சொல்லி
கிருதஜ்ஜை தெரிவித்துக் கொண்டாரே
பட்டர் இடம் தாழ்ந்து பரிமாற்ற -வயசில் மூத்த ராமானுஜர் அடியாராய் இருக்க இவ்வாறு செய்வது என் என்று கேட்க
நம்முடைய அடங்கலும் நம்மை நினைத்து இருக்குமா போல் பட்டரை நினைத்து இருக்க –
எம்பெருமானார் அருளிச் செய்தது உண்டே என்றாராம்
ஸ்ரீ பாஷ்ய கோசம் இவரையே காஷ்மீருக்கு சென்று சரஸ்வதி தேவி பாஷ்யகாரர் பட்டம் சாதித்த விருத்தாந்தம்
இவருக்கு வேதாந்த உதயனன் என்ற விருதை ஸ்ரீ உடையவர் வழங்கினார்
நியாய சாஸ்திரத்தில் உதயனன் பிரபல வித்வானாய் இருந்தார்

இவர் திருக்குமாரர் ஸ்ரீ கிடாம்பி ராமானுஜாச்சார்யார்
அவர் திருக்குமாரர் ஸ்ரீ கிடாம்பி ரங்க ராஜாச்சார்யார்
அவர் திருக்குமாரர் ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளார்
அவர் திரு சகோதரி ஸ்ரீ தோத்தாத்ரி அம்மையார்
இவர் திருக்குமாரர் ஸ்ரீ வேதாந்த தேசிகன்
இவர் வம்சமே ஸ்ரீ சிங்கப் பெருமாள் ஸ்வாமியும்
அவருடைய ஸ்வீ கார புத்ரருமான காரப்பங்காடு வெங்கடாச்சார்யார் ஸ்வாமிகள் –1906-1971-

———-

39-ஸ்ரீ அலங்கார வேங்கடவர் ஸ்வாமி

ஸ்ரீ மத் தயாபால முநேஸ் த நூஜம் தத் பாத ஸேவாதி கத ப்ரபோதம்
ஸ்ரீ மத் யதீந்த்ர அங்க்ரி நிவிஷ்ட சித்தம் ஸ்ரீ கௌசிகம் வேங்கட ஸூரி மீடே

ஸ்ரீ ராமானுஜ பாத பத்ம யுகளம் ஸம்ஸ்ருத்ய ஸத் கோஷ்டிஷு
ப்ரேம்ண அலங்க்ருத வேங்கடேச குரு இத்யாக்யாம் பராம் ப்ராப்தவான்

யோ அசவ் கௌசிக தேசிகோ குண நிதி ஸ்ரீ விஞ்ச புர்யாம் ஸ்தி தஸ்
தத் பாதாப்ஜ யுகம் நமாமி ஸததம் ஸம்ஸார சந்தாரகம்

ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானா உடைய திருக்குமாரர்
கௌசிக கோத்ரம்
மார்கழி திருவாதிரை
இவர் ஸ்ரீ பெரிய திருமலை நம்பி திருப்புதல்வியை மணந்தார்
இவர் திருக்குமாரர் ஸ்ரீ விஞ்சிமூர் தாத்தாச்சாரியார்

திரு மருவும் விஞ்சை நகர் செழிக்க வந்தோன் வாழியே
ஸ்ரீ பாஷ்யகார் அடி சேர்ந்து உய்ந்தோன் வாழியே
அருளாள மா முனிவன் அருள் மைந்தன் வாழியே
அரு மறை நூல் மாறன் உரை ஆய்ந்து உரைப்போன் வாழியே
மருளில் திருமலை நம்பி மணவாளன் வாழியே
மார்கழியில் ஆதிரை நாள் மகிழ்ந்து உதித்தோன் வாழியே
திருவரங்கர் தாளிணை யின் தம் பகர்வோன் வாழியே
திரு வேங்கட ஆசிரியன் திருவடிகள் வாழியே

————-

40-ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமி-

கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ர ஆஸ்ரிதம் ஆஸ்ரயே
ஞானப் பரமேய சார அபி வக்தாரம் வரதம் முனிம்

ஞான பக்த்யாத்த வைராக்யம் ராமானுஜ பத ஆஸ்ரிதம்
பஞ்சம உபாய ஸம்பந்தம் சம்ய மீந்த்ரம் நமாம் யஹம்

தயா பாலந தேவாய ஞான சாரா ப்ரதாயி நே
ப்ரமேய சாரம் தததே நமோஸ்து ப்ரேம ஸாலி நே

யஜ்ஞ மூர்த்தியாய் இருந்து -18 நாள் வாதம் -செய்து –
திரு ஆராதனை கைங்கர்யம்
ஞான சாரம் ப்ரேம சாரம்
தம் மடத்தை இடித்த விருத்தாந்தம்
ஸ்ரீ உடையவர் தம்மை ஆஸ்ரயிக்க வந்த
ஸ்ரீ அனந்தாழ்வான்
ஸ்ரீ எச்சான்
ஸ்ரீ தொண்டனூர் நம்பி
ஸ்ரீ மருதூர் நம்பி
ஸ்ரீ மழுவூர் நம்பி –ஆகியவர்களை இவர் இடம் ஆஸ்ரயிக்கச் செய்தார்

ஸ்ரீ வடுக நம்பி திரு நாட்டுக்கு எழுந்து அருளியதாக சொல்ல -அப்படிச் சொல்லக் கூடாது
ஸ்ரீ உடையவர் திருவடி சேர்ந்தார் என்று சொல்ல வேண்டும் என்றார் –
இவர் சரம காலத்தில் ஸ்ரீ கூரத்தாழ்வானும் ஸ்ரீ உறங்கா வில்லி தாஸரும் எழுந்து அருள
ஸ்ரீ கூரத்தாழ்வானுக்கு விரும்பியவருக்கு ஸ்ரீ பரமபதம் சாதிக்க சக்தி இருந்தும் தான் இப்படி
கஷ்டப்பட வைக்கிறார் என்று எண்ணி தான் சீக்கிரம் ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகள் சேர வேணும் என்று பிரார்த்தித்தார் –
சிறு மா மானிடராய் -8-10-3-மேனி சிறுத்து கீர்த்தி பெருத்து இருந்த
ஸ்ரீஅருளாளப் பெருமாள் எம்பெருமானாரைப் போல் என்று காட்டியது –

திரு வாழும் தென்னரங்கம் சிறக்க வந்தோன் வாழியே
தென் அருளாளன் அன்பால் திருந்தினான் வாழியே
தரு வாழும் எதிராசன் தாள் அடைந்தோன் வாழியே
தமிழ் ஞான ப்ரமேய சாரம் தமர்க்கு உரைப்போன் வாழியே
தெருளாரு மதுரகவி நிலை தெளிந்தோன் வாழியே
தேசு பொலி மடம் தன்னை சிதைத்திட்டோன் வாழியே
அருளாள மா முனியாம் ஆரியன் தாள் வாழியே
அருள் கார்த்திகைப் பரணியோன் அனைத்தூழி வாழியே –

————–

41-ஸ்ரீ குமாண்டூர் இளைய வல்லி ஸ்வாமி

ஸ்ரீ கௌசிக அந்வய மஹாம் பூதி பூர்ண சந்த்ரம்
ஸ்ரீ பாஷ்ய கார ஜநநீ ஸஹஜா தூ நூ ஜம்
ஸ்ரீ சைல பூர்ண பத பங்கஜ சக்த சித்தம்
ஸ்ரீ பால தன்வி குரு வர்யம் அஹம் பஜாமி

ஸ்ரீ யதீந்த்ர மாத்ஷ்வ ஸ்ரீய ப்ரதி தார்ய பதே ஸ்திதஸ்
மூல பத கௌசிகா நாம் தம் வந்தே பால தந்விதம்

சித்திரை ரேவதி நஷத்ரம் திரு அவதாரம்
கௌசிக கோத்ரம்
ஸ்ரீ ராமானுஜர் உடைய சிறிய திருத் தாயாருடைய திருக் குமாரர்
ஸ்ரீ பெரிய திருமலை நம்பியின் மருமகன்
ஸ்ரீ பால தந்வி -வட மொழி திரு நாமம்
இவர் வம்சம்
ஸ்ரீ பால தந்வி –சித்திரை ரேவதி
ஸ்ரீ திரு விக்ரம குரு
ஸ்ரீ ராமானுஜ குரு
ஸ்ரீ வரத்தார்ய குரு –கும்ப மூலம்
ஸ்ரீ வரம் தரும் பெருமாள் அப்பை -ஆவணி அவிட்டம் -இவர் ஸ்ரீ மா முனி சிஷ்யர்

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜர் நியமித்த -74- ஸிம்ஹாஸனாதி பதிகள் வைபவம் –21-30-

October 22, 2020

21- ஸ்ரீ சிறியாண்டான்
இவர் ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதி சிறியாண்டான் உடன் ஸ்ரீ ரெங்கம் வந்து
செய்தி திரு நாராயண புரத்தில் அருளிச் செய்தவர்

————–

22-ஸ்ரீ தொண்டனூர் நம்பி –
ஸ்ரீ தொண்டனூரில் பாகவத கைங்கர்யமே நிரூபகமாகக் கொண்டவர் –
ஸ்ரீ திருக் கோட்டியூரில் செல்வ நம்பியைப் போலவே
சைவப்பண்டாரம் ஒருவன் ஸ்ரீ மதே ராமாநுஜாய நம -சொல்லி -இவர் பிச்சை அளிக்க –
மற்றவர் குறை சொல்ல -இவர் திரு நாம வைபவம் எடுத்து விளக்க
பின்பு அவன் ஸ்ரீ வைஷ்ணவன் ஆனானாம்
இவர் ஸ்ரீ அனந்தாழ்வான் உடன் ஸ்ரீ ரெங்கம் செல்ல இவர்களை ஸ்ரீ ராமானுஜர்
ஸ்ரீ அருளாளப் பெருமான் எம்பெருமானார் இடம் ஆஸ்ரயிக்கப் பண்ணி அருளினார்
இவர் ஸ்ரீ ராமானுஜர் இடம் விண்ணப்பித்து விட்டல தேச ராஜன் மக்களது பிசாச பீடையைப்
போக்குவித்து அருளினார் –

—————-

23- ஸ்ரீ மருதூர் நம்பி
இவர் ஸ்ரீ தொண்டனூர் நம்பி ஸ்ரீ அனந்தாழ்வான் உடன் ஸ்ரீ ரெங்கம் செல்ல இவர்களை ஸ்ரீ ராமானுஜர்
ஸ்ரீ அருளாளப் பெருமான் எம்பெருமானார் இடம் ஆஸ்ரயிக்கப் பண்ணி அருளினார்

————-

24- ஸ்ரீ மழுவூர் நம்பி

இவர் ஸ்ரீ மருதூர் நம்பி ஸ்ரீ தொண்டனூர் நம்பி ஸ்ரீ அனந்தாழ்வான் உடன்
ஸ்ரீ ரெங்கம் செல்ல இவர்களை ஸ்ரீ ராமானுஜர்
ஸ்ரீ அருளாளப் பெருமான் எம்பெருமானார் இடம் ஆஸ்ரயிக்கப் பண்ணி அருளினார்

—————–

25- ஸ்ரீ முடும்பை நம்பி

ஸ்ரீ ராமானுஜ சம்ய தீந்த்ர சரணம் ஸ்ரீ வத்ஸ சிஹ்ன ப்ரியம்
சேவ அஹம் வரதார்ய நாம கமமும் ஸூ க்த்யா ப்ரிஸித்தம் முதா
பால்யாத் பரி பூர்ண போத சடஜித் காதா ராகோஜ்ஜ்வலம்
வாத்ஸ்யம் பூர்ண முதாரம் ஆஸ்ரித நிதிம் வாத்சல்ய ரத்நாகரம் –

ஸ்ரீ ராமானுஜ யோகீந்த்ர பத பங்கஜ ஷட் பதம்
முடும்பை பூர்ண மநகம் வந்தே வரதஸம் கஞகம்

ஸ்ரீ வத்ஸ கோத்ரம்
ஸ்ரீ காஞ்சீ புரம் அருகில் ஸ்ரீ முடும்பையில் திரு அவதாரம்
இயல் பெயர் -ஸ்ரீ வரதாச்சார்யர்
ஸ்ரீ ராமானுஜர் உடைய சகோதரி கணவர்
இவர் திருக் குமாரர் -ஸ்ரீ ராமானுஜ நம்பி
அவர் திருக்குமாரர் -ஸ்ரீ முடும்பை ஆண்டான் -என்னும் ஸ்ரீ தாசாரதி
இவர் முடும்பையில் இருந்து ஸ்ரீ ரெங்கம் குடி பெயர்ந்தார்
இவர் வம்சம்
ஸ்ரீ தாசரதி
ஸ்ரீ தேவப் பெருமாள் என்னும் ஸ்ரீ வரதார்யர்
ஸ்ரீ இளையாழ்வார் என்னும் ஸ்ரீ லஷ்மண ஆச்சார்யர்
இவருக்கு இரண்டு திருக்குமாரர்கள்
ஒருவர் ஸ்ரீ கிருஷ்ண பாத குரு என்னும் ஸ்ரீ வடக்குத் திரு வீதிப்பிள்ளை –
அவருக்கு ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யரும் ஸ்ரீ நாயனாரும் திருக்குமாரர்கள்
மற்ற ஒருவர் ஸ்ரீ வரதாச்சார்யர்
இவருக்கு திருக்குமாரர் ஸ்ரீ ராமானுஜ குரு
அவருக்குத் திரு குமாரர் ஸ்ரீ அழகப்பயங்கார்
அவருக்கு திருக்குமாரர் தேவராஜ குரு என்னும் பேர் அருளாலே ஸ்வாமி
அவர் திருக்குமாரர் ஸ்ரீ ராமானுஜம் பிள்ளை -இவர் மாமுனிகள் சிஷ்யர் -வான மா மலை ஜீயரின் அஷ்ட திக் கஜங்களில் ஒருவர்
இவர் திருக்குமாரர் ஸ்ரீ ஆழ்வார் திரு நகரி ஸ்ரீ ஆதி நாதன் ஸ்வாமி
ஆழ்வார் திரு நகரியில் கீழத் திரு மாளிகை மேலத் திரு மாளிகை வடக்குத் திருமாளிகை என்று இவர் வம்சம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணாவும் ஸ்ரீ முடும்பை வம்சமே

————-

26-ஸ்ரீ வடுக நம்பி

ஸைத் ரேத் வஸ்வநி ஸஞ்ஜாதம் ஸம்ஸார ஆர்ணவ தாரகம்
ராமாநுஜார்ய ஸத் ஸிஷ்யம் ஆந்த்ர பூர்ணம் அஹம் பஜே

ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாளக்ராம நிவாஸிநம்
பஞ்சமோபாய ஸம்பந்நம் ஸாளக்ராமார்யம் ஆச்ரயே

திருநக்ஷத்ரம்: சித்திரை அஸ்வினி-1047-
அவதார ஸ்தலம்: சாளக்ராமம், கர்நாடகா
ஆசார்யன்: ஸ்ரீ எம்பெருமானார்-பால் அமுது கைங்கர்யம்
இவருடைய திரு மடியிலே திரு முடியை வைத்து ஸ்ரீ எம்பெருமானார் திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்
ஸ்ரீ பரமபத ப்ராப்தி ஸ்தலம்: சாளக்ராமம்

கிரந்தங்கள்: ஸ்ரீ யதிராஜ வைபவம்,
ஸ்ரீ ராமானுஜ அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்,
ஸ்ரீ ராமானுஜ அஷ்டோத்தர சத நாமாவளி

ஸ்ரீ எம்பெருமானார் திருநாராயணபுரம் எழுந்தருளிய போது அங்குள்ள மிதிலாபுரி சாளக்கிராமம் சென்று,
ஸ்ரீ முதலியாண்டானை அங்கிருந்த தீர்த்தத்தில் திருவடி நனைக்கச் சொல்லவும், பின்னர் அதில்
நீராடிய உள்ளூரார் அனைவரும் ஸ்வாமியின் சிஷ்யர்களாக மாறினர். அவர்களில் ஒருவர் ஸ்ரீ ஆந்த்ர பூர்ணர் எனும் வடுக நம்பி.
இவர் ஸ்ரீ எம்பெருமானாரிடம் பூண்ட ஆசார்ய பக்தி அளப்பரியது, ஈடற்றது.
ஸ்ரீ எம்பெருமானார் இவர்க்கு சகல சாரார்த்தங்களும் போதித்தருளினார்.
அதனாலும் இவர் ஆசார்ய ப்ரதிபத்தி பள்ளமடை ஆயிற்றது.

ஸ்ரீ வடுக நம்பி ஆசார்ய நிஷ்டையில் ஊறியிருந்தார்.
தினமும் இவர் ஸ்ரீ எம்பெருமானார் திருவடி நிலைகளுக்கே திருவாராதனம் செய்வர்.
ஒரு நாள் ஸ்வாமி யாத்திரை கிளம்புகையில் அவரது திருவாராதன எம்பெருமான்களோடு, தாம் பூசித்து வந்த
ஆசார்யன் திருவடி நிலைகளையும் மூட்டை கட்ட, அது கண்டு துணுக்குற்ற ஸ்ரீ எம்பெருமானார், “நம்பீ! என் செய்தீர்!” என்று
கடிந்த போது, இவர், “ஸ்வாமி! உம் திருவாராதனப் பெருமாளைவிட நம் திருவாராதனப் பெருமாள் குறைவிலரே” என்றாராம்.

ஸ்ரீ எம்பெருமானார் பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்யப் போகும்போதெல்லாம் நம்பியும் உடன் எழுந்தருளி,
அவர் பெருமாளின் அழகை அனுபவிக்கும்போது இவர் ஸ்வாமியையே நோக்கியிருக்க, அவர் இவரைப் பெருமாளின்
திருக்கண் அழகைப் பாரீர் என்ன, நம்பி, ஆசார்யன் திருவுள்ளம் குளிர,
“என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே!”
(அதாவது, என்னுடைய ஸ்வாமியான தேவரீரைக் (எம்பெருமானாரை) கண்ட கண்கள் எம்பெருமானையே கூட காணாது)
என்று ஸ்ரீ திருப்பாணாழ்வார் திருவாக்கைக் கூறினாராம்.

ஸ்ரீ வடுக நம்பி எப்போதும் எம்பெருமானார் அமுது செய்த மிச்சில் ப்ரஸாதத்தையே ஸ்வீகரித்து அமுது செய்தபின்,
கைகளை அலம்பாமல் தம் தலையில் துடைத்துக் கொள்வார், பிரசாதம் உட்கொண்டபின் கையை அலம்பிச் சுத்தம்
செய்யக் கூடாதென்பதால். ஒரு நாள், இது கண்டு துணுக்குற்ற ஸ்ரீ எம்பெருமானார் கேள்வி எழுப்பவே,
ஸ்ரீ நம்பி தம் கைகளை அலம்பினார். பிற்றைநாள் பெருமாள் பிரசாதம் தாம் உட்கொண்ட மிகுதியை
ஸ்வாமி தர வாங்கி உண்ட நம்பி கைகளை அலம்ப எம்பெருமானார் வியப்புற்று வினவ,
“தேவரீர் நேற்று உபதேசித்தபடியே அடியேன் செய்தேன்” என்றாராம்.
அதைக் கேட்ட ஸ்ரீஎம்பெருமானார், ”உம்மிடம் நாம் தோற்றோம்!” என்றார்.

ஒரு முறை ஸ்ரீ வடுக நம்பி ஸ்ரீ எம்பெருமானாருக்கு, திருமடைப்பள்ளியில் பால் அமுது காய்ச்சிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது ஸ்ரீ நம்பெருமாள் திருவீதியில் புறப்பாடாக மடத்து வாசலில் எழுந்தருள,
ஸ்ரீ எம்பெருமானார் வெளியே சென்று சேவித்து, ஸ்ரீ வடுக நம்பியை வெளியே வருமாறு கூப்பிட்டார்.
அப்பொழுது, நம்பியோ, வெளியே வராமல், உள்ளிருந்தபடியே “அடியேன் உம் பெருமாளைக் காண வெளியே வந்தேன் என்றால்,
என் பெருமாளின் பால் பொங்கிவிடும், ஆதலால் அடியேன் வெளியே வர முடியாது” என்று கூறும்படியான ஆசார்ய நிஷ்டையுடன் திகழ்ந்தார்.

நம்பிகளின் அவைஷ்ணவ உறவினர் சிலர் வந்து, தங்கிச் சென்றதும், நம்பிகள் எல்லாப் பாத்திரங்களையும் எடுத்து வீசிவிட்டு,
ஸ்ரீ முதலியாண்டான் திருமாளிகையின் பின்புறத்தில் வைத்திருந்த பழைய உபயோகித்த பாத்திரங்களைப் பயன்படுத்த எடுத்துக் கொண்டார்.
ஆசார்யர்கள் சம்பந்தம் நம்மை எல்லா வகையிலும் சுத்தி செய்யும் என இப்படி அனுஷ்டித்து விளக்கினார்.

ஸ்ரீ எம்பெருமானார் திருவனந்தபுரம் சேவிக்கச் சென்றபோது அங்கு ஆகம முறையைச் சீர்திருத்தத் திருவுள்ளம் பற்றினார்.
ஆனால் எம்பெருமான் திருவுள்ளம் வேறுமாதிரி இருந்ததால், அவன் அவரை இரவோடிரவாக உறங்குகையில்
ஸ்ரீ திருக்குறுங்குடி சேர்ப்பித்து விட்டான். விடிவோரை திருக்கண் மலர்ந்த ஸ்வாமி நீராடித் திருமண் காப்புத் தரிக்க
இன்னும் ஸ்ரீ திருவனந்தபுரத்திலேயே இருந்த நம்பியை “வடுகா!” என்றழைக்க,
ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பியே வடுக நம்பி போல் வந்து திருமண் காப்பு தந்தருளினார்.
பின்னர் ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பியையும் தம் சிஷ்யனாய் ஏற்றார்.

ஸ்ரீ எம்பெருமானார் திருநாடலங்கரித்தபின் வடுக நம்பி மீண்டும் சாளக்கிராமம் வந்து ஸ்ரீ எம்பெருமானார் க்ரந்தங்களைக்
காலக்ஷேபம் செய்தும், தன் சிஷ்யர்களுக்கு ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்ற உபதேசம் செய்து கொண்டும்,
எப்பொழுதும் ஸ்ரீ எம்பெருமானாருக்குத் திருவாராதனம் செய்தும், வேறு ஒரு ஸ்ரீ பாத தீர்த்தமும் ஏற்காமல்
ஆசார்ய நிஷ்டையோடே ஸ்ரீ எம்பெருமானார் திருவடியைச் சென்று அடைந்தார்.

ஸ்ரீ வடுக நம்பியின் வைபவம் வ்யாக்யானங்களிலும் ஐதிஹ்யங்களிலும் காணக் கிடைக்கிறது. அவற்றில் சில:

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி 4.3.1 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம்.
இப்பதிகம் “நாவகாரியம்” – சொல்லக்கூடாத சொற்களைச் சொல்லுதல்.
வடுக நம்பி அருகே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் திருமந்திரம் ஓதவும், நம்பி, ”இது நாவகாரியம்” என்று வெறுத்து அகன்றாராம்.
ஏனெனில் திருமந்திரம் ஓதுமுன் குருபரம்பரையை ஒத வேண்டும், பிறகே திருமந்திரம் ஒத வேண்டும் என்பது முறை,
பிள்ளை லோகாசார்யரும் ஸ்ரீ வசன பூஷணம் 274வது ஸூத்ரத்தில், “ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும்” என்று அருளினார்.

பெரியாழ்வார் திருமொழி 4.4.7 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம், வடுக நம்பி திருநாடு எய்தினார் என்று
ஒரு ஸ்ரீவைஷ்ணவர் தகவல் கூறவும், அவர் ஆசார்ய நிஷ்டர் ஆகையால் அவர் ஆசார்யர் திருவடி அடைந்தார் என்று
கூற வேண்டும் என்று அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருத்தி யருளினாராம்.

ஸ்ரீ வடுக நம்பி யதிராஜ வைபவம் என்றோர் அழகிய நூல் சாதித்துள்ளார்.
அதில் எம்பெருமானாரோடு 700 சன்யாசிகளும், 12000 ஸ்ரீ வைஷ்ணவர்களும், கணக்கற்ற ஸ்ரீ வைஷ்ணவிகளும் இருந்தனர் என்கிறார்.
தம் மாணிக்க மாலையில், பெரியவாச்சான் பிள்ளை, ஆசார்ய பதவி தனிச் சிறப்புள்ளது,
அது ஸ்ரீ எம்பெருமானார் ஒருவருக்கே பொருந்தும் என வடுக நம்பி கூற்று என்கிறார்.

பிள்ளை லோகாசார்யர், ஸ்ரீ வசன பூஷணம் 411வது ஸூத்ரத்தில்
“வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர்” என்று சாதிக்கிறார். இதை மாமுனிகள் விளக்குகையில்,
மதுரகவிகள் முற்றிலும் ஆழ்வாரையே பற்றினாப் போலே நம்பி எம்பெருமானாரையே பற்றினார்,
ஆண்டானும் ஆழ்வானும் எம்பெருமான் எம்பெருமானார் இருவரையும் பற்றி இருந்தார்கள் என்கிறார்.

இறுதியாக, ஆர்த்தி ப்ரபந்தம் 11ஆம் பாசுரத்தில் மாமுனிகள் எம்பெருமானாரிடம் தம்மையும் அவரையே பற்றியிருந்த
ஸ்ரீ வடுக நம்பிகளைப் போலே ரக்ஷித்தருள வேணும் என்று இறைஞ்சுகிறார்.
ஸ்ரீ வடுக நம்பி எம்பெருமானாரிடம் கொண்டிருந்த அளவற்ற ஈடுபாட்டினால், ஸ்ரீ எம்பெருமானைத் தனியாக வணங்கவில்லை.
ஆசார்யனை நாம் வழிபடும்போது, இயற்கையாகவே அவ்வாசார்யன் அண்டி இருக்கும் எம்பெருமானையும் வழிபட்டதாக ஆகி விடும்.
ஆனால், எம்பெருமானை மட்டும் வழிபட்டால், ஆசார்யனை வணங்கியதாக ஆகாது என நம் பூர்வர்கள் தெளிவாகக் காட்டியுள்ளனர்.
ஆகையால் ஆசார்யனையே எல்லாமாகக் கொண்டு இருப்பதே நம் ஸம்ப்ரதாயத்தின் முக்கியமான கொள்கை.
இந்த அம்சம் வடுக நம்பியிடம் அழகாகப் பொருந்தியுள்ளது என்கிறார் மாமுனிகள்.

இவ்வாறாக பாகவத நிஷ்டையை ஆசார்ய பக்தியால் அனுஷ்டித்த வடுக நம்பி திருவடிகளே நமக்குப் புகல்.

——————-

27- ஸ்ரீ வங்கி புரத்து நம்பி

பாரத்வாஜ குல உத்பூதம் லஷ்மணார்ய பத ஆஸ்ரிதம்
வந்தே வங்கீ புராதீஸம் ஸம்பூர்ணார்யம் கிருபா நிதிம்

இவர் ஸ்ரீ திருவாய் மொழியின் சாரம் அர்த்த பஞ்சகம் என்று அருளிச் செய்வர்
பிராட்டியின் பதியாய் இருப்பதே எம்பெருமானுக்குப் பெருமை –
ஸ்ரீ வைஷ்ணவ மதத்தின் பெருமையும் அதுவே என்று அடித்து அருளிச் செய்வர்
ஸ்ரீ எம்பெருமானே ஸ்ரீ நம்மாழ்வாராக அவதரித்தார் என்பாராம் –

ஸ்ரீ மணக்கால் நம்பி சிஷ்யரான ஸ்ரீ வங்கி புரத்து ஆய்ச்சியின் திருக்குமாரர் –
ஸ்ரீ சிறியாத்தான் இவரது சிஷ்யர் –

ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேத –நாக பர்யங்க உத்ஸ்ருஜ்ய —
ஆகதோ மதுராம் புரீம்
சர்வ நியாந்தா
ஸ்ரீ கிருஷ்ணனாய் பிறந்து
நியாம்யனாய் இருந்த வ்ருத்தாந்தம் – பெரிய திருமொழி -6-7-4-
ஸ்ரீ வங்கி புரத்து நம்பி பல காலம்
திரு வாராதன க்ரமம் அருளிச் செய்ய வேணும் என்று  போருமாய்
அவசர ஹானியாலே அருளிச் செய்யாமலே போந்தாராய்
திருமலையிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
ஸ்ரீ ஆழ்வானுக்கும் நம்பி   ஸ்ரீ ஹனுமந்தத் தாசருக்கும் அது தன்னை அருளிச் செய்தாராய்
சமைக்கிற அளவிலே நம்பி தோற்ற
திரு உள்ளம் துணுக் என்று  அஞ்சி அப்போது அருளிச் செய்த வார்த்தை –
என்றும் உள்ள இஸ் சம்சயம் தீரப் பெற்றோம் ஆகிறது
நியாமகன் நியாம்யங்களிலே   சிலர்க்கு அஞ்சிக் கட்டுண்டு அடி உண்டு
அழுது நின்றான் என்றால்  இது கூடுமோ என்று இருந்தோம் –
இரண்டு இழவுக்கும் நம்முடைய ஹிருதயம் அஞ்சி
நொந்தபடியால் அதுவும் கூடும் -என்று –

ஸ்ரீ நம் பெருமாள் வீதி உலாக்கில் பால் உண்பீர் பழம் உண்பீர் என்று இடையர்கள் –
விஜயீ பவ -இவர் சொல்ல ஸ்ரீ முதலியாண்டான்
முரட்டு சம்ஸ்க்ருத குறை சொல்லி அவர்கள் அவர்களே நாம் நாம் தான் என்று
ஆய்ச்சிகளின் பக்தியை மெச்சி அருளிச் செய்தாராம்

நமக்குத் தஞ்சமாக நினைத்து இருப்பது –உன்னை அருள் புரிய வேண்டும் என்ற
க்ஷத்ர பந்துவின் வார்த்தை -என்று எம்பெருமானார் சொல்ல
உன்னை வணங்கத் தெரியாத எனக்கு கிருபை செய்து எனக்கு அருள் புரிய வேண்டும் என்ற
காளியன் வார்த்தை என்றாராம்
இவர் நிர்ஹேதுக கிருபையின் பெருமையை விளக்க இந்த சம்வாதம்

———————–

28-ஸ்ரீ பராங்குச நம்பி

கோவிந்த ராஜான் வயஜோ மநீஷீ பரங்குசோ யாமுனவை மநஸ்யம்
அபாசகார பிரசபம் த்ருதீயம் விராஜதே வ்ருத்த மணி ப்ரதீப –

இவர் ஸ்ரீ எம்பாருடைய தம்பியான சிறிய கோவிந்த பட்டரின் திருக்குமாரர்
இவர் திருக்குமாரர் ஸ்ரீ கூர நாராயண ஜீயர் ஸ்ரீ புத்தருடைய சிஷ்யர்
ஸ்ரீ உடையவர் ஸ்ரீ எம்பாரிடம் ஸ்ரீ நம்மாழ்வார் திரு நாமத்தைச் சாத்தகி சொல்ல இந்த திரு நாமம் –
தமிழில் வல்லவர்
ஸ்ரீ கூரத்தாழ்வான் இவரை பாலேய் தமிழர் என்பாராம் –

————

29- ஸ்ரீ அம்மங்கி அம்மாள்
இவர் ஒரு சமயம் ஸ்ரீ நம்பிள்ளையின் நோய் தீர ஒரு மந்திரிக்கப்பட்ட யந்திரத்தை அவர்
கையில் வைக்க முற்பட அவர் அத்தை ஏற்க மறுத்தார்
இவர் ஸ்ரீ மழுவூர் நம்பி ஸ்ரீ மருதூர் நம்பி ஸ்ரீ தொண்டனூர் நம்பி ஸ்ரீ அனந்தாழ்வான் உடன்
ஸ்ரீ ரெங்கம் சென்று வந்தார் –

இவர் நீதிப்பாடல்கள் பாடி மகிழ்விப்பாராம் –
இவரது சரம தசையில் ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ நம்பிள்ளை அறிய வந்து அவர் படுகிற கிலேசங்களைக் கண்டு
இங்குத்தை ஆச்சார்ய சேவைகளும்
பகவத் குணங்களைக் கொண்டு போது போக்கின படிகள் எல்லாம் கிடக்க
அல்லாதாரைப் போலே இப்படி பட வேண்டுவதே -என்ன –
நீயாள வளை யாள மாட்டோமே -ஸ்ரீ பெரிய திரு மொழி -3-6-9–என்றவாறே
பகவத் பரிக்ரஹம் ஆனால் கிலேசப் பட்டே போம் இத்தனை காணும் -என்றார்
புறப்பட்ட பின்பு ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ பிள்ளையை பார்த்து முடிகிற இவ்வளவிலேயும் இவ்வார்த்தை சொல்லுகிறது
விஸ்வாசத்தின் கனமான பாவ பந்தத்தில் ஊற்ற்ம் இறே என்று அருளிச் செய்தார்-

——————–

30- ஸ்ரீ பருத்திக் கொல்லை அம்மாள்

ஸ்ரீ உடையவர் திருமலைக்கு எழுந்து அருளும் போது ஸ்ரீ திருக்கோவலூர் சென்று அங்கு இருந்து
ஸ்ரீ காஞ்சி புரம் நோக்கி நடக்க அதில் இரண்டு வழிகள் பிரிய -அங்குள்ள இடையர்கள்
ஓன்று ராஜஸரான எச்சான் இடத்துக்குப் போகும் வழி என்றும் –
மற்ற ஓன்று சாத்விகரான இவர் இடத்துக்குப் போகும் வழி என்று சொல்ல
அதன் வழி இவர் இடத்துக்கு வந்தவர் -அங்கு அவர் இல்லாமல் அவர் தேவிமார் சரியான புடவை இல்லாமல்
வெளியே வர முடியாமல் இருக்க அறிந்த ஸ்ரீ உடையவர் தனது உத்தரீயத்தை எடுத்து எறிய –
அத்தைக் கட்டிக் கொண்டு வந்து வணங்க அவரைத் தளிகை பண்ணும்படி சொல்ல
பண்ணி முடித்ததும் அவள் கணவர் வந்து தண்டம் சமர்ப்பித்து ஸ்ரீ பாத தீர்த்தம் ஸ்வீ கரித்து
அனைவரும் அமுது செய்தார்கள்
இவர் தேவிக்கு தீங்கு நினைத்த வைசியன் ஒருவனை ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாத தீர்த்தம் சாதித்து
இவர் திருத்திப் பணி கொண்டார் –

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜர் நியமித்த -74- ஸிம்ஹாஸனாதி பதிகள் வைபவம் –11-20-

October 21, 2020

11-ஸ்ரீ மிளகு ஆழ்வான்
வித்வத் பரிக்ஷைக்கு இவரை நீர் வைஷ்ணவர் ஆதாலால் நுழைய முடியாது என்ன-
ஸ்ரீ வைஷ்ணவர் என்று சொன்னதாலேயே கொண்டாடினவர்
வித்வான் ஆகையால் ஸ்ரீ முதலியாண்டானை வாதத்துக்கு அழைத்து தோற்று அவரை தோளில் சுமந்தவர்
ஸ்ரீ முதலியாண்டான் இவரை ஸ்ரீ உடையவர் இடம் கூட்டிச் சென்று ஆஸ்ரயிக்க வைத்தார்
திருவானைக்கா சென்று பகவத் வைபவம் பேசி திருத்திப் பணி கொள்வேன் என்று சொல்ல
அப்படி திருந்தினவர்கள் உண்டோ என்ன
நான் அனைவரையும் ஸ்ரீ மன் நாராயண சம்பந்திகளாகவே நினைக்கிறேன்
ப்ரக்ருதி சம்பந்திகள் அல்ல -அப்ருதக் ப்ரஹ்ம வஸ்துக்கள் இல்லையே என்பாராம் –

————————-

12-உக்கல் ஆழ்வான்
இவர் ஸ்ரீ ராமானுஜர் மடத்தில் பிரசாத கலம் எடுக்கும் கைங்கர்யம் பெற்றவர்

————-

13-ஸ்ரீ கணியனூர் சிறியாச்சான்
இவர் ஸ்ரீ வங்கி புரத்து நம்பி சிஷ்யர் -போசள நாட்டில் இருந்து வந்தவர்
பசும் புல்லைக் கூட மிதிக்காத சாது
இட்டீரிட்டு விளையாடும் -வார்த்தையை ரசிப்பவர் –
கன்றுகள் உடன் விளையாடும் கண்ணன் மேல் மிகவும் பரவசப் பட்டவர்
சிறந்த அனுஷ்டானம் கொண்டவர் -உடம்பில் தழும்பு வரும் படி தொழுபவர்
மேனி சிறுத்து பெரிய ஞானம் கொண்ட சிறு மா மனுஷர் என்று ஸ்ரீ கூரத்தாழ்வானால் புகழப் பெற்றவர்
சத்யம் சத்யம் புனர் சத்யம் யதிராஜோ ஜகத் குரோ
ச ஏவ சர்வ லோகா நாம் உத்தர்த்தா ந சம்சய -இவர் சொன்னதாகவும் சொல்வர்
ராமபிரான் தூது போக வில்லையே எதனால் என்று பட்டர் இடம் கேட்டவர் –
அனுப்புவார் இல்லையே -க்ஷத்ரியர் ஆகையால்
மன்மதனையும் சுப்ரமண்யனையயும் ராமனுக்கு அழகுக்கு ஒப்பாக சொல்லி ருஷி கரி பூசுகிறார்
என்று பட்டர் வாயால் கேட்கப் பெற்றவர்

—————

14-ஆட் கொண்ட வில்லி ஜீயர்

ஞான வைராக்ய சம்பந்தம் ராமானுஜ பாதாஸ்ரிதம்
சதுர்த்த ஆஸ்ரம சம்பந்தம் சம்ய மீந்த்ரம் நமாம் யஹம் –

சித்திரை திருவாதிரை இவர் திரு அவதாரம்
ஸ்ரீ எம்பெருமானார் நியமனத்தால் ஸ்ரீ முதலி ஆண்டான் திருக்குமாரர் ஸ்ரீ கந்தாடை ஆண்டான்
இவரை ஆஸ்ரயித்தார்
இவர் நஞ்சீயரை வணங்கி தனக்கு பகவத் விஷயத்தில் உண்மையான ருசி இல்லை என்றும்
பாகவதர்களைக் கண்டால் என்று மகிழ்ச்சி ஏற்படுகிறதோ அன்று தான் பகவத் ருசி ஏற்படுகிறது
என்று அர்த்தம் என்றும் தெரிவித்தார் –

———————-

15- ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்

ஸிம்ஹே ம்ருக ஸ்ரோத் பூதம் ராமானுஜ பாதாஸ்ரிதம்
த்ராவிடாம் நாய தத்வஞ்ஞம் குருகாதிபம் ஆஸ்ரயே –

த்ராவிட ஸாரஞ்ஞம் ராமானுஜ பாதாஸ்ரிதம்
ஸூ தியம் குருகேசார்யம் நமாமி சிரஸான் வஹம்

ஆவணி மிருக சீர்ஷம் திரு அவதாரம்
இவர் ஸ்ரீ பெரிய திருமலையின் திருக்குமாரர்
ஸ்ரீ ராமானுஜரின் அபிமான புத்திரர்
பிள்ளான் என்ற இவருக்கு திருக் குருகைப் பிரான் பிள்ளான் என்று ஸ்ரீ உடையவரே
திரு நாமம் சாத்தி அருளினார்
திருக்கோட்டியூர் நம்பிக்கும் திருக்குருகைப் பிரான் என்ற திரு நாமமும் உண்டே
இவர் சிறு புத்தூரில் எழுந்து அருளி சோமாசி ஆண்டான் இவர் இடம் மூன்று முறை
ஸ்ரீ பாஷ்யம் சாதித்து அருளினார்
அவர் இவர் இடம் தனக்குத் தஞ்சமாக ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் என்று
கேட்ட பொழுது இவர் நீர் பாட்டம் பிரபாகரம் மீமாம்ஸை இவை அனைத்துக்கும் கர்த்தா
பாஷ்யம் வாசித்தோம் என்று மேன்மை அடித்து இராதே எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம்
என்று அருளிச் செய்தார்
ராமானுஜர் ஆணைப்படியே ஆறாயிரப்படி சாதித்து அருளி உள்ளார்
இவர் இடம் ஸ்ரீ எங்கள் ஆழ்வான் அருளிச் செயல்கள் அர்த்தம் கேட்டு அருளினார்
இவரே ஸ்ரீ டாமானுஜருக்கு சரம கைங்கர்யம் செய்து அருளினார்
இவர் கொங்கில் நாட்டுக்கு எழுந்து அருளும் பொழுது ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசார்யன் திரு நாமத்தைச்
சொல்லாமல் எம்பெருமான் திரு நாமத்தைச் சொல்ல அங்கு இருந்து வெளி ஏறினார்
வளர்த்ததனால் பயன் பெற்றேன் என்று ஸ்ரீ உடையவர் கொண்டாடும் படி இருந்தவர்
இவருடைய இறுதிக் காலத்தில் -கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -என்று
சொல்லக் கேட்ட நஞ்சீயர் அழத் தொடங்க
அப்போது இவர் சீயரே நீர் கிடந்து அழுகிறது என் -அங்கு போய் பெறுகிற பேறு
இதிலும் தண்ணிது என்று தோற்றி இருந்ததோ என்று அருளிச் செய்தாராம்

———————————-

16- ஸ்ரீ திருக் கண்ண புரத்து எச்சான்
செறு வரை முன் ஆசு அறுத்த சிலை அன்றோ கைத்தலத்து -பாசுரம் அருளிச் செய்ய
உடனே ஒரு நொடியிலே விரோதிகளை அழித்து விடுவேன் என்று எம்பெருமானும் சொன்னாராம்

——–

17- ஸ்ரீ அம்மங்கிப் பெருமான்
இவர் ஸ்ரீ ராமானுஜருக்கு பால் அமுது காய்ச்சித் தரும் கைங்கர்யம் –

———————-

18- ஸ்ரீ மாருதிப் பெரியாண்டான்
இவர் ஸ்ரீ ராமானுஜருக்கு திருக்கை சொம்பு பிடிக்கும் கைங்கர்யம்

—————-

19- ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டான்

ஞாதும் கூர குலாதிபம் க்ருமி களாத் ப்ராப்தா பதம் ப்ரேஷிதே
ஸ்ரீ ராமா வர ஜேந கோஸல பாதாத் த்ருஷ்ட்வா ததீ யாம் ஸ்திதம்
ஸம் ப்ரதாஸ் த்வரயா புராந்தக புராத் கல்யாண வாபீ தடே
யோ அசவ் மாருதி ரித்ய ஸம் சத வயம் தஸ்மை நமஸ் குர்மஹே

இவர் மடத்துக்கு அமுது படி -கனி அமுது -பால் -நெய் முதலியவை வாங்க ஏற்பாடு செய்யும்
கைங்கர்யம் செய்து வந்தார்
இவரையும் சிறிய ஆண்டானையும் அம்மங்கி அம்மாளையும் ஸ்ரீ ரெங்கத்துக்கு அனுப்ப
இவர் அங்கே சென்று ஸ்ரீ பெரிய நம்பி திரு நாட்டுக்கு எழுந்து அருளியதையும்
ஸ்ரீ கூரத்தாழ்வான் கண் இழந்ததையும் ஸ்ரீ உடையவருக்குத் தெரிவித்தார்

———————-

20-ஸ்ரீ சோமாசி ஆண்டான்

நவ்மி லஷ்மண யோகீந்த்ர பாத சேனவக தாரகம்
ஸ்ரீ ராம க்ரது நாதார்யம் ஸ்ரீ பாஷ்ய அம்ருத சாகரம் –

சித்திரை திருவாதிரை திரு அவதாரம்
இயல் பெயர் -ராம மிஸ்ரர்
அவதார ஸ்தலம்: காராஞ்சி
ஸோம யாகம் செய்து சோமாசி ஆண்டான் பெயர்
எம்பெருமானாரே சரணம் -இவர் சொல்வது போல் யாராலும் இனிமையாக சொல்ல முடியாதே
கண்ண புரம் -திருமங்கை ஆழ்வார் –அழகிய மணவாளன் -பட்டர் –
திருத் தொலை வில்லி மங்கலம் -நம்மாழ்வார் -சொல்லுவது போலே அன்று இதுவும்
திரு நாராயண செல்வப்பிள்ளைக்கு அந்தரங்கர் -பாட்டுப்பாடி மகிழ்விப்பவர்
பாடினத்துக்கு ஆடினேன் -மோக்ஷம் ராமானுஜரை விஸ்வசித்துப் பற்றினால் உண்டாகும் என்று
அருளிச் செய்ய பற்றினார்
இவர் வம்சத்தவர்களே ஸ்ரீ ரெங்க வாக்ய பஞ்சாங்கம் மிராசு பெற்றவர்கள் –
ஸ்ரீ பாஷ்ய விவரணம்
ஸ்ரீ குரு குணா வளி-(எம்பெருமானார் பெருமை பேசுவது),
ஸ்ரீ ஷடர்த்த ஸம்க்ஷேபம் ஆகிய கிரந்தங்களை அருளிச் செய்துள்ளார் –

க்ருபாமாத்ர ப்ரசன்னாசார்யர்களின் பெருமையை விளக்கும் ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை இவரது
குரு குணாவளி ச்லோகம் ஒன்றை உதாஹரிக்கிறார்.

யஸ்ஸாபராதாந் ஸ்வபதப்ரபந்நாந் ஸ்வகீயகாருண்ய குணேந பாதி |
ஸ ஏவ முக்யோ குருரப்ரமேயஸ் ததைவ ஸத்பி: பரிகீர்த்யதேஹி ||

ஆசார்யன் தன்னுடைய பெருங்கருணையால், தன்னிடய் சரணடைந்த சிஷ்யனை ரக்ஷித்து உஜ்ஜீவிக்கிறான் –
அந்த ஆசார்யனே முக்யமானவன். இவ்விஷயம் ஆப்த தமர்களால் காட்டப்பட்டுள்ளது.

சரமோபாய நிர்ணயத்தில் ஸ்ரீ எம்பெருமானார் இவர்க்குச் செய்த பெருங்கருணை விளக்கப் படுகிறது.

எம்பெருமானாரிடம் காலக்ஷேபம் கேட்டு அவரோடிருந்த ஸ்ரீ சோமாசியாண்டான், சிறிது காலம் தம் ஊரான காராஞ்சி வந்து,
திருமணம் ஆகி, பின் மனைவி வற்புறுத்தலால் மீண்டும் ஸ்ரீ எம்பெருமானாரிடம் சென்று சேர இயலாது கிராமத்திலேயே இருக்க,
தம் வழிபாட்டுக்கு ஒரு ஸ்ரீ எம்பெருமானார் விக்ரஹம் செய்விக்க, அவ்விக்ரஹம் சிற்பி முயன்றும் சரிவராமல் போக,
சிற்பியிடம் அந்த விக்ரஹத்தை அழித்து வேறு விக்ரஹம் செய்யுமாறு கூறுகிறார்.
அன்று இரவு அவர் கனவில் ஸ்வாமி வந்து,
”ஆண்டான், நீர் எங்கிருப்பினும் நம் நினைவுண்டதாகில் கவலை வேண்டாவே.
நீர் ஏன் நம்மை இப்படித் துன்புறுத்துகிறீர்? நம்மிடம் விச்வாஸம் இல்லையெனில்
இவ்விக்ரஹத்தால் மட்டும் என்ன பயன்”என வினவ,
விழித்தெழுந்த ஆண்டான் விக்ரஹத்தைப் பாதுகாப்பாய் வைத்துவிட்டு, மனைவியைத் துறந்து, ஸ்ரீரங்கம் வந்து
ஸ்ரீ எம்பெருமானார் திருவடியில் வந்து அழுதபடி விழுந்தார்.
ஸ்ரீ எம்பெருமானார் என்ன நடந்தது என்று வினவ, ஆண்டான் நடந்ததை விவரித்தார்.
ஸ்ரீ உடையவரும் சிரித்து, “உம்முடைய மனைவியிடத்தில் உமக்கு இருந்த பற்றை விலக்கவே இதைச் செய்தோம்.
நீர் நம்மை விட்டாலும், நாம் உம்மை விடமாட்டோம். நீர் எங்கிருந்தாலும், நம்முடைய அபிமானம் உள்ளதால்
உம்முடைய பேற்றுக்கு ஒரு குறையும் இல்லை. நம்மிடம் எல்லாக் கவலைகளையும் விட்டு
இனி நீர் சுகமாய் இருக்கலாம்” என்று அருளினார் –
இவ்வாறு நம் பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்வர்.

ஸ்ரீ வார்த்தா மாலையிலும் ஸ்ரீ சோமாசியாண்டான் விஷயமான சில ஐதிஹ்யங்களுண்டு:

126 – ஸ்ரீ சோமாசியாண்டான் ப்ரபன்னருக்கு எம்பெருமானே உபாயம், பக்தியோ ப்ரபத்தியோ அன்று என்று நிலை நாட்டுகிறார்.
பகவான் நம்மைக் கைகொள்ள, நம்மைக் காத்துக்கொள்வதில் நம்முடைய முயற்சியை நாம் கைவிட வேண்டும்.
பக்தியோ ப்ரபத்தியோ உண்மையான உபாயம் அன்று. நாம் சரணடையும் எம்பெருமானே உயர்ந்த பலத்தை அளிப்பதால்,
அவனே உண்மையான உபாயம்.
279 – ஸ்ரீ சோமாசி யாண்டானை விட வயதில் குறைந்த ஆனால் ஞானம் அனுஷ்டான மிக்க அப்பிள்ளை என்ற ஸ்ரீவைஷ்ணவர்,
ஆண்டானிடம்,”ஸ்வாமி! தேவரீர் வயதிலும், ஆசாரத்திலும் சிறந்தவர்; ஸ்ரீபாஷ்யம் பகவத் விஷயாதி அதிகாரி;
இருந்தாலும், பாகவத அபசாரம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்கு உம் வேஷ்டியில் ஒரு முடிச்சு முடித்துக்கொள்ளும்!” என்று கூறினாராம்,
பாகவதாபசாரம் மிகக் கொடிது என்பதே விஷயம் – எத்தனை பெரியவராக இருந்தாலும், அபசாரங்களை விலக்க வேண்டியதின்
முக்கியத்துவத்தை அப்பிள்ளை இங்கு எடுத்துரைத்தார்.
304 – ஸ்ரீ வைஷ்ணவன் விஷய சுகத்தில் ஆசை கொள்ளக் கூடாது என்கிறார் ஆண்டான். ஏனெனில்:
ஜீவாத்மா முற்றிலும் பெருமாளை நம்பியுள்ளது என்பதாலும்
நம் லக்ஷ்யம் பெருமாளை அடைவதொன்றே, வேறல்ல என்பதாலும்
எம்பெருமானுக்கு நமக்குமுள்ள சம்பந்தமே உண்மை, வேறல்ல என்பதாலும்
எம்பெருமான், அவன் சம்பந்தம் மட்டுமே சாஸ்வதம், மற்றவை நிலையற்றவை என்பதாலும் விஷய சுகம் தள்ளுபடி.
375 – ஓர் இடையன் பால் திருடியதற்காகத் தண்டிக்கப் பட்டான் என்று கேட்ட ஆண்டான் மூர்ச்சை ஆனாராம்!
கண்ணன் எம்பெருமான் யசோதையால் தண்டிக்கப்பட்டதை நினைவு படுத்தியதால் அவ்வளவு உணர்ச்சி வசப்பட்டாராம்.

————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜர் நியமித்த -74- ஸிம்ஹாஸனாதி பதிகள் வைபவம் –1-10-

October 21, 2020

1-ஸ்ரீ ஆளவந்தார் திருக்குமாரர் ஸ்ரீ சொட்டை நம்பி –

மகரே சைகை பாத்யேச யாமுனாசார்ய நந்தனம்
கூர நாத குரோ ஸிஷ்யம் ஸேவே ஸூப குணார்ணவம் -இவர் தனியன் –

தை மாதம் பூரட்டாதி நக்ஷத்ர திரு அவதாரம்
ஸ்ரீ கூரத்தாழ்வான் சிஷ்யர்
இவர் ஒரு சமயம் திருக் கோஷ்ட்டியூர் நம்பி இடம் கடுமையாகப் பேசி நடந்து கொள்ள –
இங்கு இல்லாமல் போ என்று ஆணை இட
தலைநகர் சென்று அரசாங்க உத்யோகம் பார்த்து வந்தார்
சரம காலத்தில் ஒரு வைஷ்ணவர் இவர் இடம் தேவரீர் என்ன திரு உள்ளம் பற்றி உள்ளார் என்று வினவ

ஸ்ரீ ஆளவந்தார் சம்பந்தத்தால் பேறு சித்தம் -அங்கு ஸ்ரீ வைகுண்ட நாதன் திரு முகம் நம் பெரிய பெருமாள்
போல் குளிர்ந்து இரா விட்டால் பரம பத அண்டச் சுவரை முறித்துக் கொண்டு இங்கே வந்து விடுவேன் என்றாராம்
திருவாய் மொழி -தன் தனக்கு இன்றி நின்றானை –4-5-7-என்று அருளிச் செய்தது
ஆத்மாநாம் மானுஷம் மன்யே – என்று அருளிச் செய்த
ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனுக்கே இந்தப் பெருமை சேரும் என்றார்
இவர் திருக் குமாரர் என் ஆச்சான்
அவர் திருக் குமாரர் -பிள்ளை அப்பன் –

————

2- ஸ்ரீ பெரிய நம்பி திருக் குமாரர் -ஸ்ரீ புண்டரீகர் –
இவர் ஸ்ரீ அத்துழாயின் திருச் சகோதரர்

ஸூசவ் மாஸ் யுத்தராஷாட ஜாதம் பூர்ண குரோஸ் ஸூ தம்
யதி ராஜ அங்க்ரி ஸத் பக்தம் புண்டரீகாக்ஷம் ஆஸ்ரயே —

ஆடி உத்தராடம் திரு அவதாரம்
ஸ்ரீ உடையவர் சிஷ்யர்
இவர் சேரக் கூடாத ஸஹ வாசத்தால் போகக் கூடாத இடம் போக –
நீர் எம்மை விட்டாலும் நான் உம்மை விடேன் -என்று கண்டு பிடித்து
அருளிச் செய்து திருத்திப் பணி கொண்டார்

———————

3- ஸ்ரீ தெற்காழ்வான்
ஸ்ரீ திருக் கோட்டி நம்பி திருக் குமாரர் -ஆடித் திரு வோணம் திரு அவதாரம் –
ஸ்ரீ தேவகிப் பிராட்டியார் சகோதரர் -காஸ்யப கோத்தரம்
இவரது திருப்பேரானாரும் ஸ்ரீ தெற்காழ்வான்-ஸ்ரீ பட்டர் சிஷ்யர் -இவர் நண்பர் ஸ்ரீ கோளரி ஆழ்வான்
பாபங்கள் குளிப்பதனால் போகாது -ஸ்ரீ சிங்கப் பிரானது சக்ராயுதத்தால் மட்டுமே தொலையும் -என்று
அருளிச் செய்ததை கேட்டு
இவர் ஞானத்தையும் விசுவாசத்தையும் ஸ்ரீ பட்டர் பாராட்டிய ஐதிக்யம் உண்டே

——————

4-ஸ்ரீ ஸூ ந்தரத் தோளுடையான்
ஸ்ரீ திருமாலை ஆண்டான் திருக் குமாரர் –
இவருக்கு ஸ்ரீ பெரியாண்டான் என்னும் திரு நாமமும் உண்டு –
காஸ்யப கோத்ரம்
சித்திரை சித்திரை திரு அவதாரம்

மாலாதார குரோ புத்ரம் ஸுவ்ந்தர்ய புஜ தேசிகம்
ராமாநுஜார்ய ஸத் சிஷ்யம் வந்தே வர கருணா நிதம்

திருமாலிருஞ்சோலை அழகர் சந்நிதியில் புரோஹிதர்
இவருடைய மூதாதையரில் ஒருவர் கண்ணுக்கு இனியான் அழகரை ஒரு ஆபத்தில் ரக்ஷித்து
இதனால் இவர் வம்சத்துக்கு ஆண்டான் என்ற பட்டப் பெயர் வந்தது
இவர் வம்சத்தில் வந்த யமுனாச்சார்யர் ஸ்ரீ வாதி கேசரி ஜீயரின் சிஷ்யர் -யோக சாஸ்திரத்தில் மேதாவி –

——————

5–ஸ்ரீ பிள்ளை திருமலை நம்பி –

வ்ருஷே விசாக ஸம்பூதம் ராமானுஜ பதாஸ்ரிதம்
ஸ்ரீ சைல பூர்ண ஸத் புத்ரம் ஸ்ரீ சைலார்யம் அஹம் பஜே–தனியன்

ஸ்ரீ பெரிய திருமலை நம்பி திருக் குமாரர் -வைகாசி திரு விசாகம் திரு அவதாரம் –
இவருக்கு ஸ்ரீ ராமானுஜர் என்ற சகோதரர் உண்டு
இவருடைய சகோதரியின் கணவர் -அருளாளப் பெருமாள் எம்பெருமானாரின் திருக் குமாரர்
ஸ்ரீ அலங்கார வேங்கடவர் -இவரும் ஸிம்ஹாஸனாதி பதிகளில் ஒருவர்–35-
இவருடைய மருமகன் புகழ் பெற்ற விஞ்சிமூர் தாதாச்சார்யர்

———————

6- ஸ்ரீ நடுவில் ஆழ்வான்

யேந ப்ரோல்ல சதே நித்யம் கார்க்ய வம்ச மஹாம் புதி
மன் மஹே தம் ஸதா ஸித்தே மத்யமார்யம் கலா நிதிம் –தனியன் –

இவர் கண்ணன் -யது வம்ச புரோஹிதரான கர்கர் வம்சத்தவர்
மேல்கோட்டையில் ஸ்ரீ உடையவர் எழுந்து அருளின காலத்தில் உடனே இருந்த ஸ்வாமி
இவர் ஸ்ரீ பாஷ்யம் சாதித்த காலத்தில் ஸ்ரீ வங்கி புரத்து ஆச்சியும் ஸ்ரீ சொட்டை அம்மாளும் கேட்டு
அற்புதமாக இருந்தது என்றார்களாம்
இவர்கள் இடம் எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள் என்று அருளிச் செய்தார்
ஸ்ரீ மா முனிகளின் அஷ்ட திக் கஜங்களில் ஒருவரான பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் இவர் வம்சத்தவர்
ஸ்ரீ எம்பெருமானார் உடைய சரம தசையில் இவர் ஸ்ரீ திருவரங்கம் எழுந்து அருளினார்

ஸ்ரீ எம்பெருமானார் தன்னை ஆஸ்ரயித்த
ஸ்ரீ மாருதி ஆண்டான்
ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டான்
ஸ்ரீ அரண புரத்து ஆழ்வான்
ஸ்ரீ ஆ ஸூரிப் பெருமாள்
ஸ்ரீ முனிப் பெருமாள்
ஸ்ரீ அம்மங்கிப் பெருமாள் -முதலானவரை இவரை ஆஸ்ரயிக்கச் செய்தார்
இவர்கள் அனைவரும் -74- ஸிம்ஹாஸனாபதிகள்

இவர் வம்ச பரம்பரை
ஸ்ரீ நடுவில் ஆழ்வான்
ஸ்ரீ ஆழ்வான்
ஸ்ரீ வைத்த மா நிதி
ஸ்ரீ அழகிய மணவாளர் –
ஸ்ரீ வரதாச்சார்யர்
ஸ்ரீ வேங்கடத்து உறைவார்
ஸ்ரீ சடகோபாச்சார்யார்
ஸ்ரீ போர் ஏற்று நாயனார்
ஸ்ரீ கோவிந்தாச்சார்யார்
ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யார்
ஸ்ரீ ராமானுஜாச்சார்யார்
ஸ்ரீ கோவிந்த தாஸப்பர் என்னும் ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்

————————-

7- ஸ்ரீ கோ மடத்து ஆழ்வான்
ஸ்ரீ கோ மடத்துப் பிள்ளான் என்றும் அழைக்கப் படுவார்
இவர் சிஷ்யர் காக்கைப் பாடி ஆச்சான் பிள்ளை -மூன்று தட்வை ஸ்ரீ பாஷ்யம் கேட்டாராம்
இவரது வம்சமே ஸ்ரீ திகழக் கிடந்தான் திரு நா வீறுடைய தாஸர் அண்ணர் –
ஸ்ரீ மா முனிகளின் திருத் தகப்பனார் –
ஸ்ரீ மா முனிகளின் திருப் பேரனார் ஸ்ரீ ஜீயர் நாயனார் –
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் உடைய அஷ்ட திக் கஜங்களில் ஒருவர் –

———

8-ஸ்ரீ பிள்ளைப் பிள்ளை ஆழ்வான்
ஸ்ரீ கூரத்தாழ்வான் சிஷ்யர்
பாகவத அபசாரம் செய்யாமல் இருக்க சத்யம் – தண்ணீர் வார்த்து தானம் -செய்து கொடுத்து –
மீண்டும் அபசாரப்பட்டு மனம் வருந்தி
ஸ்ரீ கூரத்தாழ்வானை சந்திக்கக் கூசினார் -இதை அறிந்து இவர் வீடு சென்று
ஸ்ரீ கூரத்தாழ்வான் மன்னித்து இவர் மனம் தேற்றினார்
வீர சுந்தர பிரம ராயர் இவர் திரு மாளிகை இடிக்க ஸ்ரீ பட்டர் மனம் வருந்தி
திருக் கோஷ்ட்டியூர் சென்று இருந்த விருத்தாந்தம்
புள்ளும் சிலம்பின் காண் -காலையில் எம்பெருமானை அனுசந்திக்க பறவைகளின் சப்தம்
உத்தேச்யம் என்று சொல்வாராம்
திரு விருத்தம் வியாக்யானத்தில் -குழந்தை தாய் பால் பருகி முகம் பார்க்குமா போல்
அடியார்கள் எம்பெருமான் திருவடிகளை முன்னிட்டுக் கொண்டு
அவன் திரு மேனி குணங்களில் ஈடுபடுவார்கள் என்பாராம்-

———————

9- ஸ்ரீ நடாதூர் ஆழ்வான்

யஸ்மின் பதம் யதி வரஸ்ய முகாத் ப்ரணே துர் நிஷ் க்ராம தேவ நிததே நிகமாந்த பாஷ்யம்
தஸ்யைவ தம் பகவத ப்ரிய பாகி நேயம் வந்தே குரும் வரத விஷ்ணு பதாபிதாநம் —

ஸ்ரீ காஞ்சிபுரம் ஸ்ரீ வத்ஸ கோத்ரம் -ஸ்ரீ ராமானுஜர் சகோதரி திருக்குமாரர் -அந்தரங்க கைங்கர்ய பூதர்
ஸ்ரீ வராத விஷ்ணு என்ற பெயரும் உண்டு
ஸ்ரீ பாஷ்ய ஸிம்ஹாஸனாதிபதி ஸ்ரீ ராமானுஜர் வழங்கிய பட்டம்
இவர் 19-12 சிஷ்யர்களுக்கு ஸ்ரீ பாஷ்யம் வழங்கி உள்ளார்
மான யாதாத்ம்ய நிர்ணயம் கிரந்தம் அருளி உள்ளார்
திரு வெள்ளறை கோயிலில் இவர் அர்ச்சா விக்ரஹம் உள்ளது
ஸ்ரீ எங்கள் ஆழ்வான் இவர் சிஷ்யர் –
ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்ரீ வாத்ஸ்ய வரதாச்சார்யர் இவரது திருப்பேரானார்

—————

10-ஸ்ரீ எங்கள் ஆழ்வான்
ஸ்ரீ விஷ்ணு சித்த பத பங்கஜ சங்க மாய சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத பரேண
நோ சேத் மமாபி யதி சேகர பாரதீ நாம்
பாவா கதம் பவிது மர்ஹதி வாக் விதேயா

சீராரும் வெள்ளறையில் சிறந்து உதித்தோன் வாழியே
சித்திரை ரோஹிணி நாள் சிறக்க வந்தோம் வாழியே
பார் புகழும் எதிராஜர் பதம் பணிந்தோன் வாழியே
பங்கயச் செல்வியின் பதங்கள் பணியுமவன் வாழியே
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திரு அருளோன் வாழியே
தீதிலா பாடியத்தைத் தேர்ந்து உரைப்போன் வாழியே
தரணியில் விஷ்ணு மதம் தழைக்க வந்தோன் வாழியே
தண்ணளியோன் எங்கள் ஆழ்வான் தாளிணைகள் வாழியே

ஸ்ரீ விஷ்ணு பிராணத்துக்கு ஸ்ரீ விஷ்ணு சித்தீயம் வியாக்யானம் அருளியவர் –
ஸ்ரீ நஞ்சீயர் ஆயர் தீவு இவர் கனவில் நாவல் பழம் கேட்ட ஐதிக்யம்
திரு நாராயண புரத்தில் இருந்தும் திரு வரங்கம் வந்த ஸ்ரீ பாஷ்ய காரருக்கு ஸ்ரீ பாஷ்யம்
எழுத உஸாத் துணையாக இருந்தவர் –
அதனாலேயே எங்கள் ஆழ்வான் என்று பெயர் இடப் பெற்றவர்
ஸ்ரீ பாஷ்யகாரரை விட 80 வயசு சிறியவர்
ப்ரமேய ஸங்க்ரஹம்
சங்கதி மாலா
கத்ய வியாக்யானம் எழுதியவர்
இவர் திருக்குமாரத்தி செங்கமல நாச்சியார்
இவர் மாப்பிள்ளை வரதாச்சார்யர் –

————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமநுச கதி-TAMIL HINDU May 26, 2017 By முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி-

October 14, 2020

ஸ்ரீ உடையவர் இராமாநுசர் மண்ணுலகில் அவதரித்து மானுடரின் மேம்பாட்டுக்குப் பெருமாளின் அருளோடு
ஆற்றிய புண்ணிய கைகங்கரியங்களைப் பற்றிய பல அரிய செய்திகள்
இவ்வாண்டு முழுதும் ஊடகங்களில் வெளியாயின. வாசித்து உய்ந்தோர் பலர்.

எம்பெருமானாரைப் பற்றி இதுவரை வெளிவராத புதிய செய்தி பக்தமான்மியம் என்னும்
தமிழ் மொழிபெயர்ப்புக் காப்பியத்தில் காணக் கிடைக்கின்றது.
இம் மொழிபெயர்ப்புக் காப்பியத்தின் ஆசிரியர் கொங்குக் கச்சியப்பர் எனப் புலவர்களால் போற்றப் பெறும் பெரும் புலவர்,
சிரவை ஆதீனத்தின் இரண்டாம் அதிபர் தவத்திரு கந்தசாமி சுவாமிகள்.
சுவாமிகள் அருளிய பக்த மான்மியம் எனும் இக்காப்பியம் 7367 விருத்தப் பாக்களில்
அரி பத்தர்களின் பெருமையினை விளக்குகின்றது.

பத்தியை உடையவர்கள் பத்தர். அவர்களுடைய மகத்தாகிய பெருமையைக் கூறுவது பக்த மான்மியம்.
பத்தியாவது யாது? அன்பு பத்தி காதல் என்னுஞ் சொற்கள் இச்சையின் மிகுதிப்பாட்டைக் குறிப்பன.
இம்மை வாழ்வில் பரம்பொருளாகிய இறைவனொடு உணர்விற் கலந்து நிற்கும் உணர்வே பத்தி.
இறைவனை நெஞ்சிற் பதித்தலால் எழும் இன்ப உணர்வே பத்தி.
இதனை முழுமையாகப் பெற்றவர்கள் சீவன் முத்தர்கள்.

இந்த நூல் 104 அரி பத்தர்களின் அற்புதமான வாழ்வை விவரிக்கின்றது.
பத்தி என்பது சாமானிய அன்பினைப் போலத் தோற்றமளித்தாலும் பயிலுதற்கரிய தொன்றாம்.
இறைவன் “எற்பணி யாளாய் எனைப் பிரியாதே, ஓடி மீள்கென ஆடல் பார்த்திட்டு, என்வழி நின்றனன்” எனத் தமிழாகமமும் ,
‘பத்திவலையிற் படுவோன்’ எனத் தமிழ் மறையும்,
ஓதினும் அந்நிலை சாமானியத்தில் அடையப்படுவ தொன்றன்று என்னும் உண்மை அரிபத்தர்களின் வாழ்வில் வெளிப்படுகின்றது.
அரியின் பத்தர்களாயினும் அவர்களுக்கும் துன்பமுண்டு. அத்துன்பம் உலக வாழ்வில் மயங்கி
மண் பெண் பொன் ஏனும் மூவேடணையில் உழலுவோரின் துன்பம் போன்றதன்று.
சுடச்சுட ஒளிரும் பொன் போன்று, அரைக்குந்தோறும் மணக்கும் சந்தனம் போன்று, அரிபத்தர்களின்
பத்திப் பெருமையைச் சுடர்விடச் செய்வன. அன்னோர் எதிர்கொள்ளும் சோதனைகளும் துன்பங்களும்
உண்மையில் அவைசோதனைகளும் அல்ல; துன்பங்களும் அல்ல.
அவை பத்தர்களின் மகத்துவத்தை உலக வாழ்வில் உழலும் மாந்தருக்கு உணர்த்த அரி மேற்கொளும் உபாயங்களேயாம்.
அவற்றைக் காப்பியமாக எடுத்துரைப்பதே பக்தமான்மியம்.

சந்திரதத்தர் பத்தமான்மியம் மூல நூலின் ஆசிரியர்; மிதிலையிலே பிறந்தவர்.
கொடுங்கோல் வேந்தனின் ஏவலால் சிறையினில் வருந்தினார். அரியின் மந்திரத்தை ஓதிய வலிமையினால் சிறை நீங்கினார்.
தன் அறிவில் தெளிந்து நாரணனைத் தொழுது, நாரணனை போன்ற குரு சொன்ன உபதேசத்தில் மூழ்கி
யமபயம் அகல, பகவனது அருளினைப் பெற்று, பரந்தாமனின் சொற்படி,
வடமொழியில் பக்தர்களின் பெருமையைச் சாற்றும் பக்தமான்மியம் எனும் காவியத்தை இயற்றினார்.

திருமாலின் பழவடியார்களின் பத்தி ததும்பும் வாழ்க்கையினையும் அடியவர் திருத்தொண்டினையும் எடுத்தியம்பும்
அருமையான காவியம் பக்தமான்மியம். இக்காப்பியதில் இருபதாவது கதியாக அமைந்தது இராமாநுச கதி.
இக்கதியில் கூறப்பட்டுள்ளவாறு இராமானுஜரின் வரலாற்றைக் காண்போம்.

ஆதிசேடன் மீது அறி துயில் கொள்ளும் அச்சுதனின் பொன்னடித் துணைகளைப் பரவுகின்ற அடியார்கள்
தம் சென்னிமிசை பதிதருளும் திருப்பதம் வாய்ந்தோன்;
உயர்ந்த பிராமணக் குலத்தினர் செய்த பெருந்தவம் ஒரு வடிவெடுத்து வதது போன்ற திருமேனி உடையவன்;
இராமானுஜன் எனும் திருநாமம் வாய்ந்த ஆச்சாரியன்.
அன்னவனை ஈன்றருளும் அன்னை தந்தை ஆகியோர் பெயர் இன்னவென முன்னூலினிடை விளங்கவில்லை.
இருப்பினும் பாம்பணைத் துயில்பவனின் ஆயிரம் நாமங்களில் ஒன்று கொண்டவர் தந்தை;
அவனுடைய திருமார்பில் உறைகின்ற திருவின் பெயர்களில் ஒன்று கொண்டவர் அன்னை எனலாம்.

நுண்ணிய அறிவுடையார் ஏத்தும் இராமானுஜப் பேர் ஒண்மையன் தன்னுடைய அறிவாகிய அளவுகோல் கொண்டு
வேத சாத்திரங்கள் கூறும் வளமான பொருள்களை யெல்லாம் அளவிட்டு ஆராய்ந்து பூரண சந்திரன் போல ஒளி திகழ்ந்தான்.
தன் தற்போதம் அறத் தன்னைத் தடுத்தாளும் சற்குரவன் வருதல் எந்நாளோ எனக் காதலனை
வேட்டுருகும் காதலியைப் போல மனம் ஏங்கியிருந்தான்.
வரம்பில் கருணை நாரணன் தன் பத்தன் உளம் நலியச் சகிப்பானோ?
இராமானுஜனின் அதிதீவிர பக்குவந் தெரிந்து, உள்ளங் கையில் நெல்லிக் கனி போன்று
முத்தியை அளிக்கும் மந்திரத்தை அருளினன்.
அழல் நெய்யைப் பற்றுதல் போல இராமானுஜன் அருமந்திரத்தை நெஞ்சிற் பற்றினன்.

பாம்பின் மேல் பரதம் பயிலும் நாரணக் குரவன்,
“ ஒருகணத்திற் பலித்து இன்பத்தைக் காட்டும் இம்மந்திரத்தை விண்ணிற் பொலியும் தேவர்களும் அறியார்கள்.
பத்தியிற் சிறந்த நீ இம்மத்திரத்தைக் கைக்கொண்டு இன்பநிலை எய்துவாயாக” என அருளினான்.

அந்த அரிய மந்திரத்தை இராமானுசன் சிந்தையிற் பதித்து ஏத்திடவே,
மந்த புத்தி உடைய உலகவர்களின் உள்ளத்தில் காண முடியாத பேரானந்தம் விளைந்தது.

“நாம் பெற்ற இப்பேரானந்தத்தை இந்த உலகில் ஆள்வாரிலி மாடெனத் திரிந்து சற்றும் இறையறிவு இலாத
ஆணவ இருளால் சிமிழ்ப்புண்டு உழல்பவர்களும் பெற்று உய்யச் செய்வேன்” என உறுதி பூண்டார்

கீழ்மக்கள் நெஞ்சம்போல் இருண்ட இரவில், பேய்களும் கண்ணுறக்கம் கொளும் யாமத்தில்
அறிவு சூனியரும் தெளியுமாறு குரவன் அருளிய மந்திரத்தை பலமுறை உரக்கக் கூவினான் ,
அந்த இணையற்ற அருளாளன்.

அந்த ஒலி கேட்டு உறக்கம் ஒழிந்து ‘இஃது என்ன ஒலியோ’ என மருண்டவர்களும்
இராமானுசன் சொன்ன மறையொலி நெஞ்சிற் பதியப் பெற்று, ஒருகணத்தில் ஞான சம்பன்னர்களானார்கள்.
ஞானவான்களாகிய அவர்கள், ‘பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கட் படின்” எனும்
ஆன்றோர் நவின்றதை மெய்ப்பிக்குங் கருணையாளனைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் பொழிந்து தொழுதனர்.

பன்னிரண்டு ஆண்டுகள் இரவும் பகலும் சோர்ந்துவிடாத மெய்த் தொண்டின் வழி நின்றவர்கட்கே
குருதேசிகனால் அருளப்படும் இம்மந்திரமாகிய அரிய செல்வத்தை இராமானுசன் எளிதில் நமக்குத் தந்தான்,
அவனுடைய பெருமையை நம்மால் உரைக்கவுவும் இயலுமோ எனப்பலரும் புகழ்ந்தேத்தும் இராமானுசருடைய வரலாற்றில் ,
உலகவர் பலர் அறியாத நிகழ்வொன்றை புகல்வேன்.

அத்தகைய புகழ் வாய்ந்த இராமானுசர் தம் சீடர்கள் ஆயிரவர் தம்மைச் சூழ,
‘நீலாசலம்’ எனப் பெயருடைய பூரி ஜகந்நாதேச்சுரத்தைத் தரிசித்து வழிபட அங்கு நண்ணினார்.
ஜகந்நாதரின் பொற்பாதங்களைத் தொழுது வீற்றிருக்கும் நாளில் ஜகந்நாதரைப் பூசிக்கும்
அருச்சகர்களின் செயல்களை முற்றும் ஆராய்ந்தார்.

ஜகந்நாதரைப் பூசிக்கும் அருச்சகர்கள் செயல்கள் காண்போர் உள்ளத்தில் அருவருக்கத் தக்க
அநாச்சாரம் கொண்டனவாக இருந்தன; அவர்கள் எச்சாதியினரொடுங் கூடிக் கலந்து உணவருந்துவாராகி இருந்தனர்.
அந்த அபேதப் பண்பைக் கண்டு இராமானுஜர் ஆச்சரியமுற்றார்.

ஜகந்நாத நகரில் வாழ்வோர் தாம் தாம் அந்நிய சாதியர் என்ற நினைவின்றி அனைவரும் ஒன்றாகக்கூடி
உணவு உண்ணல் ஆகிய கருமங்களைச் செய்கின்றனர். இவர்களை நல்ல ஆசார நியமத்தராக நான் இயற்றுவேன்;
அரிய வேதங்கள் புகல்கின்ற சதாசாரத்தினை (சத்+ ஆசாரம். உயர்ந்தோரின் நல்லொழுக்கம்)
இங்கு நிலைநாட்டாமல் இப்பதியை விட்டு அகலேன் என்று மனதில் உறுதி கொண்டார்.

சீடர்கள் சூழப் பூசா திரவியங்களொடு, அறக்கருணை ஒரு சற்றுமின்றி, அதிபலாத்காரமாய், அருச்சகர்களைப்
புறக்கணித்து விட்டுத் தாமே சகந்நாதத் திருக்கோவிலைத் திறந்து ஜகந்நாதருக்கு ஆசார நியமங்களுடன்
அன்பாற் பூசனை சிறக்கச் செய்து நைவேத்தியம் நிகழ்வித்தார்.
தம் சீடருடன் தாமும் அந்நிவேத்தியத்தை உண்டு உறக்கம் கொண்டார்.

அவ்வுறக்கத்தின்போது இராமானுசர் ஒரு கனவு கண்டார்.
அச்சொப்பனத்தில் திரு ஜகந்நாத மூர்த்தி தன் மெய்யுருவை இராமானுஜருக்குக் காட்டிப் புகன்றிடுவார்.

“என்பால் மெத்த அன்பு பூண்ட இராமானுஜப் பேர் கொண்ட அன்பனே! உனக்கு யான் பகர்வதொன்றுண்டு.
இத்தலத்து அநாசாரத்தில் எனக்கு மிக்க பெருவிருப்பம். அதோடு மட்டுமன்றிச் சித்தத்தில் பத்தியுடையார்
செயல்களெல்லாம் எனக்குத் திருப்தி அளிப்பனவே. பத்திக் கடலில் நெஞ்சம் பதிந்தவர் எவரானாலும்
எதனை அவர் எனக்குத் தந்தாலும் எனக்கு அதில் இச்சையே.
எனவே, என்னை விரும்பிப் பூசை செய்யும் பூசகர்களை கணத்தில் இங்கு வர அழைப்பாயாக.
என்னைப் பிரிந்திருக்க அரைக்கணமும் அவர் ஆற்றார். யானும் அவரை விட்டு அரைக்கணமும் நீங்கேன்.
அதனால் நீ இங்கு அமைத்துள்ள பூசாசாதனங்க ளெல்லாங் கொண்டு அமைத்த நியமங்கள் எனக்கு ஒவ்வாதாம்.

நம் மீது பத்தி சிறிதும் நெஞ்சில் இன்றி உலக போகங்களாகிய பித்தம் மேவிப் பொய்யான உடலை
மெய்யென எண்ணி அதற்கு உழலும் வம்பர்களுக்கு வைத்தாய் உன் ஆசாரத்தை.
அந்த ஆசாரக் கதையை வானோர்க்கும் மேலாய் நம் ஜகந்நாதத்து வாழ்வார்க்குச் சிறிதும் ஓதாதே.

பலவடிவோடுப் படிகம் ஒத்து எவற்றையும் பற்றும் கன்ம மயமான மனத்தவர்களுக்கு உன்னுடைய ஆசாரக் கதைகள் மிக இனிக்கும்.
அதல்லாமல், தற்போத மனம் கழன்று என்னைப் பூசித்து என் மயமாகி நிற்போர்க்கு இனிது யாது? தீது யாது?
பேயாற் பிடிப்புண்டோர் செயல்களெல்லாம் பேயின் செயலேயாக நிகழ்தல் போல்,
என் பத்தராவார் இவர்கள் இயற்றிடுகின்றவெல்லாம் என் செயல்களேயாகி எனக்கு உவப்பளித்திடும்”
என்று அளப்பரும் போதமிக்கவரும் இணையற்ற கருணை வள்ளலுமாகிய இராமானுஜருடைய
நற்கனவில் ஜகந்தாதன் நவின்றருளினான்.

இவ்வாறு ஜகந்நாதன் நவின்றும், வேதங்கள் ஓதும் தூய ஆசாரசீலங்களில் ஒன்றையும் அகன்றிடற்குத் தன்னுள்ளம்
இசையாத இராமானுசர் , “ மாயவன் அநாசார பத்தர்களிடம் அருள் மிகுந்து அவர் தம்மை வாஞ்சித்து,
என் மீது கோபம் கொள்ளுவது மிகவும் வியப்பைத் தருகிறது. இத்தேயத்தில் நாற்குலத்தோரும் சேர்ந்து ஒன்றாக உணவு நுகர்கின்றார்.
இத் தீங்கைக் கண்டும் யான் எவ்வணம் உளம் சகிப்பேன். மேக வண்ணனுக்கு வேதாசாரக் கடப்பாட்டில் நின்று செய்யும்
உயர்ந்த ஆசார பத்தி ஒப்பாதது என்னே! பத்திக்குப் பெருமை அநாசாரமே போலும்.
நம்மைப் போல ஆசாரம் மிக்கவர்களாக இருந்தால் ஜகந்நாதன் கோபம் கொள்வானென்று தான்
இப்பதியில் வாழ்வார் இத்தனை அநாசாரமாக இருக்கிறார்கள் போலும்.
என்னவானாலும் நான் என் உடல் கழியுங்காறும் வேதோக்தமான சதாசாரத்தைக் கைவிடேன்;
இவரோடு ஒன்றாக இருந்து உண்ணுதற்கோர் சற்றும் சம்மதம் கொள்ளேன்” என்று கூறி
விரக்தியுடன் அங்குத் தங்கி இருந்தார்.

இவ்வாறு இராமானுஜர் ஜகந்நாதத்தில் தங்கியிருக்கும்போது, அரவணையில் துஞ்சும் பக்தவத்சலன்
கருடாழ்வரை நோக்கிச் சொல்லுவன், இராமானுஜன்பாற் சென்று,
“இத்தலத்து உனது ஆசாரமெல்லாம் எனக்கு அவசியமில்லை. இங்குள்ள எனது அருச்சகரை எனக்குப் பூசை இயற்றிடச்
செய்யில் என் மனம் உவப்புறும். அவர்கள் மனம் வாடில் ஒருகணமும் யான் சகியேன்.
யான், நினது ஒரு ஆசாரச் சீல பத்தி முதலிய நற்குணங்களைக் கண்டு அளவில்லாத இன்பம் அமைந்தேன், அது மெய்யே.
உன்னுடைய மந்திரம் தியானம் முதலியவற்றால் நான் உன் வசம் ஆனேனென்றாலும், இங்கு வாழ்பவருக்கு என் மீதில்
இணையில்லாத மெய்ப்பத்தி உண்டு. இயல்பான பத்தி உணர்வு உந்துதலால் அநாசாரம் என்று சொல்லப்படுகின்ற
இவர்களுடைய பண்பு என்னுடைய உள்ளத்துக்கு இன்பமே அடையச் செய்கின்றது.

திருமகளை மார்பிற் பதித்து வைத்துள்ள என்னைப் போல, இந்நகருளார்பால் அன்பு அதிகரித்து வாழும் ஆசை
உன் நெஞ்சில் இருக்குமாகில் , இப்பதியில் வாழ்வாயாக.
இவர்கள் பண்பு அநாசாரம் , குற்றம் என உனக்குத் தோன்றினால் உடனே இப்பதிவிட்டு நீங்கி உன் பதிக்குச் சென்று
உன் ஆசாரத்துடன் அங்கு வாழ்வாயாக
அங்கு தூய நல் சதாசாரத்தின் துறை பிழையாமல் என்னைப் பேரன்பினோடு பூசனை புரிந்து வாழ்தி.
என்னுடைய நாமந்தன்னைச் செபித்தல் ஒன்றாலேயே நினக்குச் சர்வாபீஷ்டங்களையும் ஈகுவன், உண்மை. என்று
இனையவை பலவும் யாம் இயம்பியவாகச் சொல்லி இராமானுஜனையும் அவனைத் துதிக்கும் மாணாக்கரையும்
உவகையுறப் புரிந்து அரைக்கணத்தில் அவர்தம் பதியேகப் புரிதி” என்றனன்.

நாராயணப் பகவன் உத்திரவிட்டு ஏவக் கருடன் விரைந்து அகமகிழ்வோடு இராமானுசரை அடைந்து,
நிகழ்ந்த செய்தியை ஓதினான். அதைக் கேட்டு இராமானுஜர் நெஞ்சமிக்குவந்து,
‘எந்தப்பொருளை அடையும் பொருட்டு இங்கு வந்தேனோ அந்தப் பொருள் கதுமென என் கைவரக் கடைக்கண் பாலித்தான்.
பழமறைகள் இன்னும் கண்டு தேறா மூர்த்தி பொது நீக்கி என்னை ஆண்ட கருணக்குக் கைம்மாறு ஏது?
கருமணி வண்ணத்தெம்மான் கரையில்லாத பேரருள் பெற்றமைந்த எனக்கு இந்நகரம் யான் வாழும் தேயம்
இருள் நகராகிய நரகம் சொர்க்கம் எதுவாயினும் எனக்கினிதே.
விரைவில் என்னுடைய நகருக்கு செல்கின்றேன் என்று இராமானுஜர் , பிரம சொரூபியாக விளங்கிய
கருடனிடத்துப் புகன்று தன்னுடைய சீடர்களுடன் உறக்கங் கொண்டார்.

கருடமூர்த்தி, உறக்கம் கொள்ளும் அவர்களை ஒருமாத்திரைப் பொழுதுக்குள்ளே அவர்கள் தம்பதியில்
அன்னவர்தம் மனைகளில் கொண்டு சேர்த்தார். அதன்பின் ஜகந்நாதம் வந்தார்.
இராமானுஜர் ஜகந்நாதத்தை விட்டு அகன்றார் என்னும் செய்தியை அறிந்த அவ்வூர் மக்கள்
குற்றமில்லாத அன்பு ஓங்க அருச்சகன் தனை அழைத்து எல்லை யில்லாத அன்பும் இன்பமும் பொங்க, வாசத் துளபமாலையும்
‘மலர்மின்(திரு) செம்பொற் குசயுகளமும் தோய் மார்பின’னாகிய கார்நிற அண்ணலின் அருட்பதம் பணிந்தர்.

அவ்வேளையில், இராமானுஜர் தம் பதியில் துயிலுணர்ந்தார்.
ஜகந்நாதத்திலிருந்த தான் தன் பதிக்கு வந்து சேர்ந்த காரணத்தை நாடி அளப்பிலா வியப்பும் உவகையும்
மிக்கோங்கும் உளத்தராகி, விட்டுணு அன்புடன் தம் கனவில் கூறியது பலிதமானதைத் தெளிந்தார்.
“ இத்தகைய திருவிளையாடலை மாயன் இயற்றிடற்கு ஏது தன் தாமரை மலரிதழ் போன்ற தன் திருவடி மேல்
மெய் பத்தி கொண்ட பத்தர்கள் மிது வைத்திருக்கும் வாத்சல்லியமே யன்றி வேறென்ன என்று கூறுவது.
உத்தம பத்திக்கு ஒப்பது வேறொன்றுளது எனலாமோ?

ஜகந்நாதத்தில் பொருந்தியிருந்த அநாசாரங்களைப் போக்கி, மக்களை நல் நெறிப்படுத்த யான் மேற் கொண்ட சிரமமும்,
அதனால் அங்குள்ளவர் வருத்தம் கொண்ட செயலையும் தன் உயரிய மனத்திடைச் சகிக்க ஆற்றானாகி
இத்திருவிளையாடலைப் புரிந்த கரும்புயன்மேனி வள்ளலின் கருணையை என்ன என்பது?

வேத நெறியில் பலதுறைகள் பேசப்படுகின்றன. அவற்றுள் பொருந்துகின்ற அதிகாரம் அதாவது
தகுதி, பக்குவம் சற்றும் அமைந்திடாதவர்களும் தாமோதரனது திருவடியைச் சிந்தையில் சற்றும் பிரியாத
பத்தியுற்ற பண்பினால் நாரணனுக்கு உவப்பானவராக உள்ளனர். அதனால் பத்தியின் மான்மியத்தைப் பேசவும் படுமோ”
என எண்ணிய இராமானுஜர், பின்னர்,
பத்தியின் மாண்பினை மிகவும் கொண்டாடித் திட சித்தங்கொண்ட தம் சீடர்களும் மற்றும் இவ்வுலகத்தில்
பிறந்தவர்களும் நாரணன் பதஞ் சேர்ந்து உய்யும் வண்ணம் பகவனை அடையப் பத்திமார்க்கத்தைத் தாபித்தார்.

புறச் சமயத்தவரும் நாரணனின் பொற்றாளில் பத்தி எய்தச் செம்மையான பாடியம் சொன்ன
அப்புகழோன் அறநெறி வழுவாச் சீடர் கூட்டத்துடன் உலகவர் அடைதற்கு அரியதாகிய
மாயனின் பொன்னடியாகிய சின்மயத்தை அணைந்தார்.

மேட்டிமையான வருணாச்சிரமத் தூய்மையைக் காட்டிலும் நெஞ்சில் வஞ்சகமற்ற பாமரபத்தர்களின்
அநாசாரமாக வெளிப்படும் அன்பே நாராயணனுக்கு இன்பமளிப்பது,
எனவே பத்தர்களின் அநாசாரத்தைப் பழித்து அவர்களை இகழ்தல் முறையன்று .
இது ஸ்ரீவைணவத்தின் சீரிய கொள்கை.

“அற்ற முரைக்கிலடைந்தவர் பாலம்புயைக் கோன்
குற்ற முணந் திகழும் கொள்கையனோ- எற்றே தன்
கன்றி னுடம்பின் வழுவன்றோ காதலிப்ப(து)
அன்றதனை யீன்றுகந்த ஆ. (ஞானாசாரம் 25)

கன்றினைச் சமீபத்தில் ஈன்ற பசு, வாஞ்சையுடன் கன்றின் மேலுள்ள வழும்பாகிய அழுக்கை நக்கி நக்கித் துடைக்கும்.
அது போல புத்தடியார்களின் புன்மையைக் கண்டு நாரணன் அவர்களை இகழான்;
அவர்கள் பால் அவன் கொள்ளும் வாஞ்சையால் அப்புன்மைகளை இன்பமாகவே ஏற்றுக் கொள்வன்.

————–

ஆழ்வார் விக்கிரஹங்களிலிருந்து சில சான்றுகள்
a)சீர்காழி அருகிலுள்ள -திருநகரி கோயிலில் -திருமங்கையாழ்வார் திருமேனி/ விக்ரஹம் சேவிக்கலாம்
அவர் பாதத்தில் ராமானுஜர் உருவம் காணப்படுகிறது.

b)திருச்சி -உறையூர் கோயிலில் திருப்பாணாழ்வார் திருமேனி யினை சேவிக்கலாம் –
அவர் பாதத்திலும் ராமானுஜர் உருவம் காணப்படுகிறது .

c)திருச்சி -திருவெள்ளறை கோயிலில் -குலசேகர ஆழ்வார் திருமேனியினை சேவிக்கலாம்
அவர் பாதத்தில் ராமானுஜர் உருவம் காணப்படுகிறது .
இவர் இரண்டாம் வருணமான க்ஷத்ரிய இனத்தைச் சேர்ந்தவர்.
இங்கு அனைத்து ஆழ்வார்களையும் அவர்களது பாதங்களில் தவறாமல் ராமானுஜர் திருவுருவத்தினையும் சேவிக்கலாம் .

d)திருநெல்வேலிக்கு அருகில் , ஆழ்வார் திருநகரியிலுள்ள ஆதிநாதர் கோயிலில் நம்மாழ்வார் சடாரியினை சேவிக்கலாம் .
அதிலும் ராமானுஜர் திருவுருவம் காணப்படுகின்றது .

ராமானுஜருக்கு அந்தரங்க சீடராயிருந்து அவருக்கு பால் காய்ச்சுதல் ,திருவாராதன பொருட்களை சித்தம் செய்தல் என்று
அணுக்க தொண்டராய் இருந்தவர் வடுக நம்பி ஆவார் .இவர் ப்ராஹ்மணர் அல்லர் .

b) திருக்கச்சி நம்பிகளுக்கு சீடனாயிருந்து வைணவ சித்தாந்தம் கற்க ஆசைப்பட்டார் ராமானுஜர்.
திருக்கச்சி நம்பிகள் அமுது செய்து மீதமாகும் சேஷதத்தினை(போனகம் செய்த சேடம் ) உண்ண ஆசைப்பட்டார் ராமானுஜர்.
திருக்கச்சி நம்பிகள் மூன்றாம் வர்ணமாம் வைஸ்ய குலத்தைச் சேர்ந்தவர் ஆவார் .

c) ராமானுஜர் தனது நித்தியகால பூஜைக்காக சிறிய வரதராஜர் விக்ரஹம் ஒன்றை வைத்திருந்தார் .
அவருக்கு திருவாராதனம் செய்யும் முன்னர் பூதசுத்தி ,ஸ்தலசுத்தி செய்வார் .இவற்றால் திருப்தி அடையாது ,
தனது அந்தரங்க சீடரான உறங்கா வில்லி தாசரது கரஸ்பர்சம் பெற்ற பின்னரே முழு சுத்தியானதாக திருப்தி அடைந்து ,
அதன்பிறகு ஆராதனை-ஷோடச அங்க பூஜைகளை செய்வார் .இந்த உறங்கா வில்லி தாசரும் ஐந்தாம் வர்ணத்தவர்தான்.
முன்பு அகளங்க சோழனிடம் மெய்காப்பாளனாயும்- மல்லராகவும் இருந்தவர் .
பின்னர் ராமாநுஜரிடம் அணுக்கத் தொண்டர்களில் ஒருவரானார்.

அவரது சாதி மறுப்பு புரட்சியினால் வெறுப்புற்ற சாதி அந்தணர் அவருக்கு பிக்ஷை உணவில் விஷமிட்டனர் .
இச் செய்திகள் “ஆறாயிரப்படி குரு பரம்பரா ப்ரபாவம்” என்னும் நூலில் காணலாம் .

“ராமோ விக்ரஹவாந் தர்ம: ஸாது ஸத்ய பராக்ரம:” – என்பது ராமாயணம்.( மாரீசன் ராவணனுக்கு சொன்னது .)
ராமன் என்பவன் , தர்மமே ஒரு உருவமாகி வந்தவன் .அவன் என்றுமே மாறாத உண்மை உருவன் ,நல்லவன் ,வீண் போகாத வீரன்.
அதே ராமனை -“அதாதோ தர்ம ஜிஞ்சாஸ: ” என்று கூறி பூர்வ மீமாம்ஸை தொடங்குகின்றது .

யத்ர யோகேஸ்வர கிருஷ்ணோ யத்ர பார்தோ தனுர்தர:|
தத்ர ஸ்ரீ : விஜயோ பூதி : த்ருவா நீதிர் மாதிரி மம || – மஹாபாரதம் .

எந்தப் பக்கத்தில் ப்ரஹ்மமான கண்ணன் உளனோ, அங்கே தான் நிலைத்த தர்மம் என்கிறார் சஞ்சயன் த்ருதராஷ்டிரரிடம் .
அந்த கண்ணனை பிரம்மமாக துதித்து -“அதாதோ ப்ரம்ம ஜிஞ்சாஸ: “ என்று கூறி உத்தர மீமாம்ஸை தொடங்குகின்றது .

——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருக்கோளூர்ப் பெண் பிள்ளை ரஹஸ்ய வார்த்தைகள் – 1-8- விவரணம் –

October 13, 2020

1. அழைத்து வந்த அக்ரூரர்

தேவகியின் எட்டாவது மகனால் தனக்கு அழிவு நேரிடும் என்பதால்,
கம்சன் கண்ணனைக் கொல்லப் பல திட்டங்களையும் தீட்டினான்.
பூதகி, சகடாசுரன் போன்ற கொடியவர்களை, கம்சன் அம் முயற்சியில் ஈடுபடுத்தித் தோல்வி கண்டான்.
வடமதுரையில் நடந்த வில்வித்தைப் போட்டிக்கும், மல்யுத்தப் போட்டிக்கும் கண்ணனை அழைத்து வந்து,
தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளத் திட்டம் தீட்டினான்.

கம்சன், குவலயாபீடம் என்ற பட்டத்து யானையைக் கொண்டும், சாணூரன், முஷ்டிகன் போன்ற மல்லர்களைக் கொண்டும்
கண்ணனைக் கொல்லவும் எண்ணினான்.
கம்சன் தன் முயற்சியைச் செயற்படுத்த, கண்ணனை வட மதுரைக்கு அழைத்துவர வேண்டுமே?
அப்பணியில் தன்னுடைய அமைச்சர் அக்ரூரரை ஈடுபடுத்தினான் கம்சன்.
கொடியவன் கம்சனின் நல்லமைச்சராக விளங்கிய அக்ரூரர், நந்தகோபரின் நெருங்கிய நண்பர்.
எனவே, அவரைக் கோகுலத்திற்கு அனுப்பி, கண்ணனை வடமதுரைக்கு அழைத்து வர வேண்டினான்.

அக்ரூரர் ஒரு கிருஷ்ண பக்தர். கண்ணனை நம்பி, தன் கடமையைச் செய்யப் புறப்பட்டார் அக்ரூரர்.
நந்தகோபர், கம்சனின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றரசர். அவரிடம் அக்ரூரர் கம்சனின் ஆணையைத் தெரிவித்தார்.
கோகுலத்தில் இருந்தோர் அனைவரும் கம்சனால் கண்ணனுக்கு ஆபத்து நேரிடும் என்று அஞ்சினர்.
கொடியவர்களை அழிக்கும் நேரத்தை எதிர்பார்த்திருந்த கண்ணன், அனைவருக்கும் ஆறுதல் கூறி,
அண்ணன் பலராமர் உடன்வர, அக்ரூரருடன் வடமதுரைக்குப் புறப்பட்டான்.

வழியில் அக்ரூரர் சந்தியாவந்தனம் செய்ய யமுனையில் இறங்கினார். கண்ணனும் பலராமரும் தேரில் அமர்ந்திருந்தனர்.
அக்ரூரர் கையில் யமுனை நீரை அள்ளினார். அந்த நீரில் கண்ணனின் திருவுருவம் தோன்றியது. மேல்நோக்கிப் பார்த்தார்.
தேரில் கண்ணன் வீற்றிருந்தான். மாயங்களில் வல்லவனான கண்ணனின் தெய்வத் தன்மையை அக்ரூரர் புரிந்து கொண்டார்.
அவனே வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கையுடன் வடமதுரையை நோக்கிச் சென்றார்.

கண்ணன் வடமதுரையில் விற்போட்டியில் வென்றான். குவலயாபீடத்தைக் கொன்றான். மல்லர்களை எதிர்த்துக் கொன்றான்.
இறுதியில் கம்சனையும் வதைத்தான். பெற்றோர் வசுதேவரும் தேவகியும் மகிழ்ந்தனர்.
நாட்டு மக்கள் கண்ணனையும், அவனை அழைத்து வந்த அக்ரூரரையும் வாழ்த்தி வணங்கினர்.
இந்த நிகழ்ச்சியைத் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை,

“அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே!” என்று குறிப்பிட்டாள்.
அக்ரூரர் கோகுலத்துக்குச் சென்று, கண்ணனை வடமதுரைக்கு அழைத்து வந்தார். அதனால் கொடியவர்கள் மாண்டனர்.
நாட்டு மக்கள் மகிழ்ந்தனர். அக்ரூரர் அவற்றுக்கு மூலகாரணமாக இருந்தார்.
‘துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம்’ என்ற பகவானின் கொள்கைக்கு உதவியாகச் செயற்பட்ட அக்ரூரரின் பெருமையை,
திருக்கோளூர்ப் பெண் பிள்ளை வியந்து போற்றினாள்.

—————–

2. மூன்றெழுத்துச் சொல்லி முத்தி பெற்றவன்

க்ஷத்திரிய பந்து என்பவன் பல கொடுஞ்செயல்களைச் செய்து வந்தான். அவனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று
திரண்டு அவனைக் காட்டிற்கு விரட்டினர். க்ஷத்திரியபந்து காட்டில் கிடைத்த காய், கனிகளைப் புசித்து வாழத் தொடங்கினான்.
அவனிடம் சத்வகுணம் வளர்ந்தது. தான் செய்த வன்செயல்களுக்கு வருந்தினான். திருந்தி வாழத் தீர்மானித்தான்.
திருமால் அவனுக்குப் பக்தியைக் கொடுத்தார். அதனால் அவன் திருமாலடியாராக உயர்ந்தான்.

அவன் கிடைத்ததை உண்டு, மரத்தடியில் தரையில் உறங்கினான். ஒருநாள் அவனுக்கு நாவல்கனிகள் கிடைத்தன.
அவற்றைத் திருமாலுக்கு நிவேதித்து உண்டான். அன்று ஒரு முனிவரின் தொடர்பு கிடைத்தது.
அவருக்கும் நாவல்கனிகளை வழங்கினான். அவர் க்ஷத்திரியபந்துவுக்கு, திருமாலின் மூன்றெழுத்து மந்திரமாகிய,
கோவிந்த மந்திரத்தை உபதேசித்தார். க்ஷத்திரிய பந்து அந்த மந்திரத்தை இடையறாது ஜபித்தான். எளிதில் வீடுபேறும் எய்தினான்.

செய்யுளைப் போல், மந்திரங்களிலும் ஒற்றெழுத்து அதாவது, க்,ச்,ந் போன்ற எழுத்துகள் கணக்கில் சேராது.
ஆகவே, ‘கோவிந்த’ என்ற மந்திரம் மூன்றெழுத்து மந்திரம் என்று கூறப்படுகிறது.
க்ஷத்திரியபந்துவைத் தமிழில், ‘கத்திரபந்து’ என்பர்.

“மூன்றெழுத்து சொன்னேனோ கத்திரபந்துவைப் போலே!”

என்று திருக்கோளூர்ப் பெண்பிள்ளை, தன் ஏக்கத்தைத் தெரிவித்தார்.
கோவிந்த மந்திரத்தின் மகிமை இவ்வரலாற்றில் உட்பொருளாக அமைந்துள்ளது.

——————-

3. கவந்தன் சொன்ன அடையாளம்

இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றான். அவளைத் தேடி இராமரும் இலக்குமணனும் காட்டில் நடந்தனர்.
அவர்கள் ஓரிடத்தில் ஒரு விசித்திரமான உருவத்தைக் கண்டனர். தலையும் கால்களும் இல்லாமல்
இரண்டு நீண்ட கைகளை மட்டும் பெற்றிருந்த கவந்தனே அவ்வுருவம்!
தன்னுடைய எல்லைக்குள் நுழையும் உயிர்களைப் பிடித்து இழுத்துத் தின்பவன் கவந்தன்.

இராமரும் இலக்குமணனும் கவந்தனின் எல்லைக்குள் வந்தனர். அவர்களையும் பிடித்துத் தின்ன முற்பட்டான் கவந்தன்.
இராம, லட்சுமணர்கள் கவந்தனின் கரங்களை வெட்டித் துண்டித்தனர். உடனே அவனுடைய சாபம் நீங்கியது.
தன் வரலாறு கூறினான். பிறகு, சுக்ரீவன் இருக்கும் இடத்தைக் கூறினான்.
அவனுடன் நட்புக் கொண்டு, சீதையைத் தேடவும் ஆலோசனை வழங்கினான். ஸ்தூலசிரஸ் என்ற முனிவரின்
சாபத்தால் கவந்தன் கோரவுருவம் பெற்றான் என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறது.
இந்திரனின் சாபத்தால் கோரவுருவம் பெற்றதாகக் கம்பராமாயணம் உரைக்கிறது.

“அடையாளம் சொன்னேனோ கவந்தனைப் போலே!”
என்று, கவந்தன் இராமருக்கு அடையாளம் சொன்ன அரிய செயலைத் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை நினைவு படுத்தினாள்.

——————–

4. மிதிலையில் தீ!

சீதையைப் பெண்ணாக அடைந்த ஜனகர் சிறந்த கல்வியாளர். தெளிவான ஞானம் பெற்றவர்.
‘எல்லாம் ஈசன் செயல்’ என்ற கொள்கையில் உறுதியாக இருந்தவர். பேரிடர் வந்தாலும் சிறிதும் கலங்காமல்
தனக்குரிய கடமைகளைச் செவ்வனே செய்தவர்.
முதிர்ந்த ஞானம் பெற்ற முனிவர்கள் பலரும் ஜனகருடன் உரையாடி மகிழ்வார்கள்.
அதனால், ஜனகரை, ‘ராஜரிஷி’ என்று போற்றினர்.

அறிவுரைகளைக் கூறுவது எளிது. அவற்றைப் பின்பற்றுவது அனைவருக்கும் எளிதன்று.
அதிலும், “எல்லாம் ஈசன் செயல்’ என்றும், “இறைவன் அனைத்தையும் பார்த்துக்கொள்வான்” என்றும் எண்ணி,
அதன்படி நடத்தல் மிகவும் கடினமான செயலாகும். ஆனால், ஜனகர் விதிவிலக்கானவர். சொன்னதைச் செய்தவர்.

யாக்ஞவல்கியர் மிகச் சிறந்த பிரம்மஞானி. அவருடைய தலைமையில், பல முனிவர்களும் சான்றோர்களும் கூடி,
பிரம்ம வித்தை குறித்து ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
மிதிலையில் நடைபெற்ற அந்த ஆய்வரங்கத்தில் ஜனகரும் பங்கு பெற்றார்.
யாக்ஞவல்கியர் அந்த ஆய்வரங்கத்தில் பங்கு பெற்றவர்களின் மனநிலையையும், பண்புகளையும் அறிந்துகொள்ள ஓர் ஏற்பாட்டைச் செய்தார்.

யாக்ஞவல்கியர் சில வீரர்களை அழைத்தார். ஆய்வரங்கம் காரசாரமாக நடைபெறும்பொழுது,
“மீதிலை தீப்பிடித்து எரிகிறது” என்று கூறச் சொன்னார். அந்த வீரர்களும் அவசரமாக ஓடிவந்து,
“ஜனகமகாராஜா! மிதிலை தீப்பற்றி எரிகிறது!” என்று கூறினர். முனிவர்களில் பலர் தங்கள் உயிருக்கு அஞ்சி ஓடினர்.
சான்றோர்கள் பலர் தங்கள் உடைமைகளைக் காப்பாற்றும் நோக்கத்துடன் ஓடினார்கள்.
ஆனால், ஜனகர் மட்டும் சற்றும் சஞ்சலமின்றி, “எல்லாம் ஈசன் செயல்!” என்று கூறியபடி அமர்ந்திருந்தார்.
யாக்ஞவல்கியர், ஜனகரே உண்மையான பிரம்மஞானி என்று பிரகடனம் செய்தார்.

உண்மையில் மிதிலையில் தீப்பிடிக்கவில்லை என்பதை அறிந்து பிறகு அனைவரும் அரங்கிற்குத் திரும்பினர்.
அவர்கள், ஜனகரால் எவ்வாறு சிறிதும் சஞ்சலம் அடையாமல் இருக்க முடிந்தது என்று வினவினார்கள்.
“உலகங்களும், அவற்றிலுள்ள பொருள்களும் கடவுளின் உடைமைகள்! அவற்றைப் பாதுகாப்பதும், காவாமல் இருப்பதும் அவன் செயல்.
நாம் எதற்காக வீணில் கவலைப்பட வேண்டும்?” என்றார் ஜனகர்.
அவருடைய விவேகத்தையும், ஞானத்தையும் எண்ணி அனைவரும் வியந்தனர்.

பெருமாள் சும்மா இருப்பாரா? இத்தகைய கர்மயோகியின் கலப்பையில் ஸ்ரீதேவியாகிய சீதையை அகப்படச் செய்தார்.
சீதையும் ஜனகரின் பெண்ணாகவே வளர்ந்து இராமனுக்கு மாலையிட்டாள்.

“கர்மத்தால் பெற்றேனோ சனகரைப் போலே!”

ஜனகர் பலனில் பற்று வைக்காமல் கடமையைச் செய்த கர்மயோகியாகத் திகழ்ந்தார்.
அதனால், விவேகியானார். பிரம்மஞானியாக உயர்ந்தார். அதன் பயன் ஸ்ரீதேவியை மகளாகப் பெற்றார்.
அது போன்ற கர்மயோகியாகத் தன்னால் வாழ முடியவில்லையே! என்று ஏங்குகிறாள் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை.
அதே நேரத்தில் ஜனகரின் சாதனையையும் பாராட்டினாள்.

———————-

5. திருமேனியில் புகுந்த திருப்பாணாழ்வார்

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் திருப்பாணாழ்வார். யாழிசைக்கும் பாணர் குலத்தில் பிறந்தவர்.
அவருக்குத் திருவரங்கனிடம் பக்தி மேலிட்டது. அக்காலத்தில், அவர் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
எனினும், அவர் காவிரிக்கரையில் நின்று, யாழிசைத்து அரங்கனைப் போற்றிப் பாடிவந்தார்.

திருவரங்கம் திருக்கோயிலில் அர்ச்சகர் பணியில் இருந்த லோகசாரங்கர் என்பவர், தினமும் காவிரிக்குச் சென்று,
திருமஞ்சனத்திற்காகத் தீர்த்தம் எடுத்து வருவார். அவர் சென்ற வழியில் நின்று, திருப்பாணாழ்வார் தன்னை
மறந்த நிலையில் அரங்கனுக்கு இசையால் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்.
லோகசாரங்கர் சிறு கல்லை எடுத்து, திருப்பாணாழ்வார் மீது வீசினார். அது அவருடைய நெற்றியில் பட்டு உதிரம் பெருக்கெடுத்தது.
அவர் அதனைப் பொருட்படுத்தவில்லை. லோகசாரங்கரின் தொண்டுக்குத் தன்னால் தடை ஏற்பட்டுவிட்டதை எண்ணி வருந்தினார்.

லோகசாரங்கர் காவிரி தீர்த்தத்துடன் திருவரங்கன் சந்நிதியில் நுழைந்தார்.
பெருமாளின் நெற்றியில் உதிரம் வழிந்ததைக் கண்டு துணுக்குற்றார்.
அதன் காரணம் புரியாது வருந்தினான். அன்றிரவு லோகசாரங்கரின் கனவில் அரங்கன் தோன்றினார்.
“பாணர் எம் அடியவர்; அவருடைய இசையும் எமக்கு மிகவும் உகப்பானது;
நீர் அவரைக் கல்லால் அடித்துக் காயப்படுத்தி, பாகவத அபச்சாரம் செய்துவிட்டீர்;
நாளை நேரில் சென்று அவரை உமது தோளில் சுமந்து எமது சந்நிதிக்கு அழைத்து வாரும்!
அதுவே தக்க பரிகாரம் ஆகும்!” என்று பெருமாள் கூறி யருளினார்.

அடுத்த நாள் காலையில் லோகசாரங்கர் காவிரிக் கரைக்குச் சென்றார். பாணரிடம் மன்னிப்புக் கேட்டார்.
பெருமாள் உரைத்தபடி அவரைத் தமது தோளில் அமரச் செய்து, திருக்கோயிலுக்கு அழைத்துவந்தார்.
பெருமாளைச் சுமக்கும் பெரியதிருவடியின் (கருடாழ்வாரின்)பேறு தமக்குக் கிடைத்ததாகக் கூறி மகிழ்ந்தார்.

பாணர் அரங்கனை அருகில் கண்டார். அழியா அழகைத் தன் கண்களால் பருகினார்.
பெருமாளின் திருவடி முதல், திருமுடி வரை, கேசாதிபாத வருணனை செய்து பாடினார்.
“அமலன் ஆதிபிரான். . . . . ” என்று தொடங்கும் பாசுரத்தைத் திருப்பாணாழ்வார் பாடியருளினார்.
பெருமாள் திருப்பாணாழ்வாரைத் தம் திருமேனியில் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
ஆண்டாளும், திருப்பாணாழ்வாரும் திருவரங்கனின் திருமேனியில் ஐக்கியமான தனிச்சிறப்பைப் பெற்றவர்கள்.
திருப்பாணாழ்வார் ஐம்பதாண்டுகள் பூவுலகில் வாழ்ந்திருந்தார்.

திருவரங்கன் திருப்பாணாழ்வாரைத் தன் பால் அழைத்துவரச் செய்து, தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
இதனால் பக்தி நெறியில் குறிப்பாக, வைணவத்தில் சாதி வேறுபாடுகளுக்கு இடமில்லை என்பதை உலகிற்கு உணர்த்தினார்.

“அவன் திருமேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே!”
என்று திருக்கோளூர்ப் பெண்பிள்ளை திருப்பாணாழ்வார் பெற்ற பேரருளைக் குறிப்பிட்டார்.

——————–

6. மாலுக்கு உகந்த மண்மலர்

திருப்பதிக்கு அருகில் குருவபுரம் என்ற சிற்றூர் உள்ளது. அங்கு நம்பி என்ற திருமாலடியார் வாழ்ந்துவந்தார்.
அவர் மண்பாண்டங்கள் செய்யும் தொழிலாளியாவார்.
குருவபுரத்தைச் சேர்ந்த நம்பி என்ற பொருளில் அவரை, ‘குருவநம்பி’ என்று அழைத்தனர்.

குருவநம்பி அன்றாடம் தன்னுடைய தொழிலைத் தொடங்கும்பொழுது, மண்ணால் ஒரு தாமரை மலரைச் செய்வார்.
அதனை வேங்கடவனுக்கு என்று ஓரிடத்தில் தனியே வைத்துவிட்டு, தனது தொழிலைத் தொடருவார்.
குருவநம்பி, அன்றாடம் மண்ணால் செய்து வைக்கும் மலரை வேங்கடவன் ஏற்றுக்கொள்வார்.
வேங்கடவன் திருவடியில் மண்மலர் அன்றாடம் தவறாமல் சென்று சேர்ந்து விடும்.

அவரைப் போலவே தொண்டைமான் அன்றாடம் பொன்மலர் ஒன்றைச் செய்து வேங்கடவனுக்குச் சமர்ப்பிப்பார்.
பெருமாள் குருவநம்பி சமர்ப்பிக்கும் மண்மலரே தமக்கு உகப்பானது என்று தொண்டைமானிடம் கூறிவிட்டார்!
ஏனெனில், தொண்டைமான் பொன்மலரைக் கர்வத்துடன் சமர்ப்பித்தார்.
அதன் பின்னர் தொண்டைமான் தனது செருக்கை மாற்றிக்கொண்டார்.

“மண்பூவை இட்டேனோ குருவ நம்பியைப் போலே!”
என்று திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ஏங்குகிறாள்.

————————

7. கண்ணனை மறைத்த ததி பாண்டன்

கோகுலத்தைச் சேர்ந்த ததிபாண்டன் என்பவன் கண்ணனின் நெருங்கிய தோழர்களில் ஒருவனாவான்.
கோகுலத்தில் கண்ணன் செய்துவந்த பிள்ளைக் குறும்புகளில் ததிபாண்டனும் தவறாது பங்கேற்பான்.
நந்தகோபரின் இல்லத்தில் தயிரும் வெண்ணெயும் நிறைந்திருந்தன.
எனினும் ஆயர்பாடியில் உள்ள அத்துணை இல்லங்களிலும் வெண்ணெய் திருடி உண்பதில் கண்ணனுக்கு அலாதியான இன்பம் இருந்தது.
கண்ணனின் கைபட்ட இடங்களிலெல்லாம் செல்வம் கொழித்தது! அதனால் கோகுலத்துப் பெண்கள் அவன் வரவை எதிர்பார்த்திருந்தனர்.
எனினும்,அதனை வெளிக்காட்டாமல், கண்ணனைக் கடிந்துகொள்வது போல் நடிப்பார்கள்.

ஒருநாள் ததிபாண்டன் வீட்டில், தயிரும் வெண்ணெயும் விற்றுத் தீர்ந்த பிறகு, அவன் பெரிய பானையைக் கவிழ்த்துவிட்டு,
கண்ணனின் வருகைக்காகக் காத்திருந்தான். குறும்புகள் செய்த கண்ணனைக் கண்டிக்கவும், தண்டிக்கவும் விரும்பிய
யசோதை அவனைத் துரத்திச் சென்றாள். அவள் பிடியில் சிக்காமல் நழுவிய கண்ணன் ததிபாண்டன் இல்லத்திற்குள் நுழைந்தான்.
தன்னைத் தேடி யசோதை வந்தால், தான் அங்கு இல்லை என்று கூறும்படி,
ததிபாண்டனிடம் வேண்டிய கண்ணன், பெரிய பானைக்குள் ஒளிந்து கொண்டான்.

யசோதை கண்ணனைத் தேடி ததிபாண்டனின் இல்லத்திற்கு வந்தாள்.
ததிபாண்டன், கண்ணன் தன்வீட்டில் இல்லை என்று பொய்யுரைத்தான். யசோதை திரும்பிச் சென்றாள்.
கண்ணன் பானையைத் திறந்து தன்னை வெளியேவிட வேண்டினான்.
ஏனெனில், பானையின் மூடியின் மீது ததிபாண்டன் அமர்ந்திருந்தான்.

கண்ணன் தன்னுடன் நெருங்கிப் பழகும் தோழன் என்றாலும், அவன் பரம்பொருளே என்று ததிபாண்டன் அறிந்திருந்தான்.
உரிய நேரத்தில் அவனிடம் மோட்சத்தைக் கேட்டுப் பெறவேண்டும் என்று காத்திருந்தான்.
பானையைத் திறந்து வெளியே விடுவதற்கு ஒரு நிபந்தனை விதித்தான் ததிபாண்டன்.
தனக்கு மோட்சம் தருவதாக உறுதியளித்தால் மட்டுமே பானையின் மூடியைத் திறக்கப் போவதாகக் கூறினான்.
உற்ற நண்பனுக்குக் கண்ணன் வீடுபேறு அருளாமல் இருப்பானா?
“ததிபாண்டா! எனக்கு மூச்சு முட்டுகிறதடா! என்னை வெளியே விடு! உனக்கு மோட்சம் உறுதி!” என்று
கண்ணன் வேடிக்கையாகக் கூறி வெளியே வந்தான்!

“இங்கில்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே!”

“கண்ணன் இங்கில்லை என்று பொய்யுரைத்து மோட்சம் எய்திய ததிபாண்டனின் சாமர்த்தியம் கூட எனக்கு இல்லையே”
என்று ஏங்குகிறாள் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை.

——————-

8. வடுக நம்பியின் குரு பக்தி

இராமானுஜரிடம் அபாரமான குருபக்தி கொண்ட சீடர்கள் சிலர் இருந்தனர்.
அவர்களில் உறங்காவில்லி தாசர், வடுகநம்பி ஆகிய இருவரும் முக்கியமானவர்கள்.
வடுகநம்பி, இராமானுஜரின் அணுக்கத் தொண்டராக இருந்து பணிவிடைகள் செய்தார்.

ஒருநாள், திருவரங்கம் வீதிகளில் பெருமாள் உலா நடைபெற்றது. பெருமாள் சர்வாலங்காரங்களுடன் எழுந்தருளி வந்தார்.
அவரைச் சேவிக்க எம்பெருமானாராகிய இராமானுஜர் தமது திருமடத்திலிருந்து வெளியே வந்தார்.
பெருமாளைக் கண்குளிரக் கண்டார். தான் கண்ட அரங்கநாதன் உலாவைத் தன் சீடர் வடுகநம்பியும்
தரிசித்துப் பயனடைய வேண்டுமென்று அவர் விரும்பினார்.

“வடுகா! சீக்கிரம் வா! பெருமாள் எழுந்தருளுகிறார்! வெளியே வந்து சேவித்துக்கொள்!” என்றார் இராமானுஜர்.
அப்போது வடுகநம்பி, தளிகை அறையில் இராமானுஜருக்காகப் பால் காய்ச்சிக் கொண்டிருந்தார்.
“சுவாமி! தாசானுதாசனை மன்னிக்கவேணும்; அடியேன் உம் பெருமானைச் சேவிக்க வந்தால்
எம்பெருமானுக்காகக் காய்ச்சிக் கொண்டிருக்கும் பால் பொங்கிவிடும்!” என்று கூறினார்.
பெருமாளைச் சேவிப்பதைவிட அவருக்கு, குருகைங்கர்யமே சாலச்சிறந்ததாகத் தோன்றியது.

“இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுகநம்பியைப் போலே!”

குருநாதருக்குப் பணிவிடைகள் செய்யும் பேறும் தமக்குக் கிடைக்கவில்லையே என்று ஏங்கினார் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை.

————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்கோளூர்ப் பெண் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருக்கோளூர்ப் பெண் பிள்ளை ரஹஸ்ய வார்த்தைகள் –

October 13, 2020

1. அழைத்து வருகிறேன் என்றோனோ அக்ரூரரைப் போலே!
2. அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போலே!
3. தேகத்தை விட்டேனோ ரிஷி பதினியைப் போலே!
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே!
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே!

6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே!
7. தாய் கோலம் செய்தேனோ அனுசூயையைப் போலே!
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே!
9. மூன்றெழுத்து சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே!
10. முதலடியை பெற்றேனோ அகலிகையைப் போலே!

11. பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே!
12. எம்பெருமான் என்றேனோ பட்டர் பிரானைப் போலே!
13. ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே!
14. அவன் சிறியனென்றேனோ அழ்வாரைப் போலே!
15. ஏதேனும் என்றேனோ குலசேகரரைப் போலே!

16. யான் சத்யம் என்றேனோ அழ்வாரைப் போலே!
17. அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே!
18. அந்தரங்கம் சொன்னேனோ திரிஜடையைப் போலே!
19. அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே!
20. அஹம் வேத்மி என்றேனோ விஸ்வாமித்திரரைப் போலே!

21. தேவுமற்றரியேனோ மதுரகவியாரைப் போலே
22. தெய்வத்தை பெற்றேனோ தேவகியைப் போலே!
23. ஆழிமறை என்றேனோ வசுதேவரைப் போலே!
24. ஆயனை(னாய்) வளர்த்தேனோ யசோதையைப் போலே!
25. அநுயாத்திரை செய்தேனோ அணிலங்கனைப் போலே!

26. அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே!
27. ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே!
28. அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே!
29. கர்மத்தால் பெற்றேனோ ஜநகரைப் போலே!
30. கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கயாரைப் போலே!

31. குடை முதலானதானேனோ ஆனந்தால்ழ்வான் போலே!
32. கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே!
33. இளைப்பு விடாய் தீர்தேனோ நம்பாடுவான் போலே!
34. இடைக்கழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே!
35. இருமன்னரைப் பெற்றேனோ வால்மீகரைப் போலே!

36. இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப் பொடியார் போலே!
37. அவனுரைக்க பெற்றேனோ திருக்கச்சியார் போலே!
38. அவன்மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே!
39. அனுப்பி வையுமேன்றேனோ வசிஷ்டரைப் போலே!
40. அடி வாங்கினேனோ கொங்கில் பிராட்டியைப் போலே!

41. மண்பூவை இட்டேனோகுரவ நம்பியைப் போலே!
42. மூலமென்றழைத்தேனோ கஜராஜனைப் போலே!
43. பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே!
44. பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே!
45. வைத்தவிடத்து இருந்தேனோ பரதரைப் போலே!

46. வழி அடிமை செய்தேனோ இலக்குவணனைப் போலே!
47. அக்கரைக்கே விட்டேனோ குகப்பெருமாளைப் போலே!
48. அரக்கனுடன் பொருதேனோ பெரியவுடயாரைப் போலே!
49. இக்கரைக்கே செற்றேனோ விபீஷணனைப் போலே!
50. இனியதென்று வைத்தேனோ சபரியைப் போலே!

51. இங்கும் உண்டென்றேனோ பிரஹலாதனைப் போலே!
52. இங்கில்லை என்றேனோ திதிபாண்டனைப் போலே!
53. காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே!
54. கண்டுவந்தேன் என்றேனோ திருவடியைப் போலே!
55. இருகையும் விட்டேனோ திரௌபதியைப் போலே!

56. இங்குபால் பொங்கும் என்றேனோ வடுகனம்பியைப் போலே!
57. இருமிடறு பிடித்தேனோ செல்வப்பிள்ளையைப் போலே!
58. நில்லென்று(னப்) பெற்றேனோ இடையற்றூர்நம்பியைப் போலே!
59. நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே!
60. அவன் போனான் என்றேனோ மாருதியாண்டான் போலே!

61. அவன் வேண்டாம் என்றேனோ அழ்வானைப் போலே!
62. அத்வைதம் வென்றேனோ எம்பெருமானாரைப் போலே!
63. அருளாழங் கண்டேனோ நல்லானைப் போலே!
64. அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே!
65. ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வவாரியாண்டானைப் போலே!

66. அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே!
67. அனுகூலம் சொன்னேனோ மால்ய்வானைப் போலே!
68. கள்வனிவன் என்றேனோ லோககுருவைப் போலே!
69. கடலோசை என்றேனோ பெரியநம்பியைப் போலே!
70. சுற்றிக்கிடந்தேனோ திருமாலையாண்டான் போலே!

71. சூலுறவு கொண்டேனோ திருக்கோட்டியூரார் போலே!
72. உயிராய பெற்றேனோ ஊமையைப் போலே!
73. உடம்பை வெறுத்தேனோ திருனறையூரார் போலே!
74. என்னைப்போல் என்றேனோ உபரிசரனைப் போலே!
75. யான் சிறியன் என்றேனோ திருமலைநம்பியைப் போலே!

76. நீரில் குதித்தேனோ கணப்புரதாளைப் போலே!
77. நீரோருகம் கொண்டேனோ காசிசிங்கனைப் போலே!
78. வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே!
79. வாயிற் கையிட்டேனோ எம்பாரைப் போலே
80. தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே!

81. துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே!

——————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்கோளூர்ப் பெண் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-