Archive for the ‘Prabandha Amudhu’ Category

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –25–காரேய் கருணை இராமானுசா- இத்யாதி —

April 7, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ எம்பெருமானார் தம் பக்கல் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து அத்தாலே அவர் திருமுகத்தை பார்த்து –
தேவரீர் உடைய க்ருபா ஸ்வபாவம் இந்த லோகத்தில் யார் தான் அறிவார் என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

மேகம் போலே சர்வ விஷயமாக உபகரிக்கும் க்ருபையை உடைய ஸ்ரீ எம்பெருமானாரே –
சதுஸ் சமுத்திர பரிவேஷ்டிதமான இந்த பூ பிரதேசத்திலே -தேவரீர் உடைய கிருபா ஸ்வபாவத்தை தெளிந்தவர் யார் –
சகல துக்கங்களுக்கும் சாஷாதாகரமான என்னை தேவரீரே எழுந்து அருளி அங்கீ கரித்த பின்பு –
தேவரீர் உடைய கல்யாண குணங்கள் -என்னுடைய பிராணனுக்கு பிராணனாய் –அடியேனுக்கு ரசியா நின்றது என்று –
ஸ்ரீ எம்பெருமானார் திரு முகத்தைப் பார்த்து -நேர் கொடு நேரே-விண்ணப்பம் செய்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

தனக்கு பண்ணின உபகாரத்தை நினைந்து நேரே ஸ்ரீ எம்பெருமானாரை நோக்கி
தேவரீர் உடைய அருளின் திறத்தை இவ் உலகில் யார் தான் அறிவார் என்கிறார் –

காரேய் கருணை இராமானுசா இக்கடல் இடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ என்னை யுய்த்த பின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 – –

பத உரை –
கார் ஏய்-கரு முகிலை ஒத்த
கருணை -கிருபையை உடைய
இராமானுச -எம்பெருமானாரே -நான்
அல்லலுக்கு -துன்பத்திற்கு
நேரே உறைவிடம்-நேரே குடி இருக்கும் இடமாக உள்ளேன்
நீ வந்து -தேவரீராக எழுந்து அருளி
என்னை உற்ற பின்-என்னை யுய்த்த பின்- –அல்லலுக்கு உறைவிடமான என்னை அடைந்ததற்குப் பிறகு
உன் சீரே -தேவரீர் உடைய கல்யாண குணங்களே
உயிர்க்கு -என்னுடைய ஆத்மாவுக்கு
உயிராய் -தாரகமாய்
அடியேற்கு-அடியானான எனக்கு
இன்று தித்திக்கும் -இப்பொழுது இனிக்கின்றன
நின் அருளின் தன்மை -தேவரீர் உடைய கிருபையின் ஸ்வபாவத்தை
இக்கடல் இடத்தில் -இந்தக் கடல் சூழ்ந்த உலகத்தில்
யார் அறிபவர் -யார் தான் அறிவார் –

ஜல ஸ்தல விபாகம் பாராதே வர்ஷிக்கும் மேகம் போலே சர்வ விஷயமாக உபகரிக்கும்-கிருபையை உடையவரே –
துக்கத்துக்கு நேரே ஆவாச பூமியே இருப்பானொருவன் நான் –இப்படி இருக்கிற என்னை
தேவரீர் தாமே வந்து ப்ராபித்து அருளின பின்பு தேவரீர் உடைய கல்யாண குணங்களே ஆத்மாவுக்கு தாரகமாய் –
அடியேனுக்கு இன்று ரசியா நின்றது
தேவரீர் உடைய கிருபையின் ஸ்வபாவத்தை இக்கடல் சூழ்ந்த பூமியில் யார் தான் அறிவார் –
காரேய் கருணை -என்றது -கார் ஏய்ந்த கருணை என்றபடி –
ஏய்கை-ஒப்பு–

பாலே போலே சீர் -நீ விட்டாலும் நான் விட்டேன் என்று அன்றோ சிக்கென கொள்வார் ஸ்வாமி –
இன்று இங்கே இந்த உடம்போடு தித்திக்கும் -தேசாந்தரம் தேகாந்தரம் காலாந்தரம் வேண்டாமே –
நின் அருள் -அவன் அருள் போலே அன்றே -மோக்ஷ ஏக ஹேது-உயிர் பாசுரம் இது –
சரண்யத்வம் ஸ்வாமி இடம் வந்த பின்பு தானே நிறம் பெற்றது -ஸ்வா பாவிகம் அடைந்தது -என்றவாறு –

காரேய் கருணை
ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷூ கவலாஹகம் போலே –
அனலோசித விசேஷ லோக சரண்யமான – க்ருபை -சித்தே ததீய சேஷத்வே -சர்வார்த்தாஸ் சம்பவந்திஹி – என்னக் கடவது இறே –
கார் -மேகம் / ஏய்கை -ஒப்பு -இப்படிப் பட்ட க்ருபையை உடைய

கார் ஏய் கருணை இராமானுச
நீர் நிலம் என்னும் வேறு பாடு இன்றி எல்லா இடத்திலும் மழை பொழிவது போலத் தம் மீதும்
உலகத்தார் மீதும் வேறுபாடு இன்றிக் கருணை பெருகியது பற்றி –கார் ஏய் கருணை –என்கிறார் –
புலைச் சமயங்களை சாராது -தம்மை சஞ்ச நெஞ்சில் வைத்த தன்னைத் தம்மை உள்ளவாறு காணுறச் செய்தும் –
புலைச் சமயங்களை அவித்தும் -பொய்த் தவத்தில் உழலாது நிலத்தில் உள்ளாரை மெய் ஞானம் நெறியில் புகச் செய்தும் –
எல்லோருக்கும் உபகரித்ததை மீண்டும் -அருளின் தன்மையின் பெருமையை காட்டுவதற்காக அனுவத்தித்த படி –
கருணை-அருள்
அருளுடைமையாவது
யாதானும் ஓர் உயிர் இடர்படின் -அதற்க்கு தன் உயிர்க்கு உற்ற துன்பத்தினால் வருந்துமாறு போலே –
வருந்தும் ஈரம் உடைமை -எனபது மணக்குடவர் -திருக்குறள்-உரை –
இதனை பர துக்க துக்கித்வம்-அஸஹிதவம் -என்பர் வட நூலார்

இராமானுச –
ஸ்ரீ எம்பெருமானாரே –

கருணை இராமானுசன்-
கருணையை உடைய ஸ்ரீ இராமானுசன்
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை –
செல்வத்துள் செல்வமாகிய அருள் செல்வத்தால் மேம்பட்டவர் ஸ்ரீ எம்பெருமானார் -என்க –

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலு ளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே–5-1-9-

ஆனான் ஆளுடையான் என்றஃதே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமு மாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே–5-1-10-

கார் வண்ணன் கண்ண பிரான் கமலத்தடங் கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே–5-1-11-

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் –5-2-11-

வந்தருளி என்னெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்
முந்தைத் தாய் தந்தையே! முழு ஏழுலகும் உண்டாய்!–5-7-7-

மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்ல வாழ்
சுழலின் மலி சக்கரப் பெரு மானது தொல் லருளே–5-9-9-

தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே ஒக்க அருள் செய்வராதலால்–பெரிய திருமொழி–11-3-5-

கருமா முகிலுருவா கனலுருவா புனலுருவா
பெருமால் வரை யுருவா பிறவுருவா நினதுருவா
திருமா மகள் மருவும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
அருமா கடலமுதே யுனதடியே சரணாமே –7-9-9-

நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே ! கருமா முகில் போல் எந்தாய் !–3-8-1-

இக் கடல் இடத்திலே
சதிஸ் சமுத்திர பரி வேஷ்டிதமான -இந்த -இருள் தரும் மா ஞாலத்திலே –

நின் அருளின் –
பர துக்க அசஹிஷ்ணுத்வ நிராசி கீர்ஷத்வாதி லஷணங்களோடு கூடி இறே கிருபை இருப்பது –
அப்படிப் பட்ட கிருபைக்கு நின் அருளின் என்று ஆஸ்ரிய ப்ராபல்யத்தாலே வந்த வெளிச் செறிப்பு
ஸ்வர்ணத்துக்கு பரிமளம் வந்தால் போலே காணும் -இருப்பது

தன்மை –
இப்படிப் பட்ட கிருபா ஸ்வபாவத்தை –

இக்கடல் இடத்தில் –நின் அருளின் தன்மை-ஆரே அறிபவர் —
நின் அருளின் தன்மையை இருள் தரும் மா ஞாலமாகிய இக்கடல் சூழ்ந்த நிலப்பரப்பில்
எங்கும் எக்காலத்திலும் அறிபவர் யாருமே இல்லை -என்றபடி –
எனவே தெளி விசும்பாகிய ஸ்ரீ பரம பதத்தில் உள்ள நித்தியரும் முக்தரும் அறிய வல்லார் என்பது கருத்து –
நின் அருளின் தன்மை-
ஸ்ரீ இராமானுசா என்று விளித்து கூறி-நின் -என்று மேலும் -கூறுவதால் அருள் உடைய அவரது சிறப்பு தோற்றும் –
இறைவனது அருளின் தன்மை அறிவு எளிதாயினும் ஸ்ரீ எம்பெருமானாறது அருளின் தன்மை அறிவு அரிதே –என்றபடி –
இறைவனது அருள் ஸ்வா தந்த்ரியத்தால் தடை படுவதற்கு உரியது –
ஸ்ரீ எம்பெருமானார் அருளோ -தடை ஏதும் இன்றி என்றும் பெருகும் தன்மையது -என்க –

ஆரே அறிபவர் –
தெளிந்தவர் தான் யார் –
நித்ய விபூதியில் இருந்தவர்கள் ஆகில் -சதா பச்யந்தி -என்றும் -விப்ராச -என்றும் -ஜாக்ர்வாசா -என்றும் –
சர்வஜ்ஞம் உடையவர் ஆகையாலே -அறியக் கேட்டவர்கள் இத்தனை –
யாநிசா சர்வ பூதாநாம் தஸ்யா ஜாகர்த்தி சமயமி – என்னும்படி அஜ்ஞானத்தை விளைப்பிக்கும்
பூலோகத்தில் இருந்தவர் தெரிகிலர்-என்றபடி –

அல்லலுக்கு
கர்ப்ப ஜன்மாத்யவச்தாஸ் துக்கம் அத்யந்த துச்சகம் -என்னும்படியான துக்கங்களுக்கு –

நேரே உறைவிடம் நான்
சாஷாத் ஆவாச பூமியாய் இருப்பான் ஒருவன் நான் –
சரீர சம்பந்திகளுக்கு வந்த துக்கங்கள் எல்லாம் தத் சம்பந்தத்தாலே -எனக்கு ப்ராப்தமானால் சிறிது இலகுவாய் இருக்கும் –
அப்படி அன்றிக்கே சாஷாத் எனக்கு வந்தது ஆகையாலே அவற்றுக்கு எல்லாம் நான் த்ருடமான ஆஸ்ரயமாய்-இருந்தேன் -என்றபடி –

அல்லலுக்கு நேரே உறைவிடம் நான் –
அல்லல்-கர்ப்ப வாசம் முதல் மரணம் ஈறாக உள்ள துன்பங்கள் அவற்றிக்கு நேரே உறைவிடம் நான்-
என்னை சார்ந்தர்க்கு நேர்ந்த துன்பங்களை கண்டு நான் படும் அவை யல்ல இவ் அல்லல்கள் –
எனக்கு நேர்ந்து நேரே நான் படும் அவை
ஆதலின் என்னால் பொறுக்க ஒண்ணாதவை -என்பது கருத்து

நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி யல்லாதன செய்தும்
துஞ்சினார் செல்லும் தொன்னெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவர் தானவர்க்கு என்றும்
நஞ்சனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—–பெரிய திருமொழி–1-6-7-

நீசனேன் நிறை ஒன்றும் இலேன் –

மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன் சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீ விளி விளிவன்–திரு மாலை–30-

வந்து நீ –
நீ வந்து
தேவரீர் பர துக்க அசஹிஷ்ணுவாகையாலே -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய ஆர்த்த த்வனி கேட்டவாறே
ஸ்ரீ சர்வேஸ்வரன் அரை குலைய தலை குலைய வந்தால் போலே –
ஸ்ரீ பரம பதத்தின் நின்றும்-இவ்வளவாக எழுந்து அருளி –

என்னை –
துக்க ஆஸ்ரயமான என்னை –

உற்ற பின் –
த்வயாபி லப்த்த பகவன் நிதா நீ மனுத்த மாம் பாத்ரம் இததயாயா -என்றால் போலே
அலாப்ய லாபமாக என்னைப் பெற்ற பின்பு –

முதலை வாய்ப்பட்டு ஸ்ரீ கஜேந்த்திரன் துயர் உறும் இடத்துக்கு ஸ்ரீ எம்பெருமான் வந்து அவ் வெம் துயரை தீர்த்து அருளியது போலே
நான் இருந்து அல்லல் உறும் இடத்துக்கு எனக்காக தேவரீர் எழுந்து அருளி என் அல்லலைத் தீர்த்து அருளினீர் என்கிறார் –
ஸ்ரீ கஜேந்த்ரனுக்கு அருளியது அவன் கதறிய காலத்தில் –
எனக்கு ஸ்ரீ எம்பெருமானார் அருளியதோ கதறவும் தெரியாது -அல்லலில் அழுந்திய காலத்தில் –
ஸ்ரீ கஜேந்த்திரன் துயர் உற்றது ஒரு மடுவிலே
நான் அல்லலுள் அழுந்தியது சம்சார சாகரத்திலே
ஸ்ரீ கஜேந்த்திரன் துயரம் தேவர்கள் கணக்கு படி ஆயிரம் ஆண்டுகள்-
என் அல்லல்களோ அநாதி காலம்
ஒரு முதலையின் வாய் பட்டது ஸ்ரீ கஜேந்த்திரன்
நானோ ஐம்புலன்களின் வாய்ப்பட்டேன் –
ஸ்ரீ கஜேந்த்திரன் துயரத்தை விட என் அல்லல்கள் மிகக் கொடியவை –
ஆயினும் தானாக வந்து என் அல்லல்களை தீர்த்து தன் பேறாக என்னை ஏற்று அருளினார்
ஸ்ரீ எம்பெருமானார் என்கிறார் இங்கு –

இருந்தான் கண்டு கொண்டேன் எனது ஏழை நெஞ்சு ஆளும்
திருந்தாத ஒருவரைத் தேய்ந்து அற மன்னிப்
பெரும் தாள் களிற்றுக்கு அருள் செய்த பெருமாள்
தரும் தான் அருள் இனி யான் அறியேனே – திருவாய் மொழி – 8-7 2- – என்னும்
ஸ்ரீ நம் ஆழ்வார் பாசுரமும் அதன் வியாக்யானமும் காணத் தக்கன –

வந்து நீ என்னை உற்ற பின் -என்னும் இடத்தில்
வந்தமையால்-சௌ லப்யமும்
அல்லல் உள்ள இடத்தில் வந்தமையால்-வாத்சல்யமும்
என்னை உற்றமையால்-சௌசீல்யமும்-
தன் பேறாக ஹேது எதுவும் இன்றி -என்னை உற்றமையால்-ஸ்வாமித்வமும்
கருணை இராமானுசா -என்றமையால் வருவதற்கு ஹேதுவான கிருபையும் –
ஸ்ரீ எம்பெருமானார் இடம் உள்ளமை தோற்றுகிறது –

உன் சீரே
தேவரீர் உடைய கல்யாண குணங்களே –
குணா நாமா கரோ மஹார் -என்றால் போலே சீர் என்னும்படியான வாத்சல்ய சௌசீல்யாதி குணங்களை –

உன் சீரே –அடியேற்கு இன்று தித்திக்கும் –
கீழ் சொன்ன சௌலப்யம் முதலிய குணங்களும் -பிறந்த தோஷத்தைப் போக்கி -ஆரோக்யத்தை விளைத்து –
பாலை இனிக்க வைப்பது போலே -அல்லலை தீர்த்து அடியானாக்கி குணங்களை தித்திக்கும் படி செய்த
ஞானம் சக்தி முதலிய குணங்களும் எனக்கு இன்று இனிக்கின்றன -என்கிறார் –
உன் சீர் –இறைவனுடைய சீர்கள் அல்ல –

உயிர்க்கு உயிராய் –
ஆத்மாவுக்கு தாரகமாய் -லோகத்தில் எல்லாருக்கும் தம் தாமுடைய பிராணன் ஜீவன ஹேதுவாய் இருக்கும் –
இங்கு அப்படி அன்றிக்கே இவருடைய பிராணனுக்கு பிராணனாய்-காணும் அவருடைய சீர் இருப்பது –

உயிர்க்கு உயிராய் -ஆத்மாவுக்கு உயிராய் –தாரகமாய் -ஜீவனமாய்
இதனால் தாரகமும் போஷகமும் சீரே என்றது ஆயிற்று
தித்திக்கும் என்கையாலே போக்யமும் அதுவே என்றது ஆயிற்று –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் -என்றார் ஸ்ரீ நம் ஆழ்வார் –
ஸ்ரீ அமுதனார் அவை எல்லாம் ஸ்ரீ எம்பெருமானார் குணங்களே என்கிறார் –

வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே –
திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே –
அறிவார் உயிரானாய்

அடியேற்கு
சேஷ பூதனான எனக்கு –

இன்று –
ரசஹ்யே வாயலப்த்த்வா நந்தீ பவதி -என்றும்
சோச்நுதே சர்வான் காமான் சஹா -என்றும் –
சொல்லப்படுகிற ப்ரஹ்மத்தின் உடைய கல்யாண குண அமருத அனுபவமும் –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று ததீயர் உடன் கூடிப் பண்ணக் கடவேன் என்று
பிராத்தித்தபடி தலைக் கட்டுவது பரம பதத்திலேயாய் இருக்கும் –
அப்படி அன்றிக்கே எனக்கு இந்த பந்த -பத்த -தசையிலே தானே –

தித்திக்குமே –
ரச்யமாய் -ஆனந்த அவஹமாய் இருக்கும் என்று ஆய்த்து –
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்தால் போலே ஆய்த்து -என்றபடி –
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே – என்னக் கடவது இறே—

அடியேற்கு
இயல்பான அடிமை இன்பம் உணரப் பெற்ற எனக்கு –
இனி சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு-
என்கையாலே கீழ் கூறிய சௌலப்யாதி குணங்களுக்கு தோற்று -அடிமை யானதும் தோற்றுகிறது –
இன்று –
எங்கோ என்றோ போய் சரீர சம்பந்தம் நீங்கின பிறகு பெரும் ஸ்ரீ பகவத் குணா அனுபவம் அன்று –
இங்கேயே இப்பொழுதே இவ் உடலோடேயே ஸ்ரீ ஆசார்ய குணம் அனுபவம் ஆகிற பெரும் பேறு-வாய்க்க பெற்றேன் என்று களிக்கிறார் –

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான் தனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
உரிய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6-

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் தன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே–4-5-10-

நீ என்னை யுய்த்த-யுற்ற – பின் உன்–சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே–
ஸ்ரீ எம்பெருமானார் விஷயீ கரித்து அருளின பின்பு –
அவருடைய குணங்களே தமக்கு தாரக போஷக போக்யங்கள் ஆயிற்று என்கிறார் –

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –23-வைப்பாய வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே இத்யாதி —

April 6, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

நிர்தோஷரான பிரேம யுக்தர் பரம தனமாக தங்கள் நெஞ்சிலே வைத்து கொண்டு இருக்கும்-விஷயத்தை
பாபிஷ்டனான நான் ஹேயமான மனசிலே வைத்து ஏத்தா நின்றேன் –
இது-அவ்விஷயத்தின் உடைய குணத்துக்கு என்னாகும் என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ பூர்வாசார்யர்கள் எல்லாரும் –வைத்த நிதி -என்னுமா போலே -தங்களுக்கு ஆபத்து ரஷகமாக வைக்கப் பட்ட –
அஷய பரம தனம் -என்று கொண்டு -தங்களுடைய திரு உள்ளத்திலே சர்வ காலமும் வைக்கும் விஷயமான ஸ்ரீ எம்பெருமானாரை
அதி பாபிஷ்டனான என்னுடைய மனசிலே வைத்துக் கொண்டு அவருடைய கல்யாண குணங்களை ஸ்துதிக்கத் தொடங்கினேன்-
மகா பிரபாவம் உடைய அவருடைய கல்யாண குணங்களுக்கு இது என்னாய் விளையுமோ-என்று பரிதபிக்கிறார் .

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

நல்ல அன்பர்கள் சிறந்த செல்வமாக தங்கள் நெஞ்சிலே வைத்து கொண்டு இருக்கும் ஸ்ரீ எம்பெருமானாரை
மிக்க பாவியான நான் குற்றம் உள்ள நெஞ்சிலே வைத்து எப்போதும் ஏத்தா நின்றேன் –
இது அவரது சீரிய-கீர்த்திக்கு என்னவாய் முடியுமோ -என்கிறார்

தான் சேம வைப்பாக கொண்ட ஸ்ரீ எம்பெருமானாரை -ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ ஆழ்வான் போல்வார்கள் —
தங்கள் நெஞ்சில் குறைவுறாத நிதியாக வைத்து பேணுவது கண்டு -நல்லன்பர்கள் பேணும் சீர்மை வாய்ந்த இந்த நிதியை
போலி அன்பனாகிய இவ் ஒப்பற்ற பாவியேன் நெஞ்சில் வைத்து ஏத்துவதனால் அந்நிதியின் சீர்மை
சிதைந்து விடலாகாதே என்று வருந்துகிறார் ஸ்ரீ அமுதனார் –
இங்கனம் தங்களை தாழ்ந்தவர்களாக நினைப்பதும் கூறுவதும் -நைச்ய அனுசந்தானம் –பெரியோர்கள் மரபு –
அன்பு நிலையில் மேல் விழுந்து -துய்த்து இன்புற்றுப் பேசுவதும்
அறிவு நிலையில் தன் தாழ்வு தோன்றி இகழ்வாய தொண்டனேனாகிய என்னால் குறை நேர்ந்து விடலாகாதே என்று
பிற்காலிப்பதும் தவிர்க்க ஒண்ணாதவை என்க-

வைப்பாய வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமானுசனை இரு நிலத்தில்
ஒப்பார் இலாத வுறுவினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழக்கே -23 –

பத உரை –
வைப்பு ஆய -ஆபத்துக்கு உதவும் பொருட்டு வைக்கப் பட்டதான
வான் பொருள் என்று -சிறந்த செல்வம் என்று
நல் அன்பர் -நல்லவர்களான பக்தர்கள்
மனத்தகத்தே -நெஞ்சுக்கு உள்ளே –
எப்போதும் -எல்லாக் காலத்திலும்
வைக்கும் -வைத்துக் கொண்டு இருக்கிற
இராமானுசனை -எம்பெருமானாரை
இரு நிலத்தில்-பெரிய பூமியில்
ஒப்பார் இலாத -ஒத்தவர்கள் இல்லாத
உறு வினையேன் -பெரும் பாவியான நான்
வஞ்ச நெஞ்சில் -ஏமாற்றுகிற நெஞ்சகத்திலே –
வைத்து -வைத்து கொண்டு –
முப்போதும் -மூன்று வேளைகளிலும்
வாழ்த்துவன் -வாழ்த்துகின்றேன்
இது அவன் மொய் புகழுக்கு -இது அவருடைய சீரிய கீர்த்திக்கு
என் ஆம்-என்ன ஆகுமோ –

வைத்த மா நிதி -திருவாய் மொழி – 5-8 11- – – என்னுமா போலே ஆபத் ரஷகமாக வைக்கப்பட்ட அஷயமான தனம் என்று –
நிர்தோஷராய் பிரேம யுக்தராய் இருக்கும் அவர்கள் -சீரிய நிதிகளை செப்புக்குள்ளே வைப்பாரைப் போலே –
மனச்சுக்குள்ளே -திவாராத்ரா விபாகம் அற சர்வ காலத்திலும் -வைக்கும் விஷயமான ஸ்ரீ எம்பெருமானாரை –
மகா ப்ருதிவியில் பாபம் பண்ணினவர்களில் இவனைப் போல் ஒரு பாபிகள் இல்லை என்னும்படி பாபிஷ்டனாய் இருக்கிற நான்
நிச்ச்நேஹனாய் இருக்க ச்நேஹிகளைப் போலே பாவித்து –
உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம் – திருவாய் மொழி -5 1-9 – – என்கிறபடியே
சர்வஞ்ஞனையும் மருட்ட வற்றான க்ருத்ரிம யுக்தமான மனசிலே வைத்து -த்ரி சந்த்யமும் ஏத்தா நின்றேன் –
இது அவருடைய ச்லாக்யமான புகழுக்கு என்னாய் விளையுமோ –
வான்-பெருமை
நல்லன்பர் -என்கிற இடத்தில் –
நன்மை அன்புக்கு விசேஷணமாய்-அநந்ய பிரயோஜநதையா விலஷண-பத்தி என்னவுமாம் –மொய்-அழகு–

எனக்கு எய்ப்பினில் வைப்பு அன்றோ நீ -ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஓ ஓ என்று கதற –
மாசூணாது என்று பதில் வந்ததாம் -ஸ்ரீ ஆழ்வாருக்கு -அது போலே ஸ்ரீ அமுதனாருக்கும் –

வைப்பாய வான் பொருள் என்று
சேமித்த மகா தனம் என்று -நிஷேபித்து வைத்த-பரம தனம் என்று –
விஷ்ணுஸ் சேஷி ததீய சுப குண நிலயோ விக்ரஹஸ் ஸ்ரீ சடாரிஸ் ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பதே கமல யுகம் பாதிரம் யம் ததீயம் -என்று
சொல்லப்படுகிற பத கமலத்தை –தனம் மதீயம் -என்று அருளிச் செய்கையாலே –
அப்படி பட்ட ஸ்ரீ எம்பெருமானாரை பரம தனமாக நிரூபித்து என்றபடி –
குருரேவ பரம்தனம் -என்னக் கடவது இறே –
இப்படி யாவதாத்ம பாவி உஜ்ஜீவன ஹேதுவான பரம தனம்-என்று அத்யவசித்து இருக்கிற

வைப்பாய –இராமானுசனை –
ஸ்ரீ மது சூதனையே ஸ்ரீ ஆழ்வார் வைத்த மா நிதியாக கொள்வது போலே –
நல்லன்பர் ஸ்ரீ எம்பெருமானாரையே வைப்பாய வான் பொருளாக கொள்கின்றனர் என்க —
பேய் முலைத்தள நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளியார் வணங்கப் படும் தேவனை
மாயனை மதிள் கோவலிடைக் கழி மைந்தனை யன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை யிலங்கும் சுடர்ச் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைய்ப்பினைக்
காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-4-
என்று ஸ்ரீ பெரும் புறக் கடலை வைப்பு நிதி என்றார் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார்
கைம்முதல் இல்லாத காலத்து நிதி பயன்பட்டு காப்பது போலே -தம்மைக் காப்பாற்றிக் கொள்ள சாதனம் எதுவும் இல்லாத நிலையில் –
தம்மை காப்பாற்றும் ஸ்ரீ எம்பெருமானாரே -சித்த சாதனமாய் பயன்படுதலின் -அவரையே
வைப்பாய பொருளாக கொள்கின்றனர் –நல்லன்பர் -என்று உணர்க –
வைப்பாய பொருள் –பயன் பட பயன் பட -குறைந்து கொண்டே போம் –
ஸ்ரீ எம்பெருமானாராகிய வைப்பு பொருளோ -அங்கன் குறைவுறாது – என்பார் -வான் பொருள்-என்றார் –

நல்லன்பர் –
ஜ்ஞாநாதிகராய்-அவர் திருவடிகளில் ப்ரீதி யுக்தர் ஆனவர்கள் –
நல்லன்பர் என்கிற
இடத்தில் –நன்மை அன்புக்கு விசேஷணமாய் – அநந்ய பிரயோஜந தயா -விலஷணையான பக்தியை உடையவர் என்னவுமாம் –
அவர்கள் ஆகிறார் –
ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ பிள்ளான் ஸ்ரீ எம்பார் ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் -முதலானவர்கள் –

நல்லன்பர்
என்னைப் போல வஞ்ச நெஞ்சர் அல்லர் இவ்வன்பர் -குற்றம் அற்றவர் -என்றபடி –
இனி நல்லதான அன்பை உடையவர் என்னலுமாம் –
அன்புக்கு நன்மையாவது -வேறு பயன் ஒன்றும் கருதாமை-

மனத்தகத்தே -வான்பொருள் என்று –
வான் என்று விபு வாசகமாய் –
குரு ரேவா பரம் பிரம்ம -என்று சொல்லப்பட்ட மகா தனம் என்று கொண்டு -அத்தை வெளிச் செறிப்பாக
வைத்தால் சாதகமாய் இருக்கும் என்று அறியாதபடி நிரவயவமான மனச்சினுள்ளே –
நல்லன்பர் மனத்தகத்தே –
ஸ்தோத்ர ரத்னம் இயம் நியச்தம் ஆசார்யஸ்து திசம்புடே -என்று-
அநர்கமான ரத்னம் கிடைத்தால் செப்பிலே வைத்துக் கொண்டு இருப்பாரைப் போலே –
இந்த லோக விலஷணமான மகா தனத்தை தங்களுடைய நெஞ்சின் உள்ளே-

எப்போதும் வைக்கும் –
பூத பவிஷ்யத் வர்த்தமான காலத்திலும் வைக்கும் —
பூத காலத்தில் -ஸ்ரீ நம் ஆழ்வார்
கலியும் கெடும் கண்டு கொண்மின் -பொலிக பொலிக பொலிக -என்று இவரை மங்களா சாசனம் பண்ணி நிற்கையாலும் –
ஸ்ரீ ஆள வந்தார் இவருடைய பிரபாவத்தை கேட்டருளி ஸ்ரீ பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளி –
ஸ்ரீ கரிய மணிக்கப் பெருமாள் சன்னதியில் இருந்து இவரை மங்களா சாசனம் பண்ணினார் ஆகையாலும் –
ஸ்ரீ மன் நாதமுனிகள் ஸ்ரீ ஆழ்வார் சம்ப்ராயத்தாலே இவருடைய விக்ரகத்தைப் பெற்று -சர்வ காலமும் ஆராதித்துப் போந்தார் ஆகையாலும்
நல்லன்பர் மனத்தகத்தே எப்போதும் வைக்கும் -என்னத் தட்டில்லை இறே-

வைக்கும் –
சேர்த்து வைக்கும் -ஜங்கம ஸ்ரீ விமான நிஹ்ர்தயானி மநீஷிணாம்-என்ன கடவது இறே .
கிரணங்களால் தப்தனாய்க் கொண்டு -ரவி மண்டலத்திலே வர்த்தித்தும் -காடும் மேடுமான பர்வதாக்ரத்திலே
ஜடாதாரணம் பண்ணி நின்றும் -ஜல தத்வத்திலே சர்வதா வசித்தும் -இப்படி சாதனா அனுஷ்டானம் பண்ணி
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு ஞானிகளுடைய ஹ்ரதய கமல வாசம் சாத்தியம் என்று பிரசித்தமாக சொல்லுகையாலே
இது ஸ்ரீ பகவத் பரமானாலும் –
யஸ்ய தேவ பராபக்திர் யதா தேவ ததா குரவ் -என்றும் –தேவ மிவாசார்ய முபாசீத -என்றும் –
தேவ வத்ச்யா பரஸ்ய -என்றும் -சொல்லுகையாலே இருவரும் ஒக்கும் இறே –

மனத்தகத்தே வைக்கும் –
அருமை தெரிந்து அன்பு பூண்டவர் ஆதலின் -சீரிய பொருளை செப்பிலே வைப்பது போலே
உள்ளே வைத்து பேணுகின்றனர் -என்க
எப்போதும் வைக்கும் –
அல்லும் பகலும் என்றபடி-
எக்காலத்திலும் வெளியே வைக்கத் தக்க பொருள் அன்றே இது –
எப்போதும் -அகிஞ்சனராகிய நம்மைக் காப்பவர் ஸ்ரீ எம்பெருமானாரே என்று
ப்ரீதி உடன் இடைவிடாது நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்-எனபது கருத்து –

இராமானுசனை –
ஸ்ரீ எம்பெருமானாரை –

இரு நிலத்தில் –
அதி விஸ்தைர்யான இந்த பூமியிலே-

ஒப்பார் இல்லாத –
என்னைப் போல் பாபிஷ்டன் ஆகிலும் கிடைப்பானோ என்று ஆராய்ந்தால் -எனக்கு துல்யமான பாபிஷ்டர்
இந்த லோகத்தில் கிடையாமையாலே –சத்ர்சர் இல்லாத –
ஒப்பார் -சதர்சர் –

அரு வினையேன் –
பிராய சித்தாதிகளால் நிவர்திப்பிக்க அரியதாய் –
அவசியம் அனுபோக்தவ்யம் கிர்தம் கர்மசுபாசுபம் -என்கிறபடி
அனுபவ ஏகைக நாச்யமான பாபத்தைப் பண்ணின நான் –
நத்விராணி க்ர்தான்ய நேன நிரையர் நாலம்புன கல்பிதை பாபா நாமிதி மத்க்ர்தே தததிகான் கர்த்தும் ப்ரவர்த்தேத்
வி தேப்யோப் யப்யதிகாரி தான்ய ஹமபி சூத்திர கரோமி ஷனாத் -என்றும் -அஹமசம்ய பராதசக்ரவர்த்தி -என்றும்-
துரிதம் சகலச்ய ஜந்தோ தாவச் சதத் தத்தி கஞ்சம மாஸ்தி சத்யம் -என்றும் -பூர்வைஸ் ஸ்வ நைச்ய மனுசம்ஹித
மார்ய வர்யைர் மாமேவ வீஷ்ய மகாதாம் நாதாதச்த் தேஷாம் –நைசயம் த்விதம் சடரிபோம மசத்ய மேவமத்தம்
பரோநம லி நோய தா ஆவிரச்தி -என்றும் சொல்லுகிறபடியே
அத்யந்த பாபிஷ்டனான என்னுடைய –

வஞ்ச நெஞ்சில் வைத்து –
நான் அப்படி யானாலும் என் மனசு நிர்மூலமோ – என்னோட்டை சம்பந்தம் பெற்றதாகையாலோ
எனக்கு முன்னே பாப கர்மங்களிலே பிரவர்த்திக்கும் ஆய்த்து-
பந்தாயா விஷயாசங்கி -என்னும் படியாய்
பாஹ்ய விஷய ப்ரவணமாய் -எல்லாரையும் மோஷம் போகக் கடவதாய் -சர்வஞ்ஞாரான தேவரீரும் கூட
நல்லவன் என்று திரு உள்ளத்திலே கொண்டாடும்படியான -வஞ்சனத்தை உடைய மனசிலே வைத்து
வர்த்யாபசுர்நாவபுஸ் த்வஹா மீத்ர்சொபி சுத்யாதி சித்த நிகிலாத்மா குணாஸ் ரயோயம்
இத்யாதரேன க்ர்திநோபி மிதப்ரவக்து மத்யாபி வஞ்சன பரோத்ர யதீந்திர வர்த்தே – என்று ஸ்ரீ ஜீயரும் அனுசந்தித்தார் இறே

இரு நிலத்தில் ஒப்பார் இலாத உறு வினையேன் –
இப்பூமி பரப்பு அடங்கலும் தேடினும் எனக்கு இணையான பாபியை காண இயலாது –
அத்தகைய மகா பாபி நான் என்றபடி –

வஞ்ச நெஞ்சில் வைத்து முப்போதும் வாழ்த்துவன் –
வஞ்சிப்பது பிறரை மாத்ரம் அன்று -ஸ்ரீ எம்பெருமானாரையே வஞ்சிக்க வல்லது என் நெஞ்சு என்கிறார் –
நல்லதும் தீயதும் பகுத்தறியும் பண்பு வாய்ந்த பேர் அறிவாளராய் இருந்தாலும் –
அவ் எம்பெருமானாரையே ஏமாற்றுக்கு உட்படும்படி பகட்டுவது என் நெஞ்சு –
உண்மையிலே அன்பு அற்று இருந்தும் அது அன்பார்ந்தது போலே தன்னைக் காட்டும் –

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-
உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம் -– என்னும் ஸ்ரீ நம் ஆழ்வார் திரு வாக்கை இங்கு நினைவு கூறுக –
தூய மனத்தகத்தே -எப்போதும் வைக்கும் பொருளை -வஞ்ச நெஞ்சில் வைத்து மாசு படுத்தி விட்டேனே -என்று இரங்குகிறார் –
எப்போதும் அவர்கள் த்யானம் பண்ணுகிறார்கள்-
நானோ காலை-மத்யானம் மாலை மூன்று வேளைகளிலும் த்யானம் செய்பவன் போலே நடிக்கின்றேன் –
அவர்கள் பிறர் அறியாது அடக்கமாக த்யானம் செய்வார்கள்-
நானோ மூன்று வேளைகளிலும் வாழ்த்துவதன் மூலம்
அதனை டம்பமாய் வெளிப்படுத்தி கொள்கிறேன் –

முப்போதும் வாழ்த்துவன் –
சர்வ காலத்திலும் –
அறுசமயச் செடியதனை யடி யறுத்தான் வாழியே -அழகாரும் எதிராசர் அடி இணைகள் வாழியே -என்றும்
எதிராசன் வாழி எதிராசன் வாழி -என்று கொண்டு மங்களா சாசனம் பண்ணினாரே ஸ்ரீ ஜீயரும் –
சக்ருத் ப்ர்ஷ்டனுக்கு பிராயச் சித்தம் லகுவாய் இருக்கும் -அப்படி இன்றிக்கே
இதுவே யாத்ரையாக இந்த அக்ர்த்யத்தை பண்ணா நின்றேன் –
ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ எம்பார் போல்வார்கள் ஸ்ரீ எம்பெருமானாருக்கு நிதி-
இங்கோ வஞ்ச நெஞ்சு –வஸ்துவோ வான் பொருள்..

அன்பும் ஞானமும் மாறாடுகிறது-மாறி மாறி வருமே ஸ்ரீ ஆழ்வாருக்கும் – ஸ்ரீ அமுதனாருக்கு அது போல்
தேனும் பாலும் கன்னலும் அமுதமும் போல் .எல்லாம் கலந்து ஒழிந்தோம் என்பர் ..அனுபவம் பிரேம தசையில்
வள ஏழ் உலகின் முதலாய -..அருவினையேன் ..எந்தாய் என்பேன் –நினைந்து நைந்தே –உன் பெருமை மா சூணாதோ -என்பர்
வைகுந்தா மணி வண்ணா -நைச்சயம் பாவித்து விலகுவாரோ என்று கலங்கிய அவனுக்கு
உன்னை சிக்கென பிடித்து கொண்டேன் -மாஸூசா என்பர் ஸ்ரீ ஆழ்வாரும்
பக்தர் பேசவும் பித்தர் பேசவும் பேதையர் பேசவும் -ஸ்ரீ கம்பர்
மெய்யே பெற்று ஒழிந்தேன் பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே ஆடி…
பாவனத்வம் இல்லை ..தயை இல்லை ..விநயம் இல்லை ..வெட்கமும் இல்லை –
இருந்தும் பெரியோர் கேட்ட உன் திருவடி தாமரையை கேட்டேன்–
நல்லது ஒன்றும் இல்லை யோக்யதை இல்லை நைச்ய அனுசந்தான பாசுரம்-

என்னாம் இது அவன் மொய் புகழக்கே–
அவன் -அநந்தம் ப்ரதமம் ரூபம் –
த்வதீயம் லஷ்மணஸ்ததா -பலபத்ரஸ் த்ரீயஸ்து-கலவ் ராமானுஜ ஸ்ம்ர்தா-என்று ப்ரஹ்ம நாரதீயத்திலும் –
சேஷாவா சைன்யநாதோ வா ஸ்ரீ பதிர் வேத்தி சாத்விகை -விதர்க்யாய மகா ப்ராஜ்ஜை யதிராஜாய மங்களம் – என்று அபியுக்தராலும் –
பிரதிபாதிக்கப்பட்ட அப்ரதிம பிரபாவரான ஸ்ரீ எம்பெருமானார் உடைய –
மொய் புகழ்க்கு –
அதி ஸ்லாக்யமான ப்ரபாபத்துக்கு –மொய் -அழகு –
அன்றிக்கே அசங்க்யேயமான ப்ரபாவத்துக்கு என்னுதல் –

அவன் மொய் புகழ்–
ஆதி சேஷன் லஷ்மணன் நம்பி மூத்த பிரான் -முன்பு யுகங்களில் -கலியில் ஸ்வாமி
பூதூரில் வந்து உதிர்த்த புண்யனோ
ஆழ்வாரோ
தூது நடந்த நெடுமாலோ-
ஆய் சுவாமிகள் திரு நாராயண புரத்தில் மா முனி பார்த்து கேட்டது போலே
யாதவ குலத்தை தூக்க கீழ் குலம் புகுந்த வராஹா கோபாலர் போலே –
ராமனுஜன்-பலராமன் தம்பி/ராமானுஜரோ பாஹ்ய குத்ருஷிகள் பர மதங்களை வீழ்த்தி –
அபி யுக்தராலும் நிகர் சொல்ல பட முடியாத பெருமை -அந்த ஸ்ரீ பார்த்த சாரதி போல

இது என்னாம் –
இது என்னாய் விடுமோ
இப்படிப் பட்ட மங்களாசாசனம் பண்ணுகிற இது -அவருடைய வைபவத்துக்கு என்னாய் தலைக் கட்டுமோ -என்றபடி –
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும் –
புனைந்த கண்ண நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் –
நினைந்த எல்லாப் பொருள் கட்கும் வித்தாய் முதலில்
சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே -என்றால் போலே தலைக் கட்டுகையாலே
எத்தனை சாகாசம் பண்ணுகிறேன் என்று அநு தபிக்கிறார் –
திகசுசிமவி நீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம் பரம புருஷயோ ஹம்யோகிவர்யா க்ரகண்யை –
விதிசிவச நாகாத்யைர் த்த்யாது மத்யந்த தூரம் தவ பரிஜன பாவம் காமயே காமவ்ர்த்தா –
என்று ஸ்ரீ ஆள வந்தாரும் இப்படியே அனுசந்தித்து அருளினார் இறே –

என்னாம் இது அவன் மொய்ப் புகழக்கே –
என் இழி தகைமை எல்லோருக்கும் தெரியும் ஆதலின் -நல்லன்பர் போலே நானும் நெஞ்சில் வைத்துக் கொள்ளின்
இழிவுடையார்ர் இடத்தும் இருப்பவர் தனா ஸ்ரீ எம்பெருமானார் என்கிற எண்ணம் ஏற்படும் ஆதலின்
அவருடைய-அழகிய புகழுக்கு இழுக்கு உண்டாகி விடுமோ -என்று அஞ்சுகிறார் –

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே–3-9-11-

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –22-கார்த்திகையானும் கரி முகத்தானும்- இத்யாதி —

April 6, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

முன்பு தன்னோடு எதிரிட்ட தேவ ஜாதி -பின்பு தன் வைபவத்தை அறிந்து ஸ்தோத்ரம் பண்ண –
அவர்களுக்காக வாணன் அபராதத்தை பொறுத்த ஸ்ரீ சர்வேஸ்வரனை ஏத்தும்
ஸ்ரீ எம்பெருமானார்-எனக்கு ஆபத்து தனம் -என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

பாணன் என்கிற கோர அசுரன் கோர தபச்சாலே ருத்ரனை வசீகரித்து -அவனைத் தன் வாசலிலே வைத்துக் கொண்டு
இருந்த காலத்தில் -அவன் தன் பெண் பிள்ளையான உஷா நிமித்தமாக ஸ்ரீ அநிருத்தாழ்வானை நிரோதிக்க –
ஸ்ரீ கிருஷ்ணன் இந்த வ்ருத்தாந்தைக் கேட்டு -அவன் மேல் படை எடுத்து வர –
ருத்ரனும் சபரிகரனாய் கொண்டு வந்து எதிரிட்டு -ஸ்ரீ கிருஷ்ணனோடே கோர யுத்தம் பண்ணி -பலாயிதனான பின்பு –
தன்னை உள்ளபடி அறிந்து ஸ்தோத்ரம் பண்ணினவாறே –
அப்போது ருத்ரன் முதலான தேவ ஜாதிக்காக – பாணனுடைய ஆர்த்த அபராதத்தைப் பொறுத்த
ஸ்ரீ கிருஷ்ணனை ஸ்துதிக்கும் ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு மகா நிஷேப பூதர் -என்கிறார் .

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

தன்னை எதிர்த்து போரிட்ட அமரர் மக்கள் இவர்களோடு கூடிய முக் கண்ணன் என்னும் இவர்கள்
தோல்வி அடைந்து தன் வைபவத்தை அறிந்து துதிக்க –அவர்களுக்காக வாணன் அபராதத்தை
பொறுத்த ஸ்ரீ சர்வேஸ்வரனை ஏத்தும் ஸ்ரீ எம்பெருமானார்-எனக்கு சமயத்துக்கு உதவ சேமித்து வைத்த செல்வம்-என்கிறார்

ஸ்ரீ எம்பெருமானார்க்கு பூர்வாசார்யர்கள் ஆன ஸ்ரீ நாத முனிகள் ஸ்ரீ ஆளவந்தார் இவர்கள் இடம் உள்ள பக்தி பேசப்பட்டது-
கீழ் இரண்டு பாசுரங்களாலே –
இனி கீழ் கூறிய ஸ்ரீ ஆழ்வார் -ஸ்ரீ நாத முனிகள் -ஸ்ரீ ஆளவந்தார் -இவர்கள் பர தேவதையாக வழி பட்ட ஸ்ரீ கண்ணன் இடத்தில் –
அவருக்கு உள்ள ஈடுபாடு பேசப்படுகிறது –இந்த பாசுரத்தில் –
கண்ணன் கல்லது இல்லையோர் கண்ணே -என்று
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
நம் கண்ணன் கண் அல்லது இல்லை கண்
கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் எண்னும் திரு நாமம் திண்ணம் நாரணமே
ஸ்ரீ நம் ஆழ்வார் ஸ்ரீ கண்ணனையே பர தேவதையாக ஸ்தாபித்தார் –
ஸ்ரீ நாத முனிகள் யமுனைக் கரையிலே குடி இருந்து யமுனைத் துறைவனை வழி பட்டும் –
அத திருநாமத்தையே தம் திருப் பேரனாருக்கு சாத்தச் சொல்லியும் –
அரசன் தன் பெண்டிரும் தானுமாய் இவர் யோகத்தில் இருப்பதைக் கண்டு வியந்து மீண்டு போகும் பொழுது –
திரு உடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன் என்னும் -என்ற படி ஸ்ரீ கண்ணனும் கோபியருமாக கருதி –
அம் மேதகு மன்னனை பின் தொடர்ந்து – ஸ்ரீ கண்ணனை தாம் காமுற்று பரதேவதையாய் வழி பட்டதை காட்டி அருளினார் –
ஸ்ரீ ஆளவந்தாரும் ஸ்ரீ கண்ணனை –தனைப் பற்றி அருளிய ஸ்ரீ கீதையை –
ஸ்ரீ மணக்கால் நம்பி இடம் இருந்து கேட்டு -அதில் கூறப்படும் பர தேவதையை தவிர மற்று ஒரு உபாயம் இதனின் மிக்கது இல்லை –
அதனை இப்போதே சாஷாத் கரிக்க வேணும் என்று வேட்கை மீதூர்ந்து –
ஸ்ரீ மணக்கால் நம்பி ஸ்ரீ திருவரங்கத்தால் ஸ்ரீ பெரிய பெருமாளை காட்ட –
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடும் அன்று தொட்டு பிரியாது ஸ்ரீ கீதைப் பொருளாம் அரங்கனை வழி பட்டு –
ஸ்ரீ கண்ணன் பால் உள்ள தன் பரத்வ பிரதிபத்தியை காட்டி அருளினார் –

இவ்விதம் ஆழ்வாரும் ஆச்சார்யர்களும் உகந்த ஸ்ரீ கண்ணனை ஸ்ரீ எம்பெருமானாரும் ஏத்துவதாக -கோருகிறார் ஸ்ரீ அமுதனார் –
ஸ்ரீ கண்ணனது பரத்வம் பாணாசுர யுத்தத்தில் தெளிவாக வெளிப்படுதலின் வாணனது பிழையை
பொருத்து அருளிய தூய்மையை ஸ்ரீ எம்பெருமானார் எத்துவதாக சொல்லுகிறது இந்த பாசுரம் –

கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –

பத உரை –
கார்திகையானும் -கார்த்திகேயன் என்று சொல்லப்படுகிற சுப்ரமண்யனும்
கரி முகத்தானும் –யானை முகனான கணபதியும்
கனலும் -அக்னி தேவனும்
முக் கண் மூர்த்தியும் -மூன்று கண்கள் கொண்ட வடிவு படைத்த ருத்னனும்
மோடியும் -காளியும்
வெப்பும் -ஜவர தேவதையும்
முதுகிட்டு -புற முதுகு காட்டி ஓடி
பின்னர்
மூ வுலகும்-மூன்று உலகங்களையும்
பூத்தவனே என்று -உண்டு பண்ணிணவனே என்று
போற்றிட -துதிக்க
அவர்க்காக
வாணன் -பானாசுரனுடைய
பிழை பொறுத்த -குற்றத்தை மன்னித்த
தீர்த்தனை-சுத்தமானவனை
ஏத்தும் -ஸ்தோத்ரம் செய்கிற
இராமானுசன்-எம்பெருமானார் –
என் தன் சேம வைப்பு –எனக்கு சேமித்து வாய்த்த செல்வம் ஆவார் –

கிருத்திகா நஷத்திர சம்பந்தத்தாலே கார்த்திகேயன் என்று சொல்லப்படுகிற ஸூப்ரஹ்மண்யனும் கஜ முகனான கணபதியும் –
அவர்களுக்கு சகாயமாய் வந்த அக்னியும் -த்ரி நேத்ர யுக்தமான-வடிவை உடைய ருத்ரனும் – துர்கையும் -ஜ்வரமும்–
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடியங்கி யோடிட -திரு சந்த விருத்தம் -71 – என்கிறபடியே
புறம் காட்டி யோடி –
கிருஷ்ண கிருஷ்ண மஹாபாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம் -விஷ்ணு புராணம் -5 33-41 – –
என்கிறபடியே ஸ்ரீ சர்வேஸ்வரன் என்று அறிந்த பின்பு –
க்ருதகம்- அக்ருதகம் -க்ருதகாக்ருதம் -என்று மூன்று வகைப் பட்டு இருக்கிற இந்த அண்டத்தை உன்னுடைய
திரு நாபீ கமலத்திலே ஜனிப்பித்தவனே -என்று அவனுடைய ஜகத் காரணத்வ கதனத்தாலே –
அவனுக்கும் தங்களுக்கும் உண்டான பித்ரு புத்ர சம்பந்தாதிகளை ஸூசுப்பித்து நின்று தங்களை ஆஸ்ரயித்த
வாணனுடைய ரஷண அர்த்தமாக ஸ்தோத்ரம் பண்ண –
அவர்களுக்காக பாணாசுரனுடைய அபராதத்தை ஷமித்த குண சுத்தியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை
அந்த குண வித்தராய் கொண்டு -ஏத்துகிற ஸ்ரீ எம்பெருமானார் -எனக்கு ஆபத்துத் துணையாக சேமித்து வைத்த -தனம் ..
போற்றுதல்-புகழ்தல்
வைப்பு -நிஷேபம்–

தோள் பலம் கண்ட பின்பே ஸ்தோத்ரம் பண்ணினான் ருத்ரன் –
கிருஷ்ண கிருஷ்ண மா பாஹோ-பிரகலாதன் -விரோசனன் -மஹா பலி -நமுசி -பாணன் -இருவரும் பிள்ளைகள் –
நமுசி மஹா பலி திருக் கோவலூரில் சேவிக்கலாம் –இதுவும் ஒரு பரம்பரை -அவதாரங்களும் இவர்களுக்காக –
காமரு சீர் அவுணன் -அன்றோ –
ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்ரீ நாத முனிகள் ஸ்ரீ ஆளவந்தார் -மூவர் திருவடி சம்பந்தம் அருளிச் செய்து –
இவர்கள் மண்டி கிடந்த ஸ்ரீ கண்ணன் பற்றி அருளிச் செய்கிறார் -இதில் –
அவன் இவன் என்று கூழேன் மின் -நெஞ்சினால் நினைப்பவன் எவன் அர்ச்சை பாடிய உடனே
அன்று தேர் கடாவின கழல் காண்பது என்று கொல் கண்களே என்பர் -ஸ்ரீ கிருஷ்ண அனுபவமே -ஸ்ரீ நம்மாழ்வார்
மூன்றாம் பதிகம் -முதல் இரண்டாலும் கொள்கை நிரதேசித்து அருளின பின்பு -சாஸ்த்ர மரியாதை படி நாராயணனே -என்றார் –

கார்த்திகையானும் -இத்யாதி
பிரகலாதனுடைய பௌத்திரனாய் -மகா பலியினுடைய புத்ரனான -பாணன் என்கிற மகா அசுரன் கோரமான தபச்சுக்களால்
ருத்ரனை பிரசன்னனாக்கி வசீகரித்துக் கொண்டு –
நீ என் வாசலில் இருந்து சகல லோக ஜெயத்தையும் பண்ணித் தர வேண்டும் என்று அர்த்தித்தவாறே -ருத்ரனும் அப்படியே
பார்யா புத்த்ராதி சஹிதனாய் வந்து தலையில் பூ வாடாதபடி உன்னைக் காக்கிறேன் என்று பிரதிக்ஜை பண்ணி
அவனுடைய வாசலிலே இருக்கிற காலத்திலே-
அவனுடைய கன்யகையான உஷா ரூப லாவண்யாதிகளால் அப்ரதிமையாய் இருக்கை யாலே –
அவளுக்கு க்ரீடார்த்தமாக ஒரு ஸௌதத்தை பண்ணிக் கொடுக்க – அவளும்
பஹூ பரிசாரிகா ஸ்திரீகளோடே அந்த ஸௌத தத்திலே விஹரியா நின்று கொண்டு -தனக்கு
தகுதியானவர்களைத் தேடும் பருவம் வந்த வாறே -ஒரு மாய பிறவியான தோழியை அழைத்து –
பூ லோகத்தில் இருக்கிற ராஜ குமாரர் எல்லாரையும் -ஒரு சித்ர படத்திலே எழுதிக் கொண்டு வர வேண்டும் என்று சொல்ல –
அவளும் அப்படி எழுதிக் கொண்டு அவள் கையில் கொடுக்க -அவள் எல்லோரையும் பார்த்து
அவர்களிலே ஸ்ரீ மத் த்வாரக நகர வாசியாய் -ஸ்ரீ கிருஷ்ணனுக்கு பேரனாய் -ஸ்ரீ பிரத்யும்னனுடைய குமாரனான ஸ்ரீ அனிருத்தாழ்வானைப்
பார்த்து -அவரையே வரிக்க வேணும் என்னும் அதி வ்யாமோகத்தாலே அந்த தோழியை பிரார்த்திக்க –
அவளும் அசுர ஜாதியில் பிறந்த மாயாவினி யாகையாலே -ஸ்ரீ மத் துவாரகையில் உள்ள எல்லாரையும் வஞ்சித்து –
ஸ்ரீ அநிருத் தாழ்வானை எடுத்துக் கொண்டு வந்து அந்த ஸௌததத்திலே வைக்க –

ஸ்ரீ உஷையும் ஸ்ரீ அநிருத் தாழ்வானும் அந்யோந்யம் ச வதித்துக் கொண்டு -காந்தர்வ விவாஹத்தாலே
ஒருவரை ஒருவர் வரித்து போக பரராய் இருக்க –
பாணனும் அச் செய்தி அறிந்து குடில சித்தனாய் ஸ்ரீ அநிருத் தாழ்வானைப் பிடித்து நிரோதிக்க –
இவ் வ்ருத்தாந்தத்தை ஸ்ரீ கிருஷ்ணன் கேட்டருளி வாணன் மேல் சீறி ச பரிகரனாய் படை எடுத்து வர –
அவன் வாசலில் இருந்த ருத்ரன் எதிரிட்டு தோற்று ஸ்துதி பண்ணினான் என்று -இந்த வ்ர்தாந்த்தங்கள் எல்லாம் –
பாஹவத ஹரிவம்சாதிகளிலே பிரசித்தம் இறே –
அந்த கதா முகேன இப் பாட்டை அருளிக் செய்கிறார் –

கார்த்திகையானும் –
ருத்ர புத்ரனாய் கிருத்திகா நஷத்ரத்திலே ஜலத்திலே ஜனித்த சண்முகனும்
கார்திகையானும்
சரவணத்தில் பிறந்த சுப்ரமணியனுக்கு கார்த்திகைப் பெண்கள் பால் கொடுத்த காரணத்தால் கிருத்திகை மன்னனாக
அவன் கூறப்படுகிறான் -கார்த்திகேயன் -எனபது வட மொழி பெயர்

கரி முகத்தானும் –
ருத்ரன் தஷ யாக த்வம்சம் பண்ணின போது அங்கே இருந்தவர்கள் இவனுடைய சிரசை சேதித்தவாறே –
தேவ ஜாதி எல்லாம் திரண்டு வந்து ஒரு ஆனையினுடைய தலையை அறுத்துக் கொண்டு வந்து -இவன் கழுத்தின் மேலே சேர்க்க –
அன்று தொடங்கி கஜானனன் என்ற பேரை வகித்த ருத்ர கணபதியும் –
கரி முகத்தானும்
கரி-யானை-வட சொல் –
கார்திகையானும் கரி முகத்தானும் முக் கண் மூர்த்தியினுடைய மக்கள் ஆவர் –

கனலும் முக்கண் மூர்த்தியும் –
லோக சம்ஹாரம் பண்ணுகிற சம்வர்த்த காலாக்னி போலே பிரஜ்வ விதமான
மூன்று கண்களை உடைய நாமத்தாலே விருபாஷன் என்று பேசப்படுகிற ருத்ரனும் –
அன்றிக்கே –
கனலும் -என்று
அவர்களுக்கு சகாயமான அக்னியை சொல்லவுமாம் –
முக் கண் மூர்த்தி –
எரித்து விடுவான் என்னும் அச்சத்தை விளைவிக்கக் கூடிய வடிவு படைத்தவன் -என்றபடி
இத்தகைய திறன் உடைமையே ஸ்ரீ கண்ணனையும் மதிக்காது எதிர்க்கும்படி செய்தது -என்க-

மோடியும் –
துர்க்கையும் –
வெப்பும் –
யுத்த பரிகரமாய் எதிர்படைக்கு சந்தாபகரமான -ஜ்வராதி தேவதையும் –
மோடியும் –
இவளை ஸ்ரீ விஷ்ணு புராணம்-கோடரி-என்கிறது
அசுரர்கள் உடைய குல தேவதையாய் -வித்யா ஸ்வரூபமான இவள் வாணன் மீது சக்கரத்தை
ஸ்ரீ கண்ணன் பிரயோகிக்க முற்படும் போது -வாணனை காப்பதற்காக -கண்ணன் எதிரே அரையில் ஆடை இன்றி
நின்றதாகவும் -அதனால் வெட்கி -ஸ்ரீ கண்ணன் கண்களை மூடிக் கொண்டே சக்கரத்தை பிரயோகித்ததாகவும் –
அந்த புராணத்திலே பேசப்படுகிறது –
அவ்விடத்துக்கு ஸ்ரீ எங்கள் ஆழ்வான் -அருளிய வ்யாக்யானத்தில் –
ஸ்ரீ கண்ணன் அவளுக்கு -பன்னிரண்டு ஆண்டுகள் என்னிடம் பக்தி செலுத்திய பயன் உன்னை ஒரு கால் பார்த்து
வணங்கின மாத்ரத்திலே நசித்து விடும் -என்றும் –
எப்பொழுதும் அரையில் ஆடை அற்றவளாக கடவை -என்றும் சாபம் இட்டதாக மேற்கோள் காட்டி யுள்ளார் –
ஸ்ரீ திரு மழிசை பிரானும்-மோடியோடி லச்சையாய்ச் சாபமெய்தி முக் கணான் – என்று திருச்சந்த விருத்தத்தில் -53 –
சாபமிட்ட செய்தியை அருளி செய்து இருப்பதும் -இங்கு அறிய தக்கது –
அதன் வ்யாக்யானத்தில் -ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை -சாத்விகர்க்குத் தர்சனமே தொடங்கி லஜ்ஜையாம் படி
இவர்களால் அபரிக்ராஹ்யையான சாபத்தை ப்ராபித்த காளியோடே-என்று அந்த சாபத்தை விளக்கி இருப்பதும் காண்க –

மோடியோட இலச்சையாய சாபம் எய்தி முக்கண்ணான்
கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து
ஓட வாணன் ஆயிரம் கரம் கழித்த வாதிமால்
பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்ற பேரதே ––ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–53-

வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
இண்ட வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி யோடிடக்
கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே –ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–71-

ஆயிரம் குன்றம் சென்றது தொக்கு அனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள்
ஆயிரம் துணிய அடல் மழுப்பற்றி மற்று அவன் அகல் விசும்பு அணைய
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறி துயில் அலைகடல் நடுவே
ஆயிரம் சுடர் வாய் அரவணைத் துயின்றான் அரங்க மா நகர் அமர்ந்தானே––பெரிய திருமொழி–5-7-6-

நீணிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும் போர்கள் செய்து
வாண னாயிரம் தோள் துணித்ததும் உட்பட மற்றும் பல
மாணியாய் நிலம் கொண்ட மாயன் என்னப்பன் தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?––ஸ்ரீ திருவாய் மொழி–6-4-8-

இத்தனை சாதனங்களுடன் வந்து யுத்தம் பண்ணி –
ஸ்ரீ கிருஷ்ணனுடைய பாண பாதத்துக்கு சஹிக்க மாட்டாதே –
முதுகிட்டு –
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி யங்கி யோடிட –என்கிறபடியே – விமுகராய் புறம் காட்டி ஓடி –
முதுகிட்டு
பாணாசுர னோடு போரிட அவன் நகராகிய சோணித புரத்தை நோக்கி ஸ்ரீ கண்ணன் படை எடுத்து வந்த போது –
தானும் தன் மக்களும் பக்க பலமாக வந்த அக்னி முதலிய தேவர்க்களுமாக முக் கண்ணன் வாணனை காக்க முற்பட்டு
போருக்கு ஆற்றாது -புறம் காட்டி ஓடினான் -என்க –
பிறகு பாணாசுரன் ஸ்ரீ கண்ணனை நேர எதிர்த்து போரிட -அவ்வசுரனுடைய ஆயிரம் தோள்களையும் அறுத்து
அவனைக் கொல்ல ஸ்ரீ கண்ணன் கருதிய போது -முக் கண்ணன் தன்னால் அபயம் அளிக்கப்பட அவனைக் காக்கும் நோக்குடன் –
மூவுலகும் பூத்தவனே -என்று கண்ணனைப் போற்றி -வாணனை கொல்லாது காக்குமாறு வேண்டினான் -என்க –

அப்போது அவனுடைய பரத்வத்தை அறிந்து –
மூ வுலகும் பூத்தவனே –என்று –
க இதி பிரம்மணோ நாம ஈசோஹம் சர்வதேஹினா – ஆவாந்த வான்சே சம்பூதவ் தஸ்மாத் கேசவ நாமவான் -என்றும் –
ஏதவத் வைவிபுதச்ரே ஷ்டவ் பிரசாத குரோத ஜவ ச்மர்தவ் -ததா தர்சித பந்தானவ் ஸ்ர்ஷ்டி சம்ஹார காரகவ் -என்றும்
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய் தானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி யதனுள் கண் வளரும் -என்றும்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூர தனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-என்றும்
சொல்லுகிறபடியே
சமஸ்த லோகங்களையும் ஸ்ர்ஷ்டிக்கைக்காக காரண ஜலத்திலே ஒரு பவனான ஆலம் தளரின் மேலே பள்ளி கொண்டு
அவனுடைய திரு நாபீ கமலத்திலே -சதுர் முகன் தொடக்கமான சகல ஜகத்துக்களின் உடையவும் -உத்பத்தி காரணமாய்
இருப்பதொரு தாமரைப் பூவை விகசிப்பித்த ஜகத் காரண பூதன் ஆனவன் -என்று போற்றிட –

கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும் . ஜகதாகவே உபாதான காரணமாக
ப்ரஹ்ம சரீரம் நீராய் நிலனாய்–போல…நீ தான் புருஷோத்தமன்
தங்களுக்கும் அவனுக்கும் உண்டான பித்ர் புத்ராதி சம்பந்தங்களை சூசிப்பியா நின்று கொண்டு –ஸ்தோத்ரம் பண்ண –

போற்றுதல்-
புகழுதல் –
கிருஷ்ண கிருஷ்ண மகா பாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம் –என்றும் –
கிருஷ்னேதி மங்களானாம் யச்யவாசி பிர வர்த்ததே பச்மீபவந்தி ராஜேந்திர மகாபாதக கோடாயா-என்றும்
கிருஷ்ணா-என்றும் தான் தீர கழியச் செய்த அபராதத்துக்கு பிராயச்சித்தார்தமாக -திரு நாம சங்கீர்த்தனம் பண்ணுகிறான் காணும் –
ப்ராயச்சித்தான்ய சேஷாணி தப கர்மாத்மகாநிவை -யாநி தேஷா மசெஷாணாம் கிருஷ்ண அனுஸ்மரணம் பரம் -என்னக் கடவது இறே –

கிருஷ்ண -என்றும்
கிருஷி ப்ர்பூ வாசகஸ் சப்தோனஸ் ச நிர்வர்த்தி வாசக -தயோரைக்யம் பரப்ரம்ம கிருஷ்ணா இத்யபிதீயதே -என்னும்படி –
உபய விபூத் யாத்மகனாய் – என்றும் –
ஜகச்சச -என்று தத்ரூப மகா ப்ர்திவி யானவனே – என்றும் –
மகா பாஹோ -பூர்வ காலத்தில் தேவர்களும் ரிஷிகளும் -அசுத்தாஸ்தே சமஸ்தாச்து தேவாத்யாம் கர்ம யோக -என்றும் –
அவித்யாந்தர்க்க தாஸ் சர்வே -என்றும் –
நமேவிதுஸ் சூரகணா பிரபவன்ன மகர்ஷய – என்றும் சொல்லப்பட்ட பிரக்ரதர் யாகையாலே –
ஹரி ஹரர்கள் இருவருடையவும் -பலாபலங்களை அறிவதற்காக விஸ்வ கர்மாவை அழைத்து -இரண்டு தனுச்சுக்களைப் பண்ணச் சொல்ல –
அவனும் அப்படியே பண்ணிக் கொடுக்க -அவர்கள் அந்த தனுச்சுக்களை எடுத்து இருவர்
கையிலும் கொடுத்து -யுத்தம் பண்ண வேணும் என்று பிரார்த்திக்க -அப்படியே இருவரும் யுத்தம் பண்ணுகிற போது –
விஷ்ணுவுடைய சர வேகத்தை -ருத்ரன் சஹிக்க மாட்டாதே மிகவும் அவசன்னனாய் -ரஜஸ் தமச்சுக்கள் அபி பூதமாய் –
சத்வம் தலை எடுத்தவாறே -அப்போது அவரை -சர்வ ஸ்மாத்பரன் -என்று அறிந்து -ஸ்தோத்ரம் பண்ணினான் -என்று பிரசித்தம் இறே –
அப்படியே இப்போதும் தமோத்ரேகத்தாலே யுத்தம் பண்ணி -அவனாலே அடி பட்டு -பின்பு சத்வம்தலை எடுக்க –
பூர்வ காலத்திலே அபதானத்தை ஸ்மரித்து -அவனுடைய பாஹூ பலத்தை அறிந்தவன் ஆகையாலே –
மகா பாஹோ என்று சம்போதிக்கிறான் –
ஜானே -இவ்வளவும் தேவரீர் கொடுத்த அதிகாரத்தாலே யுத்தம் பண்ணி -அடி பட்ட பின்பு –சத்வம் தலை எடுத்து தெளிந்தேன் –
சத்வாத் சஞ்சாய தேஜ்ஞ்ஞானம் -என்றது இறே -தெளிந்த படி
எங்கனே என்னில் –
த்வாம் புருஷோத்தமம் -என்றும் –
வாசுதேவ குமாரராய் -ஆஸ்ரித சுலபனான தேவரீரை – என்றும் –
புருஷோத்தமம் –என்றும் -அதோச்மிலோகேவேதேச பிரதித புருஷோத்தம -யோ மா மேவ மசமூடே ஜாநாதி புருஷோத்தமம் -என்று
தேவரீர் அருளிச் செய்த படி -பரம புருஷன் என்று -இப்போது தெளிந்தேன் என்று -போற்றிட –
இப்படி குணி நிஷ்ட குணாபிதானம் பண்ணி ஸ்துதிக்க –

வாணன் பிழை பொறுத்த –
இந்த ஸ்தோத்ரத்தாலே பிரசன்னனாய் ஸ்ரீ அநிருத் தாழ்வானை நிரோதித்து –
மகா அபராதம் பண்ணி நின்ற -வானனுடைய மகா அபராதத்தை ஷமித்த –

தீர்த்தனை –
ஒருவன் சில அபராதங்களைப் பண்ணினால் அவை அனுபவ பிராயசித்தங்களாலே போக்க வேணும் -இறே –
இவன் அப்படி அன்றிக்கே -ஒருவரை ஸ்தோத்ர மாத்ரத்தாலே -அவனுடைய பாபங்களை எல்லாம் பொடி பண்ணின -பாவனனை –
பதித பாவனனை-

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே–7-10-11-

வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை –
வாணனுக்கு அபயம் அளித்து -தன்னை எதிர்த்தவன் முக் கண்ணனாய் இருப்பினும் -தற் சமயம்
தன் பிரபாவத்தை உள்ளபடி உணர்ந்து அவன் வேண்டிக் கொண்டமையின் வாணனை கொல்லாது விட்டதோடு –
அவன் பிழையையும் பொறுத்து அருளினான் ஸ்ரீ கண்ணன் –
அத்தகைய சுத்தமான குணம் உடையவன் என்றபடி-இவ் வரலாற்றினை ஸ்ரீ ஹரி வம்சத்திலும் -ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் –
ஸ்ரீ பாகவதத்திலும் விரிவாக காணலாம் -இதன் சுருக்கம் வருமாறு –

பாணாசுரன் பரம சிவ பக்தன்-பரம சிவன் நடமாடும் போது மத்தளம் கொட்டி அவனை மகிழ்வித்தான் –
பரம சிவன் மகிழ்ந்து அவனுக்கு ஆயிரம் கரம் கொடுத்ததோடு -பரிவாரமும் தானுமாக -அவனுக்கு காவலாக கூடவே இருந்தான் -.
தம்பதிகளான பார்வதி பரமேஸ்வரர்கள் இணைந்து விளையாடி மகிழ்வதை பாணாசுரன் மகள் உஷை கண்டாள் –
தானும் இவ்வாறே கணவனைப் பெற்று அவனோடு இன்புற்று வாழ்வதற்கு ஆசை கொண்டாள்-
இதனை அறிந்த பார்வதி -வைகாசி மாதம் வளர் பிறை த்வாதசி அன்று நீ ஒரு கனா காண்பாய் –
அக்கனாவில் உன்னோடு ஒரு ஆடவன் கூடுவான் -அவனே உனக்கு கணவன் ஆவான் -அவனோடு கூடி விளையாடி
நீயும் என்னைப் போல் இன்புறுவாய் -என்று உஷையை நோக்கி கூறினாள்-
அவ்வாறே உஷை கனா கண்டாள் –
அவனை தன் தோழி சித்ர லேகை எழுதிக் காட்டிய பல சித்திரங்களுள் ஒன்றினால் அடையாளம் கண்டு கொண்டாள் உஷை-
அவன் ஸ்ரீ மத் த்வாரகையில் உள்ள ஸ்ரீ கண்ணனுடைய பேரனும் ஸ்ரீ பிரத்யும்னனுடைய புத்திரனுமான ஸ்ரீ அநிருத்தனே -எனபது ஊர்ஜிதம் ஆயிற்று –
அந்தபுரத்திலே உறங்கிக் கொண்டு இருக்கும் போது சித்ர லேகை தன் யோக வித்யையின் பலத்தினால்
யாரும் அறியா வண்ணம் அவனை உஷையின் கன்னி மாடத்தில் கொணர்ந்து அவனை காண்பித்தாள்
ஸ்ரீ அநிருத்தன் உஷையுடன் கூடிக் கழிப்பதை பணி யாட்கள் வாயிலாக ஒருவாறு அணிந்த வாணன்
போராடி இறுதியில் நாக பாசத்தாலே அவனைக் கட்டிப் போட்டான் –

ஸ்ரீ அநிருத்னனைக் காணாது கலங்கிய ஸ்ரீ கண்ணன் முதலியோர் நாரதர் மூலம் விஷயம் அறிந்து
ஸ்ரீ அநிருத்னனை மீட்பதற்காக சோணித புரத்தை நோக்கி படை எடுத்து வந்தனர் –
நினைத்தும் வந்த ஸ்ரீ கருடன் மீது ஸ்ரீ கண்ணன் எழுந்து அருளினான் –
வந்த படையை சிவ பிரானுடைய ப்ரமத கண்கள் தடுத்தன -அவர்களை சிதற அடித்து நகரை நெருங்கியது ஸ்ரீ கண்ணன் படை –
பின்னர் மூன்று தலைகளும் மூன்று கால்களும் கொண்ட சிவ பிரானை சேர்ந்த ஜவர தேவதை வாணனை
காப்பதற்காக கண்ணனோடு போர் இட்டது -வைஷ்ணவ ஜவர தேவதையால் அது நிராகரிக்கப்பட்டது –
பிறகு அக்னி தேவன் தோற்கடிக்கப் பட்டான் –
அசுரப் படை அனைத்தும் -வாணனும் -சிவ பிரானும் -சுப்ரமணியனும் போருக்கு எழுந்தனர் –
ஸ்ரீ கண்ணனுக்கும் பரம சிவனுக்கும் பயங்கரமான போர் மூண்டது –
ஸ்ரீ கண்ணன் ஜ்ரும்பகாஸ்த்ரத்தால் சிவ பிரானை கொட்டாவி விட்டு கொண்டே இருக்க செய்து ஒய்வுறச் செய்தான் –
சுப்பிரமணியன் வாகனம் கருடனால் புண் படுத்தப்பட்டது –
பிரத்யும்னனின் பாணங்களால் நோவுற்று ஸ்ரீ கண்ணன் ஹூங்காரத்தாலே சக்தி ஆயுதம்
பயன் அற்று போரினின்றும் விலகி ஓடினான் சுப்பிரமணியன் –
அசுரப்படைகளும் சிவ பரிகாரங்களும் நலிவுற்றன –

பின்னர் நந்தி தேரோட்ட ஸ்ரீ கண்ணனோடு போரிட முற்பட்டான் வாணன்
ஐந்நூறு விற்கள் ஏந்தி ஆயிரம் கை படைத்த வாறன் வாணன் -பல பல பாணங்களை எய்து
இறுதியில் ஸ்ரீ கண்ணனை கையில் சக்கரம் எடுக்கும்படி செய்தான் –
வாணனை கொல்லும் கருத்துடன் ஸ்ரீ கண்ணன் கையில் சக்கரம் எடுத்ததும் வாணனை காப்பதற்காக அசுரர்களுடைய
குல தெய்வமும் வித்யா ரூபமுமான கோடரி என்னும் பெயர் வாய்ந்த கௌரியின் சக்தி
அறையில் ஆடை இன்றி கண் எதிரே நின்றாள்-அவள் நின்றதும் ஸ்ரீ கண்ணன் கண்ணை
மூடிக் கொண்டே வாணன் தோள்களை துணிப்பதர்க்காக சக்கரத்தை ஏவினான் -அவன்
தோள்களை அது அறுத்து தள்ளியது -மீண்டும் அவனை நாசப் படுத்துவதற்காக சக்கரத்தை
ஏவ முற்படுவதை கண்டு உமாபதி தன்னால் அபயம் அளிக்கப்பட்ட வாணனை பிராணன் போகாமல் காப்பதற்காக
ஸ்ரீ கண்ணனை போற்றி வேண்டிக் கொண்டான் –

கிருஷ்ண கிருஷ்ண மஹாபாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம் -என்று
நீண்ட கை படைத்த கிருஷ்ண கிருஷ்ண உன்னைக் புருஷோத்தமனாக அறிகிறேன் –
கிருஷ்ண கிருஷ்ண ஜகந்நாத- எனபது தற்காலப் பாடம் -என்று தொடங்கி
நான் அபயம் என்று சொன்னதை பொய்யாக்காது அருள வேணும் –
என்னிடம் இருந்து வரம்யேற்று செருக்கு கொண்டனன் – பொருத்து அருள வேண்டும் என்று மன்றாடினான் –
ஸ்ரீ கண்ணன்-உனக்காக பொறுத்தேன் என்று சக்கரத்தை ஏவாது வாணனை உயிரோடு விட்டு விட்டான் –
ஸ்ரீ கருடன் காற்றுப் பட்டதும் அநிருத்தனை கட்டி இருந்த நாக பாசம் விடுபட்டது -ஸ்ரீ அநிருத்னனையும் ஸ்ரீ உஷையையும் மீட்டுக் கொண்டு
ஸ்ரீ கண்ணன் முதலியோர் ஸ்ரீ மத் த்வாரகைக்கு மீண்டும் வந்து சேர்ந்தனர் –
உன்னை புருஷோதமனாக அறிகிறேன் என்றமையால்-அறியாமையால் முன்பு போரிட்டதை சிவ பிரான்
ஒப்புக் கொண்டமை தெரிகிறது -ஸ்ரீ அமுதனார் –
இங்கே முதுகிட்டு -போற்றிட -என்னும் சொல் அமைப்பாலே
முதுகிட்டமையால் பிரபாவத்தை அறிந்து -போற்றினதை உய்த்து உணர வைத்தார் –
போற்றிட வாணன் பிழை பொறுத்த -என்றமையின் போற்றின முக் கண்ணனுக்காக வாணன் பிழை பொறுத்தமை தோற்றுகிறது-

மூ வுலகும் பூத்தவனே என்று போற்றிட –
இந்த மூ வுலகு எனபது -பூ லோகம் -ஸ்வர்க்க லோகம்-பாதாள லோகம் என்னும் மூ வுலகைக் குறிப்பிட வில்லை –
எல்லா வுலகும் ஸ்ரீ கண்ணன் படைப்பு ஆதலின் -ஆனவே அணைத்து உலகங்களையும் அடக்குவதற்காக –
கிருதகம்-அகிருதகம் -கிருதகா கிருதகம் –என்னும் மூ வகைப்பட்ட வுலகம் என்று கொள்ள வேணும் –
இந்த அண்டத்தையே -என்றதாயிற்று –
பூத்தவனே –
ஸ்ரீ நாபீ கமலத்தை மலரச் செய்வதன் மூலம் பிறப்பிதவனே -என்றபடி –
பூவின் இடம் உள்ள பூத்தலை அதனை உடையான் மேல் ஏற்றி கூறுவது உபசார வழக்கு –
ஸ்ரீ நாபீ கமலம் மலருவதே லோக சிருஷ்டி என்றும்
அது கூம்புவதே லோக சம்ஹாரம் என்றும் சொல்லப்படுதலின் -இங்கனம் கூறினார் –
இனி பூத்தல்
விரிதலாய் உலகு அனைத்தும் தன்னுள் ஒடுங்க நின்ற இறைவன் விரிவு அடைதலே சிருஷ்டி யாதலின் -இங்கனம் கூறினதாகவுமாம் –
மூ வுலகும் பூத்தவனே -பொறுத்து அருள்க -எனபது சொல் எச்சம் –
பிறப்பித்தவன் நீ -பிறந்தவர்கள் நாங்கள் – ஆகையால் நாம் தந்தையும் மக்களும் ஆகிறோம் –
பிதேவ புத்ரச்ய -என்றபடி மகன் திறத்து பிதா பொறுத்துக் கொள்வது போல பொருத்து அருள வேணும் எனபது கருத்து –
வாணன் மன்னிப்பு கோரா விடினும் அவனுக்காக முக் கண்ணன் கோர – வாணன் பிழை பொறுத்தான் ஸ்ரீ கண்ணன் –
இதனால் -அஹமச்ம்ய பராதானாமாலய -நான் குற்றங்களுக்கு கொள்கலம்-என்று
சரண் அடைந்தவருக்கு மாத்திரம் அன்றி -அவர் அபிமானத்தை பெற்றவருக்கும் குற்றங்களை பொறுத்து
அருள் சுரக்கும் பெரும் தன்மை கண்ணன் இடம் துலங்குவது காணலாம் –

ஸ்ரீ கண்ணன் என்னும் தெய்வம் தவிர மற்றைத் தெய்வங்கள் கருணை காட்டினும் ஆபத்து காலத்து உதவகில்லாது
கை விட்டு ஓடி விடுவன -சீறின நிலையிலும் ஸ்ரீ கண்ணனே ஆபத்துக்கு உதவுமவன் என்பதும் இங்கே தெளிதற் பாலது –
தேக பந்துக்களை துறந்து -பற்ற வேண்டியவனான ஸ்ரீ கண்ணனை தன் பெண்ணாகிய உஷைக்காக பகைத்து
போரிடப் புறப்பட்டது -பாணனது பிழையாகும் –
மேலும் காதல் மணம் புரிந்து தன் மகள் ஸ்ரீ அநிருத்னனோடு கூடினதற்கு பிறகு ஸ்ரீ கண்ணனோடு தனக்கு சம்பந்தம் வாய்த்து
இருப்பதை பயன்படுத்தி காதல் தம்பதிகளை இணைத்து ஸ்ரீ கண்ணன் இடம் ஒப்படைத்து பேர் உவகை கொள்ளுமாறு
செய்ய வேண்டி இருக்க தன் தோள் வலிமையை பெரிதும் மதித்து போருக்கு புறப்பட்டு அல்லலுக்கு உள்ளாகியதும் அவன் இடம் உள்ள பிழையாம் –
அனுபவித்தோ அல்லது பிராயச்சித்தம் செய்தோ தீர்க்க வேண்டிய அபராதங்களையும் பகைவர் திறத்தும் போக்கியும் போக்கி அவர்களை
தூயராக்கிய தூய்மையை கருதி -தீர்த்தன் -என்கிறார் –

ஆபத்துக் காலத்திலேயே உதவிய ஸ்ரீ கண்ணனது தூய்மையினை ஏத்தும் ஸ்ரீ எம்பெருமானாரோ எனக்கு
ஆபத்து காலத்தில் உதவுவதற்காக சேமித்து வைத்த செல்வம் என்றார் ஆயிற்று –

ஏத்தும் –
இந்த பிரபாவத்தை இட்டு ஸ்துதிக்கிற –
ஏத்தும் -என்கிற வர்த்தமான நிர்தேசத்தால் –
ஸ்ரீ பாஷ்ய கீதா பாஷ்யாதிகளாலே -சர்வ காலத்திலும்-லோகத்தில் அவனுடைய பிரபாவத்தை ச்தாபிக்கிறவர் -என்றபடி –

இராமானுசன் –
எம்பெருமானார் –

என் தன் சேம வைப்பே –
எனக்கு யாவதாத்ம பாவியாய் -உஜ்ஜீவிக்கும்படி -சேமித்து வைத்த ஆபத்து தனம் – என்றது ஆய்த்து –
வைப்பு -நிஷேபம் –

பேய் முலைத்தள நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளியார் வணங்கப் படும் தேவனை
மாயனை மதிள் கோவலிடைக் கழி மைந்தனை யன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை யிலங்கும் சுடர்ச் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினைக்
காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-4-
என்று ஸ்ரீ பெரும் புறக் கடலை வைப்பு நிதி என்றார் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார்

வைத்த மா நிதியாம் மது சூதனையே அலற்றிக்
கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக் கோளூர்க்கே
சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுல காள்வாரே–6-7-11-

ராமானுசன் எனக்கு சேம வைப்பே –
நம் கண்ணன் கண்
தீர்த்தன் உலகு அளந்த சேவடி போல் ஸ்ரீ சுவாமியும் தீர்த்தன் என்கிறார் இங்கு
என்றும் ரஷிக்க போகிறவர் ஸ்ரீ ராமனுஜன்–யாராலும் கை விட்டவரை ஸ்ரீ சுவாமி காப்பார்..
இந்த குணம் ஸ்ரீ கீதாசார்யன் மூலம் பெற்றார் ஸ்ரீ ஸ்வாமி –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –21-நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர்-இத்யாதி —

April 4, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ ஆளவந்தார் உடைய திருவடிகள் ஆகிற ப்ராப்யத்தை பெற்றுடைய ஸ்ரீ எம்பெருமானார் என்னை ரஷித்து அருளினார் –
ஆகையால் ஷூத்ரருடைய வாசல்களிலே நின்று அவர்கள் ஒவ்தார்யாதிகளைச் சொல்லி ஸ்துதியேன்-என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

இவ்வளவும் -ஸ்ரீ ஆழ்வார்கள் உடையவும் -ஸ்ரீ மன் நாத முனிகள் உடையவும் சம்பந்தத்தை இட்டு –
ஸ்ரீ எம்பெருமானார் உடைய வைபவத்தை யருளிச் செய்து கொண்டு வந்து –
இதிலே சரம பர்வ நிஷ்டர் எல்லாருக்கும்-ஸ்வாமியான ஸ்ரீ ஆளவந்தார் உடைய திருவடிகளை உபாய உபேகமாக பற்றின –
ஸ்ரீ எம்பெருமானார் என்னை ரஷித்து- அருளின பின்பு -இனி நீசரான மனுஷ்யரை ஸ்துதித்து க்லேசப் பேடன் என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ ஆளவந்தார் உடைய திருவடிகளை பெரும் பேறாக உடைய ஸ்ரீ எம்பெருமானார் என்னை ரஷித்து அருளினார் .
ஆகையால் அற்பர்கள் உடைய வாசல்களில் நின்று அவர்கள் உடைய வள்ளன்மை முதலியவற்றைக்
கூறிப் புகழ் பாட மாட்டேன் -என்கிறார் –

நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர் தம் வாசல் பற்றித்
துதி கற்று உலகில் துவள் கின்றிலேன் இனித் தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமானுசன் என்னைக் காத்தனனே – 21- –

பத உரை –
தூய் நெறி சேர் -சுத்தமான ஒழுக்கம் வாய்ந்த
எதிகட்கு -சந்நியாசிகட்கு
இறைவன்-தலைவரான
யமுனைத் துறைவன் -ஆளவந்தார் உடைய
இணை -ஒன்றுக்கு ஓன்று ஒத்த
அடியாம்-திருவடிகள் ஆகிற
கதி -பேற்றை
பெற்று உடைய -அடைந்து அதனை உடையவராய் இருக்கிற
இராமானுசன் -எம்பெருமானார்
என்னைக் காத்தனனே-என்னைக் காப்பாற்றி அருளினார்
இனி -இனிமேல்
நிதியைப் பொழியும் -நவ நிதிகளையும் தாரையாகக் கொட்டும்
முகில் என்று -மேகம் என்று
துதி கற்று -புகழ் பாடப் பயின்று
உலகில் -இவ் உலகத்தில்
நீசர் தம் -அற்பர்கள் உடைய
வாசல் பற்றி –வாசலிலே காத்துக் கிடந்தது
துவள்கின்றிலேன் -துவண்டு வறுமை தோற்ற நிற்கின்றிலேன்-

வியாக்யானம் –
பரி சுத்த அனுஷ்டான யுக்தரான -எதிகளுக்கு நாதரான -ஸ்ரீ ஆளவந்தார் உடைய பரஸ்பர சத்ருசமான திருவடிகளாகிற
ப்ராப்யத்தை பெற்றுடையராய் இருக்கும் ஸ்ரீ எம்பெருமானார் என்னை ரஷித்து அருளினார் –
ஆன பின்பு நிதியை வர்ஷியா நிற்கும் மேகம் என்று அவர்களுடைய ஒவ்தார்ய கதனத்துக்கு உறுப்பான ஸ்தோத்தரங்களை
கற்று லோகத்திலே அஹங்காராதி தூஷிதரான தண்ணியர்கள் உடைய வாசலைப் பற்றி-நின்று –
என்னுடைய ரஷண அர்த்தமாக அவர்கள் அவசரம் பார்த்து துவளக் கடவன் அல்லேன் –
தூய் நெறி சேர் எதிகட்கு இறைவன் -என்கிற இது –
ஸ்ரீ ஆளவந்தாருக்கு விசேஷணம் ஆகவுமாம்-
நெறி-ஒழுக்கல்
கதி–அதாவது ப்ராப்யம்–

யதீஸ்வரர் -ஸ்ரீ ஆளவந்தாருக்கும் ஸ்ரீ எம்பெருமானாருக்கும் இயையும் –
இல்லாதது சொன்னேனுக்கு இல்லை என்றாய் -மொட்டைத் தலையன் -கதை
என்னை காத்தனன் -நீசனேன் நிறை ஒன்றும் இல்லாத என்னையும் கூட –
இன்பம் பயக்க -ஸ்ரீ திருவாறன் விளை அன்றோ – ஸ்ரீ திருவாய் மொழி அரங்கேற்றப் பட்ட திவ்ய தேசம் -துணைக் கேள்வி

தூய் நெறி சேர் –
சுருதி பத விபரீதஷ் வேளகல்ப ஸ்ருதவ் சப்ரக்ருதி புருஷ யோக ப்ராபகா சோனதத்ய –என்கிறபடியே
அபரிசுத்தமாய் இருக்கிற உபாயாந்தரங்களுக்கும் -பிரபகாந்தர பரித்யாகத்துக்கும் -அஞ்ஞான அசக்திகள் அன்று
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது என்றும் –
மதிராபிந்து மிஸ்ரமான சாதகும்ப மய கும்ப கத தீர்த்த சலிலம் போலே
அஹங்கார மிஸ்ரமான உபாயாந்தரம் என்றும் சொல்லப்படுகிற -அவத்யங்கள் ஒன்றும் இன்றிக்கே –
அத்யந்த பாரதந்த்ர்ய ஸ்வரூப அநு ரூபமாய் -அதிலும் -பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான ஈஸ்வரனை பற்றுகை அன்றிக்கே –
மோஷ ஏக ஹேதுவான சதாசார்யனைப் பற்றி -அதிலும் –
அஹங்கார கர்ப்பமான தான் பற்றும் பற்றுகை அன்றிக்கே -கிரூபா மாத்திர பிரசன்னாசார்யரான ஸ்ரீ ஆள வந்தார் –
தம்மாலே பரகதமாக ச்வீகரிக்கப் பட்டது ஆகையாலே -அத்யந்த பரிசுத்தமான
ஆசார்ய அபிமானத்திலே ஒதுங்கி வர்த்திக்கிற -தூய்மை -பரி சுத்தி –நெறி –உபாயம் –

சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1-

வியன் மூ வுலகு பெறினும் போய்த் தானே தானே ஆனாலும்
புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே அடிமை தலை நின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே–8-10-2-

வாய்க்க தமியேற்கு ஊழி தோறு ஊழி ஊழி மா காயாம்
பூக் கொள் மேனி நான்கு தோள் பொன்னாழிக் கை என்னம்மான்
நீக்க மில்லா வடியார் தம் அடியார் அடியார் அடியார் எம் கோக்கள்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே–8-10-10-

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற் கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திரு வுடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடைதோறு எம்மை ஆளும் பரமரே–3-7-1-

உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
புடையார் பொன் நூலினன் பொன் முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே–3-7-4-

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப் படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம் மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம் மடியார் அடியோங்களே–3-7-10-

மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே -8-10-3-

எதிகட்கு
ஐஹிக ஆமுஷ்மிகம் சர்வம் கதி ரஷ்டாஷரப்ப்ரத -என்றும் –
மாதா பிதா வுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம் -என்றும் சொல்லுகிறபடியே –
ஸ்வா சார்யரான ஸ்ரீ ஆள வந்தாரே தங்களுக்கு ஐ ஹிக ஆமுஷ்யங்கள் எல்லாம் என்று கொண்டு –
மேக பிந்துக்களை ஒழிய மற்று ஒன்றை விரும்பாத சாதகம் போலே – ததீய விஷயங்களை விரும்பாதபடி –
தம் தாமுடைய மனசை நியமித்துப் போகிற –ஸ்ரீ பெரிய நம்பி –ஸ்ரீ திருமலை நம்பி –ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி –
ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் -ஸ்ரீ திருமாலை ஆண்டான் -ஸ்ரீ திருக் கச்சி நம்பி –ஸ்ரீ மாறனேர் நம்பி -முதலானவர்களுக்கு –

இறைவன் –
ஸ்வாமி யானவர் –

யமுனைத் துறைவன் –
யமுனா தீரத்தில் எழுந்து அருளி இருந்த ஸ்ரீ மன் நாதமுனிகளுக்கு உத்தேச்யராய் –
ஸ்ரீ காட்டு மன்னார் கோயிலிலே எழுந்து அருளி இருந்த ஸ்ரீ சுவாமிகளுடைய திரு நாமத்தை வஹித்த ஸ்ரீ ஆள வந்தார் உடைய

இணை யடியாம்
பாவனத்வ போயத்வங்களாலே பரஸ்பர ச தர்சமான-திருவடிகள் ஆகிற –

கதி பெற்று –உபாயத்தை லபித்து-உபாய உபேயங்களாக பற்றி -என்றபடி –
கதி –
கதி -அதாவது ப்ராப்யமும் ப்ராபகமும் –
அத்தாலே லோகத்தில் உள்ள பிரபன்ன ஜனங்களுக்கு எல்லாம்-ஸ்வாமியாய் இருக்கிற-

இராமானுசன்b
எம்பெருமானார் –

என்னைக் காத்தனனே –
லோகத்தில் ஞாநாதிகரை ரஷித்தது ஆச்சர்யமாய் இராது –
பிரதி கூலனாய் இருக்கிற என்னை -அநு கூலனாக்கி ரஷித்தான் –
இது என்ன அகடிதகடநா சாமர்த்தம் என்று வித்தராகிறார் –

தூய் நெறி சேர் யதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் -கதி பெற்று உடைய -என்கிற இது –
ஸ்ரீ எம்பெருமானாருக்கு விசேஷணம் ஆகவுமாம் –

தூய் நெறி சேர் எதிகட் கிறைவன் –
இவ்வடை மொழி ஸ்ரீ யமுனைத் துறைவற்கும் இசையும் -ஸ்ரீ இராமனுசற்கும் இசையும் –
நெறி-ஒழுக்கம் -உபாயமுமாம்
ஒழுக்கம் –ஆவது
அனுஷ்டானம் -அது சாத்விக த்யாகத்துடன் -பகவான் என்னைக் கொண்டு தன் பணியை
தன் உகப்புக்காக செய்து கொள்கிறான் என்றும் நினைப்புடன் -அனுஷ்டிக்கப் படுதலின் தூயதாயிற்று -என்க –
இனி அஹங்காரக் கலப்பினால் மாசுற்ற மற்ற உபாயங்களை விட்டுத் தூயதான சித்த உபாயத்தின்
எல்லை நிலமான ஆசார்யனையே உபாயமாக கொள்ளலின் தூய் நெறி என்றார் ஆகவுமாம் –
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ நாத முநிகளையே உபாயமாகவும்-
ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ ஆளவந்தாரையே உபாயமாகவும் -கொண்டு உள்ளமையின் தூய் நெறி சேர்ந்தவர்கள் ஆயினர் என்க –

யமுனைத் துறைவன் –
ஸ்ரீ ஆளவந்தார் திரு நாமம்
அவருக்கு ஸ்ரீ நாத முனிகள் விருப்பப்படி இத் திருநாமம் சாத்தப்பட்டது என்பர் –
யாமுநேயர் -என்பது வட மொழி திரு நாமம் -பொருள் ஒன்றே –
கதி -பெறப்படுவது -பேறு என்றபடி
குருரேவ பராகதி -என்று குருவையே சிறந்த கதியாக சாஸ்திரம் சொல்லுவதும் காண்க –

ஸ்ரீ ஆளவந்தாரைப் பற்றி ஸ்ரீ எம்பெருமானார் –
யத் பதாம் போருஹ த்யான வித்வஸ்தா சேஷ கல்மஷ வஸ்துதாம் உபயதோஹம் யாமுநேயம் நமாமிதம் -என்று
எவருடைய திருவடித் தாமரையை உபாயமாக த்யானம் செய்ததனால் பாபம் அனைத்தும் நீங்கப் பெற்றவனாய்
ஒரு பொருளாகி விட்டேனோ -அந்த ஸ்ரீ யமுனைத் துறைவனை வணங்குகிறேன் -என்று
அருளிய ஸ்லோகம் இங்கு அனுசந்திக்கத் தக்கது
நேர் ஆசார்யர் ஸ்ரீ பெரிய நம்பியே ஆயினும் -அவர் தம்மை ஸ்ரீ ஆளவந்தார் உடைய கருவியாகவும் –
ஆ முதல்வன் -என்று முந்துற முன்னம் ஸ்ரீ பெருமாள் கோயிலிலே கடாஷித்த ஸ்ரீ ஆளவந்தாரே நேர் ஆசார்யராகவும்
கருதினதாலும் -அங்கனமே ஸ்ரீ எம்பெருமானாருக்கு –
ஸ்ரீ பெருமாள் மரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்து வானோர் வாழத் தண்ட காரண்யத்துக்கு
எழுந்து அருளினது போலே ஸ்ரீ ஆளவந்தாரும் அடியானான அடியேனை உமக்கு வைத்து
மேலை வானோர் வாழத் திரு நாட்டுக்கு எழுந்தி அருளினார் -என்று உபதேசித்த தனால்
ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ யமுனைத் துறைவன் இணை அடியாம் கதி பெற்று உடையரானார் என்க –
ஸ்ரீ ஆளவந்தாருக்கு ஸ்ரீ மணக்கால் நம்பி நேரே ஆசார்யன் ஆனாலும் தம் ஆசார்யர் திரு உள்ளப்படி
நித்யம் யதீயசரணவ் சரணம் மதீயம் -என்று
பரமாச்சார்யார் ஆன ஸ்ரீமன் நாத முனிகள் திருவடிகளையே கதியாகவும் பற்றினது -போலே
ஸ்ரீ எம்பெருமானாரும் பரமாச்சார்யர் ஆன ஸ்ரீ ஆளவந்தார் இணை அடியாம்-கதியைப் பெற்று உடையரானார் -என்க-

இனி யமுனைத் துறைவர் இணை யடி -என்பது
ஸ்ரீ ஆளவந்தார் திருவடியான ஸ்ரீ பெரிய நம்பியை குறிப்பால் உணர்த்துகிறது என்றும் கூறுவர்-
இவ் விஷயம் லஷ்மீ நாத -பத்ய வ்யாக்யானத்தில் ஸ்பஷ்டம் –

ஆச்சர்ய அனுக்ரகம் ஒன்றாலே பெற பெறுவோம்
முக் கண்ணான் எட்டு கணான் 1000 கண் சேர்ந்து ஆச்சார்யர் கண் சமம் இல்லை-
இவ் உலக அவ் உலக இன்பம் எல்லாம் ஆச்சார்யர் எல்லாம் வகுத்த இடமே
உன் தனக்கு எத்தனை இன்பம் தரும் …மேக பிந்துவை ஒன்றையே நோக்கும் சாதக பறவை போல –

சித்தி த்ரயம் கை விளக்கு கொண்டு வேதார்த்த சங்க்ரஹம் -வேதார்த்ததீபம் போன்றன அருளினார்-
ஸ்தோத்ர ரத்னம் சதுஸ்லோகி கொண்டு கத்ய த்ரயம் அருளினார்-
கீதா சங்க்ரஹம் கொண்டு கீதா பாஷ்யம் அருளினார்-

என்னைக் காத்தனன் –
என்னைக் காக்கும் பொறுப்பைத் தாமே ஸ்ரீ எம்பெருமானார் ஏற்றுக் கொண்டு நிறைவேற்றி விட்ட படியால்
நான் என்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அலைந்து துவள வேண்டியது இல்லை-என்றது ஆயிற்று –

அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னைத்
துளிக்கும் நறுங்கண்ணித் தூ மணி வண்ணன் எம்மான் தன்னை
ஒளிக் கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர்
சலிப்பின்றி யாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே–3-7-6-

இனி
அவர்க்கு அடியேன் ரஷ்ய பூதனாய் விட்ட பின்பு இனி -மேல் உள்ள காலம் எல்லாம்-

நீசர் தம் வாசல் பற்றி –
ய கஞ்சித் புருஷ அதம ரகதிபயக்ராமேச மல்பார்த்தத்தம் -என்கிறபடியே
அஹங்கார தூஷிதராய் -நிஹீநராய் இருக்கிறவர்களுடைய –
துரீச்வர த்வார பஹிர்விதர்த்தி காதுராசி காயை ரசிதோய மஞ்சலி -என்கிறபடியே-
நரக பிராயமான வாசலை ஆஸ்ரயித்து –

நிதியைப் பொழியும் முகில் என்று –
லோகத்திலே மேகம் ஜலத்தை வர்ஷிக்கும் இத்தனை –
இந்த தாதாவானால் நவ நிதியையும் ஒருக்காலே வர்ஷிக்கும் காள மேகமாய் இருந்தான் என்று –

துதி கற்று
சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்வன் கேண்மினோ என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் -என்கிற
தர்மஜ்ஞ சமயத்தையும் லன்கித்து வாய் வந்த படி எல்லாம் ஸ்தோத்ரம் பண்ணி –
மற்று ஒருவர் சொன்ன மித்யா ஸ்தோத்ரங்களை அப்யசித்து முன்னே சொன்னேன்-என்னுதல் –

உலகில் –
இப்படி இருந்த உலகில் -இருள் தரும் மா ஞாலத்திலே-

துவள்கின்றிலேன்
அவர்கள்-உடைய அவசரம் பார்த்து -என்னுடைய ரஷண்த்துக்காக கிலேச படக் கடவேன் அல்லேன் –
துவலுகை -வாடுகை –
குரு பாதாம் புஜம் த்யாயேத் குரோர் நாம சதா ஜபேத் குரோர் வார்த்தார்ஸ் சதக யேத் குரோர் அந்ய ந பாலயேத் –-என்கிறபடியே
இருக்கக் கடவேன் என்று கருத்து –

ஒழிவு ஒன்று இலாத பல் ஊழி தோறு ஊழி நிலாவப் போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க்
கழிய மிக நல்ல வான் கவி கொண்டு புலவீர்காள்!
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?–3-9-3-

கொள்ளும் பயன் இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என்
வள்ளல் மணி வண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ–3-9-5-

சேரும் கொடை புகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லாம்,மற்று யான் கிலேன்;
மாரி அனைய கை, மால் வரை ஒக்கும் திண் தோள் என்று,
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே–3-9-7-

நிதியை ….துவள்கின்றிலேன் இனி –
நீசர் -அதமர்கள்-பணச் செருக்கினால் மற்றவரை மதிக்காதவர்கள்-
அஹம் மமேதி சண்டாள -என்றபடி -அஹங்காரம் சண்டாளனாக கூறப்பட்டது –
அதனுக்கு இடம் தருவாரும் அத்தகையினரே –
மத்பக்தான் ச்ரோத்ரியோ நிந்தத் சத்யச்சண்டாளதாம் வ்ரஜேத் -என்று
வேதம் ஓதியவன் என் பக்தர்களை இகழும் பொழுதே சண்டாளன் ஆகி விடுகிறான் -என்றபடி
பணம் படைத்தவர்கள் பக்தர்களையும் மதிக்காது -இகழ்வதனால் உடனே சண்டாளர்கள் ஆகி விடுகிறார்கள் –
அவர்கள் வாசலில் உலகில் தவிர்க்க ஒண்ணாத பசி முதலியவற்றால் துவண்டு சமயம் எதிர்பார்த்து கிடக்கின்றனர் மக்கள்.
அந்த நீசரை மகிழ்விப்பதற்காக தம்மிடம் தகுதி இன்மையால் புகழுரை பாடப்பாடம் கற்று வருகின்றனர் –
மாரி யனைய கை – என்று பச்சை பசும் பொய்களை பேசுகின்றனர் –
நிதியை பொழியும் முகில் -எனபது போன்றவற்றை கற்று வந்து -வாசலில் துளள்கின்றனர் –
அங்கனம் அவர்கள் துவள்வதற்கு காரணம் -தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ளும் திறன் இல்லாமையும் –
காப்பாற்றுவார் வேறு இல்லாமையும் –
எனக்குத் தானே காப்பாற்றிக் கொள்ளும் திறன் இல்லாவிடினும் –
ஸ்ரீ எம்பெருமானார் என்னைக் காப்பாற்றி விட்டார் -இனி ஏன் நான் துவள வேண்டும்-என்கிறார் ஸ்ரீ அமுதனார் –

நிதியை பொழியும் மேகம் -ஜலம் கொட்டாது நிதியை கொட்டுகிறாய் என்று ஸ்தோத்ரம் கற்று–இனி துவள் கின்றிலேன்
இனி-காத்த பின்பு-நவ நிதியை வர்ஷிக்கும் காள மேகம் ஸ்ரீ எம்பெருமானார் இருக்க –
இந்த கஷ்டம் இனி எனக்கு இல்லையே –

மேகமாக அருளிச் செய்தது யாரை என்னும்–ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் -ஆச்சார்ய ஹிருதயம்-சூரணை–156–

பூண்ட நாள் சீர்க் கடலை உள் கொண்டு
திரு மேனி நல் நிறம் ஒத்து உயிர் அளிப்பான்
தீர்த்தகரராய் எங்கும் திரிந்து
ஜ்ஞான ஹ்ரதத்தைப் பூரித்து
தீங்கின்றி வாழ நிதி சொரிந்து
கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து
வெளுத்து ஒளித்து கண்டு உகந்து
பர சம்ருத்தியே பேறான
அன்பு கூறும் அடியவர்
உறையில் இடாதவர்
பு யற்கை அருள்மாரி
குணம் திகழ் கொண்டல்
போல்வாரை மேகம் என்னும் —

அதாவது
1-பூண்ட நாள் சீர் கடலை உள் கொண்டு —
வர்ஷிக்கைக்கு உடலான காலங்களிலே கடலிலே புக்கு அதில் நீரைப் பருகி
கொண்டு இருக்கும் -மேகம் போலே –
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்-பூண்ட நாள் எல்லாம் புகும் -மூன்றாம் திருவந்தாதி -69-என்றும் –
திரு மால் சீர்க் கடலை உள் பொதிந்த சிந்தனையேன் –பெரிய திருவந்தாதி -69–என்றும் –
சொல்லுகிறபடி -விடிந்த நாள் எல்லாம் அவன் கண் வளர்ந்து அருளுகிற கடலிலே
புகுந்து ஸ்ரீ யபதியான அவனுடைய கல்யாண சாகரத்தை
மன வுள் கொண்டு –பெரிய திருமொழி –7–3–1–என்கிற படியே
உள்ளே அடக்கி கொண்டு —

2-திரு மேனி நன்னிறம் ஒத்து –
திரு மால் திரு மேனி ஒக்கும் –திரு விருத்தம் –32–என்றும் –
கண்ணன் பால் நன்னிறம் கொள் கார் –பெரிய திருவந்தாதி -85–என்றும் –
சொல்லுகிறபடியே மேகமானது அவன் திரு மேனி ஒத்ததாய் இருக்கும் நிறத்தை உடைத்தாய் இருக்குமா போலே
விக்ரக வர்ணத்தால் அவனோடு சாம்யாபன்னராய் –

3-உயிர் அளிப்பான் தீர்த்தகரராய் எங்கும் திரிந்து –
உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து -திரு விருத்தம் –32-என்று
மேகமானது வர்ஷ முகேன -பிராணி ரஷணம் பண்ணுகைக்காக –
விஸ்த்ருமான ஆகாசப் பரப்பு எங்கும் சஞ்சரிக்குமா போலே – சம்சாரிகளான ஆத்மாக்களை ரஷிக்கைகாக
தீர்த்தகரராமின் திரிந்து –இரண்டாம் திருவந்தாதி –14–என்றும் ,
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து –பெருமாள் திருமொழி –2–6–என்றும்-
சொல்லுகிறபடியே -லோக பாவனராய் -உஜ்ஜீவன மார்க்க பிரதர்சகராய் கொண்டு-சர்வத்ர சஞ்சாரம் பண்ணி

4-ஜ்ஞானஹ்ரதத்தை பூரித்து –
மேகம் வர்ஷித்தாலே தடாகாதிகள் நிறைக்குமா போலே –
ஜ்ஞானஹ்ரதே த்யான ஜலே ராக த்வேஷ மலாபஹே
ய ஸ்நாதி மானசே தீர்த்தே ஸ யாதி பரமாம் கதிம் -என்று
மானஸ தீர்த்த வர்ணனத்திலே , சொன்ன ஜ்ஞானம் ஆகிற
வர்ணனத்தை -தாங்கள் வர்ஷிக்கிற பகவத் குண ஜலங்களாலே நிறைத்து —

5-தீங்கின்றி வாழ நிதி சொரிந்து –
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து –திருப்பாவை -3–என்றும் –
வாழ உலகினில் பெய்திடாய் -திருப்பாவை -3–என்றும் ,
மாமுத்த நிதி சொரியும் –நாச்சியார் திருமொழி –8–2–என்றும்
சொல்லுகிற படியே -அநர்த்த கந்தம் இன்றிக்கே –அகிலரும் உஜ்ஜீவிக்கும் படி-
பகவத் குண ரத்னங்களை வர்ஷித்து-

6-கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து —
ஒவ்தார்ய அதிசயத்தாலே உபகரித்ததை நினையாதே –
இன்னமும் உபகரிக்க பெற்றிலோம் ! நாம் செய்தது போருமோ ? என்று லஜ்ஜித்து-

7–வெளுத்து –
உபகரிக்கப் பெறாத போது – உடம்பு வெளுத்து ஒளித்து
(அர்த்த விசேஷங்களை உபதேசிக்கப் பெறாத பொழுது உடம்பு வெளுத்து

8- ஒளித்து –
மறைந்து வெளியே முகம் காட்டாமல்
ஸூவ அனுபவ பரர்களாய் ஏகாந்த சீலர்களாய் இருப்பதைத் தெரிவித்த படி – )

9–கண்டு உகந்து –
உபகரிக்கும் தசையில் எதிர் தலையில் சம்ருத்தி கண்டு உகந்து –

10-பர சம்ருத்தியே பேறான
அந்த பர சம்ருத்தி தங்களுக்கு பேறாக நினைத்து இருக்கிற-

அன்பு கூறும் அடியவர் –
ஆங்கு அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும்
அடியவரான- பெரிய திருமொழி -2–10–4––முதல் ஆழ்வார்கள்-
(ஆங்கு அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர் –
அடியவர் என்று பொய்கையார் -பர பக்தி நிலை -ஞான பிரதம நிலை —
அன்பு கூறும் அடியவர் என்று பூதத்தாழ்வார் பர ஞான நிலை -தர்சன-சாஷாத்காரம் பெற்றவர்கள் –
அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர் -பேயாழ்வார் -பரம பக்தி நிலை -பிராப்தி தசை -என்றவாறு )

உறையில் இடாதவர் –
உருவின வாள் உறையில் இடாதே -ஆதி மத்திய அந்தம் தேவதாந்திர அவரத்வ –பிரதிபாதன -பூர்வகமாக
பகவத் பரத்வத்தை வுபபாதிக்கும் திரு மழிசைப் பிரான்

புயற்கை அருள் மாரி –
காரார் புயற்கை கலி கன்றி –பெரிய திருமொழி–3-2-10-என்றும் ,
அருள் மாரி –பெரிய திருமொழி–3-4-10–என்றும் ,
ஒவ்தார்யத்தில் மேக சத்ருசராய் கொண்டு கிருபையை வர்ஷிக்கும் திரு மங்கை ஆழ்வார்-

குணம் திகழ் கொண்டல்–இராமானுச நூற்றந்தாதி -60—என்று
குண உஜ்ஜ்வலமான மேகமாகச் சொல்லப் பட்ட எம்பெருமானார் —போல்வாரை மேகம் என்னும் –
இந்த குண சாம்யத்தை இட்டு மேகம் என்று சொல்லும் என்ற படி —

(நம்மாழ்வார் த்ரிகாலம் உணர்ந்தவர் -முற்பட்டவர் பின்பட்டவர் பற்றியும் அறிந்தவர்
வால்மீகி முற்காலம் பிற்கால நிகழ்வுகளை அருளிச் செய்தது போலே – )

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ செஞ்சொல் கவிகாள்–ஸ்ரீ இன் கவி பாடும் பரம கவிகள்-ஸ்ரீ பதியே பரவித் தொழும் தொண்டர்-பேசிற்றே பேசும் ஏக கண்டர்-அருளிச் செயல்களில் –ஒரே பலன்கள் —

April 4, 2020

செந்நெலார் வயல் சூழ் திருக் கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டு சித்தன் விரித்த விப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே––பெரியாழ்வார் திருமொழி -1-1-10-

ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலைக் குழல் கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே––நாச்சியார் திரு மொழி–4-11-

தேடற்கு அரியவனைத் திரு மாலிருஞ்சோலை நின்ற
ஆடற்பரவையனை அணியா யிழை காணும் என்று
மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே –பெரிய திருமொழி -9-9-10-

கண்ணா யேழ் உலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்
பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே—-பெரிய திருமொழி–1-9-10-

——–

மைத் தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை-
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டு சித்தன் விரித்த தமிழ் இவை
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடரில்லையே –பெரியாழ்வார் திருமொழி –1-4 10-

என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனைக்
கன்றின் பின் போக்கினேன் என்ற யசோதை கழறிய
பொன் திகழ் மாடப் புதுவையர் கோன் பட்டன் சொல்
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இடர் இல்லையே –பெரியாழ்வார் திருமொழி -3 2-10 –

———-

ஆள் கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோவினை
நாள் கமழ் பூம் பொழில் வில்லிபுத்தூர் பட்டன்
வேட்கையினால் சொன்ன சப்பாணி ஈரைந்தும்
வேட்கையினால் சொல்லுவார் வினை போமே –பெரியாழ்வார் திருமொழி -1-6 10-

போதமர் செல்வக் கொழுந்து புணர் திரு வெள்ளறையானை
மாதர்க்கு உயர்ந்த யசோதை மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம்
வேதப்பயன் கொள்ள வல்ல விட்டுசித்தன் சொன்ன மாலை
பாதப்பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே பெரியாழ்வார் திருமொழி –2 8-10 –

————-

ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான் புறம் புல்கிய
வேய்த்தடம் தோளி சொல் விட்டு சித்தன் மகிழ்ந்து
ஈத்த தமிழ் ஈரைந்தும் வல்லவர்
வாய்த்த நன் மக்களை பெற்று மகிழ்வரே பெரியாழ்வார் திருமொழி -1 9-11 – –

ஆயனுக்காக தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே—–நாச்சியார் திரு மொழி–6-11-

————–

புற்று அரவு அல்குல் யசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை
கற்றினம் மேய்த்து வரக் கண்டு உகந்தவள் கற்பித்த மாற்றம் எல்லாம்
செற்றம் இலாதவர் வாழ்தரு தென் புதுவை விட்டு சித்தன் சொல்
கற்று இவை பாட வல்லார் கடல் வண்ணன் கழல் இணை காண்பர்களே -3 3-10 –

மருதப் பொழில் அணி மால் இரும் சோலை மலை தன்னை
கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான் தன்னை
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டு சித்தன் சொல்
கருதி உரைப்பவர் கண்ணன் கழலினை காண்பரே – 4-2 11-

—————

விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ மிறைத்து ஆயர்பாடியிலே வீதி யூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருள கண்டு இள ஆய்க் கன்னிமார் காமுற்ற
வண்ண வண்டு அமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
பண்ணின்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3 4-10 – –

அரவில் பள்ளி கொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகை ஊர்தி அவனுடைய
குரவில் கொடிமுல்லைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடை மேல்
திருவில் பொலி மறை வாணர் புத்தூர் திகழ பட்டார் பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவும் மனம் நன்குடை பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3 5-11 –

—————–

மாயவன் பின் வழி சென்று வழி இடை மாற்றங்கள் கேட்டு
ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றம் எல்லாம்
தாயவள் சொல்லிய சொல்லை தண் புதுவை பட்டன் சொன்ன
தூய தமிழ் பத்தும் வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளரே – 3-8 10-

மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானே
வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே – 4-10 10-

——————

நந்தன் மதலையை காகுத்தனை நவின்று
உந்தி பறந்த ஒளி இழையார்கள் சொல்
செந்தமிழ் தென் புதுவை விட்டு சித்தன் சொல்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே – 3-9 11- –

பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனைக்
கற்ற நூல் கலிகன்றி யுரை செய்த
சொல் திறமிவை சொல்லிய தொண்டர்க்கு
அற்றமில்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே –பெரிய திருமொழி-–10-1-10-

பாதம் நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே––ஸ்ரீ திருவாய் மொழி–9-10-9-

———–

மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை
வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து
எல்லையில் பிள்ளை செய்வன காணாத்
தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடி மேல்
கோலமாம் குலசேகரன் சொன்ன
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள்
நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே– பெருமாள் திருமொழி–7-11-

காமர் தாதை கருதலர் சிங்கம் காண இனிய கரும் குழல் குட்டன்
வாமனன் என் மரகத வண்ணன் மாதவன் மது சூதன் தன்னை
சேம நன்கமரும் புதுவையோர் கோன் விட்டு சித்தன் வியம் தமிழ் பத்தும்
நாமம் என்று நவின்று உரைப்பார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணர் உலகே – 5-1 10-

———–

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே –பெரிய திருமொழி–5 4-11 –

பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனொடும்
வாய்த்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே-–-நாச்சியார் திரு மொழி–7-10-

————

திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு
திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை
கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்
குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள்
கூடலர் கோன் கொடை குலசேகரன் சொல் செய்த
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே—–பெருமாள் திருமொழி–1-11-

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே––பெருமாள் திருமொழி–10-11–

———–

மன்னிய தண் சாரல் வட வேம்கடத்தான் தன்
பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி
கொன் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே –பெருமாள் திருமொழி–4-11-

கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் காகுத்தன்
தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே—-பெருமாள் திருமொழி— 8-11-

———-

வில்லார் மலி வேங்கட மா மலை மேய
மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை
கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை
வல்லார் வர் வானவர் ஆகுவர் தாமே––பெரிய திருமொழி–1-10-10-

நல்லன்புடை வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வன் திரு வெள்ளக் குளத்து உறைவானைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
வல்லர் யென வல்லவர் வானவர் தாமே ––பெரிய திருமொழி–4-7-10-

மின்னு மா முகில் மேவு தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி இன் தமிழால் உரைத்த இம்
மன்னு பாடல் வல்லார்க்கு இடமாகும் வானுலகே—–பெரிய திருமொழி–2-1-10-

ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணி பொழில்
சேல்கள் பாய் கழனித் திருக் கோட்டியூரானை
நீல மா முகில் வண்ணனை நெடுமாலை யின் தமிழால் நினைந்த விந்
நாலும் ஆறும் வல்லார்க்கு இடமாகும் வானுலகே ––பெரிய திருமொழி–9-10-10-

———

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம்மாயனே அருளாய்
என்னுமின் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை
மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே—–பெரிய திருமொழி–2-7-10-

பொன்னு மா மணியும் முத்தமும் சுமந்து பொரு திரை மா நதி புடை சூழ்ந்து
அன்னம் மாடுலவு மலை புனல் சூழ்ந்த வரங்க மா நகர் அமர்ந்தானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே —பெரிய திருமொழி–5-7-10-

—————-

சீரார் பொழில் சூழ்ந்து அழகாய தில்லைத் திருச் சித்ரகூடத்துறை செங்கண் மாலுக்கு
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும்
காரார் புயல் கைக் கலிகன்றி குன்றா வொலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்
பாரார் உலகம் அளந்தான் அடிக் கீழ்ப் பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே––பெரிய திருமொழி–3-2-10-

வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை யறிந்து முன்னுரை செய்த
கார் கொள் பூம்பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி ஒலி வல்லார்
ஏர் கொள் வைகுந்த மா நகர் புக்கு இமையவரோடும் கூடுவரே –பெரிய திருமொழி–8-5-10-

——————-

மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே ––பெரிய திருமொழி–5-8-10-

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி
நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை
பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –பெரிய திருமொழி-–7-3-10-

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே —பெரிய திருமொழி–8-8-10-

சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம்
கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல்
கலையார் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை
நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே ––பெரிய திருமொழி–9-6-10-

————-

செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன்
கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை
இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள் கொண்டு தொண்டீர்
வரு நீர் வையம் உய்ய விவை பாடி யாடுமினே –பெரிய திருமொழி–8-9-10-

மெய்நின்ற பாவம் அகலத் திருமாலைக்
கைநின்ற ஆழியான் சூழும் கழல் சூடி
கைந்நின்ற வேற்க் கை கலியன் ஒலி மாலை
ஐ ஒன்றும் ஐந்தும் இவை பாடி ஆடுமினே –பெரிய திருமொழி-–11-7-10-

————

ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டழு
கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒர் பத்து இசை யொடும்
நாத் தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே–6-2-11-

கலையுலா வல்குல் காரிகை திறத்துக் கடல் பெரும் படையொடும் சென்று
சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற திருக் கண்ணங்குடி யுள் நின்றானை
மலைகுலா மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
உலவு சொல் மாலை யொன்பதொடு ஒன்றும் வல்லவர்க்கு இல்லை நல்குரவே ––பெரிய திருமொழி–9-1-10-

—————-

மூவராகிய ஒருவனை மூ வுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்சத் தண் திருவயிந்திரபுரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலி கன்றி விரித்து உரைத்த
பாவு தண் தமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே––பெரிய திருமொழி–3-1-10-

சீரார் நெடுமறுகில் சிறுபுலியூர்ச் சல சயனத்து
ஏரார் முகில் வண்ணன் தன்னை இமையோர் பெருமானைக்
காரார் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை
பாரார் இவை பரவித் தொழப் பாவம் பயிலாவே –பெரிய திருமொழி-–7-9-10-

————

சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனை சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே –நாச்சியார் திரு மொழி-–9-10-

சிந்தை யாலும் சொல் லாலும் செய்கை யினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குருகூ ரவர் சட கோபன்
முந்தை ஆயிரத் துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமா லுக்கே––ஸ்ரீ திருவாய் மொழி–6-5-11-

—————————————————–—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –20- ஆரப் பொழில் தென் குருகைப் பிரான்- இத்யாதி —

April 4, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ நாதமுனிகளை தம் திரு உள்ளத்திலே அபிநிவேசித்து அனுபவிக்கும் ஸ்ரீ எம்பெருமானார்
எனக்கு பரம தனம் -என்கிறார்-

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

தர்சநீயமான திரு நகரிக்கு நிர்வாஹரான ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய அமிர்தமய திவ்ய ஸூக்தி ரூபமாய் இருந்துள்ள –
ஸ்ரீ திருவாய் மொழியை சார்த்தமாக அப்யசிக்க வல்லார் திறத்திலே -அதி ப்ரவணராய் இருக்குமவர்களுடைய –
கல்யாண குணங்களிலே சக்தராய் -உஜ்ஜீவிக்கும் ஸ்வபாவத்தை உடையரான ஸ்ரீமன் நாதமுனிகளை –
தம்முடைய மனசாலே அனுபவிக்கும் ஸ்ரீ எம்பெருமானார் அடியேனுக்கு மகா நிதியாய் இருப்பார் என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

இதுகாறும் ஸ்ரீ ஆழ்வார்கள் இடம் எம்பெருமானாருக்கு உள்ள ஈடுபாடு பேசப்பட்டது –
இனி ஸ்ரீ ஆசார்யர்கள் இடம் உள்ள ஈடுபாடு பேசப்படுகிறது –
யோக முறையில் நேரே சாஷாத்காரம் பண்ணின ஸ்ரீ மாறன் இடம் இருந்து –
செம் தமிழ் ஆரணத்தை -அடைந்து -அதன் இசையை உணர்ந்தவர்களுக்கு இனியவர்களின் குணங்களில்
பலகால் பயின்று உஜ்ஜீவிக்கும் ஸ்ரீ நாத முனியை ஆர்வத்தோடு நெஞ்சால்
அனுபவிக்கும் ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு கிடைத்த புதையல் -என்கிறார் –

ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திருவாய்
ஈரத் தமிழ் இன் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமானுசன் என்தன் மா நிதியே – -20 –

ஆரப் பொழில் -சந்தனச் சோலைகள் உடைய
தென் குருகைப் பிரான் -அழகிய திரு நகரிக்குத் தலைவரான நம் ஆழ்வார் உடைய
அமுதம்-மிக்க இனிய
திருவாய்-திரு வாயில் இருந்து வெளி வந்த
ஈரத் தமிழின் -நனைந்து குளிர்ந்து உள்ள திருவாய் மொழி யினுடைய
இசை-இசையை
உணர்ந்தோர்கட்கு -அறிந்தவர்களுக்கு
இனியவர் தம் -பிடித்தவர்கள் உடைய
சீரை -குணங்களை
பயின்று -பழகி
உய்யும் -உஜ்ஜீவிக்கும்
சீலம் கொள் -வைபவம் உடையவரான
நாத முனியை -நாத முனிகளை
நெஞ்சால்-மனத்தால்
வாரி-ஆர்வத்துடன் அள்ளி
பருகும் -அனுபவிக்கும்
இராமானுசன் -எம்பெருமானார்
என் தன் மா நிதி -எனது பெரும் புதையல் ஆவார் –

சந்தனச் சோலைகளை உடைத்தாய் -தர்சநீயமான திருநகரிக்கு நாத பூதரான ஆழ்வார் உடைய பரம போக்யமான திருப் பவளத்தில
பிறந்த ஈரப் பாட்டை உடைத்தான திரு வாய் மொழி இன் இசையை அறிந்தவர்களுக்கு ச்நிக்தராய் இருக்கும் அவர்கள் உடைய
குணங்களிலே செறிந்து – தன் சத்தை பெறா நிற்கும் -ஸ்வபாவத்தை உடையரான ஸ்ரீ நாத முனிகளை பெரு விடாயர் மடுவிலே புகுந்து
வாரிப் பருகுமா போலே தம் திரு உள்ளத்தாலே அபிநிவிஷ்டராய்க் கொண்டு அனுபவிக்கும் ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு அஷயமான நிதி –
ஆரம்-சந்தனம்–

ஸ்ரீ நம் ஆழ்வார் -இசை உணர்ந்தோர் -ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் -இனியவர் -ஸ்ரீ பராங்குச நம்பி -சீரை பயின்று உய்யும் ஸ்ரீ நாதமுனி
நெஞ்சால் வாரிப் பருகும் ஸ்ரீ ராமானுஜன் -ஐந்து பேர் இங்கும் –இது அன்றோ நமது ஸ்ரீ அமுதனாருக்கு பஞ்சாம்ருதம் –
வியாசம் -வசிஷ்டர் சக்தி பராசரர் வியாசர் -சுகர் -ஐந்து பேர் அங்கும் -அது நிதி இதுவோ மா நிதி அன்றோ –
247 பாசுரம் -தமிழ் கடவுள் அன்றோ ஸ்ரீ அரங்கன் -ஈரத்தமிழ் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -முதல் நாலாயிரம் அத்யாபகர் அன்றோ –
திரு அத்யயன உத்சவம் -ஏற்பாடு –
நெஞ்சால் வாரிப் பருகும் -மானஸ அனுபவம் விஞ்சி -கால தத்வம் உடைந்து பெரு நீராக ஆச்சார்யர் கிருபை –
பகீரதன் கொணர்ந்த -கங்கை போலே -கண்ணி நுண் திருத் தாம்பு தொடக்கம் மேல் கோட்டையில் –
மற்ற தேசங்களில் திருப் பல்லாண்டு போலே -என் தன் மா நிதி -அமுதூறும் என் நாவுக்கே -போலே –
மதிர் மம-நான் கண்ட நல்லது -அர்த்த பரத்வ -தோள் மாறாமல் மா நிதி

ஆரப் பொழில் தென் குருகை –
திருத் தாம்ரபர்ணீ தீர்மாகையாலும் -நீர் வாசியாலும்
நித்ய அபி வர்த்தங்களான சந்தன சோலையாலே சூழப்பட்டு தர்சநீயமான திருக் குருகூருக்கு -ஆரம்-சந்தனம்
பிரான் –
சர்வர்க்கும் சேவ்யமாம் படி உபகாரகர் –
குயில் நின்று ஆல் பொழில் சூழ் குருகூர் நம்பி -என்று ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அருளிச் செய்தார் இறே –
குருகைப் பிரான் –
திருக் குருகையிலே அவதரித்து -சகல ஜனங்களுக்கும் திருவாய் மொழி முகத்தாலும் –
நாத முனிகளுக்கு சகல அர்த்தங்களையும் -உபதேசித்து சம்ப்ரதாயத்தை நடத்தின படியாலும்-உபகாரகர் -என்றபடி –

ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் –
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் -என்றபடி சோலைகள் சூழ்ந்த திரு நகரி குளிர்ந்த ஊர் –
அதன் கண் உள்ள ஸ் ஆழ்வாரும் தாபம் தீர்ந்து குளிர்ந்தவர் –
தம்மைப் போலே ஊரும் நாடும் உலகமும் குளிரும்படி செய்யும் பரம உபகாரகர் அவர் –
பிரான்-உபகரிப்பவர்-

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக் குயில் கொள் சோலைத் தென் குருகூர்ச் சடகோபன்––3-2-11-

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்––3-3-11-

கூடி வண்டு அறையும் தண் தார்க் கொண்டல் போல் வண்ணன் தன்னை
மாடு அலர் பொழில் குருகூர் வண் சடகோபன் சொன்ன–3-4-11-

வாய்ந்த வள வயல் சூழ் தண் வளம் குருகூர்ச் சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும் அருவினை நீறு செய்யுமே–3-5-11-

பண் கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக் கோன் சடகோபன் சொல்
பண் கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே–3-6-11-

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க் காரி மாறன் –4-5-11-

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்–5-4-11-

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்–5-7-11-

கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென் குருகூர்ச் சடகோபன்சொல்–6-6-11-

வைத்த மா நிதியாம் மது சூதனையே அலற்றிக்
கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன–6-7-11-

மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது சூத பிரான் அடி மேல்
நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன–6-8-11-

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல்
துகில் வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர்ச் சட கோபன்–7-2-11-

தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-

கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11–

அமுதத் திருவாய் ஈரத் தமிழின்
இப்படிப் பட்ட ஸ்ரீ நம் ஆழ்வாருடைய -தொண்டர்க்கு அமுது உண்ண சொல்-மாலைகள் சொன்னேன் -என்கிறபடியே
பரம போக்யமாய் கொண்டு –திருப் பவளத்திலே பிறந்ததே –
ஸ்வ நிஷ்டரான-சேதனருடைய சம்சார தாபம் எல்லாம் ஆறும் படியாக ஈரப் பாட்டை உடைத்ததாய் –
த்ரமிட பாஷா ரூபமான திருவாய் மொழி யினுடைய –
இசை -கானம் ராகாதி லக்ஷணங்களோடு கூடி –
உணர்ந்தோர்கட்கு -அப்யசித்து
பின்னையும் ஆவர்த்தி பண்ணி -அதிலே பூர்ண ஜ்ஞானம் உடையவர்களுக்கு –
ஸ்ரீ மன் மதுர கவிகள் -ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்-முதலானவர்களுக்கு -என்றபடி –

இனியவர் –
அவர்களுக்கு அத்யந்தம் பிரிய தமராய் -ஸ்ரீ மன் நாத முனிகளுக்கு -கண்ணி நுண் சிறுத் தாம்பினை
உபதேசித்து அருளின –ஸ்ரீ பராங்குச நம்பி –

அமுதத் திருவாய் ஈரத் தமிழ்
அமுதம் போல் இனித்து அன்பினால் நனைந்து ஈரமான தமிழ் -திருவாய் மொழி -என்க
வாய் மொழி என்பதை –வாய் தமிழ் -என்கிறார் –
மனத்தால் நினைந்து -பேசாது வாயினால் மட்டும் பேசிய மொழி யாதலின் -வாய் மொழி -எனப்படுகிறது –
வாய் வெருவின மொழி வாய் மொழி -என்க –
இவள் இராப்பகல் வாய் வெருவி-திரு வாய் மொழி -2 4 5- – – என்னும் இடத்தில் ஈட்டில் –
அவதானம் பண்ணி சொல்லுகிறது ஒன்றும் இல்லை -வாசனையே உபாத்யாயராக சொல்லுகிற இத்தனை –
என்று வியாக்யானம் செய்யப்பட்டு இருப்பது இங்கு அனுசந்திக்க தக்கது –

ஈரத் தமிழ் –
ப்ரேமார்த்ரா விஹ்வல கிற புருஷா புராணா த்வாம் துஷ்டுவுர் மத்ரிபோ மதுரைர் வசோபி -என்று
ஸ்ரீ மது சூதனனே -பிரேமத்தினால் நனைந்து நிலை குலைந்த வாக்கு படைத்தவர்களான பண்டைய
ஸ்ரீ ஆழ்வார்கள் இனிய மொழிகளாலே உன்னை துதித்தார்கள்-என்று ஸ்ரீ ஆழ்வான் அருளி செய்ததை அடி ஒற்றி –
அமுதத் திருவாய் ஈரத் தமிழ் -என்றார் –
சம்சார தாபத்தை தணித்தலின் ஈரத் தமிழ் ஆகவுமாம்–
புது கணிப்பு இன்றும் குறையாமல் இருக்கிறது-

பாலோடு அமுது அன்ன ஆயிரத்துப் பத்தும் மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே -8-6-11-

நேர் பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர் பட்டார் அவர் நேர் பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-

தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே–9-1-11-

ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த அழிவு இல்லா ஆயிரத்து–9-7-11-

பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே–9-8-11-

இனியவர் தம் சீரைப் பயின்று –
அவர்களுடைய கல்யாண குணங்களை சர்வ காலமும் அனுசந்தித்து -அவர் செய்த உபகாரத்தை
விஸ்மரியாதே -க்ர்த்ஞராய்க் கொண்டு –
பயிலுதல் –
அனுசந்திக்கை –
உய்யும் –
அவ்வளவாக இவருக்கு உஜ்ஜீவனம் இல்லை –
அந்த மதுரகவி ஆழ்வார் உடைய சம்ப்ராயச்தரான ஸ்ரீ பராங்குச நம்பி உபதேசித்த அநந்தரம் –
அவர் பக்கலிலே க்ர்த்ஞராய் போந்த பின்பு -காணும் இவர் உஜ்ஜீவித்தது

இசை உணர்ந்தோர் –
பாவின் இன் இசை பாடித் திரிவனே -என்று தம்மைக் கூறிக் கொண்ட ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் போல்வர்
இசை உணர்ந்தவர்கள் என்க –

குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் -நின்று ஆலும் பொழில்–அசேதனமும் திரு வாய் மொழி பாடுகிறது–
சாகா சம்பந்தம் இருப்பதால் பாதித்து சாகா -கிளை / சாம வேதம்
வண்டினம் ஆலும் சோலை மயில் ஆடினதை பாடினது போல்–இவர் மதுர கவி ஆதலால் மதுர வாக்கியம் கொண்டாடுகிறார் ..

ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் சங்கப் பலகையில்-
கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே .ஏற்றி-
சங்கப் பலகை காட்டி கொடுத்தது–
சேமம் குருகையோ.. பெருமான் உனக்கு..நாமம் பராந்குசமோ நாரணமோ
ஈ ஆடுவதோ கருடர்க்கு எதிரே இரவிக்கு எதிர் மின் மினி ஆடுவதோ பெருமாள் ..ஒரு சொல் போருமோ உலகில் கவியே.
கலி 42 நாள் திரு அவதாரம்.
முதல் சங்கம் இடை சங்கம் நூல் இன்றும் இல்லை இலக்கணம் அப்புறம் தான் தொல் காப்பியம் அப்புறம் தான்
ஆதி காவ்யம் இல்லை இருப்பதில் இது பழசு அதனால் தொன்மை
கடைச் சங்கம் கி மு 9000 ஆண்டு முதல் சங்கம்/5450 -1750 வரை இடைச் சங்கம் / ஸ்ரீ ஆழ்வார் காலம் 3102 கி மு
திரு வள்ளுவர் –
குரு முனிவர் முத் தமிழும் என் குறளும் நங்கை சிறு முனிவன் வாய் மொழி சேய் என்கிறார்..
இரண்டாவது சங்கத்தில் தான் சங்கை பலகை–
கோ செங்கணான் கலி பிறந்து -500-வருஷம் -ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் காலத்துடன் ஒத்து போகும்

ஒவையாரும் –
ஐம் பொருளும் நாற் பொருளின் முப் பொருளும் அமைத்து பெய்த செம்பொருள்
வூரும் நாடும் உலகமும் தன்னை போல அவன் பெயரையும் தாள்களும் பிதற்ற அருளினார்

இனியவர் –பருகும் –
ஸ்ரீ மதுர கவி ஆழ்வாருக்கு இனியவர் -அவர் பரம்பரையில் வந்தவரும் –
ஸ்ரீ மன் நாத முனிகளுக்கு கண்ணி நுண் சிறு தாம்பை உபதேசித்தவருமான ஸ்ரீ பராங்குச நம்பி–
அவர் சீர் –
அருள் மிக்கு உபதேசித்து அருளின வள்ளன்மை ,ஞான பக்திகள் ,இசை உணர்வு -முதலியன
இசை உணர்ந்தோர்க்கு இனியவர் –
சீர் பயின்றதாக கூறுவதால் -இன்னிசை பாடித் திரியும் அவர் பரம்பரையினரான ஸ்ரீ பராங்குச நம்பி இசையோடு
ஸ்ரீ கண்ணி நுண் சிறு தாம்பை உபதேசித்ததாக தெரிகிறது –
கற்றாரை கற்றாரே காமுறுவர் -என்றபடி -இசை வல்லுனரான ஸ்ரீ நாத முனிகள்-அவ்விசையிலும் ஈடுபட்டு
இனியவர் சீரைப் பயிலா நின்றார் என்க –

ஸ்ரீ குருகை வைபவம்- ஸ்ரீ பராங்குச நம்பி அங்கேயே இருந்து -3500 வருஷம் ஒரு பரம்பரை இருந்து வந்து இருக்கிறது-

செய்நன்றி உடன் அதனையே மீண்டும் மீண்டும் பயின்று உய்வு பெறுகிறாராம் ஸ்ரீ மன் நாத முனிகள்-
ஸ்ரீ பராங்குச நம்பி உபதேசத்தாலே அன்றோ
ஸ்ரீ நம் ஆழ்வாரை சாஷாத் கரித்து அவரை ஆஸ்ரயித்து ஸ்ரீ மன் நாதமுனிகள் உஜ்ஜீவித்தது –
இந்நன்றி யறிவு ஸ்ரீ மன் நாத முனிகளுக்கு ஸ்வபாவமாய் அமைந்தது என்று –சீலம் கொள் நாதமுனி –என்பதனால் உணர்த்துகின்றார் –

சீலம் கொள் நாத முனியை –
இப்படி உஜ்ஜீவனமே ஸ்வபாவமாக உடையரான ஸ்ரீ மன் நாத முனிகளை-ஸ்ரீ ரங்க நாதருடைய திருநாமத்தை வகித்து –
ஆழ்வார் தமக்கு உபதேசித்த அர்த்தங்களை அடைவே சர்வதா -மனனம் பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ மன் நாதமுனிகளை -என்றபடி –
சத்யா பாமா -என்பதை பாமா -என்று வழங்குவது போலே ரங்கநாத முனி என்பதை ஸ்ரீ மன் நாத முனி –
என்று அருளிச் செய்கிறார் -நாமைகதேசம் –

உபதேச பிரதானர் ஆச்சார்யர் சொட்டை குலம்
ஸ்ரீ ரெங்க நாத முனி-காட்டு மன்னார் கோவில்–அவதார ஸ்தலம் –823 -ஸ்ரீ மன் நாத முனிகள் –-93-திரு நக்ஷத்ரம் இருந்தவர் –
ஸ்ரீ ஆளவந்தார் –30-வயசுக்குள் ஆக்கி ஆழ்வான்-ஸ்ரீ கீதை உபதேசம் –66-திரு நக்ஷத்ரம் இருந்தார் ஸ்ரீ ஆளவந்தார் 976-1042-
ஸ்ரீ குருகை காவல் அப்பன் -200-வருஷங்கள் இருந்து இருக்க வேண்டும் –25-வயசில் ஸ்ரீ பாஷ்யகாரர் -1017-அவதாரம் என்பதால் –
ஸ்ரீ பெருமாள் –12 -திருக் கல்யாணம் –25 -பட்டாபிஷேகம் குறித்தது போலே –
இடைப்பட்ட -3100-காலம் இருண்ட காலம் —1600-வருஷம் ஸ்ரீ முதல் ஆழ்வார் முதல் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் வரை
அருளிச் செயல்கள் வந்த தேஜஸ் மறைந்து –இதனாலே ஆச்சார்யர்களை பிறப்பித்து அருளினான் –
450 வருஷம் இடை வெளி ஸ்ரீ மன் நாத முனிகளுக்கும் ஸ்ரீ ராமனுஜருக்கும்
இன்பம் மிகு ஆறாயிரம் தொடங்கி-திரு குருகைப் பிரான் பிள்ளான் மூலம் -ஐந்து -எஞ்சாமை எதற்கும் இல்லை ..
பெருக்கி கொடுத்தவர் சுவாமி ஸ்ரீ ராமானுஜர் .

நெஞ்சால் வாரிப் பருகும் –
சமான காலமானால் -காயிகமாகத் தழுவி -முழுசிப் பரிமாறி அனுபவிப்பார் காணும் –
அத்யந்த கால வ்யவதானமாக இருக்கையாலே அந்த ஸ்ரீ மன் நாதமுனிகளை -நெஞ்சாலே அள்ளிக் கொண்டு
பிரி கதிர் படாதபடி விக்ரக குணங்களோடு கூட அனுபவிக்கை –
பருகுகை –
அனுபவிக்கை –

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-

நெஞ்சால் வாரிப் பருகும் –
சம காலத்தவர் ஆயின் -கண்ணால் அள்ளிப் பருகி இருப்பார் –
ஸ்ரீ எம்பெருமானார் பிற் காலத்தவர் ஆதலின் நெஞ்சால் நினைந்து நினைந்து அவரை அள்ளிப் பருகுகிறார் -என்றபடி –
பருகுதல் கூறவே -ஸ்ரீ மன் நாத முனிகள் நீராய் உருகினமை பெறப்படும் –
இனியவர் தம் சீரைப் பயின்று நீராய் உருகினார் -ஸ்ரீ மன் நாதமுனிகள்-
அத்தகைய நீரைப் பருகி விடாய் தீர்த்து இன்புறுகிறார் ஸ்ரீ எம்பெருமானார் –
ஸ்ரீ மன் நாத முனிகளை ஆர்வத்துடன் நெஞ்சால் நினைந்து இனிது அனுபவிக்கிறார் எம்பெருமானார் -எனபது கருத்து –

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் –

என் தன் மா நிதியே –
லோகத்தார் எல்லாருக்குமாக அவதரித்தார் ஆகிலும் ஸ்ரீ அமுதனாருடைய அத்யாவசாயம் –
தமக்கேயாக அவதரித்தார் என்று காணும் –
என் தன் மாநிதி –
அடியேனுடைய மகா நிதி –
நவநிதியான தனங்களும் பிரளயத்திலும் அழிவு உண்டு -அப்படி அன்றிக்கே அவற்றைக் காட்டில் விலஷணமாய்
அப்ராக்ருதமான நிதி -என்றபடி –
அத்ர பரத்ர சாபி நித்யம் யாதிய சரணவ் சரணம் மதீயம் என்று அருளிச் செய்தார் இறே ஸ்ரீ ஆள வந்தாரும்

வானவர் ஆதி என்கோ! வானவர் தெய்வம் என்கோ!
வானவர் போகம் என்கோ! வானவர் முற்றும் என்கோ!
ஊனம் இல் செல்வம் என்கோ! ஊனம் இல் சுவர்க்கம் என்கோ!
ஊனம் இல் மோக்கம் என்கோ ஒளி மணி வண்ணனையே!–3-4-7-

என் தன் மா நிதி –
ஏனைய நிதிகள் போலே அழிவுறாத புதையல் ஸ்ரீ எம்பெருமானார் –
ஸ்ரீ ஆழ்வான் உதவிய ஞானக் கண்ணால் அப் புதையலைக் கண்டு எடுத்து ஆண்டு அனுபவிக்கும் தனது பாக்கியம்
தோற்ற –என் தன் மா நிதி -என்கிறார் –
கொள்ள குறை இலன்…குறையாத நிதி..வாரிப் பருகும் மா நிதி–

ஸ்ரீ திரு குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைம்மின்–இதுவே -திவ்ய தேச நினைவே -உஜ்ஜீவிக்க வழி .

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ செஞ்சொல் கவிகாள்–ஸ்ரீ இன் கவி பாடும் பரம கவிகள்-ஸ்ரீ பதியே பரவித் தொழும் தொண்டர்-பேசிற்றே பேசும் ஏக கண்டர்-அருளிச் செயல்களில் ஒற்றுமை —

April 3, 2020

தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்துரைத்த வென்னாகத்துன்னை-தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது—நான்முகன் திருவந்தாதி-63-

பண்டு பல வாரியரும் பாருலகோர் உய்யப்
பரிவுடனே செய்தருளும் பல்கலைகள் தம்மைக்
கண்டது எல்லாம் எழுதி யவை கற்று இருந்தும் பிறர்க்குக்
காதலுடன் கற்பித்தும் காலத்தைக் கழித்தேன்
புண்டரிகை கேள்வன் உறை பொன்னுலகு தன்னில்
போக நினைவோன்றும் இன்றிப் பொருந்தி யிங்கே யிருந்தேன்
எண்டிசையும் ஏத்தும் எதிராசன் அருளாலே
எழில் விசும்பை அன்றி இப்போது என் மனம் எண்ணாதே—-ஆர்த்தி பிரபந்தம்–28

———-

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் -புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அவர்——இரண்டாம் திருவந்தாதி—11-

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் –புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் எவர் –நான்முகன் திருவந்தாதி –55-

————

விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதி யொன்று இல்லை
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த வரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணினை களிக்குமாறே –திரு மாலை–17-

இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என்தன்
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே–திருக் குறும் தாண்டகம்–13–

————-

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம்மாயனே அருளாய்
என்னுமின் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை
மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே—–பெரிய திருமொழி–2-7-10-

பொன்னு மா மணியும் முத்தமும் சுமந்து பொரு திரை மா நதி புடை சூழ்ந்து
அன்னம் மாடுலவு மலை புனல் சூழ்ந்த வரங்க மா நகர் அமர்ந்தானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே -5-7-10-

———————-

வண்டுண் மலர் இண்டை கொண்டு பண்டை நம் வினை கெட வென்று அடியேன்
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே
ஆண்டாய் யுன்னைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே –6-1-1-

அண்ணல் செய்து அலைகடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே -6-1-2-

குழல் நிற வண்ண நின் கூறு கொண்ட தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ நனி மலை சிலை வளைவு செய்து அங்கு அழல் நிறம் அம்பது வானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே —6-1-3-

நிலவோடு வெயில் நில விருசுடர் உலகமும் உயிர் களும் உண்டு ஒரு கால்
கலை தரு குழவியின் உருவினையாய் அலைகடல் ஆலிலை வளர்ந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-4-

பாரெழு கடலெழு மலை ஏழு மாயச் சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்
ஆர்குழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கோர் எழுத்து ஓர் உரு வானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே -6-1-5-

கார்கெழு கடல்களும் மலைகளுமாய் ஏர் கெழும் உலகுமுமாகி முத
லார்களும் அறிவரும் நிலையினாய்ச் சீர் கெழு நான்மறை யானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-6-

உருக்கு நறு நெய் கொண்டு ஆர் அழலில் இருக்கு உறும் அந்தணர் சந்தியின் வாய்
பெருக்கமோடு அமரர்கள் அமர நல்கும் இருக்கினில் இன்னிசை யானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே–6-1-7-

காதல் செய்து இளையவர் கலவி தரும் வேதனை வினையது வெருவுதலாம்
ஆதலில் உனது அடியன் அணுகுவன் நான் போதலர் நெடு முடிப் புண்ணியனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே–6-1-8-

சாதலும் பிறத்தலும் என்று இவற்றை காதல் செய்யாது உன் கழல் அடைந்தேன்
ஓதல் செய் நான்மறையாகி யும்பராதல் செய் மூவுருவானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-9-

—————–

தானே தனக்குமவன் தன்னுருவே எவ்வுருவும்
தானே தவவுருவும் தாரகையும் –தானே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடருமாய விறை –-மூன்றாம் திருவந்தாதி –38-

நீயே யுலகெல்லாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தேவத் தேவ தேவனும் -நீயே
எரி சுடரும் மால்வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இவை –-நான்முகன் திருவந்தாதி -20-

————-

மின்னின் அன்ன நுண் மருங்குல் வேயேய் தடந்தோள் மெல்லியற்காய்
மன்னு சினத்த மழம் விடைகள் ஏழு அன்று அடர்த்த மாலதிடம்
மன்னு முதுநீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
புன்னை பொன்னேய் தாது உதிர்க்கும் புள்ளம் பூதங்குடி தானே –-பெரிய திருமொழி-5-1-6-

என் ஐம் புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்து அருளிப்
பொன்னங்கலைகள் மெலிவெய்தப் போன புனிதரூர் போலும்
மன்னு முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
அன்னம் பெடையோடு உடனாடும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே–பெரிய திருமொழி-7-5-9-

———-

கொல்லை என்பர் கொலோ? குணம் மிக்கனள் என்பர் கொலோ?
சில்லை வாய்ப் பெண்கள் அயற் சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே––ஸ்ரீ திருவாய் மொழி-6-7-4-

மல்கு நீர்க் கண்ணொடு மைய லுற்ற மனத்தினளாய்
அல்லும் நன் பகலும் நெடு மால் என்றழைத் தினிப் போய்ச்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?––ஸ்ரீ திருவாய் மொழி–6-7-7-

—————-

சீர் கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி
நேர் பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வு இலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே–-ஸ்ரீ திருவாய் மொழி-7-9-5-

ஆர்வனோ ஆழி அங்கை எம்பி ரான் புகழ்
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர் விலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைச்
சீர் பெற இன் கவி சொன்ன திறந்துக்கே–-ஸ்ரீ திருவாய் மொழி-7-9-8-

————–

கோது இல் வண் புகழ் கொண்டு, சமயிகள்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான், பரன்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால்; ஊழ்வினையேன் தடம் தோளியே–-பெரிய திருமொழி-4-2-4-

மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய்,
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால் எய்தினள் என் தன் மடந்தையே–-பெரிய திருமொழி-4-2-6-

————–

குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா நிரை காத்து
சடையானோடே வடல் வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம்
குடையா வண்டுகள் உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
புடையார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –-பெரிய திருமொழி-5-1-7-

வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூ வெழு கால்
படியார் அரசு களை கட்ட பாழியானை அம்மானை
குடியா வண்டு கொண்டு உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
கடியார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –பெரிய திருமொழி-8-8-6-

————–

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி
நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை
பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –-பெரிய திருமொழி–3-10-

மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –-பெரிய திருமொழி-5-8-10-

——————–

அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணி உள் அங்கு இருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் தூ மலராள் மணவாளா
உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆல் இலையில் துயில் கொண்டாய்
கண்டு நான் உன்னை உகக்க கரு முகைப் பூ சூட்ட வாராய் –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-2 7-9 – –

அண்டத்து அமரர் பெருமான் ஆழியான் இன்று என் மகளைப்
பண்டப் பழிப்புக்கள் சொல்லிப் பரிசற ஆண்டிடும் கொலோ
கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து கோவலர் பட்டம் கவித்துப்
பண்டை மணாட்டிமார் முன்னே பாது காவல் வைக்கும் கொலோ –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 3-8 7-

———–

அண்டமும் இவ் வலை கடலும் அவனிகளும் எல்லாம்
அமுது செய்த திரு வயிற்றன் அரன் கொண்டு திரியும்
முண்ட மது நிறைத்து அவன் கண் சாபமது நீக்கும்
முதல்வனவன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
எண் திசையும் பெரும் செந்நெல் இளம் தெங்கு கதலி
இலைக் கொடி ஒண் குலைக் கமுகோடு இசலி வளம் சொரிய
வண்டு பல இசை பாட மயில் ஆலு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–-பெரிய திருமொழி-3-9-3-

அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் குலவரையும்
உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்தகில் கனகம்
தெண் திரைகள் வரத் திரட்டும் திகழ் மண்ணித் தென் கரைமேல்
திண் திறலார் பயில்நாங்கைத் திருத் தேவனார் தொகையே –பெரிய திருமொழி-4-1-5-

—————

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் -இருளாத
சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர் தூயக் கை தொழுது
முந்தையராய் நிற்பார்க்கு முன் -மூன்றாம் திருவந்தாதி–19-

அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவ–-ஸ்ரீ திருவாய் மொழி -9-8-8-

——–

அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில்-பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் என்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து——இரண்டாம் திருவந்தாதி—12-

அவரிவர் என்று இல்லை யனங்க வேள் தாதைக்கு
எவரும் எதிரில்லை கண்டீர் –உவரிக்
கடல் நஞ்சம் உண்டான் கடன் என்று வாணற்கு
உடன் நின்று தோற்றான் ஒருங்கு–நான்முகன் திருவந்தாதி -56–

————

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி -இழைப்பரிய
வாயவனே யாதவனே என்றவனை யார்முகப்பும்
மாயவனே என்று மதித்து -இரண்டாம் திருவந்தாதி-—50-

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக் கூடல் கூட -மழைப்பேர்
அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு –-நான்முகன் திருவந்தாதி -39-

————

அறிந்து அறிந்து வாமனன் அடி இணை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெள் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்து எழுந்து தீ வினைகள் பற்று அறுதல் பான்மையே –-ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-74-

அறிந்து அறிந்து, தேறித் தேறி, யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே–-ஸ்ரீ திருவாய் மொழி -4-7-7-

—————

அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்–திருப்பாவை–24-

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை–நான்முகன் திருவந்தாதி -35-

————

அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன்
என்றும் இக்காவில் இருந்து இருந்து என்னைத் ததைத்தாதே நீயும் குயிலே
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்–—நாச்சியார் திருமொழி -5-10-

அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உருவாய் இரணியனதாகம் கீண்டு
வென்றவனை விண்ணுலகில் செல யுய்த்தாற்கு விருந்தாவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து
பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்திப் புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன்
தென் தமிழன் வடபுலக் கோன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே–-பெரிய திருமொழி-6-6-5-

—————-

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் அளந்து
ஆயர் பூங்கொடிக்கு இனவிடை பொருதவனிடம் பொன் மலர் திகழ் வேங்கை
கொங்கு செண்பகக் கொம்பினில் குதி கொடு குரக்கினம் இரைத்தோடி
தேன் கலந்த தண் பலங்கனி நுகர் தரு திருவயிந்திரபுரமே–-பெரிய திருமொழி-3-1-5-

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும்
பாங்கினில் கொண்ட பரம நின் பணிந்து எழுவன் எனக்கு அருள் புரியே
ஓங்கு பிண்டியின் செம்மலர் ஏறி வண்டுழி தர மா வேறித்
தீங்குயில் மிழற்றும் படைப்பைத் திரு வெள்ளறை நின்றானே —-பெரிய திருமொழி-5-3-9-

————

இரும்பு அனன்று உண்ட நீர் போல் எம்பெருமானுக்கு
அரும் பெறல் அன்பு புக்கு இட்டு அடிமை பூண்டு உய்ந்து போனேன்
வரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்துக்
கரும்பினின் சாறு போலேப் பருகினேற்கு இனியவாறே –-திருக் குறும் தாண்டகம்-5-

இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என்தன்
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே–திருக் குறும் தாண்டகம்-13-

————–

உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்றபேதெல்லாம்
திண்ணார் மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே நம்முடைய நன்மைகளே எண்ணுவரே–-நாச்சியார் திரு மொழி –11-7-

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் எரி நீர் வளி வான்
மண்ணாகிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்
கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே – திரு விருத்தம்–66 –

————–

உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு
விருப்புற்று அங்கே ஏக விரைந்து எதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச்
சிரைத்திட்டான் வன்மையை பாடிப் பற
தேவகி சிங்கத்தைப் பாடிப் பற –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 3-9 3- –

உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் துடர்ந்து ஓடிச் சென்ற
உருப்பனை ஒட்டிக் கொண்டு இட்டு இறைத்திட்ட வுறைப்பன் மலை
பொருப்பிடைக் கொன்றை நின்று முறி ஆழியும் காசும் கொண்டு
விருப்போடு பொன் வழங்கும் வியன் மால் இரும் சோலை யதே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-4 3-1 –

—————–

உலவு திரையும் குல வரையும் ஊழி முதலா வெண் திக்கும்
நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விரலாழி
வலவன் வானோர் தம் பெருமான் மருவா வரக்கர்க்கு எஞ்ஞான்றும்
சலவன் சலம் சூழ்ந்து அழகாய சாள்க்கிராமம் அடை நெஞ்சே—பெரிய திருமொழி -—1-5-3-

உலவு திரைக் கடல் பள்ளி கொண்டு வந்து உன்னடியேன் மனம் புகுந்த அப்
புலவ புண்ணியனே புகுந்தாயைப் போகல ஒட்டேன்
நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல் தண் தாமரை மலரின் மிசை மலி
அலவன் கண் படுக்கும் அணியாலியம்மானே–-பெரிய திருமொழி —3-5-7-

—————-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —முதல் திருவந்தாதி—99-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——மூன்றாம் திருவந்தாதி–40-

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை–நான்முகன் திருவந்தாதி–86-

—————-

ஊழி தோற் ஊழி ஓவாது வாழிய
வென்று யாம் தொழ இசையும் கொல்?
யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல் வரும் பெரும் பாழ் காலத்து இரும் பொருள்க்கு
எல்லாம் அரும் பெறல் தனி வித்து ஒரு தான்
ஆகி தெய்வ நான் முக கொழு முளை
ஈன்று முக் கண் ஈசனோடு தேவு பல நுதலி
மூ உலகம் விளைத்த உந்தி
மாய கடவுள் மா முதல் அடியே -ஸ்ரீ திருவாசிரியம் ––4-

ஊழி தோறு ஊழி உலகுக்கு நீர் கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே! நீயும் மதுசூதன்
பாழிமையிற் பட்டு அவன் கண் பாசத்தால் நைவாயே?–-ஸ்ரீ திருவாய் மொழி-2-1-5-

ஊழி தோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே–-ஸ்ரீ திருவாய் மொழி–7-3-11-

———–

எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூ மகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல் புகழ்க் கார் எழில் அண்ணலே–-ஸ்ரீ திருவாய் மொழி-3-3-2-

எந்தை தந்தை தம்மான் என்று எமர் ஏழு அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
சிந்தை தன்னுள் முந்தி நிற்றீர் சிறிதும் திருமேனி
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே –பெரிய திருமொழி -4-9-9-

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி
வந்து வழி வழி யாட் செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
யந்தியம்போதில் யரி வுருவாகி யரியை யழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே –திருப்பல்லாண்டு–6-

————-

எனக்காவார் ஆரோருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்றல்லால் புனக்காயாம்
பூ மேனி காணப் பொதியவிழும் பூவைப் பூ
மா மேனி காட்டும் வரம் ——முதல் திருவந்தாதி–89-

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே யுன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை –நான்முகன் திருவந்தாதி-–51-

————–

என்றும் மறந்தறியேன் என்நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை -என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கருவிருந்த நாள் முதலாக் காப்பு–நான்முகன் திருவந்தாதி–92-

என்றும் மறந்து அறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட வறிவனே இன்பக்
கடலாழி நீ யருளிக் காண்––இரண்டாம் திருவந்தாதி–55-

—————-

ஏழை பேதையர் பாலகன் வந்து என் பெண் மகளை எள்கித்
தோழிமார் பலர் கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன்
ஆழியான் என்னும் ஆழம் மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி
மூழை உப்பு அறியாதது என்னும் மூதுரையும் இலளே –-ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 3-7 4-

ஏழை பேதை இராப் பகல் தன
கேழ் இல் ஒண் கண்ண நீர் கொண்டாள்;கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர்! இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே–-ஸ்ரீ திருவாய் மொழி-2-4-10-

————–

ஓதி யாயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல்
ஏதும் இன்றி நின்று அருளும் நம் பெரும் தகை இருந்த நல்லிமயத்து
தாது மல்கிய பிண்டி விண்டலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே -பெரிய திருமொழி–1-2-9-

ஓதி யாயிர நாமமும் பணிந்து ஏத்தி நின் அடைந்தேற்கு ஒரு பொருள்
வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம் எந்தாய்
நீதியாகிய வேத மா முனியாளர் தோற்றம் உரைத்து மற்றவர்க்கு
ஆதியாய் இருந்தாய் அணி யாலி யம்மானே–-பெரிய திருமொழி–3-5-9-

—————

கண்டு கொண்டு, என் கைகள் ஆர, நின் திருப் பாதங்கள் மேல்
எண் திசையும் உள்ள பூக் கொண்டு ஏத்தி, உகந்துகந்து,
தொண்டரோங்கள் பாடி ஆட, சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே–-ஸ்ரீ திருவாய் மொழி–4-7-8-

கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன் மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே -ஸ்ரீ திருவாய் மொழி––9-4-9-

கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே –கண்ணி நுண் சிறுத் தாம்பு–1–

—————

ஆழ்வாருடைய நிரதிசய போக்யதையைச் சொல்லுகிறது -ப்ராப்ய காஷ்டையான ஆழ்வாரைப் பற்றுகிற இவர்
பிரதம அவதியான பகவத் விஷயத்திலே இழிவான் என் என்னில்
ஆழ்வாருடைய போக்யாதிசயம் தோற்றுகைக்காகவும் அவருடைய முக மலர்த்தி தோற்றுகைக்காகவும்
அவர் உகக்கும் பகவத் விஷயம் ஆகையாலும் பேசுகிறார் –

சரம அதிகாரி சேகரர் ஆகிறார் இவர் -ஆழ்வார் திருவடிகளே தாரகாதி -யாகக் கொண்டவர்
1-அவர் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராமுதம் -இவர் -அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -போக்யதா பிரகர்ஷம்
2-அவர் -மலக்கு நாவுடையேற்கு என்றார் -இவர் நாவினால் நவிற்று –
3-அவர் அடிக் கீழ் அமர்ந்து –இவர் மேவினேன் அவன் பொன்னடி
4-கண்ணன் அல்லல் தெய்வம் இல்லை -தேவு மற்று
5-பாடி இளைப்பிலம் என்றார் -பாடித் திரிவேனே -ஆனந்தப் பட்டார் வாசி உண்டே
6-இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்றேன் -திரி தந்தாகிலும்
7-உரிய தொண்டர் தொண்டர் —நம்பிக்கு ஆள் உரியனே
8-தாயாய் தந்தையாய் -அன்னையாய் அத்தனாய்
9-ஆள்கின்றான் ஆழியான் -என்னை ஆண்டிடும் தன்மையான் -வெப்பம் இல்லை குளிர்ந்து அன்றோ
10-கடியனாய் கஞ்சனைக் கொன்ற பிரான் -தக்க சீர் சடகோபன்
11-யானே என் தனதே என்று இருந்தேன் -நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் –நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
12-எமர் கீழ் மேல் ஏழ் ஏழ் பிறப்பும் நம்முடிய வாழ்வு வாய்கின்றவா -மா சதிர் -இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
13-என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசன் -நின்று தன புகழ் ஏத்த அருளினான்
14-ஒட்டுமே இனி என்னை நெகிழ்க -என்றும் என்னை இகல்விலன் காண்மின் -நீங்களே பாருமின் -சங்கையே இல்லை
15-மயர்வற மதிநலம் அருளினான் -ஒண் தமிழ் சடகோபன் அருளையே
16-அருள் உடையவன் -அருள் கண்டீர் இவ் உலகத்தில் மிக்கதே -உயர்ந்த அருள் என்கிறார் இவர்
17-பே ரே ன் என்று -நெஞ்சு நிறைய புகுந்தான் –நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -கண்ணன் அங்கே திருவாய்மொழி இங்கே
18-வழு விலா அடிமை செய்ய வேண்டும் -ஆட்புக்க காதல் அடிமைப் பயன்
19-ஆராத காதல் -ஆட்புக்க காதல் -தாஸ்யம் ஸ்பஷ்டம் இங்கே தான்
20-பொருள் அல்லாத என்னை பொருள் ஆக்கி -அடிமை கொண்டான் -பயன் நன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல்
21-கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய அன்பேயோ -தென் குருகூர் நம்பிக்கு அன்பன் -திருஷ்டாந்தம் இல்லை இங்கு -போட்டி இல்லை இங்கு
22-உலகம் படைத்தான் கவி -மதுர கவி -இவர்
23-உரைக்கவல்லார்க்கு வைகுந்தம் ஆகும் தம்மூர் எல்லாம் -நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே பிரத்யஷம் -சங்கையே இல்லையே –

பிரத்யுபகாரம் செய்ய இயலாமல் குண அனுசந்தானம் செய்து -முனிவர்கள் யோகிகள் -குண நிஷ்டர் கைங்கர்ய நிஷ்டர்
1-போக்யதா பிரகர்ஷம் -முதல் பாட்டில்
2-தேக யாத்ரைக்கு தாரகம் -பாவின் இன்னிசை பாடத் திரிவனே
3-பகவத் விஷயம் உத்தேச்யம் ஆழ்வார் உகந்த விஷயம் -திரி தந்தாகிலும்
4-விஷயீ கரித்து அருளி -அன்னையாய்
5-இதர விஷய பிராவண்யம் விட்டு தம் அளவு வரும் படி சாதுர்யம் -நம்பினேன்
6-ஆழ்வார் தம்மை விஷயீ கார உறுதி -ஆறாம் -இன்று தொட்டும் எழுமையும் -ஒன்பது குளிக்கு நிற்கும் -புகழ் ஏத்த அருளினான்
7-கிருபா பிரகாசம் -சடகோபன் அருளையே
8-ஆழ்வார் கிருபை விஞ்சி -அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
9-சகல வேத ரகசியம் -ஸூ பிரதிஷ்டியாக நெஞ்சில் நிறுத்தி -மிக்க -வேதத்தின் உட் பொருள் -நிற்கப்பாடி
10-உபகாரம் பிரத்யுபகார நிரபேஷம் -முயல்கின்றேன் உன் தன மொய் கழற்கு அன்பையே -பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்

—————

கண்ணார் கடல் போல் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்த்
திண்ணார் மதிள் சூழ் திரு வெள்ளக் குளத்து
வண்ணா வடியேன் இடரைக் களையாயே -பெரிய திருமொழி-–4-7-1-

கண்ணார் கடல் சூழ் இலங்கைக் கிறைவன் தன்
திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய
அண்ணா வடியேன் இடரைக் களையாயே––பெரிய திருமொழி-1-10-1–

——————-

கலை இலங்கும் அகலல்குல் அரக்கர் குலக் கொடியைக்
காதோடு மூக்குடன் அரியக் கதறி அவளோடி
தலையில் அங்கை வைத்து மலை இலங்கை புகச் செய்த
தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
சிலை இலங்கு மணி மாடத்துச்சி மிசைச் சூலம்
செழும் கொண்டல் அடடிரியச் சொரிந்த செழு முத்தம்
மலை இலங்கு மாளிகை மேல் மலி வெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-4-

கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை கதிர் முத்த வெண்ணகையாள் கரும் கண் ஆய்ச்சி
முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடும் தோள் மூர்த்தி கண்டீர்
மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி யாடவரை மட மொழியார் முகத்திரண்டு
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே—4-4-5-

————–

கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன்
வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த
வில்லானைச் செல்வ விபீடணற்கு வேறானை
நல்லானை நாடி நறையூரில் கண்டேனே–-பெரிய திருமொழி –6-8-5-

கல்லார் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சிப் பாடகத்துள்
எல்லா வுலகும் வணங்க விருந்த வம்மான் இலங்கைக் கோன்
வல்லாளாகம் வில்லால் முனிந்த வெந்தை விபீடணற்கு
நல்லான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே -பெரிய திருமொழி –6-10-4-

————

கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினைப்
பற்றி எறிந்த பரமன் திருமுடி
உற்றன பேசி நீ ஓடித் திரியாதே
அற்றைக்கும் வந்து குழல் வாராய் அக்காக்காய்
ஆழியான் தன குழல் வாராய் அக்காக்காய் –ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி– 2-5 5- –

கற்றினம் மேய்க்கலும் மேக்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்
பற்றி உரலிடை ஆப்புமுண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கோலோ
கற்றன பேசி வசவு உணாதே காலிகளுய்ய மழை தடுத்த
கொற்றக் குடையாக வேந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை யுய்த்திடுமின்––நாச்சியார் திரு மொழி–12-8-

—————–

கன்னி நன் மா மதிள் சூழ் தரு பூம் பொழில் காவிரித் தென்னரங்கம்
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து
உன்னை இளம் கன்று மேய்க்க சிறுகாலே யூட்டி ஒருப்படுத்தேன்
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை என் குட்டமே முத்தம் தா –-ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி– 3-3 2-

கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் காகுத்தன்
தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே— -பெருமாள் திருமொழி-8-11-

——————-

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே —-திரு விருத்தம்–8-

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக் காற்றெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல் வண்ணன் ஏறக் கொலோ?
காண்கின்ற உலகத்தீர்க் கென் சொல்லுகேன்?
காண்கின்ற என் காரிகை செய் கின்றவே–-ஸ்ரீ திருவாய் மொழி-5-6-3-

————-

காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே
மாரிகை ஏறி அறை இடும் காலத்தும் வாழியரோ
சாரிகை புள் ஆர்ந்து அம் தண் துழாய் இறை கூய் அருளார்
சேரிகை ஏறும் பழியாய் விளைந்தது என் சின் மொழிக்கே –-திரு விருத்தம்-19-

காரிகையாருக்கும் உனக்கும் இழுக்கு உற்று என் காதுகள் வீங்கி எரியில்
தாரியாது ஆகில் தலை நொந்திடும் என்று விட்டிட்டேன் குற்றமே அன்றே
சேரியில் பிள்ளைகள் எல்லாரும் காத்து பெருக்கி திரியவும் காண்டி
ஏர்விடை செற்று இளம் கன்று எறிந்திட்ட விருடீகேசா என் தன் கண்ணே –ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி–2-3 10- –

————–

காரத்தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்து என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே -நாச்சியார் திரு மொழி-–14-4-

கார்த் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடுகின்றன வென்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே யென்று
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று
பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் -நாச்சியார் திரு மொழி-–12-6-

—————

காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக் கண்
ஓராழி யானடியே யோதுவது மோர்ப்பனவும்
பேராழி கொண்டான் பெயர் ——முதல் திருவந்தாதி–66-

காலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன்
மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை
மேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணெயே யன்றிருந்த
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ –பெரிய திருமொழி–10-7-2-

காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே -நாச்சியார் திரு மொழி––9-8-

—————

குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா!
குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே!
விரை கொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் உன்
உரை கொள் சோதித் திருவுருவம் என்னது ஆவி மேலதே–-ஸ்ரீ திருவாய் மொழி-4-3-7-

குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல்
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே–-ஸ்ரீ திருவாய் மொழி-10-6-7-

—————

குன்றம் எடுத்த பிரான் அடி யாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–-ஸ்ரீ திருவாய் மொழி–7-4-11-

குன்றம் எடுத்து மழை தடுத்து இளையரோடும்
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான்
முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்தீர்கின்ற
அன்றிலின் கூட்டைப் பிரிக்க கிற்பவர் ஆர் கொலோ–-பெரிய திருமொழி-11-2-1-

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே–பெரிய திருமொழி—11-8-10-

—————————–

குன்றால் மாரி தடுத்தவனைக் குல வேழம் அன்று
பொன்றாமை அதனுக்கு அருள் செய்த போர் ஏற்றை
அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ண வணி யழுந்தூர்
நின்றானை யடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே -பெரிய திருமொழி–7-6-4-

குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேர் இடையாள் பொருட்டாக
வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன்
சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகால் சகடம் சினம் அழித்துக்
கன்றால் விளங்காய் எறிந்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே -பெரிய திருமொழி–8-6-9-

————-

குன்று எடுத்து ஆ நிரை காத்த பிரான் கோவலனாய் குழலூதி ஊதிக்
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்து உடன் வருவானை தெருவில் கண்டு
என்றும் இவனை ஒப்பாரை நங்காய் கண்டு அறியேன் யேடி வந்து காணாய்
ஓன்று நில்லா வளை கழன்று துகில் ஏந்து இள மூளையும் என் வசம் அல்லவே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-3-4-4 – –

குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோநிரை மேய்த்தவனே எம்மானே
அன்று முதல் இன்று அறுதியா ஆதியம் சோதி மறந்து அறியேன்
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வந்து என்னைப் பற்றும் போது
அன்று அங்கு நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவிணைப் பள்ளியானே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–4 10-9 –

—————–

கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் !
தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா ! தாசரதீ !
கங்கையிலும் தீர்த்த மலி கண புரத்து என் கரு மணியே
எங்கள் குலத்தின் இன் அமுதே !ராகவனே !தாலேலோ !—-பெருமாள் திருமொழி-8-3–

கொங்கு மலி கருங்குவளை கண்ணாகத் தெண் கயங்கள்
செங்கமல முகமலர்த்தும் திருக் கண்ண புரத் துறையும்
வங்கமலி தடங்கடலுள் வரி அரவின் அணைத் துயின்ற
செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே —-பெரிய திருமொழி—8-3-8-

————–

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —–அமலனாதி பிரான்–10-

கொண்டல் வண்ணா இங்கே போதராயே கோவில் பிள்ளாய் இங்கே போதராயே
தெண் திரை சூழ் திருப் பேர் கிடந்த திரு நாரணா இங்கே போதராயே
உண்டு வந்தேன் அம்ம என்று சொல்லி ஓடி அகம்புக வாய்ச்சி தானும்
கண்டு எதிரே சென்று எடுத்து கொள்ளக் கண்ண பிரான் கற்ற கல்வி தானே —ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–2 9-4 – –

கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா -என்
அண்ட வாணா வென்று என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன் மேல் தான் மண் மேல் தான் விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே––ஸ்ரீ திருவாய் மொழி–8-5-6-

—————-

சலங்கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு
தடங்கடலைக் கடைந்து அமுதம் கொண்டுகந்த காளை
நலங்கொண்ட கருமுகில் போல் திருமேனி அம்மான்
நாள் தோறும் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
சலங்கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி
சண்பகங்கள் மண நாறும் வண் பொழிலி னூடே
வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே––பெரிய திருமொழி-3-9-1-

சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள் மாவலியை
நிலம் கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறிப் பொழிவீர் காள்
உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை
நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே–-நாச்சியார் திரு மொழி – -8-6-

————-

செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ் வுலகத்து
வைகுந்தன் பூதங்களே யாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே–-ஸ்ரீ திருவாய் மொழி-5-2-5-

செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்
செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
செய்ய கனி வாய் இளமான் திறத்தே–-ஸ்ரீ திருவாய் மொழி–5-6-4-

————

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்–நான்முகன் திருவந்தாதி -71-

சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற
மாயன் மணி வாள் ஒளி வெண்டரளங்கள்
வேய் விண்டுதிர் வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே–-பெரிய திருமொழி-1-10-8-

சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேசக் கேட்டிருந்தே
என்னெஞ்சம் என்பாய் எனக்கு ஓன்று சொல்லாதே
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி வேங்கட மலை கோயில் மேவிய
ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–-பெரிய திருமொழி-2-1-8-

———-

சோத்தென நின்று தொழ விரங்கான் தொன்னலம் கொண்டு எனக்கு இன்று தாறும்
போர்ப்பதோர் பொற் படம் தந்து போனான் போயின ஊர் அறியேன் என் கொங்கை
மூத்திடுகின்றன மற்றவன் தன் மொய்யகலம் அணையாது வாளா
கூத்தன் இமையவர் கோன் விரும்பும் குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் ————பெரிய திருமொழி—-9-5-9-

சோத்தென நின்னைத் தொழுவன் வரம் தரப்
பேய்ச்சி முலையுண்ட பிள்ளாய் பெரியன
ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச்
சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி தடம் கைகளால் கொட்டாய் சப்பாணி––பெரிய திருமொழி–10-5-5-

—————

ஞாலம் உற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் என்றும் நானிலம் சூழ்
வேலை யன்ன கோல மேனி வண்ணன் என்றும் மேல் எழுந்து
சேல் உகளும் வயல் கொள் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி
பாலின் நல்ல மென் மொழியாள் பார்த்தான் பள்ளி பாடுவாளே–பெரிய திருமொழி-4-8-6-

ஞாலம் முற்று உண்டு ஆல் இலை துயில் நாராயணனுக்கு இவள்
மாலதாகி மகிழ்ந்தனள் என்று தாயுரை செய்ததனைக்
கோலமார் பொழில் சூழ் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன
மாலை பத்தும் வல்லார்க்கு இல்லை வரு துயரே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-3 7-11 –

————–

தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி
நிவர்ந்து அளப்ப நீட்டிய பொற் பாதம் -சிவந்த தன்
கை யனைத்தும் ஆரக் கழுவினான் கங்கை நீர்
பெய்தனைத்துப பேர் மொழிந்து பின்–இரண்டாம் திருவந்தாதி-78-

தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம் செய்த வாழியான் அன்றே -உவந்து எம்மை
காப்பாய் நீ காப்பதனை யாவாய் நீ வைகுந்த
மீப்பாயும் எவ் உயிர்க்கும் நீயே–நான்முகன் திருவந்தாதி -19-

————-

தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில் திரு நெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையைக்
கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்
அளைந்து உண் சிறு பசுந்தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே – –திரு விருத்தம் -74 –

தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப்
பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே!
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ
விளங்க ஒரு நாள் காண வாராய் விண் மீதே–-ஸ்ரீ திருவாய் மொழி-6-9-4-

————-

தாங்கரும் சினத்து வன் தாள் தடக்கை மா மருப்பு வாங்கிப்
பூங்குருந்து ஒசித்துப் புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை
மாங்கனி நுகர்ந்து மந்தி வந்து வண்டிரிய வாழைத்
தீங்கனி நுகரு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே -பெரிய திருமொழி -4-5-4-

தாங்கரும் போர் மாலி படப்பறவை யூர்ந்து தாரலத்தோர் குறை முடித்த தன்மையானை
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்கட்கு ஆரமுதமானான் தன்னை
கோங்கரும் புசுர புன்னை குரவர் சோலைக் குழா வரி வண்டு இசைபாடும் பாடல் கேட்டு
தீங்கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–-பெரிய திருமொழி -2-10-4-

————–

தாராய தண் துளவ வண்டுழுத வரை மார்பன்
போரானைக் கொம்பு ஒசித்த புட் பாகன் என்னம்மான்
தேராரும் நெடு வீதித் திருவாலி நகராளும்
காராயன் என்னுடைய கனவளையும் கவர்வானோ–-பெரிய திருமொழி -3-6-6-

தாராய தண் துளப வண்டுழுத வரை மார்பன் என்கின்றாளால்
போரானைக் கொம்பொசித்த புட்பாகன் என்னம்மான் என்கின்றாளால்
ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக்கு என்கின்றாளால்
கார்வானம் நின்றதிரும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -பெரிய திருமொழி –8-1-4-

———–

திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும்
படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னைப் பங்கயத்தயன் அவன் அனைய
திட மொழி மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே–பெரிய திருமொழி–4-3-3-

திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசைப்
படர்பொருள் முழுவதும் ஆய்அவை அவைதொறும்
உடல்மிசை உயிர்எனக் கரந்துஎங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவைஉண்ட சுரனே–ஸ்ரீ திருவாய் மொழி —1-1-7-

————

திருமால் இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–-ஸ்ரீ திருவாய் மொழி-10-7-6-

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–-ஸ்ரீ திருவாய் மொழி-10-7-8-

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே—-ஸ்ரீ திருவாய் மொழி-10-8-1-

————

தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத்
தேனதனை வாய் மடுத்து உன் பெடையும் நீயும்
பூ மருவி யினிதமர்ந்து பொறியிலார்ந்த
அறுகால சிறுவண்டே தொழுதேன் உன்னை
ஆ மருவி நிரை மேய்த்த யமரர் கோமான்
அணியழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று
நீ மருவி அஞ்சாதே நின்றோர் மாது
நின்னயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே –திரு நெடும் தாண்டகம்-26-

தேமருவு பொழில் புடை சூழ் திருக் கண்ண புரத் துறையும்
வாமனனை மறி கடல் சூழ் வயலாலி வள நாடன்
காமரு சீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை
நா மருவி யிவை பாட வினையாய நண்ணாவே –பெரிய திருமொழி–8-3-10-

—————–

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே–-பெரிய திருமொழி-7-4-4-

தேராளும் வாளரக்கன் செல்வம் மாளத்
தென்னிலங்கை முன் மலங்கச் செந்தீ யொல்கிப்
போராளன் ஆயிரம் தோள் வாணன் மாளப்
பொரு கடலை யரண் கடந்து புக்கு மிக்க
பாராளன் பாரிடந்து பாரையுண்டு
பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட
பேராளன் பேரோதும் பெண்ணை மண் மேல்
பெரும் தவத்தள் என்றல்லால் பேசலாமே –திரு நெடும் தாண்டகம்-20-

————-

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கண புரத்து என் கரு மணியே!
ஏவரி வெஞ்சிலை வலவா! ராகவனே! தாலேலோ—-பெருமாள் திருமொழி- 8-10-

தேவரையும் அசுரர்களையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்
யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன
காவளரும் பொழில் மங்கைக் கலி கன்றி யொலி மாலை கற்று வல்லார்
பூவளரும் திரு மகளால் அருள் பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே –பெரிய திருமொழி–11-6-10-

—————

தொண்டெல்லாம் நின்னடியே தொழுது உய்யுமா
கண்டு தான் கண்ண புரம் தொழப் போயினாள்
வண்டுலாம் கோதை என் பேதை மணி நிறம்
கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே –பெரிய திருமொழி–8-2-8-

தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுது அடி பணியுமாறு
கண்டு நான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய்
அண்டமா எண் திசைக்கும் ஆதியாய் நீதியான
பண்டமாம் பரமசோதி நின்னையே பரவுவேனே –திருக் குறும் தாண்டகம் –11-

————-

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ் சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
சிகர மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே–ஸ்ரீ திருவாய் மொழி-6-3-3-

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாண் எனக்கு இல்லை என் தோழிமீர்காள்!
சிகர மணி நெடு மாட நீடு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன் மாயன் நூற்றுவரை யன்று மங்க நூற்ற
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சங் கவர்ந்து எனை ஊழியானே–-ஸ்ரீ திருவாய் மொழி-7-3-10-

————–

நந்தன் மதலையை காகுத்தனை நவின்று
உந்தி பறந்த ஒளி இழையார்கள் சொல்
செந்தமிழ் தென் புதுவை விட்டு சித்தன் சொல்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே –-ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 3-9 11- –

நந்தன் மதலை நிலமங்கை நற் துணைவன்
அந்த முதல்வன் அமரர்கள் தம் பெருமான்
கந்தங்கமழ் காயா வண்ணன் கதிர் முடி மேல்
கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோற்றும்பீ –பெரிய திருமொழி–8-4-9-

————

நீல தடவரை மா மணி நிகழக் கிடந்தது போல் அரவணை
வேலைத் தலைக் கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய்
சோலைத் தலைக் கணமா மயில் நடமாட மழை முகில் போன்று எழுந்து எங்கும்
ஆலைப் புகை கமழும் அணி யாலி யம்மானே–-பெரிய திருமொழி–3-5-2-

நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம்கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே –திரு விருத்தம்-39-

———————-

பஞ்சவர் தூதனாய் பாரதம் கை செய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நல பொய்கை புக்கு
அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனே அச்சோ அச்சோ ஆயர் பெருமானே அச்சோ அச்சோ –ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி– 1-8 3- –

பஞ்சவர் தூதனாய் பாரதம் கை செய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனைப் பாடிப் பற
வசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற –-ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி- 3-9 5-

——–

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும்
அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில்
புது நாள் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே –-ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி- 4-9 4-

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயில் கொண்டால் போலே மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப் பெரும் சங்கே––நாச்சியார் திரு மொழி ––7-9-

———————–

பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு
நின் கோயில் சீய்த்துப் பல்படி கால் குடி குடி வழி வந்தாட் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தான் –ஸ்ரீ திருவாய் மொழி –9-2-1-

பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே––பெரிய திருமொழி–5-7-1-

——————-

பந்தணைந்த மெல் விரலாள் பாவை தன் காரணத்தால்
வெந்திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன் விரி புகழ் சேர்
நந்தன் மைந்தனாக வாகும் நம்பி நம் பெருமான்
எந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே—பெரிய திருமொழி–2-2-4-

பந்தணைந்த மெல் விரலாள் சீதைக்காகிப் பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன்
அந்தமில் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த வம்மான் காண்மின்
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசை முகனே யனையவர்கள் செம்மை மிக்க
அந்தணர் தம் ஆகுதியின் புகையார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –பெரிய திருமொழி—7-8-7-

—————

புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பொசித்து
கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலையை
தெள்ளருவி கொழிக்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
வள்ளலை வாணுதலாள் வணங்கித் தொழ வல்லள் கொலோ––பெரிய திருமொழி-9-9-7-

புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பொசித்து
கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலையை
தெள்ளருவி கொழிக்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
வள்ளலை வாணுதலாள் வணங்கித் தொழ வல்லள் கொலோ––பெரிய திருமொழி–9-9-7-

புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரியின் கொம்பு ஒசித்தாய்
கள்ள அரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டாய்
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன்
தெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய் –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–2-7 5- – –

—————

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந்தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்–திருப்பாவை–13-

புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்தஎன்
கள்ள மாயவனே! கரு மாணிக்கச் சுடரே!
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவர மங்கை
யுள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறு எனக்கே––ஸ்ரீ திருவாய் மொழி-5-7-9-

———–

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்த அரிமாச் செகுத்து அடியேனை ஆளுக
ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான்
தூங்கு தண் பலவின் கனித்தொகு வாழையின் கனியொடு மாங்கனி
தேங்கு தண் புனல் சூழ்த் திருக் கோட்டியூரானே -பெரிய திருமொழி-–9-10-8-

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்தரிமா செகுத்து
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு வன் பேய் முலை
வாங்கி யுண்ட வவ்வாயன் நிற்க விவ்வாயன் வாய்
ஏங்கு வேய்ங்குழல் என்னோடு ஆடும் இளைமையே -பெரிய திருமொழி–11-2-2-

————-

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்த அரிமாச் செகுத்து அடியேனை ஆளுக
ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான்
தூங்கு தண் பலவின் கனித்தொகு வாழையின் கனியொடு மாங்கனி
தேங்கு தண் புனல் சூழ்த் திருக் கோட்டியூரானே -பெரிய திருமொழி–9-10-8-

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்தரிமா செகுத்து
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு வன் பேய் முலை
வாங்கி யுண்ட வவ்வாயன் நிற்க விவ்வாயன் வாய்
ஏங்கு வேய்ங்குழல் என்னோடு ஆடும் இளைமையே -பெரிய திருமொழி–11-2-2-

—————-

பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச்
செற்றார் படி கடந்த செங்கண் மால் நற்றா
மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று——முதல் திருவந்தாதி––20–

பெற்றார் தளை கழலப் பேர்ந்து அங்கு அயல் இடத்து
உற்றார் ஒருவரும் இன்றி உலகினில்
மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட
கற்றாயனே கொட்டாய் சப்பாணி கார் வண்ணனே கொட்டாய் சப்பாணி -பெரிய திருமொழி-10-5-4-

————-

பேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத் தண் கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு
காரார் திண் கடல் ஏழும் மலை யெழ் இவ்வுலகு யெழ் உண்டு
ஆராது என்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே –பெரிய திருமொழி–5-6-2-

பேரானைக் குடந்தை பெருமானை இலங்கொளி சேர்
வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை
ஆராவின்னமுதைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
காரர் கரு முகிலைக் கண்டு கொண்டு களித்தேனே -பெரிய திருமொழி–7-6-9-

————–

மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய்யன்பர் எண்ணில்
அலகளவு கண்ட சீராழி யாய்க்க்கு அன்றிவ்
வுலகளவும் உண்டோ வுன் வாய்——முதல் திருவந்தாதி––10-

மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும்
உண்ணும் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு
வண்ணன் எழில் கொள்மகர குழை இவை
திண்ணம் இருந்தவா காணீரே செய் இழையீர் வந்து காணீரே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–1-2-18-

மண்ணும் மலையும் மறி கடல்களும் மற்றும் யாவும் எல்லாம்
திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனை சிக்கென நாடுதிரேல்
எண்ணற்கு அரியதோர் ஏனமாகி இரு நிலம் புக்கு இடந்து
வண்ணக் கரும் குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர் –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–4 1-9 –

————-

மற்றுமோர் தெய்வம் உண்டே மதியிலா மானிடங்காள்
உற்ற போது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர்
அற்றமேல் ஓன்று அறியீர் அவனை அல்லால் தெய்வம் இல்லை
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே–திரு மாலை–9–

மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே –பெரிய திருமொழி–8-10-3-

————–

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் —இரண்டாம் திருவந்தாதி–28-

மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்வன் சினத்துச்
செரு நருகச் செற்று உகந்த தேங்கோத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து –மூன்றாம் திருவந்தாதி-–3–

——————

மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மா மதயானை யுதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே—-நாச்சியார் திரு மொழி -4-5-

மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –பெரிய திருமொழி–5-8-10-

—————–

மானேய் நோக்கியர் தம் வயிற்றுக் குழியில் உழைக்கும்
ஊனேர் ஆக்கை தன்னை யுதவாமை உணர்ந்து உணர்ந்து
வானே மா நிலமே வந்து வந்து என் மனத்து இருந்த
தேனே நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –பெரிய திருமொழி–6-2-3-

மானேய் நோக்கு நல்லார் மதி போல் முகத்து உலவும்
ஊனேய் கண் வாளிக்கு உடைந்து ஓட்டந்து உன்னடைந்தேன்
கோனே குறுங்குடியுள் குழகா திரு நறையூர்த்
தேனே வரு புனல் சூழ் திரு விண்ணகரானே–-பெரிய திருமொழி-6-3-3-

மானேய் நோக்கி மடவாளை மார்பிற் கொண்டாய் மாதவா!
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!
வானார் சோதி மணி வண்ணா! மது சூதா! நீ அருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே––ஸ்ரீ திருவாய் மொழி– 1-5-5-

————–

மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லி புத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்து வித்த இருடீகேச முலை உணாயே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–2 2-6 –

மின் அனைய நுண்ணி இடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்
தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற் குவடாம் அரும் தவததேன் ஆவேனே –பெருமாள் திருமொழி-–4-6-

மின்னணைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை
வேந்தன் முடி யொருபதும் தோள் இருபதும் போய் உதிர
தன்னிகரில் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த
தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை
செங்கழு நீரொடும் இடைந்து கழனி திகழ்ந்து எங்கும்
மன்னு புகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–-பெரிய திருமொழி-3-9-5-

——–

மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு
வீங்கு இருள் வாய் என் தன் வீதி யூடே
பொன் ஒத்த வாடைக்குக் கூடல் இட்டு
போகின்ற போது நான் கண்டு நின்றேன்
கண் உற்றவளை நீ கண்ணால் இட்டு
கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன்
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் ?
இன்னம் அங்கே நட நம்பி ! நீயே— 6-5-

மின்னொத்த நுண்ணிடையாய் மெய்யடியேன் விண்ணப்பம்
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே யங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் – –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–-3-10-7-

——————

மைத்தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப் பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத் தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-1-2-12-

மைத் தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை-
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டு சித்தன் விரித்த தமிழ் இவை
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடரில்லையே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–1-4 10-

———–

வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட
அஞ்சன வண்ணனை யாய்ச்சி தாலாட்டிய
செம் சொல் மறையவர் சேர் புதுவை பட்டன் சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே—ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–1 3-10 –

வஞ்சனையால் வந்தவள் தன் உயிர் உண்டு வாய்த்த
தயிர் உண்டு வெண்ணெய் அமுதுண்டு வலி மிக்க
கஞ்சன் உயிரது உண்டு இவ் உலகுண்ட காளை
கருதுமிடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி
மஞ்சுலவு பொழிலூடும் வயலூடும் வந்து
வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் மணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே -பெரிய திருமொழி–3-10-9-

———–

வண்டமரும் வனமாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -பெரிய திருமொழி–8-1-9-

வண்டமரும் மலர்ப்புன்னை வரி நீழல் அணி முத்தம்
தெண்திரைகள் வரத் திரட்டும் திருக் கண்ண புரத் துறையும்
எண் திசையும் எழு சுடரும் இரு நிலனும் பெரு விசும்பும்
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே -பெரிய திருமொழி-8-3-7-

வண்டமரும் சோலை வயலாலி நன்னாடன்
கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை
கொண்டல் நிற வண்ணன் கண்ண புரத்தானைத்
தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோற்றும்பீ -பெரிய திருமொழி-8-4-10-

வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும்
தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ் மாலை
தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்றாட
உண்டே விசும்பு உந்தமக்கு இல்லை துயரே -பெரிய திருமொழி–7-1-10-

————–

வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே –பெரிய திருமொழி–11-5-5-

வண்ணக் கரும் குழல் மாதர் வந்து அலர் தூற்றிடப்
பண்ணிப் பல செய்திப் பாடி எங்கும் திரியாமே
கண்ணுக்கு இனியானை கானதரிடைக் கன்றின் பின்
எண்ணற்கு அரியானை போக்கினேன் எல்லே பாவமே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–3 2-4 –

————

வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ
சிந்தா மணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே––பெரிய திருமொழி–1-10-9-

வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
எந்தாய் போய் அறியாய் யிதுவே யமையாதோ
கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்துகந்த
மைந்தா வுன்னை என்றும் மறவாமை பெற்றேனே –-பெரிய திருமொழி–8-9-5-

வந்தாய் போலே வந்தும்,என் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யாய்; இதுவே இது வாகில்,
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய்! யான் உனை எங்கு வந்து அணுகிற்பனே?––ஸ்ரீ திருவாய் மொழி–3-2-5-

வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே!
செந் தாமரைக் கட் செங்கனி வாய் நாற் றோளமுதே! என துயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உன பாதம் அகல கில்லேன் இறையுமே—ஸ்ரீ திருவாய் மொழி–6-10-9-

————

வம்பு அவிழ் கோதை பொருட்டா மால் விடை ஏழும் அடர்த்த
செம் பவளத்திரள் வாயன் சிரீதரன் தொல் புகழ் பாடிக்
கும்பிடு நட்டம் இட்டு ஆடிக் கோகு உகட்டு உண்டு உழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே சாது சனங்க ளிடையே?––ஸ்ரீ திருவாய் மொழி–3-5-4-

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமைய்க்கலம் காண்டற்கு
ஏற்ப்பன வாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினான் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-திருப்பள்ளி எழுச்சி—8 –

வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழு வென மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் —1-6-4-

வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக
அம்பு தன்னால் முனிந்த வழகன் இடம் என்பரால்
உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் நற்
செம்பொனாரும் மதிள் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே –பெரிய திருமொழி —5-4-5-

————–

வாரணிந்த கொங்கை ஆய்ச்சி மாதவா உண் என்ற மாற்றம்
நீரணிந்த குவளை வாச நிகழ் நாறும் வில்லி புத்தூர்
பாரணிந்த தொல் புகழான் பட்டார் பிரான் பாடல் வல்லார்
சீரணிந்த செங்கண் மால் மேல் சென்றசிந்தை பெறுவார் தாமே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–2 2-11 – –

வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-–3-10-4-

வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-–3-10-10-

வாராரும் முலை மடவாள் பின்னைக்காகி வளை மருப்பில் கடுஞ்சினத்து வன் தாள் ஆர்ந்த
காரார் திண் விடை யடர்த்து வதுவை யாண்ட கருமுகில் போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்
ஏராரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும் எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்
சீராரு மணி மாடம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே——பெரிய திருமொழி—–4-4-4-

வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்
ஏராரும் பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சீராரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே—–பெரிய திருமொழி–4-1-8-

வாராளும் இளம் கொங்கை வண்ணம் வேறாயின வாறு எண்ணாள் எண்ணில்
பேராளன் பேரல்லால் பேசாளிப் பெண் பெற்றேன் என் செய்கேன் நான்
தாராளன் தண் குடந்தை நகராளன் ஐவர் க்காய் அமரில் தேர் உய்த்த
தேராளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் செப்புகேனே –பெரிய திருமொழி-–5-5-7-

வாராளும் இளங் கொங்கை நெடும் பணைத் தோள் மடப்பாவை
சீராளும் வரை மார்பன் திருக் கண்ண புரத் துறையும்
பேராளன் ஆயிரம் பேர் ஆயிரம் வாய் அரவணை மேல்
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே –பெரிய திருமொழி-–8-3-9-

—————

வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை பேய் மகள் துஞ்ச
நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சியில் நிற்கும் நம்பியைக்
கஞ்சனைத் துஞ்சவஞ்சித்த வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டேனே –பெரிய திருமொழி–7-10-8-

வெஞ்சினக் களிறும் வில்லோடு மல்லும் வெகுண்டு இருத்து அடர்த்தவன் தன்னைக்
கஞ்சனைக் காய்ந்த காளை யம்மானைக் கரு முகில் நிறத்தவனைச்
செஞ்சொல் நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே––பெரிய திருமொழி–4-3-7-

————

வெந்திறல் களிறும் வேலை வாய் அமுதும் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும்
இந்திரர்க்கு அருளி எமக்கும் ஈந்து அருளும் எந்தை எம்மடிகள் எம்பெருமான்
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிர முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே—–பெரிய திருமொழி–1-4-7-

வெந்திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கோர் குறளாகி மெய்ம்மை உணர
செந்தொழில் வேத நாவின் முனியாகி வையம் அடி மூன்று இரந்து பெறினும்
மந்தர மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர்
அந்தரம் ஏழினூடு செல வுய்த்த பாதமது நம்மை யாளும் அரசே –பெரிய திருமொழி-–11-4-5-

———–

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே -கேழ்ந்த
அடித்தாமரை மலர்மேல் மங்கை மணாளன்
அடித்தாமரை யாமலர் ——மூன்றாம் திருவந்தாதி–—-96-

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின்தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால்கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும்தங்கு––பெரிய திருவந்தாதி —84-

————————–

வெள்ளை நுண் மணல் கொண்டு தெருவணிந்து
வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து
முள்ளும் இல்லாச் சுள்ளி எரி மடுத்து
முயன்று உன்னை நோற்கின்றேன் காம தேவா
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு
கடல் வண்ணன் என்பதோர் பேர் எழுதி
புள்ளினை வாய் பிளந்தான் எனபது ஓர்
இலக்கினில் புக வென்னை எய்க்கிற்றியே––நாச்சியார் திரு மொழி–1-2-

வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தி யாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஓன்று இலோம் கண்டாய்
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே –-நாச்சியார் திரு மொழி–2-5-

————

வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர் திருச் சக்கரம் ஏந்தும் கையன்
உள்ளவிடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன்
வெள்ளைப் புரவி குரக்கு வெல் கொடிதேர் மிசை முன்பு நின்று
கள்ளப் படை துணையாகி பாரதம் கை செய்யக் கண்டார் உளர் –ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி- 4-1-7- –

வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் எனக்கு உருக் காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ள விழ் செண்பகப் பூ மலர்க் கோதிக் களித்து இசை பாடும் குயிலே
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்––நாச்சியார் திரு மொழி-5-2-

—————

வையம் எல்லாம் பெறும் வார் கடல் வாழும் மகரக் குழை கொண்டு வைத்தேன்
வெய்யவே காதில் திரியை இடுவன் நீ வேண்டியது எல்லாம் தருவன்
உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே
மையின்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய்–ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி- 2 3-3 –

வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி
வெய்ய சீற்றக் கடியிலங்கை குடி கொண்டோட வெஞ்சமத்து
செய்த வெம்போர் நம்பரனைச் செழும் தண் கானல் மண நாறும்
கைதை வேலிக் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே—பெரிய திருமொழி –8-8-7-

————–

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–-மூன்றாம் திருவந்தாதி–—69-

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்—நான்முகன் திருவந்தாதி–40-

அருளிச் செயலில் சாரமான திருவாய் மொழியின் ப்ரமாண்ய அதிசயத்தை பிரகாசிப்பைகாக ,
ஆழ்வார்களுடைய ஐக கண்ட்யைத்தையும் ,அவர்களில் தலைவரான இவர் அருளிச் செய்த இப் பிரபந்ததினுடைய பிராபல்யத்தையும் ,
பிரதி பாதியா நின்று கொண்டு , ஏவம் பூதமான விதுக்குச் சேராத சாஸ்திரங்கள் பரீஷக பரித்யாஜ்யங்களாம் படியை அருளிச் செய்கிறார் ..

குரு சிஷ்ய கிரந்த விரோதங்களை
பரமதாதிகளாலே பரிஹரியாமல்
செஞ்சொல் செம்தமிழ் இன் கவி
பரவி அழைக்கும் என்று
அந்யோந்யம் கொண்டாடி
பேசிற்றே பேசும் ஏக கண்டரில்
என்னில் மிகு வென்னும் இவர் உரை
கொள் இன் மொழி கொண்டு
சாஸ்த்ரார்தங்களை நிர்ணயிக்க வேண்டுகையாலே
வலம் கொண்டு இதுக்கு சேராதவை
மநு விபரீதங்கள் போலே-(விலக்கப்படுவனவாம் )
(வலம் -பலம் -பிரபலம் என்றவாறு )

அதாவது –
ருஷிகளில் ,குரு சிஷ்யர்களான வியாச ஜைமிநிகளில் ,
(பூர்வ மீமாம்சை -கர்மகாண்ட விசாரம் -அபூர்வத்தை ஒத்துக் கொண்டு ஜைமினி -12-அத்தியாயங்கள் –
உத்தர மீமாம்சை –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூதரம் -4-அத்தியாயங்கள்
கர்ம விசாரம் பண்ணிய பின்பு – அதனாலே ப்ரஹ்ம விசாரம் –அத அதக– முதல் ஸூத்ரம் -அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஜாசா
அதாதோ கர்ம ஜிஜ்ஜாசா-பரமத -ஆதி என்றது -அந்நிய பரத்வங்களாலே-இரண்டாலும் – பரிஹரியாமல்-
கர்மம் செய்வதை சொன்னது இவை இரண்டாலும் )
குருவான வியாசனுடைய கிரந்தமான ,ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தோடு சிஷ்யனான ஜைமினி உடைய
கிரந்தமான கர்ம ஸூத்ரத்தோடு நிரீஸ்வர வாதாதிகளால் ,வந்த விரோதத்தை ,
சம்பத் தேரிதி , ஜைமினி–ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்–1-2-32-
( பிராணா ஹூதி ஹோமங்களை அக்னி ஹோத்ர ஹோமங்களாக செய்வதற்காக உபாசகனுடைய
மார்பு முதலான உறுப்புகளை நெருப்பு களாக கூறியுள்ளது என்று ஜைமினி சொன்னார் )
அன்யார்த்தம் து ஜைமினி–ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்– 1-4-18-
( வேறு பயனுக்காகவே இங்கு ஜீவனைச் சொல்லுகிறது என்று ஜைமினி சொல்கிறார்-
ஜீவனைக்காட்டிலும் ப்ரஹ்மம் வேறுபட்டது என்று காட்டவே )
பரம் ஜைமினி முக்யத்வாத்—ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்– 4-3-11-
( பர ப்ரஹ்மத்தை உபாசிக்கின்றவர்களையே ஆதி வாஹிகர்கள் அழைத்துக் கொண்டு போகிறார்கள் என்று ஜைமினி எண்ணுகிறார்-
ப்ரஹ்ம கமயிதி என்ற இடத்தில் உள்ள ப்ரஹ்ம சப்தம் ப்ரஹ்மத்தின் இடமே முக்கியமாக இருப்பதால் )
ப்ராஹ்மனே ஜைமினி –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்-4-4 -5-
( ப்ரஹ்ம சம்பந்தியான அபஹத பாப்மத்வம் முதலான குணங்களோடு முக்தன் தோன்றுகிறான் என்று
ஜைமினி சொல்லுகிறார் ) இத்யாதியான ,ப்ரஹ்ம ஸூத்தரங்களாலே
ஜைமினிக்கு ப்ரஹ்ம ஸ்வரூப தத் குண தத் உபாசன தத் பலாதிகளின் உடைய
அங்கீகாரம் உண்டு என்னும் இடமும் தோற்றுகையாலும் ,

மகா பாரதத்திலே ,ஹய சிர உபாக்யானாதிகளிலே பகவத் வியாச உபதேச லப்த
பரமாத்மா தத்வ ஞானம் உடையவனாய் சொல்லுகையாலும் ,
ஸ்ரீ வேத வியாசனும் ஜைமினியும் ஏக கண்டர்கள்..

இனி தேவதா நிராகரணம் பண்ணின இது ,ஈஸ்வர பிரநீதமாக வேதத்தை
சிலர் சொல்லுகையாலே ,அந்த பௌ ருஷேத்வம் அடியாக
விப்ரலம்பாதி தோஷங்களை கல்பித்து வேத அப்ராமண்யம் சொல்லுவது ,
வைதிக கர்மங்களை ,நிந்திப்பதாகிற பாஹ்யரை நிராகரித்து ,
வேத ப்ராமண்ய கர்மா அவச்ய ,கர்தவ்யைகளை சாதிக்கையில் உண்டான இச்சையாலே
ஸ்வ மதம் அன்றிலே இருக்க பரம பதத்தை அவலம்பித்து சொன்னான் என்றாதல் ..
அன்றிக்கே தேவதா நிராகரணத்தில் ,தாத்பர்யம் இல்லை ..

அஸ்ருத வேதாந்தருக்கு கர்மத்தில் ,அச்ரத்தையை நிவாரிக்கைக்காக ,
கர்ம பிரதாண்யம் சொல்லுகையிலே தாத்பர்யம் ஆகையாலே ,
நஹி நிந்த்யா நிந்த்யம் நிந்திதும் ந பிரவர்த்ததே
நிந்திதாத் இதரத் பிரசம்கிதம் –
(நிந்தையானது நிந்திக்கும் பொருளை நிந்திப்பதற்கு வரவில்லை -நிந்திக்கும் பொருளைக் காட்டிலும்
வேறான ஒரு பொருளைத் துதிப்பதற்காக வந்தது ) –என்கிற ந்யாயத்தாலே ,
தேவதா நிரகரணம் பண்ணின இது ,கர்ம பிரசம்சார்த்தம் ஆகையாலே
அந்ய பரம் என்றாதல் கொள்ள வேணும் என்று
இப்படி பரமத அன்ய பரத்வங்களால் பரிஹரிக்க வேண்டிற்று இறே .
( கர்மங்களை அவசியம் செய்ய வேண்டும் என்பதன் பொருட்டு ஆகையால் கடவுள் இல்லை என்று கூறின இது
வேறு ஒன்றிலே நோக்கு என்றாதல் கொள்ள வேண்டும் -என்று இப்படி பிறர் தம் மதம் மேற்கொண்டு கூறினார் –
வேறு ஒன்றினை உட்க்கொண்டு கூறினார் என்று பரிஹாரம் செய்ய வேண்டுமே )

அப்படியே
இங்கும் அந்யோந்ய வசன விரோதம் உண்டாய் ,அதுக்கு பரிகாரம் பண்ண வேண்டாத படி
செஞ்சொல் கவிகாள்–திருவாய் -10-7-1-என்றும்
செம் தமிழ் பாடுவார் தாம் வணங்கும் -பெரிய திருமொழி -2-8-2–என்றும்
இன் கவி பாடும் பரம கவிகள்-திருவாய் -7-9-6 -என்றும்
பதியே பரவித் தொழும் தொண்டர் -பெரிய திருமொழி -7–1-7-என்றும்
அரங்காவோ என்று அழைக்கும் தொண்டர் -பெருமாள் திருமொழி -2-2–என்றும்
பரஸ்பரம் ஸ்லாகித்து கொண்டு ,

பேசிற்றே பேசல் அல்லால்–திருமாலை -22- -என்ற படியே
ஒருவர் பேசினதே எல்லாரும் பேசும் ஏக கண்டரான
ஆழ்வார்களில் வைத்து கொண்டு

என்னில் மிகு புகழார் யாவர் –பெரிய திருவந்தாதி –4-என்று சேஷிக்கு அதிசயகராகப் பெற்ற
ப்ரீதி பிரகர்ஷத்தாலே என்னில் காட்டில் மிக புகழ் உடையார் ஆர் என்னும்
சர்வாதிகரான இவருடைய -உரை கொள் இன் மொழியாளை-திருவாய் -6-5–3- -என்கிற படியே
ஸ்ரீ ராமாயணாதிகளையும் ஸ்வ வைலஷண்யத்தாலே ஜெயிக்கும் படியான
சக்திகளைக் கொண்டு வேத தத் உப ப்ரும்ஹண ரூப சாஸ்த்ரங்களில் ,சம்சயிதமான
அர்த்தங்களை நிர்ணயிக்க வேண்டும் படியாய் இருக்கும் ஆகையாலே –

வலம் கொண்ட வாயிரம்–திருவாய் -3–8-11-என்கிற படியே பிரதி பாத்ய வஸ்துவை உள்ள படியே
பிரதி பாதிக்க வல்ல சாமர்த்தியத்தை உடைத்தான இப் பிரபந்தத்துக்கு
சேராத சாஸ்திரங்கள் -மன் வர்த்த விபரீதா து யா ஸ்ம்ருதிஸ் ஸா ந சஸ்யதே –
( எந்த ஸ்ம்ருதியானது மனுவினால் சொல்லப்பட்ட பொருளுக்கு மாறுபட்டு இருக்கிறதோ அது புகழப்படுவது இல்லை )
என்று சொல்லப் பட்ட மநு விபரீதமான ஸ்ம்ருதிகள் போலே கழிக்க படும் என்கை-

—————————————————–—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –19-உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்இத்யாதி —

April 2, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஐஸ்வர்யாதி பர தேவதா பர்யந்தமான அபேஷித வஸ்துக்கள் எல்லாம் ஸ்ரீ திருவாய் மொழியே –என்று
ஜகத் பிரசித்தமாக நின்ற ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு நிரதிசய போக்யர் -என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

ஐ ஹிக ஆமுஷ்மிக சமஸ்த சம்பத்தும் -சர்வவித பந்துக்களும் -வகுத்த சேஷியான ஸ்ரீயபதியும் –
ஸ்ரீ நம் ஆழ்வார் -தமக்கு பகவத் நிர்துஹேதுக கிருபையாலே பிரகாசியா நின்று உள்ள அர்த்த விசேஷங்களை-
அடைவே அருளிச் செய்த ஸ்ரீ த்ரமிட உபநிஷத்தே என்று சகல ஜனங்களுக்கும் உபதேசிக்கிற
ஸ்ரீ எம்பெருமானார்-எனக்கு நிரதிசய போக்யர் – என்கிறார்-

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ திருவாய் மொழியே சொத்தும் -தந்தையும் -தாயும்-குருவும் -ஸ்ரீயபதியான பர தேவதையுமாக-உலகில் பிரசித்தமாகும் படி
நின்ற ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு மிகவும் இனியர் -என்கிறார்-

இது காறும்-ஸ்ரீ ஆழ்வார்கள் இடம் ஸ்ரீ எம்பெருமானாருக்கு உள்ள ஈடுபாடு கூறப்பட்டது –
இதனில் ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய ஸ்ரீ திருவாய் மொழியையே உலகினர்க்கு இன்றியமையாத சொத்தும்
மாதா பிதா குரு தெய்வமுமாகக் கொள்ளுமாறு அதன் பெருமையை உணர்த்திப் பரப்பிய பேருபகாரம் பேசப்படுகிறது –
ஸ்ரீ நம் ஆழ்வார் ஸ்ரீ திருவாய் மொழியை தமது அனுபவ முறையில் அருளிச் செய்தார் –
ஸ்ரீ எம்பெருமானார் அதன் மாண்பினை உலகில் உள்ள மாந்தர் அனைவரும் உணர்ந்து
மாந்தி மகிழும்படி செய்து சிரஞ்சீவியாக அதனை வளர்த்து அருளினார் என்பது கருத்து-
ஈன்ற முதல்த் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் -என்றனர் ஆன்றோரும் –

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-

உறு பெரும் செல்வமும் -சீரிய பெரிய சொத்தும்
தந்தையும் -பிதாவும்
தாயும் -மாதாவும்
உயர்குருவும் -மேன்மை தங்கிய ஆசார்யனும்
வெறி தரு -மனம் கமழுகிற
பூ மகள் -பூவில் பிறந்த பெரிய ப்ராட்டியாருடைய
நாதனும் -கேள்வனாகிய தெய்வமும்
மாறன்-நம் ஆழ்வார் உடைய
விளங்கிய -வெளிப்பட்டு தோன்றிய
சீர் -இயல்பான பர பக்தி முதலிய குணங்களினுடைய
நெறி -அடைவிலே
தரும்-அருளி செய்யும்
செம் தமிழ் ஆரணமே -செவ்விய தமிழ் வேதமாகிய திருவாய் மொழியே என்று
இம் நீள் நிலத்தோர் -இந்த நீண்ட உலகத்தவர்
அறிதர -தெரிந்து கொள்ளும்படியாக
நின்ற -பிரசித்தமாகும்படி எழுந்து அருளி இருந்த
இராமானுசன் -எம்பெருமானார்
எனக்கு ஆர் அமுது -எனக்கு அருமையான அமுதம் போன்று இனியராவார் –

ஸ்வ சம்பந்தத்தை வுடையவர்களுக்கு இன்னார் என்னும் மதிப்பை கொடுக்குமதாய்
ஹித பரமுமாய் -ப்ரியகரமுமாய் -அஞ்ஞாத ஜ்ஞாபகமுமாய் -பிராப்ய ப்ராபகங்களுமாய்- இருக்கையாலே –
சீரியதாய் -நிரவதிகமான சம்பத்தும் -பிதாவும் -மாதாவும் -சதாசார்யனும் –
பரிமளிதமான புஷ்பத்தை பிறப்பிடமாக உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான ஸ்ரீ சர்வேஸ்வரனும் –
ஸ்ரீ ஆழ்வார் பகவத் ப்ரசாதத்தாலே தமக்கு பிரகாசித்த -பரபக்தி -யாதி – ச்வபாவங்களின் உடைய அடைவிலே –
உபகரித்து அருளின -திராவிட வேதமான ஸ்ரீ திருவாய் மொழியே
என்று இம் மகா ப்ருதிவியில் உள்ளார் அறியும்படி நின்ற ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு நிரதிசய போக்யர் –
அதவா
விளங்கிய சீர் நெறி தரும் என்றது -சீர்த் தொடை யாயிரம் -திருவாய் மொழி -1 2-11 – –
என்னும்படி தமக்கு பிரகாசித்த பகவத் குணங்களை அடைவே உபகரித்து அருளின -என்னவுமாம் –

மாறனுக்கு விளங்கிய –
மயர்வற மதிநலம் அருளப் பட்டவர் என்றபடி –
வேதார்த்தம் -திருவாய் மொழி -தீர்த்த சரணாகதி -நித்ய சிந்தயந்தி -அன்றோ இவர் –
வெறி தரு பூ -பூ மகள் -நாதன் –
பரிமளம் வடிவு -திருத் துழாய் தரித்த நாதன் என்றுமாம் –
நெறி தரும் –
சாத்விக்க சாத்விக்க –
தரும் செந்தமிழ் ஆரணம் -அறிதர நின்ற –
அனைவரும் அறிந்த பின்பு தரித்த ஸ்ரீ ராமானுஜர்-12–பாசுரங்களால் -12-ஆழ்வார் சம்பந்தம் சொல்லி -இந்த பிரகரணம் முடிகிறது –
உறு துணை -என்றவர் –ப்ரீதி காரித கைங்கர்யம் பெற திருவாய்மொழி நிலை நிற்க ஸ்ரீ எம்பெருமானார் திருவடி சேர்வோம் என்றதாயிற்று என்றுமாம் –
கீழே தண் தமிழ் செய்த நீலன் என்று
பெரிய திருமொழி முதலான திவ்ய பிரபந்தங்கள் சம்பந்தம் சொல்லி
இதில் -செம் தமிழ் ஆரணம் -இவையே ஆரமுது-ஸ்வாமிக்கும் நமக்கும் –
உறு -உயர் -விசேஷணம் அனைவருக்கும் -அவனுக்கு இவற்றையே பூ மகள் -ஸ்தானத்தில் சொல்லி ஸ்ரீ யபதி என்றவாறு

உறு பெரும் செல்வமும்
அவிந்தந தனஞ்சய பிரசமதம் தனம் தந்தனம் -என்கிறபடியே அப்ராப்தமான சம்பத் அன்றிக்கே –
தனஞ்சய விவர்த்தனம் தனமுதூட கோவர்த்தனம் சூசாத நம பாதநம்-சூ மனசா சமாராதனம் -என்றும் –
ஸாஹி ஸ்ரீர்ம்ர்தாசதாம் -என்றும் -முக்த ஐச்வர்யத்துக்கு உடல் ஆகையாலே –ப்ராப்தமாய் –
பெரும் –
ஷீணே புன்யே மர்த்த்ய லோகாம் விசந்தி -என்றும் –
ஒரு நாயகம் ஓட வுலகு உடன் ஆண்டவர்-கரு நாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர் பெரு நாடு காண
இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் -என்றும்-சொல்லுகிறபடியே அதி ஸ்வல்பமாய் -அநித்யமாய்-இருக்கை அன்றிக்கே –
கொள்ளக் குறைவற்று இலங்கி – கொழுந்து விட்டோங்கிய -என்கிறபடியே – கொள்ளக் கொள்ள பெருகி வரக் கடவதாய் இருக்கிற –
செல்வமும் –
சம்பத்தும் -அளவியன்ற யந்தாதி யாயிரம் இறே -இது –

உறு பெரும் செல்வமும்
உலகில் வாழ்வதற்கு இன்றியமையாதது செல்வம்-
அது இல்லாத போது தந்தை தாய் குரு தெய்வம் என்று மேல் சொல்லுமவை யனைத்தும் இருந்தாலும் பயன்படாது –
இல்லாதவை போல் ஆகி விடுதலின் செல்வத்தை முந்துற கூறுகிறார் –
இழிகுலப் பிறப்பானும்-அறிவின்மையானும் -இன்னார் என்று ஒரு பொருளாக மதிக்கபடாத வரையும் -மதிக்கப் படுபவராக
செய்ய வல்லது செல்வம் –
உயர் குலத்தாரும் –அறிவுடையாரும் -குலமும் -அறிவும் இல்லாவிடினும் -செல்வம் படைத்தது இருப்பதை ஒன்றினையே கருதி –
அவர் பால் சென்று -அவர் அருள் நாடி நிற்பதை நாம் உலகினில் காண்கிறோம் –
இதனையே வள்ளுவனாரும் –
பொருள் அல்லாதவரை பொருளாகச் செய்யும் பொருள் அல்லது இல்லை பொருள் -என்கிறார் –
திருவாய் மொழியும் தன்னைக் கற்றவரை –
உயர் குலமும் அறிவுடைமையும் இல்லாது இருப்பினும் –
அறியக் கற்று -வல்லார் வைட்ணவர்-என்றபடி –
ஞான ஜென்மத்தை தந்து -வைஷ்ணவராக மதிக்கப்பட செய்து -உயர் குலத்தாரையும் -அறிவுடையாரையும் –
அவர் பால் சென்று அருளை-பாகவத அனுக்ரகத்தை-நாடி நிற்கச் செய்தலின் செல்வமாகப் போற்றப் படுகின்றது -என்க-
ஏனைய செல்வம் போலே அளவுக்கு உட்படாது வாரி வாரி வழங்கத் துய்க்கத் துய்க்கத் குறைவு படாதது
இத் திருவாய்மொழியாம் செல்வம் என்பது தோன்ற –பெரும் செல்வம்-என்கிறார் –
ஏனைய செல்வம் -அறனீனும் இன்பமுமீனும் -இச் செல்வமோ வீட்டு இன்பத்தையும் தருதலின் அதனினும்
மிக்கது என்பது தோன்ற –உறு பெரும் செல்வம் -என்றார்-
அந்தணர் செல்வம் வட மொழி யாரணம் –அந்தணர் மாடு -என்றார் திரு மங்கை மன்னன் –

தந்தையும் தாயும் –
மாதா பித்ர் சஹஸ்ரேப்யோ-வஸ்தலதரம் சாஸ்திரம் -என்று -சகல ஜன உஜ்ஜீவன ப்ரவர்த்தமாய் இறே –
வேதத்வ சாமான்ய விசிஷ்ட வேதம் எல்லாரும் விரும்புவது –
அப்படியே -திராவிட வேத சாகரம் -என்று இத்தை வேதமாக நிதர்சிக்கையாலே –
சகல ஜன உஜ்ஜீவன ஏக ப்ரவர்த்தம் ஆகையாலும் –
பக்தாம்ர்தம் விஸ்வ ஜன அநு மோதனம் -என்றும்
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -என்றும் சொல்லுகிறபடியே
பிரியத்தையே நடத்தக் கடவதாகையாலும் -திரு வாய் மொழியிலே –
வீடு முன் முற்றவும் -என்று தொடங்கி -கண்ணன் கழலினை –என்னும் அளவும் ஆதி அந்தத்திலே
ஹிதத்தையே போதிக்கையாலே ஹிதத்தை நடத்தக் கடவதாகையாலும்
தாயும் தந்தையுமாய் இருக்கும் என்றபடி –

செம் தமிழ் ஆரணம் -நீள் நிலத்தோர் அனைவருடையவும் செல்வம் .தந்தையும் ..பூ மகள் நாதனும் —
ஹிததை நாடும் பிதாவும் -பிரியத்தை கோரும் மாதாவும் -அறியாதன அறிவிக்கும் குருவும் –
பேறும் பெருவிப்பதும் ஆகிய தெய்வமும் -திருவாய் மொழியே -என்றபடி –
மாதா பிதா குரு தெய்வம் எனும் முறையை மாற்றி -பிதாவுக்கு முதலிடம் கொடுக்கப் பட்டு உள்ளது –
இதத்தால் ஹிதத்தை உணர்த்துதலே செம் தமிழ் ஆரணத்துக்கு முக்கிய நோக்கம் ஆகும் என்று தோற்றுகிறது –
அசேஷ ஜகத்தித அனுசாசன ச்ருதி நிகரசிர-என்று உலகு அனைத்துக்கும் ஹிதத்தை கற்ப்பிக்கும் வேதாந்தம் –
என்று வேதார்த்த சந்க்ரஹத்தில் ஸ்ரீ பாஷ்ய காரர் அருளி உள்ளமையும் காண்க –
ஹிதத்தை கற்ப்பிதலாவது –
உபாயத்தையும் -உபேயத்தையும் -பகுத்து உணர்த்துதல் –
பேற்றுக்கு உரிய நல் வழியே ஹிதம் என்க –
திரு நாரணன் தாள் சிந்தித்தல் உய்ய உபாயம் என்று ஹிதத்தை உணர்த்துதலின் செம் தமிழ் ஆரணம்
தந்தையாய் ஆயிற்று என்று உணர்க –
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் -என்றபடி பக்தாம்ருதமாய் -இனிமை பயப்பது பற்றி
செம் தமிழ் ஆரணம் இனிப்பு தரும் தாய் ஆயிற்று என்க –

தந்தையும் தாயும் –
மாதா பித்ரு சஹஸ்ரேப்யோ வத்சலதரம் ஹி சாஸ்திரம் –
ஆயிரம் தாய் தந்தையிரினும் மிக்க வாத்சல்யம் கொண்டதன்றோ சாஸ்திரம் -என்றபடி –
மக்கள் இடம் உள்ள குறை பாராது தான் கண்ட நல்லதை சொல்லியே
தீர்த்து திருத்தி உய்வித்தலின் செம் தமிழ் ஆரணம் தந்தையும் தாயும் ஆயிற்று -என்க

உயர் குருவும் –
புத்ரான் பந்தூன் சகீன் குருன் -சர்வ தர்மாம்ச சம் த்யஜ்ய – என்று த்யாஜ்ய கோடியிலே பரி கணிக்கப்பட்ட -குரு அன்றிக்கே –
அத்ர பரத்ர சாபி – என்கிறபடியே உபய விபூதியிலும் இச் சேதனனுக்கு உபாதேய தமனாய் –
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி -அஞ்ஞாத ஜ்ஞாபனம் பண்ணின சதாசார்யனும் –
இவ் உபகார ஆதிக்யத்தாலே காணும் இவன் பரித்யாஜ்யனாகாதே ஒழிந்தது –
உயர்த்தியை உடையனானதும் – சேதனருடைய அஞ்ஞான அந்தகாரத்தை நிவர்த்திப்பவன் ஆகையாலே குரு -என்கிறார் –
அந்தகார நிரோதித்வாத் குரு ரித்யபி தீயதே -என்னக் கடவது இறே –

உயர் குருவும் –
கீழ்ப் பேரின்பம் தரும் செல்வம் ஆதலின் ஏனைய செல்வத்திலும் வேறு பட்டது என்பது தோன்ற –
உறு பெறும் செல்வம் -என்று விசேடித்தது போலே –
இங்கும் பேரின்பத்துக்கு இடையூறாய் நிற்கும் அவித்யை என்னும் இருளை விலக்குதலின் –
ஏனைய குருக்களினின்றும் வேறு பட்டவர் என்பது தோன்ற உயர் குரு -என்று விசேடிக்கிறார்-
ஏனைய குருக்கள் வீட்டு இன்பம் விழைவோருக்கு விடத் தக்கவர்களாய் அன்றோ இருப்பது –
இங்கு கூறப் படும் குருவோ -சம்சார நிவர்தகமான பெரிய திரு மந்த்ரத்தை உபதேசித்தவன் என்று அறிக –
தானே தன்னை யறியகிலாது-யானே என் தனதே – என்கிற அஹங்கார மமகாரங்கள் என்னும் செருக்கு உடையானுக்கு –
உடல் மிசை உயிர் என இறைவன் உன்னை உடலாக கொண்டு உள்ளமையின்
உன் ஆத்ம ஸ்வரூபம் ஆகிய உடலை அந்த உயிர் தனக்கேயாக பயன்படுத்துவதே முறை-
உயிர் தன் விருப்பபடி உடலை பயன்படுத்த -அவ் உயிருக்கு அத்தகைய உடல் தனக்கொரு பயன் கருதாது
பயன்பட்டு மகிழ்ச்சியை ஊட்டுவது போலே நீயும் இறைவன் விருப்பபடி பயன்படுத்தப்பட்டு –
தனக்கு ஒரு பயன் கருதாது -அவ் இறைவனுக்கு மகிச்சியை ஊட்டுதல் வேண்டும் –
இதுவே அடிமை எனப்படுவது -இத்தகைய அடிமையே ஆத்மா ஸ்வரூபத்தின் உண்மை நிலையம் -என்று
முன்னம் முன்னம் மறந்த ஆத்மாவினுடைய-அனந்யார்ஹ சேஷத்வத்தை உணர்த்துதலின்
திருவாய் மொழி -உயர் குருவாய் ஆயிற்று என்க –

இனி தாய் தந்தை யரினும் தெய்வத்தினும் உயர்வுடைமை பற்றி –உயர் குரு -என்றார் என்னலுமாம் –
தாய் தந்தையர் சரீரத்தையே உண்டு பண்ணுகின்றனர் –
குருவோ வித்தையினால் ஆத்ம ஸ்வரூபத்தையே உண்டு பண்ணுகிறான் – என்றபடி –
ஆத்மாவுக்கு ஞானப் பிறப்பை தரும் குரு -சரீரப் பிறப்பை தரும் தாய் தந்தை யரினும் உயர்ந்தவன் ஆகிறான் –
தெய்வம் தான் அருள் புரிவதற்கு குரு அருளை எதிர் பார்ப்பது –
உயிர் இனங்கள் புரியும் வினைகளுக்கு ஏற்ப நன்மை தீமைகளை விளைவித்து கருணை காட்டாது சட்டப் படி நடாத்துவது –
மிக்க மாறுபாடு உடையவர்களை தீ வினை புரிவித்து அவர்களை அதோ கதிக்கு உள்ளாக்குவது –
குருவோ அருள் புரிவதற்கு தெய்வத்தின் அருளை எதிர் பார்ப்பவன் அல்லன் –
வினைகளுக்கு ஏற்ப சட்டப்படி நடாத்தாது நன்மையே பயக்கும் -கருணை காட்டி நடாத்துபவன் –
எவரையும் அதோகதிக்கு உள்ளாக்காது நல் வினையே புரிவித்து மேலே கை தூக்கி விடுபவன் –
இத்தகைய வகைகளில் தெய்வத்தினும் உயர்ந்தவன் குரு என்க –

ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா!
ஒத்தாய் எம்பொருட்கும், உயிராய், என்னைப் பெற்ற
அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்து,
அத்தா! நீ செய்தன அடியேன் அறியேனே––ஸ்ரீ திருவாய் மொழி–2-3-2-

தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம் முள்ளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்
நெஞ்சினால் நினைப்பான் யவன் அவன் ஆகும் நீள் கடல் வண்ணனே–3-6-9-

வெறி தரு பூ மகள் நாதனும்
வெறி -பரிமளம் -இந்த பதம் புஷ்பத்துக்கு விசேஷணமாய்-பரிமளமான புஷ்பத்தை பிறப்பிடமாக உடையளான ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு –
பூ மகளார் தனிக் கேள்வன் -என்கிறபடியே வல்லபனான ஸ்ரீ சர்வேஸ்வரன் -என்றபடி –
அன்றிக்கே –
வெறி தரு பூ மகள் -வெறி –என்கிற பதம் பிராட்டிக்கு விசேஷணமாய் -கந்தத்வாரம் – என்கிறபடியே –
திவ்ய கந்த பிரதமான திரு மேனியை உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியார் என்னவுமாம் –
அன்றிக்கே –
வெறி தரு பூ மகள் நாதனும் –
வெறி –என்கிற பதம் ஸ்ரீ ஈஸ்வரனுக்கு விசேஷணமாய் –
சர்வ கந்த -என்கிறபடியே -திவ்ய பரிமள ஸ்வரூபனான ஸ்ரீ யபதி என்றும் சொல்லவுமாம் –

வெறி தரு பூ மகள் நாதனும்
தெய்வம் என்பது திருமாலே யாதலின் பூ மகள் நாதன் என்கிறார் –
திருமங்கை நின்று அருளும் தெய்வம் -இரண்டாம் திருவந்தாதி -57 – என்றதும் காண்க –
மணம் தரும் பூ –திருமகளையும் தந்தது -மணமே வடிவு கொண்டு வந்தது போலே -மலரிலே தோன்றினவள் பிராட்டி -என்க –
திரு மகள் கேள்வன் -நமக்குப் பிராட்டி புருஷகாரமாய் இருத்தலின் உபாயமாய்ப் பேறு தருவான் ஆகிறான் –
பிராட்டியோடு கூடி இருந்து நாம் செய்யும் கைங்கர்யத்தை ஏற்பதனால் ப்ராப்யனாகவும்-பெறும் பேறாகவும் -ஆகிறான்
திருவாய் மொழியும் -இவை பத்தும் வீடே – 1-1 11- – என்றபடி வீடு அளிப்பதாலின் உபாயமாகவும் –
கேட்டாரார் வானவர்கள் செவிக்கு இனிய செம் சொல்லே –10 6-11 – -என்றபடி வீட்டில் உள்ளாறும்
கேட்டு இன்புறும்படி இருத்தலின் ப்ராப்யமாகவும் ஆதலின் -பூ மகள் நாதன் -ஆயிற்று –

திரு மார்வத்து மாலை நங்கை வாசம் செய் பூம் குழலாள்
பூவினும் மேவிய தேவி மணாளனை
தூ மலராள் மணவாளா-

இனி உறு பெறும் செல்வம் என்று தொடங்கி யதற்கு ஏற்ப –உயர் குரு -என்றது போலே –
உயர் தந்தை –உயர் தாய் –உயர் நாதன் -என்று ஏனையவற்றையும் உயர்ந்தவைகளாக கருதலுமாம் –
ஏனைய தந்தையும் தாயும் போல் அல்லாமல் –தஞ்சமாகிய தந்தையும் தாயுமாகத் திருவாய் மொழி உள்ளது என்றது ஆயிற்று –
ஏனைய தாய் தந்தையர் இடர் நேர்ந்த போது விட்டுச் செல்வாரும் –
விற்றுப் பிழைப்பாரும் கர்மம் தீர்ந்தவாறே -பந்தம் அற்றாருமாய் இருப்பார்கள் அன்றோ –
திருவாய் மொழி அங்கன் அன்றி -எக்காலத்திலும் ஞானப் பாலூட்டி -ஹிதமான நெறியிலே
செலுத்திப் பாதுகாத்தலின் தஞ்சமாகிய தந்தையும் தாயுமாய் ஆயிற்று -என்க –
மலை மகள் நாதன் போன்ற ஏனைய இளம் தெய்வங்கள் பாணாசுரன் போன்றாரைக் காக்கும் திறன் அற்று நின்றன –
அங்கனம் அல்லால் தப்பாது –காப்பாற்றும் பெறும் தெய்வம் பூ மகள் நாதன் -ஆயிற்று என்க —

இவ் அபிநிவேசம் எல்லாம் இவருக்கு எவ் விஷயத்தை பற்ற -என்றால்
மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று –
மாறன் –
ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய -பிதாவான காரியாலே சமர்ப்பிக்கப் பட்ட திரு நாமம் ஆய்த்து -இது –
இப்படிப் பட்ட ஸ்ரீ நம் ஆழ்வாருக்கு -விளங்கிய -பிரகாசித்த -ஸ்ரீ சர்வேஸ்வரன் தன்னுடைய நிர்ஹேதுக கிருபையாலே
உபய விபூதி வ்ருத்தாந்தகளை எல்லாம் -அடைவே அறியலாம்படி -மயர்வற மதிநலம் அருளப் பெற்ற – ஸ்ரீ நம் ஆழ்வாருக்கு –
ஏவம் நித்யாத்ம பூகாதாஸ் சடகோப ப்ரனேஷ்யதி – என்கிறபடி நித்ய அபௌருஷேயமாய் இருக்கிற இது –
அவர் தம்மாலே உண்டாக்கப் பட்டது அன்று –தோற்றும் -பிரகாசித்தது -என்றபடி –
ஆகையாலே இறே விளங்கிய –என்று அருளிச் செய்கிறார் .
சீர் நெறி தரும் –
பகவத் ஸ்வரூப ரூப குண விபூதி ஸ்ரீ யை எல்லாம் -எல்லாரும்-அறியும் படி – சாத்மிக்க சாத்மிக்க அனுபவிக்குமதாய் –
நெறி -ஒழுக்கம்-அதாகிறது சாத்மிக்க -என்றபடி –
அன்றிக்கே –
மாறன் விளங்கிய சீர் நெறி தரும் –
ஸ்ரீ ஆழ்வார் பகவத் பிரசாதத்தாலே தமக்குபிரகாசித்த பர பக்தியாதி ச்வபாவங்களின் உடைய அடைவிலே
உபகரித்து அருளின என்று யோஜிக்க்கவுமாம் –
அங்கன் அன்றிக்கே –
சீர் நெறி தரும் –
அகஸ்த்யோ பகவான் சாஷாத் தஸ்ய வியாகரணம் வ்யதாத் சந்தஸ் சாஸ்திர அநு சாரனே வ்ர்த்தானா அபி லஷணம்-
உக்த மந்யைஸ் சதாசார்யை த்ராமிடச்ய மகாமுனே சம்ச்கர்தச்ய யதாசந்தி பாட்யபந்த ச்ய சர்வத –
லஷணா நிதாதே -சாந்தி திராமிட ஸ்யாபி பூதலே -என்கையாலே
எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை நிரை பா -என்று சொல்லப் படுகிற பிரபந்த லஷண பேதமாய் இருக்கும் என்னவுமாம் –
சீர் -என்கிற இது –
எழுத்து அசை தொடக்கமானவற்றுக்கு உப லஷணமாக கடவது –
நெறி –
ஒழுக்கம் அதாவத் ஸ்வபாவமாய்-லஷணம் -என்றபடி –
தருகை –
உடைத்தாகை –
செந்தமிழ் ஆரணமே என்று –
ஆதி மத்திய அவசானங்களிலே ஏக ரூபமாய் திராவிட பாஷா ரூபமான உபநிஷத்தே -என்று -அவதாரணத்தாலே –
அனநயோக வியவச்சேதம் பண்ணுகிறது -இது காணும் ஸ்ரீ எம்பெருமானாருடைய பிரதி பத்தி

மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செம் தமிழ் ஆரணம் –
சீர்-பரபக்தி -பர ஞான -பரம பக்திகள் -என்னும் நல் இயல்புகள் மறைந்து கிடந்த அவை இறைவன் அருளால்
நம் ஆழ்வாருக்கு வெளிப்பட்டன –
அவை தமக்கு அங்கன் வெளிப்படும் அடைவிலே அவர் செம் தமிழ் ஆரணத்தை தந்து அருளினார் –
பரபக்தி யாவது பிரிவில் வருந்தும்படியான நிலையையும் கூடல் மகிழும்படியான நிலையையும் விளைவிப்பதான தனிப்பட்ட அன்பு –
பர ஞானம் ஆவது -அத்தகைய அன்பு முதிர்ந்த நிலையில் ஏற்படும் நேரிடையான தோற்றம் –
பரம பக்தி யாவது ஷண காலமும் பிரிவை சஹிக்க மாட்டாது அனுபவித்தே யாக வேண்டிய பேரன்பு –
ஸ்ரீ நம் ஆழ்வாருக்கு சூழ் விசும்பு -திருவாய் மொழி வரையிலும் பர பக்தியும் –
சூழ் விசும்பு அணி முகில் -லில் பர ஞானமும்
முனியே நான் முகனில் பரம பக்தியும் ஸ்ரீ இறைவன் அருளால் விளங்கியதாக பெரியோர் விளம்புகின்ற்றனர் –
இனி சீர்த் தொடை யாயிரம் -என்றபடி
இறைவன் குணங்கள் அவன் அருளால் விளங்க அவ்வடைவில் நம் ஆழ்வார் செம் தமிழ் ஆரணத்தை தந்து அருளினார் என்னலுமாம் –

எம்பெருமானார்
தமக்கு ஐஸ்வர்யாதி பரதேவதா பர்யந்தமான புருஷார்த்தங்கள் எல்லாம் திரு வாய் மொழியே அன்றி
வேறு ஒன்றை அத்யவசித்து இரார் -என்றபடி –

இந் நீணிலத்தோர் அறிதர நின்ற –
இவ் அர்த்தத்தை விச்தீர்னையான இந்த ப்ர்திவியில் உள்ள சேதனருக்கு அஞ்ஞான ஜ்ஞாபனம் பண்ணுகைக்கு நின்று அருளின –
அன்றிக்கே –
இவ் அர்த்தத்தை மகா பிருத்வியில் உள்ளோர் எல்லாரும் அறியும் படி நின்று அருளின -என்னவுமாம் –
ஏதத் வ்ரதம் மம – என்கிறபடியே பக்த கங்கணராய் இருக்கிற என்றபடி –

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் –

எனக்கு ஆரமுதே –
அடியேனுக்கு அபர்யாப்த்தாம்ர்தம் -நிரதிசய போக்யர் -என்றபடி –

நீள் நிலத்தோர் அறிதர நின்ற –
கற்றவர் மற்றவர் என்கிற வேறுபாடு இன்றி உலகம் எங்கும் உள்ள மக்கள் அனைவரும்
செல்வம் தொடங்கி-தெய்வம் ஈறாக நமக்கு பயன்படுவது திருவாய் மொழியே -என்று உணர்ந்து –
கொள்ளும்படி ஸ்ரீ எம்பெருமானார் செம் தமிழ் ஆரணத்தை பரப்பி பேணினார் -என்றபடி –

எனக்கு ஆரமுது –
செம் தமிழ் ஆரணத்தின் இனிமையை நுகர்ந்து நுகர்ந்து தொண்டர்க்கு அமுதான –
அதனால் உயிர் பெற்ற ஸ்ரீ அமுதனார் –
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே -என்றபடி -அவ்வமுது உணவினை தமக்குத் தந்த ஸ்ரீ எம்பெருமானார்
திறத்து பேரன்பு பெருகி -அவ்வின்பத்திலே திளைத்து – அவரையே அருமையான அமுதாகக் கூறுகிறார் -என்க-
ஆரமுது –
அருமையான அமுது .

எப்பொருளும் தானாய், மரதகக் குன்றம் ஒக்கும்;
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம்; கை கமலம்;
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கும் அப்பொழுது என் ஆரா அமுதமே–-ஸ்ரீ திருவாய் மொழி–2-5-4-

இதுகாறும் ஸ்ரீ எம்பெருமானாருக்கு ஸ்ரீ ஆழ்வார்கள் இடத்திலும் அவர்களுடைய திவ்ய பிரபந்தங்களிலும் உள்ள ஈடுபாடு கூறப் பட்டது –
ஸ்ரீ நம் ஆழ்வார் இடமும் திரு மங்கை ஆழ்வார் இடம் உள்ள ஈடுபாடு
தொடக்கத்திலேயே முதல் இரண்டு பாசுரங்களினால் பேசப் பட்டு இருந்தாலும் -அவர்களுடைய ப்ராதான்யம் கருதி –
இறுதியில் ஸ்ரீ நாத முனியை பேசத் தொடங்கும் முன் அவர்களைப் பற்றி பேசினார் –
அவர்களிலும் ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாரைப் பற்றி ஒரு பாசுரமும் -ஸ்ரீ நம் ஆழ்வாரைப் பற்றி இரண்டு பாசுரங்களும் அருளிச் செய்தார் –
ஸ்ரீ நம் ஆழ்வாருக்கு உள்ள மிக முக்கிய தன்மையை நோக்கி அவரை இறுதியிலே பேசினார் –
அவ்விரு பாசுரங்களில் முறையே –
ஸ்ரீ நம் ஆழ்வாரை அன்றி வேறு ஓன்று அறியாத மதுர கவி ஆழ்வார் உடைய வீறுடைமையும் –
பரபக்தி முதலியவற்றின் அடைவிலே அருளிச் செய்த திருவாய் மொழியினுடைய சீர்மையையும் அருளிச் செய்து முடித்தார் –

ஆயின் ஸ்ரீ ஆழ்வார்களின் அவதார க்ரமத்தை அடி யொற்றி அமுதனார் இங்கு அருளிச் செய்து இலர் –
எந்த முறையை அடி யொற்றி ஸ்ரீ அமுதனார் அருளிச் செய்து உள்ளார் எனபது நமக்கு இங்குப் புலப்பட வில்லை-
ஆயினும் ஒருவாறு வரிசைப் படுத்திக் கூறுகிறோம் –
ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் முதலில் வரிசையாகப் பேசப் பட்டு உள்ளனர் –
விளக்கு ஏற்றிய இருவரும் முதலிலும் -கண்டு நமக்கு காட்டியவர் பிறகும் பேசப்பட்டு உள்ளனர் –

தாம் இருக்கும் இடத்தில் வந்து இறைவனால் காட்ஷி கொடுக்கப் பட்டவர்கள் பேசப்பட்டனர் முன்னர் –
அர்ச்சை நிலையில் தாம் இருக்கும் இடத்துக்கு வருவிக்கப்பட்டு காட்சி கொடுக்கப் பட்டவரான
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் பேசப்பட்டார் பின்னர் –

அதற்க்கு பிறகு மழிசைக்கு இறைவன் பேசப்படுகிறார் –
பைந்நாகப் பாயை சுருட்டிக் கொண்டு பைம்தமிழ் பாட்டு கேட்க்கைகாக பின் தொடர்ந்து -தான் ஆட் செய்த நிலையை
வெளியிடுவதற்காக மீண்டதும் அப் பைந்நாகப் பாயில் மாறிப் படுத்த நிலையில் -ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாளாய் –
அர்ச்சை நிலையில் காட்சி கொடுக்கப் பட்டவர் ஸ்ரீ பாணற்கு அடுத்து பேசப்படுகிறார் –

மழிசைக்கு இறைவனுக்கு அடுத்து –ஸ்ரீ துளவத் தொண்டர் பேசப்படுகிறார் –
அர்ச்சை நிலையில் ஸ்ரீ அரங்கனால் தன் அழகைக் காட்டி ஆட் கொள்ளப் பட்டவர் -ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் –
அர்ச்சை எம்பெருமான் சொன்ன வண்ணம் செய்து ஆட் செய்தவன் மூலம் உகப்பித்த மழிசைக்கு இறைவனை
அடுத்து அழகைக் காட்டி ஆதரம் பெருக வைத்து அர்ச்சை எம்பெருமானாம் ஸ்ரீ அரங்கனால் ஆட் கொள்ளப்பட்ட
துளவத் தொண்டரைப் பேசுவது -முறை தானே –
ஆட்செய்தான் அங்கே ஆட்கொண்டான் இங்கே –

பிறகு அவ்வரங்கனை -கண்டு கொண்டு என் கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே -என்னும்
வேட்கை மீதூர்ந்த ஸ்ரீ குலசேகரப் பெருமாள் பேசப்படுகிறார் –
ஸ்ரீ அரங்கனை வேட்கை மீதூர்தலினாலும்-ரசிக மனப்பான்மையினாலும் -நேரே காட்டும் வண்ணம் ஸ்ரீ வால்மீகி
தீட்டிய கவிதை திறத்தினாலும் – ஸ்ரீ ராமாயணத்தில் பதினாலாயிரம் அரக்கரோடு தனித்து இருந்து போராடும்
ஸ்ரீ ராம பிரானாக கண்டு படையுடன் அவனுக்கு உதவி புரிந்து – ஆட்செய்யப் புறப்பட்டவர் –
அவர் ஸ்ரீ அரங்கன் அழகைக் கண்டு ஆதரம் பெருகி ஆட்செய்தவருக்கு பிறகு
வீரம் கேட்டு வீணே பயப்பட்டு விரைந்து படையுடன் ஆட்செய்யப் புறப்பட்டவரை பேசுவது பொருத்தம் அன்றோ –

பின்னர் ஸ்ரீ பெரியாழ்வார் பேசப்படுகிறார் –
கூட்டு ஒருவரையும் வேண்டா கொற்றவனாம் -ஸ்ரீ இராமபிரானுடைய ஆற்றலை அறிந்து இருந்தும்
பொங்கும் பரிவாலே அவன் அறிவாற்றல் ஒன்றும் பாராது -அவனைத் தான் காப்பாற்ற போவதாக மயங்கி
படை எடுத்து -புறப்பட்ட ஸ்ரீ குலசேகர பெருமாளுக்கு பின்னர் –
ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய அழகு மென்மைகளையே பார்த்து தொல்லை மாலை ஒன்றும் பாராது மயங்கிப்
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையரைப் பேசுவது தகும் அன்றோ –

ஸ்ரீ பெரியாழ்வாரை சார்ந்து இருப்பவளான ஸ்ரீ ஆண்டாளை அவரை அடுத்துப் பேசினார் –

பின்னர் ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரும் ஸ்ரீ நம் ஆழ்வாரும் பேசப்படும் போது
ஸ்ரீ நம் ஆழ்வாரைத் தேவு மற்று அறியாது பேசின ஸ்ரீ மதுர கவி ஆழ்வாரும் பேசப்பட்டார் –

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –18-எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் இத்யாதி —

April 1, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ நம் ஆழ்வாரைத் திரு உள்ளத்திலே வைக்க அநுரூப வைபவரான ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் குணங்களை சகல
ஆத்மாக்களும் உஜ்ஜீவிக்கைக்காக உபகரிக்கும் ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு ஆன துணை -என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழில் பாட்டுக்களில் பிரதி பாதிக்கப் பட்ட ஸ்ரீ ஆழ்வார்களில் வைத்துக் கொண்டு –பிரதாநராய் -சர்வாதிகார்ரராம் படி –
ஸ்ரீ திருவாய்மொழி என்கிற பிரபந்தத்தை அருளிச் செய்கைக்காக அவதரித்து அருளின ஸ்ரீ நம் ஆழ்வாருக்கு – அனந்யார்ஹரான
ஸ்ரீ மதுரகவி ஆழ்வாருடைய கல்யாண குணங்களை சகல ஆத்மாக்களும் உஜ்ஜீவிக்கைக்காக உபகரித்து அருளின
ஸ்ரீ எம்பெருமானார் -எனக்கு சகாயம் என்கிறார் .

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ நம் ஆழ்வாரைத் தம் திரு உள்ளத்திலே வைத்து கொள்வதற்கு ஏற்புடைய பெருமை வாய்ந்தவரான ஸ்ரீ மதுரகவி ஆழ்வார்
உடைய குணங்களை எல்லா ஆன்மாக்களும் உஜ்ஜீவிப்பதற்க்காக உபகரித்து அருளும்
ஸ்ரீ எம்பெருமானாரே எங்களுக்கு நல்ல துணை என்கிறார் –

இதில் நடு நாயகமான -சித்தரை சித்தரை -ஆழ்வார் திருவடி -ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் திருவடி சம்பந்த சீர்மையை அருளுகிறார் –
நம அர்த்தம்-ததீய சேஷத்வம் கூற அவதரித்தார்.
ஸ்ரீ ஆழ்வாரைப் பற்றியும் ஸ்ரீ திரு வாய் மொழியைப் பற்றியும் எங்கும் சென்று பாடித் திரிந்தவர்
ஸ்ரீ மாறன் அடி பணிந்த ஸ்ரீ சுவாமியையும் அடியார்களையும் அருளுகிறார்-என்றுமாம் –

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- –

எய்தற்கு -அடைவதற்கு
அரிய -எளிதில் இயலாத
மறைகளை -வேதங்களை
ஆயிரம்-ஆயிரம் என்னும் எண்ணிக்கையில் உள்ள
இன்-இனிய
தமிழால்-தமிழ்க் கவிதைகளால்
செய்தற்கு-பாடுவதற்கு
உலகில்-உலகத்தில்
வரும்-அவதாரம் செய்து அருளும்
சடகோபனை– நம் ஆழ்வாரை
சிந்தை உள்ளே -மனத்திற்குள்ளே
பெய்தற்கு-வைத்துக் கொள்வதற்கு
இசையும் -பொருத்தமான
பெரியவர்-பெருமை வாய்ந்த ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் உடைய
சீரை-நற்குணங்களை
உயிர்கள் எல்லாம் – அனைத்து ஜீவாத்மாக்களும்
உய்தற்கு-உஜ்ஜீவிப்பதற்க்காக
உதவும் -உபகரித்து அருளும்
இராமானுசன் -எம்பெருமானார்
எம் உறு துணை -எமக்கு உற்ற துணை வராவார்-

துஷ் ப்ராபங்களான வேதங்களை –
பிரவணம் போலே சுருங்கி இருத்தல்-வேதம் போலே பரந்து இருத்தல் -செய்கை அன்றிக்கே -ஆயிரம் பாட்டாகவும்
அது தான் சாரமாகவும்-ஸ்திரீ பாலர்களுக்கும் கற்கலாம் படியான பாஷையிலே செய்து அருளுகைக்கு லோகத்திலே வந்து
அவதரித்து அருளினவராய் -பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிய சடர்க்கு பிரதிபடராய் இருக்கையாலே –
ஸ்ரீ சடகோபர் -என்னும் திரு நாமத்தை உடையவரான ஆழ்வாரை -தம் திரு உள்ளத்திலே வைக்கைக் குதகுதியாய் இருந்துள்ள –
பிரபாவத்தை உடையரான ஸ்ரீ மதுர கவிகள் உடைய -ஜ்ஞாநாதி குணங்களை சகல ஆத்மாக்கள் உடையவும் உஜ்ஜீவன
அர்த்தமாக உபகரித்து அருளா நிற்கும் -ஸ்ரீ எம்பெருமானார் –எனக்கு சீரிய துணை
அதவா
ஸ்ரீ சடகோபனை சிந்தை உள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் -என்று
ஸ்ரீ ஆழ்வாரை அல்லது அறியோம் என்று இருக்கும் அவர் எல்லோரையும் சொல்லவுமாம்-

சரம பர்வ நிலையில் உள்ளவர் என்பதால் சரம பாசுரம் இந்த பிரகரணத்தில் –
ஸ்ரீ கேசவ பக்தி- ஸ்ரீ பாகவத பக்தி -சிறப்பை அருளிச் செய்த ஸ்ரீ ராமானுஜர் –

எய்தற்கு அரிய மறைகளை
அநந்தாவை வேதா – என்கிறபடி ஒரு சங்கையை இட்டு –சொல்லப் போகாத படி ஒரு அபரிமிதங்களாய் -சர்வோப ஜீவியங்கள் ஆகாதே
அதி க்ருத்தாதி காரங்களாய்-அந்யோப மரத்தக வாக்யங்களாலே -ஸ்வார்த்தத்தை தெளியும் போது -எத்தனையேனும் அதிசய
ஞானர் ஆனவர்களுக்கும் அருமைபடுத்தக் கடவதான சம்ஸ்க்ருத வேதங்களை –

எய்தற்கு அரிய மறைகளை –
எய்தல்-அடைதல்
வேதங்கள் அளவில் அடங்காதவைகள் ஆதலின் முழுதும் அவற்றை பெற்றவர் எவரும் இலர் –
அதனால் எவராலும் எய்தற்கு அரியன வாயின வேதங்கள்-
இனி
அந்தணர் -அரசர்-வணிகர் என்னும் மூ வர்ணத்தவர் தவிர மற்றவர்களுக்கு ஓதும் உரிமை இன்மையால்
அவர்கட்கு –எய்தற்கு அரியன-என்னவுமாம் –
இனி –
கத்யர்த்தா புத்த்யர்த்தா -அடைதல் அறிதற் பொருளது -என்றபடி – அடைதல் அறிதலாய் -பேர் அறிவாளற்கும்
தர்ம சாஸ்திரம் இதிஹாச புராணங்கள்-மீமாம்ஸா நியாயங்கள் என்னும் இவற்றின் உதவி இன்றி எளிதில் பொருள் காண
ஒண்ணாமை பற்றி –எய்தற்கு அரிய மறைகளை –என்றதாகவும் கொள்ளலாம் –
தன் பொருள்களை மறைத்துக் கொண்டு இருக்கும் அருமை தோன்ற -மறை-என்றார் வேதத்தை –

ஆயிரம் இன் தமிழால் –
வரணாதி நியதி இன்றிக்கே -ருசி பிறந்தவர்கள் எல்லாரும் அதிகரிக்கும் படியாய் –
ஆயிரம் என்ற ஒரு சங்கையுடன் கூடி இருப்பதாய் -உயர்வற உயர்நலம் -என்று தொடங்கி -உயர்ந்தே -என்னும் அளவும் –
ஆதி மத்திய அவசானங்களிலே –
ஸ்ரீ பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் –
சேதன அசேதன ரூப ச்வபாவங்களையும் –
சேதனருடைய சம்சார பந்த ஹேதுக்களையும் –
தந் நிவர்தன உபாயமான தத் விஷய ப்ரீதி ரூபாபன்ன ஞானத்தையும் –
ஜகத் காரண வஸ்து நாராயணனே என்று -தேவதாவஸ்து விசேஷ நிர்த்தாரணத்தையும் –
அவனுடைய சமஸ்த கல்யாண குணாத் மகத்வத்தையும்
அநந்த கருட விஷ்வக்சேநாதி திவ்ய சூரி பரிசர்யமான நளினனாய்க் கொண்டு நின்ற படியையும் –
தாம் அனுபவித்த படியே எல்லாரையும் அனுபவிப்பைக்காக -தம்முடைய நிர்ஹேதுக பரம கிருபையாலே –
லவ்கிகரைக் குறித்து உபதேசித்த படியையும் –
தம்முடைய அபிநிவேசம் எல்லாம் தீரும்படி அவனை ப்ராபித்த படியையும் -விசதமாக பிரதிபாதிப்பதாய் –
ஸ்வா ர்த்தத்தை எல்லாம் ஸூஸ்பஷ்டமாகவும் ஸூக்ரஹமாகவும் தெறிவிக்குமதாய் –
அத ஏவ அத்யந்த சுலபமாய் -பக்தாம்ர்தம் -தொண்டர்க்கு அமுதுண்ண சொல் மாலைகள் –என்னும்படி
அநு போக்தாக்களுக்கு அத்யந்தம் போக்யமாய் -நடை விளங்கு தமிழான -த்ரமிட பாஷையாலே –
ஸ்ரீ திருவாய் மொழி என்கிற பிரபந்த ரூபேண –

செய்தற்கு –
அவதரிப்பிப்பதர்க்கு –ஆவிர்பாவத்தை பண்ணுவதற்கு -என்றபடி-

ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு –
மறையினது அருமைக்கு நேர் எதிரான எளிமைத் தன்மையை காட்டுகிறது இச் சொல் தொடர் –
வேதம் அளவற்றது -இன் தமிழ் ஆயிரம் என்னும் அளவு பட்டது –
வேதத்தின் பொருளைத் தன்னுள் கொண்ட பிரணவம் மூன்றே எழுத்துக்களைக் கொண்டது ஆதலின் மிக சிறியது –
இது அங்கனம் அன்றிக்கே -ஆயிரம் கவியாய் -விரிந்து -தெள்ளத் தெளிய வேதப் பொருளை உணர்த்துவது –
வேதத்தின் பொருளைக் காண்பதற்கு இதிஹாச புராணங்கள் -மீமாம்ச நியாயங்களின்
உதவியை நாட வேண்டி இருக்கிற படியால் இடர்ப் பட நேரிடுகிறது –
இது தமிழ் ஆகையாலும் அளவு பட்டமையாலும் இனிது பொருள் படும்படியாய் இருக்கிறது –
தெரிய சொன்ன ஆயிரம் -என்றது காண்க –

ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இவை பத்தும் 4-7-11–
சீர் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இவை பத்தும் -5-1-11-
தெரியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் -6-9-11-
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் -7-5-11-
அறிந்து உரைத்த ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும் -7-8-11-

வேதம் ஓதுவதற்கு மாதர்க்கும் மூ வர்ணத்தார் அல்லாதாருக்கும் உரிமை இல்லாமையின் எய்தற்கு அரியதாய் ஆயிற்று –
இதுவோ இன்னார் இனியார் என்று இராமல் எல்லோருக்கும் உரியதாய் -தமிழாய் இருத்தலின்-எய்தற்கு எளியதாய் இருக்கிறது –
தமிழ் –
தமிழினால் ஆகியபாட்டுக்கு ஆகு பெயர்
இப்பாசுரம் ஸ்ரீ மதுர கவி ஆழ்வாரை பற்றியதாலின் அவர் அருளிச் செய்த
அரு மறையின் பொருள் ஆயிரம் இன் தமிழ்ப் பாடினான் -என்பதை அடி ஓற்றின படி –

பகவான் பெருமை -உயர்வற உயர் நலம் உடையவன் -தொடங்கி 1000 கல்யாண குணங்களை பட்டியல் போடுகிறார்
உயர்வற உயர் நலம் உடையவன் தொடங்கி –பிறந்தான் உயர்ந்தே .முடித்தார்
திவ்ய ஆபரணங்கள் திவ்ய ஆயுதங்கள் உடன் -ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்களை அனுபவித்து
அனுபவ ஜனித ப்ரீதி காரணமாக வாய் வழியே வழிந்த திருவாய் மொழி-

பொறி உணர் அவை இலன்..இலன் இலன் மிகு நிறை இலன்.-என்று பரத்வம் பேசி
மின் நின் நிலையில சரீரம் வீடு முன் முற்றவும்-நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து என்று உபதேசித்து –
பத்துடை அடியவர்க்கு எளியவன் –சௌலப்யம் பேசி
அதில் மேல் மேல் நிலை சௌசீல்யம் –ஆர்ஜவம் -போன்றவை -காட்டி
வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் பொய் கலவாது என் மெய் கலந்தானே -என்று
ஆழ்வார் உடலை வெண்ணெய் போலே விரும்பி யதை அருளி –
தமக்கு -ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே -என்று பிராட்டிமார் – நித்யர்
அனைவருடன் பரிமாறுவதை ஆழ்வார் இடமே காட்டி அருளியதை பாடி –
ஈறில வண் புகழ் என்றும் -பல பல கல்யாண குணங்களை காட்டி அருளினார் ஆழ்வார் –

அடியேன் உள்ளான் உடல் உள்ளான்-என்று சேஷத்வம் காட்டி
தன் பேறாகக் கலந்து -ஆழ்வார் சம்பந்தி சம்பந்திகள் அளவும் ப்ரீதி மிகுந்து -எதிர் சூழல் புக்கு பெறாப் பேறாக பெற்று
திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமினே-என்று அவனே உபாயம் என்று அருளி
பூவில் நான் முகனை படைத்தான் -அவனே பராத்பரன் –
சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்வேன் என்று உபதேசித்து
அர்த்த பஞ்சக ஞானம் ஊட்டி –

சூழ்ந்து அகன்று -பதிகம் மூலம் அர்ச்சிராதி கதியையும் விவரித்து அருளி அவா பெற்று வீடு பெற்ற சட கோபன்
ஸ்பஷ்டமாயும்-வேதம் போல் அங்க்யேயமாய் இன்றி ஆயிரம் இன் தமிழால் பாடி அருளினார் அருளினார்-

அத்யந்த சுலபமாய் தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள்.
பக்தாம்ருதம–நடை விளங்கு திராவிட வேத சாகரம்.இது எல்லாருக்கும் சரண்–அது அசரண்யன் பெருமாளுக்கு மட்டும்
குருகூர் சடகோபன் வார்த்தை பதிகம் தோறும் வைத்து -இங்கு எல்லாரும் கை கூப்புவார்கள்
இப்படி அருளியதனால் தானே -ஸ்ரீ நாத முநிகள் –குருகூர் என்றும் –ஆயிரம் உண்டு என்றும் அறிந்து
பெரிய ஆதாரத்துடன் குருகூர் சென்று –நாதனுக்கு நாலாயிரமும் பெற்றான் வாழியே –என்று சொல்லும்படி –
பெற்று நமக்கு வழங்கினார் அருளிச் செயலை.-
இன்று நமக்கு அதுவும் முடிய வில்லை கண் நுண் சிறு தாம்பு அதற்கே
ஸ்ரீ ராமாயண சுருதி சாகரம்–24000 -ஸ்ரீ ரகு குல திலகன் சரிதம் சொல்லும்
இந்த பக்த அம்ருத சாகரம் ஸ்ரீ கண்ணன் சேஷ்டிதம் சொல்ல வந்தது–வானின் மீது ஏற்றும் இது–

உலகில் வரும் சடகோபனை –
ஏனையோர் தாம் செய்த வினைகளின் பயனை நுகர்வதற்காக பிறக்கும் இடம் இவ் உலகம் –
ஸ்ரீ சடகோபனோ -அத்தகைய இவ் உலகத்திலே உயிர் இனங்கள் மீண்டும் மீண்டும் பிறந்து உழலா வண்ணம்
காக்க வேண்டும் என்னும் நோக்கம் கொண்டு ஈண்டு வாரா
வழிக் கண் தலைப் படுமாறு அருமறை கூறும் மெய்ப் பொருளை ஆயிரம் இன் தமிழால் காட்டுவதற்காகவே
அவதரித்து அருளினார் -என்கிறார் –
ஸ்ரீ சடகோபனுடைய அவதாரம் -ஸ்ரீ திருவாய் மொழி பாடுவதற்காகவே -எனபது கருத்து–

மறைந்த மறைகளை மீட்பதற்காகவே இறைவன் அவதாரம் செய்தான் ஸ்ரீ ஹயக்ரீவனாக –
உபநிடந்தங்களின் கருத்துக்களை எல்லாம் இனிதாகத் திரட்டி ஸ்ரீ கீதை என்னும் அமுதத்தை
ஊட்டுவதற்காகவே அவ இறைவன் அவதரித்தான் ஸ்ரீ கண்ணனாக –
உய்யும் வழி தெளியாது பவக்காட்டிலே வழி திகைத்து அலமந்த மாந்தர்க்கு வழி காட்டுவதற்காகவே
காட்டின் இடையே ஆநிரை காக்கும் ஆயனாக ஆயினான் ஸ்ரீ எம்பெருமான் என்பர் –
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்
மாயவர் தாம் காட்டும் வழி–56—ஸ்ரீ பெரிய திருவந்தாதி – 56- என்றார் ஸ்ரீ நம் ஆழ்வார் .

வரவாறு ஓன்று இல்லையால்–இன்ன வழியாக வந்தது என்று தெரியாது
வாழ்வு இனிதால் எல்லே–பலன் போக்யதாய் இரா நின்றது-ஆச்சர்யம்
ஒருவாறு ஒருவன்–எந்த சேதனனும்-எந்த உபாயாந்தரத்திலும்
புகாவாறு–பிரவேசிக்க வேண்டாதபடி
உருமாறும்–தன்னுடைய ஸ்வரூப ஸ்வபாங்களை மாற்றிக் கொள்ளுகிற
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏக்கம் சரணம் வ்ரஜ-அஹம் தவா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாசுச -தானே
தலை மேல் ஏறிட்டுக் கொண்டு நோக்கும் கண்ணபிரான் –
அன்றிக்கே
உருமாறும்-பரஞ்சோதி உருவை விட்டிட்டு அழுக்கு மானிட உருவை-ஏற்றுக் கொண்ட கோபால கிருஷ்ணன் என்றுமாம்
ஆயவர் தாம்-ஸ்ரீ கிருஷ்ணன் ஆனவனும்
சேயவர் தாம் –ஆசூர பிரக்ருதிகளுக்கு-எட்ட முடியாதவனும்
பாண்டவர்களுக்கு அணியனாயும் துரியோத நாதிகளுக்கு தூரஸ்தநாயும்
ஒரு கால விசேஷத்திலே அனைவருக்கும் சமீபஸ்ததானாக இருப்பவன் -என்பதை
அன்று உலகம் தாயவர்தாம் – என்கிறது அடுத்து
அன்று உலகம் தாயவர் தாம்–முன்பு ஒரு கால்-உலகங்களைத் தாவி அளந்தவனும்
மாயவர் தாம்-ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவனுமான-எம்பெருமான் –
இப்படி சேயனாயும் அணியனாயும் இருப்பது பற்றி மாயவர் தாம் என்கிறது
காட்டும் வழி-காட்டுகிற உபாயம்-

தவறான வழியில் போய் தடுமாறாத படி நல் வழி -ஸ்ரீ கீதையின் மூலம் -காட்டுவதற்காகவே ஆயன்
உருவகமாக மாறினான் எனபது இதன் கருத்து –
இதனை அடி இடறி ஸ்ரீ வேதாந்த தேசிகன் -ஸ்ரீ தயா சதகத்தில் –
பூமி பாரத்தை குறைப்பது பேச்சளவிலே தான் –
அறியாமைக்கு உள்ளான அகல் ஞாலத்தவர் அறிய மறைமுடி உயர் மாடத்தில் ஒளிரும் கீதை என்னும்
விளக்கின் ஒளியால் அறியாமை இருளை ஒழிப்பது தான் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்துக்கு நோக்கம் என்னும்
பொருள் படும் ஸ்லோகம் -89 – அருளி செய்து இருப்பதும் காண்க –

உபநிடதக் கருத்துக்களை ஸ்ரீ கீதையில் ஸ்ரீ கண்ணன் திரட்டிக் கொடுத்தது வட மொழியிலே தான் –
அதுவும் நன்கு விளங்க வல்லதாய் அமைந்திலது -அதனால் உபநிடதங்கள் தெளிவி படாததாய் ஆயிற்று –
வ்யாமிச்ரேனை வவாக்யேன புத்திம் மோஹயசீவமே -என்று –
கலந்து கட்டியான வாக்யத்தாலே என் புத்தியை மோஹிப்பிக்கிறாய் போலும் -என்று நேரே ஸ்ரீ கண்ணன் இடம் அர்ஜுனன் கூறுவது காண்க –
இதனால் அவரவர் தம் தமக்கு தோன்றியவாறு பொருள் கூறித் தம் தம் கூற்றினையே ஏற்றுக் கொண்டு உள்ளது
ஸ்ரீ கீதை என்று அதனைப் போற்றுவார் ஆயினார் –
ஸ்ரீ கீதை அருளிச் செய்வதற்காகவே கண்ணன் அவதரித்தது போலே -ஸ்ரீ நம் ஆழ்வார்
ஆயிரம் இன் தமிழான திருவாய்மொழி அருளிச் செய்வதற்காகவே அவதரித்தார் –
ஸ்ரீ கண்ணன் வட மொழியிலே ஸ்ரீ கீதை தந்தான் –
ஸ்ரீ நம் ஆழ்வார் இன் தமிழிலே ஸ்ரீ திருவாய்மொழி தந்தார் –
ஸ்ரீ கீதை அர்ஜுனனையும் மயங்கச் செய்தது –
ஸ்ரீ திருவாய்மொழி அனைவர்க்கும் தெரியச் சொன்ன ஆயிரம்

உலகில் –
அசுத்தாஸ் தேசமஸ்தாஸ்து தேவாத்யாம-கர்ம யோநயா ஆவிரிஞ்சாதி மங்களம் – என்றும் –
இருள் தரும் மா ஞாலம் -என்றும் –
கர்ம ஜன்மாத்யவஸ்தாச துக்கமத்யந்த துச்சகம் -ந கிஞ்சித் கணயன் நித்யம் சராமீந்த்ரிய கோசர -என்றும்
சொல்லப்படுகிற-இந்த லீலா விபூதியிலே –

வரும் சடகோபனை
வரும் என்ற வர்த்தமான நிர்தேசத்துக்கு –
அவருடைய திவ்ய-மங்கள விக்ரகம் -சமஸ்த திவ்ய தேசங்களிலும் சமஸ்த பிரபன்ன ஜனங்களுடைய திரு மாளிகைகளிலும் –
நவம் நவமாய்க் கொண்டு ஆராத்யமாகையும் –
அவருடைய திவ்ய சூக்திகள் இந்த லோகத்தில் இவ்வளவும்-இன்னும் உள்ள காலத்திலும்
நடை யாடிப் போருகையும் பொருளாகக் கடவது-

சடகோபனை –
சடராவார் –ஸ்வரூப ஞானம் இல்லாத சம்சாரிகள் -அவர்களைக் குறித்து –
ஒரு நாயகத்திலும் –
நண்ணாதார் முறுவலிலும் –
பருஷம் பண்ணினவனை -பாஹ்ய குத்ர்ஷ்டிகள் ஆகிற சடர்க்கு பிரதிபடர் ஆனாரை -என்னுதல் .-
இப்படிப்-பட்ட ஸ்ரீ நம் ஆழ்வாரை –

வரும் சடகோபனை –
வருதல்-அவதரித்தல்-
வெளிப்பட புலனாகாது மறைத்துத் தீங்கு இழைப்பவர்கள் சடர்கள் –
கூடவிப்ரிய க்ருச்சட -எனபது காண்க –
அஹிம்சாவாதிகளாய் அறநெறி செல்வாரைப் போலே பேச்சிலும் நடையிலும் தங்களை வெளியிலே காட்டிக் கொண்டு தூய அற நெறி
கூறும் மறையினையே பிரமாணமாக மதிக்காத பாஹ்யர்களாகிய பௌத்தரும் சமணரும் சடர்கள் ஆகிறார்கள் –
இங்கனமே வேதத்தை பிரமாணமாக மதிக்கும் வைதிகர்கள் போன்று தங்களை பேச்சிலும் நடையிலும் வெளியிலே
காட்டிக் கொண்டு மறை கூறும் உண்மை பொருளை பொய்ப் பொருளாக ஆக்குதலின் குத்ருஷ்டிகளும் சடர்கள் ஆகிறார்கள் –
அவர்களை சினந்து வெல்பவர் ஆதலின் ஸ்ரீ நம் ஆழ்வார் ஸ்ரீ சடகோபன் -என்று பேர் பெற்றார் –

இலிங்கத் திட்ட புராணத்தீரும் -திருவாய் மொழி -4 10-5 – -என்று குத்ருஷ்டிகளையும் –சமணரும் சாக்கியரும் -என்று
பாஹ்யர்களையும் சேர விளித்து -அவர்களை வென்று சர்வ அந்தர் ஆத்மாவாக
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரானை -ஸ்ரீ ஆழ்வார் திரு நகரியில் கோயில் கொண்டு உள்ள ஸ்ரீ எம்பெருமானை –
ஒப்புக் கொண்டு போற்றும்படி செய்வது காண்க –
இனி சம்சாரிகளான ஜனங்களுடைய சடத் தன்மையை -ஒளித்து தீங்கு இழைக்கும் மனப் பான்மையை –
ஸ்ரீ திருவாய் மொழி போக்குதலின் -ஸ்ரீ சடகோபன் என்று பேர் பெற்றார் என்று கொள்ளலுமாம் –
உற்றார் உறவினர் என்று பாராது அவர்களையும் ஏமாற்றி பணம் ஈட்டும் நாட்டம் கொண்டவனை
சடமதி -ஏமாற்றும் எண்ணம் கொண்டவன் -என்று குறிப்பிட்டு -அது பக்தர் அல்லாதாருடைய லஷணம்-என்கிறது ஸ்ரீ விஷ்ணு புராணம் –
பரம சூஹ்ருதி பாந்தவே களத்ரே
சூதத நயா பித்ரு மாத்ரு ப்ருத்யவர்க்கே
சடமதி ருபயாதி யோரத்த த்ருஷ்ணாம்
தம தம சேஷ்ட மவேஹி நாச்ய பக்தம்- -3 7-10 ஸ்லோகம் – – -என்று
நெருங்கிய நண்பன் இடத்திலும் -உறவு உடையான் இடத்திலும் மனைவியின் இடத்திலும் மகன் இடத்திலும் மகள் இடத்திலும்
தகப்பன் இடத்திலும் தாயினிடத்திலும் பணி ஆட்கள் இடத்திலும் -ஏமாற்றும் எண்ணம் படைத்தவனாய் –
எவன் பணத்தில் ஆசை கொள்கிறானோ –அந்த கீழ் பட்ட செயலை உடையவனை ஸ்ரீ விஷ்ணு பக்தன் அல்லாதவனாக அறிக –
அத்தகைய சடமதியை –
ஒரு நாயகமாய் – என்னும் திருவாய் மொழியிலே பக்தன் ஆக்கும் ஸ்ரீ நம் ஆழ்வாரை
ஸ்ரீ சடகோபனை எனபது மிகவும் ஏற்கும் அன்றோ –
சடகோப முநிம் வந்தே சடாநாம் புத்தி தூஷகம் -சடர்களுடைய புத்தியை -ஏமாற்றும் எண்ணத்தை
கெடுப்பவரான ஸ்ரீ சடகோப முனிவனை வந்திக்கின்றேன் -என்றது காண்க –

சிந்தை உள்ளே
தம்முடைய திரு உள்ளத்திலே –பெய்தற்கு -தமக்கு பர தேவதையாய் ஆராத்யராய் இருக்கும்படி வைக்கைக்கு –

இசையும்-
வுபயுக்தமான பிரபாவத்தை உடைய -மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே தேவு மற்றறியேன் -என்றும் –
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் –என்றும் -இறே இவர் தாம் அருளிச் செய்த படி –

பெரியவர் –
உண்ட போது ஒரு வார்த்தையும் உண்ணாத போது ஒரு வார்த்தையும் சொல்லுவார் பத்துப் பேர் உண்டு இறே –
அவர்கள் பாசுரம் கொண்டு அன்று இவ்வர்த்தம் அறுதி இடக் கடவது –
அவர்களைச் சிரித்து இருப்பார் ஒருவர் உண்டு இறே -அவர் பாசுரம் கொண்டு இவ் வர்த்தம் அறுதி இடக் கடவோம் -என்று
ஸ்ரீ வசன பூஷணத்தில் சொல்லுகிறபடியே-
யஸ்மாத் ததுபதேஷ்டா ஸௌ தஸ்மாத் குருதரோ குரு – அரச்ச நீயச்ய சவந்த்யஸ்ச -இத்யாதி சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட
சரம பர்வ நிஷ்டராயும் -தத் ப்ரவர்த்தகராயும் -இருக்கை யாகிற மகா பிரபாவத்தை உடையவர் ஆகையாலே-
சர்வாதிகரான ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் உடைய

சீரை –
மாறன் சடகோபன் வண் குருகூர் எங்கள் வாழ்வாம்-என்று ஏத்தும் மதுரகவியார் யம்மை யாள்வார் அவரே அரண் -என்றும்
பார் உலகில் மற்று உள்ள ஆழ்வார்கள்-வந்து உதித்த நாள்களிலும் -உற்றது எமக்கு என்று நெஞ்சே ஓர் -என்றும்
இப்படி ச்லாக்கிக்கப்பட்ட கல்யாண குணங்களை –

சிந்தை யுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் –
ஸ்ரீ சடகோபனை சிந்தை யுள்ளே வைப்பது இசைந்து -பொருந்தி இருக்கிறது -ஸ்ரீ மதுரகவி ஆழ்வாருக்கு
அதற்க்கு காரணம் -அவர் பெரியவராய் இருத்தல்-
ஸ்ரீ நம் ஆழ்வார் பெரியன் –
ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் பெரியார் –
பெரியனைப் பெரியராலே தான் தன்னுள்ளே-வைக்க முடியும் –

புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு––பெரிய திருவந்தாதி-75

புவியும்-இவ்வுலகமும்
இருவிசும்பும்-விசாலமான மேல் உலகமும்
நின்னகத்த-உன்னிடத்தே உள்ளன
நீ-உபய விபூதியையும் உள்ளே-அடக்கிக் கொண்டு இருக்கிற நீ
என் செவியின் வழி புகுந்து-எனது காதின் வழியே புகுந்து
என்னுள்ளே –என் பக்கல் இரா நின்றாய்
அவிவின்றி-அவிவு இன்றி-ஒரு நாளும் விட்டு நீங்காமல்
ஆன பின்பு
யான் பெரியன்—நானே பெரியவன்
நீ பெரியை என்பதனை யார் அறிவார்-நீ பெரியவன் என்று அறிவார் உண்டோ
ஊன் பருகு நேமியாய்–அசூர ராஷசர்களின் சரீரத்தில் உள்ள-மாம்சங்களை கவர்கின்ற திருவாழி ஆழ்வானை
திருக் கையிலே-ஏந்தி உள்ள பெருமானே
உள்ளு–இத்தை நீயே ஆலோசித்துப் பார் –
யான் பெரியன் -தனி வாக்யமாகவும்
நீ பெரியை என்பதனை யார் அறிவார் -என்பதனை தனி வாக்யமாகவும்-கொண்டு உரைக்கப் பட்டது
அங்கனம் அன்றிக்கே இரண்டையும் சேர்த்து-நான் பெரியவனோ நீ பெரியவனோ
இதைப் பிறரால் அறியப் போகாது-நீ தான் ஆராய்ந்து அறிய வேணும் -என்கை-

புவியும் -லீலா விபூதியும் -இருவிசும்பும் -நித்ய விபூதியும் -தன்னகத்தே கொண்டவன் –பெரியோனாகிய மாயன் –
அவன் செவியின் வழியே புகுந்து நம் ஆழ்வார் உள்ளத்திலே நின்றான் -அதனால் பெரியோனையும் உள்ளடக்கிய
பெரியரானார் ஸ்ரீ நம் ஆழ்வார் -அத்தகைய நம் ஆழ்வாரையும் சிந்தை உள்ளே பெய்தற்கு இசைந்து இருக்கிறது
ஸ்ரீ மதுர கவி ஆழ்வாருக்கு உள்ள பெருமை –ஆதலின் அவரைப் பெரியவர் என்றே குறிப்பிடுகிறார் –

இறைவனை தம் உள்ளத்திலே வைத்துக் கொள்ளுதல் முதல் நிலையாகும் –
அது எல்லா ஆழ்வார்களுக்கும் பொதுவானது -ஆசார்யனை தம் உள்ளத்தில் வைத்துக் கொள்ளுதல் இறுதி நிலையாகும் –
அது ஏனையோருக்கு அன்றி ஸ்ரீ மதுர கவி ஆழ்வாருக்கே அமைந்தது ஒன்றாகும் –
இது பற்றியே -பத்துப் பேரையும் -பத்து ஆழ்வார்களையும் – சிரித்து இருப்பார் ஒருவர் -என்றார் இவரை ஸ்ரீ வசன பூஷண காரர் –
ஆசார்யனை தம் சிந்தை உள்ளே பெய்தற்கு இசைந்து உள்ளது இவரது இறுதி நிலை வாய்ந்த பெருமை என்பது
தோன்ற –பெரியவர் –என்றார் ஆகவுமாம்-
இறுதி நிலை வாய்ந்த ஸ்ரீ அமுதனார் அதனாலாய பெருமையை குறிப்பிடுவது பொருத்தம் உடையது அன்றோ –
இனி பெரியவர் என்று
பொது சொல்லால் குறிப்பிடிதலின் -தம் நெஞ்சினால் ஸ்ரீ நம் ஆழ்வாரை அன்றி
வேறு ஒன்றும் அறியாத -பெரியவர்கள் எல்லோரையும் சொல்லலுமாம் –
சீர்-
ஞானம் முதலிய குணங்கள்
இனி ஆச்சார்யா நிஷ்டை யாகிய சிறப்பை கூறலுமாம்

உயிர்கள் எல்லாம் –
வர்ணாஸ்ரம குண வ்ருத்தாத் உத்கர்ஷ்ட அபகர்ஷ்ட விபாகம் அற –ருசி உடையரான சகலசம்சாரிகள் உடையவும் –

உய்தற்கு –
உஜ்ஜீவன அர்த்தமாக –
இது ஒழிந்த உபாயங்கள் எல்லாம் உஜ்ஜீவன ஹேதுக்கள் அன்று காணும் -இந்த வமுதனாருடைய திரு உள்ளத்தில் ஓடுகிறது –

உதவும்
உபகரித்து அருளும் -எல்லாருக்கும் மோஷ உபாயமான திரு மந்திர அர்த்தத்தை உபதேசிக்கும் வேளையிலே
அர்த்த விசேஷங்கள் எல்லாம் ததீய பர்யந்தமாக அனுசந்திக்க வேணும் -என்னும் ஸ்ரீ மதுரகவி ஆழ்வாருடைய நிஷ்டையே காணும்
ஸ்ரீ எம்பெருமானார் உபதேசிப்பது-

உயிர்கள் எல்லாம் உய்வதற்கு உதவும்
எல்லோரையும் உய்விப்பதற்காக ஸ்ரீ மதுரகவி ஆழ்வாருடைய குணங்களை அல்லது அவரது ஆசார்ய நிஷ்டையை
தாம்-மாறனடி உய்ந்து காட்டியும் -உபதேசத்தால் கேட்பவர்களும் கைக் கொள்ளலாம் படி வழங்கியும்
உபகரித்து அருளினார் ஸ்ரீ எம்பெருமானார் -என்க-

உயிர்கள் எல்லாம் -என்கையாலே –
ஆசார்ய நிஷ்டைக்கு அதிகாரி நியமம் இல்லை -என்பது தெரிகிறது –
தேக சம்பந்தமான துறையாயின் அதிகாரி நியமம் இருப்பதற்கு இடம் உண்டு –
இது ஆத்ம சம்பந்தமான துறை யாதலின் அது இருப்பதற்கு இடம் இல்லையே
ஸ்ரீ வேதாந்த தேசிகன் –
துன்பற்ற மதுர கவி தோன்றக் காட்டும் தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே – குரு பரம்பரா சாரம் -என்று
ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் உடைய ஆசார்ய நிஷ்டையே அநாதி யான நல் வழி என்று துணிவதும் –
ஸ்ரீ மணவாள மா முனிகள்-
மதுரகவி சொல் படியே நிலையாகப் பெற்றோம் -ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் -55 – என்று
இவ் ஆசார்ய நிஷ்டையில் நிலைத்து நிற்பதும் -ஸ்ரீ எம்பெருமானார் உய்வதற்கு உதவியதன் பயனே என்று அறிக –

ஸ்ரீ இராமானுசன் எம் உறு துணையே –
இப்படிப் பட்ட ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு த்ர்டமான துணை –
துணை-
சகாய பூதர் –உறு -த்ர்டம் -இத்தால் பரம பதத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்றபடி –
அன்றிக்கே –
பெரியவர் என்ற பதத்துக்கு –
ஸ்ரீ ஆழ்வாருடைய திருவடிகளை தம் திரு உள்ளத்திலே நிறுத்திக் கொண்ட-ஸ்வாமிகள் எல்லாரும் –
என்று பொருள் ஆகவுமாம்-

எம் உறு துணை –
ஸ்ரீ பெரிய ஜீயர் உரையில் -எனக்கு என்று உரை காண்கையாலே-
என் உறு துணையே -என்று-பாடம் இருக்கலாம் என்று தோற்றுகிறது –
உறு துணை-சீரிய துணை –
ஆக்கம்-செல்வம் -உண்டேல் துணையாவார் போல்வர் சுற்றத்தவர் –
ஆக்கத்தில் பங்கு பெரும் நோக்கம் அவர்களது –
ஸ்ரீ எம்பெருமானாரோ -தனக்கு என்று ஒரு பயன் இன்றி உயிர் உய்வதற்கு உதபுவர் ஆதலின் – உறு துணையானார் -என்க –
நாமும் முயன்றால் பிறரும் அதற்கு உதவும் துணை யாவார் –
அங்கன் அன்றி தாமாகவே உற்று துணையாகி நம்மிடையே எம் முயற்சியும் இல்லாத நிலையிலும்
தமது இயல்பான அருளாலே நாம் உய்வதற்கு உதவுதலின் -ஸ்ரீ எம்பெருமானார் உறு துணை யாயினார் என்னலுமாம் –
உறுகின்ற துணை உறு துணை –

எம் உறு துணையே
சகல ஆத்மாக்களும் தம் தம் ஆசார்யர் பற்ற அதன் மூலம் இராமானுசன் அடியார்களாகி -மோஷம் பெறலாம்
மோர் காரி – வூமை அடைந்தது அறிவோமே
ஸ்ரீ ஆழ்வார் எஞ்சான்று கண்டு கொள்வது . என்று .அருள — இவரோ கண்டு கொண்டேன் .அவன் பொன் அடி
காடு மேடு அடங்கலும் மேவிய பொன் அடி- வித்யுத் மக்களின் மேல் இருக்கும் அடி
பொன் பிராப்யம் பிராபகம் இரண்டும் தீட்டு கிடையாது .
த்வத் பாதாரவிந்தம் வைக்க பிரார்த்திப்பார்கள் அவனை –
மேவினேன் அடியை தேவு மற்று அறியேன் இரண்டும் உண்மை
பாவின் இன் இசை பாடி திரிவனே
இடை வெளி இல்லை.
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரானுக்கும் இடம் இல்லாத படி…
என் நெஞ்சுள் நிறுத்தினான்-

மிக்க வேதியர் ஆழ்ந்து உள் பொருள் ததீய சேஷத்வம்.
நிற்கப் பாடி நெஞ்சுள் நிறுத்தினான்-நெஞ்சில் இல்லை –நெஞ்சுள் -உள்ளேயே ஸ்தாவர பிரத்திஷ்டை ஆகும் படி
எதுவும் நில்லாத நெஞ்சுள் நிறுத்தினான்.
பாடி நிறுத்தினான்.
ஸ்ரீ ஆழ்வார் பாட பாட கிருபையால் நெஞ்சுள் நிறுத்தினான்
என் -தாழ்ந்த . நெஞ்சுள் உள் பகுதியில் பகவான் ஜகத்தை நிறுத்தினால் போல.

கூப்பிடு கேட்க்கும் இடமும் பாட்டு கேட்க்கும் இடமும் குதித்த இடமும் -எல்லாம் /வகுத்த இடமே என்று இருக்கும் நிலையே வேண்டும்
தேனார் கமல கொழுநன்தானே வைகுந்தம் தரும் —
பெரியவர் -ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் பற்றி உள்ள எல்லோரும் உஜ்ஜீவிப்பது உறுதிதானே

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –17-முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும் இத்யாதி —

March 31, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி ஸ்ரீ எம்பெருமானார் செய்த உபகாரத்தை கேட்டு தத் சமாஸ்ரயண ருசி பிறந்தவர்கள் இவ் விஷயத்தை
ஆஸ்ரயித்தாலும்-சுக துக்க நிபந்தனமான -கலக்கம் வரில் செய்வது என்ன –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் பக்கலிலே சிநேக யுக்தராய் -எங்கள் நாதராய் இருக்கிற
ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவர்கள் அவை மேலிட்டாலும் கலங்கார் என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழ் எல்லாம் ஸ்ரீ ஆழ்வார்களை இட்டே ஸ்ரீ எம்பெருமானாரை கொண்டாடுகிற பிரகரணம் ஆகையாலே
இப்படி ஸ்ரீ எம்பெருமானார் செய்து அருளின உபகாரங்களைக் கேட்டு -தத்சமாசரயண ருசி பிறந்தவர்கள் இவ் விஷயத்தை
ஆஸ்ரயித்தாலும் சுக துக்க நிபந்தமாக கலக்கம் வரில் -செய்வது என் என்று -ஸ்ரீ திருக் கண்ண மங்கையுள் நின்று அருளின
பக்தராவி விஷயமாக திவ்ய பிரபந்தத்தை அருளிச் செய்த -ஸ்ரீ திருமங்கை ஆழ்வாருக்கு பிரிய தமரான
ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவர்களுக்கு -சுக துக்கங்கள் வந்து மேல் விழுந்தாலும் –
ஹர்ஷாமர்ஷங்களாலே சலியார்கள்-என்கிறார் .

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

இங்கனம் கலியினால் நலி உறாது உலகினைக் காத்து ஸ்ரீ எம்பெருமானாரைப் பற்றிடினும்
இன்ப துன்பங்களால் நேரிடும் கலக்கம் விளக்க ஒண்ணாதது அன்றோ என்பாரை நோக்கி-
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாருக்கு இனியரும் எங்களுக்கு நாதருமான ஸ்ரீ எம்பெருமானாரைப்-பற்றினவர்கள்
இன்ப துன்பங்களால் கலங்க மாட்டார்கள் -என்கிறார் —

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும்
தனியானைக் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமானுசனை வந்து எய்தினரே -17 –

பத உரை –

கலை-சாஸ்திரங்கள்
பரவும் -துதிக்கும்
தனி ஆனையை -ஒப்பற்ற மதம் கொண்ட யானை போன்றவனான
கண்ண மங்கை நின்றானை -திருக் கண்ண மங்கையில் எழுந்து அருளி இருக்கும் பத்தராவி எம்பெருமானை
தண் தமிழ் செய்த -குளிர்ந்த தமிழ் கவி பாடின
நீலன் தனக்கு -திரு மங்கை ஆழ்வாருக்கு
உலகில் -உலகத்தில்
இனியானை -அன்பரான
எங்கள் -எங்களுடைய
இராமானுசனை -எம்பெருமானாரை
வந்து -அடைந்து
எய்தினர் -பற்றினவர்கள்
துயரங்கள் -துன்பங்கள்
முந்திலும் -முன் முன்னாக வரினும்
முனியார் -வெறுப்படைய மாட்டார்கள்
இன்பங்கள் -சுகங்கள்
மொய்த்திடினும் -ஓன்று திரண்டு வந்தாலும்
மனம் கனியார் -உள்ளம் நெகிழ மாட்டார்கள் –

சகல சாச்த்ரங்களாலும் ஸ்துதிகப் படுபவனாய் அத்வதீயமான மத்த கஜம் போலே -அத்தால் வந்த செருக்கை உடையனாய் கொண்டு –
ஸ்ரீ திருக் கண்ண மங்கையிலே நின்று அருளினவனை –
நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் -ஸ்ரீ பெரிய திருமொழி – 7-10 10- என்னும்படி பிரதிபாத்யார்த்த
கௌரவத்தாலே சாம்சாரிக சகல தாப ஹரமான தமிழை செய்து அருளின
ஸ்ரீ திருமங்கை ஆழ்வாருக்கு லோகத்திலே ச்நேஹியாய் இருப்பாராய்-
எங்களுக்கு நாதரான – ஸ்ரீ எம்பெருமானாரை வந்து ப்ராபித்தவர்கள் –
துக்கங்கள் ஆனவை அஹமஹமிகயா வந்தாலும் இது வந்ததே என்று வெறார்கள்–
சுகங்கள் ஆனவை எகோத்யோகென வந்து திரண்டாலும் பக்வபலம் போலே மனசு இளையார்கள் –
ஆன பின்பு நீங்களும் இவற்றால் வரும் ஹ்ருதயகாலுஷ்யத்தை-நினைத்து அஞ்ச வேண்டாம் என்று கருத்து –
முனிவு -வெறுப்பு / மொய்த்தல்-திரளுதல்

ப்ராசங்கிக்கமாக -அமைந்த பாசுரம் இது –ஸ்ரீ ராமானுஜர் திருவடிகளை ஆஸ்ரயித்தால் துன்பம் வாராதோ என்று கேட்டவர்களுக்கு
பதில் அளிக்க இந்த பாசுரம் -சுகம் துக்கம் ஏற்படும் -ஆனாலும் கலங்காத திடமான நெஞ்சை திருவடிகளே கொடுத்து அருளும் என்றவாறு –
கலை பரவும் தனியான்–தனியானை–அத்விதீயம் -செருக்கு அவனுக்கு குணம் —ஸ்ரீ கண்ண மங்கையுள் நின்றான் –
நின்றது -இவர் பாசுரம் கேட்ட பின்பு அன்றோ –ஆடினவன் நின்றான் —

ஸ்ரீ பெரும் புறக்கடல் -ஸ்ரீ பிருஹத் பஹு சிந்து -ஸ்ரீ திருப் பாற் கடல் பிராட்டி தோன்றி மாலை சாத்த –
முப்பத்து முக்கோடி தேவர்கள் தேனீக்கள் வடிவில் திருக் கல்யாணம் அனுபவிக்க -ஸ்ரீ பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள் –
பத்தர் ஆவி ஸ்ரீ பத்தராவி -பெருமாள் -ஸ்ரீ கருடனுக்கு -கட்டம் போட்ட புடவையை சாத்திக் கொள்வார் –
ஸ்ரீ திருப் பாற் கடலை விட்டு வந்ததால் புறக் கடல்
அநவசாதம்-அனுத்ருஷம் -துன்பம் இன்பம் கண்டு கஷ்டம் இன்பம் பெறாமல் ஸூக துக்க சமம் –
திருவடிகளில் ஈடுபட்டு இவை முக்கியம் இல்லை –
கோவையை பத்தராவியை நித்திலத் தொத்தினை -கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –
ஸ்ரீ பராங்குச முகத்தாமரை ஸ்ரீ ராமானுஜர் என்றாலே மலரும் –

கலை பரவும்
சர்வே வேதாயாத் பதமாமனந்தி -வேதாஷராணி யாவந்தி படிதா நித்விஜாதிபி-தாவந்தி ஹரி நாமானி கீர்த்தி தாநி ந சம்சய
வேதே ராமாயனே-புண்யே பாராதே பரதர்ஷப -ஆதவ் மத்யே ததாந்தேச விஷ்ணுஸ் சர்வத்ர கீயதே -என்கிறபடியே
சகல சுருதி ஸ்ம்ருதி இதிகாச புராணங்களாலும் ஸ்துத்திக்கப் படுபவனாய்-

தனி யானையை
த்யாவாப்ர்தி வீஜ நயன் தேவ ஏக -என்றும் –
சயசாயம் புருஷே யாச்சா சாவித்த்யே ச ஏக -என்றும்
திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்கிறபடியே -அத்விதீயமாய் -மத்த கஜம் போலே -செருக்கை உடையனாய் கொண்டு –

பொன்னானாய் பொழில் ஏழும் காவல் பூண்ட
புகழானாய் இகழ்வாய தொண்டனேன் நான்
என்னானாய் என்னானாய் என்னால் அல்லால்
என்னறிவேன் ஏழையேன் உலகமேத்தும்
தென்னானாய் வடவானாய் குடபாலனாய்
குணபால மதயானாய் இமையோர்க்கு என்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி
திரு மூழிக் களத்தனாய் முதலானாயே–திரு நெடும் தாண்டகம்–10-

எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் யுனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கோள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்—திருப்பாவை–15

கண்ண மங்கையுள் நின்றானை –
முத்தின் திரள் கோவையை -பத்தராவியை -நித்திலத்தொத்தினை –யரும்பினை யலரை -யடியேன் மனத்தாசையை
அமுதம் பொதியும் சுவைக் கரும்பினை -கனியை-சென்று நாடி -கண்ண மங்கையுள் கொண்டு கொண்டேனே -என்கிறபடி
தன்னுடைய போக்யதையை-எல்லாரும் அனுபவிக்கும் படி -ஸ்ரீ திருக் கண்ண மங்கையில் எழுந்து அருளி இருக்கிற -ஸ்ரீ பத்தராவியை –

கண்ண மங்கை நின்றானை –
ஸ்ரீ திருக் கண்ண மங்கை சோழ நாட்டுத் திவ்ய தேசமாம் -அங்கு எழுந்து அருளி உள்ள ஸ்ரீ எம்பெருமானுக்கு
ஸ்ரீ பத்தராவி -எனபது திரு நாமம்

தண் தமிழ் செய்த
நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே -என்கிறபடியே
அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளாகிற பிரதிபாத்யர்த்த கௌரவத்தாலே தன்னை அப்யசித்தவர்களுடைய
சகல தாபங்களும் மாறும்படி -ஸ்ரம ஹரமாய் திராவிட பாஷா ரூபமாய் பிரபந்தீ கரித்து அருளின

கலை பரவும் தனி யானையை –
பரவுதல்-துதித்தல்
சாஸ்திரங்கள் பத்தராவி பெருமாள் குணங்களை பரக்க பேசுதலின் துதிப்பன ஆயின –
வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -என்று–எல்லா வேதங்களாலும் நான் ஒருவனே அறியப் படுகிறேன் -என்றபடி
வேதம் அனைத்தும் துதிக்கும் நோக்கம் உடையவைகளாய் இருத்தல் பற்றி செருக்கு தோற்ற ஒப்பற்ற மதம் பிடித்த யானை போலே
தோற்றம் அளிக்கிறான் –
அவ் வெம்பெருமான் ஸ்ரீ திருமங்கை ஆழ்வாருக்கு –
வேதத்தில் சொல்லப்படுதல் என்னும்படி -நெருங்க ஒண்ணாதபடி யானைக்கு பிடித்து இருக்கும் மதம் போன்று உள்ளது –
வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை பேய் மகள் துஞ்ச
நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சியில் நிற்கும் நம்பியைக்
கஞ்சனைத் துஞ்சவஞ்சித்த வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டேனே –பெரிய திருமொழி – 7-10 8-
வெஞ்சினக் களிற்றை – -என்று
வெவ்விய சினம் உடைய யானை போலே இருப்பவன் -என்று இவ் எம்பெருமானைத் திரு மங்கை-ஆழ்வாரே வர்ணித்து உள்ளார் –
கிட்ட ஒண்ணாத வனேயாயினும்-யானை போல் கண்டு களிக்கத் தக்கவன் -என்பது அதன் கருத்து –

தொடர் சங்கிலி கை சலார் பிலார் என்னத் தூங்கு பொன்மணி ஒலிப்பப்
படு மும்மதப் புனல் சோர வாரணம் பைய நின்றூர்வது போல் -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-–1-7-1-

வெண் புழுதி மேல் பெய்து கொண்டு அளைந்த தோர் வேழத்தின் கரும் கன்று போல்
தெண் புழுதி யாடித் திரிவிக்ரமன்-1-7-9-

ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ அம்புயத் தடம் கண்ணினன் தாலோ
வேலை நீர் நிறத் தன்னவன் தாலோ வேழ போதக மன்னவன் தாலோ-பெருமாள் திருமொழி -7-1-

கலை பரவும் பீடு படைத்த அவ் எம்பெருமான் திரு மங்கை ஆழ்வார் உடைய ஈடு இல்லாத
தண் தமிழ்க் கவியைக் கண்டு வியக்கிறான் –
வேதம் அனைத்தும் சேர்ந்து பரவுவதைத் தண் தமிழ் காவியம் ஒரு பதிகத்திலே பொருள் ஆழத்துடன் ரசமாக
காட்டுவது வியப்பூட்டுவதாக இருந்தது அவ் எம்பெருமானுக்கு .
வேதங்கள் பரவுவது கிடக்கட்டுமே-அதனால் செருக்கு உற்று என் பயன் –
இத் தண் தமிழ் கவியின் உள் ஈடான பொருள் சீர்மையை ஆராய்ந்து இன்புறுவோம் என்று கருதி அத் துறையில் இறங்கினான் –
தானாகப் பார்த்து அறியத் தக்கதாக அத் தண் தமிழ் அமைய வில்லை –
வேத விதேவசாஹம்-வேதப்-பொருளை அறிந்தவனும் நானே -என்று கூறிக் கொண்ட கண்ணனுக்கும்
கற்றே அறிய வேண்டும்படியாக அமைந்து இருந்ததாம்
இக் கவியின் உள்ளீட்டான கனம்-அவன் கருத்தை அறிந்து –

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10–என்கிறார் ஆழ்வார் –
உனக்கு இதிலே ஆதரம் உண்டாகில் எனக்கு சிஷ்யனாய் உனக்கும் அதிகரிக்க வேண்டும் படி யாயிற்று
இதின் உள்ளீட்டின் கனம் இருக்கிறபடி -எனபது பெரியவாச்சான் பிள்ளை-வியாக்யானம் .
ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் இறுமாந்து இருந்தால் போகாது
என்னோடு அதிகரிக்கில் அறியலாம்
ஒரு வசிஷ்டனோடே
ஒரு சாந்தீபனோடே
தாழ நின்று அதிகரிக்கக் கடவ
அவனுக்கு திரு மங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்கை தாழ்வோ –
இங்கனம் செருக்குற்ற சர்வேஸ்வரனையும் கற்பிக்கலாம் படியான கவிதை எனபது தோன்ற –
தனியானைத் தண் தமிழ் செய்த – என்கிறார் –

தமிழ் –
தமிழ் ஆகிய கவிக்கு ஆகு பெயர்-தண் தமிழ் செய்த -தண் தமிழ் கவி பாடின என்றபடி –
கவி வாணர்கள் யானையை பாடுவார் -அதனைப் பரிசிலாகப் பெருவது கவி வாணர் நோக்கம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரும்-தனி யானையைப் பாடுகிறார் -அதனைப் பரிசிலாகப் பெறுவது இவர்க்கும் நோக்கமாகும் –
இந்த யானையை கொடுப்பார் வேறு எவரும் இலர் –
தன்னையே தான் தருவது இது – தன்னைத் தந்த கற்பகம் -என்னும் ஸ்ரீ நம் ஆழ்வார் திரு வாக்கும் காண்க-

கண மங்கை கற்பகத்தை -என்பது திரு மங்கை ஆழ்வார் அருளிய பெரிய திரு மடல் –

தண் தமிழ்-
ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் என்னும் இவை அனைத்தும் இறைவன் காட்ட -தம் கண்டபடியே கற்பவர் மனத்தில் பதியும் படியும் –
உலகிலுள்ள பொருள்கள் அனைத்தும் அவனுக்கு போலி யாயும் –
பிரியாது இணைந்த பிரகாரமாயும் இருப்பதை உணரும் படியும் -அவனது இனிமையை நுகரும்படியும் – செய்து –
சம்சார தாபத்தை அறவே போக்கி குளிர வைப்பதாய் இருத்தல் பற்றி –தண் தமிழ் -என்கிறார் –
நீலன்-
திருமங்கை ஆழ்வார் திரு நாமங்களில் இதுவும் ஓன்று
நீலன் தனக்கு உலகில் இனியானை-
இந்த உலகத்தில் எம்பெருமானார் ஒருவரே திரு மங்கை ஆழ்வாருடைய தண் தமிழ் கவியின்
பொருள் உணர்ந்து தாபம் அற்றவராய் விளங்குதலின் –
நீலன் தனக்கு உலகில் இனியானை-என்கிறார் –

நீலன் தனக்கு –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாருக்கு-
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலியன் உரை செய்த வண் ஒண் தமிழ்-என்று
ஆழ்வார் தாமே அருளிச் செய்தார் இறே –

உலகில் இனியானை –
இவ் விபூதியில் சமஸ்த பாப ஜனங்களும்-அதி பிரியகரரான –
ஸ்ரீ பரகால முகாப்ஜமித்ரம் -என்று ஸ்ரீ ஜீயரும் அருளிச் செய்தார் இறே –

எங்கள் இராமானுசனை –
என்னைப் போலே எல்லாரையும் உத்தர்பிக்கைக்காக வந்து-அவதரித்து அருளின ஸ்ரீ எம்பெருமானாரை –

வந்து எய்தினரே
ஸ்ரீ மான் ஆவிரபூத பூமவ்ர ராமானுஜ திவாகர –என்னும்படியான பிரபாவத்தை அறிந்து வைத்து –
சபக்தி பண்ணி ஆஸ்ரயித்த பாக்யவான்கள்-

அக்கரை என்னும் அநர்த்தக்கடல் -சம்சாரம் / இக்கரை ஏறி-என்று பரமபதத்தையும் அருளிச் செய்வார்களே –

வந்து எய்தினர் –
சென்று ஆஸ்ரயித்தவர்கள் என்னாது வந்து ஆஸ்ரயித்தவர்கள் என்கிறார் –
தாம் எப்பொழுதும் பிரியாது ஸ்ரீ எம்பெருமானார் சந்நிதியிலேயே இருப்பவர் ஆதலின் – எய்தினர் –
வினையால் அணையும் பெயர் –
நீலன் பத்தராவிப் பெருமாளையே கண்களார அளவும் நின்று -கண்ண மங்கையுள் காண வேண்டும்படியான காதல் விஞ்சியவராய் –
காணாது பிரிந்து இருப்பதையே துன்பமாகவும் -கண்டு கொண்டு கிட்டி இருப்பதையே இன்பமாகவும் கொண்டு இருத்தலின் –
ப்ராக்ருதமான -தேக சம்பந்தத்தால் ஆன-முனிவும் கனிவும் அற்றவர் ஆனார் –
ஸ்ரீ எம்பெருமானாரும் அந்நீலன் தண் தமிழ் இன்பத்திலேயே மூழ்கி -அவருக்கு இனியராய் -அத்தகையரானார்-
அவரைப் பற்றினவர்களும் தண் தமிழ் இன்பத்தைக் காட்டின நீலனுக்கு இனிய ஆசார்யன் திறத்து உரிமைப் பட்டு
இருத்தலாம் பேரின்பத்திலே திளைத்து -அத்தகையார் ஆனார் -என்க-
எய்தினர் முனியார் மனம் கனியார் -என்று கூட்டிப் பொருள் கூறுக —

முனியார் துயரங்கள் முந்திலும் –
துக்கங்கள் ஆனவை அஹம் அஹம் என்கையாய் வந்து மொசிந்தாலும்-இவை வந்ததே என்று வியாகுலப் படார்கள்-
முனிவு -வெறுப்பு .

இன்பங்கள் மொய்ந்திடிலும் கனியார் மனம் –
சுகங்களானவை ஏகோத் யோகென வந்து திரண்டாலும் இந்த அதிசயம் நமக்கு வந்ததே என்று பக்வ பலம்-போலே –
மனசிலே ஏகாகாரங்களாய்
மொய்த்தல் -திரளுதல் –
ந பிரகர்ஷ்யதே த்ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத்-ப்ராப்யசாபிரியம் -என்றார் இறே ஸ்ரீ கீதாசார்யரும் .
மதன கதனைர் நக்லிச்யந்தே யதீஸ்வர சம்ஸ்ரயா -என்று-இவ் அர்த்தத்தை அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே –

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் மனம் –
துன்பத்தையும் இன்பத்தையும் துல்யமாக பார்க்கிறவர்கள் ஸ்ரீ எம்பெருமானார் அடியார்கள் -என்றபடி –
துன்பங்களோ இன்பங்களோ -கன்ம பலங்களாக தாமே வந்து தாமே தொலைகின்றன –
கர்மம் தொலைகின்ற்றது என்று அமைதியாய் இருத்தல் வேண்டும் -என் தளரவோ கிளறவோ
வேண்டும் எனபது அவர்கள் உறுதிப்பாடு –
ந ப்ரகுருஷ்யேத் ப்ராப்ய நோத்விஜேத் ப்ராப்ய சாப்ரியம் -கீதை – 5-20 – என்று விரும்பிய பொருளைப் பெற்று களிப்புறலாகாது –
விரும்பத் தகாத பொருளைப் பெற்று வெறுப்பு உறலும் ஆகாது -எனபது இங்கு நினைவு உரத்தக்கது –
ஆன்ம தத்தவத்தின் உண்மை நிலையை தத்துவ ஞானிகள் இடம் இருந்து தெரிந்து அதனைப் பெற முயல்வானாய் –
உடலையே ஆன்மாவாக கருதும் அறியாமையை விட்டு ஒழிந்து –ஸ்த்திரமான ஆத்மா தர்சன சுகத்தில் நிலை நிற்றலின் –
அஸ்திரமான பொருள்களைப் பற்றிய களிப்பும் கவர்வும் அற்றவனாய் இருத்தல் வேண்டும் என்கிறது இந்த ஸ்ரீ கீதா ஸ்லோகம் –
ஸ்ரீ எம்பெருமானைப் பற்றினவர்களும் –தத்துவம் அறிந்த பெரியோர் இடம் இருந்து ஆசார்யனுக்கு உரிமை பட்டு இருத்தலே
ஆன்ம தத்துவத்தின் உண்மை நிலை என்பதை தெரிந்து அந்நிலையிலே ஊன்றி நிற்க முயல்வராய் உடலையும் உடல் உறவு
படைத்தவர்களையும் -நான் எனது -என்று கருதும் அறியாமையை விட்டு ஒழிந்து –
ஸ்திரமான ஆசார்யனுக்கு உரிமைப் பட்டு இருத்தலாம் சுகத்தில்-நிலை நின்ற பின்
அஸ்திரமான உடல் முதலிய பொருள்களைப் பற்றிய களிப்பும்-கவர்வும் அற்றவர்களாய் இருக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள் -என்க –

சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்
இறப்பில் எய்துக, எய்தற்க; யானும்
பிறப்பு இல் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஒன்று இன்றி என்றும் மகிழ்வனே–திருவாய்மொழி-2-9-5-

இங்கு –
ஒன்றிடுக விண்ணவர் கோன் செல்வம் ஒழிந்திடுக
என்றும் இறவாது இருந்திடுக -இன்றே
இறக்க களிப்பும் கவர்வும் இவற்றால்’
பிறக்குமோ தற்றேளிந்த பின் – ஞான சாரம் -17 – என்று
விண்ணவர் கோன் செல்வம் என்பதை முன்னும் பின்னும் கூட்டுக –
தற்றேளிந்த பின் -தன் ஸ்வரூபத்தை தெளிவாக அறிந்த பிறகு
பின் இவற்றால் களிப்பும் கவர்வும் பிறக்குமோ என்று கூட்டிப் பொருள் கூறுக –

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .