ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.
தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஸ்லோகம் -4-
ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.
————-
ஸ்ரீ விஷ்ணு புராணம் -முதல் -அம்சம் -17-20-அத்யாயங்கள் –
17-பிரகலாதன் சரிதம்-
18. அசுரப் புரோகிதர்களைக் காத்தல்!–
19. பிரகலாதனின் பிரார்த்தனை-
20. நரசிம்மர் பிரத்தியக்ஷமாதல்–
ஹ்லாதன்- ஒரு பிள்ளை பிரஹலாதன் -நல்ல ஆனந்தம் உடையவன் -மேல் இரண்டு பிள்ளைகள்
ஸூக ப்ரஹ்மம் -விரிவாக பேரன் சொல்வதை தாத்தா பராசரர் இங்கு சுருக்கமாக சொல்வார்
கர்ப்ப ஸ்ரீ மான் -நாராயணனே அனுக்ரஹம் இங்கு -பாகவதத்தில் நாரதர் அனுக்ரஹம்
சாமான்ய தர்மம் -தந்தை அளவில் பிள்ளை மதித்தான் -விசேஷ தர்மம் பகவத் பக்தியில் ஆழ்ந்தவன் –
பரதன் தாய் சொன்ன சாமான்ய தர்மம் விரோதம் -விசேஷ தர்மம் கைக்கொண்டு பாதுகை பெற்றான் -இதே போல் செல்வ விபீடணன் –
கடோ நாஸ்தி நியாயம் -உளன் அலன் எனிலும் உளன் தானே
அறியும் செந்தீயைத் தழுவி* ‘அச்சுதன்’ என்னும் மெய்வேவாள்,*
எறியும் தண் காற்றைத் தழுவி* ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்,*
வெறி கொள் துழாய் மலர் நாறும்* வினையுடையாட்டியேன் பெற்ற*
செறி வளை முன்கைச் சிறுமான்* செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே?
முக்கூர் அழகிய சிம்கார் -ராஜகோபாலாச்சாரியார் பூர்வ ஆஸ்ரம பெயர் -ராஜ கோபுரம் காட்டியவர்
நரசிம்ஹர் ரசிப்பார் திடமான விசுவாசம் -கையில் உள்ள அக்னி கொண்டு பீடி பற்ற வைக்கக் கெட்டவன் இடம்
ஸூர்யன் அஸ்தமிக்காமல் இருக்க அம்மாவைக் கூப்பிடு -கற்பைக் கொண்டாடும் வார்த்தை
கையில் அக்னி உள்ளது இதே போல்
மத்த சர்வம் யத்ர சர்வம் யதஸ்ஸ சர்வம் -சர்வம் ஸம்ஸரய ச –அஹம் சர்வம் மயி சர்வம் -ஆழ்வார் போல் அநுகாரம்
அஹம் ப்ரஹ்மாஸ்மி -சொம்பு தண்ணீர் கொண்டு வந்து சொம்பு கொண்டு வந்தேன் சொல்லாமல்
தண்ணீர் வேறே சொம்பு வேறே தான்
உள்ளே இருப்பதையே சொன்னவாறே இது
கட்டுண்ட போதும் பெருமாளை ஸ்துதிக்கிறான் 19 அத்தியாயத்தில்
உன்னுடைய தர்சனம் தந்து அருள்
நாராயணனாக சேவை -பீதாம்பரம் தரித்து
வரனாக வந்துள்ளேன்
கேள் -என்றான்
நாத யோகி ஸஹஸ்ரேஷு அச்யுத பக்தி மாறாமல் இருக்க வேண்டும் -எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உற்றோமே ஆக வேண்டும்
விவேகம் இல்லாதவர் அல்பமானவற்றில் வைக்கும் பற்றை உதாரணமாகச் சொன்னான்
உலகியல் ஆசைக்காக பகவானை தியாகம் செய்த சம்சாரிகள் பெரிய தியாகி -ராமகிருஷ்ணர்
தூணைப் பிளந்தது எல்லாம் விஷ்ணு புராணத்தில் இருளை
அப்பா பண்ணிய தப்பை மன்னித்துக்கொள்
மன்னித்தோம் என்றான்
அவரும் பக்தராக வேண்டும் -ஸ்தோத்ரமும் பண்ண வேண்டும் -பூஜையும் பண்ண வேண்டும்
சரி என்றான் –
கல்ப பேதத்தால் இந்த பேதம்
அடுத்த நாள் போனதும் வாடா குழந்தை -ஆசீர்வாதம் செய்து
தம் பிதா-சேர்ந்து பூஜை கைங்கர்யம் செய்தானாம்
திடீர் தூனைப் பிளந்து நரசிம்மர் தோன்றி -அழித்து -பட்டாபிஷேகம் செய்ததாக முடித்தார்
நல்லவனை எதனால் அழிக்க வேண்டும்
இவ்வளவு பாபம் செய்தவன் திருந்தி பக்தி எப்படி
எல்லீரும் வீடு பெற்றால் இடம் இல்லை
ராம நாமம் சொல்லவே புண்ணியம் வேண்டுமே
ஹிரண்யகசிபாக அவதரித்து முன்பு காட்டினான்
கீழ் வாழ்த்தி ஆசீர்வாதம் நாராயணன்
இதுவே ரஹஸ்யம்
பின்பு பட்டாபிஷேகம் பண்ணி வைத்தான்
1-நான் அஹங்காரம் கூடாது
2-குலத்தால் வேறுபாடு பார்க்காத பகவான்
3-உறுதி நம்பிக்கை முக்கியம் பக்தனுக்கு
4-பகவான் எது செய்தாலும் நன்மைக்கே என்ற எண்ணம் வேண்டும்
5- பக்தனுக்காக எதையும் செய்வான்
கேட்டவர் பலன் -ஹிரண்யன் போல் பாபங்களை போக்கி அருளுவான் -ஒருமுறை
கோ தானம் செய்த பலன் -குறிப்பிட்ட அம்மாவாசை போன்ற நாள்களில் கேட்ப்பாருக்கு –
அனைத்து நாள்களிலும் கேட்ப்பார்களுக்கு கூட இருந்து ரஷிப்பான்
———-
1–17-பிரகலாதன் சரிதம்
ஸ்ரீ பராசர உவாச –
மைத்ரேய ஸ்ரூயதாம் சமயக் சரிதம் தஸ்ய தீமத
ப்ரஹ்லா தஸ்ய சதோதார சரி தஸ்ய மஹாத்மன–1-17-1-
ஸ்ரீ பிரகலாத ஆழ்வான் சரித்ரத்தை த்யான பூர்வமாகக் கேட்ப்பாயாக –
பிரஹ்லாத உவாச
அநாதி மத்ய அந்தம் அஜம் அவ்ருத்தி சாயம் அச்யுதம்
ப்ரணதோ அ சமயந்த சந்தாமம் சர்வ காரண காரணம் –1-17-15-இதுவே சார விஷயம் என்று உறுதியாச் சொன்னான்
பிரஹ்லாத உவாச –
சாஸ்தா விஷ்ணுர் அசேஷச்ய ஜகதோ யோ ஹ்ருதி ஸ்திதி
தம்ருதே பரமாத்மானம் தாத க கேன சாஸ்யதே–1-17-20-சாஸீதா -உள்ளேத்தே உறையும் மால் -லஷ்மீ நாத ஸமாரம்பாம்
ப்ரஹ்லாத உவாச
ந சப்த கோசரம் யஸ்ய யோகித்யேயம் பரம் பதம்
யதோ யாச்ச ஸ்வயம் விச்வம்ச விஷ்ணு பரமேஸ்வர –1-17-22-
வாய் வார்த்தையாலும் சொல்ல முடியாத ஸ்ரீ வைகுண்டம் -உலகு அவன் இடமே வந்தது -உள்ளே உயிராக உள்ளான் -உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
யதோ யாச்ச ஸ்வயம் விச்வம்ச விஷ்ணு -இத்தை விடாமல் விஷ்ணு புராணம் காட்டிக் கொண்டே இருக்கும்
பிரஹ்லாத உவாச
ந கேவலம் தாத மம பிரஜானாம் ஸ ப்ரஹ்ம பூதோ பவதச்ச விஷ்ணோ
ததா விதாதா பரமேஸ் வரச்ச ப்ரசீத கோபம் குருஷே கிமர்த்தம் —1-17-24-
ப்ரஹ்லாத உவாச –
ந கேவலம் மத ஹ்ருதயம் ஸ விஷ்ணுர் ஆக்ரம்ய லோகான் அகிலான் அவஸ்தித
ஸ மாம் த்வாதீம்ச்ச பித்தாஸ் சமஸ்தான் சமஸ்த சேஷ்டாஸூ யு நகதி சர்வ –1-17-26-
ப்ரஹ்லாத உவாச
யத பிரதான புருஷௌ யதஸ் சைதஸ் சராசரம்
காரணம் சகலச்ய அஸ்ய ஸ நோ விஷ்ணு ப்ரசீதது –1-17-30-
பிரஹ்லாத உவாச –
விஷ்ணு சஸ்த்ரேஷூ யுஷ்மா ஸூ மயி ஸ அசௌ வ்யவஸ்தித
தைத்யாஸ் தென் சத்யேன மாக்ர நந்த்வா யுதானி மே–1-17-33-
பிராஹ்லாத உவாச
பயம் பயா நாம் அபஹாரிணி ஸ்திதே மநஸய நந்தே மம திஷ்டதி
ய ஸ்மின் ச்ம்ருதே ஜன்ம ஜரா அந்தகாதி பயானி சர்வாணி அபயாந்தி ததா -1-17-36-
ப்ரஹ்லாத உவாச –
தந்தா கஜா நாம் குலிசாக்ர நிஷ்டுரா சீர்ணா யதேதே ந பலம் மமைதத்
மஹா விபத்தாப விநாசனோ அயம் ஜனார்த்தனா நு ஸ்மரண அநுபாவ –1-17-44-
ப்ரஹ்லாத உவாச –
தாதைஷா வஹ்னி பவநேரி தோ அபி ந மாம் தஹ்யத்ர சமந்தோ அஹம்
பஸ்யாமி பதமாஸ் தரணாஸ் த்ருதாநி ஸீதாநி சர்வாணி திசாம்முகா நி –1-17-47-
சுக்ராச்சார்யர் புதல்வர்கள் -சண்டாமர்க்கர்கள்-அவர்களுக்கும் உபதேசிக்கிறான் ப்ரஹ்லாத ஆழ்வான்
ப்ரஹ்லாத உவாச –
அத்யந்தஸ் திமிதான்கானாம் வ்யாயாமேன ஸூ கைஷிணாம்
பிராந்தி ஜ்ஞானா வ்ருதாஷாணாம் து கமேவ ஸூ காயதே -1-17-61-
க்வ சரீரம் அசேஷாணாம் ச்லேஷ்மாதீனாம் மகாசய
க்வ காந்தி சோபா சௌந்த்ர்ய ரமணீ யாதயோ குணா -1-17-62-
மாம்ஸா ஸ்ருக்பூய விண் மூத்ர ஸ் நாயு மஜ்ஜா அஸ்தி சம்ஹதௌ
தேஹே சித்ப்ரீதி மான் மூடோ பவிதா நரகே அப்யசௌ–1-17-63-
அக்னே சீதேன தோயஸ்ய த்ருஷா பக் தஸ்ய ஸ ஷூதா
க்ரியதே ஸூ க கர்த்ருத்வம் தத் விலோ மஸ்ய சேதரை -1-17-64-
கரோதி ஹை தைத்ய ஸூ தா யாவன் மாதரம் பரிக்ரஹம்
தாவன் மாதரம் எவாசய துக்கம் சேதசி யச்சதி –1-17-65-
யாவத குருதே ஜந்து சம்பந்தான் மனச பிரியான்
தாவந்தோ அய நிகச்யந்தே ஹ்ருதயதே சோக சங்கவ –1-17-66-
யத் யத் க்ருஹே தன மனஸி யத்ர தத்ர அவதிஷ்டதி
நாசதாஹ உபகரணம் தஸ்ய தத்ர ஏவ திஷ்டதி –1-17-67-
ஜன்மன் யத்ர மஹத் துக்கம் ம்ரிய மாணச்ய சாபி தத்
யாத நா ஸூ யமஸ் யோக்ரம் கர்ப்ப சங்கர மணேஷூ ஸ -1-17-68-
கர்ப்பேஷூ ஸூ கலேசோ அபி பவத்பிர் அநு மீயதே
யதி தத் கத்யதாம் ஏவம் சர்வ துக்க மயம் ஜகத் –1-17-69-
தமேவம் அது துக்க நாம் ஆஸ்பதே அதர பவார்ணவே
பவதாம் கத்யதே சத்யம் விஷ்ணுர் ஏக பராயண –1-17-70-
மாஜா நீத வயம் பாலா தேஹி தேஹே ஷூ சாஸ்வத
ஜரா யௌவன ஜன்மாத்யா தர்மா தேஹச்ய ந ஆத்மன –1-17-71-
பால்யே க்ரீடன கா சக்தா யௌவனே விஷயோன்முகா
அஜ்ஞா நயந்த் யசக்த்யா ஸ வார்த்தகம் சமுபஸ்திதம் -1-17-75-இத்தையே ஆதி சங்கரர் பஜ கோவிந்தத்தில் அருளிச் செய்கிறார்
பாலஸ் தாவத் க்ரீடா சக்த:
தருணஸ் தாவத் தருணீ சக்த:
வ்ருத்தஸ் தாவத் சிந்தா சக்த:
பரே ப்ரஹ்மணி கோபி ந சக்த:
சிறு வயதிலோ விளையாட்டுச் செயல்களிலேயே ஒவ்வொருவரும் மூழ்கிப் போகின்றனர். பருவ வயதிலோ இனக் கவர்ச்சியிலேயே மனமெல்லாம் இருக்கிறது. முதுமைக் காலத்திலோ எத்தனையோ கவலைகள். ஐயோ! பரம் பொருளைப் பற்றி எண்ண ஒருவருக்கும் தமது வாழ்க்கையில் நேரமே இல்லையே?-கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!
வேத நூல் பிராயம் நூறு —-பேதை பாலன் அது ஆகும் தொண்டரடிப்பொடி ஆழ்வார்-
100 வயசுக்கு வேடிக்கையாக சொல்லும் கதை –
குரங்கு20 வரை -காளை20-40 உழைத்து -மனுஷ்ய புத்தி -40-60–மேல் நாய் போல் காவல் இருந்து 80 வரை -மேல் வௌவ்வால் -கண் தெரியாமல் எங்கேயே ஒதுங்கி போய் –
தஸ்மாத் பால்யே விவேக ஆத்மா யதேதே ஸ்ரேயசே சதா
பால்ய யௌவன வ்ருத்தாத்யைர் தேஹ பாவரைஸம்யுத –1-17-76-
ததே தத்வோ மயாக்யாதம் யதி ஜாநீத நாந்ருதம்
ததஸ் மதபரீதயே விஷ்ணு ஸ்மர்யதாம் பந்த முக்தித –1-17-77-
ப்ரயாச ஸ்மரேண கோ அஸ்ய ச்ம்ருதோ யச்சதி சோபனம்
பாபஷ யச்ச பவதி ஸ்மரதாம் தமஹர் நிசம் –1-17-78—ஸ்மரேண–சிற்ற வேண்டாம் சிந்திப்பே அமையும் –
சர்வ பூதஸ் திதே தஸ்மின் மதிர் மைத்ரீ திவா நிசம்
பவதாம் ஜாயதாமேவம் சர்வ க்லேசான் ப்ரஹாச்யதே–1-17-79-
தாபத்ர யேண் அபிஹதம் யதேதத் அகிலம் ஜகத்
ததா சோச்யேஷூ பூதேஷு த்வேஷம் ப்ராஜ்ஞா கரோதி க –1-17-80-
அத பத்ராணி பூதானி ஹீன சக்திர் அஹம் பரம்
முதம் ததாபி குர்வீத ஹா நிர் த்வேஷபலம் யத -1-17-81-
பக்த வைராணி பூதானி த்வேஷம் குர்வந்தி சேத்ததி
ஸூ சோஸ் யான்யதி மோஹேன வ்யாப்திநீதி மநீஷிணாம்–1-17-82-
விஸ்தார சர்வ பூதஸ்ய விஷ்ணோ சர்வம் இதம் ஜகத்
த்ரஷ்டவ்யம் ஆத்மவத் தஸ்மாத் அபேதேன விசஷணை –1-17-84-
அஸார சம்சார விவர்த்தநேஷூ மா மா யாத தோஷம் பிரசபம் ப்ரவீமி
சர்வத்ர தைத்யாஸ் சமதாமுபேத சமத்தவம் ஆராதனம் அச்யுதச்ய –1-17-90-
தஸ்மின் பிரசன்னே கிமிஹாச்த்ய லப்யம் தர்ம அர்த்த காமைர் அலம் அல்ப காஸ்தே
சமாஸ்ரிதாத் ப்ரஹ்ம ரோர் அனந்தான் நி சம்சயம் ப்ராப்ச்யாத வை மஹத் பலம் –1-17-91-
——————
18. அசுரப் புரோகிதர்களைக் காத்தல்!–
பராசர உவாச
தச்யைதாம் தாநவாஸ் சேஷ்டாம் த்ருஷ்ட்வா தைத்ய பதேர் பயாத்
ஆசசரக்யு ஸ சோவாச ஸூ தா நா ஹூய சத்வர –1-18-1-
ப்ரஹ்லாத உவாச
சம்பத் ஐஸ்வர்ய மஹாத்ம்ய ஜ்ஞான சந்ததி கர்மாணாம்
விமுக்தேஸ் சைகதோ லப்யம் மூலம் ஆராதனம் ஹரே –1-18-26-விமுக்தி மோக்ஷ பர்யந்தம் அளிப்பான்
பஹூ நாத்ர கிமுக்தேன ஸ ஏவ ஜகத பதி
ஸ கர்த்தா ஸ விகர்த்தா ஸ சம்ஹர்த்தா ஸ ஹ்ருதி ஸ்திதே -1-18-27
ஸ போக்தா போஜ்யமப்யேவம் ஸ ஏவ ஜகத் ஈஸ்வர
பவத்பிர் ஏதத் ஷந்தவ்யம் பால்யாதுக்தம் து யன்மயா — 1-18-28-
க கேன ஹன்யதே ஜந்துர் ஜந்து க கேன ரஷ்யதே
ஹந்தி ரஷதி சைவாத்மா ஹ்யசத்சாது சமாசரன்–1-18-31-
கரமண ஜாயதே சர்வம் கர்மைவ கதி சாதனம்
தஸ்மாத் சர்வ பிரயத்னேந சாது கர்ம சமாசரேத்–1-18-32-
யத்ர அநபாயி பகவான் ஹ்ருத் யாஸ்தே ஹரிர் ஈஸ்வர
பங்கோ பவதி வஜ்ரச்ய தத்ர சூலச்ய கா கதா –1-18-36-
பிரஹ்லாத உவாச –
சர்வ வ்யாபின் ஜகத்ரூப ஜகத் ஸ்ரஷ்ட ஜனார்த்தன
பாஹி விப்ரான்இமான் அஸ்மா ஹூ சஹான்மந்திர பாவகாத் –1-18-39-
யதா சர்வேஷூ பூதேஷு சர்வவ்யாபி ஜகத் குரு
விஷ்ணுர் ஏவ ததா சர்வே ஜீவந்த்வேன புரோஹிதா –1-18-41-
யே ஹந்து பாகதா தப்யம் யைர்விஷம் யைர் ஹூ தாசன
யைர் திக் கஜைர் அஹம் ஷூண்ணோ தஷ்ட சர்பைச்ச யைரபி –1-18-42-
தேஷ்வஹம் மித்ர பாவேன சம பாபோ அஸ்மி ந க்வசித்
யதா தேனாத்ய சத்யேன ஜீவந்த்வவ ஸூ ரயா ஜகா –1-18-43-
ஸ்ரீ பராசர உவாச
இத்யுக்த்வா தம் ததோ கதவா யதாவ்ருத்தம் புரோஹிதா
தைத்ய ராஜாயா சகலம் ஆச்சக்யுர் மஹா முனே –1-18-46–
வித்யா கர்வம் இல்லாமல் -பாலகன் -அறியாமையால் சொன்னேன் -தப்பாக இருந்தால் மன்னிப்பு கோருகிறேன் என்றான் விநயத்துடன் –
———————————–
19. பிரகலாதனின் பிரார்த்தனை
ஸ்ரீ பராசர உவாச
ஹிரண்யகசிபு ஸ்ருத்வா தாம் க்ருத்யாம் விததீக்ருதாம்
ஆ ஹூய புத்ரம் பப்ரச்ச பிரபாவஸ் யாச்ய காரணாத்–1-19-1-
ந மந்த்ராதி கருத்தும் தாத ந ஸ நை சர்கிகோ மம
பிரபாவ ஏஷ சாமான் யோ யஸ்ய அச்யுதோ ஹ்ருதி –1-19-4-உள்ளத்தில் உறையும் மாலால் பெற்ற சக்தி
அன்யேஷாம் யோ பாபானி சிந்தயத்ய ஆத்மா நோ யதா
தஸ்ய பாப கமஸ் தாத ஹேத்வ பாவான் ந வித்யதே –1-19-5-
கர்மணா மநஸா வாசா பரபீடாம் கரோதி ய
தத் பீஜம் ஜன்ம பலதி ப்ரபூதம் தஸ்ய ஸ அஸூபம் –1-19-6-
சோ அஹம் ந பாபம் இச்சாமி ந கரோமி வதாமி வா
சிந்தயன் சர்வ பூதஸ்தம் ஆத்மன்யபி ஸ கேசவம் -1-19-7-முக்கரணங்களால் பாபம் செய்யாமல் பெற்ற பலன்
சரீரம் மானசம் துக்கம் தைவதம் பூதபவம் ததா
சர்வத்ர ஸூ பசித் தஸ்ய தஸ்ய மே ஜாயதே குத – 1-19-8-
ஏவம் சர்வேஷூ பூதேஷு பக்திர் அவ்யபிசாரிணீ
கர்தவ்யா பண்டிதைர் ஜஞாத்வா சர்வ பூத மயம் ஹரிம் –1-19-9-நிற்கின்றது எல்லாம் நெடுமால் -என்று ஸர்வ பூத ஹிதம் வேண்டுமே
மம உபதிஷ்டம் சகலம் குருணா ந அதர சம்சய
க்ருஹீந்த்து மயா கிந்து ந சததேன்மதம் மம –1-19-34–
சாம சோபப்ப்ரதானம் ஸ பேத தண்டென ததா பரௌ
உபாயா கதிதா சர்வே மித்ராதீநாம் ச சாதேநே -1-19-35-
நானேவாஹம் ந பஸ்யாமி மித்ராதீம்ஸ் தாத மா கருத
சாத்யாபாவே மஹா பாஹோ சாதனை கிம் பிரயோஜனம் -1-19-36-
சர்வ பூதாத்மகே தாத ஜகன்னாதே ஜகனமயே
பரமாத்மனி கோவிந்தே மித்ர அமித்ர காத குத -1-19-37-
த்வய் யஸ்தி பகவான் விஷ்ணுர் மயி ச அன்யத்ர ச அஸ்தி ச
யதஸ் ததோயம் மித்ரம் மே சத்ருச்சேதி ப்ருதக் குத -1-19-38-வேறுபாடு இல்லையே
ததேபிர் அலமத்யர்த்தம் துஷ்டாரம் போத்தி விஸ்தரை
அவித்யா அந்தர் கதைர் யதன க்ர்த்தவ்யஸ் தாத சோபனே –1-19-39 –
வித்யா புத்திர் அவித்யாயாம் அஜ்ஞா நாத் தாத ஜாயதே
பாலோக் நிம் கிம் ந கத்யோதம் அ ஸூர ஈஸ்வர மந்யதே –1-19-40-
தத் கர்ம யன்ன பந்தாய சா வித்யா யா விமுக்தயே
ஆயாசாயாபரம் கர்ம வித்யான்யா சில்ப நை புணம் –1-19-41-
ததேதத் அவகம்யாஹம் அஸாரம் சாரமுத்தமம்
நிசாமய மஹாபாகா ப்ரநிபத்திய ப்ரவீமி தே–1-19-42-
ந சிந்த்யதி கோ ராஜ்யம் கோ தனம் நாபி வாஞ்சதி
ததாபி பாவயமே வைததுபயம் ப்ராப்யதே நரை –1-19-43-
சர்வ ஏக மஹாபாக்க மஹத்தவம் பிரதி சோத்யமா
ததாபி பும்ஸாம் பாக்யாநி நோத்யமா பூதி ஹேதவ–1-19-44–
ஜடா நாம விவேகானாம் அ ஸூ ராணாம்பி பிரபோ
பாக்ய போஜ்யாநி ராஜ்யாநி சந்தய நீதி மதாமாபி –1-19-45
தஸ்மாத் எதேத புண்யேஷூ ய இச்சேன் மஹதீம் ஸ்ரியம்
யதிதவ்யம் சமத்வே ச நிர்வாண ம்பி சேச்சதா–1-19-46-
தேவா மனுஷ்யா பசாவ பஷி வருஷ சரீஸ்ரூப
ரூபம் ஏதத் அனந்தசய விஷ்ணோர் பின்னம் இவ ஸ்திதம் –1-19-47-
ஏதத் விஜா நதா சர்வம் ஜகத் ஸ்தாவர ஜங்கமம்
த்ரஷ்டவ்யம் ஆத்மவத் விஷ்ணுர் எதோ அயம் விஸ்வ ரூப தருக –1-19-48-
ஏவம் ஜ்ஞாதே ச பகவான் அநாதி பரமேஸ்வர
ப்ரசீததி அச்யுதஸ் தஸ்மின் பிரசன்னே க்லேச சங்க்ஷய –1-19-49-
———-
20. நரசிம்மர் பிரத்தியக்ஷமாதல்
———
17. பிரகலாதன் சரிதம்
பரமஞானியும் உதார சரிதராயும் விளங்கும் பிரகலாதரின் பிரபாவத்தை பராசர முனிவர் சொல்லலானார். பூர்வத்திலே மிகவும் பராக்கிரமமுடையவனும் அதிதியின் மகனுமான இரணியகசிபு என்ற ஓர் அரக்கன் இருந்தான். அந்த அரக்கன் கோரமான தவங்களினால் பிரம்மாவை மகிழச்செய்து, தனக்குத்தேவர்களாலோ, மிருகங்களாலோ மரணம் விளையக்கூடாது என்பது போன்ற அநேகவரங்களைப் பெற்றான். அதனால் அவன் கர்வம் மிகுந்து, மூன்று உலகங்களையும் தீனப்படுத்திக் கொண்டான். இந்திரன், வருணன், ஆதித்தன், வாயு, அக்கினி, சந்திரன், யமன் முதலியோரது அதிகாரங்களைத் தனது கைவசப்படுத்திக் கொண்டான். வேள்விகளில் அவர்களுக்குரிய அவிர்ப்பாகங்களையும் தானே கைக்கொண்டான் மூன்று உலகங்களையும் சாதிதேச்காரமாய் ஆண்டு வந்தான். அப்போது இந்திரன் முதலிய தேவர்கள் அவனுக்குப் பயந்து சுவர்க்கலோகத்தை விட்டு, மானிட வேடம் பூண்டு பூவுலகில் சஞ்சரித்தார்கள். இந்தவிதமாக இரணியகசிபு மூன்று உலகங்களையும் ஏகச்சக்கிராதிபதியாக மிகவும் அகங்காரத்தோடு ஆண்டு வந்தான். கந்தர்வர்கள் கீதம் பாட, சித்தசாரணர் மிருதங்கம் முதலிய வாத்தியங்களை, வாசிக்க தேவலோகத்து அப்சர மங்கையர் நடனமாட, ஸ்படிக மயமும் அப்ரகசிலா மயமுமான அதிவுன்னதமான அழகிய உப்பரிகையில் இரணியகசிபு மிகவும் மகிழ்ச்சியோடு, மதுபானம் அருந்திய வண்ணம், மனதுக்கிச்சையான சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருந்தான். அவன் அனைவருக்கும் தானே தலைவன் தானே எல்லாம் தானே சர்வ வல்லமை பொருந்திய ஈசுவரன் என்று அகப்பாவம் கொண்டு தன்னைத் தவிர வேறு எதையும் வணங்கக்கூடாதென்றும் கட்டளை பிறப்பித்திருந்தான். அவனுக்குப் பிரகலாதன் என்று ஒரு குமாரன் இருந்தான். அவன் பாலியத்தில் உபாத்தியாயரின் வீட்டிலிருந்து, பாலர் படிக்கவேண்டிய படிப்பைப் படித்துக் கொண்டிருந்தான்.
ஒருநாள் பிரகலாதன் தன் ஆசிரியரோடு, தன் தந்தையிடம் வந்து, வணங்கி நின்றான்; அப்போது மிகவும் தேஜஸோடு விளங்கும் தன் குமாரனை அசுர மன்னன் இரணியகசிபு வாரியணைத்துக் கொண்டு மனம் மகிழ்ந்து, குழந்தாய்! உன் குருநாதர் இத்தனை நாட்களாய் அதிக முயற்சியுடன் உனக்குச் சொல்லிக் கொடுத்த விஷயங்களின் சாராம்சத்தைச் சொல் பார்க்கலாம் என்றான். உடனே பிரகலாதன் பக்திச்சிரத்தையோடு, என் மனதில் இருக்கும் சாராம்சத்தைக் கூறுகிறேன் கேளுங்கள். ஆதிமத்தியாந்தரகிதனும் அஜனுமாகி விருத்தியும் க்ஷயமும் இல்லாமல், சர்வபூத அந்தராத்மாவாய் சிருஷ்டியாதிகளுக்கு காரணங்களான யாவற்றுக்குமே காரணமாய், எப்பொழுதுமே ஆனந்தசொரூபமாய் விளங்குகிற ஸ்ரீவிஷ்ணுவான அச்சுதனுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன்! என்றான். குமாரனின் அந்த வார்த்தையைக் கேட்டதும் இரணியகசிபுவுக்குக் கோபம் மூண்டது. அவன் கண்கள் சிவந்தன, உதடுகள் துடிதுடித்தன. அவன் பயங்கரமான ரூபமடைந்து தன் புத்திரனின் குருவைப் பார்த்து, ஏ தர்ப்புத்தியுள்ளவனே! நிசாரமும் சத்துரு பட்ச துதியுமான இந்த சுலோகத்தை என் பாலகனுக்குச் சொல்லிக் கொடுத்த, என்னை அவமானஞ் செய்யலாமா? என்று கேட்டான். அதனால் ஆசிரியர் பயந்து நடுங்கி இரணியகசிபை நோக்கி, தைத்ய ஈசுவரா! கோபிக்க வேண்டாம். உமது குமாரன் நான் உபதேசித்த விதமாகப் படிக்கவில்லை! என்றார். உடனே இரணியகசிபு தன் பாலகனை நோக்கி, பிரகலாதா! உன் உபாத்தியாயர் இப்படி உனக்கு உபதேசிக்கவில்லை என்று சொல்கிறாரே, இப்படி யார் உனக்குப் போதித்தார்கள்? என்று சினத்துடன் கேட்டான். பிரகலாதனோ புன்முறுவலுடன் தன் தந்தையைப் பார்த்து ஐயா எவன் சர்வ பூதங்களின் இதயத்திலே இருக்கிறானோ, அந்த ஸ்ரீவிஷ்ணுவே சகல ஜனங்களுக்கும் புத்தியைக் கற்பிப்பவன் பரமாத்வான அந்தத் தேவனையன்றி வேறு யார் கற்பிப்பவன் இருக்கிறான்? என்றான்.
இரணியனுக்குக் கோபம் முற்றியது. அவன் தன் சின்னஞ்சிறு பாலகனான பிரகலாதனைக் கடிந்து நோக்கி, துர்புத்தியுள்ளவனே! உலகத்திற்கே ஈசுவரனான என் கண் முன்னாலேயே பயமின்றி நின்று வேறு எவனையோ அடிக்கடி பயமில்லாமல் துதிக்கிறாயே, அந்த விஷ்ணு என்பவன் யார்? என்று கேட்டான். எவனுடைய பரமார்த்த ஸ்வரூபம் இன்னதன்மையதென்று சொல்லக்கூடாமல் யோகீந்திரர்களுக்கும் தியான கம்மியமாக இருக்குமோ, எவனால் உலகமெல்லாம் உண்டாயிற்றோ எவன் விஸ்வமயனாக இருக்கிறனோ அந்தப் பரமேஸ்வரனே ஸ்ரீவிஷ்ணு என்று அறிவீராக! என்றான் பிரகலாதன். அதை எதிர்க்கும் விதமாக இரணியகசிபு துள்ளிச் சினந்து, மூடனே! யோகீஸ்வரனாக நான் இருக்கப் பரமேசுவரன் என்ற பெயர் வேறு ஒருவனுக்கும் உண்டோ? நீ நாசமடையப் போவதால் தான் என் முன்னாலேயே துணிந்து நின்று பலவிதமாக அன்னியனைத் துதிக்கிறாய்? என்று குமுறினான். பிரகலாதனோ அமைதியாக, தைத்யேசுவரனே! பரப்ரம்ம பூதனான ஸ்ரீவிஷ்ணுவே எனக்கும் உமக்கும் சகல பிரஜைகளுக்கும் நிலைப்படுத்துவோனும் சிருஷ்டிப்பவனுமாக இருக்கிறான். ஆகையால் நீங்கள் ஏன் கோபிக்கிறீர்கள்? கோபத்தை விட்டுச் சாந்தமாக இருங்கள் என்றான். அதை இரணியகசிபால் பொறுக்கமுடியவில்லை. துர்புத்தியுடைய இந்தச் சிறுவனின், இதயத்தில் எவனோ ஒரு பாபகர்மமுடையவன் பிரவேசித்து மோகத்தையுண்டாக்கியிருக்கிறான். அதனால்தான் இவன் இப்படிப்பட்ட கெட்ட வார்த்தைகளைப் பலவாறாகச் சொல்கிறான்! என்று உறுமினான். சர்வலோக வியாபகனான அந்த ஸ்ரீமகாவிஷ்ணு என் இதயத்தில் மட்டுமல்ல; சகல உலகங்களிலும் வியாபித்திருக்கிறார். அதனால் என்னையும், உம்மையும் மற்றுமுள்ள சகலரையும் அந்த விஷ்ணுவே அந்தந்தக் காரியங்களில் பிரவேசிக்கச் செய்கிறார் என்றான் பிரகலாதன். அவன் சின்னஞ்சிறு பையன் என்றே; தன் புத்திரன் என்றோ பாராமல் இரணியன் மிகவும் குரோதம் கொண்டு; தன் அருகில் இருந்த அசுரர்களை அழைத்து துராத்மாவான இந்த மூடனைக் குருவின் வீட்டிற்குக் கொண்டு போய் நன்றாகத் தண்டிக்கச் சொல்லுங்கள்! ஒரு துராத்மா இவனுக்குப் பகைவனை துதிக்கும்படிப் போதித்திருக்கிறேன்! என்று கட்டளையிட்டான். அதன் பிரகாரம் அசுரர்கள் பிரகலாதனைக் குருவின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கேயே அவனைத் தள்ளிவிட்டுப் போனார்கள். அங்கே பிரகலாதன் தன் குருவுக்குப் பணிவிடைகள் புரிந்து; கல்வி பயின்று வந்தான்.
சிறிது காலஞ்சென்ற பிறகு இரணியன் தனது மகனை அழைப்பித்து; மகனே பிரகலாதா! ஏதேனும் ஒரு சுலோகத்தைச் சொல்! என்றான். அதனால் பிரகலாதன் தன் தந்தையை நோக்கி, எவனிடத்திலிருந்து மூலப்பிரகிருதியும் சமஷ்டி ரூபமான ÷க்ஷத்ரக்ஞனும் உண்டானார்களோ; எவனிடத்திலிருந்து சராசரத்மகமான சகல பிரபஞ்சமும் ஜனித்தனவோ; அப்படிப்பட்ட சர்வதாரனப் பூதனான ஸ்ரீவிஷ்ணுதேவன் நமக்குப் பிரத்யட்சமாகக் கடவன்! என்றான். அதைக்கேட்டதும் இரணியன் அளவிலாத கோபங்கொண்டு அங்கிருந்த அசுரரை நோக்கி; இந்தத் துராத்மாவைச் சித்திரவதை செய்து கொல்லுங்கள்! இவன் பிழைத்திருப்பதால் யாதொரு பயனுமில்லை. இவன் தன் சார்புடைய இனத்தவருக்குத் தீங்கு செய்யத் தலைப்பட்டதால் இக்குலத்துக்கு நெருப்பு போல இருக்கிறான் என்று கட்டளை பிறப்பித்தான். உடனே அசுரர்கள் அநேகர் கூடி, பலவிதமான ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு, பிரகலாதனைத் தாக்கி வதைக்க முயன்றார்கள். அப்பொழுது பிரகலாதன் புன்முறுவலுடன், அசுரர்களே உங்களிடமும் என்னிடமும் உங்களுடைய ஆயுதங்களிலுங்கூட ஸ்ரீமந்நாராயணனே பரிபூரணமாய் நிறைந்திருக்கிறான் என்பது சத்தியம்! இந்தச் சத்தியத்தினாலே உங்கள் ஆயுதங்கள் என்மீது பாயாதிருக்கட்டும்! என்று சொன்னான். அப்படி அவன் சொல்லியுங்கூட அசுரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தடி, கத்தி, சூலசக்கரம் முதலிய ஆயுதங்களால் பிரகலாதனை வதைக்கலானார்கள். ஆயினும் பிரகலாதன் அவற்றால் சிறிதும் வேதனையடையாமல் விசேஷ காந்தியுடனே பிரகாசித்தான். அப்போது அவனது தந்தை இரணியன் அவனைப் பார்த்து, அடா துர்புத்தியுடையவனே! இனியேனும் எனது பகைவனைத் துதி செய்யாமல் இருந்தால் உனக்கு அபயங்கொடுக்கிறேன். அதிக மூடத்தன்மையை அடையாமல் சன்மார்க்கனாக இரு என்று புத்தி புகட்ட முயன்றான். அதை பிரகலாதன் ஏற்றுக்கொள்ளாமல், பிதாவே! எவனைச் சிந்திதகதவுடன் பிறப்பு, இறப்பு, மூப்பு முதலிய சமஸ்த பயங்களும் ஓடிப்போகுமோ, அத்தகைய பயங்களையெல்லாம் போக்கடிக்கும் அனந்தனான ஸ்ரீமகாவிஷ்ணு, எனது இதயத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கும்போது எனக்குப் பயம் என்பது ஏது? என்று நிமிர்ந்து நின்றான்.
அதைப் பார்த்து இரணியன் அளவிலாத ஆங்காரம் கொண்டு மகா நாகங்களை அழைத்து, ஓ கொடிய பாம்புகளே! மிகவும் துர்புத்தியும் துர்நடத்தையுமுள்ள இந்தப் பையனை விஷச்சுவாலைகள் மிக்க உங்கள் பற்களால் கடித்து இப்போதே இவனை நாசமடையச் செய்யுங்கள்! என்று கட்டளையிட்டான்; உடனே தக்ஷகன் முதலான கொடிய பாம்புகளெல்லாம் உக்கிரமான விஷங்களைக் கக்கிக் கொண்டு பிரகலாதனின் சகல அவயவங்களிலும் கடித்தன. ஆனால் அந்தப் பாலகனோ ஸ்ரீவிஷ்ணுவிடம் தன் சிந்தை முழுவதையும் நிலைநிறுத்தியிருந்ததால் ஆனந்தப் பரவசமாகி அக்கொடிய பாம்புகள் தனது அறியாமல் இருந்தான். பிறகு விஷசர்ப்பங்களெல்லாம் தோல்வியடைந்து இரணியனிடம் சென்று அரசே எங்களுடைய பற்கள் ஒடிந்துவிட்டன. முடியிலிருக்கும் இரத்தினங்கள் வெடித்தன. படங்களிலே மகத்தான தூபம் ஒன்று உண்டாயிற்று. இதயம் நடுங்கியது. இவையெல்லாமல் அந்தப் பாலகனின் தேகத்தில் சிறிதும் சேதம் உண்டாகவில்லை. ஆகையால் எங்களிடத்தில் நீங்கள் கோபிக்காமல், இந்தக் காரியத்தை ஒழித்து வேறு ஒரு காரியத்தைக் கட்டளையிடுங்கள்! என்று கெஞ்சி விழுந்தன. இரணியன் அப்போதும் குரோதம் அடங்காமல் திக் கஜங்களைக் கூப்பிட்டு, ஓ! திசை யானைகளே! உங்களுடைய தந்தங்கள் ஒன்றோடு ஒன்று நெருங்கி மிகக் கெட்டியாகவும் உக்கிரமாயும் விளங்குகின்றன. அத்தந்தங்களினால்; அந்தத் துராத்மாவான பிரகலாதன் மீது பாய்ந்து, அவனைக் கொன்றொழியுங்கள். அரணியில் பிறந்த அக்கினியே அந்த அரணியை தகிப்பதுபோல தைத்திய குலத்தில் பிறந்த இந்த அதமன் தன் குலத்தையே நாசஞ்செய்பவனாக இருக்கிறான்! என்றான். உடனே திக்கஜங்கள் பிரகலாதனை பூமியிலே வீழ்த்தி பருவத சிகரங்களைப் போன்ற தங்களுடைய தந்தங்களை பிரகலாதன் மீது பாயவைத்து இடித்தன. அப்படி அவை பாயும் போது; கோவிந்த சரணாவிந்தங்களையே பிரகலாதன் தியானித்துக் கொண்டிருந்தானாகையால் அந்தப் பாலகனது மார்பிலே யானைகளின் தந்தங்கள் பட்டதும்; அவை முறிந்து பொடிப்பொடியாய்ப் போயின.
அப்போது பாலகன் பிரகலாதன் தன் தந்தை இரணியனைப் பார்த்து; தந்தையே! வைரத்தைவிட உறுதியான திசையானைகளின் தந்தங்கள் என் மீது பட்டுப் பொடிப்பொடியானது என்னுடைய பலத்தால் அல்ல. பாபங்களையெல்லாம் நாசஞ்செய்யவல்ல ஸ்ரீஜனார்த்தனருடைய ஸ்மரண மகிமையினால் தான் என்பதை நினைப்பீராக! என்று சொன்னான். அதைக்கேட்டதும் இரணியன் அதிக ஆத்திரமடைந்து திக்கஜங்களை அப்பால் விரட்டிவிட்டுத் தன் அசுரர்களை நோக்கி, தைத்தியர்களே! பாபகர்மனான இந்தப் பாலகனைக் கொன்றொழிக்காமல் விடக்கூடாது. காலாக்கினிக்கு ஈடான மஹா அக்கினியை வளர்த்து அதிலே இவனைப் போட்டு எரியுங்கள் என்று சொல்லிவிட்டு; வாயுதேவனான காற்றைக் கூப்பிட்டு மாருதனே! அந்தப் பெரு நெருப்பை உனது காற்றால் ஜ்வலிக்கச் செய்! என்று கட்டளையிட்டான். அசுரர்களோ மலைபோல் விறகுகளைக் குவித்து; அந்தக் குவியலுக்குள் பாலகனான பிரகலாதன் மறையும்படி அவற்றினுள்ளே அமுக்கி மூடிவைத்து, நெருப்பை மூட்டிக் கொளுத்தினார்கள். அப்போது பிரகலாதன் தன் தந்தையை நோக்கி, பிதாவே! பிராண்ட மாருதத்தால் ஜ்வலிக்கப்பட்டும்; இந்த அக்கினி சிறிதளவுகூட என்னைத் தகிக்கவில்லை. மேலும் நான் கிடக்கும் இந்த நெருப்பு மயமான விறகுக் குவியலோ, பத்துத் திசைகளிலும் நல்ல தாமரை மலர்களை நிறைவித்து அதிகக் குளிர்ச்சியாகச் செய்யப்பட்டவை போலிருப்பதையே நான் உணர்கிறேன்! என்று சிரித்தான்.
இது இப்படியிருக்கும்போது, இரணியனுக்குப் புரோகிதர்களும், சுக்கிரனுடைய குமாரர்களுமான சண்டாமர்க்கர் என்பவர்கள் இரண்யனை நல்வார்த்தைகளால் துதித்து; அசுர ஈஸ்வரனே உமக்கு விரோதிகளான தேவர்கள் மீது உமது கோபத்தைச் செலுத்த வேண்டுமே தவிர உமது சொந்த மகனான இந்தப் பாலகனிடம் உமது கோபத்தையெல்லாம் செலுத்துவது முறையல்ல! இவன் இனிமேலும் சத்துருபட்ச ஸ்துதி செய்யாமல் இருக்கும்படி நாங்கள் இவனுக்குக் கற்பிக்கிறோம்! பாலியப்பருவம் சகல துர்க்குணங்களுக்கும் இருப்பிடமானபடியால் பாலகனான இந்தக் குமாரனிடத்தில் கோபிக்க வேண்டாம். நாங்கள் போதிப்பதாலும் இவன் ஹரிபக்தியை விடாமல் இருப்பானாயின் இவனை வதைப்பதற்கான துர்ச்செயல்களை நாங்களே செய்கிறோம்! என்று வேண்டிக்கொண்டார்கள். அதனால் இரணியன் சிறிது மனமிளகித் தன்னுடைய அசுரர்களை ஏவி மகாக்கினியின் மத்தியில் போட்டிருந்த பிரகலாதனை வெளியே இழுத்துவரச் செய்தான். மறுபடியும் குருகுலத்துக்கே போகும்படி பிரகலாதனுக்கு இரணியன் கட்டளையிட்டான். அதன்பிறகு, குருகுலத்தில் பிரகலாதன் வசித்துக் கொண்டிருந்தான். அங்கே அவனுடைய குருவானவர் பாடம் போதிக்காத சமயங்களில் பிரகலாதன் தன்னோடு படிக்கும் தைத்ரிய பாலர்களான அசுரச் சிறுவர்களைக் கூப்பிட்டு உட்காரவைத்துக் கொண்டு அவர்களுக்கு விஷ்ணு பக்தியையும், உண்மையான ஞானமார்க்கத்தையும் உபதேசித்து வரலானான். ஓ தைத்திய பாலர்களே! பரமார்த்தமான விஷயத்தை உங்களுக்கு உபதேசிக்கிறேன் கேளுங்கள். என் வசனங்களைப் பொய்யாக என்ன வேண்டாம். ஏனென்றால் நான் பொருள்மீது ஆசை வைத்து இதை உங்களுக்கு உபதேசிக்க வந்தவனல்ல. ஆகையால் நான் சொல்வதை நம்பிக் கேளுங்கள். மனிதன் பிறந்தவுடன் பாலியமும், யவனமும், அதற்குப் பிறகு தடுக்கமுடியாத கிழத்தன்மையும் வந்து, கடைசியில் மிருத்யுவான மரணத்திற்கே வசமாவான். தைத்ய பாலர்களே! மனிதர்களிடம் இவையெல்லாம் உண்டாவதை நீங்களும் நானும் கண்ணெதிரில் கண்டிருக்கிறோம். இதுமட்டுமல்ல. மரணமடைந்தவனுக்கு மீண்டும் பிறவியுண்டாவதும் மெய்யேயாகும். இதற்கு சுருதி ஸ்மிருதி முதலிய சாஸ்திரங்களே பிரமாணங்களாம்! அவற்றை நீங்களும் கற்றறிந்திருக்கிறீர்கள். இந்தத் தேகம் பிறப்பதற்குக் காரணம், பூர்வ ஜன்மத்தில் செய்த பாவ புண்ணியங்களோடு கூடிய ஸ்திரமான ஆன்மாவேயல்லாமல் வேறு காரணம் அகப்படாமையால் சுக்கில சுரோணிதங்களுக்கு ஆளாவதான ஆன்மாவே முக்கிய காரணம். ஆகையால் மனிதனுக்கு கர்ப்பவாசம் முதல் சரீரம் விழும் வரையிலும், சர்வ அவஸ்தையிலும் துக்கம் ஒன்று தான் நிச்சயம்! அன்னபானாதிகளாலே பசியும் தாகமும் தீருவதும், அந்தந்த உபாயங்களாலே சீத உஷ்ணாதி உபத்திரவங்கள் விலகுவதையுங் கொண்டு அதையே சுகம் என்று நினைப்பது உண்மையில் அவிவேகமே ஆகும்!
அது எப்படியெனில், அன்னபானாதிகளைச் சம்பாதிப்பதற்காகச் செய்யும் பிரயாசையினால் உண்டாகும் துக்கங்கள் சொல்லத்தரமல்ல. இந்த அன்னாதிகளால் அஜீர்ணமாகும்போது எத்தனை துக்க ஹேதுவாகின்றன? இதற்கு உதாரணம் கேளுங்கள், வாத தோஷங்களால் மரத்திருக்கிற அங்கங்களையுடைவர்களுக்கும், வதைப்பதாலேயே தேகசுகத்தை விரும்புகிறவர்களுக்கும், அவர்களுடைய உடம்பைக் குத்துவதும், கசக்குவதும், பிசைவதும், மிதிப்பதும், அடிப்பதுமே சுகமாகத் தோன்றுகின்றன; காமமோகிகளாக இருப்பவர்களுக்கோ ஊடலும் கூடலும் காமினீ சரண தாடனமுமே சுகமாகத் தோன்றும் இப்படியாகத் துக்க ஏதுக்களில் சுகப்பிராந்தி உண்டாயிருப்பதைக் காண்பீர்கள். இதுபோலவே, மாமிச சிலேஷ்ம, மலமூத்திராதி மயமான உடலில் சவுந்தர்ய, சவுகுமார்ய, சவுரப்பிய காந்தி முதலான குணங்கள் உண்டென்று நினைப்பதும் வெறும் மனப்பிராந்தியே தவிர வேறல்ல. ரத்தமாமிச, சிலேஷ்ம மலமூத்திர மச்சஸ்நாயு அஸ்திகளின் சமூகமாக இருக்கும் தேகத்தின் மீது பிரியம் வைப்பவன் நரகத்திலேயும் பிரியம் வைக்கலாம். குளிரினால் நெருப்பும், தாகத்தினால் தண்ணீரும், பசியினால் அன்னமும் சுகமாகத் தோன்றுகின்றன. குளிரும் தாகமும் பசியும் இல்லாதபோது அக்கினியும் தண்ணீரும் அன்னமும் துக்க ஏதுக்களாகவே இருக்கும். பிள்ளைகளே! மனிதன் எவ்வளவு தனதானிய ரத்னாதிகளைக் கிரகித்துக் கொள்கிறானோ அவ்வளவையும் துக்கம் என்று நினைக்க வேண்டும். மனிதனின் மனத்துக்குப் பிரியமான புத்திர, மித்திர களத்திராதி சம்பந்தங்கள் எத்தனை சம்பாதிக்கிறானோ அத்தனையும் இதயத்தில் தைத்த ஆணிகளைப் போலவே இருக்கும்! மனிதன் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவனுடைய இதயத்தில் இருக்கிற தனதானிய ரத்னாதிகளை நாசமும், அக்கினியுபாதையும் கோரபயமுமில்லாமல் ஸ்திரமாய்ப் பாதித்துக்கொண்டேயுள்ளன. வீட்டில் கள்வர் பயமில்லாமல் இருந்தாலும், இருதயத்தில் பொருள்களிடத்துள்ள ஆசையால், அவை உண்டாகிக்கொண்டே இருக்கின்றன. மேலும் பிறக்கும்போது அனுபவிக்கிற துக்கத்தைப் போலவே மரணத்திலும் துக்கம் உண்டாகிறது. பிறகு, யமவாதனையிலும் மகாதுக்கமே உண்டாகும். கர்ப்பவாசத்தில் கொஞ்சமேனும் சுகம் இருக்குமா என்று நீங்களே சொல்லுங்கள். எனவே எங்குமே சுகமில்லை ஆகையால் ஜகம் எங்கும் துக்கமயமாகவே இருக்கிறது.
இப்படியாகச் சகல துக்கங்களுக்கும் இருப்பிடமான சம்சார சாகரத்தை ஸ்ரீமந்நாராயணன் ஒருவனே கடக்கச் செய்பவன் உங்களுக்கு நான் உண்மையையே சொல்கிறேன். நாம் பால்யரானதால் விரகதி மார்க்கத்திற்குத் தகுதியற்றவர்கள் என்று நினைக்கவேண்டாம். பால்ய, யௌவன ஜரா, மரணாதி அவஸ்தைகள் உடலுக்கேயன்றி ஆத்மாவுக்கு இல்லை. உடலில் ஆன்மாதான் ஜனன மரணாதி ரகிதனாய், சாஸ்வதனாக இருக்கிறான். உலகத்தில் மனிதன், தன்னுடைய பாலப்பருவம் கடந்த பிறகு யவ்வன வயதிலே ஆன்மாவுக்கு இதஞ்செய்து கொள்கிறேன் என்றும், யவ்வனத்தை அடைந்தபோது வயோதிகத்திலே உயர்ந்த ஞானத்தைப் பெற்றுக்கொள்கிறேன் என்றும் நினைப்பான். பிறகு வயது முதிர்ந்து, மூப்புவந்து இந்திரியங்கள் பலவீனப்பட்டுப் போகும் போது, இனிமேல் என்ன செய்வேன்? திடமாக இருந்தபோதே ஆத்தும இதஞ்செய்துகொள்ளாமல் மூடனாகப் போனேனே! என்று கவலைப்படுவான். இதுவுமல்லாமல் துராசார மோகங்கொண்டு, ஒருநாளும் உயர்வான மார்க்கத்துக்கு உரியவனாக மாட்டான். எப்படியென்றால், பலவித கிரீடா விளையாடல் விசேஷங்களால் பாலியத்தையும், சந்தன குசுமவனிதையர்களின் பரவசத்தினாலே வாலிபத்தையும், அசக்தியினாலேயே வயோதிகத்தையும் போக்கிக் கொண்டு, அஞ்ஞானிகள் தங்கள் வாழ்நாளை வீணாக்கிக் கொள்கிறார்கள். ஆகையால் கங்கை நதியின் அருகிலிருந்தும் வண்ணான் தனக்குத் தாகமெடுத்தவுடன் தண்ணீரைக் குடிக்காமல், இந்தத் துணியைத் துவைத்தாகட்டும் இந்த ஆடையைத் துவைத்தாகட்டும் என்ற காலத்தைப் போக்குவதைப் போலவும், செம்படவன் இந்த மீனைப் பிடித்தாகட்டும் என்று பொழுதைப் போக்குவதைப் போலவும், எதிர்காலத்தை நினைத்து தற்காலப் பருவத்தைப் போக்கக்கூடாது. பாலிய, யவ்வன, ஜரா மரணாதி அவஸ்தைகள் உடலுக்கு உண்டே தவிர ஆன்மாவுக்கு இல்லை என்று நினைத்து விவேகமுடையவர்களாய், நீங்கள் உஜ்ஜீவிக்கும்படியான முயற்சிகளைச் செய்யுங்கள். இதுவே விரக்திமார்க்கம்! இது அசத்தியம் என்று நினைக்காதீர்கள் எப்போதும் சம்சார பந்த நிவாரணியான ஸ்ரீமந்நாராயணனையே நினையுங்கள். அந்த எம்பெருமானை நினைப்பதில் என்ன கஷ்டம் இருக்கிறது? அந்தத் திருப்பெயரை ஸ்மரித்தவுடனேயே சகல பாபங்களும் நாசமாய் சகல சுபங்களும் உண்டாகும். ஆகையால் அந்த மகாவிஷ்ணுவையே நினைத்து மகாத்துமாக்கள் உஜ்ஜீவிப்பார்கள். சர்வபூதந்தர் பாமியான நாராயணனிடத்தில் உங்களுக்கு நட்புணர்வு உண்டாகட்டும்! அவனது லீலா சாதனங்களான சேதனங்களிடத்தில் சினேகஞ்செய்யுங்கள். அதனால் மோகம் முதலிய சகல கிலேசங்களும் விலகும் ஆத்தியாத்து மாகாதி, தாபத்ரயத்தினால் ஜகம் யாவும் துன்பப்படுபவை. ஆகையால் மிகவும் பரிதாபப்பட வேண்டிய பிராணிகளிடத்தில் எவன்தான் துவேஷத்தை வைப்பான்? ஒருவேளை செல்வம், கல்வி, பலம் முதலியவற்றில் தன்னைவிட சகல ஜீவர்களும் சகல பிராணிகளும் செழிப்பாக இருப்பதாகவும், தான் ஒருவனே அப்படியில்லாமல் சக்தியீனனாக இருப்பதாகவும் மனிதன் நினைத்தானானால் அப்போதும் துவேஷம் பாராட்டாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். துவேஷஞ் செய்வதால் ஹானியே ஏற்படும் ஆகையால்; மயித்திரி; கருணை; முதிதை; உபேஷை என்ற மனத்தெளிவின் காரணங்களை மந்திமாதிகாரிகளின் மதத்தை அனுசரித்து உங்களுக்குச் சொன்னேன். மந்திமாதிகாரிகள் என்போர் உலகத்தைப் பகவானின் சொரூபமாக நினைக்காமல் வேறாக நினைக்கிற சாங்கியராவர். இனி உத்தமாதிகாரிகளின் கருத்தைக் கூறுகிறேன் கேளுங்கள்.
சகல பிரபஞ்சமும் சர்வாத்மாவான ஸ்ரீமந்நாராயணருடைய சொரூபம் என்று நினைத்து, ஞானமுள்ளவர்கள் சகல பூதங்களையும் உன்னைப்போலவே அபேதமாக நினைக்கவேண்டும். ஆகையால், நானும் நீங்களும் அசுர சுபாவத்தை விட்டுவிட்டு, பெரும் ஆனந்தத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்வோமாக. சூரியன், சந்திரன், வருணன், இந்திரன், வாயு, அக்கினி முதலானவர்களாலே ஒருபேறுமில்லை. இதற்கு என்ன செய்வது என்றால், தேவ, அசுர; யக்ஷ;ராக்ஷச, கின்னர பன்னகாதிகளாலும் மனுஷ்ய; பசு; பக்ஷி; மிருகங்களாலும் அதிகாரம்; ஜ்வரம், குன்மம், முதலிய மகாரோகங்களாலும் ராக, துவேஷ, லோப, மோக மதமாச்சாரியங்களாலும் எது நாசஞ்செய்யப்படாததோ அப்படிப்பட்ட பரமானந்தத்தைப் பெறுவதற்கு ஸ்ரீகேசவனது திருவடிகளில் இதயத்தை நிலைநிறுத்த வேண்டும். இதனால் சுகமடையலாம். ஆகையால் அசாரமான சம்சார மார்க்கத்தில் உண்டாகும் தேவ மனுஷ்யாதி சரீரங்களுக்கு உரிய ஸ்வர்க்க போகங்களுக்கு ஆசைப்பட வேண்டாம். உங்களுக்கு நான் வலுவில் வந்து நன்மையானவற்றையே சொல்கிறேன். சர்வபூதங்களிடத்திலும் சமத்துவ புத்தியுடன் இருங்கள். சர்வபூத சமத்துவந்தான் அச்சுதனுக்குச் செய்யும் ஆராதனையாகும். சர்வ நாதனான விஷ்ணுபெருமான் பிரசன்னமானானேயாகில் துர்லபமான பொருள்கள் என்னதான் இருக்கமுடியும்? ஆனாலும் தர்மார்த்த கர்மங்களைப் பிரார்த்திப்பது நல்லதன்று. அவை அற்பங்கள்! அவைகளினால் பயன் என்ன? மோட்சத்தையும் விரும்பவேண்டாம். ஏனென்றால் நன்றாய்ப் பழுத்த மாமரத்தின் அருகே சென்றவனுக்கு தற்செயலாய்ப் பழங்கிடைப்பது போல பரப்பிரமமான அனந்தன் என்ற மகாகல்ப விருட்சத்தை அணுகியவனுக்கு மோக்ஷõனந்தம் என்கிற பலன் தற்செயலாகவே கிடைத்துவிடும், இதில் சந்தேகமில்லை என்று பாலகன் பிரகலாதன் கூறினான்.
————
18. அசுரப் புரோகிதர்களைக் காத்தல்!
பிரகலாதனின் உபதேசங்களைக் கேட்டதும் அசுரகுமாரர்கள் மிகவும் யோசித்துவிட்டு, இரணியனின் கட்டாயத்துக்குப் பயந்து, பிரகலாதன் சொன்னவற்றையெல்லாம் அந்த அசுரேஸ்வரனிடம் கூறிவிட்டார்கள். அதனால் இரணியன் அதிகக் கோபமும் அகங்காரமும் கொண்டு தன் சமையற்காரனைக் கூப்பிட்டு, பரிசாரகர்களே! மந்தபுத்தி படைத்தவன் தான் என் குமாரன் பிரகலாதன் அவன் கெட்டதுமல்லாமல், மற்றவருக்கும் துன்மார்க்கமான உபதேசங்களைச் சொல்லி, அவர்களையும் கெடுத்துக் கொண்டிருக்கிறான். ஆகையால் பிரகலாதனைத் தாமதமின்றி அழித்தொழிக்க வேண்டும். அவனறியாத வண்ணம் அவனுடைய ஆகாரங்களிலெல்லாம் ஆலகாலம் என்ற கொடிய விஷத்தைக் கலந்து அவனுக்குக் கொடுங்கள். இந்தக் காரியத்தில் சந்தேகம் வேண்டாம்! என்று கட்டளையிட்டான். பரிசாரகர்களும் அப்படியே விஷங்கலந்த அன்னத்தை பிரகலாதனுக்கு கொடுத்தார்கள். அதையறிந்த பிரகலாதன், தன் மனதில் யாதொரு மாறுபாடும் இல்லாமல், அனந்தன் என்ற திவ்யநாமதே யத்தினால் அந்த அன்னங்களையெல்லாம் வாங்கி மகிழ்ச்சியுடன் அமுது செய்தான். ஸ்ரீஅனந்தனின் நாமத்தை உச்சரணை செய்த பெருமையால் அன்னத்தில் கலந்துள்ள விஷமெல்லாம் தன் வீரியத்தை இழந்து பிரகலாதனின் ரத்தத்திலேயே ஜீரணமாகிவிட்டது. அந்த மகாவிஷம் பிரகலாதனுக்கு ஜீரணமானதைப் பார்த்ததும் சமையற்காரர்கள் மகாபயம் பிடித்தவர்களாய் இரணியனிடம் ஓடி நடந்தவற்றைக் கூறினார்கள். அதனால் இரணியன் இன்னும் கோபங்கொண்டு, புரோகிதர்களான சண்டாமர்க்கர்களைக் கூப்பிட்டு, புரோகிதர்களே, விரைவில் அந்த துன்மார்க்கப்பையலைக் கட்டியிழுத்துச் சென்று உங்கள் மந்திர பலத்தால் பயங்கரமான கிருத்தியை உண்டாக்கி, அவனை அழித்து விடுங்கள் என்று கட்டளையிட்டான். புரோகிதர்களான பிராமணர்கள் அசுரேஸ்வரனின் ஆக்ஞையை ஏற்று பிரகலாதனை அணுகினார்கள். வணக்கமாக நின்று கொண்டிருக்கும் பிரகலாதனைப் பார்த்து, சிறுவனே! திரிலோக விக்கியாததமான பிரமகுலத்தில் உதித்து, இரணியனின் மகனான உனக்கு எந்தத் தேவதைகளால் என்ன ஆகவேண்டும்? விஷ்ணுவான அந்த அனந்தனாலே தான் உனக்கு என்ன பயன்? உன் பிதாவான இரணியகசிபோ சகல உலகங்களுக்கும் அதிபதியாக இருப்பதால் நீயும் அப்படியே அதிபதியாக இருக்கலாம். ஆகையால் சத்துருபட்ச ஸ்தோத்திரத்தை விட்டுவிடுவாயாக: சகல உலகங்களுக்கும் உன் தந்தையே பூஜிக்கத்தக்கவராகவும் பரமகுருவாகவும் இருக்கிறார். ஆகையால் இப்போது நீ அவரது கட்டளையை ஏற்று நடப்பதே நியாயம்! என்று புத்திமதி கூறினார்கள்.
மகாத்மாக்களே! நீங்கள் சொல்வது மெய்தான். மூன்று உலகங்களிலும் பிரமபுத்திரனான மரீசியின் வமிசம் மேலானது தான். என் தந்தை மேன்மையானவர், தேஜோ பல பராக்கிரமங்களையுடையவர் என்பதும் உண்மைதான். அவரே பரமகுரு என்பதும் நியாயமே! அத்தகைய என் தந்தைக்கு நான் சிறிதாவது அபராதம் செய்யவில்லை. அப்படியிருக்கும்போது, அனந்தனாலே பயன் என்ன என்று நீங்கள் சொன்னீர்களே, அந்த வசனம் ஒன்றுதான் பொருள் அற்றது! என்றான் பிரகலாதன். பிறகு மரியாதைக்காக ஒன்றும் சொல்லாமல், புன்னகையுடன் பிரகலாதன் அவர்களைப் பார்த்து, புரோகிதர்களே! விஷ்ணுவான அந்த அனந்தனால் என்ன பயன் என்ற உங்களது வாக்கியம் நேர்த்தியாக இருக்கிறது. அனந்தனாலே காரியம் என்னவென்று நீங்கள் கேட்டது மிகவும் நன்றாக இருக்கிறது. நான் சொல்லுகிறேனே என்று மனதில் கிலேசங்கொள்ள வேண்டாம். அனந்தனாலே உண்டாகும் பயனை நான் சொல்கிறேன் கேளுங்கள். தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்று சொல்லப்படும் நால்வகை புருஷார்த்தங்களும் எவனால் உண்டாகுமோ, அந்த அனந்தனாலே பிரயோசனமென்ன என்று நீங்கள் சொல்வதை நான் எப்படி அங்கீகரிப்பேன்? மரீசி முதலியவர்கள் அனந்தனை ஆராதித்தே, அவனது கிருபையினாலே தாம் விரும்பியதையெல்லாம் பெற்றார்கள். தத்துவ ஞானிகளான பரமாத்மாக்கள் ஞானநிஷ்டையினாலே அந்த பரமாத்மாவை ஆராதித்து, சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை அடைந்தார்கள். சம்பத்து ஐசுவரியம், பெருமை, சந்தானபலம் ஆகிய நல்ல காரியத்துக்கும் மோட்சத்துக்கும் ஒன்றாலேயே பெறத்தக்க காரணம் எதுவென்றால் அது ஸ்ரீஹரியினுடைய ஆராதனையேயாகும். இப்படித் தருமார்த்த காம மோட்சங்கள் எவனிடமிருந்து பெறப்படுமோ, அப்படிப்பட்ட அனந்தனாலே என்ன பயன் என்று நீங்கள் கேட்டீர்கள்? பிராமணர்களே! இதுவென்ன நியாயம்? மேலும் நான் பல வார்த்தைகளைச் சொல்லி பயன் என்ன? நீங்களோ எனது ஆசிரியர்கள். ஆகையால் சந்தேகமின்றி நல்லதாயினும் பொல்லாததாயினும் என்னிடம் சொல்லுங்கள். இதனால் சிறப்பிராது அற்ப விவேகம் தான் இருக்கும். இனி என்னுடைய முடிவான சித்தாந்தத்தைக் கூறுகிறேன். கர்த்தாவும், வளர்ப்பவனும், சங்கரிப்பவனும் உலகநாதனும் எல்லோருடைய இதயத்திலிருப்பவனும், யாவற்றையும் அனுபவிப்பவனும், அனுபவிக்கப்படுபவனும் அந்த ஸ்ரீமந்நாராயணனே யல்லாமல் வேறு ஒருவனுமல்ல; பாலியனான நான் இப்படிச் சொல்வதைக் கேட்டுப் பொறுத்தருள வேண்டும்! என்று பிரகலாதன் கூறினான்.
பாலகனே! இனிமேல் நீ இப்படிச் சத்துருபக்ஷ ஸ்தோத்திரமான வார்த்தைகளைச் சொல்லமாட்டாய் என்று எண்ணித்தான், நெருப்பின் மத்தியிலே தகிக்கப்பட்டிருந்த உன்னை வெளியே இழுக்கச் செய்தோம். மூடனாகையால் அதையே நீ மறுபடியும் பேசுகிறாய். இனியும் உன் பிடிவாத்தை விடாமல் இருப்பாயானால், கிருத்தியை உண்டாக்கி ஒரு கணத்தில் உன்னை நாசமாக்குவோம்! என்றார்கள் புரோகிதர்கள். பிராமணர்களே! ஒருவனால் ஒருவன் ரட்சிக்கப்படுவதுமில்லை அழிக்கப்படுவதுமில்லை. அவனவன் தனது சதாகாரத்தினாலேயே தன்னைத் தற்காத்துக் கொள்கிறான். நற்செயல்களால், சகல பயன்களும் நற்கதியும் உண்டாகின்றன. ஆகையால் எப்போதும் நல்லவற்றையே செய்யவேண்டும்! என்றான் பிரகலாதன். அசுரப் புரோகிதர்கள் கோபம் அடைந்து மந்திரங்களை உச்சாடனம் செய்து, மிகவும் பயங்கர முகத்துடன் தீச்சுவாலை வீசும்படியான ஒரு கிருத்தியை உண்டாக்கி அதைப் பிரகலாதன் மீது ஏவினார்கள். அது பூமிநடுங்க தன் பாதங்களை எடுத்து வைத்து மிகவும் கோபத்துடன் தனது சூலத்தினாலே, பிரகலாதனின் மார்பைத் தாக்கியது. அந்தச் சூலம் பிரகலாதனின் மார்பிலே பட்டவுடனேயே சடசடவென ஒடிந்து தரையில் விழுந்து பொடிப்பொடியாயிற்று! பகவானும் ஜகதீஸ்வரனுமான ஸ்ரீஹரி எங்கே பிரியாமல் இருப்பானோ, அங்கே வஜ்ராயுதமானாலும் பொடியாய்ப் போகும் என்றால் சூலத்தின் கதியை பற்றிச் சொல்லவா வேண்டும்? இவ்விதமாக அந்த கிருத்தியையினால் ஒன்றும் செய்யமுடியாமற் போகவே, அது தன்னைக் குற்றமில்லாத இடத்திற்கு ஏவிய புரோகிதர்கள் மீதே திரும்பி விழுந்து அவர்களைத் தகிக்கத் துவங்கியது. அதனால் தவிக்கிற ஆசிரியர்களைக் கண்டதும் பிரகலாதன் மிகவும் பரிவு கொண்டு அவர்களை ரக்ஷிக்கும் பொருட்டு, ஸ்ரீகிருஷ்ணா! ஸ்ரீஅனந்தா! இவர்களைக் காப்பாயாக! என்று சொல்லிக் கொண்டே அவர்களிடம் ஓடிச்சென்று, சுவாமியைத் துதிக்கலானான்.
ஓ சர்வ வியாபகனே! ஜகத்ரூபனே! ஜகத்கர்த்தாவே! ஜனார்த்தனனே! கடினமான மந்திர அக்னியால் தகிக்கப்படும் இந்தப் பூசுரர்களைக் காப்பாயாக. சர்வ பூதங்களிடத்திலும் ஜகத் குருவான ஸ்ரீவிஷ்ணுவே வியாபித்திருக்கிறார் என்பது சத்தியமானால் இந்தப் புரோகிதர்கள் பிழைப்பார்களாக. ஸ்ரீவிஷ்ணு யாவரிடத்திலும் பிரியமாய் இருப்பவன் என்று நான் நினைத்து, சத்துரு பக்ஷத்திலும் துவேஷமில்லாமல் நான் இருப்பேனேயானால், இந்தப் பிராமணர்கள் பிழைக்கவேண்டும். என்னைச் சங்கரிக்க வந்த க்ஷத்திரிய அசுரர்களிடமும் எனக்கு விஷம் இட்ட சமையற்காரர்களிடமும், அக்கினியை மூட்டிய தானவர்களிடமும் தந்தங்களாலே என்னைப் பிடித்துப் பிடித்துக் குத்திய திக்கு கஜங்களிடத்திலும்; விஷங்கக்கி என்னைக் கடித்த பாம்புகளிடமும் என் சிநேகிதர்களிடமும் நான் சமமான புத்தியுடையவனாக இருந்து, எங்கும் ஒரு தீங்கும் நினைக்காமல் இருந்தேன் என்றால் அந்தச் சத்தியத்தினாலேயே இந்த அசுரப்புரோகிதர்கள் பிழைத்து சுகமாக இருக்கவேண்டும்! என்று பிரகலாதன் பிரார்த்தித்தான். அதனால் அப்புரோகிதர்களின் வேதனை ஒழிந்தது. அவர்கள் மகிழ்ச்சியுடன், பிரகலாதாழ்வானைப் பார்த்து, குழந்தாய்! நீ தீர்க்காயுளுடன் எதிரற்ற வீரிய பலபராக்கிரமங்களும், புத்திர பவுத்திர தனாதி ஐசுவரியங்களும் பெற்றுச் சுகமாக இருப்பாயாக! என்று ஆசிர்வதித்துவிட்டு, இரணியனிடம் சென்று நடந்தவற்றைக் கூறினார்கள்.
————
19. பிரகலாதனின் பிரார்த்தனை
இரணியன் தன் புரோகிதர்கள் உண்டாக்கிய கிருத்தியை வீணானதைக் கேட்டுத் திகைத்தான். பிறகு அவன் தன் புத்தரனை அழைத்து, பிரகலாதா! உன் பிரபாவம் அதியற்புதமாக இருக்கிறதே! இதற்குக் காரணம் என்ன? இது மந்திரத்தால் உண்டானதா! இயல்பாகவே உள்ளதா? தெரியச் சொல்! என்றான். பிரகலாதன் தன் தந்தையின் பாதங்களைத் தொட்டு வணங்கி விட்டு, ஐயனே! எனக்கு இந்தப் பிரபாவம் மந்திர தந்திரங்களால் உண்டானதல்ல! இயற்கையாகவே உள்ள சுபாவமுல்ல எவனெவன் இதயத்திலே ஸ்ரீமகாவிஷ்ணு நிலையாகப் பிரகாசிப்பானோ, அவனவனுக்கெல்லாம் இத்தகைய பிரபாவம் உண்டு! யார் ஒருவன் தனக்குக் கேடு நினையாததைப் போலப் பிறருக்கும் கேடு நினைக்காமல் இருப்பானோ அப்படிப்பட்டவனுக்குப் பாவத்தின் காரியமாகிய பாவம் உண்டாவதில்லை. எவன் மனோவாக்குக் காயங்களினால் யாருக்கும் துரோகஞ்செய்யாமல் இருக்கிறேன். இப்படி நல்ல சிந்தையுள்ளவனான எனக்கு ஆத்தியாத் மிகம், ஆதி தெய்வீகம், ஆதி பவுதிகம் என்ற மூலகைத் துக்கமும் எப்படி உண்டாகும்? ஆகையால், விவேகமுள்ளவர்கள் ஸ்ரீஹரியே சர்வாத்துமகனாக இருக்கிறான் என்று நினைத்து, சகல பூதங்களிடமும் சர்வதேச, சர்வ காலங்களிலும் இடைவிடாமல் அன்பு செலுத்த வேண்டும்! என்று பிரகலாதன் சொன்னான். இரணியன் இன்னும் குரோதத்தால் பொங்கி, அங்கிருந்த அசுரகிங்கரர்களைக் கூவியழைத்து இந்த துஷ்டப்பையனான பிரகலாதனை இழுத்துகக் கொண்டு போய் நூறு யோசனை உயரமுள்ள உப்பரிகையின் மேலே இருந்து, கீழே தள்ளுங்கள். அந்த மலையின் மேல் விழுந்து இவனது உடம்பெல்லாம் சின்னாபின்னமடைந்து சிதையட்டும்! என்று கட்டளையிட்டான். அதன் பிரகாரம் கிங்கரர்களும் பிரகலாதனை இழுத்துப்போய் மிகவும் உயரத்திலிருந்து கீழே தள்ளினார்கள். ஆனால் பிரகலாதன் தனது இதயகமலத்தில் புண்டரிதாஷனான ஸ்ரீமந்நாராயணனையே நினைத்துக் கொண்டிருந்ததால் பூமிதேவி வெளிப்பட்டு சர்வபூத ரட்சகனின் பக்தனான பிரகலாதனை தன் கைகளால் ஏந்திக் கொண்டாள்.
அப்படிக் கீழே விழுந்தும் தனது அங்கத்தில் கிஞ்சித்தும் சேதமில்லாமல் சுகமாய் எழுந்துவந்த தன் மகனைப் பார்த்து, இரணியன் மனம் பொறாமல் மகாமாயவியான சம்பராசுரனைக் கூவி அழைத்து, அசுர உத்தமனே! துன்மார்க்கனான இந்தப் பையனைச் சாகடிக்க நான் எத்தனை உபாயம் செய்தும் இவன் சாகாமலே தப்பிவிடுகிறான்! ஆகையால் உமது மாயா சக்தியினால் இந்தத் துராத்மாவைச் சங்கரிக்க வேண்டும்! என்றான்.
அதற்கு சம்பராசுரன் இணங்கி, அசுரேஸ்வரா! எனது மாயாபலத்தைப் பாரும்! சஹஸ்ரகோடி மாயைகளைச் செய்து இந்த பிரகலாதனை நானே சாகடிக்கிறேன்! என்று சொல்லி விட்டு பிரகலாதன் மீது பலவகையான மாயைகளைப் பிரயோகித்தான். ஆனால் பிரகலாதனோ அந்த அசுரன் மீதும் வெறுப்படையாமல் ஸ்ரீமதுசூதனான விஷ்ணுவையே நினைத்துக் கொண்டிருந்தான். அப்போது ஸ்ரீமந்நாராயணனின் நியமனத்தால் அநேகமாயிரம் ஜ்வாலைகளோடு கூடிய திருவாழி புறப்பட்டு, பிரகலாதனை ரட்சிப்பதற்காக அதிவேகமாக வந்து, சம்பராசுரனின் மாயைகளையெல்லாம் தகித்துச் சாம்பலாக்கியது. பிறகு, இரணியன் இன்னும் பிடிவாதமான குரோதம் கொண்டு சம்சோஷகன் என்ற வாயுவைப் பார்த்து, சீக்கிரமாக இந்தத் துஷ்டனை நாசஞ்செய்வாயாக! என்று கட்டளையிட்டான். அந்த வாயு அசுரனும் அதிகுளிர்ச்சியும் அதிஉஷ்ணமும் கொண்டு, பிரகலாதனின் திருமேனியினுள்ளே பிரவேசித்தான். ஆனால் பிரகலாதன் தன் இருதயத்திலே ஸ்ரீமந்நாராயணனைத் தரித்திருந்தபடியால், அங்கு குடிகொண்டிருக்கும் ஸ்ரீமதுசூதனன் ரட்சகமூர்த்தியாய் எழும்பி, அந்தச் சம்சோஷகனை விழுங்கி ஒரே கணத்தில் நாசஞ்செய்தருளினார். அதைக்கண்ட இரணியன் பிரமித்தான். இதுபோல சம்பரனால் ஏவப்பட்ட மாயைகளும் சம்சோஷக வாயுவும் நாசமடைந்ததையறிந்த பிரகலாதன் மீண்டும், குருகுலத்துக்குச் சென்று அங்கே படித்துக் கொண்டிருந்தான். குருகுலத்தில் அவனுடைய ஆசாரியர், அவனுக்குத் தினந்தினம் சுக்கிர நீதியை உபதேசித்து வந்தார். சிலகாலம் சென்ற பிறகு அவர் தம்மிடம் பிரகலாதன் நீதி சாஸ்திரத்தை கற்றறிந்து விட்டதாக நினைத்து, அவனையும் அழைத்துக் கொண்டு, இரணியனிடம் சென்றார். அவர் இரணியனை நோக்கி, அசுரேந்திரனே! உனது புத்திரன் சுக்கிர நீதியை நன்றாகப் பயின்று சகல விஷயங்களிலும் சமர்த்தனாகி விட்டான்! என்றார். இரணியன் சிறிது மனச்சமாதானமடைந்து பிரகலாதனைப் பார்த்து, மகனே! அரசனானவன், நண்பர்களிடமும் பகைவரிடமும், நடுவரிடத்திலும், விருத்தி, சாமியம், க்ஷயம் என்பவை நேரிடும் சமயங்களிலும் எப்படியிருக்க வேண்டும்? புத்திசொல்லும் மந்திரிகளிடமும் காரியசகாயரான அமாத்தியரிடமும் பாகியர் என்னும் வரிவாங்கிச் சேர்க்கும் அதிகாரிகளிடமும், ஆப்பியந்தார் என்று சொல்லப்படும் அந்தப்புர அதிகாரிகளிடமும், தன்னுடைய குடிமக்களிடமும், தன்னால் ஜெயிக்கப்பட்டுத் தன்னிடம் சேவகம் செய்யும் பகைவரிடமும் மன்னன் என்போன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சந்தி, விக்கிரகம் முதலியவற்றில் எங்கே எதையெதைச் செய்ய வேண்டும்? தனக்குள்ளே இருந்து மர்மங்களை அறிந்து, பிறகு பிறராலே பேதப்படுத்திக் கொண்டு போக உடன்பட்டிருக்கும். தன் ஜனங்கள் விரோதமாகாமல் இருக்க அரசன் என்ன செய்ய வேண்டும்? சைலதுர்க்கம், வனதுர்க்கம், ஜலதுர்க்கம் முதலிய துர்க்கங்களை எப்படி அமைப்பது? அசாத்தியர்களால் வனத்தில் வாசஞ்செய்யும் மிலேச்சர்களை வசப்படுத்தும் உபாயம் யாது? திருடர் முதலிய துஷ்டர்களை நிக்ரஹிக்கும் விதம் என்ன? இவற்றையும் சாமதான பேதாதி உபாயங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதையும் நீதி சாஸ்திரத்திலே நீ கற்றிருப்பவைகளையும் சொல்வாயாக உன் மனதில் இருக்கும் கருத்தை நான் அறிய விரும்புகிறேன் என்றான்.
தந்தையே! ஆசாரியர் எனக்குச் சகல சாஸ்திரங்களையும் உபதேசித்தார்; நானும் படித்தேன். ஆயினும் இவையெல்லாம் எனக்கு அர்த்தமற்றதாகவும், அசாரமாகவுமே தோன்றுகின்றன. மித்திராதிகளை வசப்படுத்த, சாம தான பேத தண்டங்களைச் செய்யும்படி நீதி சாஸ்திரத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. ஐயனே கோபிக்க வேண்டாம்! ஜகத்திலே சத்துரு மித்திரர்களை நான் காணவில்லை. ஆகையால் சாமதானாதி உபாயங்கள் வீணானவையே! சாத்தியம் இல்லாதபோது வெறும் சாதனத்தால் பயன் என்ன? சகல பூதங்களையும் சரீரமாகக் கொண்டு, ஜகத் ஸ்வரூபமாகவும் ஜகந்நாதனாகவும் கோவிந்தனே எழுந்தருளியிருக்கும்போது, இந்த ஜகத்தில் சத்துரு மித்துரு என்ற பேச்சுக்கு இடம் ஏது? ஸ்ரீவிஷ்ணுபகவான் உம்மிடமும் என்னிடமும் மற்றுமுள்ள சகல ஜகத்திலேயும் பரிபூரணமாக நிறைந்திருக்கிறாராகையால் சத்துரு மித்திரன் என்ற பேதம் எப்படி உண்டாகும்? இகலோக போகசாதனங்களாய் வீணான சொற்கள் விரிந்து, அவித்தைக்கு உட்பட்டிருக்கும் நீதி சாஸ்திரங்களால் என்ன பயன்? ஐயனே! பந்தங்கள் நீங்கும்படியான பிரமவித்தைப் பயிற்சிக்கே முயற்சி செய்ய வேண்டும். மின்மினிப் பூச்சியைப் பார்த்து அக்கினி என்று பாலகன் பிரமிப்பது போல் சிலர் அஞ்ஞானத்தால் அவித்தையை வித்தையென்று நினைக்கிறார்கள். எது சம்சார பந்தத்துக்குக் காரணமாகாதோ அப்படிப்பட்ட கருமமே கருமமாகும்! எது மோக்ஷத்துக் காரணமாகுமோ அப்படிப்பட்ட வித்தையே வித்தையாகும். மற்ற கருமங்கள் யாவுமே வீணான ஆயாசத்தை யுண்டாக்குமேயொழிய வேறாகாது. ஆகையால், நீதி சாஸ்திரத்தால் வரும் ராஜ்யாதி பயன்களைத் துச்சமாக நினைத்து, உத்தமமான விஷயத்தைச் சொல்கிறேன். பூமியில் ராஜ்ய அபேட்சையில்லாதவனும் தன அபேட்சையில்லாதவனும் உண்டோம். ஆயினும் பூர்வ புண்யவசத்தால் கிடைக்கத் தக்கதே கிடைக்குமேயல்லாது. நினைத்தது கிடைக்காது. கோபாக்கியமுடைய என் தந்தையே! ஜகத்தில் யாவரும் தமக்கு ஐசுவரியம் உண்டாக வேண்டும் என்று முயற்சி செய்கின்றனர். ஆயினும் அது ஜன்மாந்திர பாக்கிய வசத்தாலன்றி முயற்சியால் உண்டாகாது.
விவேகமில்லாதவர்களக்கும் முயற்சி செய்யாதவருக்கும் நீதி சாஸ்திர மறியாதவருக்கும் அதிர்ஷ்டவசத்தால் ராஜ்யாதிகள் உண்டாகின்றன. ஆகையால் ஐசுவரியத்தை விரும்புவோரும் புண்ணியத்தையே செய்ய முயலவேண்டும். தேவ மனுஷ்ய, மிருக பட்சி விருட்ச ரூபமுடைய பிரபஞ்சம் யாவும் ஸ்ரீஅனந்தனுடைய ஸ்வரூபமாக இருக்கின்றன. ஆனால் அஞ்ஞானிகளுக்கு அவை வேறு போலத் தோன்றுகின்றன. ஸ்ரீவிஷ்ணு பகவான் விசுவதா ரூபதரன். ஆகையால் தாவர சங்கமாதமகமான பிரபஞ்சத்துக்கு எல்லாம் அந்தர்யாமியாக இருக்கிறான் என்று நினைத்து விவேதியாக இருப்பவன் சகல பூதங்களையும் ஆத்மசமானமாகப் பாவித்திருக்க வேண்டும். இந்த ஞானம் எவனுக்கு இருக்கிறதோ அவனிடத்திலே அனாதியாயும் ஷட்குண ஐசுவரிய சம்பன்னான அந்தப் புருஷோத்தமன் பிரசன்னமாவான். அவன் பிரசன்னனானால், சகல விதமான கிலேசங்களும் விலகிப் போய்விடும்! என்றான். பிரகலாதன் அதைக்கேட்ட இரணியன், சகிக்கமாட்டாமல் கோபத்துடன் தன் சிங்காதனத்திலிருந்து எழுந்து, தன் குமாரனின் மார்பிலே உதைத்து கையோடு கையை அறைந்து, அருகிலிருந்த அசுரர்களைப் பார்த்து, ஓ விப்ரசித்து! ராகுவே! ஓ பலனே! இந்தப் பயலை நாகபாசங்களினால் கட்டியிழுத்து, சமுத்திரத்திலே தூக்கிப் போடுங்கள் தாமதம் செய்ய வேண்டாம். இல்லையெனில் தைத்தியதானவ சமூகங்கள், மூடனான இந்தப் பாவியின் வழியில் சென்று கெட்டுப் போய்விடும். என்ன சொல்லியும் இவன் மாறவில்லை. இவனை நான் சொன்னபடிச் செய்யுங்கள் என்று கட்டளையிட்டான். தைத்யர்கள் அவனது கட்டளையை ஏற்று, பிரகலாதனை நாகபாசங்களாற் கட்டிக்கடலில் போட்டார்கள்.
பிரகலாதன் அதில் விழுந்து அசைந்ததும் கடல்நீர் எல்லை கடந்து, ஜகமெங்கும் வியாபித்தது. இவ்விதம் கடல்நீர் பொங்கிப்பூமியில் வியாபிப்பதைக் கண்ட இரணியன் தைத்யர்களை அழைத்து சமுத்திரத்தில் மூழ்கியிருக்கும் அந்தத் துஷ்டன் மீது மலைகளை நெருக்கமாக அடுக்குங்கள்! அந்தப் பையன் பிழைப்பதால் யாதொரு பயனும் இல்லை. ஆகையால் ஜலராசியின் நடுவில், மலைகளால் நாலாபுறமும் அமுக்கப்பட்டுக் கொண்டே பல ஆண்டுகள் இருந்தானாகில் அவன் உயிரை விட்டுவிடுவான்! என்றான். பிறகு தைத்ய தானவர்கள் உயர்ந்த மலைகளைப் பறித்துக் கொண்டுவந்து பிரகலாதன் மீது போட்டு, அவனைச் சுற்றிலும் ஆயிரம் யோசனைக்கு மலைகளை அடுக்கினார்கள். இவ்விதம் பிரகலாதாழ்வான் சமுத்திர மத்தியில், அத்தனைத் தொல்லைகளிலும் ஏகாக்கிர சித்தனாய் அச்சுதனையே துதிக்கலானான்! புண்டரிகாக்ஷனே! உனக்கு எனது வணக்கம், புருஷோத்தமனே உனக்குத் தெண்டனிடுகிறேன். சர்வலோக ஸ்வரூபனே! உனக்கு நமஸ்காரம்! உக்கிரமான சக்கர ஆயுதமுடையவனே உனக்குத் தெண்டனிடுகிறேன். பிரமண்ணியம் என்று சொல்லப்பட்ட தவம் வேதம் முதலியவைகளுக்குத் தேவனாகவும், கோக்களுக்கும், பிராமணருக்கும் இதனாகவும், ஜகத்துக்கெல்லாம் ரக்ஷகனாயும், ஸ்ரீகிருஷ்ணன் என்றும், கோவிந்தன் என்னும் திருநாமமுடைய உனக்கு மேலும் மேலும் தண்டனிடுகிறேன். பிரமரூபமாகி உலகங்களைப் படைத்துக் கொண்டும், தனது சொரூபமாகி ரட்சித்துக் கொண்டும், கல்பாந்தத்திலே ருத்திர ரூபமாகிச் சங்கரித்துக் கொண்டும், திரமூர்த்தியாக விளங்கும் உனக்குத் தெண்டனிடுகிறேன்! ஓ அச்சுதனே! தேவ அசுர கந்த வசித்த கின்னர சாத்திய பன்னக யக்ஷ ராக்ஷச பைசாச மனுஷிய பட்க்ஷ ஸ்தாவர பிபீவிகாதிகளும், பிரித்வி அப்பு, தேயு வாயு ஆகாயங்களுக்கும் சப்த ஸ்பரிச ரச கந்தங்களும், மனோ புத்தி சித்த அகங்காரங்களும், காலமும் அதன் குணங்களும் இவற்றின் பரமார்த்தமான ஆன்மாவும் இவையெல்லாம் நீயே! வித்தை அவித்தை சத்தியம், அசத்தியம் பிரவிர்த்தி, நிவர்த்தி ரோதோக்த்த சர்வகர்மங்களும் நீயே! விஷ்ணுபகவானே! சமஸ்த கர்மபோகத்தை அனுபவிப்பவனும் சர்வகர்ம பயன்களும் நீயே! ஓ மகாப்பிரபுவே! உன்னிடமும் இதரரிடமும் சேஷ பூதங்களான சகல உலகங்களிலே நீ வியாபித்திருப்பதும், உபதான நிமித்தகாரண ரூபமான ஐசுவரியும் அனந்த ஞானசக்தியும் உனது கல்யாண குணங்களைக் குறிக்கின்றன. பரமயோகிகள் உன்னைத் தியானிக்கின்றனர். யாகசீலர் உன்னைக் குறித்து யாகஞ்செய்கின்றனர். நீயே பிதுர் ரூபமும் தேவ ரூபமும் கொண்டு, ஹவ்ய கவ்யங்களைப் புசிக்கிறாய்! ஓ அச்சுதா! மகத்தகங்காரம் முதலான சூட்கமங்களும் பிரித்வி முதலிய பூதங்களும் அவற்றினுள்ளே அதிசூட்சுமமான ஆத்ம தத்துவமாகிய இந்தச் சூட்சும பிரபஞ்சமெல்லாம் எங்கேயிருக்கிறதோ, எங்கே உண்டாகிறதோ, அது சொரூப குணங்களிலே பெருத்த உனது மகாரூபமாக இருக்கிறது! சூக்ஷ்மம் முதலான யாதொரு சிறப்புமில்லாமல், சிந்திப்பதற்கும் அரியதாய் யாதொரு ரூபம் உண்டோ அதுவே உன்னுடைய பரமாத்ம சொரூபம்! இத்தகைய புருஷோத்தமனான உனக்குத் தெண்டமிடுகிறேன். சர்வாத்மகனே! சகல பூதங்களிலும் சத்வாதி குணங்களைப் பற்றியதாய் யாதொரு பிரகிருத சக்தி இருக்கிறதோ, ஜீவ ஸ்வரூபமான அந்தச் சக்தியை நான் வணங்குகிறேன்; வாக்குக்கும் மனதுக்கும் எது எட்டாததோ, யாதொரு விசேஷத்தினாலும் எது விசேஷப்படுத்தக் கூடாததோ, ஞானிகளுடைய ஞானத்தால் எது நிரூபிக்கப்படக்கூடியதோ அத்தகைய முந்தாத்தும ஸ்வரூபமாக இருக்கிற உனது மேன்மையான சக்திக்குத் தெண்டனிடுகிறேன்!
எவனுக்கு வேறானது ஒன்று இல்லையோ, எவன் எல்லாவற்றுக்கும் வேறாக இருக்கிறானோ, அத்தகைய பகவானான ஸ்ரீவாசுதேவனுக்குத் தெண்டனிடுகிறேன்! கர்மாதீனமான நாம ரூபங்கள் இல்லாமல் விலக்ஷணனாய் இருப்பதாக மட்டும் எவன் காரணப்படுவானோ அத்தகைய மகாத்மாவுக்கு எனது நமஸ்காரம்! சங்கர்ஷணாதி வியூகரூபியானவனுக்கு நமஸ்காரம்! தேவதைகளும் எவனுடைய பராத்பரமான ரூபத்தைக் காணமுடியாமல், மச்சகூர்மாதி அவதார ரூபங்களையே அர்ச்சனை செய்வார்களோ, அந்தப் பரமாத்மாவுக்கு வந்தனம்! எவன் ருத்திராதி சகல பூதங்களுக்கும் அந்தர்மியாகி சுபாசுபங்களை கண்டு கொண்டிருப்பானோ, அந்தச் சர்வசாட்சியும் பரமேஸ்வரனுமான ஸ்ரீவிஷ்ணுதேவருக்குத் தெண்டனிடுகிறேன்! காணப்படும் இந்தச் சகமெல்லாம் எவனோடு பேதமின்றி இருக்கிறதோ அந்த விஷ்ணுவுக்கு வந்தனஞ் செய்கிறேன்! யாவற்றுக்கும் ஆதியான அந்த ஸ்ரீஹரி எனக்குப் பிரசன்னனாகக் கடவன் அட்சரம் என்ற பெயருடையவனாக இருக்கும். எவனிடம் பிரபஞ்சமெல்லாம் நூலில் வஸ்திரம் கலந்திருந்திருப்பது போலக் கலந்தும், நூலில் மணிகள் சேர்க்கப்பட்டிருப்பது போலச் சேர்க்கப்பட்டும் இருக்கிறதோ, அந்தத் தியானசம்யனான அச்சுதன் என்னிடம் தோன்றக்கடவன்! சர்வ ஸ்வாமியாய் சர்வ சேஷயாய் இருக்கிற அந்த ஸ்ரீமகாவிஷ்ணுவுக்குத் தெண்டமிடுகிறேன்! எவனிடம் சகலமும் படைப்புக் காலத்தில் உண்டாகுமோ, எவன் சகல சரீரனாகவும், சகல ஆதாரமாகவும் இருக்கிறானோ, அந்த சுவாமிக்குப் பலமுறைகள் தெண்டனிடுகிறேன். யாவுமே எம்பெருமானது விபூதியாய், அவனைப் பற்றியே நிற்பதும் இயல்வதுமாய் சற்றேனும் சுதந்திரமில்லாமல் இருப்பதைப் பற்றியே எம்பெருமானை யாவும் என்றும் அவனன்றி வேறொன்றுமில்லை என்றும் அவனுள்ளேயே சொருகித் தன்னையும் அனுசந்தித்தபடியாகும். இதுவே விசிஷ்õத்துவைதம். ஸ்ரீஅனந்தன் எங்கும் ஆன்மாவாய், அகமும், புறமும் வியாபித்து ஞானானந்தமயனாய் நிறைந்திருப்பதால், நானும் அவனாகவே இருக்கிறேன். ஆகையால் என்னிடத்திலிருந்தே யாவும் உண்டாயிற்று. நானே யாவுமாக இருக்கிறேன். எப்போதும் இருக்கிற என்னிடத்திலே எல்லாம் இருக்கின்றன. நானே அவ்யயனாயும், நித்தியனாயும் வேறொரு ஆதாரமின்றி தன்னிலேயே தானாக இருக்கும் பரமாத்மாவாக இருக்கிறேன். நான் படைக்கும் முன்பு பிரமம் என்ற பெயரையுடையவனாக இருந்தேன். அப்படியே பிரளய காலத்திலும் எல்லாம் உள்ளே ஒடுங்கும்படியான பரமபுருஷனாக இருப்பேன்! என்று பிரகலாதன் தியானித்துக் கொண்டிருந்தான்.
—————
20. நரசிம்மர் பிரத்தியக்ஷமாதல்
சர்வ காரணனும் சர்வாத்மகனுமான ஸ்ரீவிஷ்ணுதேவன் தன்னையே சரீரமாகக் கொண்டு
உள்ளும்புறமும் வியாபித்துப் பூரணமயமாக இருப்பதால் விஷ்ணுமயமாகத் தன்னையே பிரகலாதன் நினைத்து,
விஷ்ணுவல்லாத பொருள் எதையுமே காணாமையால், திரிகுணாத்மகமாய் அனாதிப் பிரகிருதி வாசனாமலினமாய்,
மற்றக் காலத்திலே தோன்றுகின்ற ஆன்ம ஸ்வரூபத்தை மறந்தான்.
தான் அவ்யயனும் நித்தியனுமான பரமாத்மாவுக்குச் சரீர பூதராய், தன்மயர்ணனை நினைத்தான்.
இவ்விதமான யோகாப்பியாசப் பிரபாவத்தால் கிரமக் கிரமமாகச் சகல சருமங்களிலிருந்தும் விடுபட்டவனாய்
அந்தியந்த பரிசுத்தனான பிரகலாதனின் அந்தக்கரணத்திலே ஞானமயனும் அச்சுதனுமான பகவான் ஸ்ரீவிஷ்ணுவே பிரகாசித்தருளினான்.
யோகப் பிரபாவத்தினாலேயே பிரகலாதன் விஷ்ணு மயமானதால், அந்தப் பாலகனின் உடல் கட்டியிருந்த
நாகபாச பந்தங்கள் அனைத்துமே கணத்தில் சின்னாபின்னமாகச் சிதறுண்டு விழுந்தன.
பிறகு சமுத்திரமானது கரைகளை மூழ்த்தியது. அப்போது, பிரகலாதன் தன்மீது போடப்பட்டிருந்த மலைகளையெல்லாம்
விலக்கித் தள்ளிக்கொண்டு, சமுத்திரத்தை விட்டு வெளியில் வந்து, ஆகாயங்கவிந்த உலகத்தைப் பார்த்தும் லவுகித் திருஷ்டியினால்,
தான் பிரகலாதன் என்றும் இரணியனின் மகன் என்றும் நாமசாதிபாதி விசேஷண சமேதனாக மறுபடியும் தன்னை நினைத்தான்.
புத்திசாலியான அந்த அசுர சிகரமணி ஏகாக்கிர சித்தமுடன், மனோவாக்குக் காயங்களைச் சுவாதீனமாக்கிக் கொண்டு,
வியாகுலத்தை விட்டு, அநாதிப் புரு÷ஷாத்தமனான அச்சுதனை மீண்டும் துதித்தருளினான்.
பரமார்த்த பிரயோஜனமானவனே! ஸ்தூல சூட்சுமரூபனே வியக்தமாயும் அவ்வியக்தமாயும் இருப்பவனே!
பஞ்சேந்திரியாதிக் கலைகளையெல்லாம் கடந்தவனே! சகலேசுவரனே! நிரஞ்சனனே குணங்களைத் தோற்றுவித்தவனே!
குணங்களுக்கு ஆதாரமானவனே! பிராகிருத குணம் இல்லாதவனே! சகல சற்குணங்களையும் கொண்டவனே!
மூர்த்தமும் அமூர்த்தமும் ஆனவனே! மஹாமூர்த்தியான விசுவரூபமும், சூத்ம மூர்த்தியான வியூக ரூபமும்,
வெளிப்படையாகத் தோன்றும் விபவ ரூபமும் அப்படி தோன்றாத, பரஸ்வரூபம் உடையவனே!
சத்துரு சங்கார காலங்களில் குரூரமாகவும் சுபாவத்தில் சாந்தமாகவும் விளங்கும் உருவமுடையவனே!
ஞான மயனாயும் அஞ்ஞான மயனாயும் இருப்பவனே! நன்மையாய் இருப்பவனே! உண்மையும் இன்மையும் கற்பிப்பவனே!
நித்திய அநித்திய பிரபஞ்ச ஆத்மகனே! பிரபஞ்சங்களுக்கம் மேற்பட்டவனே! நிருமலர் ஆஸ்ரயிக்கப்பெற்றவனே!
அச்சுதனே! உனக்குத் தண்டனிடுகிறேன். ஏகா! அநேகா வாசுதேவா! ஆதிகாரண! உனக்கு வணக்கம்!
எவன் ஸ்தூல ரூபத்தால் தோன்றுபவனும், எவன் சூட்சும ரூபத்தால் தோன்றாதவனுமாக இருக்கிறானோ,
எவன் சகல பூதங்களையும் சரீரமாகக் கொண்டு, யாவற்றிலும் தானே விலக்ஷணமாக இருக்கிறானோ,
இந்த உலகம் யாவும் விஷம சிருஷ்டி காரணமாகாத எவனிடமிருந்து உண்டாயிற்றே அந்தப் புரு÷ஷாத்தமனுக்குத் தெண்டனிடுகிறேன்
என்று பலவாய்த் தோத்திரஞ்செய்த பிரகலாதனிடம்
ஸ்ரீஹரி பகவான் பிரசன்னனாய்ப் பீதாம்பராதி திவ்ய லக்ஷணங்களோடு அவனுக்குப் பிரத்யட்சமாய் சேவை சாதித்தான்.
அப்போது அந்தப் பரம பாகவதனான பிரகலாதன் பயபக்தியுடன் எம்பெருமானைத் சேவித்து மகிழ்ச்சியினால்
நாத்தடுமாற ஸ்ரீவிஷ்ணுவுக்குத் தெண்டமிடுகிறேன்! என்று பலமுறைகள் சொல்லிப் பிரார்த்தித்தான்.
சுவாமீ! சரணாகதி செய்தோரின் துக்கத்தைப் போக்கடிப்பவரே! ஸ்ரீகேசவா! அடியேனிடத்தில் பிரசன்னமாகி
இந்தப் படியே எக்காலமும் பிரத்யக்ஷமாய்ச் சேவை தந்து ரட்சித்து அருள்செய்ய வேண்டும்! என்று பிரகலாதன் வேண்டினான்.
அப்போது விஷ்ணுபகவான் அப்பாலகனைப் பார்த்து பிரகலாதா!
நீ இதர பயன்களை இச்சிக்காமல் என்னிடத்திலேயே பரமமான ஏகாந்த பக்தியைச் செய்தபடியால், உனக்குப் பிரசன்னமானேன்.
உனக்கு இஷ்டமான வரங்களை வேண்டிக்கொள் என்று அருளிச்செய்தார்.
சுவாமி! அடியேன் தேவ, திரியக், மனுஷ்யாதி ஜன்மங்களிலே எந்த ஜன்மத்தை எடுத்தாலும்
அந்த ஜன்மங்களில் எல்லாம் உன்னிடம் இடையறாத பக்தியுடையவனாக இருக்க வேண்டும்.
மேலும் விவேகமில்லாத ஜனங்களுக்கு நல்ல சந்தன வனிதாதி போக்கிய வஸ்துக்களில் எத்தகைய ஆசையுண்டாகுமோ
அத்தகைய பிரீதிச் சிறப்பானது, உன்னை ஸ்மரிக்கின்ற அடியேனுடைய மனத்தினின்றும் நீங்காமல் இருக்க வேண்டும்!
என்று பிரகலாதன் வேண்டிக் கொள்ளவே
எம்பெருமான் அந்தப் பக்த சிகாமணியைக் கடாட்சித்து, பிரகலாதா! முன்னமே என்னிடம் பிரியாத பக்தி உனக்கு உண்டாயிருக்கிறது.
இன்னமும் அப்படியே அது அபிவிருத்தியாகும். அதிருக்கட்டும் இப்பொழுது உனக்கு வேண்டிய வரங்களைக் கேட்பாயாக! என்று
அனுக்கிரகம் செய்ய, பிரகலாதாழ்வான் பிரார்த்திக்கலானான்.
எம்பெருமானே! உன்னைத் துதிக்கும் அடியேனிடத்தில் மாச்சரியம் பாராட்டியதால், அசஹ்யமான அபசாரம் பண்ணினவரானாலும்
இரணியன் என்னுடைய தகப்பனார் என்பதால் அவரைப் பாவமில்லாதவராகும்படி அனுக்கிரகஞ்செய்ய வேண்டும்!
மேலும் ஆயுதங்களால் அடிக்க வைத்தும், நெருப்பிலே போட்டும், சர்ப்பங்களைக் கொண்டு கடிக்கச் செய்தும்
போஜனத்திலே விஷத்தைக் கலந்தும், நாக சர்ப்பங்களைக் கட்டி சமுத்திரத்திலே போடுவித்தும்,
பர்வதங்களால் துவைத்தும் இவ்வாறு மற்றும் பலவிதங்களான தொல்லைகளைச் செய்து உன் பக்தனான அடியேனை
அழிக்கப் பார்த்த என் தகப்பனுக்குச் சம்பவித்திருக்கின்ற அளவற்ற மகாபாவங்கள் உனது கடாட்சத்தினாலேயே நாசமாக வேண்டும்.
இதுதான் அடியேன் வேண்டும் வரமாகும்! என்றான் பிரகலாதன்.
உடனே மதுசூதனன் புன்முறுவலுடன் பிரகலாதா! என் அனுக்கிரகத்தால் நீ கேட்டவாறே ஆகும்.
சந்தேகமில்லை இன்னமும் உனக்கு வேண்டிய வரங்களைக் கேட்பாயாக! என்றான்.
புரு÷ஷாத்தமனே, உனது திருவடித் தாமரைகளிலே பிரியாத பக்தி உண்டாகும்படி அனுக்கிரகித்தால், அடியேன் கிருதார்த்தனானேன்.
சகல ஜகத்காரண பூதனான உன்னிடத்தில் எவனுக்கு அசஞ்சலமான பக்திச் சிறப்புண்டாகுமோ அவனுக்கு
சர்வ உத்தமமான மோட்சமும் உண்டல்லவா? அப்படியிருக்க, அவனுக்குத் தர்மார்த்த காமங்களால் ஆகவேண்டுவது என்ன? என்றான் பிரகலாதன்.
குழந்தாய்! உன் இதயம் என்னிடம் பக்தியுடன் எப்படிச் சஞ்சலமற்று இருக்கிறதோ, அப்படியே எனது அனுக்கிரகத்தால்
பரமமான மோக்ஷõனந்தத்தையும் பெறுவாயாக! என்று ஸ்ரீபகவான் அருளிச் செய்து
பிரகலாதன் பார்த்துக் கொண்டிருக்கும் போதோ, அந்தர்த்தானமானார்.
பிரகலாதன் மீண்டும் நகரத்துக்கு வந்து தன் தந்தையை வணங்கி நின்றான்.
இரணியன் தன் பாலகனை இறுகக் கட்டியணைத்துக் கொண்டு, உச்சிமோந்து, கண்களில் கண்ணீர் ததும்ப,
அடா குழந்தாய்! நீ பிழைத்து வந்தாயா? என்று அன்போடும் ஆசையோடும் கொஞ்சினான்.
பரமதார்மீகனான பிரகலாதனும், தன் தகப்பனுக்கும் ஆசாரியாருக்கும் பணிவிடை செய்துகொண்டு சுகமாக இருந்தான்.
சிறிது காலத்திற்குப் பிறகு, இரணியன் முன்பு நேர்ந்த பிரம்மசாபவசத்தால் பகவானிடம் துவேஷம் முற்றி,
மறுபடியும் தன் மகனான பிரகலாதனைக் கொல்ல முயன்றபோது, ஸ்ரீஹரிபகவான், அந்த அசுரனைச் சங்கரிக்க தீர்மானித்தார்.
தேவராலோ, மனிதராலோ, மிருகங்களாலோ தனக்கு மரணம் விளையக்கூடாது என்று இரண்யன் முன்பு
வரம் பெற்றிருந்தானாகையால், மனிதனாகவும் இல்லாமல், மிருகமாகவும் இல்லாமல் நரசிம்ம உருவமெடுத்த
இரண்யனைக் கொல்ல வேண்டுமென்று விஷ்ணு கருதினார். இரண்யன் கோபத்துடன் தன் மகன் பிரகலாதனை நோக்கி,
உன் ஆண்டவன் இந்தத் தூணிலும் இருப்பானோ! என்று ஒரு தூணைச் சுட்டிக்காட்டி ஏளனமாகச் சிரித்து
அந்தத் தூணை எட்டி உதைத்தான். உடனே ஹரிபகவான் நரசிம்மரூபியாக அவ்வரக்கன் சுட்டிக் காட்டிய தூணிலிருந்து தோன்றி
அவ்வசுர வேந்தனைச் சங்கரித்து அருளினார். பிறகு பரம பாகவதனான பிரகலாதன், தைத்ய ராஜ்யத்தில் முடிசூட்டிக்கொண்டு,
அந்த ராஜ்ய போகத்தினால் பிராரப்த கர்மங்களைக் கழித்து புத்திர பவுத்திராதிகளைப் பெற்று
பிராரப்த கர்ம அனுபவமாகிற அதிகாரங்கழிந்தவுடன், இரண்டையும் விட்டு மோக்ஷத்தையடைந்தான்.
மைத்ரேயரே! பரமபக்தனான பிரகலாதனின் மகிமையை வணக்கமாகச் சொன்னேன்.
எவன் மகாத்மாவான பிரகலாதனின் சரிதத்தை ஒருமித்த மனத்துடன் கேட்பானோ, அவனுக்கு அப்போதே
சகல பாவங்களும் தீர்ந்து போகும். பிரகலாதனின் சரிதத்தைப் படிப்பவர்களும் கேட்பவர்களும்,
அகோராத்திர கிருதங்களான பாவங்கள் நீங்கப்பெறுவர். இதில் ஐயமில்லை. எவன் இந்தச் சரிதத்தைப் படிக்கிறானோ,
அவன் பவுர்ணமியிலும், துவாதசியிலும், அஷ்டமியிலும் புனிதமான தோத்திரத்திலே சூரிய கிரகண புண்ணிய காலத்தில்
சுவர்ண சிருங்கம் முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்ட உபயதோமுகியான பசுக்களை சற்பாத்திரத்திலே
பூரண மயமான தக்ஷணைகளோடு தானஞ்செய்த பயனையடைவான். உபயதோமுகி என்பது இருபுறத்தும் முகத்தையுடையது.
கன்றையீன்று கொண்டிருக்கும்போதே, பசுவைத் தானம் செய்வது. எவன் ஒருவன் பக்தியுடன்
இந்தப் பிரகலாதாழ்வானின் திருக்கதையைக் கேட்கிறானோ, அவனை ஸ்ரீமந்நாராயணன் பிரகலாதனைக் காத்தது போலவே,
சகல ஆபத்தையும் விலக்கிச் சர்வகாலமும் ரட்சித்து அருள்வான்.
————————————————————————————
ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 24–ஸ்ரீ ப்ரஹ்லாத சரிதம் —
ஸ்ரீ மத் பாகவதம் ஸ்கந்தம் -7-ஸ்ரீ விஷ்ணு புராணம் முதல் அம்சம் சொல்லும்
ஹிரண்யாஷே போத்ரி ப்ரவர வபுஷா தேவ பவதா
ஹதே சோக க்ரோத க்லபி தத்ருதிரே தஸ்ய ஸஹஜ
ஹிரண்ய ப்ராரம்ப கசிபுர மராராதி ஸதசி
ப்ரதிஜ்ஞம் ஆதேந தவ கில வாதார்தம் மது ரிபோ –1-
மது என்ற அசுரனைக் கொன்றவனே -தாங்கள் ஸ்ரீ வராஹ அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனைக்
கொன்றதால் கோபமடைந்த அவனுடைய சகோதரன்
ஹிரண்யகசிபு அசுரர்களின் சபையில் தங்களைக் கொல்வதாக சபதம் செய்தான்
போத்ரி-மானமில்லா பன்றி -அளவு உவமானம் இல்லா -மஹா வராஹா ஸ்புட பத்ம லோசனா –அபிமானம் இல்லா
சோக க்ரோ-சோகமும் கோபமும் கூடிய
ரத்தம் கொண்டே தர்ப்பணம் பண்ணுவேன் என்று சொன்னதை தமது வாயால் சொல்ல மாட்டாரே
தான் தீங்கு நினைந்த கம்சன் போல்
——————
விதா தாரம் கோரம் ச கலு தபஸித்வா நசிரத
புர ஸாஷாத் குர்வன் ஸூர நர ம்ருகாத்யைர் அநிதனம்
வரம் லப்தவா த்ருப்தோ ஜகதிஹ பவன் நாயக மிதம்
பரி ஷுந்தன் நிந்த்ராத ஹரத திவம் த்வாம கணயன்–2-
அவன் கடுமையான தவம் புரிந்து ப்ரம்ம தேவனைத் தன் முன் தோன்ற வைத்து பல வரன்கள் பெற்றான் –
தேவர்களாலும் மனிதர்களாலும் மிருகங்களாலும் மரணம் இல்லாத வரத்தைப் பெற்றான்
அதனால் கொழுப்பு அடைந்து தங்களைத் தலைவராக உடைய இந்த உலகத்தை அழித்துக் கொண்டு
இந்த்ர லோகத்தைக் கைப் பற்றினான்
————–
நிஹந்தும் த்வாம் பூயஸ் தவ பதம வாப் தஸ்ய ச ரிபோர்
பஹிர் த்ருஷ்டே ரந்தர் ததித ஹ்ருதயே ஸூஷ்ம வபுஷா
நதந் துச்சைஸ் தத்ராப் யகில புவநாந்தே ச ம்ருகயன்
பியா யாதம் மத்வா ச கலு ஜித காசீ நிவ வ்ருதே –3-
தங்களைக் கொல்வதற்காக -கார்ய -ஸ்ரீ வைகுண்ட லோகத்தை அடைந்தான் -தாங்கள் ஸூஷ்ம ரூபத்தில்
அவன் மனத்தில் உள்ளே மறைந்தீர்கள்-ஹ்ருதயே ஸூஷ்ம வபுஷா-இங்கு மட்டும் தானே தேட மாட்டான் -மறைந்து இருந்தால் தானே நரஸிம்ஹ அவதாரம் மஹிமை நாம் அறிய முடியும் –
அகில உலகங்களிலும் தங்களைத் தேடினான் -தாங்கள் பயந்து ஓடிப் போனதாக நினைத்து
உரக்க சப்தம் செய்து கொண்டு வெற்றி பெற்றதாகவே எண்ணி கர்வத்துடன் திரும்பினான்
————-
ததோ அஸ்ய ப்ரஹ்லாத ஸம ஜனி ஸூதோ கர்ப வசதவ்
முநேர் வீணா பாணேர் அதிகத பவத் பக்தி மஹிமா
ச வை ஜாத்யா தைத்ய ஸி ஸூரபி சமேத்ய த்வயி ரதம்
கதஸ் த்வத் பக்தாநாம் வரத பரம உதாஹரணதாம் –4-
அவனுக்கு ப்ரஹ்லாதன் என்ற மகன் பிறந்தான் -அவன் கர்ப்பத்தில் இருக்கும் போதே ஸ்ரீ நாரத முனிவர் இடம்
இருந்து தங்களுடைய மகிமையை உபதேசமாகப் பெற்றான்
பிறப்பால் அசுரனாய் இருந்தாலும் தங்கள் இடம் மிகுந்த பக்தி கொண்டு இருந்தான்
தங்கள் பக்தர்களுக்கு எல்லாம் சிறந்த உதாரணமாய் இருந்தான்
கயாது தாயின் கர்ப்ப ஸ்ரீ மான் கருவிலே திருவுடையால் -நல்ல ஆனந்தம் உடையவன் பெயரிலே ப்ர ஆஹ்லாதன் -ஆச்சார்ய அனுக்ரஹம்
சீமந்தம்-வேத மந்த்ரம் வீணையில் வாசிக்க வேண்டும் வேதம் சொல்லும்
ஆனை காத்து ஓர் ஆனை கொன்று அதன்றி ஆயர் பிள்ளையாய்
ஆனை மேய்த்தி ஆ நெய் உண்டியன்று குன்றம் ஒன்றினால்
ஆனை காத்து மை யரிக்கண் மாதரார் திறத்து முன்
ஆனை யன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே –40-பிரகலாதனை ரக்ஷித்து ஹிரண்யனை நிரஸித்து
ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக வ்யாஸாம் அம்பரீஷா –புண்யாம் பரம பாகவதர்
ப்ரஹ்லாத வரத நரசிம்மன் -இவனை வைத்த்தே நிரூபகம்
————–
ஸூராரீணாம் ஹாஸ்யம் தவ சரண தாஸ்யம் நிஜ ஸூதே
ச த்ருஷ்ட்வா துஷ்டாத்மா குருபி ரஸி ஸிஷச் சிரமமும்
குரு ப்ரோக்தம் ஸாசாவிதம் இதம் அபத்ராய த்ருடமி
த்யபா குர்வன் சர்வம் தவ சரண பக்த்யைவ வவ்ருதே –5-
தனது பிள்ளை தங்கள் இடம் பக்தி கொண்டு இருப்பதால் ஹிரண்ய கசிபு அசுரர்களின் கேலிக்கு ஆளானான் –
அதனால் அவன் ஆசிரியர்களை அவனுக்கு உபதேசிக்கச் சொன்னான்
அவர்கள் உபதேசித்த ராஜ நீதி முதலியவை பிறப்பு இறப்புக்களுக்கு காரணமாய் இருப்பதால்
அவற்றை விட்டு தங்கள் இடமே ப்ரஹ்லாதன் பக்தி செலுத்தி வந்தான் –
பக்த்யைவ வவ்ருதே–பக்தி நாளுக்கு நாள் வளர என்றும் பக்தியாலேயே வளர்ந்தான் -பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தனம்
————-
அதீ தேஷு ஸ்ரேஷ்டம் கிமிதி பரி ப்ருஷ்டே அத தனயே
பவத் பக்திம் வர்யாமபி கததி பர்யா குல த்ருதி
குருப்யோ ரோஷித்வா ஸஹஜம் அதிரஸ்யேத் யபி விதன்
வதோ பாயா நஸ்மின் வ்யத நுத பவத் பாத சரணே –6-
நீ படித்த பாடங்களில் சிறந்தது எது என்று ஹிரண்ய கசிபு கேட்க ப்ரஹ்லாதன் தங்கள் இடம் கொண்டுள்ள
பக்தியே சிறந்தது என்று கூறினான்
அதனால் ஹிரண்ய கசிபு ஆசிரியர்களைக் கோபித்துக் கொண்டான் -அவர்கள் இந்த பக்தி இவனுக்கு
முன் ஜென்மத்திலேயே உண்டானது என்று சொன்னார்கள்
அதனால் தங்கள் பக்தர்களில் சிறந்தவனாக இவனை கொல்ல திட்டங்கள் செய்தான் –
ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோர் ஸ்மரணம் பாத சேவகம் -இங்கு அடியார் அடியாராக தொண்டு –
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸஹ்யம் ஆத்ம நிவேதனம்-நவ வித பக்தி
செவியின் வழி புகுந்து என்னுள்ளாய் -நான் பெரியன் –நீ பெரியை என்பதனை யார் அறிவார்-
———–
ச ஸூலை ராவித்த ஸூபஹு ம் அதிதோ திக் கஜை கணர்
மஹா சர்பைர் தஷ்டோ அப் யநஸந கராஹார விதூத
கிரீந்த்ர வஷிப்தோ அப்ய ஹ ஹ பரமாத்மந்நயி விபோ
த்வயி ந்யஸ்தாத் மத்வாத் கிமபி ந நிபீடா மபஜத –7–
எங்கும் நிறைந்தவனே -சூலத்தால் குத்தப் பட்டும் -யானைகளால் மிதிக்கப் பட்டும் -பாம்புகளால் கடிக்கப் பட்டும் –
பட்டினி போடப் பட்டும் -விஷம் கொடுக்கப் பட்டும் ப்ரஹ்லாதன் துன்புறுத்தப் பட்டான்
தங்கள் இடம் மனத்தை வைத்ததால் எவற்றாலும் ப்ரஹ்லாதன் துன்பம் பட வில்லை ஆச்சர்யம் –
————
தத சங்காவிஷ்ட ச புனரதி துஷ்டோ அஸ்ய ஜனகோ
குரூக்த்யா தத் கேஹே கில வருண பாஸை ஸ் தமருணத்
குரோஸ் சா சாந்நித்யே ச புனர் அநுகான் தைத்ய தனயான்
பவத் பக்தேஸ் தத் தவம் பரமம் அபி விஞ்ஞானம் அஸிஷத் –8-
கவலை அடைந்த கொடியவனான ஹிரண்ய கசிபு ஆசிரியர்கள் வீட்டில் ப்ரஹ்லாதனை வருண பாசத்தால்
கட்டி அடைத்து வைத்தான்
ஆசிரியர்கள் இல்லாத போது ப்ரஹ்லாதன் அசுரக் குழந்தைகளுக்கு தங்கள் பக்தியைப் பற்றியும்
பக்தியின் தத்வத்தைப் பற்றியும் உபதேசித்தார் –
சண்டன் மர்த்தன் -சுக்ராச்சாரியார் பிள்ளைகள் -வருண பாசத்தால் தூணில் கட்டி உபதேசம் செய்தார்களாம்
————-
பிதா ஸ்ருண்வன் பால ப்ரகரம் அகிலம் த்வத் ஸ்துதி பரம்
ருஷாந்த ப்ராஹை நம் குல ஹதக கஸ்தே பலமிதி
பலம் மே வைகுண்டஸ் தவ ச ஜகதாம் சாபி ச பலம்
ச ஏவ த்ரை லோக்யம் சகலமிதி தீரோ அயம கதீத் –9-
எல்லா அசுரக் குழந்தைகளும் தங்களையே ஸ்துதிப்பதைக் கேட்ட ஹிரண்ய கசிபு கோபத்துடன் ப்ரஹ்லாதன் இடம்
உனக்கு எவன் உதவி செய்கிறான் என்று கேட்டான்-குல ஹதக-கோடாலிக்காம்பு போல் குலத்தை அழிக்கப் பார்க்கிறாய் –
ப்ரஹ்லாதனும் தைரியமாக -அந்த ஸ்ரீ மன் நாராயணனே எனக்கும் தங்களுக்கும் உலகங்களுக்கு எல்லாம் துணை
மூ உலகங்களும் அவனே என்றான் –
வைகுண்ட-தடைகளைப் போக்குமவன் என்பதால் இந்த பத பிரயோகம்
தீரோ -தீரன் -வீரத்துடனும் புத்தியுடனும் சொல்பவன் தீ ஞானம்
உளன் அலன் எனில் என்றாலும் உளன் -ஆழ்வார்-சாணிலும் உளன் நீ சொல்லும் சொல்லிலும் உளன் -கம்பர்
சாணினும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன் ; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன் ; இத் தன்மை
காணுதி விரைவின்” என்றான்; “நன்று” எனக் கனகன் சொன்னான்.
————-
அரே க்வா சவ் க்வா சவ் சகல ஜகதாத்மா ஹரிரிதி
ப்ரபிந்தே ஸ்ம ஸ்தம்பம் சலித கரவாலோ திதி ஸூத
அத பஸ்ஸாத் விஷ்ணோ ந ஹி வதி துமீ ஸோ அஸ்மி ஸஹஸா
க்ருபாத் மந் விச்வாத் மந் பவன புர வாஸிந் ம்ருடய மாம் –10-
அடே ப்ரஹ்லாதா சகல உலகங்களும் அவனே என்று உன்னால் சொல்லப்படும் அந்த நாராயணன்
எங்கே என்று வாளை வீசிக் கொண்டு அங்கு இருந்த ஒரு தூணை அடித்தான்
எங்கும் நிறைந்த ஸ்ரீ மன் நாராயணா அதன் பின் நடந்தவற்றை எனக்குச் சொல்ல சக்தி இல்லை
கருணா மூர்த்தியே -சகல உலகமாய் இருக்கும் குருவாயூரப்பா அடியேனை குணப்படுத்தி அருள வேண்டும் –
அளந்து இட்ட தூணை* அவன் தட்ட* ஆங்கே-
வளர்ந்திட்டு* வாள் உகிர்ச் சிங்க உருவாய்*
உளந் தொட்டு இரணியன்* ஒண்மார்வு அகலம்*
பிளந்திட்ட கைகளால் சப்பாணி*
பேய் முலை உண்டானே! சப்பாணி.
———————–——————————————
ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 25-ஸ்ரீ நரசிம்ம அவதாரம்-
ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 25–ஸ்ரீ நரசிம்ம அவதாரம்
ஸூகர்ணி மீட்டர் கீழ் -ஸூக பிரகலாதன் சரித்திரம்
இது சார்த்தூல விக்ரீதம் மீட்டர் புலி பாய்ச்சல்
ஸ்தம்பே₄ க₄ட்டயதோ ஹிரண்யகஶிபோ: கர்ணௌ ஸமாசூர்ணயந்ந
ஆகூ₄ர்ணஜ் ஜக₃த₃ண்ட₃குண்ட₃குஹரோ கோ₄ரஸ்தவாபூ₄த்₃ரவ: |
ஶ்ருத்வா யம் கில தை₃த்யராஜ ஹ்ருத₃யே பூர்வம் கதா₃ப்யஶ்ருதம்
கம்ப: கஶ்சந ஸம்பபாத சலிதோ(அ)ப்யம்போ₄ஜபூ₄ர்விஷ்டராத் || 1||
ஹிரண்யகசிபு தூணை அடித்தான். உடனே, காதுகளைக் கிழிக்கும் பயங்கரமான சத்தம் கேட்டது.
அந்த சத்தம், அண்டங்களை நடுங்கச் செய்வதாயிருந்தது. இதுவரை எவராலும் கேட்கப்படாத சத்தமாக இருந்தது.
அந்த சத்தத்தைக் கேட்ட ஹிரண்யகசிபுவின் உள்ளம் நடுங்கியது. பிரும்மதேவன் கூட நடுங்கினாராமே? என்று பட்டத்ரி கேட்க
குருவாயூரப்பான் “ஆம்” என்று தலையை ஆட்டி அங்கீகரித்தாராம்.
———–
தை₃த்யே தி₃க்ஷு விஸ்ருஷ்டசக்ஷுஷி மஹாஸம்ரம்பி₄ணி ஸ்தம்ப₄த:
ஸம்பூ₄தம் ந ம்ருகா₃த்மகம் ந மநுஜாகாரம் வபுஸ்தே விபோ₄ |
கிம் கிம் பீ₄ஷண மேதத₃த்₃பு₄தமிதி வ்யுத்₃ப்₄ராந்தசித்தே(அ)ஸுரே
விஸ்பூ₂ர்ஜ்ஜத்₃த₄வ லோக்₃ர ரோம விகஸத்₃வர்ஷ்மா ஸமாஜ்ரும்ப₄தா₂: || 2||
எங்கும் நிறைந்தவரே! அந்த அசுரன், எல்லா திசைகளையும் கண்களால் பரபரப்புடன் நோக்கினான்.
அப்போது, தூணிலிருந்து, மிருக வடிவமும் அல்லாத, மனித வடிவும் அல்லாத உருவத்துடன் தாங்கள் தோன்றினீர்கள்.
இது என்ன என்று அசுரன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, பிரகாசிக்கின்ற பிடரியுடன்,
சிங்க உருவத்துடன் தாங்கள் பெரிதாக வளர்ந்தீர்கள்.
பீஷணம் அத்புதம் -சேராச் சேர்க்கை -சக்கரை போட்ட பால் -அழகியான் தானே அரி யுருவன் தானே
அழகிய சிங்கர் -இவன் மட்டுமே –
மத்ஸ்ய கூர்ம வராஹா -வாமனன் -பரசுராமன் -ரோஷ ராமர் ராமன் -பல ராமன் -கண்ணன் -கல்கி
ஸூந்தர ராமன் -திருவடி உடன் இருப்பதால்
மோஹன கண்ணன்-ஆபத்துக்கு உதவ -நாளை என்பது நரசிம்மருக்கு இல்லையே
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் பெருமை ஆராய முடியாதே
எங்கும் உளன் கண்ணன் என்ற* மகனைக் காய்ந்து,*
இங்கு இல்லையால் என்று* இரணியன் தூண் புடைப்ப,*
அங்கு அப்பொழுதே* அவன் வீயத் தோன்றிய,* என்
சிங்கப் பிரான் பெருமை* ஆராயும் சீர்மைத்தே?
————–
தப்த ஸ்வர்ண ஸவர்ண கூ₄ர்ணத₃திரூக்ஷாக்ஷம் ஸடா கேஸர-
ப்ரோத்கம் பப்ரநிகும்பி₃தாம்ப₃ரமஹோ ஜீயாத் தவேத₃ம் வபு: |
வ்யாத்த வ்யாப்த மஹாத₃ரீ ஸக₂முக₂ம் க₂ட்₃கோ₃க்₃ர வல்க₃ந்மஹா-
ஜிஹ்வா நிர்க₃ம த்₃ருஶ்யமாந ஸுமஹா த₃ம்ஷ்ட்ரா யுகோ₃ட்₃டா₃மரம் || 3||
சுழலும் தங்கள் கண்கள், உருக்கிய தங்கத்தைப் போல ஜொலித்தன. பிடரி மயிர்கள், விரிந்து ஆகாயத்தை மறைத்தன.
வாய் குகையைப் போன்றிருந்தன. வாளைப்போல் கூர்மையாக சுழன்றுகொண்டு இருந்த நாக்கு வெளியே வரும்போது,
மிகப்பெரிய கோரைப்பற்கள் இருபுறமும் தெரிந்தன. பயங்கரமான உருவம் கொண்ட,
தங்களுடைய இந்த நரசிம்ம அவதாரம் சிறந்து விளங்கட்டும்.
—————
உத்ஸர்பத்₃வ லிப₄ங்க₃பீ₄ஷண ஹநு ஹ்ரஸ்வஸ்த₂வீயஸ்தர-
க்₃ரீவம் பீவரதோ₃ஶ்ஶதோத்₃க₃தநக₂ க்ரூராம்ஶுதூ₃ரோல்ப₃ணம் |
வ்யோமோல் லங்கி₄ க₄நாக₄நோபமக₄நப்ரத்₄வாந நிர்தா₄வித-
ஸ்பர்தா₄லு ப்ரகரம் நமாமி ப₄வதஸ்தந் நாரஸிம்ஹம் வபு: || 4||
குட்டையான கழுத்துடன், கர்ஜிக்கும்போது மடிந்த கன்னத்து சதைகளால் தங்கள் உருவம் பயங்கரமானதாய் இருந்தது.
நூற்றுக் கணக்கான கைகளில் இருந்து கூர்மையான நகங்கள் வெளிவந்தது. மிக பயங்கரமான இடி முழக்கம் போன்ற
சிம்ம நாதக் குரல், பகைவர்களை ஓடச் செய்தது. இப்படிப்பட்ட நரசிம்ம உருவத்தை நமஸ்கரிக்கிறேன்.
————-
நூநம் விஷ்ணுரயம் நிஹந்ம்யமுமிதி ப்₄ராம்யத்₃க₃தா₃பீ₄ஷணம்
தை₃த்யேந்த்₃ரம் ஸமுபாத்₃ரவந்தமத்₄ரு₂ தோ₃ர்ப்₄யாம் ப்ருது₂ப்₄யாமமும் |
வீரோ நிர்க₃லிதோ(அ)த₂ க₂ட்₃க₃ப₂லகௌ க்₃ருஹ்ணந் விசித்ரஶ்ரமாந்
வ்யாவ்ருண்வந் புநராபபாத பு₄வநக்₃ராஸோத்₃யதம் த்வாமஹோ || 5||
“இவன் நிச்சயம் நாராயணன், இவனைக் கொல்கிறேன்” என்று ஹிரண்யகசிபு, தன் கதையைச் சுழற்றிக் கொண்டு,
தங்கள் அருகே வந்தான். தங்கள் பருத்த கரங்களால் அவனைப் பிடித்தீர்கள். அவன், தங்கள் பிடியிலிருந்து நழுவி,
தன் வாளால், உலகங்களை விழுங்கும் உக்கிரத்தோடு இருந்த தங்களைத் தாக்க முயன்றான். ஆச்சர்யம்!
————
ப்₄ராம்யந்தம் தி₃தி ஜாத₄மம் புநரபி ப்ரோத்₃க்₃ருஹ்ய தோ₃ர்ப்₄யாம் ஜவாத்
த்₃வாரே(அ)தோ₂ருயுகே₃ நிபாத்ய நக₂ராந் வ்யுத்கா₂ய வக்ஷோபு₄வி |
நிர்பி₄ந்த₃ந்நதி₄க₃ர்ப₄நிர்ப₄ரக₃லத்₃ரக்தாம்பு₃ ப₃த்₃தோ₄த்ஸவம்
பாயம் பாயமுதை₃ரயோ ப₃ஹு ஜக₃த் ஸம்ஹாரி ஸிம்ஹாரவாந் || 6||
மறுபடியும் கரங்களால் அவனைப் பிடித்து, வாசற்படியில், உம்முடைய தொடைகளில் படுக்க வைத்து,
கூரிய நகங்களால் அவன் மார்பைக் கிழித்தீர்கள். பெருகிய ரத்தத்தைக் குடித்து சிம்ம நாதம் செய்தீர்கள்.
கொண்ட சீற்றம் ஓன்று உண்டு -பக்த அபசாரம் பொறுக்காதவன்
ஆழ் துயர் செய்து அசுரரை அழித்தவன் -ஹிம்சை -ஸிம்ஹம் -இவர் போல் வடிவு என்பதால் காட்டு ராஜாவுக்கும் ஸிம்ஹம்
அனுக்ரஹம் செய்தார் -வெந்நரகம் போகாமல் இங்கேயே அனுபவிக்கப்பண்ணியதால்
————
த்யக்த்வா தம் ஹதமாஶு ரக்தலஹரீஸிக்தோந்நமத்₃வர்ஷ்மணி
ப்ரத்யுத்பத்ய ஸமஸ்த தை₃த்ய படலீம் சாகா₂த்₃யமாநே த்வயி |
ப்₄ராம்யத்₃பூ₄மி விகம்பிதாம்பு₃தி₄குலம் வ்யாலோலஶைலோத்கரம்
ப்ரோத்ஸர்பத்க₂சரம் சராசரமஹோ து₃:ஸ்தா₂மவஸ்தா₂ம் த₃தௌ₄ || 7||
கொன்ற அவனை விட்டுவிட்டு, எழுந்து நடந்து மற்ற அசுரர்களை விழுங்கத் தொடங்கினீர்கள்.
அப்போது, அனைத்து உலகங்களும் சுழன்றன. சமுத்திரங்கள் கலங்கின. மலைகள் அசைந்தன.
நட்சத்திரங்கள் சிதறின. அனைத்தும் நிலை குலைந்து விட்டது!
—————
தாவந்மாம்ஸவபாகராலவபுஷம் கோ₄ராந்த்ரமாலாத₄ரம்
த்வாம் மத்₄யே ஸப₄மித்₃த₄கோபமுஷிதம் து₃ர்வார கு₃ர்வாரவம் |
அப்₄யேதும் ந ஶஶாக கோபி பு₄வநே தூ₃ரே ஸ்தி₂தா பீ₄ரவ:
ஸர்வே ஶர்வ விரிஞ்ச வாஸவ முகா₂: ப்ரத்யேகமஸ்தோஷத || 8||
ஹிரண்யகசிபுவின் மாமிசத்தையும், குடலையும் மாலையாய் அணிந்து கொண்டு, இடி முழக்கம் போல்
கர்ஜித்துக் கொண்டு இருந்த தங்களை நெருங்க அனைவரும் அஞ்சினர்.
சிவன், பிரம்மன், இந்திரன் முதலியோர் வெகு தூரத்தில் இருந்து தங்களைத் துதித்தனர்.
ஸிம்ஹாஸனம் இருந்து -ஹிரண்யன் இருந்த negative vibration மாற்றி -இவன் அமர்ந்ததாலேயே அதுக்கு இந்த பெயர்
———–
பூ₄யோ(அ)ப்யக்ஷதரோஷதா₄ம்நி ப₄வதி ப்₃ரஹ்மாஜ்ஞயா பா₃லகே
ப்ரஹ்லாதே₃ பத₃யோர் நமத்யபப₄யே காருண்ய பா₄ராகுல: |
ஶாந்தஸ்த்வம் கரமஸ்ய மூர்த்₄நி ஸமதா₄: ஸ்தோத்ரைரதோ₂த்₃கா₃யத-
ஸ்தஸ்யாகாமதி₄யோ(அ)பி தேநித₂ வரம் லோகாய சாநுக்₃ரஹம் || 9||
அப்போதும் தங்களுடைய கோபம் அடங்க வில்லை. பிரம்மன், குழந்தையான பிரஹ்லாதனிடம் தங்களை
வணங்கும்படி கூறினார். பயமற்ற பிரஹ்லாதனும் தங்களை நெருங்கி நமஸ்கரித்தான்.
தாங்களும் சீற்றம் தணிந்து பிரஹ்லாதனுடைய தலை மேல் கையை வைத்து ஆசீர்வதித்தீர்கள்.
அவனும் தங்களை ஸ்தோத்திரங்களால் துதிக்க, அவனுக்கு அவன் விரும்
பக்தி நிலைத்து இருக்கவே அனுக்ரஹம் -இருக்கும் விஷயம் கேட்க்க கூடாதே -தந்தையை மன்னித்து விடு -முன்பே செய்தேனே
வரம் கெடுக்காமல் இருக்கும் நிலையை அருளு
———
ஏவம் நாடித ரௌத்₃ர சேஷ்டித விபோ₄ ஶ்ரீதாபநீயாபி₄த₄-
ஶ்ருத்யந்தஸ்ஃபுடகீ₃தஸர்வமஹிமந்நத்யந்தஶுத்₃தா₄க்ருதே |
தத்தாத்₃ருங்நிகி₂லோத்தரம் புநரஹோ கஸ்த்வாம் பரோ லங்க₄யேத்
ப்ரஹ்லாத₃ப்ரிய ஹே மருத் புரபதே ஸர்வாமயாத் பாஹி மாம் || 10||
இவ்வாறு ஒரு பயங்கரமான லீலையை நடித்தீர்கள். ஸ்ரீ நரசிம்மதாபனீயம் என்ற உபநிஷத்தில் பாடப்பட்டவரும்,
எல்லா மகிமைகளை உடையவரும், பரிசுத்தமான ரூபத்தை உடையவரும், பிரஹ்லாதனிடத்தில் பிரியம் வைத்தவருமான
குருவாயூரப்பா! எல்லா ரோகங்களில் இருந்தும் என்னைக் காக்க வேண்டும்.
“பிரஹ்லாத ப்ரிய” என்று பட்டத்ரி அழைத்ததும், பகவான் தலையை அசைக்காது இருந்தார்.
பட்டத்ரி வருந்தினார். அப்போது, “ நான் பிரஹ்லாதனிடத்தில் மட்டுமல்ல, பக்தர்கள் அனைவரிடமும் அன்பு வைத்தவன்”
என்று அசரீரி கேட்டது என்று பெரியோர்கள் சொல்வார்கள்
அங்கண் ஞாலமஞ்ச வங்கோ ராளரியாய் * அவுணன்
பொங்கவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம் *
பைங்கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் * அடிக்கீழ்ச்
செங்கணாளி யிட்டறைஞ்சும் சிங்கவேள் குன்றமே.
———————–——————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-