Archive for the ‘Manna vaallla Maa munikall’ Category

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –103–வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று -இத்யாதி –

June 3, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி சர்வ கரணங்களும் தம் பக்கலிலே ப்ரவண மாகைக்கு உறுப்பாக ஸ்ரீ எம்பெருமானார் தம்முடைய ஔ தார்யத்தாலே
உமக்கு உபகரித்த அம்சத்தை சொல்லீர் -என்ன-
என்னுடைய கர்மத்தை கழித்து – அழகிய ஜ்ஞானத்தை விசதமாகத் தந்து அருளினார் -என்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டிலே
தம்முடைய சர்வ கரணங்களையும் ஸ்ரீ எம்பெருமானார் தம் விஷயத்தில் அதி பிரவணராகும்படி ( ஸ்ரீ யதி பிரவணர் -என்றுமாம் )-பண்ணி –
அநிதர சாதாரணமாகத் தம்முடைய ஔ தார்யத்தை தம்மிடையே வர்ப்பித்து அருளினார் -என்று சொல்லி வித்தரானவாறே –
ஆக இப்படி சர்வ கரணங்களும் தம் விஷயத்திலே யதி ப்ரவணராம் படி ஈடு படுகைக்கு உடலாக அவருடைய ஔ தார்யத்தாலே
இன்னமும் உமக்கு உபகரித்தமை ஏதாகிலும் உண்டோ என்ன –
இதிலே –
அத்யந்த கோபோவிஷ்டமாய் -அத்விதீயமான ஸ்ரீ நரசிம்ஹ அவதாரத்தை கொண்டாடி -ஸ்வ ஆஸ்ரிதரான தேவதைகளுடைய ஸ்தானங்களை
ஆக்கிரமித்து -லோகத்தை எல்லாம் பாதிக்கைக்காக கட்க ஹஸ்தனாய் தனிக் கோல் செலுத்திக் கொண்டு திரிகிற
ஹிரண்யாசுரனுடைய ஸ்வ ரூபமான சரீரத்தை துரும்பைக் கிழிக்குமா போலே அநாயாசேன கிழித்துப் பொகட்ட
ஸ்ரீ சர்வேச்வரனுடைய திவ்ய கீர்த்தியை தம்முடைய திரு உள்ளத்திலே ஸ்ரீ எம்பெருமானார் –
என்னுடைய -—ஆத்யாத்மிகாதி துக்கங்களை வாசனையோடு ஒட்டி விட்டு -கரதலாமலகமாக -தத்வ ஹித புருஷார்த்த-
யாதாம்ய ஞானத்தை கொடுத்து அருளினார் என்கிறார் –
(இதனாலே தான் நரசிம்ம- கீதாச்சார்யர்-நாராதர் -மூவர் உடைய பெருமையும் ஸ்வாமியிடம் காண்கிறோம் )

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ எம்பெருமானார் தம் வண்மையினால் உமக்கு மட்டும் கரணங்கள் அனைத்தும் தாமே தம்மிடம் ஈடுப்படும்படியாக
உபகரித்தது எவ் வழியாலே என்பாருக்கு என் கருமத்தை நீக்கி உபகரித்து அருளினார் -என்கிறார் .

வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று வாளவுணன்
கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயி ரெழுந்து
விளைந்திடும் சிந்தை யிராமானுசன் என்தன் மெய் வினை நோய்
களைந்து நன்ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே – – 103 –

பத உரை –

வளர்ந்த -எல்லை கடந்து மிகுந்த
வெம்கொபம் -கொடிய கோபம் கொண்ட
ஓன்று மடங்கல் ஆய் -ஒப்பற்ற சிங்க உருவாக்கி
அன்று -அக்காலத்திலே
வாள் அவுணன் -வாள் ஏந்திய -ஹிரண்ய -அசுரனுடைய
கிளர்ந்த -பருத்து வளர்ந்த
பொன் ஆகம் -பொன் நிறம் வாய்ந்த உடலை
கீண்டவன் -கிழித்த ஸ்ரீ நரசிம்ஹப் பெருமாளுடைய
கீர்த்திப் பயிர் -புகழாகிற பயிர்
யெழுந்து -மேலும் ஓங்கி வளர்ந்து
விளைந்திடும் -பலித்திடும்
சிந்தை -உள்ளம் படைத்த
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார்
என் தன் -என்னுடைய
மெய் வினை -சரீரத்தின் தொடர்பினாலாய கர்மங்களின் பயனான
நோய் -துன்பங்களை
களைந்து -போக்கி
கையில் கனி என்ன -கையில் உள்ள கனி என்னலாம் படி
நல் ஞானம் -நல்ல அறிவை
அளித்தனன் -தந்து அருளினார் –

முனைத்த சீற்றம் விண் சுடப்போய்-ஸ்ரீ பெரிய திரு மொழி – 1-7 7- – என்கிற படியே அநு கூலரான
தேவர்களும் உட்பட வெருவி நின்று பரிதபிக்கும்படி -அத்யந்த அபிவிருத்தமாய் அதி க்ரூரமான-ஸ்ரீ நரசிம்ஹமாய் –
சிறுக்கன் மேலே அவன் முழுகின வன்று –
வயிறழல வாளுருவி வந்தான் -என்கிறபடியே சாயுதனாய்க் கொண்டு எதிர்ந்த ஹிரன்யாசுரனுடைய மிடியற வளர்ந்த
ஸ்வர்ண வர்ணமான சரீரத்தை
அஞ்ச வெயிறி லகவாய் மடித்ததென்-ஸ்ரீ முதல் திருவந்தாதி – 93- என்கிறபடியே
மொறாந்த முகத்தையும் நா மடிக் கொண்ட உதட்டையும் -குத்த முறுக்கின கையையும் கண்டு –
விளைந்த பய அக்நியாலே பரிதப்தமாய் பதம் செய்தவாறே –
வாடின கோரையை கிழித்தால் போலே அநாயாசேன கிழித்து பொகட்டவனுடைய திவ்ய கீர்த்தி யாகிய பயிர்
உயர் நிலத்தில் -உள் நிலத்தில் – பயிர் ஓங்கி வளருமா போலே யெழுந்து சபலமாம் படியான
திரு உள்ளத்தை உடையராய் இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார் –
என்னுடைய சரீர அனுபந்தி கர்ம பலமான துக்கங்களைப் போக்கிக் கரதலாமலகம் போலே சுலபமாய் -ஸூவ்யக்தமுமாய் -இருக்கும்படி
விலஷணமான ஜ்ஞானத்தை தந்து அருளினார் –
இது இறே கீழ்ச் சொன்ன ப்ராவண்யத்துக்கு அடியாக ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு பண்ணின உபகாரம் என்று கருத்து –

மடங்கல்-சிம்ஹம்
கிளர்ந்த பொன்னாகம் -என்றது மாற்று எழும்பின பொன் போன்ற சரீரம் என்னவுமாம்-

கர்மம் குறைய ஞானம் வளரும் -ஞானம் வர கர்மம் குறையும் -நம்மால் செய்ய முடியாது -அவர் கிருபையால் இரண்டையும் செய்து அருளினார்
கையில் கனி -உள்ளங்கை நெல்லிக்கனி நுட்பமாக அறியும் படி ஞானம் -தெளிந்த யாதாம்யா ஞானம் -தத்வ ஹிதம் புருஷார்த்தங்கள் மூன்றையும்
ஆராதனை பெருமாள் ஸ்ரீ அழகிய சிம்ஹப் பெருமாள் -சேராதத்தை சேர்க்க –அமுதனார் -ஞானம் -சேர்த்து -சேர்ந்த கர்மம் விலக்கி-
இது சர்வம் சமஞ்சயம் -ப்ரஹ்லாதன் அனுக்ரஹம் -ஞானம் கொடுத்து -ஹிரண்யன் அழித்து- கர்மங்கள் அழித்து –
எனக்கு செய்தது சாஹாச செயல் –கீர்த்தி என்னும் பயில் வளர்ந்த நிலம் ஸ்வாமி திரு உள்ளம் –
வேதங்களில் பிரதிபாதிக்கப்பட்ட கீர்த்தி தானே ஸ்ரீ ஸ்வாமி திரு உள்ளம்
கீர்த்தியும் -சீற்றமும் -விண் முழுதும் பரவி ஸ்வாமி திரு உள்ளத்தில் –நீசனான நான் வாழ -ஊரே வாழும்
மெய் வினை -சரீர வினை -கர்மங்களை போக்கி
நல் ஞானம் -சரம பர்வ விஷய ஞானம்
வளர்ந்த வெங்கோபம் -கொண்ட சீற்றம் —அத்யந்த அபி வருத்தம் பயங்கரம் அஸஹ்யமாய் -மொராந்த மோகம் -அட்டகாச சிரிப்பு ,
நா மடி கொண்ட உதட்டையும் குத்த முறுக்கின கையையும் கோரைக் கிழங்கு போலே கிழித்து
ஸ்ரீ நரசிம்மன் இருந்ததே ஒரு முஹூர்த்தம் -பண்ணிக் காட்டியதை உபதேசிக்க -ஸ்ரீ கீதாச்சார்யன் –
மனுஷ்யத்வம் சிங்கமும் -வலிமை -சொல்லும் சாமர்த்தியம் -கிருத யுகம் த்வாபர யுகம் –சீயம் ஆயர் கொழுந்து -ஆச்சார்யத்வம் நாரதத்வம் –
இப்படி சேராச் சேர்க்கைகள் உண்டே -நல் ஞானம் -மெய் ஞானம் – கீண்டவன் -கிழிந்தவன்-பாட பேதங்கள் –

வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று வாளவுணன் கிளர்ந்த -பொன்னாகம் கிழித்தவன்
அன்று வாளவுணன் கிளர்ந்த -பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயி ரெழுந்து- விளைந்திடும் சிந்தை யிராமானுசன்
யிராமானுசன் என் தன் மெய்வினை நோய்-களைந்து நன்ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே -என்று இப்படி பிரித்து கொள்ளலாமே

ஆள் அரி –ஆண் அரி இல்லை -லோகத்து ஆள் போலே இல்லாமல் இரண்டு ஆகாரம் கலந்த ஆள் என்றவாறு
திருமேனியே வளர்ந்த -வெங்கோபம் வளர்ந்த என்றுமாம் -கீர்த்திப் பயி ரெழுந்து விளைந்திடும் –நஞ்சை வயலில் செழித்து வளர்ந்த –என்றபடி –
சினத்தினால் மனத்துக்கு இனியான்-ஓன்று மடங்கலாய் வெம்கோபம் கீர்த்தி –வெங்கோபம் கீர்த்தி இங்கு ஆண்டாள் பாசுரம் ஒட்டியே –
ஆகாசம் -அம்பரம் -செவ்வி மாதிரம் எட்டும் தோள்கள் திசைகள் –மிருகம் சேவி மேல் தூக்கி ஆபத்து வரும் பொழுது இருக்குமே
பரத்வம் உபாகரத்வம் – வியாப்தி ஏக தேசம் – கோப பிரசாதங்கள் சேர்த்து -திவ்ய கீர்த்தி -பிரமனை விஞ்சிய பரமன் அன்றோ –
சேராச் சேர்த்தி -ஓலைப் புறத்தில் மட்டும் கண்டு அறியாமல் பிரத்யக்ஷமாக காட்டி அருளி -சரணாகதர்களுக்கு தனம் -இவர் சினம் தானே –

வளர்ந்த வெம் கோபம் மடங்கல் ஒன்றாய் –
அஸ்மின் ஷனே மகா சப்த ஸ்தம்பேஸ் சம்ஸ்ருயதே ப்ர்சம் – சம்வர்த்தாச -நிசன்காத -ரவவத் ச்புடிதாந்த்ரம்-
தேன சபதே மஹதா தைத்ய ஸ்ரோத்ரா விகாதினா -சர்வே நிபாதிதா பூமவ் சின்ன மூலா இவத்ருமா –
பிப்யந்தி சகலா தேவா மேநிரைவை ஜகத் ஷயம்-தாம் ச்தூணாம் – சதாபித்வா வி நிஷ்க்ராந்தோ மஹா ஹரி –
சகார ஸூ மஹா நாதம் லயாச நிபயஸ்வனம் -தேன நாதேன மஹதா தாரகா பதிதா புவி நரசிம்ஹா வபுராஸ்தாய-
தத்ரை வாவிர பூத்தரி – அநேக கோடி ஸூ ரய அக்நி தேஜஸா மகாதாவ்ருத முகே பஞ்சா நப்ரக்ய சரீரே மானுஷா க்ருதி –
தம்ஷ்ட்ராக ராள வதன ஸ்த்ர்யா ஷஸ்த்ரி சடோத்ர்த -என்றும் –

அம் கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரியாய் –என்றும் –
முனைத்த சீற்றம் விண் சுடப்போய் -மூ வுலகும் பிறவும் அனைத்து –என்றும் –
மஞ்ச வாள் அரியாய் -என்றும் –
எரித்த பைம் கண் இலங்கு பேழ் வாய் -என்றும் சொல்லுகிறபடியே –
மனுஷர்களோடு தேவர்களும் வாசி யற-அனைவரும் வெருவி விபரிதவிக்கும் படி –அத்யந்த அபி வ்ர்த்தமாய் –
அத்யந்த பயங்கரமாய் -அத்யந்த க்ரூரமாய் –அத்யந்த அசஹ்யமாய் இருந்துள்ள சீற்றத்தை உடையதாய் அத்விதீயமான
அனல் உமிழா நிற்கிற மூன்று கண்களையும்-மோறாந்த முகத்தையும் நாலு திக்குக்கும் ஏறிட்ட உதட்டையும் –
மேல் ஒரு வடிவையும் கீழ் ஒரு வடிவையும்-உடைத்தான ஸ்ரீ நரசிம்ஹமாய் –

மடங்கல் -சிம்ஹம் –

அன்று –
தேவ திர்யங் மனுஷ்யேஷூ ச்தாவரேஷ்வபி ஜந்துஷூ வ்யாபதிஷ்டதி சர்வத்ர பூதேஷ்வபி மகத் ஸூ ச இதி பிரஹ்லாத வசனம்
ஸ்ருத்வா தைத்ய பதிஸ் ததா உவாச ரோஷதாம் ராஷ பர்த்சயன் ஸ்வசூதம் முஹூ அசவ்சர்வதகோ விஷ்ணு ரபிசேத்பரம
புமான் ப்ரத்யஷம் தர்சச்வாத்ய பஹூபி கிம்ப்ரலாபிதை இத்யுக்த்வா சஹசாதைத்ய பிரசாதாத் ஸ்தம்பமாத்மான தாடாயாமா சஹச்தேன
ப்ரஹ்லாத இதமப்ரவீத் -அஸ்மின் தர்சயமே விஷ்ணும் யதிசர்வக தோபவேத் -அந்ய தாத்வம் வதிஷ்யாமி மித்யாவாக்ய ப்ரலாபினம் -என்றும் –
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப -என்றும் சொல்லுகிறபடியே –
தன் படிகளை அடைய வெளி இட்ட சிறுக்கன் மேலே அவன் முறுகி தூணை தன் காலால் உதைத்த அன்று –

வாள் அவுணன் கிளர்ந்த பொன் ஆகம் கிழித்தவன் –
இத்யுக்த்வா சஹசா கட்க மாதாயதிதி ஜேஸ்வர -என்றும் –
(ஸ்ரீ ஆழ்வார்கள் காலால் உத்தைத்தான் என்று சொல்லா மாட்டார்களே -முஷ்டியாலும் கதையாலும் – என்பர் –
திருவடி ஸ்பர்சம் பெற்றால் ஹிரண்யன் பிரகலாதன் உடைய ஸ்வபாவம் பெற்று விடுவானே -திண் கழல் அன்றோ )-
வயிறு அழல வாளுருவி வந்தானை – என்றும் சொல்லுகிறபடியே –
கட்க ஹஸ்தனாய் கொண்டு எதிர்ந்த-ஹிரண்யாசுரனுடைய -இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் பாதித்து –
அவர்களுடைய ஸ்தானங்கள் அடங்கலும் ஆக்கிரமித்து -அவர்களுடைய ஹவிர்பாகங்களை பலாத்காரேன பறித்துக் கொண்டு
பஷிக்கையாலே மிடியற வளர்ந்து –நிறம் பெற்று ஸ்வர்ணம் போல் இருக்கிற சரீரத்தை –

எவ்வும் வெவ் வேல் பொன் பெயரோனே தலனின்னுயிரை வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம் -என்றும் –
அவுணன் உடல் -என்றும் –
இடந்திட்ட இரணியன் நெஞ்சை இருபிளவாக முன் கீண்டாய் -என்றும் -சொல்லுகிறபடியே
கூரிய நகங்களாலே -அநாயாசேன ஆட்டின்-குடலை கிழித்தால் போலே இரு பிளவாக கிழித்து பொகட்டவனுடைய —

கிளர்ந்த பொன்னாகம் என்றது
மாற்று எழும்பின பொன் போன்ற சரீரம் -என்னவுமாம் –

வளர்ந்த –கீந்தனன் –
சீற்றமில்லாதான் என்று பாடப் பெறும் சீதை மணாளனாம் எம்பெருமானும் -ஒரு கால் மிக்க சீற்றம் கொண்டான் –
ஜிதக்ரோதன் -கோபத்தை வென்றவன் -போர் களத்திலே அநு கூலர்களான தேவர்களும் கூட
அஞ்சும்படி கோபத்திற்கு உட்பட்டவன் ஆனான் –
உயிரையும் உடலையும் -இக்கரையும் அக்கரையுமாக பிரித்த பாபியான ராவணனை நேரே கண்டும் கோபம் கொண்டிராத ராம பிரான் –
அந்த ராவணனால் புண் படுத்தப் பட்ட பக்தனாகிய அனுமானைக் கண்டதும் -கோபத்துக்கு உள்ளானான் அன்றோ –
தன் திறத்து புரியும் அபராதங்களைப் பொறுப்பவனாயினும்-தன் அடியார் திறத்து புரியும்-அபராதத்தை பொறுக்கிலாதவன் –
ஸ்ரீ எம்பெருமான் என்பது இதனால் நன்கு வெளிப்படுகின்றது அன்றோ –

ஸ்ரீ நரசிம்ஹப் பெருமாளும் இது போல் இரணியன் எண்ணிறந்த அபராதங்களை தம் திறத்து புரிந்ததை பொறுப்பினும்-
தம் அடியான் ப்ரஹலாதன் திறத்து அவன் புரியும் அபராதத்தை பொறுக்க கிலாது –
வரம்பின்றி –வளர்ந்த வெம் கோபத்திற்கு உட்பட்டார் –
இரணியனும் ஏனைய அசுரர்களும் மாத்திரமின்றி -அநு கூலர்களான தேவர்களும் அஞ்சி நடுங்கும்படி கோபம்
பெருகினமையின் அது வரம்பின்றி வளர்ந்தது என்க –
முனைத்த சீற்றம் விண் சுடப்போய் மூவுலகும் பிறவும் அனைத்தும் அஞ்ச ஆள் அரியாய் –ஸ்ரீ பெரிய திருமொழி – 1-7 7- –
என்று ஸ்ரீ திரு மங்கை மன்னன் விண்ணகமும் சுடும்படி சீற்றம் முனைந்து இருந்ததாக அருளிச் செய்தது இங்கு அனுசந்திக்கத் தக்கது .
அநு கூலர்கள் உட்பட தபிக்கும்படி இருத்தலின் கோபம் வெங்கியதாயிற்று –

புறப்பட்டது சீயம் விண்ணை முட்டும் வளர்ந்தது-மடங்கல் வளர்ந்த வெம்கொபம்-திரு மேனியும் கோபமும் வளர்ந்ததாம்

மடங்கல் ஒன்றாய் –
ஒரு மடங்கலாய் -என்று மாற்றுக
பெருமை-ஒப்பற்றமை -நரம் கலந்த சிங்கம் –உலகில்வேறு ஓன்று இல்லாமையின் இது ஒப்பற்றதாயிற்று –

அன்று வாள் அவுணன் கிளர்ந்தபொன்னாகம் கிழித்தவன் –
அன்று -ப்ரஹலாதனைப் பெற்ற தகப்பன் அடர்த்த அன்று –
வாள் அவுணன்-வாளை உடைய அவுணன் –
மடங்கலைக் கண்டதும் -வாளை உறையிலிருந்து உருவி மடங்கலோடு போரிட வந்த அவுணன் -என்றபடி
வயிறழல வாள் உருவி வந்தானை -ஸ்ரீ முதல் திருவந்தாதி -95 – என்றார் பொய்கை ஆழ்வாரும்

கீர்த்தி –
திவ்ய கீர்த்தி யாகிற சஹச்ர சீர்ஷா புருஷ சஹஸ்ராஷஸ் சஹச்ர பாத் -சபூமிம் விச்வதொவ்ர்த்வா –
அத்யதிஷ்டத்த்வ சாங்குலம் -புருஷ ஏவேதம் சர்வம் யத்பூதம் யச்ச பவ்யம் உதாம்ர்த்தத்வச்யே சான யதஹ் நே
நாதி ரோஹதி -ஏதாவா நஸ்ய மஹிமா-என்றும் –
யச்ச கிஜ்ஜிஜ் ஜத்யச்மிந்தர் ஸ்யதே ஸ்ரூய தேபிவா அந்தர் பஹிஸ் சதத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித -என்றும் –
வேதாஹமேதம் புருஷம் மகாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் தமேவ வித்வா நம்ரத
இஹபவதி நான்ய பந்தா அயநாய வித்யதே -என்றும் –
ஸ்ரீ வேத புருஷனால் பிரதிபாதிக்கப் பட்ட அப்ரதிம பிரபாவம் – என்றபடி –

பயிர் எழுந்து விளைந்திடும் சிந்தை –
ஸூ ஷேத்ரத்தில் விரை விரைத்தால் ஓங்கி வளர்ந்து சம்ர்த்தியாய் பல பர்யந்தமாக விளையுமா போலே –
ஸ்ரீ அழகிய சிங்கருடைய கீர்த்தி யாகிற பயிர் நித்ய அபிவ்ர்த்தமாய் -லோகம் எல்லாம் வியாபித்து -பல பர்யந்தம் ஆகும்படிக்கு ஈடான
வீரத்தை உடைத்தான திரு உள்ளத்தை உடைய –

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் –

இவருக்கு ஸ்ரீ அழகிய சிங்கர் திரு ஆராதனம் ஆகையாலே இப்படி அருளிச் செய்கிறார் –

என் தன் மெய் வினை நோய் களைந்து –
கர்ம பிரம்மம் பரம் வித்தி -என்றும்
பிரக்ர்த்தே கிரியமாணா நி குணை கர்மாணி சர்வச -என்றும் சொல்லுகிறபடி
அநாதி அவித்யா கர்ம வாசன ருசி பிரக்ர்தி சம்பத்தாலே -பத்தும் பத்தாக பண்ணப்பட்ட துஷ் கர்ம பலமான
துக்கங்களை நிவர்திப்பித்து –

கையிலே கனி யன்னவே –நல் ஞானம் அளித்தனன் –
சர்வ குஹ்ய தமம் பூயா ஸ்ருணுமே பரமம் வச இஷ்டோசி மே த்ரட இதி ததோ வஹ்யாமி தே ஹிதம் – என்கிறபடியே –
கீழ் சொன்ன ப்ராவண்யத்து உடலான தத்வ ஹித புருஷார்த்த தத் யாதாம்ய-ஞானத்தை
கையிலே கனி போலே சுலபமாய் ஸூவ்யக்தமாய் இருக்கும்படி உபதேசித்து-அருளினார் என்றது ஆய்த்து –

கிளர்ந்த பொன்னாகம் கீண்டவன்
பொன்னிறம் கொண்டது அவன் சரீரம் -அடது பற்றியே அவன் ஹிரண்யன் -எனப்படுகிறான்
பொன் பெயரோன் மார்பிடந்த -முதல் திருவந்தாதி -23 -என்பர் ஸ்ரீ பொய்கையாரும்
தடை இன்றி மேலும் மேலும் வளர்ந்து வந்த அவனது ஆகம் சிங்கத்தின் எயிறு இலக வாய் மடுத்து நிற்கும் நிலை
கண்ட அச்சம் என்னும் நெருப்பினாலே வாட்டப் பெற்று பதமானவாறே நாரைக் கிழிப்பது போலே எளிதில் கிழித்தனன் -என்க –

கீர்த்திப் பயிர் யெழுந்து விளைந்திடும் சிந்தை இராமானுசன்
ஸ்ரீ நரசிம்ஹப் பெருமாளுடைய இந்தக் கீர்திகள் -ஸ்ரீ எம்பெருமானார் திரு உள்ளம் ஆகிற நன்செய்யுள் பயிராகி –
ஓங்கி வளர்ந்து விளைகின்றனவாம் –
ஸ்ரீசிங்கப் பிரான் கீர்த்திகள் பெருமை -பரத்வம்
ஆபத்திலே பக்தனுக்கு தோன்றி உதவுதல் –
எல்லாப் பொருள்களிலும் உட்புக்கு நியமிக்கும் அந்தராத்மாவாய் உள்ள தன்மை –
சீற்றம் -அந்நிலையிலேயே அருளுதல் -முதலியவை பல பல – அவைகளை எல்லாம் தம் திரு உள்ளத்திலே
நினைந்து நினைந்து நாள் தோறும் பேணுகிறார் ஸ்ரீ எம்பெருமானார் –

அவர் நெஞ்சுப் பெறும் செய்யுள் பேணப்படும் கீர்த்திப் பயிர்கள் பெரியனவாய் யெழுந்து விளைந்து விடுகின்றன –
ஸ்ரீ சிங்கப் பிரானுடைய குண அனுசந்தானத்தின்-விளைவு தான் எனக்கு அளித்த நல் ஞானம் என்பது ஸ்ரீ அமுதனார் கருத்து .
ஸ்ரீ எம்பெருமானார் சிந்தையிலே விளையும் கீர்த்திப் பயிர்களிலே சிலவற்றை இந்தப் பாசுரத்திலே ஸ்ரீ அமுதனார் காட்டுகிறார் .
முதலாவதாக காட்டுவது –வளர்ந்த வெம் கோபம் -என்பது –
ஸ்ரீ சிங்கப் பிரான் சீற்றம் அடியார்கட்கு தினம் தோறும் சிந்தித்ததற்கு உரியது –அதுவே நமக்கு வுய்வுபாயமுமாகும்
மேவி எரி வுருவமாகி இரணியனது ஆகம் தெரி உகிரால் கீண்டான் சினம் -ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி – 42-
என்னும் ஸ்ரீ பேயாழ்வார் ஸ்ரீ ஸூக்தியையும்
அருளன்று நமக்கு உத்தேச்யம் -ஆஸ்ரித விரோதிகள் பக்கம் அவனுக்கு உண்டான சினம் உத்தேச்யம் –
அச் சினத்தை தெரி -அனுசந்தி -என்று ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அதனுக்கு அருளிச் செய்த வ்யாக்யானத்தையும் காண்க –

பிரகலாதனுடைய பகைவனான இரணியன் பக்கல் உண்டான சினம் அடியார்களது மனத்தை மிகவும் ஈடுபடுத்த வல்லது .
ஏனைய குழந்தைகளுக்கு போல் அல்லாமல் நரசிம்ஹப் பெருமாள் வெளிப்படும் பொழுதே
பிரபல பாலரிஷ்டமாய் இரணியன் கையிலே வாளை வுருவி எடுத்துக் கொண்டு குழந்தையை முடிப்பதற்கு முடிகினான் கோபத்தினாலே –
அதை நினைத்தால் தற்காலத்தில் நடப்பது போல் தோற்றுகிறது அடியார்கட்கு -என்ன ஆகும் -ஐயோ என்று வயிறு எரிகிறது –
நல்ல வேளை குழந்தை விழித்து கொள்கிறது -விழியினால் அனலை சொரிகிறது –
வாள் வுருவி வந்தவனும் அஞ்சும் படியாக –பூவினும் மெல்லியதும் அழகியதுமான திருச் சக்கரம் ஏந்தும் கையினாலே –
செய்ய திருவடியிலே மடியிலே -அவனைப் பிடித்து வைத்து -அழகிய நகங்களினாலே அவனை அழித்து விடுகிறது அக் குழந்தை –
அழித்த பிறகும் கூட அதன் சீற்றம் மாற வில்லை –
எயிறு -பல் -தெரிய வாயை மடுத்துக் கொண்டு இன்னமும் இருக்கிறதே இக் குழந்தை -என்ன காரணம் -என்று
அவதரித்த கோலத்துடன் நேரே காட்சி தரும் ஸ்ரீ நரசிம்ஹ பெருமாளையே நோக்கி வினவுகிறார் ஸ்ரீ பொய்கை ஆழ்வார் –
அவரது அனுபவம் இதோ இந்தப் பாடலில் வெளியாகிறது –

வயிறழல வாளுருவி வந்தானை யஞ்ச
எயிறிலக வாய் மடுத்த தென்னீ-பொறி உகிரால்
பூவடியை யீடளித்த பொன் ஆழிக் கையா நின்
சேவடி மே லீடழியச் செற்று- – 63- இரணியனை முடித்த பின்னும் சீற்றம் மாறாது ஒழிவதே –

சங்கல்ப்பதாலேயோ திரு வாழி யாலேயோ -அவனை முடித்தால் ஆகாதோ
ஆத்திரம் தீர நகத்தினால் முடித்ததோடு அமையாமல் பிணத்தைப் பார்த்ததும்
நா மடித்து கோபத்தைக் காட்டுவதே -இஃது என்ன கோபமோ -என்று ஈடுபடுகிறார் ஸ்ரீ பொய்கையார் .

தன் திறத்து மட்டும் அபசாரப் பட்டு இருப்பின் -அவனை முடித்ததும் சீற்றம் மாறி இருக்கும் .
அடியானாகிய பிரகலாதன் இடத்தில் அபசாரப் பட்டமையால் -அவனை முடித்த பின்பும் சீற்றம் அடங்கின பாடு இல்லை –
என்று உணர்க –
இதனால் ஆத்திரம் அடங்க மாட்டாத அளவில் அடியார் இடம் எம்பெருமானுக்கு உள்ள பரிவுடைமை புலனாகிறது –
இந்த பொய்கையார் பாசுர வ்யாக்யானத்தில் –
சரணா கதிக்கு தஞ்சமான தனமாவது ஆஸ்ரித அர்த்தமாக ஹிரண்யனைப் பற்றப் பண்ணும் சீற்றம் –என்னும்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்து இருப்பதுய் இங்கு அனுசந்திக்கத் தக்கது .

இங்கனம் ஸ்ரீ பொய்கை யாழ்வார் ஈடுபட்ட சீற்றத்தை ஸ்ரீ எம்பெருமானாரும் தம் திரு உள்ளத்தே இருத்தி
வளர்ந்த வெம் கோபம் -கீர்த்திப் பயிரை விளைந்திடச் செய்தார் -என்க .

மடங்கலானதும் ஒரு கீர்த்தி
பிரமன் கொடுத்த வரத்திற்கு ஏற்ப -அவன் படைப்புக்குள் அடங்கும் பிராணிகளில் ஒன்றாகாது –
தனிப்பட்ட நரம் கலந்த சிங்கமானது –பிரமன் வரத்தை மெய்யாக்கின கீர்த்தி படைத்தது அன்றோ –
பிரமன் படைப்புக்குள் ஆகாதாயினும் பொருந்தின அழகிய சிங்கமானது பிரமனுக்கும்
மேற்பட்ட பரமன் இவன் என்னும் கீர்த்தியை பறை சாற்றுகின்ற தன்றோ –

அன்று மடங்கலானதும் –
எங்கும் உளன் என்னும் பிரகலாதனை மெய்யனாக்கிக் காப்பாற்றியதனாலும்
எங்கும் வியாபித்து இருப்பதை ப்ரத்யட்ஷமாக காட்டியதனாலும்
அவனது கீர்த்தியை புலப்படுத்துவதாகும் .
வாள் அவுணன் கிளர்ந்த பொன்னாகம் கிழித்ததும் –
அடியார் அச்சத்தை அகற்றி அவனது எல்லை இல்லா வல்லமையை விளக்கி வலிமை வாய்ந்த அடியார் பகையையும்
அழித்து தரும் ஆற்றலை காட்டுவதனால் கீர்த்தி வாய்ந்ததாகும் .

இவை ஸ்ரீ எம்பெருமானார் திரு உள்ளத்தில் பயிராய் வளர்ந்து விளைகின்றன –
அதாவது
இந்த குண அனுசந்தானங்கள் ஸ்ரீ எம்பெருமானாருக்கும் பலித்து – அவரைச் சார்ந்த எனக்கும் பயன்படுகின்றன –
சரணா கதற்கு தஞ்சமான தனமாக அனுசந்தித்த சீற்றம் -என் மெய் வினை நோயாம் இரணியனை களைவதற்கும் பயன்படுவதாயிற்று –
இங்கனம் அடியார்களைக் காக்கும் திறம் -பரத்வம் -முதலிய பிறவும்
சரண்யனுக்கு வேண்டிய குணங்களாய் அனுசந்திக்கப்பட்டு அச்சம் இன்றி நிறை வுடன் தெள்ளிய அறிவினராய்
வாழும்படி பலித்து -அவரைச் சார்ந்த எனக்கும் நல் ஞானமாய் பயன்படுகின்றன .

என் தன் மெய் வினை நோய் —கனி என்னவே
மெய் -சரீரம் -மாறுபட்டு அளித்தால் பற்றி விபரீத இலக்கணை
மெய் வினை -சரீர சம்பந்தத்தால் வரும் கர்மம்
அக் கர்மத்தின் பலனான துன்பங்கள் மெய் வினை நோய் எனப்படுகின்றன –
நல் ஞானம் –
ஸ்ரீ நரசிம்ஹனே -வன் பகை மாற்றித் தெள்ளறிவுடன் வாழ்விப்பவன் -என்பது ஞானம்
அங்கனம் வாழ்பவரே நமக்கு நல்லன நீக்கி நல்லன நல்குவர் என்னும் துணிவு நல் ஞானம் -என்க
இத்தகைய நல்ல ஞானம் மிக எளிதாக விளங்கும்படி கை இலங்கு நெல்லிக் கனி போலே தந்து அருளினார் -என்கிறார்
என்னவே -கரணங்களும் ஈடுபடும்படியான ஆர்வம் விளையுமாறு-கர்மங்களை நீக்கிக் பண்ணின உபகாரம்
இது என்பது கருத்து ஆயிற்று —

உபபத்யச – உபலப்த்யச்ச ச -கர்மாவும் அநாதி -ஈஸ்வரன் திரு உள்ளத்தில் ப்ரீதி அப்ரீதி ரூபத்துடன் ஒட்டி கொண்டு இருக்கும்
ஞானம் அவித்யையால் மூட பட்டு மீண்டும் கர்மம் சேர்கிறான்-
உடைக்க -காமாதி தோஷ கரம்- ஸ்வாமி திருவடிகளில் பற்றி ஒழிக்க வேண்டும்
உமி களைந்து அரிசி கொடுப்பது போல அஞ்ஞானம் போக்கி ஞானம் கொடுத்தார்-

ஸ்ரீ நரசிம்கர்-ஸ்ரீ அழகிய சிங்கர் சேராத இரண்டை சேர்த்தார்-
ஸ்ரீ நரசிம்கரையும் ஸ்ரீ கீதாச்சர்யரும் கலந்தது ஸ்ரீ ஸ்வாமி
ஸ்ரீ நரசிங்கர் பண்ணினதை -ஸ்ரீ கீதாசார்யன் போல உபதேசித்து–எடுத்து சொல்லும் தன்மை-
இரண்டையும் அருளினவர் ஸ்ரீ ஸ்வாமி-
உகிரே ஸ்வாமி /பஞ்ச ஆயுதங்களும் சேர்ந்து தானே ஸ்ரீ ஸ்வாமி

ஞானம்-ஸ்ரீ நரசிம்ஹர் பற்றிய ஞானம் –
நல் ஞானம்—அவரை திரு உள்ளத்தில் கொண்ட ஸ்ரீ ஸ்வாமி பற்றிய ஞானம்-
ஏற்றி இருப்பாரை வெல்லுமே மற்றவரை சாத்தி இருப்பவர் தவம் –

——————-

ஸ்ரீ நரஸிம்ஹாவதாரம்
வடி யுகிரால் ஈர்ந்தான் இரணியானதாகம் –பொய்கையார் –17-
தழும்பு இருந்த பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரொன் மார்பிடந்த —23-
கீண்டானை –25-
பூரி ஒரு கை பற்றி ஓர் பொன்னாழி ஏந்தி அரியுருவும் ஆளுருவுமாகி –எரியுருவ வண்ணத்தான் மார்பிடந்த மாலடியை–31-
முன்னம் தரணி தனதாகத் தானே இரணியனைப் புண்ணிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால் –36-
மேல் அசுரர் கோன் வீழக் கண்டுகந்தான் குன்று –40-
களியில் பொருந்தாதவனைப் பொரலுற்று அரியாய் இருந்தான் திரு நாமம் எண்–51-
வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம் சிரித்தால் வணங்கானாம் என்றே உரத்தினால்
ஈரரியாய் நேர் வலியோனாய விரணியனை ஓரரியாய் நீ இடந்த தூன்—90-
வயிறு அழல வாள் உருவி வந்தானை பொறி யுகிரால் நின் சேவடி மேல் ஈடழியச் செற்று—93-
கோளரியாய் ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்து –பூதத்தார் —18-
மாலை அரி உருவன் பாத மலர் அணிந்து காலை தொழுது எழுமின் கைகோலி–47-
வரம் கருதி தன்னை வணங்காத வன்மை உரம் கருதி மூர்க்கத்தவனை
நரம் கலந்த சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே –பூதத்தார் -84-
பற்றிப் பொருந்தாதான் மார்விடந்து –94-
தானவனை வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் -95-
இரணியானதாகம் அவை செய்தரி யுருவமானான் –பேயார்-31-
மேவி யரியுருவமாகி இரணியனதாகம் தெரி யுகிரால் கீண்டாம் சினம் —42-
செற்றதுவும் சேரா இரணியனை –49-
அங்கற்கு இடர் இன்றி யந்திப் பொழுதத்து மணக்க இரணியனதாகத்தை பொங்கி அரியுருவமாய் பிளந்த எம்மானாவானே —65-
புகுந்து இலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய் இகழ்ந்த விரணியனதாகம் –பிளந்த திருமால் திருவடியே வந்தித்தது என்நெஞ்சமே –95-
தொகுத்த வரத்தனனாய் தோலாதான் மார்வம் வ
மாறாய தானவனை வள்ளு
தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை அவம் செய்த ஆழியாய் யன்றே –19-
இவையா அரி பொங்கிக் காட்டும் அழகு –21-
அழகியான தானே யரி யுருவம் தானே —22-
வானிறத்தோர் சீயமாய் வளைந்த வாள் எயிற்றவன் ஊநிறத்துகிர் தலம் அழுத்தினாய் –திருச்சந்த –23-
சிங்கமாய தேவ தேவ —24-
வரத்தினால் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன் உரத்தினில் கரத்தை வைத்து உகிர்த் தளத்தை ஊன்றினாய்–25-
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும் இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே -62-
பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட –அமலனாதி –8-
அந்தியம் போதில் அரியுருவாகி அறியாய் அழித்தவனை–திருப்பல்லாண்டு -6-
மறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான் –பெரியாழ்வார் –1–2–5-
கோளரியின்னுருவம் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழக் கூர் உகிரால் குடைவாய் -1–5–2-
அளந்திட்ட தூணை அவன் தட்ட அங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க யுருவாய்
உளம் தொட்டு இரணியன் ஒண் மார்பகலம் பிளந்திட்ட கைகளால் சப்பாணி –1-6–9-
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய் –2–7–7-
முன் நரசிங்கமதாகிய அவுணன் முக்கியத்தை முடிப்பான் —3–6–5-
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய் உதிரம் அளைந்த கையோடு
இருந்தானை அல்லவா கண்டார் உளர் —4- -1–1-
நாதனை நரசிங்கனை நவின்று ஏத்துவார் உழக்கிய பாத தூளி படுத்தலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே –4–4–6-
நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால் எம்பிரான்
தன் சின்னங்கள் இவரிவர் என்று ஆசைகள் தீர்வேனே –4–4–9-
வாள் எயிற்றுச் சீயமுமாய் –அவுணனை இடந்தானே –4–8–8-
உரம் பற்றி இரணியனை உகிர் நுதியால் ஒள்ளிய மார்புறைக்க யூன்றிச்
சிரம் பற்றி முடியிடியக் கண் பிதுங்க வாய் அலறத் தெழித்தான் கோயில் — 4–9–8-
நாதனே நரசிங்கமதானாய் –5–1–9-
சிங்கப் பிரானவன் எம்மான் சேரும் திருக் கோயில் கண்டீர் -5–2–4-
ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்–நாச்சியார் -8–5-
அப்பொன் பெயரோன் தடம் நெஞ்சம் கீண்ட பிரானார் –திருவிருத்தம் –46-
அன்று அங்கை வன் புடையால் பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்விடந்தான்–பெரிய திருவந்தாதி -35-
வழித் தங்கு வால் வினையை மாற்றானோ நெஞ்சே தழிஇக் கொண்டு போர் அவுணன் தன்னைச் சுழித்து எங்கும்
தாழ்விடங்கள் பற்றிப் புலால் வெள்ளம் தானுகள வாழ்வடங்க மார்விடந்த மால் –57-
போரார் நெடு வேலோன் பொன் பெயரொன் ஆகத்தைக் கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு
ஆரா எழுந்தான் அரியுருவாய்–சிறிய திரு மடல் –
ஆயிரம் கண் மன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும் –தோள் வலியால் கைக் கொண்ட தானவனை பின்னோர் அரியுருவாகி
எரி விழித்து –தான் மேல் கிடத்தி அவனுடைய பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த வீரனை –பெரிய திருமடல்
எங்கும் நாடி நாடி நரசிங்கா என்று வாடி வாடும் இவ் வாணுதலே –திருவாய் –2—4–1-
உன்னைத் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட எண் முன்னைக் கோளரியே—2–6–6-
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே —2—8–9-
அவன் ஒரு மூர்த்தியாய் –சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக் கீழ் புக நின்ற செங்கண் மால் –3–6–6-
கிளர் ஒளியால் குறைவில்லா அரியுருவாய்க் கிளர்ந்து எழுந்து கிளர் ஒளிய இரணியனது அகல் மார்பம் கிழித்து உகந்த –4–8–7-
அந்திப் போது அவுணன் உடல் இடந்தானே –7–2–5-
அப்பன் ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறு—7–4–6-
அல்லல் அமரரைச் செய்யும் இரணியன் ஆகத்தை மல்லல் அரியுருவாய்ச் செய்த மாயம் அறிந்துமே—–7–5–8-
புக்க வரியுருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த சக்கரச் செல்வன் தன்னை —-7–6–11-
கோளரியை –7–10–3-
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கையுகிராண்ட வெங்கடலே–8-1-3-
ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர் ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் –9–3–7-
வானவர் தானவர்க்கு என்றும் அறிவது அரிய அரியாய அம்மானே –9–4–4-
மிகுந்தானவன் மார்வகலாம் இரு கூறா நகந்தாய் நரசிங்கமதாய யுருவே —9–4–7-
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன் —9–10–6-
வன் நெஞ்சத்து இரணியனை மார்விடந்த வாட்டாற்றான் –10–6–4-
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று —10–6–10-
அவுணன் ஆர் உயிரை யுண்ட கூற்றினை –திருக் குறும் தாண் –2-
மறம் கொள் ஆளரி உருவென வெருவர ஒருவனது அகல் மார்வம் திறந்து வானவர் மணி முடி பனி தர —-1–2–4-
மன்னவன் பொன்னிறத் துரவோன் ஊன் முனிந்தவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து —-1- -4–8-
ஏனோர் அஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப் பரிய இரணியனை ஊனார் அகலம் பிளவெடுத்த ஒருவன் —1–5–7-
அங்கண் மா ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆளரியாய் அவுணன் பொங்கவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் இடம்
பைம்கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக் கீழ் செங்கணாளி யிட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே –1–7–1-
அலைத்த பேழ்வாய் வாள் எயிற்றோர் கோளரியாய் அவுணன் கொலைக் கையாளன் நெஞ்சிடந்த –1–7–2-
அவுணன் வாய்ந்த வாகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம் —1—7–3-
எவ்வும் வெவ்வேல் பொன் பெயரோன் ஏதலன் இன்னுயிரை வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த –1–7–4-
மென்ற பேழ்வாய் வாள் எயிற்றோர் கோளரியாய் அவுணன் பொன்ற வாகம் வள்ளுகிரால் போழ்ந்த –1–7–5-
எயிற்றொடி தெவ்வுரு வென்று இரிந்து வானோர் கலங்கியோட இருந்த வம்மான் —-1–7–6-
மூ உலகும் பிறவும் அனைத்தும் அஞ்ச வாள் அரியாய் இருந்த —1–7–7-
நாத் தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த அங்கோர் ஆளரியாய் —1–7–8-
தூணாய் அதனூடு அரியாய் வந்து தோன்றி பேணா வவுணன் உடலம் பிளந்திட்டாய் –கலியன் –1–10–5-
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் –பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப –
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திரு வல்லிக்கேணிக் கண்டேனே —2–3–8-
அவுணன் அவன் மார்பகலம் உகிரால் வகிராக முனிந்து அரியாய் கீண்டான் –2–4–2-
தங்காததோர் ஆளரியாய் அவுணன் தனை வீட முனிந்து —2–4–4-
அடிப் பணியாதவனைப் பணியால் அமரில்–நெஞ்சிடந்தான்–2- 4–7-
பூணாகம் பிளவெடுத்த போர் வல்லோனை —2–5–7-
பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை –2–5–8-
அன்று அவுணர் கோனைப் பட வெகுண்டு —2–5–10-
எரியன கேசரி வாள் எயிற்றொடு இரணியனாக மிரண்டு கூறா அரியுருவாம் இவர் –2–8–1-
திண் படைக் கோளரியின் உருவாய்த் திறலோன் அகலம் செருவில் முன நாள் புண் படப் போழ்ந்த பிரான் –2–9–6-
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல்லவுணன் தன் மார்வகம் இரு பிளவாக்
கூறு கொண்டவன் குல மகற்கு இன்னருள் கொடுத்தவன் –3–1–4-
பொங்கி யமரில் ஒருகால் பொன் பெயரோனை வெருவ –சிங்க உருவில் வருவான் –3–3–8-
பொன்னன் பைம் பூண் நெஞ்சிடந்து குருதியுக உகிர் வேலாண்ட நின்மலன் தாள் அணைகிற்பீர் –3–4–4-
சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு —3–9–1-
திண்ணியதோர் அரியுருவாய்த் திசையனைத்தும் நடுங்கத் தேவரோடு தானவர்கள் திசைப்ப
இரணியனை நண்ணியவன் மார்வகலத்து உகிர் மடுத்த நாதன் —-3–9–2-
ஓடாத வாளரியின் உருவமது கொண்டு அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்ற
வாடாத வள்ளுகிரால் பிளந்தவன் தன் மகனுக்கு அருள் செய்தான் வாழுமிடம் –3–10–4-
ஓடாத வாளரியின் யுருவாகி இரணியனை வாடாத வள்ளுகிரால் பிளந்து அளைந்த மால் –4–1–7-
உளைய ஒண் திறல் பொன் பெயரோன் தனது உரம் பிளந்துதிரத்தை அளையும்—4–2–7-
முடியுடை அமரர்க்கு இடர் செய்யும் –அசுரர் தம் பெருமானை அன்று அரியாய் மடியிடை வைத்து மார்வை முன் கீண்ட மாயனார்—4—10–8-
வெய்யனாய் யுலகு ஏழுடன் நலிந்தவன் உடலகம் இரு பிளவா –கையில் நீளுகிர் படையது வாய்த்தவனே —5–3–3-
தரியாது யன்று இரணியனைப் பிளந்தவனை —5–6–4-
வெங்கண் வாள் எயிற்றோர் வெள்ளி மா விலங்கல் விண்ணுறக் கனல் விழித்து எழுந்தது –அங்கனே ஓக்க அரியுருவானான்–5–7–5-
வானோர் புக்கு அரண் தந்து அருளாய் என்னப் பொன்னாகத்தானை–நக்கரி யுருவமாகி
நகம் கிளர்ந்து இடந்து உகந்த சக்கரச் செல்வன் –5–9–5-
முனையார் சீயமாகி அவுணன் முரண் மார்வம் புனை வாள் உகிரால் போழ் பட வீழ்ந்த புனிதனூர்—6–5–2-
பைம் கண் ஆளரி யுருவாய் வெருவ நோக்கிப் பருவரைத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி
அங்கை வாள் உகிர் நுதியால் அவனதாகம் அங்குருதி பொங்குவித்தான் -6-6-4-
வேரோர் அரி யுருவாய் இரணியனதாகம் கீண்டு வென்றவனை விண்ணுலகில் செல உய்த்தார்க்கு –6–6–5-
ஓடா வரியாய் இரணியனை ஊனிடந்த—6–8—4-
ஓடா வாள் அரியின் உருவாய் மருவி என் தன் மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா —7–2–2-
பொன் பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனை –7–3–9-
முந்திச் சென்று அரி யுருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால் —7–4–5-
சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த சங்கமிடத்தானைத் தழல் ஆழி வலத்தானை—7–6–1-
விண்டான் விண் புக வெஞ்சமத்து அரியாய்ப் பரி யோன் மார்வகம் பற்றி பிளந்து —7–7–5-
சினமேவும் அடல் அரியின் உருவமாகித் திறல் மேவும் இரணியதாகம் கீண்டு –7–8–5-
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய வணி யுகிரால் உடல் எடுத்த பெருமானுக்கு —8–3–6-
சீர் மலிகின்றதோர் சிங்க யுருவாய் –8–4–4-
உளைந்த வரியும் மானிடமும் உடனாயத் தோன்றி ஒன்றுவித்து விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றோன்
வாள் அவுணன் பூணாகம் கீண்டதுவும் –8–10–10-
பரிய இரணியானதாகம் அணி யுகிரால் அரி யுருவாய்க் கீண்டான் –9–4–4-
சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த –9–9–4-
துளக்கமில் சுடரை அவுணன் உடல் பிளக்கும் மைந்தனை —10–1–4-
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போல் அவுணன் உடல் வள்ளுகிரால் அளைந்திட்டவன் காண்மின் –10–6–3-
தளர்ந்திட்டு இமையோர் சரண் தா எனத் தான் சரணாய் முரணாயவனை உகிரால் பிளந்திட்டு
அமரர்க்கு அருள் செய்து உகந்த பெருமான் –10–6–4-
பொருந்தலனாகம் புள்ளு வந்தேற வள்ளுகிரால் பிளந்த வன்று —10–9–8-
அங்கு ஓர் ஆளரியாய் அவுணனைப் பங்கமா இரு கூறு செய்தவன் –11–1–5-
அளவெழ வெம்மை மிக்க அரியாகி அன்று பரியோன் சினங்களவிழ வளை யுகிர் ஆளி மொய்ம்பில் மறவோனதாகம் மதியாது
சென்று ஓர் உகிரால் பிள எழவிட்ட குட்டமது வையமூடு பெரு நீரின் மும்மை பெரிதே —11–4–4-
கூடா இரணியனைகே கூர் உகிரால் மார்விடந்த ஓடா அடல் அரியை உம்பரார் கோமானை —11–7–4-
முனைத்த சீற்றம் விண் சுடப்போய் மூவுலகும் பிறவும் அனைத்தும் அஞ்ச ஆள் அரியாய் –பெரிய திருமொழி – 1-7 7- –

கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயி ரெழுந்து விளைந்திடும் சிந்தை யிராமானுசன்

————————————————————————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –102–நையும் மனமுன் குணங்களை வுன்னி-இத்யாதி –

June 2, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி பாவனத்வ அனுசந்தானமும் அசஹ்யமாம்படி -பரம போக்ய பூதரான -ஸ்ரீ எம்பெருமானார் விஷயத்தில் –
தம்முடைய அந்தக் கரணத்தோடு-பாஹ்ய கரணங்களோடு -வாசி யற-
அதி மாத்திர ப்ரவணமாய்ச் செல்லுகிற படியைச் சொல்லி –
இந்த பூமிப் பரப்பு எல்லாம் கிடக்கச் செய்தே தேவரீர் ஔதார்யம் என் பக்கலிலே வர்த்திக்கைக்கு ஹேது என் -என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டிலே –
ஸ்ரீ எம்பெருமானாருடைய போக்யதையில் ஈடு பட வேண்டி இருக்க -அப்படி இராதே – அவருடைய பாவனத்தைக் கொண்டாடினது –
அவரை அனுசந்தித்து சிதிலராய் இருக்குமவர்களுக்கு அசஹ்யமாய் இருக்கும் என்று சொல்லி –
இதிலே –
அவர்கள் விஷயத்தால் (விஷயீ காரத்தால் )குற்றம் தீரும்படி அந்த கரணத்தொடு பாஹ்ய கரணங்களோடு வாசி யற –
எல்லாம் ஸ்ரீ எம்பெருமானார் பக்கலிலே அதி மாத்ர ப்ராவன்யத்தாலே சக்தங்களாய் ஆழம்கால் பட்டன என்று சொல்லா நின்று கொண்டு –
(மனன் அகம் மலம் அற மலர் மிசை எழு தரும் மனம் உணர்வு அவை இலன் –
குற்றம் தீர்த்த மனசாலும் ஸ்ரீ எம்பருமானை அறிய முடியாது -ஸ்ரீ ஆச்சார்யர் விஷயத்தில் அப்படி இல்லையே )
இந்த பூ லோகத்தில் இருக்கும் எல்லா சேதனரும் இருக்கச் செய்தே -தேவரீருடைய திவ்ய ஔ தார்யம்
என் ஒருவன் பக்கலிலும் கிளர்ந்து வருகைக்கு ஹேது என் என்று -அவர் தம்மையே கேட்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

இங்கனம் தூய்மைப் படுத்துபவர் என்பது கூடப் பொறுக்க ஒணாத படியான-இனிமை வாய்ந்த ஸ்ரீ எம்பெருமானார் திறத்து –
தம் உட் கரணமும் -புறக் கரணங்களும் எவ்வித பாகுபாடும் இன்றி -தாமே மிகவும் ஈடுபட்டு இருப்பதைச் சொல்லி –
இப்பரந்த உலகினிலே அனைவரும் இருக்க -தேவரீருடைய வள்ளல் தனம் என் மீது வளருவதற்கு ஹேது என்ன –
என்று ஸ்ரீ எம்பெருமானாரிடமே வினவுகிறார்

நையும் மனமுன் குணங்களை வுன்னி என் நா விருந்தெம்
ஐயன் இராமானுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காணக் கடல் புடை சூழ்
வையமிதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே – – 102- –

பத உரை –
மனம் -நெஞ்சு
உன் குணங்களை -தேவரீர் குணங்களை
உன்னி -நினைத்து
நையும் -நிலை குலையும்
என் நா -என்னுடைய நாக்கு
இருந்து -நிலை மாறாமல் ஒருபடிப்பட இருந்து
எம் ஐயன் -எங்களுடைய தலைவன்
இராமானுசன் என்று -ஸ்ரீ எம்பெருமானார் என்று
அழைக்கும் -கூப்பிடும்
அரு வினையேன் -கொடிய பாபம் செய்த என்னுடைய
கையும் -கைகளும்
தொழும் -கூப்பின வண்ணமாய் இருக்கும்
கண் காணக் கருதிடும் -கண்கள் தேவரீரைக் காண விரும்பிக் கொண்டு இருக்கும்
கடல்-கடலாலே புடை -நான்கு பக்கங்களிலும்
சூழ் -சூழப்பட்ட
வையம் இதனில் -இந்தப் பூமியில்
உன் வண்மை -தேவரீருடைய வள்ளன்மை
என்பால்-குறிப்பிட்டு என்னிடத்திலே
வளர்ந்தது என் -மிக்கு இருப்பது என்ன காரணத்தினால்

வியாக்யானம் –
மனச்சானது தேவரீருடைய குணங்களை அனுசந்தித்து தன்னிலே கிடந்தது நையா நின்றது –
என்னுடைய நா வானது ஒருபடிப்பட இருந்து தேவரீருடைய நிருபாதிக பந்துத்வத்தையும் –
திரு நாமத்தையும் சொல்லிக் கூப்பிடா நின்றது –
இப்படி இருக்க உரிய கரணங்களை அநாதி காலம் அப்ராப்த விஷயங்களுக்கு சேஷமாக்கின மகா பாபியான
என்னுடைய கையும் எப்போதும் தேவரீர் விஷயமாக அஞ்சலி பந்தத்தை பண்ணா நின்றது –
கண்ணானது சர்வ காலத்திலும் தேவரீரை காண்கையாலே மநோ ரதியாய் நின்றது –
கடலாலே சுற்றும் சூழப் பட்டு இருந்துள்ள இந்த பூமியிலே இப் பரப்பில் உள்ளவர்கள் எல்லாம் கிடக்க –
தேவரீருடைய ஔ தார்யம் என் பக்கலிலே வளர்ந்தது-
(பெரும் கேழலார் –தம் புண்டரீக கடாக்ஷம் ஸ்ரீ நம்மாழ்வார் பக்கலில் ஒருங்கினது போலே )என் கொண்டு

அழைத்தல் -கூப்பிடுதல்-(-உபாய பாவத்தால் இல்லை -போக்யம் -அனுபவத்துக்கு -கூடு என்றபடி )
கண் கருதிடும் என்று சேதன சமாதியாலே சொல்லுகிறது –

கையும் தொழும் -நீசனான – உன் குணங்களை –அவன் குணங்கள் சங்கைக்கு இடம் -பரத ஆழ்வான் கூப்பிட திரும்ப வில்லையே –
இத்தனை நாளும் ஆத்மாவுக்கே ஞானம் இல்லாமல் திரிய இப்பொழுது கண் இந்திரியங்களுக்கு ஞானம் வந்து உம்மை பற்ற துடிக்கிறதே –
மெய்யில்– சீர் -திரு மேனி அழகைக் காட்டியே இப்படி கரணங்களை பண்ண வைத்தீர்-
ஐயன் -சம்பந்தம் -குணங்களும் இருக்க ப்ராவண்யம் வளர்வதில் என்ன ஆச்சர்யம் –
கண்ணும் காணும் சொல்லாமல் -காண கருதும் -பனி அரும்பு உதிருமாலோ- காரேய் கருணை -முதலிலே அருளிச் செய்தார்
இருந்து சதா -முக்கரணங்களுக்கும் எப்பொழுதும் இதனால்
சித்தம் சித்தாகி அல்லேன் என்று நீங்கி -முடியானையில் கரணங்கள் அவையாக – -ஒவ் ஒன்றும் மற்று ஒன்றின் கார்யம் விரும்பினது போலே –
தேஜஸ் சங்கல்பித்தது –நிமித்த காரணம் -உபாதான காரணம் –சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் –
தேஜஸை சரீரமாக கொண்ட ப்ரஹ்மம் சங்கல்பிக்க -தண்ணீரை சரீரமாக கொண்ட ப்ரஹ்மம் மாறும் –
ஞான சக்த்யாதிகள் சஹகாரி காரணம் -அங்கே சேதன சமாதி வராதே -ஸ்ரீ ஆழ்வார் கரணங்கள் போலே இல்லையே –

நையும் மனம் வுன் குணங்களை வுன்னி –
எபிஸ் ச சசி வைஸ் ஸார்த்தம் -என்கிறபடியே மநோ ரதித்துக் கொண்டு வந்த ஸ்ரீ பரத ஆழ்வானுடைய மநோ ரதம்
விபலமாய் போருகைக்கு உறுப்பாகையாலும் –
அனந்யா ராகவேணாஹம்-என்ற ஸ்ரீ பெரிய பிராட்டியை காட்டிலே விட உறுப்பாகையாலும் –
குணைர் தாஸ்ய முபாகத –என்ற ஸ்ரீ இளைய பெருமாளை த்யஜிக்கைக்கு ஹேதுவாகையாலும் –
ஸ்ரீ சர்வேஸ்வரனின் கல்யாண குணங்கள் கட்டடங்க ஆஸ்ரிதர்களுக்கு அவிஸ்ரம்ப ஜனகங்களாய் இருக்கும் –

அப்படி அன்றிக்கே –
பிரதி கூல்யத்திலே முறுகி லீலா விபூதியில் கிடக்கிற சேதனர் எல்லாரையும் உத்தரிப்பிக்க வேணும் என்று தீஷித்துக் கொண்டு
அவதரித்து அருளின தேவரீர் உடைய சௌசீல்ய சௌலப்ய வாத்சல்யாதி கல்யாண குணங்களை
என் மனசானது அனுசந்தித்து -அத்யந்த அபிநிவிஷ்டமாய் -தன்னிலே கிடந்தது சிதிலமாகா நின்றது
ஆஹ்லாத ஸீ த நேத்ராம்பு புளகீ க்ரத காத்ரவான் -சதா பர குணா விஷ்ட -என்று சேதனாய் இருக்குமவன்-
படும் பாட்டை படா நின்றது என்றார் –
அசேதனமான மனச்சு கூட உருகும்படி காணும் இவர் கல்யாண-குணங்களுடைய போக்யத்தை இருப்பது –

நையும் மனம் உன் குணங்களை எண்ணி –
இதனால் உட் கரணமாகிய மனம் ஈடுபட்டமை கூறப்பட்ட படி –
மனம் முதலிய கருவிகளை கர்த்தாவாக கூறியது -அவை ஸ்ரீ அமுதனாரை எதிர்பாராது –
தாமாகவே ஸ்ரீ எம்பெருமானார் திறத்து –பள்ள மடையாய் பாய்வதை காட்டுகிறது –
உன் குணங்களை –
தேவரீர் திரு மேனியைப் பற்றிய சௌந்தர்யம் முதலிய குணங்களை –
மேற் கூறப்படும்மற்றைக் கரணங்கள் திரு மேனியைப் பற்றியனவாகவே அமைதலின் இதுவும் அங்கனமே யாகக் கடவது –
இந்தப் பாசுரத்தை அடியொற்றி -இந்நிலையினை ஸ்ரீ மணவாள மா முனிகளும் –
நித்யம் யதீந்திர தவ திவ்யவபுஸ் ஸ்மிருதவ் மே சக்தம் மநோ பவது –ஸ்ரீ யதிராஜ விம்சதி -4 -என்று அருளிச் செய்து இருப்பது
இங்கு அறிவுறத் தக்கது ..
உன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் – 104- என்பர் மேலும் .

இனி திருமேனியினுடைய-அப்ராக்ருதமான தன்மையைக் காட்டிக் கொடுத்த – கருணை-வண்மை -முதலிய
பண்புகளையும் சேர்த்துக் கூறலுமாம் –
தன்னை நயந்தாரை தான் முனியும் ஸ்ரீ எம்பெருமானிலும்
கனியும் ஸ்ரீ எம்பெருமானார் உடைய சிறப்பைக் கருதி -உன் குணங்கள் -என்றார் .

என் நா இருந்து எம் ஐயன் இராமானுசன் என்று அழைக்கும்
அரு வினையேன் -என்றத்தை –
காகாஷி ந்யாயத்தாலே -பூர்வ உத்தர பதங்களோடு அந்வயித்து கொள்வது –

என் நா –
என்னுடைய ஜிஹ்வை யானது -அநாதி காலம் பிடித்து இவ்வளவாக விஷயாந்தரங்களிலே சக்தையாய் கொண்டு போந்து –
அசத் கீர்த்தன காந்தார பரிவர்த்த பாம் ஸூ லை -யான என்னுடைய ஜிஹ்வையானது –

இருந்து –
தேவரீருடைய கல்யாண குணங்களை அனுபவித்து -அவற்றிலே அத்யந்த அபிநிவிஷ்டையாய் ஒருப்படிப்பட இருந்தது –
இவ் வாகாரத்தை பிறப்பித்த தேவரீருக்கும் கூட அசைக்கப் போகாத படி-
நீர்வஞ்சி போலே ஏகாரமாய் கொண்டு இருந்து -என்னுதல் –

எம் ஐயன் –
அசந்நேவ ச பவதி -என்கிறபடியே அசத் கல்ப்பனாய் கிடந்த அடியேனை –
சந்தமேனம் ததோவிது -என்னும்படி ஒரு வஸ்து ஆகும்படி கடாஷித்த உபகாரத்தை அனுசந்தித்து –

சஹி வித்யாதஸ்தம் ஜநயதி – என்றும் –
குரூர் மாதா குரூர் பிதா -என்றும் –
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன் -என்றும் –
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம் -என்றும் –
தந்தை நல் தாய் தாரம் -என்றும் பிரமாண சஹஸ்ரத்தாலே சொல்லப்பட்ட பந்த விசேஷத்தை உட் கொண்டு –
நமக்கு நிரூபக பந்து பூதரானவர் -என்று தேவரீருடைய பாந்தவத்தையும் –

இராமானுசன் –
ஸ்ரீ சக்ரவர்த்தி திரு மகனுக்கு அநுஜராய் அவதரித்த போது –
நச சீதா த்வயா ஹீநா-நசா ஹமபிராகவா -முஹூர்த்த மபிஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத்த்ர்வ்–என்றும்-
ஸ்ரீ பிராட்டியை போலே அனந்யார்ஹராய் இருக்கையும் –
ஸ்ரீ பாகவத் ப்ரத்வேஷியான மேகநாதனை நிரசிக்கையும் -முதலான கல்யாண குணங்களில் ஈடுபட்டு –
அவற்றுக்கு பிரகாசமான இத் திரு நாமத்தையும் –

என்று அழைக்கும் –
மடுவின் கரையில் ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பெரும் மிடறு செய்து ஓலம் இட்டால் போலே சொல்லிக் கூப்பிடா நின்றது –
அழைத்தல் -கூப்பிடுதல் -தஸ் யுபிர் முஷி தேனிவ யுக்தமா க்ரந்தி தும்ப்ர்சம் –என்று ஸ்ரீ பகவத் விஷயத்தில்
அத் திரு நாமம் மறந்த போதாய்த்து கூப்பிட அடுப்பது –
இங்கு அப்படி அன்றிக்கே-அனுசந்தித்து கொண்டு இருந்த போதும் கூப்பிட வேண்டுகிறது –

புணரா நின்ற மரம் ஏழு அன்று எய்த ஒரு வில்-வலவாவோ –
புணரேய் நின்ற மரம் இரண்டின் நடிவே போன முதல்வாவோ -என்று அதீத காலங்களில் பண்ணின
அபதானங்களை அனுசந்தித்து பெரும் மிடறு செய்து கூப்பிட்டார் இறே ஸ்ரீ ஆழ்வாரும் –
தேவரீர் உடைய குண-அனுபவ ஜநிதையான ப்ரீதி தலை மண்டை இட்டு அடவு கெட கீர்த்தனம் பண்ணா நின்றது -என்றபடி –

என் நா விருந்து எம் ஐயன் இராமானுசன் என்று அழைக்கும் –
சொலப் புகில் வாய் அமுதம் பரக்கும் -43 -திரு நாமம் ஆதலின் ருசி கண்ட என் நா சொல்லி முடித்தோம் என்று ஒய்வுறாது-
ஒருபடிப்பட இருந்து ஸ்ரீ இராமானுசன் -என்னும் திருநாமத்தை சொன்ன வண்ணமாய் இருக்கும் -என்றபடி .
திரு நாமம் எவர் சொன்னாலும் இனிக்கும் -இதற்க்கு மேல் உறவு முறையும் அமைந்து விட்டாலோ கேட்க வேண்டியது இல்லை –
இவ்வினிமையோடு அவ்வினிமையும் சேர்ந்து பேரின்பம் பல்கா நிற்கும் அன்றோ –
ஆகவே என் நா ஸ்ரீ எம்பெருமானார் உடன் உள்ள உறவையும் அவர் திரு நாமத்தையும்
ஒருபடிப்ப்டச் சொல்லிக் கொண்டே இருக்கிறது -என்கிறார் .

எம் ஐயன் –
எங்களுடைய தகப்பன் –
துளப விரையார் கமழ நீண்முடி எம் ஐயனார் -ஸ்ரீ அமலனாதி பிரான் – 7- என்றது காண்க –
அறிவு ஊட்டி ஆளாக்கினவர் ஆதலின் ஐயன் எனப்பட்டார் –
சாஹிவித்யாதச்தம் ஜனாதி -அந்த ஆசார்யன் அன்றோ வித்யையினால் அந்த சிஷ்யனைப்-பிறப்பிக்கிறான் -என்று
வித்யையினால் ஞானப் பிறப்பு அளிக்கும் ஆசார்யனைத் தந்தையாகச் சொல்வதைக் காண்க –
அறியாதன அறிவித்த அத்தா -ஸ்ரீ திரு வாய் மொழி – 2-3 2- என்று ஸ்ரீ நம் ஆழ்வாரும்
ஆசார்யனை உடையவன் –ஸ்ரீ ஸ்வாமி –என்னும் சம்பந்த்தத்தை இட்டுப் பார்க்கிறார் .
ஏனைய தந்தை முதலியவர்களின் உறவு எற்பட்டமையின் குலையும்
ஆசார்யனாம் தந்தை வுடன் உண்டான உறவோ அங்கன் அன்றி நிரந்தரமாக நிற்பது -என்று அறிக-

ஸ்ரீ ராமானுசன் நெஞ்சே சொல்லுவோம் நெஞ்சே என்று ஆரம்பித்தார்-இதுவே பயன்-புருஷார்த்தம்-

அருவினையேன் கை தொழும் –
நானே நாநாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பாவமே செய்து பாவி யானேன் –என்றும்
ந நிந்திதம் கர்தமதஸ்தி லோகே சஹச்ர சோயம் நம யாவ்யதாயி -என்றும் –
யாவச் சயச் சதுரிதம் சகலச்ய ஜந்தோ ஸ்தாவஸ் சதத்ததி கஞ்சம மாஸ்தி சத்யம் -என்றும் சொல்லுகிறபடியே
அநாதி காலம் பிடித்து தேவரீருக்கு உரித்தான இக் கரணங்களைக் கொண்டு
அப்ப்ராப்த விஷயங்களுக்கே உரித்தாக்கி அத்தாலே அத்யந்த க்ரூர பாபங்களைப் பண்ணின என்னுடைய கையும்
இப்போது தேவரீருடைய கல்யாண குணங்களிலே சக்தமாய் தேவரீரைக் குறித்து-அஞ்சலி பந்தத்தைப் பண்ணா நின்றது –
பத்தாஞ்சலி புடா ஹ்ர்ஷ்டா நம இத்யேவ வா தி ந-என்னும்படியான ஸ்வேத த்வீப வாசிகளோடு தோள் தீண்டி யானார் காணும் இவரும் –

அரு வினையேன் கையும் தொழும்
அருவினையேன் -ஸ்ரீ எம்பெருமானார் திறத்து பயன்பட வேண்டிய கருவிகளை இதுகாறும் தகாத
விஷயத்திலே செலுத்தி -மகா பாபியானேனே -என்று தம்மை நொந்து கொள்கிறார் –

அரு வினையேன்–
இத்தனை நாளும் ஸ்ரீ அரங்கனுக்கு கைங்கர்யம் பண்ணி கொண்டு இருந்தார்-
இதுவே அரு வினையேன்–கொடு மா வினையேன்-ஸ்ரீ ஆழ்வார் சொல்லி கொண்டாரே–

கையும் தொழும் –
நா அழைப்பதோடு சேர்த்து கையும் தொழும்
உம்மை – தழீ இயது
ஸ்ரீ இராமானுசன் என்னும் நாம சங்கீர்த்தனம் பண்ணும் போதே கைகளும் கூம்பின –
மகர்ஷே கீர்த்த நாத்தச்ய பீஷ்ம ப்ராஞ்சலி ரப்ரவீத் -மகரிஷியான அந்த ஸ்ரீ வியாசருடைய பெயரை சத்யவதி சொன்னதனால்
ஸ்ரீ பீஷ்மர் கை கூப்பினவராய் பேசலானார் -என்னும் சிஷ்டாசாரத்தின் படி
நாம சங்கீர்த்தனம் கைகள் கூம்பின என்க –
இன்றும் ஸ்ரீ குருகூர் ஸ்ரீ சடகோபன் -என்று ஸ்ரீ திருவாய்மொழி ஓதும் பெரியவர்கள் கை கூப்புவதை காணா நிற்கிறோம் அன்றோ –
நா ஒருபடிப்பட இருந்து அழைக்கவே கையும் எப்பொழுதும் தொழா நிற்கும் -என்று அறிக

கண் கருதிடும் காண –
இவ்வளவும் விஷயாந்தரத்தை காண கருதின என்னுடைய கண்ணானது –
உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் -என்கிறபடியே அனுபாவ்யங்களான கல்யாண குணங்களால் பிரகாசியா நிற்கிற
தேவரீர் உடைய திவ்ய மங்கள விக்ரகத்தை பார்க்க வேணும் என்று மநோ ரதியாய் நின்றது –

கதாத்ர ஷ்யா மஹே ராஜன் ஜகத க்லேச நாசனம் – என்றும் –
காணுமாறு அருளாய் -என்றும் –
காண வாராய் -என்றும் –
கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா- என்றும்
நேத்ர சாத்குரு கரீச சதா -என்றும் –
பகவத் விஷயத்தில் ஸ்ரீ பரத ஆழ்வானும் -ஸ்ரீ ஆழ்வாரும் -ஸ்ரீ ஆச்சார்யர்களும் – அருளிச் செய்தால் போலே
இவரும் அருளிச் செய்கிறார் –
ரூபம் தவாஸ் து யதிராஜ த்ர்சோர் மமாக்ரே -என்னக் கடவது இறே –

அசேதனமான கண்ணை கருதிடும் -என்னக் கூடுமோ என்னில் –
காமார்த்தா ஹி பிரதி க்ர்பனா சேதனா சேதநேஷூ -என்று சொன்னால் போலே
பிரேம பாரவச்யத்தாலே சேதன சமாதியாக சொல்லத் தட்டு இல்லை இறே –

கண் கருதிடும் காண –
உன் குணங்களை என்றும் உன் வண்மை என்றும் நேரே நின்று பேசுபவர் கண் காணக் கருதும் என்பது
இன்று போல் என்றும் காணக் கருதும் என்னும் கருத்துடைத்து –
இனி கை தொழும் -என்றது போலே கண் காணும் -என்னாது காணக் கருதும் -என்றது குறிக் கொள்ளத் தக்கது –
நேரே காணும் காலத்திலும் –
கண்ட கண்கள் பனி யரும்புதிருமாலோ என் செய்கேன் -ஸ்ரீ திரு மாலை 18- – என்றபடி –
ஆனந்தத்தினால் கண்ணீர் சொருதளால் காண முடியாமை பற்றிக் கண் காணக் கருதுவதாகக் கூற வேண்டியது ஆயிற்று -என்க –
தன் கருத்தை தன் கருவியாகிய ஸ்ரீ கண்ணின் மீது ஏற்றி -கண் கருதிடும் -என்றார் -உபசார வழக்கு –
இதனால் ஸ்ரீ எம்பெருமானார் இடத்தில் தமக்கு உள்ள ஆர்வ மிகுதியை காட்டினார் ஆயிற்று –
ரசிகரான தம்மைப் போலே தனியாகத் தம் கருவிகளும் ஆர்வமுடையன வாம்படி ஸ்ரீ எம்பெருமானார்-விஷயத்தில் உட் புக்கபடி இது –
உன்னை மெய் கொள்ளக் காணக் கருதும் என் கண்ணே -ஸ்ரீ திரு வாய் மொழி – 3-8 4- – என்னும்-
ஸ்ரீ நம் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியை இங்கே நினைவு கூர்க-

கடல் புடை சூழ் வையம் இதனில் –
கடல்களுடைய புடைகளால் சூழப்பட்ட இந்த பூமிப் பரப்பு எல்லாம் வியாபித்து இருக்கிற
சமஸ்த சேதனரும் உண்டாய் இருக்க –

உன் வண்மை –
சமஸ்த சேதனரையும் உத்தரிப்பிக்கைக்காக தீஷிதராய் வந்து அவதரித்த தேவரீர் உடைய ஔ தார்யம்
என்னை மாத்ரம் இப்படி ஈடுபடும் பண்ணுகை அன்றிக்கே
என்னுடைய கரணங்களும் தனித் தனியே ஈடுபடும் பண்ணின தேவரீர் உடைய ஔ தார்யம் -என்றபடி-

ஒவ்தார்யம் தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்த சுவாமிக்கும் உடைய ஔ தார்யம் -என்றபடி-

என்பால் என் வளர்ந்ததுவே –
அடியேன் ஒருவன் இடத்திலும் மேன்மேலும் கிளர்ந்து அபி வ்ர்த்தமாய் செல்லா நின்றது –
இதுக்கு ஹேது என்ன –
நான் அஞ்ஞன் ஆகையால் அறிய மாட்டேன் –
அறிக்கைக்கு ஏதேனும் நான் ஆர்ஜித்த கைம்முதல் உண்டோ -அது இல்லாமை அறிந்து அன்றோ அடியேன் தேவரீரை கேட்பது –
தேவரீர் சர்வஞ்ஞர் -தேவரீர் அறிந்தது ஏதேனும் உண்டாகில் அத்தை அருளிச் செய்ய வேணும் என்ன –
இதற்க்கு ஸ்ரீ எம்பெருமானார் ஒரு மாற்றமும் சொல்லக் காணாமையாலே நிர்ஹேதுகமாக இப்படி ஔ தார்யத்தை
பண்ணினார் என்று வித்தர் ஆகிறார் –

இந்த ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் பாட்டுத் தோறும் ஸ்ரீ எம்பெருமானாரின் வண்மையை கொண்டாடுகிறது
போஜன ரசம் அறிந்த ஸூகுமாரன் பிடி தோறும் நெய்யை அபேஷிக்கிறாப் போலே காணும்–

கடல் புடை சூழ் —வளர்ந்தது
சுற்றும் கடல் சூழ்ந்த இந்த நிலப் பரப்பிலே எத்தனை பேர்கள் இல்லை –
அவர்களுக்கு இத்தகைய ஈடுபாட்டினை விளைவிக்காது எனக்கு மட்டும் மட்டற்ற ஈடுபாட்டினை
விளைவிக்கும்படியான வள்ளன்மை வளம் பெற்றதற்கு என்ன காரணமோ என்கிறார் —

——————

அருவினையேன்

கொடு மா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது வல்லால்
விடுமாறு எனபது என்னந்தோ வியன் மூ வுலகு பெறினுமே—8-10-1-

சயமே அடிமை தலை நின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே–8-10-2-

உறுமோ பாவியேனுக்கு இவ் வுலக மூன்றுமுடன் நிறைய
சிறு மா மேனி நிமிர்ந்த எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறு மா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே–8-10-3-

கண்ட கண்கள் பனி யரும்புதிருமாலோ என் செய்கேன் -திரு மாலை 18- –

அறியாதன அறிவித்த அத்தா -திரு வாய் மொழி – 2-3 2-

துளப விரையார் கமழ நீண்முடி எம் ஐயனார் -அமலனாதி பிரான் – 7-

உணர்வில் உம்பர் ஒருவனை-உணர்வில் அவனை நிருத்தினேன் அதுவும் அவனது இன் அருளே-

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும் சீர்
அடியானேஎ! ஆழ் கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல் வண்ணா! அண்டத்து உம்பரில்
நெடியானேஎ! என்று கிடக்கும் என் நெஞ்சமே–3-8-1-

கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை
வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றிப்
பை கொள் பாம்பு ஏறி உறை பரனே! உன்னை
மெய் கொளக் காண விரும்பும் என் கண்களே–3-8-4-

சொலப் புகில் வாய் அமுதம் பரக்கும் -43

போந்ததென் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில் ஒண் சீராம் தெளி தேனுண்டமர்ந்திட வேண்டி–100

உன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் – 104-

அருளிச் செயல்களில் -கரணத்ரய அனுபவம்

தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -5

மாலை உற்று எழுந்து ஆடிப் பாடித் திரிந்து அரங்கன் எம்மானுக்கே மாலை உற்று இடும் தொண்டர் வாழ்வுக்கு
மாலை உற்றது என் நெஞ்சமே -பெருமாள் திருமொழி-2-8-

போதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன் -தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக் குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே-திருமாலை –26-

கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும் புந்தியேன்
மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன் -பெரிய திருமொழி -3-5-6-

உள்ளம் உரை செயல் -உள்ள இம் மூன்றையும் -இறை உள்ளில் ஒடுங்கே–திருவாய் மொழி –-1-2-8-

நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் -1-5-2-

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே
தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர் சடகோபன் –6-6-11-

சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திருவாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே –7-10-10-

நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே -10-5-5-

மனமாசு தீரும் அருவினையும் சாரா தனமாய் தானே கை கூடும்
புனமேய பூந்துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி தாம் தொழா நிற்பார் தமர் -முதல் திருவந்தாதி ––43-

நா வாயிலுண்டே நமோ நாரணா வென்று ஓவாது உரைக்கும் உரை உண்டே
மூவாத மாக் கதிக் கண் செல்லும் வகை யுண்டே இன்னொருவர் தீக்கதிக் கண் செல்லும் திறம் -95-

தா முளரே தம்முள்ளம் உளதே தாமரையின் பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே
வாமன் திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே அரு நரகம் சேர்வது அரிது -இரண்டாம் திருவந்தாதி –-21-

நாமம் பல சொல்லி நாராயணா வென்று நாம் அங்கையால் தொழுதும் நன்னெஞ்சே வா
மருவி மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய் கண்ணனையே காண்க நம் கண் -மூன்றாம் திருவந்தாதி -8-

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி
கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை யாங்கு -நான்முகன் திருவந்தாதி –-9-

வாழ்த்தி அவன் அடியைப் பூப் புனைந்து நின் தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத
பாழ்த்த விதி எங்குற்றாய் என்றவனை ஏத்தாது என் நெஞ்சமே தங்கத்தானாமேலும் தங்கி -பெரிய திருவந்தாதி -84

சார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்த தத் தாமரைத் தாள்களுக்கு உன்தன் குணங்களுக்கே
தீர்ந்த தென் செய்கை முன் செய்வினை நீ செய்வினையதனால்
பேர்ந்தது வண்மை யிராமானுசா ! எம் பெரும்தகையே !–71–

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –101-மயக்கு மிருவினை வில்லியிற் பூண்டு மதி மயங்கித் துயக்கும் பிறவியில்– இத்யாதி —

June 2, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி ஸ்ரீ எம்பெருமானாருடைய போக்யதையிலே நெஞ்சு வைத்தவாறே
முன்பு இவ் விஷயத்தில் தாம் பண்ணின பாவனத்வ அனுசந்தானம் அவத்யமாய்த் தோற்றுகையாலே-
நான் தேவரீருடைய பாவனத்வத்தை பேசினதானவிது தேவரீர் போக்யதையை அனுசந்தித்து இருக்குமவர்களுக்கு
அவத்யம் என்று சத்துக்கள் சொல்லுவார்கள்-என்கிறார்

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டிலே
ஸ்ரீ எம்பெருமானாருடைய போக்யதையிலே –அருவினையேன் வன் நெஞ்சு –என்னும்படியான தம்முடைய திரு உள்ளமானது –
ஈடு பட்ட படியைச் சொல்லி –
இப்பாட்டுக்கு கீழ் பல-இடங்களிலும் –
தீதில் இராமானுசன் -என்றும் –
தூயவன் -என்றும் –
எங்கள் இராமானுசன் -என்றும்-
தாம் அனுபவித்த பாவநத்வத்தை ஸ்மரித்து -இந்த போக்யதைக்கும் -அந்த பாவனத்வத்துக்கும் – நெடு வாசி உண்டாகையாலும் –
இப்படி இருந்துள்ள இவ்விஷயத்துக்கு அது அவத்யமாய் தலைக் கட்டுவதாலையாலும்
அப்போது அத்தை தப்பைச் சொன்னோம் -அத்தாலே அவர்க்கு என் பக்கல்-ப்ரீதி மட்டமாய் போகிறதோ என்று திரு உள்ளம் புண்பட்டு –
இதிலே –
பந்தாயா விஷயா சங்கி -என்னும்படியான மனசை உடையனான -தீரக் கழிய செய்த துஷ் கர்மத்தாலே –
ஜன்ம பரம்பரைகளில் தட்டி திரியா நிற்கிற என்னை
அந்த துஷ் கர்ம பலமான ஜன்ம பரம்பரையாகிற துக்கத்தைப் போக்கி உஜ்ஜீவிக்கும் படி கைக் கொண்டு
கிருபை பண்ணியருளின ஸ்ரீ எம்பெருமானாரே என்று –
தேவரீர் உடைய பாவநத்வத்தை கீழ் பல இடங்களிலும் நான் சொன்ன இது –தேவரீரை அனுசந்தித்து நீர்ப் பண்டம் போலே
சிதிலமாய் போமவர்களுக்கு அவத்யமாய் என்று ஞானாதிகரானவர்கள் சர்வ காலமும் சொல்லுவார்கள் என்று
ஸ்ரீ எம்பெருமானாரைப் பார்த்து விண்ணப்பம் செய்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

இங்கனம் ஸ்ரீ எம்பெருமானார் உடைய போக்யதையிலே நெஞ்சு படிந்ததும் -முன்பு தாம் அவர் திறத்து பண்ணின –
பாவனர் -தூய்மை படுத்துமவர் -என்னும் பாவனை குற்றமாகப் பட –
ஸ்ரீ எம்பெருமானாரை நோக்கி தேவரீரது போக்யதையிலே ஈடுபட்டு இருப்பவர்களுக்கு
நான் -பாவனர் -என்னும் பாவனையுடன் பேசினது குற்றமாக தோன்றும் என்று – நல்லவர்கள் சொல்லுவார்கள் என்கிறார்

மயக்கு மிருவினை வில்லியிற் பூண்டு மதி மயங்கித்
துயக்கும் பிறவியில் தோன்றிய வென்னைத் துயரகற்றி
உயக்கொண்டு நல்கு மிராமானுச என்ற துன்னை வுன்னி
நயக்கு மவர்க்கி திழுக்கென்பர் நல்லவ ரென்று நைந்தே – – 101- –

பத உரை –
மயக்கும் -அறிவு கேட்டினை உண்டு பண்ணும்
இரு வினை -புண்யம் பாபம் என்னும் இருவகைப் பட்ட கர்மங்கள் ஆகிற
வல்லியின் -பாசத்தாலே
பூண்டு -கட்டப்பட்டு
மதி மயங்கி -அறிவு கலங்கி
துயக்கும் -மனத் திரிவை உண்டு பண்ணும்
பிறவியில் -பிறப்பிலே
தோன்றிய என்னை -பிறந்த என்னை
துயர் -துன்பங்களை அகற்றி -போக்கி
உயக் கொண்டு -உய்யும்படி ஏற்றுக் கொண்டு
நல்கும் -விருப்பத்துடன் இருக்கும்
இராமானுச என்றது இது -ஸ்ரீ எம்பெருமானாரே என்று சொன்னதான இது
நைந்து -தேவரீர் இடம் ஏற்பட்ட ஈடுபாட்டினால் நைவுற்று
என்றும் -எப்பொழுதும்
நயக்குமவர்க்கு -விருப்பம் உடையவர்களாய் இருப்பவர்களுக்கு
இழுக்கு என்பர் -குற்றமாம் என்று சொல்லுவார்கள்
நல்லவர்-நல்லவர்கள் –

வியாக்யானம்-
அறிவு கேட்டை விளைக்குமதாய் -புண்ய பாப ரூபத்தாலே இருவகைப் பட்டு இருந்துள்ள கர்மமாகிற பாசத்தாலே –
கட்டுண்டு அறிவு கலங்கி -மனை திரிவை விளைப்பதான -ஜன்மத்திலே-வந்து ஜனித்த என்னை –
கர்ம பலமான துக்கங்களைப் போக்கி
(கர்மங்களை போக்கி என்று சொன்னால் இங்கே இருக்க முடியாதே -அதனால் துக்கங்களை போக்கி என்று காட்டி அருளுகிறார் )-
உஜ்ஜீவிக்கும்படி கைக் கொண்டு -என்னளவிலே ஸ்நேஹத்தைப் பண்ணி -அருளினவரே -என்று
தேவரீர் உடைய பாவனத்தை பேசினாதான இது -தேவரீரை அனுசந்தித்து சிதிலராய்
சர்வ காலமும் விருப்பத்தை பண்ணுமவர்களுக்கு –தண்மை என்று சொல்வார்கள் -சத்துக்களானவர்கள் .

நல்லவர் என்று தேவரீருக்கு ஸ்நேஹிகளானவர்கள்-என்னவுமாம்
(சொல்லும் சத்துக்கள் ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான் -நைந்து இருப்பவர்கள் பலரும் உண்டே )

இரு வினை வல்லியைப் பூண்டு -என்று பாடம் ஆயிற்றாகில் –
இருவகைப் பட்ட கர்மம் ஆகிற படத்தை கழுத்துப் புக்க வாயோடு போலே கழற்ற ஒண்ணாதபடி ஸ்வார்ஜனத்தால்
ஏறிட்டு கொண்டேன் -என்று பொருளாக கடவது .(வாயோடு –வாயில் ஒட்டிக் கொண்ட -பானை பகுதி என்றவாறு)

மயக்குகை -மதி மயங்க பண்ணுகை
துயக்குகையாவது -மனம் திரிவைப் பண்ணுகை
துயக்கு -மனம் திரிவு
நயக்குகை -விரும்புகை

மயக்கும் இரு வினை -என்று தொடங்கி-உயக்கொண்டு நல்குமிராமானுஷ -என்கிறதிது-
உன்னை உன்னி நைந்து என்றும் நயக்குமவர்கு இழுக்கு என்பர் நல்லவர் -என்று அந்வயம் –

அதவா
உயக் கொண்டு நல்கும் இராமானுசன் என்றதிது-உன்னை அனுசந்தித்து விரும்பும்
ஸ்வபாவராய் இருப்பார்க்கு தண்மை என்று சொல்லா நிற்ப்பர்கள் சத்துக்கள்
இதில் அசஹதையாலே சர்வகாலமும் சிதிலராய்க் கொண்டு -என்னவுமாம் ..

கருமுகை மாலையை சும்மாடு ஆக்கி அன்றோ அருளிச் செய்தேன் -தப்பைச் செய்தேன் என்கிறார்

வில்லியில் பூண்டு -பஷத்தில்
உய்ய ஒரே வழி ஸ்ரீ உடையவர் திருவடி பாவானத்வம் தானே சொல்லும் –-இது ஸ்ரீ கூரத் ஆழ்வான் போல்வாருக்கும் இழுக்காக முடியுமே-

சரம நிலையில் இது சரம நிலை-போக்யத்துக்கே ஸ்ரீ ஸ்வாமி திருவடி பற்றுவது-இந்த நிலை வருவதற்கு 101 பாசுரம் வேண்டி இருக்கிறது–
நைந்து -அனுபவத்தால் நைந்து என்றும் பாவானத்வம் சொன்னதால் நைந்தும் என்றுமாம் –
பாவானத்வம் அனுபவம் தாண்டி போக்யத்வம் அனுபவிக்கும் நிலை வந்த பின் அது அவத்யமாகவே தான் இருக்கும்
உன்னை நினைந்து நைந்து –திருக்குணங்கள் விட திரு மேனி என்றே காட்டு –
என்று நைந்து –என்றும் நைந்து-
எழுத்துக்கு கணக்கால் குறைத்து -சர்வ காலமும் போக்யமாக அனுபவித்து முடிக்காமல் இருக்கும் நல்லோர்-

மயக்கும் இருவினை வல்லியில் பூண்டு –
தத்வ ஹித புருஷார்த்த -தத் யாதாதம்ய ஞான விரோதிகளாய் -வைஷயிக வ்யாமோகத்தை உண்டாக்க கடவதாய் –
பொன் விலங்கு போலவும் இரும்பு விலங்கு போலவும் ப்ராப்தி பிரதிபந்தங்களாய் கொண்டு –
புண்ய பாப ரூபத்தாலே இருவகைப் பட்டு இருக்கிற கர்மமாகிற பாசத்தாலே கட்டுண்டு –
கழுத்திலே புக்க வாயோடு போலே கழிக்க ஒண்ணாதபடி காணும் ஆத்மாவை
(ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருமாலை வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகளை அப்படியே இங்கே எடுத்துக் காட்டி –
வாயோடு –வாயில் ஒட்டிக் கொண்ட -பானை பகுதி என்றவாறு-) இக் கர்மாவானது ஆவரித்து கொண்டு இருக்கும் படி –

மயக்குகை யாவது
மதி மயங்கப் பண்ணுகை –

இரு வினை வல்லியைப் பூண்டு -என்கிற பாடமான போது –
இரு வகைப் பட்ட கர்மமாகிற பாசத்தை ஸ்வார்ஜநத்தாலே ஏறிட்டு கொண்டு என்று பொருளாகக் கடவது –

மதி மயங்கி துயக்கும் பிறவியில் தோன்றிய என்னை –
அஞ்ஞானே நாவ்ர்தம் ஜ்ஞானம் தேன முஹ்யந்தி ஜந்தவ –-என்கிறபடியே –
அத்தாலே மதி எல்லாம் உள் கலங்கி -மனம் திரிவாகிற சம்சயத்தை பிறப்பிக்குமதான ஜன்ம பரம்பரைகளிலே
தோள் மாறிப் பிறந்து சர்வ லோக சாஷிகமாக சம்சரித்து போந்த என்னை

துயக்கு -மனம் திரிந்து -அதாவது சம்சயம் —
மயங்குகை -கலங்குகை –

மயக்கும் இருவினை வல்லியில் பூண்டு
வல்லியின் -வல்லியினால்
பூண்டு -செயப்பாட்டு வினை எச்சம்
வல்லியைப் பூண்டு என்றும் பாடம் உண்டு -அப்பொழுது தானாகவே கர்ம பாசத்தை தன்பால் ஏறிட்டு கொண்டு
என்று பொருள் ஆகிறது .
தானே தனக்கு நன்மையைத் தேடிக் கொள்பவன் போலே தானே தன்னை கர்ம பாசத்தால் கட்டிக் கொண்டு –
அதனைக் கழற்ற வழி தெரியாது தீமையை ஏறிட்டு கொண்டபடி –

உண்டு கழிக்க விரும்பினவன் -உண்ணும் போது கழுத்தில் புகுந்த வாயோடு கீழ் இழியவோ அன்றி
மேல் வரவோ மாட்டாமையால் -அதனை கழற்ற ஒண்ணாது -கஷ்டத்தை தானே ஏறிட்டு கொள்வது போன்றது இது என்பர் ஆசார்யர்கள் .
பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியதோர் இடும்பை பூண்டு -ஸ்ரீ திரு மாலை —5 –என்னும் இடத்து ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –
பூண்டு என்றது –
கழுத்தில் புக்க வாயோடு போலே தன்னால் கழற்ற ஒண்ணாது இருக்கை – என்று வியாக்யானம் செய்து இருப்பது காண்க .
அதனை அடி ஒற்றி ஸ்ரீ மண வாள மா முனிகள் இங்கே –
இருவகைப்பட்ட கர்மமாகிற பாசத்தை கழுத்துக்கு புக்க வாயோடு போலே கழற்ற ஒண்ணாதபடி ஸ்வார்ஜநத்தால்-
தான் தேடிக் கொள்வதால் -ஏறிட்டுக் கொண்டேன் என்று பொருளாக கடவது -என்று உரைத்தார் ..

மயக்கும் இருவினை -சப்தாதி விஷயமான சிற்றின்பங்களை பேரின்பங்களாக காட்டி மயங்கச் செய்வன-
புண்ய பாப ரூபமான கர்மங்கள் -என்றபடி .
மதி மயங்கி -மயக்கும் வினைகளால் கட்டுண்ட படியால் மதி மயங்கிற்று -என்க.
மதி மயக்கம் -புத்தி கலக்கம்
தயக்கம் பிறவி -மனம் திரிவுறும்படி செய்யும் பிறப்பு .
மனம் திரிவுறுதலாவது – ஒன்றிலே மனம் துணிந்து -நிலை நில்லாமை -அதாவது ஐயப்பாடு

துயர் அகற்றி உய்யக் கொண்டு நல்கும் –
கர்ப்ப ஜன்மாத்யவஸ்தா ஸூ துக்கமத்யந்த துச்சகம் -என்கிறபடியே கேட்ட போதே நடுங்கும்படியான –
கர்ப்ப ஜென்மாதி துக்கத்தை வாசனையோடு ஒட்டி –
ஆத்மா நாத்மா விவேகத்தையும் –
த்யாஜ்ய உபாதேய விவேகத்தையும் –
ஸ்வ பர சம்பந்த விவேகத்தையும் -அடைவே உண்டாக்கி -உஜ்ஜீவிக்கும்படி கைக் கொண்டு
என்னளவிலே அநிதரசாதாரனமான ஸ்நேஹத்தை பண்ணி யருளின

இராமானுசா என்றது –
ஸ்ரீ எம்பெருமானாரே என்று பரம பாவநராக நான் சொன்ன இது –

துயரகற்றி -கர்ம பலன்களாக வரும் துன்பங்களைப் போக்கி
உயக் கொண்டு நல்கும் இராமானுச என்றது இது –
உய –உய்ய -உஜ்ஜீவிக்கும்படியாக
கொண்டு -கைக் கொண்டு
தன்னைச் சேர்ந்தவனாக ஏற்றுக் கொண்டு -என்றபடி
நல்குதல்-அன்பு புரிதல்
கொண்டதற்கு வேறு எதுவுமே ஹேது அன்று -அன்புடைமையே ஹேது .-என்றது ஆயிற்று .
கர்ம சம்பந்த்தினாலாய துயரை அகற்றிக் கொண்டது என்பது –
பொல்லா ஒழுக்கினாலாகிய அழுக்கை நீக்கித் தன்னுடையவனாக ஆக்கிக் கொண்டமையை -கூறினபடி –
இதனால் ஸ்ரீ எம்பெருமானாருடைய பாவனத்வத்தை -தூய்மை படுத்தும் இயல்பை -சொன்னதாயிற்று .
தூயவன் தீதில் இராமானுசன் மாயும் என்னாவியை வந்து எடுத்தான் – 42- என்றும்
புன்மையினேன் இடைத் தான் புகுந்து தீர்த்தான் இருவினை -52 – என்றும்
பல கால் ஸ்ரீ எம்பெருமானாருடைய பாவனத்வத்தை இவர் தானே அனுசந்தித்தையும் நினைவு கூர்ந்து
அவை அனைத்தையும் சேரப் பிடித்து –என்றது இது -என்கிறார் .

உன்னை உன்னி நயக்குமவர்க்கு –
குரு ரேவ பர ப்ரஹ்ம குருரேவ பரம் தனம் -குருரேவ பர காம -குருரேவ பராயணம் –
த்யாயேஜ் ஜபேன் நமேத் பக்த்யா பஜே தப்யர்ச்ச யேத்முதா–உபாயோபேய பாவேன தமேவ
சரணம் வ்ரஜேத் –யஸ்ய தேவோ பராபக்திர் யதா தேவோ ததா குரவ்-என்கிறபடியே
கரண த்ரயத்தாலும்-தேவரீர் பக்கல் த்ரட அத்யாவச்யத்தை பெற்று தேவரீரை அனுசந்தித்து அதி ப்ரீதராய் இருக்குமவர்களுக்கு –

நயக்குகை -விரும்புகை –

இது இழுக்கு –
நால் தோள் அமுதே -ஆரா அமுதே -என்னுமா போலே -ஸ்ரீ இராமானுசன் எனக்கு ஆராமுதே – அடியேற்கு இன்று தித்திக்கும் –
என்னும்படியான நிரவதிக அதிசய ரசத்தை யாவதத்மா பாவியாக அனுபவித்து பிரீதனாய் இருக்க வேண்டி இருக்க –
அப்படிச் செய்யாதே சம்சார நிவர்த்தகத்வ மாத்ர உபகாரத்தை சொன்ன இது அவத்யம் என்று –

நல்லவர் என்றும் நைந்தே –
வாசா யதீந்திர மனசா வபுஷாச யுஷ்மத் பாதார விந்த யுகளம் – பஜதாம் குருணாம்–கூராதிநாத குருகேச முகாத்யுபும்சாம் -என்கிறபடியே
தேவருடைய போக்யதையை-சர்வ காலமும் அனுபவித்துக் கொண்டு போந்து நீர்ப்பண்டம் போலே சிதிலராய் இருந்த
ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ பிள்ளான் முதலான முதலிகள் –

என்பர் –
சொல்லுவார்கள் –

அன்றிக்கே –
உன்னை உன்னி நைந்து என்றும் நயக்குமவர்க்கு-இது இழுக்கு என்பர் நல்லவர் -என்று அன்வயிக்க்கவுமாம் –
அப்போது தேவரீரை அனுசந்தித்து சிதிலராய்-சர்வ காலமும் விருப்பத்தை பண்ணுமவர்களுக்கு தண்மை
என்றும் சொல்லுவார்கள் சத்துக்களானவர்கள் -என்றபடி –
நல்லவர் என்றது –
தேவரீருக்கு ஸ்நேகி யானவர் என்றுமாம் -தேவரீர் உடைய போக்யதையை அனுசந்தித்து-
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம்யதே வநியமே நமதன்வயானாம் -என்றும் –
அத்ர பரத்ரா சாபி நித்யம் யதீய-சரணவ் சரணம் மதீயம் -என்றும் –
ஸ்ரீ ராமானுஜச்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -என்றும் -சொல்லுகிற படியே-
தேவரீரை சர்வ பந்துவாக அனுசந்தித்து இருக்குமவர்களுக்கு –கநிஷ்டன் ஜ்யேஷ்டா அனுவர்த்தனம்-பண்ணாது ஒழிந்தால்
அவனுக்கு அது குற்றமாய் தலைக் கட்டுமா போலே -அவர்களைப் பின் சென்று கொண்டு-இருக்குமவர்களுக்கு-

உன்னி உன்னி நயக்குமவர்க்கு –என்றும் நைந்து
உன்னு உன்னி நைந்து என்றும் நயக்குமவர்க்கு -என்று இயையும்.
உன்னுதல்-நினைத்தால்

உன்னை –
நீண்ட பொன் மேனியும்-பற்பம் எனத் திகழ் பைம் கழலும் பல்லவம் ஏய் விரலும்
பைந் துவராடை பதிந்த மருங்கு அழகும் முப்புரி நூலோடு மேவிய மொய் யகலமும் முன் கையில் ஏந்திய முக்கோல் தன் அழகும்
துளசி மணி மாலையும் -தாமரை மணி மாலையும் -இழக்கும் கழுத்து அழகும் –
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்த முறுவல் நிலா அழகும்
கற்பகம் ஏய்ந்து கருணை பொழிந்திடும் கண் முகங்களின் அழகும் காரிசுதன் கழல் சூடிய முடி யழகும்-
வாயந்துள்ள தேவரீரை -எப்பொழுதும் இதயத்தில் உள்ளதாம்படி யான போக்யதை நிறைந்த தேவரீரை-என்றபடி .

உன்னி நைந்து –
நினைந்து நைந்து -ஸ்ரீ திருவாய்மொழி -1-5 2- என்றபடி நெஞ்சு நினைந்து உடலம் நெக்குண்டு போனபடி

என்றும் நயக்குமவர்க்கு –
போக்யதையின் மிகுதியால் அப்பொழுதைக்கு அப்பொழுது இனித்து இருத்தலின் நயக்குமவர் எப்பொழுதும் நயக்கின்ற்றனர் -என்க .

நயக்குமவர்க்கு இழுக்கு –
போக்யதையில் ஈடுபட்டவர்களுக்கு பாவனத்வத்தை பற்றிப் பேசுவது இழுக்காகாகத் தோற்றும் -என்றபடி
எடுத்த எடுப்பில் தோன்றுவது போக்யதை
தூய்மை எய்திய பின்னர்த் தெரிந்து கொள்வது பாவனத்வம்
போக்யதை காரணம் இன்றி அனுசந்திக்கப் படுவது
பாவனத்வம் -தூய்மைப் படுத்தும் காரணத்தை முன்னிட்டு அனுசந்திக்கப் படுவது
சாணிச் சாறு தூய்மைப் படுத்துவது -ஆதலின் அது தூயது ஆயின் அதனிடம் போக்யதை இல்லை –
அமுதம் இனியது போக்யதை வாய்ந்தது ஆயின் அதனிடம் பாவனத்வம் இல்லை
ஸ்ரீ எம்பெருமானார் இடமோ பாவனத்வம் -போக்யத்வம் -இரண்டுமே உள்ளன
ஆயினும் இவற்றுள் அமுதம் போலே இனியர் என்றே அனுபவிப்பது நன்று-
சாணிச்சாறு போலே பாவனர் என்று அனுபவிப்பது ஏதமே என்பது -நயக்குமவர்கள் கருத்தாகும் –

ஸ்ரீ நம் ஆழ்வார் -இனிய ஸ்ரீ எம்பெருமானை -கைவல்ய நிஷ்டர்கள் போக்யதை முன்னிட்டு பாராமே
அறவனை ஆழிப்படை அந்தணனை -திரு வாய் மொழி 1-7 1- -என்று தூய்மை படுத்துபவனாக
பார்ப்பதைக் குறை கூறியது – போன்றது இஃது என்க –

என்பர் நல்லவர் –
நல்லவர் -சத்துக்கள் -அன்புடையோர் -என்னலுமாம்
இனி
என்றும் நசிந்து என்பர் நல்லவர் -என்று இயைந்து உரைத்தலுமாம் –
அப்பொழுது உயக் கொண்டு நல்கும் இராமானுச -என்ற இதனை சஹிக்க மாட்டாமையாலே-
எல்லாக் காலத்திலும் நைந்து கொண்டே உன்னை நயக்குமவர்க்கு இழுக்கு என்பர்-நல்லவர் -என்றபடி

——————–

அறவனை ஆழிப்படை அந்தணனை -திரு வாய் மொழி 1-7 1-

தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லான் ஆயர் தலைவனாய்
இளவேறு ஏழும் தழுவிய எந்தாய்!’ என்பன் நினைந்து நைந்தே–1-5-1-

நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்–1-5-2-

நினைந்தும் பேசியும் நைந்தும் தப்பச் செய்தேன்,’ என்றார் முதற்பாட்டில்-
தப்பச் செய்தேன் என்ற இடம் தப்பச் செய்தேன் என்றார் இரண்டாம் பாட்டில்-

சினை ஏய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய்! சிரீதரா!
இனையாய்! இனைய பெயரினாய்! என்று நைவன் அடியேனே–1-5-6-

கையுள் நன்முகம் வைக்கும் நையும்–5-5-8-

பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியதோர் இடும்பை பூண்டு -திரு மாலை — -5–

மயக்கு மிருவினை வில்லியிற் பூண்டு மதி மயங்கித் துயக்கும் பிறவியில் தோன்றிய வென்னை

சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து மாயப் பற்று அறுத்துத்
தீர்ந்து தன் பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்–1-5-10-

இருமை வினை கடிவாரே–1-6-9-
கடிவார் தீய வினைகள் -1-6-10–
பிறவித் துயரற–1-7-1-
மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே -1-7-3-
ஓவாத் துயர் பிறவி -2-8-5-
ஈவிலாத தீ வினைகள் ஏத்தசனை செய்தனன் கொல்-4-7-3-

நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்து ஏங்க,
எண்ணாராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகியற்கை?–4-9-1-

சாமாறும் கெடுமாறும் தமர் உற்றார் தலைத் தலைப் பெய்து
ஏமாறிக் கிடந்து அலற்றும் இவை என்ன உலகியற்கை?–4-9-2-

புற மறக் கட்டிக் கொண்டு இரு வல் வினையார் குமைக்கும் முறை முறை யாக்கை–5-1-6-

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் துயர் இடும்பையில் பிறந்து -1-1-1-
தீவாய் வல் வினையார் உடன் நின்று சிறந்தவர் போல் மேவா வெந்நரகத்திட–6-2-8-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –100–போந்ததென் நெஞ்சு என்னும் பொன் வண்டு இத்யாதி —

June 2, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி தாம் உபதேசிக்கக் கேட்டு க்ருதார்த்தமாய் -தம்முடைய திரு உள்ளம் – ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே
போக்யதயை அனுபவத்தை ஆசைப் பட்டு-மேல் விழுகிற படியை கண்டு -அதின் ஸ்வபாவத்தை அவர்க்கு விண்ணப்பம் செய்து –
இனி வேறு ஒன்றைக் காட்டி தேவரீர் மயக்காது ஒழிய வேணும் – என்கிறார்

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டில் பிராப்தி நிமித்தமாக தளரா நின்ற தம்முடைய நெஞ்சினாரைக் குறித்து நாம்
சரம பர்வமானவரை ஒருக்கால் தொழுதோமாகில் நம்மை நம் வசத்தே காட்டிக் கொடார் என்று உபதேசித்து தேற்றி –
பூ லோகத்திலே பாஹ்ய குத்ருஷ்டிகள் வியாபித்து -லோகத்தாரை எல்லாரையும் அழிக்கப் புக்கவாறே
வேத மார்க்க பிரதிஷ்டாபன முகேன -அவர்களை எல்லாரையும் ஜெயித்து –
தமக்க கல்பக ஸ்த்தாநீயராய் இருந்த படியை சொன்னவாறே –
ஸ்ரீ ருக்மிணி பிராட்டியார் ஸ்ரீ கிருஷ்ணனுடைய வைபவத்தை கேட்டு அவனை வரிக்க வேணும் என்று துடித்தால் போலே –
இவருடைய திரு உள்ளமானது ஸ்ரீ எம்பெருமானார் உடைய திருவடித் தாமரைகளில் உள்ள மகரந்தத்தை வாய் மடுத்து பருகுவதாக
பிர்யன்காயமாநமாய் இருக்கிறபடியை கடாஷித்த ஸ்ரீ எம்பருமானார் உடன் அதனுடைய தசையை விண்ணப்பம் செய்து –
இனி வேறு ஒரு விஷயத்தை காட்டி என்னை தேவரீர் மயக்காது ஒழிய வேணும் என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

இங்கனம் தேற்றப் பெற்ற நெஞ்சு -ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே இன்பம் நுகர விழைந்து மேல் விழ-
அதனது இயல்பினை -ஸ்ரீ எம்பெருமானாருக்கு விண்ணப்பம் செய்து தேவரீர் வேறு ஒன்றினைக் காட்டி மயக்காது
ஒழிய வேணும்-என்கிறார் .

போந்ததென் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில் ஒண் சீ
ராம் தெளி தேனுண்டமர்ந்திட வேண்டி நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமானுச இதுவன்றி யொன்றும்
மாந்தகில்லாது இனிமற்றொன்று காட்டி மயக்கிடலே – – 100- –

பத உரை –
இராமானுச -ஸ்ரீ எம்பெருமானாரே –
என் நெஞ்சு என்னும் -என்னுடைய மனம் எனப்படும்
பொன் வண்டு -அழகிய வண்டு
உனது அடிப் போதில் -தேவரீருடைய திருவடியாகிற பூவிலே
ஒண் சீராம் -நற்குணங்கள் ஆகிற
தெளிதேன்-தெளிவான தேனை
உண்டு -பருகி
அமர்ந்திட வேண்டி -பொருந்தி அங்கேயே இருப்பதற்கு விரும்பி
நின்பால்-தேவரீர் இடம்
போந்தது -வந்தது
அதுவே -அது விரும்பின அந்த திருவடிப் பூவினையே
ஈந்திட வேண்டும் -கொடுத்தருள வேணும்
இது அன்றி -இந்த திருவடி பூவினைத் தவிர
ஒன்றும் -வேறு ஒன்றையும்
மாந்த கில்லாது -அனுபவிக்க மாட்டாது
இனி -நெஞ்சினுக்கு இந்நிலை ஏற்பட்ட பிறகு
மற்றொன்று -வேறொன்றை
காட்டி-காண்பித்து
மயக்கிடல் -மயங்கப் பண்ணாது ஒழிய வேணும்

வியாக்யானம்
என்னுடைய மனசாகிற அழகிய வண்டு -தேவரீருடைய திருவடிகள் ஆகிற பூவிலே
சைத்ய மார்த்த்வ ஸௌரப்யாதி கல்யாண குணங்கள் ஆகிற நிர்மலமான மதுவைப் பானம் பண்ணி –
அங்கே நித்ய வாசம் பண்ண வேணும் என்று தேவரீர் பக்கலிலே வந்தது –
அதி இச்சித்ததை ஒழிய மற்றொன்றைக் கொடாதே -அத்தையே தேவரீர் கொடுத்து அருள வேணும்
உடையவரே –-(ஸ்ரீ மா முனிகள் ஸ்ரீராமானுஜ பதார்த்தம் பாசுரம் தோறும் பொருத்தமான ஸ்ரீ எம்பெருமானார் உடையவர்
போன்ற சப்த பிரயோகங்கள் அருளிச் செய்கிறார் )
மற்றொன்றை கொடுத்தருளிற்றாகிலும் -அம்ருதாசிக்குப் புல்லை இட்டால் மிடற்றுக்கு கீழே இழியாதாப் போலே
ஈது ஒழிய வேறு ஒன்றையும் புஜிக்க மாட்டாது –
தேவரீர் நினைத்தால் அதுவும் செய்விக்கலாம் –
இனி வேறொன்றைக் காட்டி மயங்கப் பண்ணாது ஒழிய வேணும் .

அன்பாலதுவே ஈந்திட வேண்டும் -என்றும் பாடம் சொல்லுவர்
அப்போது என்னுடைய ஹ்ருதயம் தேவரீருடைய திருவடிகளில் போக்யத அனுபவ அர்த்தமாக-அங்கே போந்தது –
சிநேக பூர்வமாக அத்தையே கொடுத்தருள வேணும் -என்றபடி
போது -புஷ்பம்
மாந்தல்-உண்டல்
மயக்கம் -மோஹம்–

குணக்கடலில் மூழ்கி -வேறு சமயங்களை பேசி பொழுது போக்காமல் -வேறு ஒன்றைக் காட்டி மயக்காதீர்
வேறு என்று பரத்வத்தையே கழிப்பார் இவர் சரம பர்வ நிஷ்டையில் இருப்பதால் –
அமிர்தம் உம் திருவடியே -மற்று எல்லாம் புல் -/ மனம்– பொன் வண்டு — மஹா உபகாரங்களை அனுசந்தித்து –
ஷட்பதம் –கால் -சொற்கள் த்வயம் -உபதேசித்து -த்வயம் அர்த்தானுசந்தானம்-சர்வ காலமும் –சொன்னவரையே தாண்டாமல் –
ஸ்ரீ அரங்கன் திருவடியே தஞ்சம் என்று அடைந்த ஸ்ரீ மாறன் அடியே தஞ்சம் என்று இருந்த ஸ்ரீ இராமானுஜர் திருவடியே தஞ்சம் –

நீர்மையினால் அருள் செய்தான் தன் சரண் தந்திலன் தான் அது தந்து -சொல்லி விட்டேன்-அதனால் காட்டி மயக்காதீர் என்கிறார்
போக்கியம் இதில் –அடுத்த பாசுரம் -101- பாவனத்வம் அருளுவார்
அண்ணிக்கும் அமுதூரும் -போக்யத்வம் சொல்லி மேவினேன் அவன் பொன் அடி பாவனத்வம்-அருளியது போலே இங்கும்-

அனுபவம் முதலில் ஆச்சார்யர் கொடுக்க –பின்பு தான் இவரே உடைய என்று அறிகிறோம்
பொய்யிலாத ஸ்ரீ மணவாள மா முனி —பொய்யிலாத பொன் முடிகள் எய்த வெந்தை –பொய்ம்மொழி ஓன்று இலாத மெய்ம்மையாளன் –
ஸ்ரீ திருமங்கை யாழ்வார்-பொய்யா நாவின் மறையாளர் வாழும் இடம் ஸ்ரீ புள்ளம் பூதம் குடி -பொய்யில் பாடல் ஸ்ரீ திருவாய்மொழி –
அது போலே பொன் கற்பகம் என்பதால் பொன் வண்டு ஆகுமே நெஞ்சினாரும் –
விதித்தலால் திருவடியை த்யானம் பண்ணி நிற்காமல் ராக ப்ராப்தமாக அனுபவித்து நிற்கும் படி அடைந்த நெஞ்சை –
வேறே காட்டி மயக்கிடாமல் இதிலே ஸ்திரமாக நிற்கும் படி -பண்ணி அருள வேணும் –

போந்தது என் நெஞ்சு என்று தொடங்கி-இராமானுசா -எம்பெருமானாரே —என் நெஞ்சு என்னும் பொன் வண்டு –
தேவரீர் செய்து அருளின மகா உபகாரகங்களை அனுசந்தித்துக் கொண்டு இருக்கிற அடியேனுடைய மனசாகிற ஷட் பதம் –
பொன் வண்டு என்றது –
தாம் ஸ்ரீ மந்திர ரத்னத்தை அனுசந்தித்து கொண்டு இருக்குமவர் ஆகையாலே –
சகலம் காலம் த்வயேன ஷிபன் -என்றும் –
மந்திர ரத்ன அனுசந்தான சந்தஸ்புரிதாதாம்-என்றும் சொல்லுகிறபடியே
சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும் அனுசந்திக்கப்படுமது ஆகையாலே –
லஷ்மீ சஷூ ர நுத்யான தத்சாருப்ய முபேயுஷே நமோஸ்து மீ நவ புஷே -என்று அபி யுக்தரும் அருளிச்செய்த படியே –
தத்க்ரது ந்யாயத்தாலே ஷட் பதமான மந்திர ரத்னத்தை அனவரதம் அனுசந்தித்து கொண்டு போகிற தம்முடைய மனசுக்கும்
ஷட்பதத்வம் உண்டாக ப்ராப்தம் ஆகையாலே -சர்வ விலஷணமான வண்டு -என்றபடி –
இவர் எப்போதும் ஷட் பதத்தையே காணும் கொண்டாடுவது –

உனதடிப்போதில் ஒண் சீராம் தெளி தேனுண்டு அமர்ந்திட வேண்டி நின்பால்-
பாபக்ரியச்ய சரணம்-பகவத் ஷமைவ -சாதச்வயைவ கமலார மனேர்த்தி தாயத் ஷேமச்ச ஏவ ஹீய தீந்திர பாவச் ச்ரிதாநாம் – என்கிறபடியே
சமஸ்த சேதனரையும் -உத்தரிக்கைக்காக திருவரங்க செல்வனாருடைய -திருப் பொலிந்த-திருவடிகளிலே –
ஸ்ரீ ரெங்க நாச்சியார் முன்னிலையாக சரணா கதி பண்ணி யருளின தேவரீர் உடைய-திருவடி தாமரைப் பூவிலே –
சைத்ய மார்த்த்வ ஸௌ கந்தியாதிகளாகிற நிர்மலமான மகரந்தத்தை பானம் பண்ணி –
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்னுமா போலே நிழலும் அடி தாறும் போலே – இருக்கக் கோலி தேவரீர் சகாசத்திலே-

போந்தது –
ப்ராபித்தது -குரு பதாம் புஜம் த்யாயேத் -என்கிறபடியே தேவரீர் திருவடிகளை த்யானம் பண்ணி நின்றது -என்றபடி –

ஒண் சீர் –
அழகிய சீர் –

நின் பால் என்றது –
தேவரீர் திருவடிகளில் என்றபடி –பால் -இடம் –

அதுவே ஈந்திட வேண்டும் –
சஞ்சலமான என்னுடைய மனசு இச்சித்து நின்றவற்றை ஒழிய மற்று ஒன்றை காட்டாதே அத்தையே கொடுத்து அருள வேணும் –
தேவரீர் உடைய சரணாரவிந்த மகரந்தத்தை அனுபவத்தையே -ப்ராசதித்து அருள வேணும் என்று அபேஷித்து காணும் இப்படி விண்ணப்பம் செய்கிறார் –
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ச -ரசம் ஹ்யேவாயம் லப்த்வா நந்தீ பவதி – சர்வ கந்த சர்வ ரச –
உன் தேனே மலரும் திருப்பாதம் -என்றும்
தவாம்ர்த்த ச்யந்திநி பாத பங்கஜ -என்றும் சொல்லுகிறபடியே இது ஒழிய பரம போக்யமாய் இருப்பதொரு மது வேறு உண்டு –
அத்தைக் கொடுக்கிறோம் என்னில் -இது அன்றி ஒன்றும் மாந்த கில்லாது –

ஈதே இன்னும் வேண்டுவது எந்தாய் -என்கிறபடியே
எங்களுக்கு ரசிப்பது தேவரீர் உடைய திருவடிகளில் மகரந்தமே ஆகையாலே அத்தை ஒழிய வேறு ஒன்றை கொடுத்து அருளிற்று ஆகில் –
அமிர்தாசிக்கு புல்லை இட்டால் மிடற்றுக்கு கீழே இழியாதா போலே –என் நெஞ்சு என்னும் பொன் வண்டு அத்தை புஜிக்க மாட்டாது –
ஆகையாலே அதுவே ஈந்திட வேண்டும் என்கிறார் –

போந்தது –மாந்த கில்லாது
வண்டிகள் சபலமானவை –
தேன் நுகருவதர்க்காக பூக்கள் உள்ள இடம் நாடி அலைவன –
அதனாலேயே அவை ப்ரமரம்-சுற்றுவது சஞ்சரீகம் -அலைந்து கொண்டு இருப்பது -என்று பேர் பெற்றன –
அவை தேன் நிறைந்த தாமரைப் பூவை அடைந்திடின் அதனைத் தவிர ஏனைய மலர்களை கண் எடுத்து பார்க்குமா –
அது போலே என் நெஞ்சும் சபலமானது –
இன்பம் நுகர கிடைக்கும் இடம் எல்லாம் தேடி அலைவது –
அது ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் உள்ள மென்மை -குளிர்ச்சி மணம் அழகு -என்னும் இவற்றை நிரம்ப கண்டு -இன்பம் நுகர –
அதனை அடைந்த பின்னர் -மற்ற இன்பம் நுகரும் இடங்களை நுகர விரும்புமா என்கிறார் –

வண்டுக்கு தேன் தான் உணவு அது வன்றி மற்றொன்றை அது உட் கொள்ளாது –
மதுவ்ரதம் என்று அதனால் வடமொழியில் அதனை வழங்குகிறார்கள் –
நெஞ்சு என்னும் வண்டும் எம்பெருமானார் திருவடி மலரில் உள்ள குணங்கள் என்னும் தேனை உணவாகக் கொண்டு உள்ளது
மற்றொன்றை அது உணவாகக் கொள்ளாது .
வந்து தேன் நிறைந்த தாமரையில் -தேனை உண்டு அதனின்றும் நகராது -அங்கேயே அமர்ந்து விடுகிறது
நெஞ்சு என்னும் வண்டும் -இன்பம் நுகர்ந்து நகராமல் அங்கேயே அமர்ந்திட வேண்டி ஸ்ரீ எம்பெருமானார் திருவடித் தாமரையை வந்து அடைந்தது –

இங்கு
தவாம்ருத ச்யந்தினி பாத பங்கஜெநிவே தாத்மா கதமன்ய திச்சதி
ச்த்திதேரவிந்தே மகரந்த நிர்ப்பரே மதுவ்ரதோ நே ஷூரகம் ஹிவீ ஷதே -ஸ்ரீ ஆள வந்தார் ஸ்ரீ ஸ்தோத்ரம் – 27-
உன் அமுதம் ஒழுகும் திருவடித் தாமரையில் படியும்படி செய்யப்பட மனத்தை உடையவன்
மற்றதை எங்கனம் விரும்புவான் -வண்டு தாமரை தேன் நிறைந்ததாய் இருக்கும் போது முள்ளிப்பூவை
கண் எடுத்தும் பாராது அன்றோ -என்பது நினைவுறத் தக்கது .

உணவுள்ள நல்ல இடத்தில் வந்து சேர்ந்தமையின்-தம் நெஞ்சை -பொன் வண்டு -என்று கொண்டாடுகிறார்
பொற் கற்பகம் பூத்த அடிப்போதில் வந்து சேருவதும் பொன் வண்டாய் இருப்பது மிகவும் பொருந்துகிறது அன்றோ –
ஷட் பதமான ஆறு பதங்களைக் கொண்ட -த்வய மந்த்ரத்தை த்யானம் பண்ணிப் பண்ணி நெஞ்சும் ஷட்பதம்
ஆறு கால் உடைய -வண்டு ஆயிற்று –
ஸ்ரீ லஷ்மியினுடைய மீன் போன்ற கண்ணை த்யானம் பண்ணிப் பண்ணி
ஸ்ரீ பகவான் தானே மீன் ஆனது போலே என்று ரசமாக பணிப்பர் பிள்ளை லோகம் ஜீயர் –

போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு -என்று முந்துறப் போந்தமை கூறினமையினால் முந்துற்ற நெஞ்சு வாய்ந்தமை தோற்றுகிறது –
உண்டு அமர்ந்திட வேண்டி -என்றமையின் இதற்கு முன்பு நல்ல உணவு கிடைக்காமல் அலைந்து உழன்றமை தோற்றுகிறது .
நின்பால் போந்தது -என்று இயைக்க

அன்பால் அதுவே ஈந்திட வேண்டும் –என்ற பாடமான போது –
சினேக பூர்வகமாக அத்தையே கொடுத்து அருள வேண்டும் என்றபடி–அன்பால் -சிநேகம் —
மாந்தல் -உண்டல்

இனி அன்பால் என்றும் பாடம் உண்டு
அப்பொழுது அன்பால் ஈந்திட வேண்டும் என்று இயைப்பது –அன்பால்-அன்போடு அதுவே ஈந்திட வேண்டும் –
விரும்பின அதனையே கொடுத்தருளினால் அன்றோ புருஷார்த்தத்தை தந்தது ஆகும் -என்பது கருத்து .
குரு பாதாம் புஜம் த்யாயேத் –என்றபடி ஆசார்யன் திருவடித் தாமரையை த்யானம் செய்தல் வேண்டும் என்னும் கட்டுப் பாட்டிற்காக அன்றி –
தானாகவே என் நெஞ்சு அவாவுடன் எம்பெருமானார் திருவடி மலரில் உள்ள குணங்களுக்கு ஈடுபட்டு இடைவிடாது நினைத்து இருக்க முற்பட்டு விட்டது
அந்த குண அனுபவத்திலேயே மேலும் மேலும் திளைத்துக் கொண்டு இருக்குமாறு ஸ்ரீ எம்பெருமானார் தான் அருள் புரிய வேண்டும் என்று
அவரிடம் அதனைப் பிரார்த்தித்தார் ஆயிற்று –

இனி மற்று ஓன்று காட்டி மயக்கிடிலே –
இப்படியான பின்பு வேறு ஒரு விஷயத்தை காட்டி மோகிப்பிக்க வேண்டா –
மயக்கம் -மோகம் –
பகவத் விஷயத்தை என்று சொல்ல அருவருத்து மற்று ஓன்று காட்டி –என்று சொல்லுகிறார் காணும் –

மாந்த கில்லாது –
தேவரீர் நினைத்தால் அதுவும் செய்யலாம் இறே -ஆகிலும்-என் மனசு அந்த பிரசங்கத்துக்கு இசையாது –
ஆபிமுக்க்யத்தை கொண்டு இறே தேவரீர் கார்யத்தை செய்ய ஒருப்படுவது –
ஸ்திதேர விந்தே மகரந்த நிர்ப்பரே மதுவ்ரதே நே ஷூ ரகம் ஹி வீ ஷதே – என்று இவ் வர்த்தத்தை தேவரீர் திரு உள்ளம் பற்றி இல்லையோ –
தவாம்ர்தஸ் யந்தி நி பாத பங்கஜே நிவே சிதாத்மா கதமன்யதிச்சதி -என்று இவ்வர்த்தத்தை-
பிரதம பர்வத்தில் பரமாச்சார்யாரும் அனுசந்தித்தார் இறே –

இதுவன்றி ஒன்றும்மாந்த கில்லாது –
விரும்பின இத் தெளி தேன் அன்றி வேறு ஒன்றையும் இந்தப் பொன் வண்டு உணவாக உட் கொள்ள மாட்டாது –
தேன் உண்ணும் வண்டு மற்று ஏதுனும் உண்ணுமா
அம்ருதம் உண்பவர்களுக்கு புல்லிட்டுக் கட்டாயப் படுத்தினால் கழுத்துக்கு கீழே இறங்கி விடுமா

இனி மற்று ஓன்று காட்டி மயக்கிடிலே –
மற்று ஒரு விஷயத்தை பிரசங்கிப்பதும் செய்ய வேண்டா என்கிறார் –
பல நீ காட்டிப் படுப்பாயோ இன்னம் கெடுப்பாயோ –
நெறி காட்டி நீக்குதியோ-என்று நம் ஆழ்வாரும் இவ்வர்த்தத்தை பிரதம பர்வத்தில் அனுசந்தித்து அருளினார் இறே –

இனி மற்று ஒன்றை காட்டி மயக்கிடல்
தெளி தேன் அன்றி உண்ணாத -இயல்பினை அறிந்த பின்னும் தேவரீர் நினைத்தால் மற்று ஒன்றை
இது நல்ல தெளி தேன் என்று காட்டி மயக்கி உட் புகும்படி ஊட்ட முடியும் –
அங்கனம் செய்து அருளாது ஒழிய வேணும் -என்கிறார் .
தெளி தேனுக்கு மாற்றாக காட்டும்மற்று ஓன்று மது சூதநனின் தேனே மலரும் திருப்பாதம் -என்பது ஸ்ரீ அமுதனார் உட் கருத்து .
ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளின் இனிமையை உணர்த்தி என்னை மயக்கி விடக் கூடாது என்கிறார் .

ஸ்ரீ நம் ஆழ்வார் -ஸ்ரீ எம்பெருமானை –சிற்றின்பம் பல நீ காட்டிப் படுப்பாயோ -ஸ்ரீ திரு வாய் மொழி -6 9-9 — என்கிறார் =
இவர் ஸ்ரீ எம்பெருமானாரை மற்று ஓன்று காட்டி மயக்கிடல் என்கிறார் –
ஸ்ரீ எம்பெருமான் காட்டும் சிற்றின்பம் பல
ஸ்ரீ எம்பெருமானார் காட்டுவதோ பேரின்பமான ஸ்ரீ எம்பெருமான் என்னும் மற்று ஓன்று –
இதனால் தமது சரம பர்வ நிஷ்டையை வெளி இட்டு அருளினார் ஆயிற்று .

அனந்யார்க்க சேஷத்வம் -ஸ்ரீ எம்பெருமானாருக்கு அன்றி மற்று ஒருவருக்கு உரியர் ஆகாமை –
அநந்ய சரணத்வம் -ஸ்ரீ எம்பெருமானார் அன்றி வேறு உபாயம் இன்மை
அநந்ய போக்யத்வம் -ஸ்ரீ எம்பெருமானாரே நீ யன்றி வேர் ஒருவரையும் அனுபவிக்கத்தக்கவராக கொள்ளாமை
என்னும் ஆகார த்ரயமும் தன் பால் அமைந்து உள்ளமையை இங்கு ஸ்ரீ அமுதனார் காட்டும் அழகு ரசித்து அனுபவிக்கத் தக்கதாய் உள்ளது .

உனது அடிப் போதில் அமர்ந்திட -என்றமையின் -சேஷத்வம் தெரிகிறது
உனது அடிப் போதில் என்னவே அமைந்து இருக்க -நின் பால் -என்று மிகை படக் கூறியது-
மற்றவர் பால் போதராது -நின்பாலே போந்து அமர்ந்திடலை வலி வுறுத்துவதால்-மற்றவருக்கு உரியர் ஆகாமை காட்டிற்று
அதுவே ஈந்திட வேண்டும் என்பதனால் ஸ்ரீ எம்பெருமானாரே இன்பம் தரும் உபாயம் என்பது பெற்றோம்-
உண்டு அமர்ந்திடப் போனது தானாகவோ அன்றிப் பிறர் மூலமாகவோ அல்லாமல்-ஸ்ரீ எம்பெருமானாராலேயே
அதனைப் பெற வேண்டி இருத்தலின் அவரன்றி வேறு உபாயம் இன்மை-தோற்றுகிறது .
இதுவன்றி ஒன்றும் மாந்த கில்லாது -என்று வெளிப்படையாகவே ஸ்ரீ எம்பெருமானார் அன்றி வேறு போக்கியம்-இல்லாமை சொல்லப் படுகிறது –
இப்படி ஆகார த்ரயமும் -சொல்லிற்று ஆயிற்று –
அநந்யார்க்க போக்யத்வம்-பிராப்யம் சொல்ல வந்த திரு மந்த்ரம் அர்த்தத்தை இதில் அருளினார்-

ஸ்ரீ மா முனிகள் ஸ்ரீ ஸ்வாமி வண்டு என்பர்—
ஸ்ரீ பெருமாள் வண்டு ஸ்ரீ ஆழ்வார் என்பர்-
ஸ்ரீ அமுதனார் தன் திரு உள்ளத்தை பொன் வண்டு என்கிறார் –
என் நெஞ்சு-முன்புற்ற நெஞ்சு -என்பதால் மம காரம்– மமகாரம் விட்டவரின் மம காரம்–

மற்று ஓன்று காட்டி மயக்காதே- மோகிக்காதீர்–ஸ்ரீ பகவத் விஷயம்- மற்று ஒன்றினை காணா-திவ்ய தேசங்கள் எல்லாம் கழித்தார்-
கற்ப்பார் ராமனை அல்லால் மற்றும் கற்பரோ/-இங்கு ஸ்ரீ கண்ணனை கழிக்கிறார்
உன் அடியார் எல்லாரோடும் -ஸ்ரீ ஆழ்வாரை கூட கழித்தார் -ஒக்க எண்ணி இருத்தீர் அடியேனை-ஸ்ரீ கலியன் ஸ்ரீ திரு இந்தளூர் பாசுரத்தில்–
மலையாள ஊட்டு போல அவர்
அச்சுவை பெறினும் வேண்டேன் -ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்
இப்படி அறுவர்–ஸ்ரீ ஆழ்வார்–ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் –ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் -ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் –
ஸ்ரீ திருவடி-ஸ்ரீ அமுதனார் -அனுபவம் —

—————

அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா முன்
அருள் ஆழிப் புட் கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று
அருள் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
யருள் ஆழி வரி வண்டே! யாமும் என் பிழைத்தோமே–1-4-6-

மானேய் நோக்கி மடவாளை மார்பிற் கொண்டாய் மாதவா!
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!
வானார் சோதி மணி வண்ணா! மது சூதா! நீ அருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே–1-5-5-

நெஞ்சமே! நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்–1-10-4-

ஏறேல் ஏழும் வென்று, ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி!
தேறேல் என்னை;உன் பொன்னடி சேர்த்து ஒல்லை;
வேறே போக எஞ்ஞான்றும் விடலே–2-9-10-

அச்சுதன் அமலன் என்கோ அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மா மருந்தம் என்கோ நலம் கடல் அமுதம் என்கோ
அச்சுவைக் கட்டி என்கோ அரு சுவை யடிசில் என்கோ
நெய்ச்சுவைத் தேறல் என்கோ கனி என்கோ பால் என்கோ-3-4-5-

மனிசரும் மற்றும் முற்றுமாய் மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னைத் தடங்கடல் சேர்ந்த பிரானைக்
கனியைக் கரும்பின் இன் சாற்றைக் கட்டியைத் தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார் முழுது உணர் நீர்மையினாரே–3-5-6-

பூவை வீயா நீர் தூவிப்போதால் வணங்கே னேலும் நின் பூவை வீயா மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே -4-3-1-

பூசும் சாந்து என்னஞ்சமே புனையும் கன்னி எனதுடைய வாசகம் செய் மாலையே வான் பட்டாடையும் அக்தே
தேசமான அணி கலனும் என் கை கூப்பிச் செய்கையே ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே –4-3-2-

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வட பாலைத் திருவண் வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே–6-1-10-

மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க, எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே–6-2-5-

உண்ணி லாவிய ஐவ ராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணு கின்றாய்
எண்ணிலாப் பெரு மாய னே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே! என்னை ஆள்வானே!–7-1-1-

என்னை ஆளும் வன்கோ ஓரைந்திவை பெய்து இராப் பகல் மோது வித்திட்
டுன்னை நான் அணுகா வகை செய்து போதி கண்டாய்-7-1-2-

என் பரஞ்சுடரே! என்றுன்னை அலற்றி உன் இணைத் தாமரை கட்கு
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை வலித்து ஏற்று கின்றனர்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ!–7-1-10

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துல குண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை–8-4-11-

கற்ப்பார் ராமனை அல்லால் மற்றும் கற்பரோ–7-5-1-

கேட்ப்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ –705-3-

சிற்றின்பம் பல நீ காட்டிப் படுப்பாயோ – பல நீ காட்டிப் படுப்பாயோ இன்னம் கெடுப்பாயோ –
நெறி காட்டி நீக்குதியோ

என் நெஞ்சமே —வேங்கடம் மேவி —இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–-பெரிய திருமொழி–2-1-

இது கண்டாய் நன்னெஞ்சே இப்பிறவியாவது இது கண்டாய் எல்லாம் நாமுற்றது இது கண்டாய் நாரணன் பேரோதி
நரகத் தரு கணையா காரணமும் வல்லையேல் காண் -இரண்டாம் திருவந்தாதி ––66-

அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே -திரு விருத்தம் –-3-

ஆமாறறிவ்வுடைய ராவது அரிதன்றே நாமே யது வுடையோம் நன்னெஞ்சே பூ மேய
மதுகரமே தண் துழாய் மாலாரை வாழ்த்தாம் அது கரமே யன்பாலமை -பெரிய திருவந்தாதி ––37-

மூவரின் முதல்வனாய யொருவனை உலகம் கொண்ட கோவினைக் குடந்தை மேய குரு மணித் திரளை
இன்பப் பாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை யமர ர்சென்னிப் பூவினைப்
புகழும் தொண்டர் என் சொல்லிப் புகழ்வர் தாமே

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –99–தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும்- இத்யாதி —

June 2, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

நம்மை நம் வசத்தே விடுமே -மனமே நையேல் -என்றவாறே –
ஆனாலும் -ஜ்ஞான வ்யவசாயங்களை பங்கிக்கும் பாஹ்ய குத்ருஷ்ட்டி பூயிஷ்டமான தேசம் அன்றோ -என்ன –
ஸ்ரீ எம்பெருமானார் அவதரித்த பின்பு –அவர்கள் எல்லாரும் நஷ்டர் ஆனார்கள் என்கிறார்

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டிலே ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு -நம்மை நம் வசத்தே விடுமே -என்று இவர் மகா விச்வாசத்தோடே
சொன்னவாறே -அது சத்யம் -ஆனாலும் -சமயக் ஞானமும் -தத் அனுரூபமான அனுஷ்டானமும் -இவ்விரண்டையும் அடைவே
அறிவிப்பிக்க கடவதான வேதம் நடையாடாதபடி -அத்தை மூலை யடியே நடப்பித்துக் கொண்டு உபத்ராவாதிகளான
பாஹ்ய குத்ருஷ்டிகள் தனிக்கோல் செலுத்தும் தேசம் என்பது என்ன –
சமஸ்த புருஷார்த்த பிரதத்வத்தாலே -கற்பகம்-என்று சொல்லப்படுகிற ஸ்ரீ எம்பெருமானார் இந்த மகா பிர்த்வியில்
அவதரித்த பின்பு அப்படிப்பட்ட நீச சமய நிஷ்டர் எல்லாரும் சமூலகமாக நஷ்டமாய் போனார்கள் -என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

நம்மை நம் வசத்தே விடுமே -மனமே நையல் -என்று மனத்தை தேற்றினார் -கீழ் .
நம் வசத்தில் விட மாட்டார் என்னும் நம்பிக்கை குலையாமல் இருக்க வேண்டாமா –
பாஹ்யர்களும் குத்ருஷ்டிகளும் நிறைந்த இவ் உலகத்திலே அவர்களது சேர்க்கையாலே
அது குலைந்து விடில் என் செய்வது என்று -தம் மனம் தளர –
ஸ்ரீ எம்பெருமானார் அவதரித்த பின்பு அவர்கள் அழிந்து ஒழிந்தனர் -தளரற்க-என்கிறார் .

தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன்
சொற் கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே
பொற் கற்பகம் எம்மிராமானுச முனி போந்த பின்னே – – 99- –

தற்கச் சமணரும் -தர்க்கம் செய்யும் திறமையினால் தங்கள் மதத்தைக் காப்பவர்களான ஜைனர்களும்

சாக்கியப் பேய்களும் -பேய் போலே பிடித்த பிடியை விடாத பௌத்தரும்
தாழ் சடையோன் -தாழ்ந்த சடை உடையவனாகிய பசுபதியினுடைய
சொல் -சொல்லாகிய சைவ ஆகமத்தை
கற்ற -கற்றவர்களான
சோம்பரும் -சோம்பலுக்கு காரணமான தமோ குணம் வாய்ந்த சைவர்களும்
சூனிய வாதரும் -சூன்யமே தத்தவம் என்று வாதம் புரியும் மாத்யாமிக மதத்தவரும்
நான்மறையும் நிற்க -நான்கு வகைப்பட்ட வேதங்களும் பிரமாணங்களாக ஏற்கப் பட்டவைகளாய் இருந்த போதும்
குறும்பு செய் நீசரும் -தவறான பொருள்களை தம் இஷ்டப்படி கற்பனை செய்யும் ஈனர்களான குத்ருஷ்டிகளும்
பொற் கற்பகம் -விரும்பத் தக்க கற்பக விருஷம் போன்ற வாளால் தனம் வாய்ந்த
எம் இராமானுச முனி -எங்களுடைய எம்பெருமானார் ஆகிய முனிவர்
நீள் நிலத்தே -நீண்ட இவ் உலகத்திலே –
போந்த பின் -எழுந்து அருளின பின்பு
மாண்டனர் -நசித்து விட்டனர் .

வியாக்யானம் –
தருக்கினால் சமண் செய்து -ஸ்ரீ பெரிய திரு மொழி -2 2-7 – – என்கிறபடியே -தர்க்க சாமர்த்த்யத்தாலே
ஸ்வ மத பரிபாலனம் பண்ணுகிற ஆர்ஹதரும் –
சமணரும் சாக்கியரும் -ஸ்ரீ திரு வாய் மொழி -4-10 4- என்று அவர்களை எண்ணினால் இரண்டாம்
விரலுக்கு விஷயமாம் படி -அவர்களோடு தோள் தீண்டியாய் — பேய் போலே விடுதல் -பற்றுதலை-அறியாதே –
பிடித்ததை பிடித்துக் கொண்டு நிற்கிற பௌத்தரும் –
தன்னை ஈஸ்வரன் என்று லோகம் ஆராதிக்க வேணும் என்று -அதுக்கு ஈடாக -தீர்க்க ஜடாதரனாய்க் கொண்டு
சாதனம் அனுஷ்டித்து -பகவத் அனுமதியாலே -மோஹ சாஸ்திரங்களைப் ப்ரவர்த்திப்பித்த –
ருத்ரனுடைய வசனமான ஆகமத்தை அதிகரித்து இருக்கிற தாமசரான சைவரும் –
பிரமாண பிரமேய ப்ரமாதாக்களான இவை மூன்றும் இல்லை என்று சர்வ சூன்ய வாதம் பண்ணுகிற மாத்த்யாமிகரும் –
இவர்களைப் போல் அன்றிக்கே
ருகாதி பேதத்தாலே நாலு வகைப் பட்டு இருந்துள்ள வேதத்தை பிரமாணமாக அங்கீ கரித்து வைத்து –
திஷ்டத்சூ வேதேஷூ -என்கிறபடியே அது நிற்கச் செய்தே -அத்தோடு ஒரு சம்பந்தம் இல்லாத
அபார்த்தங்களைச் சொல்லி -மூலையடியே நடத்துகிற ப்ரஹீனரான குத்ருஷ்டிகளும் –

ஸ்ப்ருஹநீயமான -கல்பகம் போலே -பரமோதாரராய்-அது தன்னை நமக்கு பிரகாசிப்பித்தது அருளின ஸ்ரீ எம்பெருமானார்
மகாப்ருதிவியிலே எழுந்து அருளின பின்பு -முடிந்து போனார்கள் .
ஸ்ரீ பாஷ்ய முகேன-தத் மதங்களை பங்கித்து – அசத் கல்பம் ஆக்குகையாலே -அவர்கள் நஷ்டர் ஆனார்கள் என்று கருத்து –
சாக்கியர் என்றது -சாக்யர் -என்றபடி
மாத்யாமிகரும் சாக்கிய வர்க்கத்திலேயாய் இருக்க பிரித்து எடுத்தது தந் மத க்ரௌர்ய விசேஷத்தைப் பற்ற –

லீலா வியாபாரம் – வாதத்தால் பாஹ்ய குத்ருஷ்டிகளை முடித்து -அருளினார் –
நியாய சாஸ்திரம் -தர்க்கம் –ஜைனர்கள் -புத்தர்கள் -சாக்கிய பேய்கள் -பிடித்தத்தை கெட்டியாக விடாமல் இருப்பதே பேய் தனம் –
பேயாழ்வார் திருவை விடாதால் போலே -பிரமாதம் -கவனக் குறைவு —மாத்யமிகர் புத்தரின் உள் பிரிவு சர்வ சூன்ய வாதம்
கற்பக வருஷ வாகனத்தில் அரங்கனாகிய கற்பகம் எழுந்து அருளுவார் –
அனைத்தும் கொடுத்தாலும் தன் தாள் தந்திலன் அதிகாரம் கொடுத்து அரங்கன் தாள் பெற்று தரும் –
பொற் கற்பகம் எம் ஸ்ரீ இராமானுச முனி வேத மார்க்கம் பிரஷ்டாபனம்-செய்து அருளி –

ஞானம் அறிவு -அறிவாளி -அறியப்படும் பொருள் -க்ஷணம் நசிக்கும் என்று சொல்லும் மூன்று வகை புத்தர் இங்கே –
சொல்லி மேலே சர்வ சூன்யவாதி
சப்த வாதிகள் –இருக்கு -இல்லை -இருக்கும் இல்லை இரண்டும் சொல்லலாம் போலே –
பாஸ்கரன் கடாகாசம் பாடாகாசம் உபாதை -சரீரம் போனதும் ஒன்றாகும் –
ஸ்ரீ பாஷ்யாதி முகத்தால் இவர்கள் மாளும் படி பண்ணி அருளினார்-
செந்நெல் கவரி வீசும் -ஆராவமுதனுக்கும் திருக் குருகூரில் ஆழ்வாருக்கும் மட்டுமே –
9-மதங்களை காட்டி–காட்டாத -8-க்கும் உப லக்ஷணம் –மோக்ஷ பிரதத்வம் -தனியாக பிரித்து திண்ணன் வீட்டில் அருளி –
சம்ப்ரதாயம் -சாதித்து அருளினார் ஆழ்வார் –
கண்டது மெய் என்னில் காணும் மறையில் அறிவு கண்டோம் -கண்டது அல்லாது இல்லை எனில் –
சாஸ்திரமே கண் கண்டிலம் குற்றம் -பிரத்யக்ஷ வாதம் நிரசனம் கண்டது போலே வேதம் காட்டுமே -தேசிகன் -பரமத பங்கம் –
உண்டால் பசி போகும் என்பதும் அனுமானத்தாலே தானே -பிரத்யக்ஷம் இல்லை –சிலருக்கு பசி வர உண்ண வேண்டுமே –
பிரத்யக்ஷம் அனுமானம் விசுவாசம் இல்லாதவர் ஆப்த வாக்கியம் விஸ்வஸித்து -வேப்பம் கொழுந்து உண்டு –
ஆப்த தமர் மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் அன்றோ –

த்ரஷ்டம்–அதிரஷ்டம் -கண்ணால் பார்க்க வில்லையே என்றால் -லோகத்தால் இறப்பதும் பிறப்பதும் உண்டே –
ஜனத்தொகை கூட -பிரத்யக்ஷம் மட்டுமே உண்மை என்றால் -இருப்பவனே பிறக்க வேண்டுமே -சாஸ்திரம் சொல்வதும் உண்மையாகும்
சப்த பங்கி -மூ வேழு- நித்யாநித்யா – பின்னம் அபின்னம் – சத்ய அசத்ய -இப்படி மூன்றிலும் -ஸர்வத்ர சப்த பங்கி –
அஸ்தித்வம் -இருக்கும் தன்மை / இருக்கலாம் -மீதி வாதங்களுக்கும் இடம் -இல்லாத இடங்கள் உண்டு –
ஸியாத் நாஸ்தி -இல்லாமலும் இருக்கலாம் / சேர்ந்தும் ஸியாத் அஸ்திச்ச நாஸ்திச்ச –
ஸியாத் அஸ்திச்ச அவயக்யத்வஞ்ச சொல்ல முடியாமல் போகலாம் /இது போலே /

வைபாஷிகன் -ஜகத் பிரத்யக்ஷம் சித்தம் ஜகத் அது மட்டும் உண்டு –பரமாணு சங்காதம்-தத் விஷய ஞானமும் க்ஷணிகம் –
இதில் ஸ்திரத்தவ புத்தி சம்சாரம் -க்ஷணிக புத்தி மோக்ஷம் -என்பான்
நாஸ்தித்வ விசிஷ்ட ப்ரஹ்மம் -அஸ்தித்வ விசிஷ்ட ப்ரஹ்மம் –
உளன் எனில் உளன் அவ்வ்ருவுகள் அவன் உருவம் அவ் உருவுகள் –உளன் அலன் எனில் அவன் அறிவும் அவ் அருவிகள் –
அபாயம் -சூன்யம் -கட உத்பத்தி மண்ணுக்கு அபாவம் -அதனால் சூன்யம் – உத்பத்தியே அபாவம் -சொல்லி தர்க்கம் உக்தியாலே நிரசனம் –
சூன்யம் ஸ்தாபிக்க பிரமாணம் -அது உண்மையா பொய்யா -உண்மை என்றால் சர்வ சூன்யவாதம் நிரஸ்தம் –
ஸர்வதா அனுபவத்தே ச -மகாதீர்கதவாதிகரணம்–அணுவை பாகமாக்கலாம் வருமே –
அணு-சேர்ந்து த்வி அணு –நூல் சேர்ந்து வஸ்திரம் போலே -ஓட்டிக்காத்த பாகம் இருக்குமே -பேதிக்கமுடியாத ஸ்வரூபம் பாதிக்கும் –
பரமாணு -அவையாவும் இருந்தால் அதுக்கும் காரணம் இருக்க வேண்டு வருமே –
ஸூக துக்கங்கள் -பரமாணுவில் இருக்குமா ஆத்மாவிடத்தில் இருக்குமா -பிரதம கிரியா -எங்கு -யார் அனுபவிக்க –
நிர்விசேஷ ப்ரஹ்மம் -சின் மாத்ர ப்ரஹ்மம் -வாக்ய ஜன்ய ஞானத்தால் பிரம்மம் போய் மோக்ஷம் என்பான் –
சப்த வித அநுபவத்தை மகா பூர்வ பக்ஷம் -உபாதி கண்ணாடி போலே உபாதி -பாஸ்கரன் –
ப்ரஹ்மத்துக்கு சித் அசித் ப்ரஹ்மம் பகுதி அம்சம் என்பான் யாதவ பிரகாசம் –
நமுசி பிரக்ருதிகள் -விஷ்ணு பக்தர்களாக இருந்து வைத்தே இந்த்ராதிகளை –நலிய -விப்ரபத்தியை பிறப்பிக்க –
தம் பக்கல் உள்ள ஆதரவை நீக்கி சம்ஹரிக்க -ருத்ரனை ஏவி -மோஹனார்த்தாம் –
ஞாத்ருத்வம் ஜீவன் -கர்த்ருத்வம் பிரகிருதி -கண் தெரியாதவன் நொண்டி இருவரும் சேர்ந்தே -கபிலர் சாங்க்ய -நிரீஸ்வர சாங்க்ய –

தற்கச் சமணரும் –
தருக்கினால் சமண செய்து -என்கிறபடியே
பிரமாண அநு குணங்களாய் இருந்துள்ள தர்க்கங்களால் அன்றிக்கே –
ஸ்வ அபிநிவேச அநு குணங்களான தர்க்கங்களாலே ஒரு மதத்தை கல்பித்து -அத்தை பரிபாலித்து கொண்டு போருகிற ஆர்ஹதரும் –
அன்றிகே –தற்க்க சமணரும் –
பரமாணு-காரண வாதிகளாய் -பாஷாண கல்பா முக்தி -என்றும் சொல்லுகிற நையாயிக வைசேஷிகர்களும்-
வேத வைதிக பிரத்வேஷிகளுமான ஜைனரும் என்றுமாம் –
சமணரும் என்றது ஷபனகர் என்றபடி –

நையாயிகரும் வைசேஷிகரும்-தர்க்க பிரதான வாதிகள் ஆகையாலே –தர்க்க என்று அவர்களை-நிர்தேசிக்க தட்டில்லை –
சாக்கியப் பேய்களும் -வேத பாஹ்யரை என்னும் போது இரண்டாம் விரலுக்கு விஷயமாம் படி
ஆர்ஹதரோடு தோள் தீண்டியாய்-த்யாஜ்ய உபாதேய விவேக லேசம் இன்றிக்கே
க்ரஹீத க்ராஹி களான பௌத்தரும் —

தற்கச் சமணரும் –
பிரமாணத்துக்கு ஒத்து வராது -வெறும் தர்க்க பலத்தாலே தங்கள் கொள்கைகளைக் காப்பவர்களான ஜைனர்களும் – என்றபடி –
தருக்கினால் சமண் செய்து -பெரிய திரு மொழி -2-3-7 – -என்றார் திரு மங்கை மன்னனும் ..
உலகில் உள்ளவைகளாக நாம் காணும் பொருள்களை உள்ளவைகளும் அல்ல -இல்லாதவைகளும் அல்ல –
என்று முரண்பட்ட தன்மைகளை ஒரு பொருளின் இடத்திலேயே -அவர்கள் தர்க்க பலத்தினாலே ஸ்தாபிக்கின்றனர் –
தர்க்கம் என்பது எதுகை நயம் பற்றி –தற்கம் என்று ஆயிற்று .
ஷபனகர்-சமணர் எனப்படுகின்றனர் –

சாக்கியர் என்றது சாக்யர் என்றபடி –ஜைனர் ஆகிறார்கள் –
அங்கீ க்ர்த்யது சப்தபங்கி குஸ்ரிதம் ச்யாதஸ்தி நாஸ்த்யாதிகாம் விச்வம் த்வத்-விபவம் ஜகஜ்ஜி நமதே நேகாந்த மாச ஷதே –
என்கிறபடி கார்ய காரண ரூபேண ஜகத்து பின்னாபின்னமாயும் நித்யா நித்தியமாயும் -சத்யா சத்தியமாயும் இருக்கும் -என்றும் –

ச்வேதே ஹமா நாஹ்யாத் மநோமோஹாத் தேஹாபிமாநின – க்ர்மீகீடாதி பர்யந்தம் தேக பஞ்சரவர்த்தினா -என்கிறபடியே
ஆத்மாக்கள் -ஸ்வ ஸ்வ கர்ம அனுகுணமாக சரீரத்தினுடைய பரிணாமத்தையே தங்களுக்கும் பரிணாமாக கொண்டு இருப்பார்கள் -என்றும் –
பிராணி ஜாத மஹிம் சந்த மநோ வாக் காய கர்மபி -திகம்பராஸ் சரந்தஏவ யோகினோ
பிரம சாரிணா–மயூரபிஞ்ச ஹச்ஸ்தாச்தே க்ர்தவீராச நாதிகா – பானிபாத்ரேஷூ புஞ்சானா
லூனகேசாச்த மவ்நின-சதா ஷபன காசர்யா க்ர்தமந்தார துராசதா –குருபதிஷ்ட மார்கேன
ஜ்ஞான கர்ம சமுச்சயாத் –மோஷோ பந்த விரக்தச்ய ஜாயதே புவி கச்யசித் -என்கிறபடி
மல தாரண ஹிம்சாதிகளாலும் ஆத்மா ஞானத்தினாலும் பிரக்ர்தி விநிர்முக்தராய் ஊர்த்த்வ கதியை
ப்ராபியா நிற்கை மோஷம் என்றும்
வேதாந்த விருத்தார்த்தங்களை வாய் வந்த படி பரக்க சொல்லுமவர்கள் –

சமணர் என்றது சார்வாகரையும் கூட்டி -ஈட்டிலே இவரையும் சேரப் பிடித்து இறே எடுத்தது
அவர்கள் ஆகிறார்கள் -பிரதிவ்யாப ச்தேஜோ வர்யுரிவிதி தத்வானி -என்கிறபடியே –
பிரதிவ்யாதி பூத-சதுஷ்டயமே தத்வம் –ஆகாசாதி பூதாந்தரம் இல்லை -என்றும்
தேப்யஸ் சைதன்ய கிண்வாதிப்யோமதசக்திவத் -என்றும்-
க்ரமுகபல தாம்பூல தளாவயவாதி ஷூ பிரத்யேக வித்யமா நச்யாபி ராகச்யோ வாவயவி நிசம்யோக
விசேஷாத்தே ஹாரம் பக பரமாணு சம்ச்லேஷ விசேஷா தேவ தேக சைதன்யா விர்ப்பாவோ நா நுபன்ன –என்றும் சொல்லுகிறபடியே
ஸூரா பூரித சரம பஸ்த்ரிகையை ஆதபத்திலே வைத்தால் -சலனாதி விகாரங்கள்-தன்னடையே தோற்றுமா போலேயும் –
வெற்றிலையும் பாக்கையும் சுண்ணாம்பையும் சேரப் பிடித்து-மெல்லும் அளவில் ஒரு விசேஷம் பிறக்குமா போலேயும் –
அந்த ப்ரிதிவ்யாதி பூதங்களுடைய கூட்டரவிலே சைதன்யம் என்று ஒரு தர்மம் பிறக்கும் என்றும் –

ப்ரத்யஷ சம்யமேவாதி நாஸ்த்ய த்ரஷ்ட த- அதர்ஷ்டவாதி பிச்சாபி நாத்ர்ஷ்டம் த்ர்ஷ்டமுச்ச்யதே –
க்வாபித்ரஷ்ட ம த்ர்ஷ்டஞ்சே தத்தர்ஷ்டம் ப்ரவதேகதம் -நித்யாத்ர்ஷ்டம் கதம் சத்ச்யாத் சச்சஸ்ரின்காதி
சந்நிபம் -ந கல்ப்யன் சுக துக்காப்யாம் தர்மாதர்மவ்பரைரிஹா -ஸ்வபாவேந ஸூ கீ துக்கீ
பவேன்னான்யத்தி காரணம் -நிசிசக்ரே யேத் கோவாகொகிலாங்க பிரகூஜயேத் – ஸ்வபாவ வ்யதிரேகென
வித்யதே நாச்ய காரணம் – இஹலோகாத்பரோ நான்ய ஸ்வ ச்வர்கொஸ்தி நார்கோ நவா – என்கிறபடியே
ப்ரத்யஷ த்ர்ஷ்டமான அர்த்தமே உள்ளது -வேறு ஒன்றும் இல்லை –
அந்த சைதன்யத்துக்கு உண்டான ஸூ க துக்கங்களே ஸ்வர்க்க நரகங்கள் –
வேறு சில புண்ய பாபங்களும் -அவற்றால் உண்டான தர்மாதர்மங்களும் இல்லை என்றும் –
மோஷச்து மரண ம பிராண சம்ஜ்ஞவாயு நிவர்த்தனம் – அதஸ் தத்தர்த்தன் நாயாசம் கர்த்துர் மதி பண்டித -என்கிறபடியே அதனுடைய
புரிவாகிற மரணமே மோஷம் -அவ்வருகு ஒன்றும் இல்லை -என்று ஸ்ருதி விருத்த பிரக்ரியையை ஆக்கிரமித்து சொல்லுமவர்கள் –

நையாயிக வைசேஷிகர் ஆகிறார்-
அக்ஷபாதர் கணாதர் இருவரும் இந்த -மத ப்ரவர்த்தகர்கள் –
ப்ரத்யஷ அனுமான உபமான சப்தா பிரமாணா நி -என்றும் –
த்ரிதா பிரமாணம் ப்ரத்யஷ அனுமான ஆகமாதிதி -த்ரி ப்ரேதை பிரமானைஸ்து – ஜகத்க்ர்த் தரவகம்யதே –
தஸ்மாத் ததுக்த கர்மாணி குர்யாத் தஸ்யை வதர்ப்த்யே பக்த்யைவசார்ச்ய நீயோ ஸௌபகவான் பரமேஸ்வர-
தத் பிரசாத ந மோஷஸ் ஸ்யாத் காணோ பரமாத்மக-காணோ பரமேத்யாத்மா -பாஷாணவத வஸ்த்தித -என்றும் சொல்லுகிறபடியே –
பிரத்யஷாதிகள் நாலும் கூட பிரமாணம் என்றும் –
சப்தம் அனுமான வித்யா பிரமாணம் ஆகையாலே -பிரத்யஷாதிகள் மூன்றுமே பிரமாணம் என்றும்-
ஜகத்துக்கு உபாதான காரணம் பரமாணுக்கள் –ஆநுமானி கேஸ்வரன் நிமித்தகாரணம் என்றும்-
(சாக்ஷி சர்வேஸ்வரன் -குயவன் போலே தான் மண் போலே இல்லை -என்பர் )
சம்சாரம் அநாதி -ஈச்வராவ்பாஸ்தியாலே சுக துக்க ஞானங்கள் நசித்து -பாஷாண கல்பனாய் இருக்கை மோஷம்
யென்றும் உத்ப்ரேஷிக்குமவர்கள் –

சாக்கியப் பேய்கள் –
வேதத்தை பிரமாணமாக ஏற்காத நிலையில் அவர்களுக்கு ஒத்தவர்களான பௌத்தர்கள் பேசப்படுகின்றனர் –
சாக்கியர் -பௌத்தர்-
சமணமும் சாக்கியமும் -திருவாய் மொழி -4 10-4 -என்று சமணரை அடுத்து சாக்கியரை நம் ஆழ்வார் அருளிச் செய்தார்
அவர்களில் பலர் தள்ளுவதும் -கொள்ளுவதும் -தாம் அறியாது-குருவான புத்தர் உபதேசித்ததையும் -மீறித் தாம் கொண்ட
கொள்கைகளை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு இருத்தலின் –பேய் -எனப்பட்டனர் .
புத்தர் -தம் சிஷ்யர்களுக்கு சர்வம் சூன்யம் -என்று முதலில் உபதேசித்தார் .
நால்வகைப்பட்ட பாவனை -இடையறா நினைப்பினால் பரம புருஷார்த்தத்தை பெறுதல் வேண்டும் என்றும் உபதேசித்தார் –
இவ் உபதேசங்களைக் கேட்டவர்களில் சிலர் நான்கு வகைப் பட்ட பாவனையை ஏற்று –

சர்வமும் சூன்யம் என்னில் -வெளியில் உள்ள பொருள்கள் போலே உள்ளே உள்ள ஞானமும் சூன்யமாக நேரிடும் –
அங்கனம் ஆயின் உலகமே குருடாக்கி விடுமே -என்று வெளியில் உள்ள பொருள்களை மட்டும்உலகை -மட்டும் சூன்யம் என்று
இசைந்து –ஜ்ஞானத்தை உள்ளதாக கொண்டு –குருவினிடும் கேள்வி கேட்டு தாம் பிடித்த பிடியை விடாது நிலை நிறுத்திக் கொண்டனர் –
இவர்கள் யோகாசாரர் எனப்பட்டனர் –
குருவினிடம் கேள்வி -யோகம்-கேட்டமையினாலும் -அவர் சொன்ன நால் வகைப்பட்ட பாவனையை ஏற்று ஆசார -அனுஷ்டானத்தில் –
கொண்டமையினாலும் இவர்கள் யோகாசாரர் எனப்பட்டனர் –
நால்வகைப் பட்ட பாவனைகள் ஆவன –
எல்லாம் ஷணிகம் ::-துக்கம் ஸ்வ லஷணம் .சூன்யம் என்னும் நினைப்புக்கள் -ஷணிகமாவன ஷண நேரத்தில் அழிவன –
இந்த பாவனையினால் நிலையானவை என்னும் ப்ரமம் தொலைகின்ற்றது –
எல்லாம் துக்கம் என்னும் பாவனையினால் இன்புறுத்துமவைகள் என்னும் ப்ரமம் தவிருகிறது –
ஸ்வ லஷணம் என்னும் பாவனை யாவது எல்லாம் ஷணத்தில் அழியுமவை யாதலின் இன்ன பொருள் மாதிரி என்று
திருஷ்டாந்தமாக மற்றொரு பொருளைக் காட்ட இயலாமையின் -பொதுத் தன்மை இன்றி
ஒவ்வொரு பொருளும் -தன் தனக்கு என்று தனித் தன்மை வாய்ந்தது -என்று நினைத்தலாம் –
இதனால் பொதுவான தன்மை வாய்ந்தது என்னும் ப்ரமம் நீங்குகிறது -.சூன்யம் என்னும் பாவனையால்
சத்யமான -உண்மையான -பொருள் என்னும் ப்ரமம் ஒழிகின்றது –

மற்றும் சிலர் அறிபவனும் -அறியப் படுமவைகளுமான வெளிப் பொருள்கள் இல்லை -என்பது ஏற்புடைத்தன்று –
அவை உண்மையில் இல்லையாயின் -வித விதமான அறிவுகள் எங்கனம் ஏற்படக்கூடும் –
உண்மைப் பொருளாக கொல்லப்பட்ட அறிவின் விசித்திர தன்மையினால் அறியப்படும் பொருள்களும்
உண்மையில் உண்டு என்பது அனுமானத்தால் தெரிகின்றது என்றனர் –
இவர்கள் ஸௌத்ராந்திகர் எனப்படுகின்றனர் –
குரு சொன்ன சூத்ரத்திற்கு அனுமானத்தால் உலகு அறியப்படுவது என்னும் முடிவைப் பற்றி -கொண்டு நிற்பவர்கள் என்றபடி –
இனி சூத்ரம் எது பர்யந்தம் போகுமோ என்று கேட்டமையின் -இவர்களுக்கு அப் பெயர் எற்பட்டதாகவுமாம் –
சூத்ராந்தம் ப்ருச்சந்தீதி ஸௌத்ராந்திகா -என்று இதற்கு வ்யுத்பத்தி கண்டு கொள்க –
ப்ருச்ச தவ் சூஸ்நாதாதிப்ய-என்னும் வார்த்திகத்தின் படி -டக் -பிரத்யயம் வந்தது என்று அறிக -.

வேறு சிலர் -பொருள்கள் அனுமானத்தாலே அறியப்படுவன என்று கூறுவது தவறு – பிரத்யஷமே இல்லை என்பார்க்கு –
அதன் மூலமாக வர வேண்டிய அனுமானம் எங்கனம் பொருள்களை உள்ளவைகளாக சாதிக்க இயலும் –
பிரத்யஷத்தால் ஹேது சாத்தியங்களுக்கு வ்யாப்தியை கிரஹிக வேண்டாமோ –
நேரே கண்டு அறியும் -லோக அனுபவத்திற்கும் -அது முரண் பட்டது -எங்கனம் அனுபவ பலத்தாலே வெளிப் பொருள்கள்
ஒப்புக் கொள்ளப் படுகின்றனவோ -அங்கனமே ப்ரத்யஷ அனுபவத்தாலே -வெளிப் பொருள்கள் ப்ரத்யஷ பிரமாணத்திற்கு –
புலனாவன என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்கின்றனர் –
இவர்கள் உள் உள்ள ஞானமும் வெளிப் பொருள்களும் பிரத்யஷத்திற்கு புலனாய் இருக்க -சிலருக்கு வைராக்கியம்
உண்டாவதற்காக முதலில் எல்லாம் சூன்யம் என்று உபதேசித்தார் குரு –
ஞானத்தை மட்டும் உண்மையானது என்று கொண்டு பிடிவாதத்துடன் -வாதாடுபவர்க்கு ஞானம் தவிர மற்றவை சூன்யம் என்றார் .
ஞானத்தைப் போலே வெளிப் பொருள்களும் உண்டு என்று அடம் பிடிப்பார்க்கு –
வெளிப் பொருள்களும் உள்ளனவே யாயினும் -அவை அனுமானத்தினாலேயே அறியப்படுவன -என்றார்
இது விருத்தமான பேச்சு என்றனர் ..இதனால் இவர்கள் –வைபாஷிகர் –என்று பேர் பெற்றனர் –
வெளிப் பொருள்களும் பிரத்யஷமாக உள்ளனவேஎன்பது தவிர ஸௌ த்ராந்திகர்களுக்கும் இவர்களுக்கும் வேறு பாடு இல்லை .

இம் மூன்று திறத்தவர்களான பௌ த்தர்களும் குருவின் உபதேசத்தை முழுமையாக ஏற்காமல்
தங்கள் பிடிவாதப் பேயினால் ஆட்டப்படுதலின் –சாக்கியப் பேய்கள் -என்றார் .
இம் மூவருக்கும் எல்லாம் ஷணத்தில் அழிபவை என்பதிலும் -அவ் வண்ணமான ஞானமே ஆத்மா என்பதிலும் கருத்து வேறுபாடு இல்லை
ஆதலின் இம் மூவரும் ஒன்றாக எடுத்துப் பேசப்படுகின்றனர் –

ஸ்ரீ பட்டரும் -யோகாசாரோ ஜகத பல பத்யத்ர ஸௌ த்ராந்திக ஸ்தத் தீவை சித்ர்யாதனுமிதிபதம் வக்தி
வைபாஷிகச்து ப்ரத்யஷம் தத் ஷணிகயதி தே ரங்கநாதா த்ரயோபி ஜ்ஞானாத்மத்வ ஷணபிதுறதே
சஷதே தான் ஷிபாம – ஸ்ரீ ரங்க ராஜ ஸ்தவம் – -உத்தர சதகம் – 8- என்று
பௌ த்தர்கள் நால்வரில் யோகாசாரன் -உலகினை இல்லை என்று மறைக்கிறான் –
ஸௌ த்ராந்திகன் அவ் உலகினை ஞானத்தினுடைய விசித்திர தன்மையினாலே அனுமானத்தினாலே அறியத் தக்கதாகச் சொல்லுகிறான் —
வை பாஷிகனோ -பிரத்யஷமான அவ் உலகினை ஷணத்தில் அழிவதாக கொள்கிறான் –
அந்த மூவரும் ஞானத்தையே ஆத்மாவாகவும் -ஷணத்தில் அழிவதாகவும் சொல்லுகின்றனர் –
அவர் மூவரையும் தள்ளுகிறோம் -என்று இம்மூவரையும் சேர எடுத்து கண்டிக்கத் தக்கது காணத் தக்கது ..

தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும் –
தன்னை ஈஸ்வரன் என்று பிரமித்து லோகம் எல்லாம்-ஆராதிக்க வேண்டும் என்று -அதுக்கு தகுதியாக தீர்க்க ஜடையைத்
தரித்து கொண்டு -சாதனா-வேஷத்தோடு இருந்து -மோஹா சாஸ்தராணி காராய -என்கிறபடியே –
பகவத் அனுமதியாலே மோஹா சாஸ்த்ரத்தை-பிரவர்த்திப்பித்த ருத்ரனுடைய வசனமான ஆகமத்தை அதிகரித்து போந்து –
அதி தாமசராய் இருக்கும் பாசுபதரும் –

பௌ த்தரை எடுத்த உடனே பாசுபதரை எடுத்தது –அவர்களோபாதி இவர்களும் வேத பாஹ்யர் என்னும் இடம் தோற்றுக்கைக்காக –
(பசய்து அசமஞ்சஸ்யாத் -சாஸ்திரம் உடன் விரோதிக்கும் படியால் -)-
பிரதான காரணத்வா வுப்யுகம சாம்யாத் சாம்க்ய நிராச நந்தர பாவித்வே பாசூபத நிராசச்ய-ப்ராப்தே பிசதவ் கதா ஆர்
ஹதம நிராஸா நந்தரம் தத் பிரதிஷேப தச்யாத் யந்த வேத பாஹ்ய-த்வஜ்ஞாப நாயக்ர்தா -என்று சுருதி பிரகாசார்யரும் –
பத்யுர சமாஞ்ஜச்யாத் -என்கிற அதிகரணத்துக்கு சங்கதி-சொல்லும் பொழுது அருளிச் செய்தார் இறே-

அவர்கள் ஆகிறார் –
பிரதானம் ஜகத்து உபாதான காரணம் –ஆகம சித்த ஈஸ்வரன் நிமித்த காரணம் -என்றும் –
முத்ரி காஷாட் கதத் வஜ்ஜ பரமுத்ரா விசாரத பாகாச நஸ்த-மாத்மானம் த்யாத்வா நிர்வாணம் ர்ச்சதி -கண்டிகாருசி கஞ்சசைவ
குண்டலஞ்ச-சிகாமணி -பச்மயஞ்ச்ஜோப வீதஞ்ச முத்ராஷட்கம் பிரசஷதே -ஆபிர் முத்ரித தேஹச்து-நபய இஹா ஜாயதே –
ருத்ராஷ கங்கணம் ஹஸ்தே ஜடா சைகா சமஸ்தகே -காபாலம் பஸ்ம-நா ஸ்நானம் த்யானம் பிரணவ பூர்வகம் தீஷா
பிரவேசமா த்ரேன ப்ராஹ்மானோ பவதி-தத் ஷனாத்-காபாலம் வ்ரதமாஸ்த்தாய யதிர்பவதி மாநவ-என்றும்
சர்வஜ்ஜ ருத்ர ப்ரகோத்த தாஷர ராசியான ஆகமத்திலே சொல்லுகிறபடி முத்ரிகாஷட்க தாரண-பாகாச நஸ்தாத்மா த்யான
ஸூர கும்பஸ்தாபச்த தேவதார்ச்ச்சனா மூடாச்சார ச்மச்சான பசம ஸ்நான-பிரணவ பூர்வ கத்யா நாதி கர்ம அனுஷ்டானத்தாலே –
பசுபதி சாரூப்யத்தை பெருகை மோஷம் ஆகிறது என்றும்
ஸ்ருத்யத்ந்த விருத்தார்தங்களை அத்யந்தம் ஆதரித்து சொல்லுமவர்கள் –

தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும் –
தாழ் சடை -வினைத் தொகை –நீண்ட சடையை உடையவனாகிய ருத்ரன் -என்றபடி –
சடை தவக் கோலத்தை காண்பிக்கிறது -தன்னை ஈஸ்வரன் என்று உலகம் ஆராதிக்க வேணும் என்று
தவக் கோலத்துடன் தவம் செய்து இறைவனிடம் வரம் கேட்டு -அவன் அனுமதி பெற்று –
மோக சாஸ்திரம் ஆகிய சைவ ஆகமத்தை இயற்றி நடத்தினதாக பிரமாணங்கள் கூறுவது இங்கே அறியத் தக்கது .

தாழ் சடையோன் சொல்-சைவ ஆகமம் .
அதனை கற்றனரே யன்றி -அதனை இயற்றினவன் தவக் கோலத்தைக் கொண்டு உண்மையை அறியப் பெற்றிலரே -என்கிறார்
அங்கனம் அறியாமைக்கு ஹேது அவர்கள் சோம்பராய் இருத்தலே –
சோம்பர் -சோம்பலை உடையவர் –
சோம்பலுக்கு காரணமான தமோ குணம் வாய்ந்தவர் -என்றபடி -உபசார வழக்கு .
மாறுபட்ட உணர்வைத் தருவது -தமோ குணம் -என்க

சூனிய வாதிக்கும் சாக்கிய பேய்களுக்கும் இடையே சைவரை எடுத்தது
பௌ த்தர்களில் உள் பிரிவுகள் பல ஒன்றுக்கு ஓன்று முரண் பட்டவைகளாய் இருப்பினும் வேதத்திற்கு அவை அனைத்தும்
முரண்பட்டவை என்னும் தன்மையை முன்னிட்டு எவ்விதம் அவை அனைத்தும் புறக்கணிக்கப் படுகின்றனவோ –
அவ்விதமே சைவ ஆகம கொள்கைகளும் வேதத்திற்கு முரண் பட்டவைகளாய் இருத்தலின் புறக்கணிக்கத் தக்கனவே
என்பதை புலப்படுத்துகிறது .
உலகமாக மாறும் உபாதான காரணம் பிரகிருதி தத்வம் நிமித்த காரணம் ஆகமத்தாலே சித்தித்த ஈஸ்வரன் என்பது
சைவ ஆகம கொள்கை –
உபாதான காரணமும் -நிமித்த காரணமும் -வேதத்தில் சித்தித்த பரப் பிரம்மமாம் நாராயணனே என்பது வேதத்தின் கொள்கை –
வேத வியாச பகவானும் பிரகிருதி தத்தவத்தை உபாதான காரணமாக ஒப்புக் கொண்டு உள்ள –சாங்கிய மதத்தை கண்டித்தும் –
அக் கொள்கையினையே உடைய பாசுபத மதத்தை கண்டிக்காமல் விட்டு -முற்றிலும் வேதத்துக்கு புறம்பான வர்களான பௌத்த ஜைன
மதங்களைக் கண்டித்த பிறகு -பாசுபத மதத்தை கண்டிப்பது –
பௌத்த ஜைன மதங்கள் போன்று முற்றிலும் வேதத்துக்கு புறம்பானது பாசுபத மதம் என்பதை உய்த்து உணர வைக்கிறது .
இவ் விஷயம் ஸ்ருத பிரகாசிகையில் தெளிவாக உள்ளது ..
கள்ள வேடத்தைக் கொண்டு புத்தனாய் மோஹா சாஸ்த்ரத்தை ப்ரவர்த்தித்தது போன்றதே –
ருத்னனுக்கு அனுமதி அளித்து அவன் மூலமாக சைவ ஆகமத்தை ப்ரவர்த்திப்பித்ததும் என்பது
பௌத்த மத்தத்தவர் இடையே சைவரை வைத்து பேசிய அமுதனார் கருத்தாகும் .

சூனிய வாதரும் –
சூன்யமே ததுவ்வம் என்று சொல்லுகிற மாத்யாமிகரும் சாக்ய வர்க்கத்திலேயாய் இருக்க-பிரித்து எடுத்தது தந் மத க்ரௌர்யத்தைப் பற்ற –
பௌத்த மத ப்ரவர்த்தகர் –வைபாஷிகன் என்றும் – ஸௌ த்ராந்திகன் என்றும் -யோகாசுரன் என்றும் -மாத்யமிகன் -என்றும்
நாலு வகை பட்டு இருப்பார் இறே -இவர்களுள் முதலில் சொன்ன மூவர்க்கும் ஸ்வாப்யுபதகமாய் விஜ்ஞான ரூபமாய் இருக்கிற-
வஸ்துவினுடைய ஷணிகத்வம் சாமானமாய் இருக்கும் – பூத பௌதிகங்களும் சித்த சைத்தன்யங்களையும்-ஒழிய வேறு சில
ஆகமாதிகளை அவர்கள் அங்கீ கரித்தது இல்லை –

இவர்களிலே வைபாஷிகன் ஆனவன்-
வி பாஷை –மாற்றி பேசுவதால் வைபாஷிகன் –
பரமாணு சன்காதாத்மகமாய் பிரதிஷ சித்தமாய் கொண்டு இருக்கும் ஜகத்து என்றும் –
தத் விஷய ஞானம் ஷணிகம் என்றும் –
ஞான விஷயமான பாஹ்யார்த் தங்கள் எல்லாம் உத்பத்தி விநாசங்கள் உடன் கூடி இருக்கும் என்றும் –
ஷணிக விஞ்ஞான சந்தானமே ஆத்மா என்றும் –
இதில் ச்த்திரத்வ புத்தி சம்சாரம் -அச்த்திரத்வ புத்தி மோஷம் என்றும் சொல்லுமவன் –

ஸௌத்ராந்திகன் ஆகிறான் –
சூத்ர அந்தம் வரைக்கும் கேட்டவன்-என்றபடி –ஞானத்தில் ஸ்வ ஆகாரத்தை சமர்ப்பித்து -நஷ்டமே போந்த வர்த்தங்கள்-
எல்லாம் ஞானகதமான நீலாத்ய ஆகாரத்தாலே அனுமேயங்களாய் இருக்கும் என்றும் –
அர்த்தவைசித்த்ரயகர்தம்-ஞானவைசித்ரியம் என்றும் அனுமான சித்தம் ஜகத் -தத் விஷய ஞானம் ஷணிகம் –
அந்த ஷணிக விஞ்ஞானம் தானுமே-ஆத்மா –இதில் ச்த்திரத்வ புத்தி சம்சாரம் அச்த்திரத்வ புத்தி மோஷம் என்றும் சொல்லுமவன் –

யோகாசாரன் ஆகிறான் –
அர்த்தங்களைப் போலே சாகாராங்களாய் இருந்துள்ள ஞானங்களும் ஸ்வ மேயவிசித்தரங்களாய் இருக்கையாலே –
அர்த்தவைசித்யர்த்தத்தாலே ஞான வைசித்ரியம் சொல்ல ஒண்ணாது என்றும் ஞானமே உள்ளது
பாஹ்யார் தங்கள் ஒன்றுமே இல்லை என்றும் -அந்த ஞானம் ஷணிகம் என்று அறிகை மோஷம் என்றும் சொல்லுமவன் –
யோகாசாரோ ஜகாத பல பத்யந்திர ஸௌத்ராந்திகஸ்து ஈவைசித்ரியாத நுமதி பதம் வக்தி ஸௌ த்ராந்தி கஸ்து
ப்ரத்யஷம் தத் ஷணிக மிதே ரெங்கநாத திரையோ பஞ்ச்ஞாநாத் மகத்வ ஷன பு மூகேத சஷி தாந்தத் ஷிபாமா -என்று
சங்க்ரகேன இம் மூவருடைய மதங்களையும் உபன்யாசித்து அருளினாரே ஸ்ரீ பட்டரும் –

மாத்யாமிகன் ஆகிறான் –
பிரமாணமும் பிரமேயமும் பிரமாதாவும் இவை உண்டு என்று அறிவது ப்ரமம்-சூன்ய வாதம் ஒன்றுமே சுகத்துக்கு பராகாஷ்டை என்றும் –
கீழ் சொன்ன மூவரும் சித்த சைதன்யங்கள் உண்டு-என்றும் -ஷணிக விஞ்ஞானம் உண்டு என்றும் –
சிஷ்யனுடைய பிரதிபத்தி ஸௌ கர்யார்த்தமாக சொன்னார்கள்-இத்தனை என்றும் –
நசன் நாசன் நசதசத் நசாப்ய நுபயாத்மகம் -சதுஷ்கோடி விநிர்முக்தம் தத்வம் மாத்யமிகோவிது – என்கிறபடியே
சத்தும் இன்றிக்கே அசத்தும் இன்றிக்கே -சத் அசத்தும் இன்றிக்கே -சத் அசத் விலஷணமும் இன்றிகே –
இந் நாலு கோடியிலும் உத்தீர்ணமாய் இருப்பது ஒன்றே தத்வம் என்றும்
சூன்யத்தில் சூன்யம் என்று அறிகையே-மோஷம் என்றும் உத்ப்ரேஷிக்குமவன் –

சூனிய வாதியரும்
எல்லாம் சூன்யமே என்று வாதம் புரிபவரும் பௌத்தர்களே-இவர்கள் மாத்த்யமிகர் -எனப்படுகின்றனர் .
சிறந்த சீடர்களிடம் -யோகம் -ஆசாரம் -என்னும் இரு செயல்களும் இருத்தல் வேண்டும் –
யோகமாவது -மேலும் விஷயங்களை தெரிந்து கொள்வதற்காக குருவினிடம் கேள்வி கேட்பது .
ஆசாரமாவது -குரு சொன்னதைக் கேட்டு அதன்படி ஒழுகுதல் .
குரு முதலில் சொன்ன சர்வ சூன்யக் கொள்கையை ஏற்று அதன்படி ஒழுகினமையின் உத்தம சீடர்கள் ஆயினர் .
ஆயினும் மேலும் விஷயம் அறிந்து கொள்ள கேள்வி கேட்காமையினால் அவர்கள் அதமர்கள் ஆகி விட்டனர் .
ஒழுகினமையினால் உயர்வும் -கேள்வி கேளாமையினால் தாழ்வும் இவர்களிடம் சேரவே
நடுத்தரமான நிலையினை இவர்கள் எய்தினவர்கள் ஆகிறார்கள் –ஆகவே மாத்த்யமிகர் –
நடுத்தர நிலையினோர் -என்று இவர்கள் பேர் பெற்றனர் ..

மாத்த்யமிகர்கள் இங்கனம் கருதுகிறார்கள் –
சூன்யம் என்பதே முடிவான கொள்கை -புத்தர் உபதேசித்த ஷணிகம் துக்கம் ஸ்வ லஷணம் சூன்யம் –
என்னும் பாவனைகள் நான்கும் இம் முடிவு நிலை எய்துவதற்கே யாம் -நிலை நிற்பது இன்பம் தருவது
பொதுவான இன்னதன்மைத்து -சாத்தியமானது என்னும் ப்ரமம் நீங்குவதற்காக நான்கு பாவனைகள் உபதேசிக்கப் பட்டன –
உண்மையில் ஒரு பொருளையும் இன்னது என்று சொல்ல இயலாது –
சத் -என்னவும் முடியாது -சத் இல்லாத அசத் என்னவும் ஒண்ணாது –
சத்தும் அசத்துமானது என்று கூருவதர்க்குமியலாது
சத் அசத் என்னும் இப் பொருள்களிலும் வேறு பட்டது என்பதற்கும் இடம் இல்லை
குடம் முதலிய பொருள்கள் இயல்பினில் -சத் -ஆயின் -அவற்றை குயவன் மண் கொண்டு உண்டு பண்ண வேண்டிய அவசியம் இல்லை .
இனி இயல்பினில் -அசத் -இல்லாத பொருள் -ஆயின்அப்பொழுதும் குயவன் உண்டு பண்ண வேண்டிய அவசிமில்லை
ஆகாசத் தாமரையை யார் உண்டு பண்ணுகிறார்கள் –
மேலும் ஆகாசத் தாமரை கண்ணுக்கு தோற்றுவது இல்லை –இவைகளோ தோற்றுகின்றன
ஆகவே குடம் முதலிய பொருள்கள் இயல்பினில் சத் ஆனவை என்பதற்கோ -அசத் ஆனவை என்பதற்கோ வழி இல்லை –
முரண்படுதலின் சத்தாகவும் அசத்தாகவும் உள்ளன என்ன ஒண்ணாது –
இனி சத்தும் அசத்தும் இல்லாத தனிப் பட்ட பொருள்கள் என்பது -அத்தகைய பொருள்கள் எங்கணும் காணாமையாலே கூடாததாம் –
ஆகவே உலகில் உள்ள குடம் முதலிய பொருள்களைப் பற்றி வ்யவஹாரங்கள் ஸ்வப்ன உலகில் நடக்கும்
வ்யவஹாரங்கள் போன்றவைகளே .சூன்யமே தத்தவம் –
அறிவும் அறியப்படுமவையும் அறியுமவனும்-எல்லாம் சூன்யமே -அந்நிலையினை எய்துதலே முக்தி .

மாத்த்யமிக மதத்தைப் பற்றி ஸ்ரீ பட்டர் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவத்தில் சுருங்க கூறி அம்மதம் கூறு கூறாக கண்டிக்கத் தக்கது -என்கிறார் .
நசதசதுபயம்வா நோப யஸ்மாத் பஹிர்வா ஜகதிதி நகிலைகாம் கோடி மாடீ கதேதத் இதி நிருபதி
சர்வம் சர்விகாதோ நிஷேதன் வரத சூகதபாசச்சோர லாவம் விலாவ்ய -உத்தர சதகம் – – 6- என்று
வரம் தரும் அரங்கனே -உலகமானது சத்தாகவும் இல்லை -அசத் ஆகவுமில்லை-சத்தும் அசத்துமாகவும் இல்லை –
சத் அசத் என்னும் இரண்டிற்கும் புறம்பான தாகவும் இல்லை -ஆகையினால் அவ் உலகம் கீழ் சொன்ன நான்கினில்
ஒரு பொருளின் வகையிலும் சேர வில்லை யன்றோ -இங்கனம் இங்கே இப்பொழுது என்னும் வரையறை இன்றி யாதும் இல்லை என்று
மறுக்கும் கீழ் மகனான புத்தன் திருடனைப் போலே கூறு படுத்தி தண்டிக்கத் தக்கவன் -என்பது அவரது திரு வாக்கு .
யோகாசாரன் முதலியோர்களை தள்ளுகிறோம் என்றார் .
மாத்த்யாமிகனையோ தண்டிக்க வேண்டும் என்கிறார் –
இங்கே இப்பொழுது இது -என்று எல்லாம் குறிப்பிடாமல் கண்ணை மூடிக் கொண்டு எல்லாம் சூன்யம் என்பது ஏனைய பௌத்தர்
மூவரும் புரியும் குற்றத்திலும் மிகக் கொடியதாக தோற்றுதலின் ஆத்திரத்துடன் மாத்த்யாமிகரைக் கூறாக தண்டிக்க வேண்டும் என்கிறார் .
அமுதனாரும் சாக்கிய பேய்களிலும் சூன்ய வாதரின் கொடுமை மிகுந்து இருத்தலின் அது தோன்ற பிரித்து அருளிச் செய்தார் -என்க .
சாக்கிய பேய்களுக்கும் சகிக்க ஒண்ணாமையாலே அன்றோ அவைகளாலே சூன்ய வாதம் குருவான புத்தரிடமே ஏற்க ஒண்ணாது என்று மாற்றப் பட்டது –

நான் மறையும் நிற்க குறும்பு செய் நீசரும் –
அந்த பௌத்தாதிகளைப் போல் அன்றிக்கே -ரிகாதி பேதென நாலு வகைப்பட்டு இருந்துள்ள வேதங்களை பிரமாணமாக
அங்கீ கரித்து வைத்தும் – அவற்றுக்கு உப பிரமண உப ப்ரஹ்மிதங்களான தாத்பர்ய விஷய பூதார்த்தங்களைச் சொல்லாதே –
சர்வார்த்தான் விபரீதான்ஸ்ஸபுத்திச்சா பார்த்ததாமசீ -என்கிற தாமச புத்தியாலே -விபரீதார்த்தங்களை கற்பித்து –
அவற்றை மூலை அடியே நடப்பித்து லோகத்தாரை தம் தாமுடைய துஸ் தர்க்கத்தாலே மோஹிப்பித்து-
பிபேத் யல்ய ஸ்ருதாத் வேதோமாமயம் பிரத்யஷ்யதி –என்கிறபடியே வேத பிரதாரகர் ஆகையாலே – எதி ப்ரஹீனரான மாயாவாதிகளும் –

குறும்பு செய் நீசர் என்றது –
சங்கர பாஸ்கர யாதவர்கள் மூவரையும் சேரப் பிடித்து –அம் மூவருக்கும் பிரமாணம் பிரமேயம் ஒன்றாய் இருக்கும் இறே –
சங்கரன் ஆகிறான் –
சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் ஏகமேவாத்மதீயம் -என்கையாலே நிர்விசேஷ சின் மாத்ரமே பிரம்மம் -என்றும் –
ஏவம் ஜாக்ரத் பிரபன்ஜோயம் மயிமாயா விஜ்ம்ர்மித -என்கையாலே -இந்த பரிதர்சயமானமாய் இருந்துள்ள ஜகத்து
மாயா கல்ப்பிதமாய் மித்யா பூதமாய்-இருக்கும் என்றும் –
இந்த்ரோ மாயோ புரு ரூப ஈதியதே -என்கையாலே அந்த பிரம்மம் தானே மாயாசபளிதமாய்- கொண்டு –பிரமிக்கை சம்சாரம் என்றும் –
இத்தை கட்டி கொள்ளவும் சொல்லுகையாலே தத்வம்பதசேதி-வஸ்த்துக்களுடைய ஐக்ய பாவனையாலே –
அந்த ப்ரமம் போகை-மோஷம் -என்றும் சொல்லுமவன் –

பாஸ்கரன் ஆகிறான் –
அவித்யோ பப்ப்ரக்மிதம் பிரம்ம ஜீவ இத்யபிதீயதே -என்கையாலே-அந்த பிரம்மம் தானே புத்தி இந்திரியாதி ரூபமாய் –
சத்தியமாய் இருந்துள்ள –உபாதியோட்டை சம்சர்க்கத்தாலே ஜீவ பாவத்தை பஜித்து -பிரமித்து கொண்டு போருகை சம்சாரம்
ஜகத்து சத்யம் என்றும் – சத்யமான பந்தத்துக்கு ஜ்ஞான மாத்திர நிவர்த்தயம் கூடாது ஆகையாலே –
வித்யாஞ்சா வித்யாஞ்சா யஸ் தத்வே தோபயம்சஹா –வித்யயாம்ருத்யம் தீர்த்தவா வித்யயாம்ரத் தமஸ் நுதே -என்கையாலே –
ஸ்வ வர்ணாஸ்ரம தர்மோ பேதமாய் வேதமாய் –
தத்வமஸி – இத்யாதி வாக்ய ஜன்ய ஞான பூர்வகமாய் இருந்துள்ள உபாசனாத்மாக ஞானத்தாலே அந்த உபாதி நசித்தவாறே –
கடத்வம் சே கடகாசோ நபின்னோ நபசாயதா -என்று கடாத்யுபாதி நாச அநந்தரம் தத்வ சின்னமான ஆகாசத்துக்கு
மகா ஆகசத்தொடே ஏகி பாவம் உண்டாகிறது போலே உபஹிதாம்சமான ஆத்மாவுக்கு அனுபஹிதாம்சமான ப்ரஹ்மத்தோடு
ஏகி பாவம் மோஷம் ஆகிறது என்று சொல்லுமவன் –

யாதவன் ஆகிறான் –
அந்த ப்ரஹ்மம் தானே சத்தியமாய் -பாரமார்த்திகமாய் -ஸ்வ ஸ்வாத் பின்னமான-சிதசித் விச்வகாத்மாக பிரபஞ்சமானது –
ஸ்வ ஸ்வாத் பின்னம் என்று பிரமிக்கைசம்சாரம் -வித்யாஞ்சா வித்யாஞ்சா -என்றும்
உபாப்யாமே வபஷாப்யாம் யதாகே பஷணாம் கதி -ததைவஞான கர்மப்யாம்ப்ராப்ய தே பிரம்ம சாஸ்வதம் -என்றும் சொல்லுகையாலே
ஞான கர்ம சமுச்ச்யத்தாலே-அந்த பேத ஞானம் நசித்துப் போகை மோஷம் என்று சொல்லுமவன் –

இந்த மதங்கள் எல்லாம் ஸ்வ அஞ்ஞாதி-லங்கணம் பண்ணிப் போருகிற அசூர ராஷசாதிகள் மோகிப்பைக்காக-
தானாயும் ருத்ரனைக் கொண்டும்-சர்வேஸ்வரன் ப்ரவர்த்திப்பிதவை இறே –
இவ்வர்த்தம் –
புத்தோ நாம மு நிர்ப்பூதாய மோஷ இஷ்யாமி-மானவான் தத பஸ்சாத் பவிஷ்யந்தி முண்டா காஷாய வாசச –
தேஷா மல்பதரோதர்ம இஹலோகே பரத்ரச -தேஷாம் தத்தஞ்ச புக்தஞ்ச பஸ்மி பவந்தி காஷ்டவத் -விப்ராஸ்
ஸ்ராத் தேஷ்வதாச்யந்தி மயிபுத் தத்வமாகத -அல்பதோ யாஸ்த தோமேகா – அல்ப சச்யா வசுந்தரா –
அல்ப ஷீராச்த தோகாவ -அல்ப வித்யாசா பிராமணா -நிவர்த்த யஞ்ச ஸ்வாத்யாய பிண்டோதக விவர்ஜிதா –
அனன்யா எஷ் வதீயந்தே ப்ரக்மனோ ஸௌ சவர்ஜிதா அக்னி ஹோத்ராச்ச நச்யந்தி குரு பூஜா பரண ச்யாதி-
பிராமணாஸ் சர்வ யக்ஜேஷு பிரசாந்தி சத தஷிணா-தத் பிரஜா பிரளயம் யார்ந்தி காலக தர்மேன சோதிதா
நஸ்ருன் வந்தி பித்து புத்ரா நச்துஷா நச ஹோதரா-ந ப்ர்த்தயா ந களத்ரபாணி பவிஷ்யத் யதயோத்தரம் -என்று
ஸ்ரீ மகா பாரதத்தில் மோஷ தர்மத்திலும் ஸ்ரீ சர்வேஸ்வரன்-தானே சொன்னான் இறே

ருத்ரன் ஏகாதசி தர்மத்தை பரக்க சொல்லிக் கொண்டு போந்து அத்திவசத்திலே பாஷாண்டிகளுடனே-
சல்லாப சகவாசாதிகள் பண்ண ஒண்ணாது என்று பிரசங்காத் சொல்லக் கேட்ட பார்வதி யானவள் –
ஆகில் நீர் அவர்களுடைய இந்த நிஹித சிஹ்னங்களை தரித்து கொண்டு இருப்பான் என் – என்று கேட்க –
நமுசாத்யாம ஹாதைத்யா புரஸ்வயாம் புவேந்த்ரே -என்று தொடங்கி அந்த ராஷசர்கள் விஷ்ணு பக்தராய் இருந்து வைத்ததே-
தத் பக்தரான இந்த்ராதிகளை பாதித்து -அவர்களுடைய ஸ்தானங்களை ஆக்ரமித்த வாறே அவர்களுடைய சர்வேஸ்வரன்-ஆன
ஸ்ரீ மன் நாராயணன் -பக்கலிலே சென்று சரணம் புகுந்து தங்களுக்கு வந்த ஆபத்தை விண்ணப்பம் செய்யக் கேட்டு –
அந்த ராஷசர்கள் ஸ்வ பக்தராய் ஸ்வ அஞ்ஞாதி லங்கனம் பண்ணினார் ஆகையாலே அவர்களுக்கு தன்னளவிலே-
விப்ப்ரபத்தியை பிறப்பித்து பின்பு அவர்களை சம்ஹரிக்க கடவோம் என்று நினைப்பிட்டு –

இத்யா கர்ணயா ஹரேர் வாக்கியம் தேவோ நாம பயார்த்தினாம் -நான்ஸ்வ வ்ர்த்தான்விதி-த்வாத்மாமஹா புருஷோத்தம –
ஸ்ரீ பகவான் உவாச -த்வஞ்ச ருத்ர மகா பாஹோ மோஹோநார்த்தம்-ஸூ ரத்விஷாம் பாஷண்டா சரணம் தர்மம் குருஷ்வ
ஸூ ர சத்தம –தாமஸா நி புராணா நி-ரசயச்வசதான் பிரதி -மோகனா நிச சாஸ்தராணி த்வம் குருஷ்வ மகா மாதே -என்று
சொல்லிக் கொண்டு போந்து –
வம்சதாம் ஸ ச மகாமுனி -தவ சக்த்யா சமா விச்ய குருஸ் வஜ கதோ ஹிதம்கதயன் சேவதேவிப்ரா தாமஸ நிஜ கத்ரயே –
புராணா நிச சாஸ்தராணி த்வத் பரேநேப பிரமஹித -தாதாபா சுபதாம் சாஸ்திரம் த்வமே குரு ஸூ வ்ரத-கங்கா ள ந்ஜ்சைவ
பாஷண்ட மகா சை வாதிபேதித -அவலம்ப்ய மதம் சமயக் வேத பாஹ்யாத் விஜோத்தமா -பஸ்மாதி தாரணாஸ் சர்வே
பபூவுஸ்தே-ந சம்சய –த்வாம் பரத்வே ந சம்சந்தி சர்வ சாஸ்த்ரேஷூ தாமஸ -அஹமப்ய வதாரேஷு த்வாஞ்ச ருத்ர மகா பாலா –
தாமஸ நாம் மோஹா நாரத்தம் பூஜயாமி யுகே யுகே —மதமேத வஷ்டப்ய ரதன்யேவன சம்சய -என்று இப்படி-நியமித்து
அவர்கள் விஸ்வசிக்கைக்காக நீ அந்த சிஹ்னங்களை தரித்து கொண்டு இருக்க வேணும்-என்று சொன்னவாறே –
நான் தரித்து கொண்டு இப்படியே இரா நின்றேன் என்று அவளுக்கு பிரத் யுத்தரம் சொல்லி –

ப்ரதமம் ஹிமையைவோக்தம் சைவம் பாஸூ பதாதிகம் -மத்ஸ் சக்த்யாவேசி தைர் விப்ரை -சம்ப்ரோக்த்தா நிதத பரம் –
மாயாவாத மசஸ் சாஸ்திரம் பிரசன்னம் பௌ த்யமுச்ச்யதே –மயைவகதிதம்-தேவி கலவ் ப்ராஹ்மன ரூபிணா –
அபார்த்தம் சுருதி வாக்யானாம் தர்சிதம் லோக கர்ஹிதம் –கர்ம ஸ்வரூபவத்யாஜ்யம்யத் அத்ரைவ பிரதிபாத்யே –
சர்வ கர்ம பர்ப்ரஷ்டம் விகரம ஸததம்ததுச்யதே-பாச ஜீவயோரைக்யம் மயாத் பிரதிபாத்யே ப்ரம் ஹனேப்ய
ப்ரம்ரூபம் நைர்குண்யம் வஷ்யதேமையா-சர்வச்ய ஜகதோ பார்த்த மோகனார்த்தம் கலவ் யுகே வேதார்த்த மன் மகா சாஸ்திரம்
மாயா வாதம-வைதிகம் மயைய வஷ்யதே தேவி அஸ்தாம் நாச காரணாத் என்ற பின்பு –ருத்ரன் தானே சொன்னான் என்று
பாத்ம உத்தர காண்டத்திலே உமா= மகேச்வர-சம்வாதத்திலும் -பரக்க சொல்லப் பட்டது இறே –

இப்படி பாஹ்ய சமயங்களையும் குத்ருஷ்டி-சமயங்களையும் எடுத்தது –
1–சாங்கியர் 2-யோகிகள்-3- பாட்டர் -4-ப்ரபாகரர்-5- ஏகாயனர் ஐவருக்கும்-உப லஷணம் –
ஈட்டுக் காரர் இவ் ஐந்து மதங்களையும் எடுத்தார் இறே -அவர்களோடு ஒக்க-

சாங்கிய யோகிகள் ஆகிறார் –
சதேவ சொம்யேத மகர ஆஸீத் -என்றும் –
சத்வம் ரஜஸ் தம இதி குணா-பிரகிருதி சம்பவா -என்றும் -சொல்லுகையாலே –
சத்வர ஜஸ்த மோ மயமாய் சச் சப்த வாச்யமான-பிரதானமே ஜகத் காரணம் என்கிறது என்றும் –
அஹங்காரவி மூடாத்மா கர்த்தா ஹமிதி மந்யதே -என்கையாலே
ஆத்மாவுக்கு கர்த்த்ரத்வம் பிரக்ரிதி சம்சர்க்காயத்தம் இத்தனை ஒழிய ச்வாபாவிக்கம்-அன்று என்றும் –
பிரக்ருதே க்ரிய மானானி – என்கையாலே அந்த பிரக்ருதிக்கே கர்த்ரத்வம் உள்ளது என்றும்
பிரகிருதி புருஷ விலஷணாய் கொண்டு வேறு ஒரு ஈஸ்வரன் இல்லை என்றும் –
அந்த பிரக்ருதியோடு-ஆத்மாவுக்கு உண்டான அநாதி சம்பந்தம் சம்சாரம் என்றும் –
பிரகிருதி புருஷ விவேகமே மோஷம் என்றும் சொல்லுமவர்கள் –

பாட்ட பிராபகர் ஆகிறார்கள் –
ஆத்மானோ பகவ ப்ரோக்தா நின்யாஸ் சர்வ கதாஸ் ததா -அந்யைர் மதி மதாம் ஸ்ரேஷ்ட தத்வா லோக நதத் பரை -என்றும் –
புத்தீந்த்ரிய சரீரேப்யோ பின்ன ஆத்மா விபுர்த்ருவ –நா நா பூத பிரதி ஷேத்ர மர்த்ஞ்சா ஞானே ஷூ பாசதே -என்றும் சொல்லுகையாலே-
ஆத்மாக்கள் நித்தியராய் -அநேகராய் – சர்வகதராய் -சரீராதி வி லஷணராய் இருப்பர் என்றும் –
பத்த்யதே சஹிலோகஸ் துயகாம்ய பிரதிஷித்த க்ரத் -காம்ய கர்மாணி குர்வாணை ரகாம்யகர்மா நுரூபத – ஜனித்வைவோப போக்தவ்யம்
புன காம்ய பலம் நரை -க்ர்மிகீடா தி ரூபேண ஜனித்வாது நிஷித்த க்ரத் நிஷித்த பல போகிச்யாதி தோயோ நரகம் வ்ரஜேத் –என்கையாலே
காம்ய நிஷித்த ரூபமான அநாதி கர்மத்தை அனுஷ்டித்து சம்சரிக்கிரார்கள் என்றும்
யதாத்ய ஜகதோ புத்தி ததா காலாந்த ரேஷ்வபி -பிரவாஹோ நித்ய எவைஷா க கர்த்தேதி சகேச ந ந – என்கையாலே
ஜகத்து பிரவாஹா ரூபன நித்யம் என்றும் –
நதேவதா சதுர்த்யந்த விநியோத்ருதே பரா – என்கையாலே –
சதுர்த்த்யந்த விநியோகாதிரிக்தமாய் கொண்டு வேறு ஒரு தேவதா விசேஷம் இல்லை என்றும் –
வெதைக விஹிதம் கர்ம மோஷதம் ந பரந்தத -என்கையாலே –
வைதக விஹிதமாய் பலாபிசந்தி விதுரங்களாய் கொண்டு அனுஷ்டிக்கப்பட்ட யக்ஜ்ஜாதிகளாலே ஆத்மாவினிடத்தில் இருந்து ஒரு அபூர்வம்
பிறந்து அத்தாலே உண்டான கர்ம பந்த நிவ்ருத்தி பூர்வாக கேவல ஆத்மா ப்ராப்தியே மோஷம் ஆவது என்றும் சொல்லுவார்கள் –

ஏகாநயர் ஆகிறார் –
த்வத் ப்ரியம் லோக நாதம் -என்கிறபடி மிதுன சேஷத்வத்தை அங்கீ கரியாதே நி ஸ்ரீ க பிரம்ம சேஷத்வத்தை அங்கீ கரித்துக் கொண்டு –
(மாதவ சம்பிரதாயத்தில் மிதுனம் இல்லை என்பர் )-
சக்தி பிஸ் சேவிதா நித்யம் ஸ்ர்ஷ்டிஸ்தித்யாதி பிரபா -த்வத்ரிம்சத் சதசாஹஸ் ரஸ்ர்ஷ்டி சக்தி ப்ரவர்த்தாம் வ்ர்தாதத்
விகுணா பிஸ்ய திவ்யா பிஸ்திதி சக்திபி நாதாதச்வி விகுணா பிஸ்ய யுக்தா சசம்ஹ்ருத சக்திபி –
நாயிகா சர்வ சக்தினாம் சர்வ சக்தி மகேஸ்வரி -ஏகம் தத் பிரம்மம் பஹ்ம ஷாட் குணிய அஸ்தி மிதம் மஹ பாவ பாவ மதி
தஸ்ய சக்தி ரேஷா நபாயி நீ தத் தர்மதர்மதீ திவ்யாக்ஜ்ஜ்யோத் ச்நேவ ஹி மதிதிதே -நைவ சக்த்யாவி நாகஸ் சித் பக்தி
மா நாஸ்தி காரணம் -என்றும் லஷ்மி தந்த்ரத்தில் சொல்லுகையாலே
சக்தி விலஷணமாய் இருக்கிற லஷ்மி இல்லை என்றும் –
ஸ்ர்ஷ்டி ஸ்த்தியாதி பரிமித சக்தி பரிவேஷ்டிதையான ஸ்ரீ என்கிற பிரதான சக்தியோடேயும் மற்றும் அபூர்ணங்களான சக்தியோடேயும்
அந்த ப்ரஹ்மம் விசிஷ்டமாய் இருக்கும் என்றும் சொல்லுமவன் –

நான் மறையும் நிற்க குறும்பு செய் நேசரும் –
இதனால் குத்ருஷ்டிகளை சொன்னபடி
புற மத்ததவாரகிய ஜைன பௌத்தர்கள் தங்களுக்கு வழி காட்டும் பிரமான நூல் ஓன்று இல்லாமையினால்
தங்கள் மனம் போன போக்கில் கொள்கைகளை வகுத்துக் கொண்டனர் –
குத்ருஷ்டிகளோ அங்கன் அன்றிக்கே உண்மை யல்லது ஓதாத வேதங்கள் நான்கினையும் வழி காட்டும் பிரமாண நூலாக கொண்டு இருந்தும்
அந்த பிரமாணத்திற்கு கட்டுப் படாமல் -தங்கள் மனம் போன போக்கிலே தாமே வகுத்துக் கொண்ட கொள்கைகளை நான்மறைகளும்
நவில்வதாக -தாம் தமது விருப்பப்படி கூறும் பொருளை வேதத்தின் மீது திணிக்கின்றனரே-அந்தோ இஃது என்ன பரிதாபம் -என்று வருந்துகிறார் .
பிழைக்கும் வழி இல்லாமையால் புற மதத்தினர் அழிகின்றனர் -.
அது இருந்தும் பயன் படுத்திக் கொள்ளாமல் -அவ் வழியினைத் தூர்த்து -இதுவே அவ் வழி என்று
புது வழியை கற்பித்து அழிகின்ற குத்ருஷ்டிகள் நிலைமை மிகவும் வருந்த பாலதன்றோ –

குறும்பு செய்தல்-
மறையின் உண்மைப் பொருளை கொள்ளாது தன் மனம் போன படி வலிந்து உரை கூறல் .
நீசர் -தாழ்ந்தவர்கள்
நிறம் கிளர்ந்த கரும் சோதி நெடும் தகையை நினையாதார் நீசர் தாமே -ஸ்ரீ பெரிய திரு மொழி -11 6-8 – –என்றபடி
கருமை வாய்ந்த திரு மேனியையும் இயல்பாய் அமைந்த பெரும் தன்மையான ஞான பல கிரியைகளையும்
நான் மறைப் பொருளாக கொள்ளாமையினால் குத்ருஷ்டிகளை –நீசர் -என்றார் .
குத்ருஷ்டிகள் பிரம்மத்திற்கு வடிவம் குணங்கள் முதலியன உண்மையில் இல்லை
என்ற தாம் கொண்ட பொருளை வேதத்திற்கு பொருளாக கற்ப்பித் தலினால் அவர்கள் குறும்பு செய் நீசர் ஆயினர் -என்க –

நீணிலத்தே-
இப்படி பல வகைப்பட்டு இருந்துள்ள வேத பாஹ்யருக்கும் குத்ருஷ்டிகளுக்கும் நடையாடுக்கைக்கும் ஈடான
பரப்பை உடைத்தான மகா ப்ரித்வியிலே –
நீட்சி –பரப்பு –

பொற் கற்பகம் –
ஸ்ப்ர்ஹநீயமான கற்பகம் போலே பரம உதாரராய் –
பொற் கற்பகம் என்று விசே ஷிக்கையாலே -ப்ராக்ருதமாய் -ஜடமாய் -அர்த்த காம பரர்கு மாத்ரமே -ஸ்பர்ஹீநீயமாய்
இருக்கிற கல்பகம்-போலே அன்றிக்கே -அப்ராக்ருதமாய் -ஸ்வ பிரகாசமாய் -சர்வருக்கும் ஸ்ப்ர்ஹநீயமாய் –
அபேஷா நிரபேஷமாக உஜ்ஜீவன அர்த்தங்களை ஸ்ரீ பாஷ்யாதி முகேன – ஆசந்த்ரார்த்தமாக கொடுத்து
உபகரிக்கை யாகிற -மகா ஔதார்யத்தை உடையரான -விலஷண கல்பகம் என்றபடி –
இக் கல்பகம்-கொடுக்கிற பல பரம்பரை விலஷணமாய் இருக்கிறாப் போலே காணும் இதுவும் விலஷணமாய்-இருக்கிறபடி –

எம் இராமானுசன் –
லோகம் எல்லாம் ஒரு தலையாயும் -அதி பிரதி கூலனான நான் ஒரு தலையுமாய் இருக்கச் செய்தே –
என்னை ஒருவனையே உஜ்ஜீவிப்பைக்காக மனனம் பண்ணிக் கொண்டு இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார் –

போந்த பின்பு –
எழுந்து அருளின பின்பு –மாண்டனர் -துர் மத நிஷ்டர் எல்லாரும் முடிந்து போனார்கள் –
ஸ்ரீ பாஷ்ய முகேன தந் தந் மதங்களை பங்கித்து அசத்கல்ப்பம் ஆக்குகையாலே அவர்கள்ந ஷ்டர்கள் ஆனார் -என்றபடி –

சாருவாத மத நீறு செய்து சமணக் கடல் கொளுத்தியே -சாக்கிய கடலை வற்றுவித்தி –
மிக சாங்கியக் கிரி-முறித்திட -மாறுசெய்திடு கணாத வாதியர்கள் வாய்த கரத்தற மிகுத்து மேல் -வந்த
பாசுபதர் சிந்தியோடும் -வகை வாது செய்த வெதிராசனார் -கூறுமா குரு மதத்தோடு ஓங்கிய குமாரிலன்
மதமவற்றின் மேல் கொடிய-தர்க்க சரம் விட்ட பின்பு குறுகு மத வாதியரை வென்றிட -மீறி வாதில் வரும்
பாற்கரன் மத விலக்கடி-கொடி எறிந்து போய் மிக்க யாதவர் மதத்தை மாய்த்த பெரு வீரர் நாளும் மிக வாழியே –என்று
பர பஷ பிரதி ஷேபனே பிரகாரத்தை அனுசந்தித்து அத்தால் வந்த வீர ஸ்ரீ க்கு மங்களா சாசனம்-பண்ணி அருளினார் இறே -நம்முடைய ஸ்ரீ ஜீயரும் –

காதா தாதா கதா நாம் களதிகம நிகாகா பிலீக்வாபி லீநா-ஷீணா காணாத வாநீத்ருஹின ஹரகிரஸ் ஸௌ ர பன்னார பந்தே –
ஷாமா கௌ மாரிலோக்திர்ஜகதி-குரு மதம் கௌ ரவாத் தூரவாந்தம் காசன் காசன் கராதேர்பஜதி எதிபதவ் பத்ரவேதீம் த்ரி வேதீம் -என்று
இவ் அர்த்தத்தை அபியுக்தரும் அருளிச் செய்து அனுசந்தித்தார் இறே –

மாண்டனர் நீணிலத்தே —-பொற் கற்பகம் போந்த பின்னே —
நீணிலத்தே போந்த பின் -என்று இயைக்க –
நீள் நிலம் -நீண்ட பெரிய பூமி
புற மதத்தவருக்கும் குத்ருஷ்டிகளுக்கும் இடம் தரத் தக்க பரப்புடமை இங்கே கருதப்படுகிறது .
கற்பகம் –கற்பக வ்ருஷம் போன்றவர் -வள்ளல் -என்றபடி
விண் தலத்திலே அசையாது இருப்பது கற்பக வ்ருஷம்
விண்ணவரான ஸ்ரீ எம்பெருமானார் நீநிலத்தை நோக்கி திரும்பாதவர்
விண் உலகில் அசையாது இருந்த கற்பகம் ஸ்ரீ கண்ணனால் நீணிலதிற்கு வந்தது-அது வந்தது கருதிய காதலிக்காக –
ஸ்ரீ விண்ணவரான எம்பெருமானாராம் கற்பகம் இன் நீணிலத்தே வந்தது
இது வந்தது உயிர் இனம் மறையின் உண்மைப் பொருளை பெற்று உய்வதற்காக

கற்பகம் வந்து நீணிலத்திலே நல்ல பொருளை தருகிறது .
பொன் -பொன் போலே விரும்பத் தக்கது
கற்பகம் -உவம ஆகு பெயர்

எம் இராமானுச முனி –
மறைப் பொருள் வழங்கும் வள்ளன்மை தம்பால் உள்ளதை நமக்குக் காட்டிக் கொடுத்த ஸ்ரீ எம்பெருமானார் -என்றபடி –
போந்த பின் மாண்டனர் -என்று முடிக்க
ஸ்ரீ எம்பெருமானார் நீணிலத்தில் ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்து –அதனில் அந்த அந்த மதங்களைக் கண்டித்து –
அவற்றை இருக்கும் இடம் தெரியாதபடி மறைய செய்து அருளினார் -என்பது கருத்து .
மற்ற மதத்தவர் இருக்கும் இடம் தெரியாது மறைந்து ஒழிந்தனர் ஆதலின்
இந்நிலை குலையாது -மனமே தளரற்க -என்றார் ஆயிற்று-

—————

தருக்கினால் சமண் செய்து -பெரிய திரு மொழி –

மறம் கிளர்ந்து கரும் கடல் நீர் உரந்துரந்து பரந்தேறி யண்டத்தப்பால்
புறம் கிளர்ந்த காலத்துப் பொன்னுலகம் ஏழினையும் ஊழில் வாங்கி
அறம் கிளர்ந்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக் கொண்ட
நிறம் கிளர்ந்த கருஞ்சோதி நெடும் தகையை நினையாதார் நீசர் தாமே –11-6-8-

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந் தழகாய திருக் குருகூர தனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே–4-10-2-

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மா மதிள் சூழ்ந்து அழகாய திருக் குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கி யர்க்கே?–4-10-4-

இலிங்கத் திட்ட புராணத் தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாதுசெய்வீர் களும்மற்று நும்தெய்வமு மாகிநின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குரு கூர்அதனுள்
பொலிந்து நின்ற பிரான்கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே–4-10-5-

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப் பிரான் அமரும்
வளங்கொள் தண்பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக் கொண்டு போகுறிலே–4-10-9-

இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே யாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி
நடந்தும் பறந்தும் குனிந்தும் நாடகம் செய்கின்றனவே–5-2-4-

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக் கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்ப தெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே–5-2-7-

இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன் மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே–5-2-8-

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக்
கலி வயல் தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன்
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக்குமே–5-2-11-

கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேற லாமை விளங்க நின்றதும்
உள்ள முள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே–5-10-4-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –98–இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகிலிட்டுச் சுடுமே- இத்யாதி —

June 1, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி ஸ்ரீ எம்பெருமானார் செய்த உபகாரத்தை பேசினவாறே-இவர் திரு உள்ளமானது –
நிருபாதிக பந்துவான ஸ்ரீ ஈஸ்வரன் அநாதி காலம் ஸ்வர்க்க நரக கர்ப்பங்களிலே தட்டித் திரிய விட்டு இருந்தது –
கர்மத்தை கடாஷித்து அன்றோ – பிரகிருதி சம்பந்தம் கிடக்கையாலே துர் வாசனை மேலிட்டு விபரீதங்களிலே
போகவும் யோக்யதை உண்டே –இன்னும் ப்ராப்தி பர்யந்தம் ஆனால் இறே என்று தளர –
ஸ்ரீ எம்பெருமானார் தன்னை சரணம் என்றால் -அப்படி ஒன்றிலும் விட்டுக் கொடார் ஆகையாலே
ப்ராப்தி நிமித்தமாக நீ கிலேசிக்க வேண்டா -என்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

இப்படி ஸ்ரீ எம்பெருமானார் தம்முடைய சர்வ உத்கர்ஷ்டமான அதிகாரத்திலே மூட்டின
உபகாரத்தை அனுசந்தித்து ஹ்ர்ஷ்டரானவாறே -இவருடைய திரு உள்ளமானது -நீர் இப்படி சொன்னீரே யாகிலும் –
சர்வ நியந்தாவான சர்வேஸ்வரன் -அநாதி காலம் தொடங்கி -தத் தத் கர்ம அனுகுணமாக பலத்தை
கொடுப்பதாக சங்கல்பித்துக் கொண்டு இருக்கிறான் ஒருவன் ஆகையாலே -இவ்வளவும் ஸ்வர்க்க நரக
கர்ப்பங்களிலே இடைவிடாது அடைவே தட்டித் திரிய விட்டு இருந்து -நம்முடைய கர்மத்தை
கடாஷித்து அன்றோ -அக் கர்மங்களை உண்டாக கடவதான பிரகிருதி சம்பந்தம் நமக்கு இன்னும் கிடைக்கையாலே
துர்வாசனை மேலிட்டு திரும்பவும் நிக்ரஹத்துக்கு உடலான துஷ்கர்மங்களிலே அன்வயிக்கவும் -யோக்யதை
உண்டே -ப்ராப்தி பர்யந்தம் ஆனால் இறே -நீர் இப்படி நிர்பரராய் சொல்லக் கூடுவது என்று தளரா நிற்க –
எம்பெருமானார் தம்மை சரணம் என்றால் அப்படி ஸ்வர்க்க நரகாதிகள் ஒன்றிலும் விட்டுக் கொடுக்கும்
ஸ்வபாவர் அல்லர் ஆகையாலே -இனி பிராப்தி நிமித்தமாக நீ கிலேசிக்க வேண்டாம் என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

தம் அடியார் திருவடிகளை அடைந்து ஆட் செய்யும் படியான உயர்ந்த நிலையினை ஸ்ரீ எம்பெருமானார்
தமக்கு உதவினதைக் கூறியதும் –
ஸ்ரீ அமுதனார் திரு உள்ளம்-இயல்பினில் அண்ணிய உறவினனான இறைவன் நெடும் காலமாக
ஸ்வர்க்கத்திலும் நரகத்திலும் -கர்ப்பத்திலும் –நிலை இல்லாமல் திரிந்து உழலும் படி விட்டு இருந்தது
கர்ம சம்பந்தத்தினால் அன்றோ –
கர்மத்திற்கு ஏற்ப வந்த சரீர சம்பந்தம் நீங்காமையாலே-கர்ம வாசனை மேலிட்டு மீண்டும் கர்மங்கள்
புரிந்து திரிந்து உழலும் நிலை ஏற்படின் என் செய்வது –
ஸ்ரீ எம்பெருமானார் உதவியதற்கு நாம் மகிழ்வது-அந்தமில் பேரின்பத்து – எம்பெருமானார் அடியாரோடு இருத்தல்
ஆகிய பேறு கிட்டும் அளவு ஆனால் அன்றோ என்று மிகவும் தளர்வுற
அதனை நோக்கி ஸ்ரீ எம்பெருமானார் சரணம் -என்றவரை திரிந்து உழலும்படி விட்டுக் கொடுக்க மாட்டார்
நீ பேறு கிடையாதோ என்று வருந்த வேண்டாம் -என்கிறார் .

இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகிலிட்டுச்
சுடுமே யவற்றைத் தொடர் தரு தொல்லைச் சுழல் பிறப்பில்
நடுமே யினி நம் இராமானுசன் நம்மை நம் வசத்தே
விடுமே சரணமென்றால் மனமே நையல் மேவுதற்கே – – -98 – –

பத உரை –
நம் இராமானுசன் -நம்முடைய ஸ்ரீ எம்பெருமானார்
சரணம் என்றால் -சரணம் என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டால்
இனிய -பிறருக்கு அனுபவித்தற்கு தக்கதாய் தோன்றுகிற
ஸ்வர்க்கத்தில் -ஸ்வர்க்க லோகத்தில்
இடுமே -அனுபவிக்கும்படி விட்டு இருப்பாரோ
இன்னும் -அவரைப் பற்றின பின்பும்
நரகில் -நரகத்தில் இட்டு வைத்து
சுடுமே -தபிக்கும்படி செய்வாரோ
அவற்றை -அந்த ஸ்வர்க்க நரகங்களை
அனுபவிப்பதற்கு ஈடான கர்மம் பிறப்பினுக்கு உறுப்பாகையாலே
தொடர் தரு -தொடர்ந்து வருகிற
தொல்லை -பழையதான
சுழல் பிறப்பில் -சுழன்று சுழன்று வாரா நிற்கும் பிறப்புகளிலே
நடுமே -நடுவாரோ -அதாவது நிற்கும் படி செய்வாரோ
இனி -நம்மை ஏற்றுக் கொண்ட பிறகு மேலுள்ள காலம் எல்லாம்
நம்மை நம் வசத்தே -நம்மை நம்முடைய இஷ்டப்படி நம் வசத்திலே
விடுமே -ஸ்வ தந்த்ரிரமாய் நடக்க விடுவாரோ
மனமே -நெஞ்சே
மேவுதற்கு -பேற்றினை அடைதளுக்காக
நையல் -வருந்து நைந்து போகாதே

வியாக்யானம் –
தம்மை உத்தரிப்பிக்கைக்காக வந்து அவதரித்த ஸ்ரீ எம்பெருமானார் –
தேவரே சரணம் -என்று ஓர் உக்தி மாதரம் பண்ணினால் -பிரகிருதி வச்யருக்கு சப்தாதி போக விஷயங்களாலே இனிதாக
தோற்றி இருக்கும் ஸ்வர்க்கத்திலே இட்டு வைப்பாரோ –
தம் திருவடிகளைப் பற்றின பின்பும் நரகத்திலே இட்டு வைத்து தபிப்பிப்பரோ –
அந்த ஸ்வர்க்க நரக அனுபவத்துக்கு ஈடான கர்மம் ஜென்மத்துக்கு உருப்பாகையாலே –
அவற்றை அநுசரித்து கொண்டு இருப்பதாய் -அநாதியாய் -வளைய வளைய வரா நின்றுள்ள-ஜன்மத்திலே நிறுத்துவரோ –
மேலுள்ள காலம் நம்மை நம்முடைய ருசி அநு குணமாக விடுவரோ –
ஆன பின்பு ப்ராப்தி நிமித்தமாக-நெஞ்சே சிதிலமாகாதே கொள் –

மேவுதல்-பொருந்துதல் -அதாவது ப்ராபித்தல்
சோற்றுக்கு கரையாதே கொள் -என்றால் சோறு நிமித்தமாக கரையாதே கொள் -என்னுமா போலே
மேவுதற்கு நையல் -என்றது மேவுதல் நிமித்தமாக -என்றபடி
நடுதல்-ஸ்த்தாபித்தல்–

பரம்- ஸ்வாமி உடையதே -சுவர்க்கம் நரகம் -பிறவி -நம் வசம் நான்கும் வராதே -ஸ்ரீ ராமானுஜர் சரணம் என்ற யுக்தி மாத்திரத்தாலே –
இடுமே-/ சுடுமே / நடுமே –/ விடுமே -பிரி நிலை ஏவகாரம் -இட மாட்டார் –சுடாது -நட மாட்டார் – விட மாட்டார் -என்றபடி –
ஆகையால் நைய வேண்டாமே –கர்ம ஜென்ம சூழல் தப்புவோம்
தாய் போலே அன்றோ ஸ்ரீ ஸ்வாமி –அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான –
தனக்கே யாக நம்மை கொள்வார் -ஸ்ரீ சர்வேஸ்வரன் இல்லையே கர்ம அனுகுணமாக செய்வதற்கு –
நம் வசம் -ருசிக்கு அனுகுணமாக காட்டிக் கொடுக்காமல் – -ரக்ஷணமும் அவர் ஆதீனம் -என்றவாறு –
சரணம் என்றால் -ஆல் -சரம பர்வ நிஷ்டை துர்லபம்-அன்றோ -யுக்தி மாத்திரமே அமையும் -மேவினேன் அவன் பொன்னடி -படர்க்கை –
நேராக கூட செல்ல வேண்டாம் -இருந்த இடத்திலே நாவினால் நவின்றாலே போதுமே
கொடு உலகம் காட்டேல் -ஸ்ரீ நம்மாழ்வார் பிரார்த்திக்க -ஸ்ரீ ஸ்வாமி திருவதரித்தார் –
அவன் ஸ்ரீ ஈஸ்வரன் ஸ்வ தந்த்ரன் ஸ்வதந்த்ரம் கொடுப்பான் -இவர் பாரதந்த்ரர் -நமக்கு பாரதந்தர்யம் கொடுத்து
நம்மை தன் வசத்தே சேர்த்து கொள்கிறார் –அவன் நம் கர்மம் பார்ப்பான் இவர் தம் கிருபை ஒன்றையே பார்ப்பார்

மனமே –
இப்படி அதி சங்கை பண்ணா நிற்கிற நெஞ்சே –

எம் இராமானுசன் –
சாஷான் நாராயணோ தேவ க்ர்த்தவா மர்த்த்யமயீம் தநும் -மக்னா நுத்தரதே லோகன் காருண்யாஸ் சாஸ்திர பாணி நா -என்றும் –
பாபத்வாந்த ஷயாயச -ஸ்ரீ மான் ஆவிரபூத் பூமவ் ராமானுஜ திவாகர -என்றும் சொல்லுகிறபடியே-
எங்களுடைய முன்னை வினை- பின்னை வினை- பிராரப்த என்று மூன்று வகைப் பட்டு இருக்கிற வினைத் தொகை-
அனைத்தும் நசிப்பித்து -சம்சார கர்த்தத்தில் நின்றும் உத்தரிப்பிக்க வேணும் என்று தீஷித்துக் கொண்டு –
இக்கொடு உலகத்தில் திருவவதரித்து அருளின ஸ்ரீ எம்பெருமானார் –

சரணம் என்றால்-
ஸ்ரீ ராமானுஜச்ய சரணவ் சரணம் பிரபத்யே -என்றும்
சரணமேமி ராமானுஜம் -என்றும் –
ஸ்ரீ இராமானுசா உன் சரணே கதி -என்றும் –
மூலே நிவேச்ய மஹதாம் நிகமத்ருமாணாம் முஷ்ண ந ப்ரதாரக பயம்-த் ர்த நைக தண்ட –
ஸ்ரீ ரங்கேச பக்த ஜன மானஸ ராஜ ஹம்ஸோ ராமானுஜஸ் சரணமஸ்து முநிஸ் ஸ்வயந்ர – என்றும்
ஸ்ரீ ராமானுஜாய முநயே நம உக்தி மாதரம் காமாதுரோபிகுமதி கலயன்ன பீஷணம் -யாமாம நந்திய மிநாம்
பகவஜ் ஜாநாநாம் தாமேவவிந்தித கதிம் தமஸ பரஸ்தாத் – என்கிறபடியே-
ஸ்ரீ தேவரீரே சரணம் -என்கிற ஒரு-உக்தி மாத்ரத்தை பண்ணினால் –

இனிய ஸ்வர்க்கத்தில் –
பிரகிருதி வச்யராய் இருப்பார்க்கு -சப்தாதி போக விஷயங்களாலே அத்யந்தம்-போக்யமாய் தோற்றுகிற ஸ்வர்க்கத்திலே –
இனிமை -போக்யதை –
ஸ்வர்க்கமாவது -த்ரைவித்யாமாம்-சோம பர பூத பாபா -யஜ்ஞை ரிஷட் வாஸ்வர்காதிதம் ப்ரார்த்தயந்தே –
தே புண்யமாசாத்யா ஸூ ரேந்த்ரலோகம் அஸ் நந்தி திவ்யான் திவிதேவ போகான் –தேதம் புக்த்வா ஸ்வர்க்க லோகம்
விசாலம் ஷீணே புன்யே-மர்த்த்யலோகம் விசந்தி -என்கிறபடியே –
நச்வரமாய் சோபாதிகமாய் இருப்பதொரு ஸூக விசேஷம்-இறே இப்படி பட்ட ஸ்வர்க்கத்தில் —

இடுமே –
இட்டு வைப்பாரோ –
தந்தும் கேன சம்பின்னம் -இத்யாதிப்படியே அதுக்கு இதோபி விலஷணமாய் இருந்ததே ஆகிலும் –
முமுஷுக்கு நரக கல்பமாயும் -பிரதி கூலமாயும் இறே இருப்பது –
தேவேந்திர த்வாதி கம்பதம் ஏதேவைநிரயாஸ் ததாஸ் த்தா நஸ்ய பரமாந்தமான –ஷேத்ராணி மித்ராணி தனானி நாத
புத்ராச ச தாரா பஸவொக்ரஹாநித்வத் பாத பத்ம ப்ரவனாத்மாவர்த்தேர்ப்பவந்தி சர்வே பிரதி கூல ரூபா -என்னக் கடவது இறே —
பல நீ காட்டிப் படுப்பாயோ இன்னம் கெடுப்பாயோ –
போர வைத்தாய் புறமே –
நெறி காட்டி நீக்குதியோ –
அற்ப சராசரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன் –
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –
என்று ப்ராக்ர்த்த ஸூகத்தை கட்டடங்க பிரதி கூலமாகவும் ஸ்வரூப நாசககமாகவும் ஸ்ரீ நம் ஆழ்வார்-அனுசந்தித்து அருளினார் இறே –

இடுமே இனிய ஸ்வர்க்கத்தில் –
சரணம் என்றால் -என்பதனை -இந்த வாக்யத்திலே கூட்டிக் கொள்க –
ஸ்ரீ எம்பெருமானாரை சரண் அடைவது முக்திக்காக –
மீண்டும் பண்டைய வாசனை தலை எடுத்து அதனுக்கு மாறாக இனியது என்று பாமர மக்கள் மயங்கிக் கொண்டு இருக்கிற
ஸ்வர்க்கத்தை எய்தி இன்பம் துய்க்க -விரும்பிப் புண்ணியம் பண்ணிச் சரணடைந்த அவனே சுவர்க்கத்திற்கு
குடி யிருக்க முர்ப்படும்படி விட்டு வைக்க மாட்டார் ஸ்ரீ எம்பெருமானார் -என்றபடி –
கர்மங்களை வாசனை என்னும் வேரோடே களைந்து எரிந்து
விட்டமையின் அந்நிலை ஏற்படுவதற்கு வழியே இல்லாமல் போய் விடுகிறது -என்பது கருத்து .
ஸ்வர்க்கம் முக்தி நெறிக் கண் நிலை நில்லாதவாறு வல்லாரையும் அல்லாரையும் இனியது எனத் தோன்றித்-
தன்பால் வீழ்ந்து அழுந்தி மாயுமாறு மயக்க வல்லதாதலின் -அதனை முந்துற கூறினார் .இனிய ஸ்வர்க்கம் என்று
அதன் கொடுமை தோற்றக் கூறினபடி –
வாயில் இட்டால் ரசித்து பின்னர் முடியும்படி செய்யும் விஷம் போன்றது ஸ்வர்க்கம் என்க-
விஷம் என்பது முன்னரே தெரிந்தால் வாயில் இடாது தப்பிப் பிழைக்கலாம் .

இன்னும் நரகில் இட்டு சுடுமே –
உபாய உபேய பாவேன தத்வதஸ் சர்வே தேசிகை -ஸூ நிச்சிதான்க்ரி பத்மாய –என்கிறபடியே –
தன் திருவடிகளையே உபாயம் உபேயம் என்று அத்யவசித்து -அனந்யார்ஹராய் போன பின்பு கேட்ட உடனே அஞ்சும்படி –
அதி துஸ் சகங்களான ரௌவராதி நரகங்களிலே விழ விட்டு தஹிப்பிப்பாரோ
கர்ச்ச்ரென தேஹான் நிஷ்க்ராந்திம் யாம் யகிங்கர தர்சனம் -யாத நாதேக சம்பந்தம் யாம்யபாசைஸ் ச கர்ஷணம் –
உக்ர மார்க்க கதின்லேசம் யமச்ய புர தஸ்திதம்–தன்னி யோகேன தாயாதா யாதனாச்ச சகஸ்ரசா -ஸ்ருத்வாஸ்
ம்ர்த்வாச தூயேஹம் தத் ப்ரேவேச பயாகுல -என்றும் –
கடும் சொலார் கடியார் காலனார் தமரால் படுவதோர்-கொடுமிறைக்கு அஞ்சி – என்றும் –
எண்ணிறந்த துன்பம் தரு நிரயம் பல -என்றும் சொல்லப்பட்ட
நரகங்களிலே சென்று துக்கப்ப்படும்படி உதாசீனராய் இருப்பாரோ -என்றபடி

துன்பம் தரு நரகு என்றால் அதனில் விழாது தப்பிப் பிழைக்கலாம் –
இனியது என்று முகப்பிலே தோன்றும் ஸ்வர்க்கமோ -பிரம்மானந்தம் பெற ஒட்டாது செய்து முடித்தே விடும் என்க
இடுதல்-வைத்தல் .
இன்னும் நரகில் இட்டுச் சுடுமே –
இன்னும் -சரணம் என்றதற்குப் பிறகும் நரகத்திலே போட்டு தபிக்கும்படி செய்வாரோ
ஸ்ரீ எம்பெருமானார் சரணம் -என்று சொன்னதும் கர்மங்கள் வாசனையோடு களையப் படுதலின்
மீண்டும் பாபம் செய்து நரகத்தில் விழுந்து தபிக்க வழி இன்றி செய்து வருகிறார் ஸ்ரீ எம்பெருமானார் -என்பது கருத்து

அவற்றை தொடர் தரு தொல்லை சுழல் பிறப்பில் சுடுமே –
கர்ம பிரம்மோத் த்பவம் வித்தி -என்கிறபடி –
அந்த ஸ்வர்க்க நரகாதிகளுக்குஈடான புண்ய பாப ரூப கர்மார்ஜனத்துக்கு -பிரம சப்த வாச்யமான சரீரம்-
ஹேதுவாய் இருக்கையாலே அத்தை அனுசரித்து கொண்டு இருப்பதாய் –
தொன் மாயப் பல் பிறவி –என்கிறபடி –அநாதியாய் –
ஏவம் சம்சர்த்தி சக்ரச்தே ப்ராம்ய மானே ஸ்வ கர்மபி -என்றும் –
மாறி மாறி-பல பிறப்பும் பிறந்து -என்றும் சொல்லுகிறபடி –
சக்ரம் போல் சுழன்று வாரா நின்றுள்ள ஜன்ம பரம்பரைகளில்-நிறுத்துவாரோ –
அவற்றில் அன்வயிக்கும்படி பிரவர்த்திப்பிப்பாரோ என்றபடி –
நடுதல் –ஸ்தாபித்தல் –

அவற்றைத் தொடர் தரு தொல்லை சுழல் பிறப்பில் நடுமே –
கீழ் சொன்ன ஸ்வர்க்க நரகங்களைத் தொடர்ந்து வருவன பிறப்புக்கள் .
ஸ்வர்க்கத்தில் இன்பத்திற்கு ஈடான புண்ணியமும்
நரகில் தபித்தற்கு ஈடான பாபமும் -அவற்றை அடுத்து வரும் பிறப்பிற்கு உறுப்பாய் இருத்தலின் –
அவற்றைத் தொடர் தரு பிறப்பு -என்றார் .

கர்மம் அடியாக ஏற்படும் பிறப்பு அநாதி யாதலின் –தொல்லைப் பிறப்பு -என்றார் .
கர்மத்தினால் ஓய்வின்றி மாறி மாறிப் பிறப்பு வந்த வண்ணமாய் இருத்தலின் –சுழல் பிறப்பு –என்றார் .
சுழல் பிறப்பு -வினைத் தொகை –
துரிதபவந ப்ரேரிதே ஜன்ம சக்ரே -கர்மமாகிற பாபம் என்னும் காற்றினால் சுழலுகின்ற பிறப்புச் சக்கரம் -ஸ்ரீ ஸ்துதி –
என்றார் ஸ்ரீ வேதாந்த தேசிகன்
சுழன்று கொண்டே யிருக்கும் அத்தகைய பிறப்புச் சக்கரத்தில் அகப்பட்டுச் சுழலும்படி விட்டு விடுவாரோ -என்றபடி-
நடுதல்-நிறுத்துதல்
நாற்று நடுதல் -என்னும் வழக்குக் காண்க .

இனி நம்மை நம் வசத்தே விடுமே –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளுக்கு நிழலும் அடிதாறும் போல் அத்யந்த-பரதந்த்ரராய் போந்த நம்மை
மேல் உள்ள காலம் எல்லாம் ஸ்வ தந்த்ரராக்கி -நம்முடைய ருசி அனுகுணமாக-ச்வைர சம்சாரிகளாய் போகும்படி விட்டு விடுவாரோ –

இனி நம்மிராமானுசன் நம்மை நம் வசத்தே விடுமே –
நம் இராமானுசன் –
நம்மை கை தூக்கி விட வேணும் என்பதற்காகவே அவதரித்த ஸ்ரீ எம்பெருமானார் .
வீடளிப்பான் மண்ணின் தலத்து உதித்தவர் -என்றபடி –
மோஷத்திற்கு மட்டும் ஹேதுவானவர் -பந்தத்துக்கு உள்ளாகும்படி நம்மை நம் வசத்தே விடுவாரோ -என்பது கருத்து

இனி நம் வசத்தே விடுமே –
எதிர்காலத்தில் நம் விருப்பப் படி நடக்க விடுவாரோ –
நம்மை –
இதற்கு முன்பு விருப்பப்படி ஸ்வ தந்தரமாக நடந்து பாழ் படுத்திக் கொண்டவர்களான -நம்மை
கீழ்க் கூறியபடி ஸ்வர்க்கத்திலும் -நரகத்திலும் -பிறப்பிலுமாக -நாம் மாறி மாறி திரிந்து கொண்டு இருந்தது –
மனம் போனபடி ஸ்வ தத்ரமாக நாம் நடந்து கொண்டமையால் -அதனுக்கு இடம் தாரார் -என்றபடி .

இதனால் ஈஸ்வரனிலும் ஆசார்யர் ஆகிற எம்பெருமானாருக்கு உள்ள வேறுபாடு தோற்றுகிறது-
அவன் கர்மத்திற்கு தக்கவாறும் நடாத்துகிறவன் –
ஸ்ரீ எம்பெருமானாரோ கிருபைக்கு தக்கவாறு மட்டும் நடாத்துவார் –
அதனால் தன் கருணைக்கு ஏற்ப -அவித்யை கர்மம் முதலியவற்றை .அடியோடு ஒழிப்பவனாய் இருப்பினும்
கேட்ப்பார் அற்ற ஸ்வ தந்த்ரனாதலின் -நம் கர்மத்திற்கு ஏற்ப அவன் நடாத்த புகின் நம் நிலைமை என் ஆவது –
ஸ்வர்க்கத்தில் போடுவானோ -நரகத்தில் போட்டு தபிக்க செய்வானோ -கர்மத்தில் சுழல விடுவானோ -என்று
மனம் நைதற்கு இடம் உண்டு -மேலும் அவற்றிலே திரிந்து உழலுதற்கு காரணமான வினைகளை ஈட்டிக் கொள்ளுமாறு
ஸ்வ தந்தரத் தன்மையை தந்து விடுவானோ என்று பயப்பட்டு நைய வேண்டியது ஆகிறது –
ஸ்ரீ எம்பெருமானாரோ அவன் போல ஸ்வர்க்கத்தில் இட மாட்டார் – நரகில் இட்டு சுட மாட்டார் -சுழல் பிறப்பில் நட மாட்டார் –
அந்நிலை ஏற்படும் படி நம்மை ஸ்வ தந்தரமாக நம் இஷ்டப்படி விட மாட்டார் -ஆகவே நெய்வதற்கு இடம் எது -என்கிறார் –
ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனைப் பற்றினார்க்கு -மீண்டும் ஸ்வ தந்த்ரதன்மையைத் தந்து –
கர்ம பந்தத்துக்கு உள்ளாக்கி விடுவானோ -ஸ்வ தந்த்ரனான அவன் -என்று அஞ்சி-நைவதற்கு இடம் உண்டு –
கர்மங்கள் தொலைக்கப் பட்டு இருந்தாலும் அவை கிளறுவதற்கு-ஹேதுவான தேக சம்பந்தம் இன்னும் நீங்காமையின்
அஞ்சி நைதல் தவிர்க்க ஒண்ணாதாயிற்று.

ஈஸ்வரனுக்கும் தம் ஆசார்யனுக்கும் பரதந்த்ரர் ஆகிய எம்பெருமானாரோ –
ஸ்வ தந்த்ர்ய தன்மையை தந்து கர்ம பந்தத்துக்கு உள்ளாகும்படி விட்டு விட மாட்டார் –
பரதந்த்ரர் ஸ்வ தந்த்ரம் தர மாட்டார் அன்றோ –
தேக சம்பந்தம் உள்ள வரையிலும் புத்தி பூர்வகமான -தெரிந்து வேண்டும் என்றே புரியுமவையான –
பாபங்களில் இறங்க ஒண்ணாதவாறு கண் காணித்து காத்து அருளுவார் -என்பது -கருத்து –

இங்கு -ஸ்ரீ எம்பெருமானார் சம்பந்தம் உடையவனாய் இருந்து வைத்தும்-அரங்க மாளிகை -என்பான் ஒருவன் –
விஷய ப்ரவணனாய் வர்திக்கக் கண்டு-பஹூச -பலகாலும் சிஷித்து ஸ்ரீ கீதா அத்யாயங்களை-பதினெட்டும் ஓதுவித்து –
அதில் அர்த்தம் நெஞ்சில் படுத்தி -ஊண் உறக்கமும் அறியாதே -வீத ராகனாய் -ஆசை அற்றவனாய் –
கிருபா பரதந்திர -அருளுக்கு உட்பட்டவனாம் படி -அருளினாரே -என்று ஸ்ரீ எம்பருமானார்
தம் சம்பந்தம் உடையாரை அவர்கள் வசத்தே விடாமைக்கு உதாஹரணமாய்-
விலஷண மோஷ அதிகாரி-நிர்ணயத்தில் காட்டி இருப்பது -காணத்தக்கது ..

ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே பிரசங்கம் –பயம் அபயம் -இரண்டும்-மாறி மாறி நடப்பது -தான் உள்ளது –
என்னும் ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தியும் –
பரதந்திர ஸ்வரூபனாய் மோஷ ஏக ஹேதுவான ஆசார்யனை உபாயமாக பற்றில் இப் பிரசங்கம்-இல்லை –
சதத நிர்ப் பரனாய் இருக்கலாம் என்று கருத்து -என்னும் ஸ்ரீ மணவாள மா முனிகள்-வியாக்யானமும் அறியத் தக்கன .

சரணம் என்றால் –
சரணம் அடைந்தால் என்றபடி –
மனம் வாக்கு உடல் என்னும் மூன்று கரணங்களும் சரண் அடைவதற்கு தேவை இல்லை –
அம் மூன்றுக்குள் மிக எளிதான வாக்கு ஒன்றே போதும் –
அதாவது ஸ்ரீஎம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று சொன்னாலே போதும் –
ஸ்ரீ எம்பெருமான் கைவிடாமல் இருப்பதற்கு -என்னும் கருத்துடன் -சரணம் என்றால்-என்கிறார் .

இதனை எம்பெருமான் திறத்து-சரணா கதி என்னும் சொல்லை சொன்ன என்னை –
நான் மகா-பாபியாய் இருப்பினும் ஈஸ்வரனாகிய நீ உபேஷிப்பது தகாது என்னும் பொருள்பட –
பாபீ யசோபி சரணாகதி சப்த பாஜோ நோபே ஷணம் மாமா தவோசிதம் ஈச்வரஷ்ய – என்று
இவர் ஆசார்யரான ஸ்ரீ கூரத் ஆழ்வான் அருளிச் செய்து உள்ளமை -காண்க –

பெரியோர்கள் இது பற்றியே
ஸ்ரீ மதே ராமானுஜாய நம -என்று சொல்லியோ எழுதியோ தங்கள் பணியைத் தொடக்கி
இடையூறு இன்றி முடிப்பதைக் காண்கிறோம் .

இவ்விடத்தில்
ஸ்ரீ ராமானுஜாய முநயே நம உக்திமாத்ரம் காமாது நுரோபி குமதி கலயன் ந பீ ஷணம்
யாமாம நந்தி யமி நாம் பகவஜ்ச நா நாம் தாமேவ விந்ததி கதிம் தமஸ பரஸ்தாத் –
புத்தி கெட்டவனாய்-காமத்தினால் பீடிக்கப் பட்டவனாய் -இருப்பினும் ஸ்ரீ ராமானுஜாய நம -என்னும் சொல்லை
மட்டும் அடிக்கடி சொல்லுமவன் –பகவானைச் சேர்ந்தவர்களான யோகியர் பிரகிருதி மண்டலத்திற்கு அப்பால் உள்ள
எந்த மோஷத்தையேபெறுவதாக ஒதுகின்றனரோ அந்த மோஷத்தை அடைகிறான் –என்னும்
ஸ்ரீ ராமானுஜ அஷ்டக ஸ்லோகம் அனுசந்திக்கத் தக்கது .

ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளை ஆஸ்ரயித்து-
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஏதே -என்னும்படியான நிஷ்கர்ஷத்தைப் பெற்ற அடியோங்களை –
அப்ராப்தமானவை ஒன்றும் தட்டாதபடி பண்ணி அருளுவார் -என்று கருத்து

த்ர்ணீ க்ரத விரிஞ்சாதி நிரம்குச விபூதய -ராமானுஜ பதாம் போஜ சமாஸ்ரயண சாலி ந -என்றும்
மதன கதனைர் நக்லிச்யந்தே யதீஸ்வர சம்ஸ்ரயா -என்னக் கடவது இறே –

மேவுதற்கு –
அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ – என்றும் –
ஸ்ரீ ராமானுஜச்ய வசக பரிவர்த்தி ஷீய -என்றும் சொல்லுகிறபடியே –
நம்மால் பிரதி பாதிக்க படுகிற ப்ராப்தி நிமித்தமாக –

நையல் –
சிதிலமாகாதே கொள் –
மேவுதல் –பொருந்துதல் -அதாவது ப்ராபித்தல் –
சோற்றுக்கு கரையாதே கொள் என்றால் -சோறு நிமித்தமாக கரையாதே கொள் என்னுமா போலே
மேவுதற்கு நையேல் என்றது -மேவுதல் நிமித்தமாக நையல் வேண்டா -என்றபடி –
ந புக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி -அவசியம் அனுபோக்தவ்யம் க்ர்தம் கர்ம ஸூ பா ஸூ பம் -என்கிற
சாஸ்த்ரத்தை உட் கொண்டு சர்வேஸ்வரன் சம்சாரத்தில் மூட்டும் ச்வாபவனாய் விட்டாப் போலே-
ஸ்ரீ எம்பெருமானாரும் தம் சாஸ்திர மரியாதையை உட் கொண்டு உதாசீனராய் இருப்பாரோ என்று அதி சங்கை-பண்ணின நெஞ்சைக் குறித்து –
ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பும் -பிரபன்னராய் -சரம பர்வ நிஷ்டராய் இருக்கும்-நம்மை
உபாசகரைப் போலே ப்ராப்ய அவசான பர்யந்தம் சம்சார வெக்காயம் தட்டும்படி காட்டிக் கொடார் -என்றது ஆய்த்து –

மனமே நையல் மேவுதற்கே -என்று
சேதன சமாதியால் அருளிச் செய்கிறார் -அசித்தை கூட திருத்தும் படி காணும்-இவர் உபதேசம் இருப்பது –
நகலு பாகவதாய மவிஷயம்கச்சந்தி -பரிஹர மது ஸூ தன பிரபன்னான் பிறப்பு ரஹமன்ய நிர்னாம் –
த்யஜபட தூரதரென தானபாபான் -என்னக் கடவது இறே –
எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே – என்று-இவ்வர்த்தத்தை பிரதம பர்வத்தில்
ஸ்ரீ திரு மழிசைப் பிரானும் அருளிச் செய்தார் இறே –

மனமே நையல் மேவுதற்கு –
சோற்றுக்கு நையாதே எனின் சோறு கிடைப்பது பற்றி வருந்தாதே -அது கிடைப்பது உறுதி என்று பொருள் படுவது போலே
மேவுதல்-பேற்றினைப் பெறுதல் பற்றி நையாதே -என்றது பேறு கிடைப்பது பற்றி வருந்தாதே
அது கிடைப்பது உறுதி என்று பொருள் பட நின்றது .
நையல்-எதிர்மறை வியங்கோள் வினை முற்று
பேற்றுக்காக வருந்தாது நிம்மதியாய் இரு என்று மனத்தை தேற்றினார் -ஆயிற்று –

உத்தாரணம் பண்ணவே அவதரித்தார்..இது ஒன்றே அவதார பலன்-

அரவணை மேல் பேர் ஆயற்கு ஆட் பட்டார் பேர் -பெயரை வைத்து கொண்டாலே போதும்-
எத்தினால் இடர் கெட கிடத்தி –இறந்த குற்றம் எண்ண வல்லனே

—————–

நெறி காட்டி நீக்குவாயோ –

அல்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்-

தமர்கள் வல் வினையை கூட்ட நாசம் செய்கிறான்-

பல நீ காட்டிப் படுப்பாயோ இன்னம் கெடுப்பாயோ –

போர வைத்தாய் புறமே –

அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-

ஸ்ரீ சரம ச்லோகார்த்தம் சொல்லும் பாசுரம்
இத்தையும் வார்த்தை அறிபவர் -பாசுரத்தையும் முமுஷுப்படி முடிவில் எடுத்துக் காட்டி அருளுகிறார்
நம்முள் ஒரு நீராகப் பொருந்தி இருக்கிறார் மட நெஞ்சமே சோகப் படாதே என்கிறார்-

மாறு செய்த வாளரக்கர் நாள் உலப்ப அன்று இலங்கை
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்
வேறு செய்து தம்முள் என்னை வைதிடாமையால் நமன்
கூறு செய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே -116-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –97–தன்னை வுற்றாட் செய்யும் தன்மையினோர்- இத்யாதி —

June 1, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி ஸ்ரீ எம்பெருமானார் தம்மளவன்றிக்கே-அங்குத்தைக்கு அனந்யார்ஹராய் இருப்பார் உத்தேச்யர் என்று
இருக்கைக்கு இந்த ருசி உமக்கு வந்த வழி தான் என் என்ன -அதுவும்
ஸ்ரீ எம்பெருமானார் தம்முடைய கிருபையாலே வந்தது என்கிறார்

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டிலே எம் இறைவர் -ஸ்ரீ இராமானுசனை உற்றவரே -என்று -மாதா பிதா –சர்வம் யதேவ நியமே ந மதந்வயாநாம் –
என்றால் போலே ஸ்ரீ எம்பெருமானாரை- தேவு மற்று அறியேன் -என்று பற்றி இருப்பாரே –தமக்கு உறு துணை -என்று
இவர் சொன்ன வாறே -உமக்கு அவர் தம் அளவில் அன்றிக்கே -அங்குத்தைக்கு -நிழலும் அடிதாரும் போலே –
அனந்யார்ஹராய் இருப்பாரும் கூட உத்தேச்யர் என்று இருக்கைக்கு ஈடான இந்த ருசி வந்த வழி தான் ஏது என்ன –
திக்குற்ற கீர்த்தி – என்னும்படியான இவர் தம்முடைய வைபவத்தை -கண்களால் கண்டும் செவிகளால் கேட்டும் –
தம் பக்கலிலே-அடிமைப்படுவாரை இத்தனை ஒழிய –
தமக்கு அனந்யார்ஹராய் இருப்பார் -தமக்கு கிடைக்க அருமை — அடிமைப் படுவார் கிடைக்க-அரியார் என்று
திரு உள்ளமாய் –முந்துற முன்னம் தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் பக்கலிலே என்னை அடிமைப்படுத்தினர் ஆகையாலே –
இந்த ருசி அடியேனுக்கு அவருடைய கிருபையாலே வந்தது -என்கிறார்

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

இப்படி ஸ்ரீ எம்பெருமானார் அளவோடு நில்லாது -அவர் தம்மை உற்றவர் அபிமானத்திலே நிஷ்டை
ஏற்படும் படியான விருப்பம் – எவ்வாறு உமக்கு வந்தது என்பாரை நோக்கி
அதுவும் ஸ்ரீ எம்பெருமானார் கிருபையினாலே வந்தது -என்கிறார் –

தன்னை வுற்றாட் செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத் தாள்
தன்னை வுற்றாட் செய்ய என்னை வுற்றானின்று தன் தகவால்
தன்னை வுற்றாரன்றித் தன்மை வுற்றாரில்லை என்றறிந்து
தன்னை உற்றாரை இராமானுசன் குணம் சாற்றிடுமே – – -97 –

பத உரை –
தன்னை உற்றார் அன்றி -தம்மை பற்றி இருப்பவர்கள் உள்ளார்களே தவிர
தன்னை உற்றாரை -தம்மை பற்றி இருப்பவர்களை
குணம் சாற்றிடும் -குணங்களை உலகறிய சொல்லி பரவும்
தன்மை உற்றார் -ஸ்வபாவம் நிறைந்தவர்
இல்லை என்று அறிந்து -ஒருவரும் இல்லையே என்று திரு உள்ளம் பற்றி
தன்னை உற்று -தம்மைப் பற்றி
ஆட் செய்யும் -அடிமை புரியும்
தன்மையினோர் -ஸ்வபாவம் உள்ளவர்களுடைய
மன்னு -ஒன்றுக்கு ஓன்று பொருந்தி உள்ள
தாமரை -தாமரை மலர் போலே மிக்க அழகு -போக்யதை -வாய்ந்த
தாள் தன்னை -திருவடிகளை –
உற்று -பற்றி நின்று
ஆட் செய்ய -அடிமை செய்யும் படியாக
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார்
தன் தகவால் -தம்முடைய கிருபையினாலே
இன்று என்னை உற்றான் -இன்று என்னைப் பற்றி -ஏற்று அருளினார் .

வியாக்யானம்
தம்மை பற்றி இருப்பார் உண்டு இத்தனை ஒழியத்-தம்மைப் பற்றி இருக்குமவர்களைக் குண கீர்த்தனம்
பண்ணுகை யாகிற ஸ்வபாவத்தில் உற்று இருப்பார் ஒருவரும் இல்லை என்று திரு உள்ளம் பற்றி –
தம்மை ஒழிய விஷயாந்தரம் அறியாதபடி பற்றித் தமக்கு அடிமை செய்கையே ஸ்வபாவமாக உடையராய்
இருக்குமவர்களுடைய பரஸ்பரம் பொருந்தியும் -பரம போக்யமுமாய் இருக்கிற திருவடிகளை
தத் வ்யதிரிக்தங்கள் ஒன்றும் அறியாத படி பற்றி –இவர்களுக்கு தம்மை அடிமை செய்யும்படியாக
ஸ்ரீ எம்பெருமானார் தம்முடைய கிருபையால் இன்று என்னை அங்கீ கரித்து அருளினார் –

தன்மை -ஸ்வபாவம்
மன்னுதல் -பொருந்துதல்

தன்னை வுற்றார் அன்றித் -தன்னை வுற்றாரை- குணம் சாற்றிடும் தன்மை வுற்றார் -இல்லை-என்று அறிந்து –
தன்னை உற்றாட் செய்யும் தன்மையினோர்- மன்னு தாமரைத் தாள் தன்னை- வுற்றாட் செய்ய-
இராமானுசன்- தன் தகவால் இன்று என்னை வுற்றான் –என்று-அந்வயம் .-.

விஷய பிரவண்யத்தை விட்டு பகவத் விஷயத்தில் வரும் அருமை போல் அன்றியே பகவத் விஷயத்தை விட்டு
பாகவத விஷயம் -மேட்டு மடை அன்றோ
இளைய பெருமாள் பெருமாள் அழகில் ஈடுபட்டு இருந்ததால் -பாகவத சேஷத்வம் அறியாமல் –
நம் ஸ்வாமி -அக்குறை தோன்ற அன்றோ அவதரித்தார் இங்கு

அன்றிக்கே –
சாற்றிடும் -என்பது வினை முற்று அன்று –பெயர் எச்சம்-அது தன்மை என்னும் பெயரோடு முடிகிறது .

ஸ்ரீ பாஷ்யம் கற்பித்த -குணம் போற்றி – அடியாருக்கு ருசி விளைவிக்க – ஆனந்தம் போக்கு வீடாக –
ஸ்ரீ ஆழ்வானை போற்றுவார் ஸ்ரீ எம்பெருமானார்
ஸ்ரீ அமுதனார் தன்மை அறிந்து தகவால் ஸ்ரீ ஆழ்வான் திருவடிகளில் சேர்த்து –
அடியார் அடியார் ஏற்றம் அறிந்து அடியார்க்கு ஆட்படுத்தும் தன்மை சாற்றிடும் -பெயர் எச்சமாகவும் வினை முற்றாகவும் –
அடியார்க்கு ஆள் செய்வதே அவர்களை குணம் சாற்றிடும் தன்மை தானே –
ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் நிஷ்டை ஸ்ரீ இளைய பெருமாள் வெளியிடவில்லையே -அதனால் ஸ்ரீ ஸ்வாமி இந்த அவதாரத்தில் -காட்டி அருளி
ஸ்ரீ அமுதனாரை ஸ்ரீ ஆழ்வானுக்கு ஆட்படுத்தி அருளினார் என்றவாறு-
இக் கிருபை பூர்வ அவதாரத்தில் ராம சௌந்தர் யத்தாலே அமுக்குண்டு-நிற்க்கையாலே இவ் அர்த்தத்தை வெளி இட மாட்டாதே இருந்தார் என்றபடி –
மன்னு தாமரை தாள்கள் -போக்யமே ஈடுபடுத்தும் -கட்டாயப்படுத்த வேண்டாமே ஸ்ரீ அமுதனார் -அமுத மொழி -ஸ்ரீ ஆழ்வான் வைபவம் –
கவிபாடவும் ஆடி செய்யவும்- என்னை உற்று ஆள் செய்ய -உற்றது -கவி பாட –ஸ்ரீ கூரத் தாழ்வான் -ஒன்றே போதும்
ஸ்ரீ எம்பெருமானாரை பாட சொல்லி இதுவே ஸ்ரீ ஆழ்வானுக்கு ஆள் செய்வது-
இங்கே போனால் அங்கு அனுப்புவார்கள் -அங்கே போனால் இங்கே அனுப்புவார்கள் அன்றோ
என்னை உற்றான் இன்று -இன்றே விடிந்தது-இன்று தொட்டும் ஸ்ரீ ஆழ்வார் புகழ் பாட அருளினால் போலவும் ஸ்ரீ அக்ரூரர் போலவும்

தன்னை உற்றார் அன்றி –
கலவ் கஸ் சித் பவிஷ்யதி – என்று ஸ்ரீ நாரத பகவான் சொல்லுகையாலும் –
பாகவத புத்ரனான ஊமை –இவர் தம் பிரபாவத்தை கட்டடங்க வெளி இட்டு -அங்கனே திரோஹிதன் ஆகையாலும் –
யாதவ பிரகாசர் இவரை வஞ்சிப்பதாக மணி கர்னிக்கைக்கு அழைத்துக் கொண்டு போகிற போது
ஸ்ரீ கோவிந்த பெருமாள் அச் செய்தியைக் கேட்டு -வித்யாடவியிலே அறிவித்தவாறே -அங்கே இவர் தனிப்பட்டு இருக்க –
அவ்வளவிலே ஸ்ரீ பெருமாள் தாமே இவருக்கு வழி துணையாக வந்து -ஒரு ராத்ரியிலே தானே இவர் தம்மை –
ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய ஸ்ரீ கச்சித் திருப்பதியிலே சேர்த்தார் என்று சொல்லுகையாலும் –
இவருக்கு ஸ்ரீ திருக் கச்சி நம்பி முகமாக சமஸ்த அர்த்தங்களையும் ஸ்ரீ பேர் அருளாளர் வெளி இட்டார் என்கையாலும் –

திக் விஜயார்த்தமாக தத் தேசங்களிலே சென்று –
சைவ மாயாவாத ஜைன பௌதாதிகள் உடம் சஹஸ்ரமுகமாக பிரசங்கித்து -அவர்களை பக்னர் ஆக்கினார் என்கையாலும் –
ஸ்ரீ வேங்கடாசல ஸ்ரீ யாதவாசலங்களை நிர்வஹித்தார் என்கையாலும் –
இச் செய்திகளை அடைவே கண்டும் கேட்டும் லோகத்தார் எல்லாரும் வித்தராய் –
அலசாம் ப்ரதிபேதரே -என்றால் போலே
தம்மை ப்ராப்யமாகவும் பிராபகமாகவும் அத்யவசித்து -ஆஸ்ரயித்து இருப்பார் உண்டு இத்தனை ஒழிய ––

தன்னை உற்றார் குணம் சாற்றிடும் தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து தன்னை உற்றார் –
தம்முடைய ஸ்வரூப ரூப குண விபவங்களை உள்ளபடி தெளிந்து இருக்கும் அவர்கள் –
அன்றிக்கே –-
சம்பந்தி சம்பந்திகள் அளவிலே கிருபை அதிசயித்து இருக்கிற தம்முடைய ஸ்வபாவத்தை-உள்ளபடி தெளியப் பெற்றவர்கள் என்னுதல் –
அமுதனார் தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் விஷயத்தில் -கிருபை-பண்ண விரும்புவதும் –
அந்த ஸ்வபாவத்தை உள்ள படி அறிகைக்கு உத்தேச்யர் என்று இறே -எம்பெருமானார் உடைய-ஸ்வபாவம் –
தம்மை ஆஸ்ரயித்து இருக்குமவர்களை காட்டில் – ஸ்வ சம்பந்த சம்பந்திகள் விஷயத்தில் கிருபை-
அதிசயித்து செல்ல வேண்டும்படியாய் இருக்கும் -ஆகையால் இறே –
த்வத் தாஸ தாஸ கண ந சரமாவதவ் யஸ் ஸ்வத்தா-சதைகரசதா விரதாமமாஸ்து -என்று ஸ்ரீ ஜீயரும் பிராரத்து அருளினார் இறே –
இப்படிப் பட்ட ஸ்வபாவத்தை அறிந்து ஆஸ்ரயித்தார் உடைய-

குணம் சாற்றிடும் தன்மை உற்றார் –
எம்மை நின்றாளும் பரமரே -நம்மை அளிக்கும் பிராக்களே –
தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே –
சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே –
தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே –
கடல் மலை தலை சயனம் ஆர் எண்ணு நெஞ்சுடையார் அவர் எம்மை ஆள்வாரே –
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காணும் என் தலை மேலாரே –என்று பிரதம பர்வ நிஷ்டரான ஸ்ரீ ஆழ்வார்கள்
ததீய விஷயத்தில் அருளிச் செய்த குணாதிக்யத்தை இட்டு ஸ்தோத்ரம் பண்ணுகை யாகிற ஸ்வபாவத்தை உடையராய் இருப்பார் –

தன்மை -ஸ்வபாவம் –
சாற்றுதல் -பிரகாசமாக சொல்லுதல் –

இல்லை என்று அறிந்து –
தத்ராபி துர்லபம் மன்யே வைகுண்டே ப்ரிய தர்சனம் -என்னுமா போலே இது-தான் துர்லபம் –
விஷய ப்ரவணனுக்கு அத்தை விட்டு ஸ்ரீ பகவத் விஷயத்திலே வருகைக்கு உள்ள அருமை போல்-அன்றிக்கே –
பிரதம பர்வதத்தை விட்டு -சரம பர்வதத்திலே வருகைக்கு உள்ள வருமை -என்றும் சொல்லுகிறபடியே
மேட்டுமடையான இவ் அத்யாவச்யத்தை உடையவர் ஒருவரும் இல்லை என்று அறிந்து –
இல்லை என்று திரு உள்ளம் பற்றி -என்றபடி –

இந்த சூஷ்ம அர்த்தத்தை தெளிந்து இருக்குமவர் இவர் ஒருவரே என்று இருக்கிறார் காணும் ஸ்ரீ அமுதனார் –

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் –

தம்முடைய பூர்வ அவதாரத்தில் வெளி இட மாட்டாத அர்த்தத்தை காணும் இப்போது வெளி இடத் தொடங்கினார் –

தன் தகவால் –
சாவித்ரீ முக்தாநாம் சகல ஜகதேன ப்ரச மனீ கரீ யோபிஸ் தீர்த்த ரூபசித-ரசயா முன முகை நிருச்சேதாநிம் நேதாமபி
சமாலாப்வயதிமாம் யதர்ச்சா விஷேபாத்-யதிபதி தயாதி வ்யதடி நீ –
(கங்கை முத்து / ஸ்ரீ ஸ்வாமி முக்தர் / பாபம் போக்கும் கங்கை போலே ஸ்ரீ ஸ்வாமி ஸ்ரீ ஸூக்திகள் -யமுனை தீர்த்தங்கள் சேர்ந்து –
வெள்ளைப் பெருக்கு/ ஸ்ரீ யாமுனாதிகள் உபதேசமும் இவர் கருணையில் சேரும் -நிருச்சேதா -வற்றாத –
நின் நே மேட்டு நிலம் -வணங்கா முடி -ஸ்ரீ யதிராஜ சப்ததி விடாமல் ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் காட்டி அருளுகிறார் ) என்கிறபடி
கரை கட்டா காவேரி போலே பெருகி வருகிற-தம்முடைய பரம கிருபையாலே –

இக் கிருபை பூர்வ அவதாரத்தில் ஸ்ரீ ராம சௌந்தர் யத்தாலே அமுக்குண்டு-நிற்க்கையாலே
இவ் அர்த்தத்தை வெளி இட மாட்டாதே இருந்தார் என்றபடி –

தன்னை உற்று ஆள் செய்யும் தன்மையினோர் –
வாசா யதீந்திர மனசா வபுஷாச யுஷ்மத்-பாதார விந்த யுகளம் பஜதாம் குருணாம் -என்றும் –
நித்யம் யதீந்த்ரம் தவ திவ்ய வாபஸ் ச்ம்ரத்தொமே-சக்தம் மனோபவது வாக் குண கீரத்த நேசவ்-
க்ர்த்யஞ்ச்ச தாஸ்ய கரணந்து – கரத்வயச்ய-வ்ர்த்யந்தே ரேச்து விமுகம் கரண த்ரயஞ்ச -என்றும் –
நித்யம் யதீந்திர தவ திவ்ய பதாப்ஜ சேவா -என்றும் சொல்லுகிறபடி –
தம்மை ஒழிய வேறு ஒரு விஷயாந்தரம் அறியாதபடி -ஆஸ்ரயித்து –கரண த்ரயத்தாலும் தமக்கு சகல வித கைங்கர்யங்களும்
பண்ண வேணும் என்னும் ஸ்வபாவத்தை-உடையராய் இருக்குமவர்கள் –
தன்மையினோர் –
ஸ்வபாவம் உடையோர்

மன்னு தாமரைத்தாள் தன்னை உற்றாள் செய்ய என்னை உற்றான் இன்று –
த்ர்ணீ கர்த விரிஞ்சாதி நிரந்குச விபூதய -ராமானுஜ பதாம் போஜ சமாச்ரயண சாலி ந-என்றும் –
ஸ்ரீ ராமாநுஜார்ய சரண த்வந்த்வ கைங்கர்ய வ்ர்த்தய-சர்வாவச்தாஸூ சர்வ ரஸூ -தாரக போஷகாஸ் சமே -என்றும் சொல்லுகிறபடி –
இப்படி சர்வ பிரகாரத்தாலும் ஸ்லாக நீயராய் இருக்குமவர்கள் –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் ஸ்ரீ கண்ணன் எம்பெருமான் -என்று ஸ்ரீ ஆழ்வார் அத்யவசித்தால் போலே
தமக்கு தாரகாதிகளாக அத்யவசித்து –
கம்பீராம்பஸ் சமுத்பூதமாய் -செவ்வி பெற்று இருக்கிற செந்தாமாரை போலே
அதி ஸூ குமாரங்களாய் -ஒன்றுக்கு ஓன்று போலியாய் -பொலிந்து என்றும் –
மன்னு தாமரை தாள்கள் அன்றோ-அத்யந்த போக்யங்களாய் இருக்கிற அவர்களுடைய திருவடிகளை –

தத் தாஸ தைகர சதா விரதாமமாஸ்து -என்றபடியே
வழு இலா அடிமை செய்ய வேண்டும் என்னும் மநோ ரதத்தையும் –
மம மத் பக்த பக்தேஷூ ப்ரீதிரப்யதி காபவேத் –
தஸ்மான் மத் பக்த பக்தாஸ்ஸ பூஜ நீயா விசேஷத -என்ற அவனுடைய ஊற்றத்தை போன்ற ஊற்றத்தையும் உடையராய் கொண்டு –
மற்றொரு பேறும் மதியாதபடி பற்றினார் –
மநோ ரதித்த படியே -அவர்களுக்கு வழு இலா அடிமை செய்ய வேண்டும்படியாக அடியேனை இன்று திருத்தி-
அங்கீ கரித்து அருளினார்-
மன்னுதல்-பொருந்துதல் –
இவ் அங்கீகாரம் முன்பு உண்டாய்-இருந்தது -ஓன்று அல்ல –
இன்று உற்றான் –
அத்யமே சபலம் ஜன்ம ஸூ ப்ரபாதாசமே நிசா -என்கிறபடி-
விடியா வென் நரகம் அற்றுப் போய் இன்று நல் வீடு உண்டாக தொடங்கிற்று -என்கிறார் –

மன்னு தாமரைத் தாள்
எல்லாரும் என்னை ஆஸ்ரயிக்கிரார்கள் தவிர-
என்னை ஆஸ்ரயித்து உள்ளவர்களை ஆஸ்ரயித்து -அவர்கள் குணங்களை உலகு அறியப் பேசுகிறவர் எவருமே இல்லையே –
என்னும் குறைபாடு ஸ்ரீ எம்பெருமானார் திரு உள்ளத்திலே நெடும் காலமாய் இருந்தது –
அக்குறை பாட்டினை என்னை இன்று தன்னை ஆஸ்ரயித்தவர்களை ஆஸ்ரயித்து
அவர்கள் திருவடிகளிலே ஆட் செய்யும் படி செய்ததனால் -அவர் தீர்த்துக் கொண்டார் என்றபடி –
தம்மை ஆஸ்ரயித்தவர்களை உற்று ஆட் செய்யும்படி செய்தது கட்டாயப் படுத்தியதனால் அன்று –
அதில் போக்யதையை காட்டி விரும்பும் படி செய்ததனாலேயே என்னும் கருத்து தோன்ற -மன்னு தாமரைத் தாள் -என்றார் –

தன் தகவால் –
தன் மனக்குறை தீர என்னை இந்த உயர்ந்த நிலைக்கு தேர்ந்து எடுக்க காரணம் -தனது கிருபையே – என்கிறார்
தகவு -கிருபை
இனி ஆட் செய்ய -என்பதற்கு
குணம் சாற்றிடல் ஆகிய அடிமை செய்ய என்னும் பொருள் கொண்டு
தன்னயுற்றாரை குணம் சாற்றிடும் தன்மை உற்றார் இல்லையே என்னும் குறை தீருவதற்காக
என்னை குணம் சாற்றி -ஆட் செய்ய -ஏற்று அருளினார் -என்னவுமாம் –
என்னை –
குணம் சாற்றிடும் –துதிக்கும் -தன்மை-இயல்பாய் அமைந்த உணர்ச்சி ஊட்டும் கவித் திறமை -வாய்ந்த –
அமுத கவியாய -என்னை -என்றபடி .
தன்னை ஆஸ்ரயித்தவர்களைப் பற்றி கவி பாடும் தன்மை வாய்ந்தவர் எவரும் இல்லையே என்று குறை பட்டு –
ஸ்ரீ அமுதனாரை கொண்டு -ஸ்ரீ ஆழ்வான் விஷயமாக கவி பாடச் செய்து கேட்கலாம் என்று
ஸ்ரீ அமுதனாரை ஸ்ரீ ஆழ்வான் திருவடிகளிலே -ஆஸ்ரயித்து ஆட் செய்யும் படி அங்கீ கரித்து அருளினார் ஸ்ரீ எம்பெருமானார் –

ஆயின் ஸ்ரீ அமுதனார் ஸ்ரீ ஆழ்வானுக்கு ஆட் செய்தாரே அன்றி –கவி பாடி -ஸ்ரீ ஆழ்வான் குணம் சாற்றி –
ஸ்ரீ எம்பெருமானாரைக் கேட்ப்பிக்க வில்லை –
காரணம் ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ எம்பெருமானார் விஷயமாக கவி பாடக் கட்டளை இட்டாரே யன்றி
தன் விஷயமாக கவி பாட சற்றும் இசைய வில்லை –
அதனால் ஸ்ரீ எம்பெருமானாரைப் பற்றிய பாடல்களில் இடை இடையே அவரைக் குறிப்பிடுவது தவிர
தனியே கவி பாடுவது ஸ்ரீ அமுதனாருக்கு இயலாதாய் ஆயிற்று —
ஸ்ரீ எம்பெருமானார் தம் ஆசார்யர் ஆகிய பெரிய நம்பிகள் நியமனப்படி -அவர் விஷயமாக அல்லாமல்-
பரமாச்சார்ய விஷயமாக -யத்பதாம் போரு ஹத்த்யான – என்னும் ஸ்லோகத்தை அருளிச் செய்தது போலே
ஸ்ரீ அமுதனாரும் பரமாசார்ய விஷயமாக இந்த பிரபந்தத்தை அருளிச் செய்தார் -என்க –

தன்னை உற்றாரை குணம் சாற்றிடும் தன்மை உற்றார் -என்று இயைக்க
சாற்றிடும் -என்பது வினை முற்று அன்று -பெயர் எச்சம்-அது தன்மை என்னும் பெயரோடு முடிகிறது –

தன்னை உற்றார் அன்றி தன்னை உற்றாரை குணம் சாற்றிடும் தன்மை உற்றார் இல்லை –
என்று அறிந்து
தன்னை உற்று ஆட் செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத்தாள் -தன்னை உற்று ஆட் செய்ய
ஸ்ரீ இராமானுசன் தன் தகவால் இன்று என்னை உற்றான் -என்று கொண்டு கூட்டி முடிக்க –

இனி உற்றான் என்பதைப் போலே –சாற்றிடும் என்பதையும் வினை முற்றாக கொண்டு –
இரண்டு வாக்யங்களாக பிரித்து -பொருள் கூறலாமோ என்று தோன்றுகிறது .
அப்பொழுது கடைசியில் உள்ள சாற்றிடும் என்பதை மூன்றாம் அடியில் உள்ள –தன்மை -என்பதோடு கூட்டி
வலிந்து உரை கூறும் இடர்ப்பாடு இல்லை –
மூன்றாம் அடியில் உள்ள தன்மை -என்பதற்கு –
தம் அடியார்க்கு அடியாராய் இருக்கும் ஆத்மாவினது இயல்பான தன்மை –என்று பொருள் கொள்ளல் வேண்டும் –

தனக்கு அடியார்கள் உளரே அன்றி தன் அடியார்க்கு அடியாராம் இயல்பான நிலைமையை எய்தினவர் ஒருவரும் இல்லையே –
என்று இனி –
தன் அடியார்களுக்கு அடியார் ஆவதற்கு உறுப்பாக தன்னை உற்றாரை குணம் சாற்றிடுவார் ஸ்ரீ எம்பெருமானார் -என்று
இப் பொழுது பொருள் ஆயிற்று –

புதிதாய் வருமவர்களிடம் தம் அடியார்களை ஆஸ்ரயிப்பதற்கு விருப்பம் ஏற்ப்படும் வகையில் –
அவ் அடியார்களை நாடறிய புகழ்ந்து உரைப்பர் எம்பெருமானார் -என்பது கருத்து –
ஸ்ரீ ராமானுசன் -என்பது இரண்டு வாக்யங்களுக்கும் ஒரே எழுவாய் –
தன் தகவால் -என்பதனை –
காகாஷி ந்யாயத்தாலே -முன்வாக்யத்திலும் பின் வாக்யத்திலும் கூட்டிக் கொள்ளல் வேண்டும்
தன் தகவால் உற்றான் என்றும்
தன் தகவால் தன்னை உற்றாரை குணம் சாற்றிடும் -என்றும் உரைக்க –

இதனால் தன் அடியார் குணத்தை தானே சாற்றிடுதல் தகுமா என்னும் வினாவிற்கும் விடை இறுத்ததாகிறது –
சீரியதான அடியார்க்கு அடிமை என்னும் இயல்பான நிலையில் வருமவர்களை அமர்த்தல் வேண்டும் -என்னும் கிருபையினாலே
அவர்களுக்கு ருசி உண்டாகுவதற்க்காக-சாற்றிடுதலின் இது தகாதது அன்று -என்க .

இனி உலகை உய்வித்தலாம் தமது பணியில் -தன் அடியார்களை ஊக்குவித்து –
அடியார்க்கு அடியார்களை பெரும் மகிழ்வின் மிகுதியினாலேயே தன் அடியார்களை கொண்டாடுதலும் தகும் -என்க –

தான் வளர்த்த கிளி -தன்னால் கற்ப்பிக்க பட்ட திரு நாமத்தை விவேகத்துடன் சமயத்துக்கு ஏற்ப –
உஜ்ஜீவிப்பித்த படி -தோற்றுமாறு –அடைவே சொல்லக்கேட்டு -தரித்து –
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக -ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் – -14 – என்று
ஸ்ரீ பரகால நாயகி -தான் கற்பித்த கிளையை கொண்டாடினது போலே
ஸ்ரீ எம்பெருமானாரும் தாம் கற்பித்த சீடர்கள் தாம் வழங்கிய கல்வி கொண்டே உலகினை உய்வித்தலாம் தமது பணியிலே –
உரு துணையாய் நிற்றலையும் –
தம் அடியார்க்கு அடியார் -தமக்கு கிடைத்தமையையும் கண்டு மகிழ்ந்து -கற்பித்த தலினால் பயன் பெற்றேன் -என்று
கற்ப்பிக்க பட்ட சீடர்களைக் கொண்டாடினார் என்று அறிக –

தன்னை உற்றாரைக் கொண்டாடுவது ஆஸ்ரயிப்பவர்க்கு-அடியார்க்கு அடிமையில் விருப்பம் உண்டாவதற்கும் –
தான் கற்ப்பித்தது உயிர்களை உய்விப்பதில் பயன் பட்டமையினாலும் –
அடியார்க்கு அடியார் கிடைத்தமையினாலும்-
உண்டான வரை கடந்த மகிழ்ச்சிப் பெருக்கின் போக்கு வீட்டிற்காகவும் -என்றது ஆயிற்று .

முதல் வாக்யத்தால் ஸ்ரீ எம்பெருமானார் தம்மை ஸ்ரீ ஆழ்வான் திருவடிகளில் ஆஸ்ரயிப்பித்ததும்
இரண்டாம் வாக்யத்தால் -இறாய்க்காமல் ஸ்ரீ ஆசார்யன் ஆணைக்கு ஆட் பட்டு ஸ்ரீ ஆழ்வான் தமக்கு ஆசார்யனாகி –
அந்த ஸ்ரீ எம்பெருமானாராலே கொண்டாடப் பட்டதும் -குறிப்பால் உணர்த்தப் படுகின்றன .

ஸ்ரீ மணவாள மா முனிகள் கொண்டு கூட்டி ஒரே வாக்யமாக உரை அருளிச் செய்து உள்ளார் –
அவர் தம் திரு உள்ளம் –தன்மை -என்பது ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற தம் அடியார்க்கு அடியார் ஆகிற-ஸ்வபாவம் என்னும்
பொருளைக் கொடுக்காது -என்பதோ வேறு யாதோ தெரிகிலம்-
அறிஞர்கள் அருள் கூர்ந்து உணர்த்துமாறு அடி பணிந்து வேண்டுகிறோம் .

ஆசார்ய சார்வ பௌமராகிய மணவாள மா முனிகள் திரு உள்ளத்துக்கு முரண்பாடு இல்லை எனில்
நிர்வாஹச்ய நிர்வஹா ந்தரா தூஷகத்வம் –
ஒரு நிர்வாஹம் -ஒரு வகையில் பொருள் உரைத்தல் –மற்ற நிர்வாஹத்தை -வேறு வகையில் பொருள் உரைத்தலை –
குற்றம் கூறி கடிந்தது ஆகாது –என்கிற கணக்கில் கொள்ளவேண்டும் என்று பிரார்த்திக்கிறோம் –

———

குணம் சாற்றிடும் தன்மை உற்றார் –
எம்மை நின்றாளும் பரமரே -நம்மை அளிக்கும் பிராக்களே –
தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே –
சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே –
தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே –
கடல் மலை தலை சயனம் ஆர் எண்ணு நெஞ்சுடையார் அவர் எம்மை ஆள்வாரே –
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காணும் என் தலை மேலாரே –என்று பிரதம பர்வ நிஷ்டரான ஸ்ரீ ஆழ்வார்கள்
ததீய விஷயத்தில் அருளிச் செய்த குணாதிக்யத்தை இட்டு ஸ்தோத்ரம் பண்ணுகை யாகிற ஸ்வபாவத்தை உடையராய் இருப்பார் –

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –96–வளரும் பிணி கொண்ட வல்வினையால்- இத்யாதி —

June 1, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

மறை நாலும் வளர்த்தனன் -என்றீர்
அவர் சேதனருக்கு உஜ்ஜீவன உபாயமாக வேதாந்த பிரக்ரியையாலே அருளிச் செய்தது பக்தி பிரபத்தி ரூப உபாய த்வயம் இறே-
அதில் ஸூகர உபாயமான பிரபத்தியிலேயோ உமக்கு நிஷ்டை -என்ன –
அதுவும் அன்று –தாம் அபிமத நிஷ்டர் என்னும் அத்தை அருளிச் செய்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டிலே நிக்ரஹ அனுக்ரஹங்கள் இரண்டுக்கும் பொதுவாய் தண்டதரனான சர்வ ஸ்மாத் பரனிலும்-
அஞ்ஞான நிக்ரஹராய் – பரம பதத்தில் நின்றும் ரஷண ஏக தீஷிதராய் வந்து –அவதரித்த ஸ்ரீ எம்பெருமானார் –
நிர்ஹேதுக கிருபையை உடையவர் ஆகையாலே -சேதன சம்ரஷணார்த்தமாக வேத வேதாந்த பிரவர்த்தனம் பண்ணி அருளினார்
என்று இவர் அருளிச் செய்ய கேட்டு -அருகில் இருப்பார்
அந்த வேதாந்தந்களிலே-முமுஷூர்வை சரணமஹம் பிரபத்யே -என்று மோஷ அதிகாரிகளுக்கு சொன்ன
சரணாகதியில் நிஷ்டராய் இருந்தீரோ என்ன –
சரணா கதி பெருகைக்கு பிரதி பந்தங்களான பிரபல கர்மங்களாலே –அது தன்னிலும் -மகா விசுவாசம் கிடையாதே –
துர்கந்த பிரசுரமாய் -மாம்ஸா ஸ்ர்காதி மயமான சரீரம் கட்டுக் குலைந்து போம் அளவும் சுக துக்க அனுபவம் பண்ணிக் கொண்டு
சகாயம் இன்றிக்கே இருக்கும் எனக்கு
அந்த சரமோ உபாயமான ஸ்ரீ எம்பெருமானாரிலும் -சுலபமாய் -சேஷிகளாய் -எனக்கு ஸ்வாமியான அவர் தம்மையே
தந்தை நல் தாயம் தாரம் -இத்யாதிப்படியே சர்வ வித பந்துவாய் அத்யவசித்து –
தேவு மற்று அறியேன் -என்று இருக்கும் மகாத்மாக்களே வழித் துணையாய் -ரஷகராய் -இருப்பார் என்று அத்யவசித்தேன் –
ஆகையால் -நான் ததீய அபிமான நிஷ்டன்-என்று அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

மறை நாலும் வளர்த்தனன் என்றீர்
அவர் வேதாந்தத்தில் கூறிய முறையைப் பின் பற்றி உயிர் இனங்கள்
உய்வதற்கு உபாயங்களாக பக்தியையும் -பிரபத்தியையும் அன்றோ அருளிச் செய்தார் –
அவற்றில் எளிய உபாயமான பிரபத்தியையோ நீர் கைக் கொண்டது -என்ன
நான் பிரபத்தி நிஷ்டன் அல்லேன்
ஸ்ரீ எம்பெருமானாரைச் சேர்ந்தவர்களுடைய அபிமானத்திலே நிஷ்டை உடையேன் நான் என்கிறார் .

வளரும் பிணி கொண்ட வல்வினையால் மிக்க நல்வினையில்
கிளரும் துணிவு கிடைத்தறியாது முடைத்தலை யூன்
தளருமளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்கு
உளரெம் மிறைவன் இராமானுசன் தன்னை வுற்றவரே – – 96- – –

பத உரை
வளரும் -முடிவின்றி மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வரும்
பிணி கொண்ட -துக்கத்தை உண்டு பண்ணுவதான
வல்வினையால் -வலிமை வாய்ந்த கர்மத்தினாலே
மிக்க நல் வினையில் -மிகுந்த -பரமமான -தர்மம் ஆகிற சரணா கதியில்
கிளரும் துணிவு -கிளர்ந்து எழுகின்ற நம்பிக்கை -மகா விசுவாசம்
கிடைத்தறியாது -நேரே அனுபவித்தில் பெற்று தெரிந்து கொள்ளாதது
முடை -கெட்ட நாற்றத்திற்கு
தலை -இடமான
ஊன் -மாம்ச பிண்டமான சரீரம்
தளரும் அளவும் -தளர்ந்து கட்டுக் குலைந்து போகும் வரையிலும்
தரித்தும் -பெரியோர் கொடுத்த பகுத்தறிவு என்னும் கோல் கொண்டு வழுக்கி விழாது தரித்து நின்றும்
விழுந்தும் -பண்டைய பழக்கத்தாலே கோலின்றி -சப்தாதி விஷயங்களிலே -விழுந்தும்
தனி திரிவேற்கு -துணை இன்றி தனியாக திரிகின்ற எனக்கு
எம் இறைவன் -எமக்குத் தலைவரான
இராமானுசன் தன்னை -ஸ்ரீ எம்பெருமானாரை
உற்றவர் -பற்றி இருப்பவர்கள்
உளர் -துணையாக உள்ளார்கள் .

வியாக்யானம் .
நிரவதிக துக்க அவஹமாய் -அநுபவ விநாச்யமாதல்-பிராயஸ் சித்த விநாச்யமாதல் செய்யாத பிரபல கர்மத்தாலே
பரம தர்மமான சரணாகதியில் மகா விசுவாசம் என்பது ஓன்று நேராக கிடையாததாய் –
துர்க் கந்த ஆஸ்ரய பூதமாய் -மாம் சாஸ்ருகாதி ரூபமான சரீரம் –
தளரா உடலம் -ஸ்ரீ திருவாய் மொழி -5 8-8 – – என்கிறபடியே –
பிராண வியோக தசாபன்னமாய் -கட்டுக் குலையும் அளவும்
வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலம் -ஸ்ரீ திரு விருத்தம் – 100- என்றும்
பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி -ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி – -5 2-7 – என்றும்
கூடி யழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்காதே –ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி 4-6 6- – -என்றும் சொல்லுகிறபடியே –
அள்ளலும் வழுக்கலுமான -சம்சார விபூதியிலே -தார்மிகர் உபகரித்த த்யாஜ்ய உபாதேயம் ஆகிற ஊற்றம்கோல் கொண்டு தரித்தும் –
துர் வாசனா மூலமான அநவதாநத்தாலே –
கொடு வன் குழி -ஸ்ரீ திருவாய்மொழி -7 1-9 – யான
சப்தாதி களிலே விழுந்தும் -உறு-ஒரு -துணை இன்றிக்கே திரியா நிற்கும் எனக்கு –
என் தனிமை தீர எனக்கு துணையாய் ஒறு குழியிலே விழாதபடி தாங்களே பிடித்து நடத்தி -உஜ்ஜீவிப்பிக்கைக்கு
நமக்கு சேஷியான எம்பெருமானாரைத்
தேவு மற்று அறியேன் -ஸ்ரீ கண்ணி நுண் -2 -என்று பற்றி இருப்பார் உளர் .
அவர்கள் அபிமானமே எனக்கு உத்தாரகம் -என்று கருத்து .

எம்மிறைவர் இராமானுசன் தன்னை உற்றவர் -என்று பாடமான போது
எம்பெருமானாரை யல்லது அறியோம் என்று பற்றி இருப்பாராய்- நமக்கு சேஷிகள் ஆனவர்கள் என்று யோஜிப்பது .
பிணி -துக்கம்
நல்வினை– ஸூ க்ருதம்
கிளரும் துணிவு– மிக்க துணிவு
கிளர்த்தி -மிகுதி
முடை -துர் கந்தம்
மிக்க நல்வினையின் கிளரும் துணிவு -என்றும் பாடம் சொல்லுவர்
அப்போது பரம தர்மமான சரணா கதிக்கு அபேஷிதமான மகா விசுவாசம் -என்கை-

பக்தி -சாஸ்திரம் ஸ்ரீ பாஷ்யம் -ஸ்ரீ கீதா பாஷ்யம் – பிரபத்தி -கத்ய த்ரயம் -ஸ்ரீ அமுதனார் –
அளியல் நம் பையன் என்று ஸ்ரீ எம்பெருமானார் சிஷ்யர் அபிமானத்தில் ஒதுங்கி –
பிணி -சம்சாரம் ஆகிய நோய் -துக்கம் -கர்மம் -வளரும் பிணி -கார்ய ஆகு பெயர் மிக்க -வல் வினை –
தான் என் துணிவை கெடுத்தது -மிக்க நல் வினையிலும் -பர கத – சுவீகாரத்திலும் துணிவு போக்கிற்றே –
சம்சார சூழலில் இருந்தும் –சங்கம் -பற்று ஆசை புத்தி பேதலித்து -பயன் அறியாமல் ஸ்வரூப நாசம் –
சங்கம் பற்றுதல் -ஆசை உருவாக்கி -க்ரோதம் நிறைவேறாமல் -விவேக ஞானம் தொலைந்து சம்மோஹம் –
ஸ்ம்ருதி பிரம்சாத் புத்தி நாஸாத் -அழியும் வழி படிக்கட்டுக்கள் -வல்வினை -பிணி –காரியம் காரணம் -மிக்க நல்வினை -பிரபத்தி
வினை -கர்ம யோகமும் ஞான யோகமும்
நல் வினை -பக்தி யோகம்-சரணாகதி -மோக்ஷம் நிச்சயம் -சர்வேஸ்வரன் ரக்ஷகன் -இரண்டு மகா விசுவாசமும் வேண்டுமே –
இழையாது உன தாள் பிடிக்க பிரார்த்திப்பது இந்த விசுவாசம் குலையாமல் இருக்கவே ஸ்ரீ ஆழ்வார்கள் பிரார்த்தனை –
அந்திம ஸ்ம்ருதி வேண்டாமே பிரபன்னனுக்கு
முடை -நாற்றம் – ஊன்-மாம்சம் –சரீரம் – சேற்றில் உழன்று இருக்க-சம்சாரம் பாதை -சப்தாதி விஷயங்கள் குழி -என்றவாறு –
ஊன்று கோல் த்யாஜ்ய உபாதேய ஞானம் — -த்ரி தண்டம் கொண்டு இங்கு வந்து உத்தாரணம் செய்து அருள -திருவடி பற்றி உய்ந்தேன் –
மஹாத்மாக்களே துணை ரக்ஷகம்-ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -சாஸ்திர விரோதம் ஆகாதோ உபாயாந்தரமா இது –
ஸ்ரீ சர்வேஸ்வரனை தவிர்ந்து -கீழ் சொன்ன சரணாகதியில் அடங்கும் -திருவடி ஸ்தானீயர் என்றபடி –
வாய்க்கு வந்தபடி நாம் பேச -நம் பூர்வாச்சார்யர்கள் வந்த படி பேச வைப்பவனும் அவனே தானே –
ஆனுகூல சங்கல்பயாதிகள் அதிகாரி விசேஷணங்கள் -தானாக அமைய வேண்டும் –போஜனத்துக்கு சுத்து போலே –
பர கத சுவீகாரம் -மகா விசுவாசம் இல்லா விட்டாலும் -ஸ்ரீ ஆச்சார்யர் -நீ என்னை விட்டாலும் நான் விட்டேன் என்று கைக் கொள்ளுவார்கள்
ஸ்ரீ ஆழ்வான் திருவடி அடைந்து பிரபந்தம் தொடங்கிய ஸ்ரீ அமுதனார் இதில் மீண்டும் சொல்லி தலைக் கட்டுகிறார் -7-பாசுரம் -போலே இதிலும் –
தரிப்பது -சிரமம் பட்ட பின்பு தானே -விழுவது எப்பொழுதும் -தரிப்பது சில தடவை தானே –
அதனால் அல்பம் துக்க சாந்தி ஏற்படுத்த ஆசுவாசத்தை சொன்ன படி –

வளரும் பிணி கொண்ட வல் வினையால் –
அதத்தோ ஷேன பவேத்தரித்த்ரீ தரித்திர தோஷன கரோதிபாபம் –
பாபாதாவச்யம் நரகம் வ்ரஜந்தி புநர் தரித்திர புனரேவ பாபி -என்றும்
த்யாயதோ விஷயான் பும்சஸ் சங்கஸ் தேஷ பஜாயதே -சங்காத் சஞ்சாயா தேகாமா -காமாத் க்ரோதாபி ஜாயதே -க்ரோதாத் பவதி
சம்மோஹா -சம்மோஹாத் ஸ்மரதி விப்ரம -ஸ்மரதி ப்ரம்சாத் புத்தி நாச – புத்தி நாசாத் ப்ரணச்யதி -என்றும் சொல்லுகிறபடி –
மேன் மேலும் -பெருகி வருகிற -பிணி உண்டு வியாதி -தன் மூல துக்கம் -என்றபடி –
கொண்ட வல்வினையால் –
அந்த துக்கத்தையே சர்வ காலத்திலும் விளைக்க கடவதாய் –
அனுபவ ப்ராயசித்தங்களாலே நசியாதபடி -அதி பிரபலமான துஷ் கர்மத்தாலே –

வளரும் பிணி கொண்ட வல் வினையால்
பிணி -நோய் -இங்கு கார்ய ஆகுபெயரால் துக்கத்தை சொல்கிறது
புன புநரகம் யதிராஜ குர்வே-ஸ்ரீ யதிராஜ விம்சதி -என்றபடி -பாபம் செய்தால் பயமோ -அனுதாபமோ – வெட்கமோ ஏற்படாமையின் –
மீண்டும் மீண்டும் வினைகளைச் செய்த வண்ணமாய் இருத்தலின் -அதனால் விளையும் பிணியும் ஓய்வின்றி மேலும் மேலும் வளருவதாயிற்று –
பிணி கொண்ட வல்வினை –
பிணியை உண்டு பண்ணும் வல்வினை -என்றதாயிற்று –
வினைக்கு வலிமை அனுபவித்தோ பரிகரித்தோ போக்க ஒண்ணாமை –
பிரபத்தியில் மகா விசுவாசம் உண்டாகாமைக்கு இவ் வல் வினையே ஹேது என்க –

மிக்க நல் வினையில் கிளரும்-துணிவு கிடைத்தறியாது –
தாஸ்மான் நியாச மேஷாம் தபஸா திரிக்தமா ஹூ என்றும் –
சத் கர்ம நிரதாஸ் ஸூத்தாஸ் சாக்ய யோக விதச்த தா -நார்ஹந்தி சரணஸ் த்தச்யகலாம் கோடீ தமீ மபி –என்றும் சொல்லுகிறபடியே –
சர்வ உபாய உத்க்ரிஷ்டமாய் -உபாயாந்தாரங்களைப் போலே ஸ்வரூப விருத்தமாய் இருக்கை அன்றிக்கே –
ஸ்வரூப அனுரூபமாய் இருக்கை யாகிற நன்மையையும் உடைத்தான அஞ்சலி ரூப கிரியை யாலே –
மகா விசுவாச பூர்வகம் -தகேகோபாயதா யாச்னா -என்றும் –
விச்வாச பிரார்த்தனா பூர்வம் ஆத்மா ரஷாபரம் -என்றும் சொல்லுகிறபடி –
பரபக்தி பர ஞான பரம பக்தி பர்யந்தமாக பெருகி வருகிற ப்ராப்ய த்வரைக்கு உறுப்பான மகா விசுவாசம் என்பது ஒன்றும்
நேராக லபியாதபடி ஞான விதுரனாய் இருந்து வைத்து –
நல் வினை -ஸூக்ருதம் -அதாவது பிரபத்தி-
கிளரும் துணிவு -மிக்க துணிவு -கிளர்த்தி -மிகுதி —

மிக்க நல் வினையின் கிளரும் துணிவு –என்ற பாடமான போது –
பரம தர்மமான சரணா கதிக்கு -அபேஷிதமான மகா விசுவாசம் -என்கை –

மிக்க நல் வினையில் கிளரும் துணிவு கிடைத்தறியாது .
மிக்க நல்வினை –பிரபத்தி
வினை -கர்ம யோகமும் ஞான யோகமும்
நல் வினை -பக்தி யோகம்
சத்கர்ம நிரதாஸ் சுத்தா சான்க்க்ய யோக விதச்ததா நார்ஹந்தி சரணா சத்தச்ய கலாம் கோடி தமீமபி-என்று
நல்ல கர்ம யோகத்தில் மிக்க பற்று உடையவர்களும் –
அப்படியே சுத்தர்களான ஞான யோகம் கைப் புகுந்தவர்களும் .
பிரபத்தி நிஷ்டையில் உள்ளவனுடைய கோடியில் ஒரு அம்சத்துக்கும் தகுதி உடையவர்கள் ஆக மாட்டார்கள்
என்று பிரபத்தி -ஏனைய உபாயங்களை விட மிகவும் உயர்ந்ததாக கூறப்பட்டு இருத்தல் -காண்க –

மகா விசுவாசத்தை முன்னிட்டு நீயே எனக்கு உபாயமாக இருந்து காத்தருள வேணும் -என்னும் பிரார்த்தனையே –
பிரபத்தி யாதலின் அதனுக்கு -கிளரும் துணிவு –மகா விசுவாசம் -இன்றியமையாதது ஆயிற்று –
அது எனக்கு இல்லையே -பிரபத்தி நிஷ்டை எங்கனம் எனக்கு கை கூடும் என்கிறார் .
கிடைத்தறியாது –
மகா விசுவாசம் ப்ரபத்திக்கு தேவை என்பது கேட்டு அறிந்த விஷயமே யன்றி –
நேரே எனது அனுபவத்திற்கு கிடைத்தறிய வில்லை -என்கிறார் .

மிக்க நல்வினையின் கிளரும் துணிவு -என்றும் ஓதுவர்-
அப்பொழுது ப்ரபத்திக்கு தேவைப்படும் மகா விசுவாசம் -என்று பொருள் கொள்க –

முடைத்தலை ஊன் தளரும் அளவும் –
அமேத்யுபூர்ணம் கிர்மிஜந்துசம்குலம் ஸ்வபாவ துர்கந்தம் அசவ்சமத்ருவம் களேபரம் மூத்ரபுரீஷா பாஜனம் -என்கிறபடியே
ஸ்வபாவ துர்கந்த ஸ்த்தானமாய்-மாம்சாஸ்ர்க்பூய வின்மூத்ரா ச்நாயுமஞ்சாச்திதம் ஹதரூபான சரீரம் தளர்ந்து போம் அளவும் –
முடை-துர்கந்தம் –
முடை என்றும் ஊன் என்றும் -மாம்சமாய் -தத் பிரசுரமான சரீரத்தை சொன்னபடி –
ஊன உடல் சிறை -என்ன கடவது இறே –

தரித்தும் விழுந்தும் –
இப்படியான தசையிலே
சம்சார விஷ வ்ர்ஷஸ் யத்வே பலே ஹ்யம்ர் தோபமே -கதாசித்கே சவே பக்திஸ் தத்பக்தைர் வாசமாகம -என்றும் –
கூடி அழுங்கி குழியில் வீழ்ந்து வழுக்காதே -என்றும் –
மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலம் -என்றும்-சொல்லுகிறபடியே
அள்ளலும் வழு க்களுமான சம்சார விபூதியிலே யாதார்சிகமாக சஞ்சரித்து கொண்டு போருகிற சில
தார்மிகர் சம்சார கர்த்தத்திலே அழுந்திக் கிடந்த நான் உத்தரிக்கும் படி உபகரித்தும் –
த்யாஜ்ய உபாதேய விவேகம் ஆகிற ஊன்று கோலை உத்தம்கம்பமாக பிடித்துக் கொண்டு –
அத்தாலே அல்ப துக்க சாந்தி பிறந்து ஆஸ்வசித்தும் -பின்னையும் –
துர்வாசன மூலமான அனவதானத்தாலே கொடு வன் குழியான சப்தாதி விஷயங்களில் விழுந்தும் –

தனி திரிவேற்கு –
ஜீர்ணா தரிஸ் சரித தீவ பீர நீரா பாலாவயம் சகலமித்த ம நர்த்த ஹேது – என்றும் –
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் -என்றும் –
ந தர்ம நிஷ்டோச்மி -என்றும் -பவ துர்த்தி நேபதஸ் நலிதம் –என்றும் சொல்லுகிற படி-
சேதன ரூபமாய் யாதல் -அசேதன ரூபமாய் ஆதல் -ஒரு சஹாயாந்தரம் இன்றிக்கே இருக்கும் நமக்கு-

முடைத்தலை ஊன் —-தனிதிரிவேற்கு
முடைத்தலை ஊன் -வேண்டா நாற்றமிகு உடல் -என்றார் ஸ்ரீ ஐயங்காரும் ஸ்ரீ திருவரங்கக் கலம்பகத்திலே
ஊன் –மாம்சத்தை சொன்னது -ரத்தம் தசை எலும்பு முதலிய அருவருக்கும் பொருள்களை உடைமைக்கும் உப லஷணம்
ஊன் -சரீரத்திற்கு ஆகு பெயர் .
தளருமளவும் -தளர்தல் -கட்டுக் குலைத்தல்
தளரா உடலம் எனதாவி சரிந்து போம் போது –ஸ்ரீ திருவாய் மொழி – 5-8 8- – என்றபடி
ஆவி பிரியும் நிலையில் உடலம் கட்டுக் குலைக்கிற அளவும் -என்றபடி –

தரித்து விழுந்தும் தனி திரிவேற்கு –
இந்த சம்சாரம் -வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலம் -ஸ்ரீ திரு விருத்தம் – 100- என்று சருக்கி விழும் சகதியாகவும் –
கொங்கை சிறுவரை என்னும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி — 5-2 7- என்றும்
கூடி யழுங்கி குழியில் வீழ்ந்து வழுக்காதே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -4 6-6 – – என்றும் வழுக்கி விழும் குழியாகவும்
சொல்லப் படுதலின் – அதிலே திரிபவனுக்கு சில நல்லவர்கள் கொடுத்த விவேக ஞானம் ஊன்று கோலாய் –
விழாமல் தரித்து நிற்பதற்கு உதவும் —

சில வேளைகளில் அவனுக்கே -பண்டைய கெட்ட வாசனை -தலை தூக்கி
நல்லவர்கள் கொடுத்த ஊன்று கோலை இழந்து -அள்ளலும் வழுக்கலுமான -இந்த சம்சாரத்திலே
குலமுதலிடும் தீவினைக் கொடுவன் குழி -ஸ்ரீ திருவாய் மொழி – 7-1 9- – என்றபடி
சப்தாதி விஷயங்கள் ஆகிற குழிகளிலே விழுந்து அழுந்தும் படியான நிலை ஏற்படும் .
இங்கனம் தரித்தும் -விழுந்தும் துணை இன்றி -தனியே திரிகின்றவனான எனக்கு
விழாமல் காப்பதற்கு துணையாக இராமானுசன் தன்னை உற்றவர்கள் உள்ளார்கள் -என்கிறார் –

இராமானுசன் தன்னை உற்றவர் –
ஸ்ரீ ராமானுஜச்ய சரணவ் சரணம் பிரபத்யே -ராமாநுஜார்ய வசக பரிவர்த்தி ஷீய –நசேத் ராமானுஜேத் ஏஷா – இத்யாதிப்படியே
ஸ்ரீ எம்பெருமானாரை அத்யவசித்து இருப்பார் –

எம் இறைவர் —உளர் —
நம்முடைய தனிமை தீர நமக்குத் துணையாய் -சம்சாரம் ஆகிற-படு குழியில் விழாதபடி –
தாங்களாயே பிடித்து நடத்தி உத்தரிப்பிகும் அஸ்மத் ஸ்வாமிகள் ஆனவர்கள் –

எம் இறைவர் -என்றது -ஸ்ரீ கூரத் ஆழ்வானை-
வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத் ஆழ்வான் –என்று கீழேயும் அருளிச் செய்தார் இறே –
அன்றிக்கே –
எம் இறைவர் –இராமானுசன் -என்று
ஸ்ரீ எம்பெருமானாருக்கு விசேஷணம் ஆக்கவுமாம் –

எம் இறைவன் இராமானுசன் -தன்னை உற்றவரே –என்ற பாடமான போது
ஸ்ரீ எம்பெருமானாரை அல்லது அறியோம் என்று அற்று இருப்பவர்கள் நமக்கு சேஷிகள் என்று யோஜிப்பது –

கர்மேதி கேசித்த பரே மதி மித்ய தான்யே பக்திம்பரே பிரபத நம் ப்ரவதந்த்யுபாயம் -ஆம் நாயா சார ரஹீகாஸ்-
த்வமிதா நுபாவ ஸ்த்வாமேவ யாந்தி சரணம் சட ஜின் முதீந்திர -பராங்குச பஞ்ச விம்சதி -ஸ்லோகம் -என்றும்
சரம பர்வதத்தை பற்றினவர்களே-பெரியோர்கள் என்று அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே –

த்வத் தாஸ தாஸ கண நா சரமா வதவ் யஸ்தவத்தா-சதைகரசதாம் விரதாமமாஸ்து -என்று
ததீய சேஷத்வத்தை ஸ்ரீ ஜீயரும் பிரார்த்தித்து அருளினார் இறே –

உளர் எம்மிறைவன் –உற்றவரே
உற்றவர் உளர் என்று இயைக்க .
தனி திரிவேற்கு உளர் எனவே -என் தனிமை தீர -துணையாய் -குழியிலே விழாதபடி பிடித்து நடத்தி –
உய்விப்பவராய் -உளர் -என்றது ஆயிற்று –
உளன் கண்டாய் நன்னெஞ்சே -ஸ்ரீ முதல் திருவந்தாதி – 99- என்னும் இடத்தில் போலே
ஆபத்திற்கு உதவுவராய் கூடவே உள்ளனர் -என்றபடி –
இதனால் குழியைக் கடத்தும் ஸ்ரீ கூரத் ஆழ்வானை அண்டை கொண்டு -அவரது அபிமானத்திலே நிஷ்டை கொண்டு
உள்ளமையை குறிப்பிட்டார் ஆயிற்று .

எம் இறைவர் -என்றும் ஒரு பாடம் உண்டு
அப்பொழுது ஸ்ரீ இராமானுசன் தன்னை உற்றவர் எம் இறைவர் -சேஷிகள் -ஆக உள்ளனர் -என்று உரைக்க .

ஊன் தளருமளவும் விழுந்தும் -என்றமையின் ஊன் தளருகின்றதே யன்றிச் சப்தாதி விஷயங்களில் ஆசை தளருவதில்லை –
அதனால் குழியில் விழ நேருகிறது என்று ஆசையின் வலிமையை குறிப்பித்து அருளுகிறார் –
இங்கு -ஜீர்யந்தி ஜீர்யதே கேசா தந்தா ஜீர்யந்தி ஜீர்யத சஷூஸ் ச்ரோத்ரேச ஜீர்யதே ஆசைகா நிருபத்ரவா -என்னும் ஸ்லோகம்
முதுமை வுற்றவனுக்கு கேசங்கள் உதிர்ந்து -விடுகின்றன -பற்கள் விழுந்து விடுகின்றன –
கண் பார்வை மங்குகிறது -காதுகள் செவிடாகின்றன -ஆசை மட்டும் தடை இன்றி வளருகிறது – என்பது அநு சந்திக்கத் தக்கது –

தேவு மற்று அறியேன் என்று ஸ்ரீ எம்பெருமானாரைப் பற்றிய உற்றவர் அபிமானமே
சம்சாரக் குழியில் விழாது என்னைக் காக்க வல்லது -என்பது இப்பாசுரத்தின் கருத்து —

பக்தி பண்ண சக்தி இல்லை– பிர பத்தி பண்ண விசுவாசம் இல்லை -பேறு தப்பாது என்ற துணிவு வேண்டும்-
எலுமிச்சம் பழம் கொடுத்து ராஜ்ஜியம் பெறுவது போல மகா விசுவாசம் வேணும்-
ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம்–என்கிறார் இதில்–பர கத ச்வீகாரம்-தானே வைகுந்தம் தரும்–

———-

வட பாலை திரு வண் வண்டுர் –ஏறு சேவகனாருக்கு என்னையும் உழள் என்மீர்களே-பம்ப உத்தர தேசம் -நாயனார் –

பஷி தூது விட –உயிர் உடன் இருப்பதாக அர்த்தம் -திரு மாலை ஆண்டான் அர்த்தம் சொல்ல–
இன்றியாமை அவன் இருந்தால் நானும் இருக்கிறேன் ரஷிக்க வேண்டிய வஸ்துகளில் நானும் ஓன்று என்று
அறிவிக்க சொல்லி -ஸ்வாமி நிர்வாகம்-அடிபட்டு துடிக்கும் மான் போல பராங்குச நாயக–அறிவிப்பே அமையும்-

உளன் கண்டாய் நன்னெஞ்சே -முதல் திருவந்தாதி – 99- என்னும் இடத்தில் போலே
ஆபத்திற்கு உதவுவராய் கூடவே உள்ளனர்

சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!
யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!–திரு வாய் மொழி-–5-8-6-

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மா மாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே–5-8-8-

உண்ணி லாவிய ஐவ ராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணு கின்றாய்
எண்ணிலாப் பெரு மாய னே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே! என்னை ஆள்வானே!–7-1-1-

குல முதல் அடுந் தீவி னைக் கொடுவான் குழியினில் வீழ்க்கு மைவரை
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்
நில முதல் இனி எவ்வுல குக்கும் நிற்பன செல்வன எனப் பொருள்
பல முதல் படைத்தாய்! என் கண்ணா! என் பரஞ்சுடரே!–7-1-9-

என் பரஞ்சுடரே! என்றுன்னை அலற்றி உன் இணைத் தாமரை கட்கு
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை வலித்து ஏற்று கின்றனர்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ!–7-1-10-

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே -திருவிருத்தம் –1-

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – – 100-

மலமுடை யூத்தையில் தோன்றிற்று ஓர் மல ஊத்தையை
மலமுடை யூத்தையின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை
குலமுடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால்
நலமுடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் -4 6-5 –

நாடும் நகரும் அறிய நாடு மானிடப் பேர் இட்டு
கூடி அழுங்கி குழியில் வீழ்ந்து வழுக்காதே
சாடிறப் பாய்ந்த தலைவா தாமோதரா என்று
நாடுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் -4 6-6 –

உற்ற உறு பிணி நோய்காள் உமக்கு ஓன்று சொல்லுகேன் கேண்மின்
பெற்றம் கண் மேய்க்கும் பிரானார் பேணும் திருக் கோயில் கண்டீர்
அற்றம் உரைகின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர்
பற்றில்லை கண்டீர் நடமின் பண்டன்று பட்டினம் காப்பே -பெரிய ஆழ்வார் திரு மொழி– 5-2 6-

கொங்கை சிறுவரை என்றும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி
அங்கோர் முழையினில் புக்கிட்டு அழுந்தி கிடந்து உழல்வேனை
வங்கக் கடல் வண்ணன் அம்மான் வல்வினை யாயின மாற்றி
பங்கப் படா வண்ணம் செய்தான் பண்டன்று பட்டினம் காப்பே -பெரிய ஆழ்வார் திரு மொழி -5 2-7-

மிக்க நல்வினையில் கிளரும் துணிவு கிடைத்தறியாது

இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே–5-8-8-

இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!–5-8-9-

அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென் றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திரு வேங்கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே–6-10-11-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –95-உண்ணின்று உயிர் களுக்கு உற்றனவே செய்து – இத்யாதி —

June 1, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ எம்பெருமானார் தம்மை ஆஸ்ரயித்தவர்களுக்கு உஜ்ஜீவனத்துக்கு வேண்டுவது எல்லாம் தாமே உண்டாக்கி
உஜ்ஜீவிப்பித்து விடுவர் என்றார் கீழ்
இப்படி இருக்கிறவருடைய ஜ்ஞான சக்தியாதிகளை அனுசந்தித்த வாறே -இந்த லோகத்தில் உள்ளார்படி யன்றிக்கே –
வ்யாவ்ருத்தமாய் இருக்கையாலே –
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரிலே ஒருவர் பரார்தமாக சம்சாரத்தில் அவதரித்தாராகவே நினைத்து அருளிச் செய்கிறார் -இதில் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ எம்பெருமானார் தம்மை ஆஸ்ரித்தவர்களுக்கு உத்தாரண ஹேதுவான உபாய விசேஷத்தையும் –
அத்தாலே உண்டாக கடவ -ஸ்ரீ பகவத் ப்ரீதி ரூப சம்பத்தையும் -ப்ராப்தி பிரதி பந்தகமான பாப விமோசனத்தையும் –
தத் அனந்தர பாவியான பரம பத ப்ராப்தியையும் -பண்ணிக் கொடுப்பாரே யாகிலும் –
நான் அவருடைய கல்யாண குணங்களை ஒழிய வேறு ஒன்றை விரும்பி அனுபவியேன் -என்று அருளிச் செய்தார் -கீழ்ப் பாட்டிலே –
இப்பாட்டிலே –
சகல ஆத்மாக்களுக்கும் அந்தர்யாமியாய் -அவர்களுடைய சகல பிரவர்த்தி நிவ்ருத்திகளையும் பண்ணிக் கொடுக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனும் –
இவரைப் போலே ஆஸ்ரித வ்யாமுக்தன் அல்லன் என்னும் படியாயும் –
ஞான வைராக்யாதிகளாலே சம்சாரிகளைக் காட்டில் அத்யந்த வ்யாவ்ர்த்தர் என்னும் படியாயும் இவர் தான் இருக்கையாலே –
ஸ்ரீ பரம பதத்தின் நின்றும் அந்த பரம ப்ராப்யத்தை எல்லார்க்கும் கொடுப்பதாக அஸ்பர்ஷ்ட சம்சார கந்தரில் ஒருவர் பரார்த்தமாக
இந்த லோகத்தில் -ஸ்ரீ எம்பெருமானாராய் அவதரித்து -சர்வ காலமும் வேதார்த்தத்தை ப்ரவர்த்திப்பித்தார் என்று அருளிச் செய்கிறார்

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

தம்மை சார்ந்தவர்கட்கு உய்வுற வேண்டுமாவை யாவும் தானே உண்டு பண்ணி உதவி ஸ்ரீ எம்பெருமானார் உய்விப்பதை கூறினார் கீழே .
இங்கனம் உய்விக்கும் அவருடைய அறிவாற்றல்களைக் கண்டு உலகத்தாருக்கு உள்ளவை போன்றவைகள் அல்ல இவை –
தனிப்பட்டவையாய் விளங்குகின்றன -ஆதலின் இவர் இவ் உலகத்தவர் அல்லர் .
சம்சார சம்பந்தம் அறவே அற்று இருக்கும் நித்ய சூரிகளில் ஒருவர் –வீடளித்து பிறரை உய்விப்பதற்க்காகவே அவதாரம்
செய்தவராய் இருத்தல் வேண்டும் –என்று தீர்மானித்து -அவதரித்து செய்யும் அவற்றை அனுசந்திக்கிறார் –
இந்தப் பாசுரத்திலே –

உண்ணின்று உயிர் களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப்பன் எம்மிராமானுசன்
மண்ணின் தலத் துதித்துய் மறை நாலும் வளர்த்தனனே – – -95 – –

பத உரை –
உள் நின்று -அந்தர்யாமியாய் -உள்ளே இருந்து
உயிர்களுக்கு -ஆத்மாக்களுக்கு
உற்றனவே செய்து -தகுந்தவைகலையே -உய்வதற்கு உறுப்பாக -பண்ணி
அவர்க்கு உயவே பண்ணும் -அந்த ஆத்மாக்களுக்கு உஜ்ஜீவனத்தையே செய்யா நிற்கும்
பரனும் -ஸ்ரீ பரம புருஷனும்
பரிவு இலன் ஆம்படி -ஸ்ரீ எம்பெருமானாரின் நிலையினை நினைத்துப் பார்க்கும் போது -உயிர்களிடம்
அன்புடையன் அல்லன் என்று சொல்லலாம் படி
பல் உயிர் க்கும் -எல்லா ஆத்மாக்களுக்கும்
வீடு -மோஷத்தை
அளிப்பான் -கொடுப்பதற்காக
எம் இராமானுசன் -எங்கள் ஸ்வாமியான ஸ்ரீ எம்பெருமானார்
விண்ணின் தலை நின்று -பரம ஆகாசமான ஸ்ரீ வைகுண்டத்தின் நின்றும்
மண்ணின் தலத்து -பூமியின் பிரதேசத்திலே
உதித்து -அவதாரம் செய்து
உய மறை நாலும் -உஜ்ஜீவன சாஸ்த்ரமான நான்கு வேதங்களையும்
வளர்தனன் -வளரும்படி செய்து அருளினார் .

வியாக்யானம்
யஆத்மா ந மந்தரோயமயதி -ப்ருஹ -என்கிறபடியே சத்தா நிர்வாஹர்த்தமாக உள்ளே நின்று இவ்வாத்மாக்கள் யாதொரு வழியாலே –
உஜ்ஜீவிக்கும் -அதுக்கு ஈடான க்ருஷிகளையே பண்ணி அவர்களுக்கு -உஜ்ஜீவனத்தையே பண்ணா நின்றுள்ள –
ஸ்வாதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி பேதனான சர்வ ஸ்மாத் பரனும் –
ஆத்மாக்கள் அளவிலே இவரோபாதி ஸ்நேஹமுடையவன் அல்லன் -என்னும்படியாக -சகல ஆத்மாக்களுக்கும் –
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ -தாடீபஞ்சகம் -என்கிற படியே
பரம புருஷார்த்த லஷண மோஷத்தை கொடுத்து அருளுவதாக நம்முடைய நாதரான ஸ்ரீ எம்பெருமானார் –
நாகஸ்ய ப்ருஷ்ட்டே -என்கிறபடியே
விண்ணின் தலையான ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் பூதலத்திலே தக்கத தோஷ ஸ்பர்சம் அற அவதரித்து –
சர்வ உஜ்ஜீவன சாஸ்த்ரமான -ருகாதி சதுர் வேதத்தையும் அசங்குசிதமாக நடத்தி யருளினார் .
இப்படிச் செய்து அருளுவதே! -என்று கருத்து

உற்றனவே செய்து -என்றது தக்கனவே செய்து என்றபடி
பரிவு –ச்நேஹம் -பஷபாதகமாகவுமாம் .
பல்லுயிர்க்கும்–புல்லுயிர்க்கும்–என்று பாடமானாலும் பொருள் ஒக்கும் .

இவர் பரிவுடன் ஒப்பிட்டால் ஸ்ரீ எம்பெருமானுக்கும் ஒப்பாகாதே-அதி மானுஷ சேஷ்டிதங்கள் -மோக்ஷ ஏக ஹேதுவாக
இந்த மண்ணின் தோஷம் தட்டாமல் -செய்த உபகாரங்கள் -வேதம் வளர்த்து -இதுவே -தர்மம் சமஸ்தானம் –
ஆத்ம யதாம்யா ஞானம் வந்து ருசி பிறந்து -கர்மங்களை போக்க பிரபத்தி பண்ண வைத்து -இத்யாதி
அவன் உள் நின்று -இவர் வெளியில் பயம் இல்லாமல் -இரா மடம் ஊட்டுவரைப் போலே -அவன்–
இவரோ சேதனருடைய ஸ்வா தந்த்ரயதிற்கு அஞ்சாது கண் காண வந்து உய்விக்கிறார் .
அவனோ பரன் -அந்நியன் -இவரோ எம் ஸ்ரீ இராமானுசன் –அவன் சர்வ வியாபகம் -உள் நின்று -அதிசயம் இல்லையே –
இவரோ விண்ணின் தலை நின்று உதித்து –விலை பால் போல அவன் பரிவு தாய் போல் ஸ்ரீ ஸ்வாமி பரிவு-
அது தத்வ வசனம் இது தத்வ தரிசினி வாக்கியம்-அன்னமாய் அற மறை நூல் பயந்தான்-கொடுத்தான் அவன்– வளர்த்தார் ஸ்ரீ ஸ்வாமி-
பெற்ற தாய் அவன் வளர்த்த இதத் தாய் ஸ்ரீ ஸ்வாமி –
பல் உயிர்– புல் உயிர் -பாட பேதம்-

உள் நின்று –
அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்த்தா ஜநாநாம் சர்வாத்மா -என்றும் –
அந்த பிரவிஷ்டம் கர்த்தாரமேதம் – என்றும் –
அந்தரப் பஹிஸ் சதத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்திதத-என்றும் –
ய ஆத்ம நிதிஷ்டன் ய ஆத்மா ந மந்தரோயமயதி – என்றும் –
சர்வஸ்யசாஹம் ஹ்ர்தி சந்நிவிஷ்ட-என்றும் –
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து உளன் -என்றும் –
பரந்த தண் பரவையுள்-நீர் தொறும் பரந்து உளன் -என்றும் -சொல்லுகிறபடியே
அந்தர்யாமியாய் -சத்தா நிர்வாஹனாய் கொண்டு-இருந்து –
அநாதி மாயாயா ஸூப் தோயதா -என்கிறபடியே –
அநாதி அசித் சம்பந்த நிபந்தனமான அஞ்ஞான- அந்தகாரத்திலே -தத்வ ஹித புருஷார்த்த ஜ்ஞான சூன்யரான
சேதனருக்கு -அத்தை அறிவிக்கைக்காக
அருகே வந்து கண் காண நிற்கில் -ஞான ஏக ஆகாரத்தாலே உன்னோடு நானும் துல்யன் என்று ஆணை இட்டு
தள்ளி விடுவார்களோ என்று – அதி சங்கை பண்ணி -இரா மடம் ஊட்டுவாரைப் போலே –அவர்களுக்கு தெரியாதபடி
சத்தையை நோக்குவதற்காக உள்ளே புகுந்து நின்று -என்றபடி –

உயிர்கட்கு உற்றனவே செய்து –
ஸ்வேதர சமஸ்த பிராணிகளுக்கும் -அவரவர் விதி வழி அடைய நின்றனரே – என்கிறபடியே –
தத்தத் பூர்வ கர்ம அனுகுணமாக பிரவர்த்தி நிவர்த்திகளை பண்ணிக் கொடுத்து –
அன்றிக்கே
ஸ்வரூப மானவற்றை க்ரம க்ரமேன விரகாலே ஏறிட்டு தத் அனுரூபமாய் இருந்துள்ள ப்ரவர்த்திகளிலே மூட்டுவித்து என்னுதல்-
இவ் ஆத்மாக்கள் யாதொரு வழியால் உஜ்ஜீவிப்பார்களோ அதற்க்கு ஈடான க்ர்ஷிகளைப் பண்ணி என்னுதல் –

உற்றனவே செய்து -என்றது தக்கனவே செய்து என்றபடி –
பவந்தி பாவ பூதானாம் மத்த ஏவ பிரதக்விதா -என்றான் இறே –அவர்க்கு உய்யவே பண்ணும் பரனே –
த்ரிபா தூர்த்த்வ உதைத் புருஷ – என்றும் –
தமஸ பரஸ்தாத் -என்றும் சொல்லுகிறபடியே –
சர்வோத்தமான பரம புருஷார்த்தத்தை பிராபிக்கையாகிற உச்சாராயத்தை பண்ணா நின்றுள்ள ஸ்ரீ சர்வேஸ்வரனும் –
பதிம் விச்வச்ய – என்றும் –
யஸ்மாத் பரன் நாப ரமஸ்தி கிஞ் சித் -என்றும்
அதயததாபர -என்கிறபடியே
ஸ்வாதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி பிரவர்த்தி பேதகனாய்-சர்வ ஸ்மாத் பரனான –ஸ்ரீ சர்வேஸ்வரனும்-

உண்ணின்று –பரிவிலனாம்படி –
பரன் உள் நின்று உற்றனவே செய்து –உயவே பண்ணுகிறான் -என்கை –
படைத்தவற்றுள் அநு பிரவேசம் செய்து -உட் புக்கு -சத்தும் -ஆத்மாவும் -த்யத்தும் அசேதனப் பொருள்களும் –ஆனான என்றபடி –
ஆத்மாவை ஒரு பொருளாக நினைக்கும் படி செய்வதற்காக அதன் உட் புக்கு நிற்கிறான் ஸ்ரீ சர்வேஸ்வரன் –
இதனையே அந்தர்யாமித்வம் -என்கிறோம் –அந்த அந்தர்யாமித்வத்தை உண்ணின்று -என்கிறார் .
உயிர்களுக்கு உள் நின்று -என்கை-
ஆத்மாவை உள்ளே இருப்பவனே நியமிக்கிறான் -என்னும் சுருதியை பின் பற்றி இங்கனம் கூறுகிறார்

பரிவிலனாம்படி -சேதன சம்ரஷணம் பண்ணும் அளவில்
இவ் எம்பெருமானாரோ பாதி சிநேகத்தை-உடையவன் அல்லன் என்னும்படியாக –
பரிவு —ஸ்நேஹம் -பஷபாதம் -என்னுதல் -இலன் -இல்லாதவன் –
துர்லபம் உபாசதே -என்றும்
ஷிபாமி -ந ஷமாமி -என்றும் –
சித்திர் பவதி வாநேதிசம் சயோசித்த சேவிதாம் –
என்றும் சொல்லுகிறபடியே-சர்வேஸ்வரன் துர்லபனாய் நிக்ரஹ அனுக்ரஹங்கள் இரண்டுக்கும் பொதுவானவனாய் –
பலம் சித்திக்குமோ சித்தியாது ஒழியுமோ என்று சந்தேக்கிக்க வேண்டியபடி இருக்கையாலும் –

இவர் சுலபம் ஸ்வ குரும்-என்றும் –
ந சம்சயச்து தத் பக்த பரிசர்யாரதாத்மனாம் -என்றும் சொல்லுகிறபடியே
சுலபராய் -அனுக்ரஹ சீலராய் -நிஸ் சம்சையை சபல ப்ரதராய் இருக்கையாலும்
இருவரையும் பார்க்கும் அளவில் இவரே அவனைக் காட்டிலும் சேதனர் பக்கலில் அதி ஸ்நேஹி என்னும் இடம் தோற்றுகிறது இறே

உயிர்களுக்கு உற்றனவே செய்து –
ஆத்மா வர்க்கங்கள் தம் தமது கர்மங்களுக்கு ஏற்ப -எந்நிலையில் இருந்தாலும் -அந்நிலைக்கு தக்கவாறு –
எதனைச் செய்தால் அவர்கள் உய்வதற்கு வழி ஏற்படுமோ -அதனை பரன் -கைக் கொண்டு முயலுகிறான் -என்கை-
உற்றன -தக்கன
ஆத்மா வர்க்கங்கள் தீய செயல்களில் இறங்கினால் தடுக்காது வாளா இருந்து -அதனின் நின்றும் மீட்க மாட்டாது -அனுமதித்து –
மீட்பதற்கு உரிய தறுவாய் வாய்த்த போது –
என் ஊரைச் சொன்னாய் –
பேரைச் சொன்னாய் -என்பது போல இவன் அறியாது செய்யுமவற்றை நற்செயலாக கற்பித்து
அவற்றை மேலும் மேலும் பெருக்கி உய்விற்கு வழி ஏற்படும்படி-ஸ்ரீ பரன் முயலுகிறான் -என்பது கருத்தாகும் .

உயவே பண்ணும் பரனும் பரிவிலனாம் படி –
ஸ்ரீ பரன் இவ்விதம் உயிர்களுக்கு உய்வினையே பண்ணா நிற்கும் . பரன் -யாவரிலும் மேம்பட்டவன்
பக்தர் முக்தர் நித்யர் -என்னும் மூ வகைப் பட்ட சேதனர்களுக்கும்-
சுத்த சத்வம் மிச்ர சத்வம் சத்வ சூன்யம் – என்னும் மூ வகை பட்ட அசேதன பொருள்களுக்கும்
ஸ்வரூபம் -இருத்தல் -செயல் யாவும் தன வசத்தில் வைத்துக் கொண்டு இருப்பவன் பரன் -என்கை –

அவன் உட் புக்கு நியமிப்பவனாய் இருந்தாலும் தன் நியமன சக்தியாலே -அவர்களை உய்வித்தல் சுவைப் படாது –
உய்வு –மோஷம் –
புருஷார்த்தமாக வேணுமே -விரும்பி பெறுவது அன்றோ புருஷார்த்தம்
ஆகவே –ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மான் -என்றபடி –
சிறிது சிறிதாக அவர்கள் புத்தியை திருத்தி
உய்யும் வழிக்கு இசையும் படியாக செய்து -மெல்ல மெல்ல படிப் படியாக தான் திருத்தி
பரனும் உய்விக்க வேண்டி உள்ளது -என்னும் கருத்துடன் –பரனும் உற்றனவே செய்து உயவே பண்ணும் -என்கிறார் ..

இனி –பரனும் -என்னுமிடத்து –
உம்மை -அன்புடைமையில் சிறப்பை காட்டலுமாம்-
நெருங்குதற்கும் அருவருக்கத் தக்க -குற்றங்கள் மலிந்த உயிருக்குள் புகுந்து -நிரந்தரமாய் நியமித்துக் கொண்டு
அருவருப்பின்றி ஆனந்தமாய் எழுந்து அருளி இருப்பது -அன்பின் முதிர்வினாலாகிய வாத்ச்யத்தால் அன்றோ –
உயிர் இனங்கள் எக்கேடு கெட்டாயினும் தொலையும் படி யாக விட மாட்டாது –
அந்தர்யாமியாக அவற்றுக்கு உற்றனவே செய்து உயவே பண்ணுவதும் அன்பினாலாய செயல் அன்றோ –

அத்தகைய பரிவு வாய்ந்தவனும் ஸ்ரீ எம்பெருமானோரோடு சேர்த்து பார்க்கும் அளவில்
ஸ்ரீ எம்பெருமானாரது பரிவு எங்கே-பரந்து பரிவு எங்கே –
அந்தப் பரிவுக்கு ஸ்ரீ பரன் பரிவு அற்பமாய் -இல்லை என்னலாம்படி உள்ளது என்கிறார் .
ஸ்ரீ எம்பெருமானார் பரிவுடைமையை விளக்கு காட்டுகிறார் –பல்லுயிர்க்கும் -என்று தொடங்கி –

விண்ணில் தலை நின்று –
நாகஸ்யப்ரஷ்டே -என்கிறபடியே ஸ்வர்க்காதி லோகங்களுக்கு எல்லாம் மேலாய் –
பரமாகாச சப்த வாச்யமான ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் –

பல் உயிர்க்கும் வீடு அளிப்பான் –
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ ராமானுஜோ விஜயதே எதிராஜராஜ -என்கிறபடியே –
சகல ஆத்மாக்களுக்கும் -அந்தமில் பேரின்பம் ஆகையாலே பரம புருஷார்த்தமான மோஷத்தை கொடுத்து அருளுவதாக –

புல் உயிர்க்கு– என்ற பாடமான போது-
புல் உயிர் என்றது ஷூத்ரர் -என்றபடி –

எம் இராமானுசன் –
எங்களுக்கு ஸ்வாமியான ஸ்ரீ எம்பெருமானார் –

மண்ணின் தலத்து உதித்து –
பிரக்ரதிம் ச்வாமதிஷ்டாய சம்பவாமி -என்றால் போலே அவதரிப்பது பூமியிலே ஆகிலும் –
தத்கததோஷ ரசம் அச்பர்ஷ்டராய் அஜகத ச்வாபராய் – கொண்டு அவதரித்தார் காணும்
மண்ணின் தலத்து உதித்து இருள் தரும் மா ஞாலமான இந்த பூமியிலே இதனுடைய தோஷம் ஒன்றும் தட்டாதபடி திருவவதரித்து –

மறை நாலும் வளர்த்தனனே –
ரிசோ யஜும் ஷி சாமானி ததைவாதர்வணா நிச – என்கிறபடியே ரிகாதி பேதேன நாலு வகைப்பட்டு இருக்கிற வேதத்தையும்
லோகம் எல்லாம் வியாபித்து அசங்குசிதமாக நடத்தி யருளினார் –
சிரந்த ந சரஸ்வதி சிகுர பந்து சை ரந்தரிகா – என்னும்படியான
ஸ்ரீ ஸூக்திகளாலே நிர்மித்து அருளின ஸ்ரீ பாஷ்யாதி கிரந்த வியாக்யானம் பண்ணிக் கொண்டே இந்த
வேத சதுஷ்டத்தையும் -தடையற நடப்பித்து அருளினார் என்றபடி –

இத்தால் –ஸ்ரீ மத் வேத மார்க்க பிரதிஷ்டாப நாச்சார்யா -உபய -வேதாந்தாசார்யர் -என்றது ஆய்த்து-

பல்லுயிர்க்கும் –வளர்த்தனான் –
பலவகைப் பட்ட உயிர் இனங்கள் உள்ளே அந்தர்யாமியாய் மறைந்து இருந்து அவர்களுக்கு
தக்கவைகளைப் பண்ணி உய்விக்கிறான் –ஸ்ரீ பரன் –
ஸ்ரீ எம்பெருமானாரோ பல்வகைப் பட்ட உயிர் களுக்கு எல்லாம் நேரடியாக வீடு அளிப்பதற்காகவே
விண்ணகத்தின் நின்றும் இம் மண்அகத்துக்கு நேரே வந்தருளினார் –
ஸ்ரீ பரன் எங்கும் வியாபித்து இருப்பவன் ஆதலின் அவனுக்கு வரும் அருமை இல்லை –
நித்ய ஸூரிகளில் ஒருவராகிய இவரோ –குன்றாத வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை
இகழ்ந்து உயிர் களுக்காக இங்கே வந்து அவதரிக்கிறார்
இதனாலும் ஸ்ரீ பரனை விட இவரது அன்புடைமை யின் சிறப்பு விளங்குகிறது .
ஸ்ரீ பரன் கண் காண நிற்கில் ஆணை யிட்டு விலக்குவார்கள் என்று – அஞ்சி அந்தர்யாமியாய் தன்னை ஒளித்து நிற்கிறான் –
இவரோ சேதனருடைய ஸ்வா தந்த்ரயதிற்கு அஞ்சாது கண் காண வந்து உய்விக்கிறார் .
இதனாலும் இவருடைய அன்புடைமையின் சிறப்பு விளங்குகிறது –
சலித்தான நலம் -அன்பு -உடையார்க்கு அச்சம் தோன்றாதன்றோ –
பரிவு உடையவன் ஆயினும் ஸ்ரீ பரன் ஆகையாலே -நேரே நிற்க அஞ்சி ஒளிந்து உள் நின்றான் .
இப்பொழுது பரன் என்பதற்கு அந்யன் என்பதும் பொருள்
இவர் அந்யர் அல்லாது உயிர் இனங்களை சேர்ந்தவர் ஆதலின் நேரே நிற்க அஞ்சாது -வந்து நிற்கிறார் .
இந்தக் கருத்து -பரன் -அந்யன் –
எம்மிராமானுசன்-என்னும் சொல் அமைப்பிலே மிளிருவதைக் கண்டு களிக்க .-

விண்ணுளாரிலே ஒருவர் இம் மண்ணிடை வரினும் இதன் குற்றம் அவரைப் பற்றாது என்பது தோன்ற –
பிறந்த என்னாது –உதித்து -என்றார் .
கிழக்குத் திசையில் சூர்யன் உதிக்கும் போது அத்திசைக்கும் சூர்யனுக்கும் எங்கனம் யாதொரு தொடர்பும்
உண்மையில் இல்லையோ -அங்கனம் இம் மண்ணின் தலத்திற்கும்-அவருக்கும் யாதொரு தொடர்பும்
உண்மையில் இல்லை என்றது ஆயிற்று –

தோஷம் தட்டாதவர் ஸ்ரீ ஸ்வாமி உதித்தாலும்/ஸ்ரீ ராம திவாகரன் ஸ்ரீ அச்சுத பானு ஸ்ரீ வகுளாபர திவாகரன் ஸ்ரீ ராமானுஜ திவாகரன்-

வீடளிப்பான் உதித்தவர் –
நம்மைப் போல் கன்ம பலம் துய்ப்பான் பிறந்தவர் அல்லர் அவர் என்பது கருத்து .
உயிர்களின் உள்ளே நிற்றலால் ஸ்ரீ பரனுடைய வாத்சல்யமும் –
உயிர்களின் குற்றங்கள் தன்பால் ஓட்ட ஒண்ணாது நிற்றலால் அவனுடைய ஆற்றல் உடைமையும் தோன்றுகின்றன –
உயிர்களின் இடையே தோள் தீண்டி நிலவுலகிலே கால் பாவி நிற்றலால் அளவு கடந்த வாத்சல்யமும்
அங்கனம் நின்றும் நிலத்தின் குற்றங்கள் தன்பால் ஓட்ட ஒண்ணாது நிற்றலால்
அளவிறந்த ஆற்றலுடைமையும் ஸ்ரீ எம்பெருமானாரிடம் தோன்றுகின்றன .
உயிர்கள் கூடவே அந்தர்யாமியாய் இருக்கும் ஸ்ரீ பரன் உய்விப்பதற்கும் –
பிரகிருதி மண்டலத்திற்கு அப்பால் பட்ட ஸ்ரீ வைகுண்டத்தின் நின்றும் வந்து நேரே உதித்தவர் உய்விப்பதற்கும் –
எவ்வளவு வாசி பாரீர் –

உய் மறை நாளும் –வளர்த்தனன்
உயிர்கள் எல்லாம் உய்கிற சாஸ்திரங்கள் நான்கு வேதங்களாகும்
அவைகளின் பொருளை குறிப்பிட்ட சிலரே அறிந்து உய்ந்தனர் என்று இல்லாமல் நால் வேதப் பொருளையும்
நானிலத்தோர் அனைவரும் அறியும்படி உபதேசித்து – மறை நான்கும் வளர்ச்சி யுறும்படி செய்தார் -என்றபடி
சிலர் அளவில் பயன் படின் மறை சுருங்கி நின்றதாகும் – அனைவர்க்கும் பயன்படினோ அது வளர்ச்சி உற்றதாம்
இதனாலும் பரன் உய்விப்பதனினும் ஸ்ரீ எம்பெருமானார் உய்விப்பதன் சிறப்பு காட்டப் படுகிறது

அந்தர்யாமி வேதப் பொருளை உபதேசித்து உய்விப்பதற்கு வழியே இல்லை
இனி வலுவிலே ஒருவனுக்கு சாஸ்திர ஞானம் உண்டாகும்படி செய்தாலும் எல்லாருக்கும் அந்த ஞானம் உண்டாக வழி இல்லையே –
ஸ்ரீ எம்பெருமானாரோ தமது அறிவின்-வீறுடைமையால் மண்ணின் தலத்தில் உள்ளோர் எல்லார்க்கும் சொல்லி -எல்லோருக்கும்
சாஸ்திர ஞானத்தை உண்டாக்கி மறை நான்கையும் வளர்த்து உய்வித்து அருளுகிறார் -என்க

மண்ணின் தலத்து உதித்த -என்றதில்-மண்ணின் தோஷம் தட்டாத ஆற்றல் உடைமையும் –
உய் மறை நாளும் வளர்த்தனன் – என்றதில் வளர்க்க வல்ல அறிவுடைமையும் தோன்றுகின்றன –

இனி அந்தர்யாமியாய் இருந்து சாஸ்திர ஞானத்தை பரப்ப முடியா விடினும்
ஸ்ரீ பரன் -ஸ்ரீ எம்பெருமானார் போலே அவதரித்து பரப்ப முடியும் அன்றோ -எனின் அதுவும் ஆகாது என்க –

அன்னமாய் அவதரித்து அன்று அங்கு அருமறை பயந்தானே அன்றி வளர்த்தான் அல்லன்-
இனி ஸ்ரீ கண்ணனாக அவதரித்து ஸ்ரீ கீதை செப்பி மறை நாளும் வளர்த்திலனோ எனில் -அன்று -என்க
நான் மறைகளின் பொருள் எளிதில் எல்லோருக்கும் விளங்காதது போலே
ஸ்ரீ கீதையின் பொருளும் எல்லோருக்கும் எளிதில் விளங்காததாகவே யாயிற்று –
அவன் உபநிடதங்களின் பொருளை சாரமாக எடுத்து சொல்ல வேணும் என்று நினைத்து சொன்னானாலும் அவன் நினைப்பு
நிறை வேற வில்லையே-
ஆசை இருக்கலாம் அவனுக்கு – அதனை நிறைவேற்றிக் கொள்ளும் ஆற்றல் வேண்டாமா –
ஸ்ரீ எம்பெருமானாருக்குப் போலே விளங்கச் சொல்லும் வல்லமை வாய்ப்பது அரிது அன்றோ –
ஆதல் பற்றியே ஸ்ரீ கீதையினைப் பரிஷ்கரித்து அதன் பொருளை எல்லாருக்கும் தெரியும்படி செய்ய
ஸ்ரீ கீதா பாஷ்யம் -அருளிச் செய்வதற்கு என்றே ஸ்ரீ எம்பெருமானார் பாரினில் அவதரிக்க வேண்டியதாயிற்று .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்ரீ கீதா பாஷ்யத்தை
பரபணிதி பரிஷ்கார வ்ருத்யாசமேதம் -ஸ்ரீ சங்கல்ப சூர்யோதயம் -2 -22 – – என்று
பர -ஸ்ரீ கண்ணனுடைய வாக்காகிய ஸ்ரீ கீதைக்கு பரிஷ்காரம் -செம்மை படுத்துதல் -செய்யும் செயலோடு கூடியது -என்று
ஸ்ரீ கீதா பாஷ்யத்தை குறிப்பிட்டு இருப்பது இங்கு நினைவு கூரத் தக்கது .
இப்படி எல்லாம் வல்ல பரனிலும் சீரிய முறையிலேயே அவதரித்து வேதார்த்த ஞானத்தை பரப்பி
உயிர்களை எல்லாம் உய்வித்து அருளுவதே -என்பது கருத்து –

ஆழ்வாரையும் ஆச்சார்யர்களையும் தன்னை விட உயர்ந்தவர் என்று அருளி செய்ய வைத்து உகக்கிறான்
ஸ்ரீ வடுக நம்பி/ஸ்ரீ மதுரகவி ஆழ்வார்/ஸ்ரீ சத்ருக்னன்/ஸ்ரீ அமுதனார் இவர்களுக்கும் –
அந்தர்யாமித்வமும் வ்யாபகத்வமும் ஸ்ரீ எம்பெருமான் தானே –
அனைத்தும் அவர் தான் என்பதால் -நின் திரு எட்டு எழுத்தும் கற்றதும் உற்றது உன் அடியார்க்கு அடிமை-
இதையும் கேட்டு உகக்கிறான் –

——————

வண் புகழ் நாரணன்-நாரணன் முழு எழ உலகுக்கும் நாதன்–உடல் மிசை உயிர் என கரந்து-மறைந்து – எங்கும் பரந்துளன்–

ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மான்

குன்றாத வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை
இகழ்ந்து உயிர்களுக்காக இங்கே வந்து அவதரிக்கிறார்

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –94-தவந்தரும் செல்வம் தகவும் தரும் சரியா பிறவிப் பவந்தரும்- இத்யாதி —

May 31, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

தம்மை நிர் ஹேதுகமாக அங்கீகரித்து -கர்மங்களைப் போக்கின படியை அனுசந்தித்தார் கீழ்
இப்பாட்டில் ஸ்ரீ எம்பெருமானார் தம்மை ஆஸ்ரயித்தார்க்கு-பிரபத்தி நிஷ்டை தொடங்கி-
ஸ்ரீ பரமபதம் பர்யந்தமாக கொடுத்து அருளுவாரே ஆகிலும் –
நான் அவர்கள் குணங்களை ஒழிய ஒன்றையும் விரும்பி புஜியேன் -என்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

தம்மை நிர்ஹேதுகமாக அங்கீ கரித்து அநாதியான பாபங்கள் மறுவலிடாதபடி தம்முடைய கிருபை யாகிற கடாக்ஷத்தாலே
சேதித்து அத்தாலே பிரபன்ன ஜன கூடஸ்தரான ஸ்ரீ எம்பெருமானார் லோகத்திலே அபசித்தாந்தங்களை
வேதார்த்தங்களாக பிரமிப்பிக்கும் குத்ருஷ்டிகளை நிரசித்த உபாகரகர் என்று கொண்டாடினார் – கீழ்ப் பாட்டில் –
இப் பாட்டில் –
அந்த ஸ்ரீ எம்பெருமானார் தம்மை ஆஸ்ரயித்தவர்க்களுக்கு சர்வோத்தரக ஹேதுவான பிரபத்தி உபாயத்தையும் –
தத் உத்தர கால க்ர்த்யமான கைங்கர்ய ரூப சம்பத்தையும் – சரீர அநுரூப சம்பந்தத்தை அறுத்து பொகட்டு –
பரம புருஷார்த்த லஷண மோஷத்தையும் அடைவே கொடுத்து அருளுவரே ஆகிலும் -அடியேன் அவருடைய
கல்யாண குணங்களை ஒழிய வேறொன்றை ஆதரித்து புஜியேன் என்று ஸ்வ அத்யவசாயத்தை அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

காரணம் இன்றி தம்மைக் கைக் கொண்டு -கன்மங்களை கழலச் செய்தமையைக் கூறினார் கீழே –
இப்பாட்டில்
ஸ்ரீ எம்பெருமானார் -தம்மைச் சார்ந்தார்க்கு தவம் தொடங்கி திவம் முடிய அளிப்பரே யாயினும்–நான்
அவருடைய குணங்களை ஒழிய வேறு ஒன்றையும் விரும்பிஅனுபவியேன்-என்கிறார் –

தவந்தரும் செல்வம் தகவும் தரும் சரியா பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும் பரந்தாம மென்னும்
திவந்தரும் தீதிலிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் கட்கு
உவந்தருந்தேன் அவன் சீரன்றி யான் ஒன்றும் உள் கலந்தே – – – 94- –

பத உரை –
தீது இல் -தீமை இல்லாத
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார்
தன்னை சார்ந்தவர்கட்கு -தம்மை ஆஸ்ரயித்தவர்களுக்கு
தவம் தரும் -சரணாகதி நிஷ்டையை கொடுத்து அருளுவார்
செல்வம் -பின்னர் -பக்திச் செல்வத்தை
தகவும் -பெரும் பேற்றினுக்கு பொருத்தமாகவும்
தரும் -கொடுத்து அருளுவார்
சரியா – அதற்கு மேல் -சரிந்து விழாத
பிறவிப்பவம் -பிறப்பினால் ஏற்படும் சம்சாரத்தை
தரும் -உண்டாக்கும்
தீவினை -கொடிய கர்மங்களை
பாற்றித் தரும் -தூள் தூளாக்கி கொடுத்து அருளுவார்
பரம் தாமம் என்னும் -கடைசியாக -ஸ்ரீ பரந்தாமம் -சிறந்த இடம் -என்று சொல்லப்படுகிற
திவம் -பரம ஆகாசமான ஸ்ரீ வைகுண்ட லோகத்தை –
தரும் -கொடுத்து அருளுவார்
யான் அவன் சீர் அன்றி -ஆயினும் -நான் அந்த ஸ்ரீ எம்பெருமானார் உடைய குணங்களைத் தவிர
ஒன்றும் -வேறு ஒன்றையும்
உள் மகிழ்ந்து -மனம் மகிழ்வுற்று
உவந்து -விரும்பி
அருந்தேன் -அனுபவிக்க மாட்டேன்

வியாக்யானம் –
ஆஸ்ரயித்தவர்களை-அநிஷ்ட நிவ்ருத்தி -இஷ்ட ப்ராப்திகளில் ஒன்றினுடைய அலாபத்தாலே –
துக்கப்பட விட்டு இருக்கும் -குற்றமில்லாத -ஸ்ரீ எம்பெருமானார் –
தம்மை ஆஸ்ரயித்தவர்களுக்கு-முதல் பூர்வ வாக்கியத்தில் சொல்லுகிற சரணாகதி நிஷ்டையை கொடுத்து அருளுவார் –
அநந்தரம் – உத்தர வாக்யத்தில் சொல்லுகிற கைங்கர்யத்துக்கு ருசி வேண்டுகையாலே
பக்தி யாகிற சம்பத்தை ப்ராப்ய அநு ரூபமாகவும் கொடுத்து அருளுவர் –
பின்பு -சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து -ஸ்ரீ திருவாய் மொழி 1-5 -10- –என்கிறபடியே
ஒரு சர்வ சக்தி சரிக்கில் ஒழிய சரியாததாய் –
ஜன்ம பிரயுக்தமான சம்சாரத்தை மேன்மேலும் உண்டாக்கா நிற்கும் க்ரூர கர்மங்களை –
பண்டை வல்வினை பாற்றி அருளினான் -ஸ்ரீ கண்ணி நுண் – 7-என்கிறபடியே சூத்திர தூளியாம் படி பண்ணிக் கொடுப்பர்-பின்பு
பரந்தாமாஷர பரமவ்யோமாதி சப்திதே -என்கிறபடியே
ஸ்ரீ பரம்தாமம் என்று சொல்லப்படுகிற ஸ்ரீ வைகுண்டத்தை கொடுப்பர் –
இப்படி அவர் எல்லாவற்றையும் தந்தாலும் -நான் அவருடைய குணங்களை ஒழிய வேறு ஒன்றையும் மனப் ப்ரீதியோடு விரும்பி புஜியேன் –

தரும் என்றது -கொடுக்கும் என்றபடி

சலியாப் பிறவிப் பவம் தரும் தீவினை -என்று பாடம் ஆன போது
சலிக்கையாவது -நிலை பேருகையாய்-நிலை பேர்க்க வரிதாய்-சம்சார ஹேதுவான -துஷ்கர்மம் -என்றபடி –
பவம் – -சம்சாரம்
பாறு -பொடி
பாற்றுகை -பொடியாக்குகை
மகிழ்ந்து என்று ப்ரீதி வாசக சப்தம் உண்டாகையாலே -உவந்து -என்கிற விது விருப்பமாய்-ஆதர வாசியாகிறது .

விசுவாசம் பிறப்பித்து -பரம புருஷார்த்தம் பர்யந்தமாக உபகார பரம்பரைகள் -தீதில் இராமானுசன் –
தபஸ் -பிரபத்தி -செல்வம் -பக்தி-ருசி பெருக்கி – தகவு -கைங்கர்யம் – நிஷ்டை ருசி வேண்டுமே –
சரியா சலியா -பிறவி -பாட பேதம் -ஐந்து தரும் சப்தங்கள் -ஓன்று மட்டும் வினை எச்சம் -சரியா பிறவிப் பவம் தரும்
தீ வினை —தீ வினைக்கு –விசேஷணமாக -நமக்கு கர்தவ்யம் இசைகையே-தானே அனைத்தையும் அருளிச் செய்வார் –
செல்வம் தகவும் -சரம பர்வ -பாகவத கைங்கர்யம் -தரும்–
நான்கும்-1- சரணாகதி நிஷ்டை –2-கைங்கர்யத்துக்கு தேவையான பக்தி –3-பிரகிருதி அறுத்து –
4-பரம புருஷார்த்த லக்ஷணமான கைங்கர்ய சாம்ராஜ்யத்தையும் க்ரமேண அருளி –
இவற்றை நினைத்து மகிழ்ந்து இல்லாமல் இவற்றை நிர்ஹேதுகமாக அருளிய ஸ்வாமி யுடைய சீரையே உண்டு களிப்பேன்
ருசி ஜனகத்வம் -சொல்லி -சரணாகதி ஸ்ரீ ஆழ்வார் -இங்கு கிரமத்துடன்-ஸ்ரீ ஆச்சார்யர் அருளுவதால்
யான் -நானே செய்ய மாட்டேன் -ஸ்ரீ ஸ்வாமியே தலை மேல் இவற்றை வைத்து சூட்டினால் -மலர் இட்டு நாம் முடியோம் -போலே –
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் எல்லாரும் அங்கே தானே நித்ய கைங்கர்யம் இன்றும் –
காண்டலுமே விண்டே -பிரதம பர்வம் -இங்கு பாற்றி பொடி பொடியாகும் -உருப்பட வாய்ப்பு இல்லாமல்
தீதில் -உபாயம் உபேயம் அத்யாவசித்து ஆஸ்ரயிப்பார்க்கு -இரண்டும் உபாயம் புருஷகாரம் –
குணம் ஹானி -தோஷம் -இரண்டும் இல்லை என்று இருந்தால் இரண்டும் இருக்குமே -இருக்கும் என்று இருந்தால் இரண்டும் போகுமே

தீதில் இராமானுசனை –
தோஷ குண ஹானிகளை கசித்தது அங்கீகரியாதே இருந்தார் என்ற குற்றமில்லாத ஸ்ரீ எம்பெருமானார் –
ஆஸ்ரயேண உன்முகராய் வந்த சேதனரை கடாஷித்து -பரீஷ்ய விவிதோபாயை – என்னும் விசேஷ வாக்கியம் இருக்க
இது குற்றமாய் தலைக் கட்டுமோ எனில் –
இரண்டும் குலைய வேணும் என்று இருக்கில் இரண்டுக்கும் இரண்டும் உண்டாய்த்தாம் -என்று ஸ்ரீ வசன பூஷணத்தில்
சொல்லுகையாலே -தோஷ குணா ஹானிகளை கணிசிக்கிறது பிரபத்தவ்யனுக்கு குற்றமாய் தலை கட்டும் இறே-
த்யஜ்ய தேயதி தோஷேன குணென ந பரிக்ரகயதே -ஏதத் சாதாரணம் பந்தா ஆஸ்ரித ஸ்யகுதம் பலம் -என்னக் கடவது இறே –

தீதாவது –
தம்மை ஆஸ்ரயித்தவர்களை-அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்திகள் இரண்டினுடையவும் அலாபத்தாலே
துக்கப்பட விட்டு இருக்கை யாகிற குற்றம் -அது இல்லாதவரை -என்றபடி –

தீது இல் இராமானுசன்
தன்னை சார்ந்தவர்கட்கு அநிஷ்டத்தை தொலைக்காமலோ இஷ்டத்தை கொடுக்காமலோ
வருந்தும் படி வாளா விட்டு இருத்தல் தீது –
அது அறவே இல்லாதவர் ஸ்ரீ எம்பெருமானார் -என்றபடி –

ஸ்ரீ கேசவன் திருவடியில் பக்தி -பக்தர் சேர்க்கை இரண்டில்- கதா சித் -இது தான் வேண்டும் –
இது இல்லா விடில் அது என்பர் ஸ்ரீ ஸ்வாமி
மகிழ்ந்து –வுவந்து =விருப்பும் ஆதரவும்-
வாக்கு- குண கீர்த்தனை செய்கை கைங்கர்யம் மனசு ஸ்வாமி நினைந்தே இருக்க ஸ்ரீ மா முனிகளும் பிராதித்தாரே –
தீதில்- அனகன்-ஸ்ரீ சத்ருக்னன்- அமலன் விமலன் நிமலன் நின்மலன் போல -மூவர் அனுபவம்-

தன்னை சார்ந்தவர்கட்கு –
இப்படி பட்ட வைபவைத்தை உடைய தம்மை -உபாய உபேய பாவேன அத்யவசித்து ஆஸ்ரயித்தவர்களுக்கு
முந்துற முன்னம்

தவம் தரும் –
நியாச மேஷாம் தபஸா மதிரிக்த மாஹூ-என்கிறபடியே சர்வோ உபாய விலஷணமாய்
ஸ்வரூப அனுரூபமாய் -த்வயத்தில் பூர்வ வாக்ய பிரதிபாதகமான -கைங்கர்யத்துக்கு -போஜனத்துக்கு ஷூத்து போலே
பூர்வ பாவியாய் இருந்துள்ள -ருசி ரூப பக்தி யாகிற சம்பத்தை ப்ராப்ய அநு ரூபமாக கொடுத்து அருளுவர் –
தகவு -தகுதி -அன்றிக்கே

தவம் தரும் –
ஸ்ரீ எம்பெருமானார் -தம்மை சார்ந்தவட்கு தரும் தவமாவது -சரணாகதி -நிஷ்டையே -என்க –
ஸ்ரீ எம்பெருமானார் கொடுக்கும் பயன்களுடைய அடைவு பேசப்படுகிற இடமிது ஆதலின்
உடலை ஒறுத்தல் -காயகிலேசம் -ஆம் தவம் இங்குக் கூறப்பட வில்லை
கேசித் பாக்யாதிகா புன –என்றபடி –சரணாகதி நிலையில் நிற்பதே -உறு பாக்கியம் என்று உணர்க –
ஆதலின் அது தரும் பயனாக பேசப்படுகிறது –
சரணாகதி நிஷ்டையாவது -ஸ்ரீ த்வய மந்த்ரத்தில் முதலாவது வாக்யத்தில் சொன்ன படி இருத்தல்-
திருவடிகளே தஞ்சம் என்னும் துணிவும் –
உபயாந்தரங்களில் நெஞ்சு செல்லாமையும் –
பேறு தப்பாது என்று துணிந்து இருக்கையும் —–சரணா கதி நிஷ்டை -என்க .

செல்வம் தரும் –
சது நாக வர ஸ் ஸ்ரீ மான் –லஷ்மனோ லஷ்மிசம்பன்ன -என்னும்படியான கைங்கர்ய
சம்பத்தையும் கொடுத்து அருளுவர் –

தகவும் தரும் –
அந்த கைங்கர்ய செல்வத்தை பெறுவது எப்போதோ என்கிற ப்ராப்ய த்வரையையும் கொடுத்து அருளுவர் –

அங்கனம் அன்றிக்கே செல்வம் தகவும் தரும் –
உத்தர வாக்யத்தில் சொல்லுகிற கைங்கர்யம் சரம பர்வ பர்யந்தமாக இருப்பது ஆகையாலும் –
அது பரம தர்மம் ஆகையாலும் – பரம தர்மமான சரம பர்வ பர்யந்தமாய் இருக்கும்
கைங்கர்ய ஸ்ரீ லஷ்மியை கொடுத்து அருளுவர் என்னவுமாம் –

இந்த யோஜனையில்
தகவு ஆவது தர்மம் –

செல்வம் தகவும் தரும் –
த்வய மந்த்ரத்தில் பிந்திய வாக்யத்தினால் சொல்லப்படுகிற கைங்கர்யத்துக்கு முன்பு –
சாப்பாட்டுக்கு முன்பு தேவைப்படும் பசி போலே -அவசியம் ப்ரீதி தேவைப்படுவதாதலின் –
அந்த ப்ரீதி ரூபமான பக்தியை தருகிறார் —
இங்கு செல்வம் என்பது அத்தகைய பக்தியை –
சரணாகதி நிஷ்டன் பெறத்தக்க பயன் அதுவே யன்றோ –
தனமாய தானே கை கூடும் -ஸ்ரீ முதல்-திருவந்தாதி – 43- என்று கைங்கர்யத்துக்கு முன்பு தேவப் படுகின்ற
பக்தி தனமாகப் பேசப்பட்டு இருப்பதும் காண்க –

செல்வம் தருவதும் தக்க முறையிலே தருகிறாராம் -பெரும் பேறாகிய கைங்கர்யத்துக்கு தக்கவாறும்
அமைய வேண்டும் அன்றோ பக்தி செல்வம் -.
செல்வம் தருகிறார் –அது பொருந்தவும் தருகிறார் -என்னும் கருத்துடன் –
செல்வம் தகவும் தரும் -என்கிறார் .
இங்கு பக்தி செல்வம் தருவதை மட்டும்தகவும் -பொருந்தும் படியாகவும் -தருவதாக விசேஷித்து இருப்பது குறிக் கொள்ளத் தக்கது .

ஸ்ரீ எம்பெருமானாரை சார்ந்தவர்கள் சரம பர்வ பர்யந்தமான ஆசார்ய கைங்கர்யத்தை தான் பேறாக கருதுவர் ..
கருதவே அவர்களுடைய பக்தி -அவ் ஆசார்ய கைங்கர்யத்துக்கு தக்கதாக அமைதல் வேண்டும் அன்றோ –
பேற்றின் எல்லை நிலமான ஆசார்ய கைங்கர்யதிற்கே தக்கதாக பக்திச் செல்வத்தையும் தருகிறார் -என்றதாயிற்று .
ஆகவே வழி பாட்டிற்கு தக்கதாக பயன் அமையும் –
யதோபாசனம் பலம் -என்றபடி –
இவர்களுடைய சரணாகதி நிஷ்டையும் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் -என்னும் துணிவாகவே –
கொள்ளப்படுதல்-ஏற்ப்புடைதாகும் .

இனி ஸ்ரீ த்வய மந்திரத்தின் முதல் வாக்யத்தில் சொன்ன –
ஸ்ரீ நாராயணன் திருவடிகளே தஞ்சம் –என்னும் துணிவாகிய சரணாகதி நிஷ்டைக்கும் –
பிந்தின வாக்யத்தில் சொன்ன ஸ்ரீ நாராயண கைங்கர்யத்துக்கும் -ஸ்ரீ எம்பெருமானாரைச் சார்ந்தார் நிலைகள் மாறுபடாவோ-எனில் கூறுதும் –
ஸ்ரீ த்வய மந்திரத்தில் -இரண்டு வாக்யங்களாலும் -முறையே கூறப்படும்
சரணா கதி நிஷ்டைக்கும் – கைங்கர்யத்துக்கும் சரம பர்வமான ஸ்ரீ எம்பெருமானார் அளவும் விஷயமாக கொள்ளுகையால்
மாறுபாடு இல்லை -என்க –
இனி ஸ்ரீ எம்பெருமானாரை சார்ந்த சரம பர்வ நிஷ்டர் ஆனவர்கள் –
அவரையே நேரே த்வய மந்த்ரத்தின் பொருளாக அனுசந்திக்கையாலே -மாறுபாட்டினை சங்கிப்பதர்க்கும் இடமே இல்லை என்னலுமாம் .

ஸ்ரீ எம்பெருமானாரை த்வயத்தின் பொருளாக அவர்கள் எவ்வாறு அனுசந்திக்கின்றனர் என்பதை சிறிது விளக்குவாம் –
ஸ்ரீ பிராட்டி புருஷகாரத்தாலே தூண்டப்பட்ட வாத்சல்யம் முதலிய குணங்கள் வாய்ந்த சித்தோ உபாயத்தின் உடைய –
ஸ்ரீ நாராயணன் உடைய -திரு மேனியாக அவர்கள் நம் ஆழ்வாரை அனுசந்திக்கின்றனர் –
திரு மேனி ஸ்ரீ பகவானுடைய குணங்களை பிரகாசப் படுத்துவது போலே
ஸ்ரீ நம் ஆழ்வாரும் பிரகாசப் படுத்துவதனால் அவர் திரு மேனி யாயினார் –
கல்யாண குணங்கள் உறைந்து திரு மேனியில் விளங்குவது போலே –ஸ்ரீ நம் ஆழ்வாரிடத்திலும் வண் புகழ் நாரணன் விளங்குவதால்
அவரை திரு மேனியாக அனுசந்திப்பது பொருந்து கின்றது –
அத்தகைய ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய திருவடி ஸ்ரீ எம்பெருமானார் —
அவரைத் தஞ்சமாக பற்றுகின்றேன் என்று த்வய மந்த்ரத்தின் முதல் வாக்யத்தின் பொருளை அனுசந்தானம் செய்கின்றனர்
ஸ்ரீ நம் ஆழ்வார் ஆகிய ஸ்ரீ மன் நாராயணனின் திரு மேனியின் திருவடிகளை உபாயமாக கொண்டால் –
உபேயமாக வுமான அந்த திருவடிகளுக்கே கைங்கர்யம் செய்ய வேணும் என்று பிந்திய வாக்யத்துக்கும் –
அவர்கள் பொருள் கொண்டனர் -என்க –

விஷ்ணுச் சேஷீ ததீ யச்சுப குண நிலயோ விக்ரஹா ஸ்ரீ சடாரி ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பத-கமல யுகம் பாதி ரம்யம் ததீயம-என்று
விஷ்ணு சேஷி யானவன் .அவனது நற் குணங்களுக்கு இருப்பிடமான திரு மேனி ஸ்ரீ நம் ஆழ்வார் –
ஸ்ரீ மான் ஆகிய ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ நம் ஆழ்வாருடைய அழகிய இணைத் தாமரை யடியாக விளங்குகிறார் –
என்னும் பூர்வாசார்யர் ஸ்ரீ ஸூக்தி இங்கு அனுசந்திக்கத் தக்கது .

சிலர் செல்வம் தகவும் தரும் -என்று புதுப்பாடம் கற்பித்தும் அதனுக்கு உரை வரைந்தும் உள்ளனர் ..

சரியா பிறவி பவம் தரும் தீ வினை பாற்றி தரும் –
அநந்தரம் -சார்ந்த இரு வல் வினைகளையும் சரித்து –என்கிற படியே ஒரு சர்வ சக்தி கழிக்கில் ஒழிய –
அனுபவத்தாலும் பிராயசித்தத்தாலும் சரியாததாய் -பல யோனிகள் தோறும் பலபடியாக பிறக்கை ஆகிற சம்சாரத்தை
மேன்மேலும் கொழுந்து விட்டு பண்ணக் கடவதான க்ரூர கர்மங்களை
பண்டை வல் வினை பாற்றி அருளினான் -என்கிறபடியே சூத்திர தூளி யாம்படி பண்ணிக் கொடுப்பார் –
காற்று அடித்தவாறே தூள் பறக்குமா போலே பறந்து போகும்படி பண்ணிக் கொடுப்பார் என்றபடி –
பவம் -பவம் -சம்சாரம் என்றபடி –
பாரு -பொடி-பாற்றுகை -பொடி யாக்குகை –
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்றான் இறே கீதார்ச்சார்யனும் –

சரியா பிறவி –தீவினை பாற்றித்தரும் –
சரியா என்னும் ஈறு கெட்டு -எதிர் மறைப் பெயர் எச்சத்தை தீவினை என்னும் பெயரோடு முடிக்க –
சார்ந்த இரு வல் வினைகளும் சரிந்து -ஸ்ரீ திருவாய் மொழி -1 5-10 – – -என்றபடி .
எல்லா வல்ல ஸ்ரீ இறைவனுக்கு ஒழிய -பிறர்க்கு சரிக்க ஒண்ணாத தீவினை-என்க .

சலியா -என்றும் பாடம் உண்டு .
அப்பொழுது சலித்தல்
அசைதவாய் -அசையாத -அதாவது நிலை பேராத தீவினை என்று பொருள் கொள்க –
பிறவிப்பவம் -பிறவியினாலாய பாவம் -பாவம் -சம்சாரம் –
பாற்றுதல் -பாறாகச் செய்தல் –பாறு -பொடி
சரியாதவைகளும் -பிறவினாலாய சம்சாரத்தை உண்டு பண்ணிக் கொண்டு இருப்பவைகளுமான
கொடிய கர்மங்களை பொடி பொடியாகப் பண்ணிக் கொடுப்பார் -என்றபடி .

பகவானைப் பற்றிய ஸ்ரீ நம் ஆழ்வார் -தம் வினைகள் கமலப் பாதம் காண்டலும் விண்டே ஒழிந்தன -என்றார் .
ஸ்ரீ நம் ஆழ்வாரைப் பற்றிய ஸ்ரீ மதுர கவிகள் -பண்டை வல் வினை பாற்றி யாருளினான் -கண்ணி நுண் – 7- என்றார் .
விண்டிடில் மீண்டும் உருப்படியாதலும் கூடும் .பாறு ஆக்கி விட்டாலோ தீ வினைகள் மீண்டும் தலை தூக்க வழி இல்லை
ஸ்ரீ ஆசார்ய அபிமானத்தின் வீறுடைமை இது.
ஸ்ரீ மதுர கவிகளை அடி ஒற்றி –பாற்றித் தரும் -என்கிறார் ஸ்ரீ அமுதனாரும் .
பவம் தரும் -என்னும் இடத்தில் உள்ள –தரும் -என்னும் எச்சம் தீ வினை என்னும் பெயரோடு முடிந்தது .
பாற்றித் தரும் -என்பது ஏனைய இடங்களில் போலே வினை முற்று

பரம் தாம் என்னும் திவம் தரும் –
அநந்தரம் -பரந்தாமாஷர பர ப்ரஹ்ம வ்யோமாகதி சப்திதே -என்று ஸ்ரீ கத்ய த்ரயத்தில் அருளிச் செய்தபடி –
பரம் தாமம் –என்று சொல்லப்படுகிற –திவம் –பரமாகாசம் –ஸ்ரீ வைகுண்டம் என்றபடி -அத்தைக் கொடுத்து அருளுவர் –

பரந்தாமம் என்னும் நிலம் தரும் –
பரம் தாமம் -என்பதற்கு சிறந்த இடம் என்பது பொருள் .
திவம் -என்பதற்கு வான் -என்பது பொருள் .
சிறந்த இடம் எனப்படும் வான் என்பது ஏனைய தேவர்கள் உள்ள வாளினின்றும் வேறுபட்ட தான
பரம ஆகாசம் எனப்படும் ஸ்ரீ வைகுண்டமே யாகும் -என்க –

இங்கே முதலில் த்வய மந்த்ரத்தின் முதல் வாக்யத்தில் சொன்ன சரணாகதி நிஷ்டையும்
பின்னர் -பிந்திய வாக்யத்தில் சொன்ன -அதன் பயனாகிய கைங்கர்யத்துக்கு பொருந்தும்படி யமையும்

பக்தியும் -அதன் பிறகு –
நமஸ் சப்தார்த்தமான அநிஷ்ட நிவ்ருத்தி யாகிய தீவினை பாறுதலும்
அதனை யடுத்து சதுர்த்தியின் அர்த்தமான கைங்கர்யத்திற்கு பாங்காக அமையும் இஷ்டப் ப்ராப்தி யாகிற திவம் பெறுதலும் –
முறையே பேசப்பட்டு உள்ள அழகு காண்க –

இப்படி பிரபத்தி நிஷ்டை தொடங்கி -ஸ்ரீ பரம பத்தைத் அளவும் கொடுத்து அருளுவரே ஆகிலும் –
அவன் சீர் அன்றி யான் -என்று
கீழ் சொன்ன படி சர்வ பிரகாரத்தாலும் உத்தாரகரான ஸ்ரீ எம்பெருமானார் உடைய கல்யாண குணங்களை ஒழிய
நான் மற்று ஒரு விஷயத்தை-

உள் மகிழ்ந்து உவந்து அருந்தேன் –
மனஸ் சந்தோஷத்தோடு ஆதரித்து அனுபவிக்க கடவேன் அல்லேன் –
அருந்துதல் -உண்டல் –
சுழி பட்டோடும் சுடர் சோதி வெள்ளம் -என்னும்படியான ஸ்ரீ பரம பதத்தையும் கூட –
ஐஸ்வர்ய கைவல்யங்களைப் போலே காற்கடை கொள்ள வேண்டும்படி ஸ்ரீ அமுதனார்க்கு இருந்தது காணும் –
ஸ்ரீஎம்பெருமானார் உடைய– பாலே போல் சீர் -என்னும்படியான கல்யாண குணங்களின் உடைய போக்யதை –

இத்தால் -ப்ரீத மனஸ்கராய் -அவருடைய கல்யாண குணங்களையே விரும்பி புஜிப்பேன் -என்கிறார் –
மகிழ்ந்து -என்று
ப்ரீதி வாசக சப்தம் உண்டாகையாலே –
உவந்து -என்கிற இது -விருப்பமாய் -ஆதர வாசியாய் இருக்கிறது –

சலியா பிறவியென்ற பாடமான போது – சலிக்கையாவது நிலை பெயர்க்கையாய் -நிலை பேர்க்க அரியதாய் –
சம்சார ஹேதுவான துஷ் கர்மங்கள் என்றபடி –
நித்யம் யதீந்திர -இத்யாதி ஸ்லோகத்திலே ஸ்ரீ ஜீயரும் அத்தையே பிரார்த்தித்து அருளினார் இறே –

உவந்தருந்தேன் ..உள் மகிழ்ந்து
உள் மகிழ்ந்து உவந்து அருந்தேன் -என்று கூட்டுக
மகிழ்வு மேலே கூறப்படுதலின் -உவந்து என்பதை விரும்பி பொருளில் வந்ததாக கொள்க –
ஆதரவும் ப்ரீதியும் -உவந்து மகிழ்ந்து -இரண்டு சப்தங்கள் –
உவந்து அருந்தேன் -விரும்பி அனுபவியேன் -என்றபடி

யான் அவன் சீர் அன்றி ஒன்றும் அருந்தேன் –
ஸ்ரீ எம்பெருமானார் தரும் அவையான தவத்தில் இருந்து -திவம் உட்பட -யாதொன்றையும் மன மகிழ்வுடன் விரும்பி அனுபவிக்க மாட்டேன் –
அவருடைய கல்யாண குணங்களையே மன மகிழ்வுடன் விரும்பி அனுபவிப்பேன் -என்றதாயிற்று –
அவைகள் வலுவிலே என் மடியில் கட்டப்படில் தவிர்க்க ஒண்ணாது -நானாக மனம் மகிழ்ந்து விரும்பி அவற்றுள் ஒன்றினையும்
விரும்பி அருந்தேன் -என்கிறார் .
ஸ்ரீ எம்பெருமானார் கல்யாண குணங்கள் அவ்வளவு இனிக்கின்றன அமுதனார்க்கு –

ஸ்ரீ நம் ஆழ்வார் செங்கண் மாலை நோக்கி –நின் புகழில் வைக்கும் தம் சிந்தையிலும்
மற்றினிதோ நீ யவர்க்கு வைகுந்தம் என்றருளும் வான் -ஸ்ரீ பெரிய திருவந்தாதி – 53- என்று-
அவன் தரும் ஸ்ரீ வைகுந்தத்தினும் அவன் குணங்கள் இனிப்பதாக கூறுவதை இங்கே நினைவு கூர்க-

——————–

சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து மாயப் பற்று அறுத்துத்
தீர்ந்து தன் பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி அகலம் கீழ் மேல் அளவு இறந்து
நேர்ந்த உருவாய் அருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே–1-5-10-

பண்டை வல்வினை பாற்றி அருளினான் -கண்ணி நுண் – 7-

தனமாய தானே கை கூடும் -முதல்-திருவந்தாதி – 43-

நின் புகழில் வைக்கும் தம் சிந்தையிலும்
மற்றினிதோ நீ யவர்க்கு வைகுந்தம் என்றருளும் வான் -பெரிய திருவந்தாதி – 53-

குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படு துயராயின வெல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளோடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் யாயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம் –1-1-9-

தேசும் திறலும் திருவும் உருவமும்
மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் -பேசில்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத
நலம் புரிந்து சென்றடையும் நன்கு —-10–

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-