ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –
முதல் -பாட்டில் -ஸ்ரீ ஆழ்வார் உடைய நிரதிசய போக்யதையை -சொல்லுகிறது –
கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் –
ப்ராப்ய காஷ்டையான ஸ்ரீ ஆழ்வாரைப் பற்றுகிற இவர் -ப்ரதம அவதியான ஸ்ரீ பகவத் விஷயத்தில்-இழிவான் என் -என்னில் –
ஸ்ரீ ஆழ்வார் உடைய போக்ய அதிசயம் தோற்றுகைக்காகவும் –
ஸ்ரீ ஆழ்வார் உடைய முக முலர்த்திக்காகவும் –
அவர் உகக்கும் பகவத் விஷயம் -ஆகையாலும் –பேசுகிறார்
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எழில் எத்திறம் -என்றும் –
பிறந்தவாறும் -வளர்ந்தவாறும் -என்றும் –
பையவே நிலையும் -என்றும்
ஸ்ரீ ஆழ்வார் ஆழம் கால் பட்ட விஷயம் ஆகையாலும் அத்தைப் பேசுகிறார் –
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -1-
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் –
ஸ்ரீ ஆழ்வார் பக்கலில் இவர்க்கு உண்டான உத்தேச்யதை இருந்தபடி –
அவருடைய உத்தேச்ய வஸ்துவைக் கட்டின ஒரு கயிற்றின் உடைய உள் மானம் புறமானம்-ஆராயும்படி -ஆயிற்று
இவர் பகவத் விஷயத்தில் கை ஒழிந்த படி –
இவர் ஸ்ரீ ஆழ்வார் பக்கலிலே ந்யஸ்த பரர் ஆனபடி –
கண்ணித் -தாம்பு
உடம்பிலே கட்டப் புக்கால் உறுத்தும்படி பல பிணைகளை உடைத்தாய் இருக்கை
கண்ணி -முடி
நுண் தாம்பு –
உடம்பிலே அழுந்தும்ப்படி நேரியதாய் இருக்கை
சிறுத் தாம்பு –
இவனை கட்டின பின்பு உரலோடு சேர்த்த போராதாய் இருக்கை
கட்டுண்ணப் பண்ணிய-
உரலை நேரிதாகச் செதுக்கப் போகாது-
அப்போதாகக் கயிற்றை நெடுக விடப் போகாது-
இனி இவன் தன்னை விட்டு நெடிய கயிறு தேடி எடுக்கப் புகில் பின்னை இவன் தான் எட்டான்
காற்றில் கடியனே ஓடும் -இனிச் செய்வது என் என்று அவள் தடுமாறிய படியைக் கண்டான்
கட்டுண்ணப் பண்ணிய –
சதைக ரூப ரூபாய என்கிற
தன்னுடைய திருமேனியை நெருக்கி இடம் கொண்டு கட்டுண்ணும் படி பண்ணினான் –
கட்டுகைக்கு பரிகரம் இல்லை என்று நிவ்ருத்தை -யாமாகில்
பிறந்து படைக்க நினைத்த குணத்தை இழக்கும் இத்தனை இறே
ஆகையாலே திருமேனியிலே இடம் -கொடுத்தான்
கண்ணியார் குறும் கயிற்றால் கட்ட வெட்டு என்று -இருந்தான் என்றும் –
கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் -என்றும் –
எல்லாரும் ஈடுபடும் துறை இறே இது -தான்
தாய் கட்டின கட்டை அவிழ்க்க சக்தன் அல்லன் -என்று இருந்தான் இறே-
ஸ்வ வ்யதிக்ர்த்தரை யடைய கட்டுகைக்கும் விடுகைக்கும் ஹேதுவானவன் கிடீர் –
தாம்நா சைவயதி சக்நோஷி கச்ச த்வமதி சஞ்சல சேஷ்டித -என்று
தாய் கட்டின கட்டை அவிழ்க்க சக்தன் அல்லேன் என்று இருந்தான் இறே
சம்சார பந்த ஸ்திதி மோஷ ஹேது-
ஸ்வ வியதிரிக்தரை அடைய கட்டுகைக்கும் விடுகைக்கும் ஹேதுவானவன் கிடீர்
இப்போது ஒரு அபலை கட்டின கட்டை அவிழ்க்க சக்தன் அன்றிக்கே -இருக்கிறான்
செருக்கனான சார்வ பௌமன் -அபிமத விஷயத்தின் கையிலே அகப்பட்ட ஒரு
கரு முகை யாலே கட்டுண்டு அகலுவதற்கு பிரதி கிரியை பண்ண மாட்டாதே இருக்குமா போலே இறே
இவள் கட்டின கட்டுக்கு பிரதிகிரியை பண்ண மாட்டாதே யிருந்த யிருப்பும் –
பிறர் உடைய கர்ம நிபந்தனமாக வரும் கட்டை அவிழ்க்கும் அத்தனை அல்லது –
தன் அனுக்ரஹத்தால் வந்த கட்டு தன்னாலும் அவிழ்க்கப் -போகாது என்கை
ஆழ்வார் -மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையாலே –
உயர்வற உயர்நலம் உடையவன் -என்று அவன் குணத்தை வர்ணித்தார் –
இவர் முதல் அடியிலே ஆழ்வார் தம்மை பற்றுகையாலே –
அவன் திருமேனியில் ஸ்பர்சித்த ஒரு தாம்பை வர்ணிக்கிறார் –
அவருடைய உத்தேச்ய வஸ்து இவர்க்கு வெளியதாய் கழிகிறது இறே-
இவன் தன்னைக் -கட்டுவது-
ஒரு பெண்ணைக் களவு கண்டான் -வெண்ணெயை களவு கண்டான் -ஊரை மூலையடியே -நடத்தினான் -என்று இறே –
இவன் சாமான்யன் என்று இடும் ஈடெல்லாம் இடும் கோள் என்று இருந்தான் -அதாவது களவிலே தகண் ஏறின படி –
இவை கட்டி வைத்து அடிக்கப் புக்க வாறே தொழுகையும் -என்ற படி தொழுக தொடங்குமே
எல்லாரையும் தொழுவித்துக் கொள்ளுமவன் இறே தொழுகிறான்
போக்கடி அற்ற தசையில் அபிமத ஸித்திக்கு அஞ்சலியே சாதநம் -என்று அறிந்தவன் இறே-
அதி சஞ்சல சேஷ்டித –
துரு துருக்கையனாக கொண்டு ஊர் பூசல் விளைத்தவன் இல்லையோ –
இத்யுக்த்வா
ஒரு சொல்லாலே விலங்கிட்டு வைத்து
அத நிஜம் கர்ம சாசகார
அவள் தான் கறப்பது கடைவது ஆகத் தொடங்கினாள் –
குடும்பிநீ
இவனைப் போலே நியமிக்க வேண்டுவது அநேகம் உண்டு இறே-
பெரு -மாயன்
நிரதிசய ஆச்சர்ய -உக்தன்
இத்தால்
அவாப்த சமஸ்த காமனுக்கு ஒரு குறை உண்டாய் –
அது தன்னை ஷூத்ரரைப் போலே களவாகிற வழி யல்லா வழியிலே இழிந்து சர்வ சக்தியானவன்
அது தன்னையும் தலைக் கட்ட மாட்டாதே வாயது கையதாக அகப்பட்டு
கட்டுண்டு
அடியுண்டு
பையவே நிலையும்
என்று உடம்பு வெளுத்து நின்ற நிலை யளவும் செல்ல -நினைக்கிறார்-
என் -அப்பனில்
ஸ்ரீ ஆழ்வார் இவருக்கு உத்தேச்யராய் நிற்க -இங்கனம் சொல்லுவான் என் -என்னில்
ஸ்ரீ பகவத் சம்பந்தம் அற வார்த்தை சொன்னார் ஆகில்
ஸ்ரீ ஆழ்வாரோட்டை சம்பந்தத்தை அறுத்துக் கொண்டார் ஆவர் இறே -அத்தாலே சொல்லுகிறார்
அதவா –
பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம் -என்கிறபடியே
அவ்வருகே போவாரையும் துவக்க வல்ல விஷயம் ஆகையாலே துவக்குண்டு -சொல்லுகிறார் என்னவுமாம்-
என் அப்பனில் நண்ணி-
ஸ்ரீ பகவத் விஷயத்தில் நின்றும் ஸ்ரீ ஆழ்வார் விஷயத்தில் கிட்டி
சப்தாதி விஷய ப்ராவண்யங்களை விட்டு பகவத் விஷயத்தில் கிட்டுகையில் உள்ள அருமை போல் அன்றி
ப்ரதம அவதியான பகவத் விஷயத்தை விட்டு சரம அவதியான ததீய சேஷத்வத்தை கிட்டுகை-
சப்தாதி விஷயங்களை விடலாம் அதின் தோஷ தர்சநத்தாலே
இங்கன் ஒரு தோஷம் காண விரகு இல்லை யாகையால் இது அதிலும் அரிது
தென் குருகூர் -நம்பி-
நல்கி என்னை விடான் நம்பி நம்பி -என்று ஆழ்வார் தாம் உத்தேச்யமாக பற்றின
விஷயத்தில் பூர்த்தி அளவு அன்று இறே இவர் பற்றின விஷயத்தில் பூர்த்தி –
எங்கனே என்னில் –
பகவத் விஷயத்தைப் பற்றினால் அதின் எல்லையான ஆழ்வார் அளவும் வர வேண்டி இருக்கும்
ஸ்ரீ ஆழ்வாரைப் பற்றினால் -அவ் வருகு கந்தவ்ய பூமி இல்லை இறே-
ஆச்சார்யர்களை -நம்பி -என்னக் கற்ப்பித்தார் ஸ்ரீ மதுரகவிகள் இ றே என்று ஜீயர் அருளிச் செய்வர் –
என்றக்கால்-
மநோ வாக் காயங்கள் மூன்றும் வேண்டி இருக்கும் ஸ்ரீ பகவத் விஷயத்துக்கு –
ஒரு உக்தி மாத்ரமே அமையும் இவ் விஷயத்துக்கு
பூர்தியால் வந்த ஏற்றமே அன்று -சௌலப்யத்தாலும் வந்த ஏற்றம் உண்டு என்கை-
அண்ணிக்கும்
தித்திக்கும்
ஸ்ரீ பகவத் விஷயத்தை அனுபவித்தால் ஸ்ரீ ஆழ்வாருக்கு பிறக்கும் ஆநந்தம் எல்லாம்
இவ் விஷயத்தில் ஒரு உக்தி மாத்ரத்திலே எனக்கு சித்தித்தது –
அமுதூரும்
அமுதூற்று மாறாதே நிற்கும்
அவ்விஷயம் ஸ்ரீ ஆழ்வாருக்கு தத் ப்ரசாதத்தாலே நித்தியமாய் செல்லுமா போலே
எனக்கும் ஸ்ரீ ஆழ்வார் ப்ரசாதத்தாலே நித்யமாக செல்லப் பெற்றேன்
என் நாவுக்கே
இது பின்னை எங்களுக்கு ரசிக்கிறது இல்லையோ என்னில்
முதல் அடியான ஸ்ரீ பகவத் விஷயமும் கூட ரசியாது இருக்கிற உங்களுக்கு
அதின் எல்லையில் நிற்கிற எனக்கு
ரசிக்குமா போலே ரசிக்குமோ
என் நாவுக்கே
அநாதி காலம் விஷயாந்தரங்களில் ரசித்துப் போந்த என் நாவுக்கே இவ் விஷயம்
ரசிக்கிறது –என்றுமாம்
—————————–
ஸ்ரீ நஞ்சீயர் -அருளிச் செய்த வியாக்யானம்-
கண்ணித் தாம்பு –
அபலைகளாய் இருப்பார் கட்டிய தாம்பாகையாலே பல பிணையலாய் இருக்கை –
புஷ்ப ஹாச ஸூகுமாரமான கையாகையாலே அவிழ்க்க மாட்டான் இறே
இப் பிணையல் திரு மேனியிலே உறுத்தும் என்று அஞ்சுகிறார் –
நுண் தம்பு
பருத்து மேல் முதவாதே அழுந்தும் என்று அஞ்சுகிறார் –
சிறுத்தாம்பு
அளவில்லாமையாலே உறுத்தித் திருமேனி நோம் என்று அஞ்சுகிறார் –
கட்டுண்ணப் பண்ணிய
உரலிடம் காண ஒண்ணாது –
கயிற்றில் இடம் காண ஒண்ணாது
விடில் கண்ணன் ஆகையாலே ஓடிப்போம்
கட்டினோம் ஆக வல்லமோ என்ற தாயார் முகத்தில் பயிர்ப்பு தீர ஒரு சுற்றுக்குப் போராத தாம்பு
இரண்டு சுற்றுக்குப் போரும்படி திருமேனியில் இடம் கொடுத்தபடி
ஆஸ்ரிதர் கையாலே கட்டுண்ணா விடில் சீலத்துக்குப் போராது
அநாஸ்ரிதரைக் கட்டா விடில் ப்ரபாவத்துக்குப் போராது
ராஜாவானவன் எதிரிகளைக் கட்டி வைக்கவும் பும்ஸ்த்வம்
தன மகிஷியின் கையில் பூ மாலையாலே கட்டுண்டு கிடக்கையும் பும்ஸ்த்வம்
பெரு மாயன் –
இவருடைய எத்திறம் இருக்கும் படி
அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை இதர சஜாதீயம் ஆக்குகையும்
அவனுக்கு ஷூத்து நலிகையும்
நவ நீதத்திலே ஸ்ரத்தை யுண்டாகையும்
அத்தை இடுவார் இல்லாத போது களவு காண்கையும்
அத்தைத் தலைக் கட்ட மாட்டாதே வாயது கையதாக அகப்படுகையும்
ஸ்ருஜ்யர் கையிலே கட்டுண்கையும்
சம்சார பந்தத்தை தவிர்க்க வல்லதான இத்தை விட்டுக் கொள்ள மாட்டாது ஒழிகையும்
இது என்ன ஆச்சர்யமோ என்கிறார்
இவனுடைய மேன்மை எல்லை காணலாம் -நீர்மை தரை காண ஒண்ணாது –
என்னப்பனில் –
கீழ் ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமான அர்த்தம் ஆகையாலே ஸ்ரீ கிருஷ்ண வ்ருத்தாந்தம் சொல்லிற்று
மேல் உத்தேச்யமான விஷயத்தைச் சொல்லாதே அவனை என்னப்பன் என்பான் என் என்னில்
ஸ்ரீ ஆழ்வார் அங்கீ கரிக்கைக்காக அங்கே தமக்கொரு சம்பந்தம் சொல்கிறார்
ஒன்றைக் குறித்துப் போம்போது
நீரும் நிழலும் நன்றாய் இருந்தது என்று ஒதுங்கினால் உத்தேச்யம் ஆகவேணுமோ –
நண்ணி –
இப்படு குழியைத் தப்பினால் இறே என்கிறார்
படு குழி என்பான் என் என்னில் ஸ்
ரீ பகவத் பிராப்திக்கு சப்தாதி விஷயங்கள் விரோதியானால் போலே
ஸ்ரீ ஆழ்வாரைப் பற்றுகிற இவர்க்கு பகவத் விஷயம் விரோதி என்றபடி
அவற்றுக்கு அல்ப அஸ்த்ரத்வாதி தோஷம் உண்டாகையாலே விடலாம்
இங்கு அங்கன் அன்று —நிலை நின்ற ப்ரதிபந்தகம்-
தென் குருகூர் நம்பி
சர்வேஸ்வரன் ப்ராப்தியில் பிரதம அவதி ஆகையாலே அரை வயிறாகப் பேசி
ஸ்ரீ ஆழ்வார் சரம அவதி யாகையாலே பூர்ணராகப் பேசுகிறார்
என்றக்கால்
ஸ்ரீ பகவத் விஷயத்தில் மநோ-வாக் -காயங்கள் -மூன்றிலும் அன்வயிக்க வேணும்
அது எல்லாம் வேண்டா
உக்தி மாத்ரமே அமையும் இங்குத்தைக்கு என்கிறார்
அண்ணிக்கும் அமுதூரும்
ரச பதார்த்தங்களில் காட்டில் இதுக்கு வ்யாவ்ருத்தி
எல்லா பதார்த்தங்களும் நாக்கில் இட்டால் இட்ட பதார்த்தம் உண்ட வாறே ரசமும் மாளும்
இது அங்கனம் அன்றிக்கே ஒருகால் இட்டால் உள்ளதனையும் அமுது ஊற்று மாறாது என்கிறார்
என் நாவுக்கே –
அவர்கள் எங்களுக்கு இங்கன் இருக்கிறது இல்லையீ என்றார்கள்
ஸ்ரீ பகவத் விஷயமும் ரசித்து
அதுக்கு எல்லை நிலமான ஸ்ரீ பாகவத விஷயத்தவும் ரசித்த என் நாவுக்கு அல்லது
அதவா
எது ரசித்துப் போந்த நாவுக்கு எது ரசிக்கியது தான்
இத்தால் சொல்லிற்று ஆயத்து
பிரதம அவதியோடு சரம அவதியோடு வாசியற இவர் ஸ்ரீ ஆழ்வாருக்கு அனன்யார்ஹர் ஆனபடி
——————————————————–
ஸ்ரீ நம்பிள்ளை -அருளிச் செய்த வியாக்யானம் –
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் -என்றும்
பிறந்தவாறும் -பையவே நிலையம் -என்றும்
அவர் உத்தேச்யமாய்ப் பற்றுகிற விஷயம் இறே இவருக்கு இப்போது வெளிறாய்க் கழியுண்கிறது
நவநீத சௌர்ய நகர ஷோபத்தை அனுசந்தித்து அவர் மோஹித்துக் கிடக்கும் துறையில் இறே
இவர் இவர் இப்போது தெளிந்து இருந்து வார்த்தை சொல்லுகிறது –
ஸ்ரீ ஆழ்வார் பக்கலிலே ந்யஸ்த பரராரான படி
அவருடைய உத்தேச்ய வஸ்துவைக் கட்டின கயிற்றினுடைய உள்மானம் புரமானம் ஆராயும்படி இறே
இவர் கை ஒழிந்த படி ஸ்ரீ பகவத் விஷயத்திலே –
கண்ணித்தாம்பு
உடம்பிலே கட்டப்புக்கால் உறுத்தும் படி பல பிணையலை உடைத்தாய் இருக்கை –
நுண் தாம்பு
உடம்பிலே அழுந்தும்படி நேரிதாய் இருக்கை
சிறுத்தாம்பு
குறுகி இருக்கை
உரலைச் சுருக்க ஒண்ணாது
கயிற்றை நெடுக்க ஒண்ணாது
சதைக ரூப ரூபாய -என்கிற
இவனுடைய உடம்பை நெருக்கி இடம் கண்டு கட்டும் இத்தனை இறே செய்யலாவது
கண்ணியார் குறும் கையிற்றால் கட்டவெட்டு என்று இருந்தான் -என்றும்
கண்ணிக்குறும் கயிற்றால் கட்டுண்டான் காணேடி -என்றும் எல்லாரும் ஈடுபடும் துறை இறே இது தானே –
கட்டுண்ணப் பண்ணிய
சம்சார பந்த ஸ்திதி மோஷ ஹேது -என்று ஸ்வ வ்யதிரிக்தரைக் கட்டுகைக்கும் விடுகைக்கும் ஹேதுவானவன் கிடீர்
இப்போது ஓர் அபலை கட்டின கட்டை அவிழ்த்துக் கொள்ள சக்தன் அன்றிக்கே இருக்கிறான் –
யதி சக் நோஷி கச்ச த்வ மதி சஞ்சல சேஷ்டித-என்றாள் இறே
சார்வ பௌ மனான ராஜ குமாரன் தன மகிஷி கையிலே அகப்பட்டு ஒரு மாலையாலே கட்டுண்டு –
அதுக்கு ஒரு பிரதிக்ரியை பண்ண மாட்டாதே
இருக்குமா போலே இறே இவள் கட்டின இதுக்கு பிரதிக்ரியை பண்ண மாட்டாதே இருக்கிற இருப்பும் –
பிறருடைய கர்ம நிபந்தனமான கட்டை அவிழ்க்கும் அத்தனை அல்லது
தன் அனுக்ரஹத்தால் வரும் கட்டு தன்னாலும் அவிழ்க்கப் போகாது
இனி சக்தனாகில் போய்க்கானும் -என்று அவள் சொல்லும் படி இறே இவனுடைய அசக்தி
தொழுகையும்-பெருமாள் திருமொழி -7-8–என்று கொண்டு போக்கு அற்றவாறே தொழத் தொடங்கும் அத்தனை இறே
எல்லாரையும் தொழுவித்துக் கொள்ளுமவன் இறே தொழுகிறான்
போக்கற்ற தசையிலே அஞ்சலியே அபிமத சித்திக்கு சாதனம் என்று அறியும் அவன் இறே
அதி சஞ்சல சேஷ்டித என்று துருதுருக்கையாய் ஊரைப் பூசல் விளைத்துத் திரிந்த நீ வல்லை யாகில் போய்க்காண் என்கிறாள் –
இத்யுக்த்வா -ஒரு சொல்லாலே விலங்கிட்டு வைத்து அத நிஜம் கர்ம சா சகாரா -அவள் தான் கரைப்பது கடைவதாகப் புக்காள்-
குடும்பி நீ-இவனைப் போலே நியமிக்க வேண்டுவன எத்தனை கிடக்கின்றன –
பெரு மாயன் –
நிரதிசய ஆச்சர்ய யுக்தன் -அவாப்த சமஸ்த காமனுக்கு ஒரு குறை யுண்டாய்
அது தன்னை எளியாரைப் போலே வழி எல்லா வழியே களவிலே ஒருப்பட்டு
அது தன்னையும் சர்வ சக்தியான தான் தலைக் கட்ட மாட்டாதே வாயது கையதாக அகப்பட்டுக் கட்டுண்டு
அதுக்கு ஒரு பிரதிக்ரியை பண்ண மாட்டாதே பையவே நிலையும்-திருவாய்மொழி -5-10-8-என்று
உடம்பு வெளுத்துப் பேகணித்து நின்ற நிலை அளவும் செல்ல நினைக்கிறார் –
என்னப்பனில் –
என்னாயனில் –
ஸ்ரீ ஆழ்வார் உத்தேச்யமாய்ப் போகா நிற்கச் செய்தேயும்
பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரியான விஷயம் ஆகையாலே
அவ்வருகு போவாரையும் துவக்க வல்ல விஷயம் ஆகையாலே சொல்லுகிறார் –
ஸ்ரீ பகவத் விஷயத்தில் அடியர வார்த்தை சொன்னாராகில் ஸ்ரீ ஆழ்வாரோட்டை சம்பந்தத்தை அறுத்துக் கொண்டாராவர் இறே
என்னப்பனில் நண்ணி
ஸ்ரீ பகவத் விஷயத்தில் நின்றும் ஆழ்வார் பக்கலிலே கிட்டி –
விஷய பிரவணன் சப்தாதி விஷயங்களை விட்டு பகவத் விஷயத்தைக் கிட்டுகையில் உண்டான அருமை போரும்
இவருக்கு ஸ்ரீ பகவத் விஷயத்தை விட்டு ஆழ்வார் அளவும் வருகைக்கு
சப்தாதி விஷயங்களை விடலாம் -அவற்றின் தோஷ தர்சனத்தாலே
அங்கன் ஒரு தோஷம் காண விரகு இல்லாமையாலே அதிலும் அரிது இது
ஆனால் இத்தை விட வேண்டுவான் என் என்னில் சரம அவதியில் போவார்க்கு
பிரதம அவதியில் நிற்கையும் குறை என்னும் அதினாலே –
தென் குருகூர் நம்பி
ஸ்ரீ ஆழ்வார் தாம் உத்தேச்யமாகப் பற்றின விஷயத்துக்கு உள்ள குறையும் இல்லை இறே
இவர் பற்றுகிற விஷயத்துக்கு -எங்கனே என்னில்
ஸ்ரீ பகவத் விஷயத்தைப் பற்றினால் அதில் எல்லையான ஸ்ரீ ஆழ்வார் அளவும் வர வேண்டி இருக்கும்
ஸ்ரீ ஆழ்வாரைப் பற்றினால் அவ்வருகு கந்தவ்ய பூமி இல்லை இறே
என்றக்கால் –
வாங் மன காயங்கள் மூன்றும் வேண்டி இருக்கும் -ஸ்ரீ பகவத் விஷயத்துக்கு
உக்தி மாத்ரமே அமையும் இவ் விஷயத்துக்கு
அண்ணிக்கும்
தித்திக்கும் -பகவத் விஷயத்தை அனுபவித்தால் ஸ்ரீ ஆழ்வாருக்குப் பிறக்கும் ஆனந்தம் எல்லாம்
இவ் விஷயத்திலே ஓர் உக்தி மாத்ரத்தாலே பெற்றேன் என்கிறார்
அமுதூறும்-
அமுது தான் ஊற்று மாறாதே செல்லா நிற்கும்
ந ஸ புனராவர்த்ததே -என்று அவ் விஷயம் நித்ய அபூர்வமாய் ஸ்ரீ ஆழ்வாருக்குச் செல்லுமா போலே எனக்கு
இவ் விஷயம் நித்ய அபூர்வமாய்ச் செல்லப் பெற்றேன்
என் நாவுக்கே –
பின்னை எங்களுக்கு ரசிக்கிறது இல்லையீ என்னில்
முதல் அடியான ஸ்ரீ பகவத் விஷயமும் கூட ரசியாதே இருக்கிற உங்களுக்கு
அதினுடைய எல்லையான ஸ்ரீ ஆழ்வார் அளவும் ரசிக்கும் படியான எனக்கு ரசிக்குமா போலே ரசிக்குமோ
என் நாவுக்கே
அநாதி காலம் எது ரசித்துப் போந்த நாவுக்கு எது ரசிக்கிறது என்றுமாம்
இப் பாட்டால் ஸ்ரீ ஆழ்வார் என்றால் தமக்கு ரசித்து இருக்கும் படி சொன்னார்
—————————————————————————————
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம் –
அவதாரிகை –
ஆத்மாஸ்து காமாய சர்வம் ப்ரியம் பவதி -என்கிறபடியே தனக்கு அபிமதம் என்றாய்த்து இவன் சர்வத்தையும் ஆதரிக்கிறது –
அதில் சாத்யமாய்-அபிமதமாதல் -அதுக்கு உறுப்பாக சாதனமாய் அபிமதம் ஆதலாய் இரண்டு வகையாய்த்து இருப்பது –
அதில் ஸ்ரீ பகவத் விஷயம் -ரசோவை ஸ ரசம் ஹ்யேவாயம் லப்த்வா நந்தீ பவதி -என்றும் –
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனம் மேவியே -என்கிறபடியே -என்றும் சொல்லுகிறபடியே
சாஷாத் அபிமதமாய் தன்னைப் பெறுகிற இவனுக்கு புறம்பு போக்கடி இல்லாமையினாலே தானே சாதனமாய் இருக்கும்
இப்படி சரச வஸ்து வாகையாலே ஸ்மரித்தல் சங்கீர்த்தனம் பண்ணுதல் செய்யுமவர்களுக்கு –
வைகுண்ட சரணாம் போஜ ஸ்மரணாம் ருதசேவின-என்றும்
பாதேயம் புண்டரீகாஷா நாம சங்கீர்த்த நாம்ருதம் -என்றும் சொல்லுகிறபடியே ரசிக்கக் கடவதாய் இருக்கும் –
அப்படியே ஸ்ரீ ஆழ்வாருடைய போக்யதையை இப் பாட்டாலே வெளியிடுகிறார்
சப்தாதி விஷயங்களின் உடைய போக்யதையும் ஸ்ரீ ஆழ்வாருடைய போக்யதையும் பார்த்தவாறே விசத்ருசமாய் இருந்தது
இனி ஸ்ரீ பகவத் போக்யதை இறே கூட்டுதல் கழித்தல் செய்யலாவது –
அந்த ஸ்ரீ பகவத் போக்யதையிலும் விஞ்சி இருந்தது ஸ்ரீ ஆழ்வாருடைய போக்யதை –
அதுக்குத் தானும் உட்பட -உருவமும் ஆர் உயிரும் உடனே யுண்டான் -9-6-5-என்னும்படி போக்ய பூதரானவர் இறே இவர் –
இனி அந்த ஸ்ரீ பகவத் விஷயத்துக்கு -வாஸூ தேவோ சி பூர்ண -என்கிறபடியே
ஷாட் குண்ய பூர்நையாய் இருப்பதொரு பர அவஸ்தை யுண்டு –
அது ஒழிய சௌசீல்யாதி குண பூர்நையாய் இருப்பதொரு அவதார அவஸ்தை யுண்டு –
அந்த பரத்வம் பாற் கடலினுடைய ஸ்தானத்திலேயாய் அதில் அம்ருத கலசம் போலே யாய்த்து அந்த அவதார அவஸ்தை இருப்பது –
அவ்வதாரங்கள் தன்னிலும் ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் அந்த அவதாரங்கள் தன்னைப் பர அவஸ்தா நீயமாக்கும் படி அத்யந்த போக்யமாய் இருக்கும்
க்ருஷிர்ப் பூவாசகச் சப்தோ ணச்ச நிர்வ்ருத்தி வாசக -என்கிற வ்யுத்பத்தியாலே ஸூகரமான வ்யக்தி இறே
அதிலும் பக்வ ஸ்ரீ கிருஷ்ணனிலும் காட்டில்
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன் தன் சிந்தை போயிற்று -பெரிய திருமொழி -8-5-1-என்கிறபடி
முக்த ஸ்ரீ கிருஷ்ண அபதானம் த்ருஷ்டி சித்த அபஹாரியாய் இருக்கும் –
நவ நீத சௌர்யமும் நகர ஷோபமும் பண்ணின அபவதானம் இறே
உறிகளில் வெண்ணெயோடு அறைகளில் பெண்களோடு வாசியற இரண்டையும் களவு கண்டு போந்த அபதானம் இறே –
இதுவாய்த்து அபதா நாந்தரங்களில் போக்யதமமாய் இருப்பது –
குணங்கள் உண்டு இறே ஸ்ரீ ராம விஷயத்தில் நல்குவார் நல்கிற்று
இங்கு அப்படி அன்றிக்கே –
வெண்ணெய் யுண்டு உரலினிடை யாப்புண்ட தீங்கரும்பினைத் தேனை நன்பாலினை -பெரிய திருமொழி -7-3-5-என்னும் படி
தீம்பு போக்யமாம்படி யாய்த்து இவ் வ்யக்தி இருப்பது -அதாவது
அகண்ட பரிபூர்ண வஸ்து ப்ராக்ருத பதார்த்தமாய் இருப்பதொரு வெண்ணெயை யாசைப்படவும் –
அத்தைக் களவு காண்கையும் –
சர்வஜ்ஞமான வஸ்து அத்தை மறைக்கவும் மாட்டாமல் வாயது கையதாக அகப்படுகையும்
சர்வ சக்தியானது ஒரிடைச்சி கையிலே கட்டுண்டு கட்டை அவிழ்க்க மாட்டாதே இருந்து அழுகையுமான
இந் நிலை அத்யந்த அனுபாவ்யமாய்த்து இருப்பது
தறியார்ந்த கரும் களிறே போலே நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை -பெரிய திருமொழி -2-10-6-என்று
இவ்வபதாநத்திலே இறே அனுபோக்தாக்கள் ஆழம் கால் படுவது –
இவ் வபதானத்தின் போக்யதையை இவர் வ்யுத்பத்தி பண்ணிற்று ஸ்ரீ ஆழ்வார் தம்முடைய பாடே யாய்த்து
முதல் திருவாய்மொழியிலே சர்வ காரணத்வாதி லஷணமாக ஒரு வஸ்துவைச் சொல்லி
அப்படிப்பட்ட வஸ்து ஏது என்னும் அபேஷையிலே அநந்தரம் திருவாய் மொழியிலே –
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே -1-2-10-என்று ஸ்ரீ நாராயண சப்த வாச்யமாகச் சொல்லி
இவ் வஸ்துவுக்கு அடையாளம் ஏது என்னும் அபேஷையிலே -மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் -1-3-1-என்று
திரு மார்பில் பிராட்டியை அடையாளமாகச் சொல்லி இப்படி ஸ்ரீ யபதித்வத்தால் வந்த சர்வ உத்கர்ஷத்தை யுடைய வஸ்து
அநாஸ்ரிதர்க்கு அரியதாய் ஆஸ்ரிதர்க்கு எளியதாம் இடத்தில் –
மத்துறு கடை வெண்ணெயை-நெடு நாள் மலடு நின்று பிள்ளை பெற்றவள் ஆகையாலே துர்ப்பலையாய்
இவன் தான் மருங்கில் இருந்து மருங்கு தேய்ப்புண்கையாலும்
மத்தாரப் பற்றிக் கொண்டு என்னும்படி மதத்திலே உடலைச் சாய்த்து யாய்த்து கடைவது
இப்படி கடையா நிற்கச் செய்தே வெண்ணெய் படப் படக் களவு காண அவளும் இதுக்கு அடி என்
தெய்வம் கொண்டு போகிறதா என்று விசாரித்து இவனுடைய வாயையும் கையையும் பார்க்கும் –
கண்ணன் என்னும் கரும் தெய்வம் இறே களவு கண்டு கொண்டு போகிறது –
இவன் கள்ளன் என்று வாயது கையதாகப் பிடித்து கிடந்ததொரு கயிற்றாலே பண்டும் இவன் களவுக்கு பெரு நிலை நிற்கும்
உரலோடு அணைத்துக் கட்ட -இவனும் கட்டுண்டு இருந்து அழப் புக்கவாறே வாய் வாய் என்று
கையிலே கயிற்றைக் கொள்ள ஏறிட்ட குரலை இறக்க மாட்டாதே இருந்து அழுது ஏங்கும் யாய்த்து –
இப் பிரகாரம் ஏதாய் இருக்கிறது -இது பெருமையிலே முதலிடுமதோ-எளிமையிலே முதலிடுமதோ -என்று மோஹங்கதரானார் இறே
இத்தை அனுசந்தித்து போந்த இவரும் ஸ்ரீ ஆழ்வார் ஈடுபட்டுப் போந்த அபதானம் இதுவாய் இருந்தது -என்று பார்த்து
இதிலும் காட்டில் முதலடியிலே இமையோர் தலைவா -என்று ப்ராப்யத்திலே கண் வைத்த இவரை
அவா வற்று வீடு பெற்ற -என்னும் அளவும்
லோக உபகார அர்த்தமாக ஈஸ்வரன் இவர் அழுவது அலற்றுவது ஆண் பெண்ணாக மடல் எடுப்பது -தூது விடுவதாம் படி
தன் சங்கல்ப பாசத்திலே கட்ட இவரும் அதை அவிழ்க்க மாட்டாதே அறியா மா மாயத்து அடியேனை வைத்தையால் -2-3-3-என்னும் படி
கட்டுண்டு இருந்த இருப்பு தமக்கு போக்யமாய் இருக்கிற படியை இப் பாட்டாலே அருளிச் செய்கிறார் –
அவன் கட்டுண்ட இடத்தில் -பற்றி உரலிடை யாப்பும் உண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ -என்று
பிறருக்கு ஏசுகைக்கு உறுப்பாய் விட்டது
இவர் கட்டுண்டது இறே நாட்டாருடைய கட்டை அவிழ்கைக்கு உறுப்பாய் பரம சாத்விக வர்க்கத்துக்கு போக்யமாய்த்து –
வியாக்யானம் —
அவன் கட்டுண்டு இருந்த அபதானத்திப் பேசி தாமும் அதில் கால் தாழ்ந்த படி சொல்லுகிறார் –
கட்டின கயிற்றைக் கொண்டாடுகிறார்
தத் சம்பந்தியான தொன்றைக் கொண்டாடுகை இவர்க்குள்ள தொன்று இறே –
கண்ணித் தாம்பு –
பல பல இடங்களிலும் அற்றுப் பிணையுண்டு கிடப்பதொரு கயிற்றைக் இட்டாயிற்று இவனைக் கட்டிற்று-
கட்டுவது விடுவது கறப்பது கடைவதாகப் பணி போரும் இத்தனை போக்கி அத்தைத் தரம் இட்டுக் கொள்ள அவசரம் இல்லையே –
உருவுள்ளவை உண்டாகில் கன்றுகளும் பசுக்களும் கட்டப் போரும்
ஒழிஞ்சானமுட்டாய் -ஒன்றுக்கும் உறுப்பு இன்றிக்கே இருக்கை -இருப்பதொரு கயிற்றைக் இட்டாயிற்று இவனைக் கட்டுவது
வேறு ஒருவரைக் கட்டுமதிட்டு இவனைக் கட்டப் போகாதே -பசு ப்ராயரைக் கட்டுமது ஒன்றுக்கு இவன் அகப்படானே –
பல கண்ணிகளையும் யுடைத்தாய் அனந்யமாய் இருப்பதொரு பாசத்துக்கு இறே இவன் அகப்படுவது –
அசித் ப்ராயராய் தான் கால் வைக்கலாம் படி இருப்பாரோடு அணைதல் -அனந்யமான பாசத்துக்கு அகப்படுதல் செய்யுமவனாய்த்து
இவன் அகப்பட்டாய்த்து உரலோடு சேர்த்துக் கயிற்றை இட்டுக் கட்டிற்று
அது தான் பொத்த யுரலாய் ஸூஷிரமும் உண்டான பின்பாய்த்து அனந்யார்ஹம் ஆயிற்று
இப்படி அனந்யார்ஹர்க்கு இறே அவன் உடம்பு கொடுப்பது
பொத்த யுரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறி -என்கையாலே இது தான் இஷ்ட விநியோக அர்ஹமுமாயிற்றே-
நுண் தாம்பு –
நுண்ணிய தாம்பு -அது தான் அற நேரியதாய் இருப்பதொரு கயிறு ஆய்த்து-ஆகையால் இறே இவன் மேலே அழுந்துவது –
இன்றும் அழுந்திக் கிடக்கிறது இறே இவனைக் கட்டுகிற பாசம் சௌஷ்ம்யவத்தாய் இருக்க வேணும் இறே
சிறுத் தாம்பு
எட்டாம் பொறாமல் இவன் திருமேனியிலே இடம் கண்டு கட்ட வேண்டும்படியான சிறுமையை யுடைய கயிறு
கட்டுண்ணப் பண்ணிய –
அனந்யமாய் ஸூ ஷ்மமாய் இருந்ததே யாகிலும் திரு மார்பில் இருக்கிற அவளையும் அவனையும் சேர ஒரு உரலோடு சேர்த்துக் கட்ட
உரலுக்கும் தனக்கும் ஒரு வைஷம்யம் அற இருந்து பின்னையும் சைதன்யம் கிடக்கையாலே விம்மல் பொருமலாய் அழுது இருந்த
இந்த சௌசீல்யம் ஏதாய் இருக்கிறது என்று அவர் சோகித்தார் யாய்த்து
இவர் அத்தை அனுசந்தித்துப் போந்தவர் ஆகையாலே இவ் வாழ்வார் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும்
அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று பிரகிருதி சம்பந்தத்தை அறுக்க வேணும் என்று
அபேஷியா நிற்கச் செய்தேயும் ஸ்ரீ பகவத் சங்கல்ப பாசத்தாலே இவர் கட்டுண்டு இருந்த படியைக் கண்டு ஈடுபடுகிறார் –
அவன் இவளுடைய த்ரவ்யத்தைக் களவு காண்கையாலே கட்டுண்டான் –
இவர் பிறர் பணத்தை அவர்களுக்குக் கொடுத்து இருக்கச் செய்தேயும் கட்டுண்டவராய்த்து
அவன் தான் இவரைக் கட்டுகைக்கு அடி என் என்னில் இவரைக் கட்ட நாட்டில் உள்ளார் களவு போம் என்னும் நினைவாலே
ஊரும் நாடும் உலகும் தன்னைப் போலவும் அவ்வளவன்றிக்கே அறிவுக்கு அவகாசம் இல்லாத ஸ்தாவர ஜாதீயங்களையும்
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ வென்று கூவுமவராகையாலே இவரைக் கட்டி வைத்தான் –
இவருக்குத் தன் களவு வெளிப்பட்டுப் பிறர் களவு போமாய்த்து –
கண்ணி நுண் சிறுத் தாம்பு
போக்யதா காஷ்டை யுள்ளது -இவ்வபதானம் ஆகையாலே அத்தை முற்படச் சொல்லி அதில் காட்டில்
ஸ்ரீ ஆழ்வார் தமக்கு போக்யரான படியை இப் பாட்டாலே வெளியிடுகிறார்
அதில் அவன் கட்டுண்ட தாம்பை முற்படக் கொண்டாடுகிறார்
கண்ணித் தாம்பாயும் நுண் தாம்பாயும் சிறுத் தாம்புமாயும் இருக்கும்
ஜ்ஞான பக்தி வைராக்யங்களைக் கொண்டாடுமா போலே இங்கு மூன்று விசேஷணங்களைச் சொல்லுகிறார்
திரு மேனிக்கு உறுத்தும் படி பல கண்ணிகளை உடைத்தாய் இருக்கும்
பிரதமத்திலே ருசி சங்கம் பக்தி பர பக்தி பர ஜ்ஞானம் பரம பக்திகள் என்று அநேக பர்வையாய் இறே அந்த பக்தி இருப்பது
பக்தி க்ராஹ்வோ ஹாய் கேசவ -என்றும் -அபங்குர பக்தி பவ்ய -என்று பக்தி பவ்யனாய் இறே அவன் இருப்பது –
நுண் தாம்பு –
நுண்ணிதான தாம்பு -திருமேனியிலே அழுந்தும்படி நுண்ணியதாய் இருக்கும்
அந்த பக்தி தான் ஜ்ஞான சிரஸ்கம் ஆகையாலே அந்த ஜ்ஞானம் தான் நுண்ணறி வாய்த்து இருப்பது –
பகவத் ஸ்வரூப ரூபாதிகளை யதாவாக சாஷாத் கரிக்கிறது இறே
பக்த்யா மாமபிஜா நாதி யாவான் யச்சாச்மி தத்வத -என்கிறபடியே
சிறுத் தாம்பு –
உள்ள கயிறுகள் கன்று கட்டுகைக்கும் பசு கட்டுகைக்கும் கடை கயிருமாய்ப் போயிற்றன
இனி வேறு ஓன்று கட்டுகைக்கு உருப்பல்லாத கயிற்றாலே யாய்த்து இவனைக் கட்டுவது
அனந்யார்ஹமாய் இருப்பது ஒன்றுக்கு இறே இவன் கட்டுண்பது
பக்த்யா த்வ நன்யயா சக்ய -என்றும் பக்த்யா லப்யஸ் த்வ நன்யயா -என்று அனந்யையான பக்தியாக வேணுமே
அல்லாதவற்றுக்கு விநியோகம் கன்று காலிகளைக் கட்டுகை இறே –
கட்டுண்ணப் பண்ணிய
தாம்பு சிறுத் தாம்பு ஆகையாலே அதை நீளப் பண்ணப் போகாது –
அடுத்து கட்டுகிற உரலை இளைக்கப் பண்ணப் போகாது
இனி இடம் காணலாவது இவன் பாடே யாகையாலே
வயிற்றை எக்கச் சொல்லி இடம் கண்டு கட்டினாள் யாய்த்து
தன்னுடைய சங்கல்ப்பத்தாலே இடம் கொடுக்கை அன்றிக்கே தாயாருடைய சீற்றத்துக்கு அஞ்சி
மௌக்யப் பிரயுக்தமாய் கட்டுண்ணப் பண்ணினான் ஆய்த்து –
கட்டுண்ணப் பண்ணிய
பக்தி யுண்டே யாகிலும் அவன் தானே தன்னை அமைத்துத் தர வேண்டும் படியாய் இது பின்னையும் சிறிதாய் இருக்குமாய்த்து
நாயமாத்மா -இத்யாதி
இனி இந்த பக்தி இவன் நெஞ்சில் அந்ய பரதையை அறுக்கும் இத்தனை
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக் கட்டி -என்கிறபடியே எட்டும் இரண்டும் பத்தாய் பக்தியைச் சொன்னபடி
எட்டு என்று திரு அஷ்டாஷரமாய் அத்தாலே யாதல் -இரண்டு என்று வாக்ய த்வயமாய் அத்தாலே யாதல் வசீகரித்து என்னவுமாம்
அல்லது எட்டும் இரண்டும் அறியாதார்க்குக் கட்டப் போகாதே-
பெரு மாயன்
அவன் நினைக்க ஒண்ணாத ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடையவன் -அதாவது
அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும் தொழுகையுமான இச் சேஷ்டிதங்கள்
அழுகையும்
உரலோடு கட்டி வைத்தவாறே அழ -அவள் வாய் வாய் என்றவாறே அஞ்சி பேதைத் தனம் தோற்ற அவளைப் பார்க்கும்
அந் நோக்கும்-
தொடுவே செய்த்தில வாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் -என்கிறபடியே பெண்கள் அடையத் திரண்டு வருகைக்காக
களவாகிற சாதனத்தை அனுஷ்டித்து கள்ளனைக் காண்கை எல்லாருக்கும் சாதாரணம் ஆகையாலே ஒத்த பருவத்தில்
பெண்கள் எல்லாரும் வந்து திரள அவர்கள் முகத்திலே தௌர்த்த்யகர்ப்பமான கடாஷத்தைப் பண்ணா நிற்கும்
இசையாதவர்களை இசையும் படி பார்த்தும் -இசைந்தவர்களை அறவிலை செய்து தரும்படி பார்த்தும்
தான் பண்டு செய்த மறத்தாலே மாலின்யம் யுடையவர்களை அமலங்களாக விழித்தும் இப்படி நோக்கேயாய்ச் செல்லும் –
தொழுகையும்
மக்கள் மனம் மாதர்க்குச் தெரியும் ஆகையாலே இவனுடைய தௌர்த்த்யத்தைத் தெரிந்து அவள் அச்சம் உறுத்த
தொழுகையும்
அவளைப் பார்த்து அஞ்சலி பண்ணும்
பொடிந்தவர்களுக்கு ப்ரசாதகம் ஆவது அஞ்சலியே என்று இருக்கும்
ஷிப்ரம் தேவ பிரசாதி நீ -என்றும்
அந்த ரேணாஅஞ்சலிம் பத்வா லஷ்மணச்ய பிரசாத நாத் -என்கிறபடியே
இவை கண்ட யசோதை தொல்லை யின்பத்து இறுதி கண்டாளே-
ஆத்மானுபந்தியான ஸூ கத்தினுடைய எல்லையைக் கண்டாள்
நித்ய முக்தர் ஜ்ஞான சக்த்யாதிகளைக் கண்டு அனுபவித்தவர்கள்
இவள் சௌசீல்யாதிகளைக் கண்டு அனுபவித்தவள் –
என்னப்பனில்
என்னாயனில்
பெருமாயன் என்னப்பனில்
இப்போதை இவருடைய தாஸ்யம் -குணைர் தாஸ்யம் உபாகத -என்கிறபடியே
அத் தலையில் குண சேஷ்டிதங்களுக்கு தோற்றாயிற்று
இவரையும் உட்பட தோற்றிக்கிறது இறே இவ் வபதானம்
இனி ஸ்ரீ ஆழ்வாரைப் போலே இள நெஞ்சு இல்லாமையாலே மீண்டார் இத்தனை
என்னப்பனில் நண்ணி
அவனில் காட்டில் ஸ்ரீ ஆழ்வார் பக்கலில் நெஞ்சை வைத்து
சப்தாதி விஷயங்களின் போக்யதையை அறுத்துத் தன் பக்கலிலே யாக்கிக் கொள்ளும் ஸ்ரீ பகவத் வைலஷண்யம்
பகவத் விஷய போக்யதையிலே நின்றும் மீட்டுத் தன் பக்கலிலே யாக்கிக் கொண்டது ஸ்ரீ ஆழ்வார் வைலஷண்யம்
தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும்
ஸ்ரீ குறுங்குடி நம்பியைக் காட்டில் ஸ்ரீ குருகூர் நம்பியை வ்யாவர்த்திக்கிறது
அவனுக்குப் பூர்த்தி ஜ்ஞான சக்த்யாதிகளாலே
இவருக்குப் பூர்த்தி ஜ்ஞான பக்த்யாதிகளாலே
ஜகத்தை தனக்கு ஆக்கும் படியான குணங்கள் அவனது
அவன் தன்னைத் தனக்காக்கும் படியான குணங்கள் இவரது
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
ஸ்ரீ ஆழ்வார் பக்கலிலே நெஞ்சை வைத்து
ஸ்ரீ ஆழ்வார் திரு நாமத்தைச் சொன்னால்
அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே
நினைத்த நெஞ்சம் தித்தித்தது
சொன்ன நாக்கும் தித்தித்து வாரா நின்றது
சாரச்யம் சதா கால வர்த்தியாகா நின்றது
இனி ஸ்ரீ பகவத் விஷயத்தை நினைக்கைக்கு நெஞ்சம் இல்லை –சொல்லுகைக்கு நாக்கும் இல்லை
இந்த சாரஸ்யம் எங்களுக்குப் பிறக்க காண்கிறிலோமீ என்னில்
என் நாவுக்கு
உங்களைப் போலே பகவத் விஷயமும் ரசித்து ஸ்ரீ ஆழ்வாரும் ரசிக்கும் நாவன்றே என்னது
அடியே பிடித்து ஸ்ரீ ஆழ்வார் உடைய சாரஸ்யத்திலே பழகின நா வன்றோ
என் நாவுக்கே
இவ்வம்சத்தில் கரணியான என்னோடு கரணங்களோடு வாசி இல்லை
என் நாவுக்கே
அவர் தாம் என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்றால் போலே இவரும் என் நாவுக்கே -என்கிறார் –
——————————————————————————
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –
நிகமத்தில் இப் ப்ரபந்தத்தையே தஞ்சமாக நினைத்து இருக்குமவர்களுக்கு
வாசபூமி ஸ்ரீ பரம பதம் -என்கிறார்
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11–
அன்பன் –
வாத்சல்யத்தையே நிரூபகமாக உடையவன் ஆயிற்று ஈஸ்வரன் –
இன்னானுக்கு அன்பன் என்று விசேஷியாமையாலே
ரிபூணாமபி வத்சலா -என்கிறபடியே-சர்வ விஷயம் ஆயிற்று அவனுடைய வாத்சல்யம் இருப்பது –
அதுக்கு ஹேது என் என்னில்
சர்வேஷா மேவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ -என்றும்–
தேவா நாம் தாநவாநாஞ்ச சாமான்யமதி தைவதம் -என்றும்
ஜனகத்வ பிரயுக்தமான சம்பந்தம்-சர்வ சாதாரணமாய் இருக்கையாலே
வாத்சல்யமும் பொதுவாய் இருக்கும் –
தன்னை அடைந்தவர்கட் கெலாம் அன்பன் தென் குருகூர் நகர் நம்பி-
ஆழ்வாருடைய அன்பு அங்கன் பொதுவாய் அன்றே இருப்பது
பரமனைப் பயிலும் திருவுடையார் எவரேலும் அவர் எம்மை ஆளும் பரமர் -என்கிறபடியே
பகவத் சம்பந்த நிபந்தனமாய் இறே இருப்பது -(கீழே அன்பு -வாத்சல்யம் -இங்கு பக்தி -என்றவாறு )
தம்மைப் போலே -அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்பார் எல்லாரையும் தமக்கு நாதராக-வாயிற்று நினைத்து இருப்பது –
தென் குருகூர் நகர் நம்பி –
அடியார் அடியார் தம் அடியார் -என்று தத் சம்பந்திகள் அளவும் பண்ணின பிரேமத்தாலே பூரணராய் இருப்பர்
நம்பிக்கு அன்பனாய் –
ஸ்ரீ பகவத் விஷயத் தளவும் அன்றிக்கே -ததீயர் அளவும் அன்றிக்கே-ஆசார்ய விஷயத்திலே சக்தராய் –
தனக்கு புருஷார்த்தம் வேண்டி இருக்கில் ஸ்ரீ பகவத் விஷயத்தை பற்ற -அமையும்
அங்கன் தான் உகந்தது அன்றிக்கே -ஈஸ்வரன் உகப்பே புருஷார்த்தம் -என்று இருக்கில் பாகவதர்களைப் பற்ற அமையும் –
ஜ்ஞா நீத்வாத்மைவ மே மதம் என்றும்
மம ப்ராணா ஹி பாண்டவா -என்றும்
பாண்டவர்களை தனக்கு தாரகராக இறே நினைத்து இருப்பது –
ஈஸ்வரனோடு ஸ்ரீ வைஷ்ணவர்களோடு வாசியற எல்லாருடைய உகப்பும் புருஷார்த்தம் என்று இருக்கில்-
ஆச்சார்யனைப் பற்ற அடுக்கும்-ஆசார்ய வான் -என்று ஆயிற்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் உகப்பது-
பிரதமத்திலே –
1-ஆசார்யன் தனக்கு அஜ்ஞாத ஜ்ஞாபந முகத்தாலே-ஸ்வரூப ஜ்ஞாநத்தைப் பிறப்பித்து-
2-பகவத் சமாஸ்ரயண வேளையிலே புருஷகார -பூதனாய்–
3-தன்னுடைய அனுஷ்டாநத்தாலே இவனை நல் வழியே கொண்டு போய்-
4-ப்ராப்தி தசையிலும் சாத்ய வ்ருத்தியை பண்ணிக் கொடுக்கக் -கடவனாய்
இப்படி பஹூ முகத்தாலே உத்தேச்யனாய் இறே இருப்பது-
மதுரகவி சொன்ன -சொல்
ஸ்ரீ ஆழ்வாரைத் தாம் சொன்ன பாசுரம் தமக்கு இனிதாய் இருக்கையாலே-மதுரகவி -என்கிறார்
(குருகூர் குயில் போலே -தானாய் தன்னைப் பாடிக் கொண்டார் -கண்ணன் இவரை இட்டு பயாடிக் கொண்டால் போலே )
சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே
இனிதாய் இருந்தில்லை யாகிலும்-
(மதுரகவி சொல் போதுமே -சொன்ன – நடுவில் -சொன்னதாக வள வள பேச்சாக இருந்தாலும் என்றவாறு )-
இப் பிரபந்தத்தை தஞ்சமாக நினைத்து இருக்குமவர்களுக்கு-வஸ்தவ்ய தேசம் பரம பதம் –
ஸ்ரீ ஆழ்வார் உத்தேச்யர் ஆனால் ஸ்ரீ திரு நகரி அன்றோ ப்ராப்யமாவது -என்னில்
ஸ்ரீ திரு நகரியில் -ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் ஆணையும்–ஸ்ரீ ஆழ்வார் ஆணையுமாய் இரு புரியாச் செல்லும்-
அங்கன் இன்றிக்கே ஸ்ரீ ஆழ்வார் ஆணையேயாய்ச் செல்லும் -ஸ்ரீ பரமபதம்
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ –என்றும்
வானவர் நாடு -என்றும் சொல்லக் கடவது இ றே –
ஸ்ரீ நம்பி திரு வழுதி வள நாடு தாசர் –நம்புவார் பதி வைகுந்தம் -என்று
அவர்கள் இருந்த தேசம் காணும் ஸ்ரீ பரம பதம் –என்று சொல்லுவர் –
உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகும் தம்மூர் -எல்லாம் -என்னக் கடவது இறே-
(உள்ளுவாருக்கு உம்பர் ஊரே -அநந்த புரம் பதிகம் -உம்பர் -ஊர் திரு நாடு – திரு வனந்த புரம்
வசிக்கும் ஊர் மூன்றும் -சாண்ட்லி விவகாரத்தில் கண்டோமே -இது அன்றோ எழில் ஆலி என்னார் தாமே -போலே )
ஸ்ரீ கூரத் ஆழ்வான் மகன் பிறந்த பின்பு சம்சாரமும் பரம பதமும் இடைச் சுவரைத் தள்ளி
ஒரு போகி யாயிற்று காண் -என்று ஸ்ரீ பெற்றி பணித்தார் -என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்வர் –
—————————
ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த வியாக்யானம் –
நிகமத்தில் இவர் அருளிச் செய்த பிரபந்தத்தைக் கற்றார்க்கு ஸ்ரீ ஆழ்வார் ஆணை பரிமாறும்
ஸ்ரீ வைகுண்டமே தேசம் என்கிறார் –
அன்பன்- –
ஈஸ்வரத்வம் அன்று ஸ்வரூபம்–ஸ்ரீ எம்பெருமான் இருந்ததே குடியாக எல்லாருக்கும் ஒரு தலையாய் இருக்கை-
ரிபூணாமபி வத்சலா -என்கிறபடியே –
தன்னை அடைந்தவர்கட்கெலாம்-அன்பன்
ஏவம் குண விசிஷ்டனான ஸ்ரீ எம்பெருமானை ஆச்ரயித்தார்க்கு எல்லாம் அன்பராய் இருக்கை
ஸ்ரீ ஆழ்வாருக்கு ஸ்வரூபம் -தம்தாம் சத்தையிலே யன்றோ எல்லாரும் ஸ்நேஹிப்பது –
தென் குருகூர் நகர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
ஸ்ரீ ஆழ்வாருக்கே அன்பராய் இருக்கை ஸ்ரீ மதுர கவிகளுக்கு ஸ்வரூபம்-
ப்ரீதி ப்ரேரிதராய்க் காணும் சொல்லிற்று-தாம் காண வந்த சோழரோ பாதி ப்ரீதி காணும் சொல்லுவித்தது
இவர் முன் சொல்லும் எனபது பரிதியைக் காணும் –
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே-
இது கற்றாருக்கு வாசஸ் ஸ்தானம் ககலங்கா பெரு நகரான ஸ்ரீ பரம பதம் –
இது வ்யாஹத பாஷணமாய் இருந்ததீ-ஸ்ரீ ஆழ்வாரை ப்ராப்யமாகச் சொன்னால் ஸ்ரீ திரு நகரியே ப்ராப்ய தேசமாக வேண்டாவோ என்னில்
ஸ்ரீ திரு நகரியிலே ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் ஆணையும் ஸ்ரீ ஆழ்வார் ஆணையும் கூடச் செல்லுவது
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ என்கிறபடியே ஸ்ரீ ஆழ்வார் ஆணை ஒன்றுமே யாய்த்து அங்குச் செல்லுவது –
சேதனனுக்கு ப்ராதி கூல்யத்தில் நின்றும் நிவ்ருத்தன் ஆனேன் என்று தோற்றும் போது ஸ்ரீ ஈஸ்வரன் பக்கல் ஸ்நேஹித்து இருக்க விடுக்கும்
ஸ்ரீ ஈஸ்வரன் பக்கல் ஸ்நேஹித்து இருக்கை யாவது அவன் அடியார் அளவும் ஸ்நேஹித்து இருக்கை
அவர்கள் எல்லாருக்கும் ப்ரியம் செய்கையாவது ஜ்ஞான ப்ரதன் பக்கலிலே ஸ்நேஹித்து இருக்கை இறே-
ஆகையாலே ஸ்ரீ திரு நாட்டை ப்ராப்யமாகச் சொல்லிற்று
அதவா
நம்புவார் இருந்த இடமே வைகுந்தம் என்னவுமாம்
ஸ்ரீ திரு நாடு என்றும் லீலா விபூதி என்றும் விபாகம் இல்லையோ வென்ன
ஸ்ரீ நம்பி திருவழுதி வள நாடு தாசர் வார்த்தை -ஸ்ரீ கூரத் தாழ்வான் மகன் பிறந்த பின்பு இடைச் சுவர் தள்ளி
ஒரு போகியாய்த்துக் காண் -என்று பணித்தான் –
————————————————————————–
ஸ்ரீ நம்பிள்ளை -அருளிச் செய்த வியாக்யானம் –
நிகமத்தில் இவர் பிரபந்தத்தைத் தஞ்சமாக நினைத்து இருக்குமவர்களுக்கு
வாஸ பூபி ஸ்ரீ பரம பதம் என்கிறார் –
அன்பன் –
வாத்சல்யத்தை நிரூபகமாக யுடையவன்
இவனுடைய வாத்சல்யம் -ரிபூணாமபி -என்கிறபடியே
சர்வ விஷயமாய்த்து இருப்பது
அதுக்கடி தேவா நாம் தாநவாநாஞ்ச சாமான்ய மதிதைவதம் -என்று
சம்பந்தம் பொதுவாய் இருக்கையாலே –
தன்னை அடைந்தவர்கட்கெலாம் அன்பன் –
ஸ்ரீ ஆழ்வாருடைய அன்பு அங்கன் பொதுவாய் யன்றாய்த்து இருப்பது
பரமனைப் பயிலும் திருவுடையார் யாவரேலும் கண்டீர் எம்மை ஆளும் பரமர் -என்று இறே இருப்பது –
தென் குருகூர் நகர் நம்பிக்கு அன்பனாய் –
ஸ்ரீ பகவத் விஷயத்து அளவன்றிக்கே ததீயர் அளவிலும் அன்றிக்கே ஆச்சார்ய விஷயத்திலே சக்தராய்
தனக்குப் புருஷார்த்தம் வேண்டி இருக்கில் பகவத் விஷயத்தைப் பற்ற அடுக்கும்
அங்கன் தான் உகந்தது அன்றிக்கே அவன் உகந்தது செய்ய வேண்டி இருக்கில் பாகவதர்களைப் பற்ற வடுக்கும்
அவர்கள் எல்லாரும் உகந்தது செய்ய வேண்டி இருக்கில் ஆச்சார்யனைப் பற்ற வடுக்கும்
ஸ்ரீ ஆசார்யன் முதலிலே அஜ்ஞ்ஞாத ஜ்ஞாபனத்தாலே உத்தேச்யனாம்
பின்பு ஸ்ரீ பகவத் குணங்களிலே அவகாஹித்து குண அனுபவத்தால் அல்லது செல்லாத படியானால்
போத யந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு உசாத் துணை யாகையாலே உத்தேச்யனாம்
ப்ராப்தி தசையிலே சாத்யவிருத்தி ரூபத்தாலே உத்தேச்யனாம் –
மதுரகவி சொன்ன சொல்
தமக்குப் பாசுரமே இனிதாய் இருக்கையாலே ஸ்ரீ மதுர கவி என்கிறார்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே
இனிதாய் இருந்தது இல்லை யாகிலும் இப் பிரபந்தத்தை தஞ்சமாக நினைத்து இருக்குமவர்களுக்கு வச்தவ்ய தேசம் ஸ்ரீ பரம பதம்
ஸ்ரீ ஆழ்வார் உத்தேச்யர் ஆகில் இவருக்கு ஸ்ரீ திரு நகரி யன்றோ ப்ராப்யம் ஆவது என்னில்
ஸ்ரீ திரு நகரியில் ஸ்ரீ ஆழ்வார் ஆணையும் ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் ஆணையும் இரு புரியாய்த்துச் செல்லுவது
அங்கன் அன்றியே ஸ்ரீ ஆழ்வார் ஆணையே செல்லும் தேசம் ஸ்ரீ பரம பதம்
அடியார் நிலாகின்ற வைகுந்தம் என்றும் வானவர் நாடு என்றும் சொல்லக் கடவது இறே
ஸ்ரீ நம்பி திருவழுதி வள நாடு தாசர் அவர்கள் இருந்த தேசம் தானே ஸ்ரீ பரம பதம் என்று சொல்லுவர்
ஸ்ரீ கூரத் தாழ்வான் மகன் பிறந்த பின்பு இடைச் சுவர் தள்ளி இரண்டு விபூதியும் ஒன்றாய்த்துக் காண்-
என்று பணித்தார் என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்வர் –
————————————————————————–
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம் –
நிகமத்தில்- இப்பாட்டில் இப்பிரபந்தம் கற்றார்க்கு வஸ்தவ்ய பூமி பரமபதம் என்கிறார்
1-ஸ்ரீ ஆழ்வாருடைய போக்யதையும்-அவர் தமக்கு ஸ்வாமி என்னும் இடத்தையும்
2–தமக்கு கால ஷேப விஷயம் அவருடைய ப்ரபந்தம் என்னும் இடத்தையும்
3-ஸ்ரீ ஆழ்வாரோட்டை சம்பந்தம் அடியாக ஸ்ரீ ஈஸ்வரன் மேல் விழுந்து அனுபவித்த படியையும்
4-தம்முடைய தோஷம் பாராமல் ஸ்ரீ ஆழ்வார் விஷயீ கரித்த படியையும்
5-தோஷம் தானே அவருடைய தேச பிரவேச மாத்ரத்திலே தம்மை விட்டுக் கழன்ற படியையும்
6-பின்பு அத் தோஷம் மேலிடாதபடி ஸ்ரீ ஆழ்வார் குண கீர்த்தனமே தமக்குக் கால யாத்ரையாம் படி அவர் தம்மைத் திருத்தின படியும்
7-அவருடைய க்ருபா வைபவத்தை லோகம் அடங்கலும் தாம் பரப்ப வேண்டும்படி தமக்குப் பிறந்த ஆதரத்தையும்
8-பகவத் கிருபையில் காட்டில் ஸ்ரீ ஆழ்வாருடைய கிருபை லோகத்திலே அதிசயித்த படியையும்
9-அக் கிருபை அடியாக அவர் உபகரித்த உபகாரமும்
10-அவ் வுபகார பரம்பரைகளுக்கு பிரத்யுபகாரம் தேடி அவருடைய பூர்த்தியாலே பிரத்யுபகாரத்துக்கு அவகாசம் காணாமல்-
தாம் அலமருகிற படியையும் இறே கீழ்ச் சொல்லி நின்றது –
இவ் வர்த்தங்களுக்கு வாசக சப்தம் இட்டுச் சொன்ன இப்பிரபந்தத்திலே ஆதரம் உள்ளார்க்கு நித்ய ஸூரிகள்-
ஸ்ரீ பரம பதத்திலே ஒரு பிராப்தி பண்ணிக் கொடுப்பார்கள் என்கிறார்-
இவர்களுக்கு ஸ்ரீ திரு நகரியே ப்ராப்ய ஸ்தலமாய் இருந்ததே யாகிலும் அவர்கள் ஆதரத்துக்காக அங்கே போய்-
அங்கும் ஸ்ரீ ஆழ்வாரை அனுபவிக்கப் பெறுவார்கள் –
கவி பாட்டுண்ட விஷயத்தையும்–
கவி பாடின தம்மையும்–கவியையும் –
கவியை ஏதேனும் ஒரு வழியால் கற்றவர்களுக்குப் பலமும் சொல்லுகிறது –
தன்னை அடைந்தவர்கட்கெலாம் அன்பன் –
தம்முடைய திருவடிகளை ஆஸ்ரயித்த என் போல்வார்க்கு எல்லாம் வத்சலராய் இருக்குமவர்
எங்கள் தோஷங்களைப் பாராதே தம்முடைய குணங்களைத் தந்து தரிப்பிக்குமவர்
நான் மறையாளர்கள் புன்மையாகக் கருதுவர் ஆதலில் அன்னையாய் அத்தனாய் என்றும்-
நின்று நின் புகழ் ஏத்த அருளினான் என்றும் சொல்லுகிறபடியே
அன்றிக்கே
அன்பன் என்று சர்வேஸ்வரனுக்கு திரு நாமமாய்-அவனை ஆச்ரயித்தவர்க்கு எல்லாம் ஸ்நிக்தராய் இருப்பவர்-
மத்பக்த ஜன வாத்சல்யம் -என்று இத்தை இறே பிரதம லஷணமாகச் சொல்லிற்று –
அன்பன்
இன்னபடி அன்பன் என்கை அன்றியிலே எல்லாருக்கும் எல்லாப் படியாலும் நிசர்க்க ஸூஹ்ருத்தாய் இருக்கும்-
ஏவம் நிசர்க்க ஸூ ஹ்ருதி ந சித்ரமிதமாஸ்ரித்த வத்சலத்வம் என்று சௌஹாரத்த கார்யம் இறே வாத்சல்யம்-
(ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் தொடங்கி யத்ருஷா கடாக்ஷம் -சாது சமாகம் வரை ஆறு படிகள் -உண்டே )
சர்வ லோகைக வத்சலா -என்றும் –
சரணா கத வத்சலா -என்றும் –
ரிபூணாமபி வத்சலா -என்னும் படி
லோகத்துக்காக வத்சலனுமாய்-
அதில் ஆஸ்ரிதர் அளவிலே தோஷோயத்யபி என்னும் படி வத்சல்யனுமாய் –
ப்ராதி கூல்யமே பண்ணிப் போருமவர்களுக்கும்-வத்சலனுமாய் இருக்கும் –
பிரதிபவமா பராத்துர் முக்த சாயுஜ்ய தோபூ-இறே-அங்கு மௌக்த்யம் ஆவது தோஷம் படாது ஒழிகை யாவது –
அன்பன்
தன்னை ஸ்நேஹித்தார்க்குத் தான் ஒருவனுமே விஷய பூதனுமாய்
தான் ஸ்நேஹிக்கும் இடத்தில் விபூதியாக ஸ்நேஹிக்குமவன்
தன்னை ஸ்நேஹித்தவன் புறம்பே சிலவற்றை ஸ்நேஹித்தால் அவனுக்குத் தன்னைப் பெற விரகு இல்லை-
தான் எல்லாரையும் ஸ்நேஹியானாகில் தான் இன்றிக்கே ஒழியும்
நிரவதிக வாத்சல்ய ஜலதே -என்றும் –
வாத்சல்ய மஹோததே -என்கிறபடியே
கடலுக்கு உள்ளே மாணிக்கங்கள் அடைய மறைந்து கிடைக்குமா போலே-
இவ்வாத்சல்ய குணத்தில் குணாந்தரங்கள் அடைய மறையும் படி யாய்த்து இது
ஸ்வரூபத்தை விளாக்குலை கொண்டு கிடக்கும் படி
ஸ்வரூபம் தான் சர்வதா சாத்ருச்ய ரஹிதமானாப் போலே யாய்த்து
இக் குணமும் சத்ருச்ய ரஹிதமாய் —
நிகரில் புகழாய் இருக்கும் படி
அந்த – ஸ்வரூப –சாத்ருச ராஹித்யத்தால் பெற்றது பரத்வ சித்தி –
இந்த-வாத்சல்ய – சாத்ருச்ய ராஹித்யத்தால் பெற்றது சரண்யத்வ சித்தி –
அன்பன்
தன்னைப் பற்றிப் புறம்பே சிலவற்றை ஆசைப்பட்டவர்களுக்கும் –
உதாரா என்று குணம் கொள்ளும் வ்யாமோஹத்தை யுடையவன் –
அன்பன்
உபக்ரமத்திலே கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என்னப்பன் -என்று-
சீல சௌலப்ய ஸ்வாமித்வங்களை உபாதானம் பண்ணி
உப சம்ஹாரத்தில் வாத்சல்ய குணத்தோடு தலைக் கட்டுகிறார்
அவை ஒரு தட்டு -இது ஒரு தட்டு இறே-
இத்தைப் பற்ற விறே சீலாதி குண சம்பன்னஸ் சர்வ லோகைக வத்சலா -என்று ரிஷிகளும் சொல்லிற்று –
(கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என்னப்பன் -அன்பன் -நான்கு சப்தங்கள்
நான்கு குணங்களைக் காட்டி அருள )
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம் அன்பன்-
இப்படி சர்வ லோக வத்சலனான சர்வேஸ்வரனுடைய குணத்துக்குத் தோற்று
குணைர் தாஸ்யம் உபாகத என்று அடிமை புக்கு அவன் திருவடிகளை உபாயத்வேன வரணம் பண்ணி இருக்கும்
சாத்விக வர்க்கத்துக்கு நல்லராய் இருக்குமவர்
அவனுக்கு எல்லாரோடும் பந்தம் உண்டாகையாலே எல்லாரையும் ஸ்நேஹிக்கும்
இவர் பரமனைப் பயிலும் திரு யுடையார் யவரேலும் அவர் கண்டீர் -என்னை யாளும் பரமர் -என்று இருக்குமவர் யாய்த்து
இவரைப் போலே வைராக்ய பூர்வகமான ஸ்நேஹம் அன்றே அவனது
அவனுக்கு எல்லாரோடும் ஸ்வரூப நிபந்தன சம்பந்தம் -இவரது உபாதி நிபந்தன சம்பந்தம்
எல்லாம் அன்பன்
அவர்களுடைய ஜாத்யாதி நியமம் பாராதே தத் சம்பந்தமே ஹேதுவாக நல்லராய் இருக்குமவர்-
கும்பி நரகர்க ளேதத்துவரேலும் –எம் தொழு குலம் தாங்கள் -என்றும்
எத்தனை நலம் தாம் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் அடியார் தம் அடியார் எம் அடிகள் -என்று இருக்குமவர் –
அன்பன்
அவன் அடியார் -நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க -என்று
பகவத் அனுபவ சூ கத்தை விட்டே யாகிலும்-
வைஷ்ணவசமமாய் சம்ச்லேஷ ராசராய் இருக்குமவர்
அடைந்தவர்கட்க்கு எல்லாம் அன்பன்
அவனை சேஷியாக வரிக்க்கவுமாம் –
பந்துத்வேன வரிக்க்கவுமாம் –
உபாயத்வேன வரிக்க்கவுமாம் –
உபேயத்வேன வரிக்க்கவுமாம்-
இவருக்கு ஆதரிக்க வேண்டுவது ஏதேனும் ஒரு சம்பந்தம் ஆய்த்து
தென் குருகூர் இத்யாதி
இவருக்கு இப்படி ஸ்ரீ பகவத் ஸ்ரீ பாகவத விஷயத்தில் ஸ்நேஹத்துக்கு ஊற்றுவாய்
ஸ்ரீ திரு நகரியில் பிறப்பாய்த்து-
துறை வாய்ப்பாலே பயிரும் வாய்க்கும் இறே –
இவருக்கு காதல் கடல் புரைய விளவிக்கைக்கு அடி அந்த நிலப் பண்பு யாய்த்து
நகர்
அந்நகர வாசத்தாலே யாய்த்து இவர் சார அசார விவேகஜ்ஞ்ஞர் யாய்த்து
நம்பி
இப்படி ஆத்ம குண பூரணரான ஸ்ரீ ஆழ்வார்
அன்பனாய்
இப்படி இவருடைய பகவத் ஜ்ஞான பக்த்யாதிகள் ஆகிற ஆத்ம குணம் கண்டாய்த்து
இவருக்கு ஸ்நேஹம் பிறந்தது
அன்பனாய் மதுரகவி
அவருக்கு பகவத் ப்ரேமம் ஸ்வரூப பிரயுக்தமாய் –
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன் என்று நிரூபகம் ஆனால் போலே-
இவருக்கும் ஸ்ரீ ஆழ்வாருக்கும் நல்லவர் ஆனவர் என்று நிரூபகம்
அவர் பிரணவ நமஸ் ஸூ க்கள் இரண்டிலும் நிஷ்டராய்ப் போருவர்-
இவர் மத்யம பதத்திலே நிஷ்டராய் இருப்பர்-
மதுரகவி
அவர் தத் விஷயத்தை கவி பாடுகையாலே -என் நாவில் இன்கவி என்றால் போலே இவரும்
ஸ்ரீ ஆழ்வாரைப் பாடுகையாலே தம்மை மதுர கவி என்கிறார் –
நம்பிக்கு அன்பனாய் மதுரகவி
நெஞ்சுக்குப் பணி ஆழ்வார் பக்கல் ஸ்நேஹமே –வாய்க்குப் பணி அவருடைய குண ஸ்தோத்ரமே ஆனவர்-
(அன்பு -நெஞ்சுக்கு –
கவி வாய்க்கு )
சொன்ன சொல்
அவர் ப்ரபந்தீ கரித்த இந்த சப்த சந்தர்ப்பத்தை
சொன்ன சொல்
இதுவும் ஒரு சொல்லே என்று விஸ்மிதர் ஆகிறார்
நம்புவார்
இத்தை ஆசைப்படுமவர்கள்-இவ்வர்த்தத்தை வ்யுத்பத்தி பண்ணி விடுதல் செய்கை அன்றிக்கே
இதிலே நசை யுடையராய் இவ்வியலிலே எப்போதும் பரிசயிப்பது
இதுக்குள் ஓடுகிற ஸ்ரீ ஆழ்வாருடைய ப்ரபாவங்களிலே வித்தராவது –
இப் பிரபாவத்தை எப்போதும் ஒருவர் சொல்லக் கேட்க ஆசைப்படுவதாய்–இப்படி நசை பண்ணிப் போருவார்-
நம்புவார்
பகவத் ப்ரபாவத்தில் காட்டில் ஸ்ரீ ஆழ்வார் பிரபாவத்தை விரும்புவார்-
ஸ்ரீ ஆழ்வார் பிரபாவம் சொன்ன இது கைதவம் அன்று சத்யம் என்று இவ் வர்த்தத்தை தங்களுக்குத்
தஞ்சமாக விஸ்வசித்து இருப்பார்-(-நம்புவார்-ஆசை விசுவாசம் வியப்பது )
பதி வைகுந்தம் காண்மினே
அவர்களுக்கு வஸ்தவ்ய பூமி ஸ்ரீ பரம பதம்
—————————————
ஸ்ரீ தம்பிரான் படி -அருளிச் செய்த வியாக்யானம் –
அவதாரிகை –
ஸ்ரீ ஆழ்வாருடைய நிரதிசய போக்யதையைச் சொல்லுகிறது –
ப்ராப்ய காஷ்டையான ஸ்ரீ ஆழ்வாரைப் பற்றுகிற இவர்
பிரதம அவதியான ஸ்ரீ பகவத் விஷயத்திலே இழிவான் என் என்னில்
ஸ்ரீ ஆழ்வாருடைய போக்யாதிசயம் தோற்றுகைக்காகவும்
அவருடைய முக மலர்த்தி தோற்றுகைக்காகவும்
அவர் உகக்கும் பகவத் விஷயம் ஆகையாலும் பேசுகிறார் –
சரம அதிகாரி சேகரர் ஆகிறார் இவர் -ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே தாரகாதி -யாகக் கொண்டவர்
1-அவர் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராமுதம் -இவர் -அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -போக்யதா பிரகர்ஷம்
2-அவர் -மலக்கு நாவுடையேற்கு என்றார் -இவர் நாவினால் நவிற்று –
3-அவர் அடிக் கீழ் அமர்ந்து –இவர் மேவினேன் அவன் பொன்னடி
4-கண்ணன் அல்லல் தெய்வம் இல்லை -தேவு மற்று
5-பாடி இளைப்பிலம் என்றார் -பாடித் திரிவேனே -ஆனந்தப் பட்டர் வாசி உண்டே
6-இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்றேன் -திரி தந்தாகிலும்
7-உரிய தொண்டர் தொண்டர் —நம்பிக்கு ஆள் உரியனே
8-தாயாய் தந்தையாய் -அன்னையாய் அத்தனாய்
9-ஆள்கின்றான் ஆழியான் -என்னை ஆண்டிடும் தன்மையான் -வெப்பம் இல்லை குளிர்ந்து அன்றோ
10-கடியனாய் கஞ்சனைக் கொன்ற பிரான் -தக்க சீர் சடகோபன்
11-யானே என் தனதே என்று இருந்தேன் -நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் –நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
12-எமர் கீழ் மேல் ஏழ் ஏழ் பிறப்பும் நம்முடிய வாழ்வு வாய்கின்றவா -மா சதிர் -இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
13-என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசன் -நின்று தன புகழ் ஏத்த அருளினான்
14-ஒட்டுமே இனி என்னை நெகிழ்க -என்றும் என்னை இகல்விலன் காண்மின் -நீங்களே பாருமின் -சங்கையே இல்லை
15-மயர்வற மதிநலம் அருளினான் -ஒண் தமிழ் சடகோபன் அருளையே
16-அருள் உடையவன் -அருள் கண்டீர் இவ் உலகத்தில் மிக்கதே -உயர்ந்த அருள் என்கிறார் இவர்
17-பேரேன் என்று -நெஞ்சு நிறைய புகுந்தான் –நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -கண்ணன் அங்கே திருவாய்மொழி இங்கே
18-வழு விலா அடிமை செய்ய வேண்டும் -ஆட்புக்க காதல் அடிமைப் பயன்
19-ஆராத காதல் -ஆட்புக்க காதல் -தாஸ்யம் ஸ்பஷ்டம் இங்கே தான்
20-பொருள் அல்லாத என்னை பொருள் ஆக்கி -அடிமை கொண்டான் -பயன் நன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல்
21-கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய அன்பேயோ -தென் குருகூர் நம்பிக்கு அன்பன் -திருஷ்டாந்தம் இல்லை இங்கு -போட்டி இல்லை இங்கு
22-உலகம் படைத்தான் கவி -மதுர கவி -இவர்
23-உரைக்க வல்லார்க்கு வைகுந்தம் ஆகும் தம்மூர் எல்லாம் -நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே பிரத்யஷம் -சங்கையே இல்லையே –
பிரத்யுபகாரம் செய்ய இயலாமல் குண அனுசந்தானம் செய்து -முனிவர்கள் யோகிகள் -குண நிஷ்டர் கைங்கர்ய நிஷ்டர்
1-போக்யதா பிரகர்ஷம் -முதல் பாட்டில்
2-தேக யாத்ரைக்கு தாரகம் -பாவின் இன்னிசை பாடத் திரிவனே
3-பகவத் விஷயம் உத்தேச்யம் ஆழ்வார் உகந்த விஷயம் -திரி தந்தாகிலும்
4-விஷயீ கரித்து அருளி -அன்னையாய்
5-இதர விஷய பிராவண்யம் விட்டு தம் அளவு வரும் படி சாதுர்யம் -நம்பினேன்
6-ஆழ்வார் தம்மை விஷயீ கார உறுதி -ஆறாம் -இன்று தொட்டும் எழுமையும் -ஒன்பது குளிக்கு நிற்கும் -புகழ் ஏத்த அருளினான்
7-கிருபா பிரகாசம் -சடகோபன் அருளையே
8-ஆழ்வார் கிருபை விஞ்சி -அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
9-சகல வேத ரகசியம் -ஸூ பிரதிஷ்டியாக நெஞ்சில் நிறுத்தி -மிக்க -வேதத்தின் உட் பொருள் -நிற்கப்பாடி
10-உபகாரம் பிரத்யுபகார நிரபேஷம் -முயல்கின்றேன் உன் தன மொய் கழற்கு அன்பையே -பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்
வியாக்யானம்-
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு –எத்திறம் -என்றும்
பிறந்தவாறும் என்றும் -பையவே நிலையும் வந்து -என்றும்
ஆழ்வார் ஆழம் கால் பட்ட விஷயம் ஆகையால் அத்தைப் பேசுகிறார்
கண்ணி இத்யாதி
ஆழ்வார் பக்கல் இவருக்கு உண்டான உத்தேச்யத்தை இருந்தபடி
ஆழ்வாருடைய உத்தேச்ய வஸ்துவைக் கட்டினதொரு கயிற்றினுடைய உள் மானம் புறமானம் ஆராயும் படி யாய்த்து
இவர் கை ஒழிந்த படி பகவத் விஷயத்தில்
கண்ணித் தாம்பு
என்றது -உடம்பில் கட்டப் புக்கால் உறுத்தும் படி பல பிணைகளை யுடைத்தாய் இருக்கை
நுண் தாம்பு
உடம்பிலே அழுந்தும்படி நேரிதாய் இருக்கை
சிறுத் தாம்பு
இவனைக் கட்டின பின்பு உரலோடு சேர்க்கைக்கு எட்டாம் போராது இருக்கை –
கட்டுண்ணப் பண்ணிய
உரலை நேராகச் செதுக்கப் போகாது
அப்போதாகக் கயிற்றை நெடுக விடப் போகாது
இனி இவனை விட்டு நெடிய கயிறு தேடி எடுக்கப் புகில் இவன் தான் எட்டான் காற்றில் கடியனாய் ஓடும்
இனிச் செய்வது என் -என்று அவள் தடுமாறுகிற படியைக் கண்டான்
கட்டுண்ணப் பண்ணிய
சதைக ரூப ரூபாய என்கிற தன்னுடைய திருமேனியை நெருக்கி இடம் கண்டு கட்டும் படி பண்ணினான்
கட்டுகைக்கு பரிகாரம் இல்லை என்று நிவ்ருத்தை யாமாகில் பிறந்து படைக்க நினைத்த குணத்தை இழக்கும் அத்தனை இறே
ஆகையாலே திருமேனியிலே இடம் கொடுத்தான்
கண்ணியார் குறும் கயிற்றால் கட்ட வெட்டு என்று இருந்தான்
கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் என்றும் எல்லாரும் ஈடுபடும் துறை இறே இது தான் –
தாம் நா சைவ –யதி சக் நோஷி என்று தாய் கட்டின கட்டை அவிழ்க்க சக்தன் அல்லேன் என்று இருந்தான் இறே
சம்சார பந்த ஸ்திதி மோஷ ஹேது -என்று ஸ்வ வியதிரிக்தரை யடையக் கட்டுகைக்கும் விடுகைக்கும் ஹேது வானவன் கிடீர்
இப்போது ஒரு அபலை கட்டின கட்டை அவிழ்க்க சக்தன் இன்றிக்கே இருக்கிறான்
செருக்கனான சார்வ பௌமன் அபிமத விஷயத்தின் கையில் அகப்பட்டு ஒரு கருமுகை மாலையாலே கட்டுண்டால்
அதுக்கு பிரதிகிரியை பண்ண மாட்டாதே இருக்குமா போலே இறே இவள் கட்டின கட்டுக்கு
பிரதிகிரியை பண்ண மாட்டாது இருக்கிற இருப்பும்
பிறருடைய கர்ம நிபந்தனமான கட்டு அவிழ்க்கும் அத்தனை அல்லது தன் அனுக்ரஹத்தால் வந்த கட்டு
தன்னாலும் அவிழ்க்கப் போகாது என்கை
ஸ்ரீ ஆழ்வார் மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையாலே உயர்வற உயர்நலம் உடையவன்
என்று அவர் குணத்தை வர்ணித்தார்
இவர் முதல் அடியிலே ஆழ்வார் தம்மையே பற்றுகையாலே அவன் திருமேனியில் ஸ்பர்சித்த தொரு தாம்பை வர்ணிக்கிறார்
அவருடைய உத்தேச்ய வஸ்து வெளிறாய்க் கழிகிறது இறே
அதவா
கட்டுண்ணப் பண்ணிய
பக்தி உண்டாகிலும் அவன் தானே தன்னை அனைத்துத் தர வேண்டும் படியாய் இது பின்னையும் சிறிதாய் இருக்குமாய்த்து
நாயமாத்மே த்யாதி –யமேவைஷா வ்ருணுதே தேன லப்யஸ் தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்-என்கிறபடியே
இனி இந்த பக்தி இவன் நெஞ்சில் அந்ய பரத்தையை அறுக்கும் அத்தனை
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக் கட்டி -என்கிறபடியே
எட்டும் இரண்டும் பத்தாய் பக்தியைச் சொன்னபடி
எட்டு என்று திரு அஷ்டாஷரமாய் அத்தாலே யாதல் –
இரண்டு என்று வாக்ய த்வயமாய் அத்தாலே யாதல் வசீகரித்து என்னவுமாம்
அல்லது எட்டும் இரண்டும் அறியாதார்க்குக் கட்டப் போகாதே-
இவன் தன்னைக் கட்டுவது -ஒரு வெண்ணெயைக் களவு கண்டான் -ஊரை மூலையடியே நடத்தினான் என்று இறே
இவன் சாமான்யன் என்று இடுமீடு எல்லாம் இடுங்கோள்என்று இருந்தான் –அதாவது களவிலே தகண் ஏறின படி –
இவனைக் கட்டி வைத்து அடிக்கப் புக்கவாறே தொழுகையும் என்கிறபடியே தொழத் தொடங்கும்
எல்லாரையும் தொழுவித்துக் கொள்ளுமவன் இறே தொழுகிறான்
இத்தசையில் அபிமத சித்திக்கு ஓர் அஞ்சலியே சாதனம் என்று அறியுமவன் இறே
தாம் நா சைவோதரே பத்வா பிரத்யபத்நா து ஸூ கலே -யதி சக் நோஷி கச்ச தவம் -தான் தாயான பரிவு தோற்ற
இவனைக் களவிலே கண்டு பிடித்து தாம்பாலே உரலோடு அடுத்துக் கட்டி மறு கண்ணியும் பொத்தி
நீ வல்லையாகில் போய்க் காணாய் என்று உருக்கி விட்டால் போக மாட்டாதே இருக்கும்
பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே என்று ஒதப்படுகிற வஸ்து இவளுக்கு எளிதான படி இறே இங்கனே சொல்லுகிறாள்
அதி சஞ்சல சேஷ்டித -துறு துறுக்கையாய்க் கொண்டு ஊர் பூசல் விளைத்தவன் அல்லையோ
இத்யுக்த்வா -ஒரு சொல்லாலே விலங்கிட்டு வைத்து
அத நிஜம் கர்ம சா சகாரா -அவள் கறப்பது கடைவதாகத் தொடங்கினாள்
குடும்பி நீ -இவனைப் போலே நியமிக்க வேண்டுவன அநேகம் உண்டு இறே இவளுக்கு –
பெருமாயன்
நிரதிசய ஆச்சர்ய யுக்தன்
இத்தால்
அவாப்த சமஸ்த காமனுக்கு ஒரு குறை உண்டாய் அது தன்னை ஷூத்ரரைப் போலே
களவாகிற வழி எல்லா வழியே இழிந்து
சர்வ சக்தியான தான் அது தன்னைத் தலைக் கட்ட மாட்டாதே வாயது கையதாக அகப்பட்டுக் கட்டுண்டு –
பையவே நிலையும் -என்று
உடம்பு வெளுத்து நின்ற நிலை அளவும் செல்ல நினைக்கிறார்
என்னப்பனில்
ஸ்ரீ ஆழ்வார் இவர்க்கு உத்தேச்யராய் நிற்க இங்கனே சொல்லுவான் என் என்னில்
ஸ்ரீ பகவத் சம்பந்தம் அற வார்த்தை சொன்னார் ஆகில்
ஸ்ரீ ஆழ்வாரோட்டை சம்பந்தத்தை அறுத்துக் கொண்டாராம் அத்தனை இறே -அத்தாலே சொல்லுகிறார்
அதவா
பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரிணம்-என்கிறபடியே அவ்வருகு போவாரையும் துவக்க வல்ல விஷயம் ஆகையாலே
துவக்குண்டு சொல்லுகிறார் ஆகவுமாம் –
என்னப்பனில் நண்ணி
ஸ்ரீ பகவத் விஷயத்தில் நின்றும் ஸ்ரீ ஆழ்வார் பக்கல் கிட்டி –
சப்தாதி விஷய ப்ராவண்யங்களை விட்டு பகவத் விஷயத்தைக் கிட்டுகையில் உண்டான அருமை போல் அன்று
பிரதம அவதியான பகவத் விஷயத்தை விட்டுப் புருஷார்த்தத்தில் சரம அவதியான ததீய சேஷத்வத்தைக் கிட்டுகை-
சப்தாதி விஷயங்களை விடலாம் -அதின் தோஷ தர்சனத்தாலே அங்கு –
இங்கு அங்கன் ஒரு தோஷம் காண விரகில்லை-ஆகையாலே அதிலும் இது அரிது
தென் குருகூர் நம்பி –
நல்கி என்னை விடான் நம்பி என்று ஸ்ரீ ஆழ்வார் தாம் உத்தேச்யமாகப் பற்றின விஷயத்தின் பூர்த்தி யளவன்று இறே
இவர் பற்றின விஷயத்தின் பூர்த்தி
எங்கனே என்னில் –ஸ்ரீ பகவத் விஷயத்தைப் பற்றினால் அதின் எல்லையான ஸ்ரீ ஆழ்வார் அளவும் வர வேண்டி இருக்கும்
ஸ்ரீ ஆழ்வாரைப் பற்றினால் அவ்வருகு கந்தவ்யம் இல்லை இறே
ஆசார்யர்களை நம்பி எண்ணக் கற்பித்தார் ஸ்ரீ மதுர கவிகள் இறே என்று ஜீயர் அருளிச் செய்வர்
என்றக்கால்
மநோ வாக் காயங்கள் மூன்றும் வேண்டி இருக்கும் பகவத் விஷயத்துக்கு
ஓர் உக்தி மாத்ரமே அமையும் இவ்விஷயத்துக்கு
பூர்த்தியால் வந்த ஏற்றமே யன்று -சௌலப்யத்தாலும் ஏற்றம் உண்டு என்கை-
அண்ணிக்கும்
தித்திக்கும்
பகவத் விஷயத்தை அனுபவித்தால் ஸ்ரீ ஆழ்வாருக்கு பிறக்கும் ஆனந்தம் எல்லாம்
இவ் விஷயத்திலே ஓர் உக்தி மாத்ரத்தாலே எனக்கு சித்திக்கிறது
அமுதூறும்
அமுது ஊற்று மாறாதே நிற்கும்
ந ச புனராவர்த்ததே என்ற விஷயம் ஆழ்வாருக்கு தத் பிரசாதத்தாலே நித்யமாகச் செல்லுகிறாப் போலே
எனக்கும் ஸ்ரீ ஆழ்வார் பிரசாதத்தாலே நித்ய அபூர்வமாய்ச் செல்லப் பெற்றேன்
என் நாவுக்கே
இது பின்னை எங்களுக்கு ரசிக்கிறது இல்லையீ என்னில்
முதல் அடியான ஸ்ரீ பகவத் விஷயம் கூட ரசியாது இருக்கிற உங்களுக்கு
அதின் எல்லையிலே நிற்கிற எனக்கு ரசிக்குமா போலே ரசிக்குமோ
என் நாவுக்கே
அநாதியாக விஷயாந்தரங்களை ரசித்துப் போந்த என் நாவுக்கே இவ்விஷயம் ரசிக்கிறது என்றுமாம் –
———————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தம்பிரான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –