Archive for the ‘Krishnan kathai amutham’ Category

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -16—-தேவாஸூர விபாக அத்யாயம் —

June 7, 2017

தேவா ஸூர விபாகோக்தி பூர்விகா சாஸ்திர வஸ்யதா
தத்வ அனுஷ்டான விஜ்ஞானஸ் தேமநே ஷோடஸ உச்யதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –20-

தேவா ஸூர விபாக-உக்தி பூர்விகா -தேவ அஸூர -விபாகம் சொல்வதை முன்னிட்டு
சாஸ்திர வஸ்யதா-சாஸ்திரம் வஸ்யராய வாழ வேண்டும்
தத்வ அனுஷ்டான விஜ்ஞானஸ் -தத்வம் -உண்மை பொருள் -பற்றிய ஞானம் ஏற்படவும்/அடைய- உபாயம் அனுஷ்டானம் பற்றிய ஞானமும்
தேமநே -ஸ்திரமாக -ஆழமாக உறுதியாக -இருக்க வேண்டுமே -வேதமும் வேதாந்தமும் தான் இந்த உறுதியை கொடுக்கும்
கீழே அவன் புருஷோத்தமன் சொல்லி -அவனை பற்றிய ஞானமும் -அடைய வேண்டிய அனுஷ்டானமும் இங்கு -அருளிச் செய்கிறான்
ஒரே வழி சாஸ்திரம் தானே –ப்ரத்யக்ஷம் அனுமானம் மூலம் -இல்லாமல் -வேதம் ஒன்றே புகல் -வேதைக சமைத கம்யன் -சாஸ்த்ர யோநித்வாத்-

————————————————-

ஸ்ரீ பகவாநுவாச
அபயம் ஸத்த்வஸம் ஷுத்தி ஜ்ஞாநயோகவ்யவஸ்திதி–தாநம் தமஷ்ச யஜ்ஞஷ்ச ஸ்வாத்யாயஸ்தப ஆர்ஜவம்–৷৷16.1৷৷
தேவர்கள் அடையாளம் -மூன்று ஸ்லோகங்கள் / மேல் அசுரர்கள் பற்றி /பயம் இல்லா தன்மை -சத்வ குணம் மிக்கு தேவர் / விஷ்ணு பக்தி உள்ளவர் /
-பயம் -ஆபத்து பிடிக்காதது வரும் என்னும் எதிர்பார்ப்பால் வரும் உணர்வு தானே பயம் / ஆசை -நல்லது வரும் என்று எதிர்பார்ப்பது -/
சுத்த மனசால் பர ப்ரஹ்மம் உணர்ந்து பயம் அற்று இருப்பார்களே / சத்வம் -மனஸ் கலக்கம் இல்லாமல் இருப்பர் / சத்வ சம் சுத்தி /ஜ்ஞாநயோகவ்யவஸ்திதி—
தேகம் விட ஆத்மா மேம்பட்டவன் என்ற ஞானம் கொண்டு தியானித்து பகவத் பிராப்திக்கு முயலும் தன்மை /ஆத்மாவுக்கு நல்லது தேடி தேகத்தை வெய்யில் வைப்பார்கள்
-வல்லபதேவன் -பெரியாழ்வார் -அந்த லோக சுகத்துக்கு இந்த லோகம் என்ன முயற்சி /பரதத்வ நிர்ணயம் -/
தானம் -நல்ல வழியில் ஈட்டிய பொருளை -சாஸ்த்ர சம்மதம் -சத்பாத்திரத்துக்கு கொடுத்தல் /தமம்-மன அடக்கம் / யஜ்ஞஷ்ச-பஞ்ச மஹா -ஆராதனம் /
ஸ்வாத்யாய -வேதம் ஓதி ஓதுவித்தல் /தப -உடம்பை வருத்தாமல் -சாஸ்த்ர சம்மதமான தபஸ் -உபவாசம் போல்வன -ஆர்ஜவம்–நேர்மை முக்கரணங்கள் ஒன்றாக /

அஹிம்ஸா ஸத்யமக்ரோதஸ்த்யாக ஷாந்திரபைஷுநம்–தயா பூதேஷ்வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீரசாபலம்–৷৷16.2৷৷
அஹிம்ஸா -பூத ஹிதம்-வேதம் ஹிம்சை பேசும் அவலம்பிக்க வேண்டாம் -அஹிம்சா வாதம் கொண்டு புத்தர்கள் -சங்கரர் -சாஸ்திரம் ஹிம்சை இல்லை /
ராமானுஜரும் பின்னர் இத்தையே -ஹிம்சை என்பது –வைத்தியர் ரண சிகிச்சை ஹிம்சை இல்லையே -கொஞ்சம் வலித்தாலும் நீண்ட நாள் நன்மைக்கு தானே
வலியே ஹிம்சை என்றால் பிரசவம் பொழுது வலிக்குமே -அது ஹிம்சை ஆகாதே -நீண்ட நாள் இன்பத்துக்காக -அன்றோ / சத்யம் உண்மை பேசுதல் பூதங்கள் நன்றாக இருக்க /
அப்ரியமான சத்யம் பேசாமல் / கோபம் அற்று இருப்பது -பிறருக்கு துன்பம் படுத்தும் கோபம் கொள்ளாமல் /தியாகம் -ஆத்மாவுக்கு நல்லது பண்ணாதவற்றை விட்டு /
ஷாந்தி இந்திரியங்களை அடக்கி /அபைசுனம் கோள் சொல்லாமை -தீக் குறளை சென்று ஓதோம்/
தயை பூ தேஷூ –ரஷிக்கும் இச்சை -அனு கம்பா கிருபா -கஷ்டப்படுபவர்களை கண்டால் / அலோ லுப்தம் –விலகி பற்று இல்லாமல் -லௌகீகர்களை கண்டால் ஒட்டு அற்று -/
மார்தவம் மென்மை- பெரியவர் நம்மை அணுக கடினத்தன்மை இல்லாமல் சாதுவாக /ஹ்ரீரி வெட்கம் பட்டு -சாஸ்திரம் சொன்னபடி செய்யாதபடி இருந்தோமே-வெட்க்கி வருந்தி –
கிணற்று தண்ணீர் ஆச்சாரம் இல்லையே -வருத்தம் வெட்கமாவது இருக்க வேண்டும் என்றபடி /அசபலம் -அழகிய இனிய பொருளை கண்டாலும் சபலம் கொள்ளாமை/

தேஜ க்ஷமா தரிதி ஷௌசமத்ரோஹோ நாதிமாநிதா–பவந்தி ஸம்பத தைவீமபிஜாதஸ்ய பாரத—৷৷16.3৷৷
-தேஜஸ் -பொறுமை -துன்புறுத்தினாலும் – த்ருதி உறுதி -பேர் ஆபத்து வந்த நிலையிலும் –சாஸ்த்ர விரோதமானவற்றை உண்ணாமல் /
ஸுசம் -சுத்தி -அனுஷ்டானம் செய்து / அத்ரோகம் / அதீத மனித கர்வம் கொள்ளாமை / சத்வ குணம் வளர தைவத் தன்மை வரும் என்றவாறு –
தைவச் செல்வம் -ஏற்படும் இந்த குணங்கள் -தேவனாக பிறந்தவன் -தேவ குணங்கள் கொண்டவன்
-சாஸ்த்ர விதி உட்பட்டவன் -தேவன் என்றபடி /மனம் போன படி நடப்பவன் அசுரன் -/

தம்போ தர்போபிமாநஷ்ச க்ரோத பாருஷ்யமேவ ச–அஜ்ஞாநம் சாபிஜாதஸ்ய பார்த ஸம்பதமாஸுரீம்–৷৷16.4৷৷
அசுரர் சம்பத் -இதுவும் செல்வமா விபத்து அன்றோ -அசுரர் நினைவால் சம்பத்து தானே /டம்பம் புகழுக்காக செய்வது -செருக்கு தர்பம் /
அபிமானம் கர்வம் -முக்குறும்பு -செல்வம் குடிப்பிறப்பு அழகு வித்யைகள் /குறும்பு அறுத்த நம்பி -சரித்திரம் /க்ரோதம் /வெறுப்பு
-பாருஷ்யம் /அஞ்ஞானம் விவேகஞானம் இல்லாமை -த்யாஜ்ய உபாதேய ஞானம் இல்லாமை

தைவீ ஸம்பத்விமோக்ஷாய நிபந்தாயாஸுரீ மதா–மா ஷுச ஸம்பதம் தைவீமபிஜாதோஸி பாண்டவ–৷৷16.5৷৷
தைவ தன்மை மோக்ஷம் -ஆசூரா ஸ்வபாவம் சம்சார பந்தம் -கொடுக்கும் -தேவாசுர விபாக -சங்கை ஜெனித சோகம் இரண்டாவது சோகம் இவனுக்கு —
நிபூட அஹங்காரம் மறைந்து உள்ள அஹங்காரம் இருக்குமே -ஷத்ரியன் -அசுரன் ஆவோமோ -சங்கை
தெய்வத் தன்மை தான் சோகப் படாதே –புருஷோத்தமன் என்னை பற்றி சொல்லி ஏத்து கொண்டாயே -இதுவே அடையாளம்

த்வௌ பூதஸர்கௌ லோகேஸ்மிந் தைவ ஆஸுர ஏவ ச–தைவோ விஸ்தரஷ ப்ரோக்த ஆஸுரம் பார்த மே ஷ்ரரிணு–৷৷16.6৷৷
பகவத் ஆணை படி நடப்பவர் தேவர்கள் -மீறுபவர்கள் அசுரர்கள் -தன்மை பற்றி சொல்கிறேன் –

ப்ரவரித்திம் ச நிவரித்திம் ச ஜநா ந விதுராஸுரா–ந ஷௌசம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷு வித்யதே–৷৷16.7৷৷
பிரவ்ருத்தி மார்க்கம் மூலம் அடையும் இவ்வுலக செல்வம் -நிவ்ருத்தி மார்க்கம் மூலம் பெரும் இவ்வுலக செல்வம் -இரண்டையும் பெறாதவர்கள்
-இரா எழுத்தை கேட்டாலே பயந்த ராவணன் -நல்ல கார்யம் செய்ய சுத்தி இல்லாதவர்கள் -ஆச்சாரம் இல்லாதவர்கள் உண்மை பேச மாட்டார்கள்

அஸத்யமப்ரதிஷ்டம் தே ஜகதாஹுரநீஷ்வரம்–அபரஸ்பரஸம்பூதம் கிமந்யத்காமஹைதுகம்—৷৷16.8৷৷
ஜகத் அசத்தியம் என்பர் -ப்ரஹ்மாத்மகம் இல்லாத வஸ்துக்கள் உண்டு என்பர் -காட்டு என்றால் தன்னையே காட்டுவர் –பூமியில் நிலை நிற்கும்
-ப்ரஹ்மம் சர்வ ஆதாரம் என்று ஒத்து கொள்ளாதவர்கள் இவர்கள் /ப்ரஹ்மா நியமிக்க வில்லை / பரஸ்பர ஆண் பெண் சேர்க்கையால் உருவாகாத பொருள்கள் இல்லை
-செல்வத்தால் எல்லாம் வாங்கலாம் / காமத்தை அடிப்படையாக கொண்டே உலகம் ஓடும் காமமே ப்ரஹ்மம் என்பான் /

ஏதாம் தரிஷ்டிமவஷ்டப்ய நஷ்டாத்மாநோல்பபுத்தய–ப்ரபவந்த்யுக்ரகர்மாண க்ஷயாய ஜகதோஹிதா–৷৷16.9৷৷
ஜகதோஹிதா–ஜகதோ அஸூபா–பாட பேதம் -மங்களத்தன்மை இல்லாமல்
இந்த த்ருஷ்ட்டியை பண்ணிக்க கொண்டு -குத்ருஷ்ட்டி – அல்ப புத்தி -தேஹாத்ம பிரமத்தால் -உலகம் அழிவதற்கு செயல்படுவார்கள் –

காமமாஷ்ரித்ய துஷ்பூரம் தம்பமாநமதாந்விதா–மோஹாத்கரிஹீத்வாஸத்க்ராஹாந்ப்ரவர்தந்தேஷுசிவ்ரதா–৷৷16.10৷৷
ஆசை பட்டு -அடி இல்லா பள்ளம் -தூரா குழி -டம்பம் -மானம் -மதம் கர்வத்தால் -அறிவின்மையால் -தவறான வழியில் பொருளை
ஈட்டி வைத்து -சாஸ்திரம் விதிக்காத வழியில் செயல் படுவார்கள்

சிந்தாமபரிமேயாம் ச ப்ரலயாந்தாமுபாஷ்ரிதா–காமோபபோகபரமா ஏதாவதிதி நிஷ்சதா–৷৷16.11৷৷
இவர்கள் ஆசை நிறைவேறாதே -பரிமித சிந்தனை இல்லை -ப்ரஹ்மம் துணை இல்லாமல் பிரளயம் வரை நிறைவேறாதே
-காமம் அனுபவிப்பதே -இதுவே புருஷார்த்தம் என்று இருந்து அழிகிறார்கள்

ஆஷாபாஷஷதைர்பத்தா காமக்ரோதபராயணா–ஈஹந்தே காமபோகார்தமந்யாயேநார்தஸஞ்சயாந்–৷৷16.12৷৷
நூற்றுக் கணக்கான ஆசா பாசங்களில் சிக்கி -புலன்களை மேய விட்டு தோற்றாய் -மண்டோதரி -ஆசை வைத்து கிடைக்காமல்
கோபம் கொள்வது இதுவே புருஷார்த்தம் -காமம் சுகத்துக்காக அநியாய வழியில் பொருளை ஈட்டுவார்கள்

இதமத்ய மயா லப்தமிமம் ப்ராப்ஸ்யே மநோரதம்–இதமஸ்தீதமபி மே பவிஷ்யதி புநர்தநம்–৷৷16.13৷৷
இவை எல்லாம் என்னாலேயே அடைய பெற்றன -புண்ய பலம் இல்லை ஈஸ்வர கிருபையால் இல்லை -ஆசைப் பட்டது எல்லாம் அடைவேன்
-இவை எல்லாம் என் ஆசையால் வந்தவை -எது வேண்டுமானாலும் பெறுவான் -யாரும் தேவை இல்லை–
அவன் இல்லாமல் எதுவும் இல்லையே -நின்றனர் இத்யாதி அவரவர் விதி வழி நின்றனர் என்று உணராமல் -இஷ்ட பிராப்தி தன்னால் –

அஸௌ மயா ஹத ஷத்ருர்ஹநிஷ்யே சாபராநபி–ஈஷ்வரோஹமஹம் போகீ ஸித்தோஹம் பலவாந்ஸுகீ–৷৷16.14৷৷
அநிஷ்ட நிவ்ருத்தியும் என்னாலே -என்னாலே சத்ருக்கள் மாண்டனர் -நான் தான் ஈஸ்வரன் -நானே அனுபவிக்கிறேன்
-ஸ்வர்க்காதிகளை நானே அடைவேன் -பலமும் என்னாலே சுகம் என்னாலே –

ஆட்யோபிஜநவாநஸ்மி கோந்யோஸ்தி ஸதரிஷோ மயா–யக்ஷ்யே தாஸ்யாமி மோதிஷ்ய இத்யஜ்ஞாநவிமோஹிதா–৷৷16.15৷৷
உயர் நிகர் எனக்கு -அஞ்ஞானம் பீடித்து -யாகங்கள் எல்லாம் என்னாலே –

அநேகசித்தவிப்ராந்தா மோஹஜாலஸமாவரிதா–ப்ரஸக்தா காமபோகேஷு பதந்தி நரகேஷுசௌ–৷৷16.16৷৷
சிந்தனை கடலில் அலைந்து -மோஹம் மயக்கம் சூழ்ந்து -காமம் அனுபவித்து -நரகில் விழுகிறார்கள் –
-செம்பினால் இயன்ற பாவையை தழுவி பாவி -நைமிசாரண்ய பாசுரம்

ஆத்மஸம்பாவிதா ஸ்தப்தா தநமாநமதாந்விதா–.யஜந்தே நாமயஜ்ஞைஸ்தே தம்பேநாவிதிபூர்வகம்–৷৷16.17৷৷
தன் பெருமையை பேசி -குலையாமல் -தான மதம் -பெயர் யாகம் -பெயருக்காக புகழுக்காக யாகம் -டம்பம் -சாஸ்திரம் விதிக்காத வகையில்

அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் ச ஸம் ஷ்ரிதா–மாமாத்மபரதேஹேஷு ப்ரத்விஷந்தோப்யஸூயகா–৷৷16.18৷৷
அஹங்காரம் -நானே பலவான் கர்வம் கோபம் பீடுக்கப்பட்டு -நான் தான் எல்லார் உடம்புக்குள்ளும் உள்ளேன்
-என்னை எதிர்க்கிறார்கள் பொறாமையால் -அ ஸூ யை / வாத்சல்யம் எதிர் குணம்

தாநஹம் த்விஷத க்ரூராந்ஸம் ஸாரேஷு நராதமாந்–க்ஷிபாம்யஜஸ்ரமஷுபாநாஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷
என்னை த்வேஷிக்கும் -க்ரூர ஸ்வபாவம் உள்ளவர்களை மறு படியும் அசூப அசுர யோனிகளில் பிடித்து தள்ளி விடுகிறேன்
7- அத்யாயம் ஆஸூரம் பாவம் நால்வர் பற்றி சொன்ன நால்வரையே இங்கும்

அஸுரீம் யோநிமாபந்நா மூடா ஜந்மநி ஜந்மநி–மாமப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்யதமாம் கதிம்–৷৷16.20৷৷
மூடர்கள் -பிறவி தோறும் என்னை அடையாதவர்களாக -மிக மிக தாழ்ந்த பிறவிகளை அடைந்து –

த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாஷநமாத்மந–காம க்ரோதஸ்ததா லோபஸ்தஸ்மாதேதத்த்ரயம் த்யஜேத்–৷৷16.21৷৷
மூன்று துவாரம் -ஆத்மாவை அளிக்கும் -காமம் -க்ரோதம் -பேராசை -மூன்றையும் விளக்கி விடுவாய் -தேவைகளை குறைத்து ஆசைப் படாமல் இருந்தால் போதுமே

ஏதைர்விமுக்த கௌந்தேய தமோத்வாரைஸ்த்ரிபிர்நர–ஆசரத்யாத்மந ஷ்ரேயஸ்ததோ யாதி பராம் கதிம்–৷৷16.22৷৷
இவற்றை விட்டவர்கள் -நரகம் -அசுரர் தன்மைக்கு மூன்று துவாரம் விடுபட்டு -நல்ல கதியை அடையலாம்

ய ஷாஸ்த்ரவிதிமுத்ஸரிஜ்ய வர்ததே காமகாரத–ந ஸ ஸித்திமவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம்–৷৷16.23৷৷
அத்யாயம் சுருக்கம் -சாஸ்த்ர விதியை தாண்டி தம் மனம் போன படி ஆசைப் பட்டு அனைத்தையும் இழக்கிறார்கள்
-ஸ்வர்க்கம் அடைவதும் மாட்டான் -இவ்வுலக இன்பமும் இல்லை -ஸ்ரீ வைகுண்டமும் கிட்டான்

தஸ்மாச்சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்யவ்யவஸ்திதௌ–ஜ்ஞாத்வா ஷாஸ்த்ரவிதாநோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி–৷৷16.24৷৷
ஆகையால் சாஸ்திரம் பிரமாணம் -ப்ரஹ்மம் உள்ளபடி -தெரிவதற்கும் உபாயம் அனுஷ்ட்டிக்கவும்
-சாஸ்த்ர தத்வம் நானே உபாயமும் நானே -கர்மங்களை சாஸ்திரம் படி செய்ய யோக்யதை பெற்று உயர்ந்த ப்ராப்யமான என்னை அடைவாய்

———————————————-

கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -15—-

June 7, 2017

அசின் மிஸ்ராத் விஸூத்தாச்ச சேத நாத் புருஷோத்தம
வ்யாப நாத் பரணாத் ஸ்வாம் யாத் அந்ய பஞ்சத சோதித–ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –19-

அசின் மிஸ்ராத் சேத நாத்– அசித் உடன் கூடிய சேதனர்கள் -பத்தாத்மா
விஸூத்தாச்ச சேத நாத்—அசித் நீக்கி சுத்த -முக்தாத்மா சேதனர்கள் –
புருஷோத்தம –
வ்யாப நாத்-வியாபிக்கிற படியால்
பரணாத்-தரிக்கிற படியால்
ஸ்வாம் யாத்-நியமிக்கிறபடியால்
அந்ய-வேறுபட்ட புருஷோத்தமன் -ஸமஸ்த ஸூவ இதர விலக்ஷணன் –
வேறு பட்டு –உயர்ந்த — சம்பந்தம் கொண்டே –பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஸ்திதிகள் –
ஆகாசம் -வியாபகம் மட்டும் -பூ தேனை தரிக்கும் -ராஜா சிலரை நியமிக்கலாம் -இவனோ சர்வரையும் சர்வத்தையும் –

தன்னை பற்றி -ஸூ யாதாம்யாம் -7-அத்யாயம் / ஸூ மாஹாத்ம்யம் -9-அத்யாயம் / இவற்றின் விளக்கம் இது -பூர்வ சேஷம் –
புருஷன் புரி நாடியில் இருந்து -எல்லா ஆத்மாக்களும் புருஷன் -பத்தன் முக்தன் நித்யன் -மூவர் / புருஷோத்தமன் -இம்மூவரிலும் வாசி -இந்த கோஷ்ட்டியில் இல்லையே /
அபுருஷன் -அசித் -வர்க்கம்- / புருஷோத்தம வித்யை அறிந்தால் அந்த ஜென்மத்தில் மோக்ஷம் /அவதார ரஹஸ்ய ஞானம் போலே
– நடுவில் நாம சங்கீர்த்தனமும் இதே கிட்டும் பார்த்தோம் -/பிரபத்தி நிஷ்டர்களுக்கு -சர்வ தர்மான் பரித்யஜ்ய -இவை எல்லாம் கைங்கர்யம் -சாதனம் இல்லை –

————————————————————

ஸ்ரீ பகவாநுவாச–
ஊர்த்வமூலமதஷாகமஷ்வத்தம் ப்ராஹுரவ்யயம்–சந்தாம் ஸி யஸ்ய பர்ணாநி யஸ்தம் வேத ஸ வேதவித்–৷৷15.1৷৷
அஸ்வத்த மரம் -அரச மரம் -த்ருஷ்டாந்தம் -தலை கீழே -/கடோ உபநிஷத் –ப்ரஹ்மம் ஸ்ருஷ்டிக்க -வேராக கொண்டு -கர்மம் அடியாக -கீழே விழுந்த விதை
இந்த கர்மம் அடியாக பிறப்பது -மேலே வேற மரம் அருகில் -சம்சாரம் ஆகிய பெரிய மரம் வேர் சத்யலோகம் / கீழே தேவாதி கிளைகள் -/
அஸ்வத்தம் -நாளை இருக்காது -அதனால் அஸ்வத்தம் -மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் -சதத பரிணாமம் -ஷட் பாவ விகாரங்கள் உண்டே –
அவ்யயம் பிரவாஹ ரூபமாக அழியாமல் -சந்தஸ் வேத வாக்கியங்கள் இலைகள் என்கிறான் -மரத்துக்கு இலை தானே ஸூர்ய ஒளி மூலம் பிராணன்
-அதே போலே யாகங்கள் இவை வேத வாக்கியங்கள் கொண்டே – மறை புரிய வைக்காமல் மயக்கும் – / பூர்வ காண்டம் -த்யானம் உபாசனம் -/
உபநிஷத் வேதாந்தம் -ப்ரஹ்ம பாவம் /
சந்தஸ் -மறைக்கும் -வேதம் மட்டும் பிடித்து கொண்டு ஸ்வர்க்காதி அல்ப -முக்குணத்தவர்களுக்கு /சம்சாரம் மரத்தை அறிந்தவனே அதிகாரி -சொல்லி அடுத்து

அதஷ்சோர்த்வம் ப்ரஸரிதாஸ்தஸ்ய ஷாகா–குணப்ரவரித்தா விஷயப்ரவாலா–அதஷ்ச மூலாந்யநுஸந்ததாநி–கர்மாநுபந்தீநி மநுஷ்யலோகே–৷৷15.2৷৷
மேலும் கீழும் பரவி உள்ள கிளைகள் கர்மா -உயர்ந்த தாழ்ந்த யோனிக்கு இரண்டுக்கும் -இதுவே காரணம் -முக்குணங்கள் வளர்க்கப் பட்ட மரம்
-நீரும் உரமும் இவையே -கர்மம் வளர -விழுது விழுந்து மேலும் கீழும் -மரம் சூழல்- பிரவாஹா ரூபம் -/ தளிர்கள் பஞ்ச பூத ஸூ ஷ்மங்கள் உடைய சம்சாரம்
-சப்தாதிகளை தளிர்கள் -முதலில் நைமித்திக ஸ்ருஷ்ட்டி – அடுத்து நித்ய ஸ்ருஷ்ட்டி -பிராட்டி புருவ நெறிப்பே
-பெரிய பெருமாளுக்கு வேதம் -மேலே உயர்த்தினால் உயர்ந்த யோனி / பிரமாணம் இதுவே இவனுக்கு –
கர்மம் என்னும் கட்டுக்கள் -மனுஷ்ய லோகத்திலும் -சேரும் –

ந ரூபமஸ்யேஹ ததோபலப்யதே–நாந்தோ ந சாதிர்ந ச ஸம் ப்ரதிஷ்டா–அஷ்வத்தமேநம் ஸுவிரூடமூல-மஸங்கஷஸ்த்ரேண தரிடேந சித்த்வா–৷৷15.3৷৷
இந்த சம்சாரி இந்த விஷயம் அறியாமல் -முடிவையும் தெரிந்து கொள்ளாமல் -முடிவு முக்குணங்களை தாண்டினால் தானே -நீர் கொட்டாமல் இருந்தால்
-தண்ணீர் அற்று பட்டு போகுமே -ஆதியும் -அறியாமல் -ஆதி குண சங்கம் -வேர் இது தானே -சம்சார மரம் -அஞ்ஞானம் என்னும் ஆதாரம் -என்றும் அறியாமல்
-தேஹாத்ம பிரமம் தானே -அதுவும் அறியாமல் -/ விவேக ஞானம் என்னும் கோடரியால் வெட்ட வேண்டுமே –
குடும்ப மரம் வம்ச வருஷம் மட்டுமே அறிந்து சம்சாரத்தில் உழல்கின்றான் —
இந்த அரச மரத்தை -நன்றாக பதிந்த மரம் -ஸூ= நன்கு நின்று -வி= விசித்திர விவித -ஸூ விருட மூலம் -இரண்டையும் சொல்லி /
சுலபமாக கண்டு கொள்ள முடியாத மரம் -கோடரி -அசங்கம் -பற்று அற்ற -முக்குணங்களில் பற்று வைக்காத தன்மை /
திடமாக இருக்க வேண்டும் –எப்பொழுதும் இருக்க வேண்டும் -ஞானத்தின் அடிப்படையில் அசங்கம் வேண்டும் –

தத பதம் தத்பரிமார்கிதவ்ய–யஸ்மிந்கதா ந நிவர்தந்தி பூய–தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே–யத ப்ரவரித்தி ப்ரஸரிதா புராணீ–৷৷15.4৷৷
அதனால் -ஆத்ம பிராப்தியை -உயர்ந்த -தேடத் தக்கத்தை -தேடுவாய் –திடமான பற்று அற்ற தன்மையால் –
இதற்கு உபாயம் என்ன என்னில்-திருவடிகள் தானே –மூல புருஷனான எம்பெருமானை பற்று -அந்த -படர்க்கையில் சொல்கிறான் -அஹம்-சொல்லாமல் -தமேவ –
பிரபத்யே -பற்றுகிறேன் -யத–பற்றி அதனால் அஞ்ஞானம் தொலைத்து –
புருஷோத்தமன் -அரையன் சிறையன் இருவரும் சிறை சாலையில் -சிறை கதவை திறந்து விடுவேன் –
வைப்பான் என் திறப்பான் என் -கர்மாதீனம் —யதாக எவன் இடம் இருந்து -பிரவ்ருத்தி முக்குணங்கள் சேர்க்கை கிடைத்ததோ அவன் திருவடிகளை பற்றி –
தம் -இல்லை தமேவ -அவனையே -மறந்தும் புறம் தொழா மாந்தர் -நாராயணனே நமக்கே பறை தருவான் -ஏக காரணன்

நிர்மாநமோஹா ஜிதஸங்கதோஷா–அத்யாத்மநித்யா விநிவரித்தகாமா–த்வந்த்வைர்விமுக்தா ஸுக துக்கஸம்ஜ்ஞை–ர்கச்சந்த்யமூடா பதமவ்யயம் தத்–৷৷15.5৷৷
பற்றினால் கிட்டும் பலன்கள் –போகிறார்கள் -ஆத்ம பிராப்தி அடைகிறார்கள் -அசங்கம் கோடரி கிட்டும் -பிறவி நீங்கி -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி
தேஹாத்ம மயக்கம் இல்லை -முக்குணம் பற்று அற்று -ஆத்மசிந்தனையில் ஈடுபடுவான் -வேறு எதிலும் ஆசை இல்லை -இரட்டையில் இருந்து விடுபடுவார்
-மயக்கம் இல்லாமல் உயர்ந்த பிராப்தி பெறுகிறான் –

ந தத்பாஸயதே ஸூர்யோ ந ஷஷாங்கோ ந பாவக–யத்கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம–৷৷15.6৷৷
பரிசுத்தமான ஆத்மா -/ஆத்ம சாஷாத்காரம் பெற்று -ஞானம் தேஜஸ் -மிக்கு -ஸூரியன் கொண்டு ஒளி பெற வேண்டாம் சந்திரன் அக்னி -இல்லாமல் தானே விளங்கும்
எத்தை அடைந்த பின் திரும்பி வர வேண்டாமோ -தாமம் தேஜஸ் -இந்த சொத்து மம -சேர்த்தே சொல்லுவான் /
எதனால் விளங்குகிறான் -யோகத்தால் -ஞான சஷூஸ்-கர்மா விலகியதும் யோகம் வளரும் -திருவடி பற்றி பற்று அறுக்க பிரார்த்திக்க வேண்டுமே –

மமைவாம் ஷோ ஜீவலோகே ஜீவபூத ஸநாதந–மந ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரகரிதிஸ்தாநி கர்ஷதி৷৷15.7৷৷
கீழே முக்தாத்மா தன்னுடைய உடைமை -இதில் பத்தாத்மாவும் என்னுடைய உடைமை -என்னுடைய அம்சமே -மிகவும் பழையவன்
-பிரகிருதி பரிணாமம் சரீரம் -வியாபாரம் செய்து -இந்திரியங்கள் செயல்பாட்டை செய்து கொண்டு இருக்கிறான் –

ஷரீரம் யதவாப்நோதி யச்சாப்யுத்க்ராமதீஷ்வர–கரிஹீத்வைதாநி ஸம் யாதி வாயுர்கந்தாநிவாஷயாத்–৷৷15.8৷৷
அடுத்த சரீரம் போகும் பொழுது பூத ஸூ ஷ்மங்களை எடுத்து கொண்டே -காற்று மணம் -வண்டு தேன்களை கிரஹிக்குமா போலே
-ருசி வாசனைகள் உடனே -இந்திரியங்களையும் சப்தாதி விஷயங்களையும் -கொண்டே புகுகிறான்

ஷ்ரோத்ரம் சக்ஷு ஸ்பர்ஷநம் ச ரஸநம் க்ராணமேவ ச–அதிஷ்டாய மநஷ்சாயம் விஷயாநுபஸேவதே–৷৷15.9৷৷
விஷம் தோய்ந்த தேனை பருகுகிறான் -காது கண் –இத்யாதி மனஸ் -சப்தாதிகளிலே மேய விட்டு -அறியாமல் அனுபவிக்கிறான்

உத்க்ராமந்தம் ஸ்திதம் வாபி புஞ்ஜாநம் வா குணாந்விதம்.விமூடா நாநுபஷ்யந்தி பஷ்யந்தி ஜ்ஞாநசக்ஷுஷ–৷৷15.10৷৷
ஆத்ம அபகாரம் திருட்டை பற்றி சொல்கிறான் இதில் -சரீரத்தில் புறப்படும் பொழுதும் இருக்கும் பொழுதும் புகும் பொழுதும்
-ஆத்மாவை பிரித்து பார்க்க தெரியாமல் மூடர்களாக -ஞானம் அறிய ஞான கண் கொண்டே பார்க்க முடியும் -சூழலிலே சிக்கி உழல்கின்றான்

யதந்தோ யோகிநஷ்சைநம் பஷ்யந்த்யாத்மந்யவஸ்திதம்–யதந்தோப்யகரிதாத்மாநோ நைநம் பஷ்யந்த்யசேதஸ–৷৷15.11৷৷
என்னை சரண் அடைந்து -கர்மங்களில் இருந்து முயன்றால் -உண்மை நிலையை அறிந்தவனாக -ஆகிறான் -/
பற்றாமல் முயல்வாருக்கு மனஸ் சுத்தி ஏற்படாமல் -இழக்கிறார்கள் –கைங்கர்யம் திருவடி சரண் அடைந்தே -செய்ய வேண்டும் –
சம்பந்தம் புரிந்தே முயல வேண்டும் -ஆத்மாவை தெரிந்து கொள்ள -மனஸ் சுத்தி வேண்டுமே

யதாதித்யகதம்- தேஜோ ஜகத்பாஸயதேகிலம்–யச்சந்த்ரமஸி யச்சாக்நௌ தத்தேஜோ வித்தி மாமகம்–৷৷15.12৷৷
இங்கு அனைத்தும் தன்னதே -கீழே முக்தாத்மா பத்தாத்மா சொல்லி -பிராசங்கிக்கமாக மூன்று ஸ்லோகங்கள் –
ஆதித்யன் -இடம் உள்ள தேஜஸ் -உலகம் அகிலம் ஒளி பெற -சந்திரன் -அக்னி தேஜஸ் -இந்த தேஜஸ் எல்லாம் என்னுடையதே என்று அறிந்து கொள் –

காமாவிஷ்ய ச பூதாநி தாரயாம்யஹமோஜஸா–புஷ்ணாமி சௌஷதீ ஸர்வா ஸோமோ பூத்வா ரஸாத்மக–৷৷15.13৷৷
பூமியை அடைந்து -தரித்து -திறல்/ அமர்த்த ரசம் சந்திரனாக இருந்து போஷித்து சேதுபவனும் நானே /அனைத்து சக்திகளும் என்னது –

அஹம் வைஷ்வாநரோ பூத்வா ப்ராணிநாம் தேஹமாஷ்ரித–ப்ராணாபாநஸமாயுக்த பசாம்யந்நம் சதுர்விதம்–৷৷15.14৷৷
ஜாடராக்னியாகவும்-இருந்து -பிராணிகள் தேகம் அடைந்து -பிராண வாயு அபான வாயு -நான்கு வித அன்னம் -கடித்து நக்கி உறிஞ்சி குடிக்கும் நான்கு விதம்
/நானே தளிகை பண்ணுகிறேன் -ஜீரணம் என்றவாறு -ஸமஸ்த வஸ்துக்களும் அவன் உடைமை என்றவாறு -/
அன்னம் -பிராமணனுக்கு -சொல்லி வஸ்திரம் கொடுத்ததாக வஸ்திர தானம் -ஐந்து வாயுக்களும் சரியான நிலையில்
சமான வாயு உடன் பிராண அபான வாயு சேர்ந்து –சாப்பிடட பதார்த்தங்கள் சக்தி பிரிந்து இந்திரியங்களுக்கு போக வேண்டுமே –

ஸர்வஸ்ய சாஹம் ஹரிதி ஸந்நிவிஷ்டோ–மத்த ஸ்மரிதிர்ஜ்ஞாநமபோஹநம் ச–வேதைஷ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ-வேதாந்தகரித்வேதவிதேவ சாஹம்–৷৷15.15৷৷
ஆச்சர்யமான ஸ்லோகம் -நிறைய இடங்களில் காட்டி வியாக்யானம் உண்டே –கீழே சாமானாதிகரண்யம்-அனைத்தும் இவனே /
அந்தராத்மாவாக இருந்து -சரீராத்மா நிபந்தனம்-/பின்ன பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஏகஸ்மின் -விசேஷணங்கள் ஒன்றுக்கே –
விலை பெற்ற நீல வாயும் வயிறுமான மண் குடம் போலே /வேறு வேறு பிரயோஜனத்துக்காக வேறே வேறே விசேஷணங்கள் -பிரதம விபக்தி -முதல் வேற்றுமையில் படிக்கலாம் –
ஹிருதயத்தில் ஆத்மாவாக நுழைந்து இருக்கிறேன் அனைத்துக்குள்ளும் -அந்த ப்ரவிஷ்டா சாஸ்தா நியாந்தா /ஸ்ம்ருதியும் / ஞானம் மறதி எல்லாம் என் ஆதீனம் /
வேதங்கள் -சொல்லப் படுகிறேன் -நானே -ஏவ காரம் மூன்று இடங்களிலும் -வேதங்களினால் நானே -அறிய படுகிறேன்
வேதங்களினாலே சொல்லப் படுகிறேன் -வேறே ஒன்றும் சொல்லாதே -வேதம் என்னை சொல்லி அல்லால் நில்லாது /வேதம் எத்தை சொல்ல போனாலும் -இவனது சரீரமே /
வேதங்களின் படி செய்யும் கர்மங்களுக்கும் பலம் கொடுப்பவனும் நானே

த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஷ்சாக்ஷர ஏவ ச–க்ஷர ஸர்வாணி பூதாநி கூடஸ்தோக்ஷர உச்யதே–৷৷15.16৷৷
லோகே வேதத்தில் சொல்லப் பட்ட படி -ஷரன் அழிவுக்கு உட்பட்ட சரீரம் உடன் உள்ள பத்தாத்மா / அஷரன் -முக்தாத்மா -/
பூத ராசிகள் எல்லாம் ஷரன் -உயர்ந்த முக்தாத்மா அஷரன் -/ இருவரும் வேதத்தில் சொல்லப்பட்டன

உத்தம புருஷஸ்த்வந்ய பரமாத்மேத்யுதாஹரித–யோ லோகத்ரயமாவிஷ்ய பிபர்த்யவ்யய ஈஷ்வர–৷৷15.17৷৷
இவர்களை காட்டிலும் வேறு பட்ட புருஷோத்தமன் -பாரமான ஆத்மா -லோக த்ரயம் -சித் அசித் ஈஸ்வரன் தத்வ த்ரயங்கள் -சூழ்ந்து தங்குகிறான்
-ஸ்வாமி -நியமனம்-ஈசான சீலன் நியமன சாமர்த்தியம் – -வியாபிக்கிறான் -தரிக்கிறான் -தங்குகிறான் -/ மற்றவை வியாபிக்கப்படும் – தாங்கப்படும்- நியமிக்கப் படும் /

யஸ்மாத்க்ஷரமதீதோஹமக்ஷராதபி சோத்தம–அதோஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம—৷৷15.18৷৷
எதன் இடத்தில் இருந்து ஷரம் பத்தாத்மா –அஹம் சப்தம் இங்கு -தாண்டி அதீத வாசனை கூட இல்லை முகத்தாத்மா தாண்டி
-வேதங்கள் ஸ்ம்ருதிகள் என்னை புகழும் / ஸ்வரூப ஸ்வ பாவ விகாரங்கள் இல்லாமல்

யோ மாமேவமஸம்மூடோ ஜாநாதி புருஷோத்தமம்–ஸ ஸர்வவித்பஜதி மாம் ஸர்வபாவேந பாரத–৷৷15.19৷৷
யார் -என்னையே -சந்தேகம் இடம் இல்லாமல் -மயக்கம் இல்லாமல் -புருஷோத்தமன் என்று -அம்சமா அங்கமா அவயவமா ஐக்கியமா -சங்கை இல்லாமல்
அந்த ஆத்ம ஞானி -புருஷோத்தம வித்யை கை வந்தவன் எல்லாவற்றையும் அறிந்தவன் ஆகிறான் –அவனை அடையும் உபாயங்கள் எல்லாவற்றையும் அறிந்தவன் ஆகிறான்
-என்னை பக்தி செய்யும் எல்லா முறைகளாலும் பக்தி பண்ணுகிறான் -கண்ணன் அபிப்பிராயம் இது -இவற்றால் எனக்கு ஏற்படும் ஆனந்தம்
-புருஷோத்தம வித்யை அறிந்தவன் தெரிவதால் அடைகிறேன் என்றபடி

இதி குஹ்யதமம் ஷாஸ்த்ரமிதமுக்தம் மயாநக–ஏதத்புத்த்வா புத்திமாந்ஸ்யாத்கரிதகரித்யஷ்ச பாரத–৷৷15.20৷৷
புருஷோத்தம வித்யை அறிந்தவன் அனைத்தையும் அனுஷ்டித்தவன் ஆகிறான் -புனர் யுக்தி தோஷம் இல்லை -இதில் தான் அறிந்து அனுஷ்ட்டித்து அடைந்து
–செய்த வேள்வியர் – பூவை –யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் -வியாக்யானம் போலே -பேர் வைத்து ஆனந்தம் இல்லை
திருநாமங்கள் சொல்லி பெற்ற ஆனந்தம் உலக குழந்தைகள் இவை கொண்டு விளையாடும் ஆனந்தம் பராங்குச நாயகி பெற்றாள்-
அதே போலே இங்கும் முந்திய ஸ்லோகங்களும் அர்த்தம் -குஹ்ய தமமான சாஸ்திரம் —ரஹஸ்யமாக வைத்து கொள் -குற்றம் அற்ற அர்ஜுனன்-

————————————————————–

கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -14—-

June 6, 2017

குண பந்த விதா தேஷாம் கர்த்ருத்வம் தந் நிவர்த்தனம்
கதி த்ரய ஸ்ய மூலத்வம் சதுர்தச உதீர்யதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -18-

குண பந்த விதா -முக்குணங்களால் கட்டுப்பட்டு
தேஷாம் கர்த்ருத்வம் -இவற்றுக்கே கர்த்ருத்வம் -ஆத்மாவுக்கு இல்லை
தந் நிவர்த்தனம் -தாண்டி நிற்கும் உபாயம்
கதி த்ரய ஸ்ய மூலத்வம்–ஐஸ்வர்யம் கைவல்யம் பகவத் லாபார்த்தம் மூன்றுக்கும் தன் திருவடியே -பிராசங்கிக்கமாக –

முக்குண சேர்க்கை பிறவி காரணம் -அறிய படிக்கட்டு –ஆச்சார்ய ஹிருதயம் சொல்லுமே இந்த ஏழையும் -இது சூழல் -ஆதி அந்தம் காண முடியாதே –
-/7-படிகள் – நிரதிசய ஆனந்தம்-ஸ்ரீ வைகுண்டம் – -அனந்த கிலேச பாஜனம்-சம்சாரம் -கடைசி படிகள்
6-ஞாதவ்ய பஞ்சக ஞான அஞ்ஞானங்கள் -அடுத்த படி -ஞானம் ஏற்பட்டால் ஸ்ரீ வைகுண்டம் -இல்லாவிட்டால் சம்சாரம் /
-அர்த்த பஞ்சக -ஞானம் வருவதற்கு என்ன வேணும் 5–இவற்றுக்கு காரணம் இரண்டில் ஒன்றினில் ஒன்றுகைகள்-அதாவது –
சத்வா சத்வங்கள் -சத்வ குணம் இருந்தால் வரும் -ரஜஸ் தமஸ் களால் அஞ்ஞானம் -ஞானான் மோக்ஷம் அன்றோ –
அதற்கு என்ன பண்ணனும் -சத்வ குணம் வளர -4–ஜென்ம ஜாயமான கால கடாக்ஷம் -பிறப்பால் -ரஜஸ் தமஸ் /ஜாயமான கால கடாக்ஷம் –
இவற்றுக்கு மூலம் -3-இரு நல்லருள் நல் வினைகள் -கர்மமும் கிருபையும் -என்றபடி –
இவற்றுக்கு அடி-2–கர்மா க்ருபா பீஜம் பொய்ந்நின்ற ஞானம் – -அவித்யா ஸுஹார்த்தங்கள்-அருள் புரிந்த –
ஏதன் நிமித்தம் 1 முன்னமே முதல் முன்னமே யான அசித் அயன அநாதி சம்பந்தங்கள் -இது தான் கீழ் படிக்கட்டு
இவை கிட்டமும் வேட்டு வேளானும் போலே ஒண் பொருள் பொருள் அல்லாத என்னாதே நானில்லாத யானும் உளனாவான் என்கிற
சாம்யம் பெறத் தின்று ஊதி அந்தமும் வாழ்வும் ஆகிற ஹானி சத்தைகளை உண்டாக்கும் –
பரமாத்மா அசித் சாம்யம் சம்பந்திப்பவர்களை சாம்யம் ஆக்குவதில் சாம்யம் / சித் அசித் இரண்டும் சொத்து -என்பதில் சாம்யம் /-சித் பரமாத்மா ஞானம் சாம்யம் /
பஞ்சாக்கினி வித்யா பிரகரணம் —ஜென்மம் -பாப்பம் புண்ணியம் -எதனால் -உதங்க பிரஸ்னம் -உத்திரம் இல்லையே -/கர்மா ஆதி அற்றது -அந்தம் உண்டு –
கிருபையால் வெட்டி விட முடியும் -/
மேக மண்டலம் -வ்ருஷடி மழையாகி -பயிர் -தானியம் / அன்னம் / புருஷன் / ரேதஸ் சோணிதம் -கர்ப்பம் -/பூர்வ க்ருத கர்மா தான் நிர்ணயிக்கும் -/
கர்மா –ஜென்ம -அசத்வ குணம் –எதிர் நீச்சல் போட்டு சத்வ குணம் வளர்க்க -புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன் அடிக்க கீழ் அமர்ந்து புகுந்தேனே –
இதை விளக்க இந்த அத்யாயம் —-25 ஸ்லோகம் விவரித்து சொல்லி –26-ஸ்லோகம்- திருவடி பற்றி போக்கி கொள் என்கிறான்

—————————————————————-

ஸ்ரீ பகவாநுவாச-
பரம் பூய ப்ரவக்ஷ்யாமி ஜ்ஞாநாநாம் ஜ்ஞாநமுத்தமம்–யஜ்ஜ்ஞாத்வா முநய ஸர்வே பராம் ஸித்திமிதோ கதா–৷৷14.1৷৷
உயர்ந்த அர்த்தம் மறுபடியும் சொல்கிறேன் – -மிக வேறு பட்ட உயர்ந்த -இதை அறிந்தே எல்லா முனிவர்களும் சம்சாரம் தாண்டி ஆத்ம பிராப்தி
மோக்ஷம் அடைந்தார்களோ அத்தை உன்னிடம் அன்பினால் சொல்கிறேன் -முனி மனன சீலர் -இது நானே சொன்னது இல்லை -சர்வே முனிகளும் –

இதம் ஜ்ஞாநமுபாஷ்ரித்ய மம ஸாதர்ம்யமாகதா–ஸர்கேபி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச–৷৷14.2৷৷
முக்கிய ஸ்லோகம் – இந்த ஞானம் மூலம் -ஸ்ருஷ்ட்டி காலத்திலும் பிறப்பது இல்லை -பிரளய காலத்தில் அழிவதும் இல்லை-
முக்தன் ஆகிறான் -கிடைக்கும் பயனை சொல்லிய பின்பு உபாயம் சொல்லுவான் -ஐக்கியம் மோக்ஷம் இல்லை –
அபஹத பாப்மா –பாபங்கள் தீண்டாமல் விஜர–சத்யகாமம் ஸத்யஸங்கல்பம் அஷ்ட குணங்களில் சாம்யம் -அப்பும் அப்பும் அப்பும் உப்பும் -வாதம் –

மம யோநிர்மஹத்ப்ரஹ்ம தஸ்மிந் கர்பம் ததாம்யஹம்–ஸம் பவ ஸர்வபூதாநாம் ததோ பவதி பாரத–৷৷14.3৷৷
பிரகிருதி ஆத்ம சம்பந்தம் -புருஷ -ஜீவாத்மா –நைமித்திக ஸ்ருஷ்ட்டி இதில் -என்னுடைய மூல பிரகிருதி -மம-சொல்லிக் கொள்வதில் பெருமை இவனுக்கு
-இது மிக பெரியது -ஏ பாவம் பரமே -ஆழ்வார் இவனை-யானை மண்டபத்தில் தேடி கண்டு பிடிப்பது போலே -உலகம் ஏத்தும் தென் ஆனை இத்யாதி
ஜீவ சமஷ்டியை கர்ப்பமாக புகுத்துகிறேன் -ஆத்மாக்கள் சேர்ந்து -சமஷ்டி/ கர்ப்பமாக -சப்தம் -கர்ப்பம் கர்ப்ப பையா -சிசுவா -/
கர்ப்ப பைக்குள் சிசு இருந்தால் தானே -இணை பிரியாத –சப்தம் இங்கும் உபயோகம் -சரீரமா ஆத்மாவா என்று மயங்கும் படி அன்றோ ஸூ சகம் -/
கர்ப்பம் -ஜன்மா கொடுத்து கர்மா தொலைக்க -அதே போலே இங்கும் -/
ததா-அதனாலே -எல்லா ஜீவா ராசிகள் பிறப்பும் -நான்முகன் தொடக்கி எறும்பு வரை

ஸர்வயோநிஷு கௌந்தேய மூர்தய ஸம்பவந்தி யா–தாஸாம் ப்ரஹ்ம மஹத்யோநிரஹம் பீஜப்ரத பிதா–৷৷14.4৷৷
தன்னை தந்தை -பீஜப்ரத பிதா— சொல்லிக் கொள்கிறான் -அவனை பிரார்த்தித்து தானே வலி வர வேண்டும்
சரீரம் உடன் பலா யோனிகளில் -அவை அத்தனைக்கும் மஹத் மூல பிரகிருதி கர்ப்பம் தரிக்கும் -நான் பிதா

ஸத்த்வம் ரஜஸ்தம இதி குணா ப்ரகரிதிஸம் பவா–நிபத்நந்தி மஹாபாஹோ தேஹே தேஹிநமவ்யயம்–৷৷14.5৷৷
முக்குணங்கள் கட்டுப்படுத்துகின்றன -நேரே விஷயம் -அவதாரிகை மிக பெரியது -பிரகிருதி உடன் விட்டு பிரியாத -இவையும் சப்தாதி குணங்களும்
பிரகிருதி உடன் சேர்ந்தே தானே இருக்கும்
மண் கந்தவாதி பிருத்வி / நெருப்பு ரூபம் / தண்ணீர் ரசம் /வாதம் கபம் பித்தம் சமமாக இருந்தால் ஆரோக்யம் -ஆயுர் வேதம் சமமாக ஆக்கவே மருந்து
கபம் முதலில் இளைமையில் / நடுவில் பித்தம் தலை சுத்தும் / அப்புறம் வாதம் முட்டு வலிகள் போல்வன ./
முக்குணங்கள் சமம் -பிரளயம் -தேகத்தில் தேஹினாம் ஆத்மாவை இயற்கையில் அழிவற்றவன் -நன்றாக கட்டுப் படுத்தி வைக்கும்

தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத்ப்ரகாஷகமநாமயம்–ஸுகஸங்கேந பத்நாதி ஜ்ஞாநஸங்கேந சாநக–৷৷14.6৷৷
அநக -குற்றம் அற்ற -நிர்மலம் குற்றம் அற்ற -ஞானம் ஆனந்தம் தடை பண்ணாமல் -சத்வ குணம் அப்படி –ரோகம் அற்ற வாழ்வும் உண்மையான அறிவை
கொடுக்கும் சத்வ குணம் -யதார்த்த ஞானம் –சத்வ குணம் வளர்த்தாலும் பந்தம் -முக்குணங்களும் கட்டுப்படுத்தும் -முதல் படி சத்வம் வளர்ப்பது
-சுகம் கொடுக்கும் -ஆசை ஏற்படுத்தி கட்டுப்படுத்தும் -ஞானம் கொடுத்து கட்டுப் படுத்தும் –செயல் பாட்டில் மூட்டும் -பொன் விலங்கு போலே –
லௌகிக கார்யம் பண்ண வைக்கும் –

ரஜோ ராகாத்மகம் வித்தி தரிஷ்ணாஸங்கஸமுத்பவம்–தந்நிபத்நாதி கௌந்தேய கர்மஸங்கேந தேஹிநம்–৷৷14.7৷৷
ரஜோ குணம் -காமம் தூண்டு வித்து -விஷயாந்தர ஆசைகளை – சங்கம் -பத்னி புத்ராதிகள் இடம் ஆசை / கட்டுப்படுத்தும் –
ஆசைகளை நிறைவேற்ற செயல்பாட்டில் மூட்டும்

தமஸ்த்வஜ்ஞாநஜம் வித்தி மோஹநம் ஸர்வதேஹிநாம்–ப்ரமாதாலஸ்யநித்ராபிஸ்தந்நிபத்நாதி பாரத–৷৷14.8৷৷
தமஸ் -பிரமாதம் கவனக் குறைவு -கவனம் இன்மை /ஆலஸ்யம் சோம்பல்/ நித்திரை தூக்கம்/-மூன்றும் கொடுக்கும் —
அஞ்ஞானம் -விபரீத ஞானம் -தர்மத்துக்கு புறம்பாக மோஹிக்க வைக்கும் -அறிவு ஆசை மயக்கம் -சத்யம் -ரஜஸ் தமஸ் -மூன்றும்

ஸத்த்வம் ஸுகே ஸஞ்ஜயதி ரஜ கர்மணி பாரத–ஜ்ஞாநமாவரித்ய து தம ப்ரமாதே ஸஞ்ஜயத்யுத–৷৷14.9৷৷
சத்வம் சுகம் தோற்றுவிக்கும் -ரஜஸ் செயல்பாட்டில் தூண்டும் -அசாஸ்த்ர விஷயங்களில் -தூண்டும் -உள்ள படி அறிய
வேண்டிய ஞானத்தை தமோ குணம் மூடி விடும் -விதிக்கப்பட்ட கர்மாவை செய்யாமல் -நிந்தித்த கர்மங்களை செய்ய வைக்கும் –

ரஜஸ்தமஷ்சாபிபூய ஸத்த்வம் பவதி பாரத–ரஜ ஸத்த்வம் தமஷ்சைவ தம ஸத்த்வம் ரஜஸ்ததா–৷৷14.10৷৷
காலையில் சத்யம் -தேவ குணம் -பிடித்து மேலே ஏறி ஏணியை தள்ளி அவனை அடைய வேண்டும் -/
ரஜஸ் தமோ குணம் சூழ்ந்து கொண்டு சத்வ குணம் மேலோங்கி இருக்கும் –எல்லாம் புரியும் / ஆசை மிக்கு இருந்தால் -ரஜஸ் /
தூக்கம் வந்தால் தமோ / நமக்கே தெரியுமே / மூன்றும் மூன்று சமயங்களில் ஓங்கி இருக்கும்

ஸர்வத்வாரேஷு தேஹேஸ்மிந்ப்ரகாஷ உபஜாயதே–ஜ்ஞாநம் யதா ததா வித்யாத்விவரித்தம் ஸத்த்வமித்யுத—৷৷14.11৷৷
சத்வ குணம் வளர்ந்து இருக்கும் -தேகத்தில் ஞான பிரசுர ஆறு த்வாரங்களிலும் -ஞான இந்திரியங்களும் மனசும் –ஞானம் ஏற்பட்டால்
சத்வ குணம் ஓங்கி இருக்கும் -குருடன் செவிடனுக்கும் சத்வ குணம் உண்டு –
வேலை செய்தால் தான் என்பது இல்லை -பிரசாதத்தால் குருடன் பார்க்கிறான் -கூரத் தாழ்வான -யார் எதை கேட்டாலும் கொடுக்கும் -காண் தகு தோள் அண்ணல் /

லோப ப்ரவரித்திராரம்ப கர்மணாமஷம ஸ்பரிஹா–ரஜஸ்யேதாநி ஜாயந்தே விவரித்தே பரதர்ஷப–৷৷14.12৷৷
ரஜஸ் –கருமி தனம் உயர்ந்து -எனக்கே என்று -/விசித்ரா தேக சம்பந்தி கரணங்கள் அவனுக்கும் அடியாருக்கு தொண்டு செய்யவே /
பயன் அற்ற செயல்களில் மூட்டும் /-இந்திரியங்களை அடக்காமல் -அசமம் / விஷயாந்தரங்களில் ஆசைகளை மூட்டும் –

அப்ரகாஷோப்ரவரித்திஷ்ச ப்ரமாதோ மோஹ ஏவ ச–தமஸ்யேதாநி ஜாயந்தே விவரித்தே குருநந்தந–৷৷14.13৷৷
இருள் மூடி –படிப்பது காலையில் மிக பயன் கொடுக்கும் -ராக்ஷஸ வேளையில் ராஷஸ புத்தி தானே வரும் /
அந்யதா ஞானம் விபரீத ஞானம் மோஹம் விளைவிக்கும் –

யதா ஸத்த்வே ப்ரவரித்தே து ப்ரலயஂ யாதி தேஹபரித்–ததோத்தமவிதாஂ லோகாநமலாந்ப்ரதிபத்யதே৷৷14.14৷৷
சத்யம் வளர்ந்த தசையில் -பிராணன் போனால் சத்ய குண நிஷ்டர்கள் இடம் மீண்டும் பிறந்து -உயர்கிறான் –
-உத்தம வித்துக்கள் –ஆத்ம ஞானம் படித்த சமூகம் –

ரஜஸி ப்ரலயம் கத்வா கர்மஸங்கிஷு ஜாயதே–ததா ப்ரலீநஸ்தமஸி மூடயோநிஷு ஜாயதே–৷৷14.15৷৷
ரஜஸ் -கர்மங்களிலே மூட்டும் -அங்கே சேர்கிறான் -/ தமஸ் -ஸ்தாவரங்கள் யோனியில் -சங்கமாக ஞானம் அற்ற ஜென்மம் –

கர்மண ஸுகரிதஸ்யாஹு ஸாத்த்விகம் நிர்மலம் பலம்—ரஜஸஸ்து பலம் துக்கமஜ்ஞாநம் தமஸ பலம்–৷৷14.16৷৷
தமஸ் -அஞ்ஞானம் வளர்த்து கொள்கிறான்

ஸத்த்வாத்ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப ஏவ ச–ப்ரமாதமோஹௌ தமஸோ பவதோஜ்ஞாநமேவ ச—৷৷14.17৷৷
சத்வம் -ஆத்ம சாஷாத்காரம் – பலன்களில் ஆசை மூட்டும் ரஜஸ் / கவண் இன்மை விபரீத ஞானம் அஞ்ஞானம் தூண்டுவிக்கும் தமஸ்

ஊர்த்வம் கச்சந்தி ஸத்த்வஸ்தா மத்யே திஷ்டந்தி ராஜஸா–ஜகந்யகுணவரித்திஸ்தா அதோ கச்சந்தி தாமஸா–৷৷14.18৷৷
சத்வ குண நிஷ்டர் மேல் லோகம் -ரஜஸ் நடுவில் உழன்று -தமஸ் குண நிஷுடன் கீழே நரகில்

நாந்யம் குணேப்ய கர்தாரம் யதா த்ரஷ்டாநுபஷ்யதி–குணேப்யஷ்ச பரம் வேத்தி மத்பாவம் ஸோதிகச்சதி—৷৷14.19৷৷
முக்குணங்களில் வேறுபட்டவன் ஆத்மா –கர்மாதீனம் -என்று அறிந்து –ஆத்மாவை கர்த்தா இல்லை குணங்கள் செயல்
புரிய வைக்கின்றன -அறிந்தவன் அவன் நிலையை அடைகிறான் –

குணாநேதாநதீத்ய த்ரீந்தேஹீ தேஹஸமுத்பவாந்—ஜந்மமரித்யுஜராதுக்கைர்விமுக்தோமரிதமஷ்நுதே—৷৷14.20৷৷
முக்குணத்தினில் இரண்டை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று -இறுதியில் மூன்றையும் தாண்ட வேண்டும் –தேகம் உடன் சேர்ந்தே
உள்ள முக்குணங்களை தாண்டி ஆத்ம பிராப்தி அம்ருதம் அடைகிறான் -ஜென்மாதிகளை தாண்டுகிறான் –

அர்ஜுந உவாச
கைர்லிம் கைஸ்த்ரீந்குணாநேதாநதீதோ பவதி ப்ரபோ–கிமாசார கதம் சைதாஂஸ்த்ரீந்குணாநதிவர்ததே–৷৷14.21৷৷
அடையாளம் காட்டு இப்படி முக்குணங்களை தாண்டி இருப்பார்களே என்ன –நீயாவது ஆவாய் என்று பார்க்கிறேன் –
-லிங்கம் -உள் அடையாளங்களும் வெளி அடையாளங்களும் உடன் இருப்பான் -எப்படி தாண்டுகிறான் –

ஸ்ரீ பகவாநுவாச
ப்ரகாஷம் ச ப்ரவரித்திம் ச மோஹமேவ ச பாண்டவ–ந த்வேஷ்டி ஸம்ப்ரவரித்தாநி ந நிவரித்தாநி காங்க்ஷதி–৷৷14.22৷৷
முக்குண கார்யம் பிரகாசம் பிரவ்ருத்தி மோஹம் மூன்றையும் சொல்லி -தம் கார்யம் செய்யட்டும் -நமக்கு இவற்றுடன் ஒட்டு இல்லை -நான் கர்த்தா இல்லை
என்ற நினைவுடன் -அநிஷ்டம்-அநிஷ்ட காரணங்கள் வந்தால் வெறுக்காமல் இஷ்டம் இஷ்ட காரணங்கள் -வந்தால் விரும்பாமல் -இருந்து -உதாசீனனாக இருப்பான்

உதாஸீநவதாஸீநோ குணைர்யோ ந விசால்யதே–குணா வர்தந்த இத்யேவ யோவதிஷ்டதி நேங்கதே–৷৷14.23৷৷
எப்படி இருப்பான் -உதாசீனனாக -பக்கத்து வீட்டில் நடப்பது போலே -இருக்கலாம் -எல்லாம் அவன் சம்பந்தம் -விகாரம் அடையாமல் –
குணங்கள் இருக்கும் அவற்றின் காரியம் செய்யும் -நான் கர்த்தா இல்லை என்று இருப்பானே

ஸம துக்க ஸுக ஸ்வஸ்த ஸமலோஷ்டாஷ்மகாஞ்சந–துல்யப்ரியாப்ரியோ தீரஸ்துல்யநிந்தாத்மஸம் ஸ்துதி–৷৷14.24৷৷
கீழே உள் அடையாளம் -சுகம் துக்கம் சமம் –ஆத்மாவில் ஈடுபாட்டுடன் இருப்பான் இதுவே அடிப்படை -மண் கட்டி கல் பொன் அனைத்திலும்
துல்ய பிரிய அப்ரியமாக இருப்பான் -இவற்றை விட ஆத்மா உயர்ந்தது என்ற உண்மை அறிவு வந்தால் இது நடக்கும் -இது முதல் படி -அப்புறம் பரமாத்மா நோக்கி –
இனியது இனிமை இல்லாதது இரண்டிலும் துல்யமாக -தீர வரை வெளி அடையாளம் -வைதாலும் ஸ்தோத்ரம் பண்ணினாலும் சமம்

மாநாபமாநயோஸ்துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ–ஸர்வாரம்பபரித்யாகீ குணாதீத ஸ உச்யதே৷৷14.25৷৷
மானம் அவமானம் -விரோதி மித்ரன் சமம் -பிரகலாதன் -எங்கு பார்த்தாலும் அவனே -தேக கார்யம் செய்யாமல் ஆத்ம கார்யம் மட்டுமே
-ஆஸ்ரம தர்மங்களை விடாமல் -இப்படி முக்குணம் தாண்டி

மாம் ச யோவ்யபிசாரேண பக்தயோகேந ஸேவதே–ஸ குணாந்ஸமதீத்யைதாந் ப்ரஹ்மபூயாய கல்பதே–৷৷14.26৷৷
அசக்தனுக்கு -மாம் -பரம காருணிக்கம் உனக்கு நன்மை செய்ய காத்து -அனன்யா பக்தி யோகம் -பிரயோஜனாந்த சம்பந்தம் இல்லாமல்
-சேவை பஜனம் பண்ணி முக்குணங்களை எளிதில் தாண்டுகிறான் –

ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹமமரிதஸ்யாவ்யயஸ்ய ச–ஷாஷ்வதஸ்ய ச தர்மஸ்ய ஸுகஸ்யைகாந்திகஸ்ய ச—৷৷14.27৷৷
கதி த்ரயம் -மூன்றுக்கும் அவனே -/ அம்ருதம் மரணம் அற்ற அழிவற்ற ஆத்ம பிராப்திக்கு கைவல்யார்த்திக்கு நானே உபாயம் /
சாஸ்வத பக்தி செய்து ஐஸ்வர்யம் கேட்டாலும் -என்னையே கேட்டாலும் நானே உபாயம் /

—————————————————-

கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -13—-

June 6, 2017

கீதா ஸூ கீதா கர்தவ்ய கிம் அந்யகி சாஸ்த்ர சங்க்ரஹி –யா ஸ்வயம் பத்ம நாபஸ்ய முக பத்மத் வினிஸ்ரயா —
ஸ்ரீ கீதை இனிமை -ஸ்ரீ கீதாச்சார்யன் தானே சோதி வாய் திறந்து அருளிச் செய்தது -இத்தை அறிந்தால் வேறே சாஸ்திரம் அறிவு வேண்டாமே –

பிரதான புருஷ வ்யக்த சர்வேஸ்வர விவேச நம்
கர்ம தீர் பக்திரித்யாதி பூர்வ சேஷோஅந்தி மோதித –4-

பிரதான புருஷ வ்யக்த சர்வேஸ்வர விவேச நம் -மூல பிரகிருதி ஜீவன் -பிரக்ருதியி இருந்து உண்டாகும் மஹான் போன்றவை -சர்வேஸ்வரன் -பற்றியும் –
கர்ம தீர் பக்திரித்யாதி -பூர்வ சேஷோஅந்தி மோதித –கர்ம ஞான பக்தி யோகங்களில் எஞ்சி உள்ளவற்றையும்
முதல் மூன்றால் -தத்வ ஞானம் விசாரம் / அடுத்த மூன்றால் அனுஷ்டானம் பண்ணும் முறைகள் –
சொல்லி முடித்ததும் பெரிய சோகம் -அர்ஜுனனுக்கு -ஆராய்ந்து பார் -சரியானதை பண்ணு பொறுப்பை தலையில் போட்டான் –
கீழே ஒன்றும் தெரிதா சோகம் -இங்கு இவன் பெருமையை அறிந்த பின்பு வந்த சோகம் -சரம ஸ்லோகம் சொல்லி -சோக நிவ்ருத்தி

தேஹ ஸ்வரூபம் ஆத்மாப்தி ஹேது ஆத்மவிசோதநம்
பந்த ஹேதுர் விவேகஸ்ஸ த்ரயோதச உதீர்யதே –17-

1-தேஹ ஸ்வரூபம் -தேகத்தின் இயற்க்கைத் தன்மை
2-ஆத்மாப்தி ஹேது -ஆத்மா அடையும் உபாயம் -20–ஆத்ம குணங்கள் விளக்கி –
3-ஆத்மவிசோதநம் -ஆத்ம விசாரம் -ஆராய்ச்சி
4-பந்த ஹேதுர் -ஆத்ம பந்த காரணம்
5-விவேகஸ்ஸ -பகுத்து அறிதல் –

——————————————

அர்ஜுந உவாச-
ப்ரகரிதிம் புருஷம் சைவ க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞமேவ ச–ஏதத்வேதிதுமிச்சாமி ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச கேஷவ—৷৷13.1৷৷

ஸ்ரீ பகவாநுவாச
இதம் ஷரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யபிதீயதே–ஏதத்யோ வேத்தி தம் ப்ராஹு க்ஷேத்ரஜ்ஞ இதி தத்வித—-৷৷13.2৷৷
இதம் -சுட்டி காணும் பொருள் -வஸ்து நிர்தேசம் -ஆத்மாவை பார்த்து இதம் சொல்ல முடியாதே -இதுவே வாசி –கண்ணால் பார்க்கும் பொருள்கள் அழியும்
-அழியாத ஆத்மா நித்யம் குந்தி புத்ரன் -ப்ருதா பிள்ளை பார்த்தா -க்ஷேத்ரம் -விளை நிலம் சரீரம் என்று சொல்லப் படுகிறது
-தான் சொன்னேன் என்பதை விட- உபநிஷத் வேதம் ரிஷிகள் -சொல்வதை உயர்த்தி சொல்வான் –
பயிர் என்ன -கேள்வி வருமே -நல்ல குணங்களை வளர்க்க கொடுத்தேன் -நாமோ சரீரம் போகும் படி -அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழியில் உழல்வேன் –
போகத்துக்கு விளைச்சல் –இத்தை யார் க்ஷேத்ரம் என்று அறிந்து கொள்பவன் -ஷேத்திரஞ்ஞன்-ஆத்மாவுக்கு -பெயர்-உழவன் என்றபடி –
சரீரமே தான் இல்லை -தன்னுடைய சரீரம் என்று உணர வேண்டுமே -சாருவாக மதம் -வாய் பந்தல் போலே பேசி-ஜாபாலி வசனம் –
அநஹம் -அஹம் என்று மயங்குவது தேஹாத்ம பிரமம் -லோகாயத மதம் கண்டதே காட்சி கொண்டதே கோலம் –
நீ பார்க்காதது எல்லாம் பொய்யாகாதே-ஆத்ம தத்வம் வேறு தான் சரீரம் வேறு தான் -பகுத்து அறிவு -தேஹம் ஆத்மா பகுத்து அறிவதே இது –
ஆத்ம ஷேமத்துக்கு என்ன செய்ய வேன்டும் -என்ற எண்ணம் வர வேண்டுமே -வல்லப தேவன் -பெரியாழ்வார் பரத்வ நிர்ணயம் –
ஸூஷ்மமான வஸ்து தானே முக்கியமாக இருக்கும் –மூடர்கள் அறியாமல் இழக்கிறார்கள் -ஞான கண் தியானம் மூலமே அறியலாம் –
நெஞ்சமே நீள் நகராக இருக்கும் என் தஞ்சனே -அவகாசம் பார்த்து -உள்ளுவார் உள்ளத்து உடன் இருந்து –

க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்தி ஸர்வக்ஷேத்ரேஷு பாரத–க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோர்ஜ்ஞாநம் யத்தஜ்ஜ்ஞாநம் மதம் மம–৷৷13.3৷৷
என்னுடைய மதம் -இதுவே ஞானம் -ஷேத்ரஞ்ஞானாகவும் என்னை அறிந்து கொள் -உம்மை -என்றது சரீரமும் அவன் உடைமை -யானும் நீ என் உடைமையும் நீ
-ச அபி மாம் வித்தி –தத்வ த்ரய சம்ப்ரதாயம் -விசிஷ்ட ப்ரஹ்மம் -விசிஷ்டா த்த்வைதம் –விசிஷ்டா அத்வைதம் -கூடி உள்ள ப்ரஹ்மம் ஒன்றே –
சித்துடனும் அசித்துடனும் கூடிய ப்ரஹ்மம் ஒன்றே இரண்டாவது இல்லை -இரண்டும் இவன் சொத்து –நிலமாகவும் உள்ளவனாகவும் என்னை தெரிந்து கொள்
-பரம சேதனன் -நிலத்துக்கு ஒன்றாக படிக்கலாமா -சரீரம் உடன் ஜீவாத்மா கூடி இருக்க சரீரத்தை சொல்வது ஆத்மா அளவும் போகுமே
-சரீரத்துக்கு பெயர் தனது என்று தெரியாது -சரீரம் உடையவன் என்று ஆத்மா அறிகிறான் -அடை பற்ற தன்மை பத்தாத்மா -நீங்கி முக்தாத்மா
-செயற்கை – வந்தேறி கழிந்து ஸ்வரூப ஆவிர்பாவம் -அப்ருதக் சித்தி –தனித்து இல்லாமை -கூடியே இருக்கும் –
சரீராத்மா பாவம் -இல்லத்துக்கு அல்லதும் அவன் உரு – ஐ ததாத்மம் இதம் சர்வம் -/இதம் சர்வம் -இங்கும் சுட்டிக் காண்பிக்கிறான்

தத்க்ஷேத்ரம் யச்ச யாதரிக் ச யத்விகாரி யதஷ்ச யத்–ஸ ச யோ யத்ப்ரபாவஷ்ச தத்ஸமாஸேந மே ஷ்ரரிணு–৷৷13.4৷৷
க்ஷேத்ரம் பற்றியும் -எத்தனால் செய்யப்பட்டதோ எவற்றுக்கு இருப்பிடமோ ஏதுவாக பரிணாமம் -என்ன பிரயோஜனம் -ஆத்மா சிறப்புக்களையும் சொல்கிறேன் கேள் –

றஷிபிர்பஹுதா கீதம் சந்தோபிர்விவிதை பரிதக்–ப்ரஹ்மஸூத்ரபதைஷ்சைவ ஹேதுமத்பிர்விநிஷ்சதை—-৷৷13.5৷৷
கற்பனை இல்லை -ரிஷிகள் முன்பே சொல்லி -வேத வேதாந்தங்கள் -ப்ரஹ்ம ஸூ த்ரம் -யுக்தி போன்றவற்றால் பகுத்து சொல்லப் பட்டன –

மஹாபூதாந்யஹங்காரோ புத்திரவ்யக்தமேவ ச–இந்த்ரியாணி தஷைகம் ச பஞ்ச சேந்த்ரியகோசரா–৷৷13.6৷৷
எத்தால் -செய்யப்பட்டது -பிரகிருதி மஹான் அஹங்காரம் -சாத்விக/ ராஜஸ /தாமச -பஞ்ச பூதங்களும் தன்மாத்திரைகளும் -தாமசம் இருந்து –
பூதாதி -இந்திரியங்கள் கர்ம ஞான மனஸ் -தன்மாத்திரைகள் –சப்தாதிகள் ஸாத்வீகத்தில் இருந்து / பொங்கு ஐம் புலனும் இத்யாதி –
புத்தி என்றது மஹான் -அவ்யக்தம் -மூல பிரகிருதி என்றவாறு /தஸ்ய ஏகஞ்ச மனஸ் உயர்ந்தது என்பதால் –

இச்சா த்வேஷ ஸுகம் துக்கம் ஸங்காதஷ்சேதநாதரிதி–ஏதத்க்ஷேத்ரம் ஸமாஸேந ஸவிகாரமுதாஹரிதம்—৷৷13.7৷৷
இவை சேர்ந்ததால் படும் பாட்டை -விருப்பம் த்வேஷ சுகம் துக்கம் -பூதங்கள் கூட்டரவால் -அனுபவிக்க -விகரித்து கொண்டே இருக்கும் -ஆத்மா மாறாதே –
சரீரம் கலப்படம் -என்பதால் பரிணாமம் -ஆகும் -அனுபவம் ஆத்மாவுக்கு தானே -சரீரத்துக்கு சொல்லுவான் என் -ஆத்மா இருந்தால் தானே
இவை அனுபவம் -இயற்கையில் ஆத்மாவுக்கு இல்லை -சரீரம் சம்பந்தம் இருப்பதால் தானே -அதனால் சொல்லலாமே –
தர்ம பூத ஞானத்தின் காரணம் தான் இவை –

அமாநித்வமதம்பித்வமஹிம் ஸா க்ஷாந்திரார்ஜவம்–ஆசார்யோபாஸநம் ஷௌசம் ஸ்தைர்யமாத்மவிநிக்ரஹ–৷৷13.8৷৷
மேல் -ஐந்து ஸ்லோகங்களால் -20-குணங்கள் -இதில் -9-/–
-1-அமானித்வம் மரியாதை உடன் பெரியோர் இடம் -மானம் உடையவன் மாநி-கிம் கரோ -பெருமாள் விசுவாமித்திரர் –வயோ வ்ருத்தர் திருவடிகளில் தலையை வைத்து /
-2-அதம்பித்தவம் தம்பம் இல்லாமை -எல்லாம் அவன் சொத்து தானே
–3-அஹிம்சா -பூதங்கள் மேல் வாக்காலும் மனசாலும் கரணங்களாலும்-பிள்ளை பிள்ளை ஆழ்வான் -கூரத் தாழ்வான் சம்வாதம் –
மானஸ பாகவத அபசாரம்-யாருக்கும் தெரியாமல் -ராமானுஜர் இடம் சமர்ப்பித்தால் அடையலாம் /-
4- ஷாந்தி-கலங்காமல் பொறுத்து -5-ஆர்ஜவம்-முக்கரணங்கள் நேர்மை /-6-ஆச்சார்ய உபாசனம்-கைங்கர்யம் /
-7-க்ஷவ்சம் -சுத்தி முக்கரணங்களாலும்-வர்ணாசிரமம் விடாமல் / -8-ஸ்தைர்யம்–கலங்காமல் -உறுதியாக -அசஞ்சலமான பக்தி வேண்டுமே
-9-ஆத்ம விநிக்ரஹம் -மனஸ் அடக்கம் -/

இந்த்ரியார்தேஷு வைராக்யமநஹங்கார ஏவ ச—ஜந்மமரித்யுஜராவ்யாதிதுகதோஷாநுதர்ஷநம்–৷৷13.9৷৷
10–இந்திரியங்கள் ஓடுவதை இழுத்து வைராக்யம் வளர்த்து -சப்தாதிகளில் வைராக்யம்–11 -அஹம் அல்லாத தேகத்தை அஹமாக
நினைக்காமல் –12/ஜன்மா இறப்பு மூப்பு வியாதி துக்க தோஷ தர்சனம்

அஸக்தரநபிஷ்வங்க புத்ரதாரகரிஹாதிஷு–நித்யம் ச ஸமசித்தத்வமிஷ்டாநிஷ்டோபபத்திஷு–৷৷13.10৷৷
13–அசக்தி -பற்று அற்ற தன்மை -ஆத்ம விஷயத்தை தவிர வேறு ஒன்றிலும் ஆசை இல்லாமை /14–புத்ரன் தாரம் வீடு இவற்றில் மிகுந்த ஆசை வைக்காமல்
-இவை அநித்தியம் -நித்தியமான உறவு -கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தாய் தந்தை அவனே /ஆத்மசிந்தனை பண்ணும் உறவினர்கள் இடமே பற்று வைத்து /
கர்ணன் விபீஷணன் வாசி உண்டே – /15–நித்தியமாக சம சித்தம் இஷ்டங்கள் அநிஷ்டங்கள் -ஹர்ஷ கோபம் இல்லாமல் /

மயி சாநந்யயோகேந பக்தரவ்யபிசாரிணீ–விவிக்ததேஷஸேவித்வமரதிர்ஜநஸம் ஸதி–৷৷13.11৷৷
16–அவன் இடமே அநந்ய அசையாத பக்தி செலுத்தி /17–தனிமையிலே இருக்கும் ஆசை கொண்டு சிந்தனைக்கு ஏற்ற /
18–ஜனக் கூட்டங்கள் கண்டாலே ஓடி -பாம்பை கண்டால் போலே /

அத்யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்த்வஜ்ஞாநார்ததர்ஷநம்–ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநம் யததோந்யதா–৷৷13.12৷৷
–19-ஆத்ம சிந்தனம் ஈடுபாடு /20— தத்வ ஞானம் தியானம் சிந்தனை -இவையே ஞானம்-மற்றவை எல்லாம் அஞ்ஞானங்கள்

ஜ்ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வாமரிதமஷ்நுதே–அநாதிமத்பரம் ப்ரஹ்ம ந ஸத்தந்நாஸதுச்யதே–৷৷13.13৷
இது முதல் ஆத்ம ஸ்வரூபம் -விசாரம் -யத்தை அறிந்து கொண்டு சம்சாரம் தொலைத்து -அம்ருதம் -ஆத்ம பிராப்தி -அந்த ஞானம் உபதேசிக்கிறேன்
-ஆத்ம சாஷாத்காரம் பற்றியும் ஆத்மாவின் ஏற்றமும் -சொல்கிறேன் -அநாதி -பிறப்பு இறப்பு இல்லை
-மத் பரம் -எனக்கு அடிமை -சேஷத்வம் தானே முதலில் அறிந்து கொள்ள வேன்டும் /ப்ரஹ்மம் -பெரியது என்றபடி -ஸூஷ்மம்-இருந்தாலும் ப்ரஹ்மம் சப்தம்
-ஒரே வார்த்தை பல அர்த்தங்களில் வரும் -ஆத்மா ஆகாரம் ஸ்வரூபம் ரூபத்தால் பெரியது இல்லை -தர்ம பூத ஞானத்தால் பரந்து இருக்குமே /
ஆத்ம ஸ்வரூபம் ஞான மாயம் -ஞானத்தால் ஆனந்தத்தால் பண்ணப் பட்டு -இல்லாத வஸ்து தானே பண்ணப்படும்-அதனால் இப்படி சொல்ல கூடாது
– நித்யம் -ஞானமயம் ஆனந்தமயம் -என்றவாறு -ஞானமயமான ஆத்மா ஞானம் உடையவனாயும் இருக்கும் -இதுவே தர்ம பூத ஞானம் -என்னுடைய ஞானம் என்றபடி -/
நான் என்று அறிவது தர்மிக் ஞானம் தூங்கினாலும் நன்றாக தூங்கினேன் என்பது போலே -/ஞான குணகத்வம் ஞான மயம் இரண்டும் உண்டே /
உடம்பு எங்கு வலித்தாலும் உணர்வது தர்ம பூத ஞானத்தால்
கார்ய தசையில் சத் இருக்கிறது என்றும் சொல்ல முடியாது /காரண தசையில் இல்லை என்றும் சொல்ல முடியாதே -சத் அசத்-என்றும் சொல்ல முடியாது

ஸர்வத பாணிபாதம் தத்ஸர்வதோக்ஷிஷிரோமுகம்–ஸர்வத ஷ்ருதிமல்லோகே ஸர்வமாவரித்ய திஷ்டதி–৷৷13.14৷৷
ஜகத் உள்ள பதார்த்தங்கள் எங்கும் ஞானத்தால் வியாபித்து இருக்கிறான் -தர்ம பூத ஞானம் -எங்கும் பரவும் -சக்தி வளர்க்க உடம்பை விட்டு
வெளியிலும் பரவும் -ஞானம் வளர்த்தால் முக்த ஆத்மா ஆகிறான்
கையும் காலும் எத்தை செய்யுமோ அவை இல்லாமல் பண்ணுகிறான் -கண்ணும் தலையும் முகமும் லோகத்தில் பண்ணுவதையும் இவை இல்லாமலே செய்கிறான்
-சங்கல்ப சக்தியால் செய்வான் -இந்திரிய வஸ்யத்தை பத்தாத்மாவுக்கு தானே –
இத்தனை அடியாரானார்க்கு -சிறிய அளவு பக்திக்கு இரங்கும் அரங்கன் பித்தன் -அன்றோ -பித்தனை பெற்றும் அன்றோ பிறவியில் பிணங்குமாறே-
லோகத்தில் காது கொண்ட கார்யம் -எங்கும் நீக்கமற நிறைந்து உள்ள முக்தாத்ம ஸ்வரூபம் விளக்குகிறான்

ஸர்வேந்த்ரியகுணாபாஸம் ஸர்வேந்த்ரியவிவர்ஜிதம்–அஸக்தம் ஸர்வபரிச்சைவ நிர்குணம் குணபோக்தரி ச–৷৷13.15৷৷
எல்லா இந்த்ரியங்களாலும் அறிய வேண்டியதை அறிந்து அனுபவிக்கிறான் –பத்த தசையில் இது –துரந்து விலகி விட்டான்-ஸர்வேந்த்ரியவிவர்ஜிதம்– -முக்த தசையில் –
சங்கல்ப சக்தி ப்ரஹ்மம் போலே முக்தாத்மாவுக்கும் உண்டே -ஜகத் வியாபாரம் வர்ஜம் –அடிப்படை ஞானம் சேஷ பூதன் இருக்கும் பொழுது செய்ய மாட்டானே –
அசக்தம் -தேவாதி சரீரங்களில் சேராமல் இருப்பான்-முக்த தசையில் /எல்லா சரீரங்களையும் தானே தங்குகிறான் பக்த தசையில்
-நிர்குணம் -முக்த தசை / குணம் தாக்குதல் பத்த தசையில் -வேறுபாட்டை அறிந்து அதை அடைய ஆசை வருமே –
ச ஏகதா பார்வதி –சஹஸ்ரதா பவதி —காம ரூப்யன் சஞ்சரன் -ஒளியில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை செய்வான் –

பஹிரந்தஷ்ச பூதாநாமசரம் சரமேவ ச–ஸூக்ஷ்மத்வாத்ததவிஜ்ஞேயம் தூரஸ்தம் சாந்திகே ச தத்–৷৷13.16৷৷
வெளியில் உள்ளே பூதங்களுக்கு -வியாபித்து -அசையாதவனாயும் -முக்த -தசை / அசைபவன் -பத்த தசை -ஓடி ஆடி வாழ வேன்டும் -முக்த தசையில் வேண்டாமே
/ஸூஷ்மாக இருப்பதால் பகுத்து அறிவது துர்லபம் -/ வெகு தூரத்தில் -கிட்டத்தில் -அணியன் சேயன் போலே / அகலில் அகலும் -தள்ளிப் போனால் தள்ளி போவான் -/
-20-குணங்களை அப்யசித்தால் கிட்டே / இல்லை என்றால் தூரஸ்தன் -/நான் -தள்ளி இருந்தால் என்று
உணர உணர குணங்களை வளர்ப்போம் –நீ நீயாக இருக்க அப்பியாசம் வேன்டும்

அவிபக்தம் ச பூதேஷு விபக்தமிவ ச ஸ்திதம்–பூதபர்தரி ச தஜ்ஜ்ஞேயம் க்ரஸிஷ்ணு ப்ரபவிஷ்ணு ச–৷৷13.17৷৷
பண்டிதர்கள் – நிஷ்க்ருஷ்ட வேஷம் பார்த்து சமமாக -ஞான மயன் ஆனந்த மயன் சேஷ பூதன்-என்றே பார்த்தால் சமம் தானே —
-ரகு குணன் -ஜட பரதர் -சரித்திரம் பல்லக்கு -தூக்கி /
ஆத்மாவுக்கு தண்டனை கொடுக்க முடியாதே -சரீரத்துக்கு தானே -ஆத்மா உன்னை தூக்க வில்லையே -/ நீர் யார் -எங்கு இருந்து வந்தீர் எதற்க்காக வந்தீர்
-கர்மா தொலைக்க தானே நீயும் நானும் -கிருபா பலன் கொண்டே கர்மம் தொலைக்க முடியும் — அருள் என்னும் ஒள் வாள் வெருவியே தீர்க்க முடியும் -/
வேறுபாடு -சரீர விசிஷ்டமாக இருக்கும் பொழுது -ஞான சஷூஸால் பார்த்தால் தானே ஒன்றாக தெரியும்
பூதங்கள் தாங்கி -அன்னம் புஜித்து -ரேதஸ் கர்ப்பம் இவற்றுக்கு காரணம் போலே தோன்றும் -சரீர சம்பந்தம் தானே -இதற்கு காரணம் –

ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதிஸ்தமஸ பரமுச்யதே–ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஜ்ஞாநகம்யம் ஹரிதி ஸர்வஸ்ய விஷ்டிதம்–৷৷13.18৷৷
எல்லாருடைய ஹிருதயத்தில் நிலை நின்று -தர்ம பூத ஞானம் பிரகிருதி இருளை விட மேம்பட்டது -ஜோதிஷ பதார்த்தங்கள் எல்லாம் இருள் போலே இதன் ஏற்றம் பார்த்தால்
-விளக்கு எரிவதை நம் ஞானத்தால் அறிகிறோம் -அதே போலே ஸூரியன் ஒளியையும் நம் ஞானத்தால் தானே அறிகிறோம் /
ஞானம் என்று அறிந்து ஜடத்தை விட வேறுபட்டவன் -சரீரம் வேறு ஆத்மா வேறு -/ சரீர சம்பந்தத்தால் தானே இந்த பாடு
-மீண்டும் மீண்டும் சொல்லி -/-20-சாதனங்களால் அறிய படுகிறான் –

இதி க்ஷேத்ரம் ததா ஜ்ஞாநம் ஜ்ஞேயம் சோக்தம் ஸமாஸத–மத்பக்த ஏதத்விஜ்ஞாய மத்பாவாயோபபத்யதே–৷৷13.19৷৷
இது காறும் சொன்ன ஸ்லோகங்களால் -சொன்னதை தொகுத்து -பலனையும் அருளிச் செய்கிறான் -சரீரம் பற்றியும் -ஆத்மா அடைய -20-குணங்களை பற்றியும்
-ஆத்மாவை பற்றியும் -சொல்லி மேலே என் பக்தன் இவற்றை அறிந்து என் நிலையை அடைகிறான் –சம்சாரம் ஒட்டு அற்ற தன்மை -என்றவாறு -மத் பாவம் –

ப்ரகரிதிம் புருஷம் சைவ வித்த்யநாதீ உபாவபி–விகாராம் ஷ்ச குணாம் ஷ்சைவ வித்தி ப்ரகரிதிஸம் பவாந்–৷৷13.20৷৷
நான்கு ஸ்லோகங்களால் பிரக்ருதி ஆத்மா சேர்வதை பற்றி விளக்குகிறான் -எதனால் பந்தம் எப்படி பந்தம் -விவேக ஞானம் வளர்க்க -அருளிச் செய்கிறான் –
மூல பிரகிருதி காரணமான சரீரம் -ஜீவன் -அநாதி காலமாக பந்தப் பட்டு உள்ளார்கள் என்று உணர்ந்து கொள் —
விகாரம் -சரீரத்தால் ஏற்படும் தீய குணங்கள் -நல்ல -20-குணங்கள் -பிரகிருதி சம்பந்தத்தால் என்று உணர்ந்து கொள் –

கார்யகாரணகர்தரித்வே ஹேது ப்ரகரிதிருச்யதே–புருஷ ஸுக துக்காநாம் போக்தரித்வே ஹேதுருச்யதே–৷৷13.21৷৷
சேர்க்கையால் -என்ன பயன் -/கர்த்ருத்வம் -போக்த்ருத்வம் -செயல்பாடு சக்தி -அனுபவிக்கும் சக்தி -செய்பவனும் அனுபவிப்பவனும் ஜீவாத்மா
-விதைத்தவன் வினை அறுப்பான் கார்யம் -சரீரம் -கரணங்கள் இந்திரியங்கள் மனஸ் –இவற்றின் வியாபாரம் -காரணம் பிரகிருதி
-சரீரம் -கர்த்ருத்வம் சரீரத்தின் தலையில் வைக்கிறான் -இயற்கையில் ஆத்மாவுக்கு குற்றம் இல்லையே -புருஷ ஜீவாத்மா போக்தாவாக
-சுகம் துக்கம் -கர்ம பலன் அனுபவிக்கிறான் -இப்படி பிரித்து -ஆத்மாவால் தானே செய்ய முடியாதே -சரீரம் அனுபவிக்க முடியாதே –
ஜீவாத்மாவால் அதிஷ்டான சரீரத்துக்கு கர்த்ருத்வம் -சேர்க்கையின் பயனே இது தானே -/

புருஷ ப்ரகரிதிஸ்தோ ஹி புங்க்தே ப்ரகரிதிஜாந்குணாந்–காரணம் குணஸங்கோஸ்ய ஸதஸத்யோநிஜந்மஸு–৷৷13.22৷৷
ஜீவன் சரீரத்தில் இருந்து உண்ணுகிறான் -அனுபவிக்கிறான் -பிரகிருதி சம்பந்தத்தால் பிறந்த சத்வ ரஜஸ் தமஸ் குணங்களை அனுபவிக்கிறான் –
–ஹி -ஆச்சர்யம் -இயற்கையில் இல்லையே -அனுபவிக்க தேவை இல்லாதவன் அன்றோ இப்படி படுகிறான் /
சேரக் காரணம் –ஆசையே -இதனால் பிறந்து –பீஜாங்குர நியாயம் -விதை முளை -/ துக்க சுழலை/ சத் -தேவாதி அசத் திர்யக்காதிகள்-பற்றுதல் காரணம் –
செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும் அத்தை தின்று அங்கே கிடக்கும் -இதன் -அர்த்தமே பிரக்ருதியிலே கிடக்கும் –

உபத்ரஷ்டாநுமந்தா ச பர்தா போக்தா மஹேஷ்வர–பரமாத்மேதி சாப்யுக்தோ தேஹேஸ்மிந்புருஷ பர—৷৷13.23৷৷
பார்க்கிறான் -அனுசந்திக்கிறான்- தரிக்கிறான் -அனுபவிக்கிறான் -தேக இந்திரியங்களை விட உயர்ந்து -நியமித்து –
-இப்படி வாசி இருக்கும் பொழுது உழல்கின்றார்களே

ய ஏவம் வேத்தி புருஷம் ப்ரகரிதிம் ச குணைஸஹ–ஸர்வதா வர்தமாநோபி ந ஸ பூயோபிஜாயதே–৷৷13.24৷৷
மேல் விவாக ஞானம் –பலத்தை சொல்லி அப்புறம் எப்படி -ஆசை இருக்க வேண்டுமே -உயர்ந்த பலனை நினைக்க நினைக்க வேலைக்கு வருவோம்
–34-ஸ்லோகத்தில் சொல்ல வேண்டியதை விவேகித்து -உணர்ந்தவன் -புருஷன் பிரகிருதி -குணங்களை பிரித்து அறிபவன் -சரீரத்துக்கு உள்ளே இருந்தாலும்
-மறு படியும் பிறப்பது இல்லை -பிறகு எடுக்க யோக்யதை இல்லாமல் ஆத்ம பிராப்தி அடைகிறான்
-அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர் -பற்று அற்றது -என்றால் -வாசி அறிந்து -வீடு உற்றது

த்யாநேநாத்மநி பஷ்யந்தி கேசிதாத்மாநமாத்மநா–அந்யே ஸாம் க்யேந யோகேந கர்மயோகேந சாபரே–৷৷13.25৷৷
மூன்று ஸ்லோகங்களில் யோகம் -மேலே மேலே கொஞ்சம் கீழ் நிலைகள் -இதில் அசக்தனுக்கு அது –
யோகம் கை கூடிய நிலை -முதலில் சொல்லி -இதிலே -கர்ம ஞான யோகம் அனுஷ்டானம் செய்பவன்
ஆத்ம -சப்தம் -சரீரம் மனஸ் ஜீவாத்மா மூன்று -அர்த்தங்கள்
மனசால் சரீரம் ஸ்தானம் உள்ள ஆத்மா விஷயம் அறிந்து -தியானத்தால் -ஆத்மாவை மனசு என்னும் கருவியால் பார்க்கிறான் -விவேகித்து அறிகிறான் என்றபடி
யாரோ சிலர் தான் இந்த நிலையில் இருப்பர் -அது முடியாதவர் -ஞான யோகத்தால் -இன்னும் சிலர் கர்ம யோகத்தால் அறிய பார்ப்பார்கள் –

அந்யே த்வேவமஜாநந்த ஷ்ருத்வாந்யேப்ய உபாஸதே–தேபி சாதிதரந்த்யேவ மரித்யும் ஷ்ருதிபராயணா–৷৷13.26৷৷
மூன்றாம் நிலை இன்னும் சிலர் -உபதேசம் காது கொடுத்து -கேட்டு -உபாஸிக்க பார்க்கிறார்கள் கர்ம யோகம் ஆரம்பிக்க வில்லை ஸ்ரத்தை உள்ளவர்கள்
இன்னும் சிலர் ஸ்ருதி பராயணர் -கேட்பதில் மட்டும் இச்சை கொண்டு -தே பி -இவர்களும் கூட -சம்சாரம் கடலை தாண்டுகிறான் –
இவனே தாண்டினால் மற்றவர்கள் தாண்டுவார்கள் சொல்ல வேண்டாமே -சங்கை இல்லை -மிருத்யு -சம்சாரம்

யாவத்ஸஞ்ஜாயதே கிஞ்சித்ஸத்த்வம் ஸ்தாவரஜங்கமம்–க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞஸம் யோகாத்தத்வித்தி பரதர்ஷப–৷৷13.27৷৷
விவேகிக்கும் உபாயம் -பரத குலத்தில் மிக உயர்ந்தவன் -தாழ்ந்து இருந்தால் இந்த அர்த்தங்கள் அறிய முடியாதே –ஜந்துக்கள் –
யாவத் –தாவத் -ஓன்று விடாமல் எல்லாம் -ஸ்தாவர ஜங்கமங்கள் மனுஷ்யர் தேவர்கள் – எல்லாம் -பிரகிருதி ஜீவன் சம்பந்தமே காரணம் -என்று
அறிந்து கொள் –கர்மம் வலிய கயிறு தானே கட்டுவிக்கும்

ஸமம் ஸர்வேஷு பூதேஷு திஷ்டந்தம் பரமேஷ்வரம்–விநஷ்யத்ஸ்வவிநஷ்யந்தம் ய பஷ்யதி ஸ பஷ்யதி–৷৷13.28৷৷
வித்யாசம் இரண்டுக்கும் -பகுத்து அறிய —சமம் முதல் –ஜீவாத்மா -விஷமம் சரீரம் வாசிகள் உண்டே -எல்லா பூதங்களிலும் ஆத்மா சமம் தானே
-கங்கா தீர்த்தம் தங்க வெள்ளி மண் பாத்திரம் -தன்மை மாறாதது போலே /அடுத்து -பரமேஸ்வரன் நியமிப்பவன் ஆத்மா -சரீரம் நியமிக்கப் படும்
–இயற்க்கைக்கு மாறாக சரீரம் சொல்லி ஆத்மா போவது துர்த்தசை / விநாசம் அடைவதற்குள்ளே விநாசம் அடையாமல் ஆத்மா இருக்கும் –

ஸமம் பஷ்யந்ஹி ஸர்வத்ர ஸமவஸ்திதமீஷ்வரம்–ந ஹிநஸ்த்யாத்மநாத்மாநம் ததோ யாதி பராம் கதிம்—৷৷13.29৷৷
லத்தை அருளிச் செய்கிறான் -எங்கும் சமமாக பார்ப்பவன் -எப்பொழுதும் -ஈஸ்வரனான ஆத்மா -மனசால் வெட்டி விடுவது இல்லை –
பிரிந்து அறியாமல் இருந்தால் ஆத்மாவுக்கு தீங்கு -என்றபடி

ப்ரகரித்யைவ ச கர்மாணி க்ரியமாணாநி ஸர்வஷ–ய பஷ்யதி ததாத்மாநமகர்தாரம் ஸ பஷ்யதி–৷৷13.30৷৷
கிரியைகளுக்கு இருப்பிடம் சரீரம் என்று அறிந்து கொள் -ஆத்மாவை கர்த்தா அல்லன் என்று அறிந்து உண்மை அறிவு பெற்று –

யதா பூதபரிதக்பாவமேகஸ்தமநுபஷ்யதி–தத ஏவ ச விஸ்தாரம் ப்ரஹ்ம ஸம்பத்யதே ததா–৷৷13.31৷৷
தேவாதி சரீரங்கள் -ஆத்மா சரீரம் -சேர்ந்து கர்தவ்யம் -காரணம் பிரகிருதி தானே -இயற்கையில் ஆத்மாவுக்கு இல்லை -சரீரம் பிரதான காரணம் –
பிரகிருதி விஸ்தாரத்தால் தானே பிள்ளை உறவுகள் இத்யாதி -என் பிள்ளை -ஆத்மாவுக்கு பிள்ளை இல்லை -சரீரத்தின் விஸ்தாரம் தானே

அநாதித்வாந்நிர்குணத்வாத்பரமாத்மாயமவ்யய–ஷரீரஸ்தோபி கௌந்தேய ந கரோதி ந லிப்யதே–৷৷13.32৷৷
சரீரம் சம்பந்தம் இல்லாமல் -அழிவற்ற அநாதி ஆத்மா -அனாதையாய் இருப்பதால் அழிவற்றவன் -முக்குண சம்பந்தம் இல்லை
-செயல்பாட்டுக்கு காரணம் இல்லை -தேகம் விட வேறு பட்டவன் பரமாத்மா -சப்தம் ஆத்மாவை குறிக்கும்

யதா ஸர்வகதம் ஸௌக்ஷ்ம்யாதாகாஷம் நோபலிப்யதே–ஸர்வத்ராவஸ்திதோ தேஹே ததாத்மா நோபலிப்யதே–৷৷13.33৷৷
உப்பு சாறு–கட்டை பாத்திரம் மாற்றும் என்று ஆக்ஷேபிக்க -ஆகாசத்துக்கு நாற்றம் தீண்டாது -ஸூஷ்மம்–
ஆத்மா ஆகாசம் விட ஸூஷ்மம் -தேகத்துக்கு உள்ளே இருந்தாலும் தீண்டாமல் இருக்கும் –

யதா ப்ரகாஷயத்யேக கரித்ஸ்நம் லோகமிமம் ரவி–க்ஷேத்ரம் க்ஷேத்ரீ ததா கரித்ஸ்நம் ப்ரகாஷயதி பாரத–৷৷13.34৷৷
சரீரத்துக்கு அவயவங்கள் பல -ஆத்மா அவயவம் இல்லாமல் -ஒளி கொடுக்க –ஒரே ஸூர்யன் லோகத்துக்கு பிரகாசம் தருவது போலே –

க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோரேவமந்தரம் ஜ்ஞாநசக்ஷுஷா–பூதப்ரகரிதிமோக்ஷம் ச யே விதுர்யாந்தி தே பரம்–৷৷13.35৷৷
ஞான கண்களால் -சரீரம்- ஜீவாத்மா-இவற்றின் ஸ்வரூபங்களை அறிந்து -விமுக்தனாக -20-குணங்களையும் அறிந்து முக்த ஆத்மா ஆகிறான் –

——————————————————

கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -12—-

June 6, 2017

பக்தேஸ் ஸ்ரைஷ்ட்யம் உபாயோக்தி அசக்தஸ் யாத்ம நிஷ்டதா
தத் பிரகாராஸ் த்வதி ப்ரீதி பக்தே த்வாதச உச்யதே — ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–16-

1–பக்தேஸ் ஸ்ரைஷ்ட்யம் –ஆத்ம உபாசனத்தை விட பக்தியின் பெருமை –கீழ் உள்ள கர்ம ஞான யோகத்தை விட உயர்ந்தது சொல்ல வேண்டாமே
-கைவல்யார்த்தி விட பகவல் லாபார்த்தி உடைய ஏற்றம் –
உபாயோக்தி -உபாய யுக்தி -பக்தி செய்யும் முறை -விதிகள் –
3–அசக்தஸ் யாத்ம நிஷ்டதா -அசக்தனுக்கு ஆத்ம உபாசனம் -இந்த உபாசனம் கர்ம ஞான யோகம் மூலம் சொல்லிய ஆத்ம உபாசனம்
4–தத் பிரகாராஸ்-அதன் பிரகாரங்களை விவரித்து–12-13–12-19/ -7-ஸ்லோகங்களால் –
த்வதி ப்ரீதி பக்தே த்வாதச உச்யதே –அதி ப்ரீதி பக்தி -அத்தனை ப்ரீதி கண்ணனுக்கு -கோதுகுலம் உடைய பாவாய் போலே

ஆத்ம அனுபவத்துக்கு பக்தி யோகம் வேண்டாம் -கர்ம ஞான யோகம் மட்டும் கொண்டு கைவல்ய அனுபவம் -பக்தி பண்ண சேஷ பூதன்
-பர ப்ரஹ்மம் மஹிமை தெரிந்து இருக்க வேண்டுமே —
பக்தி யோகம் அனுஷ்ட்டிக்க சக்தி இல்லை என்றால் -ஆத்ம உபாசனம் பண்ணு –கர்ம யோகம் பண்ணு சொல்ல வில்லை-
கர்ம யோகம் பண்ணி சித்த சுத்தி அடைந்து ஞான யோகம் -பண்ணி -மேலே பக்தி யோகம் –என்றவாறு -குழம்ப கூடாது –
பிரித்து பிரித்து அலகு அலகாக வியாக்யானம் உண்டு
கர்ம யோகம் வார்த்தைக்கு ஆத்ம உபாசனம் வார்த்தை –

—————————————————————–

அர்ஜுந உவாச-
ஏவம் ஸததயுக்தா யே பக்தாஸ்த்வாம் பர்யுபாஸதே.–யேசாப்யக்ஷரமவ்யக்தம் தேஷாம் கே யோகவித்தமா–৷৷12.1৷৷
யாருக்கு சீக்கிரம் -இரண்டும் சமம் என்ற எண்ணம் -அது ஸூ கந்தமான பகவத் அனுபவம் -இது சிற்றின்பம் -மேலும் இது சீக்கிரமாகவும் அடையலாம் –
உயர்ந்த பலனுக்கு உயர்ந்த முயற்சி வேண்டுமே -எண்ணில் அதையு கொடுப்பது நானே -பிடித்தத்தை கேட்டால் -சீக்கிரம் அளிப்பான் -குழந்தை போலே பதில் –
திருவடி பலத்தால் தான் மேலே வர வேன்டும் –
ஏவம் -இப்படி பக்தியால் மட்டுமே அடைய முடியும் -உன்னையே அடைய வேண்டிய பலமாக -த்வாம் -கல்யாண குணங்கள் உடைய உன்னை –
அவ்யக்தம் -இந்த்ரியங்களால் புலப்படாத ஆத்ம தத்வம் அக்ஷரம் -உபாசித்து -தேஷாம்
இவர்கள் இருவருக்குள் -யோக பலன் யார் சீக்கிரம் அடைவார்

ஸ்ரீ பகவாநுவாச-
மய்யாவேஷ்ய மநோ யே மாம் நித்யயுக்தா உபாஸதே.–ஷ்ரத்தயா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா—৷৷12.2৷৷
தே -அவர்கள் எனக்கு நல்ல யோகிகள் -பக்தி யோக நிஷ்டர்கள் -என்னிடமே மனசை வைத்து -என்னுடன் எப்பொழுதும் சேர்ந்தே
இருக்க ஸ்ரத்தை உடன் -உபாசித்து -அவர்கள் எனக்கு சிறந்த யோகிகள் –
இருவரும் அவன் இடம் வருவார்கள் பிராபகம் உபாயம் ஹேது அடைவிக்கும் வழியோ என்னில் இருவருக்கும் ஓன்று தானே
-புருஷார்த்தம் தானே மாறும் -இவன் விடை கொள்பவன் -அவனோ உண்ணும் சோறு பெருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்றபடி –
அத்ர பரத்ர சாபி நித்யம் யதீயம் சரணம் மதியம் -இங்கும் அங்கும் ஆச்சார்யர் திருவடிகளே-ஏறி வந்த ஏணியே அனுபவிக்கும் போக்யம் -தோள் மாறாமல் –

யே த்வக்ஷரமநிர்தேஷ்யமவ்யக்தம் பர்யுபாஸதே.–ஸர்வத்ரகமசிந்த்யம் ச கூடஸ்தமசலம் த்ருவம்৷৷12.3৷৷
அடுத்த இரண்டால் கைவலர்கள் உடைய கீழ்மை -அருளிச் செய்கிறான் -தோஷமும் கண்ணில் பட வேண்டுமே -தான் கொடுத்த சரீரம் சாஸ்திரம் கொண்டு
அவன் இடமே வேறே ஒன்றையோ கேட்டு விலகினால் கோபம் வரணுமே-
யே -உயர் ஒருத்தன் –சுட்டி இது என்று சொல்ல முடியாத ஆத்மா -தேக வியதிரிக்த ஆத்மா பற்றியே தானே உபாசிக்கிறான் —
அவ்யக்தம் -மனன் உணர் அவை இலன் -பொறி உணர் அவை இலன் -அக்ஷரம் -அழிவற்ற -குறித்து -உபாசித்து
ஸர்வத்ரகம் -எல்லா சரீரத்துக்குளே புகுந்து இருக்கும் ஆத்மா -மாறி மாறி பல பிறவி பிறந்து -அசிந்த்யம் -புத்தியால் தெரிந்து கொள்ள முடியாத -சிந்தனைக்கு அப்பால்
கூடஸ்தர் -பழைமை பொதுவான என்றபடி -கொல்லன் பட்டறை கீழே உள்ள கூடஸ்தம் -மாறாதே -தனக்கு விகார இல்லையே
-இங்கு பொது-எல்லா சரீரங்களிலும் ஆத்மா உண்டு என்றே அர்த்தம் -சலிக்காத -ஸ்வரூபம் மாறாதே -தேகம் தானே ஸ்வரூப விகாரங்கள் -துருவம் -நிலை நிற்குமே

ஸம் நியம்யேந்த்ரியக்ராமம் ஸர்வத்ர ஸமபுத்தய–.தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வபூதஹிதே ரதா–৷৷12.4৷৷
இப்படிப் பட்ட ஆத்மா பற்றி -உபாசனம் -இளைப்பினை இயக்கம் நீக்கி -இருந்து -பஞ்ச பிராணன் அடக்கி ஆசனத்தில் இருந்து
-பத்மாசனம் -27000-நரம்புகள் கட்டுப்பாட்டில் வருமே -தேக ஆரோக்யம் கிட்டும் –
முன் இமையை கூட்டி –மூக்கு நுனியை பார்த்து -அழைப்பில் ஐம்புலன் அடக்கி -அன்பு அவர் கண்ணே வைத்து துளக்கமில் சிந்தை செய்து
-விளக்கினை விதியில் காண்பார் -மெய்மையை காண்பிப்பார் -காண மாட்டார்களே இவ்வளவு சிரமம் பட்டாலும் –
இந்திரிய கிராமம் கூட்டம் கட்டுப்படுத்தி -சமமான புத்தி -சர்வ பூத ஹிதம் -ரதி ஆசை -ஜீவ ராசிகளின் நன்மையில் ஆசை கொண்டு -என்னையே அடைகிறார்கள் –
இங்கு என்னை போலே ஞானம் கொண்ட ஆத்மாவை அடைகிறார்கள் -தேக விநிர் முக்த ஆத்மா ஞானம் -அன்றோ –

க்லேஷோதிகதரஸ்தேஷாமவ்யக்தாஸக்தசேதஸாம்.–அவ்யக்தா ஹி கதிர்துகம் தேஹவத்பிரவாப்யதே–৷৷12.5৷৷
தேகத்துடன் அனைத்தும் செய்து இல்லாதது செய்து பழக்கம் இல்லையே -தேகத்துடன் கைங்கர்யம் செய்யலாமே பக்தி நிஷ்டர் –
மிக வருத்தம் –கிலேச -தர -ஒன்றை காட்டிலும் -பகவத் உபாசனத்தை காட்டிலும் –அவ்யக்த ஆசக்த நிலை நின்ற மனசை படைத்தவர்களுக்கு
ஆத்மாவே கதி என்று இருப்பவனுக்கு -துக்கம் -நிறைய -துக்கத்துடன் ஆத்மா சாஷாத்காரம் –
அனுபவம் இருவருக்கும் சுகம் -உபாயம் இதில் ஸூகரம் இல்லையே -பக்தி போலே –

யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸம் ந்யஸ்ய மத்பரா–அநந்யேநைவ யோகேந மாம் த்யாயந்த உபாஸதே—৷৷12.6৷৷
யார் ஒருவனோ எனில் -எல்லா கர்மங்களையும் என்னிடம் சமர்ப்பித்து -என்னையே புருஷார்த்தமாக கொண்டு -இங்கு
யோகம் -பக்தி -ஸ்வயம் பிரயோஜன பக்தி -என்றபடி -பக்தி பண்ணும் இன்பத்துக்காக
-குழந்தை தாய் கொஞ்சுவது போலே அன்றோ பக்தி –த்யானம் அர்ச்சனம் மூலம் உபாசித்து

தேஷாமஹம் ஸமுத்தர்தா மரித்யுஸம் ஸாரஸாகராத்—-பவாமி நசிராத்பார்த மய்யாவேஷிதசேதஸாம்—৷৷12.7৷৷
-அவர்களுக்கு -நான் -அஹம் -என்னிடம் நெருக்கமாக மனஸ் கொண்டவர்கள் –தூக்கி -மிருத்யு சம்சார சாகரம் –தங்களையும் மறந்து ஈஸ்வரனையும் மறந்து
-ஈஸ்வர கைங்கர்யமும் இழந்து இழந்தோம் என்ற இழவும் இல்லாமல் -சம்சாரிகள் -கை பிடித்து தூக்கி விடுபவனாக நான் இருக்கிறேன்
-சடக்கென –எப்பொழுது சரண் அடைவாய் என்று அநாதி காலம் காத்து அன்றோ உள்ளேன்
சரண்ய முகுந்தத்வம் உத் பலாவதாக- மாம்சம் ஆசை துரந்த யோகிகளுக்கு –மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –
அவனுக்கு பல ஜென்மங்களும் தெரியுமே –மாறி மாறி பல பிறவியும் பிறந்து —ஈறில் இன்பம் பெற்றேன் இன்று –

மய்யேவ மந ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேஷய.–நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ந ஸம் ஷய—৷৷12.8৷৷
இதில் பக்தி விதி -என்னிடமே மனசை செலுத்தி -என்னிடமே உறுதியான புத்தி கொள்வாய் -நம்பிக்கை வந்த பின்பு அதற்கு மேலே
-என்னிடமே வாழ்வாய் -சங்கை வேண்டாம் –நிர்ப்பரோ நிர்பயோஸ்மி முக்த ஆத்ம ஸ்வரூபம் அடைகிறான் -கவலை அற்று இருந்து –
இது முதல் –நான்கு ஸ்லோகங்களால் -ஓன்று ஒன்றாக குறைத்து -அசக்தனுக்கு செய்ய வேண்டியவற்றை அருளிச் செய்கிறான்

அத சித்தம் ஸமாதாதும் ந ஷக்நோஷி மயி ஸ்திரம்—-அப்யாஸயோகேந ததோ மாமிச்சாப்தும் தநஞ்ஜய—৷৷12.9৷৷
பழக்கமே இல்லையே -சப்தாதி விஷயங்களில் பழகி வாழ்ந்த பின்பு -என்னில் -ஸ்திரமான சித்தம் வைக்க சக்தி இல்லாமல் போனால் –
உடன் அடியாக பண்ண முடியாமல் போனால் -அப்பியாசம் -யோகம் -கல்யாண குணங்களில் மனசை செலுத்தி -என்னை அடைய இச்சிப்பாய் –
பழக்கம் படுத்துக்கோ -என்னிடம் குணங்களோ பல -உனக்கு அல்ப அஸ்திர இந்திரியாதி தானே தெரியும் –
அன்புடன் மனசை நினைத்து நினைத்து பழக்கி -இச்சிப்பாய் -கல்யாண குணங்களை அனுசந்தித்து மனசை பழக்கி –
கொஞ்சமாக மேல் நிலைக்கு வர படிக்கட்டுக்கள் இப்படி நான்கு ஸ்லோகங்களில் –
எந்த கல்யாண குணங்கள் -ஸுந்தர்ய –மாதுர்ய –வீர்யகுணங்கள் ஸத்யஸங்கல்ப இத்யாதி ஸ்ரீ ராமானுஜர் -18-
1-ஸுந்தர்யம் –நெஞ்சினாரும் அங்கு ஒழிந்தார் -இனி யாரை கொண்டு உஸாக -அடிமை பட்டு சாசனம் எழுதிக் கொடுக்க வைக்கும் அழகன்
2-ஸுசீல்யம்–நின்னோடும் ஐவரானோம் -கை விட மாட்டார் நம்பிக்கை வளரும் -3- ஸுஹார்த்தம் -சர்வ போதானாம் –4-வாத்சல்யம் -தோஷ போக்யத்வம்
—5 -காருண்யம் கிருபையா பரிபாலயத் -6-மாதுர்யம் -சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் -எண்ணிலும் வரும் — ஓர் எண் தானும் இன்றியே
6-காம்பீர்ய -தன் அடியார் திறக்கத்து -கலக்க முடியாதவன் –அசக்தன் அஞ்ஞான -பாபங்களை காணஅறியாதவன் -கை விட சக்தி இல்லாதவன்
7–உதாரன் -வரம் ததாதி -அர்த்திதார்த்த-பரிதான தீஷிதம் -அபீஷ்ட வரதன்/8-ஸுர்ய–9- வீர்ய -10-பராக்ரமம்-11-சார்வஞ்ஞன்-12 சத்யகாமத்வம்-
-13–ஸத்யஸங்கல்பம் 14–ஸர்வேஸ்வரத்வம் –15–சகல காரணத்வ –

அப்யாஸேப்யஸமர்தோஸி மத்கர்மபரமோ பவ.–மதர்தமபி கர்மாணி குர்வந் ஸித்திமவாப்ஸ்யஸி—৷৷12.10৷৷
மநோ வியாபாரம் கஷ்டம் தானே -கையாலே எதையும் செய்யலாம் -மனசால் நினைத்து -செய்வது வேண்டாம் -சக்தி இல்லை என்னில்– அப்பியாசம்
கைங்கர்யம் -திரு விளக்கு -மாலை இடுதல் -திருவடி விளக்கி–என் விஷய கர்மாக்கள் இங்கு -செய்தால் -பண்ண பண்ண
அருகாமை கிளிட்டும் -மனஸ் தானே ஈடுபடும் -உறுதி படும் -பக்தி வரும் -இதே பாதையில் போக வேன்டும் –

அதைததப்யஷக்தோஸி கர்தும் மத்யோகமாஷ்ரித–ஸர்வகர்மபலத்யாகம் தத குரு யதாத்மவாந்–৷৷12.11৷৷
மத் கர்மா -உன் கர்மா -இதுவும் பழக்கம் இல்லையே -இதற்கும் அசக்தனாக இருந்தால் -பக்தி யோகம் தொடங்கிய நீ -மத் யோகம் -கர்ம யோகத்தால்
மனத்தை அடக்கி -எல்லா பலத்தையும் -சர்வ கர்ம பல தியாகம் -கீழே சொல்லிய கர்த்ருத்வ மமதா பல தியாகம் -அதே சப்தம் இங்கும்
-ஆத்ம உபாசனம் -பிரதம ஷட்கத்தில் சொல்லப் பட்டது –
கர்ம யோகம் நமக்கா தானே -ஆத்ம சாஷாத்காரம் நமக்காக தானே -உன் கார்யம் பண்ணினதாகும் -ஆத்ம சாஷாத்காரம் வந்திடும்
-வந்தால் சேஷ பூதன் என்று அறிவாய் -பண்ண பண்ண மேல் படிகளுக்கு வருவாய் –கைவல்ய உபாசனம் இல்லை
-5 ஸ்லோகத்தில் நன்றாக இகழ்ந்தான்–7 -8–9- அத்தியாயத்தில் சொல்லியதை -இங்கு முதல் ஆறு அத்தியாயங்களில்த்தை சொல்லிய
ஆத்ம உபாசனம் -வாசியை நன்றாக உணர வேன்டும் –

ஷ்ரேயோ ஹி ஜ்ஞாநமப்யாஸாஜ்ஜ்ஞாநாத்த்யாநம் விஷிஷ்யதே.-த்யாநாத்கர்மபலத்யாகஸ்த்யாகாச்சாந்திரநந்தரம்–৷৷12.12৷৷
பக்தி யோகம் -முடியாது அப்பியாசம் –மத் கர்ம -உன்னுடைய கர்மா -கீழே கீழே சொல்லி -அனைத்தும் நானே விதித்தேன் -என் திருப்தியே உனக்கு நோக்கம்
-சமாதானப் படுத்துகிறான் -திரு உள்ளம் இந்த ஸ்லோகம் நன்றாக காட்டும் -எப்படியாவது நம்மை கை தூக்கி விட அன்றோ பார்க்கிறான்
-இதுவே சிறந்தது என்றும் சொல்வான் -வாதங்கள் பல வைத்து -யாதானும் பற்றி நீங்கும் விரதம் நாம் -அவன் யாதானும் செய்து நம்மை கொள்ளுவான்
அப்பியாசம் -முற்று பெறா விட்டால் -கல்யாண குணங்கள் -அதை விட ஞானம் -ஆத்ம சாஷாத்காரம் –கீழ் படி -அது கை கூடா விட்டால் த்யானம்
-அது முடியா விட்டால் கர்ம பல தியாகம் -இதுவே உயர்ந்தது ஷாந்தி கொள்வாய் -மேலே -7-ஸ்லோகங்கள் -தத் பிரகாரம் –

அத்வேஷ்டா ஸர்வபூதாநாம் மைத்ர கருண ஏவ ச.–நிர்மமோ நிரஹங்கார ஸமதுகஸுக க்ஷமீ—৷৷12.13৷৷
த்வேஷம் இல்லாமல் -எல்லா பூதங்களிலும் -பிரகலாதன் நிஷ்டை –குற்றம் செய்தவர் பாக்கள் பொறையும்–உபகார ஸ்ம்ருதியும் –இங்கும் அபசாரம்
பெற்றவர்கள் இடம் அத்வேஷம் -என்று கொள்ள வேன்டும் -/
மேலே மைத்ரேயர் -கை குலுக்கி -நண்பனாக -நமஸ்காரம் நம் பண்பாடு -கையில் ஒன்றும் இல்லை என்று காட்ட கை குலுக்கி மற்றவர்
-தோள் அனைத்தும் உள்ளே கத்தி இல்லையா பார்த்து நண்பன் /
மேலே கருணையும் காட்டி / மமகாராம் அஹங்காரம் இல்லாமை / பொறுத்து கொண்டு சுகம் துக்கங்களை -இவை எல்லாம் கர்ம யோகத்துக்கு வேண்டுமே

ஸந்துஷ்ட ஸததம் யோகீ யதாத்மா தரிடநிஷ்சய—மய்யர்பிதமநோபுத்திர்யோ மத்பக்த ஸ மே ப்ரிய—৷৷12.14৷৷
மனசை அடக்கி -சாஸ்திரம் நம்பி -மம பிரியன் -இதற்க்காகவாவது செய்ய வேண்டுமே -இத்தை எல்லா ஸ்லோகங்களிலும் சொல்லுவான்
என்னிடமே சமர்ப்பிக்கப் பட்ட மனஸ் புத்தி அவனே பலன் -கர்ம யோகம் பண்ணுபவன் பிரியமானவன்

யஸ்மாந்நோத்விஜதே லோகோ லோகாந்நோத்விஜதே ச ய-ஹர்ஷாமர்ஷபயோத்வேகைர்முக்தோ ய ஸ ச மே ப்ரிய—৷৷12.15৷৷
உலகில் உள்ளார் -அனைவரும் –இவனை கண்டு பயப்பட மாட்டார்கள் சாத்வீகன் -ஆசையும் இல்லை இவனுக்கு -இவனும் லோகம் கண்டு
பயப்பட மாட்டான் -ஸந்தோஷம் கோபம் பயம் நடுக்கம் இல்லாதவன் -கிடைத்தது கொண்டு பிரியம் கொள்பவன் —

அநபேக்ஷ ஷுசிர்தக்ஷ உதாஸீநோ கதவ்யத–ஸர்வாரம்பபரித்யாகீ யோ மத்பக்த ஸ மே ப்ரிய–৷৷12.16৷৷
கர்ம யோகி பிரியமானவன் -ஆத்ம விஷயமே நோக்கு -ஆகார சுத்தி -சத்வ குணம் -தியானம் வளரும் -ஆத்மா சாஷாத்காரம்
-துன்பம் அற்று -சாஸ்திரம் சொல்வதை மட்டும் செய்த பக்தன் பிரியன்

யோ ந ஹரிஷ்யதி ந த்வேஷ்டி ந ஷோசதி ந காங்க்ஷதி.–ஷுபாஷுபபரித்யாகீ பக்தமாந்ய ஸ மே ப்ரிய—-৷৷12.17৷৷
சப்தம் ஸ்பர்சம் ரூபம் -இவற்றால் ஆனந்தம் த்வேஷம் இல்லை வருத்தம் விருப்பம் கொள்ளாமல் / காரணமான புண்ய பாபங்கள் விட்டவன்

ஸம ஷத்ரௌ ச மித்ரே ச ததா மாநாபமாநயோ—ஷீதோஷ்ணஸுகதுகேஷு ஸம ஸங்கவிவர்ஜித—৷৷12.18৷৷
சமமாக -விரோதிகள் நண்பர்கள் / பட்டம் பெற்றாலும் அவமானம் பண்ணினாலும் -குளிர் வெப்பம் இன்ப துன்பங்கள் சமம் -பற்று இல்லாமல்

துல்யநிந்தாஸ்துதிர்மௌநீ ஸந்துஷ்டோ யேநகேநசித்.–அநிகேத ஸ்திரமதிர்பக்தமாந்மே ப்ரியோ நர—৷৷12.19৷৷
நிந்தனை ஸ்தோத்ரம் பண்ணினாலும் –வை தாலும் அவனுக்கு -என் கண்ணன் எனக்கு -கிடைத்தது கொண்டு ஸந்தோஷம்
-வீட்டிலே ஆசை இல்லாமல் -ஆத்ம விஷயம் ஸ்திர புத்தி உள்ளவன் -இப்படி பிரகாரங்களை சொல்லி

யே து தர்ம்யாமரிதமிதம் யதோக்தம் பர்யுபாஸதே.–ஷ்ரத்ததாநா மத்பரமா பக்தாஸ்தேதீவ மே ப்ரியா—৷12.20৷৷
பக்தர்கள் மிகவும் இனியவர் -இவர்களோ என்னில் -து —
யார் எல்லாம் மனசை என்னிடம் லயிக்கும் 2-ஸ்லோகத்தில் கொண்டாடப் பட்ட பக்தி யோக நிஷ்டர்களை —
கர்ம யோகங்களை சொல்லியது -8-பக்தி யோக நிஷ்டர் அசக்தர்களுக்கு -சொல்லி –
உயர்ந்த பக்தி யோக நிஷ்டர் -பக்தியே தர்மம் அமிர்தம் பிறப்பபாம் பிராப்யாம் –நன்றாக உபாசித்து -என்னிடமே நெஞ்சை செலுத்தி
இருப்பவன் மிகவும் பிரியவன் -என்று நிகமிக்கிறான் இதில் –

———————————

கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -11—-விஸ்வ ரூப யோகம் –

June 6, 2017

ஏகாதசே ஸ்வ யாதாம்ய சாஷாத்கார அவலோகனம்
தத்தமுக்தம் விதி ப்ராப்த்யோ பக்த்யே கோபா யதா ததா –15-

ஏகாதசே
ஸ்வ யாதாம்ய -பர ப்ரஹ்மம் பற்றி -உண்மை அறிவை அடைய
சாஷாத்கார -விஸ்வரூபம் காண -முக்காலத்தில் -உள்ளவை அனைத்தையும் -பாண்டவர் ஜெயம் -கூட காண போகிறான்
அவலோகனம் -கண்களால் -காண திவ்ய சஷூஸ்
தத்தமுக்தம் -கொடுக்கப்பட்டு -32-ஸ்லோகங்கள் வரை இதுவே -மேலே அர்ஜுனன் ஸ்தோத்ர ஸ்லோகங்கள்
விதி ப்ராப்த்யோ -விதி -அறிவதற்கும் -வேதனம் / அடைவதற்கும் -கடைசி நான்கு ஸ்லோகங்கள்
பக்த்யே கோபா யதா ததா –பக்தி ஒன்றே வழியாகும்
உதங்க பிரஸ்னம் /சஞ்சயன் இது ஒன்றே மனசை விட்டு நீங்காமல் இருக்கிறதே –

————————————————-

அர்ஜுந உவாச
மதநுக்ரஹாய பரமம் குஹ்யமத்யாத்மஸஂஜ்ஞிதம்–யத்த்வயோக்தம் வசஸ்தேந மோஹோயம் விகதோ மம–৷৷11.1৷৷
எனக்கு அனுகிரஹிப்பதற்காக -பரமமான குஹ்யமான -ஆத்ம விஷயம் கூடிய கர்ம யோகம் ஆறு அத்தியாயங்களில் உன்னாலே சொல்லப் பட்டவையோ
-அதனால் என்னுடைய மோஹம் விலகிப் போனதே –
தேஹாத்ம பிராந்தி -காரணம் தானே சண்டை போடாமல் -இருந்தான் -ஆத்மா நித்யம் தேஹம் அநித்தியம் உணர்ந்தேன் -முதல் நன்றி —
பகவத் பாகவத ஆச்சார்ய சம்பந்தமே முக்கியம் என்று உணர வேண்டுமே

பவாப்யயௌ ஹி பூதாநாம் ஷ்ருதௌ விஸ்தரஷோ மயா.–த்வத்த கமலபத்ராக்ஷ மாஹாத்ம்யமபி சாவ்யயம்–৷৷11.2৷৷
தாமரைக் கண்ணனே –மலர்ந்து சேவை சாதித்து இருக்கிறான் -யுத்த அரங்கத்தின் நடுவில் -தன்மை மாறாதே -கொண்டாடட்டம் இல்லையே
-யதார்த்த கத்தனம் -சாந்தோக்யம் -கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷணீ -அன்றோ -ஜிதந்தே புண்டரீகாஷா -/
நன்றாக விரித்து விளக்கமாக கேட்கப் பட்டன -ஜீவ ராசிகளின் உத்பத்தி விநாசங்கள் -உன்னிடம் இருந்தே பிறப்பு இறப்பு லயம் –
மாஹாத்ம்யம்- குறைவற்றை எல்லை அற்ற-பெருமாய் -கேட்டு கொண்டேன் -மீண்டும் நன்றி

ஏவமேதத்யதாத்த த்வமாத்மாநம் பரமேஷ்வர.–த்ரஷ்டுமிச்சாமி தே ரூபமைஷ்வரம் புருஷோத்தம–৷৷11.3৷৷
ஆசைகளை வெளி இடுகிறான் -பரமேஸ்வர -புருஷோத்தம –
பெருமை எளிமைக்கு இரண்டு விழி சொற்கள் -இரண்டும் இருந்தால் தான் காட்ட முடியும் -விஸ்வ ரூபம் –அனைத்தையும் நியமிக்கும்
-ஆஸ்திக வாதம் -சொன்னால் தானே மேலே காட்ட ஆசை வரும் -நாஸ்திகன் தானே கட்டுக் கதை என்பான் / நம்பி ஆஸ்திகன்
-சரண் அடைந்து பிரபன்னன் -நிறைய ஆஸ்திக நாஸ்திகர்கள் உண்டே /வாமனன் திரு விக்ரமன் -கதை உண்மையா நினைப்பவன் நாஸ்திகன்
–பள்ளி கல்லூரி படிப்பு பல வருஷங்கள் -வைதிக படிப்புக்கு மட்டும் ஒரே நாள் வருகிறார்களே -நேர்மை அற்ற நடுநிலை இல்லா தன்மை –
உலகம் நியமிக்கும் ஐஸ்வர்யம் காண ஆசைப்படுகிறேன் -புருஷோத்தமன் -கொண்டாடினால் தான் கேட்டதை தரம் பார்க்காமல் அருளுவான் –
தாழ்ந்த எனக்கும் காட்ட வேன்டும் -கேட்கவும் யோக்யதை இல்லை -கொடுக்க வேண்டிய நிர்பந்தமும் உனக்கு இல்லை /
பூரணமான கல்யாண குணங்கள் –அவாப்த ஸமஸ்த காமன்

மந்யஸே யதி தச்சக்யம் மயா த்ரஷ்டுமிதி ப்ரபோ—யோகேஷ்வர ததோ மே த்வம் தர்ஷயாத்மாநமவ்யயம்–৷৷11.4৷৷
உன்னை எனக்கு காட்டிக் கொடுப்பாய் -குறைவற்ற செல்வம் -யோகேஸ்வர -பிரபு -கல்யாண குணங்கள் சேர்ந்த -நியமிக்கும் சாமர்த்தியம் -பிரபு –
உன்னுடைய உயர்ந்த விஸ்வ ரூபத்தை என்னால் பார்ப்பதற்கு முடியும் -சக்யம் -என்று நீ திரு உள்ளம் பற்றினால் –
காட்டிக் கொடுத்து அருளுவாய் -இதில் அர்ஜுனன் தன்னை பற்றி சங்கை வந்ததே -ஆசை வந்ததே எதனால் சங்கை –
காட்டுவதும் காட்டாததும் -காணும் படி ஆக்குவதும் உன் சங்கல்பமே என்று அறிந்தவன் அன்றோ –
குருடனுக்கு கண்ணையும் கடலையும் கொடுத்து காட்டச் சொல்வது போலே–கமலக் கண்ணன் என் கண்ணில் உள்ளான் -காண்பன் அவன் கண்களாலே –
தது – உன்னுடைய திவ்ய ரூபத்தை அனைத்தையும் தாங்கும்-ஸ்வரூபத்தை -அத்தை -மிக உயர்ந்த —

ஸ்ரீ பகவாநுவாச-
பஷ்ய மே பார்த ரூபாணி ஷதஷோத ஸஹஸ்ரஷ–நாநாவிதாநி திவ்யாநி நாநாவர்ணாகரிதீநி ச–৷৷11.5৷৷
பார் -பஸ்ய –உடனே -பார்க்கும் படி ஆக்குகிறேன் என்றபடி -காணுமாறு என்று உண்டு எனில் அருளாய் -தேவகி கேட்டு பெற்றாள்
-பாலும் சுரந்து இவனும் குடித்தான் -வைதிக காமம் -கிருஷ்ண விஷயம் அன்றோ –
என்னுடைய ரூபங்களை பார்ப்பாய் -எல்லாவற்றையும் ஓர் இடத்தில் -நூறு ஆயிரம் ஆயிரமான ரூபங்கள் –
தோள்கள் ஆயிரத்தாய் –முடிகள் ஆயிரத்தாய் -பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சை இவற்றுள் உள் பிரிவுகள் /
நின்ற கிடந்த இருந்த நடந்த -பல பல உண்டே -அனைத்தையும் காட்டுகிறேன் -வேவேரே வகை -திவ்யம் -அப்ராக்ருதம் -ஆச்சர்யம்
-நாநா வர்ணங்கள் -நாநா ஆகாரங்கள் -ஒவ் ஒன்றிலும் வேறே வேறே விதங்கள் உண்டே அதனால் நாநா -/ நினைப்பரியன –மாயங்கள் -/
பாலின் நீர்மை செம் பொன் நீர்மை –பசியின் பசும் புறம் போலும் நீர்மை -யுகங்கள் தோறும் -/ எந்நின்ற யோனியுமாய் பிறந்தாய் –

பஷ்யாதித்யாந்வஸூந்ருத்ராநஷ்வநௌ மருதஸ்ததா–பஹூந்யதரிஷ்டபூர்வாணி பஷ்யாஷ்சர்யாணி பாரத–৷৷11.6৷৷
மீண்டும் பார் -ஆசை கிளப்பி -தூண்டி -பன்னிரண்டு ஆதித்யர்கள் அஷ்ட வசுக்கள் பதினோரு ருத்ரர்கள் அஸ்வினி தேவதைகள் -49-மருத்துக்கள் –
முன்பு பார்த்து இராத உருவத்தை -அளவுக்கு உட்படாத -ஆச்சர்யமான -பல விசேஷணங்கள் –

இஹைகஸ்தம் ஜகத்கரித்ஸ்நம் பஷ்யாத்ய ஸசராசரம்–மம தேஹே குடாகேஷ யச்சாந்யத்த்ரஷ்டுமிச்சஸி—৷৷11.7৷৷
என்னுடைய திவ்ய மேனியில் ஏக தேசத்தில் –கீழ் சொன்னவை -முப்பத்து முக்கோடியும் –ஓர் இடத்தில் அடங்கி -சர அசாரங்கள் உடன் கூடிய
ஜகத்தில் ஒன்றும் மிச்சம் இல்லாமல் -குடா கேசன் தூக்கம் வென்றவன் -அதனால் இது காண முடியாது –
நீ எது எல்லாம் பார்க்க ஆசைப்படுகிறாயோ -நான் சொல்லாமல் விட்டதையும் ஏக தேசத்தில் பார்த்துக் கொள்ளலாம்
பாண்டவர் வெல்வதையும் பார்த்து கொள்ளலாம் -ஆஸ்திகனான படியால் இதில் ஆசை இல்லை அர்ஜுனனுக்கு –
ஜோதிஷம் வேத அங்கங்கள் -கர்மா பண்ணும் காலம் கணிக்கவே -இது -தப்பாக உபயோகப்படுத்துகிறார்கள் –

ந து மாம் ஷக்யஸே த்ரஷ்டுமநேநைவ ஸ்வசக்ஷுஷா–திவ்யம் ததாமி தே சக்ஷு பஷ்ய மே யோகமைஷ்வரம்–৷৷11.8৷৷
இந்த -உன்னுடைய ஊனக் கண்களாலே என்னை பார்க்க இயலாதே -உனக்கு திவ்யமான சஷூஸ் தருகிறேன் -யோகம் ஐஸ்வர்யம்
-விஸ்வ ரூபம் பார்ப்பாய் -அபரிச்சேதயம் அன்றோ -அனந்தன் -திருமேனியை காண்பாய் –

ஸஞ்ஜய உவாச-
ஏவமுக்த்வா ததோ ராஜந்மஹாயோகேஷ்வரோ ஹரி–தர்ஷயாமாஸ பார்தாய பரமம் ரூபமைஷ்வரம்—৷৷11.9৷৷
சஞ்சயன் -விஸ்வரூபம் வர்ணித்து -நடுவில் வேறே இல்லாமல் -விஸ்வ ரூபம் காட்டியதால் அர்ஜுனன் பார்த்து மலைத்து இருக்க
ராஜன் -என்று த்ருதராஷ்ரனை –அர்ஜனுக்கு பரமமான ரூபம் ஐஸ்வர்யம் காட்டிக் கொடுத்தான் –
பிருதா பிள்ளை பார்த்தா -அத்தை பிள்ளைக்காக காட்டி -தேக சம்பந்தம் இல்லாமல் இழந்தேன் என்பர் கூரத் தாழ்வான் –
யோகம் -கல்யாண குணங்கள் உடன் கூடியவன் -மஹா யோகேஸ்வரன் -ஹரி -அசாதாரண திரு நாமம் –

அநேகவக்த்ரநயநமநேகாத்புததர்ஷநம்–அநேகதிவ்யாபரணம் திவ்யாநேகோத்யதாயுதம்–৷৷11.10৷৷
எண்ணில் அடங்காத வாய்கள் கண்கள் -மனசுக்கு எட்டாத -திவ்ய ஆபரணங்கள் திவ்ய ஆயுதங்கள் -கிரீட மகுட சூடாவதாம்ச –நூபுராதி –
பல போலவே ஆபரணம் பெரும் பல போலவே –சோதி வடிவம் —

திவ்யமால்யாம்பரதரம் திவ்யகந்தாநுலேபநம்—.ஸர்வாஷ்சர்யமயம் தேவமநந்தம் விஷ்வதோமுகம்–৷৷11.11৷৷
திவ்ய மாலைகள் -வஸ்தரங்கள் -சந்தனக் காப்பு சேவை -இயற்கையில் சர்வ கந்த -சர்வ ரஸ அன்றோ -தாயாரும் கூசிப்பிடிக்கும் மெல்லடிகள் –
எல்லா திசைகளிலும் திரு முகங்கள் -அளவில்லா திரு வடிவம் -பல பரிமாணங்கள் -நினைப்புக்கு அப்பால்

திவி ஸூர்யஸஹஸ்ரஸ்ய பவேத்யுகபதுத்திதா—யதி பா ஸதரிஷீ ஸா ஸ்யாத்பாஸஸ்தஸ்ய மஹாத்மந—৷৷11.12৷৷
ஆயிரம் ஸூ ர்யர்கள் –ஒரே காலத்தில் உதயமானால் –நிகழாதே -ஒரு வேளை நடந்தால் -இந்த விஸ்வரூபம் காட்டும்
தேஜஸ் ஸூக்கு ஒப்பாகுமோ என்ற சங்கை கொள்ளலாம் -அபூத உவமை –

தத்ரைகஸ்தம் ஜகத்கரித்ஸ்நம் ப்ரவிபக்தமநேகதா—-அபஷ்யத்தேவதேவஸ்ய ஷரீரே பாண்டவஸ்ததா—৷৷11.13৷৷
நன்றாக பிரிக்கப் பட்ட -வித விதமாக -ஜகத்தை ஒரு மூலையிலே கண்டான் -ஒன்றும் மிச்சம் இல்லாமல் –
லோகம் மட்டும் என்றால் எந்த பகுதி -சங்கை வரும் -அனைத்தும் திரு மேனியில் ஒரு மூலையில் கண்டான்
போகம் போக ஸ்தானம் போக உபகரணங்கள் போக்தா -அனைத்தையும் -ஏக தேசத்தில் -ஒன்றுமே மிச்சம் விடாமல் –
-கண்ணன் மட்டும் இருந்தால்–தன் ஸ்வயம் திருமேனி மட்டும் -இருந்தால் திருவடிகளில் விழுந்து இருந்து இருப்பான் –
இவனோ விஸ்வ ரூபம் கண்டு விசமய நீயானாகி தேவ -தேவர்களுக்கும் எல்லாம் தேவன் அன்றோ

தத ஸ விஸ்மயாவிஷ்டோ ஹரிஷ்டரோமா தநஞ்ஜய–ப்ரணம்ய ஷிரஸா தேவம் கரிதாஞ்ஜலிரபாஷத—৷৷11.14৷৷
வியப்பாய் வியப்பால் -ஆச்சர்யப் பட்டு -தத -இந்த விஸ்வரூபம் கண்டு மயிர் கூச்சு எரிந்து -தலை கீழே விழுந்து வணங்கி
கை கூப்பி பேசத் தொடங்கினான் -பீடிகை இது –

அர்ஜுந உவாச-
பஷ்யாமி தேவாம் ஸ்தவ தேவ தேஹே–ஸர்வாம் ஸ்ததா பூதவிஷேஷஸங்காந்.–ப்ரஹ்மாணமீஷம் கமலாஸநஸ்த-மரிஷீஂஷ்ச ஸர்வாநுரகாம் ஷ்ச திவ்யாந்—৷৷11.15৷৷
பார்த்தேன் -தேவ சப்தம் இங்கு ஆதேயம் –உலகு எல்லாம் தாங்கி -தேவர்கள் அத்தனை போரையும் -இந்த்ராதிகள் இங்கு -நான்முகன் மேலே
-பூதங்கள் விசேஷ -கூட்டங்கள் அனைத்தையும் பார்த்தேன் -பிராணி வகைகள் பல அன்றோ -கற்றுக் கறவை கணங்கள் பல அன்றோ
-பல பஹு வசனங்கள் இதில் -அதே போலே -பூதவிஷேஷஸங்காந்/ நான் முகன் உந்தித் தாமரையில் ருத்ரன் ரிஷிகள் -பாம்புகள்
-சேர்த்து சொல்லி -வாசி இல்லையே -அவன் திருமேனி -இருப்பதால்

அநேகபாஹூதரவக்த்ரநேத்ரம் –பஷ்யாமி த்வாம் ஸர்வதோநந்தரூபம்—நாந்தம் ந மத்யம் ந புநஸ்தவாதிம் -பஷ்யாமி விஷ்வேஷ்வர விஷ்வரூப—৷৷11.16৷৷
உலகங்களை நியமித்து உலகங்களை சரீரமாக -எண்ணிறந்த கைகள் கண்கள் -அந்தம் அற்ற ரூபங்கள் -ஆதி முடிவு நடு தெரியாமல் –

கிரீடிநம் கதிநம் சக்ரிணம் ச–தேஜோராஷிம் ஸர்வதோதீப்திமந்தம்-பஷ்யாமி த்வாம் துர்நிரீக்ஷ்யம் சமந்தா-த்தீப்தாநலார்கத்யுதிமப்ரமேயம்—৷৷11.17৷৷
கிரீடங்கள் -கதைகள் சக்ராயுதம் தரித்து -அசாதாரண லக்ஷணங்கள் -திருமாலுக்கு தானே -ஆதி ராஜ்யம் அதிகம் புவனானாம் –
ஒளி படைத்த பதார்த்தங்கள் சேர்த்த திரு மேனி -அவயவம் ஒன்றையும் பார்க்க முடியாமல் -நெருப்பு ஸூ ரியன் சேர்த்த தேஜஸ் படைத்து -அளவிட்டு அறிய முடியாத

த்வமக்ஷரம் பரமம் வேதிதவ்யம் –த்வமஸ்ய விஷ்வஸ்ய பரம் நிதாநம்.–த்வமவ்யய ஷாஷ்வத தர்ம கோப்தா-ஸநாதநஸ்த்வம் புருஷோ மதோ மே—৷৷11.18৷৷
அறியப் படும் பொருள்களில் உயர்ந்த -கொண்டாடப் படுகிறாய் -உலகில் மெலீனா நிதானம் ஆஸ்ரயம் ஆதேயம் -நித்யம் -தர்மம் ரக்ஷணம் பண்ணி
-வேதகாமேதம் புருஷம் மஹாந்தம் அறிந்தேன் –பார்க்க பார்க்க ஆச்சர்யம் பயம் -மிக்கு

அநாதிமத்யாந்தமநந்தவீர்ய–மநந்தபாஹும் ஷஷிஸூர்யநேத்ரம்–பஷ்யாமி த்வாம் -தீப்தஹுதாஷவக்த்ரம் -ஸ்வதேஜஸா விஷ்வமிதம் தபந்தம்–৷৷11.19৷৷
ஆதி மதியம் அந்தம் அநாதி -ஒன்றையும் பார்க்க முடிய வில்லை -அளவுக்கு உட்படாத சக்தி விசேஷங்கள் -ஞானம் பலம் ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் /
தோள்கள் பல / கதிர் மதியம் போல் முகத்தான் -சஷி ஸூர்ய நேத்ரம்-பல தலைகள் உண்டே -தன்மைகள் கொண்ட திருக் கண்கள் என்றபடி
-தபிக்கவும் குளிரவும் -பண்ணுமே -ஒளி படைத்த தீ கங்கு போல நீண்ட வாய் நாக்கு –உலகம் எல்லாம் கொதிப்படைய வைக்கும் –
தான் விகாரம் இல்லாமல் -சம்பந்தப்பட்டவற்றை விகாரம் அடைவிக்குமே -/ சதைக ரூப ரூபாய விஷ்ணவே —

த்யாவாபரிதிவ்யோரிதமந்தரம் ஹி–வ்யாப்தம் த்வயைகேந திஷஷ்ச ஸர்வா–தரிஷ்ட்வாத்புதம் ரூபமுக்ரம் தவேதம் -லோகத்ரயம் ப்ரவ்யதிதம் மஹாத்மந்–৷৷11.20৷৷
மஹாத்மாவே -கூப்பிட்டு -சங்கல்ப சக்தி அபரிமிதம் என்றபடி -ஸத்யஸங்கல்பன் -ஆகாசம் பூமி அந்தரம் இடை பட்ட இடங்களிலும் வியாபித்து
-திசைகளிலும் ஒருவனால் வியாபித்து உள்ளாய் -த்வயைகேந–நீர் தோறும் பரந்துளன் -விஸ்வரூபம் பார்த்து -அவனே திவலைக்குள்
-சுருக்கி கொண்டு இல்லை -விகாரம் இல்லையே –அகடிதகடநா சாமர்த்தியம் உண்டே -ஆலிலை துயின்ற மாயன் -கரந்து எங்கும்- பரந்துளன் -/
அத்புதமான உக்ரமான ரூபம் பார்த்தேன் / மூன்று லோகங்களும் பயந்து நடுங்கும் படி –
மேலே தான் நடுங்குவதை பற்றி /பார்த்தவர்கள் தானே நடுங்க முடியும் -அநு கூல பிரதி கூல உதாசீன மூவரும் -என்றபடி -/
பயத்தால் உதாசீனர் பிரதி கூலர் / பொங்கும் பிரிவால் அநு கூலர் -மங்களா சாசன பரர்கள்-/

அமீ ஹி த்வாம் ஸுரஸங்கா விஷந்தி–கேசித்பீதா ப்ராஞ்ஜலயோ கரிணந்தி–ஸ்வஸ்தீத்யுக்த்வா மஹர்ஷிஸித்தஸங்கா–ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி-புஷ்கலாபி—-৷৷11.21৷৷
இந்த -கை காட்ட -இந்த்ராதிகளை கண்டு -அமீ -விஸ்வரூபம் நோக்கி போவதை -தேவர்கள் கூட்டம் அருகில் கூப்பின கைகள் உடன் –
சிலர் பயந்து -கையில் அஞ்சலி பண்ணி தள்ளி நின்று ஸ்தோத்ரம் -பண்ண -வேதம் -அவரவர் தாம் தாம் கற்றவாறு ஏத்த -காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் –
குழந்தை மழலை சொல் சொன்னாலும் -நான்முகன் -நம்மாழ்வார் -அனைவர் அளவும் -பக்கத்தில் தானே அமைத்து கொண்டு
–cell-என்று கொண்டாலும் தன்னை அமைத்து கொள்வான் -யானைக்கு குதிரை வைப்பாரை போலே –பக்தி பீறிட்டு வருமே சேவித்ததும் –
மலையும் கல்லும் சமுத்ரத்துக்குள் இருக்க கோ விசேஷம் வேறு பாடு இல்லையே -தைரியமாக பாடுவேன் -ஆளவந்தார் –
புஷ்கலமான -நிறைந்த சொற்களால் -வாசகமாக அங்கு அடிமை செய்தான் -போலே ஸ்தோத்ரம் பண்ணினார்கள் -தமிழ் ஆழ்வாருக்கு தொண்டு செய்யுமே-

ருத்ராதித்யா வஸவோ யே ச ஸாத்யா—விஷ்வேஷ்வநௌ மருதஷ்சோஷ்மபாஷ்ச–கந்தர்வயக்ஷாஸுரஸித்தஸங்கா–வீக்ஷந்தே த்வாம் விஸ்மிதாஷ்சைவ ஸர்வே—৷৷11.22৷৷
11–ருத்ரர்கள்-12- ஆதித்யர்கள் அஸ்வினி தேவதைகள் –ஸாத்யா-முற்பட்ட -நித்யர்கள் –49-மருத்துக்கள் -பித்ருக்கள் ஊஷ்மா பாக/அனைவரும் பார்த்து ஆச்சர்யம் அடைய

ரூபம் மஹத்தே பஹுவக்த்ரநேத்ரம் –மஹாபாஹோ பஹுபாஹூருபாதம்–பஹூதரம் பஹுதம் ஷ்ட்ராகராலம் -தரிஷ்ட்வா லோகா ப்ரவ்யதிதாஸ்ததாஹம்—-৷৷11.23৷৷
கீழே வியப்பு ஆச்சர்யம் இங்கு பயம் –நானும் பயந்தேன் –
மிக பெரியதான -நிறைய கைகள் கண்கள் திருவடி தாமரைகள் -வயிறுகள் -இதில் -இடுப்பு ஓன்று -மேலும் கீழும் அநேகம் -நரசிம்மர் ஹயக்ரீவர் வயிறு வேறே வேறே தானே
/தடக் கையனே -நிறைய வளைந்த பற்கள் -வராஹ நரசிம்ம -ஹனுமான் -ராமன் அடையாளம் -8-அடி உயரம் -நான்கு கோரை பற்கள் -புருஷோத்தம லக்ஷணம் /
லோகம் -இங்கு கூடிய ராஜாக்கள் -மிகவும் பயந்து -நானும் பயந்தேன் -இறுதியிலே -சொல்கிறான்

நப ஸ்பரிஷம் தீப்தமநேகவர்ணம் –வ்யாத்தாநநம் தீப்த விஷால நேத்ரம்.–தரிஷ்ட்வா ஹி த்வா–ப்ரவ்யதிதாந்தராத்மா-தரிதிம் ந விந்தாமி ஷமம் ச விஷ்ணோ—৷৷11.24৷৷
ஆகாசம் தொடுவதாய் ஒளி படைத்த -பிளந்த திரு வாய் -பரந்த ஒளி படைத்த திரு க் கண்கள் -கண்டு -அந்தராத்மா நெஞ்சு நடுங்கி
மனசும் -தேக தாரணம் -மனஸ் இந்திரிய தாரணங்கள் அடைய வில்லை கட்டுப்படுத்த முடியவில்லை -பயந்தவற்றை விவரிக்கிறான்
ஆகாசம் -தொடுவதாய் -ஆதி நாடி அந்தம் காணவில்லை சொல்லி -பர வ்யோமம் ஸ்ரீ வைகுண்டம் வரை என்றவாறு -அதை தொடும் திரு மேனி என்றவாறு –
யாராலும் பார்க்க முடியாத ஸ்ரீ வைகுண்டம் –ஸ்ரீ வைகுண்டம் எங்கு இருந்தது என்று இவன் பார்க்க முடியுமோ -ஊகித்து சொல்கிறான் –
என்னால் பார்க்க முடியவில்லை -பரமபதம் எட்ட முடியாமல் இருக்கும் என்று சொல்லி கேள்வி பட்டதால் சொல்கிறான் -என்பதே –
நீல தோயத மத்யஸ்தா -நீர் உண்ட கார் மேக வண்ணன் -செய்யாள் -/ பீதாபா -பீதாம்பரம் -பரபாகம் –செவ்வரத்த உடை ஆடை அதன் மேல் ஒரு சிவலிக்கை கச் என்கின்றாளால்
–இழுத்து பிடித்து -கச்சிதமாக -/பச்சை மா மலை போல் மேனி -பவள வாய் -கமலச் செங்கண் –/தீப்தம் அநேக வர்ணம் /அந்தாமத்து–செம் பொன் திரு உடம்பு –செந்தாமரை /
கண்கள் சிவந்து பெரிய வாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே –மகர குண்டலத்தன் –கொண்டல் வண்ணன் சுடர் முடியன் / கரு மாணிக்க மலை மேல் –/தீப்த விலாச நேத்ரம்– செவ்வரியோடி நீண்டு மிளிர்ந்த திருக் கண்கள் /விஷ்ணோ -நீக்கமற வியாபித்த-

தம் ஷ்ட்ராகராலாநி ச தே முகாநி–தரிஷ்ட்வைவ காலாநலஸந்நிபாநி–திஷோ ந ஜாநே ந லபே ச ஷர்ம-ப்ரஸீத தேவேஷ ஜகந்நிவாஸ—৷৷11.25৷৷
தேவாதி தேவன் –மனிசர்க்கு தேவர் போலே தேவர்களுக்கும் தேவன் அன்றோ -ஜகத்தை வியாபித்த -அருள்வாய் -பயம் நீக்கி -பயங்கரமான பற்கள் பார்த்து
-ஊழி கால தீ போன்ற நாக்கு முகங்கள் கோரை பற்கள் -திசைகள் தெரிய வில்லை விசுவதோ முகம் அன்றோ -அனந்தன் –சுகம் இல்லை

அமீ ச த்வாம் தரிதராஷ்ட்ரஸ்ய புத்ரா–ஸர்வே ஸஹைவாவநிபாலஸங்கை–பீஷ்மோ த்ரோண- ஸூதபுத்ரஸ்ததாஸௌ-ஸஹாஸ்மதீயைரபி யோதமுக்யை—-৷৷11.26৷৷
திரு வாயை திறக்க -த்ருதாஷ்ட்ர புத்திரர்கள் -பூமி பால ராஜாக்கள் கூட்டம் -பீஷ்மர் துரோணர் -கர்ணன் -முன்னால் நிற்கும் கர்ணன்
-நம் பஷத்தவர்களும்-கூட -அடுத்த ஸ்லோகத்தில் புகுகிறார்கள் என்பதை சொல்லி

வக்த்ராணி தே த்வரமாணா விஷந்தி–தம் ஷ்ட்ராகராலாநி பயாநகாநி.–கேசித்விலக்நா தஷநாந்தரேஷு-ஸம் தரிஷ்யந்தே சூர்ணிதைருத்தமாங்கை—-৷৷11.27৷৷
வளைந்த பற்கள் -பயங்கரமான வாய் -வெகு வேகமாக உள்ளே புகுகிறார்கள் –வாயை மூடுவதற்கு முன்னே புகை வேகமாக -போக வேன்டும் –
எஞ்சாமல் வயிற்றில் அடக்கினான் -முற்றும் உண்ட கண்டம் கண்டீர் –
சூரணமாக உத்தம அங்கம் தலை- ஆக்கப்பட்டு -பற்களில் சிக்கி -தொங்கும் காட்சி கண்டேன் -ஆ என்று வாய் அங்காந்து -இதுவோ பிலவாய்

யதா நதீநாம் பஹவோம்புவேகா–ஸமுத்ரமேவாபிமுகா த்ரவந்தி.–ததா தவாமீ நரலோகவீரா–விஷந்தி வக்த்ராண்யபிவிஜ்வலந்தி—৷৷11.28৷৷
நதிகள் கடலை நோக்கி சேர்வது போலே -அனைத்தும் உன்னை நோக்கி -ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –
பெயரும் கரும் கடலே நோக்கும் ஆறு போலே -பரலோக வீரர் ராஜாக்கள் அனைவரும் -ஒளி படைத்து பளபளத்து இருக்கும் வாயை நோக்கி வேகமாக போகிறார்கள் —
தொக்கு இலங்கு ஆறுகள் எல்லாம் ஓடி –கடல் -வித்துக் கோட்டு அம்மா உன் சீர் அல்லால் இல்லையே -அநந்ய கதித்வம்

யதா ப்ரதீப்தம் ஜ்வலநம் பதங்கா–விஷந்தி நாஷாய ஸமரித்தவேகா—.ததைவ நாஷாய விஷந்தி லோகா-ஸ்தவாபி வக்த்ராணி ஸமரித்தவேகா—৷৷11.29৷৷
வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு – ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு -வீட்டில் பூச்சுக்கள் இவர்கள் -கீழே நதி கலக்கும் பொழுது
பெயரும் உருவமும் தான் போகும் நீருக்கு ஒன்றும் ஆகாது -இங்கு மாயும் -த்ருஷ்டாந்தம்
தங்கள் நினைத்தால் தடுக்க மாட்டாத நதிகள் -இங்கு வீட்டில் பூச்சிகள் தானே வந்து மாய்கின்றன -வேகமாக ஓடி -சடக்கென நாசம் அடைகின்றன
-கொழுந்து விட்டு எரிகிற விளக்கில் -யதா ப்ரதீப்தம் ஜ்வலநம்-சிறகு அடைக்கும் காற்றில் அணையாத விளக்கு
நிர்விகாரதத்வம் -கடல் -சேர்ந்தாலும் உயராத கடல் போலே உன் பெருமை

லேலிஹ்யஸே க்ரஸமாநஃ ஸமந்தா—ல்லோகாந்ஸமக்ராந்வதநைர்ஜ்வலத்பி–தேஜோபிராபூர்ய ஜகத்ஸமக்ரம் -பாஸஸ்தவோக்ரா ப்ரதபந்தி விஷ்ணோ—৷৷11.30৷৷
உக்ரமான -ஒளி கிரணங்கள் -தேஜஸ் ஸூ -உலகத்தை முழுவதும் சுடுமே –ராஜாக்களை விழுங்கி -நாக்கால் நக்கி -லேலிஹ்யஸே-உள்ளே தள்ளி
-கோபம் வெளிப்படும் -சிங்கம் -போலே -எல்லா புறங்களிலும் நாக்கை சுழற்றி-பளபளக்கும் திரு வாயில் -கண்டதும்
-இந்த செயலை அவனே செய்விக்கிறான் -உண்டு முடிக்கிறான்

ஆக்யாஹி மே கோ பவாநுக்ரரூபோ–நமோஸ்து தே தேவவர ப்ரஸீத—விஜ்ஞாதுமிச்சாமி பவந்தமாத்யம் -ந ஹி ப்ரஜாநாமி தவ ப்ரவரித்திம்–৷৷11.31৷৷
மிகவும் பயங்கரமான உருவை அடியேன் இடம் எதனால் காட்டினாய்-சாந்தமாக சேவை சாதிப்பாய் -ஆக்யாஹி-சொல்வாய் –எதற்க்காக இந்த உருவம் –
விஸ்வரூபத்தை -இல்லை -இந்த கோரா ரூபம் -என்னத்தையோ என்றோ செய்யப் போகிறதும் காட்டி அருளி -தூர தர்சன்ம் -தேவர்களில் தலைவனே
–மிக பழமையான ஆதி தேவனே -உன்னுடைய பிரவ்ருத்தி எதனால் என்று அருளிச் செய்ய வேன்டும் -மேலே மூன்று ஸ்லோகங்களில் பகவான் பதில்

ஸ்ரீ பகவாநுவாச–
காலோஸ்மி லோகக்ஷயகரித்ப்ரவரித்தோ–லோகாந்ஸமாஹர்துமிஹ ப்ரவரித்த–றதேபி த்வாம் ந பவிஷ்யந்தி ஸர்வே–யேவஸ்திதா ப்ரத்யநீகேஷு யோதா—৷৷11.32৷৷
தான் யார் என்று சொல்ல வில்லை -அது தான் அர்ஜுனனுக்கு தெரியுமே -சங்கைகளை தீர்த்து -நான் தான் காலத்துக்கு அந்தர்யாமி -உலகம் சம்ஹரிக்க
-ராஜாக்கள் உடைய முடிவு நாள் -நிர்ணயம் -நானே -நீ அம்பை விடா விட்டாலும் முடிவார்கள் -/ வளர்ந்தது -இவர்களுக்கு காலன்–
நானே முடிக்க முயல்கிறேன் -இரண்டு ப்ரவர்த்தித்த சப்தங்கள் -எதிர் கட்சியில் உள்ள ராஜாக்கள் -நீ இல்லாமல் போனாலும் இருக்க மாட்டார்கள்
-நீ இருந்தால் உன் அம்பு கொள்ளும்-திரௌபதி பரிபவம் கண்டு அன்றே சங்கல்பித்தேன்–துச்சோததனை -அழல விழித்தான் அச்சோ அச்சோ —

தஸ்மாத்த்வமுத்திஷ்ட யஷோ லபஸ்வ–ஜித்வா ஷத்ரூந் புங்க்ஷ்வ ராஜ்யம் ஸமரித்தம்.–மயைவைதே நிஹதா பூர்வமேவ–நிமித்தமாத்ரம் பவ ஸவ்யஸாசிந்—৷৷11.33৷৷
நீயே முடிப்பாய் ஆனால் நான் எதற்கு சண்டை போடா வேன்டும் -இடது கையால் வில்லை வைத்து இடது கையாலே அம்பு விட வல்லவன் நீ
இந்த தனி சக்தி நான் உனக்கு அருளி இருக்க அதை உபயோகப் படுத்த வேண்டாமோ –
நிமித்தமாத்ரம் பவ ஸவ்யஸாசிந்-நீ நிமித்த மாத்திரம் -வெறும் அம்பாக இருந்தால் போதும் -நானே செலுத்துகிறேன் -உன் கையில் அம்பு போலே நீ என் கையில் –
அதனாலே எழுந்திராய் -இந்த ஞானம் வந்த பின் -சண்டை போட்டு ஷத்ரிய தர்மம் செய்து -பெயர் பெறுவாய் -ராஜ்யம் அனுபவிப்பாய் –
இவர்கள் என்னாலே முன்னமே சுடப்பட்டார்கள்

த்ரோணம் ச பீஷ்மம் ச ஜயத்ரதம் ச–கர்ணம் ததாந்யாநபி யோதவீராந்.–மயா ஹதாம் ஸ்த்வம் ஜஹி மா வ்யதிஷ்டா-யுத்யஸ்வ ஜேதாஸி ரணே ஸபத்நாந்–৷৷11.34৷৷
முதல் அத்யாயம் கேள்விக்கு இங்கு பதில் -துரோணர் பீஷ்மர் பூஜிக்கத்த தக்கவர்கள் எப்படி கொல்வேன்
காரணர்கள் துரோணர் பீஷ்மர் என்னால் முன்னமே கொள்ளப் பட்டார்கள் -அதர்மம் இல்லை -விரோதிகள் -பயம் வேண்டாம் ஒரே சமாதானம் அநேகம் பதில்கள்
-அன்பு காட்ட வேண்டாம் -பயம் வேண்டாம் -தர்ம காரியமே -எழுந்து இருந்து யுத்தம் செய்வாய் -நன்றாக தூண்டி விட்டான்

ஸஞ்ஜய உவாச–ஏதச்ச்ருத்வா வசநம் கேஷவஸ்ய–கரிதாஞ்ஜலிர்வேபமாந கிரீடீ.-நமஸ்கரித்வா பூய ஏவாஹ கரிஷ்ணம் -ஸகத்கதம் பீதபீத ப்ரணம்ய—৷৷11.35৷৷
கேசவனுடைய இந்த மூன்று ஸ்லோகங்களை கேட்ட அர்ஜுனன் -கிரீடம் அணிந்த அர்ஜுனன் கீழே விழுந்து சேவித்தான் -கிரீடம் அணிந்த பலன் இப்பொழுது
தான் பெற்றான் -செவிக்காத பொழுது இது பாரம் தானே -பயந்த உள்ளத்துடன் வணங்கி -கை கூப்பி நடுங்கி -தொண்டை தழுதழுத்தது பேச தொடங்கினான் –

அர்ஜுந உவாச–
ஸ்தாநே ஹரிஷீகேஷ தவ ப்ரகீர்த்யா–ஜகத் ப்ரஹரிஷ்யத்யநுரஜ்யதே ச.–ரக்ஷாம் ஸி பீதாநி திஷோ த்ரவந்தி–ஸர்வே நமஸ்யந்தி ச ஸித்தஸங்கா—৷৷11.36৷৷
11-ஸ்லோகங்களால்– ஸ்தோத்ரம் பண்ணி கொண்டாடுகிறான் -அஞ்சலி பரம முத்திரை –தேவர்கள் சேவித்து ஈடுபட -ஸ்தானம் -உனக்கு ஒக்கும் ஏற்புடையது
-இந்திரியங்களை அடக்கி அருளுபவர் -ஜகத் -உள்ள தேவர்கள் கந்தர்வர்கள் -ப்ரஹரிஷ்யத்ய நுரஜ்யதே ச–ஆனந்தம் அடைந்து -அநுராகம் ஈடுபாடு
அனுகூல்ய சிந்தை உள்ளவர்கள் இவர்கள் / ராக்ஷஸர்கள் பயந்து திசைகள் எங்கும் ஓடுகிறார்கள் -/சித்தர்கள் சனகாதிகள் -கை கூப்பி வணங்குகிறார்கள் –

கஸ்மாச்ச தே ந நமேரந்மஹாத்மந்–கரீயஸே ப்ரஹ்மணோப்யாதிகர்த்ரே.—அநந்த தேவேஷ ஜகந்நிவாஸ–த்வமக்ஷரம் ஸதஸத்தத்பரம் யத்—৷৷11.37৷৷
மஹாத்மாவே -மிக பெரியவரே -நான்முகனை ஸ்ருஷ்டித்த ஆதியே -யார் தான் உன்னை சேவிக்க மாட்டான் என்று இருப்பார்கள் -பெருமையால் கைகள் தானே கூப்புமே
–கண்டவாற்றால் தனதே உலகு என்று நின்றான் -ஆதி ராஜ்யம் அதிகம் புவனானாம் -காண் தகு தோள் அண்ணல் தென் அத்தியூரர் –நான்முகனை நாராயணன் படைத்தான் –
அனந்த -தேவேச தேவர்களுக்கு நாயகன்-நியமிப்பவன் -ஜகத்தை வியாபித்து வாசஸ்தானமாக கொண்டவன் -அந்தர் பஹிஸ்த தத்சர்வம் —
-ஆகாசம் வியாபிக்கும் நியந்த்ருத்வம் இல்லை -இவன் நீக்கமற நிறைந்து இருந்தும் நியமித்தும் -ராஜா சிலரை நியமிக்கலாம் வியாபிக்க முடியாதே -/
அநந்த -கால தேச வஸ்து பரிச்சேத ரஹிதன் -தேவேஷ–நியந்த்ருத்வம் / ஜகந்நிவாஸ–வியாபகத்வம் -அக்ஷரம் -அழிவில்லாத பாத்த முக்த நித்ய ஜீவாத்மாக்கள்
-அனைவருக்கும் அந்தராத்மா -சத் அசத்–பிரக்ருதிகளுக்கும் அந்தராத்மா – அசத் -காரண ரூபம் பிரளய காலத்தில் பிரகிருதி-நாமம் ரூபங்கள் இல்லாமல்
-காரண அவஸ்தை / சத் -ஸ்ருஷ்டி காலத்தில் பிரகிருதி -கார்ய அவஸ்தை நாமம் ரூபங்கள் உண்டே -/அதை காட்டிலும் மேம்பட்ட முக்தர்களுக்கும் அந்தராத்மா –
இதம் ஏக மேவ அக்ர ஆஸீத் –தத் த்வம் அஸி-ஒன்பது தடவை சொல்லும் உபநிஷத் –

த்வமாதிதேவ புருஷ புராண—ஸ்த்வமஸ்ய விஷ்வஸ்ய பரம் நிதாநம்.–வேத்தாஸி வேத்யம் ச பரம் ச தாம–த்வயா ததம் விஷ்வமநந்தரூப—৷৷11.38৷৷
புராணம் பழையவன் -ஆதி தேவன் –நவோ நவோ ப வதி ஜாயமான-அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதன் –
இங்கு காணும் ஜகத்துக்கு மேம்பட்ட ஆதாரம் நீயே -நமஸ்காரங்கள் –
உன்னாலே வியாபிக்கப்பட்ட உலகம் -கணக்கில் அடங்காத உருவங்கள் -அறியப் படும் பொருளாயும் அறிபவனும் -அறிவும்– நீயே-வேதனம் -வேத்யா –அவனே அறிவும்
-உயர்ந்த பிராப்யம் பரமமான தாமம் -நீயே -எங்கும் வியாபித்து எல்லை அற்ற ரூபங்கள்
ஸ்வரூப வியாப்தி விக்ரஹ வியாப்தி இரண்டும் உண்டே -அங்குஷ்ட மாத்ர ஹ்ருதய கமலத்துக்குள் -மத்ய ஆத்மனி திஷ்டதி –

வாயுர்யமோக்நிர்வருண ஷஷாங்க–ப்ரஜாபதிஸ்த்வம் ப்ரபிதாமஹஷ்ச.–நமோ நமஸ்தேஸ்து ஸஹஸ்ரகரித்வ-புநஷ்ச பூயோபி நமோ நமஸ்தே—৷৷11.39৷৷
நீயே அக்னி வாயு வருணன்-சசாங்கன் சந்திரன் -பிரஜாபதி த்வம் –அவரே அவனும் அவனும் அவனும் -சாமானாதி கரண்யம் -சரீராத்மா நிபந்தனம்-
நினைத்ததை செய்யும் சரீரம் -சொன்னதை செய்பவன் வேலைக் காரன் -சேஷ பூதர்கள்-நீராய் நிலனாய் ஒரே வேற்றுமையில் சொல்லி கூப்பாடு —
நீராகி கேட்டவர்கள் நெஞ்சு அழிய நெடு விசும்பில் மாலுக்கு இருப்பு அறிய -பின்ன பிரவ்ருத்தி நிபந்தன சப்தானாம் /
தே அஸ்து நம வணக்கங்கள் உரித்தாகுக –ஆயிரம் தடவை -மீண்டும் மீண்டும் -முன் பக்கம் பின் பக்கம் நமஸ்காரம் –

நம புரஸ்தாதத பரிஷ்டதஸ்தே–நமோஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ.–அநந்தவீர்யாமிதவிக்ரமஸ்த்வம் -ஸர்வம் ஸமாப்நோஷி ததோஸி ஸர்வ—৷৷11.40৷৷
எல்லா காலத்திலும் எல்லா திசைகளிலும் நமஸ்காரம் -பயந்தும் பிரதிஜ்ஜை ஜய காலத்திலும் -வீர்யம் பராக்ரமம் -உன்னை ஒழிந்த மற்ற
அனைத்துக்கும் ஆத்மாவாக இருந்து -எல்லாவாக இருக்கிறாய் -எல்லா சொற்களும் உன்னையே சொல்லுமே -புகுந்து சத்தை அருளுகிறாய் –
புகழு நல் ஒருவன் என்கோ-பால் என்கோ –முத்து என்கோ -அமுதம் என்கோ – –கண்ணனை கூவுமாறு அறிய மாட்டேன் –

ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்தம் –ஹே கரிஷ்ண ஹே யாதவ ஹே ஸகேதி.–அஜாநதா மஹிமாநம் தவேதம் -மயா ப்ரமாதாத்ப்ரணயேந வாபி–৷৷11.41৷৷
அபராத ஷாமணம் இரண்டு ஸ்லோகங்களால் -பண்ணுகிறான் -தனிமையில் அவமானம் -கூட்டத்தில் பரிகாசம் செய்து உள்ளேன் -இப்படி பட்ட மஹிமை அறியாத
மயக்கத்தால் -நீண்ட நாள் பழக்கம் உரிமை -அன்பால் -விஸ்வரூபம் காட்டி அருளியதால் தானே மஹிமையை கண்டேன் -சஹா -என்று
அடக்கம் இல்லாமல் ஹே கிருஷ்ணனே யாதவன் -பிள்ளாய் -டே -இத்யாதி சொல்லி –

யச்சாவஹாஸார்தமஸத்கரிதோஸி–விஹாரஷய்யாஸநபோஜநேஷு.–ஏகோதவாப்யச்யுத தத்ஸமக்ஷம் -தத்க்ஷாமயே த்வாமஹமப்ரமேயம்—৷৷11.42৷৷
ஸத்காரம் -செய்யாமல் பெருமை குன்ற நடந்து -அவமானப் படுத்தி -இப்பொழுதே நீ கீழே சாரதி தன் கால் அவன் தோள்கள் மேல் -இந்த நிலையிலே
உபதேசம் -இதை புரிய வைக்க -11-அத்யாயங்கள் -கீதை முடிந்த பின்பும் இப்படியே உடகார்ந்து -இதே போலே நம் மனஸ் அஹங்காரம் பூயிஷ்டம் /
விகார-ஒய்வு எடுக்கும் பொழுது படுக்கை அமர்ந்து உண்ணும் காலத்தில் -நால்வரும் ஒரே படுக்கை -சஞ்சயனை உள்ளே விட்ட விருத்தாந்தம் –
தனிமையிலும் பலர் முன்னிலும் -அச்யுத ஆஸ்ரிதரை விடாமல் -என்னை நீ -வாக்குக்கும் மனசுக்கும் எட்டாத நீ -ஷாமணம் பண்ண வேன்டும் –
சீறி அருளாதே -அறியாத பிள்ளைகள் அன்பினால் உன் தன்னை சிறு பேர் அழைத்தோம் –வாசிகள் உண்டே இரண்டுக்கும் –
ஆண்டாள்-ஆயர் பாவனையில் -கோவிந்தா –இடையனே-சொல்லி கீழே நாராயணா -பரமன் உத்தமன் இத்யாதி -அவையே சிறு பேர் என்கிறாள் –

பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய—த்வமஸ்ய பூஜ்யஷ்ச குருர்கரீயாந்.—ந த்வத்ஸமோஸ்த்யப்யதிக குதோந்யோ–லோகத்ரயேப்யப்ரதிமப்ரபாவ—৷৷11.43৷৷
கத்ய த்ரயத்தில் -ஸ்ரீ ராமானுஜர் இத்தை கொள்வார் -மூன்று வேதங்கள் லோகங்கள் -ஒப்பு இல்லாத -சராசரங்கள் உடன் கூடிய லோகத்துக்கு தந்தை
பூஜிக்க தக்க -ஆச்சார்யர் தந்தை நீயே -தாயாய் –மற்றுமாய் முற்றுமாய் -கீழே மன்னிப்பு கேட்டு இதில் தந்தை -பண்ணின தப்பு எல்லாம் செய்து மன்னிப்பு
-பெற்ற தந்தைக்கு கடமை –குணங்களில் உனக்கு சமமானவன் இல்லை -வேறு ஒருத்தன் மேம்பட்டவனும் இல்லை -நிகரற்ற ஒப்பில்லா அப்பன் அன்றோ –
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் -தன் ஒப்பார் இல்லாத அப்பன் –

தஸ்மாத்ப்ரணம்ய ப்ரணிதாய காயம் –ப்ரஸாதயே த்வாமஹமீஷமீட்யம்.–பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யும் –ப்ரிய ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும்—৷৷11.44৷৷
அதனாலே -உடம்பை சுருக்கி கை ஏந்தி பிரார்த்திக்கிறேன் –நீயே ஸ்த்வயன் ஈசன் -அனுக்ரஹிப்பாய் -சரணாகத வத்சலன் -இருவர் லக்ஷணங்களையும் சொல்லி
பிதா புத்ரன் குற்றங்களை மன்னிப்பது போலே -நண்பனை போலவும் -பிரியம் உள்ளவர் போலவும்

அதரிஷ்டபூர்வம் ஹரிஷிதோஸ்மி தரிஷ்ட்வா–பயேந ச ப்ரவ்யதிதம் மநோ மே.—ததேவ மே தர்ஷய தேவ ரூபம் -ப்ரஸீத தேவேஷ ஜகந்நிவாஸ—৷৷11.45৷৷
தேவர்களுக்கும் காரணம் -ஜகத்துக்கு நிர்வாகன் -பார்க்கப் படாத உருவம் கண்டு-ஹர்ஷம் -பயந்தும் –
பழைய -கண்ணனாக -மயில் பீலி -தரித்து -அருளுவாய் -/ ஆதாரம் நீ பிரார்த்திப்பதை அருள வேன்டும் -அந்த ரூபம் எப்படிப் பட்டது அடுத்த ஸ்லோகம்

கிரீடிநம் கதிநம் சக்ரஹஸ்த–மிச்சாமி த்வாம் த்ரஷ்டுமஹம் ததைவ.–தேநைவ ரூபேண சதுர்புஜேந –ஸஹஸ்ரபாஹோ பவ விஷ்வமூர்தே—৷৷11.46৷৷
ஆயிரம் கைகள் -உலகம் திருமேனி -இப்பொழுது பார்க்கும் விஸ்வ ரூபம் வர்ணனை கொண்டு விளிக்கிறான் / கிரீடம் கதை -சக்கரம் -எல்லாம் ஏக வசனம் இங்கு
–தரித்து சேவை சாதித்து அருளுவாய் –விஸ்வ ரூபம் இல்லை -பழைய ரூபத்துடன் –சதுர்புஜம் -பழைய ரூபம் என்கிறான் -ஜாதோசி சங்க சக்ர கதா தர
-பிறந்த உடனே சதுர் புஜம் -தேவகி மறைத்து கொள் பிரார்த்திக்க வேண்டி இருந்ததே – அப்பூச்சி காட்டும் ஐதீகம் எம்பார்
-கையினார் சுரி சங்கு அனல் ஆழியினர் -பெரிய பெருமாளும் -காட்டி அருளினார்

ஸ்ரீ பகவாநுவாச
மயா ப்ரஸந்நேந தவார்ஜுநேதம் -ரூபம் பரம் தர்ஷிதமாத்மயோகாத்.–தேஜோமயம் விஷ்வமநந்தமாத்யம் –யந்மே த்வதந்யேந ந தரிஷ்டபூர்வம்—৷৷11.47৷৷
ஆச்வாஸப் படுத்துகிறான்-இது முதல் மூன்று ஸ்லோகங்களால் – -இத்தை யாருக்கும் காட்டின் இல்லை -ஸ்வாதந்தர்யம் அடியாக -அத்தை பிள்ளை -அன்பினால்
–தேஜஸ் நிரம்பி -வியாபித்து அளவுக்கு உட்படாமல் -சங்கல்ப சக்தியால் ஆனந்தம் அடைந்தவன் காட்டினேன் –

ந வேதயஜ்ஞாத்யயநைர்ந தாநை—ர்ந ச க்ரியாபிர்ந தபோபிருக்ரை–ஏவம் ரூப ஷக்ய அஹம் நரிலோகே-த்ரஷ்டும் த்வதந்யேந குருப்ரவீர—-৷৷11.48৷
எதனால் பார்க்க முடியாது என்று –அன்பினால் சங்கல்பத்தால் காட்டினேன் -தானத்தாலோ -அத்யயனத்தாலோ -யாகங்களாலோ ஹோமங்களாலோ தபசுக்கள்
-எதனாலும் பார்க்க முடியாதே -கௌரவ தலை சிறந்த வீரனே -உன்னை போன்ற பக்தி -ஸ்வயம் பிரயோஜனர் மட்டுமே பார்க்க முடியும்
உபநிஷத் -சொல்லுமே -தபஸ் தானம் மூலம் பார்க்கலாம் -அங்கும் பக்தி உள்ள வற்றாலே -காண முடியும்

மா தே வ்யதா மா ச விமூடபாவோ–தரிஷ்ட்வா ரூபம் கோரமீதரிங்மமேதம்.–வ்யபேதபீ ப்ரீதமநா புநஸ்த்வம் -ததேவ மே ரூபமிதம் ப்ரபஷ்ய–৷৷11.49৷৷
பழைய நால் தோள் அமுதை நன்றாக பார்ப்பாய் –துன்பம் கலக்கம் பயம் வேண்டாம் –ப்ரீதி அடைந்த மனசுதான் பார்ப்பாய் –

ஸஞ்ஜய உவாச–
இத்யர்ஜுநம் வாஸுதேவஸ்ததோக்த்வா–ஸ்வகம் ரூபம் தர்ஷயாமாஸ பூய–ஆஷ்வாஸயாமாஸ ச பீதமேநம் -பூத்வா புந ஸௌம்யவபுர்மஹாத்மா—৷৷11.50৷৷
பார்க்க அழகான திருமேனி உடன் சேவை சாதிக்க -பயம் போக்கடித்து -இயற்க்கை வடிவுடன் சேவை -மறுபடியும் -காட்சி -முன்பும் அதே வடிவு தானே –
ஆச்வாஸம் படும் படி -தோளை தட்டி –அழகிய மனசுக்கு ஆனந்தம் கொடுக்க வல்ல திருமேனி -மஹாத்மா -பொம்மை போலே வளர்ந்தும் சுருக்கியும்
-மஹாத்மா -ஸத்யஸங்கல்பன் -சுருக்குவாரை இல்லாமல் சுருக்கி பெருக்குவாரை இல்லாமல் பெருக்கி –லாவண்யம் ஸுந்த்ரயம் உடைய திருமேனி காட்டி அருளினான்

அர்ஜுந உவாச-
தரிஷ்ட்வேதம் மாநுஷம் ரூபம் தவஸௌம்யம் ஜநார்தந–இதாநீமஸ்மி ஸம் வரித்த ஸசேதா ப்ரகரிதிம் கத—৷৷11.51৷৷
அர்ஜுனன் நடுக்கம் தீர்ந்து இயற்க்கை நிலைக்கு வந்து -மனுஷ ரூபம் பார்த்து -ஸும்ய -அழகான கிருஷ்ண -அப்ராக்ருதமான திவ்ய ரூபம்
-சமுதாய அவயவ சோபை -புன மயிலே புற்று அரவு அல்குல் ராம கமல பத்ராஷா சர்வ சித்த அபஹாரம்
லாவண்யம் நம்பி -நாகை ஸுந்தர்ய ராஜ பெருமாள் -அச்சோ ஒருவர் அழகிய வா

ஸ்ரீ பகவாநுவாச-
ஸுதுர்தர்ஷமிதம் ரூபம் தரிஷ்டவாநஸி யந்மம–.தேவா அப்யஸ்ய ரூபஸ்ய நித்யம் தர்ஷநகாங்க்ஷிண–৷৷11.52৷৷
பக்தி விளைவிக்க -ஸூ பாஸ்ரய திரு மேனி -பார்க்க அறிய -தேவர்களும் காண முடியாமல் -நித்தியமாக பார்க்க ஆசை கொண்டு இருப்பார்கள்
-பிரமனும் உன்னை காண்பான் –வெள்கி நிற்பான் -யானைக்கு அருளை ஈந்த

நாஹம் வேதைர்ந தபஸா ந தாநேந ந சேஜ்யயா–.ஷக்ய ஏவம் விதோ த்ரஷ்டும் தரிஷ்டவாநஸி மாம் யதா—৷৷11.53৷৷
வேதத்தாலோ தபஸாலோ –யாகங்களாலும் முடியாதே -பக்தி ஒன்றை தவிர -அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் –
பக்தி இல்லாத வேதம் தபஸ் யாகம் தானம் மூலம் அடைய முடியாதே

பக்த்யா த்வநந்யயா ஷக்யமஹமேவஂவிதோர்ஜுந.–ஜ்ஞாதும் தரிஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரம் தப—৷৷11.54৷৷
பக்தி ஒன்றாலே முடியும் -எதிரிகளை தப்பிக்க செய்பவன் -பரந்தப -அறிய பார்க்க அடைய -உண்மையாக -இந்த உருவத்தை பார்க்க பக்தி ஒன்றே –
பர பக்தி பர ஞானம் பரம பக்தி ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள் –

மத்கர்மகரிந்மத்பரமோ மத்பக்த ஸங்கவர்ஜித–நிர்வைர ஸர்வபூதேஷு ய ஸ மாமேதி பாண்டவ—৷৷11.55৷৷
என்னையே அடைகிறான் -என்பனை குறித்து கைங்கர்யமாக கர்மங்கள் செய்து -என்னை உத்தேச்யமாக -என்னை விட்டு பிரிய முடியாமல்
-சர்வ பூதேஷூக்களுக்கு விரோதம் காட்டாமல் இருப்பவன் என்னை அடைகிறான் –

————————————————–

கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் – -8—-

June 4, 2017

ஐஸ்வர்யா அஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்தி நாம்
வேத்யோ பாதேய பாவா நாம் அஷ்டமே பேத உச்யதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்-12-

ஐஸ்வர்யா அஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்தி நாம் -மூவருக்கும்
வேத்யோ பாதேய பாவா நாம் -அறிய வேண்டியவை பற்ற வேண்டியவை
அஷ்டமே பேத உச்யதே –வேறு பாடுகள் உபதேசிக்கப் படுகின்றன

————————————————————-

அர்ஜுந உவாச
கிம் தத்ப்ரஹ்ம கிமத்யாத்மம் கிம் கர்ம புருஷோத்தம.—அதிபூதம் ச கிம் ப்ரோக்தமதிதைவம் கிமுச்யதே—–৷৷8.1৷৷-
அதியஜ்ஞ கதம் கோத்ர தேஹேஸ்மிந்மதுஸூதந.—ப்ரயாணகாலே ச கதம் ஜ்ஞேயோஸி நியதாத்மபி—৷৷8.2৷৷-
ப்ரஹ்மம் -அத்யாத்மம் -கர்மம் -மூன்றும் என்ன –
புருஷர்களின் உத்தமன் நீ சொல்ல வேன்டும்
அதி பூதம் அதி தெய்வம் அதி யஜன-எது ஆவது எப்படி -இந்திராதி தேவதைகள் அங்கங்கள் சரீரம் – -என்று
ஐஸ்வர்யார்த்தி கைவல்யர் பகவத் லாபாரதிகள் எத்தை நினைப்பர் -பிராயண காலத்தில் எப்படி நினைக்க வேன்டும் –

ஸ்ரீ பகவாநுவாச
அக்ஷரம் ப்ரஹ்ம பரமம் ஸ்வபாவோத்யாத்மமுச்யதே.—பூதபாவோத்பவகரோ விஸர்க கர்ம ஸம்ஜ்ஞித—-৷৷8.3৷৷
ப்ரஹ்மம் -அக்ஷரம் –ஸ்ருதி-பிரளயம் பொழுது அவ்யக்தம் அக்ஷரம் இடம் சேரும் என்று சொல்லுமே –அக்ஷரம் பிரக்ருதியில் நின்றும் வேறு பட்டது அன்றோ –
சரீரமே அத்யாத்ம -ஆத்மா உடன் ஒட்டிக் கொண்டு இருக்குமே-கர்மா -ருசி வாசனை-இத்யாதிகள் -பஞ்சாக்கினி வித்யையில் சுருதி சொல்லுமே –
முமுஷு இவை இரண்டையும் அறிந்து இருக்க வேண்டுமே –த்யஜிக்க வேண்டியது அது என்றும் – உபாதேயம் இது என்றும் –கர்மா- இவன் செய்யும் கிரிசைகளே –
அத்யாத்ம பிரகிருதி -ஸ்வ பாவம் -பழகியது /-கர்மா ஆண் பெண் சேர்க்கை –உலகம் வளர -/ இவை இரண்டும் விடத் தக்கவை -கைவல்யார்த்திக்கு –
ஸ்வர்க்கம் –ஆகாசம் –மழை-நெல் -ஆண் உடல் -கர்ப்பம் சுற்றி சுற்றி வரும் -துக்க சூழலை நெய் குடத்தை பற்றி ஏறும் எறும்பு
-பகவல் லாபார்த்தி -ஸ்ரீ வைகுண்டம் எதிர் பார்த்து

அதிபூதம் க்ஷரோ பாவ புருஷஷ்சாதிதைவதம்.—அதியஜ்ஞோஹமேவாத்ர தேஹே தேஹபரிதாம் வர—৷৷8.4৷৷
ஐஸ்வர்யார்த்தி – அஸ்திர அல்ப பலன்கள் -அபி பூதம் -சப்த ஸ்பர்ச ரூப கந்த இத்யாதி-அழிவுடன் கூடியவை -/
அதி தைவதம்-ப்ரஹ்மாதிகள் –ஹோமம் பண்ணி இந்திரா லோகம் போசணை பற்றி இங்கு சொல்ல வில்லை -பக்தி பண்ணுவது இங்கு
அதி யஜன இவை -பரம புருஷனை குறிக்கும் –மூவரும் பற்ற வேண்டியவை –
ப்ரஹ்மா -ஆத்மா/ர்மா அதி பூதம் அதி தைவதம்- இவற்றை விட வேறு பட்ட
மற்ற தேவதைகள் இவனுக்கு சரீரமே -மூ வகை அதிகாரிகளும் இப்படியே தான் உபாஸிக்க வேன்டும் -என்றபடி –

அந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம்.—யம் ப்ரயாதி ஸ மத்பாவம் யாதி நாஸ்த்யத்ர ஸங்ஷய—৷৷8.5৷৷
கடைசி காலத்தில் என்னையே நினைத்து சரீரம் விட்டு -என் பாவனையே அடைகிறான் –
ஐஸ்வர்யார்த்தி ஐஸ்வர்யம் உடையவனாக நினைத்து அதை பெறுகிறான் -இதையே மத் பாவம் கைவல்யார்த்தி -ஆத்மாவாகவும் உள்ளான் -என்ற நினைவு –
அவன் நினைவுடன் இருந்து அவனை அடைகிறோம் -இங்கு ஸ்வரூப ஐக்கியம் இல்லை -அவனாக ஆக முடியாதே –

யம் யம் வாபி ஸ்மரந்பாவம் த்யஜத்யந்தே கலேவரம்.—தம் தமேவைதி கௌந்தேய ஸதா தத்பாவபாவித—৷৷8.6৷৷
அந்திம ஸ்ம்ருதி -என்னை நினைத்து இருந்தவன் என்னை அடைகிறான் -ஜட பரதர் -மான் -விருத்தாந்தம் -/
மானுடைய தன்மை போலே -சாயுஜ்யம் பெறுவோம் அவன் நினைவாகவே இருந்து –

தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு மாமநுஸ்மர யுத்ய ச–மய்யர்பிதமநோ புத்திர் மாமேவைஷ்யஸ்ய ஸங்ஷயம்—–৷৷8.7৷৷
பர ப்ரஹ்மம் பற்றியே சிந்தை எப்பொழுதும் இருக்க வேன்டும் -அனைத்தும் அவனுக்கு அர்ப்பணம் செய்து அவனை அடைவோம் – இதிலே சங்கை இல்லை –
யுத்தம் செய் அதுவே உன் வர்ணாசிரமம் -நித்ய நைமித்திக கர்மம் -கர்ம யோகம் அங்கம் பக்தி அங்கி -விட்ட இடத்தில் சேர்த்தான் –
இங்கும் மூவருக்கும் -என்னையே -ஐஸ்வர்யம் உடைய என்னை இத்யாதி-
ஐஸ்வர்யார்த்திக்கு அங்கி -கர்ம யோகம் அங்கம் / கைவல்யார்த்திக்கு பக்தி யோகம் அங்கி – ஞான யோகம் அங்கம் /
பகவல் லாபாரதிக்கு பக்தி யோகம் அங்கி கர்ம ஞான யோகங்கள் இரண்டும் அங்கம் -/
நெஞ்சினாரும் அங்கு ஒழிந்தார் -மனஸ் அவன் இடம் -கரணங்கள் எல்லாம் அவன் இடம் அன்றோ –

அப்யாஸயோகயுக்தேந சேதஸா நாந்யகாமிநா—பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்தாநுசிந்தயந்—-৷৷8.8৷৷
மூன்று ஸ்லோகங்கள் ஐஸ்வர்யார்த்தி பற்றி —
அப்பியாசம் -பர ப்ரஹ்மம் ஒன்றே சிந்தை கொண்ட மனஸ் இருக்க வேண்டுமே -பக்தி -யோகம் ஒன்றாலே முடியும் —
இடைவிடாமல் ஐஸ்வர்யம் கூடிய பர ப்ரஹ்மத்தையே இடைவிடாமல் நினைத்து -வேறு ஒன்றை நினைத்தால் அதுவாக ஆவான்
-நினைத்துக் கொண்டே பரம புருஷனான என்னை அடைகிறான் -மாயையால் -என்னை என்று சொல்லாமல் -அர்ஜுனன் மேலே பார்க்க
-தேவகி நந்தன் சிரேஷ்டன்-ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் போலே
சேதஸா -நினைத்து -உபாசனம் பொழுது -அநு சிந்தனம் என்றது அந்திம காலத்திலும் என்றபடி

கவிம் புராணமநுஷாஸிதார-மணோரணீயாம் ஸமநுஸ்மரேத்ய–.ஸர்வஸ்ய தாதாரமசிந்த்யரூப-மாதித்யவர்ணம் தமஸ பரஸ்தாத்—-৷৷8.9৷৷
எப்படிப்பட்ட என்னை நினைக்க வேன்டும் –இதை நினைக்க நினைக்க -இப்படிப்பட்டவனை விட்டா சிற்றின்பம் போனோம் என்று வருந்தும் படி இருக்கும்
தாண்டி ஊடுருவி பார்க்கும் ஞானம் கவி-சர்வஞ்ஞன் – -புரா-பழமை-ஆராவமுதம் – -நியமன சாமர்த்யன் – -ஆத்மாவுக்குள்ளும் புகுந்து-சர்வ வியாபி
-ததா யதா பூர்வம் சர்வ ஷ்ராஷ்டா -ஆதார பூதன்–மனசுக்கும் வாக்குக்கும் எட்டாத – இனிமை–அகர்ம வஸ்யன் சுத்தம்
-தமஸ் தாண்டி நித்யன் -அகில ஹேய ப்ரத்ய நீகன் -தோஷம் அற்ற -அமலன் -நிமலன் -விமலன் நின்மலன் —

ப்ரயாணகாலே மநஸாசலேந–பக்த்யா யுக்தோ யோகபலேந சைவ.–ப்ருவோர்மத்யே ப்ராணமாவேஷ்ய ஸம்யக் –ஸ தம் பரம் புருஷமுபைதி திவ்யம்—৷৷8.10৷৷
பிராணன் போகும் பொழுது -அசங்காத மனஸ் -தாழ்ந்த விஷயங்களில் செல்லாமல் இங்கு அதற்கும் வேறே எங்கும் போகாமல் -இவன் இடம் வந்ததால்
-பக்தி யோகம் -அவனை பற்றிய நினைவால் -பக்தி சாதனம் -விடாமல் உபாசனம் பொழுதும் இறுதியிலும் விடாமல் நினைத்து
-திரும்பி திரும்பி சொல்லி திடப்படுத்துகிறான் -மேலே சரம காலத்தில் செய்ய வேண்டியது –
பக்தி யோகம் -இரண்டு புருவங்களுக்கு நடுவில்-பிராணனை நிறுத்தி -வைத்து -பர ப்ரஹ்மம் த்யானம் –அவனே சர்வ ஸ்வாமி
அணுவிலும் அணு-அனைத்துக்கும் தாதா -ஷ்ரஷ்டா -முகில் வண்ணன் -திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன் என்று ஐஸ்வர்யமான பாவம் அடைகிறான் –

யதக்ஷரம் வேதவிதோ வதந்தி–விஷந்தி யத்யதயோ வீதராகா–யதிச்சந்தோ ப்ரஹ்மசர்யம் சரந்தி–தத்தே பதம் ஸங் க்ரஹேண ப்ரவக்ஷ்யே –৷৷8.11৷৷—
இது முதல் மூன்று ஸ்லோகங்களால் கைவல்யார்த்தி -பாரமான ஸ்லோகங்கள் –கீழே -7-அத்யாயம் கடைசியில்– கைவல்யார்த்தி சொல்லி ஐஸ்வர்யார்த்தி
-இங்கு கிரமமாக –அர்ஜுனன் ஊர்வசியை தாயே -சொன்னவன் ஐஸ்வர்யார்த்தி ஆகமாட்டான் -யுத்தம் பண்ணாமல் ஓடி
கைவல்யார்த்தி ஆககூடாதே -என்பதால் -அங்கு அத்தை முதலில் சொல்லி -என்பர் –
வேதாந்தம் அக்ஷரம் -பரம பதம் –விஷயாந்தரங்களில் பற்று அற்றே பெற முடியும் என்று சொல்லுமே -வீடுமின் முற்றவும் இத்யாதி –
ஆத்ம ஸ்வரூபம் உடன் கூடிய என்னையே சுருக்கமாக சொல்கிறேன் -அர்ஜுனனுக்கும் ஆசை இல்லை அறிந்த பின்பு –
அக்ஷரம் -அழிவு அற்ற -ஆத்ம விசிஷ்ட பரமாத்மா என்பதே இங்கு -அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர் -இறை பற்றி –
ஆசை இல்லாமல் ப்ரஹ்மசர்யம் அனுஷ்டிக்கிறான் –

ஸர்வத்வாராணி ஸம் யம்ய மநோ ஹரிதி நிருத்ய ச.–மூர்த்ந்யாதாயாத்மந ப்ராணமாஸ்திதோ -யோகதாரணாம்—৷৷8.12৷৷
ஹிருதய கமலத்தில் அந்தர்யாமியிடம் அசையாமல் செலுத்தி -யோக தாரணம் -அஷ்ட மஹா சித்தி -என்னிடமே மனசை நிறுத்தி -பிராணனை
மூர்த்தனி தலை நாடியில் நிறுத்தி -உடலில் ஆசை இல்லாமல் –இந்திரியங்கள் வாசலை மூடி

ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரந்மாமநுஸ்மரந்.–யம் ப்ரயாதி த்யஜந்தேஹம் ஸ யாதி பரமாம் கதிம்—৷৷8.13৷৷
இந்திரியங்களை வசப்படுத்தி — -ஹிருதய புண்டரீகத்தில் -இருக்கும் -பர ப்ரஹ்ம ஏக சிந்தையாய்-பிரணவ திரு மந்த்ரம் கொண்டு -இடை விடாமல்
தியானித்து -பிரக்ருதியை விட்டு அவனை அடையலாம் -மீண்டும் பிறவி இல்லையே -பரம புருஷார்த்த மோக்ஷம் -என்றவாறு –
மூன்று மாத்திரை -சப்தம் -உச்சரிக்கும் காலம் -அகாரம் ப்ரம்ம உகாரம் விஷ்ணு -மகாரம் ருத்ரன் -அரை மாத்திரை ப்ரஹ்மம் குறிக்கும் -மூலமாகிய திரு மந்த்ரம் –
அர்த்தமும் நினைத்து கொண்டு -தேஹம் விடடவன் -ஆத்மானுபவம் அடைகிறான்

அநந்யசேதா ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஷ-தஸ்யாஹம் ஸுலப பார்த நித்யயுக்தஸ்ய யோகிந—৷৷8.14৷
கீழே வேண்டாததை நிறைய சொல்லி -ஒரே ஸ்லோகம் பகவல் லாபம் -அவனை அடைவது சுலபம் -அவனே தூக்கி கொள்கிறான்
என்னுடன் நித்தியமாக இருக்க மநோ ரதம் உள்ளவருக்கு -எல்லா காலத்திலும் இடைவிடாமல் – நான் எளிதில் கிட்டுவேன்—இதிலே எனக்கும் விருப்பம் தானே –
நித்ய அக்தர் -சேர்ந்து இருக்க ஆசை உள்ளவருக்கு – என் நினைவே அவனுக்கு தாரகம் -அவனது பிரதிபந்தகங்களை போக்கி
மயர்வற மதி நலனும் அருளுகிறேன் –யாதும் ஒரு நிலமையன் என அறிவு எளிய எம்பெருமான் –மறக்கும் என மனத்திலே நண்ணி அருளுகிறேன்
ஐஸ்வர்யாதியோ அல்ப அஸ்திர பலன்களை பெற்று திரும்பி சம்சாரத்திலே உழன்று உள்ளார்கள் –
உபகார பரம்பரைகள் பல செய்து -காட்ட திரு உள்ளம் கொண்டு காட்டி அருளி —

மாமுபேத்ய புநர்ஜந்ம துக்காலயமஷாஷ்வதம்.–நாப்நுவந்தி மஹாத்மாந ஸம் ஸித்திம் பரமாம் கதா—৷৷8.15৷৷
மூன்றையும் சொல்லி -இதில் பகவல் லாபார்த்தி உடைய ஏற்றம் -சித்தி மூவருக்கும் -சம்சித்தி இவருக்கே –
யாதாம்யா ஸ்வரூப ஞானம் பெற்று -விஸ்லேஷத்தில் தரிக்காமல் -சம்ச்லேஷத்தில் நித்ய மநோ ரதம் கொண்டு -என்னை அடைந்து பரம ப்ராப்யம் பெறுகிறார்கள் –
மகாத்மாக்கள் இவர்கள் -மற்ற இருவர் கூட சேர்ந்து நினைக்க கூடாதே –
ஜென்மம் தேகம் இனிமேல் இல்லை –கைவல்யார்த்தி மாம் உபாத்தியே இல்லையே-அல்பம் -அவனும் சித்தி -இவர் சம்சித்தி –
தேகம் -துக்கத்துக்கு ஆலயம் -சாஸ்வதம் இல்லாதது —நித்யம் அல்லாதது -புறம் சுவர் ஓட்டை மாடம் -புரளும் பொழுது அறிய மாட்டீர் –
வியன் மூ உலகு பெறினும் தானே தானே ஆனாலும் – சயமே அடிமை -பகவல் லாபம் விட்டு -அடியார் அடியார் -ஆழ்வார்கள் நிலைமை –

ஆப்ரஹ்மபுவநால்லோகா புநராவர்திநோர்ஜுந.–மாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம ந வித்யதே—৷৷8.16৷৷
ஐஸ்வர்யார்த்தி எங்கு போகிறான் எதனால் திரும்ப வருகிறான் -அழிவுடைய லோகம் போகிறான் -அதனால் அனுபவமும் அழியும் –
படைக்கப்பட்டு அழிக்கப் படுபவை -ப்ரஹ்ம லோகம் வரை அஸ்திரம் -லீலா விபூதி -நித்ய சங்கல்பம் அடியாக நித்ய விபூதி -அநந்ய பிரயோஜனர்க்கு
தன்னையே ஓக்க அருள் செய்யும் பரம காருணிகன் அன்றோ –
அர்ஜுனா -வெளுத்த ஸ்வ பாவம் உண்டே –து -என்னை அடைந்தவனோ என்னில் –

ஸஹஸ்ரயுகபர்யந்தமஹர்யத்ப்ரஹ்மணோ விது–ராத்ரிம் யுகஸஹஸ்ராந்தாம் தேஹோராத்ரவிதோ ஜநா–৷৷8.17৷৷
படித்தவர்கள் -பகல் இரவு தெரிந்தவர்கள் -சிஷ்டாசாரம் -மேலையார் சொல்லுகிறார்கள் என்கிறான் – இங்கு ப்ரஹ்மா நான்முகன் –
காலமும் இவன் அதீனம் -சதுர்முகனுக்கு பகல் பொழுது ஆயிரம் சதுர் யுகங்கள் / இரவும் ஆயிரம் சதுர் யுகங்கள் -/
-12000- தேவ வருஷங்கள் ஒரு சதுர் யுகத்துக்கு /ஒரு சதுர் யுகம் -4,320,000 -மானுஷ வருஷங்கள்
-நான்முகன் 100 -வருஷங்கள் -311, 040, 000,000,000 மானுஷ வருஷங்கள் –

அவ்யக்தாத்வ்யக்தய ஸர்வா ப்ரபவந்த்யஹராகமே.–ராத்ர்யாகமே ப்ரலீயந்தே தத்ரைவாவ்யக்த ஸம்ஜ்ஞகே—৷৷8.18৷৷
நான் முகன் இரவு பொழுதில் மூன்று லோகங்களும் -அழிந்து -ஸூஷ்மமாக பர ப்ரஹ்மம் இடம்-அவ்யக்தமாகி –
மீண்டும் பகலில் ஸூதூலம் -நாம ரூபங்கள் உடன் உண்டாகின்றன -ஸ்ருஷ்டி நான்முகன் பகலிலும் -சம்ஹாரம் இரவிலும் என்றபடி –

பூதக்ராம ஸ ஏவாயம் பூத்வா பூத்வா ப்ரலீயதே.—ராத்ர்யாகமேவஷ பார்த ப்ரபவத்யஹராகமே—৷৷8.19৷৷
கர்மாதீனம் -அவச -பிறந்து பிறந்து அளிக்கின்றன –
நான்முகன் -முடியும் காலம்-மஹா பிரளயம் – -அனைத்தும் பர ப்ரஹ்மம் இடம் -பிருத்வி அப்பு லீயதே -அப்பு தேஜஸ் லீயதே -இத்யாதி —
சதேவ –பர மரஹ்மம் மட்டுமே -உண்டு -ஐஸ்வர்யார்த்திகள் அதனால் மீண்டும் மீண்டும் மாறி மாறி பல பிறவியில் உழன்றே இருக்க வேன்டும்
நைமித்திக பிரளயம் -மூன்று லோகம் -ஜலம் சூழ்ந்து -/ கல்பம் முடியும் பொழுது –ஏகி பவதி -அனைத்தும் அழியும் மிருத்யு உப சேஷணம் போலே /

பரஸ்தஸ்மாத்து பாவோந்யோவ்யக்தோவ்யக்தாத்ஸநாதந–ய ஸ ஸர்வேஷு பூதேஷு நஷ்யத்ஸு ந விநஷ்யதி—৷৷8.20৷
அவ்யக்தோக்ஷர இத்யுக்தஸ்தமாஹு பரமாம் கதிம்.—யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம—৷৷8.21৷৷
இரண்டாலும் கைவல்யார்த்திக்கும் அழிவு இல்லை என்கிறான் -கைவல்ய அனுபவம் -இதுவும் மீண்டு வராத -ஆனால் சிற்றின்பம் –
அசித்தை விட மேம்பட்ட -ஐஸ்வர்யம் விட மாறு பட்ட ஆத்மா -பழைய நித்ய -பூத ராசிகள் அழிந்த காலத்திலும் அழியாமல்
-அக்ஷரம் -அவ்யக்தம் -அறிய முடியாத என்றபடி -என் நியமனத்தாலே கைவல்ய பிராப்தியும் –இறப்பதற்கே எண்ணாது–மின்னுரு பின்னுரு பொன்னுரு –

புருஷ ஸ பர பார்த பக்த்யா லப்யஸ்த்வநந்யயா.–யஸ்யாந்த ஸ்தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்—-৷৷8.22৷৷
எவனுக்குள்ளே எல்லாம் வைக்கப்பட்டு -பூதங்களால் வியாபிக்கப்பட்ட -பர ப்ரஹ்மம் பக்தியால் -அநந்ய -ஆஸ்ரயம் -நியமனம் இரண்டும் நாராயணார்த்தம் –
பூர்ணத்வத்த புருஷ -புரு சனா பவது கொடுத்து -பூர்ணன் -ஹிருதய கமல ஆத்ம பட்டணம் நிவாஸன்
சூத்ர மணி போலே அனைத்தும் தன்னாலே –அநந்ய பக்தியால் அவனை அடையலாம் -அர்ச்சிராதி கதி மூலம் -பஞ்சாக்கினி வித்யையில் சொல்லிய படி –
தத் க்ருதி நியாயம் -ப்ரீதி காரித்த கைங்கர்யம் நித்தியமாக அனுபவிக்கப் பெற்று சாயுஜ்யம் -அடைகிறான் –

யத்ர காலே த்வநாவரித்திமாவரித்திம் சைவ யோகிந–ப்ரயாதா யாந்தி தம் காலம் வக்ஷ்யாமி பரதர்ஷப—-৷৷8.23৷৷
எந்த வழிகளில் போனால் –பொதுவான ஸ்லோகம் இது -இரண்டுக்கும் –

அக்நிர்ஜ்யோதிரஹ ஷுக்ல ஷண்மாஸா உத்தராயணம்.–தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்மவிதோ ஜநா—৷৷8.24৷৷
கால அபிமானி தேவதைகளை குறிக்கும் –அர்ச்சிஸ் -பகல் -வளர் பிறை -உத்தராயணம் -சம்வத்சரம் வாயு
-சூர்யா சந்த்ர வித்யுத் வருண இந்திரா சத்யா லோகம் -12-லோகங்கள் -மார்க்கம் -என்றவாறு -சுக்ல கதி என்றும் சொல்வர் –
பாரிக்க வேன்டும் -ஆதி வாஹிகர்கள் கூட்டிச் செல்வர் –

தூமோ ராத்ரிஸ்ததா கரிஷ்ண ஷண்மாஸா தக்ஷிணாயநம்.–தத்ர சாந்த்ரமஸம் ஜ்யோதிர்யோகீ ப்ராப்ய நிவர்ததே—৷৷8.25৷৷
ஸ்வர்க்கம் -பித்ரு லோகம் போவார் தூமாதி மார்க்கம் / நரக அனுபவம் -தூ மாத்தி மார்க்கம் போவது இல்லை –ஆறு லோகங்கள் இருட்டு முதலில் –
தூமம் -ராத்திரி -கிருஷ்ண பக்ஷம் -தஷிணாயணம் -பித்ரு லோகம் -ஆகாசம் -சந்த்ர லோகம் இந்த ஆறும் அடைந்து திரும்புகிறான்
கீழே ஞானி -இங்கு யோகீ புண்ணியம் பண்ணினவன் -புண்ய பலன் அனுபவிக்க –

ஷுக்லகரிஷ்ணே கதீ ஹ்யேதே ஜகத ஷாஷ்வதே மதே–ஏகயா யாத்யநாவரித்திமந்யயாவர்ததே புந–৷৷8.26৷৷
வேதம் இரண்டையும் -சாஸ்வதமாக -வெளுத்த கறுத்த மார்க்கங்கள் -சத்வ குணம் சத்காரிக்கும் சுக்ல / ரஜோ தமஸ் கிருஷ்ண கறுத்த தூ மாத்தி மார்க்கம் –
ஒன்றால் திரும்பி வராத மோக்ஷம் -மாற்று ஒன்றால் திரும்புகிறான்

நைதே ஸரிதீ பார்த ஜாநந்யோகீ முஹ்யதி கஷ்சந.-தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு யோகயுக்தோ பவார்ஜுந—8.27৷৷
எல்லா காலத்திலும் யோகத்துடன் இரு -அர்ச்சிராதி மார்க்க சிந்தனை வேன்டும் என்றவாறு -பாரிப்பு முக்கியம் -அடைந்து அனுபவிப்பதை விட
-அக்ரூரர் யாத்திரை திருவேங்கட யாத்திரை பார்ப்பது போலே இதுவும் –

வேதேஷு யஜ்ஞேஷு தபஸு சைவ–தாநேஷு யத்புண்யபலம் ப்ரதிஷ்டம்.–அத்யேதி தத்ஸர்வமிதம் விதித்வா-யோகீ பரம் ஸ்தாநமுபைதி சாத்யம்—৷৷8.28৷৷
வேதங்களில் சொல்லப் பட்ட புண்ணியம் -தபஸ் யாகங்கள் -புண்ணியம் விட -இந்த அத்யாய ஞானங்கள் உடையவன் அனைத்தையும் தாண்டி இவன் இருக்கிறான் –
ஆதியான ஸ்தானம் ஸ்ரீ வைகுண்டம் பரம் ஸ்தானம் அடைகிறான் -7–8-சேஷி ஜகத் காரணம் பிராப்யாம் பிராபகம் –
என்று அறிந்தவன் – மன்னவராய் உலகாண்டு பின்னர் வானவராய் மகிழ்வு எய்துவர் -இவர் வல்லார் முனிவரே –
சிந்தையாலும் செய்கையாலும் சொல்லாலும் தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்து -பாவோ நான்யத்ர கச்சதி -மற்று ஓன்று வேண்டேன் –

——————————————————

கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -7— –பரம ஹம்ஸ விஞ்ஞான யோகம் —

June 4, 2017

ஜ்ஞான கர்மாத்மிகே நிஷ்டே யோக லஷ்யே ஸூ ஸம்ஸ்க்ருதே
ஆத்மாநுபூதி சித்த்யர்த்தே பூர்வ ஷட்கே ந சோதிதே — –2-

ஜீவாத்ம சாஷாத்காரம் -யோகத்தை அடையும் விதத்தையும் -ஆத்ம அனுபவத்தை அடையும் விதத்தையும்-பகவத் விஷய ஞானம்
-இதர விஷய வைராக்யம் -இவற்றால் அலங்கரிக்கப் பட்ட ஞான கர்ம யோகங்கள் முதல் ஆறு அத்தியாயங்களில் அருளிச் செய்யப் பட்டன –

மத்யமே பகவத் தத்தவ யாதாத்ம்யாவாப்தி சித்தயே
ஜ்ஞான கர்மாபி நிர்வர்த்த்யோ பக்தி யோக பிரகீர்த்திதே –3-

மத்திய ஆறு அத்தியாயங்களில் ஞான கர்ம யோகம் மூலம் உண்டாக வல்ல
-பர ப்ரஹ்மத்தின் உண்மையான அனுபவம் பெற-ஞான கர்ம யோகங்களால் சாதிக்கப்படும் -பக்தி யோகம் விரிவாக அருளப்படுகிறது –
ஞானம் த்யானம் உபாசனம்-மூலமே அடையலாம் – -உபநிஷத் சொல்லும்
தமேவ வித்வான் –அம்ருத இஹ பவதி -ஞான யோகத்தால்
ஸ்ரோதவ்யா கேட்டு மந்தவ்ய -நினைத்து -நிதித்யாஸவ்ய -தைல தாராவத் -தியானாதால்
உபாசனம் –ஞானம் வந்து -வேறு ஓன்று நினைவு இல்லாமல்
இங்கு பக்தி –உபாசனத்தில் அன்பு காதல் வேட்கை -கலந்து -வேறு வேறு நிலைகள் -ஸ்நேஹம் பூர்வம் அநு த்யானம் -பக்தி என்றவாறு –
பீதி இல்லாமல் -பக்தியுடன் திரு – ஆராதனம் –
கேள்விகள் இல்லாமல் -அனுபவம் -இங்கு -கீழே ஞானத்துக்கு கேள்விகள் -தர்க்க ரீதியாக பதில்கள் உண்டு –
-7–8–9-பக்தி யோகம் முடியும்–பக்தர் ஏற்றம் -பக்தி பெருமை -பற்றி சொல்லி கடைசியில் ஒரே ஸ்லோகத்தால் பக்தி யோகம் கௌரவம் தோன்ற -பீடிகை கீழ் எல்லாம் –
மீண்டும் சொல்கிறேன் -கேளு ஆரம்பித்து –9-அத்யாயம் -சொல்ல வந்தால் தடுக்க வில்லையே சொல்கிறேன் -என்பான் -மேகம் தானே வர்ஷிக்குமே – –

ஸ்வ யாதாத்ம்யம் ப்ரக்ருத்யாஸ்ய திரோதிஸ் சரணாகதி
பக்தபேத ப்ரபுத் தஸ்ய ஸ்ரைஷ்ட்யம் சப்தம உச்யதே -11-

1–ஸ்வ யாதாத்ம்யம்-தன்னுடைய இயற்கையான தன்மை -பெருமைகள் –12-ஸ்லோகங்கள் வரை
2– ப்ரக்ருத்யாஸ்ய திரோதிஸ்–மாயை -பிரகிருதி -தடுப்பு சுவர் -`13–14-ஸ்லோகங்கள்
3— சரணாகதி –மேலே -18-அத்யாயம் சரணாகதி வேறே -இங்கு பிரக்ருதி திரை போக்க -அவனை பற்றிய உண்மையான ஞானம் பிறக்க
4—பக்தபேத–வருபவர் நான்கு வகை – வராதவர் நான்கு வகை
5— ப்ரபுத் தஸ்ய ஸ்ரைஷ்ட்யம்–மிகவும் பிடித்த பகவத் லாபார்த்தி ஞானி பக்தன் –

————————————————–

ஸ்ரீ பகவாநுவாச

மய்யாஸக்தமநா பார்த யோகம் யுஞ்ஜந்மதாஷ்ரய–அஸம் ஷயம் ஸமக்ரம் மாம் யதா ஜ்ஞாஸ்யஸி தச்சரிணு৷৷—7.1৷৷
தச்சரிணு-நன்றாக கேளு -முக்கிய விஷயம் என்பதால் உசார் படுத்துகிறான்
மய்யாஸக்தமநா -என்னிடமே செலுத்திய மனசை உடையவனாய் -என்னை விட்டு க்ஷணம் காலமும் பிரிய அசக்தனாய் -தரியாதவனாய் –
என்னை நெகிழக்கிலும் என்னுடைய நல் நெஞ்சை -அகல்விக்க தானும் கில்லான்-ஆழ்வார்களாதிகளையே சொல்கிறான்
-மால் கொள் சிந்தையராய் -மாலே ஏறி மால் அருளால் -அருளிச் செய்த –
மத் ஆஸ்ரய –என்னை அடைந்து -பக்தி யோக நிஷ்டானாய் –
யோகம் யுஞ்ஜந்–பக்தி யோகம் ஆரம்பிக்கும்
சந்தேகம் இல்லாமல் பூர்ணமாக உனக்கு தெரியும் படி சொல்கிறேன் -முதல் மூன்று ஸ்லோகங்கள் அவதாரிகை

ஜ்ஞாநம் தேஹம் ஸவிஜ்ஞாநமிதம் வக்ஷ்யாம்யஷேஷத-யஜ்ஜ்ஞாத்வா நேஹ பூயோந்யஜ்ஜ்ஞாதவ்யமவஷிஷ்யதே৷৷—7.2৷৷
திடப்படுத்த -உனக்காக ஞானம் -விசேஷித்த ஞானத்தை சொல்கிறேன் –விவித விருத்த விசேஷ விசித்திர ஞானம், விஞ்ஞானம் -இங்கு விசேஷ ஞானம்
ஸ்வரூப நிரூபக தர்மம் -முதல் அறிய –இயற்கையை விவரிக்க -வியாவர்த்திக்க -இவற்றை சொல்லி -லக்ஷணம் -அடையாளம் -இன்னான் -ஞானம் -இது
-நிரூபித்த ஸ்வரூப விசேஷணங்கள் மேலே -இணையான்-அருமை பெருமைகள் -விஞ்ஞானம் இது -வைபவம் அறிய –
வேத வாக்கியங்களை கொண்டு -சொல்லுகிறேன் -யத்தை தெரிந்து கொண்டால் வேறு ஒன்றை அறிய வேண்டாமோ அத்தை உனக்கு சொல்கிறேன் –

மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஷ்சத்யததி ஸித்தயே.–யததாமபி ஸித்தாநாம் கஷ்சந்மாம் வேத்தி தத்த்வத–৷৷—7.3৷৷
பக்தனை கொண்டாடிக்கிறான் -ஆயிரத்தில் ஒருவனே -சித்தி அடைய முயல்வர் -மனுஷ்யர் -விசேஷணம் இல்லாமல் -அனைவரும் அதிகாரிகள்
அதில் யாரோ ஒருவன் தான் என்னை உள்ளபடி தெரிந்து அடைகிறான் -துர்லபம் –வாக்குக்கும் மனசுக்கும் எட்டாதவன் –
யாரும் ஒரு நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் —அவனே காட்டக் காணலாம் -யாரும் ஒரு நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான் –

பூமிராபோநலோ வாயுகம் மநோ புத்திரேவ ச.–அஹங்கார இதீயம் மே பிந்நா ப்ரகரிதிரஷ்டதா৷৷—-7.4৷৷
பிரகிருதி -அஷ்ட விதம் -பஞ்ச பூதங்களும் சப்தாதிகளும் / மனஸ் இந்திரியங்கள் /புத்தி -மஹான் -/-அஹங்காரம் -ஆகிய எட்டும் -இவை அனைத்தும் என் சரீரமே –
-24-தத்வங்கள் அசித் தத்வம் -பஞ்ச பூதங்கள் / பஞ்ச தன்மாத்திரைகள் / பஞ்ச கர்ம இந்திரியங்கள் / பஞ்ச ஞான இந்திரியங்கள் /
மனஸ் / மஹான் -அஹங்காரம் / பிரகிருதி -இவன் இங்கே சொன்னது உபலக்ஷணம் –எண்ணிலும் வரும் -எண் தானும் இன்றியே —

அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரகரிதிம் வித்தி மே பராம்.–ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத்৷৷–7.5৷৷
பிரகிருதி -போக்கிய வஸ்துக்கள் போக உபகரணம் போக ஸ்தானம் – -/ சம்சார பிரகிருதி திரோதானம் -இரண்டு வகை உண்டே
து -பிரசித்தம் -வேறுபட்ட ஜீவாத்மா உண்டே –

ஏதத்யோநீநி பூதாநி ஸர்வாணீத்யுபதாரய.–அஹம் கரித்ஸ்நஸ்ய ஜகத ப்ரபவ ப்ரலயஸ்ததா৷৷—-7.6৷৷
இவனே த்ரிவித காரணம் -வேர் முதல் வித்து -நிர்வாகன் -சேஷி / ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் மூன்றும் என்னாலேயே —
லயம் பொழுது மஹான் -அவ்யக்தம் -அக்ஷரம் -தமஸ் –பிரகிருதி புருஷ அனைத்தும் என்னிடமே லயம் -/வேதாந்த சித்தம் விஷ்ணுவே –
அப்ரஹ்மாத்மக வஸ்துக்களே இல்லையே / பர ப்ரஹ்மம் நிஷ் காரணன் -அகில காரணன் -அத்புத காரணன் –
செய்கின்ற –எல்லாம் நானே என்னும் — லீலா -கார்யம் -/கரித்ஸ்நஸ்ய-ஓன்று விடமால் அனைத்துக்கும் –

மத்தபரதரம் நாந்யத்கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய.–மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ৷৷—-7.7৷৷
நியாமகன் –சமஸ்தத்துக்கும் -சர்வஞ்ஞன் -சர்வசக்தன் -ஓத்தார் மிக்கார் இலாய மா மாயன்–குணங்களில் -பரத்வம் ஸுலப்யம் / சக்தாதிகளில்
– உடையவனும் குணசாலியும் -என் சொல்லி மறப்பேனோ நம்பியை -தென் குறுங்குடி நின்ற –செம் பொன்னே திகழும் திரு மூர்த்தி
-உம்பர் வானவர் ஆதி அம் சோதி -எம்பிரான் -காட்டி அருளிய உபகாரகன் -சரீராத்மா பாவம் -சர்வ சப்தமும் இவனையே சொல்லுமே –
நீ தனஞ்சயன் -நான் குணஜயன் -அந்தர் பஹிஸ்ஸா சர்வ வியாப்தன் -/வியாப்த கத தோஷம் தட்டாமல் –
அதற்கு த்ருஷ்டாந்தம் –மணி கோத்து நூல் த்ருஷ்டாந்தம் –என்னை விட்டு இருக்க முடியாதே -நூல் ஒன்றே -மணிகள் பல -கண்ணுக்கு தெரியாதே -நூல் தாங்கும் –
யஸ்ய ஆத்மா சரீரம் –யஸ்ய பிருத்வி சரீரம் -இத்யாதி -/ மணி த்ருஷ்டாந்தம் கடக ஸ்ருதியை திரு உள்ளம் பற்றியே –

ரஸோஹமப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி ஷஷிஸூர்யயோ–ப்ரணவ ஸர்வவேதேஷு ஷப்த கே பௌருஷம் நரிஷு৷৷—7.8৷৷
லோகத்தில் ப்ராப்யம் பிராபகங்கள் பல உண்டே என்னில் -அனைத்துமே நானே –ரசமாகவும் -சுவை இருந்தால் தான் உண்போம் -சுவை அனுபவிப்போம் -பிராப்பகம் பிராபகம்-
ஸூர்ய சந்த்ரர்களுக்கு ஒளியாகவும்–இதுவும் ப்ராபக ப்ராப்யம் / வேதத்தில் பிரணவமாகவும் / ஆகாசத்தில் சப்தமாகவும் -புருஷர்களின் ஆண்மைத்தனமாகவும் நானே உள்ளேன் -/
அனைத்தும் என் இடம் இருந்தே -பிரகாரம் பிரகாரி பாவம் -சரீராத்மா பாவம் -பிரிக்க முடியாதவை -சொல்லி -அவையும் நானே -பேத அபேத கடக சுருதிகள் உண்டே –

புண்யோ கந்த பரிதிவ்யாம் ச தேஜஷ்சாஸ்மி விபாவஸௌ.–ஜீவநஂ ஸர்வபூதேஷு தபஷ்சாஸ்மி தபஸ்விஷு৷৷—7.9৷৷
பூமியில் கந்தமாகவும் -அக்னியில் தேஜஸாகவும் -ஜீவர்களில் பிராணனாகவும் -தாப்ஸிகளின் தபஸாகவும் நானே உள்ளேன் –

பீஜம் மாம் ஸர்வபூதாநாம் வித்தி பார்த ஸநாதநம்.—புத்திர்புத்திமதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம்৷৷—7.10৷৷
அனைத்துக்கும் வித்தாகவும் –பரிணாம சக்தியும் நானே -பாலும் தயிரும் -மாறும் சக்தியும் நானே -கடையும் எண்ணமும் மத்தும் நெய்யும்
அனைத்தும் நானே –ஞானிகளின் ஞானமாகவும் -தேஜஸ் பதார்த்தங்களின் தேஜஸ் ஆகவும் நானே -ஸநாதனம் -என்றுமே இப்படியே –

பலம் பலவதாமஸ்மி காமராகவிவர்ஜிதம்.–தர்மாவிருத்தோ பூதேஷு காமோஸ்மி பரதர்ஷப৷৷7.11৷৷
பலவான்களின் பலமும் –காமம் ஆசை அற்றும்-அற்ற பலன் -ராவணாதிகள் பலம் இல்லை என்று விலக்க –ஸூ சுகத்துக்காக ஆசை காமம் -முன்னிலை ராகம் –
தர்மத்துக்கு விரோதம் அற்ற ஆசைகள் நானே –மற்றும் உள்ள நன்மைகள் அனைத்தாகவும் -உள்ளேன் -இவை அனைத்தும் என் சரீரம் பிரகாரம் –

யே சைவ ஸாத்த்விகா பாவா ராஜஸாஸ்தாமஸாஷ்ச யே.–மத்த ஏவேதி தாந்வித்தி நத்வஹஂ தேஷு தே மயி৷৷—7.12৷৷
முக்குண வஸ்யம் -பிரகிருதி / சரீரம் ஆத்மாவுக்காகவே -போலே -சேஷிக்கு அதிசயம் செய்யவே -காரண களேபரங்கள் சாஸ்த்ர ஞானம் அளிக்கிறான் –
என் இச்சையால் உள்ளும் புறமும் -இருந்து -நியமிக்கிறேன் -அனைத்தும் இவனுக்கு அதீனம் / பிரகார்ஷம் ப்ரீதி ஆனந்தம் சுகம் ஷாந்த சித்தம் சாத்விக பாவங்கள்
பரிதாபி மோகம் திருப்தி இல்லாமல் – கோபம் மோகம் பேராசை பொறுமை அற்ற தன்மை ராஜஸம்-அவிவிவேகம் தாமசம் / அவைகள் என்னை சார்ந்து இருக்கும் -என்றவாறு –
இந்த ஒன்பது ஸ்லோகங்களால் தான் யார் -யாதாம்யா உண்மையான ஞானம் காட்டி அருளினான் –

த்ரிபிர்குணமயைர்பாவைரேபி ஸர்வமிதம் ஜகத்–மோஹிதம் நாபிஜாநாதி மாமேப்ய பரமவ்யயம்৷৷—7.13৷৷
இவ்வளவு தெளிவாக இருக்க நாம் அறியாமல் இருக்க என்ன காரணம் –மோகத்தில் கட்டுப்பட்ட ஜகம் என்னை அறியாமல் -முக்குண வசப்பட்டு -இருக்கும் –
இந்த ஜகத் -பரிகாச புன்னகை உடன் -அநித்தியம் மாறிக் கொண்டே இருக்கும் -தாழ்ந்த –மூல பிரகிருதி உடன் சேர்ந்தே உள்ள உலகம் –
சர்வம் இதம் ஜகத் -ஆ ப்ரம்மா பீலிகா வரை -என்னை அறியாமல் -மாம் -அவ்யயம் பரம் -அழிவற்ற -இவை குறை உள்ளவை அழிபவனை தாழ்ந்த –
சத்வ குணத்தாலும் மயக்கம் வருமோ என்னில் –தேன் உள்ள பழம் உண்ண போகும் பொழுது அதிலே விஷம் கலந்து இருக்க -மிஸ்ரமாக அன்றோ ஜகத் –
காலம் உணர்த்த என்னிடமே லயம் -மீண்டும் ஸ்ருஷ்டி –யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் நான் –
ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் -அகில ஹேய ப்ரத்ய நீகன் – கல்யாணை ஏக குணாத்மகன் —

தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா.–மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே৷৷—7.14৷৷
இந்த முக்குண சேர்க்கை பிரகிருதி மாயா என்னாலே படைக்கப் பட்டது -மிக உயர்ந்தது -தைவ தன்மை கூடியது –லீலைக்காக -பகவத் ஸ்வரூப திரோதானம் -இது –
மாயா -ஆச்சர்யம் என்றவாறு –மாயாவி -மயக்கும் பகவான் –தாண்டி செல்வது அரியது–மித்யை இல்லை –
மஹா விசுவாசத்துடன் என்னை அடைந்தவர்களுக்கு -பரம காருணிகனான -நான் -இந்த மாயையை தாண்டுவிக்கிறேன்
-தே தரந்தி-அவர்கள் தாண்டுகிறார்கள் -என்னை சரண் அடைந்தவர்கள் —
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆம் அவை நன்கு அறிந்தனன் –அகற்றி நீ என்னை அரும் சேற்றில் அழுத்த –
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேன் –மணி வண்ணன் வாசு தேவன் வலையுள்ளே அகப்பட்டேன் -அரையர் சேவை விருத்தாந்தம்
-எம்பார் -கயிற்று வலை காட்டாமல் திருக் கண்களைக் காட்டி -கமலக் கண் என்னும் நெடும் கயிறு -ஆண்டாள் –கண் வலைப் படாமல் அகவலை அகப்பட வேண்டுமே –
இந்த சரணாகதி -வேறே -சரம ஸ்லோகம் சரணாகதி வேறே – பயன் பக்தி ஆரம்ப விரோதி போக்க –தடைகளை நீக்கி -பிராயச்சித்தம் பண்ணி போக்க முடியாத
பாப மூட்டைகள் உண்டே -அவற்றை தொலைக்க அங்கு -இங்கு உண்மை அறிவு தெரியாமல் திரை இருக்க -அத்தை நீக்க -மாயையை விலக்கி -ஞானம் தெளிவு பிறக்க –
நாம் சரம ஸ்லோகம் -ரஹஸ்ய த்ரயத்தில் -அங்க பிரபத்தி இல்லை -நேராக மோக்ஷம் கொடுக்கும் -சர்வ பாபேப்யோ -சர்வ கர்மங்களும் போக்கி இங்கே –
மாம் -சர்வஞ்ஞன் -சர்வ சக்தன்- பூர்ணன்- பிராப்தன்- காருணிகன்- ஸத்யஸங்கல்பன் -இத்யாதி

ந மாம் துஷ்கரிதிநோ மூடா ப்ரபத்யந்தே நராதமா–மாயயாபஹரிதஜ்ஞாநா ஆஸுரம் பாவமாஷ்ரிதா ৷৷—-7.15৷৷
மூடர்கள்-என்னை அறியாதவர்கள் -/-நராதமா– அதமர்கள் -என் கல்யாண குணங்களை அறியாதவர்கள் /
மாயயாபஹரிதஜ்ஞாநா–என்னை பற்றியும் என் கல்யாண குணங்களையும் அறிந்தவற்றை மறந்து
ஆஸுரஂ பாவம் ஆஸ்ரித–இவற்றை அறிந்து -என்னை எதிர்ப்பதற்கே உள்ள அசுரர்கள் –பாப பலத்தால் -/
இப்படி நால்வர் -மூடர்கள் -அறிவிலிகள் / ஆஸ்திக நாஸ்திகர்கள் -அறிந்து வைத்து என்னிடம் வராமல் –நாரத்தமர்கள் / சாஸ்திரம் அறிந்து தப்பான அர்த்தம் -வேத பாஹ்யர்கள் -குத்ருஷ்டிகள் / அனைத்தையும் அறிந்து என்னை விரோதிக்க என்றே விரோதிக்கும் ராவணாதிகள் -ஸ்ரீ ராம பிரபாவம் அறிந்தும்
-விழுந்தாலும் குப்புற விழுவேன் -ந நமேயம் –சேவித்தேன் என்று மோக்ஷம் அருளுவானே-/நம்மாழ்வார் -கடியன் கொடியன்-நெடிய மால் உலகம் கொண்ட அடியான்
மால் -ஆகிலும் -கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் –

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா ஸுகரிதிநோர்ஜுந.–ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப৷৷—7.16৷৷
நான்குவிதம் -ஸூ ஹ்ருதம் இருந்தால் தான் ஆஸ்ரயிப்பார்கள் -புண்ய பலத்தால் -/ பாரபக்ஷம் இல்லையே வைஷம்யம் நைர்க்ருண்யம் ஸா பேக்ஷத்வாத் இல்லாதவன் –
பரத குலத்தில் உயர்ந்தவன் நீ -இங்கும் நால்வரில் உயர்ந்த வகையில் வர வேண்டாமோ –
ஆர்த்தர் –தொலைத்த ஐஸ்வர்யம் கேட்டும் /அர்த்தார்த்தி –புதிதாக ஐஸ்வர்யம் கேட்டும் –இருவரும் அசித் அனுபவம் கண்டு கேட்டு -இத்யாதி-சிற்றின்பம் -செல்வ அனுபவம் இல்லை —/ ஜிஞ்ஞாசூ –ஆத்மானுபவம் -கேவலர்-ஜீவாத்மாவே தத்வம் என்று இருப்பவன் – /ஞானி –பகவத் லாபார்த்தி –
நால்வரும் அவன் இடமே சரண் அடைந்து பெற வேன்டும் -நால்வரையும் எனக்கு பிடிக்கும் –இதற்க்காகவாவது வருகிறார்கள்
-கிரமத்தில் திருத்தி-திருப்பி – மேலே வர வாய்ப்பு உண்டே-எழுவார் -விடை கொள்வார் -ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் –

தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகபக்திர்விஷிஷ்யதே.ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்தமஹம் ஸ ச மம ப்ரிய৷—7.17৷৷
நித்ய யுக்த –ஏக பக்தர் –அவர்கள் என்னிடம் காட்டும் ப்ரீதியை சர்வசக்தனான என்னாலும் கூட அவர்கள் இடம் காட்ட முடியாதே –
கீழே சொன்ன நால்வருக்குள்– என்னிடம் கூடவே இருக்கும் ஆசை கொண்டவன் –அநந்ய பக்தன் –பிராப்யமும் பிராபகமும் நானே என்று இருப்பவர்கள் -ஏக பக்திர் –
எனக்கும் ப்ரீதி -அவர்கள் அத்யர்த்த ப்ரீதி -தாழ விட்டு பக்தர்களை உயர்த்தி பேசும் புருஷோத்தமன் -வாரிக் கொண்டு உன்னை விழுங்குவான் காணில் -என்று இருக்க
என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றும் பருகினான் -என் ஆசையும் உன்னுடைய அதீனம் -/ என் அவா அறச் சூழ்ந்தாயே -/
மாசறு சோதி -மடலூருத்தல் -ஊர் எல்லாம் துஞ்சி -மடல் எடுக்க முடியாமல் -பேர் அமர் காதல்- பின் நின்ற காதல் கழிய மிக்கதொரு காதல் -வளர்த்து
நெஞ்சப் பெரும் செய்யுள் -ஈர நெல் வித்து விதைத்த -ஊரவர் கவ்வை எரு -அன்னை சொல் நீர் -பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த
-அமரும் காதல் -விலக்காதே / பின் நின்ற காதல் –வேண்டாம் என்று விலகி போனாலும் -ஹிரண்ய புரம் குட்டி சுவர் -செல்வ நாரணன் என்ற சொல் கேட்டு –

-12-ஸ்லோகங்களில் தன் பெருமையையும் -13-/-14-ஸ்லோகங்களில் பிரகிருதி மாயை -திரோதானம் -சரணாகதி ஒன்றே அவனை அடைய வழி என்றும் –
-15-ஸ்லோகத்தில் இவனை நாடாத நான்கு வித பக்தர்கள் -16-ஸ்லோகத்தில் இவனை நாடும் நான்கு வித பக்தர்களையும்
17-ஸ்லோகத்தில் அநந்ய பக்தர் -ஞானியே மேலானவன் என்று அருளிச் செய்து –

உதா₄ராஸ் ஸர்வ ஏவைதே–ஞாநீ த்வாத்மைவ மே மதம் |–ஆஸ்தி₂தஸ் ஸஹி யுக்தாத்மா–மாமேவாநுத்தமாம் க₃திம் ||—18-
ஏதெ ஸர்வ ஏவ உதா₄ரா: – இவர்கள் எல்லாருமே வள்ளல்கள், -வேண்டிற்றெல்லாம் தரும் கோதில் சீர் கண்ணன்”
ஞாநீ து (மே) ஆத்மா ஏவ – ஞானியோவெனில் (எனக்கு) ஆத்மாவாகவே, தாரகனாகவே இருப்பவன்.(என்று)
மே மதம் – என்னுடைய சித்தாந்தம்/ வேதாந்தம் வேறே சொல்லட்டும் –
என்நெஞ்சினால் நோக்கிக் காணீர் -போலே -என்னதுன்னதாவியில் அறிவார் உயிரானாய் அவன் மதம் தோற்றும்-
இவர்கள் பிரார்திக்கவே நான் கொடுப்பவன் ஆனேன் -அதனால் வள்ளல் -புருஷோத்தமன் வாக்யம் அன்றோ
ஞானி சப்தமாக இருந்தாலும் பக்தனையே சொல்கிறான் -பக்தி ரூபா பன்ன ஞானம் –
யுக்தாத்மா ஸ: மாம் ஏவ – என்னோடு சேர விரும்புகிற அவன் என்னையே,
மாமேவாநுத்தமாம் க₃திம் ஆஸ்தி₂த: ஹி – ஒப்பற்ற ப்ராப்யமாகக் கொண்டுள்ளானன்றோ.-
பசுவும் கன்றைபோல பகவானும் பக்தனும்.-“உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்”
மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்வம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் –ஆச்சார்ய ஹிருதயம் -179-

ப₄ஹூநாம் ஜந்மநாமந்தே-ஞாநவாந் மாம் ப்ரபத்யந்தே |–வாஸுதே₃வஸ் ஸர்வமிதி-ஸ மஹாத்மா ஸுது₃ர்லப₄ ||—19-
பல புண்ய ஜன்மாக்கள் கழிந்த பின்பே -ஞானம் படைத்தவன் என்னை சரண் அடைகிறான் –
எந்த ஞானம் – உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -என்று இருப்பவர்கள் –
நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள்,ஆழ்வார்கள் அனைவரும் , பிரகலாதன் ஆகியோர் இத்தகைய மஹாத்மாக்கள் ஆவர்.
பெரிய திருமொழி – 6-1 – ல் எல்லா பாசுரங்களிலும் “ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்” என்றும் –
வாமனன் அடியிணை மருவுவரே” — 6-1-10 -என்றும் அவனே ப்ராப்யம், ப்ராபகம் -என்கிறார்.-
எல்லாவித பந்துவும் அவனே என்று இருப்பவர்கள் –மிகவும் துர்லபம் -பாவியேன் பல்லில் பட்டு தெறிப்பதே -பிள்ளான் பணிக்கும்
“வைஷம்ய நைத்ருண்யே ந பாபேக்ஷட்வாட்.”–பல பிறவிகளில் ஒன்றிலே இந்த நிலை -இதனாலே –
கூடிடு கூடல் -முத்து குறி -பட்ட மஹிஷி வட்டத்தின் காலில்-குயில் காலில் – விழும் படி காதல் வளர்த்து த்வரை–

அடுத்த -8 ஸ்லோகங்களால் தேவதாந்த்ர பஜனம் பண்ணி அல்ப அஸ்திர பலன்களை பெற்று இழக்கிறார்கள் என்றும்
இறுதி -3–ஸ்லோகங்களால் ஐஸ்வர்யார்த்தி கைவல்ய பகவல் லாபார்த்திகள் பற்றி சுருக்கமாக தொகுத்து அருளிச் செய்கிறான் –

காமைஸ் தைஸ்தைர் ஹ்ருதஜ்ஞாநா: ப்ரபத்ந்தேந்யதே₃வதா:|–தம் தம் நியமமாஸ்தா₂யா-ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா ॥—20-
ஸ்வயா ப்ரக்ருத்யா – தமது (முக்குணமயப் பொருள்கள் விஷயமான) அநாதி வாஸனையாலே,
நியதா: – எப்போதும் சேர்ந்திருக்கப் பெற்றவர்களாய்
தை தை: – (தம் வாஸநாகுணமான) அந்த அந்த
காமை: – (முக்குணமயமான) விரும்பப்படும் பொருள்களாலே
ஹ்ருதஜ்ஞாநா: – அபஹரிக்கப்பெற்ற (என் ஸ்வரூப விஷயமான) அறிவையுடையவர்களாய்
(அந்த அந்த பொருள்கள் கிடைப்பதற்காக)
அந்யதே₃வதா: – என்னைக் காட்டிலும் வேறுபட்ட தெய்வங்களை
தம் தம் நியமமாஸ்தா₂யா – அந்த அந்த தேவதைகளையே உகப்பிப்பதற்கு உறுப்பான நியமங்களைக் கைக்கொண்டு)
ப்ரபத்ந்தே – அவர்களையே ஆஶ்ரயித்து ஆராதிக்கிறார்கள்.
ஆரோக்யம் பாஸ்கரன் -ஞானம் ருத்ரன் -மோக்ஷம் ஜனார்த்தனன் –/ மந்தி பாய் –/ கங்கா தீரத்தில் இருந்தும் தாகத்துக்கு கிணறு வெட்டுவாரைப் போலே –

யோ யோ யாம் யாம் தநும் ப₄க்த: ஶ்ரத்த₄யார்ச்சிதுமிச்ச₂தி ।–தஸ்ய தஸ்யாசலாம் ஶ்ரத்தா₄ம் தாமேவ வித₃த₃தா₄ம்யஹம் ॥—21-
ய: ய: ப₄க்த: – எந்த எந்த தே₃வதாந்த்ர பக்தன்
யாம் யாம் தநும்- (எனது) ஶரீரமான எந்த எந்த தேவதையை
ஶ்ரத்த₄யா – விஸ்வாஸத்தோடு
அர்ச்சிதும் – ஆராதிப்பதற்கு
இச்ச₂தி – விரும்புகிறானோ
தஸ்ய தஸ்ய – அந்த அந்த பக்தனுக்கு
தாம் ஏவ ஶ்ரத்தா₄ம் – அந்த (தேவதா விஷயமான) விஶ்வாஸத்தையே
அசலாம் – (இடையூறுகளால்) அசையாததாய்
அஹம் – நான்-
அந்தர்யாமி நான் என்ற ஞானத்துடன் ஆச்ரயிப்பவர் சீக்கிரம் விட்டு என்னையே கேட்டு வருவான் -அப்படி இல்லாதவர்க்கும் –
அசைக்க முடியாத ஸ்ரத்தையை நானே உண்டாக்குகிறேன் -நாஸ்திகன் ஆக்க கூடாதே –கிரமத்தில் வருவார்களே – -கொண்டி மாட்டுக்கு தடி கட்டுவாரைப் போலே
நாட்டினான் தெய்வம் எங்கும் –சேட்டை தன் மடி அகத்து செல்வம் பார்த்து இருக்கின்றார்களே –

ஸ தயா ஷ்ரத்தயா யுக்தஸ்தஸ்யாராதநமீஹதே.—லபதே ச தத காமாந் மயைவ விஹிதாந் ஹி தாந்৷৷—7.22৷৷
என்னை உள்ளபடி அறியாமல் தேவதாந்த்ர பஜனம் -செய்பவருக்கும் பலனை நானே அளிக்கிறேன் –
என் சரீரத்தை தானே ஆஸ்ரயிக்கிறான் என்று நான் அறிவேன் —
கொடியை பந்தலில் ஏற்றுவது போலே -குச்சியில் ஏற்றி – துளி பக்தி பிறந்ததும் -இவர்களை ஆஸ்ரயித்து சில சில பலங்களை கொடுத்து –
அவரவர் இறையவர் குறையிலர் -அவரவர் -விதி வழி அடைய நின்றனர் -அந்தர்யாமியாய் புகுந்து -மஹா க்ரமம்-அவன் திரு நாமம் –
சர்வ தேவதா நமஸ்காரம் கேசவம் பிரதி கச்சதி –ஆகாசம் நீர் கடலுக்கு போவது போலே –

அந்தவத்து ப₄லம் தேஷாம் தத்ப₄வத்யல்பமேத₄ஸாம் |–தே₃வாந் தே₃வயஜோ யாந்தி மத்ப₄க்தா யாந்தி மாமபி॥—23-
யல்பமேத₄ஸாம் – புல்லறிவாளர்களான அவர்களுக்கு
அந்தவத்து ப₄லம் – அவ்வாராதன பலன் அல்பமாகவும் முடிவுடையதாகவும் ஆகிறது. ஏனெனில்
தே₃வயஜ: தே₃வாந் யாந்தி – தேவர்களை ஆராதிப்பவர்கள் தேவர்களையே அடைகிறார்கள்
மத்ப₄க்தா அபி மாம் யாந்தி – என்னுடைய பக்தர்களும் என்னையே அடைகினறனர்.-என்னை பிரார்த்தித்து என்னையும் அடைகிறார்கள்
-உம்மை தொகையால் -கீழ் அவர்கள் ஒன்றையே அடைகிறார்கள் -அபி சப்தம் -இத்தையே காட்டும் -மோக்ஷம் பெற்றால் ஆரோக்யம் செல்வம் ஞானம்
எல்லாமே கிடைத்ததாகுமே -அவகாத ஸ்வேதம் போலே -நெல்லு குத்த வியர்வை தானே வருமே –
ஸூ ஆராதன் இவன் -அவர்கள் துராராதர்கள் -/இந்திரன் -ஆத்ம ப்ரச்னம் -தலை குப்புற தள்ளி விட இவன்
ஐஸ்வர்யம் அக்ஷரம் பரமபதமும் கொடுத்தும்-வெட்க்கி இருந்து – அடியார்க்கு என் செய்வான் என்றே இருப்பவன் -பெத்த பாவிக்கு விடப் போமோ –
என்னையும் –அடைந்து திரும்பாமல் பேரின்பம் பெறுகிறார்கள் –கீழே அடி பட்ட பந்து போலே திரும்ப வேண்டுமே —

அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மத்யந்தே மாமபு₃த்த₄ய:। பரம் பா4வமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம் ॥
அபு₃த்த₄ய: அவ்யயம் அநுத்தமம் மம பரம் பா4வம் அஜாநந்த: —24-
அறிவிலிகள் -அவதார ரஹஸ்யம் அறியாமல் -நம்மில் ஒரு புண்யம் செய்த மனுஷ்யன் என்றே நினைத்து
-இச்சாதீனமாக அவதரித்தேன் என்று உணராமல் -இழக்கிறார்கள் -முட்டாள்கள் -திட்டி நிறுத்துவான் -தண்டனை கொடுத்து நிறுத்துவான் –
ஈன்றவள் இருக்க மணை நீர் ஆட்டுவதே– ஓ ஓ உலகின் இயல்பே –
அவ்யக்தம் -மறைந்து இருந்தவன் -வ்யக்திமாபந்நம்-கண் காண -சகல மனுஷ நயன விஷயம் ஆக்கி -அர்ஜுனனே மறந்தான் -என்னையே பற்று என்றதும் –
மாம் -அடியேனை -அஹம் -பரத்வம் -சொல்லியும் -மாமின் அஹமின் அர்த்தமும் சொல்லியும் சரண் அடைய வில்லையே –

நாஹம் ப்ரகாஶ: ஸர்வஸ்ய யோக₃மாயாஸமாவ்ருத: ।மூடோ₄யம் நாபி₄ஜாநாதி லோகோ மாமஜமவ்யயம் ॥
யோக₃மாயாஸமாவ்ருத: அஹம் ஸர்வஸ்ய ந ப்ரகாஶ: –25-
பிரகிருதி மாயையால் மறைக்கப் பட்டு பரமாத்மா ஸ்வரூபம் உணராமல் உள்ளார்கள் -கீழே -இங்கு யோக மாயை -மனுஷ சஜாதீயனாகி வந்தததால் –
கண்ணன் சரீரம் பார்த்து -மூடர்கள் -பர வாசுதேவன் வேஷம் என்று அறியாமல் -பிறப்பிலி என்று உணராமல் –
அவதார ரஹஸ்யம் கீழே பார்த்தோமே –

வேதா₃ஹம் ஸமதீதாநி வர்த்தமாநாநி சார்ஜுந ।-ப₄விஷ்யாணி ச பூ₄தாநி மாம் வேத₃ ந க்ஶ்சந ॥
அர்ஜுந ஸமதீதாநி வர்த்தமாநாநி ப₄விஷ்யாணி ச பூ₄தாநி அஹம் வேத₃ –26-
பூத பவ்ய பவத் ப்ரபு:–சேஷி காரணனன் – முக்காலத்து மக்களையும் நான் அறிவேன் -மாம் து கஶ்சந ந வேத -என்னை இவர்கள் அறிவது இல்லை –
இதனாலே தான் ஞானி துர்பலம் -பூதாநி பத்த ஜீவர்கள் -அறியாமல் -என்னையே கொடுப்பேன் என்று தெரியாமல் -வேறு கேட்டு போகிறார்கள்
-என் ஆனந்தத்துக்கு என்னை பிரார்த்தித்து கைங்கர்யம் செய்பவர் துர்லபம்

இச்சா₂த்வேஷஸமுத்தே₂ந த்வந்த்வமோஹேந பா₄ரத ।ஸர்வபூ₄தாநி ஸம்மோஹம்-ஸர்க்கே₃ யாந்தி பரந்தப ॥-27-
இச்சா₂த்வேஷஸமுத்தே₂ந – ப்ராக்ருத விஷயங்களில் சிலவற்றைப் பற்றிய விருப்பத்தாலும், மற்றும் சிலவற்றைப் பற்றிய வெறுப்பாலும் உண்டாகும்,
த்வந்த்வமோஹேந – . இரட்டைகளான வெற்றி தோல்வி, லாபம் நஷ்டம் அதனால் சுகம். துக்கம்.
இது விருப்பு – வெறுப்பால் வருகிறது. இந்த இரட்டைகளே மோஹத்தை விளைவிக்கிறது.
ஸர்க்கே₃ ஸர்வபூ₄தாநி ஸம்மோஹம் யாந்தி–பிறக்கும் பொழுதே இந்த மோகம் -சடகோபர் ஒருவரே சடத்தை விரட்டி -உலோகரில் மாறி மாறன் ஆனார்
-8-மாதத்தில் குழந்தை பிரார்த்திக்குமாம் -அந்த எண்ணத்தை மாற்றுவானாம் -தலை கீழே திருப்பி – முன்பு நேராக இருந்து மோக்ஷம் இச்சையாக இருந்ததாம் –
சடஜித் -கோபித்து தள்ளினார் -இவன் அனுக்ரஹத்தால் -கருவரங்கத்துள் இருந்து கை தொழுதேன் -கருவிலே திரு இலாதீர் காலத்தை கழிக்கின்றார்கள்
கர்ப்ப ஸ்ரீ மான் பிரகலாதாழ்வான் போல்வாரும் இரட்டை தாண்டினவர்கள்-

யேஷாம் த்வந்தக₃தம் பாபம்–ஜநாநாம் புண்ய கர்மாணாம் ।–தே த்வந்த்வ்மோஹ நிர்முக்தா-ப₄ஜந்தே மாம் த்ருட₄வ்ரதா: ॥-28-
கர்ம யோகம் ஞான யோகம் பக்தி யோகம் மூலமும் சரணாகதி மூலமும் இரட்டை தாண்டி பகவத் விஷயத்தில் ஈடுபட்டு நல் கதி அடைகிறார்கள் –
தேவதாந்த்ர பஜனம் தவிர்த்து -ஐஸ்வர்யம் கைவல்யம் மோக்ஷம் மூன்றுக்கும் ஆஸ்ரயிக்கிறார்கள்-
ஸூர் யா நமஸ்காரம் -7- ஜன்மாக்கள் –ருத்ர பக்தன் -7-/ விஷ்ணு பக்தர்கள் -பல ஜென்மங்கள் பின்பு பக்தன் ஆகிறான் –

ஜராமரணமோக்ஷாய–மாமாஸ்ரித்ய யதந்தி யே ।–தே ப்ரஹ்ம தத்விது₃: க்ருத்ஸ்நம்-அத்யாத்மம் கர்மசாகி₂லம் ॥–29-
ஜராமரணமோக்ஷாய :-ஷட் பாக விபாகம் இன்றி ப்ரக்ருதி ஸம்பந்தமற்ற ஆத்மாநுபரூப மோக்ஷம் கிடைப்பதற்காக
மாம் ஆஸ்ரித்ய யே யதந்தி – என்னை அடைந்து எவர்கள் யத்னம் பண்ணுகிறார்களோ-
மாம் -பொறி தட்டி -ஆசை வராதா என்ற நப்பாசை –
தே தத் ப்ரஹ்ம க்ருத்ஸ்நம் அத்யாத்மம் அகி₂லம் கர்ம ச விது₃: – அவர்கள் ப்ரஹ்மம்,–பற்ற வேண்டியவற்றையும் /கர்மம் – அத்யாத்மம்-தள்ளப்பட வேண்டியவை –
கர்மம் நித்ய நைமித்திக கர்மங்கள் இவற்றை அறியவேண்டும்.
பெயர்களை மட்டும் இங்கே சொல்லி விவரம் அடுத்த அத்யாயம் –கைவல்யார்த்திக்கு இங்கு -ஐஸ்வர்யார்த்திக்கும் பகவல் லாபார்த்திக்கும் மேல் ஸ்லோகத்தில்
ப்ரஹ்மம் -கர்மம் -அத்யாத்மம் -சப்தங்கள்

ஸாதி₄பூ₄தாதி₄ தை₃வம் மாம்-ஸாதி₄யஜ்ஞம் ச யே விது₃:।–ப்ரயாணகாலேऽபி ச மாம்-தே விது₃ர் யுக்தசேதஸ: ॥-30-
“எய்ப்பென்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்.
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத்தரவணைப் பள்ளியானே” –
சரணாகதர்களுக்காக அஹம் ஸ்மராமி -என்றாரே ஸ்ரீ வராஹ நாயனார்
அ தி₄யஜ்ஞம்-மூவருக்கும் போது -/பலனுக்கு தக்கவாறு பிராண பிரயாணம் காலத்தில் நினைக்க வேன்டும் -அபி -காலத்திலும் இங்கும் –
வாழும் பொழுதும் நினைக்க வேன்டும் –

——————————————

கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் – -6—யோக அப்பியாச யோகம் —

June 4, 2017

ஜ்ஞான கர்மாத்மிகே நிஷ்டே யோக லஷ்யே ஸூ ஸம்ஸ்க்ருதே
ஆத்மாநுபூதி சித்த்யர்த்தே பூர்வ ஷட்கே ந சோதிதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –2-
ஜீவாத்ம சாஷாத்காரம் -யோகத்தை அடையும் விதத்தையும் -ஆத்ம அனுபவத்தை அடையும் விதத்தையும்-பகவத் விஷய ஞானம்
-இதர விஷய வைராக்யம் -இவற்றால் அலங்கரிக்கப் பட்ட ஞான கர்ம யோகங்கள் முதல் ஆறு அத்தியாயங்களில் அருளிச் செய்யப் பட்டன –

யோகாப்யாப்ஸ விதிர்யோகீ சதுர்த்தா யோக சாதனம்
யோக சித்திஸ் ஸ்வ யோகஸ்ய பாரம்யம் ஷஷ்ட உச்யத –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–10-
1–யோகாப்யாப்ஸ விதி -முறைகள் -6-28-வரை
2–யோகீ சதுர்த்தா –நான்கு வகை யோகீகள் -6-29–6-32-வரை
3-யோக சாதனம் -சாதனங்கள் -அப்பியாசம் -வைராக்யம் இவையே சாதனங்கள் –6-33–6-36
4–யோக சித்தி -தடை வந்தாலும் சித்திக்கும் -6-37-6-46
5–ஸ்வ யோகஸ்ய பாரம்யம் –அடுத்த அத்யாயம் முன்னுரை போலே -பக்தி யோகமே உயர்ந்தது -46-/-47-ஸ்லோகங்களில் சொல்லி
-பக்குவம் -ஏற்பட்ட பின்பு -விஷய கௌரவம் மறைத்தே தானே அருளிச் செய்ய வேன்டும் –

—————————————–

ஸ்ரீ பகவாநுவாச–
அநாஷ்ரித கர்மபலம் கார்யம் கர்ம கரோதி ய–.ஸ ஸம் ந்யாஸீ ச யோகீ ச ந நிரக்நிர்ந சாக்ரிய—৷৷6.1৷৷
-9-ஸ்லோகம் வரை -முன்னால் சொன்னதை மீண்டும் சொல்லி –யோகம் -சித்த வ்ருத்தி நிரோதம் -சித்தம் பாய்வதை நிறுத்தி-என்பர் பதாஞ்சலி
பண்பாடு கலாச்சாரம் -அடக்கி வைப்பதே / மனம் வாக்கு உடல் மூன்றையும் அடக்கி /
பலத்தில் ஆசை இல்லாமல் -எனக்கு விதித்த கர்மங்களை செய்து -ஸ்வயம் பிரயோஜனம் –மடி தடவாத சோறு -/
-3-வேளை சந்தியாவந்தனம் பானா விட்டால் ப்ராஹ்மண்யம் போகுமே -காணாமல் கோணாமல் கண்டு -/
சந்யாசீ -அவனே ஞான யோகி -என்றவாறு -இதே போலே ஞான யோகியை கர்ம யோகி ஆக மாட்டான் கர்மம் செய்யா விட்டால் –
அக்னி கார்யம் விடாமல் -கர்மாவுக்காக பண்ணி -அனுஷ்டானம் -விடாமல்
செய்யாதவன் -கேவல ஞான யோகி போலே இல்லையே இவன் -என்று இரண்டையும் சேர்த்து தெரிவிக்கிறான் –
கரமாக்குள்ளே ஞான பாகம் அறிந்தவன் என்றவாறு –

யம் ஸம் ந்யாஸமிதி ப்ராஹுர்யோகம் தம் வித்தி பாண்டவ.–ந ஹ்யஸம் ந்யஸ்தஸங்கல்போ யோகீ பவதி கஷ்சந—৷৷6.2৷৷
எது ஒன்றை ஞானம் என்று சொல்கிறார்களோ -ஆத்மா யாதாம்யா ஞானம் ஏற்பட்டால் -அத்தை அடக்கிக் கொண்டதே கர்மயோகம் /
பிராகிருத பலன்களில் பற்று விடாமல் -ஆசை கொண்டவன் யோகி ஆக மாட்டான் -இப்படி அன்வய வியதிரேகங்களால் யோகி பற்றி அருளிச் செய்கிறான் /
இந்திரிய அனுபவமே ஐஸ்வர்யா அனுபவம் -அதை சன்யாசம் பண்ணாதவன் யோகி ஆகமாட்டான் –

ஆருருக்ஷோர்முநேர்யோகம் கர்ம காரணமுச்யதே.–யோகாரூடஸ்ய தஸ்யைவ ஷம காரணமுச்யதே—৷৷6.3৷৷
முனி -யோகி -ஆத்மா பற்றியே அனுசந்தானம் -ஆத்ம சாஷாத்காரம் மேலே என்ற ஆசை கொண்டு -ஏறும் படிக் கட்டே கர்ம யோகம் தான்
ஆத்ம சாஷாத்காரம் கை வந்த பின்பு –சம தர்சனம் -பெற்ற பின்பு -ஜட பரதர் -பிரகலாதன் -ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் போல்வார் –
அவருக்கு கர்ம யோகம் நிவ்ருத்தி -நித்ய நைமித்திக கர்மாக்கள் விடக் கூடாது -/

யதா ஹி நேந்த்ரியார்தேஷு ந கர்மஸ்வநுஷஜ்ஜதே—-ஸர்வஸங்கல்பஸம் ந்யாஸீ யோகாரூடஸ்ததோச்யதே—৷৷6.4৷৷
யோகம் கைவந்தவன் என்று -இந்திரியங்கள் -அளவில்லா சிற்று இன்பம் -தொலைத்து பற்று இல்லாமல் -நித்ய நைமித்திம கர்மங்கள் தவிர
வேறு காம்ய கர்மாக்கள் பண்ணாமல் -இருப்பவன்

உத்தரேதாத்மநாத்மாநம் நாத்மாநமவஸாதயேத்—ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந—৷৷6.5৷৷
பந்துராத்மாத்மநஸ்தஸ்ய யேநாத்மைவாத்மநா ஜித—அநாத்மநஸ்து ஷத்ருத்வே வர்தேதாத்மைவ ஷத்ருவத்—৷৷6.6৷৷
பற்று அற்ற மனசே ஒருவனை உயர்த்தும் –மனசே மோக்ஷ பந்து ஏக காரணம் -பந்துவும் விரோதியும் -மனசே –
நெஞ்சை வென்றவன் -ஆத்ம சப்தம் ஜீவாத்மாவுக்கும் நெஞ்சுக்கும் -இந்த்ரியங்களில் பட்டி மேயாமல் -/ ஒரே மாச மித்ரனாகவும் விரோதியாகவும்
சங்கம் பற்று தானே காமம் க்ரோதம் -சுகம் துக்கம் காரணங்கள் ஆகும்

ஜிதாத்மந ப்ரஷாந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித–ஷீதோஷ்ணஸுகதுகேஷு ததா மாநாபமாநயோ—৷৷6.7৷৷
அப்பியாசம் பண்ணும் அவனுக்கு யோக்யதை -மேலே மூன்று ஸ்லோகங்களால் –சீதா உஷ்ணம் சுகம் துக்கம் -மரியாதை அவமானம்
-இவற்றால் விகாரம் அடையாமல் -இவை சரீரத்துக்கு தானே
வெளி இந்திரியங்களை வென்றவன் -பரமமான ஆத்மா ஜீவாத்மா என்றவாறு -அதில் நிலை பெற்று இருப்பான் -இதுவே முதல் அதிகாரம் –
இவை யோகம் பண்ணி சம்பாதிக்க முடியாது -கீழேயே இத்தை அருளிச் செய்தான் —
பிரணய ரோஷம்–மட்டை அடி உத்சவம் –தனக்கே தெரியாமல் சேர்ந்தார் -சேராத நல்குரவும் செல்வமும் –விடமும் அமுதமும் –
படுக்கை ஆதி சேஷன் வாஹனம் பெரிய திருவடி இத்யாதி -பார்க்க பார்க்க மனம் பக்குவம் அடையும் –

ஜ்ஞாநவிஜ்ஞாநதரிப்தாத்மா கூடஸ்தோ விஜிதேந்த்ரிய–யுக்த இத்யுச்யதே யோகீ ஸமலோஷ்டாஷ்மகாஞ்சந—৷৷6.8৷৷
கல்லு ஸ்வர்ணம் தாழ்ந்த பதார்த்தங்கள் வாசி இல்லாமல் -ஞானம் விஞ்ஞானம் பெற்று -ஆழ்ந்த யாதாம்யா ஞானம் பெற்றவன் –
கூடஸ்தன் -இரும்பை -அடிக்க கொல்லன் – ஆத்மாவுக்கு விகாரம் வராது என்று அறிந்தவன் இந்திரியங்களை வென்றவனே யோகி
ஆவதற்கு யோக்யதை பெற்றவன் –பித்தளை ஹாடாகம் -காட்ட பித்தலாட்டம் -இவனுக்கு வாசி இல்லை-எதுவும் இவனுக்கு வேண்டாமே —
கண்ணன் ருக்மிணி எனக்கும் ஒன்றும் இல்லை என் அடியார்களும் ஒன்றும் இல்லாதவர்கள் –அவாப்த ஸமஸ்த காமன் -அநந்ய பிரயோஜனர் அன்றோ –

ஸுஹரிந்மித்ரார்யுதாஸீநமத்யஸ்தத்வேஷ்யபந்துஷு.—ஸாதுஷ்வபி ச பாபேஷு ஸமபுத்திர்விஷிஷ்யதே–৷৷6.9৷৷
கீழே அசித் -இங்கு சித் -ஸூ ஹ்ருத் -எந்த வயசாகிலும் நன்மை விரும்பி இவர்கள் /மித்ரர் -நன்னன் சம வயசு /விரோதி / உதாசீனர் /
மத்யதஸ்தர் -ஆராய்ந்து நடுநிலை /சாது -உலக நன்மை விரும்பி -பாபி -அனைவரையும் சமமாக பார்த்து –
சாது சங்கமம் வேண்டுமே என்னில் இவன் இறுதி நிலை -கீழ் இருந்தும் இங்கு வர சாது சங்கமம் வேன்டும் -இவனுக்கு இல்லை என்றவாறு

யோகீ யுஞ்ஜீத ஸததமாத்மாநம் ரஹஸி ஸ்தித–.ஏகாகீ யதசித்தாத்மா நிராஷீரபரிக்ரஹ—৷৷6.10৷৷
யோகாப்யாஸம் -மக்கள் இல்லா இடத்தில் –இடையூறு கூடாதே -/ தனித்து இருந்து -யோகம் பண்ண /மனசை அடக்கினவனாக
-ஆசை இல்லாமல் -மமகாராம் தொலைந்து -பலத்தை பற்றி நினைக்காமல் –

ஷுசௌ தேஷே ப்ரதிஷ்டாப்ய ஸ்திரமாஸநமாத்மந-நாத்யுச்ச்ரிதம் நாதிநீசம் சைலாஜிநகுஷோத்தரம்—৷৷6.11৷৷
சுத்தமான இடம் –மனஸ் ப்ரீதியாய் இருக்க வேண்டுமே -/ நாஸ்திகர் இல்லாத இடம் பாஷாண்டிகள் உள்ள இடம் கூடாதே
பரான்ன நியமம் -மற்றவர் தொட்டு உண்ண மாட்டார்கள் -இதனால் -ரஜஸ் தமஸ்-ஓட்டும் -/ஸ்திரமான ஆசனம் -மரத்தால் -அழுந்தும் மெத்தைகள் கூடாதே
-நீண்ட காலம் யோகம் பண்ண இது தான் ஸுகர்யம் -சாய்மானம் உடன் கூடிய ஆசனம் -என்பர் ராமானுஜர்
இதனாலே –ரொம்ப சாயக் கூடாது -உயரமாகவும் கீழேயும் இல்லாமல் —
பட்டு துணி மான் தோல் தர்ப்பம் பரப்பி -தேசிகன் -தர்ப்பம் மான் தோல் பட்டு துணி கிரமம் மாற்றி /

தத்ரைகாக்ரம் மந கரித்வா யதசித்தேந்த்ரியக்ரிய—-உபவிஷ்யாஸநே யுஞ்ஜ்யாத்யோகமாத்மவிஷுத்தயே–৷৷6.12৷৷
மனசை ஒரு முகப்படுத்தி -இந்திரியங்கள் வியாபாரம் தடுத்து -வெளியில் உள்ளவற்றை சொல்லி –

ஸமம் காயஷிரோக்ரீவம் தாரயந்நசலம் ஸ்திர—.ஸம் ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திஷஷ்சாநவலோகயந்—৷৷6.13৷৷
முதுகு -இடுப்பு மேல் ஒரே -தலை கழுத்து முதுகு நேர் கோட்டில் வைத்து -கண்ணாலே மூக்கின் நுனியை –உன்னுடைய -என்னுடையது இல்லை
-முழுவதும் திறக்க கூடாது -மூடவும் கூடாதே –

ப்ரஷாந்தாத்மா விகதபீர்ப்ரஹ்மசாரிவ்ரதே ஸ்தித—.மந ஸம் யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பர—৷৷6.14৷৷
சந்தோஷமாக பயம் இல்லாமல் -ப்ரஹ்மசாரி விரதம் -சாஸ்த்ர விதி -படி -மனசை ஒரு முகப்படுத்தி -என்னிடம் ஈடுபடுத்தி –
பரமாத்மா முதலில் இங்கு -சுவாஸ்ரமம் திவ்ய மங்கள விக்ரஹம் -கட்டு படுத்த இதுவே உபாயம் –அரவணை ஆழி படை அந்தணனை மறப்பு இன்று மனத்து வைப்பார்
குணங்கள் பெருமைகளை நினைத்து -மந்தி பாய் வட வேங்கட மா மலை போலே அன்றோ மனம் —
நம்பியை -தென் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் -எம்பிரானை என் சொல்லி மறப்பேனே -விடுவேனோ -நடுவே வந்து உய்யக் கொண்ட நாதனை –
கற்பார்க்கு கல்வி வாய்க்கும் –நம்பி -குண பூர்ணன் -/சன்னிஹிதன் /அம் செம் பொன்னே திகழும் திரு மூர்த்தி -அழகன் / நிறைந்த சோதி -என் நெஞ்சம் நிறைந்தன/
பொறுப்பு அவன் கொண்ட பின்பு நாம் உறுதியாக நம்புவோமே-பரஸ்மின் -சுபாஸ்ரய பூதன்

யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ நியதமாநஸ–.ஷாந்திம் நிர்வாணபரமாம் மத்ஸம் ஸ்தாமதிகச்சதி—৷৷6.15৷৷
என்னிடம் இருக்கும் -ஷாந்தி இவன் அடைகிறான் -ஷட் பாவ விகாரம் இல்லாமல் -ஷடூரமி -சோக மோகம் பசி தாகம் ஜரா மிருத்யு இல்லாமல்
சரீரம் முடியும் காலத்தில் -முன்பாகவே அடைகிறான் -நிலை பெற்ற நெஞ்சு படைத்தவனாக -யோகம் கைவந்த –

நாத்யஷ்நதஸ்து யோகோஸ்தி ந சைகாந்தமநஷ்நத–ந சாதிஸ்வப்நஷீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுந—৷৷6.16৷৷
உணவு தூக்கம் பழக்கம் மேல் இரண்டு ஸ்லோகங்களில் / மிக உண்டால் யோகம் வராதே -பட்டினி இருந்தாலும் வராதே
-தூங்குகிறவன் -சொப்பனம் பார்க்கிறவன் -வராது -முழித்து கொண்டே இருந்தாலும் வராது
பாதி வயிறு -அன்னம் -தீர்த்தம் காத்து மீதி -வாயு சஞ்சாரணம் இடை வெளி வேண்டுமே –

யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு.—யுக்தஸ்வப்நாவபோதஸ்ய யோகோ பவதி துகஹா—-৷৷6.17৷৷
யோகம் துக்கம் தவிர்க்கும் -ஆயாசத்துக்கு தகுந்த ஆகாரம் -உண்ட பின்பு நடை பயிற்சி /
கர்மத்துக்கு தக்க -உணவு /மந்தமாக இருக்க கூடாதே -/தேவையான அளவு தூக்கம் –

யதா விநியதம் சித்தமாத்மந்யேவாவதிஷ்டதே.—நிஸ்பரிஹ ஸர்வகாமேப்யோ யுக்த இத்யுச்யதே ததா—৷৷6.18৷৷
எல்லா ஆசைகளையும் விட்டு -மநோ ரதங்கள் இல்லாமல் -ஆத்மாவில் நிலை நின்று -யோகாப்யாஸம் -அவனை பற்றியே நினைத்துக் கொண்டு

யதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்மரிதா.–யோகிநோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோகமாத்மந—৷৷6.19৷৷
த்ருஷ்டாந்தம் -காத்து -இந்திரியங்கள் -ஞான ஒளி /ஆடாமல் அசையாமல் எரிவது போலே -யோகாப்யாஸம் பண்ணுபவன் –
-நெஞ்சை ஆத்மாவில் செலுத்தி -இந்த்ரியங்களால் படாமல் -அசையாத மலை -இல்லை மலைக்கு ஒளி இல்லையே /

யத்ரோபரமதே சித்தம் நிருத்தம் யோகஸேவயா.—யத்ர சைவாத்மநாத்மாநம் பஷ்யந்நாத்மநி துஷ்யதி—৷৷6.20৷৷
நான்கு ஸ்லோகங்களால் -யோக தசையே புருஷார்த்தம் -உயர்ந்தது -எந்த யோகாப்யாஸம் -நிலை நின்று ஆனந்தம் அடைகிறதோ
-இந்திரியங்கள் பட்டி மேயாமல் -நெஞ்சு ஆனந்தம் -உண்ணும் சோறு போலே எல்லாம் ஆத்மா -/ வெளி விஷயம் இவனை தீண்டாது

ஸுகமாத்யந்திகம் யத்தத்புத்திக்ராஹ்யமதீந்த்ரியம்.–வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்திதஷ்சலதி தத்த்வத—৷৷6.21৷৷
ஆத்ம அனுபவம் சுகம் இந்த்ரியங்களால் அனுபவிக்க முடியாதே -உணர்ந்தே -புத்தியால் தானே கிரகிக்க முடியும் -துக்கம் கலசாத இன்பம்
-நிலை நின்று விலகாமல் இருக்கிறான் -ஆனந்தம் உணர்ந்த பின்பு

யம் லப்த்வா சாபரம் லாபம் மந்யதே நாதிகம் தத—–யஸ்மிந்ஸ்திதோ ந துகேந குருணாபி விசால்யதே—-৷৷6.22৷
அடைந்த பின் -வேறே உயர்ந்தது என்று முயலாமல் / கொடூரமான துக்கம் வந்தாலும் சோகப் படான் -மநோ விகாரம் அடையான்-

தம் வித்யாத் துகஸம் யோகவியோகம் யோகஸம் ஜ்ஞிதம்—.ஸ நிஷ்சயேந யோக்தவ்யோ யோகோநிர்விண்ணசேதஸா—৷৷6.23৷৷
சந்தோஷிக்கும் மனஸ் உவந்த உள்ளம் -யோகாப்யாஸம் -துக்கத்துக்கு நேரே எதிரி -அறிந்து -செய்கிறான்
-பண்ணும் தசையின் உயர்வை இப்படி நான்கு ஸ்லோகங்களால் –

ஸங்கல்பப்ரபவாந்காமாம் ஸ்த்யக்த்வா ஸர்வாநஷேஷத—மநஸைவேந்த்ரியக்ராமம் விநியம்ய ஸமந்தத—-৷৷6.24৷৷
ஷநை ஷநைருபரமேத் புத்த்யா தரிதிகரிஹீதயா—-ஆத்மஸம் ஸ்தம் மந கரித்வா ந கிஞ்சிதபி சிந்தயேத்—৷৷6.25৷৷
மமகாரம் இல்லாமல் அப்பியாசம் -நான்கு ஸ்லோகங்களால் -/காமம் -ஆசை -சங்கல்பத்தாலும் ஸ்பர்சத்தாலும் -இரண்டு வகை உண்டே -மனசாலே விட்டு —
நிஜமாக துரக்க முடியாதே வீட்டில் இருந்து -மனம் கூடாமல் இருக்கலாமே -ஓன்று விடாமல் அனைத்தையும் -இந்திரியங்களை அடக்கி –
ஆத்மா இடமே செலுத்தக் கடவன் -ஆத்மாவுக்கு ரூபம் இல்லையே -சேஷ பூதன் என்ற நினைவாலே முடியும் -சுபாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹத்தில் வைத்து –
மெது மெதுவே -அசங்காத தன்மை -நிலை நிறுத்தி -வேறே விஷயங்களில் மனம் செல்லாது —

யதோ யதோ நிஷ்சரதி மநஷ்சஞ்சலமஸ்திரம்.–ததஸ்ததோ நியம்யைததாத்மந்யேவ வஷம் நயேத்–৷৷6.26৷৷
பிரதி வசனம் -அர்ஜுனன் கேட்டதாக நினைத்து -சமாதானம் -எதில் எதில் வெளியில் போகிறதோ -போன வழியிலே சென்று திருப்ப வேன்டும் –
கஷ்ட நஷ்டங்களை சொல்லி இதன் ஏற்றத்தை சொல்லி திருப்ப வேன்டும் –சஞ்சலம் அஸ்திரம் -இரண்டையும் சொல்லி –
இயற்கையாகவே சஞ்சலம் -அஸ்திரம் -ஆத்ம சாஷாத்காரம் வந்த பின்பு விஷயாந்தரங்கள் பின்னே போவது -இதிலே ஸ்திரமாக இல்லாமல் என்றவாறு –
ஒருத்தி பால் மருவி மனம் வைத்து -ஒருத்திக்கு பொய் குறித்து -அவளுக்கும் மெய்யன் இல்லை -/மின்னிடை மடவார் –உன்னுடைய சுண்டாயம் நான் அறிவேன் —
காதில் கடிப்பிட்டு –இவர் யார் -ஏதுக்கு இவர் என் –/நல்லது சொல்லி சொல்லி நியமித்து ஆத்மா இடமே வசப்படுத்த வேன்டும் –
பிள்ளை உறங்கா வல்லி தாசருக்கு பெரிய பெருமாள் திருக் கண்களை காட்டி சம்பிரதாயத்துக்கு -அப்பொழுது ஒரு சிந்தை செய்து சேர்த்தார் நம் உடையவர்

ப்ரஷாந்த மநஸம் ஹ்யேநம் யோகிநம் ஸுகமுத்தமம்—-உபைதி ஷாந்தரஜஸம் ப்ரஹ்ம பூதம கல்மஷம்—৷৷6.27৷৷
படிக்கட்டு -ஐந்து விஷயம் –அகல்மஷம் -தோஷங்கள் விலகி -சாந்த ராஜஸம் -ரஜஸ் தமஸ் தீண்டாமல் -மனஸ் ஆனந்த நிலை அடையும்
-ஆத்மா சாஷாத்காரம் அடைகிறான் -ப்ரஹ்மத்துக்கு சமம் -உத்தமமான சுகம் அடைகிறான் –

யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ விகதகல்மஷ—ஸுகேந ப்ரஹ்மஸம் ஸ்பர்ஷமத்யந்தம் ஸுகமஷ்நுதே—৷৷6.28৷৷
யோகாப்யாஸம் செய்து -பாபங்கள் தொலைந்து -ப்ரஹ்ம சம்ஸ்பர்சம் சுகம் அடைந்து -எப்பொழுதும் சதா அஸ்நுதே –
யோகத்தில் இருந்து எழுந்து இருந்தாலும் –

ஸர்வபூதஸ்தமாத்மாநம் ஸர்வபூதாநி சாத்மநி.—ஈக்ஷதே யோகயுக்தாத்மா ஸர்வத்ர ஸமதர்ஷந—৷৷6.29৷৷
நான்கு ஸ்லோகங்களால் -சமதர்சனம் -அடையும் யோகி -நான்கு வகைகள் -ஞான மயன் ஆனந்த மயன் அதனால் சமம் -/
அங்கு ஸ்ரீ மன் நாராயணன் உடன் சாம்யம் அஷ்ட குணங்கள் -பரஞ்சோதி ரூபம் ஸ்வரூப ஆவிர்பாவம் -சம்யா பத்தி மோக்ஷம் /
மாலே மணி வண்ணா -பாசுரம் -அவன் உடையவை எல்லாம் பெற்று –சமன் கோள் வீடு தரும் தடம் குன்றமே -/
அனைவரும் ப்ரஹ்மதுக்கு சரீரம் -மூன்றாவது நிலை / சரீரம் கழித்த ஆத்மா ஸ்வரூபம் பார்த்து நான்காவது நிலை –
எல்லா ஆத்மாக்களும் –தானும் ஒரே ஆகாரம் -ஞானம் ஆனந்தம் -/சரீர சம்பந்தத்தால் வேறுபாடு

யோ மாம் பஷ்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பஷ்யதி—-தஸ்யாஹம் ந ப்ரணஷ்யாமி ஸ ச மே ந ப்ரணஷ்யதி–৷৷6.30৷৷
சேவை சாதிக்காமல் போவது இல்லை -அவனும் நானும் -யார் ஒருவன் கண்ணனை எங்கும் காண்கிறானோ-எல்லா வற்றையும் என் இடம் காண்கிறானோ
அவனுக்கு -பரமாத்மாவும் தானும் சாம்யம் இரண்டாவது நிலை இது -ஐக்கியம் இல்லை -சம்யாபத்தி சாதரம்யம்-அது அதுவே –

ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வமாஸ்தித—ஸர்வதா வர்தமாநோபி ஸ யோகீ மயி வர்ததே—৷৷6.31৷৷
என்னிடமே வாழ்கிறான் -யோகம் முடிந்து எழுந்த நிலையிலும் -எப்பொழுதும் சமமாகவே பார்க்கும் -ஒன்றான தன்மையை நினைத்து
-அனைவரும் ப்ரஹ்மாவின் சரீரம் இதில் –பரமாத்மா மூலம் வந்த நினைவு மாறாதே -உயர்ந்த நிலை இது –

ஆத்மௌபம்யேந ஸர்வத்ர ஸமம் பஷ்யதி யோர்ஜுந.—ஸுகம் வா யதி வா துகம் ஸ யோகீ பரமோ மத—৷৷6.32৷৷
பரமமான யோகி -உயர்ந்த நிலை -சுகமும் துக்கமும் ஒன்றாக -ஆத்மாக்கள் எல்லாம் நிகர் -எல்லா இடத்திலும் சமமாக பார்க்கிறான் –
அவனை யோகி என்று கொண்டாடுகிறேன் -/ எல்லார் சுகம் துக்கங்கள் நம்மதாகும் -முதலில் தோன்றும் -/ என்னிடம் மனசை திருப்பு என்கிறேன்
மக்கள் அனைவர் சுகம் துக்கம் உனக்கு என்றால் திரும்புவது கஷ்டம் தானே -அனர்த்தம் ஆகுமே -ஆகையால்
உனக்கு சுகம் வந்தாலும் படாதே -மற்றவர் சுகத்துக்கு சுகப்படாதது போலே -உனக்கு துக்கம் வந்தாலும் துக்கப் படாமல் -இதுவே சம்யாபத்தி -என்றவாறு –
சுக துக்கம் கூட்டுவதில் நோக்கு இல்லையே -கழிப்பதில் தானே நோக்கு

அர்ஜுந உவாச
யோயம் யோகஸ்த்வயா ப்ரோக்த ஸாம்யேந மதுஸூதந–.-ஏதஸ்யாஹம் ந பஷ்யாமி சஞ்சலத்வாத் ஸ்திதிம் ஸ்திராம்—৷৷6.33৷৷
ஸ்திரமான ஸ்தியை நான் காண வில்லையே என்கிறான் –நீ சொல்வது நடக்குமோ -சஞ்சலம் தானே எங்கும் -எல்லா இடத்திலும் பேதங்கள் பார்க்கிறேன் –
சமம் சொல்ல ஞானம் ஆனந்தம் – பேதங்கள் நிறைய -உண்டே / அஷ்ட சாம்யம் அவனுக்கும் நமக்கும் பேதங்கள் நிறைய பேதங்கள் உண்டே

சஞ்சலம் ஹி மந கரிஷ்ண ப்ரமாதி பலவத்தரிடம்—-தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம்–৷৷6.34৷৷
மனஸ் சஞ்சலம் -மூழ்க அடிக்கும் -பலமாக திடமாக பிடித்து இழுக்கும் –பழகியது இவை -நின்றவா நில்லா நெஞ்சு
-ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகிறேன் -அடக்கி ஆழ்வது -சூறாவளி காற்றை தடுக்க முடியுமோ –
இந்திரியங்கள் பலம் -பல பாசுரங்கள் உண்டே –7–1-ஊனிலா ஐவர் -பாவ சாகரம் -ஐவர் திசை திசை வலித்து எத்துகின்றனர்-
விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செரும் ஐம் புலன்கள் இவை/

ஸ்ரீ பகவாநுவாச–
அஸம் ஷயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம் —அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச கரிஹ்யதே—৷৷6.35৷৷
நீ சொல்வது உண்மை தான் -தடக் கையனே கூப்பிட்டு -யாரையும் வெல்வாய் -இந்திரியங்கள் மனசை வெல்ல முடியாது -அடக்குவது சிரமம் தான் –
யாதானும் பற்றி நீங்கும் விரதம் கொண்டு –/ அப்பியாசம் பண்ணி பண்ணி திருத்த வேன்டும் -ஆத்மா ஏற்றம் சொல்லி –
மேலே வைராக்கியமும் வேன்டும் -தோஷங்களையும் சொல்ல வேன்டும் –
கௌந்தேய -குந்தி -துக்கங்கள் இருக்கட்டும் -கண்ணா -அப்பொழுது தான் மனஸ் உன்னிடம் இருக்கும் என்று பிரார்த்தி பெற்றாள்-
அவள் பிள்ளையாய் இருந்து அடக்க வேண்டாமோ -உனக்கு சுகமாகவே இருக்க சொல்லிக் கொடுக்கிறேன் –

அஸம் யதாத்மநா யோகோ துஷ்ப்ராப இதி மே மதி—வஷ்யாத்மநா து யததா ஷக்யோவாப்துமுபாயத—৷৷6.36৷৷
அடக்கா விட்டால் யோகம் கை வராதே -/ நெஞ்சை கட்டு படுத்தாமல் யோகம் செய்தால் -அடைய முடியாதே -நெஞ்சை வசப்படுத்தி
-கீழே சொல்லிய விதிகளின் படி பிரத்யத்னம் செய்தவன் அடைகிறான் –

அர்ஜுந உவாச
அயதி ஷ்ரத்தயோபேதோ யோகாச்சலிதமாநஸ–.அப்ராப்ய யோகஸம் ஸித்திம் காம் கதிம் கிரிஷ்ண கச்சதி—-৷৷6.37৷৷
எந்த கத்தியை அடைவான் -போகமா மோக்ஷமா நரகமா – நல்ல எண்ணத்துடன் ஆரம்பித்து -ஸ்ரத்தை உடன் – ஆனால் சாஷாத்காரம் பெறவில்லை –

கச்சிந்நோபயவிப்ரஷ்டஷ்சிந்நாப்ரமிவ நஷ்யதி—அப்ரதிஷ்டோ மஹாபாஹோ விமூடோ ப்ரஹ்மண பதி—৷৷6.38৷৷
ஸ்வர்க்கம் மோக்ஷம் போக முடியாது போலே உள்ளதே -/ பலம் ஸ்வர்க்கம் இல்லை -அப்பியாசம் நழுவ விட்டானே -அதனால் மோக்ஷம் இல்லை
–இரண்டிலும் இல்லாமல் நழுவி -ஆகாசம் மேகம் சிதறி -காற்றாலே போவது போலே -/இரண்டும் இல்லாமல் நசித்து போவானோ –

சங்கை- போக்கி அருளுவாய் -கறுத்த திருமேனி -திவ்ய மங்கள விக்ராஹம் சேவித்தால் சங்கை போகுமே -பாவியேன் காண வந்தே பாவி என்று ஓன்று சொல்லாய் –
ஐயப்பாடு அறுக்கும் அழகன் அன்றோ -உன்னை விட யாராலும் போக்க முடியாதே –
ஆரம்பித்து -நாலுபவர் கொஞ்ச நாளில் – நிறைய நாளில் -ஆரம்பிக்காத மூவரையும் -தயாராக எல்லாம் பண்ணியும் ஸ்ரத்தை உடன்

ஸ்ரீ பகவாநுவாச-
பார்த நைவேஹ நாமுத்ர விநாஷஸ்தஸ்ய வித்யதே.–நஹி கல்யாணகரித்கஷ்சத்துர்கதிம் தாத கச்சதி–৷৷6.40৷৷
பார்த்த -தாதா -பரிவுடன் சொல்கிறான் –கல்யாணத்தையே கொடுப்பேன் -அன்பு உண்டே உறவும் உண்டே -இங்கும் அங்கும் -விநாசம் இல்லை
-கல்யாண கார்யம் ஆரம்பித்தவனுக்கு துர் கதி இல்லையே –

ப்ராப்ய புண்யகரிதாம் லோகாநுஷித்வா ஷாஷ்வதீ ஸமா—ஷுசீநாம் ஷ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோபிஜாயதே–৷৷6.41৷৷
ப்ர யத்னம் பண்ணி -யோகாப்யாஸம் ஆசை உடன் ஆரம்பித்து -புண்ணியம் செய்பவர்கள் அடையும் லோகத்தில் -ஆசை வைத்து
நிறைய ஆண்டுகள் கொடுத்து -நிறைய அனுபவிக்க வைக்கிறேன் – சுவர்க்கமும் உண்டு -என்கிறான் இதில் -அதுவும் அஸ்திரம் தானே –
பயம் இல்லாமல் அனுபவிப்பான் -தாழ்ந்த இடத்தில் பிறக்க வைக்காமல் பரிசுத்த பெரியோர் வீட்டில் பிறக்க வைத்து விட்ட இடத்தில் தொடங்க -மீண்டும் யோகத்தில் சேர்த்து

அதவா யோகிநாமேவ குலே பவதி தீமதாம்.–ஏதத்தி துர்லபதரம் லோகே ஜந்ம யதீதரிஷம்—৷৷6.42৷৷
நீண்ட நாள் கழித்து நழுவினால்–மெத்த படித்த யோகிகள் வீட்டில் -குலத்தில் அவர்கள் தூண்ட சீக்கிரம் ஸித்திக்குமே-
இத்தனை நல்லது பண்ணுகிறேன் –தவ தாஸ்யம் ஸ்ரீ வைஷ்ணவ வீட்டில் புழுவாக பிறக்க வை -ஆளவந்தார் -யோகம் கை வருமே

தத்ர தம் புத்திஸம் யோகம் லபதே பௌர்வதேஹிகம்.–யததே ச ததோ பூய ஸம் ஸித்தௌ குருநந்தந—৷৷6.43৷৷
முன் தேகத்தில் யோகாப்யாஸம் பண்ணி வாசனை போகாமல் இருக்குமே -அருகில் உள்ளாரும் யோகிகள்
குரு நந்தன -குரு குலம் –யோகி தான் குரு -நீ அந்த குலத்தில் பிறந்துள்ளாய் -விடாமல் பண்ணு -நீயே திருஷ்டாந்தம் –

பூர்வாப்யாஸேந தேநைவ ஹ்ரியதே ஹ்யவஷோபி ஸ–ஜிஜ்ஞாஸுரபி யோகஸ்ய ஷப்தப்ரஹ்மாதிவர்ததே—৷৷6.44৷৷
முன் செய்ததால் -பழைய வாசனை தூண்ட -தனக்கே தெரியாமல் அதை நோக்கி சொல்லுவான் –
ஆரம்பிக்காமல் -ஆசை மட்டும் கொண்டு நழுவினாலும் -பிரகிருதி மண்டலம் தாண்டி வரும் படி ஆக்கி அருளுகிறேன்
என்று இப்படி மூன்று வகைகளும் -உண்டு –

யத்நாத்யதமாநஸ்து யோகீ ஸம் ஷுத்தகில்பிஷ–அநேகஜந்மஸம் ஸித்தஸ்ததோ யாதி பராம் கதிம்—৷৷6.45৷৷
நிறைய ஜென்மங்களில் புண்ணியம் சேர்த்து -இந்திரியங்களை அடக்கி யோகத்தில் வந்து -பாபங்கள் நீங்கப் பெற்று -சாஷாத்காரம் பெறுகிறான் –

தபஸ்விப்யோதிகோ யோகீ ஜ்ஞாநிப்யோபி மதோதிக–கர்மிப்யஷ்சாதிகோ யோகீ தஸ்மாத்யோகீ பவார்ஜுந–৷৷6.46৷৷
அர்ஜுனா நீ யோகியாக ஆவாய் -சம தர்சனம் –தபசுவீ -கேவல தபசுவீ -விட உயர்ந்தவன் -வெறும் அசித் தத்வ ஞானி
-செருப்பு குத்த தான் லாயக்கு /கேவல ஞானி விட உயர்ந்தவன் /காம்ய கேவல கர்மா பண்ணுவனை விட உயர்ந்தவன் ஆவாய்
-இத்துடன் ஆத்ம யோகி பற்றி சொல்லி முடித்து -மேலே தன்னை பற்றி

யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மநா—ஷ்ரத்தாவாந்பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத—৷৷6.47৷৷
இந்த சமத்துவம் அறிந்த யோகி -விட பக்தி யோக நிஷ்டன் -நெஞ்சை என்னிடமே செலுத்தி ஸ்ரத்தை உடன் என்னை குறித்து செய்பவனே சிறந்த பக்தி யோகி
-இது தான் என்னுடைய மதம் -அடுத்த அத்யாயத்துக்கு பீடிகை -என்னை பஜனம் பண்ணுகிறவன்
என்னை -மாம் -விசித்திர அனந்த போக வர்க்க –பரி பூர்ண –அனவதிக –ஸ்வ அபிமத -அனந்த கல்யாண குண நிதிம் –
ஆஸ்ரித வாத்சல்ய ஜலத்திம்–வாசுதேவன் திரு குமரன் –நீண்ட வியாக்யானம் –

———————————-

கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் — -5—-கர்ம சந்யாச யோகம் —

June 4, 2017

ஜ்ஞான கர்மாத்மிகே நிஷ்டே யோக லஷ்யே ஸூ ஸம்ஸ்க்ருதே
ஆத்மாநுபூதி சித்த்யர்த்தே பூர்வ ஷட்கே ந சோதிதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –2-

ஜீவாத்ம சாஷாத்காரம் -யோகத்தை அடையும் விதத்தையும் -ஆத்ம அனுபவத்தை அடையும் விதத்தையும்-பகவத் விஷய ஞானம்
-இதர விஷய வைராக்யம் -இவற்றால் அலங்கரிக்கப் பட்ட ஞான கர்ம யோகங்கள் முதல் ஆறு அத்தியாயங்களில் அருளிச் செய்யப் பட்டன

கர்த்ருத்வ புத்தியை விடுதல் சன்யாசம் –என்னுடையது அல்ல -பலன் எனக்கு இல்லை -அகர்த்ருத்வ அனுசந்தானம் வேண்டுமே –

கர்ம யோகச்ய சௌகர்யம் சைக்ர்யம் காஸ்சன தத்விதா
பிராமஜ்ஞான பிரகாரச்ச பஞ்சமத்யாய உச்யதே -ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -9-

1–கர்ம யோகச்ய சௌகர்யம்-எளிதாக பண்ணலாமே -ஸூகரம் -மூன்றாவது அத்தியாயத்தில் சொன்னதை மீண்டும் –
2–சைக்ர்யம் காஸ்சன தத்விதா -சீக்கிரமாக பலத்தைக் கொடுக்கும் -இரண்டாவது ஏற்றம் –ஞான யோகம் குறைபாடு
-விட்ட இடத்தில் ஞான யோகம் தொடர முடியாதே -கர்ம யோகம் அப்படி இல்லையே –
3–தத்விதா -அங்கங்கள் விதிக்கிறான்
-4-பிராமஜ்ஞான பிரகாரச்ச –தன்னைப் போலே பிறரை நினைக்க-சம தர்சனம் -அனைத்தும் ப்ரஹ்மாத்மகம் -ஒரே ஜாதி -சேஷபூதன்-ஒன்றே –

————————————-

அர்ஜுந உவாச
ஸம் ந்யாஸம் கர்மணாம் கரிஷ்ண புநர்யோகம் ச ஷம் ஸஸி–யச்ச்ரேய ஏதயோரேகம் தந்மே ப்ரூஹி ஸுநிஷ்சதம்–৷৷5.1৷৷
கர்ம சன்யாசம் -ஞான யோகம் -கர்மம் அனுஷ்டானம் வேண்டாமே -/ ஞான யோகமும் பேசி கர்ம யோகத்தில் ஞான பாகமும் பேசி
பூமிக்கு ஆனந்தம் கொடுப்பவனாய் இருந்து என்னை குழப்புகிறாய் /இரண்டுக்கும் எனக்கு எதை ச்ரேயஸை கொடுக்குமோ அத்தை அருளுவாய் –
நிச்சயப்படுத்தி –கர்ம சன்யாசம் ஞான யோகமா -கர்ம யோகமா -சாத்தியம் கைப் பட்டால் சாதனம் மறப்பது தானே இயல்பு -ஏணியை எட்டி உதைப்போமே –
கர்ம யோகம் சாதனம் -ஞான யோகம் சாத்தியம் என்றால் -இதை தொடர வேண்டுமோ -/ கர்ம யோகமே நேராக சாஷாத்காரம் கொடுக்கும் என்றானே முன்னமே –
அத்தை திடப் படுத்தி -கர்ம யோகத்தின் ஏற்றம் சொல்லி ஞான யோகம் பண்ணும் சிரமங்களையும் அருளிச் செய்கிறான் –
சக்தி உள்ளவர் -லோக சங்க்ரஹம் இல்லாதவர் மட்டுமே ஞான யோகத்துக்கு அதிகாரிகள் –

ஸ்ரீ பகவாநுவாச
ஸந்யாஸ கர்மயோகஷ்ச நிஷ்ரேயஸகராவுபௌ—-தயோஸ்து கர்மஸம் ந்யாஸாத்கர்மயோகோ விஷிஷ்யதே—৷৷5.2৷৷
இரண்டும் ஆத்ம சாஷாத்காரம் கொடுக்கும் -சன்யாசம் என்றது ஞான யோகம் / யோகம் -கர்ம யோகம் -/இரண்டுக்குள்ளும் கர்ம யோகம் சிறப்புடையது
பழகியது -இதுவே -/ ஞான யோகம் தேவை இல்லை / இதுவே நேராக சாஷாத்காரம் கொடுக்கும் / ஞான யோகியும் கர்ம யோகம் விட முடியாதே
-மேலும் எனக்கு பிடித்தது -ஆகையால் செய்வாய் -/
ஆயர் பிள்ளைகள் -கோவர்தனம் -கண்ணன் சொல்வதை கேட்டு செய்தார்களே -நீ சொல்வதை செய்வேன் சொல்ல வைக்க -700-ஸ்லோகங்கள் வேண்டி இருந்ததே –

ஜ்ஞேய ஸ நித்யஸம் ந்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி—–நிர்த்வந்த்வோ ஹி மஹாபாஹோ ஸுகம் பந்தாத்ப்ரமுச்யதே—৷৷5.3৷৷
சந்நியாசி -கர்ம யோகியை இங்கே குறிக்கும் -அந்த சந்நியாசி -மிக உயர்ந்தவன் -கர்த்ருத்வ ஸந்யாஸத்தை -இதுவே இந்த அத்யாயம் -/
அகர்த்ருத்வ புத்தி -நான் செய்ய வில்லை -என்னுடையது இல்லை -பலனும் எனக்கு இல்லை -/ பற்று அற்ற நிலை -ஆசை சங்கம் இல்லாதவன் –
இந்திரியங்களை பட்டி மேய விடாமல் -/ துவேஷமும் இருக்காதே ஆசை விட்ட படியால் / த்வந்தம் சுக துக்கம் அற்று -/
செய்கின்ற கிரியை எல்லாம் நானே என்னும் -செய்கை பயன் உண்பேனும் நானே என்னும் -செய்வாரை செய்விப்பேனும் யானே என்னும் /

சாங்க்ய யோகௌ பரிதக்பாலா ப்ரவதந்தி ந பண்டிதா—-ஏகமப்யாஸ்தித ஸம்யகுபயோர்விந்ததே பலம்—৷৷5.4৷৷
சாங்க்யம் ஞான யோகம் / யோகம் -கர்ம யோகம் -/ வேறு வேறு பலன் கொடுக்கும் என்பர் அஞ்ஞர்-இரண்டுக்கும் ஒன்றை பற்றி
-இரண்டாலும் பெரும் பலனை பெறலாம் -/சமமாக இரண்டையும் அருளிச் செய்கிறான் இதில் /

யத் சாங்க்யை ப்ராப்யதே ஸ்தாநம் தத்யோகைரபி கம்யதே—.ஏகம் ஸாம் க்யம் ச யோகம் ச ய பஷ்யதி ஸ பஷ்யதி—-৷৷5.5৷৷
சாங்க்யை –கர்ம யோகத்தால் அடையலாம் -அபி சப்தம் -/நீ நினைக்கும் ஞான யோக பலன் கர்ம யோகத்தால் கிட்டும் – ஒன்றாக நினைப்பவன்
தான் உண்மையை அறிந்தவன் ஆகிறான் -ஒரே பலனை கொடுக்கும் என்று அறிந்தவன் -வேறு வேறு சாதனங்களாக இருந்தாலும் –

ஸந்யாஸஸ்து மஹாபாஹோ துகமாப்துமயோகத—–யோகயுக்தோ முநிர்ப்ரஹ்ம நசிரேணாதிகச்சதி—-৷৷5.6৷৷
தடக்கையன் -கர்ம சன்யாசம் புரிந்து சன்யாசம் பற்று அற்ற தன்மை விட பாராய் -ஞான யோகம் கர்ம யோகம் இல்லாமல் பலன் தராதே —
கர்ம யோகம் -முனி -மனன சீலன் -ஆத்ம சாஷாத் காரம் பற்றி நினைவு உடன் செய்பவன் -குறைவான காலத்தில்
ஆத்ம சாஷாத்காரம் அடைகிறான் /சுலபமாக அடைகிறான் –

யோகயுக்தோ விஷுத்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்த்ரிய—-ஸர்வபூதாத்மபூதாத்மா குர்வந்நபி ந லிப்யதே—৷৷5.7৷৷
சரீராத்மா அபிமானம் இவற்றால் தீண்டப்படுவது இல்லை -/ஆத்மாவில் அழுக்கு -கர்ம வாசனை இருக்காதே –த்ரிவித தியாகமே -இத்தை போக்க -/
அழுக்கு போவது சாஸ்திரம் படி நடக்கிறோம் என்ற ஹர்ஷத்தாலே – இதுவே இந்திரிய ஜெயம் கொடுக்கும் -/
எல்லாம் ப்ரஹ்மாத்மகம் என்று உணருகிறான் -சம தர்சனம் -கர்மம் அனுஷ்டித்துக் கொண்டே இருந்தாலும் தேஹாத்ம அபிமானம் தீண்டாதே /
தர்ம சாஸ்திரம் சொன்ன படி வாழ்கிறோம் என்ற எண்ணம் -உடன் செய்கிறான் -கர்த்தாவாக இருந்தாலும் கர்த்ருத்வ புத்தி இல்லையே

நைவ கிம் சித்கரோமீதி யுக்தோ மந்யேத தத்த்வவித்.—பஷ்யந் ஷ்ரரிணவந்ஸ்பரிஷஞ்ஜிக்ரந்நஷ்நந்கச்சந்ஸ்வபந் ஷ்வஸந்—-৷৷5.8৷৷

ப்ரலபந்விஸரிஜந்கரிஹ்ணந்நுந்மிஷந்நிமிஷந்நபி—.இந்த்ரியாணீந்த்ரியார்தேஷு வர்தந்த இதி தாரயந்—৷৷5.9৷৷
ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி ய—லிப்யதே ந ஸ பாபேந பத்மபத்ரமிவாம்பஸா—-৷৷5.10৷৷
உண்மை அறிந்தவன் -ஒன்றுமே நான் செய்வது இல்லை -என்றுமே -/ பார்க்கிறான் கேட்க்கிறான் தொடுகிறான் முகருகிறான் -மூச்சு விடுகிறான் தூங்குகிறான்
கண்ணை திறக்கிறான் -மூடு கிறான் -இந்திரியங்களின் கார்யம் -பெருமாள் தூண்ட செய்தன -என்னால் செய்யப் பட வில்லை —
முக்குணங்கள் அவன் தூண்டுதல் -என்ற எண்ணம் உண்டே இவனுக்கு -நமக்கு அன்வயம் இல்லை –
இந்திரியங்களின் மேல் -/ கபிலர் நொண்டி குருடன் -சேர்ந்து கார்யம் -நிரீஸ்வர சாங்க்ய மதம் -ஆத்மா சரீரம் -கர்த்ருத்வம் ஞாத்ருத்வம் மட்டும்
உள்ளவை போதுமே -ஆத்மா வழிகாட்ட சரீரம் கார்யம் என்பான் -/
நொண்டிக்கும் ஞாத்ருத்வம் வேணுமே -நடக்கும் வழீ கேட்டு நடக்க -/ மேல் உள்ளவனுக்கு கர்த்ருத்வம் வேண்டுமே தப்பாக போனால் தோளை தட்டி சரி பண்ண –
கர்த்தா சாஸ்த்ராத்வத் -ஸ்வ தந்த்ர கர்த்தா இல்லை -/பற்றுதலை விட்டு பலத்தில் ஆசை இல்லாமல் -தாமரை இலை தண்ணீர் போலே
-சம்சாரத்தில் வாழ்ந்தாலும் ஒட்டாமல் -இருக்கிறான் என்றபடி -பாபங்கள் தீண்டாது

காயேந மநஸா புத்த்யா கேவலைரிந்த்ரியைரபி.–யோகிந கர்ம குர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்மஷுத்தயே—৷৷5.11৷৷
ஆத்ம சுத்தி அடைய -கர்ம யோகம் -அநாதி கர்ம வாசனை தொலைய -/ஞானத்தின் வேறு வேறு நிலை -கர்மம் அடியாக ஞான விகாசம் சுருக்கம் -ஜன்மா -/
மணிவரம் -ரத்னம் சேற்றில் விழுந்தால் -கௌஸ்துபம் -அஞ்ஞானம் -மறைக்கப் பற்று -/
சங்கம் த்யக்த்வா — ஸ்வர்க்கம் போன்ற தாழ்ந்த பலன்களில் பற்று அற்று -கர்ம யோகம் செய்து / இந்திரியங்கள் புத்தி மனஸ் சரீரம் -என்னுடையது
என்ற எண்ணம் இல்லாமல் -கேவல சப்தம் அனைத்துக்கும் -சேர்த்து -அபிமானம் இல்லாமல் பண்ணி -ஆத்ம சுத்தி பெற்று -மமகாராம் அஹங்காரம் இல்லாமல்
-கர்ம பலன்கள் தீண்டாமல் -பாப புண்யங்கள் அற்று -சரீர விமுக்தனாக நினைக்க நினைக்க -இவற்றால் பாதிப்பு வராதே –

யுக்த கர்மபலம் த்யக்த்வா ஷாந்திமாப்நோதி நைஷ்டிகீம்—-அயுக்த காமகாரேண பலே ஸக்தோ நிபத்யதே—৷৷5.12৷৷
ஒரே இந்திரியங்கள் சிலருக்கு நல்லதாகவும் சிலருக்கு கேட்டதாகவும் இருக்குமோ -பட்டர் திரு மேனி அலங்காரம் -அவன் உள்ளே எழுந்து இருக்கும்
திருக் கோயில் என்ற எண்ணம் -/ ஒரே சரீரம் நினைவால் ஆகாரம் மாறிற்றே -/அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் -அம்மாவை நன்கு அறிந்தனன்–
ஆசை இல்லாமல் -பற்றுதல் இல்லா -மனசே -பந்த மோக்ஷ காரணம் –தொழுது எழு என் மனனே -முன்புற்ற நெஞ்சே -நல்லை நல்லை நெஞ்சே உன் பெற்றால் என் செய்யோம் /
யோக யுக்தன் -நெஞ்சை பழக்கி -பண்படுத்தி -/ இந்திரியங்கள் மனஸ் உதவும் -/ அவை போன வழியில் போகாமல் -அவற்றை அடக்கி -/
ஓ மண் அளந்த தாளாளா–அளந்த திருவடிகளை காட்ட தான் பிரார்த்திக்கிறேன் -/
நாங்கள் கொள்வான் அன்று -ஓன்று நூறாயிரமாக கொடுத்து பின்னும் ஆளும் செய்வோம் -/
ஸ்வயம் பிரயோஜனம் -திரு நாம சங்கீர்த்தனம் -திரு விளக்கு ஏற்றுதல் -கைங்கர்யம் /அல்ப பலன்கள் கேட்டு சம்சாரத்தில் ஆள்கிறார்கள் /

ஸர்வகர்மாணி மநஸா ஸம் ந்யஸ்யாஸ்தே ஸுகம் வஷீ.—-நவத்வாரே புரே தேஹீ நைவ குர்வந்ந காரயந்—-৷৷5.13৷৷
ஆத்மா பண்ணவும் பண்ணி வைக்கவும் இல்லாமல் -வசீ -எல்லாம் மனசால் துரந்து -விவேக ஞானம் பெற்று -/நிஷ்க்ருஷ்ட ஆத்ம ஸ்வரூபம் அறிந்து
-சுகம் பெறுகிறான் /உறவுகள் சரீர சம்பந்தத்தால் தானே –ஒன்பது த்வாரங்கள் உள்ள பட்டணம் –சரீரம் -/கொப்பூழ் தலை பகுதி சேர்த்து -11-என்பர் குழந்தைக்கு /
திறந்த கூண்டு -வரும் கஷ்டங்கள் -அவயவங்கள் உடன் கூடிய சரீர கஷ்டம் -ஆத்மா அப்படி இல்லையே /ஆத்மாவில் மனசை செலுத்தி -/
மனஸ் இந்திரியங்கள் முற்றுகை -சரீரத்தை தானே ஆத்மாவை முடியாதே -கர்ம பாரதந்தர்யம் -சரீரம் ஆத்மா இல்லையே –
பெரியதாய் பராமரிப்பது கஷ்டம் –பல வித வைத்தியர்கள் வேன்டும் -நிறைய தடவை போக வேன்டும் -ஆத்மா அணு-கௌஸ்துபம் -ரத்னம் போலே –
ஒரே வியாதி -சம்சாரம் -ஒரே வைத்தியர் வைத்தியோ நாராயணோ ஹரி -ஒரே மருந்து சரணாகதி -ஒரே தடவை ஸக்ருத் போதுமே /
ஊன் இடை சுவர் வைத்து என்பு தோல் உரோமம் கூரை வேய்ந்து –ஒன்பது வாசல் –தானுடை குரம்பை -கலியன் -நைமிசாரண்யம் -சரணாகதி

ந கர்தரித்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸரிஜதி ப்ரபு–.ந கர்மபலஸம் யோகம் ஸ்வபாவஸ்து ப்ரவர்ததே—-৷৷5.14৷৷
இயற்கையில் அகர்த்ருத்வம் –பிரகிருதி சம்பந்தத்தால் -பிரபு -ஜீவாத்மா –கர்மாவும் இல்லை கர்த்ருத்வமும் இல்லை
-லோகஸ்ய -லோகத்தில் உள்ள ஜனங்கள் -ஆகு பெயர் -/ஸ்வபாவஸ்து-பிரகிருதி – இதுவே பூர்வ வாசனை –

நாதத்தே கஸ்யசித்பாபம் ந சைவ ஸுகரிதம் விபு—அஜ்ஞாநேநாவரிதம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவ—৷৷5.15৷৷
ரொம்ப வேண்டியவர்கள் இடம் -பாபத்தை நீக்க முடியாதே -/ வேண்டாதவர் புண்ணியம் நீக்கவும் முடியாதே /விபு -ஆத்மாவின் தர்ம பூத ஞானத்தை சொன்ன படி
பல ஜென்மங்களில் வேறு வேறு சரீரங்களில் புகுகுவதால் விபு / அஞ்ஞானம் பூர்வ ஜன்மா பாப வாசனை –
தேஹாத்ம பிரமம் -ஆத்ம பந்துவை பார்க்காமல் -/தேக பந்துவை நினைத்து /

ஜ்ஞாநேந து ததஜ்ஞாநம் யேஷாம் நாஷிதமாத்மந–தேஷாமாதித்யவஜ்ஜ்ஞாநம் ப்ரகாஷயதி தத்பரம்—৷৷5.16৷৷
விலக்க உபாயம் -அநாதி பாப கர்ம வாசனை -ஆத்மா யாதாம்யா ஞானம் கொண்டே -வளர்த்து -அப்பியாசம் முக்கியம் -/
ஆதித்யன் ஒளியால் பொருள்கள் விளங்குவது போலே -/மேகம்மூட்டம் போலே அஞ்ஞானம் –

தத்புத்தயஸ்ததாத்மாநஸ்தந்நிஷ்டாஸ்தத்பராயணா—-கச்சந்த்யபுநராவரித்திம் ஜ்ஞாநநிர்தூதகல்மஷா—৷৷5.17৷৷
படிக்கட்டுகள் -ஞானம் கத்தியால் வெட்டிக் களையப் பட்ட பாப -கர்ம -வாசனை–ஆத்ம விஷயத்தில் -உறுதி முதலில் -கேட்க கேட்க –
-உபதேசம் அனுஷ்டானம் இவற்றால் -பெற்று -அதன் பின்னே நெஞ்சு அதில் சென்று -அடுத்து –பயிற்சி -அப்பியாசம் –பரம பிரயோஜனம் அடைவாய்
-பாராயணம் ஆத்ம சாஷாத்காரம் -மீளாத பரம ப்ராப்யம் –
கூரத் தாழ்வான் -முதலி யாண்டான் -விட்டே பற்றவை -பற்றி விடவா -மால் பால் மனம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட -என்றவாறு –

வித்யாவிநய ஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி—ஷுநி சைவ ஷ்வபாகே ச பண்டிதா ஸமதர்ஷிந—-৷৷5.18৷৷
சம தர்சனம் முக்கியம் -ப்ரஹ்ம ஞானம் -சேஷ பூதர்-அனைவரும் –வித்யையும் விநயமும் உள்ள -இல்லாத ப்ராஹ்மணர்களுக்குள் வாசி /
கோ ஹஸ்தி பசுவோ யானையோ / நாயை அடித்து உண்ணும் வேடனுக்கு நாயுக்கும் வாசி பார்க்காமல் /சம தரிசனமே ஆத்ம சாஷாத்காரம் –
இவை எல்லாம் சரீரத்தால் தானே -ஆத்மா இயற்கையாகவே ஞானி -ஏக ஆகாரம் தானே /
புல்லாங்குகள் ஒரே காத்து -சப்த ஸ்வரம் -/ பசுமாடு பல வர்ணங்கள் பால் வெண்மை தானே /

இஹைவ தைர்ஜித ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மந–நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம தஸ்மாத்ப்ரஹ்மணி தே ஸ்திதா—৷৷5.19৷৷
தோஷம் விலக்கப்பட்ட ஆத்ம -பிரகிருதி சம்பந்தம் இல்லாமல் -கர்ம யோகி -இங்கேயே சம்சாரம் -சாதனா தசையில் சம்சாரம் கழிக்கப் பெற்ற பெருமை அடைகிறான் –
ப்ரஹ்மம் சாம்யம் பெறுகிறான் -பாப புண்ய ரூப கர்மங்கள் வில்லை -சமமாக அனைத்தையும் பார்க்கிறான்
மேலே ஆறு நிலைகள் சம தரிசனத்துக்கு -படிப் படியாக உயர்த்திக் கொண்டு அருளிச் செய்கிறான்

ந ப்ரஹரிஷ்யேத்ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத்ப்ராப்ய சாப்ரியம்.—ஸ்திரபுத்திரஸம்மூடோ ப்ரஹ்மவித்ப்ரஹ்மணி ஸ்தித—৷৷5.20৷৷
ப்ரஹ்மவித் -ஆத்மாவை அறிந்தவன் -பிரியமானது பெற்று ஹர்ஷமோ -அப்ரியமானது பெற்று பயப்படாமல் -ஸ்திர புத்தி கொண்டு
தேஹாத்ம அபிமானம் இல்லாமல் -அமூடராக -ஆத்மாவை அறிந்து -நிலை நிற்கிறான் –
அப்ரியம் கண்டு துக்கப் படாதே சொல்ல வில்லை -பயப்படாதே என்கிறான் -வருவதற்கு முன்பு உள்ள நிலை தானே -இது முதல் நிலை –

பாஹ்யஸ்பர்ஷேஷ்வஸக்தாத்மா விந்தத்யாத்மநி யத்ஸுகம்.—ஸ ப்ரஹ்மயோகயுக்தாத்மா ஸுகமக்ஷயமஷ்நுதே—-৷৷5.21৷৷
அடுத்த நிலை -ஸ்திர புத்தி ஏற்பட்ட -முதல் நிலை வந்த பின்பு -ஆத்மா இங்கு நெஞ்சு -பாஹ்ய விஷயம் தீண்டினாலும் மனஸ் செல்லாமல்
ஆத்மா இடமே சோகத்தை பார்த்து -சுத்த ஆத்ம ஸ்வரூபத்தில் நெஞ்சை செலுத்தி -ஆனந்தம் படுகிறான் –

யே ஹி ஸம் ஸ்பர்ஷஜா போகா துகயோநய ஏவ தே.—ஆத்யந்தவந்த கௌந்தேய ந தேஷு ரமதே புத—–৷৷5.22৷৷
மூன்றாவது நிலை -விஷயங்கள் தீண்டி -இந்திரியங்கள் விஷய சம்பந்தம் பெற்று –சுகமே துக்கத்துக்கு காரணம் என்று அறிந்து —
அல்பம் அஸ்திரம் -முதலிலே படாமலே இருக்கலாம் ஆத்ம சுகமே ஆதி யந்தம் இல்லாதது -என்று அறிந்து -சம்சாரம் தோஷம் காட்டியே மனசை திருப்பி –
வஸ்து சம்பாதிக்கும் கஷ்டம் -ஆர்ஜன தோஷம் /ரக்ஷணம் -எலிகள் திருடன் ராஜா -நெல்லை காப்பது கஷ்டமே /
க்ஷய தோஷம் /போக தோஷம் அனுபவிக்கும் பொழுது / ஹிம்ஸா தோஷம் /-அனுபவிக்கும் பொழுது இவை கண்ணில் பட்டு -சுகப்படாமல் –
பட்டு -காணும் பொழுது எத்தனை பட்டு பூச்சி -/ மாலை சாத்தும் பொழுது -இதை பூ பறித்து கட்டி செய்த கஷ்டங்களை அனுசந்தித்து –

ஷக்நோதீஹைவ ய ஸோடும் ப்ராக்ஷரீரவிமோக்ஷணாத்.—காமக்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த ஸ ஸுகீ நர—-৷৷5.23৷৷
நான்காவது நிலை –சரீரம் போவதற்கு சற்று முன்பு -தடுக்க யாரால் முடியுமோ -காமம் க்ரோதங்களால் ஏற்படும் -வேதம் -நிதானம் இழந்து
-கரண த்ரயங்களால் –அவனே அதிகாரி -ஆவான்

யோந்த ஸுகோந்தராராமஸ்ததாந்தர்ஜ்யோதிரேவ ய–.ஸ யோகீ ப்ரஹ்மநிர்வாணம் ப்ரஹ்மபூதோதிகச்சதி–৷৷5.24৷৷
ஐந்தாவது நிலை –உண்ணும் சோறு -இத்யாதி -ஆத்மாவை பற்றியே -சுகம் அடைந்து -ஆத்மாவையே போக ஸ்தானம் போக உபகரணம் -சுத்த ஆத்ம ஸ்வரூபம் உணர்ந்து

லபந்தே ப்ரஹ்மநிர்வாணமரிஷய க்ஷீணகல்மஷா—சிந்நத்வைதா யதாத்மாந ஸர்வபூதஹிதே ரதா—-৷৷5.25৷৷
ஆறாவது நிலை – எல்லா ஜீவ ராசிகள் -அடியார்கள் வாழ –கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ -/ இரட்டை கடந்து –
ஆத்மாவில் நிலை நின்று -பாபங்கள் வாசனை தொலைந்து சாயுஜ்யம் பெறுவார்
ரிஷிகள் போலே மந்த்ர த்ரஷ்டர்-ஆவார்கள் -கஷ்டப்பட்டு தவம் இத்யாதியால் பெற்றதை கர்ம யோகி பெறுவான் – –

காமக்ரோதவியுக்தாநாம் யதீநாம் யதசேதஸாம்—.அபிதோ ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே விதிதாத்மநாம்—৷৷5.26৷৷
இந்திரியங்களை வென்று –நமக்கு நெருக்கமான -அக்கரை அநர்த்தக்கடல் -இக்கரை அடையலாம் -/
பிராகிருத விஷயங்களில் வைராக்யம் -கொண்டு /கை இலங்கு நெல்லிக் கனி யாகும்

ஸ்பர்ஷாந்கரித்வா பஹிர்பாஹ்யாம் ஷ்சக்ஷுஷ்சைவாந்தரே ப்ருவோ–.ப்ராணாபாநௌ ஸமௌ கரித்வா நாஸாப்யந்தரசாரிணௌ—৷৷5.27৷৷
யதேந்த்ரியமநோபுத்திர்முநிர்மோக்ஷபராயண–விகதேச்சாபயக்ரோதோ ய ஸதா முக்த ஏவ ஸ—৷৷5.28৷৷
வெளி விஷயங்கள் தீண்டினால் அகற்று -புருவம் நடுவில் பார்த்து -இரண்டு கண்களாலும் ஒன்றையே பார்த்து -பிராண வாயு ஆபரண வாயு கதிகளை சமன்வயப்படுத்தி –
அடக்கப்பட்ட இந்திரியங்கள் மனஸ் புத்தி -முனியாகி -ஆத்ம சாஷாத்காரத்தில் ஆசை வைத்து -இச்சை பயம் க்ரோதம் மூன்றும் இல்லாமல்
எப்பொழுதும் முக்தனாக இருக்கிறான்

போக்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஷ்வரம்—-ஸுஹரிதம் ஸர்வபூதாநாம் ஜ்ஞாத்வா மாம் ஷாந்திமரிச்சதி—৷৷5.29৷৷
தன்னை பற்றி இங்கே அருளிச் செய்து -கர்மங்களால் ஆராதிக்கப்படுபவன் தானே -ஸூ லாபமான கர்மம் -என்னை நோக்கி பண்ணுவதால் -அழகான வாதம்
-திருமேனி அழகை நினைந்தே -சர்வரும் நன்றாக இருக்க வேன்டும்- காருண்யம் உதாரன் மகேஸ்வரன் மூன்றையும் அறிந்து –

——————————————————–

கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –