Archive for the ‘Geetha Saaram’ Category

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் – -8—-

June 4, 2017

ஐஸ்வர்யா அஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்தி நாம்
வேத்யோ பாதேய பாவா நாம் அஷ்டமே பேத உச்யதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்-12-

ஐஸ்வர்யா அஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்தி நாம் -மூவருக்கும்
வேத்யோ பாதேய பாவா நாம் -அறிய வேண்டியவை பற்ற வேண்டியவை
அஷ்டமே பேத உச்யதே –வேறு பாடுகள் உபதேசிக்கப் படுகின்றன

————————————————————-

அர்ஜுந உவாச
கிம் தத்ப்ரஹ்ம கிமத்யாத்மம் கிம் கர்ம புருஷோத்தம.—அதிபூதம் ச கிம் ப்ரோக்தமதிதைவம் கிமுச்யதே—–৷৷8.1৷৷-
அதியஜ்ஞ கதம் கோத்ர தேஹேஸ்மிந்மதுஸூதந.—ப்ரயாணகாலே ச கதம் ஜ்ஞேயோஸி நியதாத்மபி—৷৷8.2৷৷-
ப்ரஹ்மம் -அத்யாத்மம் -கர்மம் -மூன்றும் என்ன –
புருஷர்களின் உத்தமன் நீ சொல்ல வேன்டும்
அதி பூதம் அதி தெய்வம் அதி யஜன-எது ஆவது எப்படி -இந்திராதி தேவதைகள் அங்கங்கள் சரீரம் – -என்று
ஐஸ்வர்யார்த்தி கைவல்யர் பகவத் லாபாரதிகள் எத்தை நினைப்பர் -பிராயண காலத்தில் எப்படி நினைக்க வேன்டும் –

ஸ்ரீ பகவாநுவாச
அக்ஷரம் ப்ரஹ்ம பரமம் ஸ்வபாவோத்யாத்மமுச்யதே.—பூதபாவோத்பவகரோ விஸர்க கர்ம ஸம்ஜ்ஞித—-৷৷8.3৷৷
ப்ரஹ்மம் -அக்ஷரம் –ஸ்ருதி-பிரளயம் பொழுது அவ்யக்தம் அக்ஷரம் இடம் சேரும் என்று சொல்லுமே –அக்ஷரம் பிரக்ருதியில் நின்றும் வேறு பட்டது அன்றோ –
சரீரமே அத்யாத்ம -ஆத்மா உடன் ஒட்டிக் கொண்டு இருக்குமே-கர்மா -ருசி வாசனை-இத்யாதிகள் -பஞ்சாக்கினி வித்யையில் சுருதி சொல்லுமே –
முமுஷு இவை இரண்டையும் அறிந்து இருக்க வேண்டுமே –த்யஜிக்க வேண்டியது அது என்றும் – உபாதேயம் இது என்றும் –கர்மா- இவன் செய்யும் கிரிசைகளே –
அத்யாத்ம பிரகிருதி -ஸ்வ பாவம் -பழகியது /-கர்மா ஆண் பெண் சேர்க்கை –உலகம் வளர -/ இவை இரண்டும் விடத் தக்கவை -கைவல்யார்த்திக்கு –
ஸ்வர்க்கம் –ஆகாசம் –மழை-நெல் -ஆண் உடல் -கர்ப்பம் சுற்றி சுற்றி வரும் -துக்க சூழலை நெய் குடத்தை பற்றி ஏறும் எறும்பு
-பகவல் லாபார்த்தி -ஸ்ரீ வைகுண்டம் எதிர் பார்த்து

அதிபூதம் க்ஷரோ பாவ புருஷஷ்சாதிதைவதம்.—அதியஜ்ஞோஹமேவாத்ர தேஹே தேஹபரிதாம் வர—৷৷8.4৷৷
ஐஸ்வர்யார்த்தி – அஸ்திர அல்ப பலன்கள் -அபி பூதம் -சப்த ஸ்பர்ச ரூப கந்த இத்யாதி-அழிவுடன் கூடியவை -/
அதி தைவதம்-ப்ரஹ்மாதிகள் –ஹோமம் பண்ணி இந்திரா லோகம் போசணை பற்றி இங்கு சொல்ல வில்லை -பக்தி பண்ணுவது இங்கு
அதி யஜன இவை -பரம புருஷனை குறிக்கும் –மூவரும் பற்ற வேண்டியவை –
ப்ரஹ்மா -ஆத்மா/ர்மா அதி பூதம் அதி தைவதம்- இவற்றை விட வேறு பட்ட
மற்ற தேவதைகள் இவனுக்கு சரீரமே -மூ வகை அதிகாரிகளும் இப்படியே தான் உபாஸிக்க வேன்டும் -என்றபடி –

அந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம்.—யம் ப்ரயாதி ஸ மத்பாவம் யாதி நாஸ்த்யத்ர ஸங்ஷய—৷৷8.5৷৷
கடைசி காலத்தில் என்னையே நினைத்து சரீரம் விட்டு -என் பாவனையே அடைகிறான் –
ஐஸ்வர்யார்த்தி ஐஸ்வர்யம் உடையவனாக நினைத்து அதை பெறுகிறான் -இதையே மத் பாவம் கைவல்யார்த்தி -ஆத்மாவாகவும் உள்ளான் -என்ற நினைவு –
அவன் நினைவுடன் இருந்து அவனை அடைகிறோம் -இங்கு ஸ்வரூப ஐக்கியம் இல்லை -அவனாக ஆக முடியாதே –

யம் யம் வாபி ஸ்மரந்பாவம் த்யஜத்யந்தே கலேவரம்.—தம் தமேவைதி கௌந்தேய ஸதா தத்பாவபாவித—৷৷8.6৷৷
அந்திம ஸ்ம்ருதி -என்னை நினைத்து இருந்தவன் என்னை அடைகிறான் -ஜட பரதர் -மான் -விருத்தாந்தம் -/
மானுடைய தன்மை போலே -சாயுஜ்யம் பெறுவோம் அவன் நினைவாகவே இருந்து –

தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு மாமநுஸ்மர யுத்ய ச–மய்யர்பிதமநோ புத்திர் மாமேவைஷ்யஸ்ய ஸங்ஷயம்—–৷৷8.7৷৷
பர ப்ரஹ்மம் பற்றியே சிந்தை எப்பொழுதும் இருக்க வேன்டும் -அனைத்தும் அவனுக்கு அர்ப்பணம் செய்து அவனை அடைவோம் – இதிலே சங்கை இல்லை –
யுத்தம் செய் அதுவே உன் வர்ணாசிரமம் -நித்ய நைமித்திக கர்மம் -கர்ம யோகம் அங்கம் பக்தி அங்கி -விட்ட இடத்தில் சேர்த்தான் –
இங்கும் மூவருக்கும் -என்னையே -ஐஸ்வர்யம் உடைய என்னை இத்யாதி-
ஐஸ்வர்யார்த்திக்கு அங்கி -கர்ம யோகம் அங்கம் / கைவல்யார்த்திக்கு பக்தி யோகம் அங்கி – ஞான யோகம் அங்கம் /
பகவல் லாபாரதிக்கு பக்தி யோகம் அங்கி கர்ம ஞான யோகங்கள் இரண்டும் அங்கம் -/
நெஞ்சினாரும் அங்கு ஒழிந்தார் -மனஸ் அவன் இடம் -கரணங்கள் எல்லாம் அவன் இடம் அன்றோ –

அப்யாஸயோகயுக்தேந சேதஸா நாந்யகாமிநா—பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்தாநுசிந்தயந்—-৷৷8.8৷৷
மூன்று ஸ்லோகங்கள் ஐஸ்வர்யார்த்தி பற்றி —
அப்பியாசம் -பர ப்ரஹ்மம் ஒன்றே சிந்தை கொண்ட மனஸ் இருக்க வேண்டுமே -பக்தி -யோகம் ஒன்றாலே முடியும் —
இடைவிடாமல் ஐஸ்வர்யம் கூடிய பர ப்ரஹ்மத்தையே இடைவிடாமல் நினைத்து -வேறு ஒன்றை நினைத்தால் அதுவாக ஆவான்
-நினைத்துக் கொண்டே பரம புருஷனான என்னை அடைகிறான் -மாயையால் -என்னை என்று சொல்லாமல் -அர்ஜுனன் மேலே பார்க்க
-தேவகி நந்தன் சிரேஷ்டன்-ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் போலே
சேதஸா -நினைத்து -உபாசனம் பொழுது -அநு சிந்தனம் என்றது அந்திம காலத்திலும் என்றபடி

கவிம் புராணமநுஷாஸிதார-மணோரணீயாம் ஸமநுஸ்மரேத்ய–.ஸர்வஸ்ய தாதாரமசிந்த்யரூப-மாதித்யவர்ணம் தமஸ பரஸ்தாத்—-৷৷8.9৷৷
எப்படிப்பட்ட என்னை நினைக்க வேன்டும் –இதை நினைக்க நினைக்க -இப்படிப்பட்டவனை விட்டா சிற்றின்பம் போனோம் என்று வருந்தும் படி இருக்கும்
தாண்டி ஊடுருவி பார்க்கும் ஞானம் கவி-சர்வஞ்ஞன் – -புரா-பழமை-ஆராவமுதம் – -நியமன சாமர்த்யன் – -ஆத்மாவுக்குள்ளும் புகுந்து-சர்வ வியாபி
-ததா யதா பூர்வம் சர்வ ஷ்ராஷ்டா -ஆதார பூதன்–மனசுக்கும் வாக்குக்கும் எட்டாத – இனிமை–அகர்ம வஸ்யன் சுத்தம்
-தமஸ் தாண்டி நித்யன் -அகில ஹேய ப்ரத்ய நீகன் -தோஷம் அற்ற -அமலன் -நிமலன் -விமலன் நின்மலன் —

ப்ரயாணகாலே மநஸாசலேந–பக்த்யா யுக்தோ யோகபலேந சைவ.–ப்ருவோர்மத்யே ப்ராணமாவேஷ்ய ஸம்யக் –ஸ தம் பரம் புருஷமுபைதி திவ்யம்—৷৷8.10৷৷
பிராணன் போகும் பொழுது -அசங்காத மனஸ் -தாழ்ந்த விஷயங்களில் செல்லாமல் இங்கு அதற்கும் வேறே எங்கும் போகாமல் -இவன் இடம் வந்ததால்
-பக்தி யோகம் -அவனை பற்றிய நினைவால் -பக்தி சாதனம் -விடாமல் உபாசனம் பொழுதும் இறுதியிலும் விடாமல் நினைத்து
-திரும்பி திரும்பி சொல்லி திடப்படுத்துகிறான் -மேலே சரம காலத்தில் செய்ய வேண்டியது –
பக்தி யோகம் -இரண்டு புருவங்களுக்கு நடுவில்-பிராணனை நிறுத்தி -வைத்து -பர ப்ரஹ்மம் த்யானம் –அவனே சர்வ ஸ்வாமி
அணுவிலும் அணு-அனைத்துக்கும் தாதா -ஷ்ரஷ்டா -முகில் வண்ணன் -திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன் என்று ஐஸ்வர்யமான பாவம் அடைகிறான் –

யதக்ஷரம் வேதவிதோ வதந்தி–விஷந்தி யத்யதயோ வீதராகா–யதிச்சந்தோ ப்ரஹ்மசர்யம் சரந்தி–தத்தே பதம் ஸங் க்ரஹேண ப்ரவக்ஷ்யே –৷৷8.11৷৷—
இது முதல் மூன்று ஸ்லோகங்களால் கைவல்யார்த்தி -பாரமான ஸ்லோகங்கள் –கீழே -7-அத்யாயம் கடைசியில்– கைவல்யார்த்தி சொல்லி ஐஸ்வர்யார்த்தி
-இங்கு கிரமமாக –அர்ஜுனன் ஊர்வசியை தாயே -சொன்னவன் ஐஸ்வர்யார்த்தி ஆகமாட்டான் -யுத்தம் பண்ணாமல் ஓடி
கைவல்யார்த்தி ஆககூடாதே -என்பதால் -அங்கு அத்தை முதலில் சொல்லி -என்பர் –
வேதாந்தம் அக்ஷரம் -பரம பதம் –விஷயாந்தரங்களில் பற்று அற்றே பெற முடியும் என்று சொல்லுமே -வீடுமின் முற்றவும் இத்யாதி –
ஆத்ம ஸ்வரூபம் உடன் கூடிய என்னையே சுருக்கமாக சொல்கிறேன் -அர்ஜுனனுக்கும் ஆசை இல்லை அறிந்த பின்பு –
அக்ஷரம் -அழிவு அற்ற -ஆத்ம விசிஷ்ட பரமாத்மா என்பதே இங்கு -அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர் -இறை பற்றி –
ஆசை இல்லாமல் ப்ரஹ்மசர்யம் அனுஷ்டிக்கிறான் –

ஸர்வத்வாராணி ஸம் யம்ய மநோ ஹரிதி நிருத்ய ச.–மூர்த்ந்யாதாயாத்மந ப்ராணமாஸ்திதோ -யோகதாரணாம்—৷৷8.12৷৷
ஹிருதய கமலத்தில் அந்தர்யாமியிடம் அசையாமல் செலுத்தி -யோக தாரணம் -அஷ்ட மஹா சித்தி -என்னிடமே மனசை நிறுத்தி -பிராணனை
மூர்த்தனி தலை நாடியில் நிறுத்தி -உடலில் ஆசை இல்லாமல் –இந்திரியங்கள் வாசலை மூடி

ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரந்மாமநுஸ்மரந்.–யம் ப்ரயாதி த்யஜந்தேஹம் ஸ யாதி பரமாம் கதிம்—৷৷8.13৷৷
இந்திரியங்களை வசப்படுத்தி — -ஹிருதய புண்டரீகத்தில் -இருக்கும் -பர ப்ரஹ்ம ஏக சிந்தையாய்-பிரணவ திரு மந்த்ரம் கொண்டு -இடை விடாமல்
தியானித்து -பிரக்ருதியை விட்டு அவனை அடையலாம் -மீண்டும் பிறவி இல்லையே -பரம புருஷார்த்த மோக்ஷம் -என்றவாறு –
மூன்று மாத்திரை -சப்தம் -உச்சரிக்கும் காலம் -அகாரம் ப்ரம்ம உகாரம் விஷ்ணு -மகாரம் ருத்ரன் -அரை மாத்திரை ப்ரஹ்மம் குறிக்கும் -மூலமாகிய திரு மந்த்ரம் –
அர்த்தமும் நினைத்து கொண்டு -தேஹம் விடடவன் -ஆத்மானுபவம் அடைகிறான்

அநந்யசேதா ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஷ-தஸ்யாஹம் ஸுலப பார்த நித்யயுக்தஸ்ய யோகிந—৷৷8.14৷
கீழே வேண்டாததை நிறைய சொல்லி -ஒரே ஸ்லோகம் பகவல் லாபம் -அவனை அடைவது சுலபம் -அவனே தூக்கி கொள்கிறான்
என்னுடன் நித்தியமாக இருக்க மநோ ரதம் உள்ளவருக்கு -எல்லா காலத்திலும் இடைவிடாமல் – நான் எளிதில் கிட்டுவேன்—இதிலே எனக்கும் விருப்பம் தானே –
நித்ய அக்தர் -சேர்ந்து இருக்க ஆசை உள்ளவருக்கு – என் நினைவே அவனுக்கு தாரகம் -அவனது பிரதிபந்தகங்களை போக்கி
மயர்வற மதி நலனும் அருளுகிறேன் –யாதும் ஒரு நிலமையன் என அறிவு எளிய எம்பெருமான் –மறக்கும் என மனத்திலே நண்ணி அருளுகிறேன்
ஐஸ்வர்யாதியோ அல்ப அஸ்திர பலன்களை பெற்று திரும்பி சம்சாரத்திலே உழன்று உள்ளார்கள் –
உபகார பரம்பரைகள் பல செய்து -காட்ட திரு உள்ளம் கொண்டு காட்டி அருளி —

மாமுபேத்ய புநர்ஜந்ம துக்காலயமஷாஷ்வதம்.–நாப்நுவந்தி மஹாத்மாந ஸம் ஸித்திம் பரமாம் கதா—৷৷8.15৷৷
மூன்றையும் சொல்லி -இதில் பகவல் லாபார்த்தி உடைய ஏற்றம் -சித்தி மூவருக்கும் -சம்சித்தி இவருக்கே –
யாதாம்யா ஸ்வரூப ஞானம் பெற்று -விஸ்லேஷத்தில் தரிக்காமல் -சம்ச்லேஷத்தில் நித்ய மநோ ரதம் கொண்டு -என்னை அடைந்து பரம ப்ராப்யம் பெறுகிறார்கள் –
மகாத்மாக்கள் இவர்கள் -மற்ற இருவர் கூட சேர்ந்து நினைக்க கூடாதே –
ஜென்மம் தேகம் இனிமேல் இல்லை –கைவல்யார்த்தி மாம் உபாத்தியே இல்லையே-அல்பம் -அவனும் சித்தி -இவர் சம்சித்தி –
தேகம் -துக்கத்துக்கு ஆலயம் -சாஸ்வதம் இல்லாதது —நித்யம் அல்லாதது -புறம் சுவர் ஓட்டை மாடம் -புரளும் பொழுது அறிய மாட்டீர் –
வியன் மூ உலகு பெறினும் தானே தானே ஆனாலும் – சயமே அடிமை -பகவல் லாபம் விட்டு -அடியார் அடியார் -ஆழ்வார்கள் நிலைமை –

ஆப்ரஹ்மபுவநால்லோகா புநராவர்திநோர்ஜுந.–மாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம ந வித்யதே—৷৷8.16৷৷
ஐஸ்வர்யார்த்தி எங்கு போகிறான் எதனால் திரும்ப வருகிறான் -அழிவுடைய லோகம் போகிறான் -அதனால் அனுபவமும் அழியும் –
படைக்கப்பட்டு அழிக்கப் படுபவை -ப்ரஹ்ம லோகம் வரை அஸ்திரம் -லீலா விபூதி -நித்ய சங்கல்பம் அடியாக நித்ய விபூதி -அநந்ய பிரயோஜனர்க்கு
தன்னையே ஓக்க அருள் செய்யும் பரம காருணிகன் அன்றோ –
அர்ஜுனா -வெளுத்த ஸ்வ பாவம் உண்டே –து -என்னை அடைந்தவனோ என்னில் –

ஸஹஸ்ரயுகபர்யந்தமஹர்யத்ப்ரஹ்மணோ விது–ராத்ரிம் யுகஸஹஸ்ராந்தாம் தேஹோராத்ரவிதோ ஜநா–৷৷8.17৷৷
படித்தவர்கள் -பகல் இரவு தெரிந்தவர்கள் -சிஷ்டாசாரம் -மேலையார் சொல்லுகிறார்கள் என்கிறான் – இங்கு ப்ரஹ்மா நான்முகன் –
காலமும் இவன் அதீனம் -சதுர்முகனுக்கு பகல் பொழுது ஆயிரம் சதுர் யுகங்கள் / இரவும் ஆயிரம் சதுர் யுகங்கள் -/
-12000- தேவ வருஷங்கள் ஒரு சதுர் யுகத்துக்கு /ஒரு சதுர் யுகம் -4,320,000 -மானுஷ வருஷங்கள்
-நான்முகன் 100 -வருஷங்கள் -311, 040, 000,000,000 மானுஷ வருஷங்கள் –

அவ்யக்தாத்வ்யக்தய ஸர்வா ப்ரபவந்த்யஹராகமே.–ராத்ர்யாகமே ப்ரலீயந்தே தத்ரைவாவ்யக்த ஸம்ஜ்ஞகே—৷৷8.18৷৷
நான் முகன் இரவு பொழுதில் மூன்று லோகங்களும் -அழிந்து -ஸூஷ்மமாக பர ப்ரஹ்மம் இடம்-அவ்யக்தமாகி –
மீண்டும் பகலில் ஸூதூலம் -நாம ரூபங்கள் உடன் உண்டாகின்றன -ஸ்ருஷ்டி நான்முகன் பகலிலும் -சம்ஹாரம் இரவிலும் என்றபடி –

பூதக்ராம ஸ ஏவாயம் பூத்வா பூத்வா ப்ரலீயதே.—ராத்ர்யாகமேவஷ பார்த ப்ரபவத்யஹராகமே—৷৷8.19৷৷
கர்மாதீனம் -அவச -பிறந்து பிறந்து அளிக்கின்றன –
நான்முகன் -முடியும் காலம்-மஹா பிரளயம் – -அனைத்தும் பர ப்ரஹ்மம் இடம் -பிருத்வி அப்பு லீயதே -அப்பு தேஜஸ் லீயதே -இத்யாதி —
சதேவ –பர மரஹ்மம் மட்டுமே -உண்டு -ஐஸ்வர்யார்த்திகள் அதனால் மீண்டும் மீண்டும் மாறி மாறி பல பிறவியில் உழன்றே இருக்க வேன்டும்
நைமித்திக பிரளயம் -மூன்று லோகம் -ஜலம் சூழ்ந்து -/ கல்பம் முடியும் பொழுது –ஏகி பவதி -அனைத்தும் அழியும் மிருத்யு உப சேஷணம் போலே /

பரஸ்தஸ்மாத்து பாவோந்யோவ்யக்தோவ்யக்தாத்ஸநாதந–ய ஸ ஸர்வேஷு பூதேஷு நஷ்யத்ஸு ந விநஷ்யதி—৷৷8.20৷
அவ்யக்தோக்ஷர இத்யுக்தஸ்தமாஹு பரமாம் கதிம்.—யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம—৷৷8.21৷৷
இரண்டாலும் கைவல்யார்த்திக்கும் அழிவு இல்லை என்கிறான் -கைவல்ய அனுபவம் -இதுவும் மீண்டு வராத -ஆனால் சிற்றின்பம் –
அசித்தை விட மேம்பட்ட -ஐஸ்வர்யம் விட மாறு பட்ட ஆத்மா -பழைய நித்ய -பூத ராசிகள் அழிந்த காலத்திலும் அழியாமல்
-அக்ஷரம் -அவ்யக்தம் -அறிய முடியாத என்றபடி -என் நியமனத்தாலே கைவல்ய பிராப்தியும் –இறப்பதற்கே எண்ணாது–மின்னுரு பின்னுரு பொன்னுரு –

புருஷ ஸ பர பார்த பக்த்யா லப்யஸ்த்வநந்யயா.–யஸ்யாந்த ஸ்தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்—-৷৷8.22৷৷
எவனுக்குள்ளே எல்லாம் வைக்கப்பட்டு -பூதங்களால் வியாபிக்கப்பட்ட -பர ப்ரஹ்மம் பக்தியால் -அநந்ய -ஆஸ்ரயம் -நியமனம் இரண்டும் நாராயணார்த்தம் –
பூர்ணத்வத்த புருஷ -புரு சனா பவது கொடுத்து -பூர்ணன் -ஹிருதய கமல ஆத்ம பட்டணம் நிவாஸன்
சூத்ர மணி போலே அனைத்தும் தன்னாலே –அநந்ய பக்தியால் அவனை அடையலாம் -அர்ச்சிராதி கதி மூலம் -பஞ்சாக்கினி வித்யையில் சொல்லிய படி –
தத் க்ருதி நியாயம் -ப்ரீதி காரித்த கைங்கர்யம் நித்தியமாக அனுபவிக்கப் பெற்று சாயுஜ்யம் -அடைகிறான் –

யத்ர காலே த்வநாவரித்திமாவரித்திம் சைவ யோகிந–ப்ரயாதா யாந்தி தம் காலம் வக்ஷ்யாமி பரதர்ஷப—-৷৷8.23৷৷
எந்த வழிகளில் போனால் –பொதுவான ஸ்லோகம் இது -இரண்டுக்கும் –

அக்நிர்ஜ்யோதிரஹ ஷுக்ல ஷண்மாஸா உத்தராயணம்.–தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்மவிதோ ஜநா—৷৷8.24৷৷
கால அபிமானி தேவதைகளை குறிக்கும் –அர்ச்சிஸ் -பகல் -வளர் பிறை -உத்தராயணம் -சம்வத்சரம் வாயு
-சூர்யா சந்த்ர வித்யுத் வருண இந்திரா சத்யா லோகம் -12-லோகங்கள் -மார்க்கம் -என்றவாறு -சுக்ல கதி என்றும் சொல்வர் –
பாரிக்க வேன்டும் -ஆதி வாஹிகர்கள் கூட்டிச் செல்வர் –

தூமோ ராத்ரிஸ்ததா கரிஷ்ண ஷண்மாஸா தக்ஷிணாயநம்.–தத்ர சாந்த்ரமஸம் ஜ்யோதிர்யோகீ ப்ராப்ய நிவர்ததே—৷৷8.25৷৷
ஸ்வர்க்கம் -பித்ரு லோகம் போவார் தூமாதி மார்க்கம் / நரக அனுபவம் -தூ மாத்தி மார்க்கம் போவது இல்லை –ஆறு லோகங்கள் இருட்டு முதலில் –
தூமம் -ராத்திரி -கிருஷ்ண பக்ஷம் -தஷிணாயணம் -பித்ரு லோகம் -ஆகாசம் -சந்த்ர லோகம் இந்த ஆறும் அடைந்து திரும்புகிறான்
கீழே ஞானி -இங்கு யோகீ புண்ணியம் பண்ணினவன் -புண்ய பலன் அனுபவிக்க –

ஷுக்லகரிஷ்ணே கதீ ஹ்யேதே ஜகத ஷாஷ்வதே மதே–ஏகயா யாத்யநாவரித்திமந்யயாவர்ததே புந–৷৷8.26৷৷
வேதம் இரண்டையும் -சாஸ்வதமாக -வெளுத்த கறுத்த மார்க்கங்கள் -சத்வ குணம் சத்காரிக்கும் சுக்ல / ரஜோ தமஸ் கிருஷ்ண கறுத்த தூ மாத்தி மார்க்கம் –
ஒன்றால் திரும்பி வராத மோக்ஷம் -மாற்று ஒன்றால் திரும்புகிறான்

நைதே ஸரிதீ பார்த ஜாநந்யோகீ முஹ்யதி கஷ்சந.-தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு யோகயுக்தோ பவார்ஜுந—8.27৷৷
எல்லா காலத்திலும் யோகத்துடன் இரு -அர்ச்சிராதி மார்க்க சிந்தனை வேன்டும் என்றவாறு -பாரிப்பு முக்கியம் -அடைந்து அனுபவிப்பதை விட
-அக்ரூரர் யாத்திரை திருவேங்கட யாத்திரை பார்ப்பது போலே இதுவும் –

வேதேஷு யஜ்ஞேஷு தபஸு சைவ–தாநேஷு யத்புண்யபலம் ப்ரதிஷ்டம்.–அத்யேதி தத்ஸர்வமிதம் விதித்வா-யோகீ பரம் ஸ்தாநமுபைதி சாத்யம்—৷৷8.28৷৷
வேதங்களில் சொல்லப் பட்ட புண்ணியம் -தபஸ் யாகங்கள் -புண்ணியம் விட -இந்த அத்யாய ஞானங்கள் உடையவன் அனைத்தையும் தாண்டி இவன் இருக்கிறான் –
ஆதியான ஸ்தானம் ஸ்ரீ வைகுண்டம் பரம் ஸ்தானம் அடைகிறான் -7–8-சேஷி ஜகத் காரணம் பிராப்யாம் பிராபகம் –
என்று அறிந்தவன் – மன்னவராய் உலகாண்டு பின்னர் வானவராய் மகிழ்வு எய்துவர் -இவர் வல்லார் முனிவரே –
சிந்தையாலும் செய்கையாலும் சொல்லாலும் தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்து -பாவோ நான்யத்ர கச்சதி -மற்று ஓன்று வேண்டேன் –

——————————————————

கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -7— –பரம ஹம்ஸ விஞ்ஞான யோகம் —

June 4, 2017

ஜ்ஞான கர்மாத்மிகே நிஷ்டே யோக லஷ்யே ஸூ ஸம்ஸ்க்ருதே
ஆத்மாநுபூதி சித்த்யர்த்தே பூர்வ ஷட்கே ந சோதிதே — –2-

ஜீவாத்ம சாஷாத்காரம் -யோகத்தை அடையும் விதத்தையும் -ஆத்ம அனுபவத்தை அடையும் விதத்தையும்-பகவத் விஷய ஞானம்
-இதர விஷய வைராக்யம் -இவற்றால் அலங்கரிக்கப் பட்ட ஞான கர்ம யோகங்கள் முதல் ஆறு அத்தியாயங்களில் அருளிச் செய்யப் பட்டன –

மத்யமே பகவத் தத்தவ யாதாத்ம்யாவாப்தி சித்தயே
ஜ்ஞான கர்மாபி நிர்வர்த்த்யோ பக்தி யோக பிரகீர்த்திதே –3-

மத்திய ஆறு அத்தியாயங்களில் ஞான கர்ம யோகம் மூலம் உண்டாக வல்ல
-பர ப்ரஹ்மத்தின் உண்மையான அனுபவம் பெற-ஞான கர்ம யோகங்களால் சாதிக்கப்படும் -பக்தி யோகம் விரிவாக அருளப்படுகிறது –
ஞானம் த்யானம் உபாசனம்-மூலமே அடையலாம் – -உபநிஷத் சொல்லும்
தமேவ வித்வான் –அம்ருத இஹ பவதி -ஞான யோகத்தால்
ஸ்ரோதவ்யா கேட்டு மந்தவ்ய -நினைத்து -நிதித்யாஸவ்ய -தைல தாராவத் -தியானாதால்
உபாசனம் –ஞானம் வந்து -வேறு ஓன்று நினைவு இல்லாமல்
இங்கு பக்தி –உபாசனத்தில் அன்பு காதல் வேட்கை -கலந்து -வேறு வேறு நிலைகள் -ஸ்நேஹம் பூர்வம் அநு த்யானம் -பக்தி என்றவாறு –
பீதி இல்லாமல் -பக்தியுடன் திரு – ஆராதனம் –
கேள்விகள் இல்லாமல் -அனுபவம் -இங்கு -கீழே ஞானத்துக்கு கேள்விகள் -தர்க்க ரீதியாக பதில்கள் உண்டு –
-7–8–9-பக்தி யோகம் முடியும்–பக்தர் ஏற்றம் -பக்தி பெருமை -பற்றி சொல்லி கடைசியில் ஒரே ஸ்லோகத்தால் பக்தி யோகம் கௌரவம் தோன்ற -பீடிகை கீழ் எல்லாம் –
மீண்டும் சொல்கிறேன் -கேளு ஆரம்பித்து –9-அத்யாயம் -சொல்ல வந்தால் தடுக்க வில்லையே சொல்கிறேன் -என்பான் -மேகம் தானே வர்ஷிக்குமே – –

ஸ்வ யாதாத்ம்யம் ப்ரக்ருத்யாஸ்ய திரோதிஸ் சரணாகதி
பக்தபேத ப்ரபுத் தஸ்ய ஸ்ரைஷ்ட்யம் சப்தம உச்யதே -11-

1–ஸ்வ யாதாத்ம்யம்-தன்னுடைய இயற்கையான தன்மை -பெருமைகள் –12-ஸ்லோகங்கள் வரை
2– ப்ரக்ருத்யாஸ்ய திரோதிஸ்–மாயை -பிரகிருதி -தடுப்பு சுவர் -`13–14-ஸ்லோகங்கள்
3— சரணாகதி –மேலே -18-அத்யாயம் சரணாகதி வேறே -இங்கு பிரக்ருதி திரை போக்க -அவனை பற்றிய உண்மையான ஞானம் பிறக்க
4—பக்தபேத–வருபவர் நான்கு வகை – வராதவர் நான்கு வகை
5— ப்ரபுத் தஸ்ய ஸ்ரைஷ்ட்யம்–மிகவும் பிடித்த பகவத் லாபார்த்தி ஞானி பக்தன் –

————————————————–

ஸ்ரீ பகவாநுவாச

மய்யாஸக்தமநா பார்த யோகம் யுஞ்ஜந்மதாஷ்ரய–அஸம் ஷயம் ஸமக்ரம் மாம் யதா ஜ்ஞாஸ்யஸி தச்சரிணு৷৷—7.1৷৷
தச்சரிணு-நன்றாக கேளு -முக்கிய விஷயம் என்பதால் உசார் படுத்துகிறான்
மய்யாஸக்தமநா -என்னிடமே செலுத்திய மனசை உடையவனாய் -என்னை விட்டு க்ஷணம் காலமும் பிரிய அசக்தனாய் -தரியாதவனாய் –
என்னை நெகிழக்கிலும் என்னுடைய நல் நெஞ்சை -அகல்விக்க தானும் கில்லான்-ஆழ்வார்களாதிகளையே சொல்கிறான்
-மால் கொள் சிந்தையராய் -மாலே ஏறி மால் அருளால் -அருளிச் செய்த –
மத் ஆஸ்ரய –என்னை அடைந்து -பக்தி யோக நிஷ்டானாய் –
யோகம் யுஞ்ஜந்–பக்தி யோகம் ஆரம்பிக்கும்
சந்தேகம் இல்லாமல் பூர்ணமாக உனக்கு தெரியும் படி சொல்கிறேன் -முதல் மூன்று ஸ்லோகங்கள் அவதாரிகை

ஜ்ஞாநம் தேஹம் ஸவிஜ்ஞாநமிதம் வக்ஷ்யாம்யஷேஷத-யஜ்ஜ்ஞாத்வா நேஹ பூயோந்யஜ்ஜ்ஞாதவ்யமவஷிஷ்யதே৷৷—7.2৷৷
திடப்படுத்த -உனக்காக ஞானம் -விசேஷித்த ஞானத்தை சொல்கிறேன் –விவித விருத்த விசேஷ விசித்திர ஞானம், விஞ்ஞானம் -இங்கு விசேஷ ஞானம்
ஸ்வரூப நிரூபக தர்மம் -முதல் அறிய –இயற்கையை விவரிக்க -வியாவர்த்திக்க -இவற்றை சொல்லி -லக்ஷணம் -அடையாளம் -இன்னான் -ஞானம் -இது
-நிரூபித்த ஸ்வரூப விசேஷணங்கள் மேலே -இணையான்-அருமை பெருமைகள் -விஞ்ஞானம் இது -வைபவம் அறிய –
வேத வாக்கியங்களை கொண்டு -சொல்லுகிறேன் -யத்தை தெரிந்து கொண்டால் வேறு ஒன்றை அறிய வேண்டாமோ அத்தை உனக்கு சொல்கிறேன் –

மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஷ்சத்யததி ஸித்தயே.–யததாமபி ஸித்தாநாம் கஷ்சந்மாம் வேத்தி தத்த்வத–৷৷—7.3৷৷
பக்தனை கொண்டாடிக்கிறான் -ஆயிரத்தில் ஒருவனே -சித்தி அடைய முயல்வர் -மனுஷ்யர் -விசேஷணம் இல்லாமல் -அனைவரும் அதிகாரிகள்
அதில் யாரோ ஒருவன் தான் என்னை உள்ளபடி தெரிந்து அடைகிறான் -துர்லபம் –வாக்குக்கும் மனசுக்கும் எட்டாதவன் –
யாரும் ஒரு நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் —அவனே காட்டக் காணலாம் -யாரும் ஒரு நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான் –

பூமிராபோநலோ வாயுகம் மநோ புத்திரேவ ச.–அஹங்கார இதீயம் மே பிந்நா ப்ரகரிதிரஷ்டதா৷৷—-7.4৷৷
பிரகிருதி -அஷ்ட விதம் -பஞ்ச பூதங்களும் சப்தாதிகளும் / மனஸ் இந்திரியங்கள் /புத்தி -மஹான் -/-அஹங்காரம் -ஆகிய எட்டும் -இவை அனைத்தும் என் சரீரமே –
-24-தத்வங்கள் அசித் தத்வம் -பஞ்ச பூதங்கள் / பஞ்ச தன்மாத்திரைகள் / பஞ்ச கர்ம இந்திரியங்கள் / பஞ்ச ஞான இந்திரியங்கள் /
மனஸ் / மஹான் -அஹங்காரம் / பிரகிருதி -இவன் இங்கே சொன்னது உபலக்ஷணம் –எண்ணிலும் வரும் -எண் தானும் இன்றியே —

அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரகரிதிம் வித்தி மே பராம்.–ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத்৷৷–7.5৷৷
பிரகிருதி -போக்கிய வஸ்துக்கள் போக உபகரணம் போக ஸ்தானம் – -/ சம்சார பிரகிருதி திரோதானம் -இரண்டு வகை உண்டே
து -பிரசித்தம் -வேறுபட்ட ஜீவாத்மா உண்டே –

ஏதத்யோநீநி பூதாநி ஸர்வாணீத்யுபதாரய.–அஹம் கரித்ஸ்நஸ்ய ஜகத ப்ரபவ ப்ரலயஸ்ததா৷৷—-7.6৷৷
இவனே த்ரிவித காரணம் -வேர் முதல் வித்து -நிர்வாகன் -சேஷி / ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் மூன்றும் என்னாலேயே —
லயம் பொழுது மஹான் -அவ்யக்தம் -அக்ஷரம் -தமஸ் –பிரகிருதி புருஷ அனைத்தும் என்னிடமே லயம் -/வேதாந்த சித்தம் விஷ்ணுவே –
அப்ரஹ்மாத்மக வஸ்துக்களே இல்லையே / பர ப்ரஹ்மம் நிஷ் காரணன் -அகில காரணன் -அத்புத காரணன் –
செய்கின்ற –எல்லாம் நானே என்னும் — லீலா -கார்யம் -/கரித்ஸ்நஸ்ய-ஓன்று விடமால் அனைத்துக்கும் –

மத்தபரதரம் நாந்யத்கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய.–மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ৷৷—-7.7৷৷
நியாமகன் –சமஸ்தத்துக்கும் -சர்வஞ்ஞன் -சர்வசக்தன் -ஓத்தார் மிக்கார் இலாய மா மாயன்–குணங்களில் -பரத்வம் ஸுலப்யம் / சக்தாதிகளில்
– உடையவனும் குணசாலியும் -என் சொல்லி மறப்பேனோ நம்பியை -தென் குறுங்குடி நின்ற –செம் பொன்னே திகழும் திரு மூர்த்தி
-உம்பர் வானவர் ஆதி அம் சோதி -எம்பிரான் -காட்டி அருளிய உபகாரகன் -சரீராத்மா பாவம் -சர்வ சப்தமும் இவனையே சொல்லுமே –
நீ தனஞ்சயன் -நான் குணஜயன் -அந்தர் பஹிஸ்ஸா சர்வ வியாப்தன் -/வியாப்த கத தோஷம் தட்டாமல் –
அதற்கு த்ருஷ்டாந்தம் –மணி கோத்து நூல் த்ருஷ்டாந்தம் –என்னை விட்டு இருக்க முடியாதே -நூல் ஒன்றே -மணிகள் பல -கண்ணுக்கு தெரியாதே -நூல் தாங்கும் –
யஸ்ய ஆத்மா சரீரம் –யஸ்ய பிருத்வி சரீரம் -இத்யாதி -/ மணி த்ருஷ்டாந்தம் கடக ஸ்ருதியை திரு உள்ளம் பற்றியே –

ரஸோஹமப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி ஷஷிஸூர்யயோ–ப்ரணவ ஸர்வவேதேஷு ஷப்த கே பௌருஷம் நரிஷு৷৷—7.8৷৷
லோகத்தில் ப்ராப்யம் பிராபகங்கள் பல உண்டே என்னில் -அனைத்துமே நானே –ரசமாகவும் -சுவை இருந்தால் தான் உண்போம் -சுவை அனுபவிப்போம் -பிராப்பகம் பிராபகம்-
ஸூர்ய சந்த்ரர்களுக்கு ஒளியாகவும்–இதுவும் ப்ராபக ப்ராப்யம் / வேதத்தில் பிரணவமாகவும் / ஆகாசத்தில் சப்தமாகவும் -புருஷர்களின் ஆண்மைத்தனமாகவும் நானே உள்ளேன் -/
அனைத்தும் என் இடம் இருந்தே -பிரகாரம் பிரகாரி பாவம் -சரீராத்மா பாவம் -பிரிக்க முடியாதவை -சொல்லி -அவையும் நானே -பேத அபேத கடக சுருதிகள் உண்டே –

புண்யோ கந்த பரிதிவ்யாம் ச தேஜஷ்சாஸ்மி விபாவஸௌ.–ஜீவநஂ ஸர்வபூதேஷு தபஷ்சாஸ்மி தபஸ்விஷு৷৷—7.9৷৷
பூமியில் கந்தமாகவும் -அக்னியில் தேஜஸாகவும் -ஜீவர்களில் பிராணனாகவும் -தாப்ஸிகளின் தபஸாகவும் நானே உள்ளேன் –

பீஜம் மாம் ஸர்வபூதாநாம் வித்தி பார்த ஸநாதநம்.—புத்திர்புத்திமதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம்৷৷—7.10৷৷
அனைத்துக்கும் வித்தாகவும் –பரிணாம சக்தியும் நானே -பாலும் தயிரும் -மாறும் சக்தியும் நானே -கடையும் எண்ணமும் மத்தும் நெய்யும்
அனைத்தும் நானே –ஞானிகளின் ஞானமாகவும் -தேஜஸ் பதார்த்தங்களின் தேஜஸ் ஆகவும் நானே -ஸநாதனம் -என்றுமே இப்படியே –

பலம் பலவதாமஸ்மி காமராகவிவர்ஜிதம்.–தர்மாவிருத்தோ பூதேஷு காமோஸ்மி பரதர்ஷப৷৷7.11৷৷
பலவான்களின் பலமும் –காமம் ஆசை அற்றும்-அற்ற பலன் -ராவணாதிகள் பலம் இல்லை என்று விலக்க –ஸூ சுகத்துக்காக ஆசை காமம் -முன்னிலை ராகம் –
தர்மத்துக்கு விரோதம் அற்ற ஆசைகள் நானே –மற்றும் உள்ள நன்மைகள் அனைத்தாகவும் -உள்ளேன் -இவை அனைத்தும் என் சரீரம் பிரகாரம் –

யே சைவ ஸாத்த்விகா பாவா ராஜஸாஸ்தாமஸாஷ்ச யே.–மத்த ஏவேதி தாந்வித்தி நத்வஹஂ தேஷு தே மயி৷৷—7.12৷৷
முக்குண வஸ்யம் -பிரகிருதி / சரீரம் ஆத்மாவுக்காகவே -போலே -சேஷிக்கு அதிசயம் செய்யவே -காரண களேபரங்கள் சாஸ்த்ர ஞானம் அளிக்கிறான் –
என் இச்சையால் உள்ளும் புறமும் -இருந்து -நியமிக்கிறேன் -அனைத்தும் இவனுக்கு அதீனம் / பிரகார்ஷம் ப்ரீதி ஆனந்தம் சுகம் ஷாந்த சித்தம் சாத்விக பாவங்கள்
பரிதாபி மோகம் திருப்தி இல்லாமல் – கோபம் மோகம் பேராசை பொறுமை அற்ற தன்மை ராஜஸம்-அவிவிவேகம் தாமசம் / அவைகள் என்னை சார்ந்து இருக்கும் -என்றவாறு –
இந்த ஒன்பது ஸ்லோகங்களால் தான் யார் -யாதாம்யா உண்மையான ஞானம் காட்டி அருளினான் –

த்ரிபிர்குணமயைர்பாவைரேபி ஸர்வமிதம் ஜகத்–மோஹிதம் நாபிஜாநாதி மாமேப்ய பரமவ்யயம்৷৷—7.13৷৷
இவ்வளவு தெளிவாக இருக்க நாம் அறியாமல் இருக்க என்ன காரணம் –மோகத்தில் கட்டுப்பட்ட ஜகம் என்னை அறியாமல் -முக்குண வசப்பட்டு -இருக்கும் –
இந்த ஜகத் -பரிகாச புன்னகை உடன் -அநித்தியம் மாறிக் கொண்டே இருக்கும் -தாழ்ந்த –மூல பிரகிருதி உடன் சேர்ந்தே உள்ள உலகம் –
சர்வம் இதம் ஜகத் -ஆ ப்ரம்மா பீலிகா வரை -என்னை அறியாமல் -மாம் -அவ்யயம் பரம் -அழிவற்ற -இவை குறை உள்ளவை அழிபவனை தாழ்ந்த –
சத்வ குணத்தாலும் மயக்கம் வருமோ என்னில் –தேன் உள்ள பழம் உண்ண போகும் பொழுது அதிலே விஷம் கலந்து இருக்க -மிஸ்ரமாக அன்றோ ஜகத் –
காலம் உணர்த்த என்னிடமே லயம் -மீண்டும் ஸ்ருஷ்டி –யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் நான் –
ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் -அகில ஹேய ப்ரத்ய நீகன் – கல்யாணை ஏக குணாத்மகன் —

தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா.–மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே৷৷—7.14৷৷
இந்த முக்குண சேர்க்கை பிரகிருதி மாயா என்னாலே படைக்கப் பட்டது -மிக உயர்ந்தது -தைவ தன்மை கூடியது –லீலைக்காக -பகவத் ஸ்வரூப திரோதானம் -இது –
மாயா -ஆச்சர்யம் என்றவாறு –மாயாவி -மயக்கும் பகவான் –தாண்டி செல்வது அரியது–மித்யை இல்லை –
மஹா விசுவாசத்துடன் என்னை அடைந்தவர்களுக்கு -பரம காருணிகனான -நான் -இந்த மாயையை தாண்டுவிக்கிறேன்
-தே தரந்தி-அவர்கள் தாண்டுகிறார்கள் -என்னை சரண் அடைந்தவர்கள் —
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆம் அவை நன்கு அறிந்தனன் –அகற்றி நீ என்னை அரும் சேற்றில் அழுத்த –
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேன் –மணி வண்ணன் வாசு தேவன் வலையுள்ளே அகப்பட்டேன் -அரையர் சேவை விருத்தாந்தம்
-எம்பார் -கயிற்று வலை காட்டாமல் திருக் கண்களைக் காட்டி -கமலக் கண் என்னும் நெடும் கயிறு -ஆண்டாள் –கண் வலைப் படாமல் அகவலை அகப்பட வேண்டுமே –
இந்த சரணாகதி -வேறே -சரம ஸ்லோகம் சரணாகதி வேறே – பயன் பக்தி ஆரம்ப விரோதி போக்க –தடைகளை நீக்கி -பிராயச்சித்தம் பண்ணி போக்க முடியாத
பாப மூட்டைகள் உண்டே -அவற்றை தொலைக்க அங்கு -இங்கு உண்மை அறிவு தெரியாமல் திரை இருக்க -அத்தை நீக்க -மாயையை விலக்கி -ஞானம் தெளிவு பிறக்க –
நாம் சரம ஸ்லோகம் -ரஹஸ்ய த்ரயத்தில் -அங்க பிரபத்தி இல்லை -நேராக மோக்ஷம் கொடுக்கும் -சர்வ பாபேப்யோ -சர்வ கர்மங்களும் போக்கி இங்கே –
மாம் -சர்வஞ்ஞன் -சர்வ சக்தன்- பூர்ணன்- பிராப்தன்- காருணிகன்- ஸத்யஸங்கல்பன் -இத்யாதி

ந மாம் துஷ்கரிதிநோ மூடா ப்ரபத்யந்தே நராதமா–மாயயாபஹரிதஜ்ஞாநா ஆஸுரம் பாவமாஷ்ரிதா ৷৷—-7.15৷৷
மூடர்கள்-என்னை அறியாதவர்கள் -/-நராதமா– அதமர்கள் -என் கல்யாண குணங்களை அறியாதவர்கள் /
மாயயாபஹரிதஜ்ஞாநா–என்னை பற்றியும் என் கல்யாண குணங்களையும் அறிந்தவற்றை மறந்து
ஆஸுரஂ பாவம் ஆஸ்ரித–இவற்றை அறிந்து -என்னை எதிர்ப்பதற்கே உள்ள அசுரர்கள் –பாப பலத்தால் -/
இப்படி நால்வர் -மூடர்கள் -அறிவிலிகள் / ஆஸ்திக நாஸ்திகர்கள் -அறிந்து வைத்து என்னிடம் வராமல் –நாரத்தமர்கள் / சாஸ்திரம் அறிந்து தப்பான அர்த்தம் -வேத பாஹ்யர்கள் -குத்ருஷ்டிகள் / அனைத்தையும் அறிந்து என்னை விரோதிக்க என்றே விரோதிக்கும் ராவணாதிகள் -ஸ்ரீ ராம பிரபாவம் அறிந்தும்
-விழுந்தாலும் குப்புற விழுவேன் -ந நமேயம் –சேவித்தேன் என்று மோக்ஷம் அருளுவானே-/நம்மாழ்வார் -கடியன் கொடியன்-நெடிய மால் உலகம் கொண்ட அடியான்
மால் -ஆகிலும் -கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் –

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா ஸுகரிதிநோர்ஜுந.–ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப৷৷—7.16৷৷
நான்குவிதம் -ஸூ ஹ்ருதம் இருந்தால் தான் ஆஸ்ரயிப்பார்கள் -புண்ய பலத்தால் -/ பாரபக்ஷம் இல்லையே வைஷம்யம் நைர்க்ருண்யம் ஸா பேக்ஷத்வாத் இல்லாதவன் –
பரத குலத்தில் உயர்ந்தவன் நீ -இங்கும் நால்வரில் உயர்ந்த வகையில் வர வேண்டாமோ –
ஆர்த்தர் –தொலைத்த ஐஸ்வர்யம் கேட்டும் /அர்த்தார்த்தி –புதிதாக ஐஸ்வர்யம் கேட்டும் –இருவரும் அசித் அனுபவம் கண்டு கேட்டு -இத்யாதி-சிற்றின்பம் -செல்வ அனுபவம் இல்லை —/ ஜிஞ்ஞாசூ –ஆத்மானுபவம் -கேவலர்-ஜீவாத்மாவே தத்வம் என்று இருப்பவன் – /ஞானி –பகவத் லாபார்த்தி –
நால்வரும் அவன் இடமே சரண் அடைந்து பெற வேன்டும் -நால்வரையும் எனக்கு பிடிக்கும் –இதற்க்காகவாவது வருகிறார்கள்
-கிரமத்தில் திருத்தி-திருப்பி – மேலே வர வாய்ப்பு உண்டே-எழுவார் -விடை கொள்வார் -ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் –

தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகபக்திர்விஷிஷ்யதே.ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்தமஹம் ஸ ச மம ப்ரிய৷—7.17৷৷
நித்ய யுக்த –ஏக பக்தர் –அவர்கள் என்னிடம் காட்டும் ப்ரீதியை சர்வசக்தனான என்னாலும் கூட அவர்கள் இடம் காட்ட முடியாதே –
கீழே சொன்ன நால்வருக்குள்– என்னிடம் கூடவே இருக்கும் ஆசை கொண்டவன் –அநந்ய பக்தன் –பிராப்யமும் பிராபகமும் நானே என்று இருப்பவர்கள் -ஏக பக்திர் –
எனக்கும் ப்ரீதி -அவர்கள் அத்யர்த்த ப்ரீதி -தாழ விட்டு பக்தர்களை உயர்த்தி பேசும் புருஷோத்தமன் -வாரிக் கொண்டு உன்னை விழுங்குவான் காணில் -என்று இருக்க
என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றும் பருகினான் -என் ஆசையும் உன்னுடைய அதீனம் -/ என் அவா அறச் சூழ்ந்தாயே -/
மாசறு சோதி -மடலூருத்தல் -ஊர் எல்லாம் துஞ்சி -மடல் எடுக்க முடியாமல் -பேர் அமர் காதல்- பின் நின்ற காதல் கழிய மிக்கதொரு காதல் -வளர்த்து
நெஞ்சப் பெரும் செய்யுள் -ஈர நெல் வித்து விதைத்த -ஊரவர் கவ்வை எரு -அன்னை சொல் நீர் -பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த
-அமரும் காதல் -விலக்காதே / பின் நின்ற காதல் –வேண்டாம் என்று விலகி போனாலும் -ஹிரண்ய புரம் குட்டி சுவர் -செல்வ நாரணன் என்ற சொல் கேட்டு –

-12-ஸ்லோகங்களில் தன் பெருமையையும் -13-/-14-ஸ்லோகங்களில் பிரகிருதி மாயை -திரோதானம் -சரணாகதி ஒன்றே அவனை அடைய வழி என்றும் –
-15-ஸ்லோகத்தில் இவனை நாடாத நான்கு வித பக்தர்கள் -16-ஸ்லோகத்தில் இவனை நாடும் நான்கு வித பக்தர்களையும்
17-ஸ்லோகத்தில் அநந்ய பக்தர் -ஞானியே மேலானவன் என்று அருளிச் செய்து –

உதா₄ராஸ் ஸர்வ ஏவைதே–ஞாநீ த்வாத்மைவ மே மதம் |–ஆஸ்தி₂தஸ் ஸஹி யுக்தாத்மா–மாமேவாநுத்தமாம் க₃திம் ||—18-
ஏதெ ஸர்வ ஏவ உதா₄ரா: – இவர்கள் எல்லாருமே வள்ளல்கள், -வேண்டிற்றெல்லாம் தரும் கோதில் சீர் கண்ணன்”
ஞாநீ து (மே) ஆத்மா ஏவ – ஞானியோவெனில் (எனக்கு) ஆத்மாவாகவே, தாரகனாகவே இருப்பவன்.(என்று)
மே மதம் – என்னுடைய சித்தாந்தம்/ வேதாந்தம் வேறே சொல்லட்டும் –
என்நெஞ்சினால் நோக்கிக் காணீர் -போலே -என்னதுன்னதாவியில் அறிவார் உயிரானாய் அவன் மதம் தோற்றும்-
இவர்கள் பிரார்திக்கவே நான் கொடுப்பவன் ஆனேன் -அதனால் வள்ளல் -புருஷோத்தமன் வாக்யம் அன்றோ
ஞானி சப்தமாக இருந்தாலும் பக்தனையே சொல்கிறான் -பக்தி ரூபா பன்ன ஞானம் –
யுக்தாத்மா ஸ: மாம் ஏவ – என்னோடு சேர விரும்புகிற அவன் என்னையே,
மாமேவாநுத்தமாம் க₃திம் ஆஸ்தி₂த: ஹி – ஒப்பற்ற ப்ராப்யமாகக் கொண்டுள்ளானன்றோ.-
பசுவும் கன்றைபோல பகவானும் பக்தனும்.-“உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்”
மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்வம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் –ஆச்சார்ய ஹிருதயம் -179-

ப₄ஹூநாம் ஜந்மநாமந்தே-ஞாநவாந் மாம் ப்ரபத்யந்தே |–வாஸுதே₃வஸ் ஸர்வமிதி-ஸ மஹாத்மா ஸுது₃ர்லப₄ ||—19-
பல புண்ய ஜன்மாக்கள் கழிந்த பின்பே -ஞானம் படைத்தவன் என்னை சரண் அடைகிறான் –
எந்த ஞானம் – உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -என்று இருப்பவர்கள் –
நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள்,ஆழ்வார்கள் அனைவரும் , பிரகலாதன் ஆகியோர் இத்தகைய மஹாத்மாக்கள் ஆவர்.
பெரிய திருமொழி – 6-1 – ல் எல்லா பாசுரங்களிலும் “ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்” என்றும் –
வாமனன் அடியிணை மருவுவரே” — 6-1-10 -என்றும் அவனே ப்ராப்யம், ப்ராபகம் -என்கிறார்.-
எல்லாவித பந்துவும் அவனே என்று இருப்பவர்கள் –மிகவும் துர்லபம் -பாவியேன் பல்லில் பட்டு தெறிப்பதே -பிள்ளான் பணிக்கும்
“வைஷம்ய நைத்ருண்யே ந பாபேக்ஷட்வாட்.”–பல பிறவிகளில் ஒன்றிலே இந்த நிலை -இதனாலே –
கூடிடு கூடல் -முத்து குறி -பட்ட மஹிஷி வட்டத்தின் காலில்-குயில் காலில் – விழும் படி காதல் வளர்த்து த்வரை–

அடுத்த -8 ஸ்லோகங்களால் தேவதாந்த்ர பஜனம் பண்ணி அல்ப அஸ்திர பலன்களை பெற்று இழக்கிறார்கள் என்றும்
இறுதி -3–ஸ்லோகங்களால் ஐஸ்வர்யார்த்தி கைவல்ய பகவல் லாபார்த்திகள் பற்றி சுருக்கமாக தொகுத்து அருளிச் செய்கிறான் –

காமைஸ் தைஸ்தைர் ஹ்ருதஜ்ஞாநா: ப்ரபத்ந்தேந்யதே₃வதா:|–தம் தம் நியமமாஸ்தா₂யா-ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா ॥—20-
ஸ்வயா ப்ரக்ருத்யா – தமது (முக்குணமயப் பொருள்கள் விஷயமான) அநாதி வாஸனையாலே,
நியதா: – எப்போதும் சேர்ந்திருக்கப் பெற்றவர்களாய்
தை தை: – (தம் வாஸநாகுணமான) அந்த அந்த
காமை: – (முக்குணமயமான) விரும்பப்படும் பொருள்களாலே
ஹ்ருதஜ்ஞாநா: – அபஹரிக்கப்பெற்ற (என் ஸ்வரூப விஷயமான) அறிவையுடையவர்களாய்
(அந்த அந்த பொருள்கள் கிடைப்பதற்காக)
அந்யதே₃வதா: – என்னைக் காட்டிலும் வேறுபட்ட தெய்வங்களை
தம் தம் நியமமாஸ்தா₂யா – அந்த அந்த தேவதைகளையே உகப்பிப்பதற்கு உறுப்பான நியமங்களைக் கைக்கொண்டு)
ப்ரபத்ந்தே – அவர்களையே ஆஶ்ரயித்து ஆராதிக்கிறார்கள்.
ஆரோக்யம் பாஸ்கரன் -ஞானம் ருத்ரன் -மோக்ஷம் ஜனார்த்தனன் –/ மந்தி பாய் –/ கங்கா தீரத்தில் இருந்தும் தாகத்துக்கு கிணறு வெட்டுவாரைப் போலே –

யோ யோ யாம் யாம் தநும் ப₄க்த: ஶ்ரத்த₄யார்ச்சிதுமிச்ச₂தி ।–தஸ்ய தஸ்யாசலாம் ஶ்ரத்தா₄ம் தாமேவ வித₃த₃தா₄ம்யஹம் ॥—21-
ய: ய: ப₄க்த: – எந்த எந்த தே₃வதாந்த்ர பக்தன்
யாம் யாம் தநும்- (எனது) ஶரீரமான எந்த எந்த தேவதையை
ஶ்ரத்த₄யா – விஸ்வாஸத்தோடு
அர்ச்சிதும் – ஆராதிப்பதற்கு
இச்ச₂தி – விரும்புகிறானோ
தஸ்ய தஸ்ய – அந்த அந்த பக்தனுக்கு
தாம் ஏவ ஶ்ரத்தா₄ம் – அந்த (தேவதா விஷயமான) விஶ்வாஸத்தையே
அசலாம் – (இடையூறுகளால்) அசையாததாய்
அஹம் – நான்-
அந்தர்யாமி நான் என்ற ஞானத்துடன் ஆச்ரயிப்பவர் சீக்கிரம் விட்டு என்னையே கேட்டு வருவான் -அப்படி இல்லாதவர்க்கும் –
அசைக்க முடியாத ஸ்ரத்தையை நானே உண்டாக்குகிறேன் -நாஸ்திகன் ஆக்க கூடாதே –கிரமத்தில் வருவார்களே – -கொண்டி மாட்டுக்கு தடி கட்டுவாரைப் போலே
நாட்டினான் தெய்வம் எங்கும் –சேட்டை தன் மடி அகத்து செல்வம் பார்த்து இருக்கின்றார்களே –

ஸ தயா ஷ்ரத்தயா யுக்தஸ்தஸ்யாராதநமீஹதே.—லபதே ச தத காமாந் மயைவ விஹிதாந் ஹி தாந்৷৷—7.22৷৷
என்னை உள்ளபடி அறியாமல் தேவதாந்த்ர பஜனம் -செய்பவருக்கும் பலனை நானே அளிக்கிறேன் –
என் சரீரத்தை தானே ஆஸ்ரயிக்கிறான் என்று நான் அறிவேன் —
கொடியை பந்தலில் ஏற்றுவது போலே -குச்சியில் ஏற்றி – துளி பக்தி பிறந்ததும் -இவர்களை ஆஸ்ரயித்து சில சில பலங்களை கொடுத்து –
அவரவர் இறையவர் குறையிலர் -அவரவர் -விதி வழி அடைய நின்றனர் -அந்தர்யாமியாய் புகுந்து -மஹா க்ரமம்-அவன் திரு நாமம் –
சர்வ தேவதா நமஸ்காரம் கேசவம் பிரதி கச்சதி –ஆகாசம் நீர் கடலுக்கு போவது போலே –

அந்தவத்து ப₄லம் தேஷாம் தத்ப₄வத்யல்பமேத₄ஸாம் |–தே₃வாந் தே₃வயஜோ யாந்தி மத்ப₄க்தா யாந்தி மாமபி॥—23-
யல்பமேத₄ஸாம் – புல்லறிவாளர்களான அவர்களுக்கு
அந்தவத்து ப₄லம் – அவ்வாராதன பலன் அல்பமாகவும் முடிவுடையதாகவும் ஆகிறது. ஏனெனில்
தே₃வயஜ: தே₃வாந் யாந்தி – தேவர்களை ஆராதிப்பவர்கள் தேவர்களையே அடைகிறார்கள்
மத்ப₄க்தா அபி மாம் யாந்தி – என்னுடைய பக்தர்களும் என்னையே அடைகினறனர்.-என்னை பிரார்த்தித்து என்னையும் அடைகிறார்கள்
-உம்மை தொகையால் -கீழ் அவர்கள் ஒன்றையே அடைகிறார்கள் -அபி சப்தம் -இத்தையே காட்டும் -மோக்ஷம் பெற்றால் ஆரோக்யம் செல்வம் ஞானம்
எல்லாமே கிடைத்ததாகுமே -அவகாத ஸ்வேதம் போலே -நெல்லு குத்த வியர்வை தானே வருமே –
ஸூ ஆராதன் இவன் -அவர்கள் துராராதர்கள் -/இந்திரன் -ஆத்ம ப்ரச்னம் -தலை குப்புற தள்ளி விட இவன்
ஐஸ்வர்யம் அக்ஷரம் பரமபதமும் கொடுத்தும்-வெட்க்கி இருந்து – அடியார்க்கு என் செய்வான் என்றே இருப்பவன் -பெத்த பாவிக்கு விடப் போமோ –
என்னையும் –அடைந்து திரும்பாமல் பேரின்பம் பெறுகிறார்கள் –கீழே அடி பட்ட பந்து போலே திரும்ப வேண்டுமே —

அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மத்யந்தே மாமபு₃த்த₄ய:। பரம் பா4வமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம் ॥
அபு₃த்த₄ய: அவ்யயம் அநுத்தமம் மம பரம் பா4வம் அஜாநந்த: —24-
அறிவிலிகள் -அவதார ரஹஸ்யம் அறியாமல் -நம்மில் ஒரு புண்யம் செய்த மனுஷ்யன் என்றே நினைத்து
-இச்சாதீனமாக அவதரித்தேன் என்று உணராமல் -இழக்கிறார்கள் -முட்டாள்கள் -திட்டி நிறுத்துவான் -தண்டனை கொடுத்து நிறுத்துவான் –
ஈன்றவள் இருக்க மணை நீர் ஆட்டுவதே– ஓ ஓ உலகின் இயல்பே –
அவ்யக்தம் -மறைந்து இருந்தவன் -வ்யக்திமாபந்நம்-கண் காண -சகல மனுஷ நயன விஷயம் ஆக்கி -அர்ஜுனனே மறந்தான் -என்னையே பற்று என்றதும் –
மாம் -அடியேனை -அஹம் -பரத்வம் -சொல்லியும் -மாமின் அஹமின் அர்த்தமும் சொல்லியும் சரண் அடைய வில்லையே –

நாஹம் ப்ரகாஶ: ஸர்வஸ்ய யோக₃மாயாஸமாவ்ருத: ।மூடோ₄யம் நாபி₄ஜாநாதி லோகோ மாமஜமவ்யயம் ॥
யோக₃மாயாஸமாவ்ருத: அஹம் ஸர்வஸ்ய ந ப்ரகாஶ: –25-
பிரகிருதி மாயையால் மறைக்கப் பட்டு பரமாத்மா ஸ்வரூபம் உணராமல் உள்ளார்கள் -கீழே -இங்கு யோக மாயை -மனுஷ சஜாதீயனாகி வந்தததால் –
கண்ணன் சரீரம் பார்த்து -மூடர்கள் -பர வாசுதேவன் வேஷம் என்று அறியாமல் -பிறப்பிலி என்று உணராமல் –
அவதார ரஹஸ்யம் கீழே பார்த்தோமே –

வேதா₃ஹம் ஸமதீதாநி வர்த்தமாநாநி சார்ஜுந ।-ப₄விஷ்யாணி ச பூ₄தாநி மாம் வேத₃ ந க்ஶ்சந ॥
அர்ஜுந ஸமதீதாநி வர்த்தமாநாநி ப₄விஷ்யாணி ச பூ₄தாநி அஹம் வேத₃ –26-
பூத பவ்ய பவத் ப்ரபு:–சேஷி காரணனன் – முக்காலத்து மக்களையும் நான் அறிவேன் -மாம் து கஶ்சந ந வேத -என்னை இவர்கள் அறிவது இல்லை –
இதனாலே தான் ஞானி துர்பலம் -பூதாநி பத்த ஜீவர்கள் -அறியாமல் -என்னையே கொடுப்பேன் என்று தெரியாமல் -வேறு கேட்டு போகிறார்கள்
-என் ஆனந்தத்துக்கு என்னை பிரார்த்தித்து கைங்கர்யம் செய்பவர் துர்லபம்

இச்சா₂த்வேஷஸமுத்தே₂ந த்வந்த்வமோஹேந பா₄ரத ।ஸர்வபூ₄தாநி ஸம்மோஹம்-ஸர்க்கே₃ யாந்தி பரந்தப ॥-27-
இச்சா₂த்வேஷஸமுத்தே₂ந – ப்ராக்ருத விஷயங்களில் சிலவற்றைப் பற்றிய விருப்பத்தாலும், மற்றும் சிலவற்றைப் பற்றிய வெறுப்பாலும் உண்டாகும்,
த்வந்த்வமோஹேந – . இரட்டைகளான வெற்றி தோல்வி, லாபம் நஷ்டம் அதனால் சுகம். துக்கம்.
இது விருப்பு – வெறுப்பால் வருகிறது. இந்த இரட்டைகளே மோஹத்தை விளைவிக்கிறது.
ஸர்க்கே₃ ஸர்வபூ₄தாநி ஸம்மோஹம் யாந்தி–பிறக்கும் பொழுதே இந்த மோகம் -சடகோபர் ஒருவரே சடத்தை விரட்டி -உலோகரில் மாறி மாறன் ஆனார்
-8-மாதத்தில் குழந்தை பிரார்த்திக்குமாம் -அந்த எண்ணத்தை மாற்றுவானாம் -தலை கீழே திருப்பி – முன்பு நேராக இருந்து மோக்ஷம் இச்சையாக இருந்ததாம் –
சடஜித் -கோபித்து தள்ளினார் -இவன் அனுக்ரஹத்தால் -கருவரங்கத்துள் இருந்து கை தொழுதேன் -கருவிலே திரு இலாதீர் காலத்தை கழிக்கின்றார்கள்
கர்ப்ப ஸ்ரீ மான் பிரகலாதாழ்வான் போல்வாரும் இரட்டை தாண்டினவர்கள்-

யேஷாம் த்வந்தக₃தம் பாபம்–ஜநாநாம் புண்ய கர்மாணாம் ।–தே த்வந்த்வ்மோஹ நிர்முக்தா-ப₄ஜந்தே மாம் த்ருட₄வ்ரதா: ॥-28-
கர்ம யோகம் ஞான யோகம் பக்தி யோகம் மூலமும் சரணாகதி மூலமும் இரட்டை தாண்டி பகவத் விஷயத்தில் ஈடுபட்டு நல் கதி அடைகிறார்கள் –
தேவதாந்த்ர பஜனம் தவிர்த்து -ஐஸ்வர்யம் கைவல்யம் மோக்ஷம் மூன்றுக்கும் ஆஸ்ரயிக்கிறார்கள்-
ஸூர் யா நமஸ்காரம் -7- ஜன்மாக்கள் –ருத்ர பக்தன் -7-/ விஷ்ணு பக்தர்கள் -பல ஜென்மங்கள் பின்பு பக்தன் ஆகிறான் –

ஜராமரணமோக்ஷாய–மாமாஸ்ரித்ய யதந்தி யே ।–தே ப்ரஹ்ம தத்விது₃: க்ருத்ஸ்நம்-அத்யாத்மம் கர்மசாகி₂லம் ॥–29-
ஜராமரணமோக்ஷாய :-ஷட் பாக விபாகம் இன்றி ப்ரக்ருதி ஸம்பந்தமற்ற ஆத்மாநுபரூப மோக்ஷம் கிடைப்பதற்காக
மாம் ஆஸ்ரித்ய யே யதந்தி – என்னை அடைந்து எவர்கள் யத்னம் பண்ணுகிறார்களோ-
மாம் -பொறி தட்டி -ஆசை வராதா என்ற நப்பாசை –
தே தத் ப்ரஹ்ம க்ருத்ஸ்நம் அத்யாத்மம் அகி₂லம் கர்ம ச விது₃: – அவர்கள் ப்ரஹ்மம்,–பற்ற வேண்டியவற்றையும் /கர்மம் – அத்யாத்மம்-தள்ளப்பட வேண்டியவை –
கர்மம் நித்ய நைமித்திக கர்மங்கள் இவற்றை அறியவேண்டும்.
பெயர்களை மட்டும் இங்கே சொல்லி விவரம் அடுத்த அத்யாயம் –கைவல்யார்த்திக்கு இங்கு -ஐஸ்வர்யார்த்திக்கும் பகவல் லாபார்த்திக்கும் மேல் ஸ்லோகத்தில்
ப்ரஹ்மம் -கர்மம் -அத்யாத்மம் -சப்தங்கள்

ஸாதி₄பூ₄தாதி₄ தை₃வம் மாம்-ஸாதி₄யஜ்ஞம் ச யே விது₃:।–ப்ரயாணகாலேऽபி ச மாம்-தே விது₃ர் யுக்தசேதஸ: ॥-30-
“எய்ப்பென்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்.
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத்தரவணைப் பள்ளியானே” –
சரணாகதர்களுக்காக அஹம் ஸ்மராமி -என்றாரே ஸ்ரீ வராஹ நாயனார்
அ தி₄யஜ்ஞம்-மூவருக்கும் போது -/பலனுக்கு தக்கவாறு பிராண பிரயாணம் காலத்தில் நினைக்க வேன்டும் -அபி -காலத்திலும் இங்கும் –
வாழும் பொழுதும் நினைக்க வேன்டும் –

——————————————

கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் – -6—யோக அப்பியாச யோகம் —

June 4, 2017

ஜ்ஞான கர்மாத்மிகே நிஷ்டே யோக லஷ்யே ஸூ ஸம்ஸ்க்ருதே
ஆத்மாநுபூதி சித்த்யர்த்தே பூர்வ ஷட்கே ந சோதிதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –2-
ஜீவாத்ம சாஷாத்காரம் -யோகத்தை அடையும் விதத்தையும் -ஆத்ம அனுபவத்தை அடையும் விதத்தையும்-பகவத் விஷய ஞானம்
-இதர விஷய வைராக்யம் -இவற்றால் அலங்கரிக்கப் பட்ட ஞான கர்ம யோகங்கள் முதல் ஆறு அத்தியாயங்களில் அருளிச் செய்யப் பட்டன –

யோகாப்யாப்ஸ விதிர்யோகீ சதுர்த்தா யோக சாதனம்
யோக சித்திஸ் ஸ்வ யோகஸ்ய பாரம்யம் ஷஷ்ட உச்யத –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–10-
1–யோகாப்யாப்ஸ விதி -முறைகள் -6-28-வரை
2–யோகீ சதுர்த்தா –நான்கு வகை யோகீகள் -6-29–6-32-வரை
3-யோக சாதனம் -சாதனங்கள் -அப்பியாசம் -வைராக்யம் இவையே சாதனங்கள் –6-33–6-36
4–யோக சித்தி -தடை வந்தாலும் சித்திக்கும் -6-37-6-46
5–ஸ்வ யோகஸ்ய பாரம்யம் –அடுத்த அத்யாயம் முன்னுரை போலே -பக்தி யோகமே உயர்ந்தது -46-/-47-ஸ்லோகங்களில் சொல்லி
-பக்குவம் -ஏற்பட்ட பின்பு -விஷய கௌரவம் மறைத்தே தானே அருளிச் செய்ய வேன்டும் –

—————————————–

ஸ்ரீ பகவாநுவாச–
அநாஷ்ரித கர்மபலம் கார்யம் கர்ம கரோதி ய–.ஸ ஸம் ந்யாஸீ ச யோகீ ச ந நிரக்நிர்ந சாக்ரிய—৷৷6.1৷৷
-9-ஸ்லோகம் வரை -முன்னால் சொன்னதை மீண்டும் சொல்லி –யோகம் -சித்த வ்ருத்தி நிரோதம் -சித்தம் பாய்வதை நிறுத்தி-என்பர் பதாஞ்சலி
பண்பாடு கலாச்சாரம் -அடக்கி வைப்பதே / மனம் வாக்கு உடல் மூன்றையும் அடக்கி /
பலத்தில் ஆசை இல்லாமல் -எனக்கு விதித்த கர்மங்களை செய்து -ஸ்வயம் பிரயோஜனம் –மடி தடவாத சோறு -/
-3-வேளை சந்தியாவந்தனம் பானா விட்டால் ப்ராஹ்மண்யம் போகுமே -காணாமல் கோணாமல் கண்டு -/
சந்யாசீ -அவனே ஞான யோகி -என்றவாறு -இதே போலே ஞான யோகியை கர்ம யோகி ஆக மாட்டான் கர்மம் செய்யா விட்டால் –
அக்னி கார்யம் விடாமல் -கர்மாவுக்காக பண்ணி -அனுஷ்டானம் -விடாமல்
செய்யாதவன் -கேவல ஞான யோகி போலே இல்லையே இவன் -என்று இரண்டையும் சேர்த்து தெரிவிக்கிறான் –
கரமாக்குள்ளே ஞான பாகம் அறிந்தவன் என்றவாறு –

யம் ஸம் ந்யாஸமிதி ப்ராஹுர்யோகம் தம் வித்தி பாண்டவ.–ந ஹ்யஸம் ந்யஸ்தஸங்கல்போ யோகீ பவதி கஷ்சந—৷৷6.2৷৷
எது ஒன்றை ஞானம் என்று சொல்கிறார்களோ -ஆத்மா யாதாம்யா ஞானம் ஏற்பட்டால் -அத்தை அடக்கிக் கொண்டதே கர்மயோகம் /
பிராகிருத பலன்களில் பற்று விடாமல் -ஆசை கொண்டவன் யோகி ஆக மாட்டான் -இப்படி அன்வய வியதிரேகங்களால் யோகி பற்றி அருளிச் செய்கிறான் /
இந்திரிய அனுபவமே ஐஸ்வர்யா அனுபவம் -அதை சன்யாசம் பண்ணாதவன் யோகி ஆகமாட்டான் –

ஆருருக்ஷோர்முநேர்யோகம் கர்ம காரணமுச்யதே.–யோகாரூடஸ்ய தஸ்யைவ ஷம காரணமுச்யதே—৷৷6.3৷৷
முனி -யோகி -ஆத்மா பற்றியே அனுசந்தானம் -ஆத்ம சாஷாத்காரம் மேலே என்ற ஆசை கொண்டு -ஏறும் படிக் கட்டே கர்ம யோகம் தான்
ஆத்ம சாஷாத்காரம் கை வந்த பின்பு –சம தர்சனம் -பெற்ற பின்பு -ஜட பரதர் -பிரகலாதன் -ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் போல்வார் –
அவருக்கு கர்ம யோகம் நிவ்ருத்தி -நித்ய நைமித்திக கர்மாக்கள் விடக் கூடாது -/

யதா ஹி நேந்த்ரியார்தேஷு ந கர்மஸ்வநுஷஜ்ஜதே—-ஸர்வஸங்கல்பஸம் ந்யாஸீ யோகாரூடஸ்ததோச்யதே—৷৷6.4৷৷
யோகம் கைவந்தவன் என்று -இந்திரியங்கள் -அளவில்லா சிற்று இன்பம் -தொலைத்து பற்று இல்லாமல் -நித்ய நைமித்திம கர்மங்கள் தவிர
வேறு காம்ய கர்மாக்கள் பண்ணாமல் -இருப்பவன்

உத்தரேதாத்மநாத்மாநம் நாத்மாநமவஸாதயேத்—ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந—৷৷6.5৷৷
பந்துராத்மாத்மநஸ்தஸ்ய யேநாத்மைவாத்மநா ஜித—அநாத்மநஸ்து ஷத்ருத்வே வர்தேதாத்மைவ ஷத்ருவத்—৷৷6.6৷৷
பற்று அற்ற மனசே ஒருவனை உயர்த்தும் –மனசே மோக்ஷ பந்து ஏக காரணம் -பந்துவும் விரோதியும் -மனசே –
நெஞ்சை வென்றவன் -ஆத்ம சப்தம் ஜீவாத்மாவுக்கும் நெஞ்சுக்கும் -இந்த்ரியங்களில் பட்டி மேயாமல் -/ ஒரே மாச மித்ரனாகவும் விரோதியாகவும்
சங்கம் பற்று தானே காமம் க்ரோதம் -சுகம் துக்கம் காரணங்கள் ஆகும்

ஜிதாத்மந ப்ரஷாந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித–ஷீதோஷ்ணஸுகதுகேஷு ததா மாநாபமாநயோ—৷৷6.7৷৷
அப்பியாசம் பண்ணும் அவனுக்கு யோக்யதை -மேலே மூன்று ஸ்லோகங்களால் –சீதா உஷ்ணம் சுகம் துக்கம் -மரியாதை அவமானம்
-இவற்றால் விகாரம் அடையாமல் -இவை சரீரத்துக்கு தானே
வெளி இந்திரியங்களை வென்றவன் -பரமமான ஆத்மா ஜீவாத்மா என்றவாறு -அதில் நிலை பெற்று இருப்பான் -இதுவே முதல் அதிகாரம் –
இவை யோகம் பண்ணி சம்பாதிக்க முடியாது -கீழேயே இத்தை அருளிச் செய்தான் —
பிரணய ரோஷம்–மட்டை அடி உத்சவம் –தனக்கே தெரியாமல் சேர்ந்தார் -சேராத நல்குரவும் செல்வமும் –விடமும் அமுதமும் –
படுக்கை ஆதி சேஷன் வாஹனம் பெரிய திருவடி இத்யாதி -பார்க்க பார்க்க மனம் பக்குவம் அடையும் –

ஜ்ஞாநவிஜ்ஞாநதரிப்தாத்மா கூடஸ்தோ விஜிதேந்த்ரிய–யுக்த இத்யுச்யதே யோகீ ஸமலோஷ்டாஷ்மகாஞ்சந—৷৷6.8৷৷
கல்லு ஸ்வர்ணம் தாழ்ந்த பதார்த்தங்கள் வாசி இல்லாமல் -ஞானம் விஞ்ஞானம் பெற்று -ஆழ்ந்த யாதாம்யா ஞானம் பெற்றவன் –
கூடஸ்தன் -இரும்பை -அடிக்க கொல்லன் – ஆத்மாவுக்கு விகாரம் வராது என்று அறிந்தவன் இந்திரியங்களை வென்றவனே யோகி
ஆவதற்கு யோக்யதை பெற்றவன் –பித்தளை ஹாடாகம் -காட்ட பித்தலாட்டம் -இவனுக்கு வாசி இல்லை-எதுவும் இவனுக்கு வேண்டாமே —
கண்ணன் ருக்மிணி எனக்கும் ஒன்றும் இல்லை என் அடியார்களும் ஒன்றும் இல்லாதவர்கள் –அவாப்த ஸமஸ்த காமன் -அநந்ய பிரயோஜனர் அன்றோ –

ஸுஹரிந்மித்ரார்யுதாஸீநமத்யஸ்தத்வேஷ்யபந்துஷு.—ஸாதுஷ்வபி ச பாபேஷு ஸமபுத்திர்விஷிஷ்யதே–৷৷6.9৷৷
கீழே அசித் -இங்கு சித் -ஸூ ஹ்ருத் -எந்த வயசாகிலும் நன்மை விரும்பி இவர்கள் /மித்ரர் -நன்னன் சம வயசு /விரோதி / உதாசீனர் /
மத்யதஸ்தர் -ஆராய்ந்து நடுநிலை /சாது -உலக நன்மை விரும்பி -பாபி -அனைவரையும் சமமாக பார்த்து –
சாது சங்கமம் வேண்டுமே என்னில் இவன் இறுதி நிலை -கீழ் இருந்தும் இங்கு வர சாது சங்கமம் வேன்டும் -இவனுக்கு இல்லை என்றவாறு

யோகீ யுஞ்ஜீத ஸததமாத்மாநம் ரஹஸி ஸ்தித–.ஏகாகீ யதசித்தாத்மா நிராஷீரபரிக்ரஹ—৷৷6.10৷৷
யோகாப்யாஸம் -மக்கள் இல்லா இடத்தில் –இடையூறு கூடாதே -/ தனித்து இருந்து -யோகம் பண்ண /மனசை அடக்கினவனாக
-ஆசை இல்லாமல் -மமகாராம் தொலைந்து -பலத்தை பற்றி நினைக்காமல் –

ஷுசௌ தேஷே ப்ரதிஷ்டாப்ய ஸ்திரமாஸநமாத்மந-நாத்யுச்ச்ரிதம் நாதிநீசம் சைலாஜிநகுஷோத்தரம்—৷৷6.11৷৷
சுத்தமான இடம் –மனஸ் ப்ரீதியாய் இருக்க வேண்டுமே -/ நாஸ்திகர் இல்லாத இடம் பாஷாண்டிகள் உள்ள இடம் கூடாதே
பரான்ன நியமம் -மற்றவர் தொட்டு உண்ண மாட்டார்கள் -இதனால் -ரஜஸ் தமஸ்-ஓட்டும் -/ஸ்திரமான ஆசனம் -மரத்தால் -அழுந்தும் மெத்தைகள் கூடாதே
-நீண்ட காலம் யோகம் பண்ண இது தான் ஸுகர்யம் -சாய்மானம் உடன் கூடிய ஆசனம் -என்பர் ராமானுஜர்
இதனாலே –ரொம்ப சாயக் கூடாது -உயரமாகவும் கீழேயும் இல்லாமல் —
பட்டு துணி மான் தோல் தர்ப்பம் பரப்பி -தேசிகன் -தர்ப்பம் மான் தோல் பட்டு துணி கிரமம் மாற்றி /

தத்ரைகாக்ரம் மந கரித்வா யதசித்தேந்த்ரியக்ரிய—-உபவிஷ்யாஸநே யுஞ்ஜ்யாத்யோகமாத்மவிஷுத்தயே–৷৷6.12৷৷
மனசை ஒரு முகப்படுத்தி -இந்திரியங்கள் வியாபாரம் தடுத்து -வெளியில் உள்ளவற்றை சொல்லி –

ஸமம் காயஷிரோக்ரீவம் தாரயந்நசலம் ஸ்திர—.ஸம் ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திஷஷ்சாநவலோகயந்—৷৷6.13৷৷
முதுகு -இடுப்பு மேல் ஒரே -தலை கழுத்து முதுகு நேர் கோட்டில் வைத்து -கண்ணாலே மூக்கின் நுனியை –உன்னுடைய -என்னுடையது இல்லை
-முழுவதும் திறக்க கூடாது -மூடவும் கூடாதே –

ப்ரஷாந்தாத்மா விகதபீர்ப்ரஹ்மசாரிவ்ரதே ஸ்தித—.மந ஸம் யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பர—৷৷6.14৷৷
சந்தோஷமாக பயம் இல்லாமல் -ப்ரஹ்மசாரி விரதம் -சாஸ்த்ர விதி -படி -மனசை ஒரு முகப்படுத்தி -என்னிடம் ஈடுபடுத்தி –
பரமாத்மா முதலில் இங்கு -சுவாஸ்ரமம் திவ்ய மங்கள விக்ரஹம் -கட்டு படுத்த இதுவே உபாயம் –அரவணை ஆழி படை அந்தணனை மறப்பு இன்று மனத்து வைப்பார்
குணங்கள் பெருமைகளை நினைத்து -மந்தி பாய் வட வேங்கட மா மலை போலே அன்றோ மனம் —
நம்பியை -தென் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் -எம்பிரானை என் சொல்லி மறப்பேனே -விடுவேனோ -நடுவே வந்து உய்யக் கொண்ட நாதனை –
கற்பார்க்கு கல்வி வாய்க்கும் –நம்பி -குண பூர்ணன் -/சன்னிஹிதன் /அம் செம் பொன்னே திகழும் திரு மூர்த்தி -அழகன் / நிறைந்த சோதி -என் நெஞ்சம் நிறைந்தன/
பொறுப்பு அவன் கொண்ட பின்பு நாம் உறுதியாக நம்புவோமே-பரஸ்மின் -சுபாஸ்ரய பூதன்

யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ நியதமாநஸ–.ஷாந்திம் நிர்வாணபரமாம் மத்ஸம் ஸ்தாமதிகச்சதி—৷৷6.15৷৷
என்னிடம் இருக்கும் -ஷாந்தி இவன் அடைகிறான் -ஷட் பாவ விகாரம் இல்லாமல் -ஷடூரமி -சோக மோகம் பசி தாகம் ஜரா மிருத்யு இல்லாமல்
சரீரம் முடியும் காலத்தில் -முன்பாகவே அடைகிறான் -நிலை பெற்ற நெஞ்சு படைத்தவனாக -யோகம் கைவந்த –

நாத்யஷ்நதஸ்து யோகோஸ்தி ந சைகாந்தமநஷ்நத–ந சாதிஸ்வப்நஷீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுந—৷৷6.16৷৷
உணவு தூக்கம் பழக்கம் மேல் இரண்டு ஸ்லோகங்களில் / மிக உண்டால் யோகம் வராதே -பட்டினி இருந்தாலும் வராதே
-தூங்குகிறவன் -சொப்பனம் பார்க்கிறவன் -வராது -முழித்து கொண்டே இருந்தாலும் வராது
பாதி வயிறு -அன்னம் -தீர்த்தம் காத்து மீதி -வாயு சஞ்சாரணம் இடை வெளி வேண்டுமே –

யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு.—யுக்தஸ்வப்நாவபோதஸ்ய யோகோ பவதி துகஹா—-৷৷6.17৷৷
யோகம் துக்கம் தவிர்க்கும் -ஆயாசத்துக்கு தகுந்த ஆகாரம் -உண்ட பின்பு நடை பயிற்சி /
கர்மத்துக்கு தக்க -உணவு /மந்தமாக இருக்க கூடாதே -/தேவையான அளவு தூக்கம் –

யதா விநியதம் சித்தமாத்மந்யேவாவதிஷ்டதே.—நிஸ்பரிஹ ஸர்வகாமேப்யோ யுக்த இத்யுச்யதே ததா—৷৷6.18৷৷
எல்லா ஆசைகளையும் விட்டு -மநோ ரதங்கள் இல்லாமல் -ஆத்மாவில் நிலை நின்று -யோகாப்யாஸம் -அவனை பற்றியே நினைத்துக் கொண்டு

யதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்மரிதா.–யோகிநோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோகமாத்மந—৷৷6.19৷৷
த்ருஷ்டாந்தம் -காத்து -இந்திரியங்கள் -ஞான ஒளி /ஆடாமல் அசையாமல் எரிவது போலே -யோகாப்யாஸம் பண்ணுபவன் –
-நெஞ்சை ஆத்மாவில் செலுத்தி -இந்த்ரியங்களால் படாமல் -அசையாத மலை -இல்லை மலைக்கு ஒளி இல்லையே /

யத்ரோபரமதே சித்தம் நிருத்தம் யோகஸேவயா.—யத்ர சைவாத்மநாத்மாநம் பஷ்யந்நாத்மநி துஷ்யதி—৷৷6.20৷৷
நான்கு ஸ்லோகங்களால் -யோக தசையே புருஷார்த்தம் -உயர்ந்தது -எந்த யோகாப்யாஸம் -நிலை நின்று ஆனந்தம் அடைகிறதோ
-இந்திரியங்கள் பட்டி மேயாமல் -நெஞ்சு ஆனந்தம் -உண்ணும் சோறு போலே எல்லாம் ஆத்மா -/ வெளி விஷயம் இவனை தீண்டாது

ஸுகமாத்யந்திகம் யத்தத்புத்திக்ராஹ்யமதீந்த்ரியம்.–வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்திதஷ்சலதி தத்த்வத—৷৷6.21৷৷
ஆத்ம அனுபவம் சுகம் இந்த்ரியங்களால் அனுபவிக்க முடியாதே -உணர்ந்தே -புத்தியால் தானே கிரகிக்க முடியும் -துக்கம் கலசாத இன்பம்
-நிலை நின்று விலகாமல் இருக்கிறான் -ஆனந்தம் உணர்ந்த பின்பு

யம் லப்த்வா சாபரம் லாபம் மந்யதே நாதிகம் தத—–யஸ்மிந்ஸ்திதோ ந துகேந குருணாபி விசால்யதே—-৷৷6.22৷
அடைந்த பின் -வேறே உயர்ந்தது என்று முயலாமல் / கொடூரமான துக்கம் வந்தாலும் சோகப் படான் -மநோ விகாரம் அடையான்-

தம் வித்யாத் துகஸம் யோகவியோகம் யோகஸம் ஜ்ஞிதம்—.ஸ நிஷ்சயேந யோக்தவ்யோ யோகோநிர்விண்ணசேதஸா—৷৷6.23৷৷
சந்தோஷிக்கும் மனஸ் உவந்த உள்ளம் -யோகாப்யாஸம் -துக்கத்துக்கு நேரே எதிரி -அறிந்து -செய்கிறான்
-பண்ணும் தசையின் உயர்வை இப்படி நான்கு ஸ்லோகங்களால் –

ஸங்கல்பப்ரபவாந்காமாம் ஸ்த்யக்த்வா ஸர்வாநஷேஷத—மநஸைவேந்த்ரியக்ராமம் விநியம்ய ஸமந்தத—-৷৷6.24৷৷
ஷநை ஷநைருபரமேத் புத்த்யா தரிதிகரிஹீதயா—-ஆத்மஸம் ஸ்தம் மந கரித்வா ந கிஞ்சிதபி சிந்தயேத்—৷৷6.25৷৷
மமகாரம் இல்லாமல் அப்பியாசம் -நான்கு ஸ்லோகங்களால் -/காமம் -ஆசை -சங்கல்பத்தாலும் ஸ்பர்சத்தாலும் -இரண்டு வகை உண்டே -மனசாலே விட்டு —
நிஜமாக துரக்க முடியாதே வீட்டில் இருந்து -மனம் கூடாமல் இருக்கலாமே -ஓன்று விடாமல் அனைத்தையும் -இந்திரியங்களை அடக்கி –
ஆத்மா இடமே செலுத்தக் கடவன் -ஆத்மாவுக்கு ரூபம் இல்லையே -சேஷ பூதன் என்ற நினைவாலே முடியும் -சுபாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹத்தில் வைத்து –
மெது மெதுவே -அசங்காத தன்மை -நிலை நிறுத்தி -வேறே விஷயங்களில் மனம் செல்லாது —

யதோ யதோ நிஷ்சரதி மநஷ்சஞ்சலமஸ்திரம்.–ததஸ்ததோ நியம்யைததாத்மந்யேவ வஷம் நயேத்–৷৷6.26৷৷
பிரதி வசனம் -அர்ஜுனன் கேட்டதாக நினைத்து -சமாதானம் -எதில் எதில் வெளியில் போகிறதோ -போன வழியிலே சென்று திருப்ப வேன்டும் –
கஷ்ட நஷ்டங்களை சொல்லி இதன் ஏற்றத்தை சொல்லி திருப்ப வேன்டும் –சஞ்சலம் அஸ்திரம் -இரண்டையும் சொல்லி –
இயற்கையாகவே சஞ்சலம் -அஸ்திரம் -ஆத்ம சாஷாத்காரம் வந்த பின்பு விஷயாந்தரங்கள் பின்னே போவது -இதிலே ஸ்திரமாக இல்லாமல் என்றவாறு –
ஒருத்தி பால் மருவி மனம் வைத்து -ஒருத்திக்கு பொய் குறித்து -அவளுக்கும் மெய்யன் இல்லை -/மின்னிடை மடவார் –உன்னுடைய சுண்டாயம் நான் அறிவேன் —
காதில் கடிப்பிட்டு –இவர் யார் -ஏதுக்கு இவர் என் –/நல்லது சொல்லி சொல்லி நியமித்து ஆத்மா இடமே வசப்படுத்த வேன்டும் –
பிள்ளை உறங்கா வல்லி தாசருக்கு பெரிய பெருமாள் திருக் கண்களை காட்டி சம்பிரதாயத்துக்கு -அப்பொழுது ஒரு சிந்தை செய்து சேர்த்தார் நம் உடையவர்

ப்ரஷாந்த மநஸம் ஹ்யேநம் யோகிநம் ஸுகமுத்தமம்—-உபைதி ஷாந்தரஜஸம் ப்ரஹ்ம பூதம கல்மஷம்—৷৷6.27৷৷
படிக்கட்டு -ஐந்து விஷயம் –அகல்மஷம் -தோஷங்கள் விலகி -சாந்த ராஜஸம் -ரஜஸ் தமஸ் தீண்டாமல் -மனஸ் ஆனந்த நிலை அடையும்
-ஆத்மா சாஷாத்காரம் அடைகிறான் -ப்ரஹ்மத்துக்கு சமம் -உத்தமமான சுகம் அடைகிறான் –

யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ விகதகல்மஷ—ஸுகேந ப்ரஹ்மஸம் ஸ்பர்ஷமத்யந்தம் ஸுகமஷ்நுதே—৷৷6.28৷৷
யோகாப்யாஸம் செய்து -பாபங்கள் தொலைந்து -ப்ரஹ்ம சம்ஸ்பர்சம் சுகம் அடைந்து -எப்பொழுதும் சதா அஸ்நுதே –
யோகத்தில் இருந்து எழுந்து இருந்தாலும் –

ஸர்வபூதஸ்தமாத்மாநம் ஸர்வபூதாநி சாத்மநி.—ஈக்ஷதே யோகயுக்தாத்மா ஸர்வத்ர ஸமதர்ஷந—৷৷6.29৷৷
நான்கு ஸ்லோகங்களால் -சமதர்சனம் -அடையும் யோகி -நான்கு வகைகள் -ஞான மயன் ஆனந்த மயன் அதனால் சமம் -/
அங்கு ஸ்ரீ மன் நாராயணன் உடன் சாம்யம் அஷ்ட குணங்கள் -பரஞ்சோதி ரூபம் ஸ்வரூப ஆவிர்பாவம் -சம்யா பத்தி மோக்ஷம் /
மாலே மணி வண்ணா -பாசுரம் -அவன் உடையவை எல்லாம் பெற்று –சமன் கோள் வீடு தரும் தடம் குன்றமே -/
அனைவரும் ப்ரஹ்மதுக்கு சரீரம் -மூன்றாவது நிலை / சரீரம் கழித்த ஆத்மா ஸ்வரூபம் பார்த்து நான்காவது நிலை –
எல்லா ஆத்மாக்களும் –தானும் ஒரே ஆகாரம் -ஞானம் ஆனந்தம் -/சரீர சம்பந்தத்தால் வேறுபாடு

யோ மாம் பஷ்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பஷ்யதி—-தஸ்யாஹம் ந ப்ரணஷ்யாமி ஸ ச மே ந ப்ரணஷ்யதி–৷৷6.30৷৷
சேவை சாதிக்காமல் போவது இல்லை -அவனும் நானும் -யார் ஒருவன் கண்ணனை எங்கும் காண்கிறானோ-எல்லா வற்றையும் என் இடம் காண்கிறானோ
அவனுக்கு -பரமாத்மாவும் தானும் சாம்யம் இரண்டாவது நிலை இது -ஐக்கியம் இல்லை -சம்யாபத்தி சாதரம்யம்-அது அதுவே –

ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வமாஸ்தித—ஸர்வதா வர்தமாநோபி ஸ யோகீ மயி வர்ததே—৷৷6.31৷৷
என்னிடமே வாழ்கிறான் -யோகம் முடிந்து எழுந்த நிலையிலும் -எப்பொழுதும் சமமாகவே பார்க்கும் -ஒன்றான தன்மையை நினைத்து
-அனைவரும் ப்ரஹ்மாவின் சரீரம் இதில் –பரமாத்மா மூலம் வந்த நினைவு மாறாதே -உயர்ந்த நிலை இது –

ஆத்மௌபம்யேந ஸர்வத்ர ஸமம் பஷ்யதி யோர்ஜுந.—ஸுகம் வா யதி வா துகம் ஸ யோகீ பரமோ மத—৷৷6.32৷৷
பரமமான யோகி -உயர்ந்த நிலை -சுகமும் துக்கமும் ஒன்றாக -ஆத்மாக்கள் எல்லாம் நிகர் -எல்லா இடத்திலும் சமமாக பார்க்கிறான் –
அவனை யோகி என்று கொண்டாடுகிறேன் -/ எல்லார் சுகம் துக்கங்கள் நம்மதாகும் -முதலில் தோன்றும் -/ என்னிடம் மனசை திருப்பு என்கிறேன்
மக்கள் அனைவர் சுகம் துக்கம் உனக்கு என்றால் திரும்புவது கஷ்டம் தானே -அனர்த்தம் ஆகுமே -ஆகையால்
உனக்கு சுகம் வந்தாலும் படாதே -மற்றவர் சுகத்துக்கு சுகப்படாதது போலே -உனக்கு துக்கம் வந்தாலும் துக்கப் படாமல் -இதுவே சம்யாபத்தி -என்றவாறு –
சுக துக்கம் கூட்டுவதில் நோக்கு இல்லையே -கழிப்பதில் தானே நோக்கு

அர்ஜுந உவாச
யோயம் யோகஸ்த்வயா ப்ரோக்த ஸாம்யேந மதுஸூதந–.-ஏதஸ்யாஹம் ந பஷ்யாமி சஞ்சலத்வாத் ஸ்திதிம் ஸ்திராம்—৷৷6.33৷৷
ஸ்திரமான ஸ்தியை நான் காண வில்லையே என்கிறான் –நீ சொல்வது நடக்குமோ -சஞ்சலம் தானே எங்கும் -எல்லா இடத்திலும் பேதங்கள் பார்க்கிறேன் –
சமம் சொல்ல ஞானம் ஆனந்தம் – பேதங்கள் நிறைய -உண்டே / அஷ்ட சாம்யம் அவனுக்கும் நமக்கும் பேதங்கள் நிறைய பேதங்கள் உண்டே

சஞ்சலம் ஹி மந கரிஷ்ண ப்ரமாதி பலவத்தரிடம்—-தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம்–৷৷6.34৷৷
மனஸ் சஞ்சலம் -மூழ்க அடிக்கும் -பலமாக திடமாக பிடித்து இழுக்கும் –பழகியது இவை -நின்றவா நில்லா நெஞ்சு
-ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகிறேன் -அடக்கி ஆழ்வது -சூறாவளி காற்றை தடுக்க முடியுமோ –
இந்திரியங்கள் பலம் -பல பாசுரங்கள் உண்டே –7–1-ஊனிலா ஐவர் -பாவ சாகரம் -ஐவர் திசை திசை வலித்து எத்துகின்றனர்-
விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செரும் ஐம் புலன்கள் இவை/

ஸ்ரீ பகவாநுவாச–
அஸம் ஷயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம் —அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச கரிஹ்யதே—৷৷6.35৷৷
நீ சொல்வது உண்மை தான் -தடக் கையனே கூப்பிட்டு -யாரையும் வெல்வாய் -இந்திரியங்கள் மனசை வெல்ல முடியாது -அடக்குவது சிரமம் தான் –
யாதானும் பற்றி நீங்கும் விரதம் கொண்டு –/ அப்பியாசம் பண்ணி பண்ணி திருத்த வேன்டும் -ஆத்மா ஏற்றம் சொல்லி –
மேலே வைராக்கியமும் வேன்டும் -தோஷங்களையும் சொல்ல வேன்டும் –
கௌந்தேய -குந்தி -துக்கங்கள் இருக்கட்டும் -கண்ணா -அப்பொழுது தான் மனஸ் உன்னிடம் இருக்கும் என்று பிரார்த்தி பெற்றாள்-
அவள் பிள்ளையாய் இருந்து அடக்க வேண்டாமோ -உனக்கு சுகமாகவே இருக்க சொல்லிக் கொடுக்கிறேன் –

அஸம் யதாத்மநா யோகோ துஷ்ப்ராப இதி மே மதி—வஷ்யாத்மநா து யததா ஷக்யோவாப்துமுபாயத—৷৷6.36৷৷
அடக்கா விட்டால் யோகம் கை வராதே -/ நெஞ்சை கட்டு படுத்தாமல் யோகம் செய்தால் -அடைய முடியாதே -நெஞ்சை வசப்படுத்தி
-கீழே சொல்லிய விதிகளின் படி பிரத்யத்னம் செய்தவன் அடைகிறான் –

அர்ஜுந உவாச
அயதி ஷ்ரத்தயோபேதோ யோகாச்சலிதமாநஸ–.அப்ராப்ய யோகஸம் ஸித்திம் காம் கதிம் கிரிஷ்ண கச்சதி—-৷৷6.37৷৷
எந்த கத்தியை அடைவான் -போகமா மோக்ஷமா நரகமா – நல்ல எண்ணத்துடன் ஆரம்பித்து -ஸ்ரத்தை உடன் – ஆனால் சாஷாத்காரம் பெறவில்லை –

கச்சிந்நோபயவிப்ரஷ்டஷ்சிந்நாப்ரமிவ நஷ்யதி—அப்ரதிஷ்டோ மஹாபாஹோ விமூடோ ப்ரஹ்மண பதி—৷৷6.38৷৷
ஸ்வர்க்கம் மோக்ஷம் போக முடியாது போலே உள்ளதே -/ பலம் ஸ்வர்க்கம் இல்லை -அப்பியாசம் நழுவ விட்டானே -அதனால் மோக்ஷம் இல்லை
–இரண்டிலும் இல்லாமல் நழுவி -ஆகாசம் மேகம் சிதறி -காற்றாலே போவது போலே -/இரண்டும் இல்லாமல் நசித்து போவானோ –

சங்கை- போக்கி அருளுவாய் -கறுத்த திருமேனி -திவ்ய மங்கள விக்ராஹம் சேவித்தால் சங்கை போகுமே -பாவியேன் காண வந்தே பாவி என்று ஓன்று சொல்லாய் –
ஐயப்பாடு அறுக்கும் அழகன் அன்றோ -உன்னை விட யாராலும் போக்க முடியாதே –
ஆரம்பித்து -நாலுபவர் கொஞ்ச நாளில் – நிறைய நாளில் -ஆரம்பிக்காத மூவரையும் -தயாராக எல்லாம் பண்ணியும் ஸ்ரத்தை உடன்

ஸ்ரீ பகவாநுவாச-
பார்த நைவேஹ நாமுத்ர விநாஷஸ்தஸ்ய வித்யதே.–நஹி கல்யாணகரித்கஷ்சத்துர்கதிம் தாத கச்சதி–৷৷6.40৷৷
பார்த்த -தாதா -பரிவுடன் சொல்கிறான் –கல்யாணத்தையே கொடுப்பேன் -அன்பு உண்டே உறவும் உண்டே -இங்கும் அங்கும் -விநாசம் இல்லை
-கல்யாண கார்யம் ஆரம்பித்தவனுக்கு துர் கதி இல்லையே –

ப்ராப்ய புண்யகரிதாம் லோகாநுஷித்வா ஷாஷ்வதீ ஸமா—ஷுசீநாம் ஷ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோபிஜாயதே–৷৷6.41৷৷
ப்ர யத்னம் பண்ணி -யோகாப்யாஸம் ஆசை உடன் ஆரம்பித்து -புண்ணியம் செய்பவர்கள் அடையும் லோகத்தில் -ஆசை வைத்து
நிறைய ஆண்டுகள் கொடுத்து -நிறைய அனுபவிக்க வைக்கிறேன் – சுவர்க்கமும் உண்டு -என்கிறான் இதில் -அதுவும் அஸ்திரம் தானே –
பயம் இல்லாமல் அனுபவிப்பான் -தாழ்ந்த இடத்தில் பிறக்க வைக்காமல் பரிசுத்த பெரியோர் வீட்டில் பிறக்க வைத்து விட்ட இடத்தில் தொடங்க -மீண்டும் யோகத்தில் சேர்த்து

அதவா யோகிநாமேவ குலே பவதி தீமதாம்.–ஏதத்தி துர்லபதரம் லோகே ஜந்ம யதீதரிஷம்—৷৷6.42৷৷
நீண்ட நாள் கழித்து நழுவினால்–மெத்த படித்த யோகிகள் வீட்டில் -குலத்தில் அவர்கள் தூண்ட சீக்கிரம் ஸித்திக்குமே-
இத்தனை நல்லது பண்ணுகிறேன் –தவ தாஸ்யம் ஸ்ரீ வைஷ்ணவ வீட்டில் புழுவாக பிறக்க வை -ஆளவந்தார் -யோகம் கை வருமே

தத்ர தம் புத்திஸம் யோகம் லபதே பௌர்வதேஹிகம்.–யததே ச ததோ பூய ஸம் ஸித்தௌ குருநந்தந—৷৷6.43৷৷
முன் தேகத்தில் யோகாப்யாஸம் பண்ணி வாசனை போகாமல் இருக்குமே -அருகில் உள்ளாரும் யோகிகள்
குரு நந்தன -குரு குலம் –யோகி தான் குரு -நீ அந்த குலத்தில் பிறந்துள்ளாய் -விடாமல் பண்ணு -நீயே திருஷ்டாந்தம் –

பூர்வாப்யாஸேந தேநைவ ஹ்ரியதே ஹ்யவஷோபி ஸ–ஜிஜ்ஞாஸுரபி யோகஸ்ய ஷப்தப்ரஹ்மாதிவர்ததே—৷৷6.44৷৷
முன் செய்ததால் -பழைய வாசனை தூண்ட -தனக்கே தெரியாமல் அதை நோக்கி சொல்லுவான் –
ஆரம்பிக்காமல் -ஆசை மட்டும் கொண்டு நழுவினாலும் -பிரகிருதி மண்டலம் தாண்டி வரும் படி ஆக்கி அருளுகிறேன்
என்று இப்படி மூன்று வகைகளும் -உண்டு –

யத்நாத்யதமாநஸ்து யோகீ ஸம் ஷுத்தகில்பிஷ–அநேகஜந்மஸம் ஸித்தஸ்ததோ யாதி பராம் கதிம்—৷৷6.45৷৷
நிறைய ஜென்மங்களில் புண்ணியம் சேர்த்து -இந்திரியங்களை அடக்கி யோகத்தில் வந்து -பாபங்கள் நீங்கப் பெற்று -சாஷாத்காரம் பெறுகிறான் –

தபஸ்விப்யோதிகோ யோகீ ஜ்ஞாநிப்யோபி மதோதிக–கர்மிப்யஷ்சாதிகோ யோகீ தஸ்மாத்யோகீ பவார்ஜுந–৷৷6.46৷৷
அர்ஜுனா நீ யோகியாக ஆவாய் -சம தர்சனம் –தபசுவீ -கேவல தபசுவீ -விட உயர்ந்தவன் -வெறும் அசித் தத்வ ஞானி
-செருப்பு குத்த தான் லாயக்கு /கேவல ஞானி விட உயர்ந்தவன் /காம்ய கேவல கர்மா பண்ணுவனை விட உயர்ந்தவன் ஆவாய்
-இத்துடன் ஆத்ம யோகி பற்றி சொல்லி முடித்து -மேலே தன்னை பற்றி

யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மநா—ஷ்ரத்தாவாந்பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத—৷৷6.47৷৷
இந்த சமத்துவம் அறிந்த யோகி -விட பக்தி யோக நிஷ்டன் -நெஞ்சை என்னிடமே செலுத்தி ஸ்ரத்தை உடன் என்னை குறித்து செய்பவனே சிறந்த பக்தி யோகி
-இது தான் என்னுடைய மதம் -அடுத்த அத்யாயத்துக்கு பீடிகை -என்னை பஜனம் பண்ணுகிறவன்
என்னை -மாம் -விசித்திர அனந்த போக வர்க்க –பரி பூர்ண –அனவதிக –ஸ்வ அபிமத -அனந்த கல்யாண குண நிதிம் –
ஆஸ்ரித வாத்சல்ய ஜலத்திம்–வாசுதேவன் திரு குமரன் –நீண்ட வியாக்யானம் –

———————————-

கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் — -5—-கர்ம சந்யாச யோகம் —

June 4, 2017

ஜ்ஞான கர்மாத்மிகே நிஷ்டே யோக லஷ்யே ஸூ ஸம்ஸ்க்ருதே
ஆத்மாநுபூதி சித்த்யர்த்தே பூர்வ ஷட்கே ந சோதிதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –2-

ஜீவாத்ம சாஷாத்காரம் -யோகத்தை அடையும் விதத்தையும் -ஆத்ம அனுபவத்தை அடையும் விதத்தையும்-பகவத் விஷய ஞானம்
-இதர விஷய வைராக்யம் -இவற்றால் அலங்கரிக்கப் பட்ட ஞான கர்ம யோகங்கள் முதல் ஆறு அத்தியாயங்களில் அருளிச் செய்யப் பட்டன

கர்த்ருத்வ புத்தியை விடுதல் சன்யாசம் –என்னுடையது அல்ல -பலன் எனக்கு இல்லை -அகர்த்ருத்வ அனுசந்தானம் வேண்டுமே –

கர்ம யோகச்ய சௌகர்யம் சைக்ர்யம் காஸ்சன தத்விதா
பிராமஜ்ஞான பிரகாரச்ச பஞ்சமத்யாய உச்யதே -ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -9-

1–கர்ம யோகச்ய சௌகர்யம்-எளிதாக பண்ணலாமே -ஸூகரம் -மூன்றாவது அத்தியாயத்தில் சொன்னதை மீண்டும் –
2–சைக்ர்யம் காஸ்சன தத்விதா -சீக்கிரமாக பலத்தைக் கொடுக்கும் -இரண்டாவது ஏற்றம் –ஞான யோகம் குறைபாடு
-விட்ட இடத்தில் ஞான யோகம் தொடர முடியாதே -கர்ம யோகம் அப்படி இல்லையே –
3–தத்விதா -அங்கங்கள் விதிக்கிறான்
-4-பிராமஜ்ஞான பிரகாரச்ச –தன்னைப் போலே பிறரை நினைக்க-சம தர்சனம் -அனைத்தும் ப்ரஹ்மாத்மகம் -ஒரே ஜாதி -சேஷபூதன்-ஒன்றே –

————————————-

அர்ஜுந உவாச
ஸம் ந்யாஸம் கர்மணாம் கரிஷ்ண புநர்யோகம் ச ஷம் ஸஸி–யச்ச்ரேய ஏதயோரேகம் தந்மே ப்ரூஹி ஸுநிஷ்சதம்–৷৷5.1৷৷
கர்ம சன்யாசம் -ஞான யோகம் -கர்மம் அனுஷ்டானம் வேண்டாமே -/ ஞான யோகமும் பேசி கர்ம யோகத்தில் ஞான பாகமும் பேசி
பூமிக்கு ஆனந்தம் கொடுப்பவனாய் இருந்து என்னை குழப்புகிறாய் /இரண்டுக்கும் எனக்கு எதை ச்ரேயஸை கொடுக்குமோ அத்தை அருளுவாய் –
நிச்சயப்படுத்தி –கர்ம சன்யாசம் ஞான யோகமா -கர்ம யோகமா -சாத்தியம் கைப் பட்டால் சாதனம் மறப்பது தானே இயல்பு -ஏணியை எட்டி உதைப்போமே –
கர்ம யோகம் சாதனம் -ஞான யோகம் சாத்தியம் என்றால் -இதை தொடர வேண்டுமோ -/ கர்ம யோகமே நேராக சாஷாத்காரம் கொடுக்கும் என்றானே முன்னமே –
அத்தை திடப் படுத்தி -கர்ம யோகத்தின் ஏற்றம் சொல்லி ஞான யோகம் பண்ணும் சிரமங்களையும் அருளிச் செய்கிறான் –
சக்தி உள்ளவர் -லோக சங்க்ரஹம் இல்லாதவர் மட்டுமே ஞான யோகத்துக்கு அதிகாரிகள் –

ஸ்ரீ பகவாநுவாச
ஸந்யாஸ கர்மயோகஷ்ச நிஷ்ரேயஸகராவுபௌ—-தயோஸ்து கர்மஸம் ந்யாஸாத்கர்மயோகோ விஷிஷ்யதே—৷৷5.2৷৷
இரண்டும் ஆத்ம சாஷாத்காரம் கொடுக்கும் -சன்யாசம் என்றது ஞான யோகம் / யோகம் -கர்ம யோகம் -/இரண்டுக்குள்ளும் கர்ம யோகம் சிறப்புடையது
பழகியது -இதுவே -/ ஞான யோகம் தேவை இல்லை / இதுவே நேராக சாஷாத்காரம் கொடுக்கும் / ஞான யோகியும் கர்ம யோகம் விட முடியாதே
-மேலும் எனக்கு பிடித்தது -ஆகையால் செய்வாய் -/
ஆயர் பிள்ளைகள் -கோவர்தனம் -கண்ணன் சொல்வதை கேட்டு செய்தார்களே -நீ சொல்வதை செய்வேன் சொல்ல வைக்க -700-ஸ்லோகங்கள் வேண்டி இருந்ததே –

ஜ்ஞேய ஸ நித்யஸம் ந்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி—–நிர்த்வந்த்வோ ஹி மஹாபாஹோ ஸுகம் பந்தாத்ப்ரமுச்யதே—৷৷5.3৷৷
சந்நியாசி -கர்ம யோகியை இங்கே குறிக்கும் -அந்த சந்நியாசி -மிக உயர்ந்தவன் -கர்த்ருத்வ ஸந்யாஸத்தை -இதுவே இந்த அத்யாயம் -/
அகர்த்ருத்வ புத்தி -நான் செய்ய வில்லை -என்னுடையது இல்லை -பலனும் எனக்கு இல்லை -/ பற்று அற்ற நிலை -ஆசை சங்கம் இல்லாதவன் –
இந்திரியங்களை பட்டி மேய விடாமல் -/ துவேஷமும் இருக்காதே ஆசை விட்ட படியால் / த்வந்தம் சுக துக்கம் அற்று -/
செய்கின்ற கிரியை எல்லாம் நானே என்னும் -செய்கை பயன் உண்பேனும் நானே என்னும் -செய்வாரை செய்விப்பேனும் யானே என்னும் /

சாங்க்ய யோகௌ பரிதக்பாலா ப்ரவதந்தி ந பண்டிதா—-ஏகமப்யாஸ்தித ஸம்யகுபயோர்விந்ததே பலம்—৷৷5.4৷৷
சாங்க்யம் ஞான யோகம் / யோகம் -கர்ம யோகம் -/ வேறு வேறு பலன் கொடுக்கும் என்பர் அஞ்ஞர்-இரண்டுக்கும் ஒன்றை பற்றி
-இரண்டாலும் பெரும் பலனை பெறலாம் -/சமமாக இரண்டையும் அருளிச் செய்கிறான் இதில் /

யத் சாங்க்யை ப்ராப்யதே ஸ்தாநம் தத்யோகைரபி கம்யதே—.ஏகம் ஸாம் க்யம் ச யோகம் ச ய பஷ்யதி ஸ பஷ்யதி—-৷৷5.5৷৷
சாங்க்யை –கர்ம யோகத்தால் அடையலாம் -அபி சப்தம் -/நீ நினைக்கும் ஞான யோக பலன் கர்ம யோகத்தால் கிட்டும் – ஒன்றாக நினைப்பவன்
தான் உண்மையை அறிந்தவன் ஆகிறான் -ஒரே பலனை கொடுக்கும் என்று அறிந்தவன் -வேறு வேறு சாதனங்களாக இருந்தாலும் –

ஸந்யாஸஸ்து மஹாபாஹோ துகமாப்துமயோகத—–யோகயுக்தோ முநிர்ப்ரஹ்ம நசிரேணாதிகச்சதி—-৷৷5.6৷৷
தடக்கையன் -கர்ம சன்யாசம் புரிந்து சன்யாசம் பற்று அற்ற தன்மை விட பாராய் -ஞான யோகம் கர்ம யோகம் இல்லாமல் பலன் தராதே —
கர்ம யோகம் -முனி -மனன சீலன் -ஆத்ம சாஷாத் காரம் பற்றி நினைவு உடன் செய்பவன் -குறைவான காலத்தில்
ஆத்ம சாஷாத்காரம் அடைகிறான் /சுலபமாக அடைகிறான் –

யோகயுக்தோ விஷுத்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்த்ரிய—-ஸர்வபூதாத்மபூதாத்மா குர்வந்நபி ந லிப்யதே—৷৷5.7৷৷
சரீராத்மா அபிமானம் இவற்றால் தீண்டப்படுவது இல்லை -/ஆத்மாவில் அழுக்கு -கர்ம வாசனை இருக்காதே –த்ரிவித தியாகமே -இத்தை போக்க -/
அழுக்கு போவது சாஸ்திரம் படி நடக்கிறோம் என்ற ஹர்ஷத்தாலே – இதுவே இந்திரிய ஜெயம் கொடுக்கும் -/
எல்லாம் ப்ரஹ்மாத்மகம் என்று உணருகிறான் -சம தர்சனம் -கர்மம் அனுஷ்டித்துக் கொண்டே இருந்தாலும் தேஹாத்ம அபிமானம் தீண்டாதே /
தர்ம சாஸ்திரம் சொன்ன படி வாழ்கிறோம் என்ற எண்ணம் -உடன் செய்கிறான் -கர்த்தாவாக இருந்தாலும் கர்த்ருத்வ புத்தி இல்லையே

நைவ கிம் சித்கரோமீதி யுக்தோ மந்யேத தத்த்வவித்.—பஷ்யந் ஷ்ரரிணவந்ஸ்பரிஷஞ்ஜிக்ரந்நஷ்நந்கச்சந்ஸ்வபந் ஷ்வஸந்—-৷৷5.8৷৷

ப்ரலபந்விஸரிஜந்கரிஹ்ணந்நுந்மிஷந்நிமிஷந்நபி—.இந்த்ரியாணீந்த்ரியார்தேஷு வர்தந்த இதி தாரயந்—৷৷5.9৷৷
ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி ய—லிப்யதே ந ஸ பாபேந பத்மபத்ரமிவாம்பஸா—-৷৷5.10৷৷
உண்மை அறிந்தவன் -ஒன்றுமே நான் செய்வது இல்லை -என்றுமே -/ பார்க்கிறான் கேட்க்கிறான் தொடுகிறான் முகருகிறான் -மூச்சு விடுகிறான் தூங்குகிறான்
கண்ணை திறக்கிறான் -மூடு கிறான் -இந்திரியங்களின் கார்யம் -பெருமாள் தூண்ட செய்தன -என்னால் செய்யப் பட வில்லை —
முக்குணங்கள் அவன் தூண்டுதல் -என்ற எண்ணம் உண்டே இவனுக்கு -நமக்கு அன்வயம் இல்லை –
இந்திரியங்களின் மேல் -/ கபிலர் நொண்டி குருடன் -சேர்ந்து கார்யம் -நிரீஸ்வர சாங்க்ய மதம் -ஆத்மா சரீரம் -கர்த்ருத்வம் ஞாத்ருத்வம் மட்டும்
உள்ளவை போதுமே -ஆத்மா வழிகாட்ட சரீரம் கார்யம் என்பான் -/
நொண்டிக்கும் ஞாத்ருத்வம் வேணுமே -நடக்கும் வழீ கேட்டு நடக்க -/ மேல் உள்ளவனுக்கு கர்த்ருத்வம் வேண்டுமே தப்பாக போனால் தோளை தட்டி சரி பண்ண –
கர்த்தா சாஸ்த்ராத்வத் -ஸ்வ தந்த்ர கர்த்தா இல்லை -/பற்றுதலை விட்டு பலத்தில் ஆசை இல்லாமல் -தாமரை இலை தண்ணீர் போலே
-சம்சாரத்தில் வாழ்ந்தாலும் ஒட்டாமல் -இருக்கிறான் என்றபடி -பாபங்கள் தீண்டாது

காயேந மநஸா புத்த்யா கேவலைரிந்த்ரியைரபி.–யோகிந கர்ம குர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்மஷுத்தயே—৷৷5.11৷৷
ஆத்ம சுத்தி அடைய -கர்ம யோகம் -அநாதி கர்ம வாசனை தொலைய -/ஞானத்தின் வேறு வேறு நிலை -கர்மம் அடியாக ஞான விகாசம் சுருக்கம் -ஜன்மா -/
மணிவரம் -ரத்னம் சேற்றில் விழுந்தால் -கௌஸ்துபம் -அஞ்ஞானம் -மறைக்கப் பற்று -/
சங்கம் த்யக்த்வா — ஸ்வர்க்கம் போன்ற தாழ்ந்த பலன்களில் பற்று அற்று -கர்ம யோகம் செய்து / இந்திரியங்கள் புத்தி மனஸ் சரீரம் -என்னுடையது
என்ற எண்ணம் இல்லாமல் -கேவல சப்தம் அனைத்துக்கும் -சேர்த்து -அபிமானம் இல்லாமல் பண்ணி -ஆத்ம சுத்தி பெற்று -மமகாராம் அஹங்காரம் இல்லாமல்
-கர்ம பலன்கள் தீண்டாமல் -பாப புண்யங்கள் அற்று -சரீர விமுக்தனாக நினைக்க நினைக்க -இவற்றால் பாதிப்பு வராதே –

யுக்த கர்மபலம் த்யக்த்வா ஷாந்திமாப்நோதி நைஷ்டிகீம்—-அயுக்த காமகாரேண பலே ஸக்தோ நிபத்யதே—৷৷5.12৷৷
ஒரே இந்திரியங்கள் சிலருக்கு நல்லதாகவும் சிலருக்கு கேட்டதாகவும் இருக்குமோ -பட்டர் திரு மேனி அலங்காரம் -அவன் உள்ளே எழுந்து இருக்கும்
திருக் கோயில் என்ற எண்ணம் -/ ஒரே சரீரம் நினைவால் ஆகாரம் மாறிற்றே -/அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் -அம்மாவை நன்கு அறிந்தனன்–
ஆசை இல்லாமல் -பற்றுதல் இல்லா -மனசே -பந்த மோக்ஷ காரணம் –தொழுது எழு என் மனனே -முன்புற்ற நெஞ்சே -நல்லை நல்லை நெஞ்சே உன் பெற்றால் என் செய்யோம் /
யோக யுக்தன் -நெஞ்சை பழக்கி -பண்படுத்தி -/ இந்திரியங்கள் மனஸ் உதவும் -/ அவை போன வழியில் போகாமல் -அவற்றை அடக்கி -/
ஓ மண் அளந்த தாளாளா–அளந்த திருவடிகளை காட்ட தான் பிரார்த்திக்கிறேன் -/
நாங்கள் கொள்வான் அன்று -ஓன்று நூறாயிரமாக கொடுத்து பின்னும் ஆளும் செய்வோம் -/
ஸ்வயம் பிரயோஜனம் -திரு நாம சங்கீர்த்தனம் -திரு விளக்கு ஏற்றுதல் -கைங்கர்யம் /அல்ப பலன்கள் கேட்டு சம்சாரத்தில் ஆள்கிறார்கள் /

ஸர்வகர்மாணி மநஸா ஸம் ந்யஸ்யாஸ்தே ஸுகம் வஷீ.—-நவத்வாரே புரே தேஹீ நைவ குர்வந்ந காரயந்—-৷৷5.13৷৷
ஆத்மா பண்ணவும் பண்ணி வைக்கவும் இல்லாமல் -வசீ -எல்லாம் மனசால் துரந்து -விவேக ஞானம் பெற்று -/நிஷ்க்ருஷ்ட ஆத்ம ஸ்வரூபம் அறிந்து
-சுகம் பெறுகிறான் /உறவுகள் சரீர சம்பந்தத்தால் தானே –ஒன்பது த்வாரங்கள் உள்ள பட்டணம் –சரீரம் -/கொப்பூழ் தலை பகுதி சேர்த்து -11-என்பர் குழந்தைக்கு /
திறந்த கூண்டு -வரும் கஷ்டங்கள் -அவயவங்கள் உடன் கூடிய சரீர கஷ்டம் -ஆத்மா அப்படி இல்லையே /ஆத்மாவில் மனசை செலுத்தி -/
மனஸ் இந்திரியங்கள் முற்றுகை -சரீரத்தை தானே ஆத்மாவை முடியாதே -கர்ம பாரதந்தர்யம் -சரீரம் ஆத்மா இல்லையே –
பெரியதாய் பராமரிப்பது கஷ்டம் –பல வித வைத்தியர்கள் வேன்டும் -நிறைய தடவை போக வேன்டும் -ஆத்மா அணு-கௌஸ்துபம் -ரத்னம் போலே –
ஒரே வியாதி -சம்சாரம் -ஒரே வைத்தியர் வைத்தியோ நாராயணோ ஹரி -ஒரே மருந்து சரணாகதி -ஒரே தடவை ஸக்ருத் போதுமே /
ஊன் இடை சுவர் வைத்து என்பு தோல் உரோமம் கூரை வேய்ந்து –ஒன்பது வாசல் –தானுடை குரம்பை -கலியன் -நைமிசாரண்யம் -சரணாகதி

ந கர்தரித்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸரிஜதி ப்ரபு–.ந கர்மபலஸம் யோகம் ஸ்வபாவஸ்து ப்ரவர்ததே—-৷৷5.14৷৷
இயற்கையில் அகர்த்ருத்வம் –பிரகிருதி சம்பந்தத்தால் -பிரபு -ஜீவாத்மா –கர்மாவும் இல்லை கர்த்ருத்வமும் இல்லை
-லோகஸ்ய -லோகத்தில் உள்ள ஜனங்கள் -ஆகு பெயர் -/ஸ்வபாவஸ்து-பிரகிருதி – இதுவே பூர்வ வாசனை –

நாதத்தே கஸ்யசித்பாபம் ந சைவ ஸுகரிதம் விபு—அஜ்ஞாநேநாவரிதம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவ—৷৷5.15৷৷
ரொம்ப வேண்டியவர்கள் இடம் -பாபத்தை நீக்க முடியாதே -/ வேண்டாதவர் புண்ணியம் நீக்கவும் முடியாதே /விபு -ஆத்மாவின் தர்ம பூத ஞானத்தை சொன்ன படி
பல ஜென்மங்களில் வேறு வேறு சரீரங்களில் புகுகுவதால் விபு / அஞ்ஞானம் பூர்வ ஜன்மா பாப வாசனை –
தேஹாத்ம பிரமம் -ஆத்ம பந்துவை பார்க்காமல் -/தேக பந்துவை நினைத்து /

ஜ்ஞாநேந து ததஜ்ஞாநம் யேஷாம் நாஷிதமாத்மந–தேஷாமாதித்யவஜ்ஜ்ஞாநம் ப்ரகாஷயதி தத்பரம்—৷৷5.16৷৷
விலக்க உபாயம் -அநாதி பாப கர்ம வாசனை -ஆத்மா யாதாம்யா ஞானம் கொண்டே -வளர்த்து -அப்பியாசம் முக்கியம் -/
ஆதித்யன் ஒளியால் பொருள்கள் விளங்குவது போலே -/மேகம்மூட்டம் போலே அஞ்ஞானம் –

தத்புத்தயஸ்ததாத்மாநஸ்தந்நிஷ்டாஸ்தத்பராயணா—-கச்சந்த்யபுநராவரித்திம் ஜ்ஞாநநிர்தூதகல்மஷா—৷৷5.17৷৷
படிக்கட்டுகள் -ஞானம் கத்தியால் வெட்டிக் களையப் பட்ட பாப -கர்ம -வாசனை–ஆத்ம விஷயத்தில் -உறுதி முதலில் -கேட்க கேட்க –
-உபதேசம் அனுஷ்டானம் இவற்றால் -பெற்று -அதன் பின்னே நெஞ்சு அதில் சென்று -அடுத்து –பயிற்சி -அப்பியாசம் –பரம பிரயோஜனம் அடைவாய்
-பாராயணம் ஆத்ம சாஷாத்காரம் -மீளாத பரம ப்ராப்யம் –
கூரத் தாழ்வான் -முதலி யாண்டான் -விட்டே பற்றவை -பற்றி விடவா -மால் பால் மனம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட -என்றவாறு –

வித்யாவிநய ஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி—ஷுநி சைவ ஷ்வபாகே ச பண்டிதா ஸமதர்ஷிந—-৷৷5.18৷৷
சம தர்சனம் முக்கியம் -ப்ரஹ்ம ஞானம் -சேஷ பூதர்-அனைவரும் –வித்யையும் விநயமும் உள்ள -இல்லாத ப்ராஹ்மணர்களுக்குள் வாசி /
கோ ஹஸ்தி பசுவோ யானையோ / நாயை அடித்து உண்ணும் வேடனுக்கு நாயுக்கும் வாசி பார்க்காமல் /சம தரிசனமே ஆத்ம சாஷாத்காரம் –
இவை எல்லாம் சரீரத்தால் தானே -ஆத்மா இயற்கையாகவே ஞானி -ஏக ஆகாரம் தானே /
புல்லாங்குகள் ஒரே காத்து -சப்த ஸ்வரம் -/ பசுமாடு பல வர்ணங்கள் பால் வெண்மை தானே /

இஹைவ தைர்ஜித ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மந–நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம தஸ்மாத்ப்ரஹ்மணி தே ஸ்திதா—৷৷5.19৷৷
தோஷம் விலக்கப்பட்ட ஆத்ம -பிரகிருதி சம்பந்தம் இல்லாமல் -கர்ம யோகி -இங்கேயே சம்சாரம் -சாதனா தசையில் சம்சாரம் கழிக்கப் பெற்ற பெருமை அடைகிறான் –
ப்ரஹ்மம் சாம்யம் பெறுகிறான் -பாப புண்ய ரூப கர்மங்கள் வில்லை -சமமாக அனைத்தையும் பார்க்கிறான்
மேலே ஆறு நிலைகள் சம தரிசனத்துக்கு -படிப் படியாக உயர்த்திக் கொண்டு அருளிச் செய்கிறான்

ந ப்ரஹரிஷ்யேத்ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத்ப்ராப்ய சாப்ரியம்.—ஸ்திரபுத்திரஸம்மூடோ ப்ரஹ்மவித்ப்ரஹ்மணி ஸ்தித—৷৷5.20৷৷
ப்ரஹ்மவித் -ஆத்மாவை அறிந்தவன் -பிரியமானது பெற்று ஹர்ஷமோ -அப்ரியமானது பெற்று பயப்படாமல் -ஸ்திர புத்தி கொண்டு
தேஹாத்ம அபிமானம் இல்லாமல் -அமூடராக -ஆத்மாவை அறிந்து -நிலை நிற்கிறான் –
அப்ரியம் கண்டு துக்கப் படாதே சொல்ல வில்லை -பயப்படாதே என்கிறான் -வருவதற்கு முன்பு உள்ள நிலை தானே -இது முதல் நிலை –

பாஹ்யஸ்பர்ஷேஷ்வஸக்தாத்மா விந்தத்யாத்மநி யத்ஸுகம்.—ஸ ப்ரஹ்மயோகயுக்தாத்மா ஸுகமக்ஷயமஷ்நுதே—-৷৷5.21৷৷
அடுத்த நிலை -ஸ்திர புத்தி ஏற்பட்ட -முதல் நிலை வந்த பின்பு -ஆத்மா இங்கு நெஞ்சு -பாஹ்ய விஷயம் தீண்டினாலும் மனஸ் செல்லாமல்
ஆத்மா இடமே சோகத்தை பார்த்து -சுத்த ஆத்ம ஸ்வரூபத்தில் நெஞ்சை செலுத்தி -ஆனந்தம் படுகிறான் –

யே ஹி ஸம் ஸ்பர்ஷஜா போகா துகயோநய ஏவ தே.—ஆத்யந்தவந்த கௌந்தேய ந தேஷு ரமதே புத—–৷৷5.22৷৷
மூன்றாவது நிலை -விஷயங்கள் தீண்டி -இந்திரியங்கள் விஷய சம்பந்தம் பெற்று –சுகமே துக்கத்துக்கு காரணம் என்று அறிந்து —
அல்பம் அஸ்திரம் -முதலிலே படாமலே இருக்கலாம் ஆத்ம சுகமே ஆதி யந்தம் இல்லாதது -என்று அறிந்து -சம்சாரம் தோஷம் காட்டியே மனசை திருப்பி –
வஸ்து சம்பாதிக்கும் கஷ்டம் -ஆர்ஜன தோஷம் /ரக்ஷணம் -எலிகள் திருடன் ராஜா -நெல்லை காப்பது கஷ்டமே /
க்ஷய தோஷம் /போக தோஷம் அனுபவிக்கும் பொழுது / ஹிம்ஸா தோஷம் /-அனுபவிக்கும் பொழுது இவை கண்ணில் பட்டு -சுகப்படாமல் –
பட்டு -காணும் பொழுது எத்தனை பட்டு பூச்சி -/ மாலை சாத்தும் பொழுது -இதை பூ பறித்து கட்டி செய்த கஷ்டங்களை அனுசந்தித்து –

ஷக்நோதீஹைவ ய ஸோடும் ப்ராக்ஷரீரவிமோக்ஷணாத்.—காமக்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த ஸ ஸுகீ நர—-৷৷5.23৷৷
நான்காவது நிலை –சரீரம் போவதற்கு சற்று முன்பு -தடுக்க யாரால் முடியுமோ -காமம் க்ரோதங்களால் ஏற்படும் -வேதம் -நிதானம் இழந்து
-கரண த்ரயங்களால் –அவனே அதிகாரி -ஆவான்

யோந்த ஸுகோந்தராராமஸ்ததாந்தர்ஜ்யோதிரேவ ய–.ஸ யோகீ ப்ரஹ்மநிர்வாணம் ப்ரஹ்மபூதோதிகச்சதி–৷৷5.24৷৷
ஐந்தாவது நிலை –உண்ணும் சோறு -இத்யாதி -ஆத்மாவை பற்றியே -சுகம் அடைந்து -ஆத்மாவையே போக ஸ்தானம் போக உபகரணம் -சுத்த ஆத்ம ஸ்வரூபம் உணர்ந்து

லபந்தே ப்ரஹ்மநிர்வாணமரிஷய க்ஷீணகல்மஷா—சிந்நத்வைதா யதாத்மாந ஸர்வபூதஹிதே ரதா—-৷৷5.25৷৷
ஆறாவது நிலை – எல்லா ஜீவ ராசிகள் -அடியார்கள் வாழ –கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ -/ இரட்டை கடந்து –
ஆத்மாவில் நிலை நின்று -பாபங்கள் வாசனை தொலைந்து சாயுஜ்யம் பெறுவார்
ரிஷிகள் போலே மந்த்ர த்ரஷ்டர்-ஆவார்கள் -கஷ்டப்பட்டு தவம் இத்யாதியால் பெற்றதை கர்ம யோகி பெறுவான் – –

காமக்ரோதவியுக்தாநாம் யதீநாம் யதசேதஸாம்—.அபிதோ ப்ரஹ்மநிர்வாணம் வர்ததே விதிதாத்மநாம்—৷৷5.26৷৷
இந்திரியங்களை வென்று –நமக்கு நெருக்கமான -அக்கரை அநர்த்தக்கடல் -இக்கரை அடையலாம் -/
பிராகிருத விஷயங்களில் வைராக்யம் -கொண்டு /கை இலங்கு நெல்லிக் கனி யாகும்

ஸ்பர்ஷாந்கரித்வா பஹிர்பாஹ்யாம் ஷ்சக்ஷுஷ்சைவாந்தரே ப்ருவோ–.ப்ராணாபாநௌ ஸமௌ கரித்வா நாஸாப்யந்தரசாரிணௌ—৷৷5.27৷৷
யதேந்த்ரியமநோபுத்திர்முநிர்மோக்ஷபராயண–விகதேச்சாபயக்ரோதோ ய ஸதா முக்த ஏவ ஸ—৷৷5.28৷৷
வெளி விஷயங்கள் தீண்டினால் அகற்று -புருவம் நடுவில் பார்த்து -இரண்டு கண்களாலும் ஒன்றையே பார்த்து -பிராண வாயு ஆபரண வாயு கதிகளை சமன்வயப்படுத்தி –
அடக்கப்பட்ட இந்திரியங்கள் மனஸ் புத்தி -முனியாகி -ஆத்ம சாஷாத்காரத்தில் ஆசை வைத்து -இச்சை பயம் க்ரோதம் மூன்றும் இல்லாமல்
எப்பொழுதும் முக்தனாக இருக்கிறான்

போக்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஷ்வரம்—-ஸுஹரிதம் ஸர்வபூதாநாம் ஜ்ஞாத்வா மாம் ஷாந்திமரிச்சதி—৷৷5.29৷৷
தன்னை பற்றி இங்கே அருளிச் செய்து -கர்மங்களால் ஆராதிக்கப்படுபவன் தானே -ஸூ லாபமான கர்மம் -என்னை நோக்கி பண்ணுவதால் -அழகான வாதம்
-திருமேனி அழகை நினைந்தே -சர்வரும் நன்றாக இருக்க வேன்டும்- காருண்யம் உதாரன் மகேஸ்வரன் மூன்றையும் அறிந்து –

——————————————————–

கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் – -4—-ஞான யோகம்-(கர்ம யோகத்துக்குள் உள்ள ஞான பாகம் – )

June 4, 2017

பிரசங்காத் ஸ்வ ஸ்வ பாவோக்தி-கர்மணோ அகரமா /அஸ்ய ச -பேதா-/- ஜ்ஞாநஸய மஹாத்ம்யம்–/சதுர்த்தாத்யாய உச்யதே– ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -8–
அவதார ரஹஸ்யம் (-4-11-)/ கர்ம யோகத்துக்குள் ஞான யோகம் (4-24)/
அஸ்ய ச -பேதா-13-வித கர்ம யோகங்கள் அருளிச் செய்கிறான் -பேதங்கள் -4-30-/ஜ்ஞாநஸய மஹாத்ம்யம்-

-1-அவதார சத்வத்வம் –2-அஜகத் ஸ்வஸ் ஸ்வபாவத்வம் —3-சுத்த சத்வ மயத்வஞ்ச -4–ஸூ இச்சா மாத்ரா நிதானதா
-5-தர்ம கிலானோ சமுதயா -6–சாது சம்ரக்ஷணர்த்ததா —

——————————————

ஸ்ரீ பகவாநுவாச-
இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவாநஹமவ்யயம்.-விவஸ்வாந் மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவேப்ரவீத்—৷৷4.1৷৷
ஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது–ஸ காலேநேஹ மஹதா யோகோ நஷ்ட பரந்தப—৷৷4.2৷৷
இந்த அழிவற்ற கர்ம யோகத்தை -நான் விவஸ்வனுக்கு உபதேசித்தேன் —28-சதுர் யுகங்களுக்கு முன்பு /-அவன் மனுவுக்கு -மனு இஷுவாக்குக்கும் உபதேசம்
பரம்பரையாக வந்துள்ளது –அஸ்வபதி அம்பரீஷர் ராஜ ரிஷிகள் பின் பற்றி வந்தனர் பல காலங்கள் ஆனதாலும்-த்ரேதா யுகம் –ராமன் -35-ராஜா -கலியுகத்தில் கண்ணன்
புத்தி குறைவாலும் இந்த கர்ம யோகம் அழியும் நிலையில் இப்பொழுது உள்ளது –
நஷ்ட -நலிந்து -என்றவாறு -இன்றும் -பீஷ்மர் துரோணர் உண்டே -தெரிந்தும் சரியாக பண்ண வில்லையே –

ஸ ஏவாயம் மயா தேத்ய யோக ப்ரோக்த புராதந-.பக்தோஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேததுத்தமம்—৷৷4.3৷৷
அதே கர்ம யோத்தை மாற்றாமல் இன்று -உன் பொருட்டு -சர்வஞ்ஞன் சர்வசக்தனான நான் –
உன்னுடைய நட்ப்புக்காகவும்–சஹன் -பக்தன் – பக்திக்காகவும் இந்த பழைய யோகத்தை அங்கங்கள் உடன் உபதேசிக்கிறேன்
சிஷ்ய லக்ஷணமும் இத்தால் சொல்லப் பட்டதே -வேதாந்தத்தில் உள்ள ரஹஸ்யமான இந்த பக்தி யோகம் என்னால் அல்லது யாராலும் உபதேசிக்க முடியாதே –

அர்ஜுந உவாச
அபரம் பவதோ ஜந்ம பரம் ஜந்ம விவஸ்வத-கதமேதத்விஜாநீயாம் த்வமாதௌ ப்ரோக்தவாநிதி—৷৷4.4৷৷
உன்னுடைய பிறவி காலத்தால் பின்பட்டது -அவன் காலத்தால் முன்பட்டவன் -அபரம் -தாழ்ந்த ஜாதி தேவ ஜாதிக்கு உபதேசமோ -சொல்ல வில்லை
தர்ம வியாதன் இடம் உபதேசம் – கொடுமின் கொள்மின் -/அர்ஜுனன் அறிவான் இவனே திவ்ய பரம புருஷன் -பீஷ்மர்-சகாதேவன் -சொல்லிய வார்த்தைகள்
தர்மர் ராஜசூய யாகம் செய்யும் பொழுது -அவன் அவதாரம்-உண்மை என்றும் அறிவான் -கம்ச வதம் -முக்கிய காரணம் என்று –சாஸ்திரம் அறிபவன்
முன் பிறவி ஞானம் நம்புபவன் -ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் என்று அறிபவன் –அவதார ரஹஸ்யங்கள் அவன் அருளிச் செய்ய கேட்க்கும் ஆசையால்
கேட்க்கிறான்-/அன்று உபதேசித்த திருமேனி எது -கர்மா தொலைக்க நாம் பிறக்கிறோம் உன் அவதார காரணங்கள் என்ன -சங்கைகளை மறைத்து கேட்க்கிறான் —

ஸ்ரீ பகவாநுவாச-
பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந.–தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப—৷৷4.5৷৷
நான்கு ஸ்லோகங்கள்-ஆறு ரஹஸ்யங்கள் -/அவதாரஸ்ய சத்யத்வம் –என்கிறான் இதில் –மேலே மூன்று ஓன்று ஓன்று ஆக ஆறும் அருளிச் செய்வான் –
உன்னை போலே பல பிறவிகள் எனக்கும் கழிந்தன – -த்ருஷ்டாந்தம் அறிந்த ஒன்றை காட்டியே தானே சொல்ல வேன்டும் -பிரசித்தம் -ஸ்தூலா நிந்ததி நியாயம் —
நஸ சீதாத் –ந அஹம் அபி ராகவா -அக்குளத்தில் மீன் -என்றான் –
பத்து என்பது மனசில் பிடிக்க அஜாயமானோ பஹுதா விஜாயத-/எனக்கு உன் பிறவி என் அவதாரங்கள் எல்லாம் தெரியும் -எல்லாம் மெய்யே
–உனக்கு பிறப்பு-எனக்கு அவதாரம் -ஆவிர்பூதம் –பிறந்தவாறும் -ஒருத்தி மகனாய் பிறந்து -எளிமையை அனுபவிக்க ஆழ்வார்கள் –

அஜோபிஸந்ந அவ்யயாத்மா பூதாநாம் ஈஷ்வரோபிஸந்.—ப்ரகரிதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா—৷৷4.6৷৷
முதல் ஸ்லோகத்தில் ஓன்று – மூன்று ரஹஸ்யங்கள் இதில் -அடுத்த இரண்டிலும் இரண்டு -அஜகத் ஸ்வஸ் ஸ்வபாவதா –ஒன்றும் குறையாமல் அவதாரம்
-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் கல்யாண ஏக குணாத்மகம் –திவ்ய மங்கள விக்ரஹம் -இத்யாதி –
-ப்ரகரிதிம்-ஸ்வபாவம் -மாறாமல் -நீல தோயத மத்யஸ்தாம் –
வேதாஹமேதம் புருஷம் மஹாந்தமாதித்யவர்ணம் தமஸ பரஸ்தாத்.
தமேவ விதித்வாதிமரித்யுமேதி நாந்ய பந்தா வித்யதேயநாய৷—–ஸ்வேதாஸ்வத்ர உபநிஷத் – 3.1.8৷৷
ஸ ஹோவாச மஹாத்மநஷ்சதுரோ தேவ ஏக க ஸ ஜகார புவநஸ்ய கோபாஸ்தம் காபேய நாபிபஷ்யந்தி மர்த்யா அபிப்ரதாரிந்பஹுதா வஸந்தம்
யஸ்மை வா ஏததந்நம் தஸ்மா ஏதந்ந தத்தமிதி ৷৷–ப்ரஹதாரண்யகம் 4.3.6 ৷৷
மீனில் உடம்பு முழுவது நீர் போலே எங்கும் ஸ்ரீ தேவி இவனுக்கு எல்லா அவதாரங்களிலும் -/ஆமையான கேசனே –என்ன கேசபாசம் -கொண்டாடுகிறார் -/
சரீரம் உண்டோ உனக்கு -மூன்றாவது கேள்வி –எதனால் செய்யப்பட்டது -நம்மது பாஞ்ச பவ்திக்கம் —
மாத்ரு யோனி பரீஷை -வீட்டு இன்ப பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபணம் –
பஞ்ச சக்திமயம் -உபநிஷத் மயம் -அப்ராக்க்ருதம் அன்றோ அவன் திவ்ய மங்கள விக்ரஹம் – சுத்த சத்வ மயத்வஞ்ச –பதில் இதற்கு /எதனால் அவதாரம் கேள்விக்கு
ஸ்வேச்சா மாத்ர நிதானதா –ஆசைப்பட்டு இச்சையால் -அஜோபிஸந்ந அவ்யயாத்மா பூதாநாம் ஈஷ்வரோபிஸந்.—
சன் மூன்று இடத்திலும் -அஜுபீசன் -பிறவாதவனாக இருந்து கொண்டு –முடிவு இல்லாதவனாக கொண்டு -ஈஸ்வரனாக இருந்து கொண்டு –
தேரோட்டியாக இருந்தாலும் நான் தான் ரதி –
–ப்ரகரிதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா-எனக்கே உரித்தான அப்ராக்ருதமான திருமேனியை எடுத்துக் கொண்டு -சங்கல்பத்தால் அவதரிக்கிறேன் –
பன்னி பன்னி வியாக்யானம் -பிறக்காதவன் -வேறுபட்டவன் -ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் -ராமானுஜர் முத்திரை ஸ்ரீ ஸூ க்தி–
அசித் பத்த முக்த நித்ய -இவர்களில் மாறி -என்பதற்கு நான்கு சப்தங்கள் –
பிறக்கும் அசைத்தும் பத்தாத்மா விட மாறு பட்டவன் -அஜோபி சன் / அஜ- பிறப்பிலி பல் பிறவி பெருமான் -அசித் ஸ்வரூப விகாரம் -பத்தன் ஸ்வபாவத்தால் விகாரம் /
குறைவில்லாமல் அடுத்து -அவ்யயாத்மாசன் முக்தர் முன்பு குறைபட்டு -இவன் நிர்விகாரம் எப்பொழுதும்
நித்யர் அஸ்ருப்ஷ்ட சம்சார கந்தன் -பூதானாம் ஈஸ்வரோ சன் -அவர்கள் சொத்து நான் ஸ்வாமி -/
ஐந்து விரல்கள் போலே -அங்குஷ்ட மாத்ர -நான்கையும் விட மாறுபட்ட கட்டை விரல் – நான்கும் இது சேர்ந்தால் தானே வேலை செய்யும் –
அவனுக்கே உரித்தான திவ்ய மங்கள விக்ரஹம் -சுத்த சத்வமயம் -எங்கு சேவித்தாலும் நமக்கும் சத்வம் வளரும் –சுபாஸ்ரயம் -அர்ச்சா ரூபங்களும்-
கோல நீள கொடி மூக்கும் -கொடி பூத்து தாமரைக் கண்கள் –கனிந்து செவ்வாய் -நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனி என்னுள் நிறைந்தானே –
கிரீட மகுட சூடாவதாம்ச –ஹார கேயூர –மகர குண்டல –மின்னு மா மகர குண்டலங்கள் -மை வண்ண –இருவராய் வந்தார் –கை வண்ணம் தாமரை -இத்யாதி –
ஆற்று இடை கரை புரண்டு ஓடும் –காவேரி ஆறு -ஐந்தலை அரவே–அவ்வரவம் சுமத்தோர் அஞ்சன மலையே -கரு மணி கோமளம் –
-பச்சை மா மலை போல் மேனி -பவள வாய் -கமலச் செங்கண் –
அம் மலை பூத்ததோர் அரவிந்த வனமே –10-தாமரை -அரவிந்த மலர் தோறும் அதிசயம் உள்ளதே –திருவடிகள் -திருக்கைகள் உந்தி தாமரை -திருமார்பு தாமரை —
திருக் கண்கள் -என்னையும் பேச வைத்து -ஆகியவை -நிகர் இல்லையே /உடல் எனக்கு உருகுமாலோ என் செய்வேன் உலகத்தோரே /
பொன் இவர் மேனி அச்சோ ஒருவர் அழகிய வா /

யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத—அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம் ஸரிஜாம்யஹம்—৷৷4.7৷৷
பிறவியின் காலம் முடிவு செய்வார் யார் -நமக்கு கர்மம் -/ தலைக் குனிவு -அழியும் பொழுது என்று சொல்ல வில்லை –
நானே அவதரிக்கிறேன் -எவ்வப் பொழுது -முடிவும் நானே எடுக்கிறேன் -எல்லாம் எனக்கு அடங்கி –
தர்மம் குலைய அதர்மம் தூக்குமே –இச்சா க்ருஹீத அபிமத வேஷம் -நிரபேஷமாக அவதரிக்கிறார் –

பரித்ராணாய ஸாதூநாம் விநாஷாய ச துஷ்கரிதாம்.–தர்மஸம் ஸ்தாபநார்தாய ஸம் பவாமி யுகே யுகே—৷৷4.8৷৷
சாது -அநந்ய பக்தர்கள் -நாமங்கள் சேஷ்டிதங்கள் ரூபங்கள் மட்டுமே வாக்கிலும் நெஞ்சிலும் -க்ஷணம் காலம் பிரிந்தாலும் கல்பம் போலே எண்ணி –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -இவர்களுக்கு திரு முகம் காட்டி அருளவே யுகம் யுகமாக மீண்டும் மீண்டும் திருவவதாரம் –
சாது சம்ரக்ஷணார்தாமே முக்கிய காரணம் -அது பண்ண துஷ்டர்களை அழித்து- நாசம் -இல்லை விநாசம் -தூள் தூளாக்கி என்றபடி /
இவை நடந்தால் தர்மம் நிலை பெரும் -சாது — வர்ணாசிரமம் நழுவாமல்/பிரகலாதன் போன்ற பக்தர்கள் /மாலாகாரர்-/
தொழும் காதல் களிறு அளிப்பான் -மழுங்காத ஞானமே படையாக இருக்க -சக்கரப்படையும் இருக்க –கதறி கண்ணா கண்ணா என்று அலர-
-முதலை மேல் சீறி வந்து –சுடர் சோதி -மறையாமல் இருக்க அன்றோ -/கொடியேன் பால் காண வாராய் /
பிறவி சத்யம் -பெருமைகள் குறையாமல் -பஞ்ச சக்தி மயம் -இச்சை அடியாக -தர்மம் தலைக் குனிவு காலம் உணர்த்தும் / காரணங்கள் மூன்று -இப்படி ஆறும்

ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத–த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந—৷৷4.9৷৷
அவதார ரஹஸ்யம் -அனுசந்திப்பவன் -திவ்யம் ஜென்மம் -திவ்யம் கர்மம் -பிறந்தவாறும் வளர்ந்தவாறும் -மாயம் என்ன மாயமே–
உண்மையாக அறிந்து கொண்டால் -ஐயம் இல்லாமல் திரிவு இல்லாமல் -சங்கை இல்லாமல் –
அதே ஜென்மத்தில் –என்னை அடைகிறான் -பிராரப்த கர்மம் அதே சரீரத்தில் முடித்து
மே ஜென்மம் மே கர்மம் மே திவ்யம் -இவனுக்கும் திவ்யமாக இருக்குமே –ஒளியால் வெண்ணெய் உண்டான் –ஏலா பொய்கள் உரைப்பான் –

வீதராகபயக்ரோதா மந்மயா மாமுபாஷ்ரிதா–பஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்பாவமாகதா—-৷৷4.10৷৷
என்னுடைய சேஷ்டிதங்கள் -அவதார ரஹஸ்யங்கள் உள்ளபடி அறிந்தவர்கள் இரட்டைகளை விட்டு -குண வஸ்யர் இல்லாமல் -என்னையே அடைகிறார்கள் –
தபஸ் -ஆலோசனை -பலர் உண்டே -ரிஷிகள் -என் திருவடி பற்றி -ராகம் -ஆசை பயம் -க்ரோதம் -மூன்றும் இல்லாமல் -என்னிடமே மனம் செலுத்தி
என் நிலையை அடைகிறார்கள் -எட்டு குண சாம்யம் -அபஹத பாப்மா -சம்யா பத்தி மோக்ஷம் -சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே –
அவதார ரகஸ்யம் அறிந்தால் பெரும் பேற்றை பற்றி இதில் அருளிச் செய்கிறான்

யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம் ஸ்ததைவ பஜாம்யஹம்–மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா பார்த ஸர்வஷ—-৷৷4.11৷৷
அர்ச்சையிலும் இதே தான் –எந்த தாழ்ந்தவனும் எப்படியும் -என்னை சேவிக்க ஆசை பட்டாலும் -அப்படியே சேவை சாதித்து –
தமர் உகந்த எவ்வுருவம் அவ்வுருவம் தானே –தமர் உகந்தது எப்பேர் அப்பேர் —
வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை -சதங்கை அழகியார் -நஞ்சீயர் சாத்திய திரு நாமம் /
எல்லா உறவாகவும் எல்லா திவ்ய தேசங்களிலும் -எல்லா இந்த்ரியங்களாலும் அனுபவிக்க
இது வரை அவதார ரஹஸ்யம் -மேலே கர்ம யோகத்துக்குள் ஞான ஆகாரம் -பீடிகை ஆறு ஸ்லோகங்கள் –

காங்க்ஷந்த கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா–.க்ஷிப்ரம் ஹி மாநுஷே லோகே ஸித்திர்பவதி கர்மஜா—৷৷4.12৷৷
தேவதாந்த்ரங்கள் –யஜ தேவ பூஜா -இஹ லோக ஐஸ்வர்யம் -உடனுக்கு உடன் பலன் பெற -ஆசைப்பட்டு -இப்படி எல்லாம் நான் கொடுக்க மாட்டேன் –
பல தியாகம் கர்ம யோகத்துக்கு வேண்டுமே -/மனுஷ்ய லோகத்தில் -இது அனுஷ்டிப்பவர்கள் துர்லபம் /
வாயுரவை யாகம் ஐஸ்வர்யம் சூறாவளி காற்று போலே செல்வம் கொட்டும் —

சாதுர்வர்ண்யம் மயா ஸரிஷ்டம் குணகர்மவிபாகஷ–தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம்—৷৷4.13৷৷
நான்கு வர்ணங்கள் நானே -குணம் கர்மம் அடியாக -வேதம் யுத்தம் வியாபாரம் மூவருக்கும் உதவ சூத்திரர் –
சத்வ குணம் -ஆசை அடக்கி / ஷத்ரியன் / வைசியன் . சூத்ரன் – நான் காரணம் இல்லை -உடனே சொல்லி -/ உயர்வு தாழ்வுகளுக்கு நான் காரணம் இல்லை
-நீயாக கற்பித்து கொண்டவை -வைஷம்யம் நிர்க்ருண்யம் இல்லையே / அனுக்ரஹம் ஒன்றாக இருந்தாலும் கர்மம் அடியாக வேறு பாடு உண்டே
/நான்குக்குள் வேறுபாடும் நாமே உண்டாக்கி /ஆக்கையில் வழியாக உழல்கிறார்கள்

ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மபலே ஸ்பரிஹா.—இதி மாம் யோபிஜாநாதி கர்மபிர்ந ஸ பத்யதே—৷৷4.14৷৷
கர்த்தா -அகர்த்தா நீயாக இருக்க முடியுமோ -/ கர்மாணி -பாபம் புண்யம் தீண்டாது தெரியும் -ஸ்ருஷ்டியாதிகள் -செய்வதால் ஆனந்தம் துக்கம் நமக்கு –
/பலன் எனக்கு இல்லை -என்ற ஞானத்துடன் கர்மம் செய்ய வேன்டும் -விரோதிகள் தொலையும்

ஏவம் ஜ்ஞாத்வா கரிதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷுபி—.குரு கர்மைவ தஸ்மாத்த்வம் பூர்வை பூர்வதரம் கரிதம்—-৷৷4.15৷৷
இப்படி அறிந்து -பூர்வர்கள் பலர் முமுஷுக்கள் ஆகி -கர்மம் அனுஷ்ட்டிக்கப் பட்டது -அதே போலே நீயும் செய் -என்றவாறு –
அவதார ரஹஸ்ய ஞானத்துடன் செய்வாய் -மேலையார் செய்வனகள் -சிஷ்டாச்சாரமும் உண்டு -மேலே கர்ம யோகம் ஸ்வரூபம்

கிம் கர்ம கிமகர்மேதி கவயோப்யத்ர மோஹிதா–தத்தே கர்ம ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேஷுபாத்—৷৷4.16৷৷
சுலபம் இல்லை -ஞானிகளும் மயங்கி இருப்பர் -நீ நண்பன் -அகர்மம் -ஆத்ம ஞானம் –ஞானத்தை தனக்குள் அடக்கிய கர்ம யோகம் உனக்கு சொல்வேன்
தெரிந்து செய்து -ஞாத்வா -என்பதற்கு -ஞானம் அனுஷ்டானம் -விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர் –

கர்மணோ ஹ்யபி போத்தவ்யம் போத்தவ்யம் ச விகர்மண–அகர்மணஷ்ச போத்தவ்யம் கஹநா கர்மணோ கதி—-৷৷4.17৷৷
அறிவது கஷ்டம் -விவிதம் -பல வகை கர்மங்கள் உண்டே -அதனாலும் கஷ்டம் -அவற்றுக்குள் உள்ள ஞானம் மூன்றையும் அறிவது கஷ்டம்
நடை முறை மிகவும் ஆழமானது -பீடிகை வைத்து அருளுகிறார் -பல வகைகளில் கர்ம யோகம் சொல்லி உதவுவான் மேலே –

யஸ்மாத் மோக்ஷ சாதனா கர்மா யோகம் ஸ்வரூபம் அறிவது கஷ்டம் –கர்மா விகர்மா–விவிதமான கர்மா -விருத்த கர்மா இல்லை -நிஷித்தவை இல்லை
இப்படி கர்மங்களின் அம்சம் அறிவதும் அறிந்து அனுஷ்டிப்பதும் கஷ்டம் என்று நான்காவது பாதத்தில் உள்ளதால் இங்கு நிஷித்த கர்மாவாக இருக்க முடியாதே
ஆதலால் விகர்மா விதித்த கர்மம்
அகர்மா – கர்மா இல்லாத ஞானம் என்றும்
விகர்மா -நித்ய நைமித்திக காம்ய ரூபங்கள் உண்டே / தத் சாதனா / த்ரவ்ய ஆர்ஜனாதிகள் விவிதங்கள் உண்டே -அதனால் வி கர்மா
அகர்மா -விஷயம் -ஞானம் என்றபடி / தர்மம் அதர்மம் போலே நேரே எதிர்மறை -போல் இல்லை -கர்மம் அல்லாதது -வேறே பட்டது இதர என்றபடி
கஹனம் ஆழம் -அறிவதற்கு அரியது- துர்லபம் -மோக்ஷம் ஆசைப்படுபவனுக்கு –
முமுஷுவுக்கு -பிரகரணம்– வி கர்மா போக்த்வயம் ஆகாதே -காம்ய கர்மங்களை அறிய வேண்டாமே –/ இவை வேறே வேறே பலன்களை கொடுக்கும்
நித்ய நைமித்திக கர்மாக்கள் -விடாமல் செய்து கொண்டே பாபம் தொலைய / வேறே பலன்களை ஆசைப்படாமல் -கர்மா பழ சங்க தியாகங்கள் செய்து
இந்த எண்ணம் வர -பல பேத க்ருதம் விவிதம் –வைவித்யம்–பரித்யஜ்ய மோக்ஷ ஏக பலத்திலே கண் வைத்து ஏக சாஸ்த்ரார்த்தம் -இவை –
–2–41-இவற்றை விவரித்து அருளிச் செய்ததால் இங்கே விவரிக்க வில்லை
ஆத்மா சாஷாத்காரம் ஒரே லஷ்யம் -விவிதமாக இருந்தாலும் -விவசாயாகா புத்தி -விவசாயம் உறுதிப்பாடு வேண்டும் என்பதை பார்த்தோம் –
பகவத் முக மலர்த்தியே பிரயோஜனம் -எல்லா அங்கங்களும் இதற்க்கே -என்ற எண்ணம் வேண்டும் –
அடுத்த ஸ்லோகத்தில் அகர்மா பற்றி சொல்லி -விகர்மா பற்றி சொல்ல வில்லை -இங்கு பிரகரணம் கர்மா யோகத்துக்குள் உள்ள ஞான யோகம் பற்றியே சொல்ல வேண்டும் –

கர்மண்யகர்ம ய பஷ்யேதகர்மணி ச கர்ம ய–ஸ புத்திமாந் மநுஷ்யேஷு ஸ யுக்த கரித்ஸ்நகர்மகரித்—-৷৷4.18৷৷
கர்ம யோகத்தை ஞானாகாரமாக பார்ப்பதை -ஞான பாகத்தை பல வகைகளில் அருளிச் செய்கிறான் -/கர்ம பாகத்தை விட ஞான பகுதி உயர்ந்ததே —
கர்ம யோகம் விட ஞான யோகம் உயர்ந்தது என்று சொல்ல வர வில்லை —
கர்ம யோகத்துக்குள் உள்ள ஞான பாகத்தை –எண்ணாது அந்தியால் ஆம் பயன் என் கொல் –/ஞானத்துக்குள் உள்ள கர்ம பாகத்தை
-ஞானம் அனுஷ்டானம் இரண்டும் உள்ளவரே சிறந்தவர் -மனிதர்களில் மாணிக்கம் -புத்திமான் -யோகம் கைவந்தவன் ஆகிறான்
-எல்லா கர்மாக்களை செய்து முடித்தவன் ஆகிறான் -/
இரண்டும் முரண்பாடு உள்ளவை இல்லையே -/பூ கை தொடுக்கலாம் -பாக்யம் பெற்றோமே -நினைவுடன் -செய்வதே –
கருட மந்த்ரம் -தேசிகன் -பெற்று -ஹயக்ரீவர் -கருட த்ருஷ்டாந்தம் –தியானித்து கருட மந்த்ரம் சொல்லி -முத்திரை காட்டி -மூன்றும் ஒரே காலத்தில்
செய்வது முரண்பாடு இல்லையே -த்யானம் முக்கியம் -கையால் முத்திரை விட -சொல்வதை விட -போலே இங்கும் –
இதனால் தான் பூர்வார் வியாக்யானம் கொண்டு கிருஷ்ணன் திரு உள்ளம் உள்ளபடி -அறிகிறோம் –

அகர்ம -அந்யத்-இதர -பிரஸ்த்துத -ஆத்ம ஞானம் உச்யதே / ஏதோ ஒரு ஞானம் இல்லை -ஆத்மா யாதாத்ம்ய ஞானம் -/ ஞானத்தால் நிறைந்த செயல்பாடு -பெருமை சேர்க்கும் /
கர்மணி க்ரியமானம் ஏவ -பண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது ஆத்ம ஞானம் பச்யதே -கண்ணால் பார்க்க முடியாதே
கர்மாக்கு அந்தர்கதம் -ஞானத்தை கர்மவடிவாக – ஞானம் அனுஷ்டானம் இரண்டும் வேண்டுமே -நாய் வாழை போலே அனுஷ்டானம் இல்லாத ஞானவான் –
சேஷத்வ ஞானம் புரிந்த பின்பு கைங்கர்யம் செய்ய வேண்டுமே/

யஸ்ய ஸர்வே ஸமாரம்பா காமஸங்கல்பவர்ஜிதா-ஜ்ஞாநாக்நிதக்தகர்மாணம் தமாஹு பண்டிதம் புதா—৷৷4.19৷
தொடங்கி -சர்வே -நித்யை நைமித்திகம் -காமம் -பலனில் பற்று இல்லாமல் -தேஹாத்ம மயக்கம் இல்லாமல் -பண்ண பண்ண -பாபங்களை போக்கி –
ஞானம் சூழ்ந்து -அநாதிகாலம் சேர்த்த பிராரப்த சஞ்சித கர்மாக்கள் -எரிக்கப்படும் -இவனே பண்டிதர் என்பர் அறிவாளிகள் –
பற்ற வேண்டியதை பற்றி விட வேண்டியதை விட்டதால் -வீடுமின் முற்றவும் -வீடு செய்து –புல்கு பற்று அற்றே -/நஞ்சீயர் -விடுவித்து பற்றுவிக்கும் அவனே உபாயம் -/

த்யக்த்வா கர்மபலாஸங்கம் நித்யதரிப்தோ நிராஷ்ரய–கர்மண்யபிப்ரவரித்தோபி நைவ கிஞ்சித்கரோதி ஸ—৷৷4.20৷৷
கர்மாக்கள் ஒன்றும் பண்ணாதே -கீழே தீயினில் தூசாகும் என்று சொல்லி -இங்கு நித்ய ஆத்ம வஸ்துவில் ஆசை கொண்டு சரீர ஆசை இல்லாமல்
இந்திரியங்கள் ஞானத்துடன் மேய விட்டதால் -/சாஸ்த்ர விரோதமாக செய்யாமல் நித்ய கர்மாக்கள் -மூன்று வித த்யாகத்துடன் செய்ய வேன்டும் /

நிராஷீர்யதசித்தாத்மா த்யக்தஸர்வபரிக்ரஹ–ஷாரீரம் கேவலம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்–৷৷4.21৷৷
மேலே மூன்றால் ஏற்றம் -பலன்களில் ஆசை விட்டு -மீண்டும் மீண்டும் சொல்லி குழந்தைக்கு சொல்லி திருத்தும் தாய் போலே –
மனசை அடக்கி -ஆத்ம சாஷாத்காரம் தவிர மற்றவற்றை விட்டு -சரீரம் இருக்க வேண்டியதை மட்டும் செய்து –
கேவலம் கர்ம -கர்ம யோகமே போதும் -நேரே பெறுகிறான் -ஞானாகாரம் உள்ள கர்மாவால் பலன் என்றவாறு –

யதரிச்சாலாபஸந்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்ஸர–ஸம ஸித்தாவஸித்தௌ ச கரித்வாபி ந நிபத்யதே—৷৷4.22৷৷
கிடைத்ததை கொண்டு ஸந்தோஷம் அடைந்து -/த்வந்தம் -தோல்வி ஜெயம் /சாதிக்க முடியாமல் தடுப்பார் மேல் கோபம் பண்ணாதே /
சித்தியையும் அசித்தியையும் சமமாக கருதி /இருந்தால் சம்சாரம் தடைபடாமல் இருக்கும் –

கதஸங்கஸ்ய முக்தஸ்ய ஜ்ஞாநாவஸ்திதசேதஸ–யஜ்ஞாயாசரத கர்ம ஸமக்ரம் ப்ரவிலீயதே—৷৷4.23৷৷
பற்று தொலைந்து -விஷயாந்தர ஆசை இல்லாமல் -ஞானம் நிறைந்து -சாஸ்திரம் விதித்த கர்மாக்கள் யாகங்கள் தர்ப்பணாதிகள் செய்து —
சந்தனு பீஷ்மர் கையில் கொடுக்க வில்லையே -பூமியில் கொடுக்க தான் சாஸ்திரம் விதித்தது -/

ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்மஹவிர்ப்ரஹ்மாக்நௌ ப்ரஹ்மணா ஹுதம்.—ப்ரஹ்மைவ தேந கந்தவ்யம் ப்ரஹ்மகர்மஸமாதிநா—-৷৷4.24৷৷
எல்லாம் ப்ரஹ்மாகாரம் என்று அறிந்து -சரக் உபகரணங்கள் நெய் கரண்டி / ஹவிஸ் – அக்னி ப்ரஹ்மம் ஆத்மா கொண்ட ஜீவாத்மா செய்கிறான் –
ப்ரஹ்மம் கர்மம் என்று நினைத்து -செய்கிறான் -ஞானம் பண்ண பண்ண வளர்ந்து பாபங்கள் எரிக்கப் படும்

தைவமேவாபரே யஜ்ஞம் யோகிந பர்யுபாஸதே—-ப்ரஹ்மாக்நாவபரே யஜ்ஞம் யஜ்ஞேநைவோபஜுஹ்வதி—৷৷4.25৷৷
மேலே -13-வித கர்ம யோகங்கள் அருளிச் செய்கிறான் -பேதங்கள் –இருவரை பற்றி இங்கு -திவ்ய மங்கள விக்ரஹம் வைத்து திருவாராதனம் /
அபரே -அந்நிய -வேறு வகை மீண்டும் மீண்டும் வரும் /ப்ரஹ்மத்தை அக்னியாக வைத்து
-கீழே தேவ பூஜை இதில் நிஜமான யாகங்கள் -கரண்டி நெய் — யாக வேள்வி –

ஷ்ரோத்ராதீநீந்த்ரியாண்யந்யே ஸம் யமாக்நிஷு ஜுஹ்வதி.—ஷப்தாதீந்விஷயாநந்ய இந்த்ரியாக்நிஷு ஜுஹ்வதி—৷৷4.26৷৷
அக்னி ஹவிஸ் உருவகம் -கண் காதி இத்யாதி இந்திரியங்கள் புலன் அடக்கம் அக்னி -இந்திரியங்கள் ஆஹூதி-துஷ்டர்கள் இருந்தாலும் நம்மால் பாதிப்பு
இல்லை என்று இருப்பர் / இந்திரியங்கள் அக்னி சப்தாதிகள் ஹவிஸ் -நான்காவது அதிகாரி -முதல் நிலை -துஷ்டர்களை கண்டு தூர விலக்கி-
தர்மம் ஒத்து கொண்ட ஆசையில் அளவுடன் பண்ணி -சாஸ்த்ர விரோதம் அணுகாமல் இருந்து என்றபடி –

ஸர்வாணீந்த்ரியகர்மாணி ப்ராணகர்மாணி சாபரே.—ஆத்மஸம் யமயோகாக்நௌ ஜுஹ்வதி ஜ்ஞாநதீபிதே—৷৷4.27৷৷
அறிவு என்னும் ஒளி விளக்கால்–ஐந்து பிராணங்கள் -இந்திரியங்கள் கார்யங்களை ஏத்தி -மனஸ் அடக்கம் -ஆத்ம ஞானம் இருந்தால்
தானே மனஸ் அடக்கம் வரும் -ஐந்தாவது அதிகாரி இவன்

த்ரவ்யயஜ்ஞாஸ்தபோயஜ்ஞா யோகயஜ்ஞாஸ்ததாபரே—ஸ்வாத்யாயஜ்ஞாநயஜ்ஞாஷ்ச யதய ஸம் ஷிதவ்ரதா—-৷৷4.28৷৷
ஐந்து அதிகாரிகள் இதில் -முயற்சி உள்ளவர்கள் -விடா முயற்சி உத்ஸாகத்துடன் இருந்து -மனம் தளராமல் -திருவடி போலே -முயற்சி திரு வினை ஆக்கும் –
உறுதியான நெஞ்சும் -தார்மிக வழியால் பெற்ற ஐஸ்வர்யம் கொண்டு தானம் தர்மம் செய்து / கதிக்கு பதறி –வெம் கானமும் கல்லும் கொதிக்க தபம் செய்து-/
யோகம் -தீர்த்த யாத்திரை திவ்ய தேச யாத்திரை யோகம் சேர்க்கை -சீரார் திருவேங்கடமே இத்யாதி / வேத அத்யயனம் / வேதார்த்தம் -ஞான -அனுசந்தானம் /

அபாநே ஜுஹ்வதி ப்ராண ப்ராணேபாநம் ததாபரே—.ப்ராணாபாநகதீ ருத்த்வா ப்ராணாயாமபராயணா—-৷৷4.29৷৷
மூவர் -பிராணாயாம பராயணர் –பூரகம் கும்பகம் ரேசகம் -உள்ளே இழுத்து நிறுத்தி வெளியில் விட்டு —
பிராண வாயு ஹிருதயம் மேல் நோக்கி / அபான கீழ் நோக்கி –பிராண வாயுவை அபான வாயுவில் ஆஹுதி யாக கொடுத்து பூரகம் —
ரேசகம் -வெளியில் விடும் பொழுது அபான வாயு ஆஹுதி பிராண வாயு அக்னி /
கும்பகம் -நிறுத்தி -இரண்டையும் போக விடாமல் -ஐந்தையும் ஐந்தில் ஆஹுதி
-16-தடவை நிமிஷம் பண்ணுவதை -12-ஆக குறையும் இதனால் -ஜீரண சக்தி கூடும் -ஹிருதயம் -உடல் ரீதியாகவும் உண்டு
-கண்ணன் ஆத்ம நன்மைக்கு அருளிச் செய்கிறான் -/

அபரே நியதாஹாரா ப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி.–ஸர்வேப்யேதே யஜ்ஞவிதோ யஜ்ஞக்ஷபிதகல்மஷா—-৷৷4.30৷৷
ஆகார நியமமும் முக்கியம் -வயிற்றில் அன்னம் தண்ணீர் காற்று மூன்றுக்கும் இடம் -பாதி வயிற்று மட்டும் அன்னம் –
இப்படி —13-வகை கார்ய யோகிகளை அருளிச் செய்கிறான் –
பெருமாளே காந்தம் -இரும்பு போல் வழிய நெஞ்சம் -வட்டத்துக்கு உள்ளே வந்தால் -போதும் -இழுத்துக் கொள்வான் -13-வகைகளில் -ஏதாவது ஒரு விதம்

யஜ்ஞஷிஷ்டாமரிதபுஜோ யாந்தி ப்ரஹ்ம ஸநாதநம்.–நாயம் லோகோஸ்த்யயஜ்ஞஸ்ய குதோந்ய குருஸத்தம—৷৷4.31৷৷
யாகம் பண்ணி -மிச்சம் சேஷம் உச்சிஷ்டம் அம்ருத மயம் -அநு யாகம் நாம் உண்பது -பண்ணாமல் -நித்ய நைமித்திக கர்மம் பண்ணா விடில்
இந்த லோகத்தில் ஒன்றும் கிடையாது -அந்த லோக பிராப்தி இல்லை என்பது சொல்லவும் வேண்டுமோ -தர்ம அர்த்தம் காமம் மோக்ஷம் ஒன்றுமே கிட்டாது
இப்படி பல வகை -ஆத்ம சாஷாத்காரம் -செய்ய -உலகத்தில் பரவி –இந்த கர்ம யோகம் நித்ய நைமித்திக கர்மாக்களுக்குளே பிறந்தது –

ஷ்ரேயாந்த்ரவ்யமயாத்யஜ்ஞாஜ்ஜ்ஞாநயஜ்ஞ பரந்தப.–ஸர்வம் கர்மாகிலம் பார்த ஜ்ஞாநே பரிஸமாப்யதே—৷৷4.33৷৷
ஞான யஜ்ஜம் உயர்ந்தது -சர்வ கர்மாக்களும் ஞானத்தில் அடையும் -த்ரவ்யமயம் -கர்மபாகம் -பலன் கர்தவ்யம் நம்முடையது இல்லை என்ற
ஞான பாகமே உயர்ந்தது -எண்ணமே வேன்டும் -/ஆத்ம ஞானம் ஸ்திரீகரிக்கப்படும் இந்த எண்ணத்தால் -அதுவே சாஷாத்காரம் /

தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஷ்நேந ஸேவயா.—உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வதர்ஷிந—৷৷4.34৷৷
ஞானிகள் பலர் உள்ளார் -நான் தத்வம் -ஆச்சார்யர்கள் தத்வ தர்சி -வசனம் உயர்ந்தது -கண்ணாலே கண்டு அன்றோ உபதேசிக்கிறார்கள்-
பீஷ்மர் இடம் தர்மரை கேட்டு அறிந்து கொள்ள சொன்னானே -/ திருவடியில் விழுந்து –சுற்றி சுற்றி நின்று கைங்கர்யம் பண்ணி -இதனால் ப்ரீதி அடைந்து
ஆசையுடன் உபதேசம் செய்வார் /நேராக நின்றோ பின் நின்றோ கேட்க கூடாது -பக்கத்தில் இருந்து கேட்க வேன்டும் -பரீஷை பண்ண கேட்க கூடாது
சங்கைகள் தீர்க்க கேட்க வேன்டும் /நிறைய பேர் இடம் நிறைய தடவை நிறைய கேட்க வேன்டும் -பக்குவம் பெற

யஜ்ஜ்ஞாத்வா ந புநர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்டவ.—யேந பூதாந்யஷேஷேண த்ரக்ஷ்யஸ்யாத்மந்யதோ மயி—৷৷4.35৷৷
சாஷாத்காரம் அடைந்தால் -மயக்கம் பிரமம் வராது /பார்வை -உன்னை போலே பூதங்களை பார்ப்பாய் -எல்லாரையும் ப்ரஹ்மமாகவே -சரீரம் தானே
என்று அறிந்து -கொள்வாய் / சுகர் வியாசர் -பிள்ளாய் -மரங்கள் திரும்ப பதில் -/பெண்கள் பதில் -வாசி அறியாத சுகர் -ப்ரஹ்மாத்மகம் அனைத்தும் –

அபி சேதஸி பாபேப்யஃ ஸர்வேப்யஃ பாபகரித்தம–ஸர்வம் ஜ்ஞாநப்லவேநைவ வரிஜிநம் ஸந்தரிஷ்யஸி–৷৷4.36৷৷
பாபங்கள் எல்லாம் எரிக்கப்படும் -நிறைய பாபங்கள் செய்து இருந்தாலும் -ஞானம் ஓடம் -பாபக்கடலை கடத்தும் -கவலை வேண்டாம் -/

யதைதாம் ஸி ஸமித்தோக்நிர்பஸ்மஸாத்குருதேர்ஜுந—ஜ்ஞாநாக்நி ஸர்வகர்மாணி பஸ்மஸாத்குருதே ததா—-৷৷4.37৷৷
கடலை தாண்டினால் திரும்ப வரலாமே சங்கை வந்தது -/ஒரு வினாடி ஞானத்தால் இவை போகுமோ -விறகு கட்டை போலே பாபங்கள் -திரும்பாதே -/
பஸ்மம் ஆகுமே /தீயினில் தூசாகும் செப்பு –

ந ஹி ஜ்ஞாநேந ஸதரிஷம் பவித்ரமிஹ வித்யதே.—தத்ஸ்வயம் யோகஸம் ஸித்த காலேநாத்மநி விந்ததி—৷৷4.38৷৷
கொளுத்தும் -அக்னி -பாவானத்வமும் உண்டே /புனிதமாக்கும் /மங்களம் உண்டாக்கும் -/தானே நடக்கும் -யோகம் கை வந்து -கால போக்கில் பரிபக்குவம் அடையும்
கேசவா என்ன –கெடும் இடராய வெல்லாம் கெடும் -நடமினோ-அலகிட்டு-/இருள் மண்டின குகைக்குள் விளக்கு வைத்த அடுத்த வினாடி இருள் போகுமே -/

ஷ்ரத்தாவா ல்லபதே ஜ்ஞாநம் தத்பர ஸம் யதேந்த்ரிய–ஜ்ஞாநம் லப்த்வா பராம் ஷாந்திமசிரேணாதிகச்சதி—৷৷4.39৷৷
மெதுவாக என்றால் -எத்தனை ஜென்மம் சங்கை /தவறை தான் முக்கியம் –ஸ்ரத்தை உள்ளவனை கொண்டாடி அடுத்ததில் இல்லாதவனை நிந்திப்பான்
பரமமான ஷாந்தி -விஷயாந்தர நிவ்ருத்தி -சீக்கிரம் பெறுவான் -/நீயே நாளாகும் இங்கு சீக்கிரம் -இடைப்பட்ட நிலை என்றவாறு

அஜ்ஞஷ்சாஷ்ரத்ததாநஷ்ச ஸம் ஷயாத்மா விநஷ்யதி—நாயம் லோகோஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம் ஷயாத்மந—-৷৷4.40৷৷
தனக்கு ஞானம் இல்லாமல் சிரத்தையும் இல்லாமல் அதுக்கு மேலே சங்கைகள் கொண்டு பிறர் சொன்னாலும் -நாசம் அடைகிறான்
-இங்கும் ஆனந்தம் இல்லை -மோக்ஷ ஆசையும் இல்லாமல் நாசம் அடைகிறான்

யோகஸம் ந்யஸ்தகர்மாணம் ஜ்ஞாநஸம் சிந்நஸம் ஷயம்—.ஆத்மவந்தம் ந கர்மாணி நிபத்நந்தி தநஞ்ஜய—৷৷4.41৷৷
நிகமத்தில் -கர்மாவை வெல் -தானம் வென்றாய் தனஞ்சயன் -புத்தியால் -கர்மங்களில் பற்று இல்லாமல் -ஞானம் -கத்தி -ஐயப்பாடு அறுக்கும் அழகனூர்
அரங்கம் போலே கீதாச்சார்யர் உபதேசம் -/புண்ய பாப கர்மாக்கள் கட்டுப்படுத்தாது -கடல் ஓடம் -விறகு அக்னி -சங்கை வாள் -பல த்ருஷ்டாந்தங்கள் காட்டி

தஸ்மாதஜ்ஞாநஸம் பூதம் ஹரித்ஸ்தம் ஜ்ஞாநாஸிநாத்மந—.சித்த்வைநம் ஸம் ஷயம் யோகமாதிஷ்டோத்திஷ்ட பாரத—৷৷4.42৷৷
இதுவே வழியாகும் -தேஹாத்ம அபிமானம் பிரமம் -சங்கை இருந்தது -உபதேசத்தால் பிறந்த ஞானம் கத்தி கொண்டு வெட்டி
கர்ம யோகம் செய்வாய் -அதற்காய் எழுந்திரு -உன் பெயரில் தேசமே உண்டே -பாரத -என்கிறான்

—————————————————–

கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் – 3-கர்ம யோகம் –

June 4, 2017

அசக்த்யா லோக ரஷாயை குணேஷ் வாரோப்ய கர்த்ருதாம்
சர்வேஸ்வரே வா ந்யஸ் யோகதா த்ருதீயே கர்மகார்யதா –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–7-
உலகோரை ரஷிக்கும் பொருட்டு (3-26-வரை)-முக்குணங்களால் தூண்டப பட்டு செய்கிறோம் என்ற எண்ணத்துடன் -பகவான் நியமிக்க -இவை தூண்ட
-அடுத்த நிலை –பற்று அற்ற கர்ம யோகம் செய்பவன் -கர்ம யோகம் நேராக சாஷாத்காரம் கொடுக்கும் என்றவாறு –
லோக ரக்ஷணத்துக்காக -இந்திரியங்களை அடக்க முடியாதவர்க்கு கர்ம யோகம் -என்றவாறு –
பழகியது -சுலபம் -நழுவாதது -ஞான யோகியும் கர்ம யோகம் சரீரம் நிலைக்க / பல காரணங்கள் சொல்லி —

—————————
அர்ஜுந உவாச
ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா புத்திர்ஜநார்தந.–தத்கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேஷவ—৷৷3.1৷-
ஞான யோகம் கர்ம யோகம் விட உயர்ந்தது என்பாய் ஆனால் -கோரமான கர்ம யோகத்தில் எதற்கு தள்ளுகிறாய் -அவனுக்கு யுத்தம் தானே ஷத்ரியன்
-அந்தணர் பஞ்ச கால பராயணர் -போலே -/ஜனார்த்தனன் -கேசவன் -இரண்டு திரு நாமங்கள் -ஜனங்களுக்கு நல்லதே செய்பவன் -பிறப்பை அறுத்து -/
கேசவன் -ப்ரஹ்மாதிகள் ஸ்வாமி -சிலர் வாழ சிலர் தாழ -சிலர் மடிய காரணம் தள்ளலாமோ –
அணுவிலும் அணு-பரமாத்மா -ஸ்தூலா நியாயம் -அருந்ததி -சரீரம் சொல்லி -ஜீவாத்மா சொல்லி -பரமாத்மாவை காட்டி –

வ்யாமிஷ்ரேணேவ வாக்யேந புத்திம் மோஹயஸீவ மே—ததேகம் வத நிஷ்சத்ய யேந ஷ்ரேயோஹமாப்நுயாம்—৷৷3.2৷৷
புத்தி குழம்பி -ஏத்தி ஸ்ரேயஸ் கொடுக்குமோ அத்தை சொல்லு /

ஸ்ரீ பகவாநுவாச-
லோகேஸ்மிந்த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக—ஜ்ஞாநயோகேந ஸாம் க்யாநாம் கர்மயோகேந யோகிநாம்—৷৷3.3৷৷
இரண்டு பாதைகள் -முன்னாடியே சொல்லி உள்ளேன் -கர்ம யோகம் அநாதி -சாஸ்த்ர ஸம்மதம் -மயா -தன் திரு மார்பை தொட்டு -அருளிச் செய்கிறான்
-சர்வஞ்ஞன் -சர்வ சக்தன் பிராப்தன் பூர்ணன் /கருணையால் சொன்னேன் -லோகே –லோகோ பின்ன ருசி -/
கர்ம யோகத்தால் பலன் -ஞான யோகத்தை விடலாம் / இந்திரியங்களை அடக்க முடியாதவனுக்கு கர்ம யோகம் -என்றும் -அடக்கியவனுக்கு ஞான யோகமும்

ந கர்மணாமநாரம்பாந்நைஷ்கர்ம்யம் புருஷோஷ்நுதே—-ந ச ஸம் ந்யஸநாதேவ ஸம்த்திம் ஸமதிகச்சதி—৷৷3.4৷৷
நேராக ஞான யோகம் போக முடியாது -தொடங்கி பாதியில் விட்டாலும் ஞான யோகம் சித்திக்காது -யுத்தம் -நேராக சொல்லாமல் கர்ம யோகம் –
நைஷ்கர்ம்யம் -செய்யாமல் இருக்கும் ஞான யோகம் / சன்யாசம் -விடுவது -/ அர்த்தித்தவம் ஆசை -வேன்டும் -ஆசை இருந்தாலும் சக்தியும் வேன்டும்
-வஸ்துவை அடைய ஆசையும் சக்தியும் வேண்டுமே -/

ந ஹி கஷ்சத்க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மகரித்—கார்யதே ஹ்யவஷ- கர்ம ஸர்வ-ப்ரகரிதிஜைர்குணை—৷৷3.5৷৷
ஓர் வினாடி யாவது கர்ம யோகம் இல்லாமல் சம்சாரி வாழவே முடியாதே -தூங்குபவனும் –தூங்குவதும் கர்மா தான் -தூங்கினால் தான் புத்தி கூர்மை
இந்திரியங்கள் பின்பு / பிராணன் உண்டே தூங்கும் பொழுதும் -/தெரியாமல் கார்யம் தானே நடந்து கொண்டே இருக்கும் -/கர்ம யோகம் தான் பழகி
-பிறந்த குழந்தை அழுகிறதே -/சன்யாசிகளும் விடாமல் செய்கிறார்கள் -/முக்குண வஸ்யர் -சத்வம் வெளுப்பு -/ரஜஸ் தமஸ்/

கர்மேந்த்ரியாணி ஸம் யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்—இந்த்ரியார்தாந்விமூடாத்மா மித்யாசார ஸ உச்யதே–৷৷3.6৷৷
நிந்தை -மனசை அடக்காமல் -இந்திரியங்களை மட்டும் அடக்கி பொய் ஆசாரம் -மூன்றும் -சாஸ்த்ர ஸம்மதம் -படி இருக்க வேன்டும் -ஆர்ஜவ குணம்

யஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யாரபதேர்ஜுந.–கர்மேந்த்ரியை கர்மயோகமஸக்த ஸ விஷிஷ்யதே–৷৷3.7৷৷
புத்தி சாரதி – மனஸ் கடிவாளம் / அடங்கினால் தானே -இந்திரியங்கள் அடங்கும் -/ கர்ம யோகம் ஆரம்பித்து -/பற்று இல்லாமல் தொடங்கினால்
ஞான யோகி விட சிறந்தவன் -/பள்ள மடை -இதுவே -போகும் வழியில் போனால் திரும்ப கொண்டு வரலாமே /கண் பார்க்கட்டும் -வரையறைக்கு உள்பட்டு
/பல காரணங்கள் -பழக்கம் சுலபம் ஞான யோகிக்கும் விட முடியாதே -/ பல சொல்லி -மேலே கேட்ட கேள்விக்கு பதில் அடுத்து -நேராக அருளிச் செய்கிறான்

நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண–.ஷரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேதகர்மண—-৷৷3.8৷৷
கர்மத்தை நியதமாக செய் -/ உயர்ந்தது ஞான யோகத்தை விட -கேள்வியில் உள்ள சப்தம் ஜ்யாயோக -/ சக்தி இருந்தாலும் கர்ம யோகம் அனுஷ்ட்டிக்க வேன்டும் –
நழுவவே நழுவாது கர்ம யோகம் -/ விட்ட இடத்தில் இருந்து தொடரலாம் அடுத்த ஜன்மாவில் -ஞான யோகம் அப்படி இல்லை -/சரீர யாத்ரைக்கும் இது வேன்டும்
-சரீரம் தேகம் வாசி உண்டே /இளைத்து கொண்டு போவது சரீரம் / வளரும் உடம்பு தேகம் /
இங்கு சரீர யாத்திரை -இளைத்து போகும் சந்யாசிக்கும் கர்ம யோகம் விட முடியாதே -என்கிறான் /சாதனத்தால் தான் ஆத்ம சாஷாத்காரம் –
பிராணன் போனால் கிடைக்காது -அடுத்த ஜன்மா தான் கிடைக்கும் /
சரீர யாத்திரை நம் கையில் இல்லையே -நின்றனர் இருந்தனர் –இத்யாதி எல்லாம் அவன் அதீனம் தானே /நியத கர்மா ஒரு வகை / அநியத கர்மா வேறு வகை
அவன் தூண்ட நாம் செய்கிறோம் என்ற நினைவால் செய்ய வேன்டும் -/விநயம் உடன் இருக்க வேன்டும் -/

யஜ்ஞார்தாத்கர்மணோந்யத்ர லோகோயம் கர்மபந்தந–ததர்தம் கர்ம கௌந்தேய முக்த சங்க ஸமாசர—৷৷3.9৷৷
கர்மா செய்ய செய்ய பாபங்களும் வருமே என்ன -/யஞ்ஞார்த்தமாக -ஆத்ம சாஷாத்காரம் -பற்று அற்ற கர்மா செய்தால் -பாபங்கள் கிட்டாது –
இதை தவிர மற்ற கர்மாக்கள் தாழ்வு -என்றவாறு /பலத்தை பொறுத்தே -உயர்ந்த அல்லது தாழ்ந்த கர்மா ஆகும் /
வர்ணாஸ்ரம தர்மம் -சாஸ்த்ர சம்மத கர்மாக்கள் / பற்றி அற்ற -சாஷாத்காரம் பலன் என்ற எண்ணம் வேன்டும் /

ஸஹயஜ்ஞா ப்ரஜா ஸரிஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி–அநேந ப்ரஸவிஷ்யத்வமேஷ வோஸ்த்விஷ்டகாமதுக்—-৷৷3.10৷৷
மேலே எழு ஸ்லோகங்களில் -யஞ்ஞத்துக்கு சொல்லி வைத்த கர்மங்கள் / பிரஜாபதி -பர ப்ரஹ்மம் -என்றவாறு இங்கு /பொருள் என்று இவ்வுலகம் படைத்து -சோம்பாது –
இதுவே பயன் -அதே பயனுக்கு வாழ்தல் சிரமம் இருக்காதே -ஒரே கோணம் ஆகுமே /யாகங்கள் செய்து இஷ்டமான காமங்கள் பெற்று கொள்ளலாம் –
தேவர்கள் உதவுவார் /வருண ஜபம் விராட பர்வம் வாசித்தால் மழை பெய்யும் -என்பர் / –சகல வேத அந்தராத்மா பர ப்ரஹ்மம்
-ஆனந்தம் பட்டு பலன் -இதை நினைத்து பண்ணினால் கர்ம யோகம் ஆகும் /

தேவாந்பாவயதாநேந தே தேவா பாவயந்து வ–பரஸ்பரம் பாவயந்த ஷ்ரேய பரமவாப்ஸ்யத—৷৷3.11৷৷
தேவர்கள் -மழை கொடுப்பர் –ஹவிஸ் வாங்கி –பர்ஜன்ய தேவதை /பரஸ்பரம் நல்லது செய்து கொண்டு ஸ்ரேயஸ் அடையலாம் /
தானே செய்ததாக சொல்லாமல் பிரஜாபதி -என்கிறான் -/ஆட்டு வாணியன் இல்லையே -சேதனன் சாஸ்திரம் அறிந்து செய்வான் –

இஷ்டாந்போகாந்ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞபாவிதா–தைர்தத்தாநப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ—৷৷3.12৷৷
தனக்காக பயன் படுத்தி -தேவர்களுக்கு கொடுக்காமல் -இவன் தான் பெரிய திருடன் -/

யஜ்ஞஷிஷ்டாஷிந ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பிஷை-.புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத்—৷৷3.13৷৷
திருவாராதனம் பண்ணி -சேஷம் உண்பவன் -பாபம் போக்கி -இல்லாமல் இருந்தால் -உண்பது பாபங்களையே

அந்நாத்பவந்தி பூதாநி பர்ஜந்யாதந்நஸம்பவ–யஜ்ஞாத்பவதி பர்ஜந்யோ யஜ்ஞ கர்மஸமுத்பவ—৷৷3.14৷৷
அன்னத்தால் பூதங்கள் வாழலாம் -இங்கு சுழல் ஒன்றை அருளிச் செய்கிறான் -/ பர்ஜன்யம் தேவதை அன்னத்துக்கு மழை /
யாகங்கள் செய்தால் மழை / கர்மா தான் யாகம் -/கர்மம் பண்ண சரீரம் -ஜீவாத்மா உள்ளே புகுந்து உடல் -என்றவாறு -சக்கரம்

கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம்–.தஸ்மாத்ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்—৷৷3.15৷৷
சரீரம் எல்லாம் கர்மா எதிர்பார்த்து இருக்கும்

ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ ய–அகாயுரிந்த்ரியாராமோ மோகம் பார்த ஸ ஜீவதி—৷৷3.16৷৷
சக்கரம் அனுவர்த்தனம் பண்ண வேன்டும் -இல்லாதவன் வாழ்வது பாபம் -அவன் இந்த்ரியராமன் -ஆவான் –
மேலே மூன்று ஸ்லோகங்களால் கைவல்யார்த்தி பற்றி –

யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதாத்மதரிப்தஷ்ச மாநவ–ஆத்மந்யேவ ச ஸந்துஷ்டஸ்தஸ்ய கார்யம் ந வித்யதே–৷৷3.17৷৷
கைவல்ய பரம் இதுவும் மேலே 2-ஸ்லோகங்களும் -/தத்வ த்ரயம் -அசித் அனுபவம் ஐஸ்வர்யார்த்தி / சித் அனுபவம் கைவல்யார்த்தி-கேவல அனுபவம் –
பர ப்ரஹ்மம் அனுபவம் பகவல் லாபார்த்தி /கைவல்யார்த்தி கர்ம யோகம் அனுஷ்ட்டிக்க வேண்டாம் -ஆத்ம சாஷாத்காரம் பெற்றான் –
அர்ஜுனன் -நீ கைவல்யார்த்தி இல்லையே -பண்ணு -என்றவாறு /
ஆத்மா ரதி ஏவ -இதிலே ஆசை -இதிலேயே திருப்தி – அனுபவித்து ஸந்துஷ்டன் –தாரக -ஆசை / போஷக-திருப்தி / போக்யம் -ஸந்தோஷம் /

நைவ தஸ்ய கரிதேநார்தோ நாகரிதேநேஹ கஷ்சந.–ந சாஸ்ய ஸர்வபூதேஷு கஷ்சதர்தவ்யபாஷ்ரய—-৷৷3.18৷৷
அவன் எதை செய்தாலும் ஒரு பலன் கிட்டாது -உலக இன்பம் வேண்டாம் -ஆத்மா சாஷாத்காரம் கிடைத்ததே -செய்யாததால்
கஷ்டமோ பாபமோ இல்லையே -/ மோக்ஷம் ஆசை இல்லையே இவனுக்கு /

தஸ்மாதஸக்த ஸததம் கார்யம் கர்ம ஸமாசர—அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ—৷৷3.19৷৷
அதனாலே -நீ கைவல்யார்த்தி இல்லையே -அத்தை பிள்ளை –என்னிடம் ஆசை இருக்குமே -/கண்ணன் என்னும் கரும் தெய்வம் -/ சேராத படியால் வெளுத்து
-ஆத்ம சம சஹன் நீ /அசக்தன் -பற்று இல்லாமல் /கர்மம் செய்து -/பலத்தில் ஆசை இல்லாமல் /
அக்ருதவ அனுசந்தானம் உடன் -பரம் அடைகிறான் -ஜீவாத்மா சாஷாத்காரம் அடைகிறான் –

கர்மணைவ ஹி ஸம் ஸித்திமாஸ்திதா ஜநகாதய–.லோகஸம் க்ரஹமேவாபி ஸம் பஷ்யந்கர்துமர்ஹஸி—-৷৷3.20৷৷
ஜனகன் கர்ம யோகத்தால் ஆத்ம சாஷாத்காரம் -மேலையார் செய்வனகள் சிஷ்டாசாரம் உண்டே -செய்யாதன செய்யோம் -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு
-/ஞான யோகத்துக்கு அதிகாரம் இருந்தாலும் -அவன் கூட கர்ம யோகம் / சம்சித்திம் -ஞான யோகத்தால் அடையும் அதே சாஷாத்காரம் பெற்றார்
/ரிஷி -மந்த்ர த்ருஷ்டர் /இந்திரியங்களை அடக்கினவராக இருந்தாலும் -/அதிகாரம் இல்லாத உனக்கு வேன்டும் என்று சொல்லவும் வேண்டுமோ /
மேலே லோக சங்க்ரஹம் இதிலும் சொல்லி மேலே -6-ஸ்லோகங்களில் -அருளிச் செய்கிறான் –
சமான அபிப்ராயதாயம்–ராஜாவை பார்த்து பின் வருபவர் நடப்பர் -உனக்கு ஞான யோகம் முடியும் என்று கொண்டாலும் -உன் வாதப் படியே வைத்தாலும்
-பின் வருபவர் அசக்தர்கள் -ஞான யோகம் ஆரம்பித்து விட -தவறான வழிகளில் போக வைப்பாய் –அதனாலும் கர்ம யோகமே நீ பண்ண வேன்டும் –

யத்யதாசரதி ஷ்ரேஷ்டஸ்தத்ததேவேதரோ ஜந–ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே—৷৷3.21৷৷
சிரேஷ்டர் -புகழப் படுபவர் / சாஸ்திரம் அறிந்து -அதன் படி நடந்து -அதன் படி நடக்க வைத்து –/ அங்கமாக செய்வதை போலே -லோகம் பண்ணுமே
-சிரேஷ்டர் என்று அர்ஜுனனை கொண்டாடுகிறான் –/குந்தி புத்ரன்- குரு குலம்- யுதிர்ஷ்டன் தம்பி- என் ஆத்ம சஹா- ஊர்வசி பார்த்து தாய் என்றானே /

ந மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந—நாநவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி—৷৷3.22৷৷
தன்னையும் சொல்லி கொள்கிறான் -இதில் -/ நானே கர்மம் செய்கிறேன் -நீ பண்ண வேன்டும் சொல்லவும் வேண்டுமோ -கிம் முக்குத்தி நியாயம்
-வடை குச்சி -தாண்டா அபூபம் -வடை குச்சி நியாயம் / கர்ம வைசியன் இல்லை ஆசை பட்டு வந்தவன் -கர்மம் தொலைக்க வேண்டாம்-
-சாஸ்திரம் கட்டு படுத்தது -அனுபவம் வேண்டி செய்ய வேண்டாம் / குதிரைக்கு தண்ணீர் -தேரோட்டி –எல்லா செயலையும் செய்து –
எனக்கு இல்லை -ராமானுஜர் -சர்வேஸ்வரனான் –ஸ்வ இதர விலக்ஷணன் –எல்லா விசேஷங்களை காட்டி –
மூன்று யோனிகளில் தேவ மனுஷ்ய திரியாக் ஜாதியில் அவதரித்து -என்றவாறு -எந்நின்ற இனியுமாய் பிறந்து
எந்த யோனியில் பிறந்தாலும் செய்ய வேண்டியது இல்லை -ஆனாலும் செய்கிறேன் என்றவாறு –
அவாப்த ஸமஸ்த காமன் -நானும் கர்ம யோகத்தில் நிற்கிறேன் -ருக்மிணி கண்ணன் -என் இடம் என்ன இருக்கு இடையன்
-என் அடியார் இடமும் ஒன்றும் இல்லை என்றானே –
அடைய வேண்டியது ஒன்றும் இல்லை என்பதை மறைத்து –அடியார்களுக்கு வேறே எதிலும் ஆசை இல்லையே என்னையே அடைந்த பின்பு –

யதி ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கர்மண்யதந்த்ரித—.மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா பார்த ஸர்வஷ—-৷৷3.23৷৷
ஒரு வேளை நான் -வா ஸூ தேவர் பிள்ளையாக பிறந்த நான் -கீழே நெஞ்சை நிமிர்ந்து -இங்கு கிருஷ்ணனாக அவதரித்து –
சோம்பல் ஏற்பட்டு -பண்ணாமல் இருந்தால் -கண்ணனே பண்ண வில்லை -என்னை பார்த்து -மம -உயர்ந்த என்னை பார்த்து -பின் வரும் மநுஷ்யர்கள் உண்டே –
ஒரு வினாடி பொழுதிலும் நான் செய்யாமல் இருந்தால் –இவர்கள் எப்பொழுதுமே செய்யாமல் போவார்கள் -/
கூர்மையான புத்தி வர்க்க இந்த வாதங்கள் படித்து வியாக்யானம் அறிந்து —

உத்ஸீதேயுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம்.–ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாமுபஹந்யாமிமா ப்ரஜா—৷৷3.24৷৷
சாஸ்திரம் அறிந்து புரியாத லோகத்தார் –என்னை பார்த்து பண்ணாமல் -நானே செய்யாமல் இருந்தால் -/உபதேசம் பண்ணி ஷத்ரிய தர்மம்
காக்க வைப்பதே என்னுடைய வேளை -வர்ண சங்கரஹம் கூடாதே –ஷத்ரியன் தர்மம் -வைசியன் தர்மம் -அறிந்தவன் -நேர்மை மாறாமல் செய்து காட்டி –
என்னை பார்த்து பண்ணாமல் விட்டால் லோகத்தார் என்றுமே உய்ய இயலாமல் போகுமே

ஸக்தா கர்மண்யவித்வாம் ஸோ யதா குர்வந்தி பாரத—குர்யாத்வித்வா ஸ்ததாஸக்தஷ்சகீர்ஷுர்லோகஸம் க்ரஹம்৷৷3.25৷৷
ஆத்ம யாதாம்யா ஞானம் பெறாதவன் -அவித்வாம் ச –/-எப்படி செய்ய முடியுமோ -அத்தையே வித்வான்கள் கூட –செய்ய வேன்டும் –
இந்திரியங்களை வென்றவனாக இருந்தாலும் -கர்ம யோகம் செய்ய வேன்டும் இதற்காக /

ந புத்திபேதம் ஜநயேதஜ்ஞாநாம் கர்மஸங்கிநாம்—ஜோஷயேத்ஸர்வகர்மாணி வித்வாந் யுக்த ஸமாசரந்৷৷3.26৷৷
கர்மம் தொடர்பு -அசக்தர்கள் -புத்தி பேதம் ஏற்படுத்தாமல் -ஞான யோகமும் வழியாக உண்டு என்று சொல்லி -நான் உனக்கு முன்பு சொல்லியது போலே
/அறிவுடன் செயல் பட வேன்டும் -கர்ம யோகம் சுலபம் பழகியது -ஆனந்தம் ஏற்படுத்தும் என்று செய்ய வைக்க வேன்டும் –
உலகம் ரஷிக்கும் பொருட்டு -கர்ம யோகம் இதுவரை -மேலே முக்குணம் வசப் பட்டு இருக்கும் தன்மை –

ப்ரகரிதே க்ரியமாணாநி குணை கர்மாணி ஸர்வஷ-அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே—৷৷3.27৷৷
முக்குணம் -காரணம் /அஹங்காரம் -அஹம் என்று அநஹம்-தேஹாத்ம பிரமம் -அபிமானம் அஹங்காரம் -/ அஹம் கர்த்தா -நானே செய்கிறேன்
என்று நினைக்கிறான் -முக்குணங்கள் தூண்ட செய்கிறோம் -என்ற எண்ணம் இல்லையே -ஸ்வபாவிகமாக ஆத்மா -செய்யமாட்டான் –

தத்த்வவித்து மஹாபாஹோ குணகர்மவிபாகயோ–குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே—-৷৷3.28৷৷
உண்மையாக அறிந்தவன் -குணம் கர்ம -காரண கார்யம் அறிந்தவன் -குணங்கள் அதன் அதன் கர்மாக்களில் வர்த்திக்க -கர்த்தா என்ற பற்று இல்லாமல்
வாழ்கிறான் -இத்தையே நாம் வளர்க்க வேன்டும் -கீதையை வழிமுறை படுத்த இது தானே உபாயம் /ரஜஸ் தமஸ் குணம் குறைத்து சத்வ குணம் வளர்க்க வேன்டும் –

ப்ரகரிதேர்குணஸம்மூடா ஸஜ்ஜந்தே குணகர்மஸு.–தாநகரித்ஸ்நவிதோ மந்தாந்கரித்ஸ்நவிந்ந விசாலயேத்—-৷৷3.29৷৷
குணங்களால் மறைக்கப் பட்ட அறிவு -/ ஆசை விடாமல் /இருக்க -அறிந்தவன் -ஞான யோகத்துக்கு -அதிகாரம் இல்லாதவர்களை -கர்ம யோகத்தில்
இருந்து நீக்க கூடாது -உயர்ந்தவன் தாழ்ந்தது பண்ணலாமா என்ற சங்கைக்கு பதில் –கர்ம யோகம் தாழ்ந்தது இல்லை -/

மயி ஸர்வாணி கர்மாணி ஸம் ந்யஸ்யாத்யாத்மசேதஸா.–நிராஷீர்நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர—৷৷3.30৷৷
தூண்ட ஞானம் வேன்டும் -முக்குணம் தூண்டுமோ -/சர்வேஸ்வரன் -நியமித்தால் தூண்டப படுகின்றன -/ என்னிடம் அனைத்தையும் சமர்ப்பித்து
-சர்வ அந்தர்யாமி வியாபகம் -மயி -ஹ்ருதய குஹைக்குள்/ சர்வ நியாந்தா தானே -என்ற எண்ணம் வேண்டுமே /
உயிரான ஸ்லோகம் –மூன்று வித தியாகமும் இதில் உண்டு –சந்யாசியா நான் கர்த்தா இல்லை /
நிராஸீ -ஆசைப்படாதே -பலமும் நமக்கு இல்லை -யாக எஜமான் போலே இல்லை -சொத்து அடைந்து ஸ்வாமி ஆனந்தம் படுவது போலே /
நிர்மமோ– மமதா தியாகம் -அடுத்து -/ ஜுரம் நீங்கி சண்டை போடு -மூன்று ஜுரங்களும்- இல்லாமல் -/சம்சார தோஷங்களையும் அறிந்து
ஆத்ம சாஷாத்கார இன்பமும் அறிந்து -விடாமல் கேட்டு -மனம் பழக்கி -/
ஸ்வதந்த்ர கர்த்தா அவன் பரதந்த்ர கர்த்ருத்வம் நமக்கு / மா மரம் தென்னை மரம் -ஒரே நீர் -ஒரே உரம் -விதை வேறே -போலே நம் கர்மா
-சேர்த்தே அறிந்து கொள்ள வேன்டும் -/பரதந்த்ர கர்த்ருத்வம் நமக்கு உண்டு -/ பலன் -கூடாது என்றது -ஆத்ம சாஷாத்காரம் உயர்ந்த பலனில் மட்டும் நோக்கு /
தியாகம் பண்ணும் கர்த்ருத்வம் உண்டோ என்றால் -நான் சாஸ்திரத்தில் சொன்னதால் செய் /

யே மே மதமிதம் நித்யமநுதிஷ்டந்தி மாநவா–ஷ்ரத்தாவந்தோநஸூயந்தோ முச்யந்தே தேபி கர்மபி—৷৷3.31৷৷
தே அபி -கர்ம யோகம் -நித்யம் பின் பற்றி -அனுஷ்டானம் -பண்ணுபவனை கொண்டாடி / ஸ்ரத்தை மட்டும் இருந்தாலும் -அடுத்து /அந ஸூ யை இல்லாமல் இருந்தாலும்
–இவர்களையும் கொண்டாடுகிறான் –மூன்று அதிகாரிகளை -/ பாவை நோன்பு அனுஷ்டித்த கோபிகள் / அநு காரம் செய்த ஆண்டாள் / அப்பியசிக்கும் நாம்
-மூன்று பேருக்கும் கிருஷ்ண அனுபவம் துல்யம்
நல் கன்றுக்கும் தோல் கன்றுக்கும் -பாலை சுரக்கும் -/ கர்ம யோகம் மேன்மை இத்தல அருளிச் செய்கிறான் -இல்லாமல் இருப்பவனை இகழ்கிறான் அடுத்ததில்

யே த்வேததப்யஸூயந்தோ நாநுதிஷ்டந்தி மே மதம்.—ஸர்வஜ்ஞாநவிமூடாம் ஸ்தாந்வித்தி நஷ்டாநசேதஸ—-৷৷3.32৷৷
அஸூயை உடன் இருந்து -கடைப்பிடிக்காமல் -ஸ்ரத்தை இல்லாமல் -இருந்தால் -விமூடர் -மனசே இல்லாமல் -அசத் பிராயர்கள்– இல்லாததும் சமம் –இருகால் மாடுகள் போலே

ஸதரிஷம் சேஷ்டதே ஸ்வஸ்யா ப்ரகரிதேர்ஜ்ஞாநவாநபி–ப்ரகரிதிம் யாந்தி பூதாநி நிக்ரஹ கிம் கரிஷ்யதி—৷৷3.33৷৷
மூன்று ஸ்லோகங்களால்-ஞான யோகம் கஷ்டம் -/ வைத்தியர் யாருக்கு எந்த மருந்து -அறிவான் /ஞான வான்களுக்கு கூட -ஆத்ம ஞானம் அறிந்தவர்கள்
-வாசனை -கர்மாவில் உழன்று -பிரகிருதி சம்பந்தம் போகாமல் -இருப்பதால் -/ வழக்கமான செயலை உடம்பு செய்யும் -இந்திரியங்கள் அங்கே பட்டி மேயும் –/
வாசனை அற்று போகாதே -பிரகிருதி வலையில் சிக்கி –/ சாஸ்திரம் விதி படி எளிதில் செய்யாமல் –முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணன் –
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழியில் உழல்வேன் -அக்ருத்ய கரணம் க்ருத்ய ரணம் -இரண்டையும் -/சாஸ்திரம் அப்ரத்யக்ஷம் / உடம்பு ப்ரத்யக்ஷம்
/பலனை நேராக பார்க்க முடியாதே –சுலபத்தில் நம்பிக்கை வராதே / இன்று தோன்றினது சரீரம் -என்றோ வந்தது சாஸ்திரம் —
அதனால் மாத்த முடியாதே -வாசனையின் பலம் என்றவாறு –

இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்தே ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ—தயோர்ந வஷமாகச்சேத்தௌ ஹ்யஸ்ய பரிபந்திநௌ—৷৷3.34৷৷
ராக த்வேஷம் கொடுத்து வாசனை சிரமப் படுத்தும் -/ கர்மேந்த்ரியங்கள் ஞான இந்திரியங்கள் -அதன் அதன் வியாபாரங்களில் -ஈடுபடுத்தி -/
வாசத்துக்கு போகாமல் -/ஞான யோகி போலே கஷ்டத்தில் விழாமல் -/ வெல்ல முடியாத எதிரிகள் -வாசனை ராக த்வேஷங்கள்/
அதனால் கர்ம யோகமே செய் -என்றவாறு

ஷ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்—ஸ்வதர்மே நிதநம் ஷ்ரேய பரதர்மோ பயாவஹ—-৷৷3.35৷৷
உயர்ந்தது –குறைவாக செய்யப் பட்ட கர்ம யோகம்–ஸ்வதர்மே/ நிறைவாக செய்யப் பட்ட ஞான யோகத்தை–பரதர்மோ- விட -/
வர்ணாஸ்ரம தர்மமே சாஸ்திரம் சொல்வதால் வேறு ஒருவர் தர்மம் செய்வதை சொல்லாதே -பரதர்மம் ஞான யோகம் மட்டுமே குறிக்கும் -/
அங்கி அங்கம் –உபாகர்மா -காண்ட ரிஷி தர்ப்பணம் -லஜ்ஜோபவீதம் -காமோகார்ஷி -ஸ்நானம் இவை அங்கங்கள் -குறைவானாலும் -என்றபடி /
ஞான யோகம் கர்ம யோகம் எதிர் பார்க்கும் -அதனால் தொடராதே –

அர்ஜுந உவாச-
அத கேந ப்ரயுக்தோயம் பாபம் சரதி பூருஷ–அநிச்சந்நபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜித—৷৷3.36৷৷
ஆசைப்பட்டவன் -ஞான யோகி -இந்திரியங்களை அடக்கி -எதனால் முடிக்க முடியாமல் உள்ளான் -/அத -இப்படியாலே /ப்ரயுக்த ஆரம்பித்த ஞான யோகி /
பாபகர்மாக்களை சேர்த்து கொண்டு -பிடிக்காமல் இருந்தும் -சூறாவழி காற்றால் தூக்கிப் போடும் படகு போலே – எது பிடித்து தள்ளுகிறது -கேட்க

ஸ்ரீ பகவாநுவாச-
காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுணஸமுத்பவ–மஹாஷநோ மஹாபாப்மா வித்த்யேநமிஹ வைரிணம்–৷৷3.37৷৷
காமம் -ஆசை படுத்தும் பாடு -காமம் க்ரோதம் தூண்டி விட -கிடைக்காத காரணத்தால் / காமம் ரஜஸ் குணத்தால் தூண்ட /
மஹா சனம் –அடி இல்லா குழி போலே -மூட முடியாத -ஆசை -தூராக் குழி தூர்த்து -எனை நாள் அகன்று இருப்பன் -/
மஹா பாப்மா -பாபங்களை செய்ய வைக்கும் க்ரோதம் -கோபம் வசப்பட்டு குருவையும் கொல்ல வைக்கும் /தாரை -லஷ்மணன் டம் -விசுவாமித்திரர் கோபம் –
காமாதி தோஷ ஹரம் -பராங்குச பாத பக்தன் -/ யயாதி சாபத்தால் முடி இழந்த யதுகுலம்–/வம்ச பூமிகளை உத்தரிக்க வல்ல அவதாரங்கள் /

தூமேநாவ்ரியதே வஹ்நிர்யதாதர்ஷோ மலேந ச.–யதோல்பேநாவரிதோ கர்பஸ்ததா தேநேதமாவரிதம்—৷৷3.38৷৷
ஆத்மாவை மறைக்கும் -நெருப்பு புகை யால்/ கண்ணாடி அழுக்கு மூடுவது போலே / கர்ப்பம் உல்பம் குடநீர் -மூன்று த்ருஷ்டாந்தம்
நெருப்பு புகை பிரியாதே -ஆத்மாவும் காம க்ரோதங்கள் /அழுக்கு தொடைக்க தொடைக்க மீண்டும் மூடுமே /கர்ப்பம் தானே உடைத்து வராதே -அனுக்ரஹம் கொண்டே –
காம க்ரோதம் பிரிய- பகவத் அனுக்ரஹம் வேண்டுமே -/

ஆவரிதம் ஜ்ஞாநமேதேந ஜ்ஞாநிநோ நித்யவைரிணா—காமரூபேண கௌந்தேய துஷ்பூரேணாநலேந ச—৷৷3.39৷৷
அடையவே முடியாத ஆசைகள் –நிறைவேறும் ஆசைகளில் போதும் என்ற எண்ணம் வராதே -ஆசை -நித்ய விரோதி நமக்கு
/ஞானம் மூடப்பட்டு -ஆத்மவிஷய ஞானம் -அறிய முடியாமல் –

இந்த்ரியாணி மநோ புத்திரஸ்யாதிஷ்டாநமுச்யதே.–ஏதைர்விமோஹயத்யேஷ ஜ்ஞாநமாவரித்ய தேஹிநம்—৷৷3.40৷৷
ஆத்மாவை மறைக்கிறது -ஆத்மஞானம் மறைத்து -கீழே சொல்லி -இதில் எதை வைத்து -மறைத்து -இந்திரியங்கள் -மனஸ் புத்தி மூன்றும் –
தன் வசப்படுத்தி கொண்டு -காமம் அதிஷ்டானம் இவை மூன்றும் -உறுதியான புத்தி / ஆசை பட்டு -அனுபவிக்கும் உபகரணங்கள் இந்திரியங்கள் /
ஸ்வ தந்தர்ய பிரமம் -தேஹாத்ம பிரமம் இரண்டையும் ஏற்படுத்தும் -சம்சாரத்தில் அழுத்தும்

தஸ்மாத்த்வமிந்த்ரியாண்யாதௌ நியம்ய பரதர்ஷப.—பாப்மாநம் ப்ரஜஹி ஹ்யேநம் ஜ்ஞாநவிஜ்ஞாநநாஷநம்—৷৷3.41৷৷
கர்ம யோகம் கொண்டு இவற்றை நியமிக்கும் முறை -சொல்கிறான் அடுத்து அடுத்து -/கர்ம யோகம் அதிகாரம் உள்ள நீ -த்வம் –
இந்திரியங்களை கர்ம யோகத்தில் செலுத்தி -ஞான யோகிக்கு வியாபாரம் இல்லையே -சிரமம் -/
ஸ்வரூப ஞானம் -ஆத்ம சேஷ பூதன்
விஞ்ஞானம் -விசேஷ ஞானம் / இரண்டையும் எதிர்க்கும் காம க்ரோதங்களை ஜெயிப்பாய் /கர்ம யோகத்தில் ஈடுபடுத்து –

இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேப்ய பரம் மந–மநஸஸ்து பரா புத்திர்யோ புத்தே பரதஸ்து ஸ—-৷৷3.42৷৷
இந்திரியம் -மனஸ் -பத்தி -காமம் -ஒன்றை விட ஓன்று பலம் மிக்கு -/ புத்தியை பிடித்துக் கொண்டு வசப்படுத்தி –
மனசை இழுத்து -இந்திரியங்களை தன் விஷயத்தில் செலுத்தும் -/
புத்தி உறுதி படுத்தி -காமத்தை பகவத் விஷயத்தில் வைத்தால் -மற்றை நம் காமங்கள் மாற்று -என்றபடி -அதுவே புத்தி மனஸ் இந்திரியங்களை வசப்படுத்தும் -/
இதுதான் கர்ம யோகத்துக்கு வழியாகும் -ஞான யோகம் நிவ்ருத்தி மார்க்கம் அன்றோ -/கண்ணனுக்கே ஆமது காமம் -/ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே /

ஏவம் புத்தே பரம் புத்த்வா ஸம் ஸ்தப்யாத்மாநமாத்மநா.–ஜஹி ஷத்ரும் மஹாபாஹோ காமரூபம் துராஸதம்—৷৷3.43৷৷
புத்தியை காட்டிலும் உயர்ந்த -கூடியதான -காமம் அறிந்து -புத்தியால் மனசை -மாற்றி -கர்ம யோகத்தில் செலுத்தி சத்ருவை ஜெயிப்பாய்
சத்ரு -ஏக வசனம் -காமம் க்ரோதம் -இரண்டும் ஒன்றே / தடக்கையன் -உள் சத்ரு -ஜெயிப்பது கஷ்டம் மஹா பாஹோ

————————————————-

கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் – -1–அர்ஜுனன் விஷாத யோகம் —

June 4, 2017

ஸ்ரீ பகவத் கீதை பாலை ஸ்ரீ கிருஷ்ணன் நமக்கு அளிக்கிறான் -உபநிஷத் பசு மாட்டு பாலை அர்ஜுனன் கன்றாக வியாஜ்யம்
-சர்வ உபநிஷத் காவ -கோபால நந்தன் இடைப்பிள்ளை -பார்த்தோ வத்ஸா —ஞானான் மோக்ஷம் -வேதாந்தம் –
ஸ்ருதி சாகரம் -கடைந்து– வேத வியாசர் -கிருஷ்ண த்வைபாயனர் –மதி மந்தானாம் -அறிவே மத்தை -மஹா பாரத சந்த்ரமா -சந்திரன் போலே –
புராணம்-ரத்னம் ஸ்ரீ விஷ்ணு புராணம் / -வேதம் -புருஷ ஸூ க்தம் / தர்ம சாஸ்திரம் மனு /-மகா பாரதம் -சாரம் கீதை -125000-/
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் -கண்ணனை பற்றி ஸ்ரீ கீதை கண்ணனே சொன்னது –
கீதா ஸூ கீதா கர்த்தவ்ய -கிம் அந்யயைகி சாஸ்திரம் -இதை அறிந்தால் வேற வேண்டாம் -ஸ்வயம் பத்ம நாபஸ்ய முக பத்மத் -திரு முகமே தாமரை
-சேயன் –மாயன் அன்று ஓதிய வாக்கு -நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞாலத்து ஒரு மூர்த்தி –
தத்வம் ஹிதம் புருஷார்த்தம் -மூன்றையும் விசதமாக்கி காட்டி அருளும் –
தத்வ த்ரயம் -ஒவ் ஒன்றை பிரதானம் -கொண்டு –தத்வ ஹித புருஷார்த்தம் -ஹரி நாராயண ஸ்ம்ருதி –
ஆலோக்ய சர்வ சாஸ்த்ராணி விசார புன புன –ஹரி ஒன்றே தத்வம் –
-60 திரு நக்ஷத்ரம் ஸ்ரீ கீதை 38—வருஷம் மாண்டு போக காந்தாரி சாபம் -100-வருஷம் இருந்து தன்னுடை சோதி -எழுந்து அருளினான் –

—————————————-

தரிதராஷ்ட்ர உவாச–
தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ–மாமகா பாண்டவாஷ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய—-৷৷1.1৷৷
த்ருதராஷ்ட்ரன் வாக்யத்துடன் தொடங்கி சஞ்சயன் வாக்யத்துடன் முடியும் -ஸ்ரீ கீதை –
என் பிள்ளைகள் –பாண்டு பிள்ளைகள் –கிம் அர்குவத -என்ன பண்ண -யார் வெல்ல போகிறார் -மனசில் வைத்து கேட்க்கிறான்-
அதார்மிகர்-தம் பிள்ளைகள் -க்ஷேத்ர சம்பந்தம் -நல்ல புத்தி வந்ததோ -ஆசை இருக்கலாமோ / க்ஷேத்ர மகிமையால்
தர்ம புத்திரர்கள் காண்டீபம் போட்டு விட்டு சண்டை போட்டு பெரும் ராஜ்யம் வேண்டாம் என்று பொய் விட்டார்களோ –
கிம் அகுர்வத -எனக்கு வேண்டியதாக என்ன பண்ணுகிறார்கள் -என்றபடி -மாமர -மமகாராம் தோற்ற பேசி -பாண்டவர் ஒதுக்கி வைத்து பேசி

ஸஞ்ஜய உவாச–
தரிஷ்ட்வா து பாண்டவாநீகம் வ்யூடம் துர்யோதநஸ்ததா.—ஆசார்யமுபஸங்கம்ய ராஜா வசநமப்ரவீத்—-৷৷1.2৷৷

பஷ்யைதாம் பாண்டுபுத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்.—வ்யூடாம் த்ருபதபுத்ரேண தவ ஷிஷ்யேண தீமதா—৷৷1.3৷৷
திருஷ்டத்யும்னன் -பாண்டவர் சேனாபதி -உம் சிஷ்யன் -குத்தி பேசி -/ பாண்டு புத்ரர்களுக்கு நீர் ஆச்சார்யர்

அத்ர ஷூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுநஸமா யுதி—யுயுதாநோ விராடஷ்ச த்ருபதஷ்ச மஹாரத—-৷৷1.4৷৷
சூரர்கள் -பெரிய வில்லாளிகள் பீமன் அர்ஜுனன் -மஹா ரதர்கள்

தரிஷ்டகேதுஷ்சேகிதாந காஷிராஜஷ்ச வீர்யவாந்—புருஜித்குந்திபோஜஷ்ச ஷைப்யஷ்ச நரபுங்கவ—-৷৷1.5৷৷

யுதாமந்யுஷ்ச விக்ராந்த உத்தமௌஜாஷ்ச வீர்யவாந்.—ஸௌபத்ரோ த்ரௌபதேயாஷ்ச ஸர்வ ஏவ மஹாரதா—৷৷1.6৷৷

அஸ்மாகம் து விஷிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம.-நாயகா மம ஸைந்யஸ்ய ஸம்ஜ்ஞார்தம் தாந்ப்ரவீமி தே—৷৷1.7৷৷
கணக்குக்காக சொல்கிறேன் -இரு பிறவி அந்தணர் –

பவாந்பீஷ்மஷ்ச கர்ணஷ்ச கரிபஷ்ச ஸமிதிஞ்ஜய–அஷ்வத்தாத்மா விகர்ணஷ்ச ஸௌமதத்திஸ்ததைவ ச—-৷৷1.8৷৷
முதலில் நீர் -துரோணாச்சார்யரை சொல்லி –

அந்யே ச பஹவம் ஷூரா மதர்தே த்யக்தஜீவிதா–நாநாஷஸ்த்ரப்ரஹரணா ஸர்வே யுத்தவிஷாரதா—৷৷1.9৷৷
எனக்கு உயிர் கொடுக்க கூடியவர்கள் -யுத்த நீதி அறிந்தவர்கள் –

அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம்–பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம்—৷৷1.10৷৷
நம்முடைய சேனை அளவில் அடங்காத –பீஷ்மரால் -அங்கு சின்னது பீமனால் –அச்சம் தோன்ற பேசுகிறான் –
மேலே அச்சம் போக்க சங்க நாதம் பீஷ்மர் வருவதால் -பீஷ்மர் -பீமன் ப்ரதிஞ்ஜை அறிவான்-அபரியாப்தம் -போதாது –அவர்கள் சைன்யம் போதும் என்றவாறு

அயநேஷு ச ஸர்வேஷு யதாபாகமவஸ்திதா–பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்த ஸர்வ ஏவ ஹி—৷৷1.11৷৷
பீஷ்மரை ரஷித்தால் நாம் வாழலாம் -என்கிறான் -திருவடி இருந்தால் நாம் வாழலாம் ஜடாயு கேட்டது போலே –

தஸ்ய ஸஞ்ஜநயந்ஹர்ஷம் குருவரித்த பிதாமஹ–ஸிம்ஹ நாதம் விநத்யோச்சை ஷங்கம் தத்மௌ ப்ரதாபவாந்—৷৷1.12৷৷
ஆனந்தம் கொடுக்க -ஸிம்ஹ நாதம் பீஷ்மர் /

தத ஷங்காஷ்ச பேர்யஷ்ச பணவாநககோமுகா–ஸஹஸைவாப்யஹந்யந்த ஸ ஷப்தஸ்துமுலோபவத்—৷৷1.13৷৷
சங்க பேரீ பணவா கோமுகம் — வாத்ய சப்தங்கள் ஆகாசம் வரை

தத ஷ்வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்தநே ஸ்திதௌ—மாதவம் பாண்டவஷ்சைவ திவ்யௌ ஷங்கௌ ப்ரதத்மது—-৷৷1.14৷৷
வெள்ளை குதிரை -திவ்ய சங்கம் -அடியைத் தொடர்ந்து எழும் ஐவர் கட்க்காய் -அன்று பாரதப் போர் முடியப் -பரி நெடும் தேர் விடும் கோன் –இராமா -51-

பாஞ்சஜந்யம் ஹரிஷீகேஷோ தேவதத்தம் தனஞ்சய — பௌண்ட்ரம் தத்மௌ மஹாஷங்கம் பீமகர்மா வரிகோதர—৷৷1.15৷৷
பாஞ்சஜன்யம் –இந்திரியங்களை அடக்கிய கண்ணனது- /தனஞ்சனது -தேவதத்தன் -/வரிகோதர-என்று பீமனுக்கு -அவனது -பௌண்ட்ரம்-

அநந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர—.நகுல ஸஹதேவஷ்ச ஸுகோஷமணிபுஷ்பகௌ—৷৷1.16৷৷
அனந்த விஜயம் -தர்மன் /நகுல சகாதேவன் -ஸுகோஷமணிபுஷ்பகௌ-

காஷ்யஷ்ச பரமேஷ்வாஸ ஷிகண்டீ ச மஹாரத–தரிஷ்டத்யும்நோ விராடஷ்ச ஸாத்யகிஷ்சாபராஜித—৷৷1.17৷৷

த்ருபதோ த்ரௌபதேயாஷ்ச ஸர்வஷ பரிதிவீபதே.—ஸௌபத்ரஷ்ச மஹாபாஹு ஷங்காந்தத்மு பரிதக்பரிதக்—৷৷1.18৷৷

ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம் ஹரிதயாநி வ்யதாரயத்.–நபஷ்ச பரிதிவீம் சைவ துமுலோ வ்யநுநாதயந்—৷৷1.19৷৷
மனசை உளுக்கும் படி -சஞ்சயன் முதல் பதில் -மறைத்து -மேலே மீண்டும் சொல்லுவான் –

அத வ்யவஸ்திதாந் தரிஷ்ட்வா தார்தராஷ்ட்ராந்கபித்வஜ–ப்ரவரித்தே ஷஸ்த்ரஸம் பாதே தநுருத்யம்ய பாண்டவ—৷৷1.20৷৷
கபி- திருவடி கொடி –

அர்ஜுந உவாச–
ஹரிஷீகேஷம் ததா வாக்யமிதமாஹ மஹீபதே—ஸேநயோருபயோர்மத்யே ரதம் ஸ்தாபய மேச்யுத—৷৷1.21৷৷
ராஜாவே -அடியார் -தோள் கண்டார் தோளே காணும் படி -பும்ஸாம் சித்த திருஷ்ட்டி அபகாரம் -இரண்டாவது பதில் இதில் –
கண்ணன் இவன் சொல்வதை செய்கிறான் -யார் ஜெயிப்பார் சொல்லவும் வேண்டுமோ

யாவதேதாந்நிரீக்ஷேஹம் யோத்துகாமாநவஸ்திதாந்.—கைர்மயா ஸஹ யோத்தவ்யமஸ்மிந்ரணஸமுத்யமே—-৷৷1.22৷৷
கண் பார்க்க கட வேன்

யோத்ஸ்யமாநாநவேக்ஷேஹம் ய ஏதேத்ர ஸமாகதா–தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்யுத்தே ப்ரியசிகீர்ஷவ —৷৷1.23৷৷
துர் புத்தி உள்ளவர்கள் -தர்ம க்ஷேத்ரம் இங்கு அன்றோ நிற்கிறார்கள்

ஸஞ்ஜய உவாச
ஏவமுக்தோ ஹரிஷீகேஷோ குடாகேஷேந பாரத.—ஸேநயோருபயோர்மத்யே ஸ்தாபயித்வா ரதோத்தமம் —৷৷1.24৷৷
குடாகேசன் -அர்ஜுனன் —ஆஸ்ரித வாத்சல்ய விவஸ்திதம் -தேரோட்டியாக அமைத்து -கூடாரை வெல்லும் சேர் –
கூடுவாருக்கு தோற்பான் -கட்டுண்ணப் பண்ணும் பெரு மாயன்

பீஷ்மத்ரோணப்ரமுகத ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம்.—உவாச பார்த பஷ்யைதாந்ஸமவேதாந்குரூநிதி—৷৷1.25৷৷
பீஷ்மர் த்ரோணாராதி முன்னால் வேன்டும் என்னும் என்று நிறுத்துகிறான் —

தத்ரா பஸ்யத் ஸ்திதாந் பார்த பிதரிநத பிதாமஹாந்.–ஆசார்யாந்– மாதுலாந்ப்ராதரிந்–புத்ராந்பௌத்ராந்ஸகீஂ ஸ்ததா—৷৷1.26৷৷
பிதாமகன் -ஆச்சார்யர் -மாமா -கூட பிறந்தவர் பிள்ளைகள் நண்பர்கள் நிற்க –

ஷ்வஷுராந்ஸுஹரிதஷ்சைவ ஸேநயோருபயோரபி.–தாந்ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய–ஸர்வாந்பந்தூநவஸ்திதாந்–৷৷1.27৷৷
எங்கும் பந்துக்கள் -ஸூஹ்ருத்துக்கள் –

அர்ஜுந உவாச-
கரிபயா பரயாவிஷ்டோ விஷீதந்நிதமப்ரவீத்.–தரிஷ்ட்வேமம் ஸ்வஜநம் கரிஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்திதம்—৷৷1.28৷৷
கருணையால் பீடிக்கப் பட்டு கண்ண நீர் -பூமிக்கு ஆனந்தம் செல்வம் கொடுப்பவன் கிருஷ்ண -சப்த பிரயோகம் இங்கு-

ஸீதந்தி மம காத்ராணி முகம் ச பரிஷுஷ்யதி.–வேபதுஷ்ச ஷரீரே மே ரோமஹர்ஷஷ்ச ஜாயதே—৷৷1.29৷৷
அங்கம் மெலிந்து -முகம் உலர்ந்து -சரீரம் நடுங்கி மயிர் கூச்சு எரிந்து –

காண்டீவம் ஸ்ரம் ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரிதஹ்யதே—ந ச ஷக்நோம்யவஸ்தாதும் ப்ரமதீவ ச மே மந—৷৷1.30৷৷
காண்டீபம் நழுவ –

நிமித்தாநி ச பஷ்யாமி விபரீதாநி கேஷவ.—ந ச ஷ்ரேயோநுபஷ்யாமி ஹத்வா ஸ்வஜநமாஹவே —৷৷1.31৷৷
துர் நிமித்தங்கள்- கேசவ சப்தம் இங்கு -ப்ரஹ்மாதிகளுக்கும் நியாந்தா —

ந காங்க்ஷே விஜயம் கரிஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச.–கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர்ஜீவிதேந வா—৷৷1.32৷৷
விஜயம் -ராஜ்யம் சுகம் வேண்டாம் /கோவிந்த -சப்தம் -கன்றுகளுக்கு ரக்ஷகனாய் இருந்து வைத்து -பந்துக்களுக்கு தீமை செய்ய தூண்டவோ

யேஷாமர்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகா ஸுகாநி ச–.த இமேவஸ்திதா யுத்தே ப்ராணாம் ஸ்த்யக்த்வா தநாநி ச—৷৷1.33৷৷
கைங்கர்யம் பண்ண வேண்டியவர்கள் அங்கே இருக்க –

ஆசார்யா பிதர புத்ராஸ்ததைவ ச பிதாமஹா–மாதுலா ஷ்சஷுரா பௌத்ரா ஷ்யாலா ஸம்பந்திநஸ்ததா—৷৷1.34৷৷

ஏதாந்ந ஹந்துமிச்சாமி க்நதோபி மதுஸூதந.–அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ கிம் நு மஹீகரிதே–৷৷1.35৷৷
கொல்வதற்கு ஆசை இல்லை -இவர்கள் கொல்ல வந்தாலும் -மது சூதன சப்தம் இங்கு -மூன்று உலகும் கொடுத்தாலும் வேண்டாம் –

நிஹத்ய தார்தராஷ்ட்ராந்ந கா ப்ரீதி ஸ்யாஜ்ஜநார்தந–பாபமேவாஷ்ரயேதஸ்மாந்ஹத்வைதாநாததாயிந—৷৷1.36৷৷
என்ன ப்ரீதி கிட்டும் இவர்களை கொன்று – -ஜனார்த்தன -நல்லதே செய்பவன் அன்றோ –

தஸ்மாந்நார்ஹா வயம் ஹந்தும் -தார்தராஷ்ட்ராந்ஸ்வபாந்தவாந்.–ஸ்வஜநம் ஹி கதம் ஹத்வா ஸுகிந ஸ்யாம மாதவ—৷৷1.37৷৷
மாதவ -ஸ்ரீ யாபதியாய் இருந்து வைத்து -அமங்களம் செய்ய தூண்டுவதோ –

யத்யப்யேதே ந பஷ்யந்தி லோபோபஹதசேதஸ–குலக்ஷயகரிதம் தோஷம் மித்ரத்ரோஹே ச பாதகம்—-৷৷1.38৷৷
குலம் அழியும் -தோஷம் கிட்டும் -மித்ரா துரோகம் -அவர்கள் பார்க்க வில்லை -லோபம் பேராசையால் –

கதம் ந ஜ்ஞேயமஸ்மாபி பாபாதஸ்மாந்நிவர்திதும்–குலக்ஷயகரிதம் தோஷம் ப்ரபஷ்யத்பிர்ஜநார்தந—৷৷1.39৷৷
குல நாசம் நாங்கள் செய்ய மாட்டோம் -பாபம் போக்க தானே கார்யம் செய்ய வேன்டும்-

குலக்ஷயே ப்ரணஷ்யந்தி குலதர்மா ஸநாதநா–தர்மே நஷ்டே குலம் கரித்ஸ்நமதர்மோபிபவத்யுத—৷৷1.40৷৷
சனாதன தர்மம் மாண்டு போகும் -அதர்மம் சூழ்ந்து விடும் –

அதர்மாபிபவாத்கரிஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய–ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர—৷৷1.41৷৷
ஸ்த்ரீகள் -கெட்டால் -வர்ணாஸ்ரமம் தர்மம் போகும் –

ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய ச.–பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதகக்ரியா—৷৷1.42৷৷
நரகம் நிச்சயம் -பித்ருக்கள் -பிண்ட பிரதானம் செய்ய முடியாமல் தலை குப்புற விழும் படி ஆகும்

தோஷைரேதை குலக்நாநாம் வர்ணஸங்கரகாரகை-உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா குலதர்மாஷ்ச ஷாஷ்வதா—৷৷1.43৷৷
ஜாதி தர்மம் குல தர்மம் சனாதன தர்மம் கெட்டு-

உத்ஸந்நகுலதர்மாணாம் மநுஷ்யாணாம் ஜநார்தந-நரகேநியதம் வாஸோ பவதீத்யநுஷுஷ்ரும—৷৷1.44৷৷
நரக வாஸம் நிச்சயம் –

அஹோ பத மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம்–யத்ராஜ்யஸுகலோபேந ஹந்தும் ஸ்வஜநமுத்யதா—৷৷1.45৷৷
அநியாயம் -பெரிய பாபம் செய்ய அன்றோ -ராஜ்யம் சுகம் பேராசையால் வந்தோம் –

யதி மாமப்ரதீகாரமஷஸ்த்ரம் ஷஸ்த்ரபாணய–தார்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ்தந்மே க்ஷேமதரம் பவேத்–৷৷1.46৷৷
நான் சண்டை போடாமல் -ஓடினாலும் -என்னை கொன்றாலும் நல்லதே

ஸஞ்ஜய உவாச–
ஏவமுக்த்வார்ஜுந ஸம்க்யே ரதோபஸ்த உபாவிஷ–.விஸரிஜ்ய ஸஷரம் சாபம் ஷோகஸம் விக்நமாநஸ—৷৷1.47৷৷
ரதம் நடுவில் அமர்ந்து அழ -வில் கீழே விழ -சோகம் பீடித்து -நீர் தளும்ப -சோகம் பட்டு நிற்கிறான் –

—————————————————-

கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -10–விபூதி அத்யாயம் —

May 29, 2017

ஸ்வ கல்யாண குண அனந்த்ய க்ருத்ஸ்ன ஸ்வா தீன தாமதி
பக்த்யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா விஸ்தீர்ணா தஸமோதிதா—ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–14-

ஸ்வ கல்யாண குண அனந்த்ய க்ருத்ஸ்ன ஸ்வா தீன தாமதி -கல்யாண குணங்கள் நியமன சக்தி விபூதிகள் அனைத்தையும் அறிந்து
பக்த்யுத்பத்தி –ப்ரீதி உடன் பக்தி செய்ய உபக்ரமித்து
விவ்ருத்த்யர்த்தா –அத்தை வளர்ப்பதற்காக
விஸ்தீர்ணா தஸமோதிதா-விவரித்து அருளிச் செய்கிறான்
கேட்க கேட்க பக்தி பிறக்கும் -பிறந்த பக்தி வளரும் –

———————————————————–

ஸ்ரீ பகவாநுவாச-
பூய ஏவ மஹாபாஹோ ஸ்ருணு மே பரமம் வச–யத்தேஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹிதகாம்யயா —- ৷৷10.1৷৷
பிரிய ஹித வசனம் -கவனமாக கேள் -தடக்கை படைத்தவனே -உனக்காக நான் சொல்லப் போகிறேன் -உன்னை பார்த்தால் பிரியமாக இருப்பதாக தெரிகிறதே –
சொல்லும் பொழுது தடுக்காமல் இருக்கிறாயே -தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் ஆழ்வாருக்கும் ஆழ்வார் அடி பணிந்தார்க்கும் இவை உள்ளது
-வள்ளல் பெரும் பசுக்கள் -முலைக் கடுப்பாலே பீச்சுமா போலே -ஈனச் சொல் ஆயினுமாக — ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே –

ந மே விது ஸுரகணா ப்ரபவம் ந மஹர்ஷய–அஹமாதிர்ஹி தேவாநாம்ம ஹர்ஷீணாம் ச ஸர்வஷ–৷৷10.2৷৷
சொல்லப் போகிற விஷயம் சாமான்யம் இல்லை -தனக்கும் தன் தன்மை அறிவரியன்–எல்லா வகைகளிலும் நானே ஜகத் காரணம்
–பாப புண்யங்களுக்கு தக்க ஞான சங்கோசங்கள் உண்டே -கர்மா தொலைக்க என்னிடம் வரலாம் -கிருபையால் போக்கி அருளி ஞானம் அருளுகிறேன் –
ப்ரஹ்மாதி தேவர்களும் -முனிவர்களும் -அறியலாகா -திரு நாமங்கள் -சேஷ்டிதங்கள் -கல்யாண குணங்கள் -/அபரிச்சேத்யன் —
தன் பக்தனுக்கு தானே காட்டி- அறியாதது அறிவிக்கும் அத்தன் –

யோ மாமஜமநாதிம் ச வேத்தி லோகமஹேஷ்வரம்—அஸம்மூட ஸ மர்த்யேஷு ஸர்வபாபை ப்ரமுச்யதே–৷৷10.3৷৷
பக்தி பிறக்க பாபங்கள் போக வேண்டுமே -இதையே -2-/-3- ஸ்லோகங்களில் சொல்லி மேலே பக்தி வளர்ப்பதை பற்றி சொல்கிறான்
அஜன் -பிறப்பிலி -அன்றோ-அநாதி -இன்று மட்டும் இல்லை என்றுமே – இச்சையால் பல் பிறவி பெருமான் –சத்யம் ஞானம் அனந்தம் –
-கர்ம பாவனை ப்ரஹ்மம் பாவனை உபய பாவனை -மூன்றுமே உண்டே –
இவனோ அகில் ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாண ஏக குணான்தமகன் /இதை யாதாத்மா பாவமாக அறிந்து உபாசிப்பவன் இவனை அடைகிறான் –
பிறப்பிலி முன்பே அருளிச் செய்தான் -இங்கு விகாரங்கள் இல்லை -என்கிறான் -நித்ய நிர்விகார தத்வம் அன்றோ அசித் போலே ஸ்வரூப விகாரங்கள் இல்லை
ஆத்மா போலே ஸ்வ பாவ விகாரங்கள் / முக்தனும் காதாசித்க விகாரம் உண்டே -அவிகாராய –சதைக ரூப ரூபாய -நித்யன் அன்றோ

புத்திர்ஜ்ஞாநமஸம் மோஹ க்ஷமா ஸத்யம் தம ஷம –ஸுகம் துக்கம் பவோபாவோ பயம் சாபயமேவ ச—-৷৷10.4৷৷
சம்சயம் விபர்யயம் -மருள் அற்று -புலன்களை பட்டி மேயாத படி நியமித்து -ஸூகம் துக்கம் அற்று -இவையே -அனுகூல விஷய ஞானம் -பிரதிகூல விஷய ஞானம்
பயம் -அபயம் -புகழ் பழிப்பு -இவை எல்லாமே மானஸ வியாபாரங்கள் -சங்கல்பம் ஒன்றாலே அனைத்தையும் நியமித்து அருளுகிறார் –
பிரவ்ருத்திகள் நிவ்ருத்திகள் எல்லாம் அவன் அதீனம் என்று அறிந்தால் பக்தி வளரும் –
புத்தி -ஆராயும் திறன் -விவேக ஞானம் / ஞானம் தத்வ விஷய அறிவு -ஆராய்ந்து முடிவு பெற்ற ஞானம் /
ஷாமா -பொறுமை -கோபம் தூண்டும் விஷயங்கள் இருந்தாலும் பொறுமை வேண்டுமே – சத்யம் பூத ஹிதம் /

அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ்தபோ தாநம் யஷோயஷ—பவந்தி பாவா பூதாநாம் மத்த ஏவ பரிதக்விதா—–৷৷10.5৷৷
சமதா -ஒன்றாக நினைப்பது -நமக்கு வந்தால் போலே பிறருக்கு வந்தால் சுக துக்கம் படுவது என்பது இல்லை –
ஒன்றை தொலைக்கவே முடியாதே -நஷ்டம் வரும் பொழுதும் வருத்தப் படாமல் சுகம் வந்தாலும் இன்பப் படாமல் -இவை நமக்கும் பிறருக்கும் -என்றபடி –
இப்படி இருப்பதே சமதா –
துஷ்டி-ஸந்தோஷம் / தபஸ் / தனம் யசஸ் / அயசஸ் -ஜீவ ராசிகளுக்கு இவன் சங்கல்பத்தாலே ஏற்படும் -புரியும் பொழுதே பக்தி விதைக்கப் பட்டதாகும் –
நின்றனர் இருந்தனர் –நின்றிலர் இருந்திலர் இத்யாதி

மஹர்ஷய ஸப்த பூர்வே சத்வாரோ மநவஸ்ததா.—மத்பாவா மாநஸா ஜாதா யேஷாம் லோக இமா ப்ரஜா—-৷৷10.6৷৷
சப்த ரிஷிகள்-மரீசி வசிஷ்டர் -பிருகு போல்வார் –சனக சனகாதிகள் -மானஸ புத்திரர்கள்-சாவர்ண மனு நால்வர் -தக்ஷ பிரஜாபதிகள்
இந்த மனுக்கள் இடம் லோகம் உண்டானதே -மானஸ நியமனம் -ப்ரஹ்ம நிஷ்டையிலே -இவன் சங்கல்பத்தாலே தானே –

ஏதாம் விபூதிம் யோகம் ச மம யோ வேத்தி தத்த்வத–ஸோவிகம்பேந யோகேந யுஜ்யதே நாத்ர ஸம்ஷய—৷৷10.7৷৷
விபூதி -ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் அனைத்தும் அவன் அதீனம் –யாதாம்யா ஞானம் கொண்டு பக்தி உபாசனம் செய்பவர் –
அவனை சங்கை இல்லாமல் நிச்சயமாக அடைகிறார்கள் –
யோகம் கல்யாண குண யோகம் -செங்கோல் உடைய திருவரங்க செல்வன் -அறிபவனுக்கு அசைக்க முடியாத பக்தி யோகம் உண்டாக்கும்

அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த ஸர்வம் ப்ரவர்ததே.–இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவஸமந்விதா—–৷৷10.8৷৷
அகில காரணன் -ஸ்வபாமிக கல்யாண ஏக குணாத்மிகன்-நித்ய நிரவதிக காருண்யன் -என்பதை அறிந்து -அநந்ய -பாவம் – கொள்ள வேன்டும் –
இவன் இடம் உத்பத்தி -பிரவ்ருத்தி இவன் அதீனம் -என்று அறிந்து -என்னை உண்மையாக அறிந்து -ப்ரீதி உடன் பக்தி செய்பவர்கள்

மச்சித்தா மத்கதப்ராணா போதயந்த பரஸ்பரம்.–கதயந்தஷ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச৷৷10.9৷৷
என்னையே சிந்தனம் -பிராணன் போலே -பிரிந்தால் தரிக்க மாட்டார்களே -பரஸ்பரம் திவ்ய குண சேஷ்டிதங்களை பேசி —
பேசும் கேட்க்கும் இரண்டு வர்க்க ஹர்ஷங்கள்-பெற்று இருப்பார்கள் -உன் செய்கை என்னை நைவிக்கும் -அது இது உது எல்லாம் —
பிராணனை அவன் இடம் -தாரகம் என்று உணர்ந்து -/ மனஸ் நெஞ்சு அவன் இடம் முழுவதும் –சென்னிக்கு அணியும் சேறு -அடியார் -ஆஹ்லாத சீத நேத்ராம்பு –
மச்சித்தா முதல்-10 பாசுரம் திரு நெடும் தாண்டகம் / மத்கதப்ராணா-அடுத்த பத்தும் -/போதயந்த பரஸ்பரம்-இறுதி பத்தும் –
கொடுக்க- கொள்ள- குறையாத அவன் குணங்கள் -ஞானம் மட்டும் பகிர்ந்து கொண்டால் பெருகும் குறையாது –
வைக்கும் சிந்தையிலும் பெரிதோ நீ அளிக்கும் வைகுந்தம் –

தேஷாம் ஸததயுக்தாநாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம்.–ததாமி புத்தியோகம் தம் யேந மாமுபயாந்தி தே—-৷৷10.10৷৷
நித்யமாகவே பிரியாமல் கைங்கர்யம் செய்யும் மநோ ரதங்களை கொண்டு இருப்பார்க்கு புத்தி யோகம் அருளி -தன்னிடம் சேர்ப்பித்துக் கொள்கிறான் –
ஸ்வயம் பிரயோஜனம் -ப்ரீதி உடன் பக்தி -புத்தி யோகம் கொடுக்கிறேன் -எதனால் என்னை அடைகிறார்களோ அந்த புத்தி
கீழே பர பக்தி -இங்கு பர ஞானம் -அடுத்த நிலை -பர பக்தி அனுஷ்டித்தவனுக்கு பர ஞானம் -சாஷாத்காரம் போலே மனசுக்கு தோற்றி அருளுகிறேன் –
ஞானம் -தரிசன -பிராப்தி அவஸ்தைகள் –பர பக்தி பர ஞானம் -பரம பக்திகள்- –

தேஷா மேவாநுகம்பார்த மஹமஜ்ஞாநஜம் தம–நாஷயாம் யாத்மபாவஸ்தோ ஜ்ஞாநதீபேந பாஸ்வதா৷৷10.11৷৷
அநந்ய பக்தர்கள் மேல் பக்ஷ பாதமாக -கர்ம அனுகுணமாக வரும் –மயர்வுகளை அறுத்து மதி நலம் அருளி -தன்னுடைய அசாதாரண கல்யாண குணங்களை
பிரகாசித்து அருளுகிறார் –பகவத் பக்தி ஞானம் ஒளி கொண்டு இருளை போக்கி அருளுகிறார் -கருணையால் –
அஞ்ஞானத்தால் பிறந்த தமஸ் இருட்டை போக்கி அருளுகிறேன் -ஹிருதய கமலத்தில் சேவை சாதித்து கொண்டு போக்கடிக்கிறேன் –
பரம பக்தி தானே மோக்ஷம் கொடுக்கும் -பர ஞானம் கொண்டு என்னை அடைகிறான் என்கிறான் என்னில்
தானே பரம பக்திக்கு கூட்டிச் செல்கிறான் என்றபடி -அப்படிப்பட்ட பக்தர்கள் ஏற்றம் அறிய அர்ஜுனன் ஆவலாக இருந்தான் –

அர்ஜுந உவாச
பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவாந்.–புருஷம் சாஸ்வதம் திவ்யமாதிதேவமஜம் விபும் —৷৷10.12৷৷
இது முதல் 10-18-வரை -தனது ஆதரவை ஆவலை சொல்கிறான் -15-வரை-நீ சொன்னதை நம்புகிறேன் -பிரதிஞ்ஜை -மேல் பிரார்த்தனை மேலும் சொல்ல –
ஸ்தோத்ரம் இது -பரமமான ப்ரஹ்மம் -தான் பெரியதாய் -தன்னைப் போலே பெரியதாகும் –யதோ வா -இத்யாதி –
பரமமான ஜோதிஸும் நீயே -பரம் தாமம் -ஏக தேசமே சூர்யா சந்திரர்கள் -அக்னி பற்றி கேட்க வேண்டுமோ / மங்களம் ஆக்குபவன்-
பன்னலார் பயிலும் பரனே பவித்ரனே –பாபங்களை போக்கி பக்தி ஆரம்ப விரோதிகளை போக்கி -பக்தி யோகம் பிறக்கும் —
பூர்வாகம் உத்தராகம் -தீயினில் தூசாகி -தாமரை இலை தண்ணீர் போலே விலக்கி -அஸ்லேஷா விநாஸவ் -/மாரீசன் சுபாஹு -ஒருவனை கொன்று ஒருவனை விலக்கி-
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே –புருஷோத்தமன் -சாஸ்வதம் -தெய்வீகம் -பிறப்பிலி அஜன் -விபு நீக்கமற நிறைந்து —

ஆஹுஸ்த்வாமரிஷய ஸர்வே தேவர்ஷிர்நாரதஸ்ததா.—அஸிதோ தேவலோ வ்யாஸ ஸ்வயம் சைவ ப்ரவீஷி மே—–৷৷10.13৷৷
நான் மட்டும் இல்லை பெரிய ரிஷிகள் ஞானிகளும் இப்படியே சொல்வார்களே -அடியார்கள் பேசினால் தான் உலகம் அறியும் –
ஸ்வயம் நீ சொன்ன இந்த விஷயத்தையே ரிஷிகளும் ஒத்துக்க கொண்டார்கள் –
ஸ்ருதிகள் உன்னையே பரம் ப்ரஹ்மம் -பரம் ஜோதி -பரமாத்மா-பரம் தாமம் -பரம ப்ராப்யம் -உன்னை அறிய முடியாது என்று அறிந்தவர்களே உன்னை அடைகிறார்கள் –
அவர்கள் உடைய பிரதிபந்தகங்களை நோக்கி -போய பிழையும் புகு தருவான் நின்றனவும் -தாமரை இலை தண்ணீர் போலே ஒட்டாமலும் -தீயினில் தூசாக்கியும் செய்து அருளி –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பரியங்க உத்ஸ்ருஜ்ய ஆகதோ மதுரா புரீம் –கிருஷ்ணன் தர்மம் ஸநாதனம் -ராமோ விக்ரகவான் தர்ம -கோவிந்த பட்டாபிஷேகம் –
சுருதி ஸ்ம்ருதிகள் கிருஷ்ணனே சர்வ ஷ்ரஷ்டா-சர்வ ரக்ஷகன் -நம் கண்ணன் அல்லது கண் அல்லவே –

ஸர்வமேததரிதம் மந்யே யந்மாஂ வதஸி கேஷவ.–ந ஹி தே பகவந் வ்யக்தம் விதுர்தேவா ந தாநவா—৷৷10.14৷৷
சுருதி ஸ்ம்ருதிகள் உன்னை சொல்வது எல்லாம் அர்த்தவாதம் இல்லை -உண்மையாகவே -அசாதாரண -நிரவதிக -அசங்க்யேய -ஸ்வபாவிக
-சர்வஞ்ஞன் சர்வசக்தன் -வீர தீர பராக்ரமன் -பரம் ஜ்யோதிஸ் -கிலேசம் போக்க வல்லவன் நீயே -சிஷ்யன் -தர்மம் அறியாத மூடனாக இருக்கிறேன்
தீனனாக மன்றாடினேன் -அருளிச் செய்தாய் -பகவன் -ஞான சக்தி –இத்யாதி குணங்கள் / தேவர்கள் தானவர்கள் உன்னை பற்றி பேச அர்ஹதை அற்றவர்கள்

ஸ்வயமேவாத்மநாத்மாநம் வேத்த த்வம் புருஷோத்தம.—பூதபாவந பூதேஷ தேவதேவ ஜகத்பதே—–৷৷10.15৷৷
சர்வஞ்ஞன்–சர்வசக்தன் –மனிசர்க்கு தேவர் போலே தேவர்களுக்கும் தேவன் -ஸர்வேச்வரேச்வரன் -புருஷோத்தமன் -சர்வ சேஷி -தம் ஈஸ்வரானாம் பரமம் மஹேஸ்வரம்
உன் ஞானத்தால் உம்மை அறிந்து உள்ளீர் -நம் இந்திரியங்கள் பரிமிதம் -அறிய முடியாதே -நீ அருளிச் செய்ய அறிவோம் -புருஷோத்தமன் –
அபுருஷன் அசித் புருஷன் பத்தாத்மா -உத் புருஷன் முக்தர் –உத்தர புருஷன் நித்யர் –மேம் பட்ட புருஷோத்தமன் நீ -ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் –
பூத பாவன -எல்லாம் அவன் இடம் உண்டாகும் -/ பூதேஸ -நியமிக்கிறார் தனது வசத்தில் வைத்து /தனது ஆதரவை வெளியிட்டான் இது வரை –

வக்துமர்ஹஸ்யஷேஷேண திவ்யா ஹ்யாத்மவிபூதய–.யாபிர்விபூதிபிர்லோகாநிமாம் ஸ்தவம் வ்யாப்ய திஷ்டஸி——৷৷10.16৷৷
திவ்யம் -அப்ராக்ருதம் -காட்டவே காணும் படி -விபு -நீயே அருளி அறிய வேன்டும் -விபூதிகளின் பெருமையை சொல்லி முடிக்க முடியாதே –
உள்ளும் புறமும் வியாபித்து நியமித்து -பிரவ்ருத்திகள் நிவ்ருத்திகள் ஸ்திதி அனைத்தும் உன் அதீனம் –

கதம் வித்யாமஹம் யோகிம் ஸ்த்வாம் ஸதா பரிசிந்தயந்.—கேஷு கேஷு ச பாவேஷு சிந்த்யோஸி பகவந்மயா—-৷৷10.17৷৷
அபரிச்சின்னமான உன்னை பக்தி யோக நிஷ்டர் பரிச்சின்ன ஞானம் கொண்டு எவ்வாறு தியானிக்க -நீயே நியமித்து அருளுபவர்களாக இருக்க –

விஸ்தரேணாத்மநோ யோகம் விபூதிம் ச ஜநார்தந.—பூய கதய தரிப்திர்ஹி ஷ்ரரிண்வதோ நாஸ்தி மேமரிதம்—–৷৷10.18৷৷
உன் மகிமையையும் விபூதிகளின் மஹாத்ம்யத்தையும் விஸ்தாரமாக அருளிச் செய்ய வேன்டும் -அத்தை கேட்ட்க அபிநிவேசம் மிக்கு உள்ளேன் –

ஸ்ரீ பகவாநுவாச
ஹந்த தே கதயிஷ்யாமி திவ்யா ஹ்யாத்மவிபூதய–ப்ராதாந்யத குருஷ்ரேஷ்ட நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே—–৷৷10.19৷৷
ப்ராதான்யமான -முக்கியமானவற்றை சொல்கிறேன் -அனைத்தையும் சொல்லி விவரிக்க முடியாதே —
ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் -சங்கல்பத்தாலே செய்து அருளி அனைவரையும் நியமித்து -அன்றோ இருப்பவன் –

அஹமாத்மா குடாகேஷ ஸர்வபூதாஷயஸ்தித-அஹமாதிஷ்ச மத்யம் ச பூதாநாமந்த ஏவ ச —৷৷10.20৷৷
சரீராத்மா பாவம்-ஆதாரம் -நியமனம் பிரதானம் -அவன் -சரீரம் போலே சேதன அசேதனங்கள் -உள்ளும் புறமும் வியாபித்து
யஸ்ய பிருத்வி சரீரம் -யஸ்ய ஆத்மா சரீரம் –இருந்தாலும் ந வேத -அறியாமல் -என்றபடி -சாமானாதிகரணம் -ப்ரஹ்மாத்மிகம் இல்லாத வஸ்துக்களும் இல்லையே –

ஆதித்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஷுமாந்.—–மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஷஷீ—–৷৷10.21৷৷
துவாதச ஆதித்யர்களுக்குள் விஷ்ணு / தேஜோ பதார்த்தகளுக்கும் ஆதியான /மருத்துக்களுள் மரீசி / நக்ஷத்திரங்களில் சந்திரன் /

வேதாநாம் ஸாமவேதோஸ்மி தேவாநாமஸ்மி வாஸவ—இந்த்ரியாணாம் மநஷ்சாஸ்மி பூதாநாமஸ்மி சேதநா—-৷৷10.22৷৷
வேதங்களில் சாமம் / தேவர்களில் இந்திரன் / கர்ம ஞான இந்த்ரியங்களில் மனஸ் / சேதனர்களின் தர்ம பூத ஞானம் -நானே –

ருத்ராணாம் ஷங்கரஷ்சாஸ்மி வித்தேஷோ யக்ஷரக்ஷஸாம்.—வஸூநாம் பாவகஷ்சாஸ்மி மேரு ஷிகரிணாமஹம்—-৷৷10.23৷৷
ருத்ரர்களில் சங்கரன் / யக்ஷர்களில் குபேரன்-வைஸ்ரவஸின் பிள்ளை / வசுக்களில் அக்னி / மலைகளில் மேரு /

புரோதஸாம் ச முக்யம் மாம் வித்தி பார்த பரிஹஸ்பதிம்.–ஸேநாநீநாமஹம் ஸ்கந்த ஸரஸாமஸ்மி ஸாகர—-10.24৷৷
பிரஹஸ்பதி /ஸ்கந்தன் /சமுத்திரம் –

மஹர்ஷீணாம் பரிகுரஹம் கிராமஸ்ம்யேகமக்ஷரம்.—யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோஸ்மி ஸ்தாவராணாம் ஹிமாலய—৷৷10.25৷৷
பிருகு / பிரணவம் / ஜபம் /ஹிமாலயம் -நானே –

அஷ்வத்த ஸர்வவரிக்ஷாணாம் தேவர்ஷீணாம் ச நாரத–கந்தர்வாணாம் சித்ரரத ஸித்தாநாம் கபிலோ முநி—৷৷10.26৷৷
அஸ்வத மரம் / நாரதர் /சித்ர ரதர்/ கபிலர் –

உச்சைஷ்ரவஸமஷ்வாநாம் வித்தி மாமமரிதோத்பவம்.—ஐராவதம் கஜேந்த்ராணாம் நராணாம் ச நராதிபம்৷৷10.27৷৷

ஆயுதாநாமஹம் வஜ்ரம் தேநூநாமஸ்மி காமதுக்.—ப்ரஜநஷ்சாஸ்மி கந்தர்ப ஸர்பாணாமஸ்மி வாஸுகி–৷৷10.28৷৷
ஒருதலை சர்ப்பம் – பல தலை நாகம் –

அநந்தஷ்சாஸ்மி நாகாநாம் வருணோ யாதஸாமஹம்.—பிதரிணாமர்யமா சாஸ்மி யம ஸம்ய மதாமஹம்৷৷10.29৷৷

ப்ரஹ்லாதஷ்சாஸ்மி தைத்யாநாம் கால கலயதாமஹம்.—மரிகாணாம் ச மரிகேந்த்ரோஹம் வைநதேயஷ்ச பக்ஷிணாம்—-৷৷10.30৷৷

பவந பவதாமஸ்மி ராம ஷஸ்த்ரபரிதாமஹம்.—ஷாணாம் மகரஷ்சாஸ்மி ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ —-৷৷10.31৷৷
திரியும் வஸ்துக்களில் வாயு -அம்பு ஏந்தியவர்களில் ராமன் –

ஸர்காணாமாதிரந்தஷ்ச மத்யம் சைவாஹமர்ஜுந.—அத்யாத்மவித்யா வித்யாநாம் வாத ப்ரவததாமஹம்—৷৷10.32৷৷
ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் -மூன்றும் என் அதீனமே -ஜல்பம் விதண்டா வாதம் -செய்வார்கள் இடையில் சரியாக விவாதம் பண்ணுபவனும் நானே –

அக்ஷராணாமகாரோஸ்மி த்வந்த்வ ஸாமாஸிகஸ்ய ச.—-அஹமேவாக்ஷய காலோ தாதாஹம் விஷ்வதோமுக—৷৷10.33৷৷
அகார வாஸ்யன் /த்வந்தமும் நானே /கால முஹூர்த்தம் இவற்றுள் பிரிக்க முடியாத கால தத்துவமும் நானே / ஹிரண்ய கர்பனும் நானே –

மரித்யு ஸர்வஹரஷ்சாஹமுத்பவஷ்ச பவிஷ்யதாம்.–கீர்தி ஷ்ரீர்வாக்ச நாரீணாம் ஸ்மரிதிர்மேதா தரிதி க்ஷமா —৷৷10.34৷৷
ஸ்ரீ /கீர்த்தி / வாக் -சரஸ்வதி /ஸ்ம்ருதி -நினைவு /மேதா -புத்தி / த்ருதி-உறுதி / க்ஷமை-அனைத்தும் நானே –

பரிஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம்.–மாஸாநாம் மார்கஷீர்ஷோஹமரிதூநாம் குஸுமாகர—৷৷10.35৷৷

த்யூதம் சலயதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம்.–ஜயோஸ்மி வ்யவஸாயோஸ்மி ஸத்த்வம் சத்த்வவதாமஹம்—৷৷10.36৷৷

வரிஷ்ணீநாம் வாஸுதேவோஸ்மி பாண்டவாநாம் தநம் ஜய–முநீநாமப்யஹம் வ்யாஸ கவீநாமுஷநா கவி—–৷৷10.37৷৷

தண்டோ தமயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீஷதாம்.–மௌநம் சைவாஸ்மி குஹ்யாநாம் ஜ்ஞாநம் ஜ்ஞா நவதாமஹம்৷৷10.38৷৷

யச்சாபி ஸர்வபூதாநாம் பீஜம் ததஹமர்ஜுந.–ந ததஸ்தி விநா யத்ஸ்யாந்மயா பூதம் சராசரம் —৷৷10.39৷৷

நாந்தோஸ்தி மம திவ்யாநாம் விபூதீநாம் பரந்தப.–ஏஷ தூத்தேஷத ப்ரோக்தோ விபூதேர்விஸ்தரோ மயா৷৷10.40৷৷

யத்யத்விபூதிமத்ஸத்த்வம் ஷ்ரீமதூர்ஜிதமேவ வா.—தத்ததேவாவகச்ச த்வம் மம தேஜோம் ஷஸம் பவம்–৷৷10.41৷৷
தேஜஸின் ஏக தேசத்தாலே இவைகள் என்றவாறு –

அதவா பஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந.—விஷ்டப்யாஹமிதம் கரித்ஸ்நமேகாம் ஷேந ஸ்திதோ ஜகத்—-৷৷10.42৷৷
அதி அல்ப ஏக தேச சங்கல்ப சக்தியால் -ஸமஸ்த வஸ்துக்களையும் -வஹிக்கிறேன்—ஸ்ரீ விஷ்ணு புராணம் -1–9-53 -இத்தை சொல்லும் –

———————————————————

கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

அருளிச் செயல்களும் -துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று ஓதிய வாக்கும்–

January 24, 2017

பெரியாழ்வார் திருமொழி —
தாரித்து நூற்றுவர் தந்தை சொல் கொள்ளாது போருய்த்து வந்து புகுந்தவர் மண்ணாளப்
பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று தேருய்த்த கைகளால் சப்பாணி -தேவகி சிங்கமே சப்பாணி -1-6-6-
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து –அஞ்சன வண்ணனே அச்சோ வச்சோ ஆயர் பெருமானே அச்சோ அச்சோ -1-8-3-
கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி எழலுற்று மீண்டு இருந்துன்னை நோக்கும்
சுழலைப் பெரிதுடைத் துச்சோதனனை அழல விழித்தானே அச்சோ வச்சோ ஆழி யங்கையனே அச்சோ வச்சோ –1-8-5-
போர் ஓக்கப் பண்ணி இப் பூமிப பொறை தீர்ப்பான் தேர் ஓக்க வூர்ந்தாய் செழும் தார் விசயற்காய்
நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று தாழ்ந்த தனஞ்சயர்க்காகி தரணியில்
வேந்தர்களுட்க விசயன் மணித் திண் தேர் ஊர்ந்தவன் என்னைப் புறம் புல்குவான் –உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான் -1-9-5-
மெச்சூது சங்கமிடத்தான் நல்வேயூதி பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னார்க்காய்
பத்தூர் பெறாதன்று பாரதம் கை செய்த அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் -2-1-1-
மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன்
சிலை வளையத் திண் தேர் மேல் முன்னின்ற செங்கண் அலவலை வந்தப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் -2-1-2-
ஒன்றே யுரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான் துன்று முடியான் துரியோதனன் பக்கல்
சென்று அங்குப் பாரதம் கை எறிந்தானுக்கு கன்றுகள் மேய்ப்பதோர் கோல் கொண்டு வா கடல் நிற வண்ணற்கோர் கோல் கொண்டு வா -2-6-4-
சீரொன்று தூதாய்த் துரி யோதனன் பக்கல் ஊர் ஓன்று வேண்டிப் பெறாத வுரோடத்தால்
பார் ஒன்றிப் பாரதம் கை செய்து பார்த்ததற்குத் தேர் ஒன்றை யூர்ந்தாற்கோர் கோல் கொண்டு வா
தேவ பிரானுக்கோர் கோல் கொண்டு வா –2-6-5-
பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போரேறே என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா -3-3-5-
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து —அஞ்சன வண்ணனைப் பாடிப் பற யசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற -3-9-5-
மன்னர் மறுக மைத்துனன்மார்க்கு ஒரு தேரின் மேல் முன்னங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை –தென் திருமாலிருஞ்சோலையே -4-2-7-
பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை –தொல்லை மாலிருஞ்சோலையதே -4-3-6-
திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய் அரசினை யவிய அரசினை யருளும்–கண்டம் என்னும் கடி நகரே -4-7-8-
மருமகன் தன் சன்னதியை உயிர் மீட்டு மைத்துனன் மார் உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்தானூர் –புனல் அரங்கம் என்பதுவே –4-8-3-
மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி உத்தரை தன் சிறுவனையும்
உய்யக் கொண்ட உயிராளன் யுறையும் கோயில் –திருவரங்கமே –4-9-6-

—————————————————

நாச்சியார் திருமொழி
பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும் சாரங்கவில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ –9-9-
செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பர்
தம்மை யுகப்பாரைத் தாமுகப்பார் என்னும் சொல் தம்மிடையே பொய்யானால் சாதிப்பாரினியே —11-10-

—————————————————-

திருச்சந்த விருத்தம்
பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன் தேர் மிகுத்து மாயமாகி நின்று கொன்று வென்றி சேர்
மாரதர்க்கு வான் கொடுத்து வையமைவர் பாலதாம் சீர் மிகுத்த நின்னலால் ஓர் தெய்வம் நான் மதிப்பனே –89-

—————————————–

பெரிய திருமொழி
பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர் கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் –திருவேங்கடம் அடை நெஞ்சே -1-8-4-
முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து -அவனே
பின் ஓர் தூது ஆதி மன்னார்க்காகி பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றான் எவ்வுள் கிடந்தானே –2-2-3-
விற் பெரு விழாவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னை புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-1-
இன் துணைப் பதுமத்து அலர் மகள் தனக்கும் இன்பன் நற் புவி தனக்கு இறைவன்
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-5-
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசர்க்கு இளையவன் அணியிழையைச் சென்று
எந்தமக்கு உரிமை செய்யெனைத் தரியாது எம்பெருமான் அருள் என்ன
சந்தமல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-6-
பாரேறு பெரும் பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூதியங்கி பார்த்தன் செல்வத் தேரேறு சாரதியாய் எதிர்ந்தார்
சேனை செருக்களத்துத் திறல் அழிய செற்றான் தன்னை –திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே -2-10-8-
வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினால் விசயனுக்காய் மணித் தேர் கொள் கைத் தலத்து எந்தை பெம்மானிடம் –திருவயிந்தரபுரமே -3-1-9-
ஏது அவன் தொல் பிறப்பு இளையவன் வளையூதி மன்னர் தூதுவனாய் அவனூர் சொல்லுவீர்கள் சொலீர் அறியேன் –புனலாலி புகுவர் கொலோ -3-7-4-
மல்லரையட்டு மாளக் கஞ்சனை மலைத்து கொன்று பல்லரசு அவிந்து வீழப் பாரதப் போர் முடித்தாய் –-காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-6-
மூத்தவற்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்து அருளி மாத்தமர் பாகன் வீழ மத கரி மருப்பு ஓசித்தாய் —காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-7-
கரையார் நெடு வேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி–புள்ளம் பூதங்குடி தானே –5-1-8-
வாம்பரியுக மன்னர் தம் உயிர் செய் ஐவர்கட்க்கு அரசளித்த காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப
நின் காதலை அருள் எனக்கு –திரு வெள்ளறை நின்றானே –5-3-4-
வெள்ளைப் புரவித் தேர் விசயற்காய் விறல் வியூகம் விள்ள சிந்துக்கோன் விழ ஊர்ந்த விமலனூர் –நறையூர் –6-5-8-
பாரையூரும் பாரம் தீர பார்த்தன் தன் தேரையூரும் தேவ தேவன் சேருமூர் –நறையூரே –6-5-9-
மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவி குடையா வரை யொன்று எடுத்து ஆயர் கோவாய் நின்றான் –நறையூர் நின்ற நம்பியே -6-7-7-
பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்து கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான் –நறையூர் நின்ற நம்பியே -6-7-8-
மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர் பண்ணின் மேல் வந்த படையெல்லாம் பாரதத்து
விண்ணின் மீதேறி விசயன் தேரூர்ந்தானை நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே –6-8-8-
உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவரக்காய்ச் சென்று இரங்கி யூர்நது அவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை -7-3-4-
பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாள பாரதத்துத் தேரில் பாகனா யூர்ந்த தேவ தேவன் ஊர் போலும் –அழுந்தூரே-7-5-2-
கயம் கொள் புண் தலைக் களிறுந்து வெந்திறல் கழல் மன்னர் பெரும் போரில் மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் –8-5-4-
துவரிக்கனி வாய் நில மங்கை துயர் தீர்ந்துய்ய பாரதத்துள் இவரித்தரசர் தடுமாற
இருள் நாள் பிறந்த அம்மானை –கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-9-
அரவ நீள் கொடியோன் அவையில் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்குப் பெரிய மா மேனி
அண்ட மூடுருவப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன் –திருக் கண்ணங்குடியில் நின்றானே –9-1-8-
பன்னிய பாரம் பார்மகட்க்கு ஒழியப் பாரத மா பெரும் போரில் மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர்
மைத்துனருக்கு உய்த்த மா மாயன் —திருக் கண்ணங்குடியில் நின்றானே –9-1-9-
பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்து ஒரு தேர் முன் நின்று காத்தவன் தன்னை –திரு மால் இருஞ்சோலை நின்ற மூர்த்தியை -9-9-8-
செரு வழியாத மன்னர்கள் மாளத் தேர் வலம் கொண்டு அவர் செல்லும் அரு வழி வானம் அதர் படக் கண்டா ஆண்மை கொலோ -10-9-5-
அன்று பாரதத்து ஐவர் தூதனாய் சென்ற மாயனைச் செங்கண் மாலினை மன்றிலார் புகழ் மங்கை வாட் கலிகன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே –11-1-10-
மன்னிலங்கு பாரதத்து தேரூர்ந்து —தேவர்க்கு இது கண்ணீர் என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே –11-3-1-
கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான் தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் ஆகிலும் ஓத நீர் வையகம் முன்னுண்டு உமிழ்ந்தான் சாழலே–11-5-6-
பார் மன்னர் படை தொட்டு வெஞ்சமத்து தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் காணேடீ
தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் ஆகிலும் தார் மன்னர் தங்கள் தலை மேலான் சாழலே –11-5-7-

——————————————————-

திரு நெடும் தாண்டகம்
ஓர் தேரால் மன்னிலங்கு பாரதத்தை மாள யூர்ந்த வரை யுருவின் மா களிற்றைத் தோழீ –இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே -28-

—————————————————–

முதல் திருவந்தாதி
மயங்க வலம் புரி வாய் வைத்து வானத்து இயங்கும் எறி கதிரோன் தன்னை –
முயங்கமருள் தேராழியால் மறைத்தது என் நீ திருமாலே போராழிக் கையால் பொருது –8-
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த வூர் –37-

———————————————

இரண்டாம் திருவந்தாதி
திரிந்தது வெஞ்சமத்து தேர் கடவி அன்று பிரிந்தது சீதையை மான் பின் போய் புரிந்ததுவும்
கண் பள்ளி கொள்ள அழகியதே நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு -15–

————————————————

மூன்றாம் திருவந்தாதி
அடைந்தது அரவணை மேல் ஐவர்க்காய் அன்று மிடைந்தது பாரத வெம்போர் உடைந்ததுவும்
ஆய்ச்சி பால் மத்துக்கே வாள் எயிற்றுப் பீய்ச்சி பாலுண்ட பிரான் –28-

——————————————-

நான்முகன் திருவந்தாதி
நிலை மன்னும் என்நெஞ்சம் அந்நான்று தேவர் தலை மன்னர் தாமே மாற்றாக
பல மன்னர் போர் மாள வெங்கதிரோன் மாயப் பொழில் மறைய தேராழியால் மறைத்தாரால் -16-
நிகழ்ந்தாய் பால் பொன் பசுபுக் கார் வண்ணம் நான்கும் இகழ்ந்தாய் இருவரையும் வீய புகழ்ந்தாய்
சினப் போர்ச்சுசேதனைச் சேனாபதியாய் மனப்போர் முடிக்கும் வகை –24-
சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்
அன்று ஓதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராய் மெய்ஞ்ஞானமில் –71–

—————————————————

பெரிய திரு மடல்
மன்னர் பெரும் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய் தன்னை இகழ்ந்து உரைப்பத் தான் முன நாள் சென்றதுவும் -141/142-

————————————————————————–

திருவாய்மொழி
தீர்த்தான் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தியவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயான் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –1-8-5-
கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லாச் சேனையும் இரு நிலத்தவித்த வெந்தாய்
பொல்லா வாக்கையின் புணர் வினை யறுக்கலறா சொல்லாய் யானுன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே -2-2-3-
நீர்மையில் நூற்றுவர் வீய ஐவருக்கு அருள் செய்து நின்று பார்மல்கு சேனையவித்த பரஞ்சுடரை நினைந்தாடி
நீர்மல்கு கண்ணினாராகி நெஞ்சம் குழைந்து நையாதே ஊன் மல்கி மோடு பருப்பார் உத்தமர்கட்க்கு என் செய்வாரே -2-5-7-
அடியோங்கு நூற்றுவர் வீய அன்று ஐவருக்கு அருள் செய்த நெடியோனை -2-7-11-
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாய போர்த் தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே -4-6-1-
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாயப் போர் பண்ணி நீறு செய்த வெந்தாய் –சிரீ வர மங்கல நகர் ஏறி வீற்று இருந்தாய் –5-7-4-
பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத் திறங்கள் காட்டியிட்டுச் செய்து போன மாயங்களும் -5-10-1-
மண் மிசைப் பெரும் பாரம் நீங்க ஒரு பாரத மா பெரும் போர் பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ் பட நூற்றிட்டுப் போய்
விண் மிசைத் தான தாமமே புக மேவிய சோதி தன் தாள் நண்ணி நான் வாங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே -6-4-10-
மாயம் அறிபவர் மாயவர்க்கு ஆளின்றி யாவரோ -தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்
தேசம் அறிய வோர் சாரதியாய்ச் சென்று சேனையை நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை யறிந்துமே –-7-5-10-
வார்த்தை யறிபவர் மாயவர்க்கு ஆளின்றி யாவரோ போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்து பெரும் துன்பம் வேரற நீக்கித் தன் தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே -7-5-11-
பிறந்த மாயா பாரதம் பொருத மாயா –உன்னை எங்கே காண்கேனே –8-5-10-
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் -9-1-10-
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்த வினையாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக பண்டே பரமன் பணித்த பணி வகையே -10-4-9-
வாட்டாற்றான் மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காப் படை தொட்டான் நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-10-6-4-

————————————————————

இராமானுச நூற்றந்தாதி
அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்க்காய் அன்று பாரதப் போர் முடிய பரி நெடும் தேர் விடுங்கோனை முழுதுணர்ந்த
அடியர்க்கமுதம் இராமானுசன் என்னை யால வந்து இப்படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே–51-
சரணம் அடைந்த தருமனுக்கா பண்டு நூற்றுவரை மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த கரணம் இவை யுமக்கு
என்று இராமானுசன் உயிர்கட்க்கு அரண் அங்கு அமைத்திலனேல் அரண் ஆர் மற்று இவ்வார் உயிருக்கே–67-
ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன இராமானுசனைப் பணியும் நல்லோர் சீரினில் சென்று பணிந்தது என் ஆவியும் சிந்தையுமே -68-

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்–

April 5, 2016

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

——————————————————————–

சிறப்புத் தனியன் –

கட்டப் பொருள் விரித்த காசினியில் நான் மறையின்
இட்டப் பொருள் இயம்பும் இன்பொருளைச் சிட்டர் தொழும்
வேதாந்த தேசிகனை மேவுவார் தங்கள் திருப்
பாதாம் புயம் அடியேன் பற்று –

கட்டப்பொருள் -அறிவதற்குக் கடினமான அர்த்தங்களை
சிட்டர்-பெரியோர்கள் –

கீதை மொழிந்து அருளும் வேதாந்த தேசிகனார்
பாதார விந்த மலர் பற்று –

பற்று -அனைவருக்கும் தஞ்சமாகும்

—————————————————————

கருமமும் ஞானமும் கொண்டு எழும் காதலுக்கு ஓர் இலக்கு என்று
அருமறை யுச்சியுள் ஆதரித்து ஓதும் அரும் பிரஹ்மம்
திருமகளோடு அரும் திருமால் என்று தான் உரைத்தான்
தருமம் உகந்த தனஞ்சயனுக்கு அவன் சாரதியே –1-

கருமமும் ஞானமும் கொண்டு -முதல் ஷட்கத்தின் அர்த்தமும்
எழும் காதலுக்கு ஓர் இலக்கு என்று -இரண்டாம் ஷட்கத்தின் அர்த்தமும்
அருமறை யுச்சியுள் ஆதரித்து ஓதும் அரும் பிரஹ்மம்-சேதன அசேதனங்களில் வேறுபட்ட ப்ரஹ்மம் -மூன்றாம் ஷட்கத்தின் முற்பகுதியின் அர்த்தம்
திருமகளோடு அரும் திருமால் என்று தான் உரைத்தான் தருமம் உகந்த தனஞ்சயனுக்கு அவன் சாரதியே –மூன்றாம் ஷட்கத்தின் பிற்பகுதியின் அர்த்தம் –

——————————————————————

உகவை யடைந்த யுறவுடையார் பொரலுற்ற வந்நாள்
தகவுடன் அன்பு கரை புரளத் தருமத்தின் அளவில்
உளம் மிக அஞ்சி விழுந்து அடி சேர்ந்த விசயனுக்கொர்
நகையுடன் உண்மை உரைக்க அமைந்தனன் நாரணனே –2–

——————————————————————

உடலம் அழிந்திடும் உள் உயிர் ஓன்று அழியாது எனைப்போல்
விடுமது பற்று விடாத தடைத்த கிரிசைகளே
கடுக வுனக்கு உயிர் காட்டும் நினைவு அதனால் உளதாம்
விடும் மயல் என்று விசயணத் தேற்றினான் வித்தகனே –3-

இரண்டாம் அத்யாய சாரம் -ஜீவாத்மா நித்யம் – கர்ம பலனை அனுபவிக்க சரீரம் புகுந்து –
பலனைக் கருதாமல் கர்மங்களில் பற்று வைக்காமல் பகவத் கைங்கர்யமாக பண்ண வேண்டும்-
இத்தால் சர்வேஸ்வரனுக்கு சரீரமான ஆத்ம ஸ்வரூபத்தை இடைவிடால் சிந்தித்து -ஞான யோகம் –
தேரில் பாகனாய் நின்ற போதே ஆசார்யனாகவும் நின்று உபதேசித்த அதிசயச் செய்கையை நினைந்து வித்தகன் என்று அருளிச் செய்கிறார் –

————————————————————————————

சங்கம் தவிர்ந்து ஜகம் சதிர் பெற்ற தஞ்சயனே
பொங்கும் குணங்கள் புணர்ப்பனைத்தும் புக விட்டவற்றுள்
நம் கண் உரைத்த கிரிசை எலாம் எனவும் நவின்று
எங்கும் அறிவார்களே என்று நாதன் இயம்பினனே -4-

3 வது அத்யாய சாரம் –
சங்கம் தவிர்ந்து–கர்ம பலங்களிலே பற்று விட்டு -பகவான் உடைய மகிழ்ச்சியே வேண்டும் அநந்ய பிரயோஜனராய்
ஜகம் சதிர் பெற்ற தஞ்சயனே
பொங்கும் குணங்கள் புணர்ப்பனைத்தும் புக விட்டவற்றுள்-மாறி மாறி வ்ருத்தி அடையும்
சத்வம் ரஜஸ் தமஸ் குணங்களால் நிகழும் கார்யங்கள் எல்லா வற்றையும் அந்த குணங்களுக்குள் ஏற்றி வைத்து
நம் கண் உரைத்த கிரிசை எலாம் – உரைத்த கிரிசைகள் -சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்கள் எல்லா வற்றையும்
ஈஸ்வரனாகிய நம்மிடத்திலே சமர்ப்பிக்க வேண்டும்
எனவும் நவின்றார் -என்று அனுசந்தித்த பெரியோர்கள்
எங்கும் அறிவார்களே என்று நாதன் இயம்பினனே -எல்லாவற்றையும் அறிந்தவர்கள் ஆவார் என்று உபதேசித்து அருளினான் –

——————————————————————————————

பிறவாமை தந்திடத் தானே பிறக்கும் பெருமைகளும்
துறவாக் கிரிசைகள் தூ மதி தன்னால் துலங்குகையும்
இறவா உயிர் நல் நிலை கண்டிடும் உலகின் நிலையம்
மறை வாழும் மாயவன் நேயனுக்குக்கன்று அறிவித்தனனே –5-

நான்காம் அத்யாய சாரம் –
பிறவாமை தந்திடத் தானே பிறக்கும் பெருமைகளும் -திருவவதார ரகச்யங்களும்
துறவாக் கிரிசைகள் தூ மதி தன்னால் துலங்குகையும்-விட முடியாத கர்மங்கள் பரிசுத்தமான ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றிய ஜ்ஞானத்தை
தம்முள் அடக்கிக் கொண்டு இருப்பதால் ஜ்ஞான யோகமாக பிரசாத்தித்தலையும்-
கிரிசைகள் பன்மை -தேவாத ஆராதனம் -இந்த்ரியங்களை அடக்குதல் -ப்ராணா யாமம் -யாகம் தானம் ஹோமம் தவம்
புண்ய தீர்த்த ஸ்நானம் -புண்ய ஷேத்திர யாத்ரை -வேதம் கற்று கற்பித்தல் போல்வன
இறவா உயிர் நல் நிலை கண்டிடும் உலகின் நிலையம் -அழிவற்ற ஆத்மாவின் நல்ல ஸ்வ பாவத்தை அறிந்த அதிகாரியின் மேன்மையையும்
மறை வாழும் மாயவன் நேயனுக்குக்கன்று அறிவித்தனனே-வேதத்தால் போற்றப்படும் ஸ்ரீ கண்ணன்
தனது நண்பனுக்கு பாரத போர் அன்று உபதேசித்து அருளினான் –

—————————————————————————-

கண்டு எளிதாம் கருமம் உயிர் காட்டக் கடுகுதலும்
மண்டி யதன் படியில் மனம் கொள்ளும் வரிசைகளும்
கண்டு அறியா உயிரைக் காணலுற்ற நினைவுகளும்
வண் துவரேசன் இயம்பினன் வாசவன் மைந்தனுக்கே –6-

ஐந்தாம் அத்யாய சாரம் –
கண்டு எளிதாம் கருமம் சாஸ்த்ரங்களைக் கொண்டு அறிந்து அனுஷ்டிக்க ஸூ லாபமான கர்ம யோகம்
ஞான யோகம் போலே கடினம் இல்லையே கர்ம யோகம் -செய்யச் செய்ய ரஜஸ் தமஸ் குணங்கள் நீங்கி ஆசை த்வேஷம் ஒழிந்து மனம் தெளியும்
மனம் இந்த்ரியங்கள் தம் வசப்பட ஆத்மா சாஷாத்கார ஞானம் உண்டாகும்
உயிர் காட்டக் கடுகுதலும் –ஆத்மாவைக் காட்டுவதற்கு விரைதலும்
மண்டி யதன் படியில்-அந்த கர்மயோக பிரகாரன்களிலே ஈடுபட்டு
மனம் கொள்ளும் வரிசைகளும் -மனத்தில் நினைக்க வேண்டிய பிரகாரங்களும்
கண்டு அறியா உயிரைக் -நேரில் கண்டு அறிய முடியாத ஜீவாத்மாவின் ஸ்வ ரூபத்தை
காணலுற்ற நினைவுகளும் -எங்கும் ஞான ஸ்வரூபமாக பார்க்கும் படியான பற்பக்வம் அடைந்த ஞானங்களும்
வண் துவரேசன் இயம்பினன் -உபதேசித்து அருளினான் –வாசவன் மைந்தனுக்கே -இந்த்ரன் புத்ரனான அர்ஜுனனுக்கு –

—————————————————————————————

யோக முயற்சியும் யோகில் சமநிலை நால் வகையும்
யோகின் உபாயமும் யோகுதனால் வரும் பேறுகளும்
யோகு தனில் தன் நிறமுடை யோகு தன் முக்கியமும்
நாகணை யோகி நவின்றனன் முடி வீரனுக்கே –7

ஆறாம் அத்யாய சாரம் –
பக்தி யோக விளக்கம் உபதேசித்து அருளினான் –

———————————————————————————

தானின்ற யுண்மையைத் தன் தனி மாயை மறைத்தமையும்
தானன்றி மாயை தனித் தவிர்ப்பான் விரகு அற்றமையும்
மேனின்ற பத்தர்கள் நால்வரில் ஞானி தன் மேன்மைகளும்
தேனின்ற செங்கழலான் தெளிவித்தான் பார்த்தனுக்கே –8-

ஏழாம் அத்யாய சாரம்
பத்தர்கள் நால்வரில்-ஆர்த்தான் -அர்த்தார்த்தி- ஜிஜ்ஞாஸூ-ஜ்ஞானி
மாயை -பிரகிருதி –

————————————————————————–

ஆராத செல்வமும் ஆருயிர் காணும் அரும் பயனும்
பேராது தன் கழல் கீழ் அமரும் பெரு வாழ்ச்சிகளும்
சோராது உகந்தவர் தூ மதி கொள்வதும் செய்வனவும்
தேரா விசயனுக்குத் திரு நாரணன் செப்பினனே –9-

8 அத்யாய சாரம்
சோராது உகந்தவர் தூ மதி கொள்வதும் செய்வனவும் -மூவகை அதிகாரிகளும் -ஐஸ்வர்ய-கைவல்ய -பகவல்லாப -அதிகாரிகளும்
குறைவு படாது பெற வேண்டும் என்று விரும்பிய அதிகாரிகள் பரிசுத்தமான தம் மனத்தால்
அறிய வேண்டியனவும் -அனுஷ்டிக்க வேண்டியனவும் –

—————————————————————————-

தன் மேன்மையும் தன் பிறப்பில் தளராத் தனி நிலையம்
பன்மேனி நன்னினன்பால் பிரியா வன்பர் ஆசைகளும்
புன்மேனி விண்ணவர் பால் புரியாத தன் பத்திமையும்
நன்மேனி நாராணன் நரனுக்கு நவின்றனனே–10-

9 அத்யாய சாரம் –
புன்மேனி விண்ணவர் பால் புரியாத தன் பத்திமையும் -அல்பமாய் அழிந்து போவதான
தேவ யோனி கொண்ட விண்ணவர் தன் பால் செலுத்தாத பக்தி யோகமும் –

—————————————————————————

எல்லையிலாத தன் சீலமாம் இன்னமுதக் கடலும்
எல்லையிலாத விபூதி எலாம் தனதானமையும்
எல்லையில் பக்திதனை எழுவிக்கத் திருவருளால்
எல்லையில் ஈசன் இயம்பினான் இந்திரன் மைந்தனுக்கே –11-

10-அத்யாய சாரம் –

———————————————————————————–

எல்லாம் தனக்கு உருவாய் இலங்கும் வகை தான் உரைத்துச்
சொல்லால் அறிந்தது சோராமல் கண்டிட வேண்டும் என்ற
வில்லாளனுக்கு அன்று மெய்க்கண் கொடுத்து இது வேறு உண்டோ
நல்லார்கள் காண்பர் என்றும் நவின்றான் நங்கள் நாயகனே –12-

11-அத்யாய சாரம் –
மெய்க்கண் கொடுத்து இது வேறு உண்டோ -தன் ஸ்வரூபத்தை காண தெய்விக சஷூஸ் அருளி
-இவ்வாறு தன்னை காண வேறு சாதனம் இல்லையே –

——————————————————————————–

தன் கழலில் பத்தி தாழாததும் அதன் காரணமாம்
இன் குண சிந்தையும் ஈது அறியார்க்கு அவ்வடிமைகளும்
தன் கருமங்கள் அறியாதவற்கு இலகு நிலையும்
தன் கழல் அன்பர்க்கு நல்லவன் சாற்றினன் பார்த்தனுக்கே –13-

12 அத்யாய சாரம்

———————————————————————-

ஊனின் படியும் உயிரின் பிரிவும் உயிர் பெறுவார்
ஞானம் பெரு வகையும் ஞானம் ஈன்ற வுயிர்ப்பயனும்
ஊன் நின்றதற்கு அடியும் உயிர் வேறிடும் உள் விரகும்
தேனின்ற பாதன் தெளிவித்தனன் சிலைப் பார்த்தனுக்கே –14-

13 அத்யாய சாரம் –
ஊனின் படியும் -சரீரத்தினுடைய ஸ்வரூபமும்
உயிரின் பிரிவும் -ஜீவாத்மா சாராரத்தைப் பிரிந்து நிற்கும் நிலையையும்
உயிர் வேறிடும் உள் விரகும் -ஆத்மாவை சரீரத்தில் இருந்து வேறுபடக் காண்பதற்கு வேண்டிய மனத்தால் செய்ய வேண்டிய உபாயங்களையும் –

——————————————————————————————-

முக்குணமே உயிர் முற்றவும் கட்டிட மூண்டமையும்
முக்குணமே யனைத்தும் வினை கொள்ள முயன்றமையும்
முக்குண மாயை கடத்தலும் முக்கதி தந்து அளிப்பும்
முக்குணம் அற்ற பிரான் மொழிந்தான் முடியோன் தனக்கே –15-

14-அத்யாய சாரம்
முக்கதி தந்து அளிப்பும்-ஐஸ்வர்யம் கைவல்யம் மோஷம் ஆகிய மூன்று கதிகளையும் அருளி ரஷிக்கும் விதமும் –

——————————————————————————

மூ வெட்டினும் மோகம் அடைந்த உயிர்களினும்
நா வெட்டு எழுத்தோடு நல்வீடு நண்ணின நம்பரினும்
மேவு எட்டு வன் குண விண்ணோர் களினும் விசயனக்குத்
தாவிட்டு உலகு அளந்தான் தனை வேறு என்று சாற்றினனே –16-

15 அத்யாய சாரம் –
மூ வெட்டினும் -24 தத்வங்கள் ஆகிய பிரக்ருதியைக் காட்டிலும்
மோகம் அடைந்த உயிர்களினும் -அதில் மோகம் அடைந்து அஜ்ஞானம் பெற்றுள்ள பத்த ஜீவர்களைக் காட்டிலும்
நா வெட்டு எழுத்தோடு நல்வீடு நண்ணின நம்பரினும் -திரு அஷ்டாஷர அனுசந்தத்தால் சிறந்த மோஷத்தைப் பெற்ற சிறந்த முக்தர்களைக் காட்டிலும்
மேவு எட்டு வன் குண விண்ணோர் களினும் -அபஹத பாப்மாதி எட்டு வலிய குணங்களை யுடைய நித்யர்களைக் காட்டிலும்
விசயனக்குத் தாவிட்டு உலகு அளந்தான்
தனை வேறு என்று சாற்றினனே-தன்னை வேறு பட்டவன் -புருஷோத்தமன் -என்று உபதேசித்து அருளினான் –

———————————————————

ஆணை மாறாதவர் தேவர் அல்லா வழக்கோர் அசுரர்
கோணை மராத குணச் செல்வா நீ குறிக்கோள் மறையைப்
பேணிய தத்துவமும் பிணியற்ற கிரிசைகளும்
காண் இதனால் விசயா வென்று கண்ணன் இயம்பினனே –17-

16 அத்யாய சாரம்
கோணை மராத குணச் செல்வா –வக்கிரத் தன்மை கலவாத குணமாகிய செல்வத்தை உடையவனே -இரண்டாவது மா ஸூ ச -அருளினான் –
பேணிய தத்துவமும் -கொண்டாடப்படும் பரதத்வமும்
பிணியற்ற கிரிசைகளும் -பலனில் பற்று வைப்பதாகிய தீங்கு இல்லாத கர்மங்களும்
காண் இதனால் விசயா வென்று -இந்த வேதத்தால் அறிந்து கொள் அர்ஜுனனே என்று உபதேசித்து அருளினான் –

————————————————————————-

மறை பொருந்தாதவை வல் அசுரர்க்கு வகுத்தமையும்
மறை பொருந்தும் நிலையின் வன் குணப்படி மூவகையும்
மறை நிலை தன்னை வகுக்கும் குறி மூன்றின் மேன்மையுமம்
மறை யுமிழ்ந்தான் உரைத்தான் வாசவன் தன் சிறுவனுக்கு –18-

17 அத்யாய சாரம் –
மறை நிலை தன்னை வகுக்கும் -வேதத்தில் விதிக்கப்பட்ட கர்ம அனுஷ்டானத்தை -மற்றவற்றின் நின்று வேறுபடுத்திக் காட்டுகின்ற –
குறி மூன்றின் மேன்மையுமம் –ஓம் -தத் -சத் -என்ற மூன்று லஷணங்களின் உயர்வும் –

———————————————————————————-

சத்துவ வீடுடை நல கருமம் தான் உகந்தமையும்
சத்துவம் உள்ளது தான் குறிக்கொள் வகை செய்ததுவும்
சத்துவ நல கிரிசைப் பயனும் சரணாகதியும்
சத்துவமே தருவான் உரைத்தான் தனிப் பார்த்தனுக்கே –19-

18 அத்யாய சாரம் –
கர்த்ருத்வ மமதை இல்லாமல் பலன் சம்பந்தத்தையும் விட்டு -மூன்று வித த்யாகம்-
பகவத் ஆராதனம் என்றே கருதி வர்ணாஸ்ரம கர்மங்களைச் செய்து -மனம் தெளிந்து -இடைவிடாமல் சிந்தித்து முக்தி அடையலாம் –

——————————————————————-

வன் பற்று அறுக்கும் மருந்து என்று மாயவன் தான் உரைத்த
இன்பக்கடல் அமுது ஆம் என நின்ற விக்கீதை தனை
யன்பர்க்குக் உரைப்பவர் கேட்பவர் ஆதரித்து ஓய்ஹுமவர்
துன்பக் கடலுள் துளங்குகை நீங்கித் துலங்குவரே–20-

பலன் சொல்லி அருளுகிறார் –

——————————————————————————————-

தீதற்ற நல் குணப் பாற்கடல் தாமரைச் செம்மலர் மேல்
மாதுற்ற மார்வன் மருவ இன் கீதையின் வண் பொருளைக்
கோதற்ற நான் மறை மௌலி யின் ஆசிரியன் குறித்தான்
காதல் துணிவுடையார் கற்கும் வண்ணம் கருத்துடனே –21-

நான் மறை மௌலி யின் ஆசிரியன்-வேதாந்த சாரியார் -என்றபடி –

——————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –