Archive for the ‘Geetha Saaram’ Category

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் – -2–சாங்க்ய யோகம் —

June 14, 2017

கஸ்தூரி திலகம் -லலாட பாடலே வக்ஷஸ்தலே கௌஸ்துபம் நாஸாக்ரே முத்து பல்லாக்கு —கர தலே வேணு -கரே கங்கணம் -ஸர்வாங்கே ஹரி சந்தனம்
ஸூ லலிதம் -கண்டேஸ் முக்தா வலீ கோப ஸ்த்ரீ பரி வேஷ்டிதோ விஜயதே கோபால சூடாமணி -விஜய சாரதி -பார்த்த சாரதி தேரோட்டி ஆசைப்பட்டு -தேர்ப்பாகு –
—————————–
அஸ்தான ஸ்நேக காருண்ய தர்ம அதர்ம தியாகுலம்
பார்த்தம் ப்ரபன்ன முத்திச்ய சாஸ்திர ரவதரணம் க்ருதம்—ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–5-
காட்டாக கூடாத இடத்தில் ஸ்நேஹம் -காருண்யம் -தர்ம அதர்ம விவேகம் இல்லாமல் –மூன்று தோஷங்கள் –

நித்யாத்மா சங்க கர்மேஹா கோசரா சாங்க்ய யோகதீ
த்வதீய ஸ்திததீ லஷா ப்ரோக்தா தந்மோஹ சாந்தயே —ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்—6-
சாங்க்ய யோகம் -உண்மையான அறிவு -ஆத்மாவை பற்றி / பற்றுதல் இல்லாத கர்ம யோகம் பண்ண -மோகம் மயக்கம் தீர்க்க -ஞான யோகி
-கலக்க மாட்டாத-ஸ்திரமான புத்தி யுடன் -செய்வதை உபதேசிக்கிறார் -ஞான யோகம் அடைய கர்ம யோகம் -ஆத்மாவின் நித்யத்வம் சொல்லி –

12 -30 ஆத்மா நித்யம் சொல்லி / 31 –கர்ம யோகம் –53 வரை / 72 வரை ஞான யோகம் -சொல்கிறான் /
புருஷார்த்தம் பெருமை முதலில் சொல்லி அப்புறம் உபாயம் -/

—————————————————-

ஸஞ்ஜய உவாச
தம் ததா கரிபயாவிஷ்டமஷ்ருபூர்ணாகுலேக்ஷணம்.–விஷீதந்தமிதம் வாக்யமுவாச மதுஸூதந—-৷৷2.1৷৷
தேவை இல்லா இடத்தில் கிருபை -கண்ணீர் -விட்டு உடம்பு நடுங்கி –மது சூதனன் -பிரதிபந்தகம் நீக்கி அருள –

ஸ்ரீ பகவாநுவாச
குதஸ்த்வா கஷ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்.—அநார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்திகரமர்ஜுந—৷৷2.2৷৷
மநோ வியாதி போக்க –கஷ்மலம்–இதம் -தாழ்ந்த அபிப்ராயம் –வரக் கூடாத இடத்தில் -உனக்கா இப்படி – சிறந்த வில்லாளி
–பெரியவர்கள் மனஸ் கெட –கீர்த்தியும் வராது -சுவர்க்கமும் கிட்டாது -எதனால் இப்படி

க்லைப்யம் மா ஸ்ம கம பார்த நைதத்த்வய்யுபபத்யதே.—க்ஷுத்ரம் ஹரிதயதௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப—৷৷2.3৷৷
அலி போன்ற தன்மை –மனஸ் ஒடிந்து உள்ள தன்மை உன்னிடம் சேராதே -தொலைத்து -எதிரிகளை தப்பிக்க செய்பவனே -எழு-உன்னையே இப்படி தப்பிக்க செய்யலாமோ –

அர்ஜுந உவாச
கதம் பீஷ்மமஹம் சங்க்யே த்ரோணம் ச மதுஸூதந.—இஷுபி ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூதந–৷৷2.4৷৷
இங்கும் மது சூதன -சப்தம் –பூஜைக்கு உரியவர் -அம்பை எப்படி -/ சாந்தீபன் சூதனன் இல்லையே உனக்கு பெயர்-

குரூநஹத்வா ஹி மஹாநுபாவாந்–ஷ்ரேயோ போக்தும் பைக்ஷ்யமபீஹ லோகே–ஹத்வார்தகாமாம் ஸ்து குரூநிஹைவ–புஞ்ஜீய போகாந் ருதிரப்ரதிக்தாந்—৷৷2.5৷৷
குருக்களை கொன்று –அனுபவிப்பதை விட பிச்சை எடுக்கலாம் -ஷத்ரியன் இப்படி -அலி பேச்சு -/ குருக்களுக்கு அர்த்தம் பொருளில் ஆசையால் என்னை எதிர்க்கிறார் –
காட்டுக்கு ஓடுகிறேன் -இருந்து என்ன பிரயோஜனம் -மனஸ் உடைந்து எதிர்மறையாக செயல் பட வைக்கும் -தக்ஷிணை கொடுக்க வேன்டும்
ராஜ்யம் கொடுப்பேன் -ரத்த கரை உடன் ராஜ்யம் ஆளவா-

ந சைதத்வித்ம கதரந்நோ கரீயோ–யத்வா ஜயேம யதி வா நோ ஜயேயு–யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாம–ஸ்தேவஸ்திதா ப்ரமுகே தார்தராஷ்ட்ரா—৷৷2.6৷৷
ஓடினாலும் உன்னை கொல்லுவார்களே-என்று கேட்டதாக -கொண்டு பதில் –யுத்தம் முடிவு நான் அறியேன் -யாரை கொன்று நான் ஜீவிக்க முடியாதோ அவர்கள் அன்றோ எதிரில்

கார்பண்யதோஷோபஹதஸ்வபாவம் -பரிச்சாமி த்வாம் தர்மஸம் மூடசேதா–யச்ச்ரேய ஸ்யாந்நிஷ்சதம் ப்ரூஹி தந்மே—ஷிஷ்யஸ்தேஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபந்நம்—৷৷2.7৷৷
நல்லது சொல் கேட்க்கிறான் இதில் –மனஸ் துர்பலமான நிலை –தர்மம் எது அதர்மம் எது குழம்பி உள்ளேன் –சிஷ்யன்-பிரபன்னன் -அடி பணிந்து கேட்க்கிறேன்
எது எனக்கு சிறந்தது -என்று நான் நிச்சயமாக அறியும் படி சொல்லி அருள் -ஒரே கேள்வி -700-ஸ்லோகங்கள் -தெரிந்த அத்தனை நல்லதையும் சொல்லி
வள்ளல் தன்மை -பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் இவன் தன்மையால் தானே –
தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தோர்க்கும் இந்த பரம காருண்யம் உண்டே -கீதாச்சார்யனை பின் பற்றி இவர்கள் –

ந ஹி ப்ரபஷ்யாமி மமாபநுத்யா—த்யச்சோகமுச்சோஷணமிந்த்ரியாணாம்.–அவாப்ய பூமாவஸபத்நமரித்தம்–ராஜ்யம் ஸுராணாமபி சாதிபத்யம்—-৷৷2.8৷৷
கண்ணுக்கு பட வில்லை -என்கிறான் -வேறே உபாயம் உண்டா கண்ணன் கேட்டதாக கொண்டு – சோகம் தீர்க்க -ஓடுவதை விட –
இந்திரியங்களை வற்ற அடிக்கும் சோகம் –மூன்று லோகம் கிடைத்தாலும் இந்த கேள்விக்கு பதில் இல்லையே -என்கிறான்

ஸஞ்ஜய உவாச
ஏவமுக்த்வா ஹரிஷீகேஷம் குடாகேஷ பரந்தப–.ந யோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ—-৷৷2.9৷৷
ஹா ஆச்சர்யம் –தூக்கம் சோம்பல் வென்ற அர்ஜுனன் சோம்பி -கோவிந்தன் இடம் சொல்லி -கோழை போலே சொல்கிறானே –

தமுவாச ஹரிஷீகேஷ ப்ரஹஸந்நிவ பாரத–ஸேநயோருபயோர்மத்யே விஷீதந்தமிதம் வச—৷৷2.10৷৷
சிரித்துக் கொண்டே -மந்த ஸ்மிதம் -பதில் சொல்கிறான் -உபதேசம் -சொல்கிறவர் அழுது சொல்லக் கூடாதே -/ ஆழ்ந்த விஷயம் –
மாய சிரிப்பு -வியாஜ்யமாக ஸ்ரீ கீதை தரப் போகிறேன் -/தேஹாத்ம விபாகம் இல்லாத ஷத்ரியன் / சங்கை உருவாக்கி -பீஷ்மர் துரோணர் நிறுத்தி
-கை காட்டி -வருத்தம் வர வைத்து -சிரிப்பு வருமே -விளையாட்டு பொம்மை தானே நாம்

ஸ்ரீ பகவாநுவாச-
அஷோச்யாநந்வஷோசஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதாம் ஷ்ச பாஷஸே.—கதாஸூநகதாஸூம் ஷ்ச நாநுஷோசந்தி பண்டிதா—-৷৷2.11৷৷
பண்டிதர் வருத்தம் படக் கூடாத விஷயம் -/ இவர்களை பார்த்து வருத்தப் பட கூடாதே -ஞானி போல சில சமயம் பேசுகிறாய் -நீ எந்த கோஷ்ட்டி அறிய முடிய வில்லையே /
சோகம் படக் கூடாத இடத்தில் சோகம் பட்டு -அஞ்ஞானி / பித்ரு பிண்டம் இல்லாமல் -சொல்லி ஞானி போலவும் பேசி / குல ஷயம் குல நாசம் அறிந்தவன்
சாஸ்த்ர ஞானம் அறிந்தவன் -போலவும் பேசி -/வாழ்வதே பரமாத்மாவுக்கு தானே / ஆத்ம தேஹம் வாசி அறிந்தவர் துக்கம் அடைய மாட்டார்களே –
இதுவே ஞானம் -பண்டிதன் போலே நடந்து கொள்-

ந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா—.ந சைவ ந பவிஷ்யாம ஸர்வே வயமத பரம்—৷৷2.12৷৷
நான் நேற்றைக்கு இருந்தேன் இல்லை என்பது இல்லை –அஹம் ஜாது–ந ஆஸம் இது ந /-நீ இன்று இருக்கிறாய் அல்ல என்பது இல்லை –
இரட்டை இல்லை சொல்லி திடமாக -தன்னை -அவனை -ராஜாக்களை -ஜனாதிப -/ ஆத்ம நித்யம் –/ மற்ற புற மதங்களை போக்கி –
சஜாதீய விஜாதீய ஸூகத பேதங்கள் இல்லை என்பர் அத்வைதிகள் -த்ரிவித நிர்விசேஷ திரிவித பேத ரஹித சின் மாத்ர ப்ரஹ்மம் /
நித்யோ நித்யோனாம் சேதன சேதனாம் ஏகோ பஹு நாம் யோ விஹதாதி காமான் / நாராயணனே நமக்கே பறை தருவான் –

தேஹிநோஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா—.ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி—৷৷2.13৷৷
தீரர் சோகப் பட மாட்டார் -தேஹி -ஆத்மாவுக்கு சிசு பாலன் குமார காளை மூப்பு மரணம் போலவே அடுத்த சரீரம் கொள்வதும் –

மாத்ராஸ்பர்ஷாஸ்து கௌந்தேய ஷீதோஷ்ணஸுகதுகதா–ஆகமாபாயிநோநித்யாஸ்தாம் ஸ்திதிக்ஷஸ்வ பாரத৷৷2.14৷৷

யம் ஹி ந வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப—ஸமதுகஸுகம் தீரம் ஸோமரிதத்வாய கல்பதே—৷৷2.15৷৷

நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத-உபயோரபி-தரிஷ்டோந்தஸ்த்வநயோஸ்தத்த்வதர்ஷிபி–৷৷2.16৷৷

அவிநாஷி து தத்வித்தி யேந ஸர்வமிதம் ததம்.–விநாஷமவ்யயஸ்யாஸ்ய ந கஷ்சத் கர்துமர்ஹதி—৷৷2.17৷৷

அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தாஃ ஷரீரிண–அநாஷிநோப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத—৷৷2.18৷৷
நித்யம் -/-ஞான மயம்/ -கர்ம அனுபவிக்கும் கருவி -/அறியப்படும் பொருள்/ சூஷ்மம்/ ஐந்து வாசிகள் ஆத்மாவுக்கும் தேகத்துக்கும்-

ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யஷ்சைநம் மந்யதே ஹதம்-உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே–৷৷2.19৷৷
கொல்லுபவனாக நினைத்தாலோ கொல்லப் பட்டதாக நினைத்தாலோ– ஞானி இல்லையே –

ந ஜாயதே ம்ரியதே வா கதாசி—ந்நாயம் பூத்வா பவிதா வா ந பூய–.அஜோ நித்ய ஷாஷ்வதோயம் புராணோ–ந ஹந்யதே ஹந்யமாநே ஷரீரே—৷৷2.20৷৷
விகாரங்கள் -சரீரத்துக்கு -வெட்டப்படுவது இல்லை -பிறப்பு இறப்பு இல்லை -ஏற்படுவதும் அழிவதும் இல்லை -கல்ப ஆதியில் தோற்றம் பிரமனுக்கு -கல்ப -முடிவில் அவனுக்கு –
1000 சதுர் யுகம் அவனுக்கு பகல் / அவனுக்கும் அழிவு காட்ட மீண்டும் சப்தம் –
நித்ய / நைமித்திக்க பிரளயம்-மூன்று லோகம் அழியும்- / பிராகிருத பிரளயம் பிரமனுக்கும் முடிவு /ஆத்யந்திக பிரளயம் -சரணாகதன் திரும்ப மாட்டானே
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதன் /un usual as usual மாறுவதே பழக்கம் /

வேதாவிநாஷிநம் நித்யம் ய ஏநமஜமவ்யயம்.–கதம் ஸ புருஷ பார்த கம் காதயதி ஹந்தி கம்—৷৷2.21৷৷
நித்யம் என்று அறிந்தவன் -கொல்ல முயலுவானோ –கொல்ல முடியாதே சண்டை போடலாம் -அது உன் ஷத்ரிய கர்மம்

வாஸாம் ஸி ஜீர்ணாநி யதா விஹாய–நவாநி கரிஹ்ணாதி நரோபராணி.—ததா ஷரீராணி விஹாய ஜீர்ணா–ந்யந்யாநி ஸம் யாதி நவாநி தேஹீ—৷৷2.22৷৷
அடுத்த சரீரம் -சட்டை மாத்திக் கொள்வது போல் -தர்ம யுத்தம் -பிராணன் போனால் ஸ்வர்க்கம் தானே -நல்ல சரீரம் தான் கிட்டும் –

நைநம் சிந்தந்தி ஷஸ்த்ராணி நைநம் தஹதி பாவக–ந சைநம் க்லேதயந்த்யாபோ ந ஷோஷயதி மாருத—৷৷2.23৷৷
வெட்ட முடியாதே -கொழுத்த முடியாதே -நனைக்க முடியாதே -உலர்த்த முடியாதே

அச்சேத்யோயமதாஹ்யோயமக்லேத்யோஷோஷ்ய ஏவ ச.–நித்ய ஸர்வகத ஸ்தாணுரசலோயம் ஸநாதந—৷৷2.24৷৷
வெட்ட படவே முடியாது –நித்யம் -அந்தராத்மாவா இருக்கும் -ஒரே மாதிரியாக -இருக்கும்

அவ்யக்தோயமசிந்த்யோயமவிகார்யோயமுச்யதே.—தஸ்மாதேவம் விதித்வைநம் நாநுஷோசிதுமர்ஹஸி—৷৷2.25৷৷
அழிவு உடையவன் நினைப்பவன் முட்டாள் -விகாரம் இல்லையே -கவலை பட வேண்டாம் –

அத சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே மரிதம்.—ததாபி த்வம் மஹாபாஹோ நைவம் ஷோசிதுமர்ஹஸி৷৷2.26৷৷
ஆத்மாவே தேகம் பிறக்கும் இறக்கும் என்று கொண்டாலும் நீ சோகப் பட வாய்ப்பில்லை –லோகாயுதன் -கண்டதே கோலம் கொண்டதே காட்சி
ஜாபாலி -வாதம் /ஆத்மாவே தேகம் என்றால் பாபம் புண்ணியம் கவலையே வேண்டாமே/

ஜாதஸ்ய ஹி த்ருவோ மரித்யுர்த்ருவம் ஜந்ம மரிதஸ்ய ச.–தஸ்மாதபரிஹார்யேர்தே ந த்வம் ஷோசிதுமர்ஹஸி—৷৷2.27৷৷
சோகிக்க அர்ஹதை இல்லை -பிறந்தது என்றால் இறக்க வேன்டும் -இறந்தவை பிறக்கவும் செய்ய வேன்டும் -பரிகாரம் இல்லாமல் இருக்க எதற்கு சோகிக்க வேன்டும் —
லிபி மாத்த ஒருவனே -திருவடி மகரந்த தூள் தானே மாத்த முடியும் -கிருபை ஒன்றே கர்மம் போக்கும் -ஜோதிஷம் பரிகாரம் சொல்லாது -இன்னது நடக்கும் என்றே சொல்லும்
-அர்ஜுனன் இதனாலே தான் ஓடுகிறேன் -/ வென்றால் -பிறக்கும் ஜெயம் -பின்பு இறப்பு தோல்வி /ஸூஷ்மமான அர்த்தம்
குடம் தன்மை மரணம் -மண்ணான தன்மைக்கு ஜனனம் –பானை பண்ணும் பொழுது -மண் அவஸ்தை மரணம் -கூட அவஸ்தை பிறப்பு –
வீர ஸ்வர்க்கம் பிறக்கும் பீஷ்மர் மரணம் -இது தான் பிறந்தால் இறப்பு -என்றது –

அவ்யக்தாதீநி பூதாநி வ்யக்தமத்யாநி பாரத—அவ்யக்தநிதநாந்யேவ தத்ர கா பரிதேவநா–৷৷2.28৷৷
பூத காலம் அறிய முடியாது நிகழ் காலம் மட்டும் தெரியும் -மேலே வருவதையும் தெரியாமல் -கவலை பட காரணம் இல்லையே
-துக்கப் பட எந்த வழியிலும் காரணம் இல்லையே –

ஆஷ்சர்யவத்பஷ்யதி கஷ்சதேந—-மாஷ்சர்யவத்வததி ததைவ சாந்ய–ஆஷ்சர்யவச்சைநமந்ய ஷ்ரரிணோதி–ஷ்ருத்வாப்யேநம் வேத ந சைவ கஷ்சத்—৷৷2.29৷৷
ஆத்ம ஞானி உடைய பெருமை-பார்க்க -முயல்வர்களில் கோடியில் ஒருவன்–முயன்று -கோடியில் ஒருவன் கேட்டு–உபதேச பாத்ர பூதன் கோடியில் ஒருவன்
– பார்த்து -அதில் கோடியில் ஒருவன் மட்டுமே அறிகிறான் -துர்லபம் –ஓர் ஒருவர் உண்டாகில் –எல்லாருக்கும் அண்டாதது அன்றோ அது –

தேஹீ நித்யமவத்யோயம் தேஹே ஸர்வஸ்ய பாரத.–தஸ்மாத்ஸர்வாணி பூதாநி ந த்வம் ஷோசிதுமர்ஹஸி—৷৷2.30৷৷
பல்லவி அநு பல்லவி போலே சோகப் படாதே -கடைசி வரை தாயார் போலே -வாத்சல்ய தரம் -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன்
-உந்தியில் புகுந்து -ஆதரம் பெறுக வைத்து -எல்லா தேகத்துக்குள்ளும் ஆத்மா நித்யம் தான் -எந்த ஜீவ ராசிகளை பற்றியும் கவலைப் பட வேண்டாம்
அஸ்தான காருண்யம் விலக்கினது இது வரை-தர்ம அதர்ம கலக்கம் -மேலே -4 –ஸ்லோகங்களில் சொல்லி
-அஸ்தானே ஸ்நேஹம் மேலே-3–ஸ்லோகங்களில் சொல்லப் போகிறான் –

ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி—தர்ம்யாத்தி யுத்தாச்ரேயோந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்யதே–৷৷2.31৷৷
ஷத்ரியன் ஸ்ரேயஸ் மோக்ஷம் போக தர்ம யுத்தம் -கிடைக்காத வாய்ப்பு கிட்டும் பொழுது சோகிப்பாயோ–அந்தணன் -ஞானம் -வேறே வழியால் மோக்ஷம் இல்லை
போலே -ஷத்ரியனுக்கு தர்ம யுத்தம் /சண்டை போடாமல் கர்மம் நழுவி நீ நரகம் -துரியோதனன் வென்று அதர்ம ராஜ்யம் நடத்தி அவனும் நரகம் போவான் –

யதரிச்சயா சோபபந்நம் ஸ்வர்கத்வாரமபாவரிதம்.–ஸுகிந க்ஷத்ரியா பார்த லபந்தே யுத்தமீதரிஷம்–৷৷2.32৷৷
மோக்ஷம் போகும் மார்க்கம் தானே கிட்டிய பின்பு

அத சைத்த்வமிமம் தர்ம்யம் ஸம்க்ராமம் ந கரிஷ்யஸி.–தத ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி—৷৷2.33৷৷
தர்ம யுத்தம் ஒரு வேளை பண்ணாமல் ஓடினாள் -தர்மமும் விட்டவனாக -சுவர்க்கமும் கீர்த்தியும் இழந்து –

அகீர்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தேவ்யயாம்.–ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாததிரிச்யதே—৷৷2.34৷৷
அகீர்த்தி உலகம் எங்கும் பரவும் –இதிஹாச புராணம்-எழுதுவோர்க்கு வாய்ப்பு -வீர்யம் மிகுந்த நீ -அகீர்த்தி மரணம் விட மோசமாகும் –

பயாத்ரணாதுபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா—.யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்—৷৷2.35৷৷
பயத்தால் ஓடினால் -மகா ரதர்கள் கேலி பேச –யாரால் நீ மதிக்கப் பட்டாயோ அவர்களே உன்னை இகழும் படி –
வீரன் -எதிரி -இரண்டாகும் இருந்து -செய்வதை -கேலி பண்ணுவார்கள் –
ஸ்நேஹம் -வேறே கோழை வேறே பொறுமை வேறே -வாசி ஸூஷ்மம் –

அவாச்யவாதாம்ஷ்ச பஹூந் வதிஷ்யந்தி தவாஹிதா–நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ துகதரம் நு கிம்—৷৷2.36৷৷
வாயாலே பேசிக் கூடாத -கோழை போலே -ஹிதம் விரும்பாதவர்கள் –நீ யோகி அல்ல வீரன் -சகிக்க முடியாதே துக்கம் தரும் -மரணம் விட மோசம் –
காண்டீபம் -தர்ம புத்திரர் கேலி பண்ணுவார் -ஒரே நாளில் முடிப்பேன் என்று சொல்லி ஆரம்பித்து -தீ வைத்து கொள்ளுவேன் என்று போனான்
-இப்பொழுது யுத்த ரங்கம் விட்டு போகிறாய் -என்று ஸூ சகம்

ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்–தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய யுத்தாய கரிதநிஷ்சய–৷৷2.37৷৷
வீர சுவர்க்கமா ராஜ்யமோ கிட்டும் –ஆத்ம சாஷாத்காரம் -உனக்கு ஏற்பட்ட கர்ம யுத்தமே -இடப பட்ட பாணி இதுவே -அதனால் எழுந்து இரு
-யுத்தமே மோக்ஷ சாதனம் என்று நிச்சயப்படுத்து என்றவாறு –
அஸ்தானே ஸ்நேக விஷயம் சொல்லி முடித்து மேலே கார்ய யோகம் -53-ஸ்லோகங்கள் வரை –

ஸுகதுகே ஸமே கரித்வா லாபாலாபௌ ஜயாஜயௌ.–ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி—৷৷2.38৷৷
ஆத்ம சாஷாத்காரம் பெற– ஞான யோகம் –ஞான உரோகம் பண்ண –மனஸ் சுத்தி —பற்று அற்ற கர்ம யோகம் –படிக்கட்டு –
மேலே கர்ம யோகம் நேராக சாஷாத்காரம் என்பான் மூன்றாம் அத்யாயம் –
பாபம் -சம்சாரம் கிடந்தது -ஸூ கம் துக்கம் / லாபம் நஷ்டம் / வெற்றி தோல்வி -இரட்டைகளை சமமாக -நினைத்து -/
பலம் -இவை -இவற்றை மறந்து –யுத்தத்துக்காக செய்ய வேன்டும் —
ராமனாக அவதரித்து நடத்தி காட்டியதை கண்ணன் உபதேசிக்கிறார் இங்கு -அப்பொழுது அலர்ந்த செந்தாமரையை வென்றதே ராஜ்யம் இல்லை என்றதும் –

ஏஷா தேபிஹிதா சாங்க்யே புத்திர்யோகே த்விமாம் ஷ்ரரிணு.–புத்த்யாயுக்தோ யயா பார்த கர்மபந்தம் ப்ரஹாஸ்யஸி—৷৷2.39৷৷
சாங்க்யம் ஆத்ம விஷயம் -கர்ம யோகம் பண்ணும் புத்தி -சொல்கிறேன் -புத்தி உடன் சேர்த்து கர்ம யோகம் செய்பவன் சம்சாரம் தொலைக்கிறான் –
பிரகரணம் மாறுவதால் ஸ்ருணு- கேளாய் என்கிறான் -யோகம் -கர்மா யோகம் என்றவாறு -சாதனம் -என்றவாறு -யோகம் கூடியது -என்றுமாம்
-கர்மா யோக புத்தி வந்தால் -அவன் கூட சேருவோமே

நேஹாபிக்ரமநாஷோஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே–ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்–৷৷2.40৷৷
நடுவில் நழுவினாலும்-கர்ம யோகம் – -அடுத்த ஜென்மம் விட்ட இடத்தில் தொடரும் -தப்பானாலும் தோஷம் இல்லை
-ஞான யோகம் பக்தி யோகம் அப்படி இல்லையே -கொஞ்சம் பண்ணினாலும் -முடிந்த அளவு செய்து

வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குருநந்தந—பஹுஷாகா ஹ்யநந்தாஷ்ச புத்தயோவ்யவஸாயிநாம்—৷৷2.41৷৷
உயிரான ஸ்லோகம் -ஆத்ம சாஷாத்காரம் -குறியாக கொண்டு -கர்ம யோகம் -ஒரே நேர் பார்வை -நிறைய கிளைகள்
மற்ற பலத்தில் ஆசை வைத்து -ஒன்றுமே கிட்டாமல் -காம்ய கர்மங்கள் கூடாதே -ஏகாக்ர புத்தி-
நித்ய நைமித்திக காம்ய கர்மாக்கள் உண்டே -காம்ய கர்மாக்கள் கூடாதே -பலத்தில் ஆசை இல்லாமல் – –
கர்ம யோகத்துக்கு நித்ய நைமித்திக கர்மாக்கள் உதவும் –

யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்யவிபஷ்சத–வேதவாதரதா பார்த நாந்யதஸ்தீதி வாதிந—৷৷2.42৷৷
காம்ய கர்மாக்கள் கூடாது என்றால் வேதம் சொல்வது எதனால் –சற்று அறிவு கொண்டு -பூ பூத்தால் போலே பேசி -காய் கனி –இல்லாமல்
-வாதம் பண்ணுபவர்கள் –ஸ்வர்க்கம் ஒன்றே பலம் என்பர் –

காமாத்மாந ஸ்வர்கபரா ஜந்மகர்மபலப்ரதாம்.–க்ரியாவிஷேஷபஹுலாம் போகைஷ்வர்யகதிம் ப்ரதி–৷৷2.43৷৷
காமிய கர்மங்கள் ஜென்மம் மீண்டு மீண்டு கொடுக்கும் -கிரியா விசேஷங்கள் பல உண்டு

போகைஷ்வர்யப்ரஸக்தாநாம் தயாபஹரிதசேதஸாம்–வ்யவஸாயாத்மிகா புத்தி ஸமாதௌ ந விதீயதே—৷৷2.44৷৷
அனுபவத்தில் மனஸ்–புத்தி தப்பான வழியில் –செல்பவர்களுக்கு இந்த ஏகாக்ர புத்தி விளையாது –

த்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுந.–நிர்த்வந்த்வோ நித்யஸத்த்வஸ்தோ நிர்யோகக்ஷேம ஆத்மவாந்—-৷৷2.45৷৷
முக்குணத்தவர்கள் –உண்டே -இரண்டை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று –மகா க்ரமன் -மஹதி அனுபூதி படிக்கட்டு வைப்பான் தன்னிடம் சேர்க்க
வேத நூல் ஒத்துகின்றது உண்மை -த்வந்தம் -சுக துக்கம் -இத்யாதி -/
யோகம் -கிடைக்காதது கிடைப்பது -க்ஷேமம் -கிடைத்தது நிலைக்கும் -ஆத்மா சாஷாத்காரம் கிட்டி தங்க வேன்டும்

யாவாநர்த உதபாநே ஸர்வத ஸம்ப்லுதோதகே.–தாவாந்ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத—৷৷2.46৷৷
நமக்கு வேண்டிய தண்ணீரை தானே குடிப்போம் -வேதத்தில் நமக்கு உள்ளதை மட்டும் கொள்ள வேன்டும் –

கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந.–மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோஸ்த்வகர்மணி—৷৷2.47৷৷
அகர்மா -பண்ணாமல் இருப்பது –சங்கம் -கூட்டு -நினைக்காதே -செய்தே ஆக வேன்டும் –கர்மா பண்ணுவதில் தான் யோக்யதை —
பலம் எதிர்பார்க்காமல் -ஸ்வர்க்காதி பலன்களில் கண் வைக்காமல் -பலன் கிடைப்பது நம்மால் இல்லை -கார்ய காரண பாவ விசாரம் –
பஞ்ச பிராணன் இந்திரியங்கள் மனஸ் தேகம் ஆத்மா பரமாத்மா -ஐந்தும் சேர்ந்தே -காரியம் -/காரணம் நாமே என்ற நினைவு கூடாதே –
அகர்த்ருத்வ அனுசந்தானாம் -கர்த்ருத்வ -மமதா -பல -தியாகம் மூன்றும் வேண்டுமே-
பல தியாகம் – தாழ்ந்த பலன்களில் கண் வைக்காமல் -/ மமதா -என்னுடையது -கர்த்ருத்வம் -நான் பண்ணுவது-

யோகஸ்த குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநஞ்ஜய.–ஸித்த்யஸித்த்யோ ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே৷–৷৷2.48৷৷
சமத்துவம் புதிய கருத்து –சித்தியோ அசித்தியோ -வெற்றியோ தோல்வியோ ஒன்றாக நினைத்து –யோகத்தில் நிலை நின்று கர்ம யோகம் செய்து
பற்றுதல்களை தொலைத்து -தனத்தை வெல்லுவாய் -சங்கம் வெல்வது அரிது என்பதால் தனஞ்சயன் -ஒரு சிஷ்யனும் சரண் என்று சொல்ல வில்லையே –
ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் இடமே பலித்தது –கர்ம யோகி -சுக துக்கம் சமமாக பார்ப்பார்களே –

தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத்தநஞ்ஜய.–புத்தௌ ஷரணமந்விச்ச கரிபணா பலஹேதவ—৷৷2.49৷৷
தரித்ரர்கள் -தாழ்ந்த பலத்துக்காக பண்ணுபவர்கள் –புத்தி யோகம் விட கர்ம யோகம் மிகவும் தாழ்ந்தது –என்கிறான் இல்லை -53-ஸ்லோகம் மேல் தான் ஞான யோகம்
தியாக புத்தி உடன் செய்யும் கர்ம யோகமே உயர்ந்தது என்றவாறு –புத்தியில் புகலிடமாக ஆஸ்ரயிப்பாய் -புத்தியை முதலில் சம்பாதித்து கொள் என்றவாறு -/

புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸுகரிததுஷ்கரிதே—தஸ்மாத்யோகாய யுஜ்யஸ்வ யோக கர்மஸு கௌஷலம்—৷৷2.50৷৷
சாமர்த்தியமாக -எல்லாம் செய்து -நம்மது இல்லை –தியாக உணர்வுடன் செய்தால் -இரண்டையும் விட்டு -இங்கேயே -ஸூஹ்ருதம் -ஈஸ்வர ப்ரீதியும் அப்ரீதியும்
-இதுவே புண்ய பாபங்கள் –தாழ்ந்த பலன்களை கொடுக்கவும் ஈஸ்வர ப்ரீதியால் -வேறே வழியில்லாமல் கொடுக்கிறேன் -என்றவாறு –
ஆத்மசாஷாத்கார பலத்துக்காக செய்தால் மட்டுமே உண்மையான ப்ரீதியுடன் வழங்குவான் –

கர்மஜம் புத்தியுக்தா ஹி பலம் த்யக்த்வா மநீஷிண–ஜந்மபந்தவிநிர்முக்தா பதம் கச்சந்த்யநாமயம்—৷৷2.51৷৷
மனுஷர்கள் -மூன்று வித தியாகம் சேர்ந்த புத்தி -மீண்டும் மீண்டும் இதை சொல்லி -திட புத்தி வர –/கர்ம யோகம் ஒரே பலனுக்காக -/
ஜென்மம் பந்தம் இல்லாமல் -மோக்ஷ பதம் பெற்று -வியாதி அற்ற பரமபதம் -அடைகிறான் /

யதா தே மோஹகலிலம் புத்திர்வ்யதிதரிஷ்யதி.–ததா கந்தாஸி நிர்வேதம் ஷ்ரோதவ்யஸ்ய ஷ்ருதஸ்ய ச–৷৷2.52৷৷
மயக்கத்தால் -கலங்கி -மோகம் -தேஹாத்ம பிரமம் –உபதேசம் கேட்டு வெளியில் வந்து –வெறுப்பு அடைந்து –சொல்வதை யும் சொல்லப் போவதையும் –
தேகம் -நஸ்வரம் அறிந்த பின்பு வெறுப்பு வருமே -நித்தியமான ஆத்மா பற்றி அறியாமல் -இருந்தோம் -பொழுதே பல காலம் போயின என்று அஞ்சி அழுவோமே –
நிர்வேதமே முதல் அடையாளம் -திருந்துவதற்கு -குல பாம்சனம் -திரும்பி விபீஷணன் -முதல் அடி –

ஷ்ருதிவிப்ரதிபந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிஷ்சலா.—ஸமாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி—-৷৷2.53৷৷
யோகம் -ஆத்மசாஷாத்காரம் -இங்கு -/ஸ்ருதி -இது வரை கேட்டு -நல்ல விசேஷ ஞானம் பெற்று -ஒரு முகப் பட்ட புத்தி -அசலா புத்தி —
மனஸ் -சமாதி -அசைக்க மாட்டாத ஞானம் வந்து இருக்கும் -ஞான யோகம் பிறக்கும் என்றவாறு /ஆத்ம சாஷாத்காரம் கிடைக்கும் -என்றவாறு –

அர்ஜுந உவாச-
ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேஷவ.–ஸ்திததீ கிம் ப்ரபாஷேத கிமாஸீத வ்ரஜேத கிம்—৷৷2.54৷৷
ஞான யோகி -அசைக்க மாட்டாத ஞானம் படைத்தவன் -வேறு பலனுக்கு குறி இல்லாமல் -ஆத்ம சாஷாத்காரம் -எப்படி விளக்குவார்கள் —
தான் என்ன பேசுவான் -அவன் மானஸ காய்க்க செயல்கள் என்ன -மூன்றையும் பற்றி கேட்க்கிறான் –
மேலே நான்கால்–நான்கு நிலைகள் –முதல் படிக்கட்டு -58-யதமான-யத்னம் முயலுவது முதல் நிலை / வ்யதிரேக / ஏகேந்த்ர / வசீகரா ச்மஞ்ஞா –
இந்திரியங்களை அடக்கி –68-வரை -சொல்லி –
பலாத்காரமாக -முயன்றாலும் -ஆசை திருப்ப வேன்டும் -வ்யதிரேகம் அடுத்து / மனஸ் அப்புறம் ஏகேந்த்ரியம் / வசீகரம் அனைத்தையும் அடக்குவது

ஸ்ரீ பகவாநுவாச–
ப்ரஜஹாதி யதா காமாந் ஸர்வாந் பார்த மநோகதாந்.–ஆத்மந்யேவாத்மநா துஷ்ட ஸ்திதப்ரஜ்ஞஸ்ததோச்யதே—৷৷2.55৷৷
வசீகரம் -கடைசி நிலை -சர்வ ஆசைகளையும் விட்டு -ஆத்ம சாஷாத்காரம் தவிர –மனசால் ஆத்மா இடமே செலுத்தி ஸந்தோஷம் அடைகிறான்

துகேஷ்வநுத்விக்நமநா ஸுகேஷு விகதஸ்பரிஹ-வீதராகபயக்ரோத ஸ்திததீர்முநிருச்யதே–৷৷2.56৷৷
ஏகேந்த்ரம் -மனன சீலன் முனி -ஆத்மா இடமே மனசை செலுத்தி -துக்கம் வந்தால் கலங்காமல் -சுகம் வந்தால் மகிழாமல் —
கீழே சுகம் துக்கம் -இங்கு சுக காரணம் -துக்க காரணம் -/
ராகம் பயம் க்ரோதம் மூன்றையும் விட்டு –அநாகதேஷூ ஸ்ப்ருஹ ராகம் -வர போகும் நல்லது பற்றி இனம் புரியாத ஆசை வருமே அது தான் ராகம் /
பிரிய விஸ்லேஷம் அப்ரிய ஆகாத —பயம் முதல் நிலை -அப்புறம் துக்கம் –எதிர்பார்க்கும் நிலையில் -/
க்ரோதம் -பயம் -வந்து -செய்யும் செயல்கள் தானே -ஆசை மாறி கோபம் -ஆசை இருந்தால் தானே கோபம் வரும் –

ய ஸர்வத்ராநபிஸ்நேஹஸ்தத்தத்ப்ராப்ய ஷுபாஷுபம்.–நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா—–৷৷2.57৷
வ்யதிரேகம் -ஆசையை திருப்புவது –இவன் தான் ஞான யோகி -எங்கும் இருந்து -ஆசை காட்டாமல் உதாசீனனாக -பற்று அற்று –
ஸூபம் அஸூபம் -இன்பமோ துன்பமோ படாமல் -பக்குவப்பட்டு -/புகழுவதும் இகழுவதும் இல்லாமல்/

யதா ஸம் ஹரதே சாயம் கூர்மோங்காநீவ ஸர்வஷ–இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா—-৷৷2.58৷৷
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா–அவனுடைய ஞானம் நிலை பெற்றது -மீண்டும் மீண்டும் வரும் -ஆமை -போலே சுருக்கிக் கொண்டு -விஷயங்களில் இருந்து
இந்திரியங்களை இழுத்து –பகவத் விஷயம் மட்டுமே -கண்டு பேசி கேட்டு -சப்த்தாதிகளில் இருந்து இழுத்து -அப்பொழுது தான் மனசை ஆத்மா இடம் செலுத்த முடியும் —

விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந–.ரஸவர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் தரிஷ்ட்வா நிவர்ததே–৷৷2.59৷৷
ஆத்ம தரிசனத்தால் இந்திரியங்கள் அடக்கலாம் -ஏக ஆஸ்ரய தோஷம் -/ரசம் ஆசை தவிர விஷயங்கள் -சாப்பாட்டை விலக்கி -ஆசை தவிர
எல்லாம் போகும் -ஆசை கூட ஆத்மா சாஷாத்காரம் வந்தால் போகும் /விஷயங்கள் ஆசையை தவிர விலகி போகும் -அதுவும் போகும்

யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஷ்சத.–இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந—৷৷2.60৷৷
இந்திரியங்கள் அடக்கி ஆத்ம தர்சனம் -என்கிறான் –பிரத்யனம் செய்தாலும் –இந்திரியங்கள் பலமானவை -மனசை பலாத்காரமாக இழுக்கும் –

தாநி ஸர்வாணி ஸம் யம்ய யுக்த ஆஸீத மத்பர–வஷே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா—-৷৷2.61৷৷
குறுக்கு வழியை சொல்லி / இந்திரியங்களை கொண்டு திரு மேனியில் வைத்து -ஸூ பாஸ்ரயம் -தானே அடங்கும் -/ சித்த சமாதானம் உடன்
அவன் இடமே நிலை பெற செய்து /ஜிஹ்வே கேசவ கீர்த்தி -படைத்த பலன் -/மயில் கண்ணுக்கும் நம் கண்ணுக்கும் வாசி இருக்க வேண்டுமே
பாம்பு பூத்து ஓட்டைக்கும் காது ஓட்டைக்கும் / பிணம் கைக்குக்கும் நம் கைகளுக்கும் – மரம் வேருக்கும் நம் காலுக்கும் -ஈஸ்வராயா நிவேதித்து பண்ண வேண்டுமே /

த்யாயதோ விஷயாந்பும் ஸ ஸங்கஸ்தேஷூபஜாயதே.—ஸங்காத் ஸம் ஜாயதே காம-காமாத்க்ரோதோபிஜாயதே—৷৷2.62৷৷
இதிலும் அடுத்ததிலும் -படிக்கட்டு -அவரோகணம் -தலை குப்புற விழ –
ஈஸ்வரனை நினைக்காமல் -அசித்தை -விஷயாந்தரங்கள் –சங்கம் -பற்று முதலில் பிறக்கும் -சங்கம் காமமாக மாறும்
-ஆசை பிறக்கும் -கிடைக்காமல் தடுத்தவன் பேரில் க்ரோதம் –

க்ரோதாத்பவதி ஸம் மோஹ ஸம் மோஹாத்ஸ்மரிதிவிப்ரம—ஸ்மரிதிப்ரம் ஷாத் புத்திநாஷோ புத்திநாஷாத்ப்ரணஷ்யதி—৷৷2.63৷৷
க்ரோதம் -வந்தால் பகுத்து அறிவு போகும் –ஸ்ம்ருதி நினைவு போகும் –இருக்கும் ஞானமும் அற்று போகும் -/
புத்தி நாசம் ஆனால் பிணம் போலே தானே -இப்படி படிக்கட்டு -கீழே விழ -/

ராகத்வேஷவியுக்தைஸ்து விஷயாநிந்த்ரியைஷ்சரந்.–ஆத்மவஷ்யைர்விதேயாத்மா ப்ரஸாதமதிகச்சதி–৷৷2.64৷৷
நினைத்தால் அருளுவான் -பிரசாதம் -மனஸ் தெளிவு அடைகிறான் -வசப்பட்ட இந்த்ரியங்களால் விஷயம் தாண்டி -ராகம் த்வேஷம் இல்லாமல் –
தெளிந்த மனசில் ஞான யோகம் பிறக்கும் -ஒரே படிக்கட்டு வேறு வேறு விதமாக அருளிச் செய்கிறான் -/

ப்ரஸாதே ஸர்வதுகாநாம் ஹாநிரஸ்யோபஜாயதே.–ப்ரஸந்நசேதஸோ ஹ்யாஷு புத்தி பர்யவதிஷ்டதே–৷৷2.65৷৷
மனஸ் தெளிவு வந்தால் துக்கங்கள் வெட்டப் படுமே –புத்தி -அவனுக்கு தானே -ஞான யோகம் பிறக்கும் –

நாஸ்தி புத்திரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவநா.–ந சாபாவயத ஷாந்திரஷாந்தஸ்ய குத ஸுகம்–৷৷2.66৷৷
இன்னும் ஒரு படிக் கட்டு -ஆத்மா அறிவு இல்லாமல் -புத்தி இல்லாமல் -கண்ணனை நினைக்காமல் -த்யானம் பண்ண மாட்டான் –
விஷய ஆசை போகாதே -/ பாவனா -த்யானம் -ஷாந்தி ஏற்படாதே -சுகம் -சாஷாத்காரம் கிடைக்காதே

இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோநுவிதீயதே—ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்பஸி—৷৷2.67৷৷
மனசை இந்திரியங்கள் பின்னே போக விட்டால் -பட்டி மேய்ந்தால் -மனம் -ஆத்ம விஷய ஞானத்தை இழுக்கும் –புத்தி வளர விடாமல்
-எதிர்த்து வீசும் காற்று படகை தத்தளிக்க விடுவது போலே -ஆகுமே -பகவானை நோக்கி செலுத்துவதே ஒரே வழியாகும்

தஸ்மாத்யஸ்ய மஹாபாஹோ நிகரிஹீதாநி ஸர்வஷ–.இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா—৷৷2.68৷৷
அதனால் -எல்லா வற்றில் நின்றும் விலக்கி -விஷயங்களில் இருந்து இந்திரியங்களை அடைகி
-இது வரை இந்திரியங்களை அடக்குவது பற்றி அருளிச் செய்தான்

யா நிஷா ஸர்வபூதாநாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம் யமீ.யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிஷா பஷ்யதோ முநே–৷৷2.69৷৷
முதிர்ந்த நிலை –ஞானிக்கு பகல் இரவு -உலோகோருக்கு மாறி /ஆத்ம விஷய ஞானம் வெளிச்சம் -இவனுக்கு -உலக விஷயம் இவனுக்கு இரவு
-கண்டாலே இவனுக்கு இருந்து போகுமே /மஹாத்ம்யம் தெரிவிக்கிறான் -/

ஆபூர்யமாணமசலப்ரதிஷ்டம் -ஸமுத்ரமாப ப்ரவிஷந்தி யத்வத்.–தத்வத்காமா யம் ப்ரவிஷந்தி ஸர்வே-ஸ ஷாந்திமாப்நோதி ந காமகாமீ—৷৷2.70৷৷
நடு நிலை –இதில் -/சமுத்திரம் உதாரணம் -தானே நிறைந்து -கலக்க முடியாதே -நதிகள் வந்து நிறைக்க வேண்டாம் -நதிகள் ஓடி சமுத்திரத்தில் சேருமோ
அதே போலே -ஞான யோகி -தானே மனனம் பண்ணி நினைவு -நல்லது கண்டு ஆனந்தம் -கேட்டது கண்டு துக்கம் இல்லை -நதிகள் சேர்ந்து கடல் உயராதது போலே
இந்திரியங்கள் விஷய அனுபவம் மனஸ் உள்ளே வந்தாலும் -ஸூகமோ துக்கமோ இல்லாமல் -விகாரம் இல்லாமல் -என்றவாறு
-கீழே உள்ளேயே வர விட மாட்டாதவன் நிலை -உயர்ந்தது

விஹாய காமாந்ய ஸர்வாந்புமாம் ஷ்சரதி நிஸ்பரிஹ—.நிர்மமோ நிரஹம் கார ஸ ஷாம் திமதிகச்சதி–৷৷2.71৷৷
முயல்பவன் நிலை –ஷாந்தி அடைகிறான் –பகவானையே நினைந்து –விஷயங்களை விலக்கி- -ஆசையை விலக்கி -என்னது இல்லை –
அஹங்காரம் தொலைத்து -மமகாராம் -இப்படி ஒரு படிக் கட்டு -/அநஹத்தை அஹமாக நினைப்பது -நான் அல்லாத சரீரத்தை ஆத்மா நினைப்பது அஹங்காரம் -/
தான் அல்லாததை தான் என்று நினைப்பது அஹங்காரம் -தன்னது அல்லாததை தன்னது என்று நினைத்தால் மமகாராம் –
முதலில் மமகாராம் தொலைத்து -தேகம் உடன் சம்பந்தம் பெற்றதை விலக்குவோமே -/அஹங்காரம் போகும் -/

ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி பார்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி–.ஸ்தித்வாஸ்யாமந்தகாலேபி ப்ரஹ்மநிர்வாணமரிச்சதி—৷৷2.72৷৷
அடைகிறான் -சுகமான ஆத்மா தர்சனம் -அசங்க கர்மத்தை ஆத்ம ஞானம் உடன் அனுஷ்ட்டித்து -பற்று அற்ற கர்ம யோகம் ஞானத்துடன் —
சோகப்பட மாட்டான் – கர்ம யோகத்தில் இருந்து கடைசி காலத்தில் ஆத்ம சாஷாத்காரம் அடைகிறான் -/

—————————————————

கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -18-

June 9, 2017

ஈஸ்வரே கர்த்ருதா புத்தி சத்வ உபாதேயதா அந்தி மே-
ஸ்வ கர்ம பரிணா மஸ்ஸ சாஸ்திர சாரார்த்த உச்யதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –22-

1–ஈஸ்வரே கர்த்ருதா புத்தி -கர்த்தா நான் அல்லேன் -ஈஸ்வரன் தூண்ட செய்கிறேன் என்ற புத்தி வேண்டுமே –18-17-வரை –
2–சத்த்வோ பாதே யதாந்தி மே—சத்வ உபாதேயதா அந்தி மே-கடைசி அத்தியாயத்தில் – –சத்வ குணத்துடன் -18-18–18-43-வரை –
-சாத்விக ஞானம் -சாத்விக புத்தி -சாத்விக கர்மா -சாத்விக தியாகம் சாத்விக கர்த்தா –தேவதை ஆகாரம் தானம் யஜ்ஜம் தபஸ்-ஐந்தையும் கீழே பார்த்தோம்
-இங்கு -கர்மம் ஞானம் புத்தி த்ருதி கர்த்தா -என்ற ஐந்தும் சொல்வான்
3–ஸ்வ கர்ம பரிணா மஸ்ஸ –ஞானம் உள் அடக்கிய கர்மா யோகத்தால் –18-44—18-54-வரை –
4–சாஸ்திர சாரார்த்த உச்யதே –சாஸ்த்ர சாரத்தை அருளிச் செய்கிறான் –
சாரார்த்தம் -ஸாத்ய பக்தி ஏக கோசாரத்தால்–பக்தி யோகத்தால் மட்டும் தான் அவனை அடைய முடியும் –
-18–66–சரம உபாயம் சொல்லும் ஸ்லோகம் என்றபடி -/ பக்தி சரமமா -சரணாகதி சரமமா என்னில் -கீதா சாஸ்திரம் படி பக்தியே
-பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க சரணாகதி -இங்கு
சரம ஸ்லோகம் வைபவம் இங்கு இல்லை -ரஹஸ்ய த்ரயத்தில் சேர்த்து -சரணாகதியை உபாயம் -நேரே முக்திக்கு உபாயம் சரணாகதி என்றவாறு -/
ஒரே ஸ்லோகம் கொண்டு -இங்கு பக்திக்கு அங்கம் / அங்கு ஸ்வதந்திரமாக உபாயம் என்றவாறு –

———————————–

அர்ஜுந உவாச-
ஸந்யாஸஸ்ய மஹாபாஹோ தத்த்வமிச்சாமி வேதிதும்–த்யாகஸ்ய ச ஹரிஷீகேஷ பரிதக்கேஷிநிஷூதந–৷৷18.1৷৷

ஸ்ரீ பகவாநுவாச-
காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் ஸந்யாஸம் கவயோ விது–ஸர்வகர்மபலத்யாகம் ப்ராஹுஸ்த்யாகம் விசக்ஷணா–৷৷18.2৷৷
காம்ய கர்மங்களை விட்டு -பலன்களை விட்டு -ஸ்வரூப தியாகம் கூடாது

த்யாஜ்யம் தோஷவதித்யேகே கர்ம ப்ராஹுர்மநீஷிண–யஜ்ஞதாநதப கர்ம ந த்யாஜ்யமிதி சாபரே–৷৷18.3৷৷
ஸ்வரூப தியாகம் கூடாது -தோஷம் இருப்பதால் எல்லா கர்மங்களையும் விட வேண்டும் -முமுஷுக்களும் செய்ய வேண்டும்

நிஷ்சயம் ஷ்ரரிணு மே தத்ர த்யாகே பரதஸத்தம–த்யாகோ ஹி புருஷவ்யாக்ர த்ரிவித ஸம் ப்ரகீர்தித–৷৷18.4৷৷
தியாக விஷயத்தில் -நிர்ணய விஷயம் /பிரமம் இல்லாமல் – பிரமாதம் கவன குறைவு இல்லாமல் – விப்ரலிப்ஸை -குழப்ப சொல்வது இல்லையே
தியாகம் என்னில் ஹி பிரசித்த அர்த்தம் –மூன்றாம் அத்யாயம் -30-ஸ்லோகம் -எல்லா கர்மங்களையும் என்னிடம்
-கர்த்ருத்வ பல மமக புத்தி தவிர்ந்து -மூன்றையும் நிறைய தரம் பார்த்து உள்ளோம்- மனிசர்களில் புலி போன்றவனே

யஜ்ஞதாநதப கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத்–யஜ்ஞோ தாநம் தபஷ்சைவ பாவநாநி மநீஷிணாம்–৷৷18.5৷৷
தானம் தபஸ் போன்றவற்றை ஒரு காலும் விடக் கூடாது–முமுஷுக்களும் செய்ய வேண்டும் –நித்ய நைமித்திக கர்மாக்கள்
கடைசி வரை செய்தெ இருக்க வேண்டும் -ஆ பிரயானாத் -பிரயாணம் வரை -அர்ச்சிராதி கதி – வர்ணாஸ்ரமம்-விடாமல் செய்வதே அவனுக்கு பிரியகரம்
முமுஷுக்களும் செய்ய வேண்டும் என்னில் -எந்த பயனுக்கு -தானம் தாபம் யாகம் முன் வினைகளை போக்கி -மனஸ் சுத்தி அடைவிக்கும்
-இதில் தான் பலனை அருளிச் செய்கிறான் –பக்தி நிஷ்டனுக்கும் -இங்கே இருப்பதால் -களை போலே -இருக்குமே
-நித்ய நைமித்திக கர்மம் செய்ய பாபங்கள் எரிக்கப் படும் -பக்தி செய்ய தடங்கல் இல்லாமல் சுத்தி கிட்டும்

ஏதாந்யபி து கர்மாணி ஸங்கம் த்யக்த்வா பலாநி ச–கர்தவ்யாநீதி மே பார்த நிஷ்சதம் மதமுத்தமம்–৷৷18.6৷৷
சாஸ்திரம் -ஹிம்சை தோஷம் கிடையாது -உபாசனம் போலே இந்த கர்மங்களும் -சங்கம் -பற்றுதலை அழித்து பலத்திலும் ஆசை இல்லாமல்
-கர்தவ்யம் -பகவத் ஆராதனம் ரூபமாக செய் -இது தான் உத்தம மதம் என்னுடைய மதம் -இவன் சொல்வது எல்லாம் உத்தமம்
-ஆராதனை ரூபம் என்றாலே மூன்று வித தியாகங்களும் உண்டு அவன் முக விகாசமே உத்தேச்யம்

நியதஸ்ய து ஸந்யாஸ கர்மணோ நோபபத்யதே–மோஹாத்தஸ்ய பரித்யாகஸ்தாமஸ பரிகீர்தித–৷৷18.7৷৷
கர்மம் விடுபவன் தமோ குணம் தூண்ட செய்கிறான் -நியதம் -நித்ய நைமித்திக கர்மங்கள் -சந்யாச தியாக சப்தங்கள் மாறி மாறி உபயோகித்து இரண்டும் ஒன்றே
என்று காட்டி அருளுகிறார் -விடுவது ஒவ்வாது -மயக்கத்தால் -குற்றம் இருக்கும் என்ற மயக்கம் -விட்டால் தமோ குண கார்யம் என்பர்
-பஞ்ச மகா யாகங்கள் -நிச்சயம் கர்ம யோகம் செய்தே இருக்க வேண்டும் -பகவத் ஆராதனம் -சரீர யாத்திரைக்கு வேண்டும்
-திருவாராதனம் செய்யாமல் உண்டால் பாப உருண்டைகள் தானே

துக்கமித்யேவ யத்கர்ம காயக்லேஷபயாத்த்யஜேத்–ஸ கரித்வா ராஜஸ த்யாகம் நைவ த்யாகபலம் லபேத்–৷৷18.8৷৷
கீழே விபரீத ஞானத்தால் விடுவது -இங்கு அந்யதா ஞானத்தால் -கீழ் அதர்மம் என்று நினைத்து -இங்கு காய கிலேசம் பயத்தால் -குதப-கு – பூமி சுட்டால் தான்
-வயிறு சுட்டால் தான் -ஸ்ரார்த்தம் பண்ண ஆரம்பிக்க வேண்டும் -மநோ பலமே தேக ஆரோக்யம் கொடுக்கும் -/மனசுக்கும் துக்கம்கொடுக்கும் உடம்பை வருத்தும்
என்று விட்டால் ராக்ஷஸ குணத்தால் விட்டதாகும் -ராக்ஷஸ தியாகம் ஆகும் -தியாக பலம் -சாத்விக தியாக தியாகத்தால் தான் ஞானம் வரும்
-ஆர்ஜிததுக்கும் – கொண்ட சொத்தை ரஷிக்கவும் காய கிலேசம் -என்பான் -ஆஜ்ஜை சாஸ்திரம் படி நடக்க வேண்டுமே

கார்யமித்யேவ யத்கர்ம நியதம் க்ரியதேர்ஜுந–ஸங்கம் த்யக்த்வா பலம் சைவ ஸ த்யாக ஸாத்த்விகோ மத–৷৷18.9৷৷
சாத்விக தியாகம் -நியத கர்மங்கள் -பகவத் ஆராதனை ரூபமாக -சங்கம் பற்று இல்லாமல் -பல மமதா தியாகம் செய்து -சாத்விக சப்தம் -இங்கு இருந்து
-எத்தை செய்தாலும் சாத்விக குணம் வேண்டுமே -/பகவத் முக விலாசம் பலன் -சாத்விக தியாகம் ஞானம் ஏற்படுத்தும்

ந த்வேஷ்ட்யகுஷலம் கர்ம குஷலே நாநுஷஜ்ஜதே-த்யாகீ ஸத்த்வஸமாவிஷ்டோ மேதாவீ சிந்நஸம் ஷய–৷৷18.10৷৷
கர்மங்களை ஸ்வரூபேண விடக் கூடாது -மீண்டும் வலியுறுத்தி அருளிச் செய்கிறான் -சத்வ குணங்கள் உடன் கூடி நல்ல ஞானவான் ஆகிறான்
-சம்சயன்கள் போக்குகிறான் -எல்லா பலன்களையும் விடுகிறான் -படிப் படியாக -கர்மங்களை வெறுக்காமலும் விரும்பாமலும் –
-அகுசல -விரும்பாத பாபம் தரும் கர்மங்கள் -விரும்பிய புண்ணியம் தரும் கர்மங்கள் -இதுவே கிடையாதே -பலனில் ஆசை இல்லாமல் இருக்கிறான்
-வெறுக்காமல் என்றால் பண்ணி கொண்டே இருக்கலாமோ -சங்கை -மோக்ஷம் போகிறவன் -பாப கர்ம தெரிந்து செய்ய மாட்டானே
-தெரியாமல் செய்தாலும் கவலை வேண்டாம் -நான் கணக்கில் கொள்ள மாட்டேன் -என்றபடி -/புண்ணியம் கொடுக்கும் கர்மாக்களை விரும்ப மாட்டானே
-/பலன்களில் விருப்பம் இல்லாமை கர்மங்களை செய்கிறான் –

ந ஹி தேஹபரிதா ஷக்யம் த்யக்தும் கர்மாண்யஷேஷத–யஸ்து கர்மபலத்யாகீ ஸ த்யாகீத்யபிதீயதே–৷৷18.11৷৷
ஒன்றும் மிச்சம் இல்லாமல் -எல்லா கர்மங்களையும் -தேஹ தாரணத்துக்கு -செய்தே -சாஸ்திரம் விதி மீறாமல் பொருள் ஈட்டி -வர்ணாஸ்ரம தர்மம் விரோதிக்காமல்
-/யார் பலத்தை விட்டு உள்ளானோ அவனே தியாகி -/தியாகத்தினாலேயே அம்ருத தன்மை -மோக்ஷம் அடைகிறான் -வேத வாக்கியம்
-தியாகம் என்றது கர்மங்களை விட சொல்ல வில்லை -பல த்யாகத்தையே சொல்லிற்று

அநிஷ்டமிஷ்டம் மிஷ்ரம் ச த்ரிவிதம் கர்மண பலம்–பவத்யத்யாகிநாம் ப்ரேத்ய ந து ஸந்யாஸிநாம் க்வசித்–৷৷18.12৷৷
கர்மங்களுக்கு மூன்று வித பலம் -நரகம்-அநிஷ்டம் / ஸ்வர்க்கம் -இஷ்டம் / இந்த லோக பலன் -மிஸ்ரம் -இதுவே /தியாகம் செய்யாதவர்களுக்கு –இவை
தியாகம் செய்தவர்களுக்கு இவை கிட்டாதே -/ த்ரிவித தியாகம் -முக்கியம் -/
விநியோக பிரததக்த நியாயம் –ஒரே கர்மா -மோக்ஷம் -ஸ்வர்க்கம் -ஆசை வைத்து நான் செய்தென் -என்ற எண்ணம் ஸ்வர்க்கம் / இல்லை என்றால் மோக்ஷம்
-எதை பொருட்டு பண்ணுகிறோம் அதே ஸ்வதந்த்ர போராட்டம் -கொண்டாடுகிறோம் -ஒரே செயல் பேர் பெற்று கொடுக்கும் -மற்றவருக்கு சிறை சாலை போலே /

பஞ்சைதாநி மஹாபாஹோ காரணாநி நிபோத மே–ஸாம் க்யே கரிதாந்தே ப்ரோக்தாநி ஸித்தயே ஸர்வகர்மணாம்–৷৷18.13৷৷
வேதத்தில் முடிவான பொருள் இதுவே -நான் தூண்டியே செய்கிறாய் -நான் கர்த்தா இல்லை என்ற தன்மை நினைத்து -பண்ண வேண்டும்
-பண்ணினேன் என்ற எண்ணமே விட வேண்டும் -/ஐந்து பேர் சேர்ந்தே செயல்கள் –

அதிஷ்டாநம் ததா கர்தா கரணம் ச பரிதக்விதம்–விவிதாஷ்ச பரிதக்சேஷ்டா தைவம் சைவாத்ர பஞ்சமம்–৷৷18.14৷৷
சரீரம் ஜீவாத்மா பற்றுக் கொம்பாக / ஜீவாத்மா / கருவிகள் இந்திரியங்கள் –ஐந்து வகை உண்டே /சேஷ்டை செய்யும் ஐவர்
-பஞ்ச பிராணங்கள்-வேறே வேறே வேலை இவற்றுக்கு பிராணன் அபானன் சாமான வாயு இவற்றுக்கு வேலை வேறே வேறே /
தெய்வம் பரமாத்மா -ஐந்து பெரும் சேர்ந்தே கார்யம் /தெய்வம் முக்கியம் மற்றை நாலையும் தூண்டுவித்து கார்யம் -கட்டை விரலை போலே –

ஷரீரவாங்மநோபிர்யத்கர்ம ப்ராரபதே நர–ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவ—৷৷18.15৷৷
சாஸ்திரம் சம்மதித்த கர்மம் -தொடங்கும் பொழுது -சரீர வாக் மனஸ் மூவகை பட்ட கர்மாக்கள் -/சம்மதிக்காதவையும் உண்டே / இந்த ஐந்தும் இருந்தால் தான் –
முக்கிய அர்த்தம் -கர்த்தா சாஸ்த்ரார்த்தவாத் –ஜீவாத்மா தான் கர்த்தா -விதிக்கிற படியால் -/ பரமாத்மாவை விதிக்காதே /சாஸ்திரம் அர்த்தம் ஆக வேண்டுமே
ஸ்வ தந்த்ர கர்த்தா இல்லை -அடுத்து -பரார்த்த் து -ஈஸ்வராதீனம் –ஈஸ்வர ஆணைக்கு உட்பட செய்தால் கர்ம பலன் ஜீவாத்மாவுக்கு சேரலாமோ -சங்கை வருமே /
க்ருத ப்ரத்யநா அபேஷாத் -பிரயத்தனம் எதிர்பார்த்து –உதாசீனம் அனுமந்தா -தூண்டி விடும் மூன்று நிலைகள்
முதல் நிலை உதாசீனம் -சாஸ்திரம் கொடுத்து ஞானம் கொடுத்து -முதல் முடிவு ஜீவாத்மா –
அனுமதி அளிக்கும் இரண்டாம் நிலை -நல்ல செயலோ தீய நிலையோ -அதிலேயே தூண்டி விடுகிறான் -குற்றம் வருமோ என்னில் –
தாய் குழந்தை விழும் பொழுது தடுக்காமல் -குற்றம் வருமோ -என்னில் -ஸ்வாதந்திரம் கொடுத்ததால் -இவன் ஆட்டு வாணியன் இல்லையே -ஞானமும் கொடுத்தானே-
ஆழ்வார் நீ தான் சம்சாரத்தில் -தூராக் குழி தூர்த்து வைத்தாய் -என்றது -பரதந்த்ர நிலையில் இருந்தே -சொன்னார்கள் -எல்லா பொறுப்பும் அவன் இடமே
-சர்வாத்மனா ஸ்வாதந்தர்யம் விட வேண்டுமே -அந்த நிஷ்டை வந்தால் நாமும் இப்படி சொல்லலாம் –

தத்ரைவம் ஸதி கர்தாரமாத்மாநம் கேவலம் து ய–பஷ்யத்யகரிதபுத்தித்வாந்ந ஸ பஷ்யதி துர்மதி—৷৷18.16৷৷
உண்மையில் செய்பவன் சர்வேஸ்வரன் -என்று உணராத துர்மதிகள் -இதுவே அகர்த்ருத்வ நினைவு இல்லாதவன்
-செய்து விட்டு நான் செய்ய வில்லை என்ற நினைவு வேண்டுமே

யஸ்ய நாஹம் கரிதோ பாவோ புத்திர்யஸ்ய ந லிப்யதே–ஹத்வாபி ஸ இமா ல்லோகாந்ந ஹந்தி ந நிபத்யதே–৷৷18.17৷৷
அகங்கார பாவம் -நானே செய்கிறேன் -இந்த பாவம் இல்லாதவன் -புத்தி செயலுக்கு ஆசைப்படாமல் -கர்த்ருத்வ பல தியாகம் கொண்டு –
கொலையே செய்தாலும் -யுத்தம் -ராஜ்ய பலம் இல்லாமல் -லோகத்தில் உள்ள அனைவரையும் –யாரையும் கொன்றவனாக ஆவது இல்லை -பாபங்களும் வராதே -/
பண்ணும் தப்புக்கு நாம் பொறுப்பு இல்லையா -தர்ம யுத்தத்தில் கொன்றாலும் என்றபடி -ஷத்ரிய தர்மம் என்பதால்
-தர்மம் வழியில் தர்ம யுத்தம் தர்மம் காக்க -இந்த கர்த்ருத்வ அனுசந்தானம் இல்லாமல் செய்ய வேண்டும் என்றபடி –

ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா த்ரிவிதா கர்மசோதநா–கரணம் கர்ம கர்தேதி த்ரிவித கர்மஸம் க்ரஹ—৷৷18.18৷৷
கர்மம் செய்ய தூண்டும் வேத வாக்கியங்கள் -அறிவும் கர்மங்களும் கர்த்தா -மூன்று வகை -பற்றி சொல்லும் /கர்ம வகை பற்றி இதில் சொல்லுகிறேன்
-இந்த வர்க்கம் -கரணம் யாகங்கள் செய்யும் த்ரவ்யம் -கர்மா -யாகம் / கர்த்தா -செய்யும் கர்த்தா –

ஜ்ஞாநம் கர்ம ச கர்தா ச த்ரிதைவ குணபேதத–ப்ரோச்யதே குணஸம் க்யாநே யதாவச்சரிணு தாந்யபி–৷৷18.19৷৷
இங்கும் முக்குணம் -பேதத்தால் -ஞானம் -கர்ம கர்த்தா -மூன்றுமே மாறுமே -/ சத்வ குணம் பயனில் பற்று வைத்து சாஸ்த்ர விதி
என்பதால் செய்வதே /உண்மை நிலையை கேள் -பராக் பார்க்காமல் கேள் என்றபடி

ஸர்வபூதேஷு யேநைகம் பாவமவ்யயமீக்ஷதே–அவிபக்தம் விபக்தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி ஸாத்த்விகம்–৷৷18.20৷৷
அந்த ஞானத்தை சாத்விக ஞானம் என்று புரிந்து கோள் -எந்த ஞானத்தால் இப்படி பார்க்கிறானோ -பிரம்மா முதல் பீபீலிகா வரை ஒன்றாக சம தர்சனம்
-விகாரம் இல்லா தன்மையை -எந்த அரிவாள் பார்க்கிறானோ -அந்த அறிவை சாத்விக ஞானம் -ஏகம் பாவம் ஜாதி வேறுபாடு -நிறம் வேறுபாடு இல்லாமை -அவிபக்தம்

பரிதக்த்வேந து யஜ்ஜ்ஞாநம் நாநாபாவாந்பரிதக்விதாந்–வேத்தி ஸர்வேஷு பூதேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி ராஜஸம்–৷৷18.21৷৷
ராக்ஷஸ ஞானம் -எதனால் ஜாதி முதலான வேறுபாடுகள் —உயரம் நிறம் போன்றவை- நாநா பாவம் ஜீவா சமூகம் -சரீரத்தால் வேறுபாடு -என்று அறியாமல் –
பசு பல வர்ணம் பால் வெண்மை -புல்லாங்குழல் -வேறே வேறே ஸ்வரம் ஒரே காத்து -ஆத்மா சரீரம் -இதே போலே

யத்து கரித்ஸ்நவதேகஸ்மிந்கார்யே ஸக்தமஹைதுகம்–அதத்த்வார்தவதல்பம் ச தத்தாமஸமுதாஹரிதம்–৷৷18.22৷৷
தாமஸ ஞானம் -இறந்தவர்கள் பூத கணங்களையும் பூஜித்து -கர்மங்கள் பண்ணி -/செயலும் தப்பு -சாதிக்கவும் முடியாது –
/காரணமே இல்லாமல் -அல்பமாக -சரீரம் தானே எல்லாம் என்று நினைத்து – பற்றி -செய்பவர்கள்

நியதம் ஸங்கரஹிதமராகத்வேஷத கரிதம்–அபலப்ரேப்ஸுநா கர்ம யத்தத்ஸாத்த்விகமுச்யதே–৷৷18.23৷৷
சாத்விக கர்மம் -சங்க ரஹிதம்-பற்று இல்லாமல் -கர்த்ருத்வ புத்தி -நியதம் க்ருதம் வர்ணாஸ்ரம கர்மங்கள் செய்து / பலனில் ஆசை இல்லாமல்
-த்ரிவித தியாகம் -/ புகழோ பழிப்போ என்று நினையாமல் -செய்யத் தகுந்தது என்பதற்காகவே செய்வது -/

யத்து காமேப்ஸுநா கர்ம ஸாஹங்காரேண வா புந–க்ரியதே பஹுலாயாஸம் தத்ராஜஸமுதாஹரிதம்–৷৷18.24৷৷
ராக்ஷஸ கர்மம் -ஆசை வைத்து -பலனை விரும்பி -அகங்காரத்துடன் -பெரு முயற்சி உடன் செய்து -ஹிரண்ய கசிபு ஆயிரம் ஆண்டு தபஸ்
-ராவணன் தலையை வெட்டி தபஸ் -இயற்கையில் ஏற்புடைய பகவல் லாபார்த்திக்கு சிரமம் இல்லையே -/பருவத்தில் ஈசனை பாடி -ஸூ ஆராதன் அன்றோ /

அநுபந்தம் க்ஷயம் ஹிம் ஸாமநபேக்ஷ்ய ச பௌருஷம்–மோஹாதாரப்யதே கர்ம யத்தத்தாமஸமுச்யதே–৷৷18.25৷৷
தாமஸ -பின் தொடர்ந்து -துக்கம் வருமே -கர்மம் செய்வதால் பொருள்கள் அழியும் -ஜீவா ராசிகள் ஹிம்சை -இவற்றில் கண் வைக்காமல் -/
தனக்கு உள்ள செயல் திறனையும் நினைக்காமல் / எம்பெருமான் செய்விக்கிறான் என்ற எண்ணம் இல்லாமல் –

முக்தஸங்கோநஹம் வாதீ தரித்யுத்ஸாஹஸமந்வித–ஸித்த்யஸித்த்யோர்நிர்விகார கர்தா ஸாத்த்விக உச்யதே–৷৷18.26৷৷
பலத்தில் ஆசை இல்லாமல் -நான் செய்ய வில்லை -அஹம் அவாதீ-பொறுமை செயல் திறன் -தடங்கல் வந்தாலும் தவிர்க்க ஒண்ணாத
துன்பம் பொறுத்து கொண்டு -மனம் சோர்வு அடையாமல் -திருவடி இலங்கை நிலையில் போலே -உத்ஸாகம் அடைந்து -/அவன் செயல்பாடு
என்ற எண்ணம் கொண்டு –சித்தி அடைவான் -/ஜெயம் தோல்வி பாதிப்பு இல்லாமல் -/ பலத்தில் ஆசை வைக்கவில்லையே -/

ராகீ கர்மபலப்ரேப்ஸுர்லுப்தோ ஹிஂஸாத்மகோஷுசி–ஹர்ஷஷோகாந்வித கர்தா ராஜஸ பரிகீர்தித–৷৷18.27৷৷
ராக்ஷஸ கர்த்தா -புகழில் ஆசை / பலனில் விருப்பம் / கருமி / ஹிம்சை செய்தெ கார்யம் / தேக சுத்தி இல்லாமல் / ஆனந்தம் துக்கம் கொண்டு /

அயுக்த ப்ராகரித ஸ்தப்த ஷடோ நைஷ்கரிதிகோலஸ–விஷாதீ தீர்கஸூத்ரீ ச கர்தா தாமஸ உச்யதே–৷৷18.28৷৷
தாமஸ கர்த்தா -சேராதவன் -தகுதி இல்லாதவன் -என்றபடி -சாமான்யன் -சாஸ்த்ர ஞானம் இல்லாதவன் -/லௌகிக விஷயங்களில் உழன்று –
/மனு -ஷத்ரிய வம்சம் -சூர்ய குலம் -மனு தர்ம சாஸ்திரம் மூட நம்பிக்கை இல்லையே /ஸ்தாப்த்தன் ஒன்றும் தெரியாமல் நிற்பவன்
-சட புத்தி -அபிசார கர்மங்கள் வைப்பு எடுப்பு / ராகு கால பூஜைகள் போல்வன / வஞ்சிக்கும் புத்தி / மந்த புத்தி /
மன வருத்தம் –தீர்கஸூத்ரீ-நீண்ட நாள் பிறருக்கு தீங்கு நினைத்து –

புத்தேர்பேதம் தரிதேஷ்சைவ குணதஸ்த்ரிவிதம் ஷ்ரரிணு–ப்ரோச்யமாநமஷேஷேண பரிதக்த்வேந தநஞ்ஜய–৷৷18.29৷৷
புத்தி –விவேக பூர்வக நிச்சய -உறுதியானவற்றில் அறிவு ஞானம் -அனுஷ்டானம் -உறுதி அறிவு அனுஷ்டானம் -மூன்று நிலைகள் /
புத்தியின் வேறுபாடுகள் -த்ருதி விடா முயற்சி உடன் தடங்கலை தாண்டி முடிக்கும் திட உணர்வு

ப்ரவரித்திம் ச நிவரித்திம் ச கார்யாகார்யே பயாபயே–பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்தி ஸா பார்த ஸாத்த்விகீ–৷৷18.30৷৷
சாத்விக புத்தி -பிரவ்ருத்தி மார்க்கம் இவ்வுலக இன்பம் ஸ்வர்க்கம் வரை / நிவ்ருத்தி மோக்ஷம் விஷயம் /
பயப்பட- வேண்டாதது -பந்தம் எது மோக்ஷம் -என்ற உறுதியான புத்தி -இதனால் சாத்விக ஞானம் -அதனால் சாத்விக கர்மா -அதனால் சாத்விக பலன்

யயா தர்மமதர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச–அயதாவத்ப்ரஜாநாதி புத்தி ஸா பார்த ராஜஸீ–৷৷18.31৷৷
தர்மம் அதர்மம் மயங்கி -ராக்ஷஸ புத்தி -செய்யத் தக்கவை தகாதவை தெரியாமல் மயங்கி -புத்தி -உறுதி -தர்ம பூத ஞானம் தான் புத்தி என்பர் –

அதர்மம் தர்மமிதி யா மந்யதே தமஸாவரிதா–ஸர்வார்தாந்விபரீதாம் ஷ்ச புத்தி ஸா பார்த தாமஸீ–৷৷18.32৷৷
தாமஸ புத்தி -அதர்மமே தர்மம் என்று உறுதி -கீழே மயக்கம் தான் -இங்கு அதர்மமே தர்மம் -என்று திட புத்தி –எத்தனை அழிந்தாலும் மாற்றி கொள்ளாத புத்தி –
தமோ குணத்தால் சூழ்ந்து -விபரீதமாக -சித்தம் சாத்தியம் தப்பாக புரிந்து பூதம் பிரேத குணம் சாத்தியம் என்று கொண்டு -சூழல்

தரித்யா யயா தாரயதே மந ப்ராணேந்த்ரியக்ரியா–யோகேநாவ்யபிசாரிண்யா தரிதி ஸா பார்த ஸாத்த்விகீ–৷৷18.33৷৷
த்ருதி -எடுத்த செயலை நிறைவேற்றுதல் -சாத்விக -மனஸ் பிராணன் இந்திரியங்கள் மூன்றையும் -வேறு பயனை கருதாமல் –உபாசனத்தில் நிலை நிறுத்தி –

யயா து தர்மகாமார்தாந் தரித்யா தாரயதேர்ஜுந–ப்ரஸங்கேந பலாகாங்க்ஷீ தரிதி ஸா பார்த ராஜஸீ–৷৷18.34৷৷
ராக்ஷஸ த்ருதி -தர்மம் காமம் அர்த்தம் மட்டும் -கீழே மோக்ஷ பலன் -மனஸ் இந்திரியங்களை பலனை குறித்து இங்கு –

யயா ஸ்வப்நம் பயம் ஷோகம் விஷாதம் மதமேவ ச–ந விமுஞ்சதி துர்மேதா தரிதி ஸா பார்த தாமஸீ–৷৷18.35৷৷
தாமஸ த்ருதி -அதிக தூக்கம் பயம் அச்சம் கவலை -இவற்றுடன் செய்து -விரோதம் கொண்டு அஞ்சி /சோகம் -/
கவலை கர்வம் விடாமல் செய்யும் கர்மங்கள் -இதுவரை சாதனங்களை சொல்லி மேலே பலன்களை சொல்லுகிறார்

ஸுகம் த்விதாநீம் த்ரிவிதம் ஷ்ரரிணு மே பரதர்ஷப–அப்யாஸாத்ரமதே யத்ர துக்காந்தம் ச நிகச்சதி–৷৷18.36৷৷
சுகத்தையும் மூன்று -சாத்விக கர்மாக்களால் சாத்விக சுகம் -பத்து ஸ்லோகங்கள் பின்பு ஸ்ருணு பராக் பார்க்காமல் -கேள் –என்கிறான் –
நீண்ட நாள் பயிற்சியாய் -ஆனந்தம் பட்டு -சுகம் அனுபவிக்க சம்சார துக்கம் குறைந்து -போகுமே

யத்ததக்ரே விஷமிவ பரிணாமேமரிதோபமம்–தத்ஸுகஂ ஸாத்த்விகம் ப்ரோக்தமாத்மபுத்திப்ரஸாதஜம்–৷৷18.37৷৷
ஆத்ம புத்தி -ஆத்மா இடமே செலுத்திய மனஸ் -அதனாலே பிறந்த சுகம் —ஆரம்பத்தில் விஷம் போலே இருந்தாலும் -மேலே சுகம் அமிருதம் –

விஷயேந்த்ரியஸம் யோகாத்யத்ததக்ரேமரிதோபமம்–பரிணாமே விஷமிவ தத்ஸுகம் ராஜஸம் ஸ்மரிதம்–৷৷18.38৷৷
ஆரம்பம் அம்ருதம் -மேலே விஷம் ஆகுமே -ராக்ஷஸ சுகம் -நீடித்த இன்பம் கொடுக்காதே -ஆத்ம பந்துக்கள் உத்தேச்யம் நீண்ட சுகத்துக்கு —
விஷயாந்தரங்கள் -சம்யோகத்தால் வந்த சுகம் -நாள் பட நாள் பட துக்கம் –

யதக்ரே சாநுபந்தே ச ஸுகம் மோஹநமாத்மந–நித்ராலஸ்யப்ரமாதோத்தம் தத்தாமஸமுதாஹரிதம்–৷৷18.39৷৷
தாமஸ சுகம் –முதலிலும் முடிவிலும் -விஷம் -மோகம் -நித்ரா சோம்பல் -கவனம் இன்மை -தூண்ட –

ந ததஸ்தி பரிதிவ்யாம் வா திவி தேவேஷு வா புந–ஸத்த்வம் ப்ரகரிதிஜைர்முக்தம் யதேபி ஸ்யாத்த்ரபிர்குணை–৷৷18.40৷৷
முக்குணம் -முக்தி அடைந்த தத்துவமே இல்லையே -எல்லாம் அகப்பட்டவை -அவன் திருவடி பற்றியே வெளி வர முடியும் –

ப்ராஹ்மணக்ஷத்ரியவிஷாம் ஷூத்ராணாம் ச பரந்தப –கர்மாணி ப்ரவிபக்தாநி ஸ்வபாவப்ரபவைர்குணை–৷৷18.41৷৷
முன் வினையால் விளையும் குணங்கள் -பிரித்து விடப்பட்ட நான்கு வகைகள் -செயல்களையும்-குணம் அடிப்படையில் -பிரித்து கொடுக்கப் பட்டன
–குணம் வர்ணம் செயல் -மூன்று குணங்கள் நான்கு வர்ணங்கள்

ஷமோ தமஸ்தப ஷௌசம் க்ஷாந்திரார்ஜவமேவ ச–ஜ்ஞாநம் விஜ்ஞாநமாஸ்திக்யம் ப்ரஹ்மகர்ம ஸ்வபாவஜம்–৷৷18.42৷৷
சமம் வெளி இந்திரியங்கள் அடக்கி / தமம் மனஸ் அடக்கி /-சாந்த சம தமாதி குணங்கள் -/ தபஸ் சாஸ்த்ரா உபாசனம் ஏகாதசி –
தகுதி -உடம்பு சுத்தி / ஷாந்தி ஆர்ஜவம் / தத்வ ஞானம் பகவத் விஞ்ஞானம் /வேத உறுதி ஆஸ்திகம் வேதம் பிரமாணம் என்று ஒத்துக் கொள்பவன்
/ ப்ராஹ்மணர் கர்மாக்கள் இவை -சாத்வீகம் பூர்ணன் என்றபடி –

ஷௌர்யம் தேஜோ தரிதிர்தாக்ஷ்யம் யுத்தே சாப்யபலாயநம்–தாநமீஷ்வரபாவஷ்ச க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம்–৷৷18.43৷৷
பெரிய படைக்குள் காலங்கள் நுழைந்து -வெல்ல முடியாத தேஜஸ் / த்ருதி உறுதி உடைமை / செயல் திறமை / யுத்தம் புற முதுகு காட்டாமை /
தானம் / நியமிக்கும் திறல்/-ஷத்ரியன் ரஜஸ் குணம் கார்யங்கள் –

கரிஷிகௌரக்ஷ்யவாணிஜ்யம் வைஷ்யகர்ம ஸ்வபாவஜம்–பரிசர்யாத்மகம் கர்ம ஷூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம்–৷৷18.44৷৷
வைசியன் -ரஜஸ் தமோ குணம் கலவை / வியாபாரம் /மூவருக்கு உதவி சூத்ரன் -கர்மங்கள்பண்ணி மெய் வகிருந்து சோகம் இருப்பவன் சூத்ரன்
-முதல் மூவருக்கும் இவன் வேண்டும் -அவர்கள் சோகத்தை போக்குவதால் சூத்ரன் –
போதனம் ரக்ஷணம் போஷணம் சேவகம் நால்வருக்கும் – சர்மா வர்மா குப்தா தாஸ்யன் பேர் வாசி -பேர் குணம் வியாபாரம் வாசி
தாசர் பிள்ளை உறங்கா வல்லி தாசர் சூத்ர வர்ணம் -பரம வைஷ்ணவர் -பிரபன்னன் -இவை தாண்டி -ராமானுஜ தாசன்
-குலம் தங்கு சாதிகள் -நான்கையும் தாங்கும் குலம்-ஈர் இரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் –

ஸ்வே ஸ்வே கர்மண்யபிரத ஸம் ஸித்திம் லபதே நர–ஸ்வகர்மநிரத ஸித்திம் யதா விந்ததி தச்சரிணு–৷৷18.45৷৷
கேள் -தங்கள் தங்கள் கர்மங்களில் ஆசை நிலை நின்று மோக்ஷம் அடைகிறார்கள் -கர்மங்களில் நிலை நின்றவன் சித்தி அடைவது எப்படி
-2-அத்யாயம் தொடங்கிய இடம் மீண்டும் இங்கு -கர்மா யோகம் பண்ணி –

யதம் ப்ரவரித்திர்பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம்.–ஸ்வகர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ—৷৷18.46৷৷
முக்தி -அடைகிறான் -எவன் இடம் இருந்து ஜீவ ராசிகள் உத்பத்தியோ அடைகின்றனவோ வியாபிக்க பட்டு இருக்கிறதோ
-அந்த பரம் பொருளை -அர்ச்சனை பண்ணி -வர்ணாஸ்ரம கர்மாக்களில் புஷபம் அர்ச்சனை -பிரித்து விட்டு –

ஷ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்–ஸ்வபாவநியதம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்–৷৷18.47৷৷
வர்ணாஸ்ரமமே கர்மா யோகம் -14-வகை கீழே பார்த்தோம் தீர்த்த யாத்திரை போல்வன -பரிணமித்து பரம பக்தி வரை -உயர்ந்தது
-தன கர்மா உயர்ந்தது -குறைவாக செய்யப் பட்டாலும் இதுவே உயர்ந்தது -பர தர்மம் ஞான யோகம் -நன்றாக அனுஷ்ட்டிடிக்கப் பட்டத்தை விட -இதுவே பழகியது —

ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோஷமபி ந த்யஜேத்–ஸர்வாரம்பா ஹி தோஷேண தூமேநாக்நிரிவாவரிதா–৷৷18.48৷৷
தோஷம் -இங்கு உடம்பு வருத்தம் ஞான யோகம் இந்திரியம் அடக்குவது கஷ்டம் -இதுவே சகஜம் -ஆயாசம் வந்தாலும் விட முடியாதே
-எதை ஆரம்பித்தாலும் கர்மா ஞான -அக்னியில் புகை போலே ஆயாசம் இருக்குமே

அஸக்தபுத்தி ஸர்வத்ர ஜிதாத்மா விகதஸ்பரிஹ–நைஷ்கர்ம்யஸித்திம் பரமாம் ஸந்யாஸேநாதிகச்சதி–৷৷18.49৷৷
ஞான யோகம் மூலம் அடையும் தியான நிஷ்டையும் கர்மா யோகத்தால் கிட்டும் -கர்மா யோகத்துக்குள் ஞான பாகம் உண்டே
-கர்மா என்னது இல்லை பலன் என்னது இல்லை ஞானமே தியானத்தின் மூட்டும் –நைஷ்கர்ம்யஸித்திம் -தியாகத்தால் கிட்டும் -த்ரிவித தியாகம் -சந்நியாசம் –

ஸித்திம் ப்ராப்தோ யதா ப்ரஹ்ம ததாப்நோதி நிபோத மே–ஸமாஸேநைவ கௌந்தேய நிஷ்டா ஜ்ஞாநஸ்ய யா பரா–৷৷18.50৷৷
புத்த்யா விஷுத்தயா யுக்தோ தரித்யாத்மாநம் நியம்ய ச–ஷப்தாதீந் விஷயாம் ஸ்த்யக்த்வா ராகத்வேஷௌ வ்யுதஸ்ய ச–৷৷18.51৷৷
விவிக்தஸேவீ லக்வாஷீ யதவாக்காயமாநஸ–த்யாநயோகபரோ நித்யம் வைராக்யம் ஸமுபாஷ்ரித–৷৷18.52৷
அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம்–விமுச்ய நிர்மம ஷாந்தோ ப்ரஹ்மபூயாய கல்பதே–৷৷18.53৷৷
ப்ரஹ்மபூத ப்ரஸந்நாத்மா ந ஷோசதி ந காங்க்ஷதி–ஸம ஸர்வேஷு பூதேஷு மத்பக்திம் லபதே பராம்–৷৷18.54৷৷
ஆத்மதியானத்துக்கு -சுருக்கமாக சொல்கிறேன் கேள் –ஆத்ம சாஷாத்காரம் பற்றி -புத்தி -உண்மையான கலக்கம் அற்ற புத்தி சாத்விக த்ருதி
-சப்தாதி விஷயாந்தரங்கள் -விருப்பு வெறுப்பு தொலைத்து -ஏகாந்தமான இடத்தில் -குறைந்த உணவு உண்டு
-அடக்கப்பட்ட வாக்கு காயம் மனஸ்-த்யான யோகம் -நித்ய வைராக்யம் கொண்டு அஹங்காரம் பலம் வாசனை -கர்வம் பேராசை கோபம் உறவுகளை விட்டு
-நிர்மம -சாந்தமாக ஆத்மாவே இனியது ப்ரஹ்மம் ஆத்ம அனுபவம் பெறுகிறான் –
என்னை தவிர வேறு ஒன்றில் விருப்பம் இல்லாமல் -சம புத்தி கொண்டு என் பக்தியையும் பெறுகிறான் –
ஆத்ம சாஷாத்காரம் -உண்மை அறிவை பெற்று த்யானம் -பரமாத்மாவுக்கு சரீரம் சேஷ பூதன் நினைக்க நினைக்க -மாறுவான்
-ஞான ஆனந்த மயன் விட சேஷத்வமே பிரதானம் -இது முதல் படி -பக்தியில் மூட்டும் –
என் விஷயமான உயர்ந்த பக்தியை அடைகிறான் -மனஸ் கலங்காமல் -என்னையே நினைத்து -மற்றவை பற்றி நினைக்காமல் விரும்பாமல் -சமமாக ஜீவராசிகளை நினைத்து
எட்டு காரணங்கள்-1 – -ஈஸ்வரன் என்று புரிந்து -ஆட்சி செலுத்துபன் அவனே –/-2-காரண வஸ்துவை த்யானம் பண்ண சுருதிகள் சொல்லுமே -நிகில ஜகத் உதயலய லீலா -/
-3-நிரஸ்த நிகில தோஷ அகில ஹேய ப்ரத்ய நீக்கம் கல்யாண ஏக குணாத்மகம்/ பரம பாவ்யம் பவித்ராணாம் -மண்கலன்களுக்கு இருப்பிடம்
-4- அனவதிக அதிசய -இதம் பூர்ணம் -சர்வம் பூர்வம் -/-5-அழகுக்கு குறை இல்லையே அம்ருத லாவண்யா சாகரம் அன்றோ
-6-ஸ்ரீ யபதி -மூவர் ஆளும் உலகமும் மூன்று -நடுவாக வீற்று இருக்கும் நாயகன் /-7-புண்டரீக நாயகன் -கீழே லாவண்யம் இங்கு ஸுந்தர்யம்-
-அமலங்களாக விழிக்கும் -கமலக் கண்ணன் -தூது செய் கண்கள் -ஜிதந்தே புண்டரீகாஷா /-8-ஸ்வாமி -இந்த காரணங்களால் –
தன்னடையே பரமாத்மா சிந்தனைக்கு கூட்டி செல்லும் -தேகமே எல்லாம் என்ற நினைவு மாறுவது தான் கஷ்டம் —

பக்த்யா மாமபிஜாநாதி யாவாந்யஷ்சாஸ்மி தத்த்வத–ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஷதே ததநந்தரம்–৷৷18.55৷৷
மேலே மேலே பக்தி முற்றும் -பர பக்தி -அத்ருஷ்டார்த்த பிரத்யக்ஷ அபி நிவேசம் -ஆசை ஏற்படும் / பர ஞானம் -சாஷாத்காரம் பண்ணி அனுபவிக்க /
பரம பக்தி புனர் விஸ்லேஷ பீருத்வம் கிடைத்த அனுபவம் விலகுமோ என்று துடிக்க வைக்கும் /ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள் /
யஹா அஸ்மி யாராக -எப்படிப்பட்டவனாக -இன்னான் இணையான் –ஸ்வரூப நிரூபிக்க தர்மம் -நிரூபித்த ஸ்வரூப விசேஷணங்கள்-இரண்டையும் அறிகிறான் பர பக்தி
சத்யம் ஞானம் அனந்தம் பிரம்மா -இன்னான் -நிர்விகார தத்வம் ஞான மயம் அந்தம் அற்றவன் -ஞான பல -இத்யாதி இணையான் -அறிந்து கொண்டு
என்னை பெற பக்தியால் தெரிந்து கொள்கிறான் -அதற்கு பின் உண்மையாக தெரிந்து அடைய ஆசை கொள்கிறான்
-ஞாத்வா பர ஞானம் -ஞானம் முற்றி முற்றி தர்சன சாஷாத்கார அவஸ்தை -மேலே பரம பக்தி அடைந்து என்னை அனுபவிக்கிறான் –

ஸர்வகர்மாண்யபி ஸதா குர்வாணோ மத்வ்யபாஷ்ரய–மத்ப்ரஸாதாதவாப்நோதி ஷாஷ்வதம் பதமவ்யயம்–৷৷18.56৷৷
யுத்தம் செய்தால் எப்படி கர்மா யோகம் –சாஸ்வதம் பதமவ்யயம்-குறைவற்ற அழிவற்ற ஸ்ரீ வைகுண்டம் அடைகிறான் -என்னுடைய பிரசாதத்தாலே –
முக்தி யுத்தமோ பக்தியோ கொடுக்காதே -பரம சேதனன் சர்வேஸ்வரன் -கொடுப்பவன் கண்ணன் என்கிற எண்ணமே வேண்டும்
கத்ய த்ரயம் -சர்வ அபதாரம் க்ஷமஸ்வ -ஏதோ பிரகாரத்தில் த்வயம் -சரண் என்னுடைய தையை ஒன்றாலே
-மதியே ஏவ தயையா கேவலம் -சங்கைக்கு இடம் இல்லாமல் -என்னுடைய -தயை மட்டுமே உமக்கு கொடுக்கும்
வர்ணாஸ்ரமம் செய்ய செய்ய அவனுக்கு ப்ரீதி -தயை கிட்டுமே-
பக்தி யோகத்தில் பக்தி பண்ணினால் கிருபையால் முக்தி -பிரவ்ருத்தி மார்க்கம் -பிரபத்தி நிவ்ருத்தி மார்க்கம் –
யுத்தம் காம்ய கர்மம் எப்படி பலனை கொடுக்கும் சங்கை -த்ரிவித த்யாகத்துடன் செய்வதால் -கர்த்ருத்வம் அவன் இடம் சமர்ப்பித்து -பலன் பெறுகிறான்

சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸஂந்யஸ்ய மத்பர–புத்தியோகமுபாஷ்ரித்ய மச்சித்த ஸததம் பவ–৷৷18.57৷৷
யுத்தத்தில் மூட்டுகிறார் -சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிய பின்பு -மனசால் புத்தியால் -அவன் நடத்துகிறான் என்ற நினைவுடன்
-கர்ம பலன் அவன் இடம் -அவன் முக விலாசம் பலன் –அவன் இடம் நெஞ்சை செலுத்து -சர்வ துர்க்கங்களையும் கடந்து
-ஜல துர்க்கம் போலே சம்சார ஆர்ணவம் தாண்டி -புத்தி யோகம் -த்ரிவித த்யாகத்துடன் –

மச்சித்த ஸர்வதுர்காணி மத்ப்ரஸாதாத்தரிஷ்யஸி–அத சேத்த்வமஹங்காராந்ந ஷ்ரோஷ்யஸி விநங்க்ஷ்யஸி–৷৷18.58৷৷
சர்வ தியாகம் இல்லாமல் -வீணாக போகிறாய் -என் இடம் நெஞ்சை செலுத்தி -என் பிரசாதத்தாலே தாண்டுகிறாய் -தாண்டுவிக்கிறான் நாம் செய்வதில் ப்ரீதி அடைந்து –
ஒரு வேலை அஹங்காரத்தால் -நானே செய்கிறேன் என்று -நான் சொல்வதை காது கொடுத்து கெடுக்காமல் இருந்தால் -சம்சாரத்தில் மாறி மாறி உழல்வாய்

யதஹங்காரமாஷ்ரித்ய ந யோத்ஸ்ய இதி மந்யஸே–மித்யைஷ வ்யவஸாயஸ்தே ப்ரகரிதிஸ்த்வாம் நியோக்ஷ்யதி–৷৷18.59৷৷
நான் சொல்வதை கெடுக்காமல் இருந்தாலும் யுத்தம் செய்வாய் -சம்சாரம் கிட்டும் -நான் சொல்வதை கேட்டு செய்தால் மோக்ஷம் –
விவசாயம் உறுதி -மித்யையாகும் -உன்னை பிரகிருதி தூண்டுவிக்கும் -இயற்க்கை -ஷத்ரியம் ரஜோ குணம் சண்டை போட வைக்கும் –
உன் ஸ்வ பாவமே உன்னை சண்டை போட வைக்கும் ஓடினால் பேடி என்பர் -கேட்டதும் நீ என்ன செய்வாய் -காண்டீபம் தர்மர் குறை சொல்ல பொறுக்காதவன் அன்றோ நீ
-கர்ணன் துரியோதனன் கேலி பண்ண ரஜோ குணம் தூண்ட -ராஜ்ஜியம் வேண்டும் இவர்களை தண்டிப்போம் என்ற புத்தியுடன் செய்வாய்
-இதில் எது என்பதை நீயே முடிவு பண்ணு

ஸ்வபாவஜேந கௌந்தேய நிபத்த ஸ்வேந கர்மணா–கர்தும் நேச்சஸி யந்மோஹாத்கரிஷ்யஸ்யவஷோபி தத்–৷৷18.60৷৷
ஸ்வ பாவம் -முன் வினையால் -வாசனை ருசி -கட்டுப்பட்டு -உனது சாதுர்யம் வீரம் கர்மம் -சம்சாரத்தில் கட்டுண்டு -மோகத்தால்
யுத்தம் செய்யாமல் நீ விலகி இருந்தாலும் -நீ நினைத்தால் கூட உன்னை அறியாமல் யுத்தம் செய்வாய் -ரஜோ குணம் தூண்ட செய்வாய் –

ஈஷ்வர ஸர்வபூதாநாம் ஹரித்தேஷேர்ஜுந திஷ்டதி–ப்ராமயந்ஸர்வபூதாநி யந்த்ராரூடாநி மாயயா–৷৷18.61৷৷
நானே செய்வேன் என்றால் நீ தூண்டுகிறாய் என்று எதனால் சொன்னாய் -ஈஸ்வரன் -நியமிக்கிறவன் -சர்வ ஜீவ ராசிகளுக்கு ஹிருதய பிரதேசம்
-சிந்தனம் உதயம் ஆகும் இடம் -நானே உள்ளேன் –இருந்து ஞானம் ஸ்மரணம் மறதி மூன்றையும் நானே செலுத்துகிறேன் முன்பே சொன்னேன் —
யந்த்ரம் -பிரகிருதி கார்யமான சரீரம் -அதில் ஏற்றி வைத்த ஆத்மா -மாயா சக்தியால் -முக்குணங்களில் ஈடுபடுத்தி -முக்குணம் தகுந்த படி நடத்துகிறேன்
-எத்தை செய்தாலும் என் ஆட்சியால் -சாமான்ய காரணம் பகவான் தான் -விசேஷ கார்யம் கர்மா அன்றோ

தமேவ ஷரணம் கச்ச ஸர்வபாவேந பாரத–தத்ப்ரஸாதாத்பராம் ஷாந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி ஷாஷ்வதம்–৷৷18.62৷৷
நானே விடுவிக்க வேண்டும் -செய்ய வேண்டியதை சொல்கிறேன் -இது தான் சரம ஸ்லோகம் -தெளிந்த நீரோட்டம் போலே உபதேசம் இது வரை –
அதன் படி நடக்க வில்லை -மாற்றி மேலே –18–64-வந்தது –
தமேவ -அந்த என்னையே -சரணமாக பற்றி விடு –/ஸர்வபாவேந- எல்லா பாவத்தாலும் என்னையே உபாயம் உபேயம் தாரக போஷக போக்யம் அந்தர்யாமியாக பற்று
-/ சித்த உபாயம் அன்றோ –அவனாலே அவனை அடைகிறோம் –அந்த அனுக்ரஹத்தாலே பரமமான சாந்தி கர்மா பந்தம் விடு பட்டு
ஸ்ரீ வைகுண்டம் அடைவாய் -சாஸ்வதம் -நித்ய விபூதி -சரணாகதி முக்கிய கருத்து இது தானே –
பலத்தின் சமீபத்தில் அழைத்து செல்வது உபாயம் -தாது -அர்த்தம்– பக்தி உபாயம் சாதிய உபாயம் -பகவானே உபாயம் சித்த உபாயம் –
மோக்ஷம் பலன் கொடுப்பது அவனே -பக்தி யோகத்தால் ப்ரீதி அடைந்து பலத்தை அவன் தானே அளிக்க வேண்டும் —
நான் செய்து பதிலுக்கு அவன் செய்தால் வியாபாரம் -ஆகுமே -பிதா பிராப்தி ஸ்வாமி -ஸ்வரூபம் இருவருக்கும் கொத்தை ஆகுமே /
ரஷிப்பது ஸ்வ பாவம் -பிரபாவம் இல்லையே -இயற்க்கை என்றவாறு -இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபம் -ஸ்வாதந்திரம் தலை தூக்கக் கூடாதே
-அசித்வத் பாரதந்தர்யம் வேண்டுமே -/ பக்தி யோகம் செய்ய தக்கது இல்லை இதனாலே -மேம் பொருள் போக விட்டு -வாழும் சோம்பரை யுகத்தி போலும் –
நீயே உபாயமாக இருப்பாய் என்ற பிரார்த்தனையை சரணாகதி -தமேவ ஷரணம் கச்ச-சரணம் உபாயம் க்ருஹம் ரக்ஷணம் -சரணாலயம் க்ருஹம் இல்லம் வீடு /
உபாயம் -பலத்துக்கு அருகில் அவரே கூட்டிப் போவார் /ஸ்வரோபா அனுரூபம் சரணாகதி -சரணம் இதி கதி -சரணம் என்று வந்து விடுவது தானே –கத்யர்த்த புத்யர்த்த
உபாயம் அனுஷ்ட்டிக்க வேண்டிய பொறுப்பும் உம்மது–விலக்காமை அத்வேஷம் -தடுப்பை நீக்கினால் போதுமே
-அவன் நினைவு எப்பொழுதும் உண்டு -அது கார்யகரம் ஆவது இவன் நினைவு மாறினால் தானே -பர்த்ரு போகத்தை விலைக்கு உறுப்பு ஆக்குமா போலே –
தடுப்பை நீக்குவதே சரணாகதி -/ப்ரஹ்மமே உபாயம் என்ற நினைவு வேண்டும் என்னில்-நினைவும் உபாயம் இல்லை -பக்தி பிராப்ய ருசியில் மூட்டும் –
சரணாகதர்களுக்கும் பக்தி வேண்டும் –பக்தி உபாயம் என்ற எண்ணத்தை மட்டும் விடடார்கள் -ஸ்வயம் பிரயோஜனமாக பக்தி உண்டு என்றவாறு –
வனத்திடை ஏரியாம் இயற்றி இது வல்லால் –மழை பெய்விப்பார் யார் -மேகத்தின் கருணையால் மழை போலே —
சம்சார பயம் கண்டு சோகம் -அதிகாரிக்கு லக்ஷணம் -பலன் சோகம் நிவ்ருத்தி -சோகம் இல்லை என்றால் பலிக்காது
-பின் சோகம் இல்லாமல் இருப்பதும் சரணாகதி லக்ஷணம் -இதோ சரணம் -என்று சொல்லி இருந்தால் ஸ்ரீ கீதை முடிந்து இருக்கும் -சொல்ல வில்லையே –

இதி தே ஜ்ஞாநமாக்யாதம் குஹ்யாத்குஹ்யதரம் மயா–விமரிஷ்யைததஷேஷேண யதேச்சஸி ததா குரு–৷৷18.63৷৷
என்னால் ரஹஸ்யங்களில் ரஹஸ்ய சாஸ்திரம் -மோக்ஷ சாதனம் என்னால் சொல்லப் பட்டது –2-
-12-வரை இது வரை சொன்னதை ஆராய்ந்து நீ உன் செயல்பாட்டை முடிவு செய்து கொள்- உன் தகுதிக்கு தக்க படி செய் -ஆசைப்பட்ட படி செய் என்றால்
-யுத்த பூமியில் இருந்து ஓடுவது தானே -என்னில் நான் சொன்ன வழிகளில் ஒன்றை தானே தேர்ந்து கொள்ள வேண்டும் –
சொல்லி மௌனமாக கண்ணன் -இருக்க -சரணாகதியை அர்ஜுனனுக்கு ருசி இல்லை
-சோகம் வேண்டும் என் கையில் ஒன்றும் இல்லை ஸ்வாதந்த்ர லேசம் கூடாதே -ஷத்ரியன் ஒன்றும் பண்ணாமல் இருக்க முடியாதே
-முகத்தை பார்த்து பக்தி யோகம் தான் இவனுக்கு -சரணாகதி இல்லை என்று உணர்ந்து மேலே அருளிச் செய்கிறான்

ஸர்வகுஹ்யதமம் பூய ஷ்ரரிணு மே பரமம் வச–இஷ்டோஸி மே தரிடமிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம்–৷৷18.64৷৷
ஹிதமானதை சொல்கிறேன் -மிக நெருங்கிய இனியவனாக உள்ளாய் -ரஹஸ்யம் -மறுபடியும் சொல்கிறேன்
-இந்த பக்தி யோகத்தை -9-அத்யாயம் கடைசி ஸ்லோகம் -முன்பே சொன்னேன் அதனால் பூய -மறுபடியும் -சொல்கிறேன் என்கிறான்

மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு–மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே–৷৷18.65৷৷
சத்யம் இட்டு ப்ரதிஞ்ஜை செய்து அன்றோ அருளிச் செய்கிறான் -நீ இனியவன் -என்னை அடைவாய் -/
உனக்கு நல்லது பக்தி யோகம் தான் -இதற்கும் சோகபி பட்டான் -அதனால் மேல் ஸ்லோகம் –
முதலில் என்ன செய்ய வேண்டும் தர்மம் அதர்மம் மயக்கம் தாசன் சிஷ்யன் / கீழ் தேவன் அசுரர் விபாகம் கேட்டு சோகம் -இங்கு மூன்றாவது சோகம்

ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஷரணம் வ்ரஜ–அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷுச–৷৷18.66৷৷
சோகப் படாதே –சரணாகதி விரிவாக கீழே பார்த்தோம் -/என்னை ஒருவனையே பற்று-சர்வ தடங்கலாக உள்ள எல்லா பாபங்களில் இருந்தும்
விடுவிப்பேன் சோகப் படாதே -பாபங்கள் இருந்ததே என்று தானே சோகப் பட்டு இருக்க வேண்டும் -பக்தி பண்ண -ஆரம்ப விரோதிகள் இருக்குமே
-ஆரம்பிக்கவே முடியாதே –அதை கண்டு பயந்து சோகம் –
வர்ணாஸ்ரம கர்மங்கள் பண்ணி கொண்டே பலன்களை விட்டு -சர்வ தர்ம பல பரித்யாகம் -என்னையே கர்த்தா -ஆராதனாக பற்று -என்றவாறு –
பாபங்களை போக்கும் பிராயச்சித்த தர்மங்கையும் கண்டு பயப்பட்டு சோகம் -இங்கு அவற்றையும் விட்டு -அந்த ஸ்தானத்தில் சரணாகதி என்றவாறு –
பக்தி தான் ஸ்ரீ கீதா சாஸ்திரம் உபாயம் -அர்ஜுனனுக்கு ஏற்ற உபதேசம் -அங்க பிரபத்தி என்றவாறு -பிரதான உபாயம் பக்தி யோகம் –
தடங்கலை போக்கி பக்தி தொடங்கி-பக்தி ஒன்றினால் அடையப் படுகிறேன் -ஸ்ரீ கீதா வாக்கியம் –
ரஹஸ்ய த்ரயம் -அர்த்தம் ஸ்வ தந்த்ர பிரபத்தி –
கர்மா ஞான பக்தி யோகங்களை விட்டு -என்னை சரண் அடைந்து -பண்ணின எண்ணத்தையும் உபாயமாக எண்ணாமல் -என்னை அடைய தடங்கலாக
உள்ள எல்லா பாபங்களையும் கண்டு சோகப் படாதே -இங்கு சோகம் –
இவன் சர்வாத்மா -ஞானம் வந்த பின்பு -ஆராய்ந்த பின் உனக்கு எது சரி -அத்தை செய் -இது தான் பொறுப்பை தலையில் வைத்த சோகம்
-நான் ஸ்வரூப அனுரூபமாக அன்றோ பண்ண வேண்டும் –
பிராரப்த கர்மாக்கள் பக்தி யோகனுக்கு முடிக்க மாட்டார் -பிரபன்னனுக்கு அனைத்தையும் -இந்த சரீரம் தான் கடைசி சரீரம்
-சீக்கிரம் பலம் -பஹு ஆனந்தம் -அன்றோ –
கர்மா ஞான பக்தி யோகங்கள் கைங்கர்ய ரூபமாக செய்வான் பிரபன்னன் -உபாய புத்தியால் இல்லை
மாம் -ஸுலப்ய பரம்-ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாத குணங்கள் / அஹம் -பரத்வ பரம்- -ஆஸ்ரய கார்ய ஆபாத குணங்கள் /

இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந–ந சாஷுஷ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோப்யஸூயதி–৷৷18.67৷৷
தபம் இல்லாதவனுக்கு சொல்லாதே =-பக்தி இல்லாதவன் -ஆசை இல்லாதவன் -சொல்லாதே அஸூயை உள்ளவனுக்கு சொல்லாதே –
திரௌபதி விரிந்த குழல் முடிப்பதே இவனுக்கு லஷ்யம் -அதனால் ரஹஸ்யம் முற்றத்தில் கொட்டு விட்டு பதண் பதண் என்கிறான் –

ய இமம் பரமம் குஹ்யம் மத்பக்தேஷ்வபிதாஸ்யதி-பக்தம் மயி பராம் கரித்வா மாமேவைஷ்யத்யஸம் ஷய–৷৷18.68৷৷
குஹ்யம் -சாஸ்திரம் -பக்தர்கள் இடம் வியாக்யானம் செய்தால் -ஸ்வயம் பிரயோஜனமாக பக்தி இதுவே உண்டாக்கும் -ஐந்தாவது உபாயம் இது
-சரமதமமான உபாயம் அன்றோ இது -சங்கை இல்லாமல் -நான் சொல்லியபடி சொல்லி பலன் கெடுபவர் பெறுவார்

ந ச தஸ்மாந்மநுஷ்யேஷு கஷ்சந்மே ப்ரியகரித்தம–பவிதா ந ச மே தஸ்மாதந்ய ப்ரியதரோ புவி–৷৷18.69৷৷
கீதா சொல்பவனை விட யாரும் எனக்கு பிரிய தமன் இல்லை -நேற்றும் நாளையும் இதுவே –

அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் ஸம் வாதமாவயோ–ஜ்ஞாநயஜ்ஞேந தேநாஹமிஷ்ட ஸ்யாமிதி மே மதி–৷৷18.70৷৷
இது என் மதி -அத்யயனம் பண்ணுபவன் -உனக்கும் எனக்கும் நடந்த வார்த்தா லாபம் -ஞான யாகம் தான் இது -நான் பூஜிக்கப் பட்டவன் ஆகிறேன் –

ஷ்ரத்தாவாநநஸூயஷ்ச ஷ்ரரிணுயாதபி யோ நர–ஸோபி முக்த ஷுபா ல்லோகாந்ப்ராப்நுயாத்புண்யகர்மணாம்–৷৷18.71৷৷
கேட்பவனும் சம்சார காட்டில் இருந்து முக்தன் ஆகிறான் –
புண்ய கர்மாக்கள் பண்ணும் பக்தர் கூட்டங்கள் -அடியார் குழாங்கள் இடம் சேர்ந்து பரம புருஷார்த்த மோக்ஷம் பெறுவார்கள்

கச்சிதேதச்ச்ருதம் பார்த த்வயைகாக்ரேண சேதஸா–கச்சிதஜ்ஞாநஸம் மோஹ ப்ரநஷ்டஸ்தே தநஞ்ஜய–৷৷18.72৷৷-
பார்த்தா தனஞ்சயன் ஒரு நிலை பட்ட மநஸால் கேட்டாயா -அறிவின்மையால் பெற்ற மயக்கம் போனதா –

அர்ஜுந உவாச-
நஷ்டோ மோஹ ஸ்மரிதிர்லப்தா த்வத்ப்ரஸாதாந்மயாச்யுத–ஸ்திதோஸ்மி கதஸந்தேஹ கரிஷ்யே வசநம் தவ–৷৷18.73৷৷
மோகம் போனது -தேஹாத்ம அபிமானம் -யுத்தம் பண்ணினால் மோக்ஷம் கிடைக்காது மோகம் போனது -ஆத்மா தான் எல்லாம் பக்தி யோகம் அறிந்தேன்
உன் பிரசாதத்தால் பெற்றேன் -சிஷித்து அருளினாய் -சங்கைகள் எல்லாம் தீர்ந்தேன்
-உன் வாக்கியம் கேட்டு காண்டீபம் எடுக்கிறேன் -இதற்க்கு தானே இவ்வளவும் அருளினான் –

ஸஞ்ஜய உவாச-
இத்யஹம் வாஸுதேவஸ்ய பார்தஸ்ய ச மஹாத்மந–ஸம் வாதமிமமஷ்ரௌஷமத்புதம் ரோமஹர்ஷணம்–৷৷18.74৷৷
அத்புதம் -மயிர் கூச்சு எரிந்து உள்ளேன் -கேட்டேன் -வாஸூ தேவனும் பார்தனும் பேசிய தெய்வத் தன்மை மிக்க சம்வாதம்
-வேத வியாசர் பிரசாதத்தால் கேட்கப் பெற்றேன்

வ்யாஸப்ரஸாதாச்ச்ருதவாநேதத்குஹ்யமஹம் பரம்–யோகம் யோகேஷ்வராத்கரிஷ்ணாத்ஸாக்ஷாத்கதயத ஸ்வயம்–৷৷18.75৷৷
வியாச பிரசாதத்தால் -கேட்க்கும் பாக்யம் பெற்றேன் -மிக ரஹஸ்யமான -இத்தை யோகங்களை யோகேஸ்வரன் அவனே அருளிச் செய்ய அன்றோ கேட்க பெற்றேன்

ராஜந்ஸம் ஸ்மரித்ய ஸம் ஸ்மரித்ய ஸம் வாதமிமமத்புதம்–கேஷவார்ஜுநயோ புண்யம் ஹரிஷ்யாமி ச முஹுர்முஹு–৷৷18.76৷৷
கேள்விக்கு எனக்கு தகுதி இல்லை -நினைத்து நினைத்து அத்புதம் கேசவன் அர்ஜுனன் -புண்யம் தெய்வ தன்மை-மிக்க சம்வாதம்
-நினைக்க நினைக்க மிக்க ஆனந்தப் படுகிறேன்

தச்ச ஸம் ஸ்மரித்ய ஸம் ஸ்மரித்ய ரூபமத்யத்புதம் ஹரே–விஸ்மயோ மே மஹாந் ராஜந் ஹரிஷ்யாமி ச புந புந–৷৷18.77৷৷
உயர்ந்த விஸ்வரூபம் ஒன்றையே நினைக்க ஆனந்தம் -எதுவும் பண்ண வேண்டாம் -நினைத்து நினைத்து
அதி அத்புத ரூபம் -விராட் ஸ்வரூபம் -ஆனந்தப் படுகிறேன்

யத்ர யோகேஷ்வர கரிஷ்ணோ யத்ர பார்தோ தநுர்தர–தத்ர ஷ்ரீர்விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மதிர்மம–৷৷18.78৷৷
முதல் கேள்விக்கு இங்கு பதில் -யார்க்கு வாழ்ச்சி -நேராக சொல்லாமல் எங்கு கண்ணனோ அர்ஜுனனோ அங்கே வெற்றி
-காண்டீபம் தரித்த -யோகேஸ்வரன் சேர்த்தி இங்கு தான் வெற்றி நிச்சயம்
தர்மங்கள் வெற்றி வைபவம் செல்வம் இங்கு தான் இது என்னுடைய அபிப்ராயம் -கிருஷ்ண அனுக்ரஹம் தான் வெற்றி கொடுக்கும்
-அது இல்லாமல் நீ கிட்டே போகிறாய் என்று த்ருதராஷ்ட்ரனுக்கு சொல்லி நிகாமிக்கிறார்
ஸ்ரீ கீதா சாஸ்திரம் கேட்டால் தேர் கடாவிய கனை கழல் பெறப் பெறுவோம்

——————————————————

கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -17-

June 8, 2017

அசாஸ்த்ரம் ஆஸூரம் க்ருத்ஸ்நம் சாஸ்த்ரீயம் குணத ப்ருதக்
லஷணம் சாஸ்திர சித்தஸ்ய த்ரிதா சப்தத சோதிதம்—ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்—21-

சாஸ்திரம் விதிக்காத கர்மாக்களை ஸ்ரத்தை உடன் -மனம் போன படி இல்லாமல் -செய்தால் பலன் கிட்டுமோ என்ற சங்கை –
அர்ஜுனன் கேட்பதில் -புரிந்து கொள்ளாத கேள்வி பதில் -5-ஸ்லோகம் –
மனம் போன படி என்றாலே சாஸ்திரம் விதிக்காத செயல்கள் தானே – அனைத்தும் வீண் -இந்த அத்யாயம் முழுவத்துக்கும் இதே கருத்து
-சாஸ்திரம் விதித்தவற்றை ஸ்ரத்தை உடன் செய்து பயன் பெற வேண்டும்

1–அசாஸ்த்ரம் ஆஸூரம் க்ருத்ஸ்நம்-ஓன்று விடாமல் எல்லாம் -சாஸ்திரத்தில் விதிக்கப் படாத அனைத்தும்
அஸூர தன்மை -என் ஆணையை மீறினவை தானே -இது தான் கேள்விக்கு பதில் –
2– சாஸ்த்ரீயம் குணத ப்ருதக் -சாஸ்திரம் விதிக்கப் பட்டவை செய்தால்-செய்கிறவனுடைய -குணங்களை பொறுத்து
-சாத்விக ராக்ஷஸ தாமஸ கர்மா மூவகை -பலன்களும் மூவகை –
ஆகாரம் -தபஸ் -இப்படி ஐந்துக்கும் சாத்விக ராஜஸ தாமஸ -மூன்றினில் இரண்டை அகற்றி ஒன்றினில் ஒன்றி –
கண்ணனுக்கு பிடித்தது என்பதால் எப்பாடு பட்டாவது தூக்கி விடுவாரே -ஆனு கூலஸ்ய சங்கல்பம் பிரதி கூலஸ்ய வர்ஜனம் –
3–லஷணம் சாஸ்திர சித்தஸ்ய -யஜ்ஜம் தானம் தபஸ் இவற்றை சித்தி அடைய– ஓம் சது தது– மூன்று சொற்களை சேர்த்து சொல்ல வேண்டும்

———————————————————

அர்ஜுந உவாச-
யே ஷாஸ்த்ரவிதிமுத்ஸரிஜ்ய யஜந்தே ஷ்ரத்தயாந்விதா–தேஷாம் நிஷ்டா து கா கரிஷ்ண ஸத்த்வமாஹோ ரஜஸ்தம—৷৷17.1৷৷
எவர்கள் -சாஸ்த்ர விதியை மீறி -ஸ்ரத்தை உடன் கூடி கர்மங்களை செய்கிறார்களோ -அவர்களுடைய -நிஷ்டை எதில் நிலை பெறுவார்கள்
-சத்வத்திலா ரஜசிலேயோ தமஸிலேயோ -இல்லாத ஒன்றை வைத்து மூன்றில் எது என்று கேட்க்கிறான் –
து -அனுஷ்டுப் ஸ்லோகங்கள் இவை எட்டு எழுத்துக்கள் ஒரு பாதத்தில் -இங்கு து -அதுவோ என்னில் -அர்த்தம் -சுரம் சேர்த்து
–மீறி செய்யக் கூடாது -மனம் போன படி செய்யக் கூடாது இரண்டும் சொல்லி -ஸ்ரத்தை உடன் சாஸ்த்ர விதி படி செய்யாமல் -என்றபடி –
-து சப்தம் கீழ் சொன்ன படிக்கு மாறு பாடு -தோற்ற -சப்தம் -/ கிருஷ்ணா பூமிக்கு ஆனந்தம் கொடுப்பவன் –என்றபடி /
சஸாபி ராம –தன் கதையை கேட்க மக்கள் உடன் தொடை தட்டி கேட்டான் -அபி சப்தம் போலே -அந்த ராமனோ என்னில் -ஹா -என்ன ஆச்சர்யம் வால்மீகி –

ஸ்ரீ பகவாநுவாச-
த்ரிவிதா பவதி ஷ்ரத்தா தேஹிநாம் ஸா ஸ்வபாவஜா–ஸாத்த்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ஷ்ரரிணு–৷৷17.2৷৷
சொல்வதை கேட்டு கோள் -ஸ்ரத்தை மூவகை பட்டு இருக்கும் -தேஹி–தேகத்தை உடைய ஆத்மா -ஸ்வ பாவம் -ஜா -இயற்க்கை குணத்தில் இருந்து பிறந்து –
விஷய ருசி -மாறுபடும் -/ ருசிக்கு அனுகுணமாக ஸ்ரத்தை வரும் -/ ஸ்வ பாவம் -ருசி என்றவாறு -/பண்ணும் தப்பை ஏற்று கொண்டே உள்ளாய் எதனால்
-தண்ணீர் குளிர்ந்து இருப்பது போலே இதுவும் என் ஸ்வபாவம் என்று காட்டினான் -ஸ்ரத்தை -விசுவாசம் நம்பிக்கையும் பலனில் -எதிர்பார்ப்பும் -தானே –
மூன்று வகைப் பட்டு இருக்கும் -ஸ்ரத்தை -சாஸ்த்ர விதியை பற்றி இதில் இல்லையே -ஆத்மாவுக்கு தர்மபூத ஞானம் உண்டே -அதிலே தான்
வாசனை ருசி ஸ்ரத்தை -மூன்றும்–ஸ்ரத்தை என்பது நம்பிக்கை எதிர்பார்ப்பு -ஞானத்தால் தானே -ருசி ஆசையும் இதனாலே
–பிறந்த குழந்தை அழுவதும் வாசனையால் -பதிவு -என்றபடி -சரீர வஸ்யத்தையால்-இந்த மூன்றும் -த்ரிதா -தர்ம பூத ஞானம் காரியத்தால் என்று
நேராக சொல்ல வில்லை –த்ரிவித குணங்கள் சரீரம் பற்றியவை தானே -ஆத்மா சரீரத்தில் சிறைப் பட்டு இருப்பதால் -அநாதி காலம் –
இருந்த காரணத்தால் இவை -பாதிக்கும் -காயை நெருப்பினால் போட்டு வாட்டினால் -பக்குவம் ஆவது போலே
-விஷய ருசி வாசனை ஸ்ரத்தை -/ முக்குணங்கள் ஆத்மா உடன் போகாது -அடுத்த சரீரம் கொள்ளும் பொழுது -உண்டாகும் –
சத்வ குணம் வளர்க்க வேண்டும் -அது வளர வளர சம்சாரம் ரசிக்க ஆரம்பிக்கும் -இது மிக பெரிய ஆபத்து ஆகுமே -மோக்ஷ ஆசையே வராதே –
சத்வம் வளர வளர மற்றவை போகும் -இதை கொண்டு பகவானை பிடித்து இத்தையும் அழிக்க வேண்டும் -ஊறுகாய் கொண்டு மற்றவை உண்டு -பின்பு அதை உண்பது போலே
ஸ்ரீ வைகுண்டத்திலும் சத்வம் உண்டு -அது வேறே -இங்கு போலே மிஸ்ரா சத்வம் இல்லையே -சுத்த சத்வம் -தோஷம் நீக்கிதூ மணி மாடம் -துவளில் மணி போலே
அவன் திருமேனி திவ்ய கோபுரம் எல்லாமே சுத்த சத்வம் –பார்த்தால் ஞானம் வளரும் அஞ்ஞானம் போகும் இதுவே அடையாளம் –

ஸத்த்வாநுரூபா ஸர்வஸ்ய ஷ்ரத்தா பவதி பாரத–ஷ்ரத்தாமயோயஂ புருஷோ யோ யச்ச்ரத்த ஸ ஏவ ஸ–৷৷17.3৷৷
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -சத்வ அனு ரூபா -இங்கு சத்வம் மனஸ் -மனசுக்கு தக்க ஸ்ரத்தை என்றபடி– சரீரம் உடன் விட்டு பிரியாத
முக்குணங்கள் அன்றோ -ருசி வாசனை ஸ்ரத்தை ஞானம் -பயனின் பரிணாமம் உடன் புருஷன் ஆத்மா -ஸ்ரத்தைக்கு முக்கியத்துவம்

யஜந்தே ஸாத்த்விகா தேவாந்யக்ஷரக்ஷாம் ஸி ராஜஸா–ப்ரேதாந்பூதகணாம் ஷ்சாந்யே யஜந்தே தாமஸா ஜநா–৷৷17.4৷৷
எந்த தேவதையை சேவிக்கிறான் -சாத்விகர் தேவர்களை வணங்குவார் -அவர்கள் இடம் இருப்பதை எதிர்பார்ப்பார்கள் -அதிலே ருசி
-ஸ்ரீ மன் நாராயணன் -பரம சாத்வீகன் -தேவர்க்கும் தேவாவோ -மாக வைகுந்தம் அடைய எண்ணுவார்கள்
ராக்ஷஸர்கள் யஜ்ஜர்கள் ராக்ஷஸர்களை / அன்யா -வேறு பட்ட தாமஸர்கள் பூத கணங்கள் பிரேதங்களை /
வணங்கி சா லோக்யம் சாமீப்யம் சாரூப்பியம் அடைய

அஷாஸ்த்ரவிஹிதம் கோரஂ தப்யந்தே யே தபோ ஜநா–தம்பாஹங்காரஸம் யுக்தா காமராகபலாந்விதா—৷৷17.5৷৷
கேள்விக்கு பதில் இதிலும் அடுத்ததிலும் -சாஸ்திரம் விதிக்கப் படாததாய் -கோரம் வருத்தி கொண்டு கோரமான தபஸ் -தானம் யாகம் அனைத்துக்கும்
-டம்பத்தோடும் அஹங்காரத்தோடும் செய்து -ஹிரண்ய கசிபு யாகம் ராவணன் யஜ்ஜம் போலே / காமம் ராகம் இருந்து பலசாலிகளாக -/
ஆசை இல்லாதவன் இடம் பலம் இருந்தால் லோகத்துக்கு நன்மை உண்டாகும்

கர்ஷயந்த ஷரீரஸ்தம் பூதக்ராமமசேதஸ–மாம் சைவாந்த ஷரீரஸ்தம் தாந்வித்த்யாஸுரநிஷ்சயாந்–৷৷17.6৷৷
அறிவிலிகள் -சாஸ்திரம் மீறி -இம்மை பயனை கூட கொடுக்காது என்று அறியாதவர்கள் -சரீரத்தில் உள்ள பஞ்ச பூதங்கள் துன்பத்துக்கு உள்ளாக்கி
-சமுத்திரம் -மலை -காயோடு நீடு கனி உண்டு -கதிக்கு பதறி -வெம் கானமும் கல்லும் கடலும் எல்லாம் கொதிக்க தவம் -செய்வார்கள் –
என்னுடைய அம்சமான ஆத்மாவை வேற -வருந்துகிறான் -பரமாத்மாவை வறுத்த முடியுமா -சரீர அம்சம் தானே -ஜீவாத்மாக்குள் இருந்தாலும் வியாப்யகத தோஷம் தட்டாது அவனுக்கு -/ஜீவாத்மா சரீரத்துக்குள் அகப்பட்டது கர்மாதீனம் -இவன் இருப்பது கிருபாதீனம் -அவகாசம் பார்த்து உய்ய வைக்க தானே இவன் நம்முள் உள்ளான் –
மாம் -என் அம்சமான ஜீவாத்மாவை -என்றபடி -ஆஸூர தன்மையில் நிச்சய புத்தி கொண்டு என்னுடைய ஆணை சாஸ்திரம் மீறுபவர்கள் தானே –
அசாஸ்த்ர விகிதம் -ஆஸூர நிச்சயம் –

ஆஹாரஸ்த்வபி ஸர்வஸ்ய த்ரிவிதோ பவதி ப்ரிய–யஜ்ஞஸ்தபஸ்ததா தாநம் தேஷாம் பேதமிமம் ஷ்ரரிணு–৷৷17.7৷৷
மூவகை –ஆகாரம் -அவரவர்களுக்கு பிரியமான / யஜ்ஜம் தபஸ் தானம் -இவற்றை சொல்லி -ஒவ் ஒன்றுக்கும் மூன்று ஸ்லோகங்கள்
சத்வ குணம் வளர -நிலையான சிந்தனை -த்யானம் -சர்வ முடிச்சுகள் அவிழும்-

ஆயு ஸத்த்வபலாரோக்யஸுகப்ரீதிவிவர்தநா–ரஸ்யா ஸ்நிக்தா ஸ்திரா ஹரித்யா ஆஹாரா ஸாத்த்விகப்ரியா–৷৷17.8৷৷
நீண்ட ஆயுள் -சத்தான மனஸ் வளர்க்கும் -பிராண வாயு ஸ்திரம் -இதுவே பலம் -/ தாதுக்கள் ஸ்திரம் தாதுக்கள் /
சுகம் -சாப்பிட்ட பின்பு உள்ள சுகத்தை வளர்க்கும் / ப்ரீத்தியையும் வளர்க்கும் -நல்ல எண்ணம் -மங்கள கார்யம் -சமுதாயம் பிரியம் -/
ஆயுசு வளர -இனி இனி கதறுகிறார்கள் -ஆழ்வார் நிலைக்கு வந்த பின்பு அது -படிப்படியாக -ஸ்ரீ கீதை அருளிச் செயல்கள் ஸ்ரீ பாஷ்யம்
-கைங்கர்யம் பண்ணி குண அனுசந்தானம் பண்ணி வாழ -பொருந்திய தேசம் –செல்வமும் சேரும் -குலம் தரும் செல்வம் தரும் -பிரபன்ன குலம் கைங்கர்ய செல்வம் /
சாத்விகர் பிரியமான ஆகாரம் -அனைத்துக்கும் அடிப்படை -இனிப்பு சுவை மிகுந்து /அன்னமயம் மனஸ்–/அறுசுவை மதுரம் மிக்கு /
வேகமாகவும் கூடாது அசை போட்டு உண்ணவும் கூடாது /சுவைத்து நக்கி கடித்து குடித்து விழுங்கி /சாத்விக ஆகாரம் – நிலை நின்று நன்மை பயக்கும்

கட்வம்லலவணாத்யுஷ்ணதீக்ஷ்ணரூக்ஷவிதாஹிந–ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா துக்கஷோகாமயப்ரதா–৷৷17.9৷৷
ராக்ஷஸ ஆகாரம் – துக்கம் சோகம் -ஆரோக்ய கேடு வரும் -அழ வைக்கும் / துவர்ப்பு அதிகம் -சுக்கு மிளகு திப்பிலி / புளிப்பு -நெல்லிக்காய் புளி /
உப்பு / அதி உஷ்ண -காரம் -வாதம் கிளப்பும் / எரிச்சலும் கிளப்பும் / கிழங்கு வகைகள் -/உப்பை நேராக உண்டால் பசு மாம்சம் சமம் –

யாதயாமம் கதரஸம் பூதி பர்யுஷிதம் ச யத்–உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜநம் தாமஸப்ரியம்–৷৷17.10৷৷
ஒரு ஜாமம் ஆனாலும் உண்ண கூடாது – இயற்க்கை ருசி மாறாக கூடாது -கந்தம் -ஊசினது உண்ண கூடாது / குரு முதலானோர் உச்சிஷ்டம் தவிர
– பிதா ஜ்யேஷ்ட பிராதா பர்த்தா-ஆச்சார்யர் -பானகம் தருவரேல் உண்டே /
ராமன் எச்சில் உண்பேன் என்றார் இளைய பெருமாள் தாரை இடம் /அமேத்யம் -கண்டு அருள பண்ணாத உணவு

அபலாகாங்க்ஷிபிர்யஜ்ஞோ விதிதரிஷ்டோ ய இஜ்யதே–யஷ்டவ்யமேவேதி மந ஸமாதாய ஸ ஸாத்த்விக—৷৷17.11৷৷
சாத்விக யஜ்ஜம் -பலத்தை உத்தேச்யமாக செய்து -ஈஸ்வர முக விலாசம் தவிர வேறு ஒன்றுமே கூடாதே
சாஸ்திரம் சொன்னதை மட்டுமே -ஸ்வயம் பிரயோஜனமாக – -இந்த யாகம் செய்யத் தக்கதே மனசை சமாதானம் செய்து செய்பவன்

அபிஸம் தாய து பலம் தம்பார்தமபி சைவ யத்–இஜ்யதே பரதஷ்ரேஷ்ட தம் யஜ்ஞம் வித்தி ராஜஸம்–৷৷17.12৷৷
ராக்ஷஸ யாகம் -பலத்தை எதிர்பார்த்து -டம்பத்துக்காக -இம்மை பலனை -டம்பம் ஸ்வர்க்காதி எதிர்பார்த்து -ஜ்யோதிஷட ஹோமமும் ராக்ஷஸ யாகம்

விதிஹீநமஸரிஷ்டாந்நம் மந்த்ரஹீநமதக்ஷிணம்–ஷ்ரத்தாவிரஹிதம் யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே–৷৷17.13৷৷
தாமஸ யாகம் -சாஸ்திரம் சொல்லாதது நாம் பார்க்கும் மூன்றுமே சாஸ்திரம் விதித்ததையே -பிராமணர் அனுமதி இல்லாமல்
-அநியாய வழியால் பெற்ற சம்பத் கொண்டு -மந்த்ரங்கள் இல்லாமை தக்ஷிணை கொடுக்காமல் ஸ்ரத்தை இல்லாமல்

தேவத்விஜகுருப்ராஜ்ஞபூஜநம் ஷௌசமார்ஜவம்–ப்ரஹ்மசர்யமஹிம் ஸா ச ஷாரீரம் தப உச்யதே–৷৷17.14৷৷
தபஸ் -ஆறு ஸ்லோகங்கள் –சரீரத்தால் -தெய்வம் பிராமணர் குரு பாகவதர்களை எழுந்து நமஸ்கரித்து சரீரத்தால் பண்ணும் தபஸ் /
பெரியவர் வந்தால் நம் பிராண வாயு கிளம்பும் -அதை உள்ளே அடக்கி நீ நமஸ்காரம் பானு என்கிறதே சாஸ்திரம்
ஸுசம் புண்ய தீர்த்தம் நீராடல் – நேர்மை -மனஸ் காயம் வாய் ஒன்றாக / ப்ரஹ்மசர்யம் போக்யமாக நினைக்காமல் /அஹிம்சா சரீர தபஸ் இவை –

அநுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத்–ஸ்வாத்யாயாப்யஸநம் சைவ வாங்மயம் தப உச்யதே–৷৷17.15৷৷
பேசினால் வெறுப்பு வராமல் உண்மை இனிதாக நல்லதாக -இரண்டும் -வேதம் விடாமல் ஓதி -வாக்கு தபஸ்

மந ப்ரஸாத ஸௌம்யத்வம் மௌநமாத்மவிநிக்ரஹ–பாவஸஂஷுத்திரித்யேதத்தபோ மாநஸமுச்யதே–৷৷17.16৷৷
மனஸ் தபஸ் -கோபம் இல்லாமல் தெளிந்து இருப்பது -பிறர் நன்மையை நினைந்தே -மௌனம் மனசால் வாக்கை அடக்குவது
-மௌனம் ரஹஸ்யமாக நான் இருக்கிறேன் கண்ணன்
-புன்சிரிப்பு ஆயிரம் அர்த்தம் கொடுக்கும் -பிராகிருத விஷயங்களில் மீட்டு ஆத்ம சிந்தனை உடனே இருப்பது மானஸ தபஸ் –

ஷ்ரத்தயா பரயா தப்தம் தபஸ்தத்த்ரவிதம் நரை–அபலாகாங்க்ஷிபிர்யுக்தை ஸாத்த்விகம் பரிசக்ஷதே–৷৷17.17৷৷
பலத்தில் ஆசை வைக்காத -சாத்விக தபஸ் -சாஸ்திரம் சொல்வதற்காக ஸ்ரத்தை உடன் -மூன்று விதம் பிராகிருத பலன்களை கருதாமல்

ஸத்காரமாநபூஜார்தம் தபோ தம்பேந சைவ யத்–க்ரியதே ததிஹ ப்ரோக்தம் ராஜஸம் சலமத்ருவம்–৷৷17.18৷৷
ராக்ஷஸ தபஸ் -நழுவும் நிலை நிற்காமல் மதிப்பு புகழ் பூஜைக்கு க்யாதி லாப பூஜைக்காக -ஸ்வர்க்காதி அல்ப அஸ்திர பலன்களுக்கு –

மூடக்ராஹேணாத்மநோ யத்பீடயா க்ரியதே தப–பரஸ்யோத்ஸாதநார்தம் வா தத்தாமஸமுதாஹரிதம்–৷৷17.19৷৷
தாமஸமான தபஸ் -மூடர்கள் – பிடித்த முயலுக்கு மூன்று கால் -தங்களையும் வருத்தி -பிறருக்கு பீடை -வைப்பு இத்யாதி -சக்திக்கு மீறி செய்பவர்

தாதவ்யமிதி யத்தாநம் தீயதேநுபகாரிணே–தேஷே காலே ச பாத்ரே ச தத்தாநம் ஸாத்த்விகம் ஸ்மரிதம்–৷৷17.20৷৷
சாத்விக தானம் -கொடுக்கப் பட வேண்டியதே -சாஸ்திரம் சொல்லி இருப்பதால் -உபகாரம் செய்யாதவனுக்கு -அவனுக்கு செய்தால்
பிரதியுபகாரம் ஆகும் தானம் -சரியான தேசத்தில் காலத்தில் அதிகாரிக்கு கொடுக்க வேண்டும்

யத்து ப்ரத்யுபகாரார்தம் பலமுத்திஷ்ய வா புந–தீயதே ச பரிக்லிஷ்டம் தத்தாநம் ராஜஸம் ஸ்மரிதம்–৷৷17.21৷৷
ராக்ஷஸ தானம் -பிரதியுபகாரம் எதிர்பார்த்து ஸ்வர்க்கத்துக்காக -மனஸ் வருந்தி கொடுக்க வேண்டி இருக்கிறதே -கெட்டதை கொடுப்பார் செலவு சந்தனம் போலே –

அதேஷகாலே யத்தாநமபாத்ரேப்யஷ்ச தீயதே–அஸத்கரிதமவஜ்ஞாதம் தத்தாமஸமுதாஹரிதம்–৷৷17.22৷৷
தாமஸ தானம் -கொடுக்கக் கூடாத தேசம் -கலிங்க தேசம் புத்தர்கள் உள்ள இடம் கூடாது / காலம் இரவில் கொடுக்க கூடாதே அஸ்தமனம் ஆனபின்பு பண்ண கூடாதே
-பாத்திரம் அறியாமல் -முட்டாள் தூஷிகன் போல்வாருக்கு -மரியாதை இல்லாமல் ஸத்காரம் பண்ணாமல் கொடுப்பது
-நம்ம கை கீழே இருந்து அவரை எடுத்துக் கொள்ள சொல்ல வேண்டும் –

தத்ஸதிதி நிர்தேஷோ ப்ரஹ்மணஸ்த்ரிவித ஸ்மரித–ப்ராஹ்மணாஸ்தேந வேதாஷ்ச யஜ்ஞாஷ்ச விஹிதா புரா–৷৷17.23৷৷
மேலே ஓம் -தது -சது -மூன்றையும் -வேதங்கள் -ஓதுபவர்கள் யாகங்கள் -நிர்தேசம் சப்தம் -பிராமணர்கள் வேதங்கள் யாகங்கள் மூன்றுக்கும் -என்னால் படைக்கப் பட்டன

தஸ்மாதோமித்யுதாஹரித்ய யஜ்ஞதாநதபஃக்ரியா–ப்ரவர்தந்தே விதாநோக்தா ஸததம் ப்ரஹ்மவாதிநாம்–৷৷17.24৷৷
ப்ரஹ்மம் அறிந்து சாஸ்திரம் ஓதுபவர்கள் வேதம் விதித்த படி ஓம் என்று சொல்லி தானம் தபஸ் யஜ்ஜம் செய்கிறார்கள் -எல்லா கர்மாக்களுக்கும் பொது பிரணவம் என்றபடி

ததித்யநபிஸந்தாய பலம் யஜ்ஞதப க்ரியா–தாநக்ரியாஷ்ச விவிதா க்ரியந்தே மோக்ஷகாங்க்ஷி–৷৷17.25৷৷
ஓம் தது மோக்ஷம் / ஓம் சது இந்த லோக ஐஸ்வர்யம் /ஓம் பொது -மோக்ஷம் விரும்புவர் தாது சேர்த்து -வேறே பலம் எதிர்பார்க்காமல் கிரியை
வேறே வேறே வகை தபஸ் யாகங்கள் செய்கிறார்கள் / மூன்றும் ப்ரஹ்மம் சொல்லும் சப்தங்கள் -இங்கு கர்மா செய்யும் பொழுது சேர்த்து சொல்வதை சொல்கிறது

ஸத்பாவே ஸாதுபாவே ச ஸதித்யேதத்ப்ரயுஜ்யதே–ப்ரஷஸ்தே கர்மணி ததா ஸச்சப்த பார்த யுஜ்யதே–৷৷17.26৷৷
சத் சப்தம் -லோகத்தில் சத் உணவு சத் பிள்ளை இருக்கிறது -சது நன்றாக இருக்கிறது என்ற அர்த்தமும் உண்டே -/
நல்ல லௌகிக கர்மங்களும் சத் சப்தம் சொல்வர் -/ சத் பிரயோகம் எதற்கு இந்த ஸ்லோகம்

யஜ்ஞே தபஸி தாநே ச ஸ்திதி ஸதிதி சோச்யதே–கர்ம சைவ ததர்தீயம் ஸதித்யேவாபிதீயதே–৷৷17.27৷৷
யஜ்ஜம் தானம் தாபஸ் -சத் சொல்லி செய்கிறார்கள் சத் ஓம் சேர்ந்தே -ஓம் பொது தானே -கர்மத்தை -லௌகிக பலத்தை ஆசைப்பட்டு ஓம் சத்

அஷ்ரத்தயா ஹுதம் தத்தம் தபஸ்தப்தம் கரிதம் ச யத்–அஸதித்யுச்யதே பார்த ந ச தத்ப்ரேத்ய நோ இஹ–৷৷17.28৷৷
அஸ்ரத்தையால் -இங்கு தான் இவன் கேள்விக்கு நேராக பதில் -சாஸ்த்ர விதி -இருந்தும் ஸ்ரத்தை இல்லா விடில் பலன் இல்லையே –
இது வரை ஸ்ரத்தையால் பண்ணினாலும் சாஸ்திரம் விதிக்கா விடில் வீண்
ஸ்ரத்தை இல்லா விடில் சத்தாகும் -மோக்ஷம் கொடுக்காது இந்த லோக ஐஸ்வர்யமும் கிடையாது -நோ இஹ -பிரத்ய –

————————————————————–
கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -16—-தேவாஸூர விபாக அத்யாயம் —

June 7, 2017

தேவா ஸூர விபாகோக்தி பூர்விகா சாஸ்திர வஸ்யதா
தத்வ அனுஷ்டான விஜ்ஞானஸ் தேமநே ஷோடஸ உச்யதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –20-

தேவா ஸூர விபாக-உக்தி பூர்விகா -தேவ அஸூர -விபாகம் சொல்வதை முன்னிட்டு
சாஸ்திர வஸ்யதா-சாஸ்திரம் வஸ்யராய வாழ வேண்டும்
தத்வ அனுஷ்டான விஜ்ஞானஸ் -தத்வம் -உண்மை பொருள் -பற்றிய ஞானம் ஏற்படவும்/அடைய- உபாயம் அனுஷ்டானம் பற்றிய ஞானமும்
தேமநே -ஸ்திரமாக -ஆழமாக உறுதியாக -இருக்க வேண்டுமே -வேதமும் வேதாந்தமும் தான் இந்த உறுதியை கொடுக்கும்
கீழே அவன் புருஷோத்தமன் சொல்லி -அவனை பற்றிய ஞானமும் -அடைய வேண்டிய அனுஷ்டானமும் இங்கு -அருளிச் செய்கிறான்
ஒரே வழி சாஸ்திரம் தானே –ப்ரத்யக்ஷம் அனுமானம் மூலம் -இல்லாமல் -வேதம் ஒன்றே புகல் -வேதைக சமைத கம்யன் -சாஸ்த்ர யோநித்வாத்-

————————————————-

ஸ்ரீ பகவாநுவாச
அபயம் ஸத்த்வஸம் ஷுத்தி ஜ்ஞாநயோகவ்யவஸ்திதி–தாநம் தமஷ்ச யஜ்ஞஷ்ச ஸ்வாத்யாயஸ்தப ஆர்ஜவம்–৷৷16.1৷৷
தேவர்கள் அடையாளம் -மூன்று ஸ்லோகங்கள் / மேல் அசுரர்கள் பற்றி /பயம் இல்லா தன்மை -சத்வ குணம் மிக்கு தேவர் / விஷ்ணு பக்தி உள்ளவர் /
-பயம் -ஆபத்து பிடிக்காதது வரும் என்னும் எதிர்பார்ப்பால் வரும் உணர்வு தானே பயம் / ஆசை -நல்லது வரும் என்று எதிர்பார்ப்பது -/
சுத்த மனசால் பர ப்ரஹ்மம் உணர்ந்து பயம் அற்று இருப்பார்களே / சத்வம் -மனஸ் கலக்கம் இல்லாமல் இருப்பர் / சத்வ சம் சுத்தி /ஜ்ஞாநயோகவ்யவஸ்திதி—
தேகம் விட ஆத்மா மேம்பட்டவன் என்ற ஞானம் கொண்டு தியானித்து பகவத் பிராப்திக்கு முயலும் தன்மை /ஆத்மாவுக்கு நல்லது தேடி தேகத்தை வெய்யில் வைப்பார்கள்
-வல்லபதேவன் -பெரியாழ்வார் -அந்த லோக சுகத்துக்கு இந்த லோகம் என்ன முயற்சி /பரதத்வ நிர்ணயம் -/
தானம் -நல்ல வழியில் ஈட்டிய பொருளை -சாஸ்த்ர சம்மதம் -சத்பாத்திரத்துக்கு கொடுத்தல் /தமம்-மன அடக்கம் / யஜ்ஞஷ்ச-பஞ்ச மஹா -ஆராதனம் /
ஸ்வாத்யாய -வேதம் ஓதி ஓதுவித்தல் /தப -உடம்பை வருத்தாமல் -சாஸ்த்ர சம்மதமான தபஸ் -உபவாசம் போல்வன -ஆர்ஜவம்–நேர்மை முக்கரணங்கள் ஒன்றாக /

அஹிம்ஸா ஸத்யமக்ரோதஸ்த்யாக ஷாந்திரபைஷுநம்–தயா பூதேஷ்வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீரசாபலம்–৷৷16.2৷৷
அஹிம்ஸா -பூத ஹிதம்-வேதம் ஹிம்சை பேசும் அவலம்பிக்க வேண்டாம் -அஹிம்சா வாதம் கொண்டு புத்தர்கள் -சங்கரர் -சாஸ்திரம் ஹிம்சை இல்லை /
ராமானுஜரும் பின்னர் இத்தையே -ஹிம்சை என்பது –வைத்தியர் ரண சிகிச்சை ஹிம்சை இல்லையே -கொஞ்சம் வலித்தாலும் நீண்ட நாள் நன்மைக்கு தானே
வலியே ஹிம்சை என்றால் பிரசவம் பொழுது வலிக்குமே -அது ஹிம்சை ஆகாதே -நீண்ட நாள் இன்பத்துக்காக -அன்றோ / சத்யம் உண்மை பேசுதல் பூதங்கள் நன்றாக இருக்க /
அப்ரியமான சத்யம் பேசாமல் / கோபம் அற்று இருப்பது -பிறருக்கு துன்பம் படுத்தும் கோபம் கொள்ளாமல் /தியாகம் -ஆத்மாவுக்கு நல்லது பண்ணாதவற்றை விட்டு /
ஷாந்தி இந்திரியங்களை அடக்கி /அபைசுனம் கோள் சொல்லாமை -தீக் குறளை சென்று ஓதோம்/
தயை பூ தேஷூ –ரஷிக்கும் இச்சை -அனு கம்பா கிருபா -கஷ்டப்படுபவர்களை கண்டால் / அலோ லுப்தம் –விலகி பற்று இல்லாமல் -லௌகீகர்களை கண்டால் ஒட்டு அற்று -/
மார்தவம் மென்மை- பெரியவர் நம்மை அணுக கடினத்தன்மை இல்லாமல் சாதுவாக /ஹ்ரீரி வெட்கம் பட்டு -சாஸ்திரம் சொன்னபடி செய்யாதபடி இருந்தோமே-வெட்க்கி வருந்தி –
கிணற்று தண்ணீர் ஆச்சாரம் இல்லையே -வருத்தம் வெட்கமாவது இருக்க வேண்டும் என்றபடி /அசபலம் -அழகிய இனிய பொருளை கண்டாலும் சபலம் கொள்ளாமை/

தேஜ க்ஷமா தரிதி ஷௌசமத்ரோஹோ நாதிமாநிதா–பவந்தி ஸம்பத தைவீமபிஜாதஸ்ய பாரத—৷৷16.3৷৷
-தேஜஸ் -பொறுமை -துன்புறுத்தினாலும் – த்ருதி உறுதி -பேர் ஆபத்து வந்த நிலையிலும் –சாஸ்த்ர விரோதமானவற்றை உண்ணாமல் /
ஸுசம் -சுத்தி -அனுஷ்டானம் செய்து / அத்ரோகம் / அதீத மனித கர்வம் கொள்ளாமை / சத்வ குணம் வளர தைவத் தன்மை வரும் என்றவாறு –
தைவச் செல்வம் -ஏற்படும் இந்த குணங்கள் -தேவனாக பிறந்தவன் -தேவ குணங்கள் கொண்டவன்
-சாஸ்த்ர விதி உட்பட்டவன் -தேவன் என்றபடி /மனம் போன படி நடப்பவன் அசுரன் -/

தம்போ தர்போபிமாநஷ்ச க்ரோத பாருஷ்யமேவ ச–அஜ்ஞாநம் சாபிஜாதஸ்ய பார்த ஸம்பதமாஸுரீம்–৷৷16.4৷৷
அசுரர் சம்பத் -இதுவும் செல்வமா விபத்து அன்றோ -அசுரர் நினைவால் சம்பத்து தானே /டம்பம் புகழுக்காக செய்வது -செருக்கு தர்பம் /
அபிமானம் கர்வம் -முக்குறும்பு -செல்வம் குடிப்பிறப்பு அழகு வித்யைகள் /குறும்பு அறுத்த நம்பி -சரித்திரம் /க்ரோதம் /வெறுப்பு
-பாருஷ்யம் /அஞ்ஞானம் விவேகஞானம் இல்லாமை -த்யாஜ்ய உபாதேய ஞானம் இல்லாமை

தைவீ ஸம்பத்விமோக்ஷாய நிபந்தாயாஸுரீ மதா–மா ஷுச ஸம்பதம் தைவீமபிஜாதோஸி பாண்டவ–৷৷16.5৷৷
தைவ தன்மை மோக்ஷம் -ஆசூரா ஸ்வபாவம் சம்சார பந்தம் -கொடுக்கும் -தேவாசுர விபாக -சங்கை ஜெனித சோகம் இரண்டாவது சோகம் இவனுக்கு —
நிபூட அஹங்காரம் மறைந்து உள்ள அஹங்காரம் இருக்குமே -ஷத்ரியன் -அசுரன் ஆவோமோ -சங்கை
தெய்வத் தன்மை தான் சோகப் படாதே –புருஷோத்தமன் என்னை பற்றி சொல்லி ஏத்து கொண்டாயே -இதுவே அடையாளம்

த்வௌ பூதஸர்கௌ லோகேஸ்மிந் தைவ ஆஸுர ஏவ ச–தைவோ விஸ்தரஷ ப்ரோக்த ஆஸுரம் பார்த மே ஷ்ரரிணு–৷৷16.6৷৷
பகவத் ஆணை படி நடப்பவர் தேவர்கள் -மீறுபவர்கள் அசுரர்கள் -தன்மை பற்றி சொல்கிறேன் –

ப்ரவரித்திம் ச நிவரித்திம் ச ஜநா ந விதுராஸுரா–ந ஷௌசம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷு வித்யதே–৷৷16.7৷৷
பிரவ்ருத்தி மார்க்கம் மூலம் அடையும் இவ்வுலக செல்வம் -நிவ்ருத்தி மார்க்கம் மூலம் பெரும் இவ்வுலக செல்வம் -இரண்டையும் பெறாதவர்கள்
-இரா எழுத்தை கேட்டாலே பயந்த ராவணன் -நல்ல கார்யம் செய்ய சுத்தி இல்லாதவர்கள் -ஆச்சாரம் இல்லாதவர்கள் உண்மை பேச மாட்டார்கள்

அஸத்யமப்ரதிஷ்டம் தே ஜகதாஹுரநீஷ்வரம்–அபரஸ்பரஸம்பூதம் கிமந்யத்காமஹைதுகம்—৷৷16.8৷৷
ஜகத் அசத்தியம் என்பர் -ப்ரஹ்மாத்மகம் இல்லாத வஸ்துக்கள் உண்டு என்பர் -காட்டு என்றால் தன்னையே காட்டுவர் –பூமியில் நிலை நிற்கும்
-ப்ரஹ்மம் சர்வ ஆதாரம் என்று ஒத்து கொள்ளாதவர்கள் இவர்கள் /ப்ரஹ்மா நியமிக்க வில்லை / பரஸ்பர ஆண் பெண் சேர்க்கையால் உருவாகாத பொருள்கள் இல்லை
-செல்வத்தால் எல்லாம் வாங்கலாம் / காமத்தை அடிப்படையாக கொண்டே உலகம் ஓடும் காமமே ப்ரஹ்மம் என்பான் /

ஏதாம் தரிஷ்டிமவஷ்டப்ய நஷ்டாத்மாநோல்பபுத்தய–ப்ரபவந்த்யுக்ரகர்மாண க்ஷயாய ஜகதோஹிதா–৷৷16.9৷৷
ஜகதோஹிதா–ஜகதோ அஸூபா–பாட பேதம் -மங்களத்தன்மை இல்லாமல்
இந்த த்ருஷ்ட்டியை பண்ணிக்க கொண்டு -குத்ருஷ்ட்டி – அல்ப புத்தி -தேஹாத்ம பிரமத்தால் -உலகம் அழிவதற்கு செயல்படுவார்கள் –

காமமாஷ்ரித்ய துஷ்பூரம் தம்பமாநமதாந்விதா–மோஹாத்கரிஹீத்வாஸத்க்ராஹாந்ப்ரவர்தந்தேஷுசிவ்ரதா–৷৷16.10৷৷
ஆசை பட்டு -அடி இல்லா பள்ளம் -தூரா குழி -டம்பம் -மானம் -மதம் கர்வத்தால் -அறிவின்மையால் -தவறான வழியில் பொருளை
ஈட்டி வைத்து -சாஸ்திரம் விதிக்காத வழியில் செயல் படுவார்கள்

சிந்தாமபரிமேயாம் ச ப்ரலயாந்தாமுபாஷ்ரிதா–காமோபபோகபரமா ஏதாவதிதி நிஷ்சதா–৷৷16.11৷৷
இவர்கள் ஆசை நிறைவேறாதே -பரிமித சிந்தனை இல்லை -ப்ரஹ்மம் துணை இல்லாமல் பிரளயம் வரை நிறைவேறாதே
-காமம் அனுபவிப்பதே -இதுவே புருஷார்த்தம் என்று இருந்து அழிகிறார்கள்

ஆஷாபாஷஷதைர்பத்தா காமக்ரோதபராயணா–ஈஹந்தே காமபோகார்தமந்யாயேநார்தஸஞ்சயாந்–৷৷16.12৷৷
நூற்றுக் கணக்கான ஆசா பாசங்களில் சிக்கி -புலன்களை மேய விட்டு தோற்றாய் -மண்டோதரி -ஆசை வைத்து கிடைக்காமல்
கோபம் கொள்வது இதுவே புருஷார்த்தம் -காமம் சுகத்துக்காக அநியாய வழியில் பொருளை ஈட்டுவார்கள்

இதமத்ய மயா லப்தமிமம் ப்ராப்ஸ்யே மநோரதம்–இதமஸ்தீதமபி மே பவிஷ்யதி புநர்தநம்–৷৷16.13৷৷
இவை எல்லாம் என்னாலேயே அடைய பெற்றன -புண்ய பலம் இல்லை ஈஸ்வர கிருபையால் இல்லை -ஆசைப் பட்டது எல்லாம் அடைவேன்
-இவை எல்லாம் என் ஆசையால் வந்தவை -எது வேண்டுமானாலும் பெறுவான் -யாரும் தேவை இல்லை–
அவன் இல்லாமல் எதுவும் இல்லையே -நின்றனர் இத்யாதி அவரவர் விதி வழி நின்றனர் என்று உணராமல் -இஷ்ட பிராப்தி தன்னால் –

அஸௌ மயா ஹத ஷத்ருர்ஹநிஷ்யே சாபராநபி–ஈஷ்வரோஹமஹம் போகீ ஸித்தோஹம் பலவாந்ஸுகீ–৷৷16.14৷৷
அநிஷ்ட நிவ்ருத்தியும் என்னாலே -என்னாலே சத்ருக்கள் மாண்டனர் -நான் தான் ஈஸ்வரன் -நானே அனுபவிக்கிறேன்
-ஸ்வர்க்காதிகளை நானே அடைவேன் -பலமும் என்னாலே சுகம் என்னாலே –

ஆட்யோபிஜநவாநஸ்மி கோந்யோஸ்தி ஸதரிஷோ மயா–யக்ஷ்யே தாஸ்யாமி மோதிஷ்ய இத்யஜ்ஞாநவிமோஹிதா–৷৷16.15৷৷
உயர் நிகர் எனக்கு -அஞ்ஞானம் பீடித்து -யாகங்கள் எல்லாம் என்னாலே –

அநேகசித்தவிப்ராந்தா மோஹஜாலஸமாவரிதா–ப்ரஸக்தா காமபோகேஷு பதந்தி நரகேஷுசௌ–৷৷16.16৷৷
சிந்தனை கடலில் அலைந்து -மோஹம் மயக்கம் சூழ்ந்து -காமம் அனுபவித்து -நரகில் விழுகிறார்கள் –
-செம்பினால் இயன்ற பாவையை தழுவி பாவி -நைமிசாரண்ய பாசுரம்

ஆத்மஸம்பாவிதா ஸ்தப்தா தநமாநமதாந்விதா–.யஜந்தே நாமயஜ்ஞைஸ்தே தம்பேநாவிதிபூர்வகம்–৷৷16.17৷৷
தன் பெருமையை பேசி -குலையாமல் -தான மதம் -பெயர் யாகம் -பெயருக்காக புகழுக்காக யாகம் -டம்பம் -சாஸ்திரம் விதிக்காத வகையில்

அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் ச ஸம் ஷ்ரிதா–மாமாத்மபரதேஹேஷு ப்ரத்விஷந்தோப்யஸூயகா–৷৷16.18৷৷
அஹங்காரம் -நானே பலவான் கர்வம் கோபம் பீடுக்கப்பட்டு -நான் தான் எல்லார் உடம்புக்குள்ளும் உள்ளேன்
-என்னை எதிர்க்கிறார்கள் பொறாமையால் -அ ஸூ யை / வாத்சல்யம் எதிர் குணம்

தாநஹம் த்விஷத க்ரூராந்ஸம் ஸாரேஷு நராதமாந்–க்ஷிபாம்யஜஸ்ரமஷுபாநாஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷
என்னை த்வேஷிக்கும் -க்ரூர ஸ்வபாவம் உள்ளவர்களை மறு படியும் அசூப அசுர யோனிகளில் பிடித்து தள்ளி விடுகிறேன்
7- அத்யாயம் ஆஸூரம் பாவம் நால்வர் பற்றி சொன்ன நால்வரையே இங்கும்

அஸுரீம் யோநிமாபந்நா மூடா ஜந்மநி ஜந்மநி–மாமப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்யதமாம் கதிம்–৷৷16.20৷৷
மூடர்கள் -பிறவி தோறும் என்னை அடையாதவர்களாக -மிக மிக தாழ்ந்த பிறவிகளை அடைந்து –

த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாஷநமாத்மந–காம க்ரோதஸ்ததா லோபஸ்தஸ்மாதேதத்த்ரயம் த்யஜேத்–৷৷16.21৷৷
மூன்று துவாரம் -ஆத்மாவை அளிக்கும் -காமம் -க்ரோதம் -பேராசை -மூன்றையும் விளக்கி விடுவாய் -தேவைகளை குறைத்து ஆசைப் படாமல் இருந்தால் போதுமே

ஏதைர்விமுக்த கௌந்தேய தமோத்வாரைஸ்த்ரிபிர்நர–ஆசரத்யாத்மந ஷ்ரேயஸ்ததோ யாதி பராம் கதிம்–৷৷16.22৷৷
இவற்றை விட்டவர்கள் -நரகம் -அசுரர் தன்மைக்கு மூன்று துவாரம் விடுபட்டு -நல்ல கதியை அடையலாம்

ய ஷாஸ்த்ரவிதிமுத்ஸரிஜ்ய வர்ததே காமகாரத–ந ஸ ஸித்திமவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம்–৷৷16.23৷৷
அத்யாயம் சுருக்கம் -சாஸ்த்ர விதியை தாண்டி தம் மனம் போன படி ஆசைப் பட்டு அனைத்தையும் இழக்கிறார்கள்
-ஸ்வர்க்கம் அடைவதும் மாட்டான் -இவ்வுலக இன்பமும் இல்லை -ஸ்ரீ வைகுண்டமும் கிட்டான்

தஸ்மாச்சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்யவ்யவஸ்திதௌ–ஜ்ஞாத்வா ஷாஸ்த்ரவிதாநோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி–৷৷16.24৷৷
ஆகையால் சாஸ்திரம் பிரமாணம் -ப்ரஹ்மம் உள்ளபடி -தெரிவதற்கும் உபாயம் அனுஷ்ட்டிக்கவும்
-சாஸ்த்ர தத்வம் நானே உபாயமும் நானே -கர்மங்களை சாஸ்திரம் படி செய்ய யோக்யதை பெற்று உயர்ந்த ப்ராப்யமான என்னை அடைவாய்

———————————————-

கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -15—-

June 7, 2017

அசின் மிஸ்ராத் விஸூத்தாச்ச சேத நாத் புருஷோத்தம
வ்யாப நாத் பரணாத் ஸ்வாம் யாத் அந்ய பஞ்சத சோதித–ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –19-

அசின் மிஸ்ராத் சேத நாத்– அசித் உடன் கூடிய சேதனர்கள் -பத்தாத்மா
விஸூத்தாச்ச சேத நாத்—அசித் நீக்கி சுத்த -முக்தாத்மா சேதனர்கள் –
புருஷோத்தம –
வ்யாப நாத்-வியாபிக்கிற படியால்
பரணாத்-தரிக்கிற படியால்
ஸ்வாம் யாத்-நியமிக்கிறபடியால்
அந்ய-வேறுபட்ட புருஷோத்தமன் -ஸமஸ்த ஸூவ இதர விலக்ஷணன் –
வேறு பட்டு –உயர்ந்த — சம்பந்தம் கொண்டே –பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஸ்திதிகள் –
ஆகாசம் -வியாபகம் மட்டும் -பூ தேனை தரிக்கும் -ராஜா சிலரை நியமிக்கலாம் -இவனோ சர்வரையும் சர்வத்தையும் –

தன்னை பற்றி -ஸூ யாதாம்யாம் -7-அத்யாயம் / ஸூ மாஹாத்ம்யம் -9-அத்யாயம் / இவற்றின் விளக்கம் இது -பூர்வ சேஷம் –
புருஷன் புரி நாடியில் இருந்து -எல்லா ஆத்மாக்களும் புருஷன் -பத்தன் முக்தன் நித்யன் -மூவர் / புருஷோத்தமன் -இம்மூவரிலும் வாசி -இந்த கோஷ்ட்டியில் இல்லையே /
அபுருஷன் -அசித் -வர்க்கம்- / புருஷோத்தம வித்யை அறிந்தால் அந்த ஜென்மத்தில் மோக்ஷம் /அவதார ரஹஸ்ய ஞானம் போலே
– நடுவில் நாம சங்கீர்த்தனமும் இதே கிட்டும் பார்த்தோம் -/பிரபத்தி நிஷ்டர்களுக்கு -சர்வ தர்மான் பரித்யஜ்ய -இவை எல்லாம் கைங்கர்யம் -சாதனம் இல்லை –

————————————————————

ஸ்ரீ பகவாநுவாச–
ஊர்த்வமூலமதஷாகமஷ்வத்தம் ப்ராஹுரவ்யயம்–சந்தாம் ஸி யஸ்ய பர்ணாநி யஸ்தம் வேத ஸ வேதவித்–৷৷15.1৷৷
அஸ்வத்த மரம் -அரச மரம் -த்ருஷ்டாந்தம் -தலை கீழே -/கடோ உபநிஷத் –ப்ரஹ்மம் ஸ்ருஷ்டிக்க -வேராக கொண்டு -கர்மம் அடியாக -கீழே விழுந்த விதை
இந்த கர்மம் அடியாக பிறப்பது -மேலே வேற மரம் அருகில் -சம்சாரம் ஆகிய பெரிய மரம் வேர் சத்யலோகம் / கீழே தேவாதி கிளைகள் -/
அஸ்வத்தம் -நாளை இருக்காது -அதனால் அஸ்வத்தம் -மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் -சதத பரிணாமம் -ஷட் பாவ விகாரங்கள் உண்டே –
அவ்யயம் பிரவாஹ ரூபமாக அழியாமல் -சந்தஸ் வேத வாக்கியங்கள் இலைகள் என்கிறான் -மரத்துக்கு இலை தானே ஸூர்ய ஒளி மூலம் பிராணன்
-அதே போலே யாகங்கள் இவை வேத வாக்கியங்கள் கொண்டே – மறை புரிய வைக்காமல் மயக்கும் – / பூர்வ காண்டம் -த்யானம் உபாசனம் -/
உபநிஷத் வேதாந்தம் -ப்ரஹ்ம பாவம் /
சந்தஸ் -மறைக்கும் -வேதம் மட்டும் பிடித்து கொண்டு ஸ்வர்க்காதி அல்ப -முக்குணத்தவர்களுக்கு /சம்சாரம் மரத்தை அறிந்தவனே அதிகாரி -சொல்லி அடுத்து

அதஷ்சோர்த்வம் ப்ரஸரிதாஸ்தஸ்ய ஷாகா–குணப்ரவரித்தா விஷயப்ரவாலா–அதஷ்ச மூலாந்யநுஸந்ததாநி–கர்மாநுபந்தீநி மநுஷ்யலோகே–৷৷15.2৷৷
மேலும் கீழும் பரவி உள்ள கிளைகள் கர்மா -உயர்ந்த தாழ்ந்த யோனிக்கு இரண்டுக்கும் -இதுவே காரணம் -முக்குணங்கள் வளர்க்கப் பட்ட மரம்
-நீரும் உரமும் இவையே -கர்மம் வளர -விழுது விழுந்து மேலும் கீழும் -மரம் சூழல்- பிரவாஹா ரூபம் -/ தளிர்கள் பஞ்ச பூத ஸூ ஷ்மங்கள் உடைய சம்சாரம்
-சப்தாதிகளை தளிர்கள் -முதலில் நைமித்திக ஸ்ருஷ்ட்டி – அடுத்து நித்ய ஸ்ருஷ்ட்டி -பிராட்டி புருவ நெறிப்பே
-பெரிய பெருமாளுக்கு வேதம் -மேலே உயர்த்தினால் உயர்ந்த யோனி / பிரமாணம் இதுவே இவனுக்கு –
கர்மம் என்னும் கட்டுக்கள் -மனுஷ்ய லோகத்திலும் -சேரும் –

ந ரூபமஸ்யேஹ ததோபலப்யதே–நாந்தோ ந சாதிர்ந ச ஸம் ப்ரதிஷ்டா–அஷ்வத்தமேநம் ஸுவிரூடமூல-மஸங்கஷஸ்த்ரேண தரிடேந சித்த்வா–৷৷15.3৷৷
இந்த சம்சாரி இந்த விஷயம் அறியாமல் -முடிவையும் தெரிந்து கொள்ளாமல் -முடிவு முக்குணங்களை தாண்டினால் தானே -நீர் கொட்டாமல் இருந்தால்
-தண்ணீர் அற்று பட்டு போகுமே -ஆதியும் -அறியாமல் -ஆதி குண சங்கம் -வேர் இது தானே -சம்சார மரம் -அஞ்ஞானம் என்னும் ஆதாரம் -என்றும் அறியாமல்
-தேஹாத்ம பிரமம் தானே -அதுவும் அறியாமல் -/ விவேக ஞானம் என்னும் கோடரியால் வெட்ட வேண்டுமே –
குடும்ப மரம் வம்ச வருஷம் மட்டுமே அறிந்து சம்சாரத்தில் உழல்கின்றான் —
இந்த அரச மரத்தை -நன்றாக பதிந்த மரம் -ஸூ= நன்கு நின்று -வி= விசித்திர விவித -ஸூ விருட மூலம் -இரண்டையும் சொல்லி /
சுலபமாக கண்டு கொள்ள முடியாத மரம் -கோடரி -அசங்கம் -பற்று அற்ற -முக்குணங்களில் பற்று வைக்காத தன்மை /
திடமாக இருக்க வேண்டும் –எப்பொழுதும் இருக்க வேண்டும் -ஞானத்தின் அடிப்படையில் அசங்கம் வேண்டும் –

தத பதம் தத்பரிமார்கிதவ்ய–யஸ்மிந்கதா ந நிவர்தந்தி பூய–தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே–யத ப்ரவரித்தி ப்ரஸரிதா புராணீ–৷৷15.4৷৷
அதனால் -ஆத்ம பிராப்தியை -உயர்ந்த -தேடத் தக்கத்தை -தேடுவாய் –திடமான பற்று அற்ற தன்மையால் –
இதற்கு உபாயம் என்ன என்னில்-திருவடிகள் தானே –மூல புருஷனான எம்பெருமானை பற்று -அந்த -படர்க்கையில் சொல்கிறான் -அஹம்-சொல்லாமல் -தமேவ –
பிரபத்யே -பற்றுகிறேன் -யத–பற்றி அதனால் அஞ்ஞானம் தொலைத்து –
புருஷோத்தமன் -அரையன் சிறையன் இருவரும் சிறை சாலையில் -சிறை கதவை திறந்து விடுவேன் –
வைப்பான் என் திறப்பான் என் -கர்மாதீனம் —யதாக எவன் இடம் இருந்து -பிரவ்ருத்தி முக்குணங்கள் சேர்க்கை கிடைத்ததோ அவன் திருவடிகளை பற்றி –
தம் -இல்லை தமேவ -அவனையே -மறந்தும் புறம் தொழா மாந்தர் -நாராயணனே நமக்கே பறை தருவான் -ஏக காரணன்

நிர்மாநமோஹா ஜிதஸங்கதோஷா–அத்யாத்மநித்யா விநிவரித்தகாமா–த்வந்த்வைர்விமுக்தா ஸுக துக்கஸம்ஜ்ஞை–ர்கச்சந்த்யமூடா பதமவ்யயம் தத்–৷৷15.5৷৷
பற்றினால் கிட்டும் பலன்கள் –போகிறார்கள் -ஆத்ம பிராப்தி அடைகிறார்கள் -அசங்கம் கோடரி கிட்டும் -பிறவி நீங்கி -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி
தேஹாத்ம மயக்கம் இல்லை -முக்குணம் பற்று அற்று -ஆத்மசிந்தனையில் ஈடுபடுவான் -வேறு எதிலும் ஆசை இல்லை -இரட்டையில் இருந்து விடுபடுவார்
-மயக்கம் இல்லாமல் உயர்ந்த பிராப்தி பெறுகிறான் –

ந தத்பாஸயதே ஸூர்யோ ந ஷஷாங்கோ ந பாவக–யத்கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம–৷৷15.6৷৷
பரிசுத்தமான ஆத்மா -/ஆத்ம சாஷாத்காரம் பெற்று -ஞானம் தேஜஸ் -மிக்கு -ஸூரியன் கொண்டு ஒளி பெற வேண்டாம் சந்திரன் அக்னி -இல்லாமல் தானே விளங்கும்
எத்தை அடைந்த பின் திரும்பி வர வேண்டாமோ -தாமம் தேஜஸ் -இந்த சொத்து மம -சேர்த்தே சொல்லுவான் /
எதனால் விளங்குகிறான் -யோகத்தால் -ஞான சஷூஸ்-கர்மா விலகியதும் யோகம் வளரும் -திருவடி பற்றி பற்று அறுக்க பிரார்த்திக்க வேண்டுமே –

மமைவாம் ஷோ ஜீவலோகே ஜீவபூத ஸநாதந–மந ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரகரிதிஸ்தாநி கர்ஷதி৷৷15.7৷৷
கீழே முக்தாத்மா தன்னுடைய உடைமை -இதில் பத்தாத்மாவும் என்னுடைய உடைமை -என்னுடைய அம்சமே -மிகவும் பழையவன்
-பிரகிருதி பரிணாமம் சரீரம் -வியாபாரம் செய்து -இந்திரியங்கள் செயல்பாட்டை செய்து கொண்டு இருக்கிறான் –

ஷரீரம் யதவாப்நோதி யச்சாப்யுத்க்ராமதீஷ்வர–கரிஹீத்வைதாநி ஸம் யாதி வாயுர்கந்தாநிவாஷயாத்–৷৷15.8৷৷
அடுத்த சரீரம் போகும் பொழுது பூத ஸூ ஷ்மங்களை எடுத்து கொண்டே -காற்று மணம் -வண்டு தேன்களை கிரஹிக்குமா போலே
-ருசி வாசனைகள் உடனே -இந்திரியங்களையும் சப்தாதி விஷயங்களையும் -கொண்டே புகுகிறான்

ஷ்ரோத்ரம் சக்ஷு ஸ்பர்ஷநம் ச ரஸநம் க்ராணமேவ ச–அதிஷ்டாய மநஷ்சாயம் விஷயாநுபஸேவதே–৷৷15.9৷৷
விஷம் தோய்ந்த தேனை பருகுகிறான் -காது கண் –இத்யாதி மனஸ் -சப்தாதிகளிலே மேய விட்டு -அறியாமல் அனுபவிக்கிறான்

உத்க்ராமந்தம் ஸ்திதம் வாபி புஞ்ஜாநம் வா குணாந்விதம்.விமூடா நாநுபஷ்யந்தி பஷ்யந்தி ஜ்ஞாநசக்ஷுஷ–৷৷15.10৷৷
ஆத்ம அபகாரம் திருட்டை பற்றி சொல்கிறான் இதில் -சரீரத்தில் புறப்படும் பொழுதும் இருக்கும் பொழுதும் புகும் பொழுதும்
-ஆத்மாவை பிரித்து பார்க்க தெரியாமல் மூடர்களாக -ஞானம் அறிய ஞான கண் கொண்டே பார்க்க முடியும் -சூழலிலே சிக்கி உழல்கின்றான்

யதந்தோ யோகிநஷ்சைநம் பஷ்யந்த்யாத்மந்யவஸ்திதம்–யதந்தோப்யகரிதாத்மாநோ நைநம் பஷ்யந்த்யசேதஸ–৷৷15.11৷৷
என்னை சரண் அடைந்து -கர்மங்களில் இருந்து முயன்றால் -உண்மை நிலையை அறிந்தவனாக -ஆகிறான் -/
பற்றாமல் முயல்வாருக்கு மனஸ் சுத்தி ஏற்படாமல் -இழக்கிறார்கள் –கைங்கர்யம் திருவடி சரண் அடைந்தே -செய்ய வேண்டும் –
சம்பந்தம் புரிந்தே முயல வேண்டும் -ஆத்மாவை தெரிந்து கொள்ள -மனஸ் சுத்தி வேண்டுமே

யதாதித்யகதம்- தேஜோ ஜகத்பாஸயதேகிலம்–யச்சந்த்ரமஸி யச்சாக்நௌ தத்தேஜோ வித்தி மாமகம்–৷৷15.12৷৷
இங்கு அனைத்தும் தன்னதே -கீழே முக்தாத்மா பத்தாத்மா சொல்லி -பிராசங்கிக்கமாக மூன்று ஸ்லோகங்கள் –
ஆதித்யன் -இடம் உள்ள தேஜஸ் -உலகம் அகிலம் ஒளி பெற -சந்திரன் -அக்னி தேஜஸ் -இந்த தேஜஸ் எல்லாம் என்னுடையதே என்று அறிந்து கொள் –

காமாவிஷ்ய ச பூதாநி தாரயாம்யஹமோஜஸா–புஷ்ணாமி சௌஷதீ ஸர்வா ஸோமோ பூத்வா ரஸாத்மக–৷৷15.13৷৷
பூமியை அடைந்து -தரித்து -திறல்/ அமர்த்த ரசம் சந்திரனாக இருந்து போஷித்து சேதுபவனும் நானே /அனைத்து சக்திகளும் என்னது –

அஹம் வைஷ்வாநரோ பூத்வா ப்ராணிநாம் தேஹமாஷ்ரித–ப்ராணாபாநஸமாயுக்த பசாம்யந்நம் சதுர்விதம்–৷৷15.14৷৷
ஜாடராக்னியாகவும்-இருந்து -பிராணிகள் தேகம் அடைந்து -பிராண வாயு அபான வாயு -நான்கு வித அன்னம் -கடித்து நக்கி உறிஞ்சி குடிக்கும் நான்கு விதம்
/நானே தளிகை பண்ணுகிறேன் -ஜீரணம் என்றவாறு -ஸமஸ்த வஸ்துக்களும் அவன் உடைமை என்றவாறு -/
அன்னம் -பிராமணனுக்கு -சொல்லி வஸ்திரம் கொடுத்ததாக வஸ்திர தானம் -ஐந்து வாயுக்களும் சரியான நிலையில்
சமான வாயு உடன் பிராண அபான வாயு சேர்ந்து –சாப்பிடட பதார்த்தங்கள் சக்தி பிரிந்து இந்திரியங்களுக்கு போக வேண்டுமே –

ஸர்வஸ்ய சாஹம் ஹரிதி ஸந்நிவிஷ்டோ–மத்த ஸ்மரிதிர்ஜ்ஞாநமபோஹநம் ச–வேதைஷ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ-வேதாந்தகரித்வேதவிதேவ சாஹம்–৷৷15.15৷৷
ஆச்சர்யமான ஸ்லோகம் -நிறைய இடங்களில் காட்டி வியாக்யானம் உண்டே –கீழே சாமானாதிகரண்யம்-அனைத்தும் இவனே /
அந்தராத்மாவாக இருந்து -சரீராத்மா நிபந்தனம்-/பின்ன பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஏகஸ்மின் -விசேஷணங்கள் ஒன்றுக்கே –
விலை பெற்ற நீல வாயும் வயிறுமான மண் குடம் போலே /வேறு வேறு பிரயோஜனத்துக்காக வேறே வேறே விசேஷணங்கள் -பிரதம விபக்தி -முதல் வேற்றுமையில் படிக்கலாம் –
ஹிருதயத்தில் ஆத்மாவாக நுழைந்து இருக்கிறேன் அனைத்துக்குள்ளும் -அந்த ப்ரவிஷ்டா சாஸ்தா நியாந்தா /ஸ்ம்ருதியும் / ஞானம் மறதி எல்லாம் என் ஆதீனம் /
வேதங்கள் -சொல்லப் படுகிறேன் -நானே -ஏவ காரம் மூன்று இடங்களிலும் -வேதங்களினால் நானே -அறிய படுகிறேன்
வேதங்களினாலே சொல்லப் படுகிறேன் -வேறே ஒன்றும் சொல்லாதே -வேதம் என்னை சொல்லி அல்லால் நில்லாது /வேதம் எத்தை சொல்ல போனாலும் -இவனது சரீரமே /
வேதங்களின் படி செய்யும் கர்மங்களுக்கும் பலம் கொடுப்பவனும் நானே

த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஷ்சாக்ஷர ஏவ ச–க்ஷர ஸர்வாணி பூதாநி கூடஸ்தோக்ஷர உச்யதே–৷৷15.16৷৷
லோகே வேதத்தில் சொல்லப் பட்ட படி -ஷரன் அழிவுக்கு உட்பட்ட சரீரம் உடன் உள்ள பத்தாத்மா / அஷரன் -முக்தாத்மா -/
பூத ராசிகள் எல்லாம் ஷரன் -உயர்ந்த முக்தாத்மா அஷரன் -/ இருவரும் வேதத்தில் சொல்லப்பட்டன

உத்தம புருஷஸ்த்வந்ய பரமாத்மேத்யுதாஹரித–யோ லோகத்ரயமாவிஷ்ய பிபர்த்யவ்யய ஈஷ்வர–৷৷15.17৷৷
இவர்களை காட்டிலும் வேறு பட்ட புருஷோத்தமன் -பாரமான ஆத்மா -லோக த்ரயம் -சித் அசித் ஈஸ்வரன் தத்வ த்ரயங்கள் -சூழ்ந்து தங்குகிறான்
-ஸ்வாமி -நியமனம்-ஈசான சீலன் நியமன சாமர்த்தியம் – -வியாபிக்கிறான் -தரிக்கிறான் -தங்குகிறான் -/ மற்றவை வியாபிக்கப்படும் – தாங்கப்படும்- நியமிக்கப் படும் /

யஸ்மாத்க்ஷரமதீதோஹமக்ஷராதபி சோத்தம–அதோஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம—৷৷15.18৷৷
எதன் இடத்தில் இருந்து ஷரம் பத்தாத்மா –அஹம் சப்தம் இங்கு -தாண்டி அதீத வாசனை கூட இல்லை முகத்தாத்மா தாண்டி
-வேதங்கள் ஸ்ம்ருதிகள் என்னை புகழும் / ஸ்வரூப ஸ்வ பாவ விகாரங்கள் இல்லாமல்

யோ மாமேவமஸம்மூடோ ஜாநாதி புருஷோத்தமம்–ஸ ஸர்வவித்பஜதி மாம் ஸர்வபாவேந பாரத–৷৷15.19৷৷
யார் -என்னையே -சந்தேகம் இடம் இல்லாமல் -மயக்கம் இல்லாமல் -புருஷோத்தமன் என்று -அம்சமா அங்கமா அவயவமா ஐக்கியமா -சங்கை இல்லாமல்
அந்த ஆத்ம ஞானி -புருஷோத்தம வித்யை கை வந்தவன் எல்லாவற்றையும் அறிந்தவன் ஆகிறான் –அவனை அடையும் உபாயங்கள் எல்லாவற்றையும் அறிந்தவன் ஆகிறான்
-என்னை பக்தி செய்யும் எல்லா முறைகளாலும் பக்தி பண்ணுகிறான் -கண்ணன் அபிப்பிராயம் இது -இவற்றால் எனக்கு ஏற்படும் ஆனந்தம்
-புருஷோத்தம வித்யை அறிந்தவன் தெரிவதால் அடைகிறேன் என்றபடி

இதி குஹ்யதமம் ஷாஸ்த்ரமிதமுக்தம் மயாநக–ஏதத்புத்த்வா புத்திமாந்ஸ்யாத்கரிதகரித்யஷ்ச பாரத–৷৷15.20৷৷
புருஷோத்தம வித்யை அறிந்தவன் அனைத்தையும் அனுஷ்டித்தவன் ஆகிறான் -புனர் யுக்தி தோஷம் இல்லை -இதில் தான் அறிந்து அனுஷ்ட்டித்து அடைந்து
–செய்த வேள்வியர் – பூவை –யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் -வியாக்யானம் போலே -பேர் வைத்து ஆனந்தம் இல்லை
திருநாமங்கள் சொல்லி பெற்ற ஆனந்தம் உலக குழந்தைகள் இவை கொண்டு விளையாடும் ஆனந்தம் பராங்குச நாயகி பெற்றாள்-
அதே போலே இங்கும் முந்திய ஸ்லோகங்களும் அர்த்தம் -குஹ்ய தமமான சாஸ்திரம் —ரஹஸ்யமாக வைத்து கொள் -குற்றம் அற்ற அர்ஜுனன்-

————————————————————–

கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -14—-

June 6, 2017

குண பந்த விதா தேஷாம் கர்த்ருத்வம் தந் நிவர்த்தனம்
கதி த்ரய ஸ்ய மூலத்வம் சதுர்தச உதீர்யதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -18-

குண பந்த விதா -முக்குணங்களால் கட்டுப்பட்டு
தேஷாம் கர்த்ருத்வம் -இவற்றுக்கே கர்த்ருத்வம் -ஆத்மாவுக்கு இல்லை
தந் நிவர்த்தனம் -தாண்டி நிற்கும் உபாயம்
கதி த்ரய ஸ்ய மூலத்வம்–ஐஸ்வர்யம் கைவல்யம் பகவத் லாபார்த்தம் மூன்றுக்கும் தன் திருவடியே -பிராசங்கிக்கமாக –

முக்குண சேர்க்கை பிறவி காரணம் -அறிய படிக்கட்டு –ஆச்சார்ய ஹிருதயம் சொல்லுமே இந்த ஏழையும் -இது சூழல் -ஆதி அந்தம் காண முடியாதே –
-/7-படிகள் – நிரதிசய ஆனந்தம்-ஸ்ரீ வைகுண்டம் – -அனந்த கிலேச பாஜனம்-சம்சாரம் -கடைசி படிகள்
6-ஞாதவ்ய பஞ்சக ஞான அஞ்ஞானங்கள் -அடுத்த படி -ஞானம் ஏற்பட்டால் ஸ்ரீ வைகுண்டம் -இல்லாவிட்டால் சம்சாரம் /
-அர்த்த பஞ்சக -ஞானம் வருவதற்கு என்ன வேணும் 5–இவற்றுக்கு காரணம் இரண்டில் ஒன்றினில் ஒன்றுகைகள்-அதாவது –
சத்வா சத்வங்கள் -சத்வ குணம் இருந்தால் வரும் -ரஜஸ் தமஸ் களால் அஞ்ஞானம் -ஞானான் மோக்ஷம் அன்றோ –
அதற்கு என்ன பண்ணனும் -சத்வ குணம் வளர -4–ஜென்ம ஜாயமான கால கடாக்ஷம் -பிறப்பால் -ரஜஸ் தமஸ் /ஜாயமான கால கடாக்ஷம் –
இவற்றுக்கு மூலம் -3-இரு நல்லருள் நல் வினைகள் -கர்மமும் கிருபையும் -என்றபடி –
இவற்றுக்கு அடி-2–கர்மா க்ருபா பீஜம் பொய்ந்நின்ற ஞானம் – -அவித்யா ஸுஹார்த்தங்கள்-அருள் புரிந்த –
ஏதன் நிமித்தம் 1 முன்னமே முதல் முன்னமே யான அசித் அயன அநாதி சம்பந்தங்கள் -இது தான் கீழ் படிக்கட்டு
இவை கிட்டமும் வேட்டு வேளானும் போலே ஒண் பொருள் பொருள் அல்லாத என்னாதே நானில்லாத யானும் உளனாவான் என்கிற
சாம்யம் பெறத் தின்று ஊதி அந்தமும் வாழ்வும் ஆகிற ஹானி சத்தைகளை உண்டாக்கும் –
பரமாத்மா அசித் சாம்யம் சம்பந்திப்பவர்களை சாம்யம் ஆக்குவதில் சாம்யம் / சித் அசித் இரண்டும் சொத்து -என்பதில் சாம்யம் /-சித் பரமாத்மா ஞானம் சாம்யம் /
பஞ்சாக்கினி வித்யா பிரகரணம் —ஜென்மம் -பாப்பம் புண்ணியம் -எதனால் -உதங்க பிரஸ்னம் -உத்திரம் இல்லையே -/கர்மா ஆதி அற்றது -அந்தம் உண்டு –
கிருபையால் வெட்டி விட முடியும் -/
மேக மண்டலம் -வ்ருஷடி மழையாகி -பயிர் -தானியம் / அன்னம் / புருஷன் / ரேதஸ் சோணிதம் -கர்ப்பம் -/பூர்வ க்ருத கர்மா தான் நிர்ணயிக்கும் -/
கர்மா –ஜென்ம -அசத்வ குணம் –எதிர் நீச்சல் போட்டு சத்வ குணம் வளர்க்க -புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன் அடிக்க கீழ் அமர்ந்து புகுந்தேனே –
இதை விளக்க இந்த அத்யாயம் —-25 ஸ்லோகம் விவரித்து சொல்லி –26-ஸ்லோகம்- திருவடி பற்றி போக்கி கொள் என்கிறான்

—————————————————————-

ஸ்ரீ பகவாநுவாச-
பரம் பூய ப்ரவக்ஷ்யாமி ஜ்ஞாநாநாம் ஜ்ஞாநமுத்தமம்–யஜ்ஜ்ஞாத்வா முநய ஸர்வே பராம் ஸித்திமிதோ கதா–৷৷14.1৷৷
உயர்ந்த அர்த்தம் மறுபடியும் சொல்கிறேன் – -மிக வேறு பட்ட உயர்ந்த -இதை அறிந்தே எல்லா முனிவர்களும் சம்சாரம் தாண்டி ஆத்ம பிராப்தி
மோக்ஷம் அடைந்தார்களோ அத்தை உன்னிடம் அன்பினால் சொல்கிறேன் -முனி மனன சீலர் -இது நானே சொன்னது இல்லை -சர்வே முனிகளும் –

இதம் ஜ்ஞாநமுபாஷ்ரித்ய மம ஸாதர்ம்யமாகதா–ஸர்கேபி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச–৷৷14.2৷৷
முக்கிய ஸ்லோகம் – இந்த ஞானம் மூலம் -ஸ்ருஷ்ட்டி காலத்திலும் பிறப்பது இல்லை -பிரளய காலத்தில் அழிவதும் இல்லை-
முக்தன் ஆகிறான் -கிடைக்கும் பயனை சொல்லிய பின்பு உபாயம் சொல்லுவான் -ஐக்கியம் மோக்ஷம் இல்லை –
அபஹத பாப்மா –பாபங்கள் தீண்டாமல் விஜர–சத்யகாமம் ஸத்யஸங்கல்பம் அஷ்ட குணங்களில் சாம்யம் -அப்பும் அப்பும் அப்பும் உப்பும் -வாதம் –

மம யோநிர்மஹத்ப்ரஹ்ம தஸ்மிந் கர்பம் ததாம்யஹம்–ஸம் பவ ஸர்வபூதாநாம் ததோ பவதி பாரத–৷৷14.3৷৷
பிரகிருதி ஆத்ம சம்பந்தம் -புருஷ -ஜீவாத்மா –நைமித்திக ஸ்ருஷ்ட்டி இதில் -என்னுடைய மூல பிரகிருதி -மம-சொல்லிக் கொள்வதில் பெருமை இவனுக்கு
-இது மிக பெரியது -ஏ பாவம் பரமே -ஆழ்வார் இவனை-யானை மண்டபத்தில் தேடி கண்டு பிடிப்பது போலே -உலகம் ஏத்தும் தென் ஆனை இத்யாதி
ஜீவ சமஷ்டியை கர்ப்பமாக புகுத்துகிறேன் -ஆத்மாக்கள் சேர்ந்து -சமஷ்டி/ கர்ப்பமாக -சப்தம் -கர்ப்பம் கர்ப்ப பையா -சிசுவா -/
கர்ப்ப பைக்குள் சிசு இருந்தால் தானே -இணை பிரியாத –சப்தம் இங்கும் உபயோகம் -சரீரமா ஆத்மாவா என்று மயங்கும் படி அன்றோ ஸூ சகம் -/
கர்ப்பம் -ஜன்மா கொடுத்து கர்மா தொலைக்க -அதே போலே இங்கும் -/
ததா-அதனாலே -எல்லா ஜீவா ராசிகள் பிறப்பும் -நான்முகன் தொடக்கி எறும்பு வரை

ஸர்வயோநிஷு கௌந்தேய மூர்தய ஸம்பவந்தி யா–தாஸாம் ப்ரஹ்ம மஹத்யோநிரஹம் பீஜப்ரத பிதா–৷৷14.4৷৷
தன்னை தந்தை -பீஜப்ரத பிதா— சொல்லிக் கொள்கிறான் -அவனை பிரார்த்தித்து தானே வலி வர வேண்டும்
சரீரம் உடன் பலா யோனிகளில் -அவை அத்தனைக்கும் மஹத் மூல பிரகிருதி கர்ப்பம் தரிக்கும் -நான் பிதா

ஸத்த்வம் ரஜஸ்தம இதி குணா ப்ரகரிதிஸம் பவா–நிபத்நந்தி மஹாபாஹோ தேஹே தேஹிநமவ்யயம்–৷৷14.5৷৷
முக்குணங்கள் கட்டுப்படுத்துகின்றன -நேரே விஷயம் -அவதாரிகை மிக பெரியது -பிரகிருதி உடன் விட்டு பிரியாத -இவையும் சப்தாதி குணங்களும்
பிரகிருதி உடன் சேர்ந்தே தானே இருக்கும்
மண் கந்தவாதி பிருத்வி / நெருப்பு ரூபம் / தண்ணீர் ரசம் /வாதம் கபம் பித்தம் சமமாக இருந்தால் ஆரோக்யம் -ஆயுர் வேதம் சமமாக ஆக்கவே மருந்து
கபம் முதலில் இளைமையில் / நடுவில் பித்தம் தலை சுத்தும் / அப்புறம் வாதம் முட்டு வலிகள் போல்வன ./
முக்குணங்கள் சமம் -பிரளயம் -தேகத்தில் தேஹினாம் ஆத்மாவை இயற்கையில் அழிவற்றவன் -நன்றாக கட்டுப் படுத்தி வைக்கும்

தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத்ப்ரகாஷகமநாமயம்–ஸுகஸங்கேந பத்நாதி ஜ்ஞாநஸங்கேந சாநக–৷৷14.6৷৷
அநக -குற்றம் அற்ற -நிர்மலம் குற்றம் அற்ற -ஞானம் ஆனந்தம் தடை பண்ணாமல் -சத்வ குணம் அப்படி –ரோகம் அற்ற வாழ்வும் உண்மையான அறிவை
கொடுக்கும் சத்வ குணம் -யதார்த்த ஞானம் –சத்வ குணம் வளர்த்தாலும் பந்தம் -முக்குணங்களும் கட்டுப்படுத்தும் -முதல் படி சத்வம் வளர்ப்பது
-சுகம் கொடுக்கும் -ஆசை ஏற்படுத்தி கட்டுப்படுத்தும் -ஞானம் கொடுத்து கட்டுப் படுத்தும் –செயல் பாட்டில் மூட்டும் -பொன் விலங்கு போலே –
லௌகிக கார்யம் பண்ண வைக்கும் –

ரஜோ ராகாத்மகம் வித்தி தரிஷ்ணாஸங்கஸமுத்பவம்–தந்நிபத்நாதி கௌந்தேய கர்மஸங்கேந தேஹிநம்–৷৷14.7৷৷
ரஜோ குணம் -காமம் தூண்டு வித்து -விஷயாந்தர ஆசைகளை – சங்கம் -பத்னி புத்ராதிகள் இடம் ஆசை / கட்டுப்படுத்தும் –
ஆசைகளை நிறைவேற்ற செயல்பாட்டில் மூட்டும்

தமஸ்த்வஜ்ஞாநஜம் வித்தி மோஹநம் ஸர்வதேஹிநாம்–ப்ரமாதாலஸ்யநித்ராபிஸ்தந்நிபத்நாதி பாரத–৷৷14.8৷৷
தமஸ் -பிரமாதம் கவனக் குறைவு -கவனம் இன்மை /ஆலஸ்யம் சோம்பல்/ நித்திரை தூக்கம்/-மூன்றும் கொடுக்கும் —
அஞ்ஞானம் -விபரீத ஞானம் -தர்மத்துக்கு புறம்பாக மோஹிக்க வைக்கும் -அறிவு ஆசை மயக்கம் -சத்யம் -ரஜஸ் தமஸ் -மூன்றும்

ஸத்த்வம் ஸுகே ஸஞ்ஜயதி ரஜ கர்மணி பாரத–ஜ்ஞாநமாவரித்ய து தம ப்ரமாதே ஸஞ்ஜயத்யுத–৷৷14.9৷৷
சத்வம் சுகம் தோற்றுவிக்கும் -ரஜஸ் செயல்பாட்டில் தூண்டும் -அசாஸ்த்ர விஷயங்களில் -தூண்டும் -உள்ள படி அறிய
வேண்டிய ஞானத்தை தமோ குணம் மூடி விடும் -விதிக்கப்பட்ட கர்மாவை செய்யாமல் -நிந்தித்த கர்மங்களை செய்ய வைக்கும் –

ரஜஸ்தமஷ்சாபிபூய ஸத்த்வம் பவதி பாரத–ரஜ ஸத்த்வம் தமஷ்சைவ தம ஸத்த்வம் ரஜஸ்ததா–৷৷14.10৷৷
காலையில் சத்யம் -தேவ குணம் -பிடித்து மேலே ஏறி ஏணியை தள்ளி அவனை அடைய வேண்டும் -/
ரஜஸ் தமோ குணம் சூழ்ந்து கொண்டு சத்வ குணம் மேலோங்கி இருக்கும் –எல்லாம் புரியும் / ஆசை மிக்கு இருந்தால் -ரஜஸ் /
தூக்கம் வந்தால் தமோ / நமக்கே தெரியுமே / மூன்றும் மூன்று சமயங்களில் ஓங்கி இருக்கும்

ஸர்வத்வாரேஷு தேஹேஸ்மிந்ப்ரகாஷ உபஜாயதே–ஜ்ஞாநம் யதா ததா வித்யாத்விவரித்தம் ஸத்த்வமித்யுத—৷৷14.11৷৷
சத்வ குணம் வளர்ந்து இருக்கும் -தேகத்தில் ஞான பிரசுர ஆறு த்வாரங்களிலும் -ஞான இந்திரியங்களும் மனசும் –ஞானம் ஏற்பட்டால்
சத்வ குணம் ஓங்கி இருக்கும் -குருடன் செவிடனுக்கும் சத்வ குணம் உண்டு –
வேலை செய்தால் தான் என்பது இல்லை -பிரசாதத்தால் குருடன் பார்க்கிறான் -கூரத் தாழ்வான -யார் எதை கேட்டாலும் கொடுக்கும் -காண் தகு தோள் அண்ணல் /

லோப ப்ரவரித்திராரம்ப கர்மணாமஷம ஸ்பரிஹா–ரஜஸ்யேதாநி ஜாயந்தே விவரித்தே பரதர்ஷப–৷৷14.12৷৷
ரஜஸ் –கருமி தனம் உயர்ந்து -எனக்கே என்று -/விசித்ரா தேக சம்பந்தி கரணங்கள் அவனுக்கும் அடியாருக்கு தொண்டு செய்யவே /
பயன் அற்ற செயல்களில் மூட்டும் /-இந்திரியங்களை அடக்காமல் -அசமம் / விஷயாந்தரங்களில் ஆசைகளை மூட்டும் –

அப்ரகாஷோப்ரவரித்திஷ்ச ப்ரமாதோ மோஹ ஏவ ச–தமஸ்யேதாநி ஜாயந்தே விவரித்தே குருநந்தந–৷৷14.13৷৷
இருள் மூடி –படிப்பது காலையில் மிக பயன் கொடுக்கும் -ராக்ஷஸ வேளையில் ராஷஸ புத்தி தானே வரும் /
அந்யதா ஞானம் விபரீத ஞானம் மோஹம் விளைவிக்கும் –

யதா ஸத்த்வே ப்ரவரித்தே து ப்ரலயஂ யாதி தேஹபரித்–ததோத்தமவிதாஂ லோகாநமலாந்ப்ரதிபத்யதே৷৷14.14৷৷
சத்யம் வளர்ந்த தசையில் -பிராணன் போனால் சத்ய குண நிஷ்டர்கள் இடம் மீண்டும் பிறந்து -உயர்கிறான் –
-உத்தம வித்துக்கள் –ஆத்ம ஞானம் படித்த சமூகம் –

ரஜஸி ப்ரலயம் கத்வா கர்மஸங்கிஷு ஜாயதே–ததா ப்ரலீநஸ்தமஸி மூடயோநிஷு ஜாயதே–৷৷14.15৷৷
ரஜஸ் -கர்மங்களிலே மூட்டும் -அங்கே சேர்கிறான் -/ தமஸ் -ஸ்தாவரங்கள் யோனியில் -சங்கமாக ஞானம் அற்ற ஜென்மம் –

கர்மண ஸுகரிதஸ்யாஹு ஸாத்த்விகம் நிர்மலம் பலம்—ரஜஸஸ்து பலம் துக்கமஜ்ஞாநம் தமஸ பலம்–৷৷14.16৷৷
தமஸ் -அஞ்ஞானம் வளர்த்து கொள்கிறான்

ஸத்த்வாத்ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப ஏவ ச–ப்ரமாதமோஹௌ தமஸோ பவதோஜ்ஞாநமேவ ச—৷৷14.17৷৷
சத்வம் -ஆத்ம சாஷாத்காரம் – பலன்களில் ஆசை மூட்டும் ரஜஸ் / கவண் இன்மை விபரீத ஞானம் அஞ்ஞானம் தூண்டுவிக்கும் தமஸ்

ஊர்த்வம் கச்சந்தி ஸத்த்வஸ்தா மத்யே திஷ்டந்தி ராஜஸா–ஜகந்யகுணவரித்திஸ்தா அதோ கச்சந்தி தாமஸா–৷৷14.18৷৷
சத்வ குண நிஷ்டர் மேல் லோகம் -ரஜஸ் நடுவில் உழன்று -தமஸ் குண நிஷுடன் கீழே நரகில்

நாந்யம் குணேப்ய கர்தாரம் யதா த்ரஷ்டாநுபஷ்யதி–குணேப்யஷ்ச பரம் வேத்தி மத்பாவம் ஸோதிகச்சதி—৷৷14.19৷৷
முக்குணங்களில் வேறுபட்டவன் ஆத்மா –கர்மாதீனம் -என்று அறிந்து –ஆத்மாவை கர்த்தா இல்லை குணங்கள் செயல்
புரிய வைக்கின்றன -அறிந்தவன் அவன் நிலையை அடைகிறான் –

குணாநேதாநதீத்ய த்ரீந்தேஹீ தேஹஸமுத்பவாந்—ஜந்மமரித்யுஜராதுக்கைர்விமுக்தோமரிதமஷ்நுதே—৷৷14.20৷৷
முக்குணத்தினில் இரண்டை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று -இறுதியில் மூன்றையும் தாண்ட வேண்டும் –தேகம் உடன் சேர்ந்தே
உள்ள முக்குணங்களை தாண்டி ஆத்ம பிராப்தி அம்ருதம் அடைகிறான் -ஜென்மாதிகளை தாண்டுகிறான் –

அர்ஜுந உவாச
கைர்லிம் கைஸ்த்ரீந்குணாநேதாநதீதோ பவதி ப்ரபோ–கிமாசார கதம் சைதாஂஸ்த்ரீந்குணாநதிவர்ததே–৷৷14.21৷৷
அடையாளம் காட்டு இப்படி முக்குணங்களை தாண்டி இருப்பார்களே என்ன –நீயாவது ஆவாய் என்று பார்க்கிறேன் –
-லிங்கம் -உள் அடையாளங்களும் வெளி அடையாளங்களும் உடன் இருப்பான் -எப்படி தாண்டுகிறான் –

ஸ்ரீ பகவாநுவாச
ப்ரகாஷம் ச ப்ரவரித்திம் ச மோஹமேவ ச பாண்டவ–ந த்வேஷ்டி ஸம்ப்ரவரித்தாநி ந நிவரித்தாநி காங்க்ஷதி–৷৷14.22৷৷
முக்குண கார்யம் பிரகாசம் பிரவ்ருத்தி மோஹம் மூன்றையும் சொல்லி -தம் கார்யம் செய்யட்டும் -நமக்கு இவற்றுடன் ஒட்டு இல்லை -நான் கர்த்தா இல்லை
என்ற நினைவுடன் -அநிஷ்டம்-அநிஷ்ட காரணங்கள் வந்தால் வெறுக்காமல் இஷ்டம் இஷ்ட காரணங்கள் -வந்தால் விரும்பாமல் -இருந்து -உதாசீனனாக இருப்பான்

உதாஸீநவதாஸீநோ குணைர்யோ ந விசால்யதே–குணா வர்தந்த இத்யேவ யோவதிஷ்டதி நேங்கதே–৷৷14.23৷৷
எப்படி இருப்பான் -உதாசீனனாக -பக்கத்து வீட்டில் நடப்பது போலே -இருக்கலாம் -எல்லாம் அவன் சம்பந்தம் -விகாரம் அடையாமல் –
குணங்கள் இருக்கும் அவற்றின் காரியம் செய்யும் -நான் கர்த்தா இல்லை என்று இருப்பானே

ஸம துக்க ஸுக ஸ்வஸ்த ஸமலோஷ்டாஷ்மகாஞ்சந–துல்யப்ரியாப்ரியோ தீரஸ்துல்யநிந்தாத்மஸம் ஸ்துதி–৷৷14.24৷৷
கீழே உள் அடையாளம் -சுகம் துக்கம் சமம் –ஆத்மாவில் ஈடுபாட்டுடன் இருப்பான் இதுவே அடிப்படை -மண் கட்டி கல் பொன் அனைத்திலும்
துல்ய பிரிய அப்ரியமாக இருப்பான் -இவற்றை விட ஆத்மா உயர்ந்தது என்ற உண்மை அறிவு வந்தால் இது நடக்கும் -இது முதல் படி -அப்புறம் பரமாத்மா நோக்கி –
இனியது இனிமை இல்லாதது இரண்டிலும் துல்யமாக -தீர வரை வெளி அடையாளம் -வைதாலும் ஸ்தோத்ரம் பண்ணினாலும் சமம்

மாநாபமாநயோஸ்துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ–ஸர்வாரம்பபரித்யாகீ குணாதீத ஸ உச்யதே৷৷14.25৷৷
மானம் அவமானம் -விரோதி மித்ரன் சமம் -பிரகலாதன் -எங்கு பார்த்தாலும் அவனே -தேக கார்யம் செய்யாமல் ஆத்ம கார்யம் மட்டுமே
-ஆஸ்ரம தர்மங்களை விடாமல் -இப்படி முக்குணம் தாண்டி

மாம் ச யோவ்யபிசாரேண பக்தயோகேந ஸேவதே–ஸ குணாந்ஸமதீத்யைதாந் ப்ரஹ்மபூயாய கல்பதே–৷৷14.26৷৷
அசக்தனுக்கு -மாம் -பரம காருணிக்கம் உனக்கு நன்மை செய்ய காத்து -அனன்யா பக்தி யோகம் -பிரயோஜனாந்த சம்பந்தம் இல்லாமல்
-சேவை பஜனம் பண்ணி முக்குணங்களை எளிதில் தாண்டுகிறான் –

ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹமமரிதஸ்யாவ்யயஸ்ய ச–ஷாஷ்வதஸ்ய ச தர்மஸ்ய ஸுகஸ்யைகாந்திகஸ்ய ச—৷৷14.27৷৷
கதி த்ரயம் -மூன்றுக்கும் அவனே -/ அம்ருதம் மரணம் அற்ற அழிவற்ற ஆத்ம பிராப்திக்கு கைவல்யார்த்திக்கு நானே உபாயம் /
சாஸ்வத பக்தி செய்து ஐஸ்வர்யம் கேட்டாலும் -என்னையே கேட்டாலும் நானே உபாயம் /

—————————————————-

கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -13—-

June 6, 2017

கீதா ஸூ கீதா கர்தவ்ய கிம் அந்யகி சாஸ்த்ர சங்க்ரஹி –யா ஸ்வயம் பத்ம நாபஸ்ய முக பத்மத் வினிஸ்ரயா —
ஸ்ரீ கீதை இனிமை -ஸ்ரீ கீதாச்சார்யன் தானே சோதி வாய் திறந்து அருளிச் செய்தது -இத்தை அறிந்தால் வேறே சாஸ்திரம் அறிவு வேண்டாமே –

பிரதான புருஷ வ்யக்த சர்வேஸ்வர விவேச நம்
கர்ம தீர் பக்திரித்யாதி பூர்வ சேஷோஅந்தி மோதித –4-

பிரதான புருஷ வ்யக்த சர்வேஸ்வர விவேச நம் -மூல பிரகிருதி ஜீவன் -பிரக்ருதியி இருந்து உண்டாகும் மஹான் போன்றவை -சர்வேஸ்வரன் -பற்றியும் –
கர்ம தீர் பக்திரித்யாதி -பூர்வ சேஷோஅந்தி மோதித –கர்ம ஞான பக்தி யோகங்களில் எஞ்சி உள்ளவற்றையும்
முதல் மூன்றால் -தத்வ ஞானம் விசாரம் / அடுத்த மூன்றால் அனுஷ்டானம் பண்ணும் முறைகள் –
சொல்லி முடித்ததும் பெரிய சோகம் -அர்ஜுனனுக்கு -ஆராய்ந்து பார் -சரியானதை பண்ணு பொறுப்பை தலையில் போட்டான் –
கீழே ஒன்றும் தெரிதா சோகம் -இங்கு இவன் பெருமையை அறிந்த பின்பு வந்த சோகம் -சரம ஸ்லோகம் சொல்லி -சோக நிவ்ருத்தி

தேஹ ஸ்வரூபம் ஆத்மாப்தி ஹேது ஆத்மவிசோதநம்
பந்த ஹேதுர் விவேகஸ்ஸ த்ரயோதச உதீர்யதே –17-

1-தேஹ ஸ்வரூபம் -தேகத்தின் இயற்க்கைத் தன்மை
2-ஆத்மாப்தி ஹேது -ஆத்மா அடையும் உபாயம் -20–ஆத்ம குணங்கள் விளக்கி –
3-ஆத்மவிசோதநம் -ஆத்ம விசாரம் -ஆராய்ச்சி
4-பந்த ஹேதுர் -ஆத்ம பந்த காரணம்
5-விவேகஸ்ஸ -பகுத்து அறிதல் –

——————————————

அர்ஜுந உவாச-
ப்ரகரிதிம் புருஷம் சைவ க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞமேவ ச–ஏதத்வேதிதுமிச்சாமி ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச கேஷவ—৷৷13.1৷৷

ஸ்ரீ பகவாநுவாச
இதம் ஷரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யபிதீயதே–ஏதத்யோ வேத்தி தம் ப்ராஹு க்ஷேத்ரஜ்ஞ இதி தத்வித—-৷৷13.2৷৷
இதம் -சுட்டி காணும் பொருள் -வஸ்து நிர்தேசம் -ஆத்மாவை பார்த்து இதம் சொல்ல முடியாதே -இதுவே வாசி –கண்ணால் பார்க்கும் பொருள்கள் அழியும்
-அழியாத ஆத்மா நித்யம் குந்தி புத்ரன் -ப்ருதா பிள்ளை பார்த்தா -க்ஷேத்ரம் -விளை நிலம் சரீரம் என்று சொல்லப் படுகிறது
-தான் சொன்னேன் என்பதை விட- உபநிஷத் வேதம் ரிஷிகள் -சொல்வதை உயர்த்தி சொல்வான் –
பயிர் என்ன -கேள்வி வருமே -நல்ல குணங்களை வளர்க்க கொடுத்தேன் -நாமோ சரீரம் போகும் படி -அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழியில் உழல்வேன் –
போகத்துக்கு விளைச்சல் –இத்தை யார் க்ஷேத்ரம் என்று அறிந்து கொள்பவன் -ஷேத்திரஞ்ஞன்-ஆத்மாவுக்கு -பெயர்-உழவன் என்றபடி –
சரீரமே தான் இல்லை -தன்னுடைய சரீரம் என்று உணர வேண்டுமே -சாருவாக மதம் -வாய் பந்தல் போலே பேசி-ஜாபாலி வசனம் –
அநஹம் -அஹம் என்று மயங்குவது தேஹாத்ம பிரமம் -லோகாயத மதம் கண்டதே காட்சி கொண்டதே கோலம் –
நீ பார்க்காதது எல்லாம் பொய்யாகாதே-ஆத்ம தத்வம் வேறு தான் சரீரம் வேறு தான் -பகுத்து அறிவு -தேஹம் ஆத்மா பகுத்து அறிவதே இது –
ஆத்ம ஷேமத்துக்கு என்ன செய்ய வேன்டும் -என்ற எண்ணம் வர வேண்டுமே -வல்லப தேவன் -பெரியாழ்வார் பரத்வ நிர்ணயம் –
ஸூஷ்மமான வஸ்து தானே முக்கியமாக இருக்கும் –மூடர்கள் அறியாமல் இழக்கிறார்கள் -ஞான கண் தியானம் மூலமே அறியலாம் –
நெஞ்சமே நீள் நகராக இருக்கும் என் தஞ்சனே -அவகாசம் பார்த்து -உள்ளுவார் உள்ளத்து உடன் இருந்து –

க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்தி ஸர்வக்ஷேத்ரேஷு பாரத–க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோர்ஜ்ஞாநம் யத்தஜ்ஜ்ஞாநம் மதம் மம–৷৷13.3৷৷
என்னுடைய மதம் -இதுவே ஞானம் -ஷேத்ரஞ்ஞானாகவும் என்னை அறிந்து கொள் -உம்மை -என்றது சரீரமும் அவன் உடைமை -யானும் நீ என் உடைமையும் நீ
-ச அபி மாம் வித்தி –தத்வ த்ரய சம்ப்ரதாயம் -விசிஷ்ட ப்ரஹ்மம் -விசிஷ்டா த்த்வைதம் –விசிஷ்டா அத்வைதம் -கூடி உள்ள ப்ரஹ்மம் ஒன்றே –
சித்துடனும் அசித்துடனும் கூடிய ப்ரஹ்மம் ஒன்றே இரண்டாவது இல்லை -இரண்டும் இவன் சொத்து –நிலமாகவும் உள்ளவனாகவும் என்னை தெரிந்து கொள்
-பரம சேதனன் -நிலத்துக்கு ஒன்றாக படிக்கலாமா -சரீரம் உடன் ஜீவாத்மா கூடி இருக்க சரீரத்தை சொல்வது ஆத்மா அளவும் போகுமே
-சரீரத்துக்கு பெயர் தனது என்று தெரியாது -சரீரம் உடையவன் என்று ஆத்மா அறிகிறான் -அடை பற்ற தன்மை பத்தாத்மா -நீங்கி முக்தாத்மா
-செயற்கை – வந்தேறி கழிந்து ஸ்வரூப ஆவிர்பாவம் -அப்ருதக் சித்தி –தனித்து இல்லாமை -கூடியே இருக்கும் –
சரீராத்மா பாவம் -இல்லத்துக்கு அல்லதும் அவன் உரு – ஐ ததாத்மம் இதம் சர்வம் -/இதம் சர்வம் -இங்கும் சுட்டிக் காண்பிக்கிறான்

தத்க்ஷேத்ரம் யச்ச யாதரிக் ச யத்விகாரி யதஷ்ச யத்–ஸ ச யோ யத்ப்ரபாவஷ்ச தத்ஸமாஸேந மே ஷ்ரரிணு–৷৷13.4৷৷
க்ஷேத்ரம் பற்றியும் -எத்தனால் செய்யப்பட்டதோ எவற்றுக்கு இருப்பிடமோ ஏதுவாக பரிணாமம் -என்ன பிரயோஜனம் -ஆத்மா சிறப்புக்களையும் சொல்கிறேன் கேள் –

றஷிபிர்பஹுதா கீதம் சந்தோபிர்விவிதை பரிதக்–ப்ரஹ்மஸூத்ரபதைஷ்சைவ ஹேதுமத்பிர்விநிஷ்சதை—-৷৷13.5৷৷
கற்பனை இல்லை -ரிஷிகள் முன்பே சொல்லி -வேத வேதாந்தங்கள் -ப்ரஹ்ம ஸூ த்ரம் -யுக்தி போன்றவற்றால் பகுத்து சொல்லப் பட்டன –

மஹாபூதாந்யஹங்காரோ புத்திரவ்யக்தமேவ ச–இந்த்ரியாணி தஷைகம் ச பஞ்ச சேந்த்ரியகோசரா–৷৷13.6৷৷
எத்தால் -செய்யப்பட்டது -பிரகிருதி மஹான் அஹங்காரம் -சாத்விக/ ராஜஸ /தாமச -பஞ்ச பூதங்களும் தன்மாத்திரைகளும் -தாமசம் இருந்து –
பூதாதி -இந்திரியங்கள் கர்ம ஞான மனஸ் -தன்மாத்திரைகள் –சப்தாதிகள் ஸாத்வீகத்தில் இருந்து / பொங்கு ஐம் புலனும் இத்யாதி –
புத்தி என்றது மஹான் -அவ்யக்தம் -மூல பிரகிருதி என்றவாறு /தஸ்ய ஏகஞ்ச மனஸ் உயர்ந்தது என்பதால் –

இச்சா த்வேஷ ஸுகம் துக்கம் ஸங்காதஷ்சேதநாதரிதி–ஏதத்க்ஷேத்ரம் ஸமாஸேந ஸவிகாரமுதாஹரிதம்—৷৷13.7৷৷
இவை சேர்ந்ததால் படும் பாட்டை -விருப்பம் த்வேஷ சுகம் துக்கம் -பூதங்கள் கூட்டரவால் -அனுபவிக்க -விகரித்து கொண்டே இருக்கும் -ஆத்மா மாறாதே –
சரீரம் கலப்படம் -என்பதால் பரிணாமம் -ஆகும் -அனுபவம் ஆத்மாவுக்கு தானே -சரீரத்துக்கு சொல்லுவான் என் -ஆத்மா இருந்தால் தானே
இவை அனுபவம் -இயற்கையில் ஆத்மாவுக்கு இல்லை -சரீரம் சம்பந்தம் இருப்பதால் தானே -அதனால் சொல்லலாமே –
தர்ம பூத ஞானத்தின் காரணம் தான் இவை –

அமாநித்வமதம்பித்வமஹிம் ஸா க்ஷாந்திரார்ஜவம்–ஆசார்யோபாஸநம் ஷௌசம் ஸ்தைர்யமாத்மவிநிக்ரஹ–৷৷13.8৷৷
மேல் -ஐந்து ஸ்லோகங்களால் -20-குணங்கள் -இதில் -9-/–
-1-அமானித்வம் மரியாதை உடன் பெரியோர் இடம் -மானம் உடையவன் மாநி-கிம் கரோ -பெருமாள் விசுவாமித்திரர் –வயோ வ்ருத்தர் திருவடிகளில் தலையை வைத்து /
-2-அதம்பித்தவம் தம்பம் இல்லாமை -எல்லாம் அவன் சொத்து தானே
–3-அஹிம்சா -பூதங்கள் மேல் வாக்காலும் மனசாலும் கரணங்களாலும்-பிள்ளை பிள்ளை ஆழ்வான் -கூரத் தாழ்வான் சம்வாதம் –
மானஸ பாகவத அபசாரம்-யாருக்கும் தெரியாமல் -ராமானுஜர் இடம் சமர்ப்பித்தால் அடையலாம் /-
4- ஷாந்தி-கலங்காமல் பொறுத்து -5-ஆர்ஜவம்-முக்கரணங்கள் நேர்மை /-6-ஆச்சார்ய உபாசனம்-கைங்கர்யம் /
-7-க்ஷவ்சம் -சுத்தி முக்கரணங்களாலும்-வர்ணாசிரமம் விடாமல் / -8-ஸ்தைர்யம்–கலங்காமல் -உறுதியாக -அசஞ்சலமான பக்தி வேண்டுமே
-9-ஆத்ம விநிக்ரஹம் -மனஸ் அடக்கம் -/

இந்த்ரியார்தேஷு வைராக்யமநஹங்கார ஏவ ச—ஜந்மமரித்யுஜராவ்யாதிதுகதோஷாநுதர்ஷநம்–৷৷13.9৷৷
10–இந்திரியங்கள் ஓடுவதை இழுத்து வைராக்யம் வளர்த்து -சப்தாதிகளில் வைராக்யம்–11 -அஹம் அல்லாத தேகத்தை அஹமாக
நினைக்காமல் –12/ஜன்மா இறப்பு மூப்பு வியாதி துக்க தோஷ தர்சனம்

அஸக்தரநபிஷ்வங்க புத்ரதாரகரிஹாதிஷு–நித்யம் ச ஸமசித்தத்வமிஷ்டாநிஷ்டோபபத்திஷு–৷৷13.10৷৷
13–அசக்தி -பற்று அற்ற தன்மை -ஆத்ம விஷயத்தை தவிர வேறு ஒன்றிலும் ஆசை இல்லாமை /14–புத்ரன் தாரம் வீடு இவற்றில் மிகுந்த ஆசை வைக்காமல்
-இவை அநித்தியம் -நித்தியமான உறவு -கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தாய் தந்தை அவனே /ஆத்மசிந்தனை பண்ணும் உறவினர்கள் இடமே பற்று வைத்து /
கர்ணன் விபீஷணன் வாசி உண்டே – /15–நித்தியமாக சம சித்தம் இஷ்டங்கள் அநிஷ்டங்கள் -ஹர்ஷ கோபம் இல்லாமல் /

மயி சாநந்யயோகேந பக்தரவ்யபிசாரிணீ–விவிக்ததேஷஸேவித்வமரதிர்ஜநஸம் ஸதி–৷৷13.11৷৷
16–அவன் இடமே அநந்ய அசையாத பக்தி செலுத்தி /17–தனிமையிலே இருக்கும் ஆசை கொண்டு சிந்தனைக்கு ஏற்ற /
18–ஜனக் கூட்டங்கள் கண்டாலே ஓடி -பாம்பை கண்டால் போலே /

அத்யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்த்வஜ்ஞாநார்ததர்ஷநம்–ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநம் யததோந்யதா–৷৷13.12৷৷
–19-ஆத்ம சிந்தனம் ஈடுபாடு /20— தத்வ ஞானம் தியானம் சிந்தனை -இவையே ஞானம்-மற்றவை எல்லாம் அஞ்ஞானங்கள்

ஜ்ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வாமரிதமஷ்நுதே–அநாதிமத்பரம் ப்ரஹ்ம ந ஸத்தந்நாஸதுச்யதே–৷৷13.13৷
இது முதல் ஆத்ம ஸ்வரூபம் -விசாரம் -யத்தை அறிந்து கொண்டு சம்சாரம் தொலைத்து -அம்ருதம் -ஆத்ம பிராப்தி -அந்த ஞானம் உபதேசிக்கிறேன்
-ஆத்ம சாஷாத்காரம் பற்றியும் ஆத்மாவின் ஏற்றமும் -சொல்கிறேன் -அநாதி -பிறப்பு இறப்பு இல்லை
-மத் பரம் -எனக்கு அடிமை -சேஷத்வம் தானே முதலில் அறிந்து கொள்ள வேன்டும் /ப்ரஹ்மம் -பெரியது என்றபடி -ஸூஷ்மம்-இருந்தாலும் ப்ரஹ்மம் சப்தம்
-ஒரே வார்த்தை பல அர்த்தங்களில் வரும் -ஆத்மா ஆகாரம் ஸ்வரூபம் ரூபத்தால் பெரியது இல்லை -தர்ம பூத ஞானத்தால் பரந்து இருக்குமே /
ஆத்ம ஸ்வரூபம் ஞான மாயம் -ஞானத்தால் ஆனந்தத்தால் பண்ணப் பட்டு -இல்லாத வஸ்து தானே பண்ணப்படும்-அதனால் இப்படி சொல்ல கூடாது
– நித்யம் -ஞானமயம் ஆனந்தமயம் -என்றவாறு -ஞானமயமான ஆத்மா ஞானம் உடையவனாயும் இருக்கும் -இதுவே தர்ம பூத ஞானம் -என்னுடைய ஞானம் என்றபடி -/
நான் என்று அறிவது தர்மிக் ஞானம் தூங்கினாலும் நன்றாக தூங்கினேன் என்பது போலே -/ஞான குணகத்வம் ஞான மயம் இரண்டும் உண்டே /
உடம்பு எங்கு வலித்தாலும் உணர்வது தர்ம பூத ஞானத்தால்
கார்ய தசையில் சத் இருக்கிறது என்றும் சொல்ல முடியாது /காரண தசையில் இல்லை என்றும் சொல்ல முடியாதே -சத் அசத்-என்றும் சொல்ல முடியாது

ஸர்வத பாணிபாதம் தத்ஸர்வதோக்ஷிஷிரோமுகம்–ஸர்வத ஷ்ருதிமல்லோகே ஸர்வமாவரித்ய திஷ்டதி–৷৷13.14৷৷
ஜகத் உள்ள பதார்த்தங்கள் எங்கும் ஞானத்தால் வியாபித்து இருக்கிறான் -தர்ம பூத ஞானம் -எங்கும் பரவும் -சக்தி வளர்க்க உடம்பை விட்டு
வெளியிலும் பரவும் -ஞானம் வளர்த்தால் முக்த ஆத்மா ஆகிறான்
கையும் காலும் எத்தை செய்யுமோ அவை இல்லாமல் பண்ணுகிறான் -கண்ணும் தலையும் முகமும் லோகத்தில் பண்ணுவதையும் இவை இல்லாமலே செய்கிறான்
-சங்கல்ப சக்தியால் செய்வான் -இந்திரிய வஸ்யத்தை பத்தாத்மாவுக்கு தானே –
இத்தனை அடியாரானார்க்கு -சிறிய அளவு பக்திக்கு இரங்கும் அரங்கன் பித்தன் -அன்றோ -பித்தனை பெற்றும் அன்றோ பிறவியில் பிணங்குமாறே-
லோகத்தில் காது கொண்ட கார்யம் -எங்கும் நீக்கமற நிறைந்து உள்ள முக்தாத்ம ஸ்வரூபம் விளக்குகிறான்

ஸர்வேந்த்ரியகுணாபாஸம் ஸர்வேந்த்ரியவிவர்ஜிதம்–அஸக்தம் ஸர்வபரிச்சைவ நிர்குணம் குணபோக்தரி ச–৷৷13.15৷৷
எல்லா இந்த்ரியங்களாலும் அறிய வேண்டியதை அறிந்து அனுபவிக்கிறான் –பத்த தசையில் இது –துரந்து விலகி விட்டான்-ஸர்வேந்த்ரியவிவர்ஜிதம்– -முக்த தசையில் –
சங்கல்ப சக்தி ப்ரஹ்மம் போலே முக்தாத்மாவுக்கும் உண்டே -ஜகத் வியாபாரம் வர்ஜம் –அடிப்படை ஞானம் சேஷ பூதன் இருக்கும் பொழுது செய்ய மாட்டானே –
அசக்தம் -தேவாதி சரீரங்களில் சேராமல் இருப்பான்-முக்த தசையில் /எல்லா சரீரங்களையும் தானே தங்குகிறான் பக்த தசையில்
-நிர்குணம் -முக்த தசை / குணம் தாக்குதல் பத்த தசையில் -வேறுபாட்டை அறிந்து அதை அடைய ஆசை வருமே –
ச ஏகதா பார்வதி –சஹஸ்ரதா பவதி —காம ரூப்யன் சஞ்சரன் -ஒளியில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை செய்வான் –

பஹிரந்தஷ்ச பூதாநாமசரம் சரமேவ ச–ஸூக்ஷ்மத்வாத்ததவிஜ்ஞேயம் தூரஸ்தம் சாந்திகே ச தத்–৷৷13.16৷৷
வெளியில் உள்ளே பூதங்களுக்கு -வியாபித்து -அசையாதவனாயும் -முக்த -தசை / அசைபவன் -பத்த தசை -ஓடி ஆடி வாழ வேன்டும் -முக்த தசையில் வேண்டாமே
/ஸூஷ்மாக இருப்பதால் பகுத்து அறிவது துர்லபம் -/ வெகு தூரத்தில் -கிட்டத்தில் -அணியன் சேயன் போலே / அகலில் அகலும் -தள்ளிப் போனால் தள்ளி போவான் -/
-20-குணங்களை அப்யசித்தால் கிட்டே / இல்லை என்றால் தூரஸ்தன் -/நான் -தள்ளி இருந்தால் என்று
உணர உணர குணங்களை வளர்ப்போம் –நீ நீயாக இருக்க அப்பியாசம் வேன்டும்

அவிபக்தம் ச பூதேஷு விபக்தமிவ ச ஸ்திதம்–பூதபர்தரி ச தஜ்ஜ்ஞேயம் க்ரஸிஷ்ணு ப்ரபவிஷ்ணு ச–৷৷13.17৷৷
பண்டிதர்கள் – நிஷ்க்ருஷ்ட வேஷம் பார்த்து சமமாக -ஞான மயன் ஆனந்த மயன் சேஷ பூதன்-என்றே பார்த்தால் சமம் தானே —
-ரகு குணன் -ஜட பரதர் -சரித்திரம் பல்லக்கு -தூக்கி /
ஆத்மாவுக்கு தண்டனை கொடுக்க முடியாதே -சரீரத்துக்கு தானே -ஆத்மா உன்னை தூக்க வில்லையே -/ நீர் யார் -எங்கு இருந்து வந்தீர் எதற்க்காக வந்தீர்
-கர்மா தொலைக்க தானே நீயும் நானும் -கிருபா பலன் கொண்டே கர்மம் தொலைக்க முடியும் — அருள் என்னும் ஒள் வாள் வெருவியே தீர்க்க முடியும் -/
வேறுபாடு -சரீர விசிஷ்டமாக இருக்கும் பொழுது -ஞான சஷூஸால் பார்த்தால் தானே ஒன்றாக தெரியும்
பூதங்கள் தாங்கி -அன்னம் புஜித்து -ரேதஸ் கர்ப்பம் இவற்றுக்கு காரணம் போலே தோன்றும் -சரீர சம்பந்தம் தானே -இதற்கு காரணம் –

ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதிஸ்தமஸ பரமுச்யதே–ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஜ்ஞாநகம்யம் ஹரிதி ஸர்வஸ்ய விஷ்டிதம்–৷৷13.18৷৷
எல்லாருடைய ஹிருதயத்தில் நிலை நின்று -தர்ம பூத ஞானம் பிரகிருதி இருளை விட மேம்பட்டது -ஜோதிஷ பதார்த்தங்கள் எல்லாம் இருள் போலே இதன் ஏற்றம் பார்த்தால்
-விளக்கு எரிவதை நம் ஞானத்தால் அறிகிறோம் -அதே போலே ஸூரியன் ஒளியையும் நம் ஞானத்தால் தானே அறிகிறோம் /
ஞானம் என்று அறிந்து ஜடத்தை விட வேறுபட்டவன் -சரீரம் வேறு ஆத்மா வேறு -/ சரீர சம்பந்தத்தால் தானே இந்த பாடு
-மீண்டும் மீண்டும் சொல்லி -/-20-சாதனங்களால் அறிய படுகிறான் –

இதி க்ஷேத்ரம் ததா ஜ்ஞாநம் ஜ்ஞேயம் சோக்தம் ஸமாஸத–மத்பக்த ஏதத்விஜ்ஞாய மத்பாவாயோபபத்யதே–৷৷13.19৷৷
இது காறும் சொன்ன ஸ்லோகங்களால் -சொன்னதை தொகுத்து -பலனையும் அருளிச் செய்கிறான் -சரீரம் பற்றியும் -ஆத்மா அடைய -20-குணங்களை பற்றியும்
-ஆத்மாவை பற்றியும் -சொல்லி மேலே என் பக்தன் இவற்றை அறிந்து என் நிலையை அடைகிறான் –சம்சாரம் ஒட்டு அற்ற தன்மை -என்றவாறு -மத் பாவம் –

ப்ரகரிதிம் புருஷம் சைவ வித்த்யநாதீ உபாவபி–விகாராம் ஷ்ச குணாம் ஷ்சைவ வித்தி ப்ரகரிதிஸம் பவாந்–৷৷13.20৷৷
நான்கு ஸ்லோகங்களால் பிரக்ருதி ஆத்மா சேர்வதை பற்றி விளக்குகிறான் -எதனால் பந்தம் எப்படி பந்தம் -விவேக ஞானம் வளர்க்க -அருளிச் செய்கிறான் –
மூல பிரகிருதி காரணமான சரீரம் -ஜீவன் -அநாதி காலமாக பந்தப் பட்டு உள்ளார்கள் என்று உணர்ந்து கொள் —
விகாரம் -சரீரத்தால் ஏற்படும் தீய குணங்கள் -நல்ல -20-குணங்கள் -பிரகிருதி சம்பந்தத்தால் என்று உணர்ந்து கொள் –

கார்யகாரணகர்தரித்வே ஹேது ப்ரகரிதிருச்யதே–புருஷ ஸுக துக்காநாம் போக்தரித்வே ஹேதுருச்யதே–৷৷13.21৷৷
சேர்க்கையால் -என்ன பயன் -/கர்த்ருத்வம் -போக்த்ருத்வம் -செயல்பாடு சக்தி -அனுபவிக்கும் சக்தி -செய்பவனும் அனுபவிப்பவனும் ஜீவாத்மா
-விதைத்தவன் வினை அறுப்பான் கார்யம் -சரீரம் -கரணங்கள் இந்திரியங்கள் மனஸ் –இவற்றின் வியாபாரம் -காரணம் பிரகிருதி
-சரீரம் -கர்த்ருத்வம் சரீரத்தின் தலையில் வைக்கிறான் -இயற்கையில் ஆத்மாவுக்கு குற்றம் இல்லையே -புருஷ ஜீவாத்மா போக்தாவாக
-சுகம் துக்கம் -கர்ம பலன் அனுபவிக்கிறான் -இப்படி பிரித்து -ஆத்மாவால் தானே செய்ய முடியாதே -சரீரம் அனுபவிக்க முடியாதே –
ஜீவாத்மாவால் அதிஷ்டான சரீரத்துக்கு கர்த்ருத்வம் -சேர்க்கையின் பயனே இது தானே -/

புருஷ ப்ரகரிதிஸ்தோ ஹி புங்க்தே ப்ரகரிதிஜாந்குணாந்–காரணம் குணஸங்கோஸ்ய ஸதஸத்யோநிஜந்மஸு–৷৷13.22৷৷
ஜீவன் சரீரத்தில் இருந்து உண்ணுகிறான் -அனுபவிக்கிறான் -பிரகிருதி சம்பந்தத்தால் பிறந்த சத்வ ரஜஸ் தமஸ் குணங்களை அனுபவிக்கிறான் –
–ஹி -ஆச்சர்யம் -இயற்கையில் இல்லையே -அனுபவிக்க தேவை இல்லாதவன் அன்றோ இப்படி படுகிறான் /
சேரக் காரணம் –ஆசையே -இதனால் பிறந்து –பீஜாங்குர நியாயம் -விதை முளை -/ துக்க சுழலை/ சத் -தேவாதி அசத் திர்யக்காதிகள்-பற்றுதல் காரணம் –
செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும் அத்தை தின்று அங்கே கிடக்கும் -இதன் -அர்த்தமே பிரக்ருதியிலே கிடக்கும் –

உபத்ரஷ்டாநுமந்தா ச பர்தா போக்தா மஹேஷ்வர–பரமாத்மேதி சாப்யுக்தோ தேஹேஸ்மிந்புருஷ பர—৷৷13.23৷৷
பார்க்கிறான் -அனுசந்திக்கிறான்- தரிக்கிறான் -அனுபவிக்கிறான் -தேக இந்திரியங்களை விட உயர்ந்து -நியமித்து –
-இப்படி வாசி இருக்கும் பொழுது உழல்கின்றார்களே

ய ஏவம் வேத்தி புருஷம் ப்ரகரிதிம் ச குணைஸஹ–ஸர்வதா வர்தமாநோபி ந ஸ பூயோபிஜாயதே–৷৷13.24৷৷
மேல் விவாக ஞானம் –பலத்தை சொல்லி அப்புறம் எப்படி -ஆசை இருக்க வேண்டுமே -உயர்ந்த பலனை நினைக்க நினைக்க வேலைக்கு வருவோம்
–34-ஸ்லோகத்தில் சொல்ல வேண்டியதை விவேகித்து -உணர்ந்தவன் -புருஷன் பிரகிருதி -குணங்களை பிரித்து அறிபவன் -சரீரத்துக்கு உள்ளே இருந்தாலும்
-மறு படியும் பிறப்பது இல்லை -பிறகு எடுக்க யோக்யதை இல்லாமல் ஆத்ம பிராப்தி அடைகிறான்
-அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர் -பற்று அற்றது -என்றால் -வாசி அறிந்து -வீடு உற்றது

த்யாநேநாத்மநி பஷ்யந்தி கேசிதாத்மாநமாத்மநா–அந்யே ஸாம் க்யேந யோகேந கர்மயோகேந சாபரே–৷৷13.25৷৷
மூன்று ஸ்லோகங்களில் யோகம் -மேலே மேலே கொஞ்சம் கீழ் நிலைகள் -இதில் அசக்தனுக்கு அது –
யோகம் கை கூடிய நிலை -முதலில் சொல்லி -இதிலே -கர்ம ஞான யோகம் அனுஷ்டானம் செய்பவன்
ஆத்ம -சப்தம் -சரீரம் மனஸ் ஜீவாத்மா மூன்று -அர்த்தங்கள்
மனசால் சரீரம் ஸ்தானம் உள்ள ஆத்மா விஷயம் அறிந்து -தியானத்தால் -ஆத்மாவை மனசு என்னும் கருவியால் பார்க்கிறான் -விவேகித்து அறிகிறான் என்றபடி
யாரோ சிலர் தான் இந்த நிலையில் இருப்பர் -அது முடியாதவர் -ஞான யோகத்தால் -இன்னும் சிலர் கர்ம யோகத்தால் அறிய பார்ப்பார்கள் –

அந்யே த்வேவமஜாநந்த ஷ்ருத்வாந்யேப்ய உபாஸதே–தேபி சாதிதரந்த்யேவ மரித்யும் ஷ்ருதிபராயணா–৷৷13.26৷৷
மூன்றாம் நிலை இன்னும் சிலர் -உபதேசம் காது கொடுத்து -கேட்டு -உபாஸிக்க பார்க்கிறார்கள் கர்ம யோகம் ஆரம்பிக்க வில்லை ஸ்ரத்தை உள்ளவர்கள்
இன்னும் சிலர் ஸ்ருதி பராயணர் -கேட்பதில் மட்டும் இச்சை கொண்டு -தே பி -இவர்களும் கூட -சம்சாரம் கடலை தாண்டுகிறான் –
இவனே தாண்டினால் மற்றவர்கள் தாண்டுவார்கள் சொல்ல வேண்டாமே -சங்கை இல்லை -மிருத்யு -சம்சாரம்

யாவத்ஸஞ்ஜாயதே கிஞ்சித்ஸத்த்வம் ஸ்தாவரஜங்கமம்–க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞஸம் யோகாத்தத்வித்தி பரதர்ஷப–৷৷13.27৷৷
விவேகிக்கும் உபாயம் -பரத குலத்தில் மிக உயர்ந்தவன் -தாழ்ந்து இருந்தால் இந்த அர்த்தங்கள் அறிய முடியாதே –ஜந்துக்கள் –
யாவத் –தாவத் -ஓன்று விடாமல் எல்லாம் -ஸ்தாவர ஜங்கமங்கள் மனுஷ்யர் தேவர்கள் – எல்லாம் -பிரகிருதி ஜீவன் சம்பந்தமே காரணம் -என்று
அறிந்து கொள் –கர்மம் வலிய கயிறு தானே கட்டுவிக்கும்

ஸமம் ஸர்வேஷு பூதேஷு திஷ்டந்தம் பரமேஷ்வரம்–விநஷ்யத்ஸ்வவிநஷ்யந்தம் ய பஷ்யதி ஸ பஷ்யதி–৷৷13.28৷৷
வித்யாசம் இரண்டுக்கும் -பகுத்து அறிய —சமம் முதல் –ஜீவாத்மா -விஷமம் சரீரம் வாசிகள் உண்டே -எல்லா பூதங்களிலும் ஆத்மா சமம் தானே
-கங்கா தீர்த்தம் தங்க வெள்ளி மண் பாத்திரம் -தன்மை மாறாதது போலே /அடுத்து -பரமேஸ்வரன் நியமிப்பவன் ஆத்மா -சரீரம் நியமிக்கப் படும்
–இயற்க்கைக்கு மாறாக சரீரம் சொல்லி ஆத்மா போவது துர்த்தசை / விநாசம் அடைவதற்குள்ளே விநாசம் அடையாமல் ஆத்மா இருக்கும் –

ஸமம் பஷ்யந்ஹி ஸர்வத்ர ஸமவஸ்திதமீஷ்வரம்–ந ஹிநஸ்த்யாத்மநாத்மாநம் ததோ யாதி பராம் கதிம்—৷৷13.29৷৷
லத்தை அருளிச் செய்கிறான் -எங்கும் சமமாக பார்ப்பவன் -எப்பொழுதும் -ஈஸ்வரனான ஆத்மா -மனசால் வெட்டி விடுவது இல்லை –
பிரிந்து அறியாமல் இருந்தால் ஆத்மாவுக்கு தீங்கு -என்றபடி

ப்ரகரித்யைவ ச கர்மாணி க்ரியமாணாநி ஸர்வஷ–ய பஷ்யதி ததாத்மாநமகர்தாரம் ஸ பஷ்யதி–৷৷13.30৷৷
கிரியைகளுக்கு இருப்பிடம் சரீரம் என்று அறிந்து கொள் -ஆத்மாவை கர்த்தா அல்லன் என்று அறிந்து உண்மை அறிவு பெற்று –

யதா பூதபரிதக்பாவமேகஸ்தமநுபஷ்யதி–தத ஏவ ச விஸ்தாரம் ப்ரஹ்ம ஸம்பத்யதே ததா–৷৷13.31৷৷
தேவாதி சரீரங்கள் -ஆத்மா சரீரம் -சேர்ந்து கர்தவ்யம் -காரணம் பிரகிருதி தானே -இயற்கையில் ஆத்மாவுக்கு இல்லை -சரீரம் பிரதான காரணம் –
பிரகிருதி விஸ்தாரத்தால் தானே பிள்ளை உறவுகள் இத்யாதி -என் பிள்ளை -ஆத்மாவுக்கு பிள்ளை இல்லை -சரீரத்தின் விஸ்தாரம் தானே

அநாதித்வாந்நிர்குணத்வாத்பரமாத்மாயமவ்யய–ஷரீரஸ்தோபி கௌந்தேய ந கரோதி ந லிப்யதே–৷৷13.32৷৷
சரீரம் சம்பந்தம் இல்லாமல் -அழிவற்ற அநாதி ஆத்மா -அனாதையாய் இருப்பதால் அழிவற்றவன் -முக்குண சம்பந்தம் இல்லை
-செயல்பாட்டுக்கு காரணம் இல்லை -தேகம் விட வேறு பட்டவன் பரமாத்மா -சப்தம் ஆத்மாவை குறிக்கும்

யதா ஸர்வகதம் ஸௌக்ஷ்ம்யாதாகாஷம் நோபலிப்யதே–ஸர்வத்ராவஸ்திதோ தேஹே ததாத்மா நோபலிப்யதே–৷৷13.33৷৷
உப்பு சாறு–கட்டை பாத்திரம் மாற்றும் என்று ஆக்ஷேபிக்க -ஆகாசத்துக்கு நாற்றம் தீண்டாது -ஸூஷ்மம்–
ஆத்மா ஆகாசம் விட ஸூஷ்மம் -தேகத்துக்கு உள்ளே இருந்தாலும் தீண்டாமல் இருக்கும் –

யதா ப்ரகாஷயத்யேக கரித்ஸ்நம் லோகமிமம் ரவி–க்ஷேத்ரம் க்ஷேத்ரீ ததா கரித்ஸ்நம் ப்ரகாஷயதி பாரத–৷৷13.34৷৷
சரீரத்துக்கு அவயவங்கள் பல -ஆத்மா அவயவம் இல்லாமல் -ஒளி கொடுக்க –ஒரே ஸூர்யன் லோகத்துக்கு பிரகாசம் தருவது போலே –

க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோரேவமந்தரம் ஜ்ஞாநசக்ஷுஷா–பூதப்ரகரிதிமோக்ஷம் ச யே விதுர்யாந்தி தே பரம்–৷৷13.35৷৷
ஞான கண்களால் -சரீரம்- ஜீவாத்மா-இவற்றின் ஸ்வரூபங்களை அறிந்து -விமுக்தனாக -20-குணங்களையும் அறிந்து முக்த ஆத்மா ஆகிறான் –

——————————————————

கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -12—-

June 6, 2017

பக்தேஸ் ஸ்ரைஷ்ட்யம் உபாயோக்தி அசக்தஸ் யாத்ம நிஷ்டதா
தத் பிரகாராஸ் த்வதி ப்ரீதி பக்தே த்வாதச உச்யதே — ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–16-

1–பக்தேஸ் ஸ்ரைஷ்ட்யம் –ஆத்ம உபாசனத்தை விட பக்தியின் பெருமை –கீழ் உள்ள கர்ம ஞான யோகத்தை விட உயர்ந்தது சொல்ல வேண்டாமே
-கைவல்யார்த்தி விட பகவல் லாபார்த்தி உடைய ஏற்றம் –
உபாயோக்தி -உபாய யுக்தி -பக்தி செய்யும் முறை -விதிகள் –
3–அசக்தஸ் யாத்ம நிஷ்டதா -அசக்தனுக்கு ஆத்ம உபாசனம் -இந்த உபாசனம் கர்ம ஞான யோகம் மூலம் சொல்லிய ஆத்ம உபாசனம்
4–தத் பிரகாராஸ்-அதன் பிரகாரங்களை விவரித்து–12-13–12-19/ -7-ஸ்லோகங்களால் –
த்வதி ப்ரீதி பக்தே த்வாதச உச்யதே –அதி ப்ரீதி பக்தி -அத்தனை ப்ரீதி கண்ணனுக்கு -கோதுகுலம் உடைய பாவாய் போலே

ஆத்ம அனுபவத்துக்கு பக்தி யோகம் வேண்டாம் -கர்ம ஞான யோகம் மட்டும் கொண்டு கைவல்ய அனுபவம் -பக்தி பண்ண சேஷ பூதன்
-பர ப்ரஹ்மம் மஹிமை தெரிந்து இருக்க வேண்டுமே —
பக்தி யோகம் அனுஷ்ட்டிக்க சக்தி இல்லை என்றால் -ஆத்ம உபாசனம் பண்ணு –கர்ம யோகம் பண்ணு சொல்ல வில்லை-
கர்ம யோகம் பண்ணி சித்த சுத்தி அடைந்து ஞான யோகம் -பண்ணி -மேலே பக்தி யோகம் –என்றவாறு -குழம்ப கூடாது –
பிரித்து பிரித்து அலகு அலகாக வியாக்யானம் உண்டு
கர்ம யோகம் வார்த்தைக்கு ஆத்ம உபாசனம் வார்த்தை –

—————————————————————–

அர்ஜுந உவாச-
ஏவம் ஸததயுக்தா யே பக்தாஸ்த்வாம் பர்யுபாஸதே.–யேசாப்யக்ஷரமவ்யக்தம் தேஷாம் கே யோகவித்தமா–৷৷12.1৷৷
யாருக்கு சீக்கிரம் -இரண்டும் சமம் என்ற எண்ணம் -அது ஸூ கந்தமான பகவத் அனுபவம் -இது சிற்றின்பம் -மேலும் இது சீக்கிரமாகவும் அடையலாம் –
உயர்ந்த பலனுக்கு உயர்ந்த முயற்சி வேண்டுமே -எண்ணில் அதையு கொடுப்பது நானே -பிடித்தத்தை கேட்டால் -சீக்கிரம் அளிப்பான் -குழந்தை போலே பதில் –
திருவடி பலத்தால் தான் மேலே வர வேன்டும் –
ஏவம் -இப்படி பக்தியால் மட்டுமே அடைய முடியும் -உன்னையே அடைய வேண்டிய பலமாக -த்வாம் -கல்யாண குணங்கள் உடைய உன்னை –
அவ்யக்தம் -இந்த்ரியங்களால் புலப்படாத ஆத்ம தத்வம் அக்ஷரம் -உபாசித்து -தேஷாம்
இவர்கள் இருவருக்குள் -யோக பலன் யார் சீக்கிரம் அடைவார்

ஸ்ரீ பகவாநுவாச-
மய்யாவேஷ்ய மநோ யே மாம் நித்யயுக்தா உபாஸதே.–ஷ்ரத்தயா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா—৷৷12.2৷৷
தே -அவர்கள் எனக்கு நல்ல யோகிகள் -பக்தி யோக நிஷ்டர்கள் -என்னிடமே மனசை வைத்து -என்னுடன் எப்பொழுதும் சேர்ந்தே
இருக்க ஸ்ரத்தை உடன் -உபாசித்து -அவர்கள் எனக்கு சிறந்த யோகிகள் –
இருவரும் அவன் இடம் வருவார்கள் பிராபகம் உபாயம் ஹேது அடைவிக்கும் வழியோ என்னில் இருவருக்கும் ஓன்று தானே
-புருஷார்த்தம் தானே மாறும் -இவன் விடை கொள்பவன் -அவனோ உண்ணும் சோறு பெருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்றபடி –
அத்ர பரத்ர சாபி நித்யம் யதீயம் சரணம் மதியம் -இங்கும் அங்கும் ஆச்சார்யர் திருவடிகளே-ஏறி வந்த ஏணியே அனுபவிக்கும் போக்யம் -தோள் மாறாமல் –

யே த்வக்ஷரமநிர்தேஷ்யமவ்யக்தம் பர்யுபாஸதே.–ஸர்வத்ரகமசிந்த்யம் ச கூடஸ்தமசலம் த்ருவம்৷৷12.3৷৷
அடுத்த இரண்டால் கைவலர்கள் உடைய கீழ்மை -அருளிச் செய்கிறான் -தோஷமும் கண்ணில் பட வேண்டுமே -தான் கொடுத்த சரீரம் சாஸ்திரம் கொண்டு
அவன் இடமே வேறே ஒன்றையோ கேட்டு விலகினால் கோபம் வரணுமே-
யே -உயர் ஒருத்தன் –சுட்டி இது என்று சொல்ல முடியாத ஆத்மா -தேக வியதிரிக்த ஆத்மா பற்றியே தானே உபாசிக்கிறான் —
அவ்யக்தம் -மனன் உணர் அவை இலன் -பொறி உணர் அவை இலன் -அக்ஷரம் -அழிவற்ற -குறித்து -உபாசித்து
ஸர்வத்ரகம் -எல்லா சரீரத்துக்குளே புகுந்து இருக்கும் ஆத்மா -மாறி மாறி பல பிறவி பிறந்து -அசிந்த்யம் -புத்தியால் தெரிந்து கொள்ள முடியாத -சிந்தனைக்கு அப்பால்
கூடஸ்தர் -பழைமை பொதுவான என்றபடி -கொல்லன் பட்டறை கீழே உள்ள கூடஸ்தம் -மாறாதே -தனக்கு விகார இல்லையே
-இங்கு பொது-எல்லா சரீரங்களிலும் ஆத்மா உண்டு என்றே அர்த்தம் -சலிக்காத -ஸ்வரூபம் மாறாதே -தேகம் தானே ஸ்வரூப விகாரங்கள் -துருவம் -நிலை நிற்குமே

ஸம் நியம்யேந்த்ரியக்ராமம் ஸர்வத்ர ஸமபுத்தய–.தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வபூதஹிதே ரதா–৷৷12.4৷৷
இப்படிப் பட்ட ஆத்மா பற்றி -உபாசனம் -இளைப்பினை இயக்கம் நீக்கி -இருந்து -பஞ்ச பிராணன் அடக்கி ஆசனத்தில் இருந்து
-பத்மாசனம் -27000-நரம்புகள் கட்டுப்பாட்டில் வருமே -தேக ஆரோக்யம் கிட்டும் –
முன் இமையை கூட்டி –மூக்கு நுனியை பார்த்து -அழைப்பில் ஐம்புலன் அடக்கி -அன்பு அவர் கண்ணே வைத்து துளக்கமில் சிந்தை செய்து
-விளக்கினை விதியில் காண்பார் -மெய்மையை காண்பிப்பார் -காண மாட்டார்களே இவ்வளவு சிரமம் பட்டாலும் –
இந்திரிய கிராமம் கூட்டம் கட்டுப்படுத்தி -சமமான புத்தி -சர்வ பூத ஹிதம் -ரதி ஆசை -ஜீவ ராசிகளின் நன்மையில் ஆசை கொண்டு -என்னையே அடைகிறார்கள் –
இங்கு என்னை போலே ஞானம் கொண்ட ஆத்மாவை அடைகிறார்கள் -தேக விநிர் முக்த ஆத்மா ஞானம் -அன்றோ –

க்லேஷோதிகதரஸ்தேஷாமவ்யக்தாஸக்தசேதஸாம்.–அவ்யக்தா ஹி கதிர்துகம் தேஹவத்பிரவாப்யதே–৷৷12.5৷৷
தேகத்துடன் அனைத்தும் செய்து இல்லாதது செய்து பழக்கம் இல்லையே -தேகத்துடன் கைங்கர்யம் செய்யலாமே பக்தி நிஷ்டர் –
மிக வருத்தம் –கிலேச -தர -ஒன்றை காட்டிலும் -பகவத் உபாசனத்தை காட்டிலும் –அவ்யக்த ஆசக்த நிலை நின்ற மனசை படைத்தவர்களுக்கு
ஆத்மாவே கதி என்று இருப்பவனுக்கு -துக்கம் -நிறைய -துக்கத்துடன் ஆத்மா சாஷாத்காரம் –
அனுபவம் இருவருக்கும் சுகம் -உபாயம் இதில் ஸூகரம் இல்லையே -பக்தி போலே –

யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸம் ந்யஸ்ய மத்பரா–அநந்யேநைவ யோகேந மாம் த்யாயந்த உபாஸதே—৷৷12.6৷৷
யார் ஒருவனோ எனில் -எல்லா கர்மங்களையும் என்னிடம் சமர்ப்பித்து -என்னையே புருஷார்த்தமாக கொண்டு -இங்கு
யோகம் -பக்தி -ஸ்வயம் பிரயோஜன பக்தி -என்றபடி -பக்தி பண்ணும் இன்பத்துக்காக
-குழந்தை தாய் கொஞ்சுவது போலே அன்றோ பக்தி –த்யானம் அர்ச்சனம் மூலம் உபாசித்து

தேஷாமஹம் ஸமுத்தர்தா மரித்யுஸம் ஸாரஸாகராத்—-பவாமி நசிராத்பார்த மய்யாவேஷிதசேதஸாம்—৷৷12.7৷৷
-அவர்களுக்கு -நான் -அஹம் -என்னிடம் நெருக்கமாக மனஸ் கொண்டவர்கள் –தூக்கி -மிருத்யு சம்சார சாகரம் –தங்களையும் மறந்து ஈஸ்வரனையும் மறந்து
-ஈஸ்வர கைங்கர்யமும் இழந்து இழந்தோம் என்ற இழவும் இல்லாமல் -சம்சாரிகள் -கை பிடித்து தூக்கி விடுபவனாக நான் இருக்கிறேன்
-சடக்கென –எப்பொழுது சரண் அடைவாய் என்று அநாதி காலம் காத்து அன்றோ உள்ளேன்
சரண்ய முகுந்தத்வம் உத் பலாவதாக- மாம்சம் ஆசை துரந்த யோகிகளுக்கு –மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –
அவனுக்கு பல ஜென்மங்களும் தெரியுமே –மாறி மாறி பல பிறவியும் பிறந்து —ஈறில் இன்பம் பெற்றேன் இன்று –

மய்யேவ மந ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேஷய.–நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ந ஸம் ஷய—৷৷12.8৷৷
இதில் பக்தி விதி -என்னிடமே மனசை செலுத்தி -என்னிடமே உறுதியான புத்தி கொள்வாய் -நம்பிக்கை வந்த பின்பு அதற்கு மேலே
-என்னிடமே வாழ்வாய் -சங்கை வேண்டாம் –நிர்ப்பரோ நிர்பயோஸ்மி முக்த ஆத்ம ஸ்வரூபம் அடைகிறான் -கவலை அற்று இருந்து –
இது முதல் –நான்கு ஸ்லோகங்களால் -ஓன்று ஒன்றாக குறைத்து -அசக்தனுக்கு செய்ய வேண்டியவற்றை அருளிச் செய்கிறான்

அத சித்தம் ஸமாதாதும் ந ஷக்நோஷி மயி ஸ்திரம்—-அப்யாஸயோகேந ததோ மாமிச்சாப்தும் தநஞ்ஜய—৷৷12.9৷৷
பழக்கமே இல்லையே -சப்தாதி விஷயங்களில் பழகி வாழ்ந்த பின்பு -என்னில் -ஸ்திரமான சித்தம் வைக்க சக்தி இல்லாமல் போனால் –
உடன் அடியாக பண்ண முடியாமல் போனால் -அப்பியாசம் -யோகம் -கல்யாண குணங்களில் மனசை செலுத்தி -என்னை அடைய இச்சிப்பாய் –
பழக்கம் படுத்துக்கோ -என்னிடம் குணங்களோ பல -உனக்கு அல்ப அஸ்திர இந்திரியாதி தானே தெரியும் –
அன்புடன் மனசை நினைத்து நினைத்து பழக்கி -இச்சிப்பாய் -கல்யாண குணங்களை அனுசந்தித்து மனசை பழக்கி –
கொஞ்சமாக மேல் நிலைக்கு வர படிக்கட்டுக்கள் இப்படி நான்கு ஸ்லோகங்களில் –
எந்த கல்யாண குணங்கள் -ஸுந்தர்ய –மாதுர்ய –வீர்யகுணங்கள் ஸத்யஸங்கல்ப இத்யாதி ஸ்ரீ ராமானுஜர் -18-
1-ஸுந்தர்யம் –நெஞ்சினாரும் அங்கு ஒழிந்தார் -இனி யாரை கொண்டு உஸாக -அடிமை பட்டு சாசனம் எழுதிக் கொடுக்க வைக்கும் அழகன்
2-ஸுசீல்யம்–நின்னோடும் ஐவரானோம் -கை விட மாட்டார் நம்பிக்கை வளரும் -3- ஸுஹார்த்தம் -சர்வ போதானாம் –4-வாத்சல்யம் -தோஷ போக்யத்வம்
—5 -காருண்யம் கிருபையா பரிபாலயத் -6-மாதுர்யம் -சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் -எண்ணிலும் வரும் — ஓர் எண் தானும் இன்றியே
6-காம்பீர்ய -தன் அடியார் திறக்கத்து -கலக்க முடியாதவன் –அசக்தன் அஞ்ஞான -பாபங்களை காணஅறியாதவன் -கை விட சக்தி இல்லாதவன்
7–உதாரன் -வரம் ததாதி -அர்த்திதார்த்த-பரிதான தீஷிதம் -அபீஷ்ட வரதன்/8-ஸுர்ய–9- வீர்ய -10-பராக்ரமம்-11-சார்வஞ்ஞன்-12 சத்யகாமத்வம்-
-13–ஸத்யஸங்கல்பம் 14–ஸர்வேஸ்வரத்வம் –15–சகல காரணத்வ –

அப்யாஸேப்யஸமர்தோஸி மத்கர்மபரமோ பவ.–மதர்தமபி கர்மாணி குர்வந் ஸித்திமவாப்ஸ்யஸி—৷৷12.10৷৷
மநோ வியாபாரம் கஷ்டம் தானே -கையாலே எதையும் செய்யலாம் -மனசால் நினைத்து -செய்வது வேண்டாம் -சக்தி இல்லை என்னில்– அப்பியாசம்
கைங்கர்யம் -திரு விளக்கு -மாலை இடுதல் -திருவடி விளக்கி–என் விஷய கர்மாக்கள் இங்கு -செய்தால் -பண்ண பண்ண
அருகாமை கிளிட்டும் -மனஸ் தானே ஈடுபடும் -உறுதி படும் -பக்தி வரும் -இதே பாதையில் போக வேன்டும் –

அதைததப்யஷக்தோஸி கர்தும் மத்யோகமாஷ்ரித–ஸர்வகர்மபலத்யாகம் தத குரு யதாத்மவாந்–৷৷12.11৷৷
மத் கர்மா -உன் கர்மா -இதுவும் பழக்கம் இல்லையே -இதற்கும் அசக்தனாக இருந்தால் -பக்தி யோகம் தொடங்கிய நீ -மத் யோகம் -கர்ம யோகத்தால்
மனத்தை அடக்கி -எல்லா பலத்தையும் -சர்வ கர்ம பல தியாகம் -கீழே சொல்லிய கர்த்ருத்வ மமதா பல தியாகம் -அதே சப்தம் இங்கும்
-ஆத்ம உபாசனம் -பிரதம ஷட்கத்தில் சொல்லப் பட்டது –
கர்ம யோகம் நமக்கா தானே -ஆத்ம சாஷாத்காரம் நமக்காக தானே -உன் கார்யம் பண்ணினதாகும் -ஆத்ம சாஷாத்காரம் வந்திடும்
-வந்தால் சேஷ பூதன் என்று அறிவாய் -பண்ண பண்ண மேல் படிகளுக்கு வருவாய் –கைவல்ய உபாசனம் இல்லை
-5 ஸ்லோகத்தில் நன்றாக இகழ்ந்தான்–7 -8–9- அத்தியாயத்தில் சொல்லியதை -இங்கு முதல் ஆறு அத்தியாயங்களில்த்தை சொல்லிய
ஆத்ம உபாசனம் -வாசியை நன்றாக உணர வேன்டும் –

ஷ்ரேயோ ஹி ஜ்ஞாநமப்யாஸாஜ்ஜ்ஞாநாத்த்யாநம் விஷிஷ்யதே.-த்யாநாத்கர்மபலத்யாகஸ்த்யாகாச்சாந்திரநந்தரம்–৷৷12.12৷৷
பக்தி யோகம் -முடியாது அப்பியாசம் –மத் கர்ம -உன்னுடைய கர்மா -கீழே கீழே சொல்லி -அனைத்தும் நானே விதித்தேன் -என் திருப்தியே உனக்கு நோக்கம்
-சமாதானப் படுத்துகிறான் -திரு உள்ளம் இந்த ஸ்லோகம் நன்றாக காட்டும் -எப்படியாவது நம்மை கை தூக்கி விட அன்றோ பார்க்கிறான்
-இதுவே சிறந்தது என்றும் சொல்வான் -வாதங்கள் பல வைத்து -யாதானும் பற்றி நீங்கும் விரதம் நாம் -அவன் யாதானும் செய்து நம்மை கொள்ளுவான்
அப்பியாசம் -முற்று பெறா விட்டால் -கல்யாண குணங்கள் -அதை விட ஞானம் -ஆத்ம சாஷாத்காரம் –கீழ் படி -அது கை கூடா விட்டால் த்யானம்
-அது முடியா விட்டால் கர்ம பல தியாகம் -இதுவே உயர்ந்தது ஷாந்தி கொள்வாய் -மேலே -7-ஸ்லோகங்கள் -தத் பிரகாரம் –

அத்வேஷ்டா ஸர்வபூதாநாம் மைத்ர கருண ஏவ ச.–நிர்மமோ நிரஹங்கார ஸமதுகஸுக க்ஷமீ—৷৷12.13৷৷
த்வேஷம் இல்லாமல் -எல்லா பூதங்களிலும் -பிரகலாதன் நிஷ்டை –குற்றம் செய்தவர் பாக்கள் பொறையும்–உபகார ஸ்ம்ருதியும் –இங்கும் அபசாரம்
பெற்றவர்கள் இடம் அத்வேஷம் -என்று கொள்ள வேன்டும் -/
மேலே மைத்ரேயர் -கை குலுக்கி -நண்பனாக -நமஸ்காரம் நம் பண்பாடு -கையில் ஒன்றும் இல்லை என்று காட்ட கை குலுக்கி மற்றவர்
-தோள் அனைத்தும் உள்ளே கத்தி இல்லையா பார்த்து நண்பன் /
மேலே கருணையும் காட்டி / மமகாராம் அஹங்காரம் இல்லாமை / பொறுத்து கொண்டு சுகம் துக்கங்களை -இவை எல்லாம் கர்ம யோகத்துக்கு வேண்டுமே

ஸந்துஷ்ட ஸததம் யோகீ யதாத்மா தரிடநிஷ்சய—மய்யர்பிதமநோபுத்திர்யோ மத்பக்த ஸ மே ப்ரிய—৷৷12.14৷৷
மனசை அடக்கி -சாஸ்திரம் நம்பி -மம பிரியன் -இதற்க்காகவாவது செய்ய வேண்டுமே -இத்தை எல்லா ஸ்லோகங்களிலும் சொல்லுவான்
என்னிடமே சமர்ப்பிக்கப் பட்ட மனஸ் புத்தி அவனே பலன் -கர்ம யோகம் பண்ணுபவன் பிரியமானவன்

யஸ்மாந்நோத்விஜதே லோகோ லோகாந்நோத்விஜதே ச ய-ஹர்ஷாமர்ஷபயோத்வேகைர்முக்தோ ய ஸ ச மே ப்ரிய—৷৷12.15৷৷
உலகில் உள்ளார் -அனைவரும் –இவனை கண்டு பயப்பட மாட்டார்கள் சாத்வீகன் -ஆசையும் இல்லை இவனுக்கு -இவனும் லோகம் கண்டு
பயப்பட மாட்டான் -ஸந்தோஷம் கோபம் பயம் நடுக்கம் இல்லாதவன் -கிடைத்தது கொண்டு பிரியம் கொள்பவன் —

அநபேக்ஷ ஷுசிர்தக்ஷ உதாஸீநோ கதவ்யத–ஸர்வாரம்பபரித்யாகீ யோ மத்பக்த ஸ மே ப்ரிய–৷৷12.16৷৷
கர்ம யோகி பிரியமானவன் -ஆத்ம விஷயமே நோக்கு -ஆகார சுத்தி -சத்வ குணம் -தியானம் வளரும் -ஆத்மா சாஷாத்காரம்
-துன்பம் அற்று -சாஸ்திரம் சொல்வதை மட்டும் செய்த பக்தன் பிரியன்

யோ ந ஹரிஷ்யதி ந த்வேஷ்டி ந ஷோசதி ந காங்க்ஷதி.–ஷுபாஷுபபரித்யாகீ பக்தமாந்ய ஸ மே ப்ரிய—-৷৷12.17৷৷
சப்தம் ஸ்பர்சம் ரூபம் -இவற்றால் ஆனந்தம் த்வேஷம் இல்லை வருத்தம் விருப்பம் கொள்ளாமல் / காரணமான புண்ய பாபங்கள் விட்டவன்

ஸம ஷத்ரௌ ச மித்ரே ச ததா மாநாபமாநயோ—ஷீதோஷ்ணஸுகதுகேஷு ஸம ஸங்கவிவர்ஜித—৷৷12.18৷৷
சமமாக -விரோதிகள் நண்பர்கள் / பட்டம் பெற்றாலும் அவமானம் பண்ணினாலும் -குளிர் வெப்பம் இன்ப துன்பங்கள் சமம் -பற்று இல்லாமல்

துல்யநிந்தாஸ்துதிர்மௌநீ ஸந்துஷ்டோ யேநகேநசித்.–அநிகேத ஸ்திரமதிர்பக்தமாந்மே ப்ரியோ நர—৷৷12.19৷৷
நிந்தனை ஸ்தோத்ரம் பண்ணினாலும் –வை தாலும் அவனுக்கு -என் கண்ணன் எனக்கு -கிடைத்தது கொண்டு ஸந்தோஷம்
-வீட்டிலே ஆசை இல்லாமல் -ஆத்ம விஷயம் ஸ்திர புத்தி உள்ளவன் -இப்படி பிரகாரங்களை சொல்லி

யே து தர்ம்யாமரிதமிதம் யதோக்தம் பர்யுபாஸதே.–ஷ்ரத்ததாநா மத்பரமா பக்தாஸ்தேதீவ மே ப்ரியா—৷12.20৷৷
பக்தர்கள் மிகவும் இனியவர் -இவர்களோ என்னில் -து —
யார் எல்லாம் மனசை என்னிடம் லயிக்கும் 2-ஸ்லோகத்தில் கொண்டாடப் பட்ட பக்தி யோக நிஷ்டர்களை —
கர்ம யோகங்களை சொல்லியது -8-பக்தி யோக நிஷ்டர் அசக்தர்களுக்கு -சொல்லி –
உயர்ந்த பக்தி யோக நிஷ்டர் -பக்தியே தர்மம் அமிர்தம் பிறப்பபாம் பிராப்யாம் –நன்றாக உபாசித்து -என்னிடமே நெஞ்சை செலுத்தி
இருப்பவன் மிகவும் பிரியவன் -என்று நிகமிக்கிறான் இதில் –

———————————

கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -11—-விஸ்வ ரூப யோகம் –

June 6, 2017

ஏகாதசே ஸ்வ யாதாம்ய சாஷாத்கார அவலோகனம்
தத்தமுக்தம் விதி ப்ராப்த்யோ பக்த்யே கோபா யதா ததா –15-

ஏகாதசே
ஸ்வ யாதாம்ய -பர ப்ரஹ்மம் பற்றி -உண்மை அறிவை அடைய
சாஷாத்கார -விஸ்வரூபம் காண -முக்காலத்தில் -உள்ளவை அனைத்தையும் -பாண்டவர் ஜெயம் -கூட காண போகிறான்
அவலோகனம் -கண்களால் -காண திவ்ய சஷூஸ்
தத்தமுக்தம் -கொடுக்கப்பட்டு -32-ஸ்லோகங்கள் வரை இதுவே -மேலே அர்ஜுனன் ஸ்தோத்ர ஸ்லோகங்கள்
விதி ப்ராப்த்யோ -விதி -அறிவதற்கும் -வேதனம் / அடைவதற்கும் -கடைசி நான்கு ஸ்லோகங்கள்
பக்த்யே கோபா யதா ததா –பக்தி ஒன்றே வழியாகும்
உதங்க பிரஸ்னம் /சஞ்சயன் இது ஒன்றே மனசை விட்டு நீங்காமல் இருக்கிறதே –

————————————————-

அர்ஜுந உவாச
மதநுக்ரஹாய பரமம் குஹ்யமத்யாத்மஸஂஜ்ஞிதம்–யத்த்வயோக்தம் வசஸ்தேந மோஹோயம் விகதோ மம–৷৷11.1৷৷
எனக்கு அனுகிரஹிப்பதற்காக -பரமமான குஹ்யமான -ஆத்ம விஷயம் கூடிய கர்ம யோகம் ஆறு அத்தியாயங்களில் உன்னாலே சொல்லப் பட்டவையோ
-அதனால் என்னுடைய மோஹம் விலகிப் போனதே –
தேஹாத்ம பிராந்தி -காரணம் தானே சண்டை போடாமல் -இருந்தான் -ஆத்மா நித்யம் தேஹம் அநித்தியம் உணர்ந்தேன் -முதல் நன்றி —
பகவத் பாகவத ஆச்சார்ய சம்பந்தமே முக்கியம் என்று உணர வேண்டுமே

பவாப்யயௌ ஹி பூதாநாம் ஷ்ருதௌ விஸ்தரஷோ மயா.–த்வத்த கமலபத்ராக்ஷ மாஹாத்ம்யமபி சாவ்யயம்–৷৷11.2৷৷
தாமரைக் கண்ணனே –மலர்ந்து சேவை சாதித்து இருக்கிறான் -யுத்த அரங்கத்தின் நடுவில் -தன்மை மாறாதே -கொண்டாடட்டம் இல்லையே
-யதார்த்த கத்தனம் -சாந்தோக்யம் -கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷணீ -அன்றோ -ஜிதந்தே புண்டரீகாஷா -/
நன்றாக விரித்து விளக்கமாக கேட்கப் பட்டன -ஜீவ ராசிகளின் உத்பத்தி விநாசங்கள் -உன்னிடம் இருந்தே பிறப்பு இறப்பு லயம் –
மாஹாத்ம்யம்- குறைவற்றை எல்லை அற்ற-பெருமாய் -கேட்டு கொண்டேன் -மீண்டும் நன்றி

ஏவமேதத்யதாத்த த்வமாத்மாநம் பரமேஷ்வர.–த்ரஷ்டுமிச்சாமி தே ரூபமைஷ்வரம் புருஷோத்தம–৷৷11.3৷৷
ஆசைகளை வெளி இடுகிறான் -பரமேஸ்வர -புருஷோத்தம –
பெருமை எளிமைக்கு இரண்டு விழி சொற்கள் -இரண்டும் இருந்தால் தான் காட்ட முடியும் -விஸ்வ ரூபம் –அனைத்தையும் நியமிக்கும்
-ஆஸ்திக வாதம் -சொன்னால் தானே மேலே காட்ட ஆசை வரும் -நாஸ்திகன் தானே கட்டுக் கதை என்பான் / நம்பி ஆஸ்திகன்
-சரண் அடைந்து பிரபன்னன் -நிறைய ஆஸ்திக நாஸ்திகர்கள் உண்டே /வாமனன் திரு விக்ரமன் -கதை உண்மையா நினைப்பவன் நாஸ்திகன்
–பள்ளி கல்லூரி படிப்பு பல வருஷங்கள் -வைதிக படிப்புக்கு மட்டும் ஒரே நாள் வருகிறார்களே -நேர்மை அற்ற நடுநிலை இல்லா தன்மை –
உலகம் நியமிக்கும் ஐஸ்வர்யம் காண ஆசைப்படுகிறேன் -புருஷோத்தமன் -கொண்டாடினால் தான் கேட்டதை தரம் பார்க்காமல் அருளுவான் –
தாழ்ந்த எனக்கும் காட்ட வேன்டும் -கேட்கவும் யோக்யதை இல்லை -கொடுக்க வேண்டிய நிர்பந்தமும் உனக்கு இல்லை /
பூரணமான கல்யாண குணங்கள் –அவாப்த ஸமஸ்த காமன்

மந்யஸே யதி தச்சக்யம் மயா த்ரஷ்டுமிதி ப்ரபோ—யோகேஷ்வர ததோ மே த்வம் தர்ஷயாத்மாநமவ்யயம்–৷৷11.4৷৷
உன்னை எனக்கு காட்டிக் கொடுப்பாய் -குறைவற்ற செல்வம் -யோகேஸ்வர -பிரபு -கல்யாண குணங்கள் சேர்ந்த -நியமிக்கும் சாமர்த்தியம் -பிரபு –
உன்னுடைய உயர்ந்த விஸ்வ ரூபத்தை என்னால் பார்ப்பதற்கு முடியும் -சக்யம் -என்று நீ திரு உள்ளம் பற்றினால் –
காட்டிக் கொடுத்து அருளுவாய் -இதில் அர்ஜுனன் தன்னை பற்றி சங்கை வந்ததே -ஆசை வந்ததே எதனால் சங்கை –
காட்டுவதும் காட்டாததும் -காணும் படி ஆக்குவதும் உன் சங்கல்பமே என்று அறிந்தவன் அன்றோ –
குருடனுக்கு கண்ணையும் கடலையும் கொடுத்து காட்டச் சொல்வது போலே–கமலக் கண்ணன் என் கண்ணில் உள்ளான் -காண்பன் அவன் கண்களாலே –
தது – உன்னுடைய திவ்ய ரூபத்தை அனைத்தையும் தாங்கும்-ஸ்வரூபத்தை -அத்தை -மிக உயர்ந்த —

ஸ்ரீ பகவாநுவாச-
பஷ்ய மே பார்த ரூபாணி ஷதஷோத ஸஹஸ்ரஷ–நாநாவிதாநி திவ்யாநி நாநாவர்ணாகரிதீநி ச–৷৷11.5৷৷
பார் -பஸ்ய –உடனே -பார்க்கும் படி ஆக்குகிறேன் என்றபடி -காணுமாறு என்று உண்டு எனில் அருளாய் -தேவகி கேட்டு பெற்றாள்
-பாலும் சுரந்து இவனும் குடித்தான் -வைதிக காமம் -கிருஷ்ண விஷயம் அன்றோ –
என்னுடைய ரூபங்களை பார்ப்பாய் -எல்லாவற்றையும் ஓர் இடத்தில் -நூறு ஆயிரம் ஆயிரமான ரூபங்கள் –
தோள்கள் ஆயிரத்தாய் –முடிகள் ஆயிரத்தாய் -பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சை இவற்றுள் உள் பிரிவுகள் /
நின்ற கிடந்த இருந்த நடந்த -பல பல உண்டே -அனைத்தையும் காட்டுகிறேன் -வேவேரே வகை -திவ்யம் -அப்ராக்ருதம் -ஆச்சர்யம்
-நாநா வர்ணங்கள் -நாநா ஆகாரங்கள் -ஒவ் ஒன்றிலும் வேறே வேறே விதங்கள் உண்டே அதனால் நாநா -/ நினைப்பரியன –மாயங்கள் -/
பாலின் நீர்மை செம் பொன் நீர்மை –பசியின் பசும் புறம் போலும் நீர்மை -யுகங்கள் தோறும் -/ எந்நின்ற யோனியுமாய் பிறந்தாய் –

பஷ்யாதித்யாந்வஸூந்ருத்ராநஷ்வநௌ மருதஸ்ததா–பஹூந்யதரிஷ்டபூர்வாணி பஷ்யாஷ்சர்யாணி பாரத–৷৷11.6৷৷
மீண்டும் பார் -ஆசை கிளப்பி -தூண்டி -பன்னிரண்டு ஆதித்யர்கள் அஷ்ட வசுக்கள் பதினோரு ருத்ரர்கள் அஸ்வினி தேவதைகள் -49-மருத்துக்கள் –
முன்பு பார்த்து இராத உருவத்தை -அளவுக்கு உட்படாத -ஆச்சர்யமான -பல விசேஷணங்கள் –

இஹைகஸ்தம் ஜகத்கரித்ஸ்நம் பஷ்யாத்ய ஸசராசரம்–மம தேஹே குடாகேஷ யச்சாந்யத்த்ரஷ்டுமிச்சஸி—৷৷11.7৷৷
என்னுடைய திவ்ய மேனியில் ஏக தேசத்தில் –கீழ் சொன்னவை -முப்பத்து முக்கோடியும் –ஓர் இடத்தில் அடங்கி -சர அசாரங்கள் உடன் கூடிய
ஜகத்தில் ஒன்றும் மிச்சம் இல்லாமல் -குடா கேசன் தூக்கம் வென்றவன் -அதனால் இது காண முடியாது –
நீ எது எல்லாம் பார்க்க ஆசைப்படுகிறாயோ -நான் சொல்லாமல் விட்டதையும் ஏக தேசத்தில் பார்த்துக் கொள்ளலாம்
பாண்டவர் வெல்வதையும் பார்த்து கொள்ளலாம் -ஆஸ்திகனான படியால் இதில் ஆசை இல்லை அர்ஜுனனுக்கு –
ஜோதிஷம் வேத அங்கங்கள் -கர்மா பண்ணும் காலம் கணிக்கவே -இது -தப்பாக உபயோகப்படுத்துகிறார்கள் –

ந து மாம் ஷக்யஸே த்ரஷ்டுமநேநைவ ஸ்வசக்ஷுஷா–திவ்யம் ததாமி தே சக்ஷு பஷ்ய மே யோகமைஷ்வரம்–৷৷11.8৷৷
இந்த -உன்னுடைய ஊனக் கண்களாலே என்னை பார்க்க இயலாதே -உனக்கு திவ்யமான சஷூஸ் தருகிறேன் -யோகம் ஐஸ்வர்யம்
-விஸ்வ ரூபம் பார்ப்பாய் -அபரிச்சேதயம் அன்றோ -அனந்தன் -திருமேனியை காண்பாய் –

ஸஞ்ஜய உவாச-
ஏவமுக்த்வா ததோ ராஜந்மஹாயோகேஷ்வரோ ஹரி–தர்ஷயாமாஸ பார்தாய பரமம் ரூபமைஷ்வரம்—৷৷11.9৷৷
சஞ்சயன் -விஸ்வரூபம் வர்ணித்து -நடுவில் வேறே இல்லாமல் -விஸ்வ ரூபம் காட்டியதால் அர்ஜுனன் பார்த்து மலைத்து இருக்க
ராஜன் -என்று த்ருதராஷ்ரனை –அர்ஜனுக்கு பரமமான ரூபம் ஐஸ்வர்யம் காட்டிக் கொடுத்தான் –
பிருதா பிள்ளை பார்த்தா -அத்தை பிள்ளைக்காக காட்டி -தேக சம்பந்தம் இல்லாமல் இழந்தேன் என்பர் கூரத் தாழ்வான் –
யோகம் -கல்யாண குணங்கள் உடன் கூடியவன் -மஹா யோகேஸ்வரன் -ஹரி -அசாதாரண திரு நாமம் –

அநேகவக்த்ரநயநமநேகாத்புததர்ஷநம்–அநேகதிவ்யாபரணம் திவ்யாநேகோத்யதாயுதம்–৷৷11.10৷৷
எண்ணில் அடங்காத வாய்கள் கண்கள் -மனசுக்கு எட்டாத -திவ்ய ஆபரணங்கள் திவ்ய ஆயுதங்கள் -கிரீட மகுட சூடாவதாம்ச –நூபுராதி –
பல போலவே ஆபரணம் பெரும் பல போலவே –சோதி வடிவம் —

திவ்யமால்யாம்பரதரம் திவ்யகந்தாநுலேபநம்—.ஸர்வாஷ்சர்யமயம் தேவமநந்தம் விஷ்வதோமுகம்–৷৷11.11৷৷
திவ்ய மாலைகள் -வஸ்தரங்கள் -சந்தனக் காப்பு சேவை -இயற்கையில் சர்வ கந்த -சர்வ ரஸ அன்றோ -தாயாரும் கூசிப்பிடிக்கும் மெல்லடிகள் –
எல்லா திசைகளிலும் திரு முகங்கள் -அளவில்லா திரு வடிவம் -பல பரிமாணங்கள் -நினைப்புக்கு அப்பால்

திவி ஸூர்யஸஹஸ்ரஸ்ய பவேத்யுகபதுத்திதா—யதி பா ஸதரிஷீ ஸா ஸ்யாத்பாஸஸ்தஸ்ய மஹாத்மந—৷৷11.12৷৷
ஆயிரம் ஸூ ர்யர்கள் –ஒரே காலத்தில் உதயமானால் –நிகழாதே -ஒரு வேளை நடந்தால் -இந்த விஸ்வரூபம் காட்டும்
தேஜஸ் ஸூக்கு ஒப்பாகுமோ என்ற சங்கை கொள்ளலாம் -அபூத உவமை –

தத்ரைகஸ்தம் ஜகத்கரித்ஸ்நம் ப்ரவிபக்தமநேகதா—-அபஷ்யத்தேவதேவஸ்ய ஷரீரே பாண்டவஸ்ததா—৷৷11.13৷৷
நன்றாக பிரிக்கப் பட்ட -வித விதமாக -ஜகத்தை ஒரு மூலையிலே கண்டான் -ஒன்றும் மிச்சம் இல்லாமல் –
லோகம் மட்டும் என்றால் எந்த பகுதி -சங்கை வரும் -அனைத்தும் திரு மேனியில் ஒரு மூலையில் கண்டான்
போகம் போக ஸ்தானம் போக உபகரணங்கள் போக்தா -அனைத்தையும் -ஏக தேசத்தில் -ஒன்றுமே மிச்சம் விடாமல் –
-கண்ணன் மட்டும் இருந்தால்–தன் ஸ்வயம் திருமேனி மட்டும் -இருந்தால் திருவடிகளில் விழுந்து இருந்து இருப்பான் –
இவனோ விஸ்வ ரூபம் கண்டு விசமய நீயானாகி தேவ -தேவர்களுக்கும் எல்லாம் தேவன் அன்றோ

தத ஸ விஸ்மயாவிஷ்டோ ஹரிஷ்டரோமா தநஞ்ஜய–ப்ரணம்ய ஷிரஸா தேவம் கரிதாஞ்ஜலிரபாஷத—৷৷11.14৷৷
வியப்பாய் வியப்பால் -ஆச்சர்யப் பட்டு -தத -இந்த விஸ்வரூபம் கண்டு மயிர் கூச்சு எரிந்து -தலை கீழே விழுந்து வணங்கி
கை கூப்பி பேசத் தொடங்கினான் -பீடிகை இது –

அர்ஜுந உவாச-
பஷ்யாமி தேவாம் ஸ்தவ தேவ தேஹே–ஸர்வாம் ஸ்ததா பூதவிஷேஷஸங்காந்.–ப்ரஹ்மாணமீஷம் கமலாஸநஸ்த-மரிஷீஂஷ்ச ஸர்வாநுரகாம் ஷ்ச திவ்யாந்—৷৷11.15৷৷
பார்த்தேன் -தேவ சப்தம் இங்கு ஆதேயம் –உலகு எல்லாம் தாங்கி -தேவர்கள் அத்தனை போரையும் -இந்த்ராதிகள் இங்கு -நான்முகன் மேலே
-பூதங்கள் விசேஷ -கூட்டங்கள் அனைத்தையும் பார்த்தேன் -பிராணி வகைகள் பல அன்றோ -கற்றுக் கறவை கணங்கள் பல அன்றோ
-பல பஹு வசனங்கள் இதில் -அதே போலே -பூதவிஷேஷஸங்காந்/ நான் முகன் உந்தித் தாமரையில் ருத்ரன் ரிஷிகள் -பாம்புகள்
-சேர்த்து சொல்லி -வாசி இல்லையே -அவன் திருமேனி -இருப்பதால்

அநேகபாஹூதரவக்த்ரநேத்ரம் –பஷ்யாமி த்வாம் ஸர்வதோநந்தரூபம்—நாந்தம் ந மத்யம் ந புநஸ்தவாதிம் -பஷ்யாமி விஷ்வேஷ்வர விஷ்வரூப—৷৷11.16৷৷
உலகங்களை நியமித்து உலகங்களை சரீரமாக -எண்ணிறந்த கைகள் கண்கள் -அந்தம் அற்ற ரூபங்கள் -ஆதி முடிவு நடு தெரியாமல் –

கிரீடிநம் கதிநம் சக்ரிணம் ச–தேஜோராஷிம் ஸர்வதோதீப்திமந்தம்-பஷ்யாமி த்வாம் துர்நிரீக்ஷ்யம் சமந்தா-த்தீப்தாநலார்கத்யுதிமப்ரமேயம்—৷৷11.17৷৷
கிரீடங்கள் -கதைகள் சக்ராயுதம் தரித்து -அசாதாரண லக்ஷணங்கள் -திருமாலுக்கு தானே -ஆதி ராஜ்யம் அதிகம் புவனானாம் –
ஒளி படைத்த பதார்த்தங்கள் சேர்த்த திரு மேனி -அவயவம் ஒன்றையும் பார்க்க முடியாமல் -நெருப்பு ஸூ ரியன் சேர்த்த தேஜஸ் படைத்து -அளவிட்டு அறிய முடியாத

த்வமக்ஷரம் பரமம் வேதிதவ்யம் –த்வமஸ்ய விஷ்வஸ்ய பரம் நிதாநம்.–த்வமவ்யய ஷாஷ்வத தர்ம கோப்தா-ஸநாதநஸ்த்வம் புருஷோ மதோ மே—৷৷11.18৷৷
அறியப் படும் பொருள்களில் உயர்ந்த -கொண்டாடப் படுகிறாய் -உலகில் மெலீனா நிதானம் ஆஸ்ரயம் ஆதேயம் -நித்யம் -தர்மம் ரக்ஷணம் பண்ணி
-வேதகாமேதம் புருஷம் மஹாந்தம் அறிந்தேன் –பார்க்க பார்க்க ஆச்சர்யம் பயம் -மிக்கு

அநாதிமத்யாந்தமநந்தவீர்ய–மநந்தபாஹும் ஷஷிஸூர்யநேத்ரம்–பஷ்யாமி த்வாம் -தீப்தஹுதாஷவக்த்ரம் -ஸ்வதேஜஸா விஷ்வமிதம் தபந்தம்–৷৷11.19৷৷
ஆதி மதியம் அந்தம் அநாதி -ஒன்றையும் பார்க்க முடிய வில்லை -அளவுக்கு உட்படாத சக்தி விசேஷங்கள் -ஞானம் பலம் ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் /
தோள்கள் பல / கதிர் மதியம் போல் முகத்தான் -சஷி ஸூர்ய நேத்ரம்-பல தலைகள் உண்டே -தன்மைகள் கொண்ட திருக் கண்கள் என்றபடி
-தபிக்கவும் குளிரவும் -பண்ணுமே -ஒளி படைத்த தீ கங்கு போல நீண்ட வாய் நாக்கு –உலகம் எல்லாம் கொதிப்படைய வைக்கும் –
தான் விகாரம் இல்லாமல் -சம்பந்தப்பட்டவற்றை விகாரம் அடைவிக்குமே -/ சதைக ரூப ரூபாய விஷ்ணவே —

த்யாவாபரிதிவ்யோரிதமந்தரம் ஹி–வ்யாப்தம் த்வயைகேந திஷஷ்ச ஸர்வா–தரிஷ்ட்வாத்புதம் ரூபமுக்ரம் தவேதம் -லோகத்ரயம் ப்ரவ்யதிதம் மஹாத்மந்–৷৷11.20৷৷
மஹாத்மாவே -கூப்பிட்டு -சங்கல்ப சக்தி அபரிமிதம் என்றபடி -ஸத்யஸங்கல்பன் -ஆகாசம் பூமி அந்தரம் இடை பட்ட இடங்களிலும் வியாபித்து
-திசைகளிலும் ஒருவனால் வியாபித்து உள்ளாய் -த்வயைகேந–நீர் தோறும் பரந்துளன் -விஸ்வரூபம் பார்த்து -அவனே திவலைக்குள்
-சுருக்கி கொண்டு இல்லை -விகாரம் இல்லையே –அகடிதகடநா சாமர்த்தியம் உண்டே -ஆலிலை துயின்ற மாயன் -கரந்து எங்கும்- பரந்துளன் -/
அத்புதமான உக்ரமான ரூபம் பார்த்தேன் / மூன்று லோகங்களும் பயந்து நடுங்கும் படி –
மேலே தான் நடுங்குவதை பற்றி /பார்த்தவர்கள் தானே நடுங்க முடியும் -அநு கூல பிரதி கூல உதாசீன மூவரும் -என்றபடி -/
பயத்தால் உதாசீனர் பிரதி கூலர் / பொங்கும் பிரிவால் அநு கூலர் -மங்களா சாசன பரர்கள்-/

அமீ ஹி த்வாம் ஸுரஸங்கா விஷந்தி–கேசித்பீதா ப்ராஞ்ஜலயோ கரிணந்தி–ஸ்வஸ்தீத்யுக்த்வா மஹர்ஷிஸித்தஸங்கா–ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி-புஷ்கலாபி—-৷৷11.21৷৷
இந்த -கை காட்ட -இந்த்ராதிகளை கண்டு -அமீ -விஸ்வரூபம் நோக்கி போவதை -தேவர்கள் கூட்டம் அருகில் கூப்பின கைகள் உடன் –
சிலர் பயந்து -கையில் அஞ்சலி பண்ணி தள்ளி நின்று ஸ்தோத்ரம் -பண்ண -வேதம் -அவரவர் தாம் தாம் கற்றவாறு ஏத்த -காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் –
குழந்தை மழலை சொல் சொன்னாலும் -நான்முகன் -நம்மாழ்வார் -அனைவர் அளவும் -பக்கத்தில் தானே அமைத்து கொண்டு
–cell-என்று கொண்டாலும் தன்னை அமைத்து கொள்வான் -யானைக்கு குதிரை வைப்பாரை போலே –பக்தி பீறிட்டு வருமே சேவித்ததும் –
மலையும் கல்லும் சமுத்ரத்துக்குள் இருக்க கோ விசேஷம் வேறு பாடு இல்லையே -தைரியமாக பாடுவேன் -ஆளவந்தார் –
புஷ்கலமான -நிறைந்த சொற்களால் -வாசகமாக அங்கு அடிமை செய்தான் -போலே ஸ்தோத்ரம் பண்ணினார்கள் -தமிழ் ஆழ்வாருக்கு தொண்டு செய்யுமே-

ருத்ராதித்யா வஸவோ யே ச ஸாத்யா—விஷ்வேஷ்வநௌ மருதஷ்சோஷ்மபாஷ்ச–கந்தர்வயக்ஷாஸுரஸித்தஸங்கா–வீக்ஷந்தே த்வாம் விஸ்மிதாஷ்சைவ ஸர்வே—৷৷11.22৷৷
11–ருத்ரர்கள்-12- ஆதித்யர்கள் அஸ்வினி தேவதைகள் –ஸாத்யா-முற்பட்ட -நித்யர்கள் –49-மருத்துக்கள் -பித்ருக்கள் ஊஷ்மா பாக/அனைவரும் பார்த்து ஆச்சர்யம் அடைய

ரூபம் மஹத்தே பஹுவக்த்ரநேத்ரம் –மஹாபாஹோ பஹுபாஹூருபாதம்–பஹூதரம் பஹுதம் ஷ்ட்ராகராலம் -தரிஷ்ட்வா லோகா ப்ரவ்யதிதாஸ்ததாஹம்—-৷৷11.23৷৷
கீழே வியப்பு ஆச்சர்யம் இங்கு பயம் –நானும் பயந்தேன் –
மிக பெரியதான -நிறைய கைகள் கண்கள் திருவடி தாமரைகள் -வயிறுகள் -இதில் -இடுப்பு ஓன்று -மேலும் கீழும் அநேகம் -நரசிம்மர் ஹயக்ரீவர் வயிறு வேறே வேறே தானே
/தடக் கையனே -நிறைய வளைந்த பற்கள் -வராஹ நரசிம்ம -ஹனுமான் -ராமன் அடையாளம் -8-அடி உயரம் -நான்கு கோரை பற்கள் -புருஷோத்தம லக்ஷணம் /
லோகம் -இங்கு கூடிய ராஜாக்கள் -மிகவும் பயந்து -நானும் பயந்தேன் -இறுதியிலே -சொல்கிறான்

நப ஸ்பரிஷம் தீப்தமநேகவர்ணம் –வ்யாத்தாநநம் தீப்த விஷால நேத்ரம்.–தரிஷ்ட்வா ஹி த்வா–ப்ரவ்யதிதாந்தராத்மா-தரிதிம் ந விந்தாமி ஷமம் ச விஷ்ணோ—৷৷11.24৷৷
ஆகாசம் தொடுவதாய் ஒளி படைத்த -பிளந்த திரு வாய் -பரந்த ஒளி படைத்த திரு க் கண்கள் -கண்டு -அந்தராத்மா நெஞ்சு நடுங்கி
மனசும் -தேக தாரணம் -மனஸ் இந்திரிய தாரணங்கள் அடைய வில்லை கட்டுப்படுத்த முடியவில்லை -பயந்தவற்றை விவரிக்கிறான்
ஆகாசம் -தொடுவதாய் -ஆதி நாடி அந்தம் காணவில்லை சொல்லி -பர வ்யோமம் ஸ்ரீ வைகுண்டம் வரை என்றவாறு -அதை தொடும் திரு மேனி என்றவாறு –
யாராலும் பார்க்க முடியாத ஸ்ரீ வைகுண்டம் –ஸ்ரீ வைகுண்டம் எங்கு இருந்தது என்று இவன் பார்க்க முடியுமோ -ஊகித்து சொல்கிறான் –
என்னால் பார்க்க முடியவில்லை -பரமபதம் எட்ட முடியாமல் இருக்கும் என்று சொல்லி கேள்வி பட்டதால் சொல்கிறான் -என்பதே –
நீல தோயத மத்யஸ்தா -நீர் உண்ட கார் மேக வண்ணன் -செய்யாள் -/ பீதாபா -பீதாம்பரம் -பரபாகம் –செவ்வரத்த உடை ஆடை அதன் மேல் ஒரு சிவலிக்கை கச் என்கின்றாளால்
–இழுத்து பிடித்து -கச்சிதமாக -/பச்சை மா மலை போல் மேனி -பவள வாய் -கமலச் செங்கண் –/தீப்தம் அநேக வர்ணம் /அந்தாமத்து–செம் பொன் திரு உடம்பு –செந்தாமரை /
கண்கள் சிவந்து பெரிய வாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே –மகர குண்டலத்தன் –கொண்டல் வண்ணன் சுடர் முடியன் / கரு மாணிக்க மலை மேல் –/தீப்த விலாச நேத்ரம்– செவ்வரியோடி நீண்டு மிளிர்ந்த திருக் கண்கள் /விஷ்ணோ -நீக்கமற வியாபித்த-

தம் ஷ்ட்ராகராலாநி ச தே முகாநி–தரிஷ்ட்வைவ காலாநலஸந்நிபாநி–திஷோ ந ஜாநே ந லபே ச ஷர்ம-ப்ரஸீத தேவேஷ ஜகந்நிவாஸ—৷৷11.25৷৷
தேவாதி தேவன் –மனிசர்க்கு தேவர் போலே தேவர்களுக்கும் தேவன் அன்றோ -ஜகத்தை வியாபித்த -அருள்வாய் -பயம் நீக்கி -பயங்கரமான பற்கள் பார்த்து
-ஊழி கால தீ போன்ற நாக்கு முகங்கள் கோரை பற்கள் -திசைகள் தெரிய வில்லை விசுவதோ முகம் அன்றோ -அனந்தன் –சுகம் இல்லை

அமீ ச த்வாம் தரிதராஷ்ட்ரஸ்ய புத்ரா–ஸர்வே ஸஹைவாவநிபாலஸங்கை–பீஷ்மோ த்ரோண- ஸூதபுத்ரஸ்ததாஸௌ-ஸஹாஸ்மதீயைரபி யோதமுக்யை—-৷৷11.26৷৷
திரு வாயை திறக்க -த்ருதாஷ்ட்ர புத்திரர்கள் -பூமி பால ராஜாக்கள் கூட்டம் -பீஷ்மர் துரோணர் -கர்ணன் -முன்னால் நிற்கும் கர்ணன்
-நம் பஷத்தவர்களும்-கூட -அடுத்த ஸ்லோகத்தில் புகுகிறார்கள் என்பதை சொல்லி

வக்த்ராணி தே த்வரமாணா விஷந்தி–தம் ஷ்ட்ராகராலாநி பயாநகாநி.–கேசித்விலக்நா தஷநாந்தரேஷு-ஸம் தரிஷ்யந்தே சூர்ணிதைருத்தமாங்கை—-৷৷11.27৷৷
வளைந்த பற்கள் -பயங்கரமான வாய் -வெகு வேகமாக உள்ளே புகுகிறார்கள் –வாயை மூடுவதற்கு முன்னே புகை வேகமாக -போக வேன்டும் –
எஞ்சாமல் வயிற்றில் அடக்கினான் -முற்றும் உண்ட கண்டம் கண்டீர் –
சூரணமாக உத்தம அங்கம் தலை- ஆக்கப்பட்டு -பற்களில் சிக்கி -தொங்கும் காட்சி கண்டேன் -ஆ என்று வாய் அங்காந்து -இதுவோ பிலவாய்

யதா நதீநாம் பஹவோம்புவேகா–ஸமுத்ரமேவாபிமுகா த்ரவந்தி.–ததா தவாமீ நரலோகவீரா–விஷந்தி வக்த்ராண்யபிவிஜ்வலந்தி—৷৷11.28৷৷
நதிகள் கடலை நோக்கி சேர்வது போலே -அனைத்தும் உன்னை நோக்கி -ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –
பெயரும் கரும் கடலே நோக்கும் ஆறு போலே -பரலோக வீரர் ராஜாக்கள் அனைவரும் -ஒளி படைத்து பளபளத்து இருக்கும் வாயை நோக்கி வேகமாக போகிறார்கள் —
தொக்கு இலங்கு ஆறுகள் எல்லாம் ஓடி –கடல் -வித்துக் கோட்டு அம்மா உன் சீர் அல்லால் இல்லையே -அநந்ய கதித்வம்

யதா ப்ரதீப்தம் ஜ்வலநம் பதங்கா–விஷந்தி நாஷாய ஸமரித்தவேகா—.ததைவ நாஷாய விஷந்தி லோகா-ஸ்தவாபி வக்த்ராணி ஸமரித்தவேகா—৷৷11.29৷৷
வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு – ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு -வீட்டில் பூச்சுக்கள் இவர்கள் -கீழே நதி கலக்கும் பொழுது
பெயரும் உருவமும் தான் போகும் நீருக்கு ஒன்றும் ஆகாது -இங்கு மாயும் -த்ருஷ்டாந்தம்
தங்கள் நினைத்தால் தடுக்க மாட்டாத நதிகள் -இங்கு வீட்டில் பூச்சிகள் தானே வந்து மாய்கின்றன -வேகமாக ஓடி -சடக்கென நாசம் அடைகின்றன
-கொழுந்து விட்டு எரிகிற விளக்கில் -யதா ப்ரதீப்தம் ஜ்வலநம்-சிறகு அடைக்கும் காற்றில் அணையாத விளக்கு
நிர்விகாரதத்வம் -கடல் -சேர்ந்தாலும் உயராத கடல் போலே உன் பெருமை

லேலிஹ்யஸே க்ரஸமாநஃ ஸமந்தா—ல்லோகாந்ஸமக்ராந்வதநைர்ஜ்வலத்பி–தேஜோபிராபூர்ய ஜகத்ஸமக்ரம் -பாஸஸ்தவோக்ரா ப்ரதபந்தி விஷ்ணோ—৷৷11.30৷৷
உக்ரமான -ஒளி கிரணங்கள் -தேஜஸ் ஸூ -உலகத்தை முழுவதும் சுடுமே –ராஜாக்களை விழுங்கி -நாக்கால் நக்கி -லேலிஹ்யஸே-உள்ளே தள்ளி
-கோபம் வெளிப்படும் -சிங்கம் -போலே -எல்லா புறங்களிலும் நாக்கை சுழற்றி-பளபளக்கும் திரு வாயில் -கண்டதும்
-இந்த செயலை அவனே செய்விக்கிறான் -உண்டு முடிக்கிறான்

ஆக்யாஹி மே கோ பவாநுக்ரரூபோ–நமோஸ்து தே தேவவர ப்ரஸீத—விஜ்ஞாதுமிச்சாமி பவந்தமாத்யம் -ந ஹி ப்ரஜாநாமி தவ ப்ரவரித்திம்–৷৷11.31৷৷
மிகவும் பயங்கரமான உருவை அடியேன் இடம் எதனால் காட்டினாய்-சாந்தமாக சேவை சாதிப்பாய் -ஆக்யாஹி-சொல்வாய் –எதற்க்காக இந்த உருவம் –
விஸ்வரூபத்தை -இல்லை -இந்த கோரா ரூபம் -என்னத்தையோ என்றோ செய்யப் போகிறதும் காட்டி அருளி -தூர தர்சன்ம் -தேவர்களில் தலைவனே
–மிக பழமையான ஆதி தேவனே -உன்னுடைய பிரவ்ருத்தி எதனால் என்று அருளிச் செய்ய வேன்டும் -மேலே மூன்று ஸ்லோகங்களில் பகவான் பதில்

ஸ்ரீ பகவாநுவாச–
காலோஸ்மி லோகக்ஷயகரித்ப்ரவரித்தோ–லோகாந்ஸமாஹர்துமிஹ ப்ரவரித்த–றதேபி த்வாம் ந பவிஷ்யந்தி ஸர்வே–யேவஸ்திதா ப்ரத்யநீகேஷு யோதா—৷৷11.32৷৷
தான் யார் என்று சொல்ல வில்லை -அது தான் அர்ஜுனனுக்கு தெரியுமே -சங்கைகளை தீர்த்து -நான் தான் காலத்துக்கு அந்தர்யாமி -உலகம் சம்ஹரிக்க
-ராஜாக்கள் உடைய முடிவு நாள் -நிர்ணயம் -நானே -நீ அம்பை விடா விட்டாலும் முடிவார்கள் -/ வளர்ந்தது -இவர்களுக்கு காலன்–
நானே முடிக்க முயல்கிறேன் -இரண்டு ப்ரவர்த்தித்த சப்தங்கள் -எதிர் கட்சியில் உள்ள ராஜாக்கள் -நீ இல்லாமல் போனாலும் இருக்க மாட்டார்கள்
-நீ இருந்தால் உன் அம்பு கொள்ளும்-திரௌபதி பரிபவம் கண்டு அன்றே சங்கல்பித்தேன்–துச்சோததனை -அழல விழித்தான் அச்சோ அச்சோ —

தஸ்மாத்த்வமுத்திஷ்ட யஷோ லபஸ்வ–ஜித்வா ஷத்ரூந் புங்க்ஷ்வ ராஜ்யம் ஸமரித்தம்.–மயைவைதே நிஹதா பூர்வமேவ–நிமித்தமாத்ரம் பவ ஸவ்யஸாசிந்—৷৷11.33৷৷
நீயே முடிப்பாய் ஆனால் நான் எதற்கு சண்டை போடா வேன்டும் -இடது கையால் வில்லை வைத்து இடது கையாலே அம்பு விட வல்லவன் நீ
இந்த தனி சக்தி நான் உனக்கு அருளி இருக்க அதை உபயோகப் படுத்த வேண்டாமோ –
நிமித்தமாத்ரம் பவ ஸவ்யஸாசிந்-நீ நிமித்த மாத்திரம் -வெறும் அம்பாக இருந்தால் போதும் -நானே செலுத்துகிறேன் -உன் கையில் அம்பு போலே நீ என் கையில் –
அதனாலே எழுந்திராய் -இந்த ஞானம் வந்த பின் -சண்டை போட்டு ஷத்ரிய தர்மம் செய்து -பெயர் பெறுவாய் -ராஜ்யம் அனுபவிப்பாய் –
இவர்கள் என்னாலே முன்னமே சுடப்பட்டார்கள்

த்ரோணம் ச பீஷ்மம் ச ஜயத்ரதம் ச–கர்ணம் ததாந்யாநபி யோதவீராந்.–மயா ஹதாம் ஸ்த்வம் ஜஹி மா வ்யதிஷ்டா-யுத்யஸ்வ ஜேதாஸி ரணே ஸபத்நாந்–৷৷11.34৷৷
முதல் அத்யாயம் கேள்விக்கு இங்கு பதில் -துரோணர் பீஷ்மர் பூஜிக்கத்த தக்கவர்கள் எப்படி கொல்வேன்
காரணர்கள் துரோணர் பீஷ்மர் என்னால் முன்னமே கொள்ளப் பட்டார்கள் -அதர்மம் இல்லை -விரோதிகள் -பயம் வேண்டாம் ஒரே சமாதானம் அநேகம் பதில்கள்
-அன்பு காட்ட வேண்டாம் -பயம் வேண்டாம் -தர்ம காரியமே -எழுந்து இருந்து யுத்தம் செய்வாய் -நன்றாக தூண்டி விட்டான்

ஸஞ்ஜய உவாச–ஏதச்ச்ருத்வா வசநம் கேஷவஸ்ய–கரிதாஞ்ஜலிர்வேபமாந கிரீடீ.-நமஸ்கரித்வா பூய ஏவாஹ கரிஷ்ணம் -ஸகத்கதம் பீதபீத ப்ரணம்ய—৷৷11.35৷৷
கேசவனுடைய இந்த மூன்று ஸ்லோகங்களை கேட்ட அர்ஜுனன் -கிரீடம் அணிந்த அர்ஜுனன் கீழே விழுந்து சேவித்தான் -கிரீடம் அணிந்த பலன் இப்பொழுது
தான் பெற்றான் -செவிக்காத பொழுது இது பாரம் தானே -பயந்த உள்ளத்துடன் வணங்கி -கை கூப்பி நடுங்கி -தொண்டை தழுதழுத்தது பேச தொடங்கினான் –

அர்ஜுந உவாச–
ஸ்தாநே ஹரிஷீகேஷ தவ ப்ரகீர்த்யா–ஜகத் ப்ரஹரிஷ்யத்யநுரஜ்யதே ச.–ரக்ஷாம் ஸி பீதாநி திஷோ த்ரவந்தி–ஸர்வே நமஸ்யந்தி ச ஸித்தஸங்கா—৷৷11.36৷৷
11-ஸ்லோகங்களால்– ஸ்தோத்ரம் பண்ணி கொண்டாடுகிறான் -அஞ்சலி பரம முத்திரை –தேவர்கள் சேவித்து ஈடுபட -ஸ்தானம் -உனக்கு ஒக்கும் ஏற்புடையது
-இந்திரியங்களை அடக்கி அருளுபவர் -ஜகத் -உள்ள தேவர்கள் கந்தர்வர்கள் -ப்ரஹரிஷ்யத்ய நுரஜ்யதே ச–ஆனந்தம் அடைந்து -அநுராகம் ஈடுபாடு
அனுகூல்ய சிந்தை உள்ளவர்கள் இவர்கள் / ராக்ஷஸர்கள் பயந்து திசைகள் எங்கும் ஓடுகிறார்கள் -/சித்தர்கள் சனகாதிகள் -கை கூப்பி வணங்குகிறார்கள் –

கஸ்மாச்ச தே ந நமேரந்மஹாத்மந்–கரீயஸே ப்ரஹ்மணோப்யாதிகர்த்ரே.—அநந்த தேவேஷ ஜகந்நிவாஸ–த்வமக்ஷரம் ஸதஸத்தத்பரம் யத்—৷৷11.37৷৷
மஹாத்மாவே -மிக பெரியவரே -நான்முகனை ஸ்ருஷ்டித்த ஆதியே -யார் தான் உன்னை சேவிக்க மாட்டான் என்று இருப்பார்கள் -பெருமையால் கைகள் தானே கூப்புமே
–கண்டவாற்றால் தனதே உலகு என்று நின்றான் -ஆதி ராஜ்யம் அதிகம் புவனானாம் -காண் தகு தோள் அண்ணல் தென் அத்தியூரர் –நான்முகனை நாராயணன் படைத்தான் –
அனந்த -தேவேச தேவர்களுக்கு நாயகன்-நியமிப்பவன் -ஜகத்தை வியாபித்து வாசஸ்தானமாக கொண்டவன் -அந்தர் பஹிஸ்த தத்சர்வம் —
-ஆகாசம் வியாபிக்கும் நியந்த்ருத்வம் இல்லை -இவன் நீக்கமற நிறைந்து இருந்தும் நியமித்தும் -ராஜா சிலரை நியமிக்கலாம் வியாபிக்க முடியாதே -/
அநந்த -கால தேச வஸ்து பரிச்சேத ரஹிதன் -தேவேஷ–நியந்த்ருத்வம் / ஜகந்நிவாஸ–வியாபகத்வம் -அக்ஷரம் -அழிவில்லாத பாத்த முக்த நித்ய ஜீவாத்மாக்கள்
-அனைவருக்கும் அந்தராத்மா -சத் அசத்–பிரக்ருதிகளுக்கும் அந்தராத்மா – அசத் -காரண ரூபம் பிரளய காலத்தில் பிரகிருதி-நாமம் ரூபங்கள் இல்லாமல்
-காரண அவஸ்தை / சத் -ஸ்ருஷ்டி காலத்தில் பிரகிருதி -கார்ய அவஸ்தை நாமம் ரூபங்கள் உண்டே -/அதை காட்டிலும் மேம்பட்ட முக்தர்களுக்கும் அந்தராத்மா –
இதம் ஏக மேவ அக்ர ஆஸீத் –தத் த்வம் அஸி-ஒன்பது தடவை சொல்லும் உபநிஷத் –

த்வமாதிதேவ புருஷ புராண—ஸ்த்வமஸ்ய விஷ்வஸ்ய பரம் நிதாநம்.–வேத்தாஸி வேத்யம் ச பரம் ச தாம–த்வயா ததம் விஷ்வமநந்தரூப—৷৷11.38৷৷
புராணம் பழையவன் -ஆதி தேவன் –நவோ நவோ ப வதி ஜாயமான-அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதன் –
இங்கு காணும் ஜகத்துக்கு மேம்பட்ட ஆதாரம் நீயே -நமஸ்காரங்கள் –
உன்னாலே வியாபிக்கப்பட்ட உலகம் -கணக்கில் அடங்காத உருவங்கள் -அறியப் படும் பொருளாயும் அறிபவனும் -அறிவும்– நீயே-வேதனம் -வேத்யா –அவனே அறிவும்
-உயர்ந்த பிராப்யம் பரமமான தாமம் -நீயே -எங்கும் வியாபித்து எல்லை அற்ற ரூபங்கள்
ஸ்வரூப வியாப்தி விக்ரஹ வியாப்தி இரண்டும் உண்டே -அங்குஷ்ட மாத்ர ஹ்ருதய கமலத்துக்குள் -மத்ய ஆத்மனி திஷ்டதி –

வாயுர்யமோக்நிர்வருண ஷஷாங்க–ப்ரஜாபதிஸ்த்வம் ப்ரபிதாமஹஷ்ச.–நமோ நமஸ்தேஸ்து ஸஹஸ்ரகரித்வ-புநஷ்ச பூயோபி நமோ நமஸ்தே—৷৷11.39৷৷
நீயே அக்னி வாயு வருணன்-சசாங்கன் சந்திரன் -பிரஜாபதி த்வம் –அவரே அவனும் அவனும் அவனும் -சாமானாதி கரண்யம் -சரீராத்மா நிபந்தனம்-
நினைத்ததை செய்யும் சரீரம் -சொன்னதை செய்பவன் வேலைக் காரன் -சேஷ பூதர்கள்-நீராய் நிலனாய் ஒரே வேற்றுமையில் சொல்லி கூப்பாடு —
நீராகி கேட்டவர்கள் நெஞ்சு அழிய நெடு விசும்பில் மாலுக்கு இருப்பு அறிய -பின்ன பிரவ்ருத்தி நிபந்தன சப்தானாம் /
தே அஸ்து நம வணக்கங்கள் உரித்தாகுக –ஆயிரம் தடவை -மீண்டும் மீண்டும் -முன் பக்கம் பின் பக்கம் நமஸ்காரம் –

நம புரஸ்தாதத பரிஷ்டதஸ்தே–நமோஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ.–அநந்தவீர்யாமிதவிக்ரமஸ்த்வம் -ஸர்வம் ஸமாப்நோஷி ததோஸி ஸர்வ—৷৷11.40৷৷
எல்லா காலத்திலும் எல்லா திசைகளிலும் நமஸ்காரம் -பயந்தும் பிரதிஜ்ஜை ஜய காலத்திலும் -வீர்யம் பராக்ரமம் -உன்னை ஒழிந்த மற்ற
அனைத்துக்கும் ஆத்மாவாக இருந்து -எல்லாவாக இருக்கிறாய் -எல்லா சொற்களும் உன்னையே சொல்லுமே -புகுந்து சத்தை அருளுகிறாய் –
புகழு நல் ஒருவன் என்கோ-பால் என்கோ –முத்து என்கோ -அமுதம் என்கோ – –கண்ணனை கூவுமாறு அறிய மாட்டேன் –

ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்தம் –ஹே கரிஷ்ண ஹே யாதவ ஹே ஸகேதி.–அஜாநதா மஹிமாநம் தவேதம் -மயா ப்ரமாதாத்ப்ரணயேந வாபி–৷৷11.41৷৷
அபராத ஷாமணம் இரண்டு ஸ்லோகங்களால் -பண்ணுகிறான் -தனிமையில் அவமானம் -கூட்டத்தில் பரிகாசம் செய்து உள்ளேன் -இப்படி பட்ட மஹிமை அறியாத
மயக்கத்தால் -நீண்ட நாள் பழக்கம் உரிமை -அன்பால் -விஸ்வரூபம் காட்டி அருளியதால் தானே மஹிமையை கண்டேன் -சஹா -என்று
அடக்கம் இல்லாமல் ஹே கிருஷ்ணனே யாதவன் -பிள்ளாய் -டே -இத்யாதி சொல்லி –

யச்சாவஹாஸார்தமஸத்கரிதோஸி–விஹாரஷய்யாஸநபோஜநேஷு.–ஏகோதவாப்யச்யுத தத்ஸமக்ஷம் -தத்க்ஷாமயே த்வாமஹமப்ரமேயம்—৷৷11.42৷৷
ஸத்காரம் -செய்யாமல் பெருமை குன்ற நடந்து -அவமானப் படுத்தி -இப்பொழுதே நீ கீழே சாரதி தன் கால் அவன் தோள்கள் மேல் -இந்த நிலையிலே
உபதேசம் -இதை புரிய வைக்க -11-அத்யாயங்கள் -கீதை முடிந்த பின்பும் இப்படியே உடகார்ந்து -இதே போலே நம் மனஸ் அஹங்காரம் பூயிஷ்டம் /
விகார-ஒய்வு எடுக்கும் பொழுது படுக்கை அமர்ந்து உண்ணும் காலத்தில் -நால்வரும் ஒரே படுக்கை -சஞ்சயனை உள்ளே விட்ட விருத்தாந்தம் –
தனிமையிலும் பலர் முன்னிலும் -அச்யுத ஆஸ்ரிதரை விடாமல் -என்னை நீ -வாக்குக்கும் மனசுக்கும் எட்டாத நீ -ஷாமணம் பண்ண வேன்டும் –
சீறி அருளாதே -அறியாத பிள்ளைகள் அன்பினால் உன் தன்னை சிறு பேர் அழைத்தோம் –வாசிகள் உண்டே இரண்டுக்கும் –
ஆண்டாள்-ஆயர் பாவனையில் -கோவிந்தா –இடையனே-சொல்லி கீழே நாராயணா -பரமன் உத்தமன் இத்யாதி -அவையே சிறு பேர் என்கிறாள் –

பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய—த்வமஸ்ய பூஜ்யஷ்ச குருர்கரீயாந்.—ந த்வத்ஸமோஸ்த்யப்யதிக குதோந்யோ–லோகத்ரயேப்யப்ரதிமப்ரபாவ—৷৷11.43৷৷
கத்ய த்ரயத்தில் -ஸ்ரீ ராமானுஜர் இத்தை கொள்வார் -மூன்று வேதங்கள் லோகங்கள் -ஒப்பு இல்லாத -சராசரங்கள் உடன் கூடிய லோகத்துக்கு தந்தை
பூஜிக்க தக்க -ஆச்சார்யர் தந்தை நீயே -தாயாய் –மற்றுமாய் முற்றுமாய் -கீழே மன்னிப்பு கேட்டு இதில் தந்தை -பண்ணின தப்பு எல்லாம் செய்து மன்னிப்பு
-பெற்ற தந்தைக்கு கடமை –குணங்களில் உனக்கு சமமானவன் இல்லை -வேறு ஒருத்தன் மேம்பட்டவனும் இல்லை -நிகரற்ற ஒப்பில்லா அப்பன் அன்றோ –
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் -தன் ஒப்பார் இல்லாத அப்பன் –

தஸ்மாத்ப்ரணம்ய ப்ரணிதாய காயம் –ப்ரஸாதயே த்வாமஹமீஷமீட்யம்.–பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யும் –ப்ரிய ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும்—৷৷11.44৷৷
அதனாலே -உடம்பை சுருக்கி கை ஏந்தி பிரார்த்திக்கிறேன் –நீயே ஸ்த்வயன் ஈசன் -அனுக்ரஹிப்பாய் -சரணாகத வத்சலன் -இருவர் லக்ஷணங்களையும் சொல்லி
பிதா புத்ரன் குற்றங்களை மன்னிப்பது போலே -நண்பனை போலவும் -பிரியம் உள்ளவர் போலவும்

அதரிஷ்டபூர்வம் ஹரிஷிதோஸ்மி தரிஷ்ட்வா–பயேந ச ப்ரவ்யதிதம் மநோ மே.—ததேவ மே தர்ஷய தேவ ரூபம் -ப்ரஸீத தேவேஷ ஜகந்நிவாஸ—৷৷11.45৷৷
தேவர்களுக்கும் காரணம் -ஜகத்துக்கு நிர்வாகன் -பார்க்கப் படாத உருவம் கண்டு-ஹர்ஷம் -பயந்தும் –
பழைய -கண்ணனாக -மயில் பீலி -தரித்து -அருளுவாய் -/ ஆதாரம் நீ பிரார்த்திப்பதை அருள வேன்டும் -அந்த ரூபம் எப்படிப் பட்டது அடுத்த ஸ்லோகம்

கிரீடிநம் கதிநம் சக்ரஹஸ்த–மிச்சாமி த்வாம் த்ரஷ்டுமஹம் ததைவ.–தேநைவ ரூபேண சதுர்புஜேந –ஸஹஸ்ரபாஹோ பவ விஷ்வமூர்தே—৷৷11.46৷৷
ஆயிரம் கைகள் -உலகம் திருமேனி -இப்பொழுது பார்க்கும் விஸ்வ ரூபம் வர்ணனை கொண்டு விளிக்கிறான் / கிரீடம் கதை -சக்கரம் -எல்லாம் ஏக வசனம் இங்கு
–தரித்து சேவை சாதித்து அருளுவாய் –விஸ்வ ரூபம் இல்லை -பழைய ரூபத்துடன் –சதுர்புஜம் -பழைய ரூபம் என்கிறான் -ஜாதோசி சங்க சக்ர கதா தர
-பிறந்த உடனே சதுர் புஜம் -தேவகி மறைத்து கொள் பிரார்த்திக்க வேண்டி இருந்ததே – அப்பூச்சி காட்டும் ஐதீகம் எம்பார்
-கையினார் சுரி சங்கு அனல் ஆழியினர் -பெரிய பெருமாளும் -காட்டி அருளினார்

ஸ்ரீ பகவாநுவாச
மயா ப்ரஸந்நேந தவார்ஜுநேதம் -ரூபம் பரம் தர்ஷிதமாத்மயோகாத்.–தேஜோமயம் விஷ்வமநந்தமாத்யம் –யந்மே த்வதந்யேந ந தரிஷ்டபூர்வம்—৷৷11.47৷৷
ஆச்வாஸப் படுத்துகிறான்-இது முதல் மூன்று ஸ்லோகங்களால் – -இத்தை யாருக்கும் காட்டின் இல்லை -ஸ்வாதந்தர்யம் அடியாக -அத்தை பிள்ளை -அன்பினால்
–தேஜஸ் நிரம்பி -வியாபித்து அளவுக்கு உட்படாமல் -சங்கல்ப சக்தியால் ஆனந்தம் அடைந்தவன் காட்டினேன் –

ந வேதயஜ்ஞாத்யயநைர்ந தாநை—ர்ந ச க்ரியாபிர்ந தபோபிருக்ரை–ஏவம் ரூப ஷக்ய அஹம் நரிலோகே-த்ரஷ்டும் த்வதந்யேந குருப்ரவீர—-৷৷11.48৷
எதனால் பார்க்க முடியாது என்று –அன்பினால் சங்கல்பத்தால் காட்டினேன் -தானத்தாலோ -அத்யயனத்தாலோ -யாகங்களாலோ ஹோமங்களாலோ தபசுக்கள்
-எதனாலும் பார்க்க முடியாதே -கௌரவ தலை சிறந்த வீரனே -உன்னை போன்ற பக்தி -ஸ்வயம் பிரயோஜனர் மட்டுமே பார்க்க முடியும்
உபநிஷத் -சொல்லுமே -தபஸ் தானம் மூலம் பார்க்கலாம் -அங்கும் பக்தி உள்ள வற்றாலே -காண முடியும்

மா தே வ்யதா மா ச விமூடபாவோ–தரிஷ்ட்வா ரூபம் கோரமீதரிங்மமேதம்.–வ்யபேதபீ ப்ரீதமநா புநஸ்த்வம் -ததேவ மே ரூபமிதம் ப்ரபஷ்ய–৷৷11.49৷৷
பழைய நால் தோள் அமுதை நன்றாக பார்ப்பாய் –துன்பம் கலக்கம் பயம் வேண்டாம் –ப்ரீதி அடைந்த மனசுதான் பார்ப்பாய் –

ஸஞ்ஜய உவாச–
இத்யர்ஜுநம் வாஸுதேவஸ்ததோக்த்வா–ஸ்வகம் ரூபம் தர்ஷயாமாஸ பூய–ஆஷ்வாஸயாமாஸ ச பீதமேநம் -பூத்வா புந ஸௌம்யவபுர்மஹாத்மா—৷৷11.50৷৷
பார்க்க அழகான திருமேனி உடன் சேவை சாதிக்க -பயம் போக்கடித்து -இயற்க்கை வடிவுடன் சேவை -மறுபடியும் -காட்சி -முன்பும் அதே வடிவு தானே –
ஆச்வாஸம் படும் படி -தோளை தட்டி –அழகிய மனசுக்கு ஆனந்தம் கொடுக்க வல்ல திருமேனி -மஹாத்மா -பொம்மை போலே வளர்ந்தும் சுருக்கியும்
-மஹாத்மா -ஸத்யஸங்கல்பன் -சுருக்குவாரை இல்லாமல் சுருக்கி பெருக்குவாரை இல்லாமல் பெருக்கி –லாவண்யம் ஸுந்த்ரயம் உடைய திருமேனி காட்டி அருளினான்

அர்ஜுந உவாச-
தரிஷ்ட்வேதம் மாநுஷம் ரூபம் தவஸௌம்யம் ஜநார்தந–இதாநீமஸ்மி ஸம் வரித்த ஸசேதா ப்ரகரிதிம் கத—৷৷11.51৷৷
அர்ஜுனன் நடுக்கம் தீர்ந்து இயற்க்கை நிலைக்கு வந்து -மனுஷ ரூபம் பார்த்து -ஸும்ய -அழகான கிருஷ்ண -அப்ராக்ருதமான திவ்ய ரூபம்
-சமுதாய அவயவ சோபை -புன மயிலே புற்று அரவு அல்குல் ராம கமல பத்ராஷா சர்வ சித்த அபஹாரம்
லாவண்யம் நம்பி -நாகை ஸுந்தர்ய ராஜ பெருமாள் -அச்சோ ஒருவர் அழகிய வா

ஸ்ரீ பகவாநுவாச-
ஸுதுர்தர்ஷமிதம் ரூபம் தரிஷ்டவாநஸி யந்மம–.தேவா அப்யஸ்ய ரூபஸ்ய நித்யம் தர்ஷநகாங்க்ஷிண–৷৷11.52৷৷
பக்தி விளைவிக்க -ஸூ பாஸ்ரய திரு மேனி -பார்க்க அறிய -தேவர்களும் காண முடியாமல் -நித்தியமாக பார்க்க ஆசை கொண்டு இருப்பார்கள்
-பிரமனும் உன்னை காண்பான் –வெள்கி நிற்பான் -யானைக்கு அருளை ஈந்த

நாஹம் வேதைர்ந தபஸா ந தாநேந ந சேஜ்யயா–.ஷக்ய ஏவம் விதோ த்ரஷ்டும் தரிஷ்டவாநஸி மாம் யதா—৷৷11.53৷৷
வேதத்தாலோ தபஸாலோ –யாகங்களாலும் முடியாதே -பக்தி ஒன்றை தவிர -அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் –
பக்தி இல்லாத வேதம் தபஸ் யாகம் தானம் மூலம் அடைய முடியாதே

பக்த்யா த்வநந்யயா ஷக்யமஹமேவஂவிதோர்ஜுந.–ஜ்ஞாதும் தரிஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரம் தப—৷৷11.54৷৷
பக்தி ஒன்றாலே முடியும் -எதிரிகளை தப்பிக்க செய்பவன் -பரந்தப -அறிய பார்க்க அடைய -உண்மையாக -இந்த உருவத்தை பார்க்க பக்தி ஒன்றே –
பர பக்தி பர ஞானம் பரம பக்தி ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள் –

மத்கர்மகரிந்மத்பரமோ மத்பக்த ஸங்கவர்ஜித–நிர்வைர ஸர்வபூதேஷு ய ஸ மாமேதி பாண்டவ—৷৷11.55৷৷
என்னையே அடைகிறான் -என்பனை குறித்து கைங்கர்யமாக கர்மங்கள் செய்து -என்னை உத்தேச்யமாக -என்னை விட்டு பிரிய முடியாமல்
-சர்வ பூதேஷூக்களுக்கு விரோதம் காட்டாமல் இருப்பவன் என்னை அடைகிறான் –

————————————————–

கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -9—ராஜ வித்யா ராஜ குஹ்யா யோகம் —

June 4, 2017

ஸ்ரீ ஆளவந்தார் -ஸ்ரீ கீதார்த்த சங்க க்ரஹ ஸ்லோகம் -13-
ஸ்வ மஹாத்ம்யம் -மனுஷ்யத்வே பரத்வஞ்ச -மஹாத்மானம் விசேஷ- நவமே யோகோ- பக்தி ரூப ப்ரக்ரிதிதா -13-

பக்தி யோகம் 7-அத்யாயம் -அருளிச் செய்து- இதில் நிகமிக்கிறான் -நான்கு விஷயங்கள் –
-1-ஸ்வ மஹாத்ம்யம் -மீண்டும் அருளிச் செய்து –9-10–/ -2-மனுஷ்யத்வே பரத்வம் -ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தவன் அன்றோ /
-3-அநந்ய பக்தர்களின் ஏற்றம் /-4-பக்தி ரூபம் -ஆக இந்த நான்கும் –
ஸூ யாதாத்ம்யம் -கீழே -7-அத்யாயம் -இங்கு மாஹாத்ம்யம் -ஸ்திதோஸ்மி-சொல்ல வில்லையே -அதனால் மேலும் –

—————–

ஸ்ரீ பகவான் உவாச —
இதம் து தே குஹ்ய தமம் பிரவக்ஷ்யாமி அநஸூயவே ஞானம் விஞ்ஞான ஸஹிதம் யஞ்ஞானத்வ மோக்ஷயே அஸூபாத் –9-1-
ஞான பக்தி அனுஷ்டான ரூபமான உபாசனம் மூலமே -அஸூபாத்–பிரதிபந்தகங்களை போக்கி அவனை அடையலாம் என்றவாறு –
அநசூயை-குணம் உனக்கு இருப்பதால் இந்த உயர்ந்த விஞ்ஞானம் உனக்கு அருளிச் செய்கிறேன் -இது ஒன்றே யோக்யதை –
கால் கண்ணன் தோள்களில் படும் படி இருந்தாலும் -வாத்சல்யம் -குணத்துக்கு எதிர்மறை – அநசூயை /
து -பிரஸித்தார்த்தம் -கர்ம ஞான யோகங்களை விட உயர்ந்த -குஹ்ய குஹ்ய தரம் -குஹ்ய தமம்–
சொன்னால் விரோதம் -கேள்மின் -காது கொடுத்தால் போதும் -ஸ்ரத்தை ஒன்றே -தடுக்காமல் இருந்தாலே போதுமே -கறவைகள் பின் சென்றே -அவை தடுக்காதே
பிரவக்ஷ்யாமி-திரௌபதி குழல் விரித்தது ஸஹிக்காமல் அன்றோ அனைத்தும் செய்கிறான் –கோவிந்தா -அழைத்த சொல்லுக்காக –
கௌரவம் மனசில் பட பண்ணி பண்ணி சொல்ல வேண்டுமே -குஹ்ய தமம் –விஞ்ஞான ஸஹிதம் -ஞானம் -அங்கியும் அங்கங்களும் சேர்ந்து —

ராஜ வித்யா ராஜ குஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம் ப்ரத்யக்ஷ அவாகமம் தர்ம்யம் ஸூஸூகம் கர்த்தும் அவ்யயம் –9-2-
தனி சிறப்பு பெற்ற வித்யை -ஸ்ரீ வித்யா ராஜகோபாலன் -32-சேவைகள் -பரம ரஹஸ்யம் -வெகு சிலருக்கே தெரியும் -ஆசை உடன் உனக்கு சொல்கிறேன்
புனிதம் -பாபங்களை போக்கும் -/பிரத்யக்ஷமாக காட்டும் -மேலே -11-அத்யாயம் -ஞானம் த்ரஷ்டும் இத்யாதி –பக்தி ஒன்றாலே அறிய முடியும்
புலன்களுக்கு -இல்லை சுத்தமான மனசாலே காணலாமே -/சஞ்சயனுக்கு காட்டி -அருளி –
சாஷாத்கார சமானாகாரம் -ஸூ ஆராதனம் -ஸூஸூகம்-போக்யம்-தன்னையே தந்து அருளும் கற்பகம் -ஆராவமுதன் –
அவ்யயம் -கொள்ளக் குறைவற்று இலங்கும் கோதில் கண்ணன் -அடியார்க்கு என் செய்வன் என்று இருத்தி –
தர்மயம்-தர்மம் கூட விட்டு பிரியாத -தர்மம் ஸநாதனம் -/அவ்யயம் அக்ஷயம்-நெடுமால் – -ருணம் –திரௌபதி –
பிராப்தி கிட்டினாலும் மறக்க முடியாத பக்தி -எட்டி உதைக்க வேண்டாத ஏணி -சாதனம் –அங்கும் பக்தியே –

அஸ்ரத்தான புருஷ தர்மஸ்யஸ்ய பரந்தப அப்ராப்ய மாம் நிவர்த்தந்தே ம்ருத்யு சம்சார வர்த்தமனி –9-3-
கீழே பக்தியை கொண்டாடி -பக்தியோகம் பெருமையை சொல்லி -இங்கு இழந்தவர்கள் -இகழ்கிறான்
ஸ்ரத்தை இல்லாமல்–உபாதேய த்யாஜ்ய பஞ்சாக்கினி வித்யை -ஞானம் இல்லாமல் -கர்மாக்களால் பீடிக்கப் பட்டு சம்சார சூழலில் சிக்கி உழல்கின்றார்களே –
புருஷா -ஜீவாத்மாக்கள் -புருஷார்த்தம் பிராத்திக்க வாய்ப்பு இருந்தும் இழந்து -என்னை அடையாமல் மாறி மாறி பிறந்து உழல்கிறார்கள்
பரந்தப -எதிரிகளை தபிக்கச் செய்பவன் -ஸ்ரத்தை இல்லாமல் இருப்பதை கொழுத்த பார்
மிருத்யு -கொடிய நகரம் இது -ஆத்ம நாசம் ஏற்படுத்துவதால் சம்சாரம் வெந்நரகம் தானே -இதுவரை முன்னுரை

மயா ததம் இதம் சர்வம் ஜகத் அவ்யக்த மூர்த்தின மத ஸ்தானி சர்வ பூதாநி நஸஹம் தேசவவஸ்தித–9-4-
கண்ணால் பார்க்கும் இந்த ஜகத்தில் – அனைத்துள்ளும் புறமும் வியாபித்து -சத்தை உண்டாக்கி நியமித்து –
உடல் மீசை உயிர் என -கரந்து எங்கும் பரந்துளன்-அவ்யக்தம் -மூர்த்தி உருவத்துடன் இல்லை கண்ணுக்கு தெரியாமல் அருவத்துடன் வியாபிக்கிறேன் -ஸ்வாமியானபடியால் –
வியாபித்து -தரித்து –அந்தர் பஹிஸ்த-வியாப்யம் நாராயணா –
நஸஹம் தேசவவஸ்தித-நான் அவற்றுள் இல்லை –இவை அவனை தாங்காதே -என்றவாறே -சங்கை விலக்கி -அவைகள் என்னிடம் இருக்கும்
நான் அவற்றுக்குள் இருந்தாலும் தாரணம் நானே –
ப்ரஹ்மாத்மகம் இல்லாத வஸ்துவே இல்லையே –நித்ய நைமித்திக கர்மாக்கள் -ஆராதானங்கள்- அந்தர்யாமியாய் உள்ள இவனுக்கே என்ற ஞானத்துடன் செய்ய வேண்டுமே –

நச மஸ்தானி பூதாநி பஸ்ய மே யோகம் ஐஸ்வர்யம் -பூத ப்ருத் நச பூதஸ்தோ மாமாத்மா பூத பாவநாத் –9-5-
எல்லாம் என்னை இருப்பிடமாக கொண்டு -தாரகம் அவனே -இந்த சக்திக்கு த்ருஷ்டாந்தமே இல்லையே –
உள்ளே இருந்தும் அவனே தாரகம் -தாங்கி கொண்டு –
சங்கல்ப சக்தியால் எல்லோரையும் தாங்கி/ எல்லோரையும் நியமித்து -எல்லா உள்ளும் புறமும் வியாபித்து -அகடிதகடநா சாமர்த்தியம்
-முற்றும் உண்ட கண்டம் கண்டீர் -ஆலிலை வளர்ந்த மாயன் –தாரணம் வெளி வியாப்தி நியமனம் உள்ளே வியாப்தி -இரண்டும் உண்டே
நச மஸ்தானி பூதாநி-நினைவாலே -சங்கல்ப சக்தியால் தங்குகிறான் -கண்ணுக்கு தெரியாமல் –
ஸ்ருஷ்டி -ஸ்திதி -சம்ஹாரம் -ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி -அனைத்தும் அவன் அதீனம் -வ்ருத்த விபூதிமான் -நல்குரவும் செல்வமும் -இத்யாதி –
யஸ்ய பிருதிவி நிவேத –பிருத்வி ந வேத –யஸ்ய ஆத்மா நிவேத—ஆத்மா ந வேத -இத்யாதி -அந்தர்யாமி ப்ராஹ்மணம்
-எங்கும் உள்ளே அவன் இருந்தும் அவை இவனை அறியாதே உழலுமே
யோகம் ஐஸ்வர்யம் -சங்கல்ப சக்தி என்றவாறு -இத்தை பார் என்கிறான் -மாமாத்மா பூத பாவநாத் -ஆத்மா -சங்கல்பம் என்றபடி –

யத் ஆகாச ஸ்திதோ நித்யம் வாயு ஸர்வத்ரகோ மகான் ததா சர்வானி பூதாநி மத ஸ்தானாதி உப தாரய –9-6-
மஹா வாயு ஆகாசத்தில் நித்தியமாக சஞ்சரிப்பது போலே -ஆகாசமும் வாயுவும் என்னாலே தாங்கப்பெற்று-அனைத்தும் என் அதீனம் என்பதை
-உபநிஷத்துக்களும் சொல்லும் -பர ப்ரஹ்மத்துக்கு பயந்தே நியதமாக சூர்யாதிகள் அனைத்தும் செயல்படுகின்றன -அனைத்தும் அவன் சங்கல்ப அதீனமே-
ஜடபாரதர் தான் பல்லக்கு தூக்க வில்லை என்றானே -காற்று ஆகாசத்தில் இருந்தாலும் தங்குவது அவனே -காற்று தங்குவது போலே தோன்றினாலும் –
யஸ்ய பிருத்வி சரீரம் –ந வேத -சரீரமாக இருந்தாலும் எதுவும் –அறியாதே –

சர்வ பூதாநி கௌந்தேய ப்ரக்ருதிம் யாந்தி மாமிகம் கல்ப ஷயே புனஸ்தானி கல்பதவ் விஸ்ருஜாமி அஹம் –9-7-
அனைத்தும் என் சரீரம் -கல்ப முடிவில் என்னிடமே லயம் -மூல பிரக்ருதியாகி -அடையும் -மீண்டும் கல்ப ஆரம்பத்தில் என்னாலே ஸ்ருஷ்டிக்கப்பட்டு நாம ரூபங்கள் பெறுகின்றன
நித்ய பிரளயம் /-நைமித்திக பிரளயம் –1000–சதுர் -யுகங்களுக்கு பின்பு நான்முகனுக்கு இரவு–பூ புவ சுவர் மூன்று லோகங்களும் லயம் /
பிராகிருத பிரளயம் -நான்முகனுக்கு 100-ப்ரஹ்ம வருஷம் கழித்து -/ஆத்யந்த்திக்க பிரளயம் -மோக்ஷம் -உண்டும் உமிழ்ந்து -இத்யாதி –
உத்பத்தி விநாசனங்களும் என் அதீனமே இதில் -கீழே பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் அவன் அதீனம் -குந்தீ புத்ரன் -தாய் சொல்வதை நம்புவது போலே சாஸ்திரம் சொல்வதை நம்பு –
சமஷ்டி ஸ்ருஷ்டி தானே செய்து வியஷ்ட்டி ஸ்ருஷ்டி நான்முகனுக்கு அந்தர்யாமியாய் இருந்து -கல்பம் -நான்முகனுக்கு ஆயூஸூ-

ப்ரக்ருதிம் ஸ்வம் அவஸ்தப்ய விஸ்ருஜமி புன புன பூத க்ரமம் இமாம் க்ருத்ஸ்னம் அவசம் ப்ரக்ருதிர் வஸத்–9-8–
சரீரம் பிரகிருதி எட்டு விதமாக பரிணாமம் -/பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் -/பூத க்ரமம் நான்கு யோனிகள் தேவர் மனுஷ்யர் ஸ்தாவர ஜங்கமங்கள் /
அனைத்தும் இங்கே பிரகிருதி வசத்தில்-குண வஸ்யம் – ஆழ்ந்து இருக்கும் -மீண்டும் மீண்டும் சோம்பாது ஸ்ருஷ்டித்து -பிரகிருதி-மஹான் -அஹங்காரம்
-பஞ்ச தன்மாத்திரைகள் -சப்த ரூபா ரஸ கந்த ஸ்பர்சங்கள் -இத்யாதி -எல்லாம் அவன் சங்கல்பத்தாலே ஸ்ருஷ்ட்டிக்கப் படுமே –

ந ச மாம் தானி கர்மானி நிபத்நந்தி தனஞ்சய உதாசீனவத் அசினம் அசக்தம் தேசு கர்மசு –9-9-
வியாபித்தாலும் வியாப்பிய கத தோஷம் தட்டாமல் -கர்மாக்கள் பந்திக்காதே -விஷம ஸ்ருஷ்டி விஷம சம்ஹாரம் இல்லை –
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரங்கள் அனைத்தும் -வைஷம்யம்-நைர்க்ருண்யம்-இல்லாமல் –உதாசீனனாக
-பக்ஷபாதம் இல்லாமல் -கர்மத்தின் அடிப்படையிலே செய்பவன் என்றவாறு –
தனஞ்சயன் -தனம் வென்றவன் -ஷத்ரியன் -நாடு பிடித்தால் குற்றம் வராதே அதே போலே இவன் ஸ்ருஷ்டிப்பதும் சம்ஹாரம் செய்வதும் –
விஷம ஸ்ருஷ்டிக்கு நான் காரணம் இல்லை -வைஷம்யம்-நைர்க்ருண்யம்-ஸாபேக்ஷத்வாத் -ஜீவாத்மா தன் கர்மாவை எதிர்பார்த்தே பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் -என்றவாறு /
விதைப்படியே தான் விளைச்சல் -பக்தி உழவன் -/ உதாசீனம் இதனாலே -பற்று அற்று இருக்கிறான் –

மயா அத்யக்ஸேனா ப்ரக்ருதி சுயதே ச சர அசரம் ஹேதுன் அநேந கௌந்தேய ஜகத் விபரிவர்த்ததே –9–10-
உதாசீனமாக இருந்தாய் என்றால் பிரக்ருதியே ஸ்ருஷ்ட்டிக்கலாம் -என்று சொல்லக் கூடாதோ -நாஸ்திக வாதம் -நான் தலைவனாக இருந்தே
பிரக்ருதியை பரிணாமம் செய்கிறேன் விதை தனக்கு தானே விளைச்சல் கூடாதே -அத்யக்ஸன் -தலைவன் -சங்கல்ப சக்தியால் பிரகிருதி பரிணாமம் –
கர்மாதீனமாகவே ஸ்ருஷ்ட்டி -அசேஷ சித் அசித் -அனைத்தும் அவன் அதீனம் -இது வரை தன் மஹாத்ம்யம்

அவஜாநந்தி மாம் மூடா மானுசிம் தநும் ஆஸ்ரிதம் பரம் பாவம் அஜா நந்தோ மம பூத மஹேஸ்வரம் –9–11–
பெரியவன் அவன் நம்மை உஜ்ஜீவிக்கவே சஜாதீயனாக -எளியவனாக தாள நின்று அவதரிக்கின்றான் என்று உணராமல் இழந்து போகிறார்களே –
எளியவனாக அந்த பரத்வமே என்று அறிபவர் நீர் ஒருவரே எம்பார் என்பர் எம்பெருமானார் –
பூத மஹேஸ்வரம் சொல்லியும் சரண் அடையவில்லையே -தனக்காக இட்ட சாரதி வேஷத்தை உணராமல் –

மோஹாஸ மோஹ கர்மனோ மோஹ ஞான விசேதச ராக்ஷஸிம் ஆசூரிம் கைவ ப்ரக்ருதிம் மோஹினிம் ஸ்ரித –9–12–
மோஹ வசத்தால் மோஹ கர்மங்களை செய்து மோஹ ஞானம் கொண்டு என்னை உள்ள படி அறியாமல் ராக்ஷஸ அசுர பிறவிகளில் உழன்று போகிறார்களே
பெருமாள் பானம் அமோகம் –இவர்கள் மோகித்தே உழல்கிறார்கள் -மோஹ ஆசை -மோக கர்மாக்கள் -மோஹ ஞானம் -மயக்கு துவக்கு -/
பிரகாரம் -சரீரம் என்று அறியாமல் அல் வழக்கில் உழன்று -ஆஸூர ராக்ஷஸ பாவம் –

மஹாத்மானஸ் து மாம் பார்த்த தைவீம் ப்ரக்ருதிம் ஆஸ்ரித -பஜந்தே அநந்ய மனசோ ஞாத்வ பூதாதிம் அவ்யயம் –9–13-
மகாத்மாக்கள் அநந்ய பக்தியால் என்னை உள்ளபடி அறிந்து என்னையே அடைகிறார்கள் –சாத்ய பக்தர்களை புகழ்கிறான் –
ஆழ்வார்கள் -ஆச்சார்யர்கள் போல்வார் -ஆதி -காரணம் -அழிவற்றவன் -எளியவனான என்னை மிக உயர்ந்தவனாக -கீழே மூடர்கள் மகேஸ்வரனை எளியவனாக கொள்கிறார்கள்

ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஷ்ச தரிடவ்ரதா-நமஸ்யந்தஷ்ச மாம் பக்த்யா நித்யயுக்தா உபாஸதே৷৷—9.14৷৷
கார் கலந்த மேனியான் –சீர் கலந்த சொல் கொண்டே பொழுது போக்குபவர்கள் -/திரு நாம சங்கீர்த்தனமே ஸ்வயம் பிரயோஜனமாக இருப்பவர்கள் -/
அடியார் குழாங்களை உடன் கூடி ப்ரீதி கார்ய கைங்கர்யமே பரம புருஷார்த்தம் என்று இருப்பவர்கள் –
திட சங்கல்பம் கொண்டு பிரயத்தனம் பண்ணி பக்தி -சாதனா பக்தர்கள் –பக்தியால் கீர்த்தனம் அர்ச்சனம் நமஸ்காரம் -மூன்றிலும் பக்தி –
நித்ய யுக்தர் -சேர்வதில் மநோ ரதம் உள்ளவர்வர்கள் என்றபடி -மகாத்மாக்கள் விரஹம் சகிக்க மாட்டானே அவனும் —
மால் கொள் சிந்தையராய் -மயல் மிகு பொழில் சூழ் மால் இரும் சோலை -திவ்ய தேசம் திருமால் -பக்தர்கள் அனைவரும் மயல் –

ஜ்ஞாநயஜ்ஞேந சாப்யந்யே யஜந்தோ மாமுபாஸதே.–ஏகத்வேந பரிதக்த்வேந பஹுதா விஷ்வதோமுகம்—৷৷9.15৷৷
கீழே விட மேல் படி -ஞானத்துடன் -வளர்த்து கொண்டு -இவனே ஓன்று பல என்ற ஞானம் பல படிகள் -உலகம் முழுவதும் பிரகாரம் என்று அறிந்தவர்கள் –
நீராய் நிலனாய் —அயனாய் –இத்யாதி பிரகாரங்கள் -ஒரே பிரகாரி என்று அறிந்து -/ சரீராத்மா பாவம் உணர்ந்து -/
சத்ய சங்கல்பன்-போன்ற ஸ்வபாவங்களை அறிபவர்கள்-சதேவ சோம்ய –ஏகமேவ அத்வதீயம் -சாந்தோக்யம் –
ஒன்றே என்னில் ஒன்றேயாம் பல என்னில் போலவே யாம் -காரண தசையில் ஓன்று -கார்ய தசையில் பல –
-மயில் தோகை த்ருஷ்டாந்தம் -ஸ்ருஷ்டிக்கும் சம்ஹாரத்துக்கும் -அப்ருதக் சித்தம் -அசேஷ சேதனங்களும் அசேதனங்களும்

அஹv க்ரதுரஹம் யஜ்ஞ ஸ்வதாஹமஹமௌஷதம்.-மம் த்ரோஹமஹமேவாஜ்யமஹமக்நிரஹம் ஹுதம்—-৷৷9.16৷৷
ப்ருதக்த்வேன -பலவாக உள்ளவற்றை விளக்குகிறான் அடுத்த நான்கு ஸ்லோகங்களில்
நானே க்ரது / ஜ்யோதிஷ்டோத்மாதி யாகங்கள் -/ ஸ்வதா / ஒளஷதம் -ஹவிர் பாவம் என்றவாறு / மந்த்ரம் / ஹோம த்ரவ்யங்கள் /ஆஹவனீய அக்னி -அனைத்தும் நானே
–ஆஹுதியும் நானே -ஏற்பானும் நானே -சாமாநாதி கரண்யம்–பின்ன பிரவ்ருத்தி நிமித்தானாம் சப்தானாம் ஏகஸ்மின் அர்த்தே வ்ருத்தி -விசேஷணங்கள் ஒன்றிலே
-விசேஷயம் விளக்க-மற்றவற்றுக்குள் வியாவர்த்திப்பதை காட்ட -நீராய் நிலனாய் தீயாய் –அயனாய் –சரீரமாக கொண்ட பர ப்ரஹ்மம் -சரீராத்மா பாவத்தால் -/
ஹுதம்-ஹோமமும் நானே –

பிதாஹமஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ–வேத்யம் பவித்ரமோv கார றக் ஸாம யஜுரேவ ச—৷৷9.17৷৷
நானே அனைத்துக்கும் அனைவருக்கும் பிதா மாதா பிதாமஹா –ஸ்ரஷ்டா-பவித்ரங்களுக்கும் பவித்ரன்–ஓங்காரமும் நானே –காரணமும் நானே என்றபடி
-அகார வாஸ்யன்–ரிக்காதி வேதங்களும் நானே –காரியங்களும் நானே என்றபடி சாம வேத கீதநாய சக்ரபாணி அன்றோ -வேத நான்காய் –
உற்றம் உடையாய் பெரியாய் -உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே -சொல்லி முடிக்க முடியாதே -பன்னலார் பயிலும் பரனே பவித்ரனே -உபய வேதாந்தம்
—வேதங்களால் அறியப் படுபவனும் நானே பிரத்யக்ஷம் அனுமானம் கொண்டு அறிய முடியாதே -சாஸ்த்ர யோநித்வாத் –
தாயாய் தந்தையாய் -மற்றும் முற்றுமாய் -பிரசவம் புருஷ பிரசவம் நம் சித்தாந்தம் -மாதா நாராயணா பிதா நாராயணா நிவாஸா நாராயணா கதி நாராயணா -/
பிரிய ஹிதங்கள் -/தாதா -தாங்கி -/முதலாம் திரு உருவம் மூன்று என்பர் -மூவருக்கும் முதல்வன் -இவனே நாராயணா ப்ரஹ்மா ஜாயதே -/

கதிர்பர்தா ப்ரபு ஸாக்ஷீ நிவாஸ ஷரணம் ஸுஹரித்.ப்ரபவ ப்ரலய ஸ்தாநம் நிதாநம் பீஜமவ்யயம்—-৷৷9.18৷৷
நானே பரமாகதி / தாரகன்-பர்த்தா / ஸ்வாமி / ஸாஷீ-ஸ்ரஷ்டா என்றபடி / நிவாஸ-இருப்பிடம் / அசரண்ய சரண்யன்-உபாய க்ருஹ ரக்ஷிதா சரணம்
-அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி தரும் ஒரே ரக்ஷகன் -இஷ்டங்கள் அநிஷ்டங்கள் மாறலாம் /ஸூஹ்ருத் -ஹிதம் நினைப்பவன் / அனைத்துக்கும் பீஜம் /
அனைத்தும் என்னிடமே லயம் அடையும்-நிதானம் -வைக்கும் இடமும் நானே /அவ்யயம் –பீஜம்– அழியாத காரணப் பொருள் நானே

தபாம்யஹமஹம் வர்ஷம் நிகரிஹ்ணாம்யுத்ஸரிஜாமி ச.—அமரிதம் சைவ மரித்யுஷ்ச ஸதஸச்சாஹமர்ஜுந—-৷৷9.19৷৷
அக்னி -ஸூ ரியாதி தேஜஸ் பதார்த்தங்களின் தேஜஸ் நானே / பொழியும் மழையும் நானே / சதேவ -ஸோமயே-அஹம் ஏவ -அத்விதீயம் /
ஸமஸ்த சேதன அசேஷனா விசிஷ்டம் -ஸூஷ்ம ரூபத்திலும் ஸ்தூல ரூபத்திலும் -காரண கார்ய அவஸ்தைகளிலும் –இவ்வாறு அறிபவர் ஞானிகள் –
திரு விண்ணகர் -விருத்த விபூதி ஐஸ்வர்யம் -காட்டி அருளி -பிரணய ரோஷம் தீர்த்து -ஆழ்வாரை சேர்த்துக் கொண்டானே -இங்கும் அம்ருதமும் மிருத்யுவும் நானே –
ஏகத்வேன -நானே ப்ருதக்த் வேன -இப்படி காட்டி -அறிந்தவனே உயர்ந்த சாதனா பக்தி நிஷ்டர் –

த்ரைவித்யா மாம் ஸோமபா பூதபாபா–யஜ்ஞைரிஷ்ட்வா ஸ்வர்கதிம் ப்ரார்தயந்தே–தே புண்யமாஸாத்ய ஸுரேந்த்ரலோக–மஷ்நந்தி திவ்யாந்திவி தேவபோகாந்—৷৷9.20৷৷
தே தம் புக்த்வா ஸ்வர்கலோகம் விஷாலம் –க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விஷந்தி.–ஏவ த்ரயீதர்மமநுப்ரபந்நா–கதாகதம் காமகாமா லபந்தே—৷৷9.21৷৷
இவை இரண்டாலும் தாழ்ந்த கதி -திருவடிகளில் சேர்வதை பார்த்தால் இவை அல்பங்கள் தானே -த்ருணீக்ருத விரிஞ்சாதி நிராங்குச விபூதியா ராமானுஜ பதா –
இந்திராதி தேவதைகளை குறித்து யாகாதிகள் செய்து ஸ்வர்க்காதி அல்ப பலன்களை அனுபவித்து மீள்கிறார்கள் –
வேதாந்தம் அறிந்தவர்களே என்னை உள்ளபடி அறிந்து மீளாத பரமபதம் அடைகிறார்கள் -கேவலம் கர்ம பாகங்களை அறிந்தவர்கள் என்னை இழக்கிறார்கள் -/
உபநிஷத் -அறிந்தால் தானே ப்ரஹ்ம விசாரம் –
என்னை யஜ்ஜம் முதலாக ஆராதித்து -இந்திரனுக்கு அந்தர்யாமி நானே தானே -பண்ணும் யாகமும் நானே -அறியாமல் -புண்ய லோகம் ஸ்வர்க்கம் என்றது
இந்த லோகம் ஒப்பு நோக்கி –விசாலம் -நீண்ட நாள் அனுபவிக்கலாம் அங்கு என்றபடி -திருவடிகளில் சேர்வதை பார்த்தால்-அதோ கதி அடைகிறார்கள்

அநந்யாஷ்சந்தயந்தோ மாம் யே ஜநா பர்யுபாஸதே.–தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்—৷৷9.22৷৷
அநந்ய சிந்தையராய் என்னையே உபாசித்து -என்னுடனே எப்பொழுதும் இருக்கும் மநோ ரதம் கொண்டவர்களுக்கு -வேறே பிரயோஜனம் இல்லாமல்
-இருப்பவர்களுக்கு நானே – -நித்ய அனுபவம் அருளுகிறேன் –
-யோகம் -கிடைக்காதது கிடைக்கப் பெற்று -க்ஷேமம் -கிடைத்தது விலகாமல் நித்யம் என்றவாறு –
ஜனா –பிறப்பை உடைய யாராகிலும் -என்றவாறு -அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன் -/பக்தி பண்ணாத அன்று பிறந்ததாகவே நினையார் அன்றோ –
சரீர ஜென்மம் -ஞான ஜென்மம் -நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுள்ளே -மற்று ஒன்றை காணார் –
பர்யுபாசித்தே -நன்றாக விபூதி ரூப குணங்கள் அனைத்தையும் அறிந்து நினைத்து -சாதன திசையிலும் இனியன் –
சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டு -இங்கு உள்ள கைங்கர்யமே அங்கும் -இங்கு அநித்தியம் -அங்கு நித்யம் -இடையூறு இல்லாமல் –

யேப்யந்யதேவதா பக்தா யஜந்தே ஷ்ரத்தயாந்விதா–தேபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதிபூர்வகம்—৷৷9.23৷৷
வேதாந்த ஞானம் இல்லாமல் இந்திராதி தேவதைகளை குறித்து யாகாதிகள் பண்ணினாலும் அந்த அல்ப பலன்களை அளிப்பவனும் நானே
இந்திராதி சப்தங்களும் என்னையே தானே குறிக்கும் -சரீர பூதர்களே அனைவரும் –யாதாம்யா ஞானம் இல்லாமல் சம்சாரத்திலே உழல்கிறார்கள் –
சர்வ தேவ நமஸ்காரம் கேசவம் கச்சதி –ஆகாசாத் பதிதம் தோயம் சமுத்திரம் போவது போலே -/ ஸ்வர்க்கம் ஆசைப் பட்டவனுக்கு
யோக க்ஷேமம் அளிக்க மாட்டான் -என்னை ஆசைப்பட்டு வந்தவனுக்கு இது -வேதாந்தத்தில் விதித்த படி உபாஸிக்க வில்லையே –

அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போக்தா ச ப்ரபுரேவ ச.–ந து மாமபிஜாநந்தி தத்த்வேநாதஷ்ச்யவந்தி தே—৷৷9.24৷৷
பலம் கொடுத்து நடத்துபவனும் அனுபவிப்பவனும் நானே -அக்னிக்கும் ஜீவாத்மாவுக்கும் ஹோமம் நெய் அனைத்துக்கும் அந்தராத்மா நானே
-ஞானம் உள்ளவனுக்கு யோக க்ஷேமம் -அளிக்கிறேன் –
பூர்வ பாகம் வேதம் மட்டும் அறிந்து என்னை முக்கிய பொருளாக அறியாமல் தாழ்ந்த கதிக்கு செல்கிறார்களே

யாந்தி தேவவ்ரதா தேவாந் பிதரிந்யாந்தி பிதரிவ்ரதா –பூதாநி யாந்தி பூதேஜ்யா யாந்தி மத்யாஜிநோபி மாம்—৷৷9.25৷৷
ஒரே கர்மம் எப்படி வேறே வேறே பலன்கள் என்கிற சங்கைக்கு பதில் -ஆசைப்பட்ட படியே அளிக்கிறேன்
தேவ /பித்ரு / கந்தர்வர் / -என்னை குறித்து யஜனம் பண்ணுகிறவர்களும் என்னை அடைகிறார்கள் -என்கிறான் இங்கு
திரும்பி வராத -இத்தையும் அவற்றுடன் சொன்னது ஆசைப்பட்ட படி அளிக்கிறேன் என்றபடி –
இவன் ஆட்டு வாணியன் இல்லையே -ஞானம் சாஸ்திரம் தானே அவதரித்து உபதேசம் பண்ணி -வாய்ப்புக்களை கொடுக்கிறான் –

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி.–ததஹஂ பக்த்யுபஹரிதமஷ்நாமி ப்ரயதாத்மந—৷৷9.26৷৷
பக்தி உடன் இலையோ-பூவோ -பழமோ-தண்ணீரோ –அநந்ய சிந்தை யுடன் -அவாப்த ஸமஸ்த காமன் -பூர்ணன் -சர்வேஸ்வரன் -பராத்பரன் என்று உணர்ந்து –
அன்புடன் உபகரித்து-சமர்ப்பித்து -ஸூ ஆராதன் –புரிவதும் புகை பூவே –அஸ்னாமி-உண்ணுவது -அனுபவிப்பது என்றபடி –
பரிசுத்தமான மனஸ் -கூனி சந்தனம் – மாலாகாரர் பூ -மடி தடவாத சோறு -அடிப்படையான அன்பே வேண்டுவது -/புருஷோத்தமன் -பூ தங்க முடியாமல் -ஐதீகம் –
திரு நாம சங்கீர்த்தனம் -கைங்கர்யம் -இவற்றிலே ஆழ்ந்து -உள்ள ஞானம் முதிர்ந்த பக்தன்-பக்தி ரூபா பன்ன ஞானவான் – என்னையே வந்து அடைகிறான் –
அவாப்த ஸமஸ்த காமன் –அவன் பெருமைக்கு தக்க கொடுக்க முடியாத அசக்தர்கள் -அன்பை காட்டவே சமர்ப்பணம் –
தூய பெரு நீர் யமுனை –தூயோமாய் வந்து தூ மலர் தூவித் தொழுது -வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க வேண்டுமே-

யத்கரோஷி யதஷ்நாஸி யஜ்ஜுஹோஷி ததாஸி யத்.–யத்தபஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மதர்பணம்—৷৷9.27৷৷
எதை செய்தாலும் -எத்தை செய்யாமல் விட்டாலும் –யாகம் தானம் தர்மாதிகளும் -அனைத்தும் அவனுக்கே அர்ப்பணித்து -அவனே செய்வித்தானாகவும்
போக்தாவாகவும் விஸ்வஸித்து-அசித்வத் பரதந்த்ரனாக தன்னை அனுசந்தித்து -தனக்கேயாக என்னைக் கொள்ளும் இதே -என்ற எண்ணம் வேண்டுமே –
அர்ப்பணமும் அனுசந்தானமும் –ஸ்வபாவம் -அர்த்தம் / சாஸ்திரம் மூன்றும் பிராப்தம் -ஸ்வயம் பிராப்தமான பக்தி வேண்டுமே –

ஷுபாஷுபபலைரேவ மோக்ஷ்யஸே கர்மபந்தநை–ஸந்யாஸயோகயுக்தாத்மா விமுக்தோ மாமுபைஷ்யஸி—-৷৷9.28৷৷
இப்படி உள்ள மனம் கொண்டு -சந்யாச யோகம் –சேஷ பூதன் -என்ற எண்ணத்துடன் –கர்ம பல கர்தவ்ய -த்ரிவித தியாகங்கள் உடன் செய்பவன் அவனை அடைகிறான் –
பக்திக்கு உண்டான பலன்களை அருளிச் செய்கிறான் -பாபமும் புண்ணியமும் தடங்கல் மோக்ஷத்துக்கு -சுபம் அசுபம் -புண்ய பாப பலன்கள் -பந்தம் விட்டு
சன்யாசம் -இங்கு சமர்ப்பணம் -/ யோகம் -அனுசந்தானம் -அடிமையாய்– சேஷ பூதனாய் –கைங்கர்ய ரூபமாக பண்ணுகிறோம் என்ற எண்ணம்
விமுக்தம் -அநிஷ்ட நிவ்ருத்தி / மாம் உபைஷ்யஸி இஷ்ட பிராப்தி /ஸ்தூல சரீரமும் தொலைந்து ஸூஷ்ம சரீரமும் தொலைந்து ஸ்ரீ வைகுண்டம்
-சாரூப்பிய மோக்ஷம் -அப்ராக்ருத திருமேனி பெற்று -ப்ரீதி காரித்த கைங்கர்யம் -சாயுஜ்யம்

ஸமோஹம் ஸர்வபூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய–யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம் —৷৷9.29৷৷
தேவ மனுஷ திரியக் ஜங்கமங்கள் சர்வருக்கும் சமம் -யாரையும் த்வேஷிக்காதவன் -யார் மேலும் அதிக பிரியம் கொள்ளாதவன் -திரு அனந்த புரம்-சாம்யம் காட்டி அருளி –
அன்பன் தன்னை அடைந்தவர்கட்க்கு எல்லாம் அன்பன் -ஆழ்வாருக்கு -நம்மாழ்வார் – -அனைவருக்கும் அன்பன் -விசேஷணம் இல்லாமல் -சமோஹம் –
அன்பு நம் மேல் பொழிய நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமே -மழையில் குடை பிடித்துக் கொண்டால் நனைய மாட்டோம்
-என்னை அடைந்த எவராகிலும் அதிக பிரியமாக உள்ளேன் -சரணாகதர்களுக்கு வேறே நியமம் இல்லையே –
விதி வாய்க்கின்றது காப்பார் யார் -ஈஸ்வர கிருபையே விதி -யாராலும் தடுக்க முடியாதே -ஆஸ்ரயிக்கும் காலத்தில் உயர்ந்தவன் என்று ப்ரீதி இல்லை
-தாழ்ந்தவர் என்று த்வேஷம் இல்லை /ஆஸ்ரயிக்கும் பக்தர்களுக்கும் சமோஹம் என்றபடி -வராதவர்களை பற்றி இல்லை –
தே -அவர்கள் மயி -என்னிடம் இருக்கிறார்கள் -நான் அவர்கள் இடம் உள்ளேன் -நான் உன்னை அன்றி இலேன் நீயும் என்னை அன்றி இல்லையே -அன்யோன்யம் உண்டே-

அபி சேத்ஸுதுராசாரோ பஜதே மாமநந்யபாக்.–ஸாதுரேவ ஸ மந்தவ்ய ஸம்யக்வ்யவஸிதோ ஹி ஸ—৷৷9.30৷৷
துராசாராராக இருந்தும் என்னை அடைந்து -அநந்ய பக்தனாக -இருப்பதே -கால ஷேபமாக கொண்டவன் -சாதுவாகவே கருதப் பட வேண்டியவன் –
சாது கோட்டியுள் கொள்ளப் படுவார்கள் –வலம் தங்கு சக்கரத் தண்ணலுக்கு ஆள் என்று உள் கலந்தால் -அவன் எனக்கு ஸ்வாமி –
மேம்பொருள் மேல் பாட்டுக்கள் –குக்கரில் பிறப்பரேலும்–/ எக்குற்றம் எப்பிறப்பு எவ்வியல்வு -அவையே நம்மை ஆள் கொள்ளுமே –
ஸம்யக்வ்யவஸிதோ – உறுதியாக கூடி இருப்பவன் -/ கர்ம ஞானம் கொண்டு பக்தி அடைவது நம் பிரயத்தனம் / அவனை சிந்தனை பண்ணி
அவன் அனுக்ரஹத்தால் பெற்றவர் இவர்கள் -இது முடியுமா கூடுமோ -பதில் அடுத்ததில் –

க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ஷஷ்வச்சாந்திம் நிகச்சதி.–கௌந்தேய ப்ரதிஜாநீஹி ந மே பக்த ப்ரணஷ்யதி—৷৷9.31৷৷
இப்படிப் பட்ட அநந்ய பக்தனுக்கு ரஜஸ் தமஸூக்கள் வாசனை ருசி உடன் கழன்று போகும் –
என்னையே நினைந்து பிரதி பந்தகங்கள் போக்கப் பெற்று என்னை அடைகிறான் –
ரஜஸ் தமஸ் ஒழித்து துராசாரம் போகும் -என்னை பற்றி நினைத்தவனுக்கு -கிரமத்தால் பக்தன் ஆவான்
இதை நீயே ப்ரதிஞ்ஜை பண்ணப் போகிறாய் -நான் ஏலா பொய்கள் உரைப்பான் என்பர் -நீ சொன்னால் நம்புவார்கள் -ஷத்ரியன் ராஜா அன்றோ –
அஷ்ட வித பக்தி -எனக்கு சமமாக நினைக்கத் தக்கவன் -மிலேச்சனாக இருந்தாலும் -கருட புராணம்- நின்னொடு ஓக்க -திருமாலை
மத் பக்த ஜன வாத்சல்யம் -பூஜா ஆமோதித்து ஆனந்தம் ஸ்வயம் பூஜா பண்ணி / மத் கதா ஸ்ரவணா ப்ரீதி /கொள்மின் கொடுமின் ஞானம் கொடுத்து பெறலாம் –

மாம் ஹி பார்த வ்யபாஷ்ரித்ய யேபி ஸ்யு பாபயோநய–ஸ்த்ரியோ வைஷ்யாஸ்ததா ஷூத்ராஸ்தேபி யாந்தி பராம்க திம்—-৷৷9.32৷৷
பெண்கள் வைசியர் சூத்திரர்கள் -யாராக இருந்தாலும்–வேதம் ஓத அதிகாரிகளாக இல்லா விடிலும் – என்னை சரண் அடைந்து பரமகதி பெறுகிறார்கள்–
உபரி சரவஸ் -பல ஸ்தல புராணங்களில் வருவார் -தேவர்களுக்கு பக்ஷபாதம் -தேர் அழுந்தி -/
ஸ்ருதி ஸ்ம்ருதி இவன் ஆணை மீறினால் துரோகிகள் ஆவார் /பிராயச்சைத்தமே யஜுவ்ர் உபாகர்மா -அத்யயயனம் உதசர்ஜனம் அகரண–நிறுத்தாமல் இருப்பதால் /
இவர்கள் அதிகாரிகளாக இல்லா விடிலும் சிரமம் இல்லாமல் என் திருவடி பெற்று உயர்ந்த கதி அடைகிறார்கள் -பாப யோனிகள் என்று மட்டம் தட்ட வேண்டாம் /

கிம் புநர்ப்ராஹ்மணா புண்யா பக்தா ராஜர்ஷயஸ்ததா.–அநித்யமஸுகம் லோகமிமம் ப்ராப்ய பஜஸ்வ மாம்—–৷৷9.33৷
ஸ்வயம் பிரயோஜனம் பக்தி முதல் பாதியில் -ஷத்ரியன் பண்ணி பண்ணி பழகியவன் என்பதால் இதில் இச்சை காட்ட வில்லை -அதனால் -சாதனா பக்தி அடுத்த பாதியில்
அநித்தியம் துக்க கரம் லோகத்தில் இருப்பதால் -சாதனா பக்தி செய்து என்னை அடை என்கிறான்

மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு.–மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண—৷৷9.34৷৷
பக்தி எப்படி என்று ஒரே ஸ்லோகத்தால் -ஆறு தடவை மத் மம -என்னுடைய நெஞ்சை தட்டி அருளிச் செய்கிறான் –அஹங்கரிப்பதே அவனுக்கு அழகு
-பரதந்த்ரமாக இருப்பதே நமக்கு ஸ்வரூபம்
தைலதாராவத் –என்னையே தியானித்து –அகில ஹேய ப்ரத்ய நீக்கம் -கல்யாண ஏக குணாத்மகன் -ஸத்யஸங்கல்பன்
-ஸமஸ்த த்ரிவித காரணத்தவன் -நிஷ் காரணன் -அத்புத காரணன் -பர ப்ரஹ்மம் -பரமாத்மா -புண்டரீகாக்ஷன் -முகில் வண்ணன்
-தேஜோ மயன் -ஆராவமுதன் -சதுர்புஜன் -நீண் முடியன் -மகர குண்டலத்தன் -வனமாலை -ஹார நூபுராதிகள் -தயை ஏக சிந்து –
அசரண்ய சரண்யன் –சர்வ சேஷி –அனவதிக அதிசய அசங்க்யேய -இத்யாதி -சேஷ சேஷி பாவம் அறிந்து –
அவன் உகப்புக்காகவே -அசித்வத் பரதந்த்ரனாய் –பரம பிராப்யம்-தாரகம் என்று அறிந்து -திருநாம சங்கீர்த்தனமே ஸ்வயம் –
பிரயோஜனமாக -கொண்டு-ப்ரீதியுடன் பக்தி செய்பவன் –மனசை பழக்கினவன் -என்னை அடைகிறான் –
மனசை பழக்க –திருவடிகளில் பிரார்த்தித்து தானே பெற வேன்டும் -அர்த்திகளுக்கு அருள தீஷிதை கொண்டு உள்ளான் -அவன் இடமே லயிக்கப் பண்ணி -\
மாம் -என்று தனது பெருமைகளை எல்லாம் காட்டி அருளுகிறார்

————————————————————–

கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –