Archive for the ‘Divya desams’ Category

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம் –1-25-

February 14, 2016

சிறப்புப் பாசுரம் –
ஆழ்வார் முன் பின்னவருக்கு மா மறை தந்தார் தமிழில்
வாழ்வார் மணவாளர் மாண்பவருள் –தாழ்வாரும்
எம் போலியர்க்கும் இரங்கி அரங்கக் கலம்ப
கம் போத நல்கவைத்தார் காண் –

போதம் நல்க -நல்லறிவைக் கொடுக்குமாறு
—————–
சொல் நோக்கும் பொருள் நோக்கும் தொடை நோக்கும் நடை நோக்கும் துறையின் நோக்கோடு
என்நோக்கும் காண இலக்கியம் ஆவது அன்றி
நல் நோக்கும் புத்தியும் பத்தியும் பெறுவர் முக்தி உண்டாம் நான் என் சொல்கேன்
பல் நோக்கு மணவாளர் பகர் அரங்கக் கலம்பகத்தைப் பாரீர் பாரீர் –

உரைத்த தமிழ் வரைந்த ஏட்டை பட்டாலே சூழ்ந்தாலும் மூவுலகும் பரிமளிக்கும்
பரிந்த ஏட்டைத் தொட்டாலும் கைமணக்கும் சொன்னாலும் வாய் மணக்கும்
துய்ய சேற்றில் நட்டாலும் தமிழ்ப் பயிராய் விளைந்திடுமே பாட்டினது நளினம் தானே –

————————————–

நீல மேகம் நெடும் பொற் குன்றத்துப் பால் விரிந்து அகலாது படிந்தது போலே
ஆயிரம் விரித்து எழு தலையுடை அரும் திறல்
பாயல் பள்ளிப் பலர் தொழுது ஏத்த
விரி திரைக் காவிரி வியன் பெருந்துருத்தி திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும் –
——-என் கண் காட்டு என்று என்னுளம் கவற்ற வந்தேன் -சிலப்பதிகாரம் -திருவரங்கம் பற்றி

—————————————–
காப்பு செய்யுள்கள்
ஆழ்வார்கள் பன்னிருவரின் வணக்கம்
வேதம் தொகுத்துத் தமிழ்ப் பாடல் செய்த விமலன் பொய்கை
பூதன் மயிலையர் கோன் புகழ்ச் சேரன் புத்தூரன் தொண்டர்
பாதம் தரும் துகள் மா மழிசைக்கு மன் பாணன் மங்கை
நாதன் மதுரகவி கோதை பாதங்கள் நண்ணுதுமே–

———–
நம்மாழ்வார் துதி
மறைப்பாற் கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து
துறைப்பால் படுத்தி தமிழ் ஆயிரத்தின் சுவை அமிர்தம்
கறைப் பாம்பு அணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த
நிறைப்பான் கழல் அன்றி சன்ம விடாய்க்கு நிழல் இல்லையே –

திரு நா வென் மந்தரத்தால் -பாட பேதம்-

அளத்தற்கு அரிய பரப்புடைமை -இன் சுவை யுடைமை -எம்பெருமான் உறைவிடம் ஆதலால் மறையை பாற் கடலாக உருவகம் செய்து அருளுகிறார்
திரு -வேறு ஒன்றுக்கு இல்லாத மேன்மை -திரு நா வீறுடைய பிரான் போலே
கறை-நஞ்சினை யுடைய – -புள்ளி என்றுமாம்
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் –

அம்பிலே சிலையை நாட்டி யமரர்க்கு யன்று யமுதம் ஈந்த
தம்பிரான் என்னத் தானும் தமிழிலே தாளை நாட்டிக்
கம்ப நாடுடைய வள்ளல் கவிச் சக்ரவர்த்தி பார் மேல்
அன்பு பா மாலையாலே நரர்க்கு இன்னமுதம் ஈந்தான் –

——————————————————–

எம்பெருமானார் துதி
பிடிக்கும் பர சமயக் குல வேழம் பிளிற வெகுண்டு
இடிக்கும் குரல் சிங்க ஏறு அனையான் எழு பாரும் உய்யப் படிக்கும்
புகழ் எம் இராமானுச முனி பல் குணமும்
வடிக்கும் கருத்தினார்க்கே திரு மா மணி மண்டபமே –

ஏழு பார் -ஏழு த்வீபங்களிலும் உள்ளோர் என்றுமாம்
அனைத்து உலகும் வாழப் பிறந்த எதிராசர் அன்றோ
எம்பெருமானார் திருவடிகளைத் தொழவே திவ்ய தேசங்கள் எல்லாம் திருவடி தொழுதானாகக் கடவன்
உடையவரை ஆராதித்து அமுது செய்யப் பண்ணவே எல்லா திவ்ய தேசங்களில் உள்ள எம்பெருமான்களையும் ஆராதித்து அமுது செய்யப் பண்ணினாக கடவன்
கர்மமும் உபாயம் அன்று -ஞானமும் உபாயம் அன்று -பக்தியும் உபாயம் அன்று -பிரபத்தியும் உபாயம் அன்று -எம்பெருமானார் திருவடிகளே உபாய உபேயம்
எம்பெருமானாரைப் பற்றுகையே பிரபத்தி
ராமானுஜன் என்கிற சதுர அஷரியே திரு மந்த்ரம்
அவர் திருவடிகளிலே பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம்
இதுவே நிச்சிதார்த்தமான சித்தாந்தம் –

சாருவாக மத நீறு செய்து சமணர் செடிக் கனல் கொளுத்தியே சாக்கியக் கடலை வற்றுவித்து
மிக சாங்கிய கிரி முறித்திட மாறு செய்திடு கணாத வாதியர்கள் வாய் தகர்த்தற
மிகுத்து மேல் வந்த பாசுபதர் சிந்தியோடும் வகை வாது செய்த எதிராசனார் கூறுமா குருமத்தோடு ஓங்கிய குமாரிலன்
மதமவற்றின் மேல் கொடிய தர்க்க சரம் விட்ட பின் குறுகி மாய வாதியரை வென்றிட
மீறி வாதில் வரு பாற்கரன் மத விலக்கடிக் கொடி எறிந்து போய் மிக்க யாதவ மதத்தை பெரு வீரர் நாளும் மிக வாழியே

—————————————————————————————————-

பட்டர் துதி
வான் இட்ட கீர்த்தி வளர் கூரத் தாழ்வான் மகிழ வந்த
தேன் இட்ட தார் நம் பெருமாள் குமாரர் சிவனை அயன்
தான் இட்ட சாபம் துடைத்து ஆள் அரங்கர் சங்கு ஆழி புயம்
நான் இட்டான் என்று அருள் பட்டர் பொற்றாள் கதி நந்தமக்கே

வான் இட்ட-தேவ லோகத்திலும் பரவிய
நான் இட்டான் என்று-சங்கு சக்கர லாஞ்சனை அடியேனுக்கு பிரசாதித்து அருளி பொருள் அல்லாத என்னை பொருளாக்கி அடிமை கொண்டாய்
நான் இட்டன் -அடியேன் உமக்கு இஷ்டன் என்றுமாம்

————————–

நூல் –
சீர் பூத்த செழும் கமலத் திருத் தவிசில் வீற்று இருக்கும்
நீர் பூத்த திரு மகளும் நில மகளும் அடி வருட
சிறைப்பறவை புறம் காப்ப சேனையர் கோன் பணி கேட்ப
நறைப் பாடலைத் துழாய் மார்பில் நாயிறு போல் மணி விளங்க
அரிய தானவர்க் கடிந்த ஐம்படையும் புடை தயங்க
கரிய மால் வரை முளரிக்காடு என்று கிடந்தாங்கு
பாயிர நான் மறை பரவ பாற் கடலில் பருமணிச் சூட்டு
ஆயிர வாய்ப் பாம்பு அணை மேல் அறி துயிலின் இனிது அமர்ந்தோய் –

கோலார்ந்த நெடும் சார்ங்கம் கூனல் சங்கம் கொலை யாழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள்
காலார்ந்த கதிக் கருடன் என்னும் வென்றிக் கடும் பறவை இவை யனைத்தும் புறம் சூழ் காப்ப -பெரியார் பாசுரம் –

——————————
மண்ணகம் துயர் நீங்க வானகம் தொழுது ஏத்த
கண் அகன் சோணாட்டுக் காவிரி வாய்ப் புளினத்து
பம்புகதிர் விசும்பு இரவி பசும் புரவி வழி விலங்கு
செம்பொன் மதில் ஏழ் உடுத்த திரு அரங்கப் பெரும் கோயில்
ஆணிப் பொன் தகடு உறிஞ்சும் அணிக்கதவ நீர் வாயில்
மாணிக்க வெயில் பரப்பும் வயிர மணி விமானத்துள்
மின் இலங்கு தொடி வலய வியன் வலக்கை கீழ் கொடுத்து
தென் இலங்கைத் திசை நோக்கி திரு நயனம் துயில்வோய் கேள் –

கண் அகன் சோணாட்டுக் -இடம் அகன்ற சோழ நாட்டிலே
காவிரி வாய்ப் புளினத்து -காவிரியின் மணல் திட்டினிலே
வியன் வலக்கை -முழம் தாள் அளவும் நீண்ட வலக்கை

மன்னுடைய விபீடணற்காய் மதிள் இலங்கை திசை நோக்கி மலர்க்கண் வைத்த என்னுடைய திரு அரங்கர்க்கு –
வன் பெருகு வானகம் உய்ய வமரர் உய்ய மன உய்ய மன உலகின் மனிசர் உய்ய
துன்பமிகு துயர் அகல வயர்வு ஒன்றில்லா சுகம் வளர அகம் மகிழும் தொண்டர் வாழ
வன்பொடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் –
குடதிசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி வட திசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கி –

—————————————
1-தேவராய் தேவர்க்கும் தெரியாத ஒளி உருவாய்
மூவராய் மூவர்க்குள் முதல்வனாய் நின்றோய் நீ –

முதலாவார் மூவரே யம்மூவருள்ளும் முதலாவான் மூரி நீர் வண்ணன்
முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர்
ஆதிப் பிரமனும் நீ யாதிப் பரமனும் நீ யோதியுறு பொருளுக்கு அப்பால் உண்டாயினும் நீ –
சோதிச் சுடர்ப் பிழம்பு நீ என்று சொல்லுகின்ற வேத முறை செய்தால் வெள்காரோ வேறுள்ளார்-கம்பர்
—————–
2-போற்றுவார் போற்றுவது உன் புகழ்ப் பொருளே ஆதலினால்
வேற்று வாசகம் அடியேன் விளம்புமாறு அறியேனால்-

ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வவையும் சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனம் துழாய் முடியினாய் பூவின் மேல் மாது வாழ் மார்பினாய் என் சொல்லி யான் வாழ்த்துவனே -திருவாய் மொழி

———————————
3-பணித் தடங்காது இமையவர்க்கும் பங்கயத்தோன் முதலோர்க்கும்
பணித்து அடங்காப் புகழ் அடியேன் பணித்து அடங்கற் பாலதோ

பணி தடம் காது-பாம்பைக் குழையாக அணிந்த பெரிய காதுகளை உடைய -நாகாபரணன்
பங்கயத்தோன் -பிரமன் -திரு உந்தித் தாமரையில் தோன்றினவன்-என்றவாறு
பணித்து அடங்கா -சொல்லி முடியாத

ஆராதனம் செய்து கண்டனின் கீர்த்தி யறைவன் றிரு ஆராதனம் செய்வன் வேதா என்றால் அடியேன் புகழ்கைக்கு யார் -திருவரங்கத்து அந்தாதி

————————————
4- யாம் கடவுள் என்று இருக்கும் எவ்வுலகில் கடவுளர்க்கும்
ஆம் கடவுள் நீ என்றால் அஃது உனக்கு வியப்பு ஆமோ —

நாயகராய்த் திரியும் சில தேவர் -திரு வேம்கடத்து அந்தாதி
கடவுள் -எல்லாவற்றையும் கடந்து இருப்பவன் -தொழில் ஆகு பெயர்

——————————-
5-அனைத்துலகும் அனைத்துயிரும் அமைத்து அளித்து துடைப்பது நீ
நினைத்த விளையாட்டு என்றால் நின் பெருமைக்கு அளவு ஆமோ

உலகம் ஆவையும் தாமுள வாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டு உடையார் -கம்பர்
——————————————-
6-கருதரிய உயிர்க்கு உயிராய்க் கலந்து -கரந்து- எங்கும் உறையும்
ஒரு தனி நாயகம் என்றால் உன் புகழ்க்கு வரம்பு ஆமோ

ஆத்மாக்களும் அநந்தம் -என்பதால் கருதரிய உயிர்
கலந்து கரந்து -உள்ளும் புறமும் வியாபித்து
எள்ளும் எண்ணெயும் போல் நீங்காது உலகத்து உயிராகி நியாமகனாய் -திருவரங்கத்து மாலை
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை படர் பொருள் முழுவதுமாய் யவை யவை தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன்
பரந்த அண்டம் இது என நில விசும்பு எழி வறக் கறந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் -நம்மாழ்வார் –

——————————————————-
1-உரு என அரு என உளன் என இலன் என
அரு மறை இறுதியும் அறிவு அரு நிலைமையை –

இலனது வுடையனது என நினைவு அரியவன் நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
உளன் எனில் உளன் இவ்வுருவம் அவ்வுருவுகள் இலன் எனில் இலன் அவ்வருவும் இவ்வருவுகள்
-உளன் என இலன் என இவை குணம் உடைமையின் உளன் இரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே-

————————————————–

2-இவர் இவர் இறையவர் என மன உறுதியொடு
அவர் அவர் தோழா அரு சமயமும் அருளினை —

வணங்கும் துறைகள் பல பலவாக்கி மதி விகற்பால் பிணங்கும் சமயம் பல பலவாக்கி யாவை யாவை தோறும்
அணங்கும் பல பலவாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
அறு சமயம் -வைஷ்ணவம் -சைவம் -சாக்தம் -சௌரம்-காணபதம் -கௌமாரம் –
கபில மதம் -கணாத மதம் -பதஞ்சலி மதம் -அஷ பாத மதம் -வியாச மதம் -ஜைமினி மதம்
பௌத்தம்-ஜைனம் -பைரவம் -காளாமுகம் -லோகாயதம் -சூனிய வாதம்

——————–
3-கடு வளி கனல் புனல் ககனமொடு அகலிடம்
உடுபதி கதிரவன் உருவமும் அருளினை –

கடு வளி -கடிய காற்றும் -கடுமை -விரைவு
உடுபதி -நஷத்ரங்களுக்கு தலைவன் சந்தரன்
உருவம் -இயமானன்
பாஞ்ச பூதிகமான அண்டங்களைப் படைத்து அவற்றுக்கு ஒளியைத் தரும் சந்திர சூரியர்களை உண்டாக்கி வைத்தாய் என்றுமாம்
அஷ்ட மூர்த்திகள் இவை
நில நீர் நெருப்பு உயிர் நீள் விசும்பு நிலாப் பகலோன் புலனாய ஐந்தினோடு எண் வகையாய் புணர்ந்து நின்றான் -திருவாசகம்-

—————————————————-
4-கடி மலர் அடி இணை கருதினர் பெறுகென
அடி நடு முடிவு அற அருள்பர கதியினை –

கடி மலர் -வாசனை யுடைய தாமரை
அடி நடு முடிவு அற -முதல் இடை கடை இல்லாமல் எப்பொழுதும் –
உத்தமர் மத்யமர் அதமர் என்றுமாம் -பிறப்பு வளர்ப்பு இறப்பு இல்லாமல் என்றுமாம்
பரகதி -பரம பதம் –

——————————————————————-
1- ஒரு நாலு முகத்தவனோடு உலகு ஈன்றாய் என்பர் அது உன்
திரு நாபி மலர்ந்தது அல்லால் திரு வுளத்தில் உணராயால் –

அநாயாசேன சிருஷ்டி செய்து அருளினாய் என்கிறார்
பந்திக் கமலத் தடம் சூழ் அரங்கர் படைப்பு அழிப்பு சிந்தித்திடுவதும் இல்லை கண்டீர்
அத்திசை முகனோடு உந்திக் கமலம் விரிந்தால் விரியு முகக்கடையின் முந்திக் குவியிலுடனே குவியும் இம்மூதண்டமே–திரு வரங்கத்து மாலை –

————————-
2-மேரு கிரி உடல் அவுணன் மிடல் கெடுத்தாய் என்பர் அது உன்
கூர் உகிரே அறிந்தது அல்லால் கோவே நீ அறியாயால் –

மிடல் -தேக பலம் -வர பலம் முதலியன
அவுணன் -இரணியாசுரன் –

————————————-

3-பன்றியாய் படி எடுத்த பாழியாய் என்பர் அது
வென்றி ஆர் உனது எயிற்றில் மென் துகள் போன்று இருந்ததால்

பாழியாய்-வலிமை யுடையாய்
ஆருக்கி வரை யளவிடலான் தென்னரங்கர் இந்தப் பாருக்கு அரந்தை தவிர்பதற்காக பழிப்பில் பெரும்
சீருற்ற செங்கண் கரும் பன்றியாகி திருக் குளம்பின் மேரு கண கணமா தலை நாளில் வினோதிப்பரே-திருவரங்கத்து மாலை –

————————————————————————-
4-அண்டம் எலாம் உண்மை என்பர் அறியாதார் ஆங்கு அவை நீ
உண்டருளும் காலத்து ஒரு துற்றுக்கு ஆற்றாவால் –

விராட் ஸ்வரூபி உனக்கு இது ஒரு புகழ்ச்சியோ என்றவாறு –

———————————————————
1-நஞ்சமும் அமுதமும் நரகும் வீடுமாய்
வஞ்சமும் ஞானமும் மறப்பும் ஆயினை

விருத்த விபூதியன் அன்றோ
விடமும் அமுதமுமாய் -நரகும் ச்வர்க்கமுமாய் -ஞானமும் மூடமுமாய் -நம்மாழ்வார் –

———————————————-
2- இருவினைப் பகுதியும் இன்ப துன்பமும்
கருணையும் வெகுளியும் கருத்தும் ஆயினை

புண்ணியம் பாவம் என்று இவையாய்–கண்ட வின்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய் தண்டமும் தண்மையும் -நம்மாழ்வார் –

——————————————————–
1-அலை கடல் வயிறு கலக்கினை
கூர்மாவதாரத்தில் ஷீராப்தி மதன காலத்திலும் -ஸ்ரீ ராமாவதாரத்தில் வருணனை வழி வேண்டிய பொழுதும்
2-அவுணரை மதுகை யடக்கினை
மதுகை யடக்கினை -வலிமை கெடச் செய்தாய்
3-மலை கட களிறு வதைத்தனை
குவலயாபீட வதம்
4-மலை தலை கவிழ எடுத்தனை
கோவர்த்தன உத்தாரணம்
மதுசூதனன் எடுத்து மறித்த மலை –
செந்தாமரைக் கை விரல் ஐந்தினையும் கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாக கொடுத்துக் கவித்தமலை –

————————————–
1-மண்ணை விண்டனை
2- வெண்ணெய் உண்டனை
3- மருது இடந்தனி
4-எருது அடர்ந்தனை
5-உள் நிறைந்தனை
அந்தர்யாமித்வ வைபவம்
6-எண் இறந்தனை
எண்ணத்தையும் கடந்து –மனத்தை கூறினது மொழி மெய்களுக்கும் உப லஷணம்
7-ஒருமை ஆயினை
அத்விதீயன் -ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்
8-பெருமை மேயினை-

—————————————————

என வாங்கு
1-மலர்தலை உலகத்து புலமை சான்ற
பதின்மரும் பணித்த பாடல் ஒதையொடு
முதுமறை கறங்க முரசம் ஆர்ப்பு
வலம்புரி பிளிரும் பொலம் புரி கோயில்
ஆழி அம் செல்வ ஆதி அம் பரம
வாழி வாழி மாயோய் வாழி
நெடியோய் வாழி நின் மாட்டு ஒன்றே
அடியேன் வேண்டுவது அது நீ மறுக்கேல்
பூவரும் அயன்முதல் யாவரும் போற்ற
மூவுலகு அளந்த நின் சேவடி வாழ்த்தித்
தொழுத கைத் தொண்டர் தம் தொண்டருள் சேர்க்காது
எழுவகைத் தோற்றத்து இன்னாப் பிறப்பில்
என்பு ஒழி யாக்கையுள் சேர்ப்பினும் அவர் பால்
அன்பு ஒழியாமை அருண் மதி எனக்கே –1-

மலர்தலை உலகத்து -பரந்த இடத்தை யுடைய நில வுலகத்தில்
ஒதையொடு-கோஷத்துடன்
முதுமறை கறங்க – வேதங்களும் உத்கோஷிக்க
பொலம் புரி கோயில் -பொன்னால் ஆகிய திருவரங்கத்தில்
எழுவகைத் தோற்றம் -தேவர் -மனிதர் -புல் -விலங்கு -ஊர்வன -நீர் வாழ்வான -தாவரம் –
அடியவர் மீது அன்பு ஒழியாதபடி மதியை அருள்வாய் என்றபடி

————————————————–

2-எனக்கே திருவரங்கனே பிரான் எம்மான்
தனக்கே அடிமை தமியேன் புனக்கேழ்
மருத்துளவோன் மேலன்றி மற்றொருவர் மேல் என்
கருத்துளவோ ஆராயுங்கால் –2-

புனக்கேழ் மருத்துளவோன் -புனம் கேழ் மரு துளவோன் மேல் –
வனத்தில் உள்ள ஒளியையும் வாசனையையும் உடைய திருத் துழாய் மாலையை உடைய எம்பெருமான் மேல்
ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் உணர்ந்து தேவதாந்திர பஜனம் தவிர்ந்தேன் என்கிறார்

——————————————————————-

3-கால் ஆயிரம் முடி ஆயிரம் ஆயிரம் கை பரப்பி
மேல் ஆயிரம் தலை நாகம் கவிப்ப விண் பூத்த கஞ்சம்
போல் ஆயிரம் கண் வளரும் பிரான் பொன்னரங்கன் என்றே
மாலாய் இரங்க வல்லார்க்கு எய்தலாம் திரு வைகுந்தமே –3-

விண் பூத்த கஞ்சம் போலே -ஆகாசத்தே மலர்ந்த செந்தாமரை போலே
இரங்க வல்லார்க்கு-நெஞ்சு உருக வல்லார்க்கு
அபரிமித அத்புத மகா ஞானம் மகா சக்தி யுடையவன் -திவ்யாத்மா ஸ்வரூபம் சொல்லியபடி

————————————————————

4- வை கலந்த மூவிலை மேல் ஈசற்கும் வாசவற்கும் வாசப் பூ மேல்
மெய் கலந்த நால் வேத விரிஞ்சனுக்கும் மேலா வீற்று இருப்பர் மாதோ
பை கலந்த பாம்பணை மேல் திருவரங்கப் பெரு நகருள் பள்ளி கொள்ளும்
கை கலந்த நேமியான் திரு நாமத்து ஒரு நாமம் கற்றார் தாமே –4-

வை கலந்த -கூர்மை பொருந்திய
மூவிலை -மூன்று இலை வடிவமான தலையை யுடைய
வேல் ஈசற்கும்-சூலாயுதத்தை யுடைய பரம சிவனுக்கும்
வாசவற்கும் -தேவேந்த்ரனுக்கும்
வாசப் பூ மேல்-வாசனை யுடைய தாமரை மலரில் தோன்றிய
மெய் கலந்த நால் வேதம் -உண்மை பொருந்திய நான்கு வேதங்கள் -சிறந்த பிரமாணம்
கை கலந்த ஆழியான் -நம்மாழ்வார்

—————————————————————

5- கற்றார் எனினும் பதினாலு உலகும் கண்டார் எனினும் தண்டாமிகு பற்று
அற்றார் எனினும் திருமால் அடியார் அல்லாதவர் வீடில்லாதவரே
பொற்றாமரையாள் கணவன் துயிலும் பொற் கோயிலையே புகழ்வார் பணிவார்
மாற்றார் எனினும் பெற்றார் அவரே வானோர் திரு மா மணி மண்டபமே –5-

தண்டாமிகு பற்று அற்றார் எனினும்-நீங்குதல் அரிய மிகுந்த இருவகைப் பற்றுக்களும் நீங்கியவர்களே யாயினும்
மிதுனமே பிராப்யம் –

———————————-
6-மண் தலமும் விண் தலமும் நின் வட குன்றமும் வளைந்த மலையும் கடலும் மூ
தண்டமும் அகண்டமும் அயின்றவர் துயின்றருள் அரும்பதி விரும்பி வினவின்
கொண்டல் குமுறும் குடகு இழிந்து மதகு உந்தி அகில் கொண்டு நுரை மண்டி வருநீர்
தெண் திரை தொறும் தரளமும் கனகமும் சிதறு தென் திரு அரங்க நகரே –6-

மண் தலமும் விண் தலமும் நின் வட குன்றமும் வளைந்த மலையும் கடலும்
மண் உலகத்தையும் விண் உலகத்தையும் மண் உலகத்தின் இடையே நின்ற மேரு மலையையும் -அதனைச் சூழ்ந்து நின்ற மற்றை மலைகளையும்
பூமியை கோட்டை போலே சூழ்ந்து நின்ற சக்கரவாளி கிரி என்றுமாம்
கடல்களையும் -பெரும் புறக் கடல்
மூ தண்டமும்
முது அண்டமும்
இவை எல்லாம் தன்னுள் அடக்கிய பழைய அண்டங்களையும்
அகண்டமும்
அவற்றில் உள்ள சராசரங்கள் எல்லாவற்றையும்
அயின்றவர்
பிரளய காலத்தில் அமுது செய்து அருளிய எம்பெருமான்
துயின்றருள் அரும்பதி
அடைதற்கு அரிய திவ்ய தேசம்
விரும்பி வினவின்
கொண்டல் குமுறும் குடகு இழிந்து மதகு உந்தி அகில் கொண்டு நுரை மண்டி வருநீர் தெண் திரை தொறும்
தரளமும்
முத்துக்களையும்
கனகமும்
பொன்னையும்
சிதறு தென் திரு அரங்க நகரே –

——————————————————-
7-நகு கதிர் வழங்கு தகடு படு செம்பொன் நவ மணி குயின்ற தொடி அணி அணிந்து
ககனவில் இடு நீல வெற்பு ஒத்து இருந்தன -நறிய புது மன்றல் திசை முழுதும் மண்ட
நறவு குதி கொண்ட துளவு அணி அலங்கல் மதுகரம் ஒரு கோடி சுற்றப் புனைந்தன
நளின மட மங்கை குவலைய மடந்தை சனகனது அணங்கு பொதுவர்மகள் என்றிவ்
வனிதையர் தனபாரம் மொத்தக் குழைந்தன நதிபதி சுழன்று கதறி நுரை சிந்த
அரவு அகடு உறிஞ்சி அலற அலமந்து வடவரை உடல் தேய நட்டுக் கடைந்தன –

நகு கதிர் வழங்கு -விளங்குகின்ற ஒளியை வீசுகின்ற
தகடு படு செம்பொன் -செம்பொன் மயமான தகட்டினால் செய்யப் பட்டு
நவ மணி குயின்ற -நவ ரத்னங்கள் இழைத்துள்ள
தொடி அணி அணிந்து -தொடி என்னும் ஆபரணத்தை தரித்து
ககனவில் இடு-ஆகாசத்தில் தோன்றுகின்ற இந்திர வில் இடப்பட்ட
நீல வெற்பு ஒத்து இருந்தன -கரிய மலைகளை ஒத்து இருந்தன
நறிய புது மன்றல் -நல்ல புதிய வாசனை யானது
திசை முழுதும் மண்ட
நறவு குதி கொண்ட -தேன் பெருகுதலை தன்னிடத்தே கொண்ட
துளவு அணி அலங்கல்
மதுகரம் ஒரு கோடி சுற்றப்-மிகப் பல வண்டுகள் சூழ்ந்து மொய்க்கும் படி
புனைந்தன
நளின மட மங்கை -தாமரை மலரில் வீற்று இருக்கும் அழகிய பெரிய பிராட்டியாரும்
குவலைய மடந்தை -பூமிப் பிராட்டியும்
சனகனது அணங்கு-ஜானகிப் பிராட்டியும்
பொதுவர்மகள் -நப்பின்னை பிராட்டியும் -பொதுவர் –
குறிஞ்சி நிலம் மருத நிலம் நடுவிடமான முல்லை நிலம் -இடையர் -காரணப் பெயர் -ஆயர் மகள் என்ற வாறு
என்றிவ் வனிதையர் தனபாரம் -இந்த தேவியாரது பருத்த கொங்கைகள்
மொத்தக் குழைந்தன -தம் மேல் நெருக்குதலால் நெகிழ்ந்தன
நதிபதி சுழன்று கதறி நுரை சிந்த -திருப்பாற் கடல் சுழன்று பேர் ஒலி செய்து நிறைகளைச் சிந்தவும்
அரவு அகடு உறிஞ்சி அலற -வாசுகி உடல் தேய்ந்து கதறவும்
அலமந்து வடவரை உடல் தேய -மந்தர மலை வருந்தி உடம்பு தேய்வடையவும்
நட்டுக் கடைந்தன -நாட்டிக் கடைந்தன –

இரண்டாம் அடி
இகலி இரு குன்றில் இரு சுடர் எழுந்து பொருவது எனவிம்ப மதி முகம் இலங்க
இரு குழை இருபாடு அலைப்பச் சிறந்தன இணை அற நிமிர்ந்து வலியொடு திரண்டு
புகழொடு பரந்த புழுகொடும் அளைந்து கலவையின் அணி சேறு துற்றுக் கமழ்ந்தன
யெதிர் ஒருவர் இன்றி அகில உலகும் தன் அடி தொழ இருந்த இரணியன் மடங்க
முரணிய வரை மார்பம் ஒற்றிப் பிளந்தன எறிகடல் கலங்கி முறையிட வெகுண்டு
நிசிசரர் இலங்கை அரசொடு மலங்க ஒரு சிலை இரு கால் வளைத்துச் சிவந்தன –

இகலி இரு குன்றில் இரு சுடர் எழுந்து பொருவது எனவிம்ப மதி முகம் இலங்க
சந்திர சூரியர்கள் தம்முள்ளே மாறுபட்டு இரண்டு மலைகளிலே தோன்றி பொற் செய்வது போலே
சந்திர பிம்பம் போன்ற முகத்தின் இரு பக்கங்களிலும் விளங்குகின்ற
இரு குழை இருபாடு அலைப்பச் சிறந்தன
இரண்டு குண்டலங்களும் இரண்டு பக்கங்களில் அசையும் படி சிறந்தன
இணை அற நிமிர்ந்து வலியொடு திரண்டு
ஒப்பில்லாமல் உயர்ந்து வலிமையுடனே திரட்சி பெற்று
புகழொடு பரந்த புழுகொடும் அளைந்து கலவையின் அணி சேறு துற்றுக் கமழ்ந்தன
கீர்த்தி யுடனே பரவி புகழ் உடனே கலந்து -அழகிய கலவைச் சந்தன சேறு மிகுதியாகப் பூசப் பெற்று நறு மணம் வீசின
யெதிர் ஒருவர் இன்றி அகில உலகும் தன் அடி தொழ இருந்த இரணியன் மடங்க
தனக்கு ஒருவரும் எதிர் இல்லாமல் எல்லா உலகோரும் தனது பாதங்களையே வணங்கும் படி இறுமாந்து இருந்த இரணியாசுரன் அழியும்படி
முரணிய வரை மார்பம் ஒற்றிப் பிளந்தன -அவனது வலிய மலை போலும் மார்பை ஒற்றிப் பிளந்தன -நகங்களினால் இடந்து கிடந்தன –
எறிகடல் கலங்கி முறையிட வெகுண்டு நிசிசரர் இலங்கை அரசொடு மலங்க ஒரு சிலை இரு கால் வளைத்துச் சிவந்தன
கடல் முறையிடவும் -இராவணன் கலங்கவும் கோபித்து ஒப்பற்ற கோதண்டத்தை இரண்டு தரம் சிவந்தன –
இரண்டு கோடியையும் ஓன்று சேரும்படி நன்றாக வளைத்து என்றுமாம்

மூன்றாம் அடி
மிகு களவின் நின்ற விளைவு கனி சிந்தி மடிய விடுகன்று குணில் என எறிந்து
பறைவையின் அகல்வாய் கிழித்துப் பகிர்ந்தன வெறிபடு குருந்தை முறிபட அடர்ந்து
குட நடம் மகிழ்ந்து குரவைகள் பிணைந்து பொரு தொழில் எருது ஏழு செற்றுத் தணிந்தன
வெடிபட முழங்கி எழு முகிலும் அண்ட ரொடு நிரை தியங்க எறி திவலை கண்டு
தடவரை குடையா எடுத்துச் சுமந்தன விழி வடவை பொங்க எதிர் பொர நடந்த
களிறு உளம் வெகுண்டு பிளிறிட முனிந்து புகர் முக இரு கோடு பற்றிப் பிடுங்கின –

மிகு களவின் நின்ற விளைவு கனி சிந்தி மடிய விடுகன்று குணில் என எறிந்து
மிக்க வஞ்சனை யுடனே -தன்னைக் கொல்லும்படி நின்ற -விளா மரமானது தனது பழங்களைச் சிதறி மடிந்து விழும் படி
கம்சனால் ஏவப்பட்ட கன்றை குறும் தடியாகக் கொண்டு அதன் மேல் வீசி
பறைவையின் அகல்வாய் கிழித்துப் பகிர்ந்தன வெறிபடு குருந்தை முறிபட அடர்ந்து
பகாசுரனது அகன்ற வாயை இரண்டு படும்படி கிழித்துப் பிளந்தன
வாசனை வீசுகின்ற மலர்களை யுடைய குருந்த மரத்தை முறிந்து விழும் படி அழித்து
குட நடம் மகிழ்ந்து குரவைகள் பிணைந்து பொரு தொழில் எருது ஏழு செற்றுத் தணிந்தன
மனம் மகிழ்ந்து குடக் கூத்தாடி -குரவைக் கூத்தாடி
போர் செய்யும் தொழிலை யுடைய ஏழு எருதுகளை தழுவி அழித்து சினம் தணிந்தன
வெடிபட முழங்கி எழு முகிலும் அண்ட ரொடு நிரை தியங்க எறி திவலை கண்டு
ஏழு மேகங்களும் பேரொலி யுண்டாக இடித்து பசுக்களும் இடையரும் திகைக்கும் படி வீசிப் பெய்த நீர்த் துளிகளை கண்டு
ஏழு மேகங்களும்-சம்வர்த்தம் -ஆவர்த்தம் -புட்கலாவர்த்தம் -சங்கா ரித்தம் -துரோணம் -காள முகி -நீல வருணம் –
தடவரை குடையா எடுத்துச் சுமந்தன விழி வடவை பொங்க எதிர் பொர நடந்த
பெரிய கோவர்த்தன கிரியை கொற்றக்குடையாக தரித்தன
விழி வடவை பொங்க -கண்களில் படபாமுகாக்னி போலும் தீப்பொறி பறக்கும் படி எதிரில் பொருவதற்கு வந்த
களிறு உளம் வெகுண்டு பிளிறிட முனிந்து
குவலையா பீட யானை மனம் கோபித்து பேரொலி செய்ய -கோபித்து
புகர் முக இரு கோடு பற்றிப் பிடுங்கின -செம்புள்ளிகளை யுடைய அதன் முகத்தின் கண்ணே யுள்ள இரண்டு தந்தங்களையும் பிடித்து பறித்தன

நான்காம் அடி
அகலிடமும் உம்பர் உலகமும் நடுங்கி அபயம் அடியெங்கள் அபயம் என வந்து
விழு தொறும் இடையூறு அகற்றிப் புரந்தன அருகுற விளங்கும் எறிதிகிரி சங்கம்
வெயில் ஒரு மருங்கும் நிலவு ஒரு மருங்கும் எதிர் எதிர் கதிர் வீச விட்டுப் பொலிந்தன
அரு மறை துணிந்த பொருள் முடிவை இன் சொல் அமுது ஒழுகு கின்ற தமிழினில் விளம்பி
அருளிய சடகோபர் சொல் பெற்று உயர்ந்தன அரவணை விரும்பி அறி துயில் அமர்ந்த
அணி திரு அரங்கர் மணி திகழ் முகுந்தர் அழகிய மணவாளர் கொற்றப் புயங்களே —7

—————————————————-
8-புயம் நான்கு உடையானை பொன் அரங்கத் தானை
அயன் ஆம் திரு உந்தி யானை வியன் ஆம்
பரகதிக்குக் காதலாய்ப் பாடினேன் கண்டீர்
நரகதிக்குக் காணாமல் நான் -8-

—————————-
9-நான் அந்த வைகுந்த நாடு எய்தி வாழில் என் ஞாலத்து இன்றி
ஈனம் தவாத நிரயத்து வீழில் என் யான் அடைந்தேன்
கோன் நந்தன் மைந்தனை நான்முகன் தந்தையை கோயில் அச்சு
தானந்தனை எனக்கு ஆரா அமுதை அரங்கனையே –9-

இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்ணிறந்த துன்பம் தரு நிரயம் பல சூழில் என்
தொல் உலகின் மன் பல் உயிர்கட்கு இறைவன் மாயன் என மொழிந்த வன்பன் அனகன் இராமானுசன் என்னை ஆண்டனனே –

——————————–
10-அரவில் நடித்தானும் உரவில் ஓடித்தானும் அடவி கடந்தானும் புடவி இடந்தானும்
குரவை பிணைந்தானும் பரவை அணைத்தானும் கோசலை பெற்றானும் வீசு அலை உற்றானும்
முரனை அறுத்தானும் கரனை ஒறுத்தானும் முத்தி அளித்தானும் அத்தி விளித்தானும்
பரம பதத்தானும் சரம விதத்தானும் பாயல் வடத்தானும் கோயில் இடத்தானே –10-

அரவில் நடித்தானும் -காளியன் மேல் நர்த்தனம் செய்தவனும்
உரவில் ஓடித்தானும் -வலிமை பொருந்திய சிவனது வில்லை ஓடித்தவனும்
அடவி கடந்தானும் -காட்டை நடந்து கடந்தவனும்
புடவி இடந்தானும் -பூமியை கோட்டால் குத்தி எடுத்தவனும்
குரவை பிணைந்தானும்
பரவை அணைத்தானும் -கடலை அணை கட்டியவனும்
கோசலை பெற்றானும்
வீசு அலை உற்றானும் -வீசுகின்ற திருப் பாற் கடலின் அலை யில் பொருந்தினவனும்
முரனை அறுத்தானும்
கரனை ஒறுத்தானும்
முத்தி அளித்தானும்
அத்தி விளித்தானும் -கஜேந்திர ஆழ்வானால்-ஆதி மூலமே என்று கூவி அழைக்கப் பட்டவனும்
ஹஸ்தம் -துதிக்கை உடைய -அத்தி -வேழம் -என்றபடி
பரம பதத்தானும்
சரம விதத்தானும் -சரம உபாயத்தை -பிரபத்தியை தன்னை அடையும் வழியாக உடையவனும் –
பாயல் வடத்தானும்-ஆலிலை யைச் சயனமாகக் கொண்டவனும்
கோயில் இடத்தானே –திருவரங்கத்தை வாசஸ் ஸ்தானமாகக் கொண்டவன் –

——————————-
11- தானே தனக்கு ஒத்த தாள் -தாமரைக்குச் சரண் புகுந்து ஆள்
ஆனேன் இனி உன் அருள் அறியேன் எனது ஆருயிரே
தேனே என் தீ வினைக்கு ஓர் மருந்தே பெரும் தேவர்க்கு எல்லாம்
கோனே அரங்கத்து அரவணை மேல் பள்ளி கொண்டவனே –11-

உயிர்க்கு உயிர் என்பதால் ஆருயிர்
அழியா இன்பம் தருவதால் தேன்
தேவாதி தேவன் -என்பதால் பெரும் தேவர்க்கு எல்லாம் கோன்
என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு நின் அருளே புரிந்து இருந்தேன் இனி உன் திருக் குறிப்பே -பெரியாழ்வார் –

———————————
மேக விடு தூது
12-கொண்டல் காள் உம்மைக் குறித்தே தொழுகின்றேன்
அண்டர் காணா அரங்கத் தம்மானைக் கண்டு
மனத்துள் அவத்தைப் படும் என்மையல் எல்லாம் சொல்லி
புனத் துளவத்தைக் கொணரீர் போய் –12-

சம்ச்லேஷித்து பிரிந்து வருந்தி திகைத்து -வானமே நோக்கும் மையாக்கும் –
சூட்டோதி மஞ்சென்று சொல்லாதென் காதலைத் தும்பி இசைப்பாட்டோதி மங்கையரும் பணியார் பண்டுகன் மழைக்காகக்
கோட்டோதிமம் எடுத்தார் சோலை மா மழைக் கோவலனார் மாட்டோதி மஞ்சினங்காள் உரைப்பீர் மறு வாசகமே -அழகர் அந்தாதி
இயம்புகின்ற காலத்து எகினம் கிள்ளை பயம் பெறு மேகம் பூவை பாங்கி
-நயந்த குயில் பேதை நெஞ்சம் தென்றல் பிரமரம் ஈரந்துமே தூதுரைத்து வாங்கும் தொடை –
பிறரை வாழ்வித்தலே தமது பேறாக கருதும் பாகவதர்களை பிரார்த்தித்து -மேகம் -போன்றவர்கள் -இவர்கள் -குறித்து அருளுகிறார் உள்ளுறை பொருள் –

————————————————————————————–
13-போய் அவனியில் சில புறச் சமயம் நாடும்
பேய் அறிவை விட்டு எழு பிறப்பையும் அறுப்பீர்
ஆயனை அனந்தனை அனந்த சயனத்து எம்
மாயனை அரங்கனை வணங்கி மருவீரே –13-

-மக்கள் -விலங்கு -பறவை -ஊர்வன -நீருள் திரிவன -பருப்பதம் -பாதவம் -என இவை எழு பிறப்பும் ஆகும் என்பர்

————————————————————-
14-மருவு தந்தையும் குருவும் எந்தையும் மருள் கெடுப்பதும் அருள் கொடுப்பதும்
உருகு நெஞ்சமும் பெருகு தஞ்சமும் உரிய ஞானமும் பெரிய வானமும்
திரு அரங்கனார் இருவர் அங்கனார் செங்கண் மாயனார் எங்கள் ஆயனார்
அருள் முகுந்தனார் திருவை குந்தனர் அமல நாதனார் கமலா பாதமே –14-

பெருகு தஞ்சமும் -சிறந்ததாகிய பற்றுக் கோடும்
இருவர் அங்கனார் -பிரமன் ருத்ரர்களை தனது அங்கத்தில் கொண்டவர்
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து –
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே யினி யாவாரே -நம்மாழ்வார் –

————————————————————–
15-பாதியாய் அழுகிய கால் கையரேனும் பழி தொழிலும் இழி குலம் படைத்தாரேனும்
ஆதியாய் அரவணையாய் என்பர் ஆகில் அவர் அன்றோ யாம் வணங்கும் அடிகள் ஆவார்
சாதியால் ஒழுக்கத்தால் மிக்கோரேனும் சதுர் மறையால் வேள்வியால் தக்கோரேனும்
போதில் நான் முகன் பணியப் பள்ளி கொள்வான் பொன் அரங்கம் போற்றாதார் புலையர் தாமே –15-

பழுதிலா ஒழுகலாற்று பல சதுப் பேதிமார்கள் இழி குலத்தவர்களே ஏலும் எம் அடியார்கள் ஆகில்
தொழுமினீர் கொடுமின் கொண்மின் என்று நின்னொடும் ஒக்க வழி பட அருளினாய் போல் மதிள் திரு வரங்கத்தானே
அமர வோர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதி தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் ஏனும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பதோர் அளவில் ஆங்கே யவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகர் உளானே
வைநதேய வ்ருத்தாந்தம் -கைசிக விருத்தாந்தம் -உபரி சரவசூ விருத்தாந்தம்
பிள்ளை பிள்ளை ஆழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தை ஸ்மரிப்பது
அரங்கம் என்பர் நான் முகத்தயன் பணிந்த கோயிலே -ஆதியில் பிரமன் திருவாராதனம் -என்பதால் நான் முகன் பணியப் பள்ளி கொள்வான் என்கிறார் –

——————————————————–
16-புலையாம் பிறவி பிறந்து என் செய்தோம் பொன்னி பொன் கொழிக்கும்
அலையார் திரு அரங்கத்து எம்பிரான் நமது அன்னை யொடும்
தொலையாத கானம் கடந்த அந்நாள் தடம் தோறும் புல்லாய்
சிலையாய் கிடந்திலமே நெஞ்சமே கழல் தீண்டுகைக்கே –16-

நமது அன்னை -லோகா மாதா வாக்கிய சீதா பிராட்டி
செம்பவள வாயான் திருவேங்கடம் என்னும் எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –

——————————————————————–
17-தீண்டா வழும்பும் செந்நீரும் சீயும் நிணமும் செறி தசையும்
வேண்டா நாற்றம் மிகும் உடலை வீணே சுமந்து மெலிவேனோ
நீண்டாய் தூண்டா விளக்கு ஒளியாய் நின்றாய் ஒன்றாய் அடியாரை
ஆண்டாய் காண்டா வனம் எரித்த அரங்கா அடியேற்கு இரங்காயே –17-

நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய்
கண்டா வனம் என்பதோர் காடு அமரர்க்கரை என்னது கண்டவன் நிற்க முனே மூண்டார் அழல் உண்ண முநிந்ததுவும் -திரு மங்கை ஆழ்வார் –

——————————————————————
தவம் –
18- காயிலை தின்றும் கானில் உறைந்தும் கதி தேடித்
தீயிடை நின்றும் பூ வலம் வந்தும் திரிவீர்காள்
தாயினும் அன்பன் பூ மகள் நண்பன் தட நாகம்
பாயன் முகுந்தன் கோயில் அரங்கம் பணிவீரே –18-

தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும் என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி துன்னும்
இலைக் குரம்பை துஞ்சியும் வெஞ்சுடரோன் மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்து மின்னதோர் தன்மையராய் –
காயோடு நீடு கனியுண்டு வீசு கடும் கால் நுகர்ந்து நெடும்காலம் ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திரு மார்பனைச் சிந்தையுள்
வைத்தும் என்பீர் –தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே –

——————————————————–
19-வீரர் அங்கு ஆகிய ஐவரை மாற்றி விட அரவின்
போர் அரங்கு ஆக நடித்த பொற்றாள் பற்றி பொன்னி நல் சீர்ச்
சீர் அரங்கா நின் தொழும் பன் என்றே சிந்தை செய்கில் அது
கூர் அரம் காண் நெஞ்சமே வஞ்ச மாயக் கொடு வினைக்கே –19-

———————————————
20- கேசவனையே செவிகள் கேட்க திரு அரங்கத்து
ஈசனையே சென்னி இறைஞ்சிடுக நேசமுடன்
கண்ணனையே காண்க இரு கண் இணர் கொள் காயம் பூ
வண்ணனையே வாழ்த்துக என் வாய் –20-

இணர் கொள்-கொத்தாக மலர்ந்த

———————————————————
தலைவனைப் பிரிந்த தலைவி கடலை நோக்கி இரங்கிக் கூறுதல்
21- வாயின் இரங்கினை ஆரம் எறிந்தனை வால் வளை சிந்தினை தண்
பாயலை உந்தினை மாலை அடைந்தனை பாரில் உறங்கி லையால்
கோயில் அரங்கனை மாகனகம் திகழ் கோகனகம் பொலியும்
ஆயிழை நண்பனை நீயும் விரும்பினை ஆகும் நெடும் கடலே –21-

இரங்கல் -நெய்தலுக்கு உரிய து -கடலை நோக்கி தலைமகள் அருளுவதாக அருளுகிறார்
– வாயின் இரங்கினை-வாயினால் இரங்குகின்றாய்
ஆரம் எறிந்தனை -ஹாரத்தை எறிகின்றாய் -இரத்தினாகாரம் -ஆதலால்
வால் வளை சிந்தினை -வெள்ளிய வளை களைச் -சங்குகளைச் -சிந்துகின்றாய்
தண் பாயலை உந்தினை-மெத்தென்ற பாயை தள்ளி விடுதல்
மாலை அடைந்தனை -வேட்கை மிகுதியால் மயக்கம் அடைதல்
பாரில் உறங்கி லையால்
கோயில் அரங்கனை மாகனகம்-பெருமை பொருந்திய பொன் மயமாகி – திகழ் கோகனகம் -செந்தாமரை மலரில் -பொலியும்
ஆயிழை -ஆராய்ந்து எடுத்த திரு ஆபாரணங்களை அணிந்த திருமகளது
நண்பனை நீயும் விரும்பினை ஆகும் நெடும் கடலே —

காமுற்ற கையறவோடு எல்லே இராப் பகல் நீ முற்றக் கண் துயிலாய்-நெஞ்சுருகி ஏங்குதியால்
தீ முற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள் நயந்த யாம் உற்றது உற்றாயோ வாழி கனை கடலே -நம்மாழ்வார் –

———————————————-
பிரிவாற்றாது வருந்திய தலைமகள் இரங்கல்
22-கடல் வழி விட நிசிசரர் பொடி பட இரு கண் சீறி
வடகயிலையின் எழு விடை தழுவியதும் மறந்தாரோ
அடல் அரவு அமளியில் அறி துயில் அமரும் அரங்கேசர்
இடர் கெட வருகிலார் முருகு அலர் துளவும் இரங்காரே –22-

முருகு அலர் துளவும் -வாசனை வீசுகின்ற திருத் துழாய் மாலையையும்
இரு கண் சீறி -இரண்டு தடவை சீற்றம் கொண்டு
வடகயிலையின் எழு விடை-வடக்கின் கண் உள்ள கைலாச மலை போன்ற ஏழு விருஷபங்களையும்
அடல் அரவு அமளியில் அறி துயில் அமரும் அரங்கேசர் -பாம்பணை யார்க்கும் தம் பாம்பு போல் நாவும் இரண்டு உளவாய்த்து நாண் இலியேனுக்கே –

—————————————————————–
23-இரங்கத் தனித் தனியே எய்துகின்ற துன்பத்
தரங்கத்தை ஏதால் தடுப்பீர் -அரங்கர்க்குக்
கஞ்சம் திருப்பாதம் கார் மேனி என்று அவர் பால்
நெஞ்சம் திருப்பாத நீர் –23-

கஞ்சம் -நீரிலே முளைப்பது -தாமரை மலர் போலும்
துன்பத் தரங்கத்தை -துன்பங்கள் ஆகிய அலைகளை
பிறவிப் பெரும் கடல் நீந்துவார் நீந்தார் இறைவன் அடி சேராதார் -திருவள்ளுவர் –

—————————————————–
தான் தூது விட்ட நெஞ்சு திரும்பி வாராமைக்குத் தலைமகள் இரங்குதல்
24-நீர் இருக்க –மட மங்கைமீர் -கிளிகள் தாம் இருக்க -மதுகரம் எலாம் நிறைந்து இருக்க -மட அன்னம் முன்னம் நிரையாய் இருக்க -உரையாமல் யான்
ஆர் இருக்கினும் என்நெஞ்சம் அல்லது ஒரு வஞ்சம் அற்ற துணை இல்லை என்று ஆதரத்தினொடு தூது விட்ட பிழை ஆரிடத்து உரை செய்து ஆற்றுவேன்
சீர் இருக்கும் மறை முடிவு தேடரிய திரு அரங்கரை வணங்கியே திருத் துழாய் தரில் விரும்பியே கொடு திரும்பியே வருதல் இன்றியே
வார் இருக்கும் முலை மலர் மடந்தை உறை மார்பிலே பெரிய தோளிலே மயங்கி இன்புற முயங்கி என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே –24–

தோழிமீர் -நீர் அவன் அழகிலே ஈடுபட்டு திரும்பி வாராமல் இருப்பீர்
கிளியோ மன்மதன் குதிரை
வண்டோ மன்மதன் வில்லின் நாண்
அன்னம் மந்தகதி –
குருத்தத்தை மாரன் குரகதமாம் என்றே வருத்தத்தை அங்கு உரைக்க மாட்டேன்
கருத்துற்ற மா தண்டலைவாய் மதுகரத்துக்கும் அவன் தன் கோதண்ட நாண் என்று கூறேன் நான்
பொற்கால் வெறிப்பது மவீட்டன்னம் வெண் பாலும் நீரும் பிரிப்பது போல் நட்பும் பிரிக்கும்
குறிப்பு அறிந்து காதலால் உள்ளக் கவலை யது கேட்க ஓதலாகாது என்று உரையாடேன் ஆதலால்
உள்ளே புழுங்குவது அன்றி ஒருவருக்கும் விள்ளேன் -திரு நறையூர் நம்பி -மேக விடு தூது –

——————————————–
வண்டு விடு தூது
25- மறக்குமோ காவில் மது அருந்தி அப்பால்
பறக்குமோ சந்நிதி முன்பு ஆமோ சிறக்கத்
தரு வரங்கள் கேட்குமோ தாழ்க்குமோ நெஞ்சே
திருவரங்கர் பால் போனதேன் –25-

வாயான் மலர் கோதி வாவி தோறும் ஓயுமோ மேயாமல் அப்பால் விரையுமோ –
மாயன் -திரு மோகூர் வாயின்று சேருமோ நாளை வருமோ கூர்வாய் அன்னம் வாழ்ந்து –

——————————————————————————————–

கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்தந்தாதி —75-100-

February 13, 2016

தவராக வக்கணை யொன்றாற் கடற்றெய் வந்தான் என்றிருந்
தவராகந் தீர்த்துத் தொழக் கண்ட நீ தர்ப்பை மேற் கிடந்து
தவராகப் பாவித்தென் னோதொழு தாய் தண் அரங்கத்துமா
தவராக வாகண் ணனே எண் ஒண்ணா வவதாரத்தானே –76-

தவராக வக்கணை யொன்றாற்
தவர்
வில்லின் நின்று எய்யப் பட்ட
ஆகவம் கணை ஒன்றால்
போருக்கு உரிய அம்பு ஒன்றால் -ஆக்நேய அஸ்தரம் கொண்டு
கடற்றெய்வந்தான் என்றிருந்த
கடல் தெய்வம் தான் என்று இருந்த வராகந் தீர்த்துத் தொழக் கண்ட-நீ
கடலுக்கு அதிதேவதையான வருணன் தான் -ஸ்வ தந்த்ரன் -என்று செருக்கி இருந்த அந்த அபிமானத்தை ஒழித்து
உன்னை வணங்கும்படி பின்பு செய்த வல்லமையை உடைய நீ -முதலில்
தர்ப்பை மேற் கிடந்து
தர்ப்ப சயனத்தின் மேல் கிடந்து
தவராகப் பாவித்தென் னோதொழு தாய்
தவராக பாவித்து
விரத அனுஷ்டானம் செய்பவர் போல் பாவனை காட்டி
என்னோ தொழுதாய்
தண் அரங்கத்து
மாதவ
ராகவா
கண்ணனே
எண் ஒண்ணா வவதாரத்தானே —

முன்பு மனுஷ பாவனை காட்டி பின்பு பரத்வத்தை வெளியிட்டு அருளினான் என்கிறார்
தசாவதாரம் மட்டும் அன்றி -நாரதர் -நரன் -நாராயணன் -கபிலன் -தத்தாரேயன்-பிருது -தன்வந்தரி -வியாசர் -புத்தன் -அர்ஜுனன் போன்ற
பல உண்டு என்பதால் எண்ண ஒண்ணா அவதாரத்தான் என்கிறார்

——————————————————————————–

தாரா கணமண் ணளந்த வந்நாளன்பர் சாத்தும் துழாய்த்
தாரா கணம் புயம் போலரங்காதல மேழுக்குமா
தாரா கண மங்கை யாயும்பர் தூவிய தா ண் மலர் வீழ
தாரா கணமு நில்லா காற்றிற் சூழ் வளந்தான் ஒக்குமே –77-

தாரா கணம்
மண் ணளந்த வந்நாள்
அன்பர் சாத்தும் துழாய்த்தாரா
அடியார்கள் சாத்தும் திருத் துழாய் மாலையை உடையவனே
கணம் புயம் போல
கண் அம்புயம் போல்
அரங்கா
தல மேழுக்குமாதாரா
தலம் ஏழுக்கும் ஆதாரா –
கண மங்கை யாய்
யும்பர் தூவிய தண் மலர்
தேவர்கள் அக்காலத்தில் உன் மீது சொரிந்த குளிர்ந்த
மலர்கள்
வீழ தாரா –
பூமியில் விழாதனவாயும்
கணமு நில்லா –
கணமும் நில்லா
வானத்தில் ஓர் இடத்தில் நிலையுற்று இராதனவாயும்
காற்றிற் சூழ்
வாயு மண்டலத்தில் அகப்பட்டுச் சுழல்கின்ற
வளந்தான் ஒக்குமே —
வளம் -மாட்சிமையை
ஒக்கும் -போன்று இருந்தது –

உன் பெரிய வடிவத்துக்கு முன்னே நஷத்ரங்கள் சிறியனவாய் மலர் போலே இருந்தனவே –
கீழே விழாத –ஓர் இடத்தில் நிலை இல்லாத -பல நிறங்களை உடைய மலர்கள் போலேவே இருந்தன –

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த அந்நாள் மறை முறையால் வானாடர் கூடி
–முறை முறையின் தாதிலகு பூத்தொளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின் மீதிலகித் தான் கிடக்கும் மீன் -போலே அருளிச் செய்கிறார்

—————————————————

தானந் தியாகந் தவங்கல்வி தீர்த்தந் தழலிலவி
தானந் தியாகந் தருமிழி பாயின தண்ணரங்கத்
தானந் தியாகப் பகன் மறைத்தான் பெயர் தந்திடும்வே
தானந் தியாகண் டலனறி யாப்பரந் தாமத்தையே –78 –

தானந் தியாகந் தவங்கல்வி தீர்த்தந் தழலிலவி தானந் தியாகந்
தானம் –தியாகம் -தவம் -கல்வி -தீர்த்தம் -தழலில் அவி நந்து யாகம் –
தானம் செய்தாலும் -தியாகம் அளித்தலும் -தவம் செய்தாலும் -நூல்களை ஓதுதலும் -புண்ய தீர்த்தங்களிலே நீராடுதலும்
அக்னியிலே ஹவிஸ் பக்குவமாய் பெறுகின்ற யாகமும்
என்னும் இவை எல்லாம்
தருமிழி பாயின –
இழிபு ஆயின தரும் –
இழிவான பதவிகளையே தம்மை உடையார்க்குக் கொடுக்கும்
தண்ணரங்கத்தானந் தியாகப் பகன் மறைத்தான்
தண் அரங்கத்தான் அந்தி ஆக பகல் மறைத்தான்
மாலைப் பொழுது உண்டாகும்படி சூரியனை சக்கரத்தால் மறைத்தவன்
பெயர்
திரு நாமமோ
தந்திடும்வே தானந் தியாகண் டலனறி யாப்பரந் தாமத்தையே —
வேதா நந்தி ஆகண்டலன் அறியா பரந்தாமைத்தையே தந்திடும்
தன்னைக் கருதினவர்க்கு பிரமனும் சிவனும் இந்திரனும் அறிய மாட்டாத பரமபதத்தைக் கொடுத்திடும்
பகவன் நாம ஸ்மரண பலனை அருளிச் செய்கிறார்

———————————————————————–

தாமரை மாத்திரை மூப்பற்ற வானவர் தண்ணறும் செந்
தாமரை மாத்திரை வந்தா டலை வரைத் தண்ணரங்க
தாமரை மாத்திரை போல்வளைந் தேற்றுத் தருப் பொருட்டால்
தாமரை மாத்திரைக் கேசங்கி னோசையிற் சாய்ந்தனரே –79-

தாமரை மாத்திரை
பதுமம் என்னும் தொகை யளவு உள்ளவர்களான -பதுமம் -கோடியினால் பெருக்கிய கோடி என்றவாறு
மூப்பற்ற வானவர் –
முதுமை இல்லாத இயல்பை யுடைய தேவர்கள்
திரை தண்ணறும் செந் தாமரை மாத்திரை வந்தா டலை வரைத் தண்ணரங்க தாமரை
திரை தண் நறும் செம் தாமரை வந்தாள் மா தலைவரை தண் அரங்க தாமரை
திருப் பாற் கடலிலே குளிர்ந்த பரிமளம் உள்ள சிவந்த தாமரை மலரின் மீதே தோன்றினவளான திருமகளினது கணவரும்
குளிர்ந்த ஸ்ரீ ரங்கத்தை இருப்பிடமாக கொண்டவருமான நம் பெருமாளை
மாத்திரை போல்வளைந் தேற்றுத்
மா திரை போல் வளைந்து ஏற்றித்
பெரிய திரைச்சீலை போலே சூழ்ந்து எதிர்த்து
சங்கின் ஓசையின்
அப்பெருமான் ஊதி முழக்கிய சங்கத்தின் ஓசையினால்
தருப் பொருட்டால்
பாரிஜாத தருவின் நிமித்தமாக
தாம் அரை மாத்திரைக்கே சாய்ந்தனரே —
அரை மாத்திரைப் பொழுதே மூர்ச்சித்து வீழ்ந்தனர்
கண் நொடிப் பொழுது கண் இமைக்கும் பொழுது மாத்திரை என்பர்

————————————————————————————

சாகைக்குந் தத்துத் துகிறூக்கி மாதர் தமை நகைத்தாய்
சாகைக்குந் தத்துவங் கட்கு மெட்டாய் தண் புனல் அரங்கே
சாகைக்குந் தத்துப் படையாழி யேந்த றமர்கள் வெய்யோர்
சாகைக்குந் தத்துத் தவிர்க்கைக்கும் போலுமுன் சங்கற்பமே–80-

சாகைக்குந் தத்துத் துகிறூக்கி மாதர் தமை நகைத்தாய்
சாகை -கிளைகளை யுடைய
குந்தத்து துகில் தூக்கி -குருந்த மரத்தின் மேல் கோப ஸ்திரீகளுடைய சேலைகளை எடுத்துப் போய்வைத்துக் கொண்டு
மாதர் தமை நகைத்தாய்
சாகைக்குந் தத்துவங் கட்கு மெட்டாய் –
சாகைக்கும் -வேதங்களுக்கும்
தத்துவங்கட்கும் எட்டாய் –
ஐம்பொறி -ஐம்புலன்கள் -ஐம்பூதம் -ஐந்து கர்ம இந்த்ரியங்கள் -பிரகிருதி -மகான் -அஹங்காரம் –மனஸ் –
தண் புனல் அரங்க ஈசா
கைக்குந் தத்துப் படையாழி
கை -திருக்கையிலே
குந்தத்து குந்தம் என்னும் ஆயுதத்தோடு
புடை ஆழி -பகை அழிக்க வல்ல சக்கரத்தையும்
யேந்தல்
கை குந்த துப்புடை ஆழி ஏந்தல் -கையில் இருக்க வலிமை யுடைய சக்கரத்தை ஏந்தல் -என்றுமாம்
தரித்து இருத்தல்
றமர்கள் வெய்யோர் சாகைக்குந் தத்துத் தவிர்க்கைக்கும் போலுமுன் சங்கற்பமே
வெய்யோர் சாகைக்கும் -தமர்கள் தத்து தவிர்கைக்கும் உன் சங்கற்பம் போலும்

—————————————————————————————————–

சங்கத் தமரர் குழாத்தொடு மூழ்வினை தான் விலங்கச்
சங்கத் தமரன்ப ராயிருப்ப பீர்கடறானவர் தே
சங்கத் தமரம் படவெய்த சார்ங்கத் தனுவரங்கன்
சங்கத் தமரன் சரணே சரண் என்று தாழ்ந்து இருமே –81-

சங்கத் தமரர் குழாத்தொடு மூழ்வினை தான் விலங்கச்
ஊழ் வினை தான் விலங்க
சங்கத்து அமரர் குழாத்தொடும் -எம்பெருமான் பக்கல் மனம் பற்றுதலை உடைய நித்ய ஸூரிகள் வர்க்கத்தோடு ஒப்ப
சங்கத் தமரன்ப ராயிருப்ப பீர்
அவர்கள் கூட்டத்தில் பொருந்திய அன்பராய் இருப்பீர் -முக்தர்களாய் நித்ய வாசம் செய்வீர்
கடறானவர் தேசம்
கடல் தானவர் தேசம் –
சமுத்ரமும் -அசுரர்களுடைய நாடும் -பெரு வெள்ளமாகத் திரண்ட அசுரர்கள் தேசம் -என்றுமாம்
கத்த மரம் பட
தவித்துக் கதறவும் -ஏழு மராமரங்கள் அழியவும்
வெய்த சார்ங்கத் தனுவரங்கன்
எய்த சார்ங்கம் தனு அரங்கனும் -சார்ங்கத்தன் தண் அரங்கன் -பாட பேதம்
சங்கத் தமரன் சரணே சரண் என்று தாழ்ந்து இருமே —
சங்கம் தமரன் –பாஞ்ச ஜன்யம் என்ற சங்கத்தின் முழக்கத்தை உடைய வனுமாகிய திருமாலினது
சரணே சரண் என்று தாழ்ந்து இரும் -என்று சார்ந்து இருமே –பாட பேதம்-
அங்கனம் இருப்பீராயின்

—————————————————————————-

இருந்தே னுகமுட வன்வரை நோக்கி யிருப்பது போல்
இருந்தே னுகந்துனை வைகுண்ட நோக்கி யெதிர் பொருந்கேள்
இரும்தே னுகனும் படவதைத் தாய் வெண்ணை யாமத் தொளித்து
இருந்தே னுகரரங் காகாணு நாளினி யென்றருளே–82-

இருந்தே னுகமுட வன்வரை நோக்கி யிருப்பது போல்
இரும் தேன் உக
பெருமை மிக்க தேன் தனது நவில் சிந்த வேண்டும் என்று கருதி
முடவன் வரை நோக்கி இருப்பது போல்
இருந்தே னுகந்துனை வைகுண்ட நோக்கி
உன்னை உகந்து வைகுந்தம் நோக்கி இருப்பேன்
யெதிர் பொருந்கேளிரும் தேனுகனும்
யெதிர் பொரும்-
எதிரிலே வந்து போர் செய்த தேனுகாசுரனும் அவ்வினத்தரான மற்றும் பல அசுரர்களும்
னது உறவினராக இருந்து அசுரத் தன்மை பொருந்திய சிசுபாலன் போன்றாரும் என்றுமாம்
படவதைத் தாய்
தானே கொன்றும் உறவினனான அர்ஜுனனைக் கொண்டு அழித்தும் –
வெண்ணை யாமத் தொளித்து இருந்தே னுகரரங்கா
யாமத்து ஒளித்து இருந்தே வெண்ணெய் நுகர் உண்ட அரங்கா
சாரமான ஆத்மாவை வெண்ணெய் போலே விரும்பி –
காணு நாளினி யென்றருளே–
காணும் நாள் இனி என்று அருள் செய்வாய்
யாதொரு முயற்சியும் இன்றி நோக்கிக் கொண்டே இருப்பேன்
காணும் நாள் எந்நாள் என்று சோதி வாய் திறந்து அருள் செய்வாய்

——————————

அரும்பாகவ தரிக்கும் பெயராய் புள்ளரசி னுக்கோர்
அரும்பாகவ தரத்துப் பனை யாயரங்கா வென வுண்
அரும் பாகவதர் பத தீர்த்தம் கொள்ளாதடிகள் கொப்புள்
அரும்பாகவதர் தொலைப்பார் கல்லார் கங்கை யாடுதற்கே –83-

அரும்பாகவ தரிக்கும் பெயராய்
அரும் பாகு அவதரிக்கும் பெயராய்
துதிப்பவர் நாவிலே மென்மையான கருப்பஞ்சாற்றுப் பாகு போன்று இனிமை யூரும் படியான திரு நாமங்களை உடையவனே
ராம நாமமே கற்கண்டு அன்றோ -அருமை -ஒப்பு இல்லாமையும் என்றுமாம் –
புள்ளரசி னுக்கோர் அரும்பாக
புள் அரசினுக்கொர் அரும் பாக
வதரத்துப்பனையாய்
வதரம் துப்பு அனையாய்
வாய் இதழ் பவளம் போலே சிவந்தவனே
யரங்கா
வென வுணரும் பாகவதர் பத தீர்த்தம் கொள்ளாது
ஸ்ரீ பாகவதர்கள் ஸ்ரீ பாத தீர்த்தம் கொள்ளாமல்
தடிகள் கொப்புள் அரும்பாகவதர் தொலைப்பார் கல்லார் கங்கை யாகுதற்கே —
கங்கை யாடுதற்கு அடிகள் கொப்புள் அரும்பு ஆக அதர் தொலைப்பார்
கங்கா ஸ்நானம் செய்தற் பொருட்டு நடந்து தீர்த்த யாத்ரை செய்து உள்ளங்கால்களும் கொப்புள்கள் அரும்பு போல் உண்டாக
அரு நெறிகளைக் கடந்து கழிப்பார்கள்-
ஸ்ரீ பாகவத ஸ்ரீ பாத தீர்த்தம் கங்கா ஸ்நானத்தை விட பாவனமும் எளியதாகவும் என்று அருளிச் செய்கிறார் –

—————————————————————————————————————

ஆடு முன் னீர்முதற் றீர்த்தத்தி னாலரு மாதவத்தால்
ஆடுமுன் னீர் மறை வேள்வியி னாலண்ட ராயுடன் மாறு
ஆடுமுன் னீரது மாயையி னால் என்று அரங்கனைக் கொண்ட
ஆடுமுன் னீர் செய்த பாவமும் போய் முத்தராம் வண்ணமே -84-

ஆடு முன் னீர்முதற் றீர்த்தத்தி னாலரு மாதவத்தால்
ஆடு முந்நீர் முதல் தீர்த்தத்தினால் –
கடல் போன்ற புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதலினாலும்
அரு மா தவத்தால் –
ஆடுமுன் னீர் மறை வேள்வியினால்
ஆடு முன் ஈர் மறை வேள்வியினால்
ஆடு முதலியவற்றை அறுக்கிற வேத விதிப்படி செய்யும் யாகங்களினாலும்
லண்ட ராயுடன் மாறு ஆடும்
அன்றே உடல் மாறாடும்-
மனித சன்மம் நீங்கி தேவ சந்மமாக உடம்பு மாறும்
முன் னீரது மாயையி னால் என்று அரங்கனைக் கொண்டாடு
அது -அங்கனம் வேற்றுமை அடைவது தானும்
மாயையினால் என்று முந்நீர் –
திருமால் உடைய மாயையினாலே என்று எண்ணுமின்-
அங்கனம் அரங்கனைக் கொண்டாடி ஸ்துதித்து
முன் னீர் செய்த பாவமும் போய் முத்தராம் வண்ணமே —
முன் நீர் செய்த பாவமும் போய் முக்த்தராம் வண்ணமே –

——————————————————————————

வண்ணங் கலிவஞ்சி வெண்பா வகவல் வகை தொடுத்தோர்
வண்ணங் கலிகெட வேண்டுமென் றேமக்கண் மாட்டுரையேன்
வண்ணங் கலிகடல் போல் வானரங்கன் வகுளச் செல்வன்
வண்ணங் கலி யன் புகழ் தாள் எனக்கென்று மா நிதியே –85-

உரையேன்-வண்ணங் கலிவஞ்சி வெண்பா வகவல் வகை தொடுத்து
அழகிய கலிப்பாவும் -வஞ்சிப்பாவும் வெண்பாவும் ஆஸ்ரியப்பாவும் -அவற்றின் இனமான செய்யுள்களை புனைந்து கவி பாடேன்
வல்லிசை வண்ணம் -மெல்லிசை வண்ணம் -இயைபு வண்ணம் -நெடும் சீர் வண்ணம்
-குறும் சீர் வண்ணம் -சித்திர வண்ணம் ஒழுகு வண்ணம் -என்றுமாம்
தோர் வண்ணங் கலிகெட வேண்டுமென் றே
ஏதேனும் ஒரு விதமாக வறுமை ஒழிய வேண்டும் என்று கருதி
மக்கண் மாட்டு
மக்கள் மாட்டு –
மனிதர்கள் பக்கல் -மனிசர்கள் விஷயமாக
வண்ணங் கலிகடல் போல் வானரங்கன்
வகுளச் செல்வன் வண்ணங் கலி யன் புகழ் தாள்
நம்மாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் அருளிச் செய்த அரங்கன் திருவடிகளே
எனக்கென்று மா நிதியே —

——————————————————————————————–

மானா கவரு நிருதன்புன் மாயையின் மங்கை யென்னு
மானா கவரு மணியை முன்நீங்கினான் மாயன் என்பார்
மானா கவரும் பலர் சோலை சூழ மதிலரங்கா
மானா கவரு மமுதே யதுவு நின் மாயமன்றே –86-

மானா கவரு நிருதன்புன் மாயையின் மங்கை யென்னு
மானாக வரும் நிருதன் புல் மாயையின் -மாரீசனின் அல்ப மாயையினால்
மங்கை என்னும்
மானா கவரு மணியை முன்நீங்கினான் மாயன் என்பார்
மால் நாகம் அரு மணியை -விஷத்தினால் மயக்கம் செய்யும் தன்மையதான சர்ப்பத்தின் பெறுதற்கு அரிய மாணிக்கத்தை
முன் நீங்கினான்
யதுவு நின் மாயமன்றே —
அதுவும் நின் மாயம் அன்றே
நின் சங்கல்பத்தினால் -மனுஷ்ய தன்மையை ஏறிட்டுக் கொண்டு மாயைக்கு உட்பட்டவன் போலே காட்டினாய்
அன்றோ
மானா கவரும் பலர் சோலை சூழ மதிலரங்கா
மால் -பெரிய
நாகம் -புன்னை மரத்தினது
அரும்பு அலர்-சோலை சூழ் மதிலரங்கா
மானா கவரு மமுதே
மால் நா கவரும் அமுதே -ஆசையுடன் அடியார்களால் நாவில் கொண்டு நுகரப்படுகின்ற
அமுதே மாயன் என்பார்-

——————————————————————————————-

மாயா தவர் தலை வாவரங் காவட மா மதுரை
மாயா தவரண்டர் வந்தடைந் தான்மழு வாளிபிர
மாயா தவர்செய்வர் முந்நூல் செந்நூல் கொண்ட வண்ணமொப்ப
மாயா தாவரத் தனைக் குடர் கோத்ததுன் வாணகமே –87-

மாயா தவர் தலை வாவரங் காவட மா மதுரை மாயா
மா யாதவர் தலைவா
அரங்கா
வட மதுரை மாயா
தவரண்டர் வந்தடைந் தான்மழு வாளிபிரமா
தவர் -முனிவர்களும்
அண்டர் -தேவர்களும்
வந்து அடைந்தால்-கொடிய பகைவர்க்கு அஞ்சி வந்து சரணம் அடைந்தால்
மழு ஆளி-சிவனும்
பிரமா
ஆகிய அவர் -யாது செய்வர் –
அவ்விரு மூர்த்திகளும் என்ன செய்ய மாட்டுவர் -ஒன்றும் செய்யத் திறம் அல்லாதவர் -என்றபடி
முந்நூல் செந்நூல் கொண்ட வண்ணமொப்ப –
நினது மார்பில் விளங்கிய வெண்ணிறமான முப்புரி நூல் சிவந்த மாலை வடமாக அணிந்த வித்தை ஓக்கும்படி
மாயா தாவரத் தனைக் குடர் கோத்தது-
மாயாத வரத்தனை குடல் கோத்தது –
பலவற்றாலும் அழியாத வரங்களைப் பெற்ற இரணியனது குடலைப் பிடுங்கி மாலையாக அணிந்தது –
உன் வாணகமே —
உன் வாள் நகமே -உனது வாள் போலே கூறிய நகமே –

கூருகிர் நுதியில் பைந்தேன் பொழி மலர் அலங்கன் மார்பம் போழ்ந்து செங்குருதி யூறி வழி பசுங்குடர் மென் கண்ணி யாளரி வளைந்ததன்றே –
வெண் புரிநூல் செந்நூல் ஆனதே -மார்பிலே குடலை மாலையாக தரித்துக் கொண்டதால் –
மேருகிரி யுடல் அவுணன் மிடல் கெடுத்தாய் என்பர் அது உன் கூர் உகிரே யறிந்தது யல்லால் கோவே நீ அறியாயால் -என்பரே –

——————————————————————————————————–

நகமுண் டகந்தரித் தாற்கருண் மாயற்கு ஞால முந்நீர்
நகமுண் டகமகிழ்ந் தாற்கடியே மென்மி னற்கதிவா
நகமுண் டகம்பர னென்னா தரங்கனை நாடிலயன்
நகமுண் டகமலர் தான்குவி யாது நடுக்குளத்தே –88-

நகமுண் டகந்தரித் தாற்கருண் மாயற்கு ஞால முந்நீர்
நக -கண்டவர் அனைவரும் பரிகாசமாக சிரிக்கும் படி
முண்ட கம் தரித்தாற்கு -முண்டமாகிய பிரம கபாலத்தை கையில் கொண்டவனான சிவபிரானுக்கு
அருள் மாயற்கு
ஞாலம் -பூமியையும்
முந்நீர் -கடல்களையும்
நகமுண் டகமகிழ்ந் தாற்கடியே மென்மின்
நகம் -மலைகளையும் –
உண்டு அகம் மகிழ்ந்தாற்கு
அடியேம் யேன்மின்
அங்கனம் எண்ணின மாத்ரத்தால்
நகமுண் டகம்பர னென்னா தரங்கனை நாடிலயன் நற்கதிவாநகமுண் டகமலர் தான்குவி யாது நடுக்குளத்தே —
நல் கதி வானகம் உண்டு
மற்றும் அகம் பரன் என்னாது அரங்கனை நாடில் -அஹங்காரம் கொள்ளாமல் அரங்க நாதனை விரும்பி சரண் அடைந்தால்
அயன் -பிரமனது
நகம் முண்டக மலர் -நகங்களை உடைய தாமரை மலர் போன்ற கையானது
உம் நடு குளத்தே குவியாது -உங்கள் நடுத்தலையிலே-மீண்டும் பிறக்குமாறு விதித்து எழுவதற்கு குவியாது –

அகம் பரன் என்னாது அடியேம் என்மின்–மாயவனுக்கு தொண்டு பூண்டாள் –
அயனது நக முண்டக மலர் உம் நடுக் குளத்துக் குவியாது -நல் கதி வானகம் உண்டு -என்றும் இயைத்து கொள்ளலாம் –

———————————————————————–

குளப்படி நெய்யடி சிற்கொத்த தோ கொள்ளப் பற்றிய தோ
குளப்படி யிற்றிங்கள் சேரரங்கா கோல மாய வன்றுன்
குளப்படி காட்டும் பிறை மறுப் போலொரு கோட்டிருந்து
குளப்படி யின்னகத் துட்பரல் போன்ற குவலயமே –89-

பிரளய காலத்தில் நீ உண்ட பொழுது
குளப்படி நெய்யடி சிற்கொத்த தோ
குளம் படி நெய் அடிசிற்கு ஒத்ததோ
வெல்லமும் படி யளவு கொண்ட நெய்யும் கலந்த உணவுக்கு ஒப்பாய் இருந்ததோ -குளப்படி நெய்யடிசில் -சக்கரைப் பொங்கல் –
கொள்ளப் பற்றிய தோ
அமுது செய்வதற்கு போதுமானதாய் இருந்ததோ –
குளப்படி யிற்றிங்கள் சேரரங்கா கோல மாய வன்று
குளம் படியில் திங்கள் சேர் அரங்கா
சந்திர புஷ்கரணி படியிலே சந்தரன் தன் குறை தீரும் பொருட்டு தவம் செய்யுமாறு சேர்ந்த திருவரங்கத்தில் எழுந்து அருளி இருப்பவனே
கோலம் ஆய அன்று
நீ மஹா வராஹமாகிய அந்நாளிலே
உன் குளப்படி காட்டும் பிறை மறுப் போல்
உனது நெற்றியின் உருவத்தைக் காட்டுகின்ற பிறைச் சந்தரன் இடத்து விளங்கும் களங்கம் போலே
லொரு கோட்டிருந்து
உனது ஒரு மருப்பிலே தங்கி
குளப்படி யின்னகத் துட்பரல் போன்ற குவலயமே
குளம்பு அடியின் அகத்துள் பரல் போன்ற குவலயமே
கால் குளம்பின் கீழ் பருக்கைக் கல்லை நிகர்த்து அடக்கிய பூ மண்டலமானது –

அண்டம் எலாம் உண்டை என்பர் அறியாதார் ஆங்கு அவை நீ உண்டு அருளும் காலத்தில் ஒரு தூற்றுக்கு ஆற்றாவால் –
நாண் மன்னு வெண் திங்கள் கொல்-நயந்தார்க்கு நச்சிலை கொல் -சேண் மன்னு நாள் தடம் தோள் பெருமான் தன் திரு நுதலே –
இரு நாள் பகலின் இலங்கு மதி அலங்கல் இருளின் எழில் நிழல் கீழ் பெரு நாணில் பின் அவன் நெற்றி பெற்றிதாக பெறு மன்னோ –
நிறக்கும் செழும் சுடர்க் கோடு இப்பாரு நிசா முகத்து சிறக்கும் பிறையும் களங்கமும் போலும் எனில் சிறு கண்
மறக்கும் சரம் செற்ற மாயோன் அரங்கன் வராகமதாய் பிறக்கும் பிறப்பின் பெருமை எவ்வாறு இனிப் பேசுவதே –திருவரங்கத்து மாலை
பன்றியாய் படியெடுத்த பாழியான் என்பரது வென்றியார் உனது எயிற்றின் மென்றுகள் போன்று இருந்ததால் –
தீதறு திங்கள் பொங்கு சுடர் உம்பர் உலகு ஏழின் உடன் உடனே மாதிர மண் சுமந்து வட குன்று நின்ற மலை யாறும்
ஏழு கடலும் பாதமர் சூழ் குளம்பின் கமண்டலத்தின் ஒரு பால் ஒடுங்க
வளர் சேராதி முன் ஏனமாகி யாரானாய மூர்த்தியது நம்மை யாளும் அரசே

—————————————————

குவலையஞ் சூழ்கடல் காயா மரகதம் கொண்ட னெய்தல்
குவலையங் கண்டன்பர் நைவ ரென்றார் கொற்ற வாணற்குவா
குவலைய நேமிதொட் டாயரங் காகொடும் பல் பிறப்பா
குவலையங்க கற்றுனைக் காணிலென் னாங்கொல் குறிப்பவர்க்கே –90-

அன்பர்
குவலையஞ் சூழ்கடல்-
பூ மண்டலத்தை வளைந்து இருக்கிற சமுத்ரத்தையும்
காயா மரகதம் கொண்ட னெய்தல்-குவலையங் கண்டு –
காயம் பூவையும் -மரகத ரத்னத்தையும் -நீர் கொண்ட மேகத்தையும் -கரு நெய்தல் மலரையும் -கரும் குவளை மலரையும் பார்த்து
நைவ ரென்றார்
உனது நிறத்தை காட்டுவதால் மனம் உருகுவார்கள் என்றால்
கொற்ற வாணற்கு
வெற்றியை உடைய பாணாசுரனுக்கு
வாகுவலைய நேமிதொட் டாய் –
வாகு அலைய நேமி தொட்டாய்-தோள்கள் துணிப்புண்டு துடிக்கும் படி சக்ராயுதத்தைப் பிரயோகித்தவனே
யரங்கா
கொடும் பல் பிறப்பாகுவலையங்க கற்றுனைக் காணிலென் னாங்கொல் குறிப்பவர்க்கே –
கொடும் பல் பிறக்கு ஆகு வலை அற்று அங்கு உன்னை கானில் அவர்க்கு குறிப்பு என்னாம் கொல்
அங்கே உனது திவ்ய மங்கள விக்ரஹத்தை தர்சிக்கப் பெற்றால் அவர்கள் கருத்து மற்று யாதாகுமோ –

கடலோ மழையோ முழு நீலக் கல்லோ காயா நறும் போதோ படர் பூம் குவளை நாண் மலரோ நீலோற் பலமோ பானலோ
இடர்சேர் மட்வாருயிர் உண்பதியாதோ வென்று தளர்வாள்-

பூவையும் காயாவும் நீளமும் பூக்கின்ற காவி மலர் என்றும் காண் தோறும்
பாவியேன் மெல்லாவி மெய்ம்மிகவே பூரிக்கும் அவ்வவை எல்லாம் பிரான் உருவே என்று –

தொட்ட மாத்ரமே துஷ்ட நிரசனம்
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டான் –
வாணன் ஆயிரம் புயங்கள் குருதி நீர் சிந்தியோட நேமி தொட்ட திருவரங்க ராசரே –

———————————————————————————–

குறியானைச் செங்கன் நெடியானை வானவர் கோனைச் சங்கக்
குறியானை வித்த திருவரங்கே சனைக் கூவி நின்று
குறியானை காத்தவனைப் பாடினேன் கொடி கூப்பிடினும்
குறியானை யப்பவர் போற் கொடியேன் சொலும் கொள்வன் என்றே –91-

குறியானைச் செங்கன் நெடியானை
குறுகிய வடிவம் கொண்ட வாமன அவதாரம் செய்தவனும் –
சிவந்த திருக் கண்களை உடைய திருவிக்ரமனாய் நீண்டு வளர்ந்தவனும் –
வானவர் கோனைச் சங்கக் குறியானை வித்த திருவரங்கே சனைக்
சங்கம் குறியால் நைவித்த –
தேவ ராஜாவான இந்திரனை -பாஞ்ச ஜன்யத்தால் -முழக்கத்தால் -பாரிஜாத அபஹரண காலத்தில் மூர்ச்சித்து விழச் செய்த ஸ்ரீ ரங்க நாதனும்
கூவி நின்று குறியானை காத்தவனைப்
ஆதி மூலமே என்று தன்னை கூவி அழைத்து த்யானித்த ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை பாதுகாத்தவனுமாகிய திருமாலைக் குறித்து
பாடினேன் கொடி கூப்பிடினும் குறியானை யப்பவர் போற் கொடியேன் சொலும் கொள்வன் என்றே –
கொடி கூப்பிடினும் குறி ஆ நயப்பவர் போல் கொடியேன் சொலும் கொள்வான் என்று
காக்கை இயல்பாக கத்தினாலும் அதனை ஒரு நல்ல நிமித்தமாக விரும்பி உலகத்தார் கொள்வது போலே
கொடியவனான யான் வாய்க்கு வந்தபடி சொல்லும் சொல்லையும் நன்மையாக அப்பெருமான் ஏற்றுக் கொள்வான் என்று நினைத்து
பாடினேன்
வாய் விட்டுக் கவி பாடினேன் –

நாக்கு நின்னை யல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று -மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாயேலும்
என் நாவுக்கு ஆற்றேன் காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே -பெரியாழ்வார்
திருமாலவன் கவி யாது கற்றேன் பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ யுண்டு பண்டு பண்டே —

————————————————————————–

வனத்திற் சிலம்பி விடு நூலுட் பட்டு மசக மெய்த்த
வனத்திற் சிலம்பின போற் பிணி வாய்ப்பட்டென் வாய் புலம்பின்
வனத்திற் சிலம்பின் குரலன்னம் வாழு மரங்கனிப்பு
வனத்திற் சிலம்பினின்றான் கேட்கு மோவும்பர் வாழ்த்தை விட்டே –92–

வனத்திற் சிலம்பி விடு நூலுட் பட்டு மசகம்
வனத்தில் சிலம்பி விடு நூலுள் பட்டு -மாசகம் –
கொசுவானது காட்டிலே சிலந்திப் பூச்சி வாய் விட்டு இழைத்த நூலினிடையே சிக்கிக் கொண்டு
மெய்த் தவனத்திற் சிலம்பின போற் –
உடல் தவிப்பினால் அரற்றியது போலே
பிணி வாய்ப்பட்டென் வாய் புலம்பின்
யான் நோயின் கண் அகப்பட்டு எனது வாய் விட்டு அரற்றினால்
அந்த அரற்று ஒலியை
வனத்திற் சிலம்பின் குரலன்னம் வாழு மரங்கனிப்பு வனத்திற் சிலம்பினின்றான்
சிலம்பின் குரல் அன்னம் வனத்தில் வாழும் அரங்கன் இ புவனத்தில் சிலம்பில் நின்றான் –
சிலம்பு என்னும் காலணியின் ஒலி போன்ற குரலை உடைய அன்னப் பறவைகள் நீரிலே வாழ்வதற்கு இடமான திரு வரங்கத்தில் பள்ளி கொண்டு இருப்பவனும்
இந்த உலகத்திலே திரு வேங்கடம் என்னும் திருமலையிலே -மலையின் பெயரான சிலம்பு -நின்று அருள்பவனுமான எம்பெருமான்
கோயில் திருமலை -போல அரங்கன் சிலம்பில் நின்றான் என்கிறார்
கேட்குமோ வும்பர் வாழ்த்தை விட்டே —
உம்பர் வாழ்த்தை விட்டுக் கேட்குமோ
பரம பதத்தில் வாழும் நித்ய முக்தர்கள் உடைய மங்கள வாழ்த்து ஒலியை விட்டு கேட்டு அருள்வானோ –

———————————————————————————————————-

விடத்தேரை மன்னும் வனப் பாழும் கிணற்றுள் வெம்பாம்பு பற்றும்
விடத்தேரை வாய் வண்டு தேன் வேட்டல் போல் விசித்துக் கொடு போய்
விடத்தேரையில் வெங்கட் கூற்றை எண்ணாது எண்ணும் வேட்கை எல்லாம்
விடத்தேரை யூரரங்கன்று இருந்தாளில் விழு நெஞ்சமே –93-

விடத்தேரை மன்னும் வனப் பாழும் கிணற்றுள் வெம்பாம்பு பற்றும்
விடத்தேரை என்னும் மரம் பொருந்திய காட்டிலே உள்ள பாழ் அடைந்த கிணற்றிலே
கொடிய பாம்பினால் கௌவிக் கொள்ளப் பட்ட
விடத்தேரை வாய் வண்டு தேன் வேட்டல் போல்
விடம் தேரை -நஞ்சு ஏறிய தவளையினது
வாயிலே அகப்பட்டுள்ள வண்டு தேனை விரும்புவது போலே
விசித்துக் கொடு போய் -விடத்தேரையில் வெங்கட் கூற்றை எண்ணாது எண்ணும்
விசித்துக் கொடு போய் -தேர் ஐ யில் வெம் கண் கூற்றை எண்ணாது என்னும்
உயிரை உடம்பின் நின்றும் பாசத்தால் கட்டி இழுத்துக் கொண்டு போய் விட எண்ணுகிற வேல் படையையும்
கொடும் தன்மையையும் உடைய யமனை பின் புறத்திலேயே இருக்கிறான் என்று எண்ணாமல்
நீ மேன்மேல் -எண்ணுகின்ற
வேட்கை எல்லாம்
ஆசைகள் யாவும்
விடத்
ஒழிய
தேரை யூரரங்கன்று இருந்தாளில் விழு நெஞ்சமே —
அர்ஜுனனுக்கு தேரை ஒட்டிய ஸ்ரீ ரங்க நாதனது திருவடிகளிலே சேர்வாய்
திருத்தேர் உத்சவம் கண்டு அருளும் நம் பெருமாள் திருவடிகளை சேர்வாய் என்றுமாம்

—————————————————————————————

விழுங்கூன் றசைச் சுவர் நீர் மலங் கோழை வெம் பித்தொடுங்க
விழுங்கூ னரம்புறி யென்பேணி தோற்சட்டை வீழ்ந்து நொந்த
விழுங்கூந்த லாரழப் பாடையில் போய் சுடும் வெய்ய செந்தீ
விழுங்கூன நோய்க் குடில் வேண்டேன் அரங்க விமானத்தானே –94-

விழுங்கூன் றசைச் சுவர் நீர் மலங் கோழை வெம் பித்தொடும்
கூன் விழும் தசை சுவர்
நீர் மலம் கோழை-கொடிய பித்தமும் -இவற்றுடன் கூடிய
கவிழுங்கூ னரம்புறி யென்பேணி தோற்சட்டை வீழ்ந்து நொந்த -விழுங்கூந்த லாரழப் பாடையில் போய்
கவிழும் கூன் -கவிழ்கிற பாத்ரமும்
நரம்பு உறி -நரம்புகளினால் அமைக்கப் பட்ட ஒரு சிக்கமும்
என்பு ஏணி -எலும்பிகளினால் ஆகிய தோர் ஏணியும்
தோல் சட்டை –
அவிழும் கூந்தலார்
நொந்து வீழ்ந்து அழ -வருந்தி கீழ் விழுந்து அழ பாடை மேல் கொண்டு போய்
சுடும் வெய்ய செந்தீ விழுங்கு
ஊன நோய்க் குடில்
வேண்டேன் அரங்க விமானத்தானே —

ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன் என்பதை ஒட்டி அருளிச் செய்கிறார்

——————————————————————————————-

மானத் துவண்ட லுழவோர் எழுத்தின் வடிவுற்ற சீர்
மானத் துவண்ட வினையாளராயினு மால் வளர் வி
மானத் துவண்டல மா மரங்கம் வழி யாவரினு
மானத் துவண்டமர் தாரண்ட ராம்பதம் வாய்க்குமங்கே –95-

மானத் துவண்ட லுழ
மால் நத்து -பெரிய நத்தை யானது
வண்டல் உழ-சேற்றிலே ஊர்ந்து செல்ல
வோர் எழுத்தின் வடிவுற்ற சீர்மானத் –
ஓர் அஷரத்தின் வடிவமாக அமைந்த சிறப்பு போலே
துவண்ட வினையாளராயினும்
வருந்துவதற்கு காரணமான ஊழ் வினையை யுடையவர்களே யானாலும்
அவர்கள்
மால் வளர் விமானத் துவண்டல மா மரங்கம் வழி யாவரினும்-
மால் வளர் விமானத்து வள் தளம் ஆம் அரங்கம் வழி ஆ வரினும்
திருமால் கண் வளர்ந்து அருளுகிற பிரணவாகார விமானத்தை யுடைய ஸ்ரீ ரங்க மார்க்கமாக தன்னடையே வந்தாலும்
அந்த வரவினாலேயே
மானத் துவண்டமர் தாரண்ட ராம்பதம் வாய்க்குமங்கே —
மானத்து வண்டு அமர் தார் அண்டர் ஆம் பதம் வாய்க்கும்
பெருமையையும் வண்டுகள் மொய்க்கும் மாலையையும் உடைய முக்தர்கள் ஆகும் பதவி சித்திக்கும் –
தேவர்கள் மாலையில் வண்டு மொய்க்காது -முக்த நித்யர்கள் மாலையிலே தான் மொய்க்கும்

————————————————————————————————–

அங்காக்கைக் கே மங்கைக் கீந்தான் அரங்கன் அவனிக்கு வாய்
அங்காக்கைக் கே பசித்தான் நிற்க வே முத்தி யாக்கித் துயர்
அங்காக்கைக் கே சிலர் வேறே தொழுவரருந்திரவிய்
அங்காக்கைக் கே தனத் தாடரு மோதிரு வன்றியிலே –96-

அங்காக்கைக் கே மங்கைக் கீந்தான் அரங்கன்
அம் கா மங்கைக்கு கைக்கே ஈந்தான்
அழகிய -சோலையை -இந்திரன் கற்பகச் சோலையில் உள்ள பாரிஜாத தருவை -சத்யா பாமை பிராட்டிக்கு கையிலே கொடுத்தவனும் -கை வசமாக்கித் தந்தவனும்
அவனிக்கு வாய் -அங்காக்கைக் கே
உலகத்தை உண்பதற்கு –தனது வாயத் திறக்கும் அவ்வளவாக
பசித்தான்
பசி உற்றான் -வாய் திறந்து உலகத்தை உட்கொள்ள அவா கொண்டவனும்
ஆகிய அரங்கன் –
நிற்க வே
இருக்கையிலே -அவனை விட்டு
முத்தி யாக்கித் துயர் அங்காக்கைக் கே சிலர் வேறே தொழுவர்-
தமக்கு மோஷத்தைக் கொடுத்து துன்பங்கள் வாராத படி தம்மை காப்பதற்கு வேறு தெய்வங்களை சிலர் வணங்குவார்கள்
அருந்திரவியம் –
அருமையான செல்வப் பொருளை
அங்காக்கைக் கே தனத் தாடரு மோதிரு வன்றியிலே –
திரு அன்றியிலே -திருமகள் கொடுப்பாளே யல்லாமல்
காக்கை கே தனத்தாள் தருமோ
காக்கை வடிவம் எழுதிய துவசத்தை உடையவளான மூதேவி கொடுக்க மாட்டுவளோ –

நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள் தன்னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்
கேட்டிரே நம்பிமீர் காள் கெருட வாகனும் நிற்க
சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே -திருமாலை

—————————————————————————

அன்றே யடைய யுனக்கே யடிமை என்றாய்ந்து உணர்ந்தார்
அன்றே யடையப் படுவாருனை யரங்கா வனத்திய்
அன்றே யடையை யயில்வோரு மீதறி யாரறிஞர்
அன்றே யடையைம் புலனாலு நன்கில்லை யாங்கவர்க்கே –97-

அன்றே யடைய யுனக்கே யடிமை என்றாய்ந்து உணர்ந்தார் அன்றே
அன்றே -அந்நாளிலேயே -தொன்று தொட்டே
உனக்கே அடிமை பட்டவை என்று ஆராய்ந்து அறிந்தவர்கள் அன்றோ
யடையப் படுவாருனை யரங்கா
உனை அடையப் படுவார் -அரங்கா -உன்னைச் சேர்வதற்கு உரியர்
வனத்திய் அன்றே யடையை யயில்வோரும்-
வனத்து இயன்றே அடையை அயில்வோரும்-
காட்டில் வசித்துக் கொண்டே இலையை புசிப்பவர்களான முனிவர்களும்
ஈதறியார் –
ஈது அறியார் -இந்த உண்மையை உணரார் ஆயின்
அறிஞர் அன்றே
அறிவுடையார்கள் அல்லர் ஆவார்
யடையைம் புலனாலு நன்கில்லை யாங்கவர்க்கே —
அவர்கட்கு ஆங்கு ஆடை ஐம்புலனாலும் நன்கு இல்லை
அவ்வனத்தில் இருந்து அடைக்கப் பட்ட -அடக்கி ஆளப்பட்ட -பஞ்ச இந்த்ரியங்களாலும் நல் பயன் இல்லை –

————————————————————————–

ஆங்கார மாமின்னைத் தோய்மார் பரங்கனளை வெண்ணெயுண்டு
ஆங்கார மாநில முண்டாற்குத் தொண்டனிவ் வண்டத் தப்பால்
ஆங்கார மான்பகு திப்புறம் போயமு தாற்றிர் படிந்து
ஆங்கார மானடி காண்பே னவன்ற னருள் சிந்தித்தே –98-

ஆங்கார மாமின்னைத் தோய்மார் பரங்கனளை வெண்ணெயுண்டு
கார் ஆம் -மேகத்தில் உண்டாகின்ற
அம் -அழகிய
மின் மாவை -மின்னல் போன்ற வளான இலக்குமியை
தோய் மார்பு அரங்கன் -தழுவும் திருமார்புடை ரங்கநாதனும்
அளையினை யுண்டு ஆங்கு -வெண்ணெயை யுண்டால் போலவே
ஆர மாநில முண்டாற்குத்
நிரம்ப பெரிய உலகத்தை உட்கொண்டவனுமான திருமாலுக்கு
தொண்டன் -அடியவன் -ஆதலால்
னவன்ற னருள் சிந்தித்தே —
அவன் தன் அருள் சிந்தித்தே
இ வண்டத் தப்பால்
இந்த அண்ட கடாஹத்துக்கு அப்பால்
ஆங்கார மான்பகு திப்புறம் போய்
ஆங்காரம் மான் பகுதி புறம் போய் –
அஹங்காரம் மகான் பிரகிருதி என்ற ஆவரணங்களைக் கடந்து மேல் சென்று
அமுதாற்றிர் படிந்து –
அமுது ஆற்றில் படிந்து –
அம்ருதமயமான விரஜா நதியிலே நீராடி
ஆங்கார மானடி காண்பேன்
ஆங்கு ஓர் அம்மான் அடி காண்பேன்
அவன் தன் அருள் சிந்தித்தே -என்றது வீடு பேற்றுக்கு அவன் அருள் சிந்தித்து அல்லது வேறு ஒரு உபாயம் இல்லை என்றவாறு –

————————————————————————–

சிந்தாகுல முய்யக் குன்றெடுத்தாய் தென்னரங்க சுற்றும்
சிந்தா குலகம் படைத்து அளித்தாய் நிலம் சென்று இரந்த
சிந்தா குலவு செல்வந்தந்தை தாய் குரு தெய்வமு நீ
சிந்தா குலமடைந்தேன் அடியேன் சென்மம் தீர்த்து அருளே –99-

சிந்தாகுல முய்யக் குன்றெடுத்தாய் தென்னரங்க
சிந்து -இந்திரன் ஏவிய மேகங்கள் விடாப் பெரு மழை பொலிதலால் வருந்திச் சிதறிய
ஆ குலம் உய்ய -பசுக் கூட்டம் உயிர் பிழைக்கும் படி
குன்று எடுத்தாய் -தென் அரங்க
சுற்றும் சிந்தா குலகம் படைத்து அளித்தாய் நிலம் சென்று இரந்த
சுற்றும் சிந்து ஆகு -சுற்றிலும் கடல் அமையப் பெற்ற
உலகம் -உலகத்தை
படைத்து -அளித்தாய் -நிலம் இரந்த
சிந்தா குலவு செல்வந்தந்தை தாய் குரு தெய்வமு நீ
சிந்தா -வாமன மூர்த்தியே
குலவு செல்வம் -சிறப்புற்று விளங்கும் செல்வமும்
தந்தை தாய் குரு தெய்வமு நீ -எல்லாம் நீயே
சிந்தா குலமடைந்தேன் அடியேன் சென்மம் தீர்த்து அருளே —
சிந்தா ஆகுலம் அடைந்தேன்
பிறப்புத் துன்பத்தைக் குறித்து -மனக் கலக்கம் அடைந்து உள்ளவனான
அடியேனுடைய பிறப்பை ஒழித்துக் கருணை செய்து அருள்வாய்

———————————————————————–

தீரத் தரங்கப் பவ நோய் துடைத்து என்னைத் தேவரொடும்
தீரத் தரங்கப் பணி காப்ப வைத்த செயல் என்பதோர்
தீரத் தரங்க வபயம் என்றார்க்கும் திரைப் பொன்னி சூழ்
தீரத் தரங்கன் சிலம் பார்ந்த செய்ய திருவடியே –100-

தீரத் தரங்கப் பவ நோய் துடைத்து
தரங்கம் பவ நோய் தீரத் துடைத்து
அலை போல் மாறி மாறி வந்து வருத்துகின்ற எனது பிறவித் துன்பத்தை ஒழியுமாறு நீக்கி
என்னைத் தேவரொடும்
அடியேனை நித்ய ஸூ ரிகளோடும்
தீரத் தரங்கப் பணி காப்ப வைத்த செயல் என்பதோர்
தீர்த்தர் -ஓடும் ஞானி
அங்கு -அவ்விடத்தில் -பரம பதத்தில்
அ பணி
எம்பெருமானுக்கு செய்யும் அந்தக் கைங்கர்யங்களை
காப்ப -காத்து இருந்து தவறாமல் செய்யுமாறு
வைத்த செயல் எனபது ஒர்தீர்
செய்கையை அறியுங்கோள்
தீரத் தரங்க வபயம் என்றார்க்கும் திரைப் பொன்னி சூழ்
அத்தர் அங்க -தலைவர்களான பிரம ருத்ரர்களை தனது திருமேனியில் கொண்டு அருள்பவனே
அபயம் என்று ஆர்க்கும்
அடைக்கலம் என்று ஓலம் இடுவது போன்று ஆரவாரிக்கின்ற
திரைப் பொன்னி சூழ்
தீரத் தரங்கன் சிலம் பார்ந்த செய்ய திருவடியே —
தீரத்து அரங்கன் -வரம்பை உடைய திருவரங்கன் உடைய
சிலம்பு ஆர்த்த செய்ய திருவடியே
சிலம்பு என்னும் திரு ஆபரணம் பொருந்திய சிவந்த திருவடிகளே –

பணி காப்ப வைத்த செயல் -அவா அற்று வீடு பெற்றார் என்றால் போலே
அத்த ரங்க அபயம் என்று ஆர்க்கும் திரைப் பொன்னி
ஏறாளும் இறையோனும் திசை முகனும் திரு மகளும் கூறாளும் தனிவுடம்பன்
அஞ்சாதே என்று என்னை பாதுக்காக உரியன் நீயே -என்றபடி

————————————————————————————

பணவாள் அரவின் அரங்கேசர் தாளில் பரிதி வளை
நிணவாள் அம் சார்ங்கம் கதை தோளில் சார்த்தினன் நீள் நிலமேல்
குணவாளர் ஆம் பட்டர்க்கு ஏழ் ஏழ் பிறப்பும் குடி அடியான்
மணவாள தாசன் யமக அந்தாதி வனைந்தனனே —

பணவாள் அரவின் அரங்கேசர் தாளில் சார்த்தினன்
திருவடிகளில் சமர்ப்பித்தான்
பரிதி வளை நிண வாள் அம் சார்ங்கம் கதை தோளில்
பரிதி -சக்கரம்
வளை -சங்கமும்
நிணம் வாள் -பகைவரின் கொழுப்புத் தோய்ந்த வாளும்
அம் சார்ங்கம் -அழகிய சார்ங்கம் என்னும் வில்லும்
கதை -ஆகிய பஞ்ச ஆயுதங்களும்
தோளில் -தமது திருக்கைகளில் கொள்பவரான
தொனி தக்க சங்கம் திருச் சக்கரம் சுடர் வாள் முசலம் குனி தக்க சார்ங்கம் தரித்தார் அரங்கர் -என்றார் முன்னமே
நீள் நில மேல் -நீண்ட நில வுலகத்திலே
குணவாளர் ஆம் பட்டர்க்கு
உத்தம குணங்களை யுடைய வரான பட்டர் என்னும் ஆச்சார்யர்க்கு
ஏழ் ஏழ் பிறப்பும் குடி அடியான்
பதினான்கு தலை முறைகளிலும் -தொன்று தொட்டு -பரம்பரையாக அடியவனான
மணவாள தாசன் –
அழகிய மணவாள தாசன்
யமக அந்தாதி வனைந்தனனே —
யமக யந்தாதி பா மாலையைத் தொடுத்து

————————————————————————————–

கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்தந்தாதி –50-75-

February 12, 2016

பட நாகத்தந்தர மீதிருப்பான் எம் பரன் அரங்கன்
பட நாகத் தந்தம் பறித்தோன் புகழைப் பரவுமின்க
பட நாகத் தந்தக் கரணம் பொல்லான் சிசுபாலன் முற்பல்
பட நாகத் தந்த வசைக் குந்தந்தான் றொல் பரகதியே –51-

பட நாகத்தந்தர மீதிருப்பான் எம் பரன் அரங்கன்
அந்தரமீது -பரமபதத்தில்
படம் நாகத்து இருப்பான் -படங்களை உடைய திருவனந்த வாழ்வான் மீது வீற்று இருப்பவனும்
எம் பரன் -எமது இறைவனும்
பட நாகத் தந்தம் பறித்தோன்
கம்சன் ஏவிய குவலயா பீடம் என்னும் யானையினுடைய தந்தத்தை அந்த யானை அழியும்படி பறித்துக் கொண்டவனும்
புகழைப் பரவுமின்
அந்த அரங்கன் கீர்த்தியை கொண்டாடித் துதியுங்கோள்
அப்படி புகழும் படி அந்த எம்பெருமான் செய்தது யாது என்னில்
கபட நாகத் தந்தக் கரணம் பொல்லான் சிசுபாலன்
கபடனும் -வஞ்சகனும் -ஆகத்து அந்தக்கரணம் பொல்லான் -உடம்பில் அகத்து உறுப்பான மனத்தாலும் தீமை நினைப்பவனுமான சிசுபாலன் என்பவன்
முற்பல் பட நாகத் தந்த வசைக் குந்தந்தான் றொல் பரகதியே —
முன்பு பலவாறாக நா கத்து -நாவினால் பிதற்றின
அந்த வசைக்கும் -அப்படிப் பட்ட மிகக் கொடிய நிந்தனை சொற்களுக்கும்
தொல் பரகதி தந்தான் -அநாதியான பரமபதத்தைக் கொடுத்து அருளினான் –

———————————————————————

பரவையி லன்ன கட் பாஞ்சாலி நின்பரமென்ன நிரு
பறவையில் மேகலை ஈந்தான் அரங்கன் பணிந்து இமையோர்
பரவையிலாழிப் பிரான் அடிக்கீழுற் பவித்து அழியும்
பரவையில் மொக்குகளைப் போல் பல கோடி பகிரண்டமே–52-

பரவையி லன்ன கட் பாஞ்சாலி நின்பரமென்ன
பரவி ஐ யில் அன்ன கண் பாஞ்சாலி -விசாலித்த வேலைப் போன்ற கூறிய கண்களை யுடைய த்ரௌபதி
நின் பரமென்ன -என்னைக் காப்பது உனது பாரம் என்று சொல்லி முறையிட்டுச் சரணம் அடைய
நிருபறவையில் மேகலை ஈந்தான்
நிருபர் அவையில் -அரசர்கள் கூடிய சபையிலே
மேகலை ஈந்தான்-அவட்கு ஆடையை அளித்தவனும் -மேகலை -மேவுகலை -விரும்பிகின்ற கலை -பொருந்திய ஆடை
அரங்கன்
பணிந்து இமையோர் பரவு
இமையோர் பணிந்து பரவு -தேவர்களால் வணங்கித் துதிக்கப் பெற்ற
ஐயில் ஆழிப் பிரான் அடிக்கீழ்
கூரிய சக்கராயுதத்தை ஏந்திய இறைவனுமான அரங்கன் திருவடியிலே
உத் பவித்து அழியும் பரவையில் மொக்குகளைப் போல் பல கோடி பகிரண்டமே–
கடலில் தோன்றும் நீர்க் குமிழிகளைப் போலே அநேக கோடிக் கணக்காகிய அண்ட கோளங்கள்
உத்பவித்து அழியும் -தோன்றி சிலகாலம் கழிந்த வாறே மாய்ந்து போம் –

வாரித்தலமும் குல பூதரங்களும் வானு முள்ளே -பாரித்து வைத்த இவ்வண்டங்கள் யாவும் படைக்க முன்னாள்
வேரிப் பசும் தண் துழாய் அரங்கேசர் விபூதியிலே மூரிப் புனலில் குமுழிகள் போலே முளைத்தனவே -திருவரங்கத்து மாலை

———————————————————————-

அண்ட மடங்கலையும் தந்து காத்தவை யந்தந்தன்பால்
அண்ட மடங்கலைச் செய்கா ரணமம் பொன் முத்தலைவான்
அண்ட மடங்கலை யீர்த்தோடும் பொன்னி யரங்கன் புட்கார்
அண்ட மடங்கலை முந்நீர் மகளுகப் பாகவென்றே –53-

அண்ட மடங்கலையும் தந்து காத்தவை யந்தந்தன்பால் அண்ட மடங்கலைச் செய்
அண்ட கோளங்கள் எல்லாவற்றையும் –படைத்து -ரஷித்து-அவை அனைத்தையும் கல்பாந்த காலத்திலேயே மீண்டும் தன பக்கல் ஒடுங்கும் படி அழிவு செய்கின்ற
காரணம்-எது என்னில் –
பொன் முத்தலைவான் அண்ட
அழகிய பொன்னையும் முத்துக்களையும் கொழிக்கின்ற அலைகள் மேக மண்டலத்தை அலாவி உயர
மடங்கலை யீர்த்தோடும்-சிங்கங்களை இழுத்துக் கொண்டு ஓடி வருகிற
பொன்னி யரங்கன் புட்கார்
காவேரி நதியினால் சூழப் பட்ட திருவரங்கத்தில் எழுந்து அருளி இருக்கும் பெருமான்
காரண்டம் புள் அடங்கு அலை முந்நீர் மகளுகப் பாகவென்றே —
நீர்க்காக்கை யாகிற பறவைகள் தம்மில் அடங்கப் பெற்ற அலைகளை யுடைய திருப் பாற் கடலில் நின்றும் தோன்றிய திரு மகள் கண்டு களிப்பதற்கே என்றேயாம்
முந்நீர் மகள் உகப்பாக -அண்டங்களுக்கு எல்லாம் அதிஷ்டான தேவதையான கடலாடை சூழ்ந்த பூமிப் பிராட்டி மகிழ்ச்சி யடைய என்றுமாம் –

அந்தம் அண்ட -அழிவை அடைய
மடங்கலைச் செய் -ஊழிக் காலத்தைச் செய்கின்ற –
என்றுமாம்
மடங்கல் -பிடரி மயிர் மடன்குதலை உடைய ஆண் சிங்கம் காரணப் பெயர்

தன்னுள்ளே திரைத்து எழுந்த தரங்க வெண் தடம் கடல்
தன்னுள்ளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுள்ளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுள்ளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே -திருமழிசைப் பிரான் –

————————————————————

ஆக மதிக்கு முகமன் முகமுடை யானயன் வாழ்
ஆக மதிக்கு நவநீதக் கள்வ வவனி கொள்வார்
ஆக மதிக் குளம் சேர் ரங்கா வுன்னை யன்றித் தெய்வம்
ஆக மதிக்குள் எண்ணேண் அடியேன் பிரராரையுமே –54-

ஆக மதிக்கு முகமன் முகமுடை யானயன் வாழ்
ஆகமம் திக்கு முகம் மேல் உடையான் -காமிகம் முதலிய ஆகமங்களைக் கூறிய
-நான்கு முகங்களுக்கு மேலும் ஒரு முகத்தை -ஐந்து முகங்களை உடைய சிவபெருமானும்
அயன் -பிரமனும் இனிது வசிக்கின்ற
ஆக மதிக்கு நவநீதக் கள்வ
ஆக -திரு மேனி யுடையவனே
மதிக்கும் நவ நீத கள்வ -கடைந்து எடுத்த வெண்ணெயை ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் களவு செய்து உண்டவனே
வவனி கொள்வாராக -பூமியைக் கோட்டினால் குத்தி எடுத்துக் கொண்டு வந்த ஸ்ரீ வராஹ மூர்த்தி யானவனே
மதிக் குளம் சேர் ரங்கா
சந்திர புஷ்கரணி சேர்ந்த ஸ்ரீ அரங்கத்தில் எழுந்து அருளி இருப்பவனே
வுன்னை யன்றித் தெய்வமாக மதிக்குள் எண்ணேண் அடியேன் பிரராரையுமே
உனது அடியவனான நான் உன்னை யல்லால் வேறு எவரையும் கடவுளாக மனத்தாலும் கருத மாட்டேன்
மறந்தும் புறம் தொழா மாந்தர் அன்றோ

பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனை தன உந்தியிலே தோற்றுவித்து கறை தங்கு வேல் தடம் கண் திருவை மார்பில் கலந்தவன்

—————————————————————————

ஆரத் தநந்தருந் தாய்தந்தை யா நந்த மாவரிகழ்
ஆரத் தநந்தனன் றீமை கண்டாலங்கவுத் துவ பூண்
ஆரத் தநந்த சயனா வணியரங்கா திகிரி
ஆரத் தநந்தன் மதலா யென் றீங்குனக்கத் தன்மைத்தே –55-

ஆரத் தநந்தருந் தாய்
தான் பெற்ற பிள்ளைக்கு முலைப்பால் கொடுக்கும் தாயும்
தந்தை யா நந்த மாவரிகழ் ஆரத் தநந்தனன்
றீமை கண்டால்
ஆரத் தநந்தருந் தந்தையும் -தனது செல்வம் முழுவதும் கொடுக்கும் தந்தையும் –
நந்தனன் தீமை கண்டால் ஆனந்தம் ஆவர் இகழார்
தமது புதல்வன் ஏசுதல் உதைத்தல் போன்றவற்றைக் கண்டு மகிழ்வது போலே
லங்கவுத் துவ பூண் ஆரத் தநந்த சயனா வணியரங்கா
அம குத்துவ பூண் -அழகிய கௌஸ்துபம் மற்ற ஆபரணங்கள் பூண்ட
ஆரத்து அனந்த சயனா -அணிந்த ஹாரங்களை யுடைய ஆதி சேஷன் மேல் பள்ளி கொண்டு அருளும்
அணி யரங்கா
திகிரி ஆரத் தநந்தன் மதலா யென் றீங்குனக்கத் தன்மைத்தே –
திகிர் ஆர் அத்த -சக்கராயுதம் தரித்த திருக்கையை யுடையவனே
நந்தன் மதலாய்
என் தீங்கு உனக்கு அ தன்மைத்தே -எனது பிழையும் உனக்கு அத்தன்மையே ஆகுமே எந்தாய் –

என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்
திருவரங்கத்துள் ஓங்கும் ஒளியுளார் தாமே யாண்டே தந்தையும் தாயும் ஆவார் -திருமாலை
அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா -பெரியாழ்வார்

————————————————————

அத்தனு மன்புள வன்னையும் பேரு மனந்தமதாம்
அத்தனு மன்புல னாதலி னாண்டரு ளம்புயைவீர்
அத்தனு மன்புயமீதே றரங்கனஞ் சார்ங்கவயிர்
அத்தனு மன்புகல் பேரிரு வீர்க்குமடிய னென்றே –56-

அத்தனு மன்புள வன்னையும் பேரு மனந்தமதாம்
அத்தனும் -தந்தையும்
அன்புள்ள வன்னையும் -மிக்க அன்பை யுடைய தாயும்
பெரும் -பெயரும்
அநந்தம் அது ஆம் -எல்லை இல்லதாகப் பெற்ற
அத்தனு மன்புல னாதலி னாண்டரு ளம்புயை
அ தனு-அந்த அந்த உடலில் -பல வகைப் பட்ட பிறவிகளில்
மன் புலன் ஆதலின் -மன்னும் -பொருந்திய -புல்லன் -எளியவன் ஆகையால்
அம்புயை -இலக்குமி என்றும்
வீர் அத்தனு மன்புயமீதே றரங்கனஞ் சார்ங்கவயிர்-அத்தனு மன்புகல் பேரிரு வீர்க்குமடிய னென்றே
வீரத்து அனுமன் புயம் மீது ஏறு அரங்கன் -அம சார்ங்கம் வயிரம் தனு மன் புகழ் பேர் இருவீர்க்கும் அடியன் என்று ஆண்டு அருள்

———————————————————————–

அடியவராகவும் ஆட்கொள்ளவும் எண்ணி யாருயிர்கட்கு
அடியவராகம் படைத்தமை யாலகமே பெரிய
அடியவராக வரங்கருக்கு ஆட்செய ருட்கதையால்
அடியவராகம் செய்மாரனுக்காட் செயுமை வரையே –57-

அடியவராகவும் ஆட்கொள்ளவும் எண்ணி யாருயிர்கட்கு
அடியவராகம் படைத்தமை யாலகமே பெரிய
அடி -ஆதிகாலத்தில்
ஆர் உயிர்கட்கு ஆகம் படைத்தமையால்-
அகமே -மனமே
பெரிய அடிய வராக வரங்கருக்கு ஆட்செய்ய -பெரிய திருக்கால்களை உடைய வராக மூர்த்தியாக திருவவதாரம் செய்து அருளிய ஸ்ரீ அரங்கர்க்கு
நீ அடிமையாவாய்
அங்கனம் ஆகி அருள் கதையால் -கருணையாகிய தண்டாயுதத்தைப் பெற்று அது கொண்டு
அடியவராகம் செய்மாரனுக்காட் செயுமை வரையே —
அவம் ராகம் செய் மாறனுக்கு ஆள் செய்யும் ஐவரை அடி
கெட்ட ஆசையை விளைக்கிற மன்மதனுக்கு அடிமை செய்யும் பஞ்ச இந்த்ரியங்கள்
ஆகிய உட்பகைவர்களையும் தாக்கி வலியடக்குவாய்

யானும் என்னெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் வல்வினையைக் கானும் மழையும் புகக் கடிவான்
தானோர் இருளன்ன மாமேனி எம்மிறையார் தந்த அருள் என்னும் தண்டால் அடித்து –
மாறனார் வரி வெஞ்சிலைக்கு ஆட்செய்யும் பாரினார் போலே அல்லாமல் –

சிலம்பினிடை சிறு பரல் போல் பெரிய மேரு திருக் குழம்பில் கணகணப்ப -திருவாகாரம் குலுங்க
நிலா மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய எம் கோமான்
ஆர் உயிர் -முக்தி பெறுவதற்கு உரிய என்றதால்
அரங்கர்க்கு ஆட்செய்து-ஐவரை அடித்து உய்யலாம் என்றவாறு –

—————————————————————————–

செவிலித்தாய் நல் தாய்க்கு அறத்தொடு நிற்றல் –
வரையாழி வண்ணர் அரங்கேச ரீசர்முன் வாணன் திண் தோள்
வரையாழி யார் புள்ளின் வாகனத்தே வந்த நாடொடிற்றை
வரையாழிய துயராய்த் தூக நாணு மதியுஞ் செங்கை
வரையாழி யும் வளையும் மிழந்தாள் என் மடமகளே –58-

செவிலித்தாய் நல் தாய்க்கு அறத்தொடு நிற்றல் –
வரையாழி வண்ணர் -கண்டவர் மனத்தைக் கவர்ந்து கொள்ளும் கடல் போன்ற கரிய நிறத்தை உடையவரும்
அரங்கேச ரீசர்முன் வாணன் திண் தோள்வரையாழி யார்-
பாதுகாக்க வந்த சிவ பிரான் முன்னிலையிலே பாணாசுரனுடைய வழிய தோள்களை துணித்து ஒலித்த சக்கராயுதம் ஏந்திய அரங்கேசர்
புள்ளின் வாகனத்தே வந்த நாடொடிற்றை வரை
கருட வாகனத்தில் ஏறி பவனி வந்த நாள் தொடங்கி இற்றை நாள் அளவும்
யாழிய துயராய்த்
ஆழ்ந்த மனக்கலக்கம் உடையவளாய்
தூக நாணு மதியுஞ் செங்கை வரையாழி யும் வளையும் மிழந்தாள்
என் மடமகளே -எனது மடமைக் குணம் உடைய மகள் -மடமை -பேதைமை -இளமை என்றுமாம்
தூசும் -ஆடையையும்
நானும் -நாணத்தையும்
மதியும் -அறிவையும்
செங்கை வரையாழி யும் வளையும் மிழந்தாள்
சிவந்த கைகளில் அணிந்துள்ள மோதிரத்தையும் வளையல்களையும் இழந்து விட்டாள்-

தியான நிலையில் நின்ற ஐயங்காரது அகக் கண்ணுக்கு எம்பெருமான் கருடாரூடனாய் புலனாகி மறைந்த அளவிலே
அப்பெருமானது சதா சாந்நியத்தை அபேஷித்து பிரிவாற்றாமையால் வருந்துகிற ஐயங்காருடைய துயரத்தை நோக்கிய ஞானிகள்
அவர் பக்கல் தம்மினும் மிக்க ஆதாரத்தை உடைய பேர் அறிவாளர்க்கு ஐயங்காரது நிலைமையை எடுத்துக் கூறுதல் இதற்கு உள்ளுறை பொருள் –

———————————————————————

தலைவி தனது வேட்கை மிகுதியைக் கூறல்
மகரந்த காதலை வாழ்வென்ன வாரிசுட்டாய்திதி தன்
மகரந்த காதலை வானிலுள் ளோர்க்கு மண்னோர்க்கு வட்டா
மகரந்த காதலை வார் குழை யாய் வளர் சீரங்க தா
மகரந்த காதலை வாக்கிற் சொல்லேன் மட வாரெதிரெ –59-

தலைவி தனது வேட்கை மிகுதியைக் கூறல்
மகரந்த காதலை வாழ்வென்ன வாரிசுட்டாய்
மகரம் -கடலிலே வாழும் இயல்பினவான
சுறா மீன்களும்
அலை வாழ்வு தகாது என்ன -கடலில் வாழ்தல் இனிக் கூடாது என்று தவித்துக் கூறும்படி
வாரி சுட்டாய் -ஆக்நேய அஸ்தரத்தால் எரிக்கத் தொடங்கியவனே
திதி தன் மகரந்த கா-திதி தன் மகர் அந்தகா
திதி என்பளுடைய புதல்வர்களான அசுரர்கட்கு எமன் ஆனவனே
தலை வானிலுள் ளோர்க்கு -மேல் உலகத்தில் உள்ள தேவர்களுக்கு தலைவனே
மண்னோர்க்கு வட்டா மகரந்த -மண்னோர்க்கு உவட்டா மகரந்த –
நிலா வுலகத்து வாழும் மனிசர்க்கு தெவிட்டாத தேன் போலே இனியனாணவனே
காதலை வார் குழை யாய் -காது அலை வார் குழையாய்
காதுகளில் அசைகிற பெரிய குண்டலங்களை உடையவனே
வளர் சீரங்க தாம-
ஸ்ரீ ரங்கத்தை கண் வளரும் இடமாகக் கொண்டவனே
கரந்த காதலை
உன் மேல் எனக்கு அந்தரங்க மாக உள்ள மோஹத்தை
வாக்கிற் சொல்லேன் மட வாரெதிரெ –மடவார் எதிரே வாக்கின் சொல்லேன்
தோழியர் முதலிய மகளிரின் முன்னிலையிலே பகிரங்கமாக வாயினால் சொல்லும் தரம் உடையேன் அல்லேன் –

நெஞ்சு என்னும் உட் கண்ணால் எம்பெருமானை தர்சித்த ஐயங்கார் அவன் பக்கல் தமக்கு உண்டான வ்யாமோஹத்தை
ப்பெருமானை குறித்து விண்ணப்பம் செய்தல் இதற்கு உள்ளுறை பொருள் –
தனது அந்தரங்க பக்தி மிகுதியை பெதையரான உலகத்தார் முன்னிலையிலே வாயினால் சொல்லேன் என்றபடி –

பிரிந்த சீதா பிராட்டிக்காக கடலை அணை கட்டி அறிய பெரிய முயற்சி செய்த நீ என்னை அபேஷிப்பது பொருந்துமோ –
திருக்காதும் திருக்குண்டலங்களும் சேர்த்தி அழகிலும் -அவனது பராக்கிரமம் துஷ்ட நிக்ரஹம் பரத்வம் இனிமை இவற்றிலே ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
தலை -உத்தம அங்கமான தலை போலே சிறந்தவனே என்றுமாம்
வானில் உள்ளோர்க்கும் மண்ணில் உள்ளோர்க்கும் தெவிட்டாத தேன் என்றுமாம் ஆராவமுதன் அன்றோ
வளர் சீரங்க தாம – வளர்ந்து கொண்டே இருக்கும் சீர் என்றுமாம் -வளர்ந்து விளங்கும் ஒளி வடிவமானவன் என்றுமாம்

————————————————————————-

இதுவும் அது –
வாராக வாமனனே யரங்கா வட்ட நேமி வல
வாராக வாவுன் வடிவு கண்டான் மன்மதனு மட
வாராக வாதரம் செய்வன் என்றால் உய்யும் வண்ணம் எங்கே
வாராக வாச முலையேனைப் போலுள்ள மாதருக்கே –60-

வாராக வாமனனே யரங்கா வட்ட நேமி வலவா ராகவா வுன் வடிவு கண்டான் மன்மதனு மட வாராக வாதரம் செய்வன் என்றால்
வராகனே –வாமனனே –யரங்கா -வட்ட நேமி வலைவா -ராகவா
உன் வடிவு கண்டால் மன்மதனும் மடவாராக ஆதரம் செய்வன் -என்றால்
உய்யும் வண்ணம் எங்கே வாராக வாச முலையேனைப் போலுள்ள மாதருக்கே –
வார் ஆகம் வாசம் முலையேனை போல் உள்ள மாதர்க்கு உய்யும் வண்ணம் எங்கே
பூமிப் பிராட்டிக்காக பேரு முயற்சி செய்து அவளை எடுத்துக் கொண்டு வந்து கூடி அருளினவனே
வாமணன் -சௌலப்யம்
அரங்கா -இன்பம் அனுபவிக்க இனிய இடத்தில் நித்ய வாசம் செய்து அருளுபவனே
பகைவர்களை நிரசிக்க வல்ல சமர்த்தன் -வட்ட நேமி வலைவா
ராகவா -உயர் குடிப்பிறப்பு -தண்ட காரண்ய வாசிகள் பெண் உருக் கொள்ள ஆசை கொண்டார்களே

————————————————————————

மாதம்பத் துக்கொங்கை யுமல்குற் றேரும் வயிறுமில்லை
மாதம்பத் துக்குறி யுங்கண்டிலேம் வந்து தோன்றினை பூ
மாதம்பத் துக்கெதிர் மார்பா வரங்கத்து வாழ் பரந்தா
மாதம்பத் துக்கருத் தில்லார் பிறப்பென்பர் வையகத்தே –61-

மாதம்பத் துக்கொங்கை யுமல்குற் றேரும் வயிறுமில்லை
மா தம்பத்து -பெரிய தூணிலே
கொங்கையும் –
அல்குல் தேரும் -தேர்த் தட்டு போன்ற அல்குலும்
வயிறும் இல்லை
மாதம்பத் துக்குறி யுங்கண்டிலேம்
மாதம் புத்துக் குறியும் கண்டிலம் –
கர்ப்ப காலமாகிய பத்து மாசத்துக்கு உரிய கர்ப்ப சின்னங்களையும் -அத தூணிலே இருந்தனவாகக் கண்டிலோம்
அங்கனம் இருக்கவும்
வந்து தோன்றினை
தூணில் இருந்து ஸ்ரீ நரசிங்க மூர்த்தியாய் திரு வவதரித்தாய்
இந்த நுட்பத்தை உணராமல்
பூ மாதம்பத் துக்கெதிர் மார்பா -பூ மாது அம்பத்துக்கு எதிர் மார்பா
தாமரை மலராள் திருக் கண்களுக்கு இலக்காய் விளங்குகின்ற திரு மார்பின் அழகு உடையவனே
வரங்கத்து வாழ் பரந்தாமா-
திருவரங்கத்தில் நித்ய சந்நிதி பண்ணி அருளும் பரந்தாமனே
தம்பத்துக்கருத் தில்லார் பிறப்பென்பர் வையகத்தே —
தம் கருத்து பத்து இல்லார் -தம் கருத்தில் உன் விஷயமான பக்தி இல்லாதவர்கள்
வையகத்து பிறப்பு என்பர்
பூமியிலே உனக்கு கர்ம வசத்தால் நேர்ந்த பிறப்பு என்று அதனைச் சொல்வார்கள் –

அவதார விஷய ஞானம் -தனது இச்சையால்
மண்ணும் விண்ணும் உய்ய மூதண்டத்தானத்து அவதரித்தான் எனில் முத்தி வினைத் தீ தண்டத்தானத் தனுவெடுத்தான் எனிற்றீர் நரகே -என்றும்
மாயன் தரா தலத்து மீனவதாரம் முதலானவை வினையின்றி இச்சையால் அவதார் அறிவார் அவரே முத்தராம் அவரே -என்றும் சொல்லக்கடவது இறே-

—————————————————————-

வைகுந்தர் தாமரை போற்பாதர் நாகத்து மாதர்புடை
வைகுந்த மேற்கொண்டு இருந்தார் வடிவைந்தின் வாழுமிடம்
வைகுந்தம் பாற்கடன் மா நீர் அயோத்தி வண் பூந்துவரை
வைகுந்த மன்பர் மனம் சீரரங்கம் வடமலையே–62-

வைகுந்தர் தாமரை போற்பாதர் நாகத்து மாதர்புடை வை
வை குந்தர் -கூர்மையான குந்தம் என்னும் ஆயுதத்தை யுடையவரும் -ஈட்டி என்னும் ஆயுதம் -மற்ற திவ்ய ஆயுதங்களுக்கும் உப லஷணம்
வெங்கணை யத்திரள் குந்த நிற்ப்படை வெம்பு மூலக் கைகள் போர் —தங்கிய சக்கர பந்தி தரித்தன தண் பல கைத்தலமே –
தாமரை போல் பாதர்
நாகத்து -புன்னை மரத்தின் மேலும் -நாகத்து -காளியன் மேல் என்னவுமாம் –
மாதர் புடவை
கோப ஸ்திரீகள் உடைய சேலைகளை
குந்த மேற்கொண்டு இருந்தார்
குந்த -குருந்த மரத்தின் மேலும் -குந்து -சிறிது தூக்கி எடுத்து நடனம் செய்து அருளிய –
குந்து பாதம் -குஞ்சித பாதம்
வைகுந்தத தாமரை போல் பாதர் நாகத்து -பாதமாம் போதைப் படத்து வைத்தார் என்றுமாம்
திருவடி வடு இருப்பதால் கருடனுக்கு அஞ்ச வேண்டாம் என்று காளியனுக்கு அருள் செய்தான் –
கவர்ந்து கொண்டு சென்று ஏறி இருந்த திருமால் உடைய
வடிவைந்தின் வாழுமிடம்
ஐந்து வடிவங்கள் உடன் வாழும் ஸ்தலங்கள்
வைகுந்தம் பாற்கடன் மா நீர் அயோத்தி வண் பூந்துவரை
வைகுந்த மன்பர் மனம் சீரரங்கம் வடமலையே
வைகும் தம் அன்பர் மனம் -சஞ்சலப் படாது தமது அடியார்களுடைய மனமும் –

வலனோங்கு பரமபத மா மணி மண்டபத்தில் அமர்
நலனோங்கு பரம் பொருளாய் நான்கு வியூகமும் ஆனாய்
உபயகிரிப்புய ராமனொடு கண்ணன் முதலான விபவ வுருவமும் எடுத்து
வீறும் உயிர் தொறும் குடிகொள் அந்தர்யாமியுமான தமையாமே எளிதாக இந்த நெடு வேங்கடத்தில் எல்லாரும் தொழ நின்றோய்

——————————————————-

வடமலை தென்மலை கச்சி குறுங்குடி மானிற்பது
வடமலை வேலை யரங்கம் குடந்தை வளருமிடம்
வடமலை கொங்கைத் திருவோடிருப்புவை குந்தங்கர
வடமலை யன்ப ருளநடை யாட்ட மறை யந்தமே –63-

வடமலை தென்மலை கச்சி குறுங்குடி மானிற்பது
மால் நிற்பது -நின்ற திருக் கோலங்கள் -வட மலை தென் மலை கச்சி குறுங்குடி
வடமலை வேலை யரங்கம் குடந்தை வளருமிடம்
வளரும் இடம் -கண் வளர்ந்து அருளும் ஸ்தலங்கள்
வடம் அலை -ஆலிலை -அலை வேலை -அலைகளை உடைய திருப் பாற் கடல் -ஸ்ரீ ரங்கம் -திருக் குடந்தை
வடமலை கொங்கைத் திருவோடிருப்பு-
வடம் அலை கொங்கை ஆரங்கள் அசையப் பெற்ற ஸ்தனங்களை உடைய
திருவோடிருப்பு-
திருமகள் உடன் வீற்று இருந்த திருக் கோலம்
வை குந்த மாம் –
கர வடமலை யன்ப ருளநடை யாட்ட மறை யந்தமே —
நடை -நடந்து சென்று சேரும் இடம்
கரவட மலை அன்பர் உளம் –
கபடத்தை ஒழித்த அடியார்களுடைய மனமாம்
யாட்டம் –
திரு உள்ளம் உகந்து நடனம் செய்யும் இடம்
மறை அந்தம் –
வேதாந்தம் ஆகிய உபநிஷத்துக்கள் -ஸ்வரூபம் குணங்கள் சேஷ்டிதங்கள் மகிமைகள் காட்டுமே –

—————————————————–

அந்தக ராசலம் வந்தாலுனை யழை யாதிருப்பார்
அந்தக ராசலங் கா புரியார்க்கு அரங்கா மறையின்
அந்தக ராசலக் கூக்குர லோயுமுன் னாழ் தடங்கல்
அந்தக ராசலத் தேதுஞ்ச நேமி யறுக்கக் கண்டே –64-

அந்தக ராசலம் வந்தாலுனை யழை யாதிருப்பார்
அந்தகர் -ஞானக் கண் குருடர்களான பேதைகள்
சலம் வந்தால் -தங்கட்கு துன்பம் நேர்ந்த காலத்தே
உன்னை அழையாது இருப்பார்கள் அந்தோ –
அந்தக ராசலங் கா புரியார்க்கு அரங்கா மறையின் அந்த
ராச லங்கா புரியார்க்கு -தலைமை பெற்ற லங்கா புரியில் வாழ்ந்த இராவணன் போன்ற அரக்கர்களுக்கு
அந்தக -யமன் ஆனவனே
அரங்கா
மறையின் அந்த -வேதாந்தங்களில் எடுத்துக் கூறப் பட்டவனே
கராசலக் கூக்குர லோயுமுன்
கர அசலம் கூக்குரல் ஓயும் முன் –
கஜேந்திர ஆள்வான் ஆதி மூலமே என்று கூவி அழைத்து முறையிட்ட ஓலம் அடங்குவதற்கு முன்னமே -கர அசலம் துதிக்கை உடைய மலை -யானை –
ஆழ் தடங்கல் அந்தக ராசலத் தேதுஞ்ச நேமி யறுக்கக் கண்டே ஆழ் தடம் கலந்த கரா சலத்தே துஞ்ச நேமி யறுக்க
ஆழ்ந்த தடாகத்தில் பொருந்திய முதலையானது அந்நீரிலே இறக்குமாறு நீ பிரயோகித்த சக்கராயுதம்
அதனைத் துணிக்க -துஞ்சுதல் தூங்குதல் இறத்தல் என்றவாறு –
கண்டு -பார்த்தும் -கண்டும் அதன் பயனாகிய அலைத்தலை செய்யாமையால் அந்தகர் குருடர்கள் என்றவாறு –

வேங்கடத்தாரையும் ஈடேற்ற நின்றருள் வித்தகரைத்
தீங்கடத்தாரை புனைந்து யேத்திலீர் சிறியீர் பிறவி
தாங்கடத்தாரைக் கடத்தும் என்று யேத்துதீர் தாழ் கயத்து
ளாம் கடத்தாரை விலங்குமன்றோ சொல்லிற்றைய மற்றே –திருவேங்கடத்து அந்தாதி

—————————————————————————————-

அறுகு தலைப் பெய் பனி போன்ற தாதுருவாய்ப் பிறத்தல்
அறுகு தலைப் பிள்ளை யாய்க்காளை யாய்க்கிழ மாகியையள்
அறுகு தலைச் செய்து வீழ்காய் தாநென்னுமாரிருளை
அறுகு தலைக்கோல் பணி யரங்கா நின் கண் ஆசை தந்தே –65-

அறுகு தலைப் பெய் பனி போன்ற தாதுருவாய்ப் பிறத்தல்
அறுகு தலை பெய் பனி போன்ற –
அறுகம் புல்லின் நுனியில் வீழும் பனி போல் சிறிய
தாது -இந்த்ரியமாய்
உருவாய் -மனித வடிவாய் உருவெடுத்த
பின்புபிறந்து –
பிறகு
அறுகு தலைப் பிள்ளை யாய்க்காளை யாய்க் கிழமாகியையள் அறுகு தலைச் செய்து
அலறு குதலை பிள்ளையாய் -அழும் மழலைச் சொற்களை உடைய பாலனாகி
காளையாய் –
கிழமாய்
ஐ அளறு உகுதலை செய்து
கோழை யாகிய சேறு சிந்துதலைச் செய்து
வீழ்காய் தாநென்னுமாரிருளை
வீழ் -இறக்கிற
காயம் உடம்பை
நான் என்னும் ஆர் இருளை –
அஹங்காரம் ஆகிய மன இருளை
அறுகு தலைக்கோல் பணி யரங்கா நின் கண் ஆசை தந்தே —
அறு -நீக்கு
கு -பூமியை
தலை -முடியின் மேல்
கொள் -கொண்டு சுமக்கின்ற
பணி யரங்கா
நின் கண் ஆசை தந்தே –

————————————————————-

ஆசுக விக்கு நிகரெனக்கில்லை என்றற் பரைப்பூ
ஆசுக விக்கு வில் வேள் வடிவா வறி வாலகத்திய
ஆசுக விக்கு வலய மன்னா வென்ற ரற்றி யிரந்து
ஆசுக விக்கும் புலவீர் புகழ்மின் அரங்கனையே –66-

ஆசுக விக்கு நிகரெனக்கில்லை என்றற் பரைப்
ஆசு கவி பாடுவதில் எனக்கு ஒப்பார் எவரும் இல்லை என்று கட்டுபவராய்
அற்பரை -புல்லர்கள் பலரை
பூ ஆசுக விக்கு வில் வேள் வடிவா
பூ ஆசுகம் இக்கு வில் வேள் வடிவா
மலர்களாகிய அம்புகளையும் -கரும்பாகிய வில்லையும் உடைய மன்மதன் போல் அழகிய வடிவம் உடையவனே
வறி வாலகத்திய ஆசுக
வறிவால் அகத்தியா சுக –
ஞானத்தினால் அகத்தியரையும் சுகரையும் போன்றவனே
விக்கு வலய மன்னா
இ குவலயம் மன்னா
இப் பூ மண்டலத்துக்கு அரசனே
வென்ற ரற்றி யிரந்து
என்று அரற்றி –
என்று தனித்தனியே புகழ்ந்து விளித்து பிதற்றிக் கவி பாடி
இரந்து
அவர்களை கூறை சோறு முதலியன வேண்டி
ஆசுக விக்கும் புலவீர்
ஆசு கவிக்கும் –
குற்றங்களால் மூடப் படுகின்ற புலவர்களே
ஆசு உகவிக்கும் -குற்றம் உண்டாக மகிழ்விக்கிற என்றுமாம்
புகழ்மின் அரங்கனையே —
நம்பெருமாளையே போற்றுமின் –

என்னாவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள் மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள்
மின்னார் மணி முடி விண்ணவர் தாதையைப் பாடினால் தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே -ஆழ்வார்
மூச்சு விடு முன்னே முன்னூறும் நானூறும் ஆச்சு என்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ
-இம்மென்னு முன்னே ஏழு நூறும் எண்ணூறும் அம்மென்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ
எழுந்த ஞாயிறு விழுவதன் முன்னம் கவி பாடினது எழு நூறே –நிமிஷக் கவிராயர் -விரைவாக பாடும் கவி மதுர கவி -சித்ர கவி -விஸ்தார கவி
தாமரை மலர் -அசோகா மலர் -மா மலர் -முல்லை மலர் -நீலோற்ப மலர் ஐந்தும் மன்மதனுக்கு அம்பாம்
தென் மொழிக்கு அகத்தியரும் வட மொழிக்கு சுகரும் –

————————————————————————–

கனக விமான மற்றீனர்க்கு உரைக்கிலென் கால் பெற்றவா
கனகவி மானற் கருடப் புள்ளூர்த்தியைக் கான்மலர்கோ
கனகவி மானம் புவிமான் றடவரக் கண் வளரும்
கனகவி மானத் தரங்கனை நாச்சொல்லக் கற்ற பின்னே –67-

கனக விமான மற்றீனர்க்கு உரைக்கிலென்
கனம் கவி -பெருமை பொருந்திய பாடல்களை
மானன் அற்று ஈனருக்கு உரைக்கிலென் -அற்பர்கள் விஷயமாக நான் பாடேன்
கால் பெற்ற-
வாயு பகவான் ஈன்ற
வாகனக வி –
வாகனமாய் அமைந்த குரங்காகிய ஹனுமானையும்
மானற் கருடப் புள்ளூர்த்தியைக்
மால் நல் கருடன் புள்ளூர்தியை
கோகனக விமானம் புவிமான்-
கோ கனக வி மான் அம் புவி மான் –
தாமரை மலரில் வாழும் திரு மகளும் அழகிய பூமி தேவியும்
கான்மலர்- றடவரக் கண் வளரும்
கால் மலர் தடவரக் கண் வளரும் –
கனகவி மானத் தரங்கனை நாச்சொல்லக் கற்ற பின்னே —
கனக விமானத்து அரங்கனை நா சொல்லக் கற்ற பின் -நான் சொல்ல -பாட பேதம் –

அரங்கனைத் துதிக்கக் கற்ற பின் ஈனர்க்குக் கவி உரைக்கிலேன்-அதற்கு முன்பு -அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன் போலே –
சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ என்னாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னாதெனா வென்று வண்டு முரல் திருவேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே-
சீர் பூத்த செழும் கமல திருத் தவிசின் வீற்று இருக்கும் நீர் பூத்த திரு மகளும் நில மகளும் அடிவருட –அறி துயில் இனிதமர்ந்தோய்–திருவரங்க கலம்பகம் –

—————————————-

கற்றின மாயவை காளையர் வான் கண்டு மீனினைவ
கற்றின மாயமு நீ கன்று காளையராகிப் பல்ப
கற்றின மாயர் பரிவுறச் சேரி கலந்தமையும்
கற்றின மாய வொண்ணா வரங்கா செங்கமலற்குமே –68–

கற்றின மாயவை காளையர் வான் கண்டு மீனினை வகற்றின
கன்று இனம் ஆயவை-கன்றுகளின் கூட்டங்களும்
காளையர் -இடையர் சாதி சிறு பிள்ளைகளும்
வான் கண்டு மீள் நினை நினைவு அகற்றின –
மாயமு நீ –
மாயமும் நீ
கன்று காளையராகிப்
பல்ப கற்றின மாயர் பரிவுறச் சேரி கலந்தமையும்
பல் பகல் தினம் ஆயர் பரிவு உற சேரி கலந்தமையும்
கற்றின மாய வொண்ணா வரங்கா செங்கமலற்குமே —
செங்கமலற்கும் -சிறந்த சிவந்த நாபிக் கமலத்தில் தோன்றின பிரம தேவனுக்கும்
இனம் கற்று ஆய ஒண்ணா
இன்னமும் ஆராய்ந்து அறிய முடியாதவனவாய் இருக்கின்றன -எல்லா மாயைக்கும் மேற்பட்ட மாயம் செய்ய வல்லாய் என்றபடி

—————————————————————–

கமலங் குவளை மடவார் தனம் கண்கள் என்றுரைத்த
கமலங் குவளை முதுகாகியும் கரை வீர் புனல் கா
கமலங் குவளை விளையாடரங்கன் விண் காற்றுக் கனல்
கமலங் குவளையுண் டான்றொண்ட ராயுய்ம்மின் காம மற்றே –69-

கமலங் குவளை மடவார் தனம் கண்கள் என்றுரைத்த
மாதர்களுடைய கொங்கைகளையும் கண்களையும் முறையே தாமரை மொட்டும் நீலோற்பல மலருமாம் என்று புனைந்து உரைத்து
கமலங் குவளை முதுகாகியும் கரை வீர்
மலங்கு வளை முதுகு ஆகியும் -அகம் கரைவீர் –
வருந்துகிற கூன் முதுகாகிய பின்பும் -முற்ற மூத்த பிறகும் -மகளிர் பக்கல் ஆசையினால் மனம் உருகுகின்றவர்களே
நீங்கள்
காமம் அற்று
இத்தன்மையான பெண் ஆசையை ஒழித்து
விண் காற்றுக் கனல் கமலங் குவளையுண்டான்– விண் காற்றுக் கனல் கமலம் கு அளை உண்டான்
ஆகாசம் வாயு அக்னி ஜலம் பூமணி ஆகிய பஞ்ச பூதங்களையும் -வெண்ணெய் யையும் அமுது செய்தவனும்
புனல் கமலங் குவளை விளையாடரங்கன்
புனல் காகம் மலங்கு வளை விளையாடு அரங்கன் –
நீர்க் காக்கைகளும் -மலங்கு என்ற சாதி மீன்களும் சங்குகளும் விளையாடுகிற -நீர் வளம் மிக்க
-ஸ்ரீ ரங்கத்தில் எழுந்து அருளி இருக்கும் நம்பெருமாளுக்கு
றொண்ட ராயுய்ம்மின் –
அடியார்களாகி உஜ்ஜீவியுங்கோள்-

———————————————————————————————

காமனத்தால் விழ ஊதியக் காவை கவரரங்கன்
காமனத்தா வென்று நைவார்க்கு அமுதன் கல் நெஞ்சார்க்கு இரங்
கா மனத்தான ளக்கும் கடல் பார் கலம் போன்றது மீ
கானமத் தாமரையோன் கங்கை பாய்மரம் கான் மலரே –70 –

காமனத்தால் விழ ஊதியக் காவை கவரரங்கன்
கா மன்-
கற்பகச் சோலைக்கு தலைவனான இந்திரன்
நத்தால் விழ
பாஞ்ச ஜன்யத்தின் ஓசையினால் மூர்ச்சித்து கீழ் விழும்படி
ஊதி-அக்காவை கவர் அரங்கன்
காமனத்தா வென்று நைவார்க்கு அமுதன்
காமன் அத்தா என்று நைவார்க்கு அமுதன் -கா மனத்தா -காமனுக்கு நியாமகன் என்றபடி –
மன்மதன் தந்தையே -என்று சொல்லி விளித்து தனது பக்கல் மனம் உருகும் அடியவர்க்கு அமுதம் போல் இனியனாயும்
கல் நெஞ்சார்க்கு இரங்கா மனத்தான்
அளக்கும் கடல் பார் கலம் போன்றது –
அளந்து அருளிய கடல் சூழ்ந்த பூமியானது அக்கடலில் மிதக்கும் மரக்கலம் போன்றது
மீகானமத் தாமரையோன் கங்கை பாய்மரம் கான் மலரே –
அ தாமரையோன் –
அந்த மேல் உலகம் -சத்ய லோகத்தில் வசிக்கும் பிரமதேவன்
மீ காமன் –
மாலுமி போன்றனன்
கால் மலர்
மேல் நக்கிச் சென்ற திருமாலின் திருப்பாதம்
மரம்
பாய்மரம் போன்றது
கங்கை
அத்திருவடியிலிருந்து பெருகிய கங்கா நதியானது
பாய்
அம்மரத்தில் கட்டிய பாய் போன்றது
பூமியை மரக்கலத்தொடும் –பிரமனை மாலுமி யோடும் -கங்கையை பாய் யோடும் -திருவடியை பாய் மரம் போன்றும் உவமித்தார் –

விரி கடல் சூழ் மேதினி நான் முகன் மீகானாச் சுர நதி பா யுச்சி தொடுத்த –வரி திருத்தாள் கூம்பாக வெப்பொருளும் கொண்ட
பெரு நாவாய் யாம் பொலிவுற்றாயினதால் அன்று –

——————————————————————–

மலருந்தி மேல்விழ மெய் நெரித்தான் வையம் ஏழும் துஞ்சா
மலருந்தினான் அரங்கன் குறளாய் மண்ணளந்த வந்நாண்
மலருந்தி வாக்கதிர் வண் குடையாய் முடி மா மணியாய்
மலருந்தி யாய்த் திருத்தாள் விரலாழி மணி யொத்ததே –71–

மலருந்தி மேல்விழ மெய் நெரித்தான்
மலர் உந்தி மேல் விழ
மல்லர்கள் தள்ளித் தன் மேல் வந்து விழ
மெய் நெரித்தான் –
அவர்கள் உடலை நொறுக்கி அழித்தவனும்
வையம் ஏழும் துஞ்சா மலருந்தினான்
ஏழு வகை உலகங்களையும் அழியாமல் உட் கொண்டவனும்
அரங்கன்
குறளாய் மண்ணளந்த வந்நாண்
குறளாய் மண அளந்த அந்நாள்
மலருந்தி வாக்கதிர்
மலரும் திவாக் கதிர்
பரவி விளங்கும் தன்மையதான சூரிய மண்டலமானது
வண் குடையாய்
அப்பெருமானுக்கு முதலில் அழகிய குடை போன்று இருந்தது
முடி மா மணியாய்
உடனே கிரீடத்தில் உள்ள நாடு நாயக மணி போன்று ஆன பின்பு
மலருந்தி யாய்த்
நாபித் தாமரை மலர் போன்று ஆனபின்பு
திருத்தாள் விரலாழி மணி யொத்ததே —
திருவடி விரலில் அணியும் மோதிரத்தில் பதிந்த மாணிக்கத்தை போன்றது ஆனதே –

முன்னம் குடை போல் முடி நாயக மணி போல்
மன்னும் திலகம் போல் வாள் இரவி
பொன்னகலம் தங்கு கௌத்துவம் போலும்
உந்தித் தட மலர் போல் அங்கண் உலகு அளந்தாற்காம்-

பூமரு பொங்கர் புடை சூழ் அரங்கர் பொலங்கழலால்
பாமரு மூவுலகும் கொண்ட போது பழிப்பு இல் பெரும்
காமரு மோலிச் சிகா மணி ஆகி கவுத்துவம் ஆய்
தேமரு நாபி அம் தாமரை ஆனது செஞ்சுடரே –திருவரங்கத்து மாலை -35

——————————————————————————-

மணிவா சற்றூங்க வொரு குடைக்கீழ் வையம் காத்துச் சிந்தா
மணி வா சவனென வாழ்ந்திருப்பார் பின்னை மாதிருக்கு
மணி வாசமார் பரங்கே சவா வென்று வாழ்த்தித் திரு
மணி வாசகம் கொண்டணிவார் அடியை வணங்கினரே –72-

மணிவா சற்றூங்க வொரு குடைக்கீழ் வையம் காத்துச்
மணி வாசல் தூங்க
ஆராய்ச்சி மணி -அரண்மனை வாயிலிலே தொங்க
ஒரு குடைக் கீழே வையம் காத்து
சிந்தாமணி வா சவனென வாழ்ந்திருப்பார்-
சிந்தாமணி என்னும் தெய்வ ரத்தினத்துக்கு உரிய இந்திரன் போலே வாழ்ந்து இருப்பவர்கள்
பின்னை மாதிருக்கும்
திருமகள் வீற்று இருக்கின்ற
மணி வாசமார் பரங்கே சவா வென்று வாழ்த்தித்
மணி -அழகிய
வாச மார்பு –
திவ்ய பரிமளம் உள்ள
அரங்கா கேசவா என்று வாழ்த்தி -கேசவா என்றது பன்னிரு திரு நாமங்களுக்கும் உப லஷணம் –
திரு மணி வாசகம் கொண்டணிவார் அடியை வணங்கினரே –
இ வாசகம் கொண்டு
கேசவாதி நாமங்களை உச்சரித்துக் கொண்டு
திருமண் அணிவார் அடியை வணங்கினரே –

ஈராறு நாமம் உரை செய்து மண கொண்டு இடுவார்களை வணங்கினவர்களே சகல ஐஸ்வர்யங்களையும் அனுபவித்து
மேம்பட்டு வாழ்வார் என்று பாகவத பெருமையை வெளியிட்டு அருளுகிறார்-

—————————————————-

வணங்கரி யானரங்கன் அடியார் தொழ வாளரவு
வணங்கரி யாடற் பரி தேர் நடத்தெந்தை வானவர்க்கும்
வணங்கரி யான் அன்றிக் காப்பாரில்லாமை விண் மண் அறியும்
வணங்கரியானவர் வாணன் கண்டாகனன் மார்க்கண்டனே –73-

வணங்கரி யானரங்கன் அடியார் தொழ
வணம் கரியான்
வண்ணம் கரியான்
அரங்கன் அடியார் தொழ
வாளரவு வணங்கரி யாடற் பரி தேர் நடத்தெந்தை
வாள் அரவு உவணம் கரி ஆடல் பரி தேர் நடத்து எந்தை –
ஒளியை உடைய ஆதி சேஷனும்
கருடனும் -உவணம் -ஸூபர்ணம் – யானையும் ஆட்டக் குதிரையும் தேரும்-ஆடல் பரி -வெற்றியை உடைய குதிரை என்றுமாம்
ஆகிய வாகனங்களில் எழுந்து அருளி திரு வீதி உத்சவம் கண்டு அருளுகிற எமது தலைவனும்
வானவர்க்கும் வணங்கரி யான்
தேவர்களுக்கும் தர்சித்து நமஸ்கரித்து வணங்க அரியவனாய் இருப்பவனும்
அரங்கன் அன்றிக் காப்பாரில்லாமை
விண் மண் அறியும் வணம்
விண்ணும் மண்ணும் அறியும் வண்ணம்
கரியானவர் வாணன் கண்டாகனன் மார்க்கண்டனே –
சாஷி யானவர்கள் -பாணாசுரன் -கண்டாகர்ணன் -மார்கண்டேயன் போன்றவர்கள் –

—————————————————-

கண்ட லங் காரளகம் கெண்டை மேகம் கவிரிதல் சொல்
கண்ட லங்கா ர முலையிள நீர் என்று கன்னியர் சீர்
கண்ட லங் காரங்கமருளேன் புனல் கயல் கொக்கு என்று அஞ்சக்
கண்ட லங்கார மலரரங்கேசர்க்குக் காதலனே –74-

கண்ட லங் காரளகம் கெண்டை மேகம்
கண் தலம்-கார் அளகம் –
கண்களும் கரிய கூந்தலும்
கெண்டை மேகம் –
முறையே கெண்டை மீனையும் காள மேகத்தையும் போலும்
கவிரிதல் சொல் கண்ட லங்கா ர முலையிள நீர் என்று
இதழ்
அவர்களுடைய அதரம்
கவிர்
முருக்க மலர் போலும்
சொல்
பேச்சு
கண்டு -கல் கண்டு போலும்
அலங்கு ஆரம் முலை-
அசைகிற ஹாரங்களை யடைய முலைகள்
இள நீர் போலும்
கன்னியர்
இள மங்கையரது
என்று சீர் கண்ட லங் காரங்கமருளேன்
சிறப்பைக் குறித்து அவர்கள் புனை கோலத்தால் மதி மயங்கேன்
புனல் கயல் கொக்கு என்று அஞ்சக்
நீரில் உள்ள கயல் மீன்கள் கொக்கு என்று பயப்படும் படி
கண்ட லங்கார மலரரங்கேசர்க்குக் காதலனே –
கண்டல் -தாழைகள்
அங்கு -அந்நீரின் பக்கங்களிலே
ஆர மலர் -மிகுதியாக மலரப் பெற்ற
ஈசர்க்கு காதலனே —
நம்பெருமாளுக்கு அன்பு பூண்டவனான யான் –

அருகு கைதை மலரக் கெண்டை குருகு என்று அஞ்சும் கூடலூரே-போலே –

———————————————————-

காதலை வாரி மண் வெண் கோட்டில் வைத்ததுண்டு காட்டியரங்
காதலை வா கழற் குள்ளாக்கி னாய்கரப் பெங்கெனவே
காதலை வார் குழை வைதேகியை நின் கருத்துருக்குங்
காதலை வானரரத் தேட விட்டாயிது கைதவமே –75–

காதலை வாரி மண் வெண் கோட்டில் வைத்ததுண்டு
காது-மோதுகின்ற
அலை-அலைகளை உடைய
வாரி -கடலினால் சூழப் பட்ட
மண் -பூமியை
வெள் கோட்டில் வைத்து -வராக அவதாரத்தில்
வெண்மையான மருப்பில் குத்தி எடுத்து
உண்டு -பிரளய காலத்தில் வயிற்றினுள் கொண்டு
காட்டி-
அந்த பிரளயம் நீங்கினவாறே வெளிநாடு காண உமிழ்ந்து
யரங்
காதலை வா
கழற் குள்ளாக்கி னாய்-
திரிவிக்கிரம அவதாரத்தில் ஓர் அடிக்குள் ஒடுங்கச் செய்தாய்
அங்கனம் நில உலகம் முழுவதையும் சுவாதீனமாக நடத்திய நீ
நின் கருத்துருக்குங் காதலை
உனது மனதை உருக்கச் செய்கிற ஆசை மயம் ஆனவளாகிய
காதலை வார் குழை வைதேகியை
காது அலை வார் குழை வைதேகியை
குழை -அணிகலன் உடைய வைதேகி பிராட்டியை
கரப் பெங்கெனவே வானரரத் தேட விட்டாயிது கைதவமே —
கரப்பு எங்கு என வானரர் தேட விட்டாய் -இது கைதவமே -உனது மாயையே யாம் -உனது திரு விளையாடலே யாம் –

——————————————————————————————————–

கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்தந்தாதி -25-50-

February 10, 2016

ஆதவன் அந்தரம் தோன்றாமல் கல் மழை ஆர்த்து எழு நாள்
ஆ தவனம் தர வெற்பு எடுத்தான் அடியார் பிழை பார்
ஆதவன் அம் தரங்கத்தான் அரங்கன் அடியன் என்று உள்
ஆத அனந்தரம் கண்டீர் வினை வந்து அடைவதுவே——–26

ஆதவன் அந்தரம் தோன்றாமல்
ஆதவன் -சூர்யன்
அந்தரம் -வானத்திலே
தோன்றாமல் -கட்புலன் ஆகாதபடி

கல் மழை ஆர்த்து எழு நாள்
ஆலம்கட்டியைப் பொழிகின்ற மேகங்கள்
ஆரவாரித்துக் கொண்டு எழுந்த காலத்தில்

ஆ தவனம் தர வெற்பு எடுத்தான்
ஆ -பசுக்கள்
தவனம் தர -தவிப்பை அடைய
வெற்பு எடுத்தான் -கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தவன்

அடியார் பிழை பார் ஆதவன் -அடியார் பிழை பாராதவன் -பாராமல் அருள் செய்பவன்

அம் தரங்கத்தான் அரங்கன் -அழகிய அலைகளை உடைய கடலில் பள்ளி கொள்பவனும் ஆகிய ஸ்ரீ ரெங்க நாதனுக்கு

அடியார் அந்தரங்கத்தான் -மலர்மிசை ஏகினான் –நினைத்த வடிவுடன் சென்று வீற்று இருப்பவன் என்னவுமாம்

அடியன் என்று உள்ஆத அனந்தரம் கண்டீர் -அடியன் என்று உள்ளாத அனந்தரம் கண்டீர் -பின்பு அன்றோ

உள்ளாதவன் அந்தரம் முடிவில் என்னவுமாம்

வினை வந்து அடைவதுவே -முன்பு அவன் செய்த கருமம் தன பயனை விளைத்தற்கு அவன் இடம் வந்து சேர்வது

———————————————————————————–

அடையப்பன் னாகம் கடிவா யமுதுக வங்கி குளிர்
அடையப்பன் னாக மருப்பா யுதமிற வன்று குன்றால்
அடையப்பன் னாக மிசை தாங்கப் பாலர்க்கு அருள் செய்ததால்
அடையப்பன் னாகம் கரியான் அரங்கன் எட்டக்கரமே –27-

பல் நாகம் அடைய கடிவாய் அமுது உக -உடல் முழுவதும் கடித்த வாயினிடமாக அமுதம் சிந்தவும் –
அங்கி குளிர் அடைய -நெருப்பு குளிர்ச்சி அடையவும் –
பல் நாகம் மருப்பு ஆயுதம் இற-பல யானைகளின் தந்தங்கள் ஆகிய ஆயுதங்கள் ஓடியவும் -யானைத் தந்தங்களும் ஆயுதங்களும் ஒடிபட என்றுமாம்
குன்றால் அடை அப்பு அ நாகம் மிசை தாங்க மலையோடு அடுத்தலை உடையதான நீர் -கடல் -அந்த மலையின் மீது ஏந்தவும் –
பாலற்கு அன்று அருள் செய்தது -சிறுவனான பிரகாலதனுக்கு -அந்நாளில் -இரணியன் பலவாறு வருந்தத் தொடங்கிய காலத்தில் –
ஆல் அடை அப்பன் ஆகம் கரியான் எட்டு அக்கரம் –பிரளய பெரும் கடலிலே ஆலிலையிலே பள்ளி கொண்டு அருள்கிற –
யாவர்க்கும் தலைவனாயும் -திரு மேனி கருத்து இருப்பவனுமான திருவரங்க நாதனது எட்டு எழுத்து மந்த்ரமானது கருணை புரிந்தது –

நம்பெருமாள் எழுத்து எட்டின் பெருமை நவிலுமதோ
சம்பரன் மாயம் புரோகிதர் சூழ் வினை தார் அணி வாள்
வெம்படை மாசுணம் மாமத வேழம் விடம் தழல் கால்
அம்பரமே முதலானவை பாலனுக்கு அஞ்சினவே –திருவரங்கத்து மாலை –81

————————————————————————-

அக்கர வம்புனைந் தாரய னாரிடை யாயிரு நால்
அக்கர வம்பு மலராள் கொழுநன் அரங்கன் செங்கோல்
அக்கர வம்புயன்றான் மூலம் என்ப தறிவித்திடான்
அக்கர வம்புவி மேல் வேழ மே வெளி யாக்கியதே –28-

இருநால் அக்கரம் வம்பு மலராள் கொழுநன் -அஷ்டாஷர மகா மந்த்ரத்துக்கு உரியனான ஸ்ரீ யபதி
செம் கோலன் கரம் அம்புயன் -சிறந்த தாமரை போன்ற திருக்கைகைகளை யுடையவன்
அக்கு அரவம் புனைந்தார் அயனார் இடையாய்-தான் மூலம் என்பதை அறிவித்திடான் -அக்கு -எலும்பு –ருத்ராஷ மாலையுமாம் –
ஆனால்
அ கரவு -அந்த ஒளிப்பை
அம புவி மேல் வேழமே வெளியாக்கியது -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் -ஆதி மூலமே விளியால் -பகிரங்கப் படுத்தினானே –
உன்னொக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி ஒருவருக்கும் உண்மை உரையாய் –
விலங்கும் அன்றோ சொல்லிற்று ஐயம் அன்றே -திருவேங்கடத்தந்தாதி

———————————————————————–

ஆக்கு வித்தார் குழலால ரங்கே சரன் பால் விதுரன்
ஆக்குவித்தார வடிசில் உண்டார் கடலாடையகல்
ஆக்குவித்தாரறி வற்றேனைத் தம்மடி யார்க்கடிமை
ஆக்குவித்தாரடியே யடியேன்று ய்க்குமாரமுதே–29-

ஆ குவித்தார் குழலால் -வேய்ங்குழலின் இன்னிசையால் பசுக்களை ஓர் இடத்தில் திரளாக கூட்டினவரும்
அன்பால் ஸ்ரீ விதுரன் ஆக்கு வித்தாரம் அடிசில் -வித்தார அடிசில் -பலவகைப் பட்ட -சுவைப் பண்டங்களோடு கூடிய உணவு
கடல் ஆடை அகலா -சமுத்ரமாகிய ஆடையை நீங்காத
கு வித்தார் -பூமியின் உத்பத்திக்கு விதை போலே காரணமானவர்
அறிவு அற்றேனை தம் அடியார்க்கு அடிமை
ஆக்குவித்தார்
அரங்க ஈசர் திருவடிகளே அடியேன் துய்க்கும் ஆரமுது -உண்ணும் சோறு இத்யாதி

————————————————————————–

ஆராதனம் செய்து கண்டனின் கீர்த்தி யறைவன்றிரு
ஆரா தனம் செய்வன் வேதா வென்றாலடியேன்
புகழ்கைக்கு
ஆராதனம் செய்ய போதாந்திரு மகளாக பல் பூண்
ஆராதனம் செயன்பாகா வரங்கத் தமர்ந்தவனே –30-

ஆராத நஞ்சு எய்து கண்டன் நின் கீர்த்தி அறைவன்-உண்ணத் தகாத நஞ்சு பொருந்திய கழுத்தை உடைய ருத்ரன்
உனது புகழைஎடுத்துச் சொல்லி ஸ்துதி பாடுவான்
திருவாராதனம் செய்வன் வேதா -பிரமதேவன் –
அடியேன் புகழ்கைக்கு ஆர்
செய்ய போது ஆதனம் ஆம் -செந்தாமரை மலர் வீட்டரு இருக்கும் இடமாகப் பெற்ற
திரு மகள் ஆக -இலக்குமியை திரு மார்பில் உடையவனே
பல் பூண் ஆரா -பலவகை திவ்ய ஆபரணங்களையும் ஹாரத்தையும் தரித்தவனே
தனஞ்சயன் பாகா அரங்கத்து அமர்ந்தவனே –

————————————————————————–

அமர வரம்பையி னல்லார் பலரந்திக் காப்பெடுப்ப
அமர வரம்பையில் வேல் வேந்தர் சூழ மண்ணாண்டிருந்தோர்
அமர வரம்பையில் கான்போயிறந்தன ராதலில் வீடு
அமர வரம்பையின் மஞ்சா ரரங்கருக் காட் படுமே –31

அமர அரம்பையின் நல்லார் பலர் அந்திக்காப்பு எடுப்ப -ரம்பையை விட அழகிய அப்சரஸ் ஸூ க்கள் திருவந்திக்காப்பு எடுக்கவும்
அமர அரம் பயில் -பையில் -வேல் வேந்தர் சூழ -அரம் -வாள் விசேஷம்
மண் ஆண்டு இருந்தோர் அமர
பின்பு வரம்பை இல் கான் கான் போய் இறந்தனர்
ஆகையால்
வீடு அமர -பரமபதம் சென்று நித்ய கைங்கர்யம் செய்யும் பொருட்டு
அரம்பையில் மஞ்சு ஆர் அரங்கர்க்கு ஆள்படும்-வாழை மரங்கள் மேல் மேகங்கள் தங்கப் பெற்ற ஸ்ரீ ரெங்கத்தில் நம் பெருமாளுக்கு அடிமைப் படுங்கள் –

———————————————————————————–

ஆளாக வந்த வடியேற் கருள்பரி யானை திண் டேர்
ஆளாக வந்தனிற் செற்றிலங்கே சனை யட்டவல்வில்
ஆளாக வந்தன் புயந்துணித் தாயரங் காமுளரி
ஆளாக வந்தமி லுன்னடி யார்க்கன்ப னாவதற்கே –32-

ஆளாக வந்த அடியேற்கு அருள்
பரி யானை திண்டேர் ஆள செற்று-இலங்கேசனை யட்ட
வல்வில் ஆளா கவந்தன் புயம் துணித்தாய்
அரங்கா
முளரியாள் ஆக -தாமரை மலரில் வாழ்பவள் -திருமகளை மார்பில் கொண்டவனே
அந்தமில் உன் அடியார்க்கு அன்பன் ஆவதற்கு அருள் –

———————————————————————-

ஆவா கனத்த ரடியார் மனத்துட் புள்ளான வொப்பில்
ஆவா கனத்த ரரங்கர் பொற்றாளுக்கு அடிமைப் படார்
ஆவா கனத்த வழுக்குடல் பேணி யறி வழிந்தவ்
ஆவா கனத்த ரிருந்தென் னிராமலென் னம்புவிக்கே–33-

அடியார் மனத்துள் ஆவாகனத்தர் -ஹிருதய கமலத்தில் வந்து வீற்று இருந்து அருளி
புள் ஆனா ஒப்பு இலா வாகனத்தார் -அரங்கர் -பொன் தாளுக்கு அடிமைப் படார் ஆ ஆ அந்தோ
கனத்த அழுக்கு உடல் பேணி
அறிவு இழந்து
அவா ஆகு -சிற்றின்பத்தில் ஆசை கொள்ளுகிற
அனத்தர் -பயன் அற்ற அவர்கள்
அம புவிக்கு இருந்து என் இராமல் என்
நேமி சேர் தடம் கையினானை நினைப்பிலா வலி நெஞ்சுடை பூமி பாரங்கள் என்றபடி

————————————————————-

அம்பு விலங்கை நகர் பாழ் படச் சங்கு மாழியும் விட்டு
அம்பு விலங்கை கொண்டாயரங்கா வன்றிடங்கர் பற்றும்
அம்பு விலங்கை யளித்தா யினியென்னை யாசை யென்றிவ்
அம்பு விலங்கையிட் டேசம் சிறையி லடைத் திடலே –34-

அம்புவி இலங்கை நகர் பாழ் பட
சங்கும் ஆழியும் விட்டு அம்பு வி அம்கை கொண்டாய்
அரங்கா
அம்பு இடங்கர் பற்றும் -ஜலத்திலே முதலையினால் பிடித்துக் கொள்ளப் பட்ட
விலங்கை அளித்தாய்
இனி என்னை ஆசை என்று இயம்பும் விலங்கையிட்டு ஏசும் சிறையில் அடைத்திடேல்
அவா வென்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவா அப்பிறப்பீனும் வித்து -என்பதால் அவா விலங்கு என்று சொல்லப்பட்டது

—————————————————————————————

இடவ மலைக்கும் புயங்க மலைக்கு மிலங்குமால்
இடவ மலைக்கு மிருங்க மலைக்கு மிறை வசங்க
இடவ மலைக்கும் புனல் அரங்கா வெய்த்த மார்க் கண்டன் கண்டு
இடவ மலைக்கு முலகழி யாதுள் ளிருந்த தென்னே –35

இடவமலைக்கும் -ருஷப கிரியாகிற திரு மால் இரும் சோலை மலைக்கும் -இடவம் -ருஷபம் -தவம் இருந்து பேறு பெற்ற திவ்ய ஸ்தலம்
புயங்க மலைக்கும் -சேஷ கிரியாகிற திருவேங்கட மலைக்கும்
இலங்கம் இகல் இடம் அம்மளைக்கும் -விளங்குகின்ற விசாலமான நிலா உலகத்துக்கும் உரிய அதி தேவைதையான பூமி தேவிக்கும்
இரும் கமலைக்கும்-பெரிய செந்தாமரையில் வாழும் ஸ்ரீ தேவிக்கும் -அமலா கமலா -குற்றம் அற்ற தாமரை மலராள்
இறைவ -சங்கம் இடவ -தலைவனே -ஸ்ரீ சங்கத் தாழ்வானை இடத் திருக்கையிலே கொண்டவனே
மலைக்கும் புனல் அரங்கா -கரையை மோதுகின்ற காவேரி நீர் பெருக்கு பாயும் திருவரங்கத்தில் எழுந்து அருளி
இருப்பவனே
எய்த்த மார்கண்டன் கண்டிட -பிரளயத்தில் அலைபட்டு மெலிவடைந்த மார்கண்டேய முனிவன் -நின் திருவயிற்றினுள் சென்று -காணுமாறு
அம் அலைக்கும் உலகு அழியாது உல் இருந்தது என்னே -நீரினால் அழிக்கப் பட்ட உலகங்கள் எல்லாம் அழியாமல்
உன் திரு வயிற்றினுள் இருந்த விதம் என்ன விசித்ரமோ

—————————————————————-

இருந்தை யிலங்க வெளிறு படாதென் செய்தாலு நிம்பத்து
இருந்தை யிலந்தித்தி யாதவை போற் புல்லர் யாவும் கற்றாய்ந்து
இருந்தை யிலம் பன்ன கண்ணார்க்கு அல்லால் வெண்ணெ யில்லி லொளித்து
இருந்தை யிலங்கை யரங்கற்கு அன்பாகி யிருக்கிலரே–36-

இருந்தை யிலங்க வெளிறு படாதென் செய்தாலும்
கரியானது -என்ன உபாயம் செய்தாலும் விளங்கத்தக்க வெண்ணிறம் அடையாது
நிம்பத்து இரும் தையிலம் தித்தியாது -சிறந்த வேப்பெண்ணை இன்சுவை பெறாது -திலம் -எள் -தைலம் -எண்ணெய்
என் செய்தாலும் -இரண்டு இடங்களிலும் சேர்த்து கொள்ள வேண்டும்
அவை போற் புல்லர் யாவும் கற்றாய்ந்து இருந்து
யிலம் பன்ன கண்ணார்க்கு அல்லால் -ஐ யில் அம்பு அன்ன கண்ணார்க்கு அல்லால் -கூறிய அம்பு போன்ற கண்களை உடைய மகழர்க்கு அல்லால்
வெண்ணெ யில்லி லொளித்து இருந்தை யிலங்கை யரங்கற்கு அன்பாகி யிருக்கிலரே–
இல்லில் ஒழித்து இருந்த வெண்ணெய் ஐ யில் அம்கை அரங்கர்க்கு அன்பாகி இருக்கிலர்-
ஐ யில் அம்பு அன்ன -வேலையும் அம்பையும் போன்று என்ன வுமாம்

——————————————————–

இருக்குமந் தத்தி லாரியா வரங்கன் மண் ஏழுக்குந்தய்
இருக்குமந் தத்திரு வாய்மலர்ந் தான் எட்டு எழுத்தைக் குறி
இருக்குமந் தப்புத்தி யீர்த்து நல் வீடெய்தலாகும் கை போய்
இருக்குமந் தச்செசிட் டூமன்முந் நீர்கடந் தேறிடிலே–37-

இருக்குமந் தத்தி லாரியா வரங்கன்-இருக்கும் அந்தத்தில் அரங்கன்
மண் ஏழுக்குந்தய் இருக்குமந் தத்திரு வாய்மலர்ந் தான்
மண் ஏழ் உண்டும் திருக்கும் அந்தத் திரு வாய் மலர்ந்தான்
எட்டு எழுத்தைக் குறி இருக்குமந் தப்புத்தி யீர்த்து நல் வீடெய்தலாகும் –
திரு அஷ்டாஷர மந்தரத்தை சிந்தியாத உங்களுக்கும்
மந்தம் புத்தி யீர்த்து நல் வீடு எய்தல் ஆகும்
கை போய் இருக்குமந் தச்செசிட் டூமன்முந் நீர்கடந் தேறிடிலே–
கை போய் இருக்கும் அந்தன் செவிடு ஊமன் ஒருவன் கடலைக் கடந்து அக்கறை ஏறுவான் ஆகில்
முந்நீர் -படைத்தல் காத்தல் அழித்தல்-என்ற மூன்று நீர்மை உடையது என்றுமாம்
ஆற்று நீர் –ஊற்று நீர்- வேற்று நீர் -மழை நீர் -என்றுமாம் –

——————————————————————

ஏறும் கரியும் பரியும் செற்றான் பரன் என்று மன்றுள்
ஏறும் கரி மறை யாதலினால் ஐயாம் யாதுகுமக்கீடு
ஏறும் கரிய வரங்கற்கு அன்பாய்வினை யென்னுமிடி
ஏறும் கரியுமினி மேற் பிறவியிட ரில்லையே –38-

ஏறும் கரியும் பரியும் செற்றான் பரன் என்று மன்றுள்ஏறும் கரி மறை யாதலினால் ஐயம் யாதுகுமக்கு
திருமாலே பரன் என்று ஐயம் திரிபறத் தெரிவித்து நியாய சபையுள் ஏறும் -சரி என்று ஏற்றுக் கொள்ளப் படுகிற –
கரி-சாட்சி -வேதமாகும் -ஆதலால் உங்கட்கு சந்தேகம் என்
ஈடு ஏறும் கரிய வரங்கற்கு அன்பாய்வினை யென்னுமிடி ஏறும் கரியுமினி மேற் பிறவியிட ரில்லையே —
கரிய அரங்கற்கு அன்பனாய் ஈடேறும் -உயுவு பெறுமின்
அன்பராகில் வினை எனும் இடி ஏறும் கரியும் -தொன்று தொன்று வருகிற கர்மம் ஆகிற பேர் இடி கரிந்து ஒழியும்
இனி மேல் பிறவி இடர் இல்லை
சஞ்சிதம் -ஆகாம்யம் -பிராரப்தம் மூன்றுமே ஒழியும்
சிறந்தவற்றையும் பெரியவற்றையும் ஏறு எனபது கவி மரபு –

————————————————–

இடராக வந்தெனைப் புன்சிறு தெய்வங்கள் என் செயுமான்
இடராக வன் பிணி மா நாகம் என் செயும் யான் வெருவி
இடராக வன்னி பினலிடி கோண் மற்றுமென் செயும் வில்
இடராக வன்னரங்கன்று இருந்தாள் என்னிதயத்ததே–39-

இடராக வந்தெனைப் புன்சிறு தெய்வங்கள் என் செயும்
இழி குணம் உடைய அல்ப தேவதைகள் துன்பம் விளைப்பவனவாக வந்து நெருங்கி யாது செய்ய மாட்டும்
மான் இடராக வன் பிணி மா நாகம் என் செயும் –
மானிடர் ஆகம் வல் பிணி மா நாகம் என் செயும்
மனித சரீரத்துக்கு உரிய கொடிய நோய்கள் ஆகிய பெரும் பாம்புகள் என் செய்யும்
யான் வெருவி இடராக வன்னி பினலிடி கோண் மற்றுமென் செயும்
ராகம் வன்னி -செந்நிறம் உடைய தீயம் -புனல் நீரும் -இடியும் -கோள்நவ கிரகங்களும் மற்றும் -இன்னும் தீங்கு விளைப்பன யாவும்
யான் வெருவியிட என் செயும்
வில் இடராக வன்னரங்கன்று இருந்தாள் என்னிதயத்ததே–
கோதண்டத்தை இடக்கையில் ஏந்திய ரகு குலத்து திருவவதரிந்த அரங்கன் திருவடி அடியேன் மனத்தில்
உள்ளது ஆதலால் –

—————————————————————————————-

அத்திரங்கா யாமென வுணரேன் எனதாசையுன்கை
அத்திரங்கா யத்தியிற் பெரிதானாரை யாகிப்பல் வீழ்
அத்திரங்கா யந்திரம் போல் பொறி ஐந்து அழியுமக்கால்
அத்திரங்கா யரங்கா வடியேனுன் அடைக்கலமே –40–

அத்திரங்கா யாமென வுணரேன் -ரெங்கா காயம் அத்திரம் -அஸ்திரம் -என உணரேன் –
எனதாசையுன்கை அத்திரங்கா யத்தியிற் பெரிது –
எனதாசை உன் கை அத்திரம் -அஸ்திரம் -காய் அத்தியின் பெரிது
உனது கையினால் ஏவப்பட்ட ஆக நேய அஸ்த்ரத்தால் தவிப்படைந்த கடலினும் மிகப் பெரிது
நரை யாகிப்பல் வீழ அத்திரங்கா யந்திரம் போல் பொறி ஐந்து அழியுமக்கால்
கிழத்தனம் முதிர்ந்து -பற்கள் வீழ -திரங்கா -தோல் திரைந்து-யந்திரம் போல் பொறி ஐந்தும் அழியும் அக்காலத்து
இடைவிடாமல் வேலை செய்யும் இந்த்ரியம் போலே பஞ்ச இந்த்ரியங்களும் அழியும் மரண காலத்தில்
அத்திரங்கா யரங்கா வடியேனுன் அடைக்கலமே —
இரங்காய் -இரக்கம் கொண்டு அடியேனுக்கு அருள் செய்வாய் -நான் உனது தாசனாகச் சரணம் புகுந்தேன் –

எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன் -அப்போதைக்கு
இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே -பெரியாழ்வார்

——————————————————

கலக் கூழைக் கைக்குங் கருத்துடை யீரங்கத்துள் இலைக்
கலக் கூழைக் கைக்குங் கறியிட்டுத் துய்த்திரும் காது படைக்
கலக் கூழைக் கைக்குள் வருவாணனைக் கண்ணுதலும் விட்ட
கலக் கூழைக் கைக்குப்பை கண்டானை வீதியில் கண்டு வந்தே –41-

கலக் கூழைக் கைக்குங் கருத்துடை யீரங்கத்துள்
கலக்கு ஊழை -கலக்கக் கூடிய ஊழ் வினையை
கைக்கும் கருத்து உடையீர் -வெறுத்து ஒழிக்க வேண்டும் என்ற என்னத்தை உடையவர்களே
நீங்கள் அரங்கத்துள்
இலைக்கலக் கூழைக் கைக்குங் கறியிட்டுத் துய்த்திரும் காது படைக் கலம் கூழைக் கைக்குள் வருவாணனைக் கண்ணுதலும் விட்ட –
கலக் கூழைக் கைக்குப்பை கண்டானை வீதியில் கண்டு வந்தே
காது படைக்கலம் -பகவரை மோத வல்ல திவ்ய ஆயுதங்களை உடைய
கூழை கைக்குள் -படை வகுப்பின் ஒழுங்கில் இடையிலே
வரு வாணனை
கண்ணுதலும் விட்டகல -பாதுகாக்காமல் கை விட்டு அகல
கூழை கை குப்பை கண்டானை -குறைபட்ட கைகளின் குவியலைக் கண்ட எம்பெருமான்
வீதியில் கண்டு உவந்து -திருவீதியிலே உத்சவம் கண்டு அருள தர்சித்து மனம் மகிழ்ந்து
இலைக்கலக் கூழைக் கைக்குங் கறியிட்டுத் துய்த்திரும்
இலையாகிய பாத்ரத்தில் கூழாகிய இழிந்த உணவை கசக்கின்ற காய்களைச் சேர்த்து உண்டு கொண்டு இருந்தாயினும் வாழ்மின் –
வறுமையிலே வருந்தி யாயினும் நம்பெருமாளை சேவித்து கொண்டு முக்தி பெறுவீர் என்று உபதேசித்து அருள்கிறார் –

—————————————————–

கண்ட கனாவின் பொருள் போல யாவும் பொய் காலன் என்னும்
கண்ணா கனாவி கவர்வதுவே மெய்கதி நல்கேனக்
கண்ட கனாவிப் பொழுதே செல் கென்றருள் காரங்கற்
கண்ட கனாவின் புறக்கண்டு வாழ்த்திக் கடிதுய்ம்மினே –42-

கண்ட கனாவின் பொருள் போல யாவும் பொய்
யாவும் -செல்வம் இளமை போன்ற அனைத்தும் சிறிதும் நிலை பேறின்றி அழியும்
காலன் என்னும் கண்ணா கனாவி கவர்வதுவே மெய்
காலன் என்னும் கண்டகன் -ஆவி கவர்வதுவே மெய் –
ஆதலால் –
கதி நல்கேனக்
நல்ல கதி அருள்வாய் என்று
கண்ட கனாவிப் பொழுதே செல் கென்றருள்
கண்டகனா இப்பொழுதே செல்க என்று அருள்
கண்ட கர்ணா இப்பொழுதே பரமபதம் சென்று சேர் என்று அருளிய
காரங்கற் கண்ட கனாவின் புறக்கண்டு வாழ்த்திக் கடிதுய்ம்மினே –
கார் அரங்கன் -கரிய குளிர்ந்த காள மேகம் போன்ற அரங்கனை
கடிது -விரைவில்
கண் தக கண்டு -கண்கள் தகுதி பெறுமாறு தர்சித்தும்
நா இன்புற வாழ்த்தி உய்ம்மின்

————————————————

கடிக்கும் பணி நஞ்சமுதாகும் தீங்கு நன்காகும் பராக்
கடிக்கும் பணியலர் தாழ்வார் கல்லாமையும் கற்றமையாம்
கடிக்கும் பணி யறம் எல்லாம் அரங்கர் பைம் கன்னித் துழாய்க்
கடிக்கும் பணி யொளிக்கும் நல்ல பாதம் கருதினார்க்கே –43-

கடிக்கும் பணி நஞ்சமுதாகும் -கடிக்கிற பாம்பின் விஷமும் அமுதாகும்
தீங்கு நன்காகும் -பிறர் செய்யும் தீமையும் நன்காவே முடியும் –
பராக் கடிக்கும் பணியலர் தாழ்வார் -பாராமுகம் செய்து அவமதிக்கிற பகைவர்களும் கீழ்ப் படிந்து வணங்குவார்கள்
கல்லாமையும் கற்றமையாம் -பயின்று அறியாத பொருள்களும் பயின்றன போலே விளங்கும்
கடிக்கும் பணி யறம் எல்லாம் -சாஸ்த்ரங்களில் சொல்லப் பட்ட தர்மங்கள் எல்லாம் சித்திக்கும் –
அரங்கர் பைம் கன்னித் துழாய்க் கடிக்கும் பணி யொளிக்கும் நல்ல பாதம் கருதினார்க்கே —
அரங்கன் திருப்பாதம் தியாநித்தவர்களுக்கு -இவை எல்லாம் -அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் -நடக்கும் –
பிரகலாதன் பக்கலில் கண்டோம் –

———————————————————————————-

தினகரனார் கலிதீ காற்றோடுங்கும் செயலும் விண் மீ
தினகரனார் கொண்ட லேழ் செருக்காமையும் சென்றெதிர் மோ
தினகரனாருயிர் செற்றார் அரங்கர் திகிரி சங்கேந்து
தினகரனார் நம் பெருமாள் அமைத்த திருக்கை கண்டே –44-

தினகரனார் கலிதீ காற்றோடுங்கும் செயலும்
தினரன்-சூரியனும்
ஆர் கலி -கடலும்
தீ காற்று ஒடுங்கும் செயலும் –
தம் தம் வரம்பு கடவாது ஓர் எல்லைக்கு உட்பட்டு அடங்கி இருக்கும் செயலும் –
விண் மீ தினகரனார் கொண்ட லேழ் செருக்காமையும்
விண் மீதில் நகரனார் கொண்டல் ஏழ் செருக்காமையும் –
வானத்தில் -அமராவதி என்னும் நகரத்தை உடையனான இந்திரனால் செலுத்தப் படுகிற ஏழு மேகங்களும் செருக்கி
அளவிறந்த மழை பொழிந்து உலகங்களை அழித்திடாமையும்-ஆர் கொண்டல்– ஒலிக்கின்ற மேகம் என்னவுமாம் –
இவை எல்லாம் என்ன காரணத்தால் -என்ன
சென்றெதிர் மோ தினகரனாருயிர் செற்றார்
எதிராக வந்து பொருத கரன் என்னும் அரக்கனது அருமையான உயிரை ஒழித்தவரும்
அரங்கர் திகிரி சங்கேந்து தினகரனார் நம் பெருமாள் அமைத்த திருக்கை கண்டே –
சங்கு சக்கரங்களை ஏந்திய திருக் கைகளை யுடையவரும்
நம் பெருமாள் நில் என்று குறித்து வைத்த திருக்கையை கண்டே பார்த்தேயாம் –

நெடும் கடல் நிற்பதும் நாயிறு காய்வதும் நிற்றலும் கால் ஒடுங்கி நடப்பதும்
தண் கார் பொழிவதுவும்-ஊழிதனில் சுடும் கனல் பற்றிச் சுடாதே இருப்பதும்
தும்பை புனைந்து அடும் கனல் ஆழி யரங்கேசர் தம் திருவாணையினே-திருவரங்கத்து மாலை

——————————————————————–

திருக் காவிரிக்கும் யமுனைக்கும் கங்கைக்கும் தெள்ளமுதாந்
திருக் காவிரிக்கும் கடற்கும் பிரான் என்னரங்கம் என்னத்
திருக் காவிரிக்கு மொழியார்க்குத் தீ மெழுகா விரன்புய்த்
திருக் காவிரிக்குமது ஒவ்வாறவன் உங்கள் சென்மைத்தையே –45-

திருக் காவிரிக்கும் யமுனைக்கும் கங்கைக்கும் தெள்ளமுதாந் திருக் காவிரிக்கும்
திருக்கா விரிக்கும் -அழகிய சோலைகளைச் செழித்து வளரச் செய்கின்ற
யமுனா நதிக்கும் கங்கா நதிக்கும் தெளிவான அமுதம் போலே இனிதாய் இருக்கிற மேன்மை உள்ள காவேரி நதிக்கும்
கடற்கும் பிரான் என்னரங்கம் என்னத்
சமுத்ரத்துக்கும் தலைவனான எம்பெருமானது அழகிய திருவரங்கம் என்று ஒரு தடவையாவது வாயினாலாவது சொல்ல
திருக் காவிரிக்கு மொழியார்க்குத் தீ மெழுகா விரன்புய்த் திருக் காவிரிக்குமது ஒவ்வாறவன் உங்கள் சென்மைத்தையே –
-அன்பு உய்த்து இருக்கா -அன்பு செலுத்தி இராமல்
திருக்கு ஆவீர் -மாறுபடுவீர்காள்
இக்கு மொழியார்க்கு -கருப்பஞ்சாறு போலே இனிய சொற்கள் உடைய மகளிர் திறத்திலோ
தீ மெழுகு ஆவீர் -தீப்பட்ட மெழுகு போலே கரைந்து உருகுவீர்கள்
இவ்வாறு இருக்க
அவன் உங்கள் சென்மத்தை இரிக்குமது எ ஆறு -அப்பெருமான் உங்களுடைய பிறப்பை ஒழிப்பது எங்கனம் நிகழும்
திருக் கா விரிக்கும் -அடை மொழி யமுனை கங்கை காவரி மூன்றுக்கும் கொள்ளலாம்
யமுனைக்கும் இவனே பிரான் -ஸ்ரீ கிருஷ்ணா லீலைகள் செய்து அருளியதால்
கங்கைக்கும் பிரான் -ஸ்ரீ பாத தீர்த்தமானதால்
திருக் காவேரிக்கு பிரான் -உபய காவேரி மத்யத்தில் திருப் பள்ளி கொண்டு அருளிக் கொண்டு இருப்பதால் -எனவே தெள்ளமுதாம் –

——————————————————

சென்மத் தரங்கங் கருமம் சுழி பிணி சேலிணங்கு
சென்மந் தரங்கதிர் பொன் கோள் கண் மாரி திண் கூற்ற சனி
சென்மந் தரங்க வற்றுள் விழுவோர் கரை சேர்க்கும் வங்கஞ்
சென்மந் தரங்கவின் றோளா ரரங்கர் திருப்பதமே –46-

சென்மத் தரங்கங் கருமம் சுழி பிணி சேலிணங்கு சென்மந் தரங்கதிர் பொன் கோள் கண் மாரி திண் கூற்ற சனி சென்மந் தரங்க வற்றுள் விழுவோர்
சென்மம் -மாறி மாறி தன்மையான பிறப்புக்கள்
தரங்கம் -மாறி மாறி வரும் அலைகளையுடைய கடலாகும்
கருமம் -உயிர்களை பிறப்பிலே சூழச் செய்வதான ஊழ் வினை
சுழி -அகப்பட்ட பொருள்களை தன்னில் உள்ளச் செய்வதான நீர்ச் சுழி யாகும்
பிணி -பிறந்த உயிர்களை வருத்தும் உடல் வியாதிகளும் மநோ வியாதிகளும்
சேல்-நீரில் இழிந்தாரை குத்தி வருந்தும் மீன்கள்
குசென்-அங்காரகனும்
மந்தர் -சனியும்
அம்கதிர் -அழகிய சூரிய சந்த்ரர்களும்
பொன் -பிருஹஸ்பதியும்
கோள் -மற்றைய கிரஹங்களும்
மாரி -மழையும்
திண் கூற்று -பிராணிகளை தவறாது அழிக்கும் வலிமை யுடைய யமனும்
அசனி -இடியும்
ஆக ஆதிதைவிக துன்பங்கட்கு காரணமான தேவ வர்க்கங்களும்
இனம் -அம் மீனின் இனமாய் பிராணிகளை வருத்துகிற நீர் வாழ் ஜந்துக்கள் ஆகும்
அவற்றுள் செல் மாந்தர் -அப்பிரப்புக்களிலே கர்ம வசத்தால் சென்று அகப்பட்டுக் கொண்ட அல்ப பாக்கியம் உடைய மனிசர்கள்
அங்கு விழுவோர் -அக்கடலில் விழுந்து வருந்துபவர்களாகும் –
கரை சேர்க்கும் வங்கஞ் சென்மந் தரங்கவின் றோளா ரரங்கர் திருப்பதமே
செல் மந்த்ரம் கவின் தோளார் அரங்கர் திருப்பாதமே -கரை சேர்க்கும் வங்கம்
மேகம் தவழும் மந்தரகிரி போன்ற அழகிய தோள்களை யுடையவரான ஸ்ரீ ரெங்க நாதரது திருவடிகளே -பிறவிக்கடலின் நின்றும் முக்திக்கரை சேர்க்கும் மரக்கலம் ஆகும்
பிறவிப் பெரும் கடல் நீந்துவார் நீந்தார் இறைவன் அடி சேராதவர்
அறவாழி யந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது
செல் மந்த்ரம் -மந்த்ரத்தின் உயர்வு தோன்ற -அஷ்ட குல பர்வதங்களுக்குள் உயர்ந்த மழை மந்திர மலை
பாற் கடலைக் கலக்கிய மந்தர மலை போலே போர்க்கடலைக் கலக்கும் தோள்
மேகமும் மந்தரகிரியும் திருமேனி அழகையும் தோள்களையும் சொன்னவாறு –

——————————————————–

பதக்கம லங்க லணிமார்ப பொன்னி படிந்திமை யோர்
பதக்கம லங்க ளறுசீ ரரங்க பகட்டயிரா
பதக்கம லங்கரித் தூர்வோன் சிவனையன் பார்க்கவந்துன்
பதக்கம லங்க ளடியேன் றலைக்கென்று பாலிப்பதே –47-

பதக்கம லங்க லணிமார்ப பொன்னி படிந்திமை யோர்
பதக்கம் என்னும் அணி கலத்தையும்
அலங்கல் -பலவகை ஆரங்களையும்-தொங்கி அசைதல் -மாலைக்கு தொழில் ஆகு பெயர்
அணி -அணிந்த
மார்ப -திருமார்பை யுடையவனே
இமையோர் -தேவர்கள்
பொன்னி படிந்து -திருக் காவேரி தீர்த்தத்தில் நீராடி
பதக்கம லங்க ளறு
பதக்கம் மலங்கள் அறு-தீ வினைகளாகிய அசுத்தம் நீங்கப் பெறுதற்கு இடமான -கமலம் -நீரை அலங்கரிக்கும் -காரணப் பெயர்
சீ ரரங்க -ஸ்ரீ ரங்கத்தில் எழுந்து அருளி இருப்பவனே
பகட்டயிரா பதக்கம லங்கரித் தூர்வோன்
பகடு அயிராபதம் கம் அலங்கரித்து ஊர்வோன் -இந்த்ரனும் -பகடு ஆண் யானை என்றவாறு
சிவனையன் பார்க்கவந்து
சிவனும் பிரமனும் பார்க்க
வந்து -நீ எழுந்து அருளி
உன் பதக்கம லங்க ளடியேன் றலைக்கென்று பாலிப்பதே —
உன் திருவடித் தாமரைகளை அடியேன் முடியில் வைத்து அருள் செய்வது எந்நாளோ –

————————————————————

பாலனம் செய்யமர் நாடாண்டு பூணொடு பட்டணிந்து
பாலனம் செய்ய கலத்ததுண்டு மாதர்பால் போகத்தையும்
பாலனம் செய்ய விருப்பதி லையம் பருகி நந்தன்
பாலனம் செய்யவள் கோமான் அரங்கம் பையில்கை நன்றே –48-

பாலனம் செய்யமர் நாடாண்டு பூணொடு பட்டணிந்து
பாலனம் -பால் அனம் -வெண்ணிறமான அன்னப் பறவைகள்
செய் -கழனிகளில்
அமர் -பொருந்தி வசிக்கப் பெற்ற
நாடு ஆண்டு –தேசத்தை அரசாட்சி செய்து
பூணொடு பட்டணிந்து-ஆபரணங்களையும் பட்டாடையும் தரித்து
பாலனம் செய்ய கலத்ததுண்டு
செய்ய கலத்து பால் அனம் உண்டு -சிவந்த பொன் மயமான பாத்ரத்தில் பால் சோற்றை புசித்து
மாதர்பால் போகத்தையும் பாலனம் செய்ய விருப்பதில்-
மகளிர் சேர்க்கையில் ஆகும் பலவகை இன்பங்களையும் பரிபாலித்து வீற்று இருப்பதினும்
ஐயம் பருகி –
இரந்து பெற்ற கூழைக் குடித்தாயினும்
நந்தன் பாலனம் செய்யவள் கோமான் அரங்கம் பையில்கை நன்றே —
நந்தகோபனது குமரனும் -அழகிய திருமகளின் கணவனுமான திருமாலினது ஸ்ரீ ரங்கத்திலே நித்ய வாசம் செய்தல் நல்லது
பையில்கை -பயில்கை
நம் செய்யவள் கோமான் -என்றுமாம் –

——————————————————————–

பையிலத்தி மூளை நரம்பூன் உதிரம் பரந்த குரம்
பையிலத்தி யுள்விளை பாண்டமென்னாமல் புன்பாவையர் தோல்
பையிலகத்தி செய்து நரகெய்து வீருய்யப் பற்றுமினோ
பையிலத்தி மேவித் துயில் கூரரங்கர் பொற் பாதத்தையே –49-

பையிலத்தி மூளை நரம்பூன் உதிரம்
பையில் -ஒன்றோடு ஓன்று பொருந்தி இருக்கின்ற
அத்தி -எலும்பும் -அஸ்தி வடசொல்
மூளை நரம்பூன் உதிரம் -மூளையும் -நரம்பும் –ஊன் -தசையும் -இரத்தமும்
பரந்த குரம் பை
பரவிய -உயிர் சில நாள் தங்கும் -சிறு குடிசை இது
யிலத்தி யுள்விளை பாண்டம் மென்னாமல் –
மலம் அகத்திலே மேன்மேல் உண்டாகப் பெரும் பாத்ரம் இது என்னாமல்-உடம்பின் அசுத்தத் தன்மையைக் கருதாமல்
புன்பாவையர் தோல் பையிலகத்தி செய்து
இழி குணம் உடைய மகளிரின் உடம்பு இடம் ஆசை வைத்து -அத்தி -ஆசை –
நரகெய்து வீருய்யப் பற்றுமினோ பையிலத்தி மேவித் துயில் கூரரங்கர் பொற் பாதத்தையே
நரகு எய்துவீர் -நீங்கள் உய்ய –
திருப்பாற் கடலிலே-அப்தி -கடல் – ஆதி சேஷன் படத்தின் கீழே திருவுள்ளம் உகந்து யோகநித்ரை செய்து அருளுகிற
ஸ்ரீ ரங்க நாதருடைய திருவடிகளை சரண் அடைமின் –

———————————————————-

பாதகங் கைக்கு மரங்கர் பல்பேய் பண் டிராவணனுற்
பாதகங் கைக்கு மென் றெள்ளக்கொய் தார் படிக்கேற்ற திருப்
பாதகங் கைக்குள் விழு முன்னமே பங்கயன் விளக்கும்
பாதகங் கைக்குளிர் நீர் விழுந்த தீசன் படர் சடைக்கே –50-

பாதகங் கைக்கு மரங்கர்
அடியார்களுடைய பாவங்களை -கைக்கும் -வெறுத்து ஒழிக்கின்ற ஸ்ரீ ரங்க நாதரும்
பல்பேய் பண் டிராவணனுற் பாதகங் கைக்கு மென் றெள்ளக்கொய் தார்
பல பேய்கள் முன்னாளில்
இராவணனுடைய உற்பாதமான தலைகள் கசக்கும் என்று இகழுமாறு கொய்தார் –
அத்தலைகளை துணித்த்வருமான திருமால் –
உத்பாதம் -பின் நிகழப் போகும் தீமைக்கு அறிகுறியாக முன்னர்த் தோன்றும் தீ நிமித்தம் -பிணம் பிடுங்கித் தின்னும் பேய்களும் இகழும் படி
படிக்கேற்ற திருப் பாதகங் கைக்குள் விழு முன்னமே
தாம் மாவலி பக்கலில் வேண்டிய மூவடி நிலத்தை தவறாது பெறுகைக்காக
ஏற்ற -வாங்குவதற்கு உடன்பட்ட
திருப் பாத கம் -கொடுப்பதை திருப்பக் கூடாத ஜலம் -வாக்கு தந்ததோடு மகாபலி தாரை வார்த்துக் கொடுக்கிற நீர் –
கைக்குள் விழும் முன்னமே -அப்பெருமானது அகம்கையில் விழுவதற்கு முன்னமே
பங்கயன் விளக்கும் பாதகங் கைக்குளிர் நீர் விழுந்த தீசன் படர் சடைக்கே –
பங்கயன் விளக்கும் பாதம் கங்கை குளிர் நீர்
-பிரமன் திரு மஞ்சனம் செய்த திருவடியின் தீர்த்தமாகிய குளிர்ந்த கங்கா ஜலமானது சிவபிரானது பரவிய சடையிலே விழுந்திட்டது
விரைவு மிகுதி தோன்ற –

தார் ஏற்ற வெண் குடை மாவலி வார்க்கவும் தாமரை மேல் சீரேற்ற தொன்னான் முகத்தோன் விளக்கவும்
செம்போன்முடிக் காரேற்ற யரங்கேசர் கையும் கழலும் ஒக்க நீர் ஏற்றன வ ண் திருக் குறளாகி நிமிர்ந்த வன்றே -திருவரங்கத்து மாலை

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து -மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்திக்
கறை கொண்ட கண்டத்தான் சென்னியின் மேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை யாங்கு

———————————————————————————————-

கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கத்தந்தாதி -1-25-

February 7, 2016

சிலப்பதிகாரம் –
நீல மேக நெடும் பொற் குன்றத்து பால் விரிந்து அகலாது படிந்தது போலே
ஆயிரம் விரித்து எழு தலை உடை அரும் திறல் பாயற் பள்ளி பலர் தொழுது ஏத்த
விரை திரை காவிரி வியன் பெரும் துருத்தி திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும்
—என் கண் காட்டு என்று என் உளம் கவற்ற வந்தேன்

————————————————————————————————————————————

தனியன் –
சிறப்பு பாசுரம் –
மணம் வாள் அரவிந்தைமார் நோக்க இம்மை மறுமையில் மா
மண வாளர் தம் பதம் வாய்த்திடும் கோயிலிலே வந்த அந்த
மண வாளர் பொன் திருப்பாத அம்புயங்கட்கு மாலை என
மண வாளர் சூடும் யமகம் அந்தாதியை வாசிமினே-

அடி சூட்டலாகும் அந்தாமம் –
செய்ய சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை
கற்றினம் மேய்த்த கழல் இணைக் கீழ் –உற்ற திருமாலைப் பாடும் சீர் -போலே
வாள் -ஒளி

—————————————————————————–

1-காப்பு -விஷ்வக் சேனரும் -பஞ்சாயுதமும் –
ஓர் ஆழி வெய்யவன் சூழ் உலகு ஏழ் உவந்து ஏத்து அரங்கர்
கார் ஆழி வண்ணப் பெருமாள் அந்தாதிக்கு காப்பு உரைக்கின்
சீர் ஆழி அம் கையில் பொன் பிரம்பு ஏந்திய சேனையர் கோன்
கூர் ஆழி சங்கம் திரு கதை நாந்தகம் கோதண்டமே

——————————————————————————-

2-வையம் புகழ் பொய்கை பேய் பூதன் மாறன் மதுரகவி
யையன் மழிசை மன் கோழியர் கோன் அருள் பாண் பெருமான்
மெய்யன்பர் காற் பொடி விண்டு சித்தன் வியன் கோதை வெற்றி
நெய்யங்கை வேற் கலியன் தமிழ் வேத நிலை நிற்கவே –

——————————————————————————–

3-குரு பரம்பரை
சீதரன் பூ மகள் சேனையர் கோன் குருகைப் பிரான்
நாதமுனி உய்யக்கொண்டார் இராமர் நல் ஆளவந்தார்
ஏதமில் வண்மை பராங்குச தாசர் எதித் தலைவர்
பாதம் அடைந்து உய்ந்த ஆழ்வான் எம்பார் பட்டர் பற்று எமக்கே –

இந்த நூல் ஆச்ரியருக்கு பட்டர் ஆசார்யர் ஆகையாலே அவர் வரை அருளி
அவர் திரு தகப்பனாரையும் சேர்த்து அருளுகிறார்

———————————————————————————

4-திருமாலை யாண்டான் திருக்கோட்டியூர் நம்பி திருவரங்கப்
பெருமாள் அரையர் திருமலை நம்பி பெரிய நம்பி
அருமால் கழல் சேர் எதிராசர் தாளில் சிங்கா தனராய்
வரும் ஆரியர்கள் எழுத்து நால்வர் என் வான் துணையே –4

74 சிம்மாசனாதிபதிகளே சிறந்த துணையாவார் –

————————————————————–

5-நம் ஆழ்வார்
மால் தன் பராங்கதி தந்து அடியேனை மருள் பிறவி
மாறு அன்பர் ஆன குழாத்துள் வைப்பான் தொல்லை வல் வினைக்கு ஓர்
மாறன் பாராமுகம் செய்யாமல் என் கண் மலர்க் கண் வைத்த
மாறன் பராங்குசன் வாழ்க என் நெஞ்சினும் வாக்கினுமே-

மால் தன் பராங்கதி -விஷ்ணு லோகம் ஆகிய ஸ்ரீ வைகுண்டம்
பிறவி மாறு அன்பர் -முக்தர்

———————————————————————–

திரு அரங்கா உறை மார்பா திசை முகன் சேவிப்ப கந்
திருவர் அங்கு ஆதரித்து இன்னிசை பாட திருக் கண் வளர்
திருவரங்கா வுன் பழ அடியேற்கு அருள் செய்ய எழுந்
திரு வரம் காதலித்தேன் உனக்கே தொண்டு செய்வதற்கே–1

முதல் -வரி -திருவரங்கா -திரு அரங்கு ஆ -திரு மகள் தான் வசித்தற்கு இடமாக கொண்டு
இரண்டாம் வரி -திருவரங்கா தரித்து -கந்தருவர் அங்கு ஆதரித்து
மூன்றாம் வரி -திருவரங்கா -அவனையே குறித்து அருளி

நான்காம் வரி -திருவரங்கா -எழுந்திரு-உனக்கே தொண்டு செய்வதற்கு வரம் காதலித்தேன் = வரம் பெற ஆசைப்பட்டேன்-

——————————————————————————-

செய்யவளைக்  குருவின் இன்னருளால் திருத் தாள் வணங்கி
செய்ய வளைக்  குலம் சூழ் அரங்க ஈசன் சிறிது அமுது
செய்யவளைக்கும் புவிக்கும் அங்காந்த செவ்வாய் முகுந்தன்
செய்ய வளைக்கும் சிலம்பு அணி பாதங்கள் சேர்ந்தனமே -2-

ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் -என்று அருளி செய்கிறார் -இத்தால்
சேர்ந்தனம் -முன்னோரும் தாமும் -பின்னோரும்
முதல் வரி செய்யவள் -செந்நிறம் உடையவள் -அவள் தாளை வணங்கி -அவளைத் தாளாலே சென்று வணங்கி
இரண்டாம் வரி -செய்ய வளை -கழனிகளில் உள்ள சங்கினங்கள் சூழப் பெற்ற திருவரங்கம்
மூன்றாம் வரி -அளைக்கும் புவிக்கும் -வெண்ணெயையும் பூமியையும் உண்ண -அமுத செய்ய சிறிது அங்காந்த செவ்வாய் முகுந்தன்
நான்காம் வரி -செவ்வியை உடைய வளைந்துள்ள சிலம்பு அணிந்த திருவடிகளை சேர்ந்தனம்

செய்ய -சிலம்புக்கும் திருப்பாததுக்கும் அடை மொழி-

———————————————————————————

தனமாதர் அம் சொல் குதலை புதல்வர் தரணி இல்லம்
தனம் ஆதரம் செயும் வாழ்வு அஞ்சியே தஞ்ச நீ எனப் போந்
தனம் ஆ தரங்கிக்க வெற்பு எடுத்தாய் தண் அனந்த சிங்கா
தன மாதரங்கம் உள்ளாய் அரங்கா முத்தி தந்து அருளே —-3-

தரங்கிக்க -நிலை கலங்க -இந்த்ரன் பெய்வித்த மழையினால்
மாதரங்கம் -பெரிய கடலிலே
அநந்தன் -ந அந்த -பிரளயத்திலும் அழிவில்லாதவன்
ஆதரம் செயும் வாழ்வு அஞ்சியே-ஆசை கொள்ளுகிற நிலை யற்ற சம்சார வாழ்வுக்கு அஞ்சியே

———————————————————————————–

தந்தமலைக்கு முன் நின்ற பிரான் எதிர் தாக்கி வெம்போர்
தந்தமலைக் குமைத்தான் அரங்கேசன் தண் பூவினிடை
தந்தமலைக்கு தலைவன் பொற் பாதம் சரண் என்று உய்யார்
தந்தமலைக்கும் வினையால் நைவார் பலர் தாரணிக்கே ——-4-

முதல் வரி -தந்த மலைக்கு முன் நின்ற பிரான் -தந்தங்களை உடைய தொரு மலை போன்ற
யானைக்கு -கஜேந்திர ஆழ்வானுக்கு எதிரில் எழுந்து அருளி காட்சி தந்த பெருமானும்
இரண்டாம் வரி -எதிர் தாக்கி வெம்போர் தந்த மல்லைக் குமைத்தான் –
மூன்றாம் வரி -தண் பூவின் தந்து இடை அமலைக்கு தலைவன் -குற்றமற்ற திருமகளுக்கு கொழுநன்
நான்காம் வரி -அலைக்கும் தம் தம் வினையால் நைவார்
வெண்ணெய் வைத்துக் கொண்டு நெய்க்கு அழுவார் போலே சரண் புக்க மாதரத்தில்
சரணாகதருடைய கருமங்களை ஒழித்து முக்தி தருபவன் திருவடிகள் இருக்க

———————————————————————————–

தாரணி தானவன் பால் இரந்தான் சங்கம் வாய் வைத்து ஒன்னார்
தாரணி (தார் அணி )தான் அவம் செய்தான் அரங்கன் தமர்கள் பொருந்
தாரணி தான ( பொருந்தார் அணிது ஆன அமராவதியும் ) தரு நிழலும்
தாரணி தானம் அயிராவதமும் தருகினுமே——-5

தாநவன் -காசியப முனிவரது மனைவி தநு என்பவளது மரபினன்-அசுரனான மகாபலியிடம் நிலத்தை யாசித்தவனும்
அணிது -அணித்து -சமீபத்தில் உள்ள -இந்திர லோகம் அமராவதி மற்றவற்றை விட அருகில் உள்ளதால் –
அணிது -எளிது என்னும் பொருளிலும் கொள்ளலாம்
பாரிஜாத தருவை கொணர்கையில் எதிர்த்த -சங்க நாதத்தினால் பங்கப் படித்தினான்
மகா பாரத யுத்தத்திலும் சங்கு ஒலியால் அச்சப் படுத்தியும் -அறிவோம்

———————————————————————————-

தருக காவலா வென்று புல்லரைப் பாடித் தன விலை மா
தருக்கு ஆவலாய் மயிலே குயிலே என்று தாமதராய்
தருக்கா அலா நெறிக்கே திரிவீர் கவி சாற்றுமின் பத்
தருக்கு ஆ அலாயுதன் பின் தோன்று அரங்கர் பொன் தாள் இணைக்கே ——–6

தாமதராய் -தமோ குணத்தை உடையவராய்
அலாயுதன் -பலராமன்
அலா நெறி -துர் மார்க்கம்
சாற்றும் இன் பத்தருக்கு

——————————————————————————–

தாளத் தனத்தத்தைச் சொல்லியரால் வரும் தாழ் மல பா
தாளத்தனத்தத்தைத் தப்ப நிற்பீர்  புடை தங்கிய வே
தாளத்தன் அ தத்தை தீர்த்தான் அரங்கன்  சகடு உதைத்த
தாள் அத்தன் அத்தத்து ஐ ஆயுதன் பாதம் தலைக் கொண்மினே ——-7

தாளத் தனத்தத்தைச் சொல்லியரால் வரும் -கைத் தாளம் போன்ற
வடிவமுடைய கொங்கைகளையும் கிளி கொஞ்சிப் பேசுவது போலே
இனிய சொற்களையும் உடைய அயல் மாதர்களின் சம்பந்தத்தால் உண்டாகும்
தாழ் மல பாதாளத்து அ னத்தத்தை-ஆழ்ந்த அசுத்தம் பொருந்திய நரக துன்பத்தை
தப்ப நிற்பீர்
புடை தங்கிய வேதாளத்தன் அ தத்தை தீர்த்தான் -எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்து நின்ற
பூத கணங்களை உடையவனான சிவபிரானது -பிச்சை எடுதலாகிய -அந்த துன்பத்தை
போக்கி அருளினவனும்
சகடு உதைத்த தாள் அத்தன்
அத்தத்து ஐ ஆயுதன்-பஞ்சாயுதங்கள் ஏந்திய திருக்கைகளை யுடையவன்
பாதம் தலைக் கொண்மினே

—————————————————————————–

தலையிலங்கா புரம் செற்றான் அரங்கன் என் தாழ் சொல் புல்கு
தலையில் அங்கு ஆதரம் செய்த பிரான் சரண் அன்றி மற்றோர்
தலை யிலங்கா நின்ற கண் இலம் காண்கைக்கு தாழுகைக்குத்
தலை யிலம் காதிலம் கேட்கைக்கு வாயிலம் சாற்றுகைக்கே ———-8

தலையிலங்கா புரம் செற்றான் -தலைமை பெற்ற இலங்கை நகரை அழித்தவனும்
என் தாழ் சொல் புல்கு தலையில் அங்கு ஆதரம் செய்த பிரான் -என் இழிவான துதிச் சொற்களில் –
பொருள் சிறப்பு இல்லாத தம் மக்கள் பேசும் மழலைச் சொற்களின் இடத்தில்
தாய் தந்தை அன்பு கொள்ளுவது போலே விருப்பம் வைத்த பெருமான்

——————————————————————————-

கை குஞ்சரம் அன்று அளித்தாய் அரங்க மண் காக்கைக்குமாய்க்
கைக்குஞ்சரம் (கும் சரம் )அசரம் படைத்தாய் கடல் நீறு எழ து
கைக்குஞ்சர (கும் சர ) மகரம் குழையாய் எனைக் கைக் கொள் உடல்
கைக்குஞ்சரம  (கும் சரம ) தசையில் அஞ்சேல் என்று என் கண் முன் வந்தே —9

கை குஞ்சரம் அன்று அளித்தாய் -துதிக்கை உடைய யானையை -கஜேந்த்ரனை
அன்று
அரங்க
மண் காக்கைக்கும் மாய்க்கைக்கும் சரம் அசரம் படைத்தாய் -ஜங்கமம் ஸ்தாவரங்கள் படைத்து
கடல் நீறு எழ துகைக்கும் சர -ஆக்நேய அஸ்த்ரத்தை வுடையவனே
மகரம் குழையாய்–எனைக் கைக் கொள்
உடல் கைக்கும் சரம தசையில்-உடம்பை உயிர் வெறுத்து ஒழியும்படி யான அந்திம தசையில்
அஞ்சேல் என்று என் கண் முன் வந்தே –

எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் போலே பிரார்தித்தவாறும்

——————————————————————————-

வந்தனை ஏற்றனை என் புன் சொல் கொண்டனை வன் மனத்தே
வந்தனை ஏற்று அனை யாவையும் ஆயினை வான் தர வு
வந்தனை யேற்றனைத் தானொத்த தாளில் வைப்பாய் பலித்து
வந்தனை யேற்றனைத் தீர்த்தாய் அரங்கத்து ,மாதவனே ———–10

யேற்றனை பலித்து வந்தனை தீர்த்தாய் -ரிஷப வாகனம் உடைய சிவ பிரான் இரத்தல் தொழிலை நீக்கி அருளினவனே
அரங்கத்து ,மாதவனே
என் வந்தனை ஏற்றனை
புன் சொல் கொண்டனை
என் வன் மனத்தே வந்தனை ஏற்று-வலிய மனத்திலே வந்து பொருந்தி
அனை யாவையும் ஆயினை-எனக்கு தாயும் மற்று எல்லா உறு துணையும் ஆயினை
வான் தர வுவந்தனை யேல்
தனை தானொத்த தாளில் வைப்பாய்-தன்னைத் தானே ஒப்பதான திருவடியில் சேர்த்து கொண்டு அருள்வாய்

————————————————————————————-

மாதங்கத் தானை யரங்கனை வஞ்சன் இலங்கையிலே
மாதங்கத் தான் ஐ யிரு திங்கள் தாழ்த்து பின்பு வாம் பரி தேர்
மாதங்கத் தானை வலத்தானை முன் வதைத்தானைத் தன் பான்
மாதங்கத்தானை வைத்தானை வைத்தேன் என் மதி யகத்தே ——–11

மாதங்கத் தானை யரங்கனை வஞ்சன் இலங்கையிலே –
சிறந்த மாற்றுயர்ந்த பொன் மயமான ஆடையை உடைய திருவரங்கனும்
வஞ்சகனான இராவணனுடைய இலங்காபுரியிலே –
மாதங்கத் தான் ஐ யிரு திங்கள் தாழ்த்து பின்பு வரம் பரி தேர் –
திருமகள் அவதாரமான சீதா பிராட்டி தங்கி இருக்க -மா தங்க -தான் -பத்து மாதம் கழித்து
பின்பு தாவிச் செல்லும் குதிரைகளும் தேர்களும்
மாதங்கத் தானை வலத்தானை முன் வதைத்தானைத் தன் பான்
யானைகளும் காலால்கள் ஆகிய சேனை யின் பலத்தோடு மற்றும் பல்வகை வலிமைகள் உடைய இராவணனை
முற்காலத்தில் அழித்திட்டவனும்
மாதங்கத்தானை வைத்தானை வைத்தேன் என் மதி யகத்தே –
மாது அங்கத்தானை தன் பால் வைத்தானை -திருமாலை எனது மனத்தின் உள்ளே
நிலையாக வைத்திட்டேன் –

-தங்கத்தானை =பீதாம்பரம் என்னும் பொற்றாடை –
-வாம் =வாவும்
மூன்றாம் அடி மாதங்கம் -மதங்க முனிவர் இடத்தில் நின்று ஆதியில் உண்டானது
என்று காரணப் பொருள்
வலம் -வரபலம் புஜபலம் ஆயுதபலம் மனோபலம் ஸ்தான பலம் முதல்வன
வளம் -வெற்றியுமாம்
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து இருக்கும் திருமால்
வலத்தனன் திரிபுரம் எரித்தவன்
மதி யகத்து -அறிவிலே என்னுமாம்
அம்பிகையை ஒருபாகத்தில் வைத்தவனை -தனது ஒரு பாகத்தில் வைத்தவனை
எனது அகத்து உறுப்பினுள்ளே வைத்தேன் யான் -சமத்காரம் தோன்ற அருளுகிறார்

———————————————————————————–

மதிக்கவலைப் புண்ட வெண்டயிர் போல மறு குறு மென்
மதிக்கவலைப் புண்டணி கின்றிலேன் மண்ணும் வானகமும்
மதிக்கவலைப் புனல் சூழ் அரங்கா நின் மனத்தருடா
மதிக்கவலைப் புன் பிறப்பினி மேலும் வரும் கொல் என்றே —–12

மண்ணும் வானகமும் மதிக்க-
அலைப் புனல் சூழ்
அரங்கா
நின் மனத்தருடா மதிக்க=நின் மனத்து அருள் தாமதிக்க
வலைப் புன் பிறப்பினி மேலும் வரும் கொல் என்று = வலை புல் பிறப்பு இனி மேல் வரும் கொல் என்று சிந்தித்து

மதிக்கவலைப் புண்ட வெண்டயிர் போல மறு குறு மென் மதிக்கவலைப் புண்டணி கின்றிலேன்-
மதிக்க அலைப்புண்ட வெள் தயிர் போலே =கடைதலால் அலைக்கப் பட்ட வெண்மையான
தயிர் போலே ஒரு நிலை நில்லாது சுழல்கிற என் மனதின் கவலையாகிய விரணம்
ஆறப் பெற்றிலேன் -புண் தணிகின்றிலேன்-

எனது கவலை தணியுமாறு எனக்கு நல் கதி அருள வேண்டும் என்பதாகும்
வலை மிருக பஷிகளைப் பந்தப்படுதுவது போலே பிறப்பு உயிரை பந்தப்படுதலால்
வலைப்புன் பிறப்பு எனப்பட்டது-

————————————————————————————

வருந்து வரைப்பட்ட மங்கையர் எண்மர் மனங்களைக் க
வருந்து வரைப்பட்ட வாய் அரங்கேசனை வஞ்சப்பகை
வருந்து வரைப்பட்ட வேழம் அட்டானை மறந்து உலகோர்
வருந்து வரைப்பட்ட வீப்போன் மடந்தையர் மால்வலைக்கே ——–13

வருந்து வரைப்பட்ட மங்கையர் எண்மர் மனங்களைக் கவரும் =
துவரை வரும் பட்ட மங்கையர் எண்மர் மனங்களைக் கவரும்
துவரைப்பட்ட வாய் அரங்கேசனை துவர் ஐ பட்ட -=செந்நிறத்தை பொருந்திய வாய் அழகை உடைய ரெங்கநாதனும்
வஞ்சப்பகை வருந்து -வஞ்சப்பகைவர் உந்து -தன்னை நோக்கிச் செலுத்திய
வரைப்பட்ட வேழம் =மலையை ஒத்த குவலயாபீடம் என்னும் யானையைக்
அட்டானை -கொன்றவனுமான திருமாலை
மறந்து உலகோர்
வருந்து வரைப்பட்ட வீப்போன் மடந்தையர் மால்வலைக்கே =
வருந்துவர் ஐ பட்ட ஈ போல் -கோழையில் அகப்பட்டு மீள ஒண்ணாதபடி
சிக்கிக் கொண்டு இழிகிற ஈயைப் போலே -மகளிர் பக்கல் கொள்ளும் மோகம் ஆகிய
வலையிலே அகப்பட்டு மீள மாட்டாது வருந்துவர்-

ருக்மிணி -சத்யபாமை -ஜாம்பவதி -சத்யை -மித்ரவிந்தை -ஸு சிலை -ரோகிணி -லஷணை
என்கிற எட்டு பட்ட மகிஷிகள்
துவரை வரும் -கண்ண பிரானுக்கும் திருத் தேவிமார்களுக்கும் அடைமொழி.

————————————————————————————-

மாலைக்கல்லார மடவார் புண்ணாக்கையில் வாஞ்சை வைத்து
மாலைக்கல்லாரம் புலிக்கு நையா நிற்பர் மாய்விப்பதோர்
மாலைக்கல்லாரம் புயத்தாளில் வைக்கும் மதில் அரங்க
மாலைக்கல்லார் அஞ்சலி யார் என்னே சில மானிடரே ——–14

மாலைக்கல்லார மடவார் புண்ணாக்கையில் வாஞ்சை வைத்து =
மாலைக் கல்லாரம் -மாலையாகத் தொடுக்கப்பட்ட செங்கழு நீர் மலர்களை சூடிய
மாதர்கள் உடைய அசுத்தமான உடம்பிலே விருப்பம் வைத்து அக்காமத்தினால்
மாலைக்கல்லாரம் புலிக்கு நையா நிற்பர்
மாலைக்கு அல் ஆர் அம்புலிக்கு நையா நிற்பர் -காம உத்தீபகப் பொருள்களான
அந்தி மாலைப் பொழுதுக்கும் இரவில் விளங்குகின்ற சந்த்ரனுக்கும் வருந்தி நிற்பார்கள்
மாய்விப்பதோர் -மாலைக்கல்லார் =தங்களை அழியச் செய்வதான ஒப்பற்ற காம மயக்கத்தை
களைந்து ஒழிக்க மாட்டார்கள் -கல்லல் =கல்லுதல் -வேரூன்றினதை பெயர்த்து ஒழித்தல் –
அம்புயத்தாளில் வைக்கும் மதில் அரங்க மாலைக்கல்லார் அஞ்சலி யார் என்னே சில மானிடரே =
தாமரை போன்ற தனது திருவடிகளில் அடியார்களை இருத்துகிற
திருமதில்கள் சூழ்ந்த திருவரங்கத்தில் பள்ளி கொண்டு இருக்கிற திருமாலை
கல்லார் =துதிக்க மாட்டார்கள் –
அஞ்சலியார் = கை கூப்பி வணங்க மாட்டார்கள்
என்னே=இது என்ன பேதமையோ

மானிடர் -மனுஷ்யர் -காசிப முனிவர் மனைவியுள் மனுவின் சந்ததியார் என்று காரணப்பொருள் ஆகவுமாம்

——————————————————————————

மானிடராக வரலரிதோர் மண்டலத்தின் நெறி
மானிடராக மிலாதவராதன் மலரயனார்
மானிடராகமத்தாலன்பராய வரங்கத்துள் எம்
மானிடராகமலரடிக்கு ஆட்படும் வாழ்வரிதே ——–15

மானிடராக வரலரிதோர் மண்டலத்தின் -ஓர் மண்டலத்தின் மானிடராக வரல் அரிது
அப்படி மனித ஜன்மம் எடுத்தாலும்
நெறி மானிடராக மிலாதவராதன் -இடர் ஆகம் இலாதவர் ஆதல் அரிது -நெறிமான் ஆதல் அரிது =
நீதி நெறி உடையவனாய் இருத்தல் அதினினும் அரிது
அங்கனம் சன்மார்க்கத்தில் ஒழிகினாலும்
மலரயனார் -மலர் அயனார் =தாமரை மலரில் தோன்றிய பிரமதேவரும்
மானிடராகம் -மான் இடர் ஆகமத்தாலன்பராய=மானை இடக்கையில் ஏந்திய சிவபிரானும்
சாஸ்த்ரங்களில் கூறிய முறைப்படி -அன்பர் ஆய =தொண்டு பூண்டு ஒழுகுதற்கு இடமான
வரங்கத்துள் எம் மானிடராகமலரடிக்கு ஆட்படும் வாழ்வரிதே –
அரங்கத்துள் எம்மான் இடர் ஆகம் மலர் -அடிக்கு -பெருமை உடைய சிறந்த தாமரை போலே
திருவடிகளுக்கு அடிமை செய்து ஒழுகுகிற வாழ்க்கை அருமையானது

அரியது கேட்கின் வரிவடிவேலாய் அரிது அரிது மானிடராதல் அரிது
மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு பேடு நீக்கிப் பிறத்தல் அரிது
பேடு நீக்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்வர் ஆயின் வானவர் நாடு வழி திறந்திடுமே-

————————————————————————————-

அரி தாமரைக்கண் தோல் உடுத்தார் அயனார்கு அரியான்
அரி தாமரைக்கண் அம்மான் திருப்பாதம் அடைமின் சன்மம்
அரி தாமரைக்கணம் தங்காது உயிர் அவனூர் வினவில்
அரி தாமரைக்கணம் ஈர்த்து ஓடும் பொன்னி யரங்கம் அன்றே ———16

அரி தாமரைக்கண் தோல் உடுத்தார் அயனார்கு அரியான் =
அரி-இந்தரனுக்கும் -தாம் அரைக்கண் அம் தோல் உடுத்தார் -தாம் இடையிலே அழகிய
புலித் தோலை உடுத்துள்ளவரான சிவபிரானுக்கும் அறிதற்கு அரியவனும்

அரை -பாதி -உடம்பில் பாதி அளவில் உள்ள உறுப்பான இடையைக் குறிக்கும்
அரி தாமரைக்கண் அம்மான் திருப்பாதம் அடைமின் -ஹரி என்னும் திருநாமம் உடைய
செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களை உடைய தலைவனான எம்பெருமானின்
திருவடிகளை சரண் அடையும் கோள்

அரி -காண்பவர்கள் கண்களையும் மனத்தையும் கவருகிற தாமரைக் கண்ணன்
அதனால் பயன் என்ன எனின்
சன்மம் அரி தாமரைக்கணம் தங்காது உயிர் -சன்மம்  அரிதாம் -மீண்டும் பிறப்பு இல்லாமல்
-போகும் –உயிர் அரைக்கண் தங்காது -சரணம் அடைபவர் உயிர் முக்தி புகுமே அன்றி
மறுபடி ஓர் உடம்பில் அரை ஷண பொழுதும் பொருந்தி நிற்க மாட்டாது
அவனூர் வினவில் –
அரி தாமரைக்கணம் ஈர்த்து ஓடும் பொன்னி யரங்கம் அன்றே -அரி தாம் மரை கணம்
ஈர்த்து ஓடும் பொன்னி அரங்கம் அன்றே -சிங்கங்களையும் தாவிப்பாயும் மான் கூட்டத்தையும்
ஒருங்கு இழுத்துக் கொண்டு ஓடி வருகிற உபய காவேரியின் மத்தியில் உள்ள திருவரங்கம் அன்றோ

அரி -யானை முதலிய விலங்குகளை அரிப்பது -அரித்தல் -அழித்தல்

மலைத்தலைய கடற்காவேரி புனல் பரந்து பொன் கொழிக்கும் என்றபடி தான் பெருகும் பொழுது
பொன்னைக் கொழித்துக் கொண்டு வருவதால் காவேரிக்கு பொன்னி என்ற பெயர்

————————————————————————————

அரங்காதுவார் கணை கண் வள்ளை கோங்கின் அரும்பு மங்கை
அரங்காதுவார் முலை என்று ஐவர் வீழ்ந்தனர் ஆடரவின்
அரங்காதுவாரமிலா மணியே யணியார் மதில் சூழ்
அரங்காதுவாரகையாய் அடியேன் உன் அடைக்கலமே ———-17

அரங்காதுவார் கணை கண் வள்ளை கோங்கின் அரும்பு மங்கை அரங்காதுவார் முலை என்று ஐவர் வீழ்ந்தனர் –
மங்கையர் -இள மகளிருடைய கண்கள் அரம் காதுவார் கணை -அரம் என்னும் கருவியினால்
அராவப்பட்ட கூறிய நீண்ட அம்பு போலும் -அம் காது வார் முலை -அழகிய காதுகளும்
கச்சு இறுக்கிய கொங்கைகளும் -வள்ளை கோங்கின் அரும்பு -முறையே வள்ளை என்னும்
நீர்க்கொடியின் இலையையும் கோங்க மரத்தின் அரும்பையும் போலும் -என்று -உவம முகத்தால்
புனைந்து கருதி ஐவர் வீழ்ந்தனர் -பஞ்சேந்த்ரியங்களான ஐந்து பேர் அம் மகளிர் பக்கல் ஆசை கொண்டு –

அப்பெண் மோகக் கடலில் விரைந்து விழுந்தன்மையர்
ஆடரவின் அரங்காதுவாரமிலா மணியே -ஆடு அரவின் இன் அரங்கா -படம் எடுத்து ஆடுகிற
காளியன் என்னும் பாம்பை இனிய கூத்தாடும் இடமாக கொண்டவனே –
துவாரம் இலா மணியே -புரைசல் இல்லாத முழு மாணிக்கம் போன்றவனே
யணியார் மதில் சூழ் அரங்காதுவாரகையாய் அடியேன் உன் அடைக்கலமே –
அணி ஆர் மதில் சூழ் அரங்கா -துவாரகையாய் -அடியேன் உன் அடைக்கலம்

—————————————————————————————-

அடைக்கலந்தாயத்தவர் போலுடலுறையை வரையும்
அடைக்கலந்தாவுலகம் கொண்ட தாள்களுக்கண்ட முண்டால்
அடைக்கலந்தாயரங்கா வாயர்பாடியிலன்று நெய்பால்
அடைக்கலந்தாய் வைத்து வாய் நெரித்தூட்ட வழுமையனே——–18

அடைக்கலந்தாயத்தவர் போலுடலுறையை வரையும்
உடல் உறை ஐவரையும் அடைக்கலம் -விஷயாந்தரங்களில் இந்த்ரியங்களை செல்ல ஒட்டாமல் அடக்கி வசப்படுத்தி
வைக்க வல்லமை உடையோம் அல்லோம் -தாயத்த்வர் போல் -பங்காளிகள் போலே –
அடைக்கலந்தாவுலகம் கொண்ட தாள்களுக்கண்ட முண்டால்
தாய் உலகம் கொண்ட தாள்களுக்கு அடைக்கலம்
அண்டம் உண்டு ஆல் ஆடை கலந்தாய் -ஆலிலையில் சேர்ந்து பள்ளி கொண்டவனே -அரங்கா
அடைக்கலந்தாயரங்கா வாயர்பாடியிலன்று நெய்பால் அடைக்கலந்தாய் வைத்து வாய் நெரித்தூட்ட வழுமையனே
பாலடை கலம் வைத்து -பாலாடையாகிற பாத்திரத்தில் பெய்து கொண்டு -அன்று
ஆயர்பாடியிலே  யசோதை நெய்யை வாய் நெரித்து ஊட்ட -அழும் ஐயனே

—————————————————————————————

ஐயமருந்திவை யுண்என்று மாதர் அட்டு ஊட்டும் செல்வம்
ஐயமருந்தினைப்போதே அவர் இன்பம் ஆதலினால்
ஐயமருந்தியக்கங் குறுகா முன் அரங்கற்கு அன்பாய்
ஐயமருந்தயும் வாழ்மின் கண் மேல் உனக்கு ஆநந்தமே ——–19

ஐயமருந்திவை யுண்என்று மாதர் அட்டு ஊட்டும் செல்வம்
ஐய இவை -இவ் உணவுகள் -மருந்து -இன்சுவை மிகுதியால் தேவாமிருதம் போன்றன-
உண் -உண்ணக் கடவை  என்று -அன்பு பாராட்டி உபசார வரத்தை சொல்லி -மாதர் அட்டு ஊட்டும் –
தாமே சமையல் செய்து உண்பிக்கும் -செல்வம் -ஐஸ்வர்யம்
ஐயமருந்தினைப்போதே அவர் இன்பம் ஆதலினால்
ஐயம் -சந்தகதுக்கு இடமானது -நிலையற்றது என்றபடி -அருந்தினைப் போதே -சிறிய
தினை  என்னும் தானியத்தின் அளவிதான அதி சொற்ப காலத்தே -ஆதலினால் –
ஐயமருந்தியக்கங் குறுகா முன் அரங்கற்கு அன்பாய்
ஐ அமரும் தியக்கம் குறுகா முன் -கோழை கண்டத்தில் பொருந்துகிற கலக்கம் –
அந்திம திசையில் ஆகின்ற தடுமாற்றம் -நெருங்குவதற்கு முன்னமே –
அரங்கற்கு அன்பாய்
ஐயமருந்தயும் வாழ்மின் கண் மேல் உனக்கு ஆநந்தமே –
ஐயம் அருந்தியும் -பிச்சை எடுத்துப் புசித்தாயினும் -அரங்கன் விஷயத்தில்
பக்தி கொண்டு ஜீவியுங்கோள் -இப்படி செய்வீர் ஆயின் -மேல் -இப்பிறப்பு ஒழிந்த அளவில் –
உங்களுக்கு நித்ய ஆனந்தம் பரம பதம் உண்டாகும்

செல்வம் இன்பம் இளமை யாக்கை நிலையாமை விளக்கி
புலன்கள் நைய மெய்யில் மூத்துப் போந்திருந்து உள்ளம் எள்கிக்
கலங்க ஐக்கள் போத உந்திக் கண்ட பிதற்றா முன்
அலங்கலாய தண் துழாய் கொண்டு ஆயிரம் நாமம் சொல்லி
வலம்கொள் தொண்டர் பாடியாடும் வதரி வணங்குதுமே -பெரிய திருமொழி
மேல் ஆநந்தம் -மேன்மையான ஆநந்தம் -என்னவுமாம்

——————————————————————————-

நந்தமரங்கனை மா கடல் ஏழு நடுங்க எய்த
நந்தமரங்கனைப் பற்று நெஞ்சே வினை நையும் முன்கை
நந்தமரங்கனையார் மயல்போம் வரு நற் கதிவா
நந்தமரங்கனைவர்க்கும் எஞ்ஞான்று நரகில்லையே ———20

நந்தமரங்கனை மா கடல் ஏழு நடுங்க எய்த
மரம் ஏழும் நந்த -கனை மா கடல் ஏழும் நடுங்க -எய்த
நந்தமரங்கனைப் பற்று நெஞ்சே வினை நையும் முன்கை
நம் தம் அரங்கனை -நம்பெருமாளை -பற்று நெஞ்சே -வினை நையும் –
முன் கை நந்து
நந்தமரங்கனையார் மயல்போம் வரு நற் கதிவா
நந்து அமர் அங்கனையார் மையல் போம் -முன்னம் கைகளிலே சங்கம் வளையல்கள் பொருந்திய
மாதர்கள் பக்கலில் உண்டாகும் ஆசை மயக்கமும் ஒழியும் -நல்  கதி வானம்
நந்தமரங்கனைவர்க்கும் எஞ்ஞான்று நரகில்லையே –
தமர் அனைவர்க்கும் எஞ்ஞான்றும் நரகு இல்லையே
ஏழும் -மரங்களிலும் கடல்களிலும் கூட்டிப் பொருள் கொள்க
நந்து சங்கு -அதனாலாகிய வளைக்கு கருவி ஆகுபெயர்

—————————————————————————–

நரகந்தரம்புவி இம்மூன்று இடத்தும் நனி மருவு
நரகந்தரங்கித்து வெம் காலற்கு அஞ்சுவர் நாயகவா
நரகந்தரம்புள் பிடறு ஏறு அரங்கர் நல் ஆய்க்குலத்தி
நரகந்தரங்க முற்றார் அடியார்க்கு நமன் அஞ்சுமே ———-21

நரகந்தரம்புவி இம்மூன்று இடத்தும் நனி மருவு
நரகம் அந்தரம் புவி இம் மூன்று இடத்தும் -நனி மருவுநர் -மிகுதியாகப்
பொருந்தி உள்ள ஜனங்களும் –
நரகந்தரங்கித்து வெம் காலற்கு அஞ்சுவர் நாயகவா
நர் அகம் தரங்கித்து வெம் காலற்கு அஞ்சுவர் -மனம் அலைந்து கொடிய யமனுக்கு
பயப்படுவார்கள்
நரகந்தரம்புள் பிடறு ஏறு அரங்கர் நல் ஆய்க்குலத்தி
நாயக வாநர நந்தரம் புள் பிடர்  ஏறு அரங்கர் -அனுமான் திருக் கழுத்தின் மேலும்
கருடன் பிடரி மேலும் ஏறுகிற திருவரங்கரும்
நல் ஆய்க்குலத்து இநர் -இடையர் குலத்தில் வளர்ந்து விளக்கின சூர்யன் போன்றவரும்
நரகந்தரங்க முற்றார் அடியார்க்கு நமன் அஞ்சும்
தரங்கம் அகம் உற்றார் -திருப்பாற் கடலை வசிக்கும் இடமாகக் கொண்டு
அங்கு வாழ்பவர் ஆன நம்பெருமாள் உடைய -அடியார்க்கு நமன் அஞ்சும்

————————————————————————————

அஞ்சு அக்கரம் தலை கங்கையன் எற்றலும் அஞ்சிறைய
அஞ்சம் கரத்தலை குண்டிகையான் மண்டை அம் கை விட்டே
அஞ்ச கரத்தலை செய்து பித்து ஏக அருள் அரங்கன்
அம் சக்கரத் தலைவன் தாள் அலால் மற்று அரண் இலையே–22

அஞ்சு அக்கரம் தலை கங்கையன் எற்றலும் –
பஞ்சா ஷர மந்த்ரத்துக்கு உரியவனும்
தலையில் கங்கையை தரித்தவனும் ஆன சிவபெருமான் இரந்த அளவிலே
அஞ்சிறைய அஞ்சம் கரத்தலை குண்டிகையான்
அழகிய சிறகுகளை உடைய ஹம்ச வாகனத்தையும்
கையில் கமண்டலத்தையும் உடையனான பிரமனது
மண்டை அம் கை விட்டே அஞ்ச கரத்தலை செய்து-
கபாலமானது சிவன் உள்ளம் கையை நீங்கி மறைதளைச் செய்து விலகவும்
பித்து ஏக –
அந்த சிவன் திகைப்பு ஒழியவும்
அருள் அரங்கன் அம் சக்கரத் தலைவன்
கருணை செய்த
அழகிய சக்கரத்தாழ்வாரை உடைய
இறைவனான ஸ்ரீ ரெங்கநாதன் உடைய
தாள் அலால் மற்று அரண் இலையே –
திருவடியே அல்லால்
வேறு ரஷகம் எவ் உயிர்க்கும் இல்லை

—————————————————————————–

இலங்கை யிலாதரனைங்கரன் மோடி யெரி சுரத்தோன்
இலங்கை யிலாத மலையான ஈசன் இரிய வெம்போரில்
இலங்கை யிலாதபடி வாணனைச் செற்ற வென்னரங்கன்
இலங்கை யிலாதவன் போகக் கண்டான் என் இதயத்தனே–23

இலங்கை யிலாதரனைங்கரன் மோடி யெரி சுரத்தோன்
இலங்கு ஆயில் ஆதரன் -விளங்கும் வேலாயுதத்தின் இடத்து விருப்பம் உடைய சுப்பிரமணியனும்
ஐங்கரன் -நான்கு கை துதிக்கை உடைய விநாயகனும்
மோடி -துர்க்கையும்
யெரி -அக்னியும்
சுரத்தோன் -ஜுரத் தேவதையும்
இலங்கை யிலாத மலையான ஈசன் இரிய வெம்போரில்
இலம் கயிலாத மலையான ஈசன் -வசிக்கும் இடம் கைலாச கிரியாகப் பெற்ற சிவனும்
இரிய -அஞ்சி நிலை கெட்டு ஓடி
வெம்போரில் -உக்ரமான யுத்தத்தில்
இலங்கை யிலாதபடி வாணனைச் செற்ற வென்னரங்கன்
அம் கை இலாத் படி
வாணனைச் செற்ற வென்னரங்கன்
இலங்கை யிலாதவன் போகக் கண்டான் என் இதயத்தனே
இலங்கையில் ஆதவன் சூர்யன் போகும்படி செய்த திருமால்
எனது ஹிருதய கமலத்தில் உள்ளான்

ஆதபன் -நன்றாக தபிப்பவன்

—————————————————————————————-

அத்தனை வேதனை ஈன்ற அரங்கனை ஐம்படை சேர்
அத்தனை வேதனை வாய் வைத்த மாயனை ஆர் அணங்கு ஓர்
அத்தனை வேதனை தீர்த்தானைச் சேர்க்கிலள் ஆயிரம் சால்
அத்தனை வேதனை யப்புவள் சாந்து என்று அனல் அரைத்தே —-24

அத்தனை வேதனை ஈன்ற அரங்கனை
அத்தனை -எப்பொருட்கும் இறைவனை
வேதனை ஈன்ற அரங்கனை -பிரமனைப் பெற்ற திருவரங்கனும்-வேதன் -வேதம் வல்லவன் நான்முகன்

ஐம்படை சேர்அத்தனை -பஞ்சாயுதங்கள் பொருந்திய திருக் கைகளை உடையவனும்

வேதனை வாய் வைத்த மாயனை –
வேய்ங்குழலை திரு வாயில் வைத்து உஊதிய மாயவனும்

ஆர் அணங்கு ஓர்அத்தனை வேதனை தீர்த்தானைச் –
அருமையான தெய்வ மகள் பார்வதியை உடம்பில் பாதியில் உடைய
சிவ பெருமான் உடைய துயர் தீர்த்து அருளின அழகிய மணவாளனை

சேர்க்கிலள் -என்னுடன் சேரச் செய்யாள்
அனை -அன்னை -என்னுடைய தாய்
பின்னை என் செய்வாள் என்றால்

ஆயிரம் சால் அத்தனை வேதனை யப்புவள் சாந்து என்று அனல் அரைத்தே —
சாந்து என்று அனல் அரைத்து
ஆயிரம் சால் அத்தனை வேது அப்புவள்
ஆயிரம் சால் அவ்வளவு வெப்பத்தை என் உடம்பில் பூசி நிரப்புவள்

தலை மகள் பாசுரம்–தலைவி இரங்கல்

——————————————————————————–

அரைக்கலை வேலை யுடுத்த மண் பல் பகலாண்டு பற்றல்
அரைக்கலை வேலை யுடை வேந்தர் வாழ் வெண்ணலை வரையும்
அரைக்கலை வேலை யவர்க்கே புரிவை என்றாலு நெஞ்சே
அரைக்கலை வேலை யரங்கனுக்கு யாட்பட வாதரியே———25

நெஞ்சே -என் மனமே

அரைக்கலை வேலை யுடுத்த
அரைக்கு அலை வேலை உடுத்த -அரையினிடத்து அலைகளை உடைய கடலை ஆடையாகத் தரித்த

மண்-பூமியை

பல் பகலாண்டு -பல நாள் அளவும் அரசாண்டு
பற்றல் அரைக்கலை வேலை யுடை
பற்றலரை கலை வேலை யுடைய -பகைவர்களை நிலை குலைந்து ஓடச் செய்கிற வேலாயுதத்தை உடைய

வேந்தர் வாழ் வெண்ணலை வரையும்
வேந்தர் -அரசர் களது
வாழ் -நிலை அற்ற வாழ்க்கையை
எண்ணல்-ஒரு பொருளாகக் கருதாதே
ஐவரையும் -பஞ்ச இந்த்ரியங்களையும்

அரைக்கலை வேலை யவர்க்கே புரிவை என்றாலு
அரைக்கலை -நீ அடக்க மாட்டாமல்
அவர்க்கே வேலை புரிவை என்றாலும் -அந்த இந்த்ரியங்களுக்கே வசப்பட்டு வேலை -பணிவிடை செய்வாய் ஆயினும்

அரைக்கலை வேலை யரங்கனுக்கு யாட்பட வாதரியே–
அரை கலை வேலை -அரைக் கணப் பொழுதாயினும்
அரங்கனுக்கு ஆட்பட ஆதரி -அரங்கனுக்கு அடிமை செய்ய விரும்புவாய்

கண் இமைப் பொழுது பதினெட்டு கூடினால் ஒரு காஷ்டை
முப்பது காஷ்டைகள் கூடினால் ஒரு கலை -கால அளவு

————————————————————————————

கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தோத்ரம்–ஸ்ரீ பராசர பட்டர் —

November 24, 2015

சப்த பிரகார மத்யே சரசிஜ முகளோத்பா சமாநே விமாநே
காவேரி மத்ய தேசே ம்ருது தரபரணி ராட் போக பர்யங்க பாகே
நித்ரா முத்ரா பிராமம் கடி நிகட சிர பார்ஸ்வவி ந்யஸ்த ஹஸ்தம்
பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்க ராஜம் பஜேஹம் —1

கங்கையில் புனிதமாய காவேரி நடுபாட்டில் பொன் மதிள் ஏழ் உடுத்த ஸ்ரீ ரெங்க விமானத்தில் அரவரசப் பெரும் சோதி அனந்தன்
என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை யணை மேவி சீர் பூத்த செலும் கமலத் திருத் தவிசில் வீற்று இருக்கும்
நீர் பூத்த திரு மகளும் நிலமகளும் அடிவருடப் பள்ளி கொள்ளும் பரமனை தாம் இடை வீடின்றி பாவனை செய்யும் பரிசினை அருளிச் செய்கிறார்

சப்த பிரகார மத்யே
மாட மாளிகை சூழ் திரு வீதியும் -மன்னு சேர் திருவிக்ரமன் வீதியும் -ஆடல் மாறனகளங்கன் வீதியும்
ஆலி நாடன் அமர்ந்துறை வீதியும் -கூடல் வாழ் குலசேகரன் வீதியும் -குலவு ராச மகேந்தரன் வீதியும் -தேடுதன்மவன் மாவலன் வீதியும் தென்னரங்கன் திரு வாரணமே
சரசிஜ முகளோத்பா சமாநே விமாநே
சரசிஜ முகுள உத்பா சமாநே விமாநே -தாமரை முகிலம் போலே விளங்கும் பிரணவாகார ஸ்ரீ ரெங்க விமானத்திலே
காவேரி மத்ய தேசே
உபய காவேரி மத்யத்தில் உள்ள தென் திருவரங்கத்திலே
ம்ருது தரபரணி ராட் போக பர்யங்க பாகே
பர ஸூ குமாரமான திரு வனந்த ஆழ்வான் திருமேனி ஆகிற திருப் பள்ளி மெத்தையிலே
நித்ரா முத்ரா பிராமம்
நிதர முத்ரா அபிராமம் -உறங்குவான் போலே யோகு செய்யும் பெருமான் –
ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேல் கள்ள நித்தரை கொள்கின்ற
கடி நிகட சிர பார்ஸ்வவி ந்யஸ்த ஹஸ்தம்
திருவரை யருகில் ஒரு திருக்கையும் திருமுடி யருகில் ஒரு திருக் கையும் வைத்து இருப்பவரும்
பிரம்மா ருத்ராதிகளுக்கும் தலைவர் என்று திரு அபிஷேகத்தைக் காட்டி அருளியும்
திரு முழம் தாள் அளவும் நீட்டி திருவடியில் தாழ்ந்தார்க்கு தக்க புகல் இடம் என்று காட்டி அருளியும்
வலத் திருக்கை பரத்வத்தையும் -இடத்திருக்கை சௌலப்யத்தையும் கோட் சொல்லி தருமே
பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம்
திருமகளும் மண் மகளும் தமது திருக்கைகளினால் திருவடி வருடப் பெற்றவருமான
வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியைக் கொடு வினையேனும் பிடிக்க கூவுதல் வருதல் செய்யாதே -என்னும் அபிசந்தியால்
ரங்க ராஜம் பஜேஹம்
ரங்க ராஜம் அஹம் பஜே -ஸ்ரீ ரெங்க நாதரை நான் சேவிக்கின்றேன்-

———

மேல் நான்கு ஸ்லோகங்களால் தமது ஆற்றாமையை வெளியிடுகிறார் –

கஸ்தூரீகலித ஊர்த்வ புண்ட்ர திலகம் கர்ணாந்த லோல ஈஷணம்
முகதஸ் மேர மநோ ஹர அதர தளம் முக்தா கிரீட உஜ்ஜ்வலம்
பசயத் மானஸ பச்யதோ ஹர ருச பர்யாய பங்கே ருஹம்
ஸ்ரீ ரெங்கா திபதே கதா து வதனம் சேவேய பூயோப் யஹம்–2-

கஸ்தூரீகலித ஊர்த்வ புண்ட்ர திலகம்
கஸ்தூரீ காப்பினால் அமைந்த திவ்ய உஊர்த்வ புண்டரீக திலகம் உடையதும்
கர்ணாந்த லோல ஈஷணம்
திருச் செவி யளவும் சுழல விடா நின்ற திருக் கண்களை உடையதும்
கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட அப்பெரிய வாய கண்கள் என்றபடி
முகதஸ் மேர மநோ ஹர அதர தளம்
வ்யாமோஹமே வடிவு எடுத்து புன் முறுவல் செய்து கொண்டு மநோ ஹரமாய் இருக்கின்ற திரு வதரத்தை உடையதும்
முக்தா கிரீட உஜ்ஜ்வலம்
முத்துக் கிரீடத்தால் ஒளி பெற்று விளங்குவதும்
பசயத் மானஸ பச்யதோ ஹர ருச
கண்டார் நெஞ்சை கவரும் அழகு வாய்ந்த
பர்யாய பங்கே ருஹம்
தாமரையே என்னலாம்படி உள்ளதுமான
ஸ்ரீ ரெங்கா திபதே கதா து வதனம் சேவேய பூயோப் யஹம்
ஸ்ரீ ரெங்க நாதருடைய திரு முக மண்டலத்தை அடியேன் மறுபடியும் என்று சேவிப்பேன்

களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறிக் கண் வளரும் கடல் வண்ணர் கமலக் கண்ணும்
ஒளி மதி சேர் திரு முகமும் கண்டு கொண்டு என் உள்ளம் மிக என்று கொலோ உருகும் நாளே -போலே அருளுகிறார்

————-

கதாஹம் காவேரீ தட பரிசரே ரங்க நகரே
சயா நம் போ கீந்த்ரே சதமகமணி ச்யாமல ருசிம்
உபாசீன க்ரோசன் மது மதன நாராயண ஹரே
முராரே கோவிந்தேத்ய நிசமப நேஷ்யாமி திவசான் –3-

காவேரீ தட பரிசரே
திருக் காவேரி கரை யருகில்
ரங்க நகரே
திரு வரங்க மா நரரிலே
சயா நம் போ கீந்த்ரே
திரு வநந்த ஆழ்வான் மீது பள்ளி கொண்டு அருளா நின்ற
சதமகமணி ச்யாமல ருசிம்
சதமகன் இந்த்ரன் -இந்திர நீல ரத்னம் போன்ற ச்யாமளமான காந்தியை யுடைய -பச்சை நீலம் கருமை பர்யாயம் –
உபாசீன
பணிந்தவனாகி
க்ரோசன் மது மதன நாராயண ஹரே முராரே கோவிந்த இதி அநிசம் –
மது ஸூ தனா நாராயண ஹரி முராரி கோவிந்த போன்ற திரு நாமங்களை இடைவிடாது சொல்லிக் கொண்டு நின்றவனாய்
கதாஹம் -அப நேஷ்யாமி திவசான் —
அஹம் கதா திவசான் அப நேஷ்யாமி –அடியேன் எப்போது ஜீவித சேஷமான நாட்களை எல்லாம் போக்குவேன்

தெண்ணீர்ப் பொன்னி திரைக் கையால் அடிவருடப் பள்ளி கொள்பவன் -ஸ்ரீ ரெங்கன் -அவனை திரு நாமங்கள் வாய் வெருவி சேவித்து
போது போக்கவும் -காவரிக் கரையில் இருந்து திரு நாமங்களை வாய் வெருவிக் கொண்டு போது போக்கவும் பாரிக்கிறார்

———————————————

கதாஹம் காவேரீ விமல சலிலே வீத கலுஷ
பவேயம் தத்தீரே ஸ்ரமமுஷி வசேயம் கநவநே
கதா வா தம் புண்யே மஹதி புளிநே மங்கள குணம்
பஜேயம் ரெங்கேசம் கமல நயனம் சேஷ சயனம் –4-

காவேரீ விமல சலிலே வீத கலுஷ பவேயம்
திருக் காவேரியிலே நிர்மலமான தீர்த்தத்திலே குடைந்தாடி சகல கல்மஷங்களும் அற்றவனாக நான் என்றைக்கு ஆவேன்
விமல சலிலே -தெளிந்த –தெண்ணீர் பொன்னி –பிரசன்னாம்பு –
தெளிவிலா கலங்கள் நீர் சூழ் -துக்தாப்திர் ஜன நோ ஜனன்ய ஹமியம் -ஆறுகளுக்கு கலக்கமும் தெளிவும் சம்பாவிதமே
வீத கலுஷ -விரஜா ஸ்நானத்தால் போக்க வேண்டிய கல்மஷமும் இங்கே போகுமே –
தத்தீரே ஸ்ரமமுஷி -கநவநே-கதா-வசேயம்
அந்தக் காவேரியின் கரையில் விடாய் தீர்க்கும் எப்போது வசிக்கப் பெறுவேன் சோலைகளிலே
தத் தீரே கநவநே -வண்டினம் முரலும் சோலை மயிலனம் ஆலும் சோலை கொண்டல் மீதணவும் சோலை
குயிலனம் கூவும் சோலை அண்டர் கோன் அமரும் சோலை -போலவும்
கதள வகுள ஜம்பூ –ஸ்புரித சபர தீர்யன் நாளி கேரீ-ஸ்ரீ ரென்ச ராத சதவ ஸ்தோத்ரங்கள் போலேவும்
புண்யே மஹதி புளிநே
புனிதமாயும் பெருமை வாய்ந்த மணல் குன்றிலே -ஸ்ரீ ரங்கத்திலே
மங்கள குணம்
கதாஹம-பஜேயம் ரெங்கேசம் கமல நயனம் சேஷ சயனம்
அரவணை மேல் பள்ளி கொண்டு அருளும் -தாமரை போன்ற திருக் கண்களை உடைய
கல்யாண குண நிதியான ஸ்ரீ ரெங்க நாதரை எப்போது சேவிக்கப் பெறுவேன் –

———————————————-

பூகி கண்டத் வயச சரசஸ் நிகத நீர உபகண்டாம்
ஆவிர்மோத ஸ்திமித சகுன அநூதித ப்ரஹ்ம கோஷாம்
மார்க்கே மார்க்கே பதிக நிவஹை உஞ்சயமான அபவர்க்காம்
பச்யேயம் தாம் புநரபி புரீம் ஸ்ரீ மதீம் ரங்க தாம்நே –5-

பூகி கண்டத் வயச சரசஸ் நிகத நீர உபகண்டாம்
பாகு மரங்களின் கழுத்து அளவாகப் பெருகுகின்றதும் -தேனோடு கூடினதும் சிநேக யுக்தமுமான தீர்த்தத்தை சமீபத்தில் உடையதாய்
வெள்ள நீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கம் அன்றோ
ஆவிர்மோத ஸ்திமித சகுன அநூதித ப்ரஹ்ம கோஷாம்
மகிழ்ச்சி உண்டாகி ஸ்திமிதமாய் இருக்கின்ற பறவைகளினால் அனுவாதம் செய்யப் பட்ட வேத கோஷத்தை உடைய
அரு மா மறை யந்தணர் சிந்தை புக செவ்வாய்க் கிளி நான்மறை பாடு தில்லைத் திருச் சித்ர கூடம் -திருமங்கை ஆழ்வார்
தோதவத்தித் தீ மறையோர் துறை படியத் துளும்பி எங்கும் போதில் வைத்த தேன் சொரியும் புனல் அரங்கம் என்பதுவே -பெரியாழ்வார்
மார்க்கே மார்க்கே பதிக நிவஹை உஞ்சயமான அபவர்க்காம்
வழிகள் தோறும் வழி நடப்பவர்களின் கூட்டங்களினால் திரட்டி எடுத்து கொள்ளப் படுகிற மோஷத்தை யுடையதான
ஸ்ரீ ரெங்க திரு வீதிகளிலே முக்தி கரஸ்தம் என்ற படி -கோயில் வாசமே மோஷம் என்றுமாம்
காவேரீ விரஜா சேயம்-வைகுண்டம் ரங்க மந்த்ரம் -ஸூ வாஸூ தேவோ ரங்கேச –ப்ரத்யஷம் பரமம் பதம் -என்னக் கடவது இ றே
பச்யேயம் தாம் புநரபி புரீம் ஸ்ரீ மதீம் ரங்க தாம்நே –
ஸ்ரீ ரெங்க நாதனுடைய அந்தக் கோயிலை அடியேன் மறுபடியும் சேவிக்கப் பெறுவேனோ

—————————————————————————–

ஜாது பீதாம்ருத மூர்ச்சிதாநாம் நா கௌ கசாம் நந்த நவாடி கா ஸூ
ரங்கேஸ்வர த்வத் புரம் ஆஸ்ரிதா நாம் ரத்யாசு நாம் அந்யதமோ பவேயம் –6-

பீதாம்ருத மூர்ச்சிதாநாம்
அம்ருத பானம் பண்ணி மயங்கிக் கிடக்கிற
நந்த நவாடி கா ஸூ-
தேவேந்தரன் உடைய சோலைப் புறங்களிலே
நா கௌ கசாம் -ஜாது -பவேயம் –
அமரர்களில் ஒருவனாக ஒருக்காலும் ஆகக் கடவேன் அல்லேன்
பின்னியோ என்னில்
ரங்கேஸ்வர
ஸ்ரீ ரெங்க நாதனே
த்வத் புரம் ஆஸ்ரிதா நாம்
தேவரீர் உடைய ஸ்ரீ ரெங்கம் நகரியைப் பற்றி வாழ்கிற
ரத்யாசு நாம் அந்யதமோ
திருவீதி நாய்களுள் ஒரு நாயாகப் பிறக்கக் கடவேன் –

இந்திர லோகம் ஆளும அச்சுவை பெறினும் வேண்டேன் -என்றும் எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உற்றோமே ஆவோம் எ
ன்பர் கோஷ்டியில் இவரும் அன்றோ
வாய்க்கும் குருகை திருவீதி எச்சிலை வாரி யுண்ட நாய்க்கும் பரமபதம் அளித்தான் அன்றோ
அஹ்ருத சஹஜ தாஸ்யாஸ் ஸூ ரய –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் –ஸ்ரீ ரங்கத்திலே மனுஷ்ய திர்யக் ஸ்தாவரங்கள் எல்லாருமே நித்ய முக்தர்கள் என்றாரே
ஸ்ரீ ரெங்க நாத ஸ்தோத்ரங்கள் இந்த ஆறும் -மேல் இரண்டும் முக்த கங்கள்-என்பர்

—————————————————————————————-

அசந் நிக்ருஷ்டஸ்ய நிக்ருஷ்ட ஜந்தோர் மித்த்யா அபவாதேன கரோஷி சாந்திம்
ததோ நிக்ருஷ்டே மயி சந் நிக்ருஷ்டே காம் நிஷ்க்ருதிம் ரங்க பதே கரோஷி —

அ சந் நிக்ருஷ்டஸ்ய
உண்மையில் உமது அருகில் வாராத
நிக்ருஷ்ட ஜந்தோர்
ஒரு நாயின் சம்பந்தமான
மித்த்யா அபவாதேன
பொய்யான அபவாதத்தினால்
கரோஷி சாந்திம்
சாந்தி கர்மாவைச் செய்து போரா நின்றீர்
ததோ நிக்ருஷ்டே மயி
அந்த நாயினும் கடை பெற்றவனான அடியேன்
சந் நிக்ருஷ்டே
வெகு சமீபத்திலே வந்த போது
காம் நிஷ்க்ருதிம் ரங்க பதே கரோஷி —
ஸ்ரீ ரெங்க நாதரே என்ன சாந்தி செய்வீர்

கீழே -ரத்யாசு நாம் அந்யதமோ பவேயம் –என்றதாலே இந்த முக்தகமும் இங்கே சேர்ந்து அனுசந்திக்கப் படுகின்றது போலும்

—————————–

ஸ்ரீ ரெங்கம் கரி சைலம் அஞ்சன கிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ
ஸ்ரீ கூர்மம் புருஷோத்த மஞ்ச ச பத்ரி நாராயணம் நைமிசம்
ஸ்ரீ மத் த்வராவதீ பிரயாக மதுரா அயோத்யா கயா புஷ்கரம்
சாளக்ராம கிரிம் நிஷேவ்ய ரமதே ராமானு ஜோயம் முனி

————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பராசர பட்டர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தேசிகனும் -கோயில் -திருமலை -பெருமாள் கோயில்- திருவஹீந்திர புரம் -அனுபவம் –ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகள்—

October 1, 2015

ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்ரீ ரெங்க அனுபவம் –

காட்டில் வேங்கடம் கண்ண புர நகர் —பள்ளி கொடும் இடம் -கூடிடு கூடலே -பக்திக்கு பரவசப் பட்டு அசேதனம் காலில் விழுந்தாள்
-உலகு அளந்தான் வரக் கூவாய் –
அபீத ஸததம் அரங்கன் மேல்
நியாச விம்சதி நியாச பஞ்சதி திலகம் -அரங்கன் திருவடிகள்
பகவத் த்யான சோபனம் -படிக்கட்டு -முநிவாகன போகம் -காண்பனவும் –உரைப்பனவும் -மற்று ஓன்று இன்றி கண்ணனையே கண்டு உரைத்த கடிய காதல் –பாண் பெருமாள் -நின் கண் வேட்கை எழுவிப்பன் -ஆழ்வார் செய்த கைங்கர்யம் -அர்ச்சையிலே ஈடுபட்டு -எட்டாக் கனி இல்லையே –
படுகாடு கிடந்தது கண்டு குமிழ் நீர் ஆழம் கால் படுவார்கள்
அஷ்ட புஜ அஷ்டகம்
வேக்கா சேது ஸ்துதி
காமாட்சி அஷ்டகம்
பரமார்த்த ஸ்துதி -திருபுட்குளி
தேகளீச்வர ஸ்தோத்ரம் -திருக்கோவலூர்
38 திவ்ய தேசம் -நம் ஆழ்வார் -அருளி இருந்தாலும் -மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆயிரம் -பட்டர் -ஈத்த பத்து –
சேராத உளவோ பெரும் செல்வருக்கு –
ஜகதாம் பத்தி -சேஷி தம்பதிகள் -திவ்ய தம்பதிகள் -லஷ்மி நாத –நாத யாமுன –அஸ்மத் ஆச்சார்யா -திருவரங்க நாச்சியாரும் பெரிய பெருமாளையும் குறிக்கும் -ஆசார்ய பதவி ஆசை பட்டு -தேர் தட்டிலும் -அரங்கத்திலும் -குறு பரம்பரையில் முதல் ஸ்தானம் –ரகஸ்ய த்ரயம் உபதேசித்து அருளி –
குருக்கள் தம் குருப்யச்ய-இவர்களைத் தான் குறிக்கும் –
அபய முத்திரை -வைத்த அஞ்சேல் என்ற கையை -அடுத்த ஸ்லோகத்தில் –
மீண்டும் மீண்டும் பிரபத்தி பண்ணாதே ஹஸ்தம் சொல்லும் -என்னை ரஷிக்கட்டும்
வியாக்யானம் -முத்தரை காட்டி அருளும் -நாட்டியகாரர் -அபயம் பத்ரஞ்சவோ -கரதலே-ஸ்மிதம் பண்ணி -காட்டி அருளி -மாஸூசா –
-அபய பிரதானம் -நம் பெருமாள் ஸ்மிதம் இன்றும் சேவிக்கலாம்
வந்ததே போதும் -சரணா கதிக்கு பின்பே நமக்கு கைங்கர்யங்கள் நிறைய செய்து பொழுது கழிக்க வேண்டும்
-சம்சார பயம் வேண்டாமே -பிரபத்தி ஒரு தடவையே
த்வயம் இனிமையால் மீண்டும் சொல்லி -நினைவு படுத்த மீண்டும் சொல்லி -ஆச்சார்யர்களுக்கு இனிமை அதனால் சொல்லி
-சம்சார பயம் போக்க சொல்லி -கிஞ்சித் தாண்டவம் -கோட்டங்கை வாமனனாய் செய்த கோலங்கள் –
கையில் பிடித்த -திவ்யாயுதங்களும் வைத்த அஞ்சேல் என்ற கையும் -கவித்த முடியும் -தேவாதி தேவன் -சிரித்த முகமும் முறுவலும் –
ஆசன பத்மத்தில் அழுந்திய திருவடிகளும் -இவை எல்லாம் நமக்கு நம் பெருமாள் பக்கலிலே காணலாம்
குற்றம் கன்று வெறுவாமைக்கு வாத்சல்யம் –ஸ்வாமித்வம் -சௌசீல்யம் சௌலப்யம் –
ஆறாவது ஸ்லோகம் மா புஜங்கர் -சேர்த்தி மூன்று -தடவை –வெளி ஆண்டாள் உள் ஆண்டாள் -உபய நாச்சியார் -ராமர் துர்நபி பாஷதே -நம் பெருமாள் ராமர் -பெரிய பெருமாள் -கண்ணன் -கற்றினம் மேய்த்த கழல் -கொண்டல் வண்ணன் கோவலன் -நாச்சியார் மாலை நம் பெருமாள் இடம் வராது –ஆண்டாள் மட்டும் தான் அந்த உரிமை -அரங்கனுக்கே என்று இருந்தவள் -அரங்கற்கே பன்னு திருப்பாவை பல் பதியம் இன்னிசையால் பாடிக் கொடுத்தாள்
ஐஞ்சு லஷம் பெண்களையும் -பிருந்தாவனம் தனது வசம் கொண்டு இருந்தவன் அசேஷ ஜன -க்ரஹனாயா கொள்வதற்காக -சயனத்தில்
-ரெங்கே புஜங்க சயனே –
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அன்றி பேரேன்
நாபி கமலம் -ஸ்மிதம் -பிறந்த குழந்தை பார்த்து பெரிய பெருமாளும் பெரிய பிராட்டியாரும் சேர்ந்து -அன்யோன்ய மந்த ஸ்மிதம் –ஓம் சத் இத்யாதி சொல்வதைக் கேட்டு -நான்முகனால் ஆராதனம் -அவனாலே எழுந்து அருளப் பெற்ற -ஆதி ப்ரஹ்ம உத்சவம் என்றே பெயர்
கர்ம கோடி-கிடாம்பி ஆச்சான் -திரு மேனி -அந்த அப்புள்ளார் வம்சத்தில் பிறக்க வைத்தாயே
சரணம் வார்த்தை சொல்லும் படி சொல்பம் பண்ணி அருளும் –
ஆசார்ய சம்பந்தம் வரை பண்ணி அருளிய பின்பு -இத்தையும் பண்ணி அருள வேண்டும் -முக்தி அளவும் நீயே அருள வேண்டும்
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்-நம் ஆழ்வார் போலே –
ஈஸ்வர சௌஹார்த்தம் -யத்ருச்சா ஸூ ஹ்ருதம் விஷ்ணோர் கடாஷம் -அத்வேஷம் ஆபி முக்கியம் -ஆசார்யர் -சாது சமாகம் படிக்கட்டுக்கள் –
மெய்யடிகார்கள் ஈட்டம் கண்டு -கண் இணை என்று கொலோ கழிக்கும் கொலோ -முதலில் பெருமாள் திருமொழி -பிரார்த்தித்து
ஸ்ரீ ரெங்க வாசிகள் உடன் சேர்க்கை -கூடுமேல் அது காண்டும் கண் படைத்த பயன் ஆவதே -திலகம் -திருவடி துகள்கள் தண்ணீர் பட்டு –கண்ண நீர் கொண்டு அரங்கன் திரு முற்றம் சேறு செய்வர் –
ஸூ ரிகள் -பெருமாள் உபாயம் நினைக்காமல் -முக்தி அடைந்த பின்பு – ஏறி வந்த ஏணி நினைப்போமோ –திருவடிகளே உபேயம் புருஷார்த்தம் சாத்தியம் கைங்கர்யம் செய்ய -அத்தை ஸ்ரீ ரெங்க வாசிகள் இங்கேயே நினைக்க -எப்பொழுதும் பிராப்யம் -அனுபவிக்கத் தக்கவன்
பால் விருந்து -மருந்துக்கும் பித்தம் பிடித்தால் –
பால் அக்கார அடிசில் நினைவு வருமா பித்த மருந்து என்று நினைவு வருமா அஜீர்ணம் தொலைந்த பின்பு –
அது போலேவே அவன் உபேயம் -புருஷார்த்தம் –அந்திம காலத்தில் ராமானுஜர் -உபதேசம் -அந்திம கால தஞ்சம் –
ஒரு ஷணம் உபாயம் ஆக்கி பின்பு எல்லாம் புருஷார்த்தமாக நினையும் -கரு முகை மாலையை சும்மாடு போலே
துவத் சேஷத்வ -ரசிகா –தேசிகன் ஸ்ரீ ஸூ கதிகள் இத்தை அடி ஒட்டியே —
புறப்பாடு நேரம் கழித்து சேவித்தால் கழுத்தில் தூக்கு போட்டு கொள்ளுவார்கள் ஈடு
வெள்ளோட்டம் -அங்கே சென்று கைங்கர்யம் செய்ய பயிற்சி -இங்கே –

கைங்கர்ய பிரார்த்தனை -அவனுக்கு நாம் சொல்லும் மாஸூசா
பகவத் த்யான சோபானம் -படிக்கட்டுக்கள் -காட்டவே -அடி -முதல் -ஆகார சுத்தி -சத்வ குணம் வளர -திரு மேனி த்யானம் சத்வ குணம் வளர -சுத்த சத்வம் -வெள்ளை சாயல் சிகப்பு கருப்பு மாறும் -ரஜஸ் தமஸ் மாறி சத்வ குணம் வளர்க்க –மோஷ ப்ரதன்-அவன் ஒருவனே -தெளிவான சிந்தனை -ஆனந்தமாக இருப்பார்கள் –நல்லதே மனசில் படும் -பேசினாலே இனிமையாக -பிறர் ஸூ ஹ்ருதம் ஒன்றே மனசில் –
சயனத் திருக் கோலம் -ஆழ்வார்கள் ஆசார்யர்கள் ஈடுபட்டு -வேதார்த்த சந்க்ரகாம் -சேஷ சாயினே -நின்று இருப்பவன் இடம்
-தென் அரங்கன் என்னில் மயலே பெருகும்
ஏரார் கோலத் திகழ கிடந்தாய் -கிடந்ததோர் கிடக்கை -கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு
அந்தர் ஜோதி —அஞ்சனம் யோக திருஷ்டி -ஹிருதயத்தில் பிரகாசிக்க மோஷ மொஷாதி ரூபம் சித்தி -சிந்தா மணி -திவ்யம் சஷூஸ் ரெங்க மத்யே -சமுதாய சோபை –அவயவ சோபை –திருக் கமல பாதம் -தொடங்கி–நீண்ட அப்பெரியவாய கண்கள் வரை -ஆல–நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சம்
லாவண்யம் திருக் குருகுடி நம்பி
-சௌந்தர்யம் நாகை அழகியார் –
பராசர பட்டர் -லாவண்யம் கப்பல் ஏறி சௌந்தர்யம் அனுபவிக்க –
சீதக் கடலும் –பாதக் கமலம் –21 பாசுரங்கள் –
அனுபவிக்கும் மனச் கிட்டும் அப் பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம்
தானே ஏற்றி கொள்ளும் திருவடியில் நின்றால்-திருக் கண்கள் கடாஷம் பெற்று மோஷம் –
வைகுண்ட வாசலில் நுழைந்து –
பாதாம் போஜாம் –ஜனகா –தொடைகள் -நாபி -சொல்லி சொல்லி கூப்பிடுமாம் -மார்பு -நாச்சியார் -கழுத்து வாய் மாசுசா -சொல்லி -கனக வளை முத்ரா -கழுத்தில் தானே -அணைக்கும் இடம் -கழுத்து முழுங்கின இடம் மாசூசா சொன்னது வாய் -கண் பொய்யே பேசாதே அனுக்ரஹம் ஒன்றே பொழியும் மௌலி பந்தே –மாயனார் -ஆய சேர் முடியும் தேசும் அடியேற்கு அகலுமோ –வலது பக்கம் திரும்பி நம்மை நோக்கி ஜரிக்க கூடாதே உண்டது -எண்ணைக் காப்பு சாத்தி சேவை -ஆபரணங்கள் சாத்தி அழகைக் குறைக்க -ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள் -ஆடி 18 முதல் புறப்பாடு -48 நாள்களுக்கு பின்பு -ராஜாவுக்கு பிரஜை போலே அரங்க நகர் மக்கள் –

ஏகாதசி -சந்தன மண்டபம் -திருமஞ்சனம் –
ஸ்ரீ ரெங்கம் -மூலவர் உத்சவர் பிரதான்யம்
காஞ்சி -உத்சவர் பிரதான்யம்
திருவேங்கடம் -மூலவர் பிரதான்யம்
1323 உலுகான் படை எடுப்பு -துக்ளக் -1311-முதல் படையெடுப்பு -12000 முடி திருத்திய பன்றி மெட்டு -கொள்ளிடம் -அருகில் -தேசிகன்
1205-1305-பிள்ளை லோகாச்சார்யர் -ஒத்தக்கடை யானை மலை -மறைவிடம் -2 வருஷம் அங்கேயே -திருவரசு
1268/69–1369-தேசிகன் -சாஸ்திரம் ரசித்து -சுத்த பிரகாசர் -மேற்கு நோக்கி -அபிபீத ஸ்தவம் அருளி மேல் கோட்டையில்
கூறத் ஆள்வான் திரு மால் இரும் சோலை -சைவ வைணவம் சண்டை
1390 அப்புறம் சண்டை கலக்கம் முடிந்து
1371=1443 மா முனிகள்
அரங்கம் ராஜதானி வேர் பற்று -நரக பாதக -திரு அரங்கன் நாமாவளி சொல்லி
பெரிய பிராட்டிக்கு கேள்வன் -ரெங்க பூத ரமண -விருப்பத்துடன் இங்கே அந்து சேர்ந்தவன் -ந்ருத்த ஸ்தானம் –
கிருஷ்ண -கண்ணனே விஷ்ணோ ஹரே -திரு மனத் தூண்கள் இரண்டும் ஹரி -அஷரங்கள்-
த்ரிவிக்ரம ஜனார்த்தன -த்ரியுக -3 இரட்டைகள் பகவான் -நாராயணன் -நிரஸ்த -எதி தலைவர் ராசா பாரதி சொல் -பயங்கள் போனதே –தலை நரைத்து -நிரஸ்த -நிபு சம்பவம் -ரெங்க முகே -எதிரிகள் வர மாட்டார்கள் பரஸ்பர ஹிதம் -ஸ்ரீ வைஷ்ணவ செல்வம் –
பிரபாவம் சொல்லி அருளி -கைங்கர்ய செல்வம் –

——————————————————————————-

ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருமலை — அனுபவம்

தயா சதகம் -108- ஸ்லோகங்கள் -திரு வேங்கடம் உடையானே பாட்டுடைத் தலைவன் -இல்லை தயை குணம் தான் -தயா தேவி -துளசி தேவி போலே –
காடு வானரம் வேடர்களுக்கும் -ஏகாந்தமான -போதரிந்து வானரங்கள் பூச்சுனை புக்கு -ஆழ்வார்
தயை ஒன்றே அவனை பொதுவாக்கி -நித்யர் மண்ணவர் நடுவில் -கண்ணாவான்-அனைவருக்கும் -தாய் இரட்டை குழந்தைகளுக்கு இரு முலையால் பால் அளிப்பது போலே –
திரு மணி அம்சம் தேசிகன் -ராமானுஜர் ஸ்ரீ ஸூகதிகள் ரீங்கரிக்கும் படி பல கிரந்தங்கள் அருளி
ஸ்ரீ நிவாச அநு கம்பாய –உதாரணம் -கரும்பு -கடித்து ஆசாரம் பொருந்தாதே -கரும்பு சாறு -அஸ்தரம் -கட்டி கல் கண்டு –
திருவேங்கடம் உடையான் -கரும்பு -சாறு -தயை -திருமலை கல் கண்டு -திருமலையே திரு உடம்பு -ஆதி செஷன்
அஹோபிலம் -திரு மேனி -ஸ்ரீ சைலம் வாழ் -திருமலை -தலைப் பாகம் -குஷீக்கி -பர்யங்க வித்தை -ஆதி செஷன் பீடம் காலை வைத்து -அது போலே திருமலையில் கால் வைக்கலாம் -முழம் தாளால் நடந்து போனதாக சொல்வார்கள்
கிருபா –அநு கம்பா -நடுக்கம் -பிறர் நடுக்கம் பார்த்து தானும் நடுங்கி ஆர்த்தி நனைத்து -ஆர்த்ரா நஷத்ரம் –
இரங்கி தீர்த்தம் ஆடி -அடுத்த ஸ்லோகம் -பிரவாஹம் -பகவத் அனுபவம் -படித்துறை -குரு பரம்பரை -பெருமாள் -வசிசிஷ்டர் -சக பத்ன்யா விசாலாட்ச்யா –ஆற்றில் இறங்குவார் கையிலே துணை பற்றி போவார் போலே -போனார் –

குண பிரவாகம் -செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆள் செய்மின் -வஞ்சக் கள்வன் -பரத்வம் கருணை சுசல்யம் வாத்சல்யம் -சௌசீல்யம் -மூழ்க அடிக்கும்
குளிர்ந்து இருக்கும் குரு சந்ததி -சீதலாம்–தண் தெரியல் பட்டர் பிரான் -வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் திருப்பாதம் பணிந்து –
பட்டர் -அழகிய மணவாளன்
ராமானுஜர் -சோமாசி ஆண்டான்
திருக் கண்ண புரம்-திருமங்கை ஆழ்வார்
திருத் தொலை வில்லி மங்கலம் -நம் ஆழ்வார்
திரு வேங்கடம் -பெரிய திருமலை நம்பி -அனந்தாழ்வான்
அத்யயன உத்சவம் -21 நாள் -மற்ற இடங்களில் -அனந்தாழ்வான் -ஏற்பாடு -22 நாள் ராமானுச நூற்று அந்தாதி தனியாக –
23-தண்ணீர் அமுது திருத்தும் உத்சவம் -பெரிய திருமலை நம்பி -தாத்தா தீர்த்தம் கொடு கேட்டு –
ஆசார்யர்கள் ஆழ்வார்கள் ஸ்ரீ ஸூ கதி கொண்டு -சர்வ யோக்யதாம் -பொதுவாக்கி -தங்க பாத்ரம் போலே -சர்வாதிகாரம் அருளிச் செயல்
-த்ரிவேதி சர்வ யோக்யதாம்

உத்தர பாகம் திராவிட பாஷா -வேதாந்தம் -ஆயிரம் இன் தமிழால் -எய்தற்கு அறிய மறைகளை –வேதம் எண்ணிக்கை இல்லை -இதுவோ இனிமை ஆயிரம் –
கமலா வாசம் -கருணை ஒன்றையே ஏகாந்தி-பிரபன்ன ஜன சாதகாம் பஷி போலே
ஆழ்வார் திரு நகர் -தெற்கு மேற்கு கிழக்கு வடக்கு திருவேங்கடம் சந்நிதி உண்டே –
மாரி மாறாத தண் அம மலை வேங்கடம் —அண்ணலை -வாரி மாறாத -தாமிர பரணி -திருவாய் மொழி தயையால் -மயர்வற மதி நலம் அருள -திருவேங்கடம் -ஆண் பெண் பெயர்கள் அங்கும்
மணி வல்லி -பெயர் –
3-3- 6-10-திருவாய்மொழி -நோன்ற நாலிலும் சரண் -பலிக்க வில்லை -உலகம் உண்ட பெருவாயா -அகலகில்லேன் இறையும்-த்வயார்த்தம் தெளிவாக அருளி
ஒழிவில் காலம் -சவ தேச -சகலமும் -இளைய பெருமாள் போலே -பரதன் கைங்கர்யமும் வேண்டும் -சத்ருகன்
ராமனைத் தவிர தெய்வம் மற்று அறியாத பரதனைத் தவிர மற்று அறியாத சத்ருனன் -நிலைமையே வேண்டும்
த்வயம் பூர்வ உத்தர வாக்யார்த்தம் இங்கேயே –
கமலா வாசன் கருணையே எதிர்பார்த்த ஆழ்வார் -ஆழ்வார் தீர்த்தம் -கபில தீர்த்தம் இன்று பெயர் -கீழே மண்ணாக இருக்க -தொண்டைமான் சக்கரவர்த்தி மலைக்கு போகும் வழி –

ஆறாவது ஸ்லோகம் -சமஸ்த -சைதன்யம் -ஞானம் -பெரிய பிராட்டியார் -ஸ்ரீ நிவாசா கருணா இவ ரூபிணி
ருக் வேதம் -10 புராணம் -அடையாளம் -கிரிம் கச்ச -ஸ்ரீ பீடம் -கோவிந்த நாமம் – சொல்லிக் கொண்டே -திருமலை ஏறுவது -ஆருஷம் -பீடம் கொண்டே அவனுக்கு அடையாளம் –மாலையைத் தாங்கி கொண்டு இருப்பவர் உபன்யாசம் –
திருக் கண்டேன் -இடை களியில் சேவித்து முதலில் -நாச்சியார் -தான் முதலில் கண்ணில் பட -ஸ்ரீ நிவாசன் ஸ்ரீ தரன் இவனே -நித்ய அனபாயினி –அபாயம் -பிரிவி அனபாயின்மை பிரிவி இல்லாமை -இறையும் அகலகில்லேன் -ஸ்ரேயதே ஸ்ரீ நிவாசனுக்கும் பெருமை சேர்த்து தேவத்வம் அஸ்நுதே ஸ்ரேயதாம் –
பார் என்னும் மடந்தையை மால் செய்யும் -விஸ்வ தாரிணீம் -பூமா தேவி -தைக்கு தடை பாவங்கள் சூழ்ந்து இருக்கும் -பாபம் போக்க -குற்றம் போருக்க -பூமி தேவி
தென்னன் உயர் பொருப்பும்-தெய்வ வட மலையும் மன்னு நிலையே முலையாக–மலராள் தனத்துள்ளான் – ஸ்ரீ ஸ்தன ஆபரணம் இவன் –
தைர்யே ஹிமாசலன் –பூமா தேவி போலே பொறுமை பெருமாளுக்கு வால்மீகி –
நீலா தேவி -அடுத்த ச்லோஹம் -கண் புரை நோய் இருந்தால் தான் பாபங்கள் தெரியாதே -போக படலம் -அனைத்து ஆனந்தம் -மயக்கி
தயா தேவி வணங்கி –ஞானம் விளக்கு காட்டி -விழுந்தாரை எடுத்து -பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் கொண்டு திருத்தி -ஸ்வாதீன–அவனை தனக்கு வசப்படுத்தி வைத்து -நாமும் -உபதேசம் பண்ணி திருத்தி அவனை அழகாலே மயக்கி

உசித உபாயம் உசித நேரத்தில் சொல்லி -தத் இங்கித பராதீனன் -தயை ஓடம் -கிருபை ஒன்றாலே மோஷ பிரதன்-கிருத அபராதங்கள் நிவாரணம் தேடி -சம்சார தாரிணீம் நீயே –
மமமாயா துரத்தயா -கீதா -ச்லோஹம் –என் அருளினால் -மா மேவ யே பிரபத்யந்தே -விஷ்ணு போதம் –
ராமன் ராவணன் -ஞான பலாதிகள் ஓன்று போலே இருந்தாலும் தயை ஒன்றே வாசி -இது இல்லாததால் அவை இருந்தும் தோஷம் ஆகுமே -ராமனை ராவணன் இடம் பிரித்து கொடுப்பதே நீ –
கிருபா பரிபாலையா -கேவலம் மதீயைய தையா -மா மேவ ஏவ -ஏவகாரம் –அபராத சஹச்ர பாஜனம் -சம்சாரம் பாழும் கிணற்றில் விழுந்து தவிக்க –
தயை -17 ஸ்லோகம் -பிரயோக்கும் இடம் -சிருஷ்டி காலத்திலேயே செய்து அருளி -அசித் போலே இருக்க -அசித் அவிசிஷ்டான் பிரளையே–ஜாத நிர்வேதம் -வெறுத்து சிருஷ்டி பண்ணி அருளி –

சிருஷ்டி கார்யமே தயையால் தூண்டப்பட்டு -இத்தை செய்து அருளியதே -திரு வேங்கடமுடையான் -அவனே ஓங்கி உலகு அளந்த பெருமாள் -தனி மா தெய்வம் –உலகம் மூன்றும் முளைப்பித்த தனி மா தெய்வம் தளிர் அடிக் கீழ் -புகுதல் அன்றி -அவன் அடியார் நனி மா கலவி இன்பம் வாய்க்க -பிரார்த்திக்கிறார்
உழவன் -21 ஸ்லோகம் -பக்தி உழவன் -தயா தேவி -ஜலம் -சர்வ பாபேப்யோ மொஷயிஷ்யாமி களை பறித்து -ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் -உபகரணங்கள் அந்த உழவனுக்கு -பக்தியே விதை –
கமலா காந்தன் -தயா தேவி நாளைக்கு உனக்கு யார் சோறு போடப் போகிறார்கள் -அபராதங்கள் -தானே அவளுக்கு உணவு -துஷ்கிருதகளில் பிரதானன் நான் -கொஞ்சமாக தோஷம் பண்ணுகிறவர்களை பார்க்காதே –
சீதா மத்யே ஸூ மத்யமா -இடையே இல்லாதவள் இடையில்
இளையனோடு பொய்யோ இடையோ என்று இருப்பவள் -மேலும் கீழும் உள்ளது கண்டு இடை இருக்க வேண்டும் என்று ஊகம் –
தயா தேவி -ஞான -சக்தி பலம் தேஜஸ் –வீர்யம் ஐஸ்வர்யம் பெருமாளுக்கு நல்லது தேட வேண்டாமா பேசி -குணம் சமாஹம் -எதிர் வக்கீல் -தயா தான் நீதிபதி –
குழந்தையை ரஷித்தே தீர வேண்டும் -33 ஸ்லோகம்
சீறி அருளாதே -சீருவதே அருள்
கடல் அரசன் –இடத்தே வில்லை வளைத்து -விரோதிகளை ஒழித்து
பரசுராமன் -தபம் பலம் மட்டும் வாங்கி
காகாசுரன் -ஒரே கண்ணை அழித்து-
அவனது தண்டனையை மாற்றி -தடுத்து நிறுத்தாமல் -இப்படி திருப்பி விட்டு அருளுகிராய் தயா தேவி –
வேடர் தலைவன் கபி குலபதி -யாரோ ஒரு சபரி -காபி சபரி -தாழ்ந்த -குசேலர் குப்ஜா -விரஜை ஐஞ்சு லஷம் பெண்கள் மாலா காரர் -உன்னதி -நீ -பிரபு- தயை வெள்ளம் -நிரப்பி செய்து அருளி -65- ஸ்லோகம்
முகுந்த -மோஷ பூமி ததாதி இதி முகுந்தா -இங்கேயே இஹ முக்த அநுபூதி அருளி -வேறு என்ன கேட்க உள்ளது

————————————————————-

ஸ்ரீ வேதாந்த தேசிகன்-பெருமாள் கோயில் அனுபவம்

பிறந்தக அனுபவம் -வரதராஜ பஞ்சாசாது -உத்சவம் -அவதாரம் –
தேவாதி ராஜன் -பேர் அருளாளன் -ராஜா அருள் சேர்ந்து
தாக மண்டபம்
மதுரை -இழந்து ஆய்ப்பாடி
அயோத்தியை -தண்டகாரண்யம்
தூப்புல் -திரு மலைக்கு மேலே சென்று மங்களா சாசனம் உத்சவம் –
மலைக்கட்டு திவ்ய தேசம் -திரு வெள்ளறை -திருவாட்டாறு போலே அத்திகிரி
காருண்யா ராசி குவியில் -திரு நாமம் சாதிக்கிறார் முதல் ஸ்லோகத்தில் -பேர் அருளாளன் இல்லையோ -வரதன் –வரதர்களுக்குள் ராஜா வராத ராஜன் -உதாரா சர்வ ஏவைஷ என்பவன் அன்றோ –
நாலு பேர் வருகிறார்கள் -நாலு பேர் வரவில்லை -உடனே எந்த நாலு பேர் வரவில்லை கேட்டான் -அர்ஜுனன் துஷ்க்ருதா மூடர் -அசுரர் போல்வார்
இவர்கள் வாங்கி கொண்டதால்தானே உதாரன் -வாங்கினவன் கொடையாளி ஆகிறான் –
காரே ய் கருணை இராமானுச -பேர் அருளாளன் அருள் பெற்றவர் பெயர் வாங்கிக் கொண்டாரே
மகா ரச கந்தம் -மடப்பள்ளி மனம் கமழும் வம்சம் -கிடாம்பி ஆச்சான் வம்சம்
அத்திகிரி அத திகிரி -அந்த உயர்ந்த சக்கரத் ஆழ்வார் -பிடித்த அழகு -நிமிர வழி இல்லாமல் –
ராமன் ஒரு தடவை குனிந்து சமுத்திர ராஜன் இடம் அடியேன் -சொல்லி பலிக்காமல் வில் எடுத்து கார்யம் கொள்ள வேண்டிற்று
கலசி ஜலசி -கன்யா கலசம் -ஜலம் -கடலில் பிறந்த -பெரும் தேவி -காருண்யா ராசி என்றே பெயர்
புஷ்கரம்-தீர்த்த ரூபம் -ப்ரஹ்மா சேவை -ஆசைப்பட -தீர்த்தம் -சேவை கிடைக்க -நைமிசாராண்யம் -வன ரூபம் -சத்ய வ்ரத ஷேத்ரம் வந்து அஸ்வமேத யாகம் பண்ணி –
காஞ்சி -க பிரம்மா அஞ்சித்த -அவரால் வணங்கப் பட்டவர் -காயத்ரி -தேவிக்கும் சந்நிதி உண்டே புஷ்கரம்
சரஸ்வதி தேவி இல்லாமல்
தீப பிரகாசர் -இருளை நீக்க – -காளையன் அனுப்பி -அவனை விளக்கில் கொண்டார்
யானைக் கூட்டம் ஆளறி வேளுக்கை
பூத கணங்கள் -அஷ்ட பூஜை பெருமாள்
நதி போலே -வந்து வேக வாதி ஆறு -வேகமாக வந்ததால் வேக வாதி -சேது வெக்கா சேது யதோத்த காரி -தலை மாடு மாறி -என்ன பன்ன தெரியாமல் –
ப்ரஹ்மா சொன்ன வண்ணம் செய்த பெருமாள் அப்புறம் திருமங்கை ஆழ்வார் சொன்ன வண்ணம் –
நான்கு பெருமாள் எழுந்து அருளி -வர வேண்டியவர் வர வேண்டுமே
ரேவதி புனர்வசி ரோகிணி ஹஸ்தம் -சித்தரை மாசம் -திருவவதார உத்சவம் –
சம்ப்ரதாயம் ரஷனம் -காருண்யா ராசி திருமங்கை -வேகவதி ஆற்றங்கரை வந்து சொத்து -மண்ணை அளந்து போட தங்கம் வார்த்து கொடுத்த பெருமாள்
ஆளவந்தார் -பிரார்த்தனைக்கு ராமானுஜர் சம்ப்ரதாயத்துக்கு கொண்டு வந்த வரதன்
வெள்ளை வஸ்த்ரம் -இருவரும் சேவை -நவராத்திரி மகா நவமி -ஒரே வெண் கொற்றக் குடைக்கு கீழே –இருவரும் சேர்ந்து புறப்பாடு
ஸ்ரீ ரெங்கம் அனுப்பிய கருணை -ராமானுஜரை –ஆவாரார் துணை -தேவாரார் கோலத்துடன் –
அன்பன் -சர்வ ஸூஹ்ருத் -அவ்யாக வத்சலன் -ஞான சாரம் பிரேம சாரம் ராமானுஜர் காலத்தில் பிறந்த தமிழ் பிரபந்தங்கள் இவை -ராமானுஜ நூற்று அந்தாந்தி போலே -ஆசார்ய வைபவம் சொல்ல வந்தவை –
வேதாந்தம் உன்னைப்பார்க்க முடியாது சொன்னதும் உண்மை கண்ணுக்கு தெரியும் படி நீ சேவை சாதிப்பதும் உண்மை உளனஎனில் உளன் இலன் எனில் இலன் -சொல்லலாம் -சொல்லே முக்கியம் விரோதி பரிகாராம்
அவன் செய்யும் முயற்சியால் முடியாது நீ காட்டவே காணலாம் –எச் சஷூசாம் விஷயம் -மனிசர்க்கு தேவா போலே தேவர்க்கும் தேவர் நீ -அனுபிரவேசித்துநியமித்து -சிருஷ்டித்த பதார்த்தங்களுக்குள்ளும் -சம காலத்திலேயே புகுந்து -வஸ்துவாக்கி -சத்தை பெற -சட்டை போலே தேவர்கள் -அங்கான் அங்கா தேவதைகள் ஜகத் சர்வம் சரீரம் -பிரகாரம் -ஆதி ராஜ்ஜியம் -வேத ரஷகன் தேவ ராஜன் -சாயா -நிழல் -புறப்பாடு கொடை அழகு -வள்ளல் அழகு 18 ஜான் குடை அழகு –
வேதம் மரம் -பழம் உன்ன வரும் பறவைகள் போலே தேவர்கள்
அகில ஹேய -விபஷ பூதம் -பிரத்ய நீக -கல்யாணைக -உபய லிங்கம் -விபூதி லிங்கம் நம் சம்ப்ரதாயம் -உபய லிங்க பாதம் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ தரம்
நித்யோதித்த சாந் தோ தித தசை -பாஞ்சராத்ர ஆகமம் -ஸ்ரீ பத்ரியில் நாராயணன் தன்னை தானே த்யானம் ஸ்வரூப த்யானம் -விசாத வியூஹ ஸ்தம்பம் -சதிர் வித- பர வாசு தேவன் வ்யூஹ வாசு தேவன் இருவரும் நீயே -பெருமாள் கோயிலில் பாஞ்ச ராத்ர ஆகமம் –
பெரும் தேவி -கம்பர் -கௌசல்யையை–அங்கு இளைய தேவிகள் உள்ளார் -பெரும் தேவி கேட்டு அருளாய் -திருவடி -பெருமைக்கு தக்க தேவி –
கருட வாகனம் இருக்க சக்கர தாழ்வாரும் இருக்க சம்சார சாகரம் -பல முதலைகள் -கடிக்க -ஆர்த்தி உடன் நானும் கூப்பிட -அருளாதநீர் -புதுப் பெயர் கொடுக்கிறார் ஆழ்வார் – -பிரதம சதகே வீஷித வரதம் -இமையோர் தலைவா -அமரர்கள் அதிபதி தேவாதி ராஜன் -அபராத சஹாத்வம் குணம் உண்டே
கோஷ்டியார் சேர்க்கை எனக்கே எப்பொழுது உண்டாகும் –மற்றவர்களுக்கு அனுபவம் கொடுப்பார்கள் –
கனக முத்தரை -விஸ்வரூபம் சேவிக்க வேண்டும் -தீர்க்க சுமங்கலி -திரு நாராயான யது கிரி -நாச்சியார் புது மணப் பெண் போலே
புல்லாக்கு கீழே சிரிப்பை குனிந்து சேவித்து அனுபவகிக்க வேண்டும் காஞ்சியில் -பரதந்த்ரன் -சாஷி வளையல் முத்தரை காட்டிக் கொடுக்கும் –
இந்திரா -லோக மாதா -பிராட்டி திருநாமம் பரம ஐச்வர்யாயா தாது —
48 ஸ்லோகம் -உத்சவங்கள் சேர்த்து அருளி -விசேஷ அனுபவம்
குதிரை -கருட விந்தை ராஜன் -தேர் -ஆளும் பல்லக்கு ஆந்தோளிகா -தியாக ராஜன் வெய்யிலோ மழையோ-உத்சவம்
நிரந்தரம் -வாரண சைல ராஜா -அச்சுவை பெறினும் வேண்டேன் கச்சி நகர் உளானே -சத்யம் சபே –
நீர் இங்கே இருந்து என் உள்ளம் புகுந்து இருக்க
பல சுருதி -சொல்லி நிகமிக்கிறார் -கல்பக விருஷம் -தேவ ராஜன் -கையாலே பறிக்கும் படி
கோடியில் உள்ள துணியை கம்பாலே போட்டு கம்பாலே எடுக்க வேண்டும் -சாஸ்திரம்
அனைத்து ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் தேவாதி தேவன் -ஞாத சதகம் -காஞ்சிக்காக அருளி

————————————————————-

ஸ்ரீ வேதாந்த தேசிகன்-திருவஹீந்திர புரம் -அனுபவம்

அடியவர்க்கு மெய்யன் தேவ நாதன் -அஹீந்திர -ஆதி சேஷ புரம் –
ஔஷதக கிரி -கருடனை த்யானிக்க -ஹயக்க்ரீவ மந்த்ரம் உபதேசம் -28 ஸ்தோத்ர கிரந்தங்கள் தேசிகன் அருளி –
கவி -தார்க்கிக சிம்ஹம் -புற சமயம் நிரசனம் தர்க்க நியாய சாஸ்திரம் கொண்டு வேதார்த்தம் ஸ்தாபித்து அருளி -வாதம் நிலை நிறுத்த ஞாய சாஸ்திரம் –
கவிகளுக்குள்ளே சிம்ஹம் -தார்க்கிகர்களுக்குள்ளே சிம்ஹம் -ஞான பாவம் -உபதேசிக்க -அனுபவம் -உள்ளம் உருகி -நாயகி பாவம் -மகள் தாய் தோழி பாவங்கள் –
தேசிகன் -27-ஆண் பாவம் -தேவ நாத பஞ்சாசத் -50
அச்யுத சதகம் –பெண் பாவம் -அவயவ சபைகள் -100 ஸ்லோகங்கள் -ஆண்கள் முரட்டு சமஸ்க்ருதம் -பெண்கள் -மெல்லிய சமஸ்க்ருதம் வல்லினம் இல்லாமல் போலே
பிராக்ருத பாஷை -பெண்களும் குழந்தைகளும் -பேசுவது -பெண் பேச்சு தனி சிறப்பு -திருப்பாவை -லோக பிரசித்தம் –
அர்த்தம் புரிய அவரே சாமான்ய சமஸ்க்ருதத்திலும் அருளி உள்ளார் –
தெய்வ நாதன் -புருஷோத்தமன் -அழகன் பெரியவன் மூவராகிய ஒருவன் -ஞான பிரான் மலைக்கு மேலே –
தேசிகன் முதல் ஸ்தோத்ரம் பிறந்த இடம் -பொற் கால் இட்ட பெருமை கொண்டைக் கோல் நாட்டி –
திருக்குடந்தை -ஆராவமுதன் -ஆறு பிரபந்தங்களிலும் மங்களா சாசனம் -நாலு வித கவி -சிதற கவி -திரு வெழு கூற்று இருக்கை-
சக்ராயுதம் -த்ரி சூலம் -மாட்டி -சேவை சாதிக்க -தீர்த்த தாகம் -ஆதி சேஷன்-வாளால் அடித்து அஹீந்திர புரம்
கருடன் -சுத்தி வர -கருட நதி -கடிலநதி மருவி -பெருமாள் அங்கு எழுந்து அருளி உத்சவம்
மூவராகிய முதல்வன் -சத்யம் -தாசாநாம்-அடியார்க்கு மெய்யன் – அச்சுதன் -ந சுத்தி நழுவ விடாதவன் கஜேந்த்திரன் -கர்வம் -வேழப் போதகமே -அன்னவன் தாலேலோ —
பச்சிலை மரம் போலே -கருட நதிக்கரையில் -வையம் ஏழும் உண்டு ஆலிலை -அடியவர்க்கு மெய்யனாகிய -சௌலப்ய எல்லை -பரதவ எல்லை -இரண்டும் அவனே –
என் பேச்சை கிளிப் பேச்சாக எடுத்துக் கொள் -கூண்டில் உள்ள சுகம் போலே -கிளிக்கு தான் ஆழ்வார்கள் -குயிலுக்கு இல்லையே -உன்னுடோம் தோழைமை கொள்ளுவன் கிளி உடன் என்பர் -மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே முன்னோர் மொழிந்த முறை தப்பாமல்
தாச சத்யன் -கிங்கரர் சத்யன் -இன்னும் ஒரு திரு நாமம் சாத்துகிறார் –பாலன் -அறியாத பிள்ளைகளோம் -ஸ்துதி ஸ்தவ-இளைய புன் கவிதை ஏலும் -எம்பிராற்கு இனியவாறே
அஸ்மத் குருநாம் அச்யுத -நாக்கு என்கிற சிங்கா சனத்தில் உட்கார்ந்து -ஆசார்யர் மூலமாக -புல்லாங்குழல் –அபண்டித்வம் -போக்கி -யதார்த்த ஞானம்
முனிவரை இடுக்கியும் -முந்நீர் வண்ணனையும் -உபதேசித்து அருளுவான் -சத்வாரகம் அத்வாரகம் இரண்டையும் பண்ணி
டோலாயமானமான ஊஞ்சல் ஆடும் உள்ளத்தில் உட்கார மாட்டீர் -மனச் சஞ்சலம் நின்றவா நில்லா நெஞ்சம்
கோ கோபில ஜனம் -இடக்கை வலக்கை அறியாத -கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை அறிந்தவர்கள் -உத்தவர் -வைராக்கியம் சொல்லிக் கொடுக்க வந்தார் -ஞான மார்க்கம் உபதேசிக்க -கண்ணன் போனதாகவே நினைக்க வில்லை ஹி கிருஷ்ண யாதவா முராரே –
பக்தியால் திளைத்து -மெய்ப்பாடு -கண்டு கலங்கினார் -பக்தி உபதேசம் பெற்று வந்தார் –
ஸ்ரத்தா ஹிருதயம் சுலபன் -உள்ளுவார் உள்ளத்து உடன் கண்டாய்
மகிமையை இருப்பிடமாகக் கொண்டு படைக்கிறாய் -மூன்று தொழில் களையும் செய்து -உலகம் யாவையும் தாம் உலகாக்கி நிலை பெருத்து -அலகிலா விளையாட்டு உடையவன் –
தேவ நாதன் -சர்வ வியாபகன் -சகல தார ணா தி-அணுவாகி இருந்து -விபுவாகியும் –ஸ்தூலம் சூஷ்மம் -அணு விபு -நான்கும் -அவன் -கரந்த பாலுள் நெய்யே போல் –
திலதைதவது -எள்ளுக்குள் – எண்ணெய் கட்டைக்குள் உள்ள நெருப்பு போலே மூன்று உதாரணங்கள் கதய த்ரயம் –
ஒளி பண்பு எங்கும் -த்ரவ்யம் -ஞான மாயன் –
ஒரு இடத்தில் இருந்து வேறு இடம் போக முடியாதவன் -எங்கும் உள்ளவன் என்பதால்
பெண் பாவனையில் வேதார்த்த அர்த்தம் -வேதாந்த தேசிகன் -அன்றோ –
புள்ளை கடாவுநின்றதை காணீர் -மனக் கடலுள் வாழ வல்ல மாய நம்பி -அரவித பாவையும் தானும் –
மட்குடம் நூல் வேஷ்டி ஜகத் பிரமம் -காரணம் காரியம் -தாரண நியமன ச்வாமித்வ -மூன்றும் உண்டே –உபாதான நிமித்த சஹகாரி காரணத்வம்-அவனே -வேர் முதலாய் வித்தாய் -வைஷண்யம் -விஷம சிருஷ்டி இல்லாமல்
நைர்காருண்யம் -கருணை இல்லாதவன் இல்லை
நைரபேஷ்யம்-அபேஷிக்காமல் சிருஷ்டி -கர்மாதீனம்
மெய்யனாகும் விரும்பி தொழுவார்க்கு எல்லாம் -பாண்டவ பஷபாதி -விசயனுக்காய் மணித்தேர் கோல் கொள் கைத்தலத்து எந்தை -பெரிய திருமொழி 3-1-9-
சர்வ ஜன சௌஹார்த்தம் என் பக்தன் காட்டுவான் -பாகவத அபாசரம் -பொறுக்காதவன் -அச்யுதன் -சூர்யன் இடம் ஓட்டை காண்பவன் போலே –
ஏவம் முக்தி பலம் –எல்லாம் செய்து இருந்தாலும் பாகவத அபசாரம் பெரும் தடையாகும் மோஷத்துக்கு
சேஷத்வ ஞானம் -தான் ஆத்மாவுக்கு சக்கரப் பொறி -என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப் பொறியால் ஒற்றிக் கொண்டேன்
கைங்கர்யத்தில் ஆசை -என்பதால் -அச்சுவை பெறினும் வேண்டேன் -தாவத சேவா ரசி பரிதா –உத்தர விருத்தி அதிகாரம் -சரணாகதிக்கு பின்பு பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யமே கர்த்தவ்யம் –
அமுதுபடி சாத்துப்பொடி சமர்ப்பித்து -பரஸ்ப நீச பாவம் -கூரத் ஆழ்வான் -ஸ்ரீ ஸூ கத்திகளை மேற்கோள் காட்டி அருளுகிறார்
திருநாம சங்கீர்த்தனமே -வாழ்வு –
84 ஸ்லோகம் -கைகுழந்தையை கை பிடித்து கூட்டிப் போவது போலே தினகரன் கர -அர்சிராதிகதி மார்க்கம் -12 லோகங்கள் கடந்து -விரஜா நீராடி ஸ்வரூப ஆவிர்பாவம்
சுத்த சத்வ சரீரம் -சுத்த சத்வ மாயம் -ரஜஸ் தமஸ் இல்லாமல் ப்ரஹ்ம அலங்காரம் -மதி முக மடந்தையர் –
95- ஸ்லோகம் தவ சிந்தன முகானாம் -பய நாசம் -பக்தர் கடாஷம் பெற்றுக் கொடு -செங்கண் சிறு சிறிதே -ஆண்டாள் பகவத் கடாஷம் இவர் பாகவத கடாஷம் பிரார்த்திக்கிறார்
நித்யம் கிருபணன் அஸ்மின் -அநந்ய கதித்வம் -அகிஞ்சனன்-திருவடி ஆகிய புதையல் -97 ஸ்லோகம் கதா புனா -மதியம் மூர்த்தம் அலங்கரிஷ்யதி எம்மா வீட்டு -நின் செம் மா பாத பற்பு என் தலை மேல் சேர்த்து ஒல்லை
100 ஸ்லோகம் -வேடன் -குழந்தை -ராஜ குமாரன் -அறிந்து -பக்தி இல்லா விடிலும் -கொள்ள வேண்டும் -கல்யாணம் நிச்சயம் -ஆனபின்பு -பெண் மூக்கு போல்வன இனி பார்க்க வேண்டுமோ -நீயே மணவாளன் -கூவிக் கொள்ளும் காலம் குறுகாதோ –
வேங்கடேச கவி -101- ஸ்லோகம் -நல்ல மனஸ் படைத்தவர் மனசில் ஒளி பெரும்

————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருமங்கை ஆழ்வார்- பெரிய திருமொழியில் -சரணாகதி செய்த திவ்ய தேசங்கள் /திருப்பதிகங்கள் பெற்ற திவ்ய தேசங்கள்/ஒரு நல சுற்றம் -மங்களா சாசன திருப்பதிகள்-

April 11, 2015

1-திரு பிரிதி சென்று அடை நெஞ்சே
2-திரு சாளக்ராமம் அடை நெஞ்சே
3-உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள்  எந்தாய்
4-திருவேங்கடம் அடை நெஞ்சே -நாயேன் வந்தடைந்தேன் நல்கி யாள் என்னைக் கொண்டு அருளே –
அண்ணா அடியேன் இடரைக் களையாயே-வேங்கடத்து அறவனாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாய்
5-வைகுண்ட விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே
6-அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே
7-திருக் காவளம் பாடி மேய கண்ணனே களைகண் நீயே
8-திரு வெள்ளக் குளத்துக்குள் அண்ணா அடியேன் இடரைக் களையாயே
9- ஆழி வண்ண நின்னடியிணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே
10-திரு நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே
11-நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே
12-திரு நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –
13-நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே
14-திருக் கண்ணபுரம் நாம் தொழுதுமே /திருக் கண்ணபுரமொன்று உடையேனுக்கு  அடியேன் ஒருவர்க்கு உரியேனோ
15-திரு மாலிரும் சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –

——————————————————————————————————————————————————————————————————————————————-

திருப்பதிகங்கள் பெற்ற திவ்ய தேசங்கள் -50
ஒரு பதிகம் பெற்றவை–37
திருப்பிரிதி /திரு சாளக்ராமம் /திரு நைமி சாரண்யம் /திரு சிங்க வேள் குன்றம் /திரு எவ்வுள் /
திருவல்லிக்கேணி /திருநீர்மலை /திருவிடவெந்தை /திரு அட்டபுககரத்தான் /திரு பரமேஸ்வர விண்ணகரம் /
திருக்கோவலூர் /திருவயிந்திரபுரம் /திருக் காழிச் சீராம விண்ணகரம் /திரு நாங்கூர் மணி மாடக் கோயில் /திரு நாங்கூர் வைகுந்த விண்ணகரம் /
திரு நாங்கூர் அரிமேய விண்ணகரம் /திரு நாங்கூர் திருத் தேவனார் தொகை /திரு நாங்கூர் வண் புருடோத்தமம் /திரு நாங்கூர் செம் பொன் செய் கோயில் /
திரு நாங்கூர் திருத் தெற்றி யம்பலம் /
திரு நாங்கூர் திரு மணிக் கூடம் /திரு நாங்கை காவளம் பாடி  /திரு வெள்ளக் குளம் /திருப் பார்த்தன் பள்ளி /திரு இந்தளூர் /
திரு வெள்ளியங்குடி /திருப் புள்ளம் பூதங்குடி /திருக் கூடலூர் /திரு வெள்ளறை/தென் திருப்பேர் /
திரு நந்திபுர விண்ணகரம் /திருச் சேறை/ திரு சிறு புலியூர் /திருக் கண்ண மங்கை /திருக் கண்ணங்குடி /திரு நாகை/
திருவல்ல வாழ் /திருக் கோட்டியூர் /

இரண்டு பதிகங்கள் பெற்றவை -6
திரு வதரியாச்சிரமம் /திருக் கடல் மலை /தில்லைத் திருச்சித்திர கூடம் /திருப்புல்லாணி /திருக் குறுங்குடி/திருமாலிரும் சோலை /

மூன்று பதிகங்கள் பெற்றவை-2
திருவாலி /திரு விண்ணகர்

நான்கு பதிகங்கள் பெற்றவை-2
திருவேங்கடம்/திரு அழுந்தூர்

ஐந்து பதிகங்கள் பெற்றவை -1
திருவரங்கம்

பத்து பதிகங்கள் பெற்றவை-2
திரு நறையூர் /திருக் கண்ணபுரம்

——————————————————————————————————————————————————————————————————————————————-

ஒரு நல சுற்றம் -மங்களா சாசன திருப்பதிகள்
1-திரு நீர்மலை
2-திருக் கண்ணமங்கை
3-திருவேங்கடம்
4-திருத் தண்கா
5-திருவாலி
6-திரு நாங்கூர்
7-திருப்பேர் நகர்
8-திரு வெள்ளறை
9-திரு நறையூர்
10-திரு மெய்யம்
11-திருச்சேறை
12-திருக்குடந்தை
13-திரு அழுந்தூர்
14–திரு வெக்கா
15-திருமாலிரும் சோலை
16-திரு விண்ணகர்
17-திருக் கோட்டியூர்
18-திரு நாவாய்

——————————————————————————————————————————————————————————————————————————-

திரு மங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம். .

தேவ ராஜ பஞ்சகம் –ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமி அருளிச் செய்தது –

August 25, 2014

அவதாரிகை –

தக்கானைக் கடிகைத் தடம் குன்றின் மிசை இருந்த
அக்காரக் காபியை அடைந்து உய்ந்து போனேனே –
சோள சிம்ஹ புரத்தில்-
எழுந்து அருளி இருந்த மகா வித்வச் சிகாமணி
காஞ்சி கருட சேவை சென்று சேவிக்க ஷமர் அன்றிக்கே
அதியூரான் புள்ளை ஊரான் -பாசுரம் சிந்தித்து
வாயார ஏத்தி இருக்கையிலே
பேரருளாளன் இவர் பரம பக்திக்கு உகந்து தக்கான் திருக்குளத்திலே சேவை சாதித்து அருளே
அந்தானுபவ பரீவாஹ ரூபமாக திரு அவதரித்தது
இந்த தேவாதி ராஜ பஞ்சகம் –

ஐந்து ஸ்லோகங்களும் பெரிய திருவடி வாகனத்தின் பெருமை ஒன்றே பேசும் –

——————————————————————————————————————————–

பிரத்யூஷே வரத பிரசன்னவதன ப்ராப்த ஆபிமுக்யான் ஜனான்
ஆபத்தாஞ்ஜலி மஸ்தகான் அவிரலான் ஆபாலம் ஆனந்தயத்
மந்த உட்டாயி தசாமர மணி மய ஸ்வேத ஆத பத்ர சனை
அந்தர் கோபுரம் ஆவிராச பகவான் ஆருட பஷீஸ் வர——————–1-

—————————————-

பிரத்யூஷே வரத பிரசன்னவதன –வரத-பகவான்-
ஸூ ப்ரபாத காலத்தில்
ஸூ பிரசன்னமான திரு முக மண்டலத்தை யுடைய
பேரருளாள் பெருமாள்

ப்ராப்த ஆபிமுக்யான் -ஆபத்தாஞ்ஜலி மஸ்தகான் அவிரலான்-ஜனான் –
அபி முகர்களாயும்
மத்தகத்திடைக் கைகளைக் கூப்பினவர்கலாயும்
இடைவெளி இல்லாமல் நெருங்கி இருப்பவர்க்களுமாய் உள்ள
ஜனங்களை –

ஆபாலம் ஆனந்தயத் –
சிறுவர் முதல் கொண்டு சந்தோஷப் படுத்துமவராய்

மந்த உட்டாயி தசாமர –
மெதுவாக வீசப் பட்ட சாமரங்களை யுடையவராய்

மணி மய ஸ்வேத ஆத பத்ர சனை-
ரத்ன மயமான வெண் கொற்றக் குடைய யுடையவராய் –

அந்தர் கோபுரம் ஆவிராச ஆருட பஷீஸ் வர
பெரிய திருவடியை வாகனமாகக் கொண்டவராய்
மெல்ல மெல்ல திருக் கோபுரத்தினுள்
தோன்றி அருளினார்-

தேவப் பெருமாள் உடைய பெரிய திருவடி திரு நாளை
பிரதம பரிச்பந்தமே பிடித்து அனுபவிக்கிறார்
அருணோதய வேளையில்
அபிமத ஜன தர்சன ஆனந்த வேகத்தாலே
அர்ச்சாவதார சமாதியைக் கடந்து விம்மி வெளி விழுகின்ற
அவ்யக்த மதுர மந்த ஹாச விலாசத்தோடு
கூடின திரு முக மண்டலம் பொலிந்த தேவப் பெருமாள்
சிரச் அஞ்சலி மாதாய -என்றும்
மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி -என்றும் சொல்லுகிறபடியே
உச்சி மிசைக் கரம் வைத்து தொழும் அவர்களாய்
அஹமஹமிகயா வந்து நெருக்குவார் இடையே
அகப்பட்டுத் துடிப்பவர்களான அடியார்களை
சிறியார் பெரியார் வாசி இன்றிக்கே
ஜநி தர்மாக்களை எல்லாம் உகப்பியா நின்று கொண்டு
காய்ச்சினப் பறவை யூர்ந்து பொன்மலையின் மீமிசைக் கார் முகில் போல் -என்கிறபடியே
பறைவை ஏறு பரம் புருடனாய்
திரு வெண் கொற்றக் குடை பிடிக்கும் அழகும்
சாமரை வீசும் அழகும்
பொழிய
திருக் கோபுர சேவை தந்து அருளுமாறு எழுந்து அருளின அழகு என்னே
என்று ஈடுபடுகிறார்-

———————————————————————————————————————————————————————————

முக்தாத பத்ர யுகளே உபய சாமராந்தர்
வித்யோதமான விந்தா தனய அதிரூடம்
பக்த அபயப்ரத கராம் புஜம் அம்புஜாஷாம்
நித்யம் நமாமி வரதம் ரமணீய வேஷம் —————–2-

——————————————————

முக்தாத பத்ர யுகளே –
இரண்டு முத்துக் குடைகள் என்ன –

உபய சாமராந்தர் –
இரண்டு சாமரங்கள் என்ன
இவற்றின் உள்ளே –

வித்யோதமான விந்தா தனய அதிரூடம் –
விலங்கா நின்ற வைனதேயனான
பெரிய திருவடியின் மீது ஏறி
வீற்று இருப்பவனும் –

பக்த அபயப்ரத கராம்புஜம்-
அடியார்களுக்கு அபயம் அளிக்கும்
திருக்கைத் தாமரையை யுடையவனும் –

அம்புஜாஷாம் –
செந்தாமரைக் கண்ணனும் –

நித்யம் நமாமி வரதம் ரமணீய வேஷம் –
மநோ ஹராமான திவ்ய அலங்காரங்களை யுடையனுமான
பேரருளாளனை
இடையறாது வணங்குகின்றேன் —

————————————————————————————————————————————————————————————-

கேசித் தத்வ விசோதநே பசு பதௌ பாரம்ய மாஹூ பரே
வ்யாஜஹ்ரு கமலாசநே நயவிதாம் அன்யே ஹரௌ சாதரம்
இத்யேவம் சலசேதஸாம் கரத்ருதம் பாதாரவிந்தம் ஹரே
தத்வம் தர்சயதீவ சம்ப்ரதி ந்ருணாம் தார்ஷ்ய ச்ருதீ நாம் நிதி ——————-3-

—————————————————————————————-

கேசித் தத்வ விசோதநே நயவிதாம்-
பரதத்வம் இன்னது என்று
ஆராயும் அளவில்
சாஸ்திரம் அறிந்தவர்களுக்குள்ளே

பசு பதௌ பாரம்யம்-
சில மதஸ்தர்கள்
ருத்ரன் இடத்தில்
பரத்வத்தைக் கூறினார் –

ஆஹூ பரே வ்யாஜஹ்ரு கமலாசநே -பாரம்யம்-
வேறு சிலர் நான் முகக் கடவுளிடத்தில்
பரத்வம் உள்ளதாக பகர்ந்தார்கள் –

அன்யே ஹரௌ சாதரம்-பாரம்யம்-
மற்றையோர்கள் ஆதாரத்தோடு கூட
ஸ்ரீ மன் நாராயணன் இடத்தில் பரத்வம்
உள்ளதாக சொன்னார்கள் –

இப்படி பலரும் பலவாறாக சொல்லுகின்றார்களே
ஒரு விதமான நிஷ்கர்ஷம் இல்லையே
என்று தளும்பின நெஞ்சை யுடையரான மனிசர்க்கு
தெள்வு பிறப்பிக்க வேண்டி –

இத்யேவம் சலசேதஸாம் கரத்ருதம் பாதாரவிந்தம் ஹரே
தத்வம் தர்சயதீவ சம்ப்ரதி ந்ருணாம் தார்ஷ்ய ச்ருதீ நாம் நிதி –
வேதங்களுக்கு நிதியான பெரிய திருவடியானவர்
இப்போது
இத் திரு நல நாளிலே
தம்முடைய கைத் தளத்திலே தாங்கப் பட்ட
எம்பெருமான் உடைய திருவடித் தாமரையை
பரதத்துவமாகக் காட்டுகின்றார் போலும்-

வேதாத்மாவான விஹகேச்வரன்
சந்தேக விபர்யாயம் அற
பரதத்வத்தை
ஸ்ரீ மன் நாராயணன் உடைய இந்தத் திருவடித் தாமரையே காணீர் பரதத்வம் -என்று
கரஸ்தமாக்கிக் காட்டுகிறாப் போலே உள்ளது -என்றார் ஆயிற்று
பஷி காட்டி விட்டால் இதையே தத்வமாக விஸ்வசிக்க விரகு உண்டோ
என்கிற சங்கைக்கு இடம் இன்றி –
ச்ருதீ நாம் நிதி -என்று கருத்மானுக்கு விசேஷணம் இட்டார்
வேதாத்மா விஹகேச்வர -என்று ஆளவந்தாரும் அருளிச் செய்தார் இ ரே
ஸூ பர்ணோசி கருத்மான் த்ரிவ்ருத்தே சிர -இத்யாதி வேத வாக்கியம் உண்டே-

—————————————————————————————————————————————————————-

யத் வேத மௌலி கண வேத்யம் அவேத்யம் அந்யை
யத் ப்ரஹ்ம ருத்ர ஸூ ர நாயக மௌலி வந்த்யம்
தத் பத்ம நாப பத பத்ம மிதம் மனுஷ்யை
சேவ்யம் பவத் பிரிதி தர்சய நீவ தார்ஷ்ய——————-4

———————————————————————————————-

ஒ வைதிக ஜனங்களே
எம்பெருமான் யுடையதான எந்தத் திருவடியானது
வேதாந்தங்களுக்கே அறியக் கூடியதோ
வைதிகர்கள் அல்லாத மற்றியோர்க்கு அறியக் கூடாததோ
யாதொரு திருவடியானது
பிரமன் சிவன் இந்த்ரன் ஆகிய இவர்கள் முடி தாழ்த்தி
வணக்கக் கூடியதோ
அப்படிப் பட்ட இந்தத் திருவடியானது
உங்களால் சேவிக்கத் தகுந்தது
என்று கருத்மான்
கையிலே ஏந்தி காட்டி அருளுகின்றான் போலும் –

———————————————————————————————————————————————————————-

பிரத்யக் கோபுர சம்முகே தின முகே பஷீந்த்ர சம்வாஹிதம்
நருத்யச் சாமர கோரகம் நிருபமச் சத்ரத்வ யீபாஸூரம்
ஸாநந்தம் த்விஜ மண்டலம் வீ தததம் சந்தா ஹசிஹ் நாரவை
காந்தம் புண்ய க்ருதோ பஜந்தி வரதம் காஞ்ச்யாம் த்ருதீயோத்சவே–5-

————————————-

பிரத்யக் கோபுர சம்முகே –
மேலைத் திருக் கோபுர வாசலிலே

தின முகே –
ஸூ ப்ரபாத வேளையில் –

பஷீந்த்ர சம்வாஹிதம் –
பெரிய திருவடியினால்
தாங்கப் பட்டவரும்

நருத்யச் சாமர கோரகம் நிருபமச் சத்ரத்வ யீபாஸூரம் –
சாமர முகுளம் வீசப் பெற்றவரும்
ஒப்பற்ற இரண்டு திருக் குடைகளின் இடையே
விளங்கா நிற்பவரும் –

ஸாநந்தம் த்விஜ மண்டலம் வீ தததம் சந்தாஹ சிஹ்நா ரவை –
புறப்பாடு சித்தமாயிற்று என்று
தெரிவிக்கிற திருச் சின்ன ஒலியினால்

காந்தம் புண்ய க்ருதோ பஜந்தி வரதம் –
மறையவர் திரளை மகிழச் செய்பவரும்
மிக அழகு போருந்தியவருமான
பேரருளாள பெருமாளை
பாக்ய சாலிகள் பார்க்கப் பெறுகிறார்கள் –
எங்கே எப்பொழுது என்றால் –

காஞ்ச்யாம் த்ருதீயோத்சவே –
திருக் கச்சி மா நகரில்
மூன்றாவது உத்சவ
நல நாளிலே

தன்யா பஸ்யந்தி மே நாதம் -என்று பிராட்டி வருந்தி சொன்னது போலே
இங்கும் புண்ய க்ருதோ பஜந்தி -என்று
தம் இழவு தோற்றச் சொல்லி இருக்கையாலே
இந்த மஹோச்த சேவை
தமக்கு பிராப்தமாக பெறாத காலத்திலே
பணித்தது இந்த ஸ்லோஹ பஞ்சகம் என்று
விளங்குகின்றதே –

—————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ தொட்டயாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரும் தேவி சமேத பேரருளாளன் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

திவ்ய தேசம் அனுபவம் –

July 17, 2013

67 நின்ற திருக் கோலம்
17 இருந்த திருக் கோலம்
24 சயனம் திருக் கோலம் -புஜங்க சயனம் -போகி சயனம் -ஆதி சேஷன் மடியில் – -ஸ்ரீ ரெங்கம்
உத்யோக சயனம் உத்தான அர்த்த சயனம் -ஆராவமுதன் -கிடந்த வாறு எழுந்து இருந்து
சிறு புலியூர் -சல சயனம் -பால சயனம் கிருபா சமுத்திரம்
போக சயனம் -தில்லை நகர் சித்ர கூடம்
வீர சயனம் -சங்கு சக்கரம் இடம் பரிமள ரெங்க நாதன் இந்தளூர்
மாணிக்க சயனம் திரு நீர்மலை –
திருப் புல்லாணி தர்ப சயனம்
திருக் கடல் மல்லை -ஸ்தல சயனம்
வட பத்ர சாயி -வட பெரும் கோயிலுடையான்
அனந்த சயனம் தாளும் தோளும் -சமன் இல்லா பரப்பி –

————————————-

நின்ற -திருக்கோலம் 67–இருந்த திருக்கோலம் -17- சயன திருக்கோலம் -24

நின்ற திருக்கோலங்களில் -67
கிழக்கு 39-
மேற்கு -12
தெற்கு 14
வடக்கு -2

இருந்த திருக் கோலங்கள் -17–
கிழக்கு -13
மேற்கு –
தெற்கு
வடக்கு –

சயனம் திருக் கோலங்கள் -24–
கிழக்கு -18
மேற்கு 3
தெற்கு 3
வடக்கு சயனம் இல்லை –

————————————————————————————————————————————

viveka nirveda virakti bheetayah
prasaadahetu utkramana archiraadyah,
prakrityatikraantapada adhirohanam
praaptih iti atra tu bharvanaam kramah.

The nine steps are: (i) discrimination (viveka), (ii) despair (nirveda), (iii) detachment (virakti), (iv) dread (bheeti], (v) purification (prasadahetu),
(vi) ascent (utkramana), (vii) the bright path (archiradi), (viii) reaching the divine world (suddhasattva-praapti) i.e. crossing the material universe
and finally (ix) attaining His lotus Feet (Praapti).

There are two entrances to the shrine of Aravamudhan at Thirukudanthai (Kumbakkonam). The southern entrance, “The dakshiNAyana vAsal” is used during
dakshiNAyanam (about the middle of July to middle of January) and the northern entrance, “The uttarAyaNa vAsal” is used during
uttarAyaNam (about middle of January to middle of July). The two entrances have nine steps each which is symbolic of the nine steps to moksham-

———————————————–

விவேக நிர்வேத விரக்தி பீதயா -பிரசாத ஹேது உதக்ரமண அர்ச்சிராதியா ப்ரக்ருதி அதிக்ரந்தபத அதிரோஹணம் பிராப்தி இதி அத்ர து பார்வனாம் க்ரம —
ஒன்பது படிகள் -தஷிணாயண உத்தராயண -வழிகளில் –
1–விவேகம்
2—நிர்வேதம்
3 –விரக்தி
4—பீதி
5–பிரசாதம் -அருள் -பாவனத்வம்
6–உதக்ரமணம்
7–அர்ச்சிராதி கதி
8–சுத்த சத்வ பரமபத பிராப்தி -விராஜா நீராடி -அமானவன் கர ஸ்பர்சம்
9–திருவடி -சாலோக்யம் சாயுஜ்யம் -ப்ரீதி காரித கைங்கர்யம் – பரம புருஷார்த்தம் –