Archive for the ‘Divya desams’ Category

ஸ்ரீ ஒப்பிலியப்பன் – திருவோண விரதம்–நல் வாழ்வருளும் ஸ்ரீ நரசிம்மர் ஸ்ரீ திருத் தலங்கள்

May 16, 2023

ஸ்ரீ  மார்க்கண்டேய முனிவர் தவியாய் தவித்தார். திருமகளே தனக்கு மகளாக அவதரிக்க வேண்டும் என்றும், நாராயணனே தனக்கு மருமகனாக அமைய வேண்டும் என்றும் ஆவல் கொண்ட அவர், அந்த இரண்டாவது எண்ணம் ஈடேறாமல் போய்விடுமோ என்று தவித்தார். திருமகள் அவருக்கு மகளாக அவதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையால், திருமாலுக்கு, தன்னுடைய சொந்த திட்டமும் நிறைவேற வேண்டியிருந்தது. முதலில் திருமாலின் திட்டம் என்ன என்று பார்ப்போம்.

துளசி, ஸ்ரீ மன் நாராயணனின் பாதங்களை அர்ச்சனைப் பொருளாக அலங்கரித்தாள். ஓர் இலையாக அவர் பாதத்தில் வீழ்ந்து கிடக்கும் தான் ஏறிட்டு அவர் திருமுக மண்டலத்தைக் காண இயலாது தவித்தாள். எத்தனை நாள் தான் பாத தரிசனம்! பரந்தாமனின் பேரெழில் முகத்தைக் காணத் தனக்கு எப்போது தான் கொடுத்து வைக்கும் என்று ஏங்க ஆரம்பித்தாள். தன்னுடைய இந்தக் குறையை வைகுந்த வாசனிடமே முறையிட்டாள். மெல்லச் சிரித்துக் கொண்டார் நாராயணன்.

தன் முகத்தை தரிசிக்க வேண்டும் என்பது தான் துளசியின் ஏக்கமா அல்லது திருமகள் மட்டும் மார்பில் நிரந்தரமாக வீற்றிருக்க தான் மட்டும் பாதத்திலேயே கிடக்க வேண்டியிருக்கிறதே என்ற பொறாமையா என்று யோசித்தார். ஆனாலும் அவளுக்கும் பெருமை சேர்க்க மனம் கொண்டார். ஆகவே, துளசியிடம், ‘‘மஹாலக்ஷ்மி, பல காலம் தவம் மேற் கொண்டு, என் அன்பை வென்று, பிறகுதான் என் மார்பில் இடம் கொண்டாள். அதேபோல நீயும் தவமியற்றினால் உனக்கு உரிய அங்கீகாரம் அளிப்பேன்,’’ என்று அறிவுறுத்தினார்.

அதோடு, திருமகள் மார்க்கண்டேய முனிவரின் மகளாக அவதரிக்கப் போகிறாள் என்றும், அவளை மணந்து கொள்ள தான் பூவுலகிற்கு வரப்போவதாகவும், அப்போது, அங்கே தவமியற்றக் கூடிய துளசிக்குத் தான் தரிசனம் தர முடியும் என்றும் வாக்களித்தார். அதுமட்டுமல்ல; ஸ்ரீதேவியை மணம் முடிக்குமுன், அதாவது தாங்கள் இருவரும் மாலை மாற்றிக்கொள்ளும் முன் துளசியையே தன் முதல் மாலையாகத் தான் தன் மார்பில் ஏற்றுக் கொள்வதாகவும் சொல்லி அவளை சந்தோஷப்படுத்தினார்.

மிகுந்த உற்சாகத்துடன் துளசி பூலோகம் வந்தாள். திருக்குடந்தையில் அமைந்திருந்த மலர்க் காட்டில், ஒரு செடி வடிவாக தவத்தை மேற் கொண்டாள். இதற்கிடையில் திருமகளே தனக்கு மகளாக வந்துதிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் தவம் மேற்கொள்ள சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்க வந்த மார்க்கண்டேயர், இந்த மலர்க் காட்டை கண்டதும் மனம் ஈர்க்கப்பட்டு உட்புகுந்தார். வெறும் காய், கனிகள், கிழங்குகளை மட்டுமே உட்கொண்டு தவம் இயற்றினார்.

எல்லாம் கூடி வந்ததை, இதை யெல்லாம் ஏற்கெனவே திட்டமிட்டு காய் நகர்த்திய பரந்தாமன், ஸ்ரீதேவியிடம், திருக் குடந்தை மலர்க் காட்டில் துளசிச் செடிக்குக் கீழே ஒரு குழந்தையாய் வடிவெடுத்து மார்க்கண்டேயருக்காகக் காத்திருக்குமாறும், பின்னொரு நாளில், அவளைத் தானே மண முடிக்க பூவுலகம் வருவதாகவும் தெரிவித்தார்.

அதன்படி, துளசிச் செடியின் அடியில் திருமகள் ஒரு குழந்தையாய் ஒளி வீசி, மலர்ச் சிரிப்பால் அந்த வனத்தையே மகிழ்வனமாக்கினாள். தவம் முடித்த மார்க்கண்டேயர் மெல்ல நடந்து வருகையில், துளசிச் செடிக்கு அடியில் ஒரு பேரொளி தன்னை ஈர்ப்பதைக் கண்டார். அங்கே பொன்னே உருவாக, பாரிஜாத மணமாக, தெய்வீகக் குழந்தை ஒன்று தனக்காகவே கிடப்பது கண்டு உள்ளம் பூரித்தார்.

துறவு, தவம், பற்றற்றத் தன்மை எல்லாம் அந்தக் கணத்தில் அவரிடமிருந்து விடைபெற்றன. அப்படியே அந்தக் குழந்தையை அள்ளி எடுத்து நெஞ்சார அணைத்துக் கொண்டார். தன் விருப்பப்படியே ஸ்ரீதேவியே தனக்கு மகளாகக் கிடைத்து விட்டதை அவர் உணர்ந்தார். அவர் அப்படி உணர்ந்ததை, தானும் தென்றல் சிலுசிலுப்பில் மெல்ல அசைந்து துளசிச் செடியும் ஆமோதித்தது. திருமாலின் மார்பகத்தை அலங்கரிக்கப் போகும் அந்தத் திருநாளுக்காகக் காத்திருந்தது.

பூமியிலிருந்து கிடைத்தவள் என்பதால், மகளை பூமிதேவி என்றழைத்துக் கொண்டாடினார் முனிவர். அவளை சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தார். அவள் மணப் பருவம் எய்திய போது தன்னுடைய இரண்டாவது உள்ளக் கிடக்கை நிறைவேறும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார். என்ன வேடிக்கை! முற்றும் துறந்த துறவியின் உள்ளம் லௌகீகத்துக்குத் திரும்புகிறது! இதுவும் இறை சார்ந்த, பக்தி மேன்மையின் வெளிப்பாடுதானோ!

மருமகனை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தார் முனிவர். அவரது குடில் நோக்கி ஒரு பெரியவர் வந்தார். தள்ளாடும் நடை, கிழிசல் உடை, நரை முடி, இடுங்கிய கண்கள் என்று முதிய தோற்றம். வந்தவர் மார்க்கண்டேயரிடம் நேரடியாகவே கேட்டார்: ‘‘வாசலில் பேரழகாக நின்று கொண்டிருக்கிறாளே, அவள் உன் பெண்ணா? அவளை எனக்கு மணமுடித்துக் கொடு!’’

அதிர்ந்து போனார் முனிவர். என்னக் கொடுமை இது! எந்த வயதில் எந்த ஆசை வருவது என்ற விவஸ்தையே இல்லையா? ‘நான் பெருமாளுக்காகக் காத்திருக்கிறேன், இங்கே பிச்சைக்காரர் வந்து திருமணப் பேச்சு நடத்துகிறாரே’ என்று மனசுக்குள் அங்கலாய்த்தார். ‘‘பெரியவரே, உங்கள் வயது என்ன, என் மகள் வயது என்ன? அதோடு, இவளால் உங்களுக்கு சரியாக உணவு படைக்கவும் தெரியாதே. சமையலில் உப்பு போட வேண்டும் என்ற பக்குவமும் அறியாத சிறு பெண் இவள்,’’ என்று மன்றாடினார்.

‘‘அடடா, என்ன பொருத்தம் பாருங்கள்! வயது காலத்தில் எனக்கு உப்பு போட்ட பண்டம் ஆகாது என்பதை உங்கள் மகள் தெரிந்து வைத்திருக்கிறாள். இதைவிட வேறென்ன வேண்டும்? இப்படி என்னை அக்கறையுடன் கவனித்துக் கொள்ள இவளைவிட வேறு யார் எனக்குக் கிடைப்பார்கள்!’’ என்று முதியவர் நடுங்கும் குரலில் சொன்னார். இந்த பதிலைக் கேட்டுத் திடுக்கிட்டார் முனிவர். தட்டிக் கழிக்கவே முடியாது போலிருக்கிறதே என்று குழம்பி நின்றார்.

‘‘நீ உன் பெண்ணை எனக்கு மண முடித்துக் கொடுக்க வில்லை யானால் நான் என் உயிரைத் துறப்பேன்,’’ என்று சொல்லி மேலும் மிரட்டினார் முதியவர். பரிதாபமாக மகளைப் பார்த்தார் மார்க்கண்டேயர். அவளோ, பளிச்சென்று, ‘‘இந்தக் கிழவருக்கு என்னை மணமுடித்தால் நான் என் உயிரைத் துறப்பேன்.’’ என்றாள்!

இது என்ன சோதனை என்று பரிதவித்தார் முனிவர். இனியும் இந்த பக்தரைத் தவிக்க விடுவது முறையல்ல என்று கருதியதால், அவர் முன் நின்றிருந்த முதியவர் மறைந்து சர்வாலங்கார பூஷிதனாக மஹா விஷ்ணு தோன்றினார். பூமி தேவியும் வெட்கப் புன்முறுவலுடன் அவரைப் பார்த்தாள். அப்போது தான் திருமாலும், மஹாலக்ஷ்மியும் தன்னிடம் நாடகமாடியிருக்கிறார்கள் என்று முனிவருக்குப் புரிந்தது. திருமால் முனிவரைப் பார்த்து, ‘‘மார்க்கண்டேயரே, உம் மகள் எப்படி சமைத்துப் போட்டாலும் அதை நான் விரும்பி உண்பேன்.

உப்பிடப் படாதது ஒரு குறையே அல்ல. அதுவே உடல்நலம் காக்கும்,’’ என்று ஆறுதலும் அளித்தார். நெகிழ்ந்துபோனார் முனிவர். உணவுச் சுவை தான் யாரையும் எளிதாக வீழ்த்தக் கூடியது. அதையும் தன் மகளுக்காகத் தியாகம் செய்ய முன்வந்திருக்கும் இந்த மருமகன், ஒப்பிலா அப்பன் தான் என்று நெஞ்சு விம்மினார். பிறகு திருமாலிடம், ‘‘தாங்களும் என் மகளும் திருமணக் கோலத்திலேயே இத் தலத்தில் அர்ச்சாவதாரம் கொள்ள வேண்டும்.

தங்களுக்கு நிவேதிக்கப்படும் பிரசாதங்களில் உப்புச் சுவை இருத்தல் கூடாது,’’ என்று கேட்டுக் கொண்டார். இந்தக் கோரிக்கைகளை அப்படியே ஏற்றுக் கொண்டார் பெருமாள். அதன்படி, இப்போதும் இந்த ஒப்பிலியப்பன் கோயிலில் உப்பில்லாமல்தான் பிரசாதங்கள் தயாரிக்கப்படுகின்றன, பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படுகின்றன, பக்தர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

அது உப்பில்லாத பிரசாதம் என்பது தெரியாவிட்டால், அந்த பிரசாதம் அற்புதமான சுவை கொண்டதாக இருக்கும்; தெரிந்தாலும், கொஞ்சம் மனசளவில் தயக்கம் இருக்குமே தவிர, மற்றபடி ருசியில் உப்பிட்ட உணவைவிட பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியாது. அது மட்டுமல்ல, ‘இந்தக் கோயிலுக்குள் வருபவர்கள் உப்பையோ, உப்பிட்ட உணவுப் பொருளையோ கொண்டு வரக் கூடாது; அப்படிக் கொண்டு வந்தால் அவர்கள் நரகத்துக்கு தான் போவார்கள்’ என்று ஐதீகம் இருப்பதாகவும் சொல்லி அச்சுறுத்துகிறார்கள்! ஒப்பிலியப்பன் தரிசனத்தை விடவா உப்பில்லாத இந்த பிரசாதம் பெரிது!

நம்மாழ்வார் இந்தப் பெருமாளை பொன்னே, மணியே, முத்தே என்றெல்லாம் வாழ்த்திக் கொஞ்சி மகிழ்கிறார்.

என் அப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்
பொன் அப்பன், மணி அப்பன், முத்து அப்பன், என் அப்பனுமாய்
மின்னப் பொன் மதிள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனன் தனதாள் நிழலே– என்கிறார்

அவர். அதாவது, ‘பொன், மணி, முத்து போன்றவன் என் தலைவனான இந்தப் பெருமாள். தன் பக்தனுக்கு உதவி செய்வதில் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத தனித் தலைவன். என் தந்தை. மதில்களால் சூழப்பெற்ற திருவிண்ணகர் என்ற இந்த திவ்ய தேசத்தில் கொலுவிருக்கும் இவன் என் தலைவன் மட்டுமல்ல; என்னைப் பெற்ற தாய்; என்னை வளர்க்கும் தாய். தனது திருவடி நிழலால் என்னை என்றென்றும் காப்பான்,’ என்று உள்ளம் உருகிப் பாடுகிறார் நம்மாழ்வார்.

இந்தப் பாசுரத்தை ஒட்டியே இந்தக் கோயிலில், என்னப்பன், பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், திருவிண்ணகரத்தான் என்று பெருமாள் ஐவராக கொலுவிருக்கிறார். தங்க விமானம் கொண்டு பரிமளிக்கிறார் ஒப்பிலியப்பன். நெடிதுயர்ந்த நின்ற கோலம். கண்களாலேயே மென்மையாக அழைக்கிறார். தங்கக் கவசம் பூண்டு ஜொலிக்கிறார். இவர் காலடியில் இடது பக்கம் மார்க்கண்டேயரும், வலது பக்கம் பூமிதேவியும் மண்டியிட்டு இவருக்கு வணக்கம் செலுத்துகிறார்கள்.

திருப்பதி வெங்க டேசப் பெருமாளுக்கு நேர்ந்து கொண்ட பிரார்த்தனைகளை இவருக்கு நிறைவேற்றி, திருப்பதிக்குப் போக முடியாத குறையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள். இந்தப் பெருமாளும் பார்ப்பதற்கு ஸ்ரீநிவாசன் போலவே இருக்கிறார். அதனால் தானோ என்னவோ இவருக்கும் தனி சுப்ரபாதம் உண்டு. திருமண வரம் அளிக்கும் பரந்தாமன் இவர். இந்தக் கோயிலில் தனியே இருக்கும் திருமண மண்டபத்தில் ஒவ்வொரு முகூர்த்த நாளன்றும் நிறைய பக்த ஜோடிகளுக்கு பெருமாள் அருளுடன் திருமணம் நடைபெறுகிறது என்கிறார்கள்.

பூமிதேவித் தாயார் பெருமாளுடனேயே அவர் கருவறையில் வீற்றிருப்பதால், இவருக்குத் தனி சந்நதி இல்லை. தரணிதேவி, வசுந்தரா என்றும் தாயார் அழைக்கப்படுகிறார். வழக்கம்போல அனுமன், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், ராமர் முதலானோரும் தத்தமது சந்நதிகளில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்கள். பிராகாரச் சுற்றில் ராமாயண, தசாவதாரக் காட்சிகள், ஆண்டாள், ஆழ்வார்கள், ஆசார்யார்கள் ஆகியோர் பேரெழில் ஓவியங்களாக நம்மை ஆசிர்வதிக்கிறார்கள்.

108 திவ்ய தேச பெருமாள்களையும் இங்கே தரிசிக்கலாம். ஆமாம், அந்தத் தோற்றங்களையும் சுதை சிற்பங்களாக, கவினுற வடிவமைத்திருக்கிறார்கள். இங்குள்ள அஹோராத்ரி புஷ்கரிணி மிகச் சிறப்பு வாய்ந்தது. பொதுவாகவே எந்த நீர்நிலையிலும் இரவு நேரத்தில் நீராடலாகாது என்பது சாஸ்திரம். ஆனால் இந்தத் தலத்தின் அஹோராத்ரி திருக்குளத்தில் மட்டும் ஒரு நாளின் எல்லா நேரத்திலும், இரவு, பகல் என்று பாராமல் நீராடலாம் என்று சாஸ்திர விதி தளர்த்தப்பட்டிருக்கிறது.

இந்த தீர்த்தம் எல்லாவகையான தோஷங்களையும் போக்கவல்லது. தேவ சர்மா என்ற வேதம் அறிந்த அந்தணன் ஒருவன் தன் குல ஒழுக்கம் மீறி, புலன் அடக்கமில்லாமல் திரிந்தான். இந்த வகையில் ஜைமினி முனிவரின் மகளிடம் அவன் முறைகேடாக நடந்து கொள்ள முயன்ற போது, வெகுண்ட முனிவர் அவனை சக்கரவாகப் பறவையாக உருமாறுமாறு சபித்தார்.

அப்படியே பறவையான அவன் இந்த அஹோராத்ரி புஷ்கரணியின் கரையில் ஒரு மரத்தில் அமர்ந்திருந்தான். அப்போது திடீரென புயல் வீச, அந்த மரம் அப்படியே குளத்தில் சாய்ந்தது. அந்த குளத்து நீர் பறவையின் மீது தெளிக்கப்பட, தேவசர்மா தன் சுய உருவம் பெற்றான்; முக்தியும் அடைந்தான். அந்த அளவுக்கு இந்தத் திருக்குளம் சக்தி வாய்ந்தது. வேதசர்மா இவ்வாறு சாபவிமோசனம் பெற்றது ஓர் இரவில் என்பதால், இந்தக் குளத்தில் இரவு நேரத்திலும் நீராடலாம் என்ற வழக்கம் வந்ததாகச் சொல்கிறார்கள்.

தியான ஸ்லோகம்

திருவிண்ணகரம் சென்று ஒப்பிலியப்பனை தரிசிக்கும் வரை அவரது தியான ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டிருக்கலாம்:

ஸ்ரீமத் விஷ்ணௌ விமாநே ககந நகரகே பத்மினீ புண்ய பூர்ணா
(அ) ஹோராத்ராக்யா ஜநாநாமபி மதபலதோ வேங்கடேச ஸ்வரூப:
பூம்யா தேவ்யா ஸமேதஸ் த்வ லவணஹவிஷ: ப்ராசனப்ரீதிரேஷ:
புத்ரீ ப்ரீத்யை ம்ருகண்டோ: ஹரிதிகபிமுகோ த்ருச்யதே பீஷ்டதாயீ– ஸ்ரீவிஷ்ணு ஸ்தல தர்சனம்

பொதுப் பொருள்: ககந நகரம் என்ற திருவிண்ணகர் திவ்ய தேசத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானே நமஸ்காரம். விஷ்ணு விமான நிழலில், அஹோராத்ர புஷ்கரணிக் கரையில், வேண்டுவோர் வேண்டுவனவற்றை எல்லாம் அருளும் வேங்கடேசப் பெருமானாய், பூதேவி சமேதராய் திகழும் பெருமாளே நமஸ்காரம். தேவியின் மீதுள்ள பெரு விருப்பத்தால் உப்பு, இல்லாத அமுதை ஏற்பவராய் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் மார்க்கண்டேய முனிவருக்குக் காட்சி அருள்பவரே நமஸ்காரம். தன்னை சேவிப்பவர் விருப்பங்களை நிறைவேற்றும் எம்பெருமானே நமஸ்காரம்.

மாதம்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று விரதம் மேற்கொள்வது திருவோண விரதம் ஆகும். இது பெருமாளுக்கு உரிய நட்சத்திரம். திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். அத்துடன் சந்திர தோஷமும் நீங்க பெற்று வாழ்வில் மகிழ்ச்சி அடைவர். திருவோண விரதத்தை ஒருமுறை வாழ்வில் இருந்தால் கூட அத்தனை பாக்கியங்களும் கிடைக்கும் என்பது நியதி. 27 நட்சத்திரங்கள் இருந்தாலும் எம்பெருமானாருக்கு உரிய திருவாதிரை மற்றும் எம்பெருமானுக்கு உரிய  திருவோணம் இவ் விரண்டு நட்சத்திரங்கள் தான் ‘திரு’ என்ற அடைமொழியுடன் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

ஒப்பிலியப்பன் பெருமாள் மார்கண்டேயன் மகளாக இருக்கும் பூமாதேவியை மணந்து கொள்ள பெண் கேட்டதும் பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தில் தான். அவரை மணம் முடிந்ததும் ஐப்பசி மாத திருவோண நட்சத்திரம் அன்று தான். எனவே ஒப்பிலியப்பன் பெருமாள் கோவில்களில் திருவோண நட்சத்திரம் அன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெருமானின் அருளாசி பெற திருவோண நட்சத்திர விரதத்தை அனைவரும் கடைபிடிக்கலாம். மிக எளிதாக வீட்டிலேயே கடைபிடிக்கக் கூடிய திருவோண விரதத்தை ஏதாவது ஒரு நாளில் கடைபிடித்தால் கூட அவர்களுக்கு பெருமாளின் அருளும், சந்திர தோஷமும் விலகும் என்பது நியதி.

தோஷங்களில் சந்திர தோஷமும் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. சந்திர தோஷம் இருப்பவர்களுக்கு மனநிலையில் சீரற்ற தன்மை இருக்கும். தான் செய்வது சரியா? தவறா? என்கிற பதற்றம் நீடிக்கும். ஏதாவது ஒரு மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து வழிபாடு செய்தால் சந்திர தோஷம் முற்றிலுமாக நீங்கி நல்வாழ்வு பிறக்கும் என்பதை ஜோதிட சாஸ்திரம் உறுதியாக கூறுகிறது. அன்று மாலையில் சந்திர தரிசனம் செய்து சந்திரனின் அருளை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம்.

திருவோண விரதம் எப்படி இருப்பது?

மாதா மாதம் வரும் திருவோண நட்சத்திரத்தை முன் கூட்டியே குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருவோண நட்சத்திரத்திற்கு முந்தைய நாள் இரவே உணவேதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அன்று இரவில் பெருமாள் மந்திரங்களை உச்சரிப்பது, விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் கொடுக்கும். மறுநாள் அதிகாலையில் எழுந்து சுத்தமாக நீராடி நல்ல உடை உடுத்திக் கொண்டு பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு அவருக்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை அறையில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி விளக்கேற்றி வழிபட வேண்டும். பூஜையில் துளசி தீர்த்தம் வைத்து அந்த தீர்த்தத்தை நீங்கள் பருகலாம்.

மதியம் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் உப்பு சேர்க்கக் கூடாது. உப்பு சேர்க்காத உணவை சாப்பிட்டால் ஒப்பிலியப்பன் பெருமானின் அருளாசி பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. உப்பு சேர்க்காமல் உணவு தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மாலையில் நெய்விளக்கு ஏற்றி பெருமாளுக்கு மந்திரங்களை உச்சரித்து பூஜை செய்யுங்கள். இரவில் பால் மற்றும் பழம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

இவ்விரதத்தை பக்தி சிரத்தையுடன் கடைப்பிடித்து காலையில் வழிபாடு செய்யும் பொழுது நோய்கள் அனைத்தும் குணமாகும். மதிய வழிபாடு செய்யும் பொழுது செல்வம் அத்தனையும் பெருகும். மாலையில் வழிபாடு செய்யும் பொழுது செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். இரவில் இறுதியாக நான்காம் ஜாம வழிபாடு செய்யும் பொழுது முக்தி பேறு கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே இவ்வாறு திருவோண விரதத்தை முறையாக கடைபிடித்தால் ஏழேழு பிறவிக்கும் 16 செல்வங்களும் அடையலாம்.

—————–

நல்வாழ்வருளும் நரசிம்மர் திருத்தலங்கள்

திருவரங்கம் பெரிய கோயில் மேட்டழகிய சிங்கர் திருவரங்கம் பெரிய கோயிலில் தாயாரைச் சேவித்து விட்டு வெளியே வந்ததும், வடக்கு நோக்கியிருக்கின்ற, படியேறிச் செல்ல வேண்டிய, மாடக் கோயிலில் அழகிய சிங்கரான நரசிம்மப் பெருமாள் ஹிரண்யனை வதம் செய்யும் கோலத்தில் எழுந்தருளி யிருக்கிறார். அதே சமயத்தில், வலது கையை மேலே உயர்த்தி ‘அஞ்சேல்’ என்று அபயம் வழங்கி அருள் பாலிக்கிறார். கம்பநாட்டாழ்வான் இம்மேட்டழகிய சிங்கர் முன்னிலையில், ஸ்ரீரங்கநாச்சியாரை (தாயாரை) நோக்கி அமர்ந்து இந்த மண்டபத்தில் தான், தம் ராமாயணத்தை அரங்கேற்றினார். இந்த இராமாயணத்திற்குக் கம்பர் சூட்டிய பெயர் ‘இராமாவதாரம்’ ஆகும்.

திருவரங்கம் பெரிய கோயிலைச் சேர்ந்த காட்டழகிய சிங்கப் பெருமாள்

திருவரங்கம் இரயில் நிலையத்துக்கு அருகிலேயே காட்டழகிய சிங்கர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருவரங்க நகரின் கிழக்குப் பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது. சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கலி 4398-கி.பி 1297) பெரிய பெருமாளான அரங்கநகர் அப்பனிடத்தில் அன்பினால் மிக்க அடிமை பூண்டவன். இங்கே, பெருமாள் மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். உயர்ந்த விமானம், கர்ப்பக் கிரகம், அந்தராளம், முகமண்டபம், மஹா மண்டபம் மற்றும் கருடன் சந்நதியோடு இந்த கோயில்
உள்ளது.

‘கிழக்கில் காட்டழகிய சிங்கர் புராண ஸித்தம்’ என்று கோயிலொழுகுதலபுராணம் கூறுகிறது. பெரியாழ்வார் காலத்து மன்னனான அவருடைய சிஷ்யனான வல்லபதேவ பாண்டியன் இக்கோயிலில் திருப்பணிகளைச் செய்துள்ளான். மாதம்தோறும் ஸ்வாதி நட்சத்திரத்தன்று விசேஷ திருமஞ்சனம் நடைபெறும். காட்டழகிய சிங்கரைத் தரிசிக்காமல் ஸ்ரீரங்க யாத்திரை நிறைவாகாது. இந்த பெருமாளைச் சேவித்தால் வேதாந்த ஞானம் ஸித்திக்கும்.

வழி: ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்குக் கிழக்கில் மிக அருகிலேயே (நடக்கும் தொலைவிலேயே) இந்தச் சந்நதி அமைந்து உள்ளது. ‘சிங்கர் கோயில்’ என்று கேட்க வேண்டும்.

தேவர் மலை அழகிய சிங்கர்

கமலவல்லி நாச்சியாருடன் கதிர் நரசிங்கப் பெருமாள் அருள்புரியும் மிகப் பழமையான திருத்தலம்தான் தேவர்மலையாகும். கொங்கு நாட்டில் கரூர் – பாளையம் அருகிலுள்ள இத்திருத் தலத்தில் அழகிய சிங்கர் உக்கிர நரசிம்மராக கூறப்பட்டாலும், கமலவல்லித் தாயாருடன் எழுந்தருளியிருப்பதால், அன்பர்களுக்கு லட்சுமி நரசிம்மராகவும், துஷ்டர்களுக்கு உக்கிர நரசிம்மராகவும், விளங்குகிறார். பாண்டியர்களாலும், விஜயநகர, நாயக்க மன்னர்களாலும், திருப்பணி செய்யப் பெற்ற பழமையான திருக்கோயில் இது.

கமலவல்லித் தாயாருக்கு மகாமண்டபம், அர்த்த மண்டபம், கொடிமரம் ஆகியவை பெருமாளுக்கு உள்ளவை போலவே, அமைக்கப் பெற்றுள்ளன. “மோட்ச தீர்த்தம்’’ எனும் ஸ்ரீ நரசிம்ம தீர்த்தம் இத்திருத் தலத்தின் முக்கியமான தீர்த்தமாகும்.

வழி : சென்னை – திருச்சி – கரூர் அல்லது சென்னை – ஈரோடு – கரூர் வழித்தடத்தில்செல்லும் ரயிலில் கரூரில் இறங்கி, சிந்தாலவாடி, தான்தோன்றி மலை கோயில்களை சேவித்து விட்டு தேவர்மலை கதிர் நரசிங்கப் பெருமாளைச் சேவித்து விடலாம்.

சிந்தலவாடி

திருக்காவிரியின் கரைகளிலிருக்கும் அழகிய திவ்ய க்ஷேத்ரங்களில் சிந்தாலவாடியும் ஒன்று. கொங்குநாட்டில், கரூர் நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் சிந்தாலவாடி இருக்கிறது. மத்வ சம்பிரதாய வைஷ்ணவர்களின் நிர் வாகத்தின் கீழ் இத்திருக்கோயில் இயங்குகிறது. பானகம், ததியன்னம் (தயிர்சாதம்), பழப் பிரசாதங்கள் போன்றவற்றைப் பெருமாளுக்கு அமுதுசெய்விக்கலாம் (நைவேத்யம் செய்யலாம்). பகவானின் திருநாமம் ஸ்ரீயோக நரசிம்மப் பெருமாள். மிகவும் பழமையான திருக்கோயில் இது.

வழி : திருச்சி – கரூர் வழித்தடத்தில், ரயில் அல்லது பேருந்தில் சென்றால், லாலாப்பேட்டை என்னும் ஊரில் இறங்கி, அங்கிருந்து சிந்தலவாடிக்கு மாநகர பேருந்தில் செல்லலாம்.

தஞ்சை மாமணிக்கோயில் வீரநரசிம்மப் பெருமாள்
(தஞ்சையாளி நகர்)

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்து ச ஸகாத்வமேவ
த்வமேவ வித்யாத் ரவிணம் த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவதேவ

(நீயே அன்னை, நீயே தந்தை, நீயே உறவு, நீயே நண்பன், நீயே வித்தை (கல்வி), நீயே செல்வம், நீயே எனக்கு எல்லாம் என் தேவதேவனே!)என்று நரசிம்மனை விளிப்போமாக! திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட திவ்ய தேசம் இது. மணிக்குன்றப்பெருமாள், நீலமேகப் பெருமாள் ஆகிய பெருமாள்கள் இருவர் தனிக்கோயில்களில் அருகிலேயே எழுந்தருளியுள்ளனர். தஞ்சை மாமணிக்கோயில் எனும் திவ்யதேசம் மூன்று கோயில்களும் சேர்ந்ததே. திருத்தஞ்சை மாமணிக்கோயில், திருவையாறு தியாகராஜர் பிருந்தாவனம், திருக்கண்டியூர், கல்யாணபுரம், புது அக்ரஹாரம் ஆகியன அருகிலுள்ள திருத்தலங்களாம்.

வழி: தஞ்சாவூர் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. நகரப் பேருந்திலும் சென்று வரலாம்.

வல்லம்
(விக்கிரம சோழ விண்ணகரம்)

ஸ்ரீரங்கத்தில் ஆறாவது திருச்சுற்றான திரிவிக்கிரம சோழன் திருச்சுற்று, விக்கிரம சோழனின் கைங்கர்யம் என்று கோயிலொழுகு கூறுகிறது. அதே போல், திருச்சியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் ‘விக்கிரம சோழ விண்ணகரம்’ என்று ஒரு திருத்தலம் உண்டு. அதன் இப்போதைய பெயர் வல்லம் என்பதாகும். ‘வல்லம்’ எனில் ‘பெரியது, வலியது’ என்றும் பொருள் உண்டு. மலையாளத்தில் ‘வல்லிய’ என்னும் பிரயோகம் இன்றும் ‘பெரியது, வலியது’ என்ற பொருளில் வழங்கப்படுகிறது. வலிமை மிக்க இரணியனை வகிர்ந்து கொன்ற ஸ்ரீநரசிம்மரின் தலமாதலால் ‘வல்லம்’ என்று பெயர் வந்தது போலும். இங்கே பெருமானின் பெயர் தேவராஜன். தாயாரின் பெயர் கமலவல்லித் தாயார்.

இந்திரனுக்கு அகலிகையிடம் பெற்ற சாபம் நீங்கிய தலம் இதுவே என்று சொல்லப்படுகிறது. காவிரியும், கௌதம தீர்த்தம் என்னும் திருக்குளமும் இத்திருத்தலத்தின் தீர்த்தங்களாகும். இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீயோக நரசிம்மர் தெற்கு நோக்கி அருள்புரிகிறார். எனவே, இது யம பயம் நீக்கும் திருத்தலமாகும். இதய நோய், புற்று நோய் போன்ற கொடிய நோய்கள் கூட நீங்கி, அன்பர்கள் நலம் பெறும் பிரார்த்தனை ஸ்தலமாக இது விளங்குகிறது.

வழி: தஞ்சாவூர் – திருச்சி சாலை வழித்தடத்தில் தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், திருச்சியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் வல்லம் திருத்தலம் இருக்கிறது.

கொண்டி ராஜபாளையம் அழகிய சிங்கர்

அஹோபில திவ்விய தேசத்தில் ஸ்ரீராமபிரான் தமது முந்தைய அவதாரமான நரசிம்ம மூர்த்தியை ஸ்ரீந்ருஸிம்ஹ பஞ்சாம்ருத ஸ்தோத்திரத்தால் மங்களாசாஸனம் செய்தார் என்று ஹரிவம்சத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதைச் சுட்டிக் காட்டும் விதமாக இவ்வாலயத்தில் மூலமூர்த்தியான நரசிம்மப் பெருமாளுக்கு எதிரில் ஸ்ரீகோதண்டராமரைப் பிரதிஷ்டை செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால் இத்திருக்கோயிலுக்கு அஹோபில திவ்யதேச ஸாம்யம் உண்டு எனலாம். மூலவர் யோக நரசிம்மர், சோழஸிம்ஹபுரத்தைப் போலே உற்சவர் பிராட்டியைத் தொடையில் தாங்கிய மாலோலர், அஹோபிலத்தைப் போலே. ‘மா’ என அழைக்கப்படும் பிராட்டியினிடத்திலேயே மண்டியிருப்பதால், பரமபுருஷனை, ‘மாலோலன்’ என்பார்கள்.

வழி: தஞ்சாவூர் நகருக்குள்ளேயே கிழக்கு ராஜவீதியிலிருந்து கிழக்கு வாயிலுக்குச்செல்லும் சாலைப் பகுதியே கொண்டிராஜபாளையம் அழகிய சிங்கர் கோயில் உள்ளது.

கும்பகோணம் ஸ்ரீவிஜயீந்திர நரசிம்மர்

மத்வ மகான் ஸ்ரீவிஜயீந்திரரை வாதத்தில் வென்று மாயாவாதத்தை நிலைநாட்ட முடியாது என்று உணர்ந்த கங்காதர பண்டிதர் என்ற வித்வான், தவறான வழிகாட்டுதலால் விஜயீந்திரரைக் கொன்று விடுவதற்காக கொடிய விஷத்தைக் கொண்டு வந்திருந்தார். வாதப்போர் தொடங்கும் முன்பு விஜயீந்திரரைக் கண்டதும் அவருடைய தேஜஸ்ஸால் வசீகரிக்கப்பட்டார். தம் தவறை உணர்ந்து எடுத்துச் சொல்லி கண்ணீர்விட்டார். விஜயீந்திரரோ, ‘நீர் எமக்காகவே கொண்டுவந்ததை மறுக்காமல் கொடும்’ என்று அவரிடமிருந்து விஷத்தைப் பறித்து அருந்திவிட்டார். கொடிய விஷமாதலால் உடனே விஜயீந்திரரின் திருமேனி கருக ஆரம்பித்து. ‘சுவாமி… சுவாமி….’ என்று கங்காதரர் முதற்கொண்டு அனைவரும் கதறினார்கள்.

விஜயீந்திரர், ‘அன்பர்களே! எம் ஆசார்யர் ஸ்ரீவியாஸ ராஜரும் அவருடைய பூர்வ ஜன்மமான பிரஹலாதரும் விஷத்தை உண்டு ஜீரணித்தவர்களே. இதோ எம் அப்பன் நரசிம்மனைப் பாடுகிறோம். எமக்கு ஒன்றும் ஆகாது’ என்று ஸ்ரீநரஸிம்ஹாஷ்டகத்தைக் கம்பீரமாகப்பாடலானார். அவையோர் கண் முன்னாலேயே அங்கிருந்த நரசிம்மரின் திருக்கழுத்து கறுத்தது. விஜயீந்திரரின் திருமேனியின் கருநீல நிறம் மாறி முன்போல் ஆனது. இவ்வரலாறை இன்றளவும் நமக்குக் காட்ட இம்மடத்திலுள்ள நரசிம்மரின் கழுத்து கருநீலமாகவே இருக்கிறது. ஸ்ரீநரசிம்மாஷ்டகம் மிகவும் சக்திவாய்ந்த பாராயணப் பாமாலையாக விளங்குகிறது.

வழி: கும்பகோணம் நகரில் காவிரிக் கரையில் ஸ்ரீவிஜயீந்திரரின் மூலப் பிருந்தாவனம் சோலையப்பன் தெருவில் இருக்கிறது.

அரியலூர்

அரியலூரின் மையப் பகுதியில் பழமையான ஸ்ரீகோதண்ட ராம சுவாமி கோயில் இருக்கிறது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி மிகவும் விரைவில் வரமளிக்கக் கூடிய பிரார்த்தனைப் பெருமாள் ஆவார். இந்த நரசிம்ம மூர்த்தி தசாவதார மண்டபத்திலே எழுந்தருளி அருள் பாலிக்கிறார். மகத்தான சக்திமிக்க அர்ச்சா மூர்த்தி.

வழி: அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் இத்திருத்தலம் இருக்கிறது.

திருக்குறையலூர்
உக்கிர நரசிம்மப் பெருமாள்

வேதத்துக்குப் புறம்பானவர்களால் ஏற்படும் தொல்லைகள், வேதத்துக்குப் பகையானவர்களால் ஏற்பட்ட துர்வாதங்களால் ஏற்பட்ட மதிமயக்கங்கள் ஆகியவை இப்பெருமானால் அழிக்கப்படும். சிறிய ஆலயத்தில் தம் கருணையினால் உகந்து எழுந்தருளியிருக்கும் இப்பெருமாளின் கீர்த்தி பெரிதினும் பெரிது. நரசிம்ம புராணத்தில் வரும் ஸ்ரீநரசிம்ம ஸஹஸ்ர நாமத்தின் ஸ்வரூபம் இவர். ஸாத்விக வித்தைகள் (நற்கல்விகள்) அதாவது வேதம், திவ்யப் பிரபந்தம், தெய்வீக இசையாகிய திருநாம சங்கீர்த்தனம், ஜோதிடம், நாட்டியம், இலக்கணம், வைத்தியம் போன்ற இகபரசுகம் தரும் நற்கல்விகளை அருள்பவர் இவர்.

வழி: மங்கை மடத்திலிருந்து வண்டி அமர்த்திக்கொண்டு குறையலூர் போகலாம். சீர்காழியிலிருந்து, மயிலாடுதுறையிலிருந்தும் ‘மங்கை மடம்’ என்ற பெயர்ப்பலகையுடனேயே பேருந்துகள் செல்கின்றன.

திருவாலி லட்சுமி நரசிம்மர்

தூவிரிய மலருழக்கிக் துணையோடும் பிரியாதே
பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே!
தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி
ஏவரிவெஞ் சிலையானுக் கென்னிலைமை யுரையாயே (பெரிய திருமொழி 3-6-1)

திருவாலியில் உறையும் லட்சுமி நரசிம்மனை நோக்கி நம் பிரார்த்தனைகளைத் தனியே சொல்ல வேண்டியதில்லை. மேற்கண்ட பாசுரத்தைப் பேசித் துதிக்கும் போது அவனே நம் நிலைமையைக் கண்டு, வேண்டியதைச் செய்து முடிப்பான். திருமணத் தடையால் வருத்தமுற்றிருப்பவர்களும், திருமணம் நடந்து துணையைப் பிரிந்து வாழ்பவர்களும் இப்பெருமானை வணங்கினால் தனிமைத் துன்பம் மறையும். சத்ஸங்கமில்லாமல் வருந்தும் பாகவதர்கள், ஸத்ஸங்கம் கிடைக்கப் பெறுவார்கள். லட்சுமி தேவியை அருகில் தொடையிலேயே அமர்த்திக் கொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் இவர்.

வழி: சீர்காழியில் இருந்து, சுமார் 10.கிமீ., தொலைவில் திருவாலி லட்சுமி நரசிம்மர் கோயிலை அடைந்துவிடலாம். திருநகரி உக்கிர நரசிம்மர், யோக நரசிம்மர்திருவாலியும் திருநகரியும் சேர்ந்து ஒரே திவ்யதேசமாகக் கணக்கிடப்படுகின்றன. திருமங்கையாழ்வாரைத் தடுத்தாட்கொண்ட வயலாளி மணவாளனெனும் கல்யாண ரங்கநாதன் உறையும் திவ்ய தேசம் இது. இக்கோயிலிலுள்ள கல்கேணியில் ஊறும் தீர்த்தம் மிக்க சுவையையுடையது. திருமங்கையாழ்வாரை ஆழ்வாராக்க எம்பெருமானுக்கு உதவியாயிருந்த அவர் தர்மபத்தினி குமுதவல்லி நாச்சியாரும் அவருடன் எழுந்தருளியிருக்கிறார். திருநகரி கோயிலுக்குள்ளேயே உக்கிர நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். யோக நரசிம்மரும் கோயிலுக்குள்ளேயே எழுந்தருள்யுள்ளார்.

வழி: சீர்காழியிலிருந்து திருநகரிக்கு நகரப் பேருந்துகள் செல்கின்றன சுமார் 7 கிலோ மீட்டரில் அடைந்துவிடலாம்.

மங்கை மடம் அழகிய சிங்கர்

திருமங்கையாழ்வார் பாகவதர்களுக்கு விசேஷமாக ததீயாராதனம் செய்த இடமே ‘மங்கை மடம்’ என்னும் இடமாகும். இங்குதான் தம் ராஜ்ஜியத்தை இழந்து, ஆழ்வார் அன்பர்களுக்கு அன்னமிட்டு வழிபட்டார் என்பதை நினைக்கும் போது நம் கல்நெஞ்சும் கரைவதை உணரமுடிகிறது. இங்கு பிராட்டிமார்களுடன் அழகிய சிங்கப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். சிங்கவேள் குன்றமாகிய அஹோபில திவ்ய தேசத்தின் அபிமான ஸ்தலமாக இத்திருத்தலம் அமைந்துள்ளது.

வழி: திருநகரி – திருவெண்காடு – பார்த்தன்பள்ளி சாலைகள் யாவும் மங்கை மடத்தில்தான் சந்திக்கின்றன. சீர்காழியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

கடலங்குடி

திருநாங்கூர் திருப்பதிகள் எனும் 11 திவ்ய தேசங்களின் அருகில் கடலங்குடி இருக்கிறது. இன்று இது சிறிய கிராமம். ஐந்து நிலை ராஜகோபுரம், வசந்த மண்டபம், அர்த்த மண்டபம், மணி மண்டபங்கள் மற்றும் மணவாள மாமுனிகள் தீர்த்தம், அனந்த தீர்த்தம், அனுமன் தீர்த்தம், காவிரி என்று தீர்த்தங்கள் பலவற்றைக் கொண்டிருக்கிறது.

இங்கு யோக நரசிம்மர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தனிச்சந்நதியில் அருள் புரிகிறார். இவர் மிகவும் சக்தி வாய்ந்த வரப்ரசாதி. விஜயநகர மன்னர்களால் பற்பல திருப்பணிகள் செய்யப் பெற்ற இந்த அழகிய திருக்கோயில் திருஅத்தியூர் (காஞ்சி), சோழஸிம்ஹபுரம் (சோளிங்கர்), குலோத்துங்க சோழ விண்ணகரம் (இராஜ மன்னார்குடி) ஆகிய திவ்ய க்ஷேத்ரங்களின் மகிமையைக் கொண்டது.

வழி: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் ‘மணல்மேடு’ கிராமம் வழியாக பந்தநல்லூர் செல்லும் பேருந்தில் சென்றால் ‘கடலங்குடி’ திருத்தலத்தை அடையலாம்.

முகாசாபரூர்

திருமால் நெறி விரிந்து பரந்திருக்கும் நடுநாட்டில், கடலூர் மாவட்டத்தில் உளுந்தூர்ப்பேட்டை- விருத்தாசலம் சாலையில் மங்கலம் பேட்டையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் சின்னஞ்சிறு கிராமமாக இன்று முகாசாபரூர் விளங்குகிறது.

இவ்வூரில் மிகவும் பழமையான பெருந்தேவித் தாயார் சமேத வரதராஜப்பெருமாள் கோயில் இருக்கிறது. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ருணவிமோசன லட்சுமி நரசிம்மர் மிகுந்த சக்தி வாய்ந்த பிரார்த்தனைப் பெருமாள் ஆவார்.‘அனந்த சரஸ்’ எனும் அல்லிக் குளமே புஷ்கரணியாகும். ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், பிராட்டியை இடது மடியில் அமர்த்திக் கொண்ட வாத்ஸல்யம் (குற்றத்தையும் குணமாகக்கொள்ளும் தாய்மைக் குணம் அதாவது, தாய்ப்பசு தன் கன்றின் உடலிலுள்ள அழுக்குகளை நாவால் வருடிச் சுத்தப்படுத்தும் உயர்ந்த குணம்) எனும் திவ்ய கல்யாண குணம் ததும்பும் அழகிய திருக்கோலம் இதுவாகும்.

வெல்லப் பானகம், கல்கண்டுப் பானகம், எலுமிச்சைப் பானகம், பஞ்சாமிர்தம், தேன், பால் போன்றவை இந்த மாலோல நரசிம்மருக்குப் பிரியமானவையாகும். ஸ்ரீவரதராஜப் பெருமாளையும், பெருந்தேவித் தாயாரையும், ஸ்ரீலட்சுமி நரசிம்மரையும் ஒருமுறை சேவித்தவர்கள், மீண்டும் மீண்டும் சேவிக்க விரும்புவார்கள்.

வழி: சென்னை – விழுப்புரம் – திருச்சி- ரயில்- பேருந்துப் பாதையில் உளுந்தூர்ப்பேட்டையிலோ அல்லது விருத்தாசலத்திலோ இறங்க வேண்டும். பின்னர், இரு ஊர்களுக்கும் இடையில் இருக்கும் மங்கலம்பேட்டையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் முகாசாபரூர் உள்ளது.

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

கண்டோம் ஸ்ரீ அழகர்.. கண்டோம் மகிழ்வு.. கொண்டோம் மதுரை வாழியவே’ பச்சை பட்டில் வைகையில் எழுந்தருளிய ஸ்ரீ கள்ளழகர்!

May 5, 2023

கண்டோம் ஸ்ரீ  அழகர்.. கண்டோம் மகிழ்வு.. கொண்டோம் மதுரை வாழியவே’ பச்சை பட்டில் வைகையில் எழுந்தருளிய ஸ்ரீ கள்ளழகர்!

விண்ணதிர எழுந்த ஸ்ரீ கோவிந்தா முழக்கங்களுக்கு இடையே மக்கள் வெள்ளத்தில் அழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

பச்சை பட்டுத்தி ஜொலித்த ஸ்ரீ கள்ளழகர் ஸ்ரீ கோவிந்தா முழக்கங்களுக்கு கிடையே வைகை ஆற்றில் இறங்கினார்.

மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருக்கல்யாணம், தேரோட்டம் முடிந்த நிலையில் முக்கிய நிகழ்வான ஸ்ரீ கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை முதல் தொடங்கியது. விண்ணதிர எழுந்த ஸ்ரீ கோவிந்தா முழக்கங்களுக்கு இடையே மக்கள் வெள்ளத்தில் ஸ்ரீ அழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இதையடுத்து அங்கு திரட்டிருந்த மக்கள் பக்தி பரவசத்துடன் ஆடி பாடி மகிழ்ந்தனர்.

சர்க்கரை தீபம் ஏந்தி ஸ்ரீ கள்ளழகரை தரிசித்த பக்தர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு ஸ்ரீ சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு ஸ்ரீ கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.

இந்த-ஸோபக்ருத் ஆண்டிற்கான கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 1 ஆம் தேதி தொடங்கிய நிலையில் 4ஆவது நிகழ்வாக நேற்று அதிகாலை மதுரை நகருக்குள் கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை வரவேற்கும் வகையில் மூன்றுமாவடி எனுமிடத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி தொடங்கி புதூர், டிஆர்ஓ காலனி, ரிசரவ்லைட், அவுட்போஸ்ட் தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அப்போது வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சர்க்கரை தீபத்தை ஏந்தி கள்ளழகரை வரவேற்றனர்.

தொடர்ந்து நள்ளிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் திருமஞ்சணம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து அதிகாலை 2.30 மணிக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிவித்துகொண்டு வெட்டிவேர் சப்பரத்திலும் அதன் பின்னர் ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருளினார்.

இதனையடுத்து மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள கருப்பணசாமி கோவிலில் இருந்து தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆறு நோக்கி புறப்பட்ட கள்ளழகரை வரவேற்கும் வகையில் கள்ளழகர் மற்றும் கருப்பணசாமி வேடமிட்ட பக்தர்கள் தண்ணீர் பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் உற்சாகமாக வரவேற்றனர்.

ஆழ்வார்புரம் வைகையாற்று பகுதிக்குள் கள்ளழகர் தங்க குதிரையில் வருகை தரும்போது வெள்ளிக்குதிரையில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி கள்ளழகரை வரவேற்றார்.

வைகையாற்றில் எழுந்தருள வந்த கள்ளழகரை ராமர் பாதம் தாங்கிகள் முன்னே வர சக்கரை தீபம் ஏற்றி பெண்கள் வரவேற்றனர்.

அப்போது வைகை ஆற்றில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், சர்க்கரைதீபம் ஏந்தியும் கோவிந்தா கோவிந்தா என விண் அதிரும் வகையில் பக்தி கோசங்களின் மத்தியில் காலை 5.45 மணிக்கு பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் தாமரை இலைகள், மலர்களால் நிரப்பபட்டிருந்த வைகையாற்று பகுதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்..

தொடர்ந்து ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள இந்து அறிநிலையத்துறை மற்றும் வீர ராகவ பெருமாள் கோவில் சார்பில் அமைக்கப்பட்ட மண்டகப்படிகளில் கள்ளழகர் மற்றும் வீர ராகவ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டது.

பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளியதால் மும்மாரி மழை பொழிந்து விவசாயம் கொழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையோடு பக்திகோஷம் எழுப்பினர்

இதனையடுத்து இராமராயர் மண்டகப்படியில் நடைபெறும் தீர்த்தவாரி எனப்படும் நிகழ்ச்சிக்காக கள்ளழகர் புறப்பட்டார்.

முன்னதாக வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக 2டன் வண்ண மலர்களால் மண்டகப்படி அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியையொட்டி இரும்புவேலிகள் அமைக்கப்பட்டு 5 ஆயிரம் காவல்துறையினர் பலத்தபாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியை காண்பதற்காக மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்களால் தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை மக்கள் வெள்ளதால் நிரம்பி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.

மேம்பாலங்களிலும், கட்டிடங்களில் மேல் அமர்ந்து பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

வைகையாற்றில் பக்தர்கள் இறங்குவதற்காக வைகை ஆறு ஒட்டிய தடுப்பு சுவர்களின் அருகே 4 இடங்களில் தற்காலிக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது வைகையாற்றை சுற்றிலும், தீயணைப்புத் துறையினர்,மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தனர்.

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதையடுத்து பல்லாயிரக்கணக்காணோர் வைகையாற்றின் கரையோரங்கில் அமரந்து முடி காணிக்கை செலுத்தி தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர்.

கள்ளழகரை தரிசிப்பதற்காக நள்ளிரவில் இருந்தே வெளியூர்களில் இருந்துவந்த பக்தர்கள் சாலைகளில் அமர்ந்திருந்து பின்னர் வைகை ஆற்று கரையோர பகுதிக்கு புறப்பட்டு சென்று கள்ளழகர் எழுந்தருளுவதை நேரில் கண்டு களித்தனர்.

பச்சை பட்டு

கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி ஆற்றில் இறங்கியது விவசாயம் பெருகும், நாடு செழிக்கும் என்பதை கோடிட்டு காட்டுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து 6-ம் தேதி காலையில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் காட்சி அளிக்கிறார். 7-ம் தேதி இரவு பூப்பல்லக்கு விழா நடக்கிறது. வரும் 8-ம் தேதி காலை அதே பரிவாரங்களுடன் கள்ளழகர் அழகர் கோயிலுக்கு புறப்பாடாகிறார். அன்று இரவு அப்பன் திருப்பதியில் திருவிழா நடைபெறவுள்ளது.

9ம் தேதி காலையில் கள்ளந்தரி வழியாக கள்ளழகர் கோயிலுக்கு சென்று இருப்பிடம் சேருகிறார். 10-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறும்.

ஏன் கள்ளழகர் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்குகிறார் என்று தெரியுமா? அதற்கு புராணக்கதைகள் உள்ளது.

மதுரையில் மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. அப்போது, திருமாலின் அவதாரமாக விளங்கும் சுந்தரராஜப்பெருமாள் தன் தங்கை மீனாட்சியின் திருமணத்தை காண்பதற்காக சீதனத்தோடு அழகர் மலையிலிருந்து கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு வருகிறார். ஆனால், அவர் வருவதற்குள் திருமணம் முடிந்து விடுகிறது.

இத்தகவல் கள்ளழகர் வைகை ஆற்றின் வடகரைக்கு வரும்போது அவருக்கு தெரியவருகிறது. இதனால் கோபமடைந்த கள்ளழகர் மதுரை மாநகருக்கு வராமல் வண்டியூர் வழியாக மீண்டும் அழகர் மலைக்கே திரும்பிச் சென்று விடுகிறார்.

ஆனால், கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு இன்னொரு கதையும் உள்ளது. புகழ்பெற்ற நூபுர கங்கையில் ஒரு நாள் சுதபஸ் முனிவர் தண்ணீரில் மூழ்கி தவம் செய்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக துர்வாச முனிவர் தன் சீடர்களுடன் நூபுர கங்கைக்கு வருகை வந்தார். ஆனால், இவர் வருவதை சுதபஸ் முனிவர் கவனிக்கவில்லை. இதனால், கோபமடைந்த துர்வாச முனிவர் இன்றிலிருந்து நீ தவளையாக மாறுவாய் என்று சுதபஸ் முனிவருக்கு சாபமிடுகிறார். தன் தவறை உணர்ந்த சுதபஸ் முனிவர் மன்னிப்பு கேட்டார்.

அப்போது, மனமிறங்கிய துர்வாச முனிவர், சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தன்று மறுநாள் வரும் கிருஷ்ணபட்ச பிரதமை திதியில் சுந்தரராஜப்பெருமாள் உமக்கு சாபவிமோசனம் அளிப்பார் என்று கூறிவிட்டு சென்று விடுகிறார். சாபத்தால் தவளையாக மாறிய சுதபஸ் முனியவர், சுந்தரராஜப்பெருமாளை நினைத்து வைகை கரையில் தவம் இருக்கிறார்.

சுதபஸ் முனியவர் செய்த தவத்தால், மனம் மகிழ்ந்த சுந்தரராஜப்பெருமாள் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்கி சுதபஸ் முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார் என்று புராணக் கதை சொல்கிறது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில் என்று தனித்தனியாக சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், சைவ-வைணவ சமயங்களின் ஒற்றுமையை காத்திடும் வகையில் மதுரையை ஆண்ட மாமன்னர் திருமலைநாயக்கர் ஒரே விழாவாக இணைத்து நடத்தினார்.

இவையே அன்று முதல் இன்று வரை சித்திரை திருவிழாவாக மதுரையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை திருவிழா தினத்தன்று, மலையை விட்டு இறங்கும் அழகரை எதிர்கொண்டு அழைத்து மதுரை மக்கள் எப்படி வரவேற்பு கொடுத்தார்களோ அதேபோன்று, அவரை வழியனுப்பவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரை எல்லையில் திரண்டு நின்றுக்கொண்டிருப்பார்கள். அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் ஒரு பெரிய மரப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும்.

அந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள் என பல வர்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டியை திறந்து கைவிட்டு ஒரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த புடவை சிக்குகிறதோ அந்தப் புடவையைத்தான் கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது அணிவிப்பார்கள்.

கள்ளழகர் பச்சை திறத்தில் புடவை கட்டி வந்தால் அந்த வருடத்தில் நாடு செழிப்பாக இருக்குமாம். சிவப்பு புடவை கட்டி வந்தால் அந்த வருடம் நாட்டில் அமைதி குலைந்து, பேரழிவு ஏற்படுமாம். வெள்ளை நிறத்தில் புடவை கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்குமாம். மஞ்சள் திறத்தில் புடவை கட்டி வந்தால் மங்களகரமான சுபநிகழ்ச்சிகள் அந்த வருடம் நடக்கும் என்று மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

சித்ரா பவுர்ணமிக்கு நான்கு நாள் முன்னதாகச் சித்திரைத் திருவிழா தொடங்கிவிடுகிறது. முதல் இரண்டு நாட்கள் கோவிலில் இருப்பார் அழகர். மூன்றாம் நாள் மாலை மதுரையை நோக்கிப் புறப்படுகிறார். ஆரம்ப காலத்தில் கோவிலை விட்டு கிளம்பும் அழகர், அலங்காநல்லூர் போய்ச் சேருவார். அங்கு அழகரை குதிரை வாகனத்தில் தூக்கி வைத்து (ஆற்றில் இறங்குவதற்காக) அலங்காரம் செய்வார்கள். அழகருக்கு அலங்காரம் செய்யும் ஊர் என்பதால், அலங்கார நல்லூராக இருந்து, பின்பு அலங்காநல்லூராக மாறிப் போனதாகச் சொல்கிறார் கள். அலங்காநல்லூரில் இருந்து தேனூருக்கு வந்து வைகை ஆற்றில் இறங்கும் அழகர், அதன் பிறகு வண்டியூருக்கு வந்து மண்டூக முனிவருக்கு (சுதபஸ்) சாபவிமோசனம் கொடுப்பார். இதனால் மண்டூர் என அழைக்கப்பட்டு அதுவே மண்டி யூராகிப் பிறகு வண்டியூராகிப் போனதாம்.

கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (பூமராங்), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கி அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டுவரும் அவர், வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற ஐந் நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப் படிகளில் ஆசி வழங்கிவிட்டு, நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்து சேருகிறார். அதற்கு முன்னதாக மதுரை எல்லையான மூன்று மாவடியில் அழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர் சேவை நிகழ்ச்சி களை கட்டுகிறது. நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கள்ளழகருக்கு அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்துக்கும் நூபுரகங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வரப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு அலங்காரம். இதிலும்கூட ஒரு நம்பிக்கை. அழகருக்கான ஆடைகள், அலங்காரப்பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும்.

இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா…என பல வண்ணங் களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோவிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கை விட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது அன்றைய தினம் அழகருக்கு அணிவிக்கப்படும். அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும். சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும். வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் ‘ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?’ எனப்பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஐந்தாம் நாள் பவுர்ணமியன்று, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். இதற்கு தல்லாகுளத்தை விட்டு கள்ளழகர் கிளம்பியதுமே தண்ணீர் பீய்ச்சும் வைபவம் தொடங்குகிறது. அந்தக் காலத்தில் அழகர் வருவதற்குப் புதிதாகப் பாதை அமைத்ததால் தூசி கிளம்பாமல் இருப்பதற்காகவும், வெப்பத்தைத் தணிப்பதற்காகவும் தண்ணீர் பீய்ச்சும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். காலப் போக்கில் தண்ணீர் பீய்ச்சுவது ஒரு முக்கிய வைபவமாக மாறிப்போனது. அழகர் ஆற்றில் இறங்கி வண்டியூர் போய்ச் சேரும் வரை இந்த வைபவம் கலகலப்பாக நடக்கிறது. ஆற்றிலிறங்கும் அழகரை மதுரையில் உள்ள வீரராகவப்பெருமாள் எதிர்கொண்டு அழைப்பார். ஆற்றுக்குள் இருவரும் மாலை மாற்றி மரியாதை பண்ணிக் கொள்வார்கள். அதன்பிறகு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு ஐந்தாம் நாள் இரவு வண்டியூர் போய்ச் சேருகிறார் அழகர். ஆறாம் நாள் அதிகாலையில் அழகருக்கு ஏகாந்த சேவை. பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர், வண்டியூர் பெருமாள் கோவிலை வலம் வருவார். அதன்பிறகு சர்ப்பவானகத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் (இந்த மண்டபம் வைகை ஆற்றுக்குள் திருமலைநாயக்கரால் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே தேனூரில் நடந்து கொண்டிருந்த வைபவங்கள் இப்போது இந்த மண்டபத்தில் நடக்கிறது) வந்து சேருகிறார் அழகர். தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர், அங்கிருந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார். பிறகு தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு ஆறாம்நாள் இரவு வந்து சேருகிறார். அன்றிரவு அங்கு தங்குகிறார். இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர், ஏழாம் நாள் காலையில் அங்கிருந்து அனந்த ராயர் பல்லக்கில் (திருமலை நாயக்கரின் திவானால் செய்து கொடுக்கப்பட்ட இது முழுக்கத் தந்தத்தால் இழைக்கப்பட்டது) தல்லாகுளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார். அன்றிரவு அங்கு அழகருக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு பூப்பல்லக்கில் ஜோடனை நடக்கும். எட்டாம்நாள் அதிகாலையில் பூப்பல்லக்கில் மலை நோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக பூஜை புனஸ்காரங்களை ஏற்றுக் கொண்டு ஒன்பதாம் நாள் காலையில் அழகர் கோவிலைச் சென்றடைவார். பத்தாம் நாள் பயணக்களைப்பு நீக்குவதற்காக உற்சவசாந்தி அபிஷேகம் நடக்கிறது. அத்துடன் சித்திரைத் திருவிழாவின் பத்து நாள் கொண்டாட்டங்கள் சுபமாக நிறைவுற்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது மதுரை. இதே போல ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது

மதுரை, மதுரை சித்திரை பெருந்திருவிழாவையொட்டி மதுரை வந்த கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நேற்று விடிய விடிய நடந்தது. அதை தொடர்ந்து மதுரை வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அழகரை தரிசனம் செய்வர்.

மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது சித்திரை பெருந்திருவிழாவாகும். இந்த விழா கடந்த 1-ம் தேதி மாலையில் அழகர்கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து  திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பின்னர் அலங்கரிக்கப்பட்ட தங்கப்பல்லக்கில் கள்ளழகராக கோலம் கொண்டு பெருமாள் மதுரையை நோக்கி புறப்பட்டார்.

அப்போது 18-ம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பு விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து வழி நெடுகிலும் கள்ளந்திரி, அப்பன் திருப்பதி ஜமீன்தார் மண்டபம் உள்ளிட்ட பல மண்டபங்களில் அழகர் எழுந்தருளினார்.  தொடர்ந்து நேற்று காலையில் மூன்று மாவடி பகுதியில் காலை 6 மணிக்கு சுவாமி அதே பல்லக்கில் எழுந்தருளினார்.  அப்போது பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து இரவு  தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பெருமாள் திருமஞ்சனமாகி, குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுடைய திருமாலையை சாற்றி, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதை தொடர்ந்து இன்று(5-ம் தேதி) அதிகாலையில் 2.30 மணிக்கு மேல் 3 மணிக்குள் ஆயிரம் பொன் சப்பரம் எழுந்தருளல் நடைபெற்றது.

அதை தொடர்ந்து இன்று காலை 5.45 மணிக்கு மேல் 6.12 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் இறங்குகிறார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்வார்கள்.  நாளை 6-ம் தேதி தேனூர் மண்டபத்தில் காலை 9 மணிக்கு அழகர் சேஷ வாகனத்தில் எழுந்தருளுகிறார். பிற்பகல் 3 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சி தந்தருள்வது நடைபெறுகிறது. அதை தொடர்ந்து  அன்று இரவு தசாவதார காட்சி நடைபெறுகிறது.  இந்த வருடம் 480 மண்டபங்களில் அழகர் எழுந்தருள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.

விழாவையொட்டி மதுரை புறநகர் பகுதியில் மாவட்ட காவல்துறை சார்பில் வழி நெடுகிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சீருடை அணியாத போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முத்துக்கள் முப்பது-வாராரு வாராரு… அழகர் வாராரு…

தமிழகத்திற்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அதில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள வானளாவிய கோபுரங்களும், கோயில்களும் முக்கியமானவை. தமிழகத்தின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் எடுத்துக்காட்டும் ஆலய விழாக்கள் முக்கியமானவை. அவற்றில்,  மிகப் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றுதான் சித்திரையில் “அழகர் பெருவிழா”. ஆண்டுதோறும் மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின்  முக்கிய நிகழ்வான கள்ளழகர்  ‘‘வைகை ஆற்றில் இறங்குதல்” நிகழ்வினை  பல்லாயிரக் கணக்கானோரை ஈர்க்கிறது. இந்த சித்திரைத் திருவிழாவைப் பற்றி பல்வேறு தகவல்களை “முப்பது
முத்துக்களாகக்” காண்போம்.

1. மதுரையின் சிறப்பு

மதுரை என்றாலே தமிழ். தமிழ் என்றாலே மதுரை. தமிழ் நாடு என்று நினைத்தால், முதலில் நினைவுக்கு வருவது மதுரை தான். சங்கம் வளர்த்த மதுரை சுமார் 2,500  ஆண்டுகள் பழமையானது. கடம்ப மரங்கள் நிறைந்த வனப்பகுதியாக இருந்ததால்  `கடம்பவனம்’ என்றும், மருத மரங்கள் அதிக அளவில் காணப்பட்டதால் `மருதை’ என்றும், அனைவரும் கூடி இலக்கியக் கலந்துரையாடல் செய்தமையால் கூடல் மாநகர் என்றும், நீர் நிலைகளுக்கு நடுவே அமைந்தமையால் ஆலவாய் என்றும், கோட்டையின்  நான்கு வாயில்கள் சங்கமிப்பதால் நான்மாடக் கூடல் என்றும், அழைக்கப்படும் பெருமைகளைக் கொண்டது.

2. வீதிகளில் தமிழ் மணம்

மதுரைக்குத்  தான் எத்தனை பெயர்கள்? 1.மல்லிகை மாநகர், 2.கூடல் நகர், 3.மதுரையம்பதி,  4.கிழக்கின் ஏதென்ஸ், 5.நான் மாடக்கூடல், 6.மீனாட்சி பட்டணம், 7.ஆலவாய்,  8.கடம்பவனம், 9.அங்கண் மூதூர், 10.தூங்கா நகரம், 11.கோவில் நகரம் 12. பூலோக  கயிலாயம் என பல பெயர்கள் உண்டு. சித்திரை வீதி, மாசி வீதி, ஆவணி வீதி என தமிழ் மாதங்களின் பெயராலேயே தெருப்பெயர்கள் அமைந்திருக்கும் சிறப்பு  மதுரைக்கே உரியது. மாடக்குளம், ஆத்திகுளம், கரிசல்குளம் என நீர் நிலைகளின்  பெயராலேயே கிராமங்களுக்கு பெயரை வைத்து நீருக்கு மரியாதை செய்யும் வழக்கமும் அதிகம்.

3. அன்னை மீனாட்சி அருளாட்சி செய்யும் இடம்

தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை. வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பாண்டிய  மன்னர்களின் தலைமையிடமாக விளங்கியது. சங்க காலத்தில் தமிழ் சங்கங்கள் அமைத்து தமிழை வளர்த்த பெருமையுடையது. அன்னை மீனாட்சி அவதரித்து,  வளர்ந்து, ஆட்சி செய்யும் தலமாக விளங்குகிறது.
இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் ஒவ்வொன்றும் வரலாறு, கலாச்சாரம், மொழி, கலைகள் என தொடர்புடையது. மதுரைமீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், மீனாட்சியம்மன்  தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. மேலும்  இந்தக் கோயிலில் தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

4. ஆற்றைப் பார்த்தாயா? எம் அழகரைப் பார்த்தாயா?

மதுரை  என்றாலே “விழாக்களின் நகரம்” என்று சொல்லுவார்கள். வருடம் முழுக்க ஏதேனும் ஒரு விழா நடந்து கொண்டே இருக்கும். அப்படி நடக்கின்ற விழாக்களில் மிக  முக்கியமான விழா, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழா மற்றும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா. அழகர் ஆற்றில் இறங்குவதைக் காணுவதற்கு உலகமெங்கும்  இருந்து லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். ‘‘ஆற்றைப் பார்த்தாயா, எம் அழகரைப் பார்த்தாயா” என்கின்ற கூற்று இந்த விழாவின் சிறப்பினை  எடுத்துரைக்கும்.

5. பெண்ணைப் பார்த்தால் மீனாட்சி, ஆணைப் பார்த்தால் அழகர்

மதுரை  என்றாலே மீனாட்சி பெயரும், அழகர் பெயரும் பிரசித்தம். மேலூர் அழகர் கோயில் பக்கம், வீட்டில் ஒரு அழகர் இருப்பார். மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள  ஊர்களில் இருந்து குடும்பத்துடன் சித்திரை திருவிழாவுக்கு புறப்பட்டு வந்து  சேருவார்கள். வைகை ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழாவில், அழகருக்கு ஆயிரம்  பாட்டு இருந்தாலும் “வாராரு வாராரு அழகர் வாராரு” பாட்டு தான் ஊரில் எந்த  பக்கம் திரும்பினாலும் கேட்கும்.

6. வைகை நதியின் சிறப்பு

சித்திரை  விழாவில் மூன்று சிறப்புகள் உண்டு. ஒன்று மதுரை. இரண்டாவது அழகர் மலை. மூன்றாவது வைகை நதி. வைகை நதிக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? மீனாட்சி  அம்மனின் திருமணத்திற்கு வந்த குண்டோதரன் என்ற அசுரன், தாகத்தால் சிவனை  வேண்டினான். அப்போது சிவபெருமான், `வை…கை’ என்று குண்டோதரனுக்கு  உத்தரவிட, வைகை பிறந்ததாக புராணங்கள் சொல்லுகின்றன.

7. சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு பெயர்

ஸ்வாரஸ்யமாக இன்னொருசெய்தி. திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தின் `வை’யும்  சிவபெருமானின் இருப்பிடமான கைலாயத்தின் `கை’யும் இணைந்து  சங்கரநாராயணர்களின் இருப்பிடமான தீர்த்தமாக `வைகை’ அமைந்திருக்கிறது.  வைகுதல்=தங்குதல், நிலைபெறுத்தல் என்ற ஒரு பொருளும் உண்டு.

8. சமயம், தமிழ் சேர்ந்ததால்…

மதுரையில்,  சமயமும் தமிழும் சேர்ந்து நிலை பெறச் செய்வதால் வைகை என்று பெயர். “அவள் வைகுவதால், வைகையும் ஆகிறாள்” என்பார்கள் சான்றோர்கள். வைகைக்கு வேகவதி என்று பெயரும் உண்டு. தமிழ் இலக்கியத்தில் வெகுவாக வைகை புகழப்பட்டுள்ளது. ‘‘வையை என்னும் பொய்யாக் குலக்கொடி”, ‘‘ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும்  நாட்களிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வையை” என்பன போன்ற தொடர்கள்  வைகை நதியின் பெருமையைச் சொல்லும். சிவ பெருமானின் திருவிளையாடல்கள் வைகை ஆற்றங்கரையில் நிகழ்ந்ததாகக் கூறுவர். வடமொழி நூல்கள் வைகையை ‘‘க்ருதமாலா”  நதி என்று குறிக்கின்றன.

9. வைகை ஏன் கடலை அடையவில்லை?

பெரும்பாலும் ஆறுகள் மலைகளில் தோன்றி சமவெளிகளில் பாய்ந்து கடலை அடையும். ஆனால், வைகை  கடலை அடையாத ஆறு. அது ஏன் கடலை அடையவில்லை என்பதற்கு கவிஞர் ஒரு கற்பனையான  காரணத்தைப் பாட்டாகக் கூறினார். பெருந்தொகை என்னும் நூலில் இடம்பெற்றுள்ள  அப்பாடல், ‘நாரி இடப்பாகர்க்கு நஞ்சளித்த பாவி’ என்று வாரி இடம் போகாத வையையே நதி  பெண். கடல் ஆண். தேவர்கள் பாற்கடலை கடைந்தார்கள்.

அப்போது ஆலகால நஞ்சு  வந்தது. கடலில் வந்த அந்த நஞ்சை சிவபெருமான் ஏற்றுக்கொண்டார். வைகை  நினைத்ததாம். “ஏ கடலே..எங்கள் அன்னை மீனாட்சியின் நாயகனுக்கு நஞ்சு  கொடுத்த உன்னைச் சேர என் மனம் ஒப்பவில்லை. எனவே, உன்னை அடைய மாட்டேன்.”  மீனாட்சியின் நாயகனுக்கு நஞ்சு கொடுத்த கடலை அடைதல் பாவம் என்பதால் வையை  கடலை அடையவில்லை!

10. அற்புதமான ஆறு வைகை

தமிழகத்திலேயே உற்பத்தியாகி இங்கேயே கடல் சேர்கிற வைகை ஆற்றின் நீளம் 258 கி.மீ. ஆகும். இது தமிழகத்தின் நான்காவது பெரிய ஆறு ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலைதான் வைகை உற்பத்தியாகிற இடம். வருசநாடு, மேகமலை பகுதிதான் வைகையின் பிறப்பிடம். கடல் மட்டத்திலிருந்து 5,333 அடி உயரத்தில் இருக்கிற மேகமலையில் உள்ள ஒரு சிகரமான வெள்ளிமலையில்தான் அது உற்பத்தியாகிறது.

சுருளியாறு, தேனியாறு,  வரட்டாறு, வராகநதி, மஞ்சளாறு, நாகலாறு, மருதநதி, சிறுமலையாறு, சாத்தையாறு  முதலியவை வைகையின் துணை ஆறுகளாகும். பழனி மலையில் உற்பத்தியாகும் வராகநதி  கொடைக்கானல் மலையிலிருந்து வரும் பாம்பாற்றுடன் (வெள்ளி அருவி உள்ள ஆறு) இணைந்து தேனிக்குக் கிழக்கே குன்னூருக்குத் தெற்கில் வைகையுடன் கலக்கிறது. பின்னர் முல்லையாறாக பயணிக்கிறது. இவ்வாறு பயணிக்கும் பொழுது சுருளியாறு  இதனுடன் கலக்கிறது. பின்னர், வள்ளல் நதி என்று சொல்லப்படும் வருசநாட்டு பள்ளத்தாக்கிலிருந்து உருவாகும் வள்ளல் நதியுடன் கலந்து வைகையாறாக வைகை அணையைச் சென்று அடைகிறது.

11. அழகர் மலை

மதுரையின்  சிறப்பையும், வைகையின் சிறப்பையும் பார்த்த நாம், மதுரைக்கு வந்து சித்திரை முழு நிலா நாளில் ஆற்றில் இறங்கும் அழகரின் சிறப்பையும், அவர் நின்று அருள் புரியும் அழகர் மலையின் சிறப்பையும் அறிய வேண்டும். அழகர் கோயில் 108  வைணவத் திருத்தலங்களில் ஒன்று.
இதற்கு வைணவத்தில் திருமாலிருஞ்சோலை  என்கின்ற திருநாமம் உண்டு. சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாலிருங்குன்றம், சோலைமலை, குலமலை குளிர்மலை, தென்திருப்பதி, உத்யான சைலம், இருங்குன்றம், வனகிரி, விருஷ பாத்திரி அல்லது இடபகிரி முதலிய பல பெயர்கள் உண்டு. இது  கிழக்கு மேற்காக, 18 கி.மீ நீளமும் 320 மீட்டர் உயரமும் உடையது. அதிலிருந்து பல சிறிய மலைகள், நாலா பக்கமும் பிரிந்து போகின்றன.

12. ஆழ்வார்களால் பாடப்பெற்ற அழகர் மலை

மதுரையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்புறம்  அடிவாரத்தில், அமைந்துள்ள இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று. பலவகை  மரங்களும், செடிகளும், கொடிகளும் மிகவும் நெருக்கமாக வளர்ந்து  பச்சைப்பசேலெனக் கண்ணுக்குக் குளிர்ச்சியாக காட்சி தரும் இப்பகுதியில் இயற்கையாகவே சோலைகள் பல அமைந்திருகின்றன. சோலைகளில் பூக்களும் காய்களும்,  கனிகளும் மிகுதியாக உண்டாகி கண்ணுக்கும் மனத்திற்கும் இன்பம் ஊட்டும் இம்  மலையைப் பற்றிய செய்திகள் பழந்தமிழ் இலக்கியங்களில் மிகுதியாக உண்டு.

13. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் காட்டும் அழகர் கோயிலின் சிறப்பு

‘‘அவ்வழி  படரீர் ஆயின், இடத்து செவ்வழி பண்ணிற் சிறைவண்டு அரற்றும் தடந்தால் வயலொடு  தண்பூங் காவொடு கடம்பல கிடந்த காடுடன் கழிந்து திருமால் குன்றத்து  செல்குவிர் ஆயின் ”என சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அழகர் கோயிலின் சிறப்பு பற்றி கூறுகிறார்.

14. இரண்டாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பழமை

சிலப்பதிகார ஆசிரியர் ‘விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபில் புண்ணிய சரவணம், பவகாரணியோடு இட்டசித்தி எனும் பெயர் போகி விட்டு நீங்கா விளங்கிய பொய்கை முட்டாச் சிறப்பின் மூன்றுள ஆங்கு’ என்று மூன்று பொய்கைகள் இருப்பதாகவும்  கூறுகிறார். ஆனால், நாம் அறிந்தது நூபுர கங்கை என அழைக்கப்படும் ஒரே ஒரு  பொய்கை. இதன், மூலம் சிலப்பதிகாரத்திற்கு முன்பே அழகர் கோயில் அமைக்கப்பட்டது என தெரிய வருகிறது. ஆழ்வார்களின் காலத்திற்கு பிறகும்  கோட்டைகள் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

15. சொக்கத் தங்கத் திருமேனி

அழகரின்  திருமேனி பொன்மயமானது. அபரஞ்சி தங்கம் என்கின்ற சுத்தமான தங்கத்தால் ஆன திருமேனி. இங்கும் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபர் ஆலயத்திலும் மட்டுமே அபரஞ்சி தங்க உற்சவ மூர்த்திகள் உள்ளனர். திருமாலிருஞ்சோலையில் மூலவரும் உற்சவரும் பஞ்ச ஆயுதங்களுடன் காட்சி தருகின்றார்கள் என்பது ஒரு சிறப்பு. இங்குள்ள பெருமாள் கையில் உள்ள சக்கரம் பிரயோக சக்கரம். தாயார் சுந்தரவல்லி  என்ற திருநாமத்தோடு காட்சி தருகின்றார். தேவி என்ற பெயரும் இவருக்கு  உண்டு.

16. மதுரையைச் சுற்றி மூன்று அழகர்கள்

மதுரையைச் சுற்றி மூன்று அழகர்கள் இருக்கிறார்கள். ஒன்று மாலிருஞ் சோலை அழகர். இன்னொன்று  திருமோகூர் அழகர். மூன்றாவது மதுரையிலேயே இருக்கக்கூடிய கூடல் அழகர்.  திருமாலிருஞ்சோலை அழகருக்கு கள்ளழகர் என்று பெயர். கருவறையில் பெருமாள் பரமசுவாமி எனப்படுகிறார். ஆண்டாள்,

‘‘எழில் உடைய அம்மனைமீர்! என்
அரங்கத்து இன்னமுதர்
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர் எம்மானார்
என்னுடைய கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே
என்று வர்ணிக்கும் அழகு இவர்க்கு அப்படியே பொருந்தும்.

17. நூபுரகங்கை நீரூற்று

அழகர்மலை  அடிவாரத்திலிருந்து சுமார் 2 கி.மீ. உயரத்தில் பழமுதிர்சோலை முருகன் கோயில் உள்ளது. பழமுதிர்சோலை முருகன் கோயிலிலிருந்து ஒரு கி.மீ., தொலைவில் அமைந்த ராக்காயி அம்மன் நூபுரகங்கை நீரூற்று உள்ளது. எம்பெருமான் திரிவிக்கிரம அவதாரம் எடுத்தான். அவருடைய ஒரு பாதம் உலகத்தை அளந்து கொண்டே அப்பாலுள்ள உலகங்களுக்குச் சென்றது.
இந்திரலோகம் கடந்து சத்தியலோகம் சென்ற பொழுது இறைவனுடைய திருவடிகளுக்குப் பாத பூஜை செய்ய வேண்டும் என்று நினைத்த  நான்முகன், தன்னுடைய கமண்டல நீரால் எம்பெருமானின் திருவடிகளை அபிஷேகம் செய்தான். அந்த கமண்டல நீரானது எம்பெருமானின் திருவடியில் அணிந்திருந்த  பொற்சிலம்பு மீது பட்டு சிதறி பெருகி ஜீவநதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது.

18. பாவங்கள் தீர்க்கும் பவ நாசினி

எல்லா  நீர் நிலைகளுக்கும் ஒரு உற்பத்தி இடம் உண்டு. ஆனால், சிலம்பாறு எங்கே  உற்பத்தி ஆகிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. திருமாலிருஞ்சோலையில்  ஆயிரக்கணக்கான தீர்த்தங்கள் இருந்தாலும் அழகர் நீராட்டம் காண நூபுர கங்கை தீர்த்தம் தான் வேண்டும்.
கற்கண்டு போன்ற சுவையுடன் இருக்கக்கூடிய இந்த  தீர்த்தம் தவிர வேறு தீர்த்தத்தால் அழகருக்கு திருமஞ்சனம் செய்தால்,  அவருடைய மேனி கறுத்து விடுகிறது. சகல நோய்களையும் தீர்க்கக்கூடிய அற்புதமான  மூலிகை தீர்த்தம் இது. பகவானுடைய திருவடியில் இருந்து தோன்றி நம்முடைய உடல் அழுக்கை மட்டும் அல்லாது மன அழுக்கையும் அகற்றுவதால் “புண்ணிய சுருதி” என்றும் “பாவ நாசினி” என்றும் சொல்வார்கள். ஐப்பசி துவாதசியில் இங்கு  நீராடி அழகரை தரிசிப்பது பெரும் புண்ணியம். பாதகங்கள் தீர்த்து பரமனடி  காட்டும்.

19. ஆலயத்தில் எங்கும் அழகு, கலை நயம்

இங்கு  பெருமான் மட்டும் அழகரல்ல. மலை அழகு, மண்டபங்கள் அழகு, சிலை அழகு, சோலைகள்  அழகு. கண்ணதாசன் ஒரு பாடலில் இந்த அழகை  ‘‘மலை அழகா? அழகர் சிலை அழகா”  என்று வர்ணிப்பார். மூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம்  வட்ட வடிவமானது. ஆரியன் மண்டபத்தில் இசைத் தூண்கள் உள்ளன. கல்யாண சுந்தரவல்லி தாயாரின் சந்நதியும் கலைநயத்துடன் உள்ளது. இராயகோபுரம் திருமலை மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறா நிலையில் உள்ளது. சிதைந்த  நிலையிலும் இக்கோபுரத்தின் சிற்ப வேலைப்பாடுகள் சிற்பிகளின் உன்னத உளி வேலைப்பாட்டினை வெளிப்படுத்துகிறது.

20. எத்தனை மண்டபங்கள்? எத்தனை சிற்பங்கள்?

திருக்கல்யாண மண்டபத்தில் நரசிம்மர் அவதாரம், கிருஷ்ணன், கருடன், மன்மதன், ரதி, திரிவிக்கிரமன் அவதாரம், லட்சுமி வராகமூர்த்தி ஆகிய பெயர்களைக் கொண்ட  கற்றூண்களில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் கால சிறந்த படைப்புகளாகும். வசந்த  மண்டபத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும்  அழகிய ஒவியங்கள் உள்ளன. கோயிலின் காவல் தெய்வம் பதினெட்டாம்படிக் கருப்பசாமி சந்நதியில் உள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது.

இந்தச்  சந்நதியும் இங்கு ஒரு சிறப்புதான். மக்கள் திரளாக வருகிறார்கள். பெருங்கதவு  முன் நிற்கிறார்கள். பிரமாண்டமான இரட்டைக் கதவு. கதவு உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருக்கிறது. அதில் சந்தனம், குங்குமம், கற்பூரம் முதலியன பூசி  மாலையும் மலர்களும் சாத்தி கதவையே தெய்வமாக எண்ணி வணங்குகிறார்கள்.
தலையில்  உருமால், தோளில் வல்லவேட்டு, இடுப்பில் சுங்குவைத்துக் கட்டிய கச்சை,  கையில் கத்தி, ஈட்டி, வல்லயம், வீச்சரிவாள், தோளில் சாத்திய கட்டாரி,  காலில் சல்லடம் என்று கம்பீரமாகக் காட்சி தருபவராம் கருப்பசாமி. சித்திரைத்  திருவிழாவுக்குப் புறப்படும்போது முதலில் கருப்பசாமியின் சந்நதிக்குதான் அழகர் வருகிறார்.

அங்கே அழகர் அணிந்திருக்கும் நகைகளின் பட்டியல்  வாசிக்கப்படுகிறது. திருவிழாக்கண்டு திரும்பிக் கோயிலுக்குள் செல்லும்  முன்பு, கொண்டு சென்ற நகைகள் எல்லாம் திரும்ப பத்திரமாகக் கொண்டு  வந்துவிட்டதை கருப்பசாமியிடம் காட்டிச் செல்ல வேண்டும். அழகருக்கு அபிஷேகம்  செய்ய கொண்டுவரப்படும் தீர்த்தத்தைக் கூடக் கருப்பசாமியிடம்  காட்டிவிட்டுத்தான் எடுத்துச் செல்வது வழக்கம்.

21. அழியா அழகுடையான்

ஆழ்வார்கள்  பலர், பெருமானை அழகர் என்றே மங்களாசாசனம் செய்கின்றனர். அழகன் என்ற சொல் வைணவத்தில் பிரசித்திபெற்ற சொல். இராமனை அழியா அழகுடையான் என்று கம்பன் வர்ணிக்கின்றார்.

வெய்யோனொளி தன்மேனியி (ன்) விரிசோதியி(ன்) மறையப்
பொய்யோவெனு மிடையாளடு மிளையாளடு போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோ இவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான்.
திருமங்கையாழ்வார் திருநாகைப் பெருமானை ‘‘அச்சோ ஒருவர் அழகியவா”
என்று வர்ணிக்கின்றார்.

22. கள்ளழகர் என்ற திருநாமம் ஏன்?

இந்த  அழகு எவரையும் வசப்படுத்தும். எல்லோர் உள்ளத்தையும் அவர் அறியாமலேயே எடுத்துக் கொள்ளும் என்பதால் கள்ளழகர் என்று பெயர். ‘‘கோலமாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்லாது ஓரெழில், நீல மேனி ஐயோ. நிறை கொண்டது என் நெஞ்சினையே.” என்றும், “வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை”  என்றும் திருப்பாணாழ்வார் பாடுகிறார். இந்த அழகைக் காணத்தானே சித்திரை  விழாவில், 20 லட்சம் பேர் மதுரையில் கூடுகிறார்கள். அவ்வளவு பேரும்  கூடுவதால் மதுரைக்கு கூடல் என்று பெயர்.

23. இன்னொரு காரணம்

கள்ளர்  கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (வளரி), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார்  கள்ளழகர். அழகர் கள்ளர் வேடத்தில் வருவதால், அழகர் என்ற பெயர் கள்ளழகர் என  மாறியது.

24. அடைந்தால் இவனையே அடைய வேண்டும்

சித்திரை  விழாவில் தங்கக் குதிரையில் அழகர் கம்பீரமாக வைகையில் இறங்கும் போது காண ஆயிரம் கண் வேண்டும். இந்த அழகுக்கு ஒரு வர்ணனை. கண்ணன் நடந்து செல்கிறான்.  ஆயர் பெண்கள் பார்க்கிறார்கள். “ஆஹா அடைந்தால் இவனை அல்லவா அடைய வேண்டும்” என்று நினைப்பதோடு மட்டுமல்லாமல் வாய்விட்டும் சொல்கிறார்கள்.  கண்ணன் காலத்தில் அவன் அழகு சரி, இப்போது அர்ச்சசையில் எந்த பெருமானின்  அழகை, கண்ணனின் அக்கால அழகுக்கு இணையாகப் பாடுவது என்று ஆழ்வார்  நினைக்கிறார். அவருக்கு இந்த திருஅழகர் உருவம் தான் நினைவுக்கு வருகிறது.

சுற்றி நின்று ஆயர் தழைகள் இடச்  சுருள்
பங்கி நேத்திரத்தால் அணிந்து
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே
பாடவும் ஆடக் கண்டேன்  அன்றிப் பின்-
மற்று ஒருவர்க்கு என்னைப் பேசலொட்டேன்
மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால்
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக்
கொடுமின்கள் கொடீராகிற் கோழம்பமே.

‘‘மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால் மற்று ஒருவர்க்கு என்னைப் பேசலொட்டேன்” என்ற வரியைப் பாருங்கள். பெரியாழ்வாருக்கு கள்ளழகர் அழகின் மீது உள்ள ஈடுபாடு புரியும். அந்த அழகைக் காணத்தான் கடைசிக் காலத்தில் இங்கேயே தங்கி விட்டார் பெரியாழ்வார். அவர் திருவரசு அழகர் மலை அடிவாரத்தில் கோயிலை ஒட்டி  உள்ளது.

25. ஸுந்தர பாஹு

அழகன் என்பதற்கு வடமொழியில்
சுந்தரராஜன் என்று பெயர். “சுந்தரத் தோளுடையான்”(ஸுந்தர பாஹு)  என்று அவரை
ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்கின்றனர்.

சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்
மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ்
சாறுகொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ.

கூரத்தாழ்வான் 132 ஸ்லோகங்களால் இவர் மீது ஸுந்தர பாஹுஸ்தவம் என்ற அருமையான நூலை இயற்றியுள்ளார். அதில் இப்பெருமானை “வன கிரீஸ்வர” என்றும், “சத்ய ரூபா” என்றும், “காருண்ய ருத வாரிதே” என்றும், “உத்சார் சத் வத்சலா” என்றும் பல  படியாக அழைக்கிறார்.

26. திருமலை மன்னர் செய்த ஏற்பாடு

16ஆம் நுாற்றாண்டு வரை, அழகரின் சித்திரை உற்சவம் (சைத்ரோத் சவம்) சித்திரை மாதத்திலும், மீனாட்சி அம்மனின் உற்சவம் மாசி மாதத்திலும் நடைபெற்றது.  மீனாட்சி அம்மன் உற்சவத்தின் மிக முக்கியமான நிகழ்வு திருத்தேர், மாசி  மாதத்தில் நடைபெற்றது. இந்த திருத்தேர் ஓடும் வீதிகளுக்கு மாசி வீதி என்றே பெயர். திருமலை மன்னர் காலத்திற்கு முன் கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டு அலங்காநல்லுார், தேனூர் ஆகிய ஊர்கள் வழியாக சோழவந்தான் வந்து அங்குள்ள வைகையாற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா சித்திரை மாதத்தில் முழு நிலவன்று நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில், வெவ்வேறு மாதங்களில் நடைபெறும் இந்த விழா ஒரே மாதத்தில் நடைபெற்றால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று, கள்ளழகரை “மதுரை வைகையாற்றில்” எழுந்தருளச் செய்து, மதுரை சித்திரைத் திருவிழாவாக நடத்தினார்.

27. வைணவ தல புராணம் கூறும் கதை

சைவத்தில்  தங்கை மீனாட்சி திருமணம் காண, மதுரை வரும் அழகர், திருமணம் முடிந்ததால், வைகை ஆற்றுக்கு வந்து திருப்புவதாக சொல்கிறார்கள். ஆனால், வைணவ தலபுராணம்  கூறும் கதை வேறு. சுதபமுனிவர் திருமாலிருஞ்சோலையில் உள்ள நூபுர கங்கை எனும்  சிலம்பாற்றில் நீராடும்போது துர்வாச முனிவரை கவனியாது இருக்கக்கண்டு கோபமுற்ற துர்வாசர், சுதபமுனிவரை மண்டூகமாக (தவளை) மாறும்படி சாபமிட்டார். சுதபமுனிவர் வைகை ஆற்றில் மண்டூக வடிவில் தவமியற்றி திருமாலால் சாபம்  நீங்கப்பெற்றார். முனிவர் கண்டு வணங்கிய அவ்வுருவே சுந்தரபாஹூ என்று  வடமொழியிலும் அழகர், மாலிருஞ்சோலைநம்பி என்று தமிழிலும் வழங்கப்படுகிறது.

28. ஆரம்ப நாள் நிறைவு நாள்

சித்திரைத் திருவிழா 14 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை திருமஞ்சனத்தோடு திருவிழா  நிறைவு பெறுகிறது. சென்ற ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக, அழகர் ஆற்றில் இறங்குவதை காணும் பாக்கியம் பெற முடியாமல் செய்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா பெருந்தொற்று குறைந்த பின் இவ்விழா  நடைபெறுவதால், மக்கள்  ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றனர். ஏப்ரல் 14 ஆம் தேதி அழகர் மலையில்  இருந்து, ஸ்ரீகள்ளழகர் கள்ளர் திருக்கோலத்தில் கண்டாங்கி சேலை கட்டி  மதுரைக்கு பல்லக்கில் புறப்படுகிறார். அதிர்வேட்டு முழங்க அழகர்  கிளம்புவார். ஏப்ரல் 15 ஆம் தேதி இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவை  நடைபெறும்.

29. பக்தர்களின் ஆரவாரம்

16 ஆம் தேதி  சனிக்கிழமை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். லட்சக்கணக்கான பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். தல்லாகுளம் பெருமாள் கோயிலிருந்து தங்கக் குதிரை  வாகனத்தில் வைகையை நோக்கி புறப்படும் முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து  வந்திருக்கும் ஆண்டாளின் மாலையைச் சூடிக்கொள்வார்.
 ஸ்ரீஅழகர், ஆற்றுக்குச் செல்லும் பொழுது முதலில் வெட்டி வேர் சப்பரத்திலும், பிறகு மைசூர் மண்டபத்திலிருந்து ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருளும் காட்சியைக் காண கண் கோடி வேண்டும். தல்லா குளத்தை விட்டு தங்கக்குதிரை கள்ளழகர்  கிளம்பியதுமே வைகை ஆற்றில் காத்திருக்கும் பக்தர்களின் ஆரவாரம் ஆரம்பமாகிவிடும். வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் போது  “கோவிந்தா…கோவிந்தா…” என்ற சரணகோஷமும், வேட்டுச்சத்தமும் விண்ணைப் பிளக்கும்.

மதுரைக்கு வரும் அழகரை பக்தர்கள் சர்க்கரைக் கிண்ணத்தில் தீபம்  ஏற்றி எதிர் கொண்டு அழைப்பார்கள். ஆற்றில் இறங்கிய அழகர் ஆற்றின் வழியாகவே வண்டியூர் போய்ச் சேருகிறார். கூடவே பக்தர்களும் அழகருடன் செல்வார்கள். வண்டியூரில் பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக் கொள்ளும் கள்ளழகர், அங்குள்ள பெருமாள் கோயிலை வலம் வந்து, அதன் பிறகு  சர்ப்பவாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் வந்து சேருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 17ஆம் தேதி வண்டியூர் தேனூர் மண்டபத்தில் சேஷ வாகனத்தில் அருள்பாலிக்கிறார். கருட வாகனத்தில் எழுந்தருளும் அழகர் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் தருகிறார்.

பிறகு, தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு இரவில் வந்து சேருகிறார். இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர், அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் தல்லா  குளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார். வழியெங்கும் மக்கள் சுக்கும் வெல்லமும், தந்து அழகரின் வருகையை பக்தியோடும் உற்சாகத்தோடும் கொண்டாடுவார்கள்.

18 ஆம் தேதி திங்கட்கிழமை மோகனாவதாரத்திலும், இரவில் கள்ளழகர் திருக்கோலத்தில் புஷ்ப பல்லக்கில் அழகர் கோவிலுக்கு திரும்புகிறார். 19 ஆம் தேதி அதிகாலையில், பூப்பல்லக்கில் மலைநோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தவாரே அழகர் கோயிலைச் சென்றடைவார். மலையை விட்டு இறங்கும் அழகரை எதிர்கொண்டு அழைத்து  மதுரை மக்கள் எப்படி வரவேற்பு கொடுத்தார்களோ, அதேபோல அவரை வழியனுப்பவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரை எல்லையான புதூர், மூன்றுமாவடி பகுதிகளில் திரண்டிருப்பார்கள்.

30. அழகர் என்ன பட்டு உடுத்தப் போகிறார்?

அழகர்  ஆற்றில் இறங்கும் போது என்ன வண்ணத்தில் பட்டு உடுத்துவார் என்ற  எதிர்பார்ப்பு மக்களிடம் உண்டு. முதல் நாள் அர்ச்சகர் கனவில் இன்ன வண்ண பட்டு என்று சொல்லி, அர்ச்சகர் அந்த வண்ணம் சாற்றுவார் என்று சொல்கிறார்கள். இன்னொரு விதமாகவும், அழகரின் பட்டு  தேர்ந்தெடுக்கப்படுகிறது. அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள்  அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா, என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை வருகிறதோ, அது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் தினம் அணிவிக்கப்படும்.

அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி  ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது கெட்டது நடக்கும்  என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக  இருக்கும். சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சல் இருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி  வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால்,  அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன நிறத்தில் பட்டுடுத்தி வரப் போறாரோ? எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

மதுரை ஆற்றில் கள்ளழகர் விழா  காண்பது போலவே, மானா மதுரையில் சுந்தரவரதரும், பரமக்குடியில் ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாளும் ஆற்றில் இறங்குகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் விழா என்பதால், சித்திரை விழா கோலாகலமாக நடைபெறும் என்று மக்கள்  உற்சாகத்தோடு காத்திருக்கிறார்கள்.

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமாலிருஞ்சோலை ஸூந்தர வல்லி ஸமேத ஸூ ந்தர ராஜ பரம ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஜோதிர் மடம்–ஸ்ரீ தொட்டகாச்சார்யாவின் கதை–

April 28, 2023
ஸ்ரீ ஜோஷி மடம் (Joshi Mutt) அல்லது ஸ்ரீ ஜோதிர் மடம் (Jyotirmath) இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டத்தில் ,
இமயமலையில் 6150 அடி உயரத்தில் அமைந்துள்ள நகராட்சி பகுதியாகும்.
இமயமலையில் மலை ஏறும் குழுவினர்களுக்கும், பத்ரிநாத் கோயில் புனித யாத்திரை செய்பவர்களுக்கும்
ஜோஷி மடம் நுழை வாயிலாக அமைந்துள்ளது.
இந்தியாவில் ஆதிசங்கரர் நிறுவிய நான்கு மடங்களில் ஜோஷி மடமும் ஒன்று.சமயச் சிறப்புகள்
அதர்வண வேதத்தை நிர்வகிக்கும்படியாக ஆதிசங்கரர் ஜோஷி மடத்தை நிறுவினார்.
ஜோஷி மடத்தில் குடிகொண்டுள்ள முக்கிய இறைவன் நரசிம்மர் ஆவார்.
பத்ரிநாத் கோயில், குரு கோவிந்த் கோயில், பூக்களின் பள்ளத்தாக்கு எனப்படும் தேசிய பூங்கா
ஆகிய இடங்களுக்கு ஜோஷி மடத்திலிருந்துதான் செல்ல வேண்டும்.

பார்க்க வேண்டிய இடங்கள்
சங்கராச்சாரியர் மடம்
ஜோசி மடம் ஆதிசங்கரரால் இமயமலையில் நிறுவப்பட்டது.
இங்குள்ள புனித குகையில் ஆதிசங்கரர் தவமியற்றியதாகக் கருதப்படுகிறது.
பத்ரிநாத் கோயில், சங்கரர் நிறுவிய ஜோஷி மடத்தின் நிர்வாகத்தில் உள்ளது.

நரசிம்மர் கோயில்
பனிக்காலத்தில் பத்ரிநாத் கோயில் மூடப்படும் போது, கோயிலிலுள்ள முக்கிய தெய்வச் சிலைகளை
தீபாவளி நாள் முதல் ஜோஷி மடத்தில் உள்ள நரசிம்மர் கோயிலினுள் வைத்து வழிபடுவர்.

தபோவனம்
ஜோஷி மடத்திலிருந்து பத்து கி.மீ தொலைவில் தபோவனம் எனும் அமைதியான இடம் அமைந்துள்ளது.
இங்கு இயற்கையாக அமைந்த வெந்நீர் ஊற்றில் குளிக்க இதமானது.
தௌலி கங்கை ஆறு அமைதியாக இவ்விடத்தை கடக்கிறது.

பவானி கோயில்
அழகிய பவானி கோயில் ஜோஷி மடத்திலிருந்து ஆறு கி.மீ தொலைவில், ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

பத்ரிநாத் கோயில்
ஜோஷி மடத்திலிருந்து 44 கி.மீ தொலைவில் ஸ்ரீகிருஷ்ணரின் பத்ரிநாத் கோயில் அமைந்துள்ளது.

போக்குவரத்து வசதிகள்
ஜோஷி மடத்திற்கு 293 கி.மீ தொலைவில் அமைந்துள்ள விமான நிலையம், டேராடூனில் உள்ளது.

மிக அருகில் அமைந்துள்ள தொடருந்து நிலையம், அரித்வார் அருகே உள்ள ரிஷிகேஷில் அமைந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை எண் 58 ஜோஷி மடத்தை புதுதில்லி, மற்றும் இந்திய-திபெத் எல்லைகளை சாலை வழியாக இணைக்கிறது.

புதையும் ஜோஷி மத் நகரம்
சனவரி 2023ஆம் ஆண்டில் நிலவெடிப்பு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஜோஷி மடம் நகரத்தில் நூற்றுக்கணக்கான
வீடுகள் மற்றும் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு, புதையும் அபாயத்தை எதிர்கொண்டு வருகிறது.
இந்த இயற்கை பேரிடருக்கு எந்தவித திட்டமும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட உள்கட்டமைப்பு மேம்பாடுகள்தான்
காரணம் என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் வரைமுறையற்ற கட்டுமானங்கள் மட்டுமின்றி தேசிய அனல் மின் கழகத்தின் தபோவன் விஷ்ணுகாட்
நீர் மின் திட்டத்தாலும் இந்தப் பகுதி இந்த நிலையை எதிர்கொள்ள காரணம் எனக்கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் இதே போல இயற்கை பேரழிவு சம்பவங்கள் நடந்துள்ளன.
பருவநிலை மாற்றம், மலைப் பகுதியில் தொடர்ச்சியான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதே
நிலச்சரிவுக்குக் காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சாமோலி மாவட்டத்தில் இமயமலை மலைகளில் ஜோஷிமத் (அல்லது ஜோதிர்மத்) என்ற சிறிய நகரம் உள்ளது.
பத்ரிநாத் செல்லும் யாத்ரீகர்கள் செல்லும் பாதையில் ராணுவ நிலையமாகவும், நிறுத்துமிடமாகவும்
செயல்படுவதைத் தவிர, ஜோஷிமத் மதம் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும்.
ஜோஷிமத்தில் உள்ள நரசிங் மந்திர் (நரசிம்ம கோயில்) 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்,
மேலும் குளிர்கால மாதங்களில் பத்ரிநாத்தின் இல்லமாகும்.
ஜோஷிமத் உத்தராம்னய பீடத்தின் அல்லது வடக்கு இருக்கையின் இடமாகவும் உள்ளது ,
இது சங்கர பகவத்பாதாவால் நிறுவப்பட்ட நான்கு மடங்களில் ஒன்றாகும்,
மற்ற மூன்று துவாரகா , பூரி மற்றும் சிருங்கேரியில் உள்ளன.

ஆதி சங்கராச்சாரியார் இந்த நான்கு மடங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தலைவருக்கு நான்கு சீடர்களைத் தேர்ந்தெடுத்தார்.
ஒவ்வொரு மடங்களுக்கும் உபநிடதங்களின் நான்கு வேதங்களில் ஒன்றையும்
நான்கு மகாவாக்கியங்களில் ஒன்றையும் பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.
ஜோஷிமத்தில் உள்ள மடத்திற்கு ‘அயம் ஆத்ம பிரம்மம்’ ( அயம் ஆத்மா பிரம்மம்’ ) என்ற மகாவாக்கியம்
ஒதுக்கப்பட்டு அதர்வ வேதத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்த கணிதத்தின் முதல் தலைவராக ஆதி சங்கராச்சாரியார் தனது சீடரான தோடகாச்சாரியாரைத் தேர்ந்தெடுத்தார்.

உத்தரகண்ட் ஜோஷிமத்தில் உள்ள தொட்டகாச்சார்யா குகையின் நுழைவு உள்ளது 

துரதிர்ஷ்டவசமாக, ஆதி சங்கராச்சாரியாரின் வாழ்க்கை வரலாற்றில் அவரைப் பற்றிய குறிப்புகளைத் தவிர,தொட்டகாச்சாரியாரின் வாழ்க்கையைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை.

சித்விலாச சங்கர விஜய விலாசத்தில் இவரது பெயர் காலநாத என்றும், விஸ்வநாதத்வாரின் மகன் என்றும் குறிப்பிடுகிறது.
மாதவ சங்கரர் திக்விஜயாவின் கூற்றுப்படி, அவர் ‘கிரி’ என்ற சிறுவன் மற்றும் ஆதி சங்கராச்சாரியாரின் பக்தியுள்ள சீடர் ஆவார்.
கிரி, ஆதி சங்கராச்சாரியாரின் மற்ற சீடர்களைப் போல் சாஸ்திரங்களில் நிபுணராக அறியப்படவில்லை.
ஆனால் அவர் தனது குருவின் அர்ப்பணிப்பு முழுமையடைந்து, குருவின் சொற்பொழிவுகளை மிகுந்த நம்பிக்கையுடனும் பக்தியுடனும் கேட்பார்.

கிரிக்கு தொட்டகாச்சாரியார் என்ற பெயர் எப்படி வந்தது?
மாதவ சங்கர திக்விஜயம் இதைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை விவரிக்கிறது.
ஆனால் அதற்கு முன் சமஸ்கிருதத்தில் ஒரு சிறிய பாடம்.

ஆறு வேதாங்கங்கள் அல்லது வேதங்களுடன் இணைக்கப்பட்ட துணைத் துறைகளில் சந்தஸ் (छन्दः) என்று அழைக்கப்படும் ஒரு பொருள் உள்ளது.
சந்தஸ் என்பது உரைநடை அல்லது வசனத்தில் உள்ள அளவீட்டு அமைப்புகளைப் பற்றிய ஆய்வு ஆகும்.
சிக்கல்களில் சிக்காமல், விரதம் (वृत्तम् ) எனப்படும் அக்ஷர சந்தஸின் (अक्षरछन्दः) சில எளிமையான கருத்துக்கள்
இந்தக் கட்டுரையின் சூழலில் பயனுள்ளதாக இருக்கும்.

  1. ஹ்ரஸ்வ ஒலிகளைக் கொண்ட அக்ஷரங்கள் “லகு” அல்லது ‘U’ குறியீட்டால் குறிக்கப்படுகின்றன (அதாவது ஹ்ரஸ்வ ஸ்வரங்களான अ, इ, उ, ऋ, लृ ஹ்ரஸ்வ ஸ்வரங்கள் மற்றும் க், द, ल, போன்ற ஹ்ரஸ்வ ஸ்வரங்களைக் கொண்ட வியஞ்சனங்கள். क्त, स्व, முதலிய ஹ்ரஸ்வ ஸ்வரங்கள்)
  2. திர்கா ஒலிகளைக் கொண்ட அக்ஷரங்கள் “குரு” அல்லது ‘_’ என்ற குறியீட்டால் குறிக்கப்படுகின்றன க்தா, ஸ்வா போன்ற தீர்க ஸ்வரங்களுடன் கூட்டு வியஞ்சனங்கள் உட்பட.)
  3. ஒரு அனுஸ்வரம் அல்லது விசாரம் கொண்ட ஆகாஷரங்கள் ஒரு குருவால் குறிக்கப்படுகின்றன (எ.கா. तं, किं, सः, कः, முதலியன)
  4. வ்யஞ்சனா கலவைக்கு முந்தைய அக்ஷரங்கள் ஹ்ரஸ்வா அல்லது திர்கா என்பதைப் பொருட்படுத்தாமல் குருவால் குறிக்கப்படுகின்றன.
  5. ஒவ்வொரு பாதத்தின் முடிவிலும் உள்ள அக்ஷரங்கள் (ஒவ்வொரு வசன வரிகள்) குருவால் குறிக்கப்படுகின்றன
  6. மூன்று அக்ஷரங்களின் வரிசையை லகு / குருவின் வடிவத்தைப் பொறுத்து வெவ்வேறு கணங்களாக ( गणः) வகைப்படுத்தலாம் . நாம் மூன்றின் வரிசைகளைப் பார்ப்பதால், சாத்தியமான மொத்த வடிவங்களின் எண்ணிக்கை 2  ஆகும் . எனவே 8 கானாக்கள் உள்ளன .

சங்கர திக்விஜயம் பக்கத்துக்குத் திரும்பு. ஒரு நாள் காலையில் ஆதி சங்கராச்சாரியாரும் அவருடைய சீடர்களும்
சொற்பொழிவுக்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது, ​​கிரி தாமதமானார்.
மற்ற சீடர்கள், கிரியால் எப்படியும் பாஷ்யத்தின் ஆழமான பொருளைப் புரிந்துகொள்ள முடியாது என்று கூறி,
பிரம்மசூத்ர பாஷ்யத்தைப் பற்றிய பாடத்தைத் தொடங்கும்படி தங்கள் குருவை வற்புறுத்தினார்கள்.
ஆதி சங்கராச்சாரியார் பதிலளித்தார் “நாயமாத்மா பிரவசனேன் லப்யோ ந மேதயா” ( நாயமாத்மா பிரவசனேனா லாபியோ ந மேதயா ) –
ஆன்மாவை அறிவுரைகள் மூலமாகவோ அல்லது எனது அறிவின் மூலமாகவோ அடைய முடியாது.

ஆதி சங்கராச்சாரியார் தனது சீடன் மீது கொண்ட அன்பினால், அவரிடம் உள்ள உன்னத அறிவை எழுப்பினார்,
கிரி அவரிடம் ஓடி வந்து அவரது காலில் விழுந்தார்.
குரு தனது அன்பான சீடனைப் பார்த்து “த்வம் பிரம்மவிதிவ் பாஸி போঃ. உத்திஷ்டத்.” ( tvaṁ brahmavidiva bhāsi bhōḥ . uttiṣṭhata .)
“இதோ! அன்பே, நீ அறிவொளியைப் போல் ஒளிர்கிறாய்! இப்போது எழுந்திரு.”
கிரி எழுந்தார், கண்கள் கண்ணீரால் வீங்கி, அவர் தன்னிச்சையாக இயற்றிய ஒரு பாடலைப் பாடினார் :

இப்போது ஸ்ரீ ஷங்கரதேசிகாஷ்டகத்தின் முதல் வசனத்தைப் பார்த்து , அதன் உரைநடையைப் பகுப்பாய்வு செய்வோம்:

மூன்று குழுக்களாகப் பார்க்கும்போது மேற்கண்ட வசனத்தில் உள்ள லாகுகள் மற்றும் குருக்களின் வடிவம் ஒரே மாதிரியாக இருக்கும்:
இரண்டு லகுகள் மற்றும் ஒரு குரு. இந்த வரிசை (UU _ ) ‘स gaṇa ‘ என்று அழைக்கப்படுகிறது.
மேலும் स gaṇa வடிவங்களை மட்டுமே உள்ளடக்கிய ஒரு வசனம் தோடக வர்த்தம் ( தோடக விருத்தம் ) அல்லது தோடக மீட்டரில் இருப்பதாகக் கூறப்படுகிறது
இதனால் ஷங்கரதேசிகாஷ்டகம் பொதுவாக தோடகாஷ்டகம் என்று அறியப்படுகிறது .

சொற்பொழிவு முடிந்ததும், ஆதி சங்கராச்சாரியார் கிரியிடம் அதுவரை கற்றுக்கொண்ட அனைத்தையும் விளக்குமாறு கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, அத்வைத வேதாந்தத்தின் முக்கிய கருத்துக்களை சுருக்கமாக 179 வசனங்களில்
உள்ள ஷ்ருதிசாரஸமுத்தாரணம் ( ஸ்ருதிசாரசமுத்தாரணம் ) என்ற படைப்பை கிரி இயற்றினார்.
தொடக்கத்தில் ஒரு ஆசீர்வாத வசனம் மற்றும் முடிவில் இரண்டு வசனங்கள் தவிர அனைத்து வசனங்களும் மீண்டும் தொட்டக் ( தொடகா ) மீட்டருக்கு அமைக்கப்பட்டன.

இதற்குப் பிறகு, ஆதி சங்கராச்சாரியார் கிரிக்கு சன்யாசம் அளித்து, அவருக்கு தோடகாசார்யா என்று பெயரிட்டார் .
ஸ்கிரி எப்படி தொட்டகாச்சாரியார் ஆனார் என்ற கதை, உங்கள் குருவிடம் உள்ள நம்பிக்கை மற்றும்
பக்தியின் முக்கியத்துவத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு,–வெறும் சாஸ்திரங்களின் அறிவு அல்ல.

ஸ்ரீ தோடக பகவத்பாதாவின் ஸ்ருதி-சார-சமுத்தாரணம்: டாக்டர். மகேஷ் ஜி ஹம்பிஹோலி, ஸ்ரீவித்யாபிரகாஷனம்,
ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சார்யா சம்ஸ்தானம் ஷகதபுரம் ஸ்ரீவித்யாபீடம் ஆகியோரால் திருத்தப்பட்டது.

————-

ஸ்ரீ வேங்கடேச பாகவதம் -ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் அனுபவிக்கும் ஸ்ரீ திருவேங்கடம் —

March 17, 2023
ஸ்ரீ வேங்கடேச த்வாதச நாம ஸ்தோத்திரம்‌ 

வேங்கடேசோ வாஸுதேவ: வாரிஜாஸன வந்தித: 
ஸ்வாமி புஷ்கரிணீவாஸ: சங்கசக்ர கதாதர: 
பீதாம்பரதரோ தேவ: கருடாரூட ஸோபித: 
விஸ்வாத்மா விஸ்வலோகேச: விஜயோ வேங்கடேஸ்வர: 
(வாரிஜாஸன வந்தித: தாமரைமலரை ஆசனமாகக்‌ கொண்ட பிரம்மனால்‌ வணங்கப்பட்டவனே.) 
ஏதத்‌ த்வாதஸ நாமானி த்ரிஸந்த்யம்‌ ய: படேன்‌ நர: 
ஸர்வபாப வினிர்முக்தோ விஷ்ணோஸ்ஸாயுஜ்ய மாப்னுயாத்‌. 
-----------

1. பொய்கையார்‌ பாஞ்சசன்னியம்‌ (சங்கு) 
2. பூதத்தார்‌ கெளமோத$ (கதாயுதம்‌] 
3. பேயார்‌ நாந்தகம்‌ (வாள்‌) 
4-திருமழிசையார்‌ சுதர்சனம்‌ (சக்கரம்‌) 
5. சடகோபர்‌ விஷ்வக்சேனர்‌ (சேனை முதலி) 
6. மதுரகவி வைநதேயர்‌ (கருடன்‌) 
7. குலசேகரர்‌ கெளஸ்துபம்‌ (மணி) 
8. விஷ்ணுசித்தர்‌ கருடன்‌ (வாகனம்‌) 
9. ஆண்டாள்‌ பூமாதேவி (பிராட்டி) 
10. தொண்டரடிப்பொடி வைஜயந்தி (வனமாலை) 
11, திருப்பாணர்‌ ஸ்ரீ வத்ஸம்‌ (மருவு) 
12. திருமங்கை மன்னன்‌ சார்ங்கம்‌ (வில்‌).
----------
பொய்கையாழ்வார்‌ 
1. வேங்கடமே! வானோர்‌. மனச்சுடரைத்‌ தாண்டும்‌ மலை --26-
2. வேங்கடமே! வெண்சங்கம்‌ ஊதியவாய்‌ மரல்‌ உகந்த ஊர்‌, --57
3. வேங்கடமே! மேலகரர்‌ எம்மென்னும்‌ மாலது இடம்‌--36-
4. வேங்கடமே! பேரோத வண்ணர்‌ பெரிது (நின்றதுவும்‌], --39
5. வேங்கடமே! மேலசுரர்‌ கோன்‌ வீழக்‌ கண்டு உகந்தான்‌ குன்று --40-
6. வேங்கடமே! மேலொருநாள்‌ மான்மாய எய்தான்‌ வரை 

வேங்கடத்தாய்‌! நால்வேதப்‌ பண்ணகத்தாய்‌. 
விண்‌ கொடுக்கும்‌ மண்ணளந்த சீரான்‌ திருவேங்கடம்‌. 
வேங்கடமும்‌ நின்றான்‌ என்றால்‌ கெடுமாம்‌ இடர்‌. 
வேங்கடத்து மேயானும்‌ உள்ளத்தின்‌ உள்ளானென்று ஓர்‌. 
வேங்கடத்தான்‌ முன்னொரு நாள்‌ மாவாய்‌ பிளந்த மகன்‌. 
வேங்கடவனையே! வாய்திறங்கள்‌ சொல்லும்‌ வகை. 
வேங்கடத்தான்‌ விண்ணோர்‌ முடி தோயும்‌ பாதத்தான்‌. 
வேங்கடமென்று உளங்கோயில்‌ உள்ளம்‌ வைத்து உள்ளினேன்‌. 

வகையறு நுண்கேள்வி வாய்வார்கள்‌ நாளும்‌ 
புகை விளக்கும்‌ பூம்புனலும்‌ ஏந்தி - திசை திசையின்‌. 
வேதியர்கள்‌ சென்று இறைஞ்சும்‌ வேங்கடமே! வெண்சங்கம்‌ 
ஊதியவாய்‌ மால்‌ உகந்த ஊர்‌.

இப்பாசுரம்‌ ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதக்‌ காட்சிகளைக்‌  கண்முன்‌ கொண்டுவந்து நிறுத்துகிறது. 
ஆழ்வார்கள்‌ காலத்தில்‌  இவ்விதமே திருமலையில்‌ சுப்ரபாதம்‌, தோமாலை சேவை, 
அர்ச்சனை போன்றவை நடந்தன போலும்‌. 
பொய்கையாரின்‌  பாசுரத்தை ஒட்டியே ஸ்ரீ. வேங்கடேச சுப்ரபாதத்திலும்‌ ஒரு 
சுலோகம்‌ அமைந்திருக்கிறது: 

**ஏலாலவங்க கநஸார சுகந்த தீர்த்தம்‌ திவ்யம்‌ வியத்ஸரிதி ஹேமகடேஷு பூர்ணம்‌ 
தருத்வாத்ய வைதிக சிகாமணய: ப்ரஹ்ருஷ்டா: திஷ்டந்தி வேங்கடபதேர்‌ தவ சுப்ரபாதம்‌'* 
இதன்‌ தமிழாக்கம்‌: 

“ஏல முது நடு லவங்க கணசார மணங்கமழும்‌ 
சீலமிகு தெய்வீக திருதீர்த்தம்‌ தலை சுமந்து 
ஞாலமுய்ய வேதமொழி நவற்றுணர்ந்த வேதியர்கள்‌ 
கோலமிகு கோயிலுற்றார்‌, வேங்கடவா எழுந்தருள்வாய்‌! 

உலகளந்த மாயர்‌' என்பது ஏழுமலையானுக்குச்‌  சிறப்பாகப்‌ பொருந்துகிறது. 
'*தாள்‌ பரப்பி மண்தாவிய ஈசன்‌:'  என்று நம்மாழ்வார்‌ திருவேங்கடவனைப்‌ பாடியுள்ளார்‌. 
எல்லோரையும்‌ திருவடியின்‌ கீழிட்டுக்கொண்டும்‌, கானமும்‌ வானரமும்‌ ஆனவற்றுக்கும்‌ முகங்கொடுத்துக்‌ கொண்டும்‌ 
திருமலைமீது நிற்கிறபடியால்‌ திருவேங்கடமுடையானை  உலகளந்த பெருமானாகச்‌ சொல்லப்‌ பொருத்தமுண்டென்பர்‌  ஆசிரியர்கள்‌. ்‌ 

எம்பெருமான்‌ உலகமளக்க திரிவிக்ரமனாக வளர்ந்தபோது, 
அவன்‌ திருமேனிபோல்‌ அவன்‌ திருக்கைகளிலிருந்த ஆயதங்கள்‌ 
ஜந்தும்‌ தங்கள்‌ குணங்களோடு இருமேனிக்குத்‌ தகுமாறு வளர்ந்து  அழகாய்‌ விளங்கின என்றபடி, 

உலகளந்த சோர்வு தீரப்‌ பாற்கடலில்‌ . படுத்திருக்கிறான்‌. 
இளைப்பாறியதும்‌,  திருவேங்கடத்திற்கு வந்து நின்று கொண்டிருக்கிறான்‌! 

தீக்கனல்‌ பறக்கும்‌ சக்கரம்‌, வெப்பம்‌ வீசும்‌ “வெய்ய' கதை, சார்ங்கம்‌; உஷ்ணமும்‌, ஒளியும்‌ உமிழும்‌ 'வெஞ்சுடர்‌' வாள்‌; 
இவற்றிற்கும்‌ வேங்கடத்திற்கும்‌ சூடான பொருத்தமுண்டு. 
“வேம்‌”  என்றால்‌ வெப்பமான, கொளுத்துகின்ற; 
'கடம்‌' என்றால்‌ பாலை,  நீரற்ற மலைப்பிரதேசம்‌. 
*வேங்கடம்‌' என்பது மலைமீது  குளிர்ச்சியாக இருப்பினும்‌, கீழே கடும்‌ வெயில்‌ கொளுத்தும்‌ 
வறண்ட  மலைக்கூட்டங்கள்‌ன உள்ள நிலப்பகுதியில்‌  அமைந்துள்ளது. 
எனவே வேங்கடமும்‌ ஐம்படைகளைப்‌  போன்றே வெப்பம்‌ மிகுந்தது. 
அதே சமயத்தில்‌ மேகம்‌ நிறைந்த  திருமலையுச்சி, பாற்கடலைப்‌ போல்‌ குளிர்ந்திருக்கிறது! 
திருமாலின்‌ வெஞ்சுடர்‌ வாளாகிய பேயாழ்வார்‌ இந்த ஐம்படைப்‌ பாசுரத்தை, “பயிலும்‌ சுடர்‌ ஒளி மூர்த்தி'யாகிய வேங்கடநாதனுக்கு 
முற்றும்‌ பொருந்தும்‌ விதத்திலேயே அமைத்துள்ளார்‌! 
---------
பூதத்தாழ்வார்‌ 
7. வேங்கடமே! விண்ணவர் தம்‌ வாயோங்கு தொல்புகழான்‌ வந்து--25-
8. வேங்கடமே! பன்னாள்‌ பயின்றது மணிதிகழும்‌ வண்தடக்கை--40-
8. வேங்கடமே! யாம்‌ விரும்பும்‌ வெற்பு 
வேங்கடவன்‌ மலரடிக்கே செல்ல அணி வேங்கடவன்‌ பேராய்ந்து. 
திருவேங்கடம்‌ கண்டீர்‌! வான்கலந்த வண்ணன்‌ வரை. 

பேயாழ்வார்‌ 
10, வேங்கடமே! மேலொரு நாள்‌ மண்‌ கோட்டுக்‌ கொண்டான்‌ மலை. --45
11-வேங்கடமே! மேலொரு நாள்‌ மண்மதியில்‌ கொண்டுகந்தான்‌ வாழ்வு. --50-
12. வேங்கடமே! மேல்நாள்‌ விளங்கனிக்குக்‌ கன்றெறிந்தான்‌ வெற்பு.--68
13-. வேங்கடமே! மேல்நாள்‌ குழக்கன்று கொண்டு எறிந்தான்‌ --குன்று. --71
14. வேங்கடமே! மேலை இளங்குமரர்‌ கோமான்‌ இடம்‌. --78
15. வேங்கடமே! மேலொருநாள்‌ தீங்குழல்‌ வாய்வைத்தான்‌  சிலம்பு.--88-
நால்பால்‌ வேதத்தான்‌ வேங்கடத்தான்‌. 
வேங்கடம்‌ என்‌ சிந்தை அனந்தன்‌ இறைபாடியாய இவை. 
வேங்கடமும்‌ இடமாகக்‌ கொண்டார்‌ கோபாலகன்‌. 
வேங்கடத்தான்‌ உள்ளத்தின்‌ உள்ளே உளன்‌. 

திருமழிசையாழ்வார்‌. 
18-வேங்கடமே! வானோர்க்கும்‌ மண்ணோர்க்கும்‌ வைப்பு. --நான்முகன் -45
19- வேங்கடமே! நாடு வளைத்து ஆடுதுமேல்‌ நன்று. 
20. வேங்கடமே! விண்ணோர்‌ தொழுவதும்‌ மெய்ம்மையால்‌ 
21. வேங்கடமே! மெய்வினை நோய்‌ தீர்ப்பதுவும்‌. 
22. வேங்கடமே! வானவரைக்‌ காப்பான்‌ மலை.
சென்று வணங்குமினோ சேணுயர்‌ 
வேங்கடமும்‌ தாம்‌ கடவார்‌ தண்துழாயார்‌.

வேங்கடத்தான்‌ மண்ணொடுங்கத்தான்‌ ௮ளந்த மன்‌ :
.பண்டெல்லாம்‌ வேங்கடம்‌ பாற்கடல்‌ வைகுந்தம்‌.
வேங்கடம்‌ தன்‌ குடங்கை நீரேற்றான்‌ தாழ்வு.

வேங்கடம்‌ பாடும்‌ மால்கிடந்த நீள்கடல்‌ புகும்‌.

வேங்கடவனையே கண்டு வணங்கும்‌ களிறு.

வேங்கடத்து நின்றான்‌ குரைகழலே கூறுவதே நலம்‌.

28. வேங்கடத்துள்‌ நின்று குடந்தையுள்‌ கடந்த மாலும்‌  அல்லையே? 
24. வேங்கடம்‌ மாலபதமே அடைந்து நாளும்‌ உய்ம்மினோ. 
24, வெறுப்பனோ வேங்கடத்து மேயானை. 
23. அழைப்பன்‌ திருவேங்கடத்தானைக்‌ காண. 
26. வேங்கடம்‌ பாடினேன்‌ வீடாக்கி நிற்கின்றேன்‌. 
27. வேங்கடவா! என்னுள்ளம்‌ புகுந்தாய்‌ திருவேங்கடமதனைச்‌ சென்று. 
சென்று வணங்குமினோ சேணுயர்‌ வேங்கடத்தை. 
வேங்கடத்தானை கங்குல்‌ புகுந்தார்கள்‌ காப்பணிவான்‌ 
போம்‌! குமரன்‌ நிற்கும்‌ பொழில்‌ வேங்கடமலைக்கே! 
கானமும்‌ வானரமும்‌ வேடும்‌ உடை வேங்கடம்‌. 
விண்ணாள வேண்டுவார்‌ வேங்கடத்தான்‌ பால்‌ வைத்தாரே பன் மலர்கள்‌.
நம்மாழ்வார்‌ 
23. வேங்கடமே! அருமா மாயத்து எனதுயிரே! எனதுடலே! --10-7-6-

-----------

அருள்‌ மிகுத்ததொரு வடிவாய்க்‌ கச்சிதன்னில்‌ 
ஐப்பசி மாதத்‌ திருவோணத்து நாளில்‌ 
பொருள்‌ மிகுத்த மறை விளங்கப்‌ புவியோர்‌ உய்யப்‌ 
பொய்கைதனில்‌ வந்து உதித்த புனிதா! முன்னாள்‌- 
இருளதனில்‌ தண்கோவல்‌ இடைகழிச்‌ சென்று 
இருவருடன்‌ நிற்கவும்‌ மால்‌ இடை நெருக்கத்‌ 
திருவிளக்காம்‌ எனும்‌ வையந்தகளி நூறாம்‌ 
செழும்பொருளை எனக்கு அருள்‌ செய்திருந்த நீயே. (பிரபந்த சாரம்‌, 8) 

மாமயிலைப்‌ பதியதனில்‌ துலா மாதத்தில்‌ 
வரும்‌ சதயத்து அவதரித்துக்‌ கோவலூரில்‌ 
தூமுனிவர்‌ இருவருடன்‌ துலங்க நின்று 
துன்னிய பேரிருள்‌ நீங்கச்‌ சோதி தோன்ற 
சேமமுடன்‌ நெடுமாலைக்‌ காணப்‌ புக்குத்‌ 
திருக்கண்டேன்‌ என உரைத்த தேவே! உன்றன்‌- 
பாமருவு தமிழ்மாலை நூறு பாட்டும்‌ ்‌ 
பழவடியேனுக்கு அருள்செய்‌ பரம நீயே, (பிரபந்த சாரம்‌, 4)
திருக்கோவலூர்‌ இடைகழியில்‌ முதலாழ்வார்கள்‌ ஏற்றிய  ஞானத்தமிழ்‌ விளக்கின்‌ ஒளியில்‌ ஈடுபட்டு அவர்களை ஸ்ரீதேசிகன்‌ 
புகழ்ந்தருனின பாசுரமாவது: 

““பாட்டுக்குரிய பழையவர்‌ மூவரைப்‌ பண்டொருகால்‌ 
மாட்டுக்கு அருள்தருமாயன்‌ மலிந்து வருத்துதலால்‌ 
நாட்டுக்கு இருள்செக நான்மறை அந்தி நடைவிளங்க 
வீட்டுக்கு இடைகழிக்கே வெளிகாட்டும்‌ இம்மெய்விளக்கே'”,
சகல வேதங்களின்‌ சாரமானது வேதமாதா எனப்படும்‌ காயத்ரீ  மந்திரம்‌. 
அதற்கும்‌ தாயாயிருப்பது திருவெட்டெழுத்தாகிய  நாராயண மந்திரம்‌. 
அதற்கும்‌ மூலமாயிருப்பது 'ஓம்‌' என்னும்‌ பிரணவ மந்திரம்‌. 


“நான்மறை அந்தி நடை விளங்க” 
முதலாழ்வார்கள்‌ அருளிச்செய்த திருவந்தாதிகளின்‌ முதற்‌ பாசுரங்களை, காயத்ரீ,  எட்டெழுத்து, 
பிரணவ மந்திரங்களை உள்ளடக்கிபவைகளாக  . 
மேற்கூறிய  மந்திரங்கள்‌ அனைத்தும்‌ மூன்று பதங்களாகப்‌ பிரியக்‌  கூடியவையாதலால்‌, 
ஒவ்வொரு ஆழ்வார்‌ பாசுரமும்‌ ஒரு  பதத்தைக்‌ கூறுவதாக, 8ழ்க்கண்டவாறு பொருள்‌ கூறப்படும்‌: 

ஆழ்வார்‌... பொய்கையார்‌ பூதத்தார்‌ பேயார்‌ 
பாசுரம்‌ வையந்தகளி அன்பேதகளி திருக்கண்டேன்‌ 
பிரணவம்‌ ௮. உ ம 
உலகம்‌ பூ: புவ: ஸுவ: 
வேதம்‌ ர்க்‌ யசார்‌ சாம 
சாதனை ச்ரவணம்‌ மனனம்‌ சாட்க்ஷாத்காரம்‌ 
பக்திநிலை பரபக்தி பரஞானம்‌ பரமபக்தி 
திருமந்திரம்‌ ஓம்‌ நமோ நாராயணாய 
வேங்கடேச ஓம்‌ நமோ வேங்கடேசாய 

மந்திரம்‌ ்‌ 
காயத்ரீ தத்‌ ஸவிதுர்‌ பர்கோ தயோயோந:  வரேண்யம்‌ தேவஸ்ய ப்ரசோதயாத்‌ 
தீமஹி நாராயண நாராயணாய வாச்தேவாய தன்னோ  காயத்ரீ வித்மஹே தீமஹி விஷ்ணு ப்ரசோதயாத்‌ 

ஓம்‌' என்பதை தமிழில்‌ 'வோம்‌' என்று எழுதினாலும்‌  உச்சரிப்பு அநேகமாக ஒன்றே; 
“வையம்‌' என்பதை“வோம்‌”  என்பதன்‌ தரிபாகக்‌ கொள்ளலாம்‌.
ஒங்காரத்திலிருந்து பிறந்ததே வையம்‌ (உலகம்‌).
வையம்‌' என்கிற சொல்‌ வைகுந்தம்‌, வேங்கடேசன்‌  என்பவை போலவே வகாரத்தில்‌ துவங்குகிறது. 
பொய்கையார்‌  வேங்கடேச பக்தராகையால்‌ வகாரத்தை முதலிட்டுப்‌ பாடினார்‌ 

**வையம்‌' என்றால்‌ உலகம்‌, பூவுலகு என்று பொருள்‌.
ருக்‌  வேதத்திலிருந்து பூ: என்னும்‌ சப்த விசேஷம்‌ தோன்றியது என்பர்‌. 
எனவே வையந்தகளி ருக்‌ வேதம்‌, பூ: இரண்டையும்‌ குறிப்பதாகக்‌  கொள்ளலாம்‌.
ஓம்‌" என்கிற ப்ரணவம்‌ ௮, ௨, ம என்று விரியும்‌. 
வையம்‌,  வார்கடல்‌, வெய்ய கதிரோன்‌ போன்ற ஸ்தூலப்‌  பொருட்களடங்கிய சகல ஐகத்துக்கும்‌ காரணன்‌: நாராயணன்‌.
“சூட்டினேன்‌' என்பதில்‌ 'நான்‌' என்னும்‌ சொல்‌  மறைந்துள்ளது; “நான்‌ சூட்டினேன்‌' என்று கூறத்‌ தேவையில்லை.
“நான்‌” என்று கூறும்‌ மகாரப்‌ பொருளான  ஜீவாத்மா, அகாரப்‌ பொருளான நாராயணனுக்கு அடிமை என்கிற 
சேஷத்வத்தை ''சுடராழியான்‌ அடிக்கே சூட்டினேன்‌'' என்பது  கூறுகிறது. 
ப்ரணவத்திலுள்ள உகாரம்‌ ஏவகாரம்‌, தமிழில்‌ “ஏ:  என்பது போன்றது. ''நாராயணனுக்கே நான்‌ அடிமை” என்பதே 
௮, ௪, ம என்று விரியும்‌ ஓங்காரத்தின்‌ உட்பொருள்‌. இதையே 
வையந்தகளி கூறுகிறது. ஏவகாரம்‌ “அடிக்கே! என்பதில்‌ உள்ளது. 

**இடராழி நீங்குக!” என்பது வேங்கட பதத்தின்‌  பொருளை நேரடியாக விளக்குகிறது. 
வேம்‌ * கடம்‌ - வேங்கடம்‌. -வேம்‌ - எரிக்கப்படுகின்ற, நீக்கப்படுகின்ற, கடம்‌ - பாவங்கள்‌, 
இடராழி. இடராழியை நீக்குவது வேங்கடம்‌. 

'"இடராழி நீங்குக”! என்பது வேங்கட பதத்தின்‌ பொருளாக  அமைந்திருப்பதால்‌, 
சுடராழியான்‌ அடியை, திருவேங்கடவனின்‌  அடியாகக்‌ கொள்ளத்‌ தடையில்லை. 
உலகனைத்தையும்‌ தன்‌  அடிக்குள்‌ வைத்துத்‌ திருமலையில்‌ நிற்பதால்‌ திருவேங்கடவனின்‌  திருவடிக்குத்‌ தனிச்சிறப்புண்டு.
நம்மாழ்வாரும்‌ 
'“திருவேங்கடத்தானே! புகலொன்றில்லா அடியேன்‌ உன்‌ அடிக்8ழ்‌  அமர்ந்து புகுந்தேனே”" என்
ஏழுமலையானின்‌  திருவடிகளிலேயே சரணமடைகிறார்‌. 
“வேங்கடவன்‌  திருமலையை விரும்புமவன்‌ வாழியே!”', என்கிறது பொய்கையாழ்வாரின்‌ வாழித்திருநாமம்‌.
ஸ்ரவணம்‌ கீர்த்தனம்‌ விஷ்ணோ: ஸ்மரணம்‌ பாதசேவனம்‌ 
அர்ச்சனம்‌ வந்தனம்‌ தாஸ்யம்‌ ஸக்யம்‌ ஆத்மநிவேதனம்‌. 

வையந்தகளி, அன்பேதகளி என்னும்‌ முதலிரண்டு  ஆழ்வார்களின்‌ பாசுரங்கள்‌ பிரகலாதன்‌ கூறும்‌ ஒன்பதுவித பக்தி 
சாதனைகளைக்‌ குறிப்பிடுகின்றன; 
''திருக்கண்டேன்‌'' என்னும்‌  மூன்றாவது ஆழ்வாரின்‌ பாசுரம்‌ பகவானை நேரில்‌ கண்ட  பேரின்ப நிலையை விவரிக்கிறது. 

““வையந்தகளி'* பாசுரத்தில்‌ 
'“சொன்மாலை'' என்பது  விஷ்ணோ: ஸ்ரவணம்‌ (பகவானைப்‌ பற்றிக்‌ கேட்டல்‌), கீர்த்தனம்‌ 
(அவன்‌ புகழ்‌ பாடுதல்‌); ''சுடராழியான்‌ அடிக்கே சூட்டினேன்‌'' என்பது ஸ்மரணம்‌ (பகவானை சதா நினைவு கூறுதல்‌); 
“அடிக்கே” என்பது வந்தனம்‌, தாஸ்யம்‌ (அடிமையாய்‌ இருத்தல்‌), பாதஸேவனம்‌; 
சொன்மாலை சூட்டினேன்‌ என்பது அர்ச்சனம்‌ (பூஜித்தல்‌); . ்‌ 
காயத்ரீ மந்திரம்‌: 
ஓம்‌ பூர்புவஸ்ஸுவ:  தத்‌ ஸவிதுர்‌ வரேண்யம்‌ 
பர்கோ தேவஸ்ய தீமஹி  தியோ யோ ந: ப்ரசோதயாத்‌. 

பூ: புவ: ஸுவ: ஆகிய மூன்று சொற்கள்‌ பூலோகம்‌, புவர்லோகம்‌, சுவர்க்கம்‌ ஆகிய மூவுலகங்கள்‌. 
ய: (யோ) - யார்‌; ந: - நம்முடைய; திய: - அறிவை; 
ப்ரசோதயாத்‌ - தூண்டுகிறாரோ; தத்‌ - அந்த; தேவஸ்ய - 
சுடருடைய; ஸவிதுர்‌ - கடவுளின்‌; வரேண்யம்‌ - மேலாண, பர்க: 
- ஒளியை; தீமஹி: - தியானிப்போமாக. 

காயத்ரீமின்‌ பொருள்‌: 
யார்‌ நம்‌ அறிவைத்‌ தூண்டுகிறாரோ, அந்த சுடர்வீசும்‌ கடவுளின்‌ மேலான ஒளியைத்‌ தியானிப்போமாக. 

பிரம்ம காயத்ரீ அல்லது சூரிய காயத்ரீ எனப்படும்‌ இதுவே 
பல்லாயிரம்‌ ஆண்டுகளாக பாரத நாட்டின்‌ தேயப்‌  பிரார்த்தனையாக இருந்து வருகிறது. 
இதற்கு ரிஷி விசுவாமித்திரர்‌; 
தேவதை, ஸவிதா (சூரியன்‌, பரமாத்மா). 
தத்‌ ஸவிதுர்‌ வரேண்யம்‌: 1 

வையந்தகளியில்‌ பொய்கையாழ்வார்‌ “ஸவிதா'' என்பதை  நேரடியாகத்‌ தமிழில்‌ 'கதிரோன்‌' என்று குறிப்பிட்டுள்ளதால்‌, 
இப்பாசுரம்‌ காயத்ரீ மந்திரத்தின்‌ முதற்பதத்தை விளக்குவதாகக்‌ கொள்ளலாம்‌.
'“தேவஸ்ய ஸவிதுர்‌”! (சுடருடைய கடவுளின்‌) என காயத்ரீயில்‌ வருவதை ஆழ்வார்‌. சுடர்‌ ஆழியான்‌! எனக்‌ கூறுவதோடு ஒப்பிடலாம்‌. 
'*தத்‌ ஸவிதுர்‌ வரேண்யம்‌'' என்பதே ரிக்வேதமானது. 

விஷ்ணுகாயத்ரீ: மிகவும்‌ பிரசித்தி பெற்ற காயத்ரீ மந்திரத்தையொட்டி, 
பற்பல இந்துமத தெய்வங்களுக்கும்‌ உரிய காயத்ரீ மந்திரங்கள்‌ தோன்றின. 
மஹா நாராயண உபநிஷதத்தில்‌ விஷ்ணுவிற்குத்‌ தரப்பட்டுள்ள நாராயாண காயத்ரீ இது: 
நாராயணாய வித்மஹே, வாசுதேவாய தீமஹி தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்‌” 
பொகுள்‌: நாராயணனை அறிவோமாக, அதற்காக, வாசுதேவனை தியானிப்போமாக, 
அந்த தியானத்தில்‌, விஷ்ணு நம்மைத்‌ தூண்டுவாராக. 
' நாராயணாய வித்மஹே: உலகனர்‌ நாராயணனை அறிந்து உய்வடைய வேண்டுமென்றே 
பொய்கையார்‌ 'வையந்தகளி' என்று தொடங்கி நூறு பாசுரங்கள்‌ அருளிச்‌ செய்தார்‌. 
'“சுடராழியான்‌ அடிக்கே சூட்டினேன்‌ சொன்மாலை” என்கிற அடியில்‌ 
'*நாராயணனை அறிவோமாக'' என்னும்‌ ஆழ்வாரின்‌ நோக்கம்‌ தெரிகிறது. 
வையந்தகளியின்‌ இயற்கை வர்ணனை: காயத்ரீ மந்திரம்‌ சூரியோதம்‌, உச்சி, அஸ்தமனம்‌ ஆகிய மூன்று சந்தி காலங்களிலும்‌ ஜபிக்கப்படும்‌. 
பொய்கையார்‌ வைணவத்தின்‌ விடிவெள்ளி போன்றவர்‌. 
வையந்தகளி சூரியோதயத்தை வர்ணிப்பதுபோல்‌ அமைந்துள்ளது. 
திருவேங்கடமுடையானே, * வேங்கடகிருஷ்ணன்‌, பார்த்தஸாரதி என்கிற திருநாமங்களுடன்‌ எழுந்தருளியிருக்கும்‌ திவ்விய தேசம்‌, 
சென்னையிலுள்ள திருவல்லிக்கேணி. 
முதலாழ்வார்கள்‌ மூவரும்‌: திருமழிசையாழ்வாருடன்‌ இங்கு வந்து எம்பெருமானை சேவித்ததாகக்‌ கூறுவர்‌. 
திருவல்லிக்கேணியில்‌ புகழ்பெற்ற மெரீனா கடற்கரையில்‌  
விடிகாலை, சூரியன்‌ உதயமாகும்‌ நேரம்‌. நம்‌ காலடியில்‌ கடல்மண்‌, வையம்‌, பூமி. சற்று நிமிர்ந்து பார்த்தால்‌ 
வார்கடல்‌, விரித்து, அலைபாயும்‌ சமுத்திரம்‌. கடல்பரப்பின்‌ எல்லை வளைந்து தென்படுகிறது. 
மெதுவாக சூரியன்‌, இளஞ்சிவப்பு நிறத்துடன்‌, கடலின்‌ மறுகோடியில்‌ எழுகிறது. 
' இந்த அற்புதமான இயற்கைக்‌ காட்சியைத்தான்‌ ஆழ்வார்‌ சிறந்த உவமையாகப்‌ பயன்படுத்தியுள்ளார்‌.

நம்‌ காலுக்கடியிலுள்ள பூமி, மண்ணாலான அகல்‌ விளக்கைப்‌  போலுள்ளது; 
அதற்கு மேலேயுள்ள கடல்‌, உருக்கிய நெய்போல்‌  இளமஞ்சள்‌ நிறத்துடன்‌ காணப்படுகிறது. 
அதற்கும்‌ மேலே, உதய  சூரியன்‌ விளக்கைப்போல்‌ ஒளி வீசுகிறது. 
இந்த இயற்கைக்‌  காட்சியில்‌ ஒன்று கவனிக்க வேண்டும்‌, திரி இல்லை!
எனவே  ““வையந்தகளி'' பாசுரத்திலும்‌ திரி இல்லை; 
ஆனால்‌ அடுத்து  பூதத்தார்‌ பாடிய ''அன்பே தகளி'' பாசுரத்தில்‌ இரி உண்டு|
எனவே 
““வையந்தகளி'' விடிகாலையில்‌ செய்யப்படும்‌ சந்தியாவந்தனம்‌ போன்றது. 

காயத்ரீ மந்திரத்தின்‌ ரிஷியான விசுவாமித்திரரே  பாலசூரியனைப்‌ போன்ற ஸ்ரீ ராமச்சந்திரனை, 
'“கெளசல்யா  சுப்ரஜா ராம, பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே'* (கோசலையின்‌ உத்தம 
புத்திரனான ராமனே! கிழக்கில்‌ சூரியன்‌ உதயமாகிவிட்டது) என்று எழுப்பியதாக வால்மீகி ராமாயணம்‌ கூறுகிறது. 
உலகிற்கு காயத்ரீயை உபதேசித்த விசுவாமித்திர ரிஷியே, ஸ்ரீ வேங்கடேச  சுப்ரபாதத்தின்‌ முதலடியையும்‌ நமக்கு வழங்கியிருக்கிறார்‌! 

தொண்டரடிப்‌ பொடியாழ்வார்‌ அருளிச்‌ செய்த  திருப்பள்ளியெழுச்சியும்‌-- 

“கதிரவன்‌ குணதிசைச்‌ சிகரம்‌ வந்து அணைந்தான்‌ 
கன இருள்‌ அகன்றது காலையம்பொழுதாய்‌'' 
என்று சூரியோதய வர்ணனையுடன்‌ துவங்குவதும்‌ இங்கு  ஒப்பு நோக்கத்தக்கது. 

“பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே'' என்பதை ''வையந்தகளியா,  வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோன்‌ விளக்காக”! என்றும்‌; 
**கெளசல்யா சுப்ரஜா ராம'' என்பதை ''செய்ய சுடராழியான்‌'"  என்றும்‌ ஆழ்வார்‌. அருளிச்‌ செய்திருப்பதாகக்‌ கொள்ளலாம்‌. 
வையந்தகளி ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதமாகி விடுகிறது!
----------------
இந்த (பொய்கையாரின்‌ வையந்தகளி] பாசுரத்தின்‌  மகிமையால்‌ அந்த இடைகழியில்‌ பளிச்சென்று ஏதோ ஒரு திரை 
விலகி எப்படியோ ஒளியும்‌ வந்து விடுகின்றது. புறத்தே கவிந்து  கிடக்கும்‌ இருளும்‌ நீங்கி விடுகின்றது. 
அதே சமயத்தில்‌  பூதத்தாழ்வாரும்‌ ஞான விளக்கொன்றை ஏற்றுகின்றார்‌. 
அன்பை  அகலாகவும்‌, பொங்கி வரும்‌ ஆர்வத்தை நெய்யாகவும்‌,  
சிந்தையைத்‌ திரியாகவும்‌ கொண்டு ஞான விளக்கை ஏற்றுகின்றார்‌ பூதத்தார்‌.
இந்த விளக்கினால்‌ அகத்தே மண்டிக்கிடந்த உள்‌  இருட்டும்‌ நீங்கி விடுகின்றது. 

உடனே அந்தப்‌ பேயாழ்வார்‌  நான்காவது ஆளைக்‌ கண்டுபிடித்து விடுகின்றார்‌. 

“அன்பே தகளி”” விளக்குபவை: ்‌ 
௮ன்பேதகளி, உகாரம்‌, நமோ (நம: பதம்‌), “பர்கோ 
தேவஸ்ய தீமஹி'' என்டுற காயத்ரீ மந்திரத்தின்‌ இரண்டாவதுபதம்‌, 
வாசுதேவாய தீமஹி என்னும்‌ பதம்‌ ஆகியவற்றை விளக்குவதாகக் கொள்ளலாம்.

அன்பே தகளியில்‌, ஆழ்வார்‌ ''நாரணற்கு'' என்று  கூறியிருப்பதை ''நாராயணனுக்கே, நாராயணனுக்கு மட்டுமே”! 
என்று பொருள்‌ கொள்ளவேண்டும்‌. 
எனவே அன்பேதகளி, உகார  பத அர்த்தத்தை விளக்குகிறது எனலாம்‌. உகாரத்தால்‌  அந்நியசேஷத்வம்‌ கழிக்கப்படுகிறது. 

லக்ஷ்மியை நாராயணன்‌ திருமார்பில்‌ தரிக்கிறான்‌. பிராட்டிக்கு  “உ என்று திருநாமம்‌. 
'*நாரணற்கு!' என்பதால்‌ பிராட்டிக்கும்‌  சேர்த்தே ஞானத்தமிழ்‌ பாடியிருக்கிறார்‌ பூதத்தார்‌

அடுத்துப்‌ பாடிய பேயாழ்வார்‌ “'திருக்கண்டேன்‌'"  (லக்ஷ்மிப்‌ பிராட்டியைக்‌ கண்டேன்‌) என்றே துவங்குவதால்‌ இது  உறுதியாகிறது. 

நம: பதம்‌: 
“ஓம்‌ நமோ நாராயணாய”, ஓம்‌ நமோ வேங்கடேசாய”  என்னும்‌ மந்திரங்களின்‌ இரண்டாவது பதம்‌. 
ம: என்றால்‌ எனது”!  என்கிற மமகாரம்‌, ஆத்மா தனக்குரியது என்னும்‌ செருக்கு. 
“ந!  என்றால்‌ '“இல்லை”"', மமகாரத்தை இல்லை என்கிறது. 
அகங்கார, மமகாரங்களே (யான்‌, , எனது என்னும்‌ செருக்கு) ஆத்மாவுக்கு  விரோதி, 

அன்பே தகளியில்‌, **நாரணற்கு ஞானத்தமிழ்‌ புரிந்த நான்‌”! 
என்று வருவதால்‌ நான்‌, எனது என்பதெல்லாம்‌ நாராயணனுக்கே அடிமை என்பது தெளிவாகிறது.
இது நம: பதார்த்தமாக உள்ளது  எனலாம்‌
நமப்பதம்‌ சப்தத்தாலும்‌, அர்த்தத்தாலும்‌ உபாயத்தை  அறிவிக்கிறது. நாராயணனே உபாயம்‌ என்பது இதன்‌ பொருள்‌. 
இது ஸ்வசேஷத்தையும்‌, பகவத்‌ சேஷத்வத்வத்துக்கு இசையாமையையும்‌ கழிக்கறது

அன்பேதகளியில்‌, ஞானச்சுடர்‌ : தேவஸ்ய, ஒளியுடைய; 
நாரணற்கு - .ஸவிது:, கடவுளின்‌; விளக்கேற்றிய - பர்‌க;, ஒளியை. 

“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக 
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி'” 
என்னும்‌ முதலிரண்டு அடிகள்‌ - தீமஹி, தியானிப்போமாக என்று 
நேரடியாகப்‌ பொருள்படுவது இன்புறத்தக்கது. 

“பர்கோ தேவஸ்ய தீமஹி'' என்பதன்‌ விளக்கமாகவே 
"அன்பே தகளி'' அமைந்திருக்கிறது என்றால்‌ மிகையாகாது. 

வாசுதேவாய தீமஹி: 
இது விஷ்ணு காயத்ரீபின்‌ இரண்டாவது பதம்‌. 
*'வாசுதேவனை தியானிப்போமாக”* என்று பொருள்‌. 
மஹாநாராயண உபநிஷத்தில்‌ வரும்‌ நாராயண காயத்ரீக்கு  உரையெழுதிய பட்டபாஸ்கரர்‌, “வாசுதேவன்‌” என்பதற்கு 
“எல்லா ஜீவராசிகளிலும்‌ அந்தர்யாமியாக வசிப்பவன்‌'” என்று பொருள்‌ கூறுகிறார்‌. 

அன்பேத்களியில்‌, பூதத்தாழ்வார்‌ தமது இதயக் குகையிலே  அந்தர்யாமியாக எழுந்தருளியிருக்கும்‌ வாசுதேவனையே 
தியானித்து, ஞானச்சுடர்‌ விளக்கேற்றினார்‌ என்க. 


பிரகலாதன்‌ விவரிக்கும்‌ பக்து சாதனைகள்‌: 
வையந்தகளியில்‌ ''சுடராழியானடிக்கே சூட்டினேன்‌''  என்றார்‌. திருவடியைப்‌ பேசியதால்‌ இது தாஸ்யம்‌ ஆயிற்று. 
அன்பேதகளியில்‌, :*நாரணற்கு'' என்றுள்ளது, திருவடி கூறப்படவில்லை. 
மற்றும்‌, அன்பு, ஆர்வம்‌, இன்புருகு சிந்தை ஆகிய சொற்கள்‌ 'ஸக்யம்‌'' (பகவானிடம்‌ நட்பு) என்னும்‌ 
நெருங்கிய உறவைக்‌ கூறுவது போலுள்ளன. 
''நன்புருக'' என்பது  ஞானமய்மான ஆத்மா பகவதனுபவத்தில்‌ உருகுவதைக்‌ குறிப்பிடுவதால்‌, இது ''ஆத்ம நிவேதனம்‌”” ஆயிற்று. 

எனவே வையந்தகளி பிரகலாதன்‌ கூறும்‌ சாதனைகளில்‌ முதல்‌ ஏழையும்‌, 
௮ன்பேதகளி கடைசி இரண்டையும்‌ பற்றிப்‌ பேசுகின்றன. 

ஞானச்சுடர்‌ விளக்கேற்றினேன்‌ நாரணற்கு: -இதற்குப்‌ ''ப்ரபந்தரக்ஷை'' உரை: 
நாரணன்‌ விஷயமான விளக்கு நாராயண சப்தத்தின்‌ பொருளான அவனது ஸ்வரூப 
ரூப குண விபவாதிகளிலெங்கும்‌ பரவுகின்றது பற்றி ''ஞானச்சுடர்‌ விளக்கு" என்றது. 
ஞானச்சுடர்‌ என்பதற்கு ப்ரஞானமென்ற  விளக்கு என்ற பொருள்‌ முன்னோர்‌ இசைந்ததன்று. 
பர ஞானம்‌  நாரணனின்‌ அனுக்ரஹத்தாலே தானே வருவதாம்‌. அதை ஏற்றுவது  வேறொருவராகார்‌. 
அதற்கு வேண்டும்‌ பரபக்தியை ஏற்றுகிறார்‌ 
எல்லார்‌ நெஞ்சிலும்‌ ஆழ்வார்‌. “*ஏற்றினேன்‌'' என்று இறந்த  காலமாக ப்ரபந்தத்தன்‌ தொடக்கத்திலேயே அருளினது 
ப்ரபந்தத்தை எம்பெருமான்‌ நன்கு முடித்தருள்வது திண்ணமெனக்‌  கண்டதனால்‌ என்க. 

பொய்கையாரின்‌ '*வையந்தகளி”' பாசுரமும்‌, பூதத்தாரின்‌  “அன்பே தகளி'' பாசுரமும்‌ 
தகளி, நெய்‌, விளக்கு ஆகியவற்றுடன்‌  பக்தர்களுக்குக்‌ கலங்கரை விளக்கம்‌ போல்‌ வழிகாட்டுகின்றன. 
இவ்விரண்டு ஒளிவீசும்‌ பாசுரங்களையும்‌ இங்கே ஒப்பு நோக்குவோம்‌. 

வையந்தகளி: அன்பேதகளி: 

1. புறவிளக்கு; சூரியனை விளக்காக்கியது--அக விளக்கு; ஆத்மாவை விளக்காக்கியது
2. புறவிருளைக்‌ களைகிறது. ௮௧ இருளை அற்றுவறைது. 
3. திரி இல்லாமலே சிந்தையையே திரியாகத்‌ விளக்கேற்றினார்‌! திரித்து விளக்கேற்றினார்‌! 
4. மறைமுகமாக -ஆழியான்‌'' என்றார்‌.பரபக்தியைக்‌ கூறுகிறது;  ''சுடர்‌ நேரடியாக '“நாரணற்கு”* -பரஞானத்தைக்‌ கூறுகிறது;
எனவே அடிக்கே! என்றார்‌. 
தமிழ்‌ பற்றிப்‌ பேசவில்லை. 
“ஞானச்சுடர்‌' என்றார்‌. 
“'ஞானத்தமிழ்‌'' என்று  தமிழ்த்தாய்‌ வாழ்த்தாகவும்‌  துவங்கினார்‌. 

பேயாழ்வாரின்‌ “திருக்கண்டேன்‌”! 
பூதத்தாழ்வார்‌. ''அன்பேதகளி'' என்று தொடங்கி நூறு பாசுரங்கள்‌ பாடி முடித்ததும்‌, 
மூன்றாவது ஆழ்வாராகிய பேயார்‌ “*“திருக்கண்டேன்‌'' என்று கம்பீரமாகத்‌ துவங்கப்‌ பாடலானார்‌: 
திருக்கண்டேன்‌ பொன்மேனி கண்டேன்‌ திகழும்‌ 
அருக்கன்‌ அணிநிறமும்‌ கண்டேன்‌ - செருக்கிளரும்‌ 
பொன்னாழி கண்டேன்‌ புரிசங்கம்‌ கைக்கண்டேன்‌ 
என்னாழி வண்ணன்பால்‌ இன்று. 
திரு - ஸ்ரீ, மஹாலட்சுமி, பெரியபிராட்டியார்‌; அருக்கன்‌ - சூரியன்‌; செரு - போர்‌; கிளரும்‌ - கிளம்பும்‌; 
ஆழி - சுதர்சனச்‌ சக்கரம்‌; புரிசங்கம்‌ - வலம்புரிச்‌: சங்கு, பாஞ்சசன்னியம்‌; 
ஆழி வண்ணன்‌ - கடல்நிறக்கடவுள்‌, விஷ்ணு. 

என்னுடைய கடல் வண்ணனான ஸ்ரீநிவாஸனிடம்‌ இன்றைய தினம்‌ பெரிய பிராட்டியாரை சேவிக்கலானேன்‌. 
பொன்னிறமான  திருமேனியைக்‌ கண்டேன்‌. பிரகாசிக்கும்‌ சூரியன்‌ போன்ற அழகிய நிறத்தையும்‌ கண்டேன்‌. 
போர்க்களத்தில்‌  சீறி யெழுந்து  செயல்படும்‌ அழகிய சுதர்சனச்‌ சக்கரத்தையும்‌ கண்டேன்‌. 
மற்ற  திருக்கையில்‌ வலம்புரிச்‌ சங்கையும்‌ சேவிக்கப்‌ பெற்றேன்‌. 

எல்லா உலகங்களும்‌ சரீரமாகக்‌ கொண்ட பெருமானைக்‌  காணும்‌ காட்சியிலே எல்லாவற்றையும்‌ கண்ட ஆழ்வார்‌ அன்பின்‌ 
மிகுதியாலே அவனுடைய பெருமைக்குக்‌ காரணமான சிலவற்றை “அது கண்டேன்‌, இது கண்டேன்‌'' என்கிறார்‌. 

பேயாழ்வார்‌ முதன்‌ முதலாகப்‌ பெரிய பிராட்டியாரின்‌ ௮ருள்‌  வடிவத்தைக்‌ காண்கின்றார்‌; 
பொன்மேனியையுடைய அன்னையாருடன்‌ கூடிய எம்பெருமானின்‌ மரகதத்‌ திருமேனி 
இப்போது பொன்மேனியாகவே காட்சியளிக்கிறது. 
மரகத மலையில்‌ உதித்து ஒளிவீசி வரும்‌ இளஞாயிறு போலத்தோன்றி 
இருவரது ஒளியையும்‌ -- பொன்‌ ஒளியும்‌, மரகத ஒளியும்‌ கலந்து 
ஒளிர்கின்ற அந்தக்‌ கலப்பு ஒளியையும்‌ -- காண்கின்றார்‌; 
'திகழும்‌  அருக்கன்‌ ௮ணிநிறமும்‌ கண்டேன்‌! என்பதால்‌ இது பெறப்படுகின்றது. 
'*இருவர்‌ சேர்த்தியால்‌ பிறந்த முதாய சோபை”! என்பது பெரியவாச்சான்‌ பிள்ளையின்‌ வியாக்கியான விளக்கம்‌. 

“திருக்கண்டேன்‌' விளக்குபவை: 
மகாரம்‌, ஸுவர்லோகம்‌, சாமவேதம்‌, காரண சீரம்‌,  சத்துவகுணம்‌, சாட்க்ஷாத்காரம்‌, ஆனந்தம்‌, ஈசுவரன்‌,  புருஷார்த்தம்‌, 
“தியோ யோ ந; ப்ரசோதயாத்‌'' என்னும்‌ காயத்ரீ  மந்திரத்தின்‌ மூன்றாவது பதம்‌, 
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்‌, 
நாராயணாய, வேங்கடேசாய. 
மகாரம்‌: 

௮, ௨, ம்‌ என்று பிரியும்‌ 'ஒம்‌' என்கிற பிரணவ மந்திரத்தின்‌ 
மூன்றாவது எழுத்து. மகாரம்‌ “மந” என்ற தாதுவிலே தோன்றியது. 
இதற்கு ஞானம்‌ என்று அர்த்தம்‌. இதனால்‌ ஆத்மா ஞானமயமானது என்றதாயிற்று. 
“மநு” என்ற தாதுவும்‌ மகாரத்துக்குக்‌ காரணம்‌. இதற்கு அறிதல்‌ என்று பொருள்‌. 
மகாரம்‌ இருபத்தைந்தாம்‌ எழுத்து. இதனால்‌ இருபத்து நான்கு  தத்வங்களான ப்ரக்ருதியைக்‌ காட்டிலும்‌, 
இருபத்தைந்தாம்‌  தத்வமான ஆத்மா வேறுபட்டவன்‌; ஆனந்தமயமானவன்‌ என்பது  பெறப்படும்‌. 

"திருக் கண்டேன்‌' பாசுரம்‌ ஜீவாத்மா (இங்கே ஆழ்வார்‌) பரம  புருஷார்த்தமாகிய பகவதனுபவத்தை நேரடியாக அறிந்து, 
ஆனந்தமடைவதாகக்‌ கூறுவதால்‌, மகாரத்தை விளக்குவதாயிற்று. 

சாமவேதம்‌, ஸுவர்லோகம்‌: 
சாமவேதத்திலிருந்து ஸ்வ: என்னும்‌ சப்த விசேஷம்‌ பிறந்தது. 
ஸுவ: என்பது சுவர்க்க லோகம்‌. 
எண்ணத்தைக்‌ கடவுள்பால்‌  செலுத்துவதே சுவர்க்க லோகமாகிறது. 
ஸ்ரீமந்நாராயணனை  தரிசிப்பதே நிலையான சொர்க்க அனுபவம்‌. 'திருக்கண்டேன்‌: இதையே விவரிக்கிறது. 
வைகுண்ட ஏகாதசியன்று பெருமாளைக்‌  காணச்‌ செல்லும்‌ வழி '*சொர்க்கவாசல்‌'” எனப்படுவதை நாம்‌  அறிவோம்‌. 

சத்துவ குணம்‌ மேலோங்கிய நிலையிலேயே ஸமாதி  நிலையை மனம்‌ அடைந்து, ஜகத்காரணனாகிய ஈசுவரனைக்‌ 
கண்டு, பரமானந்தம்‌ அடைய முடியும்‌. இதுவே பகவத்‌  சாட்க்ஷாத்காரம்‌, மோட்சம்‌ என்கிற புருஷார்த்தம்‌. 
“திருக்கண்டேன்‌'பாகரம்‌ சத்துவகுணம்‌, காரணம்‌, சாட்க்ஷாத்காரம்‌ (நேரில்‌ இறைவனைக்‌ காணுதல்‌), 
ஆனந்தம்‌, ஈசுவரன்‌, புருஷார்த்தம்‌ ஆகியவற்றின்‌ விளக்கமாகவே அமைந்திருக்கிறது 
என்பது நன்கு விளங்குகிறது. 


தியோ யோ ந: ப்ரசோதயாத்‌: 
“யார்‌ நம்முடைய அறிவைத்‌ தூண்டுகிறாரோ'' என்னும்‌  பொருளுடைய காயத்ரீ மந்திரத்தின்‌ மூன்றாவது பதம்‌. 

தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்‌: 
அந்த தியானத்தில்‌; ந: - நம்மை; விஷ்ணு, ப்ரசோதயாத்‌ -  தூண்டுவாராக
இது விஷ்ணு காயத்ரீ மந்திரத்தின்‌ மூன்றாவது பதம்‌. 

ஈசுவரனாகிய மகாவிஷ்ணு பக்தனுக்கு இரங்கி, அவனது அறிவைத்‌ தூண்டி, அருள்‌ புரிந்தால்தான்‌, 
எம்பெருமானுடைய  திருக்காட்சி கிட்டும்‌. இவ்விதமே ஆழ்வார்‌ பகவதனுபவம்‌ பெற்று 'திருக்கண்டேன்‌' பாடினார்‌ என்க. 

நாராயணாய, வேங்கடேசாய: 
“ஓம்‌ நமோ நாராயணாய,:'' “ஓம்‌ நமோ வேங்கடேசாய* என்னும்‌ மந்திரங்களின்‌ கடைப்பதம்‌. 
நாராயண - நார * அயந.  “நார! என்றால்‌ அழியாத பொருள்களின்‌ கூட்டம்‌; 
அயந -  ஆதாரம்‌. நாரங்களுக்கெல்லாம்‌ அந்தர்யாமியாய்‌ வியாபித்து  ஆதாரமாய்‌ இருப்பவன்‌ நாராயணன்‌. 
நாராயணாய என்பது  நான்காம்‌ வேற்றுமை, பிரார்த்தனைப்‌ பொருளில்‌ வந்தது. 

“ஓம்‌ நமோ நாராயணாய”' :என்னும்‌ திருமந்திரம்‌ 
**சர்வகாரணனாய்‌ சர்வரக்ஷகனான எம்பெருமானுக்கே  உரியவனான நான்‌ சர்வசேஷியான அந்நாராயணனுக்கே எல்லா 
அடிமைகளையும்‌ செய்யப்‌ பெற வேணும்‌'' என்று பொருள்படும்‌  பிரார்த்தனை. ்‌ 

“திருக்கண்டேன்‌' பாசுரம்‌ நாராயணன்‌, பக்தர்களுக்கு  எளியவனாய்‌ தன்னை வெளிப்படுத்திக்‌ காட்டுவதை விவரிக்கும்‌ 
வகையில்‌ அமைந்துள்ளதால்‌ '*'நாராயணாய”'' என்பதன்‌  விளக்கமாக, உள்ளது எனலாம்‌. 

திரு - அலர்மேல்‌ மங்கை, மகாலட்சுமி, ஸீ 
ஆழிவண்ணன்பால்‌ - கடல்வண்ணக்‌ கடவுளிடம்‌; கண்டேன்‌ என்பதால்‌ ::ஸ்ரீநிவாஸனைக்‌ கண்டேன்‌'”  
ஸ்ரீமந்நாராயணன்‌  செளலப்யனாய்‌ நமக்கெல்லாம்‌ மிக எளியவனாகக்‌ காட்டிக்  கொடுக்கும்‌ அர்ச்சை நிலையே ஸ்ரீ வேங்கடேசன்‌. 
எனவே ஸ்ரீநிவாஸ பத விளக்கமாக “*“திருக்கண்டேன்‌'' அமைந்துள்ளது. 

விஷ்ணுவின்‌ ஐவகை நிலைகள்‌: 
உலகங்களை நிர்ஹிக்கும்‌ பொருட்டு, ஸ்ரீமந்நாராயணன்‌ 
பரத்வம்‌, வியூகம்‌, விபவம்‌, அந்தர்யாமித்வம்‌, அர்ச்சாவதாரம்‌  என்று ஐவகை நிலைகளில்‌ எழுந்தருளியிருக்கிறான்‌. , 
““திருக்கண்டேன்‌'* பாசுரத்தில்‌ பேயாழ்வார்‌ ஐந்து முறை *“கண்டேன்‌'' என்று பேசியிருப்பதால்‌, 
எம்பெருமானின்‌ ஐவகை  நிலைகளையுமே கண்டிருப்பார்‌ என்றே தோன்றுகிறது. 
கீழ்ப் பாசுரங்களில்‌ ஆழ்வார்‌ எம்பெருமானின்‌ ஐவகை  நிலைகளையும்‌ பன்முறை பேசியிருப்பதும்‌ இங்கு நினைவு கூறத்தக்கது. 
திருவேங்கடத்தை மங்களாசாஸனம்‌ செய்யும்‌ ஒரு  பாசுரத்தில்‌ பேயாழ்வார்‌ எம்பெருமானின்‌ ஐந்து நிலைகளையும்‌ குறிப்பிடுகிறார்‌. 

பாற்கடலும்‌ வேங்கடமும்‌ பாம்பும்‌ பனிவிசும்பும்‌ 
நூற்கடலும்‌ நுண்ணூல தாமரைமேல்‌ - பாற்பட்‌ 
டிருந்தார்‌ மனமும்‌ இடமாகக்‌ கொண்டான்‌ 
குருந்தொசித்த கோபாலகன்‌. 

பாற்கடல்‌ - திருப்பாற்கடல்‌ - வியூக நிலை. 
வேங்கடம்‌ - அர்ச்சாவதார நிலை.  
பனிவிசும்பு - வைகுந்தம்‌ - பரத்வ நிலை, 
மனம்‌ - அந்தர்யாமித்வ நிலை. 
கோபாலகன்‌ - விபவம்‌ (அவதார நிலை). 
எனவே '“திருக்கண்டேன்‌” பாசுரமும்‌ விஷ்ணுவின்‌ ஐந்து  நிலைகளையும்‌ கூறுவதாகக்‌ 8&ழே காண்போம்‌: 

திருக்கண்டேன்‌: . 
திரு நாட்டில்‌ (வைகுந்தத்தில்‌) திருமகளுடன்‌ திருமால்‌ திரு மா மணி மண்டபத்தில்‌ எழுந்தருளியிருப்பதைக்‌ கண்டேன்‌; -பரத்வநிலை. 
பொன்மேனி கண்டேன்‌: 
பொன்‌ . ஆபரணங்களால்‌ அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ  வேங்கடாசலபதியின்‌ திருமேனியைக்‌ கண்டேன்‌; அர்ச்சாவதார நிலை. 
ஸ்ரீயின்‌ சேர்த்தியாலும்‌ பொன்மேனி எனலாம்‌. 
அருக்கன்‌ அணிநிறமும்‌ கண்டேன்‌: 
சர்வ வியாபியாகிய சூரியனின்‌ அழகிய ஏழு நிறங்களைக்‌  கண்டேன்‌; எல்லா உயிர்களிலும்‌ சூரிய நாராயணன்‌ 
வியாபித்திருக்கும்‌ அந்தர்யாமித்வ நிலை. 
பொன்னாழி கண்டேன்‌... என்னாழி வண்ணன்பால்‌ இன்று: 
ஆழி - சக்கரம்‌, கடல்‌; கடல்‌ வண்ணனைக்‌ கண்டதாகக்‌  கூறுவதால்‌, திருப்பாற்கடல்‌ நாதனைக்‌ குறிக்கிறது.
இது வியூக நிலை. 
புரிசங்கங்‌ கைக்கண்டேன்‌: 
பாஞ்சசன்னியம்‌ ஊதிய பார்த்தஸாரதியைக்‌ கண்டேன்‌. --அவதார நிலை. 

த்வய மந்திரம்‌ அல்லது மந்த்ர ரத்னம்‌: 
ஸ்ரீமந்‌ நாராயண சரணெள சரணம்‌ ப்ரபத்யே; 
ஸ்ரீமதே நாராயணாய நம:'' 
என்பதே ஸ்ரீவைஷ்ணவத்தில்‌ பிரசித்தி பெற்ற துவயமந்திரம்‌. 
இரண்டு வாக்கியங்களால்‌ ஆன துவயத்தை ஆசாரியர்கள்‌ அனைவரும்‌ ஆதரித்து, மந்த்ர ரத்னம்‌ என்று பாராட்டினர்‌, 

ஸ்ரீ என்றால்‌ திரு, மகாலட்சுமி, பெரிய பிராட்டியார்‌. எனவே  “'ஸ்ரீயுடன்‌ கூடிய நாராயணனின்‌ திருவடிகளையே சரணமாகப்‌  பற்றுகிறேன்‌; 
ஸ்ரீபுடன்‌ கூடிய நாராயணனுக்கே தொண்டு செய்ய  விரும்பி, வணங்குகிறேன்‌! என்பதே துவயத்தின்‌ பொருள்‌.
பூர்வ (முதல்‌) வாக்கியம்‌ உபாயம்‌ (வழி) எது என்பதையும்‌, உத்தர (இரண்டாவது) வாக்கியம்‌ உபேயம்‌, ப்ராப்யம்‌ (குறிக்கோள்‌) 
என்ன என்பதையும்‌ காட்டுகின்றன. 

த்வயத்தின்‌ மகிமை 
ஸ்ரீ என்னும்‌ மகாலட்சுமித்‌ தாயார்‌ அனைத்து ஜீவர்களுக்கும்‌ அன்னை, கருணையே வடிவானவள்‌, பக்தர்களுக்கு உடனே 
மனமிரங்கி, அருள்புரியும்படி, நாராயணனிடம்‌ புருஷகாரம்‌ (சிபாரிசு) செய்பவள்‌. 
பிராட்டியை முன்னிட்டுச்‌ சரசணடைவதே, சுலபமாக உய்வடைய வழி. பிராட்டியே உபாயம்‌ (வழி), பிராட்டியே உபேயம்‌ 
(குறிக்கோள்‌). எனவே இவளை 'புருஷகார பூதை' என்பர்‌. 

திருவந்தாதிகள்‌ துவய மந்திர சாரமானவை 
முதலாழ்வார்களின்‌ முதற்பாசுரங்கள்‌ 8ழ்க்கண்டவாறு துவய மந்திர சாரமானவை: 
ஆழ்வார்‌ பேயார்‌ பூதத்தார்‌ பொய்கையார்‌ 
பாசுரம்‌ திருக்கண்டேன்‌ அன்பேதகளி வையந்தகளி 
ஆழ்வார்‌ திரு நாரணற்கு அடிக்கே சூட்டினேன்‌ 
வாக்கு 
பூர்வ ஸ்ரீமந்‌ நாராயண  சரணெள சரணம்‌ 
வாக்கியம்‌ ப்ரபத்யே 
உத்தர ஸ்ரீமதே நாராயணாய நம 
வாக்கியம்‌ 

திருக்கண்டேன்‌ பாசுரத்தில்‌ வரும்‌ “திரு”, ஸ்ரீமந்‌, ஸ்ரீமதே என்பதையும்‌; 
அன்பேதகளியில்‌ வரும்‌ 'நாரணற்குஷ்‌ நாராயண, நாராயணாய என்பதையும்‌; 
வையந்தகளியில்‌ வரும்‌ 'அடிக்கே சூட்டினேன்‌' என்பது 'சரணெள (அடிகளை) சரணம்‌ ப்ரபத்யே", 
நம: என்பதையும்‌ குறிக்கும்‌ வகையில்‌ அமைந்துள்ளன. 
எனவே  மூன்று இரத்தினங்கள்‌ போன்ற இப்பாசுரங்களிலும்‌, மந்திர இரத்தினமான துவயம்‌ பரிமளிக்கறது! 

இதைத்‌ தவிர முதலாழ்வார்கள்‌ பற்பல பாசுரங்களில்‌ “திரு” என்று ஸ்ரீயுடன்‌ சேர்த்தே ஸ்ரீநிவாஸனைப்‌ பாடியிருக்கிறார்கள்‌. 
ஸ்ரீநிவாஸன்‌ துவயமந்திர வடிவினன்‌ 
திருமலைக்‌ கோயிலில்‌ பிராட்டிக்குத்‌ தனி சன்னிதி  கிடையாது.
ஸ்ரீநிவாஸனின்‌ திருமார்பிலேயே அலர்மேல்‌ மங்கைத்‌ தாயார்‌ நித்தியவாசம்‌ செய்கிறாள்‌. 
திருமலையப்பன்‌ அம்மையப்பன்‌! இதனால்தான்‌ இவனை வழிபடுபவர்களுக்கு, 
கைம்மேல்‌ பலன்‌ உடனடியாகக்‌ இடைத்துவிடுகிறது! 

ஸ்ரீதிவாஸனை 'பாலாஜி' (பாலா என்பது தாயாரின்‌ திருநாமம்‌) என்றாலே வடநாட்டில்‌ தெரியும்‌. அர்ச்சாவதார ரத்தினமான 
வேங்கடரத்தினம்‌ மந்திர ரத்தினமான துவயவடிவினன்‌ என்பதை ஆழ்வார்‌. ரத்தினங்கள்‌ மூவரும்‌ நன்கு அறிந்திருந்தனர்‌! 
ஸ்ரீநிவாஸன்‌ சிறப்பாக துவயமந்திரம்‌ பொலியும்‌ திருவடிவம்‌ கொண்டவன்‌ என்பதாலேயே முதலாழ்வார்கள்‌ விஷ்ணுவின்‌ 
அர்ச்சை நிலையில்‌ இவனுக்கே முதலிடம்‌ கொடுத்துப்‌ பாடியிருக்கிறார்கள்‌. ! 

---------------

பரபக்தி, பரஞானம்‌, பரமபக்தி: 
பொய்கையாரின்‌ ''வையந்தகளி'" என்று தொடங்கும்‌ முதல்‌  திருவந்தாதி பரபக்தியையும்‌; 
பூதத்தாரின்‌ “அன்பே தகளி” எனத்துவங்கும்‌ இரண்டாம்‌ திருவந்தாதி பரஞானத்தையும்‌; 
பேயாழ்வாரின்‌ ''திருக்கண்டேன்‌'' என்று துவங்கும்‌ மூன்றாம்‌ திருவந்தாதி பரமபக்தியையும்‌ சொல்வதாக சிலர்‌ கொள்வர்‌. 

“பரபக்தி' என்பது எம்பெருமானை நேரில்‌ காணவேண்டும்‌ என்கிற ஆவல்‌; 
அவனை நேரில்‌ காணல்‌ 'பரஞானம்‌
பின்பு மேன்மேலும்‌ இடையறாது அனுபவிக்க வேண்டும்‌ என்னும்‌ ஆவல்‌ 'பரமபக்தி', 

இவற்றை மற்றொரு விதமாகவும்‌ பண்டைய ஆசிரியர்கள்‌ விளக்குவர்‌: 
எம்பெருமானோடு கலந்தபோது ஸூகிக்கும்படியாகவும்‌,  பிரிந்தபோது துக்கிக்கும்படியாகவும்‌ இருக்கும்‌ நிலை 'பரபக்தி". 
எம்பெருமானுடைய முழுநிறைவு நேர்காட்சி “பரஞானம்‌”. 
அவனுடைய அனுபவம்‌ பெறாவிடில்‌ தீரைவிட்டுப்‌ பிரிந்த மீன்போல மூச்சு அடங்கும்படி இருத்தல்‌ 'பரமபக்தி", 


முதலாழ்வார்களும்‌, நமது நிலையும்‌ 
பரபக்தி, பரஞானம்‌, பரமபக்தி ஆகிய மூன்று நிலைகளையும்‌ 
முதலாழ்வார்கள்‌ மட்டுமின்றி திருவேங்கடமுடையானின்‌ 
பக்தர்கள்‌ அனைவருமே தகுதிக்கேற்றபடி  சிறிதளவாவது அனுபவிக்கிறார்கள்‌ எனலாம்‌! 

சம்சார வாழ்க்கையில்‌ உழன்று கொண்டிருந்தாலும்‌,  திருமலையின்‌ பெருமையையும்‌, ஏழுமலையானின்‌ 
மஹிமையையும்‌ பூர்வ ஜன்ம புண்ணியத்தால்‌ நாம்‌ கேட்கிறோம்‌. 
பூலோக வைகுந்தமாகிய திருமலைக்குச்‌ சென்று ஸ்ரீநிவாஸனை தரிசிக்க வேண்டும்‌ என்கிற ஆவல்‌ நமக்கு எழ, 
“'திருவேங்கடம்‌  அடை நெஞ்சமே!" என்று திருமங்கையாழ்வாரைப்‌ போல்‌ 
உற்சாகத்துடன்‌ கிளம்புகிறோம்‌. இது லேசான பரபக்தி! 

பிறகு திருமலைக்குச்‌ சென்று, எப்படியாவது முண்டியடித்துக்‌  கொண்டு, ஸ்ரீவேங்கடேசனை நொடிப் பொழுதாவது நேரில்‌ 
காண்கிறோம்‌. இது லேசான பரஞானம்‌! 

ஆயினும்‌ திருவேங்கடமுடையானை ஒருமுறை காண்பது  திருப்தியளிப்பதில்லை. பின்பு மேன்மேலும்‌ அவனை 
இடையறாது கண்டு அனுபவிக்க வேண்டும்‌ என்கற ஆவல்‌  எழுகிறது. இது லேசான பரமபக்தி! 

---------------

ஞானம்‌, பக்தி, சாக்ஷாத்காரம்‌ (இறைக்காட்சி) 

மூன்று திருவந்தாதிகளும்‌ முறையே ஞான, பக்தி, சாக்ஷத்காரங்களைப்‌ பற்றியவை என்று பெரியவாச்சான்‌ பிள்ளை 
அருளிச்‌ செய்திருக்கிறார்‌. 
“ஞானச்சுடர்‌' என்பதற்கு  "பரமபக்தியாகிற விளக்கு” என்றது அவருரை. 
மூன்றாம்‌ திருவந்தாதி அவதாரிகையிலும்‌--- 
*"ஞானத்தைச்‌ சொல்லுகிறது வைசந்தகளி; ஞான  விபாகமான பக்தியைச்‌ சொல்லுகிறது அன்பே தகளி. 
பக்தியாலே  சாக்ஷாத்கரித்த படி  சொல்லுகிறது இதில்‌ (திருக்கண்டேன்‌)'* என  அவர் தாமே அருளியுள்ளார்‌. 
 
இங்ஙனம்‌ ஞான, பக்தி, ஸாக்ஷாத்காரங்களை இவர்கள்‌ அருளிச்‌ செய்கிறார்கள்‌ என்றதைக்‌ கொண்டு, 
““பொய்கையாழ்வாருக்கு சாஸ்திர ஞானம்‌ மட்டுமே யுள்ளது. 
பூதத்தாழ்வாருக்கு அத்துடன்‌ பக்தியும்‌ சேர்ந்தது. 
பேயாழ்வாரே  சாசக்ஷாத்காரம்‌ செய்தவர்‌' என்ற பாகுபாடு கொள்ள வேண்டா. 
மூவரும்‌ மூன்றுமுள்ளவராயினும்‌, அம்மூன்றும்‌ முறையே வரவேண்டியவை யாகையாலே தமக்கு அம்முறையை அறிவிக்கக்‌ 
கருதி, அவரவர்‌ அடைவதாக அவற்றை அருளினார்கள்‌ என்பதே தத்துவம்‌. 

திரிவிக்ரமன்‌ திருவடியினின்று பெருகிய கங்கை மூன்றாகப்‌  பிரிந்தது போல்‌, அவன்‌ விஷயமான இவர்களின்‌ ப்ரபந்தம்‌ மூன்று 
பிரிவுற்றதென்றார்‌ ஸ்ரீதேசிகள்‌. 

இப்ரபந்தக்‌ கர்த்தாக்கள்‌ மூவராயினும்‌ பொருள்‌ ஒற்றுமை  பற்றி இம்மூன்றும்‌ ஒரு ப்ரபந்தமாகவே அமைகிறது. 
ஒரு  வ்யாகரணத்திற்குப்‌ பாணிநீ, காத்யாயனர்‌, பதஞ்சலி ஆடிய மூவரும்‌ கர்த்தாக்கள்‌ ஆனாப்போலே, 
இப்ரபந்தங்களுக்கும்‌  இம்முனிவர்‌ மூவரும்‌ கர்த்தாக்கள்‌ என்று உரையாசிரியர்‌  துள்ளார்‌. 
வேங்கடவன்தமர்‌ ஏற்றிய வேதவிளக்கு: 

முதலாழ்வார்கள்‌ ஸ்ரீநிவாஸப்‌ பிரியர்களாகையால்‌ அவர்களை 'வேங்கடவன் தமர்‌' எனலாம்‌. 
அவர்கள்‌ ஏற்றிய 
வையந்தகளி, அன்பேதகளி விளக்குகள்‌ ''நான்மறை அந்தி நடை விளங்கச்‌'' செய்வதால்‌ வேதவிளக்குகள்‌ ஆயின. - 
திருமலைக்கே வேதகிரி: என்றொரு பெயருண்டு. 
'“வேங்கட  வெற்பென விளங்கும்‌ வேதவெற்பே”' (வெற்பு - மலை) என்று  ஸ்ரீ தேசிகனும்‌ அருளிச் செய்தார்‌. 

திருவேங்கடவனையே ''உணர்வாரார்‌ உன்‌ பெருமை... வேங்கடத்தாய்‌! நால்வேதப்‌ பண்ணகத்தாய்‌!'' என்று ஸ்ரீ 
பொய்கையாரும்‌, 
“வேதத்தான்‌ வேங்கடத்தான்‌ விண்ணோர்‌ முடிதோயும்‌ பாதத்தான்‌ பாதம்‌ பயின்று'” என்று பூதத்தாரும்‌, 
பேயாரும்‌ பாடியுள்ளனர்‌. வேதகிரி என்னும்‌ ்‌ குன்றின்‌ மேலிட்ட வேத விளக்கே வேங்கடவன்‌. 

இவற்றைக்‌ கருதியே இங்கே, ''வேங்கடவன் தமர்‌ ஏத்திய  வேத விளக்கு'' என்னும்‌ தலைப்பு அமைந்தது! 

வானரம்‌ வணங்கும்‌ வேங்கடம்‌ 

சமீப காலம்வரை, திருமலை என்றாலே வேங்கடேச பக்தர்களுக்கு அங்கே குரங்குகள்‌ செய்யும்‌ அட்டகாசங்களே 
நினைவுக்கு வரும்‌! வானர சேஷ்டைகளை நினைத்தே திருப்பாணாழ்வார்‌ 'மந்திபாய்‌ வடவேங்கடமாமலை' என்று 
மங்களாசாஸனம்‌ செய்திருக்கிறார்‌ போலிருக்கிறது. 
குரங்குகள்‌  ஏழுமலையில்‌ குதித்துக்‌ களிப்பூட்டிய காலம்‌ இன்று அநேகமாக மலையேறிவிட்டது எனலாம்‌. 
குரங்குகளுக்கு பதில்‌ குடில்களே திருமலையில்‌ எங்கும்‌ தென்படுகின்றன. ' 


பிள்ளைப்பெருமாள்‌ அய்யங்கார்‌ பதினேழாவது 
நூற்றாண்டில்‌ வாழ்ந்தவர்‌. மாபெரும்‌ ரங்கநாத பக்தரான இவர்‌ 
திருவரங்கக்‌ கலம்பகம்‌, திருவரங்கத்து அந்தாதி, திருவரங்கத்து  மாலை என்கற சிறந்த நூல்களை இயற்றினார்‌. 
திருவேங்கடவன்‌  இவர்‌ கனவில்‌ தோன்றித்‌ தன்னையும்‌ பாடும்படி கட்டளையிட, 
அய்யங்கார்‌. ''அரங்களைப்‌ பாடிய வாயால்‌ குரங்கனைப்‌  பாடுவேடீனோ?'” என்று அட்சியம்‌ செய்தார்‌. 
இதனால்‌ கோபம்‌  கொண்ட ஸ்ரீநிவாஸப்‌ பெருமாள்‌, 'கண்டமாலை' என்னும்‌ கொடிய நோயை விளைவிக்க, 
அய்யங்கார்‌ வேங்கடவளைப்‌  பாடியதாக வரலாறு. 
இவர்‌ 'திவ்விய கவி: எனப்படுவர்‌; 
இவர்‌ இயற்றிய எட்டு நூல்கள்‌ 'அஷ்டப்பிரபந்தம்‌' எனப்படும்‌. 

'குரங்கன்‌' என்றே வேங்கடவனை அலட்சியம்‌ செய்த திவ்வியகவி, அதற்குப்‌ பரிகாரமாக வேங்கடத்துக்‌ குரங்குகளையே 
பாடி, வானத்தை வரம்பாக உடையது திருமலை என்று போற்றியுள்ளார்‌. அற்புதமான கவிதை, 
'கவி' என்று ஆண்‌ குரங்கிற்குத்‌ தமிழில்‌ பெயரும்‌ உண்டு; 'கபி' என்னும்‌ வடசொல்‌, 
கவி என்றாகும்‌. 

"திருவேங்கடத்து மாலை” என்னும்‌ - நூலில்‌ பிள்ளைப்‌ பெருமாள்‌ அய்யங்கார்‌ காட்டும்‌ வேங்கடக்‌ காட்சிகளைக்‌ காண்போம்‌. 


“மண்மூலம்‌ தா என்று மந்திகடுவற்குரைப்ப  விண்மூலம்‌ கேட்டேங்கும்‌ வேங்கடமே.” (25) 

மண்மூலம்‌ - கிழங்கு; விண்மூலம்‌ - மூல நட்சத்திரம்‌; மந்தி - 
பெண்குரங்கு. கடுவன்‌ - ஆண்சுரங்கு. 

திருமலையில்‌ வாழும்‌ பெண்குரங்கு, தன்‌ காதலனிடம்‌ 
““மண்மூலம்‌ தா!” என்று கேட்கிறது. அதாவது, 
*“மண்ணிலிருக்கும்‌ கிழங்கை அகழ்ந்தெடுத்து, எனக்கு உணவாகக்‌ கொடு'' என்கிறது. 
இதை “விண்மூலம்‌', வானத்திலுள்ள மூல  நட்சத்திரம்‌ கேட்டு, தன்னைத்தான்‌ மந்தி பிடித்துக்‌ கொடுக்கச்‌ 
சொல்வதாக நினைத்து, பயத்தால்‌ நடுங்குகிறது. 

திவ்விய கவியின்‌ வருணனை, திவ்வியமான வருணனை! 
மூல நட்சத்திரத்தின்‌ வரை உயர்ந்து வானளாவ நிற்கிறது  திருமலை. எனவேதான்‌ குரங்கு கேட்பது நட்சத்திரத்திற்குத்‌ 
தெளிவாகக்‌ கேட்டு விடுகிறது. 'ஆண்மூலம்‌ அரசாளும்‌” என்பர்‌, 
ஆண்‌ குரங்கு மூல நட்சத்திரத்தில்‌ அவதரித்தது போலும்‌! 
வேங்கடத்துக்‌ கடுவன்‌ நட்சத்திர நாயகர்களான தேவகணங்களும்‌ 
அஞ்சத்தக்க அசாத்திய வலிமை படைத்தது என்பதும்‌ தெரிகிறது! 

மாம்பழம்‌ போல்‌ தித்திக்கும்‌ இன்னொரு திருமலைக் காட்சியையும்‌ திவ்விய கவி உட்டியுள்ளார்‌: 

"*வாவு கவின்‌ மந்தி நுகர்‌ மாங்கனிக்குக்‌ கற்பகத்தின்‌  மேவு கவி கைநீட்டும்‌ வேங்கடமே: (42 

வாவு .- தாலிச்செல்லும்‌; கவின்‌ - அழகிய; மேவு - பொருந்திய; கவி - கபி, ஆண்குரங்கு. 

திருவேங்கடத்தில்‌ பெண்‌ குரங்கு மாமரத்தில்‌ பழுத்துத்‌ தொங்கும்‌ தேமாங்கனியைப்‌ பறித்து, தாவிச்‌ செல்கின்றது. 
இதை  தேவலோகத்தில்‌ கற்பகத்‌ தருவில்‌ உட்கார்ந்திருக்கும்‌ ஆண்குரங்கு  பார்த்துவிடுகிறது; 
தனக்குத்‌ தருமாறு அங்கேயி௫ந்து கையை நீட்டுகின்றது! 

கவி இங்கே மறைமுகமாகக்‌ கூறுவது: திருமலை, தேவலோகம்‌ வரை உயர்ந்து நிற்கிறது. 
கற்பக மரத்தின்‌  பழத்தைவிட, வேங்கடத்தில்‌ மந்தி பறித்த மாம்பழம்‌ சுவையானது, பரம போக்யமானது. 
எனவே தேவலோகத்தையும்‌ விட உயர்ந்தது பூலோக வைகுண்டமாகய திருமலை. 


“குரங்கன்‌” என்று ஏழுமலையானை இகழ்ந்தவர்‌, அவன்‌ அருளைப்‌ பெற்றதும்‌, அரங்கனை விடவும்‌ உயர்வாகப்‌ புகழ்ந்து 
பாடிவிட்டார்‌ போல்‌ தோன்றுகிறது. 'வானர வம்பன்‌” என்பது போல்‌ வேங்கடவனை நிந்தனை செய்த பிள்ளைப்பெருமாள்‌ 
அய்யங்கார்‌ [வான வரம்பன்‌' ஆகவே அவனை வந்தனையும்‌ செய்து விடுகிறார்‌! அரங்கனுக்கும்‌, வேங்கடவனுக்கும்‌ இடையே 
மூர்த்தபேதம்‌ இல்லை என்பதை நேரடியாக உணர்ந்தவர்‌ நம்‌ திவ்விய கவி, 


அய்யங்காரின்‌ இவவிய கவிதை மாந்தோப்பில்‌ இரண்டு மாங்கனிகளைப்‌ பறித்துச்‌ சுவைத்த நம்முடைய 'மனம்‌ என்னும்‌ 
மாயக்குரங்கு' அடுத்து ஆழ்வார்களின்‌ பக்திப்பூங்காவில்‌ தாவிக்‌ குதிக்கிறது! 
பக்தி ரசம்‌ சொட்டும்‌ ஞானப்பழங்கள்‌ நாலாயிரத்தின்‌ ஜன்மபூமிக்கு அல்லவா வந்துவிட்டோம்‌? 
வந்த இடத்தில்‌ வேண்டிய சரக்கிற்குப்‌ .பஞ்சமேயில்லை என்பதை அறிந்து, 
இதற்குமுன்‌ ஆடிய களைப்புத்‌ நீர, நம்‌ மனக்குரங்கு சற்றே  கண்ணயர்கிறது, 
பூதத் திருவடி என்னும்‌ கற்பக மரத்தின்‌ இளையில்‌. பளபளவென்று பொழுதும்‌ புலர்ந்து விடுகிறது. 
இனி: நம்‌  மனக்குரங்கு என்ன செய்ய வேண்டும்‌ என்பதை பூதத்தாழ்வாரே கூறுகிறார்‌. 
ஆழ்வார்‌ கூறுவதிலிருந்து நாம்‌ வந்திருக்கும்‌ இடம்‌ திருமலையே என்பதையும்‌ தெரிந்து இன்புருகு சிந்தையராகிறோம்‌! 
ஸ்ரீ பூதத்தாழ்வார்‌ 
போது' அறிந்து வானரங்கள்‌ பூஞ்சுனை புக்‌(கு) ஆங்கு அலர்ந்த 
போது” அரிந்து கொண்டு ஏத்தும்‌ போ(து) உள்ளம்‌ - போதும்‌ 
மணி வேங்‌ கடவன்‌ மலரடிக்கே செல்ல 
அணி வேங்‌ கடவன்‌ பேர்‌ ஆய்ந்து. (72) 

போது" - விடியற்காலம்‌, பொழுது; போது” - மலர்‌; அரிந்து -கொய்து; போதுள்ளம்‌ உள்ளமே போ, புறப்படு; .பேர்‌ - திருநாமம்‌. 

திருமலைக்‌ குரங்குகள்‌ பொழுது விடிந்ததை அறிந்து, சுவாமி புஷ்கரிணி, பாபநாசம்‌ அருவி, பூஞ்சுனைகள்‌ போன்ற 
தீர்த்தங்களில்‌ புகுந்து நீராடும்‌. அப்போதே நீர்நிலைகளில்‌ அன்றலர்ந்த புத்தம்புதிய பூக்களைப்‌: பறித்துக்கொண்டு ஸ்ரீ 
ஸ்ரீ வேங்கடேசனுக்கு சமர்ப்பித்துத்‌ துதி செய்யும்‌. 
என்‌ மனமென்னும்‌  மாயக்குரங்கே! நீயும்‌ புறப்படுவாய்‌. உலகத்திற்கு மணிமகுடம்‌ வைத்ததுபோல்‌ திகழும்‌ திருமலையிலுள்ள 
ஸ்ரீ வேங்கடேசனின்‌  சஹஸ்ரநாமங்களை ஓதிக்கொண்டு, ' திருவேங்கடவனுடைய 
திருவடித்‌ தாமரைகளிலே சென்று சேரும்படியாக பூக்களை  சமர்ப்பிக்கக்‌ கடவாய்‌! 

திருமலை வானரங்கள்‌ அதிகாலையில்‌ ஏழுமலையானை  வணங்க நிகழ்த்தும்‌ ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாத சேவையை ஆழ்வார்‌ 
அழகாகப்‌ பாடியுள்ளார்‌. 
ஆஞ்சநேயர்‌ அவதரித்த அஞ்சனாத்ரி ஏழுமலைகளில்‌ ஒன்று. சமீபத்தில்‌ இம்மலைமீது அனுமாருக்குப்‌ 
பெரிய சிலை வைக்கப்பட்டிருக்கிறது. எனவே அஞ்சனாத்ரி  வானரங்கள்‌ சிறிய திருவடியாகிய அனுமன்‌ அடிச்சுவட்டில்‌ 
வேங்கடராமனை வழிபடுவதில்‌ ஆச்சரியம்‌ ஒன்றுமில்லை. 
ஆழ்வார்‌ அருளியபடியே, இன்று ஸ்ரீ வேங்கடேசன்‌ சன்னிதிக்கு நேர்‌ எதிரே, கோயிலுக்கு வெளியில்‌, ஆஞ்சநேயரே 
கைகூப்பியபடி காட்சியளிக்கிறார்‌. 
அலைபாயும்‌ நம்‌ மனக்குரங்கிற்கு ஆழ்வார்‌ சிறந்த உபதேசம்‌  செய்துள்ளார்‌. திருப்பதிக்குச்‌ சென்றுதான்‌ திருவேங்கடவனை 
சேவிக்க முடியும்‌ என்பதில்லை. தாம்‌ எங்கிருந்தாலும்‌, காலையில்‌ நீராடி, சுப்ரபாதம்‌ முதலிய துதிபாடி, மானசீகமாகவே பகவான்‌ 
திருவடிகளில்‌: புஷ்பாஞ்சலி செய்து அவனை தியானிக்கலாம்‌. 
இத்தகைய மானசீக பூஜையும்‌, ஜபமுமே மிகச்  சிறந்தன என்று  சாஸ்திரங்கள்‌ அனைத்துமே கூறுகின்றன. 
அடுத்து பேயாழ்வார்‌ இரண்டு அற்புதமான திருமலை வானரக்‌ காட்சிகளைக்‌ கண்முன்‌ கொண்டு வந்து நிறுத்துகிறார்‌. 
இவையே திவ்விய கவியின்‌ மேற்கூறிய பாடல்களுக்கு முன்னோடியாக அமைந்தவை. 
இப்பொழுது பூதத்தாழ்வார்‌  என்னும்‌ மாமரத்திலிருந்து நம்முடைய மனக்குரங்கு, பாய்ந்து 
**பிடித்தாலும்‌ பிடித்தான்‌, புளியங்கொம்பாய்ப்‌ பிடித்தான்‌'' என்று 
சொல்வார்களே, அதுபோலப்‌ பேயாழ்வார்‌ என்னும்‌ ஆன்மீகப்‌ புளியம்கொம்பைப்‌ பிடித்து விடுகிறது! 

தெளிந்த சிலாதலத்தின்‌ மேல்‌ இருந்த மந்தி 
அளிந்த கடுவனையே நோக்கி - விளங்கிய
வெண்மதியம்‌ தா என்னும்‌ வேங்கடமே! மேலொரு நாள்‌ . 
மண்மதியில்‌ கொண்டு உகந்தான்‌ வாழ்வு. (58) 

தெளிந்த - பளபளப்பான; சிலாதலம்‌ - கற்பாறையின்‌ தலம்‌, இங்கே படிகப்பாறை; மந்தி '- பெண்குரங்கு; 
அளிந்த - அன்புடைய; கடுவன்‌ - ஆண்‌ குரங்கு; மதியம்‌ - சந்திரன்‌; 
மண்‌ மதியில்‌ கொண்டு - பூமியை புத்தி சாதுர்யத்தினால்‌  ஏற்றுக்கொண்டு. 

பளபளப்பான படிகப்பாறையின்‌ மீது உட்கார்ந்திருக்கும்‌ பெண்குரங்கு, தன்னிடம்‌ காதல்‌ கொண்ட ஆண்‌ குரங்கை நோக்கி 
“ஒளி வீசும்‌ வெண்மையான பூர்ணசந்திரனைத்‌ தா!'' என்று கேட்குமிடமே வேங்கடம்‌." 
முன்னொரு காலத்தில்‌, மூன்றடி  மண்ணை புத்திசாதுர்யத்துடன்‌ கேட்டு, மகாபலிச்‌ சக்கரவர்த்தியிடமிருந்து அதை இன்னும்‌ 
அதிசாமர்த்தியமாக உலகங்களையே மூன்றடியால்‌ அளந்து எடுத்துக்கொண்டு திருப்தியடைந்த உலகளந்தப்‌ பெருமாள்‌ வாழுமிடம்‌ இது! 
 
மந்திக்குச்‌ சந்திரன்‌ எதற்காகா கண்ணாடி போல்‌  பளபளப்பான வஸ்து என்றால்‌ குரங்குக்கு அதில்‌ ப்ரீதி (பிரியம்‌) 
உண்டாவது இயற்கை, 'விளங்கிய வெண்மதியம்‌' என்ற அடைமொழியின்‌ கருத்தைப்‌ பெரிய வாச்சான்பிள்ளை கூறினது - 
**சந்திரனுடைய மேற்புற மாகையினாலே களங்கமற்று  உஜ்வலமாயிருந்துள்ள சந்திரமண்டலத்தை'* என்றவாறு. 
திருமலை சந்திரமண்டலத்திற்கு மேல்‌ வளர்ந்திருப்பது என்றபடி. 
அளிந்த - ப்ரணயகலஹம்‌ (ஊடல்‌) நீங்கத்தான்‌ ஏதேனும்‌ செய்ய விரும்பியது ஆண்குரங்கு
மதியின்‌ கொண்டு - கேட்டதிலும்‌ சாதுர்யம்‌, கொண்ட வகையிலும்‌ சாதுர்யம்‌. ' 

வெண்மதியம்‌ தா: 
ஆஞ்சநேயர்‌ அஞ்சனாத்ரி என்னும்‌ திருமலையின்‌ மீது பிறந்தவுடனேயே சூரியனைப்‌ பழம்‌ என்று நினைத்து 
அதைப்பிடிக்க ஆகாயத்தில்‌ தாவினார்‌. திருமலையில்‌ பிறப்பவர்களின்‌ ஆற்றல்‌ அத்தகையது. 
“நீயும்‌ அதே மலையில்‌ பிறந்து, அதன்‌ மீதே வாழ்கிறாய்‌. அனுமனைப்போல்‌ சூரியனைப்பிடிக்கும்‌ சக்தி இல்லாவிட்டாலும்‌, 
உன்னால்‌  குறைந்தபட்சம்‌ வெகு அருகிலுள்ள சந்திரனையாவது பிடித்துத்‌ தர முடியாதா?” என்று 
ஆண்குரங்கற்கு பலப்பரீட்சை வைக்கிறது மந்தி, இதைக்கேட்ட சந்திரன்‌ நடுங்குகிறான்‌, 
'*குரங்கு: கையில்‌  கிடைத்த பூமாலைபோல நம்‌ கதியும்‌ அதோகதி ஆகிவிடுமோ?” 
என்று பயந்து. திருமலையின்‌ உயர்வும்‌, மகத்துவமும்‌ அத்தகையது! 

“வெண்‌ மதியம்‌ தா” என்னும்‌ பேயாழ்வாரின்‌ கருத்தை ' மூலமாகக்‌ கொண்டே, பிள்ளைப்பெருமாள்‌ அய்யங்காரும்‌, 
“மண்மூலம்‌ தா என்று மந்தி கடுவற்குரைப்ப 
விண்மூலம்‌ கேட்டேங்கும்‌ வேங்கடமே'' --என்று பாடினார்‌. 

திருமலையின்‌ குரங்குகளுக்கே சந்திரனையும்‌, மூலநட்சத்திரத்தையும்‌ பிடித்துத்‌ தரும்‌ ஆற்றல்‌ உண்டென்றால்‌, 
அங்கெழுந்தருளியிருக்கும்‌ வேங்கடவனுக்கு எத்தகைய சர்வசக்தி இருக்க வேண்டும்‌? 
எல்லா உலகங்களையும்‌ காலால்‌ அளந்து “மண்‌ மதியில்‌ கொண்டு உகந்தான்‌!! ஆகத்தானே அவன்‌ இருக்கமுடியும்‌? 
இவ்விதமே அற்புதமாகப்‌ , பாசுரத்தை முடித்திருக்கிறார்‌. பேயார்‌!
அனுமார்‌ ஒரே தாவலாக இலங்கையைத்‌ தாண்டியதுபோல, மந்தி, கடுவன்‌ காட்சியை 
விவரித்த ஆழ்வாரின்‌ மனம்‌ ஒரே அடியில்‌ மலையுச்சிக்குப்‌ போய்த்‌ திருவேங்கடமுடையானையே சிக்கெனப்‌ பிடித்து விடுறைது
சந்திரனையும்‌, சூரியனையும்‌ பிடித்து என்ன பயன்‌? 
இவையனைத்தையும்‌ படைத்த ஏழுமலையானின்‌ திருவடிகளைப்‌ பிடிப்பதுதானே பிறவிப்பயன்‌? 
இதை ஆழ்வார்களைப்போல்‌ செய்கிறவர்களே வாழ்வில்‌ உகப்படைவர்‌ என்பது 'உகந்தான்‌ 
வாழ்வு" என்பதிலிருந்து அறியக்கடக்கிறது. 
மண்மதியிற்‌  கொண்டுகந்தான்‌ வாழ்வு - திருமலையப்பனின்‌ திருவடி மண்ணை 
மதியிற்‌ கொண்டு உகப்பவர்களின்‌ வாழ்வே வாழ்வு. 

கண்ணாடிபோல்‌ மின்னும்‌ வெண்ணிலாவில்‌ தன்னுடைய முகத்தழகைப்‌ பார்த்துக்‌ கொள்ள விரும்பி ''வெண்மதியம்‌ தா”! 
என்று குரங்கு கேட்டதை மேற்பாசுரத்தில்‌ கண்டோம்‌. 
கண்ணாடிபோல்‌ முகம்‌ காட்டும்‌ நீர்நிலையில்‌ தன்‌ முகத்தை  ஆண்குரங்கு பார்த்தால்‌ என்ன செய்யும்‌? 
இதைக்‌ கீழ்ப் பாசுரத்தில்‌ ஆழ்வார்‌ பாடுகிறார்‌--ஸ்ரீ பேயாழ்வார்‌ 

பார்த்த கடுவன்‌ சுனைநீர்‌ நிழல்‌ கண்டு 
பேர்த்து ஓர்‌ கடுவன்‌ எனப்பேர்ந்து - கார்த்த 
களங்கனிக்குக்‌ கைநீட்டும்‌ வேங்கடமே! மேனாள்‌ 
விளங்கனிக்குக்‌ கன்று எறிந்தான்‌ வெற்பு (68) 

பேர்த்து - அப்புறப்படுத்த முயன்று; பேர்ந்து - தானே அசைந்து; கார்த்த - கரிய; களங்கனி - களாக்காய்‌, பழம்‌; 
மேனாள்‌ - மேல்‌ நாள்‌, முன்னொரு நாள்‌; விளங்கனி - விளீஈம்பழம்‌; 
கன்று - இங்கு சன்று வடிவில்‌ வந்த வத்ஸாசுரன்‌; வெற்பு - மலை. 

திருவேங்கடமலையிலுள்ள சுனைநீரில்‌ ஓர்‌ ஆண்‌ குரங்கு தன்னுடைய நிழல்‌ தெரிவதைப்‌ பார்த்து, அதைத்‌ தன்‌ எல்லையில்‌ 
புகுந்து ஆக்கிரமிக்க முயலும்‌ இன்னொரு ஆண்குரங்கு என்று நினைத்துத்‌ துரத்தியடிக்க முயல்கிறது! பயனில்லாமல்‌ போகவே 
தானே அங்கிருந்து நகர்ந்து விடுகிறது. அப்பொழுது ஓர்‌ களாப்பழம்‌ நேரிலோ, நீரில்‌ நிழலாகவோ தோன்ற அதைப்‌ 
பறிப்பதற்குக்‌ கடுவன்‌ தன்‌ கையை நீட்டுகிறது. முன்னொரு காலத்தில்‌ விளாம்பழத்தைப்‌ பறிப்பதற்காக, வத்ஸாசுரன்‌ என்கிற 
'கன்றை விட்டெறிந்த கிருஷ்ணனுடைய மலை இது. 
திருமலைச்‌ சுளைநீர்‌ பளிங்குபோல்‌ முகம்‌ காட்டுமளவிற்கு சுத்தமானது. அதில்‌ தத்ரூபமாகத்‌ தெரிந்த தன்‌ உருவத்தைப்‌ பார்த்த 
ஆண்குரங்கு பிரமித்துவிட்டது. . களங்கனியைப்‌ பறிக்கக்‌ கைநீட்டிய குரங்கை விவரித்த ஆழ்வாருக்கு உடனே, கன்று 
வடிவில்‌ தன்னைக்‌ கொல்வதற்கு வந்த வத்ஸாசுரனை எறியக்‌ கைநீட்டிய கண்ணனின்‌ நினைவு வந்து விடுறது. 
விளங்களிக்குக்‌ கன்று எறிந்தான்‌ வெற்பு: 
அசுராவேசங்கொண்டு, கோபர்களைக்‌ கொல்லக்‌ காத்திருந்த விளம்பழங்களை வீழ்த்தினான்‌; அதற்காக கன்று வடிவில்‌ வந்து 
ஒளிந்து கொண்டிருந்த வத்ஸாசுரனை, எறிதடியாக, மலைப்பிஞ்சாகப்‌ பயன்படுத்தினான்‌ கிருஷ்ணன்‌, ஒரே கல்லில்‌ 
இரண்டு மாங்காய்‌ அடிப்பதுபோல! விளங்கனியை அடித்த வேங்கடகிருஷ்ணனுக்குக்‌ களங்கனி பிரியமென்று நினைத்தே 
திருமலைக்‌ கடுவன்‌ அதைப்‌ பறிக்கக்‌ கைநீட்டியது போலும்‌! 

பேயாழ்வாரின்‌ பாசுரத்திலுள்ள சிறந்த கருத்தைக்‌ கைநீட்டிப்‌ பறித்துக்‌ கொள்கிறார்‌ திவ்விய கவி பிள்ளைப்பெருமாள்‌ 
அய்யங்கார்‌. பறித்தவா்‌-- 
“*வாவு கவின்‌ மந்தி நுகர்‌ மாங்கனிக்குக்‌ கற்பகத்தின்‌ 
மேவு கவி கைநீட்டும்‌ வேங்கடமே” --என்று தம்முடைய கவித் திறத்தையும்‌ சேர்த்தே பாடுூறார்‌. 
------------

வேடர்‌ வில்வளைக்கும்‌ வேங்கடம்‌ 
வேடர்‌ என்பவர்கள்‌ காட்டிலே வேட்டையாடியே பிழைப்பவர்கள்‌. குறவர்‌ எனப்படுபவர்கள்‌ இவர்களை விடச்‌ 
சற்று நாட்டுடன்‌ அதிகத்‌ தொடர்பு உடையவர்கள்‌ எனலாம்‌. 
குறவர்கள்‌ தினைப்பயிரிடுவது, பிரம்பு அறுத்துக்‌ கூடைகள்‌ பின்னுவது, மலையில்‌ கிடைக்கும்‌ தேன்‌, கழங்கு போன்றவற்றை 
விற்பது ஆகியவற்றைச்‌ செய்து பிழைப்பர்‌. 
வேடர்களும்‌,  குறவர்களும்‌ வேங்கடத்தில்‌ வில்‌ வளைத்த காட்சிகளை ஆழ்வார்கள்‌ பாடியிருக்கின்றனர்‌. 

மலையும்‌, மலைசார்ந்த இடமும்‌ தமிழில்‌ 'குறிஞ்சி' என வழங்கப்படும்‌. எனவே வேங்கடம்‌ குறிஞ்சி நிலத்தைச்‌ சேர்ந்தது. 
“இத்தகைய இடத்தின்‌ கருப்பொருளாகிய குறவர்‌, யானை, குரங்கு, பாம்பு போன்றவற்றை ஆழ்வார்கள்‌ குறிப்பிட்டுச்‌ 
சொல்லும்‌ அழகு அவர்களுடைய கவித்திறனைக்‌ காட்டுவதுடன்‌ நம்மையும்‌ கவிதை அநுபவத்தின்‌ கொடு முடிக்குக்‌ கொண்டு 
செலுத்துகின்றது”,  
பொய்கையாழ்வார்‌ ஒரு பாசுரத்தில்‌ வேங்கடமலையின்‌ குறவர்‌, யானை, பாம்பு ஆகியவற்றை இணைத்துப்‌ பாடுறார்‌, 
இப்பாட்டில்‌ பேசப்படும்‌ பொருட்கள்‌ யாவுமே திருமாலுடன்‌ விசேஷத்‌ தொடர்பு கொண்டவை என்பதும்‌ இதன்‌ சிறப்பு. 

ஊரும்‌ வரியரவம்‌ ஒண்குறவர்‌ மால்யானை 
பேர எறிந்த பெருமணியை - காருடைய 
மின்னென்று புற்றடையும்‌ வேங்கடமே! மேலகரர்‌ 
எம்மென்னும்‌. மாலது இடம்‌. (ஸ்ரீ பொய்கையாழ்வார்‌ -38) 

ஊரும்‌ - ஊர்ந்து செல்லும்‌; வரி - கோடு; அரவம்‌ - பாம்பு; மால்‌ யானை - பெரிய யானை; ஒண்‌ - அழகிய, சிறப்பு வாய்ந்த; 
மணி - மாணிக்கம்‌; கார்‌ - மேகம்‌; மின்‌ - மின்னல்‌; எம்மென்னும்‌ * எம்முடையது என்று கொண்டாடும்‌; மாலது - திருமாலுடைய. 

திருவேங்கடம்‌ என்னும்‌ திவ்ய தேசத்தில்‌ வாழ்வதால்‌ சிறப்புடைய குறவர்கள்‌ தங்கள்‌ இனைப்புளங்களில்‌ பட்டி மேயும்‌ 
யானையைத்‌ துரத்துவதற்காகப்‌ பரண்களில்‌ இருந்தபடியே பெரிய, பெரிய மாணிக்கக்‌ கட்டிகளை அதன்மேல்‌ வீசுகின்றனர்‌. 
அப்பொழுது அங்கு ஊர்ந்து சென்று கொண்டிருக்கும்‌ மலைப் பாம்புகள்‌ யானை மீது பொழியும்‌ மாணிக்க மழையைக்‌ காண்கின்றன; 
யானையை மேகமாகவும்‌, இரத்தினங்களை மின்னல்களாகவும்‌ எண்ணி மயங்குகின்றன. 
மின்னலுடன்‌  இடிதோன்றும்‌ என்று மிரண்டு, பாம்புகள்‌ தங்கள்‌ புற்றுக்களில்‌ புகுந்து கொள்கின்றன. 

ஒண்குறவர்‌ எறிந்த பெருமணி; 
திருமலை வேங்கடேசனிடமிருந்து எந்நேரமும்‌ மகத்தான ஆன்மீக அலைகள்‌ எழுந்து உலகெங்கும்‌ பரவுகின்றன. 
இங்கே பூசிப்பவர்‌, தியானிப்பவர்‌, வாழ்பவர்‌ அனைவருமே தங்களை யறியாமல்‌ இதனால்‌ உயர்ந்த மனநிலைகளை அடைந்து, 
ஆனந்தத்தை அனுபவிக்கின்றனர்‌. அத்தகைய ஆனந்த நிலையம்‌ இது. இத்தகைய சக்திவாய்ந்த திவ்ய தேசத்தில்‌ தொடர்ந்து 
வாழ்வதால்‌, அங்குள்ள குறவர்களும்‌ சத்துவ குணம்‌ மேலோங்கியவர்களாக ஆகி விடுகின்றனர்‌. 
விலை மதிக்க முடியாத மாணிக்கங்களும்‌, இரத்தினங்களும்‌ அவர்களுக்கு சற்றும்‌ இலட்சியமில்லை! 
யானையை அடிப்பதற்கு கற்களுக்கு பதில்‌  மாணிக்கக்‌ கட்டிகளையே உபயோகிக்கின்றனர்‌. 
சமயக் குரவர்களையும்‌ - விஞ்சிவிடுவர்‌  போலிருக்கிறதே. நம்‌ திருமலைக் குறவர்கள்‌! 
எனவே ஆழ்வார்‌ இவர்களை 'ஒண்குறவர்‌' எனகிறார்‌. ஒண்‌ - ஒளிவீசும்‌. மகா தேஜஸ்‌ வீசும்‌ குறவர்கள்‌ இவர்கள்‌. 
கிருஷ்ணன்‌. தங்களிடையே அவதரித்ததால்‌ சிறப்புற்ற ''அறிவொன்றும்‌ இல்லாத ஆய்க்குலத்து'' கோபர்களைப்‌ போன்றே, 
ஸ்ரீ வேங்கடாசலபதி  திருமலைக்‌ குறவர்களிடையே குறிஞ்சி நிலத்‌ தலைவனாக உறைவதால்‌ இவர்களும்‌ ஆழ்வாரால்‌ உயர்வாகப்‌ 
பேசப்படுகன்றனர்‌. 
“ஓண் குறவர்‌' என்பது அழகிய  குறவர்கள்‌, சிறந்த குறவர்கள்‌ என்று பொருள்படும்‌. 
“ஒண்மையாவது இவர்கள்‌ பாட்டன்‌-பூட்டனிலே ஒருத்தன்‌ பூமியிலே இறங்கினான்‌ என்றும்‌ 
பழியின்றிக்கே இருக்கை” என்பது வியாக்கியானம்‌. 
அஃதாவது, 
வழி வழியாகத்‌ திருப்பதி மலையை விட்டுக்‌ 8ழே இறங்காமல்‌ அங்கேயே பெயராது வாழும்‌ சிறப்பு அந்தக்‌ குறவர்கட்கே உரியது 
என்று கூறி ஆழ்வாரின்‌ கருத்தை விளக்குவர்‌ பெரியவாச்சான்‌ பிள்ளை. 
அக்குறவர்கள்‌ கற்களுடன்‌ மாணிக்கக்‌ கற்களையும்‌ எறிவர்‌ என்பது வெறும்‌ உயர்வு நவிற்சியன்று; 
அவர்களுடைய மதிப்பிட்டில்‌ கல்லும்‌, மாணிக்கமும்‌ ஒன்றே என்பது குறிப்பு. 

பெகுமணி: 
பெரிய மாணிக்கம்‌. குறவர்கள்‌ வீரியெறியும்‌ இது, திருவேங்கடவனுக்கும்‌ பொருந்தும்‌. கருநிறம்‌, 
விலைமதிப்பின்மை, ஒளிவீசுதல்‌, பெறுவதற்கு அருமை போன்ற தன்மைகள்‌ கொண்டதால்‌ எம்பெருமானுக்கு மாணிக்கத்தை 
உவமையாகக்‌ கூறுதல்‌ மரபு. 
'அண்ணல்‌ மாயன்‌' என்று தொடங்கும்‌ பாசுரத்தில்‌ (3-3-3) நம்மாழ்வார்‌ திருவேங்கடவனை 
“கண்ணன்‌ செங்களனிவாய்க்‌ கருமாணிக்கம்‌”* என்று குறிப்பிடுகிறார்‌. 
திருமலைக்கும்‌ 'சிந்தாமணிகிரி' என்கிற  மணியான  திருநாமமுண்டு. 
வேண்டியதைத்‌ தருபவர்‌ திருமலையாழ்வார்‌! மணிவண்ணனுக்கு ஏற்ற மணிமலை! 

மால் யானை: 
மால்‌ - இங்கு, *பெரிய' என்று பொருள்படும்‌. மற்றபடி “மால்‌' என்றால்‌ திருமால்‌. இதற்கு வ்யாமோகமே (பிரேமையே) 
வடிவானவன்‌, தன்னை ஆச்ரமித்தவர்கள்‌ (பற்றியவர்கள்‌) விஷயத்தில்‌ பெரும்‌ பித்தன்‌, பக்தவத்ஸலன்‌ என்று பொருள்‌. 
இவ்விதமே யானையும்‌ தன்னைப்‌ பற்றிய பாகன்‌ முதவியோரிடத்திலே மிகுந்த அன்பு செலுத்தும்‌; இத்துடன்‌ 
கருநிறம்‌, நெடிய உருவம்‌, காண்பவர்க்கு எப்பொழுதும்‌ களிப்பூட்டுதல்‌ போன்றவற்றால்‌ .. யானையைத்‌ திருமாலுக்கு 
உவமை கூறுவதும்‌ மரபாகிறது. எனவே ஆழ்வார்‌ மால்‌, பானை ஆகியே இரு பதங்களையுமே சேர்த்து அர்த்தபுஷ்டியாக 
“மால்யானை' என்று அழகுற அமைத்திருப்பது, கற்கக்‌ கற்க களிப்பூட்டுகின்றது! 

ஊரும்‌ வரி அரவம்‌: 
சளர்ந்து செல்லும்‌, கோடுகளை உடைய பாம்பு. இதற்கும்‌ திருமலைக்கும்‌ நிறைய சம்பந்தம்‌ உண்டு. திருமலையே 
ஆதிசேஷன்‌, அரவணை என்பர்‌. எனவே திருமலையாழ்வார்க்கு அரவகிரி, சேஷகிரி, சேஷாத்ரி என்ற திருநாமங்களுண்டு. 
சேஷாசலத்தின்‌ மீது பேருந்தில்‌ நாம்‌ ஊர்ந்து செல்லும்போது, பாதையும்‌ 'ஊரும்‌ வரி அரவம்‌' போன்றே வளைந்து, வளைந்து 
செல்கிறது! போகும்‌ வழி 'ஊரும்‌ வரி அரவம்‌' என்றால்‌, போகும்‌ ஊரும்‌ அரவ கிரி. 

காருடைய மின்‌: 
யானையைக்‌ கார்மேகமென்றும்‌, குறவர்கள்‌ அதைத்‌ துரத்த வீசிய மணியின்‌ ஒளியை மின்னலென்றும்‌ நினைத்து பயந்து 
பாம்பு புற்றை அடைகிறது. யானை, மேகம்‌, மணி ஆகிய மூன்றுமே திருமாலுக்கு உவமைகளாகக்‌ கூறப்படுபவை; 
மூன்றையும்‌ ஒரே இடத்தில்‌ ஒன்றாகக்‌ கண்டு மயங்குகிறது அரவம்‌. மயக்குபவன்‌ மாயோன்‌, திருமால்‌; அவனுக்கு 
உவமையாகக்‌ கூறப்படும்‌ பொருள்களும்‌ இவ்விதமே மயக்கும்‌ தன்மையுடைன போலும்‌! மேகங்கள்‌ எப்பொழுதும்‌ தவழ்ந்து 
கொண்டிருப்பது திருமலை; அதன்‌ மீது மேக வண்ணனாகிய வேங்கடவன்‌ நின்று கொண்டிருப்பது பொருத்தமே! 
இவனுக்கு  ஸ்ரீ ஆண்டாள்‌ மேகவிடுதூதும்‌ அருளிச்‌ செய்துள்ளாள்‌. 

மின்னலைப்‌ போல்‌ ஒளிர்பவள்‌ பொன்னிறமுடைய மகாலட்சுமி. கார்மேகத்தினிடையே மின்னல்‌ ஜொலிப்பது 
போல, பிராட்டியுடன்‌ கூடிய “அலர்மேல்‌ மங்கையுறை மார்பன்‌: திகழ்வதை, 'திருக்கண்டேன்‌, பொன்மேனி கண்டேன்‌' என்று 
பேயாழ்வார்‌ பாடியுள்ளார்‌. 
எனவே 'காருடைய மின்‌' என்பது ஸ்ரீதரன்‌, : மாதவன்‌, லட்சுமி நாராயணன்‌, ஸீதாராமன்‌, 
ராதாகிருஷ்ணன்‌, ஸ்ரீநிவாஸன்‌ போன்ற பிராட்டியுடன்‌ கூடிய  திருமாலைக்‌ குறிக்கிறது. ்‌ 

புற்றடையும்‌ வேங்கடமே! 

**காருடைய மின்‌'' என்று பயந்து திருமலையில்‌ பரம்பு மாத்திரமா புற்றை அடைந்தது? 
மின்னல்‌ போல்‌ ஒளிரும்‌  திருமகளைப்‌ பிரிந்த, கார்மேக வண்ணனாய. வைகுந்தவாசனும்‌ 
அல்லவா சேஷாசலத்தில்‌ பிரம்மதேவனால்‌ படைக்கப்பட்ட திந்திரினி (புளிய] மரத்தின்‌ 8ழிருந்த புற்றை அடைந்ததாக ஸ்ரீ 
வேங்கடேச புராணம்‌ கூறுகிறது! 

இரத்தினத்தைக்‌ கண்டு பயந்து திருமலையில்‌ பாம்பு  புற்றையடைந்தது. 
ரத்னாகரன்‌ என்கிற வேடன்‌ நாரதரிடம்‌ மந்திரம்‌ பெற்று, தன்னைச்‌ சுற்றிலும்‌ எறும்புப்‌ புற்று எழும்படி தவம்‌ 
செய்ததால்‌ *வால்மீகி' என்று பெயரடைந்ததாக வரலாறு கூறுகிறது. 
வால்மீகி முனிவருக்கு ஏதாவது கைம்மாறாக இராமபிரான்‌ செய்ய வேண்டாமா? ஒருவன்‌ செய்ததை அப்படியே 
செய்வது, முன்‌ செய்தவனுக்குப்‌ பெருமையைக்‌ கூட்டும்‌. எனவே பார்த்தார்‌ பெருமாள்‌. நாமும்‌ வால்மீகியைப்‌ போல்‌ சிறிது காலம்‌ 
புற்றுக்குள்‌ கிடப்போம்‌ என்றெண்ணிப்‌ புற்றடைந்தார்‌ வேங்கடத்தில்‌. 
எம்பெருமானைப்‌ பின்பற்றியே நாமும்‌ புற்றுக்குள்‌ எறும்புகள்‌ ஆயிரக்கணக்கில்‌ செல்வது போல, வேங்கட மலைமீது 
சளர்ந்து செல்கிறோம்‌. 

மேலசுரர்‌ எம்மென்னும்‌ மாலது இடம்‌: 
மேல - மேம்பட்டவர்களான, சுரர்‌ - தேவர்கள்‌, நித்யஸூரிகள்‌. 
இவர்களெல்லாம்‌ “ஸ்ரீநிவாஸன்‌ எங்களுடையவன்‌'' என்று  அபிமானித்துக்‌ கொண்டாடும்‌ இடமே திருமலை, 
இது போலவே  நம்மில்‌ பலரும்‌ கொண்டாடுகிறோம்‌ என்பதே கஷ்டகாலமான 
இந்தக்‌ கலியில்‌ நாம்‌ செய்யும்‌ நல்ல காரியங்களில்‌ சிறந்தது;  தவறாமல்‌ பலன்‌ தருவது; 
“மேலசுரர்‌ எம்மென்னும்‌ மாலது இடம்‌”  என்பது இன்றும்‌ உண்மை; நித்ய ஸூரிகளே திருமலையில்‌ பற்பல 
வடிவங்களையெடுத்து உலவுகின்றனர்‌ என்று பெரியோர்‌ பணிப்பர்‌. 

திருவேங்கடத்தில்‌ வாழும்‌ குறவர்‌, அரவம்‌, யானை, அதன் மேல்‌ எறியும்‌ மணி யாவும்‌ பெருமானைப் போல்‌ 
சிறப்புடையன” என்கிறார்‌ ஆழ்வார்‌. 
திருவேங்கட மலையே நித்யஸூரி ' நிர்வாஹகனான எம்பெருமான்‌ திருவுள்ளம்‌ உவந்து எழுந்தருளியிருக்கும்‌ இடம்‌ என்றார்‌. 
திவ்யதேசங்களிலுள்ள சராசரங்கள்‌ (அசையும்‌, அசையாப்‌ பொருட்கள்‌) முற்றும்‌ மெய்யன்பர்கட்கு உத்தேச்யமாய்‌ 
(உகந்தவையாய்‌) இருக்கும்‌. ஸ்ரீ குலசேகர ஆழ்வார்‌ தம்முடைய "பிரபந்தத்தலே நான்காம்‌ திருமொழியிலே 
''வேங்கடத்துக்‌ கோனேரி வாழும்‌ குருகாய்ப்‌ பிறப்பேனே'' என்று தொடங்கித்‌, 
திருமலையில்‌ பலவகைப்‌ பிறவி பிறக்க குதூஹலித்து, 
கடைசியாக “திருவேங்கடம்‌ என்னும்‌ எம்பெருமான்‌ பொன்மலைமேல்‌ ஏதேனும்‌ ஆவேனே”! என்று தலைக்கட்டுகிறார்‌. 
அதற்கேற்ப, இக் குலசேகர ஆழ்வாரைப்‌ போன்ற ஆர்வம்‌ உடைய . மஹான்‌௧ளே திருமலையில்‌ 
பாம்பாகவும்‌, -குறவராகவும்‌, யானையாகவும்‌, புற்றாகவும்‌ பிறந்திருப்பார்கள்‌ ஆகையாலே அப்பொருள்களையும்‌ 
எம்பெருமானைப்‌ போலவே உத்தேச்யமாகக்‌ கொண்ட இவ்வாழ்வார்‌ இப்பாசுரத்தாலே தம்முடைய எண்ணத்தை வெளியிடுகிறார்‌ என்க. 

திருமலை கோபர்களாகிய குறவர்கள்‌ தினைப்புனம்‌ காப்பதை பொய்கைப்‌ பிரான்‌ பாடிவிட்டார்‌ 
நாம்‌ திருவேங்கடத்தின்‌ கோபிகைகளான குறமகளிர்‌ 'பெளர்ணமி நிலவில்‌ பனிவிழும்‌ இரவில்‌' . விளையாடுவதைப்‌ பாடுவோம்‌” 
என்று அருளிச்‌ செய்கிறார்‌ ஸ்ரீ பேயாழ்வார்‌: 

குன்று ஒன்றினாய குறமகளிர்‌ கோல்‌ வளைக்கை 
சென்று விளையாடும்‌ தீங்கழைபோய்‌ - வென்று 
விளங்குமதி கோள்விடுக்கும்‌ வேங்கடமே! மேலை 
இளங்குமரர்‌ கோமான்‌ இடம்‌. (ஸ்ரீ பேயாழ்வார்‌ -72) 
குன்று : இங்கே, திருமலை; கழை - மூங்கில்‌; மதி - சந்திரன்‌; கோள்‌ - ராகு; மேலை - மேலான பரமபதத்திஜிருக்கும்‌; 
இளங்குமரர்‌ - பிராயம்‌ எப்போதும்‌ இருபத்தைந்தேயுள்ள  நித்ப ஸூரிகள்‌; கோமான்‌ - தலைவன்‌. 

திருமலையிலேயே என்றும்‌ வசிப்பவர்கள்‌ அழகிய வளைகளை யணிந்த கைகளை யுடைய குறத்திகள்‌. 
இவர்கள்‌  அழகிய மூங்கில்கள்‌ வளரும்‌ இடத்திற்குப்‌ போய்‌ விளையாட்டாக. ஏறி அவற்றை வளைப்பர்‌; 
அதனால்‌ சந்திர மண்டலம்‌ வரை ஓங்கி வளர்ந்த மூங்கில்கள்‌ அசைந்து, சந்திரனைப்‌ பீடித்திருக்கும்‌ 
ராகுவை வென்று அப்புறப்படுத்தி, அதை கரகணத்தினின்று விடுவித்து, மீண்டும்‌ முழு நிலவாக பிரகாசிக்கச்‌ செய்யும்‌. 
இத்தகைய வேங்கடமே, நித்ய யுவர்களாகவே இருக்கும்‌ நித்ய ஸூரிகளின்‌ தலைவனான ஸ்ரீவேங்கடாசலபதியின்‌ உறைவிடம்‌. 

திருமலையை விட்டு ஒரு நொடிப்பொழுதும்‌  இழிந்தாலும்‌ குலப்‌பழியாம்‌ என்று திருமலையை விடாதே அங்கே 
நித்தியவாஸம்‌ பண்ணுகின்ற குறத்திகள்‌ அவர்கள்‌ ஊஞ்சலாடுகை முதலான விளையாடல்களுக்காக ' மூங்கில்‌ மரங்களிலே 
ஏறியிருப்பதுண்டு. அப்படிப்பட்ட மூங்கில்களானவை, சந்திரனை க்ரஹிக்கின்ற ராகுவைக்‌ குத்தி அப்புறப்படுத்தி அச்சந்திரனை 
மகழ்விக்கின்றனவாம்‌. 

இப்பாட்டுக்கு மற்றும்‌ பல வகையாகப்‌ பொருள்‌ கூறுவர்‌. 
விளையாடுகின்ற. குறத்திகளின்‌ கோல்‌ வளைக்கையானது சென்று நல்ல மூங்கிற்செறிவை நீக்கி, 
சந்திரன்‌ இங்கு புகப்பெறாமையால்‌ பெற்றிருந்த இடரை நீக்கும்‌ என்றுமாம்‌. 
அன்றியே 
குறத்திகளின்‌  வளைகளின்‌ ஒளியானது சந்திர ஒளி புகுரப்பெறாத மூங்கிலிருளை 
அகற்றி, வெளிச்சமாக்்‌க, சந்திரன்‌ மருவையும்‌ போக்கும்‌ என்றுமாம்‌. 

மேலையிளங்குமரர்‌: 
நித்ய ஸூரிகள்‌, என்றும்‌ பன்னிரண்டு வயது வாய்ந்திருப்பர்‌  எனவும்‌ கூறுவர்‌. 

ஆழ்பொகுள்‌: 

சந்திர மண்டலம்‌ வரை உயர்ந்தது திருமலை என்றார்‌. 
சந்திரனின்‌ கஷ்டத்தை நீக்கு, அதைக்‌ கவ்விக்கொண்டிருந்த இராகுவை விரட்டியடித்து அபாயத்திலிருந்து திருமலை 
காக்கிறது. இதனால்‌ பக்தர்களை அபாயத்திலிருந்து விடுவித்து விளங்கச்‌ செய்வதும்‌ திருமலையே என்பது கூறப்பட்டது. 

திருமலைக்‌ குறவர்களைப்‌: பற்றிய மற்றொரு பேயாழ்வார்‌ பாசுரம்‌: , 

முடிந்த பொழுதில்‌ குறவாணர்‌ ஏனம்‌ 
படிந்து உழுசால்‌ பைந்தினைகள்‌ வித்த - தடிந்து எழுந்த 
'வேய்ங்கழை போய்‌ விண்‌ திறக்கும்‌ வேங்கடமே! மேலொருநாள்‌ 
தீங்குழல்‌ வாய்வைத்தான்‌ சிலம்பு. (89) 

முடிந்த பொழுதில்‌ - ஆயுட்காலம்‌ முடிந்த நிலையிலுள்ள; குறவாணர்‌ - குறசாதியர்‌, குறவர்‌ தலைவர்கள்‌; ஏனம்‌ - பன்றி; 
படிந்து உழு - தோண்டி உழுத; சால்‌ - கட்டியுதிர்ந்து பதமான மண்ணிலே; வித்த - விதைக்க; வேய்ங்கழை - மூங்கில்‌ தடிகள்‌; 
சிலம்பு - மலை. 
 
மரணமடையும்‌ நிலையிலுள்ள இழவர்களான குறவர்‌ தலைவர்கள்‌ திருமலையில்‌ புதிய தனை விதைகளை 
விதைக்கின்றனர்‌. எங்கே எனில்‌, காட்டுப்பன்றிகள்‌ தங்கள்‌ செருக்காலே மூங்கில்கள்‌ வேரோடு விழும்படி 
கோரைப்பற்களினால்‌ மண்ணை அகழ்ந்து உழுத நிலங்களிலே! 
இங்ஙனம்‌ அறுபட்டாலும்‌, நிலத்தின்‌ வளத்தாலும்‌, திருமலையின்‌ மஹிமையாலும்‌ மூங்கிற்‌ கழைகள்‌ மீண்டும்‌ தடித்து வளர்ந்து, 
ஆகாயத்தைப்‌ பிளந்து நிற்கின்றன வேங்கடத்தில்‌. 
முன்பொரு நாள்‌ மதுரமான புல்லாங்குழலைத்‌ தன்‌ பவளச்செவ்வாயில்‌ வைத்து ஊதிய கண்ணபிரானுடைய திருமலை இது! 

திருவேங்கடமலையில்‌ வாழும்‌ குறவர்களோடும்‌, திருவேங்கடமுடையானோடும்‌ . வாசியறத்‌ தமக்கு 
விருப்பமாயிருத்தலை விளக்குகிறார்‌ ஆழ்வார்‌. 
திருமலையின்‌ நிலவளத்தையும்‌, ஒக்கத்தையும்‌ (உயரத்தையும்‌) ஒரு சமத்காரமாகப்‌ பேசுகிறார்‌. இதில்‌. 
தேன்‌ -இரட்டுதல்‌, வேட்டையாடி மிருகங்களைப்‌ பிடித்து வருதல்‌ முதலியன குறவர்களின்‌ தொழிலாகும்‌; 
இத்தொழில்கள்‌ நல்ல வயதிலுள்ள குறவர்கட்குச்‌ செய்ய இயலுமேபன்றி, இழக்குறவர்கட்குச்‌ செய்ய இயலா. 
ஆகவே அவர்கள்‌ இருஷியினால்‌ (உழவினால்‌) ஜீவிக்கப்‌ பார்ப்பார்கள்‌; அது தன்னிலும்‌ தாங்களே உழுது பயிரிடுதலும்‌ அவர்கட்கு இயலாது. 
கலப்பை பிடித்து உழமாட்டாத 'முடிந்த பொழுதில்‌ குறவாணர்‌: ஆதலால்‌, வயதான குறவர்கள்‌ தாங்கள்‌ பூமியைப்‌ பதம்‌ செய்ய 
முடியாதவர்களானாலும்‌ பன்றிகள்‌ வேருணவுக்காகப்‌ பூமியை எங்கும்‌ தோண்டுவதால்‌- அதுவே பண்சால்‌ உழுத பூமிபோல்‌ 
பண்பட அனுகூலமாகிறது. ஆங்காங்குள்ள மூங்கில்களும்‌ வேர்‌ அறுக்கப்பட்டு விழுந்துவிடுகன்றன.
இனி அங்கு. மூங்கில்‌  வளராதென வைத்து, அவர்கள்‌ விதைக்கிறார்கள்‌. 
ஆயினும்‌ பூமியின்‌ வளத்தால்‌ அறுக்கப்பட்டு விழுந்த மூங்கில்களும்‌ வானளாவ வளர்கின்றன. இங்ஙனம்‌ ஸாரமான திருமலையே 
திருமாலின்மலை என்றபடி. 

தீங்குழல்‌: 
குறவர்களும்‌ பன்றிகளும்‌ சுயநலம்‌ கருதி மூங்கில்களை முறித்தாலும்‌ அவை வானளாவ வளர்கின்றன. அதற்கு 
வேங்கடத்தில்‌ இருத்தலே காரணம்‌. வேங்கடமுடையான்‌ வேய்ங்குழல்‌ ஊதுகின்றவனாகையால்‌ அவன்‌ திருமேனி 
ஸம்பந்தம்‌ பெற்ற புல்லாங்குழலின்‌ சு௫தியிற்‌ பிறந்த மூங்கில்களுக்கு உண்டாம்‌ நீங்கெல்லாம்‌ தானே முடிகிறது. 
ஆக எம்பெருமானை ஆச்ரயித்தாரை (பற்றியவரைச்‌) சார்ந்தார்க்கு அயலார்‌ அபகாரம்‌ செய்ய இயலாது என்றதாயிற்று. 
திருவேங்கடத்தில்‌ மூங்கில்‌ வளர்வது கரத தமாவ தாம்‌ வளர்ந்தது போலவே! 

தீங்குழல்‌ வாய் வைத்தான்‌ சிலம்பு: 
கோவர்த்தன மலையின்‌ அருகே இருந்துத்‌ தீங்குழல்‌ ஊதி கோபிகளையும்‌,. கோக்கள்‌ (பசுக்கள்‌), மிருகங்கள்‌, செடி கொடி 
மரங்கள்‌, கந்தர்வர்‌ முதலானோரான எல்லாப்‌ பிராணிகளையும்‌ தனக்கு வசமாக்கிக்‌ கொண்ட எம்பெருமான்‌ 
சதையின்‌ முடிவிலே, ஆயுள்‌ முடிவுக்குள்ளே முடிந்தபோது நாம்‌ அவனை ஆச்ரயிருக்க 
வேண்டுமென்று உபதேசித்தருளின பொருளை இப்போதும்‌ அர்ச்சையில்‌ விளக்குவது திருவேங்கடம்‌, ஆகையால்‌ அதுவே 
அவனது மலையாம்‌. 

குறவர்களும்‌, பன்றிகளும்‌ வெட்டித்தள்ளினாலும்‌, திருமலை மூங்கில்கள்‌ கிருஷ்ணனுக்குக்‌ குழல்‌ தந்த புண்ணியத்தால்‌ ஓங்கி 
வளர்கின்றன; காற்றிலே அசைந்து 'ஊய்‌, ஊய்‌' என்று ஓசை எழுப்புகின்றன. ''புல்லாங்குழல்‌ கொடுத்த மூங்கில்களே, எங்கள்‌ 
புருஷோத்தமன்‌ புகழ்‌ பாடுங்களேன்‌'' என்பது போல்‌ மதுரகீதம்‌  பாடுகின்றன! முன்பொரு நாள்‌ மதுரமாக தையைப்‌ பாடிய 
வேணுகோபாலனே திருமலையில்‌ ஸ்ரீநிவாஸனாக நிற்பதால்‌ 
அவனே இவ்விதம்‌ வேணுகானம்‌ செய்கிறானோ, என்று. நாம்‌ சற்று அசந்து விடுகிறோம்‌. 

இப்பாசுரம்‌ மூன்று அவதாரங்களை நினைவூட்டுகிறது. 
“ஏனம்‌ (பன்றி) படிந்துழுசால்‌' என்பது முன்பு ஆதிவராகப்‌ பெருமாள்‌ நிலத்தை அகழ்ந்தெடுத்ததை நினைவுறுத்துகிறது. 
இவர்‌ திருமலையில்‌ சுவாமி புஷ்கரிணி தீர்த்தக்கரையில்‌ எழுந்தருளியிருப்பதால்‌ திருமலைக்கு 'வராக கிரி! என்றொரு 
பெய்ருமுண்டு. இத்தகைய வராக க்ஷேத்திரத்தில்‌, காட்டுப்பன்றிகள்‌ தங்கள்‌ செருக்கால்‌ மூங்கில்கள்‌ சரியும்படி 
நிலத்தை உழுவது எவ்வளவு பொருத்தமாகறது!
மூங்கில்கள்‌ மீண்டும்‌ வானளாவ வளர்வது, உலகளந்த திரிவிக்கிரமனை நினைவூட்டுகிறது. 
வானையே அளப்பதுபோல்‌ உயர்ந்த மலையில்‌ நிற்பதால்‌, தருவேங்கடவனைத்‌ திரிவிக்ரமன்‌ என்பது பொருந்தும்‌ 
என்று பணிப்பர்‌ பெரியோர்‌. இதுவே இருஷ்ணாவதாரத்தில்‌ குழல்‌ ஊதியவனின்‌ மலையுமாகும்‌. 

அடுத்து, திருமழிசையாழ்வார்‌ திருமலை வேடர்களையும்‌, குறவர்களையும்‌ பாடும்‌ இரு பாசுரங்களைக்‌ காண்போம்‌.
இவர்‌  பார்க்கவ முனிவருக்கு மகனாய்‌ அவதரித்து, பிரம்பு அறுக்கும்‌ குறவர்‌ சாதியிற்‌ வளர்ந்தவர்‌ என்று கூறுவர்‌. 

வைப்பன்‌ மணிவிளக்கா மாமதியை மாலுக்கு என்று 
எப்பொழுதும்‌ கைநீட்டும்‌ யானையை - எப்பரடும்‌ 
வேடு வளைக்கக்‌ குறவர்‌ வில்லெடுக்கும்‌ ,வேங்கடமே! 
நாடு வளைத்து ஆடுதுமேல்‌ நன்று. --ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ 

வேடு - வேடர்‌; நாடு - நாட்டு மக்கள்‌; வளைத்து ஆடுதுமேல்‌ - பிரதட்சிணம்‌ செய்து வணங்குதல்‌. 
 
“சிறந்த சந்திரனைத்‌ திருவேங்கடமுடையானுக்கு மங்களதீபமாக சன்னிதியில்‌ வைப்பேனாக'' என்றெண்ணித்‌ 
திருமலை யானை அதைப்‌ பிடிப்பதற்கு எப்போதும்‌ துதிக்கையை உயரத் தூக்கியபடியே உள்ளது. 
பானையைப்‌ பிடிக்க வேடர்கள்‌ அதை நாற்புறமும்‌ சுற்றி வளைத்துக்‌ கொள்கிறார்கள்‌.
அங்குள்ள குறவர்கள்‌ யானையைக்‌ காக்க வேடர்களை எதிர்த்து (வேடர்களுடன்‌ சேர்ந்து யானையை அடிக்க, என்றும்‌ கூறுவர்‌) 
வில்லை எடுப்பர்‌. தாட்டு மக்கள்‌ அனைவரும்‌ அத்திருமலையைச்‌ சூழ்ந்து, பிரதட்சிணம்‌ செய்து வணங்குவது நன்று. 

திருமலை சந்திரமண்டலத்தை எட்டியிருக்கிறதென்று அதன்‌ ஓக்கம்‌ (உயரம்‌, பெருமை) வெளியிடப்பட்டதாம்‌.
இதனால்‌, மலைகளில்‌ சந்திரன்‌ மிக்க ஸமீபத்தில்‌ இருப்பதாகக்‌ காணும்‌ மலைப்பிராணிகள்‌ அவனைக்‌ கைக்கொள்ள விரும்பி பல 
முயற்சிகள்‌ செய்வது இயல்பு. 
யாளை சந்திரனைப்‌ பிடிக்க முயற்சி செய்வது வெளிக்குத்‌ தெரியுமேயன்றி இன்ன காரியத்திற்காக 
அதனைப்‌ பிடிக்க முயல்கிறது என்பது தெரியமாட்டாதே; 
திருமலையப்பனுக்கு நந்தாவிளக்காக வைப்பதற்குப்‌ பிடிக்க முயல்கிறதென்று ஆழ்வார்‌ எங்ஙனே அறிந்தார்‌? : என்று சிலர்‌ கேட்கக்கூடும்‌; 
திருமலையில்‌ பிறக்கப்பெற்ற பெருமையினால்‌ அவ்யானைக்கு இப்படிப்பட்ட நற்கருத்தே இருக்கத்தகும்‌ என்று 
திருவுள்ளம்‌ பற்றினர்‌ என்க. 
அன்றியும்‌ “*வாயுந்திரையுகளும்‌'* என்கிற திருவாய்மொழியிற்படியே, பிறர்‌ செய்யும்‌ காரியங்களை 
எல்லாம்‌ தாம்‌ செய்யும்‌ காரியங்கள்போல்‌ பகவத்‌ விஷய ப்ராவண்யத்தால்‌ செய்வனவாகவே கொள்வது மெய்யன்பர்களின்‌ வழக்கமாகும்‌. 
ஆழ்வார்‌ சந்திரனைப்‌ பார்க்கும்போது '“இவன்‌ திருவேங்கடமுடையானுக்கு நந்தாவிளக்காக அமையத்தகும்‌"” 
என்று தோற்றவே, இத்தோற்றமே அவ்விடத்து யானைக்கும்‌ இருந்ததாகக்‌ கொண்டு கூறுதல்‌ பொருந்தியதே. . 

இங்கு (திருமலையில்‌, எல்லாம்‌ எம்பெருமானின்‌ கைங்கர்யத்தில்‌ ஈடுபட்டவை. யானை சந்திரனைக்‌ கண்டு 
கைநீட்டுவது, அதை நந்தாவிளக்காக நம்‌ திருமாலுக்கு அமைக்கலாம்‌ என்கிற நோக்கத்தினால்‌. “இப்படி 
கைங்கர்யபரமான ' யானையை ஏன்‌ வில்லெடுத்து வருத்துகின்றனர்‌. அது நன்றோ?” என்னில்‌ - 
யானைப்பிடிக்க  வளைத்து வரும்‌ வேடரை விலக்கக்‌ குறவர்‌ வில்லெடுக்கன்றனர்‌ என்க. 
அப்போது பாகவத விரோதிகளை வெல்ல முயல்வது என்ற நன்மையாம்‌. 
அங்குள்ள வேடர்கள்‌ மட்டும்‌ அவ்வாறு நடப்பரோ என்னில்‌, அவர்கள்‌ புறம்புள்ளவரே, அங்குள்ளவரல்லர்‌ என்க. 
இனி வேடர்களும்‌, குறவர்களும்‌ யானையைப்‌ பிடிக்கின்றனர்‌ என்றே கொண்டாலும்‌, யானை சந்திரனை இந்த நோக்கத்துடன்‌ 
பார்க்கிறது என்பதை அவர்‌ அறியார்‌. யானையைப்‌ பிடித்து வசப்படுத்தினால்‌ எம்பெருமான்‌ ஸன்னிதியில்‌ கைங்கர்யத்திற்கு 
அதைப்‌ பயன்படுத்தலாம்‌ என்பது அவர்கள்‌ கருத்து எனலாம்‌. 
நித்ய விபூதியிற்போலே திருமலையிலுள்ள ஜங்கம ஸ்தாவர பூதங்கள்‌ (செடி கொடி, விலங்குகள்‌) எல்லாம்‌ திருமாலின்‌ 
விபூதியாய்‌ அவனது கைங்கர்யத்திலே ஈடுபட்டவை என்று அதன்‌ பெருமையை (இப்பாகரத்தில்‌) அனுபவித்து, (அடுத்த பாட்டில்‌) 
வேங்கடமே ஸர்வோத்க்ருஷ்டம்‌ (அனைத்திலும்‌ சிறந்த புண்ணியத்தலம்‌) என்கிறார்‌. 
: 
“விலங்குகளும்‌ கிட்டி அடிமை செய்யும்‌ திருமலையை நாட்டார்‌ சுற்றி வலம்‌ வந்து வணங்குவார்கள்‌ எனில்‌ நலமாம்‌'* என்றார்‌. 

“வெண்‌ மதியம்‌ தா!” என்று மந்தி கடுவனைக்‌ கேட்டதை பேயாழ்வார்‌, பாடினார்‌. 
இதை கஜேந்திர ஆழ்வார்‌ பரம்பரையில்‌ பிறந்த திருமலை யானை கேட்டு விட்டது. 
““பெண்‌ குரங்கின்‌ பேச்சைக்கேட்டு, ஆண்‌ குரங்கு குரங்குத்தனமாக எதையாவது செய்துவிடப்‌ போகிறதே! 
இத்தனை அழகிய முழுநிலவு குரங்கு கையில்‌ கிடைத்த பூமாலையின்‌ துர்கதியை ௮டைவதார? அதற்கு 
முன்‌ நாமே சந்திரனைப்‌ பறித்து ஸ்ரீ வேங்கடாசலபதிக்கு மணிவிளக்காய்‌ வைப்போம்‌!'” என்று திருமலை தும்பிக்கை 
ஆழ்வார்‌ அவசர அவசரமாகக்‌ கையை நீட்டுகிறார்‌. 
பெளர்ணமி இருமாலை பூஜிப்பதற்குச்‌ சிறந்த நாள்‌, "மார்கழித்‌ இங்கள்‌ மதி நிறைந்த தன்னாள்‌'' என்றே திருப்பாவை துவங்குகிறது. 
நம்மாழ்வார்‌ வைகாசி விசாகத்திலும்‌, திருமங்கையாழ்வார்‌ கார்த்திகை கார்த்திகையிலும்‌, பெளர்ணமி திதியில்‌ அவதரித்தனர்‌. 
''சரி, நம்மால்‌ ஆன பெளர்ணமி பூஜையைப்‌ பெருமாளுக்குச்‌ செய்வோம்‌!” என்று நினைத்தே 
திருமலை கஜேந்திரர்‌ சந்திரனைப்‌ பிடிக்க முயல்கிறார்‌. 

யானை துதிக்கையைத்‌ தூக்குவது வணங்குவது  போலிருக்கும்‌; துதிக்கும்‌ கையே துதிக்கை. '*மாலுக்கென்று 
எப்பொழுதும்‌ கைநீட்டும்‌ யானை' என்பதால்‌ திருமலை. யானை எப்பொழுதும்‌ துதிக்கையைத்‌ தூக்கி ஏழுமலையானை ஏத்தித்‌ 
துதித்தே நிற்கும்‌ என்பது தெரிகிறது. ஆபத்துக்‌ காலத்தில்‌ “ஆதிமூலமே” என்று அலறிய பாகவத புராணத்து கஜேந்திரனை 
விடவும்‌ பக்தியிற்‌ சிறந்தது நான்முகன்‌ திருவந்தாதி' திவ்வியப்‌ பிரபந்த யானை!
''சந்திரன்‌ திருமலைக்கு நேரே எப்பொழுது வரும்‌? வந்தவுடன்‌ 'லபக்‌'கென்று பிடித்து மணிவிளக்காய்‌  வைத்து விடுவோம்‌,'' என்று நினைத்தே, தயார்நிலையில்‌ 
எப்பொழுதும்‌ துதிக்கை தூக்கியபடியே இருக்கிறார்‌. சில யோகியர்‌ மன வலிமையை வளர்த்துக்‌ கொள்ள, பகவானை 
நினைத்தே எப்பொழுதும்‌ கைதூக்கியபடி இருப்பர்‌; சிலர்‌ எப்பொழுதும்‌ நின்றுகொண்டே இருப்பர்‌. நம்‌ திருமலை 
கஜேந்திரயோகி இத்தகையவரே. வேடர்கள்‌ தம்மைச்‌ சூழ்ந்து கொண்டது, குறவர்கள்‌ வில்லை எடுப்பது ஒன்றுமே தெரியாமல்‌ 
கருமமே கண்ணாக இருக்கிறார்‌. “கை கூப்பிய நிலையிலேயே ஆழ்வார்களும்‌, ஆசார்யர்களும்‌ எழுந்தருளியிருக்கின்றனர்‌. நமக்கு 
இருப்பதோ ஒரே ஒரு கை. நம்மால்‌ கைகூப்ப இயலாது. எனவே கைதூக்கிய  நிலையிலேயே நிற்போம்‌'' என்றிருக்கிறார்‌. 

நாடு வளைத்து ஆடுமேல்‌ தன்று: 
நாட்டிலுள்ளவர்கள்‌ திருமலையை வலம்‌ வந்து, திருவேங்கடமுடையானைக்‌ குறித்து கீதங்கள்‌ பாடியும்‌, ஆடியும்‌ 
தொழுவது நாட்டிற்கும்‌ நல்லது, வீட்டிற்கும்‌ நல்லது என்றார்‌ ஆழ்வார்‌. ஏழு மலைகளும்‌ பரந்து கிடப்பதால்‌, 
கிரிப்பிரதட்சிணெமாக வலம்‌ வருதல்‌ கருடாழ்வாருக்கே இயலும்‌. 
ஏழு மலைகளையும்‌ நடந்து ஏறுவதே வலம்‌ வருதலாகக்‌ கொள்ளலாம்‌. திருமலையைப்‌ பொறுத்தவரையில்‌, 
கிரிப்பிரவேசமே கிரிப்பிரதட்சிணம்‌. 'நாடு வளைத்து' என்று ஆழ்வார்‌. அன்று அருளியபடியே, திருமலையைச்‌ சுற்றிய 
காடுகளெல்லாம்‌ மாயமாய்‌ நிறைந்து, மக்கள்‌ வாழும்‌ நாடாக  விட்டதை இன்று காண்கிறோம்‌! திருமலையை' நாடு வளைத்து வருகிறது. ்‌ 

நன்‌ மணிவண்ணன்‌ ஊர்‌ ஆளியும்‌ கோளரியும்‌ 
பொன்மணியும்‌ முத்தமும்‌ பூமரமும்‌ - பன்மணி நீர்‌ 
ஓடு பொருது உருளும்‌ கானமும்‌ வானரமும்‌ 
வேடும்‌ உடை வேங்கடம்‌. (-ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ 47) 

ஆளி - யாளி, கோளரி - கோள்‌ -* அரி; கோள்‌ - பலம்‌, மிடுக்கு; அரி - சிங்கம்‌. 
நீரோடு என்பது “நீர்‌ ஓடு என்று இங்கு பிரித்து எழுதப்பட்டது. வேடு - வேடர்‌ இனம்‌ 
 
யாளி என்ற மிருகங்களும்‌, பலமுள்ள சிங்கங்களும்‌, பொன்னும்‌, மாணிக்கங்களும்‌, முத்துக்களும்‌, பூத்த மரங்களும்‌, 
பலவகைப்பட்ட ரத்தினங்கள்‌ அருவி நீருடன்‌ கலந்து உருண்டு விழும்‌ காடுகளும்‌, வானரங்களும்‌, வேடர்‌ இனங்களும்‌ உடையது வேங்கடம்‌
இதுவே நீலமணிவண்ணனாகிய திருமாலின்‌ நல்ல திவ்ய தேசம்‌. 

““ஸர்வேச்வரன்‌ உகப்பது திருமலை. ௮வன்‌ உறையும்‌ திவ்ய தேசத்திலுள்ள சேதன அசேதனங்களும்‌ (உயிருள்ள, உயிரற்ற 
பொருட்கள்‌) அவன்‌ விரும்புவன; அவை நித்யஸூரிகளே”' என்று அம்மலையை மண்டி அநுபவிக்கிறார்‌ ஆழ்வார்‌.  

நித்பஸூரிகளே எம்பெருமான்‌ எழுந்தருளியிருக்கும்‌ திருமலைக்கேற்ப பல உருவங்களை எடுத்துக்கொண்டு அதனைச்‌ 
சிறப்பித்து வருகின்றனர்‌. ஆகையால்‌ திருமலை பரமபதத்திற்குக்‌ குறைந்ததன்று. பரமபதத்தில்‌ யாளி, மணி, மரம்‌, வானரமென்றாற்‌ 
போன்றவைகள்‌ இருக்குமாயினும்‌ வேடர்‌, குறவர்‌ போன்றோர்‌ இடைப்பதரிது. வேடுமுடையதானபடியாலே வேங்கடத்திற்கு 
ஏற்றமுண்டு. மணிவண்ணனும்‌ லீலாவிபூதியில்‌ உள்ளாருக்கும்‌ சுலபனாயிருந்து தனது மணிவண்ணத்தன்மை, அதாவது மணி 
முன்றானையிலே முடிக்கப்பட்டு அடக்கப்படுமாப்‌ போலே எல்லோருக்கும்‌ எளிதில்‌ இடைக்கப்படுகின்றமை தெரியும்படி 
இங்கே விளங்குகிறான்‌. ஆகவே இதுவே அவனுக்கு நல்ல ஊர்‌. 
இனி நாம்‌ பரமபதத்தை எவ்வாறு நினைக்க வேண்டும்‌ எனில்‌, 
இராமன்‌ அரண்யத்திற்கு எழுந்தருவின பிறகு அயோத்தியை எவ்வாறு பாவிக்க வேண்டுமென்று இலக்குமணனுக்கு அவரது 
தாய்‌ உபதேசித்தாள்‌ என்பதை நினைக்க. 

நன்மணி: 
நல்‌ என்பதை மணியோடு சேர்ப்பதை விட ஊரோடு சேர்ப்பது நலம்‌. 
ஊர்‌: 
திருமலையைக்‌ காடென்று நினைக்கலாகாது, ஊரேயாம்‌ அது. பலவகை விவேகிகள்‌ நிறைந்த இடத்தைக்‌ 
காடென்னலாமோ?  ஆளிகள்‌, ஆள்கின்ற நித்யஸூரிகள்‌; கோளரிகள்‌, நரசிங்க மூர்த்தியைப்‌ போன்றவர்கள்‌. இப்படி எல்லாம்‌ சிறந்தவை. 

வேங்கடம்‌: 
பாபம்‌ கழிந்தாரைப்‌ பெறுவது பரமபதம்‌. பாபிகளின்‌ பாபத்தையும்‌ போக்குவது இது. 
எனவே பரமபதத்தையும்‌ விட உயர்ந்தது வேங்கடம்‌. 
“இராமன்‌ இருக்குமிடம்‌ அயோத்தி என்பதுபோல்‌ பரமபதநாதன்‌ இக்கலியுகத்தில்‌ உஈச்‌ஈமிடமான திருவேங்கூமே பரமபதம்‌. 

“வேடும்‌ உடை வேங்கடம்‌”: என்று பாசுரத்தை ஆழ்வார்‌ முடித்திருப்பதை ஒட்டியே நம்‌ தலைப்பும்‌ அமைந்தது; 
நாம்‌ இதுவரை கண்ட திருமலை வேடர்‌, குறவர்‌ காட்சிகளும்‌ முடிகிறது! 
முன்பொருநாள்‌ ஒரு வேடுவன்‌ பறவை என்று நினைத்து வில்லை வளைத்து அம்பை எய்ய, அது திருவடிகளில்‌ 
தோய்ந்ததால்‌ கிருஷ்ணாவதாரம்‌ முடிவுற்றது. 
திருவடிகளில்‌ அம்பு தோய்ந்ததால்‌ மறைந்தவன்‌ மீண்டும்‌ அர்ச்சையாகத்‌ தோன்றியதால்‌, அவனுடைய திருவடிகள்‌ தோய்ந்த மலை எது? 
வேடர்‌ வில்‌ வளைக்கும்‌ வேங்கடம்‌, கானமும்‌, வானரமும்‌, வேடும்‌ உடை வேங்கடம்‌-

----------------

வேழம்‌ வழிபடும்‌ வேங்கடம்‌ 
வேங்கடத்தை மங்களாசாஸனம்‌ செய்த முதலாழ்வார்கள்‌, 
அதன்‌ யானைக்காட்சிகளை மிக அற்புதமாக வர்ணித்துள்ளனர்‌. 
பொய்கையாழ்வார்‌ காட்டும்‌ யானைக்காட்சி இது: 

பெருவில்‌ பகழிக்‌ குறவர்‌ கைச்‌ செந்தீ 
வெருவிப்‌ புனந்‌ துறந்த வேழம்‌ இருவிசும்பில்‌ 
மீன்நீழக்‌ கண்டஞ்சும்‌ வேங்கடமே! மேலசுரர்‌ 
கோன்வீழக்‌ கண்டுகந்தான்‌ குன்று (ஸ்ரீ பொய்கையாழ்வார்‌ -40) 

பகழி - அம்பு; செந்தீ - வட்டி; புனம்‌ - கொல்லை, வயல்‌; வேழம்‌ - யானை, விசும்பு - ஆகாயம்‌; மேல்‌ - முன்னொரு 
காலத்தில்‌; அசுரர்‌ கோன்‌ - இரணியன்‌; குன்று - திருமலை; 

பெரிய வில்லையும்‌, அம்புகளையும்‌ உடைய குறவர்கள்‌, கொளுத்திய தீவட்டியையும்‌ ' கையிலேந்திக்‌ கொண்டு, 
இனைப்புனத்தில்‌ பட்டி மேயும்‌ யானையை கட்டித்‌ துரத்துகிறார்கள்‌. இதனால்‌ பயந்த யானை வயலைவிட்டு 
ஓடுகிறது. அப்பொழுது ஆகாயத்திலிருந்து அகஸ்மாத்தாக ஒரு எரிநட்சத்திரம்‌ மிகுந்த ஒளியுடன்‌ யானைக்குமுன்‌ விழுகிறது. 
இருதலைக்‌ கொள்ளி எறும்புபோல்‌, யானை செய்வதறியாது திகைத்து, அஞ்சி நிற்கிறது, திருமலையில்‌. 

இந்த வேங்கடமே, முன்னொரு காலத்தில்‌ அசுரர்‌ அரசனாகிய இரண்யகசிபுவைக்‌ கொன்று, (தன்னுடைய பக்தனாக 
பிரகலாதனைத்‌ துன்புறுத்திய விரோதி தொலைந்தான்‌) என்று மகிழ்ந்த நரசிம்ம மூர்த்தபினுடைய மலை. ்‌ 
தன்னுடைய பக்தர்களின்‌ விரோதிகளை அழித்து, அவர்களைக்‌ காக்கும்‌ பொருட்டே ஸ்ரீ வேங்கடேசப்‌ பெருமாள்‌ 
திருமலையில்‌ எழுந்தருளியிருக்கிறான்‌ என்கிறார்‌. 

தீவட்டி தடியர்களின்‌ மிரட்டலாலும்‌, எரிநட்சத்திரம்‌ தன்‌ பாதையில்‌ விழுந்ததாலும்‌, யானை பயந்தது போலவே பக்தனும்‌ 
இவ்வுலகில்‌ பலவித பிரச்சனைகளில்‌ சிக்கி கதிகலங்குவதுண்டு. 
இவ்விதமே மகாபத்தனாகிய பிரகலாதனும்‌, பாகவத விரோதியான இரணியகசிபுவினால்‌ பலவித இன்னல்களுக்கு இரையானான்‌. 
“அன்று நீ பிரகலாதனை, நரசிம்மமாக அவதரித்துக்‌ காத்தது போதாது; இன்றும்‌ பக்தர்கள்‌ 
துன்பமடையும்போது அவர்களைக்‌ காப்பது உன்‌ கடமை'' என்று ஏழுமலையானுக்கு ஆழ்வார்‌ நினைவூட்டுகிறார்‌. 

"ஞானத்‌ தமிழ்‌ புரிந்த நான்‌” என்றே பாடத்‌ தொடங்கிய இரண்டாவது ஆழ்வாராகிய தவத்திரு பூதத்தடிகள்‌,
“யானே தவஞ்செய்தேன்‌; யானே தவமுடையேன்‌; யானே பெருந்தமிழன்‌!" 
என்று மும்முறை ஒரு பாசுரத்தில்‌ மீண்டும்‌”தம்மைக்‌ குறித்து பெருமிதம்‌ கொள்கிறார்‌. 
கஜேந்திரனை முதலையின்‌ வாயிலிருந்து... விடுவித்த ஸ்ரீ வேங்கடேசனுக்கு அடிமை பூண்டு, திருமலையில்‌ 
புஷ்பகைங்கர்யம்‌ செய்தது குறித்தே விளைந்த பெருமிதம்‌ இது என்பது இதற்கு முந்தைய பாசுரத்திலிருந்து தெரிய வருகிறது. 

இதைக்கேட்ட வேங்கடேசப்‌ பெருமாள்‌ ஆழ்வாரை நோக்கு, “'நீர்‌ நல்ல பெருந்தமிழர்‌ என்பதை நாடு நகரமும்‌ நன்கறிய ஒரு கவி 
சொல்லும்‌, பார்ப்போம்‌!”” என்கிறார்‌. உடனே நம்‌ பெருந்தமிழர்‌ திருவேங்கடத்தைக்‌ குறித்து அற்புதமாக ஒரு யானைப்‌ 
பாசுரத்தைப்‌ பாடித்‌ தம்‌ கைவரிசையைக்‌ காட்டுகிறார்‌. 
“*யானே, யானே, யானே!'' என்று பெருமைப்பட்டவர்‌ ** 
யானை! என்று கீழ்க்காணும்‌ பாசுரத்தில்‌ யானையைக்‌ காட்டி நம்மை மகிழ்விக்கிறார்‌: 

பெருகு மதவேழம்‌ மாப்பிடிக்கு முன்‌ நின்‌(று) 
இருகண்‌ இனமூங்கில்‌ வாங்கி - அருகிருந்த 
தேன்‌ கலந்து நீட்டும்‌ திருவேங்கடம்‌ கண்டீர்‌ 
வான்‌ கலந்த வண்ணன்‌ வரை", (75) 

வேழம்‌ - ஆண்‌ யானை; பிடி - பெண்‌ யானை; வரை - மலை. 

பெருகுகின்ற மதநீரையுடைய ஆண்‌ யானை, தனது சிறந்த பெண்‌ யானைக்கு முன்நின்று, இரண்டே கணுக்களையுடைய 
இளம்‌ மூங்கில்‌ குருத்தைப்‌ பறித்து, அதை அருகிலிருந்த தேனடையில்‌ தோய்த்துத்‌ தேனுடன்‌ கலந்து நீட்டுகின்றது 
திருவேங்கடமலையில்‌. நீலமேக சியாமளனாகிய ஸ்ரீநிவாஸன்‌ நித்யவாசம்‌ செய்யும்‌ திருமலையல்லவா இது! 
ஏற்கனவே மதம்‌ பிடித்து, திருமலையில்‌ செருக்கித்‌ திரிகின்றது வேழம்‌. அழகான பெண்‌ யானையைக்‌ கண்டதும்‌, 
காதல்‌ ரசம்‌ வேறு அதன்‌ தலைக்கேறி விடுகிறது! உடனே பிடிக்குப்‌ பிடித்தமான இனிய உணவை அதற்குத்‌ தந்து, அதனைக்‌ கவர நினைக்கிறது. 
'*இதயத்தில்‌ இடம்‌ பிடிக்கும்‌ வழி, வயிற்றின்‌ வழியாகவே செல்கிறது"' என்கிற உண்மையை நன்கு தெரிந்து வைத்திருக்கிறது வேங்கடத்து. வேழம்‌. 
உடனே பசுமையான இளம்‌ மூங்கில்‌ குருத்தைப்‌ பிடுங்கித்‌ தேனிலே தோய்த்து, 
“குளோப்‌ ஜாமுனை' ஊட்டுவதைப்போல்‌, பேடையின்‌ வாயில்‌ ஊட்டுகிறது! முதலில்‌ தேன்‌ உணவு; அடுத்துத்‌ தேன்‌ நிலவு. 

“இலக்கிய ரசம்‌' என்னும்‌ இளம்‌ மூங்கில்‌ குருத்திலே, “பக்தி ரசம்‌” என்கற தேனைக்‌ குழைத்து நம்‌ வாயிலும்‌ ஊட்டிவிடுகிறார்‌ 
பூதத்தார்‌] ஆழ்வார்‌ நமக்குப்‌ படைக்கும்‌ ஆரா அமுது இது. 
“தேனும்‌ பாலும்‌ கன்னலும்‌ ௮முதுமாகி'' ஆராவமுதனாகிய திருவேங்கடமுடையான்‌ அன்பர்களின்‌ இதயங்களிலே தித்திப்பது 
போலவே, வேங்கடப்பிடிக்கும்‌, திருமலையாழ்வார்‌ விளைவித்த மூங்கில்‌ 'ரஸகுல்லா” தித்திக்கிறது;
நமக்கும்‌ பெருந்தமிழரின்‌ பாசுரம்‌ திருப்பதி லட்டு போல்‌ தித்திக்கிறது! 

திருமலையிலுள்ள விலங்குகளும்‌ தம்முடைய காப்பை நோக்கி வாழும்‌ பேட்டிற்கு ஆதாரம்‌ காட்டுவதால்‌, பிராட்டியோடு 
உறையும்‌ பெருமான்‌ நம்மிடம்‌ ஆதாரங்கொண்டு காப்பான்‌ என்பது ஆழ்பொருள்‌. 
எம்பெருமான்‌ பிராட்டியை உவப்பிக்கும்படியைக்‌ கூறுதல்‌ இதற்கு உள்ளுறைப்‌ பொருள்‌. 

எம்பெருமானார்‌ (ஸ்ரீ ராமானுஜர்‌) திருமலைக்கு எழுந்தருளி, த்வயத்தின்‌ பொருளைத்‌ திருமத்திரத்தோடும்‌ சரம 
ஸ்லோகத்தோடும்‌ சேர்த்து இனிமைப்படுத்தி உபந்யஸித்தருளினபோது, அனந்தாழ்வான்‌ இப்பாசுரத்தை ஸ்வாமி பரமாக நிர்வஹித்தருளினார்‌. 

திருமந்திரம்‌, துவயம்‌, சரமஸ்லோகம்‌: 
இப்பாசுரத்தில்‌, இளமூங்கில்‌ - 'ஓம்‌ நமோ நாராயணாய: என்கிற திருமந்திரம்‌. 
'ஓம்‌' என்பது பிரணவம்‌ எனப்படும்‌. ப்ர  நவம்‌ - ப்ரணவம்‌, எப்பொழுதும்‌ புதிதானது, இளமையானது என்று பொருள்‌. 
இங்கே 'இள' என்பது பிரணவத்தைக்‌ குறிக்கும்‌. 
மூங்கில்‌ கிருஷ்ணாவதாரத்தில்‌ புல்லாங்குழல்‌ கொடுத்தது; எனவே நாராயணனைக்‌ குறிக்கும்‌. 
'வேங்கடவன்‌ 'ஓம்‌ நமோ நாராயணாய என்கிற திருமந்திர வடிவினன்‌; 
இளமூங்கில்‌ குழல்‌  ஊதிய கிருஷ்ணாவதாரக்‌ கூறுடையவன்‌. தருபூலையில்‌ விளைந்த 
இளமூங்கில்‌ இங்கே வேங்கடவனையே சிறப்பாகக்‌ குறிக்கும்‌. 
திருமந்திரம்‌ வைணவர்களுக்கு இயல்பானது; எனவே இளமூங்கில்‌ "இயல்‌ தமிழ்‌" ஆகிறது! 

இருகண்‌ - துவயம்‌. 
“ஸ்ரீமந்‌ நாராயண சரணெள சரணம்‌ ப்ரபத்யே; ஸ்ரீமதே நாராயணாய , நம:' என்பதே இரண்டு அடிகளையுடைய துவய மந்திரம்‌.
எனவே இங்கு இளமூங்கிலில்‌ உள்ள இரண்டு கணுக்கள்‌ துவயத்தைக்‌ குறிக்கும்‌
ஆண்‌ யானை பெண்‌ யானைக்கு இருகண்‌ இளமூங்கில்‌' சத்துணவை அன்புடன்‌ ஊட்டுவது போலவே, துவய மந்திரத்தை வைகுந்தத்தில்‌ 
முதன்முதலாக ஸ்ரீமந்‌ நாராயணன்‌, மகாலட்சுமிப்‌ பிராட்டீயாருக்கு உபதேசித்து, ஊட்டி உவந்தான்‌. 
ஆண்‌ யானையை எம்பெருமானுக்கு உவமையாகக்‌ கூறுதல்‌ மரபு; எனவே பெண்‌ யானை பிராட்டிக்கு உவமையானது; 
உவகை ஊட்டும்‌ உவமை! 
அலர்மேல்‌ மங்கையுறை மார்பினன்‌. ஆகையாலே நம்‌ ஸ்ரீநிவாஸன்‌ துவயமந்திர வடிவினன்‌ ஆகிறான்‌. 
இருவர்‌  இணைந்து இசைத்ததால்‌, 'இருகண்‌' இசைத்தமிழே!
இருகண்‌ இளமூங்கிலின்‌ குழலோசையுடன்‌, இலக்குமி-நாராயணன்‌ இருவரும்‌ இணைந்து இசைத்த இன்னிசை விருந்தே துவயம்‌. 

தேன்‌ கலந்து - சரம ஸ்லோகத்தைக்‌ கலந்து. ““ஸர்வதர்மான்‌ பரித்யஜ்ய மாமேகம்‌ சரணம்‌ வ்ரஜ”' (அனைத்து தர்மங்களையும்‌ 
கைவிட்டு, என்னையே சரணடை) என்னும்‌ கீதையின்‌ சுலோகம்‌ இது. சரம ஸ்லோகம்‌, மிகவும்‌ சுலபமான இறுதி ௨பாயத்தைக்‌ 
கூறுவதால்‌ பக்தர்களுக்குத்‌ தேன்‌ போன்றது, எனவே இதைத்‌ “தேன்‌' என்றார்‌. 
'மாமேகம்‌ சரணம்‌ வ்ரஜ (என்னையே சரணம்‌ அடை) என்பதையே வேங்கட கிருஷ்ணன்‌ தனது வலது 
திருக்கையால்‌, திருவடிகளைக்‌ காட்டி, நமக்கு உபதசித்துக்‌ கொண்டிருக்கிறான்‌. இதை நாடகமாகவே நடித்து, அபிநயமும்‌ 
பிடித்துக்‌ காட்டுவதால்‌ ஏழுமலையான்‌ சரம சுலோக ச8ரனே ஆகி, அசல்‌ பார்த்தசாரதியையும்‌ அசத்திவிடுகிறான்‌! எனவே 'தேன்‌ 
கலந்த' ஆழ்வார்‌ பாசுரம்‌ தேன்போன்ற நாடகத்தமிழ்‌ ஆகவே தித்திக்கிறது. 
திரு.மலையில்‌ ஸ்ரீராமானுஜர்‌ உபதேசம்‌: 
திருமலையில்‌ திரிந்த ஆண்‌ யானை, பேடைக்கு 'இருகண்‌ இளமூங்கில்‌ தேன்‌ கலந்து' ஊட்டியது.
அதுபோலவே, ஸ்ரீராமானுஜர்‌. திருமலையில்‌ அனந்தாழ்வான்‌ முதலிய சீடர்களுக்குத்‌ திருமந்திரம்‌, துவயம்‌, சரமஸ்லோகம்‌ ஆகிய 
மூன்றையும்‌ குழைத்துத்‌ தாயினும்‌ சாலப்‌ பரிந்து ஊட்டினார்‌ என்பதை அறிகிறோம்‌. 

பெருந்தமிழரின்‌ பெருந்தன்மை: 
திருமந்திரம்‌, துவயம்‌, சரமஸ்லோகம்‌ ஆகியவை சம்ஸ்‌கிருதத்தில்‌ அமைந்தவை. ஞானத்தமிழ்‌ புரிந்த 
பூதத்தாழ்வாரோ, 'பெருந்தமிழன்‌ யானே! யானே! யானே! என்று மும்முறை ஒரே பாசுரத்தில்‌ பெருமிதத்துடன்‌ மார்தட்டியவர்‌. 
பார்த்தார்‌ ஆழ்வார்‌. மூன்று சம்ஸ்கிருத மந்திரங்களையும்‌ முறையே 'இளமூங்கில்‌' இயல்‌ தமிழ்‌; 'இருகண்‌' இசைத்‌ தமிழ்‌; 
“தேன்‌ கலந்த நாடகத்‌ தமிழ்‌ என்று உள்ஞ்றைப்‌ பொருளாகவே வைத்துப்‌ பாடிவிட்டார்‌. மூன்று தமிழையும்‌ ஒரே பாசுரத்தில்‌ 
ஒன்றாகக்‌ குழைத்து, அலர்மேல்‌ மங்கைத்‌ தாயினும்‌ சாலப்‌ பரிந்து நமக்கு ஊட்டும்‌ இவரல்லவோ முத்தமிழ்‌ வித்தகர்‌, 
ஸர்வமந்த்ர ஸ்வதந்த்ரர்‌! ஸ்ரீராமானுஜர்‌ இருமலையில்‌ அன்று ஏீடர்களுக்கு மட்டுமே புகட்டியதை, ஆழ்வார்‌ இன்றும்‌ தமிழர்கள்‌ 
அனைவருக்கும்‌ ஊட்டிக்‌ கொண்டிருப்பதால்‌, இதைப்‌ *பெருந்தமிழரின்‌ பெருந்தன்மை' என்றோம்‌. 

வேங்கடத்தில்‌ மதவேழம்‌ மாப்பிடியோடு கூடி, தேன்‌ கலந்த இளமூங்கில்‌ ஊட்டியதைப்‌ பாடினார்‌ பூதத்தார்‌;
கூடியதைப்‌  பாடிவிட்டார்‌, நாம்‌ ஊடியதைப்‌ பாடுவோம்‌ என்று பேயாழ்வார்‌ அருளிச்‌ செய்துள்ளார்‌. 

புரிந்து மதவேழம்‌ மாப்பிடியோடு ஊடி 
திரிந்து சினத்தால்‌ பொருது - விரிந்தசீர்‌ 
வெண்கோட்டு முத்து உதிர்க்கும்‌ வேங்கடமே! மேலொருநாள்‌ 
மண்கோட்டுக்‌ கொண்டான்‌ மலை. (ஸ்ரீபேயாழ்வார்‌ -45). 

வேழம்‌ - ஆண்யானை, பிடி - பெண்யானை; புரிந்து - கூடி, கலந்து; கோடு - யானை, பன்றிகளின்‌ தந்தம்‌; 'விரிந்த சர்‌ - வீரச்ரீ நிறைந்த. 

மதம்‌ பிடித்த ஆண்‌ யானை பெண்‌ யானையுடன்‌ கூடி, பின்பு கலகம்‌ ஏற்பட்டதால்‌ ஊடி அதனைப்‌ பிரிந்து சென்றது. அதனால்‌ 
ஏற்பட்ட கோபத்திற்குப்‌ போக்குவீடாக வேழம்‌ அங்குமிங்கும்‌  திரிந்து கோபத்தினால்‌  மணிப்பாறைகளில்‌ மோதி, 
வீர ஸ்ரீயையுடைய தனது வெண்மையான தந்தங்களிலிருந்து முத்துக்களை உதிர்க்கறது. 
இந்தத்‌ திருவேங்கடமே முன்னொரு காலத்தில்‌, தன்னுடைய கோரைப்பல்லினால்‌ பூமியை அகழ்ந்தெடுத்த ஆதிவராகப்‌ பெருமாளின்‌ மலை. 
பொருது: 
போர்‌ செய்து; திருமலையிலுள்ள பளிங்குப் பாறைகளிலே யானை தன்‌ நிழலைக்‌ கண்டு, எதிர்யானையென்று பிரமித்து 
அதனோடே போர்‌ செய்கின்றதாகவும்‌ கொள்ளலாம்‌. 
திருமலையிலே ஸ்ரீ வேங்கடேச அவதாரத்திற்கு முன்பே ஆதிவராகர்‌ சுவாமி புஷ்கரணியின்‌ கரையில்‌ ததால்‌ பல 
மங்களாசாஸனம்‌ செய்கிறார்‌. 

எம்பெருமானைப்‌ பெறுவதற்கு எங்கோ போக வேண்டுமென்று நினைக்க வேண்டா. திருவேங்கடமே அவனது திருமலையாம்‌. 
மதயானைகள்‌ நிறைந்த மாமலை அது. யானை பெண்யானையோடு கலந்திருந்தபோது ஏதோ கலஹம்‌ ஏற்பட 
அதனால்‌ விட்டுப்பிரிந்து அந்தக்கோபம்‌ தாங்காது மதத்தினால்‌, செய்வது தெரியாமல்‌ மலைப்பாறைகளில்‌ தந்தங்களால்‌ குத்திப்‌ 
போர்புரிய அப்போது ச்ரேஷ்டமான அதன்‌ தந்தங்களில்‌ உண்டான முத்துக்கள்‌ 8ழே கண்டவிடத்தில்‌ சிதறி விழுகின்றன. 
இத்தகைய  வேங்கடமே முன்‌ பூமியைக்‌ இடந்தெடுத்த ஆதி வராஹமூர்த்தி பூதேவியோடு உல்லாசமாய்‌ வஸிக்கப்‌ பரமபதத்தினின்று 
கொணர்ந்த திருமலையாம்‌. 
முதலீரடிகளாலே தன்னை அண்டி சிற்சில பலன்களை அபேகூஷிப்பார்க்கு (வேண்டுவோர்க்கு) 
எம்பெருமான்‌ அதனையளித்து அதில்‌ வைராக்யம்‌ வர வழியும்‌ ஏற்படுத்துவதும்‌, 
“விரிந்தசீர்‌  - முத்துதிர்க்கும்‌' என்றதால்‌ அப்படிப்பட்டவன்‌ சேகரித்த பணத்தையும்‌ விடுவதும்‌ சொன்னதாம்‌. 
இதனால்‌ அர்த்தகாமங்களை த்யாகம்‌ செய்வித்து வினைகளைப்‌ போக்கும்‌ ௮ம்மலை என்றபடி. 

இப்படி தந்தங்களினின்று முத்து உதிர்த்து, அர்த்த காமங்களை விட்டொழிக்கின்றது வேங்கடத்து வேழம்‌. 
வேங்கடவன்‌ அதனுடைய வினைகளைப்‌ போக்கி, நற்புத்தியளிக்கிறான்‌. 
களிறு  கஜேந்திரனைப்‌ போலவே ஸ்ரீ வேங்கடேசனைக்‌ கண்டு வணங்குகிறது. இக்காட்சியை அடுத்து அருளிச்‌ செய்கிறார்‌. 

புகுமதத்தால்‌ வாய்பூசிக்‌ கீழ்தாழ்ந்து அருவி 
உகுமதத்தால்‌ கால்கழுவிக்‌ கையால்‌ - மிகுமதத்தேன்‌ 
விண்டமலர்‌ கொண்டு விறல்‌ வேங்கடவனையே 
கண்டு வணங்கும்‌ களிறு. --ஸ்ரீ பேயாழ்வார்‌ -

புகு - வாயில்‌ புகும்‌; வாய்‌ பூசி.- கொப்பளித்து; உகு - பெருகிற; மிகு. மதத்தேன்‌ - மிகுந்த மதத்தை விளைவிக்கக்கூடிய 
தேன்‌; விண்ட - மலர்ந்த; விறல்‌ - வீரம்‌, வெற்றி மிடுக்கு; களிறு -ஆண்‌ யானை. 

திருமலையிலுள்ள ஆண்‌ யானை, தன்‌ மத்தகத்தினின்றும்‌, கன்னங்களினின்றும்‌ வாயில்‌ புகும்‌ மதஜலத்தால்‌ வாய்‌ 
கொப்பளித்து, ஆசமனஞ்செய்கறது. மேலிருந்து கீழ்வரை அருவிபோல்‌ பெருகும்‌ மதநீரினால்‌ கால்களையும்‌ கழுவிச்‌ சுத்தம்‌ 
செய்துகொள்கிறது. மிகுந்த மதத்தை (களிப்பை) உண்டாக்கக்கூடிய தேன்‌ நிறைந்ததும்‌, அப்பொழுதே 
மலர்ந்ததுமான பூவைத்‌ துதிக்கையில்‌ எடுத்துக்கொண்டு, வெற்றி மிடுக்கு நிறைந்த ஸ்ரீ வேங்கடாசலபதியை, சேவித்து வணங்குகின்றது. 

பெருமானை அண்டுவதற்குத்‌ தகுதி வேண்டாமோ? எனில்‌, 
விலங்குகளும்‌ கூட அவனை எளிதில்‌ பற்றித்‌ தொண்டு செய்கின்றன என்கிறார்‌, 

திருமலையில்‌ மதயானைகள்‌ தாமரைப்‌ பூக்களைப்‌ பறித்து  அப்பன்‌ திருவடிகளில்‌ சமர்ப்பித்து வணங்குகிறபடியை ஒரு 
சமத்காரம்‌ பொலியப்‌ பேசுகிறார்‌. எம்பெருமான்‌ ஸந்நிதியில்‌ தொண்டு செய்யப்போமவர்கள்‌ வாயைக்‌ கொப்பளித்துக்‌ 
கைகால்களை சுத்தி செய்துகொண்டு, புஷ்பங்களை எடுத்துக்கொண்டு போவது வழக்கம்‌. 
இவ்வாசாரம்‌ சாஸ்த்ரவச்யர்களான மானிட சாதியர்க்கு மாத்திரமல்ல, 
இருமலையிலுள்ள அஃறிணைப்‌ பொருள்கட்கும்‌ கோல்விழுக்காட்டிலே அமைந்திருக்கின்றது என்றார்‌. 

விறல்‌ வேங்கடவன்‌: 
இங்ஙனே திருமலையிலுள்ள திர்யக்‌ ஜந்துக்களும்‌ தன்னை வணங்குமாறு ஜ்ஞாநத்தைக்‌ , கொடுக்க சக்தனான 
திருவேங்கடமுடையான்‌ என்ப. 

விறல்‌ வேங்கடவனையே -- விறல்‌ - வெற்றியுடைய; ““மோக்ஷ்பர்யந்தமான பலன்‌ அளிக்கும்‌ 
திருவேங்கடமுடையானிடம்‌ பாரமை காந்த்யம்‌ (இது ஈசுவரனையே உபாயமாகப்‌ பற்றி, ஆசாரியன்‌ சொல்படி நடக்கும்‌ 
மிகவுயர்ந்த பக்தனின்‌ நிலை) கொள்கிறது களிறு. 
திர்யக்குகளும்‌  திருவேங்கடமுடையானை ஆசாரத்துடன்‌ தொழ முயன்று வருகின்றன என்றால்‌ அவனுடைய வெற்றியை என்னவென்று சொல்வது? 
வேங்கடம்‌ வெற்றி பெறும்‌ ஸ்தானம்‌ என்று ஸ்ரீ 
தேசிகனும்‌ அருளிச்‌ செய்தார்‌. வல்வினைகள்‌ போர்புரிய அவற்றை 
மாய்க்க ப்ரயாஸப்பட்டு (பாடுபட்டு) கருணை என்ற கவசமணிந்து 
கையும்‌ வில்லுமாய்‌ வெற்றி பெறுமிடமான வேங்கடமேறி அருளினான்‌ சார்ங்கமேந்தும்‌ திருமால்‌ என்றாரே". 

“சுவாமி புஷ்கரிணிப்‌ பொய்கையிலே நீராடி, தேன்‌ சொட்டும்‌ மலரைத்‌ துதிக்கையில்‌ எடுத்துக்கொண்டு யானை 
திருவேங்கடவனை வணங்குகிறது”! என்னும்‌ இப்பாசுரம்‌ நமக்கு உடனே கஜலட்சுமியைக்‌ கண்முன்‌ கொண்டு வந்து நிறுத்துகிறது. 
இரண்டு கைகளில்‌ தாமரைப்‌ பூக்களையேந்தி, ஒரு பொய்கை நீரில்‌ விரிந்த ஆயிரம்‌ இதழ்களுடைய தாமரையின்மீது மகாலட்சுமிப்‌ 
பிராட்டி, அலர்மேல்‌ மங்கையாக நின்று கொண்டிருக்கிறாள்‌, ஸ்ரீ வேங்கடேசனைப்‌ போலவே அவளுடைய முன்‌ வலதுகரம்‌ 
அபயஹஸ்தமாக விளங்குகிறது; தங்கக்‌ கையினாலே பொற்காசுகளை பக்தர்களுக்கு அள்ளி வீசிக்‌ கொண்டிருக்கிறாள்‌ 
அன்னை! இரண்டு பக்கங்களிலும்‌ இரண்டு யானைகள்‌ உயரத்தூக்கிய துதிக்கையில்‌ தாமரையை ஏந்திக்கொண்டு, 
இலட்சுமிக்கு சமர்ப்பிக்க, நீரில்‌ வந்து கொண்டிருக்கின்றன. 
சாதாரணமாக மலர்மகள்‌ இவ்விதமே சித்தரிக்கப்படுகிறாள்‌. யானைகளின்‌ நெற்றியில்‌ மகாலட்சுமி வாசம்‌ செய்வதாகக்‌ கூறுவர்‌. 
இவ்வாறு கஜங்களால்‌ தொழப்படுவதால்‌, அலர்மேல்‌ மங்கைத்‌ தாயார்‌ 'கஜலட்சுமி' என்றும்‌ அழைக்கப்படுவாள்‌. 

திருமலை கஜேந்திரன்‌ அலர்மேல்‌ மங்கையை வணங்காமல்‌ ஸ்ரீநிவாஸனையே தொழுவது ஏன்‌? பிராட்டிக்குத்‌ திருமலையில்‌ 
கோயில்‌ இல்லை. “அகலகில்லேன்‌ இறையும்‌' என்று ஸ்ரீநிவாஸனின்‌ திருமார்பிலேயே மகாலட்சுமி வாசம்‌ செய்வதால்‌, 
அப்பன்‌ 'அலர்மேல்‌ மங்கையுறை மார்பன்‌' என்றே பிரசித்தமானான்‌. திருமலை கஜேந்திர ஆழ்வார்‌ இவ்வளவையும்‌ 
தெரிந்து, வைத்திருக்கிறார்‌! யானை புத்திசாலி அல்லவா? 

“வேழம்‌: வழிபடும்‌ வேங்கடம்‌' என்று பேயாழ்வார்‌. காட்டும்‌ இந்த கஜேந்திர ஆழ்வாரை நினைத்தே தலைப்பும்‌ இங்கே சூட்டினோம்‌. 
மனிதர்களில்‌ சிலர்‌ கடவுள்‌ இல்லை: என்று வணங்காமுடிகளாகத்‌ திரிவதைப்‌ போலவே, இருமலையிலும்‌ 
யானைகள்‌ திரிந்ததுண்டு. இவைகளின்‌ முடிவு பரிதாபகரமானது! 
இதிலூட்டும்‌ யானைக் காட்சி ஒன்றைக்‌ கண்முன்‌ கொண்டு வந்து நிறுத்தி, கீழ்ப்பாசுரத்தில்‌ நம்மை அசத்திவிடுகிறார்‌ ஆழ்வார்‌! 

களிறு முகில்குத்தக்‌.கை எடுத்து ஓடி 
"ஒளிறு மருப்பு ஒசிகை யாளி- பிளிறி 
விழக்‌ கொன்று நின்று அதிரும்‌ வேங்கடமே! மேனாள்‌ 
குழக்கன்று கொண்டு எறிந்தான்‌ குன்று (ஸ்ரீ பேயாழ்வார்‌ )

களிறு - யானை; முகில்‌ - மேகம்‌; கை - துதிக்கை; ஒளிறு ஒளிரும்‌, ஒளிவீசும்‌; மருப்பு - கொம்பு, தந்தம்‌; 
ஓசிகை - ஒடிக்கின்ற கை; பிளிறி - யானை வாய்விட்டு அலறி; அதிரும்‌ - பெருமுழக்கம்‌ செய்யும்‌; 
மேனாள்‌ - மேல்‌ நாள்‌, முன்னொரு காலம்‌; குழக்கன்று - இளம்‌ கன்று, இங்கு வத்ஸாசுரன்‌. 

திருவேங்கடமலையில்‌ யானையானது தனது துதிக்கையைத்‌ தூக்கிக்கொண்டு, வேசுமாக ஓடி, மதயானை போலெழுந்த 
மேகங்களைக்‌ குத்துகிறது. இதைக்‌ கண்ட யாளியானது அந்த யானையின்‌ ஒளிவீசும்‌ தந்தங்களைக்‌ கையினால்‌ முறிக்கிறது; 
யானையை அங்கேயே வாய்விட்டு அலறி விழும்படிக்‌ கொன்றும்‌ விடுகிறது. பிறகு யாளிஅங்கேயே நின்று கொன்டு பெருமுழக்கம்‌ செய்கிறது. 
முன்னொரு காலத்தில்‌ இளங்கன்றின்‌ வடிவெடுத்துக்‌ கொண்டு தன்னைக்‌ கொல்ல வந்த வத்ஸாசுரனை எறிதடியாகக்‌ 
கொண்டு, விளாம்பழ வடிவிலிருந்த கபித்தாசுரனின்‌ மீது எறிந்து, இரண்டு அசுரர்களையும்‌ கொன்ற: ஸ்ரீ கிருஷ்ணன்‌ நித்யவாசம்‌ 
செய்வது திருமலையாகும்‌. 

யாளி - சிங்கத்தைப்‌ போல்‌ வலிய மிருகம்‌; இதன்‌ சிற்பங்களைக்‌ கோயில்களில்‌ காணலாம்‌. இப்படி ஒரு மிருகம்‌ 
இருந்ததா, கவிஞர்களின்‌ கற்பனையா என்று தெரியவில்லை. இங்கே 'யாளி' என்பதை சிங்கம்‌ என்றும்‌ கொள்ளலாம்‌. 

“மதயானை போலெழுந்த மாமுகில்காள்‌!"! '*கரிய மாமுகற்‌ படலங்கள்‌ கடந்தவை முழங்கிடக்‌ களிறென்று”” என்றும்‌ 
சொல்லுகிறபடியே யானைக்கும்‌, மேகத்திற்கும்‌ ஒப்புமை பிரஸித்தம்‌. ஆகவே திருமலையிலுள்ள யானையானது 
மலைமுகட்டில்‌ படிந்திருந்த மேகத்தை எதிரியானதொரு 
"யானையென்று மயங்கிப்‌ பெரிய வேகத்தோடே சென்று துதிக்கையினால்‌ குத்த, இதனை ஒரு யாளி கண்டு 'இக்களிற்றுக்கு 
இவ்வளவு மதமா?! என்று சினந்து ஓடி வந்து ௮வ்‌ யானையின்‌ மேற்‌ பாய்ந்து அதன்‌ கொம்பை முறித்தெறிந்து அது வாய்விட்டு 
அலறிக்கொண்டு விழும்படியாகக்‌ கொலையுஞ்‌ செய்து, அவ்வளவிலும்‌ சீற்றம்‌ தணியாமையாலே அவ்விடத்திலேயே 
நின்று மற்றுள்ள மிருகங்களும்‌ மண்ணுண்ணும்படியாக கர்ஜிக்கின்றதாம்‌ திருமலையில்‌. 
பாசுரத்தின்‌ உட்ககுத்து: 
 “தனது அன்பர்களின்‌ விரோதிகளைப்‌ போக்கும்‌ பெருமான்‌ உறையும்‌ திருவேங்கட மலையில்‌ விலங்குகளும்‌ இதே 
இயல்புடையன”' என்கிறார்‌. 
அண்டினவரின்‌ தாபத்தைப்‌ போக்கித்‌ திருமால்‌: போல்‌ விளங்கும்‌ முகிலை மதம்‌ பிடித்த யானையானது தனக்குத்‌ 
துதிக்கை, எம்பெருமானைத்‌ துதித்துத்‌ தொழ ஏற்பட்டதென எண்ணாமே உதறித்தள்ள வாய்த்ததாக வைத்து ஓடி அதனால்‌ 
குத்தும்போது, முகில்‌ வண்ணனைப்‌ போன்ற முகிலை விரோதிக்கும்‌ அதை மருப்பொசிக்க (தந்தத்தை ஓடிக்கக்‌) 
கையோங்கி விரைந்து வந்து அது கூச்சலிட்டு விழுந்தழியும்படி கொன்று நின்று யாளியானது, விரோதிகளை வெல்லவே 
ஏற்பட்டது வேங்கடமென மீண்டும்‌ முழங்கி வரும்‌. 
௮சுரனாய்‌ வேற்றுருவம்‌ கொண்டு தீங்கிழைக்க வருமவரைக்‌ கொல்லும்‌ கண்ணனுக்கு மேக மண்டலமளாவிய இம்மலையே தகுமான 
திருப்பதி யென்றபடி. 
மேகமண்டலம்‌ அளாவியது மலையென்றார்‌. ஆச்ரித விரோதிகளைக்‌ (ஆச்ரிதர்‌ - பக்தர்‌] கொல்வது கூறப்பட்டது. 

திருமலையில்‌ திருமாலிடம்‌ பக்தி பூணாமல்‌ திரிந்த யானையை யாளி அடித்துக்‌ கொன்றதைக்‌ கண்டோம்‌. 
இது பேயாழ்வார்‌ நீட்டிய சொல்லோவியம்‌. இதையே தூக்கி சாப்பிட்டு விடும்‌ காட்சியைத்‌ திருமழிசையாழ்வார்‌ சித்தரிக்கிறார்‌! 
குருவை மிஞ்சிய சிஷ்யர்‌ போலும்‌! திருமலையில்‌ யானைகளை அப்படியே சுளையாக விழுங்கி ஏப்பம்‌ விடும்‌ பிரம்மாண்டமான 
மலைப்பாம்புகள்‌ உண்டு என்றார்‌. பயந்து விடாதீர்கள்‌. இந்நாளில்‌ அப்படி எதுவும்‌ இருப்பதாகத்‌ தெரியவில்லை! 
மனிதனே இன்று உலகிலுள்ள விலங்குகளையெல்லாம்‌ சீக்கிரம்‌ முடித்து விடுவான்‌ போலிருக்கிறது; பயப்பட வேண்டியது அவையே! 

அழைப்பன்‌ திருவேங்கடத்தானைக்‌ காண 
இழைப்பன்‌ திருக்கூடல்‌ கூட -- மழைப்பேர்‌ 
அருவி. மணிவரன்றி வந்து இழிய யானை 
வெருவி அரவு ஒடுங்கும்‌ வெற்பு --ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ 

வரன்றி வந்து இழிய - திரட்டிக்‌ கொண்டு வந்து விழ; வெருவி - பயந்து; அரவு - பாம்பு; வெற்பு - மலை. 

திருவேங்கடத்தானைக்‌ காண விரும்பி நான்‌ வாய்விட்டு அழைக்கிறேன்‌. மழைபோல்‌ பொழியும்‌ பெரிய அருவிகள்‌ 
அங்குமிங்கும்‌ கிடக்கும்‌ இரத்தினங்களைத்‌ திரட்டிக்கொண்டு வந்து திருமலையில்‌ விழுகின்றன. 
இரத்தினங்கள்‌ வீசும்‌ ஒளியை அக்னிப்பிழம்பாக நினைத்து யானைகள்‌ பயந்து ஓடுகின்றன; 
மலைப்பாம்புகள்‌ அதை மின்னல்‌ என்று நினைத்து மயங்கி புற்றுக்குள்‌ ஒடுங்கிக்‌ கொள்கின்றன. 
இத்தகைய திருமலை சென்று சேரவேண்டுமென்று விரும்பி நான்‌ 'திருக்கூடல்‌' என்றும்‌ சகுனம்‌ இழைத்துப்‌ பார்க்கிறேன்‌. . 
திருக்கூடல்‌ இழைப்பன்‌: 
கூடல்‌ இழைத்தலாவது, ஒரு பெரிய வட்டம்‌ வரைந்து, அதற்குள்‌ சுழி சுழியாக முழுவதும்‌ எழுத வேண்டும்‌. 
பிறகு அவற்றை இரண்டிரண்டாகக்‌ கூட்டி மீதமில்லாமல்‌ இருந்தால்‌ வேண்டியது நடக்கும்‌; 
இல்லாவிடில்‌ கூடாது என்று அறிவது 
பழந்தமிழர்‌ சகுனம்‌ பார்க்கும்‌ வகைகளில்‌ ஒன்று. சுழிகளை சுழிக்கும்போதே சாமர்த்தியமாக முன்கூட்டியே எண்ணிக்கையைக்‌ 
கூட்டி, இரட்டைப்‌ படையில்‌ முடியுமாறு பார்த்துக்‌ கொள்ளக்கூடாது! 
இது கூடல்‌, கூடல்‌ இழைத்தல்‌, கூடல்‌ வளைத்தல்‌, கூடற்குறி என வழங்கப்படும்‌. 

கூடலிழைத்தல்‌ பெண்டிர்க்கே உரியதென்றும்‌, இங்கு ““இழைப்பன்‌ திருக்கூடல்‌”! என்று ஆழ்வார்‌ அருளிச்‌ செய்தது 
நாயகி ஸமாதியில்‌ என்றும்‌ அழகிய மணவாளச்சீயர்‌ அருளிச்செய்வர்‌. 

பின்னடிகட்கு இரண்டு வகையாகக்‌ கருத்துரைக்கலாம்‌.... 
அருவிகளில்‌ விழுந்த ரத்னங்களைக்‌ கண்ட யானைகள்‌ ''இவை கொள்ளிவட்டம்‌'” என்று ப்ரமித்து ஓடப்புக்கவாறே 
மலைப்பாம்பின்‌ வாயிலே விழும்படியாயின எனவுமாம்‌. 
சில மலைப்பாம்புகள்‌ யானையைப்‌ பார்த்து ௮ஞ்சி ஒடுங்கி ஓடிப்போய்விடும்‌ என்றும்‌, 
பல மலைப்பாம்புகள்‌ யானையை அணுகி விழுங்கி விடுமென்றும்‌ தமிழ்‌ நூல்களால்‌ தெரிகிறது. 

“திரையன்‌ பாட்டு' என்ற ஓர்‌ பழைய நூலில்‌-- 
“கடுங்கண்‌ யானை நெடுங்கை சேர்த்தி 
திடங்கொண்டறைதல்‌ திண்ணமென்றஞ்சிப்‌ 
படங்கொள்‌ பாம்பும்‌ விடரகம்புகூஉம்‌ 
தடங்கொள்‌ உச்சித்‌ தாழ்வரையடுக்கத்து' என்றதனால்‌ மலைப்பாம்பு யானையைக்‌ கண்டு அஞ்சி ஒளிக்கும்‌ என்பது தெரிகின்றது. 

சிறிய கண்ணையுடைய யானை தனது நீண்ட துதிக்கையால்‌ பலமாக அறைந்து விடுவது நிச்சயம்‌ என்று பயந்து, படமெடுக்கும்‌ 
பாம்பு, மலைச்சரிவிலுள்ள புற்றில்‌ புகுந்து கொள்ளும்‌. 
*இடிகொள்‌ வேழத்தை எயிற்றொடும்‌ எடுத்துடன்‌ விழுங்கும்‌ 
கடியமாசுணம்‌ கற்றறிந்தவர்‌ என அடங்கிச்‌ 
சடைகொள்‌ சென்னியர்‌ தாழ்விலர்‌ தாமித்தேறப்‌ 
படிகடாமெனத்‌ தாழ்வரை கிடப்பன பாராய்‌” -என்ற கம்பராமாயணப்‌. பாட்டிலிருந்து மலைப்பாம்பு யானையை விழுங்கும்‌ எனத்‌ தெரிகிறது. 

கம்பர்‌ பாடலின்‌ கருத்து: 

இடிபோல்‌ முழங்கும்‌ யானையை தந்தத்துடன்‌ எடுத்து, உடனடியாக மலைப்பாம்பு விழுங்கிவிடும்‌. இருப்பினும்‌ அது 
சடைமுடி தரித்த முனிவர்களைக்‌ கண்டதும்‌ கற்றறிந்தவர்களைப்போல அடங்கி, அவர்கள்‌ தன்னை மிதித்து 
மலையேறுவதற்கு ஏற்றபடி, மலைச்சரிவில்‌ படிபோல்‌ படுத்துக்கொள்கிறது. 

மிகவும்‌ அற்புதமான சொல்லோவியத்தைக்‌ கவிச்சக்கரவர்த்தி தீட்டியுள்ளார்‌. முதலாழ்வார்களைப்‌ போன்ற மகான்களின்‌ 
முன்னிலையில்‌ யானையை விழுங்கும்‌ பாம்பும்‌ சாதுவாக விடுகிறது! சத்சங்கம்‌ அத்தனை மகத்துவம்‌ வாய்ந்தது. 
“'படியாய்க்‌ இடந்து உன்‌ பவளவாய்‌ காண்பேனே! என்று திருமலையில்‌ படியாகக்‌ இடந்து வேங்கடவனின்‌ பவளவாய்‌ காண விரும்பிய 
குலசேகர ஆழ்வாரைப்‌ போல, கம்பநாடரின்‌ மலைப்பாம்பு, 
முனிவர்களும்‌, அடியார்களும்‌ கிடந்து இயங்கும்‌ படியாகவே, சாஷ்டாங்கமாகத்‌ தரையில்‌ படுத்துவிடுகிறது. 

**யானையைக்‌ கண்டு மலைப்பாம்பு அஞ்சும்‌!" என்று “திரையன்‌ பாட்டுப்‌' பாடிய புலவர்‌; 
''யானையை அது .விழுங்கி விடும்‌!” என்று பாடிய கவிச்சக்கரவர்த்தி கம்பர்‌; 
இருவரையுமே  சேர்த்து விழுங்கிவிடும்‌ அளவிற்குக்‌ கவித்திறம்‌ படைத்த 
தெய்வப்புலவர்‌ நம்‌ திருமழிசைப்‌ பிரான்‌ என்பது இப்பாசுரத்திலிருந்து தெரிகிறது. எப்படி என்‌ன்‌றீர்களா? 
குறள்‌ போல்‌ அமைந்துள்ள கடைசி இரண்டு அடிகளைப்‌ பாருங்கள்‌-- 

“அருவி மணிவரன்றி வந்து இழிய யானை 
வெருவி அரவு ஒடுங்கும்‌ வெற்பு'” என்கிறார்‌. 
இங்கே ''யானை வெருவி அரவு ஒடுங்கும்‌ வெற்பு” என்பதற்கு இரண்டு விதமாகப்‌ பொருள்‌ கூறலாம்‌: 

௮] யானையைக்‌ கண்டு, (அல்லது அருவி அடித்து வரும்‌ இரத்தினத்தை மின்னல்‌ என நினைத்து] பாம்பு ஒடுங்கும்‌ 
திருமலை. இதுவே திரையன்பாட்டின்‌ கருத்து. 

ஆ] அருவி அடித்து வரும்‌ இரத்தினங்களைக்‌ கொள்ளிக்கட்டைகள்‌ என்று நினைத்து ஒடும்‌ யானை, 
மலைப்பாம்பின்‌ வாயிலே புகுந்து ஒடுங்கி, அடங்கும்‌ திருமலை. 
இதுவே கம்பன்‌ கூறிய கருத்து. ்‌ 

இப்படி இருபுலவர்களும்‌ . விரித்துக்கறிய இருவேறு கருத்துக்களை ஒரேயடியாக ஈரடிகளில்‌ ஒடுக்கி விடுகிறார்‌ திருமழிசையார்‌! 

இயற்கை என்னும்‌ இங்கரும்பை ஆராய்ந்து எடுத்து, கவித்திறன்‌ என்னும்‌ உருளையால்‌ ௮தை நெருக்கிச்‌ சாறு பிழிந்து, 
அதில்‌ பக்திரசம்‌ என்னும்‌ பனிக்கட்டியையும்‌ சேர்த்து, உலக ஆசை என்னும்‌ தாகம்‌ தணிய நமக்குத்‌ தருகின்றனர்‌ இன்கவி பாடிய 
இப்பரம கவிகள்‌! 
 
“இயற்கையை நாம்‌ காண்பது ஒரு வகை. நம்‌ மனத்தில்‌ அஃது ஒருவித சலனத்தையும்‌ ஏற்படுத்துவதில்லை. 
அது கவிஞர்களிடம்‌ பல்வேறு வித சலனங்களை ஏற்படுத்தப்‌ பல்வேறு கற்பனைக்‌ காட்சிகளைப்‌ படைக்கத்‌ தூண்டுகின்றது. 
கவிஞர்கள்‌ பக்தர்களாக இருப்பின்‌ அவர்கள்‌ பிறிதோர்‌ உலகத்தையே படைத்து விடுகின்றனர்‌; 
அதில்‌ தத்துவக்‌ கருத்துக்களையும்‌ மிளிரச்‌ செய்து விடுகின்றனர்‌. 
இவை இயற்கையைத்‌ துய்ப்பவர்கட்கு எழிலைக்‌ காட்டி மகழ்விக்கன்றன; முருகுணர்ச்சியையும்‌ தூண்டுகின்றன. 
பக்திக்கண்‌ கொண்டு நோக்குபவர்கட்கு பரவசத்தை ஏற்படுத்திப்‌ பரமனின்‌ விசுவரூப தரிசனத்தையே காட்டி விடுகின்றது. 
இத்தகைய பாசுரங்களைப்‌ படித்து அநுபவிக்கக்‌ கற்றுக்கொள்ளாவிடில்‌ நமக்கு இவ்வுலகில்‌ ஆறுதல்‌ 
அளிக்கும்‌ பொருளே இல்லை என்று ஆகிவிடும்‌'". 

------------

முதலாழ்வார்கள்‌ கண்ட திருமலை 
சித்‌, அசித்‌, ஈசுவரன்‌ என்று மூவகைப்பட்ட வைணவத்‌ தீத்துவம்‌ 'தத்துவத்‌ திரயம்‌' (திரயம்‌ - மூன்று) எனப்படும்‌. 
சித்‌ (உயிருள்ள ஜீவராசிகள்‌), அசித்‌ (ஜடப்பொருள்‌) ஆகிய இரண்டும்‌ ஈசுவரனுக்கு உடல்‌ என்பர்‌; 
இந்த உறவு 'சரீர - சரீரி பாவனை! எனப்படும்‌. அசித்தும்‌ பகவான்‌ படைப்பாதலால்‌ அதுவும்‌ வழிபாட்டிற்குரியது. 

திருமலையின்‌ நாம்‌ கண்ட வானரங்கள்‌, யானைகள்‌, வேடர்கள்‌, குறவர்கள்‌ 'சித்‌' வகையைச்‌ சேர்ந்தவர்‌. 
மலை 'அசித்‌” ஆகும்‌. வைகுந்தத்திலிருந்த கருடாசலமே கருடபகவானால்‌ ஸ்ரீமத்நாராயணன்‌ ஆணைப்படி கொண்டு வரப்பட்டு பூவுலகில்‌ 
வைக்கப்பட்டதால்‌, இருமலை கருடாசலம்‌' எனப்படும்‌. 
ஆதிசேஷனே சேஷகிரியாசு எழுந்தருளியிருப்பதாகக்‌ கூறுவர்‌, 
ஏழுமலை வெறும்‌ கல்‌ அல்ல; எம்பெருமானின்‌ சத்துவகுணமே இறுகத்‌  திருமலையானது எனலாம்‌. 
எனவே வேங்கடம்‌ 'திருமலையாழ்வார்‌' என்றே போற்றப்படும்‌. 
மிகவும்‌ பிரசித்தி பெற்ற இந்த ஆழ்வார்‌ ஏகப்பட்ட திருநாமங்களுடன்‌ எழுந்தருளியிருக்கிறார்‌. 
சிந்தாமணகிரி, 
ஞானகிரி, 
வேங்கடகிரி, 
ஸ்ரீனிவாச கிரி, 
தீர்த்தகிரி, 
சுவர்ணகிரி, 
ஸ்ரீசைலகிரி, 
ஆனந்தகிரி, 
நாராயணகிரி, 
வைகுந்தகிரி, 
வேதகிரி, 
யமகிரி, 
சிம்மகிரி, 
வராககிரி, 
நீலகிரி என்றும்‌, 
சேஷசைலம்‌, 
கருடாசலம்‌, 
வேங்கடாசலம்‌, 
சேஷாசலம்‌ என்றும்‌; 
வேங்கடாத்ரி, 
நாராயணாத்ரி, 
விருஷபாத்ரி, 
விருஷாத்ரி, 
அஞ்சநாத்ரி, 
சேஷாத்ரி, 
ஆநந்தாத்ரி, என்றும்‌ அழைக்கப்படும்‌ ஏழுமலை. 
இருப்பினும்‌ 
வேங்கடம்‌, திருமலை ஆகிய திருநாமங்களே இதற்கு சாதாரணமாக வழங்கப்படும்‌. 

“சென்று சேர்திரு வேங்கடமாமலை 
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே”” என்று நம்மாழ்வார்‌ இருமலையை மங்களாசாஸனம்‌ செய்திருக்கிறார்‌. 
திருமலையாழ்வாரை வணங்கினாலே  நம்முடைய பாவவினைகள்‌ அழிந்து விடும்‌. 
முதல்‌ நான்கு  ஆழ்வார்கள்‌. திருமலையைக்‌ குறித்துப்‌ பாடியுள்ள சில பாசுரங்களை இங்கு காண்போம்‌. 

எழுவார்‌ விடைகொள்வார்‌ ஈன்துழாயானை 
வழுவா வகை நினைந்து வைகல்‌ - தொழுவார்‌ 
வினைச்சுடரை நந்துவிக்கும்‌ வேங்கடமே! வானோர்‌ 
மனச்சுடரைத்‌ தூண்டும்‌ மலை. (-ஸ்ரீ பொய்கையாழ்வார்‌ -மு.தி. 26) 

வழுவா வகை - பிரியாமல்‌ இருக்க வகை; வைகல்‌ - இனந்தோறும்‌; நந்துவிக்கும்‌ - அணைக்கும்‌, அழிக்கும்‌; 
மனச்சுடர்‌  திருவுள்ளமாகிய விளக்கு. 

சிலர்‌ (எழுவார்‌) செல்வம்‌ வேண்டி ஏழுமலையானை வணங்குவர்‌; 
சிலர்‌ (விடை கொள்வார்‌) கைவல்யம்‌ (மோட்சம்‌) வேண்டி, அதைப்‌ பெற்றதும்‌ அவனை விட்டுப்‌ பிரிவர்‌; 
ஆயினும்‌ பக்தர்கள்‌ இனிய துழாய்‌ (துளசி) மாலைகளணிந்த ஸ்ரீவேங்கடாசலபதியை என்றும்‌ பிரியாமலிருக்க விரும்பி 
௮வனை நாள்தோறும்‌ தொழுவார்கள்‌. அவரவர்களது பாவவினைகளாகிய தீயை ௮ணைக்கக்கூடியது வேங்கடம்‌. 
நித்யஸூரிகளுடைய திருவுள்ளமாகிய விளக்கைத்‌ தூண்டி விளங்கச்‌ செய்வதும்‌ திருமலையே. 
அவதாரத்திற்குப்‌ பிற்பட்டவர்களாகய நாம்‌ தொழுது உய்யுமாறு திருமலையிலே பெருமான்‌ உறைந்துள்ளான்‌. 

கீழ்ப்பல பாசுரங்களில்‌ விபவாவதார சேஷ்டிதங்களை (செயல்களைப்‌) பேசி அநுபவித்த ஆழ்வார்‌, என்றைக்கோ கழிந்த 
அவ்வவதாரங்களின்‌ திருக்குணங்கள்‌ இன்றைக்கும்‌ நன்கு விளங்குமாறு, பின்னானார்‌ (பின்‌ தோன்றியவர்கள்‌) வணங்கும்‌ 
சோதியாக சேவை சாதித்து அருள்கின்ற அர்ச்சாவதாரங்களையும்‌ அனுபவிக்க ஆசை கொண்டு, 
'*தென்னனுயர்‌ பொருப்பும்‌ தெய்வவடமலையும்‌'' என்னும்‌ இரண்டு திருமலைகளுள்‌ 
திருவேங்கடமலையிலே திருவுள்ளஞ்சென்று அவ்விடத்தைப்‌ பேசி அனுபவிக்கிறார்‌ இப்பாட்டில்‌. 
எம்பெருமானிலுங்காட்டில்‌ எம்பெருமானோடு சம்பந்தம்‌ பெற்ற பொருள்களே பரம 
உத்தேச்யமென்று கொள்ளுகிறவர்கள்‌ ஆகையாலே, 
திருவேங்கடமுடையான்‌ வரையில்‌ போகாமல்‌, அவனுடைய சம்பந்தம்‌ பெற்றதான திருமலையோடே தின்று அனுபவிக்கிறார்‌. 

எழுவார்‌: 
இங்கு 'எங்களுக்கு ஐச்வர்யத்தைத்‌ தரவேணும்‌'” என்று பிரார்த்தித்து அது கைப்பட்டதும்‌ எம்பெருமானைவிட்டு எழுந்து 
போகிறவர்கள்‌ என்றாவது, ஐச்வர்யம்‌ வேணுமென்று மேலே மேலே பிரார்த்திக்குமவர்கள்‌ என்றாவது கொள்க. 
இவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது ஐச்வார்ய ப்ராப்திக்கு 
விரோதியான பாவங்களைத்‌ தொலைத்து ஐச்வர்ய விருப்பத்தை நிறைவேற்றுகை. 

விடைகொள்வார்‌ என்றால்‌ விட்டு நீங்குகிறவர்கள்‌ என்கை; 
ஸந்தர்ப்பம்‌ நோக்கி இங்கே கைவல்யார்த்திகளைச்‌ சொல்லுகிறது. 
அவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது ்‌ 
ஆத்மானுபவத்திற்கு விரோதியான பாவங்களைத்‌ தொலைத்துக்‌ கைவல்யாநுபவத்தை நிறைவேற்றுகை. 

ஈன்துழாயானை வழுவாவகை நினைந்து வைகல்‌ தொழுவார்‌ 
ப்ரமைகாத்துகளான பகவத்பக்தர்கள்‌; 
அவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது மாறிமாறிப்‌ பலபிறப்பும்‌ 
பிறக்கும்படியான தீவினைகளைத்‌ தொலைத்து முத்தியளிக்கை 

ஆக வேண்டுவோர்‌ வேண்டினபடியே அநிஷ்ட நிவருத்தியையும்‌ (வேண்டாததை விலக்கியும்‌) இஷ்டப்ராப்தியையும்‌ 
செய்விக்கவல்லது திருவேங்கடம்‌ என்றதாயிற்று. 

வானோர்‌ மனச்சுடரைத்‌ தூண்டும்‌ மலை: 
ஒரு நெருப்பை அணைக்கும்‌; ஒரு நெருப்பை அபிவிருத்தி செய்யும்‌ என்று சமத்காரமாக அருளிச்‌ செய்கிறார்‌. 
வானோர்‌ மனச்சுடரைத்‌ தூண்டுகையாவது - பரமபதத்திலே பரத்வகுணத்தை அனுபவித்துக்‌ கொண்டிருக்கிற நித்யஸூரிகளை, 
இங்கு. வந்து ஸெளலப்ய, ஸெளரில்யாதி குணங்களை அனுபவிக்குமாறு  உத்ஸாஹமூட்டுதலாம்‌. 

நெறியார்‌ குழற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து 
அறியாது இளங்கிரி என்றெண்ணி - பிரியாது 
பூங்கொடிகள்‌ வைகும்‌ பொருபுனற்‌ குன்றென்னும்‌ 
வேங்கடமே! யாம்‌ விரும்பும்‌ வெற்பு, (-ஸ்ரீ பூதத்தாழ்வார்‌ -இ.தி. 53) 

நெறி - வழி, பாதை; நெறியார்‌ - திருமலை வழியிலே இருப்பவர்கள்‌; குழற்கற்றை - சடைமுடி; இளங்கிரி - சிறியமலை; 
வைகும்‌ - படரும்‌; பொருபுனல்‌ - அலையெறியும்‌ அருவி; வெற்பு ” மலை. 

திருமலைக்குச்‌ செல்லும்‌ வழியில்‌ தவம்‌ செய்யும்‌ தவசியர்களது சடைமுடிக்கற்றைகள்‌ முன்புறம்‌ உயர்ந்தும்‌, 
பின்னே முதுகுப்புறம்‌ தாழ்ந்தும்‌ இருக்கின்றன. மனிதன்‌ என்று அறியாமல்‌, சிறிய மலை என்றெண்ணி, அவ்விடம்‌ விட்டுப்‌ 
பிரியாமல்‌ பூங்கொடிகள்‌ அவர்கள்‌ மீதே படர்கின்றன. 
அலையெறிகின்ற அருவிகளையுடைய “திருமலை” என்று புகழ்பெற்ற வேங்கடமே நாம்‌ விரும்பும்‌ மலையாகும்‌. 

திருவேங்கடமலையை ஒரு சமத்காரம்‌ பொலிய வருணிக்கிறார்‌. திருமலை யாத்திரை வருகின்ற மஹான்கள்‌ பலர்‌ 
“வெறியார்‌ தண்சோலைத்‌ திருவேங்கடமலைமேல்‌ நெறியாங்க்‌ கிடக்கும்‌ நிலையுடையேன்‌ ஆவேனே! என்று ஸ்ரீ குலசேகரப்‌ 
பெருமாள்‌ விரும்பினபடியே, திருமலை ஏறும்‌ வழியிலே மிக்க ஆதாரம்‌ வைத்து, திருமலை மேலே சென்று வாழ்வநிற்காட்டிலும்‌ 
திருமலை வழியிற்‌ கிடப்பதையே பரம உத்தேச்யமாகக்‌ கொண்டு அவ்வழியிலே' :வீற்றிருந்து எம்பெருமானைச்‌ சிந்தை செய்கின்றனர்‌. 
அப்போது மூச்சுவிடுதல்‌, உடம்பு அசைத்தல்‌ முதலியன ஒன்றுஞ்செய்யாதே, வால்மீகி ' முதலிய 
மஹரிஷிகளைப்போலே யோகநிலையில்‌ ஆழ்ந்து கிடக்கின்றனர்‌. 
அன்னவர்களது கூந்தல்‌ கற்றையானது முன்னின்று பின்‌ தாழ்ந்திருப்பதைக்‌ கண்ட பூங்கொடிகளானவை 'சில மனிதர்கள்‌ 
வீற்றிருக்கின்றார்கள்‌' என்றும்‌ அவர்களுடைய குழல்கற்றை தாழ்ந்திருக்கின்றது' என்றும்‌ தெரிந்து கொள்ளாமல்‌, “இவை 
சிறுமலைகள்‌' என்றெண்ணி அவற்றின்‌ மேலே படர்கின்றனவாம்‌. 
படர்ந்து, வால்மீகி முனிவர்மீது புற்று மூடினாற்போலே இந்த பக்தர்களின்‌ மேலும்‌ பூங்கொடிகள்‌ படர்ந்திருப்பது அற்புதமான 
ஒரு காட்சியாய்‌ அமைந்தது. இப்படிப்பட்ட காட்சிக்கு இடமான திருமலையே நாம்‌ விரும்பத்தக்க மலையாம்‌ - என்றாயிற்று. 

வெற்பென்று வேங்கடம்‌ பாடும்‌ வியன்துழாய்‌ 
கற்பென்று சூடும்‌ கருங்குழல்மேல்‌ - மற்பொன்ற 
நீண்டதோள்‌ மால்கிடந்த நீள்கடல்‌ நீராடுவான்‌ 
பூண்டநாள்‌ எல்லாம்‌ புகும்‌. (ஸ்ரீ பேயாழ்வார்‌ -மூ. தி, 69) 

வியன்துழாய்‌ - வியக்கத்தக்க துளசி; மற்பொன்ற - மல்‌ பொன்ற, மல்லர்கள்‌ அழியும்படியான; மால்‌ - திருமால்‌; நீள்கடல்‌ -திருப்பாற்கடல்‌. 

ஆழ்வார்‌ ஒரு தலைவி நிலையை அடைந்து பாடுவது முதலிய செயல்களை அவளது திருத்தாயார்‌ கூறுவதாக இச்செய்யுள்‌ 
அமைந்துள்ளது. இது தாய்ப்பாசுரம்‌ என்பர்‌. 

என்‌ மகளானவள்‌ ஏதேனும்‌ ஒரு மலையைப்‌ பற்றிய பேச்சு நேர்ந்தாலும்‌, திருவேங்கட மலையைப்‌ பற்றிப்‌ பாடுகிறாள்‌. தனது 
கற்புக்குத்‌ தகுந்ததென்று வியக்கத்தக்க துளசியைத்‌ தனது கருங்கூந்தலில்‌ சூடிக்கொள்கிறொள்‌. மல்லர்கள்‌ அழியும்படியான 
நீண்ட தோள்களையுடைய திருமால்‌ பள்ளிகொண்டுள்ள பரந்த திருப்பாற்கடலிலே நீராடுவதற்காக விடிந்த விடிவுகள்‌ தோறும்‌ புறப்படுகின்றாள்‌. 

இப்பாசரத்தில்‌ 'கற்பென்று” பாதிவ்ரத்யத்தையும்‌, 
கருங்குழல்‌” என்று பெண்ணின்‌ கூந்தலையும்‌ கூறுவதால்‌, 
'என்‌ மகள்‌' என்று ஒரு பெண்ணை எழுவாயாகக்‌ கொள்ள வேண்டும்‌. 
மற்பொன்ற: 
மல்லர்களையழித்த; கடலில்‌ புகுந்து மதுகைடபர்‌ என்னும்‌ அசுரர்களைக்‌ கொன்றதையும்‌, கிருஷ்ணாவதாரத்தில்‌ சாணூரன்‌, 
முஷ்டிகளன்‌ என்கிற மல்லர்களை அழித்ததையும்‌ கூறுகிறார்‌. 

பூண்ட நாள்‌ எல்லாம்‌: 
பூண்ட - பூட்டிய) சூரியனுடைய தேரிலே குதிரையைப்‌ பூட்டிய நாள்‌ எல்லாம்‌' என்கிறபடியே, “விடிந்த விடிவுகள்‌ 
தோறும்‌' என்று பொருள்பட்டது. 

எம்பெருமானை அனுபவித்தல்‌ பல வகைப்பட்டிருக்கும்‌: 
அவனுடைய திருநாமங்களைச்‌ சொல்லி அனுபவித்தல்‌, திருக்கல்யாண குணங்களைச்‌ சொல்லி அனுபவித்தல்‌, 
திவ்யசேஷ்டிதங்களை (அவதாரச்‌ செயல்களைச்‌) சொல்லி அனுபவித்தல்‌, வடிவழகை வருணித்து அனுபவித்தல்‌, 
அவனுகந்தருளிய திவ்ய தேசங்களின்‌ வளங்களைப்‌ பேசி அனுபவித்தல்‌, ௮ங்கே அபிமானமுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களின்‌ 
பெருமையைப்‌ பேசி அனுபவித்தல்‌ என்று இப்படிப்‌ பலவகைப்பட்டிருக்கும்‌ பகவதனுபவம்‌. 

இவ் வகைகளில்‌ பரம விலக்ஷ்ணமான மற்றொரு வகையுமுண்டு: அதாவது - தாமான தன்மையை (ஆண்மையை/ 
விட்டுப்‌ பிராட்டிமாருடைய தன்மையை ஏறிட்டுக்கொண்டு வேற்றுவாயாலே பேசி அனுபவித்தல்‌ (இது அந்யாபதேசம்‌ 
எனப்படும்‌). இப்படி அனுபவிக்கும்‌ இறத்தில்‌ தாய்ப்பாசுரம்‌, தோழிப்பாசுரம்‌, மகள்‌ பாசுரம்‌ என்று மூன்று வகுப்புகளுண்டு. 
இவை நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்களது அருளிச்செயல்களில்‌ (பாட்டுகளில்‌) விசேஷமாக வரும்‌. 
முதலாழ்வார்களின்‌ திருவந்தாதிகளில்‌ ஸ்திரீபாவனையினாற்‌ பேசும்‌ பாசுரம்‌ வருவதில்லை. 
ச்ருங்கார ரஸத்தின்‌ ஸம்பந்தம்‌ சிறிதுமின்றியே கேவலம்‌ சுத்த பக்திரஸமாகவே பாசுரங்கள்‌ அருளிச்செய்தவர்கள்‌ முதலாழ்வார்கள்‌. 
ஆயினும்‌ இப்பாசுரம்‌ ஒன்று தாய்வார்த்தையாகச்‌ செல்லுகிறது. பேயாழ்வாராகிய 
பெண்பிள்ளையின்‌ நிலைமையை அவளைப்‌ பெற்று வளர்த்த திருத்தாயார்‌ பேசுவதாக அமைக்கப்பட்ட பாசுரம்‌ இது. 
“என்னுடைய மகளானவள்‌'' என்ற எழுவாய்‌ இதில்‌ இல்லையாதலால்‌ கற்பித்துக்கொள்ள வேண்டும்‌. 

இப்பிரபந்தத்தில்‌ அந்யாபதேசப்‌ பாசுரம்‌ வேறொன்றும்‌ இல்லாதிருக்க இஃ்தொன்றை மாத்திரம்‌ இங்ஙனே 
தாய்ப்பாசுரமாகக்‌ கொள்ளுதல்‌ சிறவாதென்றும்‌, “என்‌ மகள்‌” என்ற எழுவாய்‌ இல்லாமையாலும்‌ இவ்வர்த்தம்‌ உசிதமன்று என்றும்‌ 
சிலர்‌ நினைக்கக்‌ கூடுமாதலால்‌ இப்பாசுரத்திற்கு வேறுவகையான நிர்வாஹமும்‌ பூர்வர்கள்‌ அருளிச்‌ செய்துள்ளனர்‌. 

எங்ஙனே எனில்‌: ''பாடும்‌, சூடும்‌, புகும்‌! என்ற வினைமுற்றுக்களை முன்னிலையில்‌ வந்தனவாகக்‌ கொண்டு, 
**உலகத்தவர்களே! நீங்கள்‌ ஏதாவதொரு மலையைப்‌ பாடவேண்டில்‌ திருவேங்கடமலையைப்‌ பாடுங்கள்‌; 
ஏதேனும்‌ ஒரு மலரைக்‌ குழலில்‌ சூடவேண்டில்‌ திருத்துழாய்‌ மலரைச்‌ சூடிக்கொள்வதே சேஷத்வத்திற்கு உரியதென்று கொண்டு 
அதனைச்‌ சூடுங்கள்‌; நீராடுவதற்குத்‌ திருப்பாற்கடலிலே சென்று புகுங்கள்‌'' என்பதாக. 

இங்கே பெரியவாச்சான்‌ பிள்ளை வியாக்கியான ஸ்ரீ ஸூக்தி காண்மின்‌: '*இப்பிரகரணத்தில்‌ (பிரபந்தத்தில்‌) கீமும்‌ மேலும்‌ 
அந்யாபதேசமின்றிக்கே யிருக்க இப்பாட்டொன்றும்‌ இப்படிக்‌ கொள்ளுகிறதென்னென்று நிர்வஹிப்பர்கள்‌... 
திருமலையைப்‌ பாடுங்கோள்‌... திருத்துழாயைச்‌ சூடுங்கோள்‌... விரோதி நிரஸத சீலனானவன்‌ கிடந்த திருப்பாற்கடலிலே முழுகுங்கோள்‌'' என்று. 
திருவேங்கடத்தின்‌ புகழைப்பாடியும்‌, துளசியைப்‌ போற்றிச்‌ சூடியும்‌ வந்தால்‌, நாம்‌ திருப்பாற்கடலிலே நித்யம்‌ நீராடலாம்‌; 
நிச்சயம்‌ வைகுந்தம்‌ புகுவோம்‌ என்பது குறிப்பு ... 

வெற்பென்று வேங்கடம்‌ பாடினேன்‌ வீடாக்கி 
நிற்கின்றேன்‌ நின்று நினைக்கின்றேன்‌ - கற்கின்ற 
நூல்வலையில்‌. பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்‌ 
கால்வலையில்‌ பட்டிருந்தேன்‌ காண்‌ (ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ -நா. தி, 40), 
வீடு - மோட்சம்‌; நூல்வலை - வேதங்களாகிய வலை; நூலாட்டி - வேதமாகிய நூலில்‌ போற்றப்படும்‌ லட்சுமி; 
கேள்வனார்‌ - கணவர்‌, இங்கே திருமால்‌. 
 
மலைகளின்‌ பெயர்களைச்‌ சொல்லி வருகையில்‌, தற்செயலாக வேங்கடமலை என்றேன்‌; இதன்‌ பலனாகவே 
மோட்சம்‌ நிச்சயம்‌ என்றுணர்ந்து நிற்கின்றேன்‌... “*நாம்‌ சொன்ன சிறிய சொல்லுக்குப்‌ பெரிய பேறு கிடைத்த பாக்கியம்‌ 
எத்தகையது!” என்று நினைத்து, வியந்து, மலைத்துப்‌ போனேன்‌! 
ஓதப்படுகின்ற வேத சாஸ்திரங்களாகிய வலையில்‌ அகப்பட்டிருக்கும்‌ லக்ஷ்மீநாதனின்‌ திருவடிகளாகிய வலையில்‌ 
அகப்பட்டு நிலைத்து நிற்கின்றேன்‌. 

"மலை' என்று வருகிற பெயர்களையெல்லாம்‌ அடுக்காகச்‌ சொல்லுவோம்‌ என்று விநோதமாக முயற்சி செய்து 'பசுமலை, 
குருவிமலை' என்று பலவற்றையும்‌ சொல்லி வருகிற அடைவிலே, என்னையும்‌ அறியாமல்‌ 'திருவேங்கடமலை' என்று 
என்‌ வாயில்‌ வந்துவிட்டது; இவ்வளவையே கொண்டு எம்பெருமான்‌ என்னைத்‌ திருவேங்கடம்‌ பாடினவனாகக்‌ கணக்கு 
செய்து கொண்டான்‌ என்பது இதன்‌ கருத்து. 

நின்று நினைக்கின்றேன்‌: 
நாம்‌ புத்திபூர்வமாக ஒரு நல்ல சொல்லும்‌ சொல்லாது இருக்கவும்‌, எம்பெருமான்‌ தானே மடிமாங்காயிட்டுத்‌ திருவுள்ளம்‌ 
பற்றுகிற இது என்ன ஆச்சரியம்‌! என்று இதனையே அநுஸந்தித்து ஈடுபட்டு நின்றேன்‌ என்கை. 
கால்வலையிற்‌ பட்டிருந்தேன்‌? 
மூன்றாமடியில்‌ சாஸ்திரங்களை எம்பெருமானுக்கு வலையாகவும்‌, ஈற்றடியில்‌ அவ்வெம்பெருமான்‌ திருவடிகளைத்‌ 
தமக்கு வலையாகவும்‌ அருளிச்‌ செய்தார்‌. எம்பெருமானை சாஸ்திரங்களிலிருந்து எப்படிப்‌ பிரிக்க முடியாதோ அப்படியே 
என்னை அப்பெருமான்‌ திருவடிகளிலிருந்து பிரிக்கமுடியாது என்றவாறு. 
எம்பெருமான்‌ ஒரு வலையில்‌ அகப்பட்டான்‌, -நானொரு வலையில்‌ அகப்பட்டேன்‌ என்று சமத்காரமாகச்‌ சொல்லுகிறபடி. 

வேதங்களையும்‌, ஸ்ம்ருதி இதிகாச புராணங்களையும்‌ சம்பிரதாயமாக ஓதும்‌ முறையைப்‌ பின்பற்றி ஆராய்ந்தபோது, 
எம்பெருமானும்‌, பெரிய பிராட்டியும்‌ (லட்சுமியும்‌) இருவரும்‌ நமக்குத்‌ தெய்வம்‌ என்ற தெளிவு உண்டாயிற்று... சரணாகதரைக்‌ 
காப்பதாகக்‌ கூறி ௮வன்‌ அதுபடி நடக்கவில்லையாகில்‌ நூலாட்டி (லட்சுமி) அந்நூல்களே  * எதற்கென்று கேள்வனை 
(ஸ்ரீநிவாஸனைக்‌) கேட்பாள்‌. ்‌ 
ஏதோ வெற்பொன்றைப்‌ பாட நினைத்த போதும்‌ அவனது வேங்கடத்தைப்‌ பாடும்படியாயிற்று, அதனால்‌ அதை எனக்கு 
வீடாக்கினான்‌. அதே மோட்சத்தானம்‌. இப்படி எனக்கு வாய்த்ததற்கு யானே வியந்து அசையாது நின்று என்ன 
வாத்ஸல்யமென விசாரியா நின்றேன்‌ (ஆராய்ந்தேன்‌). இனி நிலைத்து நின்று இடையூறின்றி வேங்கடத்தையே தியானிக்கவும்‌ 
வாய்த்தது என்றபடி. 
இங்கே பாடுதல்‌, நிற்றல்‌, நினைத்தல்‌ என்று வாக்கு, காயம்‌, மனோரூப முக்கரணங்களின்‌ வியாபாரங்கள்‌ 
(செய்கைகள்‌) மொழியப்‌ பெற்றன. 

வேங்கடமே விண்ணோர்‌ தொழுவதும்‌ மெய்ம்மையால்‌ 
வேங்கடமே மெய்வினை நோய்‌ தீர்ப்பதுவும்‌ - வேங்கடமே 
தானவரை வீழத்தன்‌ ஆழிப்படைதொட்டு 
வானவரைக்‌ காப்பான்‌ மலை, (ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ -நா. தி. 48) 

மெய்ம்மையால்‌ - உண்மையான பக்தியுடனே; மெய்வினை நோய்‌ - முன்பிறவியில்‌ செய்த பாவவினைகளால்‌ உடலை வருத்தும்‌ நோய்‌; 
தானவர்‌ - அசுரர்கள்‌; ஆழிப்படை - சக்கராயுதம்‌; வானவர்‌ - தேவர்கள்‌. 

நித்யஸூரிகளால்‌ உண்மையான பக்தியூடனே தொழப்படுவது வேங்கடமே. 
பாவ வினைகளால்‌ விளைந்து உடலை வருத்தும்‌ கர்மவியாதிகளைத்‌ தீர்ப்பதும்‌ வேங்கடமே. 
அசுரர்கள்‌ அழியும்படி, சக்கராயுதத்தை ஏவி, தேவர்களைக்‌ காத்தருளும்‌ பெருமானுடைய திருமலையும்‌ வேங்கடமே. 
வேங்கடமே விண்ணோர்‌ தொழுவதும்‌: விண்ணோர்‌ வைகுந்தத்திலிருக்கும்‌ முக்தர்களும்‌, நித்யஸூரிகளும்‌. 

 “ஸதா பச்யந்தி ஸூரய:'” என்கிறபடியே நித்யஸூரிகள்‌ 
பரமபதத்திலே எம்பெருமானை இடைவிடாது அநுபவிக்கப்பெற்றாலும்‌, அங்கே பரத்வத்துக்கு உரிய மேன்மைக்‌ 
குணங்களை அநுபவிக்கலாகுமேயன்றி ஸெளலப்ய (எளிதில்‌ அணுகும்‌ தன்மை) ஸெளரில்யங்களுக்குப்‌ (வேறுபாடின்றிப்‌ 
பழகும்‌ தன்மை) பாங்கான எளிமைக்‌ குணங்களை இத்நிலத்திலே வந்து அநுபவிக்க வேண்டியிருப்பதால்‌ அந்த லோதி குணங்களை 
அநுபவிப்பதற்காகத்‌ திருமலையில்‌ வந்து தொழும்படியைக்‌ கூறுவது முதலடி. 

வேங்கடமே மெய்வினை நோய்‌ நீர்ப்பதுவும்‌: 
இது 'வேங்கடம்‌' என்பதற்கு விளக்கம்‌. வேம்‌ - பாவம்‌; கடம்‌ - எரித்தல்‌. 
தேவர்களுக்கு அசுரர்களால்‌ .நேரும்‌ துன்பங்களைத்‌ திருவாழியால்‌ (சக்கரத்தால்‌ தொலைத்துக்‌ காத்தருளும்‌ எம்பெருமான்‌,
அப்படியே நம்‌ போன்ற பக்தர்களுடைய துன்பங்களையும்‌ துடைக்கவே எழுந்தருளியிருக்கும்‌ இடம்‌ திருமலை என்பன பின்னடிகள்‌. 

“'வேங்கட அம்ருத பீஜம்‌ கடமைச்வர்யம்‌ உச்யதே'' என்றபடி வேங்கடம்‌ என்ற சொல்லுக்கு மோட்சம்‌, ஐச்வர்யம்‌ இரண்டுமான 
மலையென்ற பொருளுமுண்டு. மோட்சமென்பதற்கு ஏற்ப விண்ணோர்‌ தொழுகின்றனர்‌. 
ஐச்வர்யம்‌ என்பதற்கிணங்க வானவர்‌ வணங்குகின்றனர்‌. 
வினைகளை எரிப்பதால்‌ வேங்கடம்‌ என்ற பொருளைக்‌ கருதி அனைவரும்‌ இதனையே வணங்கி 
எல்லாத்‌ துயரங்களையும்‌ தீர்த்துக்கொள்வது கண்கூடு. 
ஆகவே எல்லாவற்றிற்கும்‌ மேலானது. இவ்வாறு வேங்கடம்‌ என்ற சொல்லின்‌ பொருளைக்‌ கருதி மூன்றுதரம்‌ வேங்கடமென்றது. 

-----------
 
முதலாழ்வார்கள்‌ கண்ட திருவேங்கடவன்‌ 

முதலாழ்வார்கள்‌ மாபெரும்‌ வேங்கடேச பக்தர்கள்‌ என்பது அவர்கள்‌ பாடிய திருவந்தாதியிகளிலிருந்து நன்கு 
வெளிப்படுகிறது. மொத்தம்‌ 300 பாசுரங்களில்‌, இவர்கள்‌ வேங்கடவனைக்‌ குறித்துப்‌ பாடியவை 39;
ஸ்ரீ ரங்கநாதனைக்‌ குறித்தவை 7; 
திருமழிசையாழ்வார்‌ சரிசமமாகவே, முறையே 15,  பாடல்களைப்‌ பாடியுள்ளார்‌; 
இந்நால்வரும்‌ வேங்கடவனைப்‌ பாடிய பாசுரங்களில்‌ சிலவற்றை இங்கு காண்போம்‌. 

உணர்வாரார்‌ உன்பெருமை? ஊழிதோறு ஊழி 
உணர்வாரார்‌ உன்‌ உருவம்‌ தன்னை? உணர்வாரார்‌? 
விண்ணகத்தாய்‌! மண்ணகத்தாய்‌! வேங்கடத்தாய்‌! நால்வேதப்‌ 
பண்ணகத்தாய்‌! நீ கிடந்தபால்‌. (ஸ்ரீ பொய்கையாழ்வார்‌ )

உணர்வாரார்‌ - உணரக்கூடியவர்‌ யார்‌? ஊழி - பிரளயம்‌, காலவெள்ளம்‌; விண்ணகம்‌ - வைகுந்தம்‌. 

வைகுண்டத்தில்‌ இருப்பவனே! மண்ணுலகில்‌ அவதரித்தவனே! வேங்கடத்தில்‌ நின்று அருள்பவனே! 
ஸ்வரப்ரதானமான நான்கு வேதங்களின்‌ பண்கள்‌ மயமானவனே! 
உன்‌ பெருமையை ழி முதல்‌ அடுத்த ஊழிவரை காலமெல்லாம்‌ ஆராய்ந்தாலும்‌ யார்‌ அறியவல்லார்‌? உனது திவ்யாத்ம 
சொரூபத்தைத்தான்‌ யார்‌ அறியவல்லார்‌? நீ திருப்பாற்கடலில்‌ பாம்பணைமேல்‌ கிடக்கும்‌ நிலையைத்தான்‌ யார்‌ அறியவல்லார்? 

“திருமாலை அறிவதே அறிவு!" என்று கீழ்ப்பாட்டில்‌ அருளிச்செய்த ஆழ்வார்‌ ௮றிவுக்கு எல்லைநிலம்‌ எம்பெருமான்‌ 
அல்லது இல்லை என்னும்படி இருந்தாலும்‌, அவன்‌ தன்மை அறிவார்தான்‌ இல்லை என்று இப்பாட்டில்‌ அருளிச்செய்கிறார்‌. 
இவ்வாறிருப்பது வஸ்துவின்‌ (திருவேங்கடவனின்‌) சுபாவமே ஒழிய, அறிவின்‌ குறைவன்று என்பதும்‌ அறியத்தக்கது. 
*'உணர்வாரார்‌?'” என்ற வினாவினால்‌ ஸர்வஜ்ஞனான உன்னாலும்‌ உன்‌ தன்மை அறியமுடியாது என்பதும்‌ காட்டப்படும்‌.
''தனக்கும்‌ தன்‌ தன்மை அறிவரியான்‌'' என்றார்‌ நம்மாழ்வாரும்‌. 

உளதென்று இறுமாவார்‌ உண்டு இல்லை என்று 
தளர்தல்‌ அதன்‌ அருகுஞ்சாரார்‌ - அளவரிய 
வேதத்தான்‌ வேங்கடத்தான்‌ விண்ணோர்‌' முடிதோயும்‌ 
பாதத்தான்‌ பாதம்‌ பயின்று. (ஸ்ரீ பூதத்தாழ்வார்‌ -இ.தி. 45) 

உளது என்று - செல்வம்‌, பகவானை வழிபடும்‌ பேறு தமக்கு உள்ளது என்று; இறுமாவார்‌ - கர்வம்‌ கொள்ளமாட்டார்‌; 
விண்ணோர்‌ - நித்யஸூரிகள்‌; பயின்று - பழக. 

அளவிட முடியாதபடி அனந்தமாயுள்ள வேதங்களால்‌ போற்றப்படும்‌ திருவேங்கடமுடையான்‌, நித்யஸூரிகளது 
தலைமுடிகள்‌ படியும்படி பணியப்பெற்ற திருவடிகளை யுடையவன்‌. ஸ்ரீவேங்கடாசலபதியினுடைய பாதங்களை 
வணங்கிப்‌ பழகிய பக்தர்கள்‌ தமக்குச்‌ செல்வமோ, அவனை வணங்கும்‌ 'பேறோ உள்ளதென்று கர்வம்‌ கொள்ளமாட்டார்கள்‌; 
அவை நேற்று இருந்து இன்று இல்லையென்னும்படி அழிந்தன” என்னும்‌ மனத்தளர்ச்சியின்‌ பக்கமே செல்லமாட்டார்கள்‌. 
வேங்கடேச பக்தர்கள்‌ தம்முடைய பணம்‌, பதவி பறிபோனாலும்‌, மனம்‌ தளர்ந்து அவனைத்‌ தொழுவதைக்‌ கைவிட 
மாட்டார்கள்‌; ''ஸ்ரீ வேங்கடேச சரணெள சரணம்‌ ப்ரபத்யே” (ஸ்ரீ வேங்கடேசனின்‌ இரண்டு திருவடிகளையும்‌ சரணடைகிறேன்‌) 
என்றே எப்பொழுதும்‌ இருப்பார்கள்‌. 
இத்தகைய ''ஸ்ரீ வேங்கடேச பிரபத்தி,” 'வேங்கடத்தான்‌ விண்ணோர்‌ முடிதோயும்‌ பாதத்தான்‌ 
பாதம்‌ பயின்று என்பதனால்‌ கூறப்பட்டது. 
வேங்கடத்தான்‌ பாதத்தான்‌ - ஸ்ரீ வேங்கடேச சரணெள; பாதம்‌ பயின்று - சரணம்‌ 
ப்ரபத்யே, சரணமாகப்‌ பற்றுகிறேன்‌. 
எனவே இப்பாசுரம்‌ ஸ்ரீ வேங்கடேசப்‌ பிரபத்திக்கு இலக்கணம்‌ கூறுகிறது. 

உளதென்று இறுமாவார்‌ உண்டில்லை என்று: 
இதற்கு இருவிதமாகப்‌ பொருள்‌ கூறப்படுகிறது; 
செல்வத்தைக்‌ குறித்துச்‌ செருக்கடைதல்‌; நித்யஸூரிகள்‌ முடி. தோயும்‌ 
ஸ்ரீ வேங்கடேசனின்‌ பக்தர்கள்‌ நாம்‌ என்று பெருமைப்படுதல்‌ என்று. 

பாகவதர்களின்‌ பெருமையைப்‌ பேசுகிறார்‌. 
எம்பெருமானுடைய திருவடிகளிற்‌ பழகுகின்ற பாகவதர்கள்‌ செல்வம்‌ படைத்தாலும்‌ செருக்குக்‌ கொள்ள மாட்டார்கள்‌; இருந்த 
செல்வம்‌ அழிந்து போனாலும்‌, “ஐயோ! ஏழைமை வந்துவிட்டதே!'' என்று சிறிதும்‌ தளர்ச்சியடைய மாட்டார்கள்‌. 
களிப்பும்‌ கவர்வுமற்று' என்ற பாசுரத்திற்‌ சொன்னபடி லாபநஷ்டங்களில்‌ , ஒருபடிப்பட்ட சிந்தை உடையராயிருப்பர்‌. 
““முனியார்‌ துயரங்கள்‌ முந்திலும்‌, இன்பங்கள்‌ மொய்த்திடினும்‌ கனியார்‌... எங்கள்‌ இராமாதுசனை வந்தெய்தினர்‌'' (இராமாநுச 
நூற்றந்தாதி, 17) என்ற ஸ்ரீராமாநுஜபக்தனைப்‌ போன்றிருப்பர்‌ பகவத்பக்தர்களும்‌. 

தாழ்சடையும்‌ நீள்முடியும்‌ ஒண்மழுவும்‌ சக்கரமும்‌ 
சூழவும்‌ பொன்நாணும்‌ தோன்றுமால்‌ - சூழும்‌ 
திரண்டருவி பாயும்‌ திருமலைமேல்‌ எந்தைக்கு 
இரண்டுருவும்‌ ஒன்றாய்‌ இசைந்து (ஸ்ரீ பேயாழ்வார்‌ -மூ.தி. 63) 

தாழ்சடை, ஒண்மழு, சூழ்‌ அரவு - சிவனுக்குரியவை. 
நீள்முடி, சக்கரம்‌, பொன்‌ நாண்‌ - விஷ்ணுவுக்குரியவை. 

தாழ்ந்த சடாமுடியும்‌, நீண்ட மகுடமும்‌; அழகிய மழுவாயுதமும்‌, சக்கரமும்‌; சுற்றிலும்‌ அணிந்துள்ள 
நாகாபரணமும்‌, பொன்‌ அரைநாணும்‌; நாற்புறமும்‌ அருவிகள்‌ இரண்டு பாயும்‌ திருமலைமேல்‌ எழுந்தருளியிருக்கும்‌ எந்தை ஸ்ரீ 
வேங்கடேசனுக்கு இவ்விதம்‌ சிவன்‌, விஷ்ணு ஆகிய இருவரின்‌ உருவமும்‌ ஒரே வடிவமாக அமைந்து விளங்குகிறது; என்ன ஆச்சரியம்‌! 

இப்பாசுரத்திற்கு அவரவர்கள்‌ விருப்பப்படி பலவாறாகப்‌ பொருள்‌ கூறுவர்‌. சைவர்கள்‌ சங்கர - நாராயணனைக்‌ கூறுவதாகக்‌ 
கொள்வர்‌. இதையொட்டியே சைவ - வைணவர்களுக்கிடையே திருமலை யாருடையது என்று ஒரு பிரச்னை ஏற்பட்டதாகவும்‌, 
ஸ்ரீ ராமானுஜர்‌ அது வைணவருடையதே என்று நிலைநாட்டியதாகவும்‌ வரலாறு கூறுகிறது. ஸ்ரீ ராமானுஜர்‌ ஸ்ரீ 
வேங்கடேசன்‌ சன்னிதியில்‌ பலர்‌ காண சங்கு, சக்கரமும்‌, சிவனுக்குரிய ஒண்மழுவும்‌, திரிசூலமும்‌ வைத்து, எவையேனும்‌ * 
ஒன்றை ஏற்றுப்‌ பிரச்னையை தீர்த்து வைக்கும்படி இறைவனை வேண்டி, இரவில்‌ கதவை மூடினார்‌. மறுநாள்‌ 
திருவேங்கடமுடையான்‌ சங்கு, சக்கரங்களுடன்‌ காட்சி தந்ததாகக்‌ கூறுவர்‌. 

வேங்கடவன்‌ நாகத்தை அணிந்திருப்பது வாஸ்தவமே. 
எம்பெருமானின்‌ க்ரீடத்துக்குக் கீழ்  காணப்படும்‌ நீண்ட ரேகையைச்‌ தாழ்சடையாக்‌. கொள்வது கற்பனை என்பர்‌ வைணவர்‌. 
இப்பாசுரத்தையே இடைச்செருகல்‌, பேயாழ்வார்‌ பாடியதாக இருக்க முடியாது என்றே சிலர்‌ கூறுவர்‌. 

இது எங்நனமிருப்பினும்‌ பேயாழ்வார்‌ சைவ வைணவ சமரச  நோக்கு உடையவர்‌ என்பதற்கு இப்பாசுரம்‌ சான்றாக அமைகறது. 
இருப்பினும்‌ இவர்‌ திருமாலே முழுமுதற்‌ கடவுள்‌ என்று  கொண்டு, சைவராக இருந்த திருமழிசையாரை வாதத்தில்‌ வென்று 
வைணவராக்கனவர்‌ என்பதையும்‌ நினைவுகூர வேண்டும்‌. 

இன்று அவைதீக சமயங்களின்‌ தீவிரப்‌ பிரசாரத்தினாலும்‌, மதமாற்று முயற்சிகளாலும்‌ வைதீக மதங்களான சைவத்திற்கும்‌ 
வைணவத்திற்கும்‌ இடையே முன்பொரு காலம்‌ நிலவிய பூசல்களும்‌, வாக்குவாதங்களும்‌ , மறைந்து சமரச நோக்கே 
மிகுந்திருப்பது மூழ்ச்சிக்குரிய விஷயமாகும்‌, 
ஸ்ரீ வேங்கடேஸ்வரன்‌ என்று சைவர்களாலும்‌, ஸ்ரீநிவாஸன்‌ என்று வைணவர்களாலும்‌, 'பாலாஜி' என்று சாக்தர்களாலும்‌ மற்றும்‌ 
அவைதீக சமயத்தினராலும்‌ கூட வணங்கப்படும்‌ கண்கண்ட தெய்வமாகத்‌ திருவேங்கடமுடையான்‌ திகழ்கின்றது கண்கூடு, 

சென்று வணங்குமினோ சேணுயர்‌ வேங்கடத்தை: 
நின்று வினைகெடுக்கும்‌ நீர்மையால்‌ - என்றும்‌ 
கடிக்கமல நான்முகனும்‌ கண்மூன்றத்தானும்‌ 
அடிக்கமலம்‌ இட்டேத்தும்‌ அங்கு (ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ -நா.தி. 42) 

சேண்‌ - உயர்ந்த; சேணுயர்‌ - மிகவுயர்ந்த; நீர்மை - இயல்பு, சுபாவம்‌; கடி - வாசனை மிகுந்த; கமலம்‌ - தாமரை; 
நான்முகன்‌ பிரம்மா) கண்மூன்றத்தான்‌ - முக்கண்ணன்‌, சிவன்‌. 
 
(அன்பர்களே!) மிகவும்‌ உயர்ந்த வேங்கடத்தைச்‌ சென்று வணங்குங்கள்‌! அத்திருமலை, இயல்பாகவே பாவங்களை நின்று போக்குவது. 
அங்கு பரிமளம்‌ மிக்க தாமரையில்‌ பிறந்த பிரம்மனும்‌, முக்கண்ணனாகிய சிவனும்‌, என்றும்‌ ஸ்ரீ வேங்கடாசலபதியினுடைய திருவடிகளில்‌, 
தாமரைப்‌ பூக்களை சமர்ப்பித்து, துதித்துக்கொண்டிருப்பர்‌. வேங்கடத்தை நின்று வினைகெடுக்கும்‌ நீர்மையால்‌: 

வேம்‌ - பாவங்கள்‌, வினை. கடம்‌ - எரிப்பது, கெடுக்கும்‌; “வேங்கடம்‌” என்பதற்குப்‌ பொருள்‌ கூறியிருக்கிறார்‌. 
“வெங்கொடும்‌ பாவங்களெல்லாம்‌ வெந்திடச்‌ செய்வதால்‌ 
நல்மங்கலம்‌ பொருந்துஞ்சர்‌ வேங்கடமலையானதென்று -என்கிறது ஒரு புராணச்‌ செய்யுள்‌. 

பிரம்மாதி தேவர்களே “புஷ்பமண்டபம்‌' என்றே புகழ்பெற்ற பொன்மலையில்‌ ஸ்ரீ வேங்கடேசனது திருவடிகளில்‌ புஷ்பாஞ்சலி 
செய்து, தங்கள்‌ அதிகாரத்தைப்‌ பெற்றிருக்கின்றனர்‌. நீங்களும்‌ அவ்விதமே செய்து உய்வடைவுங்கள்‌ என்று உபதேசிக்கிறார்‌. 
சமரச . நோக்குடைய பேயாழ்வாரைப் போல்‌ அல்லாது, திருமழிசையார்‌ வீரவைணவர்‌ என்பதும்‌ இதிலிருந்து தெரிகிறது. 

முதலாழ்வார்கள்‌ வாழித்‌ திருநாமங்கள்‌ (அப்பிள்ளை திருவாய்மலர்ந்தருளியது) 

அரசனுக்குப்‌ பிரஜைகள்‌ ''வாழ்க, வாழ்க!”” என்று வாழ்த்து தெரிவிப்பது போலவே, இறைவனுக்கும்‌, மெய்யடியார்களுக்கும்‌ 
வாழ்த்துக்கூறுவது மரபாகும்‌. வைணவத்தில்‌ ஆழ்வார்களுக்கும்‌, ஆசாரியர்களுக்கும்‌ இவ்விதம்‌ வாழித்‌ திருநாமங்கள்‌ கூறுவது 
வழக்கில்‌ உள்ளது. முதலாழ்வார்களைக்‌ குறித்த இந்நூல்‌ அவர்களுடைய வாழித்‌ திருநாமங்களுடன்‌ நிறைவடைகறது. 

செய்ய துலா ஓணத்தில்‌ செகத்துதித்தான்‌ வாழியே
திருக்கச்சி மாநகரம்‌ செழிக்க வந்தோன்‌ வாழியே 
வையந்தகளி நூறும்‌ வகுத்து உரைத்தான்‌ வாழியே 
வனசமலர்க்‌ கருவதனில்‌ வந்தமைந்தான்‌ வாழியே 
வெய்யகதிரோன்‌ தன்னை விளக்கிட்டான்‌ வாழியே 
வேங்கடவர்‌ திருமலையை விரும்புமவன்‌ வாழியே 
பொய்கைமுனி வடிவழகும்‌ பொற்பதமும்‌ வாழியே 
பொன்முடியும்‌ திருமுகமும்‌ பூதலத்தில்‌ வாழியே. 

அன்பேதகளி நூறும்‌ அருளினான்‌ வாழியே 
ஐப்பசியில்‌ அவிட்டத்தில்‌ அவதரித்தான்‌ வாழியே 
நன்புகழ்சேர்‌ குருக்கத்தி நாண்மலரோன்‌ வாழியே 
நல்ல திருக்கடன்மல்லை நாதனார்‌ வாழியே 
இன்புருகு சிந்தை திரியிட்ட பிரான்‌ வாழியே 
எழில்‌ ஞானச்சுடர்‌ விளக்கேற்றினான்‌ வாழியே 
பொன்புரையும்‌ திருவரங்கர்‌ புகழுரைப்போன்‌ வாழியே 
பூதத்தார்‌ தாளிணை இப்பூதலத்தில்‌ வாழியே 

திருக்கண்டேன்‌ என நூறும்‌ செப்பினான்‌ வாழியே 
சிறந்த ஐப்பசியில்‌ சதயம்‌ செனித்த வள்ளல்‌ வாழியே 
மருக்கமழும்‌ மயிலைநகர்‌ வாழ வந்தோன்‌ வாழியே 
மலர்க்கரிய நெய்தல்தனில்‌ வந்துதித்தான்‌ வாழியே 
நெருக்கிடவே இடைகழியில்‌ நின்ற செல்வன்‌ வாழியே 
நேமிசங்கன்‌ வடிவழகை நெஞ்சில்‌ வைப்போன்‌ வாழியே 
பெருக்கமுடன்‌ திருமழிசைப்பிரான்‌ தொழுவோன்‌ வாழியே 
பேயாழ்வார்‌ தாளிணையிப்‌ பெருநிலத்தில்‌ வாழியே. 

“ஸ்ரீவேங்கடேச பாகவதம்‌" என்னும்‌ இந்தப்‌ புத்தகத்திலுள்ள குற்றம்‌, குறைகளைப்‌ பொறுத்து அருளும்படி, 
திருவேங்கடமுடையானை வேண்டிக்‌ கொள்வதோடு நூல்‌ நிறைவடைகிறது;  

ஸ்ரீவேங்கடேச நத்தம்‌ 
அஞ்ஞானினா மயா தோஷான்‌ அசேஷான்‌ விஹிதான்‌ ஹரே 
ச்ஷமஸ்வத்வம்‌ க்ஷமஸ்வத்வம்‌ சேஷசைல சிகாமணே 
அறியாமையால்‌ புரி தீவினை புரியாதுளத்‌ தற நீக்கிடு! 
பொறுத்தே அருள்‌! பொறுத்தே அருள்‌! பெருமாமணி வேங்கடவா! 

--------
சுதர்சனச்‌ சக்கரம்‌, பாஞ்சசன்னியம்‌, என்கிற திருச்சங்கு, சார்ங்கம்‌  என்கிற வில்‌ ஆகிய திருமாலின்‌ முப்படைகளை 
ஆண்டாள்‌  மின்னல்‌, இடி, மழையின்‌ வேகம்‌ ஆகியவற்றுக்கு உவமைகளாகச்‌  சொல்கிறாள்‌. 
திருக்கோவலூர்‌ மழையோ, எம்பெருமானுடைய  முப்படைகளின்‌ அவதாரங்களாகிய முதலாழ்வார்கள்‌ மீதே தன்‌ 
கை வரிசையைக்‌ காட்டியது! 
பாஞ்சசன்னியப்‌ பொய்கையார்‌;  கதாயுத பூதத்தார்‌; நாந்தகப்‌ பேயார்‌ ஆூய மூவரும்‌ 
அடைமழையில்‌ சிக்கியபோது, ஆண்டாள்‌ மார்கழி. நீராடி மூழ்ந்ததைப்போல்‌ ஆனந்தப்பட்டார்களோ என்னவோ 
தெரியாது; ஆயினும்‌ மழையில்‌ ஒதுங்குவதற்கு ஒரு புகலிடம்‌ தேடி, இருளில்‌ அலைந்தனர்‌. 

தங்களுடைய உலகநிலையைப்‌ பற்றிய  நினைவேயில்லாமல்‌, ஒருவரையொருவர்‌ விசாரித்து அறிந்து 
கொண்டு, திருமால்‌ பெருமையைப்‌ பேசி ம$ழ்ந்த வண்ணம்‌  இருந்தனர்‌. இத்தகைய இறையன்பர்கள்‌-- 

“செங்கண்‌ திருமுகத்துச்‌ செல்வத்‌ திருமாலால்‌ எங்கும்‌ திருவருள்‌ பெற்று இன்புறுவர்‌' 
என்று கோதை பலசுருதியாகப்‌ பாடியுள்ளாள்‌. 
எனவே இவர்கள்‌  மத்தியில்‌ திருமாலும்‌ வந்து சேர்ந்ததில்‌ ஆச்சரியமில்லை. 

இடைகழி அவ்வளவு சிறியது! ஸ்ரீ  வேங்கடாசலபதியை சேவிக்கும்போது இங்ஙனமே பக்தர்கள்‌ 
இன்று நெருக்கமாக நிற்க நேரிடுகிறது. நெரிசலுக்குப்‌ பிறகே  தரிசனம்‌! 
முதலாழ்வார்களும்‌ எம்பெருமானை இவ்விதமே  அனுபவித்தனர்‌. 

திருமாலின்‌ நான்கு அர்ச்சை நிலைக்‌ கோலங்களைப்‌  பொய்கையாழ்வார்‌ 
''நின்றான்‌ இருந்தான்‌ கிடந்தான்‌ நடந்தானே'"  என்று பாடியுள்ளார்‌. 
திருப்பதி கோவிந்தராஜப்‌ பெருமாள்‌  மேற்கொண்டுள்ளது கிடந்த கோலம்‌; 
திருமலை ஆதிவராக மூர்த்தி இருந்த (அமர்ந்த) கோலத்தில்‌ சேவை சாதிக்கிறார்‌. 
திருமலை வேங்கடவன்‌ ஏற்றுள்ளது நின்ற நிலை. 
இம்மூன்று நிலைகளையும்‌  தொடர்ந்து இடைகழியில்‌ ஆழ்வார்களும்‌ மேற்கொள்ள நேரிட்டது அதிசயிக்கத்தக்கது! 
முதலில்‌ பொய்கையார்‌ கடந்தார்‌; 
பூதத்தார்‌ வந்ததும்‌ இருவரும்‌ இருந்தனர்‌; 
மூன்றாமவர்‌ வந்ததும்‌  மூவரும்‌ நின்றனர்‌. 
திருக்கோவலூரில்‌ திரிவிக்கிரமன்‌ உலகளந்த நிலையில்‌ இருப்பது “நடந்த கோலம்‌' எனப்படும்‌. 
பெயருக்கேற்றவாறே கோவலூரில்‌ எம்பெருமான்‌ நடந்தே வந்து  ஆழ்வார்களுக்குத்‌ தெரியாமல்‌ அவர்கள்‌ மத்தியிலே புகுந்தான்‌ 
பொய்கைப்பிரான்‌ முதல்‌ திருவந்தாதி 85-ஆவது பாசுரத்தில்‌ 
இடைகழியில்‌ புகுந்து நெருக்கிய இறைவனைப்‌ பாடியுள்ளார்‌: 

“நீயுந்‌ திருமகளும்‌ நின்றாயால்‌ குன்றெடுத்துப்‌ 
பாயும்‌ பனி மறைத்த பண்பாளா!- வாசல்‌ 
கடை கழியா, உள்புகாக்‌ காமர்பூங்‌ கோவல்‌ 
இடைகழியே பற்றியினி.'” (86)
முந்தைய பாசுரத்தில்‌ ஆழ்வார்‌ தமது திருவுள்ளத்தைக்‌ குறித்து, “பெருமானை அனுபவிக்கவில்லையே”” என்று கூற 
திருமால்‌ பிராட்டியுடன்‌ இவர்‌ இருந்த: இடைகழிக்கே வந்து நின்றான்‌. 
எம்பெருமான்‌ அலர்மேல்‌ மங்கையுறை மார்பனாகப்‌  பிராட்டியுடன்‌ நின்ற கோலத்தில்‌ வந்திருந்ததால்‌, வந்தவன்‌ 
வேங்கடவனே எனக்கொள்ளலாம்‌.
பக்தர்களுடன்‌ கலந்த மகிழ்ச்சியால்‌ திருமால்‌ இடைகழியில்‌ நின்றான்‌. 
''காமுகர்கள்‌ உகந்த விஷயத்தினுடைய கண்வட்டம்‌  விட்டுப்‌ போக மாட்டாதாப்‌ போலே”! என்பார்‌ உரையாசிரியர்‌. 

முதலாழ்வார்கள்‌ சந்தித்து, திருமாலைக்‌ கண்டு அருந்தமிழில்‌ 
அந்தாதி பாடியதை, வில்லிப்புத்தூராரின்‌ திருமகனார்‌ வரந்தருவார்‌  இங்ஙனம்‌ போற்றிப்‌ புகழ்வர்‌: 
*பாவரும்‌ தமிழால்‌ பேர்பெறு பனுவல்‌ 
பாவலர்‌ பாதிநாள்‌ இரவில்‌ 
மூவரும்‌ நெருக்கி மொழிவிளக்கு ஏற்றி 
முகுந்தனைத்‌ தொழுத நன்னாடு” 

திருக்கோவலூரை மங்களாசாஸனம்‌ செய்யும்‌ ஒரு பெரிய திருமொழிப்பாசுரம்‌ முதலாழ்வார்களைக்‌ குறிப்பிடுவதாக 
திருமங்கையாழ்வார்‌  பாடிய ''தாங்கரும்‌ போர்‌'" என்று தொடங்கும்‌ பாசுரத்திலுள்ள  சில வரிகள்‌ இவை. 

“அடியவர்க்கு ஆரமுதம்‌ ஆனான்‌ தன்னை... 
குழாவரி வண்டு இசைபாடும்‌ பாடல்‌ கேட்டு 
தீங்கரும்பு கண்வளரும்‌ கழனி சூழ்ந்த 
திருக்கோவலூர்‌ அதனுள்‌ கண்டேன்‌ நானே! (210.4) 

அடியவாககு ஆரமுதம அனான: 
அடியவர்கள்‌ என்றது முதலாழ்வார்களை. அவர்கட்கு 
“தேனும்‌ பாலும்‌ கன்னலும்‌ அமுதுமாகத்‌: தித்தித்தவன்‌  இத்தலத்து எம்பிரான்‌.  திருக்கோவலூர்‌ திங்கரும்பு: 

இங்கு தீங்கரும்பாகச்‌ சொன்னது திருக்கோவலூர்‌ திரிவிக்ரமப்‌  பெருமாளை. 
குழாவரி வண்டிசை பாடும்‌ பாடலாவது, (முதலாழ்வார்கள்‌ பாடிய மூன்று திருவந்தாதிகள்‌. 
இந்த அந்தாதி  இசை கேட்டு, திருக்கோவலூர்‌ தீங்கரும்பாகிய  திருவேங்கடமுடையான்‌ கண்ணுறங்குமாம்‌. 
முதலாழ்வார்கள்‌  பாடிய அந்தாதிகளில்‌ மிக அதிகமாகத்‌ திருவேங்கடவன்‌  திருநாமமே அடி.படுவதால்‌ 
இங்ஙனம்‌ கொள்ளத்‌ தடையில்லை. 
வண்டுகளை மூன்று ஆழ்வார்களாகக்‌ கொள்ளலாம்‌. 

ஸ்ரீ வேதாந்த தேசிகர்‌ அருளிச்‌ செய்த '“தேஹளீச ஸ்துதி  ஏழாவது சுலோகத்தில்‌ 
முதல்‌ மூன்று ஆழ்வார்களைக்‌ கரும்பு  பிழியும்‌ சர்க்கரை ஆலையின்‌ மூன்று உருளைகளாகவும்‌, 
அவர்களால்‌ நெருக்கப்பட்ட திருமாலைத்‌ தீங்கரும்பாகவும்‌, 
எம்பெருமானின்‌ செளலப்ய குணத்தைச்‌ சாறாகவும்‌ கூறப்பட்டிருக்கிறது. 
இந்த அற்புதமான உவழைக்கு மேற்கூறிய 
திருமங்கையாழ்வார்‌. பாசுரம்‌ அடிப்படையாக அமைந்திருக்க வேண்டும்‌ 
 
கண்ணன்‌ அடியினை எமக்குக்‌ காட்டும்‌ வெற்பு 
கடுவினையரிரு வினையும்‌ கடியும்‌ வெற்பு 
திண்ணமிது வீடென்னத்‌ திகழும்‌ வெற்பு 
தெளிந்த பெருந்தீர்த்தங்கள்‌ செறிந்த வெற்பு 
புண்ணியத்தின்‌ புகலிதெனப்‌ புகழும்‌ வெற்பு 
பொன்னுலகிற்‌ போகமெலாம்‌ புணர்க்கும்‌ வெற்பு 
விண்ணவரும்‌ மண்ணவரும்‌ விரும்பும்‌ வெற்பு 
வேங்கடவெற்பென விளங்கும்‌ வேத வெற்பே. --ஸ்ரீ வேதாந்த தேசிகர்‌ அருளிச்‌ செய்தது
----------------------------------------

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவேங்கடேச மஹாத்ம்யம் –ஸ்ரீ மதி விஸாலாட்சி ரமணன் அம்மாள் தொகுத்து அருளியது —

February 24, 2023

ஸ்ரீ வேங்கடேச புராணம்

த்ரை லோக்யம் கிம் சிரேஷ்ட ஸ்தலம் வால்மீகி நாரதர் இடம் வாமன புராணம்
சங்கர ஸ்கந்த -இதே கேள்வி உத்தம ஸ்ரீ வைஷ்ணவ ஸ்தலம் -பிரகலாதன் அம்பரீஷன் -வழியில்
அம்பரீஷ வனம் இங்கும் உண்டே
விஷ்ணுவே திருமலை வடிவம்ன் -தபஸ்
அகஸ்தியர் உபாசிட்டவசுக்கு உபதேசம் -சார்ங்கம் ஏந்திய வாசுதேவனுக்கு உகந்த
வராஹ புராணம்
ரிஷிகள் வியாசர் -அதி ப்ரேசியமான ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரம்
பூமி தேவி வராஹ –
ஸ்ரீ வேண்டடேசன் வாசுதேவா ஆலயம்
பாத்திமா புராணம்
நாராயணன் ஆவிபிரபாவம் செய்த திருமலை
கருட புராணம்
அருந்ததிக்கு வசிஷ்டர் -நித்ய விபூதி விடவும் ஸூர்ய மண்டலம் விடவும் ஸ்வேதா தீபம் விட இங்கு உகந்து
ப்ருஹ்மாண்ட மாண்ட ப்ருகுவுக்கு நாரதர்புண்ய க்ஷேத்ரம் -ஸ்ரீ வைகுண்ட விரக்த்தாய
ரிக் வேதம் -அராயி காணே விகடே கிரீம் கச்ச யவிஷ்யோத்தர புராணம் 14-21) 6160. சொல்லப்பட்ட இயரிய திருமலையே …ஸ்ரீம் பீடன் -வேதமே சொல்லுமே

ரிக் வேதத்தில் உள்ள,
“அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே
சிரிம்பிடஸ்ய ஸத்வபி: தே பிஷ்ட்வா சாதயாமஸி”என்ற மந்திரம்,
“மனிதா! நீ செல்வமில்லாதவனாகவோ, எதிர்காலம் பற்றிய பார்வை இல்லாதவனாகவோ, உலகியல் வாழ்க்கையில் தவிப்பவனாகவோ,
சுற்றி உள்ளவர்களால் ஒதுக்கப்படுபவனாகவோ இருக்கிறாயா? வருந்தாதே!
அலர்மேல் மங்கைத் தாயாரைத் திருமார்பில் கொண்ட திருவேங்கடமுடையானின் மலையைச் சென்று அடைவாயாக!
பக்தர்களோடு இணைந்து கோவிந்தா! கோவிந்தா! என கோஷம் இட்டபடி அந்தப் பெருமாளிடம் சென்றால்,
அவர் உன்னைக் காப்பார்! திருப்பதி வந்தால் திருப்பம் வரும்!” என்று சொல்கிறது.

ரிக்வேதம் போற்றும் திருவேங்கடம்

“அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே, சிரிம்பிடஸ்ய ஸத்த்வபி: தேபிஷ்ட்வா சாதயாமஸி” என்ற ரிக் வேத மந்திரம் திருமலையைப் புகழ்கிறது. ஏழைகள், எதிர்காலம் பற்றிய அறிவில்லாதவர்கள், துன்பப்படுபவர்கள், சுற்றதாரின் ஆதரவுஅற்றவர்கள் ஆகிய அனைவரும் பக்தர்களோடு இணைந்து ஸ்ரீநிவாசன் திகழும் திருமலைக்குச் சென்று, அப்பெருமாளின் திரு வடிகளில் அடைக்கலம் புகுந்தால் அவன் காத்தருள்வான் என்பது இம்மந்திரத்தின் பொருள்.

சிலப்பதிகாரத்தில் திருமலை

சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தில் காடு காண் படலத்தில் திருமலையைப் புகழ்ந்து இளங்கோவடிகள் பாடியுள்ளார். வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்குயர் மலயத்து உச்சி மீமிசை என்று அப்பாடல் தொடங்குகிறது.

திருமலை ஸ்ரீநிவாசன், முதலில் அங்கே அவதாரம் செய்தபோது விபவ அவதாரமாகத் தோன்றி, பத்மாவதியை மணம் புரிந்து, அதன் பின் அர்ச்சாவதார நிலைக்கு மாறிக் கோயில் கொண்டவர். விபவம், அர்ச்சை ஆகிய இருநிலைகளும் இணைந்திருப்பது ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கே உண்டான தனிச்சிறப்பு.

திருமலை கோயிலில் ஒரு மண்வெட்டி திருமலையப்பனுக்கான புஷ்பங்கள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராமாநுஜரின் சீடரான அனந்தாழ்வான் அமைத்த நந்தவனத்தில் இருந்துதான் இன்றளவும் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு சமயம் திருமலையப்பனே சிறுவன் வடிவில் அனந்தாழ்வானுடன் லீலை புரியச் சென்றான். அப்போது அந்தச் சிறுவனைத் தன் மண்வெட்டியால் அனந்தாழ்வான் அடித்தார். சிறுவனின் தாடையில் இருந்து ரத்தம் பெருகி வந்தது. அத்துடன் அச்சிறுவன் ஓட, அவனை அனந்தாழ்வான் துரத்தி வந்தார்.

மலையப்பனின் கருவறைக்குச் சென்று அச்சிறுவன் மறைந்து போனான். வந்தவன் மலையப்பனே என உணர்ந்தார் அனந்தாழ்வான். மலையப்பனின் தாடையிலிருந்து ரத்தம் வந்தபடியால், அவ்விடத்தில் பச்சைக் கற்பூரம் வைக்கப்பட்டது. அதனால் தான் இன்றளவும் மலையப்ப சுவாமியின் தாடையில் பச்சைக் கற்பூரம் இருப்பதைக் காணமுடிகிறது. பெருமாளை அடிப்பதற்கு அனந்தாழ்வான் பயன்படுத்திய மண்வெட்டி இன்றளவும் சந்நதி நுழைவாயிலில் பராமரிக்கப் பட்டு வருகின்றது.

திருமலையில் உள்ள ராமாநுஜர் சந்நதியில் ராமாநுஜர் பெருமாளுக்குக் குருவாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு எதிரே சீடனாகப் பெருமாள் நிற்பதாக ஐதீகம். அதனால் தான் அமர்ந்திருக்கும் ராமாநுஜருக்கு எதிரே நின்றிருக்கும் பெருமாளின் திருவடிச் சுவடுகள் மட்டும் இருப்பதைக் காணலாம். பெருமாளுக்குச் சங்கு சக்கரங்கள் தந்தபடியாலும், வேதார்த்த சங்கிரகத்தை உபதேசம் செய்தபடியாலும், பெருமாள் தனக்குக் குருவாக ராமாநுஜரை அங்கீகரித்தார்.

திருமலையில் கோயில் கொண்டிருக்கும் நரசிம்மர் நிவாசனால் பூஜிக்கப்பட்டவர். ஸ்ரீநிவாச கல்யாணம் நடைபெறுவதற்கு முன் இந்த நரசிம்மரைப் பூஜித்து, அவருக்குப் பிரசாதங்களை நிவேதனம் செய்துவிட்டுத்தான் பத்மாவதியை மணந்துகொள்ளச் சென்றார் ஸ்ரீநிவாசன்.

விமான வேங்கடேசன்

பொன்மயமான ஆனந்த நிலைய விமானத்தின் வடக்குப் பகுதியில் விமான வேங்கடேச னாகப் பெருமாள் காட்சிஅளிக்கிறார். முன்பு ஒரு பொய்கைக் கரையில் கஜேந்திரன் என்ற யானை துயருற்றபோது அதைக் காத்த பெருமாள், சுவாமி புஷ்கரிணிக் கரையிலும் அப்படி அடியார்களின் குரல் ஏதும் கேட்டால், உடனே ஓடோடிச் சென்று காக்க வேண்டும் என்ற எண்ணத்திலே விமான வேங்கடேசனாக, விமானத்தின் மேல் தயார் நிலையில் காத்திருக்கிறார்.

தெய்வீக மலை

‘கட்டெதுர வைகுண்டமு’ என்ற கீர்த்தனையில், திருமலையில் உள்ள ஒவ்வொன்றுமே தெய்வீகமானது என்று அன்னமாச்சாரியார் பாடியுள்ளார். வைகுண்ட லோகமே திருமலை, வேதங்களே அதன் பாறைகள், பிரம்மா உள்ளிட்ட தேவர்களின் லோகங்கள் இம்மலையின் நான்கு மூலைகள், தேவர்களே இம்மலையில் வாழும் உயிரினங்கள் என்றெல்லாம் கொண்டாடியிருக்கிறார் அன்னமாச்சாரியார்.

வேங்கடம் என்றால் என்ன?

வடமொழியில் வேம் என்றால் பாபம், கடம் என்றால் போக்குவது. வேங்கடம் என்றால் பாபத்தைப் போக்குவது என்று வடமொழியில் பொருள்படும். தமிழில் வேம் என்றால் போக்குவது, கடம் என்றால் பாபம். எனவே தமிழிலும் வேங்கடம் என்றால் பாபத்தைப் போக்குவது என்றே பொருள்படும். நம் அனைத்துப் பாபங்களையும் தீர்க்கவல்ல மலை திருவேங்கட மலை.

ஒலியும் ஒளியும்

ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச என்பது கீதையில் கண்ணன் கூறிய சரம ஸ்லோகம் ஆகும். அதாவது, இறைவனை அடைவதற்கான மார்க்கங்களாகப் பிற தர்மங்களை எண்ணாமல், இறைவனே அவனை அடைவதற்கான வழியாவான் என்பதை உணர்ந்து, அவன் திருவடிகளை அடைக்கலமாக நாம் பற்றினால், அவன் நம்மை அனைத்துப் பாபங்களில் இருந்தும் போக்கி, நமக்கு முக்தி அளிப்பான் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

ஒலி வடிவில் உள்ள இந்த சுலோகத்தின் ஒளி வடிவமாகத் திருமலையப்பன் திகழ்கிறார். அவரது வலக்கரத்தைத் திருவடிகளை நோக்கிக் காட்டி, தன்னிடம் அடைக்கலம் புகுமாறு அறிவுறுத்து கிறார். இடக்கரத்தைத் தொடை அருகே வைத்துக் கொண்டு, அவ்வாறு நாம் அடைக்கலம் புகுந்தால், பிறவிப் பெருங்கடலை நம் தொடை அளவுவறச் செய்வதாக உறுதி அளிக்கிறார்.

சுக்ரீவன் கூற்று சீதையைத் தேடுவதற்காக வானர வீரர்களை ஏவிய சுக்ரீவன், “வடசொற்கும் தென்சொற்கும் வரம்பிற்றாய் நான்மறையும் மற்றை நாலும் இடைசொற் பொருட்கெல்லாம் எல்லையதாய் நல்லறத்துக் கீறாய வேறு புடைசுற்றுந் துணையின்றிப் புகழ்பதிந்த மெய்யேபோல் பூத்துநின்ற வடைகற்றுந் தண்சாரல் ஓங்கிய வேங்கடத்தில் சென்றடைதீர் மாதோ தோடுறு மால்வரை அதனைக் குறுகுதிரேலும் நெடிய கொடுமை நீங்கி வீடுறுதிர் ஆதலினான் விலங்குதிர் அப்புறத்து நீர்” என்று அவர்களைப் பார்த்துச் சொல்வதாகக் கம்பன் பாடுகிறான்.

அதாவது, “திருமலையில் மட்டும் சீதையைத் தேடாதீர்கள். ஏனெனில், அங்கே சில காலம் இருந்தாலே நீங்கள் பாபம் நீங்கி முக்தி அடைந்து விடுவீர்கள். நீங்கள் எல்லோரும் முக்திக்குச் சென்று விட்டால் அதன் பின் யார் சீதையைத் தேடுவது எனவே திருமலையைத் தவிர்த்த பிற இடங்களில் மட்டும் சீதையைத் தேடுங்கள்!” என்று அறிவுறுத்துகிறான் சுக்ரீவன்.

கோவர்த்தன மலையே திருமலை

கண்ணன் ஏழு நாட்கள் கோவர்த்தன மலையைத் தாங்கிப் பிடித்து ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்தான் என்பதை நாம் அறிவோம். அந்த மலை கண்ணனுக்குக் கைம்மாறு செய்ய விழைந்ததாம். அதனால் அந்த கோவர்த்தன மலையே திருமலையில் ஏழு மலைகளாக மாறியது என்றும், தன்னை ஏழு நாட்கள் சுமந்த கண்ணனை ஏழு மலைகளாக மாறிக் காலந்தோறும் அது தாங்கி நிற்கிறது என்றும் சொல்வார்கள்.

கலியுக வைகுண்டம்

வைகுண்ட லோகத்தில் உள்ள திருமாலை நேரில் சென்று தரிசிக்கும் பேறு பெறாதவர்களுக்கு இந்தக் கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக, கலியுக வரதனாகத் திருமலையப்பன் தரிசனம் தருவதால், திருமலையைக் கலியுக வைகுண்டம் என்று சொல்வார்கள்.

யசோதையே வகுளமாலிகை

கண்ணனின் வளர்ப்புத் தாயான யசோதையால், கண்ணன் செய்து கொண்ட பதினாறாயிரத்து நூற்றெட்டுத் திருமணங்களில் ஒன்றைக் கூடக் காண இயலவில்லை. அதை எண்ணி அவள் வருந்திய நிலையில், அந்த யசோதையையே வகுளமாலிகையாகத் திருமலையில் பிறக்க வைத்தார் திருமால். வகுளமாலிகை ஸ்ரீநிவாசனுக்கும் பத்மாவதிக்கும் திருமணத்தை ஏற்பாடு செய்து, தானே முன்நின்று நடத்தி வைத்துக் கண்ணாரக் கண்டு களித்தாள்.

வேதவதியே பத்மாவதி

திருமாலை மணக்க விரும்பிக் கடுந்தவம்புரிந்து வந்தாள் வேதவதி என்ற பெண். ராமாயணக் காலத்தில் ராவணன் சீதையை அபகரிக்க வந்தபோது, சீதையை அக்னி லோகத்துக்குப் பாதுகாப்பாக அனுப்பிவிட்டு, போலிச்சீதையாக இந்த வேதவதி வந்து ராவணனுடன் சென்றதாகப் பாத்ம புராணம் போன்ற நூல்கள் சொல்கின்றன. அந்த வேதவதிக்கு அருள்புரிய நினைத்தார் திருமால். அதனால் தான் அந்த வேதவதியைப் பத்மாவதியாகத் திருமலையில் அவதரிக்க வைத்து, தானே ஸ்ரீநிவாசனாக வந்து அவளை மணந்து கொண்டார்.

வேங்கடேச சுப்பிரபாதம்

மணவாள மாமுனிகளின் சீடரான பிரதிவாதி பயங்கரம் அண்ணா என்பவர் திருவேங்கடமுடையானுக்காக வேங்கடேச சுப்பிரபாதம் இயற்றினார். ராமனுக்குச் சுப்பிரபாதம் பாடும் விதமாக விசுவாமித்திரர் கூறிய,கௌசல்யா ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர சார்தூல கர்தவ்யம் தைவம் ஆஹ்நிகம்என்ற ஸ்லோகத்தையே முதல் ஸ்லோகமாகக் கொண்டு, மேலே வேங்கடேசனின் சுப்பிரபாதம் இயற்றப்பட்டது.

திருமலையப்பன் நெற்றியில் இருப்பது என்ன?

திருமலையப்பன் நெற்றியில் அணிந்திருக்கும் திருமண் காப்புக்கு ஸ்ரீபாத ரேணு என்று பெயர். இறைவனின் பாதத்தூளியை நாம் நெற்றியில் திலகமாக அணிகிறோம். பக்தர்கள் மேல் பேரன்பு கொண்ட திருவேங்கடமுடையான், தன் பக்தர்களின் பாதத்தூளியைத் தன் நெற்றியில் திருமண் காப்பாக அணிகிறானாம்.

அதனால் தான் ஸ்ரீபாத ரேணு – அடியார்களின் பாதத் தூளி எனத் திருமலையப்பனின் திருமண் காப்பை அழைக்கிறார்கள்.

திருப்பதி மலையின் அடிவாரத்திற்கு அலிபிரி என்று பெயர்

——————————————————————————

ஸ்ரீநிவாச புராணம் என்று தனியாக எதுவும் இல்லை. பதினெட்டுப் புராணங்களில் வேங்கடேசரின் லீலைகள் பன்னிரண்டு புராணங்களில் காணப்படுகின்றன. அவற்றை எல்லாம் தொகுத்து திருவேங்கட மஹாத்மியம் என்ற பெயரில் ஒன்று சேர்த்துள்ளார்கள். திருமலையில் கிடைத்த கல்வெட்டு ஒன்று கி பி 1491 ஜூன் மாதம் 27ம் தேதி பாஸிந்தி வேங்கடதுறைவார் தாம் தொகுத்த திரு வேங்கட மஹாத்ம்யத்தை விண்ணப்பம் செய்ததாகக் காணப்படுகிறது. 1884 ல் இது தெலுங்கு புத்தகமாக தேவஸ்தானத்தரால் வெளியிடப்பட்டது 1896ல் இரண்டாவது பதிப்பும் 1928 ல் மூன்றாவது பதிப்பும் வெளி வந்தன.

க்ருதேது நரசிம்ஹோபூ4த்
த்ரேதாயாம் ரகு4 நந்தன:
த்3வாபரே வாஸு தே3வஸ்ச
கலௌ வேங்கட நாயக:–(ஆதித்ய புராணம்)

கிருத யுகத்தில் நரசிம்ஹராக இருந்தவரே, திரேதா யுகத்தில் ரகுநந்தனராக அவதரித்தார்.

அவரே துவாபரயுகத்தில் வாசுதேவர் ஆனார்.அவரே கலியுகத்தில் வேங்கடநாயகர் ஆனார்.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய ஓம் நமோ நாராயணாய

சூத முனிவர்

நைமிசாரண்யம் சிறந்த தபோவனம்; –நிமிஷம் வீணாகாமல் நடக்கும் அங்கு,

பகவத் தியானமும், பகவத் சர்ச்சைகளும், அகத்தை வென்ற முனிவர்கள் இடையே!

சூத முனிவரைக் கேட்டனர் பிற முனிவர்கள்,
“பூதலத்தில் ஆதி நாராயணனுக்கு உகந்த இடம், பகவான் நிகழ்த்திய லீலா விநோதங்கள் என்னும்
மகாத்மியத்தைக் கேட்க வேண்டும் செவிகள் குளிர!”

அன்புடன் அளித்த வேண்டுகோளை ஏற்றார்
என்றும் இறைவன் புகழ் பேச விரும்பும் சூதர்.

“கணக்கில் அடங்காது நாரயணனின் லீலைகள், வணக்கத்துக்குரிய சேஷாசலத்தில் நடந்தவை.

வராக கல்பத்தில் நிகழ்த்திய அற்புதங்களை ஒரு புராணமாக உரைக்கின்றேன் எனத் தொடங்கினார்.

ஸ்வேத வராஹம்

ஓராயிரம் சதுர் யுகங்கள் பிரமனின் ஒரு பகல்; ஓராயிரம் சதுர் யுகங்கள் பிரமனின் ஒரு இரவு.

பிரமனின் ஒருநாள் பொழுது நீளும் நமக்கு இரண்டாயிரம் சதுர் யுகங்களாக பூவுலகில்!

ஒரு நாள் முடிந்ததும் எரிப்பான் சூரியன்; ஒரு துளி மழை விழாது பூமியின் பரப்பில்!

முன்னமேயே இதை அறிந்த முனிவர்கள் சென்று அடைக்கலம் புகுவர் ஞான வுலகில்

மரம், செடி, கொடி, ஜீவராசிகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிடும் அதீதஉஷ்ணத்தில். தொடர்ந்து வீசும் காற்று பல ஆண்டுகளுக்கு.

அடர்ந்த மேகத்திறள் உருவாகும் வானில். கொட்டும் கனமழை பூமியின் மேற்பரப்பு அதிர; கெட்டிப்பட்டு பூமி பதிந்துவிடும் பாதாளத்தில்!

பொங்கி எழுகின்ற ஜலப் பிரவாகத்தால் தாங்கும் நீர் மகர லோகம் வரையிலும்! வடியாது நீர் பிரமனின் இரவு முடியும் வரை

படைப்பைத் தொடங்க வேண்டும் மீண்டும்!

வெள்ளைப் பன்றி உருவெடுப்பார் விஷ்ணு; வெள்ளத்தில் தேடிச் செல்வார் பூவுலகினை. பாய் போலச் சுருட்டி ஒளித்து வைத்திருப்பான்
பாதாளத்தில் பூமியை அரக்கன் ஹிரண்யாக்ஷன்.

தரணியை வெளிக் கொணரும் முன்பு வராஹம் ஹிரண்யாக்ஷனை வெற்றி கொள்ள வேண்டும்!

தொடங்கும் துவந்த யுத்தம் இருவரிடையே! தொடரும் துவந்த யுத்தம் வெகு நீண்டகாலம்!

கூரிய நகங்களாலும், கோரைப் பற்களாலும் கிழித்து அரக்கனை அழித்து விடும் வராஹம்.

ஜலத்தில் கலந்து விடும் பெருகும் குருதி நதி ஜலப்ரவாஹம் ஆகிவிடும் செந்நீராக அப்போது!

கிரீடாசலம்

ஞான லோகத்தில், தியானத்தில் இருந்த, மோன முனிவர்கள் அறிந்தனர் இதனை.

தரணியைத் தன் முகத்தில் தாங்கி வந்தார் வராஹ பெருமான் நீரிலிருந்து வெளியே. ஸ்தாபித்தார் பூலோகத்தை முன்போலவே;
ஸ்தாபித்தார் சாகரங்களை முன்போலவே.

சிருஷ்டியைத் தொடங்கினான் பிரம்மதேவன் சிருஷ்டித்தான் சூரிய, சந்திரர்களை முதலில்.

பிற ஜீவராசிகளையும் படைத்தான் பின்னர் பிரம்மதேவன் சரியான வரிசைக் கிரமத்தில்.

பூலோகத்தை மீட்ட வராஹ பெருமான் பூவுலகிலேயே தங்கிவிட விழைந்தார்.

கருடனைப் பணித்தார், “வைகுந்தம் செல்க! பிரியமான கிரீடாச்சலத்தைக் கொணர்க!”

வைகுந்தம் விரைந்தான் உடனே கருடன்; வைக்கும் இடத்தையும் தேர்வு செய்தார்!

கோமதி நதிக்குத் தெற்கேயும், மற்றும் கீழ்க்கடலுக்கு மேற்கேயும் அமைந்தது. நாராயண கிரியே ஆகும் கிரீடாசலம்!
நவரத்தினங்கள் நிரம்பிய சிகரங்கள்!

காய் கனி, மூலிகைகளால் நிறைந்தது; கந்தம் கமழும் மலர்களால் நிறைந்தது;

ஒலிக்கும் பறவைகளின் பாடல் கொண்டது ஒலிக்கும் சுனைகள் நீரோடைகள் கொண்டது.

தேர்வு செய்த இடத்தில் மலையை வைக்கப் பார்மீது ஆதிசேஷன் படுத்ததுபோல இருந்தது.

இருந்தது ஸ்வாமி புஷ்கரிணி என்னும் தடாகம், கிரிகளின் இடையே மற்றும் தருக்களின் நடுவே.

நவரத்தினங்கள் இழைத்த தூண்கள் தாங்கிட நடுநாயகமாக அமைந்து இருந்தது விமானம்.

அழகிய மண்டபங்களோடு கூடிய விமானம் அமைந்தது ஸ்வாமி புஷ்கரிணிக் கரையில்.

எழுந்தருளினார் வராஹ பெருமான் – தாம் விழைந்தபடி பூவுலகில், விமானத்தின் கீழ்.

ஸ்துதி

வராஹ பெருமான் பூமியில் தங்கிவிட்டதால் வந்து பூமியில் துதித்தனர் வானவர், முனிவர், இந்திரன், பிரமன், துவாதச ஆதித்யர்கள்,
ருத்திரர், தேவர், வசுக்கள், திக்பாலகர்கள், கந்தருவர், சப்த ரிஷிகள், மருத் கணங்கள்!
வந்தவர் விண்ணப்பித்தனர் பெருமானிடம்,

“தரணியைப் பாதாளத்தில் ஒளித்து வைத்த ஹிரண்யாக்ஷனை சம்ஹரித்தீர்கள் போரில். ப்ரபாவமும், தோற்றமும் மாறவேயில்லை!
பக்தருக்கு அருள வேண்டும் இன்முகத்துடன்.’ மாற்றிக் கொண்டார் பெருமான் சிரித்தபடியே,
தோற்றத்தையும், தன் முக விலாசத்தையும்!

அழகிய வலிய புஜங்கள் ஒரு நான்குடனும்; அழகிய இருதேவியர் தன் இருமருங்கிலும்,.

கருணை பொழியும் கமலக் கண்களுடனும்; கருத்தைக் கவரும் ஒளிரும் வடிவத்துடனும்; கிரீடாச்சலத்தில் விளங்கும் வராஹ பெருமான்
நிறைவேற்றுகிறார் பக்தரின் கோரிக்கைகளை.

வெள்ளைப் பன்றி வடிவெடுத்ததால் – ஸ்வேத வராஹ கல்பம் என்ற பெயர் வழங்கலாயிற்று.

நாரதர்

கலியுகத்தில் நிகழ்த்தினர் மாபெரும் யாகம் காசியபர் முதலிய முனிபுங்கவர்கள் சேர்ந்து. வேதகோஷம் ஓங்கி ஒலித்தது யாகசாலையில்
தேவரிஷி நாரதர் வந்தார் அந்த யாகசாலைக்கு. “அவிர் பாகம் அளிக்கப் போவது யாருக்கு?” என ஆர்வத்துடன் கேட்டார் முனிவர்களை நாரதர்.

“இன்னமும் முடிவு செய்யவில்லை அதனை இருக்கிறதே காலஅவகாசம் அதற்கு” என்றனர்.

“சத்துவ குணமே முக்குணங்களில் உத்தமம்; சத்துவ குணம் கொண்டவரைக் கண்டறிந்து, பூர்த்தி செய்யுங்கள் உங்கள் யாகத்தை ” என்று
பற்ற வைத்தார் நாரதர் கலஹம் நடப்பதற்கு.

“இறைவன் குணத்தை ஆராயும் அளவிற்குத் திறமை உள்ளவர் யார் உள்ளார் உலகினில்?”

தேர்வு செய்தனர் பிருகுவை பிற முனிவர்கள்;
தேர்வு செய்யவேண்டும் அவர் சத்துவ குணனை. சத்திய லோகம் சென்றார் பிருகு முனிவர்;
பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார் பிரம்மன். சாவித்திரி, காயத்திரி தேவியருடன் இருந்தனர்
சரஸ்வதி தேவியும், திக்பாலகர்களும் குழுமி!

நின்று கொண்டே இருந்தார் பிருகு – அவரைக் கண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை பிரம்மன்!

‘எத்தனை நேரம் தான் நிற்பது?” என்று எண்ணிச் சத்தம் இன்றி அமர்ந்துவிட்டார் பிருகு முனிவர்.

அனுமதி பெறாமலேயே அமர்ந்த முனிவரை அலட்சியம் செய்தார் பிரம்ம தேவன் சபையில்!

முனிவரை அலட்சியம் செய்த பிரம்மனுக்குக் கனிவான சத்துவகுணம் இல்லவே இல்லை

ஈசனும், உமையும்

பிரம்மனின் போக்குப் பிடிக்காத பிருகு பிரம்மலோகத்தை விட்டுச் சென்றார். அடுத்துச் சென்றார் கயிலை மலைக்கு;
அங்கும் ஆனார் சிவபூஜையில் கரடியாக!

தனிமையில் இனிமை கண்டிருந்தவரின் தனிமையைக் குலைத்தார் பிருகுமுனிவர்.

கவனம் வேறிடத்தில் இருந்ததால் ஈசன் கவனிக்கவில்லை முனி பிருகுவின் வரவை.

பெண்ணுக்கு உண்டு அதிக உள்ளுணர்வு; கண்டு விட்டாள் உமை முனிவர் வரவை.

விலகிச் செல்லுமாறு ஈசனுக்குணர்த்த விலகிச் செல்லாமல் நின்று கொண்டிருந்த, முனிவர் மேல் கொண்டான் சீற்றம் சிவன்;
முனிவரும்கொண்டார் சீற்றம் சிவனிடம்.

தேடி வந்தவரைக் காக்க வைத்தது ஒன்று; தேடி வந்தவரை வரவேற்காதது இரண்டு; நாடி வந்த காரணத்தை வினவாதது மூன்று;
நாடி வந்தவரிடம் சினம் கொள்வது நான்கு!

தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருந்த சிவபெருமான் மேல் சீற்றம் பொங்கியது.

கோபத்தின் மிகுதியால் பிருகு முனிவர் சாபத்தை அளித்தார் சிவ பெருமானுக்கு,

“உலகில் இனிக் கிடையாது உனக்கு உருவ வழிபாடு என்ற ஒன்று!” என்றார்

நின்றுவிட்டது சிவனுக்கு உருவ வழிபாடு! இன்றும் எங்கும் நடப்பது லிங்க வழிபாடே.

சத்துவ குணம் இல்லாதவன் சிவன் என பிருகு உத்தம குணனைத் தேடினார் வைகுந்தத்தில்.

நாரணன்

கைலாசம் விடுத்த பின்பு பிருகு முனிவர் வைகுந்த நாதனைச் சோதிக்க விரைந்தார்.

ஆனந்தமாகச சயனித்திருந்தார் நாரணன் ஆதிசேஷன் மீது; லக்ஷ்மி பாதங்களை வருட.

தேவியின் பணிவிடையில் மெய்மறந்திருந்த நாதன் உணரவில்லை பிருகுவின் வருகையை.

‘வேஷம் போடுகிறான் மாயவன் – இவன் வேஷத்தைக் கலைக்கிறேன் இப்போதே!’

இரண்டு இடங்களில் அலட்சியம் செய்தனர் இங்கும் அதுவே தொடருகின்றதே!’ என்று நாரணன் மார்பில் ஓங்கி உதைத்தார் பிருகு,
“நாடகம் போதும் கண்டும் காணாதது போல!”

உதைத்த காலைப் பற்றினார் நாரயணன், உதைத்த போதும் சினம் கொள்ளவில்லை.

“கால் வலித்திருக்குமே முனிவரே! ” எனக் கால் வலி போக அழுத்திவிட்டார் பாதத்தை.

“தூக்க மயக்கத்தில் இருந்து விட்டேன் நான்! துயர் அடைந்தீரோ என்னை உதைத்தால்?”

முனிவருகு ஏற்பட்ட திகைப்பு அளவற்றது!
‘கனிவுக்கும் ஓர் எல்லையே இல்லையோ? உதைத்த காலைச் சபித்திருக்க வேண்டும்
உதைத்த காலை உபசரிக்கிறாரே!’ என்று

“கண்டு கொண்டேன் நான் சத்துவ குணனை கண்டு கொண்டேன் நான் உத்தம குணனை!” பாதங்களில் விழுந்து வணங்கினார் முனிவர்.
பாதகத்தை மன்னிக்க வேண்டினார் முனிவர்.

யாகசாலை திரும்பினர் வெற்றியுடன் – மூன்று லோகத்திலும் சத்துவ குணனை கண்டறிந்ததால்.

லக்ஷ்மியின் கோபம்

ஏகாந்தமாக இருந்த வேளையில் உள்ளே வேகமாக வந்ததோடு நிற்கவில்லை பிருகு!

உதைத்தார் தன் இருப்பிடமான மார்பினை. உதைத்த காலுக்கு நாரணனின் உபசாரம் வேறு. வெகுண்டு எழுந்தாள் அமர்ந்த நிலையில் இருந்து.
வெலவெலத்துப் போனார் நாரணன் அதுகண்டு

பதறிய விஷ்ணு சாந்தப்படுத்தினார் லக்ஷ்மியை. உதறித் தள்ளினாள் கோபம் குறையாத லக்ஷ்மி.

‘அசுத்தம் செய்தான் என் இருப்பிடத்தை பிருகு! அதற்கு அவனைக் கொண்டாடினீர்கள்!” என்றாள்

“அவமதிக்கும் எண்ணம் இல்லை பிருகுவுக்கு! அதீத பக்தி தந்த உரிமையில் உதைத்தான்” என,

“பக்தன் அவன் என்றால் பக்தையே நானும். பக்தன் ஒரு பக்தையை அவமதிக்கலாமா?

வாசஸ்தலம் களங்கப் பட்டது பிருகுவால் வசிக்க முடியாது மீண்டும் அங்கு என்னால்.” எத்தனை சொல்லியும் கேட்கவில்லை அவள்.
“என்னிருப்பிடத்தை உதைத்தான்! ” என்றாள்

வைகுந்தம் விடுத்தாள் லக்ஷ்மிதேவி உடனே. வையகம் அடைந்தாள் தவக் கோலம் பூண்டிட. கரவீரபுரம் சென்று அடைந்தாள் – அங்கு
பரந்தாமனின் பாதங்களை தியானித்தாள்

எப்படி இருக்குமோ லக்ஷ்மி இல்லாத இடம் அப்படியே இருந்தது வைகுந்தம் இப்போது. சோபை மறைந்தது; சோகம் நிறைந்தது;
சூனியமாக இருந்தது காணும் இடங்கள்!

வைகுண்டம் விடுத்தான் நாரணனும்; வையகம் அடைந்தான் நாரணனும் ;

சேஷாச்சலம் இருந்தது கரவீரபுரத்தின் அருகே; சேஷாச்சலத்தைத் தேர்வு செய்தார் நாரணன்.

எறும்புப் புற்று

நாற்புறங்களிலும் மலைச் சிகரங்கள்; ஊற்றெடுத்து ஓடும் இனிய சுனைகள்; சலசலத்து ஓடும் அழகிய சிற்றோடைகள்;
கலகலப்பால் மகிழ்வூட்டும் பறவையினங்கள்;

பள்ளத்தாக்குகள் மலைகளின் இடையிடையில்; உள்ளம் கொள்ளை கொள்ளும் இயற்கையெழில்;

தெளிந்த நீர்த் தடாகத்தைக் கண்டார் நாரணன்; விளங்கிய ஆலயத்தையும் கண்டார் நாரணன்;

அழகிய மண்டபங்கள், விமானம் கொண்ட, ஆதி வராஹ மூர்த்தியின் அழகிய ஆலயம்.

தடாகத்தில் நீராடி வராஹப் பெருமானிடம் தங்குவதற்கு அனுமதி வேண்டினார் நாரணன்;

“எங்கு விருப்பமோ அங்கு தங்கலாம்!”எனத் தங்கு தடையின்றி அனுமதித்தார் வராஹர்.

“தங்குவேன் இங்கேயே கலியுகம் முழுவதும். தடாகத்தில் நீராடித் தங்களைத் தொழுத பிறகே

இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் என்னையும் இங்கே தொழ வரவேண்டும் இனிமேல்” என்றார்.

நாரணன் சேஷாசலம் சென்றதை அறிந்து நாரணனைத் தேடி ஓடினான் பிரம்மதேவன்.

பிரிவுத்துயர் தாங்காமல் வருந்தி நாரணன் திரிவதைக் கண்டு வருந்தினான் பிரமன்.

வெட்ட வெளியில், கட்டாந்தரையில், படுத்து உறங்கினார் வைகுந்தவாசன்.

அமைக்க விரும்பினான் இருப்பிடம் ஒன்றை; அமைத்தான் நிழல் தரும் புளிய மரத்தினை.

அமைத்தான் அதன் கீழ் எறும்புப் புற்றினை; அமைத்தான் இறங்கிச் செல்லப் படிக்கட்டு.

அமைத்தான் வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய மண்டபத்தினை புற்றினுள் பிரமன்.

இடைப் பெண்

நாரணனுக்குப் பிடித்திருந்தது புதிய மண்டபம்; நிரந்தரமாகத் தங்க விரும்பினான் அங்கேயே.

‘வைகுந்தம் விடுத்து விண்ணிலிருந்து நாரணன் வையகம் வந்ததை அறிவிக்க வேண்டும் உடனே’. கைலாசநாதனிடம் விரைந்து சென்றான் பிரம்மன்.
“சேஷாச்சலத்தில் உள்ளான் நாரணன்” என்றான்;

நாரணனுக்கு உதவிட ஆவல் கொண்டனர், பிரம்மனும், பிரானும் விரைந்தனர் வையகம்.

சிறு பிணக்கினால் நாரணனிடமிருந்து பிரிந்து சென்ற லக்ஷ்மியிடம் சென்றனர்.

கரவீரபுரம் வந்த பரமேச்வரன், பிரம்மனை வரவேற்றாள் லக்ஷ்மிதேவி மனமுவந்து.

“தாங்கள் பிரிந்து வந்து விட்டதால் நாரணன் தானும் வந்து விட்டார் இப்போது வையகம்.

அனாதை போல அலைந்து திரிகின்றார் வனாந்தரங்களிலும், மலைச்சரிவுகளிலும்!

வராஹ பெருமான் கோவில் தடாகத்தருகே இருப்பிடம் ஒன்றை அமைத்துவிட்டேன்.

ஆகாரத்துக்குச் செய்ய வேண்டும் ஒரு ஏற்பாடு. அரனும், நானும் வைத்துள்ளோம் ஒரு திட்டம்.

மாறிவிடுவோம் நாங்கள் இருவரும் உடனே மடி சுரக்கும் ஜாதிப் பசுவாகவும், கன்றாகவும்!

தடை சொல்லாமல் தாங்களும் உதவ வேண்டும்; இடைப் பெண்ணாக மாறிவிட வேண்டும் நீங்கள்.

சேஷாசலத்தின் அருகே சந்திரகிரியை ஆளும் சோழ ராஜனிடம் விற்று விடுங்கள் எங்களை!”

சந்திரகிரியை நோக்கிப் புறப்பட்டாள் லக்ஷ்மி தேவி, விந்தையான பசு, கன்றுடன் இடைப்பெண்ணாக மாறி.

பசுவின் மாயம்

கரவீர புரத்திலிருந்து புறப்பட்ட இம்மூவரும் விரைவாகச் சென்றடைந்தனர் சந்திரகிரியை.

கன்றையும், பசுவையும் விற்க வந்ததாக நின்ற காவலரிடம் கூறினாள் இடைச்சி.

கொழுகொழு பசுவும், மொழுமொழு கன்றும், அழகால் கவர்ந்தன காவலரின் உள்ளங்களை! அறிவித்தனர் அதை அரசனிடம் சென்று;
தருவித்தான் அவன் அவர்களைத் அருகே.

பளபளப்போடும், சுழிகளோடும் கூடிய பசுவும், கன்றும் கவர்ந்தன அரசனை.

அரசிக்கும் பிடித்துவிட்டது அவற்றை, பராமரித்தாள் தன் கவனத்தில் வைத்து.

இடையன் செல்வான் தினமும் மலைக்கு, விடியற் காலையில் பசுக்களை மேய்க்க.

அரண்மனை திரும்புவான் அன்றாடமும். ஆவினத்துடன், ஆதவன் மறையும் முன்.

மலைக்குச் சென்றபின் பசுவும், கன்றும், மலைச் சரிவில் ஒதுங்கிவிடும் தனியாக.

இடையனின் தலை மறைந்த உடனே எடுக்கும் ஓட்டம் சேஷாச்சலத்துக்கு.

புற்றின் மேல் நின்று பசு பால் பொழிய புற்றினுள்ளே பசியாறுவான் நாரணன்.

திரும்பக் கலந்துவிடும் பிற மாடுகளுடன்! அறியவில்லை இடையன் இம் மாயத்தை!

பசுவைக் கறந்தாள் ராணியே சுயமாக; பசு பால் தரவில்லை ராணிக்குச் சரியாக.

அதிக உணவு அளித்தாள் பசுவுக்கு எனினும் அதிகப் பால் கரக்கவில்லை அந்த மாயப் பசு!

பரந்தாமன்

அரசி சந்தேகித்தாள் அப்பாவி இடையனை,
‘கறந்து குடிக்கின்றனோ வருகின்ற வழியில்?’“மடி பெரிதாக இருக்கிறது பசுவுக்கு – ஆனால்
அடி தட்டுகிறது கறக்கும் பால் விந்தையாக!

கூறு உண்மையை என்ன நடக்கிறது?” அதட்ட ,“அறியேன் நான் ஒரு பாவமும் ” என அழுதான்.

“ஜாக்கிரதை நாளைக்குக் தரவேண்டும் பால்!” எச்சரித்தாள் இடையனைச் சந்திரகிரி அரசி.

இத்தனை ஆண்டுகள் பெறாத அவப் பெயரை பெற்றுத் தந்துவிட்டன இந்தப் பசுவும் கன்றும்.

நம்பவில்லை அந்தப் பசுவை இடையன் சற்றும், ‘ஓம்புகிறதோ பழைய எஜமானுக்குப் பால் தந்து?’ கண் இமைக்காமல் கண்காணித்தான் மறுநாள்;
நண்பகலில் பிரிந்து ஓடின அப் பசுவும், கன்றும். ஓடின சேஷாசலத்தின் மலைச் சரிவுகளில்,
ஓடினான் துரத்திய இடையன் கோடரியுடன்!

புற்றை அடைந்ததும் நின்று விட்டன அங்கு. புற்றின் உள்ளே சுரந்தது மொத்தப் பாலையும்!

கோபம் கொண்டான் இடையன் – ‘அரசியின் நோகும் சொற்களை நான் கேட்டது இதனால்’.

பாய்ந்தான் பசு மீது கோடரியை ஓங்கியபடி; பாய்ந்து வெளிவந்தார் புற்றிலிருந்த நாரணன்.

விழுந்தது வெட்டு நாரணன் நெற்றியில் பிளந்த நெற்றியிலிருந்து பீறிட்டது ரத்தம்!

நனைந்தன பசுவும், கன்றும் ரத்தத்தில்! நினைவிழந்தான் இடையன் அச்சத்தில்!

சோழராஜன்

ரத்தக் கறையுடன் ஓடிவந்தன பசுவும், கன்றும்! சித்தம் குழம்பியது அரண்மனைக் காவலருக்கு!

‘துஷ்ட மிருகங்கள் சேதம் விளைவித்தனவா? கஷ்ட காலம் காணவில்லை இடையனையும்!

யார் யாருக்கு என்னென்ன நிகழ்ந்தனவோ? யாருக்குத் தெரியும்?’ அரசனிடம் ஓடினர்.

வாசலுக்கு விரைந்தான் அரசன் – ஆனால் வழக்கத்துக்கு மாறாகக் குழம்பியது மனம்.

வாலைச் சுழற்றிய பசு ஓடியது தெருவில். வரச் சொல்லுகிறது எனத் தெரிந்து விட்டது.

“செல்லுங்கள் பசுவைத் தொடர்ந்து நீங்கள்! சொல்லுங்கள் அங்கு கண்டதை இங்கு வந்து!”

ஆயுதங்களுடன் விரைந்தனர் காவலர்கள்; அடைந்தனர் புற்று இருக்கும் இடத்தினை.

இடையன் மூர்ச்சித்து விழுந்து கிடந்தான்; கிடந்தது அவன் அருகே ரத்தக் கோடாரி!

கசிந்தது ரத்தம் புற்றின் துவாரத்தில்! வசித்த நாகம் வெட்டுண்டு விட்டதோ?

விரைந்து சென்று கூறினார் அரசனிடம் விரைந்து வந்தான் அரசன் பல்லக்கில்

‘நிகழ்ந்துள்ளது அசாதாரண சம்பவம் ஒன்று ! நிகழ்ந்து விட்டதோ தெய்வக் குற்றம் இன்று?’

தெய்வத்தை எண்ணி தியனித்தான் மன்னன்; “தெளிவாக்குவாய் நிகழ்ந்தவற்றை நீ எனக்கு!

பிழை செய்யப் பட்டிருந்தால் மனமுவந்து பிராயச் சித்தம் செய்கின்றேன் பாவத்துக்கு!”

நாரணன் சாபம்

கோபத்தோடு எழுந்தார் நாரணன் புற்றிலிருந்து கோடரி பிளந்த நெற்றியில் வழிந்தது ரத்தம்!

தரையில் விழுந்து நமஸ்கரித்தான் அரசன், “உரையுங்கள் தேவதேவா! நிகழ்ந்தது என்ன?”

கண்ணீர் விட்டுக் கதறினான் சோழராஜன், செந்நீர் வழிய நின்றிருந்த நாரணனிடம்.

“வைகுந்தம் விடுத்து வையகம் வந்த பின்னர் வாழ்ந்து வருகின்றேன் நான் இந்தப் புற்றில்!

தெய்வப் பசு வந்து சுரக்கும் பாலை எனக்காக; செய்வது ஏதென்று அறியவில்லை இடையன்.

கோடரியால் தாக்க வந்தான் பசுவினை – எனக்குக்கோடரி வெட்டு அடாத செயலைத் தடுத்ததற்கு!”

“ஏய்க்கிறது பசு என்று எண்ணினான் அவன், துய்க்கிறது இறைவன் என்று அறியவில்லை!

சாந்த மூர்த்தியான தாங்கள் கோபம் விடுத்துச் சாந்தம் அடைய வேண்டும் லோக ரக்ஷகா!”

“புற்றில் பால் சுரந்த உடனேயே அவனது சிற்றறிவுக்கு எட்டி இருக்கவேண்டும் இது!

புற்றில் உள்ளது ஏதோ விசேஷம் என்பது. குற்றமே இடையன் கோடரியை வீசினது!”

அத்தனின் உக்கிரம் குறையவில்லை – மன்னன் எத்தனை கெஞ்சினாலும் மாறவில்லை கோபம்!

“குடிமக்கள் செய்யும் பாவம் சேரும் சென்று, குடிமக்களை ஆளும் அரசனையே என்றும்!

யோசியாமல் இடையன் செய்த தவற்றுக்குப் பைசாசமாக மாறித் திரிவாய் நீ வனங்களில்!”

சாபம் இட்டார் அப்பாவிச் சோழமன்னனுக்குச் சாந்த மூர்த்தியாகிய சத்துவ குண நாரணன்.

சாப விமோசனம்

“பிரஜைகளின் தவறுகள் சேரும் அரசனையே! குறைப் படவில்லை கிடைத்த சாபத்துக்கு நான்.

கூறுவீர் சாப விமோசனம் என்ன என்பதை; கூறுவீர் சாபவிமோசனம் பெறும் வழியை!”

“திரிவாய் பிசாசாக மாறி மிகுந்த ஆயுளில்; பெறுவாய் பெருமை நீ அடுத்த பிறவியில்.

பிறப்பாய் சுதர்மன் மகன் ஆகாச ராஜனாக, பிறப்பாள் என் மனைவி உந்தன் மகளாக.

நற்கதி அடைவீர் நீயும், உன் வம்சத்தினரும்; கற்பகாலம் விளங்கும் புகழுடன் உன் பெயர்.”

“சாபமா இது? அரிய வரம் அல்லவோ இது? கோபத்தின் பரிசாகக் கிடைத்தவை இவை!

வைகுந்தவாசனை அடைவேன் மருமகனாக! வைபவ லக்ஷ்மியை அடைவேன் என் மகளாக!

மன்னித்து விடுங்கள் இடையனின் குற்றதை; புன்செயல் புரிந்தான் மதியற்ற மடையன்.”

மயங்கிய இடையன் விழித்துக் கொண்டான் தயங்கித் தயங்கி எழுவதற்கு முயன்றான்.

கண்கள் தெரியவில்லை; பார்வை போய்விட்டது! கண்ணீர் வழிய அழுதான் “ஆண்டவனே!” என்று.

“தண்டனை அனுபவிப்பான் சிறிது காலம் கண் மூடித்தனமான செயல் செய்ததற்கு.

நித்தியவாசனாக அமர்வேன் நான் இங்கு; எத்தினம் இவன் என்னிடம் வருவானோ,

கிடைக்கும் கண் பார்வை மீண்டும் அன்று. கிடைக்கும் வைகுந்தம் பாவத்தை வென்று!

விண்ணுலகு விட்டு பூமிக்கு வந்தபின் கண்டீர்கள் என்னை இந்தக் கோலத்தில்.

இதே கோலத்தில் தங்குவேன் இங்கே!” அதே நொடியில் அந்தர் தியானமானார்.

பைசாச உருவம் தாங்கினான் சோழ ராஜன்; வைகுந்தவாசன் மேல் செய்தான் தியானம்.

வகுள மாலிகை

விடை பெற்றுச் சென்று விட்டாள் லக்ஷ்மி! இடையன் பிளந்தான் நெற்றியைத் தாக்கி!

பிருஹஸ்பதி வந்தார் நாரணனைக் காண; வருந்தினார் நாரணன் படும் துயர் கண்டு.

“கசிகின்றதே நிற்காமல் இன்னமும் உதிரம்! கசியும் காண்போர்கள் கண்களிலும் உதிரம்!

சேஷாச்சலத்தில் இல்லாத மூலிகைகளா? ஈசா! தாங்கள் அறியாத வைத்தியமா?” என

மூலிகையைத் தேடிச் சென்ற நாரணனை – வகுள மாலிகை என்னும் மாது சிரோன்மணி கண்டார்.

ஆதி வராஹரிடம் அதீத பக்தி கொண்டிருந்த அகவை மிகுந்த ஒரு கண்ணியப் பெண்மணி.

பிளந்த நெற்றியிலிருந்து வழிந்த ரத்தம் பிளந்தது அவள் நெஞ்சத்தைத் துயரால்.

கொய்து கொண்டிருந்த மலர்களை விடுத்துத் தொய்ந்து நடந்திருந்த நாரணனிடம் வந்தாள்.

“யாரப்பா நீ? அலைகிறாய் ரத்தக் காயத்துடன் ! யாரும் இல்லையா உன்னைக் கவனிப்பதற்கு?”

கிழித்துத் துடைத்தாள் சேலைத் தலைப்பால்; பிழிந்து கட்டினாள் மூலிகையின் சாற்றால்.

கள்வர்கள் வழிமறித்துத் தாக்கினார்களா கூறு? காயம் வந்த மாயம் என்ன சொல்லு!” என்றாள்.

“அம்மா! யாரும் இல்லாத அநாதை நான் அழைப்பர் என்னை ஸ்ரீனிவாசன் என்று.

பசுவைத் தாக்க முயன்றான் ஒரு பாதகன்; பசுவைக் காத்தேன்; விழுந்தது ஒரு வெட்டு!”

இதயத்தைத் தொட்டது “அம்மா!” என்னும் சொல்! இவளும் யாருமில்லாத ஓர் அநாதை அல்லவா?

ஆனந்தக் கண்ணீருடன் நாரணனை அவள் நோக்க, அகக்கண்கள் திறந்து கொண்டன அதே நொடியில்!

‘தன் எதிரே நிற்பது ஸ்ரீனிவாசன் அல்லவே! தன் எதிரே நிற்பது ஸ்ரீ கிருஷ்ணன் அல்லவா?’

கண் இமைக்கும் நேரத்தில் கண்ட ஒரு காட்சி கண் முன் கொண்டு வந்தது பூர்வ ஜென்மத்தை!

யசோதை

கலியுகம் பிறக்கும் நேரம் நெருங்கி விட்டது. காலில் அம்பு தைத்திருந்தது கிருஷ்ணனுக்கு!

செயல் புரிந்தது ராமாவதாரத்தில் – ஆனால் செயல் பலன் தந்தது கிருஷ்ணாவதாரத்தில்!

வாலியோடு சுக்ரீவன் புரிந்த துவந்த யுத்தத்தில், வாலியைக் கொன்றான் மறைந்திருந்த ஸ்ரீ ராமன்.

கோபம் கொண்ட வாலி ராமச்சந்திரனுக்குச் சாபம் அளித்தான் தன் உயிர் பிரியும் முன்பு.

“மறைந்திருந்து வீழ்த்தினாய் ராமா நீ என்னை! மறைந்திருந்து வீழ்த்துவான் ஒருவன் உன்னை!”

தனிமையில் வனத்தில் அமர்ந்திருந்த கண்ணனின் இனிய பாதங்களை ஒரு பறவை என எண்ணினான்.

அம்பு எய்தான் வேடன் சாபத்தை நிறைவேற்ற. அன்பு கொண்டவர்கள் துடித்தனர் இதைக் கண்டு .

“வைகுந்தம் திரும்புகின்றேன் நான் – நீங்களும் மெய்யுருவம் அடையலாம் முன் போலவே!

சேஷாச்சலத்தில் உறைவேன் நான் கலியுகத்தில். சென்று காத்திருங்கள் என் வருகைக்கு!” என்றான்

விடுத்தனர் கோபியர் தங்கள் மாய உருவங்களை. எடுத்தனர் முன் போல் தம் பழைய உருவங்களை.

“எப்போதும் உன் அன்னையாகும் பாக்கியத்தைத் தப்பாமல் எனக்குத் தரவேண்டும் என் கண்ணா!”

யசோதை வேண்டினாள் கண்களில் அருவியுடன், யசோதைக்கு அருளினான் அவள் கேட்ட வரத்தை.

வகுள மாலிகையாகக் காத்திருப்பாய் அம்மா! வெகு விரைவில் வருவேன் சேஷாச்சலத்துக்கு.”

இருவரும் ஒருவரே!

கண நேரத்தில் உணர்ந்தாள் தான் யாரென! “கண்ணா! ” என அணைத்ததாள் அன்புடன்!

“அநாதைகள் அல்ல இனி நாம் என் மகனே! அநாதி காலமாக உள்ளது நமது உறவு!” என

அழைத்துச் சென்றாள் இனிக்கும் ஓடைக்கு; பழுத்த கனிகளைப் பறித்து உண்ணத் தந்தாள்.

“இனிமேல் இருந்துவிடு நீ என்னுடனேயே! தனியாக முன்போல் தவிக்க வேண்டாம்!”

“வந்து பார் நான் தாங்கும் இடத்தை!” என்று சிந்தை மகிழ்ந்து அழைத்தார் ஸ்ரீநிவாசன்

புற்றுக்கு அழைத்துச் சென்றார் அவளை; புற்றினுள் காட்டினர் தம் இருப்பிடத்தை!

வராஹ பெருமானை வணங்கச் சென்றாள், வகுள மாலிகை தினமும் செய்வது போல.

“வழக்கதை விடத் தாமதமாக வந்துள்ளாய்! வழக்கத்தை விட நீ ஆனந்தமாக உள்ளாய்!”

வம்புக்கு இழுத்தார் அந்த வகுள மாலிகையை, அன்புடன் அவள் தொழும் வராஹ பெருமான்!

ஸ்ரீனிவாசன் கதையைக் கூறினாள் அவள்.
“ஸ்ரீனிவாசன் வேறு,  நான் வேறு அல்ல!

அங்கே அவனுக்கு நீ செய்யும் தொண்டு இங்கே எனக்கு இனி வந்து சேர்ந்து விடும்.

கவனிப்பாய் நீ ஸ்ரீனிவாசனின் தேவைகளை. கலியுக முடிவில் சேர்வாய் என் பாதங்களை!”

ஆகாச ராஜன்

திரிந்தான் பைசாச உருவில் சோழராஜன்; பிறந்தான் பூவுலக வாழ்வை நீத்த பிறகு, நாராயண புரத்தை ஆண்டு கொண்டிருந்த
நல்ல மன்னன் சுதர்மனின் முதல் மகனாக. ஆகாச ராஜன் என்ற பெயரை வைத்தனர். அன்புடன் அவனைப் பேணி வளர்த்தனர்.

பிறகு பிறந்தது இன்னொரு ஆண் மகவு; பெயர் விளங்கியது தொண்டைமான் என. ஒற்றுமையாக வளர்ந்தனர் இருவரும்;
போற்றினர் அனைவரும் இருவரையும்.

சுதர்மன் விரும்பினான் வனவாசம் செல்ல; சுபமாக மணிமுடி தரித்தான் ஆகாசராஜன்.

இளவரசுப் பட்டம் கிட்டியது இளையவனுக்கு;  இருவரும் ஏற்றனர் தந்தையின் விருப்பத்தை.

உயர்குலப் பெண்களை மணந்து கொண்டனர்; பெயர் விளங்கும்படி நிர்வகித்தனர் நாட்டினை.

உருண்டோடின வருடங்கள் ஒவ்வொன்றாக, பெருகின வளமும், நலமும் அந்த நாட்டில்.

ஆனந்தம் கொண்டிருந்தனர் அனைவருமே ஆகாச ராஜன் என்னும் மன்னனைத் தவிர!

குழந்தை ஒன்று இல்லை கொஞ்சுவதற்கு! குழந்தை ஒன்றில்லை முத்தாடுவதற்கு!

“இப்பிறவியில் செய்யவில்லை ஒரு பாதகம்; முற்பிறவியில் செய்ததை யாம் அறிகிலோம்.

குலகுரு சுகர் அறிவார் மூன்று காலத்தையும். குலகுரு கூறுவார் நல்வழி ஒன்றை நமக்கு!”

அரசி ஆலோனை கூறினாள் அரசனுக்கு; அரசன் அழைத்து வரச் சொன்னான் சுகரை.

பல்லக்குச் சென்றது சுகரை அழைத்துவர, சொல்லுக்கு வல்லவர் சுகர் அங்கு வந்தார்.

மரப் பேழை

பல்லக்கில் வந்த குலகுரு சுகரை ஆகாசராஜன் உள்ளன்போடு வரவேற்றான் அரசியுடன் சென்று.

‘அழைத்த காரணம் என்ன அரசே?” என வினவ, “விழைகின்றோம் மழலைச் செல்வத்தை யாம்!

பலன் தரவில்லை புரிந்த தான தருமங்கள்; பலன் தரும் வழியைக் கூறவேண்டும் தங்கள்!”

“புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் – உனக்கு உத்திரவாதமாகப் பிறக்கும் குழந்தை!” என

“பொய்க்காது பெரியோரின் ஆசி மொழிகள்; செய்வோம் யாகத்தைத் தங்கள் ஆசியுடன்!”

குறித்தனர் நல்ல நாள் ஒன்றை யாகத்துக்கு; குவித்தனர் யாகப் பொருட்களைக் கொணர்ந்து.

குழுமினர் வேத விற்பன்னர்கள் யாகம் புரிந்திட அழைப்புகள் சென்றன அருமை நண்பர்களுக்கு!

உழுதான் ஆகாச ராஜன் அந்த யாக பூமியை, தொழுத பின்பு இறையையும், குருவையும்.

வேத கோஷம் செய்தனர் வேத விற்பன்னர்கள். கீத நாதம் ஒலித்தனர் இசை விற்பன்னர்கள்.

நிலத்தை உழுத ஆகாச ராஜனின் கலப்பை நின்று விட்டது ஓரிடத்துக்கு வந்தவுடன்.

அழுத்தி உழுதவுடன் எழுந்தது ஒரு சப்தம்; ஆழத்தில் கலப்பையைத் தடுத்தது எதுவோ!

தோண்டினர் காவலர் நிலத்தை விரைந்து; கண்டனர் அழகிய ஒரு மரப் பேழையை!

பேழை வந்தது அரசனிடம் பத்திரமாக! பேழை வீசியது ஓர் அரிய நறுமணத்தை.

பத்மாவதி

தென்றல் தழுவிச் சென்றது குளிர்ச்சியாக! தெளித்தது வானம் நன்னீர்த் துளிகளை!

பூமியை உழுத ஜனகனுக்குச் சீதையைப் போல, பூமியை உழுத மன்னனுக்கு கிடைத்தது என்ன?

பேழையைச் சமர்பித்தான் மன்னன் குருவிடம்; பேழையைத் திறந்தார் ஆர்வத்துடன் குலகுரு.

ஆயிரக் கணக்கான தாமரை இதழ்களில் ஆனந்தமாக சயனித்திருந்தாள் குழந்தை!

பெருகியது கண்ணீர் பெருகிய உவகையால்! பரிவுடன் வணங்கினான் குருவின் பாதங்களை!

ஆகாசத்தில் இருந்து ஒலித்தது ஓர் அசரீரி.“ஆகாச ராஜன்! பூர்வ ஜன்ம புண்ணியம் இது.

பூர்த்தியடைந்தது உன் நித்திய கோரிக்கை. புத்திரி கிடைத்தாள் உன் மனக் குறை தீர!”

மார்புறத் தழுவினான் மலர்க் குழந்தையை! ஆர்வத்துடன் அடைந்தான் அரண்மனையை.

பெயர் இட்டான் குழந்தைக்கு பத்மாவதி என. பெயர்க் காரணம் தாமரையிதழ்களில் சயனம்.

நடத்தினான் தான தருமங்கள் நாடெங்கும்; நடத்தினான் பூஜைகள் ஆலயங்கள் எங்கும்.

தன் வீட்டிலேயே தேவி வந்து பிறந்ததுபோல தன்னிறைவு அடைந்தனர் ஒவ்வொருவரும்.

நாரதர்

நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்;
நற்குணங்கள் அனைத்தின் ஓர் இருப்பிடம்.

நந்த வனத்தில் தோழியாரோடு ஆனந்தமாகப்
பந்து விளையாடுகையில் வந்தார் ஒரு கிழவர்.

வயது முதிர்ந்த கிழவராக வந்த நாரதர்
“பயத்தை விட்டுவிட்டு வா இங்கே!” என,

தயங்கினாள் பத்மாவதி அவரை அறியாது!
“தயக்கம் வேண்டாம் நான் அந்நியனல்ல!

கைரேகை கண்டு சொல்லுவேன் பலன்
தையல் உந்தன் எதிர் காலத்தைப் பற்றி!”

நீட்டினாள் தன் இடக் கரத்தை பத்மாவதி
நீட்டிய கரத்தைப் பிடித்து நோக்கினார் அவர்.

“தெய்வாம்சம் பொருந்திய கை கூறுகிறது!
வைகுந்த வாசனை நீ மணக்கப் போகிறாய்!”

“அத்தனை பாக்கியமா எனக்கு?” வியந்தாள்!
அவள் கண்டாள் நாரத முனிவரை எதிரில்.

“அறிவிக்கவே வந்தேன் உனக்கு நான் இன்று !
அறிவாய் உன் கணவன் வைகுந்தவாசன் என்று!”

ஆட்டத்தில் செல்லவில்லை அவள் மனம்;
நாட்டம் கொண்டு விட்டது பரந்தாமனிடம்!

நிறைத்தாள் உள்ளம் முழுவதும் நாரணனை.
உரைத்தாள் உள்ளன்போடு “நாராயணா!” என்று!

“பருவ வயதில் உனக்கு இத்தனை பக்தியா?” என
அருமைத் தோழிகள் கேலி செய்தனர் அவளை!

கேட்டாள் நாராயணன் செய்த லீலைகளை.
கண்டாள் நாராயணனின் திவ்விய ரூபத்தை.

உரைத்தாள் நாராயணின் திவ்ய நாமங்களை.
பணிந்தாள் நாராயணின் திவ்ய விக்ரஹத்தை.

வைகுந்தவாசனை மணக்கும் சுபவேளைக்குத்
தையல் காத்திருந்தாள் மிக்க ஆர்வத்துடன்.

11a. சந்திப்பு

உலவின துஷ்ட மிருகங்கள் தம் இஷ்டம் போல!
நிலவியது ஆபத்து வனத்தில் வசிப்பவர்களுக்கு!

சுனை அருகே வசிப்பவர்களுக்கு பிராண அபாயம்,
சுனையில் நீர் பருகும் சாது பிராணிகளுக்கும் கூட.

“வேட்டைக்குப் போகின்றேன் அம்மா – விலங்குகளின்
கொட்டத்தை அடக்குவதற்கு!” என்றான் ஸ்ரீனிவாசன்.

காட்டை விட்டு வெளியே வந்து திரிபவைகளைக்
காட்டுக்குள் விரட்டினான் அவற்றை அச்சுறுத்தி.

துவம்சம் செய்து கொண்டிருந்தது ஒரு மத யானை!
துரத்தியவுடன் ஓடியது காட்டை விட்டு வெளியே.

வெளியறியது அது சேஷாச்சலத்தை விட்டு விட்டு!
வெறி கொண்ட யானையை விடலாகாது அன்றோ?

நாரயணபுரத்தை நோக்கி ஓடியது மத யானை.
நாராயணனும் துரத்திச் சென்றான் யானையை.

நுழைந்தது ஆகாசராஜனின் உத்தியான வனத்தில்!
‘இழைக்குமோ ஆபத்து அங்கிருந்த பெண்களுக்கு?’

அம்பினால் அடித்தான் அந்த மத யானையை.
தும்பிக்கையைத் தூக்கிப் பிளிறிவிட்டு ஓடியது.

யானை சென்றபின் அழைத்தனர் பத்மாவதியை,
“யானை வந்துள்ளது, திரும்புவோம் அரண்மனை!”

யானையை விரட்டிய நாரணன் வந்தான் அங்கே.
யானை சென்று விட்டது; இருந்தனர் அப் பெண்கள்.

மற்ற பெண்களிடையே இருந்தாள் பத்மாவதி
மணிகளிடையே ஜொலிக்கும் வைரம் போல.

முககாந்தி ஈர்த்தது இரும்பைக் காந்தம் போல.
முன்னேறினான் பெண்கள் கூட்டத்தை நோக்கி.

11b. “வாசுதேவன் நானே!”

அந்நிய ஆடவனைக் கண்டதும் தோழியர்
சொன்னார்கள், “திரும்பிச் செல்வோம்!” என.

“தெரிந்து கொண்டு வாருங்கள் அவன் யார் என!”
“யார் நீங்கள்? இங்கு என்ன வேலை? கூறுவீர்!”

நடந்தான் ஸ்ரீநிவாசன் பத்மாவதியை நோக்கி
தடுக்க முடியவில்லை தோழிப் பெண்களால்!

“ஆடவருக்கு நுழைய அனுமதி இல்லையா?
அறியாமல் வந்து நுழைந்து விட்டேன் இங்கு!

கண்டேன் வனத்தில் மத யானை ஒன்றை!
கண்டதும் யானை ஓடலானது வேகமாக!

காட்டுக்குள் செல்லவில்லை அந்த யானை;
நாட்டுக்குள் நுழைந்தது; நந்தவனம் வந்தது !

கன்னியரைத் துன்புறுத்துமோ என்று அஞ்சி
கணை ஒன்றை எய்து விரட்டினேன் அதை.

பூரணச் சந்திரன் போன்ற முகம் கொண்ட
ஆரணங்குடன் பேச விரும்பி வந்தேன்.”

“யானை திரிந்தால் தெரிந்திருக்கும் எமக்கும்!
யார் நீர்? எதற்கு வந்துள்ளீர்? உண்மை கூறும்.”

“வசிப்பது சேஷாச்சலம்; சிந்து புத்திரர் குலம்;
வசுதேவர் தந்தையார்; தேவகி தாயார் ஆவார்.

பஞ்ச பாண்டவர்களுக்கு ஆப்த நண்பன் நான்;
கொஞ்சப் பெயர்களா நான் சொல்லுவதற்கு?”

“பித்தம் தலைக்கு ஏறி விட்டது உமக்கு!
வைத்தியரைப் போய்ப் பாரும் உடனே!

உத்தியான வனத்தில் பெண்களிடம் வந்து
எத்தன் வேடமா போடுகின்றீர்கள் நீங்கள்?

பைத்தியக்காரன்! யசோதை கிருஷ்ணனாம்!
வைத்தியம் செய்து கொள்ளும் விரைவாக.

ஜோலியைப் பார்த்துக் கொண்டு செல்வீர்!”
கேலி பேசினார் பத்மாவதியின் தோழியர்.

11c. சினம் பெருகியது

“அரசகுமாரி தங்களைப் பற்றிய விவரங்கள்
அனைத்தும் அறிய வேண்டும் நான் இப்போது.”

“தாராளமாகத் தெரிந்து கொள்ளுங்கள் ஐயா!
நாராயணபுர மன்னன் ஆகாசராஜனின் மகள்.

பத்மாவதி என்பெயர், தாரணி தேவி என் தாய்;
அத்திரி கோத்திரம், நாங்கள் சந்திர வம்சம்.

உத்தியான வனம் உண்டானது எனக்காக.
இத்தனை விவரங்கள் போதுமா உமக்கு?”

“என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்!
என்னை மணந்து கொள்ள உனக்கு விருப்பமா?”

கோபம் வந்து விட்டது இளவரசி பத்மாவதிக்கு!
கோபம் கொண்டனர் பத்மாவதியின் தோழியரும்.

“அத்து மீறிப் பேசவேண்டாம் பித்துப் பிடித்த ஐயா!
பத்திரம் இவள் அரசகுமாரி, நினைவிருக்கட்டும்!”

“கன்னி பெண்ணை நான் மணக்க விரும்புவதில்
என்ன தவறு எனத் தெரியவில்லையே!” என்றான்.

பல்லைக் கடித்தாள், கண்களை உருட்டினாள்,
தொல்லை தரும் மனிதனுடன் என்ன பேச்சு?

வைகுந்தவாசனை வரித்த என்னை ஒரு
வழிப் போக்கன் மணக்க விரும்புவதா?

சினம் தலைக்கு ஏறியது பத்மாவதிக்கு
மனம் அவனைத் தண்டிக்க விரும்பியது.

“அனுமதி இல்லாத இந்த இடத்துக்கு வந்து
அத்து மீறி நுழைந்தது உம் முதல் தவறு!

தனித்து இருக்கும் இளம் பெண்களிடம்
தவறாகப் பேசுவது இரண்டாவது தவறு.

கன்னிப் பெண் இவள் என்று அறிந்திருந்தும்
கண்ணியம் இன்றிப் பேசுவது மூன்றாவது.

சுய உணர்வு இல்லை போலும் உமக்கு!
மயக்கத்தில் பேசுகின்றீர் போலும் நீர்!

தயவு செய்து சென்று விடுங்கள் உடனே!
பயம் இல்லையா அரசனின் கோபத்துக்கு?”

விடாக் கண்டன் கொடாக் கண்டன் கதையானது!
இடத்தைக் காலி செய்ய மறுத்தான் ஸ்ரீநிவாசன்!

1d. மோதலும், காதலும்!

“எந்த விதத்தில் குறைந்துவிட்டேன் பெண்ணே?
என்னை மணக்கப் புண்ணியம் பண்ண வேண்டும்!”

“அம்பு எய்து மதயானையை விரட்டிய பின்பும்
வம்பு செய்து எம்மைத் துன்புறுத்துவது ஏனோ?”

“போகாவிட்டால் என்ன செய்ய முடியும் உன்னால்?”
“போகாவிட்டால் உங்கள் உயிரை வாங்கிவிடுவேன்!”

“உயிருக்கு அதிபதியான என் உயிரையா?”என்றான்.
“பயித்தியத்தை அடித்து விரட்டிவிடுங்கள்!” என்றாள்.

சொல்லடிகள் பட்டு நின்றிருந்த ஸ்ரீனிவாசனுக்குக்
கல்லடிகள் கொடுக்கலாயினர் தோழிப் பெண்கள்.

காயம் பட்டது சில கற்கள் தாக்கி – எனினும்
நியாயம் கேட்க நிற்கவில்லை ஸ்ரீநிவாசன்!

மோதல் ஏற்படும் இருவர் சந்தித்தவுடனே!
காதல் ஆகிவிடும் பின்னர் சிந்தித்தவுடனே!

அடித்து விரட்டச் சொன்ன பத்மாவதியை
அடித்து விட்டன மன்மதனின் பாணங்கள்.

நாரணன் வெளியேறிய பின்னர் உலகம் தன்
பூரணத்துவம் இழந்தது போல் தோன்றியது.

உலகமே இருண்டது போலத் தோன்றியது
கலகமே நிறைந்த மனதின் நினைவுகளால்!

பாலும் கசந்தது; பஞ்சணை வருத்தியது;
கோலம் மாறியது; பசலை நோய் படர்ந்தது.

“மந்திரம் போட்டுவிட்டானோ அந்தத்
தந்திரம் அறிந்த வம்புக்கார வாலிபன்?

உற்சாகமாகச் சண்டையிட்டாள் அவனுடன்!
உற்சாகம் இழந்து ஆளே மாறிப் போய்விட்டாள்.

ரதத்தில் ஏற்றி அமர்த்தினர் பத்மாவதியை;
ரதம் விரைந்தது மன்னனின் மாளிகைக்கு.

11e. காதல் நோய்

அந்தப்புரம் சென்று வணங்கினர் அரசியை
அரண்மனை திரும்பிய உடன் தோழிகள்

வாடிய முகங்கள்; வாயடைத்த பெண்கள்;
தேடினாலும் காணவில்லை பத்மாவதியை!

“அன்னியன் ஒருவன் நுழைந்து விட்டான்
அரண்மனை உத்தியான வனத்தில் இன்று!

மதயானையைத் துரத்தி வந்தானாம் அங்கு.
மதயானை ஓடிவிட்டது அவன் பாணத்துக்கு!

வம்பு செய்து பேசினான் பத்மாவதியிடம்;
கம்பு கொண்டு புடையாமல் கல் எறிந்தோம்.

நழுவினான் கழுவும் மீனில் நழுவும் மீனாக!
இழந்துவிட்டாள் இவள் தன் உற்சாகத்தை!

மகளைத் தேடி ஓடினள் அரசி அந்தப்புரத்தில்.
மகளோ வெட்டவெளியை வெறித்திருந்தாள்!

‘கெடுதலே நினையாத நான் இன்று மட்டும்
கொடூரமாக ஏன் நடந்து கொண்டு விட்டேன் ?

அடி பலமாகப் பட்டிருக்குமோ என்னவோ?
துடிப்பான இளைஞன்! பயித்தியம் அல்ல!’

அன்னை வந்ததையும் கவனிக்கவில்லை;
சொன்ன சொற்களையும் கவனிக்கவில்லை!

திருஷ்டி கழித்தாள் அரசி பத்மாவதிக்கு!
திரு நீறு பூசினாள் அரசி பத்மாவதிக்கு!

உணவு இறங்கவில்லை பத்மாவதிக்கு!
உறக்கமும் பிடிக்கவில்லை பத்மாவதிக்கு.

குலகுரு சுகர் வந்தார், அறிவுரைகள் தந்தார்;
“மலர்வனம் அருகேயே அகத்தியர் ஆசிரமம்!

பரமசிவன் அபிஷேக நீரைக் கொண்டுவந்து
அரசகுமாரி மேல் தெளித்தால் குணமாகும்!”

பதினோரு வேத விற்பன்னர்கள் சென்றனர்,
பரமசிவனுக்கு அபிஷேக ஆராதனை செய்ய!

12. பத்மாவதி யார்?

விடியலில் எழும் ஸ்ரீனிவாசன் அன்று
வெகுநேரம் வரையிலும் எழவில்லை.

வேட்டையாடின களைப்பு என்று எண்ணி
விட்டு விட்டாள் அவனை வகுளமாலிகை.

விழித்துக் கொண்டு விருதாகப் படுத்திருந்தான்;
எழுப்பினாலும் எழவில்லை மஞ்சத்திலிருந்து.

என்ன நடந்தது என்று பலவாறாகக் கேட்டும்,
என்ன நடந்தது என்று சொல்லவே இல்லை.

“எவள் மீதாவது மோஹம் கொண்டாயா?” என,
“எப்படிக் கண்டு பிடித்தீர்கள் அம்மா?” என்றான்!

“நீராடி உணவருந்திய பின் கூறு என்னிடம்,
நீ கண்ட பெண்ணைப் பற்றிய விவரங்களை!”

“காட்டில் வேட்டையாடும் போது நான் கண்டேன்
காட்டு யானை ஒன்று மதம்கொண்டு திரிவதை!

மனிதர்களுக்குத் தீங்கு செய்யுமோ என்றஞ்சி
கனத்த காட்டுக்குள் விரட்டி விட முயன்றேன்.

மலைச் சரிவில் இறங்கி ஓடியது மதயானை.
மலர் வனம் ஒன்றில் புகுந்தது அம்மதயானை.

நாராயண புரத்தை ஆட்சி செய்யும் மன்னன்
ஆகாசராஜனின் விசேஷ மலர்வனமாம் அது.

மன்னன் மகள் இருந்தாள் தன் தோழியருடன்;
மனதைப் பறிகொடுத்துவிட்டேன் கண்டவுடன்!

விருப்பத்தைத் தெரிவித்தேன் நான் அவளிடம்;
விரட்டி விட்டாள் என்னைக் கல்லால் அடித்து .

எங்கெங்கு நோக்கிலும் தெரிவது அவள் முகமே!
எங்கள் திருமணம் நடக்குமா அம்மா?” என்றான்.

“மணம் செய்ய விரும்புகிறாய் பத்மாவதியை.
குணம் கொண்டவளா உனக்கு ஏற்றவாறு?”

“அறியமாட்டாய் நீ அவள் யார் என்பதை!
அறிவேன் நான்! கூறுவேன் உனக்கும்!”

13a. வேதவதி

திரேதா யுகத்தில் இலங்கேஸ்வரன்
திரிலோக சஞ்சாரம் செய்து வந்தான்.

இமாலயச் சாரலில் கண்டு மோஹித்தான்
அமானுஷ்ய அழகுடைய ஒரு சுந்தரியை.

வேதவதி என்ற அந்தக் கன்னிகைக்கு
வேதவாக்கு ஆகும் தந்தையின் சொல்.

மகாவிஷ்ணுவை வரித்தாள் தன் மணாளனாக;
ஹிமாச்சலத்தில் செய்து வந்தாள் கடும் தவம்.

நெருங்கினான் வேதவதியை இலங்கேஸ்வரன்.
விரும்பினான் அவள் அழகை அனுபவிப்பதற்கு!

“பரந்தாமனை வரித்துவிட்டேன் மணாளனாக!
பர புருஷர்களுக்கு இடமில்லை மனதில்” என்றாள்.

“பரந்தாமனுக்கு இளைத்தவனோ இந்த ராவணன்?
பரம சுகமாக வாழலாம் என்னை மணந்துகொண்டு!”

வேதவதி ஏற்கவில்லை இந்தக் கோரிக்கையை.
வேண்டாம் என்றால் விடுபவனா இராவணன்?

தலைக்கு ஏறிவிட்ட மோக வேகத்தில் – அவள்
தலை மயிரைப் பற்றிக் கொண்டு சூளுரைத்தான்.

“அடையாமல் ஓய மாட்டேன் நான் விரும்பியதை!”
அடிபட்ட பெண் நாகமாக மாறிவிட்டாள் வேதவதி.

“கேசத்தைத் தீண்டி அதை மாசு படுத்திவிட்டாய்!
கேசவனுக்கு உகந்தது அல்ல அது இனிமேலும்!”

திட மனத்தோடு தவம் புரிந்துவந்த வேதவதியின்
இடக்கையே மாறி விட்டது ஒரு கூரிய கத்தியாக!

கேசத்தையே துண்டித்து விட்டாள் இடக் கையால்!
மோசமான எண்ணத்தை அது மாற்றிவிடவில்லை.

திடுக்கிட்டான் ராவணன்; மனம் தளரவில்லை;
தடுத்ததால் மேன்மேலும் வளர்ந்தது காம ஜுரம்.

13b. வேதவதியின் சாபம்

அண்டம் குலுங்க நகைத்தான் ராவணன்;
கொண்டது விடா முதலையும், மூர்க்கனும்!

“மந்திர, தந்திரப் பிரயோகங்கள் என்னிடத்திலா ?
தந்திரங்களில் பெயர் போனவன் இந்த ராவணன் !”

மீண்டும் நெருங்கினான் வேதவதியை ராவணன்;
மீண்டும் தியானித்தாள் வேதவதி பரந்தாமனை;

வேதவதி ஒரு புனிதவதி அதனால் அங்கு
வேகமாக வளர்ந்தது அக்கினி ஒரு தடுப்பாக.

திகு திகு என்று எரியத் தொடங்கியது அது
திகில் அடைந்த அபலையைக் காப்பதற்கு.

வரவழைத்தான் ராவணன் வஜ்ஜிராயுதத்தை.
எரியும் தீயை அணைக்க முயன்றான் அவன்.

‘கற்பைக் காத்துக் கொள்ள இருக்கும் ஒரே வழி
கயவன் தொடுமுன் உயிரை விடுவதே ஆகும்!’

“காமத்தால் கண்ணிழந்து விட்ட அரக்கனே!
காமம் நிறைவேற அனுமதிக்க மாட்டேன்!

விடுவேன் என்னுயிரை எரியும் தீயில் குதித்து;
விடாது என்றும் இந்தப் பாவம் உன் குலத்தை!

பழி தீர்க்கும் உன்னை என்றாவது ஒருநாள்!
அழிவாய் நீயும், உன் குலமும் பெண்ணால்!”

சாபம் இட்டாள்; குதித்தாள் அந்த நெருப்பில்
சாபம் வீண் போகவில்லை பலித்தது பிறகு.

சீதையிடம் கொண்ட விபரீத மோஹமே
சீரழித்துவிட்டது அவன் வம்சத்தினையே1

13c. இரண்டு சீதைகள்

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை எனத்
தன்னாட்டை விடுத்துக் கனகம் ஏகினான்

தம்பியுடனும், சீதையுடனும் ஸ்ரீ ராமன்.
தங்கினர் பஞ்சவடியில் அமைதியுடன்.

தையல் சீதையைத் தாக்கினாள் – ராமனிடம்
மையல் கொண்டுவிட்ட அரக்கி சூர்ப்பனகை.

காது, மூக்கு அறுபட்டு அலறி ஓடிச் சென்று
ஓதினாள் சீதையின் அழகை ராவணனிடம்.

காமம் கொண்டான் கண்டிராத சீதைமீது!
ஏமாற்றினான் ஒரு மாய மானை அனுப்பி!

அப்புறப்படுத்தினான் ராம, லக்ஷ்மணர்களை.
அபகரித்தான் சீதையைப் பர்ணசாலையுடன்.

“அபாயம் நேரக் கூடாது சீதைக்கு!” என்று
உபாயம் ஒன்று. செய்தான் அக்கினிதேவன்

வேதவதியுடன் வந்தான் விரைந்து வெளியில்!
வேகமான ராவணனை மறித்தான் வழியில்!

“உண்மை சீதை இருக்கிறாள் என்னிடம்;
உன்னிடம் இருப்பவள் ஒரு மாயச் சீதை.

எடுத்துச் செல் இந்த உண்மை சீதையை!
விடுத்துச் செல் அந்த மாயச் சீதையை!”

நம்பினான் அக்கினியின் சொற்களை ராவணன்;
அம்பென விரைந்தான் வேதவதியுடன் இலங்கை.

சீதையை விட்டு விட்டான் அக்கினிதேவனிடம்;
சீதையை விட்டான் ஸ்வாஹாவிடம் அக்கினி.

ராவணன் அழிந்தபின் அக்கினிப் பரீட்சை
ராமன் செய்யச் சொன்னன் வேதவதியிடம்.

வலம் வந்தாள் அக்கினியை மூன்று முறை;
வணங்கினாள் ராமனை; இறங்கினாள் தீயில்!

வெளிப்பட்டார் அக்கணமே அக்கினி தேவன்!
வெளிப்பட்டனர் அவருடன் இரண்டு சீதைகள்!

13d. ஏக பத்தினி விரதம்

“இருவரையும் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றான்.
ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை என்பேன்.

“இவர் தங்கள் தேவி சீதா பிராட்டியார்;
இவர் வேதவதி என்னும் பிராட்டியார் .

வேதவதியே ராவணனின் சிறையிலிருந்தவர்;
தேவன் விஷ்ணுவை மணாளனாக வரித்தவர்.

இமயத்தில் நிஷ்டையில் இருக்கும் வேளை,
இராவணன் கண்டு மோஹித்தான் இவளை.

பலவந்தம் செய்ய நெருங்கினான் இவளை;
பயந்து தீயினில் குதித்துவிட்டாள் இவள்.

பத்திரமாக ஒப்படைத்தேன் என் மனைவியிடம்
தந்திரமாக மீட்டோம் சீதா தேவியைப் பின்னர்.

இருவருமே தங்களுக்கு உரியவர்கள் தாம்!
இருவரையும் ஏற்க வேண்டும் தங்கள்!” என;

சீதையும் கூறினாள் ராமனிடம் சென்று
“வேதவதி துன்புற்று என்னைக் காத்தாள்.

தாமதம் இன்றி ஏற்றுக் கொள்வீர் அவளை!”
ராமன் ஏற்கவில்லை இந்த வேண்டுகோளை.

“ஏக பத்தினி விரதம் பூண்டுள்ளதை அறிவாய்
ஏற்றுக் கொள்ள முடியாது இவளை இப்போது!

கலியுகத்தில் வசிப்பேன் சேஷாச்சலத்தில்,
கலியுகத்தில் மணப்பேன் நான் வேதவதியை.

ஆகாசராஜன் மகள் பத்மாவதி ஆவாள் – இவள்.
அரும் தவம் பலித்து என்னையும் மணப்பாள்!”

14a. சிவ ஆராதனை

“வேதவதியே இப்போது பத்மாவதி – அதனால்
வேண்டுமென்றே விலகிச் சென்றாள் லக்ஷ்மி.”

மன்னனைச் சந்திக்கச் சென்றாள் வகுளமாலிகை;
அன்னையுடன் சற்று வழி நடந்தான் சீனிவாசன்.

மாலை மங்கியது நகரை நெருங்குகையில்;
கோலாகல ஆராதனைகளின் ஒலி கேட்டது

அருகிலே இருந்த அகத்தியரின் ஆசிரமத்தில்;
விரும்பிக் கலந்து கொண்டாள் பூஜைகளில்!

விரைந்து சென்று நகரை அடைந்தாலும்
இரவில் மன்னனைக் காண முடியாதே!

வேதபாராயணம் தொடர்ந்து நடந்தது;
வேத வல்லுனர் செய்தனர் அபிஷேகம்.

விமரிசையாக நடந்தன பூஜைகள்.
வந்த காரியத்தில் வெற்றி நிச்சயம்!

“ஆராதனைக்குக் காரணம் என்ன?” என
“நாரயணபுரி இளவரசிக்காக நடக்கிறது.

உற்சாகம் இழந்து விட்டாளாம் திடீரென்று!
உறங்குவதும், உண்பதும் இல்லையாம்!”

‘காதல் வயப்பட்டுள்ளாள் பத்மாவதி தேவி!
காதலுக்கு வைத்தியம் கல்யாணம் அன்றோ?’

பூஜை முடிந்தது பொழுது புலருகையில்!
பூஜைப் பிரசாதமும், தீர்த்தமும் சென்றன.

வகுள மாலிகையும் சென்றாள் அவற்றுடன்
வெகு விரைவாக மன்னனைக் கண்டு பேசிட!

14b. குறத்தி வந்தாள்!

அன்னையுடன் வழி நடந்த ஸ்ரீனிவாசனுக்குப்
பின்னர் இருப்புக் கொள்ளவில்லை தனியே.

‘சென்ற காரியம் வெற்றி அடையுமா? அன்னை
வென்று திரும்புவாளா? அல்லது தோற்பாளா?’

தோற்று விடும் எண்ணமே தோற்றுவித்தது
தேற்ற இயலாத மனக்கவலையை நெஞ்சில்.

தன் பங்குக்கும் செய்ய வேண்டும் ஏதாவது,
தன் விருப்பம் தடையின்றி நிறைவேறிட.

மாறினான் நகரின் எல்லையை அடைந்ததும்,
குறி சொல்லும் அழகிய குறத்தியாக அவன்!

“சொல்வேன் உள்ளபடி மூன்று காலத்தையும்!
வெல்வேன் உங்கள் எல்லா தோஷங்களையும்!”

குறத்தியை அழைத்து வரச் சொன்னாள் அரசி.
குறத்தியை அழைத்து வந்தனர் தோழியர்கள்.

“குறி சொல்வதில் நீ திறமைசாலியாமே!
குறி சொல்கிறாயா அரசகுமாரிக்கு?” என,

“நான் சொல்வது ஒன்றும் இல்லை தாயே!
நாவில் அமர்பவன் செந்தில் ஆண்டவன்!

அழையுங்கள் உங்கள் அரசகுமாரியை!”
“குழந்தையின் கைபார்த்துக் குறி சொல்!”

நாணத்துடன் வந்து அமர்ந்தாள் பத்மாவதி;
காணத் தந்தாள் தன் இடக்கரத்தை நீட்டி.

வெள்ளிப் பூண் போட்ட குழலால் தடவிய
கள்ளக் குறத்தியும் குறி சொல்லலானாள்!

14c. குறத்தி சொன்ன குறி

“குல தெய்வம் யார் கூறுங்கள் அரசி” எனவும்,
“குல தெய்வம் சேஷாத்ரி வாசனே!” என்றாள்.

“சேஷாத்ரி வாசன் உள்ளான் உங்கள் முன்பு!
பேசுவது அவனே என் நாவிலிருந்து இப்போது!

மலர் வனத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு
மகள் சந்தித்தது அந்த சேஷாத்ரி வாசனையே!

மணக்கக் கேட்டான் இவளிடம் சம்மதம்;
பிணங்கிக் கொண்டு அடித்தாள் கல்லால்!

புறப்பட்டுப் போகுமுன் அவன் இவளுடைய
புறக் கண்களுக்கும் காட்சி அளித்துள்ளான்!

ஆகிவிட்டாள் அவன் நினைவால் இங்ஙனம்.
ஆகிவிடுவாள் சஹஜமாக, அவனை மணந்தால்.

விட்டு விட்டால் இவளை இப்படியே – இவள்
விட்டு விடுவாள் தன் உயிரையே ஏக்கத்தில்!”

யாரும் பேசவில்லை இதைக் கேட்ட பின்னர்.
யாரும் நம்பவில்லை குறத்தியின் குறியை!

“பகவானை மணப்பது நடக்கும் காரியமா?
பகவானிடம் மணம் பேசுவதும் சாத்தியமா?”

“மனதைப் பறி கொடுத்தவனே அனுப்புவான்;
மணம் பேசி முடிக்கத் தகுந்த நபரை!” என்றாள்.

பொற்காசுகளை அளித்தாள் அரசி குறத்திக்கு,
“நற்காரியம் நடப்பதே போதும் எனக்கு!” என்று

விடை பெற்றுச் சென்றவள் குறத்தி – ஆனால்
வீட்டைச் சென்று அடைந்தவன் ஸ்ரீனிவாசன்.

15a. அன்னையர் சந்திப்பு

விடியலுக்குக் காத்திருந்தாள் தரணி தேவி.
விடிந்தவுடன் விடியும் சில பிரச்சனைகள்.

வந்தனர் அந்தணர் சிவன் ஆலயத்திலிருந்து;
தந்தனர் அபிஷேகத் தீர்த்தப் பிரசாதங்கள்.

அழகிய கோலமிட்ட மணையில் அமர்த்தி,
அழகி பத்மாவதிக்குச் செய்தனர் அபிஷேகம்.

முழங்கின எங்கும் மங்கல வாத்தியங்கள்;
வழங்கினர் பரிசுகள் அங்கு வந்தவர்களுக்கு.

“சேஷாச்சலத்தில் இருந்து வந்துள்ள மாது
பேச விரும்புகிறார் அரசி தரணி தேவியிடம்”

வந்தவர், திருமணம் பேச வந்தவர் தான் என்று
அந்த மாதை அழைத்து வந்தனர் அரசியிடம்.

“சேஷாச்சலம் என் ஊர், வகுளமாலிகை என் பேர்;
பேச வேண்டும் அரசகுமாரியைப் பற்றி ” என்றார்.

“காத்திருக்கிறேன் உங்களிடம் பேசுவதற்கு – எதிர்
பார்த்திருந்தேன் உங்கள் இனிய வருகைக்கு!

குறத்தி வந்தாள் அரண்மனைக்கு நேற்று மாலை;
குறி சொன்னாள் சேஷாத்ரி வாசனைக் குறித்து.

உத்தியானவனத்தில் என் பெண்ணைக் கண்டானாம்;
பத்மாவதியிடம் மையல் கொண்டானாம்!” என்றாள்.

“குறத்தி சொல்லியது முற்றிலும் உண்மையே,
குமாரத்தியுடன் மணம் பேசவே வந்துள்ளேன்.

அனுப்பியவன் மகன் சேஷாச்சலம் ஸ்ரீனிவாசன்;
அனுமதி வேண்டும் இத் திருமணம் நடப்பதற்கு!”

பிள்ளையைப் பற்றிய விவரங்களைக் கேட்டு
கொள்ளை மகிழ்ச்சி கொண்டாள் தரணி தேவி.

அரண்மனையில் தங்க வைத்தாள் அந்த மாதை.
அரசனிடம் விரைந்தாள் செய்தி சொல்வதற்கு.

15b. திருமணப் பேச்சு

“உத்தமமானதே இந்த சம்பந்தம் என் ராணி!
பத்மாவதி யாரென்பதை மறந்து விடாதே நீ!

மஹாலக்ஷ்மியின் அம்சமே நம் பத்மாவதி;
மஹாவிஷ்ணுவை மனத்தால் வரித்தவள்.

சம்மதம் பெறுவோம் நமது குலகுருவிடம்;
சம்மதம் தருவோம் பின் அந்த மாதரசியிடம்.”

தொண்டைமானை அழைத்தான் ஆகாசராஜன்,
விண்டான் நடந்துள்ள நிகழ்ச்சிகளை எல்லாம்.

“கேட்போம் குலகுருவிடம் அவரது அபிப்ராயம்;
கேட்போம் நலம் விரும்பும் பிரதானிகளிடமும்.”

குலகுருவுக்குக் குதூகலம் கொப்பளித்தது!
“குமாரத்தியை மணம் செய் ஸ்ரீநிவாசனுக்கு!

வம்சம் அடைந்துவிடும் நற்கதியினை;
அம்சம் ஸ்ரீநிவாசன் மஹாவிஷ்ணுவின்.

வைகுந்தவாசனை அடைவதற்கு மருமகனாக,
வெகுபுண்ணியம் செய்தாய் முற்பிறவியில்!

நிலத்தில் கிடைத்தவள் நிலமகளே அல்லவா?
நிலமகள் மணாளன் அலைகடல் துயில்பவன்!”

பிரதானிகள் ஏற்றனர் இதனை மனமார.
பிரபுக்களும் ஏற்றனர் இதனை மனமார.

ஆடிப் பாடத் தொடங்கினாள் பத்மாவதி!
ஆனந்த வெள்ளத்தில் வகுள மாலிகை.

நிலவியது மகிழ்ச்சி அந்த அரண்மனையில்;
நிலவியது அமைதி பெற்றோரின் மனத்தில்.

பொன்னும், மணியும் அள்ளித் தந்தாள் அரசி.
“பின்னர் வரும் திருமணவோலை!” என்றாள்.

ஆசிகள் தந்தாள் பத்மாவதியை முத்தமிட்டு;
ஆவலுடன் காத்திருப்பான் ஸ்ரீநிவாசன் என;

அவசரமாகத் திரும்பினாள் வகுள மாலிகை;
அரசனும், அரசியும் வந்து வழியனுப்பினர்.

16. சுகரின் செய்தி

நாட்குறிப்புக்களைக் கொண்டு ஆராய்ந்து
நாளைத் தேர்வு செய்தனர் திருமணத்துக்கு.

மஞ்சள் தடவிய ஓலையில் எழுதினார்
மணப் பத்திரிக்கையை குலகுரு சுகர்.

வைத்தனர் திருமண ஓலையை பவ்யமாக
சந்தனப் பேழையில் அரசனும், அரசியும்.

மங்கல வாத்தியம் முழங்க ஓலையுடன்
அங்கிருந்து சென்றார் பல்லக்கில் சுகர்.

வகுள மாலிகையைக் கண்டவுடன் அவளை
வரவேற்றான் ஸ்ரீனிவாசன் ஆர்வத்தோடு வந்து.

“விருப்பம் நிறைவேறியது உன் மனம் போல.
திருமணத்துக்குக் கிடைத்து விட்டது சம்மதம்.

விவரித்தாள் முதல் நாள் நடந்த நிகழ்வுகளை.
அவளருகே அமர்ந்து ரசித்தான் ஸ்ரீனிவாசன்.

அகத்தியர் ஆசிரமத்தில் ஆலயம் சென்றது;
அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்டது;

அரசி தரணி தேவியை சந்தித்துப் பேசியது;
அரசனிடம்  பேசி அவன் அனுமதி பெற்றது;

பிரபுக்கள் மனம் மகிழ்ந்து சம்மதம் தந்தது ;
பிரதானிகள் மனம் மகிழ்ந்து சம்மதித்தது;

குறத்தி ஒருத்தி வந்து சொன்ன செய்திகள்;
குடி மக்களிடம் காணப்பட்ட மன மகிழ்ச்சி;

நகரத்தின் எல்லைவரை வந்து தன்னை
நட்புடன் வழியனுப்பிய அரசன், அரசியர்;

வகுள மாலிகையைப் பேசச் சொல்லி விட்டு
வெகு சுவாரசியமாகக் கேட்டான் ஸ்ரீனிவாசன்.

17a. பணம் தேவை!

பல்லக்குத் தூக்கிகளின் அரவம் கேட்டது;
பல்லக்கில் வருவது யாராக இருக்கும் ?

நெருங்கி அருகில் வந்து நின்றது பல்லக்கு;
இறங்கினார் சுகமுனிவர் பல்லக்கிலிருந்து.

மேனி சிலிர்க்கத் தொழுது வணங்கிய பின்,
ஸ்ரீனிவாசனிடம் சமர்ப்பித்தார் பேழையை.

“பத்மாவதியின் மணம் பற்றிப் பேச வேண்டும்.”
உத்தம முனிவரை வரவேற்றான் ஸ்ரீனிவாசன்.

பாத பூஜை செய்தான் முனிவருக்கு – பின்னர்
ஆதரவுடன் அழைத்துச் சென்றான் புற்றுக்கு.

மண நாள் பூரண சம்மதமே மணமகனுக்கு!
மன மகிழ்வோடு திரும்பினார் சுகர் மறுநாள்.

“பெரிய இடத்தில் நிச்சயித்துள்ளோம் பெண்ணை.
சரியான அந்தஸ்துடன் செல்ல வேண்டும் அங்கு!”

ஆதிசேஷனையும், பிரம்மனையும் நினைத்ததும்
ஆதிசேஷனும், பிரம்மனும் வந்து தோன்றினார்கள்.

“சித்திரை சுத்தத் திரயோதசியில் என் திருமணம்;
உத்தம மணப்பெண் இளவரசி பத்மாவதி தேவி.

முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள்
தப்பாமல் வரவேண்டும் என் திருமணம் காண.

துரிதமாகச் செயல் படவேண்டும் நீங்கள்,
விரைந்து மணநாள் நெருங்கி வருவதால்!”

“கூட்டம் சேர்ப்பது எங்கள் வேலை – ஆனால்
வாட்டம் அடைகிறோம் பணம் இல்லாததால்!

லக்ஷ்மி இல்லாத இடத்தைச் செல்வம் – அ
லட்சியம் செய்வது நாம் அறிந்தது தானே!”

17b. குபேரன்

“பெறுவோம் குபேரனிடமிருந்து கடனாக;
திருப்புவோம் அதை வட்டியும், முதலுமாக!”

அழைக்கப்பட்டான் குபேரன் சேஷாச்சலத்துக்கு;
அடைந்தான் குபேரன் உடனேயே சேஷாச்சலம்.

திருமணச் செலவுக்குக் கடன் கேட்டான் பிரமன்;
திருப்பித் தருவதாக வாக்களித்தான் பிரம்ம தேவன்.

ஒரு கோடியே பதினான்கு லக்ஷம் பொற்காசுகள்!
ஒரு வருடத்திய வட்டி ஒரு லக்ஷம் பொற்காசுகள்!

“தந்து விடுவோம் வட்டியை பிரதி வருடமும்!
தந்து விடுவோம் கடனைக் கலியுக முடிவில்!”

எழுதினான் பிரமன் கடன் பத்திரத்தை – கை
எழுத்திட்டான் ஸ்ரீனிவாசன் கடன் பத்திரத்தில்.

கையெழுத்திட்டான் பிரமன் ஒரு சாட்சியாக;
கையெழுத்திட்டன இரு மரங்கள் சாட்சிகளாக.

தொடங்கின ஏற்பாடுகள் கடன் கிடைத்தவுடனே.
மடங்கல்கள் சென்றன தேவர், முனிவர்களுக்கு.

தங்கும் ஏற்பாடுகள் செய்தனர் அதிதிகளுக்கு.
தருக்கள் குலுங்கின காய், கனிகள் நிறைந்து.

சிவன், உமை அடைந்தனர் சேஷாச்சலத்தை.
சிவ கணங்கள் தொடர்ந்தன நந்தி தேவனை.

அளித்தான் குபேரன் பட்டுப் பீதாம்பரங்களை;
அளித்தான் குபேரன் நவரத்ன ஆபரணங்களை.

ஸ்ரீனிவாச கல்யாணம் காண வந்து குழுமினர்;
இனிமையான சூழ்நிலை நிலவியது அங்கே.

17c. முதல் உரிமை

மணமகனைப் புனித நீராட்டுவதற்கு
முன் வந்தனர் முதல் உரிமை கோரி!

வகுள மாலிகை முதல் உரிமை கோர,
வெகு நயமாகக் கூறினார் ஸ்ரீனிவாசன்;

“லக்ஷ்மிக்கு முதலுரிமை மறவாதீர்!”
“லக்ஷ்மி வருவாளா திருமணத்துக்கு?”

“கரவீரபுரத்திலிருக்கும் லக்ஷ்மியை
வரவழைக்க ஒரு வழி கூறுகிறேன்.

உடல் நலமில்லை எனக்கு என்றால்,
உடன் ஓடி வருவாள் லக்ஷ்மிதேவி!”

கதிரவனை அனுப்பினர் கரவீரபுரத்துக்கு;
கதிரவன் செய்தி சொன்னான் லக்ஷ்மிக்கு.

“வைகுந்தம் விட்டு நீங்கள் வந்ததால்,
வையகம் வந்துள்ளார் ஸ்ரீனிவாசரும்.

உடல் நிலை பாதிக்கப் பட்டுள்ளது தேவி!
தடை சொல்லாமல் வரவேண்டும் தாயே!”

கரவீரபுரத்திலிருந்து லக்ஷ்மி புறப்பட்டதும்,
பிரமனும், சிவபிரானும் கைலாகு கொடுக்க;

நலிவுற்றவன் போல நடித்தான் ஸ்ரீனிவாசன்
பொலிவிழந்து உடல் நலம் குன்றியவனாக!

“ராமாவதாரத்தில் தந்த வரம் நினைவுள்ளதா?”
“ஆமாம் ஸ்வாமி! நினைவுள்ளது நன்கு எனக்கு!

வேதவதியை ஏற்றுக் கொள்ளச் சொன்னேன்;
வேளை வந்ததும் ஏற்றுக் கொள்வேன் என்றீர்!”

“வேளை வந்து விட்டது தேவி இப்போது!
வேதவதியே ஆவாள் இளவரசி பத்மாவதி!

சித்திரை சுத்தத் திரயோதசியில் திருமணம்;
உத்தேசித்தேன் உன்னை இங்கு வரவழைக்க.”

ஆனந்தம் அடைந்தாள் லக்ஷ்மி இது கேட்டு.
அனைவரும் சென்றனர் ஸ்ரீநிவாசன் புற்றுக்கு.

18a. புறப்பாடு

நாராயண புரத்துக்குச் செல்லும் துடிப்பு
நாட்காலையிலேயே துவங்கி விட்டது.

அலங்கரித்துக் கொண்டனர் அழகாக – பிறர்
அலங்கரித்துக் கொள்ள உதவிகள் செய்தனர்.

சரசர என்றன புத்தம் புதிய பட்டாடைகள்;
கலகல என்றது மகிழ்ச்சியின் வெளிப்பாடு.

புனித நீரால் ஸ்ரீநிவாசனுக்கு அபிஷேகத்தை
இனிதே தொடங்கி வைத்தாள் லக்ஷ்மி தேவி.

பட்டுப் பீதாம்பரம் அணிந்தான் ஸ்ரீநிவாசன்;
இட்டாள் லக்ஷ்மி அவன் நெற்றியில் திலகம்.

வைத்தாள் திருஷ்டிப் பொட்டை அன்னை – அணி
வித்தாள் ரத்தின ஆபரணங்களைப் பார்வதி தேவி.

அழகுக்கு அழகு கூட்டினர் தேவர்கள் ஒன்றுகூடி,
அணிவித்தனர் பல வண்ண மலர் மாலைகளை.

கொட்டிக் கிடந்தன உணவுப் பொருட்கள்;
அட்டில் பணியோ அக்னி தேவனுடையது!

பாத்திரங்கள் இல்லை சமையல் செய்வதற்கு!
தீர்த்தங்கள் மாறின சமையல் பாத்திரங்களாக!

முனிவர்கள் தேர்ந்தெடுத்தனர் சமதளத்தை;
இனிய கோலங்கள் வரைந்தனர் பெண்கள்.

சங்கல்பம் செய்தான் மணையில் அமர்ந்து;
சமீ விருக்ஷமே தன் குலதெய்வம் என்றான்.

சுவாமி புஷ்கரிணியில் ஸ்தாபித்தான் அந்தச்
சமீ விருக்ஷத்தின் ஒரு கிளையை உடைத்து.

பகலுணவைத் தயார் செய்துவிட்டான் அக்னி.
பரிமாறினான் நரசிம்மருக்கு நிவேதனம் செய்து.

பரிமளச் சந்தனம், தாம்பூலம், புஷ்பம் இதைப்
பரிவுடன் அளித்தனர் வந்திருந்த அதிதிகளுக்கு.

நாராயணபுரம் புறப்பட்டனர் உணவு உண்டபின்;
ஏராளமான வாஹனங்கள் காத்திருந்தன அங்கே.

ஆரோஹணித்தனர் ஸ்ரீனிவாசன் கருடன் மீதும் ,
பிரமன் அன்னத்தின் மீதும், சிவன் நந்தியின் மீதும் .

கரிகள், பரிகள், ரதங்களில் அமர்ந்து கொண்டு
உரிமையுடன் சென்றனர் நாராயணபுரத்துக்கு.

18b. சுகரின் உபசரிப்பு

சுகமாக அடைந்தனர் பத்ம தீர்த்தத்தை;
சுகமுனிவரின் ஆசிரமம் இருந்தது அங்கு.

பூரண கும்பத்துடன் காத்திருந்தார் முனிவர்,
பூரண மகிழ்ச்சியுடன் ஒரு சிறு இடைவேளை.

பாத பூஜை செய்தார்; வலம் வந்தார் சுகர்
பரம பக்தியுடன் மணமகன் ஸ்ரீனிவாசனை.

“மணக் கோலத்தில் உம்மைக் காண்பதற்கு
மாதவம் செய்திருப்பேன் முற் பிறவியில்.

இளைப்பாறி விட்டுச் செல்ல வேண்டும்;
களைப்பு மாறும் வரை இங்கு தங்கி விட்டு.

உபசரித்துப் பெற வேண்டும் ஆனந்தம்!
உபசார வார்த்தையல்ல உண்மையே!”

“இத்தனை பேர்களை உபசரிப்பதா எனச்
சிந்தனை செய்கின்றேன் நான் முனிவரே!”

“ஈரேழு உலகங்களும் ஒன்றாகி ஒளிந்து
இருப்பது உமக்குள் அல்லவா நாராயணா?

ஒரு கவளம் தாங்கள் உண்ட மாத்திரத்தில்
ஒரு புவனம் முழுவதும் திருப்தி அடையுமே!”

பர்ணசாலைக்குச் சென்றான் முனிவருடன்,
பாலும், பழமும் உண்டான் ஸ்ரீனிவாசன்.

திருப்தி அடைந்தார் சுகர் அவன் உண்பது கண்டு.
திருப்தி அடைந்தனர் அதிதிகள் உண்டது போல .

பிரயாணம் தொடங்கியது கலகலப்பாக,
நாராயணபுரத்தை நோக்கி மறுபடியும்.

19a. மணவிழா

எல்லையில்லா ஆனந்தம் அடைந்தனர் – நகர
எல்லையை மணமகன் குழுவினர் அடைந்ததும்.

எல்லையில்லா ஆனந்தம் அடைந்தனர் – அதைச்
சொல்லக் கேட்ட ஆகாச ராஜனும், தரணி தேவியும்.

‘எதிர் கொண்டழைக்க வேண்டும் நாமே சென்று
இதர பிரதானிகள் அமைச்சர்களுடன் இன்று!”

பட்டத்து யானை நின்றது தயாராக – ரத்தினப்
பட்டத்தை அணிந்திருந்தது பெரிய நெற்றியில்.

தந்த நுனிகளில் துலங்கின தங்கக் குமிழிகள்.
தந்தனர் யானையிடம் ரோஜாமலர் மாலையை.

ஆகாசராஜன், தரணி தேவி அமர்ந்தனர் – யானை
அம்பாரியில் மணப் பெண் பத்மாவதியுடன்.

இசைக் குழுவினர் நடந்தனர் யானை முன்னால்;
இளம் பெண்கள் தொடர்ந்தனர் யானை பின்னால்.

மலர்கள், சந்தனம், பன்னீர் இவை சொரிந்து
மலர்ந்த முகத்தோடு மணமகனை வரவேற்க;

ஒலித்தது மணமகன் குழுவின் ஆரவாரம்!
தலை நிமிரவில்லை மணமகள் நாணத்தால்!

பூரண கும்பத்துடன் வரவேற்றான் மன்னன்
நாரணன் கோஷ்டியைத் திருமணத்துக்கு.

ஒலித்தது வெற்றி கோஷம் “ஜெயா விஜயீ பவ!”
தெளித்தனர் நறுமண மலர்களை நாட்டு மக்கள்.

வலம் வந்தது பகவானைப் பட்டத்து யானை;
தலையால் வணங்கித் தந்தது ரோஜா மாலை.

வெகு நாணத்துடன் முன் வந்தாள் பத்மாவதி;
வகுள மாலிகையும் முன் வந்தாள் குழுவிலிருந்து.

“பத்மாவதியை ஏற்றுக் கொள்ளுங்கள்!” என்றதும்
“உத்தமியை நீ  ஏற்பாய்!” என்றாள் வகுளமாலிகை.

19b. மாலை மாற்று

கருடனிலிருந்து இறங்கினான் ஸ்ரீனிவாசன்
கறுத்த மேனியில் ரத்தின மாலைகள் புரள.

அணிவித்தாள் மலர்மாலையைப் பத்மாவதி.
அணிவித்தான் மலர்மாலையை ஸ்ரீனிவாசன்.

பத்மாவதியின் கரம் பற்றி ரதம் ஏறியதும்
கூத்தாடினார் ஆனந்தத்தில் அனைவரும்.

வைகுந்தமாக மாறி இருந்தது நாராயணபுரம்.
வெகு நேர்த்தியான வளைவுகள், பந்தல்கள் !

வண்ணக் கோலங்களுடன், பூரண கும்பங்கள்;
பெண்கள் எடுத்தனர் ஆரத்தி வழி நெடுகிலும்!

நின்றான் மலர்த் தட்டுடன் ஆகாச ராஜன்;
நின்றாள் தீர்த்தக் குடத்துடன் தரணி தேவி.

வசுதானா என்னும் பட்டத்து இளவரசன்
வாசனை வீசும் சந்தனத்துடன் நின்றான்.

ஆகாச ராஜன் செய்தான் பாத பூஜை – பின்
அழைத்துச் சென்றான் தன் அரண்மனைக்கு.

கூடாரம் அமைத்திருந்தனர் தங்குவதற்கு,
கூட வந்தவர்களுக்குத் தனித் தனியாக!

நகரம் ஜொலித்தது ஜகஜ் ஜோதியாக!
பகலா? இரவா? பேதம் தெரியவில்லை.

ஆகாரம் வந்தது தங்கியிருந்த இடத்துக்கு;
ஆகாச ராஜன் உயர்வாக உபசரித்தான்.

மற்றவர் உண்டனர் அரண்மனை முற்றத்தில்;
குற்றம் சொல்ல முடியாத இனிய உபசரிப்பு!

இரவில் நடந்தது அப்சரசுகளின் நாட்டியம்;
இதுவரை கண்டதில்லை மனிதர் எவருமே!

உறங்கவில்லை எவருமே அன்று இரவு;
உற்சாகமாகக் காத்திருந்தனர் விடியலுக்கு.

20a. திருமணம்

நீராடிப் புத்தாடை அணிந்தனர் விடியற்காலை;
நடக்க விருந்த திருமணத்தால் மிக உற்சாகம்.

கண்ணைப் பறிக்கும் ஜரிகைப் பீதாம்பரத்தைப்
பெண்ணைப் பெற்ற மன்னன் அனுப்பினான்.

ஆபரணங்களை அணிவித்தனர் லக்ஷ்மி, உமை!
ஆணழகன் ஸ்ரீனிவாசன் ஆனார் மணமகனாக!

வாசனைத் திரவிய நீரில் குளிக்க வைத்தபின்
வாரி ஜடை போட்டனர் பத்மாவதி தேவிக்கு.

வைத்திருந்த புஷ்பங்களின் பாரத்தினால்
வைத்திருந்தாள் தன் தலையைத் தாழ்த்தி!

தான் தன் மணநாளன்று அணிந்தவற்றை
தன் மகளுக்கு அணிவித்தாள் தரணி தேவி.

நெருங்கி விட்டது சுப முஹூர்த்த வேளை;
நெருங்கினர் மணமண்டபத்தை அனைவரும்.

இந்திரன் வெண்கொற்றக் குடை தாங்க,
அந்த நிழலில் நடந்தான் ஸ்ரீனிவாசன்.

அளித்தான் தொண்டைமான் மலர்மாலை;
அணிவித்தாள் ஸ்ரீநிவாசனுக்குப் பத்மாவதி.

ஊஞ்சல் பாடினர் வாணியும், லக்ஷ்மியும்;
ஊஞ்சல் ஆடினர் ஒய்யாரமாக மணமக்கள்.

திருஷ்டி கழித்தபின் சென்றனர் மண்டபம்,
திருஷ்டி படும் மணமக்களைக் கண்டால்!

வைதீகக் காரியங்கள் செய்தார் வசிஷ்டர்;
வேத கோஷம் முழங்க மாங்கல்ய தாரணம்!

அன்னையர் இருவரும் தழுவி மகிழ்ந்தனர்;
ஆனந்த வெள்ளத்தில் மன்னன் ஆகாச ராஜன்!

வரிசைகள் வந்து சேர்ந்தன கூடாரத்துக்கு;
பரிசுகள் வழங்கினர் வந்த விருந்தினர்களுக்கு.

20b. பிரியாவிடை

நடந்தது திருமணம் நான்கு நாட்களுக்கு;
முடிந்ததும் திரும்பவேண்டும் தத்தம் இல்லம்.

விடை பெற்றனர் மணமக்கள் எல்லோரிடமும்;
மடை திறந்து பாய்ந்தது அரசியின் கண்ணீர்.

வகுள மாலிகை தேற்றினாள் தரணி தேவியை,
“வெகு தூரம் செல்லப் போவதில்லையே!” என்று.

“எப்படியும் கணவன் வீடு செல்ல வேண்டியவள்!
எப்போது வேண்டுமானாலும் காண முடியுமே!”

கணவன் வீட்டில் நடந்துகொள்ள வேண்டிய
கண்ணியத்தை எடுத்துரைத்தாள் அன்னை.

ஆகாச ராஜன் தன் மனம் திறந்து பேசினான்
பூலோக நாதன் மருமகன் ஸ்ரீனிவாசனிடம்.

“செல்லமாக வளர்ந்து விட்டாள் பத்மாவதி!
சொல்ல முடியாது பொறுப்பு உள்ளதாக.

தெரியாமல் அவள் தவறு செய்துவிட்டால்
பெரிய மனதுடன் அவளை மன்னிக்க வேண்டும் .

அம்மையாரிடம் நான் சொன்னதும் இதுவே;
தம்பதிகள் இனிதே வாழவேண்டும்!” என்றான்

வரிசைகள் வந்து இறங்கின வரிசையாக.
“வரம் தருவேன் கேளுங்கள்” என்றான்.

“ஒன்று தான் வரம் வேண்டும் எமக்கு;
என்றுமே உம்மை மறவாது இருப்பது!”

“மறக்கவே மாட்டீர்கள் என்னை எவருமே!
சிறப்பாகக் குடி இருப்பேன் உம் சிந்தையில்!”

சேஷாசலம் சென்றனர் மணமகன் குழுவினர்;
ஆகாச ராஜனும், தரணியும் உடன் சென்றனர்.

21a. பிரியா விடை

ஆகாசராஜன், தரணி தேவி திரும்பிப்
போகாமல் உடன் சென்றனர் வெகுதூரம்.

ஸ்ரீநிவாசன் சொன்னான் பத்மாவதியிடம்,
“இனிமையாகப் பேசித் திருப்பி அனுப்பி விடு!”

தேற்றினாள் பத்மாவதி தாய் தந்தையரை,
“ஏற்க வேண்டும் தவிர்க்க இயலாத பிரிவை!”

சேஷாச்சலம் செல்லவில்லை ஸ்ரீனிவாசன்;
சென்றனர் அகத்தியரின் ஆசிரமத்துக்கு.

சுவர்ணமுகி நதித் தீரத்தை அடைந்தனர்;
பர்ணசாலை அமைத்தனர் மணமக்களுக்கு.

இந்திராதி தேவர்கள் திரும்பிச் சென்றனர்;
தந்தார் பிரமன் பொன்னும் மணியும் பரிசாக!

கரவீர புரம் திரும்பினாள் லக்ஷ்மி தேவி;
தர விரும்பினாள் தடையில்லாத ஆனந்தம்.

ஆடிப் பாடிக்காலம் கழித்தனர் மணமக்கள்;
ஓடை நீரில்  விளையாடினர் மணமக்கள்.

மலருடன் சென்று ஆராதித்தாள் வராஹரை
மறவாமல் அனுதினம் தாய் வகுளமாலிகை.

மலர் சூட்டி அலங்கரித்தனர் பத்மாவதியை
மாலை வேளைகளில் முனிவர் மனைவிகள்.

குதிரை வீரன் விரைந்து வந்தான் ஒருநாள்;
அதிர வைக்கும் செய்தி ஒன்று சொன்னான்.

“அரசன் உடல்நிலை மோசம் அடைந்துள்ளது
அரசியார் அனுப்பினார் செய்தி தெரிவிக்க.”

ரதம் தயாரானது பயணத்துக்கு – இருவரும்
விரைந்தனர் உடன் நாராயண புரத்துக்கு.

22. விண்ணுலக வாழ்வு

சயனித்து இருந்தான் ஆகாசராஜன் மஞ்சத்தில்;
சோகமே வடிவாக தரணி தேவி அருகினில்!

இளவரசனும், இளவல் தொண்டைமானும்
இருந்தனர் கால் மாட்டில் அமர்ந்தபடி.

மகளைக் கண்டதும் மகிழ்ச்சி அடைந்தான்;
மருமகனைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்தான்.

ஒப்படைத்தான் இளவரசனை ஸ்ரீநிவாசனிடம்;
ஒப்புக் கொள்ளச் செய்தான் அரசன் தன் அரசி

தரணியின் உடன்கட்டை ஏறும் முடிவினை.
தரணி வாழ்வினைத் துறந்தான் அந்த மன்னன்.

சுகர் செய்வித்தார் இறுதிச் சடங்குகள்
சிதை மூட்டினான் இளவரசன் வசுதானன்.

சர்வாலங்கார பூஷிதையாக தரணி தேவி
சுற்றி வந்தாள் எரியும் சிதையை மும்முறை.

தீயினில் புகுந்து விட்டாள் ஒரு நொடியில்!
தீ எரிந்தது கொழுந்து விட்டு வானளவாக!

வந்து இறங்கியது விண்ணிலிருந்து விமானம்;
வந்தனர் வெளியே திவ்ய சரீரத்துடன் இருவரும்.

ஆகாசராஜனும், தரணி தேவியும் அமர்ந்ததும்
வேகமாக விண்ணில் பறந்து மறைந்தது அது!

23a. சிங்காதனம்

வசுதானனுக்கு முடிசூட்டினான் ஸ்ரீநிவாசன்;
வசுதானனுக்கு உதவிடத் தொண்டைமான்!

திரும்பினர் அகத்தியரின் ஆசிரமத்துக்கு;
திரும்பியது இயல்பு நிலை மனதில் மெல்ல.

தொண்டைமான் எதிர்த்தான் புதிய அரசனை!
“பண்டைக் காலத்தின்  இளவரசன் நானே!” என்று.

“தந்தைக்குப் பின் தனயன் ஆளவேண்டும்!” என்ற
தன் கட்சியை எடுத்து உரைத்தான் வசுதானன்.

பூசல் தொடங்கியது மிகச் சிறிய அளவில்;
பூசல் பெருகி விட்டது வெகு விரைவில்.

பிரதானிகளின் துணையோடு தொண்டைமான்
அரசன் வசுதானனைஅழிக்க விரும்பினான்.

உதவி கோரினான் தொண்டைமான் ஸ்ரீநிவாசனிடம்;
மதி இழந்தவனிடம் பேசி  என்ன பயன் விளையும்?

அளித்தான் அவனுக்குத் தன் சங்குச் சக்கரங்களை!
களித்தான் தொண்டைமான் தான் வென்றது போல.

செய்தி அறிந்ததும் பதறி ஓடி வந்தான் அங்கு
செய்வது அறியாத வசுதானன் ஸ்ரீநிவாசனிடம்.

“என்னைக் கொல்ல எண்ணும் சித்தப்பாவுக்கு
எந்தை போன்ற உங்கள் உதவி தேவையா?

பாசமே இல்லையா பத்மாவதி அக்கா! நான்
மோசம் போவதில் உனக்குச் சம்மதமா?”

தேற்றினான் ஸ்ரீநிவாசன் மைத்துனனை,
“தோற்றுப் போவான்; கவலைப் படாதே!

ஆயுதங்கள் உள்ளன அவனிடம் ஆனால்
ஆதரித்துப் போரிடுவேன் உன் பக்கம் நான்.

சமரசம் பேசு முதலில். சண்டையைத் தவிர்!”
சமரசத்துக்கு ஒப்பவில்லை தொண்டைமான்!

23b. சண்டை

அமைதியை விரும்பியது ஸ்ரீனிவாசன் மட்டுமே!
ஆகாயக் கோட்டை காட்டினான் தொண்டைமான்!

நாரணனின் சங்கும், சக்கரமும் கிடைத்ததும்
நாராயாணபுர சிங்காதனம் கிடைத்தது போல!

சமரசத்துக்குத் தயாராக இல்லை அவன்;
சமருக்குத் தயார் ஆனான் படை திரட்டி.

சிற்றப்பன் போருக்குத் தயார் ஆனதால்,
சிறப்பாகத் தயார் ஆனான் வசுதானனும்.

செய்தி அனுப்பினான் ஸ்ரீநிவாசனுக்கு;
செய்தி வந்ததும் சென்றான் களத்துக்கு.

“உயிர் சேதம் சம்மதமா?” என்றாள் பத்மாவதி
“உயிர் சேதம் தவிர்க்கவே செல்கிறேன் நான்!”

நிலமை தலைகீழாக இருந்தது அங்கு!
நிகழவில்லை சமரசம் நினைத்தபடி!

சொன்னபடித் தலைமை தாங்கினான்
மன்னன் வசுதானன் படைக்கு ஸ்ரீநிவாசன்

யுத்தத்தில் உயிர் சேதத்தைத் தவிர்க்க
யுக்தி ஒன்று செய்தான் யுத்தகளத்தில்.

தொண்டைமான் முன் ஸ்ரீநிவாசன் செல்லத்
தொண்டைமான் எய்தான் மார்பில் ஓர் அம்பு

மயங்கிச் சாய்ந்து விட்டான் ரதத்திலேயே!
தயங்கிச் சண்டையை நிறுத்தினான் எதிரி!

ஆசிரமத்தை எட்டியது போர்ச் செய்தி
“பேசி நிறுத்துவேன் போரை!” என்று கூறி

முனிவருடன் கிளம்பினாள் பத்மாவதி
தனி ஒருவளாகப் போரை நிறுத்துவதற்கு.

23c. சமரசம்

“அடிபட்டு மயங்கி விட்டான் ஸ்ரீநிவாசன்!”
துடித்து விட்டாள் பத்மாவதி செய்தி கேட்டு.

கதறி அழுதபடி ஓடி வந்தாள் அவனிடம்,
பதறிய அவன் கேட்டான், “ஏன் வந்தாய்?”

“சமரசம் பேச வந்தார் தேவியார் – தாங்கள்
சமரில் அடிபட்டது கேட்டு துடித்து விட்டார்.”

அகத்தியர் இடைமறித்துக் கூறினார் – ஆனால்
“அதற்கு இடமே இல்லை!” என்றான் அவன்.

“இருவரையும் வரவழையுங்கள் என்னிடம்;
இருவருக்கும் செய்கிறேன் நான் சமரசம்”

அகத்தியர் அழைத்து வந்தார் இருவரையும்;
அகத்தீ கண்களில் வெளிவந்தது பத்மாவதிக்கு!

“அழிவதென முடிவு செய்து விட்டீர்களா?
பழி பாவத்துக்கும் அஞ்சுவது இல்லையா?”

“இளவரசுப் பட்டம் காட்டினார் என் அண்ணா!
இது உனக்கு நினைவு இல்லையா பெண்ணே ?”

“அரசனாக்கினார் என்னை ஸ்ரீநிவாசனே!
தர வேண்டாமா நாம் அதற்கு மதிப்பு ?”

“சமரஸத்துக்கு ஏற்பாடு செய்வார் இவர்;
சம்மதமா இருவருக்கும் கூறுங்கள்!” என

“தந்தைக்குப் பின் அவர் இடத்தில் நாங்கள்
எந்தையாகக் கருதுவது இவரைத் தானே!”

“நாட்டை இரு சம பாகங்கள் ஆக்குவோம்
நாட்டை ஆள வேண்டும் இருவரும் நட்புடன்!’

இருவரும் ஏற்றனர் இந்த முடிவினை;
இரண்டாக்கப் பட்டது அந்த ராஜ்ஜியம்.

தொண்டை நாடு தொண்டைமானுக்கு!
சோழ நாடு கிடைத்தது வசுதானனுக்கு!

நிலைமையைச் சீர் செய்து திரும்பினர்
நிம்மதியாக அகத்தியருடன் அவர்கள்.

24a. ஆலயம்

தொண்டைமான் காண வந்தான் ஸ்ரீநிவாசனை;
கொண்டு வந்தான் ஏராளமான பரிசுகளை.

” ஒன்றும் குறை இல்லை இந்த ஆசிரமத்தில்;
என்ன செய்வேன் பரிசுகளை வைத்துக் கொண்டு?”

“எண்ணியிருந்தேன் அண்ணன் மருமகன் என்று!
உண்மை ஸ்வரூபத்தை உணர்ந்தேன் இன்று!”

“அன்னிய இடத்தில் எத்தனை காலம்?
பொன்னும் மணியும் தர வேண்டாம்

தங்குமிடம் ஒன்று அமைத்துத் தரலாமே;
எங்களுக்கு அது தனியிடம் என்று ஆகுமே!”

“எங்கே எப்படி அமைக்க வேண்டும்;
தாங்கள் கோடி காட்டினாலே போதும்!”

மாலையில் சென்றனர் மீண்டும் புற்றுக்கு.
“ஆலயம் நிர்மாணிப்பாய் இந்த இடத்தில்!

புற்று உள்ள இடத்தில் வேண்டும் கர்ப்பக்கிரகம்
சுற்றிலும் எழுப்ப வேண்டும் மதில் சுவர்களை.

வைகுந்த வாசல் வேண்டும் இடையில்;
இரண்டாம் பிராகாரத்தில் வேண்டியவை

மடைப் பள்ளியும், கல்யாண மண்டபமும்,
மணக்கும் திரவியசாலையும், பள்ளி அறையும்.

இருக்க வேண்டும் மூன்றாவது பிராகாரத்தில்
உக்கிராண அறைகள், ஆஸ்தான மண்டபங்கள்.

வேண்டும் அழகிய ஏழு வாயில்கள்;
வேண்டும் அழகிய இரு கோபுரங்கள்;

வேண்டும் ஒரு கோபுரம் நுழை வாயிலில்;
வேண்டும் ஒரு கோபுரம் பிராகார வாயிலில்;

வேண்டும் பலி பீடமும், துவஜ ஸ்தம்பமும்!”
தொண்டைமான் நினைவில் கொண்டான்.

24b. ரங்கதாஸன்

தோட்டத்தில் இருந்தது ஒரு கிணறு,
“தோண்டியவன் நீயே முற்பிறப்பில்!”

வைகாநஸன் ஒரு முனிவர் சோழநாட்டில்;
வைத்தார் தணியாத ஆசையை மனத்தில்.

வைகுந்தனைக் கிருஷ்ணணாகக் காணக்
கைக்கொண்டார் கடுமையான தவநெறி.

தவம் செய்தார் கனி, கிழங்குகள் உண்டு!
தவம் செய்தார் தழை, சருகுகள் உண்டு!

தவம் செய்தார் உணவே உண்ணாமல்;
தவம் செய்தார் காற்றை சுவாசித்து!

கண் எதிரே தோன்றினான் வைகுந்தன்
“கண்ணனாகக் காட்சி தர வேண்டும்” என,

“ஸ்ரீநிவாசனை ஆராதித்து வந்தால்
இனிதே நிறைவேறும் உம் விருப்பம்!”

கால் நடையாகச் சென்றார் சேஷாசலம்;
கண்டார் வழியில் பக்தன் ரங்கதாஸனை.

உடன் நடந்தான் முனிவருடன் அவன்;
“கேட்டான் எதற்கு சேஷாசலத்துக்கு?”

“கிருஷ்ணாவதாரத்தில் செய்தான் லீலைகள்;
கிருஷ்ணனைக் காணக் கடும் தவம் செய்தேன்.

சேஷாசலம் ஸ்ரீநிவாசனை ஆராதித்தால்
பேஷாக நிறைவேறுமாம் என் கோரிக்கை”

முனிவருடன்  நடப்பது நல்லதாகி விட்டது!
இனிக்கும் கண்ணனைத் தரிசிக்கலாமே!

“அனாதை என்னைப் பணியாளாக எற்பீர்.
அநேக சேவைகள் செய்து உதவுவேன்!”

சேஷாசலத்தைச் அடைத்தனர் இருவரும்
வாசஸ்தலம் ஸ்வாமி பூஷ்கரிணீ அருகே.

தினமும் ஆராதித்தனர் பகவானை – ரங்கன்
முனிவருக்குப் பணிவிடைகள் செய்தான்.

வனத்துக்குச் சென்று மலர் கொய்தவன்
நந்தவனம் ஒன்று அமைக்க விரும்பினான்.

முனிவரிடம் விண்ணப்பித்தான் ரங்கன்;
கனிவுடன் பாராட்டி முனிவரும் உதவினார்.

உருவானது அழகிய நந்தவனம் அங்கே!
இருவாக்ஷி, சம்பங்கி, ஜாதி, முல்லை

மல்லிகை, அலரி, மந்தாரை என்று
மலர்கள் பூத்துக் குலுங்கின விரைவில்.

நறுமணம் நிறைத்தது நாற்றிசைகளை;
நிறங்கள் மயக்கின காண்பவர் கண்களை!

விடியலில் நீராடி மலர் கொய்து வருவான்;
செடிகளுக்கு நீரூற்ற வெட்டுவித்தான் கிணறு.

மலர் பறிக்கச் சென்ற ரங்கதாசன் ஒருநாள்,
மனத்தை மயக்கும் காட்சியைக் கண்டான்!

திவ்விய தேஜசுடன் சென்றான் கந்தர்வன்,
திவ்விய அழகு வாய்ந்த தன் மனைவியுடன்.

ஆகாய மார்க்கமாகச் சென்றவர் கண்டனர்
ஆதி வராஹமூர்த்தி ஆலயத்தை அங்கே.

ஸ்வாமி பூஷ்கரிணீயில் புனித நீராடி
ஸ்வாமி தரிசனம் செய்ய விரும்பினர்.

கந்தர்வனும், மனைவியும் நீராடுவது கண்டு
வந்த வேலையை மறந்து போனான் ரங்கன்.

சௌந்தரியத்தில் மனம் பறி போனதால்
செல்லவில்லை மலர் கொய்து ஆசிரமம்.

கரையேறி, ஆலயத்தில் தொழுது, கண்ணுக்கு
மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தான்!

24d. தவறும் தண்டனையும்

வானில் பறந்து மறைந்தனர் கந்தருவர்;
வந்தது சுய நினைவு ரங்கதாஸனுக்கு.

‘மலர் கொய்ய வந்தவன் அதைச் செய்யாமல்
மனதை அலைய விட்டு விட்டேனே அந்தோ!

கெடுத்தேனே பூஜையை அநாவசியமாக;
காக்க வைத்தேனே முனிவரை இதுவரை!

உல்லாசமாக வேடிக்கை பார்த்து நின்று
உபாஸனையில் தடங்கல் செய்தேனே!’

பதறியது உடல் செய்த தவற்றை எண்ணி;
பறித்துக் கொண்டு ஓடினான் மலர்களை!

உக்கிர மூர்த்தியாக மாறி இருந்தார் முனிவர்;
சிக்கெனக் காலைப் பற்றிக் கொண்டான் ரங்கன்.

“பாதகம் செய்துவிட்டேன் மன்னியுங்கள்!”
“தாமதம் ஏன் எனச் சொல்லு நீ முதலில்!”

“மாயைக்கு அடிமை ஆகிவிட்டேன் நான்!
மனதைத் தறிகெட்டு அலைய விட்டேன்!”

ஸ்ரீநிவாசன் தோன்றினார் அவர்கள் முன்பு;
சேவித்தான் ரங்கதாசன் விழுந்து விழுந்து.

“தவறு செய்தவன் தண்டனை அடைவான்;
தவறு தான் என் பூஜையைத் தாமதம் செய்தது!

சுதன்மனின் இளைய மகனாகப் பிறந்து பல
சோதனைகளை அனுபவி அடுத்த பிறவியில்!”

“பாதங்களை அடைய விரும்பியவனுக்குச்
சோதனைகளை அனுபவிக்கும் சாபமா?”என

“செய்த தவம் வீண் போகாது ஒரு நாளும்;
செய்தாய் தாமதம் பகவத் பூஜையில் – அது

செய்யும் சற்றுத் தாமதம் விரத பூர்த்தியில்;
எய்துவாய் எண்ணிய பேற்றைத் தாமதமாக!

மன்னன் மகனாகப் பிறந்து ஆள்வாய்
தொண்டை நாட்டை உன் குடைக் கீழ்.

அழைத்து வருவேன் நானே உன்னை இங்கு;
ஆலயம் எழுப்பச் செய்வேன் இதே இடத்தில்!”

25a. ஆனந்த நிலயம்

“ரங்க தாஸனாக இருந்தவனும் நீயே!
இங்கு கிணறு வெட்டுவித்தவனும் நீயே!

சாபம் காரணமாக நின்றுவிட்ட பணியைத்
தாபம் தீரத் தொடருவாய் இந்தப் பிறவியில்!”

தொண்டைமான் தொடங்கினான் ஆலயப் பணியை;
கொண்டு வந்து குவித்தான் கற்களைப் பாறைகளை!

வண்டி வண்டியாக வந்தன மரங்கள்,
சுண்ணம்பு, பிற தேவையான பொருட்கள்.

பாறைகளைச் செதுக்கினார் சிற்பிகள் தொடர்ந்து;
யாரும் ஊர் திரும்பவில்லை பணி முடியும் வரை!

சிற்பிகள் உழைத்தனர் உற்சாகத்துடன்
புற்று இருந்த இடத்தில் கர்ப்ப கிரகம்!

வைகுந்த வாசல் அமைந்தது அதன் வாயிலில்
எழுந்தது முதல் பிராகாரத்தைச் சுற்றி மதில்!

பள்ளியறை, மடைப்பள்ளி, திரவிய சாலை;
கல்யாண மண்டபம், உக்கிராண அறைகள்.

பலிபீடம், துவஜஸ்தம்பம், கோரியாவாறு;
ஆஸ்தான மண்டபங்கள், கோரியாவாறு;

உயர்ந்த கோபுரம் விளங்கியது வாயிலில்;
உச்சி வரையில் உயர்ந்த வேலைப்பாடுகள்.

கண் கவர் தூண்கள்; பாறைகளால் தளம்;
கண் கவர் விமானம் கர்ப்பகிரகத்தின் மேல்.

சந்தித்துக் கூறினான் ஸ்ரீநிவாசனிடம் சென்று,
“சந்தோஷத்துடன் ஏற்று அருள வேண்டும்!”

25b. சிலாரூபம்

நெருங்கியது சுபதினம் ஆலயம் புகுவதற்கு;
ததும்பியது குதூகலம் அகத்தியர் ஆசிரமத்தில்.

வந்து குவிந்தனர் இந்திராதி தேவர்கள் அங்கே;
சொந்தமாக ஏற்பாடுகளைக் கவனித்தார் பிரமன்.

வந்து சேர்ந்தனர் வசுதானனும், தொண்டைமானும்;
வந்து சேர்ந்தனர் அனைவரும் ஆனந்த நிலயம்.

ரதத்தில் வந்தனர் ஸ்ரீநிவாசனும் பத்மாவதியும்;
ரதத்தை ஓட்டினார் சுயமாக பிரம்மதேவன்.

கண்ணைப் பறித்தன வண்ணக் கோலங்கள்
மண்ணைத் தெளித்திருந்தனர் பன்னீரால்.

தோரணங்கள் தொங்கின பார்த்த இடம் எல்லாம்!
பூரணத் திருப்தி ஸ்ரீநிவாசன் உள்ளத்தில் நிலவ;

ஆனந்தம் பொங்கியது பத்மாவதி மனதில்!
ஆனந்த நிலயம் ஆனது விமானத்தின் பெயர்.

ஹோமகுண்டத்தை வளர்த்தான் பிரமன்;
வேத காரியங்களை முடித்தான் பிரமன்.

விமானத்தின் கீழ் நின்றான் ஸ்ரீநிவாசன்-
விரும்பி அமர்த்தினான் தேவியை மார்பில்!

வலது கரம் காட்டியது ஒரு திருவடியை;
இடது கரம் மடங்கியது முழங்கால் அருகில்!

“ஆகும் பாதம் வைகுந்தமாக பக்தருக்கு.
ஆகும் சம்சாரம் முழங்கால் அளவு நீராக!”

பிரமன் பணிந்து வணங்கி வேண்டினான்,
“பிரபு தங்க வேண்டும் இங்கு கலியுகத்தில்!”

“பூலோக வைகுந்தம் ஆகவேண்டும் இது – நான்
சிலா ரூபத்தில் இருப்பேன் ஆனந்த நிலயத்தில்!”

தூண்டா விளக்குகளை ஏற்றினான் பிரமன்!
ஆண்டாண்டு காலமாகப் பிரகாசிக்கின்றன.

சுபதினம் ஆனது முதல் பிரம்மோத்சவமாக;
சிலா உருவெடுத்து நிற்கின்றான் ஸ்ரீநிவாசன்!

25c. பிரம்மோத்ஸவம்

பிரமன் தெரிவித்தான் தொண்டைமானுக்கு
பிரம்மோத்ஸவத்துக்கான பல விவரங்களை.

பொன்னும், மணியும் வாரித் தந்தான் – அவன்
முன் வந்தான் உற்சாகமாக உற்சவம் நடத்த.

செய்தி பரவியது நான்கு திசைகளிலும்;
எய்தினர் உவகை செய்தியைக் கேட்டவர்.

குவிந்தனர் ஜனங்கள்; உருவாகின வீதிகள்;
குழுமினர் தேவர்கள்; உருவாகின கூடாரங்கள்!

காணக் கிடைக்காத காட்சிகள் கிடைத்தன.
காணிக்கை அளித்தனர் தம் சக்திக்கு ஏற்ப.

திருவிழா நடந்தது வெகு கோலாகலமாக.
திரும்பினர் தம் இருப்பிடம் குதூகலமாக.

தொண்டைமானுக்குப் பிரிய மனம் இல்லை.
“தொண்டை நாட்டை மறந்து விடாதே நீ!

தொண்டு புரியவேண்டும் உன் மக்களுக்கு.
மீண்டும் வருவாய் மோக்ஷம் அடைவதற்கு.

தொண்டை நாட்டை ஆட்சிசெய் அதுவரையில்!”
தொண்டைநாடு திரும்பினான் தொண்டைமான்.

26a. கிருஷ்ண சர்மா

கூர்மன் விரும்பினான் கங்கையில் நீராட.
ஆர்வம் மட்டும் இருந்தால் போதுமா?

நிறைவேறவில்லை ஒருநாளும் கோரிக்கை;
நீத்து விட்டான் உலக வாழ்வையே ஒருநாள்.

கிருஷ்ண சர்மா கூர்மனின் மகன் ஆவான்;
விரும்பினான் தந்தையின் கனவை நனவாக்க.

‘இறந்தார் தந்தை ஆசை நிறைவேறாமல்!
கரைக்க வேண்டும் அஸ்தியை கங்கையில்.’

குடும்பத்தோடு புறப்பட்டான் காசி நகருக்கு.
தடங்கல் மேல் தடங்கல்கள் வந்து சேர்ந்தன.

அடைந்திருந்தான் அப்போது தொண்டை நாட்டை.
அதிசயித்தான் தொண்டைமான் புகழைக் கேட்டு.

தோன்றியது ஒரு எண்ணம் அவன் மனத்தில்.
மூன்று மாதக் குழந்தையை, மனைவியை,

மன்னன் பாதுகாப்பில் விட்டுச் சென்றால்
முன்னேற முடியும் தனியாளாக, வேகமாக.

தொண்டைமானைச் சந்தித்தான் கிருஷ்ண சர்மா.
ஒண்ட ஓரிடம் தந்து பாதுகாக்க வேண்டினான்.

“காசி செல்ல ஆசைப்பட்டார் என் தந்தையார்.
தாசில் பண்ண ஆசை இருந்தால் மட்டும் போதுமா?

கைக் குழந்தையை, மனைவியைப் பாதுகாத்து
கை கொடுத்து உதவிட யாருமில்லை அரசே!

இளம் குழந்தையை, இளைய மனைவியைத்
தளிர் போலப் பாதுகாப்பீரா நான் வரும் வரை?”

தொண்டைமான் அளித்தான் சம்மதம் – உடனே
தொண்டைமானிடம் விடுத்தான் குடும்பத்தை.

மனப் பளு அகன்றவனாக விரைந்தான்
மகனின் கடமையைச் செய்யக் காசிநகர்.

26b. பட்டினிச் சாவு!

தொண்டைமான் சுயமாக கவனித்தான்
தன்னிடம் ஒப்படைக்கப் பட்டவர்களை.

ஏற்பாடு செய்தான் தனி வீடு ஒன்றை;
ஏற்படுத்தினான் சகல வசதிகளையும்.

பொருட்களைக் கொண்டு குவித்தான் – பிறர்
நெருங்க வண்ணம் பூட்டினான் கதவுகளை.

அடிக்கடி விசாரித்தான் முதலில் சில நாட்கள்;
அடியோடு மறந்து விட்டான் அதன் பின்னர்.

அரசனே கவனித்து வந்ததால் வேறு எவரும்
அக்கறை எடுக்கவில்லை மறந்தே விட்டனர்!

குந்தித் தின்றால் குன்றும் மாளும் அன்றோ?
முந்தி சேமித்த உணவுப் பொருட்கள் தீர்ந்தன!

பூட்டி இருந்ததால் செல்ல முடியவில்லை வெளியே!
மாட்டிக் கொண்டனர் பொறியில் இரு எலிகள் போல.

பட்டினி கிடந்தனர் தாயும் சேயும் பல நாட்கள்!
விட்டனர் தம் இன்னுயிரை ஒருவர் பின் ஒருவராக.

காசியிலிருந்து திரும்பினான் கிருஷ்ண சர்மா;
காசித் தீர்த்தம் அளித்தான் தொண்டைமானுக்கு.

“யாத்திரை இனிதே முடிந்தது உங்கள் தயவால்!
பத்திரமாக உள்ளனரா என் மனைவியும், மகனும் ?

திடுக்கிட்டான் தொண்டைமான் இது கேட்டு
நடுக்கம் எடுத்தது அவர்களை நினைத்ததும்!

“சிரம பரிஹாரம் செய்யுங்கள் – அவர்களைச்
சிறிது நேரத்தில் வரவழைக்கிறேன் இங்கு.”

மகனிடம் தந்தான் அந்த வீட்டுச் சாவியை.
ரகசியமாகப் பார்த்து விட்டு வரச் சொன்னான்.

26c. சரணாகதி

ஆடிப் போய்விட்டான் தொண்டைமான் மகன்
ஆவி பிரிந்த உடல்களை அங்கு கண்டவுடன்.

ஓடினான் தந்தையிடம் மிகுந்த துயருடன்,
“தேடி வந்தது நம்மை பிரம்மஹத்தி தோஷம்.

இறந்து விட்டனர் இருவரும் பட்டினியால்
மறந்தே போய் விட்டோம் நாம் அவர்களை.

களங்கம் ஏற்பட்டுவிட்டதே நல்ல பெயருக்கு!
விளங்குமா இதைச் சொன்னால் யாருக்காவது?”

மீண்டும் வந்தான் கிருஷ்ண சர்மா – “நான் காண
வேண்டும் என் மனைவியை, மகனை!”என்றான்.

“ஆலயம் சென்றுள்ளனர் இந்த அந்தப்புர மகளிர்.
அவர்களுடன் சென்றுள்ளனர் இவர்கள் இருவரும்!

இரண்டு நாட்களில் திரும்ப வந்துவிடுவார்கள்.
இருங்கள் நீங்கள் அரண்மனையில் அதுவரை.”

கிருஷ்ண சர்மா நிம்மதியாகச் சென்றுவிட்டான்;
கிருஷ்ண சர்மாவுக்கு உண்மை தெரிந்துவிட்டால்?

‘ஸ்ரீனிவாசனே என்னைக் காக்க முடியும் இப்போது!’
ஸ்ரீனிவாசனை விரைந்து சென்று சரணடைந்தான்.

பாதங்களைப் பற்றிக் கொண்டு கண்ணீர் விட்டான்.
” பாதி இரவில் வந்து கண்ணீர் விடுவது ஏன்?” என

“வாக்குத் தந்தால் விடுவேன் பாதங்களை அன்றிச்
சாக்குச் சொன்னால் விடுவேன் என் உயிரையே!”

“உனக்கு வந்த இடர் என்னுடையது அல்லவா?
என்னிடம் கூறுவாய் நடந்தது என்னவென்று!”

ஆதியோடு அந்தமாக உரைத்தான் அனைத்தையும்;
“பாதிப்பு அடைந்தவனுக்கு என்ன பதில் சொல்வேன்?”

26d. விஸ்வரூபம்

” இந்த முறை உதவுகிறேன் தொண்டைமான்
இன்னொரு முறை நடக்கக் கூடாது இது போல!

உடல்களைக் கொண்டு வா என் சன்னதிக்கு!” என
உடல்களைக் கொண்டு கிடத்தினான் சன்னதியில்.

“உயிர்ப்பித்துத் தருவாய் மீண்டும் ஸ்ரீனிவாசா!
உயிர்ப் பிச்சை தருவாய் குற்றவாளி எனக்கும்!”

பாத்திரத்தில் இருந்து பகவான் எடுத்துத் தெளித்த
தீர்த்தத்தினால் உயிர் பெற்றனர் தாயும், சேயும்.

எழுந்தனர் தூக்கத்தில் இருந்து எழுவது போல;
விழுந்தனர் வியப்புக் கடலில் அதைக் கண்டவர்.

“பட்டினியால் மெலிந்து நலிந்த மகன் இப்போது
பட்டொளி வீசி ஜொலிப்பது எப்படி?” என்றாள்.

“சரணடைந்தேன் ஸ்ரீனிவாசநிடம் நான் – அவன்
அரவணைத்து உயிர்ப்பித்தான் தன் கருணையால்!”

அவளும் தொழுதாள் பகவான் பாதங்களை;
“அருளுங்கள் என்றும் குறையாத பக்தியை!”

“நித்திய வாசம் செய்வேன் நாடி வருபவருக்கு!
சத்தியமாக உதவுவேன் தேடி வருபவர்களுக்கு!”

பகவான் மார்பில் தோன்றி மறைந்தன – ஈரேழு
லோகங்கள் பதினான்கும், கடல்கள் ஏழும்!

அழைத்து வந்தனர் கிருஷ்ண சர்மாவை அங்கு,
அடைந்தான் ஆச்சரியம் அவர்களைக் கண்டு.

‘இத்தனை வனப்புள்ளவளா என் மனைவி?
இத்தனை தேஜஸ் உடையவனா என் மகன்?’

“மறுபிறவி எடுத்து வந்துள்ள்ளோம் நாங்கள்!
மறவோம் என்றும் ஸ்ரீனிவாசன் கருணையை!”

விளங்கவில்லை ஒன்றும் கிருஷ்ண சர்மாவுக்கு;
விளக்கினான் அனைத்தையும் தொண்டைமான்.

ஊர் திரும்பும் அந்தணனுக்கு அளித்தான் அவன்
சீர் போலப் பொன்னும், மணியும், பல பரிசுகளும்.

27a. மண் பூக்கள்

முதிர்ந்து விட்டது வயது தொண்டைமானுக்கு;
முன்போல் சுமக்க முடியவில்லை ராஜ்யபாரம்.

நாடியது மனம் ஸ்ரீநிவாசனுடன் இருப்பதையே;
தேடின கண்கள் ஸ்ரீனிவாசனின் திருவுருவத்தையே!

முடி சூட்டினான் மகனுக்கு அடுத்த மன்னனாக;
விடை பெற்றான் அன்பு மனைவியிடமிருந்து.

ஆனந்த நிலையத்தில் மிகுந்த ஆர்வத்துடன்
ஆராதனை, பூஜைகள் செய்தான் ஸ்ரீநிவாசனுக்கு.

மாறுபாடு தெரிந்தது ஸ்ரீனிவாசனிடம் – அவன்
வேறுபட்டு நின்றான் கற்சிலையாக இப்போது.

அளவளாவுவான் முன்பு அழைத்த போதெல்லாம்;
அழைத்த போதிலும் வருவதே இல்லை இப்போது.

“பிழை என்ன செய்துவிட்டேன் ஸ்ரீனிவாசா? கூறும்
அழைத்தாலும் நீங்கள் வாராததின் காரணம் எனக்கு!

பக்தியில் குறை ஏற்பட்டு விட்டதா கூறுவீர்!
பழிகளில் இருந்து காத்தீரே முன்பெல்லாம்!”

கல்லாகவே நின்றான் ஸ்ரீனிவாசன் அப்போதும்;
சொல்லொன்றும் கூறவே இல்லை இப்போதும்.

அர்ச்சனை செய்தான் அன்றலர்ந்த மலர்களால்;
அடையவில்லை அவை இறைவன் பாதங்களை!

மண்ணால் செய்யப்பட மணமற்ற மலர்களே
அண்ணலின் இரு பாதங்களை அலங்கரித்தன!

“மணம் வீசும் புது மலர்களை நிராகரித்து விட்டு
மணமில்லாத மண்மலர்களை நீங்கள் ஏற்பது ஏன் ”

பாதங்களைப் பற்றிக் கொண்டு படுத்து விட்டான்!
“பாராமுகம் ஏன்?” என அழுதான், எழவே இல்லை.

மனம் இளகிவிட்டது ஸ்ரீநிவாசனுக்கு – வாய் திறந்து
“இனிப் போதும் நீ அழுதது எழுந்திரு!” என்றான்.

27b. பீமாவரம் பீமன்

“மௌனம் கழிய இத்தனை நேரமா உமக்கு?”என,
“சௌகரியமாக நீ வாழலாம் உன் அரண்மனையில்!

வருத்திக் கொள்கிறாய் அனாவசியமாக உன்னையும்;
வருத்துகின்றாய் அனாவசியமாக என்னையும்!” என்றான்

“வெறுப்பு ஏற்பட்டுவிட்டது உலக வாழ்வில் எனக்கு;
நறுமண மலர்களால் நான் அர்ச்சிக்கின்றேன் – ஆனால்

மணம் வீசும் என் மலர்களை நீங்கள் ஏற்பதில்லை;
மணமற்ற மண் மலர்களை நீங்கள் ஏற்கின்றீர்கள்!

குறை ஏற்பட்டு விட்டதா என்னுடைய பக்தியில் ?
குறை ஏற்பட்டதா என்னுடைய ஆராதனையில் ?

ஆனந்த நிலையத்தை அமைத்திட உழைத்தேன்;
அடுத்த சேவையைச் சிந்தித்துக் கொண்டுள்ளேன்!

பக்தி நிலவுகிறது என் மூச்சுக் காற்றில் கலந்து;
பக்தியை வெளிப்படுத்த முடியுமா இதை விட?”

கலகலவென நகைத்தான் ஸ்ரீனிவாசன் இப்போது;
“கலப்படம் இல்லாதது உன் பக்தி என்று அறிவேன்!

இருக்கின்றது உன்னுடைய மனதில் ஓர் இறுமாப்பு;
‘இவை அனைத்தும் செய்தவன் நானே!’ என்ற கருத்து.

ஆணவம் அகன்றால் மட்டுமே ஐக்கியம் சித்திக்கும்.
காண விரும்பினால் உடனே செல்வாய் பீமாவரம்!

மயங்காமல் கண்டால் மனதுக்குத் தெரியும்
குயவனும், மனைவியும் கொண்டுள்ள பக்தி!”

தொண்டைமான் சென்றான் பீமாவரத்துக்கு;
கண்டு கொண்டான் குயவன் பீமன் வீட்டை.

ஏழ்மை நிலையைக் கண்டு அதிர்ந்து போனான்.
‘தாழ்மையையே விரும்புகின்றான் ஸ்ரீனிவாசன்.

எளிமையையே விரும்புகின்றான் ஸ்ரீனிவாசன்
வலிமையைக் காட்டுபவர்களை அல்லவே அல்ல!’

27d. விமானம்

பீமன் மனைவி கழுவினாள் அன்புடன்
பகவான் திருப் பாதங்களை நீரினால்.

பரப்பி இருந்தது குடிசையில் மண்.
பரப்பினர் அதன் மேல் ஒரு பாயை.

அமர்ந்தான் ஸ்ரீனிவாசன் அதன் மேல்,
அழகிய மணை மேல் அமர்வது போல்.

இரவு உணவு வெறும் கூழும், உப்பும்.
இருப்பதை மிக விரும்பிக் குடித்தார்.

‘எளியவருக்குஎளியவன் இறைவன்!’
என்பது எத்தனை பெரிய உண்மை!

விமானம் இறங்கியது விண்ணிலிருந்து;
விண்ணில் பறந்தான் கருடன் உடனே.

பத்மாவதி வந்தாள் கருடன் மீதேறி.
பகவானுடன் இணையாக நின்றாள்.

ஆசி பெற்ற பீமனும், மனைவியும்
அதிசய விமானம் ஏறிச் சென்றனர்!

“நான், எனது என்பதை ஒழித்தேன்!
நாயேனுக்கும் அருள்வீர் பரமபதம்!”

இறங்கியது ஒரு தங்கவிமானம் தரையில்;
பறந்தது தொண்டைமானுடன் விரைவில்.

27d. விமானம்

பீமன் மனைவி கழுவினாள் அன்புடன்
பகவான் திருப் பாதங்களை நீரினால்.

பரப்பி இருந்தது குடிசையில் மண்.
பரப்பினர் அதன் மேல் ஒரு பாயை.

அமர்ந்தான் ஸ்ரீனிவாசன் அதன் மேல்,
அழகிய மணை மேல் அமர்வது போல்.

இரவு உணவு வெறும் கூழும், உப்பும்.
இருப்பதை மிக விரும்பிக் குடித்தார்.

‘எளியவருக்குஎளியவன் இறைவன்!’
என்பது எத்தனை பெரிய உண்மை!

விமானம் இறங்கியது விண்ணிலிருந்து;
விண்ணில் பறந்தான் கருடன் உடனே.

பத்மாவதி வந்தாள் கருடன் மீதேறி.
பகவானுடன் இணையாக நின்றாள்.

ஆசி பெற்ற பீமனும், மனைவியும்
அதிசய விமானம் ஏறிச் சென்றனர்!

“நான், எனது என்பதை ஒழித்தேன்!
நாயேனுக்கும் அருள்வீர் பரமபதம்!”

இறங்கியது ஒரு தங்கவிமானம் தரையில்;
பறந்தது தொண்டைமானுடன் விரைவில்.

28a. வட்டி கட்ட வழி?

ஆனந்தமாக இருந்தான் ஸ்ரீனிவாசன்,
ஆனந்த நிலயத்தில் பத்மாவதியுடன்.

பக்தர்கள் தேடி வந்தனர் பகவானை;
சக்திக்கு ஏற்பக் காணிக்கை அளித்தனர்.

மகிழ்வுடன் பகவான் இருந்த போதிலும்,
நெகிழ்வுடன் நினைப்பதுண்டு லக்ஷ்மியை!

‘உற்சாகம் குன்றி பகவான் இருப்பதற்கு
உபசரணையில் உள்ள குறைபாடுகளோ?’

பத்மாவதி ஆலோசிப்பதுண்டு அடிக்கடி;
பகவானிடம் கேட்டுவிட்டாள் நேரடியாக.

“சுகமாக இருப்பதை விட்டு அடிக்கடி நீங்கள்
சோகமாகி விடுவதன் காரணம் கூறுங்கள்!”

“லக்ஷ்மி என்னைப் பிரிந்ததனால் வாழ்க்கை
லக்ஷ்யம் இழந்ததைப் போல ஆகிவிட்டது.

திருமணச் செலவுக்கு வாங்கினேன் கடன்;
திருப்பித் தர வேண்டும் கலியுக முடிவில்.

வட்டி கட்ட வேண்டும் வருடா வருடம்
கட்ட வில்லை வட்டி ஒரு வருடம் கூட.

லக்ஷ்மி மீண்டும் என்னிடம் வந்தால் தான்
லக்ஷணமாகும் நம் வாழ்க்கை!” என்றான்.

“லக்ஷ்மி வருவதில் தடை என்ன சுவாமி?”
“லக்ஷ்மி உனக்குப் போட்டி அல்லவா?”என,

“இந்த வாழ்க்கையே லக்ஷ்மி தந்தது!
அந்த லக்ஷ்மியை நான் வெறுப்பேனா?

அழைத்து வருவோம் நாம் சென்று!” என்றாள்.
“அழைத்து வருவேன் நான் சென்று!” என்றான்.

வகுள மாலிகை துணையானாள் அவளுக்கு.
பகவான் மட்டும் சென்றார் கரவீரபுரத்துக்கு.

28b. பத்ம ஸரோவர்

பகவான் கரவீரபுரம் வருகின்றான் என்றதும்,
பாதாள லோகம் சென்று விட்டாள் லக்ஷ்மி!

கபில முனிவரைக் கண்டாள் லக்ஷ்மி தேவி;
கபில முனிவர் வரவேற்றார் அங்கே தங்கிவிட!

எந்த இடமானால் என்ன பகவானைத் தியானிக்க?
அந்த இடத்திலே தங்கிவிட்டாள் லக்ஷ்மி தேவி.

கரவீரபுரம் அடைந்த ஸ்ரீனிவாசன் கண்டது எது?
வெறிச்சோடிக் கிடந்த தேவியின் இருப்பிடத்தை.

கடுமையான தவம் மேற்கொண்டு விட்டாளா?
காடுகளில் தேடி அலைந்தான் லக்ஷ்மி தேவியை.

திருவுருவத்தின் அருகே அமர்ந்தான் ஸ்ரீனிவாசன்;
தியானம் செய்தான் தன் லக்ஷ்மி தேவியின் மீது.

பத்து ஆண்டுகள் உருண்டு ஓடிவிட்டன – ஆனால்
பார்க்க முடியவில்லை பகவானால் லக்ஷ்மியை!

அசரீரி ஒன்று பேசியது ஆகாயத்தில் இருந்து,
“வசப்படமாட்டாள் லக்ஷ்மி உன் தியானத்துக்கு!

ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரினை
அமைப்பாய் பத்ம ஸரோவர் என்ற பொய்கையில்.

கிழக்கில் இருந்து சூரியன் ஒளி வீசும் பொழுது,
அழகிய தாமரையில் உன் தேவி தோன்றுவாள்!”

அடைந்தான் சுவர்ணமுகி தீரத்தை ஸ்ரீனிவாசன்.
அனுப்பினான் வாயு தேவனை இந்திர லோகம்.

பறித்து வந்தான் இந்திரனின் அனுமதியோடு
அரிய தாமரை மலர் ஒன்றை வாயுதேவன்.

ஆயிரம் இதழ்த் தாமரையை ஸ்தாபித்தான்;
ஆயிரம் இதழ்த் தாமரை மீது தியானித்தான்.

29a. அப்சரஸ்

நாட்கள் உருண்டு ஓடின – பகவானின் தவம்
நாளுக்கு நாள் தீவிரம் அடைந்தது மேலும்!

பத்ம தீர்த்தத்தின் கரையில் ஒருவன் அமர்ந்து
உக்கிர தவம் செய்வது ஒரு செய்தியானது!

பூலோகத்தில் தவம் நடந்தால் ஆபத்து நிகழும்
தேவலோகத்தை ஆளும் இந்திரனின் பதவிக்கு.

தவத்தைக் குலைத்துக் கலைப்பதற்கு இந்திரன்
தேவ மகளிரை அனுப்பினான் பூலோகத்திற்கு.

பூலோகப் பெண்களைப் போல மாறிவிட்டனர்.
பூஜைக்கு உதவி செய்திட விரும்பி வந்தனர்.

தடை சொல்லவில்லை பகவான் அவர்களிடம்;
நடை பெறவில்லை அவர்கள் விரும்பியதும்!

நெருங்க வில்லை பகவான் அந்த சுந்தரிகளை!
நெருங்கவும் விடவில்லை அந்த சுந்தரிகளை!

அடுத்த திட்டத்தினை அமல்படுத்தினர்அப்சரஸ்.
அடுத்து அடுத்துப் பாடினர் இனிய பாடல்களை!

அர்ப்பணித்தான் அந்தப் பாடல்களை லக்ஷ்மிக்கு;
கற்பனை பலிக்கவில்லை பெண்கள் எண்ணியபடி.

மாலைகளை அணிவிக்க வந்தனர் பகவானுக்கு;
மாலைகளை அணிவித்தான் அவன் தாமரைக்கு!

“நாட்டியம் செய்யலாமே நீங்கள்!” என்று சொல்லப்
போட்டி போட்டுக் கொண்டு இனிய நடனம் ஆடினர்.

மேனி எழிலை வெளிப்படுத்தினர் ஆடும் போது;
பேணினான் பிரம்மச்சரியத்தை பகவான் நன்கு!

கற்பனையில் உருவான அழகிய பெண்ணை
கண்முன் கொண்டு வந்து நிறுத்தினான் பகவான்

‘படைக்கும் சக்தி படைத்த இவன் மனிதன் அல்ல!’
மடை திறந்தது போல எல்லாம் நினவு வந்தது!

இந்திரன் தந்தான் வாயுவிடம் தாமரை மலரை;
இந்தத் தாமரை மலரே அவன் தந்த மலர் என்று!

விழுந்து வணங்கினர் பகவான் பாதங்களில்;
அழுதும், தொழுதும், கேட்டனர் மன்னிப்பு.

“செய்ய வந்தீர்கள் உங்களுக்கு இட்ட ஆணையை;
எய்தவன் இருக்க அம்பை நான் நோக மாட்டேன்!”

தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடியவர்கள்
அப்போதே சென்றனர் இந்திரனின் சபைக்கு.

29b. பத்மாவதியின் கனவு

“அழிவுக்கு ஆளாகாமல் வந்துள்ளோம்!
பழிச் செயலைச் செய்திருந்த போதும்!”

கூறினர் பூலோகத்தில் நடந்தவற்றை;
மாறினான் இந்திரன் அதைக் கேட்டதும்.

ஓடினான் பத்மஸரோவருக்கு உடனே;
தேடினான் தவம் செய்யும் பகவானை.

விடவில்லை பற்றிய பாதங்களை அவன்;
எழவில்லை மன்னித்தேன் என்னும் வரை!

“தவறு ஒன்றும் நிகழவில்லை இந்திரா!
தவத்தில் திருப்தி செய்தோம் லக்ஷ்மியை.

மனம் உருகி வருந்திடும் ஒருவருக்கு
மன்னிப்பு உண்டு நிச்சயம்!” என்றான்.

இந்திரன் திரும்பினான் தன் இந்திரலோகம்.
சொந்த சிருஷ்டியான தேவதையிடம் அவன்

“வன தேவதையாக இருந்து காப்பாற்றுவாய்
தினமும் தேடி வரும் பக்தர்களை!” என்றான்.

தவம் தொடர்ந்தது மீண்டும் நெடுங்காலம்;
தவத்துக்கு இரங்கி வரவே இல்லை லக்ஷ்மி.

இருபத்து இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன;
வருத்தத்தில் மூழ்கியிருந்தாள் பத்மாவதி.

‘லக்ஷ்மியுடனேயே தங்கி விட்டாரா அவர்?
லக்ஷ்மியைத் தேடித் திரிகின்றாரா அவர்?

கண்டு பிடிக்கவே முடியாதபடி எங்கோ
கண் காணாது ஒளிந்து இருக்கின்றாளா?’

இரவு முழுவதும் உறங்கவில்லை அவள்;
துறவுக் கோலத்தில் கனவினில் கண்டாள்

விடியற்காலை நேரத்தில் ஸ்ரீனிவாசனை!
இடி விழுந்தது போலாகிவிட்டது உள்ளம்!

வகுள மாலிகையிடம் கூறினாள் கனவை;
வெகுவாகத் துயருற்றாள் அதை எண்ணி!

30a. தீப லக்ஷ்மி

மன நிம்மதி இழந்து விட்டாள் லக்ஷ்மி;
மனம் கலங்கியது நடப்பதைக் கண்டு.

‘கபிலரின் ஆசிரமத்தில் தங்கிவிட்டால்
கரவீர புரத்திலிருந்து திரும்பி விடுவான்!’

எண்ணிய எண்ணம் தவறானது – கணவன்
பண்ணுகின்றான் தவம் பத்ம ஸரோவரில்.

கூறினாள் மனக் கவலையைக் கபிலரிடம்;
கோரினார் கபிலர் பிரிந்து வந்த காரணத்தை.

“வாசஸ்தலத்தைக் களங்கம் செய்த பிறகு
வசிக்க முடியுமா மீண்டும் என்னால் அங்கு?”

“மகன் போன்றவன் அல்லவா பிருகு ருஷி ?
மகனிடம் கோபம் கொள்ளலாமா ஒரு தாய்?

கணவனைப் பிரிந்து தனியே வரலாமா?
கணவனைத் தவத்தில் தவிக்க விடலாமா?

பாராமுகம் செய்வது தகுமா தேவி – இங்கு
யாராவது மகிழ்ச்சியாக உள்ளார்களா?

தவிக்கின்றீர்கள் நீங்கள் தனிமையில்;
தவிக்கின்றான் பகவான் தவம் செய்து;

தவிக்கின்றாள் பத்மாவதி கவைலையில்;
தவிப்பினால் விளைந்த நன்மை என்ன?

மலரில் சென்று எழுந்தருள்வீர் தாயே!
பல காலம் செய்த தவம் பலிக்கட்டும்!”

தீபச் சுடர் உருவில் தோன்றி பகவானின்
தாபம் தீர்த்தாள் தாமரையில் லக்ஷ்மி.

தேவி தோன்றியவுடன் பிரகாசித்தது
கோடி சூரிய ஒளியுடன் தாமரை மலர்.

நிஷ்டை கலைந்து எழுந்தான் பகவான்;
இஷ்டத்துடன் நோக்கினான் லக்ஷ்மியை.

30b. பிணக்குத் தீர்ந்தது!

தாமரையில் மகாலக்ஷ்மி தோன்றியதும்
தாமதமின்றி விரைந்து வந்தனர் தேவர்.

பிரிந்தவர் சேரும் வைபவத்தைக் காணப்
பெரிய பாக்கியம் செய்திருக்க வேண்டுமே!

தேவர்கள் துதித்தனர் தேவியைப் பலவாறு;
தேவி இறங்கவில்லை தாமரையை விட்டு.

பிருகுவிடம் பேசினார் ஈசன் தனிமையில்,
“பிரிவுக்குக் காரண கர்த்தா நீரே அல்லவா?

தேவியிடம் சென்று மன்னிப்புக் கேட்பீர்!” என,
தேவியிடம் சென்று பிருகு கேட்டார் மன்னிப்பு.

சாந்தம் அடைந்து இறங்கினாள் லக்ஷ்மி தேவி.
சந்தனம் பூசினாள் பகவான் வக்ஷஸ்தலத்தில்.

வணங்கினாள் அவனை மண்டியிட்டு – அவளைப்
பிணக்குத் தீர்ந்து மார்பில் அமர்த்தினான் அவன்.

கந்தருவர் இசையுடன் கலந்து மலர் சொரிந்திட,
துந்துபி முழங்கியது எண் திசைகளிலும் பரவி.

அப்சரஸ் விண்ணில் ஆடினர் ஆனந்த நடனம்.
அருளினார் பகவான் உலகுக்குச் சிறந்த வரம்.

“கார்த்திகை மாத சுத்த பஞ்சமியில் – பத்ம
தீர்த்தத்தில் நீராடுபவருக்கு சகல சம்பத்து.”

அனைவரும் அடைந்தனர் சேஷாசலம் ;
அனைவரையும் வரவேற்றாள் பத்மாவதி/

ஆரத்தி எடுத்தாள்; திருஷ்டி கழித்தாள் அவள்;
ஆனந்தத்தில் தத்தளித்தாள் வகுள மாலிகை!

31a. ஆனந்தம் ஆனந்தம்!

ஆனந்த மயமாக மாறிவிட்டது அங்கே
ஆனந்த நிலயத்தில் மூவரின் வாழ்க்கை.

சக்களத்திகள் போல இருக்கவில்லை – இரு
சஹோதரிகள் போல அன்பு செலுத்தினர்.

பரம சந்தோஷம் பக்த கோடிகளுக்கு;
வரம் அளிக்க இருந்தனர் மூவர் என்று!

தனிமையில் கூறினான் லக்ஷ்மியிடம்,
ஸ்ரீனிவாசன் குபேரனின் கடனைப் பற்றி.

“வட்டி கட்ட ஒப்புக் கொண்டேன் நான்
வட்டி கட்ட வில்லை ஒரு முறை கூட.

பழிக்கு ஆளாகி விடுவேனே – நான்
இழிச் சொற்களைக் கேட்க நேருமோ?

உதவ முடியும் உன்னால் எனக்கு!
அதுவும் மிக எளிதான் முறையில்!

உன்னைத் தேடி வரும் பக்தருக்கு வழங்கு
பொன்னையும், பொருளையும் வாரி வாரி.

என்னைத் தேடி வருபவர்கள் அளிப்பர் – அந்தப்
பொன்னையும், பொருளையும் காணிக்கையாக!”

புறப்பட்டாள் லக்ஷ்மி தேவி கேட்ட உடனே,
“நிறைவேற வேண்டும் நம் நோக்கம் சுவாமி!

தனியே இருக்க வேண்டும் நான் – நம்முடைய
பணிகள் சரிவர நடை பெறுவதற்கு!” என்றாள்.

பாதாள லோகம் சென்றாள் லக்ஷ்மி
பகவானுக்கு உதவத் தயார் ஆனாள்.

“நினைத்த காரியம் இனிதாக நடைபெறப்
புனிதப் படுத்திக் கொள்ள வேண்டும் நான்.”

பகவன் பாடு மீண்டும் திண்டாட்டம்
பாதாள லோகத்தில் லக்ஷ்மி தவத்தில்

பூலோகத்தில் வந்து நிலை பெற்றால் தான்
ஆலோசிக்க முடியும் குபேரன் வட்டியை!

31b. மீண்டும் தவம்

சென்றான் ஸ்ரீனிவாசன் பாதாள லோகம்;
நின்றான் தியானம் செய்த லக்ஷ்மி முன்பு.

கண்டாள் லக்ஷ்மி அகக்கண்களில் அவனை;
காணவில்லை அவள் புறக்கண்கள் அவனை.

“தரிசனம் தந்தீர்கள் எனக்கு – ஆனால்
அரிதாகி மீண்டும் மறைந்து விட்டீர்கள்.”

கலைந்து விட்டது உன் தவம் லக்ஷ்மி!
வேலைகள் அநேகம் காத்திருக்கின்றன.

தடைபட்டுள்ளன அவை உன் தவத்தால்;
உடைபடும் தடை நீ பூலோகம் சென்றால்!

சுகரின் ஆசிரமத்தில் காத்திருக்கின்றது,
சுகமான ராஜ போகம் உனக்கு!” என்றான்.

ஆதிசேஷனை தியானித்தாள் லக்ஷ்மி;
ஆதிசேஷன் வந்து வணங்கி நின்றான்.

“சேர வேண்டும் சுகரின் ஆசிரமத்தை!”
தேர் நின்றது வெள்ளைப் பரிகள் பூட்டி!

ஏறி அமர்ந்தாள் அழகிய ரதத்தினில்,
அரிய ஆபரணங்கள் அணிந்த லக்ஷ்மி.

ரதத்துடன் தேவியைத் தலையில் தாங்கி,
வேகத்துடன் வெளிப்பட்டான் ஆதிசேஷன்.

சாயாசுகர் கண்டார் மஹாலக்ஷ்மியை,
“சரணம் சரணம் லோக மாதா!” என்றார்.

31c. சாயா சுகர்

சுகர் விரும்பினார் சாயுஜ்ய முக்தியை;
சுகர் எழும்பினார் தம் யோகசக்தியால்.

தடுத்தான் சூரியன் சுகரின் பிரயாணத்தை;
விடுத்தான் சுகரிடம் கேள்விக் கணைகளை.

“முன்னோர்கள் பூவுலகில் வாழ்ந்திருக்க,
முன்பாக சாயுஜ்யம் அடைய முடியுமா?

அருகதை இல்லை உமக்கு சாஸ்திரப்படி,
அறிந்திருப்பீர் இதனை நீரும் முன்பாகவே!

கிருஹஸ்தாஸ்ரமத்தை ஏற்க வேண்டும்;
பிறக்க வேண்டும் புத்திரர்கள், சந்ததியினர்;

பிரம்மஞானி ஆவது அதற்கும் பின்பு;
அரிய சாயுஜ்யம் அதற்கும் பின்பு என்று.”

“மனிதனுக்குத் தேவை நான்கு ஆசிரமங்கள்;
முனிவனுக்குத் தேவை இல்லை ஆசிரமங்கள்;

நீர்க்குமிழி போன்றது வாழ்க்கை என்று
நீத்து விடுகிறோம் அதை முற்றிலுமாக.

அடைய முடியுமா ஞான மார்க்கத்தை என
விடை அறிய விரும்பினேன் தந்தையிடம்.

அனுப்பினார் என்னை ஜனக ராஜனிடம்,
வனப்புடன் விளக்கினார் ஜனகர் எனக்கு.

பக்குவம் அடையாதவனுக்குத் தேவை இவை;
பக்குவம் அடைந்தவனுக்கு அல்ல என்பாதை.”

“விதிகளைக் கூறுபவர்களே தாம் கூறிய
விதிகளை உடைக்கவில்லை முனிவரே!

விஷ்ணு, பிரமதேவன், வசிஷ்டர், சக்தி,
பராசரர், வியாசர், நீர் ஒரு வம்சத்தினர்.

தேவை ஒரு சந்ததி சேவை செய்திட;
தோற்றுவித்தால் உமக்கு சாயுஜ்யம்!”

31d. சூரியனும், சுகரும்.

சக்தியினால் தோற்றுவித்தார் மானசீக புத்திரனை,
யுக்தியுடன் நிறுத்தினார் அவனை சூரியனின் முன்பு.

சாயாசுகர் வணங்கிய பின் கேட்டார் சுகரிடம்,
“மாயையால் என்னைத் தோற்றுவித்தது ஏன்?”

“கங்கைக் கரையில் வசிக்கும் என் தந்தைக்குத்
தங்கு தடையின்றி சேவை செய்து வருவாய்!”

வியாசருக்குப் பணிவிடை செய்வதற்குச்
சாயாசுகர் வசித்தார் சுவர்ண முகி தீரத்தில்.

கவர்ந்தது சுகரின் அறிவாற்றல் சூரியனை;
கதிரவன் கேட்டான் புதிர் போலச் சுகரிடம்,

தத்துவம் என்ன உள்ளது என் உருவில்?”
“சித்தத்துக்கு எட்டிய வரை கூறுகின்றேன்,

உண்டாயிற்று பிரணவம் நாரணனிடம்;
உண்டாயிற்று ஆகாசம் பிரணவத்திடம்;

உண்டாயிற்று வாயு ஆகாசத்திடம்;
உண்டாயிற்று அக்னி இவைகளிடம்.

வாயுவும், ஆகாசமும் கலந்த போது
வியாபித்தது அக்னி தோன்றிப் பரவி.

பிரளயம் தோன்றியது ஜல வடிவத்தில்!
பிரளய ஜலம் தோற்றுவித்தது பலப்பல

தங்க நிறம் கொண்ட ஒளிக் கிரணங்களை;
தங்க நிற ஒளிக்கிரணங்கள் ஆயின சூரியனாக!

அண்ட சராசரம் தோன்றியது அதிலிருந்து!
கொண்டிருந்தது வாழ வைக்கும் சக்தியை.

அசையும் அசையாப் பொருட்கள் வாழ
அவசியம் ஆனது அந்த சூரியனின் சக்தி.

சூரிய சக்தியால் மனிதன் பிறக்கிறான்;
சூரிய சக்தியால் மனிதன் வாழ்கிறான்.

அவன் சக்தி அடைகின்றது மீண்டும்
அதே சூரியனை ஒளிக்கிரணம் வழியே!”

அனுமதித்தான் சூரியன் சுகர் செல்வதற்கு;
வியந்தான் சுகரின் அறிவாற்றல் கண்டு!

சுக க்ஷேத்ரம்

போற்றினார் லக்ஷ்மியை சாயா சுகர்; போற்றினர் லக்ஷ்மியை மும்மூர்த்திகள்;

போற்றினர் லக்ஷ்மியைத் தேவ கந்தர்வர்கள்; போற்றினர் லக்ஷ்மியை முனி புங்கவர்கள்.

பிரமன் வேண்டினான் லக்ஷ்மி தேவியிடம், “தர வேண்டும் பத்ம தீர்த்தத்தில் நீராடினால் அஷ்ட ஐஸ்வரியங்களையும் அள்ளி அள்ளி!
கஷ்டங்கள் எல்லாம் தொலைய வேண்டும்!

ஆலயம் அமைக்கும் எண்ணம் கொண்டேன்; அனுமதி வேண்டும் அதை இங்கு அமைக்க”.

“சுக க்ஷேத்திரத்தை விடுத்தது என்னுடன் சேஷாச்சலம் நீயும் வரவேண்டும் தேவி” பகவான் கூறினான் லக்ஷ்மி தேவியிடம்,

பகவானுக்கு பதில் அளித்தாள் லக்ஷ்மி.

“சுக க்ஷேத்திரத்தில் இருக்க விருப்பம்; இக பரம் தர வேண்டும் என் பக்தருக்கு!”

விசுவகர்மா அமைத்தான் ஆலயத்தை! விசுவாசி சாயா சுகர் ஆராதனைகளை!

“செல்வதை வாரி வாரி வழங்குவாய் நீ! செல்வர் என்னை வந்து தொழுத பின்பே.”

“கார்த்திகை மாதம் சுக்கில பஞ்சமியன்று காத்திருப்பேன் தங்கள் மாலை, சேலைக்கு!

மறக்காமல் தர வேண்டும் ஆண்டுதோறும்!” இறைவனிடம் வேண்டினாள் லக்ஷ்மி தேவி.

சுக க்ஷேத்திரத்தில் குடி கொண்டாள் லக்ஷ்மி; சேஷாச்சலத்தில் குடி கொண்டான் பகவான்.

மலர்ந்த தாமரை மேல் தோன்றியவளை அலர்மேல் மங்கை என அழைக்கின்றனர்.

——————

ஸ்ரீ  வேங்கடேச புராணம் முற்றுப் பெற்றது.

சுபம், சுகம், சாந்தி நிலவட்டும் எங்கும்!

————-

தீர்த்த மஹிமை

தீர்த்தமாட விரும்பினான் ஓரந்தணன்;
யாத்திரை நீளும் நெடுங் காலம் என்று

உற்றார் உறவினரிடம் விடை பெற்றுப்
பிற்பாடு யாத்திரை செல்வது வழக்கம்.

கனவிலே தோன்றினார் மஹாவிஷ்ணு!
“கருதுகின்றாய் அகல தீர்த்த யாத்திரை!

புஷ்கர சைலம் என்பது சேஷாச்சலம்;
புனித தீர்த்தங்கள் பதினேழு உள்ளன.

புவனமெங்கும் உள்ள தீர்த்தங்கள் – அப்
புண்ணிய தீர்த்தங்களிலும் உள்ளன!

சகல பாவங்களிலிருந்து விடுதலையும்,
சகல சம்பத்துக்களும் கிடைப்பது உறுதி.

நாடெங்கும் அலைந்து திரிய வேண்டாம்.
நாடுவாய் நீ சேஷாச்சலத்தை!” என்றார்.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது – மேலும்
பலன் இரண்டுக்கும் ஒரு போலானது.

பதினேழு தீர்த்தங்களிலும் சென்று நீராடிப்
பரம பாவனம் அடைந்தார் அந்த அந்தணர்.

02. சேஷாச்சலம்

நாரதர் சென்றார் திருப்பாற் கடலுக்கு;
நாரணனைத் தேவியருடன் தரிசித்தார்.

ஒளிர்ந்தது கௌஸ்துபம் மார்பினில்;
மிளிர்ந்தன நாரணனின் பஞ்சாயுதங்கள்.

“பூலோகத்தில் நான் திருவிளையாடல்
புரிவதற்கு ஏற்ற இடத்தைக் கூறு!” என்று

நாரணன் கேட்டான் நாரத முனிவரிடம்,
நாரதர் விண்ணப்பித்தார் நாரணனிடம்.

‘கங்க தீரத்துக்குத் தெற்கே உள்ளது
தண்டகாரண்யம் என்னும் ஓர் இடம்.

விண்ணோரும் மண்ணோரும் வந்து
தெண்டனிடத் தகுந்த இடம் ஆகும்”.

தேவருஷி சென்றதும் நாரணன் – ஆதி
சேஷனுக்கு ஆணை இட்டார் இங்கனம்.

“மலை உருக் கொள்வாய் நீ அனந்தா!
சில காலம் தங்குவேன் பூவுலகினில் !”

“மலையாக மாறுகிறேன் ஆணைப்படி.
மலை மீது எழுந்தருளும் தேவியருடன்!

இருப்பிடம் ஆகவேண்டும் என் தலை;
திருவடிகள் பதித்து நின்றிட வேண்டும்.

புண்ணிய தீர்த்தங்கள் பலவற்றையும்
என்னிடம் நீங்கள் உருவாக்க வேண்டும்!”

அருள் செய்தான் நாரணன் அவ்வாறே;
திருப் பாற்கடல் விடுத்தான் அனந்தன்.

மலையானான் தண்டகாரண்யத்தில்;
தலை ஆனது திரு வேங்கடாச்சலமாக.

உடல் ஆகிவிட்டது அகோபிலமாக;
முடிவில் வால் ஆனது ஸ்ரீ சைலமாக.

அனந்தன் பூமியில் மலை ஆனபோது;
அருந்தவம் தொடங்கியது அவன் மீது.

வேங்கடேசனாகக் காட்சி தந்தருளினார்
வேங்கடமலையில் குடிகொண்ட நாரணன்

03. நாராயணாத்ரி

நாராயண முனிவர் ஒரு நல்ல தபஸ்வி.
நாராயணனைத் தேடியலைந்தார் எங்கும்.

காட்சி தரவில்லை நாராயணன் அவருக்கு
மாட்சிமை பொருந்திய தவம் செய்வித்திட.

பிரம்மனைக் குறித்துத் தவம் செய்தார்.
பிரம்மன் கேட்டான்,” என்ன வரம் தேவை?”

“நாரணனைத் தரிசிக்கத் தவம் செய்தேன்.
காரணம் என்னவோ காண முடியவில்லை!

காணும் வழியினைக் கூறுங்கள் சுவாமி!
காணும் பாக்கியத்தை அருளுங்கள் சுவாமி!”

“கோனேரிக் கரையிலே சேஷாச்சலத்திலே
கோவில் கொண்டுள்ளார் ஸ்ரீமன் நாராயணன்.

தவம் செய்வீர் நீர் சேஷாச்சலம் சென்று!
தவமும் பலிக்கும்; தரிசனமும் கிடைக்கும்”

சேஷாச்சலம் அடைந்தார் முனிபுங்கவர்;
செய்தார் கடும் தவம் பன்னெடுங் காலம்!

தேவியுடன் காட்சி தந்தான் நாரயணன்;
“தேவை எதுவோ கூறுங்கள்!” என்றான்.

“தரிசனம் வேண்டித் திரிந்தேன் – எங்கும்
தரிசனம் கிடைக்காமல் தவித்தேன் நான்.

பிரம்மன் கூறினார் இங்கு தவம் புரியுமாறு,
அரிய தரிசனம் பெற்றேன் உமது அருளால்!

முனிவர்களுக்கே கடினமான இத் தவத்தை
மனிதர்கள் செய்வது எங்கனம் சாத்தியம் ?

புனிதத் தலத்திலேயே தங்கி வசிப்பீர்!
மனிதர்களுக்கும் ஆசிகள் வழங்குவீர்!

என் பெயரால் விளங்க வேண்டும் – நீர்
எனக்கு தரிசனம் தந்த இந்த இடம்” என,

“நிறைவேற்றுவேன் உம் கோரிக்கையை.
நித்தியவாசம் செய்வேன் இந்தத் தலத்தில்.

தீரும் வரும் அடியவர் குறைகள் எல்லாம்!
பேரும் விளங்கும் நாராயணாத்திரி என்று!”

04. ரிஷபாத்ரி

வேட்டைக்குச் செல்ல விழைந்தான் ஸ்ரீனிவாசன்;
காட்டுக்குச் செல்லத் தயாராயினர் படைவீரர்கள்.

சேனைத் தலைவன் தலைமையில் வந்தனர்,
சேஷாத்திரி வாசனைத் தொடர்ந்து வீரர்கள்.

வேட்டை ஆடினர் வெகுநேரம் மிருகங்களை;
வேட்கை மிகுந்தது நீர் பருகித் தாகம் தீர்ந்திட.

அழகிய சோலை ஒன்று தென்பட்டது அங்கு;
தழுவியது வீசிய குளிர்ந்த தென்றல் காற்று.

ரிஷபன் என்னும் அசுரனின் சோலை அது;
ரிஷபன் தடுத்தான் அதில் நுழைந்த வீரர்களை.

அரச குமாரன் என்று எண்ணினான் பகவானை;
பரந்தாமனையும் அச்சுறுத்தினான் அசுரன் ரிஷபன்!

“சம்பரா! இவனுக்குப் பதில் கூறு!” என்று சொல்ல
சம்பரன் தயாரானான் ரிஷபனுடன் போர் புரிய.

சிவ பக்தி மிகுந்தவன் அசுரன் ரிஷபன் – எனவே
தேக சக்தியும் மிகுந்தவன் அசுரன் ரிஷபன் !

நொடியில் அடித்து வீழ்த்தினான் சம்பரனை;
அடுத்து ஓடி வந்தான் ஸ்ரீனிவாசனை நோக்கி!

சரங்களைப் பொழிந்தான் சேனை நாயகன்;
சரங்கள் தடுத்தன அசுரனைச் சுவராக மாறி!

கரங்களாலே உடைத்தான் சுவற்றை அசுரன்,
பரபரவென்று முன்னேறினான் அசுரன் ரிஷபன்

அஸ்திரங்களை ஏவினான் அசுரன் ரிஷபன்;
அஸ்திரங்களை ஏவினான் சேனை நாயகன்!

06. அஞ்சனாத்ரி

திரேதா யுகத்தில் கடும் தவம் செய்தான்,
பரமசிவனைக் குறித்துக் கேசரி என்பவன்.

“வேண்டும் வரம் யாது?” என்று கேட்க
வேண்டினான் கேசரி இந்த வரத்தினை.

“எவராலும் வெல்ல முடியாத பலத்துடன்,
என்றும் வாழ்ந்திருக்கும் மகன் வேண்டும்!”

“புதல்வி தான் பிறப்பாள் உமக்கு – அந்தப்
புதல்விக்குப் பிறப்பான் நீர் கோரும் மகன்!”

அஞ்சனை அவதரித்தாள் அந்தக் கேசரிக்கு;
அருமை பெருமையாக அவளை வளர்த்தான்.

வானரத் தலைவன் விரும்பிக் கேட்டதால்,
வானரனுக்கு அவளை மணம் செய்வித்தான்.

குறை இருந்தது புத்திரன் இல்லையென்று!
குறத்தி போல் வந்தாள் தருமதேவதை அங்கே.

“வேங்கடம் சென்று தவம் செய்தால் – மனம்
வேண்டியபடிப் பிறப்பான் நல்ல மகன்!” என

அனுமதி பெற்றாள் தன் கணவனிடமிருந்து,
அடைந்தாள் வேங்கட மலையைச் சென்று.

ஆகாய கங்கையில் நீராடினாள் – பின்பு
அமர்ந்தாள் அஞ்சனைஅரும் தவம் புரிந்திட.

காற்றை மட்டுமே உட்கொண்டாள் – அவள்
மற்றவற்றைத் துறந்தாள் முற்றிலுமாக!

அஞ்சனை தவத்துக்கு இரங்கினான் வாயு;
கொஞ்சமேனும் தானும் உதவ நினைத்தான்.

கனிந்த பழத்தைக் கரத்தில் கொண்டு போட,
இனிய பிரசாதமாக அதைத் தினமும் புசிப்பாள்.

07. அஞ்சனாத்ரி

வந்தனர் அங்கே சிவனும், உமையும்.
கண்டனர் மந்திகள் கூடிக் களிப்பதை!

இன்புற விரும்பினர் தாமும் அவ்விதமே ;
இருவரும் மாறினர் இரண்டு மந்திகளாக!

பரம சிவனிடம் வெளிப்பட்ட தேஜசைப்
பிரசாதமாகத் தந்துவிட்டான் வாயு அன்று!

கனி என்று எண்ணிப் புசித்துவிட்டாள்!
கனி அல்ல அது; சிவனுடைய தேஜஸ்!

அசரீரி கேட்டது அஞ்சனைக்கு அப்போது;
“அசாதரணமான மகன் பிறப்பான் உனக்கு!

மகேஸ்வரனின் ஒரு அருட் பிரசாதமாக;
மகா பலவானாக; ஒரு மகா பண்டிதனாக;

மகா பக்தனாக, ஒரு சிரஞ்சீவியாக!” என்று.
மன நிம்மதி கொண்டாள் தேவி அஞ்சனை.

வானர உருவில் வந்து பிறந்தான் ஒரு மகன்,
வானில் பாய்ந்து சென்று விளையாடினான்!

கனி எனக் கருதினான் செங்கதிரவனை!
இனித்துச் சுவைக்கப் பறிக்கச் சென்றான்.

தடுத்தான் பிரம்மாஸ்திரத்தால் பிரமன்;
தரையில் விழுந்தான் மயங்கிய குழந்தை!

அஞ்சனையின் கண்ணீருக்கு அளவில்லை.
அஞ்சி ஓடி வந்தனர் தேவர்கள் அவர்களிடம்.

“பாலகனுக்கு இல்லை என்றுமே ஆபத்து!
பாலகனுக்கு இல்லை என்றுமே மரணம்!”

தேவ கானமும், சாஸ்திர ஞானமும் தந்து,
தேஹ வலிமை, தொண்டு மனப்பான்மை,

வாக்கில் சாதுர்யம், மனதில் பூரண பக்தி,
திக்கெட்டும் பரவிய புகழ், அஷ்டசித்திகள்;

அனைத்தும் தந்தனர் அஞ்சனை மகனுக்கு;
“இனி ஒருவர் இணையாகார் இவனுக்கு!

புனிதத் தலம் விளங்கிடும் இப் புவனத்தில்
இனி அஞ்சனாத்ரி என்று உன் பெயரால்!”

08. மாதவன்

நந்தனத்தில் வாழ்ந்து வந்தான்,
அந்தணன் புரந்தரன் என்பவன்.

நன்கு தேர்ந்தவன் கல்வி, கேள்வியில்;
நல்ல மகன் இருந்தான் மாதவன் என்று.

தந்தையைப் போல உத்தமன் அவன்,
சந்திரரேகை அன்பு கொண்ட மனைவி.

தீர்த்த யாத்திரை சென்றனர் இருவரும்;
தீர்த்தமாடித் தரிசித்தனர் இறைவனை.

தங்கி இருந்தாள் மனைவி தடாக்கரையில்,
தான் மட்டும் சென்றான் கனிகள் கொணர!

புல்லறுக்க வந்த புலைச்சியைக் கண்டு,
மெல்ல அவளைத் தன் வசப்படுத்தினான்!

உடன் வந்த மனைவியை மறந்து விட்டுத்
தொடர்ந்து போனான் புலைச்சி குடிசைக்கு.

அந்தணன் தான் என்பதை மறந்து விட்டான் ;
சொந்த குல ஆசாரத்தைத் துறந்து விட்டான்;

வழிப்பறிக் கொள்ளைகள் செய்தான் – பின்பு
வழிப்பறியே வாழ்வாதாரம் ஆகி விட்டது!

காலம் செல்லக் கட்டுத் தளர்ந்தது மேனி;
காமக் களியாட்டம் கிழவனாக்கி விட்டது.

வழிப்பறி செய்ய உடல் வலிமை இல்லை;
வழியில் வந்த அவள் வழியோடு போனாள்!

09. வேங்கடம்

தனியனாக ஆகி விட்டான் மாதவன்;
தன் நிலைமைக்கு மிக வருந்தினான்.

மனைவியிடம் செல்லவும் வழியில்லை
தனியே தவிக்க விட்டு விட்டு வந்ததால்!

நோய் வாய்ப்பட்டு அவளிடம் செல்வது
நேர்மை அல்ல என்பதை உணர்ந்தான்.

ஊர் ஊராகச் சுற்றி அலைந்து திரிந்தான்!
தீர்மானம் என்று எதுவும் இல்லை மனதில்!

சேஷாச்சலத்தை அடைந்தான் – ஆதி
சேஷனே அங்கு மலையாகக் கிடந்தான்.

பாவங்கள் தீரப் பிரார்த்தனை செய்தான்;
பாவனமாகிடப் பிரார்த்தனை செய்தான்;

காலடி வைத்தவுடன் அவனை எரித்தான்,
கால் முதல் தலை வரை அக்னி தேவன் .

பாவங்கள் எரிந்து சாம்பல் ஆனதும்,
பார்ப்பவர் வியக்கும் தேஜஸ் வந்தது.

வணங்கினர் அவனைக் கண்ட பேர்கள்,
வணங்கினர் அவனை முனிபுங்கவர்கள்.

கருணை எரித்தது பாவக் குவியலை;
கருணை அளித்தது புனிதமான உடலை!

வேங்கடம் என்றால் பாவத்தை எரிப்பது;
வேங்கடம் எரிக்கும் பக்தனின் பாவத்தை!

மாதவனின் பாவத்தை எரித்தது முதல்
மறு பெயர் பெற்றது வேங்கடகிரி என.

10. நாக கன்னிகை

சோழ ராஜன் சென்றான் வேட்டைக்கு,
சேஷாச்சலத்தை அடைந்தான் திரிந்து.

பிரிந்து விட்டான் படை வீரரிடமிருந்து;
மறந்து விட்டான் வெளிச்செல்லும் வழி!

தட்டு தடுமாறி வெளிவர முயன்றவன்
பட்டு ரோஜாப் பெண்ணைக் கண்டான்!

மலரே மலர்களைக் கொய்யுமா என்ன?
மலர் மங்கை மலர்கள் கொய்திருந்தாள்!

மையல் வசப் பட்டான் சோழ மன்னன்
தையலின் லாவண்யத்தைக் கண்டதும்.

“கொடிய விலங்குகள் திரியும் வனத்தில்
கொடி இடையாள் நீ என்ன செய்கிறாய்?

நீ யார்? எந்த ஊர்? என்ன பேர்? ” என
நீளமாக அடுக்கினான் கேள்விகளை.

“நாகர் குலத்தைச் சேர்ந்தவள் நான்
நாகர்களின் வேந்தன் என் தந்தை! ”

“மணம் செய்து கொள்கிறாயா என்னை?
மனம் பறி போய்விட்டது கண்டவுடன்!”

“நற்குணங்கள் பொருந்திய மன்னனைக்
கற்பு மணம் புரிய வேண்டுமாம் நான்!

தந்தையிடம் நீர் பேசினால் நடக்கும்
தடைகள் இல்லாமல் நம் திருமணம்! ”

“நாக லோகம் செல்ல நேரம் இல்லை!
காம வேதனை தாங்க முடியவில்லை!

கந்தர்வ விவாஹம் செய்து கொள்வோம்;
தந்தையிடம் சொல் திரும்பச் சென்றபின்.”

காமவசப் பட்டிருந்தாள் நாககன்னிகை;
தாமதம் இன்றிக் கந்தர்வ விவாஹம்!

ஆனந்த வெள்ளத்தில் நீந்தினர் பல நாள்;
அவரவர் வீட்டுக்குச் சென்றனர் ஒரு நாள்.

11. யுவராஜன்

பாதாள லோகம் சென்ற நாக கன்னிகை
பூலோகத்தில் நடந்ததைச் சொன்னாள்.

மணந்தாள் அவள் சோழ மன்னனை என
மகிழ்ந்தான் தந்தை மன்னன் தனுசன்.

கந்தர்வ விவாஹத்தின் பலன் கர்ப்பம்!
சுந்தரனான ஆண் மகவு ஒன்று பிறந்தது.

பிறந்த நேரமும், அவன் தோற்றமும்,
சிறந்த அரசனுக்கு மட்டுமே உரியவை.

கண்ணும் கருத்துமாக வளர்த்தனர் அவனை;
கண்மணி வளர்ந்தான் கண்களைக் கவரும்படி.

“என் தந்தை யார்?” எனக் கேட்டான் தாயை.
“உன் தந்தை சோழ மன்னர்!” என்றாள் தாய்.

தந்தையைக் காண விரும்பினான் அவன்;
தடை சொல்லாமல் அனுப்பினர் அவனை.

சோழ மன்னனை வந்து வணங்க – மன்னன்
” தோழமையோடு கேட்டான் நீ யார்?” என.

“வந்தீர்கள் நீங்கள் சேஷாச்சலம் வேட்டையாட;
தந்தீர்கள் கந்தர்வ மணம் அன்னை நாககன்னிக்கு!”

அகன்ற ஆகாயத்தில் எழுந்தது ஓர் அசரீரி ;
“புகன்றது உண்மையே! இவன் உன் மகன்!

ஸ்ரீனிவாசனுக்குத் தொண்டுகள் புரிவான்;
மேதினியில் அழியாத புகழ் அடைவான்!”

அணைத்துக் கொண்டான் அருமை மகனை;
வினவினான் அன்னை, பாட்டனைப் பற்றி .

முதுமை எய்தி விட்டான் சோழ மன்னன்;
புதிய மன்னன் ஆனான் நாககன்னி மகன்.

நாடினான் நாட்டு மக்களின் நன்மைகளை,
நாற்றிசையும் அவன் புகழ் பரவி விரவியது

12. அபூர்வக் கனவு

இடையர்கள் கண்டனர் மன்னனை;
இயம்பினர் வியத்தகு நிகழ்ச்சிகளை.

“வேங்கட மலையினில் வாழ்பவர்கள் நாங்கள்;
தங்களுக்குப் பால் குடங்கள் எடுத்து வருவோம்.

வழியில் உள்ள புற்றின் அருகே வந்ததும்
வழிந்தோடுகிறது பால் குடங்கள் உடைந்து!

தினமும் நிகழ்கிறது இது போலவே மன்னா!
இனம் புரியவில்லை இதன் காரணம் எமக்கு!”

விந்தையாக இருந்தது சோழ மன்னனுக்கு;
“இந்த நிகழ்வைக் கண்டு பிடிப்பேன் நான்!”

கனவு கண்டான் மன்னன் அன்றிரவு;
கருமை நிற அழகன் ஒருவன் வந்தான்.

கையில் வில்,  மார்பில் பெண் உருவம்;
“கையுடன் அழைத்து வரச் சொன்னார்

சேஷகிரி ஸ்ரீனிவாசன் தங்களை!” என்றான்.
பேசாமல் அவன் பின் சென்றான் மன்னன்.

சேஷகிரியை அடைந்தனர் இருவரும் – வி
சேஷமான நவரத்தினம் மின்னும் மண்டபம்!

சங்குடன் சக்கரம், மகர குண்டலங்கள்;
பொங்கும் அழகுடைய தேவியர் மூவர்;

கோடி சூரியப் பிரகாசத்துடன் நாரயணன்;
தேடி வந்து கண்ட காட்சியில் உருகினான்!

அள்ள அள்ளக் குறையாத ஆனந்தம்;
மெல்ல மெல்ல மறைந்தது அக்காட்சி.

கனவு என்றே நம்ப முடியவில்லை அவனால்;
நனவு போலவே இருந்தது விழித்த பின்னரும்.

சபா மண்டபத்தில் உரைத்தான் தன் கனவை,
“அபாரமான கனவின் பொருள் என்ன?” என,

ஆழமாகச் சிந்தித்தனர் விசுவாச மந்திரிகள்;
சோழ மன்னனிடம் கூறினர் சிந்தனைகளை.

13. வேடுவன்

“இடையர்கள் குடம் உடைவதற்கும், கனவுக்கும்,
தொடர்பு உள்ளது இதில் ஐயம் இல்லை மன்னா!

புற்றிலே உள்ளாரா ஸ்ரீநிவாசன் என்று அறியப்
புற்றுக்குச் செய்வோம் பால்குடம் அபிஷேகம்.

இறைவன் வெளிப்பட்டால் பொருள் விளங்கும்
சிறந்த ஆலயம் கட்டுவிக்க விழைகின்றான் என.”

வேடன் வந்தான் வேந்தனிடம் சேதி சொல்ல.
வேடனின் சேதியைக் கேட்கும் ஆவல் மீறியது!

“புங்கம் விதையை உண்கின்றோம் மாவாக்கி;
எங்கிருந்தோ வருகிறது வெள்ளைஆண் பன்றி.

தின்றுவிட்டுப் போய் விடுகிறது புங்கம் மாவை!
இன்று காவல் வைத்துச் சென்றேன் என் மகனை.

உண்டான் அவன் புங்கம் மாவை வெண்ணையுடன்!
கண்டதும் என் கோபம் எல்லை மீறியது – அவனிடம்

‘பன்றி தின்கிறது என்று உன்னைக் காவல் வைத்தால்
பன்றிக்குப் பதிலாக நீயே தின்கின்றாயா?’ என்றேன்.

கொடுவாளை ஓங்கியபடிப் பாய்ந்த போது – என்னை
நடுங்க வைத்தது இடி போன்று முழங்கிய கர்ஜனை.

‘உண்டார் பரந்தாமன் உங்கள் புங்கம் மாவை,
வெண்ணை கலந்து உங்கள் மகன் உருவினில்!

நேராகச் சென்று கூறு இதை உன் மன்னனிடம்;
வேறு கனவு கண்டிருப்பான் உன் மன்னனும் கூட.’

விளங்கவில்லை என் அறிவுக்கு எதுவுமே மன்னா!
விளம்ப வந்தேன் விவரங்களை உமக்கு!” என்றான்.

“வேடன் கூறுவதற்கும், கண்ட கனவுக்கும், இடையர்
குடம் உடைவதற்கும் தொடர்பு உள்ளது உறுதியாக!”

ஆராய விரும்பினான் திருமலைக்குச் சென்று;
பிரதானி, மந்திரிகளுடன் சென்றான் புற்றுக்கு.

வேடன் ஓடி வந்தான்; சொன்னான் மன்னனிடம்,
“கூட வந்தால் காட்டுவேன் வெள்ளைப் பன்றியை!”

4. ஆலயங்கள்

வேடுவனைப் பின் தொடர்ந்தனர் அனைவரும்;
ஓடத் தொடங்கியது பன்றி இருந்த புதரை விட்டு.

வளைந்து, நெளிந்து, புகுந்தோடி வெள்ளைப் பன்றி
நுழைந்து, மறைந்தது ஒரு புற்றுக்குள் திடீரென்று!

“மன்னா! நாங்கள் சொன்ன புற்றும் இதுவே தான்!” என்று
சொன்னார்கள் இடையர்கள் சோழ மன்னனிடம் அப்போது.

“ஹிரண்யாக்ஷன் பூமியை ஒளித்து வைத்த போது,
தரணியைக் காக்க வந்த வெள்ளைப் பன்றி இதுவே!

புற்றின் அடியில் இருக்க வேண்டும் பகவான் – நாம்
புற்றைத் தோண்டினால் தெரியும் உண்மை!” என்ற

வேடனைக் கடிந்து கொண்டான் சோழ வேந்தன்;
“வேறு வழியில் வெளிப்படுத்துவோம் இறைவனை!”

பால் குடங்கள் வந்து குவிந்தன அங்கே உடனே!
பால் அபிஷேகம் செய்தான் சோழமன்னன் புற்றுக்கு.

கரைந்தது புற்று; கண்டனர் அதன் உள்ளே
இருந்தது ஆதி வராஹரின் அழகிய உருவம்!

பரவசம் அடைந்துக் கை தொழுது நின்றிருந்த
அரசனிடம் கூறினார் ஆதி வராஹப் பெருமான்.

“சுவாமி புஷ்கரிணியின் அருகே பகவான்
ஸ்ரீனிவாசன் உள்ளான் புளிய மரத்தின் கீழ்!

பூலோகம் வந்துள்ளான் பக்தருக்கு அருள;
புற்று மூடி விட்டது முழந்தாள் வரையில்!

ஆலயம் எழுப்பி ஆராதிப்பாய் ஸ்ரீனிவாசனை.
ஆலயம் எழுப்பு எனக்கும் மேற்குக் கரையில்.”

சென்றனர் அனைவரும் சுவாமி புஷ்கரிணி;
கண்டனர் ஸ்ரீனிவாசனைப் புளிய மரத்தடியில்.

புற்றுக் கரைந்து போனது பால் அபிஷேகத்தால்.
பூரணம் ஆனது பகவானின் திவ்விய தரிசனம்!

“திருமலையில் என்றும் இருந்திட வேண்டும்!”
திரும்பத் திரும்ப வேண்டினான் சோழ மன்னன்.

“திருக் கோவில்கள் அமைத்துத் திருப்பணி செய் !
தினமும் மூன்று காலமும் ஆராதனைகள் செய்!”

கண் கவர் ஆலயங்களை விரைந்து எழுப்பினான்.
விண்ணோரும், மண்ணோரும் வந்து தொழுதனர்

15. ஆதிசேஷன்

சேஷன்:

‘சயனிக்கின்றான் என் மேல் பகவான்;
தயங்காமல் தாங்குகிறேன் உலகினை.

பாக்கியசாலி என் போல் யார் உளர்?
பகவானிடம் நெருங்கிப் பழகுவதற்கு!’

கர்வம் தலை தூக்கியது மனத்தில்,
சர்வம் தனக்குத் தாழ்ந்தவை என்று.

வந்தான் வாயுதேவன் தரிசனத்துக்கு;
“இந்த நேரத்தில் இல்லை தரிசனம்.

ஏகாந்தத்தில் உள்ளார் இறைவன்;
போகவிட மாட்டேன் காண்பதற்கு!”

காற்று:

“என்னைத் தடுக்க முடியுமா உன்னால்?
எங்கும் நிறைந்திருக்கும் காற்று நான்!”

சேஷன்:

“விரிகிறேன் பாயாக இறைவனுக்கு;
விரிகிறேன் குடையாக இறைவனுக்கு!

ஈடு எவர் பக்தி செய்வதில் எனக்கு?
ஈடு எவர் சேவை செய்வதில் எனக்கு?”

காற்று:

“ஆதாரம் அனைத்துக்கும் காற்று!
அதிகம் என் ஞானம், பக்தி, சக்தி.

பணியாள் நீ; சுதந்திரன் நான்;
உணர்ந்து கொள் வேறுபாட்டை!”

சேஷன் வெகுண்டான் இது கேட்டு!
“சோதிப்போம் யார் பலசாலி என்று!”

உரைத்தனர் இருவரும் தமது கட்சியை;
உன்னினார் இறைவன் மமதையை நீக்க.

6. கர்வ பங்கம்

 

“தொண்டாற்றும் எனக்குச் சக்தி இல்லையாம்!
கொண்டாடுகின்றனர் அனைவருமே என்னை!”

“உனக்கு என்று சக்தி இல்லை அனந்தா – ஆனால்
தனக்கு என்று சக்தி உள்ளவன் வாயு தேவன்.

அனைத்து உயிர்களுக்கும் ஜீவாதாரம் வாயு;
அனைத்து இடங்களிலும் வியாபித்துள்ளான்.

சக்தி அதிகம் உடையவன் வாயு தேவனே!
சந்தேகம் வேண்டாம் உண்மையும் இதுவே!”

“சோதித்துப் பார்க்கலாம் இந்த உண்மையை;
பாதிக்காது நம்மை பலப் பரீட்சை!” என்றான்.

“மேருவை நான் கட்டிக் கொள்கிறேன் – வாயு
வேருடன் பெயர்க்கட்டும் முடிந்தால் அதனை.”

அழுத்திக் கட்டிக் கொண்டான மேரு மலையை,
ஆதிசேஷன் தன் பலத்தை ஒன்றாகத் திரட்டி.

வாயு தேவன் முயன்றான் நகர்த்துவதற்கு;
வாயு தேவனின் முயற்சி வெற்றி பெற்றது.

வேருடன் பெயர்க்கப் பட்டது மேரு மலை!
வேறு இடத்தில் பறந்து சென்று விழுந்தது!

விழுந்த இடம் சுவர்ணமுகி தீர்த்தம் – அங்கு
விழுந்த சேஷன் மலையாகக் கிடக்கின்றான்!

சேஷகிரி ஆகிவிட்டது அந்த மலை – அதன் பின்
சேஷனின் கர்வம் சென்ற இடம் தெரியவில்லை.

நீராடினான் கோனேரித் தீர்த்தத்தில் ஆதிசேஷன்,
நாக தீர்த்தத்தை அடைந்தான் பிறகு சென்று.

தவம் செய்தான் தீவிரமாக நாராயணன் மீது;
தவம் பலித்து நாராயணன் தரிசனம் தந்தான்.

“மன்னித்து எழுந்தருள வேண்டும் என் மீது;
மக்களுக்கு என்றும் அருள் புரிய வேண்டும்;”

கோனேரியில் எழுந்தருளினான் ஸ்ரீநிவாசன்;
கோரிக்கையை நிறைவேற்றுகிறான் இன்றும்!

17. சரஸ்வதியின் தவம்

“புண்ணிய தீர்த்தங்கள் அனைத்திலும்
புனிதமானவள் ஆக வேண்டும் நான்”

நதி வடிவாகி தியானித்தாள் சரஸ்வதி;
விதி விளையாடியது அவள் தவத்தில்.

புலஸ்தியர் வந்தார் சரஸ்வதி தேவியிடம்;
புலஸ்தியர் தன்னுடைய மகன் என்பதால்

உபசரிக்கவில்லை சரஸ்வதி சரியாக,
அபசாரமாகக் கருதிவிட்டார் முனிவர்.

“எல்லாத் தீர்த்தங்களிலும் சிறந்ததாகும்
பொல்லாத கனவு இல்லாது போகட்டும்.

அறிந்தவர்கள் அனைவரும் கூறுவர்,
திரிபதகைத்  தீர்த்தமே சிறந்தது என!”

தடையானான் மகனே தவத்துக்கு;
உடைந்து போனாள் சரஸ்வதி தேவி.

“பரந்தாமனுக்கு எதிரியாக அசுரனாகப்
பிறவி எடுப்பாய் நீ!” என்று சபித்தாள்.

“சாப விமோசனம் எப்போது?” என்று
சாந்தம் அடைந்த புலஸ்தியர் கேட்டார்.

“ராமனாக அவதரிப்பார் நாரணன் – நீ
ராவணன் தம்பி விபீஷணன் ஆவாய்!

இறைவனின் நட்புக் கிடைக்கும் – அதனால்
சிரஞ்சீவியாக இருப்பாய் உலகில் என்றும்!”

கருடாரூடராக வந்தார் நாராயணன்;
“சிறந்த தீர்த்தமாக அனுகிரஹியுங்கள்!”

“புலஸ்தியர் சாபத்தால் கிடைக்காது அது!
புஷ்கரிணியாக வேங்கடத்தில் இருந்து வா!

லக்ஷ்மியும் நானும் வாசம் செய்வோம் – ஒரு
லக்ஷியத்துடன் உன் தீர்த்தக் கரையினில்!

நீராடுவர் பக்தர்கள் தனுர் மாதத்தில்,
சூரியோதயத்தில், சுக்கில துவாதசியில்.

பாவங்கள் தீர்க்கும் புஷ்கரிணியாகிப்
பாரினில் நீ விரும்பும் புகழ் பெறுவாய்!”

வேங்கடத்தில் ஸ்வாமி புஷ்கரிணியாகி
வேண்டிய மகிமைகள் பெற்றாள் சரஸ்வதி.

18. தேக காந்தி

வாயுதேவன் விரும்பினான் மனதார
வாசுதேவன் போன்ற தேக காந்தியை.

ஆயிரம் தேவ வருடங்கள் செய்தான்
அரும் தவம் அறிதுயில் பிரான் மீது.

காட்சி தந்தார் பகவான் – பின்னர்
கனிவுடன் கூறினார் ஓர் உபாயம்.

“வேங்கட மலையில் குமார தாரிகையில்
முங்கி எழுந்து ஆராதிப்பாய் என்னை!”

வாயுதேவன் அடைந்தான் வேங்கடம்;
வாசுதேவனை ஆராதனை செய்தான்;

வேங்கட மலையில் குமார தாரிகையில்
முங்கிப் புனித நீராடித் தூயவனான பின்.

தவத்துக்கு மெச்சிக் காட்சி தந்தார்;
தயவுடன் அருளினார் தேக காந்தியை.

வியப்பு அடைத்தனர் கண்ட பேர்கள்
வாயுவின் ஒளிரும் தேக காந்தியால்!

பிரமன், மகேசன் முதலியோரும்
பிரமிக்கத் தக்க காந்தி பெற்றனர்,

வாயுதேவன் செய்தது போலவே
வாசுதேவனை ஆராதனை செய்து.

19. அகஸ்தியர்

அரியதொரு தவம் செய்தார் அகத்திய முனிவர்
கரிய நிறக் கண்ணனைப் பொதிகையில் காண.

பிரத்தியக்ஷம் ஆனார் பிரம்ம தேவன் அங்கே.
“பரந்தாமனைக் காணச் செல்வீர் சேஷகிரி!”

வேங்கடத்தை அடைந்து தவம் செய்கையில்
ஓங்கி ஒலித்தது விண்ணில் ஓர் அசரீரி.

“திருமலையில் உள்ளன நீராடுவதற்கு
திவ்விய தீர்த்தங்கள் ஆயிரத்து எட்டு!

மூல மந்திரத்தை உச்சரித்து நீராடி விட்டு
மலையின் மகிமை கூறி வலம் வருவாய்!

தவம் செய்தால் தவறாமல் கிடைக்கும்
பவம் ஒழிக்கும் பரந்தாமனின் தரிசனம்!”

ஆயிரத்தெட்டு தீர்த்தங்களிலும் நீராடி,
வாயால் மூல மந்திரத்தை உச்சரித்து;

வலம் வந்தார் அகத்தியர் திருமலையை;
தவம் செய்தார் பரந்தாமனைக் குறித்து.

சுவாமி புஷ்கரிணி அருகே பெற்றார்,
சுவாமி தரிசனம் லக்ஷ்மி சமேதராக!

20. சங்கன்

சூரிய வம்சத்தின் ஓரரசன் சங்கன்,
கோரினான் இறைவன் தரிசனத்தை.

கேட்டான் வசிஷ்ட முனிவரிடம் சென்று,
“நாட்டம் கொண்டேன் இறை தரிசனத்தில்!

தேட்டம் இல்லை தவம் செய்யும் இடம்;
வாட்டம் அடையாது தரிசிக்க உதவுவீர்.”

“சுவர்ணமுகி தீரத்தில் அமைந்துள்ளது
சேஷாச்சலம் என்னும் வேங்கடமலை.

முனிவர்கள் செய்தனர் அங்கே தவம்
புனிதன் நாராயணனின் தரிசனம் பெற.

பரம சிவன் உள்ளான் அடிவாரத்தில்;
பரந்தாமன் உள்ளான் மலையுச்சியில்.

விண்ணோர், மண்ணோர் தொழுவர்
கண்ணனை ஸ்ரீனிவாசனாக அங்கே.

பர்ணசாலை அமைத்துத் துதித்தான்,
சுவர்ண முகி தீரத்தில் வாயு தேவன்.

வந்தார் வயோதிகர் ஒருவர் அங்கு.
வாயுவின் தவத்தை மெச்சினார் .

வந்தவர் இறைவனோ என ஐயுற்றுத்
தங்க வைத்தான் சதுர்மாச விரதத்தில்.

திருவுருவைக் காட்டினார் வாயுவுக்கு,
விரதத்தைப் பூர்த்தி செய்ய உதவினர்.

கற்பத்தின் முடிவில் குழுமுவர் முனிவர்
சக்கர தீர்த்தத்தில்!” என்றார் சுக முனிவர்.

“மலையை வலம் வந்து ஞானயோகம் செய்.
அலைமகளுடன் தரிசிக்கலாம் நாரணனை!”

சங்கன் செய்தான் அவர் கூறியவாறு;
சங்கன் முன் தோன்றினான் நாரணன்.

“சந்திரன் சூரியன் உள்ள வரையில்
சன்னதி கொள்வீர் திருமலையில்!”

“சகலரும் வணங்கி அர்ச்சிக்கும்படி
சமைப்பாய் என் உருவத்தை இங்கு!”

ஆராதித்தான் திருவுருவை அமைத்து;
மாறாத பரமபதம் அடைந்தான் பிறகு.

21. பசு நெய் விளக்கு

அந்தணன் ஒருவன் விஷ்ணு சர்மன்,
சொந்த குல ஆசாரத்தை மறந்தான்.

இன்பம் தூய்த்தான் பல பெண்களுடன் கூடி;
இன்பம் தூய்த்தான் குரு பத்தினியைக் கூடி!

பாவம் பற்றியது முதுமையுடன் கூடி;
நோய் வாய்ப்பட்டான் மனது மிக வாடி.

வெறுத்தனர் அவனை உற்றார், உறவினர்;
துரத்தினர் வீட்டை விட்டு, ஊரை விட்டு!

ஓடிச் சென்றான் காட்டுப் பிரதேசத்துக்கு;
வாடி விழுந்து விட்டான் நாடிகள் தளர்ந்து.

கடித்துத் தின்றன நாய்களும், நரிகளும்;
துடி துடித்து இறந்தான் விஷ்ணு சர்மன்.

“குரு பத்தினியைக் கூடியவன் இவன்;
குருத் துரோகம் செய்தவன் இவன்!”

கூசியது இதைக் கேட்ட யமதர்மன் உடல்;
ஏசியபடி அனுப்பி விட்டான் நரகத்துக்கு.

வேத நாமன் விஷ்ணு சர்மனின் மகன்;
‘ வேத குலத்தில் பிறந்தார் என் தந்தை.

பேதம் பாராமல் செய்தார் பாவங்கள்;
வேதனையோடு துறந்தார் உடலை.

நற்கதி கிடைக்காது; நரகமே கதி !’
நன்கு அறிந்திருந்தான் வேத நாமன்.

“பாவம் தீர்த்து நற்கதி தர வேண்டும்;’
தேவனைப் பிரார்த்தித்து ஏற்றினான்

பசு நெய் விளக்குகளை ஸ்ரீநிவாசனுக்கு;
நசித்தது விஷ்ணு சர்மன் செய்த பாவம்!

முற்றிலும் பாவங்கள் நீஙகிய பின்னர்,
நற்கதி அடைந்து சென்றான் வைகுந்தம்.

22. அவிர் பாகம்

வையகத்தில் நடந்தான் லக்ஷ்மியுடன்,
வைகுந்தவாசன் இயற்கையை ரசித்தபடி.

சேஷாச்சலத்தின் மலைச் சரிவுகளில் யாகம்
செய்து கொண்டிருந்தனர் முனி புங்கவர்கள்.

திருமலையில் செய்யும் யாகமும், தவமும்,
ஒரு குறைவும் இன்றி நிறைவேறும் அல்லவா?

அரசன் என எண்ணிய முனிவர் இறைவனை,
வரவேற்று அளித்தனர் பாலும், பழங்களும்.

பீதாம்பரம், இரத்தின ஹாரம் அணிந்தவன்
சாதாரண மனிதனாக இருக்க முடியாதே!

“எந்த நாட்டு அரசர்? தங்கள் பெயர் என்ன?
இங்கு வந்த காரணம் கூறுங்கள்!” என்றனர்.

“அரசனும் அல்ல, நான் அந்தணனும் அல்ல;
ஆசாரம், ஜாதி, குலம், கோத்திரம் இல்லை!

தந்தையும் இல்லை, தாயும் இல்லை எனக்கு!
எந்த தேசமும் என் தேசமே! எப்போதுமே!

எங்கும் இருப்பவன், எல்லாம் என் ரூபம்;
எத்தனை பெயர்கள், அத்தனை குணங்கள்!”

‘மனநிலை சரியாக இல்லையோ இவருக்கு?’
முனிவர்கள் தொடர்ந்தனர் தம் ஹோமத்தை.

மந்திரங்கள் ஓதி ஹோமம் செய்கையில்,
வந்தன இரு கரங்கள் அவிர் பாகம் பெற்றிட.

அக்கினியின் நடுவில் கரங்களை நீட்டி – அச்
சக்கரவர்த்தி பெற்றார் முனிவரின் ஹவிசை!

சங்குச் சக்கரதாரியாகக் காட்சி அளித்தார்;
அங்கு வந்திருந்தவர் ஸ்ரீனிவாசன் அல்லவா?

23. குமார தாரிகை

அழகிய இளைஞனாக மாறிய ஸ்ரீனிவாசன்
ஆடித் திரிந்தார் மலைச் சரிவில் ஒருநாள்.

வந்து கொண்டிருந்தார் அந்தணர் ஒருவர்,
வயது முதிர்ந்தவர் தன்னந் தனியாளாக!

கூனி விட்ட முதுகு; வலுவிழந்த கால்கள்,
பனி மறைக்கும் கண்கள், பசியுடன் தாகம்!

துணைக்கு வந்த மகனைத் தேடிக் கொண்டு,
‘ துணைக்கு வந்தவன் எங்கே போய்விட்டான்?

தண்ணீர் எடுக்கச் சென்றவன் வரவில்லையா?’
கண்ணீருடன் தேடிக் கொண்டிருந்தார் அவனை!

முள்ளிலும், கல்லிலும் அவர் நடப்பது கண்டு,
உள்ளம் வெண்ணையானது ஸ்ரீனிவாசனுக்கு!

“இறைவா! ஏன் நான் உயிரோடு உள்ளேன்?
இருக்கிறேன் ஒரு பாரமாக மற்றவர்களுக்கு!

வாட்டி வதைக்கின்றது முதுமையில் வறுமை.
வாழ்வதால் ஒரு பயன் இல்லையே இனி நான்”

மெள்ளத் தடவினான் முதுகை ஸ்ரீனிவாசன்,
“துள்ளும் இளமையோடு இருக்க விருப்பமா?”

“கேலி செய்கிறாயா தம்பி கிழவன் என்னை? என்
வேலைகளைச் செய்ய முடிந்தாலே போதுமே!

சேவை செய்வேன் இறைவனுக்கு முடிந்தவரை,
தேவை இல்லை துள்ளும் இளமை !” என்றார்.

“சுனைக்கு அழைத்துப் போகிறேன் முதலில்;
நனைத்தால் குறையும் உடலின் உஷ்ணம்.”

நீரில் முங்கி எழுந்தவர் மாறி விட்டிருந்தார்!
நிமிர்ந்து விட்ட முதுகு; இறுகிய தசைகள்!

நூறு வயது குறைந்து விட்டது – பதி
னாறு வயது வாலிபனாக மாற்றியது!

காணோம் கரையில் இருந்த இளைஞனை;
நாரணன் காட்சி தந்தான் புன் முறுவலுடன்.

“நித்திய கர்மங்களைச் செய்வீர் முன்போல்.”
பக்தியுடன் விழுந்தார் கால்களில் அந்தணர்.

முதியவரை இளையவராக ஆக்கிய சுனைக்குப்
புதிய பெயர் கிடைத்தது குமார தாரிகை என்று!

24. சங்கனன்

சங்கனன் ஆண்டு வந்தான் காம்போஜ நாட்டில்
சங்காச்யம் என்னும் நகரைக் கீர்த்தியுடன்.

கர்வம் மிகுந்து விட்டது பராக்கிரமத்தால்;
தர்மம் குறைந்து நலிந்து மெலிந்து விட்டது.

புண்ணியம் குறையலானது சங்கனனுக்கு
கண்ணியம் குறையலானது சங்கனனுக்கு.

விலகி விட்டனனர் பாதுகாத்த வீரர்கள்;
விலை போயினர் மறைந்திருந்த எதிரிக்கு.

வழக்கம் போலப் பழகவில்லை பிரதானிகள்;
குழப்பம் மேலிட்டது; குறைந்தது அவன் மதிப்பு.

அவதிப் பட்டனர் அவன் நாட்டு மக்கள்;
அவன் மேல் விழுந்தது அந்தப் பழியும்!

ஆட்சியைக் கைப் பற்ற முயன்றனர்;
மாட்சிமை இல்லை அவர்களை அடக்க.

உயிருக்கு ஆபத்து என்ற நிலை உருவாக
எவருக்கும் தெரியாமல் தப்பி ஓடினான்!

பட்டத்து ராணியுடனும் இன்னமும் தன்
கட்டளைக்குப் பணியும் அமைச்சருடன்.

சேது கரையைச் சென்று அடைந்தனர்.
வேதனை தீரும் ராமேஸ்வரம் சென்றால்.

கடல் நீராடினான் சேதுவில் சங்கனன்
உடன் சென்று தரிசித்தான் இராமநாதரை.

அடைந்தான் சுவர்ணமுகி தீர்த்தத்தை!
விழைந்தான் வேங்கடத்தில் தவம் புரிய!

வட பகுதியைத் தேர்ந்தெடுத்தான் சங்கனன்;
“விட நேர்ந்த்தது நற்பணிகளைச் செருக்கால்.

அரியணையும் துறந்து அஞ்சி வாழ்கிறேன்!
சரியாகுமா மீண்டும் முன்போல இந்த நிலை?

நாட்டை அடைந்து ஆட்சி செய்வேனோ?
காட்டிலேயே காலத்தைக் கழிப்பேனோ?”

25. சங்கனன்

அன்றிரவு தூங்கும் போது குரல் கேட்டது,
நின்று தேடியும் காணவில்லை எவரையும்!

விண்ணில் இருந்து ஒலித்தது அந்தக் குரல்,
எண்ணங்களை அறிந்தது போலப் பேசியது!

“வடக்கே உள்ளது வேங்கடம் எனும் திருமலை;
தடாகம் உள்ளது சுவாமி பூஷ்கரிணி என்பது.

தடாகக் கரையில் உள்ளது எறும்புப் புற்று;
தடாகத்தில் நீராடி விடாமல் துதித்து வா!”

வேங்கட மலையில் தடாகத்தை அடைந்தனர்;
தங்குவதற்குக் குடில் அமைத்தனர் புற்றருகே.

மூன்று வேளை நீராடினான் பூஷ்கரிணியில்-மனம்
ஊன்றித் தொழுதான் பகவானை நாள் முழுவதும்.

சுவாமி மனம் கனிவதற்கு ஆறு மாதமானது!
சுவாமி பூஷ்கரிணியில் தோன்றியது ஓர் ஒளி!

ரத்தின மயமான விமானத்தில் இருந்தனர்
யத்தனம் பலித்திட நாரணனும் தேவியரும்.

குழுமினர் தேவர்கள், துதித்தனர் முனிவர்;
ஆடினர் தேவ மகளிர்; பாடினர் கந்தருவர்.

புல்லரித்தது சங்கனனின் உடல் மகிழ்வால்,
சொல்லைக் கேட்டதும் துள்ளியது மனம்!

“உன் நாடு திரும்பும் நேரம் வந்தது!
உன் ஆட்சி திரும்பும் நேரம் வந்தது!”

சங்காச்யத்தில் சங்கடமான குழப்பம்;
சங்கனன் ஆட்சியே மேல் என்றானது!

தங்களுக்கே அரசபதவி வேண்டும் என்று
தானைத் தலைவர்கள் போட்டி இட்டனர்.

வேங்கட நாதன் அருள் பெற்ற மன்னன்
சங்கனன் திரும்பி வருவதை அறிந்தனர்.

குடிமக்கள் போர்க் கொடி தூக்கினர்;
பிடிவாதமாக அதிகாரிகளைச் சாடினர்!

சிற்றரசர்கள் ஆதரித்தனர் அரசனையே;
முற்றிலும் தோற்று விட்டனர் அதிகாரிகள்.

நாட்டை விட்டு ஓடிவிட்டனர் காட்டுக்கு;
நாட்டை மீட்டு ஆட்சி செய்தான் சங்கனன்.

வேங்கட நாதனின் பேரருளே அவனுக்குச்
சங்கடம் தீர்த்தது; ராஜ்ஜியம் அளித்தது.

26. ஆத்மா ராமன் (1)

விந்தியப் பிரதேசத்தில் வாழ்ந்த
அந்தணரின் மகன் ஆத்மா ராமன்.

தெய்வ பக்தி மிகுந்தவன் – எனவே
தெய்வ அருள் பெற்று இருந்தான.

வேத, வேதாந்தங்களைக் கற்றவன்;
பேதமின்றி மதித்தனர் அனைவரும்.

மறைந்து போனார் அவன் தந்தை – ஆனான்!
பெரும் செல்வத்துக்கு புது அதிபதியாக!

பணம் வந்ததும் முழுதும் மாறி விட்டான்;
குணத்தை முற்றிலும் இழந்து விட்டான்.

குல ஆசாரங்களைத் துறந்து விட்டான்;
குல தெய்வத்தையும் மறந்து விட்டான்.

தலைக்கு ஏறியது செல்வச் செருக்கு;
விலைக்கு வாங்கினான் இன்பத்தை.

“குந்தி தின்றால் குன்றும் மாளும்” அல்லவா?
குறைந்தும், மறைந்தும் போனது செல்வம்!

பணம் போனவுடன் போயிற்று கௌரவம்!
குணம் என்றோ போய்விட்டது அல்லவா?

ஒதுக்கி வைத்தனர் வறுமை வந்தவுடன்;
மதிக்கவில்லை குலத்தைச் சேர்ந்தவர்கள்.

“குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பு!”
பலவித பரிஹாசங்களைக் கேட்டு நொந்தான்.

நட்பு என்று சொல்ல யாரும் இல்லை!
நாணம் வந்தது உறவினரைக் காண.

ஊரை விட்டே வெளியேறி விட்டான்;
ஊர் ஊராக அலைந்து திரிந்தான் அவன்.

கால்போன திசையில் நடந்து சென்றவன்
கலியுக வரதனின் திருமலை அடைந்தான்.

27. ஆத்மா ராமன் (2)

பாவங்கள் தீரும் தாபங்கள் மாறும் என,
பகவானை ஆராதித்தான் திருமலையில்.

கபில தீர்த்தத்தில் நீராடினான் முதலில்,
கபிலேஸ்வரரைத் தரிசித்தான் கண்குளிர.

தீர்த்தங்கள் அனைத்திலும் நீராடினான்;
தீர்ந்தன அவன் பாவச்சுமைகள் அவற்றில்.

சுவாமி புஷ்கரிணியை நோக்கிச் சென்றான்.
சுவாமி தரிசனம் செய்தது போல மகிழ்ந்தான்.

கோடி சூரியப் பிரகாசத்துடன் ஒரு குஹையில்
தேடினாலும் கிடைக்காத சனத்குமாரர் இருந்தார்.

வலம் வந்து நமஸ்கரித்தான் அவரை – தன்
வளம் குன்றிவிட்ட பின்புலத்தைக் கூறினான்.

“முற்பிறவியில் நான் செய்த பாவம் என்ன?
முக்காலமும் அறிந்த நீர் சொல்லுங்கள்!” என,

“தான தர்மங்களை இகழ்ந்து பேசினாய்;
தானம் பெறுபவர், தருபவர் இருவரையும்.

நல்ல செயல்களைத் தடுத்தாய் – போனாய்
பொல்லாத வழிகளில் நன்னெறி தவறி!

தந்தையின் புண்ணியம் காத்தது உன்னை!
தந்தை சென்ற பின்னர் பற்றின பாவங்கள்.”

“வியாதியஸ்தனுக்கு வைத்தியன் போலவும்,
வறியவனுக்குக் கிடைத்த புதையல் போலவும்,

காயும் பயிருக்குப் பெய்யும் மழை போலவும்,
தீயோன் எனக்குக் கிடைத்துள்ளீர்கள் நீங்கள்.

இன்னல்கள் தீர வழி கூறுங்கள் சுவாமி!
இனியும் என்னால் தாள முடியாது சுவாமி!”

28. ஆத்மா ராமன் (3)

“ஒரு வழி இருக்கிறது இன்னல் தீர்ந்திட,
திருமகள் கருணையைப் பெறுவது அது!

திருமால் மார்பில் உறைபவள் அவள்,
திருவென்னும் செல்வத்துக்கு அதிபதி!

பூரணச் சந்திரன் போன்ற முகத்தினள்;
கருணையே வடிவாகிக் காக்க வந்தவள்,

வியூக லக்ஷ்மியாக இருந்து தருவாள்,
விஜயம், புகழ், செல்வம் இவை நமக்கு.

முற்பிறப்பில் செய்த பாவங்கள் தீர்ந்திட
பொற் பதங்களைச் சிக்கெனப் பற்றுவாய்!

தாமரை மலரில் அமர்ந்து கொண்டு அவள்
தங்குகிறாள் வேங்கட நாதனின் மார்பில்.”

லக்ஷ்மியின் திருமந்திரத்தை உபதேசித்தார்.
லக்ஷியத்துடன் அவனை ஜபிக்கச் சொன்னார்.

பய பக்தியுடன் பெற்றான் உபதேசம்-அதை
சுய புத்தி மாறாமல் நடந்தான் உச்சரித்து.

சுவாமி புஷ்கரிணியை அடைவதற்குள்
சுலபமாகி விட்டது அந்த மந்திர ஜபம்.

அனைத்துத் தீர்த்தங்களிலும் மேலான
அந்தத் தீர்த்தத்திலும் நீராடினான் அவன்.

அரிய காட்சி தெரிந்தது அருகே வனத்தில்.
அழகிய விமானத்துடன் ஆலயம் ஒன்று.

மண்டபத்தில் குழுமி இருந்தனர் தேவர்;
கண்டான் ஆலயத்தில் அற்புத தரிசனம்.

சங்கு, சக்கரம், கிரீட, குண்டலங்களுடன்
வேங்கடேசன் இருந்தார் தேவியர்களோடு.

கண் கொள்ளாக் காட்சியில் மெய் சிலிர்த்து
தெண்டனிட்டவன் இருந்தான் தடாகம் அருகே!

குறைவற்ற செல்வம் தேடி வந்தது அவனை!
நிறைவான வாழ்க்கை வாழ்ந்தான் நெடுநாள்.

29. சக்கர ராஜன்

துஷ்டர்கள் சாது ஜனங்களுக்கு நானாவிதக்
கஷ்டங்கள் தந்தனர் முன்பொரு சமயம்.

அசுரர்கள் தபஸ்விக்களின் கர்மங்களைப்
பிசுபிசுக்கச் செய்து துன்புறுத்தி வந்தனர்.

முனிவர்கள் குழுமினர் சேஷாச்சலத்தில்;
கனிவுடன் காட்சி தந்தார் ஸ்ரீனிவாசன்.

துயரப் பட்டியலைக கேட்ட ஸ்ரீனிவாசன்,
அயரவில்லை அதனைக் கேட்டுச் சற்றும்!

“நிர்பயமாகத் தொடருங்கள் பணிகளை;
அபயம் அளிப்பான் இனிச் சக்கர ராஜன்!”

அனல் விழிகளுடன் அவன் வீசிய சக்கரம்
அழகிய ராஜகுமாரனாக உருவெடுத்தது.

“எட்டுத் திசைகளிலும் சென்று வேரறுப்பாய்
துஷ்டர்களைக் கூண்டோடு!” உத்தரவிட்டார்.

பெற்றான் சக்கர வேந்தன் என்ற பெயரை;
பெற்றான் அழகிய ரதத்தை மானசீகமாக.

பெற்றான் வலிய கரங்கள் ஓராயிரம்!
பெற்றான் அரிய ஆயுதங்கள் ஓராயிரம்!

கிழக்குப் பக்கம் சென்றான் அவன் முதலில்;
அழித்தான் துஷ்டரைக் கேசிமலைக் காட்டில்.

தென் கிழக்குப் பக்கம் சென்றான் அடுத்து;
தேடி துவம்சம் செய்தான் துஷ்டர்களை!

தெற்கு நோக்கிச் சென்றான் சக்ரராஜன்;
துடிப்புடன் எதிர்த்து வந்தனர் அவனை

உக்கிராங்கன், அங்கன், புளிந்தன், காலகன்
முக்தாயிகன் என்ற ஐந்து அரக்கர்கள்.

சதுரங்க சேனையுடன் வந்தவர் கண்டனர்
எதிரில் வருபவன் தன்னந்தனியன் என்பதை!

நகைத்தனர் சக்கர ராஜனைக் கண்டு!
பகைவர் வந்து சூழ்ந்தனர் ஒன்று சேர்ந்து!

30. அயி சிரசன்

ஐந்து அசுரர்கள் சூழ்ந்தனர் படையுடன்
அஞ்சா நெஞ்சன் சக்கர வேந்தனை!

ஆயிரம் கரங்களால் எய்தான் பாணங்களை;
ஆயிரம் பாணங்களை விலக்கினான் போரில்.

சக்கரம் போலவே சுற்றிச் சுழன்றான்;
சக்கராஜன் போரிட்டான் அசுரருடன்!

போரினைத் தொடர்ந்தனர் வெகுநேரம்;
சூரியனை மறைத்தது பரவிய புழுதி.

கரங்களால் பொழிந்த சர மழையால்
சிரங்களை அறுத்தான் சக்கர ராஜன்!

அயசிரசன் ஆவான் ஐவரின் தலைவன்;
ஐயுற்றான் ஐவரின் அழிவைக் கேட்டு.

“அழிப்பேன் சக்கரனை!” சபதம் இட்டவன்
அழிவது கண்டான் தன் எஞ்சிய படையும்!

வளைத்துக் கொள்ள ஆணையிட்டான்;
அழிக்கும் அஸ்திரத்தையும் விடுத்தான்.

ஆக்னேய அஸ்திரம் விடுத்தான் சக்கர ராஜன்
அக்னிக்கு முன்னால் நிற்க முடியுமா எதுவும்?

அக்னி அஸ்திரம் அழித்தது பாணத்தை;
அக்னி அஸ்திரம் அழித்து அயசிரசனை!

“யமனிடம் அனுப்புவேன் அவனை!” என்று
போர்க்களம் சூளுரைத்து வந்த அயசிரசன்,

யமனிடம் சென்று விட்டான் தான் அவனே
போர்க்களம் வந்து நாழிகைப் பொழுதில்!

தெற்கு திசையில் அழித்தான் துஷ்டர்களை;
தென் மேற்கிலும் அழித்தான் துஷ்டர்களை;

மேற்கு திசை நோக்கிச் சென்றான்,
மேற்கொண்டு அசுரரை அழிப்பதற்கு!

31. வனகர்த்தன்

மேற்கில் வசித்தான் அசுரன் வனகர்த்தன்,
மேற்கொண்டான் தவம் சிவனைக் குறித்து.

“பிறக்க வேண்டும் புஜபலம் மிகுந்த ஒரு மகன்;
சிறக்க வேண்டும் மூவுலகங்களையும் வென்று!”

காலம் கடந்தது; காட்சி தரவில்லை சிவபிரான்,
ஞாலம் வெல்லும் மகனை விரும்பிய அசுரனுக்கு.

தலையை அறுத்து அக்கினியில் இடும் போது,
பலியைத் தடுத்துத் தரிசனம் தந்தான் சிவன்.

“மனிதரும் தேவரும் வெல்ல முடியாத – வீர
மகன் பிறக்க அருள் புரிவீர்!” என்றான் இவன்.

பெருமிதம் கொண்டான் மகன் பிறந்ததும்;
செருக்கு மிகுந்துவிடத் துன்புறுத்தலானான்.

சாதுகளைத் தாக்கினான் ஈவு இரக்கமின்றி.
பேதமின்றிச் சேதப்படுத்தினான் முனிவரை.

சக்கர ராஜனை எதிர்க்க அனுப்பினான் – ஒரு
சதுரங்க சேனையைத் திரட்டி வனகர்த்தன்.

நெருப்பில் வீழ்ந்த விட்டில்கள் ஆயினர்.
நெருங்க முடியவில்லை சக்கர ராஜனை.

படை அழிந்து விட்டது என்று கேட்டதும்
மடை திறந்து கோபம் பெருக்கெடுத்தது.

ஜ்வால பாதனை அனுப்பினான் போருக்கு.
ஜெயிக்க முடியாத மகனே ஜ்வால பாதன்!

அரசகுமாரன் என்று எண்ணினான் பகைவனை.
அறியவில்லை அவன் சுதர்சனத்தின் உருவென!

அஸ்திரங்கள் பாய்ந்தன இரு திசைகளிலும்;
அஸ்திரங்கள் மாய்ந்தன தாக்கிக் கொண்டபின்.

சக்கர ராஜனின் அஸ்திரம் விரைந்து சென்றது;
மிக்க பலத்துடன் ஜ்வால பாதனை நெருங்கியது.

மாயையால் மறைந்துவிட முயன்ற அசுரனை
மாய்த்தது பாய்ந்து தாக்கிய சக்கரனின் பாணம்!

திரட்டி வந்தான் போரில் சிதறி ஓடிய வீரர்களை.
மரித்தான் தொடர்ந்து நடந்த போரில் வனகர்த்தன்.

32. பேரண்டவன்

வடதிசையில் வாழ்ந்தான் அரக்கன் பேரண்டவன்;
வெடவெடக்கும் அண்ட சராசரம் பேர் கேட்டவுடன்!

பிரம்மாண்டமான சேனை வெள்ளத்துடன் வந்ததும்,
பெருமானை தியானித்தான் சக்கர ராஜன் ஒரு கணம்.

அசுர சேனைக்கு இணையான அரிய சேனை ஒன்று
அதே கணத்தில் தோன்றியது ஆயுதங்களுடன் அங்கு.

கொடிய யுத்தம் தொடங்கி நடந்தது உடனே – போரில்
மடிந்தனர் எண்ணற்ற வீரர்கள் இரு சேனைகளிலும்.

வெற்றியும், தோல்வியும் இன்றி நீண்ட போரில்
வெறி கொண்ட அசுரர்களின் கை ஓங்கலானது.

சக்கர ராஜனின் படை வீரர்கள் பின் வங்கலாயினர்;
மிக்க சினம் கொண்டு அவன் செய்தான் ஹூங்காரம்.

சினத்தில் தோன்றினான் தேவ புருஷன் பாவகன்!
“சின்னா பின்னம் செய்வாய் அசுரர்களை!” என

பாவகன் தலைமையில் பொருதனர் மீண்டும்;
பாய்ந்து முன்னேறிய சக்கர ராஜனின் வீரர்கள்.

பாவகன் மீது பாய்ந்தனர் அசுரர்கள் இப்போது!
பாவகன் எய்தான் மயக்கும் மோகன அஸ்திரம்!

மறந்தனர் தம்மையே; துறந்தனர் போரையே;
எறிந்தனர் ஆயுதங்களை; மறிந்தனர் நிலத்தில்!

பேரண்டவன் எய்தான் ஹாஹாகாரம் செய்தபடி
மோகன அஸ்திரத்தை வெல்லும் ஞான அஸ்திரம்.

தூக்கத்தில் இருந்து எழுபவர்போல மீண்டும்
எழுந்து தாக்கினர் ஆயுதங்களால் அசுரர்கள்.

எய்தான் பாவகன் தன் கிரௌஞ்ச வாளியை!
எய்தான் பேரண்டவன் பைசாச அஸ்திரத்தை!

இரண்டும் தாக்கின அசுரர்கள் படையினையே!
பேரண்டவன் எய்தான் பிரமன் தந்த சூலாயுதம்!

வாயு அஸ்திரத்தை எடுத்து விடுத்தான் பாவகன்;
வாயு அஸ்திரம் வாயுவென விரைந்து சென்றது.

வாரிச் சுருட்டிப் பாய்போல எறிந்தது அசுரனை!
நேரில் பார்த்தவர் வீழ்ந்தனர் வியப்புக் கடலில்!

மண்டை உடைந்து மடிந்தான் அசுரன் பேரண்டவன்;
சண்டை முடிந்து திரும்பி விட்டான் சக்கர ராஜன்.

இனிதாக ஆணைகளை நிறைவேற்றிய பின்னர்
இணைந்தான் ஸ்ரீனிவாசனின் சக்கரத்தில் மீண்டும்.

வேறு புராணங்களில் காணப்பட்ட சில கதைகளின் தொகுதி முற்றியது.

பொங்குக மங்களம்!!! தங்குக எங்கும்!!!

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெருமாளின் கல்யாண குணங்கள் -ஸ்ரீ கூரத்தாழ்வான்–ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்ஜ்வல பாரிஜாதம்–ஸ்ரீ ஹரே ராம சீதா ராம ஜய ஜய ராம– —

February 24, 2023

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம யுக்தி மதீ மஹே
யத் யுக்தஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்

அர்வாஞ்சோ யத் பத ஸரஸி த்வந்தம் ஆஸ்ரித்வ பூர்வே
மூர்த்ரா யஸ்ய அந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு
சோயம் ராமானுஜ முனிர் அபி ஸ்வீய முக்திம் காரஸ்தம்
யத் சம்பந்தாத் அனுமத கதம் வர்ணயதே கூர நாத

————

ஸ்வஸ்தி ஹஸ்தி கிரி மஸ்த சேகர சந்த நோது மயி சந்ததம் ஹரி
நிஸ் சமாப்யதிக மப்ய தத்த யம் தேவம் ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–1-

ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–ஒவ்பநிஷத்துக்களின் வாக்கானது
யம் தேவம் -யாவன் ஒரு எம்பெருமானை
நிஸ் சம அப்யதிகம் அப்ய தத்த -ஓத்தாரும் மிக்காணும் இல்லாதவனாக ஓதிற்றோ
ஹஸ்தி கிரி மஸ்த சேகர-ஸ்ரீ ஹஸ்திகிரி சிகரத்தின் ஆபரணமாய் உள்ள
ஸ ஹரி -அந்த ப்ரணதார்த்தி ஹர ஸ்ரீ வரதன்
மயி-அடியேன் மீது
சந்ததம்-எப்போதும்
ஸ்வஸ்தி சந்த நோது -நன்மையை நிரம்பச் செய்ய வேணும்

உபய விபூதியிலும் அடியேனுக்கு நன்மை அருளிச் செய்ய வேணும் –
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் சர்வ வித கைங்கர்யங்களையும்
உடனாய் மன்னி வழு இல்லாமல் செய்யப் பெற வேணும் என்று தாத்பர்யம் –

திந் நாகைர் அர்ச்சிதஸ் தஸ்மிந் புரா விஷ்ணுஸ் சநாதந –
ததோ ஹஸ்தி கிரிர் நாம க்யாதி ராஸீத் மஹாகிரே –ஸ்ரீ ஹஸ்திகிரி மஹாத்ம்யம்
திக் கஜங்கள் ஆராதித்த படியால் ஸ்ரீ ஹஸ்தி கிரி திரு நாமம் –

சேகர -சிரஸ்ஸுக்கு அலங்காரம்-அலங்கார மாத்ரத்தை சொல்லா நிற்கும் –
மஸ்த சப்தம் தனியாக சிரஸ்ஸை சொல்வதால் –
சந்த நோது-சம்யக் விஸ்தாரயது -என்றபடி
நிஸ் சமாப்யதிகம் -ந தத் சமச் சாப்யதி கச்ச த்ருச்யதே -உபநிஷத்
ஓத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு இன்றி நின்றான்
ஓத்தார் மிக்காரை இலையாய மா மாயா
ககநம் ககநாகாரம் சரஸ் சாகர உபம –

——————-

ஸ்ரீ நிதிம் நிதிம் அபாரம் அர்த்திநாம் அர்த்திதார்த்த பரிதான தீஷிதம்
சர்வ பூத ஸூஹ்ருதம் தயா நிதிம் தேவ ராஜம் அதி ராஜம் ஆஸ்ரயே–2-

ஸ்ரீ நிதிம் -ஸ்ரீ யபதியாய்
அபாரம் நிதிம் -அளவற்ற நிதியாய் இருப்பவனாய்
அர்த்திதார்த்த பரிதான தீஷிதம் –வேண்டியவற்றை கொடுத்து அருளுவதையே விரதமாகக் கொண்டவனாய்
அர்த்திநாம்
சர்வ பூத ஸூஹ்ருதம் -ஸமஸ்த பிராணிகளுக்கும் அன்பனாய்
தயா நிதிம் அதி ராஜம் -கருணா நிதியாய் அனைவருக்கும் மேம்பட்ட தலைவனாய் இரா நின்ற
தேவ ராஜம் ஆஸ்ரயே–அயர்வரும் அமரர்கள் அதிபதியான பேர் அருளாளனை -தேவ பிராணனை திருவடி பணிகின்றேன்

————–

ஆதி ராஜ்யம் அதிகம் புவநா நாம் ஈஸ தே பிசு நயந் கில மௌலி
சூளிகா மணி சஹஸ்ர மரீஸே ஹஸ்தி பூஷண பவத்யுத யாத்ரி –25-

ஹஸ்தி பூஷண -ஸ்ரீ ஹஸ்தி கிரிக்கு அலங்காரமாயுள்ள
ஹே ஈஸ–ஸ்ரீ தேவாதி ராஜனே
புவநா நாம்-உலகங்கட்க்கு எல்லாம்
ஆதி ராஜ்யம் -நீ அதி ராஜனாய் இருக்கும் தன்மையை
அதிகம் -மிகவும்
பிசு நயந்-கோட் சொல்லா நின்ற
தே மௌலி -உன்னுடைய திரு அபிஷேகமானது
சூளிகா மணி சஹஸ்ர மரீஸே –தன் சிகரத்தில் உள்ள ரத்னமாகிற ஸூர்யனுக்கு
யுத யாத்ரி –உதய பர்வதமாக
பவதி கில –ஆகா நின்றது அன்றோ

திரு அபிஷேகத்தில் கண் வைத்தவர் பாசுரம் ஈஸ –ஈஸத்வம் தோற்ற இறே திரு முடி தரிப்பது –
கண்டவாற்றால் தனதே யுலகு என நின்றான் –
அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனன் தானே திரு அபிஷேகம் சூடி சேவை சாதிப்பான்
சூளிகா மணி-உபய விபூதி சாம்ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை பர்வதமாக உல்லேகிக்கிறார்
பொற் சுடர்க் குன்று அன்ன பூம் தண் முடியர் அன்றோ
நுனியில் அழுத்தின ரத்னம் -ஸூர்யன் போலே இரா நிற்க -அதற்கு உதய பர்வதமாயிற்று இத்திரு அபிஷேகம்
கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடியன் அன்றோ –
உதய பருப்பதத்தின் மேலே விரியும் கதிரே போலே விளங்கும் –

—————-

அக்ருத ஸூக்ருதகஸ் ஸூ துஷ் க்ருத்தரஸ் சுப குண லவலேச தேச அதிகஸ்
அஸூப குண பரஸ் சஹஸ்ர ஆவ்ருத்தஸ் வரதம் உருதயம் கதிம் த்வாம் வ்ருணே -83-

அக்ருத ஸூக்ருதகஸ் –அல்ப ஸூஹ்ரு தத்தையும் அனுஷ்டிக்காதவனாய்
அஞ்ஞாத ஸூஹ்ருதங்களை எம்பெருமான் ஆரோபித்து மடி மாங்காய் இடுவதற்கு ஏற்ற க்ருத்ய லேசமும் செய்திலேன்
ஸூ துஷ் க்ருத்தரஸ் –பாபிஷ்டர்களில் அக்ர கண்யனாய்
சுப குண லவலேச தேச அதிகஸ் –நல்ல குணத்தின் லவ லேசத்துக்கும் அதி தூரஸ்தனாய்
அஸூப குண பரஸ் சஹஸ்ர ஆவ்ருத்தஸ்– காம க்ரோதம் முதலிய பல்லாயிரம் தீய குணங்கள் சூழப்பட்டவனான அடியேன்
ஒரோ மயிர்க்குழிக்கும் ஓராயிரம் துர் குணங்கள் காணக் கிடைக்கும் என்கிறார் போலும்
உருதயம் வரதம்–பேர் அருளாளனாய் வரம் தரும் பெருமாளாக
த்வாம் கதிம் வ்ருணே —உன்னை சரணமாக அடைகிறேன் –

கீழே தம்முடைய தோஷ பூயஸ்த்தையை பரக்க வெளியிட்டு –பரியாப்தி பெறாமல் –
சரண வரண சம காலத்தில் தோஷ பிராசர்ய அனுசந்தானம் அவசியம் என்னும் இடத்தை
வெளி இடுகைக்காகவும்
ஸ்வ தோஷ பூயிஷ்டத்வ அனுசந்தான சகிதமாக பிரபத்தி பண்ணுகிறார்
ஸக்ருத் ஏவ ஹி சாஸ்த்ரார்த்த –என்னும் அளவில் இருப்பவர் அன்றே –
பிரபத்தி தேஹ யாத்ரா சேஷமாக அன்றோ நம்மவர்கள் கொண்டு இருப்பர்கள்

இப்படிப்பட்ட அடியேன் -பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம்பெருமானாய்
மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய் கச்சியிலே வரம் தரும் மா மணி வண்ணனாய் எழுந்து அருளி இரா நின்ற
தேவரீரை அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டப் பிராப்தியைப் பண்ணித் தர வல்ல
உபாயமாகப் போற்றுகிறேன் என்கிறார் ஆயிற்று

—–

அயே தயாளோ வரத ஷமாநிதே விசேஷதோ விஸ்வ ஜநீந விஸ்வத
ஹிதஜ்ஜ சர்வஜ்ஞ சமக்ர சக்திக ப்ரஸஹ்ய மாம் ப்ராபய தாஸ்யமேவ தே –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -93-

தயாளோ -ஷமாநிதே-பேர் அருளாளனே பொறுமைக்கு நிதியே
சரீரத்துக்கு வரும் துக்கம் சரீரிக்கு -பர துக்க துக்கி அன்றோ தயாளு

விசேஷதோ விஸ்வ ஜநீந –மிகவும் சகல ஜனங்களுக்கும் ஹிதனே
இவற்றின் புறத்தாள்-விஸ்வத்தில் பஹிர் பூதனோ அடியேன் -ஸ்வ ஜனஸ்ய ச ரக்ஷிதா என்றது கழிந்தால்
ரக்ஷிதா ஜீவ லோகஸ்ய என்கிற ஊர் பொதுவும கழிய வேணுமோ
அநா லோசித விசேஷ அசேஷ லோக சரண்யன் அன்றோ நீர்

விஸ்வத–எல்லா வற்றையும் தந்து அருள்பவனே
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் அன்றோ

ஹிதஜ்ஜ -அடியோங்களுக்கு ஹிதமானவற்றை அறியுமவனே
உண்ணிலாய ஐவரால் குமை தீற்றி என்னை யுன் பாத பங்கயம் நண்ணிலா வகையே நலியப்
பார்த்து இருக்கையோ அடியேனுக்கு தேவரீர் அறிந்து வைத்த ஹிதம்

சர்வஜ்ஞ –எல்லாவற்றையும் அறிபவனே
உட் கிடந்த வண்ணமே புறம் பொசிந்து விளங்குகின்ற என் ஆர்த்தியை அறியீரோ
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிவீர் ஆயினும் பாசுரம் கேட்டவாறே
திரு உள்ளம் உகக்கும் என்று அன்றோ அடியேன் பிதற்றுவது

சமக்ர சக்திக –பரி பூர்ண சக்தி உடையவனே
இரும்பை பொன்னாக்க வல்லீரே -பொருள் இல்லாத என்னைப் பொருள் ஆக்கி -உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்

அயே வரத –வரம் தரும் பெருமாள் என்ற திரு நாமம் உடையவனே
அடியேனுக்கு இத்தனையும் செய்ய திரு உள்ளம் இல்லையாகில் தேவருடைய வரதத்வம் என்னாவது –

மாம்பழ உண்ணி போலவோ திரு நாமம் வஹிப்பது
மாம் தே தாஸ்யமேவ –அடியேனுக்கு உன் அடிமைத் திறத்தையே
ப்ரஸஹ்ய ப்ராபய–எப்படியாவது பிராப்தம் ஆக்கி அருள்

நிரீஷிதம் வ்ருணே –92-என்று கீழே சாஷாத்கார மாத்ரம் அபீஷ்டம் என்றார்
கண்டேன் கமல மலர்ப் பாதம் என்றால் அடுத்த படியாக
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக -என்பார் –
ஆகவே இவரும் கைங்கர்ய பிரார்த்தனை இதில்
ஷூத்ர பலாந்தரங்களிலே ருசியைத் தவிர்த்து தேவரீர் திறத்தில் கைங்கர்ய சாம்ராஜ்யத்தையே
பெறுவித்து அருள வேணும் என்கிறார் ஆயிற்று –

——————-

12 குணங்கள் ஒவ்வொருவருக்கும் காட்டி

1-தயா -தயா சதகம் -கல்கண்டு போல் திருமலை -ஞானாதிகள் அப்ரயோஜனம் தயை இல்லாமல் –
பிரதானம் இதுவே -ராமானுஜரை விந்தியா மலையில் இருந்து மிதுனமாக அழைத்துச் சென்றார்களே

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–

விந்தியக் காடு, இருள் சூழ, திகைத்திருந்து, ‘ஆவாரார் துணை?’ என்று கலங்கி நின்றபோது,
தேவாதி ராஜன் –காஞ்சி வரதராஜப் பெருமாளும் பெருந்தேவித் தாயாரும், வேடுவனும் வேடுவச்சியுமாக வந்து காத்து,
மறுநாள் விடியலில் காஞ்சிக்கருகில் கொண்டு வந்து சேர்த்தனர்.
தாயார், “நீர் வேண்டும்” என்று கூற, அருகில் உள்ள (சாலைக்) கிணற்றிலிருந்து நீர் கொண்டு வந்து தர, உடன் அவர்கள் மறைந்தனர்.
உடையவர் தம்மைக் காத்தவர் யார் என்ற உண்மை உணர்ந்து, தினமும்
அக் கிணற்றிலிருந்து நீர் எடுத்து வந்து திருமஞ்சனத்திற்கு கைங்கர்யம் செய்து வரலானார்.
கருமாமுகிலுருவா, கனலுருவா புனலுருவா
பெருமாள் வரையுருவா, பிறவுருவா, நினதுருவா
திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அருமா கடலமுதே உனதடியே சரணாமே.
யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1-
இவன் அருளால் பெற்ற ஸாம்யா பத்தி ஸ்வாமிக்கும் உண்டே

யாவர் ஒரு எம்பெருமானார் -எப்போதும் ஸ்ரீ எம்பெருமானுடைய திருவடித் தாமரை இணையாகிற ஸூவர்ணத்தில்
உள்ள வ்யாமோஹத்தால்
அந்த பாதாரவிந்தங்கள் தவிர மற்ற விஷயங்களை த்ருணமாக எண்ணி தம் திரு உள்ளத்தால் திரஸ்கரித்தாரோ –
இப்படிப்பட்டவரும் கிருபைக்கு முக்கியமான கடலாக உள்ளவரும் -கல்யாண குண சாலியும்-
அஸ்மத் ஆச்சார்யருமான எம்பெருமானார் திருவடிகளை சரணம் புகுகிறேன் -என்கிறார்

———-
2-ஷாந்தி ஸகல மனுஷ நயன விஷயதாங்கனாக -பொறுமை யுடன் நமக்காக
காஞ்சி பிரம்மாவால் தொழப்பட்டவர்
ஹஸ்திகிரி
ஹஸ்த திரு நக்ஷத்ரம்
சரஸ்வதி -வேகவதி -பல திவ்ய
திருவெஃகா வேகா சேது
ஒரு ஆஸ்ரிதனான ப்ரம்மனுக்காக
ஹஸ்திகிரி மத்த சேகரன்
அத்திகிரியான்-த்யாகேசன்

————-

3-ஓவ்தார்ய –
ஆர்த்திதார்த்த பரிபால தீக்ஷிதன்
வரம் ததாதி
வரதம் அளிப்பவர்களுக்குள் ஈஸ்வரன்
வரத ஹஸ்தம் இல்லாமல் அபய ஹஸ்தம்
வரதராஜனாகவே பிரசித்தமாக இருக்க ஹஸ்தமும் காட்ட வேண்டுமோ

கொள்ளும் பயனில்லை குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து நும் வாய்மை இழக்கும் புலவீர்காள் !
கொள்ள குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் என்
வள்ளல் மணி வண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ –3-9-5-
திருமங்கை ஆழ்வாருக்கு காட்டிக்கொடுத்த உதார வள்ளல்-மண்ணை அளந்து பொன்னாகி -இஹ லோக ஐஸ்வர்யம்
தன்னையே கொடுக்கும் கற்பகம்
ராமாநுஜரையே அரங்கனுக்கு கொடுத்த உதார குணம்
சேராது உளவோ பெரும் செல்வருக்கு—அரையர் ஸ்துதிக்க -ஸ்த்வயன் -ஸ்தவ ப்ரியன் – ஸ்துதி பிரியன்
ஞானம் வழங்கிய உதாரம் -யஜ்ஞ மூர்த்தி -அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
பிள்ளை லோகாச்சார்யாராக -இவரே
ஏடு படுத்தச் சொல்லி
——–
4-பிரதிம ஸ்வ பாவம் -மென்மையான -திருமேனியும் -திரு உள்ளவும் மார்த்தவம்
ஞானிகள் பிரிவை அஸஹம்
வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் -திரு மூழி க்களத்தில்
ஆலவட்டம் -கைங்கர்யம் -ஆறு வார்த்தை
——-
5-சமதா -பக்தனை எனது அளவாவது
வேறுபாடு மட்டும் அல்ல
தன்னையும் அவர்களுக்கு கீழ்
அஷ்ட வித பக்தி மிலேச்சசன் இடம் இருந்தாலும்
அருளாளப்பெருமாள் எம்பெருமானார் பெயரிலே சாம்யம்
———–
6-ஸுஹார்த்தம்
கிருபை இதன் அடிப்படையால்
ஸூஹ்ருதம் ஸர்வ பூதா நாம்
முனியே -மனன சீலன் –
உறங்குவான் போல் யோகு செய்து
நாலூரானுக்கும் முக்தி
——–
7-த்ருதி
ஊற்றம் உடையார்
ஆஸ்ரித ரக்ஷணம்
ராமானுஜர் அவதாரம் தொடங்கி உபகார பரம்பரைகள்
நம்மாழ்வார் திரு உள்ளத்திலும் பட அருளி
——
8-பிரசாதம்
பேர் அருளாளன் அருளாத நீர் அருளி வீதி வழியாக ஒரு நாள்
———-
9-ப்ரேம
சேர்த்தி புறப்பாடு பிரசித்தம்
கஜேந்திர ரஷணம் -அகில காரணமத்புத காரணம்
நடாதூர் அம்மாள்
அம்மாள் ஆச்சார்யன் எங்கள் ஆழ்வான்
————
10ஆஜ்ஞா
ஆறு வார்த்தைகள் பிரசித்தம்
ராமானுஜரை ஆக்கி அருளி
ஆளவந்தார் ஆ முதல்வன் கடாக்ஷிக்க சரண் அடையும் பொழுதும் அருளி
விந்திய மலையில் இருந்து காத்து அருளி
ஸந்யாஸ ஆஸ்ரமும் அநந்த ஸரஸ்ஸில் செய்து அருளி
அரங்கனுக்கு அரையர் மூலம் கொடுத்து அருளி
ஸ்ரீவசன பூஷணம் ஏடு படுத்த
ஈட்டை வெளியிட்டு அருளி
————
11-ஆஸ்ரித சுலப
தொட்டாச்சார்யார் ஸேவை பிரசித்தம்
——–
12 கல்யாண
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்ஜ்வல பாரிஜாதம்
ஸுந்தர்யம் லாவண்யம் மிக்கு
ஆதி ராஜ்யம்
திவ்ய மங்கள விக்ரஹம்
நாபி சுழி
வலித்ரயம் உதர பந்தம் பட்டம் கட்டி -தாமோதரன்
ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோநிகள் தோற் உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண்டகு தோள் அண்ணல் தென்னத்தியூரர் கழல் இணைக் கீழ்
பூண்ட அன்பாளன் இராமானுசனைப் பொருந்தினமே – 31-
(கற்பக வருஷம் வாஹனம் சேவிக்கும் பொழுது நினைக்க வேண்டியது
என்னை ஆக்கி -எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -மூன்று ஏற்றம் கற்பக வ்ருக்ஷத்தை விட
முதலில் என்னையும் ஆக்கி -அர்த்திகளை உருவாக்கி -விரோதி நிரஸனமும் செய்து அருளி
தன்னையே தந்து –
பாரிஜாத மரம் வ்ருத்தாந்தம் அறிவோமே
மறப்பேன் என்று நேரில் புகுந்து -பேரேன் என்று நெஞ்சு நிறையப் புகுந்து
எனக்கே -அனைவருக்கும் தனக்கு மட்டுமே என்று சொல்லிக் கொள்ளும்படி பூர்ண அனுபவம் )
————-
காஷ்மீர் பக்தி மண்டபம் சாரதா பீடம் -வித்வான்கள் மலிந்த இடம்
காஷ்மீர அரச வம்சத்தின் வரலாற்றைக் கூறும் ‘ராஜ தரங்கணி’ என்ற வடமொழி நூல்

—————————————————————————————

ஸ்ரீ ரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்,
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம் |
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்ஜ்வல பாரிஜாதம்,
ஸ்ரீ சம் நமாமி சிரஸா யதுசைல தீபம் ||

இந்த நான்கு திவ்ய தேசங்களிலும் நடை வடை குடை முடி என்று விசேஷங்கள் உண்டு.
கோவிலில் நடை மிகவும் அழகு.
திருமலையில் வடையின் ப்ரபாவம் எல்லாருக்கும் தெரியும்.
பெருமாள் கோவிலில் குடை விசேஷம். -கொடையும் விசேஷம் பேர் அருளாளன் அன்றோ
திருநாராயண புரத்தில் வைர முடி விசேஷம்.

கோயில் (ஸ்ரீரங்கம்), திருமலை, பெருமாள்கோயில், திருநாராயணபுரம் என்ற
இந்த நான்கு திவ்யதேசங்ககளுக்குப் பிராதான்யம் கொடுத்திருக்கின்றனர்.

———————-

ஸ்ரீ ஹரே ராம சீதா ராம ஜய ஜய ராம

ஹரே அகில ஹேய ப்ரத்ய நீகன்
ராம -கல்யாண ஏக குண நிதி -ஏக ஸ்தானம்
சீதா ராம -மிதுனமே ப்ராப்யம்
ஜய ஜய ராம -பேற்றுக்கு உகப்பானும் அவனே
ஆஸ்ரித நிரஸனம் -ஸுலப்யம் -ஸுசீல்யம் -போக்யம் பசும் கூட்டம்

ஸத்ய வாக்யனாகி -சத்யம் நேர்மை உறுதி மூன்றும் சேர்ந்தவன் -நம்மையும் அப்படி ஆக்கி அருளுவான் அன்றோ

ஹரே ராம-நன்மை செய்யும் ஸுஹார்த்தம் -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி — தாரகம் –வாழ் முதல்
ஜய ராம்-போஷகம் -வளர் முதல்
சீதா ராம -ஸீயாராம் -அயோத்தியில் கோஷம் –பிராகிருத வீட்டுப்பேச்சு -போக்யம்-ஸ்ரீ யபதித்தவம் – -மகிழ் முதல்

ராதே கிருஷ்ணா ராதே ராதே பிருந்தாவனம் இதே போல்-

உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் மிதுனமே

திருவுக்கும் திருவாகிய செல்வன்

ஸுர்ய -வீர்ய -பராக்ரமம்
வெளியில் இருந்து தான் கலங்காமல் ஸுர்ய
புகுந்தும் கலங்காமல் பராக்ரமம் சின்னா பின்னம்
தனக்கு விகாரம் இல்லாமல் மற்றவை விகாரம் செய்வது வீரம்
ஜய ஜய மஹா வீரா

ஜய ஜய மஹா வீர
மஹா தீர தவ்ரேய
தேவாஸூர சமர சமய சமுதித
நிகில நிர்ஜர நிர்த்தாரித நிரவதிக மஹாத்ம்ய
தச வதன தமித தைவத பரிஷதப் யர்த்தித தாசரதி பாவ
தி நகர குல கமல திவாகர
திவிஷ ததிபதி ரண ஸஹ சரண சதுர தசரத சரமருண விமோசன
கோசல ஸூதா குமார பாவ கஞ்சுகித காரணாகார –7-

விகாரம் தனக்கு கொஞ்சமும் இல்லாமல் மற்றவர்க்கு -வீரம் சூரம் பராக்ரமம் -கலங்காமல் –
உள்ளே புகுந்து சின்னாபின்னம் ஆக்கி– தான் கிஞ்சித்தும் மாறாமல் -மூன்றும் உண்டே
மஹா வீரன் – பூஜிக்க தக்கவன் மஹான்-
ரகு -இஷுவாகு குலம் -சூர்ய குலம் மனுவின் பிள்ளை இஷுவாகு -ரகு குலம் என்பதால் ராகவன் –
குணம் ஒவ் ஒன்றுமே விகாரம் அடைவிக்குமே -வில் கொண்டு மட்டும் இல்லை -அது சாதாரணம்
அழகில் ஆழ்ந்து –நேர்மையில் ஆழ்ந்து –ஆர்ஜவத்தில் ஆழ்ந்து போவோமே
திருவடி கொண்டாடும் துறை -வீரம் -பக்திஸ்ஸ நியதா வீர–பாவோ நான்யத்ர கச்சதி —
வீரத்தை தவிர வேறு ஒன்றிலும் செல்லாதே –
கோன் வஸ்மி-குணவான் -கஸ்ய வீர -16-கல்யாண குணங்களில் -ஸுசீல்யத்துக்கு அடுத்து –
நேர்மையுடன் கூடிய வீரன் பெருமாள் -ஆயுதம் எடுக்காத வெறும் கை வீரன் கீதாச்சார்யன் –

ஸத்ய வாதி பிரிய வாதி த்ருட வாதி -மே விரதம் -அசைக்க முடியாத திடம்-சரணாகத வாத்சல்யம் -அபய பிரதான சாரம்

ஸத்ய வாதி -ஹரே ராம
பிரிய வாதி -சீதா ராம
த்ருட வாதி-ஜய ஜய ராம

ஸத்ய பாஷா ராகவா பிரிய பாஷா ராகவா மிருது பாஷா ராகவா பூர்வ பாஷா ராகவா மஞ்சு பாஷா ராகவா –
சொல்லின் செல்வன் இவனே கொண்டாடும்படி திருவடி

விதித சஹி தர்மஜ்ஞ சரணாகத வத்சல
தேன மைத்ரீபவது தே யதி ஜீவிதம் இச்சசி -சுந்தர -21-20-

மித்ர பாவேன சம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன
தோஷோய த்யபி தஸ்ய ஸ்யாத் சதாமேதத் அகர்ஹிதம் -யுத்தம் -18-3-

விபீஷணோ வா ஸுக்ரீவ யதி வா ராவணஸ்வயம்*

—————-

நாமீயை விட நாமத்துக்கே ப்ராபாவம் ஜாஸ்தி

காலையில் துயிலெழும் போது :-
“ஹரிர் ஹரி ஹரிர் ஹரி”என்று ஏழு தடவை சொல்ல வேண்டும்.

வெளியே புறப்பட்டுப் போகும் போது :-
“கேசவா”என்று சொல்ல வேண்டும். “கேசவா” என்று சொன்னால் இடர்கள் எல்லாம் கெடும்.

உணவு உட்கொள்ளும் போது :-
“கோவிந்தா”என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும்.

இரவு படுக்கச் செல்லும் போது :-
“மாதவா”என்று கூற வேண்டும்.

கஜேந்திர மோக்ஷம் செய்து அருளினை அவதாரம்
துஸ் ஸ்வப்னம் போக்கும்
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் -361-656-ஹரி நாமம்

நாராயணா மணி வண்ணா -ஆர் இடரை நீக்காய்
கபிஸ்தலம்
சென்று நின்று ஆழி தொட்டானை
புண்யோ துஸ் ஸ்வப்ன நாசநா
அஜிதன் -அம்ருத மதனன் –கூர்மம் தங்கி -மோஹினி -அவதாரங்களும் உண்டே

பச்சை வர்ணத்தையும் ஹரி குறிக்கும்
பச்சை வண்ணன் பவள வண்ணன்
கரும் பச்சை
நீல மேக ஸ்யாமளன் -கறுத்தே -முகில் வண்ணன் -பச்சையும் மரகத பச்சை ஆழ்ந்து
ஸம்ஸ்திதா பூஜித -கோவர்த்தன மலையில் இன்றும் எழுந்து அருளி இருக்கிறவன் ஹரி திரு நாமம் -பட்டர்
கோவர்த்தன தாரியும் ஹரி -குன்று எடுத்து குளிர் மழை காத்தவன் –

ஓம் பிரணவத்தையே தாங்கும் ஹரி திரு நாமம்-திரு மணத் தூண்கள் ஹரி-த்வய அக்ஷரங்களே –

ரமயதீ ராம –கண்டவர் தம் மனம் வழங்கும் -திருஷ்ட்டி ஸித்த அபஹாரிணாம்
ஒரு நாள் முகத்தில் விளித்தாரை படுத்தும் பாடு அறிவோமே

ரூபம் குணம் இரண்டுமே வசீகரிக்கும்
நடத்தை -இன்றும் பாஷ்யகாரர் உத்சவம் நடை அழகை ராமர் பிரகாரத்தில் நடை பெறுமே
ரம்யதி-மகிழ்ச்சி கொடுப்பதில் ஸ்ரேஷ்டம் –
ராம நாமமே ஜென்ம ரஷக மந்த்ரம்

ரம்யதே அஸ்மின் –தோள் கண்டார் தோளே கண்டார் –
பூமா -ஒவ்வொன்றும் –
வேறே எங்கும் போகவோ கேட்கவோ அனுபவிக்கவோ போக முடியாதே
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே
அபி ராமம் -நீலோத் புஷ்பம் -ஸரத்கால முழு நிலா -பிருந்தாவனத்தில் பெரிய ஸமூஹம்
குணாபி ராமன் ராமஞ்ச –

ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் சர்வ சம்பதாம் -ஹரே ராம் அர்த்தம்

ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்
லோகாபி ராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம் யஹம்
ஆர்த்தானாம் ஆர்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதி நாசனம்
த்விஷதாம் கால தண்டம் தம் ராமசந்த்ரம் நமாம் யஹம்
ஸன்னத்த: கவசீ கட்கீ சாப பாண தரோ யுவா
கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாது ஸ லக்ஷ்மண:
நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத சராய:
கண்டிதாகில தைத்யாய ராமாயா ஆபந் நிவாரிணே
ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:
அக்ரத: ப்ருஷ்டத ச்’சைவ பார்ச்வதஸ்ச மஹாபலௌ
ஆகர்ண பூர்ண தன்வானௌ ரக்ஷேதாம் ராம லக்ஷ்மணொ…
அச்யுதாநந்த கோவிந்த.நாமோச்சாரண பேஷஜாத்
நஸ்யந்தி ஸகலரோகா: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்
ஸத்யம் ஸத்யம் புனஸ் ஸத்யம் உத்ருத்ய புஜமுச்யதே
வேதாச்சாஸ்த்ராத் பரம் நாஸ்தி ந்தைவம் கேசவாத்பரம் //
 
சரீரே ஜர்ஜரி பூதே வ்யாதிக்ரஸ்தே களேபரே
ஒளஷதம் ஜாஹ்நவி தோயம் வைத்யோ .நாரயணோ ஹரி:
ஆலோட்ய ஸர்வசாஸ்த்ராணி விசார்ய ச புந: புந:
இதமேகம் ஸுநிஷ்பநம் த்யேயோ .நாரயணோ ஹரி :
 
காயே.ந வாசா ம.நஸா இந்த்திரியைர் வா
புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
நாரயணாயேதி ஸமர்ப்பயாமி //
 
யதக்ஷர பதப்ரஷ்டம் மாத்ராஹீநந்து யத்பவேத்
தத்ஸர்வம் க்ஷ்ம்யதாம் தேவ.நாரயண .நமோஸ்துதே
விஸர்க்க பிந்து மாத்ராணி பதபாதாக்ஷராணி ச
ந்யூநாநி ச அதிரிக்தாநி க்ஷமஸ்வ புருஷோத்தம://
ராம நாமமே தாரக ம்ந்த்ரம். கஷ்டங்களை விலக்குபவர். பீடைகளை ஒழிப்பவர். பயங்களை போக்குபவர். ஸர்வ மங்களங்களையும் தருபவர். ஒரு நாள் ஒரு தரம் சொன்னால் போதும்.

ஹரே ராம
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -ஹரி சொன்னாலே ராம புண்யம் கிட்டும்
ராம ஹரே
கிட்டி அனுபவிக்க போக -ஸம்ஸார உழன்று இருக்க -யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே-அணைவிக்கும் முடித்தே
தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன் சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-

கஷ்டங்களை நீக்கி ஆனந்தம் தருவதே ஹரே ராம்

வேத ஸ்வரூபமே ஸ்ரீ ராமாயணம்-“வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே! வேத: ப்ராசேதஸாதாஸீத ஸாக்ஷாத் ராமாயணாத்மனா!!”

வேதங்கள் சொல்லுகின்ற பரமபுருஷன் ஸ்ரீராமனே ஆவான் என்பது ஆன்றோர் வாக்கு. அந்தப் பரம புருஷனே தசரத புத்திரன் ஆன ஸ்ரீராமனாக ஆவிர்ப்பவித்தான், அவதாரம் செய்தான். வேதத்தின் சரீரமே ஸ்ரீராமன். அந்த சரீரம் ஸ்ரீராமனாய் அவதாரம் செய்தபின்னர் வேதங்கள் அனைத்தும், வால்மீகிக்கு வசப்பட்டு அவர் திருவாக்கால் ராமாயணமாக மாறிவிட்டன என்பது பெரியோர் வாக்கு.

ராம நாமம் ஒரு வேதமே! ராம நாமம் ஒரு வேதமே ராக தாளமொடு கீதமே
மனம் எனும் வீணை மீட்டிடுவோம் இசை எனும் மாலை சூட்டிடுவோம்
அருள் மிகு ராம நாமம் ஒரு வேதமே ராக தாளமொடு கீதமே
அவன் தான் நாரணன் அவதாரம் அருள்சேர் ஜானகி அவன்தாரம்
கௌசிக மாமுனி யாகம் காத்தான் கௌதமர் நாயகி சாபம் தீர்த்தான் (ராம நாமம் ஒரு வேதமே)

யாவத் ஸ்தாஸ்யந்தி கிரய: ஸரிதஸ்ச மஹீதலே
தாவத் ராமாயண கதா லோகேஷு ப்ரசரிஷ்யதி–(வால்மீகி ராமாயணம் 1.2.36)

இப்புவியில் மலைகள் மண்ணில் நிற்கும் வரை, நதிகள் ஓடும்வரை, ராம காதை உலகில் நிற்கும்.

காலங்களைக் கடந்த பெருமை
லோகங்களைக் கடந்த -கோடி கோடி அண்டங்களிலும் பெருமை பெற்ற ஸ்ரீ ராமாயணம்
கால தேச பரிச்சேதய ரஹிதம்
இரண்டு அரண் ஸ்ரீ ராமாயணமும் திருவாய் மொழி

1. நால்வர் தவம்செய்து ஒரு பிள்ளையைப் பெற்றார்கள்

கிருஷ்ணாவதாரத்தில் நால்வர் தவம்செய்து ஒரு பிள்ளையைப் பெற்றார்கள். ராமாவதாரத்தில் ஒருவர் தவம் செய்து நான்கு பிள்ளைகளைப் பெற்றார் என்று சுவாரஸ்யமாகச்  சொல்லுவார்கள். யசோதை, நந்தகோபன், தேவகி, வசுதேவர் ஆகிய நால்வர் தவம்செய்து கண்ணன் அவதரித்தான். ஆனால் தசரதன் ஒரு பிள்ளையை வேண்டினார் .ஆனால் அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன.

2. நான்கு வகை தர்மங்கள்

தர்மத்தை காப்பதற்காக பகவானே தசரதனுக்குப் பிள்ளைகளாக அவதரித்தான்.
தர்மம் நான்கு வகைப்படும்.

1.சாமானிய தர்மம், 2.சேஷ தர்மம் ,3.விசேஷ தர்மம், 4.விசேஷதர  தர்மம் . இதில் தாய் தந்தையிடமும் குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்ற தர்மம் “சாமான்ய தர்மம்”. இதை ராமன் அனுஷ்டித்துக் காட்டினான்.
இரண்டாவதாக, ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்கின்ற தொண்டுள்ளம் கொண்டவனாக, பதினான்கு ஆண்டுகள் தூங்காமல் (துஞ்சமில் நயனத்தான்) பகவானுக்குக் குற்றேவல் புரிந்தான் இலக்குவன். இது “சேஷ தர்மம்”.எப்பொழுதும் பகவானையே நினைத்துக் கொண்டு, பகவான் சொல்லியதை செய்தான் பரதன். இது  “விசேஷ தர்மம்”.
இறைவனுக்குத்  தொண்டு செய்வதை விட இறை அடியார்களுக்குத்  தொண்டு செய்வதே முதன்மையானது என்று  பாகவத சேஷத்வத்தைக்  காட்டினான் சத்ருக்கனன்.இது “விஷேதர” தர்மம்.

‘‘கூடும் அன்பினில் கும்பிட அன்றி வீடும் வேண்டா”என்று இருக்கும் நிலை அது. ‘‘உற்றதும் உன் அடியார்க்கு அடிமை” என்று இதை திருமங்கை ஆழ்வார் வலியுறுத்துவார்.

3. இராமாயணம் கதையா? தத்துவமா?

அறத்தின்  நாயகனான ராமன் குணங்கள்தான் ராமாயணம் முழுக்க இருக்கிறது .அந்தப் பரம்பொருளை உணர்வதுதான் ராமாயணம் தெரிந்து கொள்வதன் நோக்கம். எனவே ராமாயணத்தை ஒரு கதையாகப்  படிக்காமல்,  தத்துவத்தைப் படிப்பதன் மூலம்தான் முழுமையான பலன் பெற முடியும்.  அத னால் தான் நம்மாழ்வார், “கற்பார் ராமாயணத்தை அல்லால் மற்றும் கற்பரோ” என்று சொல்லாமல்,  “கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ” என்று பாடினார்.

4. 18 முறை நடந்து கேட்டார் ராமானுஜர்

ராமாயணம் வெறும் கதையாக இருந்தால், பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதிய ராமானுஜர் போன்ற மகான்கள் அதை எளிமையாக தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் ராமாயணம் என்பது வேத சாஸ்திரத்தின்  சாரமான தொகுப்பு என்பதால்தான், திருமலைக்கு பதினெட்டு முறை நடந்து, ஒரு வருட காலம், ராமாயண சாரத்தை, தன்னுடைய தாய் மாமனும் ,தன்னுடைய  ஐந்து ஆச்சாரியர்களில் ஒருவரும் ஆகிய பெரிய திருமலை நம்பிகளிடம்   பாடம் கேட்டார்.

5. காயத்ரி மந்திரமும்,  ஸ்ரீ ராமாயணமும்.

சகல வேதங்களின் சாரமான  காயத்ரி மந்திரத்திற்கும், ஸ்ரீ ராமாயணத் திற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. காயத்ரி மந்திரத்திற்கு 24 அட்சரங்கள். ராமாயணத்திற்கு 24,000 ஸ்லோகங்கள். ஒவ்வொரு  அட்சரத்துக்கு 1000 ஸ்லோகங்கள்  என்ற வகையில்   24 ஆயிரம் ஸ்லோகங்களை வால்மீகி செய்தார். இதைப்போலவே, நம்மாழ்வாரின் திருவாய்மொழியும், ராமாயண சாரத்தைச் சொல்வதால்,அதற்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை ராமாயணத்திற்கு நிகராக 24000 படி உரை எழுதினார்.

6. ராமாயணமும் மகாபாரதமும்

ராமாயணம் மகாபாரதம் இரண்டும் ஒரே கருத்தைத்தான் சொல்லுகின்றன. உலக சகோதரத்துவத்தின் ஒற்றுமையைச்  சொல்வது ராமாயணம். ஒரு வருக்கு ஒருவர் ஒற்றுமையின்றி பகைத்துக்  கொண்டால்  என்ன மாதிரியான அழிவுகள் ஏற்படும் என்பதைச் சொல்வது மகாபாரதம். ராமாயணம் நேர்மறையாகச்  சொல்கிறது. அதே கருத்தை எதிர்மறையாகச்  சொல்லுகின்றது மகாபாரதம். அதனால் தான் “இதிகாசங்களில்  சிரேஷ்டமானது  ராமாயணம்” என்று பிள்ளை லோகாச்சாரியார் தம்முடைய ஸ்ரீ வசன பூஷணம் என்கின்ற நூலிலே சொல்லி வைத்தார்.

7. சீதையின் பெருமையா?ராமனின் பெருமையா?

ராமாயணம் என்பது ராமரின் பெருமையைக்  கூறுவதாகச் சொன் னாலும், அது சீதையின் பெருமையை  பிரதானமாகச் சொல்ல ஏற்பட்ட காவியம் என்று  மகரிஷிகள் கருதுகின்றார்கள். “ஸீதாயாம் சரிதம் மகத்” (சீதையின் பெருங்கதை,) என்றுதான்  ரிஷிகள் சொல்லுகின்றார்கள்.ஆழ்வாரும்  தேவ மாதர்கள் விடுதலை அடைய வேண்டும் என்பதற்காக சீதை பத்து மாதம் சிறையில் இருந்தாள். அந்த சிறையில் இருந் தவளின்  பெருமையைச்  சொல்றதுதான் ராமாயணம் என்று பாசுரம் பாடுகின்றார்.

தளிர்நிறத்தால் குறையில்லாத் “தனிச்சிறையில் விளப்புற்ற
கிளிமொழியாள்” காரணமாக் கிளர்அரக்கன் நகர்எரித்த
களிமலர்த் துழாய்அலங்கல் கமழ்முடியன் கடல் ஞாலத்து
அளிமிக்கான் கவராத அறிவினால் குறையிலமே-என்பது திருவாய்மொழி.

தெய்வப் பெண்கள் கால்களில் விலங்கை வெட்டி விடுகைக்காகத் தன்னைப் பேணாதே, அங்கே புக்குத் தன் காலிலே விலங்கைக் கோத்துக் கொண்டவள்,’ என்று நாட்டிலே பிரசித்தையானவள் என்னுதல் என்பது உரையாசிரியர்கள்  கருத்து.

8. முத்தி நகரங்களில் தலை அயோத்தி

ஸ்ரீராமர், முத்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான அயோத்தியில் அவதரித்தார்.எனவே அயோத்தியையும் ஸ்ரீராமரையும் நினைத்தாலே புண்ணியம்  வரும்.முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் முதல் க்ஷேத்திரம் இது.
முக்கியமான க்ஷேத்திரமும் கூட.‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரி த்வாரவ திஸ்சைவ சப்த ஏகா மோக்ஷ தாயகா’ என்ற வாக்கியத்தின் படி அயோத்யா, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகா என்ற ஏழு க்ஷேத்திரங்களும் முக்தி தரும் ஸ்தலங்களாகும். இந்த ஏழும் நாராயணனுக்கு அவயங்கள் ஆகும். அயோத்தி சிரசு, காசி மூக்கு, மதுரா கழுத்து, மாயா மார்பு, துவாரகா கொப்பூழ், காஞ்சி இடுப்பு, அவந்திகா பாதம்.

9. அயோத்தி ஏன் புனிதத்தலம்?

பகவான் நித்ய வாசம் செய்யும்  வைகுண்டத்தின் ஒரு பகுதியே அயோத்தி.யுத்தங்களால்  வெல்லப்படாத பூமி. மனு, இந்த ஊரை சரையூ நதியின் தென் கரையில் நிறுவினார் என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்துகொள்ள முடிகிறது.அயோத்தியின் வாசலில் அனுமனும், அதற்கு தெற்கில் சுக்ரீவனும், அவனுக்கு அருகில் அங்கதனும், தெற்கு வாசலில் நளனும் நீலனும், மேற்கில் வக்த்ரனும், வடக்கில் விபீஷணனும் வாழ்ந்துகொண்டு இந்த நகரத்தை காப்பாற்றி வருகிறார்கள் என்பது ஐதீகம்.

ஸ்ரீராமபிரான்  வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களின்  அடிச்சுவடுகளை இன்றும் நாம் அயோத்தியில் தரிசிக்க முடியும். அதனால் அயோத்தியை புனிதத் தலமாக இந்திய மக்கள் கருதுகிறார்கள். அயோத்தியில் தரிசிக்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது. அயோத்தியா ரயில்வே நிலையத் தினுள், சுவர்களில் ஸ்ரீ ராம்சரித் மானஸ் என்ற துளசிதாஸ் ராமாயணத்திலிருக்கும் வரிகள் எழுதப்பட்டுள்ளன.

10. சரயு நதி

குழந்தைக்கு அமுதம் தரும் தாயின் மார்பகம் போல,
உயிர்களுக்கு அமுதம் தரும் வற்றாத நதி  சரயு.
இரவி தன்குலத் தெண்ணிபல வேந்தர்தம்
புரவு நல்லொழுக் கின்படி பூண்டது
சரயு வென்பது தாய் முலையன்ன திவ்
வரவு நீர்நிலத்தோங்கு முயிர்க்கெல்லாம்.–(பால-ஆற்றுப்படலம் -24) என்று

நதியின் பெருமையை கம்பன் வர்ணிப்பான். சரயு நதி அயோத்தியில் அற்புதமாக ஓடிக் கொண்டிருக்கிறது.சரயு நதியின் மூலம் ஆப்கானிஸ்தானிலிருந்து வருகிறது. அதன் பெயர் ஹரிருத் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சரயு நதியுடன் இரண்டு நதிகள் கலக்கின்றன.கர்னால் மற்றும் மகாகாளி என்பவை அவை.-இராமரின் அவதாரதினமான இராம நவமி அன்று ஏராளமான பக்தர்கள் அயோத்தியின் சரயு நதியில் இறங்கி நீராடுகிறார்கள். ராம்காட் என்னு மிடத்தில் எண்ணற்ற பக்தர்கள் வந்து நீராடி சங்கல்பம் செய்வதை இன்றும் காணலாம்.இராமர் இந்த உலக வாழ்வை முடித்துத்  கொள்ளத் தீர்மானித்த போது, இந்த நதியில்தான் இறங்கினார் என நம்பப்படுகிறது. இந்த இடம் குப்த காட் என்று அழைக்கப்படுகிறது.

11. தங்கச் சிலைகள்

சீதா தேவி தினமும் துளசி பூஜை செய்த துளசி மாடம், ராமன் பட்டாபிஷேகம் செய்த இடம், அஸ்வமேத யாகம் நடத்தப் பட்ட இடம், சீதையைப் பிரிந்த பிறகு ராமர் ஜடாமுடி தரித்த இடம் இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த இடங்களை பற்பல படையெடுப்புகளுக்கு பிறகு இன்றும் காண்பது ஆச்சர்யமாக உள்ளது.

கனக பவன் என்னும் மண்டபத்தில் இராமாயணக் காட்சிகள் யாவும் வெகு நேர்த்தியாகவும். பேரழகு பொருந்திய ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இதன் முகப்பில் தங்கம் பதித்திருப்பதால் இதற்கு கனக பவன் என்னும் பெயருண்டாயிற்று. மூன்று தங்க சிலைகள், வெள்ளி மண்டபத்தில் இருப்பது இங்கு சிறப்பு. இது ராமர் சீதைக்கு, கைகேயி உகந்து அளித்த அரண்மனை என்றும் சொல்லப்படுகிறது.

12. பிரணவம் நடந்தது

ராமபிரான் லட்சுமணன் சீதை மூவரும் காட்டிற்குச் செல்லுகின்றார்கள். இதை விவரிக்க கூடிய பெரியவர்கள், அவர்கள் மூவரும்  பிரணவம் போல நடந்து சென்றார்கள் என்று உவமை கூறி விவரிக்கிறார்கள். வேதத்தின் சாரம் தான் பிரணவம். அதாவது ஓம்காரம்.ஓங்காரத்தில் மூன்று எழுத்துக்கள் இருக்கின்றன. ‘‘அ” எழுத்து இறைவனையும் அதாவது ராமரையும், உ  என்கின்ற எழுத்து பிராட்டியையும், ‘‘ம” என்ற எழுத்து ஜீவாத்மாவாகிய லட்சுமணனையும் குறிக்கும்.

இந்த மூன்று எழுத்தும் தனித்தனியாக பிரிக்க முடிந்தாலும்  எப்பொழுதும் பிரியாமலே இருக்கும். அப்படி மூவரும் ஒருவரைத்  தொடர்ந்து ஒரு வராக காட்டில் நடந்து சென்றார்கள் என்பதை, பிரணவம் சென்றது என்று சுவாரசியமாகக்  குறிப்பிடுகின்றார்கள். பிரணவத்தை ஒரே அட்சரமாக நினைப்பது போல நாம் சீதா ராம லஷ்மணர்களை இணைத்து தியானம் செய்ய வேண்டும்.

13. ஸ்ரீ ராமனும், ஸ்ரீ ராமானுஜரும்

ஸ்ரீ ராமபிரானுக்கும் ஸ்ரீ ராமானுஜருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன “சைத்ர மாஸே  ஸிதே  பக்ஷே நவம் யாஞ்ச புனர்வஸு”  என்பது இராமர் அவதாரத்தைக் குறிக்கும் சுலோகம். அதாவது சித்திரை நவமியில் புனர் பூசத்தில் அவதரித்தார்   என்பதை இந்த ஸ்லோகம் சொல்லுகின்றது. “மேஷார் த்ராஸ ம்பவம் விஷ்ணோர் தர்ஸன ஸ்தாபனநோத் சுகம்” என்று மேஷ மாதமான சித்திரையில் ராமானுஜர் அவதாரம் நிகழ்ந்ததாக ஸ்லோகம் குறிக்கிறது.

1.இருவரும் உலகை ரமிக்கச் செய்தவர்கள்.
2.இருவர் பெயரி லும் “ராம” என்ற நாமம் உண்டு.
3.இருவருக்கும் பல ஆச்சாரியர்கள்.
4.இருவருமே சரணாகதி சாஸ்திரத்தின் மகிமையை சொல்வதற்காக அவதரித்தவர்கள்.
5.இருவருமே திருவரங்கநாதரிடத்தில் பெரும் அன்பு  கொண்டவர்கள்.

14. ஏன் ராம அவதாரம்?

ராமபிரான் தமது உலகமான வைகுண்டத்துக்குச் செல்லுகின்றபோது எல்லோரையும் அழைத்துச் சென்றார் என்று நம்மாழ்வார் பாடுகிறார். வைகுண்டம் என்பது மேலேறுவது.மேல் நிலைக்குச் செல்வது.இதை வள்ளுவரும் “வானோர்க்கும் உயர்ந்த உலகம்” என்று சொல் லுவார்.எல்லோரையும் உயரே ஏற்ற ,கீழே இறங்க வேண்டும்.கீழே இறங்குதல்தான் “அவதாரம்.” ராமபிரான் அவதரிக்கக் காரணம், மற்றவர்களை மேல்நிலைக்கு அழைத்துச்செல்வதுதான்.

மோட்சம் என்பது மறுஉலகம் என்று சொல்வதைப் போலவே விடுதலை பெறுதல் என்ற பொருளும் உண்டு.எதிலிருந்து விடுதலை பெறுதல் என்றால், துன் பங்களிருந்து விடுதலை பெறுதல்.அதனால் தானே  இராமன் கட்டிற்குச் செல்லும்போது அயோத்தி மக்கள்  அழுதார்கள்.

கிள்ளையொடு பூவை யழுத; கிளர்மாடத்
துள்ளுறையும் பூசை யழுத உருவறியாப்
பிள்ளை யழுத; பெரியோரை யென்சொல்ல
வள்ளல் வனம்புகுவான் என்றுரைத்த மாற்றத்தால்- (நகர் நீங்கு. 100)
என்று இந்தக் காட்சியின் மாட்சியை திரைப்படம் போல வர்ணிப்பான் கம்பன்.

15. ஏழு மராமரம்
இராமாயணத்தில் நம் கவனத்தை கவர்ந்தது மராமரம்.
“மரா” “மரா” என்ற உபதேசம் “ராம ராம” எனும் மந்திரம் ஆகி வான் மீகியைப்  பதப்படுத்தியது.  இராமாயணத்தை எழுத வைத்தது.
நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் எனை
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே- என்பார் கம்பர்.

அது சரி மராமரம் என்பது என்ன? இங்கே மராம் என்பது யா மரம் (ஆச்சா/சாலம்). மரா என்ற தமிழ்ச் சொல், ராம என்ற தெய்வப்பெயரை வால்மீகிக்குத் தந்துள்ளது.
ஏழுமா மரம் உருவிக் கீழுலகம் என்று இசைக்கும்
ஏழும் ஊடுபுக்கு உருவிப்பின் உடனடுத்து இயன்ற
ஏழ் இலாமையால் மீண்டது அவ் இராகவன் பகழி
ஏழு கண்டபின் உருவுமால் ஒழிவது அன்று இன்னும்.

இராமனால் செலுத்தப்பட்ட அம்பு, தனக்கு இலக்காகக் கொடுக்கப்பட்ட ஏழு மராமரங்களையும் துளைத்து, ஏழு உலகங்களையும் துளைத்து, ஏழு என்ற எண்ணிக்கையில் இருந்த எல்லாப் பொருட்களையும் துளைத்தது, இனி துளைப்பதற்கு ஏழாக எதுவும் இல்லை என்ற நிலையில் இராமனிடம் திரும்பி வந்தது.

16. ஏழும் இராமனும் ராமபிரான் வாழ்வில் ஏழு என்கிற எண் மிகப் பொருந்தி வருவதைக் காணலாம்.

1. ஏழாவது அவதாரம் ராம அவதாரம்.
2.ஏழு மரா மரங்களைத் துளைத்தான்.
3.இராமன் எழுபது வெள்ளம் வாநர சேனைகளோடு இலங்கை மீது படை யெடுத்தான்.
4.ஏழு உலகங்களிலும் அவன் பெருமை பேசப்படுகிறது.
5.ஏழு  பிராகாரங்கள் உள்ள ஸ்ரீரங்கநாதரை அவன் குலதெய்வமாக அடைந்திருந்தான்.
6.ஆறு தம்பிகளோடு சேர்ந்து ஏழு பேராக இருந்தான். (நின்னோடும் எழுவரானோம்).
7.ஏழு காண்டங்களில் ராமகதை சொல்லப்பட்டிருக்கிறது. ஏழாவது காண்டம் உத்தர காண்டம்.
8.அனுமன் வீணையை வைத்து கொண்டு ஏழு ஸ்வரங்களால்  இராமா யணம்   பாடிக்கொண்டிருக்கிறார்.

17. தோல்வியே இல்லை

1.அவன் ஜெயராமன்.
2.ஸ்ரீ ராமாயணத்தில் தோல்வி என்பதே கிடையாது.
3.ராமன் அம்பு பழுதுபட்டு திரும்பியது இல்லை.
4.“ஒக பாணமு” என்று தியாகய்யர் ராம பாணத்தின் பெருமையைப் பாடுவார்.
5.‘‘தோலா வீரன்”  என்று வேதாந்த தேசிகர் ராமனின் வீரத்தைப் பாடுவார்.
6.எல்லா இடங்களிலும் வெற்றிதான். ஆகையினால்தான் ஸ்ரீராமஜெயம் எழுதுபவர்களுக்கும், ஸ்ரீ ராமஜெயம் சொல்பவர்களுக்கும் தோல்வி என்பது வருவது இல்லை.

18. ஏன் ராமன் பெயர் இல்லை ? ஒரு அருமையான பாட்டு.

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி பற்ற
விரை செறி கமலத் தாள்சேர் வெண்ணெய்யூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மெளலி!
இந்த பாட்டிலே ராமர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி விளக்கப்படுகிறது. ராமருக்கு பட்டாபிஷேகம் செய்தார்கள்.சரி.

இதில் ராமர் பெயர் இல்லையே? என்ன காரணம்?

இதற்கு சுவையான விளக்கம் சொன்னார்கள் பெரியவர்கள்.பட்டாபிஷேகம் என்கின்ற அந்த  கிரீடம் ராமர் தலையில் வைக்கப்பட்டது  ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், வெகுஜனங்களின் அபிப்ராயம், மகிழ்ச்சி ஆகிய கிரீடத்தை, அதாவது மக்களின் அபிமானத்தை ராமபிரான் சூட்டிக் கொண்டான்.
ஒவ்வொருவர் இதயத்திலும் ஆட்சி செய்தான்,ராமர் சூடிய கிரீடம் தங்கள் தலைமேல் வைத்ததாகவே மக்கள் கருதினார்கள், எல்லா மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக ராமன் இருந்ததால், ராமன் பெயர் இதில் கம்பன் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்பது பெரியவர்கள் நிர்வாகம்.

19. வேதங்கள் ஏன் ராமனைத் தொடர்ந்தன?

வேதம்தான் ராமன். வேதம் காட்டும் மறைபொருள் தான் ராமாயணம்.
வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசராத்மஜே I
வேத: ப்ரசேதசாதாஸீத் சாக்ஷாத் ராமாயணாத்மனா II
இந்த ஸ்லோகத்தின் பொருள் இதுதான்.

“வேதங்களினால் அறியப்படும் இறைவன் தசரதனின் புதல்வனாகப் பிறந்தான்; வேதம் ப்ரசேதஸ் (வால்மீகி) முனிவரிடமிருந்து) ராமாயண மாகப் பிறந்தது” என்பது இதன் பொருள்.
அதாவது இராமாயணத்தில் தூல வடிவம் ராமன் என்கிற அவதாரம். தன் அவதார  காலம் நிறைவு பெற்றவுடன் ராமன் சரயு நதியில் இறங்கி உடனடியாக வைகுண்டத்திற்குச் செல்லத்  தொடங்க, வேதங்களும் அவனைத் தொடர்ந்து சென்றன. அதைத்தொடர்ந்து முனிவர்களும் மக்களும் ராமன் பின்னால் சென்றார்கள்.இதன் மூலம் பிரமாணமும் பிரமேயமும் (வேதமும் ,வேதப் பொருளும் ஒன்று என்பதை காட்டுகிறார்.

20. குலசேகர ஆழ்வார் வர்ணிக்கும் காட்சி இது

ஆழ்வார்களில் குலசேகர ஆழ்வார் இராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.அவர் ராமாயணம் பாடவும், அந்த காட்சிகளை அனுபவிக்கவும் விரும்புகிறார்.பகவான், “நீ திருச்சித்ர கூடம் வா, அங்கு இதை அநுபவிக் கலாம்” என, ஆழ்வார் தில்லை திருச்சித்ரகூடத்தில்  (வடக்கேயும் ஒரு சித்ரகூடமுண்டு) இக்காட்சிகளை கண்டு, ராமாயணத்தை பூரணமாக ஒரு பதிகத்தில் அருளிச் செய்கிறார். அதில் 10 வது பாசுரம் இது. தன்னுடன் சரா சரங்களை வைகுண்டம் ஏற்றினான் என்று பாடுகிறார்.

அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி
அடல் அரவப் பகையேறி அசுரர்தம்மை
வென்று இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற
விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி

சென்று இனிது வீற்றிருந்த அம்மான்தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி
நாளும் இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே.
இப்பொழுதும் இந்த காட்சியை, நாம் தில்லை திருச்சித்ரகூடத்தில் (சிதம்பரம்) காண முடியும்.

21. ஏன் சித்திரையில் ஸ்ரீராமநவமி?

ஸ்ரீராமநவமி யானது சித்திரை மாதத்தில் வருகின்றது. இராமபிரான் அவதாரம் செய்தது மட்டுமல்ல பட்டாபிஷேகம் செய்த மாதம் சித்திரை மாதம். சித்திரை மாதத்திற்கு அதிதேவதை விஷ்ணு. விஷ்ணு என்றால் கரந்து எங்கும் பரந்து உளன் என்பதுபோல் எல்லா இடத்திலும் வியாபித்து உள்ளவன் என்று பொருள். நிறைந்த ஒளியை உடையவன் என்று பொருள். தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை மாதம். எனவே, ராமபிரான், விஷ்ணு மாதத்தில், மேஷத்தில், நவகிரக தலைவன் சூரியன் அதி உச்சத்தில் இருந்த போது அவதரித்தான்.

22. வசந்த ருதுவும் ராம நவமியும்பகவான் கீதையில்,
ப்ருஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம்
மாஸாநாம் மார்கஸீர்ஷோஹம்ருதூநாம் குஸுமாகர: || 10- 35||

சாமங்களில் (வேதப் பகுதியில்) நான் ‘பிருகத்சாமம்’ என்ற பெரிய சாமமாகவும் ,  சந்தஸ்களில் நான் காயத்ரியாகவும் ,மாதங்களில் நான் மார்கழியாகவும் , பருவங்களில் நான் இளவேனில் எனப்படும் வசந்த காலமாகவும் இருக்கிறேன் என்கிறான். வசந்த ருது வருஷத்தில் முதல் ருது. அதில் முதல் மாதம் சித்திரை மாதம் என்பதால் இதற்குத்  தனிச்  சிறப்பு உண்டு.

23. ஏன் மறுபடி மறுபடி சீதையைப் பிரிந்தான் இராமபிரான் ?

இராமாயணத்தில் பலகாலம் சீதையை ராமன் பிரிந்து இருப்பதாகப் பார்க்கின்றோம். முதலில் காட்டில் சீதையைப் பிரிகின்றான். ராவணன் சீதையை அசோகவனத்தில் சென்று மறைத்து வைக்கிறான். அதற்குப் பிறகு சீதையை மீட்ட பிறகு மறுபடியும் பிரிவு ஏற்படுகிறது.
இதற்கு என்ன காரணம் என்றால், ஒருமுறை பிருகு மகரிஷியின் பத்தினியை மகாவிஷ்ணு தன்னுடைய சக்கரத்தால் தலையை துண்டித்து விட்டதாகவும், அதனால் பிருகு மகரிஷி, நீ உன் மனைவியை பிரிந்து துன்பப்படுவாய் என்று சாபம் விட்டதாகவும், முனிவரின் சாபத்தை மகாவிஷ்ணு ஏற்றுக்கொண்டு, உம்முடைய சாபத்தின் பலனை நாம் ராமா வதாரத்தில் நிறைவேற்றுவோம் என்று உறுதி கொடுத்ததாகவும் பெரியவர்கள் சொல்லுகின்றார்கள்.

முனிவரின் வாக்கு பொய்யாகி விடக்கூடாது என்பதற்காக சாட்சாத் பகவானே இந்தத் துன்பத்தை ஏற்றுக் கொண்டான். இந்த சாபத்தின் மூலம் தேவர்களின் துன்பங்களைத் தீர்த்து வைத்தான். இங்கே (முனிவரின் சாபம் (தேவர்களுக்கு) வரமாகியது.

24. ஸ்ரீராம நவமியில் ராம நாமம் சொல்லுங்கள்

சித்திரை மாதத்தில் ஸ்ரீராமநவமி உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது . ஸ்ரீராமநவமி வேறு. ஸ்ரீ ராமாயணம் வேறு அல்ல. ஸ்ரீ ராமாயணத்தில் ஒரு சில சுலோகங்களையாவது நாம் அன்றைய தினம் பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீராம ஜெயத்தை தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். ராமநாமத்தை கோடிமுறை எழுதுவதற்கு “ராம கோடி” என்று பெயர்.
தினமும் நீராடியவுடன் பக்தியுடன் ராமநாமத்தை எழுத வேண்டும். தினமும் ஆயிரம் முறை இதை எழுதினால், 30 ஆண்டுகளில் இந்த எண்ணம் பூர்த்தியாகிவிடும். இப்படி எழுதிய நோட்டுக்களை பூஜை அறையில் வைத்து பூஜிக்க வேண்டும். இப்படி ராமநாமம்  எழுதி  பூஜித்தால் அந்த குடும்பத்தின் இருபத்தி ஒரு தலை முறை புண்ணிய பலத்தோடு வாழும்.

25. மூன்று முறை சொன்னால் சகஸ்ர முறை சொன்ன பலனா?
அற்புத சக்தி பொருந்திய இந்த மந்திரத்தின் மேன்மையை பரமேஸ்வரனே பார்வதி தேவிக்குச்  சொல்வதாக விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் வருகிறது. “ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே” என்ற இந்த ஸ்லோகத்தை தினமும் குறைந்தது, 11 முறை சொல்லுங்கள், வீட்டில் சுபிட்சம் தேடி வரும். ராம ராம ராம என மூன்று முறை சொன்னால், எப்படி ஆயிரம் நாமத்துக்கு சமமாகும் என, சந்தேகம் வரும். அதற்கு கணித அடிப்படையில் பதில் உள்ளது.

எழுத்துக்களுக்கு இணையாக எண்கள் உள்ளன. “ர” என்ற எழுத்துக்கு எண் 2ம், “ம” என்ற எழுத்துக்கு எண் 5ம் ஆகும். மேலே ஸ்லோகத்தில் “ராம” என்ற நாமம் மூன்று முறை வருகின்றது. அதாவது 2X5 2×5 2×5. என்றால் 2X5 =10×2=20×5=100×2=200×5=1000 ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே. இதுதான் ராம நாமத்தின் அற்புதம். அதனால்தான், ராம ராம ராம என்று சொன்னால், விஷ்ணு சகஸ்ரநாம பலன் கிடைக்கும். இதை வேறு விதமாகச் சொல்லலாம்.

“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்” (கம்பராமாயணம்:  சிறப்புப் பாயிரம் 14)

26. யார் இவ்வுலகில் பாக்கியவான்?

ராமனின்  குணங்கள் பற்றி அழகான தமிழ் பாடல் ஒன்று உண்டு. இராமா யணத்தின் சாரமே இந்தப் பாடலில் கொடுக்கப்பட்டிருக்கும். யார் இவ்வுலகில் பாக்கியவான் என்ற கேள்விக்கு விடையாக இப்பாடல் உள்ளது.

1. ராம நாமத்தை சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்.
2. காம க்ரோதத்தை கட்டுப்படுத்தியே பூமியில் வாழ்பவன் பாக்கியவான்.
3. பொய் உரைக்காமல் மெய் சிதைக்காமல் வையத்தில் வாழ்பவன் பாக்கி யவான்.
4. கள்ளம் கபடுகள் உள்ளத்தில் இல்லாமல் வெள்ளை மனத்தவன் பாக்கியவான்.
5. நண்பர்களுடைய நலத்தின் கோரும் பண்புடையவனே பாக்கியவான்.
6.துன்பம் வந்தாலும் துக்கமில்லாமல் இன்பமாக்குபவன் பாக்கியவான்.
7. யாதொரு ஸ்திரீயையும் மாதா என்று எண்ணிடும் நேர்மையானவனே பாக்கியவான்.
27. ராமநவமி எப்படிக் கொண்டாட வேண்டும்?
ராமநவமி எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதை காஞ்சிப் பெரியவர் இப்படி கூறுகிறார். இது ஒரு பத்ததி(முறை)
1. இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஸ்ரீ ராமநவமியன்று முழுவதும் பட்டினி (சித்த உபாவாஸ) விரதம் இருக்க வேண்டும்.

2. ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிச் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் ஏதாவது சிறிது கோயில் சந்நதியிலோ, அல்லது பஜனை மடத்தின் முன்போ கூடி ஸ்ரீராம நாம மந்திரத்தை ஐந்து நிமிஷம் ஜபம் செய்து, பிறகு, “ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்” என்னும் பதின்மூன்று அட்சரங்கள் கொண்ட மந்திரத்தை, ஒருவர் முதலில் சொல்ல, எல்லோரும் அதைப் பின்பற்றிச் சொல்லிக்கொண்டு, ஊரைச் சுற்றி வந்து, முதலில் ஆரம்பித்த இடத்தை அடைந்து, அங்கு பத்து நிமிடம் பஜனை செய்து, பூர்த்தி செய்ய வேண்டும்.

3. மறுநாள் காலை அதே இடத்தில் கூடி, ஸ்ரீ ராமாவதாரத்தில் (கம்ப ராமாய ணத்தில்) ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தை வர்ணிப்பதாக பாக்களைப் பாராயணம் செய்து, அல்லது ஸம்ஸ்கிருதம் படித்தவர்கள் எவரேனும் இருந்தால், அவரைக் கொண்டு வால்மீகி ராமாயணத்தில் உள்ள ஸ்ரீராம பட்டாபிஷேக ஸர்க்கத்தைப் பாராயணம் பண்ணும்படி செய்