Archive for the ‘Desihan’ Category

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகளின் தனியன் விசேஷங்கள் —

August 23, 2021

கலியுகம் என்பது கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு 3069ம் வருஷத்திலிருந்து ஆரம்பம் என்பதை நினைவில் வைத்து,
கலியுகம் என்று சொல்லும்போதெல்லாம் அவரவர்கள் உசிதப்படி ஆங்கில ஆண்டைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

——–

ஸ்ரீ இராமாநுஜர்

திருக் குருகைப் பிரான் பிள்ளான்-இவருக்கு ” குருகேசர் ” என்றும் திருநாமம்.
இவர் பெரிய நம்பிகளுடைய இரண்டாவது குமாரர்
ஸ்ரீ உடையவர் நியமனப்படி, திருவாய் மொழிக்கு ” திருவாறாயிரப்படி ” என்று வ்யாக்யானம் செய்து,
உடையவரால் மிகவும் உகக்கப்பட்டு, “பகவத் விஷயம் ” என்று இன்றளவும் கொண்டாடப் படுகிறது.

இவருக்குப் பிறகு —-ஸ்ரீ விஷ்ணு சித்தர் என்கிற ”எங்களாழ்வான் ”
இவர் , திருவெள்ளறையில் அவதரித்தவர்

பிறகு….நடாதூர் அம்மாள்

பிறகு நம்பிள்ளை

அடுத்து, அப்புள்ளார்

அவருக்கு அடுத்து, ஸ்வாமி வேதாந்த தேசிகன் —–தூப்புல் திவ்ய தேசத்தில் அவதாரம் .

———–

ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய : கவிதார்க்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி ||

தனியனின் அர்த்தம்–மிகச் சுருக்கமாக—
கருவிலே திருவுடையவரான ,திருவேங்கடவனின் மறு அவதாரமான
வேதங்கள், சாஸ்த்ரங்கள் முதலியவற்றில் மிகவும் வல்லுநரான ,
வாதப் போர் செய்வதில் ஸிம்ஹமான ,வேதாந்த ஆசார்யரான ஸ்வாமி தேசிகன்
எங்களுடைய ஹ்ருதயத்தில் எப்போதும்,எப்போதும் வஸிப்பாராக —
எங்கள் ஹ்ருதயங்களை இருப்பிடமாகக் கொள்வாராக—

இது கலி சகாப்தம் 4431ல் சுக்ல வருஷம் சித்திரை மாதம் ,புனர்வஸு நக்ஷத்ரத்தில் அருளப்பட்டது என்பர். .
ஸ்வாமி தேசிகனின் திருக்குமாரர் வரதாசார்யர் என்கிற நயினாசார்யர் அருளியது.
நள வருஷம் ஆவணி மாத ரோஹிணி நக்ஷத்ரத்தில் அவதாரம்.

ஸ்ரீ நயினாசார்யர் அருளிய நூல்கள்–
1-ஸ்வாமி தேசிகனின் ”அதிகரண ஸாராவளி” க்கு ”அதிகரண சிந்தாமணி ”
என்கிற வ்யாக்யானம்
2-தேசிக மங்களம்
3-ப்ரார்த்தநாஷ்டகம்
4-ப்ரபத்தி
5-விக்ரஹத்யாநம்
6-திநசர்யை
7-பிள்ளையந்தாதி மற்றும் பல நூல்கள்.

இவருக்குப் பத்து சிஷ்யர்கள்.
ஜய வருஷம் பங்குனி மாதம் க்ருஷ்ணபக்ஷ ஸப்தமியில் பரமபத ப்ராப்தி.

———-

ராமாநுஜ தயா பாத்ரம் ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||

கலியுகம் பிறந்து, 4440 ம் ஆண்டில் பஹூதான்ய வருஷம்….(இப்போது கலியுகம் 5117ம் வருஷம்—– ஆங்கிலம் 2017 )
இந்தத் தனியனை, ஆவணி மாஸ ஹஸ்த நக்ஷத்ரத்தில் அநுக்ரஹித்தவர் ஸ்ரீபேரருளாள ஜீயர்.
இவர் இந்தத் திருநாமத்துடன்,
பிறகு, ப்ரஹ்ம தந்த்ர ஸ்வதந்தரர் என்று ஸ்வாமி தேசிகனாலே பஹூ மானிக்கப்பட்டு,
ஸ்ரீ பரகால மடத்தை மைசூரில் ஸ்தாபித்து, ஸ்வாமி தேசிகன் ஆராதித்து, பிறகு அநுக்ரஹித்துக் கொடுத்த
ஸ்ரீ லக்ஷ்மீ ஹயக்ரீவனை ஆராத்ய தெய்வமாகப் பெற்று, அநேகமாயிரம் சிஷ்ய வர்க்கங்களுடன் அடுத்தடுத்த
ஆசார்ய பரம்பரையுடன் அங்கங்கு மடத்தின் கிளைகளை நிறுவி, பராமரித்து, தேசிக ஸம்ப்ரதாயத்தைப் பரப்பி வரும்
ஸ்ரீ பரகால மடத்தின் முதல் ஜீயர்.

ஸ்வாமியின் ,ப்ரபந்தார்த்த நிர்வாகத்தில் ஈடுபட்டு யாதவாத்ரியில்—மேல்கோட்டையில், இத் தனியன் ஸமர்ப்பிக்கப்பட்டது
என்று குரு பரம்பரையில் கூறப்பட்டது.
ஸ்ரீ ஸ்வாமியின் எழுபதாவது திரு நக்ஷத்ரத்தில் இது ஸமர்ப்பிக்கப்பட்டது என்று தேறுகிறது

ஸ்வாமி தேசிகன், “ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய :——-” என்கிற தனியன், நம்முடைய பெருமையைச் சொல்கிறது.
” ராமாநுஜ தயாபாத்ரம் —-” என்கிற இந்தத் தனியன், நமக்கு ஏற்பட்டுள்ள சதாசார்ய கடாக்ஷப் பெருமையைச் சொல்கிறது …..
என்று சந்தோஷப்பட்டு,
” ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: …..” என்கிற தனியன் ஸ்ரீ பாஷ்ய காலக்ஷேபத்தின்போது அநுஸந்திக்கும் படியும்
” ராமாநுஜ தயா பாத்ரம் …” என்கிற இந்தத் தனியன் “பகவத் விஷய ” காலக்ஷேபத்தின்போது அநுஸந்திக்கும்படியும்
நியமித்தார்.

———-

ராமாநுஜ தயா பாத்ரம் ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||

ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்த ப்ரவர்த்தகர்—-ஸ்ரீ ராமாநுஜ ஸித்தாந்தம் என்று பெருமையுடன் சொல்லப்படும்,
ஸித்தாந்தத்துக்கு அதிபதி, ஸாக்ஷாத் பரம ஆசார்யன் –ஸ்ரீ உடையவர்
—இவருடைய தயை –கருணைக்கு–பாத்ரம் —பாத்ரமானவர் –இலக்கானவர்
ஸ்ரீராமாநுஜரின் கருணைக்குப் பாத்ரமானவர்–இந்த ஸ்ரீ ராமானுஜர், நமது விசிஷ்டாத்வைத தர்ஸன ஸ்தாபகர்.
இவருடைய தயைக்கு இலக்கானவர்-

இன்னொரு அர்த்தம்——-

இராமாநுஜர் என்பது, ஸ்வாமி தேசிகனின் ஆசார்யன் ஸ்ரீ அப்புள்ளாரைக் குறிக்கிறது என்பர் .
இவருக்கு “ராமாநுஜப் பிள்ளான்” என்றும் திருநாமம் உண்டு.——கிடாம்பி ராமாநுஜாசார்யர் என்றும் திருநாமம்.

இவருடைய தனியன் :–
நமோ ராமாநுஜார்யாய வேதாந்தார்த்த ப்ரதாயிநே |
ஆத்ரேய பத்மநாபார்ய ஸூதாய குணசாலிநே ||

இவருடைய சகோதரி தான், தோதாரம்மா —-ஸ்வாமி தேசிகனின் தாயார்.
தனது மாமாவிடம், மருமானான ஸ்வாமி தேசிகன்,
சப்தம் ,தர்க்கம், மீமாம்ஸம் முதலிய ஸாமாந்ய சாஸ்த்ரங்களைக் க்ரஹித்தார் .
ஸ்ரீ பாஷ்யம், கீதா பாஷ்யம், பகவத் விஷயம், முதலான வேதாந்த க்ரந்தங்களையும்
விசேஷ அர்த்தங்களுடன் உபதேசிக்கக் கேட்டார்.

அப்புள்ளார், வைநதேய மந்த்ரத்தை உபதேசித்தார்.

தனது திருமேனியில் நோவு சாத்திக்கொண்டிருந்தபோது, தனக்கு ஸ்ரீ நடாதூர் அம்மாள் மூலமாகக் கிடைத்த ,
தான் ஆராதனம் செய்துவந்த ஸ்ரீ உடையவர் பாதுகைகளையும் கொடுத்தார்.
ஸ்வாமி தேசிகன் அவைகளைப் பக்தியுடன் பெற்று, தன்னுடைய திருவாராதனத்தில், சேர்த்துக் கொண்டார்.

ஸ்வாமி தேசிகன் மங்களத்தில் ,…..
ராமாநுஜார்யாத் ஆத்ரேயாத் மாதுலாத் ஸகலா: கலா : |
அவாப விம்ஸத்யப்தே ய :தஸ்மை ப்ராக்ஞாய மங்களம் ||–என்று மங்களா சாஸனம்—- ஸ்தோத்ரம் சொல்கிறோம்.

ராமாநுஜ தயா பாத்ர வ்யாக்யானத்தில்,
” ராமாநுஜ சப்தத்தாலே, ராமாநுஜ அப்புள்ளார் முகமாய், இதி
எதிராஜ மாகானஸ எதிவரனார் மடப்பள்ளி வந்த மணம் என்னும் இத்யாதியாலும்,
உடையவருடைய கடாக்ஷபரீவாஹமாக வந்து ஸர்வார்த்தங்களும் நிரம்பின “என்று உள்ளது .
இதனாலும், அப்புள்ளார் என்கிற ஆசார்யரின் தயைக்குப் பாத்ரமானவர் என்றும் அர்த்தம் சொல்வர்.

———

எப்படி, தயைக்குப் பாத்ரமாகிறார் என்றால்,
1. அவருடைய திருவுள்ளத்தை நிறை வேற்றுவது —அதன்மூலமாகக் கருணைக்குப் பாத்ரம்
2. அவர் விட்டுச் சென்ற ,ஸம்ப்ரதாய விஷயங்களை நிறை வேற்றுவது —அதன் மூலமாகக் கருணைக்குப் பாத்ரம
இந்த இரண்டுமே, ஸ்வாமி தேசிகனிடம் இருந்தன.
ஸ்ரீ பாஷ்யத்தை வாசித்து ப்ரவர்த்திப்பித்தல் —ஸ்ரீ பாஷ்யகாரர் உகந்த கைங்கர்யம்.
இன்னொன்று—திவ்ய ப்ரபந்த ஸம்ரக்ஷணம்—ஸ்ரீ உடையவர் உகந்த இந்தக் கைங்கர்யங்களை தாமும் செய்து,
தானே ப்ரபந்தங்களை அருளி, திவ்ய ப்ரபந்த ரக்ஷணம் செய்தார்.

———–

3. “ராமாநுஜ ” என்பது, இளைய பெருமாளைக் குறிக்கும்.
“லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்த : ” என்கிறார், வால்மீகி.
பெருமாளாகிய ஸ்ரீ ராமனையே காப்பாற்றியவர் லக்ஷ்மணன்
அத்தகைய இளைய பெருமாளின் அருள் கருணைக்குப் பாத்ரமானவர், ஸ்வாமி தேசிகன்.

———–

4. ராம அநுஜ தயா பாத்ரம் —-
பரதனுக்கும், ராமாநுஜன் என்கிற திருநாமம் உண்டு.
“ராமாநுஜம் லக்ஷ்மண பூர்வஜஞ்ச ……..
”இந்த ராமாநுஜனான பரதன், பதினான்கு ஆண்டுகள், ராமனின் பாதுகைகளை ஆராதித்தவர்.
ஸ்வாமி தேசிகன், பாதுகைகளுக்காகவே ,“சஹஸ்ரம் “—பாதுகா சஹஸ்ரம் –பாடியவர்.
ஆக , ராம அநுஜ தயா பாத்ரம்.

———

5. சத்ருக்னனும் ராமனுக்கு, அநுஜன். பரதனை , ராமனுக்கு அனுஜன் என்று பார்த்தோம்.
அந்தப் பரதனுக்கும் அநுஜன் சத்ருக்னன்.இவன் பரம பாகவதன். நித்ய சத்ருக்களை வென்றவன்
“ராமாநுஜ —சத்ருக்ன தயா பாத்ரம் “என்று சொல்வார்.

————-

6. “ராமாநுஜ ” என்பது ஸ்ரீ க்ருஷ்ணனைக் குறிக்கும்.
ராமாவதாரத்துக்குப் பிந்தைய அவதாரம்.—-க்ருஷ்ணாவதாரம் .
ஆக , க்ருஷ்ணனும் —ராமாநுஜன்
ராமாநுஜ தயா பாத்ரம்—-க்ருஷ்ணனுடைய கருணைக்குப் பாத்ரமானவர், ஸ்வாமி தேசிகன்.
யாதவாப்யுதயம் ஒன்று போதும்; கோபால விம்சதி ஒன்று போதும்

ஸ்வாமி தேசிகன், திருவேங்கட முடையானையும், தேவப் பெருமாளையும் அரங்கனையும்—-கண்ணனாகவே கண்டவர்.

—————-

வைஷ்ணவ சித்தாந்த ஸ்தாபகரான , ஸ்ரீ ராமாநுஜரின் திருநாமத்துடன் தொடங்கும் தனியன்,
ஸ்வாமி தேசிகனுக்கு மட்டிலுமே உண்டு என்பது ஒரு ஏற்றம்.
ராமாநுஜ சித்தாந்தத்தை த் தன்னுடைய க்ரந்தங்களால் ஆழமாக வேரூன்றச் செய்து,
ஆல் போல் தழைக்கச் செய்தவர் ஸ்வாமி தேசிகன்.
ராமாநுஜ தர்சனத்துக்கு –ரக்ஷை கட்டியவர்—–. ஐந்து ரக்ஷைகள் —ரக்ஷை—காப்பு.

1. ஸ்ரீ ஆளவந்தாரின் “கீதார்த்த ஸங்க்ரஹம்”என்கிற க்ரந்தத்துக்கு ,ஸ்ரீ உடையவர், “கீதா பாஷ்யம்” செய்தார்.
இரண்டையும் சேர்த்து, ” கீதார்த்த ஸங்க்ரஹ ரக்ஷை ” செய்தார்.
2. “கத்யத்ரயத்து”க்கு ரஹஸ்ய ரக்ஷை செய்தார்.
3. சரணாகதி சித்தாந்தத்தை ஸ்தாபிக்க, “நிக்ஷேப ரக்ஷை” செய்தார்.
4. ஸ்ரீ பாஞ்சராத்ரம் பரஸ்பர முரண்பாடுகளாலே மறைந்துவிடுமோ என்கிற நிலையில் இருந்ததை மாற்றி,
“ஸ்ரீ பாஞ்சராத்ர ரக்ஷை ” செய்தார்.
5. அநுஷ்டானங்கள், நலிவு அடையாதபடி, பொலிவு அடைய, “ஸச்சரித்த ரக்ஷை ” செய்தார்.

இப்படி ஐந்து ரக்ஷைகளை, ராமாநுஜ சித்தாந்தத்துக்குக் கட்டி, ராமாநுஜ சித்தாந்தத்தை ,நிலை நிறுத்தியவர் .

ஆதலால், ராமாநுஜ தயாபாத்ரம்.
ஸ்ரீ இராமாநுஜர் பெருமையை, உலகுக்குக் பறை சாற்றியவர், ஸ்வாமி தேசிகனைப் போல வேறு ஆசார்யன் இல்லை.
“யதிராஜ ஸப்ததி ” ஒன்றே போதும்,இதைச் சொல்ல!
ராமாநுஜர் பெருமையை இப்படி உலகறியச் செய்ததால் “ராமாநுஜ தயா பாத்ரம்”

இராமாநுச நூற்றந்தாதியை, நாலாயிர திவ்யப் ப்ரபந்தத்தோடு சேர்த்து, அநுசந்தானம் செய்வித்து,
இன்றளவும் வழங்கும்படியாகச் செய்தவர், ஸ்வாமி தேசிகன், ஆதலால், இவர், ராமாநுஜ தயா பாத்ரம்.

———-

இன்னொன்று……
ரமந்த இதி ராமா :தேஷாம் —–அதாவது, ஆழ்வார்களின் அநுஜ:—ராமாநுஜர் —-உடையவர்.
ஸ்வாமி தேசிகன், ஆழ்வார்களின் ப்ரபந்தங்களைக் காத்து, வளர்த்து, உடையவருக்கு உகப்பாக இருப்பதால்,
ராமாநுஜ தயா பாத்ரம்.

ஸ்வாமி தேசிகன் ,” ப்ரபந்த ஸாரம் ” என்று அருளி இருக்கிறார். இதற்குத் தனியனே,
ராமாநுஜ தயா பாத்ரம் ஜ்ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||
இந்தப் ப்ரபந்த ஸாரத்தில், பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார்,
நம்மாழ்வார், மதுரகவிகள், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், கோதைப் பிராட்டியான ஸ்ரீ ஆண்டாள்,
தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கை ஆழ்வார் ….என்கிற 12 ஆழ்வார்களையும் சொல்லி,
அவர்கள் அவதரித்த நாள், ஊர், திருநாமங்கள், திருமொழிகள், அவற்றுள் பாட்டின் வகையான இலக்கம், மற்றுமெல்லாம் சொல்லி,
14 வது பாசுரமாக, ஸ்ரீ உடையவர்—ராமாநுஜரைப் பற்றி,

தேசம் எலாம் உகந்திடவே பெரும்பூதூரில் , சித்திரையில் ஆதிரை நாள் வந்து தோன்றி
காசினி மேல் வாதியரை வென்று, அரங்கர் , கதியாக வாழ்ந்து அருளும் எதிராசா, முன்
பூசுரர் கோன் திருவரங்கத் தமுதனார் ,உன் , பொன் அடி மேல் அந்தாதி ஆகப் போற்றிப்
பேசிய நல் கலித் துறை நூற்றெட்டுப் பாட்டும் பிழை அறவே எனக்கு அருள் செய் பேணி நீயே ——————-என்கிறார்.

தேசம் எல்லாம் போற்றும் ஸ்ரீ பெரும்பூதூரில், சித்திரை மாதம், திருவாதிரை நக்ஷத்ரத்தில்,
அவதரித்து, இவ்வுலகில் குதர்க்க வாதம் செய்பவர்களை வென்று,
அரங்கனே—-பெரிய பெருமாளே– கதி என்று வாழ்ந்து, அருளும்—அருள்புரிந்து கொண்டிருக்கிற—
இப்போதும் , அருள் புரிந்து கொண்டிருக்கிற —யதிராஜா—–யதீச்வரர்களுக்கு எல்லாம் ராஜனே—- என்கிறார்.

இப்படி, எதிராசரான ஸ்ரீ ராமாநுஜரையும் , ஆழ்வார்களோடு, ப்ரபந்த கோஷ்டியில் சேர்த்தவர் ,
ஸ்வாமி தேசிகன்—-ஆதலாலும், இவர், ராமாநுஜ தயா பாத்ரம்.

வையகமெண் பொய்கை பூதம் பேயாழ்வார் , மழிசையர் கோன் மகிழ் மாறன் மதுர கவிகள்
பொய்யில் புகழ் கோழியர் கோன் விட்டு சித்தன் , பூங்கோதை தொண்டரடிப் பொடி பாணாழ்வார்
ஐயன் அருள் கலியன் எதிராசர் தம்மோடு, ஆறிருவர் ஓரொருவர் அவர் தாம் செய்த
துய்ய தமிழ் இருபத்து நான்கிற் பாட்டின், தொகை நாலாயிரமும் அடியோங்கள் வாழ்வே –ஆழ்வார்களின் கோஷ்டிப் பாசுரம் …..

ஆறிருவர் —பன்னிரண்டு ஆழ்வார்கள்…..அவர்களோடு, ஓரொருவர் –ஒரே ஒருவர் —எதிராசர் தம்மோடு—-
ஆறு இருவர்களும், ஒரே ஒருவரும் சேர்கிறார்கள். அதன் பலன், பாட்டின் தொகை, நாலாயிரமும்—“உம் ” என்பது முக்கியம்.
அடியோங்கள் வாழ்வே—–பன்னிரு ஆழ்வார்களுக்கும் எதிராசருக்கும் அடியவர்களான ,எங்களுடைய வாழ்வே —
உய்வதே—-உய்து அவனடி அடைவதே வாழ்வு—-வாழ்வு.— வாழ்வதன் பயன் என்கிறார். ஸ்வாமி தேசிகன்
இவர், ராமாநுஜ தயா பாத்ரம்.

————

இன்னொன்று—–“ராமா” —என்றால், கோதைப் பிராட்டியைக் குறிக்கும்
“அநுஜ” என்றால், கோதைக்குப் பின்னால் தோன்றிய வள்ளல்—உடையவர்.
அந்த உடையவரின் கருணைக்குப் பாத்ரமானவர் ,ஸ்வாமி தேசிகன்—

———-

மாமலர் மன்னிய மங்கை மகிழ்ந்து உறை மார்பினன் ,தாள்
தூமலர் சூடிய தொல் அருள் மாறன் துணை அடிக்கீழ்
வாழ்வை உகக்கும் இராமாநுச முனி வண்மை போற்றும்
சீர்மையன் எங்கள் தூப்புல் பிள்ளை பாதம் என் சென்னியதே .
இராமாநுசனின் வண்மையைப் போற்றும், சீர்மையன்— என்று ஸ்ரீ நயினாசார்யர் பிள்ளை அந்தாதியில் சொல்கிறார்.

எங்கள் தூப்புல் பிள்ளை—ஸ்வாமி தேசிகனின் திருவடிகள்—
என் சென்னியதே—-என் தலைமேல் இருக்கிறது–என்று, ஸ்ரீ நயினாசார்யர் ,பாசுரமிடுகிறார் .
இராமாநுச முனி வண்மை போற்றும் சீர்மையன்—ஆதலால், ராமாநுஜ தயா பாத்ரம்.

————-

ஜ்ஞான வைராக்ய பூஷணம்——–

பூஷணம், என்றால் ஆபரணம் . ஸ்வாமி தேசிகனுக்கு, எது ஆபரணம் என்றால் ,ஜ்நானமும் , வைராக்யமும்
ஜ்ஞானப் பிரான்—-ஸ்ரீ வராஹப் பெருமான
ஜ்ஞாநானந்த மயன்—-ஸ்ரீ ஹயக்ரீவன

1. ஸ்ரீ வராஹப் பெருமான் ,பூமிப் பிராட்டிக்கு, வராஹ சரம ஸ்லோகம் சொல்ல,
பூமிப்பிராட்டி, கோதையாக அவதரித்து வராஹ, சரம ஸ்லோகத்தை ,
” திருப்பாவை ” பாசுரங்களாக , நம்மைப் போன்ற ஜீவாத்மாக்கள், உஜ்ஜீவிக் அநுக்ரஹித்தாள் .
ஸ்ரீ உடையவர், ஸ்ரீ ஆண்டாளின் பாசுரங்களில் உருகி, “திருப்பாவை ஜீயரா”க ஆனார்.
இவை எல்லாவற்றையும் சேர்த்து, சிந்தித்து , ஸ்வாமி தேசிகன், “கோதா ஸ்துதி ” அருளினார்.
இந்த ஸ்துதி மூலமாக, ஞானப் பிரானையே வயப் படுத்தினார்.

கோபாயே தநிஸம் ஜகந்தி குஹநா போத்ரீ பவித்ரீ க்ருத –
ப்ரஹ்மாண்ட : ப்ரளயோர்மி கோஷ குருபிர் கோணா ரவைர் குர்குரை
யத்தம் ஷ்ட்ராங்குர கோடி காட கடநா நிஷ்கம்ப நித்ய ஸ்திதி :
ப்ரஹ்ம ஸ்தம்ப ஸௌதஸௌ பகவதீ முஸ்தேவ விஸ் வர் பரா ||–ஸ்வாமி தேசிகன் , தான் அருளிய ” தசாவதார ஸ்தோத்” ரம்

அதாவது…..
பகவான், மஹா வராஹமாக அவதரித்து, கடல்களின் ஓசையை விட
பெரிய உறுமல்களால், உலகங்களை உய்வித்து தம்முடைய இரு அழகிய பற்களினால்,
மூழ்கிய பூமியைத் தூக்கி நிலை நிறுத்தினார்.
இது, பற்களிடையே சிக்கிய கோரைக்கிழங்கு போலக் காட்சி அளித்தது.

மேலும், ப்ரஹ் மாதி, ஸ்தாவர ,பிராணிகள், மற்ற எல்லாவற்றையும்– ஈன்றது.
அத்தகைய வராஹப் பெருமான் லோகத்தை ரட்சிக்க வேண்டும் …….
.( இந்த ச்லோகம் –நவ க்ரஹங்களில் ராகு , க்ரஹப் ப்ரீதிக்கு ஏற்றது என்றும் சொல்வர் )

2. வைனதேய மந்த்ரத்தைப் பலமுறை ஆவ்ருத்தி செய்து, ஸ்ரீ கருடன் ப்ரஸன்னமாகி,
ஸ்ரீ ஹயக்ரீவரை விக்ரஹ ரூபமாகக் கொடுத்து ஆராதிக்கச் சொல்ல,

ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகா க்ருதிம
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹ–என்று தொடங்கி, ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் அருளினார்.

ஸ்ரீ ஹயக்ரீவனின் பரிபூர்ண கடாக்ஷத்தால், எல்லா வித்யைகளும் , போட்டி போட்டுக் கொண்டு,
ஸ்வாமி தேசிகனிடம் வந்து ப்ரார்த்தித்த போது,
ஸ்வாமி தேசிகன், ஞானமும், வைராக்யமும், சம்பந்தப்பட்ட வித்யைகளை மட்டில் பிரார்த்தித்து,
மீதி வித்யைகளை ,எப்போதெல்லாம் ப்ரார்த்தனை செய்யப்படுகிறதோ,
அப்போது வந்து அநுக்ரஹிக்க வேண்டினார்.

ஜ்ஞான பூஷணம் —- இதற்கு அவர் அருளிய க்ரந்தங்கள் ஒன்றா இரண்டா ? பலப் பல !
32 ரஹஸ்ய க்ரந்தங்கள்—-யாவும் ஜ்ஞானத்தின் சிகரங்கள்–
32 ஸ்தோத்ரங்கள் , 24 ப்ரபந்தங்கள் , 24 அநுஷ்டான சாஸ்திரங்கள் , 8 காவ்யங்கள் ,
1 பகவத் விஷயம் —
ஆக மொத்தம் 121

இவைகள் மாத்ரமல்ல, ஸ்வாமி தேசிகன் காலக்ஷேபங்கள் ஸாதித்த பாங்கு,
சிஷ்யர்களுக்கு ஏற்பட்ட சாஸ்த்ர சந்தேக நிவ்ருத்தி —–இப்படிப் பல ,
ஸ்வாமி தேசிகன் ஜ்ஞான பூஷணம் என்பதைச் சொல்கிறது.

———

இனி, வைராக்ய பூஷணம் —-
ஸ்வாமி தேசிகன் க்ரஹஸ்தாஸ்ரமத்தில், தினந்தோறும் , உஞ்ச வ்ருத்தி செய்து, உஞ்ச வ்ருத்தியில் கிடைக்கும்
அமுந்த்ரியை (அரிசி) பத்நியிடம் கொடுத்து, அந்த அரிசியைத் தளிகை செய்து,
திருவாராதனத்தில் தளிகை அமுது பண்ணுவிப்பது வழக்கம்.

இப்படி, ஒரு சமயம், ஸ்வாமி தேசிகன் உஞ்சவ்ருத்தி எடுக்கும்போது,
ஒரு தனிகரின் (பணக்காரர் ) பத்னி, ஸ்வாமி தேசிகனின் ஆசார்ய விலக்ஷண , பரம காருண்ய , பரம தேஜஸ்ஸால் ஈர்க்கப்பட்டு,
அன்றைய தினத்தில், அரிசியுடன் கூட சில தங்கக் காசுகளையும் சேர்த்து , உஞ்சவ்ருத்தி பாத்ரத்தில் சேர்த்து விட்டாள் .
ஸ்வாமி தேசிகன் இதைக் கவனிக்கவில்லை.
க்ருஹத்துக்கு வந்தார்——அரிசியை ஸஹதர்மிணியிடம் கொடுத்துவிட்டு, இவருடைய நித்யஅநுஷ்டானத்தைத்தொடங்கி விட்டார்.
ஸ்வாமியின் பத்னி, அரிசியை முறத்தில் சேர்த்து, அதை சோதிப்பது வழக்கம்.
அதாவது—சுத்தம் செய்வது—ஏதாவது கல் மண் போன்றவை இருப்பின் அதை நீக்குவது—
அப்படி சோதிக்கும் போது, இந்தப் பொற் காசுகளைப் பார்த்தாள் .
இவை என்னவென்று தெரியாமல், ஸ்வாமி தேசிகனிடம் வந்து,
“ஸ்வாமி இன்றைய உஞ்சவ்ருத்தியில் .., அரிசியுடன்கூட, ஏதோ பளபளவென்று மின்னுகிறதே …இது என்ன….? ” என்று கேட்டாள
ஸ்வாமி தேசிகன் முறத்தைப் பார்த்தார் ;அரிசியுடன்கூடப் பொற்காசுகளையும் பார்த்தார்;
“இதுபளபளவென்று இருப்பதாலேயே இது ஒரு புழு…விஷப் புழு….தூர வீசி எறிந்துவிடு…..” என்றார்.
பத்னியும் அப்படியே செய்தாள் .
வைராக்ய பூஷணத்துக்கு இது ஒரு உதாரணம்.

————–

இன்னொரு உதாரணம்—
“வித்யாரண்யர் ” என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
அக்காலத்திய விஜய நகர சாம்ராஜ்யத்தில் ஆஸ்தான வித்வானாக இருந்தவர்.
இவரும், ஸ்வாமி தேசிகனும் சஹாக்கள் ( நண்பர்கள்)
வித்யைகளைப் பயிலும் போது ஆசார்யனிடம் இருவரும், , சிஷ்யர்கள்

அதாவது சஹ மாணவர்கள். வித்யைகளை எல்லாம் கற்றுத் தேறி, இருவரும் பிரிந்தார்கள்.
வித்யாரண்யர், விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரச குமாரியை ” ப்ரஹ்ம ராக்ஷஸ் ”பீடித்து இருந்த போது,
அரசனின் வேண்டுகோளின்படி, ப்ரஹ்ம ராக்ஷஸ்ஸை விரட்டி, ராஜகுமாரியைக் காப்பாற்றினார்.
அது முதல், ராஜ சபையில அத்யக்ஷர் . ஆஸ்தான வித்வான் ஆனார்.
செல்வச் செழிப்பு; அதிகாரம்; ஏகப்பட்ட மரியாதைகள் —-இப்படி வாழ்ந்து வந்தார்.
ஸ்வாமி தேசிகன், வைராக்ய பூஷணமாக இருப்பதும், ராமாநுஜ தர்ஸனத்தைப்
பரப்பி வருவதும், தேசமெங்கும் பரவியது. வித்யாரண்யரும் இதைக் கேள்விப்பட்டார்

தன்னுடைய சஹா ,தன்னை விடவும் ஞானத்தில் முதிர்ந்தவர், ஆசார்ய விலக்ஷணர்
இப்படி, உஞ்சவ்ருத்தி எடுத்துக் கொண்டு, வறுமையில் இருக்கும்போது,
தான் மாத்ரம் செல்வத்தில் புரளுவது சரியல்ல என்று எண்ணினார்.

அவரையும் விஜயநகர சாம்ராஜ்ய வித்வானாக ஆக்கினால், அவரது வறுமை அகன்று விடும் என்று தீர்மானித்தார்.
உடனே ஒரு தூதுவரைக் கூப்பிட்டார், ஒரு பத்ரிகையை . எழுதி, தூதரிடம் கொடுத்து ,ஸ்வாமி தேசிகனிடம் அனுப்பினார்.

அதிகப் ப்ரஸித்தி பெற்ற தூப்புல் குலத் திலகமே —–அடியேன் மூலமாக, தேவரீரின் புகழையும், கீர்த்தியையும் ,
விஜயநகர மஹாராஜா கேள்விப்பட்டு,சந்தோஷப்பட்டார்; அதுமுதல், தேவரீரை ஸேவிக்க ஆசைப்பட்டு,
தேவரீரையே த்யாநித்துக் கொண்டு இருக்கிறார்;
தேவரீரைத் தன்னுடைய தனத்தால் ஆதரித்து,தேவரீருடைய முகார விந்தத்திலிருந்து வரும் வாக் அம்ருதத்தில் மூழ்கித்
திளைக்க விரும்புகிறார்; தேவரீர், சிஷ்யவர்க்கங்களுடன் இங்கு விஜயநகரத்துக்கு—ஹம்பி நகருக்கு, எழுந்தருளி,
தேவரீரின் ஆதரவு பெற்ற அடியேனையும், சந்தோஷிக்கச் செய்யவேண்டும–என்று எழுதினார்.

இந்தப் பத்ரிகையைப் படித்த, ஸ்வாமி தேசிகன்,
க்ஷோணீ கோண சதாம்ச பாலந கலா துர்வார கர்வாந
க்ஷூப்யத் க்ஷூத்ர நரேந்த்ர சாடு சநா தந்யாந்ந மந்யா மஹே |
தேவம் ஸேவிதுமேவ நிஸ்சி நு மஹே யோஸௌ தயாஜ : புர
தாநா முஷ்டி முசே குசேல முநயே தத்தேஸ்ம வித்தே சதாம் ||–என்று பதில் ஸ்லோகம் எழுதி அனுப்பினார

அதாவது—-
இந்தப் பூமண்டலம் மிகப் பெரியது; இதில் ஏதோ ஒரு மூலையில், “ஏக தேசம்” என்று சொல்லிஅரசர்கள், ஆண்டுகொண்டு இருக்கிறார்கள் .
அவர்களை, அடியேன் துதிக்க விரும்பவில்லை. அரசர்களைத துதித்து, அதனால் வரும் தனமும் ஒரு பொருட்டாக அடியேனின் மனத்தில் படவில்லை.
பகவானைத் த்யானம் செய்கிறோம். அவரே எல்லாப் பலன்களையும், கொடுக்க வல்லமை படைத்தவர்
குசேலருக்குக் குபேர. சம்பத்தைக் கண்ணன் கொடுக்க, நாம் அறிந்திருக்கிறோம் அல்லவா !
அவன் பகவான்—-கொள்ளக் குறைவிலன்; வேண்டிற்றெல்லாம் தரும் கோதில் மணிவண்ணன
ஸ்ரீ நம்மாழ்வார் அருள்கிறார் —
சேரும் கொடை புகழ் எல்லையிலானை ,ஓராயிரம
பேரும் உடைய பிரானையல்லால், மற்றும் யான்கிலேன

வித்யாரண்யருக்கு இந்தப் பதில் போய்ச் சேர்ந்தது.
அவர் வருத்தப்பட்டார்.சிலகாலம் கழிந்தது. வித்யாரண்யரால் வெறுமனே இருக்க முடியவில்லை.
இன்னொரு பத்ரிகை எழுதி, தூதுவன் மூலமாக அனுப்பினார்.

அதையும் படித்தார், ஸ்வாமி தேசிகன்.
உடனே இந்தப் பத்ரிகைக்கும்பதில் எழுதினார்.
அதுதான் “வைராக்ய பஞ்சகம் ”

1-ஸிலம் கிமநலம் பவே தநல மௌதரம் பாதிதும
பய : ப்ரஸ்ருதி பூரகம் கிமு ந தாரகம் ஸாரஸம் |
அயத்ந மலமல்லகம் பதி படச்சரம் கச்சரம
பஜந்தி விபுதா : முத ஹ்ய ஹஹ குக்ஷித : குக்ஷித : ||

2. ஜ்வலது ஜலதி க்ரோட கிரீடத் க்ருபீட பவ ப்ரப
ப்ரதி பட படு ஜ்வாலா மாலா குலோ ஜடரா நல : |
த்ருணமபி வயம்ஸாயம் ஸம்புல்ல மல்லி மதல்லிக
பரிமள முசாவாசா யாசா மஹே ந மஹீச் வராந் ||

3. துரீச்வா த்வார பஹிர் விதர்த்திகா துராஸி காயை ரசிதோய மஞ்ஜலி |
யதஞ்ஜநாப ம் நிரபாய மஸ்தி மே தனஞ்ஜய ஸ்யந்தந பூஷணம் தநம் ||

4. சரீர பத நாவதி ப்ரபு நிஷேவணா பாதநாத
அபிந்தந தநஞ்ஜய ப்ரசமதம் தநம் தந்தநம் |
தனஞ்ஜய விவர்தநம் தந முதூட கோவர்த்தநம
ஸூ ஸா தந ம பாதநம் ஸூமநஸாம் ஸமாராதநம் ||

5. நாஸ்தி பித்ரார்ஜிதம் கிஞ்சித் நமயா கிஞ்சி தார்ஜிதம
அஸ்திமே ஹஸ்தி சைலாக்ரே வஸ்து பைதா மஹம் தநம் ||

1-ஒருவனுக்கு, உயிர் வாழ்வதற்கு உணவு, தாகத்துக்குத் தண்ணீர், மானத்தை மறைக்க வஸ்த்ரம் போதும்.
இதற்காக, ராஜாவை அணுகி, இருக்கவேண்டும் என்பதில்லை.
வயல்களில் சிந்தி இருக்கும் நெல்மணிகள்—-உணவுக்குப் போதுமானது.
ஆறு,குளம்,குட்டை இவைகளில் உள்ள தண்ணீர் தாகத்துக்குப் போதுமானது.
வீதிகளில் சிதறிப் போடப்பட்டிருக்கும் கந்தைத் துணிகள் , மானத்தை மறைக்கப் போதுமானது .
இப்படி, இவை எல்லாம் சுலபமாகக் கிடைக்கக் கூடியதாய் இருக்க,
அரசனை அண்டி , அவனை ஸ்தோத்ரம் செய்து, / துதிகள் பாடி அவனிடம் யாசிக்கிறார்களே… பரிதாபம் !

2.ஸமுத்ரத்தில் , “வடவாக்னி ” என்கிற நெருப்பைப் போல ,
வயிற்றில் “ஜாடராக்னி ” வ்ருத்தியாகி பசி, தாகம் என்று கஷ்டப்பட்டாலும், சாயங்கால வேளையில், பூத்துத் தானாக மலர்கிறதே —
வாசனையுள்ள மல்லிகைப்பூ அந்த வாசனையை —– உடைய நமது வாக்கினால்,ஒருபோதும் அரசனை யாசிக்க மாட்டோம் .

3, அர்ஜுனனின் ரதத்தை அலங்கரித்த மைவண்ணன் கண்ணனின் தனம் நமக்கு இருக்கிறது. இந்தத் தனம் குறைவே இல்லாதது.
ஆதலால், துஷ்ட அரசர்களின் வாசலில் போய் தனத்துக்காக, துக்கத்துடன் காத்திருக்கும் நிலை நமக்கு வேண்டாம்–
ஹரியைத் துதித்து, உடனே கிடைக்கும் தனம் உபயோகமானது. சனகாதி முனிவர்களாலும், த்யானம் செய்ய இயலாத பகவானின் தனம்
எப்போது, எப்படிக் கிடைக்கும் என்று சிலருக்குத் தோன்றும். எண்ணலாம் ; அதற்குப் பதில் சொல்கிறேன், கேளும்—

4. ராஜாக்களை அண்டிப் பெறுகிற தனம், நிரந்தரமானதல்ல; தற்காலிகமாகப் பசி தாகத்தைப் போக்கும்;
நம்முடைய மரண பர்யந்தம் அவர்கள் கொடுக்கும் ஸ்வல்ப த்ரவ்யத்துக்காக அவர்கள் தயவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பெரிய கஷ்டத்தை,
அந்த அல்ப தனம் ஏற்படுத்தும். ஆதலால், அந்தத் தனம் உபயோகமில்லாதது;
நம்மால் ஆச்ரயிக்கப்பட்ட பகவான் என்கிற தனம், அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசித்து, மேன்மையை உண்டாக்கியது.
ஜாடராக்னியை மங்கச் செய்தது; தனவானின் தனம் அவனுக்குப் போஷகமாக இருக்கும்;
ஆனால், கோவர்த்தன கிரியைத் தூக்கி, கோக்களையும், கோபாலகர் களையும் காப்பாற்றியது,
பகவானாகிய தனம்; மேலும், தன்னை யார் ஆச்ரயிக்கிறார்களோ —
தேவர்கள் வித்வான்கள் என்று இவர்களையெல்லாம் சந்தோஷப்படுத்தக் கூடியது.
ஆதலால், பகவான்தான் உயர்ந்த தனம்;

5. சுயார்ஜிதமோ, பிதுரார்ஜிதமோ அதன்மூலம் தனம் இருந்தால்,
அரசர்களை இவ்விதம் அலக்ஷியமாகப் பேசலாம்;
ஒன்றுமில்லாத உஞ்சிவ்ருத்தி செய்பவன், இப்படிப் பேசுதல் கூடாது என்று, நினைக்க வேண்டாம்;
ஹஸ்தி கிரியில், எழுந்தருளி இருக்கும் தேவப் பெருமாள் என்கிற தனம்
என்னிடம் இருக்கிறது; நாம் சம்பாதித்ததோ தகப்பனார் சம்பாதித்ததோ ஒன்றுமில்லை;
ஆனால், நம் பிதாமஹர் (ப்ரஹ் மா) சம்பாதித்த தனம் ஒன்று இருக்கிறது;
அத்திகிரியில் இருக்கிறது; அதை ஒருவராலும் அபகரிக்க முடியாது;
ப்ரஹ்மாவின் யாகத்தில் அவதரித்த தேவாதி ராஜனே, தேவப் பெருமாளே, நமக்குப் பெரிய தனம்

———–

ஸ்ரீமத் வேங்கட நாதார்யம், வந்தே வேதாந்த தேசிகம் —–

ஸ்ரீமத்—-ஸ்ரீமதே —–
ஸ்ரீமதே, என்றால்,
ஆசார்யன் செய்ய வேண்டுவதாகச் சொல்லப்படுவது நான்கு—
-1. அத்யயனம் 2.அத்யாபனம் 3. ப்ரவசனம் 4.க்ரந்த லேகநம்—-இப்படிப்பட்ட ஆசார்யன்.
“சிஷ்ய வத்ஸலன் ” ஆகிறார்.

இந்த ஆசார்யன், உபதேசம் செய்து சிஷ்யர்களை ரக்ஷிக்கிறார் ;
இது ரக்ஷணம் . க்ரந்தம் மூலமாக, ரக்ஷிப்பது,” ஸூரக்ஷணம் “.
அதனால் தான், உபதேசம் மாத்ரமல்லாமல், க்ரந்தங்களையும் அருளிச் செய்த ஆசார்யர்களை,
” ஸ்ரீமதே வேதாந்த குருவே நம : ” ,
” ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ” என்று பக்தியுடன் அநுஸந்திக்கிறோம் .

ஸ்வாமி தேசிகன், உபதேசம் மாத்ரமல்ல, முன்னேயே சொன்னதைப் போல,
குதர்க்க வாதங்களை அழித்து, ஸத்ஸம்ப்ரதாயத்தை நிலைநாட்ட, வளர்க்க,
அனேக அருமையான க்ரந்தங்களைப் பொக்கிஷமாக அருளி இருக்கிறார்.
——–

வேங்கடநாதார்யம்—-

திருவேங்கட முடையானின், மறு அவதாரமே—ஸ்வாமி தேசிகன்.
” வேங்கடசாவதாரோயம் தத் கண்டாம் ஸோதவா பவேத் ” என்கிறோம்.
“அர்ச்சையாய் நின்ற இடத்தில், ஆச்ரயணத்துக்கு உறுப்பான, ஸௌலப்ய சௌசீல்யாதி குணங்களைக் காட்ட முடியாமல்,
அதையே காரணமாகக் கொண்டு,உதாசீனர்களாயும், சத்ருபூதர்களாயும், நிற்கிற சேதனர்களைத் திருத்திப் பணிகொள்ள ,
பூர்வோக்தமான குண விசேஷங்களையும் கொண்டு,
” ஸ்ரீமத் வேங்கடநாத தேசிக ரூபேண” ,
எல்லாக் கல்யாண குணங்களையும், ப்ரகாசிப்பித்துக் கொண்டு ,ஆசார்ய ரூபராய் அவதரித்து, நின்றபடியைச் சொல்லிற்று. ……..

உடையவருக்குப் பிறகு, சுமார் 200 ஆண்டுகள் கழித்து, ஸ்வாமி தேசிகனின் அவதாரம்.
இந்த இடைப்பட்ட காலத்தில், இந்த ஸம்ப்ரதாயத்துக்கு நலிவு ஏற்பட்டிருக்க வேண்டும்..

வேதே ஸஜ்ஜாதகேதே முநிஜனவசனே ப்ராப்த நித்யாவ மானே |
ஸங்கீர்ணே ஸர்வ வர்ணே ஸதி ததனுகுணே நிஷ்ப்ரமாணே புராணே ||
மாயாவாதே ஸமோதே கலிகலுஷ வசாச் சூன்ய வாதே அவிவாதே |
தர்மத்ராணாய யோதி பூத்ஸஜயதி பகவான் விஷ்ணு கண்டாவதார : ||–ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் , ஸப்ததிரத்ன மாலிகாவில்,
.

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது, தென்குருகை வள்ளல்
வாட்டமிலா வண்தமிழ் மறை வாழ்ந்தது–மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுசன் தன் இயல்பு கண்டே.
என்று ஸ்ரீ உடையவரைப் பற்றிச் சொன்னார்.–திருவரங்கத் தமுதனார்,-இராமாநுச நூற்றந்தாதியில்,

ச்லோகத்துக்கும்,பாசுரத்துக்கும் என்ன ஒற்றுமை பாருங்கள் !

ஸ்வாமி தேசிகன் அவதரித்ததால், அழிந்த வேதங்கள் வளர்ந்தன;
புறக்கணிக்கப்பட்ட புராணங்கள் புத்துயிர் பெற்றன;
வர்ணாஸ்ரம தர்மங்கள் பழைய நிலைக்கு வந்தன;
பௌத்தம் போன்ற அவைதிக மதங்கள் ஒதுக்கப்பட்டன;–இப்படி அந்த ஸ்தோத்ரம் சொல்கிறது.

————–

” வேங்கடசா வதாரோயம் தத் கண்டாம் ஸோதவாபவேத் …..”—
திருப்பதி திருவேங்கட முடையானே , வேங்கடநாதனாக அவதரித்தான் .

————

இனி—–“-வந்தே வேதாந்த தேசிகம் ”

வேதாந்த தேசிகபதே விநிவேஸ்ய பாலம்
தேவோ தயா ஸதகமேத தவாத யந்மாம் |
வைஹாரிகேண விதிநா ஸமயே க்ருஹீதம்
வீணா விசேஷமிவ வேங்கட சைலநாத ||–ஸ்வாமி “தயா சதக”த்தில் 104 வது ஸ்லோகத்தில் அருள்கிறார்.

அலகிலா விளையாட்டுடைய திருவேங்கட முடையான், மிகுந்த மகிழ்ச்சியோடு, சிறியனான என்னை
வேதாந்த தேசிக பீடத்தில் அமர்த்தி, கைகளில் மகர யாழை எடுத்துப் பாடச் செய்வதைப் போல,
இந்த “தயா சதகம்” என்கிற ஸ்தோத்ரத்தை, அடியேனைக் கொண்டு துதிக்கச் செய்தான் …..என்று ஸ்வாமி தேசிகனே , சொல்கிறார்.

இதைப் பிற்பாடு, திருவரங்கன், “வேதாந்தாசார்யன்” என்று அடியேனுக்குச் சூட்டினான்.
திருமலையில் உற்பத்தியானது, திருவரங்கத்தில் அரங்கேறி விட்டது. அரங்கம் என்றால் “ஸபை” தானே.

வந்தே வேதாந்த தேசிகம்
நம்முடைய நிலையை உணர்ந்து, ஸ்வாமி தேசிகனின் பரிவாஹத்துக்கு —
-தேஜஸ், புகழ், பெருமைக்கு எதிரிட மாட்டாதே வணங்கி “வந்தே..” என்று பலகாலம் சொல்லி,
வேதாந்த பதத்தாலே, உபய வேதாந்தத்தைச் சொல்லி,
தேசிக பதத்தாலே ஆசார்ய நிரூபணமாயிற்று…..

கண்ணானது, நாம் செல்லும் மார்க்கத்தை, நமக்குக் காட்டி, நாம் தவறான வழியில் சென்று படுகுழியில் விழாமல் இருக்க,
நல்ல மார்க்கத்தை —தர்ஸனம் செய்விக்கிறதோ—-காண்பிக்கிறதோ —-அதைப்போல, ராமாநுஜ ஸித்தாந்தம்
நம்முடைய வாழ்நாளில், நாம் நல்ல கதியை அடைய ,தேசிக தர்ஸனமாகக் கிடைக்கிறது. இவர்தான் தேசிகன் —

வந்தே வேதாந்த தேசிகம்.
ஸம்ஸாரத்தில் உழலுபவர்கள் க்ஷர புருஷர்கள். …….
அவர்களை, அக்ஷர புருஷர்களாக —முக்தர்களாக– மாற்றும்
ராமாநுஜ தயா பாத்ரமான ஸ்வாமி தேசிகன்,
ஜ்ஞான வைராக்ய பூஷணமான ஸ்வாமி தேசிகன்,
கணக்கில்லாத உபதேசம், காலக்ஷேபம் மாத்ரமல்ல –கணக்கில்லாத க்ரந்தங்களை அருளிய ஸ்ரீமத் வேதாந்த தேசிகன்,
திருவேங்கட முடையானே , திருவவதாரம் செய்து வேங்கடனாதனாக ஆன ஸ்வாமி தேசிகன்,
புகழ், பெருமை, தேஜஸ் என்று பற்பல குண ஆச்சர்யங்களால் “வந்தே” என்று, விழுந்து, விழுந்து வணங்கும்படி பண்ணும் ஸ்வாமி தேசிகன்,
உபய வேதாந்தங்களுக்கும் விளக்காக ஆகிய ஸ்வாமி தேசிகன் ஆசார்யர் களுக்கும் ஆசார்யனாக ஆனார்.
இன்னும், தனக்குப் பிந்தைய எல்லா ஆசார்யர் களுக்கும் ஆசார்யன் —அதாவது—தேசிகன

வந்தே வேதாந்த தேசிகம்—
ராமாநுஜ தயா பாத்ரம், ஜ்ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||

ராமானுஜ தயா பாத்ரம்—-ஸர்வ ஆசார்ய கடாக்ஷ சம்பத்து ——-என்றும்
ஜ்ஞான வைராக்ய பூஷணம்–கல்யாண குணங்கள் —–என்றும்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்—அவதார வைபவம்—–என்றும்
வந்தே வேதாந்த தேசிகம்—உபய வேதாந்த ஸ்தாபன ப்ரவர்த்தனம்—-என்றும
மிக ஆச்சர்யமாக பூர்வாசார்யர்கள் அருளுவர்.

கோயில், திருமலை, பெருமாள் கோயில், மேல்கோட்டை என்கிற நான்கு திவ்ய தேசங்களையும், ஸந்த்யா வந்தன
காலங்களில் மூன்று வேளையும் சேவிக்கிறோம்;
அதாவது—-

ஸ்ரீரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம்
ஸ்ரீ ஹஸ்திசைல சிகரோஜ்வல பாரிஜாதம்
ஸ்ரீசம் நமாமி சிரஸா யது சைல தீபம

இந்த ஸ்லோகத்தில் , கருணைக்கடல், காளமேகம், பாரிஜாதம், தீபம் என்று குறிப்பிட்டுச் சொல்கிறோம்
ராமாநுஜ தயா பாத்ரம்—-மேல் கோட்டையைக் குறிக்கலாம் ( திருநாராயணபுரம் )
இந்தத் தனியன் அவதரித்ததே அங்கு தானே என்பார்.
நம் இராமாநுச வைபவம், இங்கு உலகப் பிரஸித்தம்.

ஜ்ஞான வைராக்ய பூஷணம்—கச்சிநகரைக்குறிக்கலாம் ( காஞ்சீபுரம் )
ஸ்வாமியின் திவ்ய தேசம் மாத்ரமல்ல, வைராக்ய பஞ்சகம் போன்ற
பற்பல ஸ்ரீ சூக்திகள் அவதரித்த இடமல்லவா —என்பார்.

ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்— திருப்பதியைக் குறிக்கலாம்;
ஸ்வாமி தேசிகன் திருவேங்கடமுடையானின் அவதாரமல்லவா —என்பார்

வேதாந்த தேசிகம்—-திருவரங்கத்தைக் குறிக்கலாம்;
பெரிய பெருமாள் ஸ்ரீ ரங்கநாதன் , ஸ்வாமிக்கு ,அருளப்பாடிட்டு அனுக்ரஹித்த திருநாமமல்லவா —என்பார்.
இவற்றை இப்படியும் பெரியோர்கள், அனுசந்திப்பர்;—

வேதாந்த தேசிகம்—-ஸ்ரீ ரங்கம் பெரிய கோவில்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் —- திருவேங்கடம்
ஜ்ஞான வைராக்ய பூஷணம்—-திருக்கச்சி பெருமாள் கோவில் –ஸ்ரீ ஹஸ்தி சைலம்
ராமாநுஜ தயா பாத்ரம் வந்தே—-யாதவாத்ரி கோவில் –யதி சைல தீபம

ராமாநுஜ தயா பாத்ரம் ——வந்தே
ஜ்ஞான வைராக்ய பூஷணம்—-வந்தே
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்—–வந்தே
வேதாந்த தேசிகம்——வந்தே–என்றும் , புகழ்ந்து உரைப்பர்.

ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்——-விசேஷ்யம்
மற்ற மூன்றும்—-விசேஷணம் —
அதாவது,
பிறரிடமிருந்து பிரித்துக் காட்டும் .
பிறருக்கு இவை சேராது.

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : —————இந்தத் தனியன் திருமந்த்ரத்துக்குச் சமம் என்றும்,
ராமாநுஜ தயா பாத்ரம் ——————-இந்தத் தனியன் த்வயத்துக்கு ஒப்பாகும் என்றும்
சீரொன்று தூப்புல் ——–இந்தத் தனியன் சரம ச்லோகத்துக்குச் சமம் என்றும் சொல்வார்.

——–

ஸ்ரீ மந் லக்ஷ்மண யோகீந்த்ர ஸித்தாந்த விஜயத்வஜம் |
விச்வா மித்ர குலோத் பூதம் வரதார்ய மஹம் பஜே ||(ஸ்ரீ நயினாசார்யருக்கான தனியன் )

—————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்- -ஸ்ரீ வேதாந்த தேசிகன் பாஷ்யம்/ -அருள் தரும் ஸ்ரீ ஆரண தேசிகன் —

August 6, 2021

ஸ்வாதயன் நிஹா சர்வேஷாம்
த்ரய்யந் தார்த்தம் ஸூ துர் க்ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர
தம் வந்தே யாமுநாஹ் வயம்-

ஸ்வாதயன்-அனுபவத்திக் கொண்டே –
யன் ப்ரத்யயம் -அனுபவிப்பித்து-
இஹ -இந்த காலத்தில் -இத்தைச் சொல்லும் பொழுது -இதில் –
சர்வேஷாம்-சர்வாதிகாரம் இந்த ஸ்தோத்ரம் -ஸ்ரத்தையே வேண்டுவது
ஸூ துர்க் ரஹம்–த்ரய்யந் தார்த்தம்-அறிவரிய வேதாந்தார்த்தங்களை
ஸ்தோத்ர யாமாஸ-ஸ்தோத்ர ரூபமாக வெளியிட்டு அருளினாரோ
யோகீந்திர-எந்த யோகி ஸ்ரேஷ்டர்–எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவனான ஆளவந்தார் –

————

நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம

நமோ நமோ யாமுநாயா-அஷ்டாக்ஷர மந்த்ரம் போல் இதுவே-

———————————————————

ஸ்ரீ மத யமுனா முனே நாத ஸஹாயேந -நாத முனி என்றும் பெருமாளே என்றும் -கூடியவராக -உள்ள ஆளவந்தரால்
அஹம் நாதம் உடையவராய் ஆனேன் -தேசிகன்
யஸ்ய வதன சந்த்ர உத்பன்ன புவன போக்கிய அம்ருதம்
அம்ருத கிரணங்கள் உடைய சந்திரன் -சகோர பஷி இத்தையே தாரகமாக கொள்ளுமே
ஸூ மனஸா-ஸ்ரீ வைஷ்ணவாம் போக்யம் -அமரர்கள் -பூ ஸூ ரர்களுக்கும் –

———————–

ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னம் நாலாம் ச்லோகத்தின் பொருள் விரிக்கையில் ஸ்ரீ தேசிகன்
“மாதா பிதா”வுக்கு விளக்கம் அருள்வது காணீர் –
”அத பராசர ப்ரபந்தாதபி வேதாந்த ரஹஸ்ய வைசாத்யாதிசய ஹேதுபூதை: சாத்ய பரமாத்மனி சித்த ரஞ்சக தமை:
ஸர்வோபஜீவ்யை: மதுரகவி ப்ரப்ருதி ஸம்ப்ரதாய பரம்பரயா நாதமுநேரபி உபகர்த்தாரம் காலவிப்ரகர்ஷேபி
பரமபுருஷ ஸங்கல்பாத் கதாசித் ப்ராதுர்பூய ஸாக்ஷாதபி ஸார்வோபநிஷத் ஸாரோபதேசதரம் பராங்குசமுநிம் “
மாதா பிதா ப்ராதேத்யாதி உபநிஷத் ப்ரசித்த பகவத் ஸ்வபாவ த்ருஷ்ட்யா ப்ரணமதி மாதேதி”.

இங்கு ஸ்ரீ தேசிகன் வேத விஷயங்களை
ஆழ்வார் பராசராதி ரிஷிகளையுங்காட்டில் வெகு நன்றாக விளக்குவதாகக் காட்டியருளுகிறார்.
மேலும் ஆழ்வார் பாசுரங்கள் எல்லார்க்கும் ஏற்புடையனவாயும். ரசகனமாயும் உள்ளன.
ஆகவே எம்பெருமானைப் போன்றே ஆழ்வாரும் தாய், தந்தை என எல்லா உறவு முறையிலும் கொண்டாடப் படுகிறார்.

———————–

ஸ்லோகம் -10-
ஸ்தோத்ரம் செய்ய அல்ப சக்தனான தாமே தகுதியானவர் என்று அவனது ஸ்வாபாவிக வாத்சல்யம் வெளிப்பட்டது
அது அவன் இடம் திருப்பத்தில் எவ்விதமும் ஆச்சர்யம் அன்று என்று
ஒரு கைமுதிக நியாயத்தால் இந்த ஸ்லோகத்தில் ஸ்தாபிக்கிறார்
இது முதல் 12 ஸ்லோகங்களால்
நாராயண சப்தார்த்தம் ஸர்வ ஸ்மாத் பரத்வமும் ஸுலப்யமும் என்று பிரபஞ்சித்திக் கொண்டு
ஸ்ரீ ஆளவந்தார் அவனை நமஸ்கரிக்கிறார் என்பதே ஸ்ரீ தேசிகருடைய அவதாரிகை –

ஹே பிரபு உன்னுடைய சங்கல்பம் இல்லா விடில் விசித்ரமாகப் தென்படும் இப்பிரபஞ்சம் முழுவதும் உண்டாகிறதற்காவது –
ஸத்தை யுடன் கூடி இருக்கிற தற்காவது ஸமர்த்தம் அன்று
அப்படி இருக்கவே அசமர்த்தம் என்றால் ப்ரவ்ருத்தி அதுக்கு எவ்வாறு சம்பவிக்கும்
ஆக இப்படி ஸர்வ ஜந்துக்களும் ஸ்வாபா விக ஸூஹ்ருத்தாகிய உம் இடத்தில் ஆஸ்ரிதவாத்சல்யம் இருப்பது ஆச்சர்யம் அன்று
இவற்றை உண்டாக்கி -ஸத்தயைக் கொடுத்து
போக மோக்ஷம் அடைய கரண களே பரங்க ளையும் கொடுத்த ஸர்வ உபகாரகனுக்கு இல்லாமல்
வேறே யாருக்கு ஆஸ்ரித வாத்சல்யம் சம்பவிக்க முடியும்

நிகில காரணன்–
காரணத்வம் –நியந்த்ருத்வம் -ஸூஹ் ருத்வம் -ஸ்வாமித்வம் -வாத்சல்யம் —
ஐந்து கல்யாண குணங்கள் நிறைந்தவன் அவன் ஒருவனே

அவேஷணம் -ஸங்கல்பம் -அநுஹ்ரஹத்தை முன்னிட்டே செய்து அருளுகிறான்
ஞானம் பலம் இத்யாதி ஸ்வாபாவகிம் போல் ரக்ஷணமும் ஸ்வாபாவகிம் தான்
தன் இடம் த்வேஷம் பாரட்டி உள்ளார் இடம் கூட அவன் வாத்சல்யம் காட்டி அருளுகிறான்

கட வல்லி -ஜூகுப் ஸை இல்லாமல் அந்தர்யாமி -வாத்சல்யம் அடியாகவே
மழலைச் சொல்லை உகக்கும் தாய் போல் நம் பழிச் சொற்களையும் ஏற்கிறான்

———

ஈஸித்ருத்வம் -காரணத்வம் -ஸ்வாமித்வம் -இருக்கும் தன்மை விளக்கம் –11-ஸ்லோகத்தால்

ஹே நாராயணா வேதங்களை பிரமாணமாக ஒத்துக்க கொள்பவர்களின் எவர் தான்
ஸ்வ பாவ ஸித்தமாயும் அளவற்ற மகிமையும் உள்ள ஈஸீத்ருத்வத்தை உம்மிடத்தில் ஸஹிக்க மாட்டார்
ப்ரஹ்மாதிகள் முக்தர்கள் அனைவரதும் உமது மஹிமையில் ஒரு திவிலை ஸ்தானீயர்கள் ஆகிறார்கள் அன்றோ என்று அர்த்தம் –

அநந்ய அதீனம் அபரிமிதம் இவனது ஈஸித் ருத்வம்
மற்றவர்களது -ப்ரஹ்மாதிகளுக்கு
-கர்மாதீனம் துக்க மிஸ்ரம் அநித்யம்
முக்தர்களுக்கு பரம அதீனம் -பரிச்சின்னம்
இவனே ஸர்வ அந்தராத்மா -ப்ரவர்த்தகன் -ஸர்வ ஸாக்ஷி -அனைத்துக்கும் ஆஸ்ரயம்

———-

ஸ்ரீ பிள்ளை அந்தாதி
உன் அருள் அன்றி எனக்கு ஒரு நல் துணை இன்மையால்
என் இரு வல்வினை நீயே விலக்கி ஹிதம் கருதி
மன்னிய நல் திரு மந்த்ரம் ஓதும் பொருள் நிலையே
பொன் அருளால் அருளாய் புகழ் தூப்பூல் குல விளக்கே –15-

விளக்காகி வேங்கட வெற்பினில் வாழும் விரை மலராள்
வளக் காதல் கொண்டு மறை மார்பன் திருத்தும் உனது அடியார்
துளக் காதல் இல்லவர் தங்கள் திறத்திலும் தூய்மை எண்ணிக்
களக்காதல் செய்யும் நிலை கடியாய் தூப்புல் காவலனே –16-

——–

வெள்ளப் பரிமுகர் தேசிகராய் விரகால் அடியோம்
உள்ளத்து எழுதியது ஓலையில் அட்டனம் யாம் இதற்கு என்
கொள்ளத் துணியின் இங்கு ஏது ஓன்று இகழினும் கூர் மதியீர்
எள்ளத்தனை யுகவாது இகழாது எம் எழில் மதியே —-அதிகார ஸங்க்ரகம் –56-

——————

பாத்ர பதமாஸ கத விஷ்ணு விமலர் ஷே
வேங்கட மஹீத் ரபதி தீர்த்த திந பூதே
ப்ராதுர பவஜ் ஜகதி தைத்ய ரிபு கண்டா ஹந்த
கவி தார்க்கிக ம்ருகேந்த்ர குரு மூர்த்யா –ஸப்ததி ரத்ன மாலிகா ஸ்லோகம்
திருமணி ஆழ்வாரே ஸ்வாமியாக திரு அவதாரம் என்கிறதே –

——————

வித்ராஸி நீ விபூதவைரி வரூதி நீ நாம்
பத்மாஸநேந பரிசார விதவ் ப்ரயுக்தா
உத் ப்ரேஷ்யதே புத ஜனைர் உப பத்தி பூம் நா
கண்டா ஹரே ஸமஜ நிஷ்ட யதாத்ம நேதி -சங்கல்ப ஸூர்யோதய ஸ்லோகம்

ப்ரஹ்மதேவன் ஆராதனத்துக்கு உபயோகித்த மணி –
இதன் நாதத்தாலே அசுரர்கள் பயந்து ஓடச் செய்ததே –
அவதாரமே நம் ஸ்வாமி -என்றவாறு
திரு ஆராதனத்துக்கு திருமலையில் கை மணி இதனாலே தான் சேவிக்க மாட்டார்கள் –

ஸ்வஸ்தி சுக்ல வர்ஷம் கதகலி 4370-கச்சி நகர் அனந்தாச்சார்யார் தோதார அம்மையாருக்கு
வரத வேங்கட பிரசாதமாக ஸ்வப்னத்தில் அருளிய படி
புரட்டாசி -11- ஞாயிற்றுக் கிழமை 11-28-சுக்ல ஏகாதசி -6 நாழி -19 வினாடிக்கு
திருவோணம் நக்ஷத்ரம் கன்யா லக்கினத்தில் திரு அவதாரம் -1268-
பேர் அருளாளனும் திருச்சின்னம் அருளினான்

இவர் முப்பது தடவை ஸ்ரீ பாஷ்யம் சாதித்து அருளியதை
த்ரிம் ஸத்வாரம் ஸ்ராவித சாரீரக பாஷ்யா -ஸ்லோகம் சங்கல்ப ஸூ ர்யோதயத்தில் அருளிச் செய்துள்ளார்

—————–

தேசம் எல்லாம் உகந்திடவே பெரும்பூதூரில் சித்திரையில் ஆதிரை நாள் தோன்றிக்
காசினி மேல் வாதியாரை வென்று அரங்கர் கதியாக வாழ்ந்து அருளும் எதிராசா முன்
பூ சுரர் கோன் திருவரங்கத்து அமுதனார் உன் பொன்னடி மேல் அந்தாதியாகப் போற்றிப்
பேசிய நற் கலித்துறை நூற்று எட்டுப் பாட்டும் பிழை அறவே எனக்கு அருள் செய் பேணி நீயே

பூ மகள் கோன் தென்னரங்கர் பூம் கழலுக்குப் பாதுகமாய்த்
தாம் மகிழும் செல்வர் சடகோபர் -தே மலர்த் தாட்க்கு
உய்ந்து இனிய பாதுகமாம் எந்தை இராமானுஜனை
வாய்ந்து எனது நெஞ்சமே வாழ் –

—————–

ஸ்ரீ கருட ஸ்தோத்ரம்
கருடாய நமஸ் துப்யம் நமஸ் தே பக்ஷிணாம் பதே
ந போக மாதி ராஜாய ஸூ பர்ணாய நமோ நம
விநதா தந்த ரூபாயா கஸ்யபஸ்ய ஸூதாய ச
அஹீ நாம் வைரிணே துப்யம் விஷ்ணு பத்ராய தே நம
ரக்த ரூபாய தே பஷின் ஸ்வேத மஸ்தக பூஜித
அம்ருதா ஹரணே ஹ்ருஷ்ட தஸ்மை தேவாய தே நம

அம்ருத கலச யுக்தம் காந்தி சம்பூர்ண காத்ரம்
சகல விபூத வந்த்யம் வேத ஸாஸ்த்ரர் அசிந்த்யம்
விவித விமல பஷைர் தூய மாநாண்ட கோளம்
ஸகல விஷவி நாஸம் சிந்த யேத் பக்ஷி ராஜம் –

——–

கருணாகரன் -தயா சதகம்
பயக்ருத் பய நாசன -அபீத ஸ்தவம்
வீர -மஹா வீர வைபவம்
ஸர்வ வாக் ஈஸ்வரேஸ்வர -ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
நைகமாய -தசாவதார ஸ்தோத்ரம்
யோக விதாம் நேத -பகவத் த்யான சோபனம்
ஸ்ரீ மான் -ஸ்ரீ ஸ்துதி
நரஸிம்ஹ வபு—காமாஸிகாஷ்டகம்
அச்யுத -அச்யுத சதகம்
விக்ரம -கருட தண்டகம் –கருட பஞ்சா சத்
வாமன பிராம்சு -தேஹ ளீச ஸ்துதி
வரத -வரதராஜ பஞ்சா ஸத்
ஸவ்ரி -கோபால விம்சதி

—————

வஞ்சப் பர சமயம் மாற்ற வந்தோன் வாழியே
மன்னு புகழ் பூதூரோன் மனம் உகப்போன் வாழியே
கஞ்சத் திரு மங்கை உகக்க வந்தோன் வாழியே
கலியன் உரை குடி கொண்ட கருத்துடையோன் வாழியே
செஞ்சொல் தமிழ் மறைகள் தெளிந்து உரைப்பான் வாழியே
திருமலை மால் திரு மணியாய்ச் சிறக்க வந்தோன் வாழியே
தஞ்சப் பர கதியைத் தந்து அருள்வோன் வாழியே
தண் தமிழ் தூப்புல் திரு வேங்கடவன் தாள் வாழியே –

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி/ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை /ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி –ஆடியாடி யகம் கரைந்து–2-4-சாரங்கள் —

May 21, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி

தத் ப்ரார்த்திதா நதி கமேந ஸமுத்தி தார்த்தி
அக்ரே ஹரே பர முகேந யதா விதேயம்
ஆர்த்தேர் நிவேதநம் அபா கரணம் அர்த்த நஞ்ச
மூர்ச்சாம் ததா முனிரகாந் மஹதீம் சதுர்த்தே —

பர முகேந -மாற்றார் வாயால் -திருத்தாயார் பாசுரமாக
யதா விதேயம் –மடப்பம் மிக்க தலைமகள்
மஹதீம் மூர்ச்சாம்-பெரிய மயக்கம்
அபா கரணம் அர்த்த நஞ்ச -என் கொல் நுமது திரு உள்ளம் -பிரார்த்தனை –

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி

ப்ரஹ்லா தார்த்தே ந்ருஸிம்ஹம்
ஷபித விபது ஷா வல்லபம்
ஷிப்த லங்கம்
ஷ்வேள ப்ரத்யர்த்தி கேதும்
ஸ்ரமஹர துளஸீ மாலிநம்
தைர்ய ஹேதும்
த்ராணே தத்தா வதாநம்
ஸ்வ ரிபு ஹத க்ருத ஆஸ் வாஸனம்
தீப்த ஹேதிம்
சத் பிரேஷா ரஷிதாரம்
வியசன நிரசனம்-வியக்த கீர்த்திநம் ஜகாத

1-ப்ரஹ்லா தார்த்தே ந்ருஸிம்ஹம் –நாடி நாடி நரசிங்கா என்று -பக்தனான ப்ரஹ்லாதன் நிமித்தமாக ஸ்ரீ ந்ருஸிம்ஹணாக ஆவிர்பவித்தும்

2-ஷபித விபது ஷா வல்லபம் -விறல் வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் -அநிருத்தருக்கு விரோதியான பாணாசூரனுடைய கரங்களைக் கழித்தும்

3-ஷிப்த லங்கம் -அரக்கன் இலங்கை செற்றீர் -எதிரியான ராவணனுடைய இலங்கையை அழித்தும்

4-ஷ்வேள ப்ரத்யர்த்தி கேதும் -வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் -விஷ விரோதியான வைனயதேயனை த்வஜமாகப் படைத்தும் –

5-ஸ்ரமஹர துளஸீ மாலிநம்-வண்டு திவளும் தண்ணம் துழாய்-மதுஸ்யந்தி யாகையாலே ஸ்ரமஹரமாய் இருக்கும் திருத்துழாய் மாலையைத் தரித்தும்

6-தைர்ய ஹேதும்—என தக வுயிர்க்கு அமுதே–விரஹ வியசனத்தாலே ஆத்ம வஸ்து அழியாதே அம்ருதமாய் இருந்து தரிப்பித்தும் –

7-த்ராணே தத்தா வதாநம்—வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும்—ரக்ஷணத்திலே அவஹிதனாயத் திருப்பாற் கடலிலே வந்து கண் வளர்ந்ததும் –

8-ஸ்வ ரிபு ஹத க்ருத ஆஸ் வாஸனம்—விறல் கஞ்சனை வஞ்சனை செய்தீர்–மிடுக்கனான கஞ்சனை அழியச் செய்து
தன் நிமித்தமான பயத்தைத் தீர்த்து ஆஸ்வாஸம் பண்ணியும்

9-தீப்த ஹேதிம் —சுடர் வட்ட வாய் நுதி நேமியீர்-தேஜிஷ்டமான திருவாழியைத் திருக்கையிலே தரித்தும்

10-சத் பிரேஷா ரஷிதாரம்–மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே–ஆஸ்ரிதருடைய ப்ரேக்ஷையைப் போக்காதே ரஷித்தும்

வியசன நிரசனம்-வியக்த கீர்த்திநம் ஜகாத
இப்படி பிரசித்த வைபவனான எம்பெருமானை ஆஸ்ரிதருடைய வியசனம் எல்லாம் நிரஸித்து அருளுபவனாக
ஆடி யாடி தசகத்திலே ஆழ்வார் அனுசந்தித்தார் -என்கிறார்

————-

ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை–

கீழ்த் திருவாய் மொழியில் உடன் கூடுவது என்று கொலோ என்று ஆசைப்பட்ட நித்ய ஸூரிகள்
குழாத்திலே அப்போதே போய்ப் புகப் பெறாமையாலே அவசன்னராய்
ஒரு பிராட்டி தசையை அடைந்து திருத் தாயார் பாசுரத்தாலே எம்பெருமானுக்கு அறிவிக்கிறார் ஆடியாடியிலே –

—-

ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே –2-4-1-

ஆற்றாமையின் கனத்தாலே ஓர் இடத்தில் நிலை கொள்ளாதே -எங்கும் உலாவி உலாவி –
அந்தக்கரணம் நீர்ப் பண்டமாய் உருகி தரித்து இருக்க மாட்டாமையாலே பிரலாபித்து –
கண்ண நீர்கள் விழ விட்டு -நாலு திக்கிலும் தேடித்தேடி –
நரசிங்கா என்று இந்த ஒளியை யுடைய முகத்தை உடைய பெண் பிள்ளை
மிகவும் வாடா நின்றாள் என்கிறாள் -ஆடியாடி -இத்யாதியால் –

——

வாணுதல் இம்மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள் விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
காண நீர் இரக்கமிலீரே–2-4-2-

அவயவ சோபையை யுடைய ம்ருது ஸ்வபாவையான இவள் உம்மைக் காண வேணும்
என்கிற ஆசையால் நையா நின்றாள்
பலிஷ்டனான பாணாசுரனுடைய ஆயிரம் தோள்களையும் துண்டித்தவரே –
உம்மைக் காண்கையிலும் கூட நீர் இரக்கம் இல்லாதவராக இருக்கிறீர் -என்கிறாள் -வாணுதல் -இத்யாதியால் –

———–

இரக்க மனத்தோடு எரியணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே –2-4-3–

நெகிழ்ந்த நெஞ்சை யுடைய இவள் அக்னி ஸஹ வாஸத்திலே இருக்கிற
அரக்கையும் மெழுகையும் ஒத்து இரா நின்றாள் –
நீராகில் தயை பண்ணுகிறது இல்லை –
ராக்ஷஸனுடைய இலங்கையை ஜெயித்த -ஷயித்த -உமக்கு இதுக்கு
நான் என் செய்கேன் என்கிறாள் -இரக்க மனத்தோடு-இத்யாதியால் –

———-

இலங்கை செற்றவனே யென்னும் பின்னும்
வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக்
கலங்கிக் கை தொழும் நின்றிவளே –2-4-4-

இலங்கையை ஜெயித்தவனே என்னா நின்றாள் –
பின்னையும் பலம் காய்ந்து இருக்கிற பெரிய திருவடியாலே வஹிக்கப் பட்டவரே -என்னா நின்றாள் –
ஹ்ருதயம் நடுங்கும்படி பெரு மூச்சு எறியா நின்றாள் –
கண்ணீர் மிகும்படி கலங்கி நின்று இவள் கை தொழா நின்றாள் -என்கிறாள் -இலங்கை -இத்யாதியாலே –

——–

இவள் இராப் பகல் வாய் வெரீஇத் தன்
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் என
தவள வண்ணர் தகவுகளே –2-4-5-

இவள் இரவும் பகலும் வாய் வெருவிக் கொண்டு தன்னுடைய குவளைப் பூப் போலே அழகிய கண்களிலே நீரைக் கொண்டாள் –
வண்டுகள் படிந்து குளிர்ந்து அழகிய திருத்துழாயைக் கொடீர் –
ஸூத்த ஸத்வ ஸ்வபாவரான உம்முடைய கிருபைகள் எங்கே போயிற்றோ -என்கிறாள் -இவள் -இத்யாதியாலே –

———–

தகவுடையவனே யென்னும் பின்னும்
மிக விரும்பும் பிரான் என்னும் என
தகவுயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்
உகவுருகி நின்றுள்ளுளே–2-4-6-

தகவில்லை என்னப் பொறாமையாலே -தகவுடையவனே -என்னா -நின்றாள் –
பின்னையும் மிகவும் தகவு பெற்றால் போலே ஆதரியா நின்றாள் –
இத்தசையிலும் இப்படிச் சொல்லப் பண்ணிய உபகாரகனே -என்னா நின்றாள் –
என்னுடைய அந்தராத்மாவுக்கு அம்ருதம் போலே போக்யனானவனே என்னா நின்றாள் –
ஹ்ருதயம் மிகவும் உருகி நின்று உள்ளோடுகிற வியாபாரம் உள்ளேயாய்
வாசா மகோசரமாய் இரா நின்றது -என்கிறாள் -தகவு -இத்யாதியால் –

———-

உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என்
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என்
கள்வி தான் பட்ட வஞ்சனையே –2-4-7-

உள்ளே யுள்ளே பிராணன் உலர்ந்து உலர்ந்து -என்னுடைய பரம உதாரனே -எனக்கு ஸூ லபனே -என்னா நின்றாள் –
பின்னையும் எனக்கு அணித்தாக ஷீராப்தியில் கண் வளர்ந்து அருளினவனே -என்னா நின்றாள் –
தன் ஹ்ருதயத்தில் ஓடுகிறது பிறர் அறியாது இருக்கிற இவள் பட்ட வஞ்சனை
என்னவாய் இருந்தது என்கிறாள் -உள்ளுளாவி இத்யாதியாலே –

————-

வஞ்சனே என்னும் கை தொழும் தன்
நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே –2-4-8-

நான் அல்லேன் என்றாலும் விடாதே வஞ்சித்துச் சேர்த்துக் கொண்டவனே -என்னா நின்றாள் –
வஞ்சித்த உபகாரத்துக்குக் கை தொழா நின்றாள்
தன் நெஞ்சு வேம்படியாக நெடு மூச்சு விடா நின்றாள்
பலிஷ்டனான கம்சனை வஞ்சனை செய்தவரே –
நிர் க்ருணரான உம்மை ரக்ஷகர் என்று விஸ்வசித்த இவள் பட்ட பாடுகள்
என் தான் -என்கிறாள் -வஞ்சனே என்னும் இத்ப்யாதியால் –

——–

பட்டபோது எழுபோது அறியாள் விரை
மட்டலர் தண் துழாய் என்னும் சுடர்
வட்ட வாய் நுதி நேமியீர் நும்
திட்டமென் கொல் இவ்வேழைக்கே–2-4-9-

உதித்த போதும் அஸ்தமித்த போதும் அறிகிறிலள் –
இது ஒரு பரிமளமே -இது ஒரு தேனே -இது ஒரு பூவே -இது ஒரு குளிர்த்தியே -இது ஒரு திருத்துழாயே -என்று
திருத்துழாய் விஷயமாக ஒரு கோடி சொல்லா நின்றாள் –
தேஜஸ்ஸையும் வட்டமான வாயயையும் கூர்மையையும் யுடைய திருவாழியைத் திருக்கையிலே யுடையீர்
சபலையான இவள் விஷயத்தில் உம்முடைய இஷ்டம் ஏது சொல்லீர் -என்கிறாள் -பட்டபோது -இத்யாதியாலே –

———–

ஏழை பேதை இராப்பகல் தன்
கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள் கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே –-2-4-10-

சபலையாய் பாலையான இவள் இரவும் பகலும் தன்னுடைய உபமான ரஹிதமாய் –
அழகிய கண்களிலே நீரைக் கொண்டாள் –
கிளர்ந்த ஐஸ்வர்யம் வேம்படி லங்கையை நிரசித்தீர்
இவளுடைய முக்தமான நோக்கு ஒன்றும் -கிடக்கும்படி கார்யம் பார்க்க வேணும் -என்கிறாள் –
ஏழை பேதை -இத்யாதியாலே –

——–

வாட்டமில் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே –2-4-11-

இத் தசையில் வந்து -ஸம்ஸ்லேஷிக்கையாலே வட்டம் இலாத கல்யாண குணங்களை யுடைய விநீதனைக் குறித்து
இசையைக் கூட்டிப் பரம உதாரரான ஆழ்வார் அமைத்த பாட்டு ஓர் ஆயிரத்திலும்
இந்தப் பத்தால் அழகிய மாலையை எம்பெருமான் திருவடிகளிலே சூட்டலாகும் என்று
உக்த அர்த்தத்தை -நிகமிக்கிறார்-வாட்டமில் -இத்யாதியாலே –

——-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம்–14–

இதில் ததீயரையும் அவனையும் பிரிகையாலே
மிகவும் தளர்ந்து
தாய் பேச்சாலே பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
எங்கனே என்னில் –
எம்பெருமானைப் பிரிந்த அளவன்றிக்கே அவனுக்கு பிராண பூதரான
நித்ய சூரிகளையும் கூடப் பிரிகையாலே
தம் தசையை அறியாதபடி மோஹிதராய் கிடக்கிற தம் படியை
பார்ஸ்வச்தரான பரிவர் அவனுக்கு விண்ணப்பம் செய்கிற பிரகாரத்தை
கலந்து பிரிந்து மோஹங்கதையான பிராட்டி உடைய
விரஹ பரவச வியாபார உக்திகளை அனுகரித்து
அவனுக்கு அறிவிக்கிற திருத் தாயார் பேச்சாலே
அருளிச் செய்கிற -ஆடி யாடியில் அர்த்தத்தை –
ஆடி மகிழ் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

ஆடி மகிழ் வானில் அடியார் குழாங்களுடன்
கூடி இன்பம் எய்தாக் குறையதனால் -வாடி மிக
அன்புற்றார் தம் நிலைமை ஆய்ந்து உரைக்க மோகித்து
துன்புற்றான் மாறன் அந்தோ ——ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி———-14-

வியாக்யானம்-

ஆடி மகிழ் வானில் அடியார் குழாங்களுடன் கூடி இன்பம் எய்தாக் குறையதனால் -வாடி மிக –
ஆடி மகிழ் வானில் –
பகவத் அனுபவத்தில் அவஹாகித்து
ஹிருஷ்டர் ஆகிற -என்னுதல் –
அன்றிக்கே
பகவத் அனுபவ பிரகர்ஷத்தாலே
ந்ருத்யந்தி கேசித் -என்னும் படியாக –
அத்தாலே ஹ்ருஷ்டராக -என்னுதல் –
இப்படியான வானில் அடியார் உண்டு
வைகுண்ட வாசிகளான நித்ய சூரிகள்
அவர்கள் சங்கத்திலே சங்கதராய்
ஆனந்தத்தை அடையாத அபூர்த்தியாலே
வாடி வாடும் -என்று மிகவும் வாடி –

அன்புற்றார் தம் நிலைமை ஆய்ந்து உரைக்க –
முயல்கின்றேன் அவன் தன் மொய் கழற்கு அன்பை -என்று
நிரவதிக சிநேக உக்தரான
மதுரகவி ப்ரப்ருதி ப்ரயுக்த ஸூக்ருத்துக்கள்-
இவர் வ்யாமோஹத்தை எம்பெருமானுக்கு நிரூபித்து
தன் முகேன இது தேவர் கிருபா சாத்தியம் -என்று
விஞ்ஞாபிக்கிற படியை
தன் திறத்திலே பரிவுடைய திருத் தாயார்
தன் ஸ்வ பாவத்தை அறிந்து பேசும்படியாக –

மோகித்து துன்புற்றான் மாறன் அந்தோ –
தாம் தம் தசையைப் பேச மாட்டாமல்
பிறர் பேசும்படி மோஹித்து துக்கத்தைப் பிராப்தர் ஆனார் ஆழ்வார் –

ஐயோ -மமா பிவ்யதிதம் மன -என்று
அற்ற பற்றர்க்கும் இரங்க வேண்டும் படியாய் இறே இவர் தசை இருப்பது –
அற்ற பற்றார் -மதுரகவி போல்வார் –

அன்புற்றார் தன்னிலைமை யாய்ந்து உரைக்கை யாவது –
சாதியர் கூர்த்தவஞ்ச -இத்யாதிப் படியே
எங்கும் நாடி நாடி நரசிங்கா வென்று வாடி வாடும் -என்றும்
உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் -உம்மைக் காண நீர் இரக்கம் இலீரே –என்றும்
வண்டு திவளும் தண்ணம் துழாய் கொடீர் என தவள வண்ணர் தகவுகளே -என்றும்
உம்மைத் தஞ்சம் என இவள் பட்டனவே –என்றும்
நுமது இட்டம் என் கொலோ இவ் ஏழைக்கு -என்றும்
இவள் மாழை நோக்கு ஒன்றும் மாட்டேன்மினே -என்றும்
இப்புடைகளிலே அருளிச் செய்தவை-என்கை –
இப்படி தம் தசை தமக்கும் வாசோ மகோசரமாய்
கண்டார் எல்லாரும் இரங்க வேண்டும்படியாய்
இருக்கும் ஆயிற்று –

——————————————————————-—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி/ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை /ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–ஊனில் வாழ் உயிரே-2-3-சாரங்கள் —

May 21, 2021

த்ராமிட உபநிஷத் சங்கதி

அந்தஸ்ஸ்த ஸர்வ ரஸ அம்புஜ லோசநஸ்ய
ஸம்யோக ரூபம் அவகாஹ்ய ஸூக அம்ருதாப்திம்
தத் தேஸிக ப்ரதம ஸூரி கணை கதா ஸ்யாத்
ஸங்கோ மமேத்ய கதயன் ஸ முனிஸ் த்ருதீயே —

அந்தஸ்ஸ்த ஸர்வ ரஸம் -தன்னுள்ளே
ஸம்யோக ரூபம் அவகாஹ்ய -முழுசி தழுவி -தன்னுள்ளே
ஸூக அம்ருதாப்திம் -கடல் படா அம்ருதம் -கலவி என்னும் அம்ருதக் கடலில் பிறந்த அனுபவம் –

————–

த்ராமிட உபநிஷத் தாத்பர்ய ரத்நா வளி –

சித்ரா ஸ்வாத அநு பூதிம் ப்ரிய முப க்ருதிபிர் தாஸ்ய சாரஸ்ய ஹேதும்
ஸ்வாத் மன்யா ஸார்ஹ க்ருத்யம் பஜத அம்ருத ரஸம் பக்த சித்த ஏக போக்யம்
ஸர்வாஷ ப்ரீண நார்ஹம் ஸபதி பஹு பல ஸ்நேஹம் ஆஸ்வாத்ய ஸீலம்
ஸப்யைஸ் ஸாத்யைஸ் ஸமேதம் நிர விஸத நகாஸ் லேஷ நிர்வேஸ மீஸம்

சித்ரா ஸ்வாத அநு பூதிம் –தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஓத்தே
மது ரங்களான மது ஷீராதி பதார்த்தங்களுடைய ரஸத்தை யுடைத்தான அனுபவத்தை யுடையனுமாய்
விசித்ரமான -சேர்ந்த -அனுபவம்

ப்ரிய முப க்ருதிபிர் –பெற்ற அத்தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா
மாதாவும் பிதாவும் ஆச்சார்யனும் பண்ணும் உபகாரங்களை எல்லாம் தானே பண்ணி -அத்தாலே ஆஸ்ரிதருக்கு பிரியனுமாய்
மகா உபாகரகம்-

தாஸ்ய சாரஸ்ய ஹேதும் -அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து –
அறிவு நடையாடாத காலத்திலே தாஸ்ய ரஸத்தை உண்டாக்கினவனுமாய்

ஸ்வாத் மன்யா ஸார்ஹ க்ருத்யம் -எனது ஆவியுள் கலந்த பெரு நல் உதவிக் கைம்மாறு எனதாவி தந்து ஒழிந்தேன்
ஆத்மாவை சமர்ப்பிக்கும் படிக்கு ஈடாக ஆத்மாவினுள்ளே கலந்து இருந்த மஹா உபகாரத்தை உடையனுமாய்

பஜத அம்ருத ரஸம் -என் கடற்படா அமுதே!
ஆஸ்ரிதற்கு அமிர்தம் போலே போக்யனுமாய்

பக்த சித்த ஏக போக்யம் -தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாது-
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் தானே என்று இருக்குமவர்கள் மனஸ்ஸை விட்டுப் பிரிய மாட்டாது இருக்குமவனாய்

ஸர்வாஷ ப்ரீண நார்ஹம் -யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் கவையே!பன்னலார் பயிலும் பரனே!பவித்திரனே!
கன்னலே!அமுதே!கார்முகிலே!
சஷுஸ் ஸ்ரோத்யாதி ஸர்வ இந்த்ரிய ப்ரீணந யோக்யதை யுடையனுமாய்

ஸபதி பஹு பல ஸ்நேஹம் -குறிக் கொள் ஞானங்களால் எனை ஊழி செய் தவமும்
கிறிக் கொண்டு இப் பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு இத்யாதிகளில் படியே சிரகால ஸாத்ய தபோ த்யான ஸமாதி பலமான
பக்தி யோகத்தைத் தனக்கு அபிமதர் இடத்திலே ஜடதி
சடக்கென -அருளி

ஆஸ்வாத்ய ஸீலம் -பவித்திரன் சீர்ச்  செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்து ஆடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே
அத்யந்தம் போக்யத்வேன அநு பாவ்யங்களான கல்யாண குணங்களை யுடையனுமாய்
ஆழ்ந்து அனுபவிக்க-

ஸப்யைஸ் ஸாத்யைஸ் ஸமேதம் -மாயப் பிரான் அடியார்கள் குழாங்களையே-சேர்ந்து உள்ளவன்-
ஸ்வ யஸஸ்ஸூக்களான நித்ய ஸூரிகளோடே ஸஹிதனாய் இருக்கிற எம்பெருமானை

நிர விஸதநக அஸ்லேஷ நிர்வேஸ மீஸம்
மதுரங்களான ஸர்வ பதார்த்தங்களின் உடைய ரஸத்தை யுடைத்தான போக்யதை யுடையனாக
ஊனில் வாழ் உயிரே!-தசகத்திலே ஆழ்வார் அனுபவித்தார் என்கிறார்

—————-

ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை -இரண்டாம் பத்து -மூன்றாந்திருவாய்மொழி -‘ஊனில் வாழ்’பிரவேசம்  

ப்ராசங்கிகமான அர்த்தத்தை விட்டு வாயும் திரையில் அனுபவத்தை அனுசந்தித்து
இவ்வநுபவத்துக்கு தேசிகரான நித்ய ஸூரி திரளிலே புக ஆசைப்படுகிறார்

——–

ஊனில் வாழ் உயிரே! நல்லை, போ! உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மதுசூதன் என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே–2-3-1–

இந்த சரீரத்திலே வாழுகிற மனஸ்ஸே -நீ நல்லை காண்-உன்னை இப்படி அநுகூலனாகப் பெற்று –
நித்ய ஸூரிகளுக்கு ஸ்வாமியாய் -விரோதி நிரசன சீலனான எம்பெருமான் தானும்
அவனுக்கு அநந்யார்ஹ சேஷமான நானும்
ஆயிரத்தில் ஒன்றும் கடலில் குளப்படியுமா போலே சர்வ ரசனைகளும் எங்களுக்குள்ளே உண்டாகும் படி –
தேனும் தேனும் கலந்தால் போலே -பாலும் பாலும் கலந்தால் போலே சக்கரையும் சக்கரையும் கலந்தால் போலே
கலந்து ஒழிந்தோம் என்கிறார் –

————–

ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா!
ஒத்தாய் எம்பொருட்கும், உயிராய், என்னைப் பெற்ற
அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்து,
அத்தா! நீ செய்தன அடியேன் அறியேனே–2-3-2-

ஸத்ருசரும் அதிகரும் இல்லாத ஆச்சர்ய குண சேஷ்டிதனே –
ஸகல பதார்த்தங்களும் அந்தராத்மாவாகக் கொண்டு ஒத்திரா நின்றாய்
இப்படி இருக்கிற நீ என்னைப் பற்ற அப்படிப்பட்ட தாயாய் -தமப்பனாய் –
அறியாத அர்த்தங்களை அறிவித்துச் செய்த உபகாரங்களை
அவற்றுக்கு விஷய பூதனான அடியேன் அனுபவித்து குமிழ் நீருண்டு போமது ஒழிய
இன்னது என்று சொல்லித் தலைக்கட்ட மாட்டுகிறிலேன் -என்கிறார்

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மா வலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனது ஆவி யுள் கலந்தே–2-3-3-

அறிவு நடையாடாத பால்யத்திலே நித்ய ஸூ ரீகள் பரிமாற்றமாக அடிமையிலே அபி நிவேசத்தைச் செய்வித்து
அறிவுக்கேட்டைப் பண்ணக் கடவதான ப்ரக்ருதி ஸம்ஸ்ருஷ்டனாய் இருக்கிற அடியேனைத்
திரு மார்பிலே இருக்கும் நாச்சியாரும் கூட அறியாமே வாமன வேஷத்தைப் பரிக்ரஹித்து
அனந்வித பாஷாணங்களைப் பண்ணி
ஸூக்ராதிகள் சொன்னாலும் தெரியாதபடி மகாபலியை வஞ்சித்தால் போல்
என் அந்தராத்மாவுடன் உள் கலந்து இப்படி வைத்தாயால் -என்கிறார்

———-

எனது ஆவியுள் புகுந்த பெரு நல் உதவிக் கைம்மாறு
என தாவி தந்தொழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே?
என தாவி ஆவியும் நீ, பொழில் ஏழும் உண்ட எந்தாய்!
எனது ஆவி யார்? யான் ஆர்? தந்த நீ கொண்டாக்கினையே–2-3-4-

ஹேயமான என் ஆத்மாவோடு ஒரு நீராகக் கலந்த -பெருத்து விலக்ஷணமான இந்த உபகாரத்துக்கு
ப்ரத்யுபகாரமாக என்னுடைய ஆத்மாவை ஸத்யோதஸாஹ மாகக் கொடுத்து விட்டேன் –
இனி மீள என்கிற கதை யுண்டோ -என்று ப்ரீதி யதிசயத்தாலே பிரமித்து ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணி
அநந்தரம்-அத்தை நிரூபித்து -என்னுடைய அந்தராத்மாவுக்கும் அந்தராத்மாவும் நீயே —
சர்வ லோகங்களையும் திரு வயிற்றில் வைத்து ரக்ஷித்து அருளிய என் ஸ்வாமியே –
என்னுடைய ஆத்மா யார் -நான் யார் -ஏதேனும் சம்பந்தம் உண்டோ –
கொடுத்த நீ தானே கொண்டாயானாய் என்று அநு சயிக்கிறார் –

———-

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்!
கனிவார் வீட்டின்பமே! என் கடற்படா அமுதே!
தனியேன் வாழ் முதலே!! பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய்! நுன பாதம் சேர்ந்தேனே–2-3-5-

எத்தனையேனும் அதிசயித்த ஞானரானாலும் ஸ்வ யத்தனத்தாலே பார்க்கும் அன்று
பேர்க்கப் போராது இருக்கிற என் நாயகனே
நீ என்றால் கனிந்து இருக்கிறவர்களுடைய வீட்டிலே வந்து நித்யவாஸம் செய்து அருளும் இன்பமே
என்னுடைய அக்லேச லப்தமான அமுதமே
தனியேனான எனக்கு வாழ்வுக்கு முதல்வனானவனே –
ஸப்த லோகங்களையும் விலக்ஷணமான ஸ்ரீ வராஹ நாயனாராய் கூர்மையான திரு எயிற்றிலே வைத்தாய்
இனி இப்படிச் செய்த போதே பண்டே உன் திருவடிகளைக் கிட்டினேன் அன்றோ –

———-

சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியைத்
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாது அவர் உயிரைச்
சோர்ந்தே புகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே–2-3-6-

ஆஸ்ரிதருடைய க்ரூரமான கர்மங்களுக்கு அஸஹ்யமான விஷமானவனை
அநந்யார்ஹ சேஷம் என்று தீர்ந்தவர்களுடைய ஹ்ருதயத்திலே த்ருட அத்யாவசாயமானவனை
ப்ரேமத்தாலே விஸ்லேஷியாது இருக்குமவர்களுக்கு பிராணன் சோர்ந்து போகக் கூடாமல் இருக்கும் தேஜஸ்ஸை
அடியேன் முன்னே தானே அடைந்தேன் அன்றோ -என்கிறார் –

————–

முன்னல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் கவையே!
பன்னலார் பயிலும் பரனே!பவித்திரனே!
கன்னலே!அமுதே!கார்முகிலே!என் கண்ணா!
நின்னலால் இலேன் காண்;என்னை நீ குறிக் கொள்ளே–2-3-7-

பழையதாய் -நன்றாய் -வீணை விஷயமாக -அப்யஸிக்கப் படுவதான -ஸாஸ்த்ர யுக்தமான படியே
நரம்பிலே தடவப்பட்ட அதிலே பிறந்த பண் பட்ட ரஸம் போலே போக்யமானவனே –
அநேகரான நித்ய ஸூரிகள் ஸதா அநுபவம் பண்ணினாலும் குறையாதபடி பரனாய் இருக்கிறவனே –
நித்ய சம்சாரிகளையும் நித்ய ஸூ ரிகளோ பாதி ஸூத்தர் ஆக்குகிறவனே –
கன்னல் போலவும் அம்ருதம் போலவும் போக்யனானவனே –
பரம உதாரனனே
எனக்கு ஸூ லபனானவனே
உன்னை அல்லால் நான் இல்லை கிடாய்
இப்படிப்பட்ட என்னை நீ திரு உள்ளம் பற்ற வேணும் –என்கிறார் –

————

குறிக் கொள் ஞானங்களால் எனை ஊழி செய் தவமும்
கிறிக் கொண்டு இப் பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித் துண்ணும் அம்மான் பின்
நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே–2-3-8-

யம நியமாதிகளால் சம்பாதிக்க வேண்டும் ஞான விசேஷங்களாலே அநேக கல்பங்கள் கூடி வரக்கடவதான தப பலத்தை
நீ யுக்தமாக ஒரு உபாயத்தாலே பெற்று இஜ்ஜன்மத்திலே அல்ப காலத்திலேயே பிராபித்தேன் நான்
உறிகளிலே சேமித்துக் கள்ளக் கயிறு உருவி வைத்த வெண்ணெயையும் பாலயையும் தைவம் கொண்டதோ
என்னும்படி மறைத்து அமுது செய்த அச்செயலாலே ஜகத்தை அடிமை கொண்டவன் –
எல்லாத்துக்கும் பின்பு சொன்ன பிரபத்தி மார்க்கத்தைக் கொண்ட நெஞ்சினாய்க் கொண்டு
ஜென்ம துக்கத்தை ச வாசனமாகப் போக்கினேன் என்கிறார் –

————

கடிவார் தண்ணந்துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்        
படி வானம் இறந்த பரமன் பவித்திரன் சீர்ச் 
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்து ஆடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே–2-3-9-

பரிமள பிரசுரமான திருத்துழாய் மாலையை யுடைய ஸ்ரீ கிருஷ்ணனாய்
நித்ய ஸூரிகளுக்குப் பெருமானாய்
தன் படிக்கு வானத்தில் உள்ளார் ஒப்பதாக படி இருக்கிற பர]மனாய் –
பரி ஸூ த்தனாய் இருக்கிறவனுடைய
கல்யாண குணங்களை
தூறு மண்டிக் கிடக்கின்ற சாம்சாரிக சகல துக்கங்களும் போம்படி வந்து கிட்டி
நாலு மூலையிலும் புக்கு
அவகாஹித்து
அநந்யார்ஹனான நான்
முழு மிடறு செய்து அனுபவிக்கப் பெற்றேன் -என்கிறார் –

—————-

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளி கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான் இந் நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி
அளிக்கின்ற மாயப் பிரான் அடியார்கள் குழாங்களையே–2-3-10-

இதர விஷய அனுபவத்தால் வரும் ஹர்ஷமும்
அவை பெறாத போது ஆசைப்பட்டு வரும் கிலேசமும் போய்
இவை இரண்டுக்கும் அடியான ஜென்மம்
அவை புக்க இடத்தே புகக்கடவ வியாதி
அநந்தரம் வரும் ஜரை
இத்தோடு யாகிலும் இருந்தாலே யாகாதோ என்று நினைந்து இருக்கச் செய்தே வரும் நிரன்வய விநாசம்
இவை யடையப் போய்
ரஜஸ் தமஸூக்கள் கலசின இந்த சரீரம் போல் இன்றிக்கே
ஸூத்த ஸத்வ மயமாய் நிரவதிக தேஜோ ரூபமான சரீரத்தை யுடையோமாய் உடன் கூடுவது என்றைக்கோ –
எத்தை என்னில்
வர்ஷிக்கையே ஸ்வ பாவமான ஆகாசம்
அத்தால் விளையக் கடைவதான இந்த பூமி
இவற்றைச் சுடர் ஆழியையும் சங்கையையும் ஏந்திக்கொண்டு ரக்ஷிக்கிற
ஆச்சர்ய குண சேஷ்டிதனுடைய அடியாராக இருக்கும் ஸமூஹங்களை -என்கிறார் –

———-

குழாங்கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடிக்
குழாங்களாய் அடியீர்! உடன் கூடி நின்று ஆடுமினே–2-3-11-

புத்ர பவுத்ராதி களாலே குழாம் கொண்டு இருக்கிற பெரிய அரக்கனுடைய குலம் நசிக்கும்படி கோபித்தவனை –
சத்துக்கள் அடைய குழாம் கொண்டு இருக்கிற ஆயிரத்துள் இவை பத்தையும்
சம்சாரத்தில் இருக்கிற நால்வர் இருவர் த்யாஜ்யமான அர்த்த காமங்களைப் பற்றி சீறு பாறு என்னாதே
நம் பெரிய குழாத்திலே போய்ப் புகுந்தனையும் கூடிக்
குழாங்களாய் நித்தியமாக அனுபவியுங்கோள் -என்கிறார் –

——-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம்-13-

அவதாரிகை –

இதில் எம்பெருமான் ஏக தத்வம் என்னும் படி சம்ச்லேஷிக்க-ஆதி நாதர் ஆழ்வார் தேவஸ்தானம் அன்றோ –
தத் அனுபவ சஹகாரி சாபேஷராய்
அருளிச் செய்த பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
இப்படி பிரசாங்கிகமான பரோபதேசத்தை –திண்ணன் வீடு -தலைக் கட்டின
அநந்தரம்
கீழ்
தம்முடைய ஆர்த்தி தீர வந்து கலந்த எம்பெருமான் உடைய
சம்ச்லேஷ ரசத்தை பேச ஒருப்பட்டு
எப்பேர்பட்ட இனிமையும் விளையும் படி
தம்முடனே அவன் வந்து
ராமஸ்து சீதயா ஸார்த்தம்-இத்யாதிப் படியே
ஏக தத்வம் என்னலாம் படி கலந்தபடியையும்
அந்த கல்வியால் வந்த ரசம் தம் ஒருவரால் உண்டு அறுக்க ஒண்ணாத படி
அளவிறந்து இருக்கிற படியையும் அனுசந்தித்து
தனித் தேட்டமான இதர விஷயங்கள் போல் அன்றிக்கே
துணைத் தேட்டமாய்
அதுக்கு இவ் விபூதியில் ஆள் இல்லாமையாலே
இவ் வனுபவத்தில் நிலை நின்ற நித்ய சூரிகள் திரளிலே
போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறுவது எப்போதோ
என்று பிரார்திக்கிற
ஊனில் வாழ் அர்த்தத்தை
ஊனம் அறவே வந்து -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

ஊனம் அறவே வந்துள் கலந்த மாலினிமை
யானது அனுபவித்தற்காம் துணையா -வானில்
அடியார் குழாம் கூட ஆசை யுற்ற மாறன்
அடியார் உடன் நெஞ்சே ஆடு–திருவாய் மொழி நூற்றந்தாதி–13-

ஊனம் அறவே வந்துள் கலந்த மாலினிமை யானது –
அதாவது
நித்ய சம்சாரி என்று சங்கோசியாமல்
சங்கோசம் அற சர்வேஸ்வரன் வந்து
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே -என்றும்
என தாவியுள் கலந்த பெரு நல் உதவி -என்றும்
கனிவார் வீட்டின்பமே -என்றும்
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே -என்றும்
இப்படி சர்வ ரசங்களும் உண்டாம்படி
அந்தரங்கமாகக் கலந்த கலவியின் இனிமையானது
ச ஹிருதயமாக சம்ச்லேஷித்த சாரஸ்யம் ஆனது

அனுபவித்தற்காம் துணையா –
ஏவம் வித ரச்யதையை அனுபவிக்கைக்கு
அடியார்கள் குழாம்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று
அனுகூல சஹவாசம் அபேஷிதமாய்

வானில் அடியார் குழாம் கூட ஆசை யுற்ற மாறன் அடியார் உடன் நெஞ்சே யாடு –
வையத்து அடியவர்கள் அன்றிக்கே
அனுபவத்துக்கு தேசிகராய்
வானில் அடியார்கள் குழாம்களுடன் கூட வேணும் என்று
அபி நிவேசத்திலே ஊன்றின
ஆழ்வார் அடியாரான இங்குத்தை ஸ்ரீ வைஷ்ணவர்களோடே
நெஞ்சே கூடி யாடு
அன்றிக்கே –
அக் குழாத்தில் முழுகி அனுபவிக்கப் பார் -என்றுமாம்
அடியீருடன் கூடி நின்று ஆடுமினோ -என்றார் இறே–

——————————————————————-—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ர ரஸங்கள் –

April 14, 2021

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோ மே சந்நி தத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

————————————————————————

1-ப்ரஸ்தாவ பத்ததி –விஷயம் அறிமுகம் –ஸ்லோகங்கள் 1-20-
2-சமாக்யா பத்ததி —திரு நாம பத்ததி –ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ சடகோபம் -ஸ்லோகங்கள் -21-30-
3-பிரபாவ பத்ததி -பெருமைப் பத்ததி -பாதுகையின் பெருமை -ஸ்லோகங்கள் -31-100-
4-சமர்ப்பண பத்ததி -பணயப் பத்ததி -பெருமாள் ஸ்ரீ பரத ஆழ்வான் இடம் பணயமாக விட்டு அருளியது -ஸ்லோகங்கள் -101-120-
5-பிரதி பிரஸ்தான பத்ததி -பதில் பயணப் பத்ததி -பெருமாளை விட்டு ஸ்ரீ பாதுகை ஸ்ரீ பரத ஆழ்வான் உடன் சென்றது -ஸ்லோகங்கள் -121-140-
6-அதிகார பரிக்ரஹ பத்ததி -உரிமைக் கோட் பத்ததி-ராஜ்ய அதிகாரம் -ஸ்லோகங்கள் -141-180-
7-அபிஷேக பத்ததி -முடி சூட்டுப் படலம் -ஸ்லோகங்கள் -181-210-
8-நிர்யாதநா பத்ததி -மீட்சிப் பத்ததி -ஸ்லோகங்கள் -211-240-
9-வைதாளிக பத்ததி -வந்திவை தாளிக பத்ததி -அரசர்கள் புகழ்வது -ஸ்லோகங்கள் -241-250-
10-ஸ்ருங்கார பத்ததி -பெருமாள் உடன் ஸ்ரீ பாதுகை சேர்ந்து மகிழ்வது -ஸ்லோகங்கள் -251-260-
11-சஞ்சார பத்ததி -ஸ்லோகங்கள் -261-320-
12-புஷ்ப பத்ததி -ஸ்லோகங்கள் -321-350-பூக்களால் அர்ச்சனை –
13-பராக பத்ததி -ஸ்ரீ பாதுகா தூள் படலம் -ஸ்லோகங்கள் -351-380-
14-நாத பத்ததி -இனிய நாத பத்ததி -ஸ்லோகங்கள் -381-480-
15-ரத்ன சாமான்ய பத்ததி -மணிப் போது படலம் -ஸ்லோகங்கள் -481-520-birds eye view
16-பஹூ ரத்ன பத்ததி -ஸ்லோகங்கள் -531-580-
17-பத்மராக பத்ததி -செம்மணிப் படலம் -ஸ்லோகங்கள் -581-610-
18-முக்தா பத்ததி -முத்துப் படலம் -ஸ்லோகங்கள் -611-660-
19-மரகத பத்ததி -ஸ்லோகங்கள் -661-680-
20-இந்திர நீல பத்ததி -நீல மணி படலம் -ஸ்லோகங்கள் -681-710-
21-பிம்ப பிரதிபிம்ப பத்ததி -ஸ்லோகங்கள் -711-730-
22-காஞ்சனா பத்ததி -பொற் படலம் -ஸ்லோகங்கள் -731-750-
23-சேஷ பத்ததி -சேஷ பூதமாய் -ஆதி சேஷ அவதாரமாய் -ஸ்லோகங்கள் -751-760-
24-த்வந்த்வ பத்ததி -இரட்டைப் படலம் -ஸ்லோகங்கள் -761-780-
25-சந்நிவேச பத்ததி -ஸ்லோகங்கள் -781-800-
26-யந்த்ரிகா பத்ததி -குமிழ்கள் அமைப்பும் அனுபவம்- குடை போன்றவை -மேலும் பல -படலம் -ஸ்லோகங்கள் -801-810-
27-ரேகா பத்ததி -வேரிப்படலம் -ஸ்லோகங்கள் -811-820-
28-ஸூபாஷித பத்ததி -நன் மொழிப் படலம் -ஸ்லோகங்கள் -821-830-
29-பிரகீர்ண பத்ததி -கலம்பக படலம் -ஸ்லோகங்கள் -831-910-
30-சித்ர பத்ததி -ஸ்லோகங்கள் -911-950-
31-நிர்வேத பத்ததி -உருக்கப் படலம் -வைராக்கியம் வெறுப்பு ஆற்றாமை வெளிப்படுத்தும் உருக்கப் படலம் -ஸ்லோகங்கள் -951-970-நைச்ய அனுசந்தானம் –
32-பல பத்ததி– பேற்றுப் படலம் -ஸ்லோகங்கள் -971-1008-

——–

அஷ்டாக்ஷரம் +த்வயம் -32
சரம ஸ்லோகம் -32
காயத்ரி -24-+அஷ்டாக்ஷரம் சேர்த்து -32
ப்ரஹ்ம வித்யை -32-

———-

சந்த ஸ்ரீ ரங்க ப்ருத்வீச சரண த்ராண சேகரா
ஜயந்தி புவந த்ராண பத பங்கஜ ரேணவ –1-

தலைக்கு மேல் பாதுகை வைத்த அடியார்களின் திருவடி ரேணவ-மண் துகள்கள் -இதுவே இதன் கவி நயம்
புவந த்ராண-புவனங்களை காக்க வல்லது –
அடியார்க்கு அடியார் –அடியோங்களே -சரம -நிஷ்டை –

ஸ்ரீ ரங்க நாதனுடைய ஸ்ரீ பாதுகைகளை ஸ்ரத்தை யுடன் சிரஸ்ஸில் தரித்துக் கொள்ளும் பெரியோர்கள் உடைய
திருவடித் தூள்கள் உலகம் அனைத்தையும் உஜ்ஜீவிக்கச் செய்கின்றன –
ஸ்ரீ நம்மாழ்வார் திருவடி தொழும் பரமை காந்திகள் உலகையே உஜ்ஜீவிக்கச் செய்யும் சக்தி பெற்றவர்கள் ஆகிறார்கள் –

————-

நீசே அபி ஹந்த மம மூர்த்தநி நிர்விசேஷம்
துங்கே அபி யத் நிவிசதே நிகம உத்தமாங்கே
ப்ராசேதஸ ப்ரப்ருதிபி: ப்ரதம உபகீதம்
ஸ்தோஷ்யாமி ரங்கபதி பாதுகயோர் யுகம் தத்—5—

நீசே அபி ஹந்த -தாழ்ந்தவனாக இருந்தாலும்
மம மூர்த்தநி நிர்விசேஷம்-ஏற்றத் தாழ்வு பாராமல் அடியேனுடைய சென்னியிலும் அமர்ந்து –
சடாரி தலையில் வைத்தாலும் அலம்ப வேண்டா பாவனத்வம் உண்டே
துங்கே அபி யன் நிவிசதே நிகம உத்தமாங்கே -வேதாங்கம் -உபநிஷத் -மலைக்கும் மடுவுக்கும் போல் அன்றோ –
ப்ராசேதஸ ப்ரப்ருதிபி ப்ரதம உபகீதம் -வால்மீகி தொடக்கமான ரிஷிகளால் ஸ்துதிக்கப் பட்ட
ஸ்தோஷ்யாமி ரங்க பதி பாதுக யோர் யுகம் தத் -அந்த பாதுகை இணை -ஸ்துதிக்கப் புகுந்தேனே –

———–

அநிதம் ப்ரதமஸ்ய சப்த ராசே:
அபதம் ரங்க துரீண பாதுகே த்வாம்
கத பீதி: அபிஷ்டுவந் விமோஹாத்
பரிஹாஸேந விநோதயாமி நாதம்–16—

அநிதம் ப்ரதமஸ்ய சப்த ராசே -தொடக்கம் இல்லாத வேதத்தினுடைய -ரிஷிகள் மந்த்ர த்ருஷ்டா தானே மந்த்ர கர்த்தாக்கள் இல்லையே –
சப்த ராசே -வார்த்தைக்கு கூட்டங்களாலும் கூட
அபதம் ரங்க துரீண பாதுகே த்வாம் -சொல்லி முடிக்க முடியாத -ஸ்ரீ ரெங்க நாத பாதுகா தேவியே -உன்னை –
கதபீதி ரபிஷ்டுவன் விமோஹாத் –பயமே இல்லாமல் -அறியாமையால் -ஸ்துதிக்கிறேன்
பரிஹாசேன விநோதயாமி நாதம்-ஸ்ரீ ரெங்க நாதனுக்கு ஏளன விஷயமாகும் -சேஷிக்கு மகிழ்வு கொடுக்கவே ஸ்துதி –

————

ய சப்த பர்வ வ்யவதா ந நுங்காம்
சேஷத்வ காஷ்டாம பஜன் முராரே
தஸ்யாபி நாமோத் வஹநாத் த்வயா அசௌ
லகூ க்ருதோ பூத் சடகோப ஸூரி –26-

ய சப்த பர்வ வ்யவதா ந நுங்காம் சேஷத்வ காஷ்டாம் அபஜன் முராரே –எந்த ஆழ்வார் -முரனை வதைத்த
அவனது சேஷத்வ எல்லை நிலத்தில் அடைந்தாரோ
அடியார் அடியார் தம் அடியார் –பயிலும் சுடர் ஒளி –
ப்ருத்ய ப்ருத்ய -முகுந்த மாலையிலும் உண்டே -இப்படி எட்டாவது படியில் இருக்கும் ஆழ்வாரை
தஸ்யாபி நாமோத் வஹநாத் த்வயா அசௌ லகூ க்ருதோ பூத் சடகோப ஸூரி-அந்த நம்மாழ்வார் பெயரைத் தாங்கி –
தொண்டர் தலைவன் பெயரைத் தங்குவது போல் –
உன்னாலே -இவரை வென்று -சடகோப தாசன் -என்று ஒன்பதாவது படிக்குச் சென்றாயே –

———–

நிச் சேஷம் அம்பரதலம் யதி பத்ரிகா ஸ்யாத்
ஸப்த அர்ணவீ யதி ஸமேத்ய மஷீ பவித்ரீ
வக்தா ஸஹஸ்ர வதந: புருஷ ஸ்வயம் சேத்
லிக்யதே ரங்க பதி பாதுகயோ: ப்ரபாவ:—-32-

பாதுகையின் பெருமைகளை எழுத இயலும் – எப்படி? ஆகாயம் முழுவதுமாகச் சேர்ந்து பெரியதொரு காகிதமாக இருந்தல் வேண்டும்.
ஏழு கடலும் இணைந்து, எழுதும் மையாக மாற வேண்டும். எழுதுபவனாக ஆயிரம் தலைகளுடன் கூடிய பரமபுருஷனாகிய
ஸ்ரீரங்கநாதனே இருக்க வேண்டும். இப்படி என்றால் – பாதுகையின் பெருமைகளை ஏதோ ஒரு சிறிய அளவு எழுதி முடிக்க இயலும்.

————-

யோஷித்பூத த்ருஷந்தி அபோட சகட ஸ்தேமாநி வைமாநிக
ஸ்ரோதஸ்விநீ உபலம்பநாநி பஸித் உதஞ்சத் பரீக்ஷிந்தி ச
தூத்யாதிஷ் வபி துர்வசாநி பதயோ: க்ருத்யாநி மத்வேவ யத்
தத் தே தத் ப்ரணயம் தத் ஏவ சரண த்ராணம் வ்ருணே ரங்கிண:–39-

நம்பெருமாளின் திருவடிகள் எப்படிப்பட்டவை – கல்லாகக் கிடந்த அகலிகையைப் பெண்ணாக மாற்றியவை;
பலம் வாய்ந்த சகடாசுரனை உதைத்து அழித்தவை; த்ரிவிக்ரம அவதாரத்தில் வானம் வரை அளந்து, கங்கையை உண்டாக்கியவை;
சாம்பலில் இருந்து பரீக்ஷத் அரசனை உண்டாக்கியவை; பாண்டவர்களுக்காகத் தூது சென்றவை ஆகும்.
இப்படிப்பட்ட பல குணங்களை வெளிப்படுத்திய திருவடிகளுடன் எப்போதும் பாதுகைகள் சினேகத்துடன் பிரியாமல் உள்ளன.
இப்படியாக நம்பொருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! எனக்கு மேன்மை ஏற்பட அருள்வாயாக.

—————-

பத சரசி ஜயோஸ்த்வம் பாதுகே ரங்க பர்த்து
மனசி முநி ஜநாநாம் மௌலி தேசே ஸ்ருதீ நாம்
வசசி ஸ ஸூ கவீ நாம் வர்த்தசே நித்ய மேகா
ததிதம வகதம் தே சாஸ்வதம் வைஸ்வ ரூப்யம்–49-

ஸ்ரீ பாதுகையே எம்பெருமானை போலவே நீயும் ஒரே காலத்தில் பல இடங்களிலும் இருக்கிறாய்
பெருமாள் திருவடியிலும்
ரிஷிகள் உடைய மனதிலும்
வேதாந்தங்களிலும்
கவிகளுடைய வாக்கிலும் வசிக்கிறாய்
இதுவே நீ எங்கும் பரந்தமையைக் காட்டுகிறது –

———–

கனக சரித நூபே கல்ப வ்ருஷஸ்ய பூஷ்ணோ
பதகி சலைய லக்னா பாதுகே மஞ்ஜரீ த்வம்
பரிணதி மதுராணாம் யா பலா நாம் சாவித்ரீ
வஹசி நிகம ப்ருந்தை சம்பதம் ஷட்பதா நாம் –57-

ஸ்ரீ பாதுகையே காவிரிக் கரையில் கல்ப தருவாக ஸ்ரீ ரங்க நாதன் எழுந்து அருளி இருக்கிறார் –
பெருமாளுடைய மிருதுவான திருவடித் தளிர்களில் பூத்த புஷ்பமாகவும் நீ விளங்குகிறாய் –
இந்த புஷ்பத்தில் சதுர்வித புருஷார்த்தங்களும் பழமாக பழுக்கின்றன –
வேதங்கள் பூவில் சாரம் அறிந்த வண்டுகளாக உன் மகிமையை ஓதுகின்றன –

———

பரதாஸ்வஸநேஷு பாத சப்தம் வஸுதா ஸ்ரோத்ர ஸமுத்பவ: முநீந்த்ர:
படதி த்வயி பாதுகே ததஸ் த்வம் நியதம் ராம பதாத் அபிந்ந பூமா—-70-

பாதுகையே! புற்றில் இருந்து தோன்றிய வால்மீகி மஹரிஷி, இராமாயணத்தில் பரதன் மக்களைச் சமாதானப்படுத்தக்
கூறிய சொற்களில், உன்னைப் பற்றிக் கூறும்போது திருவடி என்ற பதத்தையே பயன்படுத்துகிறார்.
இதன் மூலம் உனக்கும் இராமனின் திருவடிகளுக்கும் உள்ள பெருமைகளில் எந்தவிதமான வேறுபாடும் இல்லை என்று புரிகிறது.

————-

அஸ்த்ர பூஷணதயா ஏவ கேவலம் விஸ்வம் ஏதத் அகிலம் பிபர்த்தி ய:
அகிலம் ஏந மணி பாதுகே த்வயா ஸ: அபி சேகரதயா ஏவ தார்யதே–78–

உயர்ந்த இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பெற்ற பாதுகையே! பெரியபெருமாள் செய்வது என்ன?
இந்த உலகங்கள் முழுமையையும் தனது ஆயுதம் போன்றும், ஆபரணம் போன்றும் எந்தவிதமான சிரமமும் இன்றி தரிக்கின்றான்.
அப்படிப்பட்ட பெரியபெருமாளை நீயும் அதே போன்று, உனது தலையில் எந்தவிதமான சிரமமும் இன்றி,
மலர் போன்று வைத்துக் கொள்கிறாய்.

————-

பரஸ்ய பும்ஸ: பத ஸந்நிகர்ஷே
துல்ய அதிகாராம் மணி பாதுகே த்வாம்
உத்தம்ஸயந்தி ஸ்வயம் உத்தமாங்கை:
சேஷாஸமம் சேஷ கருத்ம தாத்யா:—-83-

உயர்ந்த இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! பரம்பொருளான பகவானின் திருவடிகளின் கீழே
நீயும் ஆதிசேஷன், கருடன் முதலானோர்களும் ஒரே போன்றுதான் கைங்கர்யம் செய்து வருகின்றீர்கள்.
ஆயினும் ஆதிசேஷன், கருடன் போன்றவர்கள் உன்னைப் பரிவட்டம் போன்று தங்கள் தலைகளில் ஏற்றுக் கொள்கின்றனர்.
இது உனக்குப் பெருமை அல்லவா?

———–

மூர்த்நா ததாநாம் மணி பாதுகே த்வாம்
உத்தம் ஸிதம் வா புருஷம் பவத்யா
வதந்தி கேசித் வயமாமநாம:
த்வாம் ஏவ ஸாஷாத் அதி தைவதம் ந:—-99-

ஸ்ரீ பாதுகையே சிலர் பெருமாளையாவது உன்னையாவது த்யானிப்பது அவசியம் என்று கூறுகிறார்கள்
நாங்களோ உன்னை மட்டுமே த்யானிப்பது போதும் என திடமாக நம்புகிறோம்
ஆசார்ய பலம் இருந்தால் தானே பகவத் கிருபையும் கிட்டுமே –

————

ப்ராப்தே ப்ரயாண ஸமயே மணி பாத ரக்ஷே
பௌரான் அவேக்ஷ்ய பவதீ கருண ப்ரலாபாந்
மஞ்ஜு ப்ரணாத முகரா விநிவர்த்த நார்த்தம்
ராமம் பத க்ரஹண பூர்வம் அயாசதேவ—-103-

மஞ்ஜூ ப்ரணாத முகரா விநிவர்த்த நார்த்தம் -சமாதானம் சொல்கிறாள் -ஆசுவாசம் படுத்துகிறாள்
ராமம் பத க்ரஹண பூர்வம் அயாசதேவ-காலைப் பிடித்து பிரார்த்தனை பண்ணுவேன் என்கிறாள் ஸ்ரீ பாதுகா தேவி

—————

பாதாவநி ப்ரபுதராந் அபராத வர்க்காந்
ஸோடும் க்ஷமா த்வம் அஸி மூர்த்திமதீ க்ஷமைவ
யத் த்வாம் விஹாய நிஹதா: பரிபந்தி நஸ்தே
தேவேந தாசரதி நா தச கண்ட முக்யா—110-

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பவளே!
அனைத்துக் குற்றங்களையும் பொறுத்துக் கொள்ளும் அளவிற்கு சரீரம் பெற்றவளாக, பொறுமையே வடிவமாக நீ உள்ளாய்.
ஆகையால் தான் இராமன் உன்னைப் பரதனிடம் அளித்து விட்டு, இராவணன் போன்றவர்களை அழித்தான் போலும்.

————-

நியதம் அதிருரோஹ த்வாம் அநாதேய சக்திம்
நிஜசரண ஸரோஜ சக்திம் ஆதாது காம:
ஸ கதம் இதரதா த்வாம் ந்யஸ்ய ராம: விஜஹ்ரே
த்ருஷத் உபசித பூமௌ தண்டகாரண்ய பாகே—116–

ஸ்ரீ பாதுகையே பொறுமையின் பிறப்பிடமான உன் மீது ஏறி பெருமாளும் தானும் எதையும் தாங்க வல்ல
உனது குணத்தை சம்பாதித்துக் கொண்டார் -இல்லாவிடில் மிருதுவான பாதங்களைக் கொண்டு
கற்கள் முட்கள் நிறைந்த ஸ்ரீ தண்ட காரண்யத்தில் எவ்வாறு சஞ்சரிப்பார்

————–

பரதஸ் ஏவ மாம் அபி பிரசமித விஸ்வாபவா துர் ஜாதா
சேஷேவ சிரஸி நித்யம் விஹரது ரகுவீர பாதுகே பவதீ –120-

வீரனாகிய இராமனின் பாதுகையே! ”இராமனைக் கானகம் அனுப்பிய கைகேயின் மகன்” என்ற அபவாதங்கள்
பரதன் மீது விழாமல் அவன் காப்பாற்றப்பட்டான் – எப்படி? உன்னைத் தனது தலையில் ஏற்ற காரணத்தினால் ஆகும்.
இது போன்று எனது தலையிலும் நீ எப்போதும் தங்கி நின்று, எனது அபவாதங்களையும் போக்க வேண்டும்.

———–

ப்ரசஸ்தே ராம பாதாப்யாம் பாதுகே பர்யுபாஸ்மஹே
ஆந்ரு சம்ஸ்யம் யயோர் ஆஸீத் ஆஸ்ரிதேஷு அநவக்ரஹம்—-121-

இராமனின் திருவடிகளை விட மிகவும் உயர்ந்த அவனுடைய பாதுகையை நாங்கள் த்யானம் செய்கிறோம் –
காரணம், அயோத்தி நாட்டின் மீது இராமனுக்கு இல்லாத தயை பாதுகைக்கு இருந்த காரணத்தால் அல்லவா பாதுகை மீண்டும் வந்தாள்?

————

ஆஸா: ப்ரஸாதயிதும் அம்ப ததா பவத்யாம்
தைவாத் அகாண்ட சரதீவ ஸமுத்திதாயாம்
ஸ்தோகாவசேஷ ஸலிலாஸ் ஸஹஸா பபூவு:
ஸாகேத யௌவத விலோசந வாரிவாஹா:—-130-

தாயே! பாதுகையே! இராமன் கானகம் புகுந்தவுடன் நீ அயோத்திக்கு மீண்டும் வந்தாய்.
மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வல்ல சரத் காலம் போன்று நீ வந்தாய்.
உன்னைக் கண்டவுடன் அயோத்தி நகரத்தில் இருந்த பெண்களின் கண்கள் என்ற மேகங்கள், தங்கள் மழை நீரை நிறுத்தின.

——————–

ஸமுபஸ்திதே ப்ரதோஷே
ஸஹஸா விநிவ்ருத்ய சித்ரகூட வநாத்
அபஜத புநஸ் ஜந பதம்
வத்ஸம் தேநு: இவ பாதுகே பவதீ—-140-

பாதுகையே! மேய்வதற்காகச் செல்லும் பசுவானது அஸ்தமன நேரத்தில் கன்றுக் குட்டியிடம் வந்து விடுகிறது.
அது போன்று நாட்டிற்கும் பரதனுக்கும் கவலை ஏற்பட்ட போது,
நீ சித்திர கூடத்தில் இருந்து மிகவும் விரைவாக கோசலத்திற்குத் திரும்பினாய் போலும்.

————

வர்ஷாணி தாநி வ்ருஷளோ ந தபாம்ஸி தேபே
பாலோ ந கச்சித் அபி ம்ருத்யுவசம் ஜகாம
ராஜ்யே தவ அம்ப ரகு புங்கவ பாத ரக்ஷே
ந ஏவ அபரம் ப்ரதி விதேயம் அபூத் ப்ரஸக்தம்—-153-

இராமனின் திருவடிகளை அவனது தாய் போன்று பாதுகாப்பவளே! நீ அயோத்தியை ஆண்ட போது –
மற்ற வர்ணத்தினர்கள் யாரும் தவம் இயற்றவில்லை (அந்தணன் தவிர); எந்தக் குழந்தையும் இறந்து போகவில்லை;
ப்ராயச்சித்தம் தேடும் அளவிற்கு எந்தவிதமான குற்றமும் நிகழவில்லை.

————–

அநந்ய பக்திர் மணி பாதுகே த்வாம்
அபி அர்ச்சயந் தாசரதிர் த்வீதீய:
விகல்ப்யமாந: ப்ரதமேந கீர்த்யா
வந்த்ய: ஸ்வயம் வ்யோமஸதாம் பபூவ—166-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! எந்த ஒரு பயனும் எதிர்பார்க்காமல், உன்னிடம் மட்டுமே பக்தி கொண்டு,
பரதன் உன்னை மட்டுமே வணங்கி நின்றான். இதனால் தசரதனின் இரண்டாவது புத்திரனான அவனை,
முதல் பிள்ளையான இராமானுக்குச் சமமாகவே அனைவரும் கருதினர்.
இப்படியாகப் பரதன் தேவர்களுக்குச் சமமானவனாகவே வணங்கப்பட்டான்.

————–

மஹீஷிதாம் ராகவ பாத ரக்ஷே
பத்ராஸ நஸ்த்தாம் பவதீம் ஸ்ப்ருசந்த:
பூர்வம் ததாத்வே நியதே அபி பூய:
கல்யாணதாம் ஆநசிரே கிரீடா:—-171-

இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! நீ சிம்மாசனத்தில் வீற்றிருந்தபோது,
உன்னை அரசர்களின் தலையில் உள்ள கிரீடங்கள் (அவர்கள் உன்னை வணங்கும்போது) தொட்டன.
அவை முன்பே தங்கமாக உள்ளபோதிலும், உன்னைத் தொட்ட பின்னர் மட்டுமே உயர்ந்த பலனைப் பெற்றன.

————-

ப்ராப்த உதயா ததாநீம்
கிம் அபி தம: தத் நிராகரோத் பவ்தீ
தநுரிவ மனுகுல ஜநுஷாம்
ப்ரஸவித்ரீ ரத்ந பாதுகே ஸவிது:—180-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இராமன் கானகம் புகுந்த போது நீ அரச பதவி ஏற்கும்
உதயம் என்பதை அடைந்தாய். ஆக மநுகுலத்தின் அரசர்களுக்கு ஆதாரமாக உள்ள ஸூரியன் போன்று நீ ஆனாய்.
இதன் மூலம் எங்கும் உள்ள இருளை நீக்கினாய்.

————–

ப்ராது: நியோகே அபி அநிவர்த்தமாநம்
ராஜ்ய அபிஷேகம் ச பரித்ய ஜந்தம்
ராமாநுஜௌ தௌ நநு பார தந்த்ர்யாத்
உபௌ உபாப்யாம் பவதீ ஜிகாய—-184-

பாதுகையே! இராமனின் ஆணைகளை அவனது தம்பிகளான இலட்சுமணனும், பரதனும் மீறாதவர்களே ஆவார்கள்.
ஆயினும் இராமனின் ஆணைக்கு ஏற்ப அவர்கள் இருவரும் பட்டாபிஷேகம் ஏற்கவில்லை.
ஆனால், நீ ஏற்றுக் கொண்டாய். இதன் மூலம் அவர்கள் இருவரையும் நீ வென்றாய்.

————-

மநு வம்ஸ புரோஹிதேந மந்த்ரை: அபிமந்தரய த்வயி பாதுகே ப்ரயுக்தம்
அபிஷேக ஜலம் க்ஷணேந ராஜ்ஞாம் சமயாமாஸ ஸமுத்திதாந் ப்ரதாபாந்—-200-

பாதுகையே! மனுவம்சத்தின் குலகுருவான வசிஷ்டர் உன் மீது மந்திரங்கள் கொண்டு ஜபிக்கப்பட்ட புண்ணிய நீரை,
பட்டாபிஷேகத்தின்போது சேர்த்தார். இந்த நீர் செய்தது என்ன?
விரோதிகளான அனைவருடைய வீரம் என்ற தீயை அணைத்துவிட்டது.

————–

அபிஷேசயது ஸ ராம: பதேந வா ஸ்ப்ருசது பாதுகே பவதீம்
அவிசேஷித மஹிமா த்வம் கிம் வா விசேஷ: க்ஷமா ஸமேதாநாம்—210-

பாதுகையே! இராமன் உனக்கு உயர்ந்த அரச பதவி என்ற பட்டாபிஷேகம் அளித்தாலும், தனது திருவடிகளில் உன்னை வைத்தாலும் –
உனது பொறுமை காரணமாக, நீ குறைவற்ற பெருமை மாறாமலேயே உள்ளாய்.
பூமியின் பொறுமையை ஒத்தபடி உள்ளவர்களுக்கு இது போன்று ஏற்றத் தாழ்வுகளில் பேதம் என்ன உள்ளது?

———–

உபாஸ்ய வர்ஷாணி சதுர் தச த்வாம்
உத்தாரிகாம் உத்தர கோஸலஸ்தா:
ஸநந்த நாத்யைரபி துர் விகாஹம்
ஸந்தாநிகம் லோகம் அவாபுர அக்ர்யம்—-212–

பாதுகையே! வடக்கு கோஸலை நாட்டில் உள்ள மக்கள் உன்னை பதினான்கு வருடங்கள் வணங்கி வந்தனர்.
இதனால் அவர்களுக்குக் கிட்டியது என்ன?
ஸநந்தனர் போன்ற உயர்ந்தவர்களாலும் அடைய இயலாத ஸாந்தாநிக லோகத்தை அவர்கள் எளிதாக அடைந்தனர்.

—————-

பாதாவநி த்வத் அபிஷேசந மங்களார்த்தம்
பேரீசதம் ப்ருசம் அதாட்யத யத் ப்ரதீதை:
ஆகர்ண்ய தஸ்ய ஸஹஸா துமுலம் நிநாதம்
லங்கா கவாட நயநாநி நிமீலிதாநி—-220-

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
உன்னுடைய பட்டாபிஷேகம் என்னும் மங்கள கரமான நிகழ்வின் போது, நூற்றுக் கணக்கானவர்கள் பெரிதாக வாத்தியம் ஒலித்தனர்.
இந்த ஓசை இலங்கை வரை கேட்டது. இதனைக் கேட்ட இலங்கையின் கதவுகள் மூடப்பட்டன.

———————–

நிஸ்தீர்ண துங்க ஜலதே: அநகஸ்ய தேவி
த்வத் ஸம்ப்ரயுக்த ரகுநாத பதாந்வயேந
ஸத்ய ஸநந்தன முகை: அபி துர் நிரீக்ஷா
ஸாம்ராஜ்ய ஸம்பத் அபரா பரதஸ்ய ஜஜ்ஞே—-237–

பாதுகாதேவியே! உன்னுடன் தொடர்பு கொண்டதால் உயர்ந்த இராமனின் திருவடிகள் மூலமாகப் பரதன்
தனது துக்கம் என்ற பெரிய கடலை எளிதாகக் கடந்தான். இதன் மூலம் தூய்மை அடைந்த பரதன்,
ஸநந்தர் போன்றவர்கள் கூடக் காண இயலாத தேஜஸ் அடைந்தான்.
இதனால் பக்தர்களுக்குச் சக்ரவர்த்தி போன்றவன் என்ற பட்டம் பெற்றான்.

———–

இதி நிகமவந்தி வசஸா ஸமயே ஸமயே க்ருஹீத ஸங்கேத:
அபி ஸரதி ரங்கநாத: ப்ரதிபத போகாய பாதுகே பவதீம்—-250-

நம்பெருமாளின் பாதுகையே! இப்படியாக அந்தந்த காலத்தில் இவற்றைச் செய்யவேண்டும் என்று
வேதங்களாகிய வந்திகள் (துதி செய்பவர்கள் எனலாம்) மூலம் ஸ்ரீரங்கநாதன் உணர்கிறான்.
அந்தந்த காலத்தில் சுகங்களை அனுபவிக்கும் பொருட்டு உன்னை அடைகிறான்.

————

சரண கமல ஸங்காத் ரங்க நாதஸ்ய நித்யம்
நிகம பரிமளம் த்வம் பாதுகே நிர்வமந்தீ
நியதம் அதிசயாநா வர்த்தஸே ஸாவரோதம்
ஹ்ருதயம் அதி வஸந்தீம் மாலிகாம் வைஜயந்தீம்—258-

அழகிய மணவாளனின் பாதுகையே! பெரிய பெருமாளின் திருமார்பில் உள்ள மஹாலக்ஷ்மியுடன் தொடர்பு கொண்டுள்ளதால்,
அவன் அணிந்துள்ள வைஜயந்தி என்கிற மாலைக்கு நறுமணம் அதிகமே ஆகும்.
ஆயினும் அவனது திருவடிகளின் தொடர்பு உனக்கு மட்டுமே அல்லவா உள்ளது?
இதன் மூலம் நீ எப்போதும் வேதங்களின் நறுமணத்தை பரப்பியபடி உள்ளாய்.
ஆக ஸ்ரீரங்கநாச்சியாரின் தொடர்பு பெற்ற அந்த மாலையை விட, அவனது திருவடிகளின் தொடர்பு பெற்ற நீ உயர்ந்தே உள்ளாய்.

———

ஸ்ப்ருசத: சிரஸா பதேந ச த்வாம்
கதிம் உத்திஸ்ய முகுந்த பாதுகே த்வௌ
அவரோஹதி பஸ்சிம: பதாத் ஸ்வாத்
அத்ரோஹத்யநக: ததேவ பூர்வ:—-267-

க்ருஷ்ணனின் பாதுகையே! உன்னை இருவர் தொடுகின்றனர். ஒருவர் உன்னைத் தனது கால்கள் கொண்டு தொடுகிறார்,
மற்றோருவர் உன்னைத் தனது தலையால் தாங்குகிறார். தலையால் தொட்டவர் மேலே (பரமபதம்) ஏறியபடி உள்ளார்.
காலால் தொட்டவர் (நம்பெருமாள் ஆசனத்தில் இருந்து இறங்க எண்ணி, பாதுகை மீது திருவடி வைக்கிறான்) கீழே இறங்குகிறார்.

————–

த்வயா அநுபத்தாம் மணி பாத ரக்ஷே
லீலா கதிம் ரங்க சயஸ்ய பும்ஸ:
நிஸா மயந்த: ந புநர்பஜந்தே
ஸம்ஸார காந்தார கதாகதாநி—-275-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கத்தில் சயனித்துள்ள பரம புருஷனாகிய பெரிய பெருமாள்,
உன்னைச் சாற்றிக் கொண்டு சஞ்சாரம் செய்கிறான். இதனைக் காண்பவர்கள், இந்த உலகில் பிறப்பது-இறப்பது
என்று சுழற்சியை இனி மேற்கொள்வதில்லை.

———–

பதஸ் ப்ருசா ரங்க பதிர் பவத்யா
விசக்ரமே விஸ்வம் இதம் க்ஷணேந
ததஸ்ய மந்யே மணி பாத ரக்ஷே
த்வயைவ விக்யாதம் உருக்ரமத்வம்—-281-

ஸ்ரீ பாதுகையே நீ பெருமாள் திருவடியில் இருந்ததால் தான் அவர் நொடிப் பொழுதில் உலகை அளந்தார் –
அதனாலேயே -உருக்ரமன் -த்ரிவிக்ரமன் -என்ற பெயரையும் பெற்றார் –

——————

ஸம்பத்யதே ஸமுசிதம் க்ரமம் ஆஸ்ரயந்த்யா
ஸத்வர்த்மநா பகவதோ: அபி கதிர் பவத்யா
ஈஷ்டே பதாவநி புந: க இவேத ரேஷாம்
வ்யாவர்த்த நஸ்ய விஷமாத் அபத ப்ரசாராத்—290-

பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் நல்ல வழியில் சென்று
சஞ்சாரம் செய்வது என்பது, உனது அடிவைப்பு மூலமே உண்டாகிறது.
இப்படி உள்ளபோது, மற்றவர்களைத் தீய வழிகளில் நடக்காமல் திசை திருப்பும் திறன் வேறு யாரிடம் உள்ளது?

————-

நித்யம் ய ஏவ ஜகதோ மணி பாத ரக்ஷே
ஸத்தாஸ்திதி ப்ரயதநேஷு பரம் நிதாநம்
யோ அபி ஸ்வதந்த்ர சரிதஸ் தவத் அதீந வ்ருத்தி:
கா வா கதா ததிதரேஷு மிதம்பசேஷு—-299-

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இந்த உலகைப் படைப்பது, இந்த உலகில் உள்ள
அனைத்தைக் காட்டிலும் உயர்ந்திருப்பது ஆகிய தன்மைகளை உடைய ஸ்ரீரங்கநாதனே உன் வசப்பட்டுள்ளான்.
இப்படி உள்ளபோது இந்த உலகில் உள்ள மற்ற அற்பர்கள் உனக்கு அடிமை என்று கூறவும் வேண்டுமா?

—————

கமபி கநக ஸிந்தோ: ஸைகதே ஸஞ்சரந்தம்
கலச ஜலதி கந்யா மேதிநீ தத்த ஹஸ்தம்
அநிசம் அநுபவேயம் பாதுகே த்வயி அதீநம்
ஸுசரித பரிபாகம் ஸூரிபி: ஸேவநீயம்—-309-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! காவேரியின் மணல்திட்டில் ஸ்ரீரங்கநாதன் சஞ்சரிக்கிறான்.
அவன் ஸ்ரீதேவியாலும் பூதேவியாலும் சூழப்பட்டு உள்ளான். சிறந்த புண்ணியங்களின் பயனாக உள்ளான்.
நித்யஸுரிகளால் என்றும் போற்றப்பட்டபடி உள்ளான். உன்னிடம் எப்போதும் வசப்பட்டு உள்ளான்.
இப்படிப்பட்ட இந்த ஸ்ரீரங்கநாதனை நான் எப்போதும் வணங்கியபடி இருப்பேனாக.

—————

ஸம்பவது பாதரக்ஷே ஸத்ய ஸுபர்ண: ஆதி: ஔபவாஹ்ய கண:
யத்ராஸு ரங்கபர்த்து: ப்ரதம பரிஸ்பந்த காரணம் பவதீ–320–

பெரியபெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
ஸ்ரீரங்கநாதன் சஞ்சாரம் செல்வதற்கு அவனுக்கு வாகனங்களாக ஸத்யன், கருடன் என்று பலரும் இருக்கக்கூடும்.
ஆனால் இவர்களுக்கு முன்பாக அவன் முதல் அடி எடுத்து வைப்பதற்கு நீ அல்லவோ காரணமாக உள்ளாய்?

———–

அஸ்ப்ருஷ்ட தோஷ பரிமர்ஸம் அலங்க்யம் அந்யை:
ஹஸ்தாபசேயம் அகிலம் புருஷார்த்த வர்கம்
சித்ரம் ஜநார்த்தந பதாவநி ஸாதகாநாம்
த்வயி அர்ப்பிதா: ஸுமநஸ: ஸஹஸா பலந்தி—-331-

ஜனார்த்தனனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னிடம் மலர்களைச் சமர்ப்பணம் செய்பவர்களுக்குக் கிட்டுவது என்ன?
எந்தவிதமான தோஷங்களும் இல்லாததும், மற்றவர்களுக்கு எட்டாததும், இவர்களுக்குக் கையினால் பறிக்கக்கூடியதும்
ஆகிய உயர்ந்த புருஷார்த்தங்கள் மிகவும் எளிதாகக் கிட்டுகின்றன.

———–

ஸூடாரக்வத ரஜஸா ஸூர்ண ஸ்நபனம் விதாய தே பூர்வம்
ரங்கேஸ பாதுகே த்வம் அபிஷிஞ்சதி மௌளி கங்கயா சம்பு:—350-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! சிவன் தனது தலையில் உள்ள கொன்னை மலர்கள் கொண்டு உனக்கு சூர்ணாபிஷேகம் செய்கிறார்.
அதன் பின்னர் தனது தலையில் உள்ள கங்கையைக் கொண்டு உனக்கு திருமஞ்சனம் செய்து வைக்கிறார்.

————–

க்ருதிந: சிரஸா ஸமுத் வஹந்த:
கதிசித் கேசவ பாதுகே ரஜஸ்தே
ரஜஸஸ் தமஸோ அபி தூரபூதம்
பரிபஸ்யந்தி விசுத்தமேவ ஸத்வம்—-356-

அழகான கேசத்தைக் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய துகள்களைத் தங்கள் தலைகளில்
கொள்கின்ற புண்ணியம் செய்தவர்களின் நிலை என்ன? அப்படிப்பட்டவர்கள் ரஜோகுணம், தமோகுணம் ஆகிய
இரண்டிற்கும் அப்பாற்பட்ட ஸத்வகுணம் நிறைந்த பரம பதத்தைக் காண்கின்றனர்.

————

கங்காபகா தட லதாக்ருஹம் ஆஸ்ரயந்த்யா:
பாதாவநி ப்ரசலிதம் பதவீ ரஜஸ்தே
ப்ராயணே பாவநதமம் ப்ரணதஸ்ய சம்போ:
உத்தூளநம் கிம் அபி நூதநம் ஆதநோதி—-368-

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் உன்னைச் சாற்றிக் கொண்டு கங்கைக் கரையில் எழுந்து அருளிய போது உண்டான
தூசியைச் சிவன் தலை வணங்கி தோஷ நிவாரண அர்த்தமாக புதியதாகத் தன் உடலில் பூசிக் கொள்கிறார் –

—————–

பஞ்சாயுதீ பூஷண மேவ சௌரே
யதஸ் தவைதே மணி பாதரஷே
விதந்வதே வ்யாப்ததிச பராகா
சாந்தோதயான் சத்ருசமூ பராகான் –374-

ஸ்ரீ பாதுகையே சத்ருக்களைக் கொல்வதற்காகப் பெருமாள் எழுந்து அருளுகிறார்
உன்னுடைய தூளியைக் கண்ட மாத்ரத்திலேயே சத்ருக்கள் ஓடோடிப் போகிறார்கள்
பெருமாளுடைய பஞ்சாயுதங்களும் அலங்காரத்திற்காக மட்டுமே ஆகின்றன –

————-

மதுரம் மணி பாதுகே ப்ரவ்ருத்தே
பவதீ ரங்க ந்ருபதே விஹார காலே
அபயார்த்த்நயா ஸமப்யு பேதாந்
அவி ஸம்வாதயதீவ மஞ்ஜு நாதை:–390-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சார காலத்தில் பலரும் அவன் அருகில் வந்து,
தங்களுக்கு அபயம் அளிக்க வேண்டி நிற்கின்றனர். அப்போது நீ செய்வது என்ன?
உன்னுடைய இனிமையான நாதம் மூலம், “அபயம் அளிக்கப்பட்டது”, என்று கூறுகிறாய் அல்லவோ?

——————-

நித்யம் பதாம் புருஹயோ: இஹ கோபிகாம் த்வாம்
கோபீ ஜந ப்ரியதமோ மணி பாத ரக்ஷே
ஸம்பந்ந கோஷ விபவாம் கதிபி: நிஜாபி:
ப்ரீத்யேவ ந த்யஜதி ரங்க ஸமாஸ்ரிதோபி—-420-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! கோபிகைகளுக்கு மிகவும் ப்ரியமானவனாகிய நம்பெருமாள்,
தனது ஸஞ்சாரங்கள் முடிந்து ஸ்ரீரங்க விமானத்தை அடைந்த பின்னரும் உன்னை விடுவதில்லை.
மிகவும் இனிமையான நாதம் கொண்ட உன்னை அவன் கோபிகை என்றே கருதியுள்ளான் போலும்.

————-

க்ஷிபதி மணி பாத ரக்ஷே நாதைர் நூதம் ஸமாஸ்ரித த்ராணே
ரங்கேஸ்வரஸ்ய பவதீ ரக்ஷாபேக்ஷா ப்ரதீக்ஷண விளம்பம்—-480-

இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! தனது அடியார்கள் தன்னிடம், ” என்னைக் காக்கவேண்டும்”, என்று
விண்ணப்பம் செய்யவேண்டும் என்று ஸ்ரீரங்கநாதன் எதிர்பார்க்கிறான்.
இத்தகைய அவனது எண்ணத்தை உனது நாதங்களால் நீக்கி, அவன் காப்பாற்றும் காலதாமதத்தைக் குறைத்து விடுகிறாய்.

———–

ரங்கேஸ பாதாவநி தாவகாநாம்
ரத்ந உபலாநாம் த்யுதய: ஸ்புரந்தி
ஸ்ரேய: பலாநாம் ஸ்ருதி வல்லரீணாம்
உபக்நசாகா இவ நிர்வ்யபாயா:—-485-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மக்களுக்கு வேண்டிய புருஷார்த்தம் என்னும் பழங்களை
அளிக்கின்ற கொடிகளாக வேதங்கள் உள்ளன. அந்த வேதங்கள் படர்வதற்கு ஏற்ற கொழுகொம்புகளாக
உனது இரத்தினக் கற்களின் ஒளிக்கீற்றுகள் உள்ளன.

———–

ப்ரபவந்தி தவீயஸாம் ஸ்வபாவாத்
தவ ரத்நாநி முகுந்த பாத ரக்ஷே
அயஸாமிவ ஹந்த லோஹ காந்தா:
கடிநாநாம் மநஸாம் விகர்ஷணாய—512–

ஸ்ரீரங்க நாதனின் திருவடிகளைக் காக்கும் பாதுகையே! ஒரு சிலர் ஸ்ரீரங்கநாதன் வீதியில் வலம் வரும்போது,
வீட்டை விட்டு வராமல் இருப்பார்கள். அவர்களது இரும்பு போன்ற மனங்களை, தூரத்தில் இருந்தே இழுக்க வல்ல
காந்தம் போன்று உன்னுடைய இரத்தினக் கற்கள் சாமர்த்தியம் கொண்டவையாக உள்ளவனவே!

————

ரங்காதிராஜ பத ரக்ஷிணி ராஜதே தே
வஜ்ர உபஸங்கடித மௌக்திக வித்ரும ஸ்ரீ:
ஸக்தா சிரம் மநஸி ஸம்யமிநாம் நிவாஸாத்
ஸூர்ய இந்து அஹ்நிமய மண்டல வாஸநேவ—-550–

ஸ்ரீரங்கராஜனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! வைரத்துடன் சேர்த்துப் பதிக்கப்பட்ட முத்து, பவழம் ஆகியவற்றின் ஒளியானது –
நீண்டகாலமாக யோகிகளின் மனதில் நீ இருந்து வருவதால், அங்குள்ள சூரியன், சந்திரன், அக்னி மண்டலங்களின்
வாசனையுடன் கூடியதாக உன்னில் காணப்படுகிறது.

———–

ஜநயஸி பதாவநி த்வம்
முக்தா சோண மணி சக்ர நீலருசா
நகருசி ஸந்ததி ருசிராம்
நந்தக நிஸ்த்ரிம்ச ஸம்பதம் சௌரே:—580-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது முத்துக்களின் ஒளி, பத்மராகக் கற்களின் ஒளி மற்றும் இந்த்ரநீலக் கற்களின் ஒளி
ஆகியவை ஸ்ரீரங்கநாதனின் திருவடியின் நகங்களில் புதிய ஒளியை ஏற்படுத்துகின்றன.
இதனைக் காணும்போது நீ அவனுடைய நந்தகம் என்னும் கத்தியின் தோற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

————

அர்ச்சிஷ்மதீ காஞ்சந பாத ரக்ஷே
ப்ரஸ்தௌதி தே பாடல ரத்ந பங்க்தி:
ரேகா ரதாங்கஸ்ய மஹ: ப்ரபஞ்சம்
ரங்கேச பாதாம்புஜ மத்ய பாஜ:—-591–

ஸ்ரீரங்கநாதனின் பொன்மயமான பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுடைய தாமரை மலர் போன்ற அழகிய திருவடியின் நடுவில்,
ரேகை வடிவத்தில் சக்கரம் உள்ளது. உன்னுடைய பத்மராகக் கற்களின் சிவந்த ஒளியானது,
அந்தச் சக்கரத்தின் ஒளியைப் போன்று காணப்படுகிறது.

———–

அருணமயஸ் தவ ஏதே
ஹரி பத ராகேண லப்த மஹிமாந:
கமயந்தி சரண ரக்ஷே
த்யு மணி கணம் ஜ்யோதி ரிங்கணதாம்—-610-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது பத்மராகக்கற்கள், ஸ்ரீரங்கநாதனுடைய திருவடித் தாமரைகளின்
சிவந்த ஒளியைப் பெறுகின்றன. இதனால் அவை, மற்ற சூரியன்கள் அனைத்தையும், ஒளி குறைந்த,
மின்மினிப்பூச்சிகள் போன்று மாற்றி விடுகின்றன.

————-

ரங்கேஸ சரண ரக்ஷா
ஸா மே விததாது சாஸ்வதீம் ஸூத்திம்
யத் மௌக்திக ப்ரபாபி:
ஸ்வேத த்வீபம் இவ ஸஹ்யஜா த்வீபம்—-660-

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! நீ எனக்கு அழிவற்ற வெண்மையை
(பாவங்கள் அற்ற தன்மை, ஞானம்) உண்டாக்க வேண்டும். உன்னுடைய முத்துக்களின் அந்த ஒளியால் அல்லவோ
ஸ்ரீரங்கம் என்னும் காவேரியால் சூழப்பட்ட தீவானது, ச்வேத த்வீபம் போன்று வெண்மையாக உள்ளது?

——————-

ஸ்தல கமலநீவ காசித்
சரணாவநி பாஸி கமல வாஸிந்யா:
யத் மரதக தள மந்யே
ய: கச்சிதஸௌ ஸமீக்ஷ்யதே சௌரி:-680–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாமரையில் வீற்றுள்ள ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஏற்ற ஒரு நிலத் தாமரை வனமாக நீ உள்ளாய்.
அந்தத் தாமரை வனத்தின் இலைகளாக உனது மரதகக் கற்களின் பச்சை ஒளி உள்ளது.
அந்த இலைகளின் நடுவே ஸ்ரீரங்கநாதன் ஒரு இலை போன்று காணப்படுகிறான்.

——————

நமதாம் நிஜ இந்த்ரநீல ப்ரபவேந முகுந்த பாதுகே பவதீ
தமஸா நிரஸ்யதி தம: கண்டகம் இவ கண்ட கேநேவ—710–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! முள்ளைக் கொண்டு முள்ளை எடுப்பது போன்று, கருமையாகக் காணப்படும்
உனது இந்த்ரநீலக் கற்களின் ஒளி மூலமாகவே நீ உன்னை வணங்குகின்றவர்களின் அறியாமை என்னும் இருளை நீக்குகிறாய்.

———–

ப்ரஜ்வலித பஞ்ச ஹேதி: ஹிரண்மயீம் த்வாம் ஹிரண்ய விலயார்ஹ:
ஆவஹது ஜாத வேதா: ஸ்ரியம் இவ ந: பாதுகே நித்யம்—750–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! சக்கரம் முதலான ஐந்து ஆயுதங்களை ஏற்தியபடி,
ஹிரண்யன் போன்றவர்களை அழிப்பதற்காக ஸ்ரீரங்கநாதன் உள்ளான்.
இப்படிப்பட்ட அவன், தங்கமயமான உன்னை, அவனுக்குச் செய்யும் கைங்கர்யச் செல்வமாக உள்ள உன்னை,
எங்களுக்கு எப்போதும் தந்தருள வேண்டும்.

——————

பஹுமுகபோக ஸமேதை: நிர்முக்ததயா விஸூத்திம் ஆபந்நை:
சேஷாத்மிகா பதாவநி நிஷேவ்யஸே சேஷ பூதைஸ் த்வம்—-760–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஆதிசேஷனின் அவதாரமான நீ, பலவிதமான இன்பங்களுடன் கூடியவர்களும்,
அனைத்து கர்மங்களில் இருந்தும் விடுபட்டதனால் தோஷம் இல்லாத தன்மையை அடைந்தவர்களும் ஆகிய
ஸ்ரீரங்கநாதனின் தொண்டர்களால் எப்போதும் வணங்கப்படுகிறாய்.

————-

பாதுகே பவ பய ப்ரதீ பயோ:
பாவயாமி யுவயோஸ் ஸமாகமம்
ஸக்தயோர் தநுஜவைரிணர் பதே
வித்யயோர் இவ பராவராத் மநோ:–768–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளே! அசுரர்களின் சத்ருவான ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் உள்ள நீங்கள்,
ஸம்ஸார பயத்திற்குச் சத்ருவாக உள்ளீர்கள். இப்படியாக உள்ள உங்கள் இருவரது சேர்க்கையைக் காணும் போது,
பரை மற்றும் அபரை என்ற வித்யைகளின் சேர்க்கை என்றே நான் எண்ணுகிறேன்.

————

பத்த ஹரி பாத யுகளம் தபநீய பாதுகே யுவயோ:
மோசயதி ஸம்ஸ்ரிதாநாம் புண்யாபுண்யமய ஸ்ருங்கலா யுகளம்—-780–

தங்கமயமான பாதுகைகளே! உங்களது இந்த இணை என்பது இரண்டாக உள்ள ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை ஒன்றாகக் கட்டுகிறது.
இந்த இணையே, உங்களை அண்டியவர்களின் புண்ணியம் மற்றும் பாவம் என்னும் சங்கிலிகளின் பிணைப்பை விடுவிக்கின்றன.

——–

அப்ரபூதமபவத் ஜகத்ரயம்
யஸ்ய மாதும் உத்தி தஸ்ய பாதுகே
அப்ரமேயம் அமி தஸ்ய தத்பதம்
நித்யமேவ நநு சம்மிதம் த்வயா –795-

ஸ்ரீ பாதுகையே -திரு உலகு அளந்த சமயம் மூன்று உலகும் அவன் திருவடிக்கு போதாமல் போயிற்று –
அளவிட முடியாதவனான அவனுடைய அளவிட ஒண்ணாத மஹிமை கொண்ட அந்த திருவடியும் கூட உன்னாலே
நித்தியமே அளவிடப் பட்டு நிகிறதே -உன் பெருமைக்கு மற்றவை ஏதும் இணையாகாது –

———–

ப்ரதமா கலேவ பவதீ சரணாவநி பாதி ரங்க சந்த்ரமஸ:
ஸ்ருங்க உந்நதிரிவ யத்ர ஸ்ரியம் விபாவயதி யந்த்ரிகா யோக:—-810-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னைக் காணும்போது ஸ்ரீரங்கத்தின் சந்த்ரனாகிய ஸ்ரீரங்கராஜனின்
முதல் கலை போன்று உள்ளாய். இப்படியாக உள்ள அந்தக் கலையின் நுனி போன்ற அழகை உனது குமிழ் ஏற்படுத்துகிறது.

———-

ரேகா அபதேசதஸ் த்வம்
ப்ரசமயிதும் ப்ரளய விப்லவ ஆசங்காம்
வஹஸி மதுஜித் பதாவநி
மந்யே நிகமஸ்ய மாத்ருகா லேக்யம்—-820-

மது என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ப்ரளய காலத்தில் வேதங்கள் அழித்துவிடுமோ
என்ற சந்தேகம் சிலருக்கு உண்டாகலாம். இதனால் அந்த சந்தேகத்தை நீக்கும் விதமாக உன்னில் காணப்படும்
கோடுகள் என்பதன் மூலம், வேதங்களின் ப்ரதியை நீ வைத்துக் கொண்டுள்ளாய் என்பதை உணர்த்துகிறாய் போலும்.

———

அதரீக்ருத: அபி மஹதா
தமேவ ஸேவேத ஸாதரம் பூஷ்ணு:
அலபத ஸமயே ராமாத்
பாத க்ராந்தாபி பாதுகே ராஜ்யம்—830-

மேலும் மேலும் உயர எண்ணுபவன், உயர்ந்த ஒருவனால் தாழ்வாக நடத்தப்பட்டாலும், அவனையே அண்டி வணங்கி நிற்க வேண்டும்.
பாதுகையானது இராமனின் திருவடிகளால் மிதிக்கப்பட்டாலும், ஒரு காலகட்டத்தில் இந்த இராமனின் ராஜ்யத்தையே அடைந்தாள்

————–

ஸ்பீதம் பதாவநி தவ ஸ்நபந ஆர்த்ர மூர்த்தே:
ஆஸாகரம் ததம் அபூத் மணிரஸ்மி ஜாலம்
லீலோசிதம் ரகு ஸுதஸ்ய சரவ்யம் ஆஸந்
யாதூநி யஸ்ய வலயேந விவேஷ்டிதாநி—-842–

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! திருமஞ்சனம் மூலம் நனைந்துள்ள உனது இரத்தினக்கற்களின் ஒளியானது ஸமுத்திரம்
வரை பரவி நின்றது. அந்த ஒளியானது ஒரு வலை போன்று காணப்பட்டது.
அந்த வலையில் சூழப்பட்ட அரக்கர்கள் அனைவரும் இராமனின் பாணங்களுக்கு விளையாட்டு போன்று இலக்கானார்கள்.

—————-

ரங்காதி ராஜ பத பங்கஜம் ஆஸ்ரயந்தீ
ஹைமீ ஸ்வயம் பரிகதா ஹரி நீல ரத்நை:
ஸம்பாவ்யஸே ஸுக்ருதிபி: மணி பாதுகே தவம்
ஸாமாந்ய மூர்த்தி: இவ ஸிந்து ஸுதா தரண்யோ:—853–

இரத்தினக் கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை எப்போதும் பற்றியவளாகவும்,
தங்கமயமாக இந்த்ரநீலக் கற்களால் இழைக்கப்பட்டவளாகவும் நீ உள்ளாய்.
ஆக நீ திருப்பாற்கடலில் அவதரித்த மஹாலக்ஷ்மி என்றும், பூமிபிராட்டி என்றும் புண்ணியவான்களால் எண்ணப்படுகிறாய்
(தங்க நிறம் = மஹாலக்ஷ்மி, இந்த்ரநீலம் = பூதேவி).

———

ரகுபதி ஸங்காத் ராஜ்ய கேதம் த்யஜந்தீ
புநரபி பவதீ ஸ்வாந் தர்ஸ யந்தீ விஹாராந்
அபிஸமதித வ்ருத்திம் ஹர்ஷ கோலாஹலாநாம்
ஜநபத ஜநிதாநாம் ஜ்யாயஸா சிஞ்ஜிதேந—-883-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இராமனின் திருவடிகளில் பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சேர்ந்ததால்,
அதுவரை ராஜ்ய பாரம் காரணமாக உண்டான துயரங்கள் அனைத்தையும் ஒரு நொடியில் நீ விட்டாய்.
மீண்டும் உனது உல்லாஸமான ஸஞ்சாரங்களைக் காட்டியபடி, இனிமையான நாதத்தால்,
அயோத்தியில் உண்டான இனிமையான சந்தோஷக் கூச்சல்களை மேலும் வளர்த்தாய்.

———–

ரம்ய ஆலோகா லளித கமநா பத்மராக அதரோஷ்டீ
மத்யே க்ஷாமா மணி வலயிநீ மௌக்திக வ்யக்த ஹாஸா
ஸ்யாமா நித்யம் ஹரி தமணிபி: சார்ங்கிண: பாத ரக்ஷே
மந்யே தாது: பவஸி மஹிளா நிர்மிதௌ மாத்ருகா த்வம்—-898–

சார்ங்கம் என்ற வில்லை உடைய ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மிகவும் அழகிய தோற்றத்தைக் கொண்டவளாக,
மெதுவான அழகிய நடையைக் கொண்டவளாக, பத்மராகக் கற்களின் சிவந்த தன்மையால் அழகான உதடுகள் கொண்டவளாக,
நடுப்பாகத்தில் (இடை) சிறுத்தவளாக, இரத்தினக்கற்களின் கூட்டம் என்ற வளையல்கள் அணிந்தவளாக,
முத்துக்கள் போன்ற அழகான சிரிப்பைக் கொண்டவளாக, பச்சைக்கல் மூலம் என்றும் யுவதியாகத் தோற்றம் அளிப்பவளாக நீ உள்ளாய்.
இப்படியாக நான்முகன் உத்தமப் பெண்களைப் படைக்க உதவுகின்ற மாதிரி உருவமாக (model) நீ உள்ளாய் என்று எண்ணுகிறேன்.

இந்த சுலோகத்தினை அதியற்புதமாய் ஒரு சிலேடை நடையில் அமைத்துள்ளார்.
இதிலுள்ள “நித்ய“ என்னும் ஒரு வார்த்தையை எடுத்துக் கொண்டு மீதமுள்ள பதங்களோடு சேர்த்து
விசேஷமான அர்த்தங்களைக் காண்போம்!
நித்யம் ரம்யாலோகா – எப்பொழுதும் தெளிவும், ஆனந்தமும் கொண்ட ஆத்மாவிலிருந்து உண்டான
வெளிப்படையான தேஜஸ்ஸை உடைத்தாயிருக்கை.
நித்யம் லலிதகமனா – ஜனங்களுக்கு நடையில் பல கோணல், விகாரங்கள் இருப்பது போல் அவர்கள் கடைபிடிக்கும்
அனுஷ்டானத்திலும் பல தோஷங்கள் உண்டு. அம்மாதிரியெல்லாம் இல்லாமல் சாஸ்திர ரீதியாய், ஸத் ஸம்ப்ரதாயமான
ஆசார அனுஷ்டானங்களை விதிப்படிக்கும், பெரியவர்களது உபதேச க்ரமபடிக்கும், சிரத்தை, பக்தி, விசுவாசத்தோடு ,
ஆடம்பரம், அஹங்காரம், பிரதிபலன்கள் ஏதும் எதிர்பார்க்காமல், எப்போதும் ஒரே மாதிரியாய் அனுஷ்டிப்பது.
நித்யம் பத்மராகாத்ரோஷ்டி தன்னுடைய நற்குணங்களாலும், நல்வாக்கினாலும், தம்முடைய வாக்கு,
கேட்பவர்களிடத்து ஆனந்தமான மெய்யுணர்வு ஏற்படும்படி இருக்கை.
நித்யம் மத்யே க்ஷாமா இத்தனை பெருமைகளும், யோக்யதைகளும் இருந்தும் கூட பவ்யமாகயிருத்தல்.
நித்யம் மணிவலயிநி – வேதம் கூறும் சாஸ்திரங்களையும், அது குறித்த பூர்வாச்சார்யர்களுடைய விளக்கங்களையும்,
வியாக்யானங்களையும் எப்போதும் ஆபரணம் போன்று நினைவில் கொண்டிருக்கை
நித்யம் மெளக்திகவ்யக்தஹாஸா – எப்போதும் தன்னுடைய சௌஹார்த்ததாலும் (எல்லாரையும் அன்போடு அணைத்துச் செல்லும் குணம்)
மலர்ச்சியோடு கூடிய தோற்றத்தினாலும் எப்போதும் இவர் நம்மோடுயிருந்து அருள வேண்டும் என்றிருக்கை.
நித்யம் ஸ்யாமா ஹிதமணிபி – நல்ல இறையனுபவத்தாலே காமக்ரோதாதிகள் அறவேயொழிந்து, புத்தி தெளிவடைந்து,
அதனால் சரீரம் நல்ல தேஜஸ்ஸையடைந்திருக்கை.
நித்யம் சார்ங்கிண: பாதரக்ஷே – பெருமாளுக்கு எந்தவிதமான அபராதங்களும் ஜனங்கள் செய்யமால்,
அபஹாரம் வராதபடிக்கு நித்ய ரக்ஷகர்களாய் இருக்கை. இதற்கு ஜனங்களுக்குப் பெருமாளைக் குறித்த
தெளிவான அறிவு வேண்டும். அதனை பல ப்ரமாணங்கள் மூலம் புகட்டும் தெளிவு வேண்டும்.

இவைகள் தாம் ஸதாச்சார்யனுடைய லக்ஷணங்கள். அவர்களால் சிக்ஷையடைந்து தேறிய நல்ல சீடர்களின் லக்ஷணமும் ஆகும்.

—————–

காலே தல்பப புஜங்கமஸ்ய பஜத: காஷ்டாம் கதாம் சேஷதாம்
மூர்த்திம் காமபி வேத்மி ரங்க ந்ருபதே: சித்ராம் பத த்ரத்வயீம்
ஸேவா நம்ர ஸுராஸுரேந்த்ர மகுடீ சேஷாபடீ ஸங்கமே
முக்தா சந்த்ரிகயேவ யா ப்ரதயதே நிர்மோக யோகம் புந:—-907–

ஸ்ரீரங்கராஜனின் பாதுகையே! வியப்பை அளிக்கவல்ல ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளான உங்களை
அவனது ஸஞ்சார காலத்தில் அடிமைத்தனத்தின் எல்லைக்கே செல்வதால்,
அவனுடைய படுக்கையான ஆதிசேஷனின் உருவமே என்று எண்ணுகிறேன்.
ஸ்ரீரங்கநாதனை வணங்கி நிற்பவர்களான தேவர்கள் மற்றும் அசுரர்களின் தலைகளில் உங்களை வைக்கும்போது
உங்கள் முத்துக்களின் ஒளியானது பரிவட்டம் போன்று காணப்படுகிறது. மேலும் அவர்களின் தலையில் உள்ள பரிவட்ட
வஸ்த்ரத்துடன் இந்த ஒளியும் இணையும்போது, உரித்த நாகத்தின் தோல் போன்று காணப்பட்டு, ஆதிசேஷனை நினைவுபடுத்துகிறது.

ஆதிசேஷனுடைய இன்னொரு உருவம்தான் பாதுகை.
இவ்விதம் கூறுவதற்கு இரண்டு காரணங்களை இந்த ஸ்லோகத்தில் கூறுகின்றார்.
1-ஆதிசேஷனை வெள்ளிமலை போல் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றது. நல்முத்துக்கள் பதிக்கப்பெற்ற பாதுகையிலிருந்து
வெளிப்படும் காந்தியானது வெள்ளிமலையை போன்று காட்சியருளுகின்றது.
2-தம் பக்தர்களை கௌரவிக்கும் போது, அவர்களது சிரஸ்ஸில் வெள்ளைத் திருப்பரிட்டத்தினைச் சுற்றி கட்டி
அதன் மேல் பாதுகையை சாதிக்கும் போது, வெள்ளைத் திருப்பரிவட்டம், உரித்து விட்ட பாம்பு சட்டைப் போன்றும்,
பாதுகை ஆதிசேஷனின் சிரஸ் போன்றும் காட்சியருளுகின்றது.
(“சேஷப்படி“ என்பது திருப்பரிவட்டத்திற்கான சமஸ்கிருதப் பெயர்.
இந்த சுலோகத்தின் மூலம் இது அந்த காலத்தில் வெளுப்பு வர்ணத்திலிருந்த்து அறியப்படுகின்றது.)
சேஷத்வ காஷ்டை மிகுந்தவர்கள் ஆழ்வார் மற்றும் ஆச்சார்யர்கள். இவர்கள் ஆதிசேஷன் போன்ற நித்யசூரிகளின் அவதாரமேயாவர்.
(ஸ்வாமி மணவாள மாமுனிகள் சொரூபத்தில் கூட சட்டை உரித்த பாம்பினைப் போன்று பால் போன்ற நிறத்தில்தான் இருப்பாராம்.)
சுத்த சத்துவ குணத்தோடேயே அவதரித்தவர்கள். இவர்களை, இவர்களின் ஸ்ரீசூக்திகளைப் போற்ற போற்ற
நமக்கு சத்துவ குணம் மேலிடும், தோலுரித்த பாம்பின் பிரகாசம் போன்று.

————-

பாபாத பாபாத பாபாஸ் பாத பாத தபா தபா
தபாதபா பாதபாத பாத பாத தபாதபா –933– (சித்ர பத்ததி )

பாபம் அற்றது -அகார வாச்யனான ஸ்ரீ விஷ்ணுவின் ஸ்ரீ பாதத்திற்கு ஒளி கொடுப்பது -ஜீவர்களுக்கும் ஒளி வழங்குவது –
தன்னை பகவான் இடம் சமர்ப்பிக்குமவர் விஷயத்தில் ரஷை தரும் திருமஞ்சன தீர்த்தம் உடையது
சர்வ லோக ரஷகமாய் இருப்பதும் சர்வ பாபா நாசகமாய் இருப்பதுமான பெருமாள் திருவடிகளுக்கும் கூட ரஷணம் தருவது ஸ்ரீ பாதுகையே –
அது என்னை சர்வ பாபங்களில் இருந்து காத்து அருளிற்று –

ஒரே வார்த்தையை 16 முறை-இது அ ஆ என்கிற உயிர் எழுத்துக்களை கொண்டது , இரண்டு மெய் எழுத்துக்களையும் கொண்டது .

பாதபா , பாபா , அத , அபா , பாதபா , பாத , பா , பாத , பாபாத் , அபாபாத் , ஆ , பாபா , த , பாபா , ஆத , பா , பாத , பா

என்று பிரித்து படிக்கப் பட வேண்டும் , அதன் பொருள் என்னவெனில் ,
மரம் போன்ற தாவரங்களையும் , பிராணிகளையும் , அடைந்திருக்கும் பாபத்தை உணடழிக்கக் கூடிய
அபிஷேக நீரை சொந்தமாக்கிக் கொண்டுள்ளதும் , முறையே நியமிக்கப் பட்டு , பதவிகளில் இருக்கும் தேவர்களை
காக்கின்ற ஸ்ரீமன் நாராயணனின் திருவடிகளை காத்திடுவதுமான பாதுகை ,
பெற்றோர்களை நன்கு பார்த்துக் கொள்வோர் விஷயத்திலும் , நன்கு காப்பாற்றாதவர்கள் விஷயத்திலும் முறையே
பாப புண்ணியத்தை நோக்குவதும் , ஸ்ரீ விஷ்ணுவை அனுபவிக்கின்றவற்கு சரணாகதிக்கு வழி வகுப்பதும் ,
நிந்திக்கும் விரோதிகளை அழிக்கக் கூடிய பெருமாளின் ஒளிகளை காப்பதும் பாதுகையே –என்று பாடுகிறார்-

———–

சரம் அசரம் ச நியந்துஸ் சரணௌ
அந்தம் பரேதரா சௌரே:
சரம் புருஷார்த்த சித்ரௌ சரணாவநி
திசஸி சத்வரேஷு ஸதாம்—950-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அடியார்களைக் காப்பாற்றும் அதே சிந்தனை கொண்டவளாக உள்ளாய்.
அசைகின்றதும், அசையாமல் உள்ளதும் ஆகிய அனைத்தையும் நியமிக்கின்ற ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள்,
உயர்ந்த புருஷார்த்தமான மோக்ஷத்தைப் பற்றிய ஞானத்தை உண்டாக்கி, காக்கவல்லவையாக உள்ளன.
இப்படிபட்ட அவனது திருவடிகளை (இதன் மூலமாக ஸ்ரீரங்கநாதனை) ஸாதுக்களின் வீட்டிற்கே அழைத்து வந்து,
அவர்களின் பூஜை அறையில் நிலையாக நிறுத்தி விடுகிறாய்.
ஆக நீ ஸ்ரீரங்கநாதனை வெகு சுலபமாக அவர்களது இல்லங்களுக்கு அழைத்து வருகிறாய்.

———-

அபி ஜந்மநி பாதுகே பரஸ்மிந்
அநகை: கர்மபி: ஈத்ருசோ பவேயம்
ய இமே விநயேந ரங்க பர்த்து:
ஸமயே த்வாம் பதயோஸ் ஸமர்ப் பயந்தி—-952-

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அந்தந்த காலங்களில் ஸ்ரீரங்கநாதனின் அர்ச்சகர்கள் உன்னை அவனது திருவடிகளில்
மிகவும் அன்புடன் ஸமர்ப்பணம் செய்கிறார்கள். எனது அடுத்த பிறவியில் இவர்கள் போன்று
ஸ்ரீரங்கநாதனின் அர்ச்சகராகப் பிறந்து உனக்கு கைங்கர்யம் செய்வேனோ?

————

காலே ஜந்தூந் கலுஷ கரணே க்ஷிப்ரம் ஆகார யந்த்யா:
கோரம் நாஹம் யம ப்ரிஷதோ கோஷமா கர்ண யேயம்
ஸ்ரீமத் ரங்கேச்வர சரணயோ: அந்தரங்கை: ப்ரயுக்தம்
ஸேவாஹ்வாநாம் ஸபதி ஸ்ருணுயாம் பாதுகா ஸேவக இதி —969-

கலுஷ=கலங்கியிருக்கின்ற – கரணே=இந்திரியங்களுடைய – காலே=செத்துப் போகிற காலத்திலே –
ஜந்துாந்=ஜந்துக்களை (ஜீவன்களை) – க்ஷிப்ரம்=சீக்கிரமாக – ஆகாரயந்த்யா:=அழைக்கிறதாயிருக்கின்ற –
யமபரிஷத:=யமக் கூட்டத்தினுடைய – கோரம்=பயத்தையுண்டுப் பண்ணுவதான – கோஷம்= இரைச்சலை –
அஹம்=நான் – நாகர்ணயேயம்=கேட்கமாலிருக்க வேண்டும். – ஸ்ரீமத்=மஹாலக்ஷ்மியோடு கூடிய –
ரங்கேஸ்வர=ஸ்ரீரங்கநாதனுடைய – சரணயோ:=திருவடிகளுக்கு – அந்தரங்கை:=அந்தரங்கமாய் –
ப்ரயுக்தம்= சொல்லப்படுகின்ற – பாதுகாஸேவகேதி= பாதுகா ஸேவகரே என்று – ஸேவா=ஸேவைக்காக –
ஆஹ்வானம்=பகவத் ஸந்நிதிக்குள் அருளப்பாடிட்டு (என்னை)அழைப்பதை – ஸபதி=சீக்கிரமாக –
அஹம்=நான் – ச்ருணுயாம்=கேட்கவேண்டும்.

———–

ஜ்ஞாந க்ரியா பஜந ஸீம விதூர வ்ருத்தே:
வைதேசி கஸ்ய தத் அவாப்தி க்ருதாம் குணாநாம்
மௌளௌ மமாஸி மது ஸூதந பாதுகே த்வம்
கங்கேவ ஹந்த பதித விதிதைவ பங்கோ:—983-

மது என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஞானயோகம், கர்மயோகம் மற்றும் பக்தியோகம்
ஆகியவற்றின் எல்லைகளுக்கு வெகுதூரத்தில் நான் உள்ளேன். அவற்றைப் பெறுவதற்குரிய குணங்களுக்கும் அப்பால் நான் உள்ளேன்.
இப்படிப்பட்ட என் தலை மீது, முடவன் ஒருவன் கங்கையில் விழுந்தது போன்று, நீயாகவே வந்து அமர்ந்தாய். என்ன வியப்பு!

———

இதி ரங்க துரீண பாதுகே த்வம்
ஸ்துதி லக்ஷ்யேண ஸஹஸ்ரசோ விம்ருஷ்டா
ஸபலம் மம ஜந்ம தாவத் ஏதத்
யதி ஹாசாஸ்யம் அத: பரம் கிம் ஏதத்—-1001–

ஸ்ரீரங்கராஜனின் பாதுகையே! இப்படியாக உன்னைத் துதிப்பது என்ற ஸ்தோத்ரம் ஒன்றைச் சாக்காக
வைத்துக் கொண்டு, என்னால் ஆயிரக்கணக்கில் நீ சிந்திக்கப்பட்டாய்.
இதன் மூலமாக எனது பிறவியானது மிகுந்த ப்ரயோஜனம் மிக்கதாகி விட்டது.
இதற்கு மேல் இந்த உலகத்தில் நான் பெற வேண்டியதும், ப்ரார்த்தனை செய்ய வேண்டியதும் வேறு என்ன உள்ளது?

——–

ஜயதி யதிராஜ ஸூக்தி:
ஜயதி முகுந்தச்ய பாதுகா யுகளீ
ததுபயதநா: த்ரிவேதீம்
அவந்தயயந்த: ஜயந்தி புவி ஸந்த:—-1008–

யதிகளின் தலைவர் என்று போற்றப்படும் எம்பெருமானாரின் ஸ்ரீபாஷ்யம் போன்ற நூல்கள் மிகவும் மேன்மையுடன் விளங்குகின்றன.
ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் மிகவும் மேன்மையுடன் விளங்குகின்றன.
இந்த இரண்டையும் ஒருவர் தனது செல்வமாகக் கொண்டாலே போதுமானது –
அப்படிப்பட்டவர்கள் மூன்று வேதங்களையும் ஸபலமாக்கியபடி வாழ்ந்து மேன்மை அடைகின்றனர்.

ஸ்ரீ யதி ராஜர் என்கிற ஸ்ரீ ராமானுஜர் உடைய திவ்ய ஸூக்திகள் -ஸ்ரீ பாஷ்யம் முதலானவை -சிறப்பாக விளங்குகின்றன –
மோஷ தாதா வாகிற ஸ்ரீ ரங்க நாதனுடைய திருப் பாதுகையினை இவ்வுலகில் விளங்குகிறது –
ஸ்ரீ பாஷ்யகார ஸ்ரீ ஸூக்திகளையும் ஸ்ரீ பாதுகா மூர்த்தியான ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளையும் மட்டுமே தம் தனம்
என்று கொண்டு இருக்கும் சாதுக்கள் த்ரயீ என்ற வேதத்தை வீணாக்காமல் அதை முழு பிரமாணம் ஆக்குகிறவர்கள் –
அவர்கள் இப்புவியில் சிறந்து விளங்குகிறார்கள் –

முதல் ஸ்லோகம் “ஸந்த” என்ற தொடங்கியது.
இந்த ஸ்லோகத்தின் முதல் பதமும் “ஸந்த” என்று முடிவதைக் காண்க.
இந்த ஸ்லோகம் கூறி முடித்தவுடன், மீண்டும் முதல் ஸ்லோகத்தைக் கூறுவது மரபாகும்.

சந்த ஸ்ரீ ரங்க ப்ருத்வீஸ சரண த்ராண சேகரா
ஜயந்தி புவந த்ராண பத பங்கஜ ரேணவ –1-

——————————————————————————–

அயோத்யா காண்டத்தில் நூற்றிப் பன்னிரண்டாவது ஸர்க்கம் உருக்கமான ஒரு காட்சியை நம் முன் காட்டுகிறது.

அதிரோஹார்ய பாதாப்யாம் பாதுகே ஹேமபூஷிதே I
ஏதே ஹி சர்வலோகஸ்ய யோகக்ஷேமம் விதாஸ்யத: II-(நூற்றிப்பன்னிரண்டாவது ஸர்க்கம், 21வது ஸ்லோகம்)

ஆர்ய – ஸ்வாமியே!
ஹேமபூஷிதே – பொன்னால் அலங்கரிக்கப்பெற்ற
பாதுகே – பாதுகைகளில்
பாதாப்யாம் – திருவடிகளால்
அதிரோஹ – ஏறி அருள்வீராக!
ஹி ஏதே – ஏனெனில் இவைகள்
சர்வலோகஸ்ய – எல்லா உலகத்தின்
யோகக்ஷேமம் – யோகக்ஷேமத்தை விதாஸ்யத: – வகிக்கப் போகின்றன

பாதுகா பாதுகா பாதுகா’ என்று சொல்லிப் பாருங்கள், பாதுகாப்பா என்று வரும்.
ஆம்! இறைவனின் பாதுகைகளை நம் சிந்தையில் இருத்துவோம், அவை நம்மை நிச்சயம் காப்பாற்றும்.”

ஸ்தோத்ர காவ்யம் -இது –
திரி ஸானு -கெட்டதையே பேசுபவர் -விஸ்வவஸூ -நல்லதையே பேசுபவர்
புஷபவத் -புஷபவந்தவ் -இரட்டைக்கு -பூ விழுந்த கண் பார்வை தெரியாத என்பான் திரிசாஸூநு
ஸூர்ய சந்த்ரர்களையும் சேர்த்து குறிக்கும் ஒரே வார்த்தை -புஷபவந்தவ்-திங்களும் ஆதித்யனும் போல்
வேங்கடாத்ரி கவி -இப்படி பாடி -இழந்த கண்ணை மீட்க லஷ்மீ சஹஸ்ரம் பாடி கண் பார்வை பெற்றார் –
23-ஸ்லோகம் -பாதுகா சஹஸ்ர மஹிமை சொல்கிறார்
பாதுகையையே பாடி உள்ளார் -தாயே உன்னை பாட முடியாதா –
சாஷாத் ஹயக்ரீவர் தேசிகன் -கவி ஸிம்ஹம் -தார்க்கிக ஸிம்ஹம் –
அவரை ஓப்பிடும் பொழுது ஊமையைப் போன்ற நான் பாடுவதே விஸ் மயம்

———————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் வைபவம் —

April 13, 2021

ஸ்ரீமத் வேதாந்த தேசிக தினசர்யா ஸ்தோத்ரம்
——————————————————————————-

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

———–

இந்த ஸ்தோத்ரம், ஸ்வாமி தேசிகனின் திருக்குமாரரான ஸ்ரீ வரதாரியார் என்கிற
ஸ்ரீ நயினாராசார்யர் அருளியது—23 ச்லோகங்கள்–

ஸ்ரீமல் லக்ஷ்மண யோகீந்த்ர ஸித்தாந்த விஜயத்வஜம் |
விச்வாமித்ர குலோத்பூதம் வரதார்ய மஹம் பஜே ||

——————————–

முதலில் இரண்டு ச்லோகங்களில் ஆச்சார்ய வந்தனம் செய்கிறார்

1. காஞ்சீபுரீ யஸ்ய ஹி ஜந்ம பூமி :விஹாரபூர் வேங்கடபூதரேந்த்ர : |
வாஸஸ்தலீ ரங்கபுரீ தமீட்யம் ஸ்ரீ வேங்கடேசம் குருமாஸ்ரயாம : ||

எழில் மிகு புகழ்க் காஞ்சி எவருக்கு அவதார பூமியோ, மலைகுனிய நின்றானின்
திவ்யதேசமான திருவேங்கடம் , எவருக்கு ”விஹாரஸ்தலமோ ”, பூலோக வைகுண்டம்
என்று போற்றப்படும் திருவரங்கப் பெரியகோயில் க்ஷேத்ரம் எவருக்கு நித்யவாஸமோ ,
அப்படிப்பட்ட ஸ்ரீ வேங்கடநாதன் என்கிற ஆசார்யனைச் சரணமாகப் பற்றுகிறோம்

2.ஸம்பாவநா யஸ்ய ஹி காலகூட : ஸபா புஜங்கீ குணபஸ் தருண்ய : |
ஸ்யாத் ரௌரவம் ராஜக்ருஹம் ச ஜீயாத் சிரம் குருர் வேங்கடநாதநாமா |\

புகழும், பாண்டித்யம் முதலியனவும் ஒன்று சேர்ந்த விமுகரான ஸ்வாமி தேசிகன் ,
பிறர் தன்னைக் கௌரவிப்பதைக் காலகூட விஷமாகவும், ஸம்பாவனை செய்யும்
ஸபையை ஸர்ப்பமாகவும் , யுவதிகளைப் பிணங்களாகவும் , அரசர்களின் ( தனவான்கள் )
மாளிகைகளை ரௌரமென்னும் கொடிய நரகமாகவும், கருதினார்.
இப்படிப்பட்ட ஸ்ரீ வேங்கடநாதன் என்னும் ஆச்சார்யோத்தமர் எப்போதும்
ஸர்வவோத்க்ருஷ்டமாக விளங்கவேண்டும்.

3. ய : ப்ராதரப்யேத்ய ஹரிம் ஸுசீநி த்ரவ்யாண்யுபாதாய சுசி ஸுசி : க்ருதேஜ்ய : |
ஸ்வாத்யாயயுக்தோ நிஸி யோகரூபாம் நித்ராம் ஸமாரோஹதி தம் நதாஸ்ஸ்ம : ||

விடியற்காலையில் நித்ய கர்மாநுஷ்டானங்களைச் செய்து, காலையில்
பகவானைச் சரண் அடைந்து, அபிகமந ஆராதனத்தைச் செய்து, பிறகு, பகவத
ஆராதனத்துக்கு வேண்டியதைச் சேகரித்து, மாத்யாஹ்நாதிகளைப் பண்ணி,
இஜ்யா காலத்தில் பகவதாராதநத்தைச் செய்து, ஸ்வாத்யாய காலத்தில்
வேதாத்யயனம் முதலியவற்றைச் செய்து, இரவு யோகரூபமான நித்ரையைச்
செய்யும் ”பஞ்சகால பராயண”ரான ஸ்ரீ தேசிகனை வணங்குகிறோம்

4. யாமே துரீயே யத்வாக் ரஜன்யா : விஹாய ஸய்யாம் விஹிதாங்க்ரி ஸுத்தி : |
யோத்யாதரேணாஸ்தித யோகசேஷ : தம் வேங்கடேசம் குருமாநமாம : ||

ராத்ரியில் 4வது ஜாமத்தில் , உறக்கத்திலிருந்து எழுந்து ”ஹரிநாம ”சங்கீர்த்தாதிகளைச்
செய்து , படுக்கையிலிருந்து எழுந்திருந்து, கை கால்களைச் சுத்திசெய்துகொண்டு , மிக ஆதரத்துடன்
யோகத்தை அனுஷ்டிக்கும் குருவான ஸ்ரீ வேங்கடநாதனை வணங்குகிறோம்

5. ததோநுஸந்தாய ததிம் குரூணாம் தம் சாபி தேவம் ரமணம் ரமாயா : |
தத்காலயோக்யாநி ததாவிதாநி ஹ்ருத்யாநி பத்யாநி படந்தமீடே ||

பின்பு, குருபரம்பரையையும் ஸ்ரீமந் நாராயணனையும் , ப்ராதக் காலத்தில்
அநுஸந்திப்பதற்கு யோக்யமான / மனோரஞ்சிதமான , ச்லோகங்களையும்
பாசுரங்களையும் அநுஸந்திப்பவரைச் சேவிக்கிறேன்

6. உத்தாய கேஹாதுபகம்ய ரம்யாம் கவேரகந்யாம் கலிதாங்க்ரி ஸுத்தி : |
ததோ விஸோத்யாப்ஸு நிமஜ்ய ஸுப்ரம் வஸ்த்ரம் வஸாநம் தமஹம் ஸ்மராமி ||

(இப்படி அநுஸந்தித்த ) பிறகு தனது திருமாளிகையிலிருந்து புறப்பட்டு,
ரம்யமான காவேரி தீரத்தை அடைந்து நதியில் சாஸ்த்ரோக்தமாக நீராடி,
வெள்ளை வேஷ்டியைத் தரித்துக்கொள்ளும் ஸ்வாமியை ஸ்மரிக்கிறேன்

7. த்ருத்வோர்தவ புண்ட்ராணி ஸரோஜபீஜ மாலாம வந்த்யாம் ஸமுபாஸ்ய ஸந்த்யாம் |
ஸாவித்ரமீஸம் ஸவிது : புரஸ்தாத் ஸ்துவந்தமேகாக்ரதியா ஸ்துவே தம் ||

பிறகு, த்வாதஸோர்த்வ புண்ட்ரங்களைத் தரித்துக்கொண்டு,( பன்னிரு திருமண் )
தோஷமில்லாத தாமரை மணி மாலையை அணிந்து, ஸூர்யனைப் பார்த்தவாறு
அர்க்ய ப்ரதாநாதிகளைப் பண்ணி ஏகாக்ர சித்தராய் காயத்ரி ப்ரதிபாத்யனான
ஸூர்ய மண்டலாந்தர்வர்த்தியான நாராயணனைத் த்யானம் செய்யும்
ஸ்வாமியை ஸ்தோத்ரம் செய்கிறேன்

8. ததஸ் ஸுபூர்வாஹ்நிக நித்ய கர்ம நிர்வர்த்ய நித்யேஷ்ட நிவ்ருத்தி மார்க : |
ஸ்ரீரங்கதாமோபஸமேத்ய ஸேவா க்ரமேண ரங்கேஸ்வர பாதமூலம் |\

காலை வேளையில் செய்யும் நித்ய கர்மாநுஷ்டானங்களைச் செய்து, ஸ்ரீரங்கநாதன்
ஸந்நிதிக்கு எழுந்தருளி, பலிபீடம் அருகில் குரு பரம்பரா அநுஸந்தான ப்ரணாமங்களைப்
பண்ணி, விஷ்வக்ஸேநரை ஸேவித்து, த்வாரபாலகர்களின் அநுமதியுடன்
பெரிய பெருமாள் அருகில் சென்று, அவன் திருவடிகளைச் சரணமாகப் பற்றும்
ஆசார்யனை ஸேவிக்கிறேன்

9. ப்ராபோதிகீபி :ப்ரதிபோத்ய கீர்பி : ப்ரஸாத்ய தம் கத்யமுகை ; ப்ரபந்தை : |
ஆஸாஸ்ய தந்மங்களமாப்தவாக்யை : ஆபாதசூடம் கலயந்த மீடே ||

இப்போது, ஸுப்ரபாதம் ,திருப்பள்ளியெழுச்சி இவைகளைச் சொல்லி அரங்கனைத்
மோனத்துயில் ஏழாகி செய்து, ஸ்ரீ உடையவர் அருளிய கத்யங்களை ஸேவித்து,
அந்த எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடி, அவனைப் பாதாதி கேசம் அனுபவித்து
ஆனந்தத்தில் மூழ்கும் ஆசார்யனை ஆச்ரயிக்கிறேன்

10. தீர்த்தப்ரஸாதாதிகமத்ர லப்தவா விக்ஞாப்ய தேவாய ததோ விஸ்ருஷ்ட : |
ஸநைருபேத்யா ஸ்ரமகல்பமாதமாத்ம க்ருஹம் ஸுகாஸீநமஹம் ஸ்மராமி ||

பின்பு, தீர்த்தம், சடாரி இவைகளைப் பெற்று, ரங்கநாதனிடம் விண்ணப்பித்து,
அவன் நியமனம் பெற்று, பின்புறமாகவே மெள்ள , கர்ப்ப க்ருஹத்தினின்று
வெளியே வந்து, மஹரிஷிகளின் ஆஸ்ரமத்துக்கு ஒப்பான , தன்னுடைய
திருமாளிகைக்கு வந்து ,ஸுகமாக வீற்றிருக்கும் ஆசார்யனை ஸ்மரிக்கிறேன்

11. வ்யாக்யானஸாலாமுபகம்ய சாதோ சிஷ்யாநந்யாந் ஸ்ரவணாபிமுக்கியாந் |
ஸங்க்ராஹயந்தம் ஸகலாநி தந்த்ராணி அதந்த்ரிதம் தம் குருமாஸ்ரயேஹம் |\

பிறகு, காலக்ஷேபம் ஸாதிக்கும் மண்டபத்துக்கு எழுந்தருளி , இதர விஷயங்களில்
பற்று இல்லாமல், வேதாந்த விஷயங்களை ஸ்ரவணம் பண்ண வந்திருக்கும்
சிஷ்யர்களுக்கு, ஸகல சாஸ்த்ரங்களையும் உபதேசிக்கும் ஆசார்யனை ஸேவிக்கிறேன்

——————-

நிஸ்ரேயஸம் யேபிலஷந்தி தஸ்ய
மூலம் க்ருபாம் சாபி ரமாஸகஸ்ய|
தயாம் யதீந்த்ரஸ்ய ஹி தைரவஸ்யம்
கார்யா ஹி பக்தி: கவிவாதிஸிம்ஹே||

மேற்கண்ட அத்யத்புதமான ஸ்லோகம், ஸ்ரீ குமார வரதாசார்யரின் ஸத்சிஷ்யரான
ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமி அருளிச்செய்த ‘ஸப்ததி ரத்ந மாலிகா’ என்கிற ஸ்வாமி
ஸ்ரீ தேசிகன் விஷயமான ஸ்தோத்ர க்ரந்தத்திலுள்ளது.
இதன் பொருளாவது, “பரம புருஷார்த்தமான மோக்ஷத்தையும், மோக்ஷ ஹேதுவான பகவத் க்ருபையையும்,
ஸ்ரீ பாஷ்யகாரரின் அனுக்ரஹத்தையும் அபேக்ஷிப்பவர்கள், ஸ்வாமி ஸ்ரீதேசிகனிடம் பக்தி செய்தாக வேண்டும்” என்பதேயாம்.

கலியுக வரதனான திருவேங்கடமுடையானும், போற்றருஞ்சீலத்திராமாநுசனும் ஸ்ரீதூப்புல் திருவேங்கடமுடையானாகத்
திருவவதாரம் செய்தருளி நம் தர்ஸனத்தை போஷித்தருளினர். திருவரங்கத்தில், துருஷ்கர்களால் உபத்ரவம் வந்தபோது,
ஸ்ரீ ஸுதர்சன பட்டர் அருளிய ‘ச்ருதப்ராகாசிகா’ என்ற ஏற்றமிகு ஸ்ரீபாஷ்ய வ்யாக்யானத்தை ரக்ஷித்தும்,
தகுந்த அதிகாரிகள் மூலம் பரவர்த்தித்தும் ப்ரவர்த்திப்பித்தும் அருளினர்.

ஆகையால் ஸ்ரீதேசிகன் ஸாக்ஷாத் திருவேங்கடமுடையானுடையவும் ஸ்ரீபாஷ்யகாரருடையவும் அபராவதாரம் என்பது ஸ்பஷ்டம்.

———-

ஸ்ரீமத் வேதாந்த தேசிக வைபவ ப்ரகாசிகா !
” ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன , ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன ” என்று கோஷித்த பரமாசார்யனுக்கு
159 வது ஸ்லோகத்தில் ” ஜயதி… ஜயதி ….ஜயதி… ஜயதி ” என்று நான்கு ஜயதி
அனுபவிப்பவர்கள், ஆசார்ய அனுக்ரஹம் பெற்றவர்கள்
மொத்தம் 165 ஸ்லோகங்கள் —–கூட்டினால் வருவது 3
ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்தை அனுக்ரஹித்தவருக்கு
தத்வ த்ரயத்தை விவரித்தவருக்கு
மூன்றின் பெருக்கமாக 165 ஸ்லோகங்கள்.
ஸ்ரீ குமார வரதார்யசார்ய ஸ்வாமி
“குருவே தைவதாய ச ” என்று, தமக்குக் குருவான ஸ்வாமி தேசிகனே தனக்குத் ( நமக்குத் )
தெய்வம் என்று அருளி, அந்தத் தெய்வம் சமீபத்தில் இருக்க
ஸ்ரீமான் வேங்கட நாதார்ய ; கவிதார்கிக கேஸரி
வேதாந்தா சார்ய வர்யோமே ஸந்நி தத்தாம் ஸதா ஹ்ருதி–என்று ப்ரார்த்தித் தார்

அந்தப் பரமாசார்யானோ
பிராட்டி விஷயமாக ஸ்ரீ ஸ்துதியிலும்
ஸ்ரீ பேரருளாளன் விஷயமாக , ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்திலும்
முறையே
“ஸந்நி தத்தாம் ஸதாமே ” என்றும்,
” தேவதா ஸந்நி தத்தாம் ” என்றும்
திவ்ய தம்பதிகளை சமீபத்தில் இருக்கப் ப்ரார்த்தித்தார் ;
ஸ்வாமி தேசிகனுக்கு மிகப் ப்ரியமான
ஸ்ரீ பெருந்தேவித் தாயாரும், ஸ்ரீ தேவப் பெருமாளும் என்றும் இப்படியே —-அர்ச்சாவதாரத்திலும் ஸ்வாமி
தேசிகனின் சமீபத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள்

அப்படிப்பட்ட பரமாசார்யனை ” ஸந்நி தத்தாம் ஸதா ஹ்ருதி ” என்று நாம் ப்ரார்த்தித்தால் ,
ஸ்வாமி தேசிகனை விட்டுப் பிரியாத திவ்ய தம்பதியர்
ஆசார்யனுடன் கூடவே நம்முடைய சமீபத்தில் நித்ய வாஸம் செய்வர் என்பது
உள்ளங்கை நெல்லிக் கனியாகும்

———

நமது தூப்புல் குலமணியும் ஸாக்ஷாத் திருமலைமால் அவதாரமும் திருமணி அம்சமும் இராமானுஜமுனியின் அபராவதாரமும் ஆவார்.
அவர் ஆழ்வார்கள் மீது வைத்திருக்கும் பற்றை அளவிடமுடியாது,
வேறு எந்த ஆசார்யனும் தன்னை “சந்தமிகு தமிழ் மறையோன்” என்று பறைசாற்றிக் கொண்டதில்லை.
அவர் காலத்தில் அத்வைத சித்தாந்தம் தலை ஓங்கி நிற்க அதை நிஷ்கர்ஷித்து உண்மைப் பொருளை நிலை நாட்ட
இவர்களுக்கு ஆழ்வார் ஸ்ரீஸூத்திகள் துணைபுரிந்தன.
அதையும் நம் ஸ்வாமி “தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே” என்று சாதித்தார்.
ஆளவந்தார் இராமானுஜமுனி காலம் தொடங்கி தேசிகறது காலம் ஏன் இன்றைய அளவிலும் ஆங்காங்கே பூர்வ பக்ஷம் தலை ஓங்குகிறது
அப்பொழுது அவர்கள் வேத வேதாந்தத்தைக் கொண்டே வாதம் செய்கிறார்கள்.
நமது ஆசார்யர்களோ ஆழ்வார்களின் திவ்யபிரபந்தங்களைக்கொண்டு உண்மைப் பொருளை உணர்த்துகின்றனர்.
இது நமது சித்தாந்துக்கே உரிய சிறப்பு.

—————

“மாநத்வம் பகவன்மதஸ்ய மஹதபும்ஸஸ்ததா நிர்ணயஃ
திஸ்ரஸ்ஸித்தய ஆத்ம ஸமவ்தகிலாதீசான தத்வாச்ரயஃ
கீதார்தஸ்ய ச ஸங்க்ரஸ்துதியுகம் ஸ்ரீஸ்ரீசயோரித்யமூன்
யத்க்ரந்தாநனஸந்ததே யதிபதிஸ்தம் யாமுநேயம் நுமஃ.”–ஸ்ரீ தேசிகன் ஸ்ரீ ஆளவந்தாரைப் பற்றி அருளிச் செய்த ஸ்லோகம்

ஆகமப்ராமாண்யம்,புருஷநி்ர்ணயம், ஸித்தித்ரயம்,கீதார்தஸங்க்ரஹம், சதுஸ்ச்லோகீ, ஸ்தோத்ரரத்நம் என்பதான
க்ரந்தங்கள் எவரால் அனுக்ரஹிக்கப்பட்டதாக யதிராஜர் அனுஸநித்தாரோ அவரை வணங்குகிறேன் என ஸாதித்தார்

————

தேவஃ ஸ்ரீமான் ஸ்வஸித்தேஃ கரணமிதி வதந் ஏகமர்த்ம் ஸஹஸ்ரே
ஸேவ்யத்வாதீந் தசார்த்தாந் ப்ருதகிஹ சதகைர்வக்தி தத்ஸ்தாபநார்த்தாந்.
ஐகைகச்யாத்பரத்வாதிஷு தசககுணேஷ்வாயதந்தே ததா தே
தத்தத்காதாகுணாநாமநுவிதததி தத்பங்க்தயஃ பங்க்திஸங்க்யாஃ–த்ரமிடோபநிஷத்தாத்பர்யரத்னாவளியில் ந்யாயதந்த்ரம்

எம்பெருமானை அடைவதில் எம்பெருமானே ஸித்தோபாயம் என்பதான ஸாத்யத்தை ஸாதிக்க ஸேவ்யத்வாதி பத்து ப்ரதானமான ஹேதுக்கள் –
பத்துதசகங்களை கொண்ட நூறுபாசுரங்களான முதற்பத்து இரண்டாம் பத்து என்பதாக பத்து பத்துகள் உள்ளன.
இவற்றில் ஸேவ்யத்வம் என்பதான ப்ரதான ஹேதுவை ஸாதிக்க பரத்வம் முதலாக பத்து ஹேதுக்கள் முதல் பத்து தசகங்களின் அர்தம்.
பரத்வத்தை ஸாதிக்க முதல் பத்தில் முதல் திருவாய்மொழியில் பத்து ஹேதுக்கள்.
ஆக, 10*10*10=1000.ஆக 1000 பாசுரம்-1000 ஹேதுக்கள், ஆயிரம் குணங்கள்.

ஸேவ்யத்வாத் போக்யபாவாத் சுபதநுவிபவாத் ஸர்வபோக்யாதிகத்வாத்
ச்ரேயஸதத்ஹேதுதாநாத் ச்ரிதவிவசதயா ஸ்வாச்ரிதாநிஷ்டஹ்ருத்வாத்.
பக்தச்ந்தாநுவ்ருத்தேஃ நிருபதிஸுஹ்ருத்பாவதஃ ஸத்பதவ்யாம்
ஸாஹாய்யாச்ச ஸ்வஸித்தேஃ ஸ்வயமிஹ கரணம் ஸ்ரீதரஃ ப்ரத்யபாதி—அனுமான ப்ரயோகத்தில் ஹேதுவானது பஞ்சமீ விபக்தியிலாகும்,
ஹேதௌ த்ருதீயா என்கிற வ்யாகரணத்தால் ஹேதுவின் அர்த்தத்தில் மூன்றாவது வேற்றுமையும் வரலாம்.
இங்கு அனுமான ப்ரயோகமாவது.ஸ்ரீதரஃ ,ஸ்வஸித்தேஃ கரணம், ஸேவ்யத்வாத் என்பதாக .
ஸ்ரீதரஃ பக்ஷம்,- ஸாத்யமான வஸ்துவின் ஆதாரம், ஸ்வஸித்தேஃ கரணம்,ஸாத்யம்–அவனை அடைவதில் அவனே உபாயம் என ஸாத்யம்,
1,ஸேவ்யத்வாத்
2,போக்யபாவாத்,
3சுபதநுவிபவாத்,
4,ஸர்வபோக்யாதிபாவாத்,
5ச்ரேயஸ்தத்ஹேதுதாநாத்,
6.ச்ரிதவிவசதயா,
7ஸ்வாச்ரிதாநிஸ்டஹ்ருத்வாத்,
8.பக்தச்சந்தாநுவ்ருத்தேஃ.
9,நிரவதிகஸுஹ்ருத்பாவதஃ
10,ஸத்பதவ்யாம் ஸஹாயாத் என்பதாக ப்ரதானமாக 10 ஹேதுக்கள்.
அனுமான ப்ரயோகத்தில் ஹேதுவாக கூறப்படுவது பக்ஷத்தில் இருக்கவேணும்.
அப்படி ஹேது பக்ஷத்தில் இல்லாமல் போனால் ஸ்ரூபாஸித்தி என்பதான தோஷம் வரும்.
ஆக ஹேதுவானது பக்ஷத்தில் உள்ளது என்பதை ஸாதிக்கவேணுமானால் அதையே ஸாத்யமாக்கி வேறு ஹேதுவினால் ஸாதிக்கவேணும்,
அதாவது, ஸ்ரீதரஃ ஸேவ்யஃ, பரத்வாத்.என இங்கு ஸ்ரீதரஃ என்பதே பக்ஷம், முன்பு ஹேதுவாக கூறப்பட்டது இதில் ஸாத்யம்,
அதாவது ஸேவ்யஃ என்பது ஸாத்யம், இதை ஸாதிக்கும் ஹேதுவானது பரத்வம்,
ஆக யாதொருவன் பரனோ அவன் ஸேவ்யன் என்பதாக வ்யாப்தி.
இங்கு பரத்வம் என்பதான ஹேது பக்ஷத்தில் உண்டு என ஸாதிக்க பத்து பாசுரங்களான பத்து ஹேதுக்கள்,
ஆக பத்து பத்து பாசுரங்களால் பரத்வாதிகளை ஸாதி்க்க வேணும்,
பரத்வாதி பத்து ஹேதுக்களால் ஸேவ்யத்வத்தை ஸாதிக்கவேணும்,
ஸேவ்யத்வாதி பத்து ஹேதுக்களால் எம்பெருமான் ஸித்தோபாயம் என ஸாதிப்பதால் இங்கு ந்யாயதந்த்ரத்தில் கூறப்பட்ட
அனுமான ப்ரயோகம் செய்வதில் ஸ்வாமி தேசிகன் ஸ்வதந்ரரான படியால் ஸர்வதந்தந்த்ர ஸ்வதந்த்ரரும் ஸ்வாமியே

——————-

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நயினாராசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம்–ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் தொகுத்து -அளித்தவை –ஸ்ரீ குருபரம்பரா ஸாரம் ”–

April 12, 2021

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

விகாஹே நிகமாந்தார்யம் ,விஷ்ணுபாத ஸமுத்பவாம் |
ரஹஸ்யத்ரய ஸாராக்யாம் த்ரிஸ்த்ரோதரஸம் அகல்மஷாம் ||

அவிஜ்ஞாதம் விஜாநதாம் விஜ்ஞாதம் அவிஜாநதாம் |
ரஹஸ்யத்ரய ஸாராக்யம் பரம் ப்ரஹ்மாஸ்து மே ஹ்ருதி ||

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்று சொன்ன பழமொழியில் —-ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு .

———–

ஸ்ரீ குருபரம்பரா ஸாரம் ”

* குருப்யஸ்தத்குருப்யஸ்ய நமோவாக மதீமகே |
வ்ருணீமகே ச தத்ராத்யௌ தம்பதீ ஜகதாம் பதீ ||

அர்த்தம் —— அடியோங்களுடைய ஆசார்யன் ,அந்த ஆசார்யனின் ஆசார்யர்கள்—-
இவர்களுக்காக, அடிக்கடி ”நம ” என்று சொல்கிறோம்.
உலகுக்கெல்லாம் அதிபதியான ஸ்ரீமந் நாராயணன், ஸ்ரீ மஹாலக்ஷ்மி
திவ்ய தம்பதிகளை, அடியோங்கள் ,ப்ரார்த்திக்கிறோம்

* பொய்கைமுனி பூதத்தார் பேயாழ்வார் தண்
பொருநல் வரும் குருகேசன் விட்டுசித்தன்
துய்ய குலசேகரன் நம் பாணநாதன்
தொண்டரடிப்பொடி மழிசை வந்த சோதி
வையமெலாம் மறைவிளங்க வாள்வேலேந்தும்
மங்கையர் கோன் என்று இவர்கள் மகிழ்ந்து பாடும்
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித்
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே– ——————அதிகார ஸங்க்ரஹம்——-

அர்த்தம்– பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், மிக்க குளிர்ச்சியான
தாமிரவருணி நதிக்கரையில் அவதரித்த நம்மாழ்வார் (குருகேசன் )
விஷ்ணுசித்தர் என்கிற பெரியாழ்வார், தூய உள்ளமுடைய
குலசேகர ஆழ்வார், நம்முடைய திருப்பாணாழ்வார் , தொண்டரடிப்பொடி ஆழ்வார் ,
திருமழிசையில் வந்து அவதரித்த, திருமழிசைப் பிரான், உலகம் எங்கும்
வேதங்களின் ஒலி ,சப்தம் விளங்க—வாள் ஆயுதமும், வில் ஆயுதமும்
ஏந்திய திருமங்கை மன்னன் –ஆகிய ஆழ்வார்கள் மகிழ்ந்து பாடிய (அருளிய )
இனிமையான பாசுரங்களை நாம் நன்கு தெளிந்து ஓதி, அத்யயனம் செய்து,
எளிதில் பொருள் தெரிந்து கொள்ள இயலாத வேதங்கள், உபநிஷத்துக்கள் –
இவைகளின் உண்மையான பொருள்களைத் தெரியாத இடங்களில், தெளிந்து(குழப்பமே இல்லாமல், தெளிவாக ) அறிந்தோம்

செய்ய தமிழ்மாலைகள்
1.பொய்கை ஆழ்வார்—–முதல் திருவந்தாதி ——————————–100 பாசுரங்கள்
2.பூதத்தாழ்வார் ——–2ம் திருவந்தாதி——————-————————–100 பாசுரங்கள்
3. பேயாழ்வார் ———-3ம் திருவந்தாதி ———————————————100 பாசுரங்கள்
4. ஸ்ரீ நம்மாழ்வார் —-திருவிருத்தம்–ருக் வேத ஸாரம் —————– 100 பாசுரங்கள்
—-திருவாசிரியம் –யஜுர் வேத ஸாரம் ———- 7 பாசுரங்கள்
—பெரிய திருவந்தாதி –அதர்வண வேத ஸாரம்– 87 பாசுரங்கள்
—திருவாய்மொழி——ஸாமவேத ஸாரம் ———- 1102 பாசுரங்கள்
5. பெரியாழ்வார் —-பெரியாழ்வார் திருமொழி —————————– 473 பாசுரங்கள்
6. குலசேகரப் பெருமாள்—பெருமாள் திருமொழி ————————– 105 பாசுரங்கள்
7. திருப்பாணாழ்வார் ——அமலனாதிபிரான் ——————————— 10 பாசுரங்கள்
8. தொண்டரடிப் பொடி ஆழ்வார் ————திருமாலை —————————45 பாசுரங்கள்
———–திருப்பள்ளியெழுச்சி ——— 10 பாசுரங்கள்
9. திருமழிசை ஆழ்வார் ——————நான்முகன் திருவந்தாதி ———- 96 பாசுரங்கள்
————திருச்சந்த விருத்தம்———————— 120 பாசுரங்கள்
10. திருமங்கை மன்னன் ——————பெரிய திருமொழி ———————-1084 பாசுரங்கள்
——- திருக்குறுந்தாண்டகம் ———————- 20 பாசுரங்கள்
————திருநெடுந்தாண்டகம் ————————- 30 பாசுரங்கள்
—————திருவெழுகூற்றிருக்கை ————– 1 பாசுரம்
————–சிறிய திருமடல் —————————– 40 பாசுரங்கள்
————–பெரிய திருமடல்———————-——– 78 பாசுரங்கள்
ஆக ———————————————————————————– 3,708 பாசுரங்கள் இந்தச் செய்யத் தமிழ் மாலைகள் 3708 பாசுரங்களை,
அர்த்தங்கள் நன்கு புரியும்படி பாராயணம் (படித்து/சொல்லி ) செய்து, வேதங்களும் ,உபநிஷத்துக்களும் சொல்லும்
கடினமான அர்த்தங்களை ,நன்கு தெளிந்தோம் —என்கிறார் ,ஸ்வாமி தேசிகன்

* இன்பத்தில் இறைஞ்சுதலில் இசையும் பேற்றில்
இகழாத பல்லுறவில் இராகமாற்றில் தன்பற்றில் வினைவிலக்கில் தகவோக்கத்தில்
தத்துவத்தை உணர்த்துதலில் தன்மையாக்கில் அன்பர்க்கே அவதரிக்குமாயனிற்க
அருமறைகள் தமிழ்ச்செய்தான் தாளே கொண்டு துன்பற்ற மதுரகவி தோன்றக்காட்டும்
தொல்வழியே நல்வழிகள் துணிவார்கட்கே .

அர்த்தம்—- ஆயன்—-அன்பர்க்கே அவதரிக்கும் ஆயன் —பக்தர்களுக்காகவே அவதாரம் செய்பவன்
கண்ணன் , நிற்க—–ஸ்ரீ க்ருஷ்ணன் தயாராக இருக்க —– எதற்கு—-? தனது பக்தர்கள்ளுக்கு ஆனந்தரூபமான அனுபவத்தைக்கொடுக்க
சரணம் என்று இறைஞ்சுபவரைக் காக்க புருஷார்த்தத்தை உணர்த்த இகழ்ச்சியே இல்லாத பலவித ஸம்பந்தத்தை உணர்த்த ,
உலக விஷயங்களில் வைத்துள்ள பற்றுதலை–அதாவது, தகாத விஷயங்களில் பற்றை அழிக்க, தன் விஷயத்தில் பற்றுதலை உண்டாக்க
பாபங்களை ஒழிக்க கருணையை வெளிப்படுத்த. தத்துவ விளக்கங்களைச் சொல்ல
தன்னுடைய சுபாவத்தை அருள —ஆகியஇந்தப் 10 விஷயங்களுக்காகத் தயாராக இருந்தான்.
ஆனாலும், அவரை ஏறெடுத்தும் பாராமல், குற்றமில்லாக் கவியான மதுரகவி ஆழ்வார் , அறிவதற்கு மிகக் கடினமான
வேதங்களின் பொருளைத் தமிழில் அருளிய ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவடிகளையே சரணமாகப் பற்றினார்.
இவர் துன்பற்ற மதுரகவி (குற்றமில்லா மதுரகவி )
இவருக்குத் தோன்றிய வழி— இதுவே தொல்வழி —தொன்மையான வழி/ பழமையான வழி — என்றும்,
நல்வழி–ஸம்ஸார பந்தத்திலிருந்து வெளியே வர மிக நல்ல வழி என்றும் நமக்கு காண்பித்தார் .
யாருக்கு—? எது தொன்மையான வழி என்று துணிந்து வருவார்க்கும், ஸம்ஸாரம் என்கிற காட்டிலிருந்து
விடுதலை பெறத் துணிந்தவர்கட்கும் நாயகன் கிருஷ்ணன் ,அருளுவதற்குத் தயாராக இருந்தாலும்,
மதுரகவிகள் நம்மாழ்வாரான ஆசார்யன் திருவடிகளைச் சரணம் என்று வந்து அடைந்தார்– இதை அனுஷ்டித்து நமக்கு காண்பித்தார்.
மதுரகவி ஆழ்வார் அருளியது—கண்ணிநுண் சிறுத்தாம்பு–10 பாசுரங்கள். இந்தப் 10 பாசுரங்களின் பொருளை,
இந்த ஒரே பாசுரத்தில் ஸ்வாமி தேசிகன் சொல்கிறார். இப்படிப் 10 விஷயங்களாலே ஸ்ரீ நம்மாழ்வார் , பகவானைச் சரணடைந்தார்.
மதுரகவிகளோ, ஆசார்யனை—ஸ்ரீ நம்மாழ்வாரைச் சரணடைந்தார். மோக்ஷத்துக்கு உபாயம் ஆசார்யனே —ஆசார்ய பரம்பரையை அநுசந்திக்க வேணும்

பாபிஷ்ட்ட : க்ஷத்ரபந்துச்ச புண்டரீகச்ச புண்யக்ருத் | ஆசார்யவத்தயா முக்தெள தஸ்மாத் ஆசார்யைவான் பவேத் ||
என்று ஆசார்யவத்தையே ஸர்வருக்கும் மோக்ஷ காரணமென்று அறுதியிட்டார்கள் .
முமுக்ஷுவுக்கு ஆசார்யவம்சம் பகவானானளவுஞ் செல்ல அநுசந்திக்க வேண்டுமென்று ஓதப்பட்டது.

வ்யாக்யானம் :—–
ஸ்ம்ருதி சொல்கிறது—பாபிஷ்ட்ட : க்ஷத்ரபந்துச்ச புண்டரீகச்ச புண்யக்ருத் |
ஆசார்யவத்தயா முக்தெள தஸ்மாத் ஆசார்யைவான் பவேத் ||
மிகவும் பாபியான க்ஷத்ரபந்து, மிகவும் புண்ணியனான புண்டரீகன் இருவருடைய சரிதத்தை மேற்கோள் காட்டி,
அவர்கள் இருவருமே ஆசார்யனின் அநுக்ரஹத்தால்தான் மோக்ஷம் அடைந்தார்கள் என்று ஸ்ம்ருதி சொல்கிறது
க்ஷத்ர பந்து சரிதம் :—- ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் சொல்லப்படுகிறது ——–
க்ஷத்ரபந்து ஒரு அரசன்–எப்போதும் பாபச் செயல்களையே செய்துவந்தான்.
அதனால் ராஜ்யத்தைவிட்டு விலக்கி வைக்கப்பட்டதால் காட்டில் வாழ்ந்து வந்தான்.
பிறரைத் துன்புறுத்தி ,ஜீவ ஹிம்ஸை செய்வதே வழக்கமாக இருந்தது. ஒருநாள், நட்ட நடுப்பகல் உச்சி வெய்யிலில்,
வழிதவறி வந்த முனிவரைப் பார்த்து, இரங்கினான். தண்ணீர் தாகத்தால் தவித்த அவர், தண்ணீர் அருந்த அருகில் உள்ள
குளத்தில் இறங்கும்போது அதில் விழுந்துவிட, க்ஷத்ரபந்து அவரைக்காப்பாற்றி,
அவரது பசிக்குத் தாமரைக் கிழங்குகளைக் கொடுத்து, உபசரித்தான். முனிவர் , அவனது வ்ருத்தாந்தத்தைக் கேட்க,
அவன் தனது பாப கார்யங்களை எல்லாம் சொல்லித் திருந்தவும் இயலாத நிலையில் இருப்பதாகச் சொல்ல,
அந்த முனிவர், ”கோவிந்தா, கோவிந்தா” என்றாவது சொல்லிக்கொண்டிரு என்று புத்திமதி சொன்னார்.
க்ஷத்ரபந்துவும், அப்படியே சொல்லக் சொல்ல, பாபச் செயல்களை ஒழித்து, மோக்ஷத்துக்கான உபாயத்தைச் செய்து மோக்ஷம் அடைந்தான்.
உபதேச பரம்பரையில் உள்ளது——-
க்ஷத்ரபந்து ஒரு கெட்ட அரசன். கெட்ட நடத்தை உடையவன். உறவினர்கள்,அரசனைக் காட்டில் தள்ளி விட்டார்கள்.
அங்கும் கெட்ட வழியில் முனிவர்களைத் துன்புறுத்தினான். ஒரு நாள், அந்த வழியில் நாரதர் வந்தார்.அவரைத் துன்புறுத்தத் தொடங்கினான்.
அவர், ”ஹே —அரசனே–உன்குடும்பத்தாரைக் காப்பாற்ற, நிறைய பாபச் செயல்களை செய்கிறாய் ;
இதில் ஒரு பங்கையாவது உன் குடும்பத்தார் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்வார்களா — என்று கேட்டு வா ” என்று சொல்லி அனுப்பினார்.
நாரதரின் தர்சனத்தால் ,சிறிதளவு ஞானம் உண்டான க்ஷத்ரபந்து, அப்படியே செய்கிறேன் என்று சொல்லிச் சென்றான்.
திரும்பி வந்த அரசன், ”எல்லோரும் மறுக்கிறார்கள்; நிறையப் பாபங்களைச் செய்திருக்கிறேன்; என்னைக் காத்தருள்க —என்று நாரதரை வேண்ட,
அவர், அவனுக்கு மோக்ஷ உபாயங்களை உபதேசித்து, அவன் மோக்ஷம் அடையுமாறு செய்தார்.

புண்டரீகனின் சரிதம் :— ஸ்ரீ பாத்மோத்தர புராணம் சொல்கிறது—— இவன் ப்ராம்மணன் —பெரிய செல்வந்தன். வேதாத்யானம் செய்தவன்.
பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்தவன். புண்ய தீர்த்தங்களில் நீராடியவன். பக்தி யோகத்தில் இழிந்தும்,
பகவானின் அருள் கிட்டவில்லை.ஒரு சமயம் நாரதரைத் தரிசிக்க, அவர் அவனுக்கு அஷ்டாக்ஷர மந்த்ரத்தை உபதேசித்து, நல்வழிகாட்ட,
இந்த பிராம்மணன் , அஷ்டாக்ஷர மந்த்ர ஜபத்தால், பகவானின் அருளை பெற்று மோக்ஷம் அடைந்தான்.இப்படியாக,
ஆசார்யன் அருளினால்தான் மோக்ஷம் சித்திக்கும் என்று தெளிந்தது.மோக்ஷம் அடையத் தீராத ஆசை உடையவன்,
தனது ஆசார்ய பரம்பரையை ,பகவான் வரையிலும் சொல்ல வேண்டும்.

பகவான் ஸ்ரீமந் நாராயணனே முதல் ஆசார்யன்
தம் இமம் ஸர்வஸம்பன்னம் ஆசார்யை பிதரம் குரும் என்றும்,
மம அபி அகில லோகாநாம் குருர் நாராயணோ குரு : என்றும் ,
த்வமேவ பந்துச்ச குரும்த்வமேவ என்றும், குருரஸி கதிச்ச ஸி ஜகதாம் என்றும் , சொல்லுகிறபடியே
ஸர்வலோகத்துக்கும் பரமாசார்யனான ஸர்வேச்வரன் —-
1. ப்ரஹ்மாவுக்கு அடியிலே வேதங்களைக் கொடுத்தும் அவற்றுக்கு அபகாரம் பிறந்தபோது மீட்டுக் கொடுத்தும் இவன்முகமாக சாஸ்த்ரங்களை ப்ரவர்த்திப்பித்தும்
2. இவன் புத்ரர்களான ஸநத்குமாராதிகளை ,ஸ்வபமாகதவிஜ்ஞானா நிவ்ருத்திம் தர்மமாஸ்திதா : என்னும்படி பண்ணி ,
அவர்கள் முகங்களாலே ஹிதப்ரவர்த்தனம் பண்ணுவித்தும் ,
3. இப்படியே மற்றும் நாரத பராசர சுக சௌனகாதிகளான பல மகர்ஷிகளையிட்டு அத்யாத்ம ஸம்ப்ரதாயம் குலையாதபடி நடத்தியும் ,
4.க்ருஷ்ணத்வைபாயனம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் , கோ ஹ்மன்யோ பூமி மைத்ரேய மகாபாரத க்ருதவேத் ? என்றும்,
மஹஷை : கீர்த்தனாத் தஸ்ய பீஷ்ம : ப்ராஞ்ஜ்ஜலி அப்ரவீத் என்றும் சொல்லுகிறபடி நிற்கிற
வ்யாஸாதிகளை அனுப்ரவேசித்து மகாபாரத சாரீரகாதிகளை ப்ரவர்த்திப்பித்தும்,
5. ஹம்ஸ மத்ஸ்ய ஹயக்ரீவ நரநாராயண கீதாசார்யாத்யவாதாரங்களாலே தானே வெளினின்று தத்வ ஹித புருஷார்த்தங்களை ப்ரகாசிப்பித்தும் ,
6. தான் அருளிச் செய்த அர்த்தங்களை எல்லாம் ஸ்ரீ பீஷ்மர் முதலான ஞானாதிகரையிட்டு முதலிப்பித்தும்
7. பாஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணாஸ்வயம் என்கிறபடியே அடியிலே தான் அருளிச் செய்த பகவஞ்சாஸ்த்ரத்தை
ப்ராம்மணை : க்ஷத்ரியை : வைச்யம்ச்சூத்ரச்ச க்ருதலக்ஷணை : அர்ச்சனீயச்ச சேவ்யச்ச நித்யயுக்தை:
ஸவகர்மஸு ஸாத்வதம் விதிமஸ்தாய கீத சங்கர்ஷிணேன ய : த்வாபரஸ்ய யுகஸ்யாந்தே ஆதெள கலியுகஸ்ய ச என்கிறபடியே
அவஸரங்களிலே ஆவிஷ்கரித்தும்
8. பூர்வேத்பன்னேஷு பூதேஷு தேஷு தேஷு கலௌ ப்ரபு : அனுப்ரவிச்ய குருதே யத் ஸமீகிதமச்யுத : என்கிறபடியே
பராங்குச பரகாலாதி ரூபத்தாலே அபிநவமாக ஒரு தசாவதாரம் பண்ணி , மேகங்கள் ஸமுத்ரஜலத்தை வாங்கி
ஸர்வோபஜீயமான தண்ணீராக உமிழுமா போலே வேதார்த்தங்களில் வேண்டும் ஸாரதமாம்சத்தை ஸர்வருக்கும்
அதிகரிக்கலான பாஷையாலே ஸங்க்ரஹித்துக் காட்டியும்
9. இப்படி தான் ப்ரவர்த்திப்பித்த ஸத்பதத்துக்கு ப்ரகடராயும் ப்ரச்சன்னராயுமிருந்துள்ள பாஷாண்டிகளால், உபரோதம் வாராமைக்காக ,
ஏ சாட்ஷாத் நாராயணோ தேவ : க்ருத்வா மர்த்யமயீம் தனும் மக்னான் உத்தரதே லோகான் காருண்யாஸ்சாஸ்த்ர பாணினா ஏ என்றும்
10. பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து என்றும் சொல்லுகிறபடியே அகஸ்த்யஸேவிதமான தேசத்திலே
அநேக தேசிகாபதேசத்தாலே அவதரித்தருளினான் . இத்தைக் கணிசித்து :
கலௌ . கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா : கசித் க்வசித் மகாபாகா த்ரமிடேஷு ச பூரிச :
தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயகிதீ காவேரீ ச மகாபாகா ப்ரதீசீ ச மகாநதீ என்று மகரிஷி அருளிச் செய்தான்

வ்யாக்யானம்–
எம்பெருமானே , எல்லா உலகங்களுக்கும் முதல் ஆசார்யன் –பரமாசார்யன் என்பதை பல உதாரணங்களிலிருந்து உணரலாம்.

தம் இமம் ஸர்வஸம்பன்னம் ஆசார்யை பிதரம் குரும் (மஹாபாரதம்–ஸபா பர்வம்) எல்லாக் கல்யாண குணங்கள் உள்ளவனும்,
முதலாவதாகப் பூஜிப்பதற்குத் தேவையான குணங்களைப் பெற்றிருப்பவனும்,தகுதி உடையவனும், பிதாவும், ஆசார்யனும் ,
பூஜிக்கத்தகுந்தவனும் ஆன ,இந்தக் க்ருஷ்ணனை பூஜிக்கலாம் —-சம்மதியுங்கள்—
( ராஜ ஸுய யாகத்தில் ,முதலில் யாருக்கு அக்ர பூஜை செய்யவேண்டும் என்கிற கேள்வி எழுந்தபோது, ஸஹதேவன் ,
அங்குள்ள சபையில் கூடி இருந்தவர்களைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகள் —-ப்ரஹ்ம வித்யையை உபதேசிப்பவன் –ஆசார்யன் .
வேதத்தைச் சொல்லிக் கொடுப்பவன் –குரு )
மம அபி அகில லோகாநாம் குருர் நாராயணோ குரு : —-விஷ்ணு புராணம் (5–1–14) எல்லா உலகங்களுக்கும் குருவான நாராயணன்,
எனக்கும் குரு —ஸ்ரீ விஷ்ணு சித்தீயம் சொல்கிறது—–தனக்கென்று ,எந்த ஆசார்யனும் இல்லாத , பரமாசார்யன் –நாராயணன்.
(இங்கு குருவும் அவனே;ஆசார்யனும் அவனே ).
த்வமேவ பந்துச்ச குரும்த்வமேவ —–நீரே பந்து–எல்ல உறவும். நீரே குரு –காந்தாரி,
க்ருஷ்ணனைப் பார்த்துச் சொல்லும் வாக்யம் குருரஸி கதிச்ச ஸி ஜகதாம்—-

ஸ்தோத்ர ரத்னம் (60 ) பிதா த்வம் , மாதா த்வம், தயிததநயஸ்த்வம் , ப்ரியஸுஹ்ருத் த்வமேவ ,த்வம் பந்து: குருரஸி கதிஸ்சாஸி ஜகதாம் |
த்வதீயஸ் த்வத் ப்ருத்ய : தவ பரிஜநஸ் த்வத்கதிரஹம் ப்ரபந்நஸ் ச ஏவம் ஸதிஅஹமபி தவைவாஸ்மி ஹி பாரா : ||
ஸ்தோத்ர ரத்னம் (60 ) முழு ச்லோகம்
எல்லா உலகங்களுக்கும், நீரே பிதா ;நீரே மாதா; பிரியமான புத்ரன்;இஷ்டமான மித்ரன்; எல்லா பந்துவும்;
அக இருள் நீக்கும் ஆசார்யன் ;அடியோங்கள் அடையும் பேறு . பகவானுக்கும் , நமக்கும் நவவித ஸம்பந்தம் –ஒன்பதுவிதமான உறவுகள் பகவான் நாம் 1.பரமாத்மா ஜீவாத்மா 2.யஜமானன் கிங்கரர்கள் –வேலையாட்கள் 3.பிதா புத்ரன் /புத்ரி 4.ஆசார்யன் சிஷ்யன்
5.பதி பத்னி 6.போக்தா –அனுபவிப்பவன் போக்யம் –அனுபவிக்கப்படும் பொருள் 7.ரக்ஷிப்பவன் ரக்ஷிக்கப்படுபவர்
8.நியமிப்பவன் நியமிக்கப்படுபவன் 9.சேஷீ சேஷன் –சேஷபூதன் இப்படிப்பட்ட எல்லா லோகங்களுக்கும் பரமாசார்யனான எம்பெருமான்,

நமக்குச் செய்த உபாயங்களை, ஸ்வாமி தேசிகன் இப்போது சொல்கிறார்.
1. ப்ரஹ்மாவுக்கு அடியிலே வேதங்களைக் கொடுத்தும் அவற்றுக்கு அபகாரம் பிறந்தபோது மீட்டுக் கொடுத்தும்
இவன்முகமாக சாஸ்த்ரங்களை ப்ரவர்த்திப்பித்தும் —-

வ்யாக்யானம் —
ப்ரஹ்மாவுக்குத் தொடக்கத்திலே வேதங்களைக் கொடுத்தான், ,காணாமல்போன வேதங்களைக் கண்டுபிடிப்பதாக வாக்குக் கொடுத்து,
அப்படியே கண்டுபிடித்து, வேதங்களை மீட்டு, ப்ரஹ்மாவிடம் கொடுத்து, அவன் மூலமாகவே , வேத சாஸ்த்ர ஞானத்தை உலகத்தாருக்கு வழங்கியும்,

2. இவன் புத்ரர்களான ஸநத்குமாராதிகளை ,ஸ்வபமாகதவிஜ்ஞானா நிவ்ருத்திம் தர்மமாஸ்திதா : (பாரதம்–சாந்தி பர்வம் )என்னும்படி பண்ணி ,
அவர்கள் முகங்களாலே ஹிதப்ரவர்த்தனம் பண்ணுவித்தும் ——,
வ்யாக்யானம் —
ப்ரஹ்மாவின் புத்ரர்களான ஸநத்குமாரர்கள் ,—இவர்கள்–தானாகவே ஞானிகள், நிவ்ருத்தி தர்மத்தில் இழிபவர்கள்—–
இவர்கள் மூலமாக நன்மைகளைச் செய்தும்,

3. இப்படியே மற்றும் நாரத பராசர சுக சௌனகாதிகளான பல மகர்ஷிகளையிட்டு அத்யாத்ம ஸம்ப்ரதாயம் குலையாதபடி நடத்தியும் ,

வ்யாக்யானம் —- மற்றும், நாரதர், பராசரர், சுகப்ரம்மம் , சௌனகரிஷி இன்னும் பல மஹரிஷிகள் மூலமாக,
அத்யாத்ம ஸம்ப்ரதாயமான ஜீவாத்மா –பரமாத்ம விஷயமான உபதேச க்ரமம் அழியாதபடி செய்தும்,

4.க்ருஷ்ணத்வைபாயனம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் , கோ ஹ்மன்யோ பூமி மைத்ரேய மகாபாரத க்ருதவேத் ? என்றும்,
மஹஷை : கீர்த்தனாத் தஸ்ய பீஷ்ம : ப்ராஞ்ஜ்ஜலி அப்ரவீத் என்றும் சொல்லுகிறபடி நிற்கிற வ்யாஸாதிகளை அனுப்ரவேசித்து
மகாபாரத சாரீரகாதிகளை ப்ரவர்த்திப்பித்தும்,

வ்யாக்யானம் —–
.க்ருஷ்ணத்வைபாயனம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் , கோ ஹ்மன்யோ
பூமி மைத்ரேய மகாபாரத க்ருதவேத் ? (விஷ்ணு புராணம் ) க்ருஷ்ணத்வைபாயனர் என்று கொண்டாடப்படும்
வ்யாஸ மஹரிஷி —ஸ்ரீமந் நாராயணனே !ஹே—-மைத்ரேயரே , மஹாபாரதம் என்கிற இதிஹாசத்தை இயற்ற, இவ்வுலகில் வேறு எவரும் இல்லை.
மஹஷை : கீர்த்தனாத் தஸ்ய பீஷ்ம : ப்ராஞ்ஜ்ஜலி அப்ரவீத் (மஹாபாரதம் —ஆதிபர்வம் )
மஹர்ஷியான , வ்யாஸரின் திருநாமத்தைச் சொல்லும்போது, பீஷ்மர், கைகளைக் கூப்பியவண்ணம் பேசினார்.
பகவான் நாராயணன், வ்யாஸாதி மஹரிஷிகளிடம் அநுபிரவேசித்து, சாரீராதிகளை—- மஹாபாரதம், ப்ரஹ்மஸூத்ரம் முதலியவைகளைப் படைத்தும்,

5. ஹம்ஸ மத்ஸ்ய ஹயக்ரீவ நரநாராயண கீதாசார்யாத்யவாதாரங்களாலே தானே வெளினின்று தத்வ ஹித புருஷார்த்தங்களை ப்ரகாசிப்பித்தும் ,

வ்யாக்யானம்—- பகவான் நாராயணனே, ஹம்ஸ , மத்ஸ்ய ,ஹயக்ரீவ,நரநாராயண, கீதாசார்ய க்ருஷ்ண அவதாரங்கள் எடுத்து,
தத்வங்களையும்,ஹிதத்தையும், புருஷார்த்தத்தையும் ப்ரகாசமாக எடுத்துச் சொல்லியும்——

ஹம்ஸாவதாரம்—-ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்படுகிறது—– ப்ரஹ்மாவின் மானஸ புத்ரர்கள்—ஸநகாதிகள்—–
இவர்கள், தங்களுடைய பிதாவான, ப்ரஹ்மாவிடம் ,ஸூக்ஷ்மயோகத்தை விளக்கும்படி ப்ரார்த்தித்தார்கள்.
இந்த யோகத்தை இதுவரை அறியாத அவர் , மிகவும் வேண்டி, எம்பெருமானைத் த்யானித்தார்.
பகவான் மிகவும் கருணையுடன் ஹம்ஸரூப அவதாரமெடுத்து, ப்ரஹ்மாவின் முன்பு தோன்றி, அவருக்கும் ஸநகாதி முனிவர்களுக்கும்,
விசிஷ்டாத்வைத தத்வமான ஜீவபர—சரீரஆத்மபாவ ரூபத்தை உபதேசித்தார்.

மத்ஸ்யாவதாரம் —–இந்த அவதாரமும் ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்படுகிறது—–
ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும், ப்ரஹ்மா நித்திரை வசப்படுவார். அப்போது, நைமித்திகப் ப்ரளயம் ஏற்படும்.
உலகங்கள் யாவும் ,கடலில் மூழ்கி எங்கும் ஜலம் காக்ஷி அளிக்கும். நித்திரை வசப்பட்ட ப்ரஹ்மாவின் வாயிலிருந்து வேதங்கள் வெளிப்பட,
அப்போது, அருகே இருந்த ஹயக்ரீவன் என்கிற அசுரன், அவற்றை அபகரிக்க,பகவான் இதை அறிந்தார்.
ஸத்யவ்ரதன் என்கிற ராஜரிஷி க்ருதமாலா என்கிற நதியில் நித்ய அநுஷ்டானங்களைச் செய்துகொண்டிருந்தபோது,
அவர், ஜலதர்ப்பணம் செய்யும் சமயத்தில், அவருடைய உள்ளங்கையில் சிறிய மத்ஸ்யமாக (மீன் )அவதரித்து,
அவராலேயே, கமண்டலு, தொட்டி,குளம், நதி இவற்றில் விடப்பட்டு, ஒவ்வொரு நிலையிலும் மிகப் பெரிய மீனாக வளர்ந்து,
கடைசியில் ஸமுத்ரத்தில் அவராலேயே விடப்பட்டார். இந்த ஆச்சர்யத்தைக் கண்டு ,அனுபவித்து, மெய்சிலிர்த்த ஸத்யவ்ரதன்
இவர் எம்பெருமானே என்று நிச்சயித்து, அவரைத் துதித்து ,ஆசார்யனாக இருந்து தத்வங்களை உபதேசிக்க வேண்டினார்.
எம்பெருமானும் தத்துவங்களை உபதேசித்து, மத்ஸ்ய புராண சம்ஹிதையையும் சொல்லி, ஹயக்ரீவன் என்கிற அந்த அசுரனை வதைத்து,
வேதங்களைக் காப்பாற்றி மீட்டு, ப்ரஹ்மாவுக்கே மீண்டும் கொடுத்தார்

ஹயக்ரீவாவதாரம் —-மஹாபாரதம் சொல்கிறது—
ப்ரளய காலம் —-எங்கும் ஜலம்.ஜீவாத்மாக்கள், கருப்பான மெழுகில் தங்கத்தூள்கள் ஒட்டுவதுபோல,
மூல ப்ரக்ருதி என்கிற சூக்ஷ்ம ரூபத்தில் ஒட்டிக்கொண்டு, அறிவிழந்து இருக்கிறார்கள்.
பகவான் ப்ரளய ஜலத்தில், பள்ளிகொண்டு இருக்கிறான்;யோக நித்ரைஇப்படியே பல காலம் கழிகிறது.
யோக நித்ரையில் , பகவான் மறுபடியும் உலகங்களை ஸ்ருஷ்டிக்கவும், ஜீவாத்மாக்களை மறுபடியும் உயிர் பெற்று எழச் செய்து,
அவர்கள் உய்வதற்கு வழிகாணவும் யோசித்து, தன்னுடைய நாபியிலிருந்து, தாமரை மலரையும், அதில் ப்ரஹ்மாவையும் ஸ்ருஷ்டிக்கிறான் .
தாமரை மலர் ஸ்ருஷ்டி ஆவதற்கு முன்பே தாமரை இலையில் இரண்டு நீர்த்துளிகள் ,அவனுடைய சங்கல்பத்தாலேயே உண்டாகின.
இதில் ஒரு நீர்த்துளி ,மது என்கிற அஸுரனாகவும் , இன்னொரு துளி ,கைடபன் என்கிற அஸுரனாகவும் ஆகி,
தாமரைத் தண்டின் உள்ளே புகுந்து ,ப்ரஹ்மா அமர்ந்துள்ள மலருக்கு வந்தனர் எம்பெருமான், ப்ரஹ்மாவுக்கு , சிருஷ்டித்தொழிலை உபதேசித்து,
அதை நன்கு தெளிய நான்கு வேதங்களையும் அருள்கிறான். ப்ரஹ்மா, நான்கு வேதங்களையும் நான்கு அழகான குழந்தைகளாக ஆக்கும் சமயத்தில்,
தாமரை மலருக்கு வந்த , மது கைடபர் என்கிற இந்த இரண்டு அஸுரர்களும் ,அழகிய நான்கு வேதங்களையும்( குழந்தைகள் ) அபஹரித்துக்கொண்டு
பாதாள லோகத்துக்குச் சென்று , அங்கு மறைத்துவைத்தனர். ப்ரஹ்மா பதறினான்; நான்கு வேதங்களின் உதவி இல்லாமல்,
ஸ்ருஷ்டி செய்ய இயலாமல்தவித்தான். எம்பெருமானைத் துதித்தான், பகவான் அநிருத்தனாகி , ஹயக்ரீவ அவதாரமெடுத்து,
பாதாள லோகத்துக்குச் சென்று, ”உத்கீதம்” என்கிற ஸ்வரத்தை எழுப்ப, இரண்டு அஸுரர்களும் சப்தம் வந்த திசையை நோக்கிப் போகும்போது,
ஹயக்ரீவனாக அவதரித்த பகவான், வேதங்களை மீட்டு, ப்ரஹ்மாவிடம் கொடுத்து, மறுபடியும் யோக நித்ரை செய்யலானார்.
அசுரர்கள், ஹயக்ரீவ அவதார எம்பெருமானிடம் சண்டையிட, பகவான் அவ்வஸுரர்களை வதைத்து, ஸ்ருஷ்டி செய்வதற்கான ஞானத்தை ப்ரஹ்மாவுக்கு அருளினார்.

நரநாராயணாவதாரம் —-ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ளது– தக்ஷ ப்ரஜாபதியின் பெண் மூர்த்தி என்பவள்–அவள்,
தர்ம ப்ரஜாபதியைத் திருமணம் செய்துகொண்டு, பகவானின் ஸ்வரூபமாக, நர நாராயணர்களைப் பெற்றெடுத்தாள் .
நாராயண ரிஷி, பத்ரிகாஸ்ரமத்தில் நாரதர் முதலானவர்களுக்கு , ஆத்ம ஸ்வரூபமான கர்ம யோகத்தை உபதேசித்தார் இவரால்,
தன்னுடைய ”இந்த்ர ”பதவி பறிபோய் விடுமோ என்று இந்த்ரன் அஞ்சி,இவருடைய தபஸ்ஸைக் கெடுக்க, அப்ஸரஸ்களை அனுப்ப,
நாராயண ரிஷியோ,தனக்குப் பணிவிடை செய்யும் அதிரூப சுந்தரிகளை அவர்களுக்குக் காண்பித்து,
இவர்களில் உங்களுக்கு ஒத்த அழகுள்ளவர் இருப்பின், நீங்கள் அவளை இந்த்ர லோகத்துக்கு அழைத்துச் செல்லலாம் என்று சொல்ல,
அவர்களும் ,மிகவும் வேண்டி, ஊர்வசியை அழைத்துச் சென்று ,இந்த்ரனிடம் சொல்ல, இந்திரன் மிகவும் நடுங்கியதாக ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.
நரநாராயணர்கள்தான், திருவஷ்டாக்ஷரம், அதன் பொருள், மஹிமை, அநுஷ்டானமுறை இவற்றையெல்லாம் வெளியிட்டவர்கள் .

கீதாசார்யன் —– குருக்ஷேத்ர யுத்தத்தில், அர்ஜுனனுக்கு, பகவான் அருளிய உபதேசங்கள்—18 அத்தியாயங்கள்– பகவத் கீதை
என்கிற மிக உயர்ந்த, தத்வ விளக்கம்–இதனாலும் பகவான் ஆசார்யன்

6. தான் அருளிச் செய்த அர்த்தங்களை எல்லாம் ஸ்ரீ பீஷ்மர் முதலான ஞானாதிகரையிட்டு மூதலிப்பித்தும்

வ்யாக்யானம்——– தான் அருளிய எல்லாவற்றையும், பீஷ்மர் முதலான ஞானிகள் மூலமாக வெளியில் பரவச் செய்தான்

7. பாஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணாஸ்வயம் என்கிறபடியே அடியிலே தான் அருளிச் செய்த பகவஞ்சாஸ்த்ரத்தை
ப்ராம்மணை : க்ஷத்ரியை : வைச்யம்ச்சூத்ரச்ச க்ருதலக்ஷணை : அர்ச்சனீயச்ச சேவ்யச்ச நித்யயுக்தை:
ஸவகர்மஸு ஸாத்வதம் விதிமஸ்தாய கீத சங்கர்ஷிணேன ய : த்வாபரஸ்ய யுகஸ்யாந்தே ஆதெள கலியுகஸ்ய ச
என்கிறபடியே அவஸரங்களிலே ஆவிஷ்கரித்தும்

வ்யாக்யானம்–விளக்கம்–
பாஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணாஸ்வயம் —-மஹாபாரதம்—சாந்தி பர்வம்– பகவான் நாராயணனே,
பாஞ்சராத்ர சாஸ்த்ரம் முழுவதையும் , சொன்னான்.
இந்த சாஸ்த்ரம் மறைந்தபோது, த்வாபர யுகத்தின் முடிவில், கலியுகத் தொடக்கத்தில், அவனே மறுபடியும் உபதேசித்தான்.
நான்கு வர்ணத்தவர்களும், அவரவர்களுக்கு உரிய முறையில், பகவானுக்குக் கைங்கர்யம் செய்ய, ஸங்கர்ஷணாகி ,உபதேசித்தான்.
இவர்கள், தத்தம் ஆசார்யனிடம் ”பஞ்ச சம்ஸ்காரம்”செய்துகொண்டு, தன்னை ஆராதிக்குமாறு செய்தான்.

8. பூர்வேத்பன்னேஷு பூதேஷு தேஷு தேஷு கலௌ ப்ரபு : அனுப்ரவிச்ய குருதே யத் ஸமீகிதமச்யுத : என்கிறபடியே
பராங்குச பரகாலாதி ரூபத்தாலே அபிநவமாக ஒரு தசாவதாரம் பண்ணி , மேகங்கள் ஸமுத்ரஜலத்தை வாங்கி
ஸர்வோபஜீயமான தண்ணீராக உமிழுமா போலே வேதார்த்தங்களில் வேண்டும் ஸாரதமாம்சத்தை
ஸர்வருக்கும் அதிகரிக்கலான பாஷையாலே ஸங்க்ரஹித்துக் காட்டியும்

வ்யாக்யானம்—விளக்கம்–
பூர்வேத்பன்னேஷு பூதேஷு தேஷு தேஷு கலௌ ப்ரபு : அனுப்ரவிச்ய குருதே யத் ஸமீகிதமச்யுத —-விஷ்ணு தர்மம் சொல்கிறது—
கலியுகத்தில் அந்தந்த ஜீவன்களுக்குள் புகுந்து, அச்யுதன், தனக்கு விருப்பமானத்தைச் செய்கிறான், என்பதற்கு ஏற்ப,
பராங்குச (நம்மாழ்வார் முதலாக ), பரகால ( திருமங்கை ஆழ்வார்) என்கிற பத்து அவதாரங்களை எடுத்தான்.
இப்படி, பகவான் செய்த உபகாரம் என்ன ? மேகங்கள், சமுத்ரத்திலிருந்து, நீரை உறிஞ்சி எடுத்து, அந்த நீரை,
எல்லா ஜீவன்களுக்கும் மழையாகப் பொழியுமாப்போலே ,வேதங்களின் சாரத்தை எல்லாம் எடுத்து, எல்லோருக்கும் எளிதில் புரியும்படி,
நாலாயிர திவ்ய ப்ரபந்தமாகத் தமிழில் அளித்தான்.

9. இப்படி தான் ப்ரவர்த்திப்பித்த ஸத்பதத்துக்கு ப்ரகடராயும் ப்ரச்சன்னராயுமிருந்துள்ள பாஷாண்டிகளால், உபரோதம் வாராமைக்காக ,
ஏ ஸாக்ஷாத் நாராயணோ தேவ : க்ருத்வா மர்த்யமயீம் தனும் மக்னான் உத்தரதே லோகான் காருண்யாஸ்சாஸ்த்ர பாணினா ஏ என்றும்

வ்யாக்யானம்—–விளக்கம் — இப்படியாகத் தான் ஸங்கல்பித்த –ஏற்படுத்திய நல்ல பாதைக்கு, நாராயணனை, மற்ற பரிவார தெய்வங்களோடுச் சமமாக நினைப்பவர்கள்,வேதநெறிப்படையாக வாழ்க்கையை வாழாத- பாஷாண்டிகள்,நாராயணனைத் தாழ்வாக எண்ணுபவர்கள், —
இவர்களைப்போல் உள்ளவர்களால், இடைஞ்சல்–தடங்கல் ஏற்படாதிருக்க, பகவான் செய்தது என்னவெனில் ?
ஏ சாக்ஷாத் நாராயணோ தேவ :க்ருத்வா மர்த்யமயீம் தனும் மக்னான்
உத்தரதே லோகான் காருண்யாஸ்சாஸ்த்ர பாணினா ஏ ——— (ஜயாக்ய ஸம்ஹிதை )
நாராயணன், மனுஷ்ய சரீரத்தை எடுத்து, ஸம்ஸாரத்தில் மூழ்கி இருக்கிற ஜீவாத்மாக்களை, சாஸ்த்ரம் என்கிற
கையினால், கருணையுடன், தானே , கரையேற்றுகிறான்.

10. பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து என்றும் சொல்லுகிறபடியே அகஸ்த்யஸேவிதமான தேசத்திலே
அநேக தேசிகாபதேசத்தாலே அவதரித்தருளினான் . இத்தைக் கணிசித்து :

வ்யாக்யானம்—-விளக்கம் —– ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து , என்னுள்ளே பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகிவந்து,
போதில்கமல வன்னெஞ்சம் புகுந்து என்சென்னித்திடரில் பாதவிலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே ————பெரியாழ்வார் திருமொழி
அவன் பகவான், நாராயணன்—பீதாம்பரதாரி—என்னுள்ளே வந்தான்—எப்படி ? பிரமகுருவாக வந்தான் —வந்து ஹ்ருதயத்திலே புகுந்தான்—
புகுந்தவன் , என் சிரஸ்ஸில் திருவடியை வைத்து , அது அழியாத அடையாளமாக ஆயிற்று— என்று இப்படி விவரிக்கிறார்—
பகவான், ஆசார்ய ரூபமாக வந்து, ப்ரஹ்மோபதேசம் செய்கிறானாம்.
கலௌ . கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா : கசித் க்வசித் மகாபாகா த்ரமிடேஷு ச பூரிச :
தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயகிதீ காவேரீ ச மகாபாகா ப்ரதீசீ ச மகாநதீ என்று மகரிஷி அருளிச் செய்தான்

வ்யாக்யானம் —விளக்கம் ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது—-
இந்தக் கலியுகத்தில், நாராயணனையே உபாயமாகவும் உபேயமாகவும்
கொண்ட விஷ்ணு பக்தர்கள், தமிழ் பேசும் பிரதேசத்தில் ,தாமிரவருணி, வைகை,பாலாறு, காவேரி, மேற்கே கடலில் கலக்கும் மகாநதி (பெரியாறு )
இந்த நதிகளின் கரைகளில் பிறப்பார்கள். ஸ்ரீ உடையவர் வரை ஆசார்ய பரம்பரை இவ்வாசார்யர்களில் ,
ஈச்வரமுனிகள் பிள்ளை நாதமுனிகள் . இவர் ந்யாயதத்துவமென்கிற சாஸ்த்ரமும் யோக ரஹஸ்யமும் அருளிச் செய்தார்.
இவருக்கு ஸ்ரீ மதுரகவிகள் முதலாக ஸம்ப்ரதாயபரம்பரையாலும், திருவாய்மொழி முகத்தாலும்
யோகதசையிலே ஸாக்ஷாத்க்ருதராயும் நம்மாழ்வார் ஆசார்யரானார் .
நாதமுனிகள் பிள்ளை ஈச்வர பட்டாழ்வான் . ஈச்வரப்பட்டாழ்வான் பிள்ளை ஆளவந்தார்.
இவர் அருளிச் செய்த ப்ரபந்தங்கள் ஆகமப்ராமாண்யமும் புருஷநிர்ணயமும் , ஆத்ம ஸித்தி–ஈச்வர ஸித்தி –ஸம்வித் ஸித்தி என்கிற ஸித்தித்ரயமும் ,
கீதார்த்த ஸங்க்ரஹமும் ,சதுச்லோகியுமாக எட்டு.
ஆளவந்தார் பிள்ளை சொட்டை நம்பி. சொட்டை நம்பி பிள்ளை என்னாச்சான் . என்னாச்சான் பிள்ளைகள் நால்வர்.
இவர்களில் ஒருவர் பிள்ளையப்பர்.பிள்ளையப்பர் பிள்ளை தோழப்பர். தோழப்பருக்குப் பெண்பிள்ளைகள் இருவர்.

வ்யாக்யானம்—-விளக்கம்—- கலியுகத்தில் ,நதிதீரங்களில் ,ஆசார்யர்கள் ,அவதரிப்பார் என்று ஸ்ரீமத் பாகவதம் சொன்னதை ,மேற்கோள் காட்டியவர்,
இப்போது ஆசார்யர்களைப் பற்றிக் கூறுகிறார்.
முதலில் ஸ்ரீமந் நாதமுனிகள் . இவர் ஈச்வரமுனியின் குமாரர். இவர், ந்யாயதத்வம், யோகரஹஸ்யம் என்கிற இரண்டு பொக்கிஷ க்ரந்தங்களை அருளினார்.
இவருக்கு, மதுரகவி ஆழ்வாரின் உபதேச பரம்பரையும், திருவாய்மொழியை உபதேசமாகப் பெற்று, யோகத்தில் இழிந்ததால்,
நேரிடையாகவே ஸ்ரீ நம்மாழ்வாரை ,ஆசார்யனாகப் பெரும் பாக்யத்தைப் பெற்றார்.
நாதமுனிகள் குமாரர் ஈச்வர பட்டாழ்வான். இவருடைய பிள்ளை ஆளவந்தார்.
ஸ்ரீ ஆளவந்தார் அருளியவை–ஆகமப்ரமாண்யம்,புருஷ நிர்ணயம், ஆத்ம ஸித்தி ,ஈச்வர ஸித்தி ,ஸம்வித் ஸித்தி ,
கீதார்த்த ஸங்க்ரஹம் , ஸ்தோத்ர ரத்னம் சதுஸ்லோகி –ஆகிய எட்டு.
பிள்ளை , சொட்டை நம்பி. சொட்டை நம்பியின் பிள்ளை எண்ணாச்சான்.இவரது பிள்ளைகள் நால்வர்.
அதில் ஒருவரான பிள்ளையப்பரின் குமாரர் தோழப்பர். இவருக்கு இரண்டு பெண்கள்.

நாதமுனிகள் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்த முதலிகள்,உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன்,
உருப்பட்டூர் ஆச்சான்பிள்ளை,நம்பிகருணாகரதாஸர் , ஏறுதிருவுடையார் , திருக்கண்ணமங்கையாண்டான்
வானமாதேவி ஆண்டான்,சோகத்தூர் ஆழ்வான் என்பர் .

உய்யக்கொண்டார் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் ஐவர்.
அவர்களாகிறார், மணக்கால் நம்பி, திருவல்லிக்கேணி பாண்பெருமாளரையர்,சேட்டலூர் செண்டலங்காரர் ,
ஸ்ரீ புண்டரீக தாஸர் , உலகப் பெருமாள் நங்கை.

மணக்கால் நம்பி ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் ஐவர் .அவர்களாகிறார், ஸ்ரீ ஆளவந்தார், தெய்வத்துக்கரசு நம்பி, கோமடத்துத்
திருவிண்ணகரப்பன் , சிறுபுள்ளூர் ஆவுடைய பிள்ளை, ஆச்சி

வ்யாக்யானம்—விளக்கம்—
ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் என்றால், அவரது திருவடிகளைப் பற்றிய சிஷ்யர்கள் என்று பொருள்.
நாதமுனிகளை ஆச்ரயித்தவர்கள்–உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், உருப்பட்டூர் ஆச்சான்பிள்ளை,
நம்பிகருணாகரதாஸர் , ஏறுதிருவுடையார் , திருக்கண்ணமங்கையாண்டான் , வானமாதேவி ஆண்டான்,சோகத்தூர் ஆழ்வான் ஆகிய எண்மர்

உய்யக்கொண்டாரை ஆச்ரயித்தவர்கள்—-மணக்கால் நம்பி, திருவல்லிக்கேணி பாண்பெருமாளரையர்,சேட்டலூர் செண்டலங்காரர் ,
ஸ்ரீ புண்டரீக தாஸர் , உலகப் பெருமாள் நங்கை ஆகிய ஐவர்

மணக்கால் நம்பியை ஆச்ரயித்தவர்கள்—-ஸ்ரீ ஆளவந்தார், தெய்வத்துக்கரசு நம்பி, கோமடத்துத் திருவிண்ணகரப்பன் ,
சிறுபுள்ளூர் ஆவுடைய பிள்ளை, ஆச்சி ஆகிய ஐவர்

ஆளவந்தார் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் பதினைவர் .அவர்களாகிறார், பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலையாண்டான்,
ஆளவந்தாராழ்வார் , திருமலை நம்பி, ஈசாண்டான் , தெய்வவாரியாண்டான், சிறியாண்டான் , திருமோகூரப்பன் ,திருமோகூர் நின்றார் ,
தெய்வப்பெருமாள், திருமங்கையாளியார் . பிள்ளை திருமாலிருஞ்சோலை தாஸர் , மாறனேர் நம்பி, ஆள்கொண்டி ஆகிய பதினைவர்

வ்யாக்யானம்—-விளக்கம்– நாதமுனிகள் திருப்பேரரான ஆளவந்தாரை -ஆச்ரயித்தவர்கள்—-பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி,
திருமாலையாண்டான், ஆளவந்தாராழ்வார் , திருமலை நம்பி, ஈசாண்டான் , தெய்வவாரியாண்டான்,சிறியாண்டான் ,
திருமோகூரப்பன் ,திருமோகூர் நின்றார் , தெய்வப்பெருமாள், திருமங்கையாளியார் . பிள்ளை திருமாலிருஞ்சோலை தாஸர் ,
மாறனேர் நம்பி, ஆள்கொண்டி ஆகிய பதினைவர் .

பெரியநம்பி ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் அறுவர். அவர்களாகிறார், எம்பெருமானார், மலைகுனிய நின்றார்,
ஆர்ய ஸ்ரீ சடகோப தாஸர் ,அணியரங்கத்தமுதனார் , திருவாய்க்குலமுடையான் பட்டர், திருக்கச்சி நம்பி

வ்யாக்யானம்—-விளக்கம்–
பெரியநம்பிகளை ஆச்ரயித்தவர்கள்—-எம்பெருமானார் என்று கொண்டாடப்படுகிற ஸ்ரீ ராமாநுஜர் ,மலைகுனிய நின்றார்,
ஆர்ய ஸ்ரீ சடகோப தாஸர் ,அணியரங்கத்தமுதனார் , திருவாய்க்குலமுடையான் பட்டர், திருக்கச்சி நம்பிகள் ஆகிய அறுவர் .
எம்பெருமானார் திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீபாதத்திலே ரகஸ்யார்த்தங்களை சிக்ஷித்தார்.
திருமாலையாண்டான் ஸ்ரீபாதத்திலே திருவாய்மொழி கேட்டார்.
ஆளவந்தாராழ்வார் ஸ்ரீபாதத்திலே திருவாய்மொழியும் ஓதி ஸ்தோத்ராதிகளும், அருளிச் செய்யும் நல்வார்த்தைகளும் கேட்டருளினார்.
திருமலைநம்பி ஸ்ரீபாதத்திலே ஸ்ரீமத் ராமாயணம் கேட்டருளினார்.
இவர் அருளிச் செய்த ப்ரபந்தங்கள் ஸ்ரீபாஷ்யமும், தீபமும், ஸாரமும் , வேதார்த்த ஸங்க்ரஹமும் , ஸ்ரீ கீதாபாஷ்யமும்
சிறிய கத்யமும், பெரிய கத்யமும் ஸ்ரீ வைகுண்ட கத்யமும் ,நித்யமும் ஆக ஒன்பது.
இவர் ஸ்ரீபாதத்தில் ஆச்ரயித்த முதலிகளை, தம் தம் ஸம்ப்ரதாயப்படிகளிலே அறிந்து கொள்வது

வ்யாக்யானம்—–விளக்கம் —
எம்பெருமானார் என்று கொண்டாடப்படுகிற ஸ்ரீ ராமாநுஜர் ,திருக்கோட்டியூர் நம்பிகளிடம் ரஹஸ்யார்த்தங்களையும் ,
திருமாலையாண்டானிடத்திலே திருவாய்மொழிஅர்த்தங்களையும்,கற்றார்.
ஆளவந்தாராழ்வார் பக்கலில் திருவாய்மொழியும் , ஸ்தோத்ர ரத்னம், அருளிச் செயலும், கற்றார்.
திருமலை நம்பிகளிடம் , ஸ்ரீமத் ராமாயணத்தைக் கேட்டார்.
இவர் அருளிய க்ரந்தங்கள் —— ஸ்ரீபாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம் , வேதார்த்த ஸங்க்ரஹம் , கீதா பாஷ்யம்,
ஸ்ரீரங்க கத்யம் ( சிறிய கத்யம் ), ஸரணாகதி கத்யம் ( பெரிய கத்யம் ), ஸ்ரீவைகுண்ட கத்யம்,நித்யம் ஆக ஒன்பது க்ரந்தங்கள் .
எம்பெருமானாரின் சிஷ்யர்களை, அவரவர் ஸம்ப்ரதாயத்துக்கு ஏற்ப அறிந்துகொள்ளவேண்டும்.

ஆசார்ய பக்தி வேண்டும்; மந்த்ர அர்த்தங்களை மறைத்தலும் வேண்டும்
குரும் ப்ரகாசாயேத் தீமான் மந்த்ரம் யத்னேன கோபயேத் அப்ரகாசப்ரகாசாப்யாம் க்ஷீயதே ஸம்பதாயுஷீ என்றார்கள்
குருவை ஒருவன் ப்ரகாசிப்பிக்கிறதவும் ஒருவன் ப்ரகாசிப்பியாதொழிகிறதுவும் குரு பக்தியில் தாரதம்யத்தாலேயிறே .
பகவத் விஷயத்தில் போலே குருவிஷயத்திலும் பரையான பக்தியுடைவனுக்கு அபேக்ஷிதார்த்தங்கள் எல்லாம் ப்ரகாசிக்கும்
என்னுமிடம் கட —ஜாபாலாதி ச்ருதிகளிலும்
ஸஞ்சயாதி வ்ருத்தாந்தங்களிலும் ப்ரஸித்தம் .
இங்ஙனல்லார்க்கு இப்படி ஞான ஸம்பத்து உண்டாகாது என்னுமிடம் சிஷ்யர்களுடைய ஞானதாரதம்யத்தாலே கண்டுகொள்வது.
மிகவும் குணாதிகரனான சிஷ்யர்களுக்கும் கடுக அத்யாத்ம விஷயங்களை ப்ரகாசிப்பியாதார்க்கு நிஷ்ட்டை குலையாது என்னுமிடம்
ரைக்வாதி வ்ருத்தாந்தங்களிலே ப்ரஸித்தம் .
பெற்றது குணமாக உபதேசித்தால் , சிஷ்ய பாபம் குரோரபி என்கையாலே ஆசார்யனுக்கு நிஷ்ட்டை குலையும்படியாமென்னுமிடம் ,
வருவது விசாரியாதே இந்த்ரனுக்கு உபதேசித்துத் தானும் ப்ரஹ்மவித்யையை மறந்து , தன் சிஷ்யனான நாரத பகவானை இட்டு
ஸர்வேச்வரன் உணர்த்துவிக்க வேண்டும்படியிருந்த சதுர்முகன் பக்கலிலே கண்டுகொள்வது.
இப்படி, அப்ரகாசப்ரகாசாப்யாம் என்கிற இரண்டுக்கும் க்ஷீயதே ஸம்பதாயுஷீ என்கிற பலங்களை
ஒளசித்யத்தாலும் ப்ரமாண ப்ரஸித்தியாலும் க்ரமத்தாலே உதாகரித்தவித்தனை,
இரண்டிலும் இரண்டு அந்வயித்தாலும் வாக்யத்தில் வரும் விரோதம் இல்லை.
ஆகையால், சர்வாவஸ்தையிலும் குருபக்தியின் பரீவாகமாக குருவை ப்ரகாசிப்பிக்கவும் மகாரத்னகர்ப்பமான மாணிக்கச் செப்புப்போலே
இருக்கிற திருமந்த்ரத்தினுடைய சீர்மையும் தன் நிஷ்ட்டையும் குலையாமைக்காக சிலவான ப்ரயோஜனங்களைப் பற்ற
சிஷ்யகுணபூதிம் இல்லாத சபலர்க்கு வெளியிடாதே , மந்த்ரத்தை மிகவும் சேமிக்கவும் ப்ராப்தம் .
இவ்விடத்தில் குரு சப்தம் பரமகுருக்களுக்கும் உபலக்ஷணம் ஸாமான்யமாகவுமாம் மந்த்ர சப்தம் மந்த்ரார்த்தம் முதலான ரகஸ்யங்களுக்கும் ப்ரதர்சனபரம் .
தான் இந்த ரகஸ்யங்களை அநுஸந்திக்கும்போதெல்லாம் ஆசார்ய பரம்பரையை அநுஸந்திக்கையும் விதிபலப்ராப்தம் .
இவ்வாசார்யர்களுடைய அநுஸந்தானம் , ஸம்பாஷ்ய புண்யக்ருதோ மனஸா த்யாயேத் என்கிறபடியே ப்ரதிஷிசம்பாஷணத்துக்கு ப்ராயச்சித்தமுமாம்

வ்யாக்யானம்——விளக்கம்—- சேஷ ஸம்ஹிதை கூறுகிறது.
குரும் ப்ரகாசாயேத் தீமான் மந்த்ரம் யத்னேன கோபயேத் அப்ரகாசப்ரகாசாப்யாம் க்ஷீயதே ஸம்பதாயுஷீ புத்திசாலியானவன் ,
தனது ஆசார்யனைப் பற்றிப் பிறரிடம் புகழ்ந்து பேசவேண்டும். அவர் உபதேசித்த மந்த்ரங்களைப் பொக்கிஷம்போலப் பாதுகாக்க வேண்டும்.
இப்படியாக, ஆசார்யனின் பெருமையைப் பேசாமலும், மந்த்ரத்தைப் பாதுகாக்காமலும் இருந்தால், ஐச்வர்யம் குறையும்; ஆயுளும் குறையும்.
ஒரு சிஷ்யன், இப்படித் தன் குருவைப் புகழ்வதும் , புகழாமலும் இருப்பதும், குருவிடம் அவன் வைத்துள்ள
அதிக பக்தியும், குறைந்த பக்தியுமே காரணமாகிறது.
பகவானிடம் எவ்வளவு பக்தியுடன் இருக்கிறானோஅதைப்போன்று ஆசார்யனிடமும் பக்தியோடு இருக்க வேண்டும்.
அப்போது எல்லா ஞானமும் வந்து சேரும் ; ஆசார்யன் உபதேசிக்காத அர்த்த விசேஷங்களும்
ஆசார்யபக்தி பரிவாஹத்தால் ஸ்புரிக்கும் என்று ச்வேதாச்வதரம் சொல்கிறது.
ஆத்ம விஷயமான ஞானம், இப்படிப் பக்தி உள்ளவனுக்கு ஏற்படும் என்று, ,கடோபநிஷத்தும் ,ஜாபால உபநிஷத்தும் கூறுகின்றன..
சிஷ்யர்கள் மிக குணவான்களாக இருந்தாலும், அவர்களுக்கு ஆசார்யன் தத்வங்கள் முழுவதையும் உபதேசிக்கவில்லையென்றாலும்,
ஆசார்யனுக்கு ,அதனால் எந்தக் குறையும் வராது. சாந்தோக்ய உபநிஷத்தில் ஜாபாலையின் குமாரன்–ஸத்யகாமனின் சரிதத்தை
ஸ்வாமி தேசிகன் இங்கு உதாஹரிக்கிறார்.
ஜாபாலை என்கிற ஸ்திரீயின் குமாரன்–ஸத்யகாமன் . இவன், ப்ரஹ்மவித்யைக் கற்க ஆசார்யரை அணுகினான்
ஜானஸ்ருதி ஒரு அரசன். இவன் பலமுறை வேண்டிக்கொண்ட பிறகே , பலபரீக்ஷைகள் செய்து, இவனுக்கு, உபதேசித்தார்.
ரைக்வர் .இதுவே ரைக்வ வித்யை.

ஆனால் சிஷ்யனை முழுவதும் அப்படியே உடனே ஏற்றுக்கொண்டு உபதேசித்தால்
அந்தத் தகுதியில்லா சிஷ்யன் செய்த பாபங்கள் ஆசார்யனுக்குச் சேர்கின்றன.
இந்த்ரன் தனக்குச் சிஷ்யனாகக் கிடைத்தான் என்று அதைப் பெருமையாக நினைத்து, ப்ரஹ்மா
அவனிடம் சிஷ்ய லக்ஷணம் இருக்கிறதா என்பதை ஆராயாமல், உபதேசித்தார்.
இதன் பலன் அவருக்கு, பாஞ்சராத்ர அர்த்தங்கள் மறந்து போயின.
பிறகு நாரதர், அவற்றை ப்ரஹ்மாவுக்கு நினைவு படுத்தினார். பிறகு, ப்ரஹ்மா, பாஞ்சராத்ரத்தை சிவன் முதலியோருக்கு உபதேசித்தார்—என்று,
ப்ருஹந்நாரதீய வாக்கியமாக , ஸாரஸங்க்ரஹத்தில் சொல்லப்படுகிறது.

ஸஞ்ஜய விஷயம்—-இவர், தன் ஆசார்யரான வ்யாஸ ரிஷியிடம் ,எம்பெருமானிடம் உள்ள பக்தியைப்போலப் பக்தி கொண்டவர்.
அதனாலேயே, ஸ்ரீ க்ருஷ்ணன் ,குருக்ஷேத்ரத்தில் அர்ஜுனனுக்கு உபதேசித்ததை மட்டுமல்லாது,
போர்க்களத்தில் நடந்தவற்றையெல்லாம் வ்யாஸ மஹரிஷியின் அருளாலே காணப்பெற்று த்ருதாஷ்டிரனுக்கு சொன்னவர்.
”அரசே—நான் ஆசார்யனின் பெருமையைப் பரப்பாமல் /புகழாமல் இருந்தாலும், நேர்மாறான வழியில் மந்த்ரத்தை வெளியே சொன்னாலும்,
செல்வம் மங்கும்;ஆயுள் குறையும். ஒருவனுக்கு ஆசார்ய பக்தி மிகவும் அவச்யம்; சிஷ்யனுக்கு இருக்கவேண்டிய லக்ஷணங்கள் இல்லாதவனுக்கு,
ஆசார்யன் உபதேசிக்கலாகாது; சிஷ்யன் மந்த்ரங்களை ஜெபிக்கும்போது, குருபரம்பரையை அவச்யம் த்யானிக்கவேண்டும் .

ஸம்பாஷ்ய புண்யக்ருதோ மனஸா த்யாயேத் என்கிறபடியே ப்ரதிஷிசம்பாஷணத்துக்கு ப்ராயச்சித்தமுமாம்——கௌதம தர்ம ஸுத்ரம் -சொல்கிறது-
பேசக்கூடாதவர்களிடம் பேச நேர்ந்துவிட்டால்,அப்போது புண்யம் செய்த ஆசார்யர்களை மனதில் த்யானிக்கவேண்டும்.
என் உயிர் தந்து அளித்தவரைச் சரணம் புக்கி யான் அடைவே அவர் குருக்கள் நிரை வணங்கிப்
பின் அருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல் பெரியநம்பி ஆளவந்தார் மணக்கால்நம்பி
நன்னெறியை அவர்க்கு உரைத்த உய்யக்கொண்டார் நாதமுனி சடகோபன் சேனைநாதன்
இன் அமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே

வ்யாக்யானம் —விளக்கம்
இந்த ஆத்மா, எம்பெருமானுக்கு ”சேஷன்” என்கிற ஞானத்தைக் கொடுத்து, ஆத்மாவைக் காப்பாற்றிய என் ஆசார்யனை
சரணம் என்று அடைந்து, அவரது ஆசார்யர்களை வரிசைக் க்ரமமாக நமஸ்கரித்து, பின்பு கருணையுடன்
ஸ்ரீ பெரும்பூதூரில் அவதரித்த வள்ளலான ஸ்ரீ பாஷ்யகாரர் , பெரியநம்பி ஆசார்யன், ஆளவந்தாராகிய ஆசார்யன் ,
மணக்கால்நம்பி என்கிற ஆசார்யன், ப்ரபத்தி மார்க்கத்தை மணக்கால் நம்பிக்கு உபதேசித்த உய்யக்கொண்டார்,
அவரது ஆசார்யன் நாதமுனிகள், அவரது ஆசார்யன் சடகோபன் என்கிற ஸ்ரீ நம்மாழ்வார், பிறகு ஸ்ரீ விஷ்வக் ஸேனர் ,
இனிமையான அமுதம் போன்ற பெரியபிராட்டியார், இவர்களை முற்பட நமஸ்கரித்து,
எம்பெருமானின் திருவடிகளை அடைகின்றேன்
ஏதே மஹ்யம் அபோட மன்மத ஸார உன்மாதாய நாதாதய : த்ரய்யந்த ப்ரதிநந்தனீய விவித உதந்தா : ஸ்வதந்தாமிஹ |
ஸ்ரத்தாதவ்ய சரண்ய தம்பதி தயா திவ்யாபகா வ்யாபகா : ஸ்பர்த்தா விப்லவ விப்ரலம்ப பதவீ வைதேஸிகா தேஸிகா : ||

வ்யாக்யானம்—விளக்கம்
வேதாந்தங்கள் கொண்டாடும்படியான தூய்மையான சரிதம் உடையவர்களும் , கல்யாணகுணங்கள் நிறைந்தவர்களும் ,
திவ்ய தம்பதிகளின் கருணை என்னும் கங்கா ப்ரவாஹத்தைநம்மிடம் பரவும்படி செய்தவர்களும்,வஞ்சித்தல்,போட்டி
இவற்றுக்கெல்லாம் எதிராக உள்ளவர்களும், சரணம் என்று அடைவதற்கு ஹேதுவாக இருப்பவர்களும் இப்படிப்பட்ட இவர்கள்,
(மேற்சொன்ன ஆசார்யர்கள்)மன்மதன் பிடியிலிருந்து என்னை விலக்கி , பரமபதத்தை அடைந்து, ஆனந்தமடைய ,
இந்த ஆசார்யர்கள் மூலமாகக் கிட்டும்படி அநுக்ரஹம் செய்ய வேண்டும் .

ஹ்ருத்யா ஹ்ருத்பத்ம ஸிம்ஹாஸநரஸிக — ஹயக்ரீவ ஹேஷோர் மிகோஷ— க்ஷிப்தப்ரத்யர்த்தி த்ருப்திர்ஜயதி பஹுகுணா பங்க்திரஸ்மத்குரூணாம் | திக்ஸௌதாபத்தஜைத்ரத்வஜபட பவந — ஸ்பாதிநிர்த்தூததத்தத் — ஸித்தாந்தஸ்தோமதூலஸ்த பகவிகமந — வ்யக்த ஸத்வர்த்த நீகா ||

வ்யாக்யானம்—-விளக்கம் ஸ்ரீ ஹயக்ரீவன் , நமது ஆசார்யர்களின் ஹ்ருதயங்களில் வீற்றிருந்து, நமது உடையவர் சித்தாந்தத்தை
எதிர்ப்பவர்களை,அவர்களின் கர்வத்தை அடக்க உதவுகிறான்.இப்படிப்பட்ட ஆசார்யர்களின் புகழ் ,
திசைகள்தோறும் உள்ள வெற்றித் தூண்களின்மீது கட்டப்பட்டுள்ளது.அந்தத் தூண்களில் உள்ள கொடிகள்,
மற்றவரின் வாதங்களை பஞ்சுக் கொத்துக்களைக் காற்று விரட்டுமாப்போலே விரட்டித்த தள்ளுகின்றன.
விமரிசையாக இருக்கிற ,நல்மார்க்கதர்ஸிகளான நமது ஆசார்யர்களின் வரிசை இப்படியாக மேன்மையுற்று விளங்குகிறது.

ஆரணநூல் வழிச்செவ்வை அழித்திடும் ஐதுகர்க்கு ஓர்
வாரணமாயவர் வாதக்கதலிகள் மாய்த்த பிரான் என்றநகீர்த்தி
இராமாநுசமுனி இன்னுரைசேர் சீரணி சிந்தையினோம் சிந்தியோம் இனித்தீவினையே

வ்யாக்யானம்—-விளக்கம் வேதங்களின்உட்கருத்தை விளக்கும் நூல் ”ப்ரஹ்மஸுத்ரம் ”.
அது கூறும் உண்மையான வழியை ,தவறான வாதங்களை சொல்லிப் பலரும் அழித்தபோது,
அவற்றையெல்லாம்,வாழைத் தோப்பை நாசம் செய்யும் ஒப்பற்ற யானையைப் போல , உபகாரகர் ,
உலகுக்கு பொருத்தமான அலங்காரமான சிறந்த புகழை உடைய இராமாநுச முனி என்னும் ஸ்ரீ பாஷ்யகாரர்
இனிமையான தன்னுடைய ஸ்ரீ ஸூக்திகளால் சாய்த்தார்.ஸ்ரீ பாஷ்யகாரரின் இன்சொற்களிலும்
அவரது சிறந்த குணங்களிலும் எங்கள் மனம் முழுதும் ஈடுபட்டுள்ளது .
இனி நாங்கள், வேறு சாஸ்த்ரங்களையும்கர்மாக்களையும் ,தீயச் செயல்களையும் மனதால்கூட நினைக்கமாட்டோம் .

நீளவந்தின்று விதிவகையால் நினைவொன்றிய நாம்
மீள வந்தின்னும் வினையுடம்பொன்றி விழுந்துழலாது
ஆள வந்தாரென வென்று அருள்தந்து விளங்கிய சீர்
ஆளவந்தாரடியோம் படியோம் இனி அல்வழக்கே

வ்யாக்யானம்—-விளக்கம்
நாம், நீண்ட நெடுங்காலமாக சம்ஸாரப் பிடியில் சிக்கி இருக்கிறோம்.இந்தப் பிறவிக்குப் பிறகும் கர்மவினையின் காரணமாக ,
வேறொருப் பிறவியை எடுத்து அல்லல்படாமல், நம்மைக்காக்க ,ஆளவந்தார் அவதரித்தார்.
அவர் எதிர்வாதம் செய்பவர்களை வென்று, கருணை புரிந்தார் , அத்தகு கல்யாணகுணங்களை உடைய ஆளவந்தாருக்குத் தாஸரான நாம்,
இனிமேலும் ஸத்தில்லாத –அஸத்தான சாஸ்த்ரங்களைப் படிக்கமாட்டோம் .

காளம் வலம்புரியன்ன நற்காதலடியவர்க்குத் தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த
வள்ளல் மூளும் தவநெறி மூட்டிய நாதமுனி கழலே நாளும் தொழுதெழுவோம் நமக்கார்நிகர் நானிலத்தே

வ்யாக்யானம்—விளக்கம் திருச்ச்சின்னம் வாத்யம்போலும் ,வலம்புரிச் சங்குபோலும் நல்ல பக்திமான்களான
கீழையகத்தாழ்வான் ,மேலையகத்தாழ்வான் ஆகிய இரண்டு சிஷ்யர்களுக்கு, தாள வித்யையைச் சொல்லிக்கொடுத்து,
தமிழ்வேதமெனப் போற்றப்படும் திவ்யப்ரபந்தத்தின் இனிமையான கானத்தையும் உபதேசித்து,
மஹா உதாரகுணவள்ளலும் யோகமார்க்கத்தை உலகில் பரவச் செய்தவருமான ஸ்ரீமந் நாதமுனிகளின் திருவடிகளைத் தினமும் ஸேவித்து வாழ்வோம் .

நான்கு வகையான இந்தப்பூமியில் நமக்குச் சமமானவர் யார் உள்ளார்கள் ? எவருமில்லை !

——————-

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம்–ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் தொகுத்து -அளித்தவை –அதிகாரம் –13—க்ருதக்ருத்யாதிகாரம்–

April 12, 2021

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

———–

அதிகாரம் –13—க்ருதக்ருத்யாதிகாரம்–(ப்ரபத்தி செய்த பிறகு ,ப்ரபன்னனின் நிலை )

அதிகாரத்திலிருந்து

ஸமர்த்தே ஸர்வஜ்ஞ ஸஹஜ ஸஹ்ருதி ஸ்வீக்ருத பரே
யத் அர்த்தம் கர்த்தவ்யம் ந புநரிஹ யத் கிஞ்சித் அபி ந :
நியச்சந்தஸ்தஸ்மிந் நிருபாதி மஹாநந்த ஜலதெள
க்ருதார்த்தீகுர்ம : ஸ்வம் க்ருபணம் அபி கைங்கர்ய தநிந :

வ்யாக்யானம்

பகவான் எல்லாவற்றையும் செய்யும் சமர்த்தன்; எல்லாவற்றையும் நன்கு
அறிந்தவன்;அனந்தகல்யாண குணபரன் ;நமது ப்ரபத்தியை அங்கீகரித்தபிறகு
இந்த மோக்ஷம் என்கிற பலத்துக்காக எதையும் செய்யவேண்டியதில்லை.
ஆதலால், நாம் க்ருதக்ருத்யர் . ஆத்மாவை, பகவானை அனுபவித்தல் என்கிற ஆனந்தத்தில்
நிலைநிறுத்தியுள்ளோம்
இப்போது ,பகவானுக்கு கைங்கர்யம் என்கிற தனம் ப்ராப்தமாகையால் க்ருதார்த்தம்
ஆபாச புருஷார்த்தங்களை எல்லாம் விட்டோம். மஹா புருஷார்த்தங்களைப் பெறுகிறோம்.
இதையும், பலப்பல ஜன்மங்களில் பக்தி முதலிய உபாயங்களில் இறங்கி காலதாமதம்
செய்யாமல் க்ஷணகால ஸாத்யமான ப்ரபத்தியாலே பெறுகிறோம் என்கிற மகிழ்ச்சி

அதிகாரத்திலிருந்து
ப்ரபத்தி செய்தவனை,”செய்யவேண்டியத்தைச் செய்தவன் ” என்று அழைப்பது ஏன் ?

இவ்வுபாய விசேஷ நிஷ்டன் ப்ராப்திக்கு அநந்தரகாலம் தொடங்கித் தான் இதுக்குக்
கோலின பலத்தைப் பற்றத் தனக்குக் கர்த்தவ்யாம்சத்தில் அந்வயமில்லாமையாலும்
கர்த்தவ்யாம்சம் ஸக்ருதநுஷ்டானத்தாலே க்ருதமாகையாலும் ,ஸ்வதந்த்ரனாய்
ஸத்ய ஸங்கல்பனான பலப்ரதன் ”மா சுச : ” என்று அருளிச்செய்கையாலும்
தனக்குப் பிறந்த பரந்யாஸரூப தசையைப் பார்த்து நிர்பரனாய் ;

”மாமேகம் சரணம் வ்ரஜ ” என்கிறபடியே ஸித்தோபாயத்வேந ஸ்வீக்ருதனான
ஸர்வேச்வரன் , ”அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி ” என்று
பலப்ரதாந ஸங்கல்பத்தைப் பண்ணுகையாலே இப்படி விச்வஸநீயனுமாய்
ஸமர்த்தனுமாய் உபாயபூதனுமான ஈச்வரனைப் பார்த்து பலஸித்தியில்
நிஸ்ஸம்சயனுமாய் , நிர்பயனுமாய் ,கடையேறவிட்ட அந்ய புருஷார்த்தங்களையும்
காம்பறவிட்ட உபாயாந்தரங்களையும் அகிஞ்சநன்அயத்நமாக மஹாநிதியைப்
பெறுமாப்போலே தான் பெறப்புகுகிற பரம புருஷார்த்தத்தையும் பார்த்து
ஹஷ்டமநாவாய் ;

தேவர்ஷி பூதாத் மந்ருணாம் பித்ருணாம் ந கிங்கரோ நாயம்ருணீ ச ராஜந்
ஸர்வாத்மநா ய :சரணம் சரண்யம் நாராயணம் லோககுரும் ப்ரபந்ந :

என்கிற ச்லோகத்தின்படியே ப்ரஜாபதி பசுபதி என்றாற்போலே பேரிட்டுக் கொண்டிருக்கிற
ஸஜாயதீயரான க்ஷேத்ரஜ்ஞரைப் பற்ற ஓரோர் அவஸரங்களிலே கைக்கூலி போலே
சில உபாதிகளடியாக எழுதாமறையிலே ஏறிட்டுக் கிடக்கிற அடிமை தீட்டும்
முதல் மாளாதே பொலிசையிட்டுப் போகிற தனிசுதீட்டும் கிழித்தவனாகையாலே
பஞ்சமஹா யஜ்ஞாதிகளான நித்ய நைமித்தகங்களில் அவர்கள் பேர் சொல்லும்போது

யே யஜந்தி பித்ருந் தேவாந் ப்ராஹ்மணாந் ஸஹுதாசநாந்
ஸர்வ பூதாந்தராத்மாநம் விஷ்ணுமேவ யஜந்தி தே

இத்யாதிகளில் மஹர்ஷிகள் அறுதியிட்டபடியே ராஜஸேவகர் ராஜாவுக்குச் சட்டை மேலே
மாலையையும் ஆபரணத்தையும் இட்டாலும் சட்டையில் துவக்கற்று ராஜாவின் ப்ரீதியே
ப்ரயோஜனமாகத் தெளிந்திருக்குமாப்போலவும் யஜ்ஞ அக்ரஹர அத்யாயாதிகளிலும்
ஸ்ரீ ஹஸ்தகிரிமஹாத்ம்யத்திலும் ஸாக்ஷா தர்ப்யாவரோதம் ஜைமிநி :என்கிற
ஸூத்ரத்திலும் சொல்லுகிறபடியே தேவர்கள் பித்ருக்கள் என்கிற சட்டைகளோடு
துவக்கற அவ்வோ சப்தங்கள் அவயவ சக்தி பௌஷ்கல்யங்களாலே ஈச்வரன் பக்கலிலே
நாராயணாதி சப்தங்கள் போலே நிற்கிற நிலையையுங்கண்டு அவற்றினுடைய
உச்சாரணாதிகளில் ச்வேததீபவாஸிகளான சுத்தயஜாதிகளுக்குப் போலே தன்
பரமைகாந்தித்வம் குறையாதே நிற்கிறபடியை நிரூபித்துத் தன் வர்ண ஆச்ரம நிமித்த
குணாத்யதிகாரத்துக்கு அநுரூபமாக அடிமை கொள்ள ஸங்கல்பித்திருக்கிற சாஸிதாவான
சேஷியினுடைய சாஸ்த்ரவேத்ய ஆஜ்ஞாநுஜ்ஞா பரிபாலநரூப கைங்கர்யமுகத்தாலே
ப்ரத்யக்ஷ விதித பரமபுருஷாபிப்ராயரான முக்தரைப்போலே கிஞ்சித்கரனாய்க் கொண்டு
முக்ததுல்யனாய் , உபாயபூர்த்தியாலே க்ருதக்ருத்யனென்றும் , புருஷார்த்த பூர்த்தியாலே
க்ருதார்த்தனென்றும் சாஸ்த்ரங்களாலும் தந்நிஷ்டராலும் கொண்டாடப்பட்டிருக்கும்

வ்யாக்யானம்

ப்ரபத்தி உபாயத்தில் இழிந்தவன் ,இந்த உபாயத்தைத் தொடங்கியதுமுதல் ,அதன் பலனைப்
பெறுவதற்கு, வேறு எதையும் செய்யவேண்டியதில்லை.ஒருமுறை இப்பிரபத்தி செய்ததிலேயே
யாவும் அடங்கியுள்ளது .ஸ்வதந்த்ரன், எண்ணிய செயலை முடிப்பவன், ப்ரபத்தி பலனை
அளிப்பவன் —ஸர்வேச்வரன் ஸ்ரீமத் பகவத் கீதையில் ( 18–66 ) ,
”மா சுச : ” –கவலைப்படாதே என்கிறான் இவற்றால்,ப்ரபந்நன் ,தனது பாரங்களைப்
பகவானிடம் ஸமர்ப்பித்து விட்டதால், கவலையில்லாமல் உள்ளான்.
மோக்ஷத்துக்கு என்று வேறு ஒன்றும் செய்யவேண்டாம். வேறு புருஷார்த்தங்களை விட்டபடியால்
அதற்கான காம்யகர்மாக்களைச் செய்யவேண்டாம். காம்யம் என்றால்–தேவதாந்த்ரம் —
தேவதாந்த்ர கர்மாக்கள். காம்யங்கள் வேண்டாதபோது, அதற்கு என்று இருக்கிற
நித்ய—நைமித்திக கர்மாக்கள் வேண்டாம். ஆனால், சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட
நித்ய கர்மாநுஷ்டானங்கள் கட்டாயம் செய்தாகவேண்டும். இது தேவதாந்த்ர பூஜை அல்ல.
வைதீக கர்மாக்கள் , தேவதாந்த்ர கர்மாக்கள் ஆகாது.
ப்ரபத்தி செய்துகொள்வதற்கு முன்பு கவலைகள் —சோகம் இருந்திருக்கலாம்
ஆனால், ப்ரபத்திக்குப் பிறகு சோகிக்கலாகாது.
{ இந்த சோகம் –கர்மாக்களை அநுபவித்துத் தீர்க்கவேண்டும் ,எப்படி இதைத் தீர்ப்பது,
நிவ்ருத்திக்குப் பிறகுதானே மோக்ஷம் , பகவான் நம்மை எப்படி அநுக்ரஹிப்பான்
என்றெல்லாம் நினைத்து கவலை–சோகம் }

இப்படியாக உபாயமாக இருக்கிற பகவான் ஸ்ரீமத் பகவத் கீதையில்
என்னை மட்டும் சரணமாக அடைவாயாக என்கிறான். மற்றும் இதற்கான பலனைத்
தானே அளிப்பதாயும் அனைத்துப் பாவங்களிலிருந்தும் காப்பாற்றுவதாகவும் உறுதி
அளிக்கிறான் .
இப்படி , நம்பத்தகுந்த , எதையும் தங்குதடையின்றி க்ஷணகாலத்தில் செய்யும்
வல்லவனான , உபாயமாக உள்ளவனான பகவானிடம் ,இப்ப்ரபந்நன் , சந்தேகங்களை
விடுத்து, பயத்தைத் துறந்து, மற்ற புருஷார்த்தங்கள் அவற்றின் வாஸனை யாவையும்
விட்டொழித்து, ஆனந்தமடைகிறான்.
எவ்வித முயற்சியும் இன்றி, பரம ஏழைக்குப் பெரும் செல்வம் கிடைத்தால் மகிழ்வதைப்போல்
ப்ரபந்நன் ,பரமபுருஷார்த்தத்தை அடைவது எண்ணி மகிழ்கிறான்

ஸ்ரீமத் பாகவதம்

தேவர்ஷி பூதாத் மந்ருணாம் பித்ருணாம் ந கிங்கரோ நாயம்ருணீ ச ராஜந்
ஸர்வாத்மநா ய :சரணம் சரண்யம் நாராயணம் லோககுரும் ப்ரபந்ந :

எல்லோராலும் அடையத்தக்கவனும் , எல்லோருக்கும் ஆசார்யனுமான நாராயணனைச்
சரணமடைந்தவன், தேவர், முனிவர் , மனிதர், பித்ருக்கள் என்கிற எவருக்கும்
அடிமையில்லை. கடன்பட்டவனுமல்ல . நித்ய நைமித்திக கர்மாக்களில், ப்ரஜாபதி,
பசுபதி என்கிற நாமாக்களை சொன்னாலும், வர்ணாச்ரம தர்மப்படி வேதங்களுக்குக்
கடன்பட்டவர்களாக அந்தக்கடனுக்கு வட்டி செலுத்துவதைப்போலத் தொண்டு செய்தாலும்,
ப்ரபந்நன் –ப்ரபத்தி செய்தவனுக்கு இந்தக் கடன் சீட்டு கிழிக்கப்பட்டதாகிறது .
பஞ்சமஹா யஜ்ஞங்களில் இவர்களின் பெயர்களை சொன்னாலும், அவை எம்பெருமானையே
சொல்வதாகும்.
மஹாபாரதம்
யே யஜந்தி பித்ருந் தேவாந் ப்ராஹ்மணாந் ஸஹுதாசநாந்
ஸர்வ பூதாந்தராத்மாநம் விஷ்ணுமேவ யஜந்தி தே

எந்தப் பரமைகாந்திகள், பித்ருக்களையும் , தேவதைகளையும் ,ப்ராஹ்மணர்களையும் ,
அக்னியையும் கூறி யாகம் செய்கிறார்களோ, அவர்கள் அந்த பித்ராதிகளுக்கு
அந்தர்யாமியான விஷ்ணுவையே ஆராதிக்கிறார்கள்.
பரமைகாந்திகள் அல்லாதவர்கள், பரமாத்மாவை அறியாதவர்கள் செய்யும் யாகாதிகள்கூட
விஷ்ணுவுக்குச் செய்யும் ஆராதனமே .ஆனால், பரமாத்மாவை இவர்கள் அறியாததால்,
ஸ்பஷ்டமாக இவர்களுக்குப் புரிவதில்லை.
ராஜாவின் சேவகர்கள் , ராஜாவின் உடலில் உள்ள வஸ்த்ரத்தின்மீது ( சட்டை ) ஆபரணங்கள்
அணிவித்தாலும், அவை, ராஜாவுக்கே அணிவித்ததைப்போல ஆகிறதல்லவா !
யஜ்ஞ அக்ரஹரம்

யஜ்ஞ அக்ரஹர அத்யாயம் –மஹாபாரதம்—-சாந்தி பர்வம்

வேத வ்யாஸர் , தன்னுடைய சிஷ்யர்களான ஸுமந்து , ஜைமினி , பைலர் ,வைசம்பாயனர்
சுகப்ரஹ்மம் ஆகிய 5 சிஷ்யர்களுக்கு உபதேசித்தார்.
கல்பத்தின் துவக்கத்தில் நாராயணன் ப்ரக்ருதியையும் , ப்ரஹ்மாவையும் ,பஞ்சபூதங்களையும்
மரீசி ,, மநு முதலிய எட்டுப் போரையும் ச்ருஷ்டித்தார் .
ப்ருஹ்மா —-வேதங்கள், வேதாந்தங்கள் , யஜ்ஞம் , அதன் அங்கம் ,ருத்ரன், இவைகளைச்
ச்ருஷ்டித்தார் . ருத்ரன் , 10 ருத்ரர்களை ச்ருஷ்டித்தார்.
ப்ருஹ்மா , தேவர்கள் தேவரிஷிகளிடம் உலகை அமைக்கவேண்டிய பொறுப்பைக் கொடுத்தார்.
ஆனால், அவர்களோ பொறுப்புக்களை நிறைவேற்ற இயலவில்லை என்று ப்ருஹ்மாவிடம்
சொன்னார்கள். அதற்கான சக்தியைப் பெறுவதற்கு, ப்ருஹ்மா இவர்களுடன் திருப்பாற்கடலுக்குச்
சென்று , கைகளை உயரத் தூக்கி ஒற்றைக்காலால் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார்கள்.
அப்போது, ”நீங்கள் என்னை ஆராதித்த பலனை விரைவில் அடைவீர்கள் ;எல்லோரும்
தினந்தோறும் யாகம் செய்து அதில் எனக்கு ”ஹவிஸ் ” அளியுங்கள் . நான் உங்களுக்கு
ச்ரேயஸ்ஸைக் கொடுக்கிறேன் ” என்று அசரீரி ஒலித்தது .இதைக்கேட்டு மகிழ்ந்த
தேவர்கள் வைஷ்ணவ யாகத்தைச் செய்தார்கள்.

பாரதத்தில், யாகங்களில் முக்யமான பாகத்தைக் பகவான் ஸ்வீகரிக்கிறான்என்பதை
விரிவாகச் சொல்வது யஜ்ஞ அக்ரஹர அத்யாயம் —
ப்ரஹ்ம —ருத்ராதி தேவர்கள் தாங்கள் செய்யும் லோக நிர்வாகத்தைச் சரியாகச்
செய்வதற்கு, பகவானை வேண்டினார்கள். அவர், ”வைஷ்ணவ யாகம் ”செய்யும்படியும்
அதில், அவரவர்கள் தங்களுக்கு முடிந்தவரையில் தன்னை ஆராதிக்கும்படியும்
யார் யார் எவ்வளவு தூரம் செய்கிறீர்களோ அந்த அளவுக்கு , யாகத்தில் உங்களுக்கும்
பங்கு கிடைக்கும் .ப்ரவர்த்தி தர்மம், நிவ்ருத்தி தர்மம் இரண்டில் மோக்ஷம் தவிர
வேறு பலன்களுக்குப் ப்ரவர்த்தி தர்மம் என்கிறவற்றைச் செய்பவர் –உங்களை ஆராதிப்பர் .
அவர்கள் அளிப்பவை, உங்களைப் புஷ்டியாக்கி நிர்வாஹம் செய்ய உதவும்.
ப்ரஹ்மா ருத்ரன் இருவரும் இந்த வரப்ரதான சக்தியை விசேஷமாகப் பெறுவார்கள்.
முமுக்ஷுக்கள், நிஷிகாம்யமாக நிவ்ருத்தி தர்மமாகச் செய்வர் —
அதனால், அதில் நானே ஆராதிக்கப்படுகிறேன் —–

ஹஸ்தகிரி மஹாத்ம்யம்

ப்ருஹ்மா செய்த அச்வமேத யாகத்தில் அக்நி மத்தியில் இருந்துகொண்டு,
எம்பெருமானே வரதனே எல்லா ஹவிஸ்ஸையும் ஸ்வீகரித்தார்

தேவதைகள், ப்ருஹ்மாவிடம் ” தேவரீர் , எங்கள் பெயரைச் சொல்லி ஹவிஸ்ஸை
அக்நியில் சேர்க்கும்போது , அந்த ஹவிஸ்ஸுக்கள் எங்களுக்கு வரவில்லையே –”
என்று கேட்டார்கள். அதற்கு, ப்ருஹ்மா , ”நான் ஒருபோதும் உங்களை ஆராதிக்கவில்லை.
முமுக்ஷுக்கள் செய்யும் கர்மாக்களில், பகவானே நேரில் ஹவிஸ்ஸை ஸ்வீகரிக்கிறான் ”என்றார்

ப்ரஹ்ம ஸூத்ரம் ( 1–2–29 )
அக்நி போன்ற சொற்கள் எம்பெருமானையே குறிக்கிறது. அதனால், விரோதமில்லை என்று
ஜைமினி கூறுகிறார்
தேவர்கள் , பித்ருக்கள் என்னும் சொற்கள் பகவானின் சட்டை போன்று உள்ளவர்களைக்
குறிக்கவில்லை; பகவானையே குறிக்கிறது.
ச்வேத த்வீபத்தில் உள்ளவர்கள் நாராயணன் என்கிற திருநாமத்தில் ”நார ”
என்கிற சப்தம் செய்தாலும், அது அவன்மீது மட்டுமே உறுதியான பக்தியை வெளிப்படுத்துமோ
அதைப்போன்று, ப்ரபந்நன் தனது கர்மாக்களைச் செய்யும்போது ப்ரஜாபதி , பசுபதி
என்று சொன்னாலும் எந்தத் தோஷமும் அண்டுவதில்லை.அவரவர் வர்ணாச்ரமத்துக்கு
ஏற்ப அவரவர்களை ,பகவான் சேவகனாக மகிழ்வுடன் ஏற்கிறான்.ஆதலால், சேஷியான
அவனுக்குக் கைங்கர்யம் செய்வது சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்டதாகும்.
முக்தர்கள், எவ்விதம் பகவானின் திருவுளத்தை நேரிடையாகவே அறிந்து கைங்கர்யம்
செய்கிறார்களோ அவ்விதமே ப்ரபந்நனும் சிறிது சிறிதாகக்கைங்கர்யம் செய்ய
முயற்சிப்பான்.இவன், சரியான உபாயத்தைச் செய்ததால் ”க்ருதக்ருத்யன் ” என்றும்,
தான் அடையவேண்டிய புருஷார்த்தத்தை அடைந்துவிட்டதால் ”க்ருதார்த்தன்”
எனவும் மெச்சப்படுகிறான்.

அதிகாரத்திலிருந்து

சரணாகதி கத்யம் –உதாரணம்

இவனுடைய இந்தக் க்ருதக்ருத்ய அநுஸந்தானத்தை அதஸ்த்வம் தவ தத்த்வதோ
மத்ஜ்ஞான தர்சன ப்ராப்திஷு நிச்சய : ஸுகமாஸ்ஸ்வ என்று சரணாகதி கத்யத்திலே
நிகமித்தருளினார் . இதுக்குக் கருத்து —அநாதிகாலம் அஜ்ஞாதிலங்கனமடியாகவுண்டான
பகவந்நிக்ரஹத்திலே ஸம்ஸரித்துப்போந்த நமக்கு அவஸர ப்ரதீக்ஷை பகவத்
க்ருபையடியாக உண்டான ஸதாசார்ய கடாக்ஷ விஷயீகாரத்தாலே வந்த த்வயோச்சரண
அநுச் சாரணத்தாலே ப்ரபத்த்யநுஷ்டானம் பிறந்தபின்பு சரண்ய ப்ரஸாதநங்களில்
இதுக்குமேல ஒன்றில்லாமையாலே நிக்ரஹஹேதுக்களையெல்லாம் க்ஷமித்துத்
தீர்த்த அடியவர் தம்மைத் திருத்திப் பணிகொள்ளவல்ல ஸர்வசேஷியான ஸ்ரீ ய :பதி
தன் பேறாகத் தானே ரக்ஷிக்குமென்று தேறி நிர்பரனாயிரு—-என்கை. இது,
மா சுச : ” என்கிற சரண்யவாக்கிலும் தீர்ந்த பொருள்

வ்யாக்யானம்

இந்தக் க்ருதக்ருத்யன் , தான் செய்யவேண்டியத்தைச் செய்துவிட்டதால் ,அடைவதை
எம்பெருமானார் ,சரணாகதிகத்யத்தில்
அந்மதம் நோக்த பூர்வம் மே ந ச வக்ஷ்ய கதாசன ராமோ த்விர்நாபி பாஷதே ,
ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யா ச தே |
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம ||
ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ :
அஹம்த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச :

இதி மயைவஹ்யுக்தம் || அதஸ்த்வம் தவ தத்வதோ மத்
ஜ்ஞான தர்ஸந ப்ராப்திஷு நிஸ்ஸம்சய :ஸுகமாஸ்வ ||

கணக்கில்லாக் காலமாக பகவானின் கட்டளையை ,நமது அறியாமை காரணமாக,
மீறி நடந்ததால், அதற்கான தண்டனையான ஸம்ஸாரத்தில் உழன்று துக்கப்படுகிறோம்;
கஷ்டப்படுகிறோம்.நம்மைக் கரையேற்றச் சரியான சந்தர்ப்பத்தை பகவான் ஏற்படுத்தி,
ஆசார்யனானின் கடாக்ஷம் கிட்டச் செய்கிறான். ஆசார்யனின் கிருபையால், த்வய
அநுஸந்தானம் செய்து ப்ரபத்தி செய்துகொள்கிறோம் . அடுப்பில், களைந்து வைக்கப்பட்ட
நீரில் உள்ள அரிசி கொதிக்கும்போது, அதை அக்நி பக்குவப்படுத்தி கீழிருந்து
மேலுக்குக் கொண்டுபோய்விடுகிறது;மேலே போனதும் கொதிக்கும் சப்தம் நின்றுவிடும்.

இந்த சப்த சக்தி –நாராயணாதி ஸப்தங்கள் — ஸம்ஸாரியான நம்மை, மேலே, பகவானிடம்
கொண்டு சேர்க்கும்வரை இருக்கும்;

பெரிய பெருமாள் திருவாய் மலர்வதாக , சரணாகதி கத்யத்தில் ஸ்ரீ உடையவர் சொல்வது—

இதில் கொஞ்சமும் சந்தேகம் வேண்டாம்.; யாம் பொய் கூறியதில்லை;இனியும் கூறமாட்டோம் .
ஸ்ரீ ராமன் இரண்டுவிதமாகச் சொல்லமாட்டான். ”ஒருக்காலே சரணம் என்பார்க்கும்
உமக்கே தொண்டன் என்பார்க்கும் எல்லாரிடமிருந்தும் அபாயம் அளிக்கிறேன் ;
இது என் வ்ரதம்.

உரிய சாதனங்களைச் செய்ய இயலாத நீர் ,என்னைச் சரணமாக அடைவீராக . நான்,
உம்மைச் , சகல பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன் . சோகத்தை விடும் —-
ஆதலால் நீர் சந்தேகமும் அறிவில் குழப்பமும் இல்லாமல் ஆசார்ய அநுக்ரஹத்தால்
வந்த எம்மைப் பற்றிய ஜ்ஞானம் மாறாமல், குறையாமல், தொடர்ந்து இருப்பதிலும்
எம்மை நேரில் தரிசிப்பது போன்ற நினைவிலும் எம்மை அடைவதிலும் ,சந்தேகம்
சிறிதும் இல்லாமல் சந்தோஷமாக இருப்பீராக—-” என்று பெரிய பெருமாள்
திருவாய் மலர்ந்து அருள்கிறார்

பெரியபிராட்டியின் நாயகனான பெரியபெருமாள், நம்மைத் தூய்மையாக்கி
தனது கைங்கர்யத்தில் இழியச் செய்கிறான்.இப்படியாக பகவான் நம்மைக்
காப்பான் என்கிற நம்பிக்கையுடன் ப்ரபந்நன் எவ்வித வருத்தமில்லாமல்
இருக்கவேண்டும் –இதையே ,கீதையில் மா சுச :” என்கிறான்–

அதிகாரத்திலிருந்து
க்ருதக்ருத்யன் –யார்

இவனுக்குப் ப்ரபத்திக்கு முன்புற்ற சோகம் அதிகாரத்திலே சொருகுகையாலே முன்பு
சோகித்திலனாகில்அதிகாரியல்லாமையாலே காராணாபாவாத் கார்யபாவ : என்கிற
ந்யாயத்தாலே உபாய நிஷ்பத்தி உண்டாகாது. உபாயஸ்வீகாரம் பண்ணினானாகத்
தன்னை நினைத்திருந்த பின்பு சரண்யோக்தியிலே நெகிழ்ச்சி உடையவனாய்
சோகித்தானாகில் கார்யபாவாத் ஸாமக்ரஞ்ய பாவ : என்கிற ந்யாயத்தாலே
பூர்ணோபாயநல்லாமையாலே பலம் உபாயபூர்த்தி ஸாபேக்ஷமாய்க்கொண்டு
விளம்பிக்குமென்று அறியலாம். முன்பு ப்ரஸக்த சோகனாய் பின்பு ”மா சுச : ”
என்று ப்ரதிஷேகிக்கிறபடியே வீதசோகனானவன் க்ருதக்ருத்யனென்று அறியலாம்

வ்யாக்யானம்

ஸம்ஸாரத் துன்பங்கள், ஆத்மஸ்வரூபத்துக்கு விரோதமாக நடப்பது–இவற்றால் ஏற்படும்
வருத்தம், ப்ரபத்திக்குத் தகுதியானவாக ஆக்குகிறது.இவ்வருத்தம் இல்லையெனில்,
ப்ரபத்திக்கு அருகதை இல்லை எனலாம். இதையே, காராணாபாவாத் கார்யபாவ :
என்கிறார்கள். காரணம் இல்லையெனில் , கார்யம் இல்லை. ப்ரபத்திக்குப் பிறகும்,
நம்பிக்கைக்கு குறைவால், வருத்தம் நீடிக்கக்கூடும். கார்யபாவாத் ஸாமக்ரஞ்ய பாவ :
கார்யம் இல்லையெனில், காரணம் இல்லை. இவர்களுக்கு, ப்ரபத்தி பூர்த்தியாகாது.
ப்ரபத்தி பூர்த்தியாகாதவரை ,அதன்மூலமாக எதிர்பார்க்கும் பலனும் தள்ளிப்போகும் .

எவன், ப்ரபத்திக்கு முன்புவரை வருத்தத்தில் அல்லல்பட்டு, ப்ரபத்திக்குப்பிறகு
”மா சுச : ” என்கிற பகவானின் ஆறுதல் வார்த்தையை, மனதில் ஏத்தி, வருத்தமில்லாமல்
வசிக்கிறானோ , அவனே க்ருதக்ருத்யன் ஆகிறான் .

அதிகாரத்திலிருந்து

மன்னவர் விண்ணவர் வானோர் இறை ஒன்றும் வாங்கருத்தோர்
அன்னவர் வேள்வி அனைத்தும் முடித்தனர் அன்புடையார்க்கு
என்ன வரம் தர என்ற நம் அத்திகிரித் திருமால்
முன்னம் வருந்தி அடைக்கலம் கொண்ட நம் முக்கியரே

பகவதி ஹரௌ பாரம் கந்தும் பரந்யஸநம் க்ருதம்
பரிமித ஸுக ப்ராப்த்யை க்ருத்யம் ப்ரஹீணம் அக்ருத்யவத்
பவதி ச வபுவ்ருத்தி : பூர்வம் க்ருதை : நியதக்ரமா
பரம் இஹ விபோ : ஆஜ்ஞாஸேது : புதை : அனுபால்யதே

வ்யாக்யானம்

யார் = மன்னவர்—-நமக்கு அரசர்கள்
யார் = விண்ணவர் —–தேவதைகளைப் போல நம்மால் ஆராதிக்கத் தகுந்தவர்
யார் = வானோரிறை —நித்ய ஸூரி களுக்கு ஸ்வாமியான பகவான்
யார் = ஒன்றும் வான் கருத்தோர் —-வசிக்கும் பரமபதத்திலேயே ஆசையுடையவர்கள்
யார் = அன்னவர் வேள்வி அனைத்தும் முடித்தனர் —நல்லது,கெட்டதுகளைப்
பிரித்து அறிபவர்கள் ,செய்யவேண்டிய
யாகங்கள் யாவும் செய்துமுடித்தனர்

இவர்கள்

அன்புடையார்க்கு என்னவரம் தரவென்ற —தன்னிடம் பக்தி உடையோர்க்கும்
அவர்களைச் சேர்ந்தோர்க்கும்
மோக்ஷம் கொடுத்தபின்பும்,இன்னும்
என்ன வரம் கொடுக்கலாம் எனச் சிந்திக்கிற
நம் அத்திகிரித் திருமால் —ஹஸ்திகிரியில் எழுந்தருளியிருக்கும் நம் பேரருளாளனால்
முன்னம் வருந்தி—–முன்பு ப்ரயாசைப்பட்டு
அடைக்கலம்கொண்ட நம் முக்கியரே –ரக்ஷிக்கப்பட வேண்டியவர்களாக
ஏற்றுக்கொள்ளப்பட்ட நமக்கு முக்கியர்களான ப்ரபந்நர்கள்

தன்னிடம் பக்தியுள்ளவர்கட்கு ,என்ன வரம் அளிக்கலாம் என்று எண்ணியபடி
ஹஸ்திகிரியில் எழுந்தருளியுள்ள பேரருளாளன், தன்னால் காக்கப்படவேண்டியவர்கள் என்று
அவர்களை ப்ரபன்னர்களாக்குகிறான் இப்படிப்பட்ட ப்ரபன்னர்கள் , நமக்கு அரசர்
போன்றவர்கள்; தேவர்களைப்போல நம்மால் ஆராதிக்கப்பட வேண்டியவர்கள்;
நித்யஸூரிகளின் தலைவனான எம்பெருமானின் வைகுண்டத்தில்வஸிக்க ஆர்வமுடையவர்கள்
நல்லது , கெட்டது அறியக்கூடிய அன்னம் போன்றவர்கள்; இவர்கள் செய்யவேண்டியத்தைச்
செய்து முடித்தவர் ஆவர்

ஸம்ஸாரத்திலிருந்து விடுபட,விரோதியை அழிக்கும் பகவானின் திருவடிகளில் ப்ரபத்தி
செய்யப்பட்டது.அல்பபலனைக் கொடுக்கும் காம்ய கர்மாக்களை விட்டொழித்து,
ப்ரபத்திக்குப் பிறகு பகவானின் கட்டளையாகிற நித்ய, நைமித்திக கர்மாக்களைச்
செய்வது ஸ்வரூபம் அறிந்த ப்ரபன்னர்களின் கடமையாகும்.

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –13 வது அதிகாரம் —-க்ருதக்ருத்யாதிகாரம் — நிறைவு

——————-

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம்–ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் தொகுத்து -அளித்தவை –அதிகாரம் —12–ஸாங்கப்ரபதநாதிகாரம்–

April 12, 2021

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

———–

அதிகாரம் —12-ஸாங்கப்ரபதநாதிகாரம்-
(ப்ரபத்தியை எப்படிச் செய்வது —அங்கங்களுடன் கூடிய ப்ரபத்தியை அநுஷ்டிக்கும் முறை )

அதிகாரத்திலிருந்து

ஆபீஷ்ட்டே துஸ்ஸாதே ஸ்வத இதரதோ வா க்வசன தத்
பரந்யாஸம் யாச்சா அந்விதம் அபிவதந்தி ப்ரபதநம்
இத : பச்சாத் அஸ்மத் யதந நிரபேக்ஷண பவதா
ஸமர்த்ய : அஸௌ அர்த்த : து இதி மதிவிசேஷம் ததாவிது :

வ்யாக்யானம்
விரும்பும் பலன் ஒன்றை சுய முயற்சியில் பெறமுடியாத சமயத்திலும்
வேறு எந்த முயற்சியிலும் பெறமுடியாதபோது, அந்தப் பலனை
அடைய ஒருவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பது –ப்ரபத்தி
இது ஆசார்யர்கள் கூறுவது
இந்த க்ஷணம் முதல், என்பொருட்டு இந்தச் செயலை எனக்காக
முடித்தருள்க—அடியேன் இதற்காக எவ்வித முயற்சியும் செய்யமாட்டேன்
என்கிற மன உறுதி என்றும் சொல்லலாம்

அதிகாரத்திலிருந்து

முமுக்ஷுவான அதிகாரிக்கு இவ்வுபாயத்தில் அங்கிஸ்வரூபமாவது ஆபரணத்தை உடையவனுக்கு
அவன் தானே ரக்ஷித்துக்கொண்டு பூணக்கொடுக்குமாப்போலே யதாவஸ்திதமான ஆத்மநிக்ஷேபம் .
அதாவது ப்ரணவத்தில் ப்ரதமாக்ஷரத்தில் ப்ரக்ருதி ப்ரத்யயங்களாலே ஸர்வரக்ஷகனாய் ஸர்வசேஷியாய்த் தோற்றின ஸர்வேச்வரனைப் பற்ற
ஆத்மாத்மீய ரக்ஷணவ்யாபாரத்திலும் ஆத்மாத்மீய ரக்ஷண பலத்திலும்
ஸ்வாநீநமாகவும் ஸ்வார்த்தமாகவும் தனக்கு அந்வயமில்லாதபடி பரந்யாஸ ப்ரதானமான அத்யந்த பாரதந்த்ரியவிசிஷ்ட்ட சேஷத்வாநு
ஸந்தான விசேஷம்

வ்யாக்யானம்

அங்கங்களுடன் கூடிய அங்கியானது ஆத்மஸமர்ப்பணம் . இது முமுக்ஷுக்கள் கைக்கொள்வது .
அவ்விதம் ஆத்மஸமர்ப்பணம் செய்யும்போது ,ப்ரபத்தியிலோ அதன் பலனிலோ தனக்கு எவ்வித
ஸ்வதந்த்ரமும் இல்லை என்கிற எண்ணம் வேண்டும்.
ஆத்மஸமர்ப்பணம் என்பது, ஒருவன் தன்னுடைய ஆபரணத்தை
பாதுகாப்பு கருதிக் கொடுத்துவைத்து ,பிறகு அதன் சொந்தக்காரன்
திரும்பிவந்தவுடன் அவனிடம் அந்த ஆபரணத்தைத் திரும்ப
ஒப்படைப்பதாகும் .
ப்ரணவத்தின் முதல் எழுத்தான ”அ ” மூலம் கூறப்படுபவன் ;எல்லோருக்கும்
எஜமானன் ;எல்லாவற்றையும் காப்பவன் –இந்த ஸர்வேச்வரனிடம்
தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையுமான காப்பாற்றுகிற பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, தாமே அப்பொறுப்பை ஏற்பதோ,
அதன் பலனை ஏற்பதோ இல்லாமல் பற்று அற்று இருத்தல். இந்த நிலை
எஜமானன் –அடிமை எனப்படுகிறது.நம்மைக் காக்கும் பொறுப்பு
முழுவதையும் அவனிடம் ஒப்படைப்பது மிக விசேஷம்.

அதிகாரத்திலிருந்து

பரந்யாஸத்தை அநுஷ்டிக்கும் முறை

ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத் என்று சோதிதமான இவ்வநுஸந்தான
விசேஷத்தை அநுஷ்டிக்கும்படி :

சேஷியாய் ஸ்வதந்த்ரனான ஈச்வரன் தன் ப்ரயோஜனமாகவே தானே ரக்ஷிக்கும்படிக்கு ஈடாக
அநந்யார்ஹ அநந்யாதீந சேஷபூதனாய் அத்யந்த பரதந்த்ரனான நான் ஆத்மாபிசாயம் ந மம என்கிறபடியே
எனக்குரியனல்லேன்; ஒன்றை நிரூபாதிகமாக என்னது என்னவும் உரியனல்லேன் ;

ஸ்வயம் ம்ருத்பிண்டபூதஸ்ய பரதந்த்ரஸ்ய தேஹிந :
ஸ்வரக்ஷணே அபி அசக்தஸ்ய கோ ஹேது : பரரக்ஷணே

என்கிறபடியே என்னையும் என்னதென்று பேர் பெற்றவையும் நானே
ஸ்வதந்த்ரனாயும் ப்ரதானபலியாயும் ரக்ஷித்துக்கொள்ள யோக்யனுமல்லேன்;

ஆத்மா ராஜ்யம் தனம் சைவ களத்ரம் வாஹநாநி ச
ஏதத் பகவதே ஸர்வம் இதி தத்ப்ரேக்ஷிதம் ஸதா

என்று விவேகிகள் அநுஸந்தித்த க்ரமத்திலே என்னுடைய ஆத்மாத்மீயங்களும் அவனதே ;

”ஆத்மாத்மீய பர ந்யாஸோ ஹி ஆத்ம நிக்ஷேப உச்யதே ” என்கையால்
இவற்றினுடைய எல்லாவற்றையும் ரக்ஷணபரமும்
” ந ஹி பாலநஸாமர்த்யம் ருதே ஸர்வேச்வரம் ஹரிம் ” என்கிறபடியே ஸர்வ ரக்ஷகனான அவனதே ;

தேந ஸம்ரக்ஷ்யமாணஸ்ய பலே ஸ்வாம்யவியுக்ததா
கேசவார்ப்பண பர்யந்தா ஹி ஆத்மநிக்ஷேப உச்யதே

என்கிறபடியே ரக்ஷண பலமும் ப்ரதான பலியான அவனதே என்று பாவிக்கை

வ்யாக்யானம்

ஸாத்யகி தந்த்ரம் சொல்கிறது

ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத் =தன்னுடைய ஆத்மாவை என்னிடம் ஒப்படைப்பது —கடைப்பிடிக்கப்படும் முறை
ஆத்மாவை ஒப்படைப்பவன், ”நான் எம்பெருமானை முழுதும் நம்பி நான் அவனின் அடிமை ;அவனுக்காகவே உள்ளேன் ;
என்னுடைய அடிமையானது வேறு ஒருவருக்குமில்லை ;நான் வேறு யாரையும் நம்பவில்லை;
ஆதலால், எல்லாவற்றுக்கும் யஜமானனும் எதையும் சார்ந்து இல்லாமலிருப்பவனுமான எம்பெருமானுக்கு ,
தனது ப்ரயோஜனத்துக்காகவே , என்னைக்காக்கும் பொறுப்பு உள்ளது என்று எண்ணுதல் வேண்டும்.

ஸாத்யகி தந்தரம்
இந்த மந்த்ரத்தாலே ஒருவன் , தன்னுடைய ஆத்மாவை என்னிடம் ஸமர்ப்பிக்கவேண்டும் .
இங்ஙனம் செய்யவேண்டியதை, என்னிடத்தில் செய்தவன் க்ருதக்ருத்யன் ( செய்யவேண்டியதைச் செய்தவன் ) ஆவான்.
தனது என்கிற ”ப்ராந்தி ” அநாதியாய் எல்லா ஜன்மங்களிலும் தொடர்ந்து
வருகிறது. ”தனது இல்லை ”என்கிற எண்ணம் எந்த ஜன்மத்தில் வருகிறதோ
‘அது,’ஸ்வ ஸம்பந்த த்யாகம் ”.

மஹாபாரதம்
ஆத்மாபி சாயம் ந மம = என்னுடைய ஆத்மா என்னைச் சார்ந்ததல்ல;என்பதைப்போல,
என் ஆத்மா என்னுடையதல்ல; வேறு எதனையும் என்னுடையது என்று
சொந்தம் கொண்டாட உரிமையுமில்லை

ஸ்வயம் ம்ருத்பிண்டபூதஸ்ய பரதந்த்ரஸ்ய தேஹிந :
ஸ்வரக்ஷணே அபி அசக்தஸ்ய கோ ஹேது : பரரக்ஷணே

ஆத்மாத்மீய ரக்ஷணம் = ஜீவன், மண்கட்டி போன்றவன்;தன்னைக் காத்துக்கொள்ளும்
திறனற்றவன் ;எம்பெருமானையே நம்பி இருப்பான் –இப்படி இருப்பவன் ,மற்றவர்களைக்
காப்பது இயலாதது .ஆகவே , தன்னையும் ,தன்னைச் சேர்ந்தவர்களையும் ,சுயமாகக்
காக்கும் திறனற்றவன்.பகவானின் அருள் வேண்டும் .

ஆத்மா ராஜ்யம் தனம் சைவ களத்ரம் வாஹநாநி ச
ஏதத் பகவதே ஸர்வம் இதி தத்ப்ரேக்ஷிதம் ஸதா

உபரிசரவஸு என்பவன் ஒரு அரசன் —அவன் சொன்னதாவது—ஆத்மா ,ராஜ்யம்,
பொருட்செல்வம் ,மக்கள் மனைவி, வாஹனங்கள் போன்ற யாவும் எம்பெருமானுக்காகவே
உள்ளன. இவ்விதம் , அறிவாளிகள் கூறுவதைப்போல என்னுடையது என்று
நினைக்கிற எல்லாமும் பகவானுக்கே உரியது
உபரிசரவஸு =வஸு என்கிற அரசனுக்கு ,இந்த்ரனால் வானத்தில் செல்லும் விமானம்
கொடுக்கப்பட்டிருந்தது;அதனால், வஸு என்கிற அரசன், உபரிச்ரவசு ஆனான்

லக்ஷ்மீ தந்த்ரம்

”ஆத்மாத்மீய பர ந்யாஸோ ஹி ஆத்ம நிக்ஷேப உச்யதே ”

ஆத்மாவையும் அதைச் சேர்ந்தவற்றையும்/சார்ந்தவற்றையும் காப்பாற்றும் பொறுப்பை
பகவானிடம் ஸமர்ப்பிப்பதே ”ஆத்ம நிக்ஷேபம் ‘ எனப்படும். ஆதலால், எல்லாவற்றையும்
காக்கும் பொறுப்பு , எல்லாவற்றையும் காப்பாற்றும் அவனைச் சேர்ந்தது

விஷ்ணு புராணம்

”ந ஹி பாலநஸாமர்த்யம் ருதே ஸர்வேச்வரம் ஹரிம் ” =எல்லாவற்றையும் நியமிக்கும்
அந்த ஸ்ரீ ஹரி தான், எல்லோரையும் காக்கும் திறன் உள்ளவன்;அந்தத் திறன் வேறு யாருக்கும் இல்லை .

லக்ஷ்மீ தந்த்ரம்

தேந ஸம்ரக்ஷ்யமாணஸ்ய பலே ஸ்வாம்யவியுக்ததா
கேசவார்ப்பண பர்யந்தா ஹி ஆத்மநிக்ஷேப உச்யதே

பகவானால் காக்கப்படும் ஆத்மாவை ,பலனில்கூடத் தனக்கு உரிமையில்லை என்கிற உறுதியுடன்
கேசவனிடம் ஸமர்ப்பிப்பதே , ”ஆத்ம நிக்ஷேபம் ” இப்படி, ஸமர்ப்பணம் செய்வதால் உண்டாகும்
பலனும் அவனுடையதே என்கிற எண்ணம் வேண்டும்.

சிபிச் சக்ரவர்த்தியை, புறா சரணம் என்று அடைகிறது.என்னை ரக்ஷித்துக்கொள்ளச் சக்தியில்லை;நீயே
அதற்கு வழி செய்யவேண்டும் என்றுதானே கேட்கமுடியும்
! சிபி, தன்னுடைய தொடையிலிருந்து மாம்ஸத்தை அறுத்துக் கொடுத்து புறாவைக் காப்பாற்றினான்.வேறு
வழி செய்ய முடிந்தால் அதையும் செய்திருப்பான்.

அதிகாரத்திலிருந்து
அதிகாரிகள்–விசேஷங்கள்

முமுக்ஷு மாத்ர ஸாமாந்யம் ஸ்வரூபாதி ஸமர்ப்பணம்
அமிஞ்சிநே பரந்யாஸ : த்வதிக : அங்கிதயா ஸ்தித :
அத்ரரக்ஷாபரந்யாஸ : ஸமஸ்ஸர்வே பலார்த்திநாம்
ஸ்வரூப பல நிக்ஷேபஸ்த்வதிகோ மோக்ஷ காங்க்ஷிணாம்

முமுக்ஷுக்கள் தங்களுடைய ஸ்வரூபம், பலன் இவற்றை சமர்ப்பணம் செய்கின்றனர்.
தன்னைக்காக்கும் பொறுப்பையும் ஸமர்ப்பிப்பது, முமுக்ஷுக்களுக்கு மேலும் ஒரு அங்கியாகிறது.
மோக்ஷத்தை விரும்புபவர் ஸ்வரூபம், பலன் தன்னைக் காக்கும் பொறுப்பு யாவற்றையும் சமர்ப்பணம்
செய்கின்றனர்

அதிகாரத்திலிருந்து
ப்ரபத்தியின் பலனும் பகவானுக்கே

பலார்த்தியாய் உபாயாநுஷ்டானம் பண்ணுகிற ஜீவன் பலியாயிருக்க ஈச்வரன் இங்குப்
ப்ரதான பலியானபடி எங்ஙனேயெனில் —-அசித்தின் பரிணாமங்கள்போலே சித்துக்குத்
தான் கொடுத்த புருஷார்த்தங்களும் ஸர்வ சேஷியான தனக்கு உகப்பாயிருக்கையாலே
ஈச்வரன் ப்ரதான பலியாயிருக்கிறான். அசேதனமான குழமண்ணை அழித்துப் பண்ணியும்
ஆபரணம் பூட்டியும் அழகு கண்டு உகக்கிறதோடு சேதநமான கிளியைப் பஞ்ஜரத்தில்
வைத்துப் பால் கொடுத்தும் வேண்டினபடி பறக்கவிட்டும் அதின் உகப்பு கண்டு உகக்கிறதோடு
வாசியில்லையிறே நிரபேக்ஷரான ரஸிகர்க்கு

வ்யாக்யானம்

ப்ரபத்தியின் பலனையும் ஈச்வரன் எப்படி அடைகிறான் என்பது சொல்லப்படுகிறது
அசித்துக்கு உண்டான தன்னால் தரப்பட்ட மாற்றங்களால் மகிழ்வதைப்போல ,
சித் என்கிற ஜீவனுக்குத் தன்னால் தரப்பட்ட புருஷார்த்தங்களால் பகவான் மகிழ்கிறான் .
இதன் காரணம், அனைத்துக்கும் அவ எஜமானனாக இருப்பதால்.
குயவன் ,மண்ணைக் குழைத்து ஒரு மண் பொம்மை செய்கிறான் .பிறகு , அதை
வேண்டாம் என்று அழிக்கிறான். வேறு ஒரு பொம்மை செய்கிறான். அதற்கு வஸ்த்ரம்
சாற்றுகிறான். ஆபரணம் பூட்டுகிறான் .அவையெல்லாம் அந்தப் பொம்மைக்குப்
புருஷார்த்தம் இல்லை. குயவனுக்கு உகப்பு. அதைப்போலவே பகவான் உகப்படைகிறான்.

1.கிளி, கூட்டில் இருக்கும்போது கிளியின் அழகு, பேசும் திறமை கிளியின் சொந்தக்காரனுக்கு
உகப்பு. 2. பால் அளித்து வெளியில் பறக்கும்படி விடுவது கிளிக்குக் களிப்பு.3. ஆனால், கூட்டில்
அடைப்பது வருத்தம். ஆனால் இந்த மூன்றிலும் , கிளியின் சொந்தக்காரனுக்கு உகப்பு.

அதிகாரத்திலிருந்து

ஆத்ம ஸமர்ப்பணம்

ஆனபின்பு இங்கு

ஸ்வநிர்பரத்வ பர்யந்த ரக்ஷகைகார்த்ய பாவநம்
த்யுக்த ரக்ஷாபல ஸ்வாம்யம் ரக்ஷ்யஸ்யாத்ம ஸமர்ப்பணம்

வ்யாக்யானம்

ஆத்ம ஸமர்ப்பணம் என்பது
1. தன்னுடைய ஆத்மா என்பது ,தன்னைக் காப்பாற்றுகிற பகவானுக்காகவே உள்ளது
2. ஆத்மா குறித்த தனது பொறுப்பு கிடையாது
3.இப்படி ஸமர்ப்பணம் செய்வதன் மூலம் கிடைக்கும் பலன் தனக்கல்ல
இவ்வாறு உறுதியிட்டுச் செய்வது ஆத்மஸமர்ப்பணம்

அதிகாரத்திலிருந்து

ஸ்வரூப ஞானம் இல்லாதவருக்கு ஸ்ரீ ஆளவந்தார் சொல்வது

ஸ்தோத்ரத்தில்

வபுராதிஷு யோ அபி கோ அபி வா குணத : அஸாநி யதாததாவித :
ததயம் தவ பாதபத்மயோரஹமத்யைவ மயா ஸமர்ப்பித :

என்கிறதுக்குத் தாத்பர்யமென்னமெனில் —-முத்திரையிட்டிருக்கிற ராஜாவின் கிழிச்சீரை
ஒரு ஹேதுவாலே தன் கையிலே இருந்தால் ராஜா கைக்கொள்ளுமென்று உள்ளிருக்கிற
மாணிக்கத்தின் ஸ்வரூப ஸ்வபாவங்களை விசதமாக அறியாதே கிழிச்சீரையோடே
மீளக்கொடுக்குமாப்போலே தேஹாத்யத்ரிக்த ஆத்மாவின் ஸ்வரூப ஸ்வபாவ ஸ்திதிகளை
விசதமாக விவேகிக்க அறியாதாரும் உள்ள அறிவைக்கொண்டு ஆத்ம ஸமர்ப்பணம்
பண்ணினால் அவ்வளவாலும் அநாதிகாலம் பண்ணின ஆத்மபஹார சைர்யத்தால்
உண்டான பகவந் நிக்ரஹம் சமிக்குமென்கிற சாஸ்த்ரார்த்தத்திலே திருவுள்ளம்

வ்யாக்யானம்

ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னத்தில் கூறுகிறார் ( 52 )

வபுராதிஷு யோ அபி கோ அபி வா குணத : அஸாநி யதாததாவித :
ததயம் தவ பாதபத்மயோரஹமத்யைவ மயா ஸமர்ப்பித :

( ப்ரபத்தி பண்ணுகிற நான் என்று சேர்த்து வாசிக்க–)

த்ரேகம் முதலான ரூபமான வஸ்துக்களிலே ஏதேனுமாகவும் ஆத்மகுணங்களிலே
ஏதேனும் உடையவனாகவும் ஆகக்கடவேன் .என் ஸ்வரூபங்களை நான் உள்ளது உள்ளபடி
அறியாமலிருக்கலாம்.அறியாமலே,ப்ரபத்தி அதிகாரியாகையாலே ஏதேனும் ஒரு
ஸ்வரூபஸ்வபாவம் உடைய நான் , உனது திருவடித் தாமரைகளில் இப்போதே
என்னாலே ஸமர்ப்பிக்கப்பட்டேன்

ஆத்மவிசாரம்
தேஹமே ஆத்மா என்பர் ; தேஹம் இருந்தும் அறிவு இல்லையென்றால் ,இந்த்ரியம்
ஆத்மா என்பர் ;கண் , காது முதலிய இந்த்ரியங்கள் பலவாக ஒரே தேஹத்தில்
இருப்பதால், ஒரே ஆத்மா என்பதற்காக ”மனஸ் ” ஸே ஆத்மா என்பர் ; ப்ராணவாயுவால்
ஜீவிப்பதால் அதையே ஆத்மா என்பர் ;இப்படிப் பலவிதமாகச் சொல்வர் .
ஆதலால் எனக்கு ஸ்வரூப நிச்சயம் ஏற்படவில்லை . இதனால், குண விஷயத்திலும்
நிச்சயமில்லை.பக்தியோகம் செய்பவர்கள் ஆத்மா நித்யமா அநித்யமா அணுவா விபுவா
உடல் அளவா ஜடமா , ஸ்வயம்ப்ரகாஸமா ஞானம் என்கிற நிலை உள்ளதா ,இல்லையா
என்று ஆத்ம ஸ்வரூபத்தைத் தேடுகிறார்கள்.
எனக்கு அதெல்லாம் தேவையில்லை .நான் ப்ரபத்தி பண்ணுகிறேன்.உனக்கே
நான் சேஷன் என்று ,இதை உனக்கே அர்ப்பணம் செய்கிறேன்.எந்த ஸ்வரூபம்
ஆனாலும் ,எந்த ஸ்வபாவம் உனக்கே சேஷம்.

இந்த ச்லோகத்தால் ஆத்மாவை உள்ளபடி சாஸ்த்ரப்படி அறியாதவர்கள் ப்ரபத்தி
பண்ணிக்கொள்ளலாம் பகவானுக்கே சேஷன் ; நான் ஸ்வதந்த்ரனல்லேன் என்பது
முக்யம் .
இந்த சேஷத்வம் , ஸ்வரூப நிரூபகம் என்று ஸ்ரீ பாஷ்யகாரருக்கு , திருக்கோட்டியூர்
நம்பி அருளினார் என்று சொல்வர்.இந்தச் ச்லோகம் அதற்கு மூலம் .
முதலில் ஆத்மாவைத் தெரிந்துகொண்டுதானே ,பகவானுக்கு சேஷன் என்பதை
அறியவேண்டும் என்றால், அஹம் —–என்பதே போதுமானது. சேஷத்வ ஜ்ஞானம்
மட்டும் போதுமானது .

ஒரு உதாரணத்தால் விளக்குகிறார்
ஒருவன் நடந்து செல்லும்போது வழியில் அரசாங்க முத்ரையுடன் உள்ள மூட்டை
விழுந்துகிடப்பதைக் காண்கிறான் என்று வைத்துக்கொண்டால் , அவன் அந்த மூட்டைக்குள்
இருக்கும் உயர்ந்த கற்களை அறியவில்லையென்றாலும் ,அரசாங்க முத்ரையுடன்
இருப்பதால், அதை , அரசனிடம் கொடுக்க முயற்சிப்பான் அல்லவா ! அதைப்போல,
உடலைக்காட்டிலும் வேறுபட்டதான ஆத்மாவின் ஸ்வரூபம் ஸ்வபாவம் இருப்பு ஆகியவற்றை
அறியாதபோதிலும் ஒருவன் தனக்குள்ள அற்பமான அறிவைக்கொண்டு மட்டுமே
ஆத்மாவைப் பகவானிடம் ஸமர்ப்பித்தால் , இதனாலேயே, கணக்கில்லாக் காலமாக
ஆத்மாவை அபஹரித்த காரணத்தால் இவன் பெறும் தண்டனையைப்
பகவான் நீக்கிவிடுகிறான் . சாஸ்த்ரங்களில் உள்ள இந்தக் கருத்தே ஸ்ரீ ஆளவந்தார்
திருவுள்ளத்தில் இருந்தது.

அதிகாரத்திலிருந்து

ஆத்ம ஸமர்ப்பணம் குறித்து ஸ்ரீ ஆளவந்தாரின் தாத்பர்யம்

இதுக்குமேல் மம நாத யாஸிதி என்கிற ச்லோகத்தில் இஸ் ஸமர்ப்பணத்தைப் பற்ற அநுசயம்
பண்ணிற்றும் ஸ்வரூபாதி விவேகமின்றிக்கே ஸமர்ப்பிக்கப்புக்காலும் தன்னுடைய த்ரவ்யத்தை
ராஜாவுக்கு உபஹாரமாகக் கொடுப்பாரைப் போலே , ”என்னது ” என்கிற அபிமானத்தோடே
ஸமர்ப்பிக்கில் ஆத்மபஹாரசைர்யம் அடியற்றதாதாதென்கைக்காகவத்தனை ; அல்லது
சாஸ்த்ர சோதிதமாய்த் தாம் அநுஷ்டித்த ஸமர்ப்பணத்தை அஜ்ஞக்ருத்யமாக்கினபடியன்று .
ஆக இரண்டு ச்லோகத்தாலும் யதாவஸ்தித ஸ்வரூபாதி விவேகமில்லையேயாகிலும் ,”ந மம ”
என்று ஸ்வஸம்பந்தம் அறுக்கையே அஹமபி தவைவாஸ்மி ஹி பர : என்னும்படி
பரஸமர்ப்பணப்ரதானமான சாஸ்த்ரார்த்தத்தில் சாரமென்றதாயிற்று

வ்யாக்யானம்

52 வது ச்லோகத்தில் ,உன் திருவடிகளில் என்னை ஸமர்ப்பிக்கிறேன் என்றதும் ,
பகவான் கேட்கிறானாம் —
இதுவரை யாருக்கு சேஷனாய் இருந்தாய் ? ஸ்வதந்த்ரமாகவும் இருந்தாய்.இப்படி
உம் இஷ்டப்படி இருந்துவிட்டு ,இப்போது உம்முடைய ஸ்வாதந்தர்யத்தை ஏன் விடுகிறீர் ?
எனக்கு மட்டும்தான் ஸமர்ப்பணம் என்கிறீர் .பிராட்டிக்கும் எனக்குமாக , ஆக இருவருக்குமாக
இந்த ஸமர்ப்பணம் இல்லையென்றால் இதற்கு நான் எப்படி சம்மதிப்பது ?
பலபேருக்கு சேஷமாக இருந்தீர். ஸ்வதந்த்ரமாக இருந்தீர். –இப்போது, உன்
திருவடித்தாமரைகளில் என்னை ஸமர்ப்பிக்கிறேன் என்பதை மாற்றினால் —-
உமக்கு ஸ்வாதந்த்ரியம் இருப்பது , ”மயா ” என்கிற உம்முடைய சொல்லாலே வெளியாகிறதே —

அதற்குப் பதில் 53 வது ச்லோகம் —-

அடியேன் அப்படிக் கருதவில்லை—அந்தச் சொல்லுக்கு அது பொருள் அல்ல !

மம நாத யதஸ்தி யோஸ்ம்யஹம் ஸகலம் தத்த்தி தைவ வ மாதவ |
நியத ஸ்வம் இதி ப்ரபுத்த தீ : அதவா கிந்நு ஸமர்ப்பயாமி தே ||

நாதனே—பகவானே—–எந்தப்பொருள் எனதாக உள்ளதோ நான் எதுவாக இருக்கிறேனோ
அது எல்லாமே பிராட்டியுடன் சேர்க்கை உனக்கேதானே ! பகவானே ! எப்போதும்
உடைமை சொத்து இவ்வாறு தெளிவான அறிவை உடைய நான் அந்த அறிவுக்குப்
பின்னால்கூட உனக்கு எதைத்தான் எனதாகக்கொண்டு நானாக ஸமர்ப்பிப்பேன் ?

நானும் , என்னைச் சேர்ந்த சேதநாசேதந வஸ்துக்களும் என் பரம் முதலானவையும்
எல்லாமே உனக்கும் பிராட்டிக்கும் என்றும் பொதுவாக சேஷமாக இருப்பதை
நான் முன்னமேயே உணர்ந்து இருக்கிறேன் நான் செய்தது எல்லாம் சேதனனான என்னை
உனக்கு அதீனமாக்கினேன்

ஸ்வாத் மாநம் மயி நிக்ஷிபேத் —-என்று என்னைப் பார்த்து ,எப்படிச் செய்யவேண்டும்
என்று கட்டளை இட்டாயோ அவ்வாறே செய்தேன் .

54 வது ச்லோகத்தில் —-இங்கு சிலகாலம் வாழ்ந்து இருந்து , அதன்பிறகு திருவடியை
அடைவதற்கு இணங்க அந்த இடைப்பட்ட காலத்தில் —சில க்ஷேமங்களை
வேண்டுகிறார்—–பக்தி —இப்படி—-

55 வது ச்லோகத்தில் பாகவத பக்தி வேண்டுகிறார்
56ல் பாகவத கடாக்ஷம் வேண்டுகிறார்
57 ல் அநிஷ்ட நிவ்ருத்தி
58 ல் பகவத அபசார ,பாகவத அபசாரம் செய்தவன் , ஆசாரம் இல்லாதவன் ,
பரிஹாரம் செய்ய வல்லவன் அல்லேன் , உனது கருணை முதலிய குணங்களால்
ஈர்க்கப்பட்டு ,அச்சமின்றி ஆசைப்படுகிறேன், அருள்வாயாக என்கிறார்
59 ல் நான் வேண்டியும் , நீ அளிக்கவில்லை என்று பிறர் பழிக்க , நீ, இடம்கொடாமல்
என்னைத் திருத்தி அருள்க என்கிறார்

60ம் ச்லோகம்

பிதா த்வம் மாதாத்வம் , தயித நயஸ்த்வம் ப்ரிய ஸுஹ்ருத் த்வமேவ , த்வபந்து :
கு ருரஸி கதிஸ் சாஸி ஜகதாம் |
த்வதீயஸ் த்வத் ப்ருத்ய : தவபரிஜநஸ் த்வத்கதிரஹம் ப்ரபந்நஸ் ச ஏவம் ஸதி அஹமபி
தவைவாஸ்மி ஹி பர : ||

ஜகதாம் த்வம் ஏவ பிதா = எல்லா உலகங்களுக்கும் நீயே பிதா. மாதா = தாய்
தயித தநய : =பிரியமான புத்ரன் .ப்ரிய ஸுஹ்ருத் =இஷ்டமான மித்ரன்
பந்து = உறவு . குரு = இருள்நீக்கும் ஆசார்யன் . கதி = எல்லோருக்கும் கதி .
அஹம் த்வதீய =நான் உனக்கு சேஷன் . த்வத் ப்ருத்ய = உன்னால் வளர்க்கப்படவேண்டியவன்
தவ பரிஜந : = உனக்கு ஊழியன் . த்வத் கதி = உன்னையே பேறாக உடையவன்
ப்ரபந்ந ச = ஸரணாகதி செய்தவன் . ஏவம் ஸதி = இப்படி இருக்கும்போது
அஹம் அபி தவ ஏவ பர அஸ்மிஹி =நானும் உனக்கே பரமாகிறேன் –உன்னால் ரக்ஷிக்கவேண்டியவனாக
இருக்கிறேன்

அதிகாரத்திலிருந்து

த்வயத்தில் பரஸமர்ப்பணம்

இப்படி சேஷத்வாநுஸந்தான விசிஷ்டமான ஸ்வரக்ஷாபர ஸமர்ப்பணம் த்வயத்தில்
உபாயபரமான பூர்வகண்டத்தில் மஹாவிச்வாஸபூர்வக கோப்த்ருத்வவரண கர்ப்பமான
சரணசப்தோபலிஷ்ட க்ரியா பதத்திலே சேர்ந்து அநுஸந்திக்கப் ப்ராப்தம்

வ்யாக்யானம்

த்வயத்தின் முதல் பகுதியில் ,தன்னை ரக்ஷிக்கப் பகவானைச் சரணமடை என்று சொல்லப்படுகிறது.
இது, அவனது அடிமை என்பதையும், அவனுக்காகவே உள்ளேன் என்பதையும் குறிக்கிறது.
”ப்ரபத்யே ” –இது ”சரணம் ” என்கிற பதத்துடன் இருப்பதால், ”சரணம் என்பதற்கு ”காப்பாற்றுக ”
என்னும் வேண்டுதலுடன் தொடங்கி மஹாவிச்வாஸத்தை உள்ளடக்கியுள்ளது

அதிகாரத்திலிருந்து

இப்படி, இவை ஆறும் இம்மந்த்ரத்திலே விமர்சதசையில் தனித்தனியே அநுஸந்தித்தாலும்
வாக்யார்த்த ப்ரதிபத்தி தசையில் அல்லாத வாக்யார்த்தங்கள்போலே ஸாங்கமான ப்ரதானம்
ஏகபுத்தயாரூடமாம் . ஆகையால் யதாசாஸ்த்ரம் ஸாங்கப்ரதானாநுஷ்டானம்
ஸக்ருத் கர்த்தவ்யமாயிற்று . அநேக வ்யாபார ஸாத்ய தாநுஷ்கனுடைய லக்ஷ்ய வேதார்த்தமான
பாணமோக்ஷம் க்ஷணக்ருத்யமாகிறாற்போலே இவ்வாத்ம ரக்ஷாபர ஸமர்ப்பணமிருக்கும்படியென்று
ச்ருதிஸித்தம்

வ்யாக்யானம்

இங்ஙனம் இந்த ஐந்து அங்கங்களும் ஒரு அங்கியும் ,ஆக ஆறும் தனித்தனியே அநுஸந்தித்தாலும்
ஒரே பொருளை அளிக்கவல்ல வாக்யமாகும்.
இது, ஆத்மரக்ஷ ஸமர்ப்பணம் –ஒரு முறை செய்தாலே போதுமானது.
அம்பை எய்யும் ஒருவன் ,அமபை எடுப்பது , நாண் ஏற்றுவது,குறி பார்ப்பது என்று பல செயல்களைச்
செய்தாலும் ,அம்பு எய்தல் ஒரு நொடியில் முடிகிறது.இதைப்போலவே , எம்பெருமானைச்
சரணமடைதல் ஒருநொடிப்போதில் பூர்ணமாகிறது

முண்டகோபநிஷத் சொல்கிறது —- ( 2–2–4 )

ப்ரணவோ தனு : சரோஹ்யாத்மா ,
ப்ரஹ்ம தல்லக்ஷ்ய முச்யதே |
அப்ரமத்தேன வேத்தவ்யம்
சரவத் —தன்மயோ பவேத் ||

ப்ரணவமே —வில்.
ஆத்மாவே —-அம்பு
ப்ரஹ்மமே —அதன் குறி
அம்பைப்போல ,கொஞ்சங்கூடக் கவனம் பிசகாமல் எய்யப்படவேண்டும்.
அப்படி எய்தால் , லக்ஷ்யத்துடன் ஒன்றுபட்ட நிலை வரும்

அதிகாரத்திலிருந்து

ப்ரபத்தி மந்த்ரங்களில் ,பரஸமர்ப்பணமே ப்ரதானம்

இப் பரஸமர்ப்பணமே ப்ரபத்தி மந்த்ரங்களில் ப்ரதானமாக அநுஸந்தேயமென்னுமிடத்தை

அநேநைவ து மந்த்ரேண ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத்
மயி நிக்ஷிப்த கர்த்தவ்ய : க்ருதக்ருத்யோ பவிஷ்யதி

என்று ஸாத்யகி தந்த்ரத்திலே பரஸ்வீகாரம் பண்ணுகிற சரண்யன்தானே தெளியவருளிச் செய்தான்

வ்யாக்யானம்

நம்மைக் காப்பதாக உறுதி செய்கிற எம்பெருமான், ஸாத்யகி தந்த்ரத்திலே,
ப்ரபத்தி மந்த்ரங்களில் பரஸமர்ப்பணமே அநுஸந்திக்கப்படுவதாகச்
சொல்கிறான்
அநேநைவ து மந்த்ரேண ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத்
மயி நிக்ஷிப்த கர்த்தவ்ய : க்ருதக்ருத்யோ பவிஷ்யதி

லக்ஷ்யத்தில் –இலக்கு –தைத்த அம்பு, இலக்கோடு ஒன்றிவிடுவதைப்போல ,
பகவானிடத்தில் ப்ரணவத்தினால் ஸமர்ப்பிக்கப்பட்ட ஜீவாத்மா, பகவானுடன்
ஒன்றி முக்திநிலையைத் த்யானிக்கவேண்டும்.

இந்த மந்த்ரம் ”ஆத்ம ரக்ஷாபர ஸமர்ப்பணத்தைச் சொல்கிறது. இதை அம்பை
எய்வதற்கு ஒப்பிடுகிறது.அம்பை எடுப்பது, வில்லில் நாணேற்றுவது, அம்பைத்
தொடுப்பது,இழுப்பது , குறிபார்ப்பது என்று பற்பலச் செயல்கள் ஒன்றன்பின்
ஒன்றாகச் செய்யப்பட்டாலும் ,அம்பை விடுவது ஒரு நொடியில் நடந்து விடுகிறது.
அதைப்போல,ப்ரபத்திக்கு ஸர்வ அங்கங்கள் இருந்தபோதிலும்
”ஆத்ம ரக்ஷாபர ஸமர்ப்பணம் ” நொடியில் முடிகிறது.( பகவானுக்குச் சேஷமாகவே
த்யானம் செய்யவேண்டும் —-என்று பொருள் )
இப்படிச் செய்யவேண்டியத்தை என்னிடம் செய்தவன், செய்யவேண்டியத்தைச்
செய்துள்ளான் –என்று கருத்தாகும்

அதிகாரத்திலிருந்து

அங்கங்களுடன் கூடிய ப்ரபத்தி முறை

இதில் ஸாங்காநுஷ்டாநமாயற்றது கர்த்ருத்வ த்யாக மமதா த்யாக பல த்யாக
பலோபாயத்வ த்யாக பூர்வகமான ஆநுகூல்யஸங்கல்பாதி அர்த்தாநுஸந்தானத்தோடே
குருபரம்பரோபசத்திபூர்வக த்வ்யவசந முகத்தாலே ஸ்வரூப பல ந்யாஸ கர்மமான
ஆத்ம ரக்ஷாபர ஸமர்ப்பணம் பண்ணுகை

வ்யாக்யானம்

ஐந்து அங்கங்களுடன் அங்கியை அநுஷ்டித்து தன்னைக் பொறுப்பை பகவானிடம்
அளிப்பது என்பதற்கு முன்பு,
தானே எல்லாமும் என்கிற எண்ணத்தையும்
எல்லாமே, எனது என்கிற எண்ணத்தையும்
பலன்களில் உள்ள பற்றையும்
பலனைக் கொடுக்குமுபாயத்தைத் தானாகவே பின்பற்றுவதாக எண்ணும் எண்ணத்தையும்
கைவிடவேண்டும்.

பிறகு,பகவானுக்கு ஏற்றவனாக நடந்துகொள்வேன் ( ஆநு கூல்யஸங்கல்பம் )என்னும் உறுதி
போன்றவற்றை உள்ளபடி உணர்ந்து அதன்வழி நிற்கவேண்டும்.
தொடர்ந்து குருபரம்பரையைத் த்யானித்தபடி இருக்கவேண்டும்.
த்வயமந்த்ரம் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும்

தன்னைக் காக்கவேணும் என்று பரஸமர்ப்பணம் என்பது—
1.ஸ்வரூபத்தை அர்ப்பணிப்பது மற்றும்
2.பரஸமர்ப்பணம் மூலமாகக் கிடைக்கும் பலனையும் அர்ப்பணிப்பது

அதிகாரத்திலிருந்து

ப்ரபத்தியில் உள்ள த்யாகங்களின் காரணம்

இக்கர்த்ருத்வத்யாகத்துக்கு நிபந்தனம் தன் கர்த்ருத்வமும் அவனடியாக வந்ததென்று தனக்கு
யாவதாத்மபாவியான பகவதேக பார தந்த்யர்த்தை அறிகை .
மமதாத்யாகத்துக்கும் பலத்யாகத்துக்கும் நிபந்தனம் ஆத்மாத்மீயங்களுடைய
ஸ்வரூபாநுபந்தி பகவதேக சேஷத்வஞானம். பலோபாயத்வ த்யாகத்துக்கு நிபந்தனம் சரண்ய
ப்ரஸாதமான இவனுடைய அநுஷ்டானம் ப்ரதானபலத்துக்கு வ்யவஹித காரணமாகையும்
அசேதநமாகையாலே பலப்ரதாந ஸங்கல்பாச்ரயமல்லாமையும்

வ்யாக்யானம்

ஜீவாத்மாவாகிய நாம், பகவானையே சார்ந்து இருக்கிறோம் என்கிற சிந்தனை நமக்கு வரும்போது,
நாமே நமது செயல்களைச் செய்கிறோம் என்கிற கர்வம் நீங்கும்.
இந்தக் கர்வம் நீங்கியதும், செயல்களை செய்வது என்பது பகவான் கொடுத்த திறமை என்கிற
ஜ்ஞானம் வரும்.
இந்த ஜ்ஞானத்தால், என்னுடையது, ப்ரபத்தியின் பலன்மீது ஆசை ,யாவும் ,நீங்கி தானும்
தன்னைச் சார்ந்தவையும் பகவானுக்காகவே அவனுடைய அடிமையாக இருக்கிறோம்
என்கிற எண்ணமுண்டாகும்
இந்த எண்ணம் வந்ததும், ப்ரபத்தி என்பது அசேதனமாக உள்ளது; அது, நேரிடையாகவோ
மறைமுகமாகவோ மோக்ஷபலன் அளிக்கும் ஸங்கல்பம் கொண்டதல்ல; அந்தப் பலனை
அளிக்க பகவானே உபாயம் என்கிற ஜ்ஞானம் ஏற்படும் .

அதிகாரத்திலிருந்து

பகவான், பலனுக்கு நேர் உபாயம்

ஈச்வரன் பலோபாயமாகிறது ஸஹஜஸௌஹார்த்தத்தாலே கரண களேபர ப்ரதானம்
தொடங்கி த்வயோச்சாரணபர்யந்தமாக ஸர்வத்துக்கும் ஆதிகாரணமான தானே
ப்ரஸாதபூர்வக ஸங்கல்பவிசேஷ விசிஷ்டனாய்க் கொண்டு அவ்யவஹித
காரணமாகையாலும் உபாயாந்தர சூந்யனுக்கு அவ்வோ உபாயஸ்தானத்திலே
நிவேசிக்கையாலும் இங்ஙனிருக்கும்படி தர்மி க்ராஹகமான சாஸ்த்ரத்திலே
அவகதமான வஸ்துஸ்வபாவமாகையால் , இவ்வர்த்தம் யுக்திகளால் சலிப்பிக்க
வொண்ணாது

வ்யாக்யானம்

பகவான், மனிதர்களின் அவயவங்கள் வளரும் காலம் முதலாக த்வயத்தைச் சொல்லும்
காலம்வரை,அனைத்துக்கும்காரணமாகிறான்.அவன் ஸத்யஸங்கல்பன்;கருணாஸமுத்ரம் .
கருணையை வெளிப்படுத்த ஆவலோடு உள்ளான் .மோக்ஷத்துக்கு நேர்க்காரணமாக
இருக்கிறான்.மற்ற உபாயங்களைச் செய்ய இயலாதவர்களுக்கு ,இவனே உபாயமாக
இருக்கிறான்.இவைகளை சாஸ்த்ரங்கள் மூலம் அறியலாம். சாஸ்த்ரங்கள் , மேலேசொல்லப்பட்ட
குணங்களை உடையவன் என்றும், வேறு எந்தக்காரணங்களாலும் மறுக்க இயலாது
என்றும் அறுதியிட்டுக் கூறுகின்றன

அதிகாரத்திலிருந்து

ஸ்ரீ நடாதூரம்மாள் சொல்லும் ப்ரபத்தி

இது ஸாங்காநுஷ்டானத்துக்கு நடாதூரம்மாள் அருளிச் செய்யும் சுருக்கு : —
”அநாதிகாலம் தேவரீருக்கு அநிஷ்டாசரணம் பண்ணுகையாலே ஸம்ஸரித்துப் போந்தேன் .
இன்றுமுதல் அநுகூலனாய் வர்த்திக்கக்கடவேன் . ப்ரதிகூலாசரணம் பண்ணக்கடவேனல்லேன் .
தேவரீரைப் பெறுகைக்கு ஏன் கையில் ஒரு கைம்முதலில்லை .தேவரீரையே
உபாயமாக அறுதியிட்டேன்.தேவரீரே உபாயமாகவேணும் .அநிஷ்டநிவ்ருத்தியிலாதல்
இஷ்டப்ராப்தியிலாதல் எனக்கினி பாரமுண்டோ ? என்று

வ்யாக்யானம்

நடாதூரம்மாள், ப்ரபத்தியை அநுஷ்டிக்கும் முறையைச் சுருக்கமாகச் சொல்கிறார்

(இவர் ஸ்ரீ வாத்ஸ்ய வரதகுரு. தேசிகனின் ஆசார்யரான அப்புள்ளாரின் ஆசார்யர் )

கணக்கற்ற காலமாக உனக்குப் பிடிக்காதவற்றைச் செய்து ஸம்ஸாரத்தில் உழன்றேன்.
இன்று முதல், உனக்கு விருப்பமானதை மட்டும் செய்வேன்;உனக்கு வருத்தமேற்படும்
எதையும் செய்யமாட்டேன்;உன்னை அடைய என்னிடம் எந்தக் கைமுதலுமில்லை ;
உன்னையே உபாயமாக அண்டினேன் ; எனக்குக்கஷ்டங்களை வருவதைத் தவிர்ப்பது,
ஸுகத்தை உண்டாக்குவது என்கிற செயல்களில் என் பொறுப்பு ஏதுமில்லை;
அவை யாவும் உன்னுடையதே

அதிகாரத்திலிருந்து

அங்கங்களை அநுஷ்டிப்பது

இவ்விடத்தில் ஆநுகூல்யஸங்கல்பாதிகள் உபாயபரிகரமாய் ஸக்ருத்தாயிருக்கும் .
மேல் இவன் கோலின அநுகூல வ்ருத்யாதிகளோடே போகிறவிடமும் உபாயபலமாய்
யாவதாத்மபாவியாய் இருக்கும். இவற்றில் ப்ராதிகூல்ய வர்ஜனமும் அம்மாள்
அருளிச் செய்தபடியே ஆநுகூல்யஸங்கல்பம்போலே ஸங்கல்பரூபமானாலும்
ஸக்ருத் கர்த்தவ்ய மென்னுமிடம் ஸ்பஷ்டம் . அபாயேப்யோ நிவ்ருத்த : அஸ்மி என்கிறபடியே
அபிஸந்திவிராமமாதல் ப்ராதிகூல்ய ஸ்வரூப நிவ்ருத்தியாதலானாலும் அதில்
ப்ரதமக்ஷணம் அங்கமாய் மேலுள்ளது பலமாய்க்கடவது. இப்படி விச்வாஸத்திலும் பார்ப்பது

ப்ரவ்ருத்தி :அநுகூலேஷு நிவ்ருத்தி: ச அந்யத : பலம்
ப்ராரப்த ஸுக்ருதாச்ச ஸ்யாத் ஸங்கல்பே ச ப்ரபத்தி :

வ்யாக்யானம்

உபாயத்தின் அங்கமாக பகவானுக்கு விருப்பமில்லாததைச் செய்யாதிருப்பது ,
விருப்பமானதைச் செய்வது என்பவைகளை கடைப்பிடித்தாலே இவை அவன் ஆத்மா உள்ளவரை
நீடிக்கும்.
பகவானுக்கு விருப்பமில்லாததைச் செய்யாதிருத்தல் என்பதை ப்ரபத்தி சமயத்தில் ஒருமுறை
செய்தாலே போதுமானது.
லக்ஷ்மீ தந்த்ரம் ( 50–215 )
அபாயேப்யோ நிவ்ருத்த : அஸ்மி ==ஸம்ஸாரத்தில் தள்ளக்கூடிய பாவங்களிலிருந்து
விலகினேன்
விருப்பம் இல்லாதவற்றைச் செய்யாமலிருப்பது –அவற்றின் தொடர்பு இல்லாமலிருத்தல்
அவற்றைச் செய்யாமல் இருப்பதில் உறுதி—இந்த இரண்டில் ஒன்றாக இருக்கலாம்.
இருந்தாலும் , இது ஒரு அங்கமே .பிறகு, விருப்பமில்லாதவற்றை விலக்குதலென்பது
ப்ரபத்தியின் பலனாகவே ஆகும்.இதையே விச்வாஸத்திலும் நிலைநிறுத்தலாம் .

ப்ரவ்ருத்தி :அநுகூலேஷு நிவ்ருத்தி: ச அந்யத : பலம்
ப்ராரப்த ஸுக்ருதாச்ச ஸ்யாத் ஸங்கல்பே ச ப்ரபத்தி :

ப்ரபத்தி செய்துகொண்ட பிறகு பகவானுக்கு உகப்பைச் செய்வதும் ,உகப்பில்லாததைத்
தள்ளுவதும் ப்ரபன்னனின் பூர்வ ஜந்ம புண்யத்தாலும் ,ப்ரபத்தி சமயத்தில் செய்துகொண்ட
சங்கல்பத்தாலும் –அவற்றின் பலனாக அமைகிறது .
ப்ரபத்தி செய்தபிறகு ப்ரபந்நன் இவ்வுலகில் ஜீவிக்கும் காலத்திலும் ப்ரபத்தி
பலனைக் கொடுக்கிறது. எப்படியெனில் , பகவானுக்கு உகப்பில்லாததைவிலக்குதல்
உகப்பானதைச் செய்தல் –தானாகவே ப்ரபத்தியின் பலனாகவே ப்ரபந்நன் செய்கிறான்

அதிகாரத்திலிருந்து

ப்ரபத்தி அநுஷ்டிப்பது

ஆகையால் இருந்த நாளில் நிரபராத கைங்கர்யத்தையும் ப்ராரப்த சரீராநந்தரம் மோக்ஷத்தையும்
சேரப் பலமாகக் கோலிப் ப்ரபத்தி பண்ணுவார்கள் நிபுணர்

வ்யாக்யானம்

எல்லாமறிந்த நிபுணத்வம் உள்ளவர்கள் இவ்வுலகில் வாழும்வரை தொய்வின்றிக் கைங்கர்யம்
செய்யவேணுமென்றும், பலன்தரத் தொடங்கிவிட்ட கர்மாக்கள் முடிந்து ,உடலை விடும்
நேரத்தில் மோக்ஷம் அடையவேணுமென்றும் ப்ரபத்தி செய்வர்

அறவே பரமென்று அடைக்கலம் வைத்தனரென்று நம்மைப்
பெறவே கருதிப் பெருந்தகவுற்ற பிரானடிக்கீழ்
உறவே இவனுயிர் காக்கின்ற ஒருயிருண்மையை நீ
மறவேலென நம் மறைமுடி சூடிய மன்னவர்

வ்யாக்யானம்

நமது ஆசார்யர்கள் வேதஸாம்ராஜ்யத்தின் மன்னர்கள்;இவர்கள் ,அவர்களது
சிஷ்யர்களாகிய நம்மை, கருணாமூர்த்தியான ,கணக்கில்லாக் காலமாக
நம்மை ரக்ஷிப்பேன் என்று உறுதியுடன் இருக்கிற பகவானின் திருவடியில்
சேர்த்து நம்மை ரக்ஷிக்கும் பொறுப்பை நம்மிடமிருந்து நீக்கி, பகவானே
ரக்ஷிக்கவேண்டும் என்பதாக, ரக்ஷிக்கப்பட வேண்டிய பொருளாகச்
ஸமர்ப்பிக்கின்றனர் .
நமக்கு,”அந்தர்யாமியாக உன் ஹ்ருதயத்தில் உள்ள பகவான் எப்போதும்
உன்னை ரக்ஷிப்பான் ” என்று உபதேசிக்கின்றனர்

யுக்ய ஸ்யந்தந ஸாரதி க்ரமவதி த்ரயந்த ஸந்தர்சிதே
தத்வாநாம் த்ரிதயே யதார்ஹ விவித வ்யாபாரஸந்தாநிநி
ஹேதுத்வம் த்ரிஷு கர்த்துபாவ உபயோ : ஸ்வாதீநதைகத்ர தத்
ஸ்வாமி ஸ்வீக்ருத யத் பர :அயம் அலஸ : தத்ர ஸ்வயம் நிர்பர :

சித் , அசித் , ஈஸ்வரன் —-குதிரை, ரத்தம், ரதசாரதி
இப்படி இந்த மூன்றும் தன்மை செயல்கள் இவைகளில் ஒத்திருக்கின்றன,
என்று வேதாந்தங்கள் சொல்கின்றன .
இவற்றில் செயலாற்றுதல் சித் மற்றும் அசித்திடமும் , செயலற்ற தன்மை
ஈச்வரனிடமும் காணப்படுகின்றன.ஆதலால், யஜமானான எம்பெருமானால்,
காப்பாற்றும் பொறுப்பு ஏற்கப்படுவதால் ஜீவன் ( சித் ) தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும்
பொறுப்பு இல்லாதவனாகிறான்

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –12 வது அதிகாரம் —- ஸாங்கப்ரபதநாதிகாரம் —நிறைவு

——————-

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம்–ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் தொகுத்து -அளித்தவை –அதிகாரம் —11–பரிகரவிபாகாதிகாரம் —

April 12, 2021

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

———–

அதிகாரம் —11-பரிகரவிபாகாதிகாரம்
ப்ரபத்திக்கு பரிகரங்கள் –அதாவது அங்கங்களைச் சொல்வது

அதிகாரத்திலிருந்து

இயாந் இத்தம்பூத : ஸக்ருத் அயம் அவச்யம்பவநவாந்
தயா திவ்ய அம்போதெள ஜகத் அகிலம் அந்த : யமயதி
பவ த்வம்ச உத்யுக்தே பகவதி பரந்யாஸ வபுஷ :
பரபத்தே : ஆதிஷ்ட : பரிகர விசேஷ : ச்ருதிமுகை :

வ்யாக்யானம்
கருணைக்கடல் என்றால் இவனையே குறிக்கும்படியானகருணைக்குக்குச்
சிறந்த ஸமுத்ரமாகவும் ,எல்லா ஜீவராசிகளுக்கும் ஹ்ருதயத்தின் உள்ளே
இருந்து நியமிக்கும் பரமாத்மாவாகவும் ,ஸம்ஸார நாசகனாகவும் இருக்கிற
பகவானிடம் பொறுப்பை ஸமர்ப்பிக்கிற ப்ரபத்தியின் அங்கங்களின்
விசேஷம், வேதம் இவற்றால் இது என்றும் இத்தனை என்றும் , இவைகளின்
ஸ்வரூபம், உபயோகம் இவற்றைப்பற்றியும் ,ப்ரபத்தி செய்யும்போது
இந்த அங்கங்கள் அனுஷ்டிக்கப்படவேண்டும் என்று நியமிக்கப்பட்டிருக்கிறது.

அதிகாரத்திலிருந்து

ப்ரபத்தியின் அங்கங்கள் சொல்லப்படுகின்றன

இவ்வித்யைக்குப் பரிகாரமாவது ஆநுகூல்ய ஸங்கல்பமும் , ப்ராதிகூல்யவர்ஜனமும் ,
கார்பண்யமும் , மஹாவிச்வாஸமும் , கோப்த்ருவவரணமும் .

வ்யாக்யானம்

ப்ரபத்தி என்கிற இந்த ந்யாஸ வித்யைக்கு அங்கங்களாவன —-
1.பகவானுக்கு உகந்தவை ,எவையோ அவற்றை மட்டும் செய்தல் –ஆநுகூல்ய ஸங்கல்பம்
2.பகவானுக்கு உகப்பில்லாதவற்றை செய்யாது தவிர்த்தல் — ப்ராதிகூல்யவர்ஜனம்
3.பகவானைத் தவிர வேறு உதவியில்லை என்று இருத்தல் –கார்பண்யம்
4. பகவானிடம் அசஞ்சலமான விச்வாஸம் –மஹாவிச்வாஸ
5. பகவான்தான் ரக்ஷிக்க வேண்டும் என ப்ரார்த்திப்பது — கோப்த்ருவவரணம்

அதிகாரத்திலிருந்து

இவ்விடத்தில்
ஆநுகூல்யஸ்ய ஸங்கல்ப : ப்ரதிகூல்யஸ்ய வர்ஜநம்
ரக்ஷிப்யதீதி விச்வாஸோ கோப்த்ருத்வவரணம் ததா
ஆத்ம நிக்ஷேப கார்ப்பண்யே ஷட்விதா சரணாகதி :

இத்யாதிகளிற் சொல்லுகிற ஷாட்வித்யமும் அஷ்டாங்கயோகமென்னுமாப்போலே
அங்க அங்கி ஸமுச்சயத்தாலே ஆகக்கடவதென்னுமிடமும் ,இவற்றில் இன்னது
ஒன்றுமே ,இதரங்கள் அங்கங்களென்னுமிடமும் ,

நிக்ஷேபாபரபர்யாயோ ந்யாஸ : பஞ்சாங்க ஸம்யுத :
ஸந்ந்யாஸஸ்த்யாக இத்யுக்த : சரணாகதிரித்யபி

என்கிற ச்லோகத்தாலே ந்யாய நிரபேக்ஷமாக ஸித்தம்

வ்யாக்யானம்

அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை சொல்கிறது ( 37 வது அத்யாயம் —28, 29 பகுதிகள் )

நாரதர், ருத்ரனை—பரமேஸ்வரனை , ந்யாஸத்தைப் பற்றிக் கேள்வி கேட்கிறார் —
நாரதர் :— மஹேஸ்வரா ! வெளிப்படையானதும் ,மானஸிகமுமான யோகத்தைப்
பற்றிச் சொன்னீர்கள். அப்போது,”” ந்யாஸம்”””” என்கிற உபாயத்தையும் சொன்னீர்கள்.
இதைப்பற்றி விரிவாகக் கூற வேண்டுகிறேன்

அஹிர்புத்ந்யர் :—இது, பெரிய உபநிஷத்துக்களில் கூறப்பட்டுள்ள ,தேவர்களும்
அறியாத ரஹஸ்யம் . அனைத்துப்பாபங்களையும் போக்க வல்லது.கோரும்
பலனைக் கொடுக்கக்கூடியது. இதை, எல்லோருக்கும் சொல்லக்கூடாது.
முக்யமாக , பகவத் பக்தி இல்லாதவனுக்குச் சொல்லக்கூடாது.
நீர், என்னிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருக்கிறீர். உமது க்ஷேமத்தை விரும்பி
விவரத்தைச் சொல்கிறேன்—– என்று ஆரம்பித்தார்

அஹிர்புத்ந்யர் சொன்னது :—-

யாரால் மற்ற உபாயங்களால் அடைய முடியாததோ ஸாங்க்ய யோகம் ,
பக்தி யோகம் இவற்றால் எந்த மோக்ஷத்தைப் பெறமுடியாதோ , எந்த இடத்துக்குச்
சென்றால் திரும்ப இவ்வுலகம் முதலியவற்றுக்கு வரமுடியாதோ , அப்படிப்பட்ட ”பரமபதம்”
ந்யாஸத்தாலே கிடைக்கும். பரமபுருஷனான பகவானுக்குக் கைங்கர்யம்
எய்யும் பாக்கியம் கிடைக்கும்.
ப்ரபத்தியின் அங்கங்கள் ஆறு என்று வேதங்களைக் கற்று அறிந்த ஜ்ஞானிகள்
சொல்கிறார்கள்.
1. ஆநுகூல்ய ஸங்கல்பம் = உமக்கு அநுகூலமாகவே இருப்பேன் என்று உறுதி
2. ப்ராதிகூல்யவர்ஜனம் = உமக்குப் ப்ரீதியில்லாத கார்யங்களைச் செய்யமாட்டேன்
என்று உறுதி
3.ரக்ஷிஸ்யதீதி விச்வாஸ =பகவான் நம்மைக் காப்பாற்றுவான் என்கிற திடநம்பிக்கை
4. கோப்த்ருவவரணம் = நீ, என்னைக் காத்தருளவேண்டும் என்று ப்ரார்த்திப்பது
5.ஆத்ம நிக்ஷேப : =தன்னுடைய ஆத்மாவை, பகவானுடைய சொத்து என்று நினைத்து
உம்முடைய உம்மிடமே ஸமர்ப்பிக்கிறேன் என்று ஸமர்ப்பிப்பது .
6. கார்பண்யம் = இது, ஆகிஞ்சின்யம் , அநந்யகதித்வம் , இரண்டும் சேர்ந்தது.
அதாவது, கர்ம , ஞான ,பக்தி யோகங்கள் எனக்குத் தெரியாது,
உன்னைத் தவிர எனக்குச் சரணமடைய யாரும் இல்லை,

ஆக , ந்யாஸம் –சரணாகதி –என்பது ஆறுவகை.
அஷ்டாங்க யோகம் என்பதில் யமம் , நியமம் –இவை அங்கங்கள்.ஸமாதி –அங்கி.
இங்கு, ஆநுகூல்ய ஸங்கல்பம் ,ப்ராதிகூல்யவர்ஜனம், கார்பண்யம்,ரக்ஷிஸ்யதீதி விச்வாஸ
என்கிற மஹா விச்வாஸம், கோப்த்ருவவரணம்–இந்த ஐந்து அங்கங்களுடன் கூடிய
ஆத்ம நிக்ஷேப என்கிற ஆத்ம ஸமர்ப்பணமான அங்கியுடன் கூடி –ஆறு எனப்படுகிறது.
ஷட்விதா சரணாகதி என்பர் .ப்ரபத்தி என்று சொல்லும்போது ,சரணம் என்கிற ”சொல் ”
உபாயம் , அதாவது சாதனம்.

லக்ஷ்மீ தந்த்ரம் ( 17—74 )

நிக்ஷேபாபரபர்யாயோ ந்யாஸ : பஞ்சாங்க ஸம்யுத :
ஸந்ந்யாஸஸ்த்யாக இத்யுக்த : சரணாகதிரித்யபி

ஆத்ம நிக்ஷேபம் என்பது, அங்கி.மற்ற ஐந்தும் அங்கங்கள். இரண்டையும்
சேர்த்து, ”ஷட்விதா சரணாகதி ” என்பர்.
ப்ரபத்தி என்று சொல்லும்போது, சரணம் என்கிற சொல் உபாயம், அதாவது சாதனம்.

அதிகாரத்திலிருந்து

மோக்ஷார்த்த ப்ரபத்தியில் பல —-ஸங்க –கர்த்ருத்வாதி த்யாகங்களின் அவச்யம்

சாச்வதீ மம ஸம்ஸித்திரியம் ப்ரஹ்மவிபவாமி யத்
புருஷம் பரமுதிச்ய ந மே ஸித்திரித : அந்யதா
இதியங்கமுதிதம் ச்ரேஷ்டம் பலேப்ஸா தத்விரோதிநீ

என்று அஹிர்புத்ந்யோக்தமான பலத்யாகரூப அங்காந்தரம் மோக்ஷார்த்தமான
ஆத்மநிக்ஷேபத்திலே நியதம். பல,ஸங்க , கர்த்ருத்வாதி த்யாகம் , கர்மயோகம்
முதலாக நிவ்ருத்தி தர்மங்களெல்லாவற்றிலும் வருகையாலே இவ்வநுஸந்தானம்
முமுக்ஷுவுக்கு ஸாங்க ஸமர்ப்பண தசையிலே கர்த்தவ்யம்

வ்யாக்யானம்

அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையிலிருந்து ,மேற்கோள் காட்டுகிறார் —
52 வது அத்யாயம் —-பகுதிகள் 13 மற்றும் 14

சாச்வதீ மம ஸம்ஸித்திரியம் ப்ரஹ்மவிபவாமி யத்
புருஷம் பரமுதிச்ய ந மே ஸித்திரித : அந்யதா
இதியங்கமுதிதம் ச்ரேஷ்டம் பலேப்ஸா தத்விரோதிநீ

அஹிர்புத்ந்யர் சொல்கிறார் —
உலகத்தில் தாழ்ந்தவன் என்கிற வரிசையில் எல்லா ஜீவர்களும் அடங்குவர் .
உயர்ந்தவன் எம்பெருமான் ஒருவனே. ஜீவன்கள் நமஸ்கரிக்கிறார்கள் ;
எம்பெருமான் வணங்கப்படுகிறான் ;அவனே வணங்கப்படுபவன் .
ஸம்பந்தம் எந்தப் பலனையும் கருதியது அல்ல .
நமஸ்கரித்தலே , ப்ரபத்தி . இதுவே புருஷார்த்தம் . ”நம ” என்கிற ஸப்தம்
ப்ரபத்தி என்கிற அர்த்தத்தை நிரூபிக்கிறது.
பரமபுருஷனைக் குறித்து , நான் நமஸ்கரிக்கிறேன் , என்பது எதுவோ
அதுவே எனக்கு நிலையான புருஷார்த்தம் அல்லது ஸ்வாபாவிக கார்யம்.
இதைவிட வேறான பலனானது எனக்கு வேண்டாம் இதுவே சிறந்த அங்கம் .
மோக்ஷம் அடைய ஆத்ம ஸமர்ப்பணமான ஸரணாகதி –ப்ரபத்தி –இதற்கு
கர்மங்களை நாமே செய்கிறோம் என்கிற எண்ணமும்,பலன்களில் பற்றும்
அறவே கூடாது.

அதிகாரத்திலிருந்து

ஆநுகூல்ய ஸங்கல்பம் , ப்ராதிகூல்ய வர்ஜநம்–இவற்றுக்கான காரணம் —
இவற்றால் வரும் பயன்

இங்குப் பரிகரங்களானவற்றில் ஆநுகூல்ய ஸங்கல்பத்துக்கும் ,
ப்ராதிகூல்ய வர்ஜநத்துக்கும் நிபந்தனம் , ஸர்வ சேஷியான ஸ்ரீய :பதியைப்
பற்றப் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளாலே அபிமதாநுவர்த்தனம் பண்ணவேண்டும்படி
இவனுக்கு உண்டானபாரார்த்ய ஜ்ஞாநம் . இத்தாலே அநுகூல்யேதராப்யாம் து
விநிவ்ருத்தி ரபாயத : என்கிறபடியே அபாய பரிஹாரம் ஸித்தம்

வ்யாக்யானம்

இவனுக்கு ஜ்ஞானம் பிறக்கிறது ? எப்போது ?
ப்ரபத்திக்குச் சொல்லப்பட்ட அங்கங்களில், பகவானுக்குச் சந்தோஷத்தை
உண்டாக்கும் கார்யங்களைச் செய்தல், அவன் விரும்பாத கார்யங்களில்
இழியாது இருத்தல் . இப்படி இருப்பின் பகவானுக்காகவே அனைத்தும்
உள்ளன என்கிற ஜ்ஞானம் பிறக்கிறது. இதுவே சேஷத்வ ஜ்ஞானம்.
ஆதலால், சேஷத்வ ஜ்ஞானம் ஏற்பட, பகவானுக்கு உகப்பானதைச்
செய்தலும், பகவானுக்கு உகப்பில்லாதவற்றைச் செய்யாதிருத்தலுமேயாகும் .
லக்ஷ்மீ தந்த்ரம் ( 17–76 )
அநுகூல்யேதராப்யாம் து விநிவ்ருத்தி ரபாயத : என்கிறது
அதாவது, பகவானுக்கு விருப்பமானதைச் செய்தல், அவன் விரும்பாதவற்றைச்
செய்யாதொழிதல் –என்பதன் மூலமாக, அவனது கட்டளைகளை மீறாமல்
இருக்கும் நிலை ஏற்படுகிறது.

அதிகாரத்திலிருந்து

கார்ப்பண்யம் அதனால் வரும் பலன்

கார்ப்பண்யமாவது முன்பு சொன்ன ஆகிஞ்சந்யாதிகளுடைய அநுஸந்தானமாதல் ,
அதடியாக வந்த கர்வஹாநியாதல் , க்ருபாஜநகக்ருபணவ்ருத்தியாதலாய் நின்று
சரண்யனுடைய காருண்யோத்தம்பநார்த்தமுமாய் ,கார்ப்பண்யேநாப்யுபாயாநாம்
விநிவ்ருத்திரிஹேரிதா என்கிறபடியே பின்பும் அநந்யோபாயதைக்கும்
உபயுக்தமாயிருக்கும்

வ்யாக்யானம்

கார்ப்பண்யம் என்பது, முன்பு சொன்ன ஆகிஞ்சந்யம் இவற்றையெல்லாம்
நினைத்திருத்தலாம் . இந்த நினைவுகள் /எண்ணங்கள் மூலமாக தனது என்கிற
கர்வம் அகலும். இதன் மூலமாக, நாம் எவ்வித உதவியும் /கதியும் இல்லாமல்
இருக்கிறோம் என்கிற எண்ணம் வரும். இவ்வாறு, எண்ணிப் பகவானிடம்
தஞ்சம் என்று அடையும்போது ,பகவானின் கருணையானது ,நம்மிடம்
வெள்ளமிடுகிறது. இதன் மூலம், வேறு எந்த உபாயமும் இல்லை என்கிற
ஜ்ஞானம் மேலோங்குகிறது
லக்ஷ்மீ தந்த்ரம் :— கார்ப்பண்யேநாப்யுபாயாநாம் விநிவ்ருத்திரிஹேரிதா–
மற்ற எந்த உபாயத்தையும் நாடாமலிருப்பதே கார்ப்பண்யம்

அதிகாரத்திலிருந்து

மஹாவிச்வாஸம் அதனால் வரும் பலன்

மஹாவிச்வாஸம் ரக்ஷிஸ்யதீதி விச்வாஸாத் அபீஷ்டோபாய கல்பநம்
என்கிறபடியே அணியிடாத அநுஷ்டான ஸித்தர்த்தமுமாய்ப் பின்பு
நிர்பரதைக்கும் உறுப்பாயிருக்கும்

வ்யாக்யானம்

எவ்வித சந்தேகமும் இல்லாத மஹாவிச்வாஸம் என்பது ,ப்ரபத்திக்கு
மிகமுக்கியமானது. இதுவே ப்ரபத்திக்குப் பிறகும், நம்மைப்பற்றிய
கவலை கொள்வது, நம்மைக் காப்பாற்றிக்கொள்ள நாமே முயற்சி
செய்வது போன்ற செயல்களிலிருந்து , நம்மை விலக்குகிறது.
லக்ஷ்மீ தந்த்ரம் : — மஹாவிச்வாஸம் ரக்ஷிஸ்யதீதி விச்வாஸாத்
அபீஷ்டோபாய கல்பநம்—-
பகவான் நிச்சயம் ரக்ஷிப்பான் என்கிற மஹா விச்வாஸத்தால்
பகவானை உபாயமாகப் பற்றுதல் என்கிற பலன் ஏற்படுகிறது

அதிகாரத்திலிருந்து

கோப்த்ருவ வரணம் —-இதன் அவச்யம்

ஸ்வரூபாநுசித புருஷார்த்தங்கள் போலே ஸ்வரூப ப்ராப்தமான அபவர்க்கமும்
புருஷார்த்தமாம்போது புருஷன் அர்திக்கக் கொடுக்கவேண்டுகையாலே
இங்கு கோப்த்ருவ வரணமும் அபேக்ஷிதம் . நன்றாயிருப்பது ஒன்றையும்
இப்புருஷன் அர்த்திக்கக் கொடாதபோது புருஷார்த்தங் கொடுத்தானாகானிறே .
ஆகையாலேயிறே அப்ரார்த்திதோ ந கோபாயேத் என்றும், கோப்த்ருவ வரணம்
நாம ஸ்வாபிப்ராய நிவேதநம் என்றும் சொல்லுகிறது

இப்படி , இவ்வைந்தும் இவ்வித்யாநுஷ்டாந காலத்தில் உபயுக்தங்களாகையால்
இவை இவாத்மநிக்ஷேபத்துக்கு அவிநாபூத ஸ்வபாவங்கள்

வ்யாக்யானம்

நமது ஸ்வரூபத்துக்கு ,மோக்ஷம் குறிக்கோள் . ஆனால் அதை புருஷார்த்தம்
என்று வேண்டும்போதோ / விரும்பும்போதோ , மற்ற புருஷார்த்தங்களை
யாசித்துப் பெறுவதைப்போல இதையும் யாசித்தே பெறவேண்டும்.
இப்படியாக, மோக்ஷம் என்கிற புருஷார்த்தத்தை ஒருவன் விரும்பும்போது,
அதை யாசித்தால் மட்டுமே பெறமுடியும். மஹா விச்வாஸத்துடன் வேண்டுபவனுக்கு
அளிக்கப்படுகிறது. காப்பாற்றவேண்டும் என்கிற வேண்டுதல் வேண்டியதாகிறது.
எந்த ஒரு நல்ல பொருளும் வேண்டாமல் கிடைப்பதில்லை . ஆதலால்,
ஒருவன் வேண்டாதபோது, மோக்ஷமென்கிற புருஷார்த்தம் அளிக்கப்படுவதில்லை.
லக்ஷ்மீ தந்த்ரம் —17—72
அப்ரார்த்திதோ ந கோபாயேத் = வேண்டுதல் இல்லாமல், எந்த ரக்ஷத்வமும்
செய்யப்படுவதில்லை
லக்ஷ்மீ தந்த்ரம் —17–78 =
கோப்த்ருவ வரணம் நாம ஸ்வாபிப்ராய நிவேதநம் = நமது மனத்தில் உள்ளதை பகவானிடம்
சொல்வதே கோப்த்ருவ வரணம்

இப்படியாக, மேலே சொல்லப்பட்ட ஐந்தும் ப்ரபத்திக்கு உதவுவதால், இவை
ஆத்ம ஸமர்ப்பணம் செய்வதற்கு முக்யமானவையாகும்

அதிகாரத்திலிருந்து

இவ்வர்த்தம் பிராட்டியைச் சரணமாகப் பற்ற வாருங்கள் என்று ஸாத்த்விக ப்ரக்ருதியான
த்ரிஜடை ராக்ஷஸிகளுக்குச் சொல்லுகிற வாக்யத்திலும் காணலாம்
ததலம் க்ரூ ஸ்வாக்யைர்வ : என்று ப்ராதிகூல்யவர்ஜநம் சொல்லப்பட்டது
ஸாந்த்வமேவாபி தீயதாம் என்கையிலே மந :பூர்வமாகவல்லது வாக்ப்ரவ்ருத்தி
இல்லாமையாலே ஆநுகூல்ய ஸங்கல்பம் ஆக்ருஷ்டமாயிற்று.
ராகவாத்தி பயம் கோரம் ராக்ஷஸாநாமுபஸ்திதம் என்று போக்கற்று நிற்கிற
நிலையைச் சொல்லுகையாலே அதிகாரமான ஆகிஞ்சந்யமும் அதினுடைய
அநுஸந்தானமுகத்தாலே வந்த கர்வஹாந்யாதிரூபமாய் அங்கமான கார்ப்பண்யமும்
சொல்லிற்றாயிற்று.
அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோ பயாத் என்கையாலும்
இத்தை விவரித்துக்கொண்டு அலமேஷா பரித்ராதும் ராகவாத் ராக்ஷஸீகணம்
என்று திருவடி அநுவதிக்கையாலும் , பெருமாள் ஒருத்தனை நிக்ரஹிக்கப்
பார்க்கிலும் அவர் சீற்றத்தையாற்றி இவள் ரக்ஷிக்க வல்லவளாகையாலே
ரக்ஷிஸ்யதீதி விச்வாஸம் சொல்லப்பட்டது.
அபியாசாம வைதேஹீம் ஏதத்தி மம ரோசதே , பர்த்ஸிதாமபி யாசத்வம்
ராக்ஷஸ்ய : கிம் விவக்ஷயா என்கையாலே கோப்த்ருத்வ வரணம் சொல்லிற்றாயிற்று

வ்யாக்யானம்

இவ்வர்த்தம் என்று சொல்லும்படியான உயர்ந்த விஷயங்கள், ராக்ஷஸிகளில் சிறந்தவளான
த்ரிஜடை , அசோகவனத்தில் மற்ற அரக்கிகளிடம் ” சீதாப்பிராட்டியைச் சரணமடையுங்கள் ”
என்று சொல்வதன் மூலமாகத் தெளிகிறது

ஸ்ரீமத்ராமாயணம்

ததலம் க்ரூ ஸ்வாக்யைர்வ : =நீங்கள் பேசும் குரூர வார்த்தைகளை நிறுத்துங்கள் .

இதன்மூலமாக, பகவானுக்கு ஏற்காததைத் தவிர்க்கிற ”ப்ராதிகூல்ய வர்ஜனம் ”
சொல்லப்பட்டதாகக் கூறுவர்.

ஸாந்த்வமேவாபி தீயதாம் = சாந்தத்தை /சமாதானத்தை உண்டாக்கும் சொற்களைப்
பேசுங்கள் என்பதால், ”ஆனுகூல்யஸங்கல்பம் ”சொல்லப்பட்டது என்பர் .பகவானுக்கு
சந்தோஷத்தைத் தருவது இது.

ராகவாத்தி பயம் கோரம் ராக்ஷஸாநாமுபஸ்திதம் =ராமபிரான் மூலமாக , அரக்கர்களுக்கு
பெரிய பயம் ஏற்பட்டது , என்பதால், அரக்கர்களின் கதியற்ற நிலை ”ஆகிஞ்சன்யம் ”
சொல்லப்பட்டது. இதனால், அரக்கர்களின் கர்வம் முதலியன அழியும் என்பதால்,
”கார்ப்பண்யமும் ” சொல்லப்பட்டது என்பர்.

அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோ பயாத் = த்ரிஜடை சொல்கிறாள்.
அரக்கிகளே , ராமன் மூலமாக நமக்கு ஏற்படும் பயத்திலிருந்து இவள் –சீதை —
நம்மைக் காப்பாற்றுகிற சக்தி உடையவள்

அலமேஷா பரித்ராதும் ராகவாத் ராக்ஷஸீகணம் =
மேற்கூறிய த்ரிஜடையின் பேச்சை , ஹநுமானும், ராமனிடமிருந்து அரக்கிகளைக்
காக்கும் சக்தி உடையவள் இவள் என்று ஆமோதிக்கிறார்.
இவற்றின் மூலம், பகவான் ஒருவனைத் தண்டிக்கவேண்டும் என்று தீர்மானித்தாலும்
அதை மாற்றி பிராட்டி காப்பாற்றுவாள் என்கிற மஹா விச்வாஸம் சொல்லப்பட்டது என்பர்.

ப்ரணிபாத ப்ரஸன்னாஹி மைதிலீ ஜனகாத்மஜா |
அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோ பயாத் ||

மிதிலா நகரைச் சேர்ந்தவள் ,ஜனகமஹாராஜாவின் புத்ரியான ஸீதை ,
நமது நமஸ்காரத்தால் கோபம் தணிந்தவளாக ஆகிவிடுவாள் . ராக்ஷஸிகளே —
பெரிய பயத்திலிருந்து நம்மைக் காப்பதற்கு ,இவள் சக்தி வாய்ந்தவள் .
த்ரிஜடை இப்படிச் சொன்னபோது, ராக்ஷஸிகளுக்கு , ஸீதை ரக்ஷிப்பாள் என்கிற
மஹாவிச்வாஸம் ஏற்பட்டது.
பகவான் நிக்ரஹிப்பது , சீற்றத்தால் . பிராட்டியின் இங்கிதங்களைப் பார்த்து
அதற்கு மாறாகச் செய்யமாட்டாவதனாய் சீற்றம் ஒழிகிறது. ஸீதையை ஆச்ரயித்து
இருக்கிறார்கள் என்கிறபோது, சீற்றம் போய்விடும் .

அபியாசாம வைதேஹீம் ஏதத்தி மம ரோசதே , பர்த்ஸிதாமபி
யாசத்வம் ராக்ஷஸ்ய : கிம் விவக்ஷயா = ஸீதையிடம் , நாம், அபயம் என்று வேண்டுவோம் .
இதுவே எனக்குச் சரியாகப் படுகிறது என்று த்ரிஜடை ,அரக்கிகளிடம் சொல்கிறாள்.
நீங்கள் ஸீதையைப் பயமுறுத்தி இருந்தாலும் அவளைப் பிரார்த்தியுங்கள் .அவள்
காப்பாற்றுவாளோ என்கிற சந்தேகமே வேண்டாம் . என்கிறாள்
இதன்மூலம் , கோப்த்ருத்வ வரணம் சொல்லப்பட்டது

இப்படியாக ஸீதாதேவியிடமே பரண்யாஸம் செய்யச் சொல்கிறாள். பகவானும் ,
பிராட்டியும் ஏக தத்வம். அதனால் இவளைக் கதியாகக் கொள்ளலாம்
ஆதலால் ரக்ஷிக்கவேண்டும் என்று ஸீதையை வேண்டுவோம் என்கிறாள் த்ரிஜடை .

அதிகாரத்திலிருந்து

இவ்வைந்துக்கும் அங்கியான ஆத்ம நிக்ஷேபம் , ப்ரணிபாத ப்ரஸந்நா ஹி மைதிலீ
ஜநகாத்மஜா என்று ப்ரஸாத காரணவிசேஷத்தைச் சொல்லுகிற ப்ரணிபாத ஸப்தத்தாலே
விவ்க்ஷிதமாயிற்று . ஆகையால் ந்யாஸ :பஞ்சாங்க ஸம்யுத : என்கிற சாஸ்த்ரார்த்தம்
இங்கே பூர்ணம்

இப்படி உபதேசிக்க ராக்ஷஸிகள் விலக்கமாட்டாதே பற்றாசாகப் பிராட்டி தன் வாத்ஸல்யத்தாலே
பவேயம் சரணம் ஹி வ : என்று அருளிச் செய்தாள் . இப்பாசுரம் ஸஹ்ருதமாய்
பலபர்யந்தமானபடியை

மாதர் மைதிலீ ராக்ஷஸீ : த்வயி ததைவ ஆர்த்ராபராதா : த்வயா
ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா

என்று அபியுக்தர் வெளியிட்டார்கள் . இவ்விடத்தில் த்ரிஜடையுடைய ஆத்மாத்மீய
பரஸமர்ப்பணத்திலே அவர்களுக்குப் பிறவித் துவக்காலே நம்மவர்களென்று
கண்ணோட்டம் பிறக்கும் ராக்ஷஸிகளும் அந்தர்பூதைகள் . அப்படியே
ஸ்ரீ விபீஷணாழ்வானோடு கூட வந்த நாலு ராக்ஷஸரும் அவருடைய உபாயத்திலே
அந்தர்பூதர்

வ்யாக்யானம்

ப்ரணிபாதம் ( தலை வணங்குதல் ) என்கிற பதம் , மேலே சொல்லப்பட்ட ஐந்து
அங்கங்களுடன் கூடிய ஆத்ம சமர்ப்பணத்தைச் ( அங்கி ) சொல்கிறது.

ப்ரணிபாத ப்ரஸந்நா ஹி மைதிலீ ஜநகாத்மஜா = நீங்கள் ஸீதையிடம்
செய்த ப்ரபத்தியால் , அவள் உங்களுக்குக் கருணை புரிபவளாக இருக்கிறாள் .

ந்யாஸ :பஞ்சாங்க ஸம்யுத : = லக்ஷ்மீ தந்த்ரம் கூறுகிறது.
ஐந்து அங்கங்களுடன் கூடியது , ”ந்யாஸம் ” என்பது ,த்ரிஜடையின் சரணாகதியில்
நன்கு வெளிப்பட்டது. ஐந்துஅங்கங்களுடன் சேர்த்துச் சொல்லப்பட்ட இந்த
நமஸ்காரம் –ப்ரபத்தியே

இப்படியாக, த்ரிஜடை சொன்னதை அரக்கிகள் மறுக்கவில்லை.வெளிப்படையாகச்
”சரணம் அடைகிறோம் ” என்று சொல்லாவிட்டாலும், த்ரிஜடை சொன்னதை மறுக்காமல்
இருந்ததையே ,ஏற்புடையதாகக் கொண்டு, ஸீதை , அரக்கிகளிடம் ,”நான் உங்களுக்கு
அடைக்கலமாக இருக்கிறேன் ” என்றால்.

ஸ்ரீகுணரத்னகோசம் ( 50 )

மாதர் மைதிலீ ! ராக்ஷஸீ த்வயி ததை வார்த்ராபராதாஸ் த்வயா
ரக்ஷந்த்யா பவனாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டீ க்ருதா |
காகம் த விபீஷணம் ”சரணம்” இத்யுக்தி க்ஷமெள ரக்ஷத :
ஸாந : ஸாந்த்ரமஹாகஸ : ஸுகயது க்ஷாந்திஸ் தவாகஸ்மிகீ ||

மாத : ! மைதிலி ! =எல்லாருக்குக்கும் தாயான மிதிலைநகரத்து அரசனின் குமாரியே ! மைதிலியே !
த்வயி =தேவரீரிடம் அப்போதே தவறுகளைச் செய்துகொண்டே இருந்த அசோகவனத்து
ராக்ஷஸிகளை ,வாயுபுத்ரனான அனுமனிடமிருந்து காப்பாற்றிய தேவரால் ,அடைக்கலம்
என்று வந்த காகாசுரனையும் ,தர்மாத்மாவான விபீஷணனையும் பாதுகாத்த ஸ்ரீ ராமபிரானின்
செயலானது , சற்று லேசானதுபோல் ஆகிவிட்டது.
ஸா ஆகஸ்மிகீ = அத்தகைய வேண்டுதலை எதிர்பார்க்காமல் அநுக்ரஹித்த தேவரீருடைய
க்ஷாந்தி: =பொறுமை என்கிற குணம் , ஸாந்த்ரமஹாகஸ : = (குற்றம் செய்த கை உலராமல்
இருக்கும் சமயத்திலும் ) பசுமையான பெரிய குற்றங்களைச் செய்கிற எங்களை,
ந : ஸுகயது =அப்படிப்பட்ட எங்களுக்கு நன்மை அடையச் செய்யட்டும்.
ஹே —மைதிலீ —ரங்கநாயகி –உன்னுடைய க்ஷமை என்கிற குணத்தால் ,ராக்ஷஸிகள் கேட்காமலே
அவர்களை ரக்ஷித்தாய் .எங்களையும் ரக்ஷிப்பாயாக —–
என்கிறார்.
ராக்ஷஸிகளை, வாயுபுத்ரனான ஹநுமானிடமிருந்து காப்பாற்றினாள் .
சரணம் என்று தாமே சொல்லாவிட்டாலும் காப்பாற்றினாள் . காத்தலே –க்ஷமை என்கிற குணம்.
ஸீதையின் திருவோலக்கத்திலே சேர்ந்துவிட்டதாலே ,த்ரிஜடை சொன்னதற்கு மறுப்பு
இல்லாததாலே —இதுவே சரணாகதி . இவர்களுக்கும் சேர்த்து த்ரிஜடை சரணாகதி.
ஒரு ராக்ஷஸ குலத்திலே –பிறவியினாலே ஏற்பட்ட ஸம்பந்தம் .

அதிகாரத்திலிருந்து

விபீஷண சரணாகதி

அங்குற்ற அபயப்ரதான ப்ரகரணத்திலும் இவ்வங்க அங்கி வர்க்கம் அடைக்கலாம் .
எங்ஙனேயென்னில் ப்ராதிகூல்யத்திலே வ்யவஸ்திதனான ராவணனக்குங்கூடப்
ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ , ஸீதாம் ச ராமாய நிவேத்ய தேவீம் வஸேம
ராஜந்நிஹ வீதசோகா : என்று ஹிதம் சொல்லுகையாலே ஆனுகூல்யஸங்கல்பம்
தோற்றிற்று . இந்த ஹித வசனம் பித்தோபஹதனுக்குப் பால் கைக்குமாப்போலே
அவனுக்கு உத்வேக ஹேதுவாயிற்று . த்வாம் து திக் குல பாம்ஸநம் என்று திக்காரம்
பண்ணினபின்பு இனி இவனுக்கு உபதேசிக்கவும் ஆகாது , இவனோடு அனுபந்தித்த
விபூதிகளுமாகாது , இருந்தவிடத்தில் இருக்கவுமாகாதென்று அறுதியிட்டு

த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச , பரித்யக்தா மயா லங்காம் மித்ராபி ச தநாநி ச
என்கிற ஸ்வவாக்யத்தின்படியே அங்குத் துவக்கற்றுப் போருகையாலே ப்ராதிகூல்ய
வர்ஜந அபிஸந்தி தோற்றிற்று . ராவணோ நாம துர்வ்ருத்த : என்று தொடங்கி
ஸர்வஜித்தான ராவணனோட்டை விரோதத்தாலே தாம் போக்கற்று நிற்கிற நிலையைச்
சொல்லுகையாலும் , பின்பும்

அநுஜோ ராவணஸ்யாஹம் தேந ஸாஸ்ம்யவமாநித :
பவந்தாம் ஸர்வபூதாநாம் சரண்யம் சரண்யம் கத :

என்கையாலும் கார்ப்பண்யம் சொல்லப்பட்டது. அஞ்சாதே வந்துகிட்டி ஸர்வலோக
சரண்யாய ராகவாய மஹாத்மனே என்று சொல்லும்படி பண்ணின மஹாவிச்வாஸம்
விபீஷணோ மஹாப்ராஜ்ஞ : என்று காரணமுகத்தாலே சொல்லப்பட்டது. ப்ராஜ்ஞதையை
விசேஷிக்கிற மஹச்சப்தத்தாலே விச்வாஸாதிசயந்தானே விவக்ஷிதமாகவுமாம் .
ராகவம் சரணம் கத : என்கையாலே உபாயவராணாந்தர்நீதமான கோப்த்ருவவரணம்
சொல்லிற்றாயிற்று . உபாயவரண ஸப்தத்தாலே வ்யாஜ்ஜிதமாகிறவளன்றிக்கே ,
நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷணமுபாஸ்திதம் என்கையாலே கடக புரஸ்ஸரமான
ஆத்மநிக்ஷேபம் சொல்லிற்று. இப்ப்ரகரணத்திலே நிவேதந சப்தம் விஜ்ஞாபநமாத்ர
பரமானால் நிஷ்ப்ரயோஜனம்

இப்படி மற்றுமுள்ள ப்ரபத்தி ப்ரகரணங்களிலும் லௌகிக த்ரவ்ய நிக்ஷேபங்களிலும்
ஸம்க்ஷேப விஸ்தர ப்ரக்ரியையாலே இவ்வர்த்தங்கள் காணலாம். தான் ரக்ஷிக்க
மாட்டாதொரு வஸ்துவை ரக்ஷிக்கவல்லவனொருவன் பக்கலிலே ஸமர்ப்பிக்கும்போது
தான் அவன் திறத்தில் அநுகூலாபிஸந்தியை யுடையவனாய் , ப்ரதிகூலாபிஸந்தியைத்
தவிர்த்து , ”இவன் ரக்ஷிக்க வல்லவன் , அபேக்ஷித்தால் ரக்ஷிப்பதும் செய்யும் ” , என்று தேறி
தான் ரக்ஷித்துக்கொள்ளமாட்டாமையை அறிவித்து , நீ ரக்ஷிக்கவேண்டுமென்று அபேக்ஷித்து
ரக்ஷ்ய வஸ்துவை அவன் பக்கலிலே ஸமர்ப்பித்துத் தான் நிர்பரனாய் பயங்கெட்டு மார்பிலே
கைவைத்துக்கொண்டு கிடந்து உறங்கக் காணா நின்றோமிறே

வ்யாக்யானம்

ராமபிரானால் அபயம் அளிக்கப்பட சந்தர்ப்பத்திலும் இந்த அங்கம் ,அங்கிகள்
காணக்கிடைக்கின்றன. ராவணன் ,தகாதவற்றைச் செய்ய வேகமாக இருந்தான். அவனுக்கு
விபீஷணன் சொன்ன நன்மையைக் கொடுக்கும் வார்த்தைகள்
ஸ்ரீமத் ராமாயணம் –யுத்த காண்டம் ( 9–22 ) ம் மற்றும்

பூரா ஸரத்ஸூர்ய மரீசி ஸன்னிபான் நவான்
ஸுபுங்கான் ஸுத்ருடான் ந்ருபாத்மஜ |
ஸ்ருஜத்யமோகான் விஸிகான் வதாய தே
ப்ரதீயதாம் தாஸரதாய மைதிலீ ||

த்யஜஸ்வ கோபம் ஸுகதர்ம நாஸனம்
யஜஸ்வ தர்மம் ரதிகீர்தி வர்தனம் |
ப்ரஸீத ஜீவேம ஸுபுத்ர பாந்தவா :
ப்ரதீயதாம் தாஸரதாய மைதிலீ ||

யாவன்ன லங்காம் ஸமபித்ரவந்தீ வலீமுகா : பர்வத கூடமாத்ரா : |
தம்ஷ்ட்ராயுதாஸ்சைவ நகாயுதாஸ்ச ப்ரதீயதாம் தாஸரதாய மைதிலீ ||

யாவன்ன க்ருஷ்ணந்தி ஸிராம்ஸி வாணா ராமேரிதா ராக்ஷஸ புங்கவானாம் |
வஜ்ரோபமா வாயு ஸமான வேகா : ப்ரதீயதாம் தாஸரதாய மைதிலீ ||

ராமனிடம் ஸீதையை ஒப்படைத்துவிடு
என்றும்,ஸீதையை , ராமனிடம் ஒப்படைத்துவிட்டு ,நாம் இந்த லங்காராஜ்யத்தில்
வருத்தமில்லாமல் வாழலாம் —
என்றெல்லாம் விபீஷணன் சொல்கிறான்—இவை ஆனுகூல்ய ஸங்கல்பம்

இந்த வார்த்தைகள், பித்து ஏறிய ஒருவனுக்குப் பால் கசக்குமாப்போலே
ஆயிற்று. ராவணன் கோபப்பட்டான்

த்வாம் து திக் குல பாம்ஸநம் = நம்முடைய அசுரகுலத்தைக் கெடுக்கிற
உன்னை அவமதிக்கிறேன் என்று ராவணன் கோபப்பட்டவுடன் , இனி இவனுக்கு
உபதேசம் செய்துப் பயனில்லை; இவனுடைய சொத்துக்கள் எதையும்
அனுபவிக்கக்கூடாது; இவனுடன் இங்கு இருக்கவும் தகாது —என்று விபீஷணன் தீர்மானிக்கிறான்

இப்படித் தீர்மானித்த விபீஷணன்
த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச , பரித்யக்தா மயா லங்காம் மித்ராபி ச தநாநி ச =
புத்ரன் ,மனைவி இவர்களைத் துறந்து ராமனைச் சரணடைந்தேன் ;லங்கை, நண்பர்கள்
செல்வம் ஆகியவற்றையும் துறந்தேன் –என்று சொல்வதால் , ப்ராதிகூல்யவர்ஜனம்
வெளிப்படுகிறது.

அதே யுத்தகாண்டத்தில்,
ராவணோ நாம துர்வ்ருத்த : என்று தொடங்கி
ஸர்வஜித்தான ராவணனோட்டை விரோதத்தாலே தாம் போக்கற்று நிற்கிற நிலையைச்
சொல்லுகையாலும் , = ராவணன் மோசமான நடவடிக்கையுள்ளவன், அனைவரையும்
ஜயித்திருக்கிறான் , அவனிடம் விரோதப்பட்டேன் , எனக்கு வேறு புகலிடம் இல்லை,
ராவணனின் இளைய சகோதரன், அவனால் அவமானப்படுத்தப்பட்டேன், எல்லா ஜீவன்களுக்கும்
ரக்ஷகன் நீ, உன்னைச் சரணமாக அடைந்தேன் —-
என்கிறான்.
அநுஜோ ராவணஸ்யாஹம் தேந ஸாஸ்ம்யவமாநித :
பவந்தாம் ஸர்வபூதாநாம் சரண்யம் சரண்யம் கத :
இதனால், கார்பண்யம் வெளிப்பட்டது.

ஸர்வலோக சரண்யாய ராகவாய மஹாத்மனே என்று சொல்லும்படி பண்ணின மஹாவிச்வாஸம்
விபீஷணோ மஹாப்ராஜ்ஞ : என்று காரணமுகத்தாலே சொல்லப்பட்டது. ப்ராஜ்ஞதையை
விசேஷிக்கிற மஹச்சப்தத்தாலே விச்வாஸாதிசயந்தானே விவக்ஷிதமாகவுமாம் .
ராகவம் சரணம் கத : என்கையாலே உபாயவராணாந்தர்நீதமான கோப்த்ருவவரணம்
சொல்லிற்றாயிற்று . உபாயவரண ஸப்தத்தாலே வ்யாஜ்ஜிதமாகிறவளன்றிக்கே ,
நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷணமுபாஸ்திதம் என்கையாலே கடக புரஸ்ஸரமான
ஆத்மநிக்ஷேபம் சொல்லிற்று. இப்ப்ரகரணத்திலே நிவேதந சப்தம் விஜ்ஞாபநமாத்ர
பரமானால் நிஷ்ப்ரயோஜனம் =
ராமன் சர்வலோக சரண்யன் என்கிறான் —மஹாவிச்வாஸம்
விபீஷணோ மஹாப்ராஜ்ஞ : =விபீஷணன் மிகுந்த புத்திசாலி ;அறிவுள்ளவன்
”மஹ ” என்கிற பதத்தாலே மிகுந்த –ஞானம் —இவற்றைச் சொல்லி, விபீஷணனின்
விச்வாஸத்தையும் சொல்கிறது.
ராகவம் சரணம் கத : =ராமனைச் சரணமடைந்தேன் — இது கோப்த்ருத்வவரணம் ஆகும்.

நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷணமுபாஸ்திதம் =விபீஷணனாகிய என்னை, ராமனிடம்
ஸமர்ப்பியுங்கள் –இதில் ”ஆத்ம நிக்ஷேபம் ”சொல்லப்பட்டது.
விபீஷணனுடன் கூடவந்தவர்களுக்கும் ,ராமபிரான் அருள்கிறான். அவர்கள் கேட்காவிட்டாலும்,
விபீஷணன் ப்ரார்த்தித்தபோது , அதில் அடக்கம்.

மற்ற ப்ரபத்தி நூல்களிலும், இந்த விஷயங்கள் , அதாவது,ஒருவரின் பொருளை ,மற்ற ஒருவரிடம்
வைப்பது—அப்பொருளைத் தன்னால் காக்க இயலாது நினைப்பவன், இவனால்தான்
பாதுகாக்க முடியும் வேண்டினால் இவன் பாதுகாப்பான் என்று தீர்மானித்து,அவனிடம் சென்று
பொருளைக்காக்க இயலாத நிலைமையைச் சொல்லி, நீயே காக்கவேண்டும் என்று
வேண்டுவது. வேண்டுதல் நிறைவேறியவுடன் , பொருளை அவனிடம் ஒப்படைத்துவிட்டு ,
மார்பிலே கைவைத்துச் சுகமாக உறங்குவது –இவற்றை இவ்வுலகில் காண்கிறோம்

அதிகாரத்திலிருந்து

இக்கட்டளையெல்லாம் க்ரியாமாணார்த்த ப்ரகாசகமான த்வயாக்யமந்த்ரத்திலே அநுஸந்திக்கும்படி
எங்ஙனேயென்னில் —ஸர்வஜ்ஞ ஸர்வ சக்தியுக்தனாய் ,கர்மாநுரூப பலப்ரதனாய் ,ஸர்வோபகார
நிரபேக்ஷனாய் ,க்ஷூ த்ர தேவதைகளைப்போலே க்ஷிப்ரகாரியன்றிக்கேயிருப்பானாய் ,
ஸமாதிக தரித்ரனான ஸர்வேச்வரன் அநந்தாபராதங்களையுடையார்க்கு அபிகமயனாகையும்,
ப்ராப்தி விரோதியான அநந்தாபராதங்களையுடையார்க்குஅளவில்லாத பலத்தைத் தருகையும்
அல்பவ்யாபாரத்துக்குத் தருகையும் ,தாழாதே தருகையும் ,தரம்பாராதே தருகையும் கூடுமோவென்கிற
சங்கைகளுக்கு நிவர்த்தகங்களுமாய் யதாஸம்பவம் உபாயத்வப்ராப்யத்வோபயுக்தங்களுமாய்
இருந்துள்ள புருஷகார ஸம்பந்தகுண வ்யாபார ப்ரயோஜன விசேஷங்களாகிற சேஷியினுடைய
ஆகாரங்களைப் பொதிந்து கொண்டிருக்கிற ஸ்ரீமச்சப்தத்திலும் நாராயண சப்தத்திலும் ஆர்த்தமாக
ஆநுகூல்ய ஸங்கல்பமும் ப்ராதிகூல வர்ஜனமும் அநுஸந்தேயமாகக் கடவது . இப்படி
விசிஷ்டனான ஸ்வாமியைக் காட்டுகிற சப்தங்கள் ஒளசித்யத்தாலே அவன் திறத்தில் ப்ராப்தமான
அபிவதாநுவர்த்தன ஸங்கல்பத்தையும் அநபிமத நிவர்த்தனத்தையும் ப்ரகாசிப்பிக்கின்றன

வ்யாக்யானம்

ப்ரபத்தியின் உள்ளார்ந்த அர்த்தத்தைச் சொல்லும் ”த்வயத்”தில் ஐந்து அங்கங்கள் வெளிப்படுகின்றன
எப்படி என்றால், எல்லாம் அறிந்துணர்ந்தவன் , எங்குமுள்ளவன் , செய்யும் கர்மங்களுக்கு
ஏற்றபடி பலனளிப்பவன் ,வேறு எவருடைய உதவியும் வேண்டாதவன் ,மற்ற தேவதைகள் போன்று
உடனே பலனளிக்காதவன் தனக்கு நிகரும் .மிக்காரும் இல்லாதவன் என்று இருக்கிற
ஸர்வேச்வரன் விஷயத்தில் சந்தேகங்கள் வந்தால் ,

1. கணக்கற்றத் தவறுகள் செய்தவர்கள் ,பகவானை நெருங்கமுடியுமா
2. கணக்கற்றத் தவறுகள் செய்தவர்கள்,அவற்றால் தடைப்படும் பலன்களை எவ்விதக்
கட்டுப்பாடும் இல்லாமல் பகவானிடமிருந்து பெறமுடியுமா
3.அல்பமான கர்மாக்களைச் செய்தவர்களும் பலன்களை அடையமுடியுமா
4.இத்தகைய பலன்கள் தாமதமின்றிக் கிடைக்குமா
5.தன்னடியார்களிடம் ஏற்றத்தாழ்வு பாராமல் இருப்பானா
இவற்றுக்கெல்லாம் , பகவான் எவ்வித விசேஷங்களை உடையவன் என்பதை முதலில்
அறியவேண்டும்

பெரியபிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டுள்ளவன்
பிராட்டியோடு கலந்து பேசும்போது ,குற்றங்களைப் பற்றியே பேசும் பகவான் ,
புருஷகாரமாகப் பிராட்டியைப் பற்றியபிறகு ,இவன்( சேதனன் ) செய்த குற்றங்களை
மறந்தாற்போல இருக்கிறான் ..பகவானுக்கு ”அவிஜ்ஞாதா ” என்று ஸஹஸ்ரநாமத்தில்
ஒரு திருநாமம் உண்டு. குற்றத்தை அறியாதவன் என்று பொருள் . தெரிந்தும் தெரியாதவன்போல
இருப்பவன் .
எஜமானன் –வேலைக்காரன் என்கிற உறவுமுறை தனது படைப்புகள் மீது ஆழ்ந்த அன்பு
உள்ளவன் . அனைத்து உயிர்களையும் , கரைசேர்க்கும் எண்ணமுள்ளவன் .
இவ்வாறு கரையேற்றுவதைத் தனது பலனாகக் கொண்டவன்
இந்த எஜமானக் குணங்கள் ,த்வயத்தில் ”ஸ்ரீமத் ” என்கிற வார்த்தை மூலமாகவும்
அவனின் திருவடியை அடைதல் என்பதை ”நாராயண ” என்கிற வார்த்தை மூலமாகவும்
தெளியப்படுகிறது . ஆனால், பகவானுக்கு விருப்பமானத்தைச் செய்வேன்,விருப்பமில்லாததைச்
செய்யமாட்டேன் என்கிற எண்ணம் இல்லாதவனுக்கு ,மேற்கூறியவைகள் வெளிப்படாது.

மோக்ஷர்த்தமாகப் பகவானைச் சரணமடையும்போது ,பிராட்டியைப் புருஷகாரமாகக் கொண்டு
சரணமடையவேண்டும். ஸ்ரீ பாஷ்யகாரர் , கத்ய த்ரய ஆரம்பத்தில், சரணாகதி கத்யத்தில்
பகவந் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப , ரூபகுண ,விபவ ,ஐஸ்வர்யசீலாதி ,அநவதிக,
அதிசய ,அசங்க்யேய , கல்யாண குணகணாம் பத்மவநாலயாம் ,பகவதீம் ச்ரியம் தேவீம் ,
நித்யானபாயினீம் ,நிரவத்யாம் தேவதேவ திவ்ய மஹிஷீம் அகிலஜகன்மாதரம் அஸ்மந்
மாதரம் அசரண்ய சரண்யாம் ,அநந்யசரண : சரணமஹம் ப்ரபத்யே —-
என்று இப்படி, முதல் சூர்ணிகையாலே பிராட்டியைச் சரணமடைகிறார்.
”பகவந் நாராயண” —-என்று ஆரம்பம் . ”பகவதீம் ச்ரியம் தேவீம்—-” நடுவில் வருவது.
”பகவத்” ஸப்த ஸ்தானத்தில் ,”பகவதீம் ” என்றும் , ”நாராயண ” ஸப்த ஸ்தானத்திலே
”ச்ரியம் ” என்றும் உள்ளது . இதனால்,பகவத் ஸப்தத்தின் பொருளும் ,நாராயண ஸப்தத்தின்
பொருளும் பிராட்டியிடம் உண்டு என்பது தெளிவாகிறது.த்வய அதிகாரத்தில் ,
ஸ்ரீ பாஷ்யகாரரும்” பகவந் நாராயண ” என்கிற நேரிலே ”பகவத் ச்ரியம் ” என்று
அருளிச் செய்தாரென்று ஸ்வாமி தேசிகன் சொல்கிறார். மேற்கொண்டு,
இதன் விவரத்தை 28 வது ”த்வய அதிகாரத்தில் ” பார்க்கலாம்.

ஸ்ரீ ச்ருதப்ரகாசிகா ஆசார்யர் ——
சரணாகதி கத்ய வ்யாக்யானத்தில் பிராட்டியின் சாக்ஷாத் உபாயத்வத்தை ,
ஸம்ப்ரதாய ஸித்தம் என்று அருள்கிறார்.
பகவந் நாராயண ——-இத்யாதியை புருஷகார ப்ரபத்திபரமாக யோசித்து
ச்ரியம் ப்ரபத்ய ,தத் ஸந்நிதெள , மூல மந்த்ரேண ,ஸ்வரூபானுரூப ,புருஷார்த்தப்ரார்த்தனம்
ததுபாய ப்ரார்த்தனா பர்யந்தம் க்ருத்வா ,ததுநுஜ்ஞயா ,த்வயம் அநுஸந்தீயதே இதி
பூர்வாசார்ய அநுஸந்தானம் அநுசஸ்மரன் ப்ரதமம் ச்ரியம் ப்ரபத்யதே —————-

மூலமந்த்ரத்தைக்கொண்டு பிராட்டியிடம் புருஷார்த்த ப்ரார்த்தனமும் செய்து ,
உபாயத்வ ப்ரார்த்தனமும் செய்து ,பிறகு பகவானை சரணவரணம் பண்ணுவது
பூர்வாசார்ய ஸம்ப்ரதாயம் .

லக்ஷ்மி கல்யாணத்தில், பட்டர்
”பத்மாயா : தவ ச சரணெள ந : சரணயந் ” ஸாரஸாஸ்த்ரத்திலே உதாஹரித்துள்ளார் .
ஸ்ரீ பராசர பட்டர் தன்னுடைய குணரத்ன கோசத்திலே –32 வது ச்லோகத்தில்
ப்ரஸகந பலஜ்யோதிர் ஜ்ஞாநைஸ்வரீ விஜய ப்ரதா —
ப்ரணத வரணப்ரேம க்ஷேமங்கரத்வ புரஸ்ஸரா : |
அபி பரிமல : காந்திர் லாவண்யம் அர்ச்சி :இதீந்திரே !
தவ பகவதஸ்சைதேஸாதாரணா குணராஸய : ||

ப்ரேம = அடியார்களின் பிரிவைத் தாங்காதவன் க்ஷேமங்கரத்வ =அடியார்களிடம்
குற்றங்களை நீக்கி அவர்களுக்கு மோக்ஷபர்யந்தமான நன்மைகளைச் செய்பவன்

சதுச்லோகி
—————–

நான்கு வ்யூஹம் —அதில் அநிருத்தன் ஒன்று.அநிருத்த வ்யூஹத்திலிருந்து
விபவ மூர்த்திகள் —-ஹார்த்தம் ( ஹ்ருதயத்தில் வாஸம் )
அர்ச்சை , விபவ மூர்த்திகளே —-
லக்ஷ்மி தந்த்ரம் —பகவானின் 38 விபவங்களைச் சொல்கிறது.கேசவாதி மூர்த்திகள்
அம்மூர்த்திகளுக்குப் பத்னியும் சொல்லப்படுகிறது
ப்ரஹ்ம ஸூத்ரம் —–4 அத்யாயம் பகவானுக்கு இதில் சொல்லப்பட்ட 4 அம்சங்களும்
பிராட்டிக்கும் உள்ளது என்பதைத் தெரிவிக்கிறது

சதுச்லோகீ —4 ச்லோகமாக ஸ்ரீ ஆளவந்தார் அருளினார்
1. உலகுக்கெல்லாம் இவள் பகவானைப்போல ”சேஷீ ”
2.பகவானுக்கும் ,பிராட்டிக்கும் ”மேன்மை ”ஒரேவிதமாகத் தானாகவே ஏற்பட்டது
3.மோக்ஷமும் இவள் அநுக்ரஹத்தாலே
4. இவளுக்கும் ”விபுத்வம் ” பகவானின் எங்கும் பரவியிருக்கிற திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தில்
பிராட்டியும் நெருக்கமாக இணைந்திருப்பதாலே ,பகவானுக்கு உள்ள விபுத்வம்
இவளுக்கும் உண்டு.

மதுராந்தகம் ஸ்வாமி தன்னுடைய ”ஸம்ப்ரதாய ஸுதா ” என்கிற க்ரந்தத்தில்,
6 வது அதிகாரத்தில் ” லக்ஷ்மி உபாயத்வ ஸம்ரக்ஷணம் ” என்பதாகச் சொல்கிறார்.
ஸ்ரீ ஸுக்த பாஷ்யத்திலே —-பெரிய ஜீயர் சொன்னதை இங்கு சொல்கிறார்

ச்ரியம் ஸ்ரீரீஸ்ரயே இதி ஸர்வாதாரத்வம் புருஷகாரத்வேந உபாயத்வேந
சாஸ் ரீயமாணத்வம் ஸ்ர்ருஹிம்ஸாயாமிதி ஆச்ரித தோஷ நிவர்தகத்வம்
ஸ்ராபரிபாகே இதி ஆச்ரிததோஷாநபஹாய ச்ரீணாத் ச குணைர்ஜகத் இதி
ஆச்ரிதகுணபூரகத்வம் ஏவமாதயே : தர்மா : ஸுசிதா : ச்ரீஸப்தேந ——

——————————————-

ஸ்ரீ பாஞ்சராத்ர வசனம் இப்படிச் சொல்கிறது —-
லக்ஷ்மீம் ச மாம் ஸுரேசம் ச த்வயேன சரணம் கத : |
மல்லோகம் அசிரால்லப்த்வா மத்ஸாயுஜ்யம் ஸ கச்சதி ||

அதிகாரத்திலிருந்து

சேஷியின் புருஷகாரம் போன்றவைகள்

இப்புருஷகாராதிகள் அஞ்சுக்கும் விசேஷங்களாவன —
மறுக்கவொண்ணாமையும் ,ஒழிக்கஒழியாமையும் , நிருபாதிகமாகையும் ,ஸஹகாரியைப்
பார்த்திருக்க வேண்டாமையும் ,தண்ணியரான பிறருடைய பேறே தன் பேறாகையும்

வ்யாக்யானம்

பிராட்டியிடமிருந்து புருஷகாரமாக ( சிபாரிசாக ) பகவான் பெறுகின்றவை ஐந்து
தன்மைகள் உள்ளவையாகும். அவை —-1.பிராட்டி சொல்வதை மறுக்க இயலாமை
2.சரணம் என்று வந்தவர்களைத் தள்ள இயலாமை 3.எதிர்பார்ப்பு இல்லாமல்
இருத்தல் 4.சரணம் அடைய வேறு எதையும் எதிர்பாராது இருத்தல் 5.சரணமடைத்தவர்களின்
பலனைத் தன்னுடைய பலனாக நினைத்தால்
புருஷகாராதிகள் 5ம் ஸ்ரீமந் நாராயண என்கிற சொல்லில் அடங்கியுள்ளன.
ஸ்ரீ —என்பதால், புருஷகாரமான பிராட்டி சொல்லப்படுகிறாள். நார —-என்பதிலிருந்து
பகவானுக்கும் ஜீவனுக்கும் உள்ள ஸம்பந்தம் சொல்லப்படுகிறது . நார –சப்தமே
பகவானின் குணங்களைச் சொல்லிற்று .ஆனுகூல்ய ஸங்கல்பம் , ப்ராதிகூல்ய வர்ஜனம்

அதிகாரத்திலிருந்து
ப்ரபத்தி -இதற்கு ஐந்து சந்தேகங்கள்

இவ்விசேஷங்கள் அஞ்சாலும் சங்காபரிஹாரம் பிறந்தபடி எங்ஙனேயென்னில்

ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தியாயிருந்தானேயாகிலும் மறுக்கவொண்ணாத புருஷகார
விசேஷத்தாலே அந்தப்புர பரிஜந விஷயத்திற்போலே அபிகந்தவ்யதா விரோதிகளான
அபராதங்களையெல்லாம் க்ஷமித்து இவற்றில் அவிஜ்ஞாதா என்னும்படி நின்று அபீகந்தவ்யனாம்

கர்மாநுரூப பலப்ரதனேயாகிலும் இப்பிரபத்திரூப வ்யாஜத்தாலே ப்ரஸன்னானாய்
ஸ்வாமித்வ தாஸத்வ ஸம்பந்தோபோதிதமாய் தாயம் போலே ஸ்வத :ப்ராப்தமான
அளவில்லாத பலத்தையும் தரும்.

அவாப்த ஸமஸ்த காமதையாலே ஸர்வோபகார நிரபேக்ஷனேயாகிலும் அல்பவ்யாஜத்தாலே
வசீகார்யனான ஸுஜந ஸார்வபௌமனைப் போலே தன் நிரூபாதிக காருண்யாதிகளாலே
இவன் செய்கிற சிலவான வ்யாபாரத்தைத் தனக்குப் பறிபோபகாரமாக ஆதரித்துக்கொண்டு
க்ருதஜ்ஞனாய்க் கார்யம் செய்யும் க்ஷூத்ர தேவதைகளைப்போலே க்ஷிப்ரகாரியன்றாகிலும்
மற்றுள்ள சாஸ்த்ரார்த்தங்களுக்கு விளம்பித்துப் பலங்கொடுத்தானேயாகிலும்
அநந்யசரணனுடைய ப்ரபத்திக்கு ஒளதார்யாதி குணஸஹிதமாய் சஹகார்யாந்தர நிரபேக்ஷமான
தன் ஸங்கல்பமாத்ரத்தாலே காகவிபூஷணாதிகளுக்குப்போலே இவன் கோலின காலத்திலே
அபேக்ஷிதம் கொடுக்கும்

ஸமாதிக தரித்ரனேயாகிலும் ஸ்வாதந்த்ரயாதி குணவிசிஷ்டனாய் தன் ப்ரயோஜனமாக
ஆச்ரிதருக்கு அபேக்ஷிதம் செய்கிறானாகையால் கோசல ஜனபதத்தில் ஜந்துக்களுக்குப் போலே
குமாரனோடொக்கத் திர்யக்கான கிளிக்குப் பாலூட்டுங்கணக்கிலே தரம் பாராதே கொடுக்கும்

இப்படி யதாலோகம் பிறந்த சங்கைகளுக்கு யதாலோகம் பரிஹாரமுண்டாகையாலே
யதாசாஸ்த்ரம் ப்ரபத்தி அபேக்ஷித சாதனமாகக் குறையில்லை

வ்யாக்யானம்

ப்ரபத்தி சம்பந்தமான ஐந்து சந்தேகங்களும் .ஐந்து தன்மைகளால் நீங்கியது
எப்படியெனில் —–
பகவான் அனைத்துமறிந்தவன் ;அனைத்து சக்தியுமுள்ளவன்.இருப்பினும், பிராட்டியின்
புருஷகாரத்தை மறுக்க இயலாதவன்.ராணியின் ஆட்கள் தவறுகள் செய்தாலும் ,
அரசன் பொறுத்துக்கொள்வதைப்போலே , புருஷகார பூதையான பிராட்டியின் தயைக்கு
உள்ளானவர்களின் குற்றங்களைப் பொறுக்கிறான் .இவைகளைக் காணாமல்போல்
இருக்கிறான்

அவரவர் கர்மங்களுக்குத் தக்க பலனை அளிப்பவனாக இருந்தாலும், ப்ரபத்தி
செய்தவனிடம் அதிகக் கருணை காட்டுகிறான் . ஆண்டான் –அடிமை உறவு இருந்தாலும்
அடிமை தவறுகள் செய்தாலும், அவர்கள் அடையவேண்டிய நன்மைகளைச் செய்கிறான்

பகவான் அடையவேண்டிய அனைத்துமுள்ளவன் ;அதற்கு எவருடைய உதவியும்
தேவையில்லாதவன். நாம் செய்யும் ப்ரபத்தியை ,நாம் அவனுக்குச் செய்யும் பேறாகக்
கருதுகிறான்;இது அவனுடைய காருண்யத்தைக் காட்டுகிறது.ஒரு அரசனுக்கு, ஒருவன்
சிறியதாக ஒன்றைச் சமர்ப்பித்தாலும் , அதனால் மகிழும் அவர் , எண்ணற்ற உதவிகளைச்
செய்வதை இது ஒக்கும்

பகவான் சாதாரண தேவதைகளைப்போல உடனே பலனளிப்பதில்லை . மற்ற சாஸ்த்ரங்களின்படி
நடப்பவனுக்கு சற்றுத் தாமதமாகவே பலனைத் தருகிறான் . ஆனால்,மற்ற உபாயங்களைத்
தள்ளி, சரணம் என்று ப்ரபத்தி செய்தவர்கள் வேண்டுவதை உடனே நிறைவேற்றுகிறான்
இதை,காகாசுரன், விபீஷணன் விருத்தாங்தங்களில் காணலாம்.

இவனுக்கு ஒப்பாரும் இல்லை ; மிக்காரும் இல்லை.இவன் ஸர்வ ஸ்வதந்த்ரன் .
ஆனாலும் தன்னை அண்டியவர்களின் விருப்பப்படி நடந்து ,மகிழ்ச்சி அடைகிறான் யாருடைய
உயர்வு தாழ்வையும் பார்ப்பதில்லை.தான் வளர்க்கும் கிளிக்குப் பாலூட்டும்
ராஜகுமாரன் முதல், குழந்தைக்குப் பாலூட்டும் விலங்குகள் வரை, ராமபிரான்
கோசலநாட்டில் சமமாக நடத்தினான்

ப்ரபத்தி குறித்து நாம் அன்றாடம் செயல்படும்போது ஏற்படும் சந்தேகங்கள் ,நாம் அன்றாடம்
செய்யும் செயல்கள் மூலமாகவே தீர்க்கப்பட்டன ஆதலால், ப்ரபத்தி என்பது
பகவானை அடைவதற்கான உபாயம் என்று தெளிவாகிறது.

அதிகாரத்திலிருந்து
மஹாவிச்வாஸம் —ஆசார்ய கடாக்ஷம் மூலமே

இவ்விசிஷ்டமான புருஷகாராதிகள் அஞ்சையும் ஸதாசார்ய கடாக்ஷ விசேஷத்தாலே
தெளிந்தவனுக்கல்லது மஹாவிச்வாஸம் பிறவாது.எங்ஙனேயென்னில் —-ஈச்வரன்
அபிமுகநல்லாமையாலே கர்மயோகாதிகளுக்குஅநர்ஹனாம்படியான மஹாபராதங்களை
உடையவனாய் திகசுசிமவிநீதம் என்கிற ச்லோகத்தின்படியே எட்ட அரிய பலத்தைக்
கணிசிக்கும்படியான சாபலத்தையுமுடையவனாய் இப்பலத்துக்கு அநுஷ்டிக்கப் புகுகிற
உபாயம் காயக்லேச அர்த்தவ்யய காலதைர்த்யாதிகளொன்றும் வேண்டாததொரு
ஸக்ருதநுஸந்தானமாதல் , ஸமுதாயஜ்ஞான பூர்வக ஸக்ருதுக்திமாத்ரமாதலாய் ,
இந்த லகுதரமான உபாயத்தைக்கொண்டு அந்த குருதரமான பலத்தைத் தான்
கோலின காலத்திலே பெற ஆசைப்பட்டு இப்பலத்துக்கு சுநமிவ புரோடாச :
என்கிறபடியே ஜன்மவ்ருத்தாதிகளாலே தான் அநர்ஹனாய் வைத்துத் தன் அநுபந்திகளையுங் கொண்டு
இப்பேறு பெறுவதற்காக ஒருத்தனுக்கு மஹாவிச்வாஸம் பிறக்கையில் அருமையை நினைந்து
கலவெள்ளுக்கட்டுப்போய்க் கல எண்ணெயாயிற்று என்று எம்பார் அருளிச்செய்தாரிறே

வ்யாக்யானம்

இதற்கு முன்பு சொல்லப்பட்ட புருஷகாரம் முதலான ஐந்தையும் ,ஆசார்யன் க்ருபையால்
தெரிந்துகொள்ளாதவனுக்கு ,மஹாவிச்வாஸம் ஏற்படாது. மஹாவிச்வாஸம் ஏற்படவில்லையெனில்
பகவானின் கடாக்ஷம் கிடைக்காது. இதனால்,கர்மயோகம் போன்றவற்றைச் செய்யும்
தகுதி இல்லாது, பாபியாக இருக்கிறான் . இதை ஸ்ரீ ஆளவந்தார் ,தனது ஸ்தோத்ர ரத்னத்தில் (47)
கூறுகிறார்.
திகசுசிமவிநீதம் நிர்ப (த )யம் மாமலஜ்ஜம்
பரமபுருஷ யோஹம் யோகிவர்யாக்ரகண்யை : |
விதிசிவ ஸநகாத்யைர் த்யாது மத்யந்ததூரம்
தவபரிஜந பாவம் காமயே காமவ்ருத்த : ||

சாஸ்த்ரங்களில் சொல்லியபடி ஸாத்விக ஆகாரங்களை உண்டு ,இந்த்ரியங்களை
அடக்கி , மனத்தையும் ஸாத்விகமாக்கி பெரியவர்களிடம் அடக்க ஒடுக்கமாக அவர்களுக்குப்
பணிவிடை செய்து பூர்ண புருஷாகாரம் இருந்தாலும் உன்னிடம் நெருங்க அஞ்சுகிறார்கள் .
யோக்யதை இருந்தாலும் பெரியோர்கள் கோஷ்டியில் சேர வெட்கப்பட்டு , அநுஷ்டானபரர்களும்
நெருங்கப் பயப்படுகிறார்கள் . ப்ரஹ்ம ருத்ராதிகளும் ஸநகாதி முனிவர்களும்
உன்னை அண்டவே அஞ்சுகிறார்கள் .அப்படி அஞ்சாமல் உன்னிடம் மோக்ஷத்தைக்
கேட்டிருந்தால் எப்போதோ மோக்ஷம் அடைந்திருப்பார்கள்.
நானோ ஒருவித சக்தியுமில்லாதவன் எவ்வித சிக்ஷையும் பெறாதவன் .துணிந்து
வெட்கமின்றிப் ப்ரார்த்திப்பது தகாதுதான் . ஆனால், நான் காமவ்ருத்தன் ; எல்லா சாஸ்திரங்களையும்
மீறி நடந்ததைப்போல ,மோக்ஷம் வேண்டுவதற்கான சாஸ்த்ரங்களையும் மீறி இருக்கிறேன்.
துணிந்து கேட்கிறேன், மோக்ஷம் . இதனை ஆராய்ந்தால் நானே என்னை வெறுத்து
ஒதுக்கவேண்டியவன் ஆவேன்.

திகசுசிமவிநீதம் =தூய்மை வெட்கம் தயை போன்றவை இல்லாதவனை நிந்திக்கவேண்டியதுதான்
நியாயம். ஆனால், அடையஇயலாத ஒன்றுக்கு முயற்சி செய்து சுலபமான உபாயத்தைச் செய்கிறான் .
இந்த உபாயம் கடுமையான உடல் முயற்சி இல்லாதது; பணச் செலவு இல்லாதது;
அதிக நேரம் தேவையில்லை; மிக எளிமையானது ; மனஸ் அல்லது வாக்கால் பொருள் அறிந்து
சொன்னாலே போதும்.இந்த உபாயத்தின் மூலம்,தான் விரும்பும் மோக்ஷத்தை, தான்
அடைய விரும்பும் நேரத்தில் பெறுவதற்கு ஆசைப்படுகிறான் .

பாத்ம ஸம்ஹிதையில் , ” சுநமிவ புரோடாச : —–” என்று சொல்லுமாப்போலே , அதாவது,
புரோடாசம் என்பது ஹோம த்ரவ்யம் –இது தேவர்களுக்கு உரியது, அதை ஏற்கும் தகுதி நாய்க்கு இல்லை—
அதைப்போல,பிறவி, மற்றும் சாஸ்த்ர விரோத நடவடிக்கைகளால்,மோக்ஷம்பெறத் தகுதி
இல்லாவிடினும் அதை அடைய ஆசைப்படுகிறான். பக்தியோகம் செய்யவே அச்சமும் தயக்கமும்
உள்ளவன் ப்ரபத்திக்கு முக்ய அங்கமான மஹாவிச்வாஸம் கொள்ள எண்ணுதல்
கலவெள்ளுக்கட்டுப்போய்க் கல எண்ணெயாயிற்று என்று எம்பார் அருளிச்செய்ததைப்
போலுள்ளது அதாவது, ஒரு வாணியனின் –எண்ணெய் விற்பவனின்— செக்கு —எண்ணையை
ஆட்டும் மரத்தாலான சாதனம்—-பழுதுபட , வாணியன் ,கானகத்துக்குச் சென்று செக்குக்கான
ஒரு மரத்தை வெட்ட முயன்றான். அப்போது அந்த மரத்தில் குடியிருந்த ஒரு பிசாசு,
”மரத்தை வெட்டாதே—-உனக்குப் பிழைப்பதற்கு தினமும் ஒரு மூட்டை எள்ளையே
தருகிறேன்;எள்ளை விற்றுப் பிழைத்துக்கொள் —” என்க , வாணியனும் சம்மதிக்க, அந்தப்
பிசாசு, தினமும் ஒரு மூட்டை எள் கொடுத்துவந்தது.சிறிதுநாள் கழித்து,அந்த மரத்தினடியே
வந்த மற்றொரு பிசாசு, விஷயத்தைக் கேள்விப்பட்டு,முதல் பிசாசிடம் , நான் அந்த வாணியனைக்
கொன்றுவிட்டு வருகிறேன் என்று சொல்லி, வாணியனின் வீட்டுக்கு வந்தது.
அந்தச் சமயத்தில், வாணியன் , தனது பிள்ளையிடம் , முரண்டு பிடிக்கும் இரண்டாவது
காளை மாட்டைக் காட்டி , ” மகனே—அந்த இரண்டாவது பிசாசைப் பிடித்துக் கட்டு –”
என்றான். வாணியனைக் கொல்ல வந்த பிசாசு ,நடுங்கிப்போய் ,”ஐயா —நான் உனக்கு
தினமும் எண்ணெயாகவே கொடுக்கிறேன் –என்னை —” என்று சொல்லி ஓடிப்போயிற்று.
இதைக் கேள்வியுற்ற முதல் பிசாசு, சிரித்ததாம் .
இதைப்போன்றே மஹாவிச்வாஸம் , பக்தியோகத்தைக்காட்டிலும் சிரமமானது என்பர்.
ஒருபிடி எள்ளையே , கொடுக்க இயலாதவனிடம் ,ஒரு பாத்திரம் நிரம்ப எண்ணெய்
கேட்பது போல—கர்மயோகத்துக்கே தகுதி இல்லாதவன் மஹாவிச்வாஸம் கொள்ள நினைப்பது
உள்ளது –என்றும் பொருள் கொள்ளலாம் .

அதிகாரத்திலிருந்து

அப்புள்ளாரின் விவரணங்கள்

இவ்விடத்தில் ஸர்வேச்வரனுடைய பரத்வமாத்ரத்தை அறிந்து அகலுகையாலே நராதமனென்று
பேர் பெற்ற பிறந்து கெட்டானிற் காட்டில் இடைச்சிகளைப்போலே விவேகமில்லையேயாகிலும்
ஸௌலப்யத்தை அறிந்து அந்நலனுடையொருவனை நணுகுமவனே பரமாஸ்திகனென்று
அப்புள்ளார் அருளிச் செய்யும் பாசுரம்

வ்யாக்யானம்
ஸ்ரீ அப்புள்ளார் கூறுவதாவது —-

கோகுலத்து ஆய்ச்சியர்கள் போன்று விவேகம் இல்லையென்றாலும் , ஒருவன் , பகவானின்
ஸௌலப்யத்தை–எளிமையை உணர்ந்து அவன் பகவானை அணுகினால்,அவன் பரம ஆஸ்திகன் .
ஆனால், பகவானின் பரத்வத்தை மட்டிலுமே உணர்ந்து , அவனை அணுகத் தகுதியில்லை
என்றிருப்பவன் ”நராதமன் ” என்று கீதை சொல்கிறது ஆதலால், நராதமன் என்பவனைக்காட்டிலும்
பரம ஆஸ்திகன் பகவானிடம் மஹாவிச்வாஸம் அதிகமுள்ளவன் ஆகிறான்

அதிகாரத்திலிருந்து
த்வயத்தில் மஹாவிச்வாஸம் ,கார்ப்பண்யம்

இப்படி புருஷகாராதி ஜ்ஞானத்தாலே பிறந்த விச்வாஸ மஹத்வமும் விச்வாஸ ஸ்வரூபமும்
கார்ப்பண்யமும் ப்ரபத்யே என்கிற க்ரியா பதத்தில் உபஸர்க்கத்திலும் ,சரணசப்தோபலிஷ்டமான
தாதுவிலும் உத்தமனிலும் அநுஸந்தேயங்கள் . இதில் உத்தமனில் விவக்ஷிதத்தை அநந்யசரண :
என்று கத்யத்திலே வ்யாக்யானம் பண்ணினார்

வ்யாக்யானம்
த்வய மந்த்ரத்தில் உள்ள ப்ரபத்யே என்பதில் ”ப்ர ” என்பதில், பெரியபிராட்டியாரின்
புருஷாகாரம் ,மஹாவிச்வாஸத்தின் மேன்மை இதன் ஸ்வரூபம் , வேறு கதியில்லை
என்கிற முடிவு சொல்லப்படுகிறது.
மேலும்,சரணம் என்கிற வார்த்தையுடன் சேர்ந்து வருகிற ”ப்ரபத்யே ” என்பதில் உள்ள
”’பத் ‘ என்பதிலும் ( தாது—root )தெரிகிறது.இக்கருத்தையே எம்பெருமானார் சரணாகதி கத்யத்தில்
அநந்யசரண :–வேறு அடைக்கலம் இல்லை என்று அருளினார்

அதிகாரத்திலிருந்து
த்வயத்தில் –கோப்த்ருத்வவரணம்

இவ்விடத்தில் உபாயத்வ அத்யவஸாய வாசக ஸப்தத்திலே கோப்த்ருத்வவரணம் அந்தர்நீதம் .

அஹம் அஸ்மி அபராதாநாம் ஆலயோ அகிஞ்சிநோ அகதி :
த்வம் ஏவ உபாய பூதோ மே பவதி ப்ரார்த்தநாபதி :

சரணாகதிரித்யுக்தா ஸா தேவே அஸ்மிந் ப்ரயுஜ்யதாம் என்றும்

உபாயோ க்ருஹ ரக்ஷித்ரோ : ஸப்த : சரணமித்யயம்
வர்த்ததே ஸாம்ப்ரதம் உபாயார்த்த ஏக வாசக : என்றும்

சொல்லுகிறபடியே உபாயாந்தர அசக்தனுக்கு ஸர்வேச்வரன் ஸர்வ ஸாஸ்த்ரார்த்த
சாதாரணமான ரக்ஷகத்வமாத்ரத்திலே நிற்கையன்றிக்கே ஸ்வீக்ருதபரனாய்க் கொண்டு
உபாயாந்தர ஸ்தானத்திலே நிவேசிக்கையாலும் ந்யஸ்தபரனான இவ்வதிகாரிக்குப் பின்பு
அந்நயோபாயத்வம் நிலைநிற்கைக்காகவும் உபாயத்வாத்யவஸாயம் இவ்விடத்திலே
விவக்ஷிதமாயிற்று . உபாயமென்றால் ஒரு விரகு என்ற மாத்ரமாகையாலே
இவ்வுபாயத்வம் சேதந அசேதந ஸாதாரணமாயிருக்கையாலும்

ரக்ஷிஷ்யதீதீ விச்வாஸோ கோப்த்ருத்வவரணம் ததா என்றும்

ஸர்வஜ்ஞ : அபி ஹி விச்வேசா : ஸதா காருணிகோ அபி ஸந்
ஸம்ஸாரதந்த்ர வாஹித்வாத் ரக்ஷாபேக்ஷாம் ப்ரதீக்ஷதே என்றும்

சொல்லுகிறபடியே சேதநைகாந்தமான கோப்த்ருத்வவரணம் அநுஸந்தேயமாகையாலும்
கோப்த்ருத்வவரணம் இங்கே விவக்ஷிதம் . அதி சரண சப்தம் ஒரு ப்ரயோகத்திலே
இரண்டு அர்த்தத்தை அபிகாநம் பண்ணமாட்டாமையாலே இவ்வதிகாரிக்கு
அஸாதாரணமான உபாயத்வாத்யவஸாயம் இவ்விடத்தில் சப்தமாய் ஸர்வாதிகாரி
ஸாதாரணமான கோப்த்ருத்வவரணம் அர்த்தமாகக் கடவது

வ்யாக்யானம்

பகவானிடம் ஏற்படுகிற மஹாவிச்வாஸம் த்வயத்தில் வெளிப்படையாகவே உள்ளது.
நம்மைக் காப்பாற்றும்படி ப்ரார்த்திப்பது சரணம் என்பதிலேயே உள்ளது

அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையிலிருந்து ப்ரமாணம் சொல்கிறார்

அஹம் அஸ்மி அபராதாநாம் ஆலயோ அகிஞ்சிநோ அகதி :
த்வம் ஏவ உபாய பூதோ மே பவதி ப்ரார்த்தநாபதி : ( 37–30 )

சரணாகதிரித்யுக்தா ஸா தேவே அஸ்மிந் ப்ரயுஜ்யதாம் ( 37–31 )

உபாயோ க்ருஹ ரக்ஷித்ரோ : ஸப்த : சரணமித்யயம்
வர்த்ததே ஸாம்ப்ரதம் உபாயார்த்த ஏக வாசக : ( 37–29 )

நீயே எனக்கு உபாயமாகவேண்டும் என்று ப்ரார்த்திப்பது –சரணாகதி –அது
இந்த எம்பெருமானிடம் செய்யப்படட்டும்

அடியோங்கள் குற்றங்களுக்கு இருப்பிடம் கைமுதல் ஏதும் இல்லாதவன்
ரக்ஷகன் யாருமில்லாமல் இருக்கிறேன் .தேவரீரே எனக்கு உபாயமாக
இருக்கவேண்டும் என்கிற ப்ரார்த்தனை வடிவமான ஜ்ஞானம் –சரணாகதி —
இது பகவானிடம் செய்யவேண்டும்
சரணம் என்கிற வார்த்தை உபாயம் ( சாதனம் ), வீடு, ரக்ஷிப்பவன் என்கிற பல
அர்த்தங்கள் இருந்தாலும் இங்கு உபாயம் என்று பொருள்
எல்லாவற்றையும் காப்பவன் எம்பெருமான். சரணாகதி செய்த ப்ரபன்னனைக்
காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டும் , உபாயமே எம்பெருமானாக உள்ளதாலும்
ப்ரபன்னன் எப்போதும் எல்லாப் பொறுப்புக்களையும் பகவானிடம் கொடுத்து
வேறு உபாயத்தை நாடாமல் ,அவனே உபாயம் என்று இருக்கவேண்டும்.
உபாயம் என்னில் இலக்கை அடைய வழி

ரக்ஷிஷ்யதீதீ விச்வாஸோ கோப்த்ருத்வவரணம் ததா
ரக்ஷிப்பான் என்கிற திடநம்பிக்கை , ரக்ஷிக்கவேண்டும் என்கிற ப்ரார்த்தனை

ஸர்வஜ்ஞ : அபி ஹி விச்வேசா : ஸதா காருணிகோ அபி ஸந்
ஸம்ஸாரதந்த்ர வாஹித்வாத் ரக்ஷாபேக்ஷாம் ப்ரதீக்ஷதே —–லக்ஷ்மீ தந்த்ரம்

எல்லாவற்றையும் நியமிப்பவன்; எல்லாம் அறிந்தவன் ;மிகுந்த காருண்யமுள்ளவன் ,
இருந்தாலும் ஸம்ஸாரத்தை வழிநடத்துபவனாகையால் , ”ரக்ஷிக்க வேணும் ”
என்கிற ப்ரார்த்தனையை எதிர்பார்க்கிறான்
சேதனன் மட்டுமே இப்படி ப்ரார்த்திக்க முடியும்.
த்வயத்தில் உள்ள ”சரணம் ” என்கிற பதம் உபாயத்தையும் குறிக்கிறது;
ரக்ஷிக்கவேணும் என்பதையும் குறிக்கிறது
சரணம் என்னும் இப்பதம் பகவானே ப்ரபன்னனுக்கு உபாயம் என்பதையும்
ரக்ஷிக்கவேணும் என்று வேண்டப்பட்டதாகவும் கொள்ளவேணும்.

அதிகாரத்திலிருந்து

அறிவித்தனர் அன்பர் ஐயம் பறையும் உபாயம் இல்லாத்
துறவித்துனியில் துணையாம் பரனை வரிக்கும் வகை
உறவு இத்தனை இன்றி ஒத்தாரென நின்ற உம்பரை நாம்
பிறவித்துயர் செகுப்பீர் என்று இரக்கும் பிழை அறவே

ப்ரக்யாத :பஞ்சஷ அங்க :ஸக்ருத் இதி பகவச்சாஸநை : ஏஷ யோக :
தத்ர த்வாப்யாம் அபாயாத் விரதி : அநிதர உபாயதா ஏகேந போத்யா
ஏகேந ஸ்வாந்ததார்ட்யம் நிஜ பர விஷயே அந்யேந தத்ஸாத்யதா இச்சா
தத்வஜ்ஞான ப்ரயுக்தா து இஹ ஸபரிகரே தாததீந்ய ஆதி புத்தி :

வ்யாக்யானம்

பக்தியோகம் போன்றவற்றை அனுசரிக்க இயலாத நிலையில் இருப்போருக்கும்
இவை பலன்தருமோ என்று சந்தேகப்படுவோருக்கும் இவர்களது கதியற்ற
நிலையை உணர்ந்த எம்பெருமான் நம்மைக் காக்கத் திருவுள்ளம் கொண்டான்.
உபாயமாக அவனையே வேண்டி,அவனையே அடைய அன்புகொண்ட
ஆசார்யர்கள் -அதற்கான வழியை உபதேசித்தார்கள்
, இதன் மூலமாக,நம்மைப்போன்றே கர்மவினைகளால் பீடிக்கப்படும்
மற்ற தெய்வங்களை நாடி , நமக்குச் சிறிதும் தொடர்பில்லாத அவர்களிடம்
என்னை இந்த ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுவிக்கவேண்டும் என்று
இத் தெய்வங்களிடம் கையேந்தும் தவறைச் செய்யமாட்டோம்

பாஞ்சராத்ர ஆகமத்தில் ப்ரபத்தி யோகம் ஐந்து அங்கங்களைக் கொண்டது
என்றும் ஒரே ஒருமுறை செய்யப்படவேண்டும் என்று கூறப்பட்டது.
(மோக்ஷத்துக்காகச் செய்யப்படும் ப்ரபத்தியில் ”ஸாத்விக த்யாகம் ”ஆறாவது அங்கம் )
ஏனைய பலன்களைக் கோரிச் செய்யப்படும் ப்ரபத்தியில் இந்த அங்கம் இல்லை.
எம்பெருமானின் கட்டளையை மீறுதல் என்பதை மாற்ற,ஆநுகூல்ய ஸங்கல்பம் ,
ப்ராதிகூல்ய வ்ரஜநம் இரண்டு அங்கங்களும் , பகவானை அல்லாது வேறு
உபாயத்தைப் பற்றாததை கார்ப்பண்யம் என்கிற அங்கமும் , தன்னைக்காப்பாற்றிக்கொள்ளும்
விஷயத்தில் வேறு உபாயங்களை நாடாமல் பகவானை நம்பியிருப்பது
மஹாவிச்வாஸத்தையும் , விரும்பும் பலனை அளிக்கிறேன் என்கிற பகவானின்
ஸங்கல்பத்தை கோப்த்ருத்வவரணம் என்கிற அங்கமும் ஏற்படுத்துகிறது .
இப்படியாக உள்ள ப்ரபத்தியில் ,இவை யாவும் பகவானாலேயே என்கிற எண்ணமும்
சாஸ்த்ர ஞானத்தால் மட்டுமே உண்டாகிறது .

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –11 வது அதிகாரம் —- பரிகரவிபாகாதிகாரம் —–நிறைவு

——————-

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .