Archive for the ‘Boothath Aazlvaar’ Category

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -31-40– -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 14, 2016

இப்படி ஆபத் சகனானவன் திருவடிகளை புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்கள்
அப்ராக்ருதமான அவன் திரு மேனியை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பெறுவர்-என்கிறார் –

பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும்
குரா நற் செழும் போது கொண்டு -வராகத்
தணி யுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்
மணி யுருவம் காண்பார் மகிழ்ந்து—31–

பெரும் புலரி என்றும்-இன்றே நல் விடிவு என்றும்
நல் செழு குரா போது கொண்டு -மணம் மிக்க அழகிய –குரா மரப் புஷ்பங்களைக் கொண்டு –

இவ்வாத்மாவுக்கு வகுத்த சேஷியானவனே -என்றும் -இதர விஷய அனுபவத்துக்கு உறுப்பாய்க் கொண்டு பாழே கழிகிற நாளிலே-
ஸூ ப்ரபாதா ச மே நிசா -என்கிறபடியே பகவத் அனுபவத்துக்கு யோக்யமாய்க் கொண்டு -அடிக் கழஞ்சு பெற்றுச் செல்லுகிற
பெரிய தொரு நல் விடிவு உண்டாவதே -என்றும் ஆதரித்துக் கொண்டு -குராவினுடைய அழகியதாய் விலக்ஷணமான
செவ்வியை யுடைத்தான பூவை சம்பாதித்திக் கொண்டு வராஹ சஜாதீயமாய் -அழகு தான் ஒரு வடிவு கொண்டால் போலே
இருக்கிற திவ்ய விக்ரஹத்தை யுடையவன் திருவடிகளை பாகனாபிமன்னராய் ஆஸ்ரயிக்குமவர்கள் கிடீர்
நீல ரத்னம் போலே இருண்டு குளிர்ந்த வடிவு அழகை உகந்து கொண்டு அனுபவிக்கப் பெறுவர்கள் –

—————————————————————————————————–

இப்படி உபதேசித்த அநந்தரம் -தம்முடைய கரணங்கள் உபதேச நிரபேஷமாக அங்கே பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –

மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி -மகிழ்ந்தது
அழலாழி சங்கமவை பாடியாடும்
தொழிலாகும் சூழ்ந்து துணிந்து—-32–

இச் சேர்த்தி அழகாலே அனுசந்தித்தவர்களை மகிழப் பண்ணும் ஸ்ரீ யபதியானவனே –ப்ரீதி தத்வம் புதியது உண்டு அறியாத
என் மனஸ்ஸானது உன்னை அனுசந்தித்து ப்ரீதி யுக்தமாய்த்து -மன பூர்வோ வாக் உத்தர -என்னும் படி அநந்தரம்
எண்ணப்படும் என் வாக் இந்த்ரியமானது ஸ்ரீ யபதியான உன்னுடைய திருவடிகளை ஏத்தி மகிழப் பெற்றது-
-என் ஹிருதயமானது பிரதிபக்ஷத்தின் மேலே -அழலை உமிழா நின்றுள்ள திரு வாழி ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் ஆகிற
இவற்றைப் பாடி ஆடுகை ஆகிற தொழிலிலே வியாப்தமாய்க் கொண்டு அத்யவசித்து உகக்கப் பெற்றது –

——————————————————————————————-

கீழே அனுபவத்தால் பிறந்த ஹர்ஷம் சொல்லிற்று -இதில் அவனை அனுபவிக்கையாலே
மநோ வாக் காயங்கள் அத்யவசித்த படியை அருளிச் செய்கிறார் –

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்க
மணிந்தவன் பேருள்ளத்துப் பலகால் -பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விரல் வேங்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை——-33–

திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனானவனுடைய ஒப்பனை அழகுக்கு வாசகமான திரு நாமங்களை ஹிருதயத்திலே
மநோ ரதமானது உத்தர உத்தரம் அனுசந்திக்க வேணும் என்று அத்யவசித்தது -இனி சரீரமானது சர்வ காலமும் வணங்குவது
மூங்கில்கள் மிக்கு இருந்துள்ள பர்யந்தத்தை யுடைய திருமலையிலே வர்த்திக்கிற அழகாலே நம்மை எழுதிக் கொள்ளும்
மிடுக்கை யுடைய திருவேங்கடமுடையானை என்னுடைய வாக் இந்த்ரியமானது
-அவனுடைய ஸ்வரூப ரூப குணாதிகளான ஸ் வ பாவங்களை சொல்லும் பிரகாரத்தில் அத்யவசித்து –

———————————————————————————————–

ஏவம் விதமான இப்பெரிய பேறு தான் தேவருடைய கடாக்ஷத்தாலே பெற்றேன் என்கிறார் –

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே -மிக வாய்ந்த
அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி—–34–

வடிவு அழகு -முக்த ஜல்பிதம் -மநோ ஹராமான திவ்ய சேஷ்டிதம் -தொடக்கமான பிரகாரங்களாலே -ஆஸ்ரிதனான இந்திரன்
திருவடிகளிலே வந்து விழுந்த முற்காலத்திலே பூமியை மஹா பலி பக்கலிலே ஸ்ரீ யபதியான பெருமையை அழிய மாறிச் சென்று
அர்த்தித்து அளந்து கொண்டாயான-உன்னுடைய திருவடிகளை தூபத்தால் செவ்விய பூ முதலான உபகரணங்களைக் கொண்டு
-முடிக்கவும் செறிந்த ப்ரேமத்தை யுடையனாய் -ஸுந்தர்ய சீலாதிகளுக்குத் தோற்று ஸ்துதித்து -வகுத்த சேஷியான தேவர்க்கு
இனி மேல் உள்ள காலம் -தேவர் என் பக்கல் பண்ணின விசேஷ கடாக்ஷம் ஆகிற பாக்யத்தால் அடிமை செய்யுமவனாய் விட்டேன்
-என்னுடைய விலக்காமை யாகிற பாக்யத்தாலே என்னுதல் –முன்னே -சந்நிதியில் என்னுதல்-

———————————————————————————————–

இப்படி அல்ப அனுகூல்யம் பற்றாசாகத் தானே மேல் விழுந்து -சர்வ ரக்ஷைகளையும் பண்ணும்
உன்னை விட்டுச் சேதனர் சப்தாதி விஷயங்களில் மண்டி அநர்த்தப் படுவதே -என்று வெறுக்கிறார் –

இனிது என்பர் காமம் அதனிலு மாற்ற
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் -இனிது என்று
காம நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல்
சேம நீர் ஆகும் சிறிது—–35–

எல்லாம் கண்ணன் -என்கிறபடியே தாரக போஷக போக்யங்கள் எல்லாம் நீயே யாம்படி -என்னைப் புகுர நிறுத்தின
என் ஸ்வாமி யானவனே -அல்பமாய் அஸ்திரமாய் அபோக்யமான சப் தாதி விஷயங்களை போக்யங்களாக பிரமித்து
-இவை இனிதாய் இருக்கிறது என்று விஷய அனுபவத்துக்கு சிரமம் செய்து இருக்கும் நாட்டார் சொல்லா நின்றார்கள்
-விரக்தரோடு அவிரக்தரோடு வாசி அற சர்வரும் விரும்பும் படி இருக்கையாலே -அந்த விஷயங்களில் காட்டிலும்
மிகவும் இனிது என்று தண்ணீரைச் சொல்லா நின்றார்கள் –
பரீக்ஷகர் ஹேயமாகவே அறுதியிட்டு இருக்கிற விஷயங்களையும் தண்ணீரையும் அதஸ்மின் தத் புத்தியால் போக்யம் என்று
புத்தி பண்ணி -அவற்றை மேல் விழுந்து ஆசைப்படாதே ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் –
-நிரதிசய போக்ய பூதனான உன்னுடைய போக்யதா பிரகர்ஷத்தை ஏக தேசம் ஆசைப்படுமவர்களாமாகில் –
-அது சர்வ தசையிலும் ரக்ஷகமான ஸ் வ பாவத்தை உடைத்தாகா நிற்கும் –

———————————————————————————————————–

நாட்டார் செய்தபடி செய்கிறார்கள் -நெஞ்சே -நீ முந்துற முன்னம் -அவனுடைய வியாபாரங்களை
அனுசந்தித்திக் கொண்டு ஸூ கமே இருக்கப் பார்–என்கிறார் –

சிறியார் பெருமை சிறிதின் கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் -அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு எண் நெஞ்சே இரு–36–

ஸ்வத உத்கர்ஷ கந்தம் இன்றிக்கே -அதி ஷூத்ரராய் இருக்கிற சம்சாரிகளுடைய -ஈஸ்வரோஹம் -என்று இருக்கும்
துர்மானத்தாலே வந்த பெருமையானது -ஸ்வத ப்ராப்தமான பழைய ஷூத்ரதையில் சென்று பர்யவசித்து விடும்
-ஸ்வத க்ருத்யாக்ருத்ய விவேகம் பண்ண ஷமர் இன்றிக்கே இருக்கிற அறிவு கேடரானவர்களும் தங்கள் நினைவாலே
சர்வஞ்ஞராக அபிமானித்து இருந்தார்களாகிலும் -பழைய அறிவு கேட்டை உடையாராயே விடுவர்கள்
-நான் அவன் படிகளை சொன்னால் -அறிக்கைக்குப் பாங்கான என் மனஸ்ஸே -நீ அறிவு கேடரான நாட்டார் படியைக் கை விட்டு
-ஸ்ரீ யபதி இப்படி இரப்பாளனாய் வந்தான் என்று ஒருவரும் அறியாத படி பூமியை இரந்து அளந்து கொண்டு
-பிரளயத்தில் அழியாதபடி அந்த பூமியைத் திரு வயிற்றிலே வைத்து நோக்கி அநந்தரம் உள்ளுக்கிடந்து தளராதபடி
அந்த பூமியை வெளிநாடு காணப் புறப்பட விட்டனாய் –
இவ்வளவு அன்றிக்கே ஆஸ்ரிதர் விஷயத்தில் பண்ணும் ரக்ஷணத்துக்கு எல்லை காண ஒண்ணாத ஆச்சர்ய பூதனுமாய் இருப்பான்
ஒருவன் என்று அநவரதம் அனுசந்தித்திக் கொண்டு -அவனைப் பற்றின நமக்கு இனி ஒரு குறை யுண்டோ -என்று நிர்ப்பயமாய் இரு-

———————————————————————————————-

இப்படிப்பட்ட சர்வேஸ்வரனை ஆஸ்ரயியாத ஜென்மங்கள் எல்லாம் வ்யர்த்தம் -என்கிறார் –

இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே
திருந்து திசை மகனைத் தந்தாய் -பொருந்திய நின்
பாதங்கள் ஏத்திப் பணியாவேல் பல் பிறப்பும்
ஏதங்கள் எல்லாம் எமக்கு—-37-

பரந்து குளிர்ந்த -திரு நாபீ கமலத்தினுடைய விஸ்தீர்ணமான பூவினுள்ளே -மறுத்துக் கேள்வி கொள்ளாதே சொன்ன கட்டளையிலே
-ஜகத்தை ஸ்ருஷ்டிக்கைக்கு சமர்த்தனான சதுர்முகனை ஸ்ருஷ்ட்டி பிரயோஜனம் எனக்கேயாம் படி அபகரித்து அருளினவனே –
அசேஷ லோக சரண்யனாகக் கொண்டு எல்லோரோடும் பொருந்தி இருக்கிற உன்னுடைய திருவடிகளை வாயார ஏத்தித்
தலையார வணங்கி ஆஸ்ரயியைக்கு உறுப்பு அல்லவாமாகில் -எங்களுக்கு கர்ம அனுகுணமாக மேலே மேலே
உண்டாயச் செல்லுகிற ஜென்மங்கள் அடங்க லும் வியர்த்தங்கள் –
-ஜன்மத்துக்கு பிரயோஜனம் உன்னை ஆஸ்ரயிக்கை இ றே-அதுக்கு உறுப்பு அல்லாத போது அவை அடங்க நிஷ் பிரயோஜனம் என்கை –

———————————————————————————————

அநர்த்த கரமான அர்த்தத்தை புருஷார்த்தம் என்று இராதே -ஸ்ரீ யபதியை நினைப்பது –
ஏத்துவதாய்க் கொண்டு ஆஸ்ரயிக்கையே -சர்வர்க்கும் கர்தவ்யம் என்கிறார் –

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கென்றும் சார்வம் அறிந்து -நமக்கென்றும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் ஓத்து—38–

பிறர் இடம் பார்த்து அறிந்து விநியோகம் கொள்ள வேணும் என்று கருதும் படி -தனக்கும் பிறர்க்கும் பொதுவாய் இருக்கிற மஹா தனத்தை
துர்வாசனையாலே நமக்கு வேணும் என்று அபிமானித்துக் கொண்டு -ந பிபேதி -என்னும் விஷயத்தைப் பற்றினால் போலே –
அறிவு கெட்டு நிர்ப்பரனாய் இராதே -தம் தாமுக்கு அறிந்த போதோடு அறியாத போதோடு வாசியற சர்வ காலத்திலும்
நித்தியமான அபாஸ்ரயம் -ஓன்று -என்று –
சாஸ்திர அப்யாசாதி களாலே அறிந்து -இனி நமக்கு கால தத்வம் உள்ளதனையும் ஸ்ரீ யபதியானவனே
ஆஸ்ரயணீயனும் பிராப்யனும் என்று துணிந்து இருக்கும் மனசை யுடையராய் -அதுக்கு மேலே அந்த ஸ்ரீ யபதியினுடைய
அச்சசேர்த்திக்கு வாசகமான திரு நாமங்களை சொல்லுகையே வாக் இந்த்ரியத்தால் உச்சரிக்கப்படும் –

—————————————————————————————————

நாவினால் ஓதுகை யாவது தான் ஏது என்ன -சகல வேத சங்க்ரஹமான திரு மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டு
வேதாந்தத்தில் சொல்லுகிற மர்யாதையாலே பக்தி மார்க்கத்தில் நின்று ஆஸ்ரயிங்கோள் என்றும்
அது மாட்டாதார் -த்வயத்தில் கட்டளையில் -ஸ்ரீ யபதியானவன் திரு நாமத்தைச் சொல்லி ஆஸ்ரயிங்கோள் -என்றும்
இரண்டு வகையாக ஆஸ்ரயணத்தை-அதிகார அநு குணம் விதிக்கிறார் –

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39–

வகுத்த விஷயத்தை இழந்து -இதர விஷயத்தில் பிரவணராய் திரிகிற சபலர்காள் -சங்க வேத அத்யயனம் பண்ணி
-அதில் சொல்லுகிற -அர்த்தங்களையும் அறிந்து அறிந்த படியே சாஷாத் கார ரூபமான பகவத் பக்தியைப் பேற்றுக்கு
உபாயமாக அனுஷ்ட்டிக்க வல்லி கோளாகில்-சர்வ வித ரக்ஷகனாய் -சர்வ பிரகாரியான புருஷோத்தமனுடைய
-சர்வ ரக்ஷகத்வ வாதியான சகலார்த்தங்களுக்கும் வாசகமான திரு மந்த்ரம் ஆகிற திரு நாமத்தைச் சொல்லி
ஸ்தோத்ரம் பண்ணும் பிரகாரமான இத்தனையே வேதத்தில் சொல்லுகிற அர்த்தங்கள் எல்லாவற்றிலும்
-தாத்பர்யமாக நிர்ணயித்துத் தலைக் கட்டின அம்சம் -இப்படி நன்றாக அத்தை அறிய மாட்டிற்றிலி கோளாகில்
-ஸ்ரீ யபதியினுடைய திரு நாமத்தை சொல்லுகையே -அந்த வேதப் பரப்பு எல்லா வற்றிலும் கூட
சங்ஷேபித்துத் தலைக் கட்டு -இவ்வர்த்தம் பகவத் பிரசாதத்தாலே தெளியக் கண்ட நான் சொன்ன வார்த்தை யாகையாலே
இத்தை தப்பாது என்று விஸ்வஸித்து அறியுங்கோள் –
இத்தைச் சுருக்கு என்கையாலே கீழ்ச் சொன்னது வேதத்தில் பரக்கச் சொன்ன பொருள் -என்று தோற்றுகிறது –

———————————————————————————————————

இப்படியான பின்பு -ஸமஸ்த வேதங்களுக்கும் தாத்பர்ய பூதனான ஸ்ரீ யபதியைச்
சரம தசா பன்னராவதற்கு முன்னே கடுக ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

சுருக்காக வாங்கிச சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் -திருப் பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள்—-40–

சரீரம் எங்கும் ஓக்கப் பூர்வத்தில் வியாபித்து நின்ற ஸ்லேஷமாவானது -சரீர விஸ்லேஷ தசையில் கண்ட ஸ்தானத்தில் வந்து
செறியத் தக்கதாகச் சுருங்க வழித்து இழுத்துக் கொண்டு -வாக் வியவஹார யோக்யதை இல்லாத படி மிடற்றை அடைத்து
மிறுக்குப் படுவதுக்கு முன்னே பெரிய பிராட்டியாராலே சம்ருத்தமாய் விளங்கா நின்றுள்ள திருமேனியை யுடையனான
சர்வேஸ்வரன் திருவடிகளை நீங்கள் அனுசந்தித்துக் கொண்டு நில்லும் கிடிகோள்
-பகவத் விஷயத்தை அறிந்து வைத்தும் அறியாதார் கணக்காம் படி பண்ணக் கடவ சப்தாதி போகங்களால் வரக் கடவ பிரயோஜனம் இல்லை –
சுலாவி நின்று ஐயார்–சுருக்காக வாங்கி–நெருக்கா முன் — -திருப் பொலிந்த-ஆகத்தான் பாதம் நீர் நினைமின் கண்டீர் -என்று அந்வயம் –

——————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -21-30- -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 13, 2016

எம்பெருமானை பஜிக்கைக்கு ஈடான கரண சம்பத்தில் குறைவற்று இருக்கச் செய்தேயும் -சம்சாரிகள் விலக்கடி
தேடிக் கொண்டு போய்ப் புகுகிறபடி எங்கனே என்று விஸ்மாயப் படுகிறார் –

தாமுளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே -வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது—————–21-

ஆஸ்ரயண உபகரணமான கரண களேபர விசிஷ்டரான தாங்கள் முந்துற முன்னம் உளராய் இருந்தார்கள் –
அனுசந்தான பரிகரமான தம்தாமுடைய மனஸ் ஸூ புறம்பே தேட வேண்டாத படி உண்டாய் இருந்ததே –
-திருவடிகளிலே பணிமாறுகைக்கு உறுப்பான கைக்கு எட்டின தாமரைப் பூ உண்டாய் இருந்ததே –
-வாய் விட்டுப் புகழுகைக்கு ஈடான காலம் உண்டாய் இருந்ததே -தன் உடமை பெறுகைக்குத் தன்னை இரப்பாளனாக்கும்
நீர்மையை யுடையனான சர்வேஸ்வரனுடைய ஐஸ்வர்ய ப்ரகாசகமாய் த்விஜ அரவிந்தாதி சிந்நிஹிதமான திருவடிகளிலே
சேஷத்வ அனுரூபமாகச் சேருகைக்கு அனுரூபமான தலையை உடையராய் இருந்தார்கள்-
-இப்படி இருக்க நேர் கொடு நேரே கொடிதான சம்சாரத்தைச் சென்று கிட்டுகை அரிது –
-இங்கனே இருந்த பின்பு இவர்கள் விலக்கடி தேடிக் கொண்டு திரிகிற படி எங்கனேயோ -என்று ஆச்சர்யப்படுகிறார் –

——————————————————————————————-

தங்களுக்கு ஒரு பரிகர சம்பாத்தி அற்று இருந்ததே யாகிலும் அவன் பக்கலிலே ந்யஸ்த பரராய் இருப்பார்க்கு
எளிதாக ஆஸ்ரயிக்கலாம் படி யன்றோ அவன் நீர்மையின் ஏற்றம் இருப்பது -என்கிறார்

அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரைப் பெற்றால் -கரியதோர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தது அன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து——22-

வஸ்துவை வஸ்தாந்தரம் ஆக்க வல்ல சக்தி யோகத்தாலே -உன் பேற்றுக்கு உறுப்பாக நீ ஒன்றும் யத்தனித்துச் செய்ய வேண்டா
-என்று ஸ்வ ரக்ஷண அர்த்தமாக -இவன் பண்ணும் ப்ரவ்ருத்திகளை அடைய மாற்றி -ஞானம் ப்ரேமம் முதலாகக் கைங்கர்ய பர்யந்தமாக
இவனுக்குச் செய்ய வேண்டும் சர்வ காரியமும் தன் தலையிலே ஏறிட்டுக் கொண்டு இவன் பக்கலிலே அந்வயமாம் படி –
-தன் பேறாக சர்வ ரக்ஷைகளையும் பண்ணுகையிலே மிகவும் உத்ஸாஹியா நிற்கும் மஹா புருஷரைப் பெற்றால் –
-பெறுதற்கு அரிதான பகவல் லாபமும் எளிதாகா நிற்கும் -அது எங்கே கண்டோம் என்னில்-
-கறுத்த நிறத்தையும் -வெளுத்த கொம்பையும் பெரிய வடிவையும் யுடைத்தான ஆனையானது -அடிமைக்கு கால் கட்டான
முதலையை ஜெயித்து அழியச் செய்தன்றே-குளிர்ந்த பொய்கைக் கரையிலே சிலாக்யமான தாமரைப் பூக்களைக் கொண்டு –
-அரை குலையத் தலை குலைய வந்து தோன்றி விரோதியைப் போக்கி ரக்ஷித்து அருளின அவன் திருவடிகளிலே தாழ்ந்து
அடிமை செய்யப் பெற்றது -தாழ்ந்து என்றது தாழ்ந்தது என்றபடி / கோடு என்று கரைக்குப் பேர் -/
தட்டம் குளிர்த்தி / குளிர்ந்த பொய்கை கரையிலே என்றபடி –
தண் தோட்டு மா மலர் -என்ற பாடமான போது -குளிர்ந்த இதழை யுடைத்தான பெரிய புஷ்ப்பத்தாலே-என்று பொருளாகக் கடவது –

——————————————————————————————

தன்னை ஆஸ்ரயித்தார்களுடைய விரோதிகளை போக்கி அபிமத சித்தியையும் பண்ணிக் கொடுத்துத்
தத் தத் அதிகார அனுகுணமாக ரஷிக்கும் என்கிறார் –

தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் -தாழ்ந்த
விளங்கனிக்கு கன்று எறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ் கொண்ட வவன்—-23-

கனியப் பழுத்துக் கிடக்கையாலே தரை அளவும் வரத் தாழ்ந்து கிடக்கிற அஸூர மயமான விளாவினுடைய பழங்களுக்கு
அஸூர மயமான கன்றை எறி கோலாக எடுத்து எறிந்து-ஸ்ரீ யபதியான தன் உருவை விட்டு அர்த்தியான வாமன ரூபத்தை
உடையனாய்க் கொண்டு -பூமியை அளந்து -தன் கால் கீழே இட்டுக் கொண்ட -அந்த சர்வேஸ்வரன் -ந நமேயம் -என்கிற
-ஸ்வாதந்தர்யத்தைப் பொகட்டுத் தன் திருவடிகளிலே வணங்கி -எங்கள் அபிமதம் நீயே பண்ணித் தர வேணும் என்று
தன் பிரசாதத்தைக் கை தொடுமானமாகப் பிடித்துக் கொண்டு தம் தாமுடைய அதிகாரங்களுக்குத் தகுதியாக இருந்த பிரகாரங்களாலே
-ஐஸ்வர்யம் ஆத்மலாபம் -ஸ்வ பிராப்தி ஆகிற ஸ்வ ஸ்வ அபிமதங்களைப் பெற்று ஸூக உத்தரராய்த் தலைக் கட்ட வேணும் என்று
இருக்கும் அவ்வவ அதிகாரிகளையும் -அவர்கள் ருசிக்கும் உபாசனத்துக்கும் ஈடான தத் தத் பலன்களைக் கொடுத்து ரஷியா நிற்கும் –

————————————————————————————————

இவன் உண்டான அன்று இவன் அபேக்ஷிதம் கொடுத்து ரக்ஷித்தான் -என்னும் இது ஓர் ஏற்றமோ –
அடியே தொடங்கி இவனுடைய சத்தையை நோக்கிக் கொண்டு போருகிறவனுக்கு -என்கிறார் –

அவன் கண்டாய் நன் நெஞ்சே யார் அருளும்கேடும்
அவன் கண்டாய் ஐம் புலனாய் நின்றான் -அவன் கண்டாய்
காற்றுத் தீ நீர் வான் கருவரை மண் காரோதச்
சீற்றத் தீ யாவானும் சென்று —24-

பகவத் வைபவம் கேட்டால் உகக்கும் நல்ல நெஞ்சே -பரி பூர்ணமான கிருபையால் உண்டாகக் கடவ மோக்ஷமும் –
நிக்ரஹ காரியமாய் வரக் கடவ சம்சாரம் ஆகிற மஹா அநர்த்தமும் ஆகிற இவற்றுக்கு நிர்வாஹகன் அவனே கிடாய் –
-இரண்டுக்கும் பொதுவான சரீரத்துக்கு ஆரம்பகமான வாயு அக்னி ஜலம் ஆகாசம் பூமிகள் ஆகிற பூத பஞ்சகம்
-தத் கார்யமான பெரிய பர்வதங்கள் ஆகிற இவற்றை அடியிலே உண்டாக்குவானும் அவன் கிடாய் –
சம்சார காலத்திலே இவற்றை அழிக்க ஒருப்பட்டுத் திரு உள்ளம் சென்று -அதுக்கு உபகரணமாய் –
-கறுத்த கடலைச் சீறிச் சுடக் கடவ படபாமுக அக்னிக்கு நிர்வாஹகனாய் இருப்பவனும் அவன் கிடாய்-
-ஆக த்யாஜ்ய உபேதேயங்கள் இரண்டுக்கும் நிர்வாஹகன் என்றபடி -ஆர் அருள் என்று அருளின் கார்யமான மோக்ஷத்தை லஷிக்கிறது
-அன்றிக்கே அநுக்ரஹ ஹேதுவான புண்யத்தையும் -நிக்ரஹ ஹேதுவாய் -அநர்த்த கரமுமான பாபத்தையும் சொல்லவுமாம் –

—————————————————————————————

இப்படி சர்வ சாதாரணனாய் நின்று ரஷிக்கும் அளவன்றிக்கே ஆஸ்ரித விஷயத்தில் –
-அசாதாரணனாய் நின்று பக்ஷபதித்து ரஷிக்கும் படியை அருளிச் செய்கிறார் –

சென்றதிலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது ராவணனை கூறுங்கால் -நின்றதுவும்
வேயோங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர் தம்
வாயோங்கு தொல் புகழான் வந்து—-25—

பரமபத வாசிகளான நித்ய ஸூ ரிகள் தாங்கள் வாய் விட்டு ஏத்துகைக்கு விஷயம் ஆகையால் உத்துங்கமாய் -ஸ்வாபாவிகமான
கல்யாண குணங்களை யுடைய சர்வேஸ்வரன் -அங்கு நின்றும் வந்து அவதரித்து -சங்கல்பத்தால் அன்றிக்கே
நேர் கோடு நேரே -அபியாதா -என்னும் படி எடுத்து விட்டுச் சென்றது இந்த்ராதிகள் கேட்கவே வயிறு பிடிக்கும் படியான லங்கையில்
-ப்ரஹர்த்தா ச -என்கிறபடியே அவதாரத்தில் மெய்ப்பாட்டாலே அபேக்ஷித சமயத்திலே உதவி முகம் காட்டக் கடவதான கோபத்தால்
கொன்று விழ விட்டது -அவத்யனாக வரம் பெற்றுடைய ராவணனை -அவன் படிகளை சொல்லப் புக்கால் அவதார காலத்தில்
இழந்தவர்கள் இழவைப் பரிஹரிக்கைக்காக எழுந்து அருளி நின்றதுவும் மூங்கில் வளர்ந்து இருக்கிற குளிர்ந்த பர்யந்தங்களை யுடைத்தான திருமலையிலே –
விண்ணவர் -இத்யாதிக்கு ராவண வத சமனந்தரம்-ப்ரஹ்மாதிகளால் ஸ்துதிக்கப் படுகிற புகழை யுடையவன் என்று பொருள் ஆகவுமாம் –

—————————————————————————————————

கீழ் ப்ரஸ்துதமான திருமலை தான் பின்னையும் இவர்க்கு ஆகர்ஷகமாய் -அங்கே
திரு உள்ளம் சென்று திருமலைக்கு உள்ள வைலக்ஷண்யம் சொல்லுகிறார் –

வந்தித்து அவனை வழி நின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய் -உந்திப்
படி யமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த
படி யமரர் வாழும் பதி—-26–

அபிமான ஸூன்யராய்க் கொண்டு –திருவடிகளிலே தலை மடுத்து -அவனை ஆஸ்ரயித்து -தத் பிராப்திபிரதிபந்தகங்களாய்க் கொண்டு
நடுவே நின்று தகைகிற பிருதிவ்யாதி பஞ்ச பூதங்களையும் -ஸ்ரோத்ராதிகளான இந்திரிய பஞ்சகத்தையும் ப்ரத்யகர்த்த ப்ரவணமாம் படி
நியமித்து அவன் பக்கலிலே அபிநிவேசத்தை உடையராய்க் கொண்டு ஒருவர்க்கு ஒருவர் முற்கோலி வந்து ஆஸ்ரயிக்கும் படி
ப்ரஹ்மாதி தேவர்களுக்காகத் திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரன்
-யத்ர பூர்வே சாதியா சந்தி தேவ -என்னும்படி முற்பாடரான நித்ய ஸூ ரிகளுக்கு சர்வ ஸ்வதானம் பண்ணுவாரைப் போலே கொடுத்து அருளிற்று
பூஸூராரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனுபவித்து அடிமை செய்து வாழ்கிற திருமலை முன்பு நித்ய ஸூ ரிகளுக்கு கொடுத்தது என்றுமாம் –

————————————————————————————————————-

இப்படி திருமலையிலே நிலையை அனுசந்தித்தவர் அங்கு நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே -நினைத்தபடி
பரிமாறலாம் பரமபதத்திலே இருக்கிற சர்வேஸ்வரனைத் தேடா நின்றது என் நெஞ்சு என்கிறார் –

பதி யமைந்து நாடிப் பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி -கதி மிகுத்தங்கு
கோல் தேடி யோடும் கொழுந்ததே போன்றதே
மால் தேடி ஓடும் மனம்——27-

திருமலை யாகிற ஸ்தானத்தில் வேரூன்றி நின்று அபிநிவேசம் தோற்ற -எங்கே எங்கே என்று தேடிக் கொண்டு
சதா சாகமாகப் பணைத்துக் கிளம்பின மநோ ரதத்தை யுடைத்தாய் -சந்த்ர பதத்தையும் உரோஸிக் கொண்டு
-அவ் வருகு பட்டு -அண்ட பித்தியில் செல்லக் கடாக்ஷித்து -ஸமஸ்த கல்யாண குண பூர்ணனாய்க்கொண்டு
பரம பதத்திலே தம் மேன்மை தோற்ற எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரனைத் தேடி விட்டவிடத்தில் விடாதே
பற்றிச் செல்லுகிற என்னுடைய நெஞ்சானது கமன சைக்ர்யத்தை உடைத்தாய்க் கொண்டு அழகிய கொம்பைத் தேடி
பரந்து செல்லுகிற கொழுந்து போலே இரா நின்றது –மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணுமா போலே –

——————————————————————————————-

தன் திரு உள்ளம் இப்படி அபிநிவேசித்த வாறே -அவனும் அத்யபி நிவிஷுடனாய்க் கொண்டு
கோயில் திருமலை முதலான தன் இருப்பிடங்களை உபேக்ஷித்துத் தன் திரு உள்ளத்தே வந்து புகுந்தான் -என்கிறார் –

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் —-28-

அசங்க்யாதரரான வேத வைதிக புருஷர்கள் பலரும் -நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகானான -பெரிய மேன்மையை யுடையவன்
-என்று சொல்லப் படா நிற்பானாய் -ஜகத் ரக்ஷண அர்த்தமாக -அங்கு நின்றும் வந்து -பரப்பை யுடைத்தான
திருப் பாற் கடலிலே பள்ளி கொண்டு அருளா நிற்பானாய் -முன்பே ஒரு நாளிலே கிருஷ்ணனாய் வந்து
-அவதரித்துக் கேசி வாயை அநாயாசேன பிளந்து புகட்ட சிறு பிள்ளையாய் -அதுக்கு மேலே நினைக்க அரிதான
நீர்மை ஏற்றத்தை யுடையனாய்க் கொண்டு போக்யதை மிக்கு இருக்கிற கோயிலிலே -சம்சாரிகளை ரக்ஷித்து அல்லது பேரேன் -என்று
கண் வளர்ந்து அருளுமவனாய் -திருமலையிலே சர்வ ஸூ லபனாய்க் கொண்டு எழுந்து அருளி நிற்கிறவன்
-என்னைப் பெறுகைக்காக முன்பு விரும்பின அவ்வவ ஸ்தலங்களை உபேக்ஷித்து -இப்போது
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு என் மனசிலே நித்ய வாசம் பண்ணா நின்றான் –

——————————————————————————————————-

மாவாய் பிளந்த மகன் -என்று பிரஸ்துதமான கிருஷ்ண அவதாரத்தில் கால் தாழ்ந்து சுழி யாறு பாடுகிறார் –

மகனாக கொண்டு எடுத்தாள் மாண்பாய கொங்கை
அகனார உண்பன் என்று உண்டு -மகனைத் தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய் தென்னிலங்கை
நீறாக வெய்தழித்தாய் நீ——-29-

பக்குவமான தசையில் கட்டளை பட்ட லங்கையை பஸ்மா சாத்தாக மனஸுக்கு ஏகாந்தமான திரு வில்லாலே
திருச் சரங்களை நடத்தி முடித்துப் பொகட்டவனே –
இப்படி இருக்கிற நீ பருவம் நிரப்புவதற்கு முன்னே யசோதை பிராட்டியை போலே புத்ரனாகவே புரையற ஸ்நேஹித்துக் கொண்டு
-பரிவு தோற்ற ஒசழக்காகத் தூக்கி எடுத்த பூதனையுடைய பாலின் கனத்தாலே விம்மி ஒளி விடுகிற முலையை
வயிறு நிறையத் தக்கதாக உண்பான் என்று அபிநிவேசம் தோற்ற பாலோடு பிராணனும் போம்படி அமுது செய்து
-புத்திரனான உன்னைத் தாயாரான யசோதை பிராட்டி விஸ்வசியாதே துணுக்கு துணுக் என்று வயிறு மறுகும் படி சிஷித்து விட்டாய் –

—————————————————————————————————-

இப்படி கிருஷ்ண விஷயமும் ராம விஷயமும் அனுசந்தித்த பிரசங்கத்தில் அவற்றோடே சேர்ந்த
அவதாரங்களையும் பல சேஷ்டிதங்களையும் அனுசந்தித்து ப்ரீதராகிறார் –

நீ அன்று உலகளந்தாய் நீண்ட திருமாலே
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் -நீ யன்று
காரோத முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை
பேரோத மேனிப் பிரான்—30-

பெரிய கடல் போலே இருண்டு குளிர்ந்த திரு மேனியை யுடையனாய் -அவ் வழகை முற்றூட்டாக என்னை அனுபவிப்பித்த
உபகாரகனாய் -அபரிச்சேத்ய வைபவனான ஸ்ரீ யபதியே -இப்படி சர்வாதிகனான நீ ஆஸீரிதரான இந்திரன்
ஐஸ்வர்யத்தை இழந்து கண்ணும் கண்ண நீருமாய் திருவடிகளிலே விழுந்த அன்று -மஹா பலி பக்கலிலே அர்த்தியாய்ச் சென்று
-இரந்து -ஜகத்தைத் திருவடிகளாலே அளந்து கொண்டாய் என்றும் -பூமியானது பிரளயத்தில் கரைந்து அண்ட பித்தியிலே சென்று
ஒட்டின அன்று -நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு ரக்ஷகனான நீ அந்த பூமியை பிரளயத்தில் முழுகி
இடந்து எடுத்துக் கொண்டு ஏறினாய் என்றும் -துர்வாச சாபத்தால் நஷ்ட ஸ்ரீ கராய்க் கொண்டு இந்த்ராதிகள்
சரணம் புக்க வன்று சர்வ சக்தியான நீ கறுத்த நிறத்தை யுடைத்தான கடலை பிராட்டியை லபிக்கைக்காக முற்படக் கடைந்து
-பின்பு ஒரு காலத்தில் அவள் முக மலர்ச்சி காண் கைக்காக -தத் சஜாதீயமான பெரிய கடலை அடைத்து அருளினாய் என்றும்
உன் படியை அறியக் கடவ பிராமாணிகரான ரிஷிகள் சொல்லா நின்றார்கள்
-இவை சில சேஷ்டிதங்கள் இருக்கும் படியே என்று வித்தாராகிறார் –

———————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -11-20 – -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 13, 2016

நாட்டில் உள்ளார் ஷூத்ர தேவதைகளை ஆஸ்ரயித்து ஷூத்ர பலத்தைப் பெற்றுப் போமது ஒழிய
சர்வாதிகனான உன்னை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஆர் -என்கிறார் –

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் -புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அவர்———11-

அவ்வோ தேவதைகளின் வாசல் கடைப்பற்றி நின்று நம்மில் காட்டில் நாலு நாள் ஏற இருந்து சாகக் கடவ ப்ரஹ்மாதி தேவர்களுடைய
கால்களை -துராராதரான வர்கள் இரங்கிக் கார்யம் செய்யும் அளவும் நெடும் காலம் ஆஸ்ரயித்து
-அங்கே வந்து உன்னை அனுபவித்தல் இங்கே இருந்து உன்னை ஆஸ்ரயித்தல்
செய்கைக்கு யோக்யதை இல்லாத படி நடுவே மிடறு பிடியாய் நின்ற
ஸ்வர்க்காதி ஸூ கத்தைப் பெற்று அனுபவிக்கப் பெறுவர் –
சுற்றும் சூழ்ந்து கிடக்கிற ஜல ஸம்ருத்தியை யுடைய கடல் போலே ஸ்ரமஹரமான
வடிவை யடைய அபரிச்சேத்ய வைபவன் ஆனவனே -இப்படி சர்வாதிகனான உன்னுடைய திருவடிகளை
ஸ்தோத்ராதிகளைப் பண்ணி -ஆஸ்ரயிக்க வல்லவர் ஆர் தான் –
அன்றிக்கே தேவதாந்த்ரங்கள் உன் வாசலிலே நின்று உன் திருவடிகளைத் தொழுது
உன்னைப் பிரயோஜனமாகக் கொள்ளாதே பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு போவார் என்றுமாம் –

——————————————————————————

ஆனால் அந்த தேவதைகளை ஆஸ்ரயிக்க ஒண்ணாதோ -அவர்களை ஷேபிக்கிறது என் என்னில் –
அவர்கள் தாங்களும் தம் தாம் அபிமதம் பெறுகைக்கு அவனை ஆஸ்ரயியா நின்ற பின்பு நமக்கும்
அவனை ஆஸ்ரயிக்கை யன்றோ அடுத்து -என்கிறார் –

அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில்-பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் என்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து———12-

ஆஸ்ரயணீயரான-அந்த தேவர்கள் -அவர்களை ஆஸ்ரயிக்கிற இந்த மநுஷ்யர்கள் என்ன ஒரு வாசி இல்லை –
திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடைய சர்வாதிகனுடைய திருவடிகளைத் தலையாலே வணங்கி வாயாலே ஏத்தி
எவர் தான் ஆஸ்ரயியாதவர்கள் -ஆராய்ந்து பார்க்குமளவில் பரம்பின அழகிய கிரணங்களை யுடையனான ஆதித்யனும்
-அழகிய திரு நாபீ கமலத்தை இருப்பிடமாக யுடைய ப்ரஹ்மாவும் -லலாட நேத்ரனான ருத்ரனும் ஆகிற நாட்டுக்கு
ஆஸ்ரயணீயராக பிரசித்தரான இவர்கள் அன்றோ நாள் தோறும் அவன் புக்க இடம் புக்கு பின்பற்றி
ஆஸ்ரயிக்கையே ஸ்வபாவமாக உடையராய் இருக்கிறார்கள் –

———————————————————————————————-

இப்படி பெரியார் ஆஸ்ரயிக்கிற அளவு அன்றிக்கே ஜென்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்றவர்களுக்கும்
கூச்சம் அற சென்று ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கலாம் என்கிறார் –

தொடரெடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி
படரெடுத்த பைங்கமலம் கொண்டு -அன்று இடர் அடுக்க
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன்
பாழி தான் எய்திற்றுப பண்டு—–13-

இட்ட விலங்கை ஒடித்துக் கையிலே கொண்டு ஸ்வைரமாகத் திரிகிற மத்த கஜமானது தன்னால் கரை காண ஒண்ணாத
பரப்பை யுடைத்தான பொய்கையில் அத்யபி நிவிஷ்டமாய் சென்று புக்கு -விகசிதமாய் ஓங்கி இருந்துள்ள அழகிய
தாமரைப் பூவை சாதரமாகப் பிடித்துக் கொண்டு -அத்தசையிலே முதலையின் வாயிலே அகப்பட்டது-
தன்னாலும் பிறராலும் பரிஹரிக்க ஒண்ணாத படியான துக்கம் பிரஸ்த்துதமாகப் பதறி -பூ செவ்வி அழிவதற்கு முன்னே
திருவடிகளிலே பணிமாறப் பெறுகிறிலோம் என்று பயப்பட்டு -முதலையைத் துணிக்கைக்குப் பரிகரமான திருவாழியை
யுடையனான சர்வேஸ்வரனுடைய திருவடிகளை ஆஸ்ரயித்து அன்றோ -முன்பு ஒரு நாளிலே அயர்வறும் அமரர்கள் அதிபதி
யானவனுடைய பரமபதம் ஆகிற ஸ்தானம் தன்னை பிராபித்தது -ஆனபின்பு அவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில்
இன்னார் ஆவார் இன்னார் ஆகார் என்னும் நியதி இல்லை என்று கருத்து –

—————————————————————————————-

இப்படி அவன் சர்வ ஸமாச்ரயணீயன் ஆனபின்பு -சம்சார வர்த்தகரான ஷூ த்ரரை ஸ்தோத்ரம் பண்ணாதே –
எம்பெருமானை ஆஸ்ரயித்து நாட்டையும் உங்கள் சஞ்சாரத்தால் பரிசுத்தமாம் படி பண்ணுங்கோ ள் -என்கிறார் –

பண்டிப்பெரும் பதியை யாக்கி பழி பாவம்
கொண்டிங்கு வாழ்வாரைக் கூறாதே எண்டிசையும்
பேர்த்த கர நான்குடையான் பேரோதிப் பேதைகாள்
தீர்த்த கரராமின் திரிந்து—14-

வயிற்றைப் பெரிய ஊர் போலே கண்ட அன்னலும் துன்னலுமாக இட்டு வளர்த்து -அதுக்கு உறுப்பாகத் தான்
அறியாதே பிறர் அறிந்து ஏறிடும்படி -அபுத்தி பூர்வகமாக செய்யப்படும் பழியையும் -புத்தி பூர்வகமாகத் தான்
அனுஷ்ட்டித்துப் போரும் நிஷித்தா சரணம் ஆகிற பாபத்தையும் உத்தரோத்தரம் வளர்த்துக் கொண்டு
-இஹ லோகத்தில் பர லோக ஸூகம் கனாக் கண்டு அறியாதவர்கள் ஆகையால் -இத்தை பெரிய வாழ்வாக
நினைத்துக் களித்துத் திரியும் ஹேயரான சம்சாரிகளை -உனக்கு ஒரு பழி யுண்டோ -பாவம் யுண்டோ -என்று புகழாதே
-கண்டது அல்லது அறியாத அறிவு கேடர்காள் –திரு வுலகு அளந்து அருளின போது எட்டு திக்குகளையும் பேர்த்துப் பொகடும்படி
-விம்ம வளர்ந்த நாலு திருத் தோள்களை யுடையனான சர்வேஸ்வரனுடைய குணாதிகளுக்கு வாசகமான திரு நாமங்களை
இடை விடாமல் சொல்லிக் கொண்டு -தீதில் நன்னெறி காட்டி எங்கும் சஞ்சரித்து -உங்கள் ஸஞ்சாரத்தாலே
நாட்டை இருந்ததே குடியாகப் பரி சுத்தராம் படி பண்ணுங்கோள் –
பண்டிப் பெரும் பதி-என்று முன்பு இந்த சம்சாரத்தை வர்த்திப்பித்து என்னுதல் -பழையதான சம்சாரத்தைச் சேர்த்து -என்னவுமாம் –

————————————————————————————–

இவர்கள் இப்படி தாங்கள் உடம்பைப் பேணிப் பேய்களாய்த் திரிய -இவர்களுக்காக கிருஷ்ணனாவது -ராமன் ஆவதாக கொண்டு
-அதி ஸூ குமாரமான திரு மேனியோடு அவன் பட்ட மிறுக்குகளை நினைத்து வெறுக்கிறார் –

திரிந்தது வெஞ்சமத்துத் தேர் கடவி அன்று
பிரிந்தது சீதையை மான் பின் போய்-புரிந்ததுவும்
கண் பள்ளி கொள்ள அழகியதே நாகத்தின்
தண் பள்ளி கொள்வான் தனக்கு—-15-

கொடிதான யுத்தத்திலே எதிரிகள் விடுகிற அம்புகள் தன் மேலே படும்படி உடம்புக்கு ஈடு கொடாமல் -சாரதியாய்க் கொண்டு
அர்ஜுனன் சொன்ன இடத்திலே தேரை நடத்திக் கொண்டு திருமேனி அலசும்படி இதஸ் தத்ஸ சஞ்சரித்ததுவும்
வன வாஸோ மஹோதய -என்று சொல்லும்படி உகப்புடன் காட்டிலே சஞ்சரித்துத் திரிகிற அன்று மாயா மிருகத்தின் பின்னே போய்
நித்யம் ப்ராணசமையான பிராட்டியைப் பிரிந்து அலைச்சல் பட்டதும் –
அதி கடினமான பூமியிடத்திலே பள்ளி கொண்டு அருள ஆதரித்ததுவுமான இவ்வோ செயல்கள் எல்லாம்
மென்மை குளிர்த்தி நாற்றங்களை பிரக்ருதியாக யுடைய திரு வனந்த ஆழ்வான் மேலே குளிரப் பள்ளி கொண்டு
அருளக் கடவ அதி ஸூ குமாரனான தனக்குச் சால அழகியதாய் இருந்தன என்று வயிறு பிடிக்கிறார் –
கண் பள்ளி கொள்ள -என்றது கண் -என்று இடமாய் -தறைக் கிடை கிடக்க என்றபடி –

———————————————————————————

இப்படி நம்மை பெறுகைக்கு எம்பெருமான் தானே கை தொடனாய் உதித்து கிருஷி பண்ணா நிற்க –
சேதனனான வாசிக்கு அவனைப் பெற வேணும் என்னும் ருசி மாத்திரம் ஒழிய நாம் பேற்றுக்கு
யத்னம் பண்ண வேணும் என்பது ஓன்று உண்டோ -என்கிறார் –

தனக்கு அடிமைப் பட்டது தான் அறியான் ஏலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை -வனதிடரை
ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று—–16-

ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வபாவம் ச சதா ஸ்மர-என்று எம்பெருமானுக்கு சேஷித்வம் கூறு பட்டால் போலே
தனக்கு சேஷத்வம் கூறு பட்டது என்னும் இடத்தை பிராமண பிரசித்தி யாலும் -ஆச்சார்ய சேவையாலும்
-தான் உள்ளபடி அறிய மாட்டாதவனாய் இருந்தானேயாகிலும் -நம் உடைமையை நாமே பெற வேணும் -என்று
மேல் விழுகிற வியாமுக்தனானவனை -திரு வாணை இட்டுப் புகாத படி தடுக்கை யன்றிக்கே மனசிலே வந்து
சேராத தக்கதாகத் தான் பொருந்தி இடம் கொடுத்து வைத்துக் கொள்ளுவது –
இத்தலையிலே இவ்வளவு ருசி மாத்திரம் உண்டானால் விரோதியைப் போக்கித் தன்னைத் தருகை அவனுடைய பரம் இ றே —
அது எங்கனே என்னில் -காடு எழுந்து கிடக்கிற அதி கடினமான திடரை-வருகிற வர்ஷ ஜலம் புறம்பு போகாதே தடை யற வந்து புகுரும்படி
ஏரியாம் பிரகாரம் யத்தனித்து வெட்டுவிக்கும் இத்தனை ஒழியப் பின்னை வர்ஷத்தைப் பெய்விப்பார் ஆர்
-அதுக்கு கடவனான பர்ஜன்யன் அன்றோ –
ஏரி வர்ஷத்தை உண்டாக்கிக் கொள்ளும் அன்று அன்றோ பிராப்தி இவனால் உண்டாக்கிக் கொள்ளல் ஆவது
-ஆனபின்பு இத்தலையில் விலக்காமையே பற்றாசாகத் தானே விரோதியைப் போக்கி ப்ராப்தியைப் பண்ணித் தரும் என்றபடி –

அங்கன் அன்றிக்கே –மனத்தடையே வைப்பதால் மாலை -அவன் சேஷி தான் சேஷம் என்னும் இடத்தை சேதனன் தான் அறிய
மாட்டானே யாகிலும் -யத்யதாசரதி ஸ்ரேஷ்டம்-என்கிறபடியே தனக்கு ருசி இன்றிக்கே இருக்கச் செய்தேயம்
செய்வார் செய் முறை பாடு காண்டாகிலும் சர்வேஸ்வரனை ஹிருதயத்திலே வைத்துக் கொள்வது –
இவ்வளவு கொண்டே அவன் தானே விரோதியையும் போக்கி ப்ராப்தியையும் பண்ணிக் கொடுக்கும் –
அதுக்கு த்ருஷ்டாந்தம் சொல்லுகிறது -வனத்திடரை -இத்யாதி -காட்டுத் திடரை ஏரியாம் படி கல்லுகை ஒழிய
மற்றும் மலை பெய்விப்பார் ஆர் -என்று யோஜிக்கவுமாம் –

அங்கனும் அன்றிக்கே -மாலை மனத்திடை வைப்பதாம்-சர்வேஸ்வரனை ஹிருதயத்திலே கொண்டு வந்து
சர்வ சக்தி வையானோ என்று ஷேபம் –
வனத்திடரை இத்யாதி -மனுஷ்யரை ப்ரேரித்து கல்லுவிப்பானும் -இந்திரனை யடுவித்து மழை பெய்விப்பானும்
-அவன் தானே யன்றோ என்கிறார் –
அப்படியே மனத்திடரில்-அவித்யா கர்மா வாசா நாதிகளைப் போக்கி ருசி உண்டாக்குவானும் -தன் கல்யாண குணங்களை வர்ஷிப்பானும்
அவனே யன்றோ என்னவுமாம் –முற்பட்ட யோஜனை திருமலை நம்பியது -இரண்டாம் யோஜனை ஆழ்வானது

———————————————————————————

இப்படி இருக்கிற அவனை ஒழிய மற்று ஆஸ்ரயணீயர் இல்லை என்கிறார் –

மற்று ஆர் இயலாவார் வானவர் கோன் மா மலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை -ஒற்றைப்
பிறை யிருந்த செஞ்சடையான் பின் சென்று மாலைக்
குறை யிரந்து தான் முடித்தான் கொண்டு—–17-

முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு எல்லாம் நிர்வாஹகனான இந்திரனும் -சிலாக்யமான திரு நாபீ கமலத்தை வாசஸ் ஸ்தானமாக
யுடைய ப்ரஹ்மாவும் -நேர் கொடு நேரே சென்று கிட்ட மாட்டாமல் பாடே பக்கே நின்று திருவடிகளிலே பின்னாபிமானராய் விழுந்து
ஆஸ்ரயிக்கைக்கு உறுப்பான ஸுந்த்ர்யாதி சீலாதி குண சேஷ்டிதங்கள் ஆகிற பிரகாரங்களை யுடையனாய் -சர்வாதிகனானவனை
-கலா மாத்ர மான சந்திரனை தரித்து இருக்கிற சிவந்த ஜடையை யுடையனான ருத்ரன் தன் ஹிருதயத்திலே அனுசந்தித்திக் கொண்டு
இருந்த துர்மானத்தை விட்டு பின்பற்றி அனுவர்த்தித்து -அநந்தரம் பல் காட்டி அர்த்தித்துத் தன்னுடைய குறையை தான் தலைக் கட்டிக் கொண்டான்
ஆனபின்பு அவனை ஒழிய வேறு ஆர் தான் சத்ருச ஸமாச்ரயணீயனாய் இருப்பர் –

————————————————————————————————————–

இப்படி ஸமாச்ரயணீயனாய் சர்வாதிகனாய் இருந்து வைத்து -தன்னை அழிய மாறியும் ஆஸ்ரிதரை நோக்கும் ஸ்வபாவன் என்கிறார் –

கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது -உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே தாமரைக் கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு——-18-

ஆகாசத்தை அளவிடிலும் அளவிட ஒண்ணாத பெருமையை யுடையவனாய் -இவனே சர்வ ஸ்மாத் பரன் என்னும் இடத்தை
கோள் சொல்லித் தருகிற தாமரை போன்ற கண் அழகை யுடையனான சர்வேஸ்வரன் -நம்முடைமையை நாமே நம்மை
அழிய மாறி ரஷிக்கை நமக்கு ஸ்வரூப பிராப்தம் அன்றோ -என்று நியாயமாகச் செய்த செயல்கள் இருந்த படி –
ஸ்ரீ வாமனனாய் தன்னை அழிய மாறி அர்த்தித்து பூமி முதலான லோகத்தை வாங்கிக் கொண்டதும் –
மிடுக்கை யுடைத்தான நரசிம்ஹ ரூபியாய்க் கொண்டு அழகிய மிடுக்கை யுடையனான ஹிரண்யனுடைய
மார்விலே -திரு உகிரை நாட்டிப் பிளந்து பொகட்டதுவும்
ஒரு நாளிலே தான் அளந்து கொண்ட சப்த லோகங்களையும் தர தம விபாகம் பாராதே திரு வயிற்றிலே எடுத்து வைத்து
நோக்கியும் செய்த செயல்கள் இவைகள் கிடீர் / வழக்கு -நியாயம் -பிராப்தம் -என்றபடி –
பிறருக்கு ஒரு கார்யம் செய்தானாய் இருக்கை அன்றிக்கே தனக்கு அடைத்த கார்யம் செய்தானாய் இருக்கை –
உடையவன் உடமையை ரஷிக்கை பிராப்தம் இ றே –

———————————————————————————-

நம்மை அழிய மாறியும் நம் உடமையை நோக்குகை நமக்கு பிராப்தம் என்று அவன் நினைத்து இருக்க
-இவர் அவனுடைய ஸுகுமார்யத்தை அனுசந்தித்து இது அப்ராப்தம் என்று வயிறு எரிகிறார்-

வழக்கன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா -குழக்கு அன்று
தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திரு மாலே
பார் விளங்கச் செய்தாய் பழி—-19-

பெரிய பிராட்டியார் -என் புகுகிறதோ -என்று வயிறு எரிந்து-மங்களாந்யபி தத்யுஷீ –என்று மங்களா சாசனம் பண்ணி
நோக்க வேண்டும் படி நிரதிசய ஸூ குமாரமானவனே –
இப்படி இருக்கிற நீ சிறு பிள்ளையாய்க் கொண்டு அதி ஸூ குமாரமான திருவடிகளாலே அதி பிரபலமான சகடத்தை
உதைத்து முறித்து விழ விட்டாய் -பிரானே இது பிராப்தம் அன்று கிடாய் -ரக்ஷகனான நமக்கு விரோதிகளை போக்கி
நோக்குகை பிராப்தம் அன்றோ என்று இந்த ஸாஹஸ பிரவ்ருத்தி யிலே அனுதாபம் கூட அற்று இருக்கிற நீ புத்தி
பண்ண வேண்டா -அதுக்கு மேலே அஸூரனான குழக் கன்றைக் கொண்டு அஸூர வடிவாயத் தீதான
விளாவின் காய்க்கு எறிந்த இந்த தீம்பான செயலானது பூமியிலே பிரகாசிக்கும் படியாக தப்பாகச் செய்தாய் –
-அவன் புகழ் என்று இருக்க இவர் பழி என்று வயிறு பிடிக்கிறார் -விபூதியில் ஏக தேசத்தை நோக்கப் புக்கு
உபய விபூதியையும் அழிக்கப் பார்த்தாய் -என்று இன்னாதாகிறார் –

————————————————————————————————-

பகவத் ஸமாச்ரயணத்தில் முதல் அடி இட்டாரோடு -முடியாத தலைக் கட்ட பெற்றாரோடு வாசி அற க்ருதக்ருத்யர் -என்கிறார் –

பழி பாவம் கை யகற்றிப் பல் காலும் நின்னை
வழி வாழ்வார் வாழ்வராம் மாதோ -வழுவின்றி
நாரணன் தன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்
காரணங்கள் தாமுடையார் தாம்———–20-

தங்கள் அறியாது இருக்கப் பிறர் அறிந்து ஏறிடும் அபகீர்த்தியையும் அறிந்து அனுஷ்ட்டிக்கப் பட்ட பர ஹிம்சாதி ரூபமான
பாபத்தையும் கை கழிய விட்டு சர்வ காலமும் யுன்னை ஸாஸ்திரங்களில் சொல்லுகிற கட்டளையிலே வழி பட்டு நின்று
போக ரூபமாக ஆஸ்ரயிக்குமவர்களும் -நாராயண சப்த வாசகன் ஆகையால் சர்வ ரக்ஷகனாய் இருக்கிற உன்னுடைய
திரு நாமங்களை விச்சேதம் இல்லாத படி ப்ரேம யுக்தராய்க் கொண்டு அழகிதாக அறிந்து ப்ரேம பரவசராய்க் கொண்டு
அழகிதாக ஏத்துகைக்கு ஹேதுக்களான ப்ரேமம் -தத் ஹேதுவான உத்பஜனம் -தந்நிதானமான ருசி -தந்நிதானமான ஸூ ஹ்ருதம்
-அதுக்கு அடியான உன் கடாக்ஷம் -என்றால் போலே சொல்லுகிற இவற்றைத் தாங்கள் பெற்று உடையராய் இருக்குமவர்களான
இவ்விரண்டு அதிகாரிகளும் ஸூ கோத்தரராய் வாழப் பெறுவார்கள்
மாதோ என்கிற இது ஓர் அவ்யயமாய் -இது ஓர் ஆச்சர்யம் இருந்த படி என் -என்னும் பொருள் பெற்றுக் கிடக்கிறது –

——————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

இரண்டாம் திருவந்தாதி-தனியன் / அவதாரிகை / பாசுரங்கள் 1-10- – -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 13, 2016

திருக்கடல் மல்லையிலே–மலர்ந்த உத் பல்ல புஷ்ப்பத்திலே –ஐப்பசி -அவிட்டத்தில்-ஸ்ரீ கௌமோதகீ என்னும் திருக் கதையின் அம்சமாக –
ஆவிர்பவித்த ஸ்ரீ பூதத்தாழ்வாரை ஸ்துதிப்போம் –

துலாத நிஷ்டா ஸம்பூதம் பூதம் கல்லோல மாலின
தீரே பு ல்லோத்பல மல்லா புர்யா மீடே கதாம் சஜம் –

மல்லாபுர வராதீசம் மாதவீ குஸூமோத்பவம்
பூதம் நமாமி யோ விஷ்ணோ ரவிம் தீப மகல்பயத்-

அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே
நன் புகழ் சேர் குருக்கத்தி நாண் மலரோன் வாழியே ‘நல்ல திருக் கடல் மல்லை நாதனார் வாழியே
இன்புருகு சிந்தை திரியிட்ட பிரான் வாழியே
எழில் ஞானச் சுடர் விளக்கை ஏற்றினான் வாழியே
பொன் புரையும் திருவரங்கர் புகழ் யுரைப்போன் வாழியே
பூதத்தார் தாளிணை இப்பூதலத்தில் வாழியே –

——————————————————————————————

திரு குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த தனியன் –

என் பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகழி யளித்தானை -நன் புகழ் சேர்
சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மலை பூதத்தார்
பொன் அம் கழல் –

இதில் திவ்ய பிரபந்த ப்ரதாதாவுமாய் -திவ்ய தேசத்தை ஜென்ம தேசமாக யுடையாருமாய் இருக்கிற பூதத்தாருடைய
ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை ஜென்ம சம்பந்தம் அறும் படி பஜித்தேன் என்கிறது –
இன்னமுதாய் -அன்பே தகழி யளித்தா ருமாய் -நன் புகழ் சேர்-சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மலை பூதத்தார்
பொன் அம் கழல் களை -என் பிறவி தீர இறைஞ்சினேன் -என்கிறது –

இன்னமுதா அன்பே தகளி அளிக்கையாவது
அமுதன்ன சொன்மாலையான-இரும்தமிழ் நன் மாலை இணை அடிக்கே சொன்னேன் -என்றும்
நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான் – என்னும்படியான
அன்பே தகளியா -என்னும் திவ்ய பிரபந்தத்தை
உத்தமன் பேர் ஏத்தும் திறம் அறிமின் -என்னும்படி உபகரிக்கை –
அன்றிக்கே கொடுக்கை –
கீழே ஞான வைபவம் சொல்லிற்று
இனி ஜன்ம வைபவம் சொல்கிறது மேலே
ஸ்லாக்கியமான யசஸ் சேரும் ஊருமாய் -நன் புகழ் சேர்
நன் புகழ் ஆவது –
யசஸ் சைக பாஜனம்
சேரும் கொடை புகழ் எல்லை இலானை
அந்தமில் புகழ் கார் எழில் அண்ணலே
எண்ணிறந்த புகழினானை -என்னும்படியான
கடல் மலை தல சயனத்து உறைவாரையும்-
எப்புவியும் பேசும் புகழ் பூதத்தாரையும்
உடைததாகையாலும் –
சீதள அதிசய முக்தா மணிகள் சேரும்படியான ஸ்தலம் –
வந்துதித்த வெண்டிரைகள் வெண் முத்தத்தை கொழிக்கை
மா மணி வந்து உந்து முந்நீர் மல்லையிலே-

சங்கிடம் கொள் முத்து ஒன்றும்
கரை கடந்த முத்தொன்றும் -சேரும் ஸ்தலம் –
இக்கரை ஏறி -என்னக் கடவது இ றே
கரை கண்டார் என்னும்படியான முக்தர் ஆயிற்று இவரும்
கடல் மலை –
விலஷண வஸ்துக்கள் சேரும் ஸ்தலம் –
சங்கு தங்கு தடம் கடல் கடல் மலை இ றே
மா மயிலை என்று இ றே இவர் தாமும் மண்டி இருப்பது
கச்சிக் கிடந்தவனூர் கடல் மலை தல சயனம் -என்று அடுத்தடுத்து படிக்கும் படி தேசமாக இ றே பாடினார்
ஆகையால் அவன் படுகாடு கிடக்கும் தேசம் என்கிறது

கடல் மலை பூதத்தார் –
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப்பூதம் –
பாற்கடல் மேல் பாம்பணை மேல் பள்ளிக் கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே –
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த வெவ்வுள் கிடந்தான் என்கிறபடியே
மிக்க சீர் தொண்டரான புண்டரீகர் -வண்டு கொண்டு நறும் துழாய் அலங்கல் கொண்டு சாத்தக் கிடந்த இடம் இ றே

-கடல் மலை பூதத்தார் –
திருக்கடல் மல்லையிலே குருக்கத்திப் பூவிலே ஐப்பசிஅவிட்டத்தில் திருவவதாரம்
இவரும் இரும் தமிழ் நன் மாலை இணை அடிக்கே சூட்டினார் இ றே -அத்தை இட்டு -கடல் மலை பூதத்தார் -என்கிறது
அவனுக்கும் -கடல் மலை தல சயனது உறைவார் -என்று இ றே நிரூபகம்
பூதத்தார் பொன் அம் கழல் இறைஞ்சினேன் –
மேவினேன் அவன் பொன்னடி -என்னுமா போலே
தமிழ் தலைவன் பொன்னடி -என்னக் கடவது இ றே
பொன் அம் கழல் என் பிறவி தீர இறைஞ்சினேன் –
இவர் பொன்னடி யடியாக வி றே ஜன்ம சம்சார பந்தம் நீங்குவது
இத்தால் பூதத்தார் பாதத்தை பணியவே பிறப்பறும் என்றதாயிற்று-

—————————————————————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்த அவதாரிகை –

கீழில் திருவந்தாதியில் உபய விபூதி நாதனாய் சர்வ ஸ்மாத் பரனாய் இருக்கிற சர்வேஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைத்
தன் நிர்ஹேதுக கடாக்ஷ விசேஷ லப்தமாய் பரபக்தி தசா பன்னமானஞான விசேஷத்தாலே சாஷாத் கரித்து அனுபவித்து
-அனுபவ ஜெனித ப்ரீதி பிரகர்ஷத்தாலே அனுபவித்த படியே ச விபூதிகனான எம்பெருமானைப் பேசி
ப்ராப்தாவான ஆத்மாவினுடைய சேஷத்வமான ஸ்வரூபத்தையும் சேஷியான எம்பெருமான் திருவடிகளிலே பண்ணும் நித்ய கைங்கர்யமே
ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யம் என்னும் இடத்தையும் அந்த ப்ராப்யத்தைக் கைப் படுத்தித் தரும் ஸ்வரூப அனுரூபமான ப்ராபகமும்
அவன் திருவடிகளே என்னும் இடத்தையும் அறுதியிட்டார் முதல் ஆழ்வார்களில் முதல் ஆழ்வாரான ஸ்ரீ பொய்கையை யாழ்வார்-

அநந்தரம் பூதத்தார் -வையம் தகளி யில் அருளிச் செய்த எம்பெருமான் படிகளைக் கூட இருந்து உத்தரோத்தரம் அனுபவித்துக் கொண்டு போருகையாலே-
எம்பெருமானுடைய அருளே தளமாக முளைத்துக் கிளர்ந்த தம்முடைய பரபக்தியானது பரஞான தசா பன்னமாம் படி பரிபக்குவமாய் வளர –
அந்த பரஞான தசா பன்ன ப்ரேம விசேஷத்தாலே அவன் படிகளைக் கட்டடங்க சாஷாத் கரித்து அனுசந்தித்துத் தாம் அனுபவித்த பிரகாரத்தை
நாடு அறிந்து அனுசந்தித்து வாழும் படி நடை விளங்கு தமிழ் மாலையாலே பேசித் தலைக் கட்டுகிறார் –
பகவத் சேஷமான விபூதியை ஸ்வ தந்திரம் என்றும் -அந்நிய சேஷம் என்றும் பிரமிக்கிற பாஹ்யமான அஞ்ஞான அந்தகாரம் நீங்கும் படி
பிருதிவ்யாதி பூத பவ்திக பதார்த்தங்களை தகளி யாகவும் நெய்யும் விளக்குமாக ரூபித்துக் கொண்டு பேசினார் பொய்கையார் –
இவர் ஆந்தரமான பகவத் பிரேமத்தில் அவஸ்தா விசேஷங்களைத் தகளி யாகவும் நெய்யும் விளக்குமாக ரூபிக்கும் படி
இவ்விஷயத்தில் உள்ளூற அவகாஹித்து
இறைவனைக் காணும் ஹிருதயத்தைப் பற்றிக் கிடக்கிற உள்ளிருள் நீங்கும் படியாக ப்ரத்யக் வஸ்துவான
ஆத்ம பரமாத்மாக்களில் உண்டாகக் கடவ சம்சய விபர்யயங்களை அறுக்கிறார் –

பரபக்த்யாதிகள் மூன்றும் மூவர்க்கும் தனித்தனியே குறைவற உண்டாய் இருக்கச் செய்தேயும் ஓர் ஒருத்தருக்கு ஒரோ அவஸ்தை
தலையெடுத்து -அல்லாத அவஸ்தைகள் அதுக்கு உள்ளே அடங்கிக் கிடக்கும் -பரஞான பரம பக்திகள் நிழலிட்டுத் தோற்றும்படியே
பரபக்தியே விஞ்சி இருக்கும் அவருக்கு -பரபக்தி முற்றிப் பக்வமானதாய் பரமபக்தி சிரஸிகமான பர ஞானமேயாய் இருக்கும் இவருக்கு
-பரம பக்தியே விஞ்சிப் பர பக்தி பர ஞானங்கள் இரண்டும் அதன் கீழே செருகிக் கிடக்கும் மற்றையவருக்கு –
பர பக்த்யாதிகளினுடைய உத் பத்தியும் வ்ருத்தியும் இன்னாருக்கு இன்ன போது இன்னது தலை எடுக்கக் கடவது
-இன்னது அடங்கிக் கிடக்கக் கடவது என்னும் இவை எல்லாம் ஈஸ்வரன் நினைவாலே உண்டாகத் தட்டில்லை –
பகவத் விஷயத்தை சாஷாத் கரிக்க வேணும் என்னும் அபிநிவேசம் பரபக்தி–சாஷாத் காரம் பரஞானம் —
பின்பு உத்தரோத்தரம் அனுபவிக்க வேணும் என்னும் அபிநிவேசம் பரமபக்தி –
சம்ச்லேஷத்தில் ஸூ கித்து –விஸ்லேஷத்திலே துக்கிக்கும் படி இருக்கை பயபக்தி –
அடியாரோடு இருந்தமை -என்னும் படி பூர்ண சாஷாத் காரம் பர ஞானம் –
அனுபவம் பெறா விடில் நீரைப் பிரிந்த மத்ஸ்யம் போலே மூச்சு அடங்கும் படி இருக்கை பரம பக்தி என்று அருளிச் செய்யும் படி –
நிரூபித்தால் தன்னில் இரண்டும் ஒக்கும் -இவை பிராமாணி கருக்கு முக்கிய அவஸ்தையில் உண்டாம் இத்தனை –
மயர்வற மதி நலம் அருள பெற்ற ஆழ்வார்களுக்கு இங்கே இருக்கச் செய்தே பகவத் பிரசாதத்தாலே யுண்டாய்த்து –
இனி -பர பக்தி பர ஞான பரம பக்தி ஏக ஸ் வ பாவம் மாம் குருஷ்வ -என்று பிராமாணிகருக்கு அவன் பக்கலிலே பிரார்த்துப் பெற வேணும் –
ஞான தர்சன ப்ராப்திகள் என்று சாஸ்திரங்களில் பர பக்த்யாதிகளைச் சொல்லும் –
ஞாதும் த்ரஷ்டுஞ்ச்ச தத்த்வேன பிரவேஷ்டுஞ்ச பரந்தப–ஸ்ரீ கீதை -11 -15-என்று இ றே கீதாச்சார்யன் வார்த்தை
ச்மஞ்ஞாயதே சந்த்ருச்யதே வாப்யதி கம்யதே வா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6 -5-87–என்று இ றே பராசர வசனம் –

——————————————————————————————-

பகவத் பிரசாத லப்தமான தம்முடைய ப்ரேம அவஸ்தா விசேஷங்களைத் தகளியும் நெய்யுமாக நிரூபியா நின்று கொண்டு
சர்வ சேஷியான நாராயணனுக்குப் பரஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை ஏற்றி அடிமை செய்யப் பெற்றேன் என்று க்ருதார்த்தர் ஆகிறார் –

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்-1-

விஷய வைக்ஷண்யம் தளமாக முளைத்துக் கிளருகிற பரபக்தி உபக்ரம ரூபமான ஸ்நேஹமானது -மேல் சொல்லுகிற
நெய் திரி முதலான வற்றுக்கு ஆதாரமான தகளி யாகவும் -அந்த விஷய வை லக்ஷண்யத்துக்கு என் புகுகிறதோ என்று
பரிந்து காப்பிடும் படி பரிபக்குவ தசாபன்னமான அபிநிவேசமானது மேல் ஏற்றத் தேடுகிற விளக்கை வளர்க்கைக்கு
உறுப்பான நெய்யாகவும் -விஷய வை லக்ஷண்ய அனுசந்தான ஜெனிதமான ஆனந்தத்தால் த்ரவீ பூதமான அந்த
ப்ரேம அவஸ்தைகளுக்கு வாய்த்தலையான ஹிருதயமானது மேல் சொல்லுகிற பரஞானம் ஆகிற விளக்குக்கு இடப்படும் திரியாகவும் –
ஞான ஆனந்த லக்ஷணமாய் -ஞான குணக்கமாய் -பகவத் அநந்யார்ஹ சேஷம் ஆகையால் அத்யந்த விலக்ஷணமான
ஆத்ம வஸ்துவானது பகவத் குணாஸ்வாத ரசத்தாலே-த்ரவ்ய த்ரவ்யமாய் யுருகிப் பர ஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை
-பகவத் தத்வ யாதாம்ய ஞான ஜனகமாய் -வேதாதிகள் போலே அதிகாரம் அநாதிகாரம் அன்றிக்கே
சர்வாதிகாரமான திராவிட பிரபந்தத்தை லோக உபகாரகமாகப் பண்ணின நான்-சர்வ சேஷியான நாராயணனுக்கு
ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்கள் உள்ள படியே பிரகாசிக்கும் படி ஏற்றினேன் –

பேசுவிக்க ஒருப்பட்ட ஈஸ்வரன் ஸத்ய ஸங்கல்பன் ஆகையாலும் -பேசித் தலைக் கட்டி யல்லது
தரிக்க ஒண்ணாத தம் ப்ரக்ருதியாலும் -சித்தவத் கரித்து -தமிழ் புரிந்த -என்கிறார் –
அறை கழல் சுடர்ப் பூந்தாமரை சூடுதற்கவா அவா வாருயிர் உருகி உக்க நேரிய காதல் அன்பு -திருவாசிரியம் -2–என்று ஆழ்வாரும்
பரபக்த்யாதிகள் மூன்றும் தமக்கு உண்டு என்று அருளிச் செய்கிறவர் -சூடுதற்கவா -என்று பர பக்தியை முந்துற அருளிச் செய்து
–பர ஞானம் அருளிச் செய்கிற இடத்தில் -அவா வாருயிர் உருகி உக்க நேரிய காதல் -என்று பர பக்தியால்
உருகி உக்க ஆருயிர் யுண்டு -ஆத்ம வஸ்து –அதின் இடத்தில் யுண்டான ஸூ ஷ்மமான காதல் -என்று
பர ஞான அவஸ்தையில் ஆத்மா த்ரவ்ய த்ரவ்யமாக உருகும் என்னும் இடம் அருளிச் செய்தார் இ றே –

அந்த நேரிய காதலாலே உண்டான அன்பு -என்று பரம பக்தியைச் சொல்லுகிறது -ஆவல் அன்பு யுடையார் –நாச் 4-8–என்றும்
-ஸ்ரத்தை தன்னால் வேடிக்கை மீதூர -திருக் குறுந்தாண்டகம் -4-என்றும் -ஈர நெல் வித்தி –பேரமர் காதல் -5-3-4-என்றும்
பர பக்தி தனக்கே இரண்டும் உண்டாக அருளிச் செய்கையாலே -அன்பு -ஆர்வம் -என்று ஓர் அவஸ்தை தன்னில்
உபக்ரம சரம அவஸ்தைகளை சொல்லத் தட்டில்லை -சங்காத் சஞ்சாயதே காம -ஸ்ரீ கீதை -2-62 -என்று இறே
கீதாச்சார்யனும் அருளிச் செய்தது -காமோ நாம சங்கஸ்ய விபாக தசா -என்று இ றே அதுக்கு பாஷ்யம் –
-ஸ்நேஹோ மே பரம –பக்திஸ்ஸ நியதா வீர -என்றான் இ றே திருவடியும் –
ஆகையால் பார்ப்பக்த்யங்குர ரூபமான அன்பே தகளி என்றும் –அத்தலைக்குப் பரிந்து அல்லது நிற்க ஒண்ணாத படி
பரிபக்வமான பரபக்தியை நெய் என்றும் -நன்புருகி ஞானச் சுடர் விளக்கு -என்று ஆஸ்ரயமான ஆத்ம வஸ்து உருகி
விழும்படியான பரஞான அவஸ்தையை விளக்கு என்று இவரும் அருளிச் செய்தார் ஆயிற்று –
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெரும் செய்யுள் -5-3-4-என்று பக்த்யங்குரமான சங்க அவஸ்தை முதலாக
நெஞ்சு தளமாக உண்டாமதாயிருக்க பர ஞான அவஸ்தைக்கு காரணமாக நெஞ்சை சொல்லுகிறது –
-உருகுமால் நெஞ்சம் –பெருகுமால் வேட்க்கை–9 -6 -1-என்று பர பக்த் யவஸ்தையில் காரணமான நெஞ்சும் உருகும்
-பர ஞான அவஸ்தையில் கரணமான நெஞ்சும் -கரணியான ஆத்மாவும் உருகும் -என்கிற விசேஷம் தோற்றுகைக்காக–

—————————————————————————————

பக்தி பரவசர்களாய்க் கொண்டு -அக்ரமமாகத் திரு நாமங்களைச் சொல்லி கூப்பிடுமவர்களை –
-சர்வேஸ்வரன் நித்ய ஸூ ரிகளோடு ஒத்த தரத்தைக் கொடுத்து ரஷிக்கும் என்கிறார்

ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால் வானத்
தணியமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்
பணியமரர் கோமான் பரிசு-2-

வகுத்த சேஷியான சர்வேஸ்வரனுடைய விக்ரஹாதிகளுக்கு வாசகமாய் -அசாதாரணமான திரு நாமங்களையும்
-ப்ரேம தசா பன்னமான ஞானத்தாலே-அவனுக்கும் தனக்கும் யுண்டான சேஷ சேஷித்வ ரூபமான உறவளவும் செல்ல
உள்ளபடி அறிந்து -பேர் பல சொல்லிப் பிதற்றி -3-5-8-என்கிறபடியே சொல்லி அல்லது நிற்க ஒண்ணாத படி
தலை மண்டிக் கொண்ட பிரேமத்தினுடைய முடி ஸ்தானத்தில் நின்று -அடைவு கெடக் கூப்பிட்டால் –
பரமாகாச சப்த வாஸ்யமான பரம பதத்தில் ஸ்வ சம்பந்தத்தாலே நிறம் கொடுக்கும் படியான அழகை யுடையரான
ஸூ ரிகளோடு ஒத்த பெருமை யுடையராம் படி பண்ணுமாதன்றோ –
நமக்கு நிருபாதிக பந்துக்களாய் -நித்யாஞ்சலி புடா -என்கிறபடியே கையும் அஞ்சலியுமாக கொண்டு தொழுகையே
நித்ய யாத்திரையாக யுடையராய் இருக்கிற அநந்த வைநதேய நாதிகள் ஆகிற நித்ய சித்த புருஷர்களுக்கு
நிருபாதிக சேஷியானவனுடைய பிரகாரம் -இங்கே அடைவு கெட திரு நாமம் சொன்னவர்களை அங்கே
அடைவு கெட்டுக் கூப்பிடும் கோசடியிலே வைக்கும் என்றபடி –

——————————————————————————

அடுத்து அணித்தாகத் திருப் பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிற நீர்மையை யுடையவனை
ஆஸ்ரயிக்குமவர்கள் -பரமபதத்தைச் சென்று பிராபிக்கப் பெறுவார் -என்கிறார் –

பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்
புரிவார் புகப்பெறுவர் போலாம் -புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளி சேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர் -3-

செவ்வி குன்றாத அழகிய பூக்களைக் கொண்டு சம்சாரிகளை அக்கரைப் படுத்துகைக்காகத் திரு பாற் கடலிலே
முற்கோலிக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திருவடிகளை சாஸ்திர யுக்தமான பிரகாரத்தால் பக்தி பரவசராய்க் கொண்டு
ஆஸ்ரயிக்குமவர்கள் -முழுகுவது -மூக்குப் புதைப்பது -ஜபிப்பது தொழுவது -புகழுவதாய்க் கொண்டு இடை விடாமல்அ
வனை ஆஸ்ரயித்துக் கொண்டு போரக் கடவர்களாய் -சம்சாரிகளில் பழையரான ப்ரஹ்மாதி தேவர்கள்
-காண ஒண்ணாதே என்றும் -கேட்டே போம் இத்தனை யாய் -நிரவாதிக தேஜஸை உடைத்தாய்க் கொண்டு
பிரகாசிக்கக் கடவதாய் இருந்து -பிரியில் தரிக்க மாட்டாத நன்மையை யுடைய நித்ய ஸூ ரிகளுக்கு நாயகனான
சர்வேஸ்வரனுடைய வைகுண்ட மா நகரத்தை பிராபிக்க பெறுவாராம் –

———————————————————————————–

அன்பே தகளி என்று தொடங்கி -தம்முடைய பக்த்யாவஸ்த விசேஷங்களை -தகளி யும் நெய்யும் விளக்குமாக நிரூபித்தால் போலே
தம்முடைய பக்த்யாவஸ்த விசேஷங்களை -இதழும் -அல்லியும்-தனமாய் -இருபத்தொரு –
தாமரைப் பூவாக நிரூபித்துக் கொண்டு அவனை ஆஸ்ரயிக்கிறார்

நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு ஆங்கே
திகழும் மணி வயிரஞ் சேர்த்து -நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனி மலராள்
அங்கம் வலம் கொண்டான் அடி-4-

பக்தி யுத்ப்பத்தி ஸ்தானமான நெஞ்சை ராஜாதி ராஜனான சர்வேஸ்வரனுக்கு திருப் படை வீடாக வகுத்து -நெஞ்சமே நீள் நகர் -5-8-2-
அந்தத் திருப் படை வீட்டிலே -அந்நெஞ்சில் யுண்டாய் -ஸ்வாதந்தர்யம் ஆகிற அழல் தட்டாமையாலே குளிர்ந்து
சர்வ கந்த -என்கிற விஷயத்தைப் பற்றிக் கிளருகையாலே
பரிமளிதமாய்-ஒளி விடுகிற ஸ்நேஹம் ஆகிற முத்தை செவ்வி குன்றாத இதழாக வகுத்துக் கொண்டு
ப்ராப்தியையும் வை லக்ஷண்யத்தையும் விஷயீ கரித்து இரண்டு கூறாக எழுந்து இருக்கிற அபிநிவேசம் ஆகிற
உஜ்ஜவலமான மாணிக்ய வைரங்களை அல்லியும் தாதுமாகச் சேர்த்து
இப்படி லௌகீகமான தாமரையில் காட்டில் வியாவிருத்தமான இதழையும் அல்லியையும் தாதையும் யுடைத்தாய் யாகையாலே
உபமான ரஹிதமான பக்தி யாகிற பெரிய தாமரைப் பூவை அழகு பெற தரித்துக் கொண்டு
குளிர்ந்த தாமரைப் பூவை இருப்பிடமாக யுடைய போக்யதை ஏக வேஷையான பெரிய பிராட்டியாரைத்
திரு மேனியில் வலவருகான திரு மார்விலே வைத்துக் கொண்டவனுடைய திருவடிகளிலே நிர்மமனாய்க் கொண்டு விழுந்து ஆஸ்ரயித்தேன் –
நெஞ்சை நகரமாக ரூபிக்கையாலே-நகரம் ஆகில் -முத்து மாணிக்கம் முதலான வி லக்ஷண வஸ்துவை உடைத்தாய் இருக்கும் என்று
பக்த்யாவஸ்தா பேதமான ஸ்நேஹாதிகளை முத்து மாணிக்யாதிகளாக ரூபிக்கிறது –
பைங்கமலம் ஏந்தி -என்று பக்தியைத் தாமரையாக நிரூபிக்கையாலே அந்த பக்த்யாவஸ்த பேதமான ஸ்நேஹாதிகளை
அதுக்கு இதழும் அல்லியும் தாதுவும் ஆக ரூபிக்கிறது –
பக்தியினுடைய போக உபகரணத்வமும் -போக்யத்தையும் -தோற்றுகைக்காக -அத்தைத் தாமரையாக நிரூபிக்கிறது –
நெஞ்சை நரகமாக நிரூபிக்கிறது -கலங்கா பெரு நகரத்தில் பண்ணும் விருப்பத்தைத் தன் நெஞ்சிலே பண்ணிக் கொண்டு
அவன் ரஸோத்தரமாக வர்த்திக்கும் என்று தோற்றுகைக்காக –

—————————————————————————-

ஆழ்வீர் நீர் நம்மைப் பணிந்தீரோ என்ன -ஒன்றைச் சொன்னேன் அத்தனை போக்கி
-ஏவம் விதனான உன் நீர்மை ஒருவரால் பரிச்சேதிக்கப் போமோ என்கிறார் –

அடி மூன்றால் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் -படி நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அறிந்து–5–

சால தூர தர்சியாய்க் கொண்டு -இரண்டு அடியாலே அளந்து -ஓரடிக்குச் சிறையிட்டு வைப்பாயாக -மஹா பலி பக்கலிலே முந்துறச் சென்று –
மூன்றடியை அர்த்தித்து -பூமியை அளந்து கொண்டாய் -அளந்து கொள்ளுகிற அக்காலத்திலே இரண்டு அடியால் அளந்து கொண்டது
அத்தனை போக்கி -மூன்று அடியால் இந்த லோகங்களை அளந்து கொண்டாயோ தான் –
பூமியிலே ரக்ஷகனாய் கொண்டு செவ்வே வந்து அவதரித்து நின்று நீர்மையை யுடையையாய் –
ஜல ஸம்ருத்தியை யுடைத்தான கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையையாய் –சர்வாதிகனான ஸர்வேஸ்வரனே –
-இப்படி நீர்மையே வடிவான உன்னுடைய திருவடிகளை -என்னைப் போலே அறிவு கெட்டார் பேசில் பேசும் அத்தனை போக்கி
நேர் கொடு நேரே இவ்வளவு என்று அறிந்து பேச வல்லார் யார் –

—————————————————————————————————

ஆனால் இப்படி யாரும் அறியாதே இழந்து போம் அத்தனையோ -என்னில் அது வேண்டா -இதர விஷய சங்கம் அற்று
அவன் திரு நாமங்களைச் சொல்லிப் புகழும் அவர்கள் அவன் திருவடிகளை பெறுவார் -என்கிறார் –

அறிந்து ஐந்தும் உள்ளடிக்கி யாய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய் செவ்வே -அறிந்தவன் தன்
பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே
காரோத வண்ணன் கழல்-6-

பகவத் வை லக்ஷண்யத்தையும் -இதர விஷய தோஷங்களையும் நன்றாக அறிந்து -ஹேய விஷயங்களில் போகாதபடி
ஸ்ரோத்ராதிகளான இந்திரியங்கள் ஐந்தையும் ப்ரத்யக்கான பகவத் விஷயத்தில் ப்ரவணமாம் படி நியமித்து
-அங்குத்தைக்கு சத்ருசமாம் படி கந்தல் அற ஆயப்பட்ட செவ்விப் பூக்களை சம்பாதித்துக் கொண்டு
-அபிநிவேசம் மிக்க மனஸை யுடையராய் -அவன் சேஷி -நாம் சேஷ பூதர் -என்னும் முறையை நன்றாகத் தெரிந்து
குண சேஷ்டிதாதிகளுக்கு வாசகமான அவன் திரு நாமங்களை இடைவிடாமல் சொல்லிக் கொண்டு ப்ரீதி பிரகர்ஷத்தாலே
ஸ்தோத்ரம் பண்ணும் பெரிய பாக்யாதிகர்கள் ஆனவர்கள் –கறுத்த கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனாவன்
திருவடிகளைக் கண்டு அனுபவிக்கப் பெறுவர்கள் –

————————————————————————————————————

இப்படி பாக்ய உத்தரர் அடங்கலும் ஆஸ்ரயித்து வாழுகிற விஷயத்தை ப்ரீதி பூர்வகமாக நெஞ்சே -நீயும் அனுசந்திக்கப் பார்-என்கிறார் –

கழல் எடுத்து வாய் மடித்துக் கண் சுழன்று மாற்றார்
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச -தழல் எடுத்த
போராழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியே
ஓராழி நெஞ்சே உகந்து-7-

ஆஸ்ரிதர் வாழும் படி திருவடிகளை வளர்த்து -சத்ருக்களான நமுசி பிரக்ருதிகள் நெருப்புக் கொளுத்தின ஹ்ருதயத்தை
யுடையராய்க் கொண்டு -பல்லிறுகி -நா மடிக் கொண்டு -பார்வையில் பட்டு விழும்படி சுடப் பார்க்கிற கண் -பரிபிரமித்து
நடுங்கும் படியாக எதிரிகள் மேலே நெருப்பை உமிழ்கிற யுத்த உன்முகமான திரு வாழியை தரித்த சர்வேஸ்வரனுடைய
-பொன் போலேயும் பூ போலேயும் -ஸ்ப்ருஹணீயமாய் -அதி ஸூ குமாரமான சிவந்த திருவடிகளையே
-அளவுடைய நெஞ்சே -தேவையாக யன்றிக்கே ப்ரீதியோடே கூடிக் கொண்டு அநுஸந்தி —
வாய் மடித்துக் கொண்டு கண் சுழன்று கொண்டு மாற்றார் அழல் எடுத்த சிந்தையராம் படி தழல் எடுத்த போராழி என்னவுமாம் –

—————————————————————————————————

இப்படி ஆஸ்ரயிக்கும் இடத்தில் -பிரதிபந்தகம் உண்டானாலோ என்னில் –பூதனையை முடித்தால் போலே
அவன் தானே அவற்றைப் போக்கும் என்கிறார் –

உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை
அகம் குளிர உண் என்று அளாவி உகந்து
முலை  யுண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும்
அலை பண்பா லானமையால் அன்று—8-

பூதனை யானவள் -யசோதை பிராட்டி ஸ்நேஹிக்குமா போலே ஸ்நேஹித்துப் பரிவு தோற்ற ஒசழக்காக உன்னை உறக்கத்தில்
தூக்கி எடுத்து -பால் விம்மி -ஒளி விடுகின்ற புகரை யுடைத்தான முலையை ஹிருதயம் குளிரும்படி உண் என்று சாதரமாக முலை தந்தாள் –
ஆகையால் நீயும் அவள் முலை தந்த அன்று அலை எறிகிற குணத்தால் பெறாப் பேறு பெற்றால் போலே உகந்து கொண்டு
மெய்யே முலை உண்பாரைப் போலே சீறி யுண்டு அவள் பிராணனை முடித்துப் பொகட்டாய் –
அலை பண்பால்-என்று அழிந்த நீர்மையை யுடையவள் -என்று அவள் மேலே ஏறிடவுமாம் -உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம்
கொள் கொங்கை-அகம் குளிர உண்-என்றாள் –ஆனமையால் நீயும் -அலை பண்பால் உகந்து-முலை  யுண்பாய் போலே
முனிந்து ஆவி உண்டாய் -என்று அந்வயம் –

————————————————————————————————————–

பூதனை படியை அனுசந்தித்த நெஞ்சாறல் தீர -இவ்விஷயத்தில் நிலை நின்ற ப்ரேமமுடைய
யசோதை பிராட்டியும் ஒருத்தியே என்று அவள் ஸ்நேஹத்தைக் கொண்டாடுகிறார் –

அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முலை தந்த இந்நீர்மைக்கு -அன்று
வரன் முறையால் நீ  யளந்த மா கடல் ஞாலம்
பெரு முறையால் எய்துமோ பேர்த்து—9-

அவள் பிணமாய் விழும்படி நீ முலையுண்டு முடித்த அன்று -முலை கொடுத்தவள் பட்டது கண்டு -நாமும் அப்படிச் செய்வது என்
-என்று பயப்படாத யசோதை பிராட்டியானவள் -உனக்கு ஏது விளையாத தேடிற்றோ -என்னும் வயிறு எரிச்சலாலே பரிந்து
தளராதே தறையிலே கால் பாவும் படி தரித்து நின்று முலை தந்த இந்த மஹா ஸ்வபாவத்துக்கு
மஹா பலி நீர் வார்த்துத் தந்த அன்று நீ உடையவனும் இவை உடைமையும் ஆகிற ஸ்ரேஷ்டமான உறவாலே ரக்ஷகனான நீ
அந்நிய அபிமானத்தால் வந்த அழல் மாறும் படி குளிரத் திருவடிகளாலே ஸ்பர்சித்து அளந்து கொண்ட பெரிய கடலாலே
சூழப் பட்ட பூமியானது மறித்துப் பார்க்கும் இடத்தில் -இதில் இது பெரியது என்று பெருக்கப் பார்க்கும் க்ரமத்தாலே ஒக்குமோ
-அதுவும் பெரிய செயல் -இதுவும் பெரிய செயல் -அந்த ஸ்வ பாவத்துக்கு இது ஒப்பாகப் போருமோ என்றபடி –

—————————————————————————————————-

அவளைப் போலே எனக்கு உன் பக்கல் அதி மாத்ர பிராவண்யம் இல்லையே யாகிலும் -ப்ராவண்ய லேசம் தான் ஆகிலும் யுண்டே –
அதுவே பற்றாசாக அடியே பிடித்துக் கண்ட கண்ட தேவதைகள் கால் கீழே தலை மடுத்துப் பட்ட
என் தண்மையைப் போக்கி ரக்ஷிக்க வேணும் -என்கிறார் –

பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண்ணிரந்து
காத்தனை பல்லுயிரும் காவலனே -ஏத்திய
நா வுடையேன் பூ வுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
கா அடியேன் பட்ட கடை———-10-

வளர்த்தின தொட்டிலிலே கிடக்கும் படியான சிறு பிள்ளையாய்க் கொண்டு பெரிய சகடத்தை கட்டு அழியும் படி தள்ளிப் பொகட்டாய் –
சர்வ ரக்ஷகன் ஆனவனே -அந்த ரஷ்ய ரக்ஷக சம்பந்தத்தை புரஸ்கரித்துக் கொண்டு ஆஸ்ரிதனான இந்திரன் இழவைப் பரிஹரிக்கைக்காக
பூமியை அர்த்தித்து வாங்கிக் கொண்ட -திருவடிகளாலே குளிர ஸ்பர்சித்து சகல ஆத்மாக்களையும் ரக்ஷித்து அருளினாய்
-இப்படி ரக்ஷகனான உன்னை சர்வ ஸமாச்ரயணீயன் என்று
அனுசந்தித்து நிற்கையாலே தனக்குத் தானே ஏத்தும் படியான நாவை யுடையேன் ஆனேன் –
காயிகமான அடிமை செய்கைக்கு உபகரணமான புஷ்ப்பங்களை யுடையேன் ஆனேன் –
உனக்கு சேஷ பூதன் ஆகையால் வந்த ராஜ குலத்தை யுடையேனான நான் அநாதி காலம் அர்வாசீநமான தேவதைகளின் கால் கீழே
தலை மடுத்துப் பட்ட தண்மை யை இனி வாராத படி தேவரீர் காத்து அருள வேணும் –

——————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருப்பாவை — கற்றுக் கறவைக் கணங்கள் – — வியாக்யானம் .தொகுப்பு –

August 18, 2015

அவதாரிகை –
எல்லாவற்றாலும் -குலம் ரூபம் குணங்களால் -ஆபிஜாதையாய் இருப்பாள்-ஒருத்தியை எழுப்புகிறார்கள் -ஆபிஜாத்யத்தால் கிருஷ்ணனோடு ஒப்பாள் ஒருத்தி -இவள்-
இப்பாட்டில் ஈச்வரனே உபாய உபேயம் என்று அத்யவசித்து இருப்பார்க்கு மிகவும் ஆதரணீயவிஷயமான அதிகாரியை எழுப்புகிறார்கள்-

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற் கொடியே
புற்றரவல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்

வியாக்யானம் –
கற்றுக் கறவைக் -ஸ சந்தானரான சிஷ்யர்-
எல்லாம் தலை நாகுகளாய் இருக்கை —இதுக்கு ஹேது
நித்ய சூரிகள் பகவத் ஸ்பர்சத்தாலே பஞ்ச விம்சதி வார்ஷிகராய்–இருக்குமா போலே
இப்பசுக்களும் கிருஷ்ண ஸ்பர்சத்தாலே கீழ் நோக்கிப் பிராயம் புகுகை–பகவத் ஸ்பர்சம் இளகிப் பதிக்கப் பண்ணும் இ றே –

கணங்கள் பல -அவர்கள் உடைய பலவான சமூகங்களை
தனித் தனியே எண்ணி முடியாமை அன்றிக்கே–சமூஹங்களும் எண்ணி முடியாது என்னுமா போலே
பல -என்னும் அத்தனை–ஆத்மாக்களுக்கும் தொகை உண்டானால் இ றே–பசுக்களுக்கு தொகை உள்ளது –

கறந்து -அவர்களுடிய அபிநிவேச அனுகுணமாக ஜ்ஞானப் பிரதானம் பண்ணி
ஈஸ்வரன் ஒருவனே சர்வ ஆத்மாக்களுக்கும்–நியமநாதிகளைப் பண்ணுமா போலே
இடைச் சாதியிலே மெய்ப்பாட்டாலே அடங்க கறக்க வல்ல சாமர்த்தியம்–பாலும் நெய்யும் கொண்டு விநியோகம் இல்லாதபடி-சம்ருத்தம் ஆகையாலே–முலைக் கடுப்பு கெடக் கறந்து -என்றுமாம் –

-கற்றுக் கறவை கணங்கள் பல கறக்கும் -கோவலர் தம் பொற் கொடியே – வர்ணாஸ்ரம தர்மம் -அனுஷ்டிக்கும் கோவலர் -பன்மை
அடுத்த பாசுரம் நற் செல்வன் தங்கை -ஒருமை இட்ட கர்மாக்காள் சாஸ்திர விதி பின் பற்றி –
விட்டு -காம கார்யம் விஷயாந்தரங்களில் இழிந்து -ந சித்தி -அவாப்நோயதி -ந சுகம் ந பராம்கதி -கீதை -வேத அத்யயனம் –
எம்பெருமானார் -சந்த்யா வந்தனம் –ஊருக்கு எல்லாம் ஒரே கண்ணன் போலே இடைக் குலத்துக்கு ஒரே பெண் பிள்ளை –
பருவம் -பதி சம்யோக -ஜனகன் கப்பல் கவிழ்ந்தால் போலே -சோகச்ய பாரம் கத -சீதை பிராட்டி 6 வயசில் –
பெண்ணை தமப்பன் மடியில் வைத்து கல்யாணம் –அவனே நோற்று என்னை பெறட்டும் என்று கிடக்குமவள் இந்த பொற் கொடி-

கன்றாகிய கறவை கற்று கறவை –சிறுமை எருமை சிற்றெருமை –கறக்கும் பருவமாக இருக்கச் செய்தே கன்று நாகு பசுக்களாக
முக்தர் பஞ்ச விம்சதி பிராயர் கீழ் நோக்கி வயசு புகுமா போலே-இவையும் இளகிப் பதித்து இருக்கும்
அவர்கள் பரதவ அனுசந்தானத்தாலே-இவை மனுஷ்யத்வ பரனான கிருஷ்ணன் ஸ்பர்சத்தாலே-அனுபவம் ஆழ மோழையாக செல்ல –
முலை சரிந்த பெண்ணை பாராத ராஜ குமாரனை போலே–கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -திரு நெடும் தாண்டகம்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -நம் ஆழ்வார்–திவத்திலும் -திவத்தை காட்டிலும் -பரம பதத்தை காட்டிலும்–திவதில் சேர்ந்தாலும் -அங்கும் பசு
சிம்ஹாசனம் இருந்து டியோ டியோ -நித்ய சூரிகள் என்ன கேட்பார்களாம்
பசு மேய்க்க மந்த்ரம் சொல்வான்–சப்த மாதரம்–ஹாவு ஹாவு சொல்கிறீர்களே அதுக்கு என்ன அர்த்தம் ஆஹா ஆஹா சந்தோஷம் வெளிப்பாடு –

ரஷ்ய வர்க்கத்தில் தன் கை கால் நீட்டாதவரையே அவன் இனிது உகப்பான் -சர்வ தர்மான் பரித்யஜ்ய -லஜ்ஜை சுய வியாபாரம் சக்தி விட்டு
இரு கையை விட்டேனோ திரௌபதியை போலே-கஜேந்த்திரன் -ஆதி மூலமே கதறின பின்பே ஓடி வந்தான்
பசுக்கள் புல் மேய அறியும்–இவை தீர்த்தம் குடிக்க தெரியாமல்-நதி கரைக்கு -சென்று
திரு கடல் மலை -கன்று மேய்த்து -வல்லான் –-தடம் பருகு கரு முகில்-வெறும் மேகம் இல்லை –
வரை மீ கானில் தடம் -மலையில் தாழ் வரையில் தீர்த்தம் பருகும் மேகம்-பெரிய திரு மொழி -2-5-3- பாசுரம் –
வேத பரிஷை -கல்லை அடுக்கி -குழந்தை -அந்த பஞ்சாயதி சொல்ல வேண்டுமாம்
பட்டர் –கன்று மேய்த்த விளையாட வல்லான்-இத்தையும் சேர்த்து வியாக்யானம்
மலை தாழ் வரை தடாகம் —தாகம் -கன்று குட்டி தீர்த்தம் உன்ன தெரியாதே-உறிஞ்சி -ச்ரேஷ்டன் செய்வதை லோகத்தார் பண்ணி –
இதை அறிந்து கீதையிலும் அருளினான் –இட்டமான பசுக்களை இனிது மறுத்தி நீரூட்டி-இஷ்டமான பசு கன்று
கன்றுகள் கிடைத்தால் பசுக்களை நித்ய சூரி போலே நினைப்பானாம்
காளாய் -இளமை யௌவனம்
அவற்றை இளகிப் பதிப்பித்து அத்தை கண்டு தானும் இளகி-பாலம் –தசரதன் -வா போ -ராமன் த்ர்ஷ்ட்வா புனர் யுவா பவ –
முன்னொட்டு கொடுக்க வற்றாய்-இவனுக்கு கண் ஜாடை காட்டலாம் படி-புக்க இடத்தே புக்கு -இவனுக்கு ஒதுங்க நிழல் கொடுத்து –
கறவைகள் பின் சென்று -புல் தேடி அது போக –எங்களுக்கும் வழி காட்டி போகுமே -அவ்வளவே எங்கள் ஞானம்
கணங்கள் பல –
பசு பசுக்கள் பசு -கணம் கணங்கள் கணங்கள் பல -என்னவே முடியாதே-சமூகங்களும் என்ன முடியாதே
ரத குஞ்சல வாஜி மான் தசரதன் -சைன்யம் போலே-நாரா-ஆத்மா சமூகங்கள் போலே-ரின்க் ஷயா அழிக்க கூடுய வஸ்து
நர — அழியாத வஸ்து–நர நாரா நாரா பல நரங்கள்–கல்யாண குணங்களை எண்ணினாலும் இவற்றை எண்ண முடியாதே

தேங்காதே புக்கு இருந்து வாங்க
கறந்து -ஒருவனே–வேதம் அடைய அதிகரிக்குமா போலே
ஷத்ரியன் யுத்தம்–ஈஸ்வரன் ஒருவனே நாம ரூபம் கொடுப்பது போலே–ஜாதி மேம்பாட்டாலும் -உசித தர்மம் –
அரியன செய்ய வல்லோம் -அவன் இடம் சென்று–உன்னை அல்லது அறியாத எங்களுக்கு நீயே அருள்
ஜாதி உசித வ்ருத்தி
கற்று கற்பித்து -பிராமணர் —மோஷம் சாதனம் இல்லை–பஞ்ச தந்திர கதை கழுதை நாய் பேச–கூடவே சென்று
மூட்டை சுமந்து பாரம்–திருடன் வர காவல் தூங்காமல்–கார்யம் மாத்தி பார்க்கலாம்–திருடன் வர கழுதை கத்த சாத்தி படுதுண்டான்
திருடு போக–விபரீதம் அது அதன் கார்யம் செய்யாமல்

ஜாதியில் உயர்ந்தது தாழ்ந்தது இல்லை
தொண்டர் குலம்–ஏகலைவன் துரோணர் -பிறவியில் ஷத்ரியனுக்கு பாடம் சொல்லுவேன் -மேலே கதை-ஏகலைவன் தபஸ்–அடுத்த ஜன்மம் சத்ரியன் ஆக–வரம் பெற்றான்–துரோணர் college pirincipal-இப்பொழுது வேடனாக இருந்தால் sheduled tribe கற்று கொடுப்பேன் -வேடிக்கை கதை seat கிடைக்கவில்லையே –
நாய் வீட்டு நாய் போலீஸ் ஸ்டேஷன் நாய் வெவேற கார்யம் ஜாதி உசிதமான கார்யம்

செற்றார் –
இவர்களுக்கு சத்ருக்கள் ஆகிறார்கள்–கிருஷ்ணன் உடைய பெருமை பொறாதவர்கள் –திறலழியச்
தேவர்களும் எனக்கு எதிர் அன்று -என்று இருக்கும் கம்சாதிகளுக்கு–புகுர ஒண்ணாத மிடுக்கை உடையவர்கள் –
செற்றார் உண்டு-உபாயாந்தர பரரும்-உபேயாந்தர பரரும்–அவர்களுடைய திறல் உண்டு –ஸ்வார்த்த பரதை-அழிய=நசிக்கும்படி

சென்று செருச் செய்யும் -தாங்களே விஜய யாத்ரையைப் பண்ணி அவர்களோடு வர்த்திக்கிற -எதிரிகள் வந்தால் பொருகை அன்றிக்கே–இருந்த இடங்களிலே சென்று பொருகை —சக்கரவர்த்தி திருமகனைப் போலே இவர்கள் வீரம் –

செற்றார் திறல் அழிய சென்று -விரோதிகள் இருக்கும் இடம் – கம்சனே நுழைய முடியாத
அசுரர்களும் மாறு வேஷத்தில் கப்பம் ஒரு நாழி பாலில் வீணாக போவதை கொடுக்க
கஞ்சன் கடியன் கரவு -கப்பம் வரி எட்டு நாள் கைவலத்து யாதும் இல்லை -நீயே உண்டாய்-படை எடுத்து போக வில்லையே வீரம் அறிந்து –

குற்றமொன்றில்லாத -பூர்வ உத்தர ராகங்களில் ஒன்றும் இல்லாத –
எடுத்து வரப் பார்த்து இருக்கும் குற்றம் இல்லை –கையில் ஆயுதம் பொகட்டவர்களை எதிர்க்கும் குற்றம் இல்லை -என்றுமாம்
அழிய செய்யா நின்றார்கள் என்று கிருஷ்ணனுக்கு முறைப் பட்டால்–செய்தாரேல் நன்று செய்தார் -என்னும்படி பிறந்தவர்கள் என்றுமாம்
அவன் படி அறிந்து நடப்பவர்கள் –

குற்றம் ஒன்றும் இலாத-செற்றார் கிருஷ்ணன் மினுக்கம் பொறாதவர்கள் அங்கதன் – -நம் விரோதி கோஷ்டி வந்தான் என்றானே –
சம்ருத்தி பொறாதவர்-சத்ருக்கள் பாகவத விரோதிகள் இவனுக்கு
விதுரன் திருமாளிகை அமுது செய்து–பீஷ்ம த்ரனவ் அதிகிரமம் ஞானம் அந்தணர் குலம் இருவரும் மாம் ச ஏவ என்னையும் ஒட ஐஸ்வர்யா வ்ருத்தர்
கிம் அர்த்தம் புண்டரீகாஷா-வைய வந்த வாயால் உண்டதால் விகசித்த திருக் கண்கள்
விரோதிகள் வீட்டில் சாப்பிட கூடாது சாதம் போடக் கூடாதே -பாண்டவா -த்வேஷிக்கிராய் மம பிராணா நீ விரோதியாக நினைக்க வில்லை நான் நினைக்கிறன்
சாதி சனத்தை நலியும் தீய புஞ்சி கம்சன் மாயன் ராவணன் செவ்விப் போரை அறியாத பையல்
கம்சன் -ஒத்து சொல்லும் ப்ரஹ்ம-பச்ம தாரி ருத்ரன்
apasaras மெய்க்காட்டு கொள்ளும் attendance எடுப்பவர் இந்த்ரன் -அந்ய பரனாய் கிடந்தது உறங்கும் விஷ்ணு யாரும் சமம் இல்லை அஹங்காரம்
சென்று செருச் செய்யும் உத்தமன் -சக்கரவர்த்தி திரு மகன் போலே எதிரிகள் ஆயுதம் போகட்ட பின்பு யுத்தம் செய்யும் குற்றம் இல்லை
அடை மதிள் படுத்தின பின்பு எதிரிகளை -குற்றம் இல்லாத நாங்கள் வர உறங்குவதோ
விரோதிகள் போலே அந்தபுரத்திலும் துராசாராம் -என்னை வணங்கி சாது -இழி குலத்தவர் ஆகிலும் என் அடியார்க்க ஆகில் கொள்மின் கொடுமின் –
பூர்வ வ்ருத்தம் பகவத் பக்தி வந்த பின்பு செய்ய மாட்டான் – என்னுடைய வழி பாட்டிலோ நிலை நின்றவனாய் துராசாரம் விட்டவனாய்
நிர்தோஷம் ஆகிறான் – ஜனக குலத்துக்கே பெருமை – ஏழ் படி கால் தொடங்கி
-கொடி-வளர்ந்ததும் உபக்னம் வேண்டுமே – பெண்கள் பருவம் -புருஷன் -மரம் பதி சம்யோகம் -ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகிலேன்
மால் தேடு ஓடும் மனம் ஆசார்யர் பாகவதர் சுள்ளுக் கால் நட்டுவாரைப் போலே – கொள் கொம்பு கிருஷ்ணன்

கோவலர் தம் பொற் கொடியே-
ஊருக்காக ஒரு பெண் பிள்ளை —பொற் கோடி தர்சநீயமாய் இருக்கையும் பார்த்தா வாகிற கொழு கொம்பை ஒழிய ஜீவியாமையும் –
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னால் அல்லல் அறிகின்றிலேன் யான் -என்று இ றே இருப்பது –
அவனே உபாய உபேயம் என்று அத்யவசித்து இருப்பவர்களுக்கு-ஸ்ப்ருஹ ணீ யமான பொற்கொடி போன்ற திரு மேனியை உடையவளே
ஜ்ஞான வைச்யத்தை உடையவளே -என்றுமாம் பக்தியை சொல்லி மேலே

புற்றரவல்குல்-ஸ்வ விஷயத்தில் படிந்த பரம பக்தியை சொல்கிறது
தன்னிலத்தில் சர்ப்பம் போலே–ஒசிவையும் அகலத்தையும் உடைய அல்குலை உடையாய்
இவர்கள் இத்தனை சொல்லுவான் என் என்னில்–பெண்களை ஆண்களாக்கும் அழகு இ றே–அவன் ஆண்களை பெண் உடுக்கப் பண்ணுமா போலே –
புற்றரவு அல்குல் -உடம்பை மெல்லியதாக ஆக்கிக் கொள்ளும் பாம்பு -ஸ்திரீ லஷணம்-உடுக்கை போலே இடை -கண்ணில் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் -கம்பர்
வாராக வாமனனே அரங்கா வட்ட நேமி வலவா ராகவா உன் வடிவு கண்டால் மன்மதனும் மடவாராக ஆதரம் செய்வன் -திரு வரங்கத்து அந்தாதி
பெருமாள் ஆண்களையும் பெண்ணுரு உடுக்கப் பண்ணுமா போலே பெண்களை ஆண்களாக்குகிறது இவளுடைய அல்குல் –

புனமயிலே –
தன்னிலத்திலே மயில் —கிருஷ்ணனையும் தங்களையும் பிச்சேற்ற வல்ல–அளகபாரத்தை உடையாளாகை-
பொற்கொடியே -என்கையாலே சமுதாய சோபையை சொல்லிற்று மேல் விசேஷண த்வயத்தாலும் அவயவ சோபையைச் சொல்லுகிறது –
அளகமென்று-ஸ்வா பதேசத்தில் வ்யாமோகத்தை சொல்லுகையாலே–வியாமோகம் தான் இதர விஷய வைராக்ய பூர்வகமாக
ஸ்வ விஷய விரக அசஹிஷ்ணுவான–பிரேம ரூப ஞானம் ஆகையாலே புன மயிலே என்று பரம பக்தியை -உடையவளே என்கிறது –

புன மயிலே -அழகான தன்னிலத்தில் வர்த்திக்கும் -சஜாதீய பெண்களும் நாயக பாவத்தில்
த்ரௌபதி ஸ்திரீகள் அனுபவிகிக்க ஆணாக பிறவாமல் போனோமே ரிஷிகள் மனசா ஸ்திரீ -சக்கரவர்த்தி பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரினாம்
ரிஷிகள் கோபிகளாக தோகை மா மயில் சமுதாய சோபை பொற் கொடு புற்றரவு லாவண்யம்

போதராய் –
நாங்கள் நிறக்கும்படி புறப்படாய்- தாரகமாக நாலடி நடந்து பின்னே சென்று நடை அழகு காண கிருஷ்ணனை கூட்டி செல்ல வேண்டாம்
தண்டகாரண்யம் சோபை ஆக்கினது போலே புனத்தை மயில் சிறப்பிக்கும் ஸ்திரீ வனத்தை நீ சிறப்பிக்க வேண்டும்

புன மயிலே போதராய் -இந்த ஸ்திரீ வனத்தை சிறப்பிக்க வாராய்

நான் புறப்பட எல்லாரும் வந்தாரோ -என்ன –சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து –
சுற்றத்து தோழிமார் -என்கிறது-இவ் ஊர் அடங்க இவளுக்கு உறவு முறை ஆகையாலே-உனக்கு பகவத் அனந்யார்ஹ சேஷ பூதரானபாகவதர் எல்லாரும் வந்து –
உறவினரும் தோழி அனைவரும் இவள் தன்னை போலே அநந்ய பிரயோஜனர் கைங்கர்யம் செய்யும் கோஷ்டி

நின் முற்றம் புகுந்து -பரம பிராப்யமான நின் முற்றத்திலே புகுந்து –
எங்களுக்கு பிராப்யமான முற்றத்திலே புகுந்து –இவர்களுக்கு பிராப்யமானபடி என் என்னில் –
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர் -என்றும் —முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டி -என்றும் –
சேஷியானவனுக்கும் பிராப்யமான முற்றம் ஆகையாலே–சேஷ பூதைகளான எங்களுக்கு சொல்ல வேணுமோ –
விசாலமான பிராப்ய ஸ்தானம் முற்றம் புகுந்து பரமபதம் முற்றத்தூடு புகுந்து முறுவல் செய்து சேஷிக்கு பிராப்யம் ஏக ரூபமாய் உள்ளவனையும் முறுவல் –

புகுந்து கொள்ளப் புகுகிற கார்யம் என்ன -என்ன -முகில் வண்ணன் பேர் பாடச் –
நீ உகக்கும்–அவன் அழகிலும்–ஔதார்யத்திலும் ஈடுபட்டு–அவன் திரு நாமத்தை பாடச் செய்தேயும் –
பரம உதாரனும் ஸ்ரமஹரமான வடிவையும் உடைய அவனுடைய திரு நாமத்தை நீ புறப்பட்டு வருவுதி என்று பாட –
முகில் வண்ணன் பேர் பாட -மேக சியாமம் எனக்கே தன்னை தந்த ஔதார்யம் இரண்டையும்
உன் பக்கல் நீ உகக்கும் அவன் வடிவு ஔதார்யம் பாடியும்

சிற்றாதே பேசாதே-பரக்க ஒரு வியாபாரத்தையும் பண்ணாதே வார்த்தையும் சொல்லாதே –
முகில் வண்ணன் என்றவாறே–அவ்வடிவை நினைத்து பேசாதே கிடந்தாள்
சிற்றாதே -சிற்றுதல் -சிதறுதல் —உணர்ந்தமைக்கு அடையாளமான சேஷ்டியைப் பண்ணாதே–இவள் சேஷ்டிதையும் வார்த்தையும்
தங்கள் கண்ணுக்கும் சேவிக்கும் போக்கியம் ஆகையாலே-இன்னாதாகிறார்கள்
சிற்றாதே அங்கங்கள் அசையாமல் -சேஷ்டிதம் வாக்கு – கண்ணுக்கும் காதுக்கும் விருந்து வேண்டுமே

செல்வப் பெண்டாட்டி நீ
உன்னோடு கூடுவது எங்களுக்கு எல்லா ஐஸ்வர்யமுமான நீ–கிருஷ்ண குண அனுசந்தத்தாலே புஷ்கலையான நீ -என்னவுமாம் –
இங்கே கூடு பூரித்துக் கிடந்ததோ என்ன –இல்லையாகில் –
செல்வப் பெண்டாட்டி--உன்னை நீ பிரிந்து அரியாய் உன்னுடன் கூடினால் எல்லா ஐஸ்வர்யமும் உன்னுடையா உத்தேச்யம் உனக்கு கிடைக்க
என்னுடைய உத்தேச்யம் எங்களுக்கு வேண்டாவோ

பின்னை எற்றுக்கு உறங்கும்--கூடு பூரித்து பூர்ண அனுபவம் – அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ

எற்றுக்குறங்கும் பொருள்-
எங்கள் பாடே புறப்படாதே உறங்குகைக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ —அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று
திரளோடு அனுபவிக்கும் அனுபவத்தை விட்டு–கைவல்யம் போலே கிடக்கிற கார்யம் என் -என்னவுமாம்
உறங்கும் பொருள் எற்றுக்கு உறங்குவதற்கு பிரயோஜனம் ஏது – எங்களை அகற்றுகையே பிரயோஜனமா –
இன்னம் சம்சாரிகளை சேதனர் ஆக்குகையே பிரயோஜனமா சொல்லாய் -என்கிறார்கள் –

எற்றுக்குறங்கும் பொருள்-பகவத் குணங்களை ஒரு மடை செய்து புஜிக்கை யாகிற சம்பத்தை உடைய நிருபாதிக பார தந்த்ரியம் உடையவளே -நீ –
உன்னுடைய உத்தேச்யத்தைப் பாராதே —எங்களுடைய ஆற்றாமையைப் பாராதே–கிருஷ்ணனுடைய நிரதிசய போக்யதையைப் பாராதே
எதுக்காக கிடக்கிறாய்

என்று இருக்கும் படி அழகிதாக இருந்தது–அவனை தனியாக அனுபவிப்பது கைவல்யம்–எங்கள் ஆற்றாமை பாராதே
உன்னுடைய உத்தேச்யம் பாராதே–கிருஷ்ணன் நிரதிசய போக்யதை–ஒன்றையும் பாராமல்
அவனை உகப்பிக்க பார்த்தாய் ஆகில்–அவன் உகந்தார் எங்களை உகப்பிக்க வேண்டாமோ-சு பிரயோஜன கைங்கர்யம் போலே கூடாதே
மற்றை நம் காமங்கள் மாற்று —உன்னையும் அவனையும் பொருந்த விட நாங்கள் வேண்டும் -கடகர் ஸ்தானம் பாகவதர்
எடுத்து கை நீட்ட நாங்கள் வேணும்–விஸ்லேஷ தசையில் -போதயந்த பரஸ்பரம் வருத்த கீர்த்தனம் பண்ணி தரிப்பிக்கை நாங்கள் வேணும்

இப்பாட்டில்-ஜாதி உசிதமான தர்மத்தை-சாதனா புத்தி அன்றிக்கே கைங்கர்ய புத்யா அனுஷ்டித்தால் குற்றம் இல்லை என்கிறது-கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து குற்றம் ஓன்று இல்லாத -என்கையாலே-

பொருள்மாலை -சாற்றி அருளுகிறாள்
எற்றுக்கு உறங்கும் பொருள் தமோ குணத்தால் சம்சாரிகள் உறக்கம் யோக நித்தரை பாற் கடல் நாதன்-
நடந்த கால்கள் நொந்தவோ மடியாது –துயில் மேவி மகிழ்ந்தது அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ
அன்று இப்படி தான் நீண்டு தாவிய அசைவோ தொல்லை மாலைக் கண்னாரா கண்டு காதல் உற்றார் கண்கள் துஞ்சாரே-சதா பஸ்யந்தி சூரய-எற்றுக் குறங்கும் பொருள்

எம்பார் உகந்த பாசுரம் –
திருமலை நம்பி கால ஷேபம் கடை போட்டு
2-2- பரத்வம் -பூவில் நான் முகனைப் படைத்த தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமே —
தகாது தகாது இனி அங்கீகரித்து அருள வேணும் -ஸ்ரீ சைல பூர்ணாயா -ஸ்ரீ ராமாயணம் -சம்மானம் எம்பாருக்கு – ஆசார்யாய பிரியம் தனம் நான் தர எமபாரைத் தந்து அருள வேணும் -கோவிந்தர் -எம்பார் -உடம்பு தேமல் – தேசாந்தாரம் இருக்க மனம் இருக்க மாட்டாதே -விற்ற பசுவுக்கு புல் இடுவார் உண்டோ -கதவையும் திறக்காமல்
இரண்டு நாள் காத்து மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் – சௌக்யமாக இருக்கிறாயா கூட கேட்க மாட்டாயா மாமா

நாராயணன் -திருப்பாவையில் மூன்று நாராயணனே நமக்கே நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் நாற்றத் துழாய் முடி நாராயணன் இங்கும்-துழாய் முடி நாராயணன் ராமன் – சீதவாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் -ஒரே தர்மி ஐக்கியம்
திருத் துழாய் -அணைத்து புஷ்பங்களுக்கும் உப லஷணம் நீ பிறந்த திரு வோணம் நீராட வேண்டும் ரோஹிணி – திருவோணம் என்று ஏழு நாள் –
எந்தை -திருவோணத் திரு விழாவில் அந்தியம் போது அரி உருவாக்கி சுவாதி –
சரவணம் நஷத்ரம் விஷ்ணு தேவதா சரவணா அம்சம் எந்த புஷ்பம் சூடிக் கொண்டாலும் திருத் துழாய் அம்சம் –
ஆளவந்தார் -உணர்த்தப்படுகிறார்-எமுனைத் துறைவன் வானமா மலை ஜீயர் கோவலர் தம் பொற் கொடி-சுற்றத்தார் தோழிமார் ஐஞ்சு சிஷ்யர்கள் உண்டே–பவிஷ்யதா ஆசார்யர் ஆ முதல்வன் கடாஷிக்க வேண்டாவோ
கா பிஷா தர்க்க பிஷா – குற்றம் ஒன்றும் இல்லாத நஞ்சீயர் ஆக்கி மைப்படி மேனியான் -நஞ்சீயர் பட்டருக்கு எடுத்துக் காட்டி –
ஞான பக்தி விரக்தி – புற்று அரவு அல்குல் -ஆசார்ய பரமான அசிந்த்ய அத்புத ஞான பக்தி விரக்த்தியா-அகாத பகவத் பக்தி சிந்தையே-நாதமுனியை கொண்டாடுகிறார் ஆளவந்தார்-

கற்று கறவை கணங்கள்
கற்று -சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் ஸ்ருதிகள் நான்கும் எல்லை இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் –
பஞ்சாச்சார்ய பதாச்சித- பெரிய நம்பி -சமாஸ்ரயணம் -மந்த்ரார்த்தம் –திருக் கோட்டியூர் நம்பி -ரகச்யார்த்தம்
திருமலை ஆண்டான் -திருவாய்மொழி திருவரங்க பெருமாள் அரையர் -ஆளவந்தார் ஆழ்வார் -அருளிச் செயல்கள்
கோ வல்லவர் -மகா வித்வான்கள் -அவர் தம் பொற் கோடி கோ அல்லர் -ஸ்வ தந்த்ரர் அல்லர்-

பூதத் ஆழ்வார்-
திருக் கோவலூர்–மூவரும் நடு நாயகம்–கோல் தேடி -கொடியாக சொல்லிக் கொண்டவர்
செற்றார் -ஓடித் திரியும் யோகிகள் மூவரும்–கன்றாகிய கறவை சின்ன பாசுரம் வெண்பாவில் வேதாந்த அர்த்தங்களை கொடுத்து
குற்றம் ஓன்று இல்லாத கர்ப்ப வாசம் இல்லாத அயோநிஜர்
ஞானம் பக்தி வைராக்கியம்
இடை–புன மயில் கடல் கரை பிரதேசம் திரு கடல் மலை
சுற்றத்தார் பொய்கை பேய் ஆழ்வார்கள் –தோழி மற்ற ஆழ்வார்கள்
முகில் வண்ணன் முதலில் இவர் பாட–மேகம் கண்டால் மயில் சந்தோஷிக்கும்–யோகி நிலை மாறி சிற்றாதே பேசாதே
தீர்தகரராம் திரிந்து
கோவலர் தம் பொற் கொடியே-வல்லி-கொடி போலே
ஆழ்வார்களை காட்டில் ஆண்டாளுக்கு ஏற்றம் பெண் தன்மை ஏறிட்டுக் கொள்ள வேண்டாமே
-பள்ளமடை காதல் சஹஜம் -மணி வல்லி பேச்சு வந்தேறி அன்று
பாரதந்த்ர்யம் அசாதாராண லஷணம் ஸ்திரீகளுக்கு கொண்டானை அல்லால் அறியா குலமகள் போலே –
புன மயிலே போதராய் பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரினாம் -இவர்களையும் இப்படி பண்ணும் அழகு
தண்டா பூபிகா நியாயம் அபூபிகா பாஷனம் -கைமுதிக நியாயம்
எம்பார் -தாசிகளுக்கு சொல்லிக் கொடுக்க எம்பெருமான் – அறையில் ஆடி அம்பலத்தில் ஆட -காவேரி செல்லும் பொழுது கேட்டு பாடி
பற்பம் என திகள் பல்லவமே விரலும் –இல்லை எனக்கு எதிர் -பாட்டு பாட –
வாக் மாத்ர்யம் -வடிவை ஆசை உடன் நோக்குமவன் –
பீஷ்ம துரோணர் மாம் ஏவ அதிக்ரமித்து விதுர போஜனம் – மம பிராணா பாண்டவ -செற்றார் திறல் அழிய-சென்று

நச புன ஆவர்த்ததே -சொல்லி இருப்பதால்
பகவானை சொல்ல விசேஷணங்கள் சொல்லி ஸ்ரீ பாஷ்யம்
உயர்வற உயர்நலம்
பக்தி ஒன்றாலேயே –
ஞானம் பக்தி விரக்தி -மால் பால் மணம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட்டு
சட்டி சுட்டதால் கை விடுவான்
ராஜ்ஜியம் அபிஷேகம் -தசரதர் வயற்றில் பிறந்து –
பரமாத்மானோ விரக்தய -விஷயாந்தர
புற்றரவல்குல் நடுவான பாகம் பக்தி
இத்தால் தான் ஞானம் விரக்தி
புன மயிலே -ஆசார்யர் உள்ள இடம்
யாத்ரா அஷ்டாஷார சம்சித்தா -மகா பாஹோ ந சஞ்சரித்து வியாதி திருபிஷா பஞ்சம் திருடன்
விசாதி பகை -தீயன வெல்லாம் நேமிப்பிரான் தமர் போந்தார் -நம் ஆழ்வார்
சுற்றத்தார் தோழிமார் தேக ஆத்மா பந்துக்கள் இருவரும் உத்தேச்யம்
குற்றம் ஓன்று இல்லாத -குருக்கத்தி தாமரை அல்லி பூ –
யோனி குற்றம் இல்லாத –
தீர்தகரராய் திரிந்து –
கோவலர்
கோ பிறப்பு அல்லர் தாச பூதர் பரதந்த்ரர்
கோபாலர் இடையர்
திருக் கோவலரில் தம் பொற் கொடி
மூவரில் -இவர் கொடி
கோல் தேடி ஓடும் கொழுந்தே போலே மால் தேடி ஓடும் மனம் இவர் அருளி –
ஸ்ரீ ரெங்க கல்ப வல்லி -ஸ்ரீ ய பதி கல்பக வ்ருஷம்
பக்தி மிக்கவர் -அன்பே தகளியே
எந்தன் அளவல்லால் யான் உடைய அன்பு -என்றார் இவர்

முற்றும் வணங்கும் முகில் வண்ணன் –இருந்தாரை ஏற்றும் என் நெஞ்சு பாண்டவ தூதர் -பூதத் ஆழ்வார்
சிற்றாதே பேசாதே சிலை இலங்கு பொன் ஆழி வாயைத் திறவாமல் சப்தோச்மி வேத வாக்கியம்
கண்டால் கொலோ கேட்டவனாலே பேச முடியவில்லை கண்டவள் பேசி தத்வ தர்சனி – செல்வப் பெண்டாட்டி –

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்  திருவடிகளே சரணம் –

முதல் ஆழ்வார்களும் கண்ணனும் –

June 2, 2015

முதல் திருவந்தாதி

அசைவில் சீர்க் கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத வண்ணன் -7
பேய் முலை நஞ்சு ஊணாக வுண்டான் –11
நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறி வெண்ணெய் தோன்ற வுண்டான் வென்றி சூழ் களிற்றை யூன்றி
பொருது வுடைவு கண்டானும் புள் வாய் கீண்டானும் மருதிடை போய் மண்ணளந்த மால் -18
கடை வெண்ணெய் உண்டாயை தாம்பே கொண்டார்த்தழும்பு-22
தழும்பிருந்த தாள் சகடம் சாடி தழும்பிருந்த பூங்கோதை யாள் வெருவ -23
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி யுரலோடு அறப் பிணித்த நான்று -குரலோவாது
ஏங்கி நினைந்து அயலார் காண விருந்திலையே ஒங்கோத வண்ணா வுரை -24
மலையால் குடை கவித்து மாவாய் பிளந்து சிலையால் மராமரம் ஏழ் செற்று -கொலையானைப்
போர்க்கோடு ஒசித்தனவும் பூங்குருந்தம் சாய்ந்தனவும் கார்க்கோடு பற்றியான் கை -27-
பேய்த்தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேரமர்க்கண் ஆயத்தை முலை தந்தவாறு -34
வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மாலுகந்த ஊர் -37-
இடந்தது பூமி எடுத்தது குன்றம் கடந்தது கஞ்சனை முன்னஞ்ச-39-
அரவ மடல் வேழம் ஆன் குருந்தம் புள்வாய் குரவை குடமுலை மற்குன்றம் கரவின்றி
விட்டிறுத்து மேய்த்தொசித்து கீண்டு கோத்தாடி உண்டு அட்டு எடுத்த செங்கண் அவன் –54 –
நேரே கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் –56
புனர் மருதினூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து மணமருவ மால் விடை யேழ் செற்று –62
வரைகுடை தோள் காம்பாக ஆ நிறை காத்து ஆயர் நிறை விடை யேழ் செற்றவாறு என்னே –83-
நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப் பாயும் பனி மறைத்த பண்பாளா -86
கனிசாயக் கன்று எறிந்த தோளான் கணை கழலே காண்பதற்கு நன்கறிந்த நா வலம் சூழ் நாடு –87-
திருமாலே ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள் மண்ணை யுமிழ்ந்த வயிறு –92-
ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் என்னெஞ்சே
ஓரடியின் தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்து வை –100-

——————————————————————————————————————————————————–

இரண்டாம் திருவந்தாதி –

உகந்து உன்னை வாங்கி ஆய்ச்சி உனக்கு இரங்கி நின்று முலை தந்த இந்நீர்மைக்கு அன்று
வரன் முறையால் நீ யளந்த மா கடல் சூழ் ஞாலம் பெரு முறையால் எய்துமோ பேர்த்து –9
பெர்த்தனை மா சகடம் பிள்ளையாய் –10-
திரிந்தது வேஞ்சமத்துத் தேர் கடவி –15
வழக்கு அன்று கண்டாய் வலி சகடம் செற்றாய் வழக்கு என்று நீ மதிக்க வேண்டா
குழக்கன்று தீ விழாவின் காய்க்கு எறிந்த தீமை திரு மாலே பார் விளங்கச் செய்தாய் பழி–19-
கரியதோர் வெண் கொட்டு மால் யானை வென்றி முடித்தன்றே தண் கொட்டு மா மலரால் தாழ்ந்து –22
தாழ்ந்த விளங்கனிக்குக் கன்று எரிந்து வேற்று உருவாய் ஞாலம் அளந்தடிக் கீழ்க் கொண்டவவன் -23
மகனாகக் கொண்டு எடுத்தாள் மாண்பாய கொங்கை அகனாற யுன்பன் என்று உண்டு
மகனைத் தாய் தேறாத வண்ணம் திருத்தினாய் தென்னிலங்கை நீராக வெய்து அழித்தாய் நீ -29-
அறியாமை மண் கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயன் என்று எண் கொண்டு என்னெஞ்சே இரு –36

ஆயவனே யாதவனே என்று அவனை யார் முகப்பும் மாயவனே என்று மதித்து –50-
ஏரின் பெருத்த எருத்தம் கோடொசியப் பெண் நசையின் பின் போய் எருத்து இறுத்த நல்லாய ரேறு –62
கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே இதயம் இருந்தவையே எத்தில்
கதையும் திரு மொழியாய் நின்ற திருமாலே உன்னைப் பரு மொழியால் காணப் பணி –64-
கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து அதவிப் போர் யானை யொசித்து–89-
அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும் படியான் கொடி மேல் புள் கொண்டான் –92
கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான் வளர்ந்தது உண்டது உலகு ஏழும் உள்ளொடுங்க
கொண்டு குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம் இடமாகிக் கொண்ட இறை –98
மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே
மேலால் விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன் அளவன்றால் யானுடைய அன்பு –100-

——————————————————————————————————————————————————————-

மூன்றாம் திருவந்தாதி –

மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண் துழாய் கண்ணனையே காண்க நங்கண் -8
மொய் குழல் ஆய்ச்சி இழுதுண்ட வாயானை மால் விடை யேழ் செற்றானை வானவர்க்கும் சேயானை நெஞ்சே சிறந்து –25-
அடைந்தது அரவணை மேல் ஐவர்க்கே அன்று மிடைந்தது பாரத வெம்போர்
உடைந்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்றுப் பேய்ச்சி பாலுண்ட பிரான் -28 –
பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே
வாய்த்த இருளார் திரு மேனி இன்பவளச் செவ்வாய் தெருளா மொழியானைச் சேர்ந்து –29
மனமும் இடமாகக் கொண்டான் குருந்து ஒசித்த கோபாலகன் –32-
கேடில் சீரானை முன் கஞ்சைக் கடந்தானை நெஞ்சமே காண்–34-
மின்னை உடையாகக் கொண்டு அன்று உலகளந்தான் குன்றம் குடையாக ஆ காத்த கோ –41-
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் -42-
சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து புனமேய பூமியதனை தனமாகப் பேரகலத்துள் ஒடுக்கும் பேரார மார்வனார் –43-
நீ யன்றே மா வா யுரம் பிளந்து மா மருதினூடு போய் தேவாசுரம் பொருதாய் செற்று –48-
சென்று ஏற்றுப் பெற்றதுவும் மா நிலம் பின்னைக்காய் -49-
அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான் அவனே அணி ,மருதம் சாய்த்தான் அவனே கலந்கப் பெரு நகரம் காட்டுவான் –51
தாளால் சகடம் உதைத்துப் பகடுந்தி நீளா மருதிடை போய்க் கேழலாய் –54-
பெற்றம் பிணை மருதம் பேய்முலை மாச்சகடம் முற்றக் காத்தூடு போயுண்டுதைத்து
கற்றுக் குணிலை விளங்கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப் பணிலம் வாய் வைத்துகந்தான் பண்டு –60-
அரியுருவமாயப் பிளந்த அம்மான் அவனே கரியுருவம் கொம்பு ஒசித்தான் காய்ந்து -65-
மேல் நாள் விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு -68
மேல் நாள் குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று –71
வெங்கொங்கை யுண்டானை மீட்டு ஆய்ச்சி யூட்டுவான் தன கொங்கை வாய் வைத்தான் சார்ந்து –74-
கவியினார் கை புனைந்து கண்ணார் கழல் போய் செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார்
புவியினார் போற்றி யுரைக்கப் பொலியுமே பின்னைக்கா ஏற்று இரையட்டான் எழில் –85
மன்னுண்டும் பேய்ச்சி முளையுண்டும் ஆற்றாதாய் வெண்ணெய் விழுங்க வெகுண்டு
ஆய்ச்சி கன்னிக் கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான் வயிற்றினோடு ஆற்றா மகன் –91-
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் மகனாம் அவன் மகன் தன காதல் மகனை
சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே நிறை செய்து என்னெஞ்சே நினை –92-

—————————————————————————————————————————————-

பொய்கை ஆழ்வார் பூதத் தாழ்வார் பேயாழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி – -91-100– ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —

February 27, 2015

பிரகிருதி வச்யரான பின்பு சரீர விஸ்லேஷ சமனந்தரம் நரகம் ஒருவகை தப்பாது-
ஆனபின்பு அவ்விஷயத்தை வணங்கப் பாருங்கள் என்கிறார் –
திருவடிகளிலே தலையைச் சாய்த்து யமன் தலையிலே காலை வைத்துத் திரியுங்கள் –

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ -பன்னூல்
அளந்தான் இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி –91-

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்-
சரீர விஸ்லேஷ சமனந்தரம் வடிம்பிட்டு நிற்கிறது நரகம் -ஆகையாலே சம்சாரம் வடிம்பிட்டுக் கொண்டு திரிகிறபடி –
பேதுறுவீர்-
முன்னடி தோற்றாதேபாபத்தைப் பண்ணிப் பின்னை அனுதாபம் பிறந்து பேதுற்றுத் திரிகிற நீங்கள் –
முன்னால் வணங்க முயல்மினோ –
பின்னை செய்கிறோம் என்று ஆறி இருக்க ஒண்ணாது -முற்பட வணங்கிப் பின்னை தேக யாத்ரை பண்ணப் பாருங்கள் –
பால்யம் இ றே பின்னை வணங்கச் செய்கிறோம் என்னுதல்-யௌவனம் இ றே இப்போது என் என்னுதல் -வார்த்தகம் இ றே இனி என் என்னுதல் செய்யாதே
ஒரு ஷண காலமாகிலும்  முற்பட்டுக் கொண்டு ஒரு கை கால் முறிய வாகிலும்சென்று விழுங்கள் -ஆஜகாம முஹூர்த்தேந-யுத்த -17-1-இதுக்கு பிரமாணம் என் என்னில் –
பன்னூல் அளந்தான்-
எல்லா பிரமாணங்களாலும் அளக்கப் படுபவனை –
அஷர ராசியாலே ஜிஜ்ஞாசிக்கப் பட்டவனை –
வேதைஸ்ஸ சர்வை அஹமேவ வேத்ய -ஸ்ரீ கீதை -15-15-
சர்வ  வேதா யத்ரைகம் பவந்தி -யஜூர் ஆரண்ய -3-11-
இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தான் அவன் சேவடி –
வேதைக சமதி கம்யனாய்  அரிதாய் இருக்குமோ என்னில் -வரையாதே எல்லார் தலையிலும் ஒக்க அடியை வைத்து ஸூ லபனானவனுடைய திருவடிகளை –
கார்க்கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
கருத்த கடல் சூழ்ந்த பூமியை எல்லாம் –
ஞாலத்தை எல்லாம் அளந்தான் –
சாஸ்திரம் தேட வேண்டா -ஆட்சி கொண்டு அறியலாம் –
அளந்தான் –
முயல்மினோ என்றவாறே தேவை யுண்டோ என்று இராதே அப்ரதிஷேதமே  வேண்டுவது –
சேவடி –
பிரஜை ஸ்தனத்திலே வாய் வைக்குமா போலே –
முலைப் பாலுக்குக் கூலி கொடுக்க வேணுமோ –
கூலியாவது உண்கை இ றே -அல்லாவிடில் சம்பந்தம் பொயயாகாதோ-
பேதுறுவீர் –
செய்வற்றைச் செய்து இப்போதாக அஞ்சினால் லாபம் யுண்டோ –
பன்னூல்   அளந்தானைக் கார்க்கடல் சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தான் அவன் சேவடி பின்னால்
அரு நரகம் சேராமல் பேதுறுவீர் முன்னால் வணங்க முயல்மினோ -என்று அந்வயம்

————————————————————————————————————————————————————————————

அவனை ஆஸ்ரயிக்க உங்களுடைய அபேஷிதமான புருஷார்த்தங்கள் எல்லாம் கிடைக்கும் -ஆஸ்ரயிங்கோள்  என்கிறார்  –
நரகம் புகாமையே அல்ல -அபேஷிதம் வேண்டிலும் அவனையே பற்ற வேணும் –

அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும்
படியான் கொடி மேல் புள் கொண்டான் நெடியான் தன்
நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால் தாம் வேண்டும்
காமமே காட்டும் கடிது–92-

அடியால் முன் கஞ்சனைச் செற்று –
திருவடிகளாலே மார்பிலே ஏறி மிதித்த்வன் –
அழகிய ஸூ குமாரமான திருவடியாலே கம்சனைப் பாய்ந்து –
என் தலையிலே வைக்க வேண்டாவோ –
கம்சன் வஞ்சிக்க நினைத்ததை அவனுக்கு முன்னே கோலிச் செற்று-அவன் நினைத்ததை அவனோடு போம்படி பண்ணி –
அமரர் ஏத்தும் படியான்-
குடியிருப்பு பெற்றோம் என்று ப்ரஹ்மாதிகளால் ஏத்தும் ஸ்வ பாவத்தை யுடையவன் -கம்சனாலே குடியிருப்பை இழந்த தேவர்கள் இ றே-
கொடி மேல் புள் கொண்டான் –
ரஷணத்துக்கு கொடி கட்டி இருக்கிறவன் –
கொடி மேல் -கருடத்வஜன்-என்னும்படி எடுக்கப் பட்ட பெரிய திருவடியை யுடையனாய் இருக்குமவன் –
தன்னை ஆஸ்ரயித்தாரைத் தனக்கு வ்யாவர்த்த விசேஷணமாகக்  கொள்ளுமவன் –
நெடியான் தன் நாமமே ஏத்துமின்கள் –
ஒருகால் திரு நாமம் சொன்னால் -அவர்கள் மறக்கிலும் தான் அவர்களை ஒரு நாளும் மறவாதவனுடைய திரு நாமங்களையே  ஏத்துங்கோள்
ருணம் ப்ரவ்ருத்தம் -பார உத் -47-22-என்று இருக்குமவன் –சர்வேஸ்வரன் என்றுமாம்
ஏத்தினால் தாம் வேண்டும் காமமே காட்டும் கடிது-
உந்தாம் அபேஷிதமான பிரயோஜனங்களையும் கொடுக்கும் –
பிரதிபந்தகம் போக்குகை -ஐஸ்வர்யம் -ஆத்மானுபவம் -தன்னைத் தருகை -எல்லாம் கிடைக்கும் –
கடிது –
தேவதாந்திர பஜனம் போலே பலத்துக்கு விளம்பம் இல்லை -கடிது ஏத்துமின் -என்றுமாம் –

———————————————————————————————————————————————————————————

கொடிய நரகானுபவம் பிரத்யாசன்னம் ஆவதற்கு முன்னே நிரதிசய போக்யனாய்-பிரதிகூல ஹந்தாவானவனை விரும்பி ஏத்துங்கள்  என்கிறார் –

கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை
கொடிது என்றது கூடா முன்னம் -வடி சங்கம்
கொண்டானைக் கூந்தல் வாய் கீண்டானைக் கொங்கை நஞ்சு
உண்டானை ஏத்துமினோ உற்று–93-

கடிது கொடு நரகம் –
கொடிதான நரகம் தர்சனமே கடிது -அதுக்கு மேலே –
பிற்காலும் செய்கை கொடிது –
பின்பு அது செய்யும் செயல்களோ கடிது -ருதிர ஆறுகளிலே பொகடுகை -வாள் போன்று இருந்துள்ள கோரைகளிலே ஏறிடுகை –
பிற்காலும் செய்கை கொடிது –
அத்தைக் காண்கைக்கு மேலே -அவர்கள் செய்வன பொறுக்கப் போகாது -அன்றிக்கே
அவர்கள் வேஷம் காண்கையே போரும் -அதுக்கு மேலே -என்றுமாம் –
தென்னவன் தமர் செப்பமிலாதார் சேவதக்குவார் போலப் புகுந்து பின்னும் வன் கயிற்றால் பிணித்து எற்றி பின் முன்னாக இழுப்பதன் முன்னம் -பெரியாழ்வார் -4-5-7-என்னக் கடவது இ றே –
கொடிது என்று –
இவற்றை அனுசந்தித்து
அது கூடா முன்னம் –
அவை கிட்டுவதற்கு முன்னே –
வடி சங்கம் கொண்டானைக் –
கூரிய ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கையிலே ஆயுதமாகக் கொண்டவனை -ஆயுதம் இ றே -கூர்மைக்குச் சொல்ல வேணுமோ -அன்றிக்கே –
அதுக்கு கூர்மையாவது -த்வநியிலே உகவாதார் முடிகை –அன்றிக்கே அழகாகவுமாம் –
கூந்தல் வாய் கீண்டானைக்-
கேசியின் வாயைக் கிழித்தவனை-கூந்தல் மா இ றே -கூந்தல் யுடையத்தைக் கூந்தல் என்கிறது –
கொங்கை நஞ்சு உண்டானை –
பூதனையை முடித்தவனை –பருவம் நிரம்புவதற்கு முன்னே செய்த செயல் -விரோதி நிரசனம் சத்தா பிரயுக்தம் –
ஏத்துமினோ உற்று-
நெஞ்சாலே அனுசந்தித்து -வாயாலே ஸ்தோத்ரம் பண்ணுங்கோள் –
நரகம் கொடிது என்று அனுசந்திக்க -விரோதி நிரசன சீலனானவனைக் கிட்டி ஏத்தலாம்  –
கடிது கொடு நரகம் –
தர்மபுத்திரன் கண்டு மோஹித்தான் இ றே
வடி சங்கம் –
ச கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம்-ஸ்ரீ கீதை -1-19-

———————————————————————————————————————————————————————————-

என்னுடைய நெஞ்சு கண்டி கோளே-ஏத்து கிறபடி -அப்படியே நீங்களும் ஏத்துங்கள் -என்கிறார் –
ஜகத் ரஷண  ஸ்வ பாவனை நிரதிசய போக்யனானவனை ஆஸ்ரயியுங்கள்-என்கிறார்
தான் நமஸ்கரித்துக் காட்டி பிரஜையை நமஸ்கரிப்பாராய்ப் போலே -சந்த்யா வந்தனாதிகளைப் பண்ணிக் காட்டுமா போலே-

உற்று வணங்கித் தொழுமின் உலகு ஏழும்
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் -பற்றிப்
பொருந்தா தான் மார்பிடந்து பூம் பாடகத்துள்
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு–94-

உற்று வணங்கித் தொழுமின் –
கிட்டி அதிகாரிகள் அல்லோம் என்று அகலாதே நெருங்கி –
அபிமான ஸூ ந்யராய் திருவடிகளினாலே தொழுங்கள் –
திருவடிகளிலே விழுந்து ஆஸ்ரயியுங்கள்-
உலகு ஏழும் முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் –
பூம்யாதிகளானசகல லோகங்களையும் ஒன்றையும் பிரிகதிர் படாதபடி திரு வயிற்றிலே வைத்து ஆபத்தே பற்றாசாக ரஷிக்கும்-
முகில் வண்ணன் –
ஜல  ஸ்தல விபாகம் இன்றிக்கே ரஷிக்குமவன் –பிரஜைக்குப் பால் கொடுத்தால் தாய் யுடம்பு நிறம் பெறுமாப் போலே –
ஸ்ரமஹரமான வடிவை யுடையவனாய்-பரம உதாரனானவன் -ரஷை வடிவிலே தோற்றுகை-
பற்றிப் பொருந்தா தான் மார்பிடந்து –
பொருந்தாத ஹிரண்யனைப் பிடித்தபடி பிணமாம்படி பிடித்து -அவனுடைய மார்வி இடந்து -அன்றிக்கே –
பற்றிப் பொருந்தா தான் மார்பிடந்து –
பிடித்த பிடியிலே துணுக் என்று திருவடிகளில் விழுமோ என்று பற்றி -அவன் பொருந்தான் என்று அறிந்த பின்பு இடந்தான் என்றுமாம் –
பூம் பாடகத்துள் இருந்தானை –
பின்னும் ஆஸ்ரித விரோதிகளைப் போக்க வேணும் என்று போக்யதை யுடைத்தான திருப் பாடகத்திலே  எழுந்து அருளி இருக்கிறவனை –
பூம் பாடகத்துள் இருந்தானை –
ஆஸ்ரிதருடைய பிரளயங்களை நீக்கி விரோதிகளுக்கு பிரளயம் யுண்டாககுமவன் வர்த்திக்கிற தேசம் –
ஹிரண்யர்கள் பலர் யுண்டாகையாலெ சந்நிஹிதனானான் –
ஏத்தும் என் நெஞ்சு-
என் நெஞ்சானது ஏத்தா நின்றது -ஸ்ரீ பிரஹலாத ஆழ்வானில் இவருக்கு வாசி -தீர்த்தம் பிரசாதியாதே அர்ச்சாவதாரத்தில் இழிகிறார் –
ஏத்தும் என் நெஞ்சு –
நீங்களும் ஏத்துங்கள் என்கிறார் –
பூம் பாடகம் -இத்யாதி
சிறுக்கனுக்கு உதவினபடி எல்லோரும் -எப்போதும் – காண வேணும் என்று இருக்கை  –

—————————————————————————————————————————————————————————————

ஜகத் காரண பூதனாய் சர்வ லோக சரண்யன் ஆனவன் திரு வத்தியூரிலே நின்றருளி என்னுடைய சர்வ அவயவங்களிலும் புகுந்தான் -என்கிறார் –
அவன் இவரை யல்லது அறியாது இருக்கிறபடி-

என் நெஞ்சமேயான் என் சென்னியான் தானவனை
வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் -முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தி ஊரான் -95-

என் நெஞ்சமேயான் என் சென்னியான் –
அவனை இவருடைய நெஞ்சு விரும்பினவாறே இவருடைய சர்வ அவயவங்களிலும் அவன் இருந்தான் –
இவருடைய ஒரு பரிகரத்தை அங்கே வைக்க  அவன் இவருடைய சர்வ பரிகரத்திலும் புகுந்தான் -சர்வ அவயவங்களுக்கும் உப லஷணம்-
என் நெஞ்சமேயான் என் சென்னியான் —
என் நெஞ்சில் உள்ளான் -தலைமேல் தாள் இணைகள் தாமரைக் கண் என் அம்மான் நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் -திருவாய் -10-6-6-என்னுமா போலே –
தானவனை வன்னெஞ்சம் கீண்ட-
ஈச்வரோஹம் என்று திண்ணிய  நெஞ்சை யுடையனான ஹிரண்யன் யுடைய நெஞ்சைக் கீண்ட –
வன்னெஞ்சம் –
தான் என்றாலும் ததீயர் என்றாலும் இரங்காத நெஞ்சு -பகவத் பாகவத விஷயங்களில் ப்ராதிகூல்யத்தில் நெகிழாத நெஞ்சு –
நர சிம்ஹத்தின் யுடைய வடிவு கண்டத்திலும் நெஞ்சு நெகிழாதவன்-
திருவாழி வாய் மடியும்படி இருக்க -என்றுமாம் –
மணி வண்ணன் –
சிறுக்கனுக்கு விரோதி போகப் பெற்றது என்று நீல மணி போலே குளிர்ந்து ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் -அதி ஸூ குமாரமாய் -ஸ்லாக்யமாய்-இருக்கை –
முன்னம் சேய் ஊழியான் –
சதேவ  சோம்யேத மக்ர ஆஸீத் –சாந்தோக்ய -என்கிறபடியே ஸ்ருஷ்டே -பூர்வ காலத்தில் அழிந்த ஜகத்தை
ஸ்ருஷ்டிக்கைக்காக காலோபல சித்தமான ஸூ ஷ்ம சிதசித் வஸ்துக்களை சரீரமாகக் கொண்டு நின்றவன் –
தன்னாலே ஸ்ருஷ்டமான  ஜகத்திலே யுள்ளான் –ஸ்ருஷ்ட்யர்த்தமாக பிரளய காலத்திலே உளனானவன் -என்றுமாம் –
ஊழி பெயர்த்தான் –
அவற்றை சம்ஹரித்தவன் -ஸ்ருஷ்டித்ததால் உள்ள கார்யம் பிறவாமை யாலே சம்ஹரித்தவன் -கால நியதி அழிப்பானும் இவனே –
ஊழி பெயர்த்தான் –
காலோபல ஷித சகல பதார்த்தத்தையும் உண்டாக்கினவன் -என்றுமாம் –
உலகு ஏத்தும் ஆழியான் –
எல்லாரும்  ஏத்தும் படித் திருப் பாற் கடலிலே அநிருத்த ரூபியாய் கொண்டு கண் வளர்ந்து அருளுகிறவன்-அன்றிக்கே
எல்லோரும் ஏத்தும் படித் திரு வாழியை யுடையவன் -என்றுமாம் –
அத்தி ஊரான் –
திரு வத்தி யூரிலே நின்று அருளினவன் –
அத்தியூரான் என் நெஞ்சமேயான் –
திருப் பாற் கடலோடு ஒத்தது  திரு வத்தி யூரும் –
ஆழியான் அத்தியூரான்  என்னெஞ்சமேயான் –
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -பெரியாழ்வார் -5-4-10-என்னும்படியே –

——————————————————————————————————————————————————————————————–

உபய விபூதி யுக்தன் கிடீர் என்கிறது —

அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான் –96-

அத்தி யூரான் புள்ளை யூர்வான்-
அவனே கருட வாஹனன் –
அணி மணியின் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் –
அணியப்பட்ட மணிகளையும்  துத்தி என்று  பொறியையும் யுடைய திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுமவன் -அனந்த சாயி -இவை இரண்டாலும் சர்வேஸ்வரன் -என்றபடி –
முத்தீ மறையாவான் –
மூன்று அக்னியையும் சொல்லா நின்றுள்ள வேதத்தாலே சமாராத் யதயா பிரதிபாதிக்கப் பட்டவன் –
பகவத் சமாஸ்ரயண கர்மங்களை பிரதிபாதியா நின்றுள்ள வேதங்கள் -அன்றிக்கே –
முத்தி மறையாவான் -என்றதாகில் மோஷத்தைப் பிரதிபாதிக்கிற வேதத்தாலே பிரதிபாத்யன் ஆனவன் –
மா கடல் நஞ்சுண்டான் தனக்கும் இறையாவான் –
அரியன செய்து அபிமானியான ருத்ரனுக்கும் ஈஸ்வரனும் ஆனவன் –
பெரிய கடலிலே பிறந்த விஷத்தைப் பானம் பண்ணி அந்த சக்தி யோகத்தாலே தன்னை ஈஸ்வரனாக அபிமானித்து இருக்கிற ருத்ரனுக்கும் ஈஸ்வரன் ஆனவன் -விபூதியில் பிரசித்தரான ருத்ரனுக்கும் நிர்வாஹகன் ஆனவன் -தேவ ராஜன் -என்றபடி –
எங்கள் பிரான் –அத்தியூரான் –
அத்தி யூரிலே நின்று அருளின உபகாராகன் -எங்கள் பிரான் ஆகைக்காக அத்தி யூரான் ஆனான் –

———————————————————————————————————————————————————————————————

என்னை விஷயீ கரிக்கைக்காகத் திருக் குடந்தையிலே ஸூலபனாய் வந்து பள்ளி கொண்டு அருளினான் -என்கிறார் –

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் திரு மார்பா -பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
குட மூக்கில் கோயிலாகக் கொண்டு–97-

எங்கள் பெருமான் –
ஆஸ்ரிதரான எங்களுக்கு நாயகன் –
இமையோர் தலைமகன் நீ-
அயர்வறும் அமரர்கள் அதிபதி –
செங்கண் நெடுமால் திரு மார்பா –
இவை எல்லாம் நித்ய ஸூ ரிகளுக்கு போக்யமானபடி –
செங்கண் நெடுமால் –
ஸ்ருதி பிரசித்தமான கண்களை யுடையவன் –புண்டரீகாஷனான சர்வேஸ்வரன் -வ்யாமோஹம் எல்லாம் கண்ணிலே தோற்றுகை -அவாப்த சமஸ்த காமன் கிடீர் குறைவாளன் ஆகிறான் –
திரு மார்பா –
ஸ்ரீ யபதியே -இமையோர் தலைமகனாய் வைத்து எங்களை அடிமை கொள்ளுகைக்கு அடி -பிராட்டி சம்பந்தம் –
பொங்கு பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்-
விஸ்த்ருதமான படங்களையும் பகவத் அனுபவ ஜனித ஹர்ஷத்துக்குப் போக்குவிட ஆயிரம்  வாயையும் மூக்கையும் யுடைய திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிறவன் –
குட மூக்கில் கோயிலாகக் கொண்டு-
திருக் குடந்தையைக் கோயிலாகக் கொண்டு -பரமபதம் போலே -குடமூக்கில்   கோயிலாகக் கொண்டு எங்கள் பெருமான் ஆனான் –

——————————————————————————————————————————————————————————————–

-தம்மை விஷயீ கரித்தவனுடைய அபதா நங்களை அனுபவிக்கிறார் –
தன் சங்கல்ப்பத்தாலே ஜகத்தை நியமிக்கிறவன் சம்சாரியான என்னோடு கலந்து நின்றபடி -அகடிதகடனத்தோடே ஒக்கும் -என்கிறார்
ஜகத்துக்கு தன்னால் அல்லது செல்லாதாப் போலே என்னால் அல்லது செல்லாதபடி ஆனான் -என்றுமாம் –

கொண்டு வளர்க்கக் குழவியாய் தான் வளர்ந்தது
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்கக் கொண்டு
குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம்
இடமாகக் கொண்டவிறை-98-

கொண்டு வளர்க்கக் குழவியாய் தான் வளர்ந்தது-
தன்னைச் சிலர் எடுத்து வளர்க்க வேண்டும் குழவியாய்த் தான் வளர்ந்து –
பிள்ளையாய் வர்த்தியா நிற்கக் கிடீர் -ஸ்வ ரஷணம் தான் அறியாத யசோதா ஸ்த நந்த்யனாய்க் கிடீர் யுலகுண்டது –
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்கக் –
அப்படி ஸ்த நந்த்யமாய் இருக்கிற  அவஸ்தையிலே வயிற்றிலே யடங்க வைத்தது யுலகு ஏழும்-
தனக்கு ரஷகர் வேண்டி இருக்கிற தசையிலே ஜகத்துக்கு ரஷகன் ஆனவனை –
கொண்டு குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம் இடமாகக் கொண்டவிறை-
இடையனாய் ஜாத்யுசிதமான கூத்தை யாடி என் நெஞ்சிலே பொருந்தி இளகப் பண்ணி நெஞ்சைக் கோயிலாகக் கொண்ட ஈஸ்வரன் –
என் நெஞ்சம் இடமாகக் கொண்டு குடமாடின படியே வந்து என் நெஞ்சைத் தனக்கு இருப்பிடமாக  கொண்டவன் யுண்டது யுலகு ஏழும் உள்ளொடுங்க –

———————————————————————————————————————————————————————————–

பிரயோஜனாந்தர பரரான தேவர்களுக்குக் கார்யம் செய்யும்படியைச் சொல்லுகிறார் –

இறை எம்பெருமான் அருள் என்று இமையோர்
முறை நின்று மொய் மலர்கள் தூவ -அறை கழல
சேவடியான் செங்கண் நெடியான் குறளுருவாய்
மாவலியை மண் கொண்டான் மால் –99-

இறை எம்பெருமான் அருள் என்று –
அஸ்மத் ஸ்வாமியான ஈச்வரனே அருள் என்று –இறை யருள் -ஏக தேசம் அருள் என்றுமாம் –
இமையோர்-
அரசு என்று இருந்தவர்கள் ஆபத்து வந்தவாறே -பராவரேசம் சரணம் வ்ரஜத்வம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-35-என்னும்படியே
ஓன்று கெட்டவாறே அங்கு ஏறப் பாடி காப்பரை வளைப்பாரைப் போலே  ஈச்வரோஹம் என்று
ஊதின களங்களை  பொகட்டு-
முறை நின்று –
முறையை யுணர்ந்து -முறை தப்பாமே என்றுமாம் –
மொய் மலர்கள் தூவ –
தேவர்கள் அழகிய புஷ்பங்களைத் தூவி ஆஸ்ரயிக்க –
அறை கழல சேவடியான் –
த்வனியா நின்றுள்ள வீரக் கழலை யுடைய திருவடியை யுடைய சர்வேஸ்வரன் –
அறை கழல் என்று  எல்லா ஆபரணங்களுக்கும் உப லஷணம் -ஆபரண ஒலி-
செங்கண் நெடியான்-
புண்டரீகாஷன் -ஆஸ்ரித வ்யாமுக்தன் –
குறளுருவாய்-
ஆஸ்ரித அர்த்தமாக சுருங்கின வடிவை யுடையவனாய் -வடிவு கண்ட போதே பிச்சேறும் படியாய் இருக்கை –
இரந்தார்க்கு இடர் நீக்கிய கோட்டங்கை வாமனன் -திருவாய் -7-5-6-இ றே –
மாவலியை மண் கொண்டான் மால் —
மகா பலி பக்கலிலே மண் கொண்ட வ்யாமுக்தன் –
மா வடிவு –
பூமி அத்யல்பமாம் படி வளர்ந்தான் –
இமையோர் முறை நின்று மொய்ம் மலர்கள் தூவ அறை கழல் சேவடியான் செங்கண் நெடியான் –மால் குறள் யுருவாய் மாவடிவில் மண் கொண்டான் -என்று அந்வயம் –

————————————————————————————————————————————————————————————–

பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் -உமக்குச் செய்வது சொல்லீர் -என்ன
அன்பை ஆஸ்ரயத்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார்-

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-

மாலே –
சர்வாதிகனே -ஆஸ்ரித வ்யாமுக்தனே -என்றுமாம் –
நெடியானே-
அபரிச்சேத்யனானவனே-வ்யாமோஹத்துக்கு எல்லை இல்லாதவனே -என்றுமாம் –
கண்ணனே-
கீழ்ச் சொன்னவற்றின் கார்யம் -ஆஸ்ரித பவ்யனே -சர்வ நிர்வாஹகனே -என்னுதல்-
விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே –
ஐஸ்வர் யத்துக்கு எல்லை இல்லாமை –
நித்ய ஸூரி களுக்கு அவ்வருகாய் ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலை யுடையவனே –
அவர்களுக்கு தோள் மாலை இட்டு ஒப்பித்துக் காட்டினபடி –
மேலாய் விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே –
பண்டு கன்றாலே விளவின் காயை விழ விட்டவனே –
கன்றையும் விளாவாயும் வந்த அஸூ ரர்கள் ஒன்றைக் கொண்டு ஒன்றை முடித்தவனே -நம்முடைய விரோதி போக்கின படிக்கு திருஷ்டாந்தம் –
என்தன் அளவன்றால் யானுடைய வன்பு –
இன்று ஆஸ்ரயித்த அளவன்று உன் பக்கல் ச்நேஹம் –இத்தை அகம் சுரிப்படுத்த வேணும் -தரமி அழியப் புகா நின்றது –
ச்நேஹோ மே பரம -உத்தர -40-16-
அவனுடைய மால் இவருடைய மாலுக்கு அடி –
அன்பை அகம் சுரிப்படுத்த ஒண்கிறது இல்லை –
தன்னைக் காட்டினான் -அன்பைக் கொண்டு நமக்குக் கிஞ்சித்கரியும் என்ன -அன்பே தகளி என்று கீழோடு கூட்டி பேசி தரிக்கப் பார்க்கிறார்
அன்றிக்கே -ப்ரேமம் அளவிறந்தார் சாஷாத் கரிக்கும் இத்தனை இ றே –
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்று சாஷாத் கரிக்கிறார் –

———————————————————————————————————————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
நம் பிள்ளை திருவடிகளே சரணம்-
பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி – -81-90– ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —

February 27, 2015

முன்பு இவனைக் காணப் பெற்றவர்கள் என் பட்டார்களோ என்றாரே -அவன் தன்னைத் தான் காணப் பெற்றுப் படுகிற பாட்டைச்  சொல்லுகிறார் –
கீழ் ஸ்ரீ தண்ட காரண்யத்தில் அக்காலத்தில் காணப் பெற்றவர்களுக்கு எங்கனே இருக்கிறதோ என்கிறார் என்றுமாம் –
அவர்களுக்கே அல்ல -எனக்கும் விடிந்தது என்கிறார் –

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

பகல் கண்டேன் –
விடிவு கண்டேன் -முன்படங்க இருள் போலே காணும் -காளராத்திரியாய்ச் செல்லாதே விடியக் கண்டேன் –
ஸூ ப்ரபாதா ச மே நிசா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-2-
ஓர் இரவும் ஒரு பகலுமே யுள்ளது -எம்பெருமானை அறிவதற்கு முன்பும் பின்பும் -முன்பு பகல் கலவாது -பின்பு இரவு கலவாது –
நாரணனைக் கண்டேன்-
வடுகர்   வார்த்தை போலே  தெரிகிறது இல்லை -எங்களுக்குத்  தெரியும்படி சொல்லீர் -என்னச் சொல்லுகிறார் –
அஸ்தமியாத ஆதித்யனைக் கண்டேன் -உறங்காத என்னையும் கண்டேன் –
அநாதி மயயா ஸூ ப்த-என்கிற உறக்கம் பிரகிருதி அன்று இ றே
இளைய பெருமாளுடைய ஸ்தா நீயன் ஆத்மா -அங்கும் -சதா பஸ்யந்தி ஜாக்ருவாம் சமிந்ததே -ருக் அஷ்ட -1-2-7-
சவிபூதிகனான சர்வேஸ்வரனை  கண்டேன் -உபய விபூதி யுக்தன் இ றே -போக்குவரத்து இல்லாத ஆதித்யன் –
நியாம்யனானவன் அல்லன் -நியாமகன் -பீஷோதேதி ஸூர்ய-தைத் ஆன -8-என்றும் -சாஸ்தா ஜனா நாம் -தைத் ஆற -3-11-என்றும் சொல்லக் கடவது இ றே –
கனவில் மிகக் கண்டேன் மீண்டவனை-
இந்த்ரியங்கள் சஹகாரியாய் அவ் வழியாலே காஷியாகை அன்றிக்கே நெஞ்சாலே முழு மிடறு செய்து காணப் பெற்றேன் –
இந்த்ரியங்க ளால் கலக்க ஒண்ணாத படி மானசத்தால் யுள்ள ஜ்ஞானத்தாலே அழகிதாகக் கண்டேன் –
மெய்யே -மிகக் கண்டேன்-
பிரத்யபி ஜ்ஞார்ஹமாம்படி அழகிதாகக் காணப் பெற்றேன் -எத்தைக் கண்டது என்னில் –
ஊன் திகழும் நேமி –
அழகிய வடிவைக் கொண்டு இருப்பதான திரு வாழி-என்னுதல்-
சத்ருக்களைக் கொன்று சத்ரு சரீரங்க ளிலேவிளங்கும் -என்னுதல் –
எம்பெருமான் திரு மேனியிலே விளங்கும் என்னுதல் –
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழி -திருப்பல்லாண்டு 2-
யொளி திகழும் சேவடியான்-
ஒளி திகழா நின்ற திருவடிகளையுமுடையவனாய்-
வான் திகழும் சோதி வடிவு –
வானிலே நித்ய  விபூதியிலே நிரவதிக தேஜோ ரூபமான வடிவு அழகு யுடையவனானவனைக் காணப் பெற்றேன் –
அன்றிக்கே -வான் திகழும் என்றது -மேகத்தோடு ஒக்கத் திகழா நின்றுள்ள வடிவை என்றதாக வுமாம் –
வானிலே திகழும் சோதி வடிவு கிடீர் இங்கே இருக்கக் காணப் பெற்றது –

——————————————————————————————————————————————————————————–

அவ் வடிவு அழகைக் கண்ட மாத்திரமேயோ -அவ் வடிவிற்குத் தகுதியான நாச்சியாரையும் கூட காணப் பெற்றேன் -என்கிறார் –
கீழ் -நாராயணனைக் கண்டார் -என்றார் -இப்போது  ஸ்ரீ லஷமீ சநாதானாகக் காணப் பெற்றேன் -என்கிறார் –
வெறும் நாராயணனை அல்ல -திரு நாரணனைக் காணப் பெற்றேன் -என்கிறார் -பிரபையோடே காணப் பெற்றேன் –

வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்
படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ
கோலத்தால் இல்லை குறை–82-

வடிக்கோலம்-
கோலம் தனை வடித்து -அதில் நன்றான அம்சம் ஆய்த்து இங்குத்தை அழகாய் இருப்பது –
இதில் ருஷீஷாம்சமான கோலமுடையார் யாரோ -என்று அருளிச் செய்வர் நஞ்சீயர் –
ஜகத்தில் அழகு எல்லாம் கோதாகப் பிறந்தவன் அழகு இங்குத்தைக் கோது –
வாள் நெடுங்கண் மா மலராள்-
இப்படிப்பட்ட வடிவு அழகையும் ஒளியையும் யுடைத்தாய்ப் பரந்து இருந்துள்ள கண்களையும் யுடையளாய்
போக்யதைக வேஷையுமாய் யுள்ள பெரிய பிராட்டியார் ஆனவள் –
வாள் -ஒளி -ஓர் ஆளும் ஒரு நோக்கும் நேரான கண்கள் -போக்தாக்களுக்கு எல்லை காண முடியாமை -த்ரைலோக்ய ராஜ்யம் சகலம் சீதாயா நாப் நுயாத் கலாம் -சுந்தர -16-14-
வாள் நெடுங்கண்  என்று வடிவிலே வாடி –
மா மலராள்-
பரிமளம் உபாதானம் ஆனவள் -சௌகுமார்யத்தையும் சௌகந்த்யத்தையும் சொல்லுகிறது –
செவ்விப் படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-
எம்பெருமானுடைய செவ்வியே படியான கோலத்தைக் கண்டு ஒரு நாளும் விட மாட்டாதே வர்த்திக்கும் ஆய்த்து –
செவ்வி –
அப்போது அலருகிற பூப் போலே இருக்கை –
படிக் கோலம் –
ஸ்வா பாவிகமான கோலத்தைக் கண்டு -அரும்பினை அலரை  -திருவாய் -7-10-1-என்றும்
சதைக ரூபரூபாய -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-1-என்றும்
சொல்லுகிறபடியே அவ் வடிவு அழகு தான் இருப்பது –
கண்டு அகலாள் பன்னாள்-
நித்ய அனுபவம் பண்ணா நிற்கச் செய்தேயும் –இறையும் அகலகில்லேன்  –என்று ஷண காலமும் பிரிய சக்தி அன்றிக்கே இருக்கும் ஆய்த்து –
கண்டு பல நாளும் அனுபவியா நிற்கச் செய்தே அகல மாட்டாள் ஆய்த்து –
ஒரு தேவையாலே அகலாது இருக்கிறாளோ என்னில் -அன்று -வைத்த கண் வாங்க மாட்டாமையும் -கால் வாங்க மாட்டாமையும் –
அடிக்கோலி ஞாலத்தாள் –
ஸ்ரீ பூமிப் பிராட்டி யானவள் அவனை அனுபவிக்கையிலே அடிக்கோலி இழிந்தாள் ஆய்த்து -அதாகிறது -பெரிய பிராட்டியாருக்கு விஷயம் அவன் ஒருவனும் இ றே
இவளுக்கு அனுபாவ்ய வஸ்து அச் சேர்த்தி யாகையாலே அதுக்கு ஈடாக அகலப் பாரித்துக் கொண்டு இழிந்தாள் ஆய்த்து –
அவள் கண்ணுக்கு விஷயம் அவன் ஒருவனுமே -இவளுக்கு விசிஷ்டமாக அவளோடு கூடினவன் என்று விஷய பூயஸ்தையாலே அடிக்கோலி -என்கிறது –
ஞாலத்தாள்-
ஷமையே வடிவானவன்  –
பின்னும் நலம் புரிந்தது என் கொலோ-
பெரிய பிராட்டியார் தண்ணீர் தண்ணீர் என்கிற விஷயம் என்று அறிந்த பின்பும் –
ஆழங்கால் என்று அறிந்தே கிடீர் தன்னில் மிடுக்கானவன் அழுந்தப் புக்கால் கரையில் நிற்கிறவனுக்கு புகாதே போக வன்றோ வடுப்பது –
எல்லாரிலும் அளவுடையளான பெரிய பிராட்டியார் குமிழ் நீருண்ணும் விஷயமானால் இவள் அகலப் போக அன்றோ அடுப்பது –
இங்கனே இருக்கச் செய்தே இவள் பின்னையும் மிக்க விருப்பத்தைப் பண்ணுகைக்கு ஹேது ஏதோ என்னில் -ஹேது சொல்லுகிறது –
மேல் அறிந்தோம் இ றே இதுக்கடி –
கோலத்தால் இல்லை குறை-
இருவர் கூடினால் பாத்தம் போராத படியான விஷயம் இன்றிக்கே எல்லாரும் திரண்டு வந்து அனுபவியா நின்றாலும்
எல்லை காண ஒண்ணாத படி புக்கார் புக்காரை எல்லாம் கொண்டு முழுகும்படி அழகு குறைவற்று இருக்கும் இ றே
கரையிலே நிற்பாரையும் இழுத்துக் கொள்ள வற்றான வடிவு அழகு இருக்கிறபடி
தருனௌ ரூப சம்பன்னௌ-ஆரண்ய -19-14-என்று இலளோ –தன் பிரக்ருதியாலே கெட்டாள்-
நின்றார் நின்ற நிலைகளிலே அகப்படும் விஷயம் –
இதர விஷயங்கள் இருவருக்கு அனுபவிக்கப் போராமையாலே சீ று பாறு என்கிறது –
கிண்ணகத்திலே இழிவாரைப் போலே எல்லாரும் திரள அனுபவிக்க வேண்டும்படி பரப்பு யுண்டாகையாலே
இவ்விஷயத்தை அனுபவிப்பார்க்கு பிரியமே யுள்ளது –

————————————————————————————————————————————————————————————

கீழே -74- பெரும் தமிழன் நல்லேன்   பெரிது -என்று தம்மை மதித்து அநந்தரம் கவி பாடுவதும் செய்தார் –
இங்கே நாச்சியாரும் அவனுமான சேர்த்தியை அனுசந்தித்துக் கூசி -நாம் இவ் விஷயத்திலேயோ கவி பாட இழிவது -என்ன சாஹசிகனோ  -என்று கீழ்ச் செய்த செயலுக்கு அனுதபிக்கிறார் –
அங்கு சர்வ விசஜாதீய வஸ்துவைப் பேசுகையாலேஎன்னோடு ஒப்பார் உண்டோ என்றார் –
இப்போது அவ் வஸ்து தன்னை ஸ்ரீ லஷமீ ச நாதமாக அனுசந்திக்கையாலே அங்குத்தைக்கு விசத்ருசமாகச் சொன்னேன் -என்கிறார் –
பூவின் மேல் மாது வாழ் மார்பினாய் உன்னை என் சொல்லி யான் வாழ்த்துவனே -திருவாய் -3-1-6-
நல்லேன் பெரிது  -என்றார் ஐஸ்வர் யத்தைக் கண்டு வெருவித் தீயேன் என்கிறார் –
பேசிற்றும் தப்பாய் பலம் ஆசைப்பட்டதும் தப்பாய்த்து –

குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி
மறை யாங்கு என உரைத்த மாலை -இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்
மாயன் கண் சென்ற வரம் -83-

குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி-
இது இ றே நான் செய்தபடி என்கிறார் -குறையாகக் கூறினேன் -வெஞ்சொற்கள் கூறினேன் –
பரிபூர்ண விஷயத்தை அபரிபூர்ணமாகச் சொன்னேன் -அதுக்கு மேல் கேட்டார் செவி கன்றும்படி வெட்டிதாகவும் சொன்னேன் –
குறையாக –
கடலைக் கண்டான் என்னும் காட்டில் கரை கண்டான் ஆகான் இ றே -அத்தலையில் பெருமையாலும் -இத்தலையில் சிறுமையாலும் குறை-
வெம் சொற்கள் –
அவன் திரு உள்ளம் நோம்படி யாக வார்த்தை சொன்னேன் –
கூறினேன் –
காணப் பெறாத விஷயத்தைக் கிடீர் பேசித்து பரிச்சேதித்தேன்-
கூறி –
இங்கனே செய்தாலும் இ றே -அநந்தரம் சைதன்ய க்ருத்யமாய் இருப்பதொரு அனுதாபம் ஆகிலும் விளையப் பெற்றதாகில் –
இது தன்னை கர்த்தவ்யம் என்றும் இருந்தேன் –
மறை யாங்கு என உரைத்த மாலை –
இவை  எல்லாத்தாலும் வருவது ஓன்று இல்லை இ றே –
சொல்லப் பட்டவன் தான் மறப்பான் ஒருவனாகப் பெற்றதாகில்
வாய் திறந்து ஏதேனும் ஒன்றைச் சொன்னான் ஆகில் -அது வேத சப்தமாம்படி இருப்பான் ஒரு சர்வேஸ்வரன் ஆய்த்து
வாக் விவ்ருதாஸ் ச வேதா -முண்டகம் -2-1-4-என்று சொல்லப் படுகிற சர்வாதிகனை –
அங்கன் அன்றிக்கே -அர்த்தங்களை யுள்ளபடி சொல்லப் போந்த வேதங்களும் அது என்று சொல்லும் அத்தனை போக்கி
இது என்று கொண்டு  பரிச்சேதித்துச் சொல்ல மாட்டாத பிரபாவத்தை யுடைய சர்வேஸ்வரனை –
வேதங்கள் ஆங்கு என்று சொல்லிப் போனவனை என்றுமாம் –
இறையேனும் ஈயுங்கொல் என்றே இருந்தேன் –
நான் பாடின கவி பாட்டுக்குத் தரமாக இவற்றால் ஆவது ஓன்று இல்லை இ றே
ஆகிலும் ஏதேனும் ஒன்றைப் பரிசிலாக எனக்குத் தாராது ஒழியுமோ என்று இருந்தேன் –
விசத்ருசமாகச் சொன்ன அளவேயோ –ஓன்று சொன்னேனாய் அதுக்குப் பிரத்யுபகாரமும் வேணும் என்று இருந்தேன் –
எனைப்பகலும்-
அநேக நாள் எல்லாம் –
மாயன் கண் சென்ற வரம் –
ஆச்சர்ய பூதனான அவன் பக்கல் யுண்டான பிரசாதம் –
இறையேனும் ஈயுங்கொல் என்றே இருந்தேன் –
பண்டு கவி பாடினார்க்கு அவன் கொடுத்து வருமத்தைக் கொண்டு நம் பக்கலிலும் ஏதேனும் செய்யானோ என்று இருந்தேன் –
இவர் பின்னை ஒரு பிரயோஜனத்துக்காக கவி பாடுவாரோ என்னில்
இக்கவி பாட்டுக்காக அவன் ஒரு விசேஷ கடாஷம் பண்ணும் -அதுவும் ஸ்வரூபம் என்று இருப்பரே
சென்ற வரம் –
வரத்தை இறையேனும் ஈயுங்கொல் என்றே இருந்தேன் -என்கிறார் -என்றுமாம் –

————————————————————————————————————————————————————————————

மற்றவை எல்லாம் செய்தபடி செய்ய ரசிக்கும் விஷயம் இதுவே கிடி கோள் என்கிறார் -அவனை விட்டு வர ஒண்ணாமைக்கு ஹேது இருக்கிற படி –
ஒரு ஆஸ்ரிதனுக்குத் தன்னைக் கொடுத்த படி கண்டவாறே வெருவுதல் தீர்ந்து நம்மது என்று அனுபவிக்கிறார் –

வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
உரம் கருது மூர்க்கத்தவனை -நரம் கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே
அங்கண் மா ஞாலத்து அமுது–84-

வரம் கருதி-
தேவதைகள் பக்கல் தான் பெற்ற வரபலத்தை புத்தி பண்ணி -ஓட்டை ஓடத்தை விஸ்வசிக்குமா போலே –
தன்னை வணங்காத வன்மை-
அத தேவதைகளுக்கும் அடியாய் சர்வேஸ்வரனான தன்னை வணங்கக் கடவன் அல்லன் என்னும் அபிசந்தியை யுடையனான
த்விதா பஜ்யேயம் அப்யேவம் ந நமேயந்து கஸ்யசித் -யுத்த -36-11-
உரம் கருதும்-
தன்னுடைய வெட்டிமையால் வந்த மிடுக்கை புத்தி பண்ணி இருக்கிற
ஊக்கத்தவனை –
வரபல புஜ பலங்களை யுடையனாகையாலே வந்த மேணாணிப்பை யுடையவனை –துரபிமானத்தை யுடையவனை -ஊக்கம் என்று நிலை
மூர்க்கத்தவனை –
என்ற பாடமான போது மௌர்க்யத்தை யுடையவனை –
நரம் கலந்த சிங்கமாய்க் கீண்ட –
இதுக்கு முன்பு யுள்ளது ஒன்றாலும் படாது இருப்பேன் என்று வேண்டிக் கொள்ள -முன்பு இல்லாத நரத்வ சிம்ஹத்வங்களைக்  கொண்டு தோற்றி அவனை நிரசித்து அருளின பெருமை -இரண்டையும் பிணைத்துக் கொண்டு தோற்றுகை –
நரம் கலந்த சிங்கம் –
சேர்ப்பாலும்   கண்ட சக்கரையும் சேர்ந்தாப் போலே இருக்கை -வெறும் மனிச்சாதல் -சிம்ஹமாதல் காணிலும் உபேஷிக்க வேண்டி இருக்கை –
திருவன் –
விருத்தமான வடிவு அழகு இரண்டையும் சேர்ந்த பின்பும் காந்தி மிகைத்துத் தோற்றின படி –
ஸ்ரீ மத்தாய் இருக்கை -அழகியதாய் இருக்கை
அழகியான்  தானே  அரி யுருவன் தானே -நான்முகன் -22-
நார சிம்ஹவபு ஸ்ரீ மான் -என்னும்படியே –
அடி இணையே-
அவனுடைய ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளே –
அங்கண் மா ஞாலத்து அமுது–
அழகிய இடத்தை யுடைத்தான  மஹா ப்ருதிவியிலே புஜிக்கப் பெற்ற அம்ருதம் -என்கிறார் –
ஒரு தேச விசேஷத்திலே போனால் புஜிக்கத் தக்க  அம்ருதம் சம்சாரத்திலே மிகவும் போக்யம் என்கிறார் –
திருவன் –
பிரஜைகள் யுடைய விரோதி போக்குவது தாய்க்காகவே என்றுமாம் -பர்த்தாரம் பரிஷச்வஜே -ஆரண்ய -30-39-
அங்கண் மா ஞாலம் –
திரு அவதாரத்துக்கு ஈடான நிலம் –

————————————————————————————————————————————————————————————–

அவனுடைய ரச்யதையை அனுசந்தித்தவாறே அமுதன்ன சொன்மாலை ஏத்தித் தொழுதேன் -என்கிறார்-

அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று –85-

அமுதென்றும் –
ரசோ வை ச -தை ஆன -7-1-என்றும் –
தேன் என்றும் –
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ச -ருக் மண்டலம் -1-21-154-என்றும் –
ஆழியான் என்றும்-
போக்யனுமாய் விரோதி நிரசன ஸ்வ பாவனுமாய் இருக்கை –
அமுதென்றும் இத்யாதி –
அம்ருதத்தோடும் தேனோடும் பர்யாய சப்தம் போலே காணும் ஆழியான் -என்கை-
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் –
அஸூர பய பீதராய் தேவர்கள் சரணம் புக்க அன்று கடலைக் கடைந்து பிரயோஜனாந்தர பரர்காக அம்ருதத்தைக் கொண்டு கொடுத்தவன்
தன்னை வேண்டா உப்புச் சாறு வேணும் என்றவர்களுக்கு -அது தேடிக் கொடுக்குமவன் –
உகந்தான் –
தன்னை உகந்திலர் என்று முனியாதே   ஏதேனுமாக நம்மை அர்த்திப்பதே  என்று அதுக்குத் தான் உகக்கை – உதாரா  சர்வ ஏவை தே-ஸ்ரீ கீதை -7-18-
அமுதன்ன சொன்மாலை ஏத்தித் தொழுதேன் –
அவனையும் தேவர்கள் அம்ருதத்தையும் ஒழிய இவருடைய அம்ருதம் -அவனைப் பேசும் சொல்லு –
சொன்மாலை –
அவை -எம்பெருமானும் அமுதமும் -கோதாம்படியான சொல்லு -எல்லா போக்யதையும் தன்னுடைய
போக்யதையிலே பொதிந்து இருக்கையாலே அவனை அமுது என்கிறது –
இது அவன் தன்னையும் பொதிந்து கொண்டு இருக்கையாலே அம்ருதம் போலே நிரதிசய போக்யமாய் இருந்துள்ள சப்த சந்தர்ப்பங்களாலே புகழ்ந்து திருவடிகளிலே நிர்மமனாய் விழுந்தேன் –
ஏத்தித் தொழுதேன் –
அறிந்து கவி பாடினேன் அல்லேன் -ஏத்தித் தொழவே எம்பெருமான் அபிசந்தியாலே கவி யாய்த்து –
சொலப்பட்ட நன்மாலை ஏத்தி நவின்று –
யஸ்மின் அக்ருத்ரிமகிராம் கதிரேகண்டா-என்று பிரமாணங்களாலே சொல்லப் பட்ட நன் மாலை –
வி லஷணமான எம்பெருமானை சர்வ சப்தங்களுக்கும் வாச்யனானவனை
வசஸாம் வாச்யமுத்தமம் -ஜிதந்தே -9-
ஏத்தி நவின்று –
மிகவும் ஆதரித்து ஏத்தினேன் -ஆதராதிசயம் தோற்றப் புகழ்ந்து கொண்டு சொல்லி நன் மாலை ஏத்தித் தொழுதேன் –

———————————————————————————————————————————————————————————

அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பர்களோ சாதன அனுஷ்டானம் பண்ணிக் கண்டவர்கள் -என்கிறார் –
சமாதிக தரித்ரமான  வஸ்துவை ப்ராபிக்கை -சமாதிக தரித்ரமான உபாயத்தாலே யாக வேண்டாவோ –
பண்டு ஆஸ்ரயித்தவர்கள் ஒன்றும் பெற்றிலர்கள் நான் பெற்ற பேற்றைப் பார்க்க-என்று கருத்து-

நவின்றுரைத்த நாவலர்கள் நாண் மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என் கொல் -பயின்றார் தம்
மெய்த் தவத்தால் காண்பரிய மேக மணிவண்ணனை யான்
எத்த்வத்தால் காண்பன் கொல் இன்று –86-

நவின்றுரைத்து-
மிகவும் ஆதரித்துத் திரு நாமங்களைப் பலகால் சொல்லி –
நாவலர்கள்-
பிரயோஜனாந்தர பரரான ப்ரஹ்மாதிகள்-
நாண் மலர் கொண்டு-
புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு -செவ்விப் பூக்களைக் கொண்டு –
ஆங்கே பயின்றதனால் பெற்ற பயன் என் கொல் –
அவ்விடத்தே ஆஸ்ரயித்தவர்கள் என்ன பிரயோஜனம் பெற்றார்கள் –
பெற்றார் தான் சாதன அனுஷ்டானம் பண்ணிப் பெறும் பேறு என்ன பேறு –
பயின்றார் தம்-
இப்படி நெருங்கி  சாதன  அனுஷ்டானம் பண்ணினார் யுடைய –
பயின்றார் ஆகிறார் பயின்றவர்கள் -ஆஸ்ரயிக்கிறவர்கள் –
மெய்த் தவத்தால் –
ஸ்வ யத்னத்தால் உடம்பு நோவப்  பண்ணின தபஸ் ஸால்-
காண்பரிய மேக மணி வண்ணனை-
ஸ்வ யத்னத்தால் காண்பரிய மேக– மேகம் போலேயும் நீல மணி போலேயும் ஸ்ரமஹரமான வடிவை யுடையவனை –
யான் எத்த்வத்தால் காண்பன் கொல் இன்று-
அதி ஷூத்ரனான நான் நின்று என்ன தபஸ் ஸூ பண்ணிக் கண்டேன் -அவன் காட்ட கண்டேன் இத்தனை இ றே
ஒரு தபஸ் ஸூ பண்ணாதே நிர்ஹேதுகமாகப் பெற்றேன் என்கிறார்
யாவர் நிகர் அகல் வானத்தே -திருவாய் -4-5-8-
வானக்  கோனைக் கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே-திருவாய் -4-5-9-
காண்பன் கொல் இன்று –
நேற்று நினைக்கில் அன்றோ இன்று அடி அறியலாவது  –

—————————————————————————————————————————————————————————-

உம்முடைய பேற்றுக்கு ஏற்றம் என் என்னில் -நான் கர்ப்ப காலமே தொடங்கிஅடிமைச் சுவடோடு கூட அவன் படியை அனுபவித்துப் போருகிறேன் -என்கிறார் –
இப்பேறு இன்று பெற்றேன் அல்லேன்  என்கிறார்-

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

இன்றா அறிகின்றேன் அல்லேன் –
இன்றாக அறிகிறேனோ -இப்போது அறியத் தொடங்கினேன் அல்லேன் -பண்டே அவனுடைய பிரசாதம் யுடையேன் –
இரு நிலத்தைச் சென்று ஆங்கு அளந்த திருவடியை –
இம் மஹா ப்ருதிவியை ஒருவர் இரக்க அன்றியே தானே சென்று அளந்த திருவடியை –
அவன் அளக்கிற இடத்திலே பூமி சென்றதோ -பூமி கிடந்த இடம் எல்லாம் தான் சென்று அளந்தான் அத்தனை அன்றோ –
அன்று-
பண்டே சாதன அனுஷ்டானத்துக்கு யோக்யதையும் இல்லாத அன்று –
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்-
கர்ப்ப ஸ்தானத்திலே கிடக்கச் செய்த கண்டேன் –
கண்டேன் கை தொழுதேன் –
அனுபவத்துக்குப் போக்கு வீடாகக் கை தொழுகை முதலான அடிமைத் தொழிலும் அன்வயிக்கப் பெற்றேன் –
அறியாக் காலத்துள்ளே -அடிமைக் கண் அன்பு செய்வித்து -திருவாய் -2-3-3-
கர்ப்ப பூதாஸ் தபோத நா -ஆரண்ய -1-21-
ஜாயமா நம் ஹி புருஷம் யம் பச்யேத் மது ஸூதந சாத்விகஸ் சாது விஜ்ஞேய ச வை மோஷார்த்த சிந்தக -பார -சாந்தி -358-73-
திருக் கோட்டி எந்தை –
திருக் கோட்டியூரிலே நின்று என்னுடைய கர்ப்ப ஸ்தானத்தில் தய நீயதை கண்டு விஷயீ கரித்தது -என்கை-
திருக் கோட்டி எந்தை –
ஸ்ரீ வைகுண்டத்தில் மேன்மை மாத்திரம் கண்டேனோ -முதல் காட்ஷியிலே   பூரணமாகக் கண்டேன் –
எந்தை திறம் –
என் ஸ்வாமிஇடையாட்டம் –

————————————————————————————————————————————————————————————–

அவன் தானே விஷயீ கரித்தாற்கு அவனைக் கிடைக்கும் அத்தனை அல்லது வேறு சிலருக்குக் கிடையாது என்கிறது-

திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்
செடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசற் கதவு–88-

திறம்பிற்று –
ஸ்வ யத்னத்தால் பெறுவோம் என்றவர்களுக்குத் தப்பிற்று –
இனி அறிந்தேன் –
இப்போது அறிந்தேன் –
தென்னரங்கத்து எந்தை-
அர்ஜூனனுக்கு மாமேகம் என்று உன்னால் சாதிக்கப்படும் அசேதனமான க்ரியா கலாபங்களை விட்டு
பரம சேதனனாய் உன்னைப் பெறுகைக்கு  யத்னம் பண்ணுகிற சித்த ஸ்வரூபனான என்னையே பற்று -என்றான் –
அது ஒருவனுக்கு ஒரு காலத்திலே என்னாத படி சர்வர்க்கும் சர்வ காலத்திலும் -மாமேகம் -என்று இருக்கிறவர் -பெரிய பெருமாள் –
மாம் -என்ற சௌலப்யத்திலும்-இங்கு சௌலப்ய காஷ்டையைச் சொல்லுகிறது –
மாம் -என்ற சௌலப்யத்தை -வென்று ஓட வைத்த -புடம் போட்ட -மாம் –
செம்மை யுடைய திருவரங்கர் -நாச் -11-10-
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் -நாச் -11-3-
அவ்விடம் பெறுவார்க்கும் இவர் நினைப்பிட வேணும்  –
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் –
அவனையே யுபாயமாகப் பற்றினர்வர்களுக்கு அல்லால் –
திறம்பா வழி-
ஏக பதத்தால் நிர்ணயித்த வழி –
பர வியூஹ  விபவங்களுக்கு நித்ய முக்தர் முக்த ப்ராயர் பாக்யவான்கள் பக்கலிலே  கண்ணழிவு  சொல்லி ஆஸ்ரயணம் தவிரலாம் –
அர்ச்சாவதாரத்திலே ஆஸ்ரயணத்துக்கு அங்கனே கண் அழிவு இல்லை என்று கருத்து -தேவதாந்த்ரங்கள் என்றுமாம் –
திறம்பாச் செடி நரகை –
தானே தூறு மண்டப் பண்ணின சம்சாரத்தை –
திறம்பா –
அனுபவிக்க அனுபவிக்க மாளாதே இருக்கை-
நீக்கித் தான் செல்வதன் முன் –
இத்தைக் கழித்து  போமவர்களுக்கு -இப்படி செல்வதற்கு முன்பே –
தான் செல்வதன் முன் –
இஸ் சர்வஜ்ஞன் சர்வ சக்தி இவ்வெளிய பிரதி பந்தகங்களைக் கடந்து செல்லாது ஒழிகிறானே-
தானே சம்சாரத்தை நீக்கிச் செல்லுகைக்கு இவனுக்குக் காலம் போராது-பாபம் பண்ணின காலம் அநாதி யாகையாலே –
வானோர் கடி நகர வாசற் கதவு-
நித்ய ஸூரி களுடைய அரணை யுடைத்தாய் இருந்துள்ள கலங்கா  பெரு நகரில்  வாசல் கதவு –
அரண் -என்று காவலாய் -அத்தால் ஸ்வ யத்ன சாத்தியம் அல்லாத வான் -என்றபடி
நயாமி பரமாம் கதிம் –அநே நைவ வஹி -அப்ரதிஷேதம் கொண்டு பெற பெற மாட்டாதே ஸ்வரூபத்தை அழித்துக் கொண்டு பேற்றை இழப்பதே –
கடி நகரம் –
கடி என்று பரிமளமாய்-போக்யதை யாகவு மாம் -ஒளியை யுடைத்தான நகரம் என்றுமாம் –
இது திறம்பிற்று -இனி அறிந்தேன் -தப்பிற்று  என்னும் இடம் அறிந்தேன் –
அவனாலே அவனைப் பெறுதல் அவனாலும் தன்னாலுமாக அவனை இழத்தல் -தன்னாலே அவனை இழத்தல் –
பிரதிகூலராய் இழப்பாரும் அனுகூலர் என்று பேரிட்டு கொண்டு பிரதிகூலராய் இழப்பாரும் ஆக இழக்கை இரண்டு விதம் –

—————————————————————————————————————————————————————————————

நீர் இப்படிச் சொல்ல நம்மையே பற்றினாருக்கு உதவினோமோ என்ன -செய்திலையோ -என்கிறார் –
இசைந்தாருக்குச் கர்மம் செய்யும்படி சொல்லுகிறார் –
பிரதிகூல நிரசனம் பண்ணும் படியையும் ஆஸ்ரித கார்யம் செய்யும் படியையும் சொல்லுகிறார் —

கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து
அதவிப் போர் யானை ஒசித்துப -பதவியாய்
பாணியால் நீரேற்றுப பண்டு ஒரு நாள் மாவலியை
மாணியாய் கொண்டிலையே மண்–89-

கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து-
சீற்றத்தை யுடைய கம்சனை -தலை மயிரைப் பற்றி முன்னே முடித்து என்னவுமாம் –
கதவி –
நெருப்புக் கதுவித்து என்னுமா போலே –
முன் காய்ந்து –
அவன் நினைத்தவற்றை அவன் தன்னோடு போம்படி பண்ணி -அன்றிக்கே
கதவி -கோபித்து
கதம் சிறந்து -என்று அச் சினம் தானே அழகியதாய் இருக்கை என்றுமாம் –
அதவிப் போர் யானை ஒசித்துப –
ஆனை வ்யாபரியாத படிக்கு ஈடாக அடர்த்துக் கொம்பை ஒசித்து -எற்றுவது-ஓட்டுவதாய் -இளைக்கப் பண்ணிக் கொம்பை வருத்தமற வாங்குகை-
இது தேவகியாருக்கும் ஸ்ரீ வ ஸூ தேவருக்கும் உபகரித்தபடி –
பதவியாய்-
பதவியையாய்-நீர்மையை யுடையையாய் –
அம்மிடுக்கை யுடைய நீ குணம் காண்கையாலே நீர்மையை யுடையையாய் -அன்றிக்கே –
கம்சனைக் கொன்றாப் போலே மூலை யடி அன்றிக்கே வழிபாடுடனே -என்றுமாம் –
பாணியால் –
கொடுத்து வளர்ந்த கையாலே –
நீரேற்றுப-
தன்னத்தைப் பெறாப் பேறாகக் கொள்வதே –
பண்டு ஒரு நாள் மாவலியை மாணியாய் கொண்டிலையே மண்
ஒரு கால் -என்றும் பாடம்
ஐஸ்வர் யம் தோற்றக் கொண்டாயோ -அர்த்தித்வம் தோற்ற -மாணியாய் அன்றோ கொண்டது –
மாணியாய் –
இரப்பிலே தகண் ஏறின படி -ஸ்ரீ வைகுண்டமே தொடங்கி இரப்பிலே மநோ ரதித்தான் –
பாணியால் நீர் ஏற்றுப் பண்டு ஒரு நாள் மாவலியை மாணியாய் கொண்டிலையே மண்-
கொடுத்து வளர்ந்த கையாலே -உதக ஜலத்தை ஏற்று வாங்கி -முன்பு ஒரு காலத்திலே கொடுக்கையில் தீஷித்து இருந்த மஹா பலியை
இரப்பிலே தகண் ஏறின ப்ரஹ்ம சாரியாய் கொண்டு பூமியை அவன் பக்கல் நின்றும் வாங்கிக் கொண்டிலையோ –
உன்னை ஆஸ்ரயித்த இந்த்ரன் விரோதியைப் போக்கிக் கார்யம் செய்திலையோ -என்றபடி –

————————————————————————————————————————————————————————————-

கம்சனைக் கொன்றோம் -ஆனையைக் கொன்றோம் -பூமியை அளந்தோம் -என்று நம்முடைய செயல்களையே சொல்லும் இத்தனையோ –
உமக்குப் பெற வேண்டுவது சொல்லீர் என்ன -எல்லா புருஷார்த்தங்களையும் அனுபவித்தேன் அன்றோ என்கிறார் –

மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே -நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை எங்கள்
பெருமானைக் கை தொழுத பின்-90-

மண்ணுலகம் ஆளேனே-
ஓரடி வர நின்றால் பூமியை ஆளுகை எனக்கு ஒரு பணியோ–அதுவும் பெற்றேனே அன்றோ என்கை-
வானவர்க்கும் வானவனாய்- விண்ணுலகம் தன்னகத்து மேவேனே –
நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகாய் பரமபதத்தே இருக்கை பணியுண்டோ –
வானவர்க்கும் வானவனே –
நித்ய ஸூ ரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் யுண்டான வாசி யுண்டாகை-
மேவனே –
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே -ஸ்ரீ வைகுண்ட நாதன் தாட்பாலைக் கொடுத்து விடும் அத்தனை –
வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே -திருவாய் -4-3-11–இரண்டும் இவனுக்கு விதேயமாக்குகை -அர்த்த தச்ச  இத்யாதிவத் -யுத்த 116-24-
அன்றிக்கே -வானவர்க்கும் வானவனே –
ப்ரஹ்மாதிகள் ஐஸ்வர்யம் பெற்றேன் அன்றோ என்றுமாம் –
திருமாலை செங்கண் நெடியானை எங்கள் பெருமானை-நண்ணி-கை தொழுத பின்-
ஸ்ரீ யபதியாய்- வத்சலனாய் -எங்களுக்கு ஸ்வாமி யானவனைக் கிட்டிக் கை தொழுத  பின் போக மோஷத்தில்
எனக்கு ஒரு குறை யுண்டோ -ஒன்றிலே எல்லாம் யுண்டான விஷயம் –
திருமாலை –
ப்ரஹ்மசாரி எம்பெருமானையோ நான் பற்றியது –
செங்கண் நெடியானை –
தலை சாய்ந்தாரை நோக்கும் படியும் -ருணம் பிரவ்ருத்தமிவ மே-பார உத் -47-22-என்று இருக்கும் படியும்
எங்கள் பெருமானை-
அப்ராப்த விஷயத்தைப் பற்றினேனோ -அஸ்மத் ஸ்வாமின்  –
கை தொழுதேன் –
உபய விபூதியும் தன்னதாகை தொழுகை யோடு வ்யாப்தம் –

—————————————————————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
நம் பிள்ளை திருவடிகளே சரணம்-
பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி – -71-80– ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —

February 26, 2015

சர்வேஸ்வரன் ஆஸ்ரித அர்த்தமாய்ப் போந்து அவதரித்துப் பண்ணும் வியாபாரங்களை அனுசந்தித்து நித்ய சூரிகள் அஸ்தானே பய சங்கி களாய்க் கொண்டு அவர்கள் படும்பாடு சொல்லுகிறது –
ஆக இப்படிப் பரிவர் இல்லாத இடங்களிலே வந்து சந்நிஹிதனானவன் –
அங்கு அப்படிப் பரிவரோடே இருக்குமவன் கிடீர் என்கிறார் -கீழ் இவன் தான் உகந்தபடி சொல்லிற்று -இதில் இவனையே உகக்கும் நித்ய ஸூ ரிகள் படி சொல்லுகிறது –
அவன் இங்கு வந்தாலும் அங்கு உள்ளாரே பரியும் அத்தனை -இங்குப் பரிவார் இல்லை -அது யார் அறியப் படுகிறார் என்கிறார் –
சர்வ காலத்திலும் ஸூ லாபமான படியை அனுசந்தித்தார் கீழ்
சர்வ தேசத்திலும் ஸூ லபனான படியை அனுசந்திக்கிறார் இதில்

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்குவித்த தாழி-விடம்காலும்
தீவாய் அரவணை மேல் தோன்றல் திசை யளப்பான்
பூவாரடி நிமிர்த்த போது–71-

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப –
இடத் திருக் கையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யமானது சர்வேஸ்வரனுடையதிரு உலகு அளந்து அருளின  விஜயத்தாலே வந்த
ஹர்ஷத்துக்குப் போக்குவீடாக நின்று ஆர்த்துக்  கொண்டதாய்த்து –
உகவாதார் அடைய அந்த த்வநியிலே மண் உண்ணும் படிக்கீடாக நின்று கோஷித்த தாய்த்து-
எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்த தாழி-
திரு ஆழியானது அப்படியே ஆர்த்துக் கொள்ள அவசரம் இன்றிக்கே  நெருப்பை உமிழா நின்று கொண்டு நமுசி பிரப்ருதிகளை  வாய் வாய் என்று முடித்த தாய்த்து –
விடம்காலும் தீவாய் அரவணை மேல் தோன்றல் –
திரு வனந்த வாழ்வான் தனக்குப் படுக்கையான நிலை குலையாது இருக்கச் செய்தே ப்ரதிபஷ நிரசனம் பண்ணிற்றாக வேணும் இ றே பரிச்சலாலே-
அதுக்கு உறுப்பாகக் கிடந்த இடத்தே கிடந்து விஷத்தை உமிழா நின்றுள்ள பயாவஹமான வாயை உடையனான
திரு வநந்த வாழ்வான்  மேலே சாய்ந்து அருளக் கடவனான பிரதானனானவன் –
திரு வநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளா நின்றாலும் இவன் திரு மேனிக்கு என் வருகிறதோ என்று அனுகூலர் அஞ்ச வேண்டும்படியான சௌகுமார்யத்தை உடையனானவன் –
திசை யளப்பான்-
காடு மோடையுமான திக்குகளை அளக்கைக்காக –
பூவாரடி நிமிர்த்த போது-
புஷ்பஹாச ஸூ குமாரமான திருவடிகளைப் பரப்பின போது இடங்கை வலம்புரி நின்றார்ப்ப இப்படிப் பட்டார்கள் என்கிறது –
பூவாரடி –
வெருமனிருக்கிலும் வயிறு எரிய வேண்டி இருக்கிற படியாலே பிராட்டிமார் பரியும் திருவடிகள் –
மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -திருவாய் -9-2-10–பரிமளமும் பொறையும் தொடப் பொறாது ஒழிவதே –
மெல்லடி ஆற்றாமையாலே தொட வேண்டித் தொடப் பொறாமை யாலே கூச வேண்டும்படி இருக்கை-பூவைப் பரப்பினால் போலே இருக்கை –

————————————————————————————————————————————————————————————————————————————————————-

அளவுடையரான நித்ய ஸூ ரிகளும் கூட இப்படிப் படுகிற விஷயமான பின்பு எனக்குச் சென்று ஆஸ்ரயிக்கைக்கு யோக்யதை உண்டோ என்று திரு உள்ளம் பிற்காலிக்க-
அது வேண்டா காண்-திர்யக்குகளும் கூட ஆஸ்ரயிக்கலாம் படி ஸூ லபன் காண் -ஆனபின்புரியும் அதிலே ஒருப்படு -என்கிறார் –

போதறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது உள்ளம் -போது
மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேராய்ந்து-72-

போதறிந்து –
காலம் அறிந்து -ரஜஸ் தமஸ் ஸூ க்கள் கழித்து சத்வ நிஷ்டரான ரிஷிகள் ப்ராஹ்மமான முஹூர்த்தத்திலே யுணருமா போலே வானரங்கள் ஆனவை காலம் அறிந்து உணர்ந்து போய்-ஏகாகிளைப் போலே உறக்கம் இல்லை –
வானரங்கள் –
நித்ய ஸூ பரியும் இடத்தே –
பூஞ்சுனை புக்கு –
பூத்த சுனைகளிலே புக்கு -ரிஷிகள் குளிரைப் பாராதே அகமர்ஷணம் பண்ணுமா போலே –
ஆங்கு-
அவ்விடம் தன்னிலும் –
அலர்ந்தபோது –
கடுமொட்டாதல் -கழிய அலருதல் செய்யாமே செவ்விப் பூக்களை –
அரிந்து-
பறித்துக்
கொண்டு ஏத்தும் –
இவற்றைக் கொண்டு ஆஸ்ரயியா நிற்கும் -ஆனபின்பு
உள்ளம் -போது-
போது உள்ளம் -உள்ள மேனியும் பிற்காலியாதே போது –
நாம் போய் செய்வது என் என்றால் நீயும் அப்படியே செவ்விப் பூக்களைக் கொண்டு –
மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல-
நீல மணி போலே இருக்கிற நிறத்தை யுடையனான திருவேங்கடமுடையானுடைய  செவ்வித் திருவடிகளிலே கிட்டும்படி –
அணி-
அது செய்யும் இடத்தில் –
வேங்கடவன் பேராய்ந்து-கொண்டு
திருவேங்கடமுடையானுடைய திரு நாமங்களை அனுசந்தித்துக் கொண்டு இது என்ன நீர்மை என்று கொண்டு
அவன் திருவடிகளிலே கிட்டும்படி போதை யணிவோம்-
பூவைக் கொண்டு ஆஸ்ரயிப்போம்-
அன்றிக்கே -அணி வேங்கடவன் என்று சம்சாரத்துக்கு ஆபரணமான திருவேங்கடமுடையான் என்றாய் வேங்கடவன் மலரடிக்கே செல்லும் போதும்  அணி என்றுமாம் –

——————————————————————————————————————————————————————————————–

அவன் இப்படி சர்வ சமாஸ்ரய ணீ யானான நிலையை அனுசந்தித்து -அவன் திருவடிகளிலே
நித்ய கைங்கர்யம் பண்ணுவதாக வ்யவசிதரான படியை அருளிச் செய்கிறார் –

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் -ஏய்ந்த
பிறை கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆட்பட துணிந்த யான் –73-

ஆய்ந்து உரைப்பன் –
அனுசந்தித்துக் கொண்டு செல்லா நிற்பன் -அவன் திரு நாமங்களை –
ஆயிரம் பேர் –
அது தன்னில் இன்ன திரு நாமங்கள் சொல்லக் கடவோம் -இன்ன திரு நாமத்தை விடக் கடவோம் -என்ற ஒரு நியதி இல்லை –
தாய் பேர் சொல்லக் காலமும் தேசமும் பார்க்க வேணுமோ –
ஐஸ்வர் யாதிகளில் கை வைத்தார்க்கு இ றே நியதி உள்ளது -கைக்கு எட்டித்த ஒரு கண்ட சர்க்கரையை வாயிலுடுமா போலே –
ஆதி நடு அந்திவாய்-
முதலும் நடுவும் முடிவுமான போதிலே -அப்படியவை செய்யும் இடத்திலே காலத்திலும் ஒரு நியதி  இல்லை -த்ரிசந்தையிலும் என்றபடி –
வாய்ந்த மலர்-
புஷ்பங்களிலும் இன்னத்தைக் கொண்டு என்ற ஒரு நியதி அன்றியிலே கிட்டின புஷ்பங்களைக் கொண்டு –
தூவி –
அடைவு கெடப் பரிமாறி –
வைகலும் –
இப்படி ஆஸ்ரயிக்கும் இடத்தில் என்றும் ஒக்க ஆஸ்ரயிப்பன்-காலம் எல்லாம் என்றபடி -நாள் தோறும் உண்ண வேண்டுமாப் போலே –
ஏய்ந்த பிறை கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்-
சேர்ந்து பிறை போலே இருந்துள்ள கொம்புகளையும் சிவந்த கண்களையும் யுடைத்தான குவலயா பீடத்தை நிரசித்த படியாகவு மாம் -அன்றிக்கே –
ஏய்ந்த என்று பிறை போலே ஏய்ந்து இருந்துள்ள கொம்புகளையும் தர்ச நீயமான கண்களையும் யுடைத்தான
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை நோக்கின படியைச் சொல்லுகிறதாக வுமாம் –
குவலயா பீடத்தை யானபோது ஆஸ்ரயிப்பாருடைய விரோதிகளைப் போக்குகைக்கு உப லஷணம் ஆகிறது –
ஸ்ரீ கஜேந்த ஆழ்வானை யானபோது ஆஸ்ரிதர் விஷயத்தில் அவனுக்கு யுண்டான வாத்சல்யத்தைச் சொல்லுகிறது –
கரி விடுத்த –
ஒரு பூ இழக்க மாட்டாமை முதலையின் வாயினின்றும் விடுத்த
பெம்மான் –
ஸ்வாமிக்கு–சர்வேஸ்வரனான -என் ஆயனுக்கு -சேஷத்வ ஜ்ஞானம் துணியப் பண்ணுகிறபடி-
இறைக்கு –
வகுத்த ஸ்வாமிக்கு –
ஆட்பட துணிந்த யான்-
அடிமை செய்கையிலே அத்யவசித்து உள்ள நான் –
ப்ராப்யமான அடிமை செய்யத் துணிந்த அடியேனான நான் –
அவன் பிரதிபந்தகம் போக்க -நான் அடிமை செய்தேன் -என்கிறார் –
இப்படி விரோதி  நிரசன சீலன் ஆனவனுக்கு அடிமை செய்யத் துணிந்த யான் –
வாய்ந்த மலர் தூவி ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நாடு அந்தி வாய் வைகலும் -என்று அந்வயம்-

—————————————————————————————————————————————————————————————

இப்படி கைங்கர்யம் பண்ணுகையால் வந்த ஹர்ஷத்தாலே அவனுக்கு சத்ருசமாகக் கவி பாடும்படியான ஸூ க்ருதம் பண்ணினேன்  நானே -என்கிறார்
நம் ஆழ்வார் வானவர் கோனைக் கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே-திருவாய் 4-5-9- என்றாப் போலே யாயத்து இவர்க்கும் இது –

யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-

யானே தவம் செய்தேன் –
நானே தபஸ் சைப் பண்ணினேன் ஆகிறேன் -சம்சாரிகளில் வாசி –
ஏழ் பிறப்பும் எப்பொழுதும்-
எல்லா ஜன்மங்களிலும் எல்லா அவச்தைகளிலும் பகவத் சமாஸ்ரய ணீ யமான கவி  பாடுகை யாகிற இந்த லாபத்துக்கு அடியான இந்த தபஸ் சைப் பண்ணினேன் நானே  –
பிராட்டி -ஈத்ருசன் து புண்யபாபம் -என்றாள்-அளவில்லாத துக்கத்தைக் கண்டு இதுக்கடி யுண்டாக வேணும் என்றாள் இ றே –
பாபமாவது இவளுக்கு அவர் நிக்ரஹம் இ றே -அப்படியே இவரும் இந் நன்மைக்கு அடி யுண்டு என்கிறார் –
பலத்தைக் கொண்டு நிச்சயிக்கிறார் -எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால் -திருவாய் -2-7-6–
யானே தவம் உடையேன் –
அந்த தபஸ் ஸூ க்கு பலமான பேறு பெற்றேனும் நானே –
எம்பெருமான் –
இதுக்கடி இவன் எனக்கு சேஷி ஆகையாலே –
இவருடைய தபஸ் ஸூம் பலமும் இருக்கிறபடி -போந்தேன் புண்ணியனே -பெரிய திருமொழி -6-3-4–
நாயன் புண்ணியமே இ றே எனக்கும் புண்யம் -நீ ஸ்வாமி யான பின்பு எனக்கு இவற்றில் இழக்க வேண்டுவது ஓன்று யுண்டோ –
தபஸ் ஸூ ம் தபஸ் சினுடைய பலமும் நானே யுடையேன் -என்கிறது -எத்தாலே என்னில் –
யானே இரும் தமிழ் நன் மாலை –
வேத நன்மாலையில் வாசி -சர்வாதிகாரம் –
யானே தவமிடையேன்  யானே இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்-
அந்த தப பலமான லஷண லஷ்யங்களிலே குறைவற்று இருக்கும் பெருமையை யுடைத்தாய் –
சர்வாதிகாரமாய் -அத்யந்த வி லஷண மான சப்த சந்தர்ப்பங்களையும் யுடைய வி லஷண மான தமிழாகிற மாலையைச்
சேர்த்தி அழகை யுடைத்தான தேவர் திருவடிகளுக்கே சொல்லப் பெற்றேன்   ஆனேன் –
பெரும் தமிழன்-அல்லேன் பெரிது –
த்ரமிட  சாஸ்த்ரத்தில் என்தனை அவகாஹித்தார் இல்லை -வேறு சிலவர் எனக்கு ஒப்பு அல்லர் என்று சொல்லும் அவ்வளவேயோ தான் –
பெரிது-நல்லேன்-
நான் அறக் கை விஞ்சினேன் அல்லேன் -என்னாகியே தப்புதல் இன்றி தனிக் கவி தான் சொல்லி -திருவாய் -7-9-4-என்கிற இத்தை நினைத்து அருளிச் செய்கிறார் –
நல்லேன் பெரிது –
யாவர் நிகர் அகல் வானத்தே -திருவாய் -4-5-8–நித்ய முக்தரும் அடைவு கெட்டுச்சொல்லுவார்கள் -நானும் அடைவு கெட்டுச் சொல்லுவேன்
என் பிரபந்தம் அடைவு பட்டு இருக்கை-அவர்களில் ஏற்றம் -ஏதத் சாம காயன் நாஸ்தே -தை ப்ருகு -10-5- -இங்கே இருக்க யுண்டானபடி –

————————————————————————————————————————————————————————————–

நான் போர நல்லேன் என்றாரே -ஆகில் நீர் ஒரு கவி சொல்லிக் காணீர் என்ன -அப்போது சொன்ன கவி தான் இருக்கிறபடி –
ஸ்ரீ வால்மீகி பகவானுடைய கவி பாட்டுக்கு உள்ளாக ஸ்ரீ ராம வ்ருத்தாந்தம் நேர் பட்டாப் போலே யாயத்து -இவருடைய கவி பாட்டுக்கு உள்ளீடாக திருமலையிடை யாட்டம் நேர் பட்டபடி-

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை-75-

பெருகு மத வேழம் –
ஒரு வரையிடக் கடவது அன்றிக்கே ஆற்றுப் பெருக்குப் போலே மேன்மேலே எனப் பெருகா நின்றுள்ள மதத்தை யுடைத்தான ஆனை யாய்த்து-
மும்மதம் என்ற ஒரு பிரதேச நியமம் இன்றிக்கே கிண்ணகம் போலேயாய் சிம்ஹம் அஞ்ச வேண்டும்படி இருக்கை –
மதித்துச் சமைந்ததாகில் சிறிது அறிவுண்டாம் –
அறிவு கெட்ட சமயத்திலே ஒன்றால் தணியப் பண்ண ஒண்ணாத படியான மதத்தை யுடைத்தான ஆனையானது –
மாப்பிடிக்கு முன்னின்று-
ஸ்லாக்யமான பிடிக்கு முன் நிற்கும் ஆய்த்து-அதுக்குப் பெருமை யாவது என் என்னில் -இப்படி மத்த கஜமான இத்தைக் கையாளாக்கை-
எல்லா அளவிலும் இத்தைத் தனக்கு கையாளாக்கிக் கார்யம் கொள்ள வற்றாய் இருக்கை –
மாப்பிடி –
இத்தை இன்னதனைப் பட்டினி கொள்ளவற்று என்கை-அதுக்குச் சாணைச் சீரையாய் இருக்கை –
முன் நின்று –
மதம் மிக்க சமயத்திலும் -க்ரியதாம் இதி மாம் வத -ஆரண்ய -15-7-என்று அத்தை அனுவர்த்தித்துக் கொண்டு நிற்கை -ப்ருகுடி படரைப் போலே நிற்கை –
இதினுடைய வியாபாரம் அதினுடைய புத்யதீனமாய் இருக்கை -சர்வ நியந்தா வானவன் பாண்டவர்களுக்கு நியாம்யனானாப் போலே –
மாப்பிடிக்கு முன் நின்று –
தம்முடைய ஸ்வா தந்த்ரியத்துக்கும் ஈஸ்வர ஸ்வா தந்த்ரியத்துக்கும் அஞ்சாமைக்குப் பற்றாக –
அஞ்சாத மாத்ரமே அல்ல -அவன் ஸ்வா தந்த்ர்யமே நமக்கு உடலாகைக்கு அடி -தம் த்ருஷ்ட்வா சத்ரு ஹந்தாரம்-ஆரண்ய -30-39-
இரு கண் இள மூங்கில் வாங்கி –
நான் உணர்த்தி அற்ற சமயத்திலும் அதுக்கு உகப்பு தேடா நிற்கும் ஆய்த்து-
இரண்டு கண் ஏறி இருப்பதாய் அத்தால் வரும் முற்றளவை யுடைத்தது அன்றிக்கே இருந்துள்ள மூங்கில் குருத்து –
இரு கண் –
பாதாளத்தில் கிட்டினாலும்  கண் இரண்டே
வாங்கி –
மலைகள் பொடியாம்படியான சமயமாய் இருக்கச் செய்தேயும் பிடிக்கு கார்யம் செய்கிறது ஆகையாலே
அவதானத்தோடு வைத்து வாங்குவாரைப் போலே வாங்கும் ஆய்த்து
மூங்கிலினுடைய மேன்மையையும்  களிற்றினுடைய ஸாவ தானத்தையும்  சொல்லுகிறது –
வெண்ணெய் வாங்கினாப் போலே -அதில் செவ்வியிலே சிறிது குறையில் அது கொள்ளாது என்று இருக்குமே –
அருகிருந்த தேன் கலந்து –
திருமஞ்சனத்துக்கு வேண்டும் உபகரணங்கள்  அவ்வவ் இடங்களிலே குறைவற்று இருக்குமாப் போலே
அங்கு பார்த்த பார்த்த இடம் எங்கும் போகய த்ரவ்யங்கள் குறைவற்று கிடக்குமாய்த்து –
மலை முளன்சு களிலே நிறைந்து நின்ற தேனிலே தோய்த்து –
கலந்து என்கையாலே மூங்கிலும் தேனும் த்ரவ்ய த்ரவ்யங்கள் இரண்டு சேர்ந்தாப் போலே இருக்கை-
நீட்டும் –
அது முகத்தை மாற வைத்துக் கொண்டு ச்வீகரியாதே அநாதரித்து நிற்க -இது கொடுத்தபடியே நிற்குமாய்த்து –
இதுக்குக் கொடுக்கையே புருஷார்த்தமாய் இருக்கிறபடி –
உனக்கு வேண்டுவார்க்குக் கொடாய்-என்னுமா போலே யாய்த்து அதுக்குக் கருத்து -இரந்து அது கொள்ளும்படி கொடுக்கும் –
நீட்டும் –
இதம் மேத்யம் இதம் ஸ்வாது -அயோத்யா -96-2-என்னுமா போலே
திருவேங்கடம் கண்டீர் –
இப்படிப்பட்ட திருமலை கிடீர் –
வான் கலந்த வண்ணன் வரை –
மூங்கில் குருத்தும் தேனும் ஏக ரசமாய்க் கொண்டு கலந்தால் போலே யாய்த்து
இங்கும் மேகத்தோடு கலந்து சேர்ந்த வடிவு இருக்கிறபடி –
மேகத்தினுடைய நிறத்துக்கும் அவனுடைய வடிவுக்கும் வாசி அறிந்து சொல்ல ஒண்ணாத படியாய் இருக்கும்
உபமான உபமேயங்கள் சத்ருசமாய் இருக்கை -வான் கலந்த வண்ணன் வரை திருவேங்கடம் கண்டீர் -என்று அந்வயம்-

—————————————————————————————————————————————————————————————-

கவி பாட்டு இனிதானாப் போலே அங்குத்தைக்கு ஈடான சமாராதன உபகரணங்களைச் சமைத்துக் கொண்டு
இப்படி சந்நிஹிதனாய் -வகுத்தவனானவன்  திருவடிகளிலே அடிமை செய்யுமதுவே இவ்வாத்மாவுக்கு ஹிதம் என்கிறார்-

வரைச் சந்தன குழம்பும் வான் கலனும் பட்டும்
விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் -நிறைத்துக் கொண்டு
ஆதிக்கண் நின்ற வறிவன் அடி இணையே
ஓதிப் பணிவது உறும் —76-

வரைச் சந்தன குழம்பும் –
நல்ல ஆகரத்தில் யுண்டான சந்தனக் குழம்பும் -நாற்றம் குறைவறும்படி அபிஜாதமான சந்தனமும் –
தென்னன் பொதியில் செழும் சந்தனக் குழம்பும்  -பெரிய திருமடல் –
வான் கலனும்-
அங்குத்தைக்கு ஈடான பெரு விலையனான வழகிய  திரு வாபரணங்களும் -தேசமான அணிகலனும் -திருவாய் -4-3-2-
பட்டும்-
திருவரைக்குத் தகுதியாக சௌகுமார்யத்துக்கு சேரும்படியான நல்ல பட்டுக்களும் –
விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் –
பரிமளத்தால் மிக்கு இருப்பதாய்  தர்ச நீயமான வெளுத்த நிறத்தை யுடைய மல்லிகையும் -சூட வேண்டாதே காண அமையும் –
நிறைத்துக் கொண்டு-
இவற்றை அடங்க கண்ட காட்சியிலே அவனுக்கு ஆதாரம் பிறக்கும் படிக்கு ஈடாக பாரித்துக் கொண்டு –
யசோதைப் பிராட்டி -அஞ்சனமும் கொண்டு வைத்தேன் -பெரியாழ்வார் -2-4-4-என்று திருமஞ்சனத்துக்குப் பாரிக்குமா போலே –
சூட்டு நன்மாலைகள் தூயன ஏந்தி -திருவிருத்தம் -21-என்னும்படி அடைவே எடுக்கும் முறையிலே எடுத்துக் கொண்டு –
ஆதிக்கண் நின்ற-
ஆதி காலத்திலே நின்றுள்ளவன்-இத்தால் இவை இழந்த வன்று தான் உளனாய் இருப்பானாய்-அதுக்கு மேலே –
இவற்றுக்கு அடங்கத் தான் காரண பூதனாய் யுள்ளவன் -என்றபடி
உபாய  வஸ்து ஏது என்ன -காரணந்து த்யேய -என்று ஜகத் காரண வஸ்து என்கிறதே –
வறிவன்-இப்படி உபாச்யனுமாய் -இவன் ஒருநாள் அல்ப அனுகூல்யம் பண்ணினால் பின்னை
கோவிந்தேதி யதாக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாசிநம் ருணம் ப்ரவ்ருத்த மிவ -பார உத் -47-22-என்கிறபடியே
பின்னை ஒரு நாளும் மறக்கக் கடவன் அல்லாத சர்வஜ்ஞ்ஞனும் ஆவான் -இத்தனை செய்தானாகில்
இதுக்கு மேற்பட இவன் செய்வது என் என்னும் ஜ்ஞானத்தை யுடையவன் –
அடி இணையே-
அவனுடைய ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளையே
ஓதிப் பணிவது உறும் —
ஸ்தோத்ரம் பண்ணி வணங்குவது உறும் -ஸ்தோத்ரம் பண்ணித் தலையாலே வணங்கும் இது இவ்வாத்மாவுக்குச் சால  யுறும் -என்கிறார் –
உறும் –
சீரியதாய் – இப்போதும் இனிதாய் -என்றும் இனிதாம் -கருப்புக் கட்டி தின்னக் கண்ட சர்க்கரை கூலி என்கை-
அப்ராக்ருத வஸ்துவை ஆஸ்ரயிக்கும் போது அப்ராக்ருத த்ரவ்யங்கள் வேணும் என்று அஞ்ச வேண்டா கிடி கோள்-என்கிறார்  –

—————————————————————————————————————————————————————————————–

இப்படி ஆஸ்ரயணத்தைஅடைவுபட அனுசந்தித்து இவர் தமக்கு அது ரசித்தவாறே -திரு உள்ளத்தைக் குறித்து
அவன் லப்தனானால் பிறக்கும் அனுபவத்தில் காட்டிலும் சாதன தசையில் பிறக்கும் ரசமே அமையும் கிடாய் -என்கிறார்-

உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் -உறும் கண்டாய்
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈர் ஐஞஜூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம்-77-

உறும் கண்டாய் –
உறுதும் -என்கிற இத்தைக் குறைத்து உறும் என்று கிடக்கிறதாக்கி பழைய உறுதும் என்கிற வற்றையே கொண்டு அவன் திருவடிகளை நாம் ப்ராபிப்போம் -என்றாதல் –
அன்றிக்கே -இத்தை இதர லாபங்கள் அளவாக புத்தி பண்ணாதே -இதாகிறது சாலச் சீரி யது என்று கிடாய் –
இத்தைப் புத்தி பண்ணு -என்றது ஆகவு மாம் –
உறும் கண்டாய் –
ஷூத்ர புருஷார்த்தங்கள் யுடைய காலைப் பற்றிக் கொண்டு திரிந்த யுனக்கு ஸூ க்ருதானவனுடைய திருவடிகளை பற்றுகை உறும் -அநாதி காலம் நாம் இளிம்பு பட்டபடியை அறிதி –
நல் நெஞ்சே –
எனக்குப் பாங்கான நெஞ்சே -என்னுதல்-எனக்கு முன்பே பதறி வரும் நெஞ்சே -என்னுதல் –
உத்தமன் –
தன பேறாக வடிவைக் கொள்ளக் கடவ சர்வேஸ்வரன் -நாம் வேண்டாத நாளும் நம்மைத் தொடர்ந்து திரிந்தவன் –
நல் பாதம்-
நமக்கும் அவனுக்கும் உள்ள வாசி போரும் அவனுக்கும் திருவடிகளுக்கும் –
பொது நின்ற பொன்னங்கழல் -மூன்றாம் திரு -88-
சோஹம் தே தேவ தேவேச நார்ச்சனா தௌ ந ச  சாமர்த்யவான் க்ருபா மாத்ர  மநோ வ்ருத்தி ப்ரசீத மே-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-10-
தானே வந்து தலையிலே இருக்கும் திருவடிகள் –
உத்தமன் நற்பாதம் உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால்-
அழகியதாய்  இருப்பது ஒரு தாமரைப் பூவாலே அவன் திருவடிகளைக் கிட்டலாம் கிடாய் –
இத்தால் கனக்க ஓன்று கொண்டு ஆஸ்ரயிக்க வேண்டா என்றபடி -அப்ராக்ருத புஷ்பம் தேடித் போக வேண்டா –
உறும் கண்டாய் ஏத்திப் பணிந்தவன் பேர் ஈர் ஐஞஜூறு எப்பொழுதும் சாத்தி உரைத்தல் தவம்-
இத்தால் ஆஸ்ரய வஸ்துவைப் ப்ராபிப்பதிலும் ஆஸ்ரயணம் தானே நன்று என்னும் இடத்தை சொல்லுகிறது –
சாத்ய தசையிலும் சாதன தசைதான் நன்றாகச் சொல்லக் கடவது இ றே
சாற்றி உரைத்தலான தவம் உறும் கண்டாய் -இத்தைத் தவமாகச் சொல்லுகிறது ஈஸ்வரன் கருத்தாலே –

——————————————————————————————————————————————————————————————

இப்படிப்பட்ட தபஸ் சை அனுசந்தித்து சர்வேஸ்வரன் திருவடிகளை வருத்தம் அற லபிக்கப் பெற்றான் சதுர்முகன் ஒருவனுமே கிடீர் -என்கிறார்-

தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி
நிவர்ந்து அளப்ப நீட்டிய பொற்  பாதம் -சிவந்த தன்
கை யனைத்தும் ஆரக் கழுவினான் கங்கை நீர்
பெய்தனைத்துப பேர் மொழிந்து பின்-78-

தவம் செய்து நான்முகனே பெற்றான் –
அநேகம் பேர் தபசைப்   பண்ணினார்களே யாகிலும் -அவை ஒன்றும் பலத்தோடு வ்யாப்தமாகப் பெற்றது இல்லை
ப்ரஹ்மா ஒருவனுமே தான் பண்ணின தபஸ் ஸூ  பலத்தோடு வ்யாப்தமாகப் பெற்றான் –
இவன் இனியது செய்ய அவன் தவம் என்று இருக்கும் -வணக்குடை தவ நெறி -திருவாய் -1-3-5–என்னக் கடவது இ றே –
தரணி நிவர்ந்து அளப்ப –
சர்வேஸ்வரன் அந்ய அர்த்தமாகச் செய்த செயல்  அவனுடைய தபஸ் ஸூ க்குப் பிரயோஜன ரூபமாகக் கொண்டு தலைக் கட்டப் பெற்றது –
யாரேனுக்கும் கார்யம் செய்ய யாரேனுக்கும் பலித்துப் போவதே –
நான்முகனே   பெற்றான் –
ப்ரஹ்மாவைப் போலே தபஸ் ஸூ பண்ணிப் பலம் பெற்றார் யுண்டோ –
நீட்டிய பொற்  பாதம் –
பூமியை வளர்ந்து அளக்கைக்காக  நீட்டின ஸ்லாக்கியமான திருவடிகள் -எட்டாதபடி பரணிட்டு இருக்கக் கிடீர் பலித்தது என்கை-
-சிவந்த தன் கை யனைத்தும் ஆரக் கழுவினான் –
தன்னுடைய சிவந்த கைகள் அனைத்தும் ஆரும்படி விளக்கினான் –
அநேகம் கை படைத்ததால் உள்ள லாபம் பெற்றான் –
கை அனைத்தும் ஆர-
வயிறார என்னுமா போலே விளக்கின படி தான் ஏன் என்னில் –
கங்கை நீர் பெய்து –
கங்கையில் நீரை வார்த்து க்ருஹீத்வா தர்மபா நீயம் -ஈஸ்வர சம்ஹிதை -என்று திருவடிகளை விளக்க அபேஷிதமான வாறே -தர்ம ஜலமானதைக் கையிலே கொண்டு –
அனைத்துப் பேர் மொழிந்து –
அவனுடைய எல்லா திரு நாமங்களையும் சொல்லி –வாய் படைத்த பிரயோஜனம் பெற்றான் –
பின் –
பின்பு தபஸ் பலம் பெற்றான் அவன் ஒருவனுமே என்கிறார் –
கங்கை நீர் பெய்து- அனைத்துப் பேர் மொழிந்து -சிவந்த தன் கை அனைத்தும் ஆரக் கழுவினான் –
பின் தவம் செய்து நான் முகனே பெற்றான் -பின்னைத் திருவடிகளை விளக்கினான் -என்றுமாம் –

———————————————————————————————————————————————————————————————

ஜகத்தை அளந்து கொண்ட செயலுடைய ஸ்ரீ வாமனனுடைய வ்ருத்தாந்தமானது -தாயார் அபேஷிக்க மறுத்துக் காடேறப் போன
சக்ரவர்த்தி திருமகனுடைய இத்தன்மைக்கு ஒக்கும் -என்கிறார்-

பின்னின்று தாய் இரப்பக் கேளான் பெரும் பணைத் தோள்
முன்னின்று தான் இரப்பாள் மொய்ம்மலராள் -சொல் நின்ற
தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல் அவன் அளந்த
நீள் நிலம் தான் அனைத்துக்கும் நேர்-79–

பின்னின்று தாய் இரப்பக் கேளான்-
தாயாரான ஸ்ரீ கௌசல்யார் பின்தொடர்ந்து நின்று -பிள்ளாய் நான் ஏக புத்ரையானவள் -உன்னைப் பிரிந்தால் ஜீவிக்க  வல்லேனோ –
நீ காட்டுக்குப் போக வேண்டா -என்று ஆர்த்திக்க -அத்தைக் கேளாதே புறப்பட்டுப் போனான் -அதுக்கு மேலே –
பெரும் பணைத் தோள் முன்னின்று தான் இரப்பாள் மொய்ம்மலராள் –
அத்யந்தம் ஸூகுமாரியான பெரிய பிராட்டியாரானவள் -பாஹூ ராமஸ்ய சம்ஸ்ரிதா -ஆரண்ய -60-20-என்கிறபடியே -இத்தோளை அணைந்த நான் பிரிந்து இருந்தும் ஜீவிக்க வல்லேனோ -என்று கொண்டு –
அக்ரதஸ் தேகமிஷ்யாமி -அயோத்யா -27-7–என்கிறபடியே முற்பட்டு நின்று அர்த்தித்தாள் ஆய்த்து-
யஸ் த்வயா சஹ சச்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா -அயோத்யா -30-18-
பெரும் பணைத் தோள் மொய்ம்மலராள் தன்னை இரக்க வேண்டும்படியான அழகும் சௌகுமார்யமும்-
இரப்பாள்   –
பெருமாள் ஆகிற கருமுகை மாலையைச் செவ்வி பெறுத்த வேணும் என்று நெருப்பிலே இடுமா போலே இந்த அதி ஸூ குமாரமான திருமேனியைக் கொண்டோ காடேறப் போகிறது -என்று
உம்மைப் பிரிந்து இருக்க மாட்டேன் -உமக்கு முன்னே போகக் கடவேன் என்று ப்ரார்த்தியா நிற்க –
பெருமாள் கருமுகை மாலையை வெய்யிலிலே இடவோ என்று இருந்தார் -அவள் தன்னை மறந்து பெருமாளையே நினைந்து இருந்தாள்-
சொல் நின்ற தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல் –
ஒரு பிரபந்தமானது தோள்களினுடைய குணங்களைச் சொல்லுகையாலே உப லஷணமாய் இருக்கும் ஆய்த்து -சொல் என்கிறது ஸ்ரீ ராமாயணத்தை ஆய்த்து – வீர்யவான் -பால -1-3-என்றும் ஆயதாஸ்ஸ-கிஷ்கிந்தா -3-10-என்றும் சொல்லக் கடவது இ றே-
பிணம் தின்னி அகப்பட -ஸூ குமாரௌ-ஆரண்ய -19-14-என்னும்படி இருக்கை-
இப்படிப்பட்ட தோள் நலத்தை யுடையனாய் ஒப்பில்லாத பிரதானனான அவன் –
தோன்றல் –
சௌகுமார்யம் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கை –
அவன் அளந்த நீள் நிலம் தான் அனைத்துக்கும் நேர்-
அவன் அளந்த பூமிப் பரப்பு அடங்கலும் இத்தனைக்கும் நேர் -அவன் அளந்த பூமி அவன் குணம் அத்தனைக்கும் நேர்
பொன்னகரம் பின்னே புலம்ப வலம் கொண்டு மன்னும் வளநாடு கை விட்டு -பெரிய திருமடல் -என்கிறபடியே
இவர்கள் சொற்களை மறுத்து பித்ரு வசன பரிபாலன அர்த்தமாகப் போன  இதுக்கு ஒக்கும்

———————————————————————————————————————————————————————————–

இப்படிப் பட்டுள்ள அவன் திருவடிகளில் அடிமை எனக்கு ருசித்து நான் ஸ்ம்ருதி மாத்ரத்தாலே அங்கே பிரவணன் ஆனபடியாலே
பண்டு அவன் வடிவைக் காணப் பெற்றவர்கள் அப்போது என் பட்டார்களோ -என்கிறார்-

நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம்
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -ஆர்ந்த
அடிக்கோலம் கண்டவர்க்கு என் கொலோ முன்னைப்
படிக்கோலம் கண்ட பகல் -80-

நேர்ந்தேன் அடிமை –
அவன் பக்கலில் யுண்டான அடிமையிலே நேர்ந்தேன் -ஸ்வரூப அனுரூபமான கைகர்யத்தைக் கிட்டினேன் –
துணிந்தேன் -என்று கீழே -65- பாசுரத்தில் சொன்னபடி -ஷத்ரியனுக்குஅபிஷேகம் நேர்பட்டால் போலே –
நினைந்தேன் அது ஒண் கமலம்-
அவனுடைய அழகிய திருவடிகளை ஸ்மரித்தேன்-இவருடைய அபிஷேகம் –
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -திருவாய் -4-3-7-என்றும்
மாலடி முடிமேல் கோலமாம் -குலசேகரன் -பெருமாள் -7-11-என்றும் சொல்கிறபடி அடிமை ஆசைப்பட்டால் அடியை நினைத்து இருக்கும்  அத்தனை இ றே –
திவ்யஜ்ஞா நோபபன் நாஸ்தே -ஆரண்ய -1-10- என்றும் -த்ருஷ்ட்வ ஏவ ஹி ந சோகம் அப நேஷ்யதி ராகவ -அயோத்ய -83-9–என்றும் சொல்கிறபடியே –
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -ஆர்ந்த அடிக்கோலம் கண்டவர்க்கு என் கொலோ முன்னைப் படிக்கோலம் கண்ட பகல் –
அழகு சேர்ந்த திருவடிகளைக் கண்டவர்களுக்கு -அதுக்கும் அடியான வடிவழகைக் கண்டு அனுபவிக்கப் பெற்ற போது என்னாய்த்தோ -என் பட்டார்களோ -என்றபடி –
அன்றிக்கே -ஆர்ந்த அடிக்கோலம் கண்டவர்களாய் -அடியராய் -அவர்கள் ஆகிறார் தாமாய்-நான் திருவடிகளில் அழகைக் கண்டு பட்டபடி கண்டால்
முன்பு அவ் வடிவழகைக் கண்டு அனுபவிக்கப் பெற்றவர்கள் என் பட்டார்கள் என்றதாக வுமாம்
பண்டு வடிவழகை  அனுபவிக்கப் பெற்றவர்கள் அப்போது திருவடிகளில் அழகைக் கண்டு என் பட்டார்களோ என்றுமாம் –
திரு யுலகு அளந்து அருளின திருவடிகளைக் கண்டவர்களுக்கு முன்பு ஸ்வா பாவிகமான ஒப்பனை கண்ட காலம் என்னோ –

——————————————————————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
நம் பிள்ளை திருவடிகளே சரணம்-
பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி – -61-70– ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —

February 25, 2015

கீழ்ச் சொன்ன ஆஸ்ரித பாரதந்த்ர்யம் தன்னை அனுஷ்டித்துக் காட்டின படியைச் சொல்லுகிறார் –
வடிவே அன்று அவனுடைய சேஷ்டிதமும் ஆஸ்ரித பரதந்த்ரம் -என்கிறது –

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் -அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனை உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு —61-

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப-
ஒரு நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே ஒரு திருவடிகளானது நின்றாப் போலே நின்று -பூமிப் பரப்பை அடங்க மறைத்துக் கொண்டது –
ஓர் பாதம் –
ஒரு திருவடிகளை இப்படிச் சொன்னால் அநந்தரம் மற்றைத் திருவடிகள் இன்னபடி செய்தது என்று  நம்மைப் போலே
அடைவுபட இருந்து ஓர் ஓன்று ஓன்று என்று கணக்கில் சொல்ல வல்லார் ஒருவர் அன்றே –
நீண்ட தோள் சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் –
ஏற்ற பொருள் பெற்றவாறே கண்ட தோளானவை திக்குகள் எங்கும் வியாபித்துக் கொண்டன – என்று விவஷிதர் இத்தைச் சொல்லா நின்றார்கள் –
கையிலே நீர் விழுந்தவாறே அலாப்ய லாபம் போலே வளர்ந்த தோளானது திக்குகள் எல்லாம் அளந்தன என்பர் –
இன்று இத்தைக் கேட்கைக்கு அன்று எங்கே போனேனோ –
அன்று கரு மாணியாய் இரந்த கள்வனை –
ஸ்ரமஹரமான  நிறைத்தை யுடையையாய் -இரப்பு பெறில் அல்லது போகாதனாகத் -தன்னைப் பேணாதே -இரப்பிலே தகணேறப் பண்ணிக் கொடு வந்தபடி
மாணியாய்-
உடையார் சூட்டினா வோடாகாதே -திருமலையைக் கல் என்றால் வாயைக் கிழியார்களோ-
இரந்த-
அவன் தன்னுடையது என்ன -அவன் பக்கலிலே இரந்தான் ஆய்த்து-
கள்வனே –
இப்படிப்பட்ட வடிவழகைக் கொடுவந்து   மகா பலியை சர்வச்வாபஹாரம் பண்ணினான் ஆய்த்து –
கள்வனே –
மஹா பலியையோ இவரையோ களவு கண்டது -அவன் தன்னை வைத்தான் இ றே-ஆத்ம அபஹாரிகளுடைய ஆத்ம அபஹாரி –
இவ்விடத்தில் தந்தாமது பெறுவார்க்கும் நேர்  கொடு நேர் கிடையாது -நீ அப்படி செய்கைக்கு ஹேது
உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு —
மஹா பலி பக்கல் கிடந்த பூமியை மீட்டுக் கொடுத்தது இந்த்ரன் ஒருவனுக்குமாகச் செய்த செயல் அன்றிக்கே
உன் திருவடிகளிலே ந்யச்தபரர் ஆனவர்கள் இச் செயலை அனுசந்தித்து -இனி நமக்கு ஒரு கர்த்தவ்யம் இல்லை என்று கொண்டு நிர்ப்பரராய் -மார்பிலே கைவைத்துக் கொடு கிடந்தது உறங்குகைக்காக செய்த செயல் இ றே
த்வத் அக்ரே சரணாகதாநாம் பராபவ ந தேநு ரூபா -ஸ்தோத்ர ரத்னம் -25-என்று கொண்டு சொன்ன அலாபம் தம்மளவிலே போகாதாப் போலே
லாபம் உள்ளதும் எங்கும் ஒக்கக் கிடக்கக் கடவதே –
எங்கனம் தேறுவர் உமரே -திருவாய் -8-1-4-எண்ணக் கடவது இ றே
ஒரு நாள் பட்டர் தம்மிலே இருந்து -இந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஒருவன் பக்கலிலே ஒரு வார்த்தை கேட்ட பின்பு தங்களை தேக யாத்ரையில் ஊன்ற நின்று நிர்வஹிக்குமது இல்லை –
அங்கனே இருக்கச் செய்தே இவர்கள் தாங்கள் ஸூ கமே ஜீவித்து ஒரு குறையற்றுச் செல்வதாக நிற்பர்கள்-
இதுக்கடி என் தான் -என்று விசாரித்து அருளிப் பின்னையும் தாமே இதுக்கடி அறிந்தோம் இ றே
ஒரு சர்வ சக்தி பக்கலிலே தங்கள் பரத்தை ஏறிட்டுத் தாங்கள் நிர்ப்பரராய் இருப்பர்கள்-
அநந்தரம் அவன் தூது போயும் -சாரத்தியம் பண்ணியும் -தான் அர்த்தியாயும் -இப்படி இவர்கள் கார்யம் நிர்வஹியா நிற்கும்
ஆனபின்பு அவர்களுக்கு ஒரு குறை இல்லை இ றே என்று அருளிச் செய்தார் –

—————————————————————————————————————————————————————————————–

இப்படி ஆஸ்ரித பரதந்த்ரனாய் இருந்துள்ள அவனை அனுசந்தித்து அவனே என்னுடைய பிரதிபந்தகங்களைப் போக்கி -என் அபேஷிதத்தைத்
தருவானாகக் கொண்டு அவனையே பற்றினேன் -என்கிறார் –
நப்பின்னைப் பிராட்டிக்கு பிரதிபந்தகமான எருதுகளைப் போக்கி அவளைத் தனக்காக்கிக் கொள்ளுகையாலே நம்முடைய பிரதிபந்தகங்களையும் போக்கும் -என்கிறது-

பேறு ஓன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதமையால்
மாறென்று சொல்லி வணங்கினேன் -ஏறின்
பெருத்த எருத்தம் கோடோசிய பெண் நசையின் பின் போய்
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு–62-

பேறு ஓன்று முன்னறியேன் –
இதுக்கு முன்பு ஒரு நாளும் இந்த பகவல் லாபம் அறியப் பெற்றிலேன் –
பெற்றறியேன் –
இவ்வறிவு இல்லாமையாலே இதுக்கு முன்படங்க இப் பேற்றை இழந்து போனேன் -அறிந்து ஆசைப் பட்டார்க்கு வருமதிறே -அதுவும் இல்லை
அறியாமையும் பெறாமைக்கும் நிதானம் இருக்கும்படி சொல்லுகிறார் –
பேதமையால்-
ஐயே அறிவு கேடு என்ன பண்ணாதது தான் –
மாறென்று சொல்லி வணங்கினேன் –
இதுக்கு முன்பு அடங்கலும் உள்ளே புகுர நில்லாதே புறம்பே நின்று பண்ணின கர்மங்களின் பலமானது என் பக்கலில் வாராதபடி அவற்றுக்கு அவன் தடையாக ஆஸ்ரயித்தேன்-
முறை அறிந்து பற்றினேன் அல்லேன் -விரோதி நிரசன சமர்த்தன் என்று பற்றினேன்
அவன் நம் விரோதிகளுக்கு பிரதிபடமான படிக்கு நிதர்சனமாக அருளிச் செய்கிறார் மேல் –
ஏறின் பெருத்த எருத்தம் கோடோசிய –
எருத்துக்களினுடைய  பெருத்த எருத்துண்டு -பெரிதான ககுத்துக்கள் அவையும் கோடுகளுண்டு கொம்புகள் அவையும் முறியும்படிக்கு ஈடாக –
பெண் நசையின் பின் போய்-
நப்பின்னைப் பிராட்டி பக்கலில் யுண்டான ஆசையைப் பின் சென்று -நப்பின்னைப் பிராட்டியைப் பெறலாம் என்ற நசையினால் தன்னைப் பேணாமை –
எருத்து இறுத்த –
எருதுகளினுடைய கழுத்தைத் திருகின -பற்றினாருக்குப் பிராட்டிமாருக்கு பரியுமா போலே பரியும் –
நல் ஆயர் ஏறு–
தன்னோடு ஒத்த பருவத்தை யுடையரான இடைப் பிள்ளைகளுக்கு எல்லாம் மேலானவனை -மாறென்று சொல்லி வணங்கினேன்
இத்தால் சொல்லிற்று ஆய்த்து –
நப்பின்னைப் பிராட்டி யோட்டைக் கலவிக்கு பிரதிபந்தகமான எருது ஏழையும் அடர்த்தாப் போலே
என்னுடைய பிரதிபந்தகங்களைப் போக்கி எனக்குத் தன்னைத் தருவானும் தானாகப் பற்றினேன்  –

——————————————————————————————————————————————————————————————-

அபிமானியான ருத்ரனுடைய சாபத்தைப் போக்குகையாலும் -அவனே ஆஸ்ரயணீயன் -என்கிறது
ஆபத்து ஒரு தலையானால் -பிராட்டிமார்களோடு -அபிமானிகளோடு வாசியறத் தானே போக்கும் என்கிறார் –
இத்தால் எம்பெருமானே -சர்வாதிகன் என்னும் இடமும் -அல்லாத ஈஸ்வரர்கள் பிறர்க்கும் தஞ்சம் அல்லர்கள் -தங்களுக்கும் தஞ்சம் அல்லர்கள் -என்னும் இடமும் சொல்லுகிறது-

ஏறு எழும் வென்று அடர்த வெந்தை எரி உருவத்து
ஏறேறி பட்ட விடு சாபம் -பாறேறி
யுண்ட தலை வாய் நிறையக் கோட்டங்கை யொண் குருதி
கண்ட பொருள் சொல்லில் கதை–63-

ஏறு எழும் வென்று அடர்த வெந்தை –
எருதுகள் ஏழையும் வேற்று முடித்த ஸ்வாமி யானவன் –
எரி உருவத்து ஏறேறி –
அக்னி வர்ணனுமாய் -ரிஷப வாகனனுமான ருத்ரன் –
ஏறேறி –
கைக் கொள் ஆண்டிகளைப் போலே
பட்ட விடு சாபம் –
முற்பாடு செய்வான் என்று அனுமதி பண்ணி இருந்த ப்ரஹ்மா-அறுத்த அநந்தரம்-நீ பதகியாவாய்  -கபாலம் உன் கை விட்டுப் போகாது ஒழிவது-என்று சபித்தான் –
இடு சாபம் –
கபாலீத்வம் பவிஷ்யசி -மாத்ச்ய -182- -என்று இட்ட சாபத்தை -இவன் உத்கர்ஷம் பொறாமை -ப்ரஹ்மா தலையை அறுக்கச் சொல்லி வைத்துப் பழி இட்டான் –
பாறேறி யுண்ட –
கழுகும் பருந்தும் பாறும் என்று கொண்டு சில பஷி விசேஷம் ஆய்த்து-
இவை மேல் விழுந்து புசியா நின்றுள்ள-கழுகும் பருந்தும் பாறுமுகத் திரிந்தபடி –
தலை வாய் நிறையக் –
தலையிடமாவது நிறையும்படிக்கு ஈடாக –
கோட்டங்கை-
கோடின கையாலே -சிராங்கித்த கையாலே –
யொண் குருதி கண்ட பொருள் சொல்லில் கதை–
அது நிறைந்து இவன் கையினின்றும் விட்டுப் போம்படிக்கு ஈடாக தன் திருமாபில் வாச நீரை வாங்கி அதிலே தெறித்தான் ஆய்த்து-
ஒண் குருதி
அழகிய குருதி -குங்குமத்தோடு கூடின ஒப்பு –
அங்கை –
பாதகத்தைப் போக்க வல்ல அழகிய கையாலே
ஒண் குருதி –
தஸ்ய ரக்தச்ய நிஸ்ருதா -மாத்ச்ய -182-என்று திரு மேனியில் ரத்தத்தை வாங்கித் தெறித்தான் என்றும் சொல்லுவர் –
ஒப்பானாலோ என்னில்  அத்தோடு இத்தோடு வாசி இல்லை -ஒப்பு இல்லாதவனுக்கு வரும் ஒப்பாகையாலே –
கண்ட பொருள் சொல்லில் –
அர்த்த ஸ்திதி இருந்தபடி சொல்லப் பார்க்கில்
கதை –
அது ஒரு மகா பாரதம் -ஈஸ்வரனாகவும் வேண்டா -பாதகியாகவும் வேண்டா –
இவ்விடத்தில் நம் பிள்ளை அருளிச் செய்வதோர் வார்த்தை யுண்டு -அதாகிறது
நஞ்சீயர் ஒரு நாள் என்கையிலே மாம் பழத்தைத்  தந்து -இத்தைக் கொடு போய் நம்பி திரு வழுதி நாடு தாசர்க்கு கொடுத்து வாரும் -என்று போக விட -அப்போது இப்பாட்டு நம்பி பணியா நிற்க கேட்ட வார்த்தை –
ஏழு கோக்களை வதித்தவன் பிராயச் சித்தியாய் ஒருவன் வாசலிலே நின்றான் என்னக் கேட்டிலோம்-
ஒருவன் பிராணன் உடன் இருந்தவன் தலையை அறுத்து -அத்தாலே பாதகியாத் திரிய -அவனுடைய ப்ரஹ்ம ஹத்யையும்  தன்னுடைய ஸ்பர்சத்தாலே போக்கினான் இவன் –
இது இ றே இவனுக்கும் அவர்களுக்கும் யுண்டான நெடு வாசி இருக்கிறபடி -என்றார்
தலையை அறுத்துப் பாதகியான அவனோ ஈஸ்வரன் -சாபத்தைப் போக்கினவனோ -தலை அறுப்புண்டு சோச்யன் ஆனவனோ பார்த்துக் கொள்ளும் அத்தனை –

——————————————————————————————————————————————————————————————–

இப்படி ஈஸ்வர அபிமானிகளுக்கும் கூடக் கார்யம் செய்யக் கடவ நீ -உன்னால் அல்லது செல்லாத நான்
உன் திரு நாமங்களைச் சொல்லி முழு மிடறு செய்து அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும் -என்கிறார் –

 

கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
இதையம் இருந்தவையே ஏத்தில்-கதையின்
திருமொழி யாய் நின்ற திருமாலே உன்னைப்
பரு மொழியால் காணப் பணி–64-

கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே-
இதிஹாச புராணங்களில் நின்று பார்க்கச் சொல்லிற்றானது  சர்வ ஸூ லபனான உன்னுடைய  குண சேஷ்டிதங்களுக்கு  வாசகமான திரு நாமங்களே –
இதையம் இருந்தவையே ஏத்தில்-
அப்பரப்பு எல்லாம் கொண்டு அன்றியே -அதில் தாத்பர்யம் அறிந்து கொண்டு ஸ்துதிக்கில்-
அன்றிக்கே -இதிஹாச புராணங்கள் யுடைய ஹ்ருதயம் இருந்தபடி சொல்லில் -அவற்றில் நிர் ணீதமான அர்த்தம்  உன்னுடைய திரு நாமத்தைச் சொல்லுகை -என்றுமாம் –
கதையின் பெரும் பொருள் என்றார் இப்போது -முன்பு ஒத்தின் பொருள் முடிவு –39-என்றார் –
கதையின் திருமொழி யாய் நின்ற திருமாலே –
உபநிஷத் சித்தமான ஏதேனுமாக ஒரு வித்யா விசேஷங்களில் யுண்டான சப்தங்கள் ஸ்ரீ யப்பதிக்கு வாசகமாயாய்த்து இருப்பது –
அர்த்தத்துக்கு போதகமான சப்தம் -அவனையும் அவளையும் காட்டக் கடவதாய் இருக்கும் –
அர்த்தம் அவனே சப்தம் இவளே யாய்த்து இருப்பது
அர்த்தோ விஷ்ணுரியம் வா ணீ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-18-என்னக் கடவது இ றே
உன்னைப்-
இதிஹாச புராணங்களாலே பிரதிபாதிக்கப் பட்ட ஸ்ரீ யபதியாய் இருந்துள்ள உன்னை
உன்னைப் பருமொழியால் காணப் பணி-
இப்படிப்பட்ட சப்த த்வாரா உன்னைக் காண்கை அன்றிக்கே –
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் -தைத் -என்கிறபடியே பேரு மிடறு செய்து கொடு காணும் படியாக பார்த்து அருள வேணும் –
உன்னைக் கண்டு ஹ்ருஷ்டனாய் ஏத்தப் பண்ணி அனவாபதியான சொல்லால் அன்றிக்கே -குறைவற்ற சொல்லாலே ஏத்தி அனுபவிக்கப் பண்ணி அருள வேணும் –
கண்டு பேசும் போது இ றே சப்தம் குறைவறப் பேசலாவது-தவறுடைய பிரசாதத்தாலே லப்தமான திவ்ய சஷூஸ் ஸாலே
ஸ்பஷ்டமாய்க் காணும்படி பார்த்து அருள வேணும் -என்கிறார் –
கதையின் திரு மொழியாய் நின்ற என்கிற இடத்திலும் கதை என்று இதிஹாசாதிகளைச் சொல்லிற்று ஆகவுமாம் –

—————————————————————————————————————————————————————————————-

இன்றாக உமக்குச் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ -நீர் எல்லாம் பெற்றீர் காணும் -என்ன –
அந்த லாபத்தை அனுசந்தித்து அதுக்கு அனுரூபமாகப் பரிமாறுகிறார் -பெற்ற அம்சம் உன்பக்கல் ருசி -என்கிறார் –

பணிந்தேன் திரு மேனி பைங்கமலம் கையால்
அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்
புரிந்து ஏத்தி யுன்னைப் புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது–65-

பணிந்தேன் திரு மேனி –
ஸ்வரூப குணங்களில் காட்டிலும் திரு மேனி என்றால் போர விரும்பி யாய்த்து இவர்கள் இருப்பது -உன் திருமேனியைக் கண்டு விழுந்தேன் –
பணிந்தேன் –
அழகை அனுசந்தித்து -த்விதா பஜ்யேயம் அப்யேவம் ந நமேயம் -யுத்த 36-11-எ
திருமேனி –
நிர்விசேஷ சின்மாத்ரம் என்றாப் போலே சிலவற்றை உத்தேச்யமாக நினையாதே திரு மேனியே ப்ராப்யம் என்று இருக்கப் பெற்றேன் –
திரு மேனி கண்டேன் -பொன் மேனி கண்டேன் என்னும் சொல்லை சேஷபூதர் ஆகையாலே பணிந்தேன் -என்கிறார்
பைங்கமலம் கையால் அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் –
கைகளாலே செவ்வித் தாமரைகளைக் கொண்டு ச்நேஹத்தை யுடையனாய்க் கொண்டு உன்னுடைய சிவந்த திருவடிகளிலே  இவற்றை இட்டு ஆஸ்ரயித்தேன் –
கையால் –
அது படைத்த பிரயோஜனம் பெற்றேன் –
அணிந்தேன் –
ஜெயித்தார்க்கு அடிமை செய்கை ப்ராப்தம் இ றே-
அன்பாய்த் துணிந்தேன்-
ஞான கார்யம் அல்ல -அபி நிவேசத்தாலே துணிந்தேன் –
புரிந்து ஏத்தி -யுன்னைப் –
எழுந்து அருளா நின்றால் முன்பே சேவித்துப் புரிந்து உன்னைக் கண்டு ஸ்தோத்ரம் பண்ணி –
புகலிடம் பார்த்து –
புக்கு அருளும் இடத்தே பின்பைக் கண்டு
ஆங்கே இருந்து ஏத்தி வாழும் இது-
பின்னைப் போக மாட்டாதே உன் பின்பைக் கண்டு -அவ்விடம் தன்னிலே இருந்து தேவருடைய ஸ்ம்ருதி மாறாதே இங்கனே செல்ல வேணும்
என்று கொண்டு ஏத்தி அனுபவிக்கும் அதிலே துணிந்தேன் -வ்யவசிதன் ஆனேன் -அங்கன் அன்றிக்கே –
திருமலை நம்பி பக்கலிலே வாசனை பண்ணி இருப்பார் ஸ்ரீ பராங்குச தாசர் என்று ஒருவர் உண்டு -அவர் நம்பி பணித்தத்தாகச் சொல்லும்படி –
புகலிடம் என்கிறது -அவதரித்துப் போய்ப் புக்கருளும் ஸ்ரீ வைகுண்டத்தையாய் -அங்கே சூழ்ந்து இருந்து ஏத்துவர் -என்கிறபடியே அவர்கள்
நடுவே புக்கு இருந்து ஏத்தி வாழ வேணும் என்னுமதிலே அத்யவசித்தேன் -என்கிறார் -என்றுமாம் –
சாயா வா சத்வம் அநு கச்சேத்-பரம சம்ஹிதை -என்று அங்கு அடிமை செய்யும் படிகளை மநோ  ரதித்து இருப்பன் -என்றுமாம் –

——————————————————————————————————————————————————————————–

பகவத் விஷயத்தில் ப்ராவண்யத்தால் பெற்ற அளவு அமையும் -இதர விஷய ப்ராவண்யத்தால் வரும்
அனர்த்தத்தை அனுசந்தித்து -இதிலே ருசி யுண்டாகாது இருக்கும் அத்தனையே வேண்டுவது என்கிறார் –
ப்ராப்திக்கும் பிரதிபந்தக நிவ்ருத்திக்கும் அடி -சம்சார தோஷ தர்சனத்தைப் பண்ணுகை- ஏத்துகையிலே துணிகையே யன்று-

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நாகத்தருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்–66-

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது-
சம்சாரம் பொல்லாது என்றால் -அதுக்கு இசைந்து என்னோடு ஒரு மிடரான நெஞ்சே –
நாம் முன்பு அனுசந்தித்து இருக்கும் ஆகாரம் ஒழிய சர்வேஸ்வரன் இப்போது காட்டின இதுவே கிடாய் இதுக்கு ஸ்வரூபம் –
சம்சாரம் ஆகிறது துக்க ரூபமாய் இருக்கை கிடாய் –
இத்தைக் கனக்க நினைத்து இருந்தது எல்லாம் நம்முடைய ப்ரமம் கிடாய் –
பகவத் பிரசாதம் யுடையார்க்கு இ றே பிரத்யஷிக்கிற தோஷமும் தோஷமாய்த் தோற்றுவது-
தன்னைக் காட்டினவோபாதி இது தன்னையும் தானே காட்ட வேணும் –
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது –
பகவத் அனுபவத்தில் வந்தால் எல்லா ஸூ கங்களும் யுண்டாய் இருக்குமாப் போலே யாய்த்து -இதில் எல்லா துக்கங்களும் யுண்டாய் இருக்கும் படி –
நெடும் காலம் நன்றாய்த் தோற்றுகிற ஆகாரத்தாலே எல்லா துக்கமும் பட்டது இது கிடாய் –
பரமபதத்திலே எம்பெருமானாலே எல்லா ஸூ கமும் யுண்டாமாப் போலே இதுவும் –
அபூத பூர்வம் மம பாவி கிம் வா சர்வம் சஹே மே சஹஜம் ஹி துக்கம் -ஸ்தோத்ர ரத்னம் -25-
தரமி லோபம் பிறந்தது இல்லை -அங்குத்தைக்கு அசாதாரணமாய் இருக்கச் செய்தே நாம் அனுபவித்ததை எல்லாம் கண்டாய் இ றே –
இது கண்டாய் நாரணன் பேரோதி நாகத்தருகு அணையாக் காரணமும் –
வகுத்த சர்வேஸ்வரனுடைய திரு நாமங்களைச் சொல்லுகைக்கும் -நரக பிரவேசம் பண்ணாமைக்கும்  நான் கீழ்ச் சொன்ன
இவற்றினுடைய தோஷ தர்சனம் பண்ணும் இதுவே கிடாய் –
எம்பெருமான் தன்னையும் பற்றுவித்து புறம்பையும் விடுவிக்குமா போலே -இத் தோஷ தர்சனமும் தன்னையும் விடுவித்து எம்பெருமானையும் பற்றுவிக்கும் –
வல்லையேல் காண்-
விழித்து இருக்கச் செய்தே சிலர் பதார்த்த க்ரஹணம் பண்ண மாட்டார்கள் ஆய்த்து –
இப்படியே தன்னை யறியா நிற்கச் செய்தேயும்  தோஷம் நெஞ்சிலே படாத படி பண்ணும் யாய்த்து இவ்விஷயங்கள் தான்
ஆனபின்பு இவற்றைத் தப்பாதபடி வருந்தி இத்தைக் காணப் பார் -அனுபவியா நிற்கச் செய்தே  விடப் போகாது ஒழிகிறது பாபம் இ றே –
ப்ரத்யஷம் அகிஞ்சித் கரமாம் விஷயம் இ றே -நன்று என்றால் ருசி பிறக்கிறவோபாதி தீது என்றால் அருசி பிறக்க வேண்டாவோ –
அத்தலை சாத்யம் அல்லாமையாலும் சம்சாரத்துக்கு அடி இதில் ருசி ஆகையாலும் இவனுக்கு வேண்டும் அம்சம் இதுவே என்று கருத்து
மன ஏவ  மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-28-
இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் அவன் உளனாய் இருக்க -அநிஷ்டத்திலே இவன் இஷ்டம் பண்ண
அத்தைத் தவிர்த்து சாஷாதிஷ்டம் தருவானாய் நின்றான் –
நம்மாழ்வார் இமையோர் தலைவனான படியை முந்துறக் கண்டார்
அதுக்கு எதிர்தட்டான பொய் நின்ற ஞானம் தொடக்கமான வற்றை-பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்  விடுவிக்க வேணும் -என்கிறார் –

————————————————————————————————————————————————————————————–

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான்
வான் திகழும் வடிவு–67 –என்றும் பாடமாம்

கண்டேன் திருமேனி –
எம்பெருமானுடைய அழகிய திரு மேனியைக் காணப் பெற்றேன் –
ஆழ்வார்கள் பஷத்தால் குணாதிகள் ஆநு ஷங்கிதம்-தன்னடையே வருவது
யான் கனவில் –
இந்த்ரிய த்வாரா இட்டு நீட்டிக் காண்கை அன்றிக்கே நெஞ்சாலே  அவ்யவதாநேந காணப் பெற்றேன் -ஆத்மாவுக்கு நித்ய தர்மமான ஞானம் பிரசரிக்கைக்கு ஆனைத்தாளான மனச்ச்சாலே பிற்பட்டு பாஹ்ய இந்த்ரியங்களாலே காண்கை அன்றிக்கே -ஸ்வப்ன தீ கம்யம் -மனு ஸ்ம்ருதி -12-122-என்னும்படியே நெஞ்சில் பார்க்க அழகிதாக அனுசந்திக்கலாகை –
ஸ்வப்ன கல்பமாய் அதிலும் விசத தமமாய் பிரத்யஷியா நின்றால் விலஷணமுமாய்  இருக்கையாலே மீளாது இருக்கை-
ஆங்கு அவன் கைக்-
அப்படிப்பட்ட அழகுடைய அவன் திருக் கையிலே
கண்டேன் கனலும் சுடர் ஆழி –
பிரதிபஷத்தின் மேலே சீறு பாறு என்னா நின்றுள்ள திரு வாழியைக் கண்டேன் -அபாதிதமாகக் கண்டேன் –
கண்டேன்உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும் மறு நோய் செறுவான் வலி-
நித்தியமான ஆத்மவஸ்துவைத் தொற்றிக் கிடக்கிற புண்யபாப ரூப கர்மங்களைப் போக்குவித்துப் பின்னையும் மறுவலிட்டு வாராதபடிக்கு ஈடாகப் போக்கும் மிடுக்கை யுடையவனைக் கண்டு கொண்டேன் –
மறுவலிடும் வாசனை என்னுதல்-
வலி கண்டேன் –
சேதனன் ஆகையாலே இரண்டு இடத்திலும் இவனுக்கு ஸ்வபாவ ஜ்ஞானமே வேண்டுவது -அஞ்சுகைக்கும் அச்சம் கெடுக்கைக்கும்-

——————————————————————————————————————————————————————————————

பிரயோஜ  நாந்தர பரரே யாகிலும் தன் பகலிலே வந்து அர்த்தித்தால் பொறுக்க   மாட்டாமை -ஆளிட்டு அந்தி தொழாதே
உடம்பு நோவத் தான் ஆயாசித்தே யாகிலும் அவர்களுக்கு கார்யம் செய்து  கொடுக்குமவன் -என்கிறார் –
இவனைக் கொண்டு வாசனையைப் போக்குவியாதே உப்புச்சாறு கொள்ளுமவர்களைச் சொல்லுகிறது –
இத்தால் நின்ற நின்ற நிலைகள் தோறும் இஷ்ட பிராப்தியும் -அநிஷ்ட நிவாரணமும் பண்ணிக் கொடுக்கும் படி சொல்லுகிறது –
தந்தாமாலே இழக்கில் இழக்கும் அத்தனை -அவன் பக்கல் தட்டில்லை –

வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள
வலிமிக்க வாள் வரை மத்தாக -வலி மிக்க
வாணாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான்
கோணாகம் கொம்பு ஒசித்த கோ–68-

வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள-
பலத்தாலே மிக்கு இருப்பாராய்-ஒளியை யுடைத்தான எயிறுகளையும் யுடையராய் -தாங்கள் சாயுதருமாய்
இருப்பாருமான ஆசூரப் பிரகிருதிகள் முடியும்படிக்கு ஈடாக -அசுரர் பலம்  நசிக்கவும் -தேவர்களுக்கு பலம் யுண்டாகவும் –
வலிமிக்க வாள் வரை மத்தாக –
ஒரு சர்வ சக்தி நின்று நெருக்கிக் கடையா நின்றால் தான் பிதிர்ந்து போகாத படி பலமே மிக்கு -ஒளியை யுடைத்தான மந்த்ரம் மத்தாக –
மிடுக்கையும் யுண்டாக்கி மத்தாகக் கொண்டு
வலி மிக வாணாகம் சுற்றி –
இசித்துக்  கடையா நின்றால் அறாத படியான பலத்தையும் -மலையோடு தேய்ப்புண்கையாலே  வந்த புகரையும் யுடைத்தான வாசூகியைச் சுற்றி –
நாற்கால் கடைந்தால் இற்றுப் போகாதபடி மிடுக்கைக் கொடுத்து –
மறுகக் கடல் கடைந்தான்-
கடல் கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும்படிக்கு ஈடாகக் கடைந்தான்-தாழியில் தயிர் பட்டது பட்டது –
அவன் தான் யார் என்னில் –
கோணாகம் கொம்பொசித்த கோ –
நம் வேர்ப் பற்றிலே நலிய நினைத்து வந்த மிடுக்கை யுடைய குவலயா பீடத்தின் யுடைய கொம்பைச் சலித்த சேஷீ-
தன்னுடைய விரோதியைப் போக்கி எழுதிக் கொண்ட படி யாதல் –
நாட்டுக்கு ஒரு சேஷியைத் தந்தான் -என்னுதல் -இச் செயலாலே எல்லாரையும் எழுதிக் கொண்டவன் -இப்படிப்பட்ட அவன் கிடீர் கடல் கடைந்தான் –

—————————————————————————————————————————————————————————————–

அவன் பக்கல் தம்முடைய அபேஷிதம் பெற்றுப் போகிறார் தேவர்களேயோ-
நாம் காண ஜகத்துக்கு ரஷகராய் ஜீவிக்கிற ராஜாக்களும் எல்லாம் ஜகத் காரண பூதனானவன் திருவடிகளை ஆஸ்ரயித்து அன்றோ தந்தாமுடைய பதங்கள் பெற்றுத் திரிகிறது என்கிறார்-

கோவாகி மாநிலம் காத்து நம் கண் முகப்பே
மாவேகிச செல்கின்ற மன்னவரும் -பூ மேவும்
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ பிறப்பும்
தண் கமலம் ஏய்ந்தார் தமர் –69-

கோவாகி –
இதுக்கு அடங்க நிர்வாஹகராய் -ஒரு ஈஸ்வரனுக்கு யுண்டான அபிமானம் அத்தனையும் போருமாய்த்து –
அவனுடைய ஐஸ்வர்யத்தை அனுகரிக்கிறவர்கள் இ றே-
உபய விபூதி யுக்தனுக்கு போலியாக பௌண்டரகாதி களைப் போலே –
தேவேந்த்ரஸ் த்ரிபுவனம்-அர்த்தமேக பிங்க -சர்வர்த்திதம் த்ரிபுவனகாம் ச கார்த்த வீர்ய -வைதேக பரமபதம் பிரசாதய விஷ்ணும் சம்ப்ராப்த சகல பல ப்ரதோஹி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -43-47-
மாநிலம் காத்து-
பரப்பை யுடைத்தான பூமியை நோக்கி –
நம் கண் முகப்பே மாவேகிச செல்கின்ற மன்னவரும் –
நம் கண் வட்டத்திலே காணக் காண ஆனை குதிரை தொடக்க மானவற்றை ஏறி நடத்துகிற ராஜாக்களும் –
-பூ வேகும் செங்கமல நாபியான் சேவடிக்கே –
பூக்கள் தள்ளுண்ணும் படியான செவ்வியை யுடைய கமலத்தை நாபியாக உடையவனுடைய சிவந்த திருவடிகளிலே
பூ மேவும் -என்ற பாடமாய்த்தால்
போக்யதை பொருந்தி இருக்கிற படி யாகிறது –
ஏகும் என்ற போதைக்கு ஒருக்காலும் செவ்வி மாறாத படியான பூவுக்கு –
அனந்தர ஷணத்திலே செவ்வி மாறும்படியான பூக்கள் நேர் நிற்க மாட்டா வி றே –
ஏழ பிறப்பும் தண் கமலம் ஏய்ந்தார் தமர் –
ஜன்மங்கள் தோறும் அவன் திருவடிகளிலே குளிர்ந்த புஷ்பங்களைக் கொண்டு  ஏய்ந்தாரான தமர் -என்னுதல்
ஏய்ந்தார் யுடைய  தமர் கிடீர் -என்னுதல் –
இப்படி யாஸ்ரயித்த சேஷபூதர் கிடீர் மா வேகிச் செல்கின்ற மன்னவராகிறார் –

—————————————————————————————————————————————————————————————-

இப்படி இருக்கிறவர்கள் தன்னை அனுகூலித்த அன்று அவர்களுடைய ஹ்ருதயங்களுக்கும் உகந்து அருளின திவ்ய தேசங்களுக்கும்
ஒரு வாசி வைத்து பரிமாறான் அவன் என்கிறார் -அன்றிக்கே -தனக்கு நல்லவர்களுக்காக அவன் சந்நிதி பண்ணும் இடங்கள் சொல்லுகிறது –
ஆஸ்ரித விஷயத்தில் பிச்சிருந்த படி சொல்லுகிறது
ஆக -அம்ருதம் ஆசைப் பட்டார்க்கு அத்தைக் கொடுக்கும்
ராஜ்யம் ஆசைப் பட்டார்க்கு  ராஜ்யத்தைக் கொடுக்கும் –
தன்னை ஆசைப் பட்டார்க்குத் தன்னைக் கொடுக்கும் -என்கிறது-

தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம் –70-

தமருள்ளும் –
இதில் முற்பட்டது ஆஸ்ரிதருடைய ஹ்ருதயம் ஆகையாலே உத்தேச்யம் இது -இத்தால்
அவ்வோ இடங்கள் போலும் அன்றிக்கே இவர்கள் ஹ்ருதயங்க ளிலே ஒரு வாசி தோற்றப் பரிமாறும் -என்கிறார் -ஆஸ்ரிதர் யுடைய ஹ்ருதயங்கள் –
தஞ்சை –
தஞ்சை மா மணிக் கோயில் –
தலை யரங்கம் –
திருப்பதிகளில் பிரதானமாய் -பரமபதத்தோடே ஒக்க எண்ணலாம் படியான பெரிய கோயில் –
அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுதை -அரங்கமேய அந்தணனை -திரு நெடும் தாண்டகம் -14- என்றும்
கட்கிலீ திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய் -திருவாய் -7-2-3-என்றும் சொல்லக் கடவது இ றே-
தண் கால்-
திருத் தண் கால் ஆகிறது திரு மங்கை ஆழ்வார் யுடைய வால்லப்யத்தை -வலிமையை -அழித்த இடம் இ றே -தண்கால் திறல் வலியை -பெரிய திரு மடல் -என்றார் இ  றே –
தமருள்ளும் தண் பொருப்பு –
நின்ற வேங்கடம் நீணிலத்துள்ளது -திருவாய்-9-3-8-என்று தங்களுக்கு வைப்பாக அனுசந்தித்து இருக்கும் ஸ்ரமஹரமான திருமலை –
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சர்வ ஸ்வமான தேசம் இ றே –
வேலை –
எல்லா வற்றுக்கும் அடியான திருப் பாற் கடல் –ப்ரஹ்மாதிகளுக்கே யாய் இருக்கையாலே விசேஷணம் இட்டிலர்-
தமருள்ளும் மா மல்லை –
ஆஸ்ரிதனுக்காகத் தரைக்கிடை கிடக்கிற திருக் கடல் மலை –
கோவல் –
திருக் கோவலூர் -மூன்று ஆழ்வார்களையும் நெருக்கின இடம் -தங்கள் நெருக்கு உகந்த இடம் இ றே –
மதிள் குடந்தை –
அரணை யுடைத்தான திருக் குடந்தை -திரு மழிசைப் பிரான் உகந்த இடம்  –
என்பரே ஏவல்ல வெந்தைக்கு இடம் –
இவற்றை எல்லாம் பிரதிபஷத்தைப் பக்க வேரோடு வாங்கிப் பொகட வல்ல என் ஸ்வாமி யான தசரதாத் மஜனுக்கு  வாஸ ஸ்தானம் என்னா நின்றார்கள் –
மிடுக்காலே பிரதிகூலரை அழியச் செய்தவன் -அனுகூலரை எழுதிக் கொண்ட இடங்கள் –
இப்படி சக்திமானாய் இருக்கிறவன் இவர்களை அனுகூலித்து மீட்கைக்காக வந்து இருக்கிற தேசங்கள் இவை –

—————————————————————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
நம் பிள்ளை திருவடிகளே சரணம்-
பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.