Archive for the ‘Ashtaadasa Rahayangal’ Category

ஸ்ரீ பரகால நல்லான் ரஹஸ்யம் -ஸ்ரீ மந்த்ர ரத்னம் -ஸ்ரீ த்வயம் – உத்தர வாக்ய – ஸ்ரீமதே பதார்த்தம்–/நாராயண பதார்த்தம்/ஆய பதார்த்தம்/நமஸ் பதார்த்தம்–

August 26, 2019

ஆக
பூர்வ வாக்கியம்
அசித் வ்யாவ்ருத்தி ஸூசகமாய்க் கொண்டு சேதனகதமான விவசாயத்தையும்
தத் பிரகாரமான உபாயத்தையும்
அந்த உபாயத்துக்கு உபாயாந்தர வ்யாவ்ருத்தி ரூப சித்தத்வ ஸூ சகமான விக்ரஹத்வத்தையும்
உபாய கார்ய உபயோகியான ஞானாதி வை சிஷ்டியையும்
தத் ஆஸ்ரயண ஏகாந்தமான வாத்சல்யாதி குண யோகத்தையும்
தத் உத்பாவக புருஷகாரத்தினுடைய நித்ய சம்ஸ்லேஷத்தையும்
புருஷகார அபேக்ஷிதமான உபய சம்பந்தத்தையும் சொல்லிற்று ஆயிற்று

அநந்தரம்
இப்படி ஸ்ரீயப்பதியாய்
ஸர்வ ஸ்வாமியான சர்வேஸ்வரன் திருவடிகளில்
ஸர்வ காலாதிகளிலும்
ஸர்வ தேசாதிகளிலும்
அநுஷ்டேயமான கைங்கர்யத்தை
தத் விரோதி நிவ்ருத்த்ய அபேஷா ஸஹிதமாகப் பிரார்த்திக்கிறது உத்தர வாக்கியம் –

கீழ் ஸ்வீ க்ருதமான சித்த சாதனம்
தாவதார்த்திஸ் ததா வஞ்சாதா வந் மோஹஸ் ததா ஸூகம் யாவந் நயாதி சரணம் த்வாம் அசேஷாக நாசனம் -என்று
ரக்ஷகனாய் -சகல புருஷார்த்தங்களுக்கும் விரோதியான பாபங்கள் எல்லாவற்றையும் போக்குமவனாய் இருக்கிற உன்னை
உபாயமாக வரிக்கும் அளவாயிற்று பிரஷ்ட ஐஸ்வர்யன் ஆகையால் வருகிற ஆர்த்தி –
அபூர்வ ஐஸ்வர்யத்தில் வாஞ்சை -ப்ரக்ருதி ஆத்ம விவேகம் பிறவாமையாலே வருகிற மோஹம்–
நிரந்தர பகவத் அனுபவ அலாபத்தாலே வந்த அஸூகம் ஆகிய இவை உண்டாவது என்கையாலே
ஆர்த்தன் முதலான நான்கு அதிகாரிகளுக்கும் பொதுவாய் இருக்கும் ஆகையால் சரண பதத்தில் சொன்ன
இஷ்ட பிராப்தி ரூப பலத்தை விவரியா நின்று கொண்டு இவ்வுபாய ஸ்வீ காரம் பண்ணினவன்
பகவத் அனுபவ அபிலாஷை உடையவன் என்று விசேஷித்துக் கொடுக்கிறது உத்தர வாக்கியம்

ஆக
பூர்வ வாக்யத்தாலே உபாய பரிக்ரஹம் சொல்லி
உத்தர வாக்யத்தாலே உபாய லாபமான கைங்கர்யத்தைப் பிரார்த்திக்கிறது –

ஜ்யோதிஷ்டோமே ந ஸ்வர்க் கதோமோ யஜேதே -என்று ஸ்வர்க்க காமனாய் ஜ்யோதிஷ்டோமத்திலே இழியுமா போலே
உபாய ஸ்வீ கார பூர்வ பாவியான முமுஷ் த்வத்தாலும்
பிரதம ரஹஸ்யத்தில் நாராயணாய பதத்தில் கைங்கர்ய பிரார்த்தனை பண்ணின அதிகாரியினுடைய வரணமாகையாலும்
தர்மார்த்த காமை ரலமல்ப காஸ்தே
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி கண்ட இன்பம்
தெரிவரிய அளவில்லா சற்று இன்பம் ஒழிந்தேன் –என்கிற ஐஸ்வர்யாதிகளில் காட்டில் வ்யாவ்ருத்தி ஸித்தமாய் இருக்க –
இது கொண்டு உத்தர வாக்யத்தாலே விசேஷிக்க வேணுமோ
இது கொண்டு விசேஷிக்கிறது உபாய பூதனான ஈஸ்வரனுக்கு இவனுக்கு அபேக்ஷிதமான பல ஞானம் இல்லாமையாலேயோ
பல பிரார்த்தன அநந்தரம் அல்லது பல பிரதானம் பண்ணான் என்றோ என்னில்
சர்வஞ்ஞன் ஆகையாலும் உபாயத்வேந வ்ருத்தனாகையாலும் அது சொல்ல ஒண்ணாது
உபாய வரணமாவது இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹாரம் பண்ணித் தர வேணும் என்று அபேக்ஷை இறே
ஆனால் எதுக்காக என்னில்

முமுஷுர் வை சரணம் அஹம் பிரபத்யே –என்கிற இவ்வதிகாரனுடைய முமுஷுத்வத்தாலே-
புருஷார்த்தாந்த்ர நிவ்ருத்தி பூர்வகமான மோக்ஷ இச்சையைக் காட்டிற்றே ஆகிலும்
உபாய வர்ண மாத்திரத்தாலே உபேய லாபமும் தன்னடையே வருமே யாகிலும்
அத்யாத்ம யோகாதிகமே ந தேவம் மத்வாதீ ரோஹர்ஷ ஸோகௌ ஜஹாதி
தரதி சோகமாத்மவித் –என்றும்
தத் ஸூஹ்ருத துஷ்க்ருதே விதூ நதே
புண்ய பாபே விதூய -என்றும்
சம்சார சாகரம் கோரம் அனந்த கிலேச பாஜநம்-த்வாமே சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி–என்றும்
சோத்வந பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம்
பரஞ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபிநிஷ்பத்யதே -என்றும்
நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்றும்
ஏதம் ஆனந்தமயமாத்மாநம் உபாசங்க்ராமதி -என்றும்
அஸ்னுதே காமான்
லப்த்வா நந்தீ பவதி -என்றும்
யேநயே நதாதா கச்சதி தேந தேந சக கச்சதி -இத்யாதியாலே
சோக நிவ்ருத்தி -புண்ய பாப ரூப கர்ம விமோசனம் -சம்சார நிஸ்தரணம் -தேச பிராப்தி -ஸ்வ ஸ்வரூப பிரகாசம் –
பரம சாம்யா பத்தி -சாமீப்யம் குண அனுபவம் -தஜ் ஜெனித ஆனந்தம் -தத் காரித கைங்கர்யம் என்கிற
அநேக புருஷார்த்தங்களைச் சொல்லுகையாலே -இவை பகவச் சேஷபூதனான இவனுக்கு ஸ்வயம் புருஷார்த்தம் அன்று –
அந்த சேஷத்வ உபபத்தி ஹேதுவான கைங்கர்யமே ஸ்வயம் புருஷார்த்தம்

சோக நிவ்ருத்தி –
கைங்கர்ய அதிகாரியினுடைய ஸ்வ சேஷத்வ பிரதிசம்பந்த பூத பகவத் ஸ்வரூப ஞான வைஸத்யத்தாலே
பிறந்த தெளிவைக் காட்டுகையாலும்
புண்ய பாப விமோசனம்
கைங்கர்ய ருசி பிரதிபந்தக நிவ்ருத்தி யாகையாலும்
சம்சார நிஸ் தரணம்
கைங்கர்ய விரோதி நிவ்ருத்தி யாகையாலும்
தேச பிராப்தி
கைங்கர்ய வர்த்தகம் ஆகையாலும்
ஸ்வரூப பிரகாசம்
கைங்கர்யத்தினுடைய ஸ்வரூப அனுரூபத்தைக் காட்டுகையாலும்
குண அனுபவம்
கைங்கர்ய ஹேதுவான ப்ரீதிக்கு உறுப்பாகையாலும்
ஆனந்தித்தவம்
ப்ரீதி காரித கைங்கர்ய அர்த்த மாகையாலும்
பகவத் அனுவ்ருத்தி
ஸர்வ தேச சித்த கைங்கர்ய ப்ராப்திக்கு ஆகையாலும்
இவை அங்க தயா உபாதேயங்கள்
பிரதான பலம் கைங்கர்யம் என்கைக்காக உத்தர வாக்யத்தாலே விசேஷிக்கிறது –

ஏவம் ரூபமான பலத்துக்கு சாதனமாக கர்ம யோகாதிகளை விதிக்கையாலே
தந் நிவ்ருத்தி பூர்வக சித்த உபாய வரணத்துக்கு அதிகாரியாகத் தோற்றுகைக்காக பூர்வ வாக்ய அனுசந்தானம் வேணும்
இதனுடைய பலமான ஐஸ்வர்யாதிகளில் காட்டில் வ்யாவ்ருத்தி தோற்றுகைக்காக உத்தர வாக்ய அனுசந்தானம் வேணும்
சாதனாந்தர நிஷ்டரில் வ்யாவ்ருத்திக்கு பூர்வ வாக்ய அனுசந்தானம் வேணும்
சாத்யாந்தர நிஷ்டரில் வ்யாவ்ருத்திக்காக உத்தர வாக்ய அனுசந்தானம் வேணும் –
அந்தரிக்ஷ கத ஸ்ரீ மான்
சாது நாக வரஸ் ஸ்ரீ மான்
கடைத்தலை இருந்து வாழும்
நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம்
வேங்கடத்தைப் பாதியாக வாழ்வீர்காள் –என்கிறபடியே
உபாய உபேயத்வ அத்யவசாயங்கள் இறே லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -என்கிற
ஸ்வரூப ஞானம் ஆகிற சம்பத் உடைய அதிகாரிக்கு ஐஸ்வர்யம் ஆவது –

ஏவம் ரூப உபாய பலமாய் ப்ராப்யமான கைங்கர்ய பிரார்த்தனையும் –
தத் விரோதி நிவ்ருத்தியையும் –
கைங்கர்ய பிரதி சம்பந்தியையும் சொல்லுகிறது உத்தர வாக்கியம் —

இதில் சேஷத்வ ஞான விசிஷ்டனான இவ்வதிகாரி அந்த சேஷத்வ அனுகுணமான கைங்கர்ய விருத்தியைப் புருஷகாரமாக
ஸ்வ ஞானத்தால் நிஷ் கர்ஷித்து பிரார்த்திக்கும் போது அந்த வ்ருத்தி
சர்வம் பரவசம் துக்கம்
சேவா ஸ்வ வ்ருத்தி –என்கிறபடியே
இவனுக்குத் துக்க ஹேதுவும் இன்றிக்கே -ஸ்வரூப அனுரூபமும் இன்றிக்கே -இருக்கும் போதைக்கு
பிரதிசம்பந்த பூதனானவன் அனுபாவ்ய குண சாம் பன்னனுமாய்-ஸ்வாமியுமாக வேண்டுகையாலே
அவற்றைப் பிரதி பாதிக்கிறது- ஸ்ரீ மதே நாராயண பதம்

அந்தக் கைங்கர்யம் தான் சேஷ வஸ்துவுக்கு இறே -அந்த சேஷத்வம் சேஷியை விஷயீ கரித்து இறே இருப்பது –
சேஷி தான் ஸ்ரீயபதியாய் இருக்கையால் கைங்கர்யமும் அவ்வஸ்துக்காகவே வேணுமே –
ஆகை இறே மயர்வற மதிநலம் அருள பெற்றவர் -அடிமை செய்வார் திருமாலுக்கே -என்றது
ஆக -திருமால் எம்மான் –
திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன்
ஸ்ரீ யபத்யுஸ் சேஷோஹம்
தாஸோஹம் கமலா நாதா –என்று சேஷியானவன் ஸ்ரீ யபதியாய் அல்லது இராமையாலே
சேஷித்வ பூர்த்தி உள்ளது தத் வை சிஷ்டியிலே யானால் போலே
கைங்கர்ய பிரதிசம்பந்த பூர்த்தியும் தத் வை சிஷ்டியிலேயாய் இருக்கையாலே
தத் பூர்த்தி ஹேதுவான ஸ்ரீ லஷ்மீ சம்பந்தத்தைச் சொல்லுகிறது ஸ்ரீ மதே -என்று
இத்தால் சேஷியான சர்வேஸ்வரன் ப்ராப்யனானவோ பாதி சேஷி ஸ்வரூப அந்தர்ப் பூதையான
இவளும் ப்ராப்ய பூதை என்றதாயிற்று

இஸ் சப்தம் இவளுடைய ப்ராப்யத்வத்தைக் காட்டுமோ என்னில் –
நாராயணாயா -என்கிற இடத்தில் நாராயணன் பொருட்டு என்கிற தாதர்த்யம் ஸ்வரூபம் ஆகையால் இறே
ததர்த்த பூதனான சேதனனுக்கு தத் ஞானமும் தத் அனுரூப பலமும் தத் பிரதிசம்பந்தியான ஸ்வரூபமும் ப்ராப்யமாகிறது –
அந் நாராயண பதத்துக்கு ஸ்ரீ மதே என்கிற பதம் விசேஷணமாய்க் கொண்டு
ஸ்ரீ யபதியான நாராயணன் பொருட்டு என்று விசேஷிக்கையாலே
தத் விசிஷ்டமான ஸ்வரூபமே ப்ராப்யம் என்று காட்டக் கடவது –

ஆனால் ப்ராப்யம் இரண்டு ஆகிறதோ என்னில் -சேஷித்வேந ஸ்வத ப்ராப்ய பூதன் ஈஸ்வரன்
அவனுக்கு மஹிஷியாய்க் கொண்டு நித்ய சம்ஸ்லிஷ்டை யாகையாலே ப்ராப்ய பூதை இவள் என்றதாயிற்று –
விஷ்ணு பத்னி யாகையாலே ஜகத்துக்கு ஈஸாநை யானாள் என்று ஸ்ருதி தானே சொல்லிற்று இறே

யதஸ்தே புருஷோத்தம சாந்தஸ்தே தத பணி பதிஸ் ஸய்யா–என்றார் இறே ஸ்ரீ ஆளவந்தாரும்
தேவ தேவ திவ்ய மஹிஷீம் அகில ஜெகன் மாதரம் -என்று மஹிஷீத்வ நிபந்தநமாக
மாத்ருத்வத்தை அருளிச் செய்தார் இறே ஸ்ரீ பாஷ்யகாரரும்
கோலத் திரு மகளோடு உன்னைக் கூடாதே
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப
நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து –
எழில் மலர் மாதரும் தானும் இவ் வேழ் உலகை இன்பம் பயக்க இனிதுடன் வீற்று இருந்து
திரு மா மகள் இருந்து மலிந்து இருந்து வாழ் –இத்யாதிகளால் மிதுனத்தை இறே ப்ராப்யமாக
ஸ்ரீ நம்மாழ்வாரும் அருளிச் செய்தது

ஸ்ரியா சார்த்தம் ஜகத் பதி-என்று இறே ஒரு தேச விசேஷத்திலும் சதா பஸ்யந்திக்கு விஷயமாய் இருப்பதும் மிதுனம் இறே
ஆகை இறே தொடர்ந்து அடிமை செய்ய வந்தவரும் ஸஹ வைதேஹ்யா அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று சங்கல்பித்ததும் –
ஆக இஸ் சப்தம் -ஸ்ரீ யதே -ஸ்ரயத -என்கிற வ்யுத்பத்தியின் படியே ஸ்வ போக ஸுக்த்யத்தாலே அவனை சேவித்துக் கொண்டு
ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்னுதே
அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்ய சா ஜனகாத்மஜா
திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற -இத்யாதிகளில் படியே
பரிமளம் பூவை ஸ்லாக்யம் ஆக்குமா போலேயும்-பிரபை மாணிக்கத்தை ஸ்லாக்யம் ஆக்குமா போலேயும்
அவனுக்கு அதிசயா வஹையாய் இருக்கும் என்று சேஷ பூதரான சேதனர்க்கு கைங்கர்ய ஹேதுவான
ப்ரீதி யுக்தமான அனுபவத்துக்கு விஷயமான குணாதிகளை பிரகாசிப்பித்தும்
கைங்கர்யத்தை ஓன்று பத்தாக வளர்த்துக் கொடுத்தும்
இவர்களுக்கு நித்ய ஆஸ்ரிதையாய் இருக்கும் என்றும் சொல்லிற்று ஆயிற்று

இதில் மதுப்பு நித்ய யோக மதுப்பாய் -ஸ்வரூப ரூப குண விபூதிகளால் அபரிச்சின்ன ஆனந்தமான
பகவத் விஷயத்தைத் தலை நீர்ப் பாட்டிலே அனுபவித்து -அனுபவ ஜெனித ப்ரீதி அதிசயத்தாலே –
அகலகில்லேன் இறையும் – என்று க்ஷண கால விஸ்லேஷ அசஹையாய்க் கொண்டு
பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சாவதார என்கிற எல்லா அவஸ்தைகளிலும்
ஸ்வரூப ரூப குண விபூதிகள் எங்கும் விடாமல்
நித்ய சந்நிஹிதையாய் இருக்கும் என்கிறது –
இத்தால் ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தைகளிலும் பண்ணும் கைங்கர்யத்துக்கு விஷயமாகக் கொண்டு
கைங்கர்ய வர்த்தகையாய் இருக்கும் என்கிறது

ஆகையால் மிதுன சேஷ பூதனானவனுக்கு
அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே –
வாரணி முலையாள் மலர் மகளோடு மண் மகளும் உடன் நிற்ப சீரணி மாட நாங்கை நன்னடுவுள்
செம் பொன் செய் கோயிலினுள்ளே காரணி மேகம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே -என்கிறபடி
ஒரு மிதுனம் ப்ராப்யமாய் அறுவது

இவ்விசிஷ்டத்திலே ஒன்றைப் பிரித்து ப்ராப்யமாக நினைத்த அன்றும் பல அலாப மாத்ரம் அன்றிக்கே
ஸ்வ நாசத்தையும் பலிப்பிக்கும் ஆகையால்
தன்னை நயந்தாளை -என்று விசேஷண வ்யதிரேகேந விசேஷ்ய மாத்ரத்தை ப்ராப்யமாக நினைத்த
சூர்ப்பணகைக்கு முக்கிய அங்க ஹானி பிறந்ததும்
பொல்லா அரக்கன் -என்னும்படி விசேஷண மாத்ரத்தை பிராப்யமாக நினைத்த ராவணனுக்கு
அங்க ஹானி அளவில் போகாமல் அங்கியான தேஹத்தை நசிப்பித்ததும்
அநன்யா ராகவேணாகம்
நச சீதாத் வ்யாஹீநா -என்கிற உடலையும் உயிரையும் பிரித்தவனைத் தாம் உடலையும் உயிரையும் பிரித்து விட்டார்

திருவிருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
திருவில்லாத் தேவரை தேறேல்
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
திரு மார்பா உனக்காகித் தொண்டு பட்ட நல்லேனை
திரு மார்பா சிறந்தேன் உன் அடிக்கே
புல்கும் அணையாம் திருமாற்கு அரவு –என்று சேஷித்வம் தொடங்கி கைங்கர்ய பிரதிசம்பந்தித்வ பர்யந்தமாக
மிதுன பிரதி சம்பந்தமாக இறே அனுசந்தித்துக் கொண்டு போந்தது

ஆக நிரதிசய ஆனந்த யுக்தமான பகவத் ஸ்வரூபாதிகளை அனுபவித்து அவள் உன்மத்தையாவது
அவ்வனுபவம் அடங்கலும் உபோத்காத ரசத்தில் சிறாங்கித்துக் கொள்ளும் படியான அவளுடைய
போக்யதாதிசயத்தை அனுபவித்து அவன் உன்மத்தனாவதாய்க் கொண்டு
ஒருவருக்கு ஒருவர் துணை இன்றிக்கே தாம் தாம் அழிந்த தசையில் உச்சித உபாயங்களாலே
இவர்களை உண்டாக்கி
சிசிரோ பசாராதிகள் பண்ணிக் கொண்டு போருகை இறே இம்மித்துன விஷயத்துக்கு
இவன் பண்ணும் கைங்கர்யமாவது

ஆக
ஸ்ரீமத்-சப்தத்தாலே
கைங்கர்ய பிரதி சம்பந்தியோடும்
கைங்கர்ய ஆஸ்ரயத்தோடும் உண்டான நித்ய சம்பந்தத்தை உடையவள் ஆகையால்
மாதா பிதாக்கள் இருவரும் சேர இருக்க சிசுரூஷிக்கும் புத்ரனைப் போலே
இருவருமாக சேர்த்தியிலே அடிமை செய்யக் கடவன் என்றதாயிற்று

———

அநந்தரம் -நாராயண பதம்
ப்ராப்யமான கைங்கர்யம் ஸ்வரூப அனுரூபம் ஆனால் அல்லது புருஷார்த்தம் ஆகாமையாலே
அதனுடைய ஸ்வரூப அனுரூபத்வத்தை பிரகாசிப்பிக்கிற ஸ்வாமித்வத்தையும்
தத் உத்பாவக ப்ரீதி நிதான அனுபவத்துக்கு பிரதி சம்பந்தி விசேஷ அதீநத்வம் உண்டாகையாலே
பிரதி சம்பந்த பூதனுடைய ஸ்வரூப ரூப குணாதி வை லக்ஷண்யத்தைப் பிரகாசிப்பிக்கிறது –

இமாந் லோகாந் காமாந் நீ காம ரூப்ய அநு சஞ்சரன்
ஸோஸ்னுதே சேர்வான் காமாந் ஸஹ
பிணங்கி அமரர் பிதற்றும் குணம்
கோதில வண் புகழ் கொண்டு சமயிகள் பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான் -என்றும்
சொல்லுகிற குணங்களை அனுபவித்தும்
சதுர் புஜஸ் ஸ்யாமளாங்க பரமே வ்யோம்நி நிஷ்டிதத
தமச பரமோ தாதா சங்க சக்ர கதா தரா
மணி யுருவில் பூதம் ஐந்தாய்
துயரில் சுடர் ஒளித் தன்னுடைச் சோதி
ஆதி யஞ்சோதி யுரு —
என்றும் சொல்லுகிற திவ்ய மங்கள விக்ரஹத்தை சதா பஸ்யந்தி பண்ணி அனுபவித்து
ரசம் ஹ்யேவாயம் லப்த ஆனந்தீ பவதி –என்கிறபடியே நிரதிசய ஆனந்தியாய் –
அந்த ஆனந்தம் ஹேதுவாக விளையுமது இறே அடிமை ஆவது –

அதில் நார பதம்
ரூப குண விபூதிகளுக்கு வாசகம் ஆகிறது
அயன பதம்
அவற்றுக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது

அதில் ஸ்வரூபம்
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம
மனன் உணர்வு அளவிலன் பொறி உணர்வு அவை யிலன் உணர் முழு நலம்
இல்லததும் உள்ளதும் அல்லது அவன் உரு எல்லையில் அந் நலம் –என்கிறபடியே
சத்யம்-சச் சப்த வாச்யமாகையாலே அசத் சப்த வாஸ்யமான அசித்திலும்
ஞானம் என்கையாலே சங்குசித ஞானரான பத்தரிலும்
அநந்தம் -என்று தேச கால வஸ்து அபரிச்சின்னமாகச் சொல்லுகையாலே பரிச்சின்ன ஸ்வரூபரான நித்யரிலும் அதிகமாய்
நிரதிசய ஆனந்த ஸ்வரூப ஸ்வ பாவமாய்க் கொண்டு ஸர்வ ஸ்மாத் பரமாய் இருக்கும் –

ரூபமும்
ந பூத சங்க ஸம்ஸ்தாநோ தேஹோஸ்ய பரமாத்மந
ந தஸ்ய பிராக்ருதா மூர்த்தி –என்கையாலே பிரகிருதி விகாரமாய் -அத ஏவ ஹேயமாய்-குணத்ரயாத்மக மாகையாலே –
திரோதாயகமாய் இருக்கும் பிராக்ருதி சரீரம் போல் அன்றிக்கே
அப்ராக்ருதமாய் -இச்சா க்ருஹீத அபிமதோரு தேஹ -வேண்டு வேண்டு உருவம் -என்கையாலே அபிமதமாய்
பஞ்ச சக்தி மயம் வபு-என்கையாலே பஞ்ச உபநிஷண் மயமாய்
நீல தோயத மத்த்யஸ்தா வித்த்யுல்லேகேவ பாஸ்கரா
நீலமுண்ட மின்னன்ன மேனி -என்றும்
மின் விழுங்கிய மேகம் போலே உள்வாயில் புகர்த்து -மைப்படி -மேனி என்கிறபடியே
கண்டார் கண்கள் வவ்வலிடும்படி குளிர்ந்து
பூர்ண ஷாட் குண்ய விக்ரஹம் -என்கிறபடி ஸ்வரூபத்தி பிரகாசகமாய்க் கொண்டு சர்வாதிகமாய் இருக்கும்

குணமும்
ஞான சக்திர் பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாமஸ்ய சேஷத-பகவச் சப்த வாசயாநிவி நா ஹேயைர்க் குணாதிபி
அபஹத பாப்மா விஜரோ விமிருத்யுர் விசோகோ விஜிகித்ஸோ அபிபாஸஸ் சத்யகாமஸ் ஸத்யஸங்கல்ப
யஸ் சர்வஞ்ஞஸ் ஸர்வவித –இத்யாதிகளாலே
ஹேயபிரதி படமாய் கல்யாணைகதாநமாய் இருக்கும் என்று சொல்லுகையாலே
ஹேயமாய் பராதீனமாய் இருக்கிற குணங்களில் அதிகமாய்
உயர்வற உயர் நலம் உடையவன் -என்கையாலே ஸ்வ வ்யதிரிக்தங்களை ச த்யோத கல்பமாக்க வற்றாய்
யாதாவாஸோ நிவர்த்தக்கே அப்ராப்ய மனசா ஸஹ என்கையாலே வாங் மனஸ் ஸூக்கு அவ்விஷயமாய்
அபரிச்சின்னமாய் இருக்கும்

விபூதியும்
பாதோஸ்ய விஸ்வா பூதாநி த்ரி பாதஸ்ய அம்ருதம் திவி
அயர்வறும் அமரர்கள் அதிபதி
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் -என்று
உபய விபூதியும் சர்வேஸ்வரனுக்கு விபூதியாகச் சொல்லுகையாலே அபரிச்சின்னமாய் இருக்கும்

ஆக
இப்படி ஸ்வரூப ரூப குண விபூதிகள் எல்லாவற்றாலும் அபரிச்சின்னனாய் அனுபாவ்ய குண சம்பன்னனாய்
இருக்கிறவன் கைங்கர்ய பிரதிசம்பந்தியாக
இந் நாராயண பதத்தில் சொல்லுகையாலே இதில் பிரார்த்திக்கிற கைங்கர்யம்
ஸ்வரூப அனுரூபமாய் அனுபவ ஜெனித ப்ரீதி காரிதமாய் இருக்கும் என்கிறது –

இத்தால்
சர்வம் பரவசம் துக்கம்
சேவா ஸ்வ வ்ருத்தி
அப்ரப்ரேஷ்ய பாவாத் -என்கிற
சேவா நிஷேதம் பகவத் வ்யதிரிக்த விஷயம் என்றதாயிற்று

திரு மந்திரத்தில் நாராயண பாதத்தில் சொன்ன குணங்கள் அடங்கலும் ஆஸ்ரயணத்துக்கும்
உபாய க்ருத்யத்துக்கும் உடலானால் போலே
இந் நாராயண பத யுக்தமான குணங்கள் ப்ராப்யமாயும் இருக்கும்
ஸ்வரூபத்துக்கு சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வங்கள் ஆகிற ஆகார த்ரயம் உண்டாகிறாப் போலே
ஸ்வரூப அனுபந்திகளான குணங்களுக்கும் ஆகார த்ரயம் உண்டாகக் கடவது இறே

பத்த சேதனருடைய சரீர விமோசன அநந்தரம் அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தருடைய அனுபவ கைங்கர்யங்களைக்
கொடுக்கையாலே வாத்சல்யம் ப்ராப்யம்
சேஷத்வ உபபத்தி ஹேதுவாய்க் கொண்டு ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யத்தைக் கொடுக்கையாலே ஸ்வாமித்வம் ப்ராப்யம்
பத்தனான இவன் தண்மையும் தன் மேன்மையும் பாராதே அயர்வறும் அமரர்களான ஸூரிகளினுடைய அனுபவத்தைக்
கொடுக்கையாலே சீல குணம் ப்ராப்யம்
அநாதி காலம் மாம்சாஸ்ருகாதி மயமான துர்விஷயங்களைக் கண்டு களித்துப் போந்த கண்களைக் கொண்டு
நித்ய திவ்ய மங்கள விக்ரஹத்தை சதா பஸ்யந்தி பண்ணும்படி பண்ணுகையாலே ஸுலப்யம் ப்ராப்யம்
சந்தா அனுவர்த்தனம் பண்ணிக் கைங்கர்யம் பண்ண வேணும் என்று பிரார்த்திக்கிற இவனுக்கு அனுகுணமான
அனுபவ கைங்கர்யங்களை அறிக்கைக்கு உறுப்பாகையாலே
சர்வஞ்ஞத்வம் ப்ராப்யம்
நிரதிசய ஆனந்தமான பகவத் ஸ்வரூபாதிகளை அசங்குசிதமாக அனுபவித்து அனுபவ ஜெனித ஆனந்த சாகர
அந்தர் நிமக்நராய்க் கொண்டு ஆஸ்ரயம் அழியும்படியான தசைகளில்
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு -என்கிறபடியே சாம்ய போக ப்ரதனாய்
ஆத்மதா பலதா -என்கிறபடியே போக்த்ருத்வ சக்தியைக் கொடுத்து புஜிம்பிக்கையாலே
ஸர்வ சக்தித்வம் ப்ராப்யம்
இந்த வ்ருத்தி தான் அவனுக்கு உபகரிக்கிறானாகை அன்றிக்கே தன் ஸ்வரூப சித்த்யர்த்தமாகச் செய்கிறோம்
என்று அநுஸந்திக்கும் போதைக்கு அவன் பூர்ணனாக வேண்டுகையாலே
அவாப்த ஸமஸ்த காமத்வம் ப்ராப்தவம்
அதில் ஸ்வ சாரஸ்யதா நிவ்ருத்தி பூர்வகமாக பகவத் ஏக ரஸ்யதையே பிரயோஜனமாகச் செய்கைக்கு உறுப்பாகையாலே
சேஷித்வம் ப்ராப்யம்
சேஷ பூதமான ஸ்வரூபம் கிஞ்சித் காரம் இல்லாத போது அசந்நே வாகையாலே அந்த ஸ்வரூபத்தினுடைய
உஜ்ஜீவன அர்த்தமான வ்ருத்தி கொள்ளுகைக்கு உறுப்பு ஆகையால்
கிருபா குணம் ப்ராப்யம்
ப்ரீதி ஹேதுவான அனுபவத்துக்கு விஷயம் ஆகையால்
ஸுந்தர்ய ஸுகந்தியாதிகளான குணங்களும் ப்ராப்யங்கள் –

ஆக இப்படி ப்ராப்ய பூதங்களான ஸமஸ்த கல்யாண குணங்களோடு —
நித்ய மங்கள விக்ரஹத்தோடு
நித்ய முக்த அனுபாவ்யனாய்க் கொண்டு இருக்கிற ஸர்வ ஸ்வாமியான நாராயணனைச் சொல்லுகிறது நாராயண பதம்
ஆனாலும் கீழில் நாராயண பதம் ஆஸ்ரயண பிரகரணம் ஆகையால் ஸுலப்ய பிரதானமானவோ பாதி
இதுவும் கைங்கர்ய பிரகரணமாகையாலே ஸ்வாமித்வ பிரதானமாய் இருக்கும்
ஏவம் ரூபமான ஸ்வரூப ரூப குணாதிகளை அனுபவித்து அனுபவ ஜெனித ப்ரீதியாலே
ஹாவு ஹாவு ஹாவு அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் இத்யாதிகளிலே சொல்லுகிறபடியே
நிரதிசய போக்யமான ஸ்வரூபத்தையும் அனுசந்தித்து ஹ்ருஷ்டானாய் அந்த ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே
ஏகதா பவதி த்விதா பவதி த்ரிதா பவதி சததா பவதி ஸஹஸ்ரதா பவதி அபரிமித ஸஹஸ்ரதா பவதி –என்கிறபடியே
கைங்கர்ய அனுகுணமாக அநேக விக்ரஹங்களைப் பரிக்ரஹிப்பித்து –
அது தான் ஒரு தேச விசேஷத்தில் பண்ணும் அடிமையால் ஆராமையாலே
யேந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி -என்கிறபடியே
ஸர்வ தேசங்களிலும் பகவத் அநு வ்ருத்தி பண்ணி த்ரிவித கரணங்களாலும் செய்யும் அடிமையைப்
பிரார்த்திக்கிறது இப்பதத்தில் சதுர்த்தியாலே

இவ்வடிமை தான் ஸித்திப்பது-
இதுக்கு பிரதிபந்தகமான -அவித்யா கர்மா வாசனா ருசி ப்ரக்ருதி சம்பந்தாதி சகல விரோதிகளும் நிவ்ருத்தமானால் ஆகையால்
இதுக்கு விரோதியான ஞான அநுதயம் -அந்யதா ஞானம் -விபரீத ஞானம் -என்கிற அவித்யை
அக்ருத்ய கரண – க்ருத்ய அகரண -பகவத் அபசார -பாகவத அபசார -அஸஹ்யா அபசார -ரூபமான அசத் கர்மங்கள்
இவை அடியாக வரக் கடவதாயும்-இவற்றுக்கு காரணமாயும் -பீஜாங்குர நியாயம் போலே வருகிற
தேவ திர்யக் ஸ்தாவர மனுஷ்யாத்மகமான சதுர்வித சரீரங்களும்
இவற்றைப் பற்றி வருகிற ருசி வாசனைகள்
இவை அடியாக அவர்ஜனீயமாய் வரும் ஆத்யாத்மிக ஆதி தைவிக ஆதி பவ்திகம் என்கிற தாப த்ரயங்கள்
புத்ர பசு அன்னாதி ரூபேணவும் ஸ்வர்க்காதி ரூபேணவும் வருகிற ஐஹிக ஆமுஷ்மிக ஸூத்ர புருஷார்த்த வாஞ்சை
இறப்பதற்கே எண்ணாது
இறுகல் இறப்பு –என்கிற கைவல்ய புருஷார்த்த வாஞ்சை
ஸ்வ கர்த்ருத்வாதிகள்
இவற்றினுடைய நிவ்ருத்தி பூர்வகமாக சஹஜ கைங்கர்ய விதய–என்னும்படி
ஸ்வதஸ் ஸித்தமாய் இருக்கிற கைங்கர்யத்தைப் பிரார்த்திக்கிறது –

விரோதி நிவ்ருத்தியும் கைங்கர்யமும் அபேக்ஷிதமாகில்-இரண்டையும் பிரார்த்தியாதே கைங்கர்ய மாத்ரம்
பிரார்த்த்யமாவான் என் -என்னில்
நிவ்ருத்த விரோதிகனுக்கு அல்லது கைங்கர்யம் உதியாமையாலே-பிரார்த்தனை தானே விரோதி நிவ்ருத்தியையும் என்கிற
ப்ராதான்யம் தோற்றக் கைங்கர்ய மாத்ரத்தைப் பிரார்த்திக்கிறது –
விரோதி நிவ்ருத்தியே ஸ்வயம் உத்தேஸ்யமாகில் -அது ப்ராப்யத்தில் ருசி இன்றிக்கே சம்சார பீதி மாத்ரம்
உள்ள கேவலனுக்கு இறே
ஆகை இறே -ஜரா மரண மோஷாயா மாம் ஆஸ்ரித்ய யதந்தியே -என்றும்
மரணம் தோற்றம் வான் பிணி மூப்பு என்ற இவை மாய்த்தோம்–என்றும் சொல்லுகிறது –
ஆக விரோதி நிவ்ருத்தி பூர்வகமான கைங்கர்யத்தைப் பிரார்த்திக்கிறது தாதார்த்த்ய வாசியான விச் சதுர்த்தியாலே

இச் சதுர்த்தி -கைங்கர்ய பிரார்த்தனையைக் காட்டுகிற படி என் என்னில் —
தாதர்த்தயே சதுர்த்தீ வக்தவ்யா -என்று தாதர்த்யத்தை சொல்லிற்றே ஆகிலும்
அந்த தாதர்த்ய ஆஸ்ரயம் சஹஜ கைங்கர்யத்தை ஸ்வஸ் சித்த ஸ்வ பாவமாக யுடைத்தான வஸ்து வாகையாலே –
கைங்கர்ய விஸிஷ்ட வேஷத்தில் தாதர்த்தமாய் இருக்கும் என்று காட்ட வற்றாகையாலும்
இந் நாராயண பதம் –தாரகனாய் -நியந்தாவாய் -வ்யாபகனாய் -அத ஏவ சரீரியாய் சேஷியான வஸ்துவையும்
தார்யமாய்-நியாம்யமாய்-வியாப்யமாய்-சரீரமாய் -சேஷமான வஸ்துக்களையும் காட்டுகையாலே
ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்திகளுடைய-தத் அதீந்யம் பலிக்கையாலே
தத் பூர்த்தி உள்ளது -வ்ருத்தி தத் அதீனமாக அனுசந்தித்து அவன் பக்கலிலே அத்யந்த
கைங்கர்யத்தை அபேக்ஷித்தாலாகையாலும்

கீழ் உபாய வரணம் பண்ணின அதிகாரி அநந்யார்ஹ சேஷமாகிற ஸ்வரூப தத் அதீந்ய ஞானவான் ஆகையாலும்
அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்திகளுக்கு நிரபேஷ ஸ்தானம் அவன் திருவடிகளேயாக பிரதிபத்தி பண்ணுகையாலே
அநந்ய சரண்யத்வம் ஆகிற ஸ்திதி தத் அதீந்யம் சித்திக்கையாலும்

உபாய பலமாய்க் கொண்டு ப்ராப்தவ்யமான அநந்ய போக்யத்வம் ஆகிற வ்ருத்தி தத் அதீந்யம்
இத பூர்வம் லப்தம் அல்லாமையாலே அது பிராப்தமாய் அறுகையாலும்
பரிமளம் பூவை ஸ்லாக்யம் ஆக்குமா போலேயும் -பிரபை மாணிக்கத்தை ஸ்லாக்யம் ஆக்குமா போலேயும்
ஸ்வ ஸ்வரூபத்துக்கு அதிசயா வஹமாய்க் கொண்டு ஸ்வரூப பிராப்தி ரூபமான
கைங்கர்ய பிரார்த்தனையைக் காட்டக் குறை இல்லை –

ஆக -இச் சதுர்த்தியாலே –
சேஷத்வ ஞான அநந்தர பாவியாய் -அந்த சேஷத்வ உப பத்தி ஹேதுவாய் -உபாய பலமாய் –
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே -என்று ஸ்வீ கரித்த உபாயத்தை பலமாக
கதாஹம் ஐகாந்திக நித்ய கைங்கர்ய ப்ரகர்ஷயிஷ்யாமி -என்று ஸ்ரீ பெரிய முதலியாராலும்
அநந்ய சரணஸ் த்வத் பாதாரவிந்த யுகளம் சரணம் அஹம் ப்ரபத்யே
நித்ய கிங்கரோ பவாநி -என்று ஸ்ரீ பாஷ்யகாரராலும்
அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று பரமாச்சார்யரான ஸ்ரீ நம்மாழ்வாராலும்
பிரார்த்திக்கப் படுமதாய் ஸ்வரூப விகாச ஸூசகமான கைங்கர்யத்தை பிரார்த்ததாயிற்று –

ஏவம் பூத கைங்கர்ய ஆஸ்ரயமாய் பகவத் அநந்யார்ஹ சேஷமான ஆத்ம ஸ்வரூபமும் –
தத் பிரதி சம்பந்தியாய் சேஷியான பகவத் ஸ்வரூபமும் –
நித்யோ நித்யா நாம் -என்கிறபடியே நித்யமாகையாலும்
அந்த நித்யத்வத்தையும் போக்தாவான இவனால் உண்டு அறுக்க ஒண்ணாதான போக்யதா பிரகர்ஷத்தை யுடைத்தான
ஸ்வரூப ரூப குணாதி வைலக்ஷண்யத்தையும் இந் நாராயண பதத்தில் சொல்லுகையாலும்
போக விரோதியான சகல பிரதிபந்தகங்களும் ஸ்வீ க்ருதமான உபாயத்தாலே நிவ்ருத்தமாகையாலும்
போக ஸ்தானமான விபூதியும்
காலமசபசதே தத்ர ந காலஸ் தத்ர வை பிரபு -என்கிறபடியே கால அதீனமாக
நாசாதிகளை உடைத்தது அன்றிக்கே இருக்கையாலும்
நசபுநா வர்த்ததே
அநா வ்ருத்திஸ் சப்தாஸ்
சர்க்கேபிநோ பஜாயந்தே பிரளயேந வ்யதந்திச
புணை கொடுக்கிலும் போக போட்டார் –என்றும்
மீட்சியின்றி வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே -என்றும்
ஏற்றி வைத்து ஏணி வாங்கி -இத்யாதிகளால்
யாவதாத்மபாவி புநரா வ்ருத்தி இல்லாத போகத்தைச் சொல்லுகையாலே
நானும் மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன் -என்கிறபடியே தத் கார்யமான
கைங்கர்யத்தை சர்வகாலமும் பிரார்த்திக்கிறது –

இத்தால்
ஷீனே புண்யே மார்த்த்ய லோகம் வி சந்தி –
கதாகதம் காம காம ல பந்தே –
தத்ய தேஹ கர்மசி தோலோச -ஷீயதே ஏவமேவா முத்ர புண்ய சிதோ லோக ஷீயதே
சத்வாகத்வா நிவர்த்தந்தே சந்த்ர ஸூர்யா தயோக்ரஹா
ஆ ப்ரஹ்ம புவநால் லோகா புநராவர்த்தி நோர் ஜூந
குடி மின்னும் இன் ஸ்வர்க்கம் எய்தியும் மீள்வார்கள் -என்கிறபடியே
புண்ய ஷயத்தில் மீண்டு பஞ்சாக்னி வித்யையில் சொல்லுகிறபடியே கர்ம பரவசனாயக் கொண்டு பிறக்கையாலே
போக்குவரத்துக்கே காலம் போருமது ஒழிய அனுபவிப்பதொரு அம்சம் இல்லை
ஆகையால் புண்யத்தால் ஜெயித்தவனுடைய லோகங்கள் ஷீணமாம் என்கிற
ஸ்வர்க்காதி போகங்களில் காட்டில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –

சாம்சாரிக சகல துரித நிவ்ருத்தி பூர்வகமாக சேஷத்வேந பிரகாசிதமான ஸ்வரூபத்தை யுடையவராகையாலே
அனுபவ உபகரணமான ஞானத்துக்கு சங்கோசம் இன்றிக்கே
சர்வதே பாணி பாதந் தத் சர்வதோ ஷிசிரோ முகம் -ஸர்வதஸ் ஸ்ருதி மல்லோகே சர்வமா வ்ருத்யஷ்டதி
இழிந்து அகன்று உயர்ந்து
உள்ள உலகு அளவு யானும் உளனாவன் –என்கிற முக்த ஸ்வரூபம் விபூதி த்வயத்தையும் வியாபிக்கும் ஆகையாலும்
போக்யமான வஸ்து தான் அபரிச்சின்ன ஆனந்தத்தை உடையனாய்க் கொண்டு
நித்ய விபூதி நிலயனாய் இருக்கச் செய்தேயும் ஜகத் ரக்ஷண அர்த்தமாக
அஜாயமாநோ பஹுதா விஜாயதே
பிறப்பில் பல் பிறவிப் பெருமான் –இத்யாதிப்படியே
ராம கிருஷ்ணாதி ரூபேண அவதரிக்கையாலும்
சர்வேஷு லோகேஷு காம சாரீ பவதி
இமாந் லோகாந் காமாந் நீ காம ரூப்ய அநு சஞ்சரன் –என்கிறபடியே
திவ்ய வேஸ்மம் திரு மா மணி மண்டபம் –முதலான பரம பதத்தில் போக ஸ்தானத்தோடு
ஆமோதம் முதலான வ்யூஹ ஸ்தானங்களோடு
திரு அயோத்தியை திரு மதுரை தொடக்கமான விபவ ஸ்தானங்களோடு
உக்காந்து அருளினை நிலங்களோடு வாசியற
அந்தமில் அடிமை -என்கிறபடியே
அபரிச்சின்னமான அடிமை செய்ய வேண்டும் என்கிறது –

இத்தாலே -தெரிவாரிய அளவில்லாச் சிற்றின்பம் -என்கிறபடியே
கர்ம ஜெனித சம்சார வச வர்த்திகளான ப்ரஹ்மாதிகளுக்கே அநு பாவ்யமாய்
அஸ்திரமான ஐஸ்வர்யாதிகளைப் பற்ற நித்யத்வத்தாலே சிறிது அதிகமாய்
ஏஷ அணுர் ஆத்மா
ஸ்வரூபம் அணு மாத்ரம் ஸ்யாத் ஞான ஆனந்த ஏக லக்ஷணம் -என்கிற
ஆத்ம அனுபவம் ஆகையால் சங்குசிதமாய்-அல்பமாய்-தேச பரிச்சின்னமான ஆத்ம அனுபவ ஸூகத்தில்
வ்யாவ்ருத்தி சொல்கிறது

இவ்வாத்மா -அப்ருதக் சித்த விசேஷணமாய்க் கொண்டு ஸர்வ அவஸ்தைகளிலும் அன்விதனாய் இருக்கையாலே
யாவஜ்ஜீவம் அக்னி ஹோத்ரம் ஜூஹூ யாத்-என்று நித்ய அக்னி ஹோத்ரமாக விதியா நிற்கச் செய்தேயும்
சாயங்காலமும் ப்ராத காலமும் ஒழிந்த காலங்களிலே விச்சின்னமான அக்னி ஹோத்ரம் போல் அன்றிக்கே
போக உபரதியை உடைத்தாய் இருபத்தொரு காலமும் இன்றிக்கே
ஓலக்கத்தோடு நாய்ச்சிமாரும் தமுமான ஏகாந்த தசையோடு வாசியற
எல்லா அவஸ்தைகளிலும் சத்ர சாமர பாணிகளாயும் படிக்கும் ஒட்டு வட்டில்கள் எடுத்தும்
அடிமை செய்வேனாக வேணும் என்கிறது –

இத்தால்
ஆத்மாநம் வாஸூ தேவாக்கியம் சிந்தயந –என்கிறபடியே
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தம் பர்யந்தமாக ஒன்றுக்கு ஓன்று அதிகமாம் படி
தேயே சத க்ரமத்தாலே பெருக்கிக் கொடு சேர்ந்த ப்ரஹ்மானந்தத்தை மனுஷ்ய ஆனந்தத்து அளவில் நிறுத்தி
பகவத் ஆனந்தத்துக்கு வகையிட்டுப் பேசத் தேடினாலும்
ஏகைச குணாவதித்சயாச தாஸ்திதா -என்று நித்ய நிர் தோஷங்களான வேதங்களாலும்
எல்லை காண ஒண்ணாத படி
கடி சேர் நாற்றத் துள்ளாலை யின்பத் துன்பக் கழி நேர்மை யொடியா இன்பப் பெருமையோன் -என்றும்
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பால் அவன் -என்கிற
ஸ்வரூப ரூப குணாதிகளை அனுபவித்தும்

ஸ்வ வைஸ்வ ரூப்யேண சதானுபூதயாப்ய பூர்வ வத் விஸ்மய மாததாநயா -என்று
ஏவம் ரூப ஸ்வரூபாதிகளைக் கொண்டு ஸர்வ காலமும் அனுபவியா நின்றாலும்
பித்தர் பனி மலர் பாவைக்கு -என்று அடைவு கெடும் படி அபூர்வ ஆச்சர்யத்தைப் பண்ணக் கடவளான
ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடே உண்டான சம்ஸ்லேஷத்தாலும்
அஹம் அன்னம்
உருவமும் ஆருயிரும் உடனே உண்டான்
என்னை முற்றப் பருகினான் –என்கிறபடியே
நிரதிசய போக்ய பூதரான நித்ய முக்தரை அனுபவிக்கும் பரம ஆனந்தியாய் நிற்கச் செய்தேயும்
ஸூரிகளோபாதி நிரந்தர அனுபவம் பண்ணுகைக்கு யோக்யரான ஆத்மாக்கள்
அநாதி அசித் சம்பந்தராய்க் கொண்டு தன்னை அனுபவிக்கப் பெறாதே
சப்தாதி விஷய போக்யராய் நிரந்தர துக்க அனுபவம் பண்ணுகிற படியைக் கண்டு
ச ஏகாகீ ந ரமேத
ப்ருஸம் பவதி துக்கித -என்று திரு உள்ளம் நொந்தும்

அவர்கள் பண்ணுகிற அக்ருத கரணாதிகளைக் கண்டு
க்ரோத மாஹார யத்தீவ்ரம்-
கோபஸ்ய வசமே யிவான்–என்கிறபடியே க்ரோதம் இட்ட வழக்காய்
ஷிபாமி
ந ஷமாமி
ஹநயாம–என்கிறபடியே தள்ளிக் குட்டிக் குலையாக அறுத்துத் தீர்த்துவேன் என்னும்படிக் கோப பரவசனாயும்
இப்படி லீலா விபூதியோட்டை சம்பந்தத்தால் துக்க ஏக மிஸ்ர ஸூகமான பகவத் போகத்தில் காட்டில்
போக மாத்ர சாமய லிங்காத்
ஜகத் வியாபார வர்ஜ்யேண சத்ருச பரமாத்மந -என்று லீலா விபூதி நிர்வாஹத்வம் இன்றிக்கே
நோ பஜனம் ஸ்மரன் நிதம் சரீரம் -என்கிறபடியே பூர்வ அனுபவ துக்க ஸ்ம்ருதிக்கும் அவகாசம் இல்லாத படி
நிரந்தரம் பகவத் அனுபவம் பண்ணுகிற முக்த பாகத்துக்கு வியாவ்ருத்தி சொல்லுகிறது –

இந்த சேதனர் விஷயமாக
மோததே பகவான் பூதைர்ப் பால கிரீட நகைரிவ
ஹரே விஹர சிக்ரீடா கந்துகை ரிவ ஐந்துபி
நளிர் மா மலருந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்
இன்புறும் இவ் விளையாட்டுடையான் –என்கிற லீலா ரூப ரஸ அனுபந்தியான ஆனந்தம் நடக்கையாலே
இந்த ஆனந்த உபயோகியுமாய் சேஷ்யதிசய ரூபமாகையாலே சேஷ பூத ஸ்வரூபத்துக்கு அனுரூபமாய் இருக்கையாலே
இது ஆனந்த வஹாமாயே இருக்க
இத்தைப் பற்ற ஈஸ்வரனுக்கு துக்கித்தவமும் க்ரோத பாரவஸ்ய நிபந்தமான அநிஷ்டாவஹத்வமும் சொல்லுகிறது
நிருபாதிக சம்பந்த நிபந்தனமாகவும்
தந் நிவ்ருத்திக சாரூப தயா நிபந்தனமாகவும்
அக்ருத்ய கரணாத் ஆஸ்ரய பூதரான சேதனர்க்கு நேரே தண்டதரனாய்க் கொண்டு சிஷித்து உஜ்ஜீவிப்பைக்காகவும்
ஆஸ்ரித வ்யாமோஹம் அடியாகவுமாகும் ஆகையால்
ஆனந்தித்வத்தோடு விரோதியாது –

இந்த கைங்கர்ய கரண ஆஸ்ரய பூத ஸ்வரூப கதமான சேஷத்வம் ஸர்வ பிரகாரம் என்று -சேஷத்வம் ஆகிறது
யதேஷ்ட விநியோக அர்ஹம் சேஷ சப்தேந கத்யதே -என்கிறபடியே
இஷ்டமான பிரகாரங்கள் எல்லாம் விநியோகப் படுகைக்கு யோக்யம் -இத்யாதிகளில் சொல்லுகையாலே
சென்றால் குடையாம்
தாஸஸ் சஹா
ஊரும் புள்-இத்யாதிகளில் படியே சத்ர சாமர பாணிகளாவது -அவை தானாவது
ச ஏகாதா பவதி –அபரிமிததா பவதி –என்கிறபடியே
அநேக விக்ரஹ பரிக்ரஹம் பண்ணுவதாய்க் கொண்டு அடிமை செய்கிற பெரிய திருவடி திருவானந்தாழ்வான்
முதலானோரைப் போலவும்
அந்த திருவனந்த ஆழ்வான் தொடர்ந்து அடிமை செய்ய வந்த இடத்தில்
ஸர்வ பிரகார சேஷ வ்ருத்தி பிரதி சம்பந்தியான ஸர்வவித பந்துத்வத்தை
பிராதா பர்த்தா ச பந்துஸ் ச பிதா ச மம ராகவ -என்று சொல்லி –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று சங்கல்பித்து சத்ர சாமர பாணி கராவது
க நித்ரபிட காதரராவது -வாளும் வில்லும் கொண்டு பின் செல்வது -பல மூலா ஹரணாதிகள் பண்ணுவது –
குஸூம சயநாதிகள் பண்ணுவது -சாலா சன்னிவேசாதிகள் பண்ணுவதாய்க் கொண்டு
ஸர்வவித சேஷ வ்ருத்தியிலும் அந்வயித்தால் போலவும் எல்லா அடிமைகளும் செய்யப் பெறுவேனாக வேணும் என்கிறது –

இத்தால் சம்ஸ்லேஷம் ஒன்றாலுமே யுகப்பிக்கும் நித்ய அநபாயினியான பிராட்டியுடைய போகத்தில்
காட்டில் வ்யாவ்ருத்தி சொல்கிறது
ஸ்வரூபமும் மிதுன சேஷமாய்
போகமும் இவருடைய சேர்த்தியிலேயாய்
கைங்கர்யமும் மிதுன விஷயத்திலேயாய் இருக்கையாலே
பகவத் ஏக சேஷமாய் -பகவத் ஏக போகமாய்-பகவத் ஏக ப்ரீதி ஹேதி பூத வ்ருத்திகமுமான ஸ்ரீ லஷ்மீ போகத்தில் காட்டில்
முக்த போகம் வியாவ்ருத்தமாய் இறே இருப்பது

ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தைகளிலும் ஸர்வவித கைங்கர்யங்களையும் பண்ணும் இடத்தில்
தான் அத்யந்த பாரதந்தர்ய ஞானவானாய் இருக்கையாலே தனக்கு உள்ளது –
கரிஷ்யாமி -என்கிற சங்கல்பமே மாத்ரமாய் -பிரேரகத்வம் -அவன் கையிலே ஆகையால்
குருஷ்வ மாம் அநு சரம்
கிரியதாம் இதி மாம் வத
முகப்பே கூவிப் பணி கொள்ளாய்
ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான்
பணி மானம் பிழையாமே யடியேனைப் பணி கொண்ட –இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
யே ஸ்வ இச்சா நிவ்ருத்திகமாய் –
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாயுடை யம்மான் —
என்கிறபடியே தோளிலும் மார்பிலும் திரு முடியிலும் திருவடிகளிலும் அவன் அணிய
அவ்விடங்களில் கிடந்தது ஸ்வரூப சத்தையும் போகமுமாய் கிடக்கிற திருத்துழாயோ பாதியும்
பர இச்சாதீந பர ப்ரேரித வியாபார ஆஸ்ரயமாய் இருக்க வேண்டுகையாலே
உசித கிஞ்சித்காரமாக வேணும் என்கிறது –

கிங்குர்ம இதி கைங்கர்யம் -என்று யாது ஒன்றே திரு முக மலர்த்திக்கு உறுப்பு –
அது இறே கைங்கர்யமாவது
ஆகை இறே கூடப் போன இளைய பெருமாளோடு -படை வீட்டில் இருந்த ஸ்ரீ பரதாழ்வானோடு-
இங்கு ஒழி என்ற சொல் படியே வழி அடி கெடாமல் இருந்த ஸ்ரீ குஹப் பெருமாளோடு வாசியற
ஸ்வரூபம் குலையாது ஒழிந்ததும் –

எங்கள் திருத்தமப்பனார் இறைக்க-திரு நந்தவனத்துக்கு மடை மாறிவிட்டு அடிமை செய்யவுமாம் –
திருமாலை கட்டி அடிமை செய்யவுமாம்
தமிழ் மாலை செய்து அடிமை செய்யவுமாம்
கட்டின மாலையை சூடித் தந்து அடிமை செய்யவுமாம்
இதில் பிரகார நியதி இல்லை -பிரதி சம்பந்தி நியதியே உள்ளது -என்று
ஸ்ரீ ஆண்டாள் வார்த்தையாக ஸ்ரீ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்ததும் –

இத்தால் ஸ்வ இச்சாதீநமான கைங்கர்யம் ஸ்வரூபத்துக்கு அநு ரூபம் அன்று என்கிறது –
இவ்வடிமைக்கு பிரதி சம்பந்தியான சர்வேஸ்வரன்
அம்மான் ஆழிப்பிரான் அவ்விடத்தான் யான் யார் -என்னும்படி உத்துங்கத்வம் ஆகையாலும்
நம்பீ கடல்வண்ணா
ஸத்ய காமஸ் ஸத்ய சங்கல்ப -என்னும்படி அவாப்த ஸமஸ்த காமனாய்- பூர்ணனாய் இருக்கையாலும்
பரார்த்த பராதீந வ்ருத்தி ஹேது பூதமான ஸ்வ கத சேஷத்வ பாரதந்தர்யங்களாலும் புருஷார்த்தமாக வேண்டுகையாலும்
தவ அநு பூதி ஸம்பூத ப்ரீதி காரித தாச தாம் தேஹி மே கிருபையா நாத ந ஜாநே கதிம் அந் யதா -என்று
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யத்தைக் கொண்டு அருள வேண்டும் என்றும்
ஸர்வ அவஸ்தோசிதா சேஷ சேஷதைக ரதி ஸ்தவ-பவே யம புண்டரீகாக்ஷ த்வமே வைவம் குருஷ்வ மாம் -என்று
ஸர்வ அவஸ்தையிலும் உசித அசேஷ வ்ருத்ய ஏக ரசனாம் படி பண்ணி அருள வேணும் என்றும்
பவாநி -என்று ஸ்ரீ பாஷ்யகாரர் பிரார்த்திக்கையாலும்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று
ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தா உசிதமான ஸர்வவித கைங்கர்யங்களையும்
பண்ணப் பெறுவேனாக வேணும் என்று இவ்வர்த்த நிஷ்டரான ஸ்ரீ நம்மாழ்வார் பிரார்த்திக்கையாலும்
சேஷ பூதனாகையாலே தத் அதிசய வ்ருத்தி அபேக்ஷித்தமாகிறாப் போலேயும் –
பரதந்த்ரனாகையாலே தத் ப்ரேரிதமாக வேண்டுகிறவோபாதியும்
சேஷத்வ பாரதந்தர்ய ஞானாவானாக தன்னை அறிகைக்கு ஈடான ஞாத்ருத்வத்தை உடையவனாகையாலே
தத் ஞான ஹேதுக பிரார்த்தனை அபேக்ஷிதமாகையாலே அந்த பிரார்த்தனை ரூப அர்த்தத்துக்கு வாசகமான
இந்த சதுர்த்தீ விபக்தியாலே ஏவம் ரூப கைங்கர்யத்தைப் பிரார்த்தித்தார் ஆயிற்று

ஆக விபபத்ததாலே
பகவத் அநந்யார்ஹ சேஷ பூத ஸ்வதஸ் ஸ்வரூபனாய் இருக்கச் செய்தேயும்
ஸ்வரூப அனுரூப போக விரோதியான சம்சார வியாதியால் யாக்ராந்தனான வாத்மா
நிர்வாணம் பேஷஜம் பிஜக்
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்
நோய்கள் அறுக்கும் மருந்து -என்ற சித்த ஒளஷதத்தைப் பெற்று அந்த வியாதியில் நின்றும் முக்தனாய்
அர்ச்சிராதி கதியால் அகால கால்யமான தேசத்திலே புக்கு
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று பிரார்த்தித்த படியே
அடியாரோடு இருந்தமை -என்னும்படி -துளக்கமில்லா வானவர் -என்கிறபடியே
நிரந்தர பகவத் அனுபவ ஏக ஆதரரான வானவர்க்கு நற்கோவையாய் அசங்குசிதமாக பிரகாசிப்பிக்கிற
பக்தி ரூபா பன்ன ஞானத்தால் அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய ஸ்வரூப ரூப குணாதிகளை
உண்டு கழித்தேற்கு உம்பர் என் குறை
வானவர் போகம் உண்பாரே–என்கிறபடியே
அதனில் பெரிய என் அவா என்னும்படி பெருகின அபிநிவேசத்தோடே அனுபவித்து
அவ்வனுபவ ஜெனித ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே-
ஹாவு ஹாவு ஹாவு அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் ஸ்லோக க்ருத அஹம் ஸ்லோக க்ருத –இத்யாதிகளில்
சொல்லுகிறபடியே அக்ரமமாக ஸ்தோத்ரம் பண்ண –
அது கிஞ்சித்காரத்திலே மூட்ட
அத்தாலே தேச கால அவஸ்த்தா க்ரியா பரிச்சேதங்கள் ஒன்றையும் சஹியாதபடி
ஸர்வ தேசத்திலும் ஸர்வ காலத்திலும் ஸர்வ அவஸ்தைகளிலும் ஸர்வவித சேஷ வ்ருத்திகளை
உபய ஸ்வரூபத்துக்கும் அநு குணமாம்படி பண்ண வேணும் என்று பிரார்த்தித்துத் தலைக் கட்டுகிறது-

——————

ஸோஸ்னுதே சர்வாந் காமாந் –என்று மாநஸமாகவும்
அஹம் அன்னம் –
நம இத்யேவ வாதிந -என்று வாசிகமாகவும்
சாயாவா சத்வமனுகச்சேத்
அநு சஞ்சரன் –
பத்தாஞ்சலி புடா -என்று காயிகமாகவும்
இப்படி த்ரிவித கரணங்களாலும் அடிமை செய்யும் இடத்தில்
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்னும்படி ஸ்ருக் சந்தநாதிகளைப் போலே
மிக்கது நறுக்கிப் பொகடலாம் படியுமாய் -அவை விநியோகம் கொள்ளும் அவனுக்கே உறுப்பாமது ஒழியத்
தனக்கு என்ன ஒரு அம்சம் இன்றியிலே இருக்குமா போலேயும் –
படியாய் -என்று அசித் சமமாய் –
கண்ணி எனது உயிர் -என்று மாலையோபாதி அத்தலைக்கு அதிசயகரமாக
சிஷிதமான ஸ்வரூபத்துக்கு தனக்கு என்ன ஒன்றும் இன்றிக்கே சேஷி உகந்த அடிமையில் அன்வயமாய் —
பவள வாய் காண்பேனே -எனைக் கொள்ளுமீதே -என்று சைதன்ய விநியோகம் அத்தலைக்காகக் கொள்ள வேணும்
என்ற அபேக்ஷையும் தந் முக உல்லாசம் கண்டு உகக்கையுமாய் இறே ஸ்வரூபத்தை பார்த்தால் இருப்பது –
அங்கன் இன்றிக்கே ஸ்வயம் போக்யம் என்றும்
ஸ்வ கீயம் என்றும் வருகிற பிரதிபத்திகளை நிவர்த்திப்பிக்கிறது நமஸ் சப்தம்

நனு –
கீழே -அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாராவமுதம் -என்று நித்ய அபூர்வமாய் நிரதிசய போக்யமான
விஷயத்தினுடைய ஸ்வரூப ரூப குணாத் யனுபவம் ரசித்து ப்ரீதனானால் –
அந்த ப்ரீதி பிரேரிதனாய் வருமது கைங்கர்யம் என்று சொல்லுகையாலும்
கர்த்தாவான இவனை ஞாதாவாகச் சொல்லுகையாலே ஞான அனுகுணமான போக்த்ருத்வம் ஸித்தமாகையாலும்
ஸோஸ்னுதே சர்வாந் காமாந்
சதா பஸ்யந்தி
அத்ர ப்ரஹ்ம சமஸ்னுதே –என்று குண விக்ரஹங்களுக்கு போக்தாவாகச் சொல்லுகையாலும்
லப்த ஆனந்தீ பவதி -என்று ஆனந்தித்வத்தை சொல்லுகையாலும் -ஸ்வரூப அநு பந்தியாய் வருகிற
கர்த்ருத்வ போக்த்ருத்வங்களை நிவர்த்திப்பிக்கக் கூடுமோ என்னில்

போக்தாவான இவனுக்கு போக உபகரணமான ஞானம் என்ன -இந்த போக்த்ருத்வ ரூபமான ஞானம் என்ன –
இவை பகவத் அதீன ஸத்பாவமாய் -பகவத் அதீன வியாபாரமுமாய் பகவத்தர்த்தமுமாய் யல்லது இராமையாலே
தத் ப்ரேரிதமாய் அல்லது அவை அனுபாவ்ய விஷயத்தை விஷயீ கரிக்கவும் பிரதிபத்த பண்ண ஷமம் இல்லாமையாலும்
லோகத்தில் பதார்த்தங்களை வர்ண ரசாதிகள் பிரதி வஸ்து அபி பின்னமாய்க் கொண்டு ஒன்றினுடைய
ரசமும் வர்ணமும் ஆக்ருதியும் மற்றையதுக்கு இன்றியே அதுக்கே நியதமாய் இருக்குமா போலேயும்
அநேக விதமான ரத்னங்களில் பிரபைகள் தோறும் தத் தத் ரத்னகதங்களான ரக்த கிருஷ்ணாதி வர்ணங்கள்
தத் தத் அந்தர் கதமாய்க் கொண்டு தோற்றுமா போலேயும்
ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்து ஸத்பாவ ஹேதுவாய் -சேஷியாயே ஸித்தமான ஞானத்துக்குள்ளே
ஸமஸ்த வஸ்து கத வியாபாரங்களாலும் வருகிற ரஸித்வம் தன்னது என்று பலித்வம் தோன்றுகிறாப் போலேயும்

யாவத் சததம சேக்ஷத்வாபாத நார்ஹம் ஸ்வார்த்தே வியந்தும் தாரயிதுஞ்ச சக்யம்
ஞானானந்த மயஸ் த்வாத்மா சேஷோஹி பரமாத்மந -என்று சேஷத்வ அபாவத்தில் சத்தா ஹானி பிறக்கும்படி –
சத்தா சித்த சேஷமாய் -தார்யமாய் -நியாம்யமாயும் போருகிற எல்லா அவஸ்தைகளிலும்
தாரகனாய் நியாந்தாவான அவனுடைய பிரயோஜன அர்த்தமாகவே தார்யமாயும் நியாம்யமாயும் போரக் கடவதாய் –
தத் பிரயோஜன வ்யதிரேகேண ஸ்வ பிரயோஜன விஷயம் என்னும் அன்று சத்தை இல்லையாய்-
சேஷோஹி -என்று வடிவான ஆனந்த ரூப ஞானத்துக்கு உள்ளீடு சேஷத்வம் என்று பிரசித்தமாய்
அபிமான நிபர்யந்தாஹமர்த்தமாய் இருக்கிற இவ்வஸ்துவுக்கு பர அதிசயத்வம் ஒழிய ஸ்வ அதிசயம் இல்லாமையாலும்
அனுபாவ்யமான ஸ்வ வை லக்ஷண்யாதிகளை பிரகாசிப்பானும் அவனே யாகையாலும்
ப்ரீதி காரித கைங்கர்யமும் தத் ப்ரேரிதமாய் வருகிறதாகையாலும்
அத்யந்த பாரதந்தர்ய பிரதிபத்தியாலே ஸ்வ கர்த்த்ருத்வ பிரதிபத்தி ரஹிதமாகவும்
சேஷத்வ ஞானத்தால் ஸ்வ பலித்வ பிரதிபத்தி ரஹிதமாகவும் பிரார்த்திக்கக் குறை இல்லை –

சத்தா சித்தம் இன்றிக்கே ஓவ்பாதிகமாய் அநித்யமுமானபார்த்த்ரு பார்யா சம்பந்தத்தில் அகப்பட இருவருக்கும் உண்டான
சம்ஸ்லேஷ ஜெனித சாரஸ்யத்தில் பர்த்த்ரு முக விகாசமே ப்ரயோஜனமாய்
அதுக்கு உறுப்பாக சம்ஸ்லேஷம் நடவாதே ஸ்வ சாரஸ்யார்த்தம் என்று நினைத்தல்
தேஹ தாரணம் என்று நினைத்தல் செய்த அன்று பாதி வ்ரத்ய ஹானி யோகா நின்றால்
சத்தா சித்த சேஷ வஸ்துவுக்குச் சொல்ல வேண்டா இறே

தன்னை சேஷமாக உணர்ந்த அன்று
அதவா கிந்னு சமர்ப்பயாமித -என்றும்
எனது யாவி யார் யான் யார் -என்றும் –
அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -என்றும்
சமர்ப்பணம் அநு சாயத்துக்கு விக்ஷயமாமாம் போலே தன்னை போக்யமாக உணர்ந்த அன்று
ஆகமுற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே -என்கிறபடியே
கர்த்ருத்வ பலித்வங்கள் இரண்டும் அவன் பக்கலிலேயாய் இருக்கையாலே
யானே என் தனதே இன்று இருந்தேன் -என்ற
ஸ்வ கர்த்ருத்வ பலித்வ பிரதிபத்திகளுக்கு அநு சயிக்க வேண்டி இறே இருப்பது –

ஸ்வரூப அனுசந்தான தசையில் அநு ரூபமான ரஷ்யத்வம் ஸுகுமார்ய அனுசந்தான தசையில் அநனு ரூபமாய் இருக்குமா போலே
விருத்தி தசையில் ஸுந்தர்யத்தில் கண் வைக்கையும்- ஸ்வரூப அனுசந்தானமும் அபிராப்தமாய் இறே வஸ்து வேஷத்துக்கு இருப்பது
பத் த்வத ப்ரியம் ததிஹ புண்யம் அபுண்யம் அந்யத் -என்கிறபடியே
அவனுக்கு பிரிய விஷயமாய் இருக்கை இறே அஹம் அர்த்தத்துக்கு ஸ்வரூபம் –
ஆகை இறே -அஹம் அன்னம் -என்றும்
ஆட கொள்வான் ஒத்து என் உயிருண்ட
உருவமும் ஆருயிரும் உடனே உண்டான் -என்று இவ்வாத்ம வஸ்துவை போக்யமாக அனுசந்திக்கிறது –

ஆக –
இந் நம சப்தத்தால் -போஜனத்துக்குத் துராலும் மயிரும் புழுவும் போலே
போக்தாவான ஈஸ்வரனுடைய போகத்துக்கு விரோதியான
-நான் கர்த்தா -என்றும் –
எனக்கும் உனக்கும் ரசித்தது -என்றும் –
வருகிற அஹங்கார மமகார ரூபமான விரோதியைக் கழிக்கிறது –

நம–என்கிற இது இவ்வர்த்தத்தைக் காட்டுகிற படி எங்கனே என்னில்
ம -என்று ஞான வாசியான அக்ஷரத்தில் ஷஷ்டி யந்தமாய் –
எனக்கு என்றும் -என்னுடையது என்றும் -சொல்லுகிற அர்த்தத்தைக் காட்டுகையாலே
சேதனஸ்ய யதா மர்யம ஸ்வஸ்மிந் ஸ்வீயோக வஸ்துநி -மம இத் யஷரத்வ நத்வம் ததா மம யஸ் வாசகம் –என்கிறபடியே
அர்த்தத்தில் அந்விதமான ம என்கிற இம்மகாரம் நான் எனக்கு என்கிற அஹங்காரத்தையும்
அஹம் அர்த்த அநு பந்தியான ஸ்வ பாதிகளாலே அந்விதமான ம என்கிற மமகாராம்
இது எனக்கு என்னுடையது என்கிற மமகாரத்தையும் காட்டவற்று ஆகையாலும்
ந என்று அத்தை நிஷேதித்து நிற்கையாலும்
மமேதி த்வயக்ஷரோம்ருத்யு -என்று நாசகரமான அஹம் மமதைகளை நிவர்த்திப்பிக்கிறது ஆகையால்
போக விரோதியான அஹம் மமதைகளை நிவர்த்திப்பிக்கிறது என்னக் குறை இல்லை

இந்த விரோதி தான்
ஸ்வரூப அனுசந்தான தசையில் எனக்கு நான் ஸ்வாமி என்றும் -எனக்கு நான் சேஷி என்றும் காட்டும்
உபாய அனுஷ்டானம் என்னுடைய பலத்துக்கு உபாயம் என்று காட்டும்
பல தசையில் பல ரூப வ்ருத்திகளுக்குக் கர்த்தா நான் -இது என்னுடைய பலம் என்று காட்டும் –
இப்படி மூன்று வகைப்பட்ட அஹங்கார மமகாரங்களையும் நிவர்த்திப்பிக்கிறது இந் நமஸ் சப்தம் –

ப்ரணவத்தில் பகவத் அநந்யார்ஹ சேஷமான ஆத்ம வஸ்துவை ஞாதாவாகச் சொன்ன அநந்தரம்
அதில் அஹம் மமதைகளை நிவர்த்திப்பித்தது திருமந்திரத்தில் நமஸ் சப்தம்
இதர உபாய பிரவ்ருத்தி நிவ்ருத்தி பூர்வகமான பகவத் ஏக உபாயத்வ பிரதிபத்தியை
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் வ்ரஜ -என்று விதித்த அநந்தரம் அதில் அஹம் மமதைகளை நிவர்த்திப்பித்தது ஏக பதம்
பகவத் கைங்கர்ய பிரார்த்தனா வாசகமான நாராயண பதத்துக்கு அநந்தரமான விந் நமஸ் சப்தம்
அதில் அஹம் மமதைகளை நிவர்த்திப்பிக்கிறது –

ஆச்சார்ய சேவா பலம் -அவதாரண த்ரயத்திலும் அர்த்த ஞானம் பிறந்து உஜ்ஜீவிக்கை காண் என்று
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்யும் வார்த்தை
ஆக கைங்கர்ய விரோதி நிவ்ருத்தி பண்ணுகிற இந் நமஸ் சப்தத்தால்
போகத்திலே ஹேய ராஹித்யத்தைச் சொல்லுகிறது –

ஆக
ஸ்ரீ மதே -என்கிற பதத்தாலும்
நாராயணாயா -என்கிற பதத்தாலும்
ஸ்ரீயபதியாய் -ஸமஸ்த கல்யாண குணாத்மகமாய் -விலக்ஷண விக்ரஹ யுக்தமாய் இருக்கிற விஷயம்
போக பிரதிசம்பந்தி என்கையாலே போக்ய வஸ்துவினுடைய வை லக்ஷண்யம் சொல்லிற்று –
நம-என்கிற பதத்தால்
நிரதிசய போக்யமான அவனை விஷயமாக யுடைத்தாய் பிரார்த்திக்கப்பட்ட கைங்கர்ய ரூப போகத்தில்
வை லக்ஷண்யம் சொல்லுகிறது –

ஆக
உத்தர வாக்யத்தாலே
கைங்கர்ய பிரதி சம்பந்தி பூர்த்தி ஹேதுவான ஸ்ரீ மத்தையையும்
தத் ஸ்வரூப பிராப்தி ஹேதுவான ஸ்வாமித்வத்தையும் கைங்கர்ய பிரார்த்தநையையும்
தத் விரோதி நிவ்ருத்தியையும் –சொல்லிற்று ஆயிற்று –

ஆக
வாக்ய த்வயத்தாலும்
ஸ்வரூப ஞான பலமான உபாய வரணத்தையும்
தத் பலமான உபேய அபேக்ஷையையும் சொல்லிற்று ஆயிற்று –

ஆக
உபாய வாரணாத்மகமான ஆஸ்ரயணத்துக்கு பிரதிபந்தகமான விரோதி பூயஸ்த்தவ
ஸ்வா தந்தர்யாதி நிபந்தன பயத்துக்கு நிவர்த்தகமான புருஷகாரத்தையும்
தத் பய நிவ்ருத்தி ஹேது பூத தத் உத்பாவித வாத்சல்யாதி குண வைசிஷ்ட்டியையும்
தத் ஆஸ்ரயண ஸுகர்ய ஹேது பூத ஸுலப்ய ப்ரகாசக திவ்ய மங்கள விக்ரஹ யோகத்தையும்
தத் உபாயத்தையும்
தத் பிரதிபத்தியையும்
தத்பல கைங்கர்ய பிரதிசம்பந்தி பூர்த்தியையும்
பல பிரார்த்தனையையும்
பல விரோதி நிவ்ருத்தியையும் –சொல்லித் தலைக் கட்டுகிறது –

ப்ரபத்யே -என்று அத்யவசாயத்தையும்
சரணம் -என்று அதுக்கு உபேய வ்யாவ்ருத்தி ரூபமான உபாயத்வத்தையும்
நாராயண சரணவ் -என்று அதுக்கு சாத்தனாந்தர வியாவ்ருத்தியையும்
ஸ்ரீ மன் என்று அதில் இழிகைக்கு அனுரூபமான துறையும்
சொல்லுகிறது பூர்வ வாக்யம்

நம-என்று விரோதி நிவ்ருத்தியையும்
ஆய -என்று ப்ராப்ய பிரார்த்தனையையும்
நாராயண -என்று ப்ராப்ய பிரதி சம்பந்தியையும்
ஸ்ரீ மதே -என்று ப்ராப்யம் ஒரு மிதுனம் என்னும் இடத்தையும் சொல்லுகிறது உத்தர வாக்யம் –

அங்க வ்யாவ்ருத்தியும்
ஸாத்ய சாதன வ்யாவ்ருத்தியும்
ஸாத்ய வ்யாவ்ருத்தியும்
அசித் வ்யாவ்ருத்தியும்
பலித்வ வ்யாவ்ருத்தியும்
பலாந்தர வ்யாவ்ருத்தியும்
பிராப்தி வ்யாவ்ருத்தியும்
அபூர்த்தி வ்யாவ்ருத்தியும் –பண்ணிற்று ஆயிற்று

ஆக
வாக்ய த்வயத்தாலும்
ஈஸா நாம் ஜகதா மதீசத பிதாம் நித்ய அநபாயாம் ஸ்ரீ ரியம் ஸமஸ்ரிதயாஸ் ரயணோ சிதாகில குணஸ்
யாங்க்ரி ஹரேர் ஆஸ்ரய இஷ்ட உபாய தயா ஸ்ரியா ச சஹிதா யாதமேஸ்வரா யார்த்தயே கர்த்தும் தாஸ்யம்
அசேஷ மபதிர ஹதம நிதய நதவஹம நிர் மம –என்கிறபடியே
சர்வ ஸ்மாத் பரனான சர்வேஸ்வரனுக்கு வல்லபையாய்
ஸமஸ்த சேதன அசேதனங்களுக்கும் ஈஸ்வரியாய்
அவனோடு நித்ய அநபாயிநியான ஸ்ரீ பெரிய பிராட்டியார் புருஷகாரமாக
வாத்சல்யாதி குண விசிஷ்டனான எம்பெருமான் திருவடிகளையே
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் உபாயமாக அத்யவசிக்கிறேன்
நித்ய அநபாயினியான அவளோடு நித்ய சம்யுக்தனாய்
சர்வ ஸ்வாமி யானவனுக்கு
எல்லா தேசத்திலும் எல்லாக் காலத்திலும் எல்லா அவஸ்தைகளிலும் எல்லா அடிமைகளையும்
அவன் ஏவின படிகளில் செய்யப் பெறுவேனாக வேணும்
அவ்வடிமைக்கு விரோதியான அகங்கார மமகாரங்களைப் போக்கித் தந்து அருள வேணும் என்று பிரார்த்தித்தது ஆயிற்று –

ஸ்ரீ த்வ்ய பிரகரணம் முற்றிற்று

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரகால நல்லான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பரகால நல்லான் ரஹஸ்யம் -ஸ்ரீ மந்த்ர ரத்னம் -ஸ்ரீ த்வயம் -பூர்வ வாக்ய – சரணவ் பதார்த்தம் /–சரணம் பதார்த்தம்/ ப்ரபத்யே பதார்த்தம்–

August 24, 2019

ஆக நாராயண பதத்தாலே
நார சப்தேந ஜீவாநாம் ஸமூஹ ப்ரோசயதேபுதை–என்று
ப்ராப்தாக்களான பிரத்யகாத்மாக்களைச் சொல்லி
அயந சப்தத்தால் -அவ்வாத்மாக்களுக்கு உபாய பூதன் என்னும் அர்த்தத்தைச் சொல்லி
அவனை உபாயத்வேந ஆஸ்ரயிக்கைக்கும் –
உபாய கார்யமான அநிஷ்ட நிவ்ருத்தியாதிகளைப் பண்ணுகைக்கும் உறுப்பான குண விசேஷங்களைச் சொல்லிற்று ஆயிற்று –

—-

அநந்தரம்
இக்குணங்களுக்கு ஆஸ்ரயமாய்
ந க்ராஹ்ய-
ஸ்வப்னதீ கம்யம்
பொறி யுணர் அவை இலன் -என்று சஷூர் கோசாரம் இல்லாமையாலும்
கண்டால் அல்லது ஆஸ்ரயிக்க விரகு இல்லாமையாலும்
கண்டு ஆஸ்ரயிக்கைக்காக சஷூர்க் கோசரமான திவ்ய மங்கள விக்ரஹத்தைச் சொல்லுகிறது -சரணவ் -என்கிற பதம்

ஆஸ்ரயணத்துக்கு விக்ரஹம் அபேக்ஷிதமாகில் வாத்சல்யாதிகள் செய்கிறது என் என்னில்
குற்றம் கண்டு கை விடாமைக்கும்
அங்கீ காரம் தன் பேறாகைக்கும்
அங்கீ கார விஷய பூத சேதனர் சிறுமை பாராமைக்கும்
வாத்சல்யாதிகள் உண்டானாலும் இவை ஆஸ்ரயண உன் முகனைக் குறித்தாகையாலே
ஆஸ்ரயணம் சஷூர் இந்திரிய க்ராஹ்யமான விஷயத்தில் அல்லது கூடாமையாலே அந்த வாத்சல்யாதிகளாலே பிரகாசிதமாய் –
ஸுலப்ய குண கார்யமாய்-மூர்த்தம் ப்ரஹ்ம–என்னும்படி குணங்களிலும் அந்தரங்கமாய்
அபிமதோரு தேஹ –என்கிறபடியே அபிமதமாய்
பூர்ண ஷாட் குண்ய விக்ரஹ -என்கிறபடியே மாணிக்கச் செப்பில் பொன் போலே அகவாயில் ஆத்ம குணங்களை
பிரகாசிப்பிக்கக் கடவதாய் இருக்கிற திவ்ய மங்கள விக்ரஹத்தைச் சொல்லுகிறது

ஆனால் விக்ரஹ வாசகமான சப்தத்தை இட்டுச் சொல்லாதே ஏக அவயவ மாத்ர வாசகமான திருவடிகளை இட்டு
விக்ரஹத்தை சொல்லுவான் என் என்னில்
ஆஸ்ரயண உன் முகனான இச் சேதனன் பிரணவ யுக்தமான அநந்யார்ஹ சேஷத்வ ஞானவான் ஆகையால்
இந் நாராயண பதத்தில் சொல்லுகிற ஸ்வாமித்வ சேஷித்வங்களுக்கு பிரதிசம்பந்தியான
ஸ்வத்வ சேஷத்வங்களை அனுசந்தித்தவன் ஆகையாலும்
பிரஜைக்கு மாதாவினுடைய சர்வ அவயவங்களில் காட்டிலும் தனக்கு தாரகமான ஸ்தந்யத்தை உபகரிக்கையாலே
ஸ்தநத்திலே விசேஷ பிராப்தி உண்டாம் போலே
அடியேன் சேவடி அன்றி நயவேன்-என்று ஸ்வரூபத்துக்கு அனுரூபமான அம்ருதத்தை
விஷ்ணோ பத பரமே மத்வ உத்ச
உன் தேனே மலரும் திருப்பாதம்
அம்ருதயஸ் யந்திநீ பாத பங்கஜே–என்கிறபடியே ப்ரவஹிக்கையாலும்
சேஷ பூதனுடைய யுக்தி ஆகையாலும்
கையைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமத்திலும் காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமவன் பக்கல் கிருபை அதிசயித்து இருக்கையாலே
கார்யம் கடுகப் பலிக்க உறுப்பாகையாலும்
திருவடிக்கு வாசகமான சப்தத்தாலே விக்ரஹத்தைச் சொல்லுகிறது –

ஆக ஆஸ்ரயண பிரதி சம்பந்தியாய் ஸ்தூலமான விக்ரஹத்தை -சரண -சப்தத்தாலே சொல்லுகிறது
அதவா
மேலே -சரணம் பிரபத்யே -என்கிற உபாய வரணத்துக்கு -பிரதி சம்பந்தியாக விக்ரஹத்தைச் சொல்லுகையாலே
ஈஸ்வரன் வாத்சல்ய முகேன ஸ்வ தோஷ தர்ச நாதி பய நிவ்ருத்தியைப் பண்ணி ருசியைப் பிறப்பித்து
ஞான சக்த்யாதி முகேன கார்யகரனாகிறவோபாதி விக்ரஹத்வாராவும் ருசி ஜனகனாய்
உபாய பூதனாகையாலே அந்த உபாயத்வ ப்ரதான்யத்தைப் பற்ற விக்ரஹத்தை சொல்லுகிறது ஆகவுமாம்

தெரிவை மாருருவமே மருவி
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
சிலம்படி யுருவில் கரு நெடும் கண்ணனார் திருத்தனாய் –என்கிறபடியே நாசகரமான நாரீ ஜனங்களுடைய
நயனங்களிலும் அகப்பட்டு நாரகிகளாய்ப் போருகிற நார ஜனங்களை
தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகன்
காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி
என் செய்ய தாமரைக் கண் பெருமானார்
என் செய்ய தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்து–என்கிறபடி தன் பக்கலிலே பிரவணமாம் படி பண்ணி
ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே -என்று தோற்றுத் திருவடிகளில் விழும்படி பண்ணி

ஸர்வதா சரண த்வந்த்வம் வ்ரஜாமி சரணம் தவ -என்று பின்னை தன்னையே உபாயமாகப் பற்றி
பாஹி மாம் புண்டரீகாக்ஷ ந ஜாநே சரணம் பரம் -த்வத் பாத கமலாதந் யந்நமே ஜென்மாந்த்ரேஷ் வபி –
நிமித்தம் குசலஸ்யாஸ்தியே ந கச்சாமி ஸத் கதிம்-என்று யாதொரு குசலத்திலே ஸத் கதியை பிராப்பிப்பன் –
அந்த குசலத்துக்கு நிமித்தம் தேவரீர் திருவடிகளை ஒழிய வேறு இல்லை என்றும் பிரதமத்திலே தோற்பித்த கண் அழகும்
தோற்று விழும் திருவடிகளையும் ஒழிய உஜ்ஜீவன உபாயம் இல்லை என்று சொல்லும்படி பண்ணி
நகாம கலுஷம் சித்தம் மம தே பாதயோஸ் ஸ்திதம் –என்று திருவடிகளில் பிராவண்யத்தாலே
வேறு ஒன்றில் மனஸ்ஸூ கலங்காத படி பண்ணி

ஆக இப்படி
ருசி ஜனகனுமாய்
ருசி பிறந்தால் உபாயமுமாய்
இதர விஷயத்தில் சங்கத்தைப் போக்க வற்றாய்
மாக மா நிலனும் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடி
மேலை விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடி –என்கையாலே சர்வ அபாஸ்ரயமாய்
திரு மா நீள் கழல்
திருக் கமல பாதம் வந்து –என்கையாலே ஆஸ்ரிதர் இருந்த இடங்களிலே தானே சென்று அங்கீ கரிக்கக் கடவதாய்
நின் மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால் –என்று ஞான விஷயமாய்
உன் இணைத் தாமரை கட்கு அன்பு உருகி நிற்குமது
தொழு நீர் இணை அடிக்கே அன்பு சூட்டிய -என்று பக்தி விஷயமாய்
அந்த பக்தியால் கலங்கி

உபாயம் வாப்யபாயம் வாஷாமோந் யாந்நா வலம்பிதும்
என்னால் செய்கேன் -என்கிறபடியே உபாய அனுஷ்டானம் பண்ண சாக்தர் அல்லாதார்க்கு
நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்-என்று உபாயமாய்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் -என்று உபதேச சமயத்திலும்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட
கண்ணனைத் தாள் பற்றி
வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேன் -என்று ஸ்வீகார சமயத்திலும் வியதிரிக்தங்களில் செல்லாதபடி பண்ணக் கடவதாய்

செய்ய நின் திருப்பாதத்தை யான் என்று கொல் சேர்வது
நீடு உறைகின்ற பிரான் கழல் காண்டும் கொல்
பாத பங்கயமே தலைக்கு அணியாய்
த்வச் சரணாம்புஜ த்வயம் மதீய மூர்த்தானம் அலங்கரிஷ்யதி -கதா புநா –என்று பிறப்பியமாக பிரார்த்திக்கப்படுவதாய்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேன் சரணங்கள் -என்று ப்ராப்யத்வேந லப்தமாய்
நலம் கழல் அவன் அடி நிழல் தடம்
ஆதித்தன் தாமரை அடி -என்று நிழல் கொடுத்து ஆப்தமாக வழி நடத்தி
தாளிணைக் கீழ்ச் சேர்த்து
பாத பற்புத் தலை சேர்த்து
பொன்னடி சேர்த்து வேறே போகல் விடேல் -என்று நிஷ்கர்ஷித்துப் பிரார்த்திக்க
பிரார்த்தனைக்கு அனுரூபமாக அருளி அடிக்கீழ் இருத்திக் கொண்டு இறப்பவை பேர்த்து
அடிக்கீழ் குற்றேவல் -என்கிற கைங்கர்யத்தில் மூட்டி முடிய நடத்தக் கடவதாய் இறே -சரண -உப லஷிதமான -விக்ரஹம் இருப்பது –

ஆகை இறே ஸ்வரூப குணங்களில் ஓர் அறிவும் இன்றிக்கே விக்ரஹ அனுபவ ஏக பரையாய் இருக்கிற சிந்தயந்தி
சிந்தயந்தீ ஜகத் ஸூதீம் பர ப்ரஹ்ம ஸ்வரூபிணம் -நிருச்ச வாச தயா முக்திங்க தாந்யா கோப கந்யகா –என்றும்
தச் சித்த விமல ஆஹ்லாத ஷீண புண்ய சயா மலா -தத் பிராப்தி மஹா துக்க விலீ நா அசேஷ பாதகா -என்று
தத் வித்வான் புண்ய பாப விதூய நிரஞ்சனா பரமம் சாம்யம் உபைதி –என்கிறபடியே
புண்ய பாப விதூநந பூர்வகமாகப் பெற்று அனுபவிக்கக் கடவ நிரதிசய ஆனந்த ரூபமான பரம சாம்யா பத்தி ரூப
மோக்ஷத்தை கேவல விக்ரஹ ரூப தியானத்தால் பெற்றாள் என்கிறதும் –

பிரசாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ் -தன்யோஹம் அர்ச்சயிஷ்யாம் ஈத்யாஹா மால்ய உபஜீவன -என்று
பூவில் கண் வைக்கில் சங்கம் செல்லும் என்று முகத்தை மாற வைத்துத் தொடுத்து விற்று வயிறு வளர்க்கும் படி
பதார்த்த வைஷம்யம் அறியாத மாலாகாரரும் அகப்பட -ஸ்வரூப ரூப குணங்கள் கனாக்கண்டும் அறியாதே
விக்ரஹ தர்சன மாத்திரத்திலே
நாதத்வம் ஸ்வரூபம் ஆகையால் அவர் ஜெனீயமாய்க் கிடக்கிறது அத்தனை -தண்ணளியே விஞ்சி இருப்பது –
இவ்வர்த்தம் ராஜ மார்க்கத்தில் போய் கம்ச க்ருஹத்திலே புகாதே
நம் தெருவின் நடுவே வந்திட்டு -என்னும்படி நான் இருந்த முடுக்குத் தெரு தேடிக் கொண்டு வந்த போதே தெரியாதோ –
நான் க்ருதார்த்தன் ஆனேன் -தரித்ரன் நிதி எடுத்தால் போலே
வைத்த மா நிதி
வைப்பாம் மருந்தாம்-என்கிற ஆயர் கொழுந்தாகிற நிதியைப் பெற்று அழைத்துக் கொடுத்து உஜ்ஜீவிக்க –
(அழித்துக் கெடுத்து ஜீவிக்க) -பாரா நின்றேன் -என்று சொல்லும்படி
ருசியே தொடங்கி மோக்ஷ பர்யந்தமான பேற்றுக்கு எல்லாம் விக்ரஹமே ஹேதுவாக எழுதிற்றும் –

ஆக குணாதிகளை ஒழியவே-விக்ரஹம் தானே விரோதி நிவ்ருத்தியையும் அபிமத பிரதானமும் பண்ணும் என்கிற
ப்ராதான்யத்தைப் பற்ற திவ்ய மங்கள விக்ரஹத்தைச் சொல்லுகிறது -சரணவ் -என்று –

ஆனால் திவ்ய மங்கள விக்ரஹம் தர்சனம் சர்வ சாதாரணம் அன்றோ -சர்வரும் முக்தராக வேண்டாவோ என்னில்
ருசி ஜனகத்வ ஹேதுவான ஸுந்தர்யாதிகள் விக்ரஹத்துக்கு உண்டே யாகிலும் –
ஸுந்தர்ய சவ்ஸீல்யாதி குண ஆவிஷ்காரேண அக்ரூர மாலாகாராதி தான் பரம பாகவதான் க்ருத்வா -என்கிறபடியே
ரூபம் தான் ஸுந்தர் யாதிகளைப் பிரகாசிப்பித்து ருசியைப் பிறப்பித்து
மோக்ஷ பிரதானம் பண்ணாமையாலே சர்வரும் முக்தராகாது ஒழிகிறது

ஆனால் விக்ரஹமே ஸ்வ தந்த்ர உபாயம் என்கிறபடி என் என்னில் –
குணங்களை ஒழியவே விக்ரஹகதமான ஸுந்தர்யாதிகளை பிரகாசிப்பித்து ருசி ஜனகனுமாய் ச விக்ரஹனுமாய்க் கொண்டு
பல பிரதானம் பண்ணும் என்கிற ப்ராதான்யத்தாலே சொல்லுகிறது அல்லது
சைதன்யாநாதரமான விக்ரஹத்துக்கு பல பிரதான சக்தி உண்டு என்கை –
ஏஷ வந்த்யா ஸூதோயாதி போலே -அசங்கதம்

அவ ரஷனே-என்கிற நிருபாதிக ரக்ஷகத்வேன-தாது ஸித்தமான ரக்ஷகத்வம் திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு ஒழிய
சேதன அசேதனங்களில் ஒன்றுக்கு உபாயத்வம் சொல்லுகையாகிறது
ரஷ்யத்வேநவும் சேஷத்தவேநவும் சித்திக்கும் அந்த வஸ்துக்களினுடைய ரஷ்யத்வ ஸூசகமான அத்யந்த பாரதந்தர்யத்துக்கும்
சேஷத்வ உபபத்தி ஹேதுவாகையாலே தத் ஸூ சகமான கைங்கர்யத்துக்கும் ஆஸ்ரயமான ஆகாரத்தோடும்
அவற்றுக்கு உபகரணமாய்க் கொண்டே ஸ்வரூப சித்தி யாகிற ஆகாரத்தோடும் விரோதிக்கும் –
அதுக்கு மேலே நிருபாதிக ரக்ஷகமான திவ்யாத்மா ஸ்வரூபத்தோடும் விரோதிக்கும்
ஆகை இறே அகார யுக்தமான ரக்ஷகத்வத்துக்கு விஷய பூதனாய் ஞானானந்த ஸ்வரூபனான மகார வாச்யனுக்கு
அனந்தர பதத்தால் ரக்ஷகத்வ நிஷேத பூர்வகமாக ரஷ்யத்வ ஸ்தாபனம் பண்ணிற்றும்
சரணம் வ்ரஜ என்கிற விரோதியைப் பற்றி வருகிற ஸ்வீ காரத்தில் ஸ்வ ரக்ஷண அன்வயத்தை ஏக பதத்தால் வியாவர்த்தித்ததும்
ஆகையால் ருசி ஜனகத்வ உபயோகியாய் -அத ஏவ ஸ்வதந்த்ர உபாயமான விக்ரஹத்தைச் சொல்லுகிறது

மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ
கோலத் திரு மகளோடு உன்னைக் கூட –என்றும் சொல்லுகையாலே ஸ்வரூபமும் புருஷார்த்தமும்
ந சாஹம் அபி ராகவ
வைதேஹ்யா கிரி சானு ஷூரம்ஸ் யதே -அஹம் சர்வம் கரிஷ்யாமி –என்று
ஸூரி களில் பிரி கதிர் பட்டு தொடர்ந்து அடிமை செய்ய வந்த இளைய பெருமாள் படியானால் -சாதனமும்
சா பிராதுஸ் சரணவ் காடம் நீ பீட்ய-என்று அவர் பரிக்ரஹித்த திருவடிகளே யாகக் கடவது

ஆக
ஸ்ரீ மன் நாராயண சரணவ் -என்று
திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி –வாத்சல்யம் —
நாதனே வந்து உன் திருவடி அடைந்தேன்-ஸ்வாமித்வம்
சீலம் எல்லையிலான் அடி -ஸுசீல்யம்
திருக்கமல பாதம் வந்து -ஸுலப்யம்
வண் கழல் நாரணன் திண் கழல் சேரே-ஞானம் சக்தி
நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி -பூர்த்தி
உன் பொற்றாமரை அடி -பிராப்தி
அருளுடையவன் தாள் –என்று
வாத்சல்யம் தொடங்கி கிருபா பர்யந்தமான குண விசேஷங்களுக்கு எல்லாம் ப்ரகாசகமான திருவடிகளைச் சொல்லிற்று ஆயிற்று –
இப்பதத்தில் த்வி வசனத்தாலே
ஆஸ்ரயணீய வஸ்துவினுடைய ஏகத்துவம் பலிக்கையாலே உபாயத்தினுடைய நைரபேஷ்யமும் சொல்லுகிறது

———-

அநந்தரம் சரணம் -சப்தம்
உபாயே க்ருஹ ரஷித்ரோஸ் சப்தஸ் சரணமித்யயம் -வர்த்ததே சாம் ப்ரதஞ்சை ஷா உபாயார்த்தைக வாசக –என்கிறபடியே
உபாய வாசகமாய் -கீழ்ச் சொன்ன ஸ்ரீ யபதியாய்-ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் –
நித்ய திவ்ய மங்கள விக்ரஹ உபேதனாய் இருக்கிற வஸ்துவை விஷயமாக உடைத்ததாய்
சேதனகதமான பிரபத்தியின் பிரகார விசேஷத்தைச் சொல்கிறது –அதாகிறது
அவனே உபாயம் என்று அத்யவசிக்கிறது
இஸ் சரண சப்தம் உபாயத்தையும் கிருஹத்தையும் ரக்ஷகனையும் காட்டுமே யாகிலும்
இப்போது பிரகரண பலத்தால் உபாயம் ஒன்றையுமே சொல்லக் கடவது-

ரக்ஷகத்வம் ஆகிறதும் இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹார ரூபமாய் –
உபாயத்வமாவதும் இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹார ரூபமாய் இருக்கையாலே இரண்டும் பர்யாயமாய் இருக்க –
உபாயே க்ருஹ ரஷித்ரோஸ்-என்று இரண்டையும் பிரியச் சொல்லுவான் என் என்னில்
ரக்ஷகத்வமாவது -த்ரிவித ஆத்ம வர்க்கத்தினுடையவும் சத்தா ஸ்திதி பிரவ்ருத்திகளை உண்டாக்கி ரஷிக்கையும்
கர்மா ஞானாதி சாதன விசேஷ அனுஷ்டானம் பண்ணின உபாசகனுக்கு தத் தத் சாதன ஸாத்ய பலன்களைக் கொடுத்து ரஷிக்கையும்
உபாயத்வமாவது -அவ்யவதாநேந ஸ்வயமேவ பல உத்பாதகமாயும் பல ப்ரதாதாவுமாகை

ஏவம் ரூபமான உபாய விசேஷத்தைச் சொல்லா நின்று கொண்டு – இஸ் சரணம் -சப்தம்
கீழ்ச் சொன்ன ஸ்ரீ மத்தைக்கும்-குண யோகத்துக்கும் -விக்ரஹவத்தைக்கும் –
திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன்
திருமால் எம்மான்
திருவுடை அடிகள்
நாரணன் எம்மான்
எம்பிரான் எம்மான்
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன்
எம்மானே என் வெள்ளை மூர்த்தி
எல்லா உலகுமுடைய ஒரு மூர்த்தி
திரு நாரணன் தொண்டர்
ஸ்ரீ மன் நாராயண ஸ்வாமிந் –என்று சேஷத்வத்திலும் அன்வயம் உண்டாய்

சீதா சமஷம் காகுத்ஸ்த்தமிதம் வசனம் அப்ரவீத்
நாராயணனே நமக்கே பறை தருவான்
திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து உய்மினோ
திருவாளன் இணை அடியே அடை
திருமாலை விரைந்து அடி சேர்மினோ
அலர்மேல் மங்கை உறை மார்பா –உன் அடிக்க கீழ் அமர்ந்து புகுந்தேனே -இத்யாதிகளாலே
ப்ராபகத்திலும் அன்வயம் உண்டாய்

ஸ்ரியா சார்த்தம் ஜகத்பதி ஆஸ்தே
தயா சஹா ஸீ நம
ப்ரகர்ஷயிஷ்யாமி
கோலத் திரு மகளோடு உன்னைக் கூடாதே
திருமாலின் சீர் இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வேனோ
பிணங்கி அமரர் பிதற்றும் குணம்
கோலமேனி காண வாராய்
கூராழி வெண் சங்கு ஏந்திக் கொடியேன் பால் வாராய் -இத்யாதிகளாலே பிராப்தியிலும் அன்வயம் உண்டாய்
இருக்கும் என்றும் சொல்லுகையாலே
அதில் சேஷித்வ ப்ராப்யத்வங்களைக் கழித்து -ப்ராபகமாக அத்யவசித்து -என்கிற அர்த்தத்தைக் காட்டுகிறது

ஆக சரண சப்தத்தால்
உன் பொற்றாமரை அடியே போற்றும்
தாமரை என்ன பொன்னாரடி எம்பிரானை -என்கிற -ஸ்வாமித்வ ப்ராப்யத்வ விசிஷ்டமான திருவடிகளையே
பிராபகம் என்கையாலே
ஸ்வரூப அனுரூபமுமாய் ப்ராப்யத்துக்கு சத்ருசமாய் இருக்கும் என்னும் இடத்தையும்
உபாய பூதனானவன் ஸ்வ கார்யமாகவும் ஸ்வயம் பிரயோஜனமாகவும் ரஷிக்கும் என்னும் இடத்தைச் சொல்லுகிறது –

இத்தால் இவ் வுபாயம் உபாயாந்தரங்களைப் போலே சாத்தியமுமாய் – சாபேஷமுமாய் -வியவஹிதமுமாய்
இருக்கவும் இன்றியிலே
ஸித்தமாய் -நிரபேஷமாய்-ஸ்வரூப அனுரூபமாய் -நிரபாயமாய் -அவ்யவஹிதமாய் -இருக்கும் என்கிறது –

உபாயமாவது -அநிஷ்ட நிவர்த்தகமாயும் இஷ்ட ப்ராப்திக்கும் உறுப்பாயும் இருப்பது ஓன்று இறே

அதில் அநிஷ்ட நிவ்ருத்தி யாவது –
தேஹாத்ம அபிமானம் தொடங்கி -கைங்கர்யத்தில் ஸ்வ கீயத்வ -ஸ்வ ஸ்வாரஸ்ய பர்யந்தமாக வருகிற
ஸ்வரூப விரோதமான அநிஷ்டங்களை நிவர்த்திப்பிக்கை -அதாவது –
அநாத்மன் யாத்ம புத்திர்யா அஸ்வே ஸ்வமிதியா மதி அவித்யாதரு சம்பூதி பீஜ மேதத் த்விதாஸ் திதம்
நீர் நுமது என்று இவை –என்கிறபடியே தான் அல்லாத தேஹத்தைத் தானாக நினைத்தும்
யஸ்யாஸ்மி –என்று பகவத் அநந்யார்ஹ சேஷமான தன்னை ஸ்வ தந்த்ரனாக நினைத்தும்
ஈஸ்வரன் விபூதி பூதமானவற்றை என்னது என்று அபிமானித்தும் -போருகிற அகங்கார மமகாரங்களாகிற அவித்யை
அது அடியாக வருவதாய் மோக்ஷ விரோதியாகையாலே இவ்வதிகாரிக்கு த்யாஜ்யமாய் ஐஹா லௌகீகமாயும்
பார லௌகீகமாயும் உள்ள ஸூகத்துக்கு ஹேதுவான புண்ய கர்மம்
சர்வ சாதாரணமாக த்யாஜ்யமான துக்கத்தை விளைப்பிக்கிற பாப கர்மம்
அது அடியாக வருகிற தேவ திர்யக்காதி சரீரம்
அநாதி கால வாசிதம் ஆகையால் வருகிற அவித்யா வாசனை -கர்ம வாசனை -பிரகிருதி வாசனை –
அவ்வாசனை அடியாக வருகிற அவித்யா ருசி கர்ம ருசி பிரகிருதி ருசி சம்பந்த ருசி
ஆக பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -என்கிற இவை
இவை அடியாக வருகிற துர்மானம்-இவை அடியாக வருகிற காம க்ரோதாதிகள் –
நோய் பிறப்பு மூப்பு இறப்பு பிணி -என்கிற ஜரா மரணாதிகள்-ஆத்யாத்மீக -ஆதி பவ்திக-ஆதி தைவிகம் -என்கிற
தாப த்ரயங்களால் வரும் துக்கம் -ஏவமானவற்றை விடுவிக்கை

இஷ்ட பிராப்தி யாவது
ஸ்தூல ஸூஷ்ம ரூபாமவிஸ்ருஜ்ய -என்கிற சரீர சம்பந்த நிவ்ருத்தி பூர்வகமாக
ப்ரீதி காரித கைங்கர்ய பர்யந்தமாக உண்டாக்குகை -அதாவது
பகவத் அனுபவ விரோதியான ப்ரக்ருதி சம்பந்தத்தை அநாயாசேந விடுவித்து அர்ச்சிராதி மார்க்கத்தாலே –
நயாமி பரமாம் கதிம் -என்கிறபடியே ஆதி வாஹிகர் கையிலே காட்டிக் கொடாமல் தானே கொடு போய்
வருண இந்த்ர பிரஜாபதி லோகங்களில் அவர்கள் சத்கரிக்க வழி நடத்தி ஆவரண சப்தகங்களையும் அதிக்ரமிப்பித்து-
த்ரிகுணாத் மிகையான மூல பிரக்ருதியையும் அதி லங்கிப்பித்து விராஜா ஜல ஸ்பர்சத்தாலே ஸூஷ்ம சரீரத்தை விடுவித்து
அமா நவம் சமாசாத்யா -என்று அமானாவன் கர ஸ்பரிசத்தை உண்டாக்கி
அபஹத பாப் மத்வாதி குணங்களையும் தத் ஆஸ்ரயமான ஸ்வரூபத்தையும் பிரகாசிப்பித்து
அப்ராக்ருத விக்ரஹத்தைப் பரிக்ரஹிப்பித்து -சதம் மாலா ஹஸ்தா -என்கிற மாநேய் நோக்கியரான
மதிமுக மடந்தையரைக் கொண்டு ப்ரஹ்மலங்காராத்தாலே அலங்கரிப்பித்து
கொடு அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்-என்கிற திவ்ய கோபுர பிராப்தியையும் உண்டாக்கி ராஜ மார்க்கத்தில் போய்
திரு மா மணி மண்டபத்தைக் கிட்டி தமிததம்வித் பாதே நாத்யா ரோஹதி–என்கிறபடியே பாத பீடத்தில் காலையிட்டுப்
படுக்கையைத் துகைத்து மடியிலே சென்று ஏறி ஆலிங்கன ஆலாப விலோகநாத் யநுபவமும் பண்ணுவித்து
அவ்வனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யத்தையும் கொடுக்கை –

சேஷமான ஸ்வரூபத்துக்கு அனுரூபமான இஷ்டம் -தத் உப பத்தி ஹேதுவான கைங்கர்யமாய் இருக்க
சரீர விமோசனமும் -பிராப்தியும் -அனுபவமும் -முதலானவற்றைச் சொல்லுகிறது –
சரீர சம்பந்தம் கைங்கர்ய விரோதி ஆகையாலும்
ஸ்வரூப பிரகாசம் கைங்கர்ய ஆஸ்ரயம் ஆகையாலும்
தேச பிராப்தி கைங்கர்ய வர்த்தகமும் ஆகையாலும்
அனுபவம் கைங்கர்ய ஹேதுவான ப்ரீதிக்கு நிதானம் ஆகையாலும்
ஆக
பிரதான பலம் கைங்கர்யமாய்
அல்லாதவை அவற்றுக்கு உப யுக்தங்களாய் இருக்கும்

சரணம் சப்தம்
ஏவம் பூதமான அநிஷ்ட பிராப்தி இஷ்ட பிராப்திகளுக்கு அவ்யவஹிதமான உபாயம் –
ஸ்ரீ யபதியாய் -ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் -நித்ய மங்கள விக்ரஹ உபேதனாய் இருக்கிறவனுடைய
திருவடிகள் என்றதாயிற்று –

———————

அநந்தரம் -ப்ரபத்யே -என்று
இப்படிப் புருஷகாரமும் -உபாயமும் சித்தமானாலும் -அநிஷ்ட நிவ்ருத்திக்கும் -இஷ்ட லாபத்துக்கும் அபேக்ஷை உடையவனாய்
அது தான் சரண்யனான ஈஸ்வரனையே கொண்டு கொள்ளக் கடவன் என்று இருப்பான் ஒரு அதிகாரி இல்லாமையாலே இறே –
இவ் உபாயம் இதுக்கு முன்பு கார்யகரம் ஆகாது ஒழிந்தது –
ஆகையால் இதுக்கு விஷய பூதனான அதிகாரியைச் சொல்லக் கடவதாகக் கொண்டு அவ்வதிகாரிக்கு விசேஷணமாய் –
கீழ்ச் சொன்ன திருவடிகளை விஷயமாக உடைத்தாய்
அத ஏவ தான் உபாயமும் இன்றிக்கே -சரணவ் சரணம் -என்கையாலே -கர்ம ஞானாதி வியாவ்ருத்தமாய்-
த்வி வசனத்தாலே சஹாயாந்தர நிரபேஷமாய்
சரணம் பிரபத்யே -என்கையாலே -தான் உபாய சரீரத்திலும் -உபேய சரீரத்திலும் புகாதே உபாய ஸ்வீ காராத்மகமாய்
அஹம் அஸ்ம்ய அபராதாநாம் ஆலயோ கிஞ்ச நோ கதி -என்றும்
த்வமேவ உபாய பூதோ மே பவதி ப்ரார்த்தநா மதி -சரணாகதி ரித்யுக்தா சா தேவேஸ்மின் ப்ரயுஜ்யதாம -என்கிற
பிரபத்தி லக்ஷண வாக்கியத்தின் படியே
அஹம் அர்த்தத்துக்கு சேஷத்வம் அன்று நிரூபகம் -ஞானாநந்தன்களும் அன்று -அபராதானாம் ஆலயத்வம் என்னும்படி
சாபராதானான நான் தந் நிவ்ருத்தி யுபாய ரஹிதனாகையாலே அகிஞ்சனன் –
நிவர்த்தகாந்தரம் இல்லாமையாலே அகதி -இப்படி இருக்கிற எனக்கு ரக்ஷகரான தேவரீரே உபாயமாக வேணும் என்று
பிரார்த்திக்கிற ப்ரார்த்தநா ரூப வியவசாயம் சரணாகதி என்கையாலும் –

அநன்யா சாத்யே ஸ்வ அபீஷ்டே மஹா விஸ்வாச பூர்வகம் -ததேக உபாயதா யாச் ஞா பிரபத்தி -என்று
ஸ்வ அபீஷ்டமான ப்ராப்யம் ப்ராப்ய பூதனானவன் அவன் தன்னை ஒழிய வேறே ஒருவரால் சாதிக்க ஒண்ணாதே –
அவன் தன்னையே கொண்டு சாதிக்க வேண்டும்படி -அவன் ஞான சக்திகளால் பூர்ணனாய் –
இவன் ஞான சக்திகளால் அபூர்ணனாய் இருக்கையாலே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-தன்னை ஸ்பர்சிக்க மாட்டாத நாக பாசத்தாலே-பத்தரான தசையிலும் –
பெருமாளையே ரக்ஷகர் என்று விஸ்வசித்து இருந்தால் போலே மஹா விஸ்வாசத்தை முன்னிட்டுக் கொண்டு –
சாதனாந்தர தியாக பூர்வகமாகவும் -ஸ்வீ கார அங்க ரஹிதமாகவும் அவனையே உபாயமாக யாஸிக்கை-பிரபத்தி -என்கையாலும்
பிரார்த்தனா கர்ப்பமாய் -வைத்தேன் மதியால் -உணர்வின் உள்ளே இருத்தினேன் -என்று
ரஷ்யத்வ அனுமதி ரூபமாய் -ஸ்வரூப யாதாத்ம்ய ஞான பலமாய்க் கொண்டு
தத் அனந்தர பாவி யாகையாலே அசித் வியாவ்ருத்தி ஸூசகமாய்
த்வத் அங்க்ரி முத்திஸ்ய -என்கிற ஸ்லோகத்தின் படியே பிராப்தமாய் ஸூலபமான திருவடிகளை
விஷயமாக்கிக் கொடுக்கிறது

ப்ரபத்யே என்கிற சப்தம் ப்ரபத்தியைக் காட்டுமோ என்னில் -பத்லு கதவ் -என்கிற தாதுவினாலே
கதி வாசியாய் அந்தக் கதி தான் கத்யார்த்தா புத்யர்த்தா -என்று மானஸ கதியைக் காட்டுகையாலே
ப்ரபத்திக்கு வாசகமாகிறது –
இப்பிரபத்தி தான் மாநசமோ வாசகமோ காயிகமோ என்னில்
இது அதிகாரி விசேஷணமாய் பல சித்திக்கு உறுப்பு இன்றிக்கே இருக்கையாலே இதில் நியமம் இல்லை

த்ரிவித கரணங்களினாலும் உண்டாயிற்றதாகில் -பெற்று அல்லது நிற்க ஒண்ணாத த்வராசியத்தை
பிரகாசிப்பிக்கக் கடவதாகையால் மயர்வற மதி நலம் அருள பெற்றவர் –
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த -என்று
த்ரிவித கரணங்களாலும் சரணம் புக்கது
ஏக கரணத்தால் உண்டாயிற்றதாகில் இவ்வுபாயத்தில் அதிகரித்த அளவைக் காட்டக் கடவது
துணிவினால் வாழ்
கடைத்தலை இருந்து வாழும் –என்று இத்துணிவு தானே வாழ்ச்சியாய் இறே இருப்பது
மானஸ கதியாவது
உணர்வின் உள்ளே இருத்தினேன்
ஸ்மர்த்தா
த்வ்யவக்தா
ஸ்மரண மாத்ரேண–என்கிறபடின் உபாயத்வேந அத்யவசிக்கை
வாசிக கதியாவது
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன்
நாராயணா ஓ மணி வண்ணா நாகணையாய் வாராய் என் ஆர் இடரை நீக்காய் -என்று வாசகமாக பிரார்த்திக்கை
காயிக கதியாவது
அஞ்சலி பிரயோகம் பண்ணுதல்
ரஷக வஸ்து இருந்த இடத்தே வருதல் செய்கை
பத்தாஞ்சலி புடம் தீநம் யாசந்தம் சரணாகதம் –
தீநம் -என்று மாநஸத்தையும்
யாசந்தம் -என்று வாசகத்தையும்
பத்தாஞ்சலி புடம் சரணாகதம் -என்று காயிகத்தையும் -என்று த்ரிவிதமான பிரபத்தியையும் சொல்லிற்று –

உபாயமும் –
புருஷகாரமும் -குணமும் -விக்ரஹமும் -கூடின பசும் கூட்டாகக் கொண்டு பூர்ணமாய் இருக்கச் செய்தேயும் –
அவை உபாய பிரகாசகமாய் -பல பிரதானம் கிருபையால் யாகிறாப் போலே
இங்கும் உபாய ஸ்வீ காரம்
கரண த்ரயத்தால் உண்டாயிற்றே யாகிலும் -பலம் அவனாலே ஆகையால்
பல த்வாரா ஆஸ்ரய பூதனான அதிகாரியினுடைய பூர்த்தியை பிரகாசிப்பிக்கக் கடவது அல்லது
ஒன்றிலும் சாதன பாவம் இல்லையே –

ஏவம் பூதமான ப்ரபத்திக்கு -ஜாதி குண வ்ருத்தாதிகளால் -ஒருவனை விசேஷித்து இவன் அதிகாரி என்னாமையாலும்
ஏவ மூர்த்தாஸ் த்ரய பார்த்தாயா மவ்ச பரதர்ஷப -திரௌபதியா சஹிதாஸ் ஸர்வே நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் -என்றும்
ரக்ஷமாம் சரணாகதாம் -என்றும்
ஸோ ஹந்தே தேவ தேவேச நார்ச ச நா கௌஸ்து தவ நச சாமர்த்த்யவான் க்ருபா மாத்திரம் நோ வ்ருத்தி ப்ரசீதமே -என்றும்
தம் ப்ரபின் சிரோக்ரீவ மாஸ்யே நஸ்ருத சோணிதம் -விலோக்ய சரணம் ஜக்முஸ் தத் பத்ந்யோ மது ஸூத நம -என்றும்
த்ரீந் லோகான் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத -என்றும்
த்யக்த்வா புத்ராம் ச தாராம்ஸ் ச ராகவம் சரணம் கத -என்றும்
பரமாபதமா பந்நோ மநசா சிந்த யத்தரிம்
மற்றது நின் சரண் நினைப்ப –என்றும்
ராக்ஷசைர் வாத்யமாநா நாம் வாநராணாம் மஹாஸமூ–சரண்யம் சரணம் யாதாராமம் தசாரதாத்மஜம் -என்றும்
ஸூக்ரீவம் சரணங்கத
அஞ்சலிம் ப்ராங்முக க்ருத்வா பிரதிசிஸ்யே மஹோததே–என்றும்
ச பிராதுஸ் சரணவ் காடம் நீ பீட்ய-என்று
ஏழை ஏதலன்
நஞ்சு சோராவதோர்–சரணாய் -என்றும்
வெம் கூற்றம் தன்னை அஞ்சி நின் சரணவ் ச சரணாய் -என்றும் இத்யாதிகளாலே
ஜென்ம வ்ருத்தாதிகளால் உத்க்ருஷ்டரோடு அபக்ருஷ்டரோடு வாசியற பலரும் பல இடங்களிலும் பிரபத்தி பண்ணக் காண்கையாலும்

இந்த பிரபத்திக்கு அபேக்ஷிதம் பகவத் ஏக ரஷ்யத்வ ரூப யாதாத்ம்ய ஞானமும் தத் அனுரூப ப்ராப்ய ருசியும் ஆகையால்
இந்த ருசிகளுக்கு அபேக்ஷிதம் சைதன்ய மாத்திரம் ஆகையால் அது ஸர்வ சாதாரணம் ஆகையாலும்
தேவா நாம் தானவா நாஞ்ச சாமான்யம் அதி தைவதம்
ஈடும் எடுப்புமில் ஈசன்
கொள்கை கொளாமை இலாதான்-என்று சம்பந்தம் ஸர்வ சாதாரணம் ஆகையால் சரண்யனுக்கு உதகர்ஷ அபகர்ஷ நிபந்தமான
உபேக்ஷை அபேக்ஷைகள் இல்லாமையாலும் ஸர்வ அதிகாரமாய் இருக்கும்

ந்யாஸ இதி ப்ரஹ்ம
தஸ்மான் ந்யாஸ மேஷாம் தபஸா மதிரிக்தமாஹு
முமுஷுர்வை சரணம் அஹம் ப்ரபத்யே –இத்யாதிகளாலே வேதாந்த ஸித்தமாய் சகல சாதனங்களிலும் அதிகமாய் இருந்ததே யாகிலும்
கர்ம ஞானாதிகளைப் போலே -அக்னி வித்யா சாபேஷை இல்லாமையாலும்
ஸாஸ்த்ர ஸித்தமாய் இருக்கச் செய்தேயும் ஸ்த்ரீ ஸூத்ராதிகளுக்கு அதிகாரம் உண்டாய் இருக்கிற
பாக யஞ்ஞாதிகளோ பாதி சர்வாதிகாரமாகக் கடவது –

ததஸ் சாகர வேலாயாம் தர்ப்பா நாஸ்தீர்ய ராகவ அஞ்சலீம் ப்ராங்முக க்ருத்வா பிரதிசிஸ்யே மஹோ ததே -என்று
பெருமாள் கடலைச் சரணம் புகுகிற இடத்தில் முழுகி மூக்கைப் புதைத்து முத்து விளக்கிக் கீழ் மேலாகப் புல் படுத்துக் கிடந்தது
நியமங்களோடே சரணம் புக்கார் என்கையாலே புரஸ் சரணாகதி சா பேஷம் என்னலுமாய்
த்வாந்து திக் குல பாம்சநம் -என்று ராவணனால் உபேக்ஷிதனான ஸ்ரீ விபீஷண ஆழ்வான்
ஆஜகாம முஹுர்த்ததேந யாத்ர ராமஸ் ச லஷ்மண -என்று அந்த க்ஷணம் தன்னிலே வந்து பெருமாளைச் சரணம் புகுகிற இடத்தில்
ஸ்நாந ஆசமநாதிகளும் பண்ணாதே சரணம் புக்கார் என்கையாலே புரஸ் சரணாகதி நிரபேஷம் என்னலுமாய் இருந்தது –
ஆனால் என் சொல்லிற்று ஆயிற்று என்னில்

இந்த ஸ்வீ காரமாகிறது -ரக்ஷகனான ஈஸ்வரன் பக்கலிலே ஸ்வதஸ் ஸித்தமாய் நியம விசேஷ சா பேஷம் அன்றியிலே
விஷய மாத்ர சா பேஷமாய் இருக்கிற உபாயத்தை அறிகிற அளவாகையாலே
அதுக்கு அபேக்ஷிதம் ரஷ்யத்வ ஞானம் மாத்ரமேயாய் –
அவனாலே அதிஷ்டிதமான சரீராதிகளையும் தத் கத உபகரணங்களையும் கொண்டு கொள்வதொரு கார்யம் இல்லாமையாலே
புரஸ் சரணாதி நிரபேஷமாயே இருக்கும்
ஆனால் பிரதிபத்தாவான சேதனனுடைய ஸ்வ பாவ விசேஷங்கள்
உதாஹரண கார்ய உபயோகியான கடத்தினுடைய வர்ணாதிகள் தத் உபயோகம் இன்றிக்கே இருக்கச் செய்தேயும்
அவர்ஜனீயமாகக் கொண்டு கிடக்குமா போலே அவர்ஜ நீயதயா அந்விதமாய்க் கிடக்கக் கடவது
இத்தாலே தந் நிபந்தனமாக த்யாஜ்ய அம்சமும் இல்லை -அநுஷ்டேய அம்சமும் இல்லை –
இருந்தபடியே அதிகாரம் என்றதாயிற்று

ஆனால் உபாயாந்தர தியாகம் விதேயமாகிற படி என் என்னில்
இந்த பிரதிபத்திக்கு விஷயமான உபாயம் உபாயாந்தர சன்னிதானத்தில் உதியாதபடி ஸ்வ தந்திரமுமாய் நிரபேஷமுமாய்
இருக்கையாலே அதுக்கு விஷய பூதனானவன் அவ்வாகாரங்களை யதாவத் பிரதிபத்தி பண்ண வேண்டுகையாலும்
இந்த பிரதிபத்திக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபம் அத்யந்த பரதந்த்ரமாய் இருக்கையாலே
கிரயமாணமான கிரியையில் நிஷ்பன்னமானவை உபாயமாக மாட்டாமையாலும்
உபாயாந்தரங்களை விடச் சொல்லிற்று அத்தனை ஒழிய
உபாய ஸ்வரூப சம்பாத நார்த்தமாகவும் உபாய க்ருத யோத் யுக்தனாகைக்காகவும்–
உபாயாந்தர தியாகம் விதித்தது அன்று
ஆகையால் சர்வாதிகாரமாய் நியம விதுரமான ப்ரபத்தியைப் பண்ணுகிறேன் என்கிறது

ப்ரபத்யே -என்று இதில் வர்த்தமானம் உபாய விஷய அபி முக்ய ஸூசகமான பிரதிபத்திக்கும்
ஸ்மர்த்தா -என்ற அநந்தரம் -தத-என்று நைரந்தர்யத்தைக் கழிக்கையாலே-ஸக்ருத் கரணம் அமையுமே யாகிலும் –
ஸ்ரீ யபதித்வாதி விசிஷ்ட விஷயம் ஆகையால்
ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் –என்று சாதன திசையிலும்
நாள் கடலைக் கழிமின்-என்று ஸமாச்ரயண அநந்தரம் பிராப்தி அளவும் கால ஷேபம் அரிதாகையாலே அந்த கால ஷேப அர்த்தமாகவும்
சம்சார தோஷமும் பகவத் வைலக்ஷண்யமும் தத் பிராப்தி அபி நிவேசமும் நெஞ்சிலே நடந்த போது
பூர்வ பரிக்ருஹீதமான உபாயத்தை திருட அத்யவசாயம் பண்ணுமத்தனை ஆகையாலும்
அநந்ய சரண்யத்வம் இவனுக்கு ஸ்வரூபம் ஆகையாலும்
நம இத்யேவ வாதிந -என்று போக தசையில் நடக்கையாலும்
த்வயம் அர்த்த அனுஸந்தாநேந சகச தைவம் வக்தா யாவச் சரீர பாதம் அத்ரைவ ஸ்ரீ ரெங்கே ஸூக மாஸ்வ -என்று
சரண்யன் தானே அருளிச் செய்கையாலும்
வாழ் நாள் சென்னாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காண் என்கிறபடியே
ஸ்திதே மநஸீ ஸூஸ்வஸ்தே ஸ்ரீ ரே சதியோ நர –என்று சரீரமும் பாங்காய் சத்வ உத்ரேகம் பிறந்த போது
அவனே உபாயம் என்கிற நினைவு மாறாமல் செல்லக் கடவது என்னும் அர்த்தத்தைக் காட்டக் கடவது

ஆனால் நிதித்யா சி தவ்ய -என்று அஸக்ருதா வ்ருத்தி ரூபமான உபாஸனாத்மக ஞானத்தில் காட்டிலும்
இதுக்கு வாசி ஏது என்னில்
அங்கு அனுசந்தான விச்சேதத்தில் பல விச்சேதம் பிறக்கையாலே விதி ப்ரேரிதமாய் -பரமாய் -இருக்கும்
இங்கு அப்படி வருவதொரு சங்கடம் இல்லாமையாலும் ஸ்மர்த்த விஷய சாரஸ்யதையாலும் ராக ப்ராப்தமாய் இருக்கும்

இப்பதம் தான் பிரபத்யே -என்று அடைகிறேன் என்கிறபடி ஆகையால் ஜூ ஹோமி ததாமி என்னுமா போலே
தத்கால அனுஷ்டான மாத்ரத்தைக் காட்டுகிறது
கால த்ரய வர்த்தித்வத்தைச் சொல்லுகிறது (அன்று) என்று சதாச்சார்ய ஸித்தமான சம்ப்ரதாயம்
அங்கன் அன்றியிலே அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா வமுதம் -என்கிற விஷயத்தை யாவத்காலம் அனுபவிக்கை யாகிற
பேற்றைப் பார்த்தால் யாவச் சரீர பாதம் இவ்வத்யவசாயம் நடந்தாலும் ஸக்ருத் என்கைக்கும் போராத படியாய்க் காண் இருப்பது
என்று ஸ்ரீ எம்பார் அருளிச் செய்வார்
சக்ருதேவ என்கிறது சகசா என்றபடியாய் வரம் ஹுதவ ஹஜ் வாலா பஞ்சராந்தர் வ்யவஸ்திதி -என்கிறபடியே
நெருப்பில் இருப்பு நன்று என்னும்படியான சம்சாரத்தில் பயமும் ஆனந்தீ பவதி என்கிற நிரதிசய ஆனந்த அனுபவமுமாகிற
பகவத் பிராப்தி ருசியும் வடிம்பிடுகையாலே
வென்னாள் நோய் வீய வினைகளை வேரறப் பாய்ந்து எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவன் -என்கிற ஆர்த்திக்கு
ஸூ சகமான தவ்ராதிசயத்தோடே சடக்கென ஆஸ்ரயிக்கச் சொல்லுகிறது என்று ஸ்ரீ ஆழ்வான் நிர்வாகம்

ஆக
திருமந்திரத்தில் பத த்ரயத்திலும் சொல்லுகிற
அநந்யார்ஹ சேஷத்வ -அநந்ய சரண்யாத்வ -அநந்ய போக்யத்வங்கள் ஆகிற ஆகாரங்கள் உடைய
அதிகாரி ஸ்வரூபத்தை ஆஸ்ரயமாக உடைத்தாய்
ஸ்ரீயப்பதியாய்
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய்
விலக்ஷண விக்ரஹ உபேதனனாய் இருக்கிற
சர்வேஸ்வரனை விஷயமாக உடைத்தாய்
ஸ்வ அபராத பூயஸ்த நிபந்தனமாகவும்
நித்ய சம்சாரியான நமக்கு அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தர் அனுபவிக்கும் விஷயம் சித்திக்குமோ என்கிற
உத்தேச்ய துர்லபத்வ நிபந்தனமாகவும்
சகல சாம்சாரிக துரித விதூநந பூர்வகமாக அனுபாவ்யமான நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸூக பாவ ஏக லக்ஷணமான
பரம புருஷார்த்தத்தை ஒரு பிரபத்தி மாத்திரம் சாதிக்க வற்றோ என்கிற
உபாய பல்குத்வ நிபந்தனமாகவும் வருகிற பயன்களைப் புருஷகார உத் பூதமான வாத்சல்ய அநு குண அனுசந்தானத்தாலும்
நாராயண பத யுக்தமான நிருபாதிக ஸ்வாமித்வ அனுசந்தானத்தாலும்
தத் பத யுக்தமான சர்வஞ்ஞத்வாதி குண அனுசந்தானத்தாலும் மறுவலிடாதபடி போக்குகையாலே
மஹா விஸ்வாசாத்மகமாய் பிராமண ப்ரமேயங்களாலும் குலைக்க ஒண்ணாதபடியான வ்யவசாயத்தைச் சொல்லுகிறது –

ஆக
பூர்வ வாக்கியம்
அசித் வ்யாவ்ருத்தி ஸூசகமாய்க் கொண்டு சேதனகதமான விவசாயத்தையும்
தத் பிரகாரமான உபாயத்தையும்
அந்த உபாயத்துக்கு உபாயாந்தர வ்யாவ்ருத்தி ரூப சித்தத்வ ஸூ சகமான விக்ரஹத்வத்தையும்
உபாய கார்ய உபயோகியான ஞானாதி வை சிஷ்டியையும்
தத் ஆஸ்ரயண ஏகாந்தமான வாத்சல்யாதி குண யோகத்தையும்
தத் உத்பாவக புருஷகாரத்தினுடைய நித்ய சம்ஸ்லேஷத்தையும்
புருஷகார அபேக்ஷிதமான உபய சம்பந்தத்தையும் சொல்லிற்று ஆயிற்று

அநந்தரம்
இப்படி ஸ்ரீயப்பதியாய்
ஸர்வ ஸ்வாமியான சர்வேஸ்வரன் திருவடிகளில்
ஸர்வ காலாதிகளிலும்
ஸர்வ தேசாதிகளிலும்
அநுஷ்டேயமான கைங்கர்யத்தை
தத் விரோதி நிவ்ருத்த்ய அபேஷா ஸஹிதமாகப் பிரார்த்திக்கிறது உத்தர வாக்கியம் –

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரகால நல்லான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பரகால நல்லான் ரஹஸ்யம் -ஸ்ரீ மந்த்ர ரத்னம் -ஸ்ரீ த்வயம் -பூர்வ வாக்ய – நாராயண பதார்த்தம் —

August 23, 2019

ஆக -மதுப்பாலே –புருஷகாரத்துக்கு உப யுக்தமான உபய சம்பந்தத்தையும் உடையளாய் இருக்கிற இவள்
செவ்விப் படிக்கோலம் கண்டு அகலாள்
திரு இருந்த மார்பில் சிரீதரன்–என்கிறபடியே
ஆஸ்ரயணீய வஸ்துவோடு நித்ய சம்ஸ்லிஷ்டையாய் இருக்கையாலே அந்த சம்ஸ்லேஷத்தில் வர்த்திக்கிற அனுபவம்
தஜ் ஜெனிதமான ஹர்ஷம்
தத் பரா காஷ்டையான ப்ரத்யுபகார சாபேஷதை
இவற்றால் வருகிற ரக்ஷணமும் நித்யம் ஆகையால் ஆஸ்ரயண உன் முகனான சேதனர்க்கு
தம் தாமுடைய ஜென்ம வ்ருத்த ஞானங்களால் உண்டான நிகர்ஷமாதல் –
அவனுடைய ஸ்வா தந்தர்ய நிபந்தனமான பீதியாதல் இன்றிக்கே
சர்வ காலமும் ஆஸ்ரயிக்கலாம் என்றிட்டு
சர்வ கால ஸமாஸ்ரயணீயத்வத்தையும்
ஆஸ்ரயணீயத்தினுடைய சர்வாதிகாரத்வத்தையும் சொல்லுகிறது –

ஆக
ஸ்ரீ மத் சப்தம் புருஷகாரத்தையும்
புருஷகாரத்தினுடைய நித்ய சம்யோகத்தையும் சொல்லிற்று ஆயிற்று –

———————

அநந்தரம்–நாராயண -பதம் –
சேதனர் பண்ணின பூர்வ அபராத தர்சனத்தாலே அபி பூதமாய்
ஸ்ரீ சப்த வாஸ்யையாய்க் கொண்டு புருஷகார பூதையான பிராட்டியாலே பிரகாசிதமாய்-
பின்பு அவள் தான் ஒரு குறை சொல்லிலும்
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வாஸீதே ச லஷ்மணாம் -என்றும்
கிங்கார்யம் சீதயா மம -என்று அவள் தன்னையும் உபேக்ஷித்துக் கைக்கொள்ளும் படியான
வாத்சல்யாதி குண விசேஷங்களைச் சொல்லுகிறது

இவள் ஜகத்துக்கு மாதா வாகையாலும் ஸ்த்ரீத்வத்தால் வந்த மார்த்தவத்தை யுடையவள் ஆகையாலும்-
சாபராத சேதனரை அங்கீ கரித்து ரஷிக்கையிலே அதி நிர்பந்தம் உடையாள் ஆகையாலும்
இவர்கள் அளவிலே அவள் குறை சொல்லுகை –பெற்ற தாய் நஞ்சு இடுகையோபாதி கூடாது இறே –
ஆகிலும் இவள் இவர்களுடைய அபராத அதிசயத்தையும் அவனுடைய தண்ட தரத்வாதிகளையும்
க்ரோத மாஹாரயத்தீவ்ரம் -என்றும்
கோபஸ்ய வசமே யிவான்-என்றும் கோபம் இட்ட வழக்காய் இருக்கும் சீற்றத்தையும் கண்டவள் ஆகையால்
நாம் காட்டிக் கொடுத்த பின்பும் இவர்கள் பக்கல் இவனுடைய நினைவு ஏது
நம்முடைய அபேக்ஷைக்காக அனுமதி பண்ணின அளவேயோ
அன்றிக்கே தன் நினைவாலும் ரக்ஷணத்தில் அதிக்ருதனோ-என்று இவனை சோதிக்கைக்காக
தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்-என்கிறபடியே இவள் குறை சொல்லக் கூடும்

அவ்வளவிலும் -என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்
தோஷோ யத்யபி தஸ்யஸ்யாத் –என்று
நீ சொல்லுகிற குற்றம் அவர்கள் செய்யார்கள்-
செய்தார்கள் ஆகில் நமக்குத் பொல்லாதோ -நாம் பிரார்த்தித்தே போம் அத்தனை -அது உண்டாயிற்றாகில்
நமக்கு குணாதிக்யமும் ஸ்வரூப சித்தியும் உண்டாக்குகிறார்களாம் அத்தனை -என்று இவன் நிஷேதித்தாலும்
அதனுடைய த்ரு டீகரண அர்த்தமாக நான் இப்போது கண்டேன் என்று ச சாஷிமாகச் சொன்னாலும்
அதுக்கு என் -முன்பு போலே நாஸ்திகனாய் நம்மை இல்லை செய்து செய்கிறார்கள் அன்றே
நம்முடைய நிக்ரஹத்துக்கு விஷய விபாகம் பண்ணித் தருகைக்கு நீயும் அதன்படி போகைக்கு நானும் உண்டு என்று அன்றோ செய்கிறது –
உன் கார்யமான சேர்த்தியை நீ உண்டாக்குமது ஒழியப் பிரிக்கை உனக்குப் பணி அன்று என்று அவளோடு மறுதலைத்து
ஆஸ்ரயிப்பித்துக் கொண்டு ரஷிக்கைக்கு ஹேதுவாய் அவளாலே உத்பவிப்பிக்கப்பட்ட வாத்சல்யயாதி குணங்களைச் சொல்லுகிறது

இப்படி ஸ்வரூப கதமுமாய் ஸ்வா தந்தர்ய அபிபூதமான இந்த குணங்களை உத்பவிக்கிறாள் இவள் ஆகையால்
இவை உபாய ஸ்வீகார ரூப ஆஸ்ரயணத்துக்கு பிரதி சம்பந்தியான ஈஸ்வரன் பக்கல் பூர்வம் அநுத் பூதங்களாய் –
தாத் காலிகமாக உத்பன்னங்கள் ஆகிறது ஆகையாலும்
உத்பாவகை இவள் ஆகையாலும்
ஆத்ம ஸ்வரூபத்துக்கு அசாதாரண ஆகாரமாய் அநாதி அவித்யா அபி பூதமாய் கிடக்கிற பக்தி யோகத்தை பிரகாசிப்பிக்கிற
கர்மாதிகளுக்கு அங்கத்துவம் உண்டாகிறாப் போலேயும்
அபஹதபாப் மத்வாதி குணங்களை பிரகாசிப்பிக்கிற ஈஸ்வரனுக்கு உபாயத்வம் உண்டாக்கிறாப் போலேயும்
இவளுக்கும் இவ் உபாயத்தினுடைய சித்தத்வ நிரபேஷத்வ பஞ்சகங்களான சாத்யத்வ சா பேஷத்வங்களுக்கு
ஹேது பூதங்களான அங்கத்வ சஹகாரித்வங்கள் ஆதல்
பிரதான உபாயத்வம் ஆதல் உண்டாமே என்னில் ஆகாது -எங்கனே என்னில்

உபாயத்வமாவது -தத் ஸ்வீ கர்த்தாவான சேதனனுக்கு அனுரூபமான அநிஷ்டத்தினுடைய நிவ்ருத்தியும்
அனுரூபமாய் அபேக்ஷிதமான இஷ்ட பிராப்தியும் பண்ணுகையாலே
தத் ஞானத்துக்கும் தந் நிவ்ருத்தி பண்ணுகைக்கும் –
அது செய்யும் இடத்தில் அஹேதுகமாகச் செய்கைக்கும்-
அது தன் காரியமாகச் செய்கைக்கும் -அபேக்ஷிதங்களான ஞான சக்தி பூர்த்தி பிராப்தி களாகையாலும்
கார்யாந்தர உபயுக்தங்கள் ஆனவற்றை உபாய உப யுக்தங்கள் ஆக்குகைக்கு அபேக்ஷிதம் கிருபை ஆகையாலும் –
உபாயத்வம் உள்ளது தத் விசிஷ்டனுக்கு-
அவை தான் ஜகத் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரங்களில் அதிக்ருதங்களாய்க் கொண்டு சர்வகாலமும் பிரகாசித்துக் கொண்டு
போருகையாலே அவற்றுக்கு உத்பாவக அபேக்ஷை இல்லை
ஆகையால் இவளுக்கு இவ்வுபாயத்தினுடைய சித்தத்வ நிரபேஷத்வ பஞ்சகங்களான
உபாய அங்கத்வ ஸஹ காரித்வங்கள் உண்டாகாது
உத்பாவக அபேக்ஷை உள்ளது ஆஸ்ரயண உபயோகியான வாத்சல்யாதிகளுக்கு
ஆகை இறே சரண்ய அபி மதமான விதி வாக்கியத்தில் த்ருதீய சபதம பதங்களில்
வாத்சல்யாதிகளையும் ஞான சக்த்யாதிகளையும் விபஜித்து அனுசந்தித்தது

ஆனாலும் புருஷகார பூதையான இவளால் பிரகாசிதமான குண த்வாரா ஆஸ்ரயித்தால் அல்லது
உபாய ஸ்வீ காரம் பண்ண ஒண்ணாமையாலே தத் த்வாரா அங்கத்வம் வருமே என்னில்
இவள் புருஷீ கரித்தாலும் கார்யகரனான ஈஸ்வரனுடைய கிருபா அபாவத்தில் அது கார்யகரம் ஆகாமையாலே
அங்கத்துவம் வரும் என்ன ஒண்ணாது

ஆனால் புருஷகார நைர்ரத்தக்ய பிரசங்கம் உண்டாகாதோ என்னில் -சேதனனுடைய
என் பிழையே நினைந்து அருளி -என்கிற ஸ்வ அபராத பய நிபந்தனமாகவும்
ஆஸ்ரயணீயனான ஈஸ்வரனுக்கு இவளைப் பற்ற உண்டான –
அணி மா மலர் மங்கையோடு அன்பளவி-என்கிற பிரணயித்வ பாரதந்தர்ய நிபந்தன நித்ய இச்சாதீன மாகவும்
வருகிறது ஆகையால் நைர்ரத்தக்யம் பிரசங்கியாது –

ஆக
இந் நாராயண பதத்தில் புருஷகார பூதையான பிராட்டியாலே உத்பூதங்களான
வாத்சல்ய -ஸ்வாமித்வ -ஸுசீல்ய -ஸுலப்யங்களைச் சொல்லுகிறது –
ஸமஸ்த கல்யாண குணாத்ம கோசவ்
ஈறில வண் புகழ் நாரணன்
தத் சர்வம் வியாப்ய நாராயணஸ் ஸ்திதா
விஸ்வம் நாராயணம்
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் –இத்யாதிகளாலே
ஸமஸ்த ரூப குண விபூதிகளுக்கும் ஆஸ்ரயமான ஸ்வரூபத்துக்கு வாசகமாய் இருக்கிற நாராயண பதம்
ரூப விபூதிகளையும் குணாந்தரங்களையும் ஒழிய வாத்சல்யாதி மாத்ரங்களுக்கு வாசகமானபடி எங்கனே என்னில்

நார பதம் ரூப குண விபூதிகளுக்கு வாசகமாய் –
அயன பதம் -தத் ஆஸ்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு வாசகமாய் –
ஆக நாராயண பதம் குண விக்ரஹ விபூதி விஸிஷ்ட வஸ்துவை சொல்லிற்றே யாகிலும் –
இது ஸ்ரீ மத்-பத அநந்தரம் யுக்தமாகையாலே -உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிகிற ஈஸ்வரன்
ஸ்வ அபராத பயத்தால் ஆஸ்ரயிக்க கூசின சேதனன் தத் பய நிவ்ருத்தி உபயோகி புருஷகார சம்பந்த பூர்வகமாக
ஆஸ்ரயிக்கிற பிரகரணம் ஆகையால்
ப்ரபத்யே -என்று வஷ்யமாணமான ஆஸ்ரயத்துக்கு உபயுக்தமான குண பிரகாச மாத்ரமாகையாலும் –
குணாந்தரங்கள் ஆஸ்ரயித்த சேதனனுக்கு ரக்ஷண அதிசங்கை உண்டானால்
தந் நிவ்ருத்தி பூர்வக விஸ்வாச அர்த்தமாக அநுஸந்திக்குமவை ஆகையாலும்
பரமாச்சார்யரான நம்மாழ்வாரும் -அலர்மேல் மங்கை உறை மார்பா -என்று புருஷகாரத்தை முன்னிட்டு –
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று ஆஸ்ரயிக்கிற தசையில்
நிகரில் புகழாய் -என்று வாத்சல்யத்தையும்
உலகம் மூன்றுடையாய் -என்று ஸ்வாமித்வத்தையும்
என்னை ஆள்வானே -என்று ஸுசீல்யத்தையும்
திரு வேங்கடத்தானே -என்று ஸுலப்யத்தையும் -அருளிச் செய்கையாலும்
இந் நாராயண பதம் -காமாநய பலீ வர்ததஞ்ச-என்று பசுக்களைக் கொண்டு வா என்ற இடத்தில் –
கோ சப்தத்துக்கு உள்ளே பலீ வர்த்தமும் அந்தர் பூதமாய் இருக்க பலீ வர்த்த சப்தத்துக்குப் புநர் யுக்தி உண்டாம் என்று
சங்கித்து காமாநய என்கிற இடத்தில் கோ சப்தம் பலீ வர்த்த வியதிரிக்த கோ மாத்திரத்துக்கே வாசகம் என்று
கோ சப்தத்தை சங்கோசித்தால் போலேயும்
ப்ராஹ்மணமாநய–என்கிற சாமான்ய சப்தம் -ஸ்ருத சீல குல ஸம்பன்னம் ப்ராஹ்மணமாநய-என்கிற
விசேஷ சப்த சந்நிதியில் சங்குசிதமாம் போலேயும்
பிரகரண பலத்தால் வாத்சல்யாதிகளுக்கு வாசகமாகக் கடவது –

ஆஸ்ரயமான ஸ்வரூபத்துக்கு -ஆஸ்ரயணீயத்வ–சரண்யத்வ – ப்ராப்யத்வங்கள் -ஆகிற ஆகார த்ரயங்களும் உண்டாம் போலே
ஆஸ்ரயிகளான குண விசேஷங்களுக்கும் ஆகார த்ரயம் உண்டாகக் கடவது இறே
ஆகையால் வாத்சல்யாதிகள் ஆஸ்ரயணத்துக்கு உறுப்பாய்
ஞானாதிகள் சரண்யத்வத்துக்கு உறுப்பாய்
ஸுந்தர்யாதிகள் ப்ராப்யத்துக்கு உறுப்பாய் இருக்கும்

அதில் வாத்சல்யமாவது
வத்சம்லாதீதி -என்கிற வ்யுத்பத்தியின் படியே அத்யஜாதமான வத்சத்தின் பக்கல் தேனுவுக்கு உண்டான ஆதரம்-அதாவது
சுவடு பட்ட புல்லைக் காற்கடைக் கொள்ளும் தசையிலும் -தன் பக்கலிலே ஜென்மமே ஹேதுவாக
அதனுடைய தோஷத்தை போக்யமாக அங்கீ கரித்து தன்னுடைய ஷீரத்தாலே தரிப்பித்துத் தன்னை நினைக்கும்படி பண்ணி
முன் அணைக் கன்றையும் புல்லிட வந்தவர்களையும் கொம்பிலும் குளம்பிலும் கொண்டு ரஷிக்கும்படியான ஸ்வ பாவ விசேஷம்

ஈஸ்வரனும் தன்னை ஆஸ்ரயித்த சேதனர் விஷயத்தில் இருள் தரும் மா ஞாலமாய் இருக்கிற சம்சாரத்தில்
பகவத் ஸ்வரூபதிரோதா நகரீம் ஸ்வ விஷயாயாஸ் ச போக்ய புத்தேர் ஜநநீம்–இத்யாதிகளில் படியே
பகவத் ஸ்வரூபாதிகளை மறைத்துத் தன் பக்கலிலே போக்யதா புத்தியைப் பிறப்பிக்கிற சரீரத்தோடு சம்பந்தித்து
இருக்கிற சேதனரைக் குற்றம் காண்கை யாகிறது நம்முடைய தோஷம் அன்றோ
துன்பமும் இன்பமுமாகிய –இத்யாதிப்படியே சம்சார ஹேதுவான புண்ய பாப ரூப கர்மங்கள் என்ன –
கர்ம ஆர்ஜன பூமி என்ன -பல பூமி என்ன -கர்த்தாவான சேதனன் என்ன -இத்தனையும் நாம் இட்ட வழக்காய் இருக்க –
அத்தை நிவர்த்திப்பியாதே
நீ தந்த வாக்கை
சுமடு தந்தாய் -என்னும்படி சரீரத்தைக் கொடுத்து

அயர்ப்பாய் தேற்றமாய்
பல சமய மதி கொடுத்தாய்
உள்ளம் பேதம் செய்திட்டு –என்னும்படி மதி விப்ரமங்களைப் பண்ணுவித்து

தானங்காரமாய்ப் புக்கு
கருமமும் கரும பலனுமாகிய நாரணன்
செய்கின்ற கிதி எல்லாம் யானே என்றும் செய்கைப் பயன் உண்பேனும் யானே என்றும் –சத்தா கர்த்த்ருத்வ பலித்வாதிகள்
ஸ்வ அதீனமாய் இருக்கும் வஸ்து அநாதி அவித்யா சம்பந்தத்தால் எளிவரவு பட விட்டு இருக்கிறது
எல்லாம் நம்மால் வந்தது அன்றோ என்று

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை
வன் சேற்று அள்ளல் பொய் நிலத்து அழுந்தார்
பிறந்தும் செற்றும் நின்று இடரும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன்
சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து மாயப் பற்று அறுத்துத் தீர்ந்து தன் பாழ் மனம் வைக்கத் திருத்தி என்கிறபடியே —
தன் பேறாகப் போக்கி

உருவமும் ஆர் உயிரும் உடனே உண்டான்
என்னை முற்றப் பருகினான்
என்னை முற்றும் உயிர் உண்டு –என்கிறபடியே போக்யமாக ஸ்வீ கரித்து

பாலே போல் சீரில் பழுத்து ஒழித்தேன்
தொல் சீரை நல் நெஞ்சே ஓவாத ஊணாக உண்
திருமாலின் சீர் இறப்பு எதிர்காலம் பருகிலும் ஆர்வேனோ
சீர் பரவாதுண்ண வாய் தான் உறுமோ –என்னும்படி தன்னுடைய கல்யாண குணங்களால் தரிப்பித்து

தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கே போய் நாடிக் கொள்ளும்
தாயை நினைந்த கன்றே ஓக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து
கறவா மட நாகு தன் கன்று உள்ளினால் போலே மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
நின்று குமுறும் -என்கிறபடியே விடில் நா கொட்டும்படி நிரந்தரம் நினைக்கப் பண்ணி

தோஷ யத்யபி -நத்யஜேயம் -என்று ஆஸ்ரயனுக்கு ஒரு காலும் தோஷம் இல்லை –
கண்டாலும் நமக்கு உபாதேயம் -நாம் விடோம் என்பது

சர்வ பூதேப்யோ அபயம் தாதாமி-என்று
த்வாந்து திக்குல பாம்சனம் -என்பாரோடு ரக்ஷண அதி சங்கை பண்ணி சிதகுரைப்பாரோடு நம் பக்கல் பரிவாலே –
வத்யதாம் -என்பாரோடு நிருபாதிக ஸ்வா தந்தர்யத்தாலே -ஹந்யாம்-ஷிபாமி -ந ஷமாமி -என்பாரோடு வாசியற
ஒருவராலும் ஒரு பயம் வராதபடி அபய ப்ரதானம் பண்ணக் கடவேன் என்பதாய்

கிம் கார்யம் சீதயா மம -என்று நித்ய அநபாயினியான பிராட்டியை ஒரு தலையாகவும் விட்டு

அனந்தன் பாலும் கருடன் பாலும் மைது நொய்தாக வைத்து என் மனம் தன்னுள்ளே வந்து வைகி வாழச் செய்தாய் –
என்கிறபடியே ஸூ ரிகள் பக்கலிலும் சத்தா மாத்திரை ஹேதுவான சந்நிஹிதமாய்

வடதமும் வைகுந்தமும் மதில் துவாராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு -என்று உகந்து அருளின திவ்ய தேசங்களையும் உபேக்ஷித்து

பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண்ணிலா ஊழி ஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
ஆனைக்கு அன்று அருளை ஈந்த
சிவனும் பிரமனும் காணாதருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த -என்று உபாஸகரானாரும் லஜ்ஜிக்கும் படி
அவர்களை உதாசீனித்தும் ரஷிக்கைக்கு ஹேதுவாய்

விதி தஸ் சஹி தர்மஞ்ஞஸ் சரணாகத வத்ஸல–என்று சத்ரு கோஷ்டியிலும் பிரசித்தமாய்
யதி வா ராவணஸ் ஸ்வயம் –என்று ராவணன் தான் வரிலும் கைக் கொள்ளக் கடவோம் என்னும்படியான ஸ்வ பாவ விசேஷம்
இந்த தோஷ நிவ்ருத்தி -உபாயாந்தர பாவியான -பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
-என்கிற பாப விமோசன வியாபாரத்தோடே விராதியாதோ என்னில்-
இங்குச் சொல்கிறது ஆஸ்ரயண விரோதி மாத்ரமாகையாலும்
பாப விமோசன ஹேதுவான குண அனுசந்தான பூர்வக ஆத்ம சமர்ப்பன அனுசந்தானம் ஆகையாலும்
தாது ஸித்தமான ரக்ஷகத்வம் இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹாரங்களுக்கு உபயுக்தமோபாதி
பாப நிவ்ருத்தி உபயோகியாகையாலே விரோதியாது –

அநந்தரம் -ஸ்வாமித்வம் ஆவது
இழவு பேறு தன்னைத்தான் படி -பகவத் பிராப்தி சேதனனுக்கு அன்று -சேதன பிராப்தி பகவத் விஷயத்துக்கு -என்னும்படியாய்
ஸ்வத்ம மாத்மநி சஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணிஸ் த்வம்-உபயோ ரேஷ சம்பந்த்தோ நேதரோபிமதோ மம -என்று
ஈஸ்வரனோடு உண்டான பந்த விசேஷங்கள் எல்லாவற்றிலும் பிரதானமாய்
யஸ்யாஸ்மி
பகவத ஏவாஹமஸ்மி –என்கிறபடியே சத்தா ஸித்தமாய்
ஆத்ம தாஸ்யம் ஹரேஸ் ஸ்வாம்யம் ஸ்வ பாவம் -என்னும்படி ஸ்வஸ் ஸித்தமாய்
கீழ்ச் சொன்ன வாத்சல்யத்துக்கு நிதானமாய் இருபத்தொரு பந்த விசேஷம்
இது அடியாக இறே சத்தா ரக்ஷணம் தொடங்கி கைங்கர்ய பர்யந்தமாக இவனை ஈஸ்வரன் அங்கீ கரித்தது –

கர்க்ஷகனானவன் தனக்குப் போக்யமான அபிமத விஷயங்களை விட்டுப் பயிர்த்தலையிலே
குடில் கட்டிக் கொண்டு கிடக்குமா போலே த்ரிபாத் விபூதியில்
ஸ்ரீ யா சார்த்த மாஸே–பக்தைர் பாகவதஸ் ஸஹ
கைங்கர்ய நித்ய நிரதைர்ப் பவதேக போகை
அயர்வரும் அமரர்கள் அதிபதி –என்கிறபடியே நிரதிசயமான போகம் நடவா நிற்கச் செய்தேயும்

ச ஏகாகீ ந ரமேத -என்கிறபடியே அவ்வனுபவம் உண்டது உருக்காட்டாதே
கல்லும் கனை கடலும் வைகுண்ட வானாடும் புல் என்று ஒழிந்தன கொல்–என்னும்படி அவற்றையும் உபேக்ஷித்து
விமுகனான திசையிலும் பிரஜையின் முதுகைக் கட்டிக்க கொண்டு கிடக்கும் தாயைப் போலே
த்வம் மே -என்றால் -அஹம் மே -என்னும் திசையிலும் இரா மடமூட்டுவரைப் போலேயும்
யமாத்மா ந வேத
ஸஹைவசநதம் ந விஜா நந்தி
கரந்து எங்கும் பரந்துளன்
ஒழி வற நிறைந்து நின்ற
எங்கணும் நிறைந்த எந்தாய்
அறியா வகையால் அருவாகி நிற்கும் –என்கிறபடியே தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக
உள்ளே நின்று சத்தியை நோக்கி

ஸேபநஸம் ஸீ ஸூஹ்ருத்
ஸ்ரேயோயாத்யதி கேசவ
என் சிந்தித்தாய் -என்கிற தன் ஸூஹ்ர்த்த அதிசயத்தாலே
மாதவன் என்றதே கொண்டு
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன -என்கிற வ்யாவ்ருத்தி மாத்ரத்தையும் -அன்யார்த்தமாய் –
புத்தி பூர்வம் இன்றிக்கே இருப்பதாய் -பகவத் அங்கீ கார ஹேதுவாக விகிதம் இன்றியிலே இருக்குமதாய்-
ரத்னத்துக்கு கரிஷம் போலே பல வி சத்ருசமாய் இருக்கிற யாத்ருச்சிகாதி ஸூஹ்ருத விசேஷங்களை உண்டாக்கி
பொய்யே கைம்மை சொல்லி மெய்யே பெற்று ஒழிந்தேன் -என்று அவற்றை ஸ்வ அங்கீ காரத்துக்கு ஹேதுவாக்கி இதுவே ஹேதுவாக
என்னைத் தீ மனம் கெடுத்தாய் –என்கிற ஆபி முக்யத்தையும் உண்டாக்கி
தன்பால் ஆதரம் பெருக வைத்த -என்கிற ஸ்வ ப்ராப்தி ருசியை உண்டாக்கி
அந்த ருசி அனுகுணமான புருஷார்த்தத்தையும்
தத் அனுரூபமான சாதனத்தையும் -தத் ஆஸ்ரயமான ஸ்வரூபத்தை யதாவத் ஸ்ரவணம் பண்ணுகைக்காக
யதா ஞானவானான ஆச்சார்யருடைய ஸமாஸ்ரயணத்தை உண்டாக்கி -அவனாலே உபதிஷ்டமாய்

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம்–இத்யாதிகளில் சொல்லுகிற அர்த்த பஞ்சகத்தையும்
உய்யும் வகை உணர்ந்தேன்
நின்ற ஒன்றை உணர்ந்தேன்
மெய்ம்மையை மிக உணர்ந்து
அவனது அருளால் உறல் பொருட்டு என் உணர்வின் உள்ளே இருத்தினேன்
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்கள் ஆமவை நன்கு அறிந்தனன்–என்னும்படி யாதாவாக அறியும் படி பண்ணி –
இவ்வர்த்த பஞ்சக ஞானத்துக்குப் பலம் உபாய உபேயங்களை யாதாவாக அறிந்து துணிந்து த்வரிக்கையாய்
மற்ற மூன்று அர்த்தமும் -பல பிரார்த்தனைக்கும் -சாதன வியவசாயத்துக்கும் -ஆஸ்ரயமான ஸ்வரூபம்
அநந்யார்ஹ சேஷமாய் -அநந்ய சரணமாய் -அநந்ய போக்யமாய் இருக்கும் என்று அறிகைக்கும்
இப்பிரார்த்தனா வியவசாயங்களுக்கு பிரதி சம்பந்தியான ஸ்வரூபம்
நிருபாதிக ரக்ஷகமுமாய் நிரதிசய ஆனந்த யுக்தமாயும் இருக்கும் என்று அறிகைக்கும்
இவற்றுக்கு விரோதி ஸ்வ ரக்ஷண அர்த்த வியாபாரமும் ஸ்வ சாரஸ்யமும் என்று அறிகைக்காகவுமுமாகையாலே
தத் பலமான ப்ராப்ய ருசியை
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும்–என்றும்
உனபாதம் சேர்வது அடியேன் என்னாளே
அடியேன் அடி சேர் வண்ணம் அருளாய் -என்று பிரார்த்திக்கும் படி பண்ணின தத் விஷய சித்த சாதன நிஷ்டையை

களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன்
யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –என்று துணியும்படி பண்ணி அந்த சாதன அன்வய பலம்
விஷயாந்தர ப்ராவண்ய நிவ்ருத்தி ஆகையால் -அத்தை
இன்னம் கெடுப்பாயோ
பல நீ காட்டிப் படுப்பாயோ
குல முதலடும் தீ வினைக் கொடு வன் குழியினுள் வீழ்க்கும் ஐவரை வலமுதல் கெடுக்கும் வரமே தந்து அருள் கண்டாய்
முன்னை மாயம் எல்லாம் முழு வேர் அரிந்து–என்கிறபடியே கண்ட காட்சியில் முடியும்படியான விஷயத்திலே மூட்டப் புகுகிறாயோ
இத்தைப் பக்க வேரோடு போக்க வல்லனாம்படி பண்ணி அருள வேணும் என்று பிரார்த்திக்கும் படி பண்ணி

இதர விஷய ப்ராவண்ய நிவ்ருத்திக்குப் பலம்
பரமாத்மநி யோரக்தோ விரக்தோ பரமாத்மநி
மால் பால் மனம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட்டு
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம் துறந்தார் தொழுதார் அத்தோள்–என்கிறபடியே
ஸ்வ விஷய ப்ராவண்யம் ஆகையால்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
கழிய மிக்கதோர் காதல்
உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் –என்கிறபடியே தன் பக்கலிலே ப்ராவண்யத்தை உண்டாக்கி -அதுவே கருவியாக
கண்டதோடு பட்டது அல்லாம் காதல் மற்று யாதும் இல்லை
அணைய வந்த ஆக்கம் உண்டேல் அட்டைகள் போல் சுவைப்பர் -என்னும்படி தேஹ சம்பந்திகளோடே உறவை அறுத்து

தேஷாம் அபி நமோ நம
அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தன் அடியான்
அடியார்க்கு என்னை ஆட்படுத்தாய்
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் –என்கிறபடியே ஸ்வ சம்பந்திகளோடே உறவை உண்டாக்கி
தெரிவரிய அளவில்லாச் சிற்று இன்பம் ஒழிந்தேன் -என்னும்படி ஆத்ம பிராப்தி மோக்ஷத்திலே அருசியைப் பிறப்பித்து
உந்தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் -என்று அநந்ய பிரஜோனனன் ஆக்கி
அர்ச்சிராதி மார்க்க கமனத்தையும் ஆதி வாஹிக ஸத்காரத்தையும்
சதம் மாலா ஹஸ்தா -இத்யாதிகளில் சொல்லுகிறபடி திவ்ய அப்சரஸ் ஸத்காரத்தையும் உண்டாக்கி
பரஞ்சோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே–என்கிற ஸ்வ ஸ்வரூப பிரகாசத்தைப் பிறப்பித்து

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான்
கண்ணுள் நின்று ஆகலான்
நெஞ்சு என்னும் உட் கண்ணாலே காணும் –என்கிற பரபக்தியையும்
சூழ் விசும்பு அணி முகிலில் சொல்லுகிற பர ஞானத்தையும்
அதனில் பெரிய என் அவா
முடிந்த அவா -என்கிற பரம பக்தியையும் உண்டாக்கி
இவற்றால் பண்ணும் பகவத் அனுபவத்தையும்
அவ்வனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யத்தையும் கைக்கொள்ளுக்கைக்கு ஹேதுவாய் இருபத்தொரு ஸ்வ பாவ விசேஷம்

அநந்தரம் ஸுசீல்யமாவது
மஹதோ மந்தைஸ் ஸஹ நீரந்த்ரேண சம்ஸ்லேஷ ஸ்வ பாவத்வம் -என்கிறபடியே
பெரியோன் சிறியனோடே கலவா நின்றால்-தன் பெருமை இருவர் நெஞ்சிலும் படாதபடி புரையறக் கலக்கை–அதாவது
ஆனந்தோ ப்ரஹ்ம
ஆனந்தோ ப்ரஹ்மணோ வித்வான்
உணர் முழு நலம்
எல்லையில் அந்நலம்
உயர்வற உயர் நலம் உடையவன்
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் -என்கிற நிரதிசய ஆனந்தமான ஸ்வரூப ஸ்வ பாவங்களையும்
தேஜஸாம் ராசி மூர்ஜிதம்
பஞ்ச சக்தி மயம் வபு
மணியுருவில் பூதம் ஐந்தாய் –என்கிறபடியே அப்ராக்ருத பூத பஞ்சகத்தையும் உபாதானமாக உடைத்தாகையாலே
நிரவதிக தேஜோ ரூபமாய்
பூர்ண ஷாட் குண்ய விக்ரஹம் -என்கிறபடியே ஸ்வரூப குணமான ஞான சக்த்யாதிகளுக்கு பிரகாசகமாய்
இச்சா க்ருஹாதீபி மதோருதேஹ –என்று இச்சா க்ருஹீதமாய் அத ஏவ ஸ்வரூப குணங்களில் காட்டிலும்
அபிமதமாய் இருக்கிற திவ்ய மங்கள விக்ரஹத்தையும் அனுபவித்து

பிரசாந்த ஆனந்தாத்ம அனுபவஜ மஹாநந்த மஹிம -ப்ரசக்தஸ் தை மித்யா நுக்ருத விதாங்கார்ண வதசம்–என்கிறபடியே –
நிஸ் தரங்க ஜலதி போலே
அவாக்ய அநாதர -என்கிற பெரிய மேன்மையை உடையவனாய்
வானோர் தனித் தலைவன்
விண்ணவர்க்கு எண்ணல் அரியான் –என்ற நித்ய விபூதி யோகத்தால்
இன்புறும் இவ்விளையாட்டு உடையான்
நளிர் மா மலர் உந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் –என்கிற லீலா விபூதி யோகத்தால் உண்டான
நிரங்குச ஐஸ்வர்யத்தை உடையனாய் இருக்கிற ஈஸ்வரன் உடைய
நதத் சமஸ் சாப் யதிகஸ் சத்ருச்யதே
யஸ்மாத் பரம் நா பரமஸ்தி கிஞ்சித்
நத்வத் சமோஸ்த் யப்பதிக குதோந்ய
இனனிலன் மிகுநரையிலன் –என்கிற சமாப்யதிக ரஹிதமான வைபவத்தையும் அனுசந்தித்து
நாகணை மிசை நம்பிரான்
செல்வர் பெரியர் சிறு மானிடர் நாம்
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் யான் யார் -என்றார் ஆஸ்ரயணத்துக்கு அஞ்ச வேண்டாதபடி

வானவர் சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனை –சொல்லுவேன் பாவியேன் -என்று அகன்ற ஆழ்வாரை ஒழியத்
தனக்குச் செல்லாதபடியைக் காட்டிச் சேர விட்டால் போலேயும்
அழுக்கு உடம்பு எச்சில் வாயால் தூய்மையில் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம் -என்று அஞ்சின இவர்க்கு
அஞ்சல் என்று காவி போல் வண்ணர் வந்து என் கண்ணுள்ளே தோன்றினார் என்னுமா போலேயும் எல்லோரோடும் ஓக்க மேல் விழுந்து
ஹே கிருஷ்ண ஹே யாதவ ஹே ச கேதி-என்னுமா போலே தன் சிறுமையும் அவன் பெருமையும் நெஞ்சில் படாதபடி ஒரு நீராகக் கலக்கையும்
இப்படிக்கு கலவா நின்றால்
ஆத்மாநம் மானுஷம் மநயே ராமம் தசாரதாத்மஜம்
அஹம் வோ பாந்தவ ஜாத –என்று தானும் சஜாதீயனாகக் பொருந்துகையும்

ஸுலப்யமாவது
ந சந்த்ருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷூஷா பஸ்யதி கஸ்சை நைநம்
ந மாம்ச சஷூர் அபிவீஷதே தம்
கட்கரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவருக்கும் கட்கரிய கண்ணனை
நேரே கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன்
கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் கானான் -என்று அதிசயித ஞானரானவர்களுக்கும் அசஷூர் விஷயமான
தன் வடிவை சஷூர் விஷயமாக்குகை
இந்த ஸுலப்ய பூர்த்தி உள்ளது அர்ச்சாவதாரத்தில் இ றே

தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரயா–என்கிற பரத்வம் தேச விப்ரகர்ஷத்தாலே சர்வராலும் ஆஸ்ரயிக்க ஒண்ணாது
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன
குறைவில் தடம் கடல் கோள் அரவேறித் தன் கோலச் செந்தாமரைக் கண் உறைபவன் போல் ஓர் யோகு புணர்ந்த ஒளிம் மணி வண்ணன்
பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
பாற்கடல் பையத் துயின்ற பரமன் –என்கிற வ்யூஹம் சனகாதிகளுக்கும்
ஆபத்து உண்டான போது ப்ரஹ்மாதிகளுக்கும் ஆஸ்ரயமாமது ஒழிய சர்வ அபாஸ்ரயம் ஆக மாட்டாது –
அஜாய மாநோ பஹுதா விஜாயதே
பஹுநி மே வ்யதீதாநி ஜன்மாநீ
பிறப்பில் பல் பிறவிப் பெருமான்
ஜன்மம் பல பல செய்து
துயரில் மலியும் மனுஷர் பிறவியில் தோன்றி கண் காண வந்து
நாட்டில் பிறந்து –என்கிற வைபவம் தத் காலீந புருஷர்களுக்கே யாகையால் பிற்பாடார்க்கு ஆஸ்ரயிக்க ஒண்ணாது
அந்தப்பிரவிஷ்டஸ் சாஸ்தா ஜநா நாம் சர்வாத்மா
சாஸ்தா விஷ்ணோர் அசேஷஸ்ய
சாஸ்தா சராசரஸ்ய ஏக
ஓர் உயிரேயோ வுலகங்கட்க்கு எல்லாம் –என்கிற அந்தர்யாமித்வம் அசஷூர் விஷயம் ஆகையால் ஆஸ்ரயிக்க ஒண்ணாது

தேச கால விப்ரகர்ஷாதிகள் வருகிற குறைகள் ஒன்றும் இன்றிக்கே
அர்ச்சாவதாரஸ் ஸர்வேஷாம் பாந்தவோ பக்த வத்ஸல
சிந்தயேச்ச ஜெகன் நாதம் ஸ்வாமி நம் பரமார்த்தத
அசக்தம ஸ்வதந்த்ரஞ்ச ரக்ஷயஞ்ச அபி ஜனார்த்தனம் –என்று சர்வவித பந்துத்வத்தாலும் பூர்ணனாய் -சர்வ சேஷியாய் –
ஸ்வதஸ் நிருபாதிக ஸ்வாமியாய் -இருக்கச் செய்தேயும்
அசக்தனுமாய் பரதந்த்ரனுமாய் ரஷ்ய பூதனுமாய்
ததிச்சயா மஹா தேஜா புங்க்தேவை பக்த வத்ஸல –ஸ்நாநம் பாநம் ததா யாத்ராம் குரு தேவை ஜகாத் பதி
அர்ச்சக பராதீன அகிலாத்ம ஸ்திதி –என்று ஆஸ்ரித அதீனமான
போஜன சயநாதிகளையும் -ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகளையும் உடையனாய்
பின்னானார் வணங்கும் சோதி திரு மூழிக் களத்தனாய்
அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீர் –என்று பிற்பாடாருக்கும் ஆஸ்ரயணீயனாம் படி
இம்மட உலகர் காண எழுந்து அருளி இருக்கிற அர்ச்சாவதாரத்திலே இறே ஸுலப்ய பூர்த்தி உள்ளது

மாம் -என்று சேனா தூளி தூ சரிதமான திருக் குழலும் கையும் உழவு கோலும் சிறு வாய்க் கயிறும்
தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற ஸுலப்யம்
பரத்வம் என்னும்படி இருக்கும் இந் நாராயண பதத்தில் ஸுலப்யம் -அதுக்கு அடி
மய்யா சக்த மநா பார்த்தா -என்றும்
நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்றும் –
தாழ்ந்த தனஞ்சயர்க்காகி -என்றும் சொல்லுகிறபடியே தன் பக்கலிலே நெஞ்சு பற்றித் தன்னை ரக்ஷகனான பற்றின அர்ஜுனன்
ஒருவனையும் பற்ற ஸூலபனான அளவாகையாலே –
அது காதா சித்கமாகையாலும் -இது நாராயண பதத்தில் சொல்லுகிற குடல் துவக்கு அடியாக வந்தது ஆகையால்
சர்வ விஷயமாய் அத ஏவ சர்வ காலீனமாய் இருக்கையாலும் இந்த ஸுலப்யம் சர்வாதிசாயியாய் இருக்கும்

ஆக ஏவம் ரூபமான வாத்சல்யத்தி குணங்களைச் சொல்லுகிறது நாராயண பதம் –
ஸ்வ தோஷ தர்சனம் ஆதல் -அவனுடைய வப்ராப்தி யாதல் -உத்துங்கத்வம் ஆதல் -துர்லபத்வம் ஆதல் உண்டானால்
ஆஸ்ரயணம் கூடாமையால் -அவற்றை நிராகரித்து -அவனை ஆஸ்ரயிக்கைக்கு ஏகாந்தமான புருஷகார பூதையான
பிராட்டியால் உத்பூதங்களாய் –
பின்னை அவள் தன்னாலும் ஒழிக்க ஒண்ணாத படியான
வாத்சல்ய ஸ்வாமித்வ ஸுசீல்ய ஸுலப்யங்களை இந் நாராயண பாதத்தால் சொல்லிற்று ஆயிற்று

இந் நாராயண பதம் வாத்சல்யாதிகள் நாலையும் சொல்லிற்றே யாகிலும்
ப்ரபத்யே என்று ஆஸ்ரயண பிரகரணம் ஆகையால் ஆஸ்ரயணத்துக்கு
அத்யந்த உப யோகியான ஸுலப்யத்தில் பிரதானமாகக் கடவது –

ஏவம் ரூபமான ஆஸ்ரயணீய குற்றங்கள் பற்றாசாக ஆஸ்ரயிக்கிறது-
நிரதிசய துக்க பாஜன-சம்சார துக்க நிவ்ருத்தி பூர்வகமாக -நிரதிசய அதிசய ஆஹ்லாத ஸூக பாவ ஏக லக்ஷண
மோக்ஷ லாபத்துக்கு ஆகையால் தத் உபயோகியான இஷ்ட அநிஷ்டங்களை அறிகைக்கும்-
தத் பிராப்தி பரிஹாரங்களைப் பண்ணுகைக்கும்
செய்யும் இடத்தில் நிரபேஷமாகச் செய்கைக்கும்
அபராத ஞானாதிகளுக்கு அநு குணங்களான இக் குண விசேஷங்களை ரக்ஷண அநு குணமாக்கைக்கும் அநு குணமாய் –
பாப விமோசகன் பக்கல் பிரித்து அநு சந்தேயமாய் இருக்கிற
ஞான -சக்தி -பிராப்தி -பூர்த்தி -கிருபைகளும் ரக்ஷண அதிசங்கை கழிந்து
விஸ்வசிக்கைக்கு உறுப்பாக இவ்விடத்தில் அநுசந்தேயங்கள்-

ஞானமாவது –
யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண
சதா ஸ்வத-அஜடம் ஸ்வாத்ம சம்போதி நித்யம் சர்வா வகாஹநம் -ஞானம் நாம குணம் ப்ராஹு-என்றபடியே
ஸ்வயம் பிரகாசமாய் -தன்னையும் ஆஸ்ரயத்தையும் நன்றாக அறிவிக்குமதாய்-
ஸ்வ வ்யதிரிக்த விஷயங்களை யுகபத் ஏவ சாஷாத் கரிக்கை

இத்தால் இவனுக்கு நிவர்த்த்யமான அநிஷ்டத்தையும்-ப்ராப்தவ்யமான இஷ்டத்தையும் அறியும் என்கிறதாகையாலே
தனக்கு ஹித அஹிதங்கள் தான் அறியாமல் வந்த இழவை நிவர்த்திப்பிக்கிறது

சக்தியாவது
ஜகத் ப்ரக்ருதி பாவோ யஸ் சா சக்தி பரிகீர்த்திதா -என்றும்
கார்யே நந்தே ஸ்வ தனுமுகதஸ் தவாமுபாதாநமாஹு -என்கிற ஜகத் உபஹார சக்தி யாதல்
வடதளஸாயித்வ சாந்தீபிநீ புத்ர வைதிக புத்ர ஆத்யாநயநம் சக்தியாதல் தொடக்கமான அகடிதகடநா சாமர்த்தியம் ஆதல்
தேநேதம் பூர்ணம் புருஷேண சர்வம்
பரந்த அண்டம் இது எனக் கரந்து பரந்துளன் -என்கிற பரி சாமாப்ய வர்த்தித்வம் ஆதல்
அநாதி அசித் சம்பந்த அபி பூதனாய்க் கொண்டு சம்சாரத்திலே வேர் பற்றிப் போந்த இவ்வாத்மாவை
என்னை இசைவித்து
என் இசைவினை –என்கிறபடியே சம்சாரத்தின் நின்றும் கால் வாங்கி அல்லது நிற்க ஒண்ணாத படி பண்ணி
நித்ய விபூதியில் கொண்டு போய் வைக்கை –

இத்தால் உத்பாதகத்வ-ஆபத் ஸகத்வ-அபிமத பிரதத்வ -ஸமஸ்த வஸ்து ஆதாரத்வத்துக்கும்
மேம் பொருள்
சார்ந்த இரு வல் வினை –என்கிறபடியே எள்ளில் எண்ணெய் போலவும் -அரணியில் அக்னி போலவும் விடுவிக்க ஒண்ணாதபடி
பொருந்திக் கிடக்கிற அவித்யாதிகளை நிவர்த்திப்பித்து அப்ராக்ருதமான தேசத்தை கொடுக்கைக்கும் ஹேதுவான
சக்தியைச் சொல்லுகையாலே ஸ்வ அசக்தி நிபந்தனமாக பலம் இழக்க வேண்டா என்கிறது-

பூர்த்தி யாவது
அவாப்த ஸமஸ்த காமத்வம்-அதாவது
அபூர்வமான காம்யங்கள் உண்டாக வேணும் என்று கோலினால் அவை கர்த்தாந்த்ர சாத்யமாதல் -காலாந்தர சாத்யமாதல்
யத்ன விசேஷ சாத்யமாதல் இன்றிக்கே சங்கல்பாத் பூர்வமேவ சித்திக்கை –

இத்தால் ஆஸ்ரித அபிமத பல பிராப்தியை சஹகாரி நிரபேஷமாகச் சடக்கெனப் பண்ணிக் கொடுக்கைக்கு ஹேதுவான
பூர்த்தியைச் சொல்லுகையாலே தன்னுடைய அபூர்த்தி அடியாக பலம் இல்லை என்று அஞ்ச வேண்டா என்கிறது

பிராப்தி ஆவது
அசேஷ சித் அசித் வஸ்து சேஷி பூத -என்று ஸமஸ்த பதார்த்த அநு பந்தி -சகல அதிசயங்களுக்கும்-தான் பலியாய் இருக்கை–

இத்தால் ஆஸ்ரித சேதன மோக்ஷ பிராப்தி ரூப பலத்திலே ப்ரீதியும் தன்னது என்று சொல்லுகையாலே
சபலத்வ புத்தியால் பல லாபம் இல்லை என்று அஞ்ச வேண்டாம் –

கீழே வாத்சல்யாதி பிரகரணத்தில் சொன்ன ஸ்வாமித்வத்துக்கும் -இந்த சேஷித்வத்துக்கும் வாசி என் என்னில்
அங்கு வஸ்து சத்தை முதலாக கைங்கர்ய பிரதான பர்யந்தமாகத் தானே செய்கைக்கு ஹேதுவான
ஸ்வத்வ அபிமான ஆஸ்ரய ரூப ஸ்வாமித்வத்தைச் சொல்லிற்று –
இங்கு எல்லா தசைகளிலும் உண்டான ரஸ விசேஷங்களுக்கும் தானே பலியாகையால் உண்டான
பிராப்தியைச் சொல்லுகிறது –

கிருபை யாவது
கிருபாஹி நாம -ஸ்வார்த்த நிரபேஷ பர துக்க அஸஹிஷ்ணுதா
தயா பர வ்யஸன ஹரா
தயான் யேஷாம் துக்கா ப்ரஸஹனம் –என்கிறபடியே பர துக்கம் ஸஹியாமல் தந் நிராகரண இச்சை பிறக்கை-அதாவது
கிருபயா பர்ய பாலயத்
ப்ரணத இதி தயாளு –என்கிறபடியே
அநந்யாஹி மயா சீதா
ரஸ சீதாத் வயா ஹீநா –என்கையாலே ஸ்வரூப அந்தர் கதையுமாய்
விஷ்ணு பத்நீ
விஷ்ணோஸ் ஸ்ரீ -என்கையாலே த்ரவ்யாந்தரையுமாய்
அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும்
பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு -என்று அபிமத விஷயமுமாய் இருக்கிற பிராட்டி விஷயத்தில் அபசாரம் ஆகையால்
பகவத அபசார பாகவத அபசார அஸஹ்ய அபசார ரூபமான த்ரிவித அபசாரமும் பண்ணின காகா விஷயமாக
அவ்வபசாரங்கள் எல்லாம் ஒன்றும் பாராமல் தன் கிருபாதிசயத்தாலே
அந்த காகத்தையும் கூட ரஷிக்கும்படி இருபத்தொரு ஆகாரம் இறே

இத்தால் அபசாராதிகளும் பாராமல் ரஷிக்கைக்கு ஹேதுவான கிருபா வைபவத்தைச் சொல்லுகையாலே
ஸ்வ அபராதம் அடியாக பல ஹானி இல்லை என்கிறது –

ஆக
ஆஸ்ரித கார்ய உபயோகியாய் ஆஸ்ரயித்த சேதனருடைய அஞ்ஞான அசக்தி அபூர்த்தி அபிராப்தி ச அபராதத்வ நிபந்தன
பல ஹானி ரூப பயத்துக்கு நிவர்த்தகமான
ஞான சக்தி பூர்த்தி பிராப்தி கிருபா ரூப குணங்களைச் சொல்லுகிறது
த்வத் ஞான சக்தி கருணா ஸூ சதீஷூநேஹ பாபம் பராக்ரமம் இதும் அர்ஹதி மாமகீ நம -என்று
இவ்வர்த்தத்தை ஸ்ரீ ஆழ்வானும் அருளிச் செய்தார் –

இந்த வாத்சல்யாதியான குண விசேஷங்கள் இந்த நாராயண சப்தத்துக்கு அர்த்தமாக
மாதா பிதா பிராதா நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண –இத்யாதிகளால் சொல்லப்பட்டது -எங்கனே என்னில்
மாத்ருத்வத்தாலே வாத்சல்யத்தையும்
பித்ருத்வத்தாலே ஸ்வாமித்வத்தையும்
ப்ராத்ருவத்தாலே ஸுசீல்யத்தையும்
நிவாஸ சப்த யுக்த நித்ய சாந்நித்யத்தாலே ஸுலப்யத்தையும்
சரண சப்த யுக்தமான உபாயத்தாலே தத் உபயோகியான ஞானாதிகளையும்
ஸூஹ்ருத் வேந கிருபா கார்ய ஹித சிந்தா முகேன காருணிக்கத்வத்தையும்
கதித்வத்தாலே -தத் குண விசேஷ விசிஷ்டனுடைய ப்ராப்யத்வத்தையும் சொல்லிற்று –

ஆக நாராயண பதத்தாலே
நார சப்தேந ஜீவாநாம் ஸமூஹ ப்ரோசயதேபுதை–என்று
ப்ராப்தாக்களான பிரத்யகாத்மாக்களைச் சொல்லி
அயந சப்தத்தால் -அவ்வாத்மாக்களுக்கு உபாய பூதன் என்னும் அர்த்தத்தைச் சொல்லி
அவனை உபாயத்வேந ஆஸ்ரயிக்கைக்கும் –
உபாய கார்யமான அநிஷ்ட நிவ்ருத்தியாதிகளைப் பண்ணுகைக்கும் உறுப்பான குண விசேஷங்களைச் சொல்லிற்று ஆயிற்று –

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரகால நல்லான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பரகால நல்லான் ரஹஸ்யம் -ஸ்ரீ மந்த்ர ரத்னம் -ஸ்ரீ த்வயம் – ஸ்ரீ மத் சப்தார்த்தம் —

August 22, 2019

ஸ்ரீ த்வயத்தில் சொல்லுகிற உபாய உபேயங்களை ஒழிந்த சகல சாதன சாத்தியங்களும் அத்யந்த விலக்ஷணமான
இந்த உபாய உபேயங்களிலே ஆரோபிக்கைக்காக பிரவ்ருத்திக்கிறது ஆகையால்
இவற்றை சகல ஸாஸ்த்ர சாரம் என்னக் குறை இல்லை

இப்படி ஸ்ருதிகளும் -ரிஷிகளும் -ஆழ்வார்களும் -ஆச்சார்யர்களும் -விரோதி நிவ்ருத்தி பூர்வகமாக
நிரதிசய ஸூக ரூபமான புருஷார்த்தத்தைப் பெற்று உஜ்ஜீவிக்கைக்கு உபாயம்
லோகாநாம் பரமோ தர்ம
ராமோ விக்ரஹவான் தர்ம
கிருஷ்ணம் தர்மம் சனாதனம்
நல்லறமானவும் நால்வேத மாத்தவமும் நாரணனே யாவது -என்று சொல்லப்படுகிற சித்த உபாயம் என்று
அறுதி இடுகையாலே நமக்கும் இவ்வுபாய விசேஷம் ஆதரயணீயமாகக் கடவது

ஆக இப்படி சகல பிரமாண ப்ரதிபாத்யங்களாய் -மந்த்ர ஸித்தமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு அநு ரூபமாய் அபிமதமுமாய்
இருந்துள்ள உபாய உபேயங்களை இரண்டு வாக்யத்தாலும் விசதமாக ப்ரதிபாதிக்கையாலே
வாக்ய த்வயாத்மகமாகக் கொண்டு ஸ்ரீ த்வயம் என்று திரு நாமமாய் –
ஸ்ரீ திருமந்த்ரத்தினுடைய விசத அனுசந்தானமாய்
மந்தாரம் த்ராயத இதி மந்த்ர –என்று அனுசந்தாவை ரஷிக்கையாலே மந்த்ரமாகவும்
த்வயே மந்த்ர ரத்னேந -என்று மந்த்ர ஸ்ரேஷ்டமாகவும் சொல்லப்படுகிற ஸ்ரீ த்வயம்
ஸ்ரீ கடவல்லி முதலான உபநிஷத்துக்களிலே அதீதமாய்ப் போருகையாலும்

ஸ்ரீ பகவச் சாஸ்திரத்தில்
பிரதமம் ச்ருணு மந்த்ராணாம் மந்த்ர ராஜம் அநுத்தமம் -சர்வ மந்த்ர பலான் யஸ்ய விஞ்ஞாநே ந பவந்திவை
ஏதன் மந்த்ரம் விஞ்ஞாயயோ நரோ மாமபீப்சதி -பாஹுப்யாம் சாகரம் தர்த்தும் லப்த்வாப்லம் இச்சதி –
தஸ்மாத் யோ மாம பீப்சேதயோ வா ஸூகிதும் இச்சதி -மந்த்ர ராஜமிம் வித்யாத் குரோர் வசன பூர்வகம் -என்றும்

மா மேகஞ்ச ஸ்ரீ யா யுக்தம் பக்தி யுக்தோ ந ரோத்தம -த்வயே ந மந்த்ராத்நேந மத பிரியேண பஜேத் சதா –
அசிரான் மத ப்ரஸாதேந மல்லோகஞ்ச கச்சதி –
துர்வ்ருத்தோ வா ஸூ வ்ருத்தோவா மூர்க்க பண்டித ஏவ வா -லஷ்மீஞ்ச மாம் ஸூரேசஞ்ச த்வயே ந சரணம் கத –
மல்லோக மசிரால லப்த்வா மத் சாயுஜ்யம் ச கச்சதி -என்று பல இடங்களிலும் ப்ரஹ்மாதிகளுக்கும்

த்வய வக்தாத்வம் -என்று ஸ்ரீ பாஷ்யகாரரும்
த்வயம் அர்த்த அனுசந்தானேந ஸஹச தைவம் வக்தா -ஸ்ரீ சரண்யன் தானேயும் அருளிச் செய்கையாலும்

ஸ்ருதி ஸித்தமுமாய் சரண்ய அபிமதமுமாய் இருந்ததே யாகிலும் ஆச்சார்ய பாரம்பர்யைக்கு எல்லை நிலமாய் இருந்துள்ள
நித்ய அநபாயினியான பிராட்டி
வேதாம் ருதமஹாம் போதேர் ஹரிணா த்வயமுத்த்ருதம்-தத் த்வயம் ச்ருணு வஷ்யாமி சத்யோ முக்தி ப்ரதம் ஸூபம் -என்று
தொடங்கி ப்ரஹ்மாதிகளுக்கு ஆதரித்து உபதேசிக்கையாலும்

ப்ரபந்ந ஜட கூடஸ்த பராங்குசாக்ய பரமாச்சார்யரும் -மயர்வற மதி நலம் அருளினன் -என்று தாமும் அனுசந்தித்து
திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி –
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே-என்றும் ஸங்க்ரஹேண பிறருக்கும் உபதேசித்து
இம்மந்த்ர யுக்தமான புருஷகார பூத ஸ்ரீ லஷ்மீ சம்பந்த ப்ரப்ருதி கைங்கர்ய விரோதி நிவ்ருத்தி பிரார்த்தனா பர்யந்தமான
அர்த்த விசேஷங்களை ச கிரமமாக
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மானே நோக்கி மடவாளை மார்வில் கொண்ட மாதவா
மலராள் மைந்தன்
திரு மகளார் தனிக்கேள்வன்
திருவின் மணாளன்
பூ மகளார் தனிக்கேள்வன் -என்று இத்யாதிகளால்-புருஷகாரமான ஸ்ரீ சம்பந்தத்தையும்

எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் -என்று ஸமஸ்த கல்யாண குணாத்மகத்வத்தையும்
எம்பிரான் எம்மான் நாராயணனாலே -என்றும் -நல்கித்தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே -என்று வாத்சல்யத்தையும்
ஞான மூர்த்தி நாராயணா -என்று சர்வஞ்ஞத்தையும்
திண்ணம் நாரணம் -என்று சர்வ சக்தித்வத்தையும்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் -என்று கிருபா வத்தையும்-சொல்லி
ஆக இப்படி ஆஸ்ரயண உபயோகியாயும் கார்ய உபயோகியாயும் உள்ள குண வைச்சிஷ்ட்டியையும்

ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட
நம்பெருமான் அடி மேல் சேமங்கொள்
கண்ணனைத் தாள் பற்றி
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாள்தோறும் ஏக சிந்தையனாய் –இத்யாதிகளால்
ஸூபாஸ்ராய திவ்ய மங்கள விக்ரஹ யோகத்தையும் -தத் உபாய ஸ்வீ காரத்தையும்

எழில் மலர் மாதரும் தானும் இவ் வேழு உலகும் இன்பம் பயக்க
திரு மா மகள் இருந்து தாம் மலிந்து இருந்து வாழ்
கோலத்திரு மா மகளோடு உன்னை
அடிமை செய்வார் திருமாலுக்கே–இத்யாதிகளால் கைங்கர்ய பிரதி சம்பந்தியையும்

கொடியேன் பருகு இன்னமுதே
திருமாலின் சீர் இறப்பு எதிர்காலம் பருகிலும் ஆர்வனோ
அடியனேன் பெரிய அம்மானே
விண்ணவர் கோன் நங்கள் கோன்
நிறை மூ உலகுக்கும் நாயகன் -என்று கைங்கர்ய ஆஸ்ரய வஸ்துவையும்

நின் கோயில் சீய்த்து
முகப்பே கூவிப் பணி கொள்ளாய்
கொடுவினையேனும் பிடிக்க நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாய்
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்–இத்யாதிகளால் கைங்கர்யத்தையும்

விண்டே ஒழிந்த வினையாய எல்லாம்
அமரா வினைகளே
நின்னால் அல்லால் -இத்யாதிகளால் கைங்கர்ய விரோதி நிரசனத்தையும் சொல்லி
ஆக இப்படி அநேக ஸ்ரீ ஸூக்திகளாலே பிரதிபாதிக்கையாலும்

ஸ்ரீ பெரிய முதலியாரும்
ந தர்ம நிஷ்டோஸ்மி –அகிஞ்சனோ அநந்ய கதி –த்வத் பாத மூலம் சரணம் பிரபத்யே –
க்ருபயா கேவலம் ஆத்மசாத்குரு–இத்யாதிகளால் இம் மந்த்ரத்தை அனுசந்திக்கையாலும்

ஸ்ரீ பாஷ்யகாரரும்
அநந்ய சரணஸ் சரணமஹம் பிரபத்யே
அநந்ய சரணஸ் த்வத் பாதாரவிந்த யுகளம் சரணமஹம் பிரபத்யே
ஸ்ரீ மன் நாராயண தவ சரணார விந்த யுகளம் சரணமஹம் பிரபத்யே
நித்ய கிங்கரோ பவாநி –இத்யாதிகளால் இம்மந்திரத்தை அனுசந்திக்கையாலும்
சரண்ய அந்தர் கத ஞானி பரிக்ரஹம் இதுக்கு அதிசயித்து இருக்குமே –

அதுக்கு மேலே இது தான்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் என்கையாலே சர்வாதிகாரமுமாய்
ஸக்ருத் ஸ்ம்ருதோபி கோவிந்தோ ந்ருணாம் ஜென்ம சதைஸ்சிதம் -பாபராசி மத ஹதயாஸூ தூலாராசி மிவா நல-என்றும்
ஸக்ருத் உச்சாரிதே நைவ க்ருதக்ருதயோ பவிஷ்யதி -என்றும்
சக்ருதேவ ப்ரபந்நாய–இத்யாதிகளால் ஸக்ருத் அனுஷ்ட்டேயமுமாய்
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல் தீது ஒன்றும் அடையாவே ஏதம் சாரா –என்கையாலே
புத்தி பூர்வ அநிஷ்ட பரிஹாரமுமாய் இருக்கும்

ஸாத்ய பக்திஸ்து சாஹந்த்ரீ ப்ராரப்தஸ் யாபி பூயஸீ -என்றும்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் -என்றும் சொல்லுகையாலும் ஆத்ம பரமாத்மாக்களுடைய
அத்யந்த பாரதந்தர்ய நிரங்குச ஸ்வா தந்தர்யங்களாலும் இருவருக்கும் கர்ம பாரதந்தர்யமும் கர்தவ்ய அம்சமும் இல்லாமையாலும் –
சர்வ பாப விமோசகன் ஆகையால் -கர்ம அவசானத்தில் அன்றிக்கே சரீர அவசானத்திலே பலமாகக் கடவது

தஸ்யாதாவதே வசிரம் யாவந் ந விமோஷ்யே அத சம்பத்ஸ்யே -என்கிற சாதாரண விசேஷம்
சாதனத்வய கதபி சித்த சாத்யங்களாலே சரீர மோக்ஷமும் கர்ம மோக்ஷமுமாகக் கடவது
சரீர மோக்ஷ பர்யந்தமான விளம்பமும் தத் காலீந துக்க அனுபவமும் பிரபத்தவ்யனான ஈஸ்வரன் இவன் பக்கலிலே
சபலனுமாய் ஹித காமனுமாய் இருக்கையாலே இவனுக்கு தீவிர வேக பிரதானம் பண்ணாமையாலும்
தத் அனுரூப கர்ம சம்பந்த அனுமதி பண்ணி இருக்கையாலுமாகக் கடவது

இவ்வாதிக்யங்கள் எல்லா வற்றிலும் காட்டிலும்
தர்மஞ்ஞ சமய பிரமாணம்
யதாதே தேஷு வர்த்தோன் ததா தேஷு வர்த்தேதா-இத்யாதிகளால் பிராமாணிக பரிக்ரஹமே பிரபலம் என்கையாலே
தத் ஞாபன அர்த்தமாகவும் –
சாதன சாத்யங்களில் ருசி விஸ்வாசங்களுக்காகவும் பூர்வாச்சார்ய வசனங்கள் அனுசந்தேயங்கள் –அவை எவை என்னில்

ஸ்ரீ பட்டர் பாதிரிக் குடியிலே எழுந்து அருளினை போது மறவன் -முயல் குட்டியைப் பிடித்தேன் –
அதன் தாய் முன்னே வந்து தண்டன் இட்டவாறே விட்டுப் போந்தேன் -என்ன
முயலுக்கு சரணாகதியே ரஷகம் என்று உபதேசித்தார் இல்லை
அரி ப்ராணான் பரித்யஜ்ய ரஷி தவ்ய -என்கிற ஞானம் வேடனுக்கு இல்லை
இப்படி இருக்க பிரபத்தி வைபவம் இருந்தபடி என் என்று ஸ்ரீ பட்டர் விஸ்மிதரானார் என்கிற வார்த்தையும்

இவன் அகத்தினிலே ஒதுங்கினோம் என்று இறே நம்மை இவன் உபசரித்தது –
பரமசேதனன் தான் அபிமானித்து இருக்கிற திவ்ய தேசங்களில் வர்த்திக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் அளவிலே
என் நினைத்து இருக்கிறானோ என்று விஸ்மிதரானார் என்கிற வார்த்தையும்

ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ஜீயர் மடியிலே கண் வளர இரா முடியத் தொடை மாறத் தேடுதல் தூங்குதல் செய்யாதே
ஸர்வதா ஸ்தானராய் இருக்க -நீர் இப்படி எனக்கு பரிவராய் இருக்கைக்கு அடி நான் சொன்ன
ஸ்ரீ த்வயத்தை விஸ்வசித்த கனம் இறே என்று அருளிச் செய்த வார்த்தையும்

ஸ்ரீ பட்டர் ஸ்ரீ எம்பார் ஸ்ரீ பாதத்தில் ரஹஸ்யம் கேட்டு இருக்கச் செய்தேயும் இவர் பதஸ்தராகிற போது
ஸ்ரீ பாஷ்யகாரர் இவர் கையிலே புஸ்தகத்தைக் கொடுத்து ஸ்ரீ த்வயத்தை அருளிச் செய்து
ஸ்ரீ பெருமாள் திருக்கையிலே காட்டிக் கொடுத்தார் என்கிற வார்த்தையும்

ஸ்ரீ சிறியாத்தான் ஸ்ரீ எம்பார் ஸ்ரீ பாதத்தில் தண்டன் இட்டு எனக்குப் பிரியமாகவும் ஹிதமாகவும் திரு உள்ளத்தில்
அறுதி இட்டு இருக்கும் அர்த்தத்தை அருளிச் செய்ய வேணும் என்ன
ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ பாதமே -ஸ்ரீ த்வயத்தில் அறுதி இட்டு இருக்கும் அர்த்தத்துக்கும் மேற்பட்ட
ஸ்ரேஷ்டமாய் இருப்பது ஓன்று இல்லை -இத்தை விஸ்வசித்து இரும் என்று அருளிச் செய்த வார்த்தையும்

அநாதி காலம் ஸ்ரீ எம்பெருமானோட்டை சம்பந்தத்தை இல்லை செய்து திரிகிற சேதனரை அவன் திருவடிகளில்
பிணைக்கைக்கு பற்றாசு ஸ்ரீ பிராட்டி உளள் என்று நிர்ப்பரனாய் இரு என்று ஸ்ரீ சிறியாத்தானுக்கு அருளிச் செய்த வார்த்தையும்

ஸ்ரீ பெற்றி ஸ்ரீ பாதத்தில் ஸ்ரீ த்வயம் ஸ்ரவணம் பண்ணின ஸ்ரீ கொற்றி யம்மைப்பிராட்டி
ஸ்ரீ திரு மந்த்ரத்தை அருளிச் செய்ய வேணும் என்ன
அதுவும் ஸ்ரீ த்வயத்துக்கு உள்ளே உண்டு காண்-அது கொண்டு கொள்ளும் காரியத்தையும்
ஸ்ரீ த்வயத்தைக் கொண்டு கொள்ளாய் என்று அருளிச் செய்த வார்த்தையும்

ஸ்ரீ வீராணத்து அருளாளப் பெருமாளுக்கு ஸ்ரீ த்வயம் அருளிச் செய்யும் போது ஸ்ரீ பிள்ளையைப் பார்த்து
என்னை ஒழியப் புறம்பே போமாகில் செய்தென் –
நான் சொல்லும்போது நான் விசுவாசித்து இருக்கும் அத்தையே சொல்ல வேணும் என்று அருளிச் செய்த வார்த்தையும்

ஸ்ரீ பெரிய கோயில் நாராயணன் மகன் ஏகாய நரோடே இருக்கக் கண்டு ஸ்ரீ பாஷ்யகாரர் அவனை அழைத்து
ஸ்ரீ பெருமாள் திரு முன்பே கொண்டு புக்கு
ஸ்ரீ த்வயம் ஒழியத் தஞ்சம் இல்லை -அத்தை விஸ்வசித்து இரு என்று ஸ்ரீ சடகோபனை எடுத்துச் சூழ்த்துக் கொடுத்த வார்த்தையும்

ஸ்ரீ பாஷ்யகாரரை பிரிந்து திருமேனி வெளுத்து ஸ்ரீ திரு நாராயண புறத்திலே எழுந்து அருளினை ஸ்ரீ அம்மங்கி அம்மாளுக்கு
என்னைப் பிரிந்து கிலேசித்த உனக்கு முன்பு சொன்ன த்வயம் ஒழியக் கண்டிலேன் என்று ஒரு த்வயத்தை அருளிச் செய்தார் என்ற வார்த்தையும்

ஸ்ரீ ஆழ்வான் திரு நாட்டுக்கு எழுந்து அருளப் புறவீடு விட்டு இருக்கிற தசையில் ஸ்ரீ ஆழ்வானுக்கு கற்பூர நிகரத்தை
வாயில் இட்டால் போலே இருக்கும் காணுங்கோள்என்று அவருக்கு ஸ்ரீ த்வயத்தை அருளிச் செய்தார் என்கிற வார்த்தையும்

ஸ்ரீ எம்பெருமானார் அந்திம தசையில் சேவித்து இருந்த ஸ்ரீ முதலிகளுக்கு ஸ்ரீ த்வயம் ஒழியத் தஞ்சம் இல்லை என்று
இருங்கோள் என்று அருளிச் செய்த வார்த்தையும்

ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்ரீ நஞ்சீயரைப் பார்த்து ஸ்ரீ திருமந்த்ரத்திலே பிறந்து ஸ்ரீ த்வயத்திலே வாழ்ந்து
ஸ்ரீ த்வய ஏக சரணனாவாய் என்று வாழ்த்தினார் என்கிற வார்த்தையும்
இவை முதலான இவ்வாச்சார்யர்களுடைய வசனங்கள் அடைய ருசி விஸ்வாசங்களுக்காக இவ்விடத்தில் அநுசந்தேயங்கள்

இப்படி ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமான ஸ்ரீ த்வயம்
அநந்ய சாதனனாய் -அநந்ய பிரயோஜனனான முமுஷுவுக்கு அனுசந்தேயமான அர்த்த விசேஷங்களை பிரகாசிப்பிக்கிற ஸ்ரீ ரஹஸ்ய த்ரயத்தில்
ஸ்ரீ திரு மந்திரத்தில் மத்யம பத யுக்தமான ஆத்ம பாரதந்தர்யத்தாலும்
ஸ்ரீ சரம ஸ்லோகத்தில் அஹம் பத யுக்தமான ஈஸ்வர ஸ்வா தந்தர்யத்தாலும் தோன்றின உபாய விசேஷத்தையும்
அவற்றில் சதுர்த்தியாலும் உத்தமனாலும் தோன்றின உபேய விசேஷத்தையும்
இதில் பிரதம பத யுக்தமான ஸ்ரீ சம்பந்தத்தால் வந்த ஆஸ்ரித பாரதந்தர்யத்தை முன்னிட்டுக் கொண்டு
ஸ்வீ கரித்து பிரார்த்திகையாலே அவற்றில் காட்டில் இது அதிகமாய் இருக்கும்

ஆகை இறே -சம்சார ஆர்ணவ மக்நாநாம் சத்யஸ் சம்சார தாரணம் -த்வயமே சந்து விப்ரேந்தர நாஸ்த்யஸ்ய சத்ருசம் புவி -என்றதும்
த்வயே ந மந்த்ர ரத்னேந –
மந்த்ர ரத்ன த்வயம் ப்ரஹ்மன் ச்ருணு வஹ்யாமி ஸூ விரத-என்பதுவும்

இத்துவயத்துக்கு அதிகாரி
பிரணவத்தில் பிரதம பதத்தில் தாது பிரத்யயங்களால் தோன்றின ரக்ஷகத்வ சேஷித்வங்களை
அதில் சரம பதத்தில் தாது அர்த்தத்தாலே தோற்றின ஞானத்தால் தெளிந்து தேறி
தத் பத யுக்த ஆனந்த ராகாரமான ஆனந்தத்தில் நிலை நின்றவன் ஆகையால்
இப்படிப்பட்ட சேதனன் துர்லபானாகையாலே நம் பூர்வாச்சார்யர்கள் இத்தை ரஹஸ்யமாக உபதேசித்துப் போருவார்கள்-

ஆகையால் தாது வர்த்த வீசதீ காரமான நமஸ் சப்தார்த்த ஞான காரியமான உபாய வர்ணத்தையும்
ப்ரத்யய அர்த்த பிரதி சம்பந்தி பூத மகார அர்த்த விசதீ காரமான சதுர்த்தி அர்த்த ஞான கார்யமான உபேய பிரார்த்தனையையும்
வாக்ய த்வயத்தாலும் சொல்லுகிறது ஆகையால் இம்மந்திரம் சர்வாதிகமாய் இருக்குமா போலே
தன்னிஷ்டனான இவ்வதிகாரியும் சாத்யாந்தரத்திலும் சாதனாந்தரத்திலும் நிஷ்டரானவர்களில் அத்யந்தம் அதிகனாய் இருக்கும்

மூர்க்கோ வா பண்டிதோ வாபி ஸூத்தோ வாப்ய ஸூசிஸ் சதா -தஸ்மிந் த்வயே யதி ஸ்ரத்தாச பூஜ்யோ பவதி த்ருவம்-
ஸ்ருதவாந் வாகுலீநோவா தபஸ்வீ வா பராசர -த்வய அதிகாரீநோ சேத்தம் தூரத பரிவர்ஜயேத் -என்று
அந்ய நிஷேத பூர்வகமாக தத் அதிகாரி யானவன் பூஜ்யன் என்று சொல்லா நின்றது இறே

சரணம் இத்யபி வாசமுதைரயம்
குரு பரம் தவ ரங்க துரந்தர
மாதவன் என்றதே கொண்டு தீதவம் கெடுக்கும்
மாதவன் என்று என்றே ஓத வல்லீரேல் -என்று சொல்லுகையாலும்
சர்வ குஹ்யதமம் பூயஸ் ஸ்ருணுமே
குஹ்யா நாம் குஹ்யம் -என்றும் சொல்லுகையாலும் நம் பூர்வாச்சார்யர்கள் மற்ற ரஹஸ்ய த்வயத்திலும்
அர்த்த மாத்ரத்தை மறைத்துப் போருவர்கள்-
இதில் சப்தங்கள் அர்த்தங்கள் இரண்டையும் மறைத்துப் போருவர்கள்

இங்கு இப்பரிசு உரைப்பார் –திருவருள் பெற்று இன்புறுவர் -என்கிறபடியே
நம்மைப் பாராதே முன்பு சொன்னவர்களை பார்த்து இரங்கும்படி பண்ணும்
இஸ் சப்த விசேஷத்தாலே இவ்வர்த்தத்தை அனுசந்தித்தால் இறே கார்யகரமாவது
இம்மந்திர நிஷ்டையை ஒழிய ஈஸ்வரனை லபிக்கத் தேடுகை மூர்க்க க்ருத்யம் -ஸ்வ நாசத்தோடே போம் –
பல அலாப மாத்ரமாய் விடும் என்னும் இடம் -ஏதந் மந்த்ரம் விஞ்ஞாய யோ நரோ மாமபீப்சதி-பாஹுப் யாப சாகரம் தர்த்தும்
லப்த்வாப்லவமிச்சத்தி -என்கிற கிரந்தத்தால் சொல்லிற்று

பொய்யே கைம்மை சொல்லி -மெய்யே பெற்று ஒழிந்தேன் விதி வாய்க்கின்று
தேனே இன்னமுதே என்று என்றே சில கூற்றுச் சொல்ல தானேல் எம்பருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
மாயம் சொல்லி வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னைக் கண்டு கொண்டு ஒழிந்தேன் -என்கிறபடியே
உபாய பூதன் பக்கலிலே -கிருபையும் -பிராப்தியும் -ஓவ்தார்யமும் –
தன் பக்கலிலே ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களும் ஆர்த்தி அபி நிவேசங்களும் இறே இவ்வுபாயத்துக்கு அபேக்ஷிதம்
அல்லது ஆபி ஜாத்ய அநு கூல்யாதிகள் அன்றே

அபவித்ர பவித்ரோ வா சர்வா வஸ்தாங்கதோபி வா -த்வய ஸ்மரண மாத்ரேண ச பாஹ்யாப் யந்தரஸ் ஸூசி –
மூர்க்கோவா பண்டிதோவாபி நிந்திதோவாப்ய நிந்தித -த்வய உச்சாரண மாத்ரேண நர பூஜ்யோ ந சம்சய -என்னக் கடவது இறே

ஏழை ஏதலன்–இத்யாதியாலே அபிஜான வித்யா விருத்தங்களால் தண்ணியரான ஸ்ரீ குஹப்பெருமாள் விஷயமாக
அவை ஒன்றையும் பாராதே சரண்யரான பெருமாள் தாம்
உன் தோழி என்று புருஷகார சம்பந்தத்தையும்
உம்பி-என்று பாகவத அங்கீ காரத்தையும் உண்டாக்கி
தோழன் நீ எனக்கு -என்று தாமும் அங்கீ கரித்து
இங்கு ஒழி-என்று தாம் உகந்த கைங்கர்யத்தையும் கொண்டார் என்கையாலே
ஜென்ம விருத்தாதிகள் அப்ரயோஜம் -பகவத் கிருபையே பிரயோஜகம் என்னும் இடம் வியக்தம்

இம்மந்திரம் தான் வாக்ய த்வயத்தாலும் -சித்த உபாய விஷயமான ப்ரதி பத்தியையும்
தத் பலமான உபேய பிரார்த்தனையும் முக்கியமாக பிரதிபாதிக்கிறது

அதில் பூர்வ வாக்கியத்தில் சொல்லுகிற உபாய பிரதிபத்தி அநாதிகால ஆர்ஜிதமான அக்ருத்ய கரணாதிகளாலே தூஷித
அந்தக்கரணான இவனுக்குக் கூடாமையாலே அந்த தோஷ தர்சன பய நிவ்ருத்தி ஹேது பூதமான
புருஷகாரத்தைச் சொல்லுகிறது ஸ்ரீ மத் பதம் –
அந்த புருஷகாரத்தாலே உத் பூதங்களாய்- தத் உபாய ப்ரதிபாத்ய ஆஸ்ரய பூத சேதனனுடைய ச தோஷத்வ அப்ராப்தத்வ
நிகர்ஷாதிகளுக்கு நிவர்த்ததகமான வாத்சல்யாதி குண யோகத்தையும் –
பிரபத்தி அந்தர் கதமான விஸ்வாசத்துக்கு ஹேது பூதமான ஞான சக்த்யாதி குண யோகத்தையும்
ப்ரதிபாதிக்கிறது நாராயண பதம்
பிரபத்திக்கு விஷயமான உபாயத்துக்கு பிரதி சம்பந்தி ஸூல பனாக வேண்டுகையாலே –
அந்த ஸுலப்யத்தைச் சொல்லுகிறது சரணவ் -என்று –
பிரபத்தி விஷய பூதனான அவனுடைய உபாயத்தைச் சொல்லுகிறது சரணம் என்று –
ஆக பூர்வ வாக்யத்துக்கு முக்கியமாகச் சொல்லப்பட்ட உபாயத்வ பிரதிபத்திக்கு உப யுக்தங்களாகக் கிடக்கின்றன
இதிலே சொல்லுகிற புருஷகாராதிகள் –

உத்தர வாக்கியத்தில் சொல்லுகிற பிரார்த்தனைக்கு விஷயமான கைங்கர்யம் -மிதுன சேஷ பூதனான இவனுக்கு மிதுனம் விஷயம்
ஆனால் அல்லது பூர்ணம் ஆகாமையாலே தத் பூர்ண ஹேதுவான ஸ்ரீ யபதித்வத்தைச் சொல்லுகிறது -ஸ்ரீ மதே-என்று –
அந்தக் கைங்கர்யம் ஸ்வரூப அனுரூபமாக வேண்டுகையாலே தத் ஹேதுவான ஸ்வாமித்வத்தைச் சொல்லுகிறது நாராயண பதம்
அதில் ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி பிறந்தால் அல்லது சேஷ பூத ஸ்வரூபத்துக்கு அனுரூபம் ஆகாமையாலே
தந் நிவ்ருத்தியைப் பண்ணுகிறது நமஸ் சப்தம்
ஆக உத்தர வாக்யத்துக்கு முக்யமாகச் சொல்லுகிற கைங்கர்ய பிரார்த்தனைக்கு உப யுக்தங்களாகக் கிடக்கிறது
இதில் சொல்லுகிற ஸ்ரீ சம்பந்தாதிகள்

ஆக இப்படி வாக்ய த்வயத்தாலும் ப்ராப்ய ப்ராபகங்களைச் சொல்லுகையாலே இதுக்கு வாக்யார்த்தம்
ப்ராப்ய ப்ராபக ஸ்வரூப நிரூபணமாகக் கடவது –
இது தான் பூர்வாச்சார்ய ருசி பரிக்ருஹீதம் ஆகையால் சகல ஸாஸ்த்ர ஸங்க்ரஹ மந்த்ர ஸித்தமான உபாய உபேயங்கள்
சிஷ்டாசார சித்தம் என்கை -இதுக்குத் தாத்பர்ய அர்த்தமாகக் கடவது
இதில் வாக்ய த்வயத்திலும் சொன்ன உபாய உபேய பிரதிபத்தி பிரார்த்தனைகள் –
பூர்வ அபராத பய நிவ்ருத்தி ஹேது பூத புருஷகார வியதிரேகணவும்-
கைங்கர்ய பிரதி சம்பந்த பூர்த்தி ஹேது பூத ஸ்ரீ லஷ்மீ சம்பந்த வியதிரேகணவும்-உதியாமையாலே
இவ் வாக்ய த்வயத்துக்கும் பிரதான அர்த்தம்
புருஷகார பராதாநயமும் மிதுன கைங்கர்ய ப்ராதான்யமுமாகக் கடவது

இப்பிரதிபத்தி -அபராதாநாம் ஆலயத்வாதி தோஷ அனுசந்தான பூர்வகமாய் இருக்கையாலும்
அனுபவ அலாபத்துக்கும்-அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்ய அலாபத்துக்கும் ஹேது
மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித்
மத் பாபமேவாத்ர நிமித்த மாஸீத்
என் பிழையே நினைந்து அருளி –இத்யாதிகளாலே ஸ்வ தோஷமாகச் சொல்லுகையாலே
இந்த பிரார்த்தனையும் ஸ்வ தோஷ அனுசந்தான பூர்வகமாய் இருக்கையாலும் அனுசந்தான அர்த்தம் ஸ்வ தோஷமாகக் கடவது

அதில் பூர்வ வாக்கியம் புருஷகார பிரதானம் ஆகையால் இதில் சொல்லுகிற அர்த்த விசேஷங்களை அனுசந்திக்க
ஸ்வ அபராத நிபந்தன பீதி நிவ்ருத்தியாம் –
உத்தர வாக்கியம் மிதுன கைங்கர்ய பிரார்த்தனா பிரதானம் ஆகையால் இதில் சொல்லுகிற அர்த்த விசேஷங்களை
அனுசந்திக்க ஸ்வரூப அனுரூப பல அலாப நிபந்தன பீதி நிவ்ருத்தியாம்
பூர்வ வாக்ய அனுசந்தானத்தாலே பகவத் கிருபா விஷயத்வ சித்தி –
உத்தர வாக்ய அனுசந்தானத்தாலே பகவத் ப்ரீதி விஷயத்வ சித்தி -என்று ஸ்ரீ ஆச்சான் பிள்ளை வார்த்தை –

பூர்வ வாக்ய யுக்த தத் ஏக உபாயத்வ பிரதிபத்தி இல்லாத போது அசித் வ்யாவ்ருத்தி இல்லை
தத் கைங்கர்ய பிரார்த்தனை இல்லாத போது ஈஸ்வர வ்யாவ்ருத்தி இல்லை
நான் அடியேன்
அடியேன் நான் -என்கிற உபய வ்யாவ்ருத்தியும் சித்திக்கும் போதைக்கு உபய வாக்ய அனுசந்தானமும் வேணும்
ஆக இதில் வாக்யார்த்தமும்
தாத்பர்ய அர்த்தமும்
பிரதான அர்த்தமும்
அனுசந்தான பிரயோஜனமும் –சொல்லிற்று ஆயிற்று –

ஆக இப்படி ப்ராப்ய பிராபகங்களுக்கு ப்ரதிபாதகமாய்
சர்வாதிகாரமாய்
ஸக்ருத் அநுஷ்டேயமாய்
பரம ரஹஸ்யமாய்
மந்த்ர நிஷ்டருடைய அனுஷ்டானம் ஆகையால் மந்த்ர அர்த்தத்துக்கு சிஷ்டாசார த்வாரா ப்ரமாணமாய்
ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமாய் –
வாக்ய த்வயாத்மகமாய் இருந்துள்ள ஸ்ரீ த்வயம் -பஞ்ச விம்சத் அக்ஷரமாய் -ஷட் பதமாய் –
1-புருஷகாரம்
2-நித்ய யோகம்
3-தத் உத் பூதங்களாய் ஆஸ்ரயண உபயோகியான வாத்சல்யாதி குணங்கள்
4-உபாய உப யோகியான ஞான சக்த்யாதி குணங்கள்
5-ஸூபாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹம்
6-தத் உபாயத்வம்
7-தத் விஷய பிரதிபத்தி
8-உபாய பல கைங்கர்ய பிரதிசம்பந்தி பூர்த்தி
9-பிரதி சம்பந்தி கைங்கர்ய பிரார்த்தனை
10-தத் விரோதி நிவ்ருத்தி -ஆகிய பத்து அர்த்தத்தையும் சொல்லக் கடவதாய் இருக்கும்

அதில் பூர்வ வாக்கியம் பத த்ரயாத்மகமாய் –
ச ப்ராதுஸ் சரணவ் காடம் நிபீட்ய ரகுநந்தன–என்கிற உபாய வரணத்தையும்
தத் பிரதி சம்பந்தியான திருவடிகளையும்
ததேகாந்தமானந் குண விசேஷங்களையும்
தத் உத்பாதகத்வ புருஷகாரத்தையும் சொல்லுகிறது

உத்தர வாக்கியம் பத த்ரயாத்மகமாய்
பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரி சாநுஷூரம்ஸ்யதே -அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று
புருஷகாரமும் -உபாயமுமான இருவருடையவும் சேர்த்தியிலே
சஹஜ சார்வ காலீந கைங்கர்ய ரூபமான உபேயத்தை அபேக்ஷிக்கிறது

ப்ரபத்யே என்று ஸ்வ அனுஷ்டானம் ஆகையால் பல ஹேது பூத அனுஷ்டான வாக்யம் முற்பட்டது
பிராப்தி வேளையில் இறே பலம் முற்பட வேண்டுவது –
அனுஷ்டான தசையில் சாதனம் இறே முற்பட வேண்டுவது
அதில் பிரதம பதம்
உபாய ஸ்வீ காரத்துக்கு ஏகாந்தமான குண விக்ரஹ விஸிஷ்ட வஸ்துவினுடைய புருஷகார சம்பந்தத்தைச் சொல்லுகிறது –
அதில் பிரதம அபேக்ஷிதமான புருஷகாரத்தையும் நித்ய யோகத்தையும் சொல்லுகிறது ஸ்ரீ மன் -என்று

அதில் ஸ்ரீ பதம் புருஷகார உபயோகி ஸ்வ பாவ விசேஷ உபேதையாய் இருந்துள்ள ஸ்ரீ க்குத் திரு நாமமாய்க் கொண்டு
ஸ்ரீஞ் சேவாயாம் -என்கிற தாதுவிலே முடிகையாலே ஆஸ்ரயத்வ விஷயத்வங்களைக் காட்டுகிறது
ஏக ஆஸ்ரயத்தில் உபயமும் கூடுமோ என்னில் கர்த்த்ரு பேதமும் விஷய பேதமும் உண்டாகையாலே கூடும் –
அந்த பேதங்களைச் சொல்லுகிறது –
ஸ்ரியத இதி ஸ்ரீ -என்கிற கர்மணி வ்யுத்பத்தியும்
ஸ்ரயத இதி ஸ்ரீ என்கிற கர்த்தரி வ்யுத்பத்தியும் -எங்கனே என்னில்

ஸ் ரீயதே -என்கிற கர்மணி வ்யுத்பத்தியாலே ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த ஆத்ம வர்க்கத்தாலும்
தம் தாமுடைய ஸ்வரூப ஸ்தித் யாதிகளுக்காக ஆஸ்ரயணீயையாய்க் கொண்டு
நங்கள் திரு -என்னும்படி இவர்களுடைய உபாய உபேய அத்யாவசாயங்கள் ஆகிற சம்பந்தங்களுக்கு
அஸ்து தே ததைவ சர்வம் சம்பத்ஸ்யதே -என்கிறபடியே அபி விருத்தியைப் பண்ணா நின்று கொண்டு ஆஸ்ரயணீயையாகவும்
ஸ் ரயதே -என்கிற கர்த்த்ரி வ்யுத்பத்தியாலே –
தன்னாகத் திரு மங்கை தங்கிய -என்கிறபடியே தன் ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ரூப சத்தா ஸித்திக்காக சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து
உன் திரு
விஷ்ணோஸ் ஸ்ரீ -என்னும்படி அவனுக்கு சம்பத் ரூபையாய்க் கொண்டு ஆஸ்ரிகை யாகவும்
இவளுக்கு வஸ்துத்வ நாம பாக்த்வங்களும் ஸ்திதி பிரவ்ருத்திகளும் அவன் அதீனம் என்கையாலே
இவள் புருஷகார நிரபேஷமாக ஆஸ்ரயனீயையுமாய் ஆஸ்ரிதை யாயும் இருக்கும் என்று
உபய அனுபந்தியான ஸ்வத் ஸ்வாமிநீத்வங்களைச் சொல்லுகிறது

அதவா
ஈஸ்வரன் பரம பிரணயி யாகையாலே அந்த பிரணயித்வம் அடியாக ஸ்வ வைஸ்வரூப யாதிகளாலே
சர்வ காலமும் அனுபவியா நின்றாலும் அபூர்வவத் விஸ்மய ஜனகமான வை லக்ஷண்யத்தையும் யுடையளாய் இருக்கிற இவளை
க்ஷண கால விஸ்லேஷ அசஹனாய்க் கொண்டு சேவித்து இருக்கையாலே
ஸ்வ வியதிரிக்த சமஸ்தராலும் ஸ்வரூபதோ குண தஸ்ச ஸேவ்யமாய் இருக்கும் என்னவுமாம்

கீழே சொன்ன ஸ்வத்வ ஸ்வாமிநீத்வங்கள் ஆகிற இரண்டு சம்பந்தமும் இல்லாத போது
ஆஸ்ரயிக்கிற சேதனருடைய அபேஷா சித்தி ஹேதுவாய் இருந்துள்ள புருஷகாரத்வம் கடியாது –
ஆகையால் ஆகந்துகம் இன்றியிலே இவள் ஸ்வரூபத்துக்கு நிரூபகமாய் இருந்துள்ள உபய சம்பந்தத்தையும்
தர்மி க்ராஹமான ஸ்ரீ சப்தத்தில் வ்யுத்பத்தி த்வயத்தாலும் சொல்லிற்று ஆயிற்று

இந்த சம்பந்த த்வயத்தையும்
ஈஸ்வரீம் சர்வ பூதாநாம்
அஸ்யே சாநா ஜகதோ விஷ்ணு பத்னீ
ஹ்ரீஸ் சதே லஷ்மீஸ் ச பத்த்ந்யவ்-இத்யாதிகளாலே ஸ்ருதியும் தானே சொல்லிற்று –

யஸ்யா கடாக்ஷணம் அநு க்ஷணம் ஈஸ்வராணாம் ஐஸ்வர்ய ஹேதுரிதி ஸார்வ ஜனீனி மேதத் –
தாம சரீரி தித்வதுப ஸமஸ்ரயணாந நிராஹு த்வாமஹி ஸ்ரீ யஸ் ஸ்ரீ யம் உதாஹுருகாரவாச -என்றும்
யஸ்யா வீஷ்ய முகமதத் இங்கித பராதீனோ விதத்தேகிலம் -என்றும் இத்யாதிகளாலே
சர்வ பிராணிகளுக்கும் உண்டான ஸ்புரத்தை எல்லாம் இவளுடைய கடாக்ஷ அதீனம் என்றும்
இப்படிக்கு ஒத்த இவளுடைய சத்தை பகவத் ஸமாஸ்ரயணத்தாலேயாய் இருக்கும் என்றும்
வ்யுத்பத்தி ஸித்தமான உபய சம்பந்தத்தையும் அபி யுக்தர் அருளிச் செய்தார்கள் –

த்வம் மாதா சர்வ லோகாநாம் தேவ தேவோ ஹரி பிதா
தேவ தேவ திவ்ய மஹிஷீம்
அகில ஜெகன் மாதரம் -என்னக் கடவது இறே –

இந்த சம்பந்த த்வயத்துக்கு உண்டான பிரயோஜக விஷயத்தைச் சொல்லுகிறது
ஸ்ருணோதி -ஸ்ராவயதி -என்கிற நிருத்தம்-அதாவது
ஆச்சார்ய உபதேசத்தால் ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்களையும் -தத் அநு ரூபமாய் நிரதிசய ஆனந்தமாய் இருந்துள்ள
புருஷார்த்தத்தையும் யாதாவாக அறிந்து தத் பிரதிபடமான சம்சாரத்தினுடைய ஹேயத்வ துக்க ரூபத்வ ஞானத்தையும் உடையவன்
ஸ்வரூப பாரதந்தர்யத்தாலும் பகவத் ஸ்வா தந்தர்யத்தாலும் விரோதி பாஹுள்யத்தாலும் சாதனாந்தரங்களுக்கு ஆளாகாதே
ப்ராப்ய ருசி அதிசயத்தாலும் சம்சார பீதியாலும் ஆஸ்ரயண விமுகனாக மாட்டாதே கிங்கர்த்தவ்யதாகுலனாய் நிற்க

நிருபாதிக ஸூஹ்ருத்தாய் நிரவதிக க்ருபாவானாய் இருந்துள்ள ஈஸ்வரன் –
அந்தப்பிரவிஷ்டஸ் சாஸ்தா ஜெநா நாம் சர்வாத்மா
ஓர் உயிரேயோ யுலகங்கட்க்கு எல்லாம் -என்னும்படி சத்தா தாரகனாய்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் –அவையுள் தனி முதல் அம்மான்-என்று
கரண களேபரைர்க் கடயிதும் தயமானமநா -என்றும்
விசித்ரா தேஹ சம்பத்தி ரீஸ்வராய நிவேதிதும்-என்றும் -இவை புருஷார்த்த ஞானம் உண்டாய் -தரிக்கைக்காக கரணங்களைக் கொடுத்து
தத் ஸ்ருஷ்ட்வா தத் ஏவ அநு ப்ராவிசத் -தத் அநு பிரவிஸ்ய சச் சத் யச் சா பவத் -என்று அவற்றுக்கு ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி சக்தி
உண்டாகைக்காக அநு பிரவேசித்தும்
அவை ஸ்வ தேஹ போஷணாதி ப்ரவ்ருத்திகளுக்கு உறுப்பாகப் புக்கவாறே அவற்றை உபசம்ஹரித்தும் –
அவ்வளவிலும் நிராசனாய் விடாதே தெரியவும் ஸ்ருஷ்ட்டித்தும் இவற்றைப் பிரிய மாட்டாமையாலும்
இவை படுகிற வியசனத்தாலும் மிகவும் துக்கிதனாயும்-இப்படி

உபாதத்தே சத்தாஸ்திதி நியமநாத்யைஸ் சித் அசிதவ் ஸ்வ முத்திஸ்ய ஸ்ரீ மா நிதி வததிவா கௌபநிஷதீ -என்றும்
அடியான் இவன் என்று எனக்கு அருள் செய்யும் -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வதஸ் ஸித்தமான ஸ்வ ஸ்வாமி சம்பந்தமே ஹேதுவாக இவற்றினுடைய சத்தா பிரதாஸநாதியான ரக்ஷணங்களைப் பண்ணி
இவ்வர்த்தத்திலே சர்வரும் விஸ்வசிக்கும் படி உபநிஷத்தின் படியே எடுப்பான் வேத மயனான கொடியைக் கட்டி
எல்லை நடந்து காட்டி ஆஸ்ரித உஜ்ஜீவன உத்ஸூகனாய் இருக்க
இப்படி சர்வ பூத ஸூஹ்ருத்தான ஈஸ்வரனுடைய திரு உள்ளம் புண்படும்படி சேதனர்-
அதிக்ராமந் நாஜ்ஞாம் -என்றும்
புதவாச நோ ச -என்றும் சொல்லுகிறபடியே அநாதி காலம் புத்தி பூர்வகமாகவும் அபுத்தி பூர்வகமாகவும் த்ரிவித கரணங்களாலும்
அக்ருத்ய கரண க்ருத்ய அகரண பகவத் அபசார பாகவத அபசார அஸஹ்ய அபசாராதிகளைப் பண்ண
யத் ப்ரஹ்ம கல்ப நியதா நுபவேப்ய நாஸ்யம் -என்று அநேகம் ஆயிரம் ப்ரஹ்ம கல்பம் அனுபவியா நின்றாலும்
அளவுபட்டுத் தோற்றாத படி செய்கிற அபராத பரம்பரைகளை உணர்ந்து
ஷிபாம் யஜஸ்ரம்ஸூபாநா ஸூ ரீஷ்வே வயோநிஷு
ந ஷமாமி கதாசன
எரி பொங்கிக் காட்டும் அழல் விழித்தானே அவுணர்க்கு
சலம் புரிந்து அங்கு அருள் இல்லாத் தன்மையாளன் -என்னும்படி நிக்ரஹ விஷய பூதரான சேதனரை
ராஜாக்கள் முனிந்தவர்களை பாணர் புலையருக்கு கொடுக்குமா போலே
பிரணமந்தி தேவதா -என்று கும்பிட்டுக் கடக்க நிற்கிற யமாதிகள் கையிலே காட்டிக் கொடுத்து
ரௌரவாதி நரகங்களிலே தள்ளி அறுத்துத் தீற்றிப் போரா நிற்க

அவ்வளவில் நிவாரகர் இல்லாதபடி நிரங்குச ஸ்வ தந்திரனாய் இருக்கிற ஈஸ்வரனை ஆஸ்ரயிக்க என்பது ஓன்று இல்லை –
இனி பழைய நரகம் ஒழிய கதி இல்லை என்று தெகுடாடா நிற்கிற இச் சேதனர் பக்கல் அவன் திரு உள்ளத்தில் உண்டான
அழற்றியை ஆற்றி இவர்களை அவன் திருவடிகளில் பொகடுகைக்கு
இவர்களோடும் அவனோடும் மாத்ருத்வ மஹிஷீத்வ சம்பந்தத்தை உடையளாய்
பிரணிபாத ப்ரசன்னாஹி மைதிலீ ஜனகாத்மஜா -என்று பிரணிபாத மாத்திரத்திலே பிரச்சன்னையாம் என்று பிரசித்தையாய்
செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு -என்று தலை சீய்ப்பது
ஏஷ சர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹனூமதா -என்று சர்வ ஸ்வதானம் பண்ணுவதாம்படி
த்ருஷ்டா சீதா -என்று பெருமாளையும் உண்டாக்கி
க்ருஹீத்வா ப்ரேஷமாணா சா பர்த்து கர விபூஷணம் -பர்த்தாரம் இவ ஸம்ப்ராப்தா ஜானகீம் உதிதாபவத்-என்று
அக்கரையும் இக்கரையுமான இருப்புத் தோற்றாத படி பெருமாளோடே ஒரு படுக்கையிலே இருந்தால் போலே ப்ரீதையாம்படி
கைக்கண்ட அடையாளம் கொடுத்து ராம குணங்களால் தேற்றி அது பர்த்தாரம் இவ -என்று த்ருஷ்டாந்தமாகப் போகாமல்
இரண்டு தலைக்கும் உபகாரகனான திருவடிக்கு எத்தைச் செய்வுதோம் என்று தடுமாறுகிற அளவில்

அவன் -தேவர் அளவிலே தர்ஜன பர்த்சநாதிகளைப் பண்ணிப் போந்த இந்த ராக்ஷஸிகள் பாபைகள் வத்த்யர் –
இவர்களை எனக்கு ஒரு க்ஷண காலம் லீலைக்கு விஷயமாக்க வேணும் -என்ன
பாபாநாம் வா ஸூபா நாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம கார்யம் கருண மார்யேன் ந கச்சின் ந அபராத்யதி என்று
அவர்கள் தர்ஜன பர்த்ஸ்னாதிகளை பண்ணுகையாலே பாபர் ஆகிலுமாம்
ராஜசர்ச்ரய வஸ்யாநாம் குர்வந்திநாம் ததாஜ்ஞயா-என்று சோறு இட்டவன் சொன்னது செய்கையாலே ஸூபராகிலுமாம்-
உன் பக்ஷத்தாலே வாதார்ஹராகிலுமாம் -நல்ல மனிசரால் சர்வ விஷயமாக கிருபை பண்ணுகை காண் பிராப்தம் –
நிரூபித்தால் பெருமாள் விஜயத்தைச் சொல்லி மீண்டு போகாமல்
தாசீநாம் ராவணஸ்யாஹம் மர்ஷயா மீஹ துர்பலா -என்று பாதகரே யாகிலும் பிறர் கண் குழிவு காண்கைக்கு சக்தை அல்லாத
என் முன்பே பெருமாளுடைய நியோகமும் இன்றிக்கே இருக்க இவர்களை நலிய விசாரித்த நீ அன்றோ அபராதம் பண்ணினவன் என்று
பவனாத்மஜனோடே மறுதலித்து அவர்களை ரக்ஷிக்குமவளாய்
அவர்கள் தங்களுக்கும் -பவேயம் சரணம் ஹிவ-என்று அபய பிரதானம் பண்ணி –
அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோ பயாத்–என்று இப்பய நிமித்தமாக நம்மை ரஷிக்கைக்கு நம்மாலே
பர்த்சிதையான இவள் தானே அமையும்படி விஸ்வசிக்கும்படி இருக்குமவளாய்

ஜென்ம வ்ருத்த ஞானங்களால் குறைய நின்ற காக விபீஷண குஹ ஸூக்ரீவாதிகளும் இவளை முன்னிட்டு ஆஸ்ரயிக்கையாலே
தந்தாமுடைய அபீஷ்டம் பெற்று க்ருதார்த்தராம்படி காருண்ய வர்ஷத்தைச் சொரிகிற மழைக் கண் மடந்தையான இவளை ஒழிய
இல்லை என்று அறுதி இட்டு -சர்வ லோக சரண்யாய -ஏதத் விரதம் மம -என்று விருது பிடித்து விரதம் கொண்டு திரிகிறவர்
அசரண்யரான அன்றும் – அசரண்ய சரண்யாம் -என்று சரண்யையான இவளை ஒழியப் புகல் அன்று என்று புகுந்து
பூர்வ அபராதத்தாலே பகவத் ஸமாஸ்ரயணத்துக்கு அஞ்சி சம்சார தோஷத்தால் இங்குப் பொருத்தம் அற்று
ஸ்வரூப பாரதந்தர்யத்தாலே கத்யந்தர ரஹிதனாய் இருக்கிற என்னை அவன் திருவடிகளில் சேர்த்து ரஷிக்கை
தேவருக்கு பரம் என்று இவன் விண்ணப்பம் செய்யும் வார்த்தைகளைக் கேட்டு
மாதாவான தன் நிழலிலே இட்டு வைத்துக் கொண்டு

அனந்தரம் -ஸ்வ வைஸ்வ ரூப்யேண சதா அனுபூதயாப்ய பூர்வவத விஸ்மய மாததாநயா -என்றும்
போகாபாத்காத கேளீ சுளகித பகவத் வைஸ்வ ரூப்யானுபாவா-என்றும் சொல்லுகிறபடியே
சர்வஞ்ஞனாய்-சர்வ சக்தி உக்தனாய் இருக்கிற ஈஸ்வரன் தன்னுடைய பாரா வியூஹாதி சகல விக்ரஹங்களாலும்
வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை உடையாய்
என்னை உன் செய்கை நைவிக்கும்
பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில்
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் -என்று அதில் அபி மக்நரானவர்கள் ஈடுபடும் படியான
குண சேஷ்டிதங்களாலும் போக்யதையாலும் சர்வ காலமும் அனுபவியா நின்றாலும் அபூர்வமான ஆச்சார்யங்களை உடைத்தாய் –
விபுவான தன் ஸ்வரூபத்திலே ஏக தேசத்துக்குள்ளே அணுவான இவள் ஸ்வரூபம் இருக்குமா போலே
இவளுடைய லீலா ரூப விலாச வியாபாரங்களால் உண்டான போக்யதைக்கு உள்ளே மக்நனாய்

அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் -என்று இடைவிடாமல் ஆலிங்கனத்துக்கு மேற்பட்ட தர்மி இல்லை என்னும்படி
பண்ணக் கடவதான போக்யதாதிசயத்தாலும்
மலராள் தனத்துள்ளான்
அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் –
மலர் மங்கை மண நோக்கம் உண்டான் -என்று ஸ்வரூப சத்தா போகங்கள் எல்லாம் அவளிட்ட வழக்காய்
ஆலிங்கன அலாப விலோக நாத்யைர் விலாச பேதைர் விவிதைர் விலோப்ய-ஆஹ்லாத யந்தீ ப்ரிய மாஸ்ரிதா
நாமம் போருஹேரோஷம பாக ரோஷி -என்கிறபடியே
மதுரா மதுரா லாப
பண்ணை வென்ற இன் சொல் மங்கை
பண்ணுலாவு மென்மொழிப் படைத் தடம் கண்ணாள்
பான் மொழியாய் –என்னும்படியே இனிய பேச்சுக்களாலும்
வடிக்கோல வாள் நெடும் கண்களாலும் துவக்கிக் கொண்டு
திருமகட்கே தீர்ந்தவாறு -என்னும்படியே திரு உள்ளம் ஈடுபட்டு ஓடம் ஏற்றிக் கூவிக் கொள்ளும் போது ஆன அளவிலே

தன்னுடைய பூர்வ அபதாரத்தாலே நேர் கொடு நேரே உம்முடைய திரு முன்பே வர அஞ்சி உம்மை ஆஸ்ரயிக்கைக்கு
என்னைக் கால் கட்டுகிறான் ஒரு சேதனன்-கைக்கொண்டு அருளீர் -என்று தனக்கு
இவன் விண்ணப்பம் செய்யும் வார்த்தைகளையும் அவனைக் கேட்ப்பித்து
அவன் இவளுக்கு நியாய நிஷ்டூரமாகக் கண்ணழிவு சொல்லும் பூர்வ அபராத ரூப கர்மங்களுக்கும்
நீர் உம்முடைய ஆஸ்ரயணத்தில் அபிமுகரானவர்கள் விஷயத்தில் குற்றம் பார்த்தல் -சிறுமை பார்த்து உபேக்ஷித்தல் –
காட்டித் தருகிற என்னைப் பாராது ஒழிதல் செய்தீராகில் உம்முடைய வாத்சல்ய சீலாதிகள் உமக்கு இல்லையாய்–
பிரணயித்வத்துக்கு அசலாய் -உமக்கு தாத் வர்த்த சித்தியும் இன்றிக்கே -எனக்கு பிரகிருதி அர்த்த சித்தியும் இன்றியிலே –
அவர்களுக்கு பிரத்யய அர்த்த சித்தியும் இன்றியிலே
தாது ஷயத்தாலே போக ஷயம் பிறந்து
ரஷித்தும் ரஷிப்பித்தும் ரஷ்யமாயும் சித்திக்கக் கடவதான ஸ்வரூப சித்தியும் இன்றிக்கே
உமக்கும் அவர்களுக்கும் உண்டான ஒழிக்க ஒழியாத உறவுக்கும்
ஜகத் ரக்ஷண அர்த்தமாகப் பண்ணின ஸ்ருஷ்ட்டி அவதாராதிகளுக்கும் பிரயோஜனம் இன்றிக்கே
உம்முடைய ஞான சக்தி பூர்த்தி பிராப்திகளை ரக்ஷண உப யுக்தமாக்குகிற கிருபையும் இன்றியிலே
அவை குற்றம் அறிகைக்கும் தண்டிக்கைக்கும்-இவன் இடம் பச்சை வாங்காமைக்கும் -இட்ட பச்சை பார்த்து -தவிராமைக்கும் –
நிவாரகர் இல்லாமைக்கும் உறுப்பாய்-காதுகராய் விடுவீர் காணும்

கடலுக்குத் தொடுத்த அம்பை காட்டிலே விட்டால் போலே நீர் சொன்ன உம்முடைய கர்ம பாரதந்தர்யத்தால் வந்த காலுஷ்யத்தை –
உம்முடைய பக்கல் விமுகராய் -சம்சார பாந்தராய் -அந்நிய பரராய்த் திரிகிறவர் பக்கலிலே நடத்திக் கொள்வீர்
அவித்யையாலும் ஜென்ம மரணங்களாலும் காம க்ரோதாதிகளாலும் அபிபூதராய்க் கிடக்கிற இருள் தரும் மா ஞாலத்துக்கு உள்ளே
குற்றம் காண்கை மூர்க்கக் க்ருத்யம் காணும்
இவர்களுடைய பூர்வ அபராதங்களைப் பொறுத்துக் கைக்கொண்டு அருளீர் என்று
சரணாகதியில் அவிரதிரூப அத்யவசாயத்தை அபேக்ஷித்தவருக்கு -தயா சரணாகத்யா சர்வம் சம்பத்ஸ்யதே -என்று
சரணாகதி தன்னாலே உமக்கு எல்லாம் உண்டாகக் கடவது என்று
அஸ்து தே-என்றால் போலே அவன் குணவத்தை தன்னாலே அவன் இவனைக் கைக்கொள்ளும்படி
தோஷ தர்சனத்தால் அமுங்கிக் கிடந்த வாத்சல்யாதி குணங்களை பிரகாசிப்பித்து

ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் -என்று பொற்பாவையான தான் விளக்குப் பொன் போலே
இவனை அவன் அங்கீ கரிக்கும் படி பண்ணி
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பே
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை
நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை அமரர் முழு முதல் -என்னுடைய நன்னெஞ்சம் தன்னை
யகல்விக்கத் தானும் கில்லான்-என்னும்படி
ஏக ரசனாக்கி சர்வ சக்தியாலும் இவள் தன்னாலும் விடுவிக்க ஒண்ணாதபடியான அவ்வளவில் –
அவன் நிழலிலே ஒதுங்கி நின்று
நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே
அடியேன் செய்யும் விண்ணப்பம் –மெய் நின்று கேட்டு அருளாய்
போற்றும் பொருள் கேளாய் -மற்றை நம் காமங்கள் மாற்று -என்று
இவன் பண்ணுகிற சரண வர்ண யுக்தி முதலாக கைங்கர்ய பிரார்த்தனா பர்யந்தமாக
இவன் விண்ணப்பம் செய்யும் இவ்வார்த்தைகளைக் கேட்ப்பியா நிற்கும்

இப்படி அல்லது அநாதி காலம் இவன் பண்ணின அக்ருத்ய கரணாதிகளை
வில்லாளன் என் நெஞ்சத்துளன்
உடன் இருந்து அறுதி -என்று சொல்லும்படி ஹ்ருதய குஹாகதனாய்க் கொண்டு
அறிந்து தண்டதரனான ஈஸ்வரன் சந்நிதியில் நின்று
க்ஷமஸ்வ -என்பது
சரணம் பிரபத்யே -என்பதனால் அது தானே அபராதமாய்ப் பரிணமிக்கும் இறே

ஆகை இறே ஸ்ரீ பாஷ்ய காரர்
தேவ தேவ திவ்ய மஹிஷீம்–என்று ஸ்ரீ பிராட்டியைச் சரணம் புக்கு
பாதார விந்த யுகளம் சரணமஹம் பிரபத்யே -என்று பின்னை ஸ்ரீ பகவத் விஷயத்திலே சரணம் புக்கு
மநோ வாக் காயை –என்று தொடங்கி -வர்த்தமானம் வர்த்திஷ்யமாணஞ்ச சர்வம் க்ஷமஸ்வ -என்று
கரண த்ரயத்தாலும் கால த்ரயத்தாலும் பண்ணும் அபராதங்களைப் பொறுக்க வேணும் என்றதும் –

ஆக ஸ்ரீ சப்தத்தால்
ஸ்ரீத்வ ப்ரயுக்தமான மென்மையாலும்
மாத்ருத்வ ப்ரயுக்தமான வாத்சல்ய அதிசயத்தாலும்
அநாதி கால ஆர்ஜிதமான அக்ருத்ய கரணத்தாலே அஞ்சின சேதனரை அங்கீ கரித்து
மஹிஷீத்வ நிபந்தமான வாத்சல்ய அதிசயத்தாலும் நிரதிசய போக்யனாய் அபரிச்சின்னனான சர்வேஸ்வரனைத்
தன் பக்கலிலே அகப்படுத்தும் படியான போக்யதா அதிசயத்தாலும் அவன் இவர்களைக் கைக்கொள்ளும்படி
பண்ணக் கடவதான ஸ்வபாவ விசேஷங்களைச் சொல்லிற்று ஆயிற்று

பிதேவத் வத் ப்ரேயான் ஜனனி பரிபூர்ணாக சிஜநேஹி தஸ் ரோதோ வ்ருத்த்யா பவதி சகதா சித் கலுஷதீ-
கிமே தந் நிர்தோஷ க இஹ ஜெகதீதித்வ முசிதை ரூபாயைர் விஸ்மார்ய ஸ்வ ஜனயஸீமா தாத தசிந -என்று
சாபராத சேதனர் விஷயத்தில் பித்ருத்வ பிரயுக்தமான ஹித பரதையாலே சீறி அருளின ஸ்வ அபிமத காந்தனை
விபூதி தோஷ ப்ரதர்ஸநாதியான யுசித உபாயங்களாலே அவன் இவர்கள் அபராதத்தை மறந்து அங்கீ கரிக்கும் படி
பண்ணுகையாலே மாதாவாகா நின்றீர் என்று இவ்வர்த்தத்தை ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் –

ஆக இந்த வ்யுத்பத்தி த்வயத்தாலும் –
த்ரிவித ஆத்ம வர்க்கத்தாலும்-தம் தாமுடைய ஸ்வரூபாதிகளுடைய ஸித்த்யர்த்தமாக ஆஸ்ரயணீயையாய் இருக்கும் என்றும்
தன்னுடைய ஸ்வரூப ஸித்த்யர்த்தமாக ஈஸ்வரனை ஆஸ்ரயித்து இருக்கும் என்றும் சொல்லுகையாலே
அவனைக் குறித்து பரதந்தரையாய் இருக்கும் என்னும் இடமும்
த்ரிவித ஆத்ம வர்க்கத்துக்கும் பூஜ்யையாய் இருக்கும் என்னும் இடமும் சொல்லிற்று ஆயிற்று –

இப்படி சர்வ பிரகார சேஷ பூதையாய் இருக்கையாலே இவனிலும் இவளுக்கு ஆதிக்யம் போல் தோற்றின பிரமாணம் உண்டாகில்
பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு -என்று இவள் பக்கலிலே அவன் துவக்குண்டு
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக
கிளர் பொறிய மறி திரிய வதனின் பின்னே படர்ந்தான் -என்னும்படி மேல் வருவதும் அறியாதே
க்ருதய அக்ருத்ய விவேகம் அற கார்யம் செய்யும் படியாய் தேச கால வஸ்துக்களால் அபரிச்சேதயமான அவன் ஸ்வரூபத்தை
அளவிடிலும் அளவிட ஒண்ணாத போக்யதாசியத்தாலே அவனுக்கு உண்டான பிரணயித்வ பாரதந்தர்யமாம் அத்தனை –

ஆனால் பரதந்த்ர வஸ்துவுக்கு சம பிரதான க்ருத்யமான புருஷகாரத்வம் விருத்தம் அன்றோ என்னில்-
ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரன் தன்னுடைய நிருபாதிக ஸுஹார்த்தத்தாலே அதுவேஷாதி ஸமஸ்த ஆத்ம குணங்களையும்
ஆச்சார்ய சமாஸ்ரயணத்தையும் உண்டாக்கி -தத் த்வாரா ப்ராப்ய வைலக்ஷண்ய ஞானத்தையும் பிறப்பித்து –
சம்சார தோஷத்தையும் பிரகாசிப்பித்து -புருஷகார பூர்வகமாக ஆஸ்ரயிக்க வேணும் என்கிற சங்கல்ப அனுரூபமாக
ஆஸ்ரயிப்பிக்கிறான் ஆகையால் அவனுடைய ஹ்ருதய அநு கமனம் பண்ணிப் புருஷீ கரிப்பித்து
சேஷியான ஈஸ்வரனுக்கு சேஷ பிரதானம் பண்ணி -அவன் இவர்களையும் ரஷித்துத் தானும் உளனாம் படி பண்ணி
அவன் ஸ்வரூப ரூப குணாதிகளுக்கு அதிசயம் உண்டாக்குகிறான் ஆகையால்
சேஷத்வ பாரதந்தர்யங்களுடைய கார்யம் அத்தனை அல்லது விருத்தம் அன்று –

ஆனால் அந்நிய அதீனாதிசயம் ஸ்வ தந்த்ர வஸ்துவுக்கு அநு ரூபம் அன்றே என்னில்
ஸ்வரூப அந்தர் கதையாய்க் கொண்டே இவளுடைய வஸ்துத்வம் ஆகையால் அந்யத்வம் இல்லாமையால்
ஸ்வ அதீன விபவமே யாகக் கடவது -ஆகையால் அநு ரூபமாய் இருக்கும்
ஸ்வதஸ் ஸ்ரீஸ்த்வம விஷ்ணோஸ் ஸ்வ மஸீ தத ஏவைஷ பகவா நத்வதா யத்தர்த்தித் வேப்யபவத பராதீன விபவ
ஸ்வயா தீப்த்யர்த்தம் பவதபி மஹார்க்கம் நவி குணம் ந குண்ட் ஸ்வா தந்தர்யம் பவதிச ந சாந்யா ஹித குணம் –என்றும்
ப்ரஸூநம் புஷ்யந்தீ மபி பரிமளர்த்திதம் ஜிகதிஷந் நசை வந்த்வா தேவம் ஸ்வ தத இத கஸ்சித் தவயதே -என்று
ஸ்வ கதையான தீப்தி யாலே மஹார்க்கமான ரத்னங்களுக்கும் ஸ்வ கத பரிமளத்தாலே ஆதரணீயமான புஷ்பத்துக்கும்
பராதீ நாதி சயத்வ நிபந்தனமான வைகுண்யம் இல்லாதாப் போலே பகவத் ஸ்வம்மாய்க் கொண்டே
ஸ்ரீ யாய் இருப்புதி யாகையாலே ஷாட் குண்ய பரிபூர்ணனான சர்வேஸ்வரனுக்கு உன்னால் வருகிற அதிசயம் பராதீனம் அன்று
என்று இவ்வர்த்த விசேஷங்களை ஸ்ரீ பட்டரும் அருளிச் செய்தார்

ரக்ஷண உன்முகனான ஈஸ்வரனுடைய ஹ்ருதய அனுதாபவனம் மாத்ரமாகில் இவளுக்கு உள்ளது –
அது புருஷகாரமாமோ என்னில்
ரஷ்ய பூதனான சேதனனுடைய ஸ்வ அபராத நிபந்தனமான பயம் நிவ்ருத்தமாம் போது இவளை ஆஸ்ரயிக்க வேண்டுகையாலும்
இவள் அபராதங்களைப் பொறுப்பித்துச் சேர விட நாம் கைக்கொள்ளக் கடவோம் என்கிற
ஈஸ்வர சங்கல்பத்தாலும் புருஷகாரமாகக் குறை இல்லை

அனந்தரம் -பிரத்யய ரூபமான மதிப்பு-நித்ய யோக மதிப்பு -என்கையாலே ஸ்ரயதே -என்கிற
வர்த்தமான ஸித்தமான நித்ய யோகத்தைச் சொல்லுகிறது -அதாவது
ஸ்ரீ யபதிர் நிகில ஹேயபிரத்ய நீக -என்கிறபடியே அகில ஹேயபிரத்ய நீக கல்யாணைகதாநமாய் –
உணர் முழு நலமான -திவ்யாத்ம ஸ்வரூபத்தை ஸ்ரீ யபதி -என்று விசேஷிக்கையாலும்

ந ச சீதா த்வயா ஹீநா -என்று இவள் பிரகிருதி அறிந்தவர்கள் உம்மைப் பிரிந்தால் இவள் க்ஷண காலமும் சத்தையோடு இராள்-
என்று சொல்லும்படி விஸ்லேஷிக்க சத்தை இன்றிக்கே இருக்கையாலும்
அநந்யா ராகவேணாகம் பாஸ்கரேண ப்ரபாயதா
அநன்யாஹி மயா சீதா பாஸ்கரேண ப்ரபாயதா -என்று
சத்தையும் சஞ்சாரமும் பிரகாச பிரகாசங்களும் ஆஸ்ரயமான ஆதித்யனை ஒழிய இன்றிக்கே இருக்கக் கடவதான ஆதபம் போலே –
எனக்கும் அவ்வோ ஆகாரங்களும் ஆஸ்ரயமான பெருமாளை ஒழிய என்று தாமும் சொல்லி
ஆஸ்ரயமானவர் தாமும் சொல்லுகையாலே நித்ய அநபாயி நியாய்க் கொண்டு பிரியில் சத்தை இன்றிக்கே இருக்கையாலும்

ஸ்வரூபத்துக்கு நிரூபக பூதையாய்
ஸ்ரீ வத்ச வஷா
ஸ்ரீ வத்ச வஷா சம்ஜாதம்
யயவ் வக்ஷஸ்தலம் ஹரே
திரு மார்பில் திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார்
அலர்மேல் மங்கை உறை மார்பா –என்கிறபடியே லப்த சா ரூப்யரான நித்ய முக்த விக்ரஹங்களில் காட்டில்
பகவத் விக்ரஹத்துக்கு வ்யாவர்த்தக விசேஷணமாய்க் கொண்டு அவன் மார்பு விடாதவளாய்
வைகுண்டேது பரே லோகே ஸ்ரீ யா சார்த்தம் ஜகத் பதி-ஆஸ்தே விஷ்ணோர் அசிந்த்யாத்ம பக்தைர் பாகவதைஸ் சஹ –
வ்யூஹேஷு சைவ சர்வேஷு விபவேஷு ச ஸர்வஸ –ததா வ்யூஹீ பவத்யேஷா மம சைவ அநபாயிநீ –
தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ -விஷ்ணோர் தேஹ அநு ரூபாம் வைகரோத் யேஷாத்ம நஸ் தநூம்–இத்யாதிகளில்
சொல்லுகிறபடியே -பர வ்யூஹாதி விக்ரஹங்கள் தோறும் அநு ரூப விக்ரஹ பரிக்ரஹம் பண்ணி
வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்படிக் கோலம் கண்டு அகலாள் பன்னாள் -என்கிறபடியே
அருகு விட்டு அகலாதவளாய்-இப்படி சர்வ காலமும் அவன் ஸ்வரூபாதிகளோடு நித்ய சம்ஸ்லிஷ்டையாய் இருக்கை

ஆக இப்படிப் புருஷகார பூதையான இவள்
திரு மார்பத்து மாலை நங்கை வாசம் செய் பூங்குழலாள் -என்றும்
சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம் நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பு -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வரூப ரூபாதிகளோடு பர வ்யூஹாதிகளோடு வாசி அற அவனை விடாதே அனுபவித்துக் கொண்டு இருக்கையாலே
சஞ்சலம் ஹி மந கிருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம் -தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிய ஸூ துஷ்கரம் -என்கிறபடியே
த்ருடத கதியான வாயுவை மீட்க்கிலும் மீட்க ஒண்ணாத படி கண்ட இடம் எங்கும் பட்டி புக்குத் திரிகிற
நின்றவா நில்லா நெஞ்சில் பிறந்த ருசி குலைவதற்கு முன்பே
திருமாலை விரைந்து அடி சேர்மினே -என்கிறபடியே ஆஸ்ரயிக்கலாம் என்கிறது-
இந்த நித்ய வாசம் ஈஸ்வரனுடைய சர்வ கால ஸமாஸ்ரயணீயத்வத்தை த்யோதிப்பிக்கிறது

நநு
அனவதிக அஸங்க்யேய கல்யாண குணாகரமாய் உணர் முழு நலமாய் இருக்கிற ஸ்வரூபத்தையும்
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரியாய் இருக்கிற ரூபத்தையும்
ஸம்ஸ்லேஷித்துக் கொண்டு ஓவ்தார்ய சீலாதி குணங்களையும் இடைவிடாமல் அசங்குசிதமாக அனுபவித்துப் போருகிற
இவளுக்கு பர துக்க தர்சனமும் தந் நிவ்ருத்தி அபேக்ஷையும் அநுப பன்னம் ஆகையால்
கீழ்ச் சொன்ன புருஷகாரம் அகடிகடிதம் அன்றோ -என்னில்;

சர்வ சேஷியாய் இருக்கிற ஈஸ்வரன் தனக்கு சேஷபூதரான நித்ய முக்தரையும் சேஷித்வ அநு ரூபமாக
ஸோஸ்நுதே சேர்வான் காமான் சக ப்ரஹ்மண விபச்சிதா
லப்த ஆனந்தீ பவதி
சதா பஸ்யந்தி ஸூரயா –இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
தன் ஸ்வரூபாதிகளை அனுபவிப்பித்து அத்தாலே தான் ஆனந்தித்துக் கொண்டு போருவது -அதுக்கு மேலே
இன்புறும் இவ்விளையாட்டுடையான் -என்று லீலா விபூதியில் உள்ளாரைக் கொண்டு லீலா ரூபேண ரசிப்பதாய்ப் போரச் செய்தேயும்
ரக்ஷகத் வேன சித்த ஸ்வரூபனாகையாலே
நல்கித்தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும்-என்று ஜகாத் ரக்ஷணம் பண்ணிக் கொண்டு போகிறாப்போலே
இவளும் அவனுக்கு பத்நீத்வேந சேஷ பூதையுமாய் பரம ப்ராணயநீயாய் இருக்கையாலே இந்த பத்நீத்வ நிபந்தனமாக உண்டான
பிரஜைகள் பக்கல் மாத்ருத்வ ரூப பந்த கார்யமான பிரஜா சம்ரக்ஷணமும் இவள் திரு உள்ளத்திலே நடந்து போருகையாலே
அவனுடைய வைஸ்வ ரூப்ய போகம் எல்லாவற்றையும் உபோத்காத கிரீடா ரசத்துக்கு உள்ளே சிறாங்கித்துக் கொள்ளும்படியான
போக்யதா பிரகர்ஷத்தை அனுபவித்து ஆனந்தித்து உன்மஸ்தக ரசமாய் –
அந்த ரஸ அதிசயத்தால் வந்த ப்ரீதி அதிசயத்தாலே தன்னை நோக்கி சாடு வாதங்களை பண்ணுவது
இப்படி போக்ய பூதையாய் இருக்கிற இவளுக்கு எத்தைச் செய்வோம் என்று கண் கலங்குவதாகப் புக்கவாறே

அத்தசையிலே அவனுடைய நீச பாஷணங்களும்-அவனுடைய ரசனைகளும் இவளுக்கு அதிசயார்த்தமாகத்
தோற்றமோபாதி அந்த ப்ரத்யுபகார சாபேக்ஷதா நிபந்தனமாகக் கண் கலக்கமும் தோற்றுகையாலே-
தன் பக்கலிலே ஏதேனும் ஒரு உபகாரம் கொள்ளாத போது அவன் நினைவை பின் செல்லுகை யாகிற
நம்முடைய பாரதந்தர்யமும் இழந்து ஆஸ்ரயமும் இழக்கும் படி வருமாகையாலே
நமக்கு ஆஸ்ரயமும் அற்று போகமும் இழக்கும் படி வரும் என்று பார்த்து –
நீர் கொடுத்த அத்வேஷாதிகளால் உண்டான வாசார்ய ப்ராப்தியாலே லப்த சம்யக் ஞானராகையாலே
ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களை யுடையராய் சம்சாரத்திலும் பொருத்தம் அற்று பூர்வ அபராத தர்சனத்தாலே
அதடியான சீற்றத்தை யுடையராய் இருக்கிற யும்முடைய பக்கல் வர அஞ்சி உம்மைக் கிட்டுகைக்கு என்னை ஆஸ்ரயித்து நிற்கிற
சேதனரை அவர்களுடைய பூர்வ அபராதங்களைப் பொறுத்துக் கைக்கொண்டு அருளீர் என்று
அவன் பிரயோஜனமே தனக்கு பிரயோஜனம் ஆகையால் அவனுடைய ஸ்ருஷ்ட்டி அவதார ரூபமான கிருஷியின் பலமான
சேதன அங்கீ காரத்தை அவனுக்கும் தனக்கும் உண்டான பிரணயி பிரணயிநி பாவம் தோற்ற நியமியா நிற்கும்

அவனும் விபூதி த்வயமும் ஸ்வ அதீனமாம் படி நியந்தாவாய்ப் போருகிற அதிசயத்திலும் காட்டில்
பிரணயித்தவ நிபந்தனமான நியாம்ய பாவம் தனக்கு அதிசயமாக நினைத்து இருப்பான் ஒருவன் ஆகையால்
இவளுடைய நியமனத்தை சிரஸா வஹித்துக் கொண்டு இவர்களுடைய ரக்ஷணத்தைப் பண்ணா நிற்கும் ஆகையால்
இவளுடைய ஸ்வரூபத்துக்கும் அனுரூபமாய்க் கொண்டு அத்யந்தம் உப பன்னம் என்றதாயிற்று

ஆக -மதுப்பாலே –புருஷகாரத்துக்கு உப யுக்தமான உபய சம்பந்தத்தையும் உடையளாய் இருக்கிற இவள்
செவ்விப் படிக்கோலம் கண்டு அகலாள்
திரு இருந்த மார்பில் சிரீதரன்–என்கிறபடியே
ஆஸ்ரயணீய வஸ்துவோடு நித்ய சம்ஸ்லிஷ்டையாய் இருக்கையாலே அந்த சம்ஸ்லேஷத்தில் வர்த்திக்கிற அனுபவம்
தஜ் ஜெனிதமான ஹர்ஷம்
தத் பரா காஷ்டையான ப்ரத்யுபகார சாபேஷதை
இவற்றால் வருகிற ரக்ஷணமும் நித்யம் ஆகையால் ஆஸ்ரயண உன் முகனான சேதனர்க்கு
தம் தாமுடைய ஜென்ம வ்ருத்த ஞானங்களால் உண்டான நிகர்ஷமாதல் –
அவனுடைய ஸ்வா தந்தர்ய நிபந்தனமான பீதியாதல் இன்றிக்கே
சர்வ காலமும் ஆஸ்ரயிக்கலாம் என்றிட்டு
சர்வ கால ஸமாஸ்ரயணீயத்வத்தையும்
ஆஸ்ரயணீயத்தினுடைய சர்வாதிகாரத்வத்தையும் சொல்லுகிறது –

ஆக
ஸ்ரீ மத் சப்தம் புருஷகாரத்தையும்
புருஷகாரத்தினுடைய நித்ய சம்யோகத்தையும் சொல்லிற்று ஆயிற்று –

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரகால நல்லான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பரகால நல்லான் ரஹஸ்யம் -ஸ்ரீ மந்த்ர ரத்னம் -த்வயம் – பிரபத்தி வைபவம்–

August 20, 2019

ஸ்ரீ யா புருஷகாராக்ர்யம் சச்சித்தா மோத காரணம்
பரகாலார்ய தாஸேந த்வய தாத்பர்யம் உச்யதே

யஸ்யாஸ்மி
பகவத் ஏவாஹம் அஸ்மி
கோஹ்யேவாந் யாத்க ப்ராண்யாத
யா காஸ்சந க்ருதயோ மம பவந்தி தாஸூ மமதா நாஸ்தி பகவத ஏவதா இதி
ஏஷஹ்யேவா நந்தயாதி
ப்ரஹர்ஷயிஷ்யாமி –என்றும் சொல்லுகிறபடியே
சர்வ ரக்ஷகனாய் -சர்வ காரண பூதனாய் -ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் -ஸ்ரீயபதியாய்-சர்வ சேஷியாய் –
அகார வாச்யனாய் இருக்கிற சர்வேஸ்வரனுக்கு
அநந்யார்ஹ சேஷ பூதமாய் -ஆனந்த ரூப ஞான ஸ்வரூப ஸ்வ பாவமாய் -அத்யந்த பராதீனமாய் -தத் ஏக போகமாய் இருக்கிற
ஸ்வ ஸ்வரூப யாதாத்ம்யத்தை யாதாவாக ப்ரதிபாதிக்கிற திரு மந்த்ர முகத்தால் இவ்வாகாரங்களை விசத்தமாக சிஷித்து
அதில் பிரதமத்திலே சிஷிதமான சேஷத்வத்துக்கு அனுரூபமான புருஷார்த்தம் சேஷி பூத பகவத் அனுபவ ஜெனித
ப்ரீதி காரித கைங்கர்ய கரண தந் முக உல்லாச ரசிகத்வம் என்றும்
அத்யந்த பரதந்த்ரனாகையாலே இந்த புருஷார்த்த லாபத்துக்கு உபாயம் நிருபாதிக ரக்ஷகனாய்
நிரவதிக ஸ்வ தந்திரனாய் இருக்கிற சர்வேஸ்வரன் திருவடிகளே என்றும் அறுதியிட்டு
இவ்வதிகாரிக்கு அனுரூபமாகவும் அபிமதமாகவும் சகல சாஸ்த்ர சார தயா
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராண அபியுக்த யுக்தி ரூப சகல பிரமாணங்களாலும் ப்ரதிபாதிதங்களாய் இருக்கிற
உபாய உபேயங்களினுடைய பிரதிபத்தி பிரார்த்தனைகளை விசதமாகப் பிரதிபாதிக்கிறது ஸ்ரீ த்வய மந்த்ரம்
இதில் சொல்லுகிற உபாய உபேயங்கள் சகல பிராமண ப்ரதிபாத்யங்களான படி எங்கனே என்னில்

நிகில ஜகந் நிருபாதிக நிர்வாஹகனாய் -அஞ்ஞான துக்க பரிணாம பராதீன இத்யாதி ரூப ஹேயங்களுக்கு பிரதிபடனாய்
ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணனாய் விபுத்வ நித்யத்வங்களாலே தேச கால வஸ்து அபரிச்சேதனனாய் –
ஸ்வயம் பிரகாசகத்வ ஸூக ரூபத்வ ஸ்வரூப ஸ்வபாவ ஞான சக்த்யாதி ஷட் குணங்களாலும் பரிபூர்ணனாய் –
ஸ்வ அதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்திகனாய்
ஈஸ்வரேண ஜகத் சர்வம் யதேஷ்டம் வி நி யுஜ்யதே -என்கிறபடியே சகல வஸ்துக்களையும் ஸ்வார்த்தமாக ஸ்வயமேவ நியமித்து
வியாபரித்து ஆனந்தித்துக் கொண்டு போரக் கடவனாய் இருக்கிற சர்வேஸ்வரனுடைய ஆஜ்ஜா ரூபமாய்க் கொண்டு
அவனுடைய சங்கல்ப பிரகாரத்துக்கு பிரகாசகமாய் இருக்கிற சாஸ்திரம்
த்ரை குண்யா விஷயா வேதா -என்கிறபடியே அந்த சர்வேஸ்வரனுக்கு நிர்வாஹ்யமான விபூதி ஏக தேசஸ்த்தராய்க் கொண்டு
தத் அபிமத லீலா விஷய பூதராய் தத் அதீனராய் பிரகிருதி ஸம்ஸ்ருஷ்டராய் சத்வ ரஜஸ் தமோ ரூப குணத்ரய உபேதராய் இருக்கிற
பத்த சேதனருக்கு தத் தத் அபிமத புருஷார்த்த சாதனங்களுக்கு பிரதர்சகமாய் இருக்கும்

அதில் தமோ பிரசுர சேதனர்-பரஹிம்சையை சாதனமாகவும்
சத்ரு நிரஸந பிராப்திகளைப் புருஷார்த்தமாகவும் நினைத்து இருப்பார்கள் –
ஸ்ருதியும் அவர்களுடைய ருசிக்கு ஈடாக அபிசாரக் கிரியை விதிக்கும்

ரஜஸ் பிரசுர சேதனர் அஹிம்ஸாத்மக க்ரியா விசேஷத்தாலே ஐஹிகமான புத்ர பசுவாதிகளையும்
ஆமுஷ்மிகமான ஸ்வர்க்காதி போகங்களையும் பெற நினைத்து இருப்பார்கள் -தத் அனுரூபமாக ஸ்ருதியும்
வாயவயமஸ் வேத மால பேதபூதி காமா
சித்ரயாப ஸூகாமோ யஜேதே
காரீர்யா வ்ருஷ்டி காமோ யஜேத
ஜ்யோதிஷ்டோமே ந ஸ்வர்க்க காமோ யஜேத–இத்யாதிகளாலே
இஹவாமுத்ர வாதாம்யம் ப்ரவ்ருத்தம் கர்ம கீர்த்த்யதே -காமதஸ்துக்ருதம் கர்ம ப்ரவ்ருத்தம் உபாதிஸ்யதே -என்கிற
லக்ஷணத்தின் படியே பல சிரத்தையோடு அனுஷ்ட்டிக்கப்பட்ட ப்ரவ்ருத்த கர்ம விசேஷங்களை
அந்த ஐஸ்வர்யாதி புருஷார்த்தங்களுக்கு சாதனமாக விதிக்கும்

சத்வ பிரசுரானவர்கள் ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம உசித கர்மக லாபத்தாலே மோக்ஷ புருஷார்த்தத்தை
லபிக்க நினைத்து இருப்பார்கள் -அதுக்கு ஈடாக ஸ்ருதியும்
தர்மேண பாபமபநுததி
யஜ்ஜேந தாநேந தபஸா நாசகேந ப்ராஹ்மணா விவிதிஷந்தி
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஞான சமாதிபி-நாராணாம் ஷீண பாபாநாம் கிருஷ்னே பக்தி பிரஜாயதே
ஒன்றி நின்று நல்தவம் செய்து ஊழி ஊழி தோறு எலாம் நின்று நின்று அவன் குணங்கள் உள்ளி உள்ளம் தூயராய் -என்று
ஞான உத்பத்தி ஹேதுவாகச் சொல்லுகிற விஹித தர்மத்தை
நிஷ் காம மஜ்ஞான பூர்வந்து நிவ்ருத்த முபதிஸ்யதே-என்று ஆத்ம ஞான பூர்வகமாக
பாலாபி சந்தி ரஹிதமாக அனுஷ்டிக்கை நிவ்ருத்த காமம் என்கிற லக்ஷணத்தின் படியே
அகார ஸூத்தவ் சத்வ ஸூத்தி -என்று சத்வ ஸூத்திக்கு அடியான அன்ன ஸூத்தி
சாந்த உபாஸீத -என்கிற காமா நபிஷ்வங்கம்
சதா தத்பாவ பாவித-என்கிற அபேக்ஷிதார்த்த பரி ஸீலநம்
கிரியாவா நேஷா ப்ரஹ்ம விதாம் வரிஷ்ட -என்கிற பஞ்ச மஹா யஜ்ஜாதி அனுஷ்டானம்
சத்யேந லப்ய-என்கிற ஆர்ஜவம் தயை தானம் அஹிம்சை அநபித்த்யை என்கிற கல்யாணம்
நாயமாத்மா ப்ரவசநே ந லப்ய-என்கிற சோக ஹர்ஷ ஹேதூபநிபாதங்களில் அவிகார காரதை என்று
சொல்லப்படுகிற விவேகாதி சப்தகங்களோடே கூட

யத் கரோஷி யதஸ்நாசி யஜ் ஜூஹோஷி ததாஸியத் -யத் தபஸ்யசி கௌந்தேய தத் குருஷ்வம தர்ப்பணம் -என்கிறபடியே
பகவத் ஸமாராதன புத்தயா அனுஷ்ட்டித்து
சததம் கீர்த்தயந்தோ மாம் யதந்தஸ் ச திருட வ்ரதா-நமஸ்யந்தஸ் சமாம் பக்த்யா நித்ய யுக்தா உபாஸதே -என்றும்
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது -என்றும் சொல்லுகிற
பகவத் த்யான அர்ச்சன பிராணாயாம சங்கீர்த்தனங்களையும் பண்ண –
அத்தாலே உத் பன்ன ப்ரீதி விஸிஷ்ட பகவத் பிரசாதத்தாலே
கஷாயே கர்மபி பக்வேததோஜ் ஞானம் ப்ரவர்த்ததே -என்கிறபடியே
மனனக மலமான ஞான உத்பத்தி விரோதி பாப ஷயம் பிறந்து
அத்தாலே உள்ளி உள்ளம் தூயராய்க் கொண்டு உத் பன்ன ஞானராய்
இந்த ஞானத்தினுடைய நைர் அந்தர்ய ரூபையான அனவரத பாவனை யுண்டாய்

ஞான நல் சுடர் கொளீ–என்பில் எள்கி நெஞ்சு உருகி உள்ளம் கனிந்து எழுந்ததோர் –என்கிறபடியே
சம்ச்லேஷ விஸ்லேஷ ஏக ஸூக துக்கராம் படி அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்ததியான பக்தி பிறந்து
சாஷாத்கார சமானமாய் அந்திம ஸ்ம்ருதியும் உண்டாய் நடக்க -அத்தாலே
பித்ய தேஹ்ருத யக்ரநதிஸ் சித்யந்தே சர்வசமயா –ஷீயந்தே சாஸ்யா கர்மாணி தஸ்மிந் த்ருஷ்டே பராவரே –என்று
பிராப்தி பிரதிபந்தக நிச்சேஷ நிவ்ருத்தி பிறந்து பகவல் லாபமாய் இருக்கும் என்று
பலாதி தியாக பூர்வகமாக அநுஷ்டேயமான ஜ்யோதிஷ்டோமாதிகளை மோக்ஷ சாதனமாக விதிக்கும்

ஸூத்த சத்வ குணோபேதரான சேதனர் நிர்ஹேதுக பகவத் பிரசாத லப்த அனுரூப பராதீன ஞான வத்தையாலே
ஸ்வ ரக்ஷணா அப்ராப்தராய்-அத ஏவ பகவத் ஏக போகராய் இருக்கிற நமக்கு
சித்த ஸ்வரூபனாய் நிருபாதிக ரக்ஷகனாய் -அமோக சங்கல்பனாய் -வாத்சல்யயாதி குண பூர்ணனான சர்வேஸ்வரன்
திருவடிகளே கர்ம ஞானாதி உபாய ஆபாச நிவ்ருத்தி பூர்வகமாய் அந்திம ஸ்ம்ருதி நிரபேஷமாய்-விளம்ப ரஹிதமாய் –
ஸ்வரூப அனுரூபமான உபாயம் என்று அத்யவசித்து ஆரம்பத்தை சரீர அவசானத்திலே –
யத்ர பூர்வே ஸாத்யாஸ் சந்தி தேவா -என்றும் விண்ணாட்டவர் மூத்தவர் -என்றும் -சொல்லப்படுகிற
பெரிய திருவடி -திரு வனந்தாழ்வான் -சேனை முதலியார் தொடக்கமானாருடைய கைங்கர்யத்தை லபிக்க நினைத்து இருப்பர்கள்
அதுக்கு அனுரூபமாக வேதங்களும் ரிஷிகளும் ஆழ்வார்களும் இப்புருஷார்த்தத்துக்கு உபாயம்
ந்யாஸ இதி ப்ரஹ்ம -என்று ந்யாஸ சப்த வாச்யனான பகவானே என்று அறுதி இட்டார்கள் -எங்கனே என்னில்

அதில் பிரதம உத்பாத்தமான வேதம்
சத்யம் தபோ தமஸ் சமோ தானம் தர்ம ப்ரஜந நமக்ந யோக்நிஹோத்ரம் யஜ்ஜோமாநசம்–என்று கொண்டு
பூத ஹிதமான சத்யம் -ஸ்வ தர்ம நிராதனாய்க் கொண்டு காய சோஷணம் பண்ணுகை யாகிற தபஸ்ஸூ –
மநோ நியமனம் ஆகிற தமம்-சித்தோபரதியாகிற சமம் -சத்துக்கள் விஷயமாகக் கொடுக்கிற தானம் –
விஹித கரண -நிஷித்த அகரணங்களாகிற தர்மம் -பாலாபிசந்தி ரஹிதமான யாகம் -ஆத்ம ஞானம் என்றால் போலே சொல்லுகிற
சாதன சமூகங்களைச் சொல்லி இந்த ஸத்யாதி விசிஷ்டனாய்க் கொண்டு

ஆந்ரு சம்சயம் தயா சத்யம் அஹிம்சா ஷாந்தி ஆர்ஜவம் தானம் பிரசாதோ மாதுர்யம் மார்தவஞ்சய மாதச —
ஸுவ்சம் இஜ்யா தபஸ் சத்யம் ஸ்வாத்யாயபஸ்த நிக்ரஹ –வ்ரதோ பவாஸோ மவ்நஞ்ச ஸ்நாநஞ்ச நியமாதச –என்கிற
யம நியமங்களை உடையனாய் சக்ராதிகளான வாசனங்களிலே ஒன்றிலே இருந்து இடா பிங்களாதி நாடிகளை ஷோப்பித்து
பிராணாதிகளான தச வாயுக்களையும் வெல்லுகைக்காக ரேசக பூரகாதிகளாகிற பிராணாயாமங்களைப் பண்ணி

ததஸ் ச வாயவோ தேஹே யத்ர யத்ர வசந்தி வை தத்ர தத்ர மனஸ்ஸ்த் தேயம் -என்கிறபடியே
வாயு ஸ்தானத்தில் மனசை நிறுத்தி

ஸ்வ பாவ இந்திரிய அர்த்தேஷு ப்ரவ்ருத்தம மாநசம்புதை -தத் தோஷ தர்சநாத் தேப்யஸ் சமாஹ்ருத்யபலேந்துர்
நிவேசனம் பகவதி ப்ரத்யாஹார இதி ஸ்ம்ருத -என்று விஷயங்களில் ஸ்வபாவ ப்ரவணமான மனசை
அவற்றின் தோஷங்களைக் காட்டி மீட்டு பகவத் விஷயத்திலே நிவேசிப்பித்து

விஷயேஷு ச வைராக்யா தப்யாசாத குண தர்சநாத் -பரமாத்ம நி சம்ரோதோ மநஸோ தாரணா ஸ்ம்ருதா–என்கிறபடியே
விஷய தோஷ தரிசன நிபந்தனை வைராக்யத்தாலும் பரமாத்ம பரிசயத்தாலும் அவன் பக்கல் உண்டான வை லக்ஷண்யத்தாலும்
பரமாத்மாவின் பக்கலிலே பொருந்தி நிறுத்தி அவ்வஸ்துவை நிரந்தரமாக த்யானம் பண்ணி

ததேவ ஸ்ம்ருதி சந்தான ஜெனித உதகர்ஷணம் க்ரமாத் அர்த்தமாத்ரா வபா சந்து சமாதிம் யோகி நோவிது -என்று
அந்த த்யான அப்யாசவசத்தாலே த்யேய வஸ்து ஒன்றுமே தோற்றும்படியான சித்த வைஸ்யத்தை உடையனாம் என்றும்
சொல்லுகிற கிரமத்திலே உபாசித்து தரிசன சாமானாகாரமான இந்த சமாதியாலே வருந்திப் புகுந்தாலும்
யோகோபசர்க்கமான சித்த விஷேபம் பிறக்கும் என்று உபசர்க்க உபஹத ஈஸ்வரம் சரணம் உபகசேத் -என்று
இப்பிரகாரணம் தன்னிலே விதிக்கையாலும் ஆதிபரதாதிகள் ப்ரஷ்டராகக் காண்கையாலும்
இது தான் துஷ்கரமுமாய் த்ரை வர்ணிக அதிகாரமுமாய் ஸாத்யமுமாய் பிரமாத பஹுளமுமாய் துர்லபமுமாய்
விளம்ப பல பிரதமுமாய் அந்திம ஸ்ம்ருதி சாபேஷமுமாய் ஸ்வரூப அபிராப்தமுமாய் இருக்கையாலும்
இதர நிரபேஷ பல பிரதான சக்தி இல்லாமையாலும்
தாநிவா ஏதாந்ய வராணி தபாம்ஸி-என்று இந்த சத்யாதிகள் அவரங்கள் என்று சொல்லி
ந்யாஸ ஏவாத்யரேசயத் தஸ்மான் ந்யாஸ மேஷாம் தபஸாம் அதிரிக்தமாஹு-என்று
ந்யாஸ சப்த வாஸ்யமான உபாயமே தனக்கு அவ்வருகு உபாயம் இல்லாதபடியான உபாயம் என்று சொல்லி
அது தானே இந்த சேதனனுடைய சர்வ பரங்களையும் ந்யசிக்கைக்கு பிராப்தமாய் இருக்கிற பகவத் விஷயம் என்னும் இடத்தை
ந்யாஸ இதி ப்ரஹ்ம ப்ரஹ்மாஹி பர பரோஹி ப்ரஹ்ம -என்று சொல்லி
ஆக இப்படி நிருபாதிக ரக்ஷகமான பகவத் விஷயமே சர்வாதிரிக்தமான யுபாயம் –
வ்யதிரிக்தங்கள் அடைய அபக்ருஷ்டங்கள் என்று சொல்லிற்று –

ஸ்வேதாஸ்வதர உபநிஷத்தில் -யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹினோதி தஸ்மை தம்ஹி
தேவமாத்ம புத்தி பிரசாதம் முமுஷுர்வை சரணமஹம் பிரபத்யே -என்று
மோக்ஷ உபாயமான பிரபத்தியையும்
பிரபத்தவ்ய விஷய விஷயத்தையும்
பிரபத்திக்கு அதிகாரியையும் சொல்லிற்று -எங்கனே என்னில்

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் -என்று சதுர்த்தச புவன ஸ்ரஷ்டாவாகவும்-தேவாதிகளுக்கு ஓர் ஆபத்து வந்த போது
சென்று அறிவிக்கும்படி பிரதாநாநன் ஆகையால் சரண்யனாகவும் சொல்லப்படுகிற சதுர்முகனை யாவன் ஒருவன் முன்பு உண்டாக்கினானோ
யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹினோதி தஸ்மை -என்று ஸ்ருஷ்ட்டி க்ரமம் அறிகைக்கும்-
அத்யயனத்தாலே அர்த்த ஞானம் உண்டாய் உபாஸ்ய உபாஸக பேத ஞானம் பிறக்கைக்காகவும்
யாவன் ஒருவன் அவனுக்கு வேதங்களைக் காட்டிக் கொடுத்தான்

தம்ஹி தேவமாத்ம புத்தி பிரசாதம் -என்று சேஷியான தானே உபாயம் என்று ஏவமாதிகளான அர்த்தங்களில்
வியவசாய ரூபமான புத்திப் பிரசாதத்தைப் பண்ணித் தந்த அந்த தேவனை

முமுஷுர்வை சரணமஹம் பிரபத்யே-என்று மோஷார்த்தியான நான் சரணம் புகுகிறேன் என்று
ப்ரஹ்மாதிகள் ஸ்ருஜ்யராகவும் கர்ம வஸ்யராகவும் சொல்லுகையாலும்
அவர்களுக்கு வேத பிரதான முகேந ருசி ஜனகனாய் வேத சஷுஸ்ஸைக் கொடுத்து –
அந்தராத்மதயா நின்று ஸ்ருஷ்ட்டி சம்ஹாரங்களைப் பண்ணுவித்தான் என்கையாலும்
இவர்கள் ஸம்ஹார்யராகையாலும் இவர்களுக்கு சரண்யத்வம் இல்லை

ஆகையால் -அகில ஜகத் காரண பூதனாய்-அபேக்ஷித பல பிரதனாய் – அஸ்ப்ருஷ்ட தோஷ கந்தனாய் –
அனுபாவ்ய குண சம்பன்னனாய் -அத்யாத்ம ஞான ஜனகனாய் -ஸ்ரீ யபதியாய்-புருஷோத்தமனாய் -சர்வ ரக்ஷகனான
ஸ்ரீ மன் நாராயணனே சரண்யன் என்னும் இடமும்
மோஷார்த்தியான நான் என்கையாலே முமுஷுத்வமே அதிகாரி என்னும் இடமும்
சரணம் பிரபத்யே என்கையாலே பிரபத்தியே சம்சார நிவ்ருத்தி பூர்வகமான பரம புருஷார்த்த சித்திக்கு
உபாயம் என்னும் இடமும் சொல்லிற்று

பிரபத்தி யாவது -பர சமர்ப்பணம் என்னும் இடம் தோற்ற
பதிம் விஸ்வஸ்ய
ப்ரஹ்மணே த்வாமஹச ஓமித்யாத்மாநம் யூஞ்ஜீத -என்று
விஸ்வ பதார்த்தங்களும் ஸ்வாமியாய் -ப்ருஹத்வ ப்ருமஹணத்வ குண யுக்தமான மஹஸ்ஸாய் இருக்கும் என்கையாலே
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி
நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி
ப்ரஹ்மணோ மஹிமானம் ஆப்நோதி
தத் பாவ பாவம் ஆபன்ன
மம சாதர்ம்யம் ஆகதா
தம்மையே ஓக்க அருள் செய்வர்–என்கிறபடியே
ஆஸ்ரிதற்கு பரம ஸாம்யா பத்தியாகிற பலத்தைக் கொடுக்குமதாய் இருக்கிற ப்ரஹ்மத்தின் பொருட்டு
ஓமித்யாத்மநம் -என்று சேஷபூத வஸ்துவுக்கு சேஷத்வ வாசகமான மந்த்ரம் ஆகையால்
ஆத்ம சப்த சேதன சப்தங்களில் காட்டில் அந்தரங்க வாசகமான பிரணவத்தைச் சொல்லி
யுஞ்ஜீத-என்று சேஷமான தனக்கு சேஷத்வ அனுரூபமான போகமாகிற பல பிரதானமும் சேஷியாய் ரக்ஷகனானவனுடைய
க்ருத்யம் என்று அனுசந்திப்பான் என்று சொல்லிற்று

இப்பிரபத்தி தனக்கு புரஸ் சரண யோக்யதா பாதகாத்வாதி சா பேஷதை இல்லை –
வதார்ஹனுக்கும் நின்ற நிலையிலே அதிகாரம் உண்டு –
சரண்யன் சேதனன் ஆகில் தோஷம் கண்டு கை விடான் என்று இச் சரணாகதியினுடைய ஆதிக்யம்
ஸ்ருதி பிரசித்தம் -எங்கனே என்னில்

தேவாவை யஜ்ஜாத் ருத்ர மந்தராயன் ச ஆதித்யா நந்வாக்ரமத தேத்விதை வத்யான் பிராபதயந்த-
தாந்ந பிரதி பிராயச்சந் தஸ்மாத் அபிவத்யம் பிரபன்னம் ந பிரதி பிரயச்சந்தி -என்றும்
தேவாவை த்வஷ்டாரமஜிகாம்சன் ச பத்னீ ப்ராபத்யத தந்ந பிரதி பிராயச சந் தஸ்மாத்
அபிவத்யம் பிரபன்னம் ந பிரதி பிரயச்சந்தி -என்றும்
தேவ யாகத்தில் ஹவிர்பாகத்துக்கு வந்த ருத்ரன் அவர்கள் கொடோம் என்றவாறே அவன் நீங்கள் வத்யர் என்று
அவர்களைக் கொல்லத் தொடங்க -அவர்கள் அஸ்வினி தேவதைகளை சரணம் புக-
அவர்களும் எங்கள் பக்கல் பிரபத்தி பண்ணினவர்கள் வத்யரே யாகிலும் நாங்கள் அவர்களை விடோம் என்று
ருத்ரனோடு மலைந்து ரஷிக்கையாலும்
தேவ யாகத்தில் த்வஷ்டா தனக்கு ஹாவிர்பாகம் தரவேணும் என்று வர தேவர்கள் எல்லாரும் கூடி
இவன் அப்ராபதம் சொன்னான் இவன் வத்யன்-என்று இவனை ஹிம்சிக்கத் தேட -அவன் தேவ பத்னிகளை சரணம் புக
அவர்களும் எங்கள் பக்கலில் பிரபத்தி பண்ணினவன் வத்யனே யாகிலும் நாங்கள் காட்டித் தரோம் என்று
தேவர்களோடு மலைந்து நோக்குகையாலும்
வத்யனே யாகிலும் பிரபன்னனானவனை விடுவான் அல்லன்-என்ற இவ்வர்த்தம் ஸ்ருதி ஸித்தமாகையாலே

இப்படி ஸ்ருதி ஸித்தமான ப்ரபதநதத்தை -ஸ்ம்ருதி உப ப்ரும்ஹணம் பண்ணின ரிஷிகளும்
ஸ்ரீ இராமாயண பஞ்சம வேதாதிகளிலே வியக்தமாக அனுசந்தித்தார்கள் -எங்கனே என்னில்
கோந் வஸ்மின் சாம்ப்ரதம் லோகே குணவான் கஸ் ச வீர்யவான் தர்மஜ்ஞஸ் ச -என்று இந்த லோகத்தில்
இப்போது ஸீலவானுமாய் வீர்யவானுமாய் தர்மஞ்ஞனுமாய் இருப்பார் யார் என்று ப்ரச்னம் பண்ண
இவற்றை மேலே விஸ்த்ருதமாகக் காட்டினதாயிற்று ஸ்ரீ ராமாயணம்
அதில் சீலவத்தை யாவது -சிறியாரோடே பெரியன் தானே செறிகை
வீர்யவத்தை யாவது அநாயாசேந விரோதி நிரசன சீலனாகை
தர்மஜ்ஜதை யாவது -அகதிகளாய் துர்த்தஸா பன்னராய் இருக்கிற சம்சாரிகளுக்கு நம்மை ஒழியப் புகலில்லை-
இனி நம்மாலே பெறுமத்தனை என்று சரணாகதி தர்மமே பரமதர்மம் என்று இருக்கை
இந்த சீலவத்தையும் வீர்யவத்தையும் தம் தாமுடைய தண்மையைப் பார்த்து ஆஸ்ரயிக்கக் கூசினவர்களுக்கு கூசாமல் ஆஸ்ரயிக்கவும்-
அவர்கள் இருந்த இடத்தே சென்று முகம் காட்டி ஆஸ்ரயிப்பிக்கைக்கும்-
ஆஸ்ரயித்தால் அவர்களுடைய விரோதி நிரசனத்துக்கும் உறுப்பாகையாலே –
இவை மேலே சொல்லப் புகுகிற தர்மஜ்ஞதை யாகிற சரண்யதைக்கு உடலாய் இருக்கும்

இப்படிக்கு மேலே உபபாதிக்கப்படுகிறது -எங்கனே என்னில்
பிரதமத்திலே யஜ்ஞ விக்நத்தைப் பரிஹரித்துத் தர வேணும் என்று வந்த விஸ்வாமித்ரன் பின்னே தன் சீல அதிசயத்தாலே –
கிங்கரவ் சமுபஸ்திதவ் -என்று தானும் தன் உடைமையும் சேர அவனுக்குக் காலாளாய்ப் போய்
யஜ்ஞ விக்நரரான மாரீச ஸூபாஹூக்களை அழியச் செய்து யஜ்ஞ ரக்ஷணம் பண்ணி
ரிஷியினுடைய அபீஷ்டத்தை ச பலமாக்குகையாலும்

அநந்தரம் அபிஷேகம் உபக்ரமித்து நடக்க கைகேயி வர வியாஜத்தால் அதுக்கு விரோதம் வர -வனவாசோ மஹோதய -என்று
ரக்ஷகத்வமே ஸ்வரூபமும் ஜீவனமுமாய் இருக்கிற நமக்கு ஆர்த்தர் இருந்த இடத்திலே நாமே சென்று வினவி ரஷிக்கும் படிப் பெறுவதே என்று
மஹத் ஐஸ்வர்யம் பெற்றால் போலே முகம் மலர்ந்து வனவாச ஸூமுகர் என்றும் பேர் பெற்று சகல கைங்கர்யத்தில் தான்
சாம்ராஜ்ய தீஷிதனான திருவனந்த ஆழ்வான் தம்பியாய் அடிமை செய்யப் போந்த இடத்தில்
தத் உபகரண கநித்ர பிடகைகளும் வில்லும் கொண்டு பின் சென்றால் போலே
சர்வ ரக்ஷண தீஷிதனான தானும் தத் உபகரணமான பாகவத புருஷகாரங்களையும் பின்னிட்டுக் கொண்டு காடேறப் போய்
ஜென்ம வ்ருத்த ஞானங்களால் குறைய நின்றவன் அவன் தன் தன்னிலையை அறிவியாது இருக்க தன் கிருபையால் அவனுக்கு
குஹேந சஹிதோ ராமோ லஷ்மனே ந ச ஸீதயா-என்றும்
மாழைமான் மட நோக்கி யுன் தோழி யும்பி எம்பி என்று ஒழிந்திலை –உகந்த தோழன் நீ எனக்கு -என்றும் சொல்லுகிறபடியே
பாகவத அங்கீ காரத்தைம் புருஷகார கடாக்ஷத்தையும் புரஸ்கரிப்பித்து ரஷ்யத்வேந அங்கீ கரித்து-
இங்கு ஒழி -என்று சரமாவஸ்த்தமான கைங்கர்யத்தில் அந்வயிப்பித்தும்

அநந்தரம் தண்டகாரண்ய வாசிகளான ரிஷிகள் பக்கலிலே சென்று ஆவாசந்த வஹமிச்சாமி-என்று
அவர்கள் பக்கலில் தனக்கு இருப்பிடத்தை அபேக்ஷித்துத் தாழ நின்று அவர்கள் அபேக்ஷித அம்சங்களைக் கேட்டு –
பஸ்ய சரீராணி -என்று அவர்கள் தங்களுக்கு ராக்ஷஸரால் உண்டான வாரத்தியைக் காட்ட ப்ரத்யக்ஷமாகக் கண்டு
ப்ரதிஜ்ஜா தஞ்ச ராமேண வதஸ் சமயிதி ரக்ஷஸாம் -என்று உங்களுக்கு பீடா காரரான ராஷசரைக் குட்டிக்குலையாய் அறுத்து
பொகடக் கடவோம்-என்று சங்கல்பித்து அதுக்கு அங்குரார்ப்பணமாக கரதூஷணாதிகளை நிரசித்தும்

அநந்தரம் சர்வ லோக ஜனனியான பிராட்டி விஷயத்தில் குரூரமான அபராதத்தைப் பண்ணின காக விஷயமாகத் தம் நெஞ்சாலும்
அகப்பட வத்யன் என்று ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட
ச பித்ரா ச பரித்யக் தஸ் ஸூரைஸ் ச மஹர்ஷிபி -த்ரீன் லோகான் சம் பரிக்ரம்ய தமேவ சரணம் கத -சதம் நிபபதிம் பூமவ்
சரண்யஸ் சரணாகதம் -வதார்ஹம் அபி காகுத்ஸ்த க்ருபயா பர்யபாலயத் -என்று பிதாவான இந்திரன் முதலாக
சகல தேவதைகளும் ரிஷிகளும் லோக த்ரயத்திலும் உண்டான சகல பிராணிகளும் இவன் வத்யன் என்று தள்ளிவிட
மதி ஸூநயதையால் பூமியிலே வந்து விழ-
அது தன்னை சரண்யரான தாம் ப்ரணத இதி தயாளு -என்கிறபடியே தன் கிருபையால் சரணாகதி யாக்கி ரஷித்தும்

அநந்தரம் பிராதாவான வாலியாலே ராஜ்ய தாரங்களை இழந்து -இருந்த இடத்திலும் இருக்கப் பெறாதே
பர்வதாக்ரங்கள் தோறும் திரிந்த மஹாராஜருக்கு அவ்விடத்திலே புருஷாகார பூதையான பிராட்டிக்கு ஆஸ்வாச கரராம்படி பண்ணி
தன்னுடைய சீலவத்தையாலே தானே சென்று
சகரர சக்யம் ராமேண ப்ரீதஸ் சைவாக்நி சாக்ஷிநம் -என்று அவரோடே ப்ரீதி பூர்வகமாகத் தோழமை கொண்டு
அவர் நம்முடைய விரோதி நிரசனத்துக்கு இவர் சக்தரோ அன்றோ என்று சங்கிக்க
பாதாங்குஷ்டே நசி ஷேப –
பிபேதச புநஸ் சாலாந் -என்று சால சப்த கபே தகநம் -முதலான வியாபாரங்களாலே விஸ்வசிப்பித்து
விரோதியான வாலியை நிரசித்து இழந்த ராஜ்ய தாரங்களையும் மீட்டுக் கொடுத்தும்

அதுக்கு மேலே ஸ்வ குடும்ப த்வாரா பிராட்டிக்கு ஆஸ்வாச கரனாய் -ராம தாச பூதனான -திருவடியை நலியப் புகுந்த
ராவணனை மீட்க்கையாலே பாகவத அங்கீ காரம் உடையவனாய்
பிரதீயதாம் தாசரதாய மைதிலீ -என்று பெருமாளும் அவர் உடைமையும் சேர இருக்க இசையாய் -என்று ராவணனுக்கு
ஹிதம் சொன்ன ஸ்ரீ விபீஷண ஆழ்வானை
த்வாந்து திக்குல பாம்சநம் -என்று பரிபவித்துப் புறப்பட விட –
பரித்யக்தா மயா லங்கா -என்று நெருப்புப் பட்ட அகத்தில் நின்றும் புறப்படுமா போலே புறப்பட்டு
ராவனோ நாம துர்வ்ருத்தோ ராக்ஷஸோ ராக்ஷஸாதிப -தஸ்யாஹம நுஜோ ப்ராதா விபீஷண இதி ஸ்ருத –
சதுர்ப்பிஸ் சஹரஷோ பிர்ப்பவந்தம சரணங்கத-என்று சரணம் அடைய -ராவணனுக்கு அனுஜனான ப்ராதா இவன் –
விபீஷணன் என்று பிரசித்தன்-விரகு அறிந்து தப்ப வல்லார் நாலு பேரோடே சரணம் என்று வந்தான் –
ஆகையால் இவன் நினைவு இருந்தபடியாலும்-வந்த காலம் இருந்தபடியாலும் -சரணாகதருடைய வார்த்தை ஜீவிக்கும் கோஷ்டி என்று
ஆளிலே கலந்து நலியலாம் என்று வந்து சரணம் புகுந்தான் இத்தனை -ஆபத்து வந்த அளவிலே பிராதாவை விடவும் கூடாது –
இவன் நம் உயிர் நிலையிலே நலிய வந்தான் என்று நிச்சயித்து
வத்யதாம் வத்யதாம் -என்று சர்வ பிரகாரத்தாலும் இவனைக் கைக்கு கொள்ள ஓட்டோம் என்று நிற்க
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன -தோஷோ யத்யபி தஸ்யஸ்யாத் சதா மேதத கர்ஹிதம் -என்று
இவனுக்கு நீர் சொன்ன தோஷம் எல்லாம் உண்டாகிலும் அது நம்முடைய லாபம் காணும் –
நமக்கு குணாதிக்யம் உண்டாக்கினானாம் அத்தனை -இது நமக்கு கிடையாது காணும் -எங்கனே யாகிலும் இவன் பண்ணின
சரணாகதி யுக்தி ஆந்தரமான பாவத்தோடு அன்றிக்கே பாஹ்யமான பாவமே யாகிலும் வருந்தியும் கை விடேன் என்று அருளிச் செய்து –
வருந்தியும் என்றது -ஆஸ்ரிதருக்கு அநபிமதராய் இருப்பாரை-ஷிபாமி-ந ஷமாமி -என்று இருக்கிற நாம் –
யேந கேநாபி பிரகாரேண-அவர்களுக்கு அபிமதராம்படி பண்ணியும் கைக் கொள்ளும் அத்தனை ஒழிய கை விடேன் என்கை —

இன்னமும் இவனைக் கை விட்டால் சரணாகதி ரக்ஷணம் ஸ்வரூபமாய் இருக்கிற நமக்கு ஸத்பாவம் இல்லை காணும்
அதுக்கும் மேலே கபோதாதிகளைப் போலே யுக்த அனுஷ்டானம் பண்ணிப் போருவார் நாலு சத்துக்கள் இருந்த இடத்தே சென்றால்
நம்மைக் கண்டு புடவை ஒதுக்குவர்கள் என்றும்
ஆர்த்தோவா யதிவா த்ருப்த பரேஷாம் சரணாகத அரி பிராணன் பரித்யஜ்ய ரஷிதவ்ய-க்ருதாத்மநா -என்று
சரணாகதனாய் வருமவன் ஆர்த்தனாய் வரவுமாம் -செருக்கனாய் வரவுமாம் –
அவன் தான் அநேக அபராதங்களைபின் பண்ணினவன் ஆகவுமாம்-சரணம் என்ற யுக்தி மாத்திரத்தாலே
அவன் சரண்யனான சேதனானால் பிராணனை விட்டு ரஷிக்கப்படும்-
சரணாகத ரக்ஷணத்துக்கு பிராண பரித்யாகம் பண்ணுகை பெரிய ஆதிக்யம் அன்று காணும் என்றும்
சக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ்மீதி சயாசதே -அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் விரதம் மம -என்று
நம் பக்கலிலே ஸ்வ கீய பர சமர்ப்பண பூர்வகமாக ஒரு கால் பிரபன்னனாவனுக்கு சர்வ பூத விஷயமாகவும்
அபய பிரதானம் பண்ணக் கடவோம் -என்று காணும் நம்முடைய விரதம் என்று ப்ரக்ருத் யநுரூபமான ப்ரதிஜ்ஜையைப் பண்ணியும்
பத்தாஞ்சலி புடம் தீனம் யா சந்தம் சரணாகதம் -என்று சொல்லப்படுகிற காயிக மானஸ வாசிக ரூபமான பிரபத்தி
தேவயம பவதா ரஷ்யா பவத் விஷய வாசிநா -என்கிற மத அபிமானம் உண்டான தேச வாசம் –
இவற்றிலே அந்யதம மாத்திரமே யுண்டாகிலும் விடேன் என்று அருளிச் செய்து
ஏதத் அர்த்தமாக கபோத உபாக்யானம்-கண்டு வசனம் தொடக்கமான இதிஹாச வசனங்களை அருளிச் செய்த இடத்திலும்
பெருமாள் பக்கலிலே பரிவின் கனத்தாலே கலங்கி ஒன்றையும் அறியாதே இருந்த மஹாராஜரைப் பார்த்து
இவர் பிரகிருதி இருந்த படியால் இப்படி தெளியுமவர் அல்லர் –
இவர் முன்பு வாலி நிமித்தமான பயத்தால் வ்யாகுலரான அளவிலும் நம்முடைய சக்தி கண்டு தெளிந்தார் அத்தனை –
இப்போது அப்படியும் அன்றிக்கே நம் பக்கலிலே பரிவாலே கலங்கினவருக்கு நம்முடைய சக்தியைக் கண்டால் ஒழிய
தெளிக்கைக்கு உபாயம் இல்லை -அத்தை பிரகாசிப்போம் என்று பார்த்து

பிசாசான் தானவான் யஷான் ப்ருதிவ்யாஞ்சைவ ராக்ஷஸான்-அங்குள் யக்ரேண தாந் ஹன்யாம் இச்சந் ஹரி கணேஸ்வர -என்று
நமக்கு எதிரிகளானார் அடைய ஒரு கலத்தே உண்டு ஒரு முகம் செய்து நம்மை நலியத் துணிந்து வந்தாலும் நம் சிறு விரலில் ஏக தேசத்துக்கு
இரை போரார்கள் காணும் -நாம் நினையாமல் கிடக்கிறது அத்தனை காணும் என்று தம்முடைய பலத்தை அருளிச் செய்ய
அநந்தரம் பெருமாளுடைய பாக்யத்தாலே மஹாராஜர் தெளிந்து -அந்த விபீஷணன் நம்மிலும் பரியனாய் வந்தான் –
கைக்கொண்டு அருளீர் -என்று விண்ணப்பம் செய்ய

ஆநயை நம் ஹரி ஸ்ரேஷ்ட தத்தமஸ்ய அபயம் மயா-என்று நாம் அவன் வந்த போதே கைக்கொண்டோம் –
நத்யஜேயம் -என்று விடும் என்றபோதே அறிந்திலீரோ கைக்கொண்டமை –
உம்முடைய அனுமதியைப் பார்த்து இருந்தோம் அத்தனை காணும் -கடுகக் கொடு புகுவீர் –
அவன் நிற்கிற நிலை கண்டும் விளம்பிக்கை குரக்கரசார உமக்குக் கூடும் அத்தனை ஒழிய நமக்குக் கூடாது காணும் என்ன –
அவரும் கொடு வந்து காட்டிக் கொடுக்க
செல்வ விபீடணற்கு வேறாக நல்லானை -என்று மஹாராஜரும் பரிகரமும் இளைய பெருமாள் முதலானோரும் பஹிரங்கம் –
ராம பரிகரத்திலே அவனே அந்தரங்கன்-என்னும் படிக் கைக்கொண்டு
அபிஷிச்ய ச லங்காயாம் -இத்யாதிகளில் படியே அபிஷிக்தனாக்கித் திரு உள்ளத்தில் உண்டான சகல தாபங்களும் போய்
செய்தது வாயிற்றுச் செல்வனாய் -பிரிவின் பலம் முடி பெற்றுப் பிரிந்தவளுடைய பிராப்தியிலும் காட்டிலும்
இதிலே திரு உள்ளம் உகந்து ரசித்து அருளினார் என்றும்

இப்படித் தன் சீலவத்தையாலே தானே சென்று ஆஸ்ரயணீயனுமாய் –
வீர்யவத்தையாலே அவர்களுடைய விரோதிகளை அழியச் செய்து
சரணாகதி தர்மத்தினுடைய ப்ரபாவத்தை தானே அனுஷ்டித்துக் காட்டுகையாலே
குணவான் -வீர்யவான் என்று சொல்லப்பட்ட சீலவத்தையும் வீரவத்தையும் -தர்மஜ்ஞ என்று சொல்லப்பட்ட
தன்னுடைய பரம உபாயத்துக்கு உறுப்பு என்னும் இடமும் –
ஏவம் குண விசிஷ்டனாய் சரண்யனான தன்னுடைய பிரபாவமும் –
சரணாகதனுடைய ஆதிக்யமும் —
சரணாகதியினுடைய ஆதிக்யமும் -பிரகடனமாக ப்ரதிபாதிக்கப் பட்டது

இப்பிரகரணத்தால் சரணாகதனான அதிகாரிக்கு ஆஸூர பிரக்ருதிகளோடே சகவாசம் பண்ணலாகாது என்னும் இடமும்
சத் சகவாசம் பண்ண வேண்டும் என்னும் இடமும்
அசத்துக்களுக்கு ஹிதம் சொல்லலாகாது என்னும் இடமும்
பகவத் சந்நிதி உள்ள தேசம் பிராப்யம் என்னும் இடமும்
பகவத் அனுபவ விரோதியான தேசம் த்யாஜ்யம் என்னும் இடமும்
சரண வரணத்துக்குப் புரஸ் சரண்யத்ய அபேக்ஷை இல்லை என்னும் இடமும்
பகவத் விஷயத்தில் பரிவரானபடியும்
பகவத் ஸமாஸ்ரயணமும் அங்கீ காரமும் ததீய புருஷகார அனுமதிகளாலே என்னும் இடமும்
வ்யதிரிக்தரான சகலரும் த்யாஜ்யர் என்னும் இடமும்
அவர்களும் இவனை விட வேணும் என்னும் இடமும்
சரணாகதனுக்கு விஸ்வாச மாந்த்யம் பிறந்தால் விஸ்வாஸ ஹேது பகவச் சக்தி
தத் பிரகாசகனும் அவனே என்னும் இடமும்
சரண வரணம் ஸ்வ நிகர்ஷ புரஸ்கார பூர்வகம் என்னும் இடமும் சொல்லிற்று ஆயிற்று –

இப்படியே மேலும் ரஷ்யபூதனுடைய இதர சாதன அன்வயமும்
ரக்ஷகனுடைய குணவத்தையே விஸ்வாஸ ஹேது என்னும் இடமும்
சரைஸ்து சங்குலாம் க்ருத்வா -என்கிற ஸ்லோகத்தாலும்
ஆஸம்ஸேயம்–என்கிற ஸ்லோகத்தாலும் சொல்லிற்று ஆயிற்று -எங்கனே என்னில்

பர பலார்த்தநனாய் இருக்கிற ரக்ஷகன் தானே எனக்கு விரோதியாய் இருக்கிற லங்கையைத் தன் கையில் அம்புகளால்
செருப்பும் தேவாரமும் ஒக்கக் காட்டி ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி பண்ணி அநந்ய உபாய ஸ்வரூபையான என்னை
எடுத்துக் கொண்டு போனார் ஆகில் தம் பிறவிக்கும் தமக்கும் சத்ருசமாய் இருக்கும் என்று
ஸ்வ சக்தி நிவ்ருத்த பூர்வகமாக ததேக ரஷ்யத்வ பிரதிபத்தியாலே தன்னுடைய அந்தராத்மாவானது ஸூத்தம் –
அவர் பக்கலிலே அநேக குணங்கள் உண்டு –
ஆகையால் சடக்க்கென பெருமாள் என்னைக் கிட்டுவர் என்றும் அருளிச் செய்கையாலே
அதிகாரியினுடைய இதர சாதன அநந்வயமும்
சரண்யன் பக்கலிலே குணவத்தையே ரஷகம் என்னும் இடமும் சொல்லிற்று ஆயிற்று

ஏவம் பூத பிரபத்தி வைபவத்தை அறிந்தவன் ஆகையால் -சரண்யன் தானும் தனக்கு ஓர் ஆபத்து வந்த போது
ஸூக்ரீவம் நாதம் இச்சாமி
ஸூக்ரீவம் சரணம் கத –என்று பிரபத்தியைப் பண்ணும் அத்தனை –
சமுத்திரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி-என்று சரணாகதன் சரண்யனுக்கு உபதேசிப்பதும் பிரபத்தியையே
இவர் தாம் பிராக்ருத்யா தர்ம சீலஸ்து –என்று தர்ம சீலராகையாலும்
ராவணனைப் போலே நை சர்க்கிகமான பாரதந்தர்யத்தை விட்டு ஆரோபிதமான ஸ்வா தந்தர்யத்தை நிர்வஹித்துக் கொண்டு
போருகை யன்றிக்கே ஸ்வதஸ் ஸித்தமாய் ஐஸ்வர்யமான ஸ்வா தந்தர்யத்திலே முசித்துப் பாரதந்தர்யம் இட்டு –
பிதரம் ரோசயாமாசா-என்று வந்து மாதா பிதாக்களுக்கும் வசிஷ்டாதிகளுக்கும் பரதந்த்ரனாய் திரியா நிற்க
விச்வாமித்ரன் ஸ்வா தந்தர்ய கார்யமான ரக்ஷண தர்மத்தை அர்த்திக்க

எவ்வவஸ்தையிலும் ரக்ஷகத்வம் விடாத ஸ்வரூபம் ஆகையால் -அது தன்னை -பிதாவினுடைய ஏவலாகையாலே
பாரதந்தர்ய காரியமாகக் கற்பித்து அவன் பின்னே போய்
கிங்கரவ் முபஸ்திதவ்-என்று அவனுக்கு பரதந்த்ரனாக -அவன் இவனுடைய சக்தியைக் கண்டு இசையாதே இருந்து
ஈச்வரத்வ ஸூசகமான ஸ்ரீ லஷ்மீ சம்பந்தத்தையும் உண்டாக்க நம்முடைய பாரதந்தர்யம் ஜீவித்த
தசரத க்ருஹமே அமையும் நமக்கு என்று மீண்டும் அங்கே வர அவ்வளவில்
ரக்ஷண உபயோகியான புருஷகார பூர்த்தி உண்டாயிற்று

இனி சர்வரையும் ரஷிக்க வேணும் என்று அபிஷிக்தனாகத் தேட -ரக்ஷணத்தில் பராதீனனாகையாலே
ஆர்த்தரான ரஷ்ய விஷயம் இருந்த இடத்து ஏற-பித்ரு வசன பரிபாலன வ்யாஜத்தாலே போந்து
ஆவாஸநத்வஹம் இச்சாமி -என்று ரிஷிகளுக்குப் பரதந்த்ரனாகத் தேட -அவர்கள்
நியாய வ்ருத்தாய தாநயாயம் தர்ப்பயாமா ஸூரீஸ் வரம் -என்று ஈஸ்வர ஈஸித்வய சம்பந்த அனுரூபமாக ஆராதிக்க –
அத்தை விட்டு திர்யக் யோனி யாகையாலே அறிவில்லாதவனாய் வாயு புத்ரனாகையாலே உள்ள அறிவும்
துர்மான சேஷமாய் இருக்கும் குரங்கின் காலைப் பிடிக்கக் கடவோம் என்று பார்க்க அவன் –

தாஸோஹம் கோஸலேந்தர்ஸ்ய -என்று எதிரே காலைப் பிடிக்க அத்தாலே அந்த நினைவு பிரதிஹதமாய் –
ஸூக்ரீவம் சரணம் கத என்று -இவன் குரக்காட்டத்துக்கு மூர்த்த அபிஷிக்தனாய் இருக்கும் –
நம்முடைய பாரதந்தர்யத்துக்கு பிரதி சம்பந்தியாம் -என்று மஹா ராஜரைக் காலைப் பிடிக்க –
அவனும் சரண்யராய் அபிமத விரோதி நிவ்ருத்தி பூர்வகமாக அபிமத லாபம் பண்ணித் தரக் கடவோம் என்று
கால கல்பனை பண்ணி ப்ரதிஜ்ஜை பண்ணிக் கொடுத்து மத்தனாய் இவர்களை மறந்து விஷய பரவசனாய் இருந்து விட
ஒரு குண சித்திக்காக குணி ஒழிய ஒண்ணாது என்று பார்த்து
த்வாந்து சத்யா ததிக்ராந்தம் ஹநிஷ்யாமி ச பாந்தவம் –
மாவாலி பதவந்மக -என்று ஸ்வா தந்தர்ய கார்யமான கோபத்தைப் பண்ணுகையாலே பாரதந்தர்யம் சித்தியாதே இருக்க
அத்தாலே அதி விஷண்ணராய்-இப்படி பாரதந்தர்யத்திலே அதி பிரசங்கம் பண்ணி இருப்பார் ஒருவர் ஆகையால்

சமுத்திரம் ராகவோ ராஜா சரணம் கர்த்தும் அர்ஹதி -என்று விபீஷணப்பெருமாள் உபதேசித்த அளவில் அதி ப்ரீதரராய்
நமக்கு ஸ்வரூப சித்தியும் குண சித்தியும் அபிமத சித்தியும்
இவரால் இருந்தது -இவரோபாதி நமக்கு ஆப்ததமர் இல்லை -இவர் சொன்ன பிரகாரத்தில் செய்யக் கடவோம்
இனிக்கடல் தான் ஒரு தேவதை யாகையாலும் ஜட பிரகிருதி யாகையாலும் நம்மைக் கும்பீடு கொள்ளும் என்று திரு உள்ளத்திலே கொண்டு
ததஸ் சாகர வேலாயாம் தர்ப்பா நாஸ்தீர்ய ராகவ-அஞ்சலீம் பிராங் முக க்ருத்வா பிரதி சிஸ்யே மஹோததே -என்று
பாரதந்ரய அபிநிவேசத்தாலே அபேக்ஷித அநபேஷித நிரூபணம் பண்ணாதே ச புரஸ் சரணமாக ப்ரபத்தியைப் பண்ண
அவன் ரத்நாகரன் ஆகையால் சத்துக்களை எல்லாம் ஆவாஸ மாகையாலும்
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்றவளுக்கு பிறந்தகமாகையாலும் சரண்யாகை முறை அன்று என்று இருக்குமவன் ஆகையால்
வந்து முகம் காட்டில் நாம் சரண்யர் ஆவுதோம் அப்போது ஸ்வரூப நாசம் பிறக்கும்
வாராத போது தொடுத்த அம்புக்கு இலக்காய் ரூப நாசமே இறே உள்ளது -என்று வந்து முகம் காட்டாதே இருக்க-அப்போது –
சாபமாநய ஸுமித்ரே -என்று ஸ்வா தந்தர்ய கார்யமான கோபமே சேஷித்து விட்டது –
இப்படி அத்யந்தம் அபிமதமான பாரதந்தர்யம் சித்திக்கும் படி பிரதிசம்பந்தியாய் வந்து சரண்யன் ஆயிற்று இலன் என்று
அதிகுபிதனாய்த் தொடுத்த அம்பும் தானுமாய் நிற்கிற தசையில் சரண்யனான வருணன் சரணாகதனாய் வந்து தோன்ற –
அபிமத விரோதம் பண்ணினானே யாகிலும் நாம் இருந்த இடத்திலே பயப்பட்டு வந்தவனை ரஷிக்க வேணும் என்று
அவனுக்குத் தொடுத்த அம்பு தன்னை விட்டே அவன் விரோதிகளை அழியச் செய்து அவனைக் கொண்டு
ஸ்வ விஷயமாகக் கிஞ்சித்கரிப்பித்து விட்டான் என்று ரிஷி எழுதினான் இறே

ஆகையால் ஸ்ரீ ராமாயணத்தால் பிரதிபாதிதமாயிற்று பிரபத்தி வைபவம் என்னும் இடம் ஸூஸ்பஷ்டம்

மஹா பாரதத்தாலும் –
ஸர்வேஷா மேவலோகாநாமபி தாமதாஸ மாதவ -கச்ச தவமே நம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -என்று
ஆபன்னரானார்க்கு வசிஷ்டாதிகள் உபதேசிப்பதும் பிரபத்தியையே
திரௌபதியும் துச்சாதனன் பரிபவிக்க பார்த்தாக்களும் பந்துக்களும் காய் விட்டு புறம்பு புகல் அற்று இருக்கிற தசையில்
சங்கு சக்ர கதா பாணே-இத்யாதியால்
ரக்ஷகனாய் பிராப்தனான கிருஷ்ணன் விஷயத்தில் பிரபத்தி பண்ணினாள் அத்தனை இறே
சங்கு சக்ர கதா பாணே
அதிர்முகமுடைய வலம்புரி குமிழ்த் தழல் உமிழ் ஆழி கொண்டு எறிந்து அங்கு எதிர்முக
அசுரர் தலைகளை இடரும் எம் புருடோத்தமன் -என்றும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் -என்றும்
நீ ஆயுதம் எடுத்தது ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்காக அன்றோ
த்வாரகா நிலய-
பரித்ராணாயா சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே -என்றும்
அவதார பலம் சாது பரித்ராண துஷ்க்ருதி விநாசகங்களுக்காக அன்றோ சங்கல்பித்தது
அச்யுத
ஆஸ்ரிதர் அளவில் -நத்யஜேயம் என்ற வார்த்தை மத ஏக வர்ஜயமோ
கோவிந்த
பசுக்களையும் தத் பிராயரையும் ரஷிக்கைக்காக அன்றோ கோவிந்த அபிஷேகம் பண்ணிற்று
புண்டரீகாஷா
பாஹிமாம் புண்டரீகாஷா
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் -என்று
நீ கண் படைத்தது ஆர்த்த ரக்ஷணம் பண்ண வன்றோ -எனக்கு நேர வேண்டுவது ஒரு பார்வை அன்றோ
ரக்ஷமாம் சரணாகதாம்
த்வத் ஏக ரக்ஷயையாய் இருக்கிற ஏன் அளவிலே நீ பேசாதது என்-
என்னை ரஷிக்கைக்கு ஈடான பரிகரம் உனக்கு இல்லாமையோ
தூரஸ்தனாயோ
ஆஸ்ரித சம்ரக்ஷணத்தில் மோக சங்கல்பனாயோ
ரக்ஷண தர்மம் நீ பிறந்து படைத்தது அன்றோ -இது தன்னில் அருமை உண்டோ -இது தனக்கு பிரதிபந்தகம் உண்டோ –
இத்தனையும் அன்றியிலே உனக்கு ஸ்வரூப அனுரூப குணாதிகளுடைய சித்தியும் இத்தாலேயாய் இருக்க
நான் பரிபவப்படுகை பிராப்தமோ என்று சரண்ய சரணாகதருடைய ஸ்வரூபத்தை யதாவாக அனுசந்தித்து பிரபத்தி பண்ண
கோவிந்தேதி யதா க்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாசிநம் -ருணம் ப்ரவ்ருத்தம் சிவமே ஹ்ருதயான் நாபஸர்ப்பதி -என்ற போதே
அபிமத சித்தி பிறந்து இருக்கச் செய்தேயும் சந்நிஹிதனாய் நின்று கார்யம் செய்யப் பெறாமையாலே
தனிசாளனாய் நெஞ்சாறல் பட்டுப் போனான் என்றும்

அத பாதக பீதஸ்த்வம் சர்வ பாவேந பாரத -விமுக்தாநய சமாரம்போ நாராயண பரோபவ -என்று
தர்ம தேவதை தர்ம புத்ரனைப் பார்த்து –
சர்வ சரீரிகனாய் -சர்வ கர்ம பிரேரிகனாய் -சர்வாவாசனாய் சர்வ ஆதாரனாய்-சர்வ கர்ம சமாராத்யனாய் இருக்கிற
நாராயணன் பக்கலிலே சகல கிரியா நிவ்ருத்தி பூர்வக பர ந்யாஸத்தைப் பண்ணி இரு என்று உபதேசித்தான்

தஸ்மாத் ஸர்வஸ்ய பர்த்தாரம் விஷ்ணும் ஜிஷ்ணும் ஸ்ரீ யபதிம் -கோவிந்தம் கோபதிம் தேவம் சததம் சரணம் வ்ரஜ -என்று
சர்வ லோகங்களையும் வ்யாபன பரண ஸ்வா மயாதிகளாலே அதிசயித்து இருப்பானாய் ஸ்ரீ யபதியாய்-சர்வ ஸூலபனாய்
ஞாநீ அஞ்ஞாநீ விபாகம் அற எல்லாருக்கும் ரக்ஷகனாய் இருக்கிறவனை சரணம் புக்கு என்று உபதேசிக்கையாலும்

ஸோஹம்தே தேவ தேவேச நார்ச்ச நாதவ்ஸ் துதவ் நச–சாமர்த்த்யவான் க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி ப்ரசீதமே -என்று
கர்ம ஞானாதி நிவ்ருத்தி பூர்வக கேவல க்ருபாதீன பகவத் பிரசாதமே உபாயம் என்று சொல்லுகையாலும்

பிப்யதாம் ம்ருத்யு சம்சாரா தீஸ்வரஸ்ய அபவர்க்கதாத் -நாந்யம் தவ பதாம் போஜாத் பச்யாமி சரணம் ந்ருணாம் -என்று
ஸ்வரூப நாசகமாய் இருந்துள்ள சம்சார நிமித்தமாக பயப்பட நின்றுள்ள சேதனர்க்கு தந் நிவ்ருத்தி பூர்வக
மோக்ஷ லாபத்துக்கு சர்வ நியாந்தாவாய் உள்ள தேவர் திருவடிகளை ஒழிய உபாயம் என்று சொல்லுகையாலும்

ஸ்மருதே சகல கல்யாண பாஜநம் யத்ர ஜாயதே -புருஷம் தமஜம் நித்யம் வ்ரஜாமி சரணம் ஹரிம்-என்று
இந்திரன் சரணம் புகுருகையாலும்

சாண்டில்யனும் சம்சாரிகளுடைய துர்க்கதியையும் பகவல் லாபத்தினுடைய சீர்மையையும் அனுசந்தித்து
வ்ருதைவப வதோ யாதா பூயஸீ ஜென்ம சந்ததி -தஸ்யா மந்ய தமம் ஜென்ம சஞ்சிந்த்ய சரணம் வ்ரஜ -என்று
சம்சார ஆபந்தனாய்த் திரிகிற நீ வ்யர்த்தமே போகிற ஜென்மத்தில் ஒரு ஜென்மத்தைப் பூவுக்கு இட்டால் போலே என்று
நினைத்து ப்ரபத்தியைப் பண்ணிப் பிழைக்க வல்லையே என்று உபதேசிக்கையாலும்

தாவதார்த்தி–இத்யாதி ஸ்லோகங்களால் சதுர்வித அதிகாரிகளுக்கும் பிரபத்தியை உபாயமாகச் சொல்லுகையாலும்
பாரத சாரமான ஸ்ரீ கீதையும்
மாமேவயே பாபதயந்தே மாயா மே தாம் தரந்திதே -என்று நான் கர்ம அனுகுணமாகப் பிணைத்த சம்சார துரிதம்
என்னையே உபாயமாகப் பற்றினார்க்கு நானே போக்குவேன் என்றும்

பரா மயன் சர்வ பூதாநி யந்த்ர ரூடாநீ மாயயா -தமேவ சரணம் கச்ச சர்வ பாவேந பாரத தத் ப்ரசாதாத
பரமா சாந்திம் ஸ்தானம் ப்ராப்ஸ்யசி சாஸ்வதம் -என்று
சர்வ பூதங்களையும் யந்த்ரா ரூடமாக்கி நியாமிப்பித்துக் கொண்டு ஹ்ருதிஸ்தனாய் இருக்கிற சர்வேஸ்வரனை சரணம் புகு-
அவனுடைய பிரசாதத்தாலே சம்சார நிவ்ருத்தி பூர்வகமாக சாஸ்வதமான பதத்தை ப்ராபிப்புதி-என்று
பல இடங்களிலும் பிரபத்தியை பிரபத்தவ்யன் தானே விதித்துப் போருகையாலும்
மஹா பாரதத்துக்கும் இதுவே தாத்பர்யம்

ஜிதந்தையிலும் ஸ்வேத தீப வாசிகள் ஷீராப்தி நாதனுடைய கண் அழகிலே தோற்று
ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பாவந –என்பது
ஸர்வதா சரண த்வந்தம் வ்ரஜாமி சரணம் தவ -என்பது –
சம்சார பய பீதராய்க் கொண்டு -த்வமேவ சரணம் -என்றும் -பாஹிமாம் புண்டரீகாக்ஷத ஜாநே சரணம் பரம என்றும்
பல இடங்களிலும் பிரபத்தியை பிரயோகித்தார்கள்
இது தான் -இதம் சரணம் அஞ்ஞானம் -அஞ்ஞா சர்வ ஞாபகதா நாம் -அவித்யாத -அறிவிலேனுக்கு அருளாய் –
அடியேன் அறிந்து -அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் – இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
அஞ்ஞரோடு சர்வஞ்ஞரோடு வாசியற சர்வருக்கும் உபாயமாய் இருக்கும்

இதில் அஞ்ஞராகிறார் –ஞான க்ரியா பஜன சம்பத கிஞ்ச நோஹமிச்சாதிகார சகநாநுசயாநுபிஜ்ஞ -என்றும்
உபாயாந்தர விஞ்ஞான ஸக்தேரஜ்ஞஸ்ய யுஜ்யதே–என்கிறபடியே
பகவல் லாபத்துக்குத் தன் பக்கல் ஞான சக்தி இல்லாதவர்கள்

சர்வஞ்ஞராகிறார் -திவ்யஞ்ஞாந உபபன்னாஸ்தேந சில்பஸ் தத்ர சோஸ்யதே-என்றும்
அஹம் தஸ்யா நுபாவஞ்ஞா -என்றும்
நதவாம் குர்மித சக்ரீவ -என்று ரிஷிகளையும் நாரீணாம் உத்தமமையும் போலே –
ஸ்வ ரக்ஷண ஸ்வ அன்வயம் ஸ்வரூப ஹானி என்னும் இடத்தையும்
உத்பத்தி பல தசைகளில் கரமேஸ்வர சாபேஷமான சாதனாந்தரங்களுடைய தோஷத்தையும்
சத்ருச உபாய வைதுர்யம சாஷாத் பகவதோ விதன்-சர்வஞ்ஞம் சரணம் யாதி யோக மார்க்க பராங்முக -என்று
அகில புவன ஜென்மாதிகளையும்
ஸாஹாய்ய க்ருத்ய மகிந தஸ்ய -என்னும்படி தானே செய்கிற ஷாட் குண்ய பூர்ணனுடைய தேச வஸ்துக்களாலே
அபரிச்சேதயமான ஸ்வ பாவத்தை அறிகையாலே அநந்ய சாத்தியம் என்னும் இடத்தை அறிந்து இருக்குமவர்கள்

பக்தி பரவசராகிறார் -மயர்வற மதிநலம் அருளப் பெற்ற பக்தியால் -ஸ்வர நேத்ராங்க விக்ரியா -என்னும்படி
மொய்த்துக் கண் பனி சோர உடலம் நீராய் அலைந்து கரைய -சித்தமும் செவ்வை நில்லாதே பர குணாவிஷ்டமாய்
அதமருதித கஷாயா கேசி தாஜாந தாஸ்ய த்வரித சிதில சித்தா-என்றும்
சர்வ காலம் பிரேம வசாத் பஜன பக்தோப்யந நயதீ-உபாய மவாப்யபாயம் வாஷமோநயந் நா வலம்பிதும்-என்னும்படி
சிதிலனாகையாலே அடைவுபட அனுஷ்ட்டிக்க மாட்டாதே –
ஆரா அன்பில் அடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாய் -என்று பிரார்த்திக்குமவர்கள் –

இவ்வதிகாரி த்ரயத்துக்கும் இப்பிரபத்தியே உபாயம் என்று -அவித்யாத -என்கிற ஸ்லோகத்தாலே
ஸுவ்நக முனி வியாக்யானம் பண்ணினான் என்று பட்டர் அருளிச் செய்தார் –
ஆகையால் ஜிதந்தையிலும் தாத்பர்யமான அர்த்தம் இதுவே

அநந்ய சாத்யே ஸ்வா பீஷ்டே
அஹம் அஸ்ய அபராதாநாம் ஆலய -என்ற இரண்டு ஸ்லோகங்களாலும் பிரபத்தியினுடைய லக்ஷணம் சொல்லப்பட்டது –
எங்கனே என்னில்
அநந்ய சாத்யே ஸ்வா பீஷ்டே –உபாயாந்தரங்களினுடைய துஷ்கரத்வ-ஸாபாயத்வ-ஸ்வரூப அநநுரூபாத்வாதிகளாலும் –
சித்த உபாயத்தினுடைய ஸஹாயாசகத்வ ப்ராப்திகளாலும் -சேதனனுடைய பராதீனத்வத்தாலும் ஸ்வ அபீஷ்டமான புருஷார்த்தம்
வேறு ஒன்றால் சாதிக்கப் படாது என்கிற ஞானம் பிறந்த அளவில் அவனுடைய வாத்சல்ய ஸ்வாமித்வ பரம காருணிகத்வாதி
குண அனுசந்தான ஹேதுக மஹா விஸ்வாஸ பூர்வகமாக புருஷார்த்த பூதனானவன் தன்னையே உபாயமாக யாஸிக்கை பிரபத்தி என்றும் –
அஹம் அஸ்ய அபராதாநாம் ஆலய -என்று அபராதாநாம் ஆலயனாய் அகிஞ்சனனாய் அகதியாய் இருக்கிற எனக்கு
வாத்சல்ய யுக்தராய் சர்வஞ்ஞத்வ சர்வ சக்தித்வாதி குண பரிபூர்ணராய் ப்ராப்தராய் இருக்கிற தேவரீரே
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் உபாயமாக வேணும் என்கிற பிரார்த்தனா ரூப அனுசந்தானம்
பிரபத்தி என்றும் இதனுடைய லக்ஷணம் சொல்லிற்று –

இப்படி ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களை லக்ஷணமாகச் சொல்லுகையாலே
ஆநு கூல்யாதிகள் ஆறும் உபாய வரணம் பண்ணின அதிகாரிக்கு உபாய பூதனான ஈஸ்வரனாலே உண்டாம்
ஸ்வ பாவ விசேஷங்கள் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்யும் வார்த்தை

ஸ்ருதவாதா மாண்ய சேஷேண பாவநா நிச ஸர்வஸ -புநரேவாப்யபாஷத-கோ தர்மஸ் சர்வ தர்மாணாம் பவத பரமோ மத -என்று
ஸ்ரீ பீஷ்மரோடே சகல தர்மங்களையும் கேட்ட தர்ம புத்ரன் அவற்றிலே தனக்கு அபிமதமாய் இருபத்தொரு தர்மத்தில்
தத்பரனாய் விடுகை அன்றிக்கே-எல்லா தர்மங்களிலும் உமக்கு அபிமதமான தர்மம் எது என்று கேட்க
ஏஷமே சர்வ தர்மாணாம் தர்மோதி கதமோ மத -யத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்ச்சயேந நாஸ் சதா –என்று
அசலையான பக்தியால் சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்குமதே எனக்கு பரமமான தர்மம் என்று சொல்லுகையாலும்
தர்மஞ்ஞ சமய பிரமாணம் வேதாஸ் ச -என்றும்
விதயஸ் ச வைதிகாஸ் த்வதீய கம்பீர மநோ நு சாரிண-என்று ஆப்த பரிக்ரஹமே பிரபல பிரமாணம்
வேதம் இவர்கள் பரிக்ரஹத்துக்கு அனுமதி பண்ணிப் போம் அத்தனை என்று சொல்லுகையாலும்
பிராமாணிக பரிக்ரஹமே பிரபலம்

அப்படிக்கு ஸ்வ யோக மஹிமா சாஷாத்க்ருத தத்வஞ்ஞாநராய் இருக்கை இன்றியிலே
நிர்ஹேதுக பகவத் பிரசாத லப்த ஞானராய் நமக்கு பரமாச்சார்யரான ஆழ்வார்களும்
சம்சார பயம் அனுவர்த்தித்த போதும் -ப்ராப்ய த்வரை வடிம்பிட்ட போதும் பல இடங்களிலும்
ப்ரபத்தியைப் பண்ணிப் போருவதொரு நிர்பந்தம் உண்டு -எங்கனே என்னில்

நெறி வாசல் தானேயாய் நின்றானை -என்றும்
மாலடியே கை தொழுவான் அந்தரம் ஓன்று இல்லை அடை-என்றும்
தன் வில் அம் கை வைத்தான் சரண் -என்றும் –பொய்கையாழ்வாரும்

பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி-என்றும்
பைம்கமலம் ஏந்திப் பணிந்தேன் -என்றும்
அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம் எவர் வணங்கி -என்றும்
அன்று இடர் கெடுத்த ஆழியான் பாதம் பணிந்து -என்றும் பூதத்தார்

அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்-என்றும்
சக்கரத்தான் தாள் முதலே நங்கட்க்கு சார்வு -என்றும் பேயாழ்வார்

அழகியான் தானே அரி உருவம் தானே பழகியான் தாளே பணிமின் -என்றும்
அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சல் என்ன வேண்டுமே -என்றும் திருமழிசைப்பிரான்

திருப்பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் -என்றும்
நின்னருளே புரிந்து இருந்தேன் -என்றும் பெரியாழ்வார்

நாராயணனே நமக்கே பறை தருவான் -என்றும்
புண்ணியம் யாமுடையோம் -என்றும்
செங்கண் மால் சேவடிக்கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம் -என்றும் நாச்சியார்

திருக்கமல பாதம் வந்து –என்று திருப்பாணாழ்வார்

கற்றினம் மேய்த்த எந்தை கழல் இணை பணிமினீரே -என்றும்
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான் -என்றும்
உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை உகத்தி போலும் -என்று தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்

உன் சரண் அல்லால் சரண் இல்லை -என்றும்
உன் பற்று அலால் பற்று இலேன் -என்றும்
உன் இணை அடியே அடையல் அல்லால் எங்குப் போய் உய்கேன் -என்றும்
மற்று யாரும் பற்று இலேன் என்று அவனைத் தாள் நயந்த -என்ற குலசேகரப்பெருமாள்

நலம் புரிந்து –திருவடி அடைந்தேன் -என்றும்
அற்றேன் வந்து அடைந்தேன் -என்றும்
உலகம் அளந்த பொன்னடியே அடைந்தேன் -என்றும்
ஆழி வண்ண நின்னடி இணை அடைந்தேன் -என்றும்
கண்ணனே களை கண் நீயே -என்றும்
அடி இணை பணிவன் வரும் இடர் அகல மாற்றோ வினையே -என்று திருமங்கை ஆழ்வார்

வண் புகழ் நாரணன் திண் கழல் சேர் -என்றும்
அலர்மேல் மங்கை உறை மார்பா –உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -என்றும்
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் -என்றும்
கழல்கள் அவளயே சரணாகக் கொண்ட -என்றும்
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்-என்றும்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -என்றும்
களை கண் மற்று இலேன் -என்றும்
உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம் சொல்லிச் சென்மின்கள் -என்றும்
ஆத்தன் தாமரை அடி அன்று மற்று இலம் அரண் -என்றும்
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் -என்றும் நம்மாழ்வார்

மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே -என்றும்
அன்பன் தன்னை அடைந்தர்வர்களுக்கு எல்லாம் அன்பன் -என்றும் ஸ்ரீ மதுரகவியாழ்வார்

இப்படி ஆழ்வார்கள் எல்லாம் ஏக கண்டராக பிரபத்தியைப் பண்ணிப் போருகையாலும் –

இவர்களை பின் சென்ற ஆளவந்தார் பாஷ்யகாரர் முதலானோரும்
ந தர்ம நிஷ்டோஸ்மி
த்வத் பாத மூலம் சரணம் பிரபத்யே
அசரண்ய சரண்யாம் அநந்ய சரணஸ் சரணம் அஹம் பிரபத்யே
சர்வ தர்மாம்ச ச ஸந்த்யஜ்ய சர்வ காமம்ஸ் ச அக்ஷரான் லோக விக்ராந்த சரணவ் சரணம் தேவ்ரஜம் விபோ -என்று
இதர உபாய நிவ்ருத்தி பூர்வகமாகவும்
புருஷகார புரஸ்சரமாகவும் பிரபத்தியை பிரயோகிக்கையாலும்
ஸ்ருதியும்
தத் உப ப்ரும்ஹணம் பண்ணின ரிஷிகளும்
இத்தை ஆதரித்த அளவன்றியே ஆப்த பரிக்ரஹமும் அதிசயித்து இருக்கையாலே பிரபத்தியே சர்வ அதிகாரமான உபாயம்

அப்படியே சாஸ்திரங்களில் புத்ர பசு அந்நாதிகளை புருஷார்த்தங்களாகச் சொல்லா நிற்கச் செய்தேயும் –
அவை அல்பமாய் அஸ்திரமாய் அநேக தோஷ துஷ்டமாய் துக்க பஹுளமாய் இருக்கையாலும்
ஸ்வர்க்காதி போகங்களை பார்த்தால் –
ஸ்வர்க்கேபி பாத பீதஸ் யக்ஷயிஷ்ணோர் நாஸ்தி நிர்வ்ருதி -அசந தோஷஸ் ச பவதி தருஷ்ட்வாதிப்தாம் பர ஸ்ரீ யம்
ஸூக வ்யாப்தம் நஸ்கா நாம் ஸஹஸா பத நமதத -ஸூபஸ்ய கர்மன க்ருத்ஸனம பலம் தத்ரோப புஜ்யதே
ந சாந்யத் க்ரியதே பூயஸ் சோத்ர தோஷோ மஹாந பூத -அத ஸிரோ ப்ர்த் த்ருஸ்யந்தே நாரகைர் திவி தேவதா
தேவாஸ் சாதோ முகாந் சர்வாந்த பஸ்யந்தி நாரகான்-இத்யாதிகளாலே
கூட இருந்து ஸூக அனுபவம் பண்ணுகிறான் ஒருவன் புண்ய ஷயத்திலே அடித்துக் கொண்டு விழக் கண்டு தனக்கும் நடக்கும் என்றும்
அதிசயித்த ஸூக அனுபவம் பண்ணுவாரைக் காணாத் தன்னுடைய ஸூக அனுபவம் துச்ச அனுபவ சமமாய்த் தோற்றும் என்றும்
பூர்வார்ஜித புண்ய பலம் அனுபவிக்குமது ஒழிய புண்யாந்தரம் ஆர்ஜிக்கப் போகாமையாலே
புண்ய க்ஷய நிபந்தமான ஸூக க்ஷய பயம் நடக்கும் என்றும்
நாரகிகளுடைய துஸ்சக துக்க அனுபவ தர்சனத்தாலே பரிதபித்தராவர்கள் என்றும் ஹிரண்ய ராவணாதிகளுக்குப் பயப்பட்டு
தேவ சரீரத்தைப் பொகட்டு மனுஷ்ய சரீரத்தை பரிக்ரஹித்து பூமியிலே திரிவார்கள் என்றும்
அதிதேவதை தான் துஸ் சீல தேவதை யாகையாலே ஸ்வ தத்த பலம் அனுபவம் சஹியாமையாலே யயாதியை த்வம்ச என்று
தள்ளினால் போலே தள்ளும் என்றும் சொல்லுகையாலும்
ப்ரஹ்மாதி பீபிலி அந்தமாக சகல சேதனரும் கர்ம ஜெனித சம்சார வச வர்த்திகளாய்க் கொண்டு பகவந் மாயா ரூபமான
சம்சாரத்திலே மக்நராய்க் கொண்டு நிரந்தர துக்க அனுபவம் பண்ணுவார்கள் என்றும்
பிரம்மா பத அனுபவம் பண்ணுகிறான் ஒருவன் ஷூத் பீடாதிசயத்தாலே இஹ லோகத்தில் வந்து ஸ்வமாமசத்தை பஷித்துப்
பின்னையும் போய் இருக்கும் என்று எழுதுகையாலும்
இப்படி இவை நரக ஸ்தானீயங்கள் என்றும் சொல்லுகையாலும் ஸ்வர்க்காதி போகங்களும் அல்பமாய் அஸ்திரமாய்
துக்கோதர்க்கமாய் துக்க மிஸ்ரமாய் ஸ்வரூப அநநு ரூபமாய் இருக்கையாலே அபுருஷார்த்தங்கள் என்று சொல்லி

அதுக்கு மேலே ஆத்ம அனுபவ ரூபமான மோக்ஷ ஸூகத்தைப் பார்த்தால் -அளவில்லாச் சிற்று இன்பம் -என்கிறபடியே
ஸ்வர்க்காதி போகத்தை அதிசயித்து இருந்ததே ஆகிலும் ஆத்ம கதமான சேஷத்வ அனுரூபம் இன்றியிலே –
ஞானத்துள் நின்று – என்கிறபடியே தத் விதுர ஞான மாத்ர அனுரூப ரசமாகையாலே சவ அலங்காரத்தோ பாதி அப்ராப்தமுமாய்
ஆத்ம வித்யா ஸூவாஸ்ரம விதவாயா இவா கல்பஸ் த்வய்ய பக்தஸ்ய நிஷ்பல -என்று
விதவை அலங்காரத்தோபாதி நிஷ்பலமுமாய் அவ்தயமுமாய் இருக்கும் என்று சொல்லி

ஆக இப்படி புத்ர லாபாத் யாத்ம பிராப்தி பர்யந்தமானவை அபுருஷார்த்தங்கள் ஆகையால்
தந் நிவ்ருத்தி பூர்வகமான பகவத் அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே புருஷார்த்தம் என்னும் இடம்
சம்சார சாகரம் கோரம் அனந்த கிலேச பாஜநம்-த்வமேவ சரணம் ப்ராப்ய நிஸ் தரந்திம் மநீஷிண
சோத்வன பரமாப்னோதி தத் விஷ்ணோ பரமம் பதம்
நிரஸ்தாதிச யாஹ்லாத ஸூக பாவைக லக்ஷணா–பேஷஜம் பகவத் பிராப்தி
யேந யேந தாதா கச்சதி தேந தேந சக கச்சதி
ரசம் ஹ்யே வாயம் லப்த்வாநந்தீ பவதி
காமான் நீ காம ரூப்யநுசஞ்சரன்
நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி
ப்ரஹ்மணோ மஹிமாந மாப்நோதி
மம சா தர்ம்யம் ஆகதா
இமம் மா நவ மா வர்த்தம் நா வர்த்தந்தே
ஏதத் சாம காயன் நாஸ்தே
அஹம் சர்வம் கரிஷ்யாமி
க்ரியதாம் இதி மாம் வத
அயர்வறும் அமரர்கள் அதிபதி –துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே
ஒளிக் கொண்ட சோதியுமாய் உடன் கூடுவது என்று கொலோ
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தனக்கேயாக என்னைக் கொள்ளுமீதே
பணிமானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட
முகப்பே கூவிப் பணி கொள்ளாய்
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும்
உற்றேன் உகந்து பணி செய்து
அடியாரோடு இருந்தமை
வீடு பெற்ற
ஐகாந்திக நித்ய கிங்கர ப்ரகர்ஷ யிஷ்யாமி
கைங்கர்ய பிராப்தி அபேக்ஷையா
நித்ய கிங்கரோ பவ
நித்ய கிங்கரோ பவிஷ்யஸி
தவாநுபூதி ஸம்பூதா ப்ரீதி காரித தாஸதாம் –தேஹி –இத்யாதி பரஸ் சத வாக்யங்களாலே பஹு முகமாகச் சொல்லப்பட்டது

ஆகையால் ரக்ஷகத்வாதி குணோபேதனாய் அகார வாச்யனான சர்வேஸ்வரனுக்குச் சேஷ பூதனாய்
ததீய ஞானானந்த ஸ்வரூப ஸ்வ பாவனான ஆத்மாவுக்கு
சர்வ சேஷியாய் -ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் -ஸ்ரீ யபதியாய் -விலக்ஷனா விக்ரஹ உபேதனாய் –
ஸுந்தர்யாதி குண விசிஷ்டனாய் இருக்கிற சர்வேஸ்வரனுடைய ஸ்வரூப குணாதிகளை அனுபவித்து
அத்தாலே உண்டான ப்ரீதியாலே பண்ணப்படுவதான நித்ய கைங்கர்யமே புருஷார்த்தம் –
அதற்கு உபாயம் ஞான சக்த்யாதி குண விசிஷ்டனானவன் திருவடிகளே என்று சொல்லி –
அதிரிக்தமாய் இருபத்தொரு உபாய விசேஷத்தையும் சொல்லாமையாலே
இவையே சகல ஸாஸ்த்ர சாரதயா பிராமண ப்ரதிபாத்யங்கள் என்றதாயிற்று

ஆனால் ஏதத் வ்யதிரிக்த சாதன சாத்தியங்களை பஹு முகமாக ப்ரதிபாதிக்கிற பிரமாணங்களுக்கு பிரயோஜனம் என் என்னில்
தர்ம அதர்மங்களும் பர லோகமும் பர தேவதையும் உண்டு என்று அறியாதே பர ஹிம்ஸா பரராய் நாஸ்திகராய் திரிகிற
பாமர சேதனருக்கு தத் ஞாபகமான சாஸ்திரங்களில் விஸ்வாசம் பிறக்கைக்காக -அவர்களுடைய ருசியைப் பின் சென்று
ஸாஸ்த்ர யுக்த பர ஹிம்ஸா ரூபையாய் இருக்கிற அபிசார கிரியையை விதித்தும் –
அதில் யுக்தமான பல தர்சனத்தாலே ஸாஸ்த்ர விஸ்வாசம் பிறந்து
அனந்தரம் தேஹாதிரிக்த ஆத்ம ஞானம் பிறக்கைக்காக சரீர வியுக்த ஆத்ம போகமாய் இருக்கிற பார லௌகிக ஸூகத்தையும்
தத் சாதன ஜ்யோதிஷ்டோமாதிகளையும் பூர்வ யுக்த பர ஹிம்ஸா நிஷேத பூர்வகமாக பிரகாசிப்பித்தும்
தேஹாதிரிக்த ஆத்மா என்று அறிந்த அளவிலே தத்காதமான பாரதந்தர்ய ஞானம் பிறக்கைக்காக பாரதந்தர்ய கைங்கர்ய ரூப
மோக்ஷ ஸூகத்தையும் தத் சாதனமான பக்தியையும் பூர்வ யுக்த பல சாதன நிஷேத பூர்வமாக விதித்தும்
அந்த பாரதந்தர்யத்தினுடைய யதாவத் தரிசன அர்த்தமாக பூர்வ யுக்த பல சாதன நிஷேத பூர்வகமாக பகவத் பிரீதி விஷய
ஏக ரஸத்வ -ததத் யந்தாதீநத்வ பிரபத்தி ரூபமான உபேய உபாயங்களை விதித்தும்
இப்படி ஸாஸ்த்ர விஸ்வாசமும்
தேஹாதிரிக்த ஆத்ம யாதாத்ம்ய ஞானம் பிறக்கைக்காக
இதர சாதன சாத்தியங்களை விதிக்கிறது ஆகையால் இந்த பிரமாணங்கள் ச பிரயோஜனங்கள் –

த்ரிவித சேதன ரக்ஷகனான ஈஸ்வரன் இந்த கிரமத்தைச் சிலர் விஷயத்தில் நிர்வகித்தும் –
இந்த கிரமம் ஒழிய இந்த ஸாஸ்த்ர ஜன்ய ஞானத்தைச் சிலருக்கு கேவல கிருபையால் பிறப்பித்தும் போருகையாலே
இந்த நியதி ஸ்வ தந்த்ர ஈஸ்வர இச்சா நிபந்தநமே ஒழிய அபேக்ஷிதம் அன்று
அபேக்ஷிதமாகில்-பரஹிம்ஸா பரரான கண்டாகர்ணாதிகளுடைய மோக்ஷம் அநுப பன்னமாம்-சர்வருக்கு பரஹிம்சாதிகம் அநுஷ்டேயமுமாம்
மயர்வற மதிநலம் அருளினன்
அவன் என்னுள் இருள் தான் அற வீற்று இருந்தான்
நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்
உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே
வைத்தேன் மதியால் -இத்யாதியாலே ஸ்வரூப புருஷார்த்த சாதனங்களுக்கு பிரகாசகன் அவன் என்றதோடு விரோதிக்கும்
ஆனால் இந்த கிரமம் நிஷ்பிரயோஜனம் ஆகாதோ என்னில்
உபயமும் ஈஸ்வர புத்தயா நியத விஷயங்கள் ஆகையால் நிஷ்பிரயோஜனம் ஆகாது
ஆனால் ஈஸ்வரனுக்கு வைஷம்யம் வாராதோ என்னில்
ஸ்வயமேவ நியத ஆகாரமாய் இருபத்தொரு வஸ்துவை அத்தைக் குலைத்து தன்னுடைய புத்த்யதீனமாக
நிர்வகித்த போது இறே வைஷம்யம் வருவது
அங்கன் இன்றியிலே சகலமும் ஸ்வாதீன ரூபமாகையாலே வைஷம்யம் வாராது
இந்தப்பிரகாரம் தான் அவனுக்கு ஸ்வ அபிமத பிரயோஜனமாய் இருக்கையாலே சா பேஷம் அன்று

ஆகையால் த்வயத்தில் சொல்லுகிற உபாய உபேயங்களை ஒழிந்த சகல சாதன சாத்தியங்களும் அத்யந்த விலக்ஷணமான
இந்த உபாய உபேயங்களிலே ஆரோபிக்கைக்காக பிரவ்ருத்திக்கிறது ஆகையால்
இவற்றை சகல ஸாஸ்த்ர சாரம் என்னக் குறை இல்லை

இப்படி ஸ்ருதிகளும் -ரிஷிகளும் -ஆழ்வார்களும் -ஆச்சார்யர்களும் -விரோதி நிவ்ருத்தி பூர்வகமாக
நிரதிசய ஸூக ரூபமான புருஷார்த்தத்தைப் பெற்று உஜ்ஜீவிக்கைக்கு உபாயம்
லோகாநாம் பரமோ தர்ம
ராமோ விக்ரஹவான் தர்ம
கிருஷ்ணம் தர்மம் சனாதனம்
நல்லறமானவும் நால்வேத மாத்தவமும் நாரணனே யாவது -என்று சொல்லப்படுகிற சித்த உபாயம் என்று
அறுதி இடுகையாலே நமக்கும் இவ்வுபாய விசேஷம் ஆதரயணீயமாகக் கடவது

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரகால நல்லான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பரகால நல்லான் ரஹஸ்யம் -ஸ்ரீ திரு மந்த்ரார்த்த விவரணம்-நாராயண பதார்த்தம்/ பிரார்த்தனாயாம் சதுர்த்தி யர்த்தம்–

August 17, 2019

ஸ்ரீ பிரணவத்தாலே
பகவத் ஸ்வரூபம் என்ன
சித் ஸ்வரூபம் என்ன
தத் சம்பந்த ஸ்வரூப விசேஷம் என்ன
உபாய ஸ்வரூபம் என்ன
ப்ராப்ய ஸ்வரூபம் என்ன –இத்யாதிகளான சகல அர்த்தங்களும் சொல்லப்படுகிறது –
ஆகையால் சகல சாஸ்த்ரா ஸங்க்ரஹம் என்னும் இடம் ஸம்ப்ரதி பன்னமாகச் சொல்லிற்று ஆயிற்று

————–

அநந்தரம் உகார விவரணமான நமஸ் சப்தம்

ஆக நமஸ் சப்தத்தால்
ஸ்வரூப விருத்தமான அஹங்கார மமகாரங்களினுடைய நிவ்ருத்தியும்
நிவ்ருத்தமான ஸ்வரூபத்தினுடைய அத்யந்த பாரதந்தர்யமும்
இந்த பாரதந்தர்ய காஷ்டையான ததீய சேஷத்வமும்
பரதந்த்ரனுக்கு அனுரூபமான உபாயமும் சொல்லிற்று ஆயிற்று

ஆக பிரணவத்தால் ஸ்வரூபம் சொல்லி
நமஸ் சப்தத்தால் ஸ்வரூப அனுரூபமான உபாயம் சொல்லிற்று ஆயிற்று

அநந்தரம் அகார விவரணமான நாராயண பதம்
பகவச் சேஷபூதனாய் -பகவத் ஏக சரணனாய் இருந்துள்ள ஆத்மாவுக்கு
தத் அனுரூப புருஷார்த்த ஸ்வரூபமான கைங்கர்ய பிரார்த்தனையைச் சொல்லக் கடவதாகக் கொண்டு
தத் பிரதி சம்பந்தியாய் தத் ஹேதுவான சேஷித்வத்துக்கு காரணமான
சர்வ ஆதார சர்வ வ்யாபகத்வ சர்வ அந்தர்யாமித்வ சர்வ ரக்ஷகத்வ சர்வ சரீரித்வாதிகளை யுடையவனாய்
அனுபாவ்ய குண சம்பன்னனாய் உபாய உபேய பூதனாய் ஹேயபிரத்ய நீகத்வ கல்யாணைகதாநத்வ விசிஷ்டானாய்
ஸ்ரீ யபதியாய் சர்வவித்த பந்துவாய் சர்வ காரணனான சர்வேஸ்வரனைச் சொல்லுகிறது

அகாரத்தில் சொன்ன சர்வ ரக்ஷகத்வத்துக்கு விஷயமான ரஷ்ய அம்சத்தைச் சொல்லுகையாலும்
நாராயண பதத்தில் சமாசத்வ யத்தாலும் ரக்ஷண பிரகாரத்தைச் சொல்லுகையாலும் அகார விவரணம் ஆகிறது நாராயண பதம்
நார என்றும் அயன என்றும் இரண்டு பதமாய் மேல் சதுர்த்ததீ விபக்தியுமாய் இருக்கும்
அதில் நார பதம் -நர என்றும் நார என்றும் நாரா என்றுமாய்
ஸ்வரூபேணவும் ப்ரவாஹ ரூபேணவும் நித்தியமான சகல பதார்த்தங்களையும் சொல்லுகிறது -எங்கனே என்னில்

ரேபம் -ரிங் ஷயே-என்கிற தாதுவிலே ஸித்தமாய்-ர-என்ற பதமாய் ஷயிஷ்ணுக்களான வஸ்துக்களைச் சொல்லி –
நகாரம் அத்தை நிஷேதித்து -நர -என்று நித்ய பதார்த்தத்தைச் சொல்லுகிறது –
க்ஷய பிரசங்க நிஷேத முகேன நித்யத்வம் சொல்லுகையாலே
ப்ரவாஹ ரூபேண நித்யங்களான பதார்த்தங்களும் இந்த நார பதத்தால் சொல்லுகிறது
யஸ்யச நாராயண என்று பஹு வ்ரீஹியாய் -ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களிலும் அந்தப் பிரவிஷ்டனாய்க் கொண்டு
ஆகாசாதிகளைப் போலே ஸ்வரூப ஏக தேசத்தாலே வ்யாபிக்கை அன்றிக்கே
பிரதிபதார்த்தம் யாவத் ஸ்வரூபம் பரிசமாப்ய ஆத்மதயா வியாபித்து நின்று நியமிக்கும் என்னும் இடத்தையும் சொல்லிற்று ஆயிற்று

இத்தாலே -யச்ச கிஞ்சிஜ ஜகத் யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதேபிவா -அந்தர்ப்பஹிச்ச தத் சர்வம்
வ்யாப்ய நாராயணஸ் ஸ்திதா -என்று ப்ரத்யஷாதி பிரமாண ஸித்தமான சகல வஸ்துக்களிலும் உள்ளும் புறமும் வியாபித்து நிற்கும் என்று
ஸ்ருதி ஸித்தமான அந்தர் வ்யாப்தியும் பஹிர் வ்யாப்தியும் சொல்லிற்று ஆயிற்று
இந்த வியாப்தி த்வயமும் அனோர் அணீயான் மஹதோ மஹீயான் -என்கிற ஸ்ருதியிலும் சொல்லப் பட்டது

ஸ்வ வ்யாதிரிக்த ஆதாரத்வ ரூபமான பஹிர் வியாப்தியில் ஞான சக்த்யாதி குணங்கள் ஸ்வரூப ஆஸ்ரயமாய்க் கொண்டு
இருக்கையாலே தத் வியாப்தியிலே அந்வயிக்கக் கடவன-

அந்தர் வியாப்தி பலம் -அந்தர் பிரவிஷ்டஸ் சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா –
சாஸ்தா விஷ்ணோர் அசேஷஸ்ய ஜகத–என்கிறபடியே நியந்த்ருத்வம் ஆகையால்
அது குண த்வாரா ஆகையால் குண யுக்தனாயே வியாபிக்க வேண்டுகையாலும் –
வஸ்து தான் நிர்குணமாய் இராமையாலும்
தத் குணங்களில் குணி வியாபிக்கும் போதைக்கு குணங்களுக்கு வ்யாப்ய வியாபகத்வங்கள் இரண்டும் உண்டாகையாலே
ஆத்ம ஆஸ்ரய தோஷம் வருகையாலும் குணங்களில் குணி வியாபிக்கும் போதைக்கு அந்த குணம் தன்னிலும் குணி வியாபிக்க வேணும்
அவைகளிலும் குணி வியாபிக்க வேணுமாகையாலே அநவஸ்தை வரும் –
ஆகையால் அந்தரவ்யாப்தியிலே குணங்களுக்கு அன்வயம் இல்லை –

இந்த நார ஸப்தத்திலே ஸ்ரீ லஷ்மீ ஸ்வரூபம் அந்தர்பவித்து இருக்கையாலே
அயன சப்த வாஸ்யமாய் வியாபகமான பகவத் ஸ்வரூபம் ஸ்ரீ லஷ்மீ விசிஷ்டமாய் இருக்கும் என்கிற அர்த்தம்
ஸ்வரூப நிரூபகத்வேந யுண்டான அவர்ஜனீய சந்நிதியாலே யாதல்
தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே மானுஷீ -விஷ்ணோர் தேஹ அநு ரூபாம் வைகரோத் யேஷாத்மனஸ் தநூம்
தவியாஸ விஷ்ணுநா ஸாம்பஜகத் வியாப்தம் சராசரம் இத்யாதிகளில் சொல்லுகிற விபூதி பேதத்தாலே யாதல்
அத்தனை அல்லது பரம மஹத் பரிமாண லக்ஷணமான விபுத்வத்தால் அன்று
அப்படியே யாமாகில் ஈஸ்வர த்வித்வாதி தோஷம் வரும் -விஷ்ணு பத்னீ என்கிற இவளுடைய பத்நீத்வ ஸ்ருதியோடும்
ஈஸ்வரனுடைய -ஈஸதே தேவ ஏச -என்றும் -சாஸ்தா சராசரஸ்யைச -என்கிற ஏகத்துவ ஸ்ருதியோடும் விரோதிக்கும்
ஆகையால் ஸ்ரீ யபதித்தவம் சொல்லிற்று
அகாரத்தில் சொல்லுகிற ஸ்ரீயப்பதித்துவத்துக்கு சேஷத்வ பிரதி சம்பந்தித்தவமும்
இதில் சொல்லுகிற ஸ்ரீயப்பதிவத்துக்கு கைங்கர்ய பிரதி சம்பந்தித்தவமும் ஆகிற அர்த்த பேதம் உண்டாகையாலே
பவ்நருர்த்யம் இல்லை-
ஆகையால் வியாபகமான பகவத் ஸ்வரூபம் ஸ்ரீ லஷ்மீ விசிஷ்டமாயே இருக்கும்

இதில் சொல்லுகிற அந்தர் வியாப்தி ஆத்மாவினுடைய நிரவயத்வ நிபந்தமான அந்தராகாச அபாவத்தாலே கூடாதே என்னில்
வியாப்ய வியாபகங்களான உபய ஸ்வரூபமும் த்ரவ்யமாய்க் கொண்டு தேஜோ த்ரவ்யங்களோபாதி ஸ்வசகங்களாய் இருக்கையாலே
தகை அற ஒரு நீராகக் கலக்கைக்கு யோக்யதை உண்டு –
ஆகையால் நியந்தாவான வியாபக ஸ்வரூபம் நியாம்யமான ஆத்மாவுக்குள்ளே வியாபித்து நியமிக்கக் குறை இல்லை
இதில் பஹிர் வியாப்தியால் சர்வ ஆதாரத்வமும் அந்தர் வியாப்தியாலே வியாபகத்வமும் சர்வ அந்தர்யாமித்வமும் சொல்லுகிறது –
இத்தாலே இதுக்கு விஷய பூதனான ஆத்மாவினுடைய ஆதேயத்வ விதேயத்வ வியாபயத்வங்கள் பலிக்கையாலே
தல் லக்ஷணமான ஆத்மாவினுடைய சரீரத்வம் சொல்லுகிறது –
ஆகையால் அவற்றுக்கு பிரதி சம்பந்திதயா ஆதாரத்வ வியாபகத்வாதி விசிஷ்டனாய்
அயன சப்த வாச்யனானவனுடைய சரீரத்வம் சொல்லிற்று ஆயிற்று

நத தஸ்திவிநாயத்ஸ் யான் மயா பூதம் சராசரம் –என்று வியாப்ய பதார்த்த ஸத்பாவம் வியாபக வஸ்து அதீனம் என்று
சொல்லுகையாலே இந்த வியாப்தி த்வயத்தாலும் சத்தா தாரகத்வ நிபந்தனமான ரக்ஷகத்வம் சொல்லுகிறது –

இதில் சொல்லுகிற சரீர சரீரீ பாவத்தால் சரீரியைப் பற்ற சரீரம் சேஷமாய் இருக்கும் என்று இந்த சரீராத்மா பாவ சம்பந்தத்தால்
கீழ்ச் சொன்ன சேஷத்வத்தை த்ருடீகரிப்பிக்கையாலே சரீரியான ஈஸ்வரனுடைய சர்வ சேஷித்வம் சொல்லுகிறது

இதிலே ஞானாதி குண விசிஷ்டனாகவும் சொல்லுகையாலே அனுபாவ்ய குண பூர்த்தியும் சொல்லிற்று ஆகிறது

அயன பதம்–இண் கதவ் -என்கிற தாதுவிலே ஸித்தமாய்க் கொண்டு -கதி வாசி யாகையாலே -கதிர் ஆலம்பனம் தஸ்ய -என்றும்
விஷ்ணு போதம் விநா நாந்யத் கிஞ்சி தஸ்தி பாராயணம் -என்று சொல்லுகிற உபாயத்வமும் உபேயத்வமும்
கம்யதே அநேந -என்கிற கரேண வ்யுத்பத்தியாலும் சித்திக்கையாலே -இத்தால் ப்ராபகத்வமும் ப்ராப்யத்வமும் சொல்லிற்று ஆயிற்று –

ஹேய நிவர்த்தகத்வ ரூபமான உபாயத்வம் ஹேய பிரதிபட வஸ்துவுக்கு ஆகையாலும்
உபேயத்துக்கு அனுபாவ்ய குண பூர்த்தி உண்டாக வேண்டுகையாலும் இதில்
ஹேயபிரத்ய நீகத்வ கல்யாணைகதாநத்வ ரூபமான உபய லிங்க விசிஷ்டத்வமும் சொல்லுகிறது –

உபாய பூதனுடைய ரக்ஷகத்வமும் இந்த ப்ராப்யத்வமும் சர்வ பிரகார விசிஷ்டம் ஆகையாலும் பந்து லாபமும் ப்ராப்யம் ஆகையாலும்
மாதா பிதா பிராது நிவாசஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ் நாள் -என்றும் சொல்லுகிறபடியே
ப்ராப்யபூதரான சகலவித பந்துக்களும் நாராயண சப்த வாச்யனான சர்வேஸ்வரன் என்கிறது

அங்கன் அன்றியிலே இந் நாராயண பதம் ஸமஸ்த கல்யாண குணாத்மகமான வஸ்துவைச் சொல்லுகையாலே
இதில் சொல்லுகிற வாத்சல்ய ஸ்வாமித்வ ஸுசீல்ய ஸுலப்யங்களாலே மாத்ருத்வ பித்ருத்வ நிவாஸத்வங்களையும்
சர்வஞ்ஞத்வ சர்வ சக்திதவ அவாப்த ஸமஸ்த காமாத்வ பரம காருணிகத் வாதிகளாலே உபாயத்வத்தையும்
ஸுந்தர் யாதிகளாலே ப்ராப்யத்வத்தையும் சொல்லுகையாலே
இந் நாராயண பதம் சர்வ வித பந்துத்வத்தையும் சொல்லுகிறது என்னவுமாம்

நாராஜ்ஜாதாநி தத்வாநி நாராணீ திததோவிது தாந்யே வசாயநம் தஸ்ய தேந நாராயணஸ் ஸ்ம்ருத-என்று
நித்யத்வேந நர சப்த வாச்யனான சர்வேஸ்வரன் பக்கல் நின்றும் உத் பன்னமானவை நாரங்கள்-
அவற்றை இருப்பிடமாக உடையவன் நாராயணன் என்று சொல்லுகையாலே இந்த நாராயண பதத்தால் சர்வ காரணத்வம் சொல்லிற்று

இப்படி சர்வ வியாபகனான நாராயணன் ஜகத் காரணன் என்று சொல்லுகையாலே –
நாராயணே நஸ்ருஜ்யாஸ்தே ப்ரஹ்ம ருத்ராதயோமரா -ஸம்ஹார்யாஸ் சததைவேம சர்வே நாராயணாத்மகா -என்று
அவனாலே ஸ்ருஜ்யமாய் ஸம்ஹாரியருமான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு காரணத்வ சங்கையே பிடித்தது இல்லை என்னும் இடம்
காரண வாக்கியங்களில் சத் ப்ரஹ்மாதி சப்தங்கள் -கதி சாமாநயாத்-என்கிறபடியே
சாமான்ய விசேஷத்தாலே வ்யக்தி விசேஷமான நாராயணன் பக்கலிலே பர்யவசித்தவோ பாதி
ப்ரஹ்ம சிவாதி சப்தங்களும் சாஸ்வத சிவ பரப்ரஹ்ம பூதனான நாராயணன் பக்கலிலே
பர்யவசிக்கும் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று

இப்பதத்திலே சேதன அசேதன சரீரியாகச் சொல்லுகையாலே
கார்யே நந்தேஸ்வ தனு முகதஸ் த்வாம் உபாதானமாஹு-என்கிறபடியே உபாதானத்வமும்
சர்வஞ்ஞத்வாதி விசிஷ்டமாக சொல்லுகையாலே நிமித்த சஹகாரித்வங்களும்
இது தன்னாலே ததைக்யமும்
வியாப்தியாலே கார்யபூத ஸமஸ்த வஸ்த்வாத்மகத்வமும்
ஹேயபிராதிபட்யத்தாலே தத்கத தோஷ ஸ்பர்ச ராஹித்யமும் சொல்லிற்று ஆயிற்று
இதில் ஸங்க்ரஹ விவரண கதங்களான காரணத்வங்களுக்கு சேஷித்வ வியாபகத்வங்களுக்கு ஹேதுவாகிற
ப்ரவ்ருத்தி நிமித்த பேதங்கள் உண்டாகையாலே புநருக்தி வாராது –

ஆக நாராயண பதத்தால்–கைங்கர்ய பிரதிசம்பந்தியான ஈஸ்வரனுடைய ஆதாரத்வ -அந்தராத்மத்வ -ரக்ஷகத்வ -வியாபகத்வ –
சரீரித்வ -சேஷித்வங்களை சொல்லுகையாலே
தத் விஷயமான சேதனனுடைய கைங்கர்யத்தில் பிரார்த்தனா ஹேதுவான சேஷத்வத்துக்கு காரணமான ஆதேயத்வாதிகளும்
கைங்கர்யத்துக்கு அடியான ப்ரீதிக்கு ஹேதுவான அனுபவத்துக்கு விஷயமான பகவத் ஸ்வரூப குணாதிகளும்
அனுபவ விரோதி நிவ்ருத்தி பூர்வகமாக அனுபவ பிரதானம் பண்ணும் உபாயத்வமும்
தத் ஹேதுவான உபய லிங்க வைசிஷ்டியும்
இத்தனையும் ஸ்வ லாபமாகச் சொல்லுகைக்கு ஹேதுவான ஸர்வவித பந்துத்வமும்
கைங்கர்யத்துக்கு கர்த்தாவான சேதனருக்கும் தத் உபகரணங்களான பதார்த்தங்களும் ஹேது பூதனாகையாலே வந்த
காரணத்வமும் சொல்லிற்று ஆயிற்று –

ஆக கைங்கர்ய பிரதிசம்பந்தியைச் சொல்லி -தத் பிரதிசம்பந்திகமான கைங்கர்யத்தை பிரார்த்திக்கிறது

மகார விவரணமான பிரார்த்தனாயாம் சதுர்த்தியாலே பகவத் அநந்யார்ஹ சேஷ வஸ்துவுக்கு தத் உபபத்தி ஹேதுவான
கைங்கர்ய பிரார்தனையைப் பண்ணுகிறது ஆகையால் சேஷபூத வாசகமான மகாரத்துக்கு
கைங்கர்ய பிராத்தனா வாசகமான சதுர்த்தீ விவரணமாகக் கடவது
இச் சதுர்த்தீ கைங்கர்ய பிரார்த்தனா வாசகமானபடி எங்கனே என்னில் –
சதுர்த்தியாவது -தாதரத்யே சதுர்த்தீ வக்தவ்யா-என்கையாலே தாதர்த்த வாசியாய் இருக்குமே
அதில் பிரதம அஷரத்தில் சதுர்த்தீ ஸ்வரூப தாத்பர்யத்தைச் சொல்லுகையாலும்
நமஸ் சப்தம் அந்த ஸ்வரூபத்தினுடைய சர்வ ரக்ஷண ஹேதுவான ஸ்வா தந்தர்யத்தினுடைய நிவ்ருத்தியைப் பண்ணுகையாலும்
தாதார்த்ய ஹேதுவான சரீராத்ம பாவத்தினுடைய நித்யத்வத்தாலே தாதர்த்யம் நித்யம் ஆகையால்
ஸ்வரூப தாதர்த்யம் பிரார்த்தித்து பெற வேண்டாது ஒழிகையாலும்
இச் சதுர்த்தியாலே ததர்த்த பூதமான ஸ்வரூபத்தினுடைய ப்ரவ்ருத்தி தாதர்த்ய முகேந கைங்கர்யத்தை சொல்ல வேண்டுகையாலும்
இது தனக்கு பிரார்த்தனையும் அர்த்தமாகலாய் இருக்கையாலே தாதர்த்ய பிரார்த்தனைகள் இரண்டையும் சொல்லா நின்று கொண்டு
ப்ரவ்ருத்தி தாதர்த்ய ரூப கைங்கர்ய பிரார்த்தனா வாசகமாய் இருக்கையாலே கைங்கர்ய பிரார்த்தனா வாசகம் என்னக் குறையில்லை –

கைங்கர்ய பிரதி சம்பந்தியான ஈஸ்வரனுடைய உத்துங்கத்வத்தாலும் -அவாப்த ஸமஸ்த காமத்வத்தாலும்
இவனுடைய சேஷத்வ பாரதந்தர்யங்களாலும்
நமஸ் சப்தத்தில் உபாய நிஷ்டனான இவன் லப்த கைங்கர்யம் இல்லாமையாலும்
நித்ய கிங்கரோ பவாநி
நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய்
வான் உயர் இன்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே
அடிமை செய்ய வேண்டும் நாம் -இத்யாதிகளாலே பிரார்த்தநா விஷ்டமாகச் சொல்லுகையாலும் பிரார்த்தித்தே பெற வேணும்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்கிறபடியே
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் உசிதமான ஸர்வவித கைங்கர்யங்களையும்
பண்ணப் பெறுவேனாக வேணும் என்று பிரார்த்தித்துத் தலைக் கட்டுகிறது

கைங்கர்ய பிரதி சம்பந்தி வாசகமான நாராயண பதத்தால் கைங்கர்ய ஹேதுவான ப்ரீதிக்கு நிதானமான அனுபவத்துக்கு
விஷயமாய்க் கொண்டு போக்யபூதனான சர்வேஸ்வரனையும் போக்தாவாய் சரீரதயா சேஷமான ஆத்மாவையும்
நித்யராகச் சொல்லுகையாலே கைங்கர்ய ஹேதுவான போகம் நித்யமாகையாலும்
நச புந ராவர்த்ததே
அநா வ்ருத்தி சப்தாத்–இத்யாதிகளில் படியே யாவதாத்மபாவி அனுபாவ்யமாகையாலும்
தத்கார்யமான கைங்கர்யத்தை சார்வ காலீனமாக பிரார்த்திக்கக் குறையில்லை –

இப்பதத்தில் போக்தாவான வாத்மாவை சேஷ தயா பிரகாசிதமான ஸ்வரூபாதிகளை யுடையனாகச் சொல்லுகையாலே
அனுபவ உபகரணமான ஞானாதிகளுக்கு சங்கோசம் இல்லை என்கையாலும்
போக்யமான ஈஸ்வரனை அபரிச்சின்ன ரூபனாகச் சொல்லுகையாலும் போகம் சர்வ தேச சித்தமாகையாலும்
தஸ்ய சர்வேஷு லோகேஷு காமஸாரோ பவதி
இமான் லோகான் காமான் நீ காம ரூப்யநு சஞ்சரன்-இத்யாதிகளில் சொல்லுகிற சர்வ தேச சித்தமாக பிரார்த்திக்கிறது

அப்ருதக் சித்தனாய்க் கொண்டு சர்வ அவஸ்திதானாகையாலே நித்ய அக்னி ஹோத்ரம் என்னா நிற்கச் செய்தேயும்
சாயம் பிராத காலங்கள் ஒழிய மத்திய கால விசசித்தியை யுடைய அக்னி ஹோத்ரம் போல் அன்றிக்கே
அந்தரங்க பஹிரங்கமான சர்வ அவஸ்தைகளிலும் நடக்கும் என்கையாலே
இந்த பிரார்த்தனை சர்வ அவஸ்தா விசிஷ்டமாய் இருக்கும்

இவனுடைய சேஷத்வத்தை சர்வ பிரகாரமாக இதில் சொல்லுகையாலும்
நிவாஸ சய்யா ஆசன பாதுகா அம்ஸூக உபாதான வர்ஷா தப வாரணாதிபி
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே சர்வவிதமாகச் சொல்லுகையாலும்
ஸர்வவித கைங்கர்யங்களையும் பண்ணப் பெறுவேனாக வேணும் என்று பிரார்த்திக்கிறது

இப்படிப் பண்ணும் இடத்தில்
குருஷ்வமாம் அனுசரம்
க்ரியதாம் இதி மாம்வத
ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான்
உனக்கே நாம் ஆட் செய்வோம்
முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -இத்யாதிகளால் சேஷ பூதனான இவனுக்கு பிரதி சம்பந்தி நியதி ஒழிய
பிரகார நியதி இல்லாமையால் சேஷி அதீன கைங்கர்யமே ஸ்வரூப ப்ராப்தமாகச் சொல்லுகையாலே
உசித கிஞ்சித்காரமாக பிரார்த்திக்கிறது –

இப்படி நியத பிரதி சம்பந்திக கைங்கர்ய கர்த்தாவான ஆத்மாவை ஞாதாவாகச் சொல்லுகையாலும்
அஹம் அந்நாத
ஸோஸ் நுதே சர்வான் காமான்
அத்ர ப்ரஹ்ம சமஸ் நுதே –இத்யாதிகளிலே ஞான அனுகுணமாக போக்த்ருத்வத்தைச் சொல்லுகையாலும்
இதிலே ஸ்வ கர்த்ருத்வ ஸ்வ சாரஸ்யாதிகள் நடக்கக் கூடுகையாலே தந் நிவ்ருத்தியும்
இச் சதுர்த்தியாலே பிரார்த்திக்கப் படுகிறது

ஆனால் இந்த நிவ்ருத்தி பிரார்த்தனை கூடும்படி என் என்னில்
கைங்கர்ய பிரதி சம்பந்தியான பகவத் ஸ்வரூபாதிகளை அனுபவிக்கைக்கு உபகரணமான ஞானம்
ஆத்மகதமாய் இருந்ததே யாகிலும் பகவத் அதீன சத்தா தாரகம் ஆகையால் தத் அனுமதி ஒழிய
அது அனுபாவ்ய விஷய விஷயீகார க்ஷமம் இல்லாமையாலும்
இந்த ஞான ஆஸ்ரயமான வஸ்து தான் பகவத் ஸ்வரூபகதமுமாய் பகவத் அதீன ஸ்வ பாவமுமாய் இருக்கையாலே
தத் ப்ரேரிதமான அனுபவம் ஒழிய ஸ்வ அதீனமான அனுபவம் இல்லாமையாலும் விஷய பிரகாசத்வமும் தத் காரியங்களும்
பக்தாநாம், தவம் பிரகாஸசே-என்றும்
ஸுந்தர்ய சவ்ஸீல்யாதி குண ஆவிஷ் காரேண அக்ரூர மாலாகாராதி கான் பரம பாகவதான் க்ருத்வா -என்றும் சொல்லுகிறபடியே
ஏதத் அதீனமாக வேண்டுகையாலும்
தத் ப்ரீதிகாரித கைங்கர்யமும் அவனுடைய நியோகாதீனமாக தத் ப்ரேரிதனாய்க் கொண்டு பண்ண வேண்டுகையாலும்
சேஷதைக ஸ்வரூபமான வஸ்துவுக்கு சேஷி பிரயோஜனத்துக்கு உறுப்பான சேஷியினுடைய நியமன தாரணாதி விஷயத்வம் ஒழிய
ஸ்வ பிரயோஜனாதிகள் இல்லாமையால் சேஷபூத வஸ்துகதமாய் சேஷத்வ ஞான நிபந்தனமான அனுபவம் என்ன –
தத் ஹேதுவான கைங்கர்யம் என்ன -தத் விஷய ரசம் என்ன -என்று இத்தனையும் ஸ்வ அதீனம் இல்லாமையாலும்

ப்ரகர்ஷயிஷ்யாமி
அஹம் அந்நம் அஹம் அந்நம் அஹம் அந்நாத
நீத ப்ரீதி புரஸ்க்ருத
உந்தன் திரு உள்ளம் இடர் கெடும் நாங்கள் வியக்க இன்புறுதும்–இத்யாதிகளால்
சேஷி பிரயோஜனமே தங்களுக்கு பிரயோஜனமாகக் கொள்ளுகையாலும்
ஸோஸ் நுதே
லப்த்வா நந்தீ பவதி -இத்யாதிகளில் சொல்லுகிற ஆனந்தித்தவம் பகவத் அதீன ஸ்வரூப ஸ்வ பாவனான இவனுடைய
பகவத் பிரீதி விஷய ஞானத்தைச் சொல்லுகிறதாக வேண்டுகையாலும்
இவ்வாகாரம் தான் சேஷியான ஈஸ்வரனாலே லப்தமாக வேண்டுகையாலும்
இந்த ஸ்வ அதீன நிவ்ருத்தியை மத்யம பதமான நமஸ் சப்தம் காட்டுகையாலும்
ஏவம்பூத ஞான விசிஷ்டனான இவனுக்கு ஸ்வ கர்த்ருத்வ ஸ்வ ஸ்வாரஸ்யாதி நிவ்ருத்தி பிரார்த்தனை அத்யந்தம் உப பன்னம்

ஆக ச விபக்திகமான நாராயண பதத்தால்
சர்வ சேஷியான சர்வேஸ்வரன் திருவடிகளில் சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தா உசிதமான
ஸர்வவித கைங்கர்யங்களை ஸ்வா தந்தர்ய ஸ்வ ஸ்வாரஸ்ய தீ மயமான விரோதி நிவ்ருத்தி பூர்வகமாகப்
பண்ணப் பெறுவேனாக வேணும் என்று பிரார்த்தித்துத் தலைக் கட்டுகிறது –

ஆக பத த்ரயத்தாலும்
ஈஸ்வர ஸ்வரூபமும்
த்யாஜ்யமான விரோதி ஸ்வரூபமும் சொல்லிற்று ஆயிற்று –
ஈஸ்வரன் சர்வ சேஷியாய் இருக்கும்
சேதனன் அநந்யார்ஹ சேஷமாய் இருக்கும்
அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்ய தேஹாத்ம அபிமானாதிகள் விரோதியாகக் கடவது என்றும்
உகார மகாரங்களாலே தந் நிவ்ருத்தியைச் சொல்லுகிறது என்றும் சொல்லிற்று

பிரணவத்திலே ஈஸ்வரனுடைய உபாயத்வமும் -சேதனனுடைய அநந்ய சரணத்வமும் -உபாயாந்தர சம்பந்தமும் –
ஸ்வ ரக்ஷண அர்த்த ப்ரவ்ருத்தியும் ஸ்வரூப ஹானி என்னும் இடமும் தந் நிவ்ருத்தியும் சொல்லிற்று

நமஸ் ஸப்தத்திலே -ஈஸ்வரனுடைய ப்ராப்யத்வமும் சேதனனுடைய அநந்ய போக்த்வமும்
ப்ராப்யாந்தர சம்பந்தம் அப்ராப்தம் என்னும் இடத்தையும்
ப்ராப்ய விஷயமான ஸ்வ கீயத்வ ஸ்வாரஸ்யாதி நிவ்ருத்தியும் சொல்லிற்று

நாராயண பதத்தில் இந்த சேஷித்வ உபாயத்வ ப்ராப்யத்வங்கள்
ஈஸ்வரனுக்கு ஸ்வரூபம் ஆகையால் ஈஸ்வர ஸ்வரூபமும்
அநந்யார்ஹ சேஷத்வ அநந்ய சரணத்வ அநந்ய போக்த்வங்கள்
ஆத்மாவுக்கு ஸ்வரூபம் ஆகையால் ஆத்ம ஸ்வரூபம் சொல்லிற்று

இம்மந்திரம் அநந்யார்ஹ சேக்ஷத்வாதி ஆகாரத்ரய வாசகம் ஆகையால் வாக்ய த்ரயாத்மகமாய் இருந்ததே யாகிலும்
அகாரார்த்தாய -என்கிற ஸ்லோகத்தாலே -அகாரார்த்தாயைவஸ்வ மஹம் -என்று
அகார வாச்யனுக்கே சேஷம் நான் என்று பிரணவ அர்த்தத்தைச் சொல்லி
அதமஹ்யம் ந -என்று வாக்ய பேதத்தைக் காட்டி நமஸ் சப்தார்த்தமான ஸ்வ அதீனதா நிவ்ருத்தியையும்-
தத் கார்யமான ததீய சேஷத்வ பர்யந்தமான தச் சேஷத்வத்தையும் சொல்லி
நாராணாம் நித்யானாம் அயனமிதி நாராயண பதம் யமாஹ -என்று நார சப்த வாச்யமாகையாலே
நித்ய பதார்த்தங்களான சேதன அசேதன சமூகங்களுக்கு அயனமாக இருக்கும் என்று
நாராயண பதம் யாவன் ஒருவனைச் சொல்லுகிறது என்று நாராயண பதார்த்தத்தைச் சொல்லி
அஸ்மை காலம சகல மபி ஸர்வத்ர சகலா ஸ்வ வஸ்த்தா ஸ்வாவிஸ்யுர் மம சஹஜ கைங்கர்ய விதய-என்று
அவன் திருவடிகளில் சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் சர்வவிதமான கைங்கர்ய விதிகள்
ஆவிர்பவிக்க வேணும் என்று சதுர்த்த்யர்த்தமான கைங்கர்ய பிரார்த்தனையைச் சொல்லித்
தலைக் கட்டுகையாலே ஏக வாக்யமாய் இருக்கும்

ஆக அகார வாச்யனான சர்வேஸ்வரனுக்கே சேஷம் நான் -எனக்கு உரியேன் அல்லேன் –
சேதன அசேதனங்களுக்கு அயனமான சர்வேஸ்வரன் திருவடிகளில் என்றும் எங்கும் எப்போதும்
எல்லா அடிமைகளும் செய்யப் பெறுவேனாக வேணும் -என்கிறது

ஆக -திருமந்த்ரத்தால்
சேதனனுடைய சேஷத்வமும் –
சேஷத்வ பிரதி சம்பந்தியும் –
இதனுடைய அநந்யார்ஹத்வமும் –
அநந்யார்ஹ சேஷபூதனுடைய ப்ரக்ருதே பரதவ ஞான குணகத்வாதிகளும்-
அவனுடைய அஹங்கார மமகார நிவ்ருத்தியும் –
நிவ்ருத்தமான ஸ்வரூபத்தினுடைய அத்யந்த பாரதந்தர்யமும் –
பாரதந்தர்ய காஷ்டையான ததீய சேஷத்வமும் –
பரதந்த்ரனுக்கு அனுரூபமான உபாயமும் –
பலமான கைங்கர்யத்துக்கு பிரதி சபந்தியையும் -கைங்கர்ய பிரார்த்தனையும் சொல்லிற்று ஆயிற்று

தேஹா சக்தாத்ம புத்திர் யதிபவதி பதம் சாது வித்யாத் த்ரிதீயம் ஸ்வா தந்தர் யாந்தோயதி ஸ்யாத்
பிரதம மிதர சேஷத்வதீஸ் சேத் த்வீதீயம் -ஆத்ம த்ராண உன்முகஸ்சேந் நம இதிச பதம பாந்தவாபாச லோலஸ் சப்தம்
நாராயாணாக்யம் விஷய சபல தீஸ் சேத்தும் –பிரபன்ன
ரக்ஷகாந்தர பிரபத்தி உண்டான போது அகாரத்தை அனுசந்தித்து மீளுவான்
ஸ்வ ஸ்வா தந்தர்ய பிரதிபத்தி உண்டான போது சதுர்த்தி அர்த்தத்தை அனுசந்தித்து மீளுவான்
தேஹாத்ம அபிமானாதிகள் உண்டான போது மகாரார்த்தத்தை அனுசந்தித்து மீளுவான்
ஸாத்ய சாதன ருசியும் பாகவத் சஜாதீய புத்தியும் உண்டான போது நமஸ் சப்த அர்த்தத்தை அனுசந்தித்து மீளுவான்
ஈஸ்வர விபூதி பூதரோடே ராக துவேஷமும் ஸ்வ பந்துத்வ பிரதிபத்தியும் உண்டான போது
நாராயண பாத அர்த்தத்தை அனுசந்தித்து மீளுவான்
பிரயோஜனாந்தர ருசி உண்டான போது சதுர்த்தி அர்த்தத்தை அனுசந்தித்து மீளுவான்

திருமந்திர பிரகரணம் முற்றிற்று

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரகால நல்லான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பரகால நல்லான் ரஹஸ்யம் -ஸ்ரீ திரு மந்த்ரார்த்த விவரணம்-நமஸ் சப்தார்த்தம் —

August 16, 2019

ஸ்ரீ பிரணவத்தாலே
பகவத் ஸ்வரூபம் என்ன
சித் ஸ்வரூபம் என்ன
தத் சம்பந்த ஸ்வரூப விசேஷம் என்ன
உபாய ஸ்வரூபம் என்ன
ப்ராப்ய ஸ்வரூபம் என்ன –இத்யாதிகளான சகல அர்த்தங்களும் சொல்லப்படுகிறது –
ஆகையால் சகல சாஸ்த்ரா ஸங்க்ரஹம் என்னும் இடம் ஸம்ப்ரதி பன்னமாகச் சொல்லிற்று ஆயிற்று

————–

அநந்தரம் உகார விவரணமான நமஸ் சப்தம்
இப்படி சேஷபூதனான ஆத்மாவினுடைய அஹங்கார மமகார நிவ்ருத்தியைப் பண்ணா நின்று கொண்டு
ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தியையும் –
தத் ஸித்தமான அந்நிய சேஷத்வ அபாவத்தையும்-
ஸ்வ கதமான ஸ்வாமித்வ சேஷித்வங்களினுடைய ராஹித்யத்தையும்
தத் பலிதமான பாரதந்தர்யத்தையும்
தத் பர்யவசான பூமியான ததீய சேஷத்வத்தையும்
பரதந்த்ர ஸ்வரூபத்துக்கு அனுரூபமான உபாயத்தையும் சொல்லுகிறது –

பிரதம அக்ஷரமான அகாரத்தை பிரதமம் விவரியாதே பிரதமம் உகார விவரணமான நமஸ் சப்தம் ஆகைக்கு அடி என் என்னில் –
இம்மந்திரம் தான் ஆத்ம ஸ்வரூப யாதாத்ம்ய ப்ரதிபாதன பரமாகையாலே உகார யுக்தமான பகவத் வ்யதிரிக்த
அந்நிய சேஷத்வ நிவ்ருத்தி மாத்ரத்தாலே ஸ்வரூப யாதாத்ம்ய பூர்த்தி பிறவாமையாலே
தத் பூர்த்தி ஹேதுவான ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி பண்ணுகை அநந்தரம் பிராப்தம் ஆகையால்
தத் வாசகமான நமஸ் சப்தம் முற்பட வேண்டுகையாலும்
ஸ்வரூபத்தை ததீய சேஷத்வத்தை பர்யந்தமாக அனுசந்தித்து தத் அனுரூப புருஷார்த்த சிஷை பண்ண வேண்டுகையாலே
ததீய சேஷத்வ வாசகமான நமஸ் சப்தம் புருஷார்த்த பிரார்த்தனா வாசகமான நாராயண பதத்துக்கு முன்னேயாக வேண்டுகையாலும்
இப்பதத்தில் சொல்லுகிற ஸ்வரூப உபாய வர்ணம் ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி பூர்வகமாக வேண்டுகையாலும்
பிரணவத்தில் சொல்லுகிற பிரகாரத்வ ரஷ்யத்வ சேஷத்வ தத் அநந்யார்ஹத்வ ஞானானந்த ஸ்வரூபத்வ
ஞான குணகத்வாதிகளுடைய ஸ்வார்தததை ஸ்வாதீநதை -இவற்றினுடைய நிவ்ருத்தியையும்
மேலே நாராயண பதத்தில் சொல்லுகிற புருஷார்த்த ஸ்வரூப கைங்கர்யத்தில் வருகிற
ஸ்வ கீயத்வ ஸ்வ ஸ்வாரஸ்யாதி நிவ்ருத்தியையும் பண்ணும் போதைக்கு காகாஷி நியாயத்தாலே
இது நடுவே கிடக்க வேண்டுகையாலும் பிரதமம் உகார விவரணமான நமஸ் சப்தமாகக் கடவது –

இந்த நமஸ் சப்தம் தான் ந என்றும் ம என்றும் இரண்டுபதமாய் இருக்கும் –
இதில் மகாரம் மந ஞாநே -என்கிற தாதுவிலே ஷஷ்ட்யந்த வசனமாய் -தாத்வர்த்தம் ஞாத்ருத்வம் ஆகையால்
எனக்கு என்கிற அர்த்தத்துக்கு வாசகம் ஆகிறது –
இங்கு விஷய நியமம் பண்ணாமையாலே –
சேநஸ் யயதாமம்யம் ஸ்வஸ்மிந் ஸ்வீயேச வஸ்துநி–மம இத்யஷரத் வந்த்வம் ததாமம் யஸ்ய வாசகம் –
அநாதி வாசநா ரூடமித் யாஜ்ஞா ந நிபந்தநா -ஆத்மாத்மீய பதார்த்தஸ் தாயா ஸ்வா தந்தர்யஸ் வதாமதி -என்கிறபடியே
அநாதி கால ஸஹிதமான விபரீத ஞானம் அடியாக வுண்டாமதாய் –
மமாஹம் மமேகம்-என்று கொண்டு ஸ்வ கதமாகவும் ஸ்வ கத கீயமாகவும் கிடக்கிற மமதா முகேன ஸ்வரூப விருத்தமாய்
நிவர்த்த்யமான அஹங்கார மமகாரங்களைச் சொல்லுகிறது

நிஷேத வாசியான நகாரம் அத்தை நிஷேதித்து
நாஹம் மம ஸ்வ தந்த்ரோஹம் நாஸ்மீத்யஸ் யார்த்த உசயதே-நமே தேஹாதிகம் வஸ்து ச சேஷ பரமாத்மந –
இதி புத்தயா நிவர்த்தந்தே தாஸ்தாஸ் ஸ்வீயா மநீஷிதா –அநாதி வாசநா ஜாதைர் போதைஸ் தைஸ் கைர் விகல்பிதை-
ரூஷி தம்யத் த்ருடம் சித்தம் ஸ்வா தந்தர்ய ஸ்வ தவ தீமயம் -தத் தத் வைஷ்ணவ சார் வாத்ம்ய பிரதிபோத சமுத்தயா –
நம இத்ய நயா வாசாநஞாஸ்வஸ் மாத போஹ்யதே-என்றும்
யானே நீ என்னுடைமையும் நீயே -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வ ஸ்வ கீய பகவத் சேஷத்வத்தை த்ருடீ கரியா நின்று கொண்டு ஸ்வ அஹங்கார மமகார நிவ்ருத்தியைப் பண்ணுகிறது

இதில் அஹங்கார நிவ்ருத்தியால் ஸ்வ சேஷத்வ அபாவம் சொல்லிற்று –
மமகார நிவ்ருத்தியாலே ஸ்வாமித்வ சேஷித்வங்களினுடைய ராஹித்யமும்
ஸ்வ கீய வியாபாராதிகளுடைய ஸ்வ அதீனதா நிவ்ருத்தியும் பலிக்கையாலே–
இத்தாலே ஸ்வ ஆராதத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்களினுடைய நிவ்ருத்தி சொல்லிற்று –

ஆக நமஸ் ச பதத்தாலே
தவ்யக்ஷரஸ் து பவேந் ம்ருத்யு
மமேதி த்வ யக்ஷரோ ம்ருத்யு
யானே என் தனதே என்று இருந்தேன் -என்றும் ஆத்மாவுக்கு நாசகமான அஹங்கார மமகாரங்களை நிவர்த்திப்பித்து
த்ரயக்ஷரம் ப்ரஹ்மண பதம்
நமமே திசை சாஸ்வதம்
அஹம் அபி ந மம பகவத ஏவாஹம் அஸ்மி
யா காஸ்சந க்ருதயோ மம பவந்தி தாஸூம மதா நாஸ்தி பகவத ஏவதா-என்று
ஆத்ம உஜ்ஜீவனமாய் இருக்கிற சேஷத்வ பாரதந்தர்யங்களைச் சொல்லுகிறது
ஆத்ம ஸ்வரூபம் சேஷமாய் ஞாதாவாய் இருக்கையாலே பிரதமம் சேஷத்வ வாசியான பதம் உதித்தால் போலே
அஹங்காராதிகள் நிஷேத்யமாய் இருக்கையாலே இங்கும் நிஷேத்யத்துக்கு முன்னே நிஷேதம் முற்படுகிறது

கீழே அநந்யார்ஹ சேஷத்வம் சொன்ன போதே ஸ்வ ஸ்வா தந்தர்யம் நிவ்ருத்தம் அன்றோ என்னில்
பார்யைக்கு பர்த்தரு சிசுரூஷணம் ஸ்வரூபமாய் -அது அவனுக்குப் போக்யமாய் இருக்கச் செய்தேயும்
போக ரசத்தில் தனக்கும் அன்வயம் உண்டாய்
பதிம் யா நாதி சரதி மநோ வாக் காய கர்மபி சா பர்த்த்ருலோகா நாப்நோதி சதபிஸ் சாத்வீதி சோஸ்யதே -என்று
அந்த சிசுருஷணம் தான் பர்த்த்ரு லோக பிராப்திக்கு ஸாதனமாய் இருக்கையாலே
சேஷ பூதையானவளுக்கு ஸ்வா தந்தர்யம் அநுவிருத்தமாயிற்று
உபாசகனுக்கு பகவச் சேஷத்வ ஞானம் பிறந்து -கைங்கர்ய ருசியும் நடந்து போரா நிற்கச் செய்தேயும்
ப்ராப்ய பிராப்தி சாதனம் ஸ்வ பிரவ்ருத்தி ரூப கர்மாதிகளாகையாலே
பகவச் சேஷமான ஸ்வரூபத்துக்கு ஸ்வா தந்தர்யம் அநுவிருத்தமாய்ப் போந்தது

அங்கன் இன்றியிலே ஸ்வரூப புருஷார்த்தங்கள் ஸ்வ கதம் அல்லாதவோபாதி
ஸ்வ ரக்ஷணார்த்த வியாபாரமும் ஸ்வ கதமல்ல என்றதாயிற்று –
அது ஸ்வரூபம் பரகதம் -விரோதி பரகதம் -புருஷார்த்தம் பரகதம் என்கிற பிரதிபத்தி ஸ்வ கதம் -அதுவும் பராதீனம் -என்கிற
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை வார்த்தை இவ்விடத்தில் அனுசந்தேயம்

அதவா
சேஷமான வஸ்து ஞாதாவாய் இருக்கும் என்று மகாரத்தாலே சொல்லுகையாலே
அந்த ஞானத்தாலே ஹித அஹித விஷயீகாரம் உண்டாய் -அத்தாலே ஹித ரூப கிரியை பண்ணிக் கொண்டு
நமஸ் சப்தம் அது அடியாக வருகிற ஸ்வா தந்தர்யத்தை நிஷேதிக்கிறது என்னவுமாம்
ஆகையால் அங்கு பகவத் சேஷத்வ விரோதியான ஸ்வா தந்தர்யத்தினுடைய நிவ்ருத்தி சொல்லிற்று
இங்கு அந்த சேஷத்வத்தினுடைய ஸ்வ அதீன நிவ்ருத்தியையும்
சேஷிபூத பகவத் ரக்ஷகத்வ விரோதியான ஸ்வா தந்தர்யத்தினுடைய நிவ்ருத்தியையும் பண்ணுகிறது –
சேஷபூதனான சேதனன் ஸ்வ ரக்ஷணத்தினின்றும் நிவ்ருத்தமானால்
சேஷியான ஈஸ்வரன் ரக்ஷகனாய் அறுமாகையாலே ஈஸ்வரனுடைய உபாய பாவம் அர்த்தமாகாது தோற்றுகிறது
ஆக இப்படி சேதன ஸ்வரூபம் -பகவத் ஏக சேஷமுமாய் -பகவத் ஏக ரஷ்யமுமாய் இருக்கையாலே
பகவத் கதமான குணங்களோபாதி ப்ராப்யத்வ பிரதிபத்தி பண்ணலாய் இருக்கிறது –
அவன் குணங்களோபாதி அவன் அபிமானத்திலே கிடக்கையாலே என்றபடி

இவ்வர்த்தத்தை -அவரைப் பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கல்பித்துத் தொழுது வைத்தேன் -என்று ஸ்ரீ நாய்ச்சியாரும் அருளிச் செய்தார்
இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்தம் சத்தா நித்யம் பிரியாஸ் தவது கேசந தேஹி நித்யா -நித்யம் த்வத் ஏக பரதந்த்ர
நிஜ ஸ்வரூபா பாவத்க மங்கள குணாஹி நிதர்சனம் – என்று பகவத் ப்ரீத்தி விஷய பூதராய்க் கொண்டு தத் அபிமான
அந்தர்ப் பூதரானவர்கள் அவன் குணங்களோபாதி ப்ராப்யபூதர் என்னும் அர்த்தத்தை ஸ்ரீ ஆழ்வானும் அருளிச் செய்தார்
குணங்களோபாதி பரதந்த்ரங்களாகச் சொல்லுகையாலே அவனுக்கு இஷ்ட விநியோக அர்ஹர் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று
இஷ்ட விநியோக அர்ஹத்வமாவது -அவன் கொடுத்ததற்கு ஸ்வம்மாம் படி இருக்கை இறே –
அப்போது இறே பாரதந்தர்யம் ஸித்திக்கும்-ஆகையால்
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்றும்
யா ப்ரீதிர் பஹுமானஞ்ச மய்ய யோக்யா நிவாஸிநாம் -மத ப்ரீயார்த்தம் விசேஷேண பாதேசா நிவேதயதாம் -என்றும்
சொல்லுகிறபடியே சேஷிபூத பகவத் ப்ரேரிதமாய் சேஷபூத சேதன பாரதந்தர்ய பூர்த்தி ஹேதுவாய் இருக்கிற
ததீய சேஷத்வம் இப்பதத்தில் சொல்லிற்று ஆயிற்று –

பகவத் சேஷத்வ பூர்த்தி ததீயா சேஷத்வத்தாலே யாகில் அது கீழ்ச் சொன்ன
பகவத் அநந்யார்ஹ சேஷத்வத்தோடு விருத்தமாகாதோ என்னில்
இந்த ததீய சேஷத்வம் சேஷியான ஈஸ்வரனுடைய நியோக நிபந்தமாய்க் கொண்டு சேஷத்வ காரியமாய் வருகிறது ஆகையால்
பதிவ்ரதையானவள் பர்த்த்ரு நியோகத்தால் தத் பந்து சிசுருஷணம் பண்ணினால் பர்த்த்ரு பிரியகரமாய்க் கொண்டு
பாதிவ்ரத அபிவிருத்தியாமாப் போலே
அநந்யார்ஹ சேஷத்வ அபி விருத்தி ஹேதுவாமது ஒழிய தத் விருத்தமாகாது –
ஆனாலும் உத்தம புருஷஸ் த்வநய-என்கிற நியாத்தாலும்
மனன் உணர்வு அவை இலன் பொறி உணர்வு அவை இலன்
இல்லதும் உள்ளதும் அவன் உரு -என்கிறபடி சேதன அசேதன விஸஜாதீயன் ஆகையாலும்
ததீயரே யாகிலும் அந்யத்வம் வாராதோ என்னில்
அநந்யாஸ் சிந்தயந்த -என்கிறபடியே இவர்கள் தான் அவனுக்கு அப்ருதக் சித்த விசேஷண ஞானவான்களாய்க் கொண்டு
அந்யன் அன்றிக்கே இருக்கையாலும்
ஞானீத்வாத்மைவ -என்றும் -பத்தராவியை என்றும் ததீய சேஷத்வ பர்யந்தமான தச் சேஷத்வ ஞானம் உடையவர்கள்
சர்வாத்ம பூதனான தனக்கும் ஆத்ம பூதராகச் சொல்லுகிற ஸ்ரீ கிருஷ்ண அபிப்பிராயத்தாலே
ஆத்ம சரீரங்களுக்கு அந்யத்வம் வாராது

இந்த ததீய சேஷத்வம்
ஸ்வேச்சயைவபரே சஸ்யதா ததீன்ய பலாத்துந-பகவத் பக்த சேஷத்வம் ஸ்வேச்சயாபிக்வசித் பவேத் -என்கிறபடியே
சேஷ பூதனான தன்னுடைய அதீனமானது அல்லாதாப் போலே -சேஷ பூத பிரதிசம்பந்தி நியோக அதீனமாக அன்றிக்கே
இதி ஸ்வோக்தி நயாதேவ ஸ்வ பக்த விஷயே பிரபு-ஆத்மாத்மீயஸ்ய சர்வஸ்ய சங்கல்பயதி சேஷதாம் –
அந்யோந்ய சேஷ பாவோபி பர ஸ்வா தந்தர்ய சம்பவ -தத் தத் ஆகார பேதேந யுக்த இத் யுப பாதிதம்-என்கிறபடியே
சேஷியான ஈஸ்வரனுக்கு ப்ரீதி விஷய பூதரானவர்களைப் பற்ற தத் ப்ரேரிதமாய்க் கொண்டு வந்தது ஆகையால்
இஷ்ட விநியோக அர்ஹதா லக்ஷணமான அநந்யார்ஹ சேஷத்வ கார்யம் அத்தனை ஒழிய அத்தோடு விருத்தம் அன்று

ஸ்வ ப்ரிய விஷய பூதரைப் பற்ற சேஷ பூத சேதனரை சேஷமாக்கி அது அடியாகத் தான் ப்ரியதமனாய் இருக்கும் என்கையாலே
தத் ப்ரீதியே புருஷார்த்தமாய் இருக்கும்
அவர்களுக்கு அந்த ப்ரீதி ஓவ் பாதிகமாக மாட்டாது -அது தானே பிரயோஜனமாம் அத்தனை ஆகையால்
ததீய சேஷத்வம் நிருபாதிகமாகக் கடவது
அங்கன் அன்றியிலே பகவச் சேஷத்வம் போலே ஸ்வத வருகை அன்றிக்கே பகவத் ப்ரேரிதமாய்க் கொண்டு
வருகையால் ஓவ்பாதிகம் என்னவுமாம்
பிரதிசம்பந்தி விஷயங்களினுடைய புத்த்ய அதீனமாக ஏக காலீனமாக ஏக ஆஸ்ரயஸ்தமாய் வருகிற சேஷ சேஷி பாவம்
ஆஸ்ரய பேதேந யுண்டாகிறது ஆகையால் அன்யோன்ய ஆஸ்ரய தோஷம் இல்லாமையால்
இந்த ததீய சேஷத்வம் உப பன்னம் என்றதாயிற்று

ஆக இந்த நமஸ் ஸப்தத்தாலே
அஹங்கார மமகார நிவ்ருத்தியும்
நிவ்ருத்தமான ஸ்வரூபத்தினுடைய அத்யந்த பாரதந்தர்யமும்
பாரதந்தர்ய காஷ்டையான ததீய சேஷத்வமும்
பாரதந்தர்ய அனுரூபமான உபாயமும் ஆகிற நாலு அர்த்தமும் சொல்லிற்று

ஆனாலும் இது அநந்ய சரணத்வ பிரதானமாய் இருக்கும் -எங்கனே என்னில்
கீழே ஆர்த்தமாக உபாய பாவம் சொல்லா நிற்கச் செய்தேயும் அவ்வளவில் பர்யவசியாதே
யஸ் ச தேவோ மயா த்ருஷ்டா புரா பத்மா யதேஷண -ச ஏஷ ப்ருது தீர்க்காக்ஷஸ் சம்பந்தீ தே ஜனார்த்தன –
ஸர்வேஷா மேவ லோகா நாம் அபி தாமாதா ச மாதவ -கச்ச த்வமே நம சரணம் சரண்யம் புருஷர்ஷபா -என்று
சர்வ லோகங்களுக்கும் ப்ரிய ஹிதங்களை நடத்திக் கொண்டு போருவான் ஒருவன் ஆகையால் எல்லாருக்கும் மாதாவுமாய் பிதாவுமாய்
உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன்-என்கிறபடியே
அந்த பிரிய ஹிதை பரதைகள் எல்லாம் தோன்றும்படி பத்மாய தேஷணனாய் இருப்பான் யாவன் ஒருவன் –
அவன் ஒரு தேவன் என்னால் முன்னாள் காணப்பட்டான் -அந்த ஜனார்த்தனன் ப்ருதுதீர்க்காஷனாய்க் கொண்டு
உங்களுக்கு சம்பந்தியாய் இருக்கிறான் -அவனைச் சரணம் புகுருங்கோள் என்று உபதேசிக்க
அனுஷ்டான வேளையில் -ஏவ முக்தாஸ் த்ரய பார்த்தாயமவ் ச பரதர்ஷப-திரௌபத்யா சஹிதாஸ் சர்வே நமஸ்சக்ருர் ஜனார்த்தனம் -என்று
இப்படி சொல்லப்பட்ட பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியோடே கூடிக் கொண்டு நமஸ்ஸைப் பண்ணினார்கள் என்கிற
ஸ்தான பிரமாணத்தாலும் உபாய வாசமாகச் சொல்லுகையாலும்
பநதா நகா உத்திஷ்டோ ம ப்ரதா உதீர்யதே-விஸர்க்க பரமே சஸ்து தத ரார்த்தோயம் நிரூப்யதே-அநாதி பரமே
சோயஸ் சக்தி மாநசயுத பிரபு -தத் ப்ராப்தயே பிரதாநோயம் பந்தா ந மந நாமவாந் -என்று
பகவத் பிராப்திக்கு கர்ம ஞானாதிகளில் காட்டில் பிரதான உபாயமாக பகவத் விஷயத்தைச் சொல்லுகிறது
நமஸ் சப்தம் என்று நிர்வகிக்கையாலும்
இவ்வுபாய அங்கமான ஸ்வ பிரவ்ருத்தி தியாகத்தை ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி முகேன
இந்த நமஸ் ஸப்தத்திலே சொல்லுகையாலும் இந்த நமஸ் சப்தம் அநந்ய சரணத்வ பிரதானமாகக் கடவது

ஆக நமஸ் சப்தத்தால்
ஸ்வரூப விருத்தமான அஹங்கார மமகாரங்களினுடைய நிவ்ருத்தியும்
நிவ்ருத்தமான ஸ்வரூபத்தினுடைய அத்யந்த பாரதந்தர்யமும்
இந்த பாரதந்தர்ய காஷ்டையான ததீய சேஷத்வமும்
பரதந்த்ரனுக்கு அனுரூபமான உபாயமும் சொல்லிற்று ஆயிற்று

ஆக பிரணவத்தால் ஸ்வரூபம் சொல்லி
நமஸ் சப்தத்தால் ஸ்வரூப அனுரூபமான உபாயம் சொல்லிற்று ஆயிற்று

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரகால நல்லான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பரகால நல்லான் ரஹஸ்யம் -ஸ்ரீ திரு மந்த்ரார்த்த விவரணம்-உகாரார்த்தம்/ மகார்த்தம் /பிரணவார்த்தம்–

August 16, 2019

அநந்தரம் -உகாரம் -ததே வாக்நிஸ் தத் வாயுஸ் தத் ஸூர்யஸ் தது சந்த்ரமா -என்று
ஏவகாரத்தையும் உகாரத்தையும் பர்யாயமாகச் சொல்லுகிற ஸ்தாந பிரமாணத்தாலே அவதாரணார்த்தமாய்க் கொண்டு
இந்த சேஷத்வ விரோதியான அநந்யார்ஹதையைக் கழித்து அவனுக்கே சேஷம் என்று அவதரிக்கிறது –

சர்வாதிகனான அகார வாச்யனுக்குச் சேஷமான வஸ்துவுக்கு அந்நிய சேஷத்வ யோக்யதை
இல்லையாய் இருக்க இந்த ப்ரஸஜ்ய ப்ரதிஷேதம் ஏது என்னில்
லோகத்தில் ஒருவனுக்கு சேஷமான கிருஹ ஷேத்ராதிகள் பிறருக்கு அர்ஹமாகக் காண்கையாலும்
ஹிரண்யம் குண்டலாய -என்று இருக்கச் செய்தேயும் கடக மகுடாதிகளுக்கும் அர்ஹமாகக் காண்கையாலும்
மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ ஆச்சார்ய தேவோ பவ -என்று ஒருவனுக்கு
அநேக விஷய சேஷத்வத்தை விதிக்கக் காண்கையாலும்
அப்படியே ஈஸ்வரனுக்கு இவ்வாத்மா வஸ்து சேஷமாம் இடத்தில் அந்யர்க்கும் சேஷமாய் ஈஸ்வரனுக்கு சேஷமாய் இருக்குமோ
என்று சங்கை பிறக்க அந்த சங்கையைக் கழித்து அவனுக்கே சேஷம் என்கிறது

சேஷத்வமாகில் அநந்யார்ஹமாய் இருக்கும் என்கிற நியமம் ஆகில் ஷேத்ராதி விஷயமாக அநயார்ஹம் ஆவான் என் என்னில்
அங்கு ப்ருதுக் ஸ்திதி யோக்யமான த்ரவ்யம் ஆகையாலே க்ரய விக்ரயாதிகளாலே அந்யார்ஹம் ஆகைக்கு யோக்யதை யுண்டு –
இங்கு ப்ருதக் ஸ்தித்ய யோக்ய த்ரவ்யம் ஆகையாலே அநயார்ஹம் ஆகைக்கு யோக்யதை இல்லை –
எங்கனே என்னில்
க்ஷேத்ரம் க்ரய விக்ரய அர்ஹமாகையாலும் -புத்ரன் க்ரய விக்ரய அர்ஹனுமாய்–மாதா பிதாக்களுக்கும்
அநேக தேவதைகளுக்கும் சேஷமாய் இருக்கையாலும் –
பார்யை பாணிக்ரஹண பூர்வ காலத்திலே மாதா பிதாக்களுக்கு சேஷமாயும் -அநந்தரம்
சோம கந்தர்வாதிகளுக்கும் சேஷமாயும் சரீர அவதியாயும் உபேஷா அவதியாயும் இருக்கையாலும்
தேகமும் பார்யா சரீரம் பர்த்தாவுக்கு சேஷமாய்- பர்த்ரு சரீரம் தேவாதிகளுக்கு சேஷமாய்
க்ரய விக்ரய யோக்யமாய் இருக்கையாலும்
குணமும் நிராஸ்ரயமாக நில்லாதே ஓர் ஆஸ்ரயத்தைப் பற்றி நிற்கையாலே ஸ்வ ஆஸ்ரய சேஷியான வ்யக்திக்குத்
தானும் சேஷமாகையாலும் க்ஷத்ர புத்ர தார தேஹ குணாதிகளுக்கும் அநந்யார்ஹத்வம் இல்லை –
குண்டல அபிமானியான ஹிரண்யமும் கர்த்தாவினுடைய ருசி விசேஷத்தாலே கடகாதிகளுக்கும் யோக்யமாகையாலே
அதுக்கும் அநந்யார்ஹத்வம் இல்லை
மாத்ரு தேவோபவேத்யாதிகளும் அநேக விஷய விதியாகையாலே அந்த விஷய பூதனானவனுக்கும் அநந்யார்ஹத்வம் இல்லை

இங்கு அப்படி இன்றியிலே
நததஸ்தி விநாயத்ஸ்யாந் மயாபூதம் சராசரம்
தன்னுள் கலவாதது எப்பொருளும் தான் இல்லையே -என்று ப்ருதக் ஸ்திதி யோக்யம் அன்று என்கையாலும்
ப்ருதக் ஸ்திதி சொன்னபோது ஈஸ்வரனுடைய சர்வ பிரகாரித்வாதிகள் பக்ந மாகையாலும்
ஆத்மை வேதம் சர்வம்
ப்ரஹ்மை வேதம் சர்வம் -என்று சாமான்யாதி கரண்யத்தாலே சரீராத்ம பாவ சம்பந்தத்தைச் சொல்லி
தத் ஸஹிதமான சேஷ சேஷி பாவ சம்பந்தத்தை ஆத்மய்வ என்று அவதரித்துக் கொண்டு அசாதாரணமாகச் சொல்லுகையாலும்
ஸ்வத்வ மாத்மநி சஞ்ஜாதம்
தாச பூத
ஆத்ம தாஸ்யம் ஹரேஸ் ஸ்வாம் யம் ஸ்வபாவம்
குல தொல் அடியேன்
தொல் அடிமை வழி வரும் தொண்டர்-இத்யாதிகளாலே
இந்த சேஷத்வத்தை நிருபாதிகமாகவும் அநந்ய சாதாரணமாகவும் ஸ்வா பாவிகமாயும் சொல்லுகையாலும்
இப்படி சேஷமான வஸ்து ஞானானந்த ஸ்வரூபமாய் ஞான குணகமாய் இருக்கும் என்று மேலே யுக்தமாகையாலும்
க்ரய விக்ரய அநர்ஹம் -அசாதாரணம் -நிருபாதிகம்-நித்யம் -ஓவ் பாதிக தேஹ வ்யாவ்ருத்த சரீரம் –
குணி என்னும் இடம் ஸூ ஸ்பஷ்டம்

ஆகையால் க்ஷேத்ர புத்ர தார தேஹாதிகளில் போலே அந்நிய சேஷத்வ சங்கா ஹேதுவான
க்ரய விக்ரய அர்ஹத்வ சாதாரணத்வ ஓவ் பாதிகத்வ அநித்யத்வங்கள் இவ்விடத்தில் இல்லாமையாலே
இங்கே அந்நிய சேஷத்வ சங்கையே பிடித்தில்லை
பூர்வ யுக்தமான ப்ருதக் ஸ்தித்யநர்ஹதையாலும் -அசாதாரணதையாலும் -மாத்ரு தேவோ பவேத்யாதிகளில் சொல்லுகிற
அநேக சேஷத்வத்துக்கு உதயம் இல்லை –
குண்டல அர்ஹமான ஹிரண்யத்தினுடைய ஸ்வாம் யதீனமான மகுடார்ஹத்வம் இங்கும் சேஷ்ய தீனமாக யுண்டாக
சேஷத்வம் சேஷி பூத பகவந் நியோகாதீனமாக வருகிறது ஆகையாலே
பகவத் சேஷத்வமே அத்தனை ஒழிய அந்நிய சேஷத்வம் அன்று

இப்படி அந்நிய சேஷத்வ சங்கை இல்லாமையாலே தந் நிவ்ருத்த அபேக்ஷை இல்லை என்றிட்டு
தத் வாசகமான உகாரத்துக்கு உதயம் இல்லை ஆகாதோ என்னில்
இப்படி சேஷபூதனாகச் சொல்லுகிற சேதனன் கர்ம ஹேதுகமாக உத் பன்னமான சரீரஸ்தனாய் இருக்கையாலே
அந்த சரீர உத்பாதகரான மாதா பிதாக்கள் என்ன –
அந்த சரீரத்தைப் பற்ற உண்டான வர்ணாஸ்ரம நிபந்தனமாக வருகிற க்ரியா பிரதி சம்பந்திகளான அக்னி இந்த்ராதி தேவதைகள் என்ன –
இவர்களைப் பற்றி வருவதொரு கர்ம உபாதிக சேஷத்வம் உண்டாகையாலே
தந் நிவ்ருத்தியைச் சொல்லுகிற உகாரத்துக்கு உதயம் இல்லை என்ன ஒண்ணாது

ஆனால் கர்ம ஹேதுக சரீரஸ்தனாய் இருக்கச் செய்தே தத் கார்யமான அந்நிய சேஷத்வத்தை நிவர்த்திக்கும்படி என் என்னில்
ஏவம் பூதனான சேதனன் விஷயமாக ஈஸ்வரன் நிர்ஹேதுக அங்கீ காரத்தைப் பண்ணி ஸ்வரூப யாதாத்ம்ய ஞானத்தைப் பிறப்பிக்கையாலே
ஸ்வ ஆத்ம சரீரங்களில் உண்டான அத்யந்த பேத ஞானம் பிறந்து -அந்த சரீரத்தில் காட்டில் அந்யனாகத் தன்னை அனுசந்தித்து இருக்கையாலும்
ஸ்வரூப அனுகுணமாக ரக்ஷிக்கும் என்கையாலே ஸ்வரூப விருத்த கிரியா ஹேதுவான கர்மத்தை நேராக நிவர்ப்பித்து
ஸ்வரூப அனுரூபமான உபாயத்தையும் பரிக்ரஹித்துப் போருகையாலும்
சரீர ஹேதுவாயும் க்ரியா ஹேதுவாயும் வருகிற அந்நிய சேஷத்வங்களை நிவர்ப்பிக்கக் குறை இல்லை

யாவா நர்தத உதபாநே சர்வதஸ் சம்ப்லுதோதகே -தாவான் சர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ் விஜாநத-என்று
ஆறு பெருகிப் போகா நின்றால் பிபாசிதனுக்கு ஸ்வ தாஹ சாந்தி மாத்ர ஜல பானமே அபேக்ஷிதமானால் போலே
சகல வேதங்களும் சகல அர்த்தங்களையும் சொல்லிற்றே யாகிலும்
க்ருஹஸ்த தர்மம் வனஸ்தனுக்கு த்யாஜ்யமானால் போலேயும் -அது தான் பிஷுவுக்கு த்யாஜ்யமாமால் போலேயும்
ஸ்வரூப பிரதானனாவனுக்கு சரீர பிரதாநாநனாவனுடைய கிரியை த்யாஜ்யமாகையாலும்
தேவர்ஷி பூதாத்மாந்ருணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம்ருணீ சராஜந்-சர்வாத்மநாயஸ்
சரணம் சரண்யம் நாராயணம் லோக கூறும் பிரபன்ன –என்று
பகவத் சேஷத்வ உபாயத்வ ஞானமுடையவன் தேவதாந்தரங்களுக்கு கிங்கரனும் அல்லன்-ருணியும் அல்லன் என்றும்
ப்ரஹ்மசார்யேண ரிஷிப்ய-யஜ்ஜேந தேவேப்ய பிரஜயாபித்ருப்ய -என்று சொல்லுகிற
தேவர்ஷி பித்ரு பூத விஷயங்களான ரிணமோச நார்த்த க்ரியா நிபந்தனமாக வருகிற கிங்கரத்வத்தை
அந்த க்ரியா ஹேது பூதமான ரிணித்வ நிஷேத பூர்வகமாக நிஷேதிக்கையாலும்

யோவைஸ் வாமதேவதா மதியஜதே ப்ரஸ்வாயை தேவதாயை சயவதே நபராக பிராபநோதி பாபீயான் பவதி-என்று
யாவன் ஒருவன் ஸ்வரூப அனுரூபமான தேவதை ஒழிய யஜிக்கிறான் -அவன் அந்த தேவதையின் பக்கல் நின்று பிரஷ்டனாம் –
அவனுக்கு பரகதி பிராப்தியும் இல்லை -பாபிஷ்டனுமாம் என்கையாலும்
ஸம்ஸேவ்ய ஏகோ ஹரிர் இந்த்ரியானாம் சேவ அந்நிய தேவே வ்யபிசார ஏவ -அந்யோபி சேவ்யோயதி
தேவ சாமயாத் கோவாஹ் ருஷீ கேசபதாபிதா ந -என்று
சகல இந்த்ரியங்களாலும் சம்சேவ்யமாநனாய் இருப்பான் ஹரி சப்த வாச்யனான சர்வேஸ்வரன் என்றும்
இந்த்ரியங்களைக் கொண்டு தத் வ்யதிரிக்த தேவதைகளை சேவித்தான் ஆகில் பர்த்தரு சேஷமான சரீரத்தை
அந்நிய புருஷ உபயோகம் ஆக்கின ஸ்த்ரீக்கு வ்யபிசாரமே பலித்து பாதி வ்ரத்ய ஹானி யுண்டாமா போலே
ஹ்ருஷீகேசனுடையதான ஹ்ருஷீகங்களை அந்நிய விஷயம் ஆக்குகையாலே அந்த ஹ்ருஷீகங்களுக்கும் ஸ்வரூப ஹாநியாய் –
அவற்றுக்கு கரணியான தனக்கும் ஸ்வரூப ஹானி யுண்டாம் என்றும் சொல்லிக் கொண்டு இந்த்ரியங்களுடைய
அந்நிய பிரதிசம்பந்தி காம கரத்வ நிஷேத பூர்வகமாக பகவத் பிரதி சம்பந்தி காமகரத்வத்தை விதிக்கையாலும் –
அந்நிய தேவதா பிரதி சம்பந்தகமாய் ஸ்வரூப விருத்தமான கர்மத்தினுடைய நிவ்ருத்தி
ஏவம் பூத ஞான விசிஷ்டனுக்கு ஸ்வத பிராப்தம் என்றதாயிற்று

சிலர் இதனுடைய அப்ராப்தத்வ சங்கையைப் பண்ணி தத் பரிஹாரார்த்தமாக இந்த கிரியைகள்
பகவத் பர்யவசான புத்தயா அநுஷ்டேயங்கள் என்றும்-
அந்த தேவதா நாமங்களை பகவந் நாமங்களாக புத்தி பண்ணி அனுஷ்டிப்பான் என்று சொல்லுவார்கள் –
அவற்றினுடைய விதான காலத்தில் -அக்னயே இந்த்ராய-என்று அக்னீ இந்திராதி தேவதைகளை பிரதிசம்பந்திகளாக
சில கிரியைகளை விதிக்கிறவோபாதி விஷ்ணவே என்று சர்வ வ்யாபகனான சர்வேஸ்வரனை
பிரதிசம்பந்தியாகச் சில கிரியைகளை விதித்தும் போரா நின்றது
அக்னீ இந்திராதி தேவதா பிரதிசம்பந்தி கிரியா தானே பகவத் பர்யவசாயியுமாய் -அந்த தேவதா நாமங்கள் தானே
பகவந் நாமங்களுமாகில் -விஷ்ணவே -என்று தனித்து விதிக்கக் கூடாது –
அதுக்கு மேலே அந்த கிரியைகளுக்கு தத் தத் தவேதா பிரதி சம்பந்திகத்வம் இல்லையாகில்
சர்வ கிரியைகளிலும் விஷ்ணவே என்று வியாபகத்வேந சர்வ விசேஷ்ய பூதனான
சர்வேஸ்வரனை பிரதி சம்பந்தியாக விதிக்க அமையும்
அங்கன் அன்றியிலே அந்தத் தேவதைகளையும் சர்வேஸ்வரனையும் தனித்து விதிக்கக் காண்கையாலே
அந்த விதிகளுக்கு பிரதிசம்பந்தி அந்த தேவதைகளாக வேணும் –
ஆகையால் அந்த தேவதைகள் தான் விசேஷணத்வேந சேஷபூதராய்க் கொண்டு தங்கள் ஸ்வரூபம் ஸித்தமாய் இருக்கச் செய்தேயும்-
நாம விசேஷணத்வேந சேஷபூதர் -அவன் விசேஷ்யத்வேந சேஷி என்ற ஞானம் இன்றியிலே –
தேவோஹம் ஸ்வ தந்த்ரோஹம் -என்று அகங்கார மமகார க்ரஸ்தராய் இருப்பார் சிலர் ஆகையாலே

பர்த்ரு சேஷபூதையான பார்யையானவள் ஆர்த்தவாதி தூஷிதை யானவன்று-அந்த பர்த்தாவோடு புத்ரர்களோடு வாசியற
சர்வர்க்கும் ஸ்பர்ச யோக்யதை இல்லாதாப் போலே-
பகவத் ஏக சேஷத்வ ஞானம் உடையாருக்கு தத் தத் தேவதா பிரதி சம்பந்திகமான கிரியைகள் த்யாஜ்யங்கள் ஆகையால் –
விதி விசேஷ்ய பர்யந்தமான போதும் இந்த நியாயத்தாலே விசேஷணத்துக்கு அஞ்ஞான நிபந்தமான அந்யத்வம் வருகையாலும்
பூர்வோக்த நியாயத்தாலே சம்யக் ஞான நிஷ்டனைக் குறித்து விதி இல்லாமையாலும்
சம்சய விபர்யய ரஹிதமாம் படி நிர்ஹேதுகமான லப்த ஞானரான ஆழ்வார் நீராய் நிலனாய் என்று தொடங்கி
சர்வேஸ்வரனுடைய சர்வ சரீரத்தை சாமாநாதி கரண்யத்தாலே அனுசந்தித்து -தமக்கு அனுபாவ்யத்தை நிர்ணயித்து அபேக்ஷிக்கிற இடத்தில்
கூராழி வெண் சங்கு ஏந்திக் கொடியேன் பால் வாராய் -என்று அசாதாரண லக்ஷணமாய் இருந்துள்ள
சங்க சக்ர கதாதரமான விக்ரஹத்தோடே வர வேணும் என்று அபேக்ஷிக்கையாலும்
யஞ்ஞத்திலே தீஷித்தவனுக்கு நித்ய கர்மங்கள் த்யாஜ்யமாம் போலே பகவத் உபாய நிஷ்டாவான்களுக்கு இவை த்யாஜ்யமாகையாலும்
ஸ்வரூப யாதாத்ம்ய ஞானவான்களுக்கு தத் பிரகார அனுஷ்டானம் அநுப பன்ன மாகையாலே இது சொல்ல ஒண்ணாது

கர்ம ஹேதுக உத்பன்ன சரீரமே யாகிலும் இந்த ஞான அநந்தரம் கர்ம நிராச பூர்வக கேவல பகவதி சகா ஹேதுவான
சரீர ஸ்திதி யாகையாலே இந்த இச்சாஸ்ரயம் பகவத் விஷயம் ஆகையாலும் பூர்வ ஜென்ம மாதா பித்ரு சேஷத்வம்
அனந்தர ஜென்மத்தில் இல்லாதாப் போலே இந்த சரீர உத்பாதகரான மாதா பித்ரு விஷய சேஷத்வம்
இவனுக்கு இல்லாமை கீழ்ச் சொன்ன ஹேது சித்தம் ஆகையாலும் தந் நிவ்ருத்தி அத்யந்தம் பிராப்தம் என்னும் இடம் ஸூ நிஸ்சிதம்
சஹி வித்யா தஸ்தம் ஜனயதி தத் ஸ்ரேஷ்ட ஜென்ம
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன் -என்றும்
இந்த ஞான உத்பத்தியையும் ஜன்மாந்தரமாகச் சொல்லிற்று இறே

ஞானம் பிறந்த அநந்தரத்திலே சரீர விமோசனம் பிறக்குமாகில் ஒருவருக்கும் இந்த ஞானம் பிறவாது என்றும்
இவனால் அநேக சேதனரை திருத்தலாம் என்றும்
இவனுடைய சரம சரீரமாகையாலே தனக்கு உண்டான ஆதார அதிசயத்தாலும் ஈஸ்வரன் தன இச்சையால் வைக்கும் என்று
பூர்வாச்சார்யர்கள் அருளிச் செய்கையாலே பகவத் இச்சையே ஹேது என்னக் குறை இல்லை
ஆனால் துக்க ஹேதுவான வியாதியாதிகள் உண்டாவான் என் என்னில்-கர்ம பலன் தான் வியாதியாதி ரூபேணவும்-
தேவதாந்த்ர சேஷத்வ ரூபேணவும் –
தேச காலாதி நிபந்தமான சீதோஷ்ண ஆதிகள்-அன்ன பானாதி வாஞ்சை இத்யாதி ரூபேண வும் த்ரிவிதமாய் இருக்கும்

அதில் வ்யாதியாதிகள் தஜ் ஜெனித கிலேச அதிசயத்தாலே தத் ஆஸ்ரயமான ஸ்வரூப விருத்த சரீரத்தில்
உபேக்ஷை பிறக்கைக்கு ஹேது வாகையாலே ஹிதபரனான ஈஸ்வரன் தத் ஹேதுவான கர்மத்தை நிஸ் சேஷமாக நிவர்த்திப்பன்
தேவதாந்த்ர சேஷத்வம் ஸ்வரூப விருத்தம் ஆகையால் ஸ்வரூப அனுகுண ரக்ஷணம் பண்ணுகிற ஈஸ்வரன்
தத் ஹேதுவான கர்மத்தினுடைய நிஸ் சேஷ நிவ்ருத்தியைப் பண்ணும்
தேச கால சீதோஷ்ண ஆதிகள் -அன்ன பானாதி வாஞ்சை இவை தேவதாந்த்ர சேஷத்வத்தோ பாதி ஸ்வரூபத்துக்கு
அத்யந்தம் விருத்தம் இன்றியிலே வியாதி யாதிகளோ பாதி சரீர உபேஷாதிகள் பிறக்கைக்கு ஹேதுவாகையாலே
தத் ஹேதுவான கர்மத்தை அவன் உபேக்ஷித்து இருக்கும் -ஆகையால் இச்சா ஹேதுவான சரீர ஸ்திதிக்கும் குறை இல்லை
அந்நிய சேஷத்வ நிவ்ருத்தியும் அத்யந்தம் அனுப பன்னம்-

ஆக உகாரத்தாலே
சாஸ்த்ரீயமான அக்னீ இந்த்ரியாதி தேவதா அனுவர்த்த நத்தையும்
மாதா பிதாக்களுடைய அனுவர்த்த நாதிகளையும் வ்யாவர்த்திக்கிறது
அங்கன் இன்றியிலே
இவ்வுகாரம் பகவத் வ்யதிரிக்த சேஷத்வத்தினுடைய நிவ்ருத்தியைப் பண்ணுகிறது என்றும் அர்த்தம்
தத் வ்யதிரிக்த சேஷத்வத்தில் நிருபாதிக பிரசங்கம் இல்லாமையால் நிரஸ்தம்

ஆக
சர்வ காரண பூதனாய் -சர்வ ரக்ஷகனாய் -ஸ்ரீ யபதியாய் -சர்வ சேஷியான அகார வாச்யனுக்கே
அநந்யார்ஹ சேஷம் என்றதாயிற்று –

————-

மகாரார்த்தம்-

அநந்தரம் மகாரம் –
இப்படி சேஷ பூதனாய் –
தேஹ இந்திரியாதி விலக்ஷணனாய் –
ஆனந்த ரூபா ஞான ஸ்வரூபனாய் –
அஹம் சப்த வாச்யனுமாய் –
ஞாத்ருத்வாதி குண விசிஷ்டனுமாய் –
ஸ்வயம் ப்ரகாசனுமாய்
அணு பரிமாணனான-ஆத்மாவைச் சொல்லுகிறது -எங்கனே என்னில்
பூதாநி சக வர்க்கேண-இத்யாதியாலே தேஹ உபாதானமான பூத பஞ்சகங்களும் இந்திரியங்களும் -விஷயங்களும் –
மநோஹங்காரங்களும் தொடக்கமான -24-தத்துவங்களையும் ககாராதி பகாராந்தமான-24-அஷரத்தாலும் சொல்லி அநந்தரம்
ஆத்மா து சம காரேண பஞ்ச விம்ச ப்ரகீர்த்தித-என்று -25-வது தத்துவமான ஆத்மாவை -25-வது அக்ஷரமான மகாரத்தாலே
இவற்றில் காட்டில் வேறுபடச் சொல்லுகையாலே ஆத்மா தேஹாதி விலக்ஷணன் என்னும் இடம் சொல்லிற்று

ஆத்மா தான் தேஹாதி விலக்ஷணனான படி என் என்னில் –
தேஹமாகிறது -அவயவ சமுதாயமாகையாலே அந்த அவயவங்களுக்கு-என்னுடைய அவயவங்கள் என்று
அந்நியனாய் இருப்பான் ஒருவனுடைய மமதைக்கு விஷயமாகை ஒழிய அஹம் வியவஹாரம் இல்லாமையாலும்
ஒரு அவயவம் ஆத்மா என்னும் போதைக்கு தத்தத் அபாவத்திலும் அஹம் வியவஹாரம் உண்டாகையாலும்
அவயவங்கள் எல்லாம் தனித்தனியே ஆத்மாக்களாம் இடத்தில் ஆத்மபூதமாய் இருக்கிற பாதத்தில் உண்டான ஷதி
அந்யாத்மாவாய் இருக்கிற ஜிஹ்வை அறியக் கூடாமையாலும்
தேஹஸ் தாவதநாத்மாபி த்ருஸ்ய த்வாத் கடவச்சுபே -ஆத்மா த்ருஸ்யோமதோயஸ் மாத் ப்ரமாணை ரேவ ஸர்வதா –
ப்ரத்யஷேனோபலப் யந்தேயதைவாத்ர கடாதயா-ததோ பலப்யதே தேஹோப்யதோ நாத்மா பவேத்த்ருவம் -என்று
அசஷுர் விஷயம் என்று பிரமாணங்கள் சொல்லுகையாலே சஷுர் விஷயமான தேகம் ஆத்மாவாகக் கூடாது என்று சொல்லுகையாலும்
நானும் என்னுடைய உடம்பும் என்று அஹமர்த்த பூதனான ஆத்மாவைக் காட்டில் இதஹமர்த்த பூதனான
தேஹத்தைப் பிரியச் சொல்லுகையாலும் தேகத்தில் காட்டில் வ்யாவ்ருத்தம் என்னும் இடம் சித்தம் –

யா அஹமத்ராக்ஷம் ஸோஹம் ஸ்ப்ருசாமி-என்று தர்சன ஸ்பர்சங்கள் இரண்டுக்கும் ஒருவனே கர்த்தா என்று சொல்லுகையாலும்
நபவேச்சஷுரப்யாத்மா கரணத்வாத் ப்ரதீபவத்-ததாத்மாந பவத் யன்யா நீந்த்ரியாண் யபி சோபநே -என்று
சஷுராதிகளைப் போலே பதார்த்த தர்சனத்துக்கு ஹேதுவாகச் சொல்லுகையாலே
கரண பூதமான இந்த்ரியங்களில் காட்டில் கர்த்ரு பூதமான வாதமா வ்யாவ்ருத்தன் என்னும் இடம் ஸம்ப்ரதிபன்னம்
ஆத்ம சந்நிதியும் உண்டாய் இந்திரியங்களுக்கு விஷய ஸ்பர்சமும் உண்டாய் இருக்கச் செய்தேயும்
அந்தக்கரண அபாவத்தாலே விஷய ஞானம் இன்ரிக்கே ஒழிகையாலே அந்தக்கரண அபேக்ஷ உண்டாகையாலும்
ஆத்மா மநோபி நபவேத் கரணத்வாத் பிரதீபவத் -என்று ஸ்ம்ருதிகளுக்குக் கரணமாகச் சொல்லுகையாலும் –
கர்த்தாவான ஆத்மாவுக்குக் கரணத்வம் கூடாமையாலும் –
பாஹ்ய இந்த்ரியங்களினுடைய அபாவத்திலேயும் ஸ்ம்ருதி உண்டாகையாலே அவை ஸ்ம்ருதிகளுக்கு கரணமாக மாட்டாமையாலும்
இவை ஒழிய அந்தக்கரண அபேக்ஷை உண்டாகையாலே அந்தக்கரண ரூபமான
மனசில் காட்டிலும் கர்த்தாவான ஆத்மா வ்யாவ்ருத்தன்

ததைவ புத்திஸ் சித்தஞ்ச கரணத்வம் த்ருசேர்யதே -என்று அத்யவசாயத்துக்கும் தர்சனத்துக்கும்
புத்தி சித்தங்களைக் காரணமாகச் சொல்லுகையாலே இவற்றுக்கு ஆஸ்ரயமான வாத்மா இவற்றில் காட்டில் வ்யாவ்ருத்தன்

பிரானோப்ய நாத்மா விஜ்ஜேயஸ் ஸூப்தேஸ் சததோயத–என்று பிராணனும் ஆத்மா அன்று என்கையாலும்
இது தான் ஒருவருக்கு சேஷம் என்கையாலும் ஞான ஆஸ்ரயமாக மாட்டாமையாலும்
ஞான ஆஸ்ரயமான ஆத்மா பிராணனில் வ்யாவ்ருத்தன்

ஆகையால் தேஹ இந்திரிய மனா பிராணாதிகளில் காட்டில் வ்யாவ்ருத்தன் என்னும் இடம் ஸம்ப்ரதிபன்னம்-

இதம் சப்த வாஸ்யமான சரீராதிகளை கவர்க்கம் தொடங்கி பகாரம் அளவாகச் சொல்லி அஹம் சப்த வாஸ்யமான
ஆத்மாவை மகாரத்தாலே சொல்லுகையாலே ஆத்மா அஹம் சப்த வாச்யனானே –
அன்றாகில் பராக் அர்த்தத்தில் காட்டில் ஆத்மாவுக்கு பேதகமான ப்ரத்யக் அர்த்தம் சித்தியாது
அஹம் புத்தி கோசரம் அஹங்கார ரூப ஜடம்-அது ஆத்ம த்யோதகம் என்கிற இது சாந்தாங்கரமானது
ஆதித்ய தர்சனத்துக்கு ஹேதுவாக மாட்டாதாப் போலே இந்த ஜட ரூபமான அஹங்காரம்
ஸ்வயம் ஜ்யோதிஸ்ஸான ஆத்மாவைத் த்யோதிப்பிக்க மாட்டாதாகையாலும் ஆத்மா அஹம் புத்தி கோசாரமாக வேணும்

ஏவம்பூதமான தேஹாதி வைலக்ஷண்யமும்-அஹம் அர்த்தமும் இவ்வஷர ஸ்வ பாவத்தாலே சொல்லிற்று ஆயிற்று

இது தான் மந-ஞாநே-என்கிற தாதுவிலே வ்யுத்பன்னமாய் வாஸ்யமான ஆத்மாவினுடைய
அத்ராயம் புருஷஸ் ஸ்வயம் ஜ்யோதிர்ப்பவதி
ஜ்யோதிர் அஹம் அஸ்மி
விஞ்ஞான கந ஏவ
விஞ்ஞானம் யஜ்ஜமத நுதே –இத்யாதி பிராமண ஸித்தமாய்-
கடாதி பதார்த்த ஸத்பாவத்தில் போலே சம்சயம் இன்றியிலே இருக்கையாலே
ப்ரத்யக்ஷ ஸித்தமாய் இருக்கிற ஞான ஸ்வரூபத்தைச் சொல்கிறது –
இது தான் அனுகூலமாகப் பிரகாசிக்கையாலே ஆனந்த ரூபனாய் இருக்கும் என்னும் இடம் ஸம்ப்ரதிபன்னம்
அஹமிதம் ஜாநாமி ந ஜாநாமி -என்கிற ஸ்வ வ்யதிரிக்த பதார்த்த ஞாத்ருத்வ சம்சயம் போல் இன்றிக்கே-
அஹம் என்கிற ஸ்வரூபம் ஞானாந்தர நிரபேஷமாக நிஸ் சம்சயமாகத் தோன்றுகையாலே
ஸ்வஸ்மை ஸ்வயம் பிரகாசமாய் இருக்கும் என்கிறது –
இத்தால் ஆத்மாவினுடைய அநன்யாதீன ப்ரகாஸகத்வ ஆஹ்லாதகத்வ லக்ஷணமான
ஞானானந்த ஸ்வரூபத்வம் சொல்லிற்று ஆயிற்று

அநந்தரம் -மநு -அவ போதனே-என்கிற தாதுவிலே ஸித்தமாய்
நஹி விஜ்ஜாதுர் விஜ்ஜா தேர் விபரிலோ போ வித்யதே
விஜ்ஜா தார மரேகேந விஜாநீ யாத்
ஜோத ஏவ -என்று சொல்லுகிற ஞான குணத்வம் சொல்லுகிறது
எனக்கு ஞானம் பிறந்தது நசித்தது -என்று பிரத்யக்ஷமாகையாலும் -ஞானம் தர்மம் அல்லாவாகில்
ஸம்ஸ்ருத்ய அவஸ்தையில் சொல்லுகிற திரோதானத்துக்கு விஷயம் தர்மியாய்
அதனுடைய ஏக ரூபத்துக்கு ஹானி வருகையாலும் ஞானம் தர்மமாக வேணும் –

அநந்தரம் -மாங் மாநே -என்கிற தாதுவிலே பரிமாண ஆஸ்ரயத்வம் ஸித்தமாய் –
அந்த பரிமாணம் மஹத் பரிமாணம் அன்று அணு பரிமாணம் என்னும் இடத்தை -யேஷோ அணுர் ஆத்மா -என்றும்
வாலாக்ர சத பாகஸ்ய சததா கல்பிதஸ்யச பாகோ ஜீவ-இத்யாதிகளாலே சொல்லுகையாலே அணு பரிமாணத்வம் சொல்லுகிறது –
உத்க்ராந்திகத்யாதிகள் ப்ரத்யக்ஷம் ஆகையாலும் அணு பரிமாணனாக வேணும்
சகாநந்த்யாய கல்பதே-என்று பரம மஹத் பரிமாண பூதனாகவும் சொல்லா நின்றதே என்னில் அப்போது
ஆத்மா ஸூத்த அக்ஷரஸ் சாந்த -என்று சொல்லுகிற ஏக ரூபத்துக்கு ஹானி வருகையால் மஹத் பரிமாணத்தைச் சொல்லுகிறது அன்று
முக்த அவஸ்தையில் திரோதான நிவ்ருத்தி பிறந்து பிரகாசிதமான குணத்தினுடைய ஆனந்த்யத்தைச் சொல்லுகிறது
ஆனால் ஆபாதசூடம் அனுபவிக்கிற ஸூக துக்க அனுபவம் கூடுமோ என்னில் ஸ்வ தர்மமான ஞானம் வ்யாப்தமாய்
ஸர்வத்ர உண்டான ஸூக தூக்காதிகளை ஸ்வ ஆஸ்ரயமான தர்மிக்கு பிரகாசிப்பிக்கையாலே கூடும்
ஆகையால் அணு பரிமாணனே
ஏவம் பூதமான ஞான ஸ்வரூபத்வ ஞான குணகத்வ அணு பரிமாணத்வங்கள் தாது த்ரயத்தாலும் சொல்லுகிறது –

இந்த ஞாத்ருத்வம் குனாந்தரங்களுக்கும் உப லக்ஷணமாய் -நித்யத்வம் -ஏக ரூபத்வம் -தொடக்கமான
குணங்களையும் சொல்லுகிறது –
அஜோஹ் ஏக
நித்யோ நித்யாநாம் -என்று நித்யனாகச் சொல்லுகையாலும்
தேஹாந்த்ர க்ருத கர்ம ஹேதுவான ஸூக துக்க அனுபவம் காண்கையாலும்
நிஷ் கர்மனான போது ஜென்மாதிகள் கூடாமையாலும்
நித்யனாக வேணும்
ஆத்மா ஸூத் தோஷா -என்கையாலே ஏக ரூபன்
இந்த நித்யத்வ ஏக ரூபங்கள் இதனுடைய அர்த்த ஸ்வ பாவத்தாலே சொல்லிற்று –

ஆக
ஆத்மாவினுடைய ஸ்வரூப ஸ்வ பாவங்களை
அக்ஷர ஸ்வ பாவத்தாலும்
தாதுக்களாலும்
அர்த்த ஸ்வ பாவத்தாலும் -சொல்லா நின்று கொண்டு ஆத்மாவுக்கு வாசகமாய் இருக்கிறது மகாரம்
இதில் ஏக வசனம் ஜாதி ஏக வசனமாய்
நித்யா நாம் சேதநா நாம் பஹு நாம் -என்று சொல்லுகிற
பத்த முக்த நித்யாத்மகமான த்ரிவித ஆத்ம வர்க்கத்தையும் சொல்லுகிறது –
ஸூக துக்காதி வியவஸ்தா பேதத்தாலும் ஆத்மாக்கள் அநேகராக வேணும்
ஆக மகாரத்தால் பகவத் அநந்யார்ஹ சேஷமான த்ரிவித மார்க்கமும் சொல்லிற்று ஆயிற்று –

அநந்தரம் -த்ரிகுணாத் மிகையான -அசித் வர்க்கமும் பகவச் சேஷமாகையாலே –
சேஷ பூத வஸ்துக்களுக்கு கர்ம அனுபவ உபகரணமாயும் கைங்கர்ய உபகரணமாயும் இருக்கையாலும்
யஸ்யை தே தஸ்ய தத் தனம் -என்கிற நியாயத்தாலே சேஷியான பகவானுக்கு சேஷமாகையாலும்
சேஷ பூத வஸ்து வாசகமான இப்பதத்தில் அந்த அசித் வர்க்கமும் சொல்லப்படுகிறது
சித் அசித்துக்கள் இரண்டும் சேஷமாய் இருக்கச் செய்தே ஸ்வதஸ் சேஷத்வ விஸ்ம்ருதி சேதன வஸ்துவுக்கு ஆகையாலும்
தந் நிவ்ருத்தி பூர்வகமாக சேஷத்வ ஞான அபேக்ஷையும் அவனுக்கு ஆகையாலும்
தத் கார்யமான சேஷ வ்ருத்தி ருசி பூர்வகமான தத் சித்தி யுபாய ஸ்வீ காரம் பண்ணுவானும் சேதனன் ஆகையாலும்
ஈஸ்வரனுக்கு ஸ்வ போக விஷயமாய் இருப்பதும் சேதன வஸ்து ஆகையாலும்
இந்த சேதனனுடைய சேஷத்வ ஞானத்தாலே அசித்தினுடைய சேஷத்வமும் சித்திக்கையாலும்
தத் வாசகமான பதத்தால் அசித்தை யுப லஷிக்கிறது
அங்கன் அன்றியிலே
இதில் சப்தம் அசித் ஆகையால் சப்த அம்சத்தாலே அசித் வர்க்கத்தைச் சொல்கிறது
அர்த்த அம்சத்தாலே சித் வர்க்கத்தைச் சொல்லுகிறது என்னவுமாம்
ஆக மகாரத்தால் கீழ்ச் சொன்ன சேஷத்வத்துக்கு விஷயமான
த்ரிவித ஆத்ம வர்க்கமும் த்ரிவித அசித் வர்க்கமும் சொல்லிற்று ஆயிற்று –

சேஷமான வஸ்துக்களை பிரதமம் சொல்லாதே வஸ்துகதமான சேஷத்வத்தை பிரதமம் சொல்லுகைக்கு ஹேது என் என்னில்
வஸ்து தான் சேஷத்வேந உத்பன்னமானது ஆகையால் சேஷத்வத்தை பிரதமத்தில் சொல்லி
அநந்தரம் உத்பன்ன வஸ்து வேஷத்தை சொல்ல வேண்டுகையாலும் சேஷ பூத வஸ்து கத வியாபாராதிகளும்
சேஷ்யதீனம் என்னும் இடம் தோற்றுகைக்காகவும்-
சேஷபூத புருஷனுடைய புருஷார்த்தமும் சேஷி பிரிய விஷயத்வம் என்று தோற்றுகைக்காகவும்
ஏவம் பூத ஞான அபாவத்தால் ஸ்வ விஷய ஆரோபிதமான ஸ்வா தந்தர்ய தாவாநலத்தாலே தாஹ்யமானமான வஸ்துவை
தத் பிரதிபடமான சேஷத்வ ஜாலத்தால் ஆற்ற வேண்டுகையாலும் சேஷத்வத்தை பிரதமத்தில் சொல்லி
அநந்தரம் தத் ஸித்தமான வஸ்துவைச் சொல்லக் குறை இல்லை –

ஆக
பிரணவத்தாலே
சர்வ காரண பூதனாய் –
சர்வ ரக்ஷகனாய்
ஸ்ரீ யபதியாய்
சர்வ சேஷியாய்
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் -அகார வாச்யனான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு
அநந்யார்ஹ சேஷமானது
தேஹ இந்திரியாதி விலக்ஷணமாய்
ஞானானந்த ஸ்வரூபமாய்
அஹம் சப்த வாஸ்யமாய்
ஞான குணகமாய்
ஸ்வயம் பிரகாசகமாய்
அணு பரிமானமாய்
நித்தியமாய்
ஏக ரூபமாய்
அநேக விதமான ஆத்ம வஸ்துவும்
அவனுக்கு உபகரண பூதமான அசித் வஸ்துவும் என்றதாயிற்று –

இந்த பிரணவ அர்த்தத்தை
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவருக்கு உரியனோ -என்று திருமங்கை ஆழ்வாரும் அனுசந்தித்து அருளினார்
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு என்று அகார அர்த்தத்தையும்
ஒருவர்க்கு உரியேனோ என்று உகார அர்த்தத்தையும்
அடியேன் என்று மகார அர்த்தத்தையும் –
இப்பிரணவம் தான் சேஷ சேஷி ரூபேண ஆத்ம பரமாத்மாக்கள் இருவருடையவும் ஸ்வரூபத்தை பிரதிபாதிக்கையாலே
ஆத்ம ஸ்வரூபத்தையும் பகவத் ஸ்வரூபத்தையும் இரண்டையும் சொல்லுகிறது எங்கனே என்னில்

அகாரத்திலே ஏறிக் கழிந்த சதுர்த்தீ விபக்தியாலே ஆத்மாவினுடைய சேஷத்வத்தைச் சொல்லி
உகாரத்தாலே தத் அந்யார்ஹதா நிவ்ருத்தியைச் சொல்லி
மகாரத்தாலே சேஷமான வஸ்து தேஹ இந்திரிய மந பிராண புத்தி விலக்ஷணமாய் -ஞானானந்த ஸ்வரூபமாய்
ஞான குணகமாய் நித்தியமாய் அணு பரிமாணமாய் ஏக ஸ்வரூபமாய் இருக்கும் என்று சொல்லி
ஆக இப்படி ஆத்ம ஸ்வரூபத்தை யாதாவாக பிரதிபாதிக்கையாலே ஆத்ம ஸ்வரூபம் சொல்லுகிறது

ச விபக்திகமான அகாரத்தாலே பரமாத்மாவினுடைய -சர்வ காரணத்வ -சர்வ ரக்ஷகத்வ -ஸ்ரீ யபதித்தவ –
சர்வ சேஷித்வங்களைச் சொல்லி
உகாரத்தாலே சேஷித்வத்தினுடைய அநன்யார்ஹா நிவ்ருத்தியைச் சொல்லி
மகாரத்தாலே தத் ஸித்தமான விஷயத்தைச் சொல்லி
ஆக இப்படி பரமாத்ம ஸ்வரூபத்தை யாதாவாகப் பிரதிபாதிக்கையாலே பரமாத்ம ஸ்வரூபம் சொல்லுகிறது

அகாரத்தாலே ரக்ஷகனைச் சொல்லி
மகாரத்தாலே ரஷ்ய வஸ்துவைச் சொல்லி
உகாரத்தாலும் சதுர்த்தியாலும் ரஷ்ய ரக்ஷகனுடைய அநந்யார்ஹதா ரூபமான லக்ஷணம் சொல்லுகையாலே
இப்பிரணவத்தாலே உபாயத்தை ப்ரதிபாதிக்கிறது

அகாரத்தாலே ப்ராப்ய ஸ்வரூபத்தைச் சொல்லி –
மகாரத்தாலே ப்ராப்தாவான ஆத்ம ஸ்வரூபம் சொல்லி
சேஷத்வமானது சேஷ விருத்தி ஒழிய சித்தியாமையாலே தத் வாசகமான சதுர்த்தியாலே கைங்கர்யத்தைச் சொல்லி
அவதாரணத்தாலே தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே-என்கிற கைங்கர்யத்தைச் சொல்லுகையாலே
ப்ரணவத்தாலே ப்ராப்ய ஸ்வரூபத்தை பிரதிபாதிக்கிறது –

அகாரத்தாலே சேஷியான ப்ரஹ்ம ஸ்வரூபத்தைச் சொல்லி
மகாரத்தாலே சேஷமான ஆத்ம ஸ்வரூபத்தைச் சொல்லி
அகாரத்திலே தாதுவாலே உபாய ஸ்வரூபம் சொல்லி
அதில் சதுர்த்தியாலே புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லி
அதிலே அந்நிய சேஷத்வ சங்கா ரூபேண விரோதி ஸ்வரூபம் சொல்லுகையாலே
பிரணவத்தாலே அர்த்த பஞ்சகமும் சொல்லுகிறது –

ஆக –பிரணவத்தாலே
பகவத் ஸ்வரூபம் என்ன
சித் ஸ்வரூபம் என்ன
தத் சம்பந்த ஸ்வரூப விசேஷம் என்ன
உபாய ஸ்வரூபம் என்ன
ப்ராப்ய ஸ்வரூபம் என்ன –இத்யாதிகளான சகல அர்த்தங்களும் சொல்லப்படுகிறது –
ஆகையால் சகல சாஸ்த்ரா ஸங்க்ரஹம் என்னும் இடம் ஸம்ப்ரதி பன்னமாகச் சொல்லிற்று ஆயிற்று

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரகால நல்லான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பரகால நல்லான் ரஹஸ்யம் -ஸ்ரீ திரு மந்த்ரார்த்த விவரணம்-அகாரார்த்தம் / ஸ்ரீ ராமானுஜ சித்தாந்த ஏற்றம் —

August 13, 2019

அஸ்மத் குரும் நமஸ் க்ருத்ய வஷ்யே ஸும்யவரேஸ்வரம்
ரஹஸ்ய த்ரய சாரார்த்தம் யதா மதி யதா ஸ்ருதம் –

ஸ்ரீ திரு மந்த்ரார்த்த விவரணம்

ஸ்வத்வம் ஆத்மநி சஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்
ஞான ஆனந்த மயஸ்த்வ ஆத்மா சேஷோஹி பரமாத்மாநி
தாஸ பூதாஸ் ஸ்வதஸ் சர்வே
தாஸோஹம் வாஸூதேவஸ்ய
யஸ்யாஸ்மி
பரவாநஸ்மி
குல தொல் அடியேன்
தொல் அடிமை வழி வரும் தொண்டர்
அடியேன் நான் –இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஸ்வதஸ் சித்தமாக ஸ்ரீ பகவத் அநந்யார்ஹ சேஷ பூதராய்
நித்ய நிர்மல ஞான அனந்த ஸ்வரூபராய் நிரதிசய ஆனந்த அனுபவ யோக்யராய் இருக்கிற ஆத்மாக்கள்

அநாதி மாயயா ஸூப்த-
மூதாவியில் தடுமாறும் உயிர் -இத்யாதிப்படியே
அநாதி அசித் ஸம்பந்தத்தாலே அபிபூதராய்-அத்தாலே-திரோஹித ஸ்வ ப்ரகாசராய் –
ஸ்வ ஸ்வரூபம் என்ன -தத் பிரதி சம்பந்தியான பர ஸ்வரூபம் என்ன – தத் அனுரூபமான பல ஸ்வரூபம் என்ன –
உபாய அனுரூபமான உபாய ஸ்வரூபம் என்ன -இவற்றில் ஒரு ஞானமும் இன்றிக்கே–
இந்த ஞான அனுகுணமான சாத்விகதாஸ்திக்யாதிகளான ஆத்ம குணங்களாலும் விஹீநராய்
ஸ்வதஸ் ஸித்த ஸ்வத்வ பாரதந்த்ரங்களை அழிய மாறி
ஸ்ரீ சர்வேஸ்வரனுடையதான ஸ்வாமித்வ ஸ்வா தந்தர்யங்களை ஆரோபித்திக் கொண்டு
அஹம் புத்தி விஷயமாய்-ஞான ஆனந்த மயமான ஸ்வரூபத்துக்கு அத்யந்த தூரஸ்தமாய் -இதம் புத்தி விஷயமாய் –
மாம்ஸாஸ்ருகாதி மயமான தேகத்தை தானாக நினைத்து -அந்த தேகம் அடியாக உத்பன்னரான புத்ர மித்ராதி விஷயாசக்தமநாக்களாய்-
தத் தத் கிலேச விஷயமான நிரர்த்தக சிந்தனத்தாலே பரிதப்த ஹ்ருதராய் ஸ்வ ஹித விசார விமுகராய்
அப்ரதிக்ரியமான ஆதி வ்யாதிகளாலும் இஷ்ட அநிஷ்ட வியோக சம்யோகங்களாலும்-ஸ்வ இஷ்ட விகாசதங்களாலும் நிர்விண்ண ஹ்ருதராய் –
அல்பமாய் அஸ்திரமாய் அநேக துக்க மிஸ்ரமாய் அநர்த்தோதர்க்கமாய்-அப்ராப்தமாய்-அபவர்க்க விரோதியாய் இருக்கிற
சம்சார ஸூகத்திலே சங்கத்தைப் பண்ணி அதினுடைய அலாபத்தாலும்-அநாதி வாசனா தார்ட்டயாத்தாலே விடுகைக்கு அசக்தராய் –
இப்படி அனந்த துக்க பாஜனமாய் அநாதி பாப வாசனா மஹார்ணவ கார்யமான சம்சார ஆர்ணவத்திலே மக்நராய் –
அநாதி அவித்யா சஞ்ஜிதமாய்-அவிட்க்க அரிதான கர்ம பாசத்தாலே ப்ரக்ரிகதரராய் அனாகத அனந்த காலம் கூடினாலும்
அத்ருஷ்ட சந்தாரோபராய் அதோபூதராய்க் கொண்டு பிரமியா நிற்பர்கள் –

அனந்தரம் –
யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
சர்வ காரண அகாரேண
நான்முகனை மூழ்த்த நீர் உலகு எல்லாம் படை என்று முதல் படைத்தாய்
முதல் தனி வித்தேயோ
வேர் முதல் வித்தாய்
உலகம் படைத்தவன்
உலகுக்கோர் தனி அப்பன் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே சர்வ காரண பூதனாய்

யேந ஜாதாநி ஜீவந்தி
யோவை வேதாம்ஸ் ச ப்ரஹினோதி தஸ்மை
நஹி பாலந சாமர்த்தியம்ருதே ஸர்வேச்வரம் ஹரிம்
ந சம்பதாம் சமா ஹாரே விபதாம் விநிவர்த்தநே-சமர்த்தோத் ருஸ்ய தேகஸ் சிததம் விநா புருஷோத்தமம்
மூவுலகை ஒருங்காக அளிப்பாய்
வென்றி மூவுலகை அளித்து உழல்வான்
எங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன் –இத்யாதிகளில் சொல்லுகிறபடியே சர்வ ரக்ஷகனாய்

பதிம் விஸ்வஸ்யாத்மேஸ்வரம்
பிரதான ஷேத்ரஞ்ஞ பதிர் குணேச
அசேஷ சித் அசித் வஸ்து சேஷிணே
அகில ஜகத் ஸ்வாமின் அஸ்மத் ஸ்வாமின் ஸ்ரீ மன் நாராயண
தாஸோஹம் கமலா நாத
திருவுடை யடிகள்
மலர்மகள் விரும்பும் நம் யரும் பெறல் அடிகள் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஸ்ரீ யபதியாய் -சர்வ சேஷியாய்

தம்ஹிதேவ மாத்ம புத்தி பிரசாதம் முமுஷுர்வை சரணம் அஹம் பிரபத்யே
ந்யாஸ இதி ப்ரஹ்ம
ந்யாஸ இதயாஹுர் மநிஷினோ ப்ரஹ்மாணம்
சரண்யம் சரணம் யாதா
சர்வலோக சரண்யாய
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்
சரணமாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம்
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே அகில ஜகத் உபாய பூதனாய்

யஸ்மின் விஸ்வா புவனாநிதஸ்து
யஸ்யா யுதரயுதாம்சாம்ஸே விஸ்வ சக்திர் இயம் ஸ்திதா
அகில ஆதார பரமாத்மா
நிகில ஜெகதாதார
மயி சர்வம் இதம் ப்ரோக்தம் –இத்யாதிப்படியே அகில ஜகத்துக்கும் ஆதாரபூதனாய்

தத் சர்வம் வியாப்ய நாராயணஸ் ஸ்தித
ஆத்மாஹி விஷ்ணுஸ் சகலஸ்ய ஐந்தோ
தேநேதம் பூர்ணம் புருஷேண சர்வம்
சர்வம் நாராயணாத்மகம்
ஓர் உயிரேயோ உலகங்கட்க்கு எல்லாம்
எல்லாப் பொருள்களுக்கும் அருவாகிய–இத்யாதிகளில் படியே அகில ஜகத் அந்தராத்மாவாய்

மாதா பிதா பிராதா நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண
தாயாய் தந்தையாய்
சேலேய் கண்ணியரும்–இத்யாதிகளில் சொல்லுகிறபடியே சர்வவித பந்துவுமாய் இருக்கிற சர்வேஸ்வரன்

சோபநஸம் ஸீ ஸூஹ்ருத் -என்கிற ஸூஹ்ருதம் தோன்ற -ஸ்ரேயோத் யாயதி கேசவ -என்கிறபடியே
இவர்களுக்கு நன்மையே தேடி இருப்பான் ஒருவன் ஆகையால்
அவர்ஜனீயமுமாய் -நிருபாதிகமுமாய் -ஸ்வ கதமாய் –அநேகவிதமான இந்த சம்பந்தமே ஹேதுவாக
நரமேத ப்ருசம் பவதி துக்கித–என்கிறபடியே திரு உள்ளம் நோவுபட்டு

ஜீவேது காகுலே விஷ்ணோ க்ருபா காப்யுப ஜாயதே
கேவலம் ஸ்வேச்சயை வாஹம் ப்ரேஷே கஞ்சித் கதாசன
என்னை ஆளும் பிரானார் வெறிதே அருள் செய்வர்
என் ஆவியை நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன்
எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
மயர்வற மதி நலம் அருளினன்–இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
ஆஸ்ரய ஸத்பாவம் தான் இந்த க்ருபா விக்ஷயத்வாநந்தரம்-என்னும்படி பர துக்க அஸஹிஷ்ணுத்வ லக்ஷணையான
கிருபையை இப்படி சம்சரிக்கிற ஆத்மாக்கள் விஷயத்தில் அவ்யாஜமாகப் பண்ணா நிற்கும்

அனந்தரம் இந்த நிர்ஹேதுக கிருபையால் சாம்சாரிக சகல துரித துக்கங்களிலும் ஜுகுப்ஸை பிறந்து வேதாவஷ்டம்ப மாத்ரம் அன்றியிலே
ஆகம பிராமண ஏக சமதிகம்யமான சைவாதி தரிசனங்கள் என்ன -இவற்றில் உபேக்ஷகனாய் நித்ய நிர்தோஷ நிகம ப்ராமாண்ய புத்தி பிறந்து
அந்த ப்ராமாண்யத்தினுடைய தாத்பர்ய ஞானம் இன்றியிலே ஆபாத ப்ரதீதி தர்சனம் பண்ணி இருக்கிற அல்பஜ்ஞ சேதனரையும்
அங்கீ கரிக்க வேண்டும்படியான வாத்சல்யாதிசயத்தாலே அவர்களுடைய குண ருசிகளுக்கு அனுகுணமாக அதில் விதிக்கக் கடவதான
ஸ்யேந விதி தொடக்கமாக ஸ்வர்க்க அனுபவம் நடுவாக ஆத்ம அனுபவம் முடிவாக உண்டான புருஷார்த்தங்களில்
அல்பத்வ துக்க மிஸ்ரத்வ அபாய பஹுளத்வ அசிர கால வர்த்தித்தவ அப்ராப்தத்வ சங்குசிதத்தவாதிகளை அறிந்து அத்தாலே
ஏதேவை நிரயா-என்னும்படி அவற்றிலே குத்சை பிறக்கையாலே தத் தத் சாதனங்களிலும் விமுகனாய்
ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூப புருஷார்த்த ஸ்வரூபங்களினுடைய யாதவத் ஸ்ரவணத்திலே உத் ஸூகனாய்-
தத் அர்த்தமாக ஏவம்பூத ஞான வைஸ்யத்தை யுடையனாய் இந்த ஞான விஷயமான ஸ்ரீ பகவத் விஷயத்திலே பக்தனாய் -விமத்சரனாய்-
இந்த ஞான ஆச்ரயமான ஸ்ரீ திருமந்த்ரத்திலே ஞான பக்திகளை யுடையனாய்
ஏதத் ஞான உபதேஷ்டாவான ஆச்சார்ய விசேஷத்திலே அதிஸ்நிக்தனாய்-ஆஸ்ரித உஜ்ஜீவன ஏக உத்ஸூகனாய் –
அவற்றிலே ஸ்வ கர்த்ருத்வாதி பிரதிபத்தி ரஹிதனாய் இருப்பான் ஒரு சதாச்சார்யனை ஆஸ்ரயித்த அதிகாரிக்கு அவஸ்ய ஞாதவ்யமாய்-
ஸ்வரூப புருஷார்த்த சாதனங்களுக்கு ப்ரதிமந்த்ரம் பிரகாசகமாய்-ப்ராமாண்ய பேதத்தாலே அர்த்த தார்ட்டய ஹேது பூதமான
ஸ்ரீ ரஹஸ்ய த்ரயமும் ஞாதவ்யமாகக் கடவது

அந்த ப்ராமாண்ய பேதங்கள் எவை என்னில் –
சகல சாஸ்த்ர ஸங்க்ரஹமாகையும்
ஸ்வரூப யாதாத்ம்ய ப்ரதிபாதமாகையும்
ஸ்ருதி ஸித்தமாகையும்
ஸிஷ்டாச்சாரமாகையும்
புருஷகார பிரதானமாகையும்
சரண்ய அபிமதையாகையும்
உப ப்ரும்ஹண ஸித்தமாகையும்
உபாய யாதாத்ம்ய பிரதிபாதகமாகையும்–ஆகிற இவைகள்
இப்படி ப்ராமாண்ய பேதம் உண்டாகையாலே மூன்றுமே அனுசந்தேயங்கள் –

அதுக்கு மேலே அகார வாச்யனுடைய சேஷித்வ ஸித்த ஹேதுவான அந்யார்ஹதா நிவ்ருத்தியைப் பண்ணா நின்று கொண்டு
உகாரம் மகார விவரணம் ஆகிறாப் போலேயும்
இதில் விபக்தியில் சொல்லுகிற சேஷத்வத்துக்கு விஷய விசேஷ ப்ரகாசகமாய்க் கொண்டு மகாரம் சதுர்த்தீ விவரணம் ஆகிறாப் போலேயும்
உகார உக்த்யா அந்யாந்யதம ஸ்வத்வ நிவ்ருத்தி முகேன நமஸ் சப்தம் உகார விவரணம் ஆகிறாப் போலேயும்
சேஷத்வ உபபத்தி ஹேதுவான கிஞ்சித்காரத்தை பிரகாசிப்பிக்கையாலே ச விபத்திக நாராயண பதம்
சேஷபூத வஸ்து வாசகமான மகாரத்துக்கு விவரணம் ஆகிறாப் போலேயும்

நமஸ் சப்தத்தில் ஆர்த்தமாகவும் சாப்தமாகவும் சொல்லுகிற உபாய விசேஷ ஸ்வரூபத்தையும்
அதினுடைய நித்ய யோகத்தையும்
அதுவும் மிகையாம்படியான ஆஸ்ரயணீய வஸ்துவினுடைய குண யோகத்தையும்
ஸூபாஸ்ரய விக்ரஹ வத்தையையும்
உபாய விசேஷ சேதன அத்யாவசாயத்தையும் -சொல்லுகிற ஸ்ரீ த்வயத்தில்
பூர்வ வாக்கியம் நமஸ் சப்த விவரணமாயும்
கைங்கர்ய பிரார்த்தனா வாசகமான நாராயணா என்கிற பதத்துக்கு கைங்கர்ய பிரதிசம்பந்தி பூர்த்தி ஹேதுவான ஸ்ரீமத்தையும்
தத் ஸ்வரூப பிராப்தி ஹேதுவான ஸ்வாமித்வத்தையும்
தத் விரோதி நிவ்ருத்தியையும் சொல்லுகிற ஸ்ரீ த்வயத்தில் உத்தர வாக்ய விவரணமாயும்
உபாய ஸ்வீகாரத்தைச் சொல்லுகிற ஸ்ரீ த்வயத்தில் பூர்வ வாக்யத்துக்கு தத் அங்கமான சாதனாந்தர தியாகத்தையும்
ஸ்வீகாராநபேஷத்வத்தையும் விதிக்கிற ஸ்ரீ சரம ஸ்லோகத்தில் பூர்வார்த்தம் விவரணமாயும்
ப்ராப்ய பிரார்த்தனை பண்ணுகிற உத்தர வாக்யத்துக்கு தத் சித்தி ஹேதுவான விரோதி நிவ்ருத்தியைப் பிரதிபாதிக்கிற
உத்தாரர்த்தம் விவரணமாயும்

ஆக இப்படி அன்யோன்ய ஸங்க்ரஹ விவரணமாய்ப் போருகையாலும் ஸ்ரீ ரஹஸ்யத்ரயமும் அனுசந்தேயமாகக் கடவது

அவற்றில் வைத்துக் கொண்டு த்யாஜ்ய உபாதேய நிர்ணாயக ஹேது ஸ்வரூபம் ஆகையாலே
அந்த ஸ்வரூப ஞானம் பிரதமபாவியாக வேணும் இறே-
தத் ப்ரதிபாதிகமாகையாலும் ஸ்வரூப அனுரூப நிஷேத விதிகளை உகார நமஸ்ஸூக்களாலே சொல்லுகையாலும்
பிரதம ரஹஸ்யமான ஸ்ரீ திருமந்திரம் பிரதம அனுசந்தேயமாகக் கடவது —
இப்படி பிரதம அனுசந்தேயமான ஸ்ரீ திருமந்திரம் -ஐஹிக லௌகிக ஐஸ்வர்யம் -இத்யாதிப்படியே சகல புருஷார்த்த ஏக ஸாதனமாய்
ஸ்ரீ விஷ்ணு காயத்ரியில் நாராயணாய என்று பிரதமோ பாத்தமாய் -ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய சகல கல்யாண குணங்களுக்கும்
பிரதிபாதகமாய் இருக்கையாலே அல்லாத ஸ்ரீ பகவத் மந்திரங்களில் அதிகமாய் இருக்கும் –
அதுக்கு மேலே வ்யாப்ய பதார்த்தம் -வியாபக ஸ்வரூபம் -வ்யாபந பிரகாரம் -வ்யாபகனுடைய குணம் -வ்யாப்தி பலம்
இவற்றை பூர்ணமாக ப்ரதிபாதிக்கையாலே வ்யாபகரந்தரங்களிலும் அதிகமாய் இருக்கும்

இவ்வாதிக்யம் இல்லையே யாகிலும் ஆழ்வார்களாலும் ஆச்சார்யர்களாலும் வேதாந்தங்களாலும்
வைதிக புருஷர்களாலும் ஆதரிக்கப்படுகையாலும்
கர்ம ஞான பக்திகளுக்கும் சஹகரித்துப் போருகையாலும்-சகல சப்த காரணம் ஆகையாலும்-சகலார்த்த காரண பூத வஸ்து
ப்ரதிபாதிகம் ஆகையாலும் ஆதரிக்க வேண்டும்படியான ஆதிக்யம் உண்டு
கர்மாத்யுபாயங்களுக்கு ஜெப ஹோம தர்ப்பணாதிகளாலே சஹகரித்துப் போகா நிற்கச் செய்தேயும்
இம்மந்திரம் பகவத் ஏக உபாயர்க்கு அவ்வுபாயம் இதினுடைய சப்த ஆவ்ருத்தியை சஹியாமையாலும்
வேதங்களும் வேத தாத்பர்ய சாஷாத்காரம் பண்ணி இருக்கிற ஆழ்வார்களும் இம்மந்திர அனுசந்தான காலத்திலே
சர்வம் வியாப்ய நாராயணஸ் ஸ்தித-
எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன்
நாரணன் எம்மான் பார் அணங்கு ஆளன்-
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -இத்யாதிகளாலே அர்த்த அனுசந்தான தத் பரராய் அனுசந்தித்துப்
போருவதொரு நிர்பந்தம் உண்டாகையாலும்
தத் உபாய நிஷ்டரான நம் ஆச்சார்யர்களும் அர்த்த அனுசந்தான தத் பரராய் அர்த்தத்துக்கு நிராஸ்ரயமாக
நிலை இல்லாமையாலே சப்தத்தையும் ஆதரித்துக் கொண்டு போருவர்கள்-
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன் -என்று இவ்வர்த்த ஞாந ஜனனமே ஜனனம் என்னும் இடத்தையும்
இவ் வநுஸந்தானமே கால க்ஷேபம் என்னும் இடத்தையும் ஸ்ரீ திருமழிசைப் பிரானும் அருளிச் செய்தார் –
இவ்வர்த்தத்தை -திரு மந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வய ஏக சரணனாவாய் -என்று ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்தார்
விலக்ஷனரான நம் ஆச்சார்யர்கள் எல்லாருக்கும் இவ்வர்த்த அனுசந்தானமே யாத்ரையாகப் போருகையாலே
அவர்கள் பிரசாதத்தாலே லப்த ஞானரான நமக்கும் அதில் அர்த்த அனுசந்தானமே யாத்ரையாகக் கடவது –

இப்படி சர்வ உத்க்ருஷ்டமான இம்மந்திரம் தான்
ஓம் இத்யேக அக்ஷரம் -நம இதி த்வே அக்ஷரே-நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி -இத்யஷ்டாக்ஷரம் சந்தஸா காயத்ரீ சேதி-
ஓமித் அக்ரே வ்யாஹரேத்-நம இதி பஸ்ஸாத் -நாராயணாயேத் யுபரிஷ்டாத் –
ப்ரணவாத்யம் நமோ மத்யம் நாராயண பதாந்திதம்-இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
பிரணவ ஸஹிதமாகவே அஷ்டாக்ஷரமாய் -பிரணவம் முதலாக -நமஸ்ஸூ நடுவாக–நாராயண பதம் நடுவாக –
உச்சரிக்கக் கடவன் என்கிற பத க்ரம நியதியையும் உடைத்தாய் இருக்கும் –

ஸ்ருதியிலே யஸ்யாஸ்மி
கோஹ்யேவாந்யாத் க பராண்யாத
ஏஷஹ் யேவா நந்தயாதி –என்று ஓதுகிற-அநந்யார்ஹ சேஷத்வ -அநந்ய சரண்யத்வ-அநந்ய போக்யத்வங்களை
அவ்வேத தாத்பர்யமான இம்மந்த்ரத்தில் பதங்கள் மூன்றும் அடைவே ப்ரதிபாதிக்கையாலே இது ஸூகர அனுசந்தேயமாய் இருக்கும் –
இம்மந்திரம் ஆத்ம பரமாத்மாக்களுடைய சேஷ சேஷி பாவ சம்பந்தத்தை ப்ரதானயேன பிரகாசிப்பிக்கிறது –
இதுக்கு விஷய அபேக்ஷையும் பிரதிசம்பந்த அபேக்ஷையும் உண்டாகையாலும் –
அந்த சேஷத்வ சித்தி தான் ஸ்வ விரோதியான ஸ்வா தந்தர்யம் நிவ்ருத்தமானாலாகையாலும்
அகிஞ்சதகரஸ்ய சேஷத்வ அனுபபத்தி-என்னும்படி கிஞித்காரம் இல்லாத போது சேஷத்வம் அனுப பன்னம் ஆகையாலும்
அந்த சம்பந்தத்துக்கு சேஷதயா அவ்வர்த்தங்களும் இதிலே பிரதிபாதிதமாகிறன
அதில் பிரணவத்தாலே சேஷத்வம் சொல்லி –
நமஸ் சப்தத்தாலே தத் விரோதியான ஸ்வா தந்திரத்தினுடைய நிவ்ருத்தி சொல்லி
நாராயண பதத்தாலே அந்த சேஷத்வத்தை சரீராத்மா பாவ சம்பந்த முகேன த்ருடீகரிக்கிறது –

இதில் பிரதம பதம் அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வகமான அநந்யார்ஹ சேஷத்வத்தைச் சொல்லுகிறது
மத்யமபதம் ஸ்வ ரக்ஷகத்வ நிவ்ருத்தி பூர்வகமான பகவத் ஏக உபாயத்தைச் சொல்லுகிறது –
அனந்தர பதம் உபேய ஆபாச நிவ்ருத்தி பூர்வகமான பகவத் ஏக உபேயத்வத்தை ப்ரதிபாதிக்கிறது
ஆகையால் ஸ்வரூப யாதாத்ம்ய பரமாய் இருக்கும்
ஆக பத த்ரயத்தாலும் ஸ்வரூப உபாய உபேய யாதாத்ம்யங்களைச் சொல்லுகிறது –
இவ்வாகாரத் த்ரயமும் இவனுக்கு ஸ்வரூபம் ஆகையாலே இத்தாலும் ஸ்வரூபம் சொல்லுகிறது என்னக் குறையில்லை –
இது தான் இதுக்கு முன்பு பிராப்தம் இன்றியிலே ப்ராப்தவ்யம் ஆகையாலே ப்ராப்யம் சொல்லுகிறது என்றும் அருளிச் செய்வர்கள்-
ஆகையால் இதுக்கு வாக்யார்த்தமான ஸ்வரூப ப்ரதிபாதன பரத்வமும் ப்ராப்ய ப்ரதிபாதன பரத்வமும் சொல்லிற்று ஆயிற்று

இது தனக்கு தாத்பர்யம் சர்வேஸ்வரனுடைய சர்வ சேஷித்வ -சர்வ ரக்ஷகத்வ -பரம போக்யத்வங்களை -ப்ரதிபாதிக்கை –
ப்ரணவத்தாலே சொல்லுகிற பகவச் சேஷித்வத்தையும் -தத் விஷயமான ஸ்வ சேஷத்வத்தையும் அனுசந்திக்க
தேவதாந்தர பரத்வ புத்தியும் அந்ய சேஷத்வ புத்தியும் நிவ்ருத்தையாகும் –
நமஸ்ஸாலே சொல்லுகிற பாரதந்தர்யத்தையும் பகவத் உபாயத்வத்தையும் அனுசந்திக்க
ஸ்வ ஸ்வா தந்தர்ய புத்தியும் ஸாத்ய சாதன சம்பந்தமும் நிவ்ருத்தமாம் –
நாராயண பதத்தாலே சொல்லுகிற பகவத் போக்ய அதிசயத்தையும்-கைங்கர்ய பிரார்த்தனையையும் அனுசந்திக்கவே
அப்ராப்த விஷய கிஞ்சித்கார புத்தியும்-ப்ராப்யாந்தர சம்பந்தமும் நிவ்ருத்தமாம் –

ஆக இம்மந்திரத்துக்கு
பிரதான அர்த்தமும்
வாக்யார்த்தமும்
தாத்பர்ய அர்த்தமும்
அனுசந்தான அர்த்தமும்
அனுசந்தான பிரயோஜனமும் -சொல்லிற்று ஆயிற்று

அங்கன் அன்றிக்கே
இதுக்கு பிரதான அர்த்தம் ஆத்ம ஸ்வரூபம் சொல்லுகை என்றும் –
தாத்பர்ய அர்த்தம் -சகல சாஸ்த்ர சாரமாய் இருக்கை என்றும்
வாக்யார்த்தம் ப்ராப்ய ஸ்வரூப நிரூபணம் என்றும்
அனுசந்தான அர்த்தம் சம்பந்தம் என்றும் சொல்லுவார்கள்

இதுதான் சர்வேஸ்வரனுடைய
சர்வ காரணத்வம்
சர்வ ரக்ஷகத்வம்
ஸ்ரீ யபதித்வம்
சர்வ சேஷித்வம்
அவற்றினுடைய அநந்யார்ஹதை
ஏதத் பிரதிசம்பந்த உபாயத்வம்
சர்வ ஆதாரத்வம்
சர்வ அந்தர்யாமித்வம்
சர்வ சரீரத்வம்
சர்வவித பந்துத்வம்
கைங்கர்ய பிரதிசம்பந்த்வம் –தொடக்கமான அர்த்த விசேஷங்களை ப்ரதிபாதிக்கையாலே
ஸ்ரீ பகவத் ஸ்வரூபம் சொல்லுகிறது என்னவுமாம் –

சேதனனுடைய பிரகாரத்வம்
ரஷ்யத்வம்
சேஷத்வம்
இவற்றினுடைய அநந்யார்ஹதை
சேஷ பூத வஸ்துவினுடைய ஞாந ஆனந்த்வம்
ஞாந குணகத்வம்
ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி
தத் ஸித்தமான பாரதந்தர்யம்
தத்பல ததீய சேஷத்வம்
ஆதேயத்வம்
வ்யாப்யத்வம்
சரீரத்வம்
கைங்கர்ய ஆஸ்ரயத்வம்–தொடக்கமான அர்த்த விசேஷங்களையும் பிரதிபாதிக்கையாலே
ஆத்ம ஸ்வரூபம் சொல்லுகிறது என்னவுமாம் –

இதில் பிரதம பதமான பிரணவம்
அகார உகார மகார இதி தாநேகதா சமபரத்தேததோமிதி -என்று மூன்று அக்ஷரமாய்
ஓமித்யேக அக்ஷரம் -மூலமாகிய ஒற்றை எழுத்தை -என்றும் ஏக அக்ஷரமாய் –
சேஷி சேஷ தத் அநந்யார்ஹத்வங்கள் ஆகிற அர்த்தங்களை அஷர த்ரயமும் வாசகம் ஆகையாலே மூன்று பதமாய் –
ஏவம்பூதமான சம்பந்தத்தைச் சொல்லித் தலைக் கட்டுகையாலே ஒரு வாக்யமாய் இருக்கும்

நாம ரூபஞ்ச பூதாநாம் க்ருதபா நாஞ்ச ப்ரபஞ்சனம் -வேத சப்தேப்ய ஏவாதவ் தேவாதீநாஞ்சகார சா-என்று
லௌகிக சப்தங்களுக்கு வேதம் காரணமாய் இருக்கும்
ரிசோ யஜும்ஷி சாமாநிததைவ அதர்வணா நிச-சர்வம் அஷ்டாக்ஷர அந்தஸ்ஸ்தம் –என்று
வேதம் தனக்கும் திருமந்திரம் காரணமாய் இருக்கும் –
இதில் மேலில் பத த்வயத்துக்கும் இப்பிரணவம் ஸங்க்ரஹம் ஆகையாலே இம் மந்திரத்துக்கு பிரணவம் காரணமாய் இருக்கும் –
ப்ரணவஸ்ய ச பிரக்ருதிர் அகார – தஸ்ய பிரகிருதி லீநஸ்ய பரஸ் ச மஹேஸ்வர -என்று
பிரணவம் தனக்கு அகாரம் காரணமாய் இருக்கும்
இப்படி ஸர்வஸப்தா காரணமான அகாரம் –
ஸமஸ்த சப்த மூலத்வாத் ப்ரஹ்மணோ அபி ஸ்வ பாவத-வாஸ்ய வாசக சம்பந்தஸ்தயோர் அர்த்தாத் பிரதீயதே -என்கிற நியாயத்தாலே
சகலார்த்த காரண பூத வஸ்துக்கு வாசகம் ஆகையாலும்
யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே -யேந ஜாதாநி ஜீவந்தி -என்றும்
மூவாத் தனி முதலாய் மூ வுலகுக்கும் காவலோன் -என்றும்
காரணத்வ ரக்ஷகத்வங்கள் இரண்டும் ஏக ஆஸ்ரயமாகச் சொல்லுகையாலும்
அகாரோ விஷ்ணு வாசக -என்று சர்வ வியாபகனாய் சர்வ ரக்ஷகனான ஸ்ரீ எம்பெருமானுடைய
ஸமஸ்த சித்த அசித் காரணத்வத்தைச் சொல்லுகிறது

இக்காரணம் தான் ஸ்வரூப காரணதவம் என்றும் ஸ்வபாவ காரணத்வம்-என்றும் த்விதம்-
அதில் ஸ்வரூப காரணத்வமாவது -சித் அசித்துக்களுடைய ஸ்வரூப ஸத்பாவம் ஸ்ரீ பகவத் ஸ்வரூப அதீனமாய் இருக்கை -அதாவது –
யஸ்யாஸ்மி
பகவத ஏவாஹமஸ்மி
நததஸ்தி விநாய தஸ்யாந்மயா பூதமசராசரம
யஸ்ய சேதனஸ்ய யத்த்ரவ்யம் யாவத்ஸத்தம் சேக்ஷத்வாபாத நார்ஹம் தத் சேஷதைக ஸ்வரூபம்
தன்னுள் கலவாதது எப்பொருளும் தான் இல்லை -இத்யாதிகளில் சித் அசித்துக்களுடைய ஸ்வரூபம்
வ்யாபகமான ஸ்ரீ பகவத் ஸ்வரூபத்துக்கு விசேஷணதயா சேஷமாய்க் கொண்டு உண்டாய் –
அல்லாத போது இல்லையாய் இருக்கும் என்று சொல்லுகையாலே
இந்த ஸ்வரூப ஸத்பாவ ஹேதுவான விசேஷண ரூப சேஷத்வத்துக்கு
பிரதிசம்பந்தி தயா சேஷியான ஸ்ரீ பகவத் ஸ்வரூபம்
முன்னை அமரர் முழு முதலானே
அமரர் முழு முதல்
யாதும் யாவர்க்கும் முன்னோன் -இத்யாதிகளில் சொல்லுகிறபடி காரணமாய் இருக்கை –

ஆனால் பிரக்ருதிம் புருஷஞ்சைவ வித்யநாதீ உபாவபி -என்று சொல்லுகிற இவற்றினுடைய அநாதித்வத்துக்கு
பங்கம் வாராதோ வென்னில்
விசேஷணத்வேந ஸ்திதமான வஸ்துக்களுக்கு விசேஷ்ய ஹேது உத்பத்தியாக வேண்டுகையாலே
விசேஷ்ய ஹேதுக வ்யவஹாரம் பண்ணுகிறது அத்தனை ஒழிய ஒரு காலத்தில் உண்டு -காலாந்தரத்தில் இல்லை என்று
ஸத்பாவ அசத் பாவங்களை சொல்லுதல் -ஏவம் பூத உதயத்துக்கு ஒரு கால விசேஷ கல்பனை செய்யாமையாலே
அநாதித்வ பங்கம் வாராது –
ஆனால் விசிஷ்டமாய்க் கொண்டே நித்தியமாய் இருக்குமாகில் இக்காரணத்வம் அநு பன்னமாமே என்னில்-
அந்நிய நிரபேஷமாக ஸித்தமான ஸ்ரீ பகவத் ஸ்வரூபத்தை நின்றும் சா பேஷமாய்க் கொண்டே சித் அசித்துக்களினுடைய
உதயமாகையாலே உப பன்னம்-
பிரதான பும்சோரஜயோ காரணம் கார்ய பூதயோ -என்று சித் அசித்துக்களினுடைய கார்யத்வ நித்யத்வங்களை
ஸ்ரீ பராசர பகவானாலும் சொல்லப்பட்டது –

அநந்தரம்-ஸ்வபாவ காரணத்வமாவது
சித் அசித்துக்களை ஸ்வ இச்சாதீனமாகத் தன்னுடைய லீலா போக விசேஷங்களுக்கு விஷயமாக நினைத்த வன்று
தத் உபகாரணமான தேச தேஹ பிரதானம் பண்ணுகைக்கும் தத் அனுரூப சாஸ்த்ர ப்ரதானாதிகளுக்கும் ஹேது பூதனாகை-
இவை கர்ம ஹேதுகம் என்னா நிற்க சர்வேஸ்வரன் ஹேது என்கிறபடி என் என்னில்
ஏஷ ஏவ சாது கர்ம காரயதி -என்று கர்மத்துக்கு உத்பத்தியே பிடித்து சர்வேஸ்வரன் ப்ரேரகனாக வேண்டுகையாலும்
அசேதன கிரியை யாகையாலே தான் இதுக்கு உத்பாதகம் ஆக மாட்டாமையாலும்
ஒரு கிரியை தானே கால கர்த்ரு பேதங்களாலே புண்ய பாபங்கள் இரண்டுக்கும் ஹேதுவாய் இருக்கையாலும்-
இவற்றுக்கு சர்வேஸ்வர இச்சை ஹேதுவாம் அத்தனை ஒழிய கர்மம் ஹேது அன்று –

சர்வேஸ்வர இச்சை தான் கர்ம ஹேதுகம் ஆனாலோ என்னில் அவனுக்கு கர்ம பாரதந்த்ரிய வ்யவஸ்தித்வம் இல்லை –
ஸ்வ இச்சாதீன கர்ம ஹேதுக வ்யவஸ்தித்வமும் ஸ்வ இஷ்டமான ஞான ப்ரதானாதிகளோடே விரோதிக்கையாலும் –
போகரச வைவித்யம் இல்லாமையாலும்
சக்ருத்த அஞ்சலி ததைவம் உஷ்ணாத்ய-ஸூப அந்நிய சேஷ தஸ்ஸூபாநீ பூஷணாதி -என்றும்
ஷாம்யஸ் பஹோதத் அபிசந்திவிராம மாத்ராத் -என்றும்
தீயினில் தூசாகும் -என்றும்
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் -என்றும் சொல்லுகிறபடியே
ஓர் அஞ்சலி மாத்திரத்தாலே சகல பாபங்களையும் போக்கும் என்கையாலே
ஆஸ்ரித விஷயத்தில் கர்ம பாரதந்தர்ய வ்யவஸ்திதி குலைகையாலும்
ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுக்கையாலும்
சர்வஞ்ஞனான சர்வேஸ்வரனுக்குக் கூடாது
இனி இங்கு உள்ளது ஸ்வ இஷ்ட கார்ய உபயோகியான கர்ம சம்பந்தத்தையும் தத் காரியங்களையும்
ஸ்வ இச்சையால் நிர்வகித்துப் போருகிறான் அத்தனை -ஆகையால் ஸ்வ இச்சையே ஹேதுவாகக் கடவது –

இவ்வர்த்தத்தை
நீ தந்த ஆக்கை
நீ வைத்த மாய வல் ஐம்புலன்கள்
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன்
தூபமும் இன்பமுமாகிய செய்வினையாய்
கருமமும் கரும பலனுமாகிய காரணன்
துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய்
உற்ற இரு வினையாய் -இத்யாதிகளிலே ஸ்ரீ நம் ஆழ்வார் அருளிச் செய்தார் –

வைதிக புத்ர வ்ருத்தாந்தத்திலும்
அயோத்யா வாசிகளுடைய மோக்ஷ லாபத்திலும்
சிசுபால மோஷாதிகளிலும் இவ்வர்த்தம் காணலாம் –

ஆக இவ்வஷர ஸ்வ பாவத்தாலே-சர்வேஸ்வரனுடைய சர்வ காரணத்வமும் சர்வ பிரகார காரணத்வமும் சொல்லிற்று ஆயிற்று –

அநந்தரம் இவ்வாகாரம் -அவ ரக்ஷனே-என்கிற தாதுவிலே ஸித்தமாய்-
வகார லோபம் பண்ணி -அ-என்ற பதமாய் ரக்ஷண தர்மத்தைக் காட்டி –
நஹி பலான சாமர்த்யம்ருதே ஸர்வேஸ்வரம் ஹரிம்
விஷ்ணுஸ் த்ரைலோக்ய பாலக
பாலநே விஷ்ணு ருச்யதே
நல்கித்தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும்-என்று சொல்லுகிறபடியே இத்தர்மத்துக்கு ஆஸ்ரய பூதனுமாய்
அ இதி ப்ரஹ்ம
அகாரோவை விஷ்ணு
அகாரோ விஷ்ணு வாசக
அக்ஷராணாம் அகாரோஸ்மி
அ இதி பகவதோ நாராயணஸ்ய பிரதம அபிதானம் -என்று இவ்வஷரத்துக்கு
முக்கிய ரூபேண வாச்யனுமாய் இருக்கிற ஸ்ரீ எம்பெருமானைச் சொல்லுகிறது

இவ்வாகாரம் தான் -அகாரோவை சர்வா வாக் -என்று எல்லா அக்ஷரங்களுக்கும் உயிராய்க் கொண்டு –
அவ்வஷர ஸ்வரூபங்களை ஸ்திதிப்பித்துக் கொண்டு நிற்கும் என்கையாலே அவ்வோ சப்தங்களுக்கு வாஸ்யமான
சகல பதார்த்தங்களினுடையவும் சத்தையை நோக்கிக் கொண்டு அந்த ஸ்திதனான எம்பெருமானுக்கு வாசகமாகக் கடவது இறே
ஆக இத்தால் அகார வாச்யனான சர்வேஸ்வரன் ரக்ஷகன் என்றதாயிற்று —
இந்த ரக்ஷண தர்மத்துக்கு விஷய அபேக்ஷை யுண்டாகையாலும் விஷய விசேஷ நியமம் பண்ணாமையாலும்
பக்த முக்த நித்யாத்மகமான உபய விபூதியும் ரஷ்யமாகக் கடவது -இத்தால் சர்வ ரக்ஷகன் என்கிறது –

இந்த பக்த வர்க்கம் தான் முமுஷுக்கள் என்றும் அஞ்ஞர் என்றும் உபய கோடியாய் இருக்கும் –
இதில் அஞ்ஞ கோடியை ஸ்வ லீலைக்கும் ஸ்வ அதீனமான பூர்வ பாக ஸாஸ்த்ரத்துக்கும்-
அவர்களுடைய கர்மத்துக்கும் அனுகுணமாக ரஷிக்கும் –
அதாவது புண்ய பாப ரூபமான கர்மங்களை அவர்கள் பண்ணப் புக்கால் அனுமதி தானத்தைப் பண்ணியும் –
அவை அவர்களுடைய பூர்வ பூர்வ கர்ம கார்யம் என்று நினைக்கும்படி உதாசீனனாய் இருந்து அவை தத் தத் காலங்களில்
ஸ்வ ஸ்வ அனுபவங்களை பண்ணும்படி செய்வித்தும்
அவர்கள் விமுகரான வன்று அந்தர்யாமியாய் நின்று சத்தையை நோக்கியும் –
அவர்களுக்கு விரோதியான சத்ருபீடை வியாதி பீடை இத்யாதிகளை நிவ்ருத்தமாக்கி
அபேக்ஷிதமான அன்ன பானாதிகளைக் கொடுத்தும் ரஷிக்கை –

முமுஷுக்களை ஸ்வரூப அனுரூபமாக ரக்ஷிக்கும்-அதாவது
ஸ்வரூப விரோதியான அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யாதி நிவ்ருத்தியைப் பண்ணி
ஸ்வரூப அனுரூபமான ஸ்வ ஸ்வகீய சேஷத்வத்தைப் பிறப்பித்தும்
ஸ்வரூப அனுரூப புருஷார்த்தத்தில் ருசியைப் பிறப்பித்து தத் அனுரூபமான சாதன விசேஷத்தை பரிக்ரஹிப்பித்தும்
அந்த சாதனத்தில் அத்யவசாயத்தை பிராப்தி பர்யந்தம் ஆக்கியும்
விபவ அர்ச்சாவதார ரூபேண நின்று அவர்களுக்கு தாரகனாயும்
அநாதியான சம்சார சம்பந்தத்தை அறுத்து -அனந்தமான ஸ்வ அனுபவத்தை அவிரோதமாகப் பண்ணிக் கொடுத்தும்
ஸ்வ போகத்துக்கும் ஸ்வ ப்ரவ்ருத்தமான உத்தர பாக ஸாஸ்த்ரத்துக்கும் அனுகுணமாக ரஷிக்கை –

நித்யரையும் முக்தரையும் போக அனுகுணமாக ரக்ஷிக்கும் -அதாவது
ஆனந்த மய-என்கிறபடியே தான் நிரதிசய ஆனந்த உக்தனாய் இருக்கையாலே
ந சாஸ்திரம் நைவ ச க்ரம-என்கிறபடியே க்ரம விவஷை பண்ண அறியாதே அல்ப ஆனந்தத்தில் மக்நராய் சத்தை அழிந்து
ஸ்வ அனுபவத்துக்கு ஆளாகாத அளவிலே -மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு-என்கிறபடியே ஸ்வ அனுபவத்தை சாத்மிப்பித்து –
ஸ்வ அனுபவத்துக்கு ஆளாக்கி -ஸ்வ அனுபவத்தைப் பண்ணிக் கொடுத்தும்
தத் ஜெனித ப்ரீதி காரிதமான கைங்கர்யத்தைக் கொண்டும் -அந்தக் கைங்கர்யத்துக்கு ஆளாக்கி
இவர்களுடைய சைதன்ய நிபந்தமான ஸ்வாரஸ்ய நிவ்ருத்தியைப் பண்ணி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்கிறபடியே கைங்கர்ய பிரதிசம்பந்தி பூத பகவன் முக விலாச விஷயத்வமே பிரயோஜனம் என்றும் –
தத் விஷய ஞானமே சைதன்ய கார்யம் என்றும் பிரதிபத்தி யுண்டாம்படி பண்ணியும் ரஷிக்கை

ஆக -சகல சப்த காரணமான ஆகாரத்தில் தத் தத் சப்த வாஸ்யங்களாய் ரஷ்ய பூதங்களான த்ரிவித சேதன அசேதனங்களையும் –
ரக்ஷகனான ஸ்ரீ சர்வேஸ்வரனையும்
ரக்ஷண பிரகார விசேஷங்களையும்
ரக்ஷணத்தினுடைய நிர்ஹேதுகத்வமும்
இத்தனையும் ரக்ஷகனான தன்னுடைய பிரயோஜன விசேஷங்கள் என்னும் இடமும் சொல்லிற்று ஆயிற்று –
ஸ்வாதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதம் -என்று இவ்வர்த்தத்தை ஸ்ரீ பாஷ்யகாரரும் அருளிச் செய்தார்
இச்சாத ஏவ தவ விஸ்வபதார்த்த சத்தா–என்கிற ஸ்லோகத்தாலே இவ்வர்த்தத்தை ஸ்ரீ ஆழ்வானும் அருளிச் செய்தார் –

ஆனால் இந்த ரக்ஷகனுடைய விதா பேதத்தாலும் -லீலா விபூதியில் உள்ளாருடைய துக்க அனுபவத்தாலும்
நித்ய விபூதியில் உள்ளாருடைய ஸூக அனுபவத்தாலும் இவற்றுக்கு ஹேது பூதனான ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய
சமோஹம் சர்வ பூதேஷூ ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய-
ஈடும் எடுப்புமில் ஈசன்
எள்கல் இராகம் இலாதான்-என்கிற சர்வ ஸமத்வத்துக்கும்
நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத்
ஸூஹ்ருத் சர்வ பூதாநாம் -என்கிற சர்வ பூத ஸூஹ்ருத்வத்துக்கும்
சதா காருணிகோபிசன் -என்கிற பர துக்க அஸஹிஷ்ணுதாருபையான கிருபைக்கும் ஹானி வாராதோ என்னில்

இது ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூப புருஷார்த்த ஸ்வரூபங்களினுடைய யாதாத்ம்ய ஞானம் இல்லாதார்
சொல்லும் வார்த்தை -எங்கனே என்னில் –
ஆனந்தோ ப்ரஹ்ம
ஆனந்தம் ப்ரஹ்மண
முழு நலம்
எல்லையில் அந் நலம்
நலமுடையவன்
அபார சச்சித் ஸூக சாகரே–என்கிறபடியே ஸ்வரூப ஸ்வ பாவங்கள் இரண்டாலும் அபரிச்சேத்யமான
ஆனந்தத்தை யுடையனாய் இருக்கையாலும்
அசேஷ சித் அசித் வஸ்து சேஷி பூத
அசேஷ சித் அசித் வஸ்து சேஷிணே -என்று சர்வ சேஷி யாகையாலும்
யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் சர்வாத்மநா ஸ்வார்த்ததே நியந்தும் தாரயிதுஞ்ச சக்யம் தத் சேஷதைக ஸ்வரூபம் – என்றும்
எதேஷ்ட விநியோக அர்ஹம் சேஷ சப்தேந கத்யதே -என்றும் சொல்லுகிறபடியே ஸ்வார்த்த-நியாம்யத்வ தார்யத்வாதிகளாலே
இஷ்ட விநியோக அர்ஹமான சேஷ வஸ்துக்களைத் தனக்கு அதிசய சித்த்யர்த்தமாகத் தன் இச்சையாலே
தனக்கு இஷ்டமான பிரகாரத்திலே விநியோகம் கொள்ளுகையும் -அப்படியே விநியோகப்படுகையும்
அம்மா அடியேன் என்கிற உபய ஸ்வரூபத்துக்கும் பிராப்தமாய் அது தானே புருஷார்த்தமுமாய் இருக்கையாலே
ஏவம் பூத விநியோக விஷயத்வ ஞானம் இறே சைதன்ய கார்யம் –

ஆனால் லீலா விபூதியில் உள்ளாருக்கு இதில் துக்கம் நடப்பான் என் என்னில் –
ஏவம் பூத ஸ்வரூப யாதாம்ய ஞானம் இல்லாமையாலே-
ஆனால் ஞானம் பிறந்த அதிகாரிகள்
மங்க வொட்டு
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ
அடைய வருளாய் -இத்யாதிகளாலே சம்சார நிவ்ருத்தி பூர்வகமாக மோக்ஷத்தை ஆசைப்படுவான் என் என்னில்

சேஷ பூதரான சேதனர்க்கு சேஷத்வ பராகாஷ்ட தர்சனம் பண்ணினவாறே இந்த லீலா விசேஷம் ப்ராப்தமாய் இருந்ததே யாகிலும்
ஸ்திதி யுத்பத்தி ப்ரவ்ருத்தி க்ரசன நியமன வ்யாபனைர் ஆத்மநஸ்தே சேஷோ சேஷ பிரபஞ்சோ வபு–என்கிறபடியே
ரக்ஷகத்வ -காரணத்வ -ப்ரவர்த்தகத்வ-சம்ஹர்த்ருத்வ -நியந்த்ருத்வ -வ்யாபகத்வாதி சகல பிரகாரங்களாலும்
இந்த ஸ்தித்யாதி விஷயமான சகல பிரபஞ்சத்துக்கு சேஷியான சர்வேஸ்வரன் –
இப்படி சர்வ பிரகார சேஷம் யாகையாலே -ஸ்வாயத்த ஸ்வரூப ரூபமாய்
ஸ்வ ஆதார க்ரியாக ரூபமாய் -ஸ்வ போக்ய பூதருமான சேதனரை –
சப்தாதீந் விஷயாந பிரதர்சய விபவம் விஸ்மார்யதாஸ் யாத்மகம் வைஷ்ணவ வ்யாகுண மாயயாத்ம நிவஹாந் விப்லாவ்ய பூர்வ புமான்-
பும்ஸாபண்யவதூ விடம் பிவ புஷா தூர்த்தா நிவா யாசயந் ஸ்ரீ ரெங்கேஸ்வரி கல்பதே தவ பரீஹாசாத்மநே கேளயே-
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய் –
உன்னடிப்போது நான் அணுகா வகை செய்து போதி கண்டாய்-இத்யாதிகளில் சொல்லுகிறபடியே

அவர்களுக்கு ஸ்வதஸ் ஸித்தமான தாஸ்ய ஐஸ்வர்யத்தை விஸ்மரிப்பித்து அத்தை த்ருடீகரிப்பிக்கும் சப்தாதி விஷயங்களிலே
சங்கத்தைப் பண்ணுவித்து ஸ்வ விசேஷண தயா ஸ்வ அதீனையான மாயையாலே கலங்கும்படி பண்ணி –
பண்யவதூ விடமபி வபுஸ்ஸான புருஷனாலே தூர்த்தரை ஆயாசிப்பித்து ரசிக்கும் செருக்கரைப் போலே-
சர்வ காரண பூதனான சர்வேஸ்வரன் தனக்கு அபிமதையான ஸ்ரீ ரெங்கேஸ்வரிக்குப் பரிஹாச ஹேதுவான லீலைக்கு விஷயமாக்கி
க்ரீடதே பகவான் பூதைர் பால க்ரீடநகைரிவ-என்றும்
இன்புறும் இவ்விளையாட்டு உடையான் -என்றும்
நளிர் மா மலருந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -என்றும் சொல்லுகிறபடியே
இவனை இசைவித்து -இவன் அனுமதிப்படியே மோக்ஷ பிரதானம் பண்ணி
ஸ்வ போகத்துக்கு விஷயமாக நினைத்த அன்று அந்த மோக்ஷ ரூப போகத்திலே ருசி பிறக்கும் போதைக்கு தத் பிரதிபடமான சம்சாரத்திலே –
நரகத்தை நகு -என்கிற அருசி பூர்வகமாக வேண்டுகையாலும் –
அந்த அருசி தனக்கு தத் விஷயமான ஹேயத்வ துக்க ரூபத்வாதி பிரதிபத்தி அபேக்ஷிதம் ஆகையாலும்-
ஸ்வ போகார்த்தமாக அதில் ஹேயத்வாதிகளைப் பிரகாசிப்பித்து-அது அடியாக அருசியை விளைப்பித்து-
அது அடியாக உபேஷாதிகளை யுண்டாக்குகிறான் ஆகையால் தந் நிவ்ருத்தி பூர்வகமாக போக ரூபமான மோக்ஷத்தை
மங்க வொட்டு
கூவிக் கொள்ளாய்
இனி உண்டு ஒழியாய்–என்று பிரார்த்திக்கிறார்கள் அத்தனை அல்லது
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பு –தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே-என்று இருக்கிறவர்கள்
பகவத் விநியோக விசேஷ விஷயத்தினுடைய ஸ்வரூப அப்ராப்ததையாலே தந் நிவ்ருத்தியை அபேக்ஷித்தார்கள் அன்று –

ஆகையால் சமோஹம் சர்வ பூதேஷூ -என்கிற இடத்தில் வியாபகத்வ தாரகத்வ ஆஸ்ரயணீயத்வ ரக்ஷகத்வ சேஷித்வங்களில்
சாம்யத்தைச் சொல்லுகிறது அத்தனை அல்லது சர்வ விநியோக சாம்யம் சொல்லுகிறது அன்று –
விநியோக சாம்யம் சொல்லுமாகில் விநியோக பேத நிபந்தமான ரஸ வைவித்யம் இல்லாமையாலே
சர்வ பிரகார ஆனந்த விசிஷ்டமான சேஷி ஸ்வரூபத்துக்கும் சேராது –
இஷ்ட விநியோக அர்ஹதையே வேஷமான சேஷ பூத ஸ்வரூபத்துக்கும் சேராது
நித்ய விபூதியில் குண அனுபவம் விக்ரஹ அனுபவம் கைங்கர்ய பரதை என்கிற விசேஷங்களுக்கும் சேராது
ஆகையால் உபய ஸ்வரூபத்துக்கும் அனுகுணமான வைஷம்யம் தோஷம் அன்று
ப்ராப்தமான சாம்யத்துக்கு ஹானி சொல்லாமையாலே சமத்துவ ஹானி இல்லை
ஏவம் ஸ்வரூப ஞானம் இன்றியிலே சம்சாரத்திலே துக்க பிரதிபத்தி பண்ணி இருக்குமவர்களுக்கு இந்தப் பிரதிபத்தி தான்
ஞான விரோதியான சம்சாரத்தில் அருசி பிறந்து தந் நிவ்ருத்ய அபேக்ஷை பிறக்கைக்கு உறுப்பு ஆகையாலே –
அந்த பிரதிபத்தி நிவ்ருத்தி பண்ணாது ஒழிந்ததும் ஸூஹ்ருத்வ கார்யமான ஹித பரதையாலே யாகையாலே
ஸூஹ்ருத்வத்துக்கு ஹானி இல்லை

சம்சாரத்தில் வாசமும் -அஞ்ஞாவஸ்தை குலைந்து ஞானம் பிறந்த போது ததீயத்வ ஆகாரேணவே தோற்றுகையாலே
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்று அது தானே புருஷார்த்தமாய் இருக்கையாலும் -தத் அனுகுணமான ஞான விசேஷத்தை –
ததாமி புத்தி யோகம் தம் -என்றும்
மத்தஸ் ஸ்ம்ருதிர் ஞானம் அபோஹஞ்ச-என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்றும்
மருவித் தொழும் மனமே தந்தாய் -என்றும் சொல்லுகிறபடியே
நிர்ஹேதுகமாகத் தானே பிறப்பிக்கையாலும் கிருபா ஹானி வாராது
ஆகையால் சேஷபூத சகல வஸ்துக்களுடையவும் சர்வ வியாபாரங்களும் ஸ்ரீ பகவத் ப்ரேரிதங்களுமாய்-
ஸ்ரீ பகவத் ப்ரயோஜன ஹேதுக்களாயுமாய் இருக்கும் என்றதாயிற்று

ஆனால் விதி நிஷேத ரூபமான சாஸ்திரத்துக்கு பிரயோஜனம் என் என்னில் -சாஸ்திரமாவது
ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமைவ ஆஜ்ஜா-என்கிறபடியே ஸ்வதஸ் சித்த ஸ்வாமித்வ சேஷித்வ ரக்ஷகத்வாதி விசிஷ்டனான
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய ஆஜ்ஜா ரூபமாய்க் கொண்டு -அவனுக்கு அதிசய ரூப சகல வியாபாராதிகளுக்கும் உண்டான
ருசி பிரவ்ருதத் யாதிகளுக்கு ப்ரதர்சகமாய் இருப்பது ஓன்று ஆகையாலே –
த்ரை குண்ய விஷயா வேதா -என்கிறபடியே அவனுக்கு லீலா விஷய பூதருமாய்க் கொண்டு ஸ்வம்மாய் இருக்கிற
சகல சேதனரையும் விஷயமாக உடைத்தாய் இருக்கும் –

ஆகையாலே இப்படி இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய பஹு விதையான லீலைக்கு உபயோகிகளாய்க் கொண்டு
லீலா விஷய பூத சேதன கதங்களான கர்ம விசேஷங்களும் பஹு விதங்களாய் இருக்கையாலே அவற்றில்
சில கர்ம விசேஷங்களாலே பர ஹிம்ஸா பரராய் நாஸ்திகராய் இருப்பாரைக் குறித்து –
சட சித்த சாஸ்த்ர வஸதோபாயோபிசார ஸ்ருதி -என்கிறபடியே அவர்களுக்கு சாஸ்த்ர விஸ்வாசம் பிறக்கைக்கு உறுப்பாக
அவர்களுடைய ருஸ்யனுசாரம் பண்ணி அபிசார கிரியை விதித்தும்
சாஸ்த்ர யுக்த தத் அனுஷ்டான அநந்தரம் தத் பல லாபத்தாலே சாஸ்த்ர விஸ்வாசம் பிறந்து –
அத்தாலே நாஸ்திக்ய ஹேதுவான பாப ஷயமாய் -அந்த கிரியையில் பரஹிம்சாதி நிபந்தமான பயம் பிறந்த அநந்தரம்
பார லௌகிக தத் சாதனங்களை விதித்தும் -அநந்தரம்

அத்தை நிரூபித்து ஸூஹ்ருதத்துக்கு ஹேது ஸூஹ்ருதாந்தரமாக வேணும்-அதுக்கு ஹேதுவாய் இருபத்தொரு ஸூஹ்ருதம் வேணும் –
அப்போது அநவஸ்தை வரும் ஆகையாலும் ஸ்வாதீன பிரவ்ருத்தி இல்லாதவனுக்கு ஸூஹ்ருத யோக்யதை இல்லையாகிலும்
ஸூஹ்ருத ஹேதுவுக்கு சொல்ல ஒண்ணாது என்று சமசயித்தவனுக்கு ஸூஹ்ருத ஹேது பகவத் கிருபை என்னும் இடத்தை பிரகாசிப்பித்தும் –
கிருபா கார்யமான ஸூஹ்ருதத்தாலே-நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸூக பாவ ஏக லக்ஷணமான மோக்ஷத்திலே ருசி பிறந்தவனுக்கு
மோக்ஷ தத் சாதனங்களை விதித்தும்
அந்த சாதனங்களினுடைய துஷ்கரத்வ சாபாயத்வ ஸ்வரூப அநனு ரூபமான உபாயத்தை விதித்தும்
உபாய பூதனான வவனுடைய ஸ்வ தோஷ தர்சனத்வ அகார்யகரத்வ உத்துங்கத்வ துர்லபத்வாதிகளாலே இளைத்தவனுக்கு
அவனுடைய வாத்சல்ய ஸ்வாமித்வ ஸுசீல்ய ஸுலப்யங்களை பிரகாசிப்பித்தும்
இப்படி ஆஸ்ரயணீனவனுடைய கார்யகரத்வ ஹேதுவான ஸர்வஞ்ஞத்வ சர்வ சக்தித்வ அவாப்த ஸமஸ்த காமத்வாதிகளை விதித்தும்
அவற்றினுடைய அபராத ஞான தத் தண்ட தரத்வாதி அனுசந்தானத்தாலே வெருவினவனுக்கு
அவற்றை ரக்ஷண உபயுக்தம் ஆக்குகிற பரம காருணிகத்வத்தை பிரகாசிப்பித்தும்

பகவத் ஆத்மனோ ஸ்வ ஸ்வாமி பாவ சம்பந்த ஞான நிபந்தன பகவத் உபாய வரணத்வ ப்ராப்ய பாவாத் வாத்ததிஷ்ட
விநியோகத்வேநே தத் அந்தர்பூதரானவர்களுக்கு தத் தத் ஞான ஹேதுக கிருபா விதானம் பண்ணியும்
ஆக இவ்வளவும் வரும் தனையும் அவர்களுக்குப் பிறந்த பர்வ க்ரம அனுசந்தானம் பண்ணி கார்யக்ரத்வ ஹேதுவான
ஸ்ரீ பகவத் கிருபையை விதித்துத் தலைக்கட்டுவது ஓன்று ஆகையாலே சாஸ்திரத்துக்கு பிரயோஜனம்

இவற்றில் பந்தகங்களான பலன்களில் நின்றவர்கள் விஷயத்தில் சர்வேஸ்வரனுக்கு லீலா ரசம் நடந்து போருகையாலும்
அல்லாத இடங்களிலே அனுக்ரஹ ரசமும் கிருபா ரசமும் நடந்து போருகையாலும்
பகவத் லீலா ஹேதுத்வமும் பகவத் கிருபா விசுவாச ஹேது த்வமுமாய் இருக்கும்
இவ்வாகார த்வயத்திலும் இருவருக்கும் பிரயோஜனம் உண்டாகையாலே சாஸ்திரத்தாலே
இருடைய பிரயோஜனமும் சொல்லிற்று ஆயிற்று

ஆக இவ்வக்ஷரத்தில் சொல்லுகிற ரக்ஷகத்தினுடைய நிர்ஹேதுகத்வம் ப்ரதிபாதமாயிற்று –

இப்படி சர்வ காரண பூதமாய் -சர்வ ரக்ஷகமாய் -அகார வாஸ்யமான ஸ்ரீ பகவத் ஸ்வரூபத்தை
ஸ்ரீ லஷ்மீ ஸ்வரூபம் ஆஸ்ரயித்துக் கொண்டு நிரூபகமாய் இருக்கையாலும்
இதில் சொல்லுகிற ரக்ஷகத்வத்துக்கு புருஷகார த்வாரா இவள் சந்நிதி அபேக்ஷிதமாகையாலும்
இவ்வக்ஷரத்தில் ஏறின விபக்தியில் சொல்லுகிற சேஷத்வத்துக்கு பிரதி சம்பந்தி மிதுனமாக வேண்டுகையாலும்
இவ்வக்ஷரத்திலே ஸ்ரீ லஷ்மீ சம்பந்தமும் அர்த்தமாகச் சொல்லுகிறது

ஸ்ரயத இதி ஸ்ரீ
அநந்யார்ஹவேணாகம்
விஷ்ணோஸ் ஸ்ரீ
தாம் ஸ்ரீ ரிதித்வதுப ஸம்ஸரயணாந் நிராஹு -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
பிரபாவானை ஆஸ்ரயித்து இருக்கும் பிரபையைப் போலே பிரிவில் ஸ்திதி இல்லாதபடி
ஸ்ரீ பகவத் ஸ்வரூபத்தை ஆஸ்ரயித்துக் கொண்டு தன்னுடைய ஸ்தியாய் இறே இருப்பது –

ஸ்வரூப நிரூபகத்வமாவது -சாதாரண தர்மங்களைக் கொண்டு வஸ்து ஏது என்று சங்கை யுண்டானால் –
இன்ன வஸ்து என்று விசேஷித்துக் கொடுக்குமது –
அதாவது -ஜகத் காரணத்வ -ஜகத் ரக்ஷகத்வ -ஜகத் பதித்வாதிகளாலே வஸ்துவை நிரூபிக்கும் போதைக்கு
அவை ஒவ்பாதிக உத்பாதகருமாய்-ஒவ்பாதிக ரக்ஷகருமாய் –
ஒவ்பாதிக சேஷிகளுமான ப்ரஹ்மாதி சேதனர் பக்கல் கவ்ண ரூபேண வர்த்திக்கையாலே அவை சாதாரணம் ஆகையாலும்
சேஷித்வமும் ஸ்வ நியோகத்தாலே ஸ்வ அங்கீ க்ருத சேதன ப்ரப்ருதி ஸ்ரீ லஷ்மீ பர்யந்தனார் பக்கலிலே
அநு வ்ருத்தம் ஆகையாலும் -அதுவும் சாதாரணம் ஆகையாலும் –
விபுத்வமும் பிரக்ருதியாதிகளிலே ஒவ்பசாரிகமாக விபுத்வ வ்யவஹாரம் நடக்கையாலே சாதாரணம் ஆகையாலும்
இவை நிரூபகம் ஆக மாட்டாது

இனி ஓர் ஆகாரத்தாலும் வ்யக்த்யந்தர சம்பந்தம் இன்றியிலே அகாரார்த்த பூதனுக்கே அசாதாரணமாய் இருப்பது
ஸ்ரீயபதித்தவம் ஆகையாலே தத் பிரதிசம்பந்தியான ஸ்ரீ லஷ்மீ ஸ்வரூபம்
ஸ்ரீ பகவத் ஸ்வரூபத்துக்கு நிரூபகமாய் இருக்கக் கடவது என்கை –
ஹேய ப்ரத்ய நீகத்வம் அசாதாரணம் அன்றோ என்னில் -ஸ்ரீ யபதிர் நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாந -என்று
நிகில ஹேய ப்ரத்ய நீகமான ஸ்வரூபத்துக்கு ஸ்ரீ யபதித்வத்தை பிரதான நிரூபகமாக ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்கையாலும்
திருமாலின் சீர் -என்று ஸ்ரீ யபதியினுடைய குணங்கள் என்று விசேஷிக்கையாலும்
ஸ்ரீ லஷ்மீ ஸ்வரூபம் நிரூபகமாய் ஹேய ப்ரத்ய நீகத்வாதிகள் தத் விசேஷணமாகக் கடவது
ஆத்மா ச சர்வ பூதாநாம் அஹம் பூதோ ஹரிஸ் ஸ்ம்ருத-அஹந்தா ப்ரஹ்மணஸ் தஸ்ய சாஹமஸ்மிசநாதநீ
அஹந்தயாவி நாஹம் ஹி நிருபாக்யோ ந சித்யதி -அஹம் அர்த்தம் விநா ஹந்தா நிராதாரா ந சித்த்யதி -என்கிறபடியே
சர்வ பூதங்களுக்கும் அந்தராத்மதயா வ்யாப்தமாய் அஹமர்த்த பூதமான ஸ்ரீ பகவத் ஸ்வரூபத்திலே
அஹந்தா ரூபேண வ்யபேதஸ்யையுமாய் அஹந்தா ரூபேண நிரூபக பூதையுமாய் இருக்கும் என்கையாலும்
ஸ்ரீ லஷ்மீ ஸ்வரூபம் நிரூபகமாய் இருக்கக் கடவது –

அதுக்கு மேலே — ஸ்ரயத இதி ஸ்ரீ -என்று ஸ்ரீ பகவத் ஸ்வரூபத்தை ஆஸ்ரயித்துத் தன் சத்தையாம்படி நித்யனுமாய்-
நிகில ஜெகஜ் ஜனகனுமாய் -இவளோடு நிரபாய பூதனுமாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன்
சகல ஜெகத் ரக்ஷணார்த்தமாக ஸ்வ அபீஷ்ட விக்ரஹங்களிலே வ்யாப்தனான போது
நித்யத்வ நிகில ஜெகஜ் ஜநநீத்வாதி விசிஷ்டையாய் இருக்கிற இவளும் தந் நிரபாயத்வ ரக்ஷண அர்த்தமாகத் தத் அனுரூப விக்ரஹங்களிலே
உபயோர் வியாப்தி ராகாசாதித்ய யோரிவ-என்றும்
தத் அனுரூப ஸ்வரூப -என்றும்
குணாத்வா லோகவத் -என்றும் சொல்லுகிறபடியே குண த்வாரா அனுபிரவேசித்து
சந்நிஹிதையாய் இருக்கும் என்கையாலே ஸ்ரீ பகவத் ஸ்வரூபம் உள்ள இடம் எங்கும் வியாபிக்கக் கடவளுமாய்
நித்ய ஸ்ரீ என்று ஸ்ரீ பகவத் ஸ்வரூபத்தினுடைய இதர வ்யாவ்ருத்தி ஹேது பூதையுமாய்
விஷ்ணு பத்னீ -என்றும் விஷ்ணோஸ் ஸ்ரீ என்றும் ஸ்ரீ பகவத் விசேஷண பூதையுமாய் இருக்கும்
ஆகையால் வ்யக்தி லக்ஷண விசிஷ்டமான ஸ்ரீ பகவத் ஸ்வரூபத்துக்கு ஜாதி லக்ஷண விசிஷ்டமான
ஸ்ரீ லஷ்மீ ஸ்வரூபம் நிரூபகம் என்னும் இடம் ஸம்ப்ரதிபன்னம்-

இப்படி ஸ்வரூப நிரூபக பூதையாம் அளவன்றியிலே
ததஸ்ஸ்ப் புரத காந்திமதீ விகாஸி கமலேஸ்திதா -ஸ்ரீர் தேவி பயஸ்ஸ் தஸ்மா துததிதாத்ருத பங்கஜா
திவ்ய மாலயாமபரதர ஸ்நாதா பூஷண பூஷிதா -பஸ்யதாம் சர்வ தேவானாம் யவ் வக்ஷஸ்தலம் ஹரே —
காஸான்யாத் வாம்ருதே தேவி சர்வ யஜ்ஜமயம் வபு-அத்யாஸ்தே தேவ தேவஸ்ய யோகி சிந்த்யம் கதாப்ருத –
ஸ்ரீ வத்ஸ வஷா
அலர்மேல் மங்கை வுறை மார்பா –இத்யாதிகளில் படியே
ஸ்வா பாவிகமாயும் ஓவ் பாதிகமாகவும் ஸ்ரீ பகவத் சாரூப்யம் பெற்று இருக்கிற நித்ய முக்த விக்ரஹங்களில்
வ்யாவ்ருத்தி தோன்றும்படி திவ்ய மங்கள விக்ரஹ நிரூபக பூதையாகையாலும்
அகலகில்லேன் இறையும்-என்று ஸ்ரீ பகவத் போக்யதையில் ஆழங்கால் பட்டு க்ஷண காலமும் விஸ்லேஷ அசஹையாய்க் கொண்டு
போக்யத்வ குணத்தை அவகாஹித்து அனுபவிக்கும் என்று சொல்லுகையாலும்
போகோ போத்காத கேளீ சுளகித பகவத் வைஸ்வரூப்ய அனுபாவ-என்று
வைஸ்வரூப்யத்தைச் சிறாங்கிற்று அனுபவிக்கும் என்கையாலும்

ப்ரசக நபல ஜ்யோதிர் ஞான ஐஸ்வரீ விஜய ப்ரதா-ப்ரணத பரண ப்ரேமஷே மங்கரத்வ புரஸ்சரா
அபி பரிமள காந்திர் லாவண்யம் அர்ச்சிர் இந்திரே தவ பகவதஸ் சைதே சாதாராணா குணராசய
அந்யேபி யவ்வன முகாயுவயோஸ் சமாநாஸ் ஸ்ரீ ரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயநதி
தஸ்மிம்ஸ் தவத்வயிசதஸ்ய பரஸ்பரேண ஸம்ஸ்தீர்ய தர்ப்பண இவ ப்ரசுரமஸ்வ தந்தே -இத்யாதிகளாலே
ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ் ஸூக்களும் -ஆஸ்ரித அங்கீ கார தத் ப்ரீதியாதிகளும் முதலான ஸ்வரூப குணங்களும்
ஸுந்தர்ய ஸுகந்த்ய லாவண்யாதி யவ்வன முகங்களான விக்ரஹ குணங்களும்
ஸ்ரீ லஷ்மீ தத் பதிகள் இருவருக்கும் ஸ்வாதீனமாகவும் பராதீனமாகவும் யுண்டாய் இருந்ததே யாகிலும்
ஸ்ரீ ரங்க மங்கள வைஜயந்தியாய் இருக்கிற ஸ்ரீ லஷ்மீ பக்கலிலே ஸ்ரீ லஷ்மீ பதியினுடைய குணங்களும்
ஸ்ரீ லஷ்மீ பதியானவன் பக்கலிலே ஸ்ரீ லஷ்மீ குணங்களும் கண்ணாடிப் புறத்தில் போலே அந்யோன்யம் பிரதிபலியா நின்று கொண்டு
பரம்பி மிகவும் இனியவாகா நிற்கும் என்று ஸ்ரீ பகவத் குணங்களுக்கு இவளோடு உண்டான அன்வயத்தையும்
அத்தாலே உண்டான அதிசயத்தையும் சொல்லுகையாலும்
ஸ்ரீ பகவத் குணத்துக்கு நிரூபக பூதையாகையாலும்

ஸ்ரீ யா சார்த்தம் ஜகத் பதிர் ஆஸ்தே
வ்யூஹேஷு சை சர்வேஷு விபவேஷு ச ஸர்வஸ ததா வ்யூஹீ பவத்யேஷா மமசைவாநபாயிநீ
தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ -விஷ்ணோர் தேஹ அனுரூபாம் வைகரோத் யேஷாத்மநஸ் தநூம்-என்று
உபய விபூதியிலும் இவளுடைய நித்ய சந்நிதி உண்டாகையாலே ஸ்ரீ பகவத் விபூதிக்கு நிரூபக பூதையாகையாலும்

ஸ்ரீ பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளுக்கு நிரூபக பூதை என்றதாயிற்று

யத் ப்ரூபங்கா பிரமாணம் ஸ்திதி
கடாக்ஷ லாபாய கரோதி லோகான் பராக்ரமம் தே பரிரம்பணாய-முதேவ முக்திம் முர பித்ரமேதத் கதம் பாலபாவ கதாஸ்யகர்த்து-என்றும்
ஜகத் காரணத்வ ஜகத் ரக்ஷகத்வ மோக்ஷ ப்ரதத்வாதிகள் இவளுடைய ப்ரூபங்கா அநந்தரம் பண்ணும் என்றும் –
இவளுடைய கடாக்ஷ லாபாதிகளுக்கு உறுப்பாகச் செய்யும் என்றும் சொல்லுகையாலும்
ஸஹ பத்ந்யா விசாலாஷ்யா நாராயணம் உபாகமத் -என்று ஜகத் ரக்ஷணத்துக்கு இவளோடு கூட
பூர்வ ரங்க அனுஷ்டானம் பண்ணினான் என்றும் சொல்லுகையாலும்
அநந்தரம் ஆஸ்ரித அபராதங்களைப் பொறுப்பித்து ரஷிக்க வேணும் என்று இவள் அபேக்ஷிக்க அவர்களை ரக்ஷிக்கும் என்கையாலும் –
காகாதிகள் இவள் சந்நிதியால் உஜ்ஜீவித்தார்கள் என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்கையாலும்
ஆஸ்ரித அங்கீ காரத்துக்கு இவளைப் புரஸ்கரிப்பிக்கும் என்னும் இடம்
ஸ்ரீ குஹ ஸூக்ரீவ விபீஷண ஆதிகள் அளவில் காண்கையாலும்
ரஷிக்கைக்கு இவன் சந்நிதியே அபேக்ஷிதம் என்றதாயிற்று

தாஸோஹம் கமலா நாத
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன்
திருமகளார் தனிக்கேள்வன் பெருமையுடைய பிரானார் -இத்யாதிகளால் இவ்விபக்தியில் சொல்லுகிற சேஷத்வத்துக்கு
பிரதிசம்பந்தி மிதுனம் என்றதாயிற்று –
ஆகையால் இப்பதத்தில் சாப்தமாக ஸ்ரீ லஷ்மீ சம்பந்தம் அனுசந்தித்தது இல்லையாகிலும் –
யத்யபி சச்சித்தா–இத்யாதிகளில் சொல்லுகிற குண சித்தி நியாயத்தாலே ஆர்த்தமாக
ஸ்ரீ லஷ்மீ சம்பந்தம் அனுசந்தேயமாகக் கடவது

இவ்வகாரத்திலே சதுர்த்தீ விபக்தியாய் ஸூபாம் ஸூலுக் -என்று விபக்தி லோபமாய் –
ப்ரத்யய லோபே ப்ரத்யய லக்ஷணம் -என்கிற நியாயத்தாலே ப்ரத்யயம் லுப்தமானாலும் ப்ரத்யயார்த்தம் கிடக்கும் என்கையாலே –
சர்வ காரண பூதனாய் சர்வ ரக்ஷகனான ஸ்ரீ எம்பெருமான் பொருட்டு என்கிறது -அதாவது
இந்த சதுர்த்தி தாதர்த்தயே சதுர்த்தியாய் இவனுக்கு இஷ்ட விநியோக அர்ஹமாம் படி சேஷமாய் இருக்கும் என்கை –

சேஷத்வம் துக்க ரூபமாக வன்றோ நாட்டில் கண்டு போருகிறது என்னில் அகார வாஸ்ய வஸ்து பிரதிசம்பந்தி யாகையாலே
ஸ்வரூப சித்தி ஹேதுவாகையாலும் -ஸ்வரூப அனுரூபமாகையாலும் -ஞானம் பிறந்தால் இது தானே புருஷார்த்தம் ஆகையாலும்
அபிமத விஷய சேஷத்வத் ஸூக ரூபமாய் இருக்கும் என்கிறது -இத்தால் அகார வாச்யனுடைய சேஷித்வம் சொல்லிற்று ஆயிற்று –

இதில் விபக்தி வ்யக்தம் இன்றியிலே இருக்கச் செய்தே சதுர்த்தீ விபக்தி என்னும் இடத்துக்கு பிரமாணம் என்
பிரதம விபக்தி ஆனாலோ என்னில்
அப்போது ஆத்ம வாசகமான மகாரமும் பிரதம அந்தமாய் -பகவத் வாசகமான அகாரமும் பிரதம அந்தமானால்
இருவருடையவும் ஐக்ய பரமாதல் சமத்துவ பரமாதல் அத்தனை –
அப்போது சகல ஸாஸ்த்ரங்களுக்கும் வையர்த்தம் வரும் –
ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்களுக்கு சேராது -எங்கனே என்னில்
பதிம் விஸ்வஸ்ய
பதிம் பதீநாம்
பிரதான க்ஷேத்ரஜ்ஜபதிர் குணேச
கரணாதி பாதிப
ஈஸதே தேவஏச
பரவா நஸ்மி
பகவத ஏவாஹமஸ்மி
தாஸோஹம் -இத்யாதிகளாலே ஸ்ரீ பகவச் சேஷித்வத்தையும் ஆத்ம சேஷத்வத்தையும் சொல்லுகிற
சகல ஸாஸ்த்ரங்களுக்கும் வையர்த்தம் வரம்
இந்த சேஷித்வ சேஷத்வங்கள் தன்னாலே உபய ஸ்வரூபத்துக்கும் சேராது என்னும் இடம் சொல்லிற்று
இவ்வஷரத்தில் சொன்ன கார்யத்வ ரஷ்யத்வங்களோடே விரோதிக்கும்
ஆத்மா நித்யனே யாகிலும் இவனுடைய நித்ய ப்ரஹ்ம விசேஷணத் வத்தாலே விசேஷ த்வாரா கார்யத்வம் சொல்லக் குறையில்லை –
ஆத்மா நித்யனே யாகிலும் இவனுடைய நித்ய ப்ரஹ்ம விசேஷணத்தாலே விசேஷ த்வாரா கார்யத்வம் சொல்லக் குறையில்லை

அஹம் அபி ந மம -பகவத ஏவாஹம் அஸ்மி -என்று ஸ்வாதந்தர்ய நிவ்ருத்தி பூர்வகமாக பகவத் ஏக
பாரதந்தர்யத்தைச் சொல்லுகிற நமஸ் சப்தத்துக்கும் நைரர்த்த்யம் வரும் -சரீராத்ம பாவத்தைச் சொல்லுகிற
நாராயண பத்துக்கும் பங்கம் வரும் -அதில் சதுர்த்தியில் சொல்லுகிற கைங்கர்ய பிரார்த்தனைக்கு உதயம் இல்லை
ஆக சாஸ்திரத்தோடு -சாஸ்த்ர தாத்பர்யத்தோடு -ப்ரதிபாதித்த வஸ்துவோடு -சாஸ்த்ர விதி அனுஷ்டானத்தோடு வாசி அற
சகலத்தோடும் விரோதிக்கையாலே இவ்வகாரம் பிரதம அந்தமாக மாட்டாது -சதுர்த்தி யந்தமாகக் கடவது
ப்ரஹ்மணேத் வாமஹஸ ஓமித்யாத்மாநம் யூஞ்ஜீத -என்று இந்த சேஷத்வத்தை சமர்ப்பண முகேன சொல்லுகிற
ஸ்ருதி வாக்கியத்தில் ப்ரஹ்மணே என்கிற சதுர்த்தி யந்தத்வமும் –
இதன் விவரணமாய் விஷேஷ்யமான நாராயண பதத்தில் சதுர்த்தி யந்தமே இதுக்கு ப்ரமாணமாகக் கடவது

ஆக இவ்வகாரம் சதுர்த்தி அந்தமாய் -அகார வாச்யனுக்கு இஷ்ட விநியோக அர்ஹமாம்படி சேஷமாய் இருக்கும் என்றதாயிற்று –
ஆக அகாரத்தினுடைய சப்த சக்தியால் காரணத்வமும்
தாதுவாலே ரக்ஷகத்வமும்
அர்த்தபலத்தாலே ஸ்ரீ யபதித்வமும்
சதுர்த்தி அந்த பத சக்தியால் சேஷித்வமும் சொல்லிற்று ஆயிற்று
இப்பத்தில் சொல்லுகிற காரணத்வ ரக்ஷகத்வ ஸ்ரீ யபத்வ சேஷித்வங்களுக்கு ஆஸ்ரயமான ஸ்ரீ பகவத் ஸ்வரூபம்
ஸ்ரீ லஷ்மீ ஸ்வரூப விசிஷ்டமாய் இருக்கச் செய்தே
இதில் சொல்லுகிற ஸ்ரீ யபதித்வ சேஷித்வங்களில் ஸ்ரீ லஷ்மீ ஸ்வரூபத்துக்கு அந்தர்பாவம் உண்டானவோ பாதி
காரணத்வ ரக்ஷகத்வங்களிலும் அந்தர்பாவம் உண்டாகக் குறை இல்லையே என்னில்
காரணத்வம் ப்ரஹ்மத்துக்கு அசாதாரண தர்மதயா லக்ஷணத்வேந நிர்தேசிக்கப் படுகையால்
வ்யக்தியந்தரத்தில் கிடவாதது ஆகையாலே பிரதான்யேன இவளுக்குக் காரணத்வம் இல்லை

இனி காரணத்வ அந்தர்பாவம் சொல்லும் போது
நிமித்த ரூபேண வாதல் -உபாதான ரூபேண வாதல் -சஹகாரி ரூபேண வாதல் சொல்ல வேணும்
சதேவ சோம்யே தமக்ரே ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்
ஸ்ருஷ்டவ் ஸ்ருஜதி சாத்மாநம்
கார்யே நந்தே ஸ்வ தனுமுகதஸ் தவாம் உபாதானம் ஆஹு -இத்யாதிகளால் நிமித்த உபாதானங்கள் இரண்டும்
அவன் என்று சொல்லுகையாலே அந்தர் பாவம் சொல்ல ஒண்ணாது –

இனி ஸஹ காரி என்ன வேணும் –
அப்போதைக்கு ஸஹ காரிகள் நிமித்த உபாதேனே உபகரண ரூபேண த்ரிவிதமாய் இருக்கும்
அதில் நிமித்த ரூப ஸஹ காரிகளாவன
பட நிர்மாண நிமித்தனான குவிந்தனுக்கு ஸஹ காரிகளான குவிந்தாந்தரங்கள்
உபாதான ரூப ஸஹ காரிகளாவன -பட உபாதான பூத தந்துவுக்கு ரத்ன கிருஷ்ணாதி ரூபேண ஸஹ கரிக்கிற த்ரவ்யாந்தரங்கள்
உபகரண ரூப ஸஹ காரிகளாவன ரத நிர்மாண க்ரியா ஹேது பூதங்களான வாஸ்யாதிகள்

அவற்றில் -மனஸ் ஏவ ஜகத் ஸ்ருஷ்டிம் சம்ஹாரஞ்ச கரோதிய-என்றும்
ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கருமங்களை செய் எல்லையில் மாயன் -என்றும்
நிமித்த பூதனான ஈஸ்வரனுக்கு தன் சங்கல்ப ஞானம் ஒழிய வேறு ஓன்று அபேக்ஷிதம் அல்ல என்று சொல்லுகையாலும்
அத்விதீயம் என்று நிமித்தாந்தர நிஷேதம் பண்ணுகையாலும்
சதேவ -ஏகமேவ -அஹமேவ -பஹுஸ்யாம்-ஸ்வயமகுருத – -இத்யாதிகளாலே
சச் சப்த வாச்யனான பர வஸ்து ஒழிய உபாதானாந்தரம் இல்லை என்று சொல்லுகையாலும்
ஸ்ருஷ்டிஸ் தித்யந்தகரணீம ப்ரஹ்ம விஷ்ணு சிவாத் மிகாம்-ச சம்ஜாம்யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தன -என்று
ப்ரஹ்ம ருத்ராதி ரூபேண நின்று ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ணுகிறான் ஜனார்த்தனன் ஒருவனுமே-
வேறு ஸஹ காரிகள் இல்லை -என்றும்
அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான்-என்றும் ஸஹ கார்யாந்தர நிஷேதம் பண்ணுகையாலும்
இவளை நிமித்த உபாதான ஸஹ காரி ரூபேண ஸஹ காரி என்ன ஒண்ணாது –

சித் அசித்துக்களில் இவன் அநு பிரவேசிப்பித்து நின்று ஸ்ருஷ்டிக்கிறாவோபாதி இவள் பக்கலிலே இவன் அனுபிரவேசிப்பித்தாலும்
உபாதானாந்தர நிஷேதத்துக்கு விரோதம் பிறவாதீ என்னில் -அப்படிச் சொல்ல ஒண்ணாது –
அபரிணாமியாய் பரி ஸூத்தமான ப்ரஹ்மத்துக்கு அவற்றினுடைய அனுபிரவேசாபாவத்தில் உபாதான ஹேதுகமான பரிணாமித்வமும்
அஜ்ஞத்வ துக்கித்வ ரூபமான அ ஸூத்தியும் பிரசங்கிக்கும் ஆகையாலே பரிணாமியான அசித்தையும் –
அவித்யா ஆஸ்ரயமான ஆத்மாவையும் அனுபிரவேசிக்க வேண்டுகையாலும்
இவளுடைய அனுபிரவேசாபாவத்தில் இப்படி வருவது ஒரு விரோதம் இல்லாமையாலும்

அதுக்கு மேலே ப்ரஹ்ம ஸ்வரூபத்தை க்ரஹிக்கிற பிரமாணம் தான்
யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே -இத்யாதிகளாலே காரணத்வாதி விசிஷ்டமாக க்ரஹிக்கையாலும்
பஹுஸ்யாம் என்கிற ப்ரஹ்ம சங்கல்ப அநந்தரம் ஜகத்து உண்டாகையாலும்
சங்கல்பாத் பூர்வம் ஜகத்து இல்லாமையாலும்
அஜா மேகம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் பஹ்வீம் ப்ரஜாம் ஜநயந்தீம் ச ரூபாம் -என்று
குணத்ரயாத்மிகையான பிரகிருதி பிரஜைகளை உத்பாதிக்கும் இடத்தில் தான் அசேதனம் ஆகையாலே
அசேதனமான ம்ருத்து புருஷ பிரயத்தன சாபேஷமாய்க் கொண்டு கடாதிகளை உத்பாதிக்குமா போலே
மயாத்யஷேண ப்ரக்ருதிஸ் ஸூபதேச சராசரம் -என்கிறபடியே ப்ரஹ்மாதிஷ்டிதமாய்க் கொண்டே
ஜகத்தை யுத்பாதிக்கும் என்று சொல்லுகையாலும்
விஷ்ணோஸ் சகாஸாதுத்புதம் ஜகத் தத்ரைவச ஸ்திதம் -என்றும்
சர்வ காரண காரணே-என்றும் –
விஷ்ணு சப்த வாச்யனான சர்வேஸ்வரன் ஜகத் காரண புதன் என்றும் சொல்லுகையாலும்
இவள் ஸ்வரூபத்தை காரணத்வேன கிரஹிப்பதோர் பிரமாணம் இல்லாமையாலும் –
இவள் சங்கல்பத்தை ஒழியவும் ஜகத்து உண்டாகையாலும் –
இவள் கூடாதபோது ஜகத்து உத்பன்னமாகாது என்கைக்கு ஒரு அனுபபத்தி இல்லாமையாலும்
இவள் காரண பூதை என்று சொல்லுவதொரு பிரமாணம் இல்லாமையாலும்
இவளுக்கு காரணத்வ அந்தர் பாவ சங்கையே பிடித்து இல்லையே

காரண பூத ப்ரஹ்ம ஸ்வரூப நிரூபகத்வேன இவளுக்கு அவர்ஜனீய சந்நிதி யுண்டேயாகிலும்
அனுப யுக்த விசேஷணங்களோபாதி தத் க்ரிய அன்வயம் இன்றியிலே தத் விஷய ப்ரீதியாதிகளிலே அன்வயமாகக் கடவது –
அப்படியே ரக்ஷகத்வமும் -யேந ஜாதாநி ஜீவந்தி-இத்யாதிகளிலே ப்ரஹ்ம லக்ஷணமாகச் சொல்லப்படுகையாலும்
ஈச்வரஸ் சர்வ பூதா நாம்
விஷ்ணுஸ் த்ரை லோக்ய பாலாக
பாலநே விஷ்ணு ருச்யதே
ச ஏவபாதி
விஷ்ணு பால்யஞ்ச பாதிச-இத்யாதிகளாலே விஷ்ணு சப்த வாச்யனான சர்வேஸ்வரனை ரக்ஷகனாகச் சொல்லுகையாலும்
இவளுக்கு ரக்ஷகத்வ அந்தர் பாவம் சொல்ல ஒண்ணாது

இந்த ரக்ஷகத்வ விசிஷ்டமாய் அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்ட பிராப்தி பிரதத்வ லக்ஷணமாய் இருக்கிற
யுபாயத்வம் யாது ஓன்று அதிலும் இவளுக்கு அந்தர்ப் பாவம் இல்லை -எங்கனே என்னில்
மாம் ஏகம் சரணம் வ்ரஜ
தமேவ சரணம் கச்ச
மாம் ஏவ யே பிரபத்யந்தே
தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே
யோ ப்ராஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹினோதி தஸ்மை –
தம் ஹி தேவ மாத்ம புத்தி பிரசாதம் முமுஷுர்வை சரணம் அஹம் பிரபத்யே –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்
களை கண் மற்று இலேன்
மூவாத் தனி முதலாய் மூ வு லகும் காவலோன்-இத்யாதிகளில்
வ்யக்த்யந்தர நிஷேத பூர்வகமாக சர்வ காரண வஸ்துவுக்கே உபாயத்தை விதிக்கையாலே

ஜ்யோதிஷ்டோமம் ஸ்வர்க்க ஸாதனமாகா நிற்கச் செய்தேயும் ப்ரயாஜாதிகளான கர்ம விசேஷங்கள்
ஸஹ காரித்வேந சகாயம் ஆகிறாப் போலேயும்-
பக்தி பகவத் பிராப்தி ஸாதனமாகா நிற்கச் செய்தேயும் கர்ம ஞானங்கள் ஸஹ காரித்வேந சகாயம் ஆகிறாப் போலேயும்
இவளுக்கும் ஸஹ காரித்வேந உபாயத்வ அந்தர் பாவம் உண்டானாலோ என்னில்
ஏதேனும் ஒன்றுக்கு சஹகாரித்வம் உண்டாவது –
ஸ்வரூப உத்பத்தி முகேனே ஆதல் –
உத்பன்ன ஸ்வரூப வர்த்தக முகேனே யாதல் –
வர்த்தித்த ஸ்வரூப பல பிரதான முகேனே யாதல் -யாயிற்று

உபாய பூதனான ஈஸ்வரன் -உபாய உபேயத்வே ததி ஹதத்வம் -என்று சித்த ஸ்வரூபனுமாய் -ஏக ரூபனுமாய் –
அமோக சங்கல்பனுமாய் இருக்கையாலே உத்பத்தி யாதிகளில் சஹகாரி சாபேஷதை இல்லாமையாலும்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -என்றும்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -என்றும் ஸஹ காரி நிரபேஷமாகச் சொல்லுகையாலும்
இவளுக்கு ஸஹ காரித்வம் இல்லை

ப்ரஹ்ம ஸ்வரூப க்ராஹக பிரமாணம் -யேந ஜாதாநி ஜீவந்தி -யோவை வேதாம்ஸ் ச ப்ரஹினோதி தஸ்மை-இத்யாதிகளாலே
ப்ரஹ்ம ஸ்வரூபத்தை உபாயத்வேன க்ரஹிக்கையாலும்
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்கிற யுக்தி அநந்தரம் சோக நிவ்ருத்தி பிறக்கையாலும்
இந்த யுக்திக்கு முன்பு சோக நிவ்ருத்தி பிறவாமையாலும் –
அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்ட பிராப்தி -நிர்ஹேதுக கிருபா விசிஷ்டனான சர்வேஸ்வரன்
தன்னாலே உப பன்னம் ஆகையாலும்
சர்வ லோக சரண்யாய
சரண்யம் சரண மயாத
சரணவ் சரணம் மயாத
முமுஷுர் வை சரணம் அஹம் பிரபத்யே -என்று சர்வ சரண்யனாகச் சொல்லுகையாலும்
இவள் ஸ்வரூபத்தை உபாயத்வேந க்ரஹிப்பதொரு பிரமாணம் இல்லாமையாலும்
இவளுடைய யுக்தி ஒழிய கேவல பகவத் யுக்தியாலே சோக நிவ்ருத்தி பிறக்கையாலும்
இவள் சஹகரியாத போதும் உபாயத்வம் உப பன்னம் ஆகையாலும்
இவள் ஜகத்துக்கு உபாய பூதை என்று சொல்லுவதொரு பிரமாணம் இல்லாமையாலும்
இவளுக்கு உபாயத்வம் இல்லை என்னும் இடம் சம் பிரதிபன்னம் –

சர்வஞ்ஞத்வாதி குண முகேன கார்யகரன் ஆகிறவோபாதி இவளையும் ஸஹ காரித்வேந அந்தர் பவித்துக் கொண்டு
கார்யகரனாகக் குறை என் என்னில் –
குணங்கள் கார்ய உபயோகி யாகையாலும் குணத்வேந உண்டான அப்ருதக் புத்தி யோக்யத்வத்தாலும்
சைதன்ய அநாதாரத்வத்தாலே கர்த்தந்த்ர சங்க அவகாசம் இல்லாமையாலே நைரபேஷ்ய ஹானி இல்லாமையாலும்
இவள் கார்ய அனுப யுக்தையாகையாலும் த்ரவ்யத்வேந வருகிற ப்ருதக் புத்தி யோக்யத்வத்தாலும் –
சைதன்ய ஆதரத்வ நிபந்தனை கர்த்ருத்வ பிரதிபத்தி யோக்யதையாலே நைரபேஷ்ய ஹானி யுண்டாகையாலும் அதுவும் ஒண்ணாது –
ஆகையாலே சர்வ பிரகாரத்தாலும் இவளுக்கு உபாயத்வ அந்தர் பாவம் இல்லை என்றதாயிற்று –

ஆகையாலே உபாய தசையில் இவளுக்கு உண்டான ஸ்வரூப அந்தர் பாவம் உபாய பூதனானவனை
உபாயத்வேந ஆஸ்ரயிக்கிற சேதனருடைய ஸ்வ அபராத நிபந்தன பய நிவ்ருத்தி ஹேது பூத
புருஷகார உபயோகியாகக் கடவது –

அப்படி இன்றியிலே ஸ்ரீ யபதித்வத்துக்கு பிரதி சம்பந்தி அபேக்ஷை யுண்டாகையாலும் –
தர்மி க்ராஹகமான ஸ்ரீ ரீச பதம் தான் -ஸ்ரயதே இதி ஸ்ரீ -என்று பகவத் ஸ்வரூபத்தை ஆஸ்ரயித்து இருக்கையாலே
ஸ்ரீ சப்த வாஸ்யை ஆனாள் என்று சொல்லுகையாலும்
ஸ்ரீ ஞ் சேவாயாம் -என்கிற தாதுவிலே
கர்த்தரி வ்யுத்பத்தியாலே ஸ்வாஸ்ரயமான பகவத் ஸ்வரூபத்தை சேவித்து இருக்கும் என்கையாலும்
அநந்யார்ஹ வேணாஹம் பாஸ்கரேண பிரபாயதா-என்றும் நிராதாரா ந சித்தயதி-என்றும்
பகவத் ஸ்வரூபத்தை ஆஸ்ரயித்த போது தன் சத்தையாய்-ஒழிந்த போது சத்தை இல்லை என்று சொல்லுகையாலும்
ஸ்ரீ யை ஒழிய அவனுக்கு ஸ்ரீ யபதித்வம் அனுபபன்னம் ஆகையாலும்
விஷ்ணோஸ் ஸ்ரீ
விஷ்ணு பத்னீ
ஹ்ரீஸ் சதே லஷ்மீஸ் ச பத்ந்யவ்
தவ ஸ்ரீ யா
மலராள் மணவாளன்
நாண் மலராள் நாயகன்
திரு மகளார் தனிக் கேள்வன்-இத்யாதிகளாலே இவளை பத்னீத்வேந சேஷ பூதையாய்ச் சொல்லுகையாலும்
ஸ்ரீ யபதித்வத்தில் அன்வயம் உண்டு என்னும் இடம் ஸூ ஸ்பஷ்டம்

அப்படியே ஸ்ரீ யதே இதி ஸ்ரீ -என்று சர்வராலும் ஆஸ்ரயிக்கப்படும் என்று சொல்லுகையாலும்
ஸ்ரீ ஞ் சேவாயாம் என்கிற தாதுவிலே கர்மணி வ்யுத்பத்தியாலே சர்வருக்கும் சேவா விஷய பூதையாகச் சொல்லுமிவள்
தன்னுடைய மாத்ருத்வ ரூபமான சேஷித்வத்தாலே ஆஸ்ரிதரை அபராத உபகரண பூர்வகமாக
ரஷித்துக் கொண்டு போரும் என்று சொல்லுகையாலும்
ஏவம் பூத சேஷித்வத்தாலே இவளுடைய புருஷகாராந்தர நிரபேஷ ஆஸ்ரயணீயத்வம் உப பன்னம் ஆகையாலும்
அஸ்யே சாநா ஜகதோ விஷ்ணு பத்னீ
சகலம் தத்திதவைவ மாதவ
தாஸோஹம் கமலா நாதா
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன்
திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்
திருமாலை வணங்குவனே -இத்யாதிகளிலே இவளை சேஷித்வத்திலே அந்தர் பவித்துச் சொல்லுகையாலும்
இவளுக்கு சேஷித்வத்திலே அன்வயம் உண்டு என்னும் இடம் ஸம்ப்ரதிபன்னம்
ஆகையாலே நாராயண பதத்தில் சொல்லுகிற சகல குணங்களும் பகவத் ஸ்வரூப ஆஸ்ரயமாய் இருக்கச் செய்தேயும்
வாத்சல்யாதிகள் ஆஸ்ரயணத்தில் உபயுக்தமாயும்
சர்வஞ்ஞத்வாதிகள் கார்யகரத்வத்திலே உபயுக்தமாயும் ஸுந்தர்யாதிகள் அனுபாவ்யமாயும் போருகிற இடத்தில்
விரோதம் இல்லாதப் போலேயும்
காரணதசையில் சித் அசித்துக்கள் உபாதான உபயோகியாயும் சங்கல்பம் நிமித்த பர்யவாசியியாயும்
ஞானாதிகள் ஸஹ காரியாயும் போருகிற இடத்தில் விரோதம் இல்லாதப் போலேயும்
ஸ்ரீ லஷ்மீ ஸ்வரூபம் அகார வாஸ்யமான ஸ்ரீ பகவத் ஸ்வரூபத்தை ஆஸ்ரயித்து இருந்ததே யாகிலும்
காரணத்வ ரஷாகத் வாதிகளில் அன்வயம் இன்றியிலே தத் விஷய அனுமோத புருஷகாரத்வ மாத்ரமாய்
ஸ்ரீ யபதித்தவ சேஷித்வங்களில் அன்வயம் உண்டாம் இடத்தில் விரோதம் இல்லை

இந்த காரணத்வ ரக்ஷகத்வங்களுக்கு சர்வஞ்ஞாதி குண அபேக்ஷை யுண்டாகையாலும் –
உபய விபூதி ரக்ஷகனாகையாலும்
ஸ்ரீ யபதியாகையாலும்
சர்வ ஸ்மாத் பரனாகையாலும்
காரணந்து த்யேய
யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் முமுஷுர்வை சரணம் அஹம் பிரபத்யே -என்றும்
காரண வஸ்துவே உபாஸ்யமாகவும் சரண்யமாகவும் சொல்லுகையாலும்
உபாஸ்யமாயும் சரண்யமாயும் இருக்கிற வஸ்துவே அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்ட பிராப்தியைப் பண்ணுகையாலும்
உபாஸ்யமாயும் சரண்யமாயும் இருக்கிற வஸ்துவே உபாயமாய் அறுகையாலும்
இது தான் இதுக்கு முன்பு பிராப்தம் இன்றியிலே மேல் பிராப்தவ்யம் ஆகையாலும்
இந்த உபாஸ்யத்வ சரண்யாத்வ உபாயத்வ ப்ராப்யத்வங்களுக்கு விலக்ஷனா விக்ரஹ அபேக்ஷை யுண்டாகையாலும்
இவ்வகாரத்தாலே-ஸமஸ்த கல்யாண குணாத்மகமும் உபய விபூதி நாதத்வமும் ஸ்ரீ யபதித்வமும்
சர்வ ஸ்மாத் பரத்வமும் உபாஸ்யத்வமும் சரண்யத்வமும் உபாயத்வமும் உபேயத்வமும்
விலக்ஷண விக்ரஹ யோகமும் சொல்லிற்று ஆயிற்று

——————

ஸ்ரீ ராமானுஜ சித்தாந்த ஏற்றம் -தாத்பர்ய அர்த்தம் -பாகவத சேஷத்வம்

ஸ்ரீ சங்கல்ப ஸூர்ய உதயம் -சாவத கரவீராதீன ஸூதே சாகர மேகலா ம்ருத சஞ்சீவநீ யதர ம்ருகமயாண தசமா கதா –
அல்ப அசாரங்கள் மலிந்து இருக்கும் சார தமம் குறைந்தே இருக்கும்

ஞான அனுஷ்டானங்களை ஒழிந்தாலும் பேற்றுக்கு ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் சம்பந்தமே அமைகிறாப் போலே
அவை உண்டானாலும் இழவுக்கு அவர்கள் பக்கல் அபசாரம் போதுமே –ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தி –
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உளவாகப் பெற்றோம் -முழுதும் அவை நமக்கு பொழுது போக்காகப் பெற்றோம்
பின்னை ஓன்று தனில் நெஞ்சு செல்லாமை பெற்றோம் -பிறர் மினுக்கம் பொறாமை இலாப் பெருமையும் பெற்றோமே
ஸ்ரீ மணவாள மா முனிகள் ஸ்ரீ ஸூக்தி

உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாது -சம்பந்த ஞானத்தை உணர்ந்து
த்வம் மே என்றால் அஹம் மே என்னும் விரதத்தை விட்டு ஒழிந்தால்
பொன்னுலகு ஆளீரோ-புவனா முழு ஆளீரோ -என்னும்படு அனுபவிக்கப்ப் படுவோமே –
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரகால நல்லான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ தத்வத்ரய ஸங்க்ரஹம் –

May 24, 2019

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ தத்வத்ரய ஸங்க்ரஹம்

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுந ஸூநவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யானாம் ஸூலப ஸ்ரீதரஸ் சதா

அவதாரிகை –
1–இதர தர்சனங்களில் பதார்த்தங்கள் ஆறு என்பார் -பதினாறு என்பார் -இருப்பத்தஞ்சு என்பார் –
இப்படி பஹு .பிரகாரங்களிலே விப்ரதிபத்தி பண்ணுவர்கள்
2– நம் தரிசனத்துக்கு தத்வம் மூன்று
3–அவையாவன–சித் என்றும் அசித் என்றும் ஈஸ்வரன் என்றும்

———————

அசித் பிரகரணம் –

4-அசித்தாகிறது -குண த்ரயாத்மகமாய்-நித்தியமாய் -ஜடமாய் -விபுவாய்-எம்பெருமானுக்கு பிரகாரதயா சேஷமாய்-
இவனுக்கு லீலா உபகரணமாய்-மஹதாதி சர்வ விகாரங்களுக்கும் ப்ரக்ருதியாய் -தன்னோடே சம்பந்தித்த சேதனனுக்கு
பகவத் ஸ்வரூபத்தை மறைத்து -தன் பக்கலிலே போக்யதா புத்தியைப் பிறப்பிக்கும் தன்மையை யுடைத்தாய்
சதத பரிணாமிமாய் இருக்கும் –
5–இதில் ஸூஷ்ம பரிணாமம் அவிசதமாய் இருக்கும் –
6–ஸூதூல பரிணாமம் விசதமாய் இருக்கும் -அதாகிறது மஹதாதி விகாரங்கள் –
7–இந்த மூலப்ரக்ருதி மஹதாதிகளாய்ப் பரிணமிக்கும் படி எங்கனே என்னில்
8–குண த்ரயங்களினுடைய சாம்யா அவஸ்தையான மூலப்ரக்ருதியில் நின்றும் மஹான் பிறக்கும்
9–இதில் நின்றும் அஹங்காரம் பிறக்கும்
10–இது தான் சாத்விகமாயும் -ராஜஸமாயும் -தாமஸமாயும் -மூன்று படியாய் இருக்கும் –
11—இதில் சாத்விக அஹங்காரத்தில் நின்றும் ஏகாதச இந்திரியங்கள் பிறக்கும் –
12–இந்திரியங்கள் தான் எவை என்னில் –
ஸ்ரோத்ர-த்வக் -சஷூர் -ஜிஹ்வா -க்ராணங்கள்-என்கிற ஞான இந்திரியங்கள் ஐந்தும்
வாக் -பாணி -பாத -பாயூபஸ்தங்கள் -என்கிற கர்மா இந்திரியங்கள் ஐந்தும்
இவற்றுக்கு பிரதானமான மனஸ்ஸூமாக இந்திரியங்கள் பதினொன்று
13–தாமச அஹங்காரத்தில் நின்றும் சப்த தந் மாத்ரை பிறக்கும் –
14–இதில் நின்றும் இத்தினுடைய ஸ்தூல அவஸ்தையாய் சப்த குணகமான ஆகாசம் பிறக்கும் –
15–இதில் நின்றும் ஸ்பர்ஸ தந் மாத்ரை பிறக்கும்
16–இதில் நின்றும் ஸ்பர்ஸ குணகமான வாயு பிறக்கும்
17–இதில் நின்றும் ரூப தந் மாத்ரை பிறக்கும் –
18–இதில் நின்றும் ரூப குணகமான தேஜஸ்ஸூ பிறக்கும் –
19–இதில் நின்றும் ரஸ தந் மாத்ரை பிறக்கும்
20–இதில் நின்றும் ரஸ குணகமான ஜலம் பிறக்கும் –
21–இதில் நின்றும் கந்த தந் மாத்ரை பிறக்கும் –
22–இதில் நின்றும் கந்த குணகையான ப்ருத்வீ பிறக்கும் –
23 — ராஜஸ அஹங்காரம் -இரண்டிற்கும் அனுக்ரஹகமாய் இருக்கும் –
24–ஆக -இந்த மஹதாதி சகல பதார்த்தங்களும் கூட அண்டமாய் பரிணமிக்கும் –
25–இவ்வண்டத்தில் பத்தாத்ம சமஷ்டி பூதனான ப்ரஹ்மா பிறக்கும்
26–இதுக்கு கீழ் ஸ்வ சங்கல்பத்தாலே எம்பெருமான் தானே ஸ்ருஷ்டித்து அருளும் –
இதுக்கு மேலே ப்ரஹ்மாவுக்கு அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டித்து அருளும் –
27–இவ்வண்டம் தான் பத்தாத்மாக்களுக்கு போக்ய போக உபகரண போக ஸ்தானமாய்க் கொண்டு பரிணமிக்கும் –
28–போக்யங்களாவன -சப்தாதிகள்
29–போக உபகரணங்கள் ஆவன இந்திரியங்கள் –
30–போக ஸ்தானம் ஆவன -தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சதுர்வித சரீரங்களும் –
பூமி முதலான மேல் ஏழு லோகங்களும் பாதாளாதி லோகங்கள் எழும்
31–இந்திரியங்களும் இச் சரீரங்களும் ஐஸ்வர்யாதி புருஷார்த்தங்களுக்கு சாதகமாய் இருக்கும்
32–இது வ்யக்த அவ்யக்த ரூபமான அசித் தத்வம்
33–காலமாகிறது -அசித் விசேஷமாய் -நித்தியமாய் -ஏக ரூபமாய் -கீழ்ச் சொன்ன பிரகிருதி பரிணாமாதிகளுக்கு
சஹகாரியாய்க் கொண்டு நிமேஷ காஷ்டாதி விகாரங்களை யுடைத்தாய் –
எம்பெருமானுக்கு ப்ரகாரதயா சேஷமாய்-லீலா பரிகரமாய் இருப்பது ஓன்று –

அசித் பிரகரணம் முற்றிற்று –

—————————–

சித் பிரகரணம் –

34–ஆத்ம தத்வம் மூன்று வர்க்கமாய் -அஸங்யாதமாய் இருக்கும் –
35–இதில் பகவத் சேஷத்தை ஏக ரசரான அனந்த கருட விஷ்வக்ஸேன ப்ரப்ருதிகள் நித்ய வர்க்கம் –
36–சம்சாரிகளாய் ஒரு நாளிலே பகவத் ஞானம் பிறந்து -அதனாலே பகவத் ப்ராப்தி பண்ணினவர்கள் விமுக்த வர்க்கம் –
37–அநாதியான கர்ம ப்ரபாவத்தாலே சதுர்வித சரீரங்களையும் பிரவேசித்து –
அதனாலே சப்தாதி விஷய ப்ரவணரான சம்சாரிகள் பத்த வர்க்கம் –
38–ஆத்ம ஸ்வரூபம் இருக்கும்படி எங்கனே என்னில் –
ஞான ஆனந்த ஸ்வரூபமாய் -நித்தியமாய் -அசித்தில் காட்டில் ஸூஷ்மமாய்-ஞான குணகமாய் -அணு பரிமாணமாய்-
பகவதாயத்த கர்த்ருத்வகமாய் -ஈஸ்வரனுக்கு பிரகாரதயா-சேஷமாய் இருக்கும் –
40–நித்ய முக்தர்களுடைய ஞானம் சங்கோச விகாசங்களுக்கு அநர்ஹமாய் இருக்கும்

சித் பிரகாரணம் முற்றிற்று –

———————-

ஈஸ்வர பிரகரணம் –

41–ஈஸ்வரன் சேதன அசேதனாத்மகமான உபய விபூதிக்கும் நியந்தாவாய் இருக்கும் –
42–எம்பெருமானுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் ஹேயபிரத்ய நீகமாய்-கல்யாணைகதாநமாய் -சகல இதர விலக்ஷணமாய் –
தேச கால வஸ்துக்களால் அபரிச்சின்னமாய் உள்ள ஞான ஆனந்தமாய் இருக்கும்
43–திவ்ய மங்கள விக்ரஹம் ஸூத்த சத்வமாய் -பஞ்ச உபநிஷந் மயமாய்-எம்பெருமானுக்கு ஸர்வதா அபிமதமாய் –
திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கும் அத்தை ஆஸ்ரயித்து இருக்கும் கல்யாண குணங்களுக்கும் ப்ரகாசகமாய் -ஏக ரூபமாய் –
சர்வ விஸஜாதீயமாய்-அப்ராக்ருதமாய் -அளவிறந்த தேஜஸ்ஸை யுடைத்தாய் -நித்ய யவ்வன ஸ்வ பாவமாய் –
சர்வ கந்த ஸ்வ பாவமாய் -ஸுந்தர்யாதி கல்யாண குண யுக்தமாய் -அதி மநோ ஹரமாய்-நித்யார்க்கும் முக்தர்க்கும் அநு பாவ்யமாய் –
முமுஷுக்களுக்கும் ஸூப ஆஸ்ரயமாய் இருக்கும் –
44–பரமபதமும் அங்குள்ள பதார்த்தங்களும் முக்தருடைய விக்ரஹங்களும் -நித்ய சித்தருடைய விக்ரஹங்களும்
ஸூத்த சத்வமாய் -பஞ்ச உபநிஷந் மயமாய் இருக்கும் –
45–எம்பெருமானுடைய திவ்யாத்ம குணங்களாவன -ஞான சக்த்யாதி ஷட் குணங்களும் -அதிலே பிறந்த ஸுசீல்யாதிகளும்-
46–இவை தான் ஒரோ குணங்களுக்கு அவதி இன்றியிலே -இவற்றுக்குத் தொகை இன்றியிலே இருக்கும்
47–இப்படிப்பட்ட ஸ்வரூபாதிகளை யுடைய ஈஸ்வரன் பர வ்யூஹாதிகளினாலே உபய விபூதியையும் நிர்வகித்து அருளும் –
48–எங்கனே என்னில்
49–கீழ்ச சொன்ன ஷாட் குண்யாதி ஸமஸ்த கல்யாண குணங்களோடும் திவ்ய மங்கள விக்ரஹத்தோடும்
பரம பதத்தில் நித்யரும் முக்தரும் தன்னை அனுபவிக்க அவர்களை அனுபவித்துக் கொண்டு இருக்கும் இருப்பு பர அவஸ்தை –
50–வ்யூஹ அவஸ்தை யாவது -லீலா விபூதியை நிர்வஹிக்கைக்காக இவ்விரண்டு இரண்டு குணங்களை பிரகாசிப்பித்துக் கொண்டு
சங்கர்ஷண ப்ரத்யும்னாதி ரூபேண வந்து அவதரிக்கை –
51–இந்த வ்யூஹங்கள் தான் ஜகாத் ஸ்ருஷ்ட்யாதிகளுக்கும் திரு வவதாரங்களுக்கும் அடியாய் இருக்கும் –
52–விபவமாவது-திவ்ய மங்கள விக்ரஹத்தை தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர சரீரங்களோடே சஜாதீயமாக்கிக் கொண்டு –
தன் படிகளை ஒன்றும் விடாதே -அவ்வோ ஜாதிகளில் வந்து அவதரிக்கை -சாஷாத் விபவமாவது –
சேதனர் பக்கல் ஸ்வரூபேண ஆவேசித்து அவதரிக்கை -ஸ்வரூப ஆவேச அவதாரம் –
சில சேதனர் பக்கலிலே சக்தியினாலே கார்ய காலத்திலே ஆவேசித்து ரஷிக்கை-சக்தி ஆவேச அவதாரம் –
53–அர்ச்சாவதாரமாவது -ஆஸ்ரிதர் உகந்தது ஏதேனும் ஒரு த்ரவ்யத்தை அதிஷ்டித்து –
அதிலே திவ்ய மங்கள விக்ரகத்தில் பண்ணும் ஆதரத்தைப் பண்ணிக் கொண்டு
ஆஸ்ரித பராதீனனாயக் கோயில்களிலும் க்ருஹங்களிலும் கால அவதி இன்றிக்கே திரு வவதரிக்கை-
54–உபாசிப்பவருடைய ஹ்ருதயங்களிலே விக்ரஹ ஸஹிதனாயக் கொண்டு
அவர்களுக்கு ஸூபாஸ்ரயமாய் இருபத்தொரு பிரகாரம் உண்டு –

சித் பிரகரணம் முற்றிற்று

———————-

55–இப்படி சித் அசித் ஈஸ்வர தத்துவங்களும் ஸங்க்ரஹேண சொல்லப் பட்டது
56–சகல சேதன அசேதனங்களையும் ஈஸ்வரன் பிரகாரமாக யுடையனாய் தான் அவற்றுக்கு பிரகாரியாய்
வேறு சேதனர்க்கு பிரகாரி இல்லாமையால் நம் தர்சனத்துக்குத் தத்வம் ஒன்றே என்னவுமாம் –

—————-

தத்வ த்ரய ஸங்க்ரஹம் முற்றிற்று

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்