Archive for the ‘Acharyarkall’ Category

ஸ்ரீ திரு விருத்தத்தில் ஐதிக்யங்களும்- –நிர்வாஹங்களும்-

January 14, 2021

ஸ்ரீ ஆழ்வாரின் ப்ரதம ப்ரபந்தம் , முதல் நூல் திருவிருத்தம்.
அவரது திவ்ய ப்ரபந்தங்கள் யாவும் ரஹஸ்யத்ரய விவரணமாகவே அமைந்துள்ளன.
அவை அந்தாதித் தொடையிலேயே அமைந்துள்ளன.

ஸ்ரீ திருவிருத்தம் முதல் பாசுரத்திலேயே அவர் இவ்வுலக வாழ்வின் தண்மையையும்,
அவ்வுலக வாழ்வின் மேன்மையையும் மிகச் சிறப்பாகக் கூறுகிறார்:

“பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்” என்று த்யாஜ்ய (விட வேண்டிய)விஷயத்தின் ஹேயதையையும்,

“இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை” என்று ப்ராப்யத்தையும்,

“இமையோர் தலைவா!” என்று தமது ஸ்ரீ ஸ்வாமியின் அப்ராக்ருத ஸ்வபாவத்தையும்,

“மெய் நின்று கேட்டருளாய்!” என்று அவனது ஸௌலப்யத்தையும்,

“அடியேன் செய்யும் விண்ணப்பம்!” என்று தமது பிரார்த்தனையையும்,

“இனி யாம் உறாமை” என்று தமது உலகியல் வாழ்வில் வைராக்யத்தையும் புலப்படுத்தினார்.

அடுத்த பாசுரம் முதலே அவர் தமிழில் ஒப்பற்ற அகத்துறை இலக்கிய ரீதியில்
நாயக நாயகி பாவனையில் அத்யாஸ்ச்சர்யமான உபதேஶ க்ரந்தம் ஸாதித்தருளினார்.

ஸ்ரீ காஞ்சி மஹா வித்வான் அண்ணங்கராசார்ய ஸ்வாமி தம் ஸ்ரீ திருவிருத்த வ்யாக்யானத்தின் முன்னுரையில்
இத் தகு நூல்களுள் திருக்கோவையார் ப்ரபந்தத்துடன் இதைக் குறித்துள்ளார் என்பது நோக்கத்தக்கது.

ஆகவே இதில் ஆசார்யர்கள் ஈடுபாடும், அதனால் அவர்களின் இன்சுவையே வடிவெடுத்த
நிர்வாஹங்களும் அமைந்ததில் வியப்பில்லை.

பாசுரம் 1:
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை உயிரளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா!
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே.

ஸ்ரீ ஆழ்வார், தண்டகாரண்யத்தில் ரிஷிகள் “ஏஹி பஶ்ய ஶரீராணி” என்று ஸ்ரீ பெருமாளிடம் தம்மை அரக்கர்கள்
அடித்தும் பொடித்தும் துன்புறுத்தியத்தைத் தங்கள் ஶரீரங்களில் இருந்த காயங்களையும் தழும்புகளையும் காட்டிக்
குறை இரந்தாப்போல் இப்பாசுரத்தில் ஞான ஸ்வரூபனும், ஞான கு3ணகனுமான ஆத்மாவை
ப்ரக்ருதி (அநாதி ஜன்ம, கர்ம, அவித்யா, பாபம் முதலியன) தின்றிருப்பதை எம்பெருமானிடம் காட்டுகிறார்
என்று ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாகம்.

ஸ்ரீ அம்மங்கி அம்மாள் எனும் ஆசார்யர், “உதிரக் கூறை காட்டுகிறார்” என்றார்.
அதாவது, ஸ்ரீ பெருமாளுக்கு ரிஷிகள் உடம்பைக் காட்டினாப் போல்
தம் குருதிக் கறை படிந்த நிலை (அஞ்ஞானாதிகள்) காட்டுகிறார்.

“பிறந்தாய்!”: என்பதற்கு ஸ்ரீ பட்டர்
ஒரு சுவையான விளக்கம் தந்ததாக ஸ்ரீவத் ஸாங்க தாஸர் கூறியதாக ஸ்ரீ நஞ்சீயர் ஸாதிப்பார்:
அதாவது: எம்பெருமான் பல பிறவிகளில் அவதரித்திருந்தாலும், அவனால் உலகினரைத் திருத்திப் பரம பதம்
கொண்டு செல்ல முடியவில்லை, உடுத்த துணியோடு பரமபதம் திரும்பிச் சென்றான்;
அதையும் பிடுங்கிக் கொள்ளாமல் அவனை அதோடு விட்டது விஶேஷம்.
ஆனால் ஸ்ரீ ஆழ்வார் அவதரித்த பின் அவனது திருவுள்ளம் நிறைவேறப் போகிறது என்பதால்,
இனி அவன் பிறக்க வேண்டிய தேவை இல்லை என்று ஸ்ரீ பட்டர் ரஸமாகக் கூறுவார் என்பது ஸ்ரீ நஞ்சீயர் குறிப்பு.

————

பாசுரம் 3–பிரிவாற்றாத தலைவி நெஞ்சழிந்து பேசும் நிலையில் உள்ளது.

குழற் கோவலர் மடப் பாவையும் மண்மகளும் திருவும்
நிழற்போல்வனர் கண்டு நிற்குங்கொல்? மீளுங்கொல் ? தண்ணந்துழாய்
அழற்போல் அடுஞ்சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழற்போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே

முதல் பாட்டில் இமையோர் தலைவா என்று வியந்த தலைவியின் இயல்பில் மாறுபாடு கண்டாள் தோழி.
இப்பாசுரத்தில், தலைவி, சக்கரக்கையன், ஸ்ரீ பூ நீளாதேவிமார் நாதன் ஆகிய எம்பெருமானை ஒருக்கணமும்
பிரியாதிருக்கும் கருடனின் பாக்கியம்தான் என்னே எனத் தன்னைக் கண்டுவிட்டுச் சென்ற பெருமாளை நினைத்து,
அவன் அவர்களோடுள்ள சேர்த்தி கண்ட என் நெஞ்சு மீளுமோ மீளாதோ எனப் பராங்குஶ நாயகி நினைப்பது.

ஸ்ரீ திருமலை நம்பி இதை, உண்மையிலேயே தமக்கு ஸ்ரீ எம்பெருமானை அனுபவிக்க இயலுமா என
ஸ்ரீ ஆழ்வார் நினைப்பதாகக் கூறுவார் என ஸ்ரீ பிள்ளை திருநறையூர் அரையர் விளக்குவார்.

ஸ்ரீ நஞ்சீயரோ, ஸ்ரீ பட்டர் “உலகியலில் தமக்குள்ள ஸம்பந்தத்தை அறுக்க வேண்டுமென ஸ்ரீ எம்பெருமானை
முதல் பாட்டில் வேண்டிய ஸ்ரீ ஆழ்வார், அவனை முதலில் கண் டபோது தம்மால் அந்த ஆனந்தத்தைத்
தாங்க முடியுமா என ஐயுற்றார்” என்று விளக்குவார் என்கிறார்.

தமது நெஞ்சைத் தூது விடுவது ஸ்ரீ ஆழ்வாரின் பல பாசுரங்களில் உள்ள விஶேஷம் என்பதை
முனைவர் ஸ்ரீ உ வே வி வி ராமாநுஜம் ஸ்வாமி “என் நெஞ்சினார் ” எனும் கட்டுரையில் அத்புதமாக விளக்கியுள்ளார்.

————–

காண்கின்றனைகளும் கேட்கின்றனகளும் காணில் இந்நாள்
பாண்குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றமேந்தி தண் மாமலை வேங்கடத்துள் உம்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே –பாசுரம் 8:

இது தலைவன் பொருள்வயின் (பொருள் தேடி) பிரிவது பற்றிக் குறிப்புத் தர, தலைவி வருந்தும் நிலை.

இதை விளக்க நம் பூர்வர்கள் ஸ்ரீ எம்பெருமானார், அவர் ஆசார்யர் ஸ்ரீ திருமலை நம்பி, ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள்
பற்றியொரு விருத்தாந்தம் தெரிவிக்கிறார்கள்.

ஸ்ரீ திருமலையில் இருந்த ஸ்ரீ எம்பெருமானார், யாராவது ஸ்ரீ காஞ்சி சென்று ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் எவ்வாறு உள்ளார்
என்று கண்டு வரமுடியுமா என்று கேட்க ஒருவரும் இசையவில்லை.
ஸ்ரீ திருமலை நம்பி தாமே சென்று ஸ்ரீ திருக்கச்சி நம்பிகளை சந்தித்து, உடனே கிளம்பவும்,
ஸ்ரீ நம்பிகள் அவரை “எதற்கு தேவரீர் வந்தது? இவ்வளவு அவசரம் ஏன் ?
ஸ்ரீ தேவப்பெருமாள் திருநாள் கண்டு போகலாமே ” என்றார்.
ஸ்ரீ திருமலை நம்பி, ஸ்ரீ உடையவர் விருப்பம் தெரிவித்து, அவர் திருவுளம் பற்றி வந்ததாகச் சொல்லிக் கிளம்பினார்.
இதில் இரு சுவையான விஷயங்கள்:
1. தம் ஆசார்யர் காஞ்சியில் எப்படி உள்ளாரோ என்று ஸ்ரீ எம்பெருமானார்க்கு ஓர் அஸ்தானே (காரணமற்ற ) பயம்,
அவர் மீது இருந்த அன்பினால். இந்தத் தலைவி போன்ற நிலை.
2. ஆசார்யர்கள் எவ்வளவு நைச்சியம் , பணிவு காட்டினார்கள் என்பது.

தலைவன் தலைவி விஷயம் சொல்லும் பாசுரத்துக்கு
ஸ்ரீ எம்பெருமானார்/ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் அன்புப் பிணைப்பைப் பேசியது நினைக்கத் தக்கது.

—————–

பாசுரம் 9:இதில் தலைவன் தலைவியைத் தன்னால் நீங்கி இருக்க இயலாமையைத் தெரிவிப்பதாக
ஸ்ரீ ஆழ்வார் தமக்கும் ஸ்ரீ எம்பெருமானுக்கு உள்ள அப்ருதக் ஸ்திதியைப் பாடுகிறார்:

திண் பூஞ்சுடர் நுதி, நேமி அஞ்செல்வர் விண்ணாடனைய
வண்பூ மணி வல்லீயை ஆரே பிரிபவர் தாம்?……

ஸ்ரீ எம்பெருமானார் ஒரு ஸ்ரீவைஷ்ணவரை, ஸ்ரீ பிள்ளை உறங்கா வில்லி தாஸரிடம் சென்று
தமக்கு வேண்டிய நெல் வாங்கிக் கொள்ள அனுப்பினார். அவர், ஸ்ரீ தாஸரிடம் சென்று உடனே நெல் பெறாமல் திரும்பி விட,
ஸ்ரீ உடையவர் துணுக்குற்று என்ன ஆயிற்று நெல் என் பெறவில்லை? என்ன,
அவர், “அடியேன் சென்ற போது தாஸர் கண்ணும் கண்ணீருமாக அழுது கொண்டிருந்தார்” என்றார் .
ஸ்ரீ உடையவர் யாதோ ஒரு வருத்தம் பற்றி, திருவரங்கத்திலிருந்து திருமலை செல்ல நினைத்திருந்ததால்
ஸ்ரீ தாஸர் இந்நிலையில் இருந்தார் என்று எம்பெருமானார் புரிந்து கொண்டார்.

மணிவல்லி என்பது சம்பிரதாயத்தில் நெறி வழுவாது அநந்யார்ஹ ஶேஷத்வம் பேணும் ஆத்மாவைக் குறிக்கும்.

இங்கு ஸ்ரீஎம்பெருமானாரின் ஆருயிர்ச் சீடரான ஸ்ரீபிள்ளை உறங்கா வில்லி தாஸருக்கு இது இயல்வாகப் பொருந்துகிறது.

————

பாசுரம் 10:-இப்பாசுரத்தில் ஆழ்வாரின் அவயவ அழகிலும் இனிய சொல் திறனிலும் ஈடுபட்ட அடியார்கள்
அவரைப் பற்றிப் பிரிவு தாங்காது சொல்வது போல, நாயகன் நாயகியைப் புகழும் வகையில் பொருள் வருகிறது.

“உமது வாயோ? அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ? அடும் தொண்டையோ? அறையோ! இதறிவரிதே”–எனும் பின் அடிகளில்,
இந்த இதழ்கள் என்ன வாயா, அல்லது கிளியும் நாணும் அவயவமா, அல்லது (சிவப்புப் பொருந்திய)
கொவ்வைப் பழமா என்று அழகை வியந்து சொல்வது.

நம் ஆசார்யர்கள் தமது பூர்வர்களின் திருமேனியிலும் மிக ஈடுபாடும் பக்தி பாரவச்யமும் கொண்டிருந்தமைக்கு
இதைக் காட்டி, ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ திருக்கோட்டியூர் நம்பி தொடர்பான ஓர் ஐதிஹ்யம் சொல்லப்படுகிறது.
அதாவது, எப்போதும் ஸ்ரீ நம்பிகள் திருவரங்கம் வந்து திரும்பத் திருக்கோட்டியூர் புறப்படுகையில்
ஸ்ரீ எம்பெருமானார் மரியாதை நிமித்தமாக அவரை சிறிது தூரம் வரை பின் தொடர்வார். அப்போது ஒருமுறை,
“அடியேனுக்கு உய்வு பெற எப்போதும் தியானிக்க ஒன்று அருளிச் செய்ய வேண்டும்” என்கிறார்.
ஏற்கெனவே அவரிடம் ரஹஸ்ய உபதேஶம் பெற்றவர் இப்படி வேண்ட, ஸ்ரீ நம்பிகளும்,
“அடியேன் ஆற்றில் இறங்கி நீராடும்போது ஆமை முதுகு (கூர்மாசனம்) போல் தெரியும் அடியேன் ஆசார்யர்
ஸ்ரீ ஆளவந்தார் முதுகுத் தோற்றத்தையே அவர் திருநாடு எய்தியபின் நினைத்திருப்பேன். நீரும் அப்படியே இரும்” என்றார்.
இதனால் ஆசார்யர்களின் திருமேனியில் ஶிஷ்யர்களின் ஈடுபாடு அவர்களின் உபதேஶத்திற்போன்றே அவசியம் என்றதாயிற்று.

ஆசார்யர்கள் தம் ஶிஷ்யர்களின் ஆத்ம க்ஷேமத்தைப் பாதுகாப்பார்கள்;
ஶிஷ்யர்கள் அவர்தம் திருமேனி நலத்தைப் பேணுவார்கள்.

ஆசார்யர் ஶிஷ்யர் உறவு பற்றி, ஸ்ரீ மணவாள மாமுனிகள், தம் ஸ்ரீ உபதேஶ ரத்தின மாலையில்:

“ஆசார்யன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்
தேசாரும் சிச்சன் அவன் சீர்வடிவை ஆசையுடன் நோக்குமவன்” என்று அருளினார்.

திருவிருத்தம் ஜீவ/பர நாயக/நாயகி பாவத்தில் அமைந்திருந்தாலும்,
பகவத் ஶேஷத்வத்தை விட பாகவத ஶேஷத்வமே இறுதி நிலை என்பதை ஆழ்வாரின் இப்பாசுரங்களில்
நம் பூர்வாசார்யர்கள் கண்டு அநுபவித்து நமக்குக் காட்டியுள்ளனர்.

—————-

பாசுரம் 11–அரியன யாம் இன்று காண்கின்றன கண்ணன் விண் அனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவென ஞாலம் எய்தற்கு
உரியன ஒண் முத்தும் பைம் பொன்னும் ஏந்தி ஓரோ குடங்கைப்
பெரியன கெண்டைக் குலம் இவையோ வந்து பேர்கின்றவே.

தலைவியுடன் இருக்கும் தலைமகன் தான் பொருள் ஈட்டுவதற்காக அவளைப் பிரிந்து செல்ல வேண்டும்
என்பதை நேர்படச் சொல்லாமல் எல்லாரும் பொருள் சம்பாதிப்பதற்கு அவ்வப்போது தத்தம் குடும்பத்தை விட்டுப்
பிரிந்து செல்வதுண்டு என்றான்.
இவன் தான் பிரிந்து செல்லப் போவதையே இப்படிக் குறிப்பாக உணர்த்துகிறார் என்று அவள் நினைத்தாள்.

கூடி இருக்கும் வேளையில் பிரிவை நினைப்பதோ அல்லது நினைப்பூட்டுவதோ மிகவும் துன்பம் விளைவிப்பது.

இதை ஸ்ரீ பட்டர் சுவைபடக் கூறி விளங்க வைத்தது ஓர் ஐதிஹ்யம்.
அவர் திரு அத்யயனத் திருநாளில் எல்லாரும் திருவாய்மொழி அநுபவத்திலும் ஸ்ரீ நம்பெருமாள் அழகிலும் ஆழ்ந்துள்ளனர்;
இவ்வேளையில் இந்த ஏகாதஶி எனும் (பட்டினி கிடப்பதாகிய) உடல் வலிமை குறைந்து
பகவதநுபவத்துக்கு இடையூறாக ஏற்படுத்தியது யார் என்று வெறுத்துச் சொன்னதாகக் கூறுவர்.

————–

பாசுரம் 16:-பலபல ஊழிகளாயிடும் அன்றி ஒர் நாழிகையைப்
பலபல கூறிட்ட கூறாயிடும் கண்ணன் விண்ணனையாய்
பலபல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பலபல சூழலுடைத்து அம்ம! வாழி இப்பாயிருளே.

தலைவனைப் பிரிந்த தலைவி தோழியிடம் இருளை வியந்து சொல்வதாக இப்பாட்டு உள்ளது.
அவனோடு இருந்து, பின் பிரிந்துள்ள போது நேரம் ஊழி போல் நீளுவதாக அவள் வருத்தம்.
அந்த இருளும் ஸ்ரீ கண்ணன் போல் நிறம் கொண்டுள்ளது. ஸ்ரீ ஆழ்வார் தம் பாசுரங்களில் ஸ்ரீ எம்பெருமானை
நினைவுறுத்தும் அசேதனங்களால் ஸ்ரீ பராங்குஶ நாயகி படும் துயரைக் குறித்துள்ளார்.

இதை விளக்கும் ஸ்ரீ நஞ்சீயர், ஸ்ரீராமாயணத்தில் ஸ்ரீ பெருமாளைக் காட்டில் விட்ட பின் ஸ்ரீ குகனோடு மூன்று நாட்கள்
இருந்து பின் ஸ்ரீ அயோத்தி செல்லும் ஸ்ரீ ஸுமந்திரனை நினைவு கூர்ந்தார்.

“குஹேன ஸார்தம் தத்ரைவ ஸ்திதோஸ்மி திவஸான் பஹூன்” எனும் ஶ்லோகத்தை மேற்கோள் காட்டினார்.
ஶிஷ்யர் ஸ்ரீ நம்பிள்ளை, “ஸுமந்திரன் குகனோடு மூன்று நாள்களே இருந்தான். ஆனால் பல நாள்கள் எனப் பொருள்பட
‘திவஶான் பஹூன்’ என்பானேன்” என்று வினவ,
ஸ்ரீ ஆசார்யர், அதற்கு, “ஒன்றைப் பிரிந்திருக்கும் போது, அதை நினைவூட்டுபவர் முன் இருந்தால்
பிரிவு நெடிதாகத் தோன்றுமே. ஸ்ரீ குகனோடு இருந்ததால் ஸ்ரீ பெருமாளை நெடு நாள் பிரிந்த மாதிரி
ஸ்ரீ ஸுமந்திரனுக்குத் தோற்றியது” என்றார்.

காதலர்க்குப் பிரிவின் போது காலம் நீளுவது போல் ஸ்ரீ எம்பெருமானைப் பிரிந்த ஸ்ரீ ஆழ்வார்க்கும்,
அவரைப் பிரிந்த அடியார்க்கும் தோற்றும். பாகவத விஶ்லேஷமும் (பிரிவும்) பகவத் விஶ்லேஷம் போன்றே உள்ளது.
ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களில் பாகவத ஸமாகமம் (சேர்த்தி) பகவத் ஸமாகமம் போன்றே வலியுறுத்தப்படுகிறது.

நெடுமாற்கடிமை, பயிலும் சுடரொளி என இரு திருவாய்மொழிகள் பாகவத ஶேஷத்வத்தை வியந்து பேசும்.
பொலிக பொலிக திருவாய்மொழி அடியார்களால் கலியும் கெடும் என்பதை அவர்கள் வரவை முன் கூட்டி இயம்பும்.

————-

பாசுரம் 30:-அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேன்மினோ கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி அவரிடை நீர்
இன்னம் சொல்லீரோ? இதுவோ தகவு என்று இசைமின்களே!

ஸ்ரீ எம்பெருமான் மற்ற தேவர்களைப் போல் அன்றி சரணடையவும், உபாஸிக்கவும் எளியன் என்பதை
ஸ்ரீ ஆழ்வார் பல வகைகளிலும் காட்டுவார். அத்துடன், அவன் தன்னிடம் வந்தவரிடம் அல்லது தானே
சென்றடைந்தவரிடமும் ஒன்றும் எதிர்பார்க்க மாட்டான் என்பதையும் பலப்படச் சொல்வார்.
ஸ்ரீ ஆழ்வார்கள் அனைவருமே ஒரு மிடறாகக் காட்டும் அரும்பொருள் இது.

இப்பாசுரத்துக்கு விளக்கம் அளிக்கும் போது ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் ஓர் அத்புதமான விளக்கம் அருளினார்:
அதாவது, தன் நாயகனைக் காணச் சென்ற தன்னால் அனுப்பப்பட்ட தன் நெஞ்சு தான் தூது செல்வதை
மறந்து பெருமானோடே நின்று தங்கிவிட
அந்த நெஞ்சுக்குப் பறவைகளைப் பராங்குஶ நாயகி தூது அனுப்புகிற சூழல் இப்பாசுரத்தில் வருகிறது.
இதில் ” தொழுது இரந்தேன்” என்கிறார் ஆழ்வார். தொழுதால் போதாதோ இரங்கவும் வேண்டுமோ?
ஸ்ரீ எம்பெருமான் சரணாகதனிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டான் என்பதை விளக்க,
ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் இவ்விடத்துக்குச் சேர

“அந்யத் பூர்ணாத் அபாம் கும்பாத் அந்யத் பாதவநே ஜநாத் அந்யத் குசல ஸம்ப்ரஶ்நாத் ந ச இச்சதி ஜநார்தந:
என்கிற அழகான ஶ்லோகத்தை எடுத்தார்.
ஸ்ரீ கிருஷ்ணன் ஒரு பூர்ண கும்பம், திருவடி விளக்குவது, நலமா என்று அன்புடன் விசாரிப்பது இது தவிர
வேறு எதுவும் எதிர்பார்க்க மாட்டான் என இந்த ஸ்ரீ மஹாபாரத ஶ்லோகம் ஸ்ரீ கிருஷ்ணனின் எளிமையை விளக்குகிறது.

இது கூட ஒருக்கால் ( ஒரே ஒரு முறை) செய்தால் போதுமா என்று ஶிஷ்யர்கள் கேட்டபோது,
ஸ்ரீ ஆச்சான் “ஒருக்கால் என்ன அரைக்கால் போதும்” என்றார்!
அதாவது உபசாரம் செய்யவே வேண்டா
மனத்தால் செய்ய நினைத்தாலே போதும் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்து விடுகிறான்.
இவ்வாறு ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் இறைவனின் எளிமையை விளக்கினார் என்பர்.

————-

பாசுரம் 38–கடமாயினகள் கழித்துத் தன்கால் வன்மையால் பலநாள்
நடமாயின புக்கு நீர்நிலை நின்றதவம் இதுகொல்?
குடமாடி இம்மண்ணும் விண்ணும் குலுங்க உலகளந்து
நடமாடிய பெருமான் உருவொத்தன நீலங்களே.

இது தலைவனைப் பிரிந்த தலைவி போலி கண்டு மகிழ்தல் எனும் துறையில் வருகிற பாசுரம்.
காதலர் பிரிந்திருக்கும் போது ஒருவர் மற்றவரை நினைந்து அவர் போன்றவற்றை அவராகவே பாவித்து
அப்போதைக்குப் பிரிவுத் துயரை மறப்பது ஒன்று உண்டே.
ஸ்ரீ ஆழ்வார் இப்படியில் அனுகாரம் என்கிற ரீதியில் பலகாலும் ஸ்ரீ எம்பெருமானை அனுபவிக்கிறார்.
ஆனது பற்றியே ஸ்ரீ ஆழ்வார்களின் பாசுரங்களில் ஆன்மிக விஷயங்களை விவரிக்கும் போதும் ஓரோர் இடம், திவ்ய தேஶம்,
அவ்விடத்து இயற்கை எழில், அவ்விடத்து மாந்தர் தோற்றச் சிறப்பு, கல்வி, செல்வ மேன்மைகளைச் சொல்வதும்.
இதை ஸ்ரீ ஈடு வ்யாக்யானத்தில் ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ ஆழ்வார் இவ்விபூதியும் அவன் உடைமை என்பதால் அனுபவிக்கிறார் என்பர்.
உண்மையில் அருளாளர்களான ஆழ்வார்களும் ஆசார்யர்களும் தாமும் அனுபவித்து நம்மையும் அனுபவிப்பிக்கிறார்கள்.

இப்பாசுரத்தில் மண்ணும் விண்ணும் அளந்த ஸ்ரீ எம்பெருமான் திருமேனி நிறத்தை நீலோத்பல மலர்கள்
நாயகிக்கு நினைப்பூட்டியது தெரிகிறது. ஒரு மலரைக் கண்டாலும் அதன் நிறம் ஸ்ரீ எம்பெருமானை நினைவூட்டுகிறது.
இந்த விபூதியில் உள்ளன யாவும் அவன் ஸ்வரூபம் என்பதால் அதில் அவளுக்கு மகிழ்ச்சியும் மன நிறைவும் வருகிறது.

ஸ்ரீ ஆளவந்தாரின் ஆசார்யரும், ஸ்ரீ நாதமுனிகளின் சீடரும் ஆன ஸ்ரீ குருகைக் காவலப்பனை அவரது சீடர் ஒருவர்,
“ஜகத் ஈச்வரர்களுக்கு என்ன தொடர்பு?” (அதாவது உலகுக்கும் எம்பெருமானுக்கும் என்ன ஸம்பந்தம்?) என்று கேட்டார்.
அதற்கு குருநாதர் “இந்த உடலுக்கும் ஆத்மாவுக்கும் என்ன ஸம்பந்தமோ அதே தான் உலகுக்கும் ஈச்வரனுக்கும் .” என்கிறார்.
சீடர் மேலும், “எனக்கு ஸ்ரீ எம்பெருமானை நினைப்பதற்கு ஒரு வழி சொல்லித் தர வேண்டும்” என்று வேண்டினார்.
அதற்கு ஸ்ரீ குருகைக் காவலப்பன், “நான் உமக்கு எம்பெருமானை எப்போதும் நினைக்க வழி சொல்லித் தருகிறேன்;
ஆனால், நீர் எனக்கு அவனை எப்படி மறப்பது, நினையாமல் இருப்பது என்று சொல்லிக் கொடும்!” என்றாராம்.

நீல மலர்களைக் கண்டதும் ஸ்ரீ பராங்குஶ நாயகிக்கு ஸ்ரீ எம்பெருமான் நினைவு வந்தது.
ப்ரக்ருதியில் உள்ள அனைத்திலும் “ஶரீரம் யத் அவாப்னோதி” என்று ஸ்ரீ கீதையில் சொன்னபடி அவனே
நிறைந்திருப்பதால் எந்தப் பொருளைக் கண்டாலும் ஆசார்யருக்கு அது ஸ்ரீ எம்பெருமானின் ஶரீரமாகவே தோற்றுகிறது.
அவ்வாறிருக்க ஸ்ரீ எம்பெருமானை எவ்வாறு நினையாது இருக்க முடியும் என்று கருத்து.

—————–

பாசுரம் 43–கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியதோர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்து உம்பரப்பால் மிக்கு மற்றெப்பால் யவர்க்கும்
எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே.

தலைவி ஸ்ரீ பராங்குஶ நாயகி தலைவன் கண்ணனின் உருவ எழிலை உரைக்கும் பாசுரம் இது.
இதில் ஸ்ரீ ஆழ்வார், ஸ்ரீ எம்பெருமானின் திருக்கண் அழகை முதலில் வியக்கிறார்;
பின்பு தம்மை அணைக்கும் கையும் தாமரை போன்றது என்கிறார்;
இவ்வாறு வியந்து அனுபவித்துப் போற்றியவர் திருவடிகளையும் தாமரை என்று நினைத்துப் போற்றுகிறார்.
திருமேனியோ கருமுகில் போலாகி அவன் வள்ளன்மையும் குளிர்த்தியும் தெரிவது என்கிறார்.

இதை விவரித்தபோது ஒரு சீடர், கண்கள், கைகள், திருமேனி இவற்றை எல்லாம் விவரித்து
எதற்காகத் திருவடியைப் பேசுகிறார் என்று ஐயம் எழுப்பினார்.
இதற்கு ஸ்ரீ பிள்ளைப் பிள்ளை ஆழ்வான் மிகவும் சுவைபட, “குழந்தைக்குத் தாயின் முலை போல
அடியார்க்கு எம்பெருமானின் திருவடிகள் ; அது தாயின் பால் உண்டு பின் தாயின் முகம் நோக்கும்.
அதே போல் இவர்களும் எம்பெருமானின் ஸர்வ அவயவ ஸௌந்தர்யங்களையும் கண்டு பருகினாலும்
அவனது திருவடிகளிலேயே நோக்காய் இருப்பர்” என்று விளக்கினார்.

—————

பாசுரம் 44–நிறமுயர் கோலமும் பேரும் உருவும் இவை இவை என்று
அறமுயர் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கங்கெல்லாம்
உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி ஒன்றும்
பெற முயன்றார் இல்லையால் எம்பிரான பெருமையே.

இப்பாசுரம் தலைவி தலைவன் பெருமையை உணர்த்துவதாக அமைந்தது.
ஸ்ரீ எம்பெருமான்பால் மிக்கிருக்கும் கணக்கற்ற மிகு நலன்களை எண்ணுவதோ முழுமையாக விரித்துரைப்பதோ இயலாது.
அவனது ஈடற்ற தோற்றப் பொலிவு இது என்றவாறு சிலர் சில சொல்லலாகும்.
அல்லது அவன் திருநாமங்கள் சிறப்பு என்று சில சொல்லக்கூடும்.
அவனது திவ்ய அவயவ ஸௌந்தர்ய லாவண்யாதிகளை ஒரு சிலர் சொல்ல முயற்சி செய்யலாம்.
ஆயினும் ஒவ்வோரிடத்திலும் அவன் திவ்ய ஞான ஒளி விளக்காய் அவர்களுக்குத் தோற்றியதன்றி இன்னது,
இவ்வளவு இவன் படி என்று சொல்ல முடிவதில்லை.
“சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ” என்பதற்கேற்ப எப்போதும் சொல்லையும்
அதனால் பெறப்படும் பொருளையும் கடந்து நிற்கிறான்.
அப்ராப்ய மனஸா ஸ:.

இப்படிப்பட்ட ஸ்ரீ எம்பெருமானின் திருநாம மஹிமை அதன் இனிமை இவற்றை நம் ஆழ்வார்களும் ஆசார்யர்களும்
வாய் வெருவிய படியே இருப்பர். இந்தப் பாசுர விளக்கத்தில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை
ஓர் அழகிய ஐதிஹ்யத்தைக் காட்டியருளுகிறார்.

ஸ்ரீ எம்பெருமானாரின் மாதுலரும் ஆசார்யருமான ஸ்ரீ திருமலை நம்பி தமது அந்திம தஶையில் இருந்த போது
ஸ்ரீ கணியனூர் சிறியாத்தான் அவரைக் காணச் சென்றார்.
ஸ்ரீ நம்பிகள், அவரை, பட்டரைக் குறித்து, தமக்குத் தஞ்சமாக நினைத்திருக்கும் திருநாமம் எது எனச் சொல்ல வேண்டும்
என்று வேண்டினார். கேட்பவர் ஸ்ரீ எம்பெருமானார்க்கே ஆசார்யர். ஆகவே, என்ன சொல்வது என்று வெட்கமும் திகைப்பும்
அடைந்த ஸ்ரீ சிறியாத்தான் மௌனமாய் இருந்தார்.
ஸ்ரீ நம்பிகள் விடாமல், “தாஶரதீ இது மௌனம் ஸாதிக்கும் விஷயமன்று – சொல்ல வேணும்” என்றார்.
ஸ்ரீ சிறியாத்தான் , “நாராயணன் போன்ற திருநாமங்களும் சொல்வார்;
ஆனால் விரும்பியிருப்பது அழகிய மணவாளப் பெருமாள் என்பதையே” என்றார் .

“இது கணவன் பேரைச் சொல்வதுபோல் உள்ளது; ஆயினும் ஸ்ரீ பட்டர் நினைத்து சொல்வதைத் தவிர
வேறு சிறப்பான தஞ்சம் (உபாயம்) இல்லை” என்று அருளிச் செய்த ஸ்ரீ திருமலை நம்பிகள்
“அழகிய மணவாளப் பெருமாளே ஶரணம்” என்று கூறியவாறே திருநாடு அடைந்துவிட்டார்.

தமக்குப் பின் ஸ்ரீ பட்டரையே ஆசார்யராகக் கருதும்படி ஸ்ரீ எம்பெருமானார் கட்டளை இருந்ததால்
அவர் தம் சீடர்கள் அனைவரும் அப்படியே ஒழுகினர்.
ஆதலால், மூத்தவராய் எழுந்தருளியிருந்த ஸ்ரீ நம்பிகளும் ஸ்ரீ பட்டர் திருவாக்கை ஶிரஸா வகித்து அனுஷ்டித்தார்
என்பதில் அவர் பெருமையும், ஆசார்யர்க்கு உண்டான தனித்துவமும், திருநாமத்துக்குள்ள ஏற்றமும் தெளிவாகிறது.

இப்பாசுரத்தில் ஸ்ரீ எம்பெருமான் திருக்கோலம், திருநாமம், திருவுருவம் ஆகிய மூன்றும் குறிக்கப் பெறுகின்றன.
ஸ்ரீ ஆழ்வார் எப்போதும் எம்பெருமானை ஸ்வரூப, ரூப , குண வைபவங்களைச் சிந்தித்தும் சொல்லியுமே போது போக்குபவர்.
இந்த அநுபவத்தை அடியொற்றியே ஆசார்யர்களும் குண அநுபவமும் நாம ஸங்கீர்த்தனமும் தம் வாழ்வில்
முக்கிய அம்ஶங்களாகவும் இவற்றையே பகவத் கைங்கர்ய வெளிப்பாடுகளாகவும் அமைத்துக் கொண்டனர்.

இப்பாசுர வ்யாக்யானத்தில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ திருமலை நம்பிக்கு ஸ்ரீ எம்பெருமான் திருநாமத்தில்
இருந்த ஆத3ரத்தை விளக்கினார். அவரே இந்த “பேரும் ” என்பதை விளக்க இன்னோர் ஐதிஹ்யமும் காட்டுகிறார்.
ஸ்ரீ ஆச்சி மகன் எனும் ஆசார்யர் தமது இறுதி நிலையில் உணர்வற்று இருந்தார்.
ஆசார்ய ஶ்ரேஷ்டரான ஸ்ரீ பராஶர பட்டர் அவரைக் காண எழுந்தருளினார்.
அவர் அருகே சென்று அவர் செவியில் மிக மென்மையாக “அழகிய மணவாளப் பெருமாள் திருவடிகளே சரணம்” என்று கூறினார்.
இதை பட்டர் தம் திருவாக்கால் ஸாதித்த மாத்திரத்தில் ஸ்ரீ ஆச்சி மகன் தம் பூர்வ வாசனையால் ப்ரக்ஜ்ஞை வர பெற்று
அவர் தாமும் அத் திருநாமத்தை உச்சரித்தவாறே உடனே ஸ்ரீ திருநாட்டுக்கு எழுந்தருளினாரென்று வரலாறு.
ஸ்ரீ எம்பெருமான் திருநாமம் உய்திக்கு வழி என்பதை ஆசார்யர்கள் இவ்வாறு காட்டுகிறார்கள்.

————–

பாசுரம் 44:“பேரும் …”
ஸ்ரீ எம்பெருமான் திருநாம மஹிமையை ஸ்ரீ திருவிருத்தப் பாசுர வ்யாக்யானத்தில் காட்டியருளிய
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை இதற்கு மற்றுமொரு நிகழ்வாக
ஸ்ரீ ஆளவந்தார் திருமகனார் ஆகிய ஸ்ரீ சொட்டை நம்பி வைபவமும் கூறுகிறார்.
ஸ்ரீ நம்பிகள் தாம் இறுதி நிலை அடையும் தருவாயில் ஆசார்யர்கள் அனைவரும் அவர் திருமாளிகை சென்று, வணங்கி,
“தேவரீர் இப்போது திருவுள்ளத்தில் விரும்புவது என்ன?” என்று வினவினர்.
அவர், “அடியேன் ஸ்ரீ வைகுண்டம் சென்றால் அங்கே ஸ்ரீ வைகுண்ட நாதன் திருமுகம் நம்பெருமாள்
திருமுகம் போலே குளிர்ந்து இராமல் போனால், வானைக் கிழித்துக்கொண்டு மீளவும் இங்கேயே
வந்து விடுவேன் என்று எண்ணி இருக்கின்றேன்” என்றாராம்!

ஆசார்யர்கள் ஸ்ரீ நம்பெருமாள் எனும் திருநாமத்தின் மீதும், அவரது திருமேனி அழகிலும்
எவ்வளவு ஈடுபாடும் ஆழ்ந்த அழகுணர்வும் கொண்டிருந்தனர் என்பது வியக்கத் தக்கது.

———-

பாசுரம் 51:-மலை கொண்டு மத்தா அரவால் சுழற்றிய மாயப் பிரான்
அலை கண்டுகொண்ட அமுதம் கொள்ளாது கடல் பரதர்
விலை கொண்டு தந்த சங்கம் இவை வேரித் துழாய் துணையாத்
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே.

கடற்கரையில் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி கடல் அலை ஓசைக்கு ஆற்றாமல் வருந்திச் சொல்லுகிற
இப்பாசுரத்தில் ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானின் கருணையைக் காட்டுவதாக நம் முதலிகள் நிர்வஹிப்பர்.

ஸ்ரீ எம்பெருமான் மந்தர மலையை மத்தாக்கி, வாஸுகிப் பாம்பை நாணாக்கி ஸமுத்ர மந்தனம் செய்து அமுதம் எடுத்தான்.
அந்த மாயன் இராம பிரானாக வந்த போது கடல் கடந்து சென்று பிராட்டியை மீட்க, கடலைக் கடக்கவேண்டி வந்தது.
ஸ்ரீ விபீஷணன் சொன்னபடி ஸ்ரீ பெருமாள் ஸமுத்திர ஶரணாகதி செய்து கேட்டும்
கடல் அரசன் வராது தாழ்த்தியதால் சினம் கொண்ட ஸ்ரீ பெருமாள் ஒரே அம்பினால் இக்கடலை வற்றச் செய்வேன்
என்று சூளுரைக்க, அப்போது கடல் அரசன் வணங்கி வந்து நின்றான்.

இந்த சந்தர்ப்பத்தை விளக்கிய ஸ்ரீ பட்டர் அதற்குத் தக்க ஸ்ரீ வால்மீகி ராமாயணம்
யுத்த காண்ட ஶ்லோகம் ஒன்றைச் சொன்னார்:

ரக்த மால்யாம்பரதர: பத்மபத்ர நிபேக்ஷண: ஸர்வபுஷ்ப மயீம் தி3வ்யாம் ஶிரஸா தாரயன் ஸ்ரஜம்।
ஜாத ரூப மயைஶ்சைவ தபநீய விபூஷிதை: ஆத்மஜாநாம் ரத்னானாம் பூஷிதௌ பூஷணோத்தமை:।। -6-22-20
என்கிற அழகிய ஶ்லோகத்தைச் சொல்லி விளக்கினார்.
இந்த ஶ்லோகத்தில் ஸ்ரீ வால்மீகி, கடல் அரசன் பெருமாளைக் காண வந்து வணங்கியபோது
சிவந்த மாலைகளைச் சூடி, அழகிய மணிகள் ஒளிரும் ஆப4ரணங்களை அணிந்து வந்தான்
என்றுள்ளதைச் சுட்டி ஶிஷ்யர் ஒருவர்,
“ஸ்ரீ பெருமாள் மிக்க சினத்தோடு வில்லையும் அம்பையும் ஏந்தி கடலை வற்றடிப்பேன் என்று நிற்கையில்
அவன் இவ்வளவு அலங்கரித்து வந்தது என்ன துணிவில்?” என்று வினவினார்.
அதற்கு ஸ்ரீ பட்டர், “கிணற்று நீர் சூடாகி , கிணற்றைச் சுடுமோ? அதன் தன்மை குளிர்ந்து இருப்பதன்றோ?
ஸ்ரீ எம்பெருமான் தன்னிடம் கார்யம் கொள்ள ஓர் அச்சுறுத்தலாக வில்லை வளைத்தானே அல்லாமல்
தன்னை ஒருபோதும் தண்டிக்க மாட்டான் என்ற உணர்வு இருந்ததால் கடல் அரசன் இவ்வாறு வந்தான்”
என்று சாதுர்யமாக ஸமாதானம் கூறியருளினார்.

எம்பெருமான் எப்போதும் எவரையும் ஒறுப்பவனல்லன். அவன் ஶாஸ்த்ர விதி மீறுபவரையும் இறுதி வரை
ஏதாவது ஒரு சாக்கில் மன்னிப்பதையே விரும்புபவன்.
இராவணன், ஶிஶுபாலன் போன்றோரிடத்தும் மித்ர பாவநை இருந்தாலே போதும் என்றவன்.
உபாய நைரபேக்ஷ்யம் (ஓர் உபாயத்தை எதிர்பாராமை) போன்றே அபராத ஸஹத்வமும்
அவனது விஶேஷ இயல்பு என்பதை ஸ்ரீ ஆழ்வார் பல இடங்களிலும் பலவாறாகக் காட்டியருளுகிறார்.

ஸ்ரீ எம்பெருமானுக்கு எவர் மீதும் வெறுப்போ காழ்ப்போ கிடையாது
பாரபக்ஷமும் இல்லை என்பது ஶாஸ்த்ர ஸித்தம். அதையே ஸ்ரீ பட்டர் விளக்கினார்.

————

பாசுரம் 53:–வாராயின முலையாள் இவள் வானோர் தலை மகனாம்
சீராயின தெய்வ நன்னோய் இது தெய்வத் தண்ணந்துழாய்த்
தாராயினும் தழை ஆயினும் தண் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே.

இது கட்டுவிச்சி பேச்சாக வரும் பாசுரம். சிறிய திருமடலிலும் திருமங்கை ஆழ்வாரின் கட்டுவிச்சி
தலைமகளின் நோய் ஸ்ரீ திருமால் மீதான காதல் நோய் என்பதைப் பரக்கச் சொல்லி அதற்கு மருந்து
ஸ்ரீ எம்பெருமான் தொடர்பானவற்றையே ஸ்மரிப்பதும், ஸ்மரிப்பிப்பதும் என்று அவனது
பல விப4வ அவதார சேஷ்டிதங்களை விவரிப்பாள்.

இக்கட்டுவிச்சி, தாயரிடம் உங்கள் மகளைப் பிடித்திருப்பது தெய்வ நன்னோய் ;
இதைத் தணிக்க எம்பெருமானின் திருத்துழாய் மாலையோ, தழையோ, அல்லது துளசிக் கொம்பு கிளையோ,
அல்லது அடி வேரோ கொண்டு வீசினால் அவள் துன்பம் தணியும் என்கிறாள்.

இப்பாசுரத்தை மிக அழகாக ஸ்ரீ பட்டர் விரித்துரைத்தார். அது கேட்டு மிகவும் மூத்த ஆசார்யர்களும்
ஸ்ரீ பட்டரின் பேரறிவாண்மையையும் பாசுரங்களை விளங்கும் பான்மையையும் பாராட்டினார்கள்.
இதைப்போல் பல நிகழ்வுகளும் ஸ்ரீ குருபரம்பரா ப்ரபாவம் முதலிய நூல்களில் காணக் கிடைக்கும்.
அடியார்களைக் கொண்டாடுவது ஸ்ரீ எம்பெருமான் திருவுள்ளத்துக்கு மிகவும் உவப்பானது என்பதை இது காட்டும்.

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை தம் ஸ்ரீ திருவிருத்த வியாக்கியானத்தில் இப்பாசுரத்தை விளக்குகையில்
ஸ்ரீ எம்பெருமானார் தொடர்பான ஒரு ஐதிஹ்யத்தைக் கூறுகிறார்:

ஸ்ரீ நம்பெருமாள் ஒரு திருவிழாவின் போது திருப்புன்னை மரத்தடியில் எழுந்தருளியிருந்தார்.
அப்போது சற்று தொலைவில் ஸ்ரீ எம்பெருமானார் எழுந்தருளியிருக்க, ஸ்ரீ பெருமாளை வணங்க வந்த
ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸ்ரீ எம்பெருமானரையும் சேவித்தார்கள். இதுகண்ட உடையார் ஸுப்ரமணிய பட்டர் எனும் அரசு அதிகாரி,
ஸ்ரீ சுவாமியிடம், “ஸ்வாமி ஓர் ஐயம் அடியேனுக்கு: பெருமாள் ஸந்நிதியிலேயே சிலர் உம்மை வணங்குகிறார்கள்;
தேவரீரும் அவர்களைத் தடுப்பதில்லை; இது ஏன் ?” என்றார்.
அதற்கு ஸ்ரீ சுவாமி, “நீர் அரசு வேலை செய்பவர். ஒரு வேலையாக அரசரிடம் வருபவர் அரசரின்
காலணிகளைத் தம் தலையில் வைத்துக் கொண்டால் நீர் தடுப்பீரோ?
அல்லது அக்காலணிகள் தம்மைக் கொண்டாட வேண்டாம் என்று கூறுமோ?
அவர் உண்மையில் அக்காலணிகளையா கொண்டாடுகிறார்?
அவற்றைத் தலையில் அவர் சுமந்தால் மகிழ்ச்சி அரசனுக்கே அன்றி, அக்காலணிகளுக்கு அன்றே!
அடியாரைத் துதிப்பதால் சிறப்பு அடியாருக்கன்று, மகிழ்ச்சியும் பெருமாளுக்கே” என்று கூறினர்.

இதில் ஸ்ரீ எம்பெருமானாரின் பணிவும், எல்லாப் பெருமைகளும் ஸ்ரீ எம்பெருமானுக்கே எனும் கைங்கர்ய
மனோபாவமும், பாகவதருக்குத் தரும் சிறப்பு பகவானுக்கே சேரும் என்பதும் தெளிவாகிறது.

——————

பாசுரம் 56:
வியலிடமுண்ட பிரானார் விடுத்த திருவருளால்
உயலிடம் பெற்றுய்ந்தம் அஞ்சலம்தோழி! ஓர் தண் தென்றல் வந்து
அயலிடையாரும் அறிந்திலர் அம்பூந்துழாயின் இன் தேன்
புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன்களே .

தலைவன் இரவிடைக் கலந்தமையைத் தோழி தலைவிக்கு உரைத்தல் எனும் வகையில் இப்பாசுரம் அமைந்துள்ளது.

அகன்ற இடத்தை உடையவளான ஸ்ரீ பூமி பிராட்டி ஸ்ரீ எம்பெருமானிடம் தனக்கு உதவ வேண்டும் என்று கேட்டிலள்;
ஆகிலும் அருள் உணர்வுள்ள ஸ்ரீ எம்பெருமான் அவளை ப்ரளய நீரிலிருந்து மீட்டெடுத்தான்.
அதே போல் அவன் பராங்குஶ நாயகிக்கும் உதவுவான்.

இதை விளக்கும் போது ஸ்ரீ வங்கிபுரத்து நம்பி “நாம் உய்தி பெறத் தஞ்சமாக நினைக்கத் தக்கது எது” என்று
கேட்ட சீடர்களுக்கு, ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் க்ஷத்ர பந்து சொல்வதாக அமைந்துள்ள ஶ்லோகத்தைக் கூறி,
எவ்வகையிலும் தகுதி அற்ற, அல்ப அறிவினன் ஆகிய என்னைக் காக்க வேணும் எனும் ப்ரார்த்தனை தகும் என்கிறார்.
ஸ்ரீ எம்பெருமானார், அது அங்கனமன்று; காளியன் செய்த ப்ரார்த்தனை தகும் என்கிறார்..

ஸ்ரீ எம்பெருமானார்,”க்ஷத்ரபந்து ப்ரார்த்தனையில் நான் உன்னை வணங்குகிறேன் ஆகவே அருள் புரி என்றுள்ளது.
அவன் அருளை பெற க்ஷத்ரபந்து தான் வணங்கியதைக் காரணமாக் கூறுகிறான்.
ஆனால், மடுவில் ஸ்ரீ கிருஷ்ணனை முற்றாக வளைத்துத் துன்புறுத்திய காளியனோ,
தனது தகுதி எதையும் காட்டாமல், அதற்காக ஸ்ரீ எம்பெருமான் தன்னை ரக்ஷிக்க வேண்டும் என்னாத,
உன்னை அர்ச்சிக்கவும் துதிக்கவும் நான் ஆற்றல் இல்லாதவன், க்ருபா மாத்ரை மனோ வ்ருத்தி:
ப்ரஸீத மே – உன்னுடைய க்ருபை ஒன்றையே நீ காட்டி என்னை ரக்ஷித்தருள்வாய் என்றான்.
தான் வணங்கியதையோ, ப்ரார்த்தித்ததையோ ஒரு சாதனமாகக் காட்டாமல் ஸ்ரீ எம்பெருமான் க்ருபை
ஒன்றையே நினைத்த காளியனின் நினைவே நமக்குத் தஞ்சம்” என்று விளக்கினார்.

ஒரு பயனை எதிர்பாராமல், ஸ்ரீ எம்பெருமானை வணங்குவது நம் ஸ்வரூபம் என்பதால் மட்டுமே
அநன்ய ப்ரயோஜனராய் ப்ரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை
ஸ்ரீ ஸ்வாமி இதில் நல்ல உதாரணத்தோடு நம் மனதில் பதியும்படி அருளிச் செய்தார்.

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பூர்வாச்சார்யர் தனியன்கள் -/வாழி திருநாமங்கள் / மங்கள ஸ்லோகங்கள் —

January 14, 2021

ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமி அருளிச்செய்த ஸ்லோக குருபரம்பரை (ஸ்லோகம் )

அஸ்மத் தேசிகம் அஸ்மதீய பரமாச்சார்யான் அஸேஷாந் குரூந்
ஸ்ரீமல் லக்ஷ்மண யோகி புங்கவ மஹாபூர்ண யாமுநம் முநிம் ராமம்
பத்மவிலோசனம் நாதம் முநிவரம் ஸடத்வேஷிணம்
ஸேநேஸம் ஸ்ரியம் இந்திராஸஹசரம் நாராயணம் ஸம்ஸ்ரயே-

அஸ்மத் தேசிகம் : நம் ஆசார்யனையும்
அஸ்மதீய பரமாச்சார்யான் :ஆச்சார்யனுக்கும் ஆச்சார்யரான பரமாச்சார்யர்களையும்
அஸேஷாந் குரூந்: ஸ்வாமி மணவாளமாமுனிகள் வரை உள்ள மற்றுமுள்ள எல்லா ஆச்சார்யர்களையும்
ஸ்ரீமல் லக்ஷ்மண யோகி புங்கவ:யதிராஜரான எம்பெருமானாரையும்
மஹாபூர்ண : பெரிய நம்பியையும்
யாமுநம் முநிம்: ஸ்ரீ ஆளவந்தாரையும்
ராமம் : மணக்கால்நம்பியையும்
பத்மவிலோசனம்: உய்யக்கொண்டாரையும்
நாதம் முநிவரம் : ஸ்ரீமந் நாதமுனிகளையும்
ஸடத்வேஷிணம்: நம்மாழ்வாரையும்
ஸேநேஸம்: சேனைமுதலியாரையும்
ஸ்ரியம் இந்திராஸஹசரம்: பெரிய பிராட்டியையும், திருமகள் கேள்வனான
நாராயணம்: நாராயணனையும்
ஸம்ஸ்ரயே: ஆஸ்ரயிக்கிறேன்(தஞ்சமாகப் பற்றுகிறேன்)

————-

வாக்ய குருபரம்பரை.
அஸ்மத் குருப்யோ நம:
எனக்கு பஞ்சஸம்ஸ்காரங்களைச் செய்து வைஷ்ணவனாக்கிய எனது ஆசார்யனை வணங்குகிறேன்
அஸ்மத் பரமகுருப்யோ நம:
எனது ஆச்சார்யனின் ஆசார்யனையும் அவர் சமகாலத்து ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன்
அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:
எனது எல்லா ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயையும் திருவரங்கச் செல்வத்தையுமுடைய எம்பெருமானாரை வணங்குகிறேன்
ஸ்ரீ பராங்குச தாஸாய நம:
ஆச்சார்ய அபிமானம் ஆகிற செல்வமுடைய பெரியநம்பியை வணங்குகிறேன்
ஸ்ரீமத் யாமுந முநயே நம:
வேதாந்த சித்தாந்தமாகிற செல்வமுடைய ஆளவந்தாரை வணங்குகிறேன்
ஸ்ரீ ராமமிஸ்ராய நம:
ஆச்சார்ய கைங்கர்யம் ஆகிற செல்வரான மணக்கால் நம்பியை வணங்குகிறேன்
ஸ்ரீ புண்டரீகாக்ஷாய நம:
ஆச்சார்ய அனுக்ரஹம் ஆகிற செல்வமுடைய உய்யக்கொண்டாரை வணங்குகிறேன்
ஸ்ரீமந் நாதமுநயே நம:
ஸ்ரீவைஷ்ணவ குலபதியும், ப்ரபந்ந குலத்துக்கு முதல்வரும், பரமாச்சார்யரான நம்மாழ்வாரிடம்
அருளிச் செயல் செல்வம் பெற்றவரான ஸ்ரீமந் நாதமுநிகளை வணங்குகிறேன்
ஸ்ரீமதே சடகோபாய நம:
மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயை உடையவரான நம்மாழ்வாரை வணங்குகிறேன்
ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:
பெரிய பிராட்டியாரிடம் ரஹஸ்யத்ரய உபதேசம் பெற்ற மிக்க செல்வரான சேனை முதலியாரை(முதல்வர்) வணங்குகிறேன்
ஸ்ரீயை நம:
தேவதேவ திவ்ய மஹிஷியாய் எம்பெருமானுக்கு வல்லபையாய் புருஷகாரம் மிக்க செல்வமுடையவளை வணங்குகிறேன்
ஸ்ரீதராய நம:
திருவுக்கும் திருவாகிய செல்வனான எம்பெருமானை வணங்குகிறேன்.

————-

ஸ்ரீ பெரிய பெருமாள் –
ஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயம் ஆச்ரயே |
சிந்தாமணிம் இவோத்வாந்தம் உத்ஸங்கே அநந்தபோகிந: ||

ஸ்வயம் ப்ரகாசமானவனும், ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரின் திருமார்பில் ஒளிரும் அணிகலன் போன்றவனும்,
ஆதிசேஷன் உமிழ்ந்த மணி போல் ஜ்வலிப்பவனுமான ஸ்ரீரங்க விராமனான ஸ்ரீரங்கநாதனை அடியேன் சரண் அடைகிறேன்.

பெரிய பிராட்டியார் (பங்குனி உத்தரம்)
நம: ஸ்ரீரங்க நாயக்யை யத் ப்ரோ விப்ரம பேதத: |
ஈசேசிதவ்ய வைஷம்ய நிம்நோந்நதம் இதம் ஜகத் ||

எவளது புருவ நெறிப்பு ஜீவர்களின் நிலையைப் பாமரன் என்றோ பண்டிதன் என்றோ,
செல்வன் என்றோ தரித்ரன் என்றோ நிர்ணயிக்கிறதோ அந்த ஸ்ரீ ரங்க நாச்சியாரை வணங்குகிறேன்.

சேனை முதலியார் (ஐப்பசி பூராடம்)
ஸ்ரீரங்கசந்த்ரமஸம் இந்திரயா விஹர்தும்
விந்யஸ்ய விச்வசித சிந்நயநாதிகாரம் |
யோ நிர்வஹத்ய நிஸமங்குளி முத்ரயைவ
ஸேநாந்யம் அந்ய விமுகாஸ் தமஸி ச்ரியாம ||

ஸ்ரீ ரங்க சந்த்ரர்களாகிய பெரியபெருமாள் பெரிய பிராட்டியார் லீலைகளைச் செய்து போர,
எம்பெருமான் அனுமதித்த தம் திருவிரல் அசைவினாலேயே உயிர் உள்ளன மற்றும் உயிர் அல்லன
அனைத்தையும் நடத்தும் விஷ்வக்சேனர் திருவடிகளையே ஒரே புகலாகப் பற்றுகிறோம்.

நம்மாழ்வார் (வைகாசி விசாகம்)
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் ய தேவ நியமேன மத் அந்வயாநாம் |
ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

ஸ்ரீவைஷ்ணவ சந்தானத்தின் தலைவரும், ப்ரபந்நஜன கூடஸ்தரும் மகிழ மாலை அணிந்தவரும்
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ நிறைந்த திருவடிகளை உடையவரும், தாய் தந்தை மனைவி மக்கள் ஏய்ந்த
பெருஞ்செல்வம் எல்லாமும் ஆனவருமான நம்மாழ்வாரை வணங்குகிறேன்.

ஸ்ரீமந் நாதமுனிகள் (ஆனி அனுஷம்)
நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே |
நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே ||

எப்போதும் பகவத் த்யானத்தில் ஆழ்ந்து பக்திக்கு கடலானவரும், அளப்பரிய ஞானம் நினைப்பரிய
வைராக்யம் ஆகியன பெற்றவருமான ஸ்ரீமந் நாதமுனிகளை வணங்குகிறேன்.

உய்யக் கொண்டார் (சித்திரை கார்த்திகை)
நம: பங்கஜ நேத்ராய நாத: ஸ்ரீ பாத பங்கஜே |
ந்யஸ்த ஸர்வ பராய அஸ்மத் குல நாதாய தீமதே ||

ஸ்ரீமந் நாதமுனிகள் திருவடிகளில் தம் ஸர்வ பாரமும் விட்டுச் சரணடைந்த
நம் குல நாதரான புண்டரீகாக்ஷரை வணங்குகிறேன்.

மணக்கால் நம்பி (மாசி மகம்)
அயத்நதோ யாமுநம் ஆத்ம தாஸம் அலர்க்க பத்ரார்ப்பண நிஷ்க்ரயேண |
ய: க்ரீதவான் ஆஸ்தித யௌவராஜ்யம் நமாமிதம் ராமமேய ஸத்வம் ||

பட்டத்து இளவரசாகிய யாமுனாசார்யரைத் தூதுவளை தந்து மிக எளிதாகத் திருத்திப்
பணிகொண்ட ஸ்ரீராம மிச்ரர் எனும் அளவிலா ஸாத்விகோத்தமரை வணங்குகிறேன்.

ஆளவந்தார் (ஆடி உத்தராடம்)
யத் பதாம்போருஹத்யாந வித்வஸ்தாசேஷ கல்மஷ: |
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம் ||

அசத்தாய்க் கிடந்த எனக்கு ஆத்மாவைக் காட்டி, சத்தை தந்து எல்லா அஞ்ஞானங்களையும்
த்வம்சம் செய்து என்னை ஒரு பொருளாக உளவாக்கிய யாமுனாசார்யரின் திருவடிகளை த்யாநிக்கிறேன்.

பெரிய நம்பி (மார்கழி கேட்டை)
கமலாபதி கல்யாண குணாம்ருத நிஷேவயா |
பூர்ண காமாய ஸததம் பூர்ணாய மஹதே நம: ||

எப்போதும் கமலாபதியான ஸ்ரீமந் நாராயணனின் கல்யாணகுணக் கடலில்
ஆழ்ந்துள்ள நிறைவுள்ள மஹா பூர்ணரை வணங்குகிறேன்.

எம்பெருமானார் (சித்திரை திருவாதிரை)
யோநித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே |
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ:
ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

அச்யுதனின் திருவடியில் பக்தியால் மற்றெல்லாவற்றையும் புல்லாக மதித்துத் தள்ளியவரும்,
அடியேன் குருவும், கருணைக் கடலேபோல் வடிவெடுத்தவரும் ஆகிய பகவத் ராமானுசரை அடி பணிகிறேன்.

எம்பார் (தை புனர்வஸு)
ராமானுஜ பதச் சாயா கோவிந்தாஹ்வ அநபாயிநீ |
ததா யத்த ஸ்வரூபா ஸா ஜீயாந் மத் விச்ரமஸ்தலீ ||

ராமானுஜரின் திருவடித் தாமரை நிழல்போல் பிரியாதவரும், அடியேன் துயர்களை நீக்கி
இளைப்பாற்றும் நிழலுமான கோவிந்தப் பெருமாளின் புகழ் ஓங்குக.

பட்டர் (வைகாசி அனுஷம்)
ஸ்ரீ பராஸர பட்டார்ய ஸ்ரீரங்கேச புரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமான் ச்ரேயஸே மேஸ்து பூயஸே ||

கைங்கர்யஸ்ரீ நிறைந்த புகழாளர், ஸ்ரீ ரங்கேசனின் புரோகிதர், ஸ்ரீவத்சாங்கர் கூரத்தாழ்வானின்
திருக்குமாரர் ஸ்ரீ பராசர பட்டர் திருவருளால் அடியேனுக்கு சகல மங்களமும் ஆகுக.

நஞ்சீயர் (பங்குமி உத்தரம்)
நமோ வேதாந்த வேத்யாய ஜகந் மங்கள ஹேதவே
யஸ்ய வாகாம்ருதாஸார பூரிதம் புவந த்ரயம்

மூவுலகுக்கும் மங்களம் சேர வேதாந்த சாரமான தம் அமுத வாக்குகளைப்
பொழியும் வேதாந்தி நஞ்சீயரை வணங்குகிறேன்.

நம்பிள்ளை (கார்த்திகை கார்த்திகை)
வேதாந்த வேத்ய அம்ருத வாரிராசேர்
வேதார்த்த ஸார அம்ருத பூரமக்ர்யம் |
ஆதாய வர்ஷந்தம் அஹம் ப்ரபத்யே
காருண்ய பூர்ணம் கலிவைரிதாஸம் ||

நீர் நிறைந்த மேகம் போல் வேதாந்த ஞானம் செறிந்த நஞ்சீயர் திருவாக்குகளைத் தம் கருணையால்
வேத வேதாந்தப் பொருள்களைச் சுவைப்படக் கூறும் பெருங்கருணையாளரான கலிவைரி தாசர் திருவடிகளைப் பற்றுகிறேன்.

வடக்குத் திருவீதி பிள்ளை (ஆனி ஸ்வாதி)
ஸ்ரீ க்ருஷ்ண பாத பாதாப்ஜே நமாமி சிரஸா ஸதா |
யத் ப்ரஸாதப் ப்ரபாவேந ஸர்வ ஸித்திரபூந்மம ||

நம்பிள்ளையின் திருவடித் தாமரைகளில் அடியவரான ஸ்ரீக்ருஷ்ணர் வடக்குத் திருவீதிப் பிள்ளை
திருவருளால் சகல ஸாரார்த்தமும் அறியப் பெறுகிறேன். இப்படிப்பட்ட வடக்குத் திருவீதிப் பிள்ளையின்
திருவடிகளை எப்பொழுதும் வணங்குகிறேன்.

பிள்ளை லோகாசார்யர் (ஐப்பசி திருவோணம்)
லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம: ||

க்ருஷ்ணபாதர் ஆகிய வடக்குத் திருவீதிப் பிள்ளை திருக்குமாரர், ஸம்ஸாரமாகிய பாம்புக் கடியிலிருந்து
ஜீவர்களுக்கு விடுதலை தரும் மருந்தான பிள்ளை உலகாசிரியரை வணங்குகிறேன்.

திருவாய்மொழிப் பிள்ளை (வைகாசி விசாகம்)
நம ஸ்ரீசைலநாதாய குந்தீ நகர ஜந்மநே |
ப்ரஸாதலப்த பரம ப்ராப்ய கைங்கர்யஸாலிநே ||

குந்தீ நகரில் அவதரித்தவர், ஆசார்ய கடாக்ஷத்தால் பரம ஸ்லாக்யமான கைங்கர்யஸ்ரீயை
அடைந்தவரான திருமலை ஆழ்வார் என்கிற திருவாய்மொழிப் பிள்ளை திருவடியை வணங்குகிறேன்.

அழகிய மணவாள மாமுனிகள் (ஐப்பசித் திருமூலம்)
ஸ்ரீசைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ||

திருமலை ஆழ்வார் கருணைக்குப் பாத்திரரும், ஞானம் பக்தி முதலிய குணங்கள் கடல்போல்
நிரம்பியவரும் யதீந்த்ரர் ஸ்ரீ ராமாநுசரை எப்போதும் அனுசரித்திருப்பவருமான அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்.

ஆழ்வார்களும் ஆசார்யர்கள் பிறர் பலரும் நம் குரு பரம்பரையில் உள்ளனர்.

வரிசைக் கிராமத்தில் ஆழ்வார்கள்:

பொய்கை ஆழ்வார் (ஐப்பசி திருவோணம்)
காஞ்ச்யாம் ஸரஸி ஹேமாப்ஜே ஜாதம் காஸார யோகிநம் |
கலயே ய: ச்ரிய:பத்யே ரவிம் தீபம் அகல்பயத் ||

காஞ்சித் திருவெஃகாத் திருக்குளத்தில் தங்கத் தாமரைப் பூவில் அவதரித்த, தம் திவ்ய ஞான ஒளியால்
ஸூர்ய தேஜஸ்ஸில் ஸ்ரீமந் நாராயணனைக் கண்ட பொய்கை ஆழ்வாரைத் துதிக்கிறேன்.

பூதத்தாழ்வார் (ஐப்பசி அவிட்டம்)
மல்லாபுர வராதீசம் மாதவீ குஸுமோத்பவம் |
பூதம் நமாமி யோ விஷ்ணோர் ஜ்ஞானதீபம் அகல்பயத ||

திருக்கடல்மல்லைத் தலைவர், மாதவிப் பூவில் அவதரித்தவர், தம் ஞான திருஷ்டியால்
நாராயணனைக் கண்டுகளிக்க ஞான தீபம் ஏற்றியவரான பூதத்தாழ்வாரை வணங்குகிறேன்.

பேயாழ்வார் (ஐப்பசி சதயம்)
த்ருஷ்ட்வா ஹ்ருஷ்டம் ததா விஷ்ணும் ரமயா மயிலாதிபம் |
கூபே ரக்தோத்பலே ஜாதம் மஹதாஹ்வயம் ஆச்ரயே ||

திருமயிலைத் தலைவர், கிணற்றில் செவ்வல்லிப் பூவில் அவதரித்த ஸ்ரீமந் நாராயணனைக்
கண்ட திவ்ய சக்ஷுஸ் பெற்ற பேயாழ்வார் திருவடிகளை வணங்குகிறேன்.

திருமழிசை ஆழ்வார் (தை மகம்)
சக்தி பஞ்சமய விக்ரஹாத்மநே சூக்திகாரஜத சித்த ஹாரிணே |
முக்திதாயக முராரி பாதயோர் பக்திஸார முநயே நமோ நம: ||

எம்பெருமான் முராரியின் கமலப் பாதங்களில் வைத்த பக்தியே வடிவெடுத்தவரும், பஞ்சோபநிஷத்மய
திருமேனியை உடைய (நம் சரீரம் நிலம் நீர் காற்று வெளி தீ எனும் பஞ்ச பூதங்களால் ஆனது.
எம்பெருமான் திருமேனியோ விஸ்வம், நிவ்ருத்தம், சர்வம், பரமேஷ்டி, புமான் எனும் பஞ்ச உபநிஷத்துகளால் ஆனது)
எம்பெருமானைத் தன் நெஞ்சிலே தரித்தவரும், நமக்கு மதி தர வல்லவருமான திருமழிசைப் பிரானுக்கு என் வணக்கங்கள்.
ஸூக்திஹாரன் என்னும் அரசனிடத்தில் ஜயித்த ஹாரத்தை அணிந்து கொண்டிருப்பவர் என்றும் சொல்லப்படும்.

மதுரகவி ஆழ்வார் (சித்திரை சித்திரை)
அவிதித விஷயாந்தரஸ் சடாரேர் உபநிஷதாம் உபகான மாத்ர போக: |
அபி ச குண வசாத் ததேக சேஷி மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து ||

நம்மாழ்வாரைப் பாடுவது தவிர வேறொன்றும் செயலாக நினையாதவர், நம்மாழ்வார் பாசுரம் தவிர
வேறொன்றையும் பாடவும் விழையாதவர், அவருக்கே அடிமைப் பட்டவரான மதுரகவி ஆழ்வார்
அடியேன் மனத்தில் உறுதியாக எழுந்தருளட்டும்.

நம்மாழ்வார் (வைகாசி விசாகம்)
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் ய தேவ நியமேன மத் அந்வயாநாம் |
ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

ஸ்ரீவைஷ்ணவ சந்தானத்தின் தலைவரும், ப்ரபந்நஜன கூடஸ்தரும் மகிழ மாலை அணிந்தவரும்
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ நிறைந்த திருவடிகளை உடையவரும், தாய் தந்தை மனைவி மக்கள் ஏய்ந்த பெருஞ்செல்வம்
எல்லாமும் ஆனவருமான நம்மாழ்வாரை வணங்குகிறேன்.

குலசேகர ஆழ்வார் (மாசி புனர்வஸு)
குஷ்யதே யஸ்ய நகரே ரங்கயாத்ரா தினே தினே |
தமஹம் சிரஸா வந்தே ராஜாநம் குலசேகரம் ||

எப்போதும் ஸ்ரீ ரங்க யாத்ரை பற்றிய பேச்சே நிகழும் நகரைத் தலைநகராகக் கொண்ட அரசர்
குலசேகரப் பெருமாள் திருவடிகளை அடியேன் தலையால் வணங்குகி கிறேன்.

பெரியாழ்வார் (ஆனி ஸ்வாதி)
குருமுகம் அநதீத்ய ப்ராஹவேதாந் அஸேஷாந்
நரபதி பரிக்லுப்தம் ஸுல்கமாதாது காம: |
ச்வசுரம் அமர வந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜ குல திலகம் விஷ்ணுசித்தம் நமாமி ||

ஒரு குருவிடமும் பயிலாது எம்பெருமான் க்ருபையினாலேயே அனைத்து வேதங்களையும் அறிந்து
வேத சாரங்களை சொல்லிப் பரத்வ ஸ்தாபநம் பண்ணிய அந்தணர் தலைவர், ஆண்டாளின் தமப்பனார்,
திருவரங்க நாதனுக்கே மாமனார் ஆகிய பெரியாழ்வாரை அடி பணிகிறேன்.

ஆண்டாள் (ஆடி பூரம்)
நீளா துங்க ஸ்தனகிரி தடீ ஸுப்தம் உத்போத்ய க்ருஷ்நம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சத சிரஸ் சித்தம் அத்யாபயந்தீ |
ஸ்வோசிஷ்டாயாம் ச்ரஜிநிகளிதம் யாபலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய: ||

நீளா தேவியின் திருமார்பில் தலைவைத்துறங்கும் கண்ணன் எம்பெருமானை, பாரதந்தர்யம் உணர்த்தும் வகையில்
துயிலுணர்த்துபவள் , எம்பெருமானுக்கே தான் சூடிக்களைந்த மாலையை அவன் விரும்பியபடி சமர்ப்பித்தவள்
திருவடிகளை மீண்டும் மீண்டும் தொழுகிறேன்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் (மார்கழி கேட்டை)
தமேவ மத்வா பரவாஸுதேவம் ரங்கேசயம் ராஜவதர்ஹணியம் |
ப்ராபோதிகீம் யோக்ருத ஸூக்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே ||

ஸ்ரீ ரங்கநாதனைப் பரவாசு தேவனாகவே பாவித்து அவனை ஓர் அரசனைபோல் மிகவும்
நளினமாகத் துயிலெழுப்பிய தொண்டரரடிப் பொடி ஆழ்வாரைப் போற்றுகிறேன்.

திருப்பாணாழ்வார் (கார்த்திகை ரோஹிணி )
ஆபாத சூடம் அனுபூய ஹரிம் சயாநம்
மத்யே கவேர ஹிதுர் முதிதாந்தராத்மா |
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோ நிச்சிகாய மனவை முநிவாஹநம் தம் ||

இரண்டு ஆறுகளின் நடுவே அறிதுயில் கொண்ட அரங்கநாதனைத் திருவடி முதல் திருமுடி வரை அனுபவித்தப் பாடிய,
லோகஸாரங்க முனிவரால் தோள் மேல் சுமந்து அவனைக் கண்டு களித்து அவனைக் கண்டு களித்த கண்களால்
இனி வேறொன்றும் காணேன் என்று அவன் திருவடி சேர்ந்த திருப்பாணாழ்வாரை த்யானிக்கிறோம்.

திருமங்கை ஆழ்வார் (கார்த்திகை கார்த்திகை)
கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோக திவாகாரம்
யஸ்ய கோபி: ப்ரகாசாபிர் ஆவித்யம் நிஹதம் தம:

கலிகன்றி என்று திருநாமம் கொண்டவர், கவிகளில் ஸூர்யன் போல் ப்ரகாசிப்பவர்,
அடியேன் அஞ்ஞாந இருளைத் தம் ஒளிமிக்க சொற்களால் முற்றிலும் அகற்றிய ஞானக் கதிரவனான
திருமங்கை ஆழ்வாரை த்யானிக்கிறேன்.

ஓராண் வழி ஆசார்ய பரம்பரையில் வாராத ஆசார்யர்களும் (மேலும் பலர் உள்ளனர்):

குருகைக் காவலப்பன் (தை விசாகம்)
நாதமௌநி பதாஸக்தம் ஜ்ஞானயோகாதி ஸம்பதம் |
குருகாதிப யோகீந்த்ரம் நமாமி சிரஸா ஸதா ||

நாதமுனிகள் திருவடித் தாமரைகளில் மிக்க பக்தி கொண்டவர், ஞான யோக பக்தி யோகங்களில் நிறை செல்வர்,
யோகிகளில் சிறந்தவரான குருகைக் காவலப்பன் திருவடித் தாமரைகளில் எப்போதும் வணங்குகிறேன்

திருவரங்கப் பெருமாள் அரையர் (வைகாசி கேட்டை)
ஸ்ரீராமமிச்ர பத பங்கஜ ஸஞ்சரீகம் ஸ்ரீயாமுனார்ய வர புத்ரம் அஹம் குணாப்யம் |
ஸ்ரீரங்கராஜ கருணா பரிணாம தத்தம் ஸ்ரீபாஷ்யகார சரணம் வரரங்கமீடே ||

யாமுனாசார்யர் திருக்குமாரர், ஸாத்விக குணபூர்ணர், மணக்கால்நம்பிகளின் திருவடித் தாமரைகளில்
வண்டு போன்றவர், ஸ்ரீபராஷ்யகாரரைத் தம் சிஷ்யராகப் பெற்றவரான திருவரங்கப் பெருமாள் அரையரைப் போற்றுகிறேன்.

திருக்கோஷ்டியூர் நம்பி (வைகாசி ரோஹிணி )
ஸ்ரீவல்லப பதாம்போஜ தீபக்த்யம்ருத ஸாகரம் |
ஸ்ரீமத்கோஷ்டீபுரீபூர்ணம் தேசிகேந்த்ரம் பஜாமஹே ||

மஹாலக்ஷ்மி நாதன் நாராயணன் திருவடிகளில் ஞானாம்ருத பக்தி அம்ருதக் கடல் போன்றவர்,
ஆசார்யர்களில் சிரேஷ்டரான திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் சரண் அடைகிறோம்.

பெரியதிருமலைநம்பி (வைகாசி ஸ்வாதி)
பிதாமஹஸ்யாபி பிதாமஹாய ப்ராசேதஸாதேசபலப்ரதாய |
ஸ்ரீபாஷ்யகாரோத்தம தேசிகாய ஸ்ரீசைலபூர்ணாய நமோ நம: ஸ்தாத் ||

திருமலையப்பனாலேயே தன் தகப்பனாராகக் கொண்டாடப்பட்டவர், அதனால் அவன் மகனாகிய
சதுர்முக பிதாமஹனுக்கே பிதாமஹரானவர், ஸ்ரீ பாஷ்யகாரருக்கு ஸ்ரீமத் வாலமீகி ராமாயணம் உபதேசித்த
உத்தம தேசிகரான திருமலை நம்பிகளை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.

திருமாலை ஆண்டான் (மாசி மகம்)
ராமாநுஜ முநீந்த்ராய த்ராமிடீ ஸம்ஹிதார்த்ததம் |
மாலாதர குரும் வந்தே வாவதூகம் விபஸ்சிதம் ||

த்ராவிட வேதமான திருவாய்மொழியைத் தம் வாக்கு வன்மையால் ஸ்ரீ ராமானுஜ முனிவர்க்கு
உபதேசித்தவரான மஹாமேதாவி ஸ்ரீ திருமாலை ஆண்டான் எனும் மாலாதரரைப் பூசிக்கிறேன்.

திருக்கச்சி நம்பிகள் (மாசி ம்ருகசீர்ஷம்)
தேவராஜ தயாபாத்ரம் ஸ்ரீ காஞ்சி பூர்ணம் உத்தமம் |
ராமாநுஜ முநேர் மாந்யம் வந்தேஹம் ஸஜ்ஜநாச்ரயம் ||

ஸ்ரீ தேவராஜனின் கருணைக்குப் பாத்ரபூதர், உத்தமரான ஸ்ரீ காஞ்சிபூர்ணர், ஸ்ரீ ராமானுசரால்
மிகவும் போற்றப் பட்டவர், ஸ்ரீ வைஷ்ணவர்களால் சூழப்பட்ட திருக்கச்சி நம்பிகளை வணங்குகிறேன்.

மாறனேரி நம்பி (ஆனி ஆயில்யம்)
யாமுநாசார்ய ஸச்சிஷ்யம் ரங்கஸ்தலநிவாஸிநம் |
ஜ்ஞாநபக்த்யாதிஜலதிம் மாறனேரிகுரும் பஜே ||

யாமுனாசார்யரின் ப்ரிய சிஷ்யர், ஸ்ரீரங்கம் பெரியகோயில் நித்ய வாசி, ஞான பக்திக் கடல்
ஆகிய மாறனேரி நம்பியை பஜிக்கிறேன்.

கூரத்தாழ்வான் (தை ஹஸ்தம்)
ஸ்ரீவத்ஸ சிந்ந மிச்ரேப்யோ நம உக்திம தீமஹே: |
யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்: ||

நாராயண பரத்வமாகிய மங்கல நாண் பூண்டவள் வேத மாதா எனத் தம்
ஸ்தோத்ரங்களால் காட்டியருளிய கூரத்தாழ்வானுக்கு நம் வணக்கங்கள்.

முதலியாண்டான் (சித்திரை புனர்வஸு )
பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா |
தஸ்ய தாஸரதே: பாதௌ சிரஸா தாரயாம்யஹம் ||

ஸ்ரீ தாசரதி என்று திருநாமம் உள்ளவர், எம்பெருமானாரின் திருவடி நிலைகளாகப் போற்றப் பெறுபவர்,
முதலியாண்டானின் திருவடிகளைத் தலையால் தாங்குகிறேன்.

அருளாளப் பெருமாள் எம்பெருமானார் (கார்த்திகை பரணி)
ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் வேதசாஸ்த்ரார்த்த ஸம்பதம் |
சதுர்த்தாச்ரம ஸம்பந்நம் தேவராஜ முநிம் பஜே ||

எம்பெருமானாரின் ப்ரிய ஸிஷ்யர், வேதங்கள் சாஸ்த்ரங்களை உட்பொருளுணர்ந்து கற்றவர்,
ஸந்யாஸாச்ரமம் மேற்கொண்டவர் ஆகிய ஸ்ரீ தேவராஜ முனிவர் எனும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை
அடியேன் சரண் புகுகிறேன்.

கோயில் கோமாண்டூர் இளையவில்லி ஆச்சான் (சித்திரை ஆயில்யம்)
ஸ்ரீ கௌசிகாந்வய மஹாம்புதி பூர்ணசந்த்ரம்
ஸ்ரீ பாஷ்யகார ஜநநீ ஸஹஜா தநுஜம் |
ஸ்ரீசைலபூர்ண பத பங்கஜ சக்த சித்தம்
ஸ்ரீபாலதந்வி குருவர்யம் அஹம் பஜாமி ||

கௌசிக குல சமுத்ரத்துப் பூர்ண சந்திரன் போன்றவர், பாஷ்யகாரரின் திருத்தாயாரின் ஸஹோதரி குமாரர்,
ஸ்ரீ சைலபூர்ணரின் திருவடிகளில் ஆழ்ந்த பக்தர் ஆகிய பால தன்வி மஹா குருவை வணங்குகிறேன்.

கிடாம்பி ஆச்சான் (சித்திரை ஹஸ்தம்)
ராமானுஜ பதாம்போஜயுகளீ யஸ்ய தீமத: |
ப்ராப்யம் ச ப்ராபகம் வந்தே ப்ரணதார்த்திஹரம் குரும் ||

மஹாமேதாவி, தம் ஆசாரயர் எம்பெருமானார் திருவடிகளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று உறுதியானவர்
ஆகிய ப்ரணதார்த்திஹர குரு கிடாம்பி ஆச்சானைத் தொழுகிறேன்.

வடுக நம்பி (சித்திரை அஸ்வினி)
ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாளக்ராம நிவாஸிநம் |
பஞ்சமோபாய ஸம்பந்நம் ஸாளக்ராமார்யம் ஆச்ரயே ||

ராமானுஜரின் சச்சிஷ்யர், சாளக்ராமத்தில் வசிப்பவர், ஆசார்ய நிஷ்டையாகிய பஞ்சமாபாயத்தில்
நிலை நின்றவர் ஆகிய சாலக்ராமாசார்யர் வடுகநம்பியைத் தொழுகிறேன்.

வங்கிபுரத்து நம்பி
பாரத்வாஜ குலோத்பூதம் லக்ஷ்மணார்ய பதாச்ரிதம் |
வந்தே வங்கிபுராதீஸம் ஸம்பூர்ணாயம் க்ருபாநிதிம் ||

பாரத்வாஜ குலத்திலகர், எம்பெருமானார் திருவடியில் ஆச்ரயித்தவர்,
வங்கிபுரத் தலைவர் க்ருபாநிதியாகிய வங்கிபுரத்து நம்பியைத் தொழுகிறேன்.

சோமாசியாண்டான் (சித்திரை திருவாதிரை)
நௌமி லக்ஷ்மண யோகீந்த்ர பாதஸேவைக தாரகம் |
ஸ்ரீராமக்ரதுநாதார்யம் ஸ்ரீபாஷ்யாம்ருத ஸாகரம் ||

எம்பெருமானார்க்குக் குற்றேவல்கள் பெருங்களிப்போடு செய்தவர், ஸ்ரீபாஷ்ய அமுதக் கடல் என்னலாம்படி
அதைக் கற்றறிந்தவர், ஸ்ரீ ராமர் எனும் திரு நாமம் பூண்ட சோமாசி ஆண்டானைத் தொழுகிறேன்.

பிள்ளை உறங்கா வில்லி தாசர் (மாசி ஆயில்யம்)
ஜாகரூக தநுஷ்பாணிம் பாணௌ கட்கஸமந்விதம்
ராமானுஜஸ்பர்சவேதிம் ராத்தாந்தார்த்த ப்ரகாசகம் |
பாகிநேயத்வயயுதம் பாஷ்யகார பரம்வஹம்
ரங்கேசமங்களகரம் தநுர்தாஸம் அஹம் பஜே ||

எப்போதும் உறங்காத விழிப்புள்ள உறங்காவில்லி தாசர், ஒருகையில் வில்லும் மற்றொன்றில் கத்தியும் ஏந்தி
நம்பெருமாளைக் காப்பவர், ராமாநுசர்க்கு ஸ்பர்சவேதி, ரஹஸ்ய புருஷார்த்தங்களைத் தம் வாழ்வில் வெளிப்படுத்தியவர்,
இரு மருமகன்களை உடையவர், எம்பெருமானார் மடத்தை நடத்தியவர், நித்தியமாகப் பெரிய பெருமாளை
மங்களாசாசனம் செய்தவருடைய திருவடிகளை புகலாக அடைகிறேன்.

திருக்குருகைப் பிரான் பிள்ளான் (ஐப்பசி புனர்வஸு )
த்ராவிடாகம ஸாரக்யம் ராமாநுஜ பதாச்ரிதம் |
ஸுதியம் குருகேசார்யம் நமாமி சிரஸாந்ஹவம் ||

த்ராவிட வேதத்தின் உட்பொருள் நன்கு உணர்ந்தவர், எம்பெருமானார் திருவடிகலில் சரணம் புக்கவர்,
மஹா மேதாவியான குருகேசாசார்யரை தினமும் தொழுகிறேன்.

எங்களாழ்வான் (சித்திரை ரோஹிணி)
ஸ்ரீவிஷ்ணுசித்த பத பங்கஜ ஸம்ச்ரயாய சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண |
நோசேந் மமாபி யதிஸேகரபாரதீனாம் பாவ: கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய: ||

ஸ்ரீ விஷ்ணு சித்தரை அடைந்திருக்க அடியேன் மனம் விரும்புகிறது. அவர் திருவடிகளைத் தவிர
வேறு எது பயனுள்ளது? அவர் திருவடிகளைச் சார்ந்திரேனாகில் அடியேன் எவ்வாறு எம்பெருமானார்
அருளிய திவ்யார்த்தங்களைக் கற்றிருக்க முடியும்?

அநந்தாழ்வான் (சித்திரை சித்திரை)
அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதாநாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||

அனைத்துக் கல்யாண குணங்களின் இருப்பிடம், அஞ்ஞான இருளை ஒழிப்பவர்,
தம்மைச் சரண் புக்கோர்க்கு ஒப்பிலா அரண் ஆகிய அநந்தாழ்வானை வணங்குகிறேன்.

திருவரங்கத்து அமுதனார் (பங்குனி ஹஸ்தம்)
ஸ்ரீரங்கே மீநஹஸ்தே ச ஜாதம் ரங்கார்யநந்தநம் |
ராமாநுஜபதாஸ்கந்தம் ரங்கநாதகுரும் பஜே ||

கைங்கார்யருக்குப் புதல்வராகப் பங்குனி ஹஸ்தத்தில் அவதரித்த, ஸ்ரீ ராமானுஜரின் திருவடி பக்தர்,
ரங்கநாதர் எனும் திருநாமம் கொண்ட திருவரங்கத்து அமுத்தனாரிடம் புகல் அடைகிறேன்.

நடாதூரம்மாள் (சித்திரை சித்திரை)
வந்தேஹம் வரதார்யம் தம் வத்ஸாபி ஜநபூஷணம் |
பாஷ்யாம்ருத ப்ரதாநாத்ய ஸஞ்ஜீவயதி மாமபி ||

அடியேனுக்கு ஸ்ரீ பாஷ்யத் தேன் அமுது ஊட்டிய ஸ்ரீவத்ஸ குல திலகர்
நடாதூர் அம்மாள் எனும் வரதாசார்யரை வணங்குகிறேன்.

வேதவ்யாஸ பட்டர்(வைகாசி அனுஷம்)
பௌத்ரம் ஸ்ரீராமமிச்ரஸ்ய ஸ்ரீவத்ஸாங்கஸ்ய நந்தநம்
ராமஸூரிம் பஜே பட்டபராசரவராநுஜம்

ஸ்ரீ ராம மிச்ரர் (கூரத்தாழ்வானின் திருத்தகப்பனார், கூரத்து ஆழ்வார்) திருப்பேரனாரும்,
ஆழ்வானின் திருக்குமாரரும், பராசர பட்டரின் இளைய சஹோதரருமான ஸ்ரீ ராமப் பிள்ளை எனும்
வேதவ்யாஸ பட்டரை அடியேனுக்குப் புகலாக அடைகிறேன்.

கூரநாராயண ஜீயர் (மார்கழி கேட்டை)
ஸ்ரீபராசரபட்டார்ய சிஷ்யம் ஸ்ரீரங்கபாலகம்
நாராயணமுநிம் வந்தே ஜ்ஞாநாதிகுணஸாகரம்

ஸ்ரீ பராசர பட்டர் சிஷ்யரும், ஸ்ரீ ரங்கத்தின் பாது காவலரும் ஞான, பக்திக்கடலுமான
ஸ்ரீ நாராயண முனியைத் தொழுகிறேன்..

ச்ருத ப்ரகாசிகா பட்டர்
யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந தர்சிதா: |
வரம் ஸுதர்சநார்யம் தம் வந்தே கூர குலாதிபம் ||

எவரது ச்ருதப்ரகாசிகா வ்யாக்யானத்தில் யதிராஜரின் ஸ்ரீ பாஷ்யம் நன்கு விளக்கப் பட்டுள்ளதோ,
அந்தக் கூர குலத்தோன்றல், மஹா ஞானி சுதர்சனாசார்யரை வணங்குகிறேன்.

பெரியவாச்சான் பிள்ளை (ஆவணி ரோஹிணி)
ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுந ஸூநவே |
யத் கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா ||

யாமுனாசார்யர் குமாரரும், எவர் க்ருபையினால் எம்பெருமானை எளிதில் அடைய முடியுமோ
அந்த ஸ்ரீ கிருஷ்ணர் எனும் பெரியவாச்சான் பிள்ளையைத் துதிக்கிறேன்.

ஈயுண்ணி மாதவப் பெருமாள் (கார்த்திகை பரணி)
லோகாசார்ய பதாம்போஜ ஸம்ச்ரயம் கருணாம்புதிம் |
வேதாந்த த்வய ஸம்பந்நம் மாதவார்யம் அஹம் பஜே ||

நம்பிள்ளை லோகாசார்யர் திருவடிகளில் சரண் புக்கவரும், கருணா சாகரரும்
ஸம்ஸ்க்ருத த்ராவிட (உபய) வேதாந்தங்களில் கரை கண்டவருமான
ஈயுண்ணி மாதவப் பெருமாளை சரண் அடைகிறேன்.

ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள் (ஸ்வாதி)
மாதவாசார்ய ஸத்புத்ரம் தத்பாதகமலாச்ரிதம் |
வாத்ஸல்யாதி குணைர் யுக்தம் பத்மநாப குரும் பஜே ||

மாதவாசார்யர் ஸத்புத்ரர், அவரது சிஷ்யர், வாத்சல்யாதி கல்யாண குணக் கடல் ஆகிய
ஈயுண்ணி பத்மநாபப் பெருமாளை சரண் அடைகிறேன்.

நாலூர்ப் பிள்ளை (பூசம்)
சதுர்க்ராம குலோத்பூதம் த்ராவிட ப்ரஹ்ம வேதிநம் |
யஜ்ஞார்ய வம்சதிலகம் ஸ்ரீவராஹமஹம் பஜே ||

கூரத்தாழ்வான் சிஷ்யர் நாலூரான் வம்சத்தவர், எம்பெருமானார் சிஷ்யரான எச்சான் வம்சத் திலகர்,
திராவிட வேத பாரங்கதர் ஆகிய ஸ்ரீ வராஹர் எனும் நாலூர்ப் பிள்ளையை வணங்குகிறேன்.

நாலூர் ஆச்சான் பிள்ளை (மார்கழி பரணி)
நமோஸ்து தேவராஜாய சதுர்க்ராம நிவாஸிநே |
ராமானுஜார்ய தாஸஸ்ய ஸுதாய குணசாலிநே ||

நாலூர்ப் பிள்ளை எனும் ராமாநுஜாசார்யர் குமாரர், சதுர்க்ராமம் எனும் நாளூரில் வசிப்பவர்
தேவராஜகுரு ஆகிய மஹா குணசாலி நாலூர் ஆச்சான் பிள்ளையைத் தொழுகிறேன்.

நடுவில் திருவீதி பிள்ளை பட்டர் (ஐப்பசி அவிட்டம்)
லோகாசார்ய பதாஸக்தம் மத்யவீதி நிவாஸிநம் |
ஸ்ரீவத்ஸசிஹ்நவம்சாப்திஸோமம் பட்டார்யமாச்ரயே ||

நம்பிள்ளை திருவடிகளில் ஆழ்ந்த பக்தர், ஸ்ரீரங்கம் நடுவில் திருவீதியில் வாழ்ந்தவர்,
கூரத்தாழ்வானின் வம்சத்துக்கு முழு நிலவு போன்றவரான நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரைச் சரண் அடைகிறேன்.

பின்பழகிய பெருமாள் ஜீயர் (ஐப்பசி சதயம்)
ஜ்ஞாந வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸுந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத் குரும் பஜே ||

திராவிட வேதமாகிய திருவாய்மொழியை விளக்கியவர், ஞானமும் வைராக்யமும் மிக்கவரான
எனது ஆசார்யர் பின்பழகிய பெருமாள் ஜீயரைத் தொழுகிறேன்.

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் (மார்கழி அவிட்டம்)
த்ராவிடாம்நாய ஹ்ருதயம் குருபர்வக்ரமாகதம் |
ரம்யஜாமாத்ருதேவேந தர்சிதம் க்ருஷ்ணஸூநுநா ||

குருபரம்பராகதமான த்ராவிடவேதம் திருவாய்மொழியின் பொருளை நமக்கு நன்கு உரைத்தருளியவர்
ஸ்ரீ கிருஷ்ணர் எனும் வடக்குத் திருவீதி பிள்ளையின் குமாரர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

நாயனார் ஆச்சான் பிள்ளை (ஆவணி ரோஹிணி)
ச்ருத்யர்த்தஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம்
பத்மோல்லஸத் பகவதங்க்ரி புராணபந்தும் |
ஜ்ஞாநாதிராஜம் அபயப்ரதராஜ ஸூநும்
அஸ்மத் குரும் பரமகாருணிகம் நமாமி ||

ச்ருதிப் பொருளை அமுதமாய்ப் பொழிபவர், ஸ்ம்ருதிப் பொருளைத் தாமரையை அலர்த்தும் கதிரவன்போல்
விளங்கச் செய்பவர், எம்பெருமானின் தாமரைத் திருவடிகளில் பழவடியார், ஞானப் பேரரசர்,
அபயப்ரத ராஜர் பெரியவாச்சான் பிள்ளையின் திருக்குமாரரான என் ஆசார்யர் பரம காருணிகர்
நாயனார் ஆச்சான் பிள்ளையை வணங்குகிறேன்.

வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் (ஆனி ஸ்வாதி)
ஸுந்தரஜாமாத்ருமுநே: ப்ரபத்யே சரணாம்புஜம் |
ஸம்ஸாரார்ணவ ஸம்மக்ந ஜந்து ஸந்தாரபோதகம் ||

சம்சாரக் கடலில் மூழ்கும் மக்களுக்கு நல்ல படகாகும் அழகிய மணவாள முனியின்
திருவடித் தாமரைகளை பணிகிறேன்.

கூர குலோத்தம தாசர் (ஐப்பசி திருவாதிரை)
லோகாசார்ய க்ருபாபாத்ரம் கௌண்டிந்ய குல பூஷணம் |
ஸமஸ்தாத்ம குணாவாஸம் வந்தே கூர குலோத்தமம் ||

பிள்ளை லோகாசார்யர் பரிபூர்ண க்ருபைக்குப் பாத்ரர், கௌண்டிந்ய குலத்தின் அணிகலன்,
ஸகல குண ஸம்பன்னரான கூர குலோத்தம தாஸரைத் தொழுகிறேன்.

விளாஞ்சோலைப் பிள்ளை (ஐப்பசி உத்தரட்டாதி)
துலாSஹிர்புத்ந்யஸம்பூதம் ஸ்ரீலோகார்ய பதாச்ரிதம் |
ஸப்தகாதா ப்ரவக்தாரம் நாராயணமஹம் பஜே ||

ஐப்பசி உத்தரட்டாதியில் அவதரித்தவர், பிள்ளை லோகாசார்யரைச் சரண் புக்கவர்,
ஸ்ரீவசன பூஷண சாரமான சப்த காதையை அருளிச் செய்தவரான விளாஞ்சோலைப் பிள்ளையை வணங்குகிறேன்.

வேதாந்தாசார்யர் (புரட்டாசி திருவோணம்)
ஸ்ரீமான் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேசரீ |
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

எதிர்க்கும் கவிகளுக்கும் தார்க்கிகர்க்கும் வெல்ல ஒண்ணாத சிங்கம், வேதாந்த ஞானக் கடலான
ஸ்ரீமான் வேங்கட நாதார்யரை எப்போதும் என் இதயத்தில் எழுந்தருளப் பண்ணுகிறேன்.

திருநாராயண புரத்து ஆய் ஜநன்யாசார்யர் (ஐப்பசி பூராடம்)
ஆசார்ய ஹ்ருதயஸ்யார்த்தா: ஸகலா யேந தர்சிதா: |
ஸ்ரீஸாநுதாஸம் அமலம் தேவராஜம் தமாச்ரயே ||

ஸ்ரீசானு தாஸர் என்றும் தேவராஜர் என்றும் புகழ் மிக்கவர், களங்கமற்றவர்,
ஆசார்ய ஹ்ருதய பொருளை விரித்துரைத்தவர் ஆய் ஜனந்யாசார்யர் திருவடிகளைப் புகலாய் அடைகிறேன்.

மாமுனிகளின் காலத்திலும் அதற்குப் பிற்பட்டும், பல சிறந்த ஆசார்யர்கள் வாழ்ந்தனர் (மேலும் பலர் உள்ளனர்):

பொன்னடிக்கால் ஜீயர் (புரட்டாசி புனர்வஸு)
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா |
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமானுஜ முநிம் பஜே ||

மாமுனிகளை எப்போதும் ஆஸ்ச்ரயித்தவரும், அவர் திருவடி ரேகைகள் போன்றவரும்,
அவரையே தம் சத்தையாகக் கொண்டவருமான பொன்னடிக்கால் ஜீயரைப் போற்றுகிறேன்.

பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் (கார்த்திகை புனர்வஸு)
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாத ஸேவைக தாரகம் |
பட்டநாத முநிம் வந்தே வாத்ஸல்யாதி குணார்ணவம் ||

மாமுனிகள் திருவடித் தாமரைகளையே எப்போதும் புருஷார்த்தமாக உடையவர்,
சகல குணங்களும் நிறைந்தவர், வாத்சல்யம் மிக்கவரான ஸ்ரீ பட்டநாத முனிவரை வணங்குகிறேன்.

கோயில் கந்தாடை அண்ணன் (புரட்டாசி பூரட்டாதி)
ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்
விபுல வாதூல கோத்ரோத்பவாநாம் வரம் |
ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பாதாச்ரயம்
வரத நாராயணம் மத் குரும் ஸம்ச்ரயே ||

சகல வேதாந்த தாத்பர்யங்களைக் கற்ற அறிவுக் கடல், புகழ் மிக்க வாதூல கோத்ரர்,
மணவாள மாமுனிகளின் திருவடிகளில் சரண் புக்கவரான வரத நாராயண குரு எனும்
கோயில் அண்ணனை நான் சரண் அடைகிறேன்.

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் (ஆடி பூசம்)
வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்தபோதம்
காந்தோபயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம் |
வத்ஸாந்வவாயமநவத்ய குணைருபேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் ||

வேதாந்த தேசிகர் கடாக்ஷத்தால் விரிந்து விகஸித்த ஞானமுள்ளவர், மணவாள மாமுனிகள்
கருணைக்குப் பூர்ண பாத்ரர் ஸ்ரீவத்ச குல விளக்கு, கல்யாண குணசாலியான
ப்ரதிவாதி பயங்கரம் அண்ணனை பக்தியோடு பஜிக்கிறேன்.

எறும்பி அப்பா (ஐப்பசி ரேவதி)
ஸௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞான ப்ரதம் சுபம் ||

மாமுனிகளின் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர், நம்மை ஞானம் தந்து காக்கும்
மங்கள ஸ்வபாவருமான தேவராஜ குரு என்கிற எறும்பி அப்பாவை வணங்குகிறேன்.

அப்பிள்ளை
காந்தோபயந்த்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
வத்ஸாந்வயபவம் வந்தே ப்ரணதார்த்திஹரம் குரும் ||

மணவாள மாமுனிகள் திருவடித்த தாமரைகளில் வண்டு போன்ற, ஸ்ரீவத்ச குல திலகர்
ப்ரணதார்த்திஹர குரு என்கிற அப்பிள்ளையை வணங்குகிறேன்.

அப்பிள்ளார்
காந்தோபயந்த்ரு யோகீந்த்ர ஸர்வ கைங்கர்யதூர்வஹம் |
ததேக தைவதம் ஸௌம்யம் ராமாநுஜ குரும் பஜே ||

மாமுனிகள் ஒருவரையே தம் தேவனாகக் கருதி அவருக்கே எல்லாப் பணிவிடைகள் செய்த
ராமானுஜ குரு என்கிற அப்பிள்ளாரை வணங்குகிறேன்.

கோயில் கந்தாடை அப்பன் (புரட்டாசி மகம்)
வரதகுரு சரணம் வரவரமுநிவர்ய கநக்ருபா பாத்ரம் |
ப்ரவரகுண ரத்ந ஜலதிம் ப்ரணமாமி ஸ்ரீநிவாஸ குருவர்யம் ||

கோயில் கந்தாடை அண்ணன் திருவடிகளையே பற்றினவரும், மாமுனிகள் கருணையைப் பெற்றவரும்
குண ரத்நக் கடலுமான கோயில் கந்தாடை அப்பன் என்கிற ஸ்ரீனிவாச குருவை வணங்குகிறேன்.

ஸ்ரீபெரும்புதூர் ஆதி யதிராஜ ஜீயர்(ஐப்பசிப்பூசம்)
ஸ்ரீமத் ராமாநுஜாங்க்ரி ப்ரவண வரமுநே: பாதுகம் ஜாதப்ருங்கம்
ஸ்ரீமத் வாநாத்ரி ராமாநுஜ கணகுரு ஸத்வைபவ ஸ்தோத்ர தீக்ஷம் |
வாதூல ஸ்ரீநிவாஸார்ய சரணசரணம் தத் க்ருபா லப்த பாஷ்யம்
வந்தே ப்ராஜ்ஞம் யதீந்த்ரம் வரவரதகுரோ: ப்ராப்த பக்தாம்ருதார்த்தம் ||

மாமுனிகள் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர், பொன்னடிக்கால் ஜீயரை போற்றிக் கொண்டே இருந்தவர்,
வாதூல ஸ்ரீநிவாஸாசார்யரிடம் ஸ்ரீ பாஷ்யம் பயின்றவரான ஸ்ரீ பெரும்பூதூர் யதிராஜ ஜீயரை வணங்குகிறேன்.

அப்பாச்சியார் அண்ணா (ஆவணி ஹஸ்தம்)
ஸ்ரீமத் வாநமஹாசைல ராமாநுஜ முநிப்ரியம் |
வாதூல வரதாசார்யம் வந்தே வாத்ஸல்ய ஸாகரம் ||

வானமாமலை பொன்னடிக்கால் ஜீயரின் ப்ரியத்துக்குரியவர், வாத்சல்யக் கடல் போன்றவர்,
வாதூல வரதாசார்யர் என்கிற அப்பாச்சியார் அண்ணாவை வணங்குகிறேன்.

பிள்ளை லோகம் ஜீயர் (சித்திரை திருவோணம்)
ஸ்ரீசடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம் |
ஸ்ரீமத்யதீந்த்ரப்ரவணம் ஸ்ரீ லோகார்ய முநிம் பஜே ||

நம்மாழ்வார் திருவடிகளில் வண்டு போன்றவர், மாமுனிகளிடம் பரம பக்தர், யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்
திவ்ய கிரந்தம் அருளிச் செய்தவர், லோகார்ய முனி என்கிற பிள்ளை லோகம் ஜீயரை வணங்குகிறேன்..

திருமழிசை அண்ணா அப்பங்கார் (ஆனி அவிட்டம்)
ஸ்ரீமத் வாதுல நரஸிம்ஹ குரோஸ்தநூஜம்
ஸ்ரீமத் ததீய பதபங்கஜ ப்ருங்கராஜம்
ஸ்ரீரங்கராஜ வரதார்ய க்ருபாத்த பாஷ்யம்
ஸேவே ஸதா ரகுவரார்யம் உதாரசர்யம்

வாதூல நரசிம்மச்சார்யர் குமாரர், அவரடி பணிந்தவர், அவர் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர்,
அவரிடமும் ஸ்ரீ ரங்கராஜாசார்யரிடமும் ஸ்ரீ பாஷ்யம் பயின்றவர், வாதூல வீரராகவர் என்றும்
அண்ணா அப்பங்கார் என்றும் பிரசித்தி பெற்ற ரகுவராயரை வணங்குகிறேன். .

அப்பன் திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் (ஆவணி ரோஹிணி)
ஸ்ரீவாதூல ரமாப்ரவாள ருசிர ஸ்ரக்ஸைந்ய நாதாம்சஜ
ஸ்ரீகுர்வீந்த்ரம் மஹார்ய லப்த நிஜஸத் ஸத்தம் ச்ருதா பீஷ்டதம்
ஸ்ரீராமாநுஜ முக்ய தேசிகலஸத் கைங்கர்ய ஸம்ஸ்தாபகம்
ஸ்ரீமத்வேங்கடலக்ஷ்மணார்ய யமிநம் தம்ஸத்குணம் பாவயே

வாதூல குலாசார்யர்களில் நல்முத்துப் போன்றவர், சேனை முதலியார் அம்சர், அண்டி வந்தோர் விரும்பியதைத் தந்தவர்,
திருவாதிரை உத்சவம் போன்றவற்றில் கட்டிய கைங்கர்யம் போன்றவற்றை ஏற்படுத்தியவர்,
ஸ்ரீமத் வேங்கட லக்ஷ்மணார்ய யதி என்கிற எம்பார் ஜீயர் திருவடிகளை வணங்குகிறேன்.

—————–

ஸ்ரீ ஈயுண்ணி மாதவப் பெருமாள் -ஸ்ரீ சிறியாழ்வான் அப்பிள்ளை –

கார்த்திகே பரணி ஜாதம் ஸ்ரீ லோகார்ய பதாஸ்ரிதம்
வேதாந்த த்வய சம்பந்நம் மாதவார்யம் அஹம் பஜே

கார்த்திகையில் பரணியில் அவதரித்தவராய் ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளை அடைந்தவராய்
உபய வேதாந்தச் செல்வரான ஸ்ரீ மாதவப் பெருமாளை வணங்குகிறேன்.

லோகாசார்ய பதாம்போஜ ஸம்ஸ்ரயம் கருணாம்புதிம்
வேதாந்த த்வய சம்பந்நம் மாதவார்யம் அஹம் பஜே

உலகாரியரான ஸ்ரீ நம்பிள்ளையின் திருவடித்தாமரையைப் பற்றியவராய் கருணைக்கடலாய்
உபய வேதாந்தச் செல்வமுடையவரான ஸ்ரீ மாதவாச்சார்யரை ஆஸ்ரயிக்கிறேன்.

சீரார் வடக்கு திருவீதிப் பிள்ளை* எழு
தேரார் தமிழ் வேதத்து ஈடுதனைத் – தாருமென
வாங்கி முன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்
தான் கொடுத்தார் பின் அதனைத்தான்

ஆங்கு அவர் பால் பெற்ற சிறியாழ்வான் அப்பிள்ளை
தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில்-பாங்குடனே
நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் நல்ல மகனார்க்கு அவர் தாம்
மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு.

ஸ்வாமி ஸ்ரீ நம்பிள்ளையினுடைய பிரதான சிஷ்யர் ஸ்வாமி ஸ்ரீ வடக்கு திருவீதிப் பிள்ளை.
(சீரார் வடக்கு திருவீதிப் பிள்ளை – ஆசார்ய ப்ரஸாதத்தாலே அவர் அருளிச் செய்த
அர்த்த விசேஷங்களை யெல்லாம் தெரிந்தெழுதி எல்லார்க்கும் உபகரிக்கும்படியான
ஜ்ஞானாதி குண பூர்த்தியை உடையவராயிருக்கை)
ஸ்ரீ ஸ்வாமி வடக்குதிருவீதிப் பிள்ளை, ஸ்வாமி நம்பிள்ளையிடம் காலக்ஷேபத்திலே கேட்டு அறிந்து கொண்ட
திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களை இரவு நேரத்திலே பட்டோலை கொண்டு
ஸ்ரீ ஈடு முப்பத்து ஆறாயிரப்படியாக்கி வைத்தாராம்.
ஆகிலும் ஸ்வாமி ஸ்ரீ நம்பிள்ளையினுடைய அனுமதி பெறாமலே இவர் எழுதிவைத்த படியால்
அந்த ஸ்ரீகோசத்தை கொடும் என்று கேட்டு தாம் வைத்துக்கொண்டாராம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் நியமனமின்றி ஸ்ரீ நம்பிள்ளை இந்த ஸ்ரீ கோசத்தை தந்தருளமாட்டார் என்பதை
நன்கறிந்த ஸ்ரீ ஈயுண்ணி மாதவப் பெருமாள் என்ற ஸ்வாமி, ஸ்ரீ பெரிய பெருமாளிடம் ப்ரார்திக்க,
ஸ்ரீ பெரிய பெருமாளும் திருவுள்ளம் உவந்து இரங்கி ஸ்ரீ நம்பிள்ளைக்கு நியமித்தருள, பின்பு அந்த
ஸ்ரீகோசத்தை நம்பிள்ளை ஈயுண்ணி மாதவப் பெருமாளுக்கு தந்தருளினாராம்.

அப்படியாக ஸ்ரீ நம்பிள்ளையிடம் ஸ்ரீகோசத்தைப் பெற்றுக்கொண்ட ஸ்ரீ சிறியாழ்வான் அப்பிள்ளை
தம்முடைய திருக்குமாரரான ஸ்ரீ பத்மநாபப் பெருமாளிடம் அந்த ஸ்ரீ ஈட்டை ப்ரசாதித்து அருளினார்.
ஸ்ரீ பத்மநாபப் பெருமாள் தம் சிஷ்யரான ஸ்ரீ நாலூர்ப் பிள்ளைக்கு ப்ரசாதித்து அருளினார்.
அந்த ஸ்ரீ நாலூர்ப் பிள்ளை தம்முடைய திருக்குமாரரான ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளைக்கு ப்ரசாதித்து அருளினார்.
அந்த ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளையே மேலுள்ளவர்களுக்கு கொடுத்து உபகரித்து அருளினாராம்.
ஸ்ரீ நாலூராச்சான் ஸ்வாமியின் சிஷ்யர்கள் ஸ்ரீ திருநாராயணபுரத்து ஆயி, ஸ்ரீசைலேசர் என்னும் திருநாமமுடைய
ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளை மற்றும் ஸ்ரீ ஈயுண்ணி தேவப்பெருமாள் ஆகியோர் ஆவர்.

—————-

ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளை –

திருநக்ஷத்ரம் – ஐப்பசி உத்திரட்டாதி
திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள ஆறநூர் என்னும் கிராமத்தில் அவதரித்தவர்.
ஆசார்யன் – ஸ்ரீ பிள்ளைலோகாசார்யார்
வேறு திருநாமம் – நலந்திகழ் நாராயண தாஸர்

தனியன்
துலாஹிர்புத்ந்ய ஸம்பூதம் ஸ்ரீ லோகார்ய பதாஸ்ரிதம்
ஸப்தகாதா ப்ரவக்தாரம் நாராயணமஹம் பஜே

ஐப்பசி உத்திரட்டாதியில் அவதரித்தவரும் ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் திருவடிகளைப் பற்றியவரும்
ஸ்ரீ ஸப்தகாதை அருளிச் செய்தவரும் “ஸ்ரீ நலந்திகழ் நாராயண தாஸர் என்ற
ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளையை வழிபடுகிறேன்.

மற்றொரு தனியன்

ஸ்ரீ லோகார்ய பதாரவிந்த மகிலம் ஸ்ருத்யர்த்த கோசாம் ஸ்ததா
கோஷ்டீஞ்சாபி ததேக லீநமநஸா ஸஞ்சிந்தயந்தம் முதா

ஸ்ரீ நாராயண தாஸமார்யமமலம் சேவே ஸதாம் ஸேவிதம்
ஸ்ரீ வாக்பூஷண கடபாவ விவ்ருதிம் யஸ்ஸப்த காதாம் வ்யதாத்

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யருடைய பாதாரவிந்தங்களில் மறைப்பொருள் அனைத்தையும் பெற்றவரும்
அவருடைய கோஷ்டியை எப்போதும் நினைத்துக்கொண்டு இருப்பவரும்,
ஸ்ரீ வசனபூஷணத்தின் உட்பொருள்களை ஸ்ரீ ஸப்தகாதை என்ற நூலால் வெளியிட்டவரும்
ஸ்ரீ நாராயண தாஸர் என்ற திருநாமமுடையவரான உயர்ந்தவரை எப்போதும் சேவிக்கிறேன்.

ஸ்ரீ பிள்ளை உறங்காவில்லிதாஸர் ஸ்வாமி எம்பெருமானாருக்கு அந்தரங்கராய் இருந்ததுபோல்,
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் ஸ்வாமியினிடத்திலே, அந்தரங்க சிஷ்யராய் இருந்து
ஸகல சாஸ்திர அர்த்தங்களையும் கேட்டவர் ஸ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளை.
இவர் ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் திருவாய்மலர்ந்தருளிய ஸ்ரீ வசனபூஷண திவ்ய சாஸ்த்ரத்தில் ஊன்றினவராயும்
அதிலுள்ள அர்த்த விசேஷங்களை அனுபவிப்பதைத் தவிர வேறொன்று அறியாதவராயும் வாழ்ந்து வந்தவர்.

ஸ்ரீமத் பகவத் கீதையில் அமைந்துள்ள ஸ்லோகங்களுள் சரம ஸ்லோகம் சிறப்பெய்தினது போல,
ஸ்ரீ வசனபூஷணத்தில் அமைந்துள்ள ப்ரகரணங்களுள் சரம பர்வ நிஷ்டா ப்ரகரணம் சிறப்புற்றது.
ஆகையால் இந்த ப்ரகரணத்தில் அருளிச்செய்யப்பட்ட அர்த்த விசேஷங்களை எல்லாம் திரட்டி
ஒரு பிரபந்தம் அருளிச்செய்ய திருவுள்ளம் கொண்டு திருவாசிரியம் போலே
ஏழு பாசுரம் கொண்ட ஸப்தகாதை என்னும் நூலை அருளிச்செய்தார் ஸ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளை என்று பெரியோர் பணிப்பர்.

ஸ்ரீ வசனபூஷண ரஹஸ்ய அர்த்தத்தை ஸ்வாமி திருவாய்மொழிப் பிள்ளைக்கு உபதேசித்தார்.
இவருடைய திருவரசு திருவனந்தபுரம் எம்பெருமானின் கர்பக்ரஹம் (அநந்த பத்மநாப பெருமாள் திருவடி).

—————–

ஸ்ரீ மாறனேரி நம்பி

யாமுநாசார்ய ஸச் சிஷ்யம் ரங்கஸ்தல நிவாஸிநம்
ஜ்ஞாந பக்த்யாதி ஜலதிம் மாறனேரி குரும் பஜே

ஆனி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பாண்டிய நாட்டிலுள்ள புராந்தகம் என்னும் சிற்றூரில்
நான்காம் வருணம் எனப்படும் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தார்.
மாறனாகிய நம்மாழ்வாருக்கு ஒப்பாக கருதும் வகையில் திருவரங்கத்தில் உறையும் அரங்கன் மீது
அளவற்ற பக்தி கொண்டமையால் இவரை மாறனுக்கு நேரான நம்பி எனும் பொருளில்
மாறனேர் நம்பி (மாறன்+நேர்+நம்பி) அல்லது மாறனேரி நம்பி என அனைவராலும் அழைக்கப்பட்டார்.

தன் குருவாகிய ஆளவந்தார் இராஜ பிளவை எனப்படும் கொடு நோயால் படும் வேதனை பொருக்க ஒண்ணாது,
தன் குருவை அணுகி, குருப்பிரசாதமாக அக்கொடிய நோயை தனக்கு அளிக்குமாறு வேண்டி நின்றார்.
ஆளவந்தார் மறுதளித்தும் பிடியாய் இருந்த நம்பிக்கு வேறுவழியின்றி தன் நோயை மாற்றியருளினார்.
மூன்று மாதங்களுக்கும் மேலாக அக்கொடிய நோயால் பாதிப்படைந்தவர், குருபக்தியால் அனைவரும்
வியக்கும் வண்ணம் விரைவில் குணமடைந்தார். ஆயினும் இச்செய்கையால் தன் குடும்ப அங்கத்தினாராலேயே ஒதுக்கப்பட்டார்.

ஆளவந்தாரின் முதன்மை சீடரும், பிள்ளை பிராயம் தொட்டு தனக்கு உற்ற தோழனுமான பெரிய நம்பிகளிடம்
தான் ஆச்சாரியன் திருவடி அடைந்தப்பின் தன் பூத உடலை தன் உறவினர்களிடம் சேர்க்காது பெரியநம்பிகளே
ஈமக்கிரியையகள் யாவும் செய்ய வேண்டும் என்ற தன் இறுதி விருப்பத்தை தெரிவித்தார்.
ஏனெனில் ஆளவந்தாரின் இராஜபிளவை நோயை குருப்பிரசாதமாக பெற்றுக் கொண்டப்படியால்
தன் உடலும் குருப்பிரசாதம் என்றும் அதனை வைணவர்கள் அல்லாத தன் குடும்பத்தினரிடம் அளிப்பது என்பது
உயர்ந்த யாக நெய்யை தெருநாய்களுக்கு இடுவதற்கு ஒப்பாகும் என்றும் கருதினார்.
அதன்படி இவரின் இறுதிக் கடன் யாவும் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த பெரிய நம்பிகளால் குறைவற நடத்திவைக்கப்பட்டது.

————-

ஸ்ரீ எறும்பியப்பா

நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய பரம்பரையில் சரம ஆசார்யராய், ப்ரதமாசார்யரான ஸ்ரீ நம்பெருமாளுக்கும் ஆசார்யராய்,
ஸ்ரீ யதிராசருடைய புநர் அவதார பூதரான ஸ்ரீ மணவாளமாமுனிகளுக்கு ஞான பக்தி வைராக்கியங்களில் சிறந்து விளங்கிய
தலை சிறந்த சிஷ்யர்கள் பலர் உண்டு. அவர்களில் எண்மர் அஷ்ட திக்கஜங்கள் என்று பெயர் பெற்றவர்கள்.
அஷ்டதிக்கஜங்களாக நியமிக்கப்பட்ட எண்மருள் ஸ்ரீ எறும்பியப்பாவும் ஒருவர்.
இவர் சோளஸிம்ஹபுரத்துக்கு அருகிலுள்ள எறும்பி என்னும் ஊரில் முடும்பைக்குடியில்
ஸ்ரீ பெரியசரண்யாச்சார்யார் என்பவருக்கு திருக்குமாரராக அவதரித்தார். இயற்பெயர் ஸ்ரீ தேவராஜன்.

திருநக்ஷத்ரம் – ஐப்பசி ரேவதி
ஸ்வாமி ஸ்ரீ எம்பெருமானாருக்கு ஸ்ரீ வடுகநம்பியைப் போலே ஸ்ரீ மணவாளமாமுநிகளையொழிய
தேவுமற்றறியாதே ஸ்ரீ மாமுநிகளுக்கு அத்யந்த அபிமதராய் இருப்பார் என்று
ஸ்ரீ கோயில் கந்தாடை நாயன் அருளிச்செய்த பெரிய திருமுடி அடைவு கூறும்.

ஸ்ரீ மணவாள மா முனிகள் விஷயமாக இவரருளிச் செய்துள்ள க்ரந்தங்கள்:
வரவரமுநி சதகம், வரவரமுநி காவ்யம், வரவரமுநி சம்பூ, வரவரமுநி நாடகம், பூர்வ தினசர்யா,
உத்திர தினசர்யா ஆகியவை ஆகும்.
மேலும் விலக்ஷண மோக்ஷ அதிகாரி நிர்ணயம் என்கிற நூலையும் அருளிச் செய்துள்ளார்.

ஸ்ரீ மணவாள மா முனிகளுடைய சிஷ்யர் ஸ்ரீ போரேற்று நாயனார்.
நவரத்னங்கள் என்று கொண்டாடப்படுபவர்களான ஸ்ரீ மணவாளமாமுனிகள் சிஷ்யர்கள் ஒன்பதின்மரில் இவரும் ஒருவர்.
ஸ்ரீ போரேற்று நாயனாருடைய சிஷ்யர் ஸ்ரீ சேனாபதியாழ்வான்.
ஸ்ரீ சேனாபதியாழ்வானுக்கும் ஸ்வாமி எறும்பியப்பாவுக்கும் இடையே நிகழ்ந்த ஸம்ப்ரதாய தொடர்புடையதான
வினாக்களுக்கு விடையாக அமைந்துள்ளது விலக்ஷண மோக்ஷ அதிகாரி நிர்ணயம் என்ற நூல்.

தனியன்
துலா ரேவதி ஸம்பூதம் வரயோகி பதாஸ்ரிதம்
ஸர்வ வேதாந்த ஸம்பூர்ணம் அப்பாச்சார்ய மஹம் பஜே

ஐப்பசி ரேவதியில் அவதரித்தவரும் மணவாளமாமுனிகளின் திருவடிகளைப் பற்றியவரும்
எல்லா வேதாந்தங்களாலும் நிறைந்தவருமான எறும்பியப்பாவை வழிபடுகிறேன்.

தனியன்
சௌம்யஜா மாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம்
தேவராஜம் குரும் வந்தே திவ்யஜ்ஞாந ப்ரதம் ஸுபம்

அழகிய மண்வளமாமுனிகளின் திருவடித்தாமரைகளில் வண்டு போல் படிந்து ரஸாநுபவம் செய்பவரும்,
தம்மை அண்டினவர்களுக்கு உயர்ந்த ப்ரஹ்ம ஜ்ஞானத்தை அளிப்பவரும், அறிவினாலும் அநுஷ்டாணத்தாலும்
சோபிப்பவருமான தேவராஜகுரு என்னும் எறும்பியப்பாவை வழிபடுகிறேன்.

—————

ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள்

ஸ்ரீ திருநாராயணபுரம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ மேலக்கோட்டையில் ஸ்ரீ ஸேனை முதலியார்
அவதரித்த நன்னாளில் திருவவதரித்தார். திருநக்ஷத்ரம் – ஐப்பசி பூராடம்.

மற்ற திருநாமங்கள் – தேவராஜர், தேவப்பெருமாள், ஆஸூரிதேவராயர், திருத்தாழ்வரை தாஸர்,
ஸ்ரீஸாநுதாசர், மாத்ரு குரு, ஜநந்யாச்சார்யர், ஆயி, தேவராஜ முநீந்த்ரர் ஆகியவை ஆகும்.

ஜநந்யாசார்யருக்கு வேதம், திவ்ய ப்ரபந்தம் கற்பித்து, பஞ்சஸம்ஸ்காரம் செய்தது
அவருடைய திருதகப்பனார் லக்ஷ்மணாச்சார்யார் ஆவார்

திருநாடு அலங்கரித்தது திருநாராயணபுரத்திலே.

ஈடு பரம்பரையின் ஆசார்யர் ஸ்வாமி நம்பிள்ளை.
அவர் சிஷ்யர் ஈயுண்ணி மாதவர்.
அவர் குமாரர் ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள்.
இவர் சிஷ்யர் நாலூர்ப்பிள்ளை.
இவர் சிஷ்யர் நாலூராச்சான்பிள்ளை.
இவருடைய சிஷ்யர்கள் ஸ்ரீ திருநாராயணபுரத்து ஆயி, இளம்பிளிசைப் பிள்ளையான ஸ்ரீ திருவாய்மொழி ஆச்சான்,
ஸ்ரீசைலேசர் என்னும் திருநாமமுடைய ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளை ஆகியோர் ஆவர்.

ஸ்ரீ எம்பெருமானார் தம் திருக்கைகளாலே திருவாராதநம் ஸமர்ப்பித்த ஸ்ரீ திருநாராயணப் பெருமாளுக்கும்,
ஸ்ரீ ராமப்ரியனும் ஸ்ரீ யதிராஜ சம்பத்குமாரனுமான செல்வப்பிள்ளைக்கும் பாலமுதும்,
ஸ்ரீ மாலாகாரர், ஸ்ரீ விஷ்ணுசித்தர் மற்றும் ஸ்ரீ ஆண்டாளைப் போல புஷ்பமும் ஸமர்ப்பித்துக்கொண்டு
கைங்கர்ய நிரதராய் ப்ரசித்தி பெற்றவர் ஸ்ரீ திருநாராயணபுரத்து ஆயி ஸ்வாமி.

ஆய் என்ற சொல்லுக்கு தாய் என்று பொருள். இந்த ஸ்வாமி ஸ்ரீ திருநாரணனுக்கு பாலமுது சமர்ப்பிக்கும்
கைங்கர்யத்தை தாயன்போடு செய்து வந்தாராம். ஒரு நாள் பாலமுது சமர்பிப்பதற்கு கொஞ்சம் காலம் தாழ்ந்துபோக,
ஸ்ரீ திருநாரணன் அது பொறாமல் நம் ஆய் எங்கே (தாய்) இன்னம் காணோமே? என்று அர்ச்சகர் மூலம்
வினவினபடியாலே அன்று முதல் இவருக்கு ஆய் என்று திருநாமம் உண்டாயிற்று.

மாமுனிகளுக்கும் இவருக்கும் உள்ள சம்பந்தம்:
மணவாளமாமுனிகள் ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யானம் அருளிச் செய்தபோது
“ஜ்ஞான சதுர்த்திகளின் மேலேயிறே ஆநந்தஷஷ்டிகளுக்கு உதயம்” என்கிற வாக்கியத்திற்கு
அர்த்தம் அருளிச்செய்யும் போது சில விளக்கங்கள் தேவைப்பட தமது ஆசார்யரான
ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளையின் ஸஹ அத்யாயியாய்(கூடப் படித்தவர்) எழுந்தருளியிருந்த
ஸ்ரீ ஆய் ஸ்வாமியினிடத்திலே கேட்கவேணும் என்று திருவுள்ளம்கொண்டு ஸ்ரீ திருநாராயணபுரம் நோக்கி
புறப்பட்டாராம் ஸ்ரீ மாமுனிகள். அதே ஸமயம் ஸ்ரீ திருநாரணன் ஆயி ஸ்வாமியின் ஸ்வப்னத்திலே
ஸ்ரீ மாமுனிகள் அவதாரரஹஸ்யத்தை காட்டியருள ஸ்ரீ ஆய் ஸ்வாமி மாமுனிகளை சேவிப்பதற்காக
ஸ்ரீ ஆழ்வார் திருநகரிக்கு புறப்பட்டார். இருவரும் ஸ்ரீ ஆழ்வார் திருநகரி எல்லையில் சந்தித்துக்கொள்ள
ஸ்ரீ ஆயியும் தாளும் தடக்கையும் கூப்பி சேவிக்க, இதனைக் கண்ட ஸ்ரீ பெரிய ஜீயர் ஸ்வாமியின் சிஷ்யர்கள்
ஸ்ரீ பெரிய நம்பியும் ஸ்ரீ எம்பெருமானாரும் எதிர்பட்டாப் போலாயிற்று என்று உகந்தனராம்.
ஸ்ரீ மாமுனிகளும் ஆசார்ய ஹ்ருதய காலக்ஷேபம் கேட்டு முடித்த பின்பு ஸ்ரீ ஆய் ஸ்வாமிக்கு ஒரு தனியன் சமர்ப்பிக்க

“ஆசார்ய ஹ்ருதயஸ்யார்த்தா: ஸகலா யேந தர்ஸிதா:
ஸ்ரீ ஸாநுதாஸம் அமலம் தேவராஜம் தமாஸ்ரயே”

ஸ்ரீ ஆயி ஸ்வாமியும் மாமுனிகள் விஷயமாக ஒரு பாசுரம் அருளிச்செய்தாராம்

பூதூரில் வந்துதித்த புண்ணியனோ?
பூங்கமழும் தாதாரு மகிழ்மார்பன் தானிவனோ,
தூதூர வந்த நெடுமாலோ?
மணவாளமாமுனிவன் எந்தையிவர் மூவரிலும் யார்?

பிறகு ஸ்ரீ ஆய் ஸ்வாமி சிலகாலம் அங்கேயே எழுந்தருளியிருந்தபின்னர் திருநாராயணபுரம் எழுந்தருளினார்.

இவர் அருளிச்செய்தவை
திருப்பாவைக்கு ஈராயிரப்படி மற்றும் நாலாயிரப்படி வ்யாக்யானம்,
ஸ்ரீ வசனபூஷண வ்யாக்யானம்,
ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யானம் ஆகியவை ஆகும்

————-

ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை வைபவம்

அவதார ஸ்தலம் – திருவெள்ளியங்குடிக்கு அருகிலே உள்ள சங்கநல்லூர் என்னும் சிற்றூர்
திருவவதாரம் – சர்வஜித் வருஷம், ஆவணி மாதம் ரோஹிணி நக்ஷத்ரம்
(கண்ணன் எம்பெருமான் திருவவதரித்த நன்னாளிலே அவதரித்தவர் – ஸ்ரீஜயந்தி)
திருதகப்பனார் திருநாமம் – ஸ்ரீ யாமுனதேசிகர்
திருத்தாயார் – நாச்சியாரம்மாள்
பெற்றோர் இட்ட திருநாமம் – க்ருஷ்ணர்
திருவாராதனப் பெருமாள் – க்ருஷ்ண விக்ரஹம்
திருக்குமாரர் – ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை
மற்ற திருநாமங்கள் – அபயப்ரதராஜர், வ்யாக்யான சக்ரவர்த்தி, க்ருஷ்ணஸூரி, பரம காருணிகர்,
அபார கருணாம்ருத சாகரர் ஆகியவை ஆகும்.
ஆசார்யன் – ஸ்ரீ நம்பிள்ளை

பெரியவாச்சான்பிள்ளை அவதாரச் சிறப்பு :
திருக்கண்ணமங்கையில் எழுந்தருளியுள்ள கண்ணன் எம்பெருமான் திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த
திவ்ய ப்ரபந்தங்களில் இருக்கக்கூடிய அர்த்தவிசேஷங்களை அறிய திருவுள்ளம் கொண்டதை அறிந்த
ஆழ்வாரும் எம்பெருமானே வாரும் கற்றுத்தருகிறேன் என்று விண்ணப்பித்தாராம்.

மெய்மை சொல்லில் வெண்சங்கம் ஒன்று ஏந்திய கண்ணா !
நின்தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே !பெரிய திருமொழி 7-10-10

இதனைத் செவிமடுத்த எம்பெருமான் ஆழ்வாரே நாம் அவஸ்யம் தேவரீரிடம் இருந்து அர்த்த விசேஷங்களை
அறிந்து கொள்வோம்! ஆனால் இப்போது அர்ச்சாமூர்த்தியாய் எழுந்தருளியுள்ளபடியால் சாத்தியமில்லை.

பின்னொரு சமயம் தேவரீர் திருக்கலிகன்றி தாசர் என்னும் திருநாமம் கொண்டவராய் இதே
கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்ர நன்னாளிலே இந்தச் சோழ நாட்டிலே அவதரிப்பீர்.
தேவரீர் அவதரித்து சில ஆண்டுகள் கழித்து அதே சோழ நாட்டில் யாம் ஆவணி மாதம் ரோஹிணி நக்ஷத்ரத்திலே
கிருஷ்ணன் என்ற திருநாமம் கொண்டவராய் அவதரிப்போம்.

அந்த சமயம் தேவரீரை ஆசார்யராகக் கொண்டு ஆழ்வார்கள் அனைவருடைய அருளிச்செயல்களின் பொருளையும்
ஸ்ரீ இராமாயண அர்த்தங்களையும் மற்றும் ரஹஸ்யார்த்தங்களையும் தேவரீரிடம் இருந்து கற்றறிந்து
உலகோர்கள் எல்லோரும் உய்ய வேண்டி உபதேசிப்போம் என்று தெரிவித்தானாம் எம்பெருமான்.

அதன்படிக்கு அருளிச்செயலின் அர்த்தவிசேஷங்களைக் கற்றுக்கொடுப்பதற்கு கலிகன்றியாகிய
திருமங்கை ஆழ்வார் திருக்கலிகன்றி தாசராகவும்(ஸ்வாமி நம்பிள்ளை),
கண்ணன் எம்பெருமானே ஆவணி ரோஹிணியிலே க்ருஷ்ணஸூரி என்னும் திருநாமம் கொண்டு
ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையாகவும் திருவவதாரம் செய்தனர் என்பது ஸ்ரீவைஷ்ணவ பூர்வாசார்யர்களின் நிர்வாஹம்.

ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையின் ஆசார்யன் – ஸ்வாமி நம்பிள்ளை

ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்த விசிஷ்டாத்வைத வேதாந்தப் ப்ரவசனம் செய்த மஹாநுபாவர்களில் தலைவர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை.
நம்பெருமாள் கோஷ்டியோ அல்லது நம்பிள்ளை கோஷ்டியோ என்று வியந்து போகும் அளவிற்கு எண்ணிலடங்கா
சத் சிஷ்யர்களை பெற்றிருந்த பெருமை, லோகாச்சார்யார் என்று ஸ்ரீ கந்தாடை தோழப்பரால் கொண்டாடப்பட்ட
நம்பிள்ளை ஸ்வாமிக்கு உண்டு. அதே போன்று நம் பெரியபெருமாளுக்கு இருக்கக்கூடிய ப்ரபாவத்தை
நம்மால் பேசி முடித்தாலும், நம் பெரியவாச்சான்பிள்ளை ஸ்வாமியின் பெருமைகளைப் பேசி முடிக்க நம்மால் முடியாது.
லோகத்தை ஆளும் சக்ரவர்திகளுக்கு ஸிம்ஹாஸனம் உண்டு என்பதை கேள்விபட்டு இருக்கிறோம் அல்லவா.
அது போல வ்யாக்யான சக்ரவர்த்தியான ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளைக்கு நான்கு திக்குகளிலும்
நான்கு ஸிம்ஹாஸனங்கள் உண்டு என்பது ஸ்ரீவைஷ்ணவ பெரியோர்களின் திருவாக்கு.

முதல் ஸிம்ஹாஸனம் –
நாலாயிர திவ்யப்ரபந்த பாசுரங்களுக்கு ஸ்வாமி அருளிச்செய்த திவ்ய வ்யாக்யானங்களே முதலாவதும்
முக்கியமானதுமான ஸிம்ஹாஸனம் ஆகும். அவைகள் இல்லாவிடில் ஸ்ரீவைஷ்ணவ உலகமே ஞான சூன்யமாய்
இருளடைந்து பாழாகியிருக்கும். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு திருப்பல்லாண்டு முதலான நாலாயிர திவ்யப்ரபந்தங்களையொழிய
பகவானை அறிவதற்கு வேறு வழியில்லை. திவ்யப்ரபந்தங்களிலே இருக்கக்கூடிய ஆழ்ந்த அர்த்தங்களை
அறிவதற்கு பூர்வாசார்ய பரம்பரையாகவும், ஆசார்ய நியமனப்படியும்,
ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையால் அருளிச்செய்யப்பட்ட வ்யாக்யானங்களைத் தவிர வேறு புகல் இல்லை.

இரண்டாவது ஸிம்ஹாஸனம் –
இதிஹாஸ ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தில் அமைந்துள்ள மிகச்சிறந்த ஸ்லோகங்கள் பலவற்றில் இருக்கக்கூடிய
ரஹஸ்ய அர்த்தங்களை விவரித்து அருளிச்செய்த ஸ்ரீராமாயண தனிஸ்லோகம்,
ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையின் இரண்டாவது ஸிம்ஹாஸனமாகும்.

மூன்றாவது ஸிம்ஹாஸனம் –
ரஹஸ்யத்ரயங்களையும் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர்கள் அவஸ்யம் தெரிந்து கொள்ள வேண்டிய மற்ற
ரஹஸ்யார்த்தங்களையும் விவரித்து ஸ்வாமி அருளிச்செய்த பரந்த ரஹஸ்யம், மாணிக்கமாலை,
ஸகலப்ராமண தாத்பர்யம், ரஹஸ்யத்ரய தீபிகை, ரஹஸ்யத்ரய விவரணம் மற்றும் நிகமனப்படி
முதலானவை மூன்றாவது ஸிம்ஹாஸனம்.

நான்காவது ஸிம்ஹாஸனம் –
பரமாசார்யரான ஸ்ரீ ஆளவந்தாரும் ஜகதாசார்யரான ஸ்வாமி எம்பெருமானாரும் அருளிச்செய்த
ஸ்தோத்ரரத்னம், சதுஸ்லோகி, கத்யத்ரயம் முதலான ஸ்தோத்ரங்களுக்கு ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த
திவ்ய வ்யாக்யானங்களும் மற்றும் ஜிதந்தே ஸ்தோத்ர வ்யாக்யானமும்,
வ்யாக்யான சக்ரவர்த்தியான ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையின் நான்காவது ஸிம்ஹாஸனம் ஆகும்.

ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளிலே ஸகல சாஸ்த்ரார்த்தங்களையும் கேட்டு
உணர்ந்துகொண்டு ஆழ்வார்கள் அருளிச்செயல் எல்லாவற்றிற்கும் வ்யாக்யானம் அருளிச்செய்தவர்.

பெரிய முதலியாரான ஸ்ரீமந் நாதமுனிகள் காலம் தொடங்கி நம் ஸம்ப்ரதாய அர்த்தங்கள் அனைத்தும்
காலக்ஷேப முறையில் ஆசார்யன் சிஷ்யர்களுக்கு உபதேசித்து வந்தார்கள். ஏடுபடுத்தவில்லை.
பரம காருணிகரும், அபாரகருணாசாகரருமான ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை தான்,
முதன் முதலில் நம்போல்வாருடைய உஜ்ஜீவனம் பொருட்டு திவ்யப்ரபந்த அர்த்தங்கள்,
ஸ்ரீ இராமாயண அர்த்தங்கள், ரஹஸ்ய அர்த்தங்கள், ஸ்தோத்ர அர்த்தங்கள் ஆகிய அனைத்தையும்
தன் பெருங்கருணையாலே பட்டோலை கொண்டு உபகரித்து அருளினார்.
இதனாலன்றோ க்ருபா மாத்ர ப்ரசன்னாசார்யர்களின் கோஷ்டிக்கு தலைவராக விளங்குகிறார் நம் ஸ்வாமி.
இப்படி உலகில் உள்ள அனைவரும் நம் ஸம்ப்ரதாய அர்த்தங்களை தெரிந்து கொள்வதற்கு
இவ்வாச்சார்யார் பண்ணிய உபகாரம் போன்று வேறு எந்த ஆசார்யரும் செய்ததில்லை.

ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளைக்கே உண்டான அசாதாரண பெருமையைப் பற்றி
பெரிய ஜீயர் ஸ்வாமி தாம் அருளிச் செய்த உபதேசரத்தினமாலையில் பின்வருமாறு தெரிவிக்கிறார்.

பெரியவாச்சான்பிள்ளை பின்புள்ளவைக்கும்
தெரிய வ்யாக்கியைகள் செய்வால் –
அரிய அருளிச்செயற்பொருளை
ஆரியர்கட்க்ப்போது அருளிச்செயலாய்த் தறிந்து*

அபயப்ரதராஜரான ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை என்னும் மஹாசார்யர் திருவாய்மொழி தவிர
மற்றுமுள்ள திவ்யப்ரபந்தங்களுக்கும் பரமகருணையுடன் வ்யாக்யானங்கள் அருளிச்செய்த படியாலே,
பின்புள்ளார்கள் ஆசார்ய பீடத்தில் அமர்ந்து திவ்யப்ரபந்த பாசுர அர்த்தங்களை ப்ரவசனம் பண்ணுவதற்கு
பாங்காயிற்று என்று தெரிவிக்கிறார் நம் ஸ்வாமி.

திருவாய்மொழிக்கு பன்னீராயிரப்படி வ்யாக்யானம் அருளிச்செய்தவர்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் என்பது எல்லோரும் அறிந்ததே.
வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமியின் இயற்பெயர் வரதராஜர் என்பதாகும்.
இந்த ஸ்வாமி ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை ஸ்வாமியின் திருமாளிகை திருமடப்பள்ளி கைங்கர்யம் புரிந்து வந்தார்.
எழுத்து வாசனையே அல்லாதவராய் இருந்தவர். அந்த சமயம் கற்றறிந்த பெரியோர்கள் சிலர் சாஸ்த்ர விசாரம்
பண்ணிக் கொண்டிருப்பதைப் பார்த்த வரதராஜர் அவர்களை அணுகி அவர்களுடைய உரையாடல்களைப் பற்றி வினவினார்.
வரதராஜருக்கோ எழுதப்படிக்க தெரியாது என்பதை நன்கு தெரிந்திருந்த அந்த பண்டிதர்கள்
முஸலகிஸலயம் என்ற நூலைப் பற்றி உரையாடிக்கொண்டு இருக்கிறோம் என்று பதில் உரைத்தனராம் அந்த பண்டிதர்கள்.
அப்படி ஒரு நூலே கிடையாது. இவர்கள் சொல்வதை உண்மை என்றெண்ணி வரதராஜர்
ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளையிடம் சென்று இந்த நிகழ்வைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்.
ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை ஸ்வாமி உண்மையை உணர்ந்துகொண்டு உமக்கு கல்வி அறிவு இல்லாதபடியாலே,
இல்லாத ஒரு நூலின் பெயரைச் சொல்லி கேலியாகப் பேசியனுப்பிவிட்டனர் என்று அவரிடம் தெரிவித்தவுடன்
வரதராஜர் மிகவும் வெட்கப்பட்டு ஸ்வாமியினுடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அடியேனுக்கு
ஸாஸ்த்ரம் கற்றுத்தரும்படி வேண்டிக்கொள்ள, அபார கருணை உள்ளம் கொண்ட ஸ்வாமியும் அவருக்கு
ஸாஸ்த்ரம், காவியம், நாடகம், அலங்காரம், ஸப்தம், தர்க்கம், பூர்வ மீமாம்ஸா மற்றும் உத்தர மீமாம்ஸா
முதலான ஸகல ஸாஸ்த்ரங்களையும் மற்றும் ஸம்ப்ரதாய விஷயங்களையும் அவருக்கு உபதேசித்து
ஒரு சிறந்த வல்லுனராக்கி வைத்தார். ஆசார்ய அனுக்கிரஹம் பரிபூர்ணமாக அவருக்கு இருந்த படியாலே
அனைத்து விதமான ஸாஸ்த்ரங்களையும் கற்றுத் தேர்ந்து முஸலகிஸலயம் என்னும் க்ரந்தத்தையும் இயற்றி
இவரைக் கேலியாகப் பேசினவர்களிடத்தே கொண்டு சமர்பித்தாராம்,
பூர்வாஸ்ரமத்திலே வரதராஜர் என்ற திருநாமம் கொண்ட வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமி.

ஆசார்ய அபிமானமே உத்தாரகம்!

ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையின் கோஷ்டியிலே எழுந்தருளியிருந்த சிலர்
“எங்களுக்கு தஞ்சமாய் இருபத்தொரு வார்த்தை அருளிச்செய்யவேணும் என்று ப்ரார்திக்க”
அதற்கு ஸ்வாமி, கலங்குகிறவனும், கலக்குகிறதும், கலங்கிக் கிடக்கிறவர்களும்,
தெளிவிக்கிறவனும், தெளிகிறவனும், தெளிந்திருப்பவனுமாயிறே இருப்பது என்று பதிலுரைத்தாராம்

கலங்குகிறவன் – ஜீவாத்மா
கலக்குகிறது – பகவானையும் ஆத்மாவையும் அறியவிடாமல் மறைத்துத் தன் விஷயத்திலே மூளும்படி பண்ணுகிற அசித்து.
கலங்கிக்கிடக்கிறவர்கள் – தேஹமே ஆத்மா என்று கிடக்கும் சம்சாரிகள்
தெளிவிக்கிறவன் – ஆசார்யன்
தெளிகிறவன் – சேதனன்(ஞானவானான ஜீவாத்மா)
தெளிந்திருக்கிறவன் – ஈஸ்வரன்

ஆகையாலே கலங்குகிற தன்னையும், கலக்குகிற ப்ரக்ருதியையும், கலங்கிக் கிடக்கிற சம்சாரிகளையும்
தஞ்சம் அன்று என்று கைவிட்டு, தெளிவிக்கிற ஆசார்யனையும், தெளிந்திருக்கும் ஈஸ்வரனையும் பற்றுகையே,
ஆசார்யனாலே தெளிந்த இவ்வாத்மாவுக்கு ஸ்வரூபம் என்று அருளினார் ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை.

————–

ஸ்வாமி எம்பெருமானாரால் நியமிக்கப்பட்ட 74 சிம்மாசனாதிபதிகளுள் 72 ஆம் ஸிம்மாசனாதிபதியான
ஸ்ரீ குமாண்டூர் இளையவில்லியாச்சான் ஸ்வாமி திருவம்சத்தில் அவதரித்த
ஸ்ரீ எறும்பில் கந்தாடை அண்ணன் ஸ்வாமியினுடைய திருநக்ஷத்ரம் கார்த்திகை திருவாதிரை.

திருமாளிகையின் எட்டாவது ஸ்வாமியாக எழுந்தருளி இருந்தவர் ஸ்வாமி வரம் தரும் பெருமாள் அப்பை.
தேவுமற்றறியேன் குருகூர் நம்பி என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைப் போல,
எல்லாம் ஆசார்யனே என்று ஸ்வாமி மணவாளமாமுனிகளிடத்திலே
வரம் தரும் பெருமாள் அப்பை ஸ்வாமி எழுந்தருளியிருந்தபடியால்,
இவருடைய ஆசார்ய கைங்கர்ய நிஷ்டையைக் கண்ட ஸ்வாமி மணவாளமாமுனிகள், நம் ஸ்வாமியை
பஞ்சரத்ன ஆசார்ய பீடத்திலே ப்ரதானராய் அபிஷேகம் செய்வித்து
ஸ்ரீ ருக்மிணீ சத்யபாமா ஸமேத ஆஹூய ரக்ஷகரான ஸ்ரீ கிருஷ்ணனை நித்ய ஆராதனத்திற்காக அனுக்ரஹித்து அருளினார்.

வரம் தரும் பெருமாள் ஸ்வாமியின் இரண்டாம் குமாரர் சுத்த ஸத்வம் அண்ணன்.
இவரை பெரிய ஜீயர் ஸ்வாமி அழைத்தருளி ‘பாகவத சேஷத்வத்தை ஈடுமுப்பத்தாறாயிரப்படியாலே நிர்வஹிக்க”
நியமித்தருள ஸ்வாமியும் “பயிலும் சுடரொளி, நெடுமாற்கடிமை” ஆகிய திருவாய்மொழிப் பதிகங்களை
ஸ்வாமி நம்பிள்ளையைப் போல் உபந்யசித்தது கண்டு பெரிய ஜீயரும் “நம் சுத்த சத்வம் அண்ணனோ” என்று
போர உகந்தருளி “திருவாய்மொழி ஆசார்யர்” என்ற சிறப்பு திருநாமமும் சாற்றி
பகவத் விஷய ஸிம்ஹாஸனத்திலே பட்டாபிஷேகம் செய்தருளினாராம்.

வரம் தரும் பெருமாள் அப்பை ஸ்வாமியின் இரண்டாவது திருக்குமாரரான சுத்த ஸத்வம் அண்ணனுக்கு
திருக்குமாரராக அவதரித்தவர் எறும்பில் கந்தாடையண்ணன் ஸ்வாமி. இவருடைய மற்றொரு திருநாமம் வரதராஜ தேசிகர்.
இவருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் பண்ணியருளியவர் ஸ்வாமி வரம் தரும் பெருமாள் அப்பை,
உபய வேதாந்தங்களை கற்பித்தவர் திருதகப்பனாரான ஸ்வாமி சுத்த ஸத்வம் அண்ணன்.
எறும்பில் கந்தாடை அண்ணன் ஸ்வாமி சாதித்த க்ரந்தங்கள்.
1. ஸ்ரீ வசன பூஷண மீமாம்ஸா பாஷ்யம்
2. ஸ்ரீ வெங்கடேசஸ்தவம் மற்றும்
3. ஸ்ரீ பராங்குச ஸ்தவம்

எறும்பில் கந்தாடை ஸ்வாமிக்கு நான்கு திருக்குமாரர்கள் அவதரித்தார்கள்.

தனியன்

கௌசிக ஸ்ரீ நிவாஸார்ய தநயம் விநயோஜ்வலம்
வாத்ஸல்யாதி குணாவாஸம் வந்தே வரததேசிகம்

வாழி திருநாமம்

தக்கானையிருசரணம் தனித்தொழுவோன் வாழியே
சகலகலைப் பொருளனைத்தும் சாத்திடுவோன் வாழியே
மிக்கான கௌஸிகரில் மேவினோன் வாழியே
விருச்சிகத்தில் ஆதிரைநாள் விளங்கவந்தோன் வாழியே
எக்காலம் அண்ணனடி யேத்துமவன் வாழியே
யதிராசன் பாஷியம் இங்கு எடுத்துரைப்போன் வாழியே
இக்காலம் என்னை ஈடேத்த வந்தோன் வாழியே
எறும்பில் கந்தாடையண்ணன் இணையடிகள் வாழியே

ஏழ்பாரும் போற்ற வரும் எறும்பி நகர் வாழுமண்ணா
வாழ்வார் குமாண்டூரில் வந்தோனே – ஆழ்வார்கள்
பன்னுகலை யதிராசன் பாஷியம் பார்த்துரைத்தே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்

————-

கார்த்திகே பரணி ஜாதம் யதீந்த்ர ஆச்ரித மாச்ரயே
ஜ்ஞான ப்ரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முநிம்
ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம்
சதுர்த்த ஆச்ரம ஸம்பந்நம் தேவராஜ முநிம் பஜே

எம்பெருமானாருடைய நல்ல சீடராய் வேத சாஸ்த்ரார்த்தப் பொருளைச் செல்வமாக உடையவராய்
ஸந்யாஸ ஆஸ்ரமத்தை உடையவரான தேவராஜ முனிவர் என்னும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை ஆஸ்ரயிக்கிறேன்.

ஸுவர்ணமுகி நதிக்கரையிலுள்ள விஞ்சை(விஞ்சிமூர்) என்னும் நகரத்தில்
கார்த்திகை மாதம் பரணி நக்ஷத்ரத்தில் அவதரித்தவர் ஸ்வாமி அருளாளப் பெருமாள் எம்பெருமானார்.
இயற்பெயர் யஜ்ஞமூர்த்தி. ஏகதண்டி அத்வைத ஸந்யாசியாக வாழ்ந்தவர்.
எம்பெருமானாருடைய பெருமைகளை அறிந்து கொண்ட இவர், அத்வைதம் தழைக்கவும்,
எம்பெருமானாரை வாதத்திற்கு அழைத்து வெற்றிகொள்ளவும் தீர்மானித்து,
நிறைய க்ரந்தங்களை எழுதி எடுத்துக்கொண்டு வித்யாகர்வத்தோடு தம் சிஷ்யர்களுடன் திருவரங்கம் வந்து சேர்ந்தார்.

ஸ்வாமி எம்பெருமானாரை நோக்கி “நீர் என்னோடு சாஸ்த்ர தர்க்கம் பண்ண வேணும்” என்று அழைத்தார்.
யஜ்ஞமூர்த்தி வாதத்தில் தோற்றால் எம்பெருமானாருடைய மதத்தை ஏற்றுக்கொண்டு,
எம்பெருமானாருடைய பாதுகையை தன் ஸிரஸில் தாங்கி தன்னுடைய பெயரையும்
எம்பெருமானாருடைய திருநாமத்துடன் சேர்த்து வைத்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
எம்பெருமானாரும் வாதத்தில் தாம் தோற்றால் க்ரந்த ஸந்யாஸம் மேற்கொள்வதாக
(க்ரந்தங்களை எழுதாமலும் தொடாமலும் விட்டுவிடுவதாக) அறிவித்தாராம்.

16 நாட்கள் வாதம் நடைபெற்று வெற்றி தோல்வி இல்லாமல் முடிந்தது. வாதத்தின் 17 ஆம் நாள் முடிவில்
யஜ்ஞமூர்த்தி பக்கமே ஓங்கியிருந்த நிலை ஏற்பட்டது. அன்று இரவு ஸ்வாமி எம்பெருமானார்
தன் திருவாராதன பெருமாளான வரதராஜ பெருமாளிடம்
“பேரருளாளப் பெருமாளே! நாத யாமுன முனிவர்கள் வளர்த்து அடியேனிடம் வந்த இந்த தரிசனம்
அடியேனால் சிதைவு காண வேணுமென உமது திருவுள்ளமோ? இப்படி ஒரு திருவிளையாடலோ? என்று
நினைத்துக்கொண்டு சயனிக்க, அவருடைய ஸ்வப்னத்திலே (கனவிலே) பேரருளாளப் பெருமாள் தோன்றி,
எம்பெருமானாரே ஒரு பெரிய அறிவாளியை உமக்கு சீடனாக ஆக்குவதற்கே இதை செய்தோம் என்று சொல்லி
பரமாசார்யரான ஆளவந்தாருடைய மாயாவாத கண்டணத்தைக் கொண்டு யஜ்ஞமூர்த்தியை வாதத்தில் ஜயிப்பீராக என்று அருளினாராம்.

மறுநாள் காலை மிகுந்த சந்தோஷத்துடனும், மநோபலத்துடனும் மதம் கொண்ட யானையைப் போல
வாதத்திற்கு எழுந்தருளிய எம்பெருமானாரைக் கண்ட யஜ்ஞமூர்த்தி, ஸ்வாமியின் முகவொளி கண்டு
மேலே வாதிட விரும்பாமல் ஸ்வாமி திருவடிகளில் தண்டம் சமர்ப்பித்து
“அடியேன் தோற்றேன், இரங்கி அருளவேணும்” என்று பிரார்த்தித்தார்.

ஸ்வாமி எம்பெருமானார் வாதம் தொடரட்டும் என்று சொல்லி வாதத்தைத் தொடங்கி
முறைப்படி வாதத்தில் வென்று வெற்றி கொண்டார். அவரும் தமது அத்வைத கொள்கையைத் த்யஜித்து
சிகையும் யக்ஞயோபவீதத்தையும் தரித்து த்ரிதண்டமேந்தி ஸ்ரீவைஷ்ணவ முக்கோல் பகவர் ஆனார்.
பேரருளாளப் பெருமாளின் அருளால் இவர் தமக்கு சிஷ்யரானபடியாலும், எம்பெருமானாரிடம் வாதத்தில்
தோற்ற படியாலும் வாத நிபந்தனைப்படி எம்பெருமானாருடைய திருநாமத்தோடு சேர்த்து
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று திருநாமம் சூட்டப்பெற்றார்.

ஆசார்யனான ஸ்வாமி எம்பெருமானாரிடம் ஸகல அர்த்தங்களையும் கற்றறிந்து அதை பின்புள்ளாரும்
அறிய வேண்டி, ஸ்வாமியிடம் அனுமதி பெற்று ஞான ஸாரம் மற்றும் ப்ரமேய ஸாரம் ஆகிய
இரண்டு தமிழ் ப்ரபந்தங்களை அருளிச்செய்தார்.

ஞானசாரம் 40 பாசுரங்களைக் கொண்டது. நான்கு வேதங்களிலும் சொல்லப்பட்ட அர்த்த விசேஷங்களை
சாரமாக எடுத்துரைக்கும் ப்ரபந்தம். அருளாளப் பெருமாள் எம்பெருமானார் தம்முடைய பரம கருணையாலே
தத்வம், ஹிதம், புருஷார்த்தம் ஆகியவற்றின் கருத்தை அனைவரும் அறியலாம்படி தமிழில் அருளிச் செய்த ப்ரபந்தம் ஞானசாரம்.

ப்ரமேய ஸாரம் 10 பாசுரங்களைக் கொண்டது. முதல் மூன்று பாசுரங்களால் ப்ரணவத்தின் பொருளையும்,
அடுத்த நான்கு பாசுரங்களால் திருமந்திரத்தின் இரண்டாவது பதமான நம: என்ற சொல்லின் பொருளையும்,
எட்டாவது பாசுரத்தால் நாராயணாய என்ற சொல்லின் பொருளையும்,
ஒன்பதாவது பாசுரத்தில் ஆசார்ய வைபவத்தையும்,
சரமப் பாசுரமான 10 ஆம் பாசுரத்தில் ஆசார்யன் செய்யும் உபகாரத்தையும் அருளிச் செய்துள்ளார்.

———–

பெரிய திருமுடி அடைவு என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றியது.
வைணவ குருபரம்பரை வரலாற்றினைக் கூறுவது. கந்தாடையப்பன் தொகுத்தது.
பார்த்தசாரதி ஐயங்கார் பதிப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது.
அரிசமய தீபம் என்னும் நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரையில் ‘பெரிய திருவடி அடைவு’ நூலைப் பற்றிக் கீழ்க்காணும் செய்திகள் உள்ளன.

கருடவாகன பண்டிதர் செய்த வடமொழி நூல் திவ்வியசூரி சரிதம்.
இதில் இராமானுசர் காலத்தில் அவரது காலம் வரையிலான குருபரம்பரை தொகுத்துக் கூறப்பட்டுள்ளது.
‘பிரபன்னாமிர்தம்’ என்னும் நூல் பின்பழகிய பெருமாள் ஜீயர் இயற்றிய குருபரம்பராப் பிரபாவம் என்னும்
நூலை வடமொழியில் மொழிபெயர்த்தார்.
பெரிய திருமுடி அடைவு என்னும் நூல் அது தோன்றிய 15 ஆம் நூற்றாண்டு வரையிலான
வைணவ குருமார்களின் பரம்பரையைத் தொகுத்துக் கூறும் தமிழ்நூல்.

———–

விஷ்ணுவை ஒரு மனித உருவாக பாவித்தால் அந்த முழு அவயவமும் நம்மாழ்வார்.
பூதத்தாழ்வார் திருமுடி.
பொய்கை ஆழ்வார் கண்கள்.
பெரியாழ்வார் தான் முகம்.
திருமழிசையாழ்வார் கழுத்து.
குலசேகரரும் திருப்பாணாழ்வாரும் இரு கைகள்.
தொண்டரடிப் பொடியாழ்வார் மார்பு.
திருமங்கை ஆழ்வார் தொப்புள்.
மதுரகவி ஆழ்வார் திருவடி.
ஆண்டாள்?? — ஜீவனாகத்தான் இருக்கவேண்டும்.

———-

பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமும் நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரியமாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடலோ குறுமுனியின் கையிலடக்கம்
குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்
கலசமோ புவியில் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப்பாரம்
அரமோ உமையின் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவர் பாடத்திற்கொடுக்கம்
இறைவனோ தொண்டருள்ளத்துளொடுக்கம்
தொண்டர்தம் பெருமையை சொல்லலும் பெரிதே–20 நூற்றாண்டு ஔவையார் பாடல்

——-

பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் இடையே உள்ள உறவு குரங்குக்கும் அதன் குட்டிக்கும் இடையேயுள்ள
உறவைப் போன்றது என்று வடகலையார் கூறுகின்றனர்.
இதனை மர்க்கட நியாயம் என்றழைக்கின்றனர் ( மர்க்கடம்– குரங்கு )
தென்கலையாரோ அவ்வுறவு பூனைக்கும் அதன் குட்டிக்கும் போன்றது என்று கூறுகின்றனர்.
இதனை “ மார்ஜாரம்– பூனை என்று அழைக்கின்றனர்.

————–

ஸ்ரீ நாத முனிகள் ( 824-924 AD )
உய்யக்கொண்டார் (புண்டரீகாக்ஷர்) ( 826-931AD )
மணக்கால் நம்பி (ராமமிச்ரர்) ( 832-937AD )
ஆளவந்தார் (யாமுனாசர்யர்) ( 916-1041 AD )
கூரத்தாழ்வான் (1009-1133AD)
உடையவர் (ஸ்ரீ ராமாநுஜர்) (1017-1137 AD)
முதலி ஆண்டான் (1027-1132)
எம்பார் (1021-1140)
திருக்குருகைப் பிரான் பிள்ளான் (1026-1131 AD )
அனந்தாழ்வான் ( 1055-1205 AD)
கிடாம்பி ஆச்சான் (1057-1157AD )
பராசர பட்டர் ( b 1074 AD )
எங்கள் ஆழ்வான் (விஷ்ணு சித்தர்) (1106-1206 AD)
நஞ்சீயர் (1113-1208 AD)
நம்பிள்ளை (வரதாசார்யர்) (1147– 1252AD)
நடாதூர் அம்மாள்(வாத்ஸ்ய வரதர்) (1165-1275 AD )
பெரியவாச்சான் பிள்ளை (க்ருஷ்ண ஸூரி) (1167-1262 AD)
வடக்குத் திருவீதிப் பிள்ளை (க்ருஷ்ணபாத:) ( 1167-1264 AD )
பிள்ளை லோகாசார்யர் (1205-1311 AD)
வேதாந்த தேசிகன் ( வேங்கடநாதன்) (1268 – 1369 AD)
திருவாய்மொழிப் பிள்ளை (ஸ்ரீசைலேசர்) (1290-1410 AD)
ஸ்வாமி மணவாள மாமுனிகள் (1370-1443 AD)

மாமுனிகள் அரங்கன் திருமுன்னிலையில் திருவாய்மொழிக்கு விரிவுரை செய்தருளிய ஆண்டு 1430 AD

உடையவருக்கு மடைப்பள்ளி கைங்கர்யம் செய்துவந்த கிடாம்பி ஆச்சான் என்ற ஆத்ரேய ராமாநுஜரின்
வம்சத்தில் தோன்றிய கிடாம்பி அப்புள்ளாரின் மருகர் ஸ்வாமி தேசிகன் அவரிடமே பயின்றவர்.
ஸ்வாமி தேசிகனின் முதன்மைச் சீடர்கள் அவர்தம் திருக்குமாரரான வரதாசார்யரும், ப்ரம்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயரும்;
குமார வரதாசார்யர் ( 1316-1401AD )
ப்ரம்ஹதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் ( 1286-1386 AD )
பரகால மடம் இவரால் நிறுவப்பட்டது.

—————

ஸ்ரீ பெரிய பெருமாள் -பங்குனி -ரேவதி
திருமகளும் மண்மகளும் சிறக்கவந்தோன் வாழியே
செய்யவிடைத்தாய்மகளார் சேவிப்போன் வாழியே
இருவிசும்பில்வீற்றிருக்கு மிமையவர்கோன் வாழியே
இடர்கடியப் பாற்கடலை யெய்தினான் வாழியே
அரியதயரதன் மகனாயவதரித்தான் வாழியே
அந்தரியாமித்துவமும் ஆயினான் வாழியே
பெருகிவரும் பொன்னிநடுப் பின்துயின்றான் வாழியே
பெரியபெருமாள் எங்கள் பிரான் அடிகள் வாழியே

பெரிய பிராட்டியார் (பங்குனி – உத்ரம்)
பங்கயப் பூவிற்பிறந்த பாவை நல்லாள் வாழியே
பங்குனியில் உத்தர நாள் பாருதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலகமென வந்த செல்வி வாழியே
மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே
எங்களெழில் சேனைமன்னர்க்கு இதமுரைத்தாள் வாழியே
இருபத்தஞ்சு உட்பொருள் மால் இயம்புமவள் வாழியே
செங்கமலச் செய்யரங்கம் செழிக்கவந்தாள் வாழியே
சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே

ஸேனை முதலியார் (ஐப்பசி – பூராடம்)
ஓங்கு துலாப் பூராடத்துதித்த செல்வன் வாழியே
ஒண்டொடியாள் சூத்ரவதி உறை மார்பன் வாழியே
ஈங்குலகில் சடகோபற்கிதமுரைத்தான் வாழியே
எழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே
பாங்குடன் முப்பத்துமூவர் பணியுமவன் வாழியே
பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே
தேங்குபுகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே
சேனையர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே

நம்மாழ்வார் (வைகாசி – விசாகம்)
மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே
வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே
ஆதிகுருவாய்ப் புவியிலவதரித்தோன் வாழியே
அனவரதம் சேனையர்கோன் அடிதொழுவோன் வாழியே
நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே
நன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே
மாதவன்பொற் பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே
மகிழ்மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே

நாதமுனிகள் (ஆனி – அனுஷம்)
ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே
ஆளவந்தார்க்க் உபதேசமருளிவைத்தான் வாழியே
பானு தெற்கிற்கண்டவன் சொல் பலவுரைத்தான் வாழியே
பராங்குசனார் சொல்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே
கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே
கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே
நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே
நலம்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே

உய்யக்கொண்டார் (சித்திரை – கார்த்திகை)
வாலவெய்யோன்தனை வென்ற வடிவழகன் வாழியே
மால் மணக்கால் நம்பிதொழும் மலர்ப்பதத்தோன் வாழியே
சீலமிகு நாதமுனி சீருரைப்போன் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்கவந்தோன் வாழியே
நாலிரண்டும் ஐயைந்தும் நமக்குரைத்தான் வாழியே
நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே
மால் அரங்க மணவாளர் வளமுரைப்போன் வழியே
வையம் உய்யக்கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே

மணக்கால் நம்பி (மாசி – மகம்)
தேசமுய்யக் கொண்டவர் தாள் சென்னிவைப்போன் வாழியே
தென்னரங்கர் சீரருளைச் சேர்ந்திருப்போன் வாழியே
தாசரதி திருநாமம் தழைக்கவந்தோன் வாழியே
தமிழ் நாதமுனியுகப்பைத் தாபித்தான் வாழியே
நேசமுடனாரியனை நியமித்தான் வாழியே
நீள் நிலத்தில் பதின்மர் கலை நிறுத்தினான் வாழியே
மாசிமகம் தனில் விளங்க வந்துதித்தான் வாழியே
மால்மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியே

ஆளவந்தார் (ஆடி – உத்ராடம்)
மச்சணியும் மதிளரங்கம் வாழ்வித்தான் வாழியே
மறை நான்கும் ஓருருவில் மகிழ்ந்துகற்றான் வாழியே
பச்சையிட்ட ராமர்பதம் பகருமவன் வாழியே
பாடியத்தோன் ஈடேறப் பார்வைசெய்தோன் வாழியே
கச்சி நகர் மாயனிரு கழல் பணிந்தோன் வாழியே
கடக உத்தராடத்துக் காலுதித்தான் வாழியே
அச்சமற மனமகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே
ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே

பெரிய நம்பி (மார்கழி – கேட்டை)
அம்புவியில் பதின்மர்கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
ஆளவந்தார் தாளிணையை அடைந்துய்ந்தோன் வாழியே
உம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்புடையோன் வாழியே
ஓங்கு தனுக் கேட்டைதனில் உதித்த பிரான் வாழியே
வம்பவிழ்தார் வரதருரை வாழி செய்தான் வாழியே
மாறனேர் நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியே
எம்பெருமானார் முனிவர்க்கு இதமுரைத்தான் வாழியே
எழில் பெரிய நம்பி சரண் இனிதூழி வாழியே

திருக்கச்சி நம்பி (மாசி – ம்ருகசீர்ஷம்)
மருவாரும் திருமல்லி வாழவந்தோன் வாழியே
மாசி மிருகசீரிடத்தில் வந்துதித்தான் வாழியே
அருளாளருடன் மொழி சொல் அதிசயத்தோன் வாழியே
ஆறுமொழி பூதூரர்க்களித்தபிரான் வாழியே
திருவாலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே
தேவராச அட்டகத்தைச் செப்புமவன் வாழியே
தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே
திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே

எம்பெருமானார் (சித்திரை – திருவாதிரை)
அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே
சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே

எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே
எழுபத்து நால்வருக்கும் எண்ணான்குரைத்தான் வாழியே
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே
தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே
தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே
தெண்டிரை சூழ்பூதூர் எம்பெருமானார் வாழியே
சித்திரையில் செய்யதிருவாதிரையோன் வாழியே

மாமுனிகள் ஆர்த்தி ப்ரபந்தத்தில் அருளியன:

சீராருமெதிராசர் திருவடிகள் வாழி
திருவரையிற்சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்யவடிவெப்பொழுதும் வாழி
இலங்கிய முன்னூல்வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்யசெய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞானமுத்திரை வாழியே

அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறுகலியைச் சிறிதுமறத் தீர்த்துவிட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்திவைத்தான் வாழியே
மறை அதனில் பொருளனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே
மாறனுரைசெய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே
அறமிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாருமெதிராசர் அடியிணைகள் வாழியே

(திருநாள்பாட்டு – திருநக்ஷத்ர தினங்களில் சேவிக்கப்படுவது)

சங்கர பாற்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள்மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடுநாள்
வெங்கலி இங்கினி வீறு நமக்கிலை என்று மிகத் தளர் நாள்
மேதினி நம் சுமை ஆறுமெனத்துயர்விட்டு விளங்கிய நாள்
மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மன்னியதென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடு நாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமானிளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே

கூரத்தாழ்வான் (தை – ஹஸ்தம்)
சீராரும் திருப்பதிகள் சிறக்கவந்தோன் வாழியே
தென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே
பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே
பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே
நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே
நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே
ஏராரும் தையில் அத்தத்திங்கு வந்தான் வாழியே
எழில் கூரத்தாழ்வான் தன் இணை அடிகள் வாழியே

முதலியாண்டான் (சித்திரை – புனர்பூசம்)
அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்பச்சை வாரணத்தில் அவதரித்தான் வாழியே
சித்திரையில் புனர்பூசம் சிறக்கவந்தோன் வாழியே
சீபாடியம் ஈடுமுதல் சீர்பெறுவோன் வாழியே
உத்தமமாம் வாதூலம் உயரவந்தோன் வாழியே
ஊர்திருந்தச் சீர்பாதம் ஊன்றினான் வாழியே
முத்திரையும் செங்கோலும் முடிபெறுவோன் வாழியே
முதலியாண்டான் பொற்பதங்கள் ஊழிதொறும் வாழியே.

திருவரங்கத்து அமுதனார் (பங்குனி – ஹஸ்தம்)
எந்தாதை கூரேசர் இணையடியோன் வாழியே
எழில் மூங்கில்குடி விளங்க இங்கு வந்தோன் வாழியே
நந்தாமல் எதிராசர் நலம்புகழ்வோன் வாழியே
நம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியே
பைந்தாம அரங்கர் பதம் பற்றினான் வாழியே
பங்குனியில் அத்தநாள் பாருதித்தோன் வாழியே
அந்தாதி நூற்றெட்டும் அருளினான் வாழியே
அணி அரங்கத்தமுதனார் அடி இணைகள் வாழியே

எம்பார் (தை – புனர்பூசம்)
பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே
பொய்கை முதல் பதின்மர் கலைப் பொருளுரைப்போன் வாழியே
மாவளரும் பூதூரான் மலர் பதத்தோன் வாழியே
மகரத்தில் புனர்பூசம் வந்துதித்தோன் வாழியே
தேவுமெப்பொருளும் படைக்கத் திருந்தினான் வாழியே
திருமலைநம்பிக் கடிமை செய்யுமவன் வாழியே
பாவையர்கள் கலவியிருள் பகலென்றான் வாழியே
பட்டர்தொழும் எம்பார் பொற்பதமிரண்டும் வாழியே

பட்டர் (வைகாசி – அனுஷம்)
தென்னரங்கர் மைந்தன் எனச் சிறக்கவந்தோன் வாழியே
திருநெடுந்தாண்டகப் பொருளைச் செப்புமவன் வாழியே
அன்னவயல் பூதூரன் அடி பணிந்தோன் வாழியே
அனவரதம் எம்பாருக்கு ஆட்செய்வோன் வாழியே
மன்னுதிருக்கூரனார் வளமுரைப்போன் வாழியே
வைகாசியனுடத்தில் வந்துதித்தோன் வாழியே
பன்னுகலை நால்வேதப் பயன்தெரிந்தோன் வாழியே
பராசரனாம் சீர் பட்டர் பாருலகில் வாழியே

நஞ்சீயர் (பங்குனி – உத்ரம்)
தெண்டிரை சூழ் திருவரங்கம் செழிக்க வந்தோன் வாழியே
சீமாதவனென்னும் செல்வனார் வாழியே
பண்டை மறைத் தமிழ்ப் பொருளைப் பகர வந்தோன் வாழியே
பங்குனியில் உத்தரநாள் பாருதித்தான் வாழியே
ஒண்டொடியாள் கலவிதன்னை யொழித்திட்டான் வாழியே
ஒன்பதினாயிரப்பொருளை யோதுமவன் வாழியே
எண்டிசையும் சீர் பட்டர் இணையடியோன் வாழியே
எழில்பெருகும் நஞ்சீயர் இனிதூழி வாழியே

நம்பிள்ளை (கார்த்திகை – கார்த்திகை)
தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியே
திருவரையில் பட்டாடை சேர்மருங்கும் வாழியே
தாமமணி வடமார்வும் புரிநூலும் வாழியே
தாமரைக் கை இணையழகும் தடம் புயமும் வாழியே
பாமருவும் தமிழ்வேதம் பயில் பவளம் வாழியே
பாடியத்தின் பொருள்தன்னைப் பகர்நாவும் வாழியே
நாமநுதல் மதிமுகமும் திருமுடியும் வாழியே
நம்பிள்ளை வடிவழகும் நாடோறும் வாழியே

காதலுடன் நஞ்சீயர் கழல்தொழுவோன் வாழியே
கார்த்திகைக் கார்த்திகை யுதித்த கலிகன்றி வாழியே
போதமுடன் ஆழ்வார் சொல் பொருளுரைப்போன் வாழியே
பூதூரான் பாடியத்தைப் புகழுமவன் வாழியே
மாதகவா லெவ்வுயிர்க்கும் வாழ்வளித்தான் வாழியே
மதிளரங்கர் ஓலக்கம் வளர்த்திட்டான் வாழியே
நாதமுனி ஆளவந்தார் நலம்புகழ்வோன் வாழியே
நம்பிள்ளை திருவடிகள் நாடோறும் வாழியே

வடக்கு திருவீதிப் பிள்ளை (ஆனி – ஸ்வாதி)
ஆனிதனிற் சோதிநன்னா ளவதரித்தான் வாழியே
ஆழ்வார்கள் கலைப்பொருளை ஆய்ந்துரைப்போன் வாழியே
தானுகந்த நம்பிள்ளை தாள்தொழுவோன் வாழியே
சடகோபன் தமிழ்க்கீடு சாற்றினான் வாழியே
நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே
நல்லவுலகாரியனை நமக்களித்தான் வாழியே
ஈனமற எமையாளும் இறைவனார் வாழியே
எங்கள் வடவீதிப்பிள்ளை இணையடிகள் வாழியே

பெரியவாச்சான் பிள்ளை (ஆவணி – ரோகிணி)

தீதறு நம்பிள்ளை பதம் சென்னிவைப்போன் வாழியே
திருமலையில் மால்பதத்தைச் சிறந்து பெற்றான் வாழியே
ஆதரவாய் தனிஸ்லோகி அருளினான் வாழியே
ஆழ்வார்கள் சொற்பொருளை அறிந்துரைப்போன் வாழியே
ஓது புகழ் சங்கநல்லூர் உகந்து பெற்றோன் வாழியே
உரோகிணி நாள் ஆவணியில் உதித்தபிரான் வாழியே
ஏதமில் எண் மூவாயிரம் இயம்புமவன் வாழியே
எழில் பெரியவாச்சான்பிள்ளை இணையடிகள் வாழியே

தண்மை சிங்கம் ரோகிணிநாள் தழைக்கவந்தோன் வாழியே
தாரணியில் சங்கநல்லூர் தானுடையோன் வாழியே
புன்மைதவிர் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே
பூதூர் எதிராசர்தாள் புகழுமவன் வாழியே
மன்புகழ்சேர் சடகோபர் வளமுரைப்போன் வாழியே
மறைநாலின் பொருள்தன்னைப் பகுத்துரைப்போன் வாழியே
அன்புடன் உலகாரியர்தம் அடியிணையோன் வாழியே
அபயப்ரதராசர் தாள் அநவரதம் வாழியே

பிள்ளை லோகாசார்யர் (ஐப்பசி – திருவோணம்)
அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே
ஐப்பசியில் திருவோணத்தவதரித்தான் வாழியே
முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே
மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே
நித்தியம் நம்பிள்ளைபதம் நெஞ்சில் வைப்போன் வாழியே
நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே
உத்தமமாம் முடும்பை நகர் உதித்தவள்ளல் வாழியே
உலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே

கூர குலோத்தம தாஸர் (ஐப்பசி – திருவாதிரை)
சந்ததமும் ஆழ்வார்கள் தமிழ் வளர்த்தோன் வாழியே
தாரணியில் சிறுநல்லூர் தானுடையோன் வாழியே
எந்தை உலகாரியனை இறைஞ்சுமவன் வாழியே
இலகு துலா ஆதிரையில் இங்குதித்தோன் வாழியே
இந்த உலகோர்க்கு இதமுரைத்தோன் வாழியே
எழில் வசன பூடணத்துக்கு இனிமைசெய்தான் வாழியே
குந்தி நகர் சிந்தை கொண்ட செல்வனார் வாழியே
கூரகுலோத்தமதாசர் குரைகழல்கள் வாழியே

திருவாய்மொழிப் பிள்ளை (வைகாசி – விசாகம்)
வையகமெண் சடகோபன் மறைவளர்த்தோன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
ஐயன் அருண்மாரி கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
அழகாரும் எதிராசர் அடிபணிவோன் வாழியே
துய்யவுலகாரியன் தன் துணைப்பதத்தோன் வாழியே
தொல் குருகாபுரி அதனைத் துலக்கினான் வாழியே
தெய்வநகர் குந்தி தன்னில் சிறக்க வந்தோன் வாழியே
திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகள் வாழியே

அழகிய மணவாள மாமுனிகள் (ஐப்பசி – திருமூலம்)
இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே
அரவரசப்பெருஞ்சோதி அனந்தனென்றும் வாழியே
எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்தவந்தோன் வாழியே
ஏராரு மெதிராச ரெனவுதித்தான் வாழியே
முப்புரிநூல் மணிவடமும் முக்கோல்தரித்தான் வாழியே
மூதரிய மணவாளமாமுனிவன் வாழியே

(திருநாள்பாட்டு – திருநக்ஷத்ர தினங்களில் சேவிக்கப்படுவது)

செந்தமிழ்வேதியர் சிந்தைதெளிந்து சிறந்து மகிழ்ந்திடு நாள்
சீருலகாரியர் செய்தருள் நற்கலை தேசுபொலிந்திடு நாள்
மந்த மதிப் புவி மானிடர் தங்களை வானிலுயர்த்திடு நாள்
மாசறு ஞானியர் சேர் எதிராசர் தம் வாழ்வு முளைத்திடு நாள்
கந்த மலர்ப் பொழில் சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடு நாள்
காரமர் மேனி அரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடு நாள்
அந்தமில் சீர் மணவாளமுனிப் பரன் அவதாரம் செய்திடு நாள்
அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலமதெனு நாளே

பொன்னடிக்கால் ஜீயர் (புரட்டாசி – புனர்பூசம்)
திருவிருந்த மலர்த்தாள்கள் வாழியே
சிறந்த செந்துவராடையும் வாழியே
தருவிருந்தகை முக்கோலும் வாழியே
தடம்புயத்தினில் சங்காழி வாழியே
மருவு கொண்டல் மணவாள யோகியை
வாழ்த்தி வாழ்ந்தருள் வாய்மலர் வாழியே
கருணை மேவும் இராமனுச முனி
கனக மௌலி கலந்தூழி வாழியே

ஆழ்வார்கள்
பொய்கையாழ்வார் (ஐப்பசி – திருவோணம்)
செய்யதுலாவோணத்திற் செகத்துதித்தான் வாழியே
திருக்கச்சி மாநகரஞ் செழிக்கவந்தோன் வாழியே
வையந்தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே
வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே
வெய்யகதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே
வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே
பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே
பொன்முடியுந் திருமுகமும் பூதலத்தில் வாழியே

பூதத்தாழ்வார் (ஐப்பசி – அவிட்டம்)
அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே
நன்புகழ்சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே
நல்லதிருக் கடன்மல்லை நாதனார் வாழியே
இன்புருகு சிந்தைதிரியிட்ட பிரான் வாழியே
எழின்ஞானச் சுடர் விளக்கையேற்றினான் வாழியே
பொன்புரையுந் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே
பூதத்தார் தாளிணையிப் பூதலத்தில் வாழியே

பேயாழ்வார் (ஐப்பசி – ஸதயம்)
திருக்கண்டேனென நூறுஞ் செப்பினான் வாழியே
சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்தவள்ளல் வாழியே
மருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே
மலர்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே
நெருங்கிடவேயிடைகழியில் நின்ற செல்வன் வாழியே
நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே
பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே
பேயாழ்வார் தாளிணையிப் பெருநிலத்தில் வாழியே

திருமழிசை ஆழ்வார் (தை – மகம்)
அன்புடனந்தாதி தொண்ணூற்றாறுரைத்தான் வாழியே
அழகாருந் திருமழிசையமர்ந்த செல்வன் வாழியே
இன்பமிகு தையில் மகத்திங்குதித்தான் வாழியே
எழிற்சந்தவிருத்தம் நூற்றிருபதீந்தான் வாழியே
முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே
முழுப்பெருக்கில் பொன்னியெதிர் மிதந்தசொல்லோன் வாழியே
நன்புவியில் நாலாயிரத்தெழுநூற்றான் வாழியே
நங்கள் பத்திசாரன் இருநற்பதங்கள் வாழியே

மதுரகவி ஆழ்வார் (சித்திரை – சித்திரை)
சித்திரையிற் சித்திரைநாள் சிறக்கவந்தோன் வாழியே
திருக்கோளூரவதரித்த செல்வனார் வாழியே
உத்தரகங்காதீரத் துயர்தவத்தோன் வாழியே
ஒளிகதிரோன் தெற்குதிக்கவுகந்துவந்தோன் வாழியே
பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே
பராங்குசனே பரனென்று பற்றினான் வாழியே
மத்திமமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே
மதுரகவி திருவடிகள் வாழிவாழி வாழியே

நம்மாழ்வார் (வைகாசி – விசாகம்)
திருக்குருகைப் பெருமாள் தன் திருத்தாள்கள் வாழியே
திருவான திருமுகத்துச் செவியென்னும் வாழியே
இருக்குமொழி என்னென்ஞ்சில் தேக்கினான் வாழியே
எந்தை எதிராசர்க்கு இறைவனார் வாழியே
கருக்குழியில் புகா வண்ணம் காத்தருள்வோன் வாழியே
காசினியில் ஆரியனைக் காட்டினான் வாழியே
வருத்தமற வந்தென்னை வாழ்வித்தான் வாழியே
மதுரகவி தம் பிரான் வாழி வாழி வாழியே

ஆனதிருவிருத்தம் நூறும் அருளினான் வாழியே
ஆசிரியமேழுபாட்டளித்த பிரான் வாழியே
ஈனமறவந்தாதியெண்பத்தேழீந்தான் வாழியே
இலகுதிருவாய்மொழி ஆயிரமுரைத்தான் வாழியே
வானணியு மாமாடக் குருகை மன்னன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
சேனையர்கோன் அவதாரஞ் செய்தவள்ளல் வாழியே
திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே

குலசேகராழ்வார் (மாசி – புனர்பூசம்)
அஞ்சனமா மலைப்பிறவியாதரித்தோன் வாழியே
அணியரங்கர் மணத்தூணையடைந்துய்ந்தோன் வாழியே
வஞ்சிநகரந் தன்னில் வாழவந்தோன் வாழியே
மாசிதனிற் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே
அஞ்சலெனக் குடப்பாம்பிலங்கையிட்டான் வாழியே
அநவரதமிராமகதை அருளுமவன் வாழியே
செஞ்சொல்மொழி நூற்றஞ்சுஞ் செப்பினான் வாழியே
சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே.

பெரியாழ்வார் (ஆனி – ஸ்வாதி)
நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
நானூற்றிரு பத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே
சொல்லரிய ஆனிதனிற் சோதிவந்தான் வாழியே
தொடைசூடிக் கொடுத்தாள் தான் தொழுந்தமப்பன் வாழியே
செல்வநம்பி தன்னைப்போற் சிறப்புற்றான் வாழியே
சென்றுகிழியறுத்துமால் தெய்வமென்றான் வாழியே
வில்லிபுத்தூர் நகரத்தை விளக்கினான் வாழியே
வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே

ஆண்டாள் (திருவாடிப் பூரம்)
திருவாடிப் பூரத்திற் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கர்க்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே
மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே

தொண்டரடிப்பொடி ஆழ்வார் (மார்கழி – கேட்டை)
மண்டங்குடியதனை வாழ்வித்தான் வாழியே
மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே
தெண்டிரை சூழரங்கரையே தெய்வமென்றான் வாழியே
திருமாலையொன்பதஞ்சுஞ் செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளியெழுச்சிப் பத்துரைத்தான் வாழியே
பாவையர்கள் கலவிதனைப் பழித்தசெல்வன் வாழியே
தொண்டுசெய்து துளபத்தால் துலங்கினான் வாழியே
தொண்டரடிப் பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே

திருப்பாணாழ்வார் (கார்த்திகை – ரோஹிணி)
உம்பர்தொழும் மெய்ஞ்ஞானமுறையூரான் வாழியே
உரோகிணிநாள் கார்த்திகையிலுதித்தவள்ளல் வாழியே
வம்பவிழ்தார் முனிதோளில் வகுத்தபிரான் வாழியே
மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே
அம்புவியில் மதிளரங்கரகம்புகுந்தான் வாழியே
அமலனாதி பிரான் பத்துமருளினான் வாழியே
செம்பொன் அடி முடி அளவும் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே

திருமங்கை ஆழ்வார் (கார்த்திகை – கார்த்திகை)
கலந்திருக் கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே
காசினியொண் குறையலூர்க் காவலோன் வாழியே
நலந்திகழாயிரத்தெண்பத்து நாலுரைத்தோன் வாழியே
நாலைந்துமாறைந்தும் நமக்குரைத்தான் வாழியே
இலங்கெழுகூற்றிருக்கையிருமடலீந்தான் வாழியே
இம்மூன்றில் இருநூற்றிருபத்தேழீந்தான் வாழியே
வலந்திகழுங் குமுதவல்லி மணவாளன் வாழியே
வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே

——————

ஸ்ரீரங்க மங்கள மணிம் (நிதிம்) கருணா நிவாஸம்
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம்
ஸ்ரீ ஹஸ்திஸைல சிகரோஜ்வல பாரிஜாதம்
ஸ்ரீஸம் நமாமி சிரஸா யதுஸைல தீபம்

லக்ஷ்மீசரண லாக்ஷாங்க ஸாக்ஷாத் ஸ்ரீவத்ஸ வக்ஷஸே
க்ஷேமங்கராய ஸர்வேஷாம் ஸ்ரீரங்கேசாய மங்களம்

ச்ரிய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தி நாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்

அஸ்துஸ்ரீஸ்தந கஸ்தூரி வாஸனா வாஸிதோரஸே
ஸ்ரீ ஹஸ்திகிரி நாதாய தேவராஜாய மங்களம்

கமலாகுச கஸ்தூரீ கர்த்த மாங்கித வக்ஷஸே
யாதவாத்ரி நிவாஸாய ஸம்பத்புத்ராய மங்களம்

நீலாசல நிவாஸாய நித்யாய பரமாத்மநே
ஸுபத்ரா ப்ராண நாதாய ஜகந்நாதாய மங்களம்

மங்களம் கோஸலேந்த்ராய மஹநீய குணாத்மநே
சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வபௌமாய மங்களம்

ப்ருந்தாரண்ய நிவாஸாய பலராமாநுஜாய ச
ருக்மிணி ப்ராண நாதாய பார்த்தஸூதாய மங்களம்

ஸ்ரீமத்யை விஷ்ணுசித்தார்ய மநோ நந்தந ஹேதவே
நந்த நந்தந ஸுந்தர்யை கோதாயா நித்யமங்களம்

ஸ்ரீநகர்யாம் மஹாபுர்யாம் தாம்ரபர்ணி உத்தரே தடே
ஸ்ரீ திந்த்ரிணீ மூலதாம்நே சடகோபாய மங்களம்

ஸ்ரீமதாலி ஸ்ரீநகரீ நாதாய கலிவைரிணே
சதுஷ்கவி ப்ரதாநாய பரகாலாய மங்களம்

ஸ்ரீமந் மஹாபூதபுரே ஸ்ரீமத் கேஸவ யஜ்வந:
காந்திமத்யாம் ப்ரஸூதாய யதிராஜாய மங்களம்

ஸ்ரீபராங்குச பாதாப்ஜ ஸுரபீக்ருத மௌலயே
ஸ்ரீவத்ஸ சிஹ்ந நாதாய யதிராஜாய மங்களம்

ஸ்ரீமதே ரம்யஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே
ஸ்ரீரங்கவாஸிநே பூயாத் நித்யஸ்ரீர் நித்யமங்களம்

துலா மூலாவதீர்ணாய தோஷிதாகில ஸூரயே
ஸௌம்யஜாமாத்ரு முநயே சேஷாம்ஸாயாஸ்து மங்களம்

மங்களாசாஸந பரை: மதாசார்ய புரோகமை:
ஸர்வைஸ்ச பூர்வைர் ஆசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

அந்திமோபாய நிஷ்டை-1- -ஸ்ரீ பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் ஸ்வாமிகள் –

January 14, 2021

ஶ்ரீஶைலேஶதயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாத்ரம் முநிம் ||

ரம்யஜாமாத்ருயோகீந்த்ரபாத ரேகாமயம் ஸதா|
ததாயத்தாத்மஸத்தாதிம் ராமாநுஜமுநிம் பஜே||

பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் தனியன்கள்

ரம்யஜாமாத்ருயோகீந்த்ரபாத ஸேவைகதாரகம் |
பட்டநாதமுநிம் வந்தே வாத்ஸல்யாதி குணார்ணவம் ||

காந்தோபயந்த்ருயமிந: கருணாம்ருதாப்தே :
காருண்யஶீதலகடாக்ஷஸுதாநிதாநம் |
தந்நாமமந்த்ரக்ருதஸர்வஹிதோபதேஶம்
ஶ்ரீபட்டநாதமுநி தேஶிகமாஶ்ரயாமி ||

———

1 – ஆசார்ய வைபவமும் சிஷ்ய லக்ஷணமும் – ப்ரமாணங்கள்-

உபநிஷதம்ருதாப் தேருத்த்ருதாம் ஸாரவித்பி :
மதுரகவிமுகை ஸ்தாமந்திமோபாயநிஷ்டாம் |
உபதிஶதிஜநேப்யோ யோதயாபூர்ணத்ருஷ்டி :
பஜஹ்ருதய ஸதாத்வம் பட்டநாதம் முநீந்த்ரம் ||

ருசிவரமுநீந்த்ரேணாத ரேணோபதிஷ்டாம்
அக்ருத க்ருதிவரிஷ்டாமந்திமோபாயநிஷ்டாம் |
தமிஹ நிகிலஜந்தூத்தாரணோத் யுக்தசித்தம்
ப்ரதிதி நமபி வந்தே பட்டநாதம் முநீந்த்ரம் ||

நமோஸ்து பட்டநாதாய முநயே முக்திதாயிநே |
யேநைவமந்திமோபாயநிஷ்டாலோகே ப்ரதிஷ்டதா||

தாதொன்றும் தார்புயத்தான் மணவாளமுனிதனது
பாதம் பரவும். பட்டர்பிரான்முனி பல்கலையும்
வேதங்களும் சில புராணங்களும் தமிழ் வேதியரும்
ஓதும்பொருளந்திமோபாயநிட்டையுரைத்தவனே!

அந்திமோபாயநிஷ்டாயாவக்தா ஸௌம்யவரோமுநி: |
லேககஸ்யாந்வயோ மேத்ர லேகநீதாலபத்ரவத் |
எந்தை மணவாளயோகி எனக்குரைத்த
அந்திமோபாயநிட்டையாமதனை – சிந்தைசெய்திங்
கெல்லாரும் வாழ எழுதிவைத்தேன் இப்புவியில்
நல்லறிவொன்றில்லாத நான்.

கற்றோர்கள் தாமுகப்பர் கல்விதன்னிலாசையுள்ளோர்
பெற்றோமென உகந்து பின்புகற்பர் – மற்றோர்கள்
மாச்சரியத்தாலிகழில் வந்த தென்னெஞ்சே இகழ்கை
ஆச்சரியமோதானவர்க்கு.

“ஆப்ரஹ்மஸ்தம்ப பர்யந்தா: ஜகதந்தர்வ்யவஸ்திதா: | ப்ராணிந: கர்ம ஜநிதஸம்ஸாரவஶவர்த்திந:” என்றும்,
“ஏவம் ஸம்ஸ்ருதிசக்ரஸ்தே ப்ராம்யமாணே ஸ்வகர்மபி:” என்றும் சொல்லுகிறபடியே
இருள் தரு மா ஞாலமான ஸம்ஸாரத்திலே, “நாபுக்தம் க்ஷீயதே கர்ம கல்பகோடிஶதைரபி” என்றும்,
“யத்ப்ரஹ்மகல்பநியுதாநுப வேப்யநாஶ்யம்” என்றும் சொல்லுகிறபடியே
பிறப்பாம் பொல்லாவருவினை மாய வன்சேற்றள்ளல் பொய்ந்நிலமாகையாலே, தரைகண்டு காலூன்றித் தரித்து நின்று
அடிகண்டறுக்கவொண்ணாதபடி மூடிக்கிடக்கிற கொடுவினைத் தூற்றில் நின்று பலகாலம் வழிதிகைத்தலமருகின்ற
ஸம்ஸாரி சேதநனுக்கு அஞ்சினான் புகலிடமான ஆசார்யாபிமாநமே உஜ்ஜீவிக்கைக்கு உசிதோபாயமென்று
ஶ்ரீவசநபூஷணாதி திவ்யப்ரபந்த முகேந அறுதியிட்டு,

ஸம்ஸாரத்தில் உருமாய்ந்து “அஸந்நேவ” என்கிறபடியே நஷ்டகல்பனாய் கிடந்த இவனை “ஸந்தமேநம்” என்னும்படி
நிர்ஹேதுகமாக அங்கீகரித்தருளி, த்யாஜ்யோபாதேயங்களைத் தெளிய அறிவித்து ரக்ஷித்தருளின
மஹோபகாரகனான ஸ்வாசார்யன் திருவடிகளை உபாயமாகப் பற்றி, “தேவுமற்றறியேன்” என்றிருக்கும்
அந்திமோபாயநிஷ்டனுக்கு ஸ்வாசார்யனுடைய திவ்யநாமவைபவத்தையும்,
(அவருடைய ஜ்ஞாநப்ரேமாதி குணவைலக்ஷண்யத்தையும் அவருடைய திருவவதார வைபவத்தையும்)
அவர் எழுந்தருளியிருக்கும் திவ்யதேஶ வைபவத்தையும், அவர் திருவடிகளே உபாயமென்னும் அவ்வழியாலே
உபேயமான தத் விக்ரஹவைலக்ஷண்யத்தையும்,
அவர் திருமேனியை ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் த்ரிவிதகரணத்தாலும் ஒன்றும் தப்பாமல் பேணும்
வழியாலே தத்கைங்கர்ய வைபவத்தையும், அந்த கைங்கர்யத்வாரா அவருக்குண்டான ப்ரீத்யதிஶயத்தாலே தாம் பெறும்
பேற்றினுடைய கௌரவத்தையும் இடைவிடாமல் அநுஸந்தித்து தத் விஷயமாக மங்களாஶாஸநம் பண்ணி
வாழுகையே அநவரத கர்த்தவ்யம் என்னுமத்தையும் இப்ப்ரபந்தமுகேந சொல்லுகிறது.

அனந்தபாரம் பஹூ வேதிதவ்யம் அல்பஶ்ச காலோ பஹவஸ்ச விக்நா: |
யத்ஸாரபூதம் தது பாஸிதவ்யம் ஹம்ஸோ யதா க்ஷீரமிவாம்புமிஶ்ரம் ||

அஸாரமல்பஸாரஞ்ச ஸாரம் ஸாரதரம் த்யஜேத் |
பஜேத் ஸாரதமம் ஶாஸ்த்ரம் ரத்நாகர இவாம்ருதம் ||

தத்கர்ம யந்ந பந்தாய ஸாவித்யா யாவிமுக்தயே |
ஆயாஸாயாபரம் கர்ம வித்யாந்யா ஶில்பநைபுணம் ||

ஶாஸ்த்ரஜ்ஞாநம் பஹுக்லேஶம் புத்தேஶ்சலநகாரணம் |
உபதேஶாத்தரிம் புத்த்வா விரமேத் ஸர்வகர்மஸு ||

ஆத்யாநம் ஸத்ருஶேகதம் விஸத்ருஶே தேஹே பவத்யாத்மந:
ஸத்புத்தேஸ்ஸ ச ஸங்க மாதபி பவேதௌஷ்ண்யம் யதா பாதஸி |
கோவாஸங்க திஹேதுரேவமநயோ: கர்மாத ஶாம்யேத் குத:
தத்ப்ரஹ்மாதி கமாத் ஸ ஸித் யதி மஹாந் கஸ்மாத் ஸதாசார்யத: ||

அநாசார்யோபலப்தாஹி வித்யேயம் நஶ்யதி த்ருவம் |
ஶாஸ்த்ராதிஷு ஸுத்ருஷ்டாபி ஸாங்கா ஸஹபலோதயா |
ந ப்ரஸீத தி வை வித்யா விநாஸதுபதே ஶத: ||

தைவாதீநம் ஜகத்ஸர்வம் மந்த்ராதீநம் து தைவதம் |
தந்மந்த்ரம் ப்ராஹ்மணாதீநம் தஸ்மாத் ப்ராஹ்மணதைவதம் ||

வ்ருதைவ பவதோ யாதா பூ யஸி ஜந்மஸந்ததி: |
தஸ்யாமந்யதமம் ஜந்ம ஸஞ்சிந்த்ய ஶரணம் வ்ரஜ ||

பாபிஷ்ட: க்ஷத்ரபந்துஶ்ச புண்டரீகஶ்ச புண்யக்ருத் |
ஆசார்யவத்தயா முக்தௌ தஸ்மாதாசார்யவாந் பவேத் ||

ப்ரஹ்மண்யேவஸ்திதம் விஶ்வம் ஓங்காரே ப்ரஹ்ம ஸம்ஸ்திதம் |
ஆசார்யாத் ஸ ச ஓங்காரஸ் தஸ்மாதாசார்யவாந் பவேத் ||

ஆசார்யஸ்ஸ ஹரிஸ்ஸாக்ஷாத் சரரூபீ ந ஸம்ஶய: ||

தஸ்மாத் பார்யாத ய: புத்ராஸ்தமேகம் குருமாப்நுயு: ||

ஸாக்ஷாந்நாரயணோ தேவ: க்ருத்வா மர்த்யமயீம் தநும் |
மக்நாநுத் தரதே லோகாந் காருண்யாச் சாஸ்த்ரபாணிநா ||

தஸ்மாத் பக்திர் குரௌ கார்யா ஸம்ஸாரபய பீருணா ||

குருரேவ பரம் ப்ரஹ்ம குருரேவ பராகதி: |
குருரேவ பராவித்யா குருரேவ பரம்தநம் ||

குருரேவ பர: காமோ குருரேவ பாராயணம் |
யஸ்மாத்தது பதேஷ்டாஸௌ தஸ்மாத் குருதரோ குரு: ||

அர்ச்சநீயஶ்ச பூஜ்யஶ்ச கீர்த்தநீயஶ்ச ஸர்வதா |
த்யாயேஜ்ஜபேந்நமேத் பக்த்யா பஜேதப்யர்ச்சயேந்முதா ||

உபாயோபேய பாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத் |
இதி ஸர்வேஷு வேதேஷு ஸர்வஶாஸ்த்ரேஷு ஸம்மதம் ||

யேந ஸாக்ஷாத் பகவதி ஜ்ஞாநதீ பப்ரதே குரௌ |
மர்த்யபுத்தி: க்ருதா தஸ்ய ஸர்வம் குஞ்ஜரஶௌசவத் ||

க்ருத்ஸ்நாம் வா ப்ருதி வீம் தத் யாந்ந தத்துல்யம் கதஞ்சந ||

ஐஹிகாமுஷ்மிகம் ஸர்வம் குருரஷ்டாக்ஷரப்ரத: ||

இத்யேவம் யே ந மந்யந்தே த்யக்தவ்யாஸ்தே மநீஷிபி: ||

யேநைவ குருணா யஸ்ய ந்யாஸ வித்யா ப்ரதீயதே |
தஸ்ய வைகுண்ட துக்தாப் தித் வாரகாஸ்ஸர்வ ஏவ ஸ: ||

யத் ஸ்நாதம் குருணா யத்ர தீர்த்தம் நாந்யத் ததோதிகம் |
யச்ச கர்ம ததர்த்தம் தத்விஷ்ணோராராத நாத் பரம் ||

பஶுர்மநுஷ்ய: பக்ஷீ வா யே ச வைஷ்ணவஸம்ஶ்ரயா: |
தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத் விஷ்ணோ: பரமம் பதம் ||

பாலமூகஜடாந்தாஶ்ச பங்க வோபதி ராஸ்ததா|
ஸதாசார்யேண ஸந்த்ருஷ்டா: ப்ராப்நுவந்தி பராங்கதிம் ||

யம் யம் ஸப்ருஶதி பாணிப்யாம் யம் யம் பஶ்யதி சக்ஷுஷா |
ஸ்தாவராண்யபி முச்யந்தே கிம்புநர்பாந்த வாஜநா: ||

அந்தோநந்த க்ரஹண வஶகோயாதி ரங்கேஶயத்வத்
பங்குர்நௌகாகுஹரநிஹிதோ நீயதே நாவிகேந |
புங்க்தே போகாநவிதி தந்ருபஸ்ஸேவகஸ்யார்ப காதி:
த்வத்ஸம்ப்ராப்தௌ ப்ரப வதி ததா தேஶிகோ மே தயாலு: ||

ஸித்தம் ஸத்ஸம்ப்ரதாயே ஸ்திரதியமநகம் ஶ்ரோத்ரியம் ப்ரஹ்மநிஷ்டம்
ஸத்த்வஸ்தம் ஸத்யவாசம் ஸமயநியதயா ஸாது வ்ருத்த்யா ஸமேதம் |
டம்பா ஸூயாதி முக்தம் ஜிதவிஷயகணம் தீர்க்க பந்தும் தயாலும்
ஸ்காலித்யே ஶாஸிதாரம் ஸ்வபரஹிதபரம் தேஶிகம் பூஷ்ணுரீப்ஸேத் ||

உத்பாதகப்ரஹ்மபித்ரோர்கரீயாந் ப்ரஹ்மத: பிதா |
ஸ ஹி வித்யாதஸ்தம் ஜநயதி தச்ச்ரேஷ்டம்ஜந்ம |
ஶரீரமேவ மாதாபிதரௌ ஜநயத: |
தேஹக்ருந்மந்த்ரக்ருந்ந ஸ்யாத் மந்த்ரஸம்ஸ்காரக்ருத் பர: |
தௌ சேந்நாத்மவிதௌ ஸ்யாதாம் அந்யஸ்த்வாத்மவிதாத்மக்ருத் ||

நாசார்ய: குலஜாதோபி ஜ்ஞாநப க்த்யாதி வர்ஜித: |
ந வயோஜாதிஹீநஶ்ச ப்ரக்ருஷ்டாநாமநாபதி ||

கிமப்யத்ராபி ஜாயந்தே யோகி ந: ஸர்வயோநிஷு |
ப்ரத்யக்ஷிதாத்மநாதாநாம் நைஷாம் சிந்த்யம் குலாதிகம் ||

பிந்நநாவாஶ்ரிதோ ஜந்துர்யதா பாரம் ந கச்சதி |
அந்தஶ்சாந்த கராலம்பாத் கூபாந்தே பதிதோ யதா ||

ஜ்ஞாநஹீநம் கோரும் ப்ராப்ய குதோ மோக்ஷமவாப்நுயாத் |
ஆசார்யோ வேத ஸம்பந்நோ விஷ்ணு பக்தோ விமத்ஸர: |
மந்த்ரஜ்ஞோ மந்த்ரபக்தஶ்ச ஸதா மந்த்ராஶ்ரயஶ்ஶுசி: ||

ஸத்ஸம்ப்ரதாய ஸம்யுக்தோ ப்ரஹ்மவித் யாவிஶாரத: |
அநந்யஸாதநஶ்சைவ ததாநந்யப்ரயோஜந : ||

ப்ராஹ்மணோ வீதராக ஶ்ச க்ரோத லோப விவர்ஜித: |
ஸத்வ்ருத்தஶ்ஶாஸிதா சைவ முமுக்ஷு : பரமார்த்த வித்||

ஏவமாதி குணோபேத ஆசார்யஸ்ஸ உதாஹ்ருத: |
ஆசார்யோபி ததா ஶிஷ்யம் ஸ்நிக்தோ ஹிதபரஸ்ஸதா ||

ப்ரபோத் ய போதநீயாநி வ்ருத்தமாசாரயேத் ஸ்வயம் |
உத்தாரயதி ஸம்ஸாராத் தது பாயப்லவேந து ||

குருமூர்த்திஸ்தி தஸ்ஸாக்ஷாத் பகவாந் புருஷோத்தம: |
த்ரிரூபோ ஹிதமாசஷ்டே மநுஷ்யாணாம் கலௌ ஹரி: ||

குருஶ்ச ஸ்வப்ந த்ருஷ்டஶ்ச பூஜாந்தே சார்ச்சகாநநாத் |
ஈஶ்வரஸ்ய வஶஸ்ஸர்வம் மந்த்ரஸ்ய வஶ ஈஶ்வர: |

மந்த்ரோ குருவஶே நித்யம் குருரேவேஶ்வரஸ்திதி: ||
ஏஷவை பகவாந் ஸாக்ஷாத் ப்ரதாநபுருஷேஶ்வர: ||

யோகீஶ்வரைர்விம்ருக்யாங்க் ரிர்லோகோயம் மந்யதே நரம் ||

நாராயணாஶ்ரயோ ஜீவஸ்ஸோயமஷ்டாக்ஷராஶ்ரய: |
அஷ்டாக்ஷரஸ்ஸதாசார்யே ஸ்திதஸ்தஸ்மாத் குரும்பஜேத் ||

தயாத மஶமோபேதம் த்ருடபக்திக்ரியாபரம் |
ஸத்யவாக் ஶீலஸம்பந்நமேவ கர்மஸு கௌஶலம் ||

ஜிதேந்த்ரியம் ஸுஸந்துஷ்டம் கருணாபூர்ணமாநஸம் |
குர்யால்லக்ஷணஸம்பந்நம் ஆர்ஜவம் சாருஹாஸிநம் |
ஏவங்குணைஶ்ச ஸம்யுக்தம் குருமா வித்யாத்து வைஷ்ணவம் |
ஸஹஸ்ரஶாகாத் யாயீ ச ஸர்வயத்நேஷூ தீக்ஷித: |
குலே மஹ்தி ஜாதோபி ந குருஸ்ஸ்யாத வைஷ்ணவ: |
அஜ்ஞாநதிமிராந்த ஸ்ய ஜ்ஞாநாஞ்ஜநஶலாகயா |
சக்ஷுருந்மீலிதம் யேந தஸ்மை ஶ்ரீகுருவே நம: ||

மந்தர: ப்ரக்ருதிரித்யுக்தோ ஹ்யர்த்த: ப்ராண இதி ஸ்ம்ருத: |
தஸ்மாந்மந்த்ரப்ரதாசார்யாத் கரீயாநர்த்த தோ குரு: ||

குஶப்த ஸ்த்வந்த காரஸ்ஸ்யாத் ருஶப் தஸ்தந்நிரோத க: ||

அந்த காரநிரோதி த்வாத் குருரித்யபி தீயதே ||

ஶிஷ்யமஜ்ஞாநஸம்யுக்தம் ந ஶிக்ஷயதி சேத் குரு: ||

ஶிஷ்யாஜ்ஞாநக்ருதம் பாபம் குரோர்ப வதி நிஶ்சய: ||

லோபாத் வாயதி வாமோஹாச்சிஷ்யம் ஶாஸ்தி நயோ குரு: |
தஸ்மாத் ஸம்ஶ்ருணுதே யஶ்ச ப்ரச்யுதௌ தாவுபாவபி ||

ஆஶிநோதி ஹி ஶாஸ்த்ரார்த்தாநாசாரே ஸ்தாபயத்யபி |
ஸ்வயமாசரதே யஸ்து ஆசார்யஸ்ஸோபி தீயதே ||

ரவிஸந்நிதி மாத்ரேண ஸுர்யகாந்தோ விராஜதே||

குருஸந்நிதி மாத்ரேண ஶிஷ்யஜ்ஞாநம் ப்ரகாஶேதே ||

யதாஹி வஹ்நிஸம்பர்க்காந்மலம் த்யஜதி காஞ்சநம் |
ததைவ குருஸம்பர்க்காத் பாபம் த்யஜதி மாணவ: ||

ஸ்நேஹேந க்ருபயா வாபி மந்த்ரீ மந்த்ரம் ப்ரயச்சதி |
குருர்ஜ்ஞேயஶ்ச ஸம்பூஜ்யோ தாநமாநாதி அபி ஸ்ஸதா ||

அநந்யஶரணாநாஞ்ச ததா வாந்ந்ய ஸேவிநாம் |
அநந்யஸாத நாநாஞ்ச வக்தவ்யம் மந்த்ரமுத்தம்ம் ||

ஸம்வத்ஸரம் ததார்த்தம் வா மாஸத்ரயமதாபி வா |
பரீக்ஷ்ய விவிதோபாயை: க்ருபயா நிஸ்ஸ்ப்ருஹோவதேத் ||

நாதீக்ஷிதாய வக்தவ்யம் நாபக்தாய ந மாநிநே |
நாஸ்திகாய க்ருதக்நாய ந ஶ்ரத் தாவிமுகாய ச ||

டம்பாஸூயாதி முக்தம் ஜிதவிஷயகணம் தீர்க்க பந்தும் தயாலும் |
ஸ்காலித்யே ஶாஸிதாரம் ஸ்வபரஹிதபரம் தேஶிகம் பூஷ்ணுரீப்ஸேத் ||

உத்பாதகப் ரஹ்மபித்ரோர்க ரீயாந் ப்ரஹ்மத: பிதா |
ஸ ஹி வித் யாதஸ்தம் ஜநயதி தச்ச் ரேஷ்டம்ஜந்ம |
ஶரீரமேவ மாதாபிதரௌ ஜநயத: |
தேஹக்ருந்மந்த்ரக்ருந்ந ஸ்யாத் மந்தரஸம்ஸ்காரக்ருத் பர: |
தௌ சேந்நாத்மவிதௌ ஸ்யாதாம் அந்யஸ்த்வாத்மவிதாத்மக்ருத் ||

நாசார்ய: குலஜாதோபி ஜ்ஞாநப க்த்யாதி வர்ஜித: |
ந வயோஜாதிஹீநஶ்ச ப்ரக்ருஷ்டாநாமநாபதி ||

கிம்ப்யத்ராபி ஜாயந்தே யோகி ந: ஸர்வயோநிஷு |
ப்ரத்யக்‌ஷிதாத்மநாதாநாம் நைஷாம் சிந்த்யம் குலாதி கம் ||

பிந்தாவாஶ்ரிதோ ஜந்துர்யதா பாரம் ந கச்சதி |
அந்த ஶ்சாந்த கராலம்பாத் கூபாந்தே பதிதோ யதா ||

ஜ்ஞாநஹீநம் குருமா ப்ராப்ய குதோ மோக்ஷமவாப்நுயாத் |

ஆசார்யோ வேத ஸம்பந்நோ விஷ்ணுபக்தோ விமத்ஸர: |
மந்த்ரஜ்ஞோ மந்த்ர பக்தஶ்ச ஸதா மந்த்ராஶ்ரயஶ்ஶுசி: ||

ஸத்ஸம்ப்ரதாய ஸம்யுப்தோ ப்ரஹ்மவித் யாவிஶாரத : |
அநந்யஸாத நஶ்சைவ ததாந்ந்யப்ரயோஜந: ||

ப்ராஹ்மணோ வீதராகஶ்ச க்ரோத லோப விவர்ஜித: |
ஸத் வ்ருத்தஶ்ஶாஸிதா சைவ முமுக்‌ஷு: பரமார்த்த வித் ||

ஏவமாதி குணோ பேத ஆசார்யஸ்ஸ உதாஹ்ருத: |
ஆசார்யோபி ததா ஶிஷ்யம் ஸ்நிக்தோ ஹிதபரஸ்ஸதா ||

ப்ரபோத்ய போத நீயாநி வ்ருத்தமாசாரயேத் ஸ்வயம் |
உத்தாரயதி ஸம்ஸாராத் தது பாயப்லவேந து ||

குருமூர்த்திஸ்தி தஸ்ஸாக்‌ஷாத் பக வாந் புருஷோத்தம: |
த்ரிரூபோ ஹிதமாசஷ்டே மநுஷ்யாணாம் கலௌ ஹரி: ||

குருஶ்ச ஸ்வப்நத் ருஷ்டஶ்ச பூஜாந்தே சார்ச்சகாநநாத் |
ஈஶ்வரஸ்ய வஶஸ்ஸர்வம் மந்தரஸ்ய வஶ ஈஶ்வர: |
மந்த்ரோ குருவஶே நித்யம் குருரேவஶ்வரஸ்திதி: ||

ஏஷ வை பகவாந் ஸாக்‌ஷாத் ப்ரதாந புருஷேஶ்வர: |
யோகி ஶ்வரைர்விம்ருக் யாங்க் ரிர்லோகோ யம் மந்யதே நரம் ||

நாராயணாஶ்ரயோ ஜீவஸ்ஸோயமஷ்டாக்ஷராஶ்ய: |
அஷ்டாக்ஷரஸ்ஸதாசார்யே ஸ்திதஸ்தஸ்மாத் குருமா பஜேத் ||

தயாத மஶமோபேதம் த்ருடப்பக்திக்ரியாபரம் |
ஸத்யவாக் ஶீலஸம்பந்நமேவ கர்மஸு கௌஶலம் ||

ஜிதேந்த்ரியம் ஸுஸந்துஷ்டம் கருணாபூர்ணமாநஸம் |
குர்யால்லக்ஷணஸம்பந்நம் ஆர்ஜவம் சாருஹாஸிநம் |
ஏவங்குணைஶ்ச ஸம்யுக்தம் குரும் வித்யாத்து வைஷ்ணவம் |
ஸஹஸ்ரஶாகாத் யாயீ ச ஸர்வயத்நேஷு தீஷித: |
குலே மஹதி ஜாதோபி ந குருஸ்ஸ்யாத வைஷ்ணவ: |

அஜ்ஞாந்திமிராந்த ஸ்ய ஜ்ஞாநாஞ்ஜநஶலாகாயா |
சக்‌ஷுருந்மீலிதம் யேந தஸ்மை ஶ்ரீ குரவே நம: ||

மந்த்ர: ப்ரக்ருதிரித்யுக்தோ ஹ்யர்த்த: ப்ராண இதி ஸம்ருத: |
தஸ்மாந்மந்த்ரப்ரதாசார்யாத் கரீயாநர்த்த தோ குரு: ||

குஶப்தஸ்த்வந்த காரஸ்ஸ்யாத் ருஶப் த ஸ்தந்நிரோதக: |
அந்தகார நிரோதித்வாத் குருரித்யபி தீயதே ||

ஶிஷ்யமஜ்ஞாநஸம்யுக்தம் ந ஶிக்ஷயதிசேத் குரு: |
ஶிஷ்யாஜ்ஞாநக்ருதம் பாபம் குரோர்பவதி நிஶ்சய: ||

லோபாத் வா யதி வா மோஹாச்சிஷ்யம் ஶாஸ்தி ந யோ குரு: |
தஸ்மாத் ஸம்ஶ்ருணுதே யஶ்ச ப்ரச்யுதௌ தாவுபாவபி ||

ஆஶிநோதி ஹி ஶாஸ்த்ரார்த்தாநாசாரே ஸ்தாபயத்யபி |
ஸவயமாசரதே யஸ்துஆசார்யஸ்ஸோபி தீயதே ||

ரவிஸந்நிதி மாத்ரேண ஸூர்யகாந்தோ விராஜதே |
குருஸந்நிதி மாத்ரேண ஶிஷ்யஜ்ஞாநம் ப்ரகாஶதே ||

யதாஹி வஹ்நிஸம்பர்க்காந்மலம் த்யஜதி காஞ்சநம் |
ததைவ குருஸம்பர்க்காத் பாபம் த்யஜதி மாநவ: ||

ஸ்நேஹேந க்ருபயா வாபி மந்த்ரீ மந்த்ரம் ப்ரயச்ச தி |
குருர்ஜ்ஞேயஶ்ச ஸம்பூஜ்யோ தாநமாநாதி பி ஸ்ஸதா ||

அநந்யஶரணாநஞ்ச ததா வாந்நய ஸேவிநாம் |
அந்ந்யஸாத நாநாஞ்ச வக்தவ்யம் மந்த்ரமுத்தமம் ||

ஸம்வத்ஸரம் ததார்த்தம் வா மாஸத்ரயமதாபி வா |
பரீக்‌ஷய விவிதோபாயை: க்ருபயா நிஸ்ஸ்ப்ருஹோ வதேத் ||

நாதீக்‌ஷிதாய வக்தவ்யம் நாபக்தாய ந மாநிநே |
நாஸ்திகாய க்ருதக் நாய ந ஶ்ரத் தாவிமுகாய ச ||

தேஶகாலாதி நியமம் அரிமித்ராதி ஶோதநம் |
ந்யாஸமுத்ராதி கம் தஸ்ய புரஶ்சரணகம் ந து ||

ந ஸ்வர: ப்ரணவோங்காநி நாப்யந்யவித யஸ்ததா |
ஸ்த்ரீணாஞ்ச ஶுத்ரஜாதீநாம் மந்த்ரமாத்ரோக்திரிஷ்யதே ||

ருஷ்யாதிஞ்ச கரந்யாஸம் அங்க ந்யாஸஞ்ச வர்ஜயேத் |
ஸ்த்ரீஶூத்ராஶ்சவிநீதாஶ்சேந்மந்த்ரம் ப்ரவணவவர்ஜிதம் ||

ந தேஶகாலௌ நாவஸ்தாம் பாத்ரஶுத்திஞ்ச நை[நே] ச்சதி |
த்வயோபதே ஶகர்த்தாது ஶிஷ்யதோஷம் ந பஶ்யதி ||

துராசோரோபி ஸர்வாஸீ க்ருதக் நோ நாஸ்திக: புரா |
ஸமாஶ்ரயேதாதி தேவம் ஶ்ரத்தயா ஶரணம் யதி |
நிர்தோஷம் வித்திதம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மந: ||

மந்த்ரரத்நம் த்வயம் ந்யாஸம் ப்ரபத்திஶ்ஶரணாகதி: |
லக்‌ஷமீநாராயணஞ்சேதி ஹிதம் ஸர்வபலப்ரதம் |
நாமாநி மந்த்ரரத்நஸ்ய பர்யாயேண நிபோத த ||

தஸ்யோச்சாரணமாத்ரேண பரிதுஷ்டோஸ்மி நித்யஶ: ||

ப்ராஹ்மணா: க்ஷத்ரியா வைஶ்யாஸ்ஸ்த்ரியஶ்ஶூத் ராஸ்ததே தரா: |
தஸ்யாதி காரிணஸ்ஸர்வே மம பக்தோப வேத்யதி ||

யஸ்து மந்த்ரத்வயம் ஸம்யகத் யாபயதி வைஷ்ணவாந் |
ஆசார்யஸ்ஸ து விஜ்ஞேயோ பவபந்த விமோசக: ||

ந்ருதேஹமாத்யம் ப்ரதிலப்ய துர்லபம்
ப்லவம் ஸுகல்யம் குருகர்ணதாரகம் |
மயாநுகூலேந நப ஸ்வதேரிதம்
புமாந் பவாப்திம் ஸ தரேத் ந ஆத்மஹா ||

ஆசார்யம் மாம் விஜாநீயாந்நாவமந்யேத கர்ஹிசித் |
ந மர்த்யபுத்த்யாத் ருஶ்யேத ஸர்வதே வமயோ குரு: ||

அத ஶிஷ்யலக்ஷணம்: –

மாநுஷ்யம் ப்ராப்ய லோகேஸ்மிந் ந மூகோ பதிரோபி வா |
நாபக்ரமாதி ஸம்ஸாராத் ஸகலு ப்ரஹ்மஹா பவேத் ||

ஸதாசார்யோபஸத்த்யா ச ஸாபி லாஷஸ்ததாத்மக: |
ததத்வஜ்ஞாநநிதிம் ஸத்த்வநிஷ்டம் ஸத் குணஸாகரம் |

ஸதாம் கதிம் காருணிகம் தமாசார்யம் யதாவிதி |
ப்ரணிபாத நமஸ்கார ப்ரியவாக் பிஶ்ச தோஷயந் |
தத்ப்ரஸாத வஶேநைவ ததங்கீகாரலாபவாந் |
ததுக்தத்த்வயாதாத்ம் யஜ்ஞாநாம்ருதஸுஸம்ப்ருத: ||

அர்த்தம் ரஹஸ்யத்ரிதயகோசரம் லப்த வாநஹம் ||

பரீக்ஷ்ய லோகாந் கர்மசிதாந் ப்ராஹ்மணோ நிர்வேத மாயாத் நாஸ்த்யக்ருத:
க்ருதேந தத் விஜ்ஞாநார்த்தம் ஸ குருமேவாபி கச்சேத் ஸமித்பாணிஶ் ஶ்ரோத்ரியம்
ப்ரஹ்மநிஷ்டம் தஸ்மை ஸ வித்வாநுபஸந்நாய ஸம்யக் ப்ரஶாந்தசித்தாய ஶமாந்விதாய
யேநாக்ஷரம் புருஷம் வேத ஸத்யம் ப்ரோவாச தாம் ததத்வதோ ப்ரஹ்ம வித்யாம் ||

குரும் ப்ரகாஶயேத் தீமாந் மந்த்ரம் யத்நேந கோபயேத் |
அப்ரகாஶப்ரகாஶாப் யாம் க்ஷீயேதே ஸம்பதாயுஷீ ||

ஆசார்யஸ்ய ப்ரஸாதே ந மம ஸர்வமபீப்ஸிதம் |
ப்ராப்நுயாமீதி விஶ்வஸோ யஸ்யாஸ்தி ஸ ஸுகீ பவேத் ||

ஆத்மநோ ஹ்யதிநீசஸ்ய யோகித்யேயபதார்ஹதாம் |
க்ருபயைவோபகர்த்தாரம் ஆசார்யம் ஸம்ஸ்மரேத் ஸதா ||

ந சக்ராத் யங்கநம் நேஜ்யா ந ஜ்ஞாநம் ந விராகதா |
ந மந்த்ர: பாரமைகாந்த்யம் தைர்யுக்தோ குருவஶ்யத: ||

நித்யம் குருமுபாஸீத த்த் வச: ஶ்ரவணோத்ஸுக: |
விக்ரஹாலோகநபரஸ்தஸ்யைவாஜ்ஞாப்ரதீக்ஷக: ||

ப்ரக்ஷால்ய சரணௌ பாத்ரே ப்ரணிபத்யோபயுஜ்ய ச |
நித்யம் விதி விதர்க்யாத்யாத் யைராத்ருதோப் யர்ச்சயேத்குரும் ||

ஶ்ருதி: – ஆசார்யவாந் புருஷோ வேத | தேவமிவாசார்யமுபாஸீத |

ஆசார்யாதீ நோ பவ | ஆசார்யாதீ நஸ்திஷ்டேத் | ஆசார்யதே வோ ப வ |
யதா பகவத்யேவம்வக்த்ரி வ்ருத்தி: | குருதர்ஶநே சோத்திஷ்டேத் | கச்சந்தமநுவ்ரஜேத் |

ஶரீரம் வஸு விஜ்ஞாநம் வாஸ: கர்ம குணாநஸூந் |
குர்வர்த்தம் தாரயேத் யஸ்து ஸஶிஷ்யோ நேதரஸ்ஸ்ம்ருத: ||

தீர்க்கதண்ட நமஸ்காரம் ப்ரத்யுத்தாநமந்த்ரம் |
ஶரீரமர்த்தம் ப்ராணஞ்ச ஸத் குருப்யோ நிவேதயேத் ||

குர்வர்த்த ஸ்யாத்மந: பும்ஸ: க்ருதஜ்ஞஸ்ய மஹாத்மந: |
ஸுப்ரஸந்நஸ்ஸதா விஷ்ணுர்ஹ்ருதி தஸ்ய விராஜதே ||

மந்த்ரே தீர்த்தேத் விஜே தேவே தைவஜ்ஞே பேஷஜே குரௌ |
யாத்ருஶீபாவநா யத்ர ஸித்திர் பவதி தாத்ருஶீ ||

யஸ்ய தேவே பரா பக்திர் யதா தேவே ததா குரௌ |
தஸ்யைதேகதிதா ஹ்யர்த்தா: ப்ரகாஶ்யந்தே மஹாத்மந: |

தர்ஶநஸ்பர்ஶவசநைஸ்ஸஞ்சாரேண ச ஸத்தமா: |
பூதம் விதாய புவநம் மாமேஷ்யந்தி குருப்ரியா: ||

தேஹக்ருந்மந்த்ரக்ருந்ந ஸ்யாந்மந்த்ரஸம்ஸ்காரக்ருத்பர: |
தௌ சேந்நாத்மவிதௌ ஸ்யாதாம் அந்யஸ்த்வாத்மவிதாத்மக்ருத் ||

அவைஷ்ணவோபதிஷ்டம் ஸ்யாத்பூர்வம் மந்த்ரவரம் த்வயம் |
புநஶ்ச விதி நா ஸம்யக் வைஷ்ணவாத் க்ராஹயேத் குரோ: ||

அத ஸ்த்ரீஶூத் ரஸங்கீர்ணநிர்மூலபதிதாதி ஷு |
அநந்யேநாந்யத்ருஷ்டௌ ச க்ருதாபி ந க்ருதா பவேத் ||

அதோந்யத்ராநுவிதி வத்கர்த்தவ்யா ஶரணாகதி: |
தண்டவத் ப்ரணமேத் பூமாவுபேத்ய குருமந்வஹம் |
திஶே வாபி நமஸ்குர்யாத் யத்ராஸௌ வஸதி ஸ்வயம் ||

ஆசார்யாயாஹரதே ர்த்தாநாத்மாநஞ்ச நிவேத யேத் |
தத்தீநஶ்ச வர்த்தேத ஸாக்ஷாந்நாரயணோ ஹி ஸ: ||

ஸத் புத்தி ஸ் ஸாது ஸேவீ ஸமுசிதசரிதஸ்தத்த்வபோதாபிலாக்‌ஷீ
ஶுஶ்ரூஷுஸ்த்யக்தமாந: ப்ரணிபதநபர: ப்ரஶ்நகலாப்ரதீக்ஷ: |

ஶாந்தோ தாந்தோநஸுயுஶ்ஶரணமுபக தஶ்ஶாஸ்த்ரவிஶ்வாஸஶாலீ
ஶிஷ்ய: ப்ராப்த: பரீக்ஷாங்க்ருதவிதபிமதம் தத்த்வத: ஶிக்ஷணீய: ||

யஸ்த்வாசார்யபராதீ நஸ்ஸத்வ்ருத்தௌ ஶாஸ்யதே யதி |
ஶாஸேநே ஸ்திரவ்ருத்திஸ்ஸ ஶிஷ்யஸ் ஸத்பிருதாஹ்ருத: ||

ஶிஷ்யோ குருஸமீபஸ்தோ யதவாக்காயமாநஸ: |
ஶுஶ்ரூஷயா குரோஸ்துஷ்டிம் குர்யாந்நிர்தூ தமத்ஸர: ||

ஆஸ்திகோதர்மஶீலஶ்ச ஶீலவாந் வைஷ்ணவஶ்ஶுசி: |
கம்பீரஶ்சதுரோ தீர: ஶிஷ்ய இத்யபி தீயதே ||

ஆஸநம் ஶயநம் யாநம் ததீயம் யச்ச கல்பிதம் |
குரூணாஞ்ச பதாக்ரம்ய நரோ யஸ்த்வத மாம் கதிம் ||

கோஶ்வோஷ்டரயாநப்ரஸாத ப்ரஸ்தரேஷு கடேஷு ச |
நாஸீத குருணா ஸார்த்தம் ஶிலாப லகநௌஷு ச ||

யஸ்திஷ்டதி குரூணாஞ்ச ஸமக்ஷமக்ருநாஞ்ஜலி: |
ஸமத்ருஷ்ட்யாத தாஜ்ஞாநாத் ஸ ஸத்யோ நிரயம் வ்ரஜேத் ||

ஆஸநம் ஶயநம் யாநம் அபஹாஸஞ்ச ஶௌநக |
அதிப்ரலாபம் கர்வஞ்ச வர்ஜயேத் குருஸந்நிதௌ ||

யத்ருச்சயா ஶ்ருதோ மந்த்ரஶ்சந்நேநாதச்ச லேந வா |
பத்ரேக்‌ஷிதோ வாவ்யர்த்த ஸ்ஸ்யாத் தம் ஜபேத் யத் யநர்த்த க்ருத்||

மந்த்ரே தத் தேவதாயாஞ்ச ததா மந்த்ரப்ரதே கு ரௌ |
த்ரிஷுபக்திஸ்ஸதா கார்யா ஸாது ஹி ப்ரதமஸாதநம் ||

அத மோதே வதாப க்தோ மந்த்ரபக்தஸ்து மத்யம: |
உத்தமஸ்து ஸ மே பக்தோ குருபக்தோத்தமோத்தம: ||

ஶ்ருதி: –

ஆசார்யாந்மா ப்ரமத: | ஆசார்யாய ப்ரியம் த நமாஹ்ருத்ய |
குரோர்குருதரம் நாஸ்தி குரோர்யந்ந பாவயேத் |
குரோர்வார்த்தாஶ்ச கத யேத் குரோர்நாம ஸதாஜபேத் |

{குருபாதாம்புஜம்த்யாயேத் குரோர்நாம ஸதா ஜபேத் |
குரோர்வார்த்தாஶ்ச கத யேத் குரோர்ந்யந்ந பாவயேத் – பா }

அர்ச்சநீயஶ்ச வந்த்யஶ்ச கீர்த்தநீயஶ்ச ஸர்வதா |
த்யாயேஜ்ஜபேந்நமேத் பக்தயா பஜேதப் யர்ச்சயேந்முதா ||

உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத் |
இதி ஸர்வேஷு வேதேஷு ஸர்வஶாஸ்த்ரேஷு ஸம்மதம் ||

ஏவம் த்வயோபதேஷ்டாரம் பாவயேத் புத்திமாந்தியா |
இச்சாப்ரக்ருத்யநுகுணைருபசாரைஸ்ததோசிதை: ||

பஜந்நவஹிதஶ்சாஸ்ய ஹிதமாவேதயேத்ரஹ: |
குர்வீத பரமாம் பக்திம் குரௌ தத்ப்ரியவத்ஸல: ||

தத் நிஷ்டாவஸாதீ தந்நாமகுணஹர்ஷித: |
ஶாந்தோநஸுயு: ஶ்ரத் தாவாந் கு ர்வர்த்தாத் யாத்மவ்ருத்திக: ||

ஶுசி: ப்ரியஹிதோ தாந்த: ஶிஷ்யஸ்ஸோபரதஸ்ஸுதீ: |
ந வைராக் யாத்பரோ லாபோ ந போதாத பரம் ஸுகம் |
ந குரோரபரஸ்த்ராதா ந ஸம்ஸாராத் பரோ ரிபு: ||

————

2 – ஆசார்ய வைபவம் மதுரகவி ஆழ்வார் மற்றும் பிள்ளை லோகாசார்யர் வார்த்தைகள் மூலம்

இன்னமும் ஆசார்யவைபவம் – ஸதாசார்யஸமாஸ்ரயணத்துக்கு முன்புள்ள அநாதி காலமெல்லாம் ஒரு காலராத்ரி,
அன்று தொடங்கி இவனுக்கு நல்விடிவு. ஆனபடி எங்ஙனே என்னில் –
“புண்யாம் போஜவிகாஸாய பாபத்வாந்தக்ஷயாய ச | ஶ்ரீமாநாவிரத்பூமௌ ராமானுஜ திவாகர:” என்றும்,
“ஆதித்ய – ராம – திவாகர – அச்யுதபாநுக்களுக்குப் போகாத உள்ளிருள் நீங்கி,
ஶோஷியாத பிறவிக்கடல் வற்றி, விகஸியாதபோதிற்கமலமலர்ந்தது வகுல பூஷணபாஸ்கரோதயத்திலே” என்றும்,
விடியா வெந்நரகான ஸம்ஸாரமாகிற காலராத்ரிக்கு ஆசார்யன் தோற்றரவை ஸூர்யோதயமாகச் சொல்லுவார்கள்.
“பார்வை செடியார் வினைத்தொகைக்குத்தீ” என்றும்,
“ந ஹ்யம்மயாநி தீர்த்தாநி ந தேவாம்ருச்சி லாமயா: | தே புநந்த்யுருகாலேந தர்ஶநாதே வ ஸாதவ: “ என்றும்,
“யாந் பஶ்யந்தி மஹாபாகா: க்ருபயா பாதகாநபி | தே விஶுத்தா: ப்ராயஸ்யந்தி ஶாஶ்வதம் பத மவ்யயம்” என்றும்
சொல்லுகிறபடியே ஆசார்ய கடாக்ஷமானது ஸ்வ விஷயமானவர்களுக்கு வேறொரு ஸாதநாநுஷ்டாநம் பண்ண வேண்டாதபடி
தானே தூறு மண்டிக் கிடக்கிற அவர்களுடைய கர்மத்தை நிஶ் ஶேஷமாகச் சுட்டுப் பொகடுகையாலை அவர்கள் முன்பு
மஹாபாபிகளே யாகிலும் அந்த க்ஷணத்திலே மிகவும் பரிசுத்தராய் அவ்வளவன்றிக்கே
பின்பு ஸுஸ்திரமான பரமபதத்தையும் சென்றடையப் பெறுவார்கள்.
“நாராயணன் திருமால் நாரம் நாமென்னுமுறவு ஆராயில் நெஞ்சே அனாதியன்றோ
சீராருமாசாரியனாலேயன்றோ நாமுய்ந்ததென்று கூசாமலெப்பொழுதும் கூறு”,
“உண்டபோதொரு வார்த்தையும் உண்ணாதபோதொரு வார்த்தையும் சொல்லுவார் பத்துப்பேருண்டிறே,
அவர்கள் பாசுரங்கொண்டன்று இவ்வர்த்தம் அறுதியிடுவது, அவர்களைச் சிரித்திருப்பாரொருவருண்டிறே,
அவர் பாசுரங்கொண்டே இவ்வர்த்தம் அறுதியிடக்கடவோம்”.

பரமாசார்யரான நம்மாழ்வார் “அப்பொழுதைக்கப்பொழுதென்னாராவமுதம்” என்றார்.
ஶ்ரீமதுரகவிகள் “தென்குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூருமென்னாவுக்கே” என்றார்.
அவர் “மலக்கு நாவுடையேன்” என்றார்.
இவர் “நாவினால் நவிற்றின்பமெய்தினேன்” என்றார்.
அவர் “அடிக்கீழ்மர்ந்து புகுந்தேன்” என்றார்.
இவர் “மேவினேனவன் பொன்னடி மெய்ம்மையே” என்றார்.
அவர் “கண்ணனல்லால் தெய்வமில்லை” என்றார்.
இவர் “தேவு மற்றறியேன்” என்றார்.
அவர் “பாடியிளைப்பிலம்” என்றார்.
இவர் “பாடித்திரிவனே” என்றார்.

அவர் “இங்கே திரிந்தேற்கிழுக்குற்றென்” என்றார்.
இவர் “திரிதந்தாகிலும் தேவபிரானுடைக் கரியகோலத் திருவுருக்காண்பன்” என்றார்.
அவர் “உரியதொண்டன்” என்றார்.
இவர் “நம்பிக்காளுரியன்” என்றார்.
அவர் “தாயாய்த் தந்தையாய்” என்றார்.
இவர். “அன்னையாயத்தனாய்” என்றார்.
அவர் “ஆள்கின்றனாழியான்” என்றார்.
இவர் “என்னையாண்டிடும் தன்மையான்” என்றார்.
அவர் “கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான்” என்றார்.
இவர் “சடகோபன்” என்றார்.
அவர் “யானே என்றனதே என்றிருந்தேன்” என்றார்.
இவர் “நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன்னெலாம்” என்றார்.

அவர். “எமரேழுபிறப்பும் மாசதிரிதுபெற்று” என்றார்.
இவர் “இன்று தொட்டுமெழுமையுமெம்பிரான்” என்றார்.
அவர் “என்னால் தன்னை இன்தமிழ் பாடியவீசன்” என்றார்.
இவர் “நின்று தன்புகழேத்த அருளினான்” என்றார்.
அவர் “ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே” என்றார்.
இவர் “என்றுமென்னை இகழ்விலன்காண்மினே” என்றார்.
அவர் “மயர்வற மதிநலமருளினன்” என்றார்.
இவர் “எண்டிசையுமறியவியம்புகேன் ஒண்தமிழ்ச்சடகோபனருளையே” என்றார்.

அவர் “அருளுடையவன்” என்றார்.
இவர் “அருள்கண்டீரிவ்வுலகினில் மிக்கதே” என்றார்.
அவர் “பேரேனென்று என்னெஞ்சு நிறையப்புகுந்தான்” என்றார்.
இவர் “நிற்கப்பாடி என்னெஞ்சுள் நிறுத்தினான்” என்றார்.
அவர் “வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்” என்றார்.
இவர் “ஆட்புக்க காதலடிமைப் பயனன்றே” என்றார்.
அவர் “பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்” என்றார்.
இவர் “பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்வான்” என்றார்.

அவர் “ஆராதகாதல்” என்றார்.
இவர் “முயல்கின்றேனுன்தன் மொய்கழற்கன்பையே” என்றார்.
அவர் “கோல மலர்ப்பாவைக்கன்பாகிய என் அன்பேயோ” என்றார்.
இவர் “தென்குருகூர் நகர் நம்பிக்கன்பனாய்” என்றார்.
அவர் “உலகம் படைத்தான்கவி” என்றார்.
இவர் “மதுரகவி” என்றார்.
அவர் “உரைக்கவல்லார்க்கு வைகுந்தமாகுந்தம் ஊரெல்லாம்” என்றார்.
இவர் “நம்புவார்பதி வைகுந்தங்காண்மினே” என்று தலைக்கட்டியருளினார்.
அவர் “பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து” என்றார்.
இவர் “கோலத்திருமாமகள்கொழுநன் தானே குருவாகித்தன் அருளால்” என்றும்,

“தான் ஹிதோபதேஶம் பண்ணும்போது” என்று தொடங்கி,
“நேரே ஆசார்யனென்பது ஸம்ஸார நிவர்த்தகமான பெரிய திருமந்தரத்தை உபதேஶித்தவனை.
ஸம்ஸார வர்த்தகங்களுமாய், க்ஷுத்ரங்களுமான பகவந்மந்த்ரங்களை உபதேஶித்தவர்களுக்கு ஆசார்யத்வ பூர்த்தியில்லை.
ஆசார்யன் உஜ்ஜீவநத்திலே ஊன்றிப்போரும். ஆசார்யன் ஶிஷ்யனுடைய ஸ்வரூபத்தைப் பேணக்கடவன்.
ஆசார்யனுக்கு தேஹரக்ஷணம் ஸ்வரூபஹாநி. ஆசார்யன் தன்னுடைய தேஹரக்ஷணம் தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக்கடவன்.
ஆசார்யன் ஶிஷ்யன் வஸ்துவைக் கொள்ளக் கடவனல்லன். கொள்ளில் மிடியனாம். அவன் பூர்ணனாகையாலே கொள்ளான்.
அவனுக்குப் பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது. ஈஶ்வரனைப் பற்றுகை கையைப் பிடித்து கார்யங்கொள்ளுமோபாதி,
ஆசார்யனைப் பற்றுகை காலைப்பிடித்துக் கார்யங்கொள்ளுமோபாதி. ஈஶ்வரன் தானும் ஆசார்யத்வத்தை ஆசைப்பட்டிருக்கும்.
ஆகையிறே குருபரம்பரையில் அந்வயித்ததும், ஶ்ரீ கீதையும் அபயப்ரதாநமும் அருளிச்செய்ததும்,
ஆசார்யனுக்கு ஸத்ருஶ ப்ரத்யுபகாரம் பண்ணலாவது விபூதிசதுஷ்டயமும் ஈஶ்வரத்வயமும் உண்டாகில்.
ஈஶ்வர ஸம்பந்தம் பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயிருக்கும். ஆசார்ய ஸம்பந்தம் மோக்ஷத்துக்கே ஹேதுவாயிருக்கும்.
ஆசார்ய ஸம்பந்தம் குலையாதே கிடந்தால் ஜ்ஞாநபக்திவைராக்யங்களை உண்டாக்கிக் கொள்ளலாம். என்று தொடங்கி,
“இத்தையொழிய பகவத் ஸம்பந்தம் துர்லபம். ஸ்வாபிமாநத்தாலே ஈஶ்வராபிமாநதைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு
ஆசார்யாபிமாநமொழிய கதியில்லை என்று பிள்ளை பலகாலும் அருளிச் செய்யக் கேட்டிருக்கையாயிருக்கும்.

ஆசார்யாபிமாநமே உத்தாரகம்”.
“நல்லவென் தோழி” என்று தொடங்கி, “அசார்யாபிமாநந்தான் ப்ரபத்தி போலே உபயாந்தரங்களுக்கு
அங்கமுமாய் ஸ்வதந்த்ரமுமாயிருக்கும். பக்தியிலஶக்தனுக்கு ப்ரபத்தி,
ப்ரபத்தியிலஶக்தனுக்கு இது. இது ப்ரதமம் ஸ்வரூபத்தைப் பல்லவிதமாக்கும்,
பின்பு புஷ்பிதமாக்கும், அநந்தரம் பலபர்யந்தமாக்கும்”.

“பொறுக்கிறவனுமாசார்யனன்று, பெறுகிறவனுமாசார்யனன்று, நியமிக்கறவனே ஆசார்யன்” என்று ஆச்சான் பிள்ளை அருளிச்செய்வர்.
விபரீத ஸ்பர்ஶமுடைய ஆசார்யன் முமுக்‌ஷுவுக்கு த்யாஜ்யன்.
விபரீதஸ்பர்ஶமுடைய ஆசார்யனாவான் ஸம்ஸாரத்திலே சில மினுக்கங்கள் தோன்றச் சொல்லுமவன்.
ஆசார்யன் ஶிஷ்யனுயிரை நோக்கும். ஆசார்யனாவான் ஓட்டையோடத்தோடு ஒழுகலோடமாய்த் தன்னைக் கொண்டு
முழுகுமவனன்று, தன்னைக் கரையேத்தவல்ல ஜ்ஞாநாதி பரிபூர்ணனாய் இருப்பானொருவனே.
ஆசார்யனுடைய ஜ்ஞாநம் வேண்டா, ஶிஷ்யனுக்கு விக்ரஹமே அமையும்.
கருடத்யாநத்துக்கு விஷம் தீருமாப்போலே ஆசார்யனை த்யாநித்திருக்கவே ஸம்ஸாரமாகிற விஷம் தீர்த்துக்கொள்ளலாம்
என்று அருளிச்செய்வர்கள். ஆசார்யன், இவன், அஜ்ஞாநத்தைப்போக்கி ஜ்ஞாநத்தை உண்டாக்கிக் கொடுக்கும்
பெரிய மதிப்பனாய், அர்த்தகாமோபஹதனன்றிக்கே லோக பரிக்ரஹமுடையனாயிருப்பானொருவன் (ஆசார்யனாவான்).

————–

சிஷ்ய லக்ஷணம் அருளாளப் பெருமாள் எம்பெருமானார், திருவரங்கத்து அமுதனார்,
பிள்ளை லோகாசார்யர் மற்றும் மாமுனிகள் வார்த்தைகள் மூலம்

இன்னமும் ஶிஷ்யலக்ஷணம் :-
“இருள்தருமாஞாலத்தே இன்பமுற்றுவாழும் தெருள்தருமா தேசிகனைச் சேர்ந்து”,
“குற்றமின்றிக்குணம் பெருக்கிக் குருக்களுக்கனுகூலராய்”,
“வேறாக ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தியிருப்பார் தவம்”,
“விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்லபரிசு வருவிப்பரேல் அதுகாண்டுமே”,
“வேறொன்றும் நானறியேன்”,
“தேவு மற்றறியேன்”,
“ஶத்ருக்நோ நித்யஶத்ருக்ந”,
“வடுகநம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையரென்பர்”,
“இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னிவாழ நெஞ்சே சொல்லுவோமவன் நாமங்களே”,
“இராமானுசன் புகழன்றி என்வாய் கொஞ்சிப்பரவகில்லாது என்ன வாழ்வின்று கூடியதே”,
“பேறொன்றுமற்றில்லை நின் சரணன்றி அப்பேறளித்தற்காறொன்றுமில்லை மற்றச்சரணன்றி”,
“நிகரின்றி நின்ற என்னீசதைக்கு நின்னருளின்கணன்றிப்புகலொன்றுமில்லை அருட்குமஃதே புகல்”,
“இராமானுசனையடைந்தபின் என்வாக்குரையாது என்மனம் நினையாதினி மற்றொன்றையே”,
“இராமானுசன் நிற்க வேறுநம்மை உய்யக்கொள்ளவல்ல தெய்வமிங்கு யாதென்றுலர்ந்தவமே
ஐயப்படாநிற்பர் வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே”,
“கையில் கனியென்னக் கண்ணனைக் காட்டித்தரிலும் உன்றன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்”,
“இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலையென்னும் பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர்” என்று
தொடங்கி “இன்றவன் வந்திருப்பிடம் என்றனிதயத்துள்ளே தனக்கின்புறவே”,
“நந்தலைமிசையே பொங்கிய கீர்த்தி இராமநுசனடிப்பூமன்னவே”…

“மாடும் மனையும் கிளையும் மறைமுனிவர் தேடுமுயர்வீடும் செந்நெறியும் பீடுடைய
எட்டெழுத்தும் தந்தவனே என்றிராதாருறவை விட்டிடுகைகண்டீர் விதி”,
“வேதமொருநான்கு” என்று தொடங்கித் “தீதில் சரணாகதி தந்ததன்னிறைவன் தாளே அரணாகுமென்னுமது”,
“வில்லார் மணிகொழிக்கும்” என்று தொடங்கி, “எந்நாளும் மாலுக்கிடம்”,
“தேனார் கமலம்” என்று தொடங்கி, “யார்க்குமவன் தாளிணையை உன்னுவதே சாலவுறும்”.
“ஆசார்யப்ரேமம் கனத்திருக்கையும்”,
“ஆசார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக்கண்டாப்போலேயும்”,
“இப்படி ஸர்வப்ரகராத்தாலும் நாஶஹேதுவான அஹங்காரத்துக்கும் அதினுடைய கார்யமான
விஷய ப்ராவண்யத்துக்கும் விளைநிலம் தானாகையாலே” என்று தொடங்கி,
“இப்படி இவை இத்தனையும் ஸதாசார்ய ப்ரஸாதத்தாலே வர்த்திக்கும்படி பண்ணிக் கொண்டு போரக்கடவன்.

வக்தவ்யம் ஆசார்ய வைபவமும் ஸ்வநிகர்ஷமும். பரிக்ராஹ்யம் பூர்வாசார்யர்களுடைய வசநமும் அநுஷ்டாநமும்.
ஆசார்யகைங்கர்யமறிவது ஶாஸ்த்ரமுகத்தாலும், ஆசார்ய வசநத்தாலும்.
இவனுடைய ஜ்ஞாநத்துக்கிலக்கு ஆசார்ய குணம், அஜ்ஞாநத்துக்கிலக்கு ஆசார்ய தோஷம்,
ஶக்திக்கிலக்கு ஆசார்ய கைங்கர்யம் அஶக்திக்கிலக்கு நிஷித்தாநுஷ்டாநம்.
ஶிஷ்யனென்பது ஸாத்யாந்தர நிவ்ருத்தியும், பலஸாதந ஶுஶ்ரூஷையும்,
ஆர்த்தியும், ஆதரமும், அநஸூயையும் உடையவனென்கை”.
“மந்த்ரமும், தேவதையும், பலமும், பலாநுபந்திகளும்” – என்று தொடங்கி –
எல்லாம் ஆசார்யனே என்று நினைக்கக் கடவன்.
‘மாதாபிதா யுவதய:’ என்கிற ஶ்லோகத்திலே இவ்வர்த்தத்தை பரமாசார்யர் அருளிச்செய்தார்.

ஶிஷ்யன் தான் ப்ரியத்தை நடத்தக்கடவன். ஶிஷ்யன் உகப்பிலே ஊன்றிப்போரும்.
ஆகையால் ஆசார்யனுடைய ஹர்ஷத்துக்கிலக்காகையொழிய ரோஷத்துக்கிலக்காகைக்கு அவகாஶமில்லை.
ஶிஷ்யனுக்கு நிக்ரஹகாரணம் த்யாஜ்யம். ஶிஷ்யன் ஆசார்யனுடைய தேஹத்தைப் பேணக்கடவன்.
இவனுக்கு ஶரீராவஸாநத்தளவும் ஆசார்யவிஷயத்தில்
“என்னைத் தீமனங்கெடுத்தாய்,
மருவித்தொழும் மனமே தந்தாய்” என்று உபகார ஸ்ம்ருதி நடக்கவேணும்.
பாட்டுக்கேட்குமிடமும் – என்று தொடங்கி – எல்லாம், வகுத்த விடமே என்று நினைக்கக்கடவன்.
இஹலோகபரலோகங்களிரண்டும் ஆசார்யன் திருவடிகளே என்றும்,
த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டும் அவனே என்றும் விஶ்வஸித்திருக்கிறதுக்கு மேலில்லை.

ஶிஷ்யன் ஆசார்யனுடைய தேஹயாத்ரையே தனக்கு ஆத்மயாத்ரையாக நினைத்திருக்கவேணும்.
ஶிஷ்யன் ஆசார்யனுடைய உடம்பை நோக்கும், ஆசார்யனுக்கு என் வஸ்துவை உபகரிக்கிறேனென்றிருக்கும்
ஶிஷ்யனுடைய அறிவையும் அழிக்கவடுக்கும்.
ஆசார்யன் பொறைக்கிலக்கான ஶிஷ்யனுக்கு பகவஜ்ஜ்ஞாநம் கைவந்ததென்னவொண்ணாது.
நியமநத்துக்குப் பாத்ரனாக வேணும்.
ஆசார்யன் பண்ணின உபகாரத்தை நாள் தோறும் அநுஸந்தித்திலனாகில் இவனுடைய ஜ்ஞாநாம்ஶமடைய மறந்து அஜ்ஞாநமே மேலிடும்.
ஆசார்யன் திறத்தில் செய்த அடிமையை மறந்தும் செய்யப் பெறாத அடிமைக்கு இழவுபட்டிருப்பான்.
ஶிஷ்யனுக்கு ஆசார்யனுடைய ஸுப்ரஸாதமே அப்ரஸாதமாகவும், அப்ரஸாதமே ஸுப்ரஸாதமாகவும் வேணும்.

“சக்ஷுஸா தவ ஸௌம்யேந பூதாஸ்மி ரகுநந்தந | பாதமூலம் கமிஷ்யாமி யாநஹம் பர்யசாரிஷம் ||” என்று
பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரியான சக்ரவர்த்தி திருமகனார் தன் கண்முன்னே நிற்க அவனை விட்டுத் தன்னுடைய
ஆசார்யர்களுடைய பாத ஸேவை பண்ணப் போகிறேனென்று போனாளிறே தான் சதிரியாயிருக்கச் செய்தேயும்
எல்லைச் சதுரையாகையாலே ஶ்ரீஶபரி.
ஞானமநுட்டானமிவை நன்றாகவேயுடையனான குருவையடைந்தக்கால் – என்று தொடங்கி.
திருமாமகள் கொழுநன் தானே வைகுந்தந்தரும்.
உய்யநினைவுண்டாகில் – என்று தொடங்கி – கையிலங்கு நெல்லிக்கனி.
தன்னாரியனுக்குத் தானடிமை செய்வது – என்று தொடங்கி – ஆசாரியனைப் பிரிந்திருப்பாரார் மனமே பேசு.
ஆசார்யன் சிஷ்யன் – என்று தொடங்கி – ஆசையுடன் நோக்குமவன்.
பின்பழகராம் பெருமாள் சீயர் – என்று தொடங்கி – நம்பிள்ளைக்கான அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே ஊனமற எப்பொழுதுமோர்.
ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா – என்று தொடங்கி – தஸ்மாதநந்யஶரணோ பவதீதி மத்வா என்று
நம்முடைய ஜீயர், தாம் அந்திமோபாயநிஷ்டாக்ரேஸரர் என்னுமிடத்தை ஸ்வப்ரபந்தங்களான உபதேச ரத்தின மாலையிலும்,
யதிராஜ விம்ஶதியிலும் நன்றாக ப்ரகாஶிப்பித்தருளித்
தாம் பெற்ற பேறுகளை அநுஸந்தித்தருளுகிற தனியனிலும் – மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம்,
முன்னவராம் நங்குரவர் மொழிகளுள்ளப் பெற்றோம், முழுதும் நமக்கவை பொழுது போக்காகப் பெற்றோம்,
பின்னையொன்றுதனில் நெஞ்சு பேராமற் பெற்றோம், பிறர்மினுக்கம் பொறாமையில்லாப் பெருமையும் பெற்றோமே –
என்று தம்முடைய நிஷ்டையை மதித்துக்கொண்டு மிகவும் ஹ்ருஷ்டரானாரிறே.

————–

4 – வடுக நம்பி மற்றும் அருளாளாப் பெருமாள் எம்பெருமானாரிடத்தில்
எம்பெருமானாரின் கருணை மற்றும் அவர்களின் பூர்ண சரணாகதி

வடுகநம்பி உடையவர் தளிகைக்குப் பாலமுது காய்ச்சா நிற்க, பெரிய திருநாளுக்குப் பெருமாள்
அழகாக உடுத்து முடித்துப் புறப்பட்டருளி மடத்து வாசலிலே எழுந்தருள, உடையவர் புறப்பட்டு ஸேவித்து,
“வடுகா! பெருமாளை ஸேவிக்க வா” என்று அழைத்தருள, வடுகநம்பி,
‘அடியேன் உம்முடைய பெருமாளை ஸேவிக்க வந்தால் என்னுடைய பெருமாளுக்குப் பாலமுது பொங்கிப் போங்காணும்.
ஆகையால் இத்தைவிட்டு வரக்கூடாது’ என்று அருளிச்செய்தார் என்று ப்ரஸித்தமிறே.
“உன்னையொழியவொரு தெய்வமற்றறியா, மன்னுபுகழ்சேர் வடுகநம்பி தன்னிலையை,
என்றனுக்கு நீ தந்தெதிராசா எந்நாளும், உன்றனக்கே ஆட்கொள் உகந்து” என்று வடுகநம்பி நிலையையும்
நம்முடைய ஜீயர் ப்ரார்த்தித்தருளினாரிறே.

(1) ப்ரக்ருதிமானாகில் ஸத்வைத்யன் கண்வட்டத்திலே வர்த்திப்பான்;
ஆத்மவானாகில் ஸதாசார்யன் கண்வட்டத்திலே வர்த்திப்பான் என்றும்
(2) நம்பிள்ளை தம்முடைய திருவடிகளுக்கு அந்தரங்கரான வடக்குத் திருவீதிப் பிள்ளையைப் பார்த்துத்
தம்முடைய தேவிகள் நிமித்தமாக ஒரு கைங்கர்யம் நியமித்தருளி, பின்பு,
‘க்ருஷ்ண ! நாம் நியமித்த கார்யத்துக்கு என்ன நினைத்திருந்தாய்? ‘ என்று கேட்டருள,
‘அடியேனுமொரு மிதுனம் தஞ்சமென்றன்றோ இருப்பேன்’ என்று விண்ணப்பம் செய்ய,
அபிமாநநிஷ்டனாகில் இப்படி இருக்கவேணுமென்று நம்பிள்ளை பிள்ளையை உகந்தருளினார் என்றும்
(3) பிள்ளை லோகாசார்யர் தம்முடைய திருவடிகளுக்கு அந்தரங்கராயிருப்பாரொரு
(திருவாய் மொழிப் பிள்ளையுடைய திருத்தாயார் ) ஸாத்த்விகையைப் பார்த்தருளி,
‘புழுங்குகிறது; வீசு’ என்ன, அவளும் ‘பிள்ளை! அப்ராக்ருதமான திருமேனியும் புழங்குமோ’ என்ன,
‘புழங்குகாண், “வேர்த்துப்பசித்து வயிறசைந்து” என்று ஓதினாய்’ என்று அவளுடைய ப்ரதிபத்தி குலையாமல்
அதுக்குத் தகுதியாகத் தம்முடைய க்ருபையாலே பிள்ளை அருளிச்செய்தார் என்றும்
இம்மூன்று வார்த்தையும் பலகாலும் நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.
இதில் வார்த்தை உபதேஶத்தாலே அறியவேணும்.

உடையவர் காலத்திலே அருளாளப் பெருமாளெம்பெருமானார் என்றொருவர் வித்யையாலும் ஶிஷ்யஸம்பத்தாலும்
அறமிகுந்தவராய் அநேகஶாஸ்த்ரங்களை எழுதி க்ரந்தங்களைச் சுமையாகக் கட்டி எடுப்பித்துக் கொண்டு
தம்முடைய வித்யா கர்வமெல்லாம் தோற்றப் பெரிய மதிப்புடன் வந்து உடையவருடனே பதினேழு நாள் தர்க்கிக்க,
பதினெட்டாம் நாள் அருளாளப் பெருமாளுடைய யுக்தி ப்ரபலமாக உடையவர் ‘இது இருந்தபடியென்’ என்று எழுந்தருளியிருக்க,
அவ்வளவில் அருளாளப்பெருமாள் தம்முடைய வெற்றிதோற்ற எழுந்திருந்து அற்றைக்குப்போக,
உடையவரும் மடமே எழுந்தருளித் திருவாராதநம் பண்ணிப் பெருமாளுடனே வெறுத்துப் பெருமாளை
‘இத்தனைகாலமும் தேவரீருடைய ஸ்வரூபரூபகுண – விபூதிகள் ஸத்யமென்று ப்ரமாணத்தை நடத்திக் கொண்டு போந்தீர்;
இப்போது இவனொரு ம்ருஷாவாதியைக் கொண்டுவந்து என்னுடைய காலத்திலே எல்லா ப்ரமாணங்களையும்
அழித்துப் பொகட்டு லீலை கொண்டாடத் திருவுள்ளமாகில் அப்படிச் செய்தருளும்’ என்று
அமுது செய்தருளாமல் கண்வளர்ந்தருள, பெருமாளும் அந்த க்ஷணத்திலே
‘உமக்கு ஸமர்த்தனாயிருப்பானொரு ஶிஷ்யனை உண்டாக்கித் தந்தோம்;
அவனுக்கு இன்ன யுக்தியை நீர் சொல்லும், அவனும் அதுக்குத் தோற்று ஶிஷ்யனாகிறான்’ என்று
உடையவர்க்கு ஸ்வப்நத்திலே அருளிச் செய்தருள,

உடையவரும் திருக்கண்களை விழித்து, ‘இது ஒரு ஸ்வப்நமிருந்தபடி என்’ என்று திருவுள்ளமுகந்து
பெருமாள் ஸ்வப்நத்திலே அருளிச் செய்த யுக்தியைத் தம்முடைய திருவுள்ளத்திலே கொண்டு
“வலிமிக்க சீயமிராமாநுசன் மறைவாதியராம் புலிமிக்கதென்று இப்புவனத்தில் வந்தமை” என்கிறபடியே
மதித்த ஸிம்ஹம் போலே ப்ரஸந்ந கம்பீரராய்க் கொண்டு தர்க்க கோஷ்டிக்கு எழுந்தருள,
அவ்வளவில் அருளாளப் பெருமாள், உடையவர் எழுந்தருளுகிற காம்பீர்யத்தையும் ஸ்வரூபத்தையும் கண்டு
திடுக்கென்று இவர் நேற்று எழுந்தருளுகிறபோது இங்கு நின்றும் சோம்பிக் கொண்டெழுந்தருளா நின்றார்,
ஆகையாலே இது மாநுஷமன்று என்று நிஶ்சயித்து, கடுக எழுந்திருந்து எதிரே சென்று உடையவர் திருவடிகளிலே விழ,

உடையவரும் ‘இதுவென்? நீ தர்க்கிக்கலாகாதோ?’ என்ன, அருளாளப் பெருமாள், உடையவரைப் பார்த்து
‘தேவர்க்கு இப்போது பெரியபெருமாள் ப்ரத்யக்ஷமான பின்பு தேவரீரென்ன, பெரியபெருமாளென்ன பேதமில்லை என்றறிந்தேன்.
இனி அடியேன் தேவரீருடைய ஸந்நிதியிலே வாய் திறந்தொரு வார்த்தை சொல்ல ப்ராப்தி இல்லை.
ஆகையாலே அடியேனைக் கடுக அங்கீகரித்தருள வேணும் என்று மிகவும் அநுவர்த்திக்க, உடையவரும்
அவ்வளவிலே மிகவும் திருவுள்ளமுகந்து அவரைத் திருத்தி அங்கீகரித்து விஶேஷ கடாக்ஷம் பண்ணியருளி,
அன்று தொடங்கி அருளாளப் பெருமாளெம்பெருமானார் என்று தம்முடைய திருநாமம் ப்ரஸாதித்தருளிப்
பெரியதொரு மடத்தையும் கொடுத்து, ‘உமக்குப் போராத ஶாஸ்த்ரங்களில்லை, புறம்புண்டான பற்றுக்களடைய
ஸவாஸநமாக விட்டு ஶ்ரிய:பதியைப் பற்றும், உமக்கு பரக்கச் சொல்லலாவதில்லை.
விஶிஷ்டாத்வைதப் பொருள் நீரும் உம்முடைய ஶிஷ்யர்களும் கூடி வ்யாக்யாநம் பண்ணிக்கொண்டு ஸுகமே இரும்’
என்று திருவுள்ளம் பற்றியருள, அவரும் க்ருதார்த்தராய், அதுக்குப் பின்பு
அருளாளப் பெருமாளெம்பெருமானாரும் அந்த மடத்திலே சிறிது நாள் எழுந்தருளியிருந்தார்.

அநந்தரம் தேஶாந்தரத்தில் நின்றும் இரண்டு ஶ்ரீவைஷ்ணவர்கள் கோயிலுக்கெழுந்தருளித் திருவீதியிலே
நின்றவர்கள் சிலரைப் பார்த்து ‘எம்பெருமானார் மடம் ஏது’ என்று கேட்க,
அவர்கள் ‘எந்த எம்பெருமானார் மடம்’ என்ன, புதுக்க எழுந்தருளின ஶ்ரீவைஷணவர்கள் நெஞ்சுளைந்து
“நீங்கள் இரண்டு சொல்லுவானென்? இந்த தர்ஶநத்துக்கு இரண்டு எம்பெருமானாருண்டோ?” என்ன,
அவர்கள் ‘உண்டு காணும்; அருளாளப் பெருமாளெம்பெருமானாரும் எழுந்தருளி இருக்கிறார்;
ஆகையாலே சொன்னோம்’ என்ன, ‘நாங்கள் அவரை அறியோம், ஶ்ரீ பாஷ்யகாரரைக் கேட்டோம்’ என்ன,
ஆனால் ‘உடையவர் மடம் இது’ என்று அவர்காட்ட, அந்த ஶ்ரீவைஷ்ணவர்களும் உடையவர் மடத்திலே சென்று புகுந்தார்கள்.
இந்த ப்ரஸங்கங்களெல்லாத்தையும் யாத்ருச்சிகமாக அருளாளப் பெருமாளெம்பெருமானார் கேட்டு,
‘ஐயோ நாம் உடையவரைப் பிரிந்து ஸ்தலாந்தரத்திலே இருக்கையாலே லோகத்தார் நம்மை
எம்பெருமானார்க்கு எதிராகச் சொன்னார்கள். ஆகையாலே நாம் அநர்த்தப்பட்டு விட்டோம்’ என்று மிகவும் வ்யாகுலப்பட்டு,
அப்போதே தம்முடைய மடத்தையும் இடித்துப் பொகட்டு வந்து உடையவர் திருவடிகளைக் கட்டிக்கொண்டு
‘அநாதி காலம் இவ்வாத்மா தேவர் திருவடிகளை அகன்று அஹம் என்று அநர்த்தப்பட்டு போந்தது போராமல் இப்போதும்
அகற்றிவிடத் திருவுள்ளமாய் விட்டதோ?’ என்று மிகவும் க்லேஶிக்க, உடையவர் ‘இதுவென்’ என்ன,
அங்குப் பிறந்த வ்ருத்தாந்தங்களை விண்ணப்பம் செய்ய, உடையவரும் அச் செய்திகளெல்லாவற்றையும் கேட்டருளி,
‘ஆனால் இனி உமக்கு நாம் செய்யவேண்டுவதென்’ என்ன, அருளாளப் பெருமாளெம்பெருமானார்
‘அடியேனை இன்று தொடங்கி நிழலுமடிதாறும்போலே தேவரீர் திருவடிகளின் கீழே வைத்துக் கொண்டு
நித்ய கைங்கர்யம் கொண்டருளவேணும்’ என்று விண்ணப்பம் செய்ய, உடையவரும் ,
‘ஆனால் இங்கே வாரும்’ என்று அவரைத் தம்முடைய ஸந்நிதியிலே ஒரு க்ஷணமும் பிரியாமல் வைத்துக் கொண்டு
ஸகலார்த்தங்களையும் ப்ரஸாதித்தருள அவரும் க்ருதார்த்தராய்த் தாம் உடையவரொழிய வேறொரு தெய்வம்
அறியாதிருந்தவராகையாலே ஸகல வேதாந்த ஸாரங்களையும் பெண்ணுக்கும் பேதைக்கும் எளியதாக கற்று
உஜ்ஜீவிக்கத் தக்கதாக ‘ஞான ஸாரம்’ ‘ப்ரமேய ஸாரம்’ என்கிற ப்ரபந்தங்களையும் இட்டருளி,
அதிலே “சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே அரணாகும்” என்றும்
“தேனார்கமலத் திருமாமகள் கொழுநன் தானே குருவாகி’ என்றுமித்யாதிகளாலே
ஸச்சிஷ்யனுக்கு ஸதாசார்யனே பரதேவதை; அவன் திருவடிகளே ரக்ஷகம் என்னுமதும்,
அவன்தான் பகவதவதாரம் என்னுமதும் தோற்ற ஸர்வஜ்ஞரான அருளாளப் பெருமாளெம்பெருமானார்
அருளிச் செய்தாரென்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.

————-

5 – பட்டர், நஞ்சீயர் மற்றும் நம்பிள்ளை – சிறந்த ஆசார்ய-சிஷ்ய ஸம்பந்தம்

கூரத்தாழ்வான் திருவயிற்றிலே அவதரித்துப் பெருமாள் புத்ர ஸ்வீகாரம் பண்ணி வளர்த்துக்கொள்ள,
பெருமாள் குமாரராய் வளர்ந்த பட்டர் தர்ஶநம் நிர்வஹிக்கிற காலத்திலே, ஒரு தீர்த்தவாஸி ப்ராஹ்மணன் வந்து
பட்டருடைய கோஷ்டியிலே நின்று ‘பட்டரே! மேல்நாட்டிலே வேதாந்திகள் என்று ஒரு வித்வான் இருக்கிறான்,
அவனுடைய வித்யையும் கோஷ்டியும் உமக்கு துல்யமாயிருக்கும்’ என்ன,
பட்டர் அந்த ப்ராஹ்மணன் சொன்ன வார்த்தைக் கேட்டு ‘ஆமோ, அப்படி ஒரு வித்வாம்ஸர் உண்டோ’ என்ன,
‘உண்டு’ என்று சொல்ல, அந்த ப்ராஹ்மணன் அங்கு நின்றும் புறப்பட்டு மேல்நாட்டுக்குப் போய்,
வேதாந்திகள் கோஷ்டியிலே நின்று ‘வேதாந்திகளே! உம்முடைய வித்யைக்கும் கோஷ்டிக்கும் சரியாயிருப்பாரொருவர்
இரண்டாற்றுக்கும் நடுவே பட்டர் என்றொருவர் எழுந்தருளியிருக்கிறார்’ என்ன,
வேதாந்திகள் அந்த ப்ராஹ்மணரைப் பார்த்து ‘ஆமோ, பட்டர் நமக்கொத்த வித்வானோ’ என்ன,
ப்ராஹ்மணன் ‘ஶப்த – தர்க்க – பூர்வோத்தரமீமாம்ஸம் தொடக்கமாக ஸகல ஶாஸ்த்ரங்களும் பட்டருக்குப் போம்’ என்ன,
வேதாந்திகள் அந்த ப்ராஹ்மணன் சொன்னது கேட்டு, ‘இந்த பூமியில் நமக்கெதிரில்லையென்று ஷட்தர்ஶநத்துக்கும்
ஆறு ஆஸநமிட்டு அதின் மேலே உயர இருந்தோம்; பட்டர் நம்மிலும் அதிகர் என்று ப்ராஹ்மணன் சொன்னான்’ என்று
அன்று தொடங்கி வேதாந்திகள் திடுக்கிட்டிருந்தார்.

அவ்வளவில் அந்த ப்ராஹ்மணன் அங்கு நின்றும் புறப்பட்டுக் கோயிலுக்கு வந்து பட்டர் ஸந்நிதியிலே நின்று,
‘பட்டரே! உம்முடைய வைபவமெல்லாம் வேதாந்திகளுக்குச் சொன்னேன்’ என்ன,
‘பட்டருக்கு எந்த ஶாஸ்த்ரம் போம்’ என்று கேட்டார்’ என்ன, ‘ப்ராஹ்மணா, அதுக்கு வேதாந்திகளுக்கு என் சொன்னாய்’ என்ன,
‘ஶப்த தர்க்கங்களும் ஸகல வேதாந்தங்களும் நன்றாக பட்டர்க்குப் போம் என்று வேதாந்திகளுடனே சொன்னேன்’ என்ன,
பட்டர் அந்த ப்ராஹ்மணனைப் பார்த்து ‘தீர்த்த வாஸியாய் தேஶங்களெல்லாம் நடையாடி எல்லாருடையவும்
வித்யா மாஹாத்ம்யங்களையும் அறிந்து நாகரிகனாய் இருக்கிற நீ நமக்குப் போமதெல்லாமறிந்து
வேதாந்திகளுடனே சொல்லாமல் வேத ஶாஸ்த்ரங்களே போமென்று தப்பச் சொன்னாய்’ என்ன,
அந்த ப்ராஹ்மணன் பட்டரைப் பார்த்து ‘இந்த லோகத்தில் நடையாடுகிற வேதஶாஸ்த்ரங்களொழிய
உமக்கு மற்றெது போம் என்று வேதாந்திகளுடனே சொல்லுவது’ என்ன,
‘கெடுவாய்! பட்டருக்கு திருநெடுந்தாண்டகம் போமென்று வேதாந்திகளுடனே சோல்லப் பெற்றாயில்லையே’ என்று
பட்டர் வெறுத்தருளிச் செய்து, அநந்தரம் பட்டர்
‘வேதாந்திகளை நம்முடைய தர்ஶநத்திலே அந்தர்பூதராம்படி பண்ணிக்கொள்ளவேணும்’ என்று
தம்முடைய திருவுள்ளத்தைக்[தே] கொண்டு பெருமாளை ஸேவித்து,
‘மேல்நாட்டிலே வேதாந்திகளென்று பெரியதொரு வித்வான் இருக்கிறார். அவரைத் திருத்தி நம்முடைய
தர்ஶந ப்ரவர்த்தகராம்படி பண்ணவேணும் என்று அங்கே விடைக்கொள்ளுகிறேன், அவரை நன்றாகத் திருத்தி
ராமாநுஜ ஸித்தாந்தத்துக்கு நிர்வாஹகராம்படி திருவுள்ளம் பற்றியருளவேணும்’ என்று பட்டர் பெருமாளுக்கு விண்ணப்பம் செய்ய,
பெருமாளும் ‘அப்படியே செய்யும்’ என்று திருவுள்ளமுகந்தருளித் தம்முடைய குமாரரான வாசி தோற்ற,
‘அநேக கீத வாத்யங்களையும் கோயில் பரிகரத்தையும் கூட்டிப்போம்’ என்றுவிட,

பட்டரும் அங்கே எழுந்தருளி வேதாந்திகள் இருக்கிற ஊர் ஆஸந்நமானவாறே
பராசர பட்டர் வந்தார், வேதாசார்ய பட்டர் வந்தார்’ என்று திருச்சின்னம் பரிமாறுகை முதலான அநேக வாத்ய கோஷத்துடனே
பெருந்திரளாக மஹா ஸம்ப்ரமத்துடனே ஸர்வாபரண பூஷிதராய்க் கொண்டு எழுந்தருள, அவ்வளவிலே அவ்வூரில் நின்றும்
இரண்டு பேர் ப்ராஹ்மணர் எதிரே சென்று,
‘நீர் மஹா ஸம்ப்ரமத்துடனே வந்தீர், நீரார்? நீர் எங்கே எழுந்தருளுகிறீர்? என்று பட்டரைக் கேட்க,
அவர் ‘நாம் பட்டர், வேதாந்திகளுடனே தர்க்கிக்கப் போகிறோம்’ என்ன, அந்த ப்ராஹ்மணர் சொன்னபடி –
‘நீர் இப்படி ஸம்ப்ரமத்துடனே எழுந்தருளினால் வேதாந்திகளை உமக்குக் காணப்போகாது.
அவர் க்ருஹத்துக்குள்ளே இருந்துவிடுவர். அவருடைய ஶிஷ்ய ப்ரஶிஷ்யர்கள் தலைவாசலிலே இருந்து
நாலிரண்டு மாஸம் வந்த வித்வான்களுடனே தர்க்கித்து உள்ளே புகுர வொட்டாதே தள்ளி விடுவார்கள்’ என்ன,
பட்டரும் அந்த ப்ராஹ்மணரைப் பார்த்து ‘ஆனால் நான் நேரே சென்று அவருடைய க்ருஹத்திலே புகுந்து
வேதாந்திகளைக் காணும் விரகேது’ என்று கேட்க, அவர்கள் சொன்னபடி – ‘வேதாந்திகள் தநவானாகையாலே
அவாரியாக {=தடையின்றி} ப்ராஹ்மணர்க்கு ஸத்ர போஜநமிடுவர், அந்த ப்ராஹ்மணருடனே கலசி அவர்களுடைய
வேஷத்தையும் தரித்துக்கொண்டு ஸத்ரத்திலே சென்றால் வேதாந்திகளைக் கண்களாலே காணலாம்.
ஆகையாலே உம்முடைய ஸம்ப்ரமங்களெல்லாத்தையும் இங்கே நிறுத்தி நீர் ஒருவருமே ஸத்ராஶிகளுடனே கூடி எழுந்தருளும்’
என்று சொல்லிப்போனார்கள். பட்டரும் அவர்கள் சொன்னது கார்யமாம் என்று திருவுள்ளம்பற்றித் தம்முடைய அனைத்து
பரிகரத்தையும் ஓரிடமே நிறுத்தி, ஸர்வாபரணங்களையும் களைந்து, ஒரு அரசிலைக் கல்லையையும் குத்தி
இடுக்கிக்கொண்டு ஒரு காவி வேஷ்டியையும் தரித்து ஒரு கமண்டலத்தையும் தூக்கி ஸத்ராஶிகளுடனே கூட
கார்ப்பண்ய வேஷத்தோடே உள்ளே எழுந்தருள,

வேதாந்திகள் ப்ராஹ்மணர் புஜிக்கிறத்தைப் பார்த்துக்கொண்டு ஒரு மண்டபத்தின்மேலே பெரிய மதிப்போடே இருக்க,
ப்ராஹ்மணரெல்லாரும் ஸத்ர ஶாலையிலே புகுர, பட்டர் அங்கே எழுந்தருளாமல் வேதாந்திகளை நோக்கி எழுந்தருள,
வேதாந்திகள் ‘பிள்ளாய் இங்கென் வருகிறீர்?’ என்ன, பட்டரும் ‘பிக்ஷைக்கு வருகிறேன்’ என்ன,
‘எல்லாரும் உண்கிறவிடத்திலே ஸத்ரத்திலே போகீர் பிக்ஷைக்கு’ என்ன, ‘எனக்கு சோற்று பிக்ஷை அன்று’ என்ன,
வேதாந்திகள் இவர் ஸத்ராஶியானாலும் கிஞ்சித் வித்வானாக கூடும் என்று விசாரித்து, ‘கா பிக்ஷா?’ என்ன,
பட்டர் ‘தர்க்க பிக்ஷா’ என்ன, வேதாந்திகள் அத்தைக் கேட்டுத் திடுக்கிட்டு தீர்த்தவாஸி ப்ராஹ்மணன் வந்து
முன்னாள் நமக்குச் சொன்ன பட்டரல்லது நம்முடைய முன்வந்துநின்று கூசாமல் தர்க்க பிக்ஷை என்று கேட்கவல்லார்
இந்த லோகத்திலே இல்லையாகையாலே, வேஷம் கார்பண்யமாயிருந்ததே யாகிலும் இவர் பட்டராக வேணும் என்று நிஶ்சயித்து
‘நம்மை தர்க்க பிக்ஷை கேட்டார் நீரார், பட்டரோ? என்ன, அவரும் ‘ஆம்’ என்று கமண்டலத்தை, காவி வேஷ்டியை
இவையெல்லாத்தையும் சுருட்டி எறிந்து எழுந்தருளிநின்று மஹாவேகத்திலே உபந்யஸிக்க,

அவ்வளவில் வேதாந்திகள் எழுந்திருந்து நடுங்கி வேறொன்றும் சொல்லாதே அரைகுலையத் தலைகுலைய
இறங்கி வந்து பட்டர் திருவடிகளிலே விழுந்து, ‘அடியேனை அங்கீகரித்தருள வேணும்’ என்று மிகவும் அநுவர்த்திக்க
பட்டரும் தாம் எழுந்தருளின கார்யம் அதிஶீக்ரத்திலே பலித்தவாறே மிகவும் திருவுள்ளமுகந்தருளி,
வேதாந்திகளை அங்கீகரித்து அவர்க்குப் பஞ்ச ஸம்ஸ்காரமும் பண்ணியருளி,
‘வேதாந்திகளே! நீர் ஸர்வஜ்ஞராயிருந்தீர். ஆகையாலே உமக்கு நாம் பரக்கச் சொல்லாவதில்லை.
விஶிஷ்டாத்வைதமே பொருள்; நீரும் மாயாவாதத்தை ஸவாஸநமாக விட்டு, ஶ்ரிய:பதியைப் பற்றி,
ராமாநுஜ தர்ஶநத்தை நிர்வஹியும்’ என்று அருளிச்செய்து, ‘நாம் பெருமாளை ஸேவிக்கப் போகிறோம்’ என்று
உத்யோகிக்கிறவளவிலே ஊருக்குப் புறம்பே நிறுத்தின அனைத்துப் பரிகாரமும் மஹாஸம்ப்ரமத்துடனே வந்து புகுந்து
பட்டரை மீளவும் ஸர்வாபரணங்களாலும் அலங்கரித்துத் திருபல்லக்கிலேற்றி உபயசாமரங்களைப் பரிமாற
எழுந்தருளுவித்துக் கொண்டு புறப்பட்டவளவிலே வேதாந்திகள் பட்டருடைய பெருமையும் ஸம்பத்தையும் கண்டு
‘இந்த ஶ்ரீமாந் இத்தனை தூரம் காடும் மலையும் கட்டடமும் கடந்து எழுந்தருளி நித்ய ஸம்ஸாரிகளிலும்
கடைகெட்டு ம்ருஷாவாதியாயிருந்த அடியேனுடைய துர்கதியே பற்றாசாக அங்கீகரித்தருளுவதே!’ என்று
மிகவும் வித்தராய்க் கண்ணும் கண்ண நீருமாய்க் கொண்டு பட்டர் திருவடிகளிலே விழுந்து க்லேஶித்து,

‘பெரிய பெருமாள் தாமாகத் தன்மையான ஸௌந்தர்ய ஸௌகுமார்யாதிகளுக்குத் தகுதியாக எழுந்தருளினார்,
அநாதி காலம் தப்பி அலம்புரிந்த நெடுந் தடக்கைக்கும் எட்டாதபடி கை கழிந்து போன இவ்வாத்மா என்றும்
தப்பிப்போம் என்று திருவுள்ளம்பற்றி, இப்படி அதிகார்ப்பண்யமாயிருப்பதொரு வேஷத்தையும் தரித்துக்கொண்டு
ஸத்ராஶிகளுடனேகூட எழுந்தருளி அதிதுர்மாநியான அடியேனை அங்கீகரித்தருளின அந்த வேஷத்தை நினைத்து
அடியேனுக்குப் பொறுக்கப் போகிறதில்லை’ என்று வாய்விட, பட்டரும் வேதாந்திகளை எடுத்து நிறுத்தித் தேற்றி,
‘நீர் இங்கே ஸுகமே இரும்’ என்று அருளிச்செய்து கோயிலேற எழுந்தருளினார்.

அதுக்குப் பின்பு வேதாந்திகள் அங்கே சிறிதுநாள் எழுந்தருளியிருந்து பட்டரைப் பிரிந்திருக்க மாட்டாதே
கோயிலுக்கு எழுந்தருளத்தேட அங்குள்ளவர்கள் அவரைப் போகவொண்ணாதென்று தகையத் தமக்கு நிரவதிக
தநம் உண்டாகையாலே அத்தை மூன்றம்ஶமாகப் பிரித்து, இரண்டு தேவிமாருக்கு இரண்டு அம்ஶத்தைக் கொடுத்து,
மற்றை அம்ஶத்தைத் தம்முடைய ஆசார்யருக்காக எடுப்பித்துக் கொண்டு தத்தேஶத்தையும் ஸவாஸநமாக விட்டு
ஸந்யஸித்துக் கோயிலிலே எழுந்தருளி, பட்டர் திருவடிகளிலே ஸேவித்துத் தான் கொண்டு வந்த தநத்தையும்
தம்மதென்கிற அபிமாநத்தைவிட்டு, பட்டர் இஷ்ட விநியோகம் பண்ணிக் கொள்ளலாம்படி அவர் திருமாளிகையிலே
விட்டுவைத்து, க்ருதார்த்தராய் எழுந்தருளி நிற்க,

அவ்வளவில் பட்டரும் மிகவும் திருவுள்ளமுகந்து, ‘நம்முடைய ஜீயர் வந்தார்’ என்று கட்டிக் கொண்டு
ஒரு க்ஷணமும் பிரியாமல் தம்முடைய ஸந்நிதியிலே வைத்துக் கொண்டு ஸகலார்த்தங்களையும் ப்ரஸாதித்தருளினார்.
ஜீயரும் பட்டரையல்லது மற்றொரு தெய்வம் அறியாதிருந்தார். பட்டர் நஞ்சீயர் என்று அருளிச்செய்தவன்று தொடங்கி
வேதாந்திகளுக்கு நஞ்சீயரென்று திருநாமமாயிற்று. நஞ்சீயர் நூறு திருநக்ஷத்ரம் எழுந்தருளியிருந்து
நூறு திருவாய்மொழியும் நிர்வஹிக்கையாலே ஜீயருக்கு ஶதாபிஷேகம் பண்ணிற்று என்று
நம்முடைய ஜீயர் அருளிச் செய்வர்.

நஞ்சீயர் பட்டரை அநேகமாக அநுவர்த்தித்து அவருடைய அநுமதி கொண்டு திருவாய்மொழிக்கு
ஒன்பதினாயிரமாக ஒரு வ்யாக்யாநமெழுதி, பட்டோலையானவாறே இத்தையொரு ஸம்புடத்திலே
நன்றாக எழுதித் தரவல்லார் உண்டோ என்று ஜீயர் தம்முடைய முதலிகளைக் கேட்க, அவர்களும்
‘தென்கரையனென்னும் வரதராஜனென்று ஒருவர் பலகாலம் இங்கே வருவர். அவர் நன்றாக எழுதவல்லார்’
என்று ஜீயருக்கு விண்ணப்பம் செய்ய, ஜீயரும் வரதராஜரை அழைத்து ‘ஒரு க்ரந்தம் எழுதிக் காட்டுங்காண்’ என்ன,
அவரும் எழுதிக்கொடுக்க, ஜீயர் அத்தைக்கண்டு ‘எழுத்து முத்துப்போலே நன்றாயிருந்தது;
ஆனாலும் திருவாய்மொழி வ்யாக்யாநமாகையாலே ஒரு விலக்ஷணரைக் கொண்டு எழுதுவிக்க வேணுமொழிய,
திருவிலச்சினை திருநாமமுண்டான மாத்ரமாய், விஶேஷஜ்ஞரல்லாத வரதராஜனைக் கொண்டு எப்படி எழுதுவிப்பது’ என்று
ஸந்தேஹிக்க, வரதராஜனும் ஜீயர் திருவுள்ளத்தை யறிந்து
‘அடியேனையும் தேவரீர் திருவுள்ளத்துக்குத் தகும்படி திருத்திப் பணி கொள்ளலாகாதோ’ என்ன,

அவ்வளவில் ஜீயரும் மிகவும் திருவுள்ளமுகந்தருளி அப்போதே வரதராஜனை அங்கீகரித்து
விஶேஷ கடாக்ஷம் பண்ணியருளி ஒன்பதினாயிரமும் பட்டோலை ஓருரு வரதராஜனுக்கு அருளிச் செய்து காட்டி
‘இப்படித் தப்பாமல் எழுதித்தாரும்’ என்று பட்டோலையை வரதராஜன் கையிலே கொடுக்க,
அவரும் அத்தை வாங்கிக் கொண்டு ‘அடியேனூரிலே போய் எழுதிக் கொண்டு வருகிறேன்’ என்று விண்ணப்பம் செய்ய,
ஜீயரும் ‘அப்படியே செய்யும்’ என்று விட, வரதராஜன் திருக்காவேரிக்குள்ளே எழுந்தருளினவளவிலே
சத்திடம் (சிற்றிடம்) நீச்சாகையாலே பட்டோலையைத் திருமுடியிலே கட்டிக்கொண்டு நீஞ்ச,
அவ்வளவிலே ஒரு அலை அவரை அடித்து க்ரந்தம் ஆற்றுக்குள்ளே விழுந்து போக,
அவரும் அக்கரையிலேயேறி ‘பட்டோலை போய்விட்டதே, இனி நான் செய்வதேது’ என்று விசாரித்து,

ஒரு அலேகத்தை {=வெற்றேடு} உண்டாக்கிக் கொண்டு ஜீயர் அருளிச் செய்தருளின அர்த்தம்
ஒன்றும் தப்பாமல் ஒன்பதினாயிரமும் நன்றாக எழுதி, தாம் சதிருடைய தமிழ் விரகராகையாலே
ஓரொரு பாட்டுக்களிலே உசிதமான ஸ்தலங்களுக்கு ப்ரஸந்ந கம்பீரமான அர்த்த விசேஷங்களும்
எழுதிக் கொண்டு போய் ஜீயர் திருக்கையிலே கொடுக்க, ஜீயரும் ஶ்ரீகோஶத்தை அவிழ்த்துப் பார்த்தவளவிலே
தாமருளிச்செய்த கட்டளையாயிருக்கச்செய்தே ஶப்தங்களுக்கு மிகவும் அநுகுணமாக
அநேக விஶேஷார்த்தங்கள் பலவிடங்களிலும் எழுதியிருக்கையாலே அத்தைக் கண்டு மிகவும் திருவுள்ளமுகந்தருளி
வரதராஜனைப் பார்த்து ‘மிகவும் நன்றாயிராநின்றது; இதேது சொல்லும்’ என்ன,
அவரும் பயப்பட்டு ஒன்றும் விண்ணப்பம் செய்யாதிருக்க, ஜீயரும் ‘நீர் பயப்படவேண்டாம், உண்மையைச் சொல்லும்’ என்ன,
வரதராஜனும் ‘திருக்காவேரி நீச்சாகையாலே பட்டோலையை அடியேன் தலையிலே கட்டிக் கொண்டேன்.
ஓரலை வந்து அடிக்கையாலே அது ஆற்றிலே விழுந்து முழிகிப்போய்த்து.
இது தேவரீர் அருளிச் செய்தருளின ப்ரகாரத்திலே எழுதினேன்’ என்று விண்ணப்பம் செய்ய,
ஜீயரும் ‘இது ஒரு புத்தி விசேஷமிருந்தபடியென்! இவர் மஹாஸமர்த்தராயிருந்தார். நன்றாக எழுதினார்’ என்று
மிகவும் திருவுள்ளமுகந்து வரதராஜனைக் கட்டிக்கொண்டு ‘நம்முடைய பிள்ளை திருக்கலிக்கன்றிதாஸர்’ என்று
திருநாமம் சாத்தித் தம்முடைய ஸந்நிதியிலே ஒரு க்ஷணமும் பிரியாமல் மாப்பழம்போலே வைத்துக்கொண்டு
பிள்ளைக்கு ஸகலார்த்தங்களையும் ப்ரஸாதித்தருளினார். ஆகையாலே ஜீயர் நம்பிள்ளை என்று அருளிச் செய்தவன்று
தொடங்கி வரதராஜனுக்கு நம்பிள்ளை என்று திருநாமமாய்த்து என்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவார்.

இந்த வ்ருத்தாந்தங்கள் தன்னை “நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை என்பர்,
அவரவர்தம் ஏற்றத்தால், அன்புடையோர் சாற்று திருநாமங்கள் தானென்று நன்னெஞ்சே,
ஏத்ததனைச் சொல்லி நீ இன்று” என்று உபதேச ரத்தின மாலையிலே நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளினார்.
‘இந்திரன் வார்த்தையும், நான்முகன் வார்த்தையும் ஈசனுடன்
கந்தன் வார்த்தையும் கற்பவராரினிக் காசினிக்கே
நந்தின முத்தென்றும் நம்பூர் வரதர் திருமாளிகையில்
சிந்தின வார்த்தை கொண்டே சில நாடு திறை கொள்வரே’ என்றிறே நம்பிள்ளை யுடைய வைபவமிருப்பது.

————–

6 – பகவானிலும் ஆசார்யனின் மேன்மை

திருகோட்டியூர் நம்பி கோயிலுக்கெழுந்தருளித் திருநாள் ஸேவித்து மீண்டெழுந்தருளுகிறவரை
எம்பெருமானார் அநுவர்த்தித்து ‘அடியேனுக்குத் தஞ்சமாயிருப்பதொரு நல்வார்த்தை அருளிச்செய்யவேணும்’ என்று கேட்க,
நம்பியும் ஒருநாழிகைப் போது திருக் கண்களைச் செம்பளித்துக் கொண்டு நின்று, பின்பு
‘எங்கள் ஆசார்யர் ஶ்ரீஆளவந்தார் அடியோங்களுக்கு ஹிதம் அருளும் போது அகமர்ஷண ஸமயத்திலே
திருமுதுகிருக்கும்படி வல்லார் கடாரம் கவிழ்த்தாப் போலே காணும் இருப்பது;
அதுவே நமக்குத் தஞ்சமென்று விஶ்வஸித்திருப்பேன்; நீரும் மறவாமல் இத்தை நினைத்திரும்’ என்று
அருளிச்செய்தாரென்று ப்ரஸித்தமிறே. நம்பிதான் திருக்கோட்டியூரிலே தளத்தின் மேலே படிக்கதவைப் புகட்டு
ஆளவந்தாரை த்யாநித்துக்கொண்டு யமுனைத்துறைவர் என்கிற மந்த்ரத்தை
ஸதாநுஸந்தாநமாய் எழுந்தருளி இருப்பர் என்று அருளிச்செய்வர்.

உடையவரும் ஒரூமையைக் கடாக்ஷித்தருளி அவனளவில் தமக்குண்டான க்ருபாதிஶயத்தாலே அவனைக்
கடாக்ஷிக்கக் கடவோம் என்று திருவுள்ளம் பற்றி, ஏகாந்தத்திலே வைத்துக்கொண்டு ஸம்ஜ்ஞையாலே
தம்முடைய திருமேனியை ஊமைக்கு ரக்ஷகமாகக் காட்டியருள, ஆருக்கும் ஸித்தியாத விஶேஷ கடாக்ஷத்தைத்
கூரத்தாழ்வான் கதவு புரையிலே கண்டு மூர்ச்சித்துத் தெளிந்த பின்பு ‘ஐயோ ஒன்றுமறியாத ஊமையாய்ப் பிறந்தேனாகில்
இப்பேற்றை உடையவர் அடியேனுக்கும் இரங்கியருளுவர்; கூரத்தாழ்வானாய்ப் பிறந்து ஶாஸ்த்ரங்களைப் பரக்கக் கற்கையாலே
தம்முடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை அடியேனுக்குத் தஞ்சமாகக் காட்டித் தந்தருளாமல் ப்ரபத்தியை உபதேஶித்து
விட்டாராகையாலே எம்பெருமானாருடைய திவ்ய மங்கள விக்ரஹமே எனக்குத் தஞ்சமென்கிற நிஷ்டைக்கு
அநதிகாரியாய் விட்டேன்’ என்று ஆழ்வான் தம்மை வெறுத்துக் கொண்டாரென்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.

உடையவர் ஆழ்வாரை ஸேவிக்க வேணுமென்று திருநகரிக்கெழுந்தருளுகிற போது திருப்புளிங்குடி என்கிற
திருப்பதியிலே எழுந்தருளினவாறே அவ்வூர்த் திருவீதியிலே பத்தெட்டு வயஸ்ஸிலே ஒரு ப்ராஹ்மணப் பெண் இருக்க,
உடையவர் அவளைப் பார்த்து, ‘பெண்ணே திருநகரிக்கு எத்தனை தூரம் போரும்’ என்று கேட்க,
அந்தப் பெண் உடையவரைப் பார்த்து ‘ஏன் ஐயரே! திருவாய்மொழி ஓதினீரில்லையோ?’ என்ன,
உடையவர் ‘திருவாய்மொழி ஓதினால் இவ்வூர்க்குத் திருநகரி இத்தனை தூரம் போம் என்று அறியும்படி எங்ஙனே?’ என்ன,
அப்பெண் – “திருபுளிங்குடியாய்! வடிவணையில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியைக்
கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள் கூவுதல் வருதல் செய்யாயே” என்று ஆழ்வார் அருளிச்செய்கையாலே
திருநகரிக்கு இவ்வூர் கூப்பிடு தூரமென்று அறிய வேண்டாவோ’ என்று உடையவரைப் பார்த்து விண்ணப்பம் செய்ய,
உடையவரும் ‘இதொரு வாக்யார்த்தமிருந்தபடி என்!’ என்று போர வித்தராய்,
அந்தப் பெண்ணளவிலே மிகவும் திருவுள்ளமுகந்து ‘இவளிருக்கிற ஊரிலே நமக்கு இன்று ஸ்வயம்பாகம் பண்ணுவதாகத்
தேடின பாண்டங்களையும் உடைத்துப் பொகட்டு, ‘பெண்ணே உன்னுடைய க்ருஹம் ஏது’ என்ன,
அவளும் தம்முடைய அகத்தைக்காட்ட, உடையவரும் அந்தக் க்ருஹத்திலே எழுந்தருளி,
அந்தப் பெண்ணையும் அவளுடைய மாதா பிதாக்களையும் தளிகைக்குத் திருப்போனகம் சமைக்கும்படி கற்பித்தருளித்
தாமும் முதலிகளும் அமுது செய்தருளி அந்தப் பெண்ணையும் அவளோடு ஸம்பந்தமுடையாரையும் அங்கீகரித்து
விசேஷ கடாக்ஷம் பண்ணியருளி, தாமும் முதலிகளுமாகத் திருநகரிக்கேற எழுந்தருளினார்.
அன்று தொடங்கி அந்தப் பெண்ணும் தத் ஸம்பந்திகளும் உடையவரல்லது மற்றொரு தெய்வமறியாமலிருந்து
வாழ்ந்து போனார்கள் என்று பெரியோர்கள் அருளிச் செய்வர்கள். இந்த வ்ருத்தாந்தங்களாலே
‘பாலமூக- ஜடாந்தாஶ்ச பங்கவோ பதிராஸ்ததா | ஸதாசார்யேண ஸந்த்ருஷ்டா: ப்ராப்நுவந்தி பராங்கதிம்’ என்கிறபடியே
ஶாஸ்த்ராநதிகாரிகளான இவர்களெல்லாம் பரமக்ருபையாலே உஜ்ஜீவித்தார்கள் என்பதை உடையவர் பக்கலிலே காணலாம் என்றபடி.

திருக்குருகைப்பிரான் பிள்ளான் கொங்கு நாட்டுக்கு எழுந்தருளி அங்கே ஒரு ஶ்ரீவைஷ்ணவ க்ருஹத்திலே விட்டு
ஸ்வயம்பாகம் பண்ணுவதாக எழுந்தருளியிருக்க, அங்குள்ளவர்களெல்லாரும் கேவல பகவந்நாம ஸங்கீர்தநங்களைப் பண்ண,
அது இவர் திருவுள்ளத்துக்குப் பொருந்தாத படியாலே அமுது செய்தருளாமல் அவ்வருகே எழுந்தருளினார் என்றும்,
ஶ்ரீபாஷ்யகாரர் காலத்திலே கோஷ்டியிலே ஒரு வைஷ்ணவர் வந்து நின்று திருமந்த்ரத்தை உச்சரிக்க,
வடுகநம்பி எழுந்திருந்து குருபரம்பரா பூர்வகமில்லாத படியாலே இது நாவகாரியம் என்று அருளிச்செய்து
அவ்வருகே எழுந்தருளினார் என்றும் இரண்டு வ்ருத்தாந்தமும் “நாவகாரியம் சொல்லிலாதவர்” என்கிற பாட்டில் வ்யாக்யாநத்திலே காணலாம்.

திருமாலையாண்டான் அருளிச்செய்யும்படி – நாம் பகவத்விஷயம் சொல்லுகிறோமென்றால் இஸ்ஸம்ஸாரத்தில் ஆளில்லை;
அதெங்ஙனே என்னில், ஒரு பாக்கைப் புதைத்து அதுருவாந்தனையும் செல்லத் தலையாலே எருச்சுமந்து ரக்ஷித்து
அதினருகே கூறைகட்டிப் பதினாறாண்டுகாலம் காத்துக் கிடந்தால் கடவழி ஒரு கொட்டைப் பாக்காய்த்துக் கிடைப்பது;
அதுபோலன்றிக்கே இழக்கிறது ஹேயமான ஸம்ஸாரத்தை, பெறுகிறது விலக்ஷணமான பரமபதத்தை,
இதுக்குடலாக ஒரு நல்வார்த்தை யருளிச் செய்த ஆசார்யன் திருவடிகளிலே ஒருகாலாகிலும் க்ருதஜ்ஞராகாத
ஸம்ஸாரிகளுக்கு நாம் எத்தைச் சொல்லுவது என்று வெறுத்தார் என்று வார்த்தாமாலையிலே ப்ரஸித்தம்.

“கோக்நேசைவ ஸுராபே ச சோரே பக்நவ்ரதே ததா| நிஷ்க்ருதிர் விஹிதா ஸத்பி: க்ருதக்நே நாஸ்தி நிஷ்க்ருதி:”
என்கிறவிடத்தில் க்ஷுத்ரமான ப்ராக்ருத த்ரவ்யோபகார விஸ்ம்ருதியை அகப்பட, நிஷ்க்ருதியில்லாத
பாபமென்றால் அப்ராக்ருதமாய், நிரதிஶய வைலக்ஷண்யத்தை உடைத்தான ஆத்ம வஸ்துவை அநாதி காலம் தொடங்கி,
“அஸந்நேவ” என்கிறபடியே அஸத் கல்பமாய்க் கிடக்க, ஜ்ஞாநப்ரதாநத்தாலே அத்தை “ஸந்தமேநம்” என்னும்போது
உண்டாக்கின ஆசார்யன் திறத்தில் க்ருதக்நராகை பாபங்களுக்கெல்லாம் தலையான பாபமென்னுமிடம் கிம்புநர்ந்யாய ஸித்தமிறே.

தண்ணீரை ஒரு பாத்ரத்திலே எடுத்துச் தேத்தாம் விரையையிட்டுத் தேற்றினாலும் மண்ணானது கீழ் படிந்து
தெளிந்த நீரானது மேலே நிற்குமாப்போலே அஜ்ஞாநப்ரதமான ஶரீரத்திலே இருக்கிற ஆத்மாவை
ஆசார்யனாகிற மஹோபகாரகன் திருமந்த்ரமாகிற தேத்தாம் விரையாலே தேற்ற, அஜ்ஞாநம் மடிந்து, ஜ்ஞாநம் ப்ரகாஶிக்கும்;
தெளிந்த ஜலத்தை பாத்ராந்தரத்திலே சேர்க்குந்தனையும் கைப்பட்ட போதெல்லாம் கலங்குமாப்போலே,
பிறந்த ஜ்ஞாநத்தைக் கலக்குகிற ப்ராக்ருத ஶரீரத்தை விட்டுப்போய், அப்ராக்ருத ஶரீரத்திலே புகுந்தனையும்
கலங்காமல் நோக்கும் தன்னுடைய ஸதாசார்யன், தத்துல்யர்கள் கண்வட்டத்திலே வர்த்திக்கை ஸ்வரூபம் என்று
பூர்வாசார்யர்கள் அருளிச் செய்வார்கள். (கதகஷோத இத்யாதி).

ஆளவந்தார் திருவநந்தபுரத்துக் கெழுந்தருளுகிற போது தமக்கு அந்தரங்க ஶிஷ்யரான தெய்வாரி யாண்டானை
‘பெருமாளுக்குத் திருமாலையும் கட்டி ஸமர்ப்பித்து மடத்துக்கு காவலாக இரும்’ என்று கோயிலிலே வைத்து எழுந்தருள,
ஆண்டானுக்கு திருமேனியும் ஶோஷித்து, தீர்த்த ப்ரஸாதங்களும் இழியாமையிருக்கையாலே மிகவும் தளர,
பெருமாள் அவரைப் பார்த்து ‘உனக்கிப்படி ஆவானென்’ என்று திருவுள்ளம் பற்றி யருள,
‘தேவரீருடைய கைங்கர்யமும் ஸேவையும் உண்டேயாகிலும் ஆசார்ய விஶ்லேஷத்தாலே இளைத்தேன்’ என்று
அவரும் விண்ணப்பம் செய்ய, ‘ஆனால் நீர் ஆளவந்தார் பக்கல் போம்’ என்று பெருமாள் திருவுள்ளமாயருள,
அவரும் அங்கே எழுந்தருள, ஆளவந்தாரும் திருவநந்தபுரத்தை ஸேவித்து அரைக்காதவழி மீண்டு,
கரைமனையாற்றங்கரையிலே விட்டெழுந்தருளியிருந்தார். ஆண்டானும் அங்கே சென்று ஆளவந்தாரைக் கண்டு
ஸேவித்துத் தம்முடைய க்லேஶம் தீர்ந்தவாறே மிகவும் ஹ்ருஷ்டராயிருக்க;
அவ்வளவிலே ஆளவந்தாரும் ‘திருவனந்தபுரம் திருச்சோலைகள் தோன்றுகிறது, ஶ்ரீ வைஷ்ணவர்களையும்
கூட்டிக்கொண்டு போய் ஸேவித்துவாரும்’ என்று திருவுள்ளம் பற்றியருள;
‘அது உம்முடைய திருவனந்தபுரம், என்னுடைய திருவனந்தபுரம் எதிரே வந்தது’ என்று ஆண்டான் விண்ணப்பம் செய்ய,
‘இது ஒரு அதிகாரம் இருந்தபடியென்! இந்நினைவு ஒருவர்க்கும் பிறக்கை அரிது’ என்று
ஆளவந்தாரும் ஆண்டானளவிலே மிகவும் திருவுள்ளமுகந்தருளினார் என்று அருளிச் செய்வார்கள்.

பின்பழகிய பெருமாள் ஜீயர் ஒருகாலம் திருமேனி பாங்கின்றியிலே கண்வளர்ந்தருளுகிற போது
தமக்கு அந்தரங்கரான ஶ்ரீவைஷ்ணவர்களை அழைத்து
‘அடியேன் இப்போது திருவடிச்சாராமல் ஆலஸ்யமும் பொறுத்து இன்னமும் இங்கே சிறிதுநாள் இருக்கும்படி
“ஏழையேதலன்”, “ஆழியெழச்சங்கும்” பெருமாள் திருவடிகளிலே விண்ணப்பம்செய்து ப்ரபத்தி பண்ணுங்கோள்’ என்ன,
அவர்கள் அப்படியே செய்து, ஜீயருக்குப் பண்டுபோலே திருமேனி பாங்காயிற்று.
இத்தை ஶ்ரீவைஷ்ணவர்கள் இவருடைய ஆசார்யரான நம்பிள்ளை ஶ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு
‘ஜ்ஞாநவ்ருத்தருமாய் வயோவ்ருத்தருமான ஜீயர் இப்படிச் செயதார், இது இவர்ஸ்வரூபத்துக்குச் சேருமோ?’ என்று
விண்ணப்பம்செய்ய, பிள்ளையும் ‘அவருடைய அபிப்ராயம் அறிகிறிலோம்; ஸகல வேத ஶாஸ்த்ரங்களும் போவது,

பிள்ளை எங்களாழ்வானைச் சென்று இப்படி இவர் நினைவைக் கேளுங்கோள்’ என்று கேட்க,
அவரும் ஶ்ரீரங்கஶ்ரீயில் ஸங்கம் போலே காணும் என்று இருள் தருமா ஞாலமான ஸம்ஸாரத்திலே
“நாபுக்தம் க்ஷீயதே கர்ம கல்ப கோடிஶதைரபி” என்றும்,
“யத் ப்ரஹ்ம கல்ப நியுதாநுபவேப்ய நாஶ்யம்” என்றும் சொல்லுகிறபடியே என்ன,
பிள்ளையும் அத்தைக்கேட்டருளி, ‘திருநாராயணபுரத்தரையரைச் சென்று கேளுங்கோள்’ என்ன,
அவரும் ‘தொடங்கின கைங்கர்யங்கள் தலைக்கட்டாமையாலே காணும்’ என்ன, பிள்ளையும் அத்தைக்கேட்டு,
‘ஆகிறது, அம்மங்கியம்மாளைக் கேளுங்கோள்’ என்ன,
அவரும், ‘பிள்ளை கோஷ்டியிலே இருந்து அவர் அருளிச்செய்கிற பகவத் விஷயத்தைக் கேட்கிறவர்களுக்கு
ஒரு தேஶ விஶேஷமும் ருசிக்குமோ?’ என்ன, மீளவும் பிள்ளை அத்தைக்கேட்டு, ‘அம்மங்கி பெரியமுதலியாரைக் கேளுங்கோள்’ என்ன,
“பெருமாள் சிவந்த திருமுக மண்டலமும் கஸ்தூரி திருநாமமும் பரமபதத்திலே கண்டேனில்லையாகில்
மூலையடியே முடித்துக்கொண்டு மீண்டுவருவன்’ என்றன்றோ பட்டர் அருளிச்செய்தது,
அப்படியே இவரும் பெருமாள் சிவந்த திருமுக மண்டலத்தையும் விட்டுப் போகமாட்டராக வேணும்” என்றார்.

பிள்ளை இவை எல்லாத்தையும் கேட்டருளி ஜீயர் திருமுக மண்டலத்தைப் பார்த்து சிரித்து,
‘இவை உம்முடைய நினைவுக்கு ஒக்குமோ?’ என்ன, ‘இவை இத்தனையுமன்று’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்தார்.
‘ஆனால் உம்முடைய அபிப்பிராயத்தைச் சொல்லும்’ என்ன, பிள்ளை ‘தேவர் ஸர்வஜ்ஞராகையாலே அறிந்தருளாததில்லை;
ஆனாலும் அடியேனைக்கொண்டு வெளியிட்டருளத் திருவுள்ளமாகில் விண்ணப்பம் செய்கிறேன்.
தேவரீர் மஞ்சன சாலையிலே எழுந்தருளித் திருமஞ்சனம் செய்தருளித் தூய்தாகத் திருவொற்றெலியல் சாற்றி யருளி
உலாவி யருளும் போது குருவேர்ப்பரும்பின திருமுக மண்டலத்தில் சேவையும் சுழற்றிப் பரிமாறுகிற கைங்கர்யத்தையும் விட்டு
அடியேனுக்குப் பரமபதத்துக்குப் போக இச்சையாயிருந்ததில்லை’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்தார்.

இத்தைக் கேட்டருளிப் பிள்ளையும் முதலிகளும் ‘இந்த விபூதியிலும் இவ்வுடம்போடே ஒருவர்க்கு இவ்வைஶ்வர்யம் கூடுவதே!’
என்று மிகவும் திருவுள்ளம் உகந்தருளினார்கள் – என்று இந்த ஜீயருடைய ஆசார்ய ப்ரேமம் தமக்குண்டாக வேணுமென்று
நம்முடைய ஜீயர் தம்முடைய திருவுளத்தைக் குறித்து உபதேச ரத்தின மாலையிலே
“பின்பழகராம் பெருமாள் சீயர் பெருந்திவத்திலன்பதுவுமற்று மிக்கவாசையினால் நம்பிள்ளைக்கான
அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே ஊனமற எப்பொழுதுமோர்” என்றருளிச் செய்தருளினார்.

பெரிய நம்பியும் திருக்கோட்டியூர் நம்பியம் திருமாலையாண்டானும் கூடிச் சந்த்ர புஷ்கரிணிக் கரையிலே
திருப்புன்னைக் கீழெழுந்தருளியிருந்து தங்கள் ஆசார்யரான ஆளவந்தார் எழுந்தருளியிருக்கும் படியையும்,
அவர் அருளிச் செய்தருளும் நல் வார்த்தைகளையும் நினைத்து அநுபவித்துக்கொண்டு மிகவும் ஹ்ருஷ்டராய்,
ஆனந்த மக்நராய்க் கொண்டு எழுந்தருளியிருக்கிற அளவிலே திருவரங்கச்செல்வர் பலி ப்ரஸாதிப்பதாக எழுந்தருளிப் புறப்பட,
இவர்களுடைய ஸமாதி பங்கம் பிறந்து எழுந்துருந்து தண்டனிட வேண்டுகையாலே
‘இந்தக் கூட்டம் கலக்கியார் வந்தார்; இற்றைக்கு மேற்பட ஶ்ரீபலியெம்பெருமான் எழுந்தருளாத கோயிலிலே
இருக்கக்கடவோம்’ என்று ப்ரதிஜ்ஞை பண்ணிக்கொண்டார்கள் என்று வார்த்தா மாலையிலே உண்டு.

பட்டர் திருத்தின வேதாந்தியான நஞ்சீயரை அநந்தாழ்வான் மேல்நாட்டிலே சென்று கண்டு
‘ஆசார்ய கைங்கர்யத்துக்கு விரோதியான ஸந்யாஸி வேஷத்தை தரித்துத் தப்பச் செய்தீர்;
வேர்த்தபோது குளித்து, பசித்தபோது புசித்து, பட்டர் திருவடிகளே ஶரணம் என்று இருந்தால்
உம்மைப் பரமபதத்தில் நின்றும் தள்ளிவிடப் போகிறார்களோ?
இனிக் கைங்கர்யத்தையும் இழந்து, ஒரு மூலையிலே இருக்கவன்றோ உள்ளது” என்று அருளிச் செய்தார்.

முன்பு ஶைவனாயிருந்து பின்பு தொண்டனூர் நம்பி ஶ்ரீபாதத்திலே திருந்தினாரொரு ஶ்ரீவைஷ்ணவர் திருமலைக்கு எழுந்தருளி,
அநந்தாழ்வானை ஸேவித்து நின்றளவிலே அவர் திருப்பூமரங்களைப் பிடுங்குவது நடுவதாய்க் கொண்டு
திருவேங்கடமுடையானுக்குத் திருநந்தவநம் செய்கிறத்தைக் கண்டு
‘அந்ந்தாழ்வான்! வேங்கடத்தைப் பதியாக வாழ்கிற நித்யஸூரிகளை ஒருவிடத்திலே இருக்கவொட்டாமல்
கழுத்தை நெறிப்பது பிடுங்குவதாய்க்கொண்டு ஏதுக்கு நலக்குகிறீர்;
அடியேனுடைய ஆசார்யன் தொண்டனூர் நம்பி திருமாளிகையிலே நாள்தோறும் ஶ்ரீவைஷ்ணவர்கள்
அமுது செய்தருளின இலை மாற்றுகிற தொட்டிலே எப்பொழுதும் எடுத்துச் செப்பனிடுகிற கைங்கர்யம் அடியேனதாயிருக்கும்;
அதிலே நாலத்தொன்று தேவர்க்கு தருகிறேன். அந்த பாகவத கைங்கர்யத்திலே அந்வயித்து
*பயிலுஞ்சுடரொளி, *நெடுமாற்கடிமைப் படியே வாழலாம்.
திருப்பூமரங்களை பாதியாமல் எழுந்தருளமாட்டீரோ?’ என்று அருளிச்செய்தார்.
அநந்தரம் அங்குத்தானே அந்த ஶ்ரீவைஷ்ணவர்க்கு திருமேனி பாங்கின்றியிலேயாய் மிகவும் தளர்ந்து
அநந்தாழ்வானுடைய திருமடியிலே கண்வளர, அந்ந்தாழ்வானும் ஶ்ரீவைஷ்ணவரைப் பார்த்து
‘இப்போது உம்முடைய திருவுள்ளத்தில் ஓடுகிறதேது?’ என்று கேட்க, அவரும்
‘தொண்டனூர் நம்பி அடியேனுடைய பூர்வாவஸ்தையில் பொல்லாங்கையும் பாராமல் அங்கீகரித்தருளின
அவருடைய திருமாளிகையில் பின்னாடியை நினைத்துக் கொண்டு கிடக்கிறேன்’ என்று அருளிச்செய்த உடனே
திருநாட்டுக்கு எழுந்தருளினார். இத்தால் சொல்லித்தென் என்னில், அவருக்கும் திருவேங்கடமுடையான் ஸந்நிதி ஸித்தித்திருக்க,
அதில் ஒரு தாத்பர்யமற்று ஆசார்யன் தம்மை அங்கீகரித்த ஸ்தலமே உத்தேஶ்யமானபடி சொல்லிற்று.

—————

7 – நம்பிள்ளை வைபவம் 1

நம்பிள்ளையும் ஶ்ரீபாதத்தில் முதலிகளும் திருவெள்ளறை நாய்ச்சியாரை ஸேவித்து மீண்டு கோயிலுக்கு
எழுந்தருளாநிற்க, திருக்காவேரி இருகரையும் ஒத்துப்பெருக, ஓடம் கிடையாதபடியாலே தோணியிலே எழுந்தருள,
நட்டாற்றிலே சென்றவாறே அப்போது அஸ்தமித்து மழையும் இருட்டுமாய், அக்கரை இக்கரை முன்னடி தெரியாதே
திக்ப்ரமம் பிறந்து, தோணி அமிழத்தேட, ‘இந்த அவஸ்த்தைக்கு நாலிரண்டு பேர் தோணியை விட்டால் கரையில் ஏறலாம்;
ஒருவரும் விடாதிருக்கில் நம்பிள்ளை முதலாக எல்லாரும் அமிழ்ந்து, தட்டுப்பட்டுப்போகும்’ என்று
தோணி விடுகிறவன் கூப்பிட்டவளவில் ஒருவரும் அதற்கிசைந்து நட்டாறாகையாலே பயாதிஶயத்தாலே
தோணியை விட்டார்களில்லை. அவ்வளவில் ஒரு ஸாத்த்விகை தோணி விடுகிறவனைப் பார்த்து
‘நூறு பிராயம் புகுவாய்! உலகுகளுக்கெல்லாம் ஓருயிரான நம்பிள்ளையைப் பேணிக்கரையிலே விடு’ என்று சொல்லி,
அவனை ஆஶீர்வதித்துத் தோணியை விட்டு அந்தகாரத்தையும் பாராமல் ‘நம்பிள்ளை திருவடிகளே ஶரணம்’ என்று ஆற்றிலே விழுந்தார்.
அவ்வளவு கொண்டு தோணி அமிழாமல் மிதந்து அக்கரையிலே சேர்ந்தேறிற்று. அவ்வளவில் பிள்ளையும்
‘ஐயோ! ஒராத்மா தட்டுப்பட்டு போய்விட்டதே!’ என்று பலகாலும் அருளிச்செய்து வ்யாகுலப்பட்டருள,
அந்த ஸாத்த்விகையம்மை தோணியைவிட்டு நாலடி எழப்போனவளவிலே அங்கே ஒரு திடர் ஸந்திக்கத் தரித்து நின்று,
இராக்குரலாகையாலே அருளிச்செய்கிறத்தைக் கேட்டு ‘பிள்ளையே! தேவர் வ்யாகுலப்பட்டருள வேண்டாம்;
அடியேனிங்கே நிற்கிறேன்’ என்று குரல்காட்ட, பிள்ளையும் ‘திடர்கள் மரங்கள் ஸந்தித்தாகவேணும்’ என்று
திருவுள்ளம் பற்றியருளித் தோணிக்காரனைவிட்டு அவளைக் கரையிலே அழைப்பித்துக்கொள்ள,
அவளும் திருவடிகளிலே வந்து ஸேவித்து ஆசார்யனையொழிந்து வேறொரு ரக்ஷகாந்தரமறியாதவளாகையாலே
‘ஆற்றிலே அடியேன் ஒழுகிப்போகிற போது தேவர் அங்கே வந்து ஒருகரைமேடாய் வந்து அடியேனை ரக்ஷித்தருளிற்றே?’
என்று கேட்க, பிள்ளையும் ‘உன்னுடைய விஶ்வாஸம் இதுவான பின்பு அதுவும் அப்படியேயாகாதோ’ என்று
அருளிச் செய்தருளினார் என்று நம்முடைய ஜீயர் பலகாலும் அருளிச்செய்தருளுவர்.

வைஷ்ணவனாயிருப்பானொரு ராஜா ஒரு பெருந்திரள் வருகிறத்தைக் கண்டு
‘நம்பெருமாள் திருவோலக்கம் கலைந்ததோ, நம்பிள்ளை கோஷ்டி கலைந்ததோ’ என்று கேட்டான்.
இப்படி மஹா ஸம்ருத்தியான ஶ்ரீவைஷ்ணவஶ்ரீயோடே நம்பிள்ளை வாழ்ந்தருளுகிற காலத்திலே
ஶ்ரீபாதத்திலே உடையளாயிருப்பாளொரு அம்மையாருக்குத் திருமாளிகைக்கருகே ஒருகோல் துறை(தரை) உண்டாய்,
அதிலே குடியிருக்கும் ஸப்ரஹ்மசாரியாய் இருப்பாரொரு ஶ்ரீவைஷ்ணவர், ‘பிள்ளை திருமாளிகைக்கு நெருக்கமாயிருக்கிறது,
இந்த ஒருகோல் துறையையும் ஆசார்யனுக்குக் கொடுக்கவேணும்’ என்று அந்த அம்மையாருக்குப் பலகாலும் அருளிச்செய்ய,
அவளும் ‘கோயிலிலே ஒருகோல் துறை ஆர்க்குக் கிடைக்கும், நான் திருவடி சேருந்தனையும் கொடேன்’ என்ன,
ஶ்ரீவைஷ்ணவரும் அந்தச் செய்தியைப் பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய, பிள்ளையும்
‘உனக்கொரு ஶரீரத்துக்கு ஒர் சத்திடமன்றோ வேண்டுவது? முதலிகள் எழுந்தருளியிருக்க வென்றொரு
கோல் துறையையும் நமக்குத் தாரும்’ என்று திருவுள்ளம் பற்றி யருள,
அவளும் ‘அடியேன் அப்படிச் செய்கிறேன்; தேவரீர் பரமபதத்திலே ஒருகோல்துறை அடியேனுக்குத் தந்தருளவேணும்’ என்ன,
பிள்ளையும் ‘தந்தோம்’ என்று அருளிச் செய்ய, ‘அடியேன் ஸாது, அதிலே பெண் பெண்டாட்டி, தருகிறோம் என்று
அருளிச்செய்த வார்த்தையால் போராது, எழுதி எழுத்திட்டுத்தரவேணும்’ என்ன,
பிள்ளையும் ‘இவள் இப்படிக்கு கேட்பதே’ என்று மிகவும் திருவுள்ளமுகந்து,
‘இன்ன வருஷம் இன்ன மாஸம் இத்தனையாம் தேதி இந்த அம்மையாருக்குத் திருக்கலிக்கன்றி தாஸன்
பரமபதத்திலே ஒரு கோல்துறை கொடுத்தேன்; இத்தை ஶ்ரீவைகுண்டநாதன் க்ரயம் செலுத்திக் கொண்டு கொடுத்தருளவும்’
என்று ஶாஸநம் எழுதித் தம்முடைய திருவெழுத்தும் சாத்திக் கொடுத்தருளினார்.
பின்பு அந்த அம்மையார் திருமுகத்தையும் வாங்கிக்கொண்டு தீர்த்த ப்ரஸாதங்களையும் ப்ரஸாதப்பட்டு
அன்று மற்று நாளும் பிள்ளையை ஸேவித்துக்கொண்டு ஸுகமேயிருந்து, மூன்றாம் நாள் பரமபதத்துக்குப் போனாள்.
ஆகையால் உபயவிபூதியும் ஆசார்யனிட்ட வழக்காயிருக்குமென்று நம்முடைய ஜீயர் அருளிச்செய்தருளுவர்.

கூரத்தாழ்வானுடைய திருப்பேரனாரான நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் நம்பிள்ளையுடைய
ஜ்ஞானபக்தி வைராக்யங்களையும் பாகவத ஸம்ருத்தியையும், லோக பரிக்ரஹத்தையும், ஶிஷ்ய ஸம்பத்தியையும்
கண்டு பொறுக்க மாட்டாமல் ‘கடி கடி’ என்றுகொண்டு போருவராயிருப்பர்.
அக்காலத்திலே அந்த பட்டர் ராஜஸ்தாநத்துக்கு எழுந்தருளாநிற்க, வழியிலே பின்பழகிய பெருமாள் ஜீயரைக் கண்டு,
‘ஜீயா! நாம் ராஜகோஷ்டிக்கு போகிறோம்; கூடவாரும்’ என்று ஜீயரைக் கூட்டிக்கொண்டு ராஜஸ்தானத்துக்கேற எழுந்தருள,
ராஜாவும் பட்டரை எதிர்க்கொண்டு பஹுமாநம் பண்ணி ஆஸநத்திலே எழுந்தருளுவித்து ஸேவித்துக்கொண்டு
பெரிய திருவோலக்கமாயிருக்கிறவளவிலே, ராஜா, தான் பஹுஶ்ருதனாகையாலே வ்யுத்பந்நனாகையாலும்,
பட்டர் ஸர்வஜ்ஞர் என்கிறத்தை ஶோதிக்கவேணும் என்று விசாரித்து,
‘பட்டரே! “ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தஶரதாத்மஜம்” என்று பரத்வம் தோற்றாமல் வர்த்தக்கிற பெருமாள்,
ஜடாயு மஹாராஜருக்கு மோக்ஷம் கொடுத்தபடி எப்படி?’ என்று கேட்க,

பட்டர் அதற்கு உத்தரம் அருளிச்செய்யச் சிறிது விசாரிக்க வேண்டியிருக்க, அவ்வளவில் ராஜாவுக்கு வேறே பராக்காக,
அவ்வளவில் பட்டரும் ஜீயரைப் பார்த்து, ‘ஜீயா! திருக்கலிகன்றிதாஸர் பெரியவுடையாருக்குப் பெருமாள் மோக்ஷம்
கொடுத்தருளினத்தைப் எப்படி நிர்வஹிப்பர்?’ என்று கேட்க,
ஜீயரும் “ஸத்யேந லோகாந் ஜயதி தீநாந்தாநேந ராகவ:” என்று பிள்ளை நிர்வஹிப்பர் – என்ன,
பட்டரும் ‘ஆமோ’ என்று அத்தைத் திருவுள்ளத்திலே யோசித்து, ‘ஒக்கும்’ என்று எழுந்தருளியிருக்க,
ராஜாவும் அவ்வளவில் திரும்பி, ‘பட்டரே! நாம் கேட்டதற்கு உத்தரம் அருளிச்செய்தீரில்லை’ என்ன,
பட்டரும் ‘நீ பராக்கடித்திருக்க நாம் சொல்லாவதொரு அர்த்தமுண்டோ? அபிமுகனாய் புத்தி பண்ணிக்கேள்’ என்று
“ஸத்யேந லோகாந் ஜயதி தீநாந்தாநேந ராகவ: குரூந்ஶுஶ்ரூஷயா வீரோ தநுஷா யுதி ஶாத்ரவாந்” என்று
இந்த ஶ்லோகத்தை பட்டர் அருளிச்செய்ய, ராஜாவும் போரவித்தராய்,
‘பட்டரே நீர் ஸர்வஜ்ஞர் என்றது நான் அறிந்தேன்’ என்று ஶிர:கம்பம்பண்ணி மிகவும் ஶ்லாகித்து,
மஹாநர்க்கங்களான அநேகாபரணங்கள், உத்தமமான அநேக வஸ்த்ரங்கள், அநேக தநங்களெல்லாத்தையும்
கட்டிக் கொடுத்துத் தானும் தோற்று, பட்டர் திருவடிகளிலே விழுந்து, ‘நீர் திருமாளிகையிலேற எழுந்தருளும்’ என்று
ஸத்கரித்து விட, பட்டரும் ராஜா கொடுத்த த்ரவ்யங்களை வாரிக் கட்டுவித்துக்கொண்டு அங்கு நின்றும் புறப்பட்டு
ஜீயர் திருக்கையைப் பிடித்துக்கொண்டு, ‘ஜீயரே! என்னையும் இந்த தநங்களையும் நம்பிள்ளை திருவடிகளிலே
கொண்டு போய்க் காட்டிக்கொடும்’ என்று போர ஆர்த்தியோடே அருளிச்செய்ய,
ஜீயரும் பட்டர் அருளிச் செய்தபடியே நம்பிள்ளை கோஷ்டியிலே கொண்டுபோய்க் காட்டிக்கொடுக்க,

நம்பிள்ளையும் தம்முடைய பரமாசார்ய வம்ஶ்யரான பட்டர் எழுந்தருளுகையாலே மிகவும் ஆதரித்து,
‘ஐயரே! இது ஏது?’ என்று கேட்டருள, பட்டரும் பிள்ளை திருமுகமண்டலத்தைப் பார்த்து
‘தேவரீருடைய திவ்ய ஸூக்தியில் பதினாயிரம் கோடியில் ஒன்றுக்குப் பெற்ற தநமிதுவாகையாலே
அடியேனையும் இந்த த்ரவ்யங்களையும் அங்கீகரித்தருள வேணும்’ என்ன, ‘ஆகிறதென்? கூரத்தாழ்வானுடைய
திருப்பேரனாரான நீர் இப்படிச் செய்ய ப்ராப்தமன்று காணும்’ என்ன,
பட்டரும் ‘நித்ய ஸம்ஸாரியான ராஜா தேவரீருடைய திவ்யஸூக்தியிலே சிந்தின சொல்லுக்குத் தோற்றுக் கொடுத்த தநமிது;
ஆனபின்பு கூரத்தாழ்வானுடைய குலத்தில் பிறந்த அடியேன் அந்தக் குலப்ரபாவத்துக்குத் தகுதியாகும்
தேவருக்கு ஸமர்ப்பிக்கலாவதொன்றும் இல்லையேயாகிலும், அசலகத்தேயிருந்து இத்தனை நாள் தேவரை இழந்து கிடந்த
மாத்ரமன்றிக்கே தேவருடைய வைபவத்தைக் கண்டு “அஸூயாப்ரஸவபூ:” என்கிறபடியே
அஸூயை பண்ணித்திரிந்த இவ்வாத்மாவை தேவருக்கு ஸமர்ப்பிக்கையல்லது வேறு எனக்கொரு கைம்முதலில்லை.
ஆகையாலே அடியேனை அவஶ்யம் அங்கீகரித்தருள வேணும்’ என்று கண்ணும் கண்ணீருமாய்க் கொண்டு
பிள்ளை திருவடிகளிலே ஸேவிக்க, பிள்ளையும் பட்டரை வாரியெடுத்துக் கட்டிக் கொண்டு,
விஶேஷ கடாக்ஷம் பண்ணியருளி, தம்முடைய திருவுள்ளத்திலே தேங்கிக்கிடக்கிற அர்த்த விஶேஷங்களெல்லாத்தையும்
ஒன்றும், தப்பாமல் பட்டருக்கு ப்ரஸாதித்தருள, இவரும் க்ருதார்த்தராய், ஒரு க்ஷணமும் பிரியாமல்
பிள்ளை ஸந்ததியிலே ஸதாநுபவம் பண்ணி, ஸேவித்துக் கொண்டு மிகவும் ஹ்ருஷ்டராய் எழுந்தருளியிருந்தார்.

அக்காலத்திலே பிள்ளை ஓருரு திருவாய்மொழி நிர்வஹித்தருள பட்டர் பிள்ளையருளிச் செய்ததொன்றும் தப்பாமல் கேட்டு,
தரித்து, எழுதித் தலைகட்டினவாறே, தாமெழுதின க்ரந்தங்களை ஸந்நிதியிலே கொண்டு போய் வைக்க
‘இதேது?’ என்று கேட்டருள, ‘தேவரீர் இந்த உருத் திருவாய்மொழி நிர்வஹித்தருளின கட்டளை’ என்ன,
பிள்ளையும், ‘ஆமோ’ என்றுக் க்ரந்தங்களையும் அவிழ்த்துப் பார்க்க, நூறாயிரத்து இருபத்தைந்தாயிரம் க்ரந்தமாக எழுதி
மஹாபாரத ஸங்க்யையாயிருக்க, அத்தைக் கண்டு பிள்ளை பெருக்க வ்யாகுலப்பட்டு, பட்டரைப் பார்த்து,
‘இதுவென்? நம்முடைய அநுமதியின்றிக்கே நாட்டுக்கு பாட்டுரையாம்படி நீர் நினைத்தபடியே
திருவாய்மொழியை இப்படி வெளியிடுவானென்?’ என்ன, பட்டரும் ‘தேவரீர் அருளிச் செய்த திவ்யஸூக்தியை எழுதினதொழிய,
ஒரு கொம்பு சுழி ஏற எழுதினதுண்டாகில் பார்த்தருளும்’ என்ன, பிள்ளை பட்டரைப் பார்த்து,
‘திருவாய்மொழி நிமித்தமாக நாம் வாக்காலே சொன்னத்தை எழுதினீராகில், நம்முடைய நெஞ்சை எழுதப் போகிறீரோ?’
என்று வெறுத்தருளிச்செய்து, ‘உடையவர் காலத்திலே திருக்குருகைப் பிரான் பிள்ளான் திருவாய்மொழிக்கு
ஶ்ரீவிஷ்ணு புராண ப்ரக்ரியையாலே ஆறாயிர க்ரந்தமாக வ்யாக்யாநமிடுகைக்கு உடையவரை அநுமதி
பண்ணுவித்துக் கொள்ளுகைக்குட்பட்ட யத்நத்திற்கு ஒரு மட்டில்லை. ஆனபின்பு நம்முடைய காலத்திலே
நம்மையும் கேளாமல் ஸபாதலக்ஷ க்ரந்தமாக இப்படி நெடுக எழுதினால்
ஒரு ஶிஷ்யாசார்ய க்ரமமற்று அஸம்பரதாயமுமாய்ப் போங்காணும்’ என்றருளிச்செய்து,
பட்டர் திருக்கையிலும் அவர் எழுதின க்ரந்தத்தை வாங்கிக்கொண்டு நீரைச் சொரிந்து கரையானுக்குக் கொடுக்க,
அவை அன்றே ம்ருத்தாய்ப் போய்த்து.

அந்ந்தரம், பிள்ளை தமக்கு ப்ரியஶிஷ்யராய், தம்முடைய பக்கலிலே ஸகலார்த்தங்களையும் நன்றாகக்
கற்றிருக்கிற பெரியவாச்சான்பிள்ளையை நியமிக்க, அவரும் திருவாய்மொழிக்கு ஶ்ரீராமாயண ஸங்க்யையிலே
இருபத்து நாலாயிரமாக ஒரு வ்யாக்யாநம் எழுதினார்.

அதுக்கநந்தரம் பிள்ளைக்கு அந்தரங்கமான
வடக்குத் திருவீதிப் பிள்ளை ஓருரு திருவாய்மொழி நிர்வஹிக்கிற கட்டளையை பகல்கேட்டு தரித்து,
ராத்ரியில் எழுதித் தலைக்கட்டினவாறே அத்தைப் பிள்ளை ஸந்நிதியிலே கொண்டுபோய் வைக்க,
நம்பிள்ளை ‘இதேது?’ என்று கேட்டருள, அவரும் ‘தேவரீர் இந்த உரு திருவாய்மொழி நிர்வஹித்த கட்டளை’ என்று
விண்ணப்பம் செய்ய, பிள்ளையும் ஸ்ரீகோஶங்களை அவிழ்த்து பார்த்தருள,
அதிஸங்கோசமுமின்றிக்கே, அதிவிஸ்தரமுமின்றிக்கே ஆனைக்கோலம் செய்து புறப்பட்டாப்போலே மிகவும் அழகாய்,
ஶ்ருதப்ரகாஶிகை கட்டளையிலே முப்பத்தாறாயிர க்ரந்தமாயிருக்கையாலே நம்பிள்ளை அத்தைக் கண்டு மிகவும் உகந்தருளி,
வடக்கு திருவீதிப் பிள்ளையைப் பார்த்தருளி ‘நன்றாக எழுதினீர்;
ஆனாலும் நம்முடைய அநுமதியின்றிக்கே எழுதினீராகையாலே க்ரந்தங்களைத்தாரும்’ என்று
அவர் திருக்கையில் நின்றும் வாங்கிவைத்துக் கொண்டு பின்பு தமக்கு அபிமதஶிஷ்யரான
ஶ்ரீமாதவப்பெருமாள் என்று திருநாமத்தையுமுடையரான ஈயுண்ணிச் சிறியாழ்வார் பிள்ளைக்கு
ஈடு முப்பத்தாறாயிரமும் கொடுத்தருளினார் என்னும், இவ்வ்ருத்தாந்தம் உபதேசரத்தின மாலையிலே
“சீரார் வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுதேரார் தமிழ் வேதத்தீடுதனைத் தாருமெனவாங்கி
முன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்தாம் கொடுத்தார் பின்னதனைத்தான்” என்று
நம்முடைய ஜீயர்தாமே அருளிச் செய்தருளினார். ஆகையாலே இன்னமும் திருவாய்மொழிக்குண்டான
வ்யாக்யாந கட்டளைகள் எல்லாம் உபதேசரத்தினமாலையிலே தெளியக் காணலாம்.

ஆக இப்படி நம்பிள்ளை அவதரித்து நெடுங்காலம் ஜகத்தை வாழ்வித்தருளின அநந்தரம்
திருநாட்டுக்குக்கெழுந்தருளினார். அவர் திருவடிகளிலே ஆஶ்ரயித்த முதலிகளெல்லாரும் திருமுடி விளக்கு வித்துக்கொள்ள,
நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டருக்கு நேரே ப்ராதாவாய் இருப்பாரொருவர் பட்டரைப் பார்த்து
‘திருக்கலிகன்றிதாஸர் பரம்பதப்ராப்தி பண்ணினதுக்கு எங்கள் கூரகுலத்திலே பிறந்த நீர்
தலை ஷௌரம் பண்ணிக்கொண்டது கூரகுலத்துக்கு இழுக்கன்றோ?’ என்ன,
பட்டரும் அவரைப் பார்த்து ‘அப்படியாம்; உங்கள் கூரகுலத்துக்கு இழுக்காகப் பிறந்தேனே’ என்ன,
அவரும் பட்டரைப் பார்த்து, ‘ஏன் வ்யதிரேகம் சொல்லுகிறீர்?’ என்ன,
பட்டரும் ‘நம்பிள்ளை திருநாட்டுக்கு எழுந்தருளினால் அவர் திருவடிகளிலே ஆஶ்ரயித்த நான்
கூரகுலத்தில் பிறந்தேனாகில் ஆழ்வானுடைய ஶேஷத்வத்துக்குத் தகுதியாக தாஸக்ருத்யமான
மோவாயும் முன்கையும் வபநம் பண்ணுவித்துக்கொள்ளவேண்டியிருக்க, அத்தைச் செய்யாதே
ஶிஷ்யபுத்ரர்களுடைய க்ருத்யமான தலைமாத்ரம் ஷௌரம் செய்வித்துக் கொண்டது உங்களுடைய
கூரக்குலத்துக்கு இழுக்கன்றோ பின்னை?’ என்ன, அந்த ப்ராதாவானவர் பட்டரைப் பார்த்து
‘உம்முடைய திருக்கலிகன்றி தாஸர் போய்விட்டாரே! இனி உமக்கு அவர் பக்கல் எத்தனை நாள்
உபகார ஸ்ம்ருதி நடக்கும்?’ என்ன, பட்டரும் ‘நம்பிள்ளை திருவடிகளில் உபகார ஸ்ம்ருதி அடியேனுக்கு
யாவதாத்மபாவி நடக்கும்’ என்ன, அந்த ப்ராதாவானவர் பட்டர் அருளிச் செய்கிறத்தைக் கேட்டு
‘‘உபகார ஸ்ம்ருதி ஆசார்ய விஷயத்தில் யாவதாத்மபாவியோ? இதொரு அர்த்த விஶேஷமிருந்த படி என்!’ என்று,
பெரிய வித்வானாகையாலும், குலப்ரபாவத்தாலும் தெளிந்து, போரவித்தராய், பட்டர் திருவடிகளிலே திருத்தி,
தமக்கு வேண்டும் அர்த்த விஶேஷங்களெல்லாம் கேட்டுக்கொண்டு ஜ்ஞாநாதிகராய் விட்டார் என்று
நம்முடைய ஜீயர் அருளிச்செய்தருளுவர்.

சிலர் ஶ்ரீபாஷ்யத்தை எப்படியிருக்குமென்று சிலரைக் கேட்க, அவர்கள் சொன்னபடி –
நடுவில் திருவீதியிலே அந்தியம் போதாக, பழுத்த வேஷ்டியும் உத்தரீயமுமாக தரித்துக்கொண்டு
கூரத்தாழ்வான் என்றொரு மூர்த்தீகரித்து ஸஞ்சரியாநிற்கும்;
அங்கே சென்றால் ஶ்ரீபாஷ்யத்தைக் கண்ணாலே காணலாம் என்றார்கள்.
சிலர் பகவத் விஷயம் எங்கே கேட்கலாம் என்று சிலரைக் கேட்க, அவர்கள் சொன்னபடி –
நடுவில் திருவீதியிலே பட்டர் என்பதொரு தேன்மா பழுத்து நிற்கிறது. அங்கே சென்று நன்றாகப் பார்த்து,
கல்லிட்டெறியாதே, ஏறித்துகையாதே, அடியிலே இருக்க மடியிலே விழும் என்றார்கள்.

பட்டருக்கு அதிபால்யமாயிருக்கச் செய்தே, ‘ஸர்வஜ்ஞன் வந்தான்’ என்று ஒருவன் அநேக ஸம்ப்ரமத்தோடே
விருதூதிவர, பட்டர் அவனைப் பார்த்து ‘நீ ஸர்வஜ்ஞனோ?’ என்ன, அவனும் ‘நாம் ஸர்வஜ்ஞனாம்’ என்ன,
பட்டர் இரண்டு திருக்கையாலும் கிடந்த புழுதியை அள்ளி அவனைப் பார்த்து ‘இது எத்தனை என்று சொல்’ என்ன,
அவன் அதுக்கு ஒன்றும் சொல்லமாட்டாமல் லஜ்ஜித்து வாயடைத்து, கவிழ்தலையிட்டு நிற்க,
பட்டர் ‘உன்னுடைய ஸர்வஜ்ஞனென்கிற விருதையும் பொகடு’ என்ன,
அவனும் அவை எல்லாத்தையும் பொகட்டு ‘உமக்கு தோற்றேன்’ என்ன,
பட்டர் அவனைப் பார்த்து ‘கெடுவாய்! இது ஒரு கைப்புழுதி என்று சொல்லி ஸர்வஜ்ஞன் என்று
விருதூதித் திரியமாட்டாதே அஜ்ஞனாய் விட்டாயே! இனிப்போ’ என்று அவனை பரிபவித்துத் தள்ளிவிட்டார்.

பாஷண்டி வித்வான்கள் அநேக பேருங்கூடி ராஜாஸ்தானத்திலே சென்று ராஜாவுடனே தப்த முத்ரா தாரணத்துக்கு
ப்ரமாணமில்லை என்று ப்ரதிஜ்ஞைபண்ண, ராஜாவும் மஹா ஸமர்த்தனாயிருக்கையாலே
இத்தை நன்றாக அறியவேணும் என்று பட்டரைப் பார்த்து ‘பட்டரே! தப்தமுத்ராதாரணத்துக்கு ப்ரமாணமுண்டோ?’ என்ன,
அவரும் ‘நன்றாக உண்டு’ என்ன, ‘உண்டாகில் காட்டிக் காணீர்’ என்ன,
பட்டர் ‘என் தோளைப்பாரீர்’ என்று திருக்தோளும் திருவிலச்சினைகளையும் ராஜாவுக்கு காட்ட,
ராஜாவும் ‘அப்படியே ஆம்; ஸர்வஜ்ஞரான பட்டர் செய்ததே ப்ரமாணம்’ என்று தானும் விஶ்வஸித்து,
ப்ரமாணமில்லை என்ற பாஷண்டிகளையும் வாயடைப்பித்துத் தள்ளி ஓட்டிவிட்டார் என்று
இவ்வ்ருத்தாந்தங்களெல்லாம் பெரியோர்கள் அருளிச்செய்வார்கள்.

ஆகையாலே
‘மட்டவிழும் பொழில் கூரத்தில் வந்துதித்திவ்வையமெல்லாம்
எட்டுமிரண்டும் அறிவித்த எம்பெருமானிலங்கு
சிட்டர்தொழும் தென்னரங்கேசர் தம்கையில் ஆழியை
நானெட்டனநின்ற மொழி ஏழுபாருமெழுதியதே” என்று இந்த திருநாமமும்,
ஶ்ருதிவாக்யமும்
“விதாநதோ ததாந: ஸ்வயமேநாமபி தப்தசக்ரமுத்ராம், புஜயேவமமைவ பூஸுராணாம்
பகவல் லாஞ்சந்தாரணே ப்ரமாணம்” என்று பட்டர் தாமருளிச் செய்த இந்த ஶ்லோகமும் லோகத்திலே ப்ரஸித்தமாய்த்து.

இவ் வ்ருத்தாந்தங்களால் சொல்லிற்று ஏதென்னில்
இவர்கள் எல்லாதனைலும் பெரியோர்களேயாகிலும் ஒருவனுடைய அபிமாநத்திலே ஒதுங்குகையாலே
ஸர்வர்க்கும் ஆசார்யாபிமாநமே உத்தாரகம் என்னும் அர்த்தம் சொல்லித்தாயிற்று.

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பகவத் சப்தார்த்தம் —

January 12, 2021

பகவந் –
“மைத்ரேய! பகவச் சப்தஸ் ஸர்வகாரண காரணே! ஸம்பார்த்தேதி ததா பர்த்தா பகாரோர்த்த்வயாந்வித:
நேதாகமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததாமுநே. ஐச்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய யசஸச்ஸ்ரீய:
ஜ்ஞாநவைராக்ய யோச்சைவ, ஷண்ணாம் பக இதீரணா. வஸந்தி தத்ர பூதாநி பூதாத்மந்யகிலாத்மநி,
ஸச பூதேஷ்வசேஷேஷு வகாரார்த்தஸ் ததோவ்யய:ஜ்ஞாந சக்தி பலைச்வர்ய வீர்ய தேஜாம்ஸ்ய சேஷத:
பகவத்சப்தவாச்யாநி விநா ஹேயைர் குணாதிபி: ஏவமேஷ மஹாசப்தோ மைத்ரேய! பகவாநிதி,
பரப்ரஹ்ம பூதஸ்ய வாஸுதேவஸ்ய நாந்யக: தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா ஸமந்வித:
சப்தோயம் நோபசாரேண த்வந்யத்ர ஹ்யுபசாரத:” (விஷ்ணுபுராணம் 6-5-72)

[ மைத்ரேயரே! ‘பகவான்’ என்னும் சப்தம் ஸர்வ காரணங்களுக்கும் காரண பூதனான ஸர்வேச்வரன்
விஷயத்தில் சொல்லப் பெறுகிறது. ‘(ப்ரக்ருதியை) கார்யதசை அடையச்செய்பவன்,
‘ஸ்வாமி’ என்னும் இரண்டு அர்த்தங்களுடன் கூடியது பகாரம்; முனிவரே!
அவ்வாறே ‘ரக்ஷிப்பவன், ஸம்ஹரிப்பவன், ஸ்ருஷ்டிப்பவன்’ என்பது ககாரத்தின் அர்த்தம்.
ஸம்பூர்ணமான ஐச்வர்யம், வீர்யம், யசஸ், ஜ்ஞாநம், வைராக்யம் என்னும் இந்த ஆறு குணங்களுக்கும்
‘பக’ என்னும் பதம் வாசகமாயிருக்கிறது.
பூதங்களை சரீரமாகக்கொண்டவனும், எல்லாவற்றுக்கும் ஆத்மாவாயிருப்பவனுமான அவனிடத்தில் பூதங்கள் வஸிக்கின்றன.
அவனும் அகில பூதங்களிலும் வஸிக்கின்றான். ஆகையால் அழிவற்றவனான பகவான் வகராத்துக்கு அர்த்தமாகிறான்.
கீழானவையான முக்குணங்கள் முதலியவற்றுடன் சேராத
‘ஜ்ஞாநம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் எல்லா குணங்களும்
‘பகவாந்’ என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன. மைத்ரேயரே! இம்மாதிரியாக பகவான் என்னும்
இந்த மஹாசப்தம் பரப்ரஹ்மமான வாஸுதேவனுக்கே உரித்தானது. வேறொருவரையும் குறிக்காது.
‘பூஜிக்கத்தக்க பொருளைக் குறிப்பது’ என்னும் பரிபாஷையுடன் கூடிய இந்த சப்தம் அவன் விஷயத்தில்
ஔபசாரிகமாகச் சொல்லப் பெறுவதில்லை. மற்ற விஷயங்களில் ஔபசாரிகமாக அமுக்யமாகச் சொல்லப் பெறுகிறது.]

“பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளியுரைத்த, கணக்கறு நலத்தனன்
அந்தமிலாதி யம்பகவன்” (திருவாய்மொழி 1-3-5)
{(அந்தமிலாதி) ஆப்ததமன். எல்லார்க்கும் உத்பத்தி விநாசங்களாலே யிறே ஜ்ஞாந ஸங்கோசம் பிறப்பது;
இவனுக்கு அவையில்லாமையாலே அகர்மவச்யன் என்கிறது.
(அம்பகவன்) — ஜ்ஞாநாதிகளால் அல்பம் உத்கர்ஷம் உடையவன் பக்கலிலே பகவச்சப்தம் வர்த்தியாநின்றதிறே ;
“அந்யத்ரஹ்யுபசாரத:” பகவச்சப்தம் முக்யமாக வசிப்பது இவன் பக்கலிலே, அல்லாதார் பக்கல் ஔபசாரிகம்.
(அம்பகவன் வணக்குடைத்தவ நெறிவழி நின்று) — “நமஸ்யந்தச்சமாம் பக்த்யா” என்று பக்தி சரீரத்திலே நின்று
அருளிச் செய்தானிறே. அங்கநா பரிஷ்வங்கம் போலே போகரூப மாயிறே இதுதான் இருப்பது— ஈடு”}

“இப்படி ஸ்வாதீந ஸர்வ ஸத்தாதிகளை உடையவனாய் இருக்கிற ஈச்வரனுடைய ஸ்வரூபம்
ஸத்யத்வாதிகளாகிற ஸ்வரூப நிரூபக தர்மங்களாலே ஸத்யமாய் ஜ்ஞாநமாய் அநந்தமாய் ஆநந்தமாய் அமலமாய் இருக்கும்.
இவ்வர்த்தத்தை ‘நந்தாவிளக்கே யளத்தற்கரியாய்'(பெரிய திருமொழி 3-8-1) என்றும்
‘உணர் முழு நலம்'(திருவாய்மொழி 1-1-2) என்றும்,
‘சூழ்ந்ததனிற் பெரிய சுடர் ஞானவின்பம்’ (திருவாய்மொழி 10-10-10) என்றும்,
‘அமலன்’ ( அமலனாதிப் பிரான். 1) என்றும்இத்யாதிகளாலே ஆழ்வார்கள் அநுஸந்தித்தார்கள்.
மற்றுள்ள குணங்களும் திவ்ய மங்கள விக்ரஹாதிகளும் எல்லாம் ஈச்வரனுக்கு நிரூபித ஸ்வரூப விசேஷணங்களாயிருக்கும்.
இக்குணங்களில் ஜ்ஞாநபல ஐச்வர்ய வீர்யசக்தி தேஜஸ்ஸுக்கள் என்று ஆறு குணங்கள் பரத்வோபயுக்தங்களாயிருக்கும்.
ஸௌசீல்ய வாத்ஸல்யாதிகள் ஸௌலப்யோப யுக்தங்களா யிருக்கும்.
இக்குணங்கள் எல்லாம் ஸர்வ காலத்திலும் ஸ்வரூபாச்ரிதங்களாயிருக்கும்.
பரவ்யூஹாதி விபாகங்களில் குணநியமம் சொல்லுகிறதெல்லாம் அவ்வோரூபங்களை அநுஸந் திப்பார்க்கு
ஸர்வேச்வரன் ஆவிஷ்கரிக்கும் குணவிசேஷங்கள் சொல்லுகைக்காக அத்தனை, ஔபநிஷத வித்யா விசேஷங்கள் தோறும்
அநுஸந்தேய குணவிசேஷங்கள் நியதமானாற்போல பகவச் சாஸ்த்ரோக்தமான ரூப விசேஷாநு ஸந்தாநத்துக்கும்
குண விசேஷங்கள் நியதங்கள்.
அவ்விடத்தில் பரரூபத்தில் ஜ்ஞாநாதிகுணங்கள் ஆறும் வேத்யங்கள்” [ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம். தத்வத்ரயசிந்த நாதிகாரம்]

“வ்யூஹங்கள் நாலென்றும் மூன்றென்றும் சாஸ்த்ரங்கள் சொல்லும். நாலு வ்யூஹம் உண்டாயிருக்க
வ்யூஹ வாஸுதேவ ரூபத்திற்கு பர ரூபத்திற்காட்டில் அநுஸந்தாய குணபேதம் இல்லாமையாலே த்ரிவ்யூஹம் என்கிறது.
இப்பக்ஷத்தை ‘குணைஷ்ஷட்பிஸ்த்வேதை: ப்ரதம தரமூர்த்தி ஸ்தவ பபௌ,
ததஸ் திஸ்ரஸ்தேஷாம் த்ரியுக யுகளைர்ஹி த்ரிப்ரபு:’ (வரதராஜஸ்தவம் -16) என்கிற ச்லோகத்திலே ஸங்க்ரஹித்தார்கள்.
இப்பரவ்யூஹங்களில் குணக்ரியாவிபாகங்கள்
‘ஷாட்குண்யாத் வாஸுதேவ; பர இதி ஸபவாந் முக்தபோக்யோ பலாட்யாத் போதாத் ஸங்கர் ஷணஸ்த்வம் ஹரஸி
விதநுஷே சாஸ்த்ர மைச்வர்யவீர்யாத் ப்ரத்யும்நஸ் ஸர்க்கதர்மௌ நயஸிச பகவந்! சக்தி தேஜோ நிருத்த:
பிப்ராண: பாஸி தத்வம் கமயஸி ச ததா வ்யூஹ்ய ரங்காதிராஜ.’ (ஸ்ரீரங்கராஜஸ்தவம். உத்தரசதகம்.39)
என்கிற ச்லோகத்திலே ஸங்க்ரஹிக்கப் பட்டன. ஜாக்ரதாதிபத பேதங்களில் உள்ள விசேஷங்கள் எல்லாம்
‘ஜாக்ரத் ஸ்வப்நாத் யல ஸதூரிய ப்ராயத் யாத்ரு க்ரமவதுபாஸ்ய: ஸ்வாமிந்! தத்தத் ஸஹ பரிபர்ஹ;
சாதுர் வ்யூஹம் வஹஸி சதுர்த்தா’ (ஸ்ரீரங்கராஜஸ்தவம் 2-40) என்று ஸங்க்ரு ஹீதங்களாயிற்று.
[ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரம், தத்வத்ரய சிந்த நாதிகாரம்.]

ஈண்டு ஆளப்பெற்ற மேற்கோள்களின் பொருள் வருமாறு:–
மூவிரண்டு குணங்களை உடைய வரதராஜனே! தேவரீருடைய அகில மூர்த்திகட்கும் முதன்மையான
பர வாஸு தேவமூர்த்தி கீழ்ச்சொன்ன இந்த ஆறு குணங்களால் விளங்கிற்று. அதற்கு மேல் மும்மூர்த்திகள்
அந்த குணங்களுடைய மூவிரண்டுகளாலே பிரகாசித்தன. இப்படிப்பட்ட வ்யவஸ்தை யாதொன்று உண்டு
அந்த வ்யவஸ்தை குணங்களை வெளியிடுதல் பற்றியாம். தேவரீரோவெனில் அகில மூர்த்திகளிலுமே
எண்ணிறந்த சிறந்த கல்யாண குணங்களையுடையீரா யிராநின்றீர். (வரதராஜஸ்தவம் 16)

பகவானாகிய திருவரங்க நகராதிபனே! பூஜ்யரான தேவரீர் வாஸுதேவாதி வ்யூஹரூபேண அவதரித்து
ஞானம் முதலிய ஆறு குணங்களோடுகூடி பரவாஸுதேவர் என வழங்கப்பெற்றவராகி முக்தர்கட்கு அநுபாவ்யராக ஆகின்றீர் ;
பலத்தோடு கூடின ஞானத்தோடு கூடி ஞானமும் பலமுமாகிற இரண்டு குணங்களை உடையவராய்க் கொண்டு
ஸங்கர்ஷண மூர்த்தியாகி ஸம்ஹாரத் தொழிலை நடத்துகின்றீர் சாஸ்த்ரத்தை அளிக்கின்றீர்;
ஐச்வர்ய வீர்யங்களோடு கூடி ப்ரத்யும்ந மூர்த்தியாகி ஸ்ருஷ்டியையும் பண்ணி தர்மத்தையும் ப்ரவர்த்திப்பிக்கிறீர்
சக்தி தேஜஸ்ஸுக்களாகிற இரண்டு குணங்களை உடையவராகி அநிருத்த மூர்த்தியாய் ரக்ஷணத் தொழிலை நடத்துகின்றீர்;
தத்வஜ்ஞாந ப்ரதாநமும் பண்ணுகின்றீர் (ஸ்ரீரங்கராஜஸ்தவம், 2-39.)

திருவரங்கநாதரே! விழித்துக் கொண்டிருப்பாரும், உறங்கிக் கொண்டிருப்பாரும், ஸுஷுப்தியில் இருப்பாரும்,
மூர்ச்சா தசையில் இருப்பாருமான த்யாநம் செய்பவர்களின் ரீதிகளையுடைய அதிகாரிகளாலே
உபாஸிக்கத் தகுந்தவராய் தகுதியான பரிச்சதங்களை உடையவராய் நான்கு வகையாக
வ்யூஹ சதுஷ்டயத்தை வஹிக்கின்றீர் (ஸ்ரீரங்கராஜஸ்தவம், 2-40)

ஜ்ஞாநசக்தி பலைச்வர்ய வீர்ய தேஜஸ்ஸுக்கள் என்கிற சிறந்த ஆறு குணங்களும்
பரவாஸு தேவமூர்த்தியிலே புஷ்கலங்கள் என்றும், எம்பெருமானுக்கு மற்றும் உள்ள அநந்த கல்யாண குணங்களுள்
இந்த ஆறு குணங்களே சிறந்தவை என்றும், இக்குணங்கள் அடியாகத்தான் இவற்றின் சாகோபசாகைகளாக
இதர குணங்கள் பெருகுகின்றன வென்றும்,
“ப்ரக்ருஷ்டம் விஜ்ஞாநம் பலமதுல மைச்வர்ய மகிலம் விமர்யாதம் வீர்யம் வரத பரமா சக்திரபிச,
பரம் தேஜச்சேதி ப்ரவரகுண ஷட்கம் ப்ரதமஜம் குணாநாம் நிஸ்ஸீம்நாம் கணநவிகுணாநாம் ப்ரஸவபூ;” என்ற
சுலோகத்தில் (வரதராஜஸ்தவம், 15) கூரத்தாழ்வான் பணித்துள்ளான்.

(i) ஜ்ஞாநமாவது — எப்போதும் ஸ்வத: ஏக காலத்தில் பஞ்சேந்த்ரியங்களினாலும் அறியக் கூடியவற்றை யெல்லாம் ஸாக்ஷாத்கரிக்கை.
(ii) சக்தியாவது — ஸ்வ ஸங்கல்ப மாத்திரத்தால் அஸங்க்யேயமான புவநங்கட்கும் உபாதாந காரணமாகை.
(iii) பலமாவது– ஸமஸ்தசித் அசித் ஸமூகங்களையும் சிறிதும் இளைப்பின்றித் தாங்கும் வல்லமை
(iv) ஐச்வர்யமாவது — ஸ்வாதந்தர்யத்தோடு எங்குந் தடையின்றிச் செல்லும் ஸங்கல்பத்தையுடைமை.
(v) வீர்யமாவது — தான் உபாதாந காரணமாகிச் சேதநா சேதநங்களை உண்டாக்கியும் தனக்கு ஒரு விகாரமின்றிக்கேயிருக்கை.
(vi) தேஜஸ்ஸாவது — வேறொருதவியின்றி அடைந்தாரது தாபங்களைப் போக்கியும் எதிரிகட்குத் தாபத்தைத் தந்தும் போருந்தன்மை.

(1) அஜடம் ஸ்வாத்ம ஸம்போதி நித்யம் ஸர்வாவகாஹநம்,
ஜ்ஞாநம் நாமகுணம் ப்ராஹு: ப்ரதமம் குணசிந்தகா:
[குணத்தைச் சிந்திக்குமவர்கள் முதலில் ஜ்ஞாநம் என்று பிரஸித்தமான குணம் அஜடமாயும்,
தன்னைத்தானே அறிகிறதாயும், நித்யமாயும், எல்லா விஷயங்களையும் பிரகாசிப்பதாயும் இருக்கும் என்று சொல்லுகிறார்கள்.
ஜ்ஞாநமாவது — எப்பொழுதும் எல்லாவற்றையும் தெளிவாக விளக்கக்கூடியதாயும், தனக்குத்தானே பிரகாசமாயும் உள்ள குண விசேஷம்.]

(2) ஜகத் ப்ரக்ருதிபாவோ யஸ்ஸக்தி ப்ரகீர்த்தித:
[ஜகத்திற்குக் காரணமா யிருப்பது யாதொன்று உண்டோ அது சக்தி என்ற சொல்லப் படும்.
சக்தியாவது — ஜகத்காரணமா யிருக்கின்ற குண விசேஷமாதல், அகடித கடனா ஸாமர்த்யமாதல் — சேராதவற்றைச் சேர்ப்பது]

(3) பலம் தாரண ஸாமர்த்யம்
[பலமாவது — எல்லா வஸ்துக்களையும் தாங்கும் ஸாமர்த்யம்]

(4) கர்த்ருத்வம் நாமயித்தஸ்ய ஸ்வாதந்தர்ய பரிப்ரும்ஹிதம்
ஐச்வர்யம் நாமதத்ப்ரோக்தம் குணதத்வார்த்த சிந்தகை:

[அந்த பரமாத்மாவுக்கு ஸ்வாதந்தர்யத்தோடு கூடின யாதொரு கர்த்தாவா யிருக்குந் தன்மை பிரஸித்தமா யிருக்கிறதோ அது,
குணங்களின் உண்மை யறிந்தவர்களாலே ஐசுவர்யம் என்ற பிரஸித்தமான குணமாகச் சொல்லப் பெற்றது.
ஐச்வர்யமாவது — எல்லாவற்றிற்கும் கர்த்தாவா யிருத்தலின் லக்ஷணமான ஸ்வாதந்தர்யம் அல்லது
எல்லா வஸ்துக்களையும் நியமிக்கும் ஸாமர்த்யம்.]

(5) தஸ்யோபாதாந பாவேபி விகாரவிரஹோஹிய:
வீர்யம் நாமகுணஸ்ஸோயம் அச்யுதத்வாபராஹ்வய
[ஸர்வேசுவரனுக்கு ஜகத்துக்கு பாதான காரணமாயிருக்கும் நிலைமையிலேயும் விகாரமின்மை யிருக்கின்றது.
இங்ஙனம் இருக்கின்ற அந்த அவிகாரத்வமானது வீர்யம் என்ற பிரஸித்தமான குணம் என்று சொல்லப்படும்.
அதுவே அச்யுதம் என்ற வேறு பெயராலும் அழைக்கப் பெறும்.
வீர்யமாவது — ஜகத்திற்கு பாதான காரணமாயிருந்தும் ஸ்வரூப விகாரமில்லா திருக்கும் அவிகாரதை — விகாரமில்லாதிருத்தல்.]

(6) தேஜஸ்ஸாவது — ஸஹாயத்தை யபேக்ஷியாதிருத்தல்

“செழுங்குணங்க ளிருமூன்று முடையார்” என்பது இவ்வாசிரியர் அருளிச் செய்த திருச்சின்னமாலை (5)ப்பாசுரவடி.
பகவச்சப்தத்தின் உண்மைப்பொருள் உணர்ந்த தென்சொற்கடந்து வட சொற்கலைக்கெல்லை தேர்ந்த
ஸ்ரீவல்லபர் (தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார்) தாம் இயற்றிய தமிழ் வேதமாகிய
திருக்குறள் பாயிரம். முதல் அதிகாரம். கடவுள் வாழ்த்து முதற்குறளை.
அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.
என அமைத்துப் பாடியுள்ளார். பரிமேலழகரும் “இப்பாட்டான் முதற் கடவுளதுண்மை கூறப்பட்டது” என்று
நுண்ணிய உரை வகுத்துள்ளதும் நன்கு நோக்கற்பாலது.
யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரவர்கள் பதிப்பில் இக்குறளின் கீழ்
ஐசுவரியம், வீர்யம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்னுமாறுக்கும்
பகமென்னும் பெயருண்மையால் பகவனென்பதற்கு இவ்வாறு குணங்களையுமுடையோனென்பது பொருள்
எனக் குறிப்பு எழுதியுள்ளார்கள்.

ஆதிபகவன் என்னு மிருபெயரொட்டுப் பண்புத்தொகை வடநூன் முடிபு என உரையிட்டனர் பரிமேலழகியார்.
“அமலனாதிபிரான்” (திருப்பாணாழ்வார் அருளிச்செய்த பத்துப்பாட்டு) வியாக்கியானமான
“முநிவாஹந போகம்” ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகன் அருளிச் செய்த இருபத்தெட்டாவது ரஹஸ்யம்.
இதில் “(ஆதி) ‘ஏஷ கர்த்தாந க்ரியதே’ இத்யாதிகளிற்படியே ஸர்வஜகதேக காரணபூதன்
இத்தால் காரணமே சரண்யம் என்கிறபடியே முமுஷுவுக்கு சரணமாகப் பற்றப்படுபவன் என்று பலிதம்:
இக்காரணத்வமும் மோஷப்ரதத்வமும் சத்ரசாமரங்கள் போலே ஸர்வலோக சரண்யனுக்கு விசேஷசிஹ்நங்கள்” என்றுள்ளன காண்க.
முழுதுணர் நீர்மையினோராகிய ஸ்ரீவல்லபர் பகவச் சப்தத்தால் பெறக் கூடிய நாராயணன் எனுந் திருநாமத்தை
“வாலறிவன்” (2.ஸர்வஜ்ஞன்) “பொறிவாயில் ஐந்தவித்தான்”. (6.ஹ்ருஷீகேசன்) “தனக்குவமையில்லாதான்”
(7.அதுல:) “எண்குணத்தான்” (9) என்ற அகாரவாச்யனின் பெயர்களை எடுத்தோதி
“அடியளந்தான்” (பொருட்பால் 610) என்று உலகளந்த திரிவிக்ரமன் பெயரைக்காட்டி இறுதிப் பாலில்
“தாமரைக்கண்ணான்” (புணர்ச்சி மகிழதல் 1103) என்று செங்கண்மாலை ஸ்பஷ்டமாகப் பேசித்
தலைக் கட்டியுள்ளது நன்கு நோக்கி இன்புறற்குரியது.

“முதற்கடவுள்” யார் என்பது ஆழ்வார்களுள் ஆதியாகிய பொய்கையார்
“உலகளந்த மூர்த்தி யுருவே முதல்” (முதல் திருவந்தாதி. 14) என்றும்
“முதலாவார் மூவரே அம்மூவருள்ளும் முதலாவான் மூரிநீர்வண்ணன் – முதலாய நல்லான்” (முதல் திருவந்தாதி.15)
என்றும் கண்டோக்தமாகக் காட்டியிருப்பதால் தெற்றென அறியலாம்.
திருவள்ளுவருக்கு வழிபடு கடவுளும் குறளுக்கு ஏற்புடைக்கடவுளும் திருமால் என்பது பேரறிஞர் கண்ட பேருண்மை.
தேவீ — பிராட்டிமார்கள்.
இப்படி அதி மநோஹரமான அநந்த போக பர்யங்கத்திலே ரஜதகிரியின் மேலே மரதககிரி இருந்தாற்போலே
‘ஏழுலகும் தனிக்கோல் செல்ல’ வீற்றிருந்து ‘விண்ணோர்தலைவ’னாய் குமாரயுவாவாய்
‘சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு’ என்னும் படி ஆதித்ய சதஸஹஸ்ர ஸமுதாயம் போலே
அநவதிக தேஜஸ்ஸை யுடையனாய் ‘விச்வமாப்யாயந் காந்த்யா பூர்ணேந்து யுத துல்யயா’ என்னும் படி
அநவதிக லாவண்யத்தையுடையனாய் ஸர்வசேஷியான தன்னுடைய க்ருபையும் க்ஷமையும் வண்மையும்
வடிவு கொண்டாற்போலே இருக்கிற நாச்சிமார்களில் ஸ்வாபிமத, நித்ய, நிரவத்ய, அநுரூப ஸ்வரூபாதிகளை
உடையனாய் ஸ்வவைச்வரூப்யத்தாலே ஸதாநுபவம் பண்ணாநின்றாலும் இன்று அநுபவிக்கத் தொடங்கினாற்போலே
ஆச்சர்யரஸாவஹையாய், ‘சாந்தாநந்த’ இத்யாதிகளின்படியே ஸர்வப்ரகாரஸம்ச் லேஷத்தை உடையனாய்
‘திருமார்வத்து மாலை நங்கை’யாய் அமுதில் வரும் பெண்ணமு’தாய்
‘வேரிமாறாத பூமேலிருந்து வினைதீர்க்கு’ மவளாய் தன் கடாக்ஷலேசத்தாலே கமலாஸநாதி வைபவத்தையும் கொடுக்குமவளாய்
‘தேவதேவ திவ்யமஹிஷீ’ என்னும் படியான மேன்மையும்
‘கருணாஸ்ராநதமுகீ’ என்னும் படியான நீர்மையும் உடையளான பெரிய பிராட்டியார்
‘தாக்ஷிண்யஸீமா’ என்று தோற்றும்படி தக்ஷிணபார்ச்வத்திலே நீலமேகத்தை அணைந்த நிலை மின்போலே
ஸேவித்திருந்து தன்னுடைய சேஷித்வ போக்யத்வ கைங்கர்யப்ரதி ஸம்பந்தித்வங்களைப் பூரித்துக் கொண்டு
அகில பரிஜநங்களை அவஸரோசிதா சேஷவ்ருத்திகளிலும் ஆஜ்ஞாபிக்க ‘ஏவம் பூதபூமி நீளாநாயக’ என்கிறபடியே
பெரிய பிராட்டியாருடைய ரூபாந்தரம் என்னலாம் படி அநவரத பஹுமாந விஷயையாய்
‘பச்சைமாமலை போல் மேனி’க்கும் படிமாவான நிறத்தை உடையளான ‘பார் என்னும் மடந்தை’யும்
‘அல்லி மலர்மகள் போகமயக்குகள் அத்யல்பம் என்னும்படி நித்யப்ரபோதம் நின்றவிடம் தெரியாதே
நீளாதுங்க ஸ்தநகிரிதடீஸுப்தம் என்னப் பண்ணுமவளாய் நீலோத்பவச்யாமளையான ஸ்ரீநீளைப் பிராட்டியும்;
அடியார் இடத்திலே ஸேவித்திருக்கும்படி தாங்களும் இடத்திலே ஸேவித்திருக்க;
‘ஸேவ்ய: ஸ்ரீபூமி நீளாபி:’ உடனமர் காதல்மகளிர் திருமகள் மண்மகள் ஆயர்மடமகள் என்றிவர் மூவர்’ இத்யாதிகளில்
சொன்ன சேர்த்தியிலே அடிமை செய்யுமவர்களுக்கு ‘ரஸம்’ என்றும் ‘ஆநந்தம்’ என்றும் சொல்லும்படியான
நிரதிசய யோக்யதையுடையனான நிருபாதிகசேஷியை நிருபாதிகஜ்ஞாத விகாஸத்தாலே
‘அவாவறச் சூழ்ந்தாய்’ என்னும்படி அனுபவித்து (ஸ்ரீபரமபத ஸோபாநம். பராப்திபர்வம்)

தேமா மலர்க்கயஞ்சூழ் கோயின் மேவுந் திருவரங்கர்
தாமாத ரித்ததிருத் தேவிமாரிற் றரங்கவுடைப்
பூமாது நாளும் புரத்தே சுமந்து புரக்குமலர்
மாமாது செல்வங் கொடுத்தே யுயிர்களை வாழ்விக்குமே. (திருவரங்கத்துமாலை.80)

(தேனையுடைய பெரிய பூக்கள் நிறைந்த தடாகங்கள் சூழ்ந்த திருவரங்கம் பெரிய கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற
திருஅரங்கர் தாம் அன்புவைத்த திருமகள் நிலமகள் என்னும் உபயதேவியர்களுள் கடலை உடுக்கும் ஆடையாக
உடைய நிலமகள் எந்நாளும் உயிர்களைத் தனது உடம்பின் மேலே தாங்கிக் காப்பாற்றுவாள்.
தாமரையில் தோன்றிய திருமகள் அவ்வுயிர்ட்கட்குச் செல்வத்தைக் கொடுத்துக் காப்பாற்றுவாள்.
எம்பெருமானது வலப்பக்கத்திலே ஸ்ரீதேவியும் இடப்பக்கத்தில் பூதேவியும் எப்பொழுதும் விட்டுப் பிரியாமல் உடன் உறைவர்.)

த்வச் சேஷத்வே ஸ்த்திரதியம் த்வத் ப்ராப்த்யேக ப்ரயோஜநம்
நிஷித்த காம்ய ரஹிதம் குரு மாம் நித்ய கிங்கரம். –ஸ்ரீ நியாஸ சதகம் -(5)

[(பகவானே !) மாம் — அடைக்கலமான அடியேனை; த்வத் சேஷத்வே — தேவரீருக்குச் சேஷ பூதமாயிருப்பதிலே ;
ஸ்த்திரதியம் — உறுதியான புத்தியை உடையவனாக ; குரு – செய்தருள வேண்டும்;
த்வத் ப்ராப்தி ஏக ப்ரயோஜநம் — தேவரீரை அடைதலே முக்கிய பலம் என்ற எண்ணம் உடையவனாகவும்
குரு — செய்தருளவேண்டும் ;
நிஷித்த காம்ய ரஹிதம் — சாஸ்த்ரங்களில் விலக்கப் பட்டவைகளான காம்ய கர்மங்களில் ஸம்பந்தம் அற்றவனாகவும்,
சாஸ்திரங்களில் நிஷித்தங்களான அற்ப பலத் தாசையினாலே சூந்யனாகவும் ;
குரு — செய்தருளுக; நித்ய கிங்கரம் — எப்போதும் தாஸ வ்ருத்தி செய்பவனாகவும் ,
இவ்வாறு நிலை நின்ற அடிமைக்காரனாகவும் ; குரு — செய்தருள வேண்டும்.]

———

எம்பெருமானார் ப்ரஹ்மம் எனும் சொல்லை ஆழ்வார் வழியில் விளக்குவதாவது:
உயர்வற=அநவதிகாதிசய
உயர்=அஸங்க்யேய
நலம் உடையவன்=கல்யாண குண கண
யவனவன்=புருஷோத்தமன்

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ கோதா ஸ்துதி–15-29-

January 12, 2021

ஸ்ரீ கோதா ஸ்துதி

ஸ்ரீமாந் வேங்க‌ட‌நாதார்ய‌: க‌விதார்க்கிக‌ கேஸ‌ரீ |
வேதாந்தாசார்ய‌வ‌ர்யோ மே ஸ‌ந்நிதத்தாம் ஸ‌தா ஹ்ருதி ||

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

————

ஆமோதவத்யபி ஸதா ஹ்ருதயங்கமாபி
ராகாந்விதாபி லளிதாபி குணோத்தராபி |
மௌளிஸ்ரஜா தவ முகுந்தா கிரீடபாஜா
கோதே பவத்யதரிதா கலு வைஜயந்தீ || (15)

கோதே — கோதாய்! வைஜயந்தீ — வனமாலை; ஸதா — எப்பொழுதும்;
ஆமோதவத்யபி — பரிமளம் நிறைந்து சிரிப்பு விகாஸத்தோடு கூடியிருந்தும்;
ஹ்ருதயங்கமாபி — திருமார்பில் இருந்துகொண்டு மனதை ஹரிப்பதாயிருந்தும்;
ராகந்விதாபி — செவ்வி மாறாமலும் பெருமாள் திருமார்பில் மிக்க ராகத்தோடும்;
லளிதாபி — மிகவும் ஸுகுமாரமாயும்; குணோத்தராபி — உயர்ந்த குணங்களை (நாறுகளை) உடையது;
முகுந்த கிரீட பாஜா — மோக் ஷஸுகத்தை அளிக்கும் பெருமாள் கிரீடத்தை அடைந்த;
தவ மௌளிஸ்ரஜ — உன்னுடைய கூந்தலை அலங்கரித்த மாலையால்;
அதரிதா பவ கலு — கீழே போனதாக ஆகிவிட்டதல்லவா?

அம்மா கோதாய்! பெருமாள் திருமார்பில் ஸர்வ காலத்திலுமுள்ள வைஜயந்தீ என்னும் வனமாலையானது,
எப்பொழுதும் பரிமளத்தோடும், ஸந்தோஷ மலர்ச்சியோடும், செவ்வியோடும் பெருமாள் திருமார்பை
அலங்கரிப்பதில் ராகத்தோடும், ச்ரேஷ்ட குணங்களோடும், ஸௌகுமார்யம் என்னும் மார்த்தவத்தோடும் கூடி
பெருமாள் திருமார்பிலேயே வசித்துக் கொண்டு மனத்துக்கினியதாயிருந்தாலும்,
அது அவர் திருமுடியிலுள்ள கிரீடத்தை அடைந்த உன் சிரோமாலையால் கீழாக்கப்பட்டதே!

கோதா பிராட்டியே ——நீ , மலர் மாலையை, உன் திருமார்பில் சூடிப் பிறகு அதைக் களைந்து,
எம்பெருமான் சூடிக் கொள்ளச் செய்தாய் .அவன் அதைத் திருமுடியில் கிரீடத்தில் அணிந்தான்.
இப்போது மணம் செய்துகொண்ட இளையாளைத் தலையாலே ஏற்று, மூத்தாளான வைஜயந்தியை மார்பிலேயே வைத்துவிட்டான்.
உன்னுடைய மாலை, வைஜயந்தி மாலை இரண்டுமே மணம் மிக்கவை; இரண்டிலுமே சிகப்பு உண்டு; இரண்டுமே அழகு;
இரண்டுமே ம்ருதுவானவை; இவ்வளவு விஷயங்கள் பொதுவாக இருந்தும், உனது மாலை அவன் திருமுடியில் ஏறியுள்ளது ,
உன் பெருமையைச் சொல்கிறது.

அவதாரிகை

(1) என்னை ஈச்வரீயென்னலாமோ? எனது உயிரும் அம்சியுமான பெரிய பிராட்டியாரல்லவோ ஈச்வரீ?
அம்மா! உன்னை ஈச்வரீ என்று அழைக்க என்ன தடை? மோக்ஷத்தை அளிக்கும் முகுந்தனான ஸர்வேச்வரரின்
கிரீடத்தை உன் சிரோமாலை அடைந்ததே? உன் சிரஸுக்கு ஈச்வர கிரீடம் கிடைத்தாலென்ன?
உன் சிரோலங்காரமான மாலைக்கு அது கிடைத்தாலென்ன?

(2) ஆண்டாள் சரித்திரத்திலும் திருக்கல்யாணத்திலும் மாலைக்குத்தான் ப்ரதான்யம்.
அநேகம் ச்லோகங்களில் இங்கே கோதைமாலையின் ஸ்துதிமாலை. இது சூடிக்கொடுத்த மாலையின் துதியென்ன வேணும்.
அந்த மாலை தானே இம் மிதுனத்தைச் சேர்த்து வைத்த கடகவஸ்து! புருஷகாரத்திற்கும் புருஷகாரமாயிற்று.
கடகர் சிறப்பினும் மிக்கதுண்டோ? பரமான ப்ரஹ்மவித்யையை ப்ரதிஜ்ஞையுடன் பேச ஆரம்பித்த முண்டகோபநிஷத்து மேலே
“ஆகையால் க்ஷேமத்தை விரும்புகிறவன் ஆத்மக்ஞனான ஆசிரியனை யல்லவோ அர்ச்சிக்க வேண்டும்” என்றது.
‘தஸ்மாத்’ என்று ஹேதுபுரஸ்ஸரமாய்ப் பேசுவதோடு த்ருப்தியில்லாமல் ‘ஹி’ என்று ப்ரஸித்தியையும் ஹேதுவையும்
காட்டும் பதத்தையும் சேர்த்துக் கொண்டது.
“தஸ்மாத் ஆத்மக்ஞம் ஹி அர்ச்சயேத் பூதிகாம:”
மதுரகவி காட்டும் மதுரமார்க்கம் நல்வழியான தொல்வழி

(3) முன் ச்லோகத்தில் ‘நீ சூடிய மாலை வந்து திருமுடியில் ஏறி கிரீடம் பெற்றதும்,
வைஜயந்தியில் மொய்த்துக் கொண்டிருந்ததை விட்டு, உன் மாலையின் பரிமளாதிகளால் மேலே இழுக்கப்பட்டு
அங்கே சூழ்ந்து சுழன்று ஆடிப் பாடுகின்றன’ என்றார். புதிதாக கிரீட மாலைக்கு வந்தால் வரட்டும்;
கையில் கிடைத்து ஸித்தமான உத்தமமாலையாகிய வைஜயந்தியை அலக்ஷ்யம் செய்து தாழ்வாக்குமோ?
இது என்ன பக்ஷபாதப் பேச்சு? பொய்த்துதி? இதற்கும் பதில் கூறுகிறார்.

கோதே! —
நீ பாமாலை பாடிக்கொண்டே பூமாலை தொடுத்துக் கட்டிச் சூடிக்கொடுத்தாய்.
உன் தோழிகளும் ப்ரஜைகளுமான உன் தோட்ட வண்டுகள் உன் பூமாலையைச் சுற்றி ஆடிப்பாடி வந்தன;
உன்னை அநுகரித்தன.

வைஜயந்தீ —
வனமாலையானது பஞ்சபூதங்களையும் அபிமானிக்கும் நித்யஸூரியான சேதன தத்துவம்.
இப்படிக்கு உத்க்ருஷ்டமான சேதனமாலை உன் பூமாலையால் ஜயிக்கப் பட்டது.
ப்ருந்தாவனத்து கோபாலனுக்கு இதுவே திருமார்புக்கு அலங்காரம். ஒருகால் குந்துமணியும் சேரலாம்.

ஸதா — எப்பொழுதும்.

ஆமோதவத்யபி — பரிமளம்,

ஸந்தோஷவிகாஸம். சேதனமான அபிமானி தேவதையானதால் ஸந்தோஷமும் உண்மையாகும்.

ஹ்ருதயங்கமாபி — ஹ்ருதய தேசத்திலிருப்பது. ஹ்ருதயத்துக்கு இனிதே.

ராகாந்வி தாபி —
வாடாத மாலை புஷ்பராகம் . மாறுவதேயில்லை. திருமார்பில் ராகம் குறைவதே இல்லை
திருமார்பில் ராகமில்லாவிட்டால் இளப்பம் செய்யக் காரணமேற்படலாம்.

லளிதாபி — மார்த்தவ ஸௌகுமார்யங்கள் குறைவதேயில்லை.

குணோந்ததாபி —
புஷ்பங்களின் உயர்த்தி குறையாவிடினும் மாலையின் நார்கள் (குணங்கள்) கெடுகின்றனவோயென்றால்,
நார்கள் ஸர்வோத்தரமாகவேயுள.

மௌளிஸ்ரஜா —
ஓர் குறைவுமில்லையென்றால், கீழாவதற்குக் காரணம்தான் என்ன? வைஜயந்தீ பெருமாள் திருமுடியிலும் ஏறவில்லை,
உன் மௌளியிலும் ஏறப்பெறவில்லை. இந்த மாலை உன் மௌளியில் சூடப்பட்டுப் பெருமாள் முடியையும் சூடுகிறது.
இந்த மாலை ஈச்வரீ ஈச்வரர் இருவர் முடியிலும் சம்பந்தம் பெற்றது. ஸ்தானத்தால் உயர்த்தி பெற்றதல்லவோ!
மற்ற தாரதம்யத்தை நாம் நினைக்க வேண்டாம். பேசவேண்டாம். மௌளி உத்தம அங்கமல்லவோ, மார்புக்கு உயர்ந்ததன்றோ?

தவ — ஈச்வரீயான உன் மௌளி சூடியது, அங்கிருந்து.

முகுந்த கிரீட பாஜா —
பெருமாள் திருமேனியிலேயே யல்லவோ ஸ்தானங்களின் உத்தமத்வமும் அதரத்வமும் காட்டவேணும்!
முகுந்தன் மோக்ஷப்ரதன். ஸர்வேச்வரன்தான் மோக்ஷப்ரதன். அவன் கிரீடத்தில் சூடப்பட்டது இம்மாலை.
கிரீட ஸம்பந்தம் உத்தமமல்லவோ? மாலைகளுக்குள் ஆதிராஜ்ய ஸூசனம் அந்த ஸம்பந்தம்.

அதரிதா —
கீழாய்ச் செய்யப்பட்டது. திருமுடியில் கிரீடத்திலுள்ள மாலைக்குக் கீழேயுள்ளதுதானே திருமார்பு மாலை?

பவதி கலு —
ஆகிறது அல்லவா? இது எல்லோரும் அறியும்படி ஸ்பஷ்டம்தானே! இங்கே ஓர் ரஸமுண்டு.
பகவத் கைங்கர்ய ரஸிகர் மற்றெல்லோருக்கும் தாழ்மையையே ஆசைப்படுவர்.
தாழ்மை கிடைத்ததும் ‘இன்றுதான் பிறந்தோம்’ என்கிற நினைப்பு வருவதை ‘அதரிதா பவதி’ என்று
சேர்த்துப் பணிப்பால் விளக்குகிறார்.
கோதை சூடிய மாலை சேதனமல்லாததால் அதற்கு அந்தத் தாழ்மை ஆசையில்லை.
மேலும் பெருமாளாக அதைத் தலையில் சூடிவிட்டார்.
நித்யஸூரியான வைஜயந்தி தேவதை தாழ்மையையே ஸத்தையாக மதித்தார். (15)

———-

த்வந்மௌளிதாமநி விபோ: ஶிரஸா க்ருஹீதே
ஸ்வச்சந்தகல்பித ஸபீதிரஸ ப்ரமோதா|
மஞ்ஜுஸ்வநா மதுலிஹோ விதது: ஸ்வயம் தே
ஸ்வாயம்வரம் கமபி மங்களதூர்யகோஷம் || .16.

விபோ — விச்வப்ரபுவினுடைய; ஶிரஸா — சிரஸினால்; த்வந்மௌளிதாமநி — உன் சிரஸை அலங்கரித்த மாலை;
க்ருஹீதே — க்ரஹிக்கப்பட்டபோது; ஸ்வச்சந்த — தங்கள் ஸ்வேச்சையாக (இஷ்டப்படிக்கெல்லாம்);
கல்பித — செய்த; ஸபீதரஸ — ஸஹபான ரஸத்தால்; (எல்லாம் கூடித் தேனைப் பானம் செய்து);
ப்ரமோதா: — அதிக சந்தோஷத்தோடு கூடியனவாக; மஞ்ஜுஸ்வநா: — இனிய சப்தத்தோடே;
மதுலிஹ: — தேனை ஆஸ்வாதிக்கும் வண்டுகள்; ஸ்வயம் — தாமாகவே (வேறு ஒருவரும் சொல்லாமல்);
ஸ்வாயம்வரம் — ஸ்வயம்வரமான விவாஹ ப்ரகரணத்திற்குத் தக்கபடி;
கமபி — வர்ணனத்திற்கு அடங்காத மாதுர்யத்தை உடைய ஓர் விசித்ரமான;
மங்களதூர்ய கோஷம் — மங்கள வாத்ய சேவையை; வித்து: — செய்தன (விதித்துக் கொண்டன)

நீ உன் சிரஸில் சூடிய மாலை ப்ரபுவின் சிரஸால் ப்ரதி க்ரஹிக்கப் படபோது, தேன் வண்டுகள் தங்கள்
இஷ்டப்படிக் கெல்லாம் வேண்டிய மட்டும் ஸஹ பானம் செய்து அந்த ரஸத்தாலே களித்து
இனிய சப்தத்தோடே உன் ஸ்வயம்வரத்தில் ஸ்வயமாக ஓர் விலக்ஷணமான மங்கள வாத்ய கோஷம் செய்தன.

கோதா தேவியே—–உன் மாலையை, எம்பெருமான் சிரஸா ஏற்றுக்கொண்டான்.
தேனைத் தேடும் வண்டுகள், அந்த மாலையில் உள்ள ரஸங்களைத் தங்களுடைய ஆசைக்கு ஏற்பப் பருகி,
அதிக ஆனந்தத்துடன் ,ரீங்காரமிட்டு அழகாகப் பாடுகின்றன.
அந்த ரீங்கார ஓசையே ஸ்வயம் வரத்துக்கான வாத்திய கோஷம் போல் உள்ளது.
நீ சூடிக் கொடுத்த மாலையில் , மாலை மாற்றுதலும், அதற்கான வாத்திய கோஷமும் —ஆஹா

அவதாரிகை

(1) அனந்தநாதரைப்போல வண்டுக்கூட்டங்கள் தங்கள் சரீரத்தாலேயே குடையாயின.
கருடனைப் போலே விசிறியுமாயின என்றார் 14ல்.
வைஜயந்தியை வண்டுகள் விட்டதைப் பேசினதை உபபாதிக்க முன் சுலோகம் வந்தது.
அது முடிந்ததும், மறுபடியும் வண்டுகள் ஆனந்தப்பட்டு ஸ்வயம் செய்யும் வாத்யகோஷ கைங்கர்யத்தை ஸாதிக்கிறார்.

(2) ஸ்வயம்வரத்தில் மங்களவாத்ய கைங்கர்யமும் ஸ்வயமாக வண்டுகளால் வரிக்கப் படுகிறது.
எல்லாம் இங்கே ஸ்வயமாகும். வண்டுகள் ஸ்வச் சந்தமாகத் தேனை ஸஹபானம் செய்து களிக்கின்றன.
ஒருவரும் அவற்றிற்குத் தேனைப் பானம் செய் என்று தேனை எடுத்துக் கொடுக்கவில்லை, பரிமாறவில்லை.
தங்கள் இஷ்டமாகத் தாமே மாலையில் பெருகும் தேனைப் பானம் செய்கின்றன.
இந்த ஸ்வயம்வரத்தில் சேஷர்களான யாவரும் தங்கள் தங்கள் இஷ்டத்தை ஆஃவயமாகச் செய்யலாம், போகங்களையும் புஜிக்கலாம்.
ஸ்வக்ருஹே கோ விசாரோஸ்தி அஸ்யாஜ்ஞா ஸம்ப்ரதீக்ஷ்யதே என்றார் ஜனகர் ஸீதா விவாஹத்தில்.
“ஸ்வக்ருஹத்தில் யாருக்கு என்ன விசாரம் வேண்டும்? யாருடைய ஆஜ்ஞை எதிர்பார்க்கப் படுகிறது?
ஏன் ஸ்வயமாக உங்கள் இஷ்டப்படிக்கெல்லாம் இந்த உத்ஸவத்தில் ப்ரவ்ருத்திக்கலாகாது ” என்று ஜனகர் கேட்டார்.
இங்கே அப்படிப் பேசவே அவஸரம் நேரிடவில்லை.
எல்லாரும் ஸ்வயமாகவே விவாஹ மங்களத்திற்கு வேண்டிய கார்யங்களைச் செய்கின்றனர்.
விவாஹத்திற்கு மருஷ்டாந்ந பானாதிகள் அங்கமாகையால் விவாஹ பூர்த்திக்காக அதையும் செய்கின்றன.
‘விதது’ என்பதால் வாத்யகோஷம் செய்ய ஒன்றையொன்று விதித்தன, கட்டளையிட்டன என்றும் கொள்ளலாம்.
விதியின் பயன் பிறர்க்கு. பரஸ்மை பதப்ரயோகம்.

த்வந்மௌளிதாமநி —
நீ உன் கூந்தலில் சூடிய மாலையானது உன் உத்தமாங்கத்தில் சூடிய மாலை.

விபோ:ஶிரஸா —
ப்ரபுவின் சிரஸால். உன் உத்தமாங்கத்தில் சூடிய மாலையைத் தம் உத்தமாங்கத்தில் தரிப்பது தானே
இந்த உத்தம ப்ரபுவின் லக்ஷணம்!

ஶிரஸா க்ருஹீதே —
“ஶிரஸா ப்ரதிக்ருஹ்ணாதி வைஸ்வயம்” என்ற வசன க்ரமத்தை இவர் விடாத ப்ரபுவே.
எவர் செய்யும் பூஜையையும் இப்படி சிரஸால் க்ரஹிப்பவர். கோதை சூடிய மாலையை இப்படி க்ரஹிக்காமலிருப்பாரோ?
தம் ஸ்வச்சந்தமான ஸ்மிருதி வசனப்படி, ஸ்வயமே சிரஸா க்ரஹித்தார். தம்மையே விதித்துக் கொண்டார்.
இந்த ஸ்வயம்வரத்திலே பெருமாளுடைய சிரஸால் க்ரஹணமும் ஸ்வயம்.
பெருமாளை ஒருவரும் ப்ரார்த்திக்கவில்லை, விதிக்கவில்லை. அவர் ஸ்வச்சந்தமாக அப்படிச் செய்தார்.
ராகத்தால் செய்தார். ஸ்வச்சந்த விதானம். மாலையை சிரஸால் க்ரஹித்த பொழுதே “யஸ்யச பாவே பாவ லக்ஷணம்”
பாவத்தை இரட்டிக்கும் பாணினி ஸூத்ரமும் இந்த பாவப்ரகரணத்தில் பாவத்தோடு சேருகிறது.

ஸ்வச்சந்த கல்பித ஸபீதி ரஸப்ரமோதா: —
பல்லாயிரம் வண்டுகளாக சிரோமாலையில் பெருகும் தேனை ரீங்காரம் பண்ணிக்கொண்டு ஸஹபானம்
செய்யும் போது தடுப்பாரில்லை, ஓட்டுவாரில்லை. கூட்டங்களான வ்யக்திகளுக்கு ஒரே காலத்தில்
அன்னம் இட்டு அவர்கள் புஜிப்பார்கள். பானகாதிகளைக் கூடிப் பானம் செய்வர்.
இவை ஸ்வச் சந்தமாய்த் தலை மேலேறி அங்கே ஒரே கூட்டமாய்ப் பானம் செய்கின்றன.
குமார ஸம்பவத்தில் தன் பேடையான பெண்வண்டை அநுவர்த்திக்கொண்டு ஆண்வண்டு ஒரே
குஸும பாத்ரத்தில் ஸஹபானம் செய்தது என்று காளிதாஸர் வர்ணித்தார்.
அங்கே பரச்சந்தானுவர்த்தன மென்னும் தாக்ஷிண்யம் காட்டப் பட்டது.
இங்கே எல்லா வண்டுகளும் ஏககாலத்தில் ஸஹபானம் செய்தன.
பானத்தில் ராகமுடையவர் பலபேர்கூடி ஸஹபானத்தை மிகவிரும்புவர்.
இங்கே இப்படிப் பல்லாயிரம் வண்டுகளும் வாத்தியம் ஸேவிக்கின்றன.
வாத்யக்காரர் எல்லோரும் கூடிச் சேர்ந்து விவாஹ ஸமயத்தில் அன்னபானங்களில் அந்வயிப்பர்.

மஞ்ஜுஸ்வநா: —
பானம் பண்ணின தேனிலும் இனிமையான சப்தத்தோடு தேன் சாப்பிட்ட வாயிலிருந்து
சப்தம் தேனாகவே வருகிறது. ராகத்திற்கு எல்லையில்லை, தித்திப்புக்கும் எல்லையில்லை.

விதது: ஸ்வயம் —
ஸ்வயமாகச் செய்தன. ஒருவர் ஆஜ்ஞையால் விதிக்கப்பட்டுச் செய்யவில்லை.
ஆஜ்ஞா கைங்கர்யமல்ல, விதிக்கப் பட்டதல்ல. அநுக்ஞா கைங்கர்யம். ராகத்தால் ஸ்வயம் செய்தன.
‘ஸ்வயம் விதானம் செய்தன’ என்பதில் ரஸமுண்டு. பிறர் விதித்துயவில்லை. தாங்களே ஸ்வயம்விதானம் செய்துகொண்டன.
எப்படித் தங்கள் ஸ்வச்சந்தத்தால் ஸ்வேச்சையால் தேனைப் பானம் செய்தனவோ, அப்படியே ஸ்வேச்சையால்
இக் கைங்கர்யத்தையும் மிக்க களிப்போடு செய்தன. “களம விரளம் ரஜ்யத் கண்டா: க்வணந்து சகுந்தய”
“அவ்யக்த மதுரமாக ஓயாமல ராகம் நிரம்பின கண்டத்தோடு பெண் பக்ஷிகள் சப்திக்கட்டுமே.
தேவன் ராமன் ஸ்வயமாக இந்தப் பஞ்சவடிக்கு மறுபடியும் எழுந்தருளியிருக்கிறார்” என்று கோதாவரீ தேவி விதித்தாள்.
அப்படி இங்கு விதிக்க அவஸரமில்லை, ஸ்வயம் ராகமிருப்பதால்.

தே —
உன் வண்டுகள்.
அந்த வண்டுகள். 14வது ச்லோகத்தில் குடையான வண்டுகள்.
உன் ஸ்வயம்வர ஸம்பந்தமாக

ஸ்வயம்வரம் —
நீ எப்படி நிரவதிகமான ராகத்தோடு உன் மணாளரை வரித்தாயோ, அப்படியே
வண்டுகளும் இந்த மங்களவாத்ய ஸேவையை வரித்தன.

மங்களதூர்ய கோஷம் —
மாலை சிரஸால் க்ரஹிக்கப்படும் க்ஷணத்தில் இப்படி வாத்ய கோஷம் செய்தன.

———–

விஶ்வாயமாந ரஜஸா கமலேந நாபௌ
வக்ஷஸ்த்தலே ச கமலாஸ்தநசந்தநேந |
ஆமோதிதோபி நிகமைர் விபுரங்க்ரியுக்மே
தத்தே நதேந ஶிரஸா தவ மௌளி மாலாம் || .17.

விபு: — ப்ரபுவானவர்; நாபௌ — உந்தியில்;
விஶ்வாயமாந ரஜஸா — ஓரோர் துளியும் ஒரண்டமாகும் பெருமையையுடைய;
கமலேந — தாமரைப்பூவினாலும்; கமலாஸ்த்தந சந்தநேந — தாமரையாளின் தனச்சந்தனத்தால்;
வக்ஷஸ்த்தலே ச — திருமார்பிலும்; நிகமை — வேதங்களால்;
அங்க்ரியுக்மே (ச) — இரண்டு திருவடிகளிலும்; ஆமோதிதோபி — வாஸனையேறப்பெற்றதும்;
தவ — உன்னுடைய; மௌளிமாலாம் — சிரோமாலையை; நதேந — வணங்கிய;
ஶிரஸா — தலையால்; தத்தே — தரிக்கிறார்.

ஓரோர் துளியும் ஓரோருலகமாக மாறும் பெருமையை உடைய தாமரையாலுந்தியிலும்,
தாமரையாளின் தனச் சந்தனத்தால் திருமார்பிலும், வேதங்களால் கழலிணையிலும்,
கந்தம் கமழப் பெற்றும், வணங்கிய தலையால் உன் சிரோ மாலையை ப்ரபு தரிக்கிறார்.

தாயே—-கோதா—-
பகவானிடம் மூன்று மணங்கள் உள்ளன ;
பகவானின் திருநாபியில், கமலப் பூவின் மணம் ;அதில் உள்ள ஒவ்வொரு மகரந்தப் பொடியும், ஒவ்வொரு உலகம்;
அனந்த ப்ரஹ் மாண்டங்களையும் நாபியில் வைத்துள்ளான் என்பது ப்ரமாணமல்லவா !
அவனது திரு மார்பில் ,வக்ஷஸ்தலத்தில், மஹா லக்ஷ்மி இருப்பதாலே அவளது திருவடியில் சாத்திய செம்பஞ்சுக் குழம்பின் ரஸம்,
அவளது திருமார்பில் சாத்திய திவ்ய சந்தனத்தின் மணம் —
மூன்றாவது, அவனின் திருவடியின் மணம் . வேதங்களின் மணம் , திருவடிகளில் மணக்கிறது;
இரண்டு திருவடிகள்—தமிழ், வடமொழி வேதங்களின் மணம் என்றும் புகழ்ந்து உரைப்பர்.
இப்படி,மும்மணம் பொருந்திய மணவாளன்—-அழகிய மணவாளன்—இம்மணங்களைஎல்லாம் விட்டு,
நீ சூடிக் கொடுத்த மாலைகளின் மணத்தைத் திருமுடியாலே ஏற்றான் இங்கிதம் தெரிந்தவன் என்கிறார் ,ஸேவா ஸ்வாமி ..
அவனோ நெடுமால்; நீயோ சிறு பெண்;உனக்குத் தலை குனிந்து, உன் மாலையை ஏற்றுக் கொண்டானே —
உனக்குத் தலை வணங்கிய பெருமை உனக்கா ? அவனுக்கா?

அவதாரிகை

(1) பெருமாளை விபு என்றார் முன் சுலோகத்தில். இங்கும் விபுவென்கிறார்.
எல்லா உலகங்களுக்கும் நாயகன், எங்கும் பரந்துளன். அவன் உந்திக் கமலத்தின்
ஓரோர் துளியும் ஓரோர் விச்வமாகும் என்று காட்டி அவன் விபு என்று விளக்குகிறார்.

(2) வைஜயந்தியைக் காட்டிலும் கோதை சூட்டிய மாலையின் ஏற்றத்தைக் காட்டினார்.
இங்கே உந்திக் கமலத்தினிலும் ஏற்றத்தையும், கந்தத்வாரமான தாமரையாள் தனச்சந்தனத்திலும்
வேத வாஸனை ஏறிய திருவடித் தாமரைகளிலும் அதிக வாஸனையைப் பேசுகிறார்.

(3) உலகநாயகன் உன் மாலைக்கு வணங்கி அதை சிரஸால் தரிக்கிறார்.

விஶ்வாயமாந ரஜஸா —
தாமரைப் பூவுக்கு தூளிகளால் வாசனை. ஓரோர் துளி ஓரோர் அண்டமாய் விரிவதால்,
வாசனை எல்லா அண்டங்களிலும் பரவுவதைக் காட்டுகிறது. வாசனை எத்தனை தூரம் வீசுகிறதோ,
அது அதற்கு ஏற்றம். அகிலமான அண்டங்களும் பரவும் உந்திக் கமல வாசனையிலும் மேன்மை (வ்யதிரேகம்)

கமலேந —
தாமரையால்.
ஓரோர் துளி வாசனை ஓரோரண்டம் பரவியது.
எத்தனையோ தூளிகளை உடைய கமலத்தின் வாசனைப் பலப்பை என் சொல்வது?

நாபௌ (ஆமோதிதோபி) — உந்தியில் வாஸிக்கப்பட்டும்

கமலாஸ்த்தந சந்தநேந —
முன்பு கமலத்தின் வாசனை. இங்கே கமலையின் (தாமரையாளின்) தன வாசனை கலந்த சந்தன வாசனை.
அச்சந்தன வாசனையால், பெரிய பிராட்டியாரைத் திருமார்பில் சுமந்துகொண்டு இருவர் திருமார்பிலும் பூசிய
சந்தனத்தோடே கோதையைப் பாணிக்கரஹணம் செய்து கொள்ள அவள் மாலையை வணங்கிய முடியால் சுமக்கிறார்.
ஆண்டாள் வாசனைக்கு ஒப்பாவதற்காக ஸர்வகந்தன் கமலையின் கந்தத்தையும் சேர்த்துக் கொண்டார்.
பெரிய பிராட்டியாரிலும் மணமேற்றமென்று நேராகப் பேசுவதில்லை. கோதையும் அவளுக்குத தனம் போன்ற
அவயமாதலால் அவள் தனத்திலும் கோதைக்கு அதிக வாசனையைப் பேசினாலும் அதுவும்
கமலையின் ஓர் ஸ்தன விசேஷத்தின் வாசனைப் பெருமையேயாகுமென்று காட்ட ஸ்தனசந்தனமென்கிறார்.

வக்ஷஸ்தலே ச —
திருமார்பிலும், தாமரையாளும் எங்கும் பரந்த விபுஸ்வரூபம்.
அவள் வாசனையும் எல்லையற்றுப் பரவியது. (ஆமோதிதோபி — வாஸிக்கப் பெற்றும்)

நிகமை —
வேதங்களுக்கு நித்யாபூர்வமான வேலாதீதமான திவ்ய வாசனை உண்டு. வேதங்கள் அனந்தங்கள்.
ஆழ்வார் தமிழ்வேதத்தின் மகிழம் பூ வாசனை திருவடிகளில் கங்குலும் பகலும் நித்யகாலமும் ஒட்டிக் கொண்டிருக்கும்.
அனந்த வேதங்களின் எல்லையற்ற அபூர்வ வாசனைகள் திருவடிகளில் சேர்ந்துள. நிகமமென்று கடைத்தெருவுக்கும் பெயர்.
விவாஹ காலங்களில் கடைத்தெருவிலிருந்து உயர்ந்த வாசனைகளை வாங்கித் தரிப்பர்.
இந்த வேத வேத்யனான திவ்ய புருஷனுக்குக் கடைத்தெருவென்ற நிகமங்களின் மணம் பொருந்தாது.
வேதமென்னும் நிகமங்களின் வாசனைப்பரப்பே சிறந்தது. கடைத்தெரு வாசனை த்ரவ்யங்களின் மணம் க்ருதரிமம் (செயற்கை),
வேத வாசனை அக்ருத்ரிமம் (இயற்கை). இங்கே நிகமங்கள் தங்கள் சிரஸுகளோடு (வேதாந்தங்களோடு)
திருவடிகளைத் தொழுகின்றன. பன்மையினால் அனந்தமான வேதங்களைக் காட்டி வாசனையின் எல்லையற்ற பரப்பைக் காட்டுகிறது.

அங்க்ரியுக்மே ச —
திருவடி ஜோடியிலும். உந்திக் கமலத்தில் உலகங்களையெல்லாம் படைக்கும் காரணத் தன்மையைக் கண்டதும்,
அக்காரணம் லக்ஷ்மீபதியானதால், திருமார்பில் கண் சென்று சேர்த்தியை ஸேவித்து, திருவடிகளில் கண் சென்றது.

விபு: —
ப்ரபு. எங்கும் ஸ்வரூபத்தால் பரந்துளன். எங்கும் வாசனையாலும் பரந்துளன்.
“ஸர்வகந்த:” என்று நிகமங்களால் புகழ்பவன். ஸ்வயமாகவே எங்கும் பரந்த வாசனையை உடையவர்.

ஆமோதிதோபி —
வாஸனையேறியும். தூரம் சென்று பரவும் வாஸனையை ஆமோதம் என்பர்.

நதேந சிரஸா —
வணங்கின சிரஸால். நெடியோன் வணங்கித்தான் ஆண்டாள் திருக்கையால் மாலையை க்ரஹிக்கவேணும்.

தவ மௌளிமாலாம் தத்தே —
உன் சிரோமாலையைத் தரிக்கிறார்.

———

சூடாபதேந பரிக்ருஹ்ய தவோத்தரீயம்
மாலாமபி த்வதௌகைரதிவாஸ்ய தத்தாம் |
ப்ராயேண ரங்கபதிரேஷ பிபர்த்தி கோதே
ஸௌபாக்ய ஸம்பதபிஷேக மஹாதிகாரம் || (18)

கோதே — கோதாய்! ரங்கபதி: ஏஷ: — ரங்கபதியாகிய இவர்;
தவ உத்தரீயம் — உனது ஸ்தன உத்தரீயத்தையும்; த்வதௌகை: — உன்னுடைய குழற்கற்றைகளால்;
அதிவாஸ்ய — வாஸனையேற்றி; தத்தாம் — கொடுக்கப்பட்ட; மாலாமபி — மாலையையும்;
சூடாபதேந — கிரீடத்தின் ஸ்தானமான சிரஸால்; பரிக்ருஹ்ய — பெற்று (அணிந்து);
ஸௌபாக்யஸம்பதபிஷேக மஹாதிகாரம் — மங்களத்தன்மை, மங்களம் செய்யும் தன்மையாகிய
ஸௌபாக்ய ஸம்பத்தில் முடிசூடப் பெறும் அரிய யோக்யதையை;
ப்ராயேண — மிகவும்; பிபர்த்தி — தரிக்கிறார்.

கோதாய்! ரங்க ப்ரபுவாகிய இவர் உன் திருமார்ப்புக் கச்சையையும், நீ சூடி வாசனை ஏற்றிக் கொடுத்த
மாலையையும் சிரஸினால் க்ரஹித்து ஸௌபாக்ய ஸம்பத்தென்னும் ஐச்வர்யத்தில் முடிசூடப்பெறும்
அரும்பெரும் அதிகாரத்தை நன்றாய் தரிக்கிறார்.

கோதாப்பிராட்டியே….நீ சாத்திய பட்டு வஸ்த்ரத்தைத் தலையில் அணிந்து இருக்கிறான்;
உன் கூந்தலினால் வாசனை சேர்க்கப்பட்ட மாலையையும் மேலே திருமுடியில் அணிந்து இருக்கிறான்;
அதாவது உன் மேலாடையை ,அவன் திருமேனியின் முடியிலே கட்டி வைத்துக்கொண்டான்.
அவன் உடுத்துக் களைந்தது ,எங்களுக்குப் போக்யம்; நீ உடுத்திய மேலாடை அவனுக்குப் போக்யம்
ஆடையை அவனே எடுத்துக் கொண்டான்; மாலையை நீ அளித்தாய்; இரண்டும் அவன் திருமுடியிலே !
இத்தனை நாள் இல்லாத ஸௌபாக்யம் ,ரங்கபதிக்குக் கிடைத்தவுடன், புதியதோர் மிடுக்கும், செல்வமும், அதிகாரமும்
பெற்றுப் பிடிபடாத பெருமையில் இருக்கிறான்

அவதாரிகை

(1) கந்யை ரூபத்தை வரிப்பாளென்பர். திவ்ய தேசத்தெம்பெருமான்கள் அழகுக்கடல்கள்.
மற்ற எம்பெருமான்களிலும் அழகுமிக்கோன் என்று சொல்லக்கூடியதால் ஆண்டாளால் மணாளனாக வரிக்கப்பட்டதை
நேரில் தம் திருவாக்கால் பேசாமல் அதை வ்யஞ்ஜனம் செய்கிறார்.
ஆண்டாள் திருவாக்கினால், காளிதாஸர் அற்புதமாக ஈடுபட்டு வர்ணித்திருக்கும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட
அழகுக்கடலைக் காட்டிலும், அழகரென்று அஸாதாரணமாகத் திருநாமம் பெற்ற திருமாலிருஞ்சோலை மாமாயனிலும்,
திருவேங்கடத்துக் கார்முகிலிலும், ‘அரங்கம் தன்னுள் துயிலும் எங்கள் மாலே’ என்று வரிக்கப்படும் மஹா பாக்யத்தை வர்ணிக்கிறார்.

(2) பெருமாள் ஸந்நிதியில் சிரஸில் பரிவட்டம் கட்டி மாலை சேர்த்து சிரஸில் ஸ்ரீசடாரியாகிய கிரீடத்தை நமக்குச் சாற்றுவர்.
இங்கே ஆண்டாள் கோயிலில் பெருமாள் சிரஸில் ஆண்டாள் திருமார்ப்க்கச்சைப் பரிவட்டமும், மாலையும் சாற்றப்படுகிறது.
சிரஸிலிருந்து ஸர்வேச்வரத்தின் சிந்ஹமான கிரீடத்தைக் கழட்டிவிட்டு சிரஸில் இவ்விரண்டையும் பரிக்ரஹித்தார்.
இவை ஸௌபாக்ய ஸம்பதபிஷேகத்திற்குக் கிரீடமாயிற்று. ஸர்வேச்வரத் தன்மையைக் காட்டிலும் இது பெரிய அதிகாரம்.

தவ உத்தரீயம் —
உன் மேலாடையை; கோபிகள் கண்ணன் எழுந்தருளியதும் தங்கள் ஸ்தன குங்குமங்களால் முத்திரை போட்ட
உத்திரீயங்களால் ஆத்ம்பந்துவான காந்தனுக்கு ஆஸனம் ஸம்ர்ப்பிவித்தார்கள் என்றார் சுகர்.
கோதையின் ஸ்தன சந்தனம் கலந்த ஆடையை.

த்வதௌகை:அதிவாஸ்ய —
உன்னுடைய குழற்கற்றைகளால் மணமூட்டி; கூந்தல் முழுவதின் முழுவாஸனையையும் மாலையிலேற்றி.
பன்மையால் குழலில் ஓரிடமும் பாக்கியில்லாமல் சூடி என்று காட்டுகிறார்.

தத்தாம் — கொடுக்கப்பட்ட; மாலாமபி — மாலையையும்; சூடாபதேந — சிகைஸ்தானத்தால்;

பரிக்ருஹ்ய —
ஆதரத்துடன் க்ரஹித்து; “பரிக்ருஹ்ய” என்பது மணம்புரிதலையும் சொல்லும். விவாஹ ஸந்தர்ப்பத்தையும் விளக்குகிறது.

கோதே — கோதாய்! ரங்கபதியையும் கோதையையும் “ரங்கபதிரேஷ கோதே” என்று ஓரடியில் ஜோடி சேர்த்தார்.

ஏஷ ரங்கபதி —
இந்த ரங்கபதி; விவஸைப்ரகரணம் ஸ்வாமிக்கு எதிரில் ஸாக்ஷாத்காரமாகிறது.
‘பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழிலரங்கம் தன்னுள் துயிலும் எங்கள் மாலே’ என்று வரிக்கப்பட்ட இவர்.

ஸௌபாக்ய ஸம்பதபிஷேகமஹாதிகாரம் —
ஸர்வேச்வரத்வாதிகாரத்திலும் பெரியதோர் ஸௌபாக்யச்வைர்யாதிகாரம். ஸமரான பெருமாள்களிலும் மஹத்தான ஓரதிகாரம்.
தமயந்தி ஸ்வயம்வரத்தில் பல தேவர்கள் கூடினார்கள். இங்கே ஒரே தேவர் பல ரூபங்களோடு பலராகக் கூடினர்.
எம்பெருமான்கள் கூட்டத்திலும் ‘எங்கள் மாலே’ என்று மஹாவ்யாமோஹத்துடன் வரிக்கப்படும் ரஹாஸௌபாக்யம்.

ப்ராயேண —
அதிகமாக; பெருமாள்களுக்குள் தாரதம்யத்தை நான் அறுதியிடேன்.
உத்ப்ரேக்ஷையாகக் கவிபாடுவது மட்டுமே தேவிமார் பேசலாம்.

—————

துங்கைரக்ருத்ரிமகிர: ஸ்வயமுத்தமாங்கை:
யம் ஸர்வகந்த இதி ஸாதரமுத்வஹந்தி |
ஆமோதமந்யமதிகச்சதி மாலிகாபி:
ஸோபி த்வதீயகுடிலாளகவாஸிதாபி: || .19.

அக்ருத்ரிமகிர: — ஒருவராலும் செய்யப்படாத ச்ருதிகள்; துங்கை: — உயர்ந்த;
உத்தமாங்கை: — சிரஸுகளால் (உபநிஷத்துகளால்); யம் — எவனை;
ஸர்வகந்த இதி — எல்லா நற்கந்தங்களையுமுடையவனென்று; ஸாதரம் — ப்ரியத்தோடு;
உத்வஹந்தி — தாங்குகின்றனவோ; (விவாஹம் செய்துகொள்ளுகிறார்களோ, மாலையிடுகிறார்களோ,);
ஸோபி — அவனும்; த்வதீயகுடிலாள கவாஸிதாபி: — உன் சுருட்டைக் குழல்களால் மணமேற்றிய;
மாலிகாபி: — மாலைகளால்; ஆமோதம் அந்யம் — ஓர் புதிய விலக்ஷண வாஸனையை; அபிகச்சதி — பெறுகிறார் (அனுபவிக்கிறார்)

அபௌருஷேயமான ச்ருதிகள் தங்கள் உன்னதமான சிரஸுகளால் எவனை ‘ஸர்வகந்தன்’ என்று
தாங்குகின்றனவோ (மாலையிடுகின்றனவோ), அவனும் உன்னுடைய வக்ரமான குந்தளங்களால் மணமூட்டப்பட்ட
மாலைகளால் ஓர் ‘புதிய மணத்தை’ப் பெறுகிறான்.
(உன் மாலை மணத்தைப் பெற்று உன்னை மணம் புரிந்து திருமால் ஓர் புதுமணம் பெறுகிறார்.)

கோதா மாதா! அநாதியான வேதங்களின் சிரஸ் என்று சொல்லப்படும் உபநிஷத்துக்கள், பகவானை
“ஸர்வ கந்தமயன்” , “ஸர்வகந்தன் ‘ என்று கொண்டாடி தங்கள் சிரஸ்ஸில் தரிக்கின்றன.
அத்தகைய முழுதும் மணம் கமழும் எம்பெருமான், நீ, உனது சுருண்ட கூந்தலில் சாத்திக் கொண்டுப் பிறகு
சமர்ப்பிக்கப்பட்ட மாலைகளைத் தன சிரஸ்ஸில் வகித்து விலக்ஷ்ணமான , பரம போக்யமான , வாசனையை அடைகிறான்.

அவ: —
எல்லா ஸுகந்தங்களையுடையவனென்று ச்ருதிகள் உன் நாயகன் உத்தம கந்தத்தைப் புகழ்ந்து தங்கள் தலைகளால்
அந்த வாசனையோடு கூடினவனைச் சூடி வாஸனை பெறுகின்றன. ச்ருதிசூடைகள் ஸர்வகந்தனைச் சூடுகின்றன.
எவனை அனந்த ச்ருதிதேவிகள் சிரஸால் ஆதரத்தோடு சூடுகின்றனவோ! ஸர்வகந்தத்திற்குள்ளகப்படாத கந்தமுண்டோ? உண்டு.

துங்கை —
ச்ருதிதேவிகளின் சிரஸுகள் உபநிஷத்துக்கள். உபநிஷத்துக்களிலும் உன்னதமானதுமுண்டோ?
ஸர்வோத்தங்களை எட்டி அவனருகிலுள்ள உபநிஷத்துக்களும் ஸர்வோத்தங்கள்.

அக்ருர்த்திமகிர: —
ஒருவராலும் செய்யப்படாமல் தாமாக நித்யமாயுள்ள ச்ருதிகளான வாக்குதேவிகள்.
கோதை ஸ்துதியில், கோதை கல்யாணத்தில், எல்லாம் இயற்கையானதேயல்லாது, செயற்கைப் பொருளே இல்லை.

ஸ்வயம் —
ச்ருதிதேவிகள் ஸ்வயமாக பூர்ணபாவத்தோடு உன் மணாளனிடம் நாயகப்ரீதி செய்கிறார்கள்.

உத்தமாங்கை: —
ச்ருதிதேவிமாரான அபூர்வ பரிமளமுடைய ச்ருதிதேவிகளான பெண்கள் தங்கள் சிரஸில் ஸர்வகந்தனென்று
உன் மணாளனைச் சுமந்து அவன் பரிமளத்தைத் தங்கள் சிரஸில் ஏற்றுகிறார்கள்.

உத்தமாங்கை: — சிரஸுகளால், சுடர்மிகு சிரஸுகளால். யம் — யவனை

ஸர்வகந்த: இதி –
எல்லா ஸுகந்தங்களையுமுடையவனென்று. ‘ஸர்வகந்த:ஸர்வரஸ’ என்று சாண்டில்யோபநிஷத்து.
சாண்டில்யர் பக்திஸூத்ரங்களியற்றியவர். பஞ்சராத்ரத்தில் அர்ச்சைப் பெருமாள்களின் மஹிமையை விஸ்தரித்திருக்கிறார்.
ச்ருதியின் பதத்தையே இங்கே அமைக்கிறார்.

ஸாதரம் —
‘ஸர்வகந்த:’ என்பதை அந்த உபநிஷத்து வாக்கியம் திருப்பித் திருப்பிப் பேசுகிறது. அதனால் அந்த கந்தத்தில்
ச்ருதியின் ஆதரம் தோற்றுகிறது. ‘ஆதராதலோப:’ என்கிற ஸூத்ரத்தின் பாஷ்யத்தை இங்கே நினைக்கிறார்.
அப்யாஸத்தால் தாத்பர்யமதிகம்.

உத்வஹந்தி —
உத்வாஹமென்பது விவாஹத்தையும் சொல்லும். ச்ருதிதேவிகள் உன் மணாளனை மணம் புரிகிறார்கள்.
எனவே வாஸனை மாலையாகத் தலையில் சூடுகிறார்களோ

ஸோபி — அந்த ஸுகந்தக் களஞ்சியமான பெருமாளும்

அதீயகுடிலாளக வாஸிதாபி: —
உன்னுடைய சுருட்டைக் குழல்களால் மணமேற்றப்பட்ட. ஆர்ஜவமே வடிவுகொண்ட உனக்குக் குழல்களொன்று
தான் வக்ரகுணமுடையது. அதுவும் அழகு ஸ்வபாவத்தால். ‘ஸ்வபாவ வக்ராண்யௌகாநி தாஸாம்’ என்பர்.
மயிர்கள் சுருண்டிருப்பது போல வாசனையும் சுருண்டு சுருண்டு வீசுகிறது. (அகிற்புகை சுருள்வதுபோல)

மாலிகாபி — மாலைகளால். ‘மாலைகளே மாலிகைகள்’

ஸ்வார்தம் — நீ சூடினாலும், மாலைகள் தேவார்ஹமாக தேவபோக்யமான மாலைகளாகவே இருக்கின்றன.

அந்யம் — எல்லாமென்பதிலும் அகப்படாத ஓர் புதிய

ஆமோதம் — வாஸனையை

அதிகச்சதி — அடைகிறார், அநுபவிக்கிறார். பரிமளரங்கனிலும் வாசனா ரஸிகனுண்டோ? (19)

——————

தந்யே ஸமஸ்த ஜகதாம் பிதுருத்தமாங்கே
த்வந்மௌளிமால்ய பரஸம்பரணேன பூய:|
இந்தீவரஸ்ரஜமிவாதததி த்வதீயாந்யா
கேகராணி பஹுமாந விலோகிதாநி || .20.

த்வந்மௌளிமால்ய ஸம்பரணேந — உன் சிரோமாலைகளைத் தரிப்பதால்;
பூயோ தந்யே — மிகவும் (முன்னிலும்) தந்யமான (க்ருதார்த்தமான);
ஸமஸ்த ஜகதாம் பிது: — எல்லாவுலகுக்கும் தகப்பனான (பகவானுடைய);
உத்தமாங்கை: — சிரஸில்; த்வதீயாநி — உன்னுடையதான;
பஹுமான விலோகிதாநி — கௌரவத்தைக் காட்டும் த்ருஷ்டிகளான;
ஆகேகராணி — அழகிய அரைக்கண் பார்வைகள்; இந்தீவரஸ்ரஜம் — கருநெய்தல் மாலையை;
ஆதததீவ — செய்கின்றனபோலும்

உலகுக்கெல்லாம் தகப்பன் பகவான். அவனுடைய சிரஸு உலகுக்கெல்லாம் தந்யம்.
உன் மாலைகளைத் தரிப்பதால் அச் சிரஸு இன்னும் மிக்க தந்யமாயிற்று.
அதில் உன்னுடைய பஹுமானத்தோடு கூடிய ஆசை நிறைந்த அரைக்கண் பார்வைகள் கரு நெய்தல் மாலை போல சேர்ப்பிக்கின்றன.

ஸமஸ்த லோக நாயகனான —எல்லா உலகங்களுக்கும் பிதாவான, ரங்கநாதனின் உத்தம அங்கமானது,
நீ, உன் உத்தமாங்கத்தில் தரித்து சமர்ப்பித்த மாலையால் –அதைத் தரித்ததால்,தந்யமாயிற்று மேலும்,
நீ, அடங்காத காதலுடன் அரைக்கண்களால் , பார்வையை அவன்மீது வீசுகிறாய். அந்தப் பார்வை அலை அலையாக எழுந்து,
அவன் கழுத்தில் நீலோற் பல (கருநெய்தல்) மாலைபோல் அமைந்துள்ளது. தலை குனிந்து நீ நாணி நிற்கிறாய்;
ஆனால், அவனோ, நீ அவனைப் பார்க்கவேண்டும் என்கிற ஆசையில், நீ ஸமர்ப்பித்த எல்லாவற்றையும், திருமுடியில் ஏந்தி இருக்கிறான்

அவதாரிகை

(1) ரகுபதியின் திருவடிகள் எல்லோருக்கும் தந்யம் என்றார் காளிதாஸர். “தன்யை: பும்ஸரம் ரகுபதி பதை:”
ஸர்வலோக பிதாவான பெருமாள் சிரஸு எல்லா உலகங்களுக்கும் ஸ்வயம் தந்யமே.
உன் மாலைகளை யணிந்து அது இன்னும் அதிநயமாக தந்யமாகிறது.
வாஸனையின் அதிசயம் கிடைத்தது மட்டுமல்ல, தந்யையுமதிகமாயிற்று.
(2) ஆசையோடு தொடுத்த பூமாலைகள் ஸமர்ப்பிப்பது மட்டுமல்ல, பாமாலைகள் ஸமர்ப்பிப்பது மட்டுமல்ல,
ஓர் நாயனார் தன் கண்ணையே பிடுங்கித் தன் தேவனுக்கு அப்பினாரென்பர்.
அது பக்தியைக் காட்டினாலும் ஜுகுப்ஸா ரஸத்தையும் தரும்.
‘அஸிதேக்ஷணா’ என்று ஸீதைப் பிராட்டிக்கு ராகவனிலும் ஏற்றத்தைப் பணித்தார்,
இருவரையும் தராஸில் நிறுத்து அனுபவித்த ருஷி. “மையார் கருங்கண்ணிக் கமலமலர்மேற் செய்யாள்”.
தன் கருவிழியின் அரைக்கண் திருஷ்டிகளின் நீலகாந்திகளால் ஸ்நேஹமயமான கருநெய்தல் புஷ்பமாலையை
சிரஸில் ஸமர்ப்பிக்கின்றாள் போலும். ‘யாரிடம் மனத்திற்கும் கண்ணுக்கும் நிர்ப்பந்தமுளதோ, அவரை வரிப்பது ச்ரேயஸ்ஸு’ என்பர்.
மனமும் கண்ணும் இந்த வார் முடியில் மாலையாக பத்தமாயின. பெருமாள் தாமரைக் கண்கள் தாமரைப் பூமாலையை ஸமர்ப்பிக்கும்,
இவள் கண்கள் கருநெய்தல் மாலையை ஸமர்ப்பிக்கின்றன.
‘மீனப்பெருமானின் கண்கள் தாமரைக் காடுகளைச் சொரிந்தன’ என்ற அனுபவத்தை நினைக்கவும்.

தந்யே —
இதை முதலிலேயே பேசுவது அழகு. பெருமாள் தந்யர், பூயோதந்யர் (இன்னும் மேலும் மேலும் தந்யர்) என்கிறார்.
தந்யரென்று எத்தனை தரம் பேசினாலும் தகும். நம் பெருமாள் திருமுடிக்கு என்ன பாக்யம் கிடைத்தது!

ஸமஸ்தே ஜகதாம் —
உலகுக்கெல்லாம். இதை நடுவில் வைத்தது மிக அழகு. உலகுக்கெல்லாம் தந்யம், உலகுக்கெல்லாம் தகப்பன்.
கோதை விவாஹ விஷயத்தில் நம் ஸ்வாமியிடம் இத்துதியான பாமாலை கிடைத்ததும் பெருமாள் பாக்யம்.
அவரிடம் பிருதம் பெற்ற கவி ஸிம்ஹம்.

பிது: —
உலகுக்கெல்லாம் தகப்பனுடைய. ‘உலகுக்கோர் தனியப்பன் தன்னை’. இவரை மாலையிடுவதால் நீ
உலகுக்கெல்லாம் ஓர் தாயாகிறாய். விவாஹ க்ஷணத்திலேயே ஸர்வ லோகத்துக்கும் நீ தாயாகிறாய்.
“பத்துப்பிள்ளைகள் பெறுவாயாக” என்று பெரியோர் அதிசயமாக விவாஹத்தில் ஆசீர்வதிப்பர்.

உத்தமாங்கை: —
அவர் திருவடி உலகுக்கெல்லாம் தந்யம். அவர் திருமுடி ஸர்வேச்வர கிரீடம் தரிப்பது.
மௌளிபர்யாதம். அவரை ஸேவிப்பது மஹாபாக்யம்.

த்வ மௌளி மால்ய ஸம்பரணேன —
உன்னுடைய மாலைச்சுமையை வஹிப்பதால். மாலைச்சுமை, வாசனைச்சுமை, கோதையின் ஸ்நேகச்சுமை.
சுமை சுமப்பதால் தந்யமாவரோவென்று கேட்கலாம். இச்சுமை இன்பச்சுமை . இன்பமான வாசனைச்சுமை என்று பதில்.
‘பாரத்தைப் பரிப்பதால்’ என்னுமிடத்தில், ‘பாரத்தை அழகாக, இன்பமாக, புருஷார்த்தமாகச் சுமக்கிறார்’ என்பதைக் காட்ட
“ஸம்” என்று சேர்த்து “ஸம்பரணத்தால்” என்று பேசுவது மிகவழகு. ஸமன்வயஸூத்ரத்தில் “ஸம்” போல.

இந்தீவரஸ்ஜ —
கரு நெய்தல் பூ மாலையை. “இந்தீவரரக்ஷி” என்பர். கண்ணை இந்தீவரமாக (கருநெய்தல் புஷ்பமாக) ரூபணம் செய்வர்.
கண்களில் கருங்காந்திகள் நெய்தல் புஷ்பங்களாகின்றன. புஷ்பங்களுக்கு அன்பு ஸூத்ரமாகும்.
கண்கள் ஜ்யோதிஸ். ஸூர்யகிரணங்கள் கண்களுக்குள் புகுந்துள்ளனவென்பர்.
ஜ்யோதிர்மயமான கண்களிலிருந்து வரும் காந்திமாலை.

த்வதீயாநி — உன்னுடையவைகளான.

ஆகேகராணி — பாதி மூடிய கண்களால். அரைக்கண் திருஷ்டிகளான.

பஹுமானவிலோகிதாநி — பஹுமானத்தோடு கூடிய பார்வைகள்.

ஆதததீவ —
(நெய்தல் மாலையாக) ஆகின்றனபோல (மாலை ஸமர்ப்பிக்கின்றனபோல).
“பூய:” என்பதை இங்கேயும் சேர்த்து அந்வயிக்கலாம். பூமாலைகள் சிலவே. கடாக்ஷமாலைகள் ஏராளமானவை.
இப்படியும் அந்வயத்தைத் திருவுள்ளம் பற்றி 2 பாதிகளுக்கும் நடுவில் இம்மாலையை நடுநாயகமாக வைத்தது.

———–

ரங்கேச்வரஸ்ய தவ ச ப்ரணயாநுபந்தாத்
அந்யோந்ய மால்ய பரிவ்ருத்திமபிஷ்டுவந்த: |
வாசாலயந்தி வஸுதே ரஸிகாஸ் த்ரிலோகீம்
ந்யூநாதிகத்வ ஸமதாவிஷயைர் விவாதை: || .21.

வஸுதே — பூமிப்பிராட்டியே (விஷ்ணுபத்நியே); ரங்கேச்வரஸ்ய — ரங்கேச்வரனுக்கும்; தவ ச — உனக்கும்;
ப்ரணயாநுபந்தாத் — பரஸ்பர ஸ்நேஹ வெள்ளத்தால்;
அந்யோந்யமால்யபரிவ்ருத்திம் — ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றிக்கொள்வதை;
அபிஷ்டுவந்த: — நன்றாய்த் துதிப்பவரான; ரஸிகா — ரஸிகர்கள்;
ந்யூநாதிகத்வஸமதா விஷயை: – தாழ்ச்சி உயர்த்தி ஸமத்வமென்ற கக்ஷிகளைப் பேசும்;
விவாதை: — விவாதங்களால்; த்ரிலோகம் — மூவுலகையும்; வாசாலயந்தி — ஒரே சப்தமாகச் செய்கிறார்கள்.

அம்மா பூதேவியே! ரங்கேச்வரனுக்கும் உனக்கும் அந்யோந்ய ஸ்நேஹத்தால் அந்யோந்யம் மாலை மாற்றிக் கொள்ளும் போது
அவ்வழகைத் துதிப்பவரான ரஸிகப் பெரியோர்கள் தாழ்த்தி, உயர்த்தி, ஸமம் என்ற கக்ஷிகளைப் பற்றிய
விவாதங்களால் லோக த்ரயத்தையும் சப்திக்கச் செய்கிறார்கள். (அதிகப் பேச்சுக் காரர்களாக்குகிறார்கள்.)

பூமியில் அவதரித்த கோதா தேவியே…..நீயும் ரங்கநாதனும், மாலைகளை ஒருவருக்கொருவர் பரிமாறி,
மாலை மாற்றிக்கொள்ளும்போது, சூழ இருக்கும் ரஸிகர்கள் /பக்தர்கள்,
உங்களில் ஒருவரைத் தாழப் பேசியும், ஒருவரை உயர்த்திப் பேசியும், இருவரையும் சமமாகப் பேசியும்,
இந்த ஆரவாரம் , உலகம் முழுவதும் பரவி, எதிரொலிக்கச் செய்கிறார்கள்.

அவதாரிகை

(1) 14 முதல் 7 சுலோகங்களால் கோதை மாலையைப் புகழ்ந்தார். இந்த விவாஹத்தில் ‘மாலை’ கடகராகும்.
உலகத்திற்குப் புருஷகாரமாகும் ஆண்டாளுக்கும் புருஷகாரமாகிற பெருமையையுடையது.
மாலையை எத்தனை புகழ்ந்தாலும் தகும். விவாஹம் சப்த பதங்களால் ஏற்படும். 7 சுலோகங்களால் மாலா வர்ணனம்.
ஆண்டாள் மாலையை மட்டும் புகழ்ந்ததை 7 சுலோகங்களோடு நிறுத்தி, விவாஹத்திற்கு முக்யமான அங்கமான
மாலை மாற்றுதலை வர்ணித்து விவாஹத்தைப் பூர்த்தியானதாகக் காட்டுகிறார்.

(2) இதுவரையிலும் கோதை கன்யாப்பெண்ணாயிருந்தாள். இப்போது பத்நியாகிறாள்.
“அஸ்யேசாநா ஜகதோ விஷ்ணு பத்நீ” என்ற ச்ருதிக்கு விஷயமான பூமிப்பிராட்டியாகிறாள்.
இதைப்பற்றி இங்கே ‘வஸுதே’ என்று கூப்பிடுகிறாரென்ற ரஸத்தை அனுபவிக்கவேண்டும்.
‘ஈசானா’ என்ற பதத்திற்கு ஆண்டாள் என்று பொருள். இவரை, இந்த ரங்கேச்வரரை ஆண்டாள் — ஜகத: உலகத்தை ஆண்டாள்.

(3) விவாஹத்தில் கன்யையைச் சேர்ந்தவர் கன்யையை உயர்த்திப் பேசுவர். வரனைச் சேர்ந்தவர் வரனை உயர்த்திப் பேசுவர்.
உண்மையில் இருவரும் மஹிமையில் ஸமமென்று சொல்லக்கூடுமானாலும், அந்தந்த பக்ஷத்தார் அந்யோந்யம்
ஏற்றத் தாழ்ச்சியைப் பேசுவதும், இரைச்சல் போடுவதும், ரஸப் பேச்சுக்கள். அதெல்லாம் தத்துவமல்ல.;

ப்ரணயாநுபந்தாத்’, தங்கள் பரிவின் மிகுதியால், ரஸத்தின் மிகுதியால், ரஸிகர்களாகப் பேசுகிறார்கள்.

ரங்கேண்வரஸ்ய –அண்டர்கோன் அணியரங்கம் — புருஷஸூக்தத்தால் புகழப்படும் ஸர்வேச்வரனுக்கும்.

தவ ச — உனக்கும்

ப்ரணயாநுபந்தாத் —
ஸ்நேஹப் பெருக்கால். முன்பே பந்தம் (பதிபத்நீ ஸம்பந்தம்) உளதே.
இப்பொழுது கோதை என்ற கந்யையாக அவதரித்ததில் ஆசையோடு கோடித்த இந்த வதுவையில் ஸ்நேஹம் மிகப் பெருகியது.
இப்படி ஸ்நேஹப் பெருக்குக்காகவே அவதரித்து வதுவை கோடிப்பது.
அரங்கனும் இவரவதரிக்கப்போகும் திக்கை நோக்கிக்கொண்டே யிருந்தார்.
‘ப்ரணயாநுபந்தாத்’ என்பதை வாசாலந்தி’ என்பதற்குக் காரணமாகவும் அந்வயிக்கலாம்.
அப்படி உச்சாவசமாகத் தாழ்த்திப் பேசுவதும் ஸ்நேஹப்பெருக்கால்தான். நிந்திப்பதில் தாத்பர்யமேயில்லை.
ஸ்நேஹத்தால் மற்றொன்றைப் புகழ்வதில் மட்டும் தாத்பர்யம். நஹிநிந்தாந்யாயம்.

அந்யோந்யமால்யபரிவ்ருத்திம் —
ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொள்வதை. பெரிய பிராட்டியார் ஸ்தனசந்தனமாலையான
வைஜயந்தீ ஆண்டாளுக்கும், ஆண்டாள் மாலை திருவுடன் கூடிய பெருமாள் மார்புக்கும் சேருகிறது.
கழுத்திலுள்ள மாலைகளின் மாற்றம். பெருமாள் சிரஸிலேறிய மாலை இந்த மாற்றத்தில் வாராது.
அதன் ஏற்றத்தை மறுப்பாரொருவருமில்லை.

அபிஷ்டுவந்த: —
நன்றாய்த் துதிக்க ஆசைப்படுபவர். துதிக்கும் ஆசையால் அதிகமாகப் பேசுவது ஸஹஜமே.
ஒருவரைத் துதிக்கையில் அத்துதிக்காகவே மற்றொருவரைக் கொஞ்சம் தாழப்பேசுவதும் ஸஹஜமே.
இங்கே சத்ருப்ரத்யம் அழகு. ஹேதுப்பொருள். அதற்காகவே அடுத்தாற்போல் கிரியையும் வைக்கிறார்.

வாசாலயந்தி —
ஒரே சப்தகோஷமாக்குகிறார்கள். அதிகப் பேச்சுக்காரர்களாகிறார்கள்.
ஸத்யாய மிதபாஷிணம் என்றிருப்பவரையும் பஹுபாஷிகளாக அதிகப்ரஸங்கம் செய்யும்படி செய்துவிடுகிறார்கள்.
ஒரு கக்ஷியைக் குறைத்துப் பேசவே பேச்சு தடித்துவிடுகிறது.

வஸுதே —
அம்மா பூமிதேவியே! பூமி முழுவதையும் (மூவுலகையும்) இக்கலஹசப்தத்தால் உத்கோஷிக்கச் செய்கிறார்கள்.
அம்மா! நீ பூமிப்பிராட்டியானதால் பூமியிலுள்ளாரெல்லாரும் பெண்கக்ஷி. ஏகக் கூக்குரலாய் விடுகிறது.

ரஸிகா: — ரஸப்பேச்சுக்களம்மா, நிந்தைபோன்றதும் துதிகளேயம்மா. உன் நாயகனை இளப்பமாக்காது.
ஆகையால் நீ தாபப்படவிடமில்லை. உன்னையும் இளப்பம் செய்யாது.
ஆகையால் உன் நாயகனுக்கும் தாபத்திற்கு இடமில்லை. எல்லாம் ஒரே ஸ்நேஹரஸம்.
ஸ்நேஹப்பெருக்கு. உண்மையில் விரஸமான எண்ணமே ஒருவருக்குமில்லை.

த்ரிலோகீம் —
த்ரிபுவனகமனமான, த்ரிலோகேச்வரரான. தம்பதிகளின் விவாஹத்தில் மூவுலக ஜனங்களும் பேசுகிறார்கள்.
பெண்கக்ஷியோர், பிள்ளை கக்ஷியோர், மத்யஸ்தர் ஆகிய மூவரையும் முறையே
தாழ்ச்சி, உயர்த்தி, ஸமம் என்ற மூன்று கக்ஷிகளையும் பேசச் செய்கிறார்கள். மூவுலகையும் சப்தமயமாக்குகிறார்கள்..

ந்யூநாதிகத்வஸமதாவிஷயை —
ஒருவர் தாழ்த்தி, ஒருவர் உயர்த்தி. இருவரும் ஸமம் என்ற மூன்று கக்ஷிகளான.

விவாதை: —
விவாதங்களாலே. விவாஹமும், விவாதமும் ஸமர்களுக்குத்தான் சோபிக்குமென்பர்.
இந்த விவாஹத்தில் வதூவரர்கள் ஸமராயிருந்துதீர வேண்டுமாகையால் விவாதப்படுபவர்களும் ஸமர்களாகி
ஸமத்வக் கக்ஷியையே ஸித்தாந்தப் படுத்துகிறார்கள். .
முன் கக்ஷிகள் இரண்டும் பூர்வபக்ஷம். ஸமத்வம் ஸித்தாந்தம்.
துல்யகுணமான வதூவரர்களை ஒன்று சேர்த்து (ஸமமாகச் சேர்த்து) ப்ரஜாபதி நீண்டகாலமான
அபவாதத்தை நீக்கிக்கொண்டார் என்று சாகுந்தலம்.
‘துல்ய’ என்ற அடைமொழியோடு த்ருப்தியில்லாமல் ‘ஸமமாகச்சேர்த்து’ என்ற க்ரியாபதத்தையும் கவி வைத்தார்.
“மைச்சேர்த்தி அரிது அரிது.” (21)

———–

துர்வாதளப்ரதிமயா தவ தேஹகாந்த்யா:
கோரோசனாருசிரயா ச ருசேந்திராயா: |
ஆஸீதநுஜ்ஜித சிகாவனகண்டசோபம்
மாங்கள்யதம் ப்ரணமதாம் மதுவைரிகாத்ரம் || .22.

மதுவைரிகாத்ரம் — வேதத்தைத் திருடிய மதுவென்னும் அஸுரனுக்குச் சத்ருவான மதுஸூதனனுடைய திருமேனியானது;
துர்வாதளப்ரதிமயா — அருகம்புல்லைப்போல் பசுமையான;
தவ தேஹகாந்த்யா — உன் திருமேனியொளியாலும்;
கோரோசனாருசிரயா — கோரோசனையைப்போல் பொன்னிறமான; இந்த்ராயா — லக்ஷ்மியின்;
ருவா ச — காந்தியாலும்; அநுஜ்ஜிதசிகாவள கண்டசோபம் –மயில் கழுத்தின் சோபையை விடாததாகி;
ப்ரணமதாம் — அடிபணிபவர்க்கு; மாங்கள்யதம் ஆஸீத் — மங்களத்தை அளிப்பதாயிற்று.

மதுஸூதனனுடைய திருமேனியானது அருகம்புல்லைப் போலப் பசுமையான உன் திருமேனியின் பச்சைக் காந்தியாலும்,
கோரோசனையைப் போன்ற லக்ஷ்மீ தேவியின் பொன்னிறத்தாலும், மயிலின் கழுத்தின் சோபையை விடாமல்
வஹித்துக் கொண்டு அடிபணிபவருக்கெல்லாம் மங்களத்தை அளிக்கிறது.

ஹே…கோதாப் பிராட்டியே–
பெரிய பிராட்டியின் நிறம் பொன் நிறம்; உன்னுடைய நிறம் அருகம்புல் பச்சை; பகவானின் நிறம் நீலம் ;
பகவானை சேவிப்பவர்கள், திருமேனியில் ,மயில் கழுத்து நிறம் —-அதாவது, பொன் நிறம், அருகம்புல் நிறம் மற்றும் நீல நிறம் சேர்ந்து—
மயில் கழுத்துச் சாயல் —திருமேனியில் விளங்கிட, மங்கலத்தைக் கொடுப்பதாக அமைந்துள்ளது.
திருக்கல்யாணோத்ஸவம் முடிந்து ,நீங்கள் ஏக ஆஸனத்தில் எழுந்தருளி இருக்கும் பாங்கை வெளிப்படுத்துகிறது.

அவதாரிகை

மாலைமாற்றி விவாஹம் நடந்து, கோதையும் பெரியபிராட்டியாரோடு விஷ்ணுபத்நியானாள்.
பிராட்டிமாரிருவரும் உபய நாச்சிமாராய் இருபக்கமுமிருக்கிறார்கள்.
அவர்கள் காந்திகள் பெருமாள் கரிய திருமேனியில் பரவுகின்றன. கோதையின் நிறம் அருகம்புல்லைப் போன்றது.
பெரியபிராட்டியார் நிறம் பொன்நிறம், கோரோசனையைப் போன்றது.
இருபக்கமும் இருவித காந்திகளும் பெருமாள் நீலத்திருமேனியில் இடைவிடாமல் பரவுகின்றன.
நீலகண்டமென்னும் மயிலின் கழுத்தைப்போல பெருமாள் திருமேனி முழுவதும் ஆகின்றது.
விவாஹத்தில் தம்பதிகளைப் பார்வதீபரமேச்வர மிதுனத்திற்கு ஒப்பிடுவார். அவர்களுடம்புமொன்றாயுளது.
காடோவகூடமாகில் பிரிவுக்கே ப்ரஸக்தியில்லாமல் இருக்கும்.
உபய நாச்சிமார் திருமேனிக் காந்திகளும் பெருமாள் திருமேனியும் ஒன்றாகச் சேர்ந்து பிரியாச் சேர்த்தியாகின்றன.
நீலகண்டரை மூன்றாவது அடியிலும், கௌரியை இரண்டாமடியிலும் ஒருவாறு ஸூசிக்கிறார்.
‘மஹேச்வரம் பர்வதராஜ புத்ரீ’ என்று பாஞ்சாலீஸ்வயம்வரத்தில் த்ரௌபதீ அர்ஜுனனை மாலையிட்டதை வ்யாஸர் வர்ணித்தார்.
‘அநுஜ்ஜித’ என்று நீங்காச் சேர்த்தியை ஸூசிக்கிறார்.
நீலகண்டருக்குக் கழுத்து மட்டும் நீலம்; மயிலுக்குக் கழுத்து இப்படி விசித்ர வர்ணமாயிருக்கும்.
பெருமாள் திருமேனி முழுதும் தேவிமார் காந்திகளால் மயில் கழுத்துக்கொப்பாகிறது.
சிவசப்தம் மங்களத்தைச் சொல்லும். நீலகண்டசோபையை உடைய திருமேனி மங்களமாகிறது என்று ஓர்வித வேடிக்கை.
ஈச்வரர் இத்தம்பதிகளுக்குப் பௌத்திரர். அவர் புத்ரர்களான அருகம்புல்லை விரும்பும் பிள்ளையாரும்,
மயில்வாஹனரான கார்த்திகேயரும் ப்ரபௌத்திரர்கள்.
‘சதுர்முகர் ஈச்வரர் முதலியவராகிய புத்திர பௌத்திரர்களோடு கூடிய ஸீதா ஸமேதரான ராமனென்னும்
க்ருஹமேதிக்கு நமஸ்காரம்’ என்று ரகுவீரமங்கள கத்யம் ஸாதித்ததை இங்கும் நினைக்கவேணும்.
‘சிவனொடு பிரமன் வண்திருமடந்தை சேர் திருவாக மெவ்வாவியீரும்’

தூர்வாதளப்ரதிமயா —
அருகம்புல்லைப் போலொத்த பசுமையான. இது மங்களத்ரவ்யம். விக்நேச்வரப்ரியம், விஷ்வக்ஸேநாராதன ஸூசகம்.

தவ தேஹகாந்த்யா — உன் திருமேனி காந்தியால்;

கோரோசனாருசிரயா — கோரோசனை வர்ணமான

இந்திராயா:ருசாச —
லக்ஷ்மீதேவியின் காந்தியாலும்; கோதையும் ஓர் பக்கத்தில் பத்நியாகக்கூட நிற்பதில் லக்ஷ்மீதேவியின் ருசியையும் ஸூசிக்கிறார்.
இந்த ஸந்தோஷத்திற்கு இத்தனை காலமாய்க் கோடித்துக் கொண்டிருந்ததால் விவாஹ க்ஷணத்திலேயே
தன்னோடு ஜோடியாக மற்றோர் பக்கத்தில் நிறுத்தி வைத்து சந்தோஷித்தான்.
ரோசனா, ருசோரா, ருசா என்று மூன்றுதரம் ருசியைக் காட்டும் சப்தங்கள். ருசிம் — ராதி, ருசியைக் கொடுக்கிறது, ருசிரம்.

ஆஸீத் — ஆயிற்று.

அநுஜ்ஜித சிகாவளகண்டசோபம் — ‘சிகாவள’ என்பது மயில், நீலகண்டம். அதன் கழுத்தின் சோபையை விடாமல்.

மாங்கள்யதம் —
திருமேனியே மங்களத்தையளிக்கிறது. பெருமாள் திருமேனியே ஆச்ரிதருக்கு மாங்கல்யத்தைக் கொடுக்கும்.
பார்வதீச்வரர்கள் மாங்கல்யத்தை, தாம்பத்யத்தை, மங்களத்தைக் கொடுப்பதென்பதும்
பெருமாள் அவர்களுக்குள்ளிருந்து கொடுப்பதால்தான்.
பெருமாள் திருமேனியுடன் உபயநாச்சிமார் திருமேனிக்காந்திகள் பிரியாமல் சேர்ந்ததும்,
அவர்கள் திருமேனிகள் கூடிய சுபாச்ரயம் ஸகல மங்களங்களையும் அளிக்க யோக்யமாயிற்று.
இத்தம்பதிகள் பிரியாமல் சேர்ந்தே ஸகல ச்ரேயஸ்ஸுகளையும் அளிப்பவர்.
‘மாங்கல்யம் தந்துநாநேந’ என்ற ச்லோகத்தையும் ஸூசிக்கிறார். மாங்கல்யத்தைக் கொடுக்கும் நூலென்று பொருளையும் ஸூசிக்கிறார்.

மதுவைரிகாத்ரம் —
இதனால் சில அழகிய பொருள்களின் வ்யஞ்ஜனம்.
(1) வேதங்களாகிய கண்களையிழந்த ப்ரஹ்மாவுக்கு வேதங்களைத் திருப்பிக் கொணர்ந்து
அவருக்கு ஞானப்ரதானம் பண்ணி மயர்வை நீக்கிய அவதாரம். புத்ரனுக்கும் லோகத்திற்கும் வேதமளித்த அவதாரம்.
இதனால் ப்ரஹ்மாவின் நினைப்பையும் இங்கே சேர்த்து பௌத்திர ப்ரபௌத்திரர்களோடு (பேரர், கொள்ளுப்பேரரோடு)
புத்திரரையும் சேர்த்துத் தம்பதிகளை க்ருஹமேதிகளாக அநுஸந்திப்பது.
‘புத்திரரைப் பெற்று’ என்று ஆஸீர்வதிப்பர். ப்ரபௌத்திரர் பர்யந்தம் இங்கே காட்சி.

(2) சரணாகதி ச்லோகமடங்கிய கீதை பாடினதும் மதுசூதனன் திருவாக்கு.
கண்ணில்லாத புத்திரர்களான நமக்கு கீதோபநிஷத்தை அருளிய திருமேனி.
வெகுகாலமாக நஷ்டமான யோகத்தைத் திருப்பிக்கொண்டுவந்து உபதேசித்தது.
கீதாசார்யன் திருமேனி சரணாகதியை உபதேசித்தது போதுமோ? அநுஷ்டானமில்லையாயின் அப்ரமாணமென்பரே!
பிராட்டிமார் சேர்த்தியில் காடோபகூடமான தசையில் விசிஷ்டத்திலன்றோ பரத்தை சமர்ப்பிக்கவேணும்!
கோதையாகிய பக்கபலமும் சேரவே பெருமாள் தப்பியோட வழியில்லை.
பெரிய பிராட்டியாருக்கு ப்ரஜா ரக்ஷணத்தில் பார்ச்வபலம் (பக்கபலம்) சேர்ந்துவிட்டதும்
அவனுடைய ருசிக்கு ஸந்தோஷத்திற்கு அளவில்லை.

(3) நாம் ஜ்ஞானவிரோதிகள், அஜ்ஞானக் களஞ்சியங்கள். மதுவென்னும் அஸுரனைச் சீறியதுபோல,
நம்மையும் சீறுவது உசிதம். இது ‘வைரி’ என்பதால் ஸூசிக்கப் படுகிறது.
பிராட்டிமார் இருபக்கமும் இருக்கவே அவர்கள் காருண்யப்ரபை படியவே அச்சீற்றம் பரந்துபோகிறது.

(4) இம் மூவர் சேர்த்தியில் வணங்கி ஆதி ராஜ்யத்தை அநுபவித்தார்களென்று அடுத்த 23ம் சுலோகத்திலும்,
ஆத்மபரம் ஸமர்ப்பிப்பதற்காகப் புருஷகாரத்தை 24லிலும்,
பெருமாள் ஸ்வாதந்த்ரியத்தைக் குறைத்து அநந்தாபராதங்களைப் போக்குவதை 25லிலும்,
‘ப்ரபத்ய’ என்று ப்ரபத்தியை 26லிலும் பேசிப் போவதையும் கவனிக்க.

(5) ப்ரஹ்மருத்திராதிகளைத் தம் புத்திர பௌத்திரர்களாகத் தம் திருமேனியிலே சேர்த்துக் கொண்டிருப்பதாக,
விசிஷ்டமாகப் பெருமாளை அனுபவிப்பார் மயர்வற மதிநலமருளப் பெற்றவர்.
‘புரமொரு மூன்றெறித்தமரர்க்கு மறிவியந்தரனயனென வுலகழித்தமைத்தனனே’ என்று துடக்கத்திலும்,
கடைப்பத்தில் ‘சடையானைப்பாகத்து வைத்தான் தன்பாதம் பணிந்தேனே’ என்றும் பாடி,
கடைத்திருவாய்மொழியிலும் ‘முனியே நான்முகனே முக்கண்ணப்பா’ என்று பாடியுள்ளது.
‘உலகுக்கோர் தனியப்பனை’ என்பதை ‘ஸமஸ்த ஜகதாம் பிது:’ என்று பாடி அதே பாசுரத்தில்
‘பிரமனப்பனை யுருத்திரனப்பனை முனிவர்க்குரியவப்பனை யமரரப்பனை’ என்று முன்னுள்ளதை இங்கே அனுஸரிக்கிறார்.
எல்லோர்க்கும் அப்பன் என்றதால் ‘தமியனேன் பெரியவப்பனே’ என்றபடி எனக்கும் பிதாவென்று கருத்து..
என் தகப்பன் விவாஹம், என் தாய் விவாஹம். என் தந்தை விவாஹத்தில் நான் மங்களம் பாடுகிறேன்.
இதென்ன பாக்யம்! என்ன ஆச்சர்யம்! ‘ஸர்வான் தேவாந் நமஸ்யந்தி ராமஸ்யார்த்தே யசஸ்விந:’ என்றபடி
இந்தத் தம்பதிகளின் சேர்த்தியின் மங்களத்திற்காக எல்லாத் தேவரையும் நினைக்கலாம். கால் கட்டலாம்,
பிராட்டி அலங்கரிக்கும் திருமேனியில் புத்ரபௌத்ராதிகளான அவர்கட்கும் பாகமுண்டு.

(6) ‘மதுவைரி’ என்றதால் மறையை அனுக்ரஹித்த உபகாரத்தைக் காட்டுகிறது.
விஷ்வக்ஸேநரான ஆழ்வார் மூலமாகவும் இப்பொழுது பத்நியாகச் சேர்ந்த கோதை மூலமாகவும்
தமிழ்மறைகளை அநுக்ரஹிக்கும் உபகாரமும் இங்கே ஸூசிக்கப்படுகிறது.
ஸம்ஸ்க்ருத வேதங்களைக் கொணர்ந்தது, வேதம் தமிழ் செய்த,
தெளியாத மறைநிலங்கள் தெளியச்செய்த இத்தமிழ்மறைகளால் ஸபலமாயிற்று.

————-

அர்ச்யம் ஸமர்ச்ய நியமைர் நிகமப்ரஸூனை:
நாதம் த்வயா கமலயா ச ஸமேயிவாம்ஸம் |
மாதச்சிரம் நிரவிசந் நிஜமாதிராஜ்யம்
மாந்யா மநுப்ரப்ருதயோபி மஹீக்ஷிதஸ்தே || .23.

மாத: — தாயே!; மாந்யா — பூஜ்யர்களான; தே — அந்த; மஹீக்ஷித: — அரசர்களான;
மநுப்ரப்ருதயோபி — மநு முதலியவரும்; த்வயா — உன்னோடும்; கமலயாச — தாமரையாளோடும்;
ஸமேயிவாம்ஸம் — (ஸமேதரான) கூடிய; தாநம் — நாதனை; அர்ச்யம் — அர்ச்சிக்க யோக்யரை;
நியமை: — நியம நிஷ்டைகளோடு; நிகமப்ரஸூனை: — மறைகளான புஷ்பங்களைக் கொண்டு;
ஸமர்ச்ய — நன்றாக அர்ச்சித்து; சேர்த்தியில் சேர்த்து அர்ச்சித்து; நிஜம் — தங்கள் ஸ்வந்தமான;
ஆதிராஜ்யம் — உலகுக்கு ஆதிபத்யத்தை; சிரம் — நீடூழி காலம்; நிரசிஶந் — அநுபவித்தார்கள்.

அம்மா! பூஜ்யர்களான அந்த மஹா மஹிமையையுடைய மநுமாந்தாதா முதலியவர்களும் உன்னோடும்
தாமரையாளோடும் கூடிய அர்ச்சிக்க யோக்யமான நாதனை நியமங்களில் நிஷ்டராய்,
வேதமந்த்ர புஷ்பங்களால் நன்றாகச் சேர்த்து அர்ச்சித்துத் தங்கள் ஆதிராஜ்யத்தை நீடூழிகாலம் அநுபவித்தார்கள்.

கோதாப் பிராட்டியே….நீ, ரங்கநாதனை அடைந்த பிறகு, அவன் உன்னோடும், எப்போதும் பிரியேன் என்று சொன்ன
பெரிய பிராட்டியோடும் கூடி நின்று, அனைவர்க்கும் நாதன் ஆனான்.
எல்லாரும் ஆராதிக்கும்படி, அர்ச்சாவிபவத்தில் , எழுந்தருளி இருக்கிறான். இக்ஷ்வாகு வம்ஸத்தைச் சேர்ந்த,
மனு, மாந்தாதா முதலிய ராஜாக்கள்–மகான்கள், நியமத்தொடு வேதங்களாகிய மந்திர புஷ்பங்களினால், உன்னை அர்ச்சித்து,
பெரியதான ராஜ்யத்தை அடைந்தார்கள். காலத்தினால், ரங்கநாதன் முன்னும், நீ பின்னும் எண்ண வேண்டாம்.
பூமியின் உருவில் நீ என்றும் ரங்கநாதனுடன் இருப்பவளே!

அவதாரிகை

தமிழ்மறை பாடிய கோதையோடும் லக்ஷ்மீதந்த்ரம் பாடிய லக்ஷ்மீயோடும் கூடிய (வேதங்களை மீட்டு உபதேசித்து கீதை பாடிய)
மதுஸூதனன் திருமேனியைப் பாதம் பணிபவருக்கு மங்களங்கள் கிடைக்குமென்றார்.
இச்சேர்த்தியைப் பூஜித்து மநு முதலிய ரவிகுலத்தரசர் தங்கள் ராஜ்யத்தை இவர்களுக்கு சேஷமாக அநுபவித்தார்கள்.
மதுஸூதனன் அக்குல கூடஸ்தரான விஸ்வானென்னும் ஸூர்யனுக்கு மோக்ஷோபாயத்தை உபதேசித்து,
இப்படி உபதேச பரம்பரை வந்ததையும் ‘மநு முதலியவர்கள் அர்ச்சித்தார்கள்’ என்பதால் காட்டுகிறார்.
ஸூர்யகுல பரம்பரை, நம் குரு பரம்பரை, இச்சேர்த்தியின் சிஷ்ய பரம்பரை.
திவ்ய மிதுனச் சேர்த்தியை மங்களகாமர்கள் ஆத்மஜ்ஞானரான ஆசார்யராக அர்ச்சிப்பது உசிதம்.
மநு முதலியவரும் அப்பரம்பரையில் சேர்ந்தவர்கள். மநுகுலமஹீபாலர் உபயநாச்சிமாரோடு கூடிய இப்பெருமாளை அர்ச்சித்தவர்.
மைதிலீரமண காத்ரத்தால் பெருமாளும் பிராட்டியும் தாமாகிய இச்சேர்த்தியை அர்ச்சித்து ராஜ்யமாண்டார்கள்.
ஈச்வரமிதுனத்திற்கும் அர்ச்யமும் மங்களமளிப்பதுமான சேர்த்தி இது. ‘அங்கம்சேரும் பூமகள் மண்மகளாய்மகள்.’

அர்ச்யம் —
முன் ச்லோகத்தில் சொன்ன விசிஷ்டம் அர்ச்சிக்கத் தக்கது. அச்சேர்த்தியில் செய்யும் அர்ச்சனை பலத்தையளிக்கும்.
சேர்த்தியை முன் ச்லோகத்தில் ஸேவித்ததும் உடனே அர்ச்சனை செய்வது உசிதம்.
அர்ச்சனை செய்வதை உடனே பேசுகிறார். முதலில் பேசுகிறார்.

ஸமர்ச்யம் —
நன்றாயர்ச்சித்து. ‘ஸம்’ என்பதற்கு ‘ஒன்று சேர்த்து’ என்றும் பொருள்.
ஒன்று சேர்த்து அர்ச்சிப்பதே சீர். தம்பதி பூஜை.

நியமை: —
பக்தியோகத்திற்குச் சக்தர்களாதலால் ஸகல வைதிக நியமங்களோடு கூட பக்தியை அனுஷ்டிக்கிறார்கள்.,
தயை, க்ஷமை, சாந்தி முதலிய ஆத்மகுண நியமங்களான புஷ்பங்களாலும்.

நிகமப்ரஸூனை: —
வேதமந்த்ர புஷ்பங்களால். நிகம கல்ப வ்ருக்ஷத்தின் மந்த்ரங்களான புஷ்பங்களால்.
வேதங்களிலிருந்து பிறந்த (வேதங்கள் சொல்லும்)எல்லா நியமங்களோடும் என்றும் கொள்ளலாம்.
லகுவான சரணாகதியைக் காட்டிலும் வேற்றுமை. ‘நிகமம்’ என்னும் கடைவீதி புஷ்பங்களிலும் வைஜாத்யம்.
நிகமமென்னும் வேத புஷ்பங்களோடு மற்ற உயர்ந்த புஷ்பங்களும் சேரட்டும்.

நாதம் —
திருநாமத்தில் ஏக தேசத்தைச் சொன்னாலும் முழுப் பெயராகும். ‘ரங்கநாதன்’ என்பதை ‘நாதன்’ என்கிறார்.
தேவிமாருக்கு நாதனென்பதையும் காட்டவேணும்.
‘யாரை அர்ச்சித்து சுபத்தை, மங்களத்தை மானவர்கள் அடையக்கூடும்’ என்று தர்ம்புத்திரர் பீஷ்மரைக் கேட்டதற்கு
‘புண்டரீகாக்ஷனை ஸ்தவங்களால் பக்தியோடு ஸதா காலமும் அர்ச்சிப்பதிலும் மிக்க தர்மமில்லை.
மங்களங்களுக்கெல்லாம் மங்களமும், தைவதங்களுக்கெல்லாம் தைவதமுமான எல்லா உலகத் தாதையான
ஜகந்நாதனை ஸஹஸ்ரநாமார்ச்சனை செய்வது நலம்’ என்று உபதேசித்தார்.
அந்த ஜகந்நாதனை ‘நாதன்’ என்கிறார். அவர் மங்களமங்களர், தேவதேவனென்றார் முன் ச்லோகத்தில்.
அர்ச்யம்’ என்று பீஷ்மர் உபதேசித்த ஸஹஸ்ரநாமார்ச்சனையை இங்கே முதலிலேயே பேசுகிறார். ‘

ஸ்ரீச: ஸ்ரீத: ஸ்ரீநிவாஸ:’ என்று அக்கிழவரும்,
‘தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்குமுணர்வு’ என்ற உறுதியையே கொண்டவர்.
‘ஸ்ரீசன் — ஸ்ரீயை அளிப்பவன்’, ஸ்ரீத: என்பதற்கு ‘மாங்கள்யத:’ என்பது பொருள்.
இத்தனையும் ஸ்வாமி நெஞ்சிலோடுகிறது. ரஸிகர் மனதின் ஸம்வாதமே ப்ரமாணம்.
‘மானவர்கள்’ என்றார் தர்மர். மானவர்க்கும் தாதையான மநு முதலியவர் இப்படி அர்ச்சித்து
மங்களமடைந்ததை இங்கே பேசுகிறார். ‘மனோர்ஜாதா: மானவா’ நாதம் — ரங்கநாதனை ,
ஜகந்நாதனை, உங்கள் ப்ராணநாதனை.

த்வயா கமலயா ச —
உங்களிருவரோடு. ‘உங்களிருவராலும் நாதன் ஜகந்நாதனாகிறான்’ என்னும் ஓர் அந்வயம் சேர்க்க வேணும்.
‘ச்ரத்தயா தேவோ தேவத்வமச்னுதே’, ‘ஹ்ரீஶ்ச தே லக்ஷ்மீஶ்ச பத்ந்யௌ’.
வேதம் ஓதிய க்ரமத்தை அனுஸரித்து பூமியாகிய கோதையை முன்னே வைத்தார்.
‘கமலயா’ என்று ‘தாமரையாள் கேள்வன் ஒருவனையே’ என்னும் ஆழ்வார் ஸம்ப்ரதாயத்தைக் காட்டுகிறார்.

ஸமேதிவாம்ஸம் —
‘ஸம்’ என்பது ஏகீகாரம் செய்யும் (ஒன்றாக்கும்) பொருளுடையது. தேவிமாரோடு கூடி ஒன்றேயாகி. விசிஷ்டம் ஒன்றே.
இந்த ப்ரயோகம் வைதிகமானது. மந்த்ர புஷ்பங்களைக்கொண்டு அர்ச்சிக்கும் சேர்த்தியைச்
சாந்தஸ ப்ரயோகத்தாலேயே பேசுவதும் அழகு. ப்ரகரணத்திற்கேற்றது.
பாலகாண்டம் முடிவில் விவாஹமானதும், ஸீதை கூடிய ராமனை ‘தயா ஸமேயிவாந்’ என்று ருஷி வர்ணித்ததை
இங்கே ‘த்வயா ஸமேயிவாந்’ என்று பேசுகிறார். இன்னுமொரு ரஸம் உண்டு.
‘கதா ஸீமேஷ்யாமி பரதேந த்வயா ச’ என்று லக்ஷ்மணனைப் பார்த்துப் பேசினவிடத்திற்போல
பிரியாமல் கூடவே யிருக்கும் லக்ஷ்மியும் கோதையோடு கூடச் சேருங்கால் ஓர் புதுச் சேர்த்தி போலாகின்றாள் என்பது ரஸம்.
கோதை கல்யாணம் லக்ஷ்மீ கல்யாணமுமாகின்றது.

மாத: —
எல்லா ப்ராணிகளுக்கும் அவ்ய்யமான பிதா. ;
நாம் மாறி மாறிப் பலபிறப்பும் பிறந்தாலும் அவன் மாறாத பிதா’.
அப்பிதாவுக்குப் பத்நியான நீ எல்லோருக்கும் தாய் என்பதில் என்ன தடை?

சிரம் —
தீர்க்க காலம். உங்கள் சேர்த்தியை அர்ச்சித்துக் கொண்டேயிருந்தால்
இம்மண்ணுலகும் பொன்னுலகே. அயோத்திமாநகரும் திருவிண்ணகரான அயோத்தியே.

நிரசிஶந் — ஸம்பூர்ணமாய் அநுபவித்தார்கள்.

நிஜம் ஆதிராஜ்யம் —
அவர்கள் ராஜ்யம் ஸர்வாதிகமான அகண்ட பூமண்டலாதி ராஜ்யம். அது அவர்களுக்கு ஸொந்தமாயினும்,
“ஸகலம் தத்தி தவைவ மாதவ”,
‘உன் சேஷித்வ விபவத்திற்கு வெளிப்பட்டதைக் கண்ணெடுத்தும் பாரேன்’ என்றபடி
உங்களுக்கு சேஷமாக அனுபவித்து இன்புற்றார்கள்.

மாந்யா மநு ப்ரப்ருதயோபி மஹீக்ஷிதஸ்தே —
பூஜ்யர்களான மனு, இக்ஷ்வாகு முதலியவர்கள் பூஜித்தார்கள்.
மநு ப்ரப்ருதிபிரமாந்யை:’ வைவஸ்வதோ மநுர்நாம மாநநீயோ மநீஷிணாம்!
ஆஸீத் மஹீக்ஷிதாமாத்ய:’ ப்ரணவஶ்சந்தஸாமிவ’ என்ற காளிதாஸ ச்லோகங்கள் இங்கே ஸ்வாமி நெஞ்சிலோடுவது திண்ணம்.
அதே பதங்களை அமைத்துள்ளது.
செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோயில் என்னுமதும் காளிதாஸர் த்ருஷ்டாந்தப் பணிப்புக்குச் சேரும்.
ரங்கம் ப்ரணவம். ‘மனு சொன்னதெல்லாம் ஔஷதம்’ என்றது வேதம்.
மனு ஆசிரியர் இச்சேர்த்தியைத் தாம் அர்ச்சித்து அவ்வாசாரத்தில் நம்மை நிலைநாட்டுகிறார்.
‘ஆசாரே ஸ்தாபயதி ஸ்வயம் ஆசரதே’ .23.

——–

ஆர்த்ராபராதிநி ஜநேப்யபிரக்ஷணார்த்தம்
ரங்கேச்வரஸ்ய ரமயா விநிவேத்யமானே |
பார்ச்வே பரத்ர பவதீ யதி தஸ்ய நஸ்யாத்
ப்ராயேண தேவி வதனம் பரிவர்த்திதம் ஸ்யாத் ||–24-

தேவி — கோதாதேவியே!; ஆர்த்ராபராதிநி — பச்சையான அபராதத்தைச் செய்து ஈரங்காயாத;
ஜநே — ஜனத்தை; அபிரக்ஷணார்த்தம் — நன்றாய் உஜ்ஜீவிப்பதற்காக; ரமயா — லக்ஷ்மீதேவியால்;
ரங்கேச்வரஸ்ய – ரங்கநாதனுக்கு; விநிவேத்யமாந்யே — சிபாரிசு செய்யும்போது; தஸ்ய – அவருடைய;
பரத்ர பார்ச்வ – மற்றோர் பக்கத்தில்; பவதீ — நீர்; யதி ந ஸ்யாத் — இல்லாமற்போனால்;
வதனம் — அவருடைய திருமுகம்; ப்ராயேண – அனேகமாக (மிகவும்); பரிவர்த்திதம் ஸ்யாத் — திரும்பியேயிருக்கும்.

பிழைப்பதையே ஸ்வபாவமாகவுடைய நாங்கள் குற்றங்கள் இன்னமுலராமல் ஈரமாய்ப் புதியதாயிருக்கையிலேயே,
உன்னைப் புருஷகாரமாகப் பணிந்ததும், எங்களை ரங்கேச்வரனுக்குச் சிபாரிசு செய்யும் போது,
அவருக்கு மற்றொரு பக்கத்தில் நீ இல்லாமல் போனால், அவர் முகம் (அந்தப் பக்கத்தில்) திரும்பியே இருக்கும்.

ஹே…தேவி.. நீ எங்களைக் காப்பாற்றுகிறாய் …ஜீவன், கணக்கிலாப் பாவங்களைச் செய்து, பெரிய பாவியாகி கஷ்டப்படுகிறான்.
அவன் செய்த பாவங்கள் , அவனைத் துன்புறுத்தும்போதே, அவனைக் காப்பாற்றுங்கள் என்று பெரிய பிராட்டி
எம்பெருமானின் வலதுபுறம் நின்று விண்ணப்பிக்கிறாள் . அது தகாத வேண்டுகோளாகப் படுகிறது;
எதிரே திருமுக மண்டலத்தைத் திருப்புகிறான்; பகவானுக்கு எதிரே அபராதிகள்; அவர்களைப் பார்க்க மனம் இசையவில்லை ;
இடது பக்கமாக முகத்தைத் திருப்புகிறான்; ஹே…கோதா.. நீ அங்கே நின்று , நீயும் அவனை வேண்டுகிறாய்;நீ,
அங்கு , நித்ய வாஸம் செய்வதால்தான் —பகவானுக்கு இடப்புறம் நின்று பகவானை வேண்டுவதால் தான்,
அந்தக் கார்யம் அனுகூலமாகிறது; நாங்கள் ,பகவானின் க்ருபையைப் பெற்றோம்.

அவதாரிகை

(1) மனு முதலியவர்கள் சக்தர்கள். பக்தியோக நிஷ்டர்கள். வேதநியமங்களையெல்லாம் அனுஷ்டித்து
உபாஸனத்தை சமதமதிருணபூர்வணராய் அனுஷ்டித்தார்கள். மாந்யரான அவர்களுக்கு இச்சேர்த்தி உபாஸ்யம்.
அசக்தர்களான பேதை ஜனங்களுக்கு இச்சேர்த்தி ப்ரபத்தவ்யம். பெரியபிராட்டியாரே புருஷகாரமாவதற்காக
அத்தாயைச் சரணம் புகுந்ததும், அன்று செய்த புதுக்குற்றங்களையும் கவனியாது பெருமாளுக்குச் சிபாரிசு செய்கிறாள்.
‘மாதர் மைதிலி’ என்ற ச்லோகத்தில் ‘ஆர்த்ராபாரதா:’ என்று ராக்ஷஸிகளைப் பட்டர் வர்ணித்தது நெஞ்சிலோடுகிறது.

(2) தேவிமாரிருவரோடும் ஒன்றாகக் கூடினார் என்றார் முன் ச்லோகத்தில்.
ஒருவனுமொருத்தியும் ஒன்றுகூடி ஒற்றிருக்கலாம்.. பார்யாத்வயமெப்படி ஸர்வகாலமும் ஒன்றுகூடி ஒன்றாயிருப்பது.
அனேக ஸபத்நிகள் வெவ்வேறு திக்குகளில் க்ருஹபதியை இழுத்து ஹிம்ஸிப்பதுபோல’ என்றாரே சுகர்.
பெருமாள் இரண்டு பத்நிகளிடமும் ப்ரியமாக இருக்கட்டும். பத்நிகளொருவருக்கு ஒருவர் கலஹப்படாரோ?
பத்நியால் பெரியபிராட்டியாருக்குச் சிறந்த பக்கபல மேற்படுகிறதென்று அழகாக வர்ணிக்கிறார்.
அற்புதமான ரஸங்களுள்ளதைக் காட்டுவோம்.

ஆர்த்ராபராதிநி அபி —
நெஞ்சில் ஈரமில்லை. ஈரச்சொற்களான ஆழ்வார்கள் தேன்மொழிகளை ரஸிப்பதில்லை.
நெஞ்சு சுஷ்கசுஷ்கம். மனோவாக் காயங்களால் புதிதுபுதிதாய்க் குற்றங்களைச் செய்த வண்ணமாயுள்ளோம்.
அபராதம் செய்த கை ஈரமுலறுவதன் முன்னமே அம்மா காப்பாற்றென்கிறோம். அப்படிக்கொத்த நம்மையும்.

ஜநே — அசோகவனத்து ராக்ஷஸிகளைப்போன்ற ஜனமாயினும்

அபிரக்ஷணாரத்த்ம் —
நன்றாக அபிமுகமாக்கி ஸர்வோத்கிருஷ்டமான ரக்ஷணத்தைச் செய்யவேண்டுமென்று.
ஆபிமுக்யத்தை அளித்து ஸ்வஜனமாக்கிக் கொள்ளவேண்டும் என்று.
‘ஸ்வஜநயஸி’ (ஸ்வஜனமாக்குகிறாய்) என்ற பட்டரது அனுபவத்தை நினைக்கிறார்.
அபராதி ஜனத்தை விரோதி ஜனத்தை ஸ்வஜனமாக்க என்பது கருத்து.
இப்படி விரோதி ஜனத்தினிடமும் அபிமுகமாகி ரக்ஷிக்க ப்ரார்த்திப்பதில், தனக்கே பதியின் ஆபிமுக்யத்தை
இழக்கக்கூடிய அபாயம் வருவதாயிருக்கிறதென்று இந்த ச்லோகத்தில் அழகாகக் காட்டப்படுகிறது.
என் பக்கத்திலிருந்து திருமுகத்தைத் திருப்பி மறுபுறத்தில் அபிமுகமானாலும் ஆகட்டும்.
எப்படியாவது குழந்தை விஷயத்தில் அபிமுகரானால் போதும். ஸபத்நியிடம் அபிமுகமாகத் திரும்பினாலும் திரும்பட்டும்.
நான் குழந்தையைக் காப்பாற்றச் சிபாரிசு செய்தே தீருவேன்.

ரங்கேச்வரஸ்ய –
ப்ரணவ ப்ரதிபாத்யமான ஸர்வேச்வரன். ஈச்வரனென்றால் ஸம்ஸார தந்த்ரத்தை வஹிப்பதில்
தண்ட தத்வ நியமத்தைக் காட்டுகிறது. பத்நீ வல்லபைதான். ஆயினும் ஸாம்யநிலையை விடலாமோ?
வைஷம்யத்தையும் பக்ஷபாதத்தையும் ஈச்வரன் பெண்டாட்டி பேச்சிற்காகக் கைப்பற்றலாமோ?
இந்த க்ஷணத்திலேயே செய்த ஈரமான (புது) அபராதத்தோடே என்னெதிரிலிருக்கிற
விரோதி ஜனத்தை ஈச்வரனான நான் தண்டிக்கவேண்டாவோ?

ரமயா —
ஈச்வரனாலென்ன? பத்நியின் போகமயக்குகளில் மயங்குபவன்தான். ரமையின் வால்லப்யத்தை மறுக்க முடியுமோ?
இவள் முகத்தைப் பார்த்துக்கொண்டு அங்குள்ள இங்கிதபராதீனனாய் ஜகத் ஸ்ருஷ்டி, மோக்ஷம் முதலியதைச் செய்பவனாயிற்றே!

விநிவேத்யமாநே —
பலமாகச் சிபாரிசு செய்யப்படும் பொழுது. ‘வி’ என்பது விசேஷமாக, அனேகமாக, வற்புறுத்தி என்பதைச் சொல்லுகிறது.
அபராதம் பச்சை, கொடிய விரோதிஜனம், இவனை அங்கீகரிப்பது கஷ்டமென்று சிபாரிசு மிக்க பலமாகச் செய்யப் படுகிறது.
‘நிவேதயத மாம்’ என்று விபீஷணாழ்வார் போலன்று. ‘விநிவேதனம்’ வேணும்.

பார்ச்வே பரத்ர –
மற்றோர் பக்கத்தில். எதிர்ப்பக்கத்தில். கோதைப்பிராட்டி பெரியபிராட்டியாருக்கு பலமான
பக்க பலமாகிறாளென்பதைக் காட்டவேண்டும். தன் பக்கத்தில் இல்லாமல் எதிர்ப்பக்கத்தில், அப்பக்கத்தில்.
அப்பாலிருந்தும், உயர்ந்த பக்கபலமாகிறாளென்பது அழகு. ‘பார்ச்வ பலம் — பக்கபலம் ‘ என்பர்.
எதிர்ப்பக்கம் தன் பக்கமாயிற்று. ஸபத்நிகள் ஒரு பக்கமாயிருப்பரோ? கிழக்கும் மேற்குமாயிருப்பர், இருக்கிறார்கள்.
எழுந்தருளியிருக்கிற பக்கம் வேறாயினும், இருவருக்கும் ஒரே பக்ஷமென்பது அழகு.
இரண்டு தாய்களுக்கும் இந்த துஷ்டப்பையல் பெற்ற பிள்ளையாகிறான்.
அவனை மன்னித்து அவனைச் சேர்த்துக்கொள்ளுவது இருவருக்கும் ஒரே பக்ஷமே.
கோதை எதிர்ப்பக்கத்தில் இருப்பதும், பெரியபிராட்டியாரிடம் பெருமாள் ஆபிமுக்யம் தவறக்கூடாதென்பதற்கும்,
தானிருக்கும் பக்கம் திரும்பாமல், லக்ஷ்மீதேவியையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்றே எதிர்ப்பக்கத்திலிருப்பது.
லக்ஷ்மியோடு ஒரே பார்ச்வத்திலிருந்தால் லக்ஷ்மிக்கு பக்கபலமேற்படாது.

பவதீ — இப்படி அற்புதமான ஸபத்நீஸ்நேஹத்தையுடைய நீ பூஜ்யை என்பதில் என்ன தடை?

யதி தத்ர நஸ்யாத் —
அந்த இடத்தில், அந்த சந்தர்ப்பத்தில். ‘தத்ர’ அவ்விடத்தில் என்றும், ‘பரத்ர’ மற்றோர் இடத்தில் என்றும்,
இருக்குமிடத்தில் சப்தமாத்ரத்தால் விரோதம் காட்டுவது ஓரழகு. இருப்பது அப்புறம், கருத்து இப்புறம்.

ப்ராயேண – அனேகமாய்.

தேவி —
விளையாடும் சீலமுடையவளே! ரங்கமெனும் நாடகசாலையில் ஈச்வரன் முன் அவன்
ஸ்வாதந்த்ரியத்தைக் குலைத்து, தேவிமாரிருவரும் என்னமாய் நடிக்கிறீர்களம்மா!

வதனம் —
‘மோக்ஷநிஸ்யாமி’ ‘உன் பரத்தை ஏற்போம்’ என்று பேசவேண்டிய முகமாயிற்றே!
முகத்தைத் திருப்பிக்கொண்டால் அனுக்ரஹப் பேச்சுக்கிடமேது? ப்ரணவரங்கத்தில் ‘ஓம்’ என்று பேசவேண்டுமே!

பரிவர்த்திதம் ஸ்யாத் —
அப்புறத்தில், பரத்ர, பார்ச்வத்தில் திரும்பியிருக்கும். அப்புறம் காலியாயிருந்தால், ஸபத்நியாகிய நீ இல்லாவிடில்,
அப்புறமே திரும்பியிருக்கும். குழந்தைக்கு சிபாரிசு செய்து அவனைக் காப்பாற்ற நீ எதிர்ப்பக்கத்தில் இருந்து
இப்படி லக்ஷ்மீதேவிக்குப் பக்கபலமாகிறாய். உன் பக்கம் திரும்பினால் லக்ஷ்மியின் கருணைக்குக்
குறையாமலோ மேற்பட்டோ உன் கருணை இருக்கிறது. அங்கீகரிக்க ஏன் இத்தனை தாமதமென்று உன் முகஜாடை.
பெருமாள் உன் பக்கம் திரும்பினால், லக்ஷ்மி சொன்னதைக் கேட்காவிடில் உன் முகத்தை அப்புறம் திருப்ப நேரும்.
நீ லக்ஷ்மீதேவியையே பார்த்துக்கொண்டு அவள் கக்ஷியிலிருக்கிறாய். … 24…

—————

சுலோகம் 25

கோதே குணைரபநயந் ப்ரணதாபராதாந்
ப்ருக்ஷேப ஏவ தவ போகரஸாநுகூல:|
கர்மாநுபத்தபலதா நரதஸ்ய பர்த்து:
ஸ்வாதந்த்ரிய துர்விஷஹமர்மபிதாநிதாநம் || .25.

கோதே — கோதாய்! போகரஸாநுகூல: — இன்பரஸத்திற்கு அனுகூலமான;
தவ – உன்னுடைய” ப்ருக்ஷேப ஏவ – புருவத்தின் அசைப்பே;
குணை: — மனோஹரமான உன் விலாஸகுணங்களாலே;
ப்ரணதாபராதாந் — வணங்கினவர்களின் அபராதங்களை; அபநயந் — போக்கிக்கொண்டு;
கர்மாநுபத்த பலதாநரதஸ்ய – செய்த கர்மங்களுக்குத் தக்க பலன்களை அளிப்பதிலே ஆஸக்தியுடைய;
பர்த்து: — நாயகனுடைய; ஸ்வாதந்த்ரியதுர்விஷஹமர்மபிதாநிதாநம் —
ஈச்வரஸ்வாதந்த்ரியமென்னும் பொறுக்கக் கூடாத மர்மஸ்தானப் பிளப்பிற்கு முதற்காரணமாகும்.

கோதாய் இன்பரஸத்திற்கு அனுகூலமான உன் புருவ அசைப்பே அதன் குணங்களால் ஆச்ரிதரின்
குற்றங்களைப் போக்கி, செய்த வினைகளுக்குத் தக்க பலனைக் கொடுக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும்
ஈச்வரனுடைய ஸ்வாதந்த்ரியத்தின் மர்மச் சேதத்திற்கு முதற்காரணமாகும்.

கோதே….. தாயே….நீ புருவத்தை நெறிக்கும்போது ,அது உனக்கும் உன் நாதனுக்கும் ,பெரியதொரு போகத்தைக் கொடுக்கிறது.
அவன் புருவ நெறிப்பு , உலகங்களை நடுங்கச் செய்கிறது; எங்களின் பாபங்களைப் பொறுக்கமாட்டேன் என்கிறான்;
அந்த சமயத்தில், உனது புருவ நெறிப்பு ,அவனுடைய புருவ நெறிப்பை அடக்கி விடுகிறது.
அவன் உனக்கு நாதன்; உலகங்களுக்கு எல்லாம் நாதன்; தன்னைக் குறை சொல்லா வண்ணம் காத்துக் கொள்கிறான்;
அதற்காக அவன் ஏற்படுத்திக்கொண்ட சங்கல்பம், அவரவர் கர்மாக்களுக்கான பலனை அளிப்பது;
இதில் அவன் ஸ்வதந்த்ரனாக இருந்தாலும்,உன் புருவ நெறிப்பு , அவனை அடக்கி விடுகிறது. என்ன பாக்யம், எங்களுக்கு!

அவதாரிகை

‘இடது பக்கத்திலேயே அவன் முகம் திரும்பி இருந்துவிடும்’ என்று முன் ச்லோகத்தில் சாதித்தார்.
அதனால் கோதை அங்கேயிருப்பதால், அங்கே திரும்புவதில்லையோ? கோதையை அபிமுகமாகப் பார்த்து
அவள் அழகிலும் முகவிலாஸங்களிலும் ரஸிப்பதில்லையோ என்கிற சங்கை வரக்கூடும். அந்த சங்கையைப் போக்குகிறார்.
உங்கள் சேர்த்தியில் வந்து ப்ரணாமம் பண்ணுகிறவர்களுக்கு தம்பதிச்சேர்த்தி அவஸரத்திற்குத் தக்கபடி
தம்பதிகள் பலதானம் செய்யவேண்டும். பலதானம் செய்யும்பொழுது தானம் வாங்குகிறவர்களின்
குற்றங்களைப் பரிசீலனம் செய்யமாட்டார். சேர்த்தி சந்தோஷத்திற்கேற்றபடி அர்த்திகளுக்கெல்லாம் பலதானம் செய்வர்.
வதுவைச் சேர்ந்த அவள் அநுபந்திகள் குற்றமுடையாராயினும், வதுவின் குணங்களையும்
அவள் அநுபந்திகளென்பதையும் நோக்கி அவர்களுக்கு உயர்ந்த பலன்களைத் தானம் செய்வர்.

கோதே — கோதாய்! குணை:

(தவ) –உன்னுடைய குணங்களால்;
‘செய்த பாபங்களைத் தர்மத்தால் (ஸுக்ருதங்களால், குணங்களால்) போக்கலாம்’ என்று வேதமோதுகிறது.
உன்னை ஆச்ரயித்தவர்களின் பாபங்களை அவர்கள் தங்கள் குணங்களால் போக்காவிடினும்
உன்னுடைய குணங்களால் நீ போக்குகிறாய். பெருமாள் உபேக்ஷிக்கும்படி செய்கிறாய்.
உன் ஆச்ரிதர் குணங்களானாலென்ன, உன் குணங்களானாலென்ன !

ப்ரணாதாபராதாந் — வணங்கி ஆச்ரயித்தவர்களின் அபராதங்களை.

அபநயந் — போக்கிக்கொண்டு; ‘அபநுததி’ என்ற ச்ருதிபதத்தில் உபஸர்க்கத்தை அனுஸரிக்கிறார்.

தவ ப்ரூக்ஷேப ஏவ –
உன் புருவத்தின் அழகிய அசைப்பே. பெருமாளுடைய துர்விஷஹமான நிக்ரஹாஸ்த்ரத்திற்கு ப்ரணதனுடைய
அஞ்ஜலி ஓர் ப்ரத்யஸ்த்ரமாகுமென்பர். அது ப்ரத்யஸ்த்ரமாவதற்கு நிதானம் (மூல காரணம்) மன்மதனுடைய
தனுஸின் வடிவான உன்னுடைய புருவத்தின் வளைத்தலே. அந்த வளைத்தல் அஸ்த்ரக்ஷேபம் போன்றது.
பெருமாள் நிக்ரஹாஸ்த்ரத்திற்கு ப்ரத்யஸ்த்ரமாக காமன் வில்போன்ற புருவத்திலிருந்து எய்தப்படுவது
ஆச்ரிதரின் அஞ்ஜலியென்னும் ப்ரத்யஸ்த்ரம், உன்னுடைய இந்த ப்ரத்யஸ்த்ரம் வலிமை பெற்றது.

போகரஸாநுகூல: —
உன்னுடைய புருவத்தின் அழகிய அசைப்புகளின் விநோதம். போகரஸத்திற்கு அநுகூலம்.
லீலாரஸம், போகரஸம் என்று இரண்டுவித ரஸங்கள். பரமபதமென்னும் போகவிபூதிக்குப் புதிய ப்ரணதர்கள் சேர்ந்தால்,
அந்த ரஸம் இன்னும் வ்ருத்தியாகும். புதிதுபுதிதாகக் குழந்தைகள் வீடுவந்து சேரச்சேர அதிசயம் அதிகம். இன்பமதிகம்.
கர்மத்திற்குத் தக்கபடி தண்டனையளிப்பது லீலாரஸத்திற்கு அநுகூலம். ஒரு வணக்கை வ்யாஜமாகக்கொண்டு
முன் செய்த கொடுவினைகளை மன்னித்து வீடு சேர்த்துக்கொள்வது போகரஸத்திற்கு அநுகூலம் என்பதும் இங்கே ரஸம்.
லீலாரஸத்திற்கு எதிர்த்தட்டு போகரஸம். அவர் தண்டனை பலன்களைக்கொடுத்து லீலாரஸத்தைத் தேடுகிறார்.
‘அது வேண்டாம், என் மனதை அநுஸரிப்பது, என் ப்ரூக்ஷேபவிலாஸபோக ரஸத்தை மட்டுமன்று
போக விபூதிரஸத்தையும் பெருக்கும்’ என்று நீ ஸூசிப்பிக்கிறாய்.

கர்மாநுபத்தபலதாநரதஸ்ய –
எந்த ரதி வேணும். அபராதிகளின் கர்மங்களுக்குத் தக்கபடி தண்டனை பலத்தை அளிப்பதில் ரதி வேணுமா?
இந்த உத்தமவதுவின் விலாஸ போகரதி வேணுமா என்ற விகல்பத்தை ஸூசிக்கின்றது ‘ரத’ என்கிற சப்தம்.
தம்பதிகள் சேர்த்தியில் வதூவரர்கள் வதுவின் அநுபந்திகளுக்குப் பலதானம் செய்யாரோ?
பலதானம் செய்யும் தம்பதிகள் உயர்ந்த பலன்களைத் தானம் செய்வரோ?
அல்லது தண்டனைகளை (ப்ரஹாரங்களை)த் தானம் செய்வரோ? ததீயாராதனை தடியாராதனை ஆகலாமோ?
கர்மானுபத்தர்கள் எனபது பெருமாள் வாதம். ‘மதனுபத்தர்கள்’ என் திறத்தார் என்று கோதை எதிர்வாதம்.
எந்த அனபந்தம் உயர்த்தி? கர்மானுபந்தமா? உன் அனுபந்தமா? என்று விகல்பம்.
இங்கே ‘அனுபத்த’, ‘பலதானம்’, ‘ரத’ என்கிற பதங்களால் இந்த ரஸங்கள் ஸூசிதமென்பது ரஸிகமனோவேத்யம்.

பர்த்து: —
உன்னுடைய பர்த்தாவினுடைய. உலகத்தின் பர்த்தாவினுடைய உலகத்தை ரக்ஷணத்தால்
மரிக்க வேண்டியவனல்லவோ. ஈச்வரனாயினும் பர்த்தாவுமாவான், ரக்ஷகனுமாவான்.

ஸ்வாதந்த்ரிய துர்விஷஹமர்மபிதாநிதாநம் —
ஐச்வர்யம் என்பது ஸ்வாதந்த்ரியம். ஓரிடத்தி லிருந்தும் அதற்கு பங்கம் வ்யாஹதி வரக்கூடாது.
ஐச்வர்யம்தானே ஈச்வரனுக்கு உயிர்நிலையானது. அந்த உயிர்நிலையில் அம்பே க்ஷேபம் செய்து சேதித்தால்
ஈச்வர தத்வத்திற்கே அழிவு வருமே என்று சங்கை. ‘ஸ்வச்சந்தம் விததாம்யஹம்’ என் சந்தப்படிக்கு,
என் இஷ்டப்படிக்கு நான் பலன்களை விதிக்கிறேன் என்கிறார் பெருமாள். அது ஈச்வர லக்ஷணமான ஐச்வர்யம்.
இப்படி ‘ஸ்வச்சந்தப்படி’ ஸ்வதந்த்ரமாக பலமளிப்பது மேன்மையா?
அல்லது உன் சந்தப்படி (பரச்சந்தப்படி) அநுவர்த்திப்பதென்கிற தாக்ஷிண்யம் மேன்மையா? என்று விகல்பம்.
“நாயகர்களுக்குத் தாக்ஷிண்யம் குலவ்ரதம்” என்பது மாளவிகாக்நிமித்ரத்தில் அக்நிமித்ரர் பேச்சு.
கோதையின் சந்தத்தை அநுவர்த்திக்காமற்போனால் நாயகர்களென்னும் பர்த்தாக்களுக்கு உயிர்நிலையான தாக்ஷிண்யம் குலையும்.
ப்ரணதர்களான அடியாரை பரிக்கவேண்டியது பர்த்தாவென்னும் யஜமானனுடைய கடமை.
“சரணாகதரக்ஷணம்” ஓர் உயிர்நிலை. மன்னித்து ரக்ஷிப்பதில் இந்த உயிர்நிலைகள் ரக்ஷிக்கப்படுகின்றன.

—–

ரங்கே தடித்குணவதோ ரமையைவ கோதே
க்ருஷ்ணாம்புதஸ்ய கடிதாம் க்ருபயா ஸுவ்ருஷ்ட்யா |
தௌர்கத்யதுர்விஷவிநாச ஸுதாஅந்தீம் த்வாம்
ஸந்த: ப்ரபத்ய சமயந்த்யசிரேண தாபாந் || .26.

கோதே– கோதாய்! ரங்கே — ஸ்ரீரங்கத்திலுள்ள; ரமையைவ – பெரியபிராட்டியாராலே;
தடித்குணவத: — மின்னற்கொடியோடுகூடிய; க்ருஷ்ணாம்புதஸ்ய – கருமேகத்தினுடைய;
க்ருபயா — க்ருபையென்னும்; ஸுவ்ருஷ்ட்யா — நல்ல வர்ஷத்தால்; கடிதாம் — கடனை செய்யப்பட்ட;
தௌர்கத்யதுர்விஷவிநாசஸுதாநதீம் — ஸம்ஸாரமென்னும் துர்கதியாகிய கொடிய விஷத்தைப் போக்கும் அம்ருதநதியான;
த்வாம் — உன்னை (உன் திருமொழியை, உன் நீராட்ட ஸரஸ்வதியை; ப்ரபத்ய – அவகாஹித்து (சரணம் பற்றி) ;
ஸந்த: — ஸத்துக்கள்; அசிரேண – சீக்கிரத்தில்; தாபாந் — எல்லாத் தாபங்களையும்; சம்யந்தி — போக்கிக் கொள்கிறார்கள்.

கோதாதேவியே! பெரியோர்கள் ஸ்ரீரங்கத்தில் உள்ளதும், லக்ஷ்மியாகிற மின்னற்கொடியோடு கூடினதுமான
கருத்த மேகத்தினுடைய க்ருபையாகிற நல்ல மழையாலே உண்டாக்கப்பட்டிருக்கிற கெட்ட விஷத்தைப்
போக்கடிப்பதில் அமுதநதியான உன்னைச் சரணம் அடைந்து உடனே (ஸம்ஸார) தாபங்களைப் போக்கடிக்கின்றனர்.

ஸ்ரீ ஆண்டாள் அமுத நதி; எப்படிஎன்றால், திருவரங்கச் செல்வன் ஒரு கார்முகில்; அதில் பெரியபிராட்டி மின்னல்கொடி;
இந்த இரண்டுமாக அருள் என்கிற மழை பொழிகிறது; இது வெள்ளமாகப் பெருக்கெடுக்கும் போது, மேடுபள்ளங்களில் நிறைந்து,
அங்கு சிக்கித் தவிக்கும் சேதனர்களின் சம்சார தாபத்தை——அந்தத் தீய விஷத்தை, அடித்துத் தூரத் தள்ளி ,
மிகவும் தெளிந்த அமுத நதியாக இருக்கிறது—
அது — ஹே கோதா—நீயே உன்னை அடைந்து சேதனர்கள், தங்கள் தாபங்களைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

அவதாரிகை
தன் ப்ரியமான நாயகனான ஈச்வரனுடைய நிருபதமான ஈச்வரத்வம் ஸ்வாதந்த்ரியமென்னும்
உயிர்நிலையைச் சேதிப்பதாகப் பேசப்பட்டது. இது என்ன அழகு?
நாயகனுடைய உயிர் மர்ம ஸ்தானத்தை ஓர் சதியான நாயகி பிளப்பளோ? இப்படிப் பேசுவது கோதா ஸ்துதியாகுமோ?
இதற்கு பதில் கூறுகிறார். பெருமாள் ஈச்வர ஸ்வாதந்த்ரியத்தாலேயே புருஷகாரமான ஆசிரியர்களோடு
தம்முடைய க்ருபையால் சேர்த்து வைத்த ப்ரணதியென்னும் வ்யாஜமாத்ரத்தால் ரக்ஷிப்பதென்பதும்
ஈச்வரன் திருவுள்ளத்தாலே உள்ளதே. ஆசார்ய ப்ராப்திக்கும் அவள் க்ருபை வேண்டும்.
கோதை ஆசார்ய தத்துவம். புருஷகார தத்துவம். கடகரான ஆசாரியரை கடிப்பித்து வைப்பது ஈச்வர க்ருபை.
ஆகையால் தாமே கடிப்பித்து வைக்கும் புருஷகார சம்பந்தத்தைக் கொண்டு சேதனர் அபராதங்களை மன்னித்து
ரக்ஷிப்பதும் ஓர்விதமாக அவர் ஸ்வாதந்த்ரியத்தைச் சேர்ந்ததே.
ஈச்வர ஸ்வாதந்த்ரியமே தண்டனைகளைச் செய்யாமல் ரக்ஷிப்பதற்கும் நிதானமாகிறது.
பிராட்டியோடு கூடி அவனே தான் தன்னுடைய ஸ்வாதந்த்ரியத்தால், தன் க்ருபையால், தன் சந்தத்தால்
கோதை என்னும் புருஷகாரத்தின் ப்ராப்தியை, ப்ரணதியை கடிப்பித்தான்.
விபுவின் ஸ்வாதந்த்ரிய விசிஷ்டமான கருணை ரக்ஷணத்திற்கு ஹேது.
இப்படிக்கு ஈச்வரன் சந்தமே நிறைவேறுவதால் அவன் ஸ்வச்சந்தத்திற்குக் குறைவில்லை என்கிறார்.
முன்பு கோதையைப் பல நதிகளாக வர்ணித்தார்.
இங்கே அவளும் அவள் திருமொழியும் அம்ருத நதீ என்கிறார். விரஜையிலுமுயர்ந்த நதி.

கோதே — திருமொழி, திருப்பாவை தரும் கோதாய்!
ரங்கே — அரங்கத்தில்;

ரமையைவ –
ரமணத்தைச் செய்விப்பதையே ஸ்வபாவமாகவுடைய லக்ஷ்மீயாலேயே.
கோதையை ஆசிரிய தத்துவமாகச் செய்தது லக்ஷ்மியே.
தடித்குணவத: —
மின்னலென்னும் கொடியோடு (குணத்தோடு) கூடியவரான.
மேகமும் மின்னலும் கூடினால் குளிர்ந்த வர்ஷமுண்டாகித் தாபங்கள் தீரும்.
பெருமாளும் பெரியபிராட்டியாரும் சேர்ந்துதான் க்ருபாவர்ஷத்திற்குக் காரணமாவாரென்பதை இது விளக்குகிறது.
பெருமாளும் லக்ஷ்மியுமாகச் சேர்ந்து தங்கள் க்ருபா வர்ஷத்தால் கோதை நாச்சியார்,
அவள் திருமொழி ஆகிய அம்ருத நதியை கடனை செய்வித்தார்கள்.

க்ருஷ்ணாம்புதஸ்ய – கிருஷ்ணமேகத்தினுடைய;
க்ருபயா — க்ருபையினாலே, க்ருபையென்னும்.
ஸுவ்ருஷ்ட்யா — நல்ல வர்ஷத்தாலே.

கடிதாம் — கடனை செய்விக்கப்பட்ட, ஏற்படுத்தப்பட்ட.
கடகையான உன்னை அடைவிப்பது ஸ்வதந்த்ரேச்வரனாகிய ச்ரிய:பதியின் க்ருபை.
கடக ப்ராப்தியையும் லக்ஷ்மீ விசிஷ்டமான ஈச்வரனுடைய க்ருபை கடிப்பிக்கும்.

தௌர்கத்ய துர்விஷ விநாச ஸுதாநதீம் —
ஸம்ஸாரம் என்பதற்கு ‘நற்கதி’ என்பது சொற்பொருள்.
அது உண்மையில் துர்கதியே என்பதைக் காட்ட ‘தௌர்கத்யம்’ என்கிறார். ஸம்ஸாரம் என்பது காலகோடிவிஷம்.
இந்தக் கொடிய விஷத்தால் குழந்தைகள் மூர்ச்சிதராயிருக்கிறார்கள். அவர்கள் ம்ருத ப்ராயராயிருக்கிறார்கள்.
குழந்தைகளைத் தீண்டிய கொடிய விஷத்தை நாசம் செய்வதிலும் பெருமாளுக்குப் பெரிய பேறுண்டோ?
அந்த விஷத்தை அமிர்த நதியாகிய உன்னைச் சரணம் பற்றி உன் அமுத ஸரஸ்வதீயில் நீராடிப் போக்கலாம்.
‘பராசர்யவசஸ்ஸுதையானது ப்ராணன் போய் மூர்ச்சிதரான குழந்தைகளை உயிர்ப்பிக்கும்’ என்று
ப்ரஹ்ம ஸூத்ரங்களை வர்ணித்ததை நினைக்க. அம்ருத ப்ரவாஹமான ஸுதாநதியாவாய்.

த்வாம் — உன்னை (உன் தேன்மொழியை)
ஸந்த: — ஸம்ஸார விஷ மூர்ச்சிதராய் அஸத் ப்ராயராயிருந்தவர் இப்பொழுது உன்னைச் சரணம் பற்றி ஸத்தானார்.
ப்ரபத்ய (ஸந்த:) — உன்னைச் சரணம் பற்றி உன் ஸரஸ்வதீயில் நீராடி (ஸத்தானார்)
அசிரேண – விரைவில். ‘தாபதேவ சிரம்’ என்றபடி ப்ராப்தகர்ம ப்ரயுக்தமான அனேக சரீரங்களின் தாமதமில்லை.
உடனே வேண்டுமென்ற ஆர்த்தியிருந்தால், உடனே.
தாபாந் — ஸகல ஸம்ஸார தாபங்களையும்;
சமயந்தி — போக்கிக் கொள்ளுகிறார்கள். (26)

——————

ஜாதாபராதமபி மாமநுகம்ப்ய கோதே
கோப்த்ரீ யதி த்வமஸி யுக்தமிதம் பவத்யா: |
வாத்ஸல்ய நிர்பரதயா ஜநநீ குமாரம்
ஸ்தந்யேந வர்த்தயதி தஷ்டபயோதராபி || 27

கோதே — கோதையே! த்வம் — நீ;
ஜாதாபராதமபி — அறிந்தோ அறியாமலோ செய்யப்பட்ட குற்றங்களோடு கூடியிருந்தாலும்;
மாம் — என்னை; அநுகம்ப்ய – தயவு பண்ணி; கோப்த்ரீ அஸி யதி — ரக்ஷிப்பவளாக ஆகியிருந்தால்;
இதம் — இவ்விஷயம்; பவத்யா: — உனக்கு; யுக்தம் — தகுந்தது; ஜநநீ — தாயாரானவள்;
குமாரம் — குழந்தையை; தஷ்டபயோதரதராபி — கடித்த முலையை யுடையவளாயினும்;
வாத்ஸல்யநிர்பரதயா — குழந்தையினிடத்தில் உள்ள ஆசை மிகுதியால்;
ஸ்தந்யேந – முலைப்பாலினால்; வர்த்தயதி — காப்பாற்றுகிறாளன்றோ.

கோதே! (நான்) அறிந்தோ அறியாமலோ செய்யப்பட்ட அபராதங்களை உடையவனாயிருந்தாலும் நீ என்னை
தயவு பண்ணி ரக்ஷிப்பவளாக ஆவாயேயாகில், இவ்விஷயம் உனக்கு உசிதமே. எப்படித் தாயானவள் குழந்தை தன்
முலையைக் கடித்துவிட்டாலும் அதனிடத்திலுள்ள அன்பினால் அதைத் தன்பாலினால் காப்பாற்றுகின்றாளல்லவா? அதுபோல,

அடியேன் பலகாலும் குற்றம் செய்தவன்; குற்றமே செய்துகொண்டு இருப்பவன்; என்றாலும், நீ, என்னைப் புறக்கணிப்பதில்லை .
காக்கின்றாய். இது உனக்கு ஏற்ற செயல். தாயார், குழந்தையிடம், அளவில்லா அன்பு கொண்டவள்.
அதன் பசி அறிந்து, பாலூட்டுபவள். ஆனால், குழந்தைக்கு, தாயார் செய்யும் உபகாரமும், தாயாரின் அன்பும் பாசமும், எப்படித் தெரியும் ?
ஸ்தன்ய பானம் செய்யும்போது , குழந்தை கடித்தாலும், இதற்காக அந்தக் குழந்தையைத் தாயார், தூக்கி எறிந்து விடுவதில்லையே !
வேறு உபாயத்திலும் இறங்குவது இல்லையே !முன்போலவே அல்லவா, ஸ்தன்ய பானம் கொடுக்கிறாள் . ஆஹா , இது உனக்குத் தகுந்ததே !

அவதாரிகை
பெருமாள் குற்றத்திற்குத் தக்கபடி தண்டிக்கிறதென்ற தர்மமுள்ளவரல்லவோ? ஸஹதர்மசரியான கோதையும்,
அந்த தர்மத்தை அவரோடுகூட அநுஷ்டிக்கவேண்டாவோ என்று சங்கை வரக் கூறுகிறார். அவர் பிதா, நீ மாதா.
மாதாவின் வாத்ஸல்ய குணம் உனக்கு ஸஹஜம். புதிதாகச் செய்து இன்னம் ஈரமுலராத அபராதங்களையும் பாராட்டாமல்
ஸ்நேஹத்தைப் பெருக்குவது வாத்ஸல்யமாகும். தாய்க்குத் தாய் தர்மம் ப்ரபலம், ஸ்வபாவத்தை ஒருவரும் மீறமுடியாது.
ஸ்வ தர்மம் ப்ரபலம். பர தர்மம் பயாவஹம். தாய் ஸ்வபாவத்தை, தாய் தர்மத்தைக் காட்டுகிறார்.
பர்த்தாவோடு ஸஹ தர்ம சரியானாலும் மாத்ருத்வத்தை விடுவளோ? ஸ்திரீத்வமே அழியுமே.

கோதே — கோதாய்!

ஜாதாபராதமபி மாம் —
(1) அபராதம் நேர்ந்தவனாகிய என்னையும். வேண்டுமென்றே குற்றத்தை நான் செய்தாலும், ஏதோ அறியாமல்
குற்றம் நேர்ந்துவிட்டதென்று உன் நினைப்பு என்பதை வ்யஞ்ஜிக்கிறார், ‘ஜாத’ என்று. ‘க்ருதாபராதஸ்ய ச தே ‘ என்று
திருவடி ஸுக்ரீவரிடம் பேசியதுபோல ‘க்ருத’ பதத்தை வைக்கவில்லை.
(2) ‘ஜாதன்’ என்பது ‘ப்ரியமான குழந்தை’யைச் சொல்லும். உன் அருமைக்குழந்தை அறியாமற் குற்றம் செய்துவிட்டதென்று
உன் நினைப்பும், பரிவும். ‘ஸத்யோ ஜாத:’ இன்று ஈன்ற கன்று வத்ஸம், அதனிடம்போல வாத்ஸல்யம்.
மூன்றாமடியில் சொல்லும் ‘பூர்ணவாத்ஸல்யத்திற்கு’ இந்த ‘இன்று பிறந்த கன்று’ என்பது ஸமர்த்தகம்.
ஸத்யோஜாத சிசுவின் அபராதம், கன்று உதைத்தது, கன்றின் பல் மடியில் பட்டது என்று உன் நினைப்பு.
(3) குற்றம் ஈரமாயிருந்தாலும், இப்பொழுதே செய்து இன்னம் உலராமலிருந்தாலும். ‘ஆர்த்ராபராதிநி ஜநே’ ‘ஆர்த்ராபராதா: ஸதீ’
அநுகம்ப்ய – என்னிடம் தயவு பண்ணி இரங்கி.
கோப்த்ரீ யதி த்வமஸி — நீ ரக்ஷகையாகிறாயென்பது.
யுக்தம் இதம் பவத்யா: — உனக்கு இது ஏற்றதே.
வாத்ஸல்யநிர்பரதயா — புத்ரஸ்நேஹம் சுமை தாங்காதபடி நிரம்பியிருப்பதால்.
ஸ்தந்யம் — ஸ்நேஹமென்னும் பால் நிரம்பிப் பெருகும் கடுப்பினால்.
ஜநநீ — பெற்ற தாய்

குமாரம் —
(1) இளங்குழந்தை, பச்சைக்குழந்தை என்று தாயின் நினைப்பு. என்ன முதிர்ந்த வயதாயினும் தாய்க்குச் சிசுவே.
(2) ராஜகுமாரன் ராஜ்யத்திற்குப் பட்டப்பிள்ளை என்று நினைப்பு.
(3) குமரன் போன்ற குமாரனென்று அருமை. “குமாரகல்பம் ஸுஷுவே குமாரம்”, ‘குமரனைப்போன்ற குமாரனைப் பெற்றாள்’.

ஸ்தந்யேந –
பாலால் குழந்தையை வளர்க்க, பெருக்க.. ஸ்தனத்தில்தானே பாலுண்டாகும்?
ஸ்தனத்தில் குழந்தை பல்லால் கடித்தது. கடித்த இடத்திலிருந்தே பால் சொரிகிறது என்று காட்ட ‘ஸ்தந்யம்’ என்கிறார்.

வர்த்தயதி —
குழந்தையைப் பருக்கச் செய்யவேண்டாவோ? பால் பெருக்கால் குழந்தை பருக்கிறது. பால் ஸ்தனத்தில்தானே பெருகும்?
கடித்த இடமென்று அதை விட்டால் பாலுக்கு வேறு இடமேதுளது? வர்த்தயதி என்பதில் மிக்க ரஸமுண்டு.
“ப்ருஹப்ருதௌ ப்ரும்ஹயதி” என்று பொருள் திருவுள்ளம். ப்ரும்ஹணம் செய்கிறாள், ப்ரஹ்மம் போலச் செய்கிறாள்.

தஷ்டபயோதராபி —
பல்லால் கடிக்கப்பட்ட ஸ்தனத்தை உடையவளானாலும். ‘பயோதர’ என்னும் பதத்தில் மிக்க ரஸம்.
‘நீரோ பாலோ நிரம்பிய’ தோல் பையைப் பொத்து விட்டால் ஜலமும் பாலும் ஒழுகி விழாமலிருக்குமோ? .

——————-

சதமகமணிநீலா சாருகல்ஹாரஹஸ்தா
ஸ்தநபரமிதாங்கீ ஸாந்த்ரவாத்ஸல்யஸிந்து: |
அளகவிநிஹிதாபி: ஸ்ரக்பிராக்ருஷ்டநாதா
விலஸது ஹ்ருதி கோதா விஷ்ணுசித்தாத்மஜா ந: || .28.

ஶதமகமணி நீலா — இந்த்ரநீலக் கல்லு போல நீலமானவளும்;
சாருகல்ஹார ஹஸ்தா — அழகிய செங்கழனிப் புஷ்பத்தைக் கையில் கொண்டவளாயும்;
ஸ்தனபரமிதாங்கீ — ஸ்தனத்தின் பரத்தால் சிறிது வணக்கப்பட்ட திருமேனியை உடையவளாயும்;
ஸாந்த்ரவாத்ஸல்யஸிந்து: — கனத்த (நிரம்பிய) ஸ்நேஹக் கடலாயும்;
அளகவிநிஹிதாபி: — கூந்தலில் சூடிய; ஸ்ரக்பி — மாலைகளால்;
ஆக்ருஷ்டநாதா — இழுக்கப்பட்ட நாதனோடு கூடியவளாயுமான;
விஷ்ணுசித்தாத்மஸா கோதா — பட்டர்பிரான் புத்திரி கோதை; ந: — நமது;
ஹ்ருதி — ஹ்ருதயத்தில்: விலஸது — விளங்கட்டும்.

இந்த்ரநீலக் கல்லுபோல நீலமானவளும், அழகிய செங்கழுநீர்ப் புஷ்பத்தைக் கையில் கொண்டவளாயும்,
தனபரத்தால் சிறிது வணங்கின தேஹத்தை உடையவளாயும் கனத்த ஸ்நேஹக்கடலாயும், தன் சிரஸில் சூடிய
மாலையால் தன் வசமாக்கப்பட்ட நாதனையுடையவளாயும் பட்டர்பிரான் புத்ரியுமான கோதையானவள் நமது மனதில் விளங்கட்டும்.

த்யான ச்லோகம்
இந்த்ர நீலக்கல் போல நீல வர்ணம் உடையவள்; அழகான கருநெய்தல் புஷ்பத்தைத் தன் கரத்திலே வைத்திருப்பவள்;
ஸ்தனங்களின் பாரத்தினால் வணங்கிய திருமேனி உடையவள்;
அடர்த்தியான அன்புக்கடல்; முடியில் ,முன்னுச்சியில் மாலைகளை அணிந்து, கணவனை—ரங்கபதியைத் தன் வசப்படுத்திக்கொண்டவள்;
விஷ்ணுசித்தரின் அருமைக் குமாரத்தி; கோதை—-நமது மனத்தில் என்றும் விளங்குவாளாக

அவதாரிகை
(1) முதல் ச்லோகத்தில் ‘கோதை’யைச் சரணம் புகுகிறேன் என்று அவளைப் பரோக்ஷமாகப் பேசினார்.
பிறகு 26 ச்லோகங்களில் கோதையை அழைத்து நேருக்கு நேராக ப்ரத்யக்ஷமாகப் பேசினார்.
தேவியான கோதையைப் பரோக்ஷமாக ‘அவள்’ ‘அவள்’ என்று பேசித் துதிப்பது உசிதம்.
‘பரோக்ஷப்ரியா தேவா:’ மனுஷ்யர்களில் அவதாரம் பண்ணினாலும், கோதை தேவியே.
ஆயினும் தாயானதால், தேவியாயிருந்தும் நீ என்றே கூப்பிட்டுப் பேசினார்.
தேவியாயுமிருப்பதால், உபஸம்ஹாரத்திலும் உபக்ரமத்திலும் (முதலிலும், முடிவிலும்) ‘அவள்’ ‘அவள்’ என்று பேசுகிறார்.
முதலிலும், முடிவிலும், ஒரே விதமாக ‘அவள்’ என்று பேசுவது தேவீ என்கிற தாத்பர்யத்தைக் காட்டும்.
(2) ஓர் ஆச்சர்ய மூர்த்தியாக ஹ்ருதயத்தில் எப்பொழுதும் த்யானம் செய்யும்படி க்ருபையால் விளங்கவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார்.
‘நீளாதுங்க ஸ்தநகிரிதடீ’ என்னும் தனியன் த்யான ச்லோகத்தையும் அநுஸரிக்கிறார்.
நக்ஷத்ரக்கணக்கான 27 ச்லோகங்களால் துதித்து பாவனை செய்து,
இங்கே ஹ்ருதயத்தில் பரமப்ரஸக்யாய் வீற்றிருப்பதைப் பிரார்த்திக்கிறார்

ஶதமகமணிநீலா —
இந்த்ர நீலம் போல நீலவர்ணமானவள். ஸ்ரீ, பூமி, நீளை என்று மூன்று தேவிமாரில்
முதல் ச்லோகத்திலிருவரைப் பேசினார். இங்கே நீளையை சப்தமாத்ரத்தாலேயாயினும் ஒருவாறு குறிக்கிறார்.
‘நீளாதுங்கஸ்தன’ என்ற த்யான ச்லோகத்திலுள்ள முதற்பதத்தை இங்கும் முதல் பதமாக வைக்கிறார் என்றும் ரஸம்.

சாருகல்ஹாரஹஸ்தா —
அழகிய செங்கழுநீர்ப் பூவைக் கையில் உடையவளாய். “அவள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் வாய் செங்கழுநீர்”
ஆகியதால், அது சாரு (அழகியது). ஸ்வாராதானத்தில் தன்தோட்டத்தில் தான்வைத்து வளர்ந்த கொடிப் புஷ்பம்.

ஸ்தனபரநமிதாங்கீ — தனபரத்தால் கொஞ்சம் வணங்கிய காத்திரமுடையவளாய். தனங்களும் கிரிபோன்றன.
தனங்களின் வாத்ஸல்யப் பெருக்கால் ஸ்தந்யப் பெருக்கை முன் ச்லோகத்தில் பேசினார்.
தனத்தின் பாரத்துடன் ஸ்தந்யத்தின் பாரமும் சேர்ந்தது.

ஸாந்த்ரவாத்ஸல்யஸிந்து: — கனத்த புத்ரஸ்நேஹக் கடல். முன்பு அம்ருதநதீ என்றார். இங்கே ஸ்நேஹக்கடல் என்கிறார்.
அளகவிநிஹிதாபி: — கூந்தலில் அழகாகச் சூடிய. (யார் கூந்தலில் என்று குறிப்பிடவில்லை) முதலில் கோதைசூடிப் பிறகு பெருமாள் சூடிய.
ஸ்ரக்பி: — மாலைகளால். ‘ஸ்ரஜி’ என்று தனியனிலுள்ளது.

ஆக்ருஷ்டநாதா —
இழுக்கப்பட்ட நாதனையுடையவளாய். தன்னால் உச்சிஷ்டமான (சூடிய) மாலையால் விலங்கிடப்பட்ட என்று
பச்சையாக உன் மேன்மை பேசப்பட்டது. இங்கே கட்டுண்டு இழுக்க இடம் கொடுத்தது குடுமி.
விலங்கு போட்டாற்போல சலிக்காமலிருக்கும் பயன் கிடைப்பதைச் சொன்னது தனியன். சிரஸில் விலங்கு போடமாட்டார்கள்.
‘குடுமியைப் பிடித்துக் கயிறால் இழுக்கப் படுகிறான்’ என்பது இங்கே பேச்சு. சூடிக் கொடுத்த மாலையை முடி மேற் கொண்ட
நாதனோடுகூட ஹ்ருதயத்தில் ஸர்வதா ஸேவை ஸாதிக்கவேண்டும்..

விலஸது — நன்றாய்ப் பிரகாசிக்கட்டும்.
ஹ்ருதி — த்யாதம் ஹ்ருதம்புஜே, த்ருஷ்டம் ஸ்ரீரங்கதாமநி.

கோதா — கோதாம் சரணம் ப்ரபத்யே என்பது முதல் ச்லோகத்தின் கடையடி.
இங்கேயும் முடிவில் கடைசிப் பதத்தில் கோதா என்று அமைக்கிறார்.
அங்கே இரண்டாம் வேற்றுமை. சரணமடைந்ததற்குப் பயனாக அவள் ஸேவை அளிப்பதால் இங்கே முதல் வேற்றுமை.

விஷ்ணுசித்தாத்மஜா —
ஸ்ரீவிஷ்ணுசித்த குலதந்தன என்று தொடக்கத்திற்குத் தக்கபடி முடிவு.
பட்டர்பிரான் கோதை சொன்ன என்ற திருப்பாவை முடிவையும் இது அநுஸரிக்கிறது.
இங்கே ‘கோதை பட்டர்பிரான் குமரீ’ என்ற க்ரமத்தை மாற்றியுளது. அதற்கடியென்?
இங்கே பல விசேஷணங்களிலும் ‘பட்டர்பிரான் புத்ரி’ என்பது உயர்த்தி என்று திருவுளம். ‘ஜநகாத்மஜா’ என்பது போல. (28)

——————-

இதி விகஸிதபக்தேருத்திதாம் வேங்கடேசாத்
பஹுகுணரமணீயாம் வக்தி கோதாஸ்துதிம் ய: |
ஸ பவதி பஹுமாந்ய: ஸ்ரீமதோ ரங்கபர்த்து:
சரணகமலஸேவாம் சாச்வதீமப்யுபைஷ்யன் || .29.

இதி — இந்தத் தோத்திரம் முழுவதிலும் காணும் ப்ரகாசமாக,
விகஸித பக்தே: — (கோதை திருவடியில்) மலர்ந்த பக்தியையுடைய;
வேங்கடேஶாத் — வேங்கடேசரிடமிருந்து ; உத்திதாம் — தோன்றி எழுந்த;
பஹுகுணரமணீயாம் — பற்பல காவ்யகுணங்களால் நிரம்பி மனோரஞ்ஜகமான;
கோதாஸ்துதிம் — கோதைவிஷயமான துதியை; ய: — எவர்; வக்தி — சொல்லுகிறாரோ;
ஸ: — அவர்; ஸ்ரீமத்: — லக்ஷ்மீயோடு கூடிய; ரங்கபர்த்து: — ரங்கநாதனுக்கு;
ஶாஶ்வதீம் — சாச்வத காலமும்; சரணகமலஸேவாம் — திருவடித்தாமரையின் ஸேவையை;
அப்யுவைஷ்யந் — அடைபவனாக (அவருக்கு) ; பஹுமாந்ய: — வெகுமதி பாத்ரமாக; பவதி — ஆகிறான்.

கோதை திருவடியில் விஸ்தாரமான பக்தியையுடைய வேங்கடேசரிடமிருந்து தோன்றியெழுந்த
அனேகவிதமான காவ்ய குணங்களால் அழகிய கோதாஸ்துதியை எவர் பாராயணம் செய்கிறாரோ அவர்
லக்ஷ்மீயோடு கூடிய ரங்கநாதனின் திருவடி ஸேவையை அடைபவனாய்க்கொண்டு அவருக்கு வெகுமதி பாத்ரனாக ஆகிறான்.

பக்தியின் பெருக்காக, வேங்கடேச கவியிடமிருந்து, பற்பல காவ்யங்களின் குணங்களை உடைய
இந்த கோதா ஸ்துதியைப் பாராயணம் செய்பவன், ஸ்ரீ ரங்கநாதனின் திருவடியில், அவ்வுலகில் நீண்ட காலம்
கைங்கர்யம் செய்வதோடு மட்டுமல்லாமல், இவ்வுலகிலும் அவனுடைய க்ருபைக்குப் பாத்ரமாவான்

அவதாரிகை
விஷ்ணுசித்தரிடமிருந்து கோதை தோன்றினாள் என்று 9ல் ஸாதித்தார்.
‘விஷ்ணுசித்தாத்மஜை’ என்று முன் ச்லோகம் முடிவில் பேசியது அதைக் காட்டுகிறது.
கோதை விஷ்ணுசித்தரிடம் தோன்றியதுபோல, கோதை துதி பக்தி நிரம்பிய என் சித்தத்திலிருந்து தோன்றியதென்கிறார்.
“ஸமுக்திதவதீம் அதிவிஷ்ணுசித்தம்” என்பதுபோல ‘விகஸிதபக்தே: வேங்கடேசாத் உத்திதாம்’ என்கிறார்.
முதல் ச்லோகத்தின் உரையில் இந்த ச்லோகத்தின் பொருள்களை விஸ்தரித்திருக்கிறோம்.
அதையெல்லாம் இந்த ச்லோக உரையில் சேர்த்துக் கவனிக்க.

இதி — இப்படி. முன் ச்லோகங்களில் அநுபவம் சென்றபடி. ;இங்கிப்பரிசுரைப்பார்’

விகஸிதபக்தே: —
புதுவைப் பூந்தோட்டத்தில் பெருமாளிடம் தன்மயத்வத்தோடு கோதை வளர்த்த பூஞ்செடிகள் புஷ்பித்து மலர்ந்ததுபோல,
கோதையின் பக்தியும் பெருமாளிடம் புஷ்பம் போல் மலர்ந்து வாஸித்துப் பாமாலையாயிற்று.
அதுபோல கோதையிடமும் அவள் பூமாலை பாமாலைகளிடமும் இந்த ஸ்தோத்ர பாவனையால் நம் ஸ்வாமியும்,
தன் மயத்வத்தை யடைந்து, கோதையிடம் பக்தி அத்புதமாக மலர்ந்தது.
‘இப்படி மலர்ந்து வாஸிக்கும் பக்தியையுடைய வேங்கடேசனிடமிருந்து இந்தத்துதி எழுந்தது’ என்றும் சொல்லலாம்.
வேங்கடேசனிடமிருந்து அவருடைய இப்படி மலர்ந்த பக்தியிலிருந்து இத்துதி எழுந்தது’ என்றும் பொருள் கொள்ளலாம்.

உத்திதாம் —
கோதை விஷ்ணுசித்தரிடமிருந்து தோன்றியதுபோல, இத்துதியும் ஸ்வாமி சித்தத்தில் தோன்றியது.
இருவருக்கும் கர்த்ருத்வமில்லை, ஆவிர்பாவாதிகரணத்வமேயுண்டு.

வேங்கடேசாத் —
இப்படி கோதையிடம் ஸ்வாமிக்கு பக்தியமைந்ததற்குக் காரணமுண்டு. வேங்கடவற்கென்றேயிருப்பாள் கோதை.
அவள் பெருமையை வேங்கடவர் கண்டை உலகமறிய இத்துதியால் சப்திக்கவேண்டியது உசிதம்.
இரண்டு சம்ப்ரதாயஸ்தரும் தேசிகன்காலம் முதல் சேர்ந்து ஏக கோஷ்டியாகப் பாடும் பாக்யம் பெற்ற ஸரஸ்வதி.

பஹுகுணரமணீயாம் —
கோதை சூடிய மாலை அநேக குணங்களாலும் நார்களாலும் அரங்கனுக்கு ஹ்ருத்யமானது போலே
அநேக குணங்களையுடைய இத்துதியும் அரங்கன்முன் அரங்கேற்றி அவனுக்கு ஹ்ருத்யமாயிற்று.

வக்தி — சொன்னால் போதும். தப்பிச் சொன்னாலும் போதும். பெருமாள் விஷயமான திருப்பாவையை
‘தப்பாமே’ சொல்லவேண்டுமென்ற நிர்ப்பந்தம் உண்டு. கோதை விஷயமான இப்பாமாலையை ப்ரஜல்பநம்
பண்ணாலும் போதும் அரங்கர்க்கு பஹுமான்யராவதற்கு. ஆனால் ஒரு நிர்ப்பந்தம் மட்டும் உண்டு. அதென்ன?
“இதி விகஸிதபக்தே: வக்தி” என்றும் அந்வயித்து ‘இப்படி மலர்ந்த பக்தியாலே சொல்லுவனேல்’ என்று பொருள் கொள்ளவேணும்.
ஸ்வாமி பக்தியைப்போல நமக்கும் பக்தி மலரவேணும். ஹ்ருதயபுண்டரீகம் விகஸிக்க வேணும்.

கோதாஸ்துதீம் —
வாக்கைக் கொடுத்தவள் விஷயமான ஸ்தோத்திரம். இந்த ஸ்துதி ரூபமான வாக்கு பிக்ஷையும் கோதைத் தாயார் கொடுத்தது.
ஆகையால் இத்துதியை ‘பஹுகுணரமணீய’ என்று கொண்டாடினது. ஆத்மச்லாகை அன்று.
“வாசா நிர்மலயா ஸுதாமதுரயா யாம் நாத பிக்ஷாம் அதா:” (க்ருஷ்ண! என் நாதனே! அமுதத்தைப்போல் இனிமையும்,
நிர்தோஷமுமான வாக்கை பிக்ஷையாக எனக்கு நீர் கொடுத்ததை நான் ஸ்வப்னத்திலும் நினைத்து
க்ருதஜ்ஞதையை அநுஸந்திக்காமல், என் வாக்கு என்று அஹங்காரமதம் பிடித்திருக்கிறேனே) என்றார் பண்டிதராஜ ஜகந்நாதர்.
முதல் சுலோகத்திலேயே ஸ்வாமி இத்தாயாரை வாக்பிக்ஷைக்காகச் சரணம் புகுந்ததைக் காட்டியுள்ளோம்.
‘வாக்கைத் தானம் செய்பவள்’ என்ற திருநாமமுடைய கோதை இந்தத் துதிவாக்கையும் கொடாமலிருந்தால்,
கோதையாகாளே! கோதை துதியென்னும் பெயரும் பொய்யாமே! அவள் பேரும் இத்துதி பேரும் நிலைப்பதற்கு
இத்துதியும் வாக்கும் அவளதேயாய்த் தீரவேணும்.

ய:ஸ: —
‘யவனவன்’. ஶ்ரிய:பதியைப் பற்றித் திருவாய்மொழி தொடங்கியதுபோலும்.
ப்ரஹ்ம ஸூத்ரமும் உபநிஷத்தும் ப்ரஹ்மலக்ஷணம் பேசுவதுபோலும்,
இத்துதியை இப்படி மலர்ந்த பக்தியோடு சொல்லுமவன் மஹிமையை ‘யவனவன்’ என்று வர்ணிக்கிறார்.

பவதி —
நித்யமும் ஆகிறான். முக்காலத்தையும் சொல்லுகிறது. ‘பவதி’, அம்மா என்று கூப்பிடுவதுமாகலாம்.
கடைசி ச்லோகத்திலும் ‘அம்மா’ என்று கூப்பிட்டு முடிப்பதழகு.
பவதிபஹுமாந்ய என்று சேர்த்து ஒரு பதமாகவும் ஓர் அந்வயம் கொள்ளலாம்.
ஸ்ரீக்கும் பஹுமாந்யன். ரங்கபர்த்தாவுக்கும் பஹுமாந்யன். உனக்கும் பஹுமாந்யன்.
உன் வாக்காயினும், எனக்குத் தானம் செய்துவிட்டதால், உன் குழந்தையாகிய நான் உச்சரித்த துதியென்று உனக்கும் அதில் பஹுமானம்.
என்முகமாக வெளிப்பட்ட துதியைப் படித்தானென்று என்னிடம் ஸ்நேஹத்தால் படிப்பவனிடம் பஹுமானம்.
பஹுமாந்ய: காரணமான துதியிலுள்ள குணத்தின் பஹுத்வம் கார்யமானமானத்திலும் வருகிறதென்பது ரஸம்.

ஸ்ரீமத: —
ஸ்ரீவிசிஷ்டனாகிய. கோதை பெருமையைக் கேட்பதில் ஸ்ரீக்கு மிக்க இன்பம்.
“ஸ்ரீரங்கராஜஹரிசந்தன” என்று முதல் ச்லோகத்தில் பேசினபடி உபஸம்ஹாரமும் அப்படியே.
முதலில் ஸமாஸம், இங்கே முடிவில் வ்யாஸம். “ஸமாஸவ்யாஸதாரணம்” வித்வான்களுக்கு அழகு.

ரங்கபர்த்து: — அரங்கத்தின் ப்ரபு. காவ்யங்களையெல்லாம் அரங்கேற்றும் ப்ரபு.

சரணகமலஸேவாம் —
பக்தியென்னும் புஷ்பம் மலர்ந்தது. ஹ்ருதயகமலம் மலர்ந்தது. இப்படி ஓர் புஷ்பம் மலர்ந்ததுக்கு அளிக்கும் பலன் என்ன?
திருவடிக் கமலமென்னும் ஓர் அபூர்வ புஷ்பத்தை சாச்வதமாய் அனுபவிக்கும்படி அளிப்பதே.
புஷ்பம் மலர்ந்ததற்குச் சாச்வதபலமான புஷ்பாநுபவமே பயன் என்று ஆநுரூப்யம். கமலத்திற்குப் பரிசு அபூர்வகமலம்.
ஹ்ருதயகமலம் மலர்ந்தபோது, இந்தத் திருக்கமலமும் அங்கே வீற்றிருந்து ஸமகத்தைக் கொடுக்கும்.
தாமரையோடு தாமரையின் யோகம் வரும். “கேசவநம்பி கால்பிடித்தல்”

சாச்வதீம் —
சாச்வதீ மம ஸம்ஸித்தி: என்றவிடத்தில்போல ஸேவையென்னும் வணக்கமே, ப்ரஹ்வீபாவமே, பரமமான ஸித்தியாகும்.
இதைப் படிப்பவருக்கும் சாச்வத ஸுகம் நியதம். ‘சாச்வதம், ஸுகம்’ என்று ச்ருதி பேசியதை
‘சாச்வதமான சரணகமல ஸேவாம்’ என்று ஸூசிக்கிறார். உன்னேச் சேவித்து உன் பொற்றாமரையடியே போற்றும் பொருள்,
உனக்கே நாமாட் செய்வோம்’ என்று கோதை ஆசைப்பட்ட பயன்.
‘திருமாலால் இன்புறுவர்’ ஸேவையென்கிற நமஸு (ந மம) என்பது சாச்வதப் பயனையளிக்கிறது. “ந மமேதி ச சாச்வதம்”

அப்யுபைஷ்யந் —
அடையப்போகிறவனாய். பரமபதத்தில் சாச்வதமான திருவடிஸேவை பாக்யத்தை அடைவானாம்.
“மாமுபேத்ய து கௌந்தேய” என்கிற ச்லோகத்தில் ‘ஆசாச்வதமான துக்காலயத்தை அடையமாட்டார்,
பரமமான ஸம்ஸித்தியையடைவார்’ என்பதை “உபைஷ்யந்” என்பதால் ஸூசிக்கிறார்.
‘மாம்’ என்றவிடத்தில் அப்பதத்தைக் கொண்டே லக்ஷ்மியையும் கொள்ளலாம். ததந்தர்பாவ ந்யாயத்தாலும் கொள்ளலாம்.

———-

பூ ஸ்துதி “என்பதாக, பூமிப் பிராட்டியை ஸ்தோத்ரம் செய்தவர்,
பூமிப் பிராட்டியின் அவதாரமான கோதையை இங்கு 28 சுலோகங்களால் ஸ்தோத்ரம் செய்கிறார்.
இது கோதா பரிணயம் என்பர்,ஆன்றோர்

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே !
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்தகுரவே நம: ||

ஸ்ரீ கோதா ஸ்துதி முற்றிற்று.

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கோதா ஸ்துதி-1-14-

January 12, 2021

ஸ்ரீமாந் வேங்க‌ட‌நாதார்ய‌: க‌விதார்க்கிக‌ கேஸ‌ரீ |
வேதாந்தாசார்ய‌வ‌ர்யோ மே ஸ‌ந்நிதத்தாம் ஸ‌தா ஹ்ருதி ||

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

————

ஸ்ரீவிஷ்ணுசித்த‌ குல‌நந்த‌ன‌ க‌ல்ப‌ வ‌ல்லீம்
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ஹ‌ரிச‌ந்த‌ன‌ யோக‌த்ருச்யாம்|
ஸாக்ஷாத் க்ஷ‌மாம் க‌ருண‌யா க‌ம‌லாமிவாந்யாம்
கோதாம‌நந்ய‌ ச‌ர‌ண‌: ச‌ர‌ண‌ம் ப்ர‌ப‌த்யே || (1)

ஸ்ரீவிஷ்ணுசித்த‌ருடைய‌ குல‌மென்னும் நந்த‌ன‌த் தோட்ட‌த்தில் (தோன்றிய‌) க‌ற்ப‌கக்கொடியும்,
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னென்னும் ஹ‌ரிச‌ந்த‌ன‌ க‌ற்ப‌க‌விருக்ஷ‌த்தை அணைவ‌தால் (ம‌ண‌ம் புரிவ‌தால்) பார்க்க‌த் த‌க்க‌வ‌ளாயும்,
க்ஷ‌மையின் வ‌டிவேயான‌வ‌ளாயும், (ஸாக்ஷாத் பூமிதேவியாயும்), க‌ருணையினால் ம‌ற்றோர் ல‌க்ஷ்மிதேவி
போன்ற‌வ‌ளாயுமான‌ கோதையை (வாக்கைய‌ளிக்கும் தேவியை) புக‌லொன்றில்லாவ‌டியேன் ச‌ர‌ண‌ம் ப‌ணிகிறேன்.

ஸ்ரீ பெரியாழ்வாரின் குலத்தில் தோன்றிய கற்பகக்கொடி ; அழகிய மணவாளனாகிய ஹரி சந்தன மரத்தைத் தழுவி விளங்கும் கொடி ;;
பூமிப் பிராட்டியின் அவதாரம்; கருணையே உருவாகி, பெரிய பிராட்டியைப் போல இருப்பவள்;
இப்படிப்பட்ட கோதா பிராட்டியை ,எந்தப் புகழும் இல்லாத அடியேன் சரண் அடைகிறேன்

ஸ்லோகத்தின் முதல் வரி, ஸ்ரீ ஆண்டாளின் அவதாரத்தையும் ,
இரண்டாவது வரி, அவளது திருக் கல்யாண விசேஷத்தையும் ,
மூன்றாவது வரி, ஸ்ரீ மஹா லக்ஷ்மியைப்போலக் கருணையே உருவானவள் என்றும்,
அப்படிப்பட்ட கோதா தேவியைப் புருஷகாரமாகப் பற்றி சரணம்அடைகிறேன் என்று நாலாவது வரியிலும் சொல்கிறார்

தாத்ப‌ர்ய‌ம்

கோதையை அம்ருத‌ வாக்கால் துதிக்க‌ வேண்டிய‌த‌ற்கு ஸாம‌க்ரியான‌ ஓர் அத்புத‌ க‌விதா ச‌க்திக்காக‌
க‌விப்பெண்ணான‌ கோதையை இங்கே ச‌ர‌ண‌ம் புகுகிறார்.
“கோதா” என்கிற‌ திருநாம‌த்தைச் சொல்லி ச‌ர‌ண‌வ‌ர‌ண‌ம் செய்வ‌தாலே இது ஸூசித‌ம்.
“கோ” என்ப‌து “வாக்கை, ஸ‌ர‌ஸ்வ‌தியை”ச் சொல்லும். கோதா என்ப‌த‌ற்கு “வாக்கைக் கொடுப்ப‌வ‌ள்” என்று அர்த்த‌ம்.
வேத‌ங்க‌ளால் க‌வி என்று புக‌ழ‌ப்ப‌டுப‌வ‌ரும், கீதை பாடிய‌வ‌ருமான‌ பெருமாளுக்கு அத்புத‌மான‌ பாமாலை கொடுப்ப‌வ‌ள்.
என்ன‌ க‌வி ஸிம்ஹ‌மானாலும், ஸ்வ‌ய‌ம் அத்புத‌ க‌வியான‌ கோதைக்கு ஸ்தோத்ர ‌மாலை கொடுக்க‌த் த‌ம‌க்குச் ச‌க்தி
போதாதென்று ப‌ய‌ந்து, அவ‌ளே அவ‌ளைப்பாட‌ ப்ர‌ஸூம‌துர‌மான‌, ப‌ஹுகுண‌ர‌ம‌ணீய‌மான‌, ஸ‌ர‌ஸ்வ‌த்யாதி புனித‌மான‌
ம‌ஹாநதிக‌ள் போன்ற‌ க‌விதா ப்ர‌வாஹ‌த்தை அளிக்க‌ வேண்டும் என்று இங்கே ச‌ர‌ண‌ம‌டைகின்றார்.

இதை மூன்றாவ‌து ஸ்லோக‌த்தில்
“தாயே! நீயே உன்னைத் துதிக்க‌ யோக்ய‌மாக‌ ப்ர‌ஸ‌ந்ந‌ம‌துர‌மான‌ வாக்கு என‌க்க‌மைய‌ க்ருபை புரிய‌வேணும்” என்று
ப்ரார்த்திப்ப‌தாலும், க‌டைசி ஸ்லோக‌த்தில்,
“ம‌ல‌ர்ந்த‌ ப‌க்தியால் ப‌ஹுகுண‌ ர‌ம‌ணீய‌மான‌ இந்த‌ கோதா ஸ்துதி வெளிப்ப‌ட்ட‌து” என்று தாம் கோரிய‌ ப‌ல‌ம்
ஸித்தித்ததைப் ப‌ணிப்ப‌தாலும் விள‌க்குகிறார்.
ஸீதாதேவி த‌ன் தாய் பூமிதேவியின் ஸ்ரோத்ர‌மென்னும் வ‌ல்மீக‌த்தில் தோன்றிய‌வ‌ரும்,
த‌ன்னுட‌ன் பிற‌ந்த‌வ‌ருமான‌ வால்மீகி க‌வியைக் கொண்டு ராமாய‌ண‌த்தைப் பாடுவித்தாளேயொழிய‌, தானே க‌வி பாட‌வில்லை.
ருக்ம‌ணீதேவி விவாஹ‌த்திற்கு முன் ஸ‌ப்த‌ப‌தியென்னும் விவாஹ‌ப்ரார்த்த‌னைக்காக‌ ஏழே சுலோக‌ம் பாடினாள்.
தேவிமாரில் ஒருவ‌ரும் ஆண்டாளைப் போல‌க் க‌வி பாட‌வில்லை.
ஆண்டாளுடைய‌ ஸ‌ர‌ஸ்வ‌தி குளிர்ந்த‌ ப்ர‌ஹ்ம‌ குண‌ வெள்ள‌த்தில் நீராடி ம‌கிழ‌ச் செய்யும் நீராட்ட‌ ஸ‌ர‌ஸ்வ‌தி.
அது ஒரு அத்புத‌மான‌ ப‌க்தி வெள்ள‌ம். ப‌க்தி ப்ர‌வாஹ‌த்தில் நீராட‌ ஒரு அழ‌கிய‌ துறை.

“ஸ‌ம்ஸார‌ ம‌ருகாந்த‌ர‌த்தில் ப‌ரிச்ராந்த‌ரான‌ தேஹிக‌ளுக்குப் பெருமாள் விஷ‌ய‌மான‌ ப‌க்தியென்னும்
அம்ருத‌வாஹினியில் அவ‌காஹ‌ந‌ம் உப‌தேசிக்க‌ப்ப‌டுகிற‌து” என்று ஸாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து.
அப்ப‌டி அவ‌காஹிக்க‌ ஆண்டாளுடைய‌ நீராட்ட‌ ஸ‌ர‌ஸ்வ‌தியாகிய‌ ப்ர‌ஹ்ம‌ நதி சிற‌ந்த‌ ஸாத‌ன‌ம், மார்க்க‌த‌ர்சி.
ஆண்டாளுடைய‌ ஸ‌ர‌ஸ்வ‌தியை ய‌முனாம‌ஹாநதியாக‌ வ‌ர்ணிக்க‌ப் போகிறார்.
ஸ்ரீ என‌ற‌ பெரிய‌ பிராட்டியார் திருநாம‌த்தோடு ம‌ங்க‌ள‌மாக‌த் துதியை ஆர‌ம்பிக்கிறார்.
இங்கே கோதைக்கு ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னுடைய‌ யோக‌ம் ஏற்ப‌டுவ‌தை இர‌ண்டாம் அடியில் ஸாதிக்கிறார்.

யோக‌ம் என்ப‌து முன்பு அடைய‌ப்ப‌டாத‌ பொருள் புதிதாக‌ அடைய‌ப்ப‌டுவ‌தைச் சொல்லும்.
இங்கே இருவ‌ருக்கும் அல‌ப்ய‌லாப‌மான‌ விவாஹ‌ம‌ங்க‌ள‌ யோக‌த்தைச் சொல்லும்.
க‌ற்ப‌கக்கொடி புதிதாக‌ ஹ‌ரிச்ச‌ந்த‌ன‌ வ்ருக்ஷ‌த்தைச் சுற்றி அணைவ‌தை இங்கே ஸாதிக்கிறார்.
‌விவாஹ‌ம் பெரிய‌பிராட்டியாரால் கோடிக்க‌ப்ப‌ட்டு ந‌ட‌ப்ப‌தாக‌ இர‌ண்டாம‌டியில் ர‌ங்க‌ராஜ‌னுக்கு முன்
ஸ்ரீயை நிவேசிப்ப‌தால் காட்டுகிறார். ஒருத‌ர‌ம் முத‌ல் பாதத்தில் ஸ்ரீயைச் சொன்ன‌தோடு த்ருப்தியில்லை.
திரும்ப‌வும் திருவின் திருநாம‌த்தை நிர்தேசிப்ப‌தால், இந்த‌ விவாஹ‌ ம‌ங்க‌ள‌த்தை நிறைவேற்றுவ‌தில் ஸ்ரீக்கு
அத்த‌னை த்வ‌ரையும், பாரிப்புமிருக்கின்ற‌தென்று அழ‌காக‌ ஸூசிக்கிறார்.
பெரிய‌பிராட்டியாரோடும் ர‌ங்க‌ராஜ‌னோடும் சேர்த்தி. அதிலும் முன்பு திருவோடு சேர்த‌தி. பின்புதான் பெருமாளோடு.

கோதையைத் த‌ன் ஸ்த‌ன‌ம் முத‌லிய‌ போக‌ஸாத‌னாவ‌ய‌மாக‌ப் பாவிப்ப‌தால், கோதையோடு யோக‌ம்
த‌ன் (ஸ்ரீயின்) ஸ்த‌ன‌த்தோடு யோக‌மாகிற‌தென‌று ஸ்ரீப‌ட்ட‌ருடைய‌ அழ‌கான‌ ப்ர‌த‌ர்ச‌ன‌ம்.
த‌ன்னோடு யோக‌த்திலும் த‌ன் த‌ன‌த்தோடு யோக‌ம் ப்ரிய‌த‌ர‌மே. கோதை ஓர் க‌ற்ப‌கக் கொடி.
பூந்தோட்ட‌த்தில் ஆவிர்ப‌வித்த‌ கோதை ஓர் தைவ‌க்கொடியே.
இந்த‌க் கொடி அணைவ‌த‌ற்கு ஹ‌ரி என்னும் ஹ‌ரிச‌ந்த‌ன‌மான‌ தேவ‌ வ்ருக்ஷ‌ம் அநுரூப‌மாகும்.
இர‌ண்டும் தேவ‌ஜாதி. இர‌ண்டும் வேண்டிற்றெல்லாம் த‌ரும்.

ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னென‌னும் ஹ‌ரி என்றும் பிரிக்க‌லாம். அப்பொழுது “ச‌ந்த‌ன‌” என்று ச‌ந்த‌ன‌ம‌ர‌த்தைச் சொல்லலாம்.
முன் பாதத்தில் ஸ்ரீவிஷ்ணு என்ற‌து ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ன் என்று இர‌ண்டாம் பாதத்தில் சொல்ல‌ப்ப‌டுவ‌தோடொன்றாகும்
என்று அந்த‌ யோஜ‌னையில் ப‌ல‌ம். ஸ்ரீயென்ன‌, விஷ்ணுவென்ன‌, இவ‌ர்க‌ளுடைய‌ சித்த‌மான‌ குல‌த்தில் (நந்த‌ன‌த்தோட்ட‌த்தில்)
அவ‌ர்க‌ள் ம‌கிழ‌த் தோன்றிய‌ க‌ற்ப‌கக்கொடியாவாள் கோதை.
ம‌ன‌த்தை ஆராமம், தோட்ட‌ம் என்று பேசுவ‌ர் வேதாந்திக‌ள். திவ்ய‌ த‌ம்ப‌திக‌ள் இருவ‌ரும் த‌ம்முடைய‌ சுப‌மான‌ ம‌ன‌தில்
த்யான‌மும் ம‌னோர‌த‌மும் செய்து அவ‌ர்க‌ளுடைய‌ ம‌ன‌தான‌ ஆராம‌த்தில் (நந்த‌வ‌ன‌த்தில்) தோன்றிய‌
க‌ற்பகக்கொடியாவாள் கோதை.

9வ‌து சுலோக‌த்தில், “விஷ்ணுவின் சித்தத்தில் ச‌ந்திர‌ம‌ண்ட‌ல‌ம் உதித்ததுபோல் நீ உதித்தவ‌ள்.
நீயும் ச‌ந்திர‌னுடைய‌ ஓர் மூர்த்தி விசேஷ‌மாவாய். திருப்பாற்க‌ட‌லில் ச‌ந்திர‌னோடுகூட‌ உதித்த‌
பெரிய‌பிராட்டியாருக்கு நீ உட‌ன்பிற‌ந்த‌வ‌ளுமாவாய்” என்று ஸாதிப்ப‌தால்
இங்கே “ஸ்ரீவிஷ்ணு சித்தத்தில‌ உதித்த‌வ‌ள்” என்றும் பொருள் கொள்ளுவ‌து உசித‌மே. க‌வியின் க‌ருத்தே.

ஸ்ரீவிஷ்ணுசித்த‌ருடைய‌ குல‌மென்னும் நந்த‌னோத்யான‌த்தில் தோன்றிய‌ க‌ற்ப‌கக்கொடி என்னும் பொருளுள்ள‌வே உள்ள‌து.
“விஷ்ணுவை நினையாத‌வ‌ர் பூமிபார‌ம் என்றும்,
அவ‌ர்க‌ள் தின்னும் சோற்றைப் பிடுங்கி நாய்க்கிடுமின்” என‌றும் பேசுப‌வ‌ர் விஷ்ணுசித்த‌ர்.
திருவையும் பெருமாளையும் ஸ‌ர்வ‌கால‌மும் த்யானித்துக் கொண்டே இருக்கையில்
திருவின் அம்ச‌மான‌ கோதையெனும் தூய‌ க‌ற்ப‌கக்கொடி அவ‌ர் தூய‌ சித்த‌மாகிய‌ பூந்தோட்ட‌த்தில் அவ‌த‌ரித்தாள்.
க்ருத‌ யுக‌த்தில் ம‌ன‌தாலே மாத்ர‌ம் ச்ருஷ்டி, உட‌ம்பாலல்ல‌.
க‌லியிலும் இந்த‌ க்ருத‌யுக‌ப் பெண் பெரியாழ்வார் சித்தத்தில் ஆவிர்ப‌வித்தாள்.
சீதை க‌ர்ம‌ட‌ரும் ஜ்ஞானியுமாகிய‌ ஜ‌ன‌க‌ராஜ‌னுடைய‌ யாக‌பூமியில் அவ‌த‌ரித்தாள்.
ஜ‌ன‌க‌ரைப்போல‌ பெரியாழ்வாரும் சிற‌ந்த‌ க‌ர்ம‌ட‌ர். ச்ரௌத‌விஷ‌ய‌மான‌ க‌ல்ப‌ஸூத்ர‌ வ்யாக்யான‌ மிய‌ற்றிய‌வ‌ர்.

இர‌ண்டாம‌டியில் ஆண்டாளோடு யோக‌த்தைச் சொல்லுகையில் ச‌ந்த‌ன‌ யோக‌த்தைப் பேசுவ‌து விவாஹ‌த்திற்கேற்ற‌தாகும்.
ஆண்டாளை ஸ்ம‌ரிப்ப‌திலும் பேசுவ‌திலும் ப‌ரிம‌ள‌த்தையும் புஷ்ப‌த்தையும் பேசாம‌லிருக்கக் கூடுமோ?
தேவோத்யான‌மான‌ பூந்தோட்ட‌த்தையும், க‌ற்ப‌கக்கொடியையும், ஹ‌ரிச்ச‌ந்த‌ன‌ வ்ருக்ஷ‌த்தையும், ச‌ந்த‌ன‌த்தையும்,
“க‌ந்தத்வாராம் துராத‌ர்ஷ‌ம்” என்று வேத‌ம் கொண்டாடிய‌ க‌ந்த‌ங்க‌ம‌ழும் ஸ்ரீயை
இருத‌ர‌மும் இங்கே குறிப்ப‌து ப‌ரிம‌ள‌ங்க‌ளின் சேர்த்தியைக் காட்டுகிற‌து.

ம‌ற்ற‌ தேவிமாரும் கோதையும் ஒரு ம‌ன‌தே என்ப‌தைக் காட்ட‌ பூதேவியே கோதை என்ப‌தை
“இவ‌ள் ஸாக்ஷாத் க்ஷ‌மாதேவியே” என்று மூன்றாம‌டியில் காட்டுகிறார்.
“இவ‌ள் பொறுமையின் அவ‌தார‌மே” என்ப‌து அத‌ற்குப் பொருள்.
“க‌ருணாமிவ‌ ரூபிணீம்” என்ற‌ப‌டி க‌ருணைக் க‌ட‌லாகிய‌ ல‌க்ஷ்மீதேவி த‌யையின் மூர்த்தியாவாள்.
கோதையும் க‌ருணைக் க‌ட‌லாகையால், த‌ன்னுடைய‌ எல்லையில்லாத‌ க‌ருணையால் அப‌ர‌ல‌க்ஷ்மீயாவாள் என்கிறார்.
இப்ப‌டி பொறுமைக்கும், க‌ருணைக்கும் நிதியான‌வ‌ளைச் ச‌ர‌ண் புகுந்தால் ப‌ல‌ம் கிடைப்ப‌து நிச்ச‌ய‌ம் என்று விள‌க்குகிறார்.

இங்கே “ந‌ப்பின்னை” என்றும் நீளாதேவியைக் குறிப்பிட்டுச் சொல்ல‌வில்லை.
“ந‌ப்பின்னாய் க‌ந்த‌ம் க‌ம‌ழும் குழ‌லீ”,
“மைத்த‌ட‌ங்க‌ண்ணினாய்” என்றும் ஆண்டாளால் துதிக்க‌ப்ப‌டுப‌வ‌ளும்,
“ந‌ப்பின்னை ந‌ங்காய்த் திருவே துயிலெழாய்” என்று திருவோடு பிரியாத‌வ‌ளென்று பேச‌ப்ப‌டுப‌வ‌ளும்,
கூடாரை வெல்லுஞ்சீரில் பெருமாளோடுகூட‌ச் சேர்ந்து ஆண்டாளுக்குப் “ப‌ல்க‌ல‌னும‌ணிவ‌து” முத‌லிய‌
ச‌ம்மான‌ம‌ளிப்ப‌தாக‌ப் பாடும் விஷ‌ய‌முமான‌ ந‌ப்பின்னையும் கூடித்தான் ஆண்டாள் திருக்க‌ல்யாண‌ம்
முத‌லிய‌ ம‌ங்க‌ள‌ங்க‌ள் ந‌ட‌க்குமென்ப‌து திண்ண‌மாகையால் இங்கே த‌னித்துப்பேச‌ வேண்டிய‌ அவ‌ச்ய‌மில்லை.

முடிவில் 28வ‌து சுலோக‌த்தில் “ச‌த‌க ‌ம‌ணி நீலா” என்று ஒருவாறாக‌ நீளா நாம‌த்தையும் நிர்த்தேசிக்கிறார்.
“வ‌ல‌ந்திக‌ழும் திரும‌க‌ளும‌ற்றிட‌த்தே ம‌ன்னிய‌ ம‌ண்ம‌க‌ளோடு நீளையாரும் ந‌ல‌ந்திக‌ழ் வீற்றிருந்த‌
நாத‌ன் பாத‌ம் ந‌ம‌க்கிதுவே முடியென்றெண்ணினோமே” என்ப‌தையும் நினைக்க‌வேணும்.
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னோடு சேர்த்தியில் ஸ்ரீபூதேவிக‌ளான‌ உப‌ய‌நாய்ச்சிமாரே த்ருச்ய‌ராய் ஸேவை ஸாதிப்ப‌தால்,
இர‌ண்டு தேவிமாரை ம‌ட்டும் குறிப்பாக‌ இங்கே நிர்த்தேசிக்க‌ப் ப‌ட்ட‌து.

இந்தத் துதியில் ச்லோக‌ங்க‌ளின் எண்ணிக்கை 29. தத்துவ‌ங்க‌ள், ஜ‌ட‌ம் 24, ஜீவாத்மா 1, 26வ‌து தத்துவ‌மாகிய‌ பெருமாள் 1,
அவ‌ருடைய‌ தேவிமார் 3, ஆக‌ தத்துவ‌க் க‌ண‌க்கு மொத்த‌ம் 29ஐ அநுஸ‌ரித்ததாயிருக்க‌லாம்.
கோதை பாடின‌ திருப்பாவையின் க‌ண‌க்கு 30ல், “ப‌ட்ட‌ர்பிரான் கோதை சொன்ன‌ ச‌ங்க‌த்த‌மிழ்மாலை முப்ப‌தும்” என்று
திருப்பாவையின் வ‌ர்ண‌ன‌ம் ம‌ட்டுமான‌ க‌டைசிப் பாட்டைச் சேர்க்காம‌ல் “சிற்ற‌ஞ்சிறு காலை”யோடு பூர்த்தி
செய்து 29 க‌ண‌க்காக‌த் திருவுள்ள‌மாயிருக்க‌லாம்.
இங்கே 29வ‌து சுலோக‌த்தில் “ச‌ர‌ண‌ க‌ம‌ல‌ ஸேவாம் ஶாஶ்வ‌தீ மப்யுபைஷ்ய‌ந்” என்று இருப்ப‌து
“உன்னைச் சேவித்து உன் பொற்றாம‌ரைய‌டியே போற்றும் பொருள்”
“நீ குற்றேவ‌ல் எங்க‌ளைக்கொள்ளாம‌ல் போகாது இற்றைப் ப‌றை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கு மேழேழ் பிற‌விக்கும் உன்த‌ன்னோடுற்றோமே யாவோமுன‌க்கே நாமாட்செய்வோம்”
என்று 29ம் பாட்டிலுள்ள‌தையே அநுஸ‌ரிப்ப‌து ஸ்ப‌ஷ்ட‌ம்.
“இதி ப‌ஹுகுண‌ர‌ம‌ணீயாம் வ‌க்தி கோதாஸ்துதிம் ய‌” என்று 29ம் சுலோக‌த்திலுள்ள‌து.
30ம் பாட்டில் “கோதை சொன்ன‌ ச‌ங்க‌த் த‌மிழ்மாலை முப்ப‌துந் த‌ப்பாமே இங்கிப்ப‌ரிசுரைப்பார்” என்ப‌தை
முழுவ‌தும் அநுஸ‌ரிப்ப‌தும் ஸ்ப‌ஷ்ட‌ம். “இதி வ‌க்தி” என்ப‌த‌ற்கு “ம‌ல‌ர்ந்த‌ ப‌க்தியோடு தேசிக‌ன் (வேங்க‌டேச‌ன்)
ம‌ன‌திலிருந்து உருகி (வாக்காக‌) வெளிவ‌ரும் ப்ர‌கார‌மாக‌ இப்ப‌டியே யார் த‌ப்பாமே உச்ச‌ரிக்கிறாரோ” என்ப‌து பொருள்.

“இப்ப‌ரிசுரைப்பார்” என்ப‌த‌ற்கும்,
“கோதை எப்ப‌டி ப‌க்திவெள்ள‌மாக‌ ம‌ன‌ம‌கிழ்ந்து உரைத்தாளோ அப்ப‌டியே ஓதுப‌வ‌ர்” என்ப‌து பொருள்.
ர‌ங்க‌ராஜ‌னிட‌ம் கோதையின் ப‌க்தியையொக்கும், கோதையிட‌ம் ஸ்ரீதேசிக‌ன் ப‌க்தி.
“ச‌ங்க‌த்த‌மிழ்மாலை” என்ப‌த‌ற்குச் சிற‌ந்த‌ த‌மிழாகிய‌ ச‌ங்க‌த் த‌மிழாலிய‌ற்றிய‌ பாமாலை என்றும் சொல்லலாம்.
“ப‌ஹுகுண‌ர‌ம‌ணீயாம்” என்ப‌து ச‌ங்க‌த் த‌மிழ்போல‌ உய‌ர்ந்த‌ ஸ‌ம்ஸ்க்ருத‌மான‌ வைத‌ர்ப்பீ பாஞ்சாலி ரீதிக‌ளில‌மைந்தது.
கோதையினின்ன‌ருளால் இத்துதி என்று பேசுவ‌தாக‌ச் சொல்லலாம்.
இத்துதியை ஓதும‌வ‌ன் ஸ்ரீமானான‌ ர‌ங்க‌ப‌ர்த்தாவுக்கு ப‌ஹுமாந்ய‌னாவான்.

திருப்பாவை முப்ப‌துந் த‌ப்பாமே உரைப்ப‌வ‌ர்
“ஈரிர‌ண்டு மால்வ‌ரைத்தோள் செங்க‌ட்திருமுக‌த்துச் செல்வ‌த் திருமாலால் எங்குந் திருவ‌ருள் பெற்று இன்புறுவ‌ர்”
கோதைக்கு “செங்க‌ட்திருமுக‌த்துச் செல்வ‌த் திருமால்” ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ன்.
“ஆண்டாள‌ர‌ங்க‌ர்க்குப் ப‌ன்னு திருப்பாவை” என்ற‌ப‌டி ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னே திருப்பாவைக்கு விஷ‌ய‌ம்.
இம்முப்ப‌துந்த‌ப்பாமே உரைப்ப‌த‌னால் திருமாலால் வைய‌த்து வாழ்வோர்க‌ள் அருள் பெற்றின்புற‌ச் செய்வ‌தே
“த‌ன‌க்குப் பாவை, வ்ர‌த‌ம்” என்ப‌தை “என் பாவாய்” என்ற‌டுத்த‌ பேச்சால் காட்ட‌ப் ப‌டுகிற‌து.
“இதுவே என‌க்கு வ்ர‌த‌ம்” என்று இவ‌ள் ப‌தி இராம‌ன் ச‌ப்த‌ம் செய‌ததுபோல் கோதைக்கு இப்ப‌டி வ்ர‌த‌ம்.

வாக்கைக் கொடுத்த‌ கோதை விஷ‌ய‌மான‌ இந்த‌ ஸ்துதி 29ம் கோதை சொல்லுவித்ததாகையால்
இத‌ற்கும் திருப்பாவையை ஓதுவ‌துபோல‌ ப‌ல‌முண்டு என்ப‌து திருவுள்ள‌ம்.
“திங்க‌ட்திருமுக‌த்துச் சேயிழையார்” என்று க‌ண்ண‌னைக் குறித்து விர‌த‌ம் அநுஷ்டிக்கும் ஆய்ச்சிய‌ரைச்
ச‌ந்த்ர ‌பிம்ப‌ம்போன்ற‌ முக‌முடையார் என்று புக‌ழ்ந்தாள்.
ஒரு பெண்ம‌ணி ம‌ற்ற‌ப் பெண்க‌ளின் அழ‌கை ஒப்புவ‌ளோ? புக‌ழ்வ‌ளோ?
கோதையின் கோதிலாக் குண‌ங்க‌ள் இத‌னால் வெளியாகும்.
திருப்பாவை முடிவில் ஆண்டாள் பேசிய‌ “திங்க‌ட் திருமுக‌த்தை”,
முத‌ல் பாட்டிலேயே “திங்க‌ள், ம‌தி, நிறைந்த‌ ம‌தி, ம‌திய‌ம்போல் முக‌த்தான்” என்று த்வ‌நிப்ப‌தை ர‌ஸிக‌ர் க‌வ‌னிக்க‌ வேண்டும்.

இப்ப‌டி முத‌லிலும் முடிவிலும் பேசுவ‌தால் திங்க‌ள் (ம‌தி) ம‌தி நிறைந்திருந்தது ஆண்டாள் நெஞ்சில் என்ப‌தை
ஸ்ரீதேசிக‌ன் அநுப‌வித்து இங்கே முத‌ல் சுலோக‌த்தில் “ச‌ந்திர‌ன் (புருஷ‌னுடைய‌) ம‌ன‌திலிருந்து ஜாத‌ன்” என‌ற‌
புருஷ‌ஸூக்த‌ ச்ருதியை அநுஸ‌ரித்து “விஷ்ணுசித்தத்தை நந்த‌ன‌ம் செய்து அதில் தோன்றிய‌வ‌ள்” என்ப‌தையும்,
இர‌ண்டாம‌டியில் ச‌ந்த்ர‌ப‌ர்யாய‌மான‌ ராஜ‌ச‌ப்தத்தை ப்ர‌யோகிப்ப‌தால்,
ஸ்ரீர‌ங்க‌ச‌ந்த்ர‌ன் என்றும் பேசுகிறார் என்ப‌தையும் ர‌ஸிக‌ர் அறிய‌வேணும்.
“ஸ்ரீர‌ங்க‌ச‌ந்த்ர‌ம‌ஸ‌ம் இந்திர‌யா விஹ‌ர்த்தும்” முத‌லிய‌ ஸ்ரீப‌ட்ட‌ர் அநுப‌வ‌ங்க‌ளையும் நினைக்க‌வேண்டும்.
இங்கே “கோதாம்” என்ப‌து விசேஷ்ய‌ம். இது ஸாபிப்பிராய‌ம்.
“வாக்கைக் கொடுப்ப‌வ‌ளைச் ச‌ர‌ண‌ம‌டைகிறேன்” என்ற‌தால் ப‌ரிக‌ராங்குர‌ம் என்னும் அணிமுறையாக‌
வாக்கின் அபேக்ஷையை ஸூசிக்கும் ஸ்வார‌ஸ்ய‌மும் க‌வ‌னிக்க‌த் த‌க்க‌து.

இங்கே ஆண்டாளுக்கும் ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னோடு யோக‌ம், அவ‌ள் திருநாமமாகிய‌ “கோதா” ச‌ப்தத்திற்கும் யோக‌ம்
என்னும் அவ‌ய‌வ‌ப் பொருள். இங்கே “விஷ்ணுசித்த‌குல‌நந்த‌ன‌” என்ப‌தால்
“ஜ‌ன‌க ‌வ‌ம்ச‌த்தர‌ச‌ர்க‌ள் குல‌த்திற்கு என் பெண் கீர்த்தியைக் கொண‌ர்வாள்” என்ற‌ ஜ‌ன‌க‌ர் வார்த்தையை நினைக்க‌ வேண்டும்.

———

வைதேசிக: ச்ருதிகிராமபி பூயஸிநாம்
வர்ணேஷு மாதி மஹிமா ந ஹி மாத்ருசாம் தே|
இத்தம் விதந்தமபி மாம் ஸஹஸைவ கோதே
மௌநத்ருஹோ முகரயந்தி குணாஸ்த்வதீயா|| .2.

“எண்ணிறந்த சுருதி வாக்குகளுக்கு நிலமல்லாத (எட்டாத) உன்னுடைய மஹிமை என் போன்றவருடைய
எழுத்துக்களுக்குள் அடங்காதே. இப்படி அறிந்தவனான என்னையும் ஆலோசிக்கவே இடமில்லாமல்
சடக்கென்றும் பலாத்காரமாயும் ஓ, கோதையே! மௌனத்தைக் கோபிக்கும் உன் குணங்கள்
என் வாயைத் திறந்து வைத்துப் பேசச் செய்கின்றன.”

உனது மஹிமை ,வேதங்களுக்கும் எட்டாதது; என் போன்றவர்களின் வார்த்தைகளால் அது எப்படி சொல்லத்தகும்;
இவ்வுண்மையை அறிந்த என்னையும், உனது குண ப்ராபங்கள் என் மௌனத்தைக் கலைத்து, தேவரீரைப் பற்றிப் பேச வைத்து விட்டது.
த்ரி விக்ரமாவதாரத்தை ஒரு உருவில் அடக்கி விடலாம்; உனது மஹிமையை ஒருவராலும் அடக்க இயலாது;
நானே பேசினால் ” முகரதை” என்கிற குற்றம் வந்து விடும் ( பலர் வாய்க்கு வந்தபடி பேசுவது)
ஆனால் உன் குணங்கள் என்னைப் பேச வைக்கின்றன

தாத்பர்யம்

கோதா என்கிற திருநாமத்தைச் சொல்லி அவளைச் சரணமடைகின்றேன் என்றார்.
தேவ ஜாதியர் பரோக்ஷணமான பேச்சில் ரஸிப்பர். தேவியான கோதையை ‘கோதையைச் சரணமடைகிறேன்’ என்று
முதலில் த்வய மந்த்ரத்தில் போல பரோக்ஷமாகப் பேசிச் சரணம் புகுந்தார்.
மஹா கவியான கோதை, கண்டையின் அவதாரமான உத்தம (த்வநி) கவி தேசிகன் ப்ரயோகித்த
‘கோதா’ சப்தத்தின் த்வயர்த்தத்தை உடனே அறிந்தாள்.
பரிகராங்குராலங்காரத்தால் ஆசைப்படுவது கவிதை என்பது வஸ்து த்வனி.
தன்னைத் துதிக்க அர்ஹமான உத்தம வாக்கைக் கேட்கிறார் இவர் என்று அறிந்து கொண்டாள்.

“ஸ்ரீரங்கராஜனுடைய திவ்யாஜ்ஞையால் வேதாந்த தேசிகன் என்றும், அவர் திருவோலக்கத்தில்
பெரியோரால் கவிதார்க்கிக ஸிம்ஹம் என்றும் பிருதளிக்கப்பட்ட நீர் என்னைத் துதிக்க கவிதா பிக்ஷை கேட்பீரேயானால்,
எம் நாயகன் கொடுத்த பிருதங்கள் பொய்யாகாவோ?
ரங்கபர்த்தா தானம் செய்த வேதாந்தாசார்ய ஸம்ஜ்ஞையை அந்வர்த்தமாகச் செய்கிறேனென்று ப்ரதிஜ்ஞை செய்து,
ஸஹஜபஹுகுணமான ஸ்ரக்தரைப் பாற்கடலான ஸாராவளியைப் பாடினீரே?
எம் நாயகர் கொடுத்த கவிதைப் பிச்சையால் நீர் பூரணரல்லவா?
அரை வயிற்றுக்குத்தான் “கொள்ளக்குறைவிலனும் வேண்டிற்றெல்லாம் தருபவனுமான” ஸ்ரீரங்கராஜன் பிச்சை கொடுத்தாரோ?
நீர் வேதாந்த தேசிகராயிற்றே, நான் ஈச்வரியாயிருந்தாலும், ஈச்வர தத்வத்தின் நிலையை வேதாந்தங்கள் அறியாவோ?
வேதாந்த தேசிகருக்கு வேதாந்தங்களுக்கு நிலமான ஈச்வர மஹிமை நிலமாகாதோ? ஓய் தேசிகரே” என்று கோதை வினவ,

உன் மஹிமையிருக்குமூரிலேயே வேதாந்தங்கள் அணுகக் கூடவில்லை.
வேதாந்தங்களுக்கு உன்னுடைய மஹிமை வைதேசிகம் என்பதால் கைமுத்யத்தால்,
வேதாந்த தேசிகனுக்கும் அவன் பெருமை வைதேசிகமென்று ஸித்திக்கிறது.
ஒருவர் ப்ரபாவம் அவருக்கு ஸமீபத்திலிருந்தால் தெரியலாம். ஒரே ஊரிலிருந்தாலும் தெரியலாம்.
ஸாமீப்யம் அல்லது ஸாலோக்யமாவது இருக்க வேணும். ஸாலோக்யமேயில்லை. ஸாமீப்யத்திற்கு ஆசையேது?
வேதங்கள் அனந்தங்களென்பர். என் போன்றவர்களுக்கு சில எழுத்துக்கள் கூட்டத்தான் தெரியும்.
என் போன்றவர் எழுத்துகளுக்குள் உன் மஹிமை அளவடங்குமோ?

வர்ணம் என்பது எழுத்தையும் சொல்லும். ஸ்தோத்ரத்தையும் சொல்லும்.
(வர்ண்யதே அநேந — இதனால் வர்ணிக்கப் படுகிறது) எங்கள் எழுத்துக்களிலடங்காது.
நாங்கள் வெட்கத்தைவிட்டுக் கோணாமாணாவென்று ஸ்தோத்ரங்களை (வர்ணங்களால் வர்ணநங்களைச்) செய்தாலும்
உன் மஹிமை அதிலடங்குமோ? துதிப்பாடலுக்கும் வர்ணமென்று பெயர்.
இந்த ச்லோகத்தில் ‘கர்த்தும் ததீய மஹிமஸ்துதிம்’ என்ற ஆளவந்தார் ச்லோக வார்த்தை ஸ்வாமி நெஞ்சிலோடுகிறது.
துதியென்றால் மஹிமையின் துதியாகும். மஹிமையை அறியாமல் எப்படித் துதி செய்கிறது?
‘யதாவத் வர்ணநே தஸ்ய கிமுதாந்யே மிதம் பசா:’ என்று யாதவாப்யுதயத்தில்
‘வேதங்களே பாடிப்பாடி ஓரோர் குணத்தின் ஏகதேசத்திலே சோர்வடையும் விஷயத்தில் மிதக்ஞரானவர்
யதாவத்தாய் உள்ளபடி வர்ணிப்பதில் ஸமர்த்தராகாரென்பதற்குக் கேட்க வேணுமோ?’ என்று ஸாதித்ததை நினைக்க வேணும்.
உள்ளபடி வர்ணிப்பது வர்ணமென்னும் துதி. அங்கே கைமுத்யம் ஸ்பஷ்டமாக்கப்பட்டது.
இங்கே கைமுத்யம் வ்யஞ்ஜிதம். என் அறியாமையை நான் நன்கறிந்தும் திடீரென்று பலாத்காரமாய்,
உன் குணங்கள், உன் சிசுவாகிய நான் ஊமையாயிருப்பதை ஸஹிக்காமல், என் மௌனத்தின்மீது கோபித்து,
என் வாயைத் திறந்துவிட்டு என்னைப் பேச்சைக் கொடுக்கும் வ்யாபாரத்தில் தள்ளி விடுகின்றன.

‘ஸஹஸைவ’ அதிவேகமாகவே, பலாத்காரமாகவே. ஒன்றுமறியேனென்கிறீர்,
மௌனத்தைக் காணோமே, வாய் திறக்கிறீரே, இதென்ன ஸாஹஸம் என்பாயோ?
அம்மா இது உன் குணங்களின் ஸாஹஸம், அவற்றின் பலாத்காரம், என் ஸாஹஸமல்ல.
உன் குணங்கள் உன் குழந்தையாகிய என் மௌனத்தைக் கோபிக்கின்றன.
பெருமாள் குணங்கள் மௌனத்தை நிர்ப்பந்திக்கும். அவர் ஆனந்த குணத்தைப் பேசி ஓய்ந்து
வாயை மூடிக்கொண்டு சும்மாயிருப்பதே அழகு என்று வேதம் நிவ்ருத்தி அடைந்தது.
‘முகலாயம் நிலில்யே’ ‘ஊமையாக லயமடைந்தது’ என்று ஸ்ரீபட்டர் ஸாதித்தார்.
பெருமாள் குணங்கள் அவருடைய ஐச்வர்யப் பெருமையால் மௌனத்தையும், ஊமைத் தன்மையையும் ஸஹிக்கும்.
பேசாமலும் செய்யும். தாயாகிய உன்னுடைய குணங்களோ குழந்தை வாயை மூடி ஊமையாயிருப்பதை ஸஹிக்காது.
மௌனத்தைக் கோபித்து வாயை உடனே திறந்து விடும். வேறொன்றையும் உன் குணங்கள் கோபிக்கமாட்டா.
மௌனத்தை மட்டும் கோபிக்கும்.

பெருமாள் குணங்களுக்கும் உன் குணங்களுக்கும் இந்த வாசியுண்டு. என்ன குணங்கள்?
முன் ச்லோகத்தில் மூன்று சொன்னேன். அவையென்ன? க்ஷமை, கருணை, கோதை என்ற திருநாமத்திற்கேற்ற
“வாக்கைத் தானம் செய்வதென்னும் குணம்”. என்ன பிதற்றினாலென்ன?
சொற்குற்றம், பொருள் குற்றம் எத்தனையிருந்தாலுமென்ன? உன் பொறுமை அதையெல்லாம் பொறுக்காதோ?
ஏன் அஞ்ச வேணும்? உன்னைத் துதி செய்தாலல்லது நான் தரிக்க முடியாத என் ஆர்த்தியைக் கண்டும்
உன் கருணை என்னைக் கைவிடுமோ? “கோதா — வாக்கையளிப்பவள்” என்னும் உன் திருநாமம் கோபியாதோ?
இரண்டுக்கும் பரஸ்பரம் சத்ருத்வமில்லையோ? வாக்கைக் கொடுக்கும் குணம் கொள்வாரில்லாமற் போனால்
கானக நிலவு போல வீணாகாதோ?

“முகரயந்தி” என்பதிலும் மிக்க ரஸமுண்டு. ‘முகம்’ என்பது வாய்க்குப் பெயர்.
லக்ஷணையாக வாய்ப்பேச்சை, வாக்கைச் சொல்லும். முகத்தைக் கொடுப்பது முகரம்.
முகம்ராதி. ராதி என்பதற்கு, கொடுக்கிறது என்று பொருள். வாய்ப்பேச்சை, வாக்கை, துதியைக் கொடுப்பது முகரம் —
வாயைக் கொடுக்கச் செய்கிறது என்று மொத்தப் பொருள். என் வாயைக் கொடுக்கச் செய்தால்தானே,
உனக்கு கோதா என்னும் திருநாமம் நிலைக்கும். (2)

—————-

த்வத்ப்ரேயஸ: ச்ரவணயோ ரம்ருதாயமாநாம்
துல்யாம் த்வதீய மணி நூபுர சிஞ்ஜிதாநாம்|
கோதே த்வமேவ ஜநநி த்வதபிஷ்டவார்ஹாம்
வாசம் ப்ரஸந்ந மதுராம் மம ஸம்விதேஹி || .3.

உன் காந்தனுடைய செவிகளுக்கு அம்ருதம் போன்றதாயிருப்பதும்,
உன்னுடைய மணிச் சிலம்பி னோசைக்குத் துல்யமானதும்,
உன்னை நன்கு துதிக்க யோக்யமுமான ப்ரஸந்ந மதுர வாக்கைத் தாயாகிய நீயே எனக்கு அமைத்தருள வேணும்.

கோதே …நீ வாக்கை அளிப்பவள்…உனது நாதனுடைய செவிகளுக்கு அமுதம் போன்று இருக்கும்படியாயும்,
உனது திருவடிகளில் அணிவிக்கப்பட்டிருக்கும் ரத்னச் சலங்கையின் ஓசைகளுக்கு நிகராக இருக்கும்படியாயும்
உன்னைத் துதிக்கும் சொற்கள் தெளிவும், இனிமையுமாக அடியேனிடமிருந்து வெளி வரும்படியாக ,அருள்வாயாக
உன் திருவடிகளில் அணிந்திருக்கும் நூபுர மணி நாதத்தை, இரு செவிகளாலும் ஆதரித்து அனுபவிக்கிறான்,அரங்கன்.
அப்போதே உன் கரத்தலம் பற்றத் தீர்மானித்தானோ !

தாத்பர்யம்

(1) நீர் சரணம் புகுகிறதாகவும், நீர் என் மஹிமையை அறியவும் பாடவும் அசக்தர் என்றும் பேசுகிறீர்.
ஆனால் கவி பாடிய இரண்டு சுலோகங்களும் அழகியதே. அப்படியே நீர் பாடலாம்.
(2) சரணம் புகுகிறேனென்கிறீர். வாய் திறக்கப்படுகிறது என்கிறீர்.
முழு வாயால் கவிதா சக்தி வேணும் என்று அர்த்திக்க மாட்டேனென்கிறீரே!
திறந்த வாயால் வேண்டியதை நன்றாய்ச் சொல்லிக் கேளும் ! வெட்கப்படாதேயும். இப்படிச் சொன்னதும்,
உன் மணிச் சிலம்பினோசையைப்போல் உன் நாயகன் செவிகளுக்கு அமிர்தத்தை வார்க்கும்
இனிய கவிகளையல்லவோ நான் ஆசைப்படுவது!
அப்படிக்கினிய கவிகள் எனக்கு நீ கொடாமல் போனால் ஸ்வயமாய் எனக்கு அவை சக்யமல்ல.
தாயாகிய உன்னிடமெனக்கு என்ன வெட்கம்? வாய்விட்டு நன்றாக யாசிக்கிறேன் என்றார்.

ச்ருதிகளுக்கெட்டாதது உன் மஹிமையென்றார் முன்பு. இங்கே உன் நாயகன் சுருதிகளுக்கு மதுரமாய் எட்டவேணும் என்கிறார்.
உன் நாயகன் எத்தகையவர் தெரியுமோ? எல்லாக் கவிகளும் அவரிடம் தங்கள் காவ்யங்களைப் பாடி அரங்கேற்றிப் பரிசு பெறவேணும்.
எல்லாக் கவிகளும் அவரிடம் பாடி இற்றைப் பறை பெற்றால்தான் உலகம் அவர்கள் கவிகளை பஹுமானிக்கும்.
தம் விஷயமான காவ்யமாயின், அதன் இனிப்புக் குறையலிருந்தாலும் குறை சொல்லமாட்டார்.
ப்ரிய காந்தையும், உத்தம கவியுமான உன் விஷயமான கவியாதலால், அமிர்தமாயிருந்தாலொழிய அபிநந்தனம் செய்யார்.
ப்ரதிதினமும் தன் முன்பு அரங்கேற்றப்படும் காவ்யங்களைக் கேட்டுக்கேட்டு காவ்ய குணதோஷங்களைப் பூர்ணமாய்
பரீக்ஷிக்கத் தெரிந்த செவிகளை உடையவர் அரங்கராஜர். அவருக்கு பஹுகுணரமணீயமென்று பஹுமானிக்கத் தக்கதாய் வேணும்.
அமிர்தம் போல் இனிப்பென்றதோடு திருப்தியில்லை. மற்றோருபமானமும் செய்கிறார்.
அந்த உவமையையும் கோதை ஸம்பந்தமாகவே எடுக்கிறார். உன்னுடையது உன்னுடையது என்று இங்கே பலதரம் பேசுகிறார்.

உனக்கு மிகப்ரியன், உன்னுடைய மணிச்சிலம்புகளினொலிகள் த்வமேவ (நீயே, நீயாகவே) உன்னை
நன்கு துதிக்க அர்ஹமாக என்றே திரும்பவும் திரும்பவும் பேசுகிறார். எல்லாம் உனதாகவே இருக்கவேணும்.
என்னதென்பதே கூடாது.
உன்னுடைய மணிச்சிலம்பின் ஓசை காதில் விழுவதை அவர் எல்லையில்லாத ஆவலுடன் ப்ரதீக்ஷித்துக் கொண்டிருப்பர்.
அதனிலும் இனியது அவர் செவிக்குக் கிடையாது. உன் வரவை அல்லவோ, அது முன்பே காட்டும்!
“மணியோசை வருமுன்னே, நீ கஜகாமினியாய் ஆடியாடி நடந்து வருவதையல்லவோ அவ்வோசை காட்டும்.
கோதையின் அடிச்சிலம்பின் ஓசையைப் போன்ற மதுரவாக்கை யாசிக்கிறார்.
சேஷனாகிய தம் வாக்குக்கு அவள் திருவடி ஸம்பந்தமான சிலம்போசையின் உவமையைச் சொல்லுவதுதான் அழகு.
அவள் “வந்த்ராரவிந்த மகரந்த துல்ய”மான வாக்கைக் கேட்கவில்லையென்பதைக் கவனிக்கவேணும்.
“கோதே த்வமேவ ஜநநி வாசம் ஸம்ஹிதேஹி” வாக்கைக் கொடுப்பதையே ஸ்வபாவமாக உடைய
நீ (கோதை) நீயாகவே ஸ்வயமாய்க் கொடுக்க வேணும். தாதாக்கள் நிர்ப்பந்தித்தால் கொடுப்பவரல்லரே.
தம்பேறாகத் தாமாகவேதான் கொடுப்பர்.

‘ஜநநி’
தாயே, என்னைப் பெற்றவளே, என்னைப் பெற்ற நீ என் துதியையும் நீயே பெறுவாயாக.
(பிறக்கச் செய்வாய்) பெற்ற ஜநநியைத்தானே “பவதி பிக்ஷாம் தேஹி” என்று என்று குழந்தைகள் யாசிப்பர்!
பிக்ஷாம் தேஹி என்பதுபோல் சப்தம் இருக்க, ‘ஸம்ஹிதேஹி’ என்று ஸாதித்தார்.
நான் உன்னை யாசிக்க வெட்கப்படவில்லை. பெற்றவள்தானே என்போன்ற ப்ரஹ்மசாரிகளுக்கு பிச்சை போடவேணும்
! உன் நாயகனுக்கு செவிக்குக் கொடுக்கவல்லவோ நான் உன்னை யாசிக்கிறேன்!
நீ எனக்குக் கொடுக்கும் வாக்குப் பிச்சை உன் நாதன் செவிகளுக்கு அமிர்தமாகும்.
க்ருஷ்ண கர்ணாம்ருதம், ராமகர்ணாம்ருதம் என்ற பகவத் ஸ்தோத்ரங்களைக் காட்டிலும் கோதை கர்ணாம்ருதமே
அவர் செவிக்கு அத்யந்தமின்பத்தைப் பயக்கும்.
“நானே வாக்கைக் கொடுத்து என்னைத் துதிக்கச் செய்து அதை நானே கேட்டு மகிழலாமோ?” என்று நீ கேட்பாயோ?
நீ எனக்கு வாக்கைக் கொடுத்து உன்னைப் பற்றிப் பாடச் செய்தால் போதும். அப்பாட்டை நீ காது கொடுத்துக் கேட்கவேண்டாம்.
உன் நாயகன் கேட்பதே போதும்.

த்வதபிஷ்டவார்ஹாம்.
கவிச் சக்ரவர்த்தினியான உன்னை நன்கு இனியப் பாட யோக்யமான வாக்கு உன் கவிதையே.
இங்கே ‘அபிஷ்டவம்’ என்னும் பதத்தைக் கவனிக்க வேணும்.
கோபால பாலனை ப்ரஹ்மதேவன் வத்ஸாபஹாரப்ரகரண முடிவில் ப்ரஹ்மஸ்துதி என்று பெயர் பெற்ற
அத்புத ஸ்தோத்ரத்தால் துதி செய்து முடிந்ததும்
“இத்யபிஷ்டூய பூமானம் த்ரி:பரிக்ரம்ய பாதயோ” (இப்படி எல்லையில்லாப் பெருமையும் ஸுகமுமான கண்ணனை
நன்கு துதித்து மூன்று ப்ரதக்ஷிணங்கள் செய்து திருவடிகளில் விழுந்தார்) என்று அவர் மகிழ்ந்து வர்ணிப்பதில்
நான்கு முகங்களாலும் ஸர்வகாலமும் நான்கு வேதங்களையும் அத்யயனாத்யாயனம் செய்யும்
ஸரஸ்வதீகாந்தரான ப்ரஹ்மதேவன் ஸ்துதியை “அபிஷ்டவம்” என்று பேசினார். அதுபோன்ற ஸ்தவத்தில் ஆசை.

திருவேங்கடமுடையான் தயாவிஷயத்திலும் “அபிஷ்டௌமி நிரஞ்ஜநாம்” என்று இப்படித் துதிக்க ஆசையைக் காட்டினார்.
ஆளவந்தார் சதுச்லோகியும் இப்படி அபிஷ்டவமாக அமைந்ததென்பதை “அபிஷ்டௌதிஸ்துத்யாம்” என்று
அதை வர்ணித்ததால் காட்டினார். எந்த ரீதியான வாக்கு வேணும்? ஸமாஸங்கள் நிறைந்த ஓஜஸ்,
அக்ஷரடம்பரம் (தடபுடல்) என்னும் கௌடரீதி வேணுமா? மாதுர்ய சௌகுமார்யங்களோடு கூடிய பாஞ்சாலிரீதி வேணுமா?
தோஷலேசங்களாலும் ஸ்பர்சிக்கப் படாததும் ஸமக்ரகுண கும்பிதமும் வீணையின் ஸ்வரத்தின் ஸௌபாக்யத்தை யுடையதும்
(விபஞ்சீஸ்வர ஸௌபாக்யையான) வைதர்பரீதி வேணுமா? உமக்கு எல்லாம் பிடிக்கும் என்று நீரே
ஸங்கல்ப ஸூர்யோதயத்தில்
“கௌடவைதர்ப்ப பாஞ்சால மாலாகாரம் ஸரஸ்வதீம் ! யஸ்ய நித்யம் ப்ரசம்ஸந்தி ஸந்தஸ்ஸௌபரபவேதின:” என்று பாடியிருக்கிறீரே !
வேண்டிய வாக்கைக் கேளும். அம்மா! கௌடரீதி வேண்டாம். ஸமக்ரகுணா பேதமான வைதர்ப்பரீதியையும்,
மாதுர்ய ஸௌகுமார்யங்களோடு கூடிய பாஞ்சால ரீதியையும் அளிக்க வேணும்.

விபஞ்சீ (வீணை) ஸ்வரம் போன்ற இனிப்புடையது வைதர்பீ என்பர். யாழிலுமினிதாகும் உன் சிலம்பின் ஓசை.
கோதை சிலம்பின் ஓசையைப் போன்ற என்றதால் உயர்ந்த வைதர்ப்பரீதியைக் கேட்டதாயிற்று.
ப்ரஸந்ந மதுரமான வாக்கை அளிக்க ப்ரார்த்திக்கிறார். மதுரம் என்பது பாஞ்சாலிரீதியை அஸாதாரணமாகக் காட்டும்.
ப்ரஸாதம் முதலிய சிறந்த எல்லாக் குணங்களையும் உடையது வைதர்ப்பீ ரீதி. ‘ப்ரஸந்ந’ என்பதால் அந்த ரீதியையும் கேட்கிறார்.
இந்த ரீதிகளால் கந்தங் கமழும் மாலை போன்ற ஸரஸ்வதியை யாசிக்கிறேன்.
உன் பாமாலை போன்ற இனிப்பும், ஸௌரப்யமுமிருக்க வேணும். வாக்கின் பரிமளத்தை உன்னிடம் யாசிக்கிறேன்.
புஷ்பம் போன்ற வாக்கு வேணும். பெருமாளுக்கு வாக்கு மாலை ஸமர்ப்பிக்க உன்னிடம்தானே யாசிக்க வேணும்!
நியே விதானம் செய்யவேணும். விதானம் மட்டும் போதாது. நன்றாய் விதனம் செய்யவேணும்.
(அமைக்கவேணும்) ஸம்விதானம் செய்விதர்ப்பாதிபதியின் புத்திரி ருக்மிணீ. கிருஷ்ணனுக்கு பரம மித்ரமானவள் பாஞ்சாலி, த்ரௌபதி.
அவள் ருக்மிணிக்கு ப்ராண ஸமமான ஸகியாவாள். வைதர்ப்பி, பாஞ்சாலி என்னும் திருநாமங்களே பெருமாளுக்கும் கோதைக்கும் அமிர்தமாகும்.

————-

க்ருஷ்ணாந்வயேந ததீம் யமுகாநுபாவம்
தீர்த்தைர் யதாவதகாஹ்ய ஸரஸ்வதீம் தே |
கோதே விகஸ்வரதியாம் பவதீகடாக்ஷாத்
வாசஸ் ஸ்புரந்தி மகரந்தமுச: கவீயாம் || (4)

கோதே — கோதாய், க்ருஷ்ணாந்வயேந — கிருஷ்ண ஸம்பந்தத்தால்;
யமுனானுபாவம் — யமுனையின் பெருமையை; தததீம் — தரிப்பவளான; தே — உன்னுடைய;
ஸரஸ்வதி — ஸரஸ்வதியை (வாக்கை, நதியை); தீர்த்தை — குருக்களின் முகமாக; (இறங்கும் துறைகள் வழியாக);
ததாவத் — உள்ளபடி (சாஸ்திரமுறைப்படி); அவகாஹ்ய — இறங்கி ஸ்நானம் செய்து;
பவதீகடாக்ஷாத் — உன் கடாக்ஷத்தால்; விகஸ்வரதியாம் — மலர்ச்சி அடைந்த புத்திகளையுடைய;
கவீநாம் — கவிகளுடைய; வாச: — வாக்குகள்; மகரந்தமுச: — தேனைப் பொழிந்துகொண்டு; ஸ்புரந்தி — விளங்குகின்றன.

கோதாய்! க்ருஷ்ண ஸம்யோகத்தால் யமுனையின் பெருமையை உடையதான உன்னுடைய ஸரஸ்வதியை
(வாக்கை, நதியை), குருக்களின் முகமாக (இறங்கும் துறைகள் வழியாக) உள்ளபடி (சாஸ்த்ர முறைப்படி)
இறங்கி ஸ்நானம் செய்து உன் கடாக்ஷத்தால் மலர்ச்சி யடைந்த புத்திகளையுடைய கவிகளுடைய
வாக்குகள் தேனைப் பொழிந்துகொண்டு விளங்குகின்றன.

க்ருஷ்ண சம்பந்தத்தினால் , உனது வாக்காகிய சரஸ்வதி , யமுனையாகவும் ஆகிறது.
இந்த யமுனைத் துறைகளில் இறங்கியவர்கள், உனது கிருபையால் மேதா விலாசம் வரப்பெற்று,
மஹா கவிகளாக மாற்றப்பட்டு, அபார க்ஜானத்தை அடைகிறார்கள். அவர்களுடைய வாக்குகள் தேனைத் தெளிப்பதுபோல் உள்ளது.
அந்த சரஸ்வதி ,அங்கு—கங்கையும் ,யமுனையும் கலக்குமிடத்தில் — அந்தர்வாஹினி உனது சரஸ்வதி (வாக்கு) யமுனையாகத் தோன்றுகிறது.
அதனால், சரஸ்வதிக்கும் துறைகள் ஏற்பட்டன ( இறங்கி நீராடும் துறைகள்) அதில் இறங்கி ஸ்நானம் செய்பவர்கள்
உனது கடாக்ஷத்தால், கவிகளாக ஆகி, அவர்களுடைய வாக்குகள் தேனைப் பொழிகின்றன.

அவதாரிகைகள்

(1) என் நாயகனுடைய ஓர் அவதாரமான ஹயக்ரீவமூர்த்தியை நீர் துதிக்கையில்
ம‌ஞ்சுப்ர‌ணாத‌ம் ம‌ணிநூபுரம் தே ம‌ஞ்சூஷிகாம் வேத‌கிராம் ப்ர‌தீம‌: என்று பேசினீர்.
அவ‌ர் ர‌த்ன‌ச் சில‌ம்பின் இனிய‌ ஓசையில் வேத‌ ஸ‌ர‌ஸ்வ‌திக‌ள் பெட்டியில்போல் அட‌ங்கியிருக்கின்ற‌ன‌ என்று பாடினீர்.
இங்கே பெண்பிள்ளையாகிய‌ என் சில‌ம்பின் ஓசையைப்போல் இனிய‌ வாக்கென்கிறீர்.
இர‌ண்டிட‌த்திலும் “ம‌ணிநூபுர‌ம்” என்று ஒரேவித‌ப் பேச்சு.
அங்கே 27ம் சுலோக‌த்தில் க‌டாக்ஷா: ஶ்ரோத்ரேஷு பும்ஸாமம்ருத‌ம் க்ஷ‌ர‌ந்தீம் ஸ‌ர‌ஸ்வ‌தீம் திஸ‌ந்து என்று பாடினீர்.
உம்முடைய‌ க‌டாக்ஷ‌ங்க‌ள் ம‌நுஷ்ய‌ர்க‌ள் காதுக‌ளில் அம்ருதத்தை வார்க்கும் ஸ‌ர‌ஸ்வ‌தியை என‌க்க‌ருள‌ வேணும்
என்று ஹ‌ய‌க்ரீவ‌தேவ‌னைப் பிரார்த்தித்தீர். அம்ருத‌ வாக்கை அவ‌ரிட‌மே ப்ரார்த்திக்க‌லாமே!
அவ‌ரிட‌ம் ப்ரார்த்தித்ததை அவ‌ர் முன்பே உம‌க்கு அருளியிருக்கிறார்.
இப்பொழுது வெறும் பேச்சாக‌ முக‌ஸ்துதியாக‌ நீர் அதே வார்த்தைக‌ளைக்கொண்டு யாசிக்கிறீர்.
ஹ‌ய‌க்ரீவ‌னிட‌மிருந்து அடையாம‌ல் என்னிட‌மிருந்து பெற‌வேண்டிய‌து மீதியுண்டோ?

இத‌ற்கு ப‌தில் கூறுகிறார்:–
அம்மா! நீ ந‌ன்றாய்க் க‌வ‌னிக்க‌வேண்டும். ப‌ர‌மபுருஷ‌னாகிய‌ உன்னுடைய‌ நாய‌க‌ன் காதுக‌ளில்
அம்ருதத்தை வார்ப்ப‌துபோல் இனிமையான‌ வாக்கைய‌ல்ல‌வா நான் முன் சுலோக‌த்தில் ப்ரார்த்தித்தது!
என் இஷ்ட‌ தெய்வ‌மான‌ ஹ‌ய‌க்ரீவ‌ரை “பும்ஸாம்” என்று பொதுவாக‌ ம‌நுஷ்ய‌ர்க‌ள் செவிக‌ளுக்கு
இனிய‌ ஸ‌ர‌ஸ்வ‌தியைத் தானே ப்ரார்த்தித்தேன்!
இங்கே உன்னை யாசிப்ப‌து ப‌ர‌மபுமானுடைய‌ செவிக‌ளுக்கு அம்ருத‌மான‌ சொற்க‌ள். உன் நாய‌க‌ன் ர‌ங்க‌ந‌ட‌ர‌ல்ல‌வோ?
சில‌ம்பில்லாம‌லும், சில‌ம்போசையில்லாம‌லும் ந‌ர்த்த‌ன‌ம் செய்வ‌ரோ! நான் ம‌ன‌ப்பூர்வ‌மாக‌ உண்மையாக‌த்தான் துதிக்கிறேன்.
ஹ‌ய‌க்ரீவ‌ ஸ்தோத்ர‌த்தில் “க‌டாக்ஷா: திஶ‌ந்து” என்று அனேக‌ க‌டாக்ஷ‌ங்க‌ள் நேர்ந்து
வாக்கை அனுக்ர‌ஹிக்க‌ட்டும் என்று ப்ரார்த்தித்தேன். உன்னுடைய‌ ஒரு க‌டாக்ஷ‌த்தைப் பெற்றுத் தேன் பொழியும்
ப‌ல‌ வாக்குக‌ள் ப்ர‌வ‌ஹிக்கும் என்று இந்த‌ சுலோக‌த்தில் “ப‌வ‌தி க‌டாக்ஷாத் வாச‌: ஸ்புர‌ந்தி” என்று பேச‌ப் போகிறேன் அம்மா!

(2) என் க‌விக‌ளைக் க‌ற்று யாரேனும் க‌விஞ‌ர்க‌ளானார்க‌ளா? அம்ருத‌வாக்கைப் பெற்றிருக்கிறார்க‌ளா?
வாக்தேவியான‌ ஸ‌ர‌ஸ்வ‌தியை உபாஸித்துக் க‌விக‌ள் அம்ருத‌ வாக்கைப் பெறுவ‌ரென்ப‌ரே!
“தேவீம் வாச‌முபாஸ‌தே ஹி ப‌ஹ‌வ‌: என்ப‌ர்.

இத‌ன் ப‌தில்:– உன்னுடைய‌ வாக்குத்தான் ப‌ரிசுத்த‌மான‌ ஸ‌ர‌ஸ்வ‌தி ர‌ஸ‌ம் ஓர் அவிச்சிந்ந‌ ப்ர‌வாஹ‌மாக‌ப்
புண்ய ‌நதியைப்போல் பெருக்கு உடைய‌து. உன் ஸ‌ர‌ஸ்வ‌தியை குருக்க‌ள் முக‌மாகக் க‌ற்றுத் தேன் மொழியைப் பெற்று
ப்ர‌காசித்த‌வ‌ர் ஆள‌வ‌ந்தார், ஆழ்வான், ப‌ட்ட‌ர் முத‌லிய‌வ‌ர். ஸ‌ர‌ஸ்வ‌தி தேவி க‌டாக்ஷ‌ம் பெற்ற‌ க‌விக‌ளிலும்
ந‌ம் பூர்வாசார்ய‌ரான‌ க‌விக‌ள் சிற‌ந்த‌வ‌ர்க‌ள். இவ‌ர்க‌ள் க‌விக‌ள் இனிப்போடு நிக‌ர‌ற்ற‌ ப‌ரிசுத்தியையுமுடைய‌ன‌.
உன் ப்ர‌ப‌ந்த‌ங்க‌ள் ப‌ரிசுத்த‌மான‌ இனிய‌ ஸ‌ர‌ஸ்வ‌தி, அவ‌ர்க‌ள் வாக்ஸ‌ர‌ஸ்வ‌தியும் அப்ப‌டியே.
“த‌ச்சாவ்யாஜ‌வித‌ப்த‌முப்த‌ம‌துராம் ஸார‌ஸ்வ‌த‌ம் ஶாஶ்வ‌த‌ம்” என்று அவ‌ர்க‌ள் வாக்கை வ‌ர்ணித்துள்ள‌து.
அவ‌ர்க‌ள் ம‌தியும் வாக்கும் ஆஜாந‌சுத்த‌ம். “செஞ்சொற்க‌விக‌ள்”

க்ருஷ்ணாந்வ‌யேந‌ —
க்ருஷ்ண‌ன் ஸ‌ம்ப‌ந்தத்தால். க்ருஷ்ண‌ த்ருஷ்ணாம‌ய‌ம் உன்னுடைய‌ ஸ‌ர‌ஸ்வ‌தி.
க்ருஷ்ண‌னிட‌ம் சுத்த‌மான‌ பாவ‌ம் ஓர் ஸ‌ர‌ஸ்வ‌திவெள்ள‌மாக‌ப் பெருகியுள‌து. க்ருஷ்ண‌ர‌ஸ‌ நதியாகுமுன்னுடைய‌ ஸ‌ர‌ஸ்வ‌தீ.
க்ருஷ்ண‌னிட‌ம் ஸ‌ம‌ந்வ‌ய‌முடைய‌ன‌ உன் காவ்ய‌ங்க‌ள். ப்ர‌ஹ்ம‌த்தினிட‌த்தில் வேதாந்த‌ ஸ‌ர‌ஸ்வ‌திக‌ளுக்கு
ஸ‌ம‌ந்வ‌ய‌த்தை நிரூபிக்கும் ப்ர‌ஹ்ம‌ஸூத்ர‌ங்க‌ள் க்ருஷ்ண‌னென்னும் அம்ருத‌ ஸ‌முத்ர‌த்தில்
த்ருஷ்ணையைப் பெருக்குகின்ற‌ன‌ என்று ஸாராவ‌ளியில் பேசியுள‌து.
ம‌ஹ‌ர்ஷியின் ஸூத்ர‌ங்க‌ளே அப்ப‌டி க்ருஷ்ண‌ த்ருஷ்ணையைப் பெருக்கும் பொழுது,
ப்ரிய ‌த‌மையான‌ பெண்க‌ளின் ப்ர‌ப‌ந்த‌ங்க‌ள் க்ருஷ்ண ‌த்ருஷ்ணையைச் சூழ்ந்தத‌னிற் பெரிய‌தாக‌ப் பெருக்குவ‌தில் என்ன‌ ஸ‌ந்தேக‌ம்?
க்ருஷ்ண‌ன் ஒருவ‌னிட‌த்திலேயே உன் ஸ‌ர‌ஸ்வ‌தி அவ்வித‌ம். பூமிப்பிராட்டி கோதை.
“ய‌த் க்ருஷ்ண‌ம் தத் வ்ருத்திவ்யா:” என்ப‌து வேத‌ம்.
பூமியின் வ‌ர்ண‌ம் க‌ருப்பு (க்ருஷ்ண‌ம்) ய‌முனை நீரும் க்ருஷ்ண‌ வ‌ர்ண‌ம். க்ருஷ்ண‌வ‌ர்ண‌ தத்வ‌ம் கோதைக்கே.

ய‌முனாநுபாவ‌ம்:–
க்ருஷ்ண‌ ஸ‌ம்ப‌ந்தத்தால் “தூய‌பெருநீர் ” ய‌முனையின் பெருமையுள‌து உன்னுடைய‌ ஸ‌ர‌ஸ்வ‌தீ.
க்ருஷ்ண‌னுடைய‌ யௌவ‌ன‌ லீலைக‌ள் க்ருஷ்ணா நதியிலும், அந்நதிக்க‌ரையிலும் நிக‌ழ்ந்த‌ன‌.
“ய‌முனாஸாக்ஷிக‌யௌவ‌ன‌ம் யுவாந‌ம்” யௌவ‌ன‌ கேளிக்கைக‌ளுக்கெல்லாம் ய‌முனை ஸாக்ஷி.
அநுபாவ‌ம் என்ப‌து ம‌ன‌தில‌ழுந்தியிருக்கும் ச்ருங்கார‌பாவ‌த்தை ஸூசிக்கும் விகார‌சேஷ்டைக‌ளையும் சொல்லும்.
முகுந்த‌ன் வேணுகான‌த்தைக் கேட்ட‌ நதிக‌ள் ம‌ன்ம‌த‌விகார‌ம் நிர‌ம்பி “நெஞ்ச‌ழியும், க‌ண்க‌ழ‌லும்” என்ப‌துபோல்,
ம‌னோவிகார‌ங்க‌ளைச் சுழ‌ல்க‌ளாலும், குமிழிக‌ளாலும் காட்டிக்கொண்டு, க‌ண்ண‌னை ஆலிங்க‌ன‌ம் செய்ய‌
ஆசையைக் காட்டுவ‌துபோல், அலைக‌ளாகிய‌ கைக‌ளை உய‌ர்த்திக்கொண்டு, ஆவ‌லுட‌ன் க‌ரையிலிருக்கும்
க்ருஷ்ண‌னிட‌ம் ஓடிவ‌ந்து தாம‌ரை ம‌ல‌ர்க‌ளை அவ‌ன் திருவ‌டிக‌ளில் ஸ‌ம‌ர்ப்பித்துத் திருவ‌டிக‌ளைத் த‌ழுவுகின்ற‌ன ‌போலும்” என்று
சுக‌ர் வ‌ர்ணித்தது ய‌முனா நதி விஷ‌ய‌ம். பின்பு ய‌முனை (காளிந்தீ) க‌ண்ண‌னுக்கு அஷ்ட‌ம‌ஹிஷிக‌ளில் ஓர் ம‌ஹிஷியானாள்.

அநு+அயம் அந்வயம் , அநு+பாவம் அநுபாவம் — காரண கார்யங்களுக்கு ஆநுரூப்யம்

தததீம் —
உன் ஸரஸ்வதிநதி யமுனையின் பெருமையை உடையது (வஹிக்கிறது).
தூயபெருநீர் யமுனை என்று யமுனைத்துறைவன் ஸம்பந்தமுடையதாக (அந்வயமுடையதாக) யமுனை நீரை வர்ணித்தாய்.
அப்படி வர்ணிக்கும் உன் ஸரஸ்வதிக்கும் அந்த வர்ணனம் தகும். இங்கே ததாநாம் என்று ஆத்மநேபதமாக
ப்ரயோகிக்காமல் தததீம் என்று பரஸ்மைபதமாக ப்ரயோகித்தது ரஸம்.
க்ருஷ்ண ரஸ வெள்ளத்தில் நீ நீராடி மகிழ்வதைப்போல், உன் ஸரஸ்வதியில் நீராடுகிறவர்களும் அதில் ஆழ்வதால்,
அந்த ரஸமுள்ள கவிதையை அவர்களும் பெற்று உத்தம கவிகளாகும்படிக்கும் செய்கிறாய்.

தே ஸரஸ்வதீம்:–
உன் ஸரஸ்வதியை. உன் க்ருஷ்ணபக்திரஸ கவிதா நதியில்.
ஸரஸ்வதீம் என்பதால் நுட்பமான பொருள் உள்ளே மறைந்திருப்பதனையும் கொள்ளவேணும். வ்யங்கியமே மிகுதி.

தீர்த்தை:–
வெள்ளமிட்டோடும் ரஸப்ரவாஹ நதியில் இறங்கும் துறைகளைக் காட்டும் பல ஆசிரியர்கள் முகமாக.
‘அனேக குருக்களிடம் அனேகம்தரம் கேட்கவேண்டும்’ என்பதைக் காட்டுகிறது பன்மை.
‘தீர்த்தம்’ என்பதற்குள்ள அனேகம் பொருள்களையும் கொள்ளவேணும்.
சாஸ்த்ரங்களை எல்லாம் கற்று உன் ஸரஸ்வதியில் நீராடவேணும். யஜ்ஞங்களை அநுஷ்டித்து
சித்த சுத்தியை ஸம்பாதித்துக் கொண்டு உன் பரிசுத்த ஸரஸ்வதியில் இறங்கவேணும். ‘விவிதிஷந்தி யஜ்ஞேந’

யதாவத்:–
உள்ளபடி உன் ஸரஸ்வதியின் ஹ்ருதயத்தை குருமுகமாக அறியவேணும். சாஸ்த்ரவிதிப்படி நீராடவேணும்.
சுத்த சுபஸங்கல்பம் செய்துகொண்டு மனச்சுத்தியோடு நீராட வேணும்.
அந்தர்வாஹினியானதால் (பொருள்கள் உள்ளே மறைந்து கிடப்பதால்) உள்ளபடி உன் கருத்தை அறிய
ஆசிரியர்கள் வழிகாட்ட வேணும். படிப்படியாய் உன் பா4வங்களிலாழ வேண்டும்.

அவகாஹ்ய:–
இறங்கி நீராடி. ராமாயணகவி “இதமேவா வகாஹிஷ்யே தமஸாதீர்த்தமுத்தமம்” என்று
புண்ய நதியிலே நீராடி அந்நதிக்கரையில் ராமாயணம் பாடினார்.
அதுபோல, உன் ஸரஸ்வதியில் எங்கள் பெரியோர் நீராடி மஹாகவிகளானார்கள்.

கோதே —
நீ இன்பத்துடன் கவி பாடினதால் உன் காவ்யத்தில் இனிய ரஸமுடையவருக்கு
உன் கடாக்ஷத்தால் உன் போன்ற வாக்கைக் கொடுக்கக் கவிதானம் செய்பவளே

பவதீகடாக்ஷாத்:–
உன் க்ருஷ்ணரஸ நதியான ப்ரபந்தங்களில் ரஸிப்பவரை நீ கடாக்ஷிக்கிறாய்.
உன் ஒரு கடாக்ஷம் போதும் அவர்களுக்கு அனேக உயர்ந்த புத்தி வ்ருத்திகள் கொழுந்துவிட்டு மலரும்படி செய்ய.
கடாக்ஷத்தில் ஒருமை, அதனால் மலர்ந்து வளரும் புத்திகளில் பன்மை. ‘விகஸ்வரதியாம்” என்பது பன்மை.
‘பவதீ கடாக்ஷாத்’ என்னுமிடத்தில் பவதீ என்பது ஸர்வநாம சப்தமன்று. அப்படியிருந்தால் ‘பும்வத்பாவம்’ வரும்.
கோதை கல்யாணம் வர்ணிக்கப்படுகிறது. அதற்கும் அது அநுசிதம். எல்லோரையும் சொல்லக்கூடிய ஓர்
ஸர்வநாமசப்தத்தால் ‘நாரீணாம் உத்தமவது’வான கோதையைச் சொல்லுவது அழகல்ல.
வேறு உணாதிவிகுதியை உடைய சப்தம் இது. இங்கே வர்ணிக்கப்படும் கவிகள் பட்டர் முதலியவர்.
“பவதீ ஸம்பந்தத்ருஷ்ட்யா ஹரிம்” என்று ப்ரயோகிப்பவர் அப்பெரியோர்.
அவர்கள் வாக்குகளை வர்ணிக்கையில் அவர்கள் ப்ரயோகத்தை அநுஸரிப்பது அழகு.

விகஸ்வரதியாம்:–
புத்தியும் புஷ்பமாயிற்று. அதற்கு மலர்ச்சியும், மலருகையில் வீசும் மணமுமுண்டு.
பூமாலை கோதை அனுக்ரஹிக்கும் வாக்கும் கவிபுத்தியும் புஷ்பமாக வர்ணிக்கப்படுவது உசிதமே.

கவீநாம்:–
ஆளவந்தார், ஆழ்வான், பட்டர், அம்மாள் முதலிய கவிகளுக்கு.

மகரந்தமுச:–
தேன் பொழிவதான

வாச: —
வாக்குகள்,

ஸ்புரந்தி —
ப்ரகாசிக்கின்றன. இத்தேனைக் காதாலும் பருகலாம்,
கண்ணாலும் காணலாம் போல் இருக்கிறது. “முடியானே”யிற்போல் அநுபவம். (4)

————-

அஸ்மாத்ருஶாம் அப‌க்ருதௌ சிர‌தீக்ஷிதாநாம்
அஹ்நாய‌ தேவி த‌ய‌தெ ய‌த‌ஸௌ முகுந்த‌: |
த‌ந் நிஶ்சித‌ம் நிய‌மித‌ஸ் த‌வ‌ மௌளிதாம்நா
த‌ந்த்ரீநிநாத‌ம‌துரைஶ்ச‌ கிராம் நிகும்பை:||–5-

தேவி — தேவி கோதாய்! அப‌க்ருதௌ — அப‌ராத‌ம் செய்வ‌தில்,
சிர‌தீக்ஷிதாநாம் — வெகுகால‌மாய் தீக்ஷையாய்க் கொண்டிருக்கும், அஸ்ம‌த்ருஶாம் — என் போன்ற‌வ‌ரிட‌ம்,
அஹ்நாய‌ — உட‌னே, அஸௌ முகுந்த‌ — இந்த‌ முகுந்த‌ன்,
த‌ய‌தே இதிய‌த் — த‌ய‌வு ப‌ண்ணுகிறான் என்ப‌து யாதொன்று உண்டோ, தத் — அதான‌து, த‌வ‌ — உன்னுடைய‌,
மௌளிதாம்நாம் — சிரோமாலையின் நாரினாலும்,
த‌ந்த்ரீநிநாத‌ம‌துரைஶ்ச‌ — வீணைக்க‌ம்பிக‌ளின் நாதத்தைப்போல் ம‌துர‌மான‌, த‌வ‌ — உன்னுடைய‌,
கிராம் நிகும்பை: — நூல்க‌ளாலும், நிய‌மித‌: — நிய‌மிக்க‌ப்ப‌ட்டான், நிஶ்சித‌ம் — நிச்ச‌ய‌மாய்.

தேவி கோதாய்! அப‌ராத‌ங்க‌ளைச் செய்வ‌தையே தீக்ஷையாக‌ (வ்ர‌த‌மாக‌) வெகுகால‌மாகக் கொண்டிருக்கும்
என் போன்ற‌வ‌ரிட‌மும், உட‌னே (விரைவில், அன்றே) மோக்ஷ‌ம் கொடுப்ப‌தாக‌ முகுந்த‌ன் த‌ய‌வு ப‌ண்ணுகிறான்
என்ப‌து நிச்ச‌ய‌மாய் உன்னுடைய‌ சிரோமாலையின் நாரினாலும், வீணைக் க‌ம்பிக‌ளின் நாதத்தைப் போல்
ம‌துர‌மான‌ உன்னுடைய‌ நூல்க‌ளாலும் க‌ட்டுப்ப‌ட்டுத்தான். அத‌னாலே தான் அப்ப‌டி அவ‌ன் உட‌னே த‌ய‌வு செய்து முக்தி அளிப்பது.

என் போன்ற அபராதிகள், பகவானுக்கு பிரதிகூலமே செய்தாலும், எங்களுக்கு முகுந்தன் கருணை செய்கிறான்.
அப்படி செய்யக் காரணம், ஒன்று , தன்னைக் காட்டிலும் பெரியதொரு சக்திக்குக் கட்டுப்பட்டு அடங்கி இதைச் செய்வது ;
இரண்டாவது, முகுந்தனைக் கட்டிப் போட்டுக் கையெழுத்து வாங்குவார் இருக்க வேண்டும்.
நீ, உனது திருமுடியில் சூடிக் கொடுத்த பூமாலைகளாலும் , உன்னுடைய பாமாலைகளாலும், முகுந்தனை வசப்படுத்தி வைத்திருக்கிறாய்.

அவ‌தாரிகை

(1) என் வாக்கில் முறைப்ப‌டி ஈடுப‌ட்டு ர‌ஸிப்ப‌வ‌ர் இனிய‌ க‌விக‌ளாகித் தேன்மொழி செவிக‌ளார‌ப் பொழிகிறாரென்றீர்.
என் ப்ர‌ப‌ந்த‌ங்க‌ள் எப்ப‌டி இனிய‌தோ? க‌விஸிம்ஹ‌மே! உம் வாயால் கேட்க‌வேணும்.
அர‌ங்க‌ன் புக‌ழ்வ‌து போதாது. என்ன‌து என்று ப‌க்ஷ‌பாதத்தால் புக‌ழ்வ‌ர்.

(2) ய‌ஜ்ஞ‌ங்க‌ளால் (தீர்த்த‌ங்க‌ளால்) சுத்திய‌டைந்து என் வாக்கை அறிய‌ விரும்புகிறார்க‌ள் என்று
ய‌ஜ்ஞாதி சுருதியைப் பேசினீர். உம்முடைய‌ த‌க‌ப்ப‌னார் , பாட்ட‌னார் யாக‌தீக்ஷித‌ர்க‌ள். நீரும் தீக்ஷித‌ரோ?

(3) விப‌ஞ்சீஸ்வ‌ர‌ம‌துர‌ம் வைத‌ர்ப்ப‌ரீதியென்ப‌ரே! என் வாக்கு அந்த‌ ல‌க்ஷ‌ண‌த்திற்கு ஏற்ற‌தோ?

தேவி —
கோதா தேவியே! மோக் ஷ‌ப்ராப்தியையும், மோக் ஷ‌ப்ராபண‌த்தையும் பேசுகிற‌ப‌டியால்
இங்கே தேவி என்று கூப்பிடுகிறார்.

அப‌க்ருதௌசிர‌தீக்ஷிதாநாம் —
ஒரு விதத்தில் நானும் தீக்ஷித‌ன்தான்.
யாக‌தீக்ஷித‌ர்க‌ள் யாக‌மென்னும் “க்ருதி”யில் தீக்ஷித‌ர்.
நாங்க‌ள் “அப‌க்ருதி”யில் தீக்ஷித‌ரென்று வேடிக்கையாகக் காட்டுகிறார்.
வெகுகால‌மாய் நாங்க‌ள் இப்ப‌டி அநாதி தீர்க்க‌ஸ‌த்ர‌த்தில் தீக்ஷித‌ர்க‌ள்.

அஸ்மாத்ருஶாம் —
என் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு, ப‌க‌வ‌த்த்ருஶேப்ய‌: என்ப‌துபோல‌,

அஸௌ —
உன் துதியைக் கேட்க‌ இதோ நிற்கிறாரே, “அஸ்மாத்ருஶாம்” என்ப‌து ப‌ரிஹாஸ‌ வ‌ர்ண‌ன‌ம்.

முகுந்த‌: —
மோக்ஷ‌த்தைய‌ளிக்கும் முகுந்த‌ன். இத‌னால் செய்யும் த‌ய‌வு மோக்ஷ‌ம‌ளிப்ப‌தென்ப‌து ஸூசிக்க‌ப் ப‌டுகிற‌து.

அஹ்நாய‌ —
தாம‌தியாம‌ல், உட‌னே, அன்று தின‌மே. நாங்க‌ள் சிர‌ கால‌ம் அப‌ராத‌ தீக்ஷித‌ர்க‌ள்.
“ஸுசிரேண‌” விள‌ம்ப‌மில்லாம‌ல் உன் நாய‌க‌ன் அன்றே மோக்ஷ‌ம‌ளிக்கிறான். மோக்ஷ‌ம‌ளிக்க‌ அவ‌ர் வெகுகால‌ தீக்ஷை!

த‌ய‌தே ய‌த‌ஸௌ — அவ‌ன் த‌ய‌வு செய்வ‌து என்ப‌து எதுவோ

தத் — அது,
நிஶ்சித‌ம் — க‌ட்டாய‌மாக‌. த‌வ‌ மௌளிதாம்நா — உன் கூந்த‌லில் சூடிக்கொடுத்த‌ மாலைக் க‌யிற்றாலும்

த‌ந்த்ரீநிநாத‌ம‌துரைஶ்ச‌ —
வீணையின் நாதத்தைப் போல் இனிமையான‌.
(த‌வ‌) கிராம் நிகும்பை: — அழ‌காகக் கோர்த்துள்ள‌ உன்னுடைய‌ வாக்குக‌ளால் (பாமாலைநார்க‌ளால்).
இர‌ண்டுவித‌ மாலைக‌ளும் அவ‌னைக் க‌ட்டியிழுத்துச் சொன்ன‌ப‌டி கேட்க‌வைக்க‌ உப‌யோக‌ப்ப‌டுகிற‌து.
குடுமியைக் கொடுத்துவிடுகிறார். உன் பாமாலைக்கு த்ருஷ்டாந்த‌மான‌ வீணையிலும்
த‌ந்திக் க‌ம்பிக‌ளிருக்கின்ற‌ன‌ என்று த‌ந்த்ரீ என்னும் ப‌தத்தால் வேடிக்கையாகக் காட்டுகிறார்.

நிய‌மித‌ —
க‌ட்டுப்ப‌டுகிற‌த‌னால்தான். வீணைக்க‌ம்பியின் நிநாத‌ம் வாக்குக‌ளின் நிகும்ப‌ங்க‌ள்,
எல்லாம் நிய‌ம‌ன‌த்திற்கு உப‌யோக‌ப்ப‌டுகின்ற‌ன‌.
“அள‌க‌நித‌மிதாபி:” என்று முடிவிலும் சாதிக்க‌ப் போகிறார்.
“நிஶ்சித‌ம்”, “நிய‌மித‌ம்” என்னும் ப‌த‌ங்க‌ளின் சேர்த்தியும‌ழ‌கு.
முன் ச்லோக‌த்தில் “அநு”வைக் கார்ய‌கார‌ண‌ங்க‌ளில் கோர்த்தது.
இங்கே “நித‌ராம்” என்னும் பொருளுடைய‌ “நி” என்ப‌தைக்கொண்டு கோர்வை. பூமாலை கோர்ப்பது போல‌.
இத்த‌னை கால‌ம் ப‌ல‌ம் கைகூடாம‌ல் தாம‌தித்தது -சிர‌ம் – நிச்ச‌ய‌மாய் எங்க‌ள‌து.
இப்பொழுது தாம‌த‌மே யில்லாம‌ல் வெகு சீக்கிர‌த்தில் ப‌ல‌ம் ஸித்திப்ப‌து (த‌வ‌) உன் பெருமை. (5)

———-

சோணாத‌ரேZபி குச‌யோர‌பி துங்க‌ப‌த்ரா
வாசாம் ப்ர‌வாஹ‌விப‌வேZபி ஸ‌ர‌ஸ்வ‌தி த்வ‌ம்|
அப்ராக்ருதைர‌பி ர‌ஸைர் விர‌ஜாஸ் ஸ்வ‌பாவாத்
கோதாபி தேவி க‌மிதுர் நநு ந‌ர்ம‌தாஸி|| .6.

த்வ‌ம் — நீ, அத‌ரே — திருவ‌த‌ர‌த்தில்,
ஶோணா அபி — சோணாநதியாக‌வும், (சோணையாயிருந்தாலும்), (சோணாநதியோ),
குச‌யோ — ஸ்த‌ன‌ங்க‌ளில்,
துங்க‌ப‌த்ரா அபி — துங்க‌ப‌த்ரா நதியாக‌வும், (துங்க‌ப‌த்ரையாயிருந்தாலும்),
(துங்க‌ப‌த்ரா நதியோ) வாசாம் பிர‌வாஹ‌விப‌வே — வாக்குக‌ள் ப்ர‌வ‌ஹித்து ஓடி வ‌ரும் பெருமையில்,
ஸ‌ர‌ஸ்வ‌தி அபி — ஸ‌ர‌ஸ்வ‌தியாக‌வும், (ஸ‌ர‌ஸ்வ‌தியாயிருந்தாலும்), (ஸ‌ர‌ஸ்வ‌தியோ),
அப்ராக்ருதை: ர‌ஸை: — ப்ர‌க்ருதி ஸ‌ம்ப‌ந்த‌மே யில்லாத‌ திவ்ய‌ர‌ஸ‌ங்க‌ளால்,
விர‌ஜா அபி — விர‌ஜா நதியாக‌வும், (விர‌ஜையாயிருந்தாலும்),(விர‌ஜா நதியோ),
ஸ்வ‌ப‌வாத் — உன் த‌ன்மையால், (உன் ஸ்வ‌பாவ‌த்தாலே),
கோதா அபி — கோதாவ‌ரியாக‌வும், (கோதாவ‌ரியாயிருந்தாலும்), (கோதாவ‌ரியோ),
தேவி — திவ்ய ‌ம‌ஹிஷியே, (விளையாடும் த‌ன்மை உடைய‌வ‌ளே),
கமிது: — ஆசைப்படும் நாயகனுக்கு,
நநு நர்மதா அஸி — நீ நர்மதை தானம்மா. நீ நர்மதையோ, நர்ம பரிஹாஸப் பேச்சுக்களைப் பேசி ரமிப்பிக்கிறாய்.

(1) பாசுரங்களைப் பாடும் உன் திருப்பவழத்தைப் பார்க்கையில் (சிவப்பினால்) நீ சோணா நதியோ என்றும்,
பாடுங்கால் உயர்ந்ததும் ஜகன்மங்களமுமான ஸ்தனங்களைக் கொண்டு துங்கபத்ரா நதியோ என்றும்,
உன் வாக்குகளின் ப்ரவாஹப் பெருமையைப் பார்த்தால், நீ ஸரஸ்வதியோ என்றும்,
ப்ரக்ருதி ஸம்பந்தமேயில்லாத திவ்யரஸங்களால் நீ விரஜையோ என்றும்,
உன்னுடைய ஸ்வந்தத்தன்மையாலே கோதாவரியோ என்றும் உல்லேஹிக்கப்படுகிறாய்.
உன்னுடைய காந்தனுக்கோ என்றால் நிச்சயமாய் நீ (மனதை ஹரிக்கும் நர்மஹாவசனங்களைக் கொடுப்பதால்)
நர்மதா நதியாகவே இருக்கிறாய்.

(2) அல்லது, திருப்பவழத்தில் சோணையாயிருந்தாலும், தனங்களில் துங்கபத்ரையாயிருந்தாலும்,
வாக்ப்ரவாஹ மஹிமையில் ஸரஸ்வதியாக இருந்தாலும், அப்ராக்ரத ரஸங்களாலே விரஜையாயிருந்தாலும்,
ஸ்வயமாக நீ கோதை (கோதாவரியாக) இருந்தாலும், உன் காந்தனுக்கு நீ நர்மதைதான்.

(3) அல்லது, ஓரோர் காரணத்தால் சோணையாகவும், துங்கபத்ரையாயும், ஸரஸ்வதியாயும், விரஜையாயும்,
கோதாவரியாயும் இருக்கும் நீ உன் காந்தனுக்கு நர்மதையாகவே இருக்கிறாய்.
எல்லாப் புண்ய நதிகளின் சுத்தியும், மஹிமையும் உன் ஸரஸ்வதி வெள்ளத்தில் சேர்ந்துளது.

தாயே…..உன்னை சேவிக்கும்போது, வார்த்தைகள் வெள்ளம் போல் வருகின்றன. ஏனென்றால் நீயே வெள்ளமாக இருக்கிறாய்.
உனது திருநாமமே கோதா…அதாவது.. கோதா ( கோதாவரி ) ஆனாலும்,
உன் திருவதரத்தை சேவித்தால், சிவந்த ஜலத்தை உடைய சோணையாறாகத்( சோண பத்ரா ) தோன்றுகிறாய்.
சொல் வளத்தில் ஸரஸ்வதி நதி, அந்தர் வாஹினியாக இல்லாமல், பஹிர் வாஹினியாக ஆகிறாய்.
திவ்யமான ச்ருங்கார ரஸங்களினால் (ஜலம்—தீர்த்தம்) ஸ்வயம் வ்ரஜை நதி ஆகிறாய் –வ்ரஜை —குற்றமற்றவள்–.
உன் கணவனுக்கு, நர்மதை ( இன்பம் தருபவள்– பரிஹாச வார்த்தைகளைச் சொல்லி மகிழ்விப்பவள்– நர்மதை நதி ) ஆகிறாய்.
மார்பகங்களில் , நீ , துங்கபத்ரை —துங்கமான தன்மை, பத்திரமான தன்மை —துங்கபத்ரை நதியாக ஆகிறாய்.

இது ஆறாவது ஸ்லோகம். ஆறுகளைப் பற்றியே நிரூபணம்.
ஆறு ஆறுகள்—கோதாவரி, சோணையாறு, சரஸ்வதி நதி, வ்ரஜா நதி ,நர்மதா, துங்கபத்ரா

அவதாரிகை

(1) என் வாக்கை ஸரஸ்வதி என்றீர், நான் வாக்தேவியாகேனோ?
என்னை ஸரஸ்வதியாக வர்ணித்து என்னை உபாஸிக்கவேண்டாவோ?
அம்மா, நீ ஸரஸ்வதிதான். ‘ஸரஸ்வதீ த்வம்’

(2) நதிகள் ப்ராயேண ப்ராசீமுகமாகப் போகும். என் ஸரஸ்வதியும் அப்படித்தானோ?
ப்ரத்யக்முகமாக (ஆத்மா என்னும் ப்ரத்யக் வஸ்துவைக் குறித்ததாய் அத்யாத்மமாய்) இருக்குமோ?
அம்மா, உன் வாக்குகள் சோணாநதி, அது மேற்கு முகமாக ஓடும் நதி. உன் வாக்கும் ப்ரத்யங்முகம். அது சோணை போன்றது.

(3) அரங்கனுக்கு இனிப்பான வாக்கு வேணுமென்கிறீர். அரங்கத்தில் என்ன ரஸம்?
மிக்க விநோதம் விளைவிக்கும் ஹாஸ்யரஸம் வேண்டுமே? அம்மா, உன் வாக்கு நர்ம பரிஹாஸங்களமைந்துளது.
அது அரங்கனுக்கு மிக்க இனிப்பை உண்டாக்கும்.

அபி என்பதற்கு மூன்று விதப் பொருள்கள் கொள்ளலாம்.
(1) அந்த நதியோ, இந்த நதியோ என்று உல்லேஹிக்கும்படி யிருப்பது ஓர் பொருள்.
(2) ஓர் நதியாயிருந்தும் மற்றோர் நதியுமாவாய் என்று விரோதி ஸமுச்சயம். வேறுவேறான பல நதிகளாயிருந்தும்,
விரோதமில்லாமல் உன்னிடத்தில் ஒன்றாகச் சேர்ந்திருக்கின்றன.
(3) இந்த நதியும் அந்த நதியுமாகப் பல புண்ய நதிகளும் உன்னிடமும் சேர்ந்துள என்பது கூட்டுப் பொருள்.
முதல் பொருளில் ரஸமதிகம்.

அதரே —
வாக்கை உச்சரிக்கும் திருப்பவழத்தில். உன் நாயகன் உன் வாக்குகளால் கட்டுப்படுவதற்கு
இதெல்லாம் ஓர் ஓர் விசித்ர நிமித்தம். பேசும் திருப்பவழத்தைப் பார்க்கையில் அவன் என் செய்வான், எப்படித் தப்பிப்பான்!

அபி ஶோணா —
(ஶோணாபி) சோணாநதியோ. சோணா என்பது சிவப்பு நிறத்தைச் சொல்லும்.
ஒருவளே எப்படிப் பல நதிகளாவது? ஓர் ஓர் அவயவத்தால் ஓரோர் குணத்தால், ஓர்ஓர் நதியாகிறாள்.
சோணை மேற்குமுகமாக (ப்ரத்யங்முகமாக) ஓடும் நதி.
உன் வாக்கு சோணாநதியைப்போல் ப்ரத்யங்முகம் (அத்யாத்மம்) ஸ்வாபதேசம் கனத்தது.
அத்யாத்மப் பொருளிலேயே முக்கிய நோக்கம் உள்ளதென்பதைக் காட்ட உபக்ரமத்திலேயே சோணையாக நிரூபித்தது.
இதனால் சொல்லப்படும் அத்யாத்ம நோக்குக்கு அநுகுணமாகவே மற்ற குணங்களும் உல்லேகங்களும் பொருந்தும்.

குசயோ: அபி துங்கபத்ரா —
இரு ஸ்தனங்களும் உந்நதம். பேசுகையில் இன்னும் உயரும்.
துங்கத்தின்பேரில் துங்கமாகும். சைதந்யஸ்தந்யத்தைக் கொடுக்கும். ஜகன்மங்களமான (பத்ரமான) ஸ்தனங்கள்.
ஸ்தனங்கள் ஓர் திருமேனியில் இரட்டையாக அமைந்திருப்பதைப்போல், இயற்கையாய் துங்கா பத்ரா என்று
இரண்டு சேர்ந்த துங்கபத்ரையை எடுத்தது அழகு. நீ பாடும்போது உயர்ந்து அமரும் உன் பத்ர ஸ்தனங்களைப் பார்த்து
அவன் எப்படி வ்யாமோஹ பரவசனாகாமல் தப்புவான்?

வாசாம் ப்ரவாஹவிபவே —
பாஹ்யமான திருப்பவழத்தின் அழகாலும், ஸ்தனங்களின் அழகினாலும் மட்டுமா
நீ பாடும் பாசுரங்களுக்குக் கௌரவம்? லாவண்யமுடைய யுவதி பாடுகிறாள் என்பதாலா உன் பாசுரங்களுக்குக் கௌரவம்?
உன் வாக்குகளின் ப்ரவாஹம் ஸ்வயம் ஸரஸ்வதீப்ரவாஹம். பாடும் உன்னுடைய அழகால் ஆரோபிதமான பெருமையன்று.
ஸ்வயம் அந்தர்வாஹினியான ஸரஸ்வதி யாகும். அரும்பெரும் கருத்துக்கள் உள்ளே ஆழ்ந்து கிடக்கும்.
உள்ளேயிருந்து கந்தம் வீசும். அந்த ஸ்திர பரிமளம் உன் ஸரஸ்வதி. மறையேயம்மா, மறையிலும் மறை.
பொருள்கள் உள்ளே மறைந்திருந்தாலும், உள்ளே அவிச்சின்ன ப்ரவாஹமாக ஓடிக்கொண்டேயிருக்கும்.
நீ பூமிதேவியானதால் உன் ஸரஸ்வதி பூமிக்குள் மறைந்து ஓடுகிறதோ?
உம்மை ஒரு க்ஷணமேனும் த்யானிப்பவர் அநிவாரிதமான வாக்குகளின் ப்ரவாஹங்களால்,
மந்தாகினியையும் மந்தமாகச் செய்கிற சக்தியை உடையவராவார் என்று உன் நாயகன் ஹயக்ரீவரைத் துதிக்கையில்
கங்கா ப்ரவாஹத்தை அதிசயிப்பதைப் பேசினேன். கங்கை அந்தர்வாஹினி யன்று.
இங்கே அந்தர்வாஹினியான ஸரஸ்வதி நீ என்று வ்யதிரேகம் (உயர்வு).

அப்ராக்ருதை: ரஸை: —
கவிஸிம்ஹமே, என் ப்ரபந்தங்களில் என்ன ரஸங்கள்? ப்ரக்ருதரஸங்களா?
அலௌகிக திவ்யரஸங்களா? அதிலுள்ள ச்ருங்கார ரஸத்திற்கு என்ன ஸ்தாயீபாவம்?
ப்ரக்ருதி மண்டலத்தில் பூமியிலோடும் (இந்த மானவாவர்த்தத்தில் ஓடும்) நதிகளாக என்னை வர்ணிப்பது உசிதமா?
அம்மா, கவிமுறையில் பலபலவிதமாய் உல்லேகாலங்காரமாகப் பேசினேன். தேவதைகளான புண்ய நதிகளாகப் பேசினேன்.
உன் ஸ்வபாவத்திற்குத் தக்கபடி உள்ளபடி பேசினால் உன் கவி ரஸங்களெல்லாம் திவ்யரஸமாயிருப்பதால்
நீ விரஜையம்மா. ‘ஸ்வபாவாத்’ என்பதை இங்கேயுமொட்டலாம். பின்பும் ஒட்டலாம். அது ‘மத்யமணி’.
வாக்ப்ரவாஹத்தை வர்ணித்தீரே! ப்ரவாஹமானால் ரஜஸ் இல்லாமல் இருக்குமோ?
இல்லையம்மா! உன் வாக்ப்ரவாஹம் ஸ்வத்ஸித்தம். நித்யமாயுளது. புதிதாக உற்பத்தியாகி ஓடிவருவதன்று.
ஸ்வபாவாத் — ஸ்வாபாவிகம் — நித்யம். ஆகையால் ரஜஸ்ஸுக்கிடமில்லை.
ச்ருங்கார ரஸத்திற்கு ரதிதான் ஸ்தாயீபாவம். ஆனால் இது ஆத்மாதி, ப்ராக்ருதியன்று.
அலௌகிகாதி,ப்ரத்யங்முகமான ரதி. ‘அத்யாத்ம ஜ்ஞானத்ருப்தத்வம்’

ஸ்வபாவாத் விரஜா அஸி —
எங்கள் ரஜஸ் தமஸ்ஸுகளை எல்லாம் போக்கி திவ்யவிபூதியை
உடனே அடையச் செய்யும் உன் வாக் ப்ரவாஹத்தில் ரஜஸ்ஸுக்கு ப்ரஸக்தியேது?

ஸ்வபாவாஅபி கோதா —
கோதா என்னும் சப்தம் கோதாவரி நதியையும்,
ஸ்ரீவிஷ்ணுசித்தர் பெண்ணையும் சொல்லும் என்று நிகண்டு. நீ ஸ்வயம் கோதாவரியாவாய்.
நீ கோதாவரி என்பதற்கு ஓர் குணவிசேஷத்தைக் கொண்டு ஆரோபிக்க வேண்டியதில்லை.
நீ கோதாவரி என்பதில் ஆரோபமுமில்லை. யமுனை கண்ணன் யௌவன விஹாரங்களுக்கு சாக்ஷி.
பஞ்சவடியில் சிரகாலம் ராமவைதேஹீ விஹாரங்களுக்கு கோதாவரி சாக்ஷியாவாள்.
ஜனகராஜன் புத்திரியாகிய ஜானகி நீராடினதால், புண்யமான நீர்களையுடையதாக,
கோதாவரி தீர்த்தத்தைக் காளிதாஸர் மேகஸந்தேச ஆரம்பத்தில் வர்ணித்தார்.
உத்தமராமசரிதத்தில் பவபூதியின் வர்ணனங்களையும் நினைக்கவேணும்.

கமிது: நநு நர்மதா அஸி —
இத்தனை நதிகளாக இருக்கையிலும், உன் நாயகனுக்கு நீ
நர்ம பரிஹாஸ வார்த்தைகளைப் பேசுவதில் உள்ள விநோதம் எல்லையற்றது.
ராமாயண ரஸங்களைப் பேசுகையில், ஆதிகவி “ஹாஸ்ய ச்ருங்கார பீபத்ஸ” என்று ஹாஸ்ய ரஸத்தை முதலில் பேசினார்.
எங்கள் அநாதிகாலமான கொடிய அந்த அபராதங்களினால் உள்ள சீற்றத்தை மாற்ற ஹாஸ்ய ரஸம்தான் சிறந்த உபாயம்.
அந்த நதியோ, இந்த நதியோ என்று ஓரோர் காரணத்தையிட்டு உல்லேகம்.
உன் காந்தனுக்கு நீ நர்மதை என்பதுதான் தத்துவம். நர்மதா த்வம் அஸி, ஸா த்வமஸி! (6)

———

வல்மீகத: ச்ரவணதோ வஸுதாத்மநஸ் தே
ஜாதோ பபூவ ஸ முநி: கவிஸார்வபௌம: |
கோதே கிமத்புதம் யதமீ ஸ்வதந்தே
வக்த்ராரவிந்த மகரந்தநிபா: ப்ரபந்தா: || (7)

கோதே — கோதாய்!; வஸுதாத்மந: — பூமிப்பிராட்டி ரூபமான; தே — உனது;
ச்ரவணத: — செவியாகிற; வல்மீகத: — புத்திலிருந்து; ஜாத: — பிறந்த; ஸ – அந்த; முநி — மஹர்ஷி;
கவிஸார்வ பௌம: — கவிகளுக்குள் சக்கரவர்த்தியாக; பபூவ — ஆனார்; (ஆகையால்), தே — உனது;
வக்த்ராரவிந்த — முகமென்னும் கமலத்திலிருந்து (பெருகும்); மகரந்தநிபா: — தேன்போன்ற;
அமீ ப்ரபந்தா: — இந்த ப்ரபந்தங்கள்; ஸ்வதந்தே — ருசிக்கின்றன; இதியத் — என்னும் இது; கிமத்புதம் — என்ன ஆச்சரியம்?

கோதாய்! பூமிப் பிராட்டியேயான உன்னுடைய காதென்று சொல்லும் வல்மீகத்திலிருந்து (புற்றினின்று) பிறந்த
அந்த முனி (வால்மீகி முனிவர்) கவிச் சக்கரவர்த்தியானார். அப்படியிருக்க, உன்னுடைய திருவாயாகிய
தாமரையிலிருந்து பெருகும் தேனுக்கு ஒப்பான இப்பிரபந்தங்கள் இனிமையாயிருக்கின்றன என்பது என்ன ஆச்சர்யம்.

நீ கோதை ! உன் வாக்கு மிகப் போக்யமானது. நீ பூமியே வடிவானவள். புற்று என்று சொல்கிறார்களே அது உன் செவி போல் உள்ளது.
அதற்கு வல்மீகம் என்று பெயர். அதிலிருந்து உண்டானவர் வால்மீகி .
ஆதிகவி உனது செவியிலிருந்து பிறந்தவருக்கே எவ்வளவு வாக்கு வன்மை. கவித்திறன்.
அப்படியிருக்கும்போது, உன் திருவாக்கிலிருந்து, நேராகவே அவதரித்த பாசுரங்கள் ,
தேனினும் இனியதாக இனிப்பதற்குக் கேட்பானேன் ! இது அத்புதம்; அதி அத்புதம்.

(1) வால்மீகியை யல்லவோ உத்தம கவி என்பர்! அவரை யல்லவோ கவிகள் நல் வாக்குகளுக்காகப் பிரார்த்திப்பர்!
“இதம் குருப்ய: பூர்வேப்யோ நமோவாகம் ப்ரஸாஸ்மஹே” என்று பவபூதி வால்மீகியை முதலிலேயே பணிந்தார்.
அவர் தானே கவிகளுக்கு மார்க்க தர்சீ! நீரும் உம்முடைய தேவநாயகன் ஸ்துதியில்
“ப்ராச; கவீந் நிகமஸம்மித ஸூந்ருதோக்தீந், ப்ராசேதஸ ப்ரப்ருதிகாந் ப்ரணமாமி நித்யம்” என்று அம்முனிவரைப் பணிந்தீர்.
பாதுகா ஸஹஸ்ரத்திலும், “யஸ்யாஸூதரவிந்த ஸம்பவ வதூ மஞ்ஜீர சிஞ்ஜாரவ ஸ்பர்த்தா துர்த்தர பாதபத்தபணிதி வல்மீகஜந்மா கவி:” என்று
அவர் ராமாயணத்தைப் புகழ்ந்தீர். பெரிய பிராட்டியாருடைய அவதாரமாகிய ஸீதாதேவியின் சரித்ரத்தைப் பாடிய கவியிலும் உயர்ந்த கவியுண்டோ?
“கவிப்ரதம பத்ததிம்” என்றல்லவோ காளிதாஸர் ராமாயணத்தைப் புகழ்ந்தார்.
“பரம் கவீநாம் ஆதாரம்” என்றபடி அக்காவ்யந்தானே எல்லாக் கவிகளுக்கும் மூலாதாரம்.!

(2) பெருமாள் கேட்டு மகிழும்படி பாட நான்தான் வாக்கு அளிக்கவேண்டும் என்று இச்சகம் பேசுகிறீர்.
ராமாயணம் 24000 சுலோகங்களையும் பெருமாள் “பபூஷயா ச்ரோத்ருமாநா பபூவ” என்றபடி தன் ஸத்தையும்
தாரணமும் அதனால்தானென்று “மஹாநுபாவம் சரிதம்” என்றும், “மமாபி பூதிகரம்” என்றும் புகழ்ந்து கொண்டு
கேட்கவில்லையே! என் விஷயமாக ஓர் சின்ன ஸ்துதி பண்ணுவதற்கு என்னையே வாக் பிக்ஷை கேட்கிறீரே?

(3) ஓரிரவில் பாதுகா ஸஹஸ்ரம் பாடி அதைப் பெரியபெருமாளே திருவோலக்கத்தில் தூக்கத்தைத் தள்ளி
லக்ஷ்மியோடு கூடத் திருச்செவி சாற்றவில்லையோ! அந்தப் பாதுகா ஸஹஸ்ரத்திற்கு திவ்ய வாக்கை
வால்மீகியைப் பிரார்த்தித்து அடையவில்லையோ? அதற்கு என்னைக் கூப்பிடவில்லையே?
ஸமயத்திற்குத் தகுந்தபடி பேசுவது அழகோ? நான் கவியா? அவர் கவியா? இதற்கெல்லாம் பதில் கூறுகிறார் இங்கே.

வால்மீகி ஆதிகவி என்பதும், அவரை மற்றக் கவிகள் பணிந்து வாக்கைப் பெற்றனர் என்பதும் உண்மையே.
அடியேனும் அவரைப் பணிந்து யாதவாப்யுதயம் பாடினேன். பாதுகா ஸஹஸ்ரமும் பாடினேன்.
பெருமாளும் அவர் ஸீதைப் பிராட்டி விஷயமாய்ப் பாடிய ஆதிகாவ்யத்தை இன்புறக் கேட்டருளினார்.
நான் இப்பொழுது உன்னைப் பிரார்த்திப்பதற்கும் நான் முன் வால்மீகியைப் பிரார்த்தித்தற்கும் ஓர் விரோதமுமில்லையே அம்மா!
வால்மீகியைப் பிரார்த்தித்துக் கவிதை பெற்றதைக் கொண்டு கைமுத்யத்தால் உன்னைப் பிரார்த்தித்து
வாக்குப் பெறவேண்டியதற்கு ஔசித்யம் ஸித்திக்கிறதே. வாதத்தில் இதுபோன்ற உன் கேள்வியை
‘சுங்கத்தில் போது விடிந்ததுபோலும்’ என்பாரம்மா! வால்மீகி யாரம்மா? வல்மீகத்தில் பிறந்தவர்தானே?
வல்மீகம் என்பது என்ன? “வஸுதாச்ரோத்ரம்”தானே? பூமிதேவியின் காது (ச்ரவணம், ச்ரோத்திரம்). நீதானே பூமிதேவி?
உன் செவியிற் பிறந்த மஹிமையாலே அவர் கவிஸார்வ பௌமரானார். உன்னுடைய குழந்தை (அம்சம்) விபூதிதானே அவர்!
அவர் கவிதாசக்திக்கு நீதானே மூலம்! ஆதாரம்! உன்னை த்யானித்துக் கொண்டே தான் யாதவாப்யுதயமும் பாதுகாஸஹஸ்ரமும் பாடினேன்.
“வஸுதா ச்ரோத்ரஜே தஸ்மிந்” என்று உன் ச்ரோத்ரத்தில் பிறந்தவரென்றுதானே அவரை ஆரம்பத்தில் இரண்டாவது ச்லோகத்தில் புகழ்ந்தேன்?
அப்படியே பாதுகா ஸஹஸ்ரத்திலும் “வஸுதா ச்ரோத்ர ஜந்மா முநிர்மே” என்று உன் மூலமான புத்ர ஸம்பந்தத்தைப்
பேசிக்கொண்டேதானே திவ்யவாக்கின் அநுக்ரஹத்தை யாசித்தேன்?
உன் ச்ரோத்ரத்திலிருந்து பிறந்த கவி பாடின க்ரந்தமானதால், ராமாயணம் முழுவதையும் பரிஷத்தில் பெருமாள் இன்புறக் கேட்டார்.

(4) இப்படிப் பதில் சொல்வது அழகாயிருந்தாலும், ஓர் கேள்வி கேட்கிறேன். அதில் நீர் அகப்பட்டுக்கொண்டே தீரவேணும்.
ஸீதைப் பிராட்டியார் தன்னுடன் பிறந்தவரான (ஸஹஜரான) கவீச்வரரைக் கொண்டு தன் சரித்ரமான ராமாயணத்தைப்
பாடிவைத்தாள் என்று பாதுகாஸஹஸ்ரம் முடிவில் பாடினீரே! இப்பொழுது ராமாயண காவ்யம் என் மூலம் என்கிறீரே?
இந்த விரோதத்தை எப்படிப் பரிஹரிப்பீர்? பெரியபிராட்டியார் எனக்கு அம்சி, நான் அம்சம். அம்சத்திற்குள் அம்சி அடங்குமோ?

அம்மா, இந்தக் கேள்வியும் ஸுபரிஹரம். நீ பெரிய பிராட்டியாருடைய அம்சமாயிருந்த போதிலும்,
பெரியபிராட்டியார் உன்னிடமுள்ள நிரதிசய ப்ரீதியால், உன் பெண்ணாகப் பிறந்து உன்னை பஹுமானித்து
உனக்கு சேஷமாயிருக்கும் ரஸத்தை அநுபவிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு பூமிஸுதையாக
(உன் பெண்ணாய், ஸீதையாக) அவதரித்தாள். அந்த அவதாரத்தில் பெரியபிராட்டியார் இச்சாவசத்தால்
அம்சாம்சி பாவம் மாறிவிட்டது. நீ அம்சியும், ஸீதை உன் அம்சமான புத்திரியுமானாள். தாயும் அம்சியுமான நீ
பாடிவைத்ததைத் தானே அங்கே ஸீதை பாடி வைத்ததாக ஔபசாரிகமாகப் பேசினேன்.
“ஸஹஜோ கவீச்வரேண” என்றதால் இது வ்யஞ்ஜிதம். வால்மீகிக்கும் ஸீதைக்கும் ஸஹஜத்வம் எப்படி?
பூமிதேவியே நீ! உன்னிடமிருந்து இருவரும் பிறந்தாரென்பதுதானே! உன்னிடம் பிறந்தவர் ஸஹஜகவி.
கவீச்வரியான தாயாருடைய பிள்ளைதானே ஸஹஜகவீச்வரரானார்? “கரிணீ”தானே களபத்தைப் பெறும்?
தாய் வேறு ஜாதி குட்டி வேறு ஜாதியாமோ? நீ கவீச்வரி. உன்னிடம் ஜாதர் கவீச்வரர்.
“மாதரம் த்விபதா இதி”. ஆண் பிள்ளைகள் தாய் ஸ்வபாவத்தை அநுஸரித்திருப்பர். ஆகையால் விரோதம் இல்லை அம்மா!

வஸுதாத்மந: —
பூமிஸ்வரூபமான (பூமிதேவியான) பூமி வடிவுடைய உன்னுடைய.
“ஸாக்ஷாத் க்ஷமாம்” என்று முதல் ச்லோகத்திலேயே இதை ஸாதித்தார்.
“வல்மீகம்” – புற்று. அதற்கு “வஸுதாச்ரோத்ரம்” என்று பெயர். வல்மீகத்தில் பிறந்தவர். பூமியின் செவியில் பிறந்தவர்.
“வஸுதாச்ரோத்ர:” என்ற பர்யாய பதத்தைப் புத்திக்கும் கொண்டு வருவதற்காக “வஸுதா” சப்தத்தைப் பிரயோகித்தது.

தே — உன்னுடைய;

ச்ரவணத —
திருச்செவியிலிருந்து. ஜன்ஹுமஹர்ஷியின் ச்ரவணத்திலிருந்து கங்கை அவதரித்தாள்.
அதுபோல உன்னுடைய ச்ரவணத்திலிருந்து ராமாயண கங்கா ப்ரவாஹ ஹேதுவான வால்மீகிமுனி பிறந்தார்.

வல்மீகத: — கரையான் புற்றிலிருந்து;

ஜாத: — பிறந்த. (ஜாதோ பபூவ) பிறவியாலே ஆனார். பிறந்ததும் ஆனார்.

ஜாத: கவிஸார்வபௌம:
கவீச்வரராகவே பிறந்தார். “ரூபதாக்ஷிண்ய ஸம்பந்த: ப்ரஸூத:” என்ற இடத்தில்
போல பிறவிக் கவீச்வரர். உன்னிடத்திலிருந்து பிறந்ததே அவருடைய நிரதிசயமான கவிதைக்கு மூலம்.

ஸ முனி: —
அந்த முனி. முனீச்வரர் கவீச்வரரானார். ‘முனி’ என்பது வாய் திறவாத மௌனியைச் சொல்லும்.
வாய் திறவாதவரும் வாசஸ்பதியாகப் பேசுவர். “மூகையான் பேசலுற்றேன்”, “மூகம் கரோதி வாசாலம்”,
“ரகுவரசரிதம் முனிப்ரணீதம்”, “ஸ்ரீமத்பாகவதே மஹாமுனிக்ருதே பராசரம் முநிவரம்”.

கவிஸார்வபௌம: —
கவிச்சக்கரவர்த்தியாய், கவீச்வரராய். முனி என்பவர் யோகி.
யோகத்தில் 7 பூமிகள், மேல்மேல் உப்பரிகைகள், மேல்மேல் ஏறவேண்டும் (ஆரோஹம்).
7 பூமிகளையும் ஏறுவர். 7 பூமிகளேறின யோகத்தை ஸார்வபௌமமென்பர். யோகி ஸார்வபௌமர் கவி ஸார்வபௌமரானார்.
யோகத்தில் 7 பூமிகள்போல், ராமாயணம் ஸப்த காண்டம். ராமாயணத்தைப்போல்,
திவ்யதம்பதிகளிடம் மனம் லயிக்க வேறு ஸாதனமில்லை. ராவண ஜயம் மனோ ஜயமாகும்.
ராவண லயம் மனோ லயம். அது யோக காஷ்டை.
பபூவ– ஆனார்.

கோதே! —
வாக்கை யளிக்கும் தேவியே! உன் புத்திரரான வால்மீகிக்கு நீதான் வாக்கை யளித்தாய்.
ஆகையால் தான் அவருக்கும் கவிதா மூலமான உன்னை பிக்ஷை கேட்கிறேன்.
“பரம் கவீநாம் ஆதாரம்” என்பதற்கும் மூலாதாரம் நீ.

(தே) வக்த்ராரவிந்த மகரந்தநிபா: —
உன் திருமுகக் கமலத்திலிருந்து பெருகும் தேனுக்கு ஒப்பான (உன் ப்ரபந்தங்கள்).
ஸாமான்யமான தாமரையிலிருந்து பெருகும் தேனுக்கு ஒப்பிடமுடியாது. உன் திருவாயாகிய தாமரையிலிருந்து பெருகும்
தேனுக்குத்தான் ஒப்பிடலாம். உன் ப்ரபந்தங்களாகிய தேனுக்கு உனக்கு பாஹ்யமான உபமானமொன்றும் ஒப்பாது.
கண்ணன் பாடிய கீதையை “யா:ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத்மாத் விநிஸ்ஸ்ருதா:” என்று வர்ணிப்பர்.
“வால்மீகேர் வதநாரவிந்த கபிதம் ராமாயணாக்யம் மது” என்று தித்திப்பதற்கும் நீதான் மூலமென்பதை ஸூசிப்பிக்கிறார்.

(தே) ப்ரபந்தா: —
உன்னுடைய தேன் ப்ரபந்தங்கள். ப்ரபந்தமென்பதற்குப் பரம்பரை விஸ்தாரம் என்றும் பொருள்.
த்வநி பரம்பரை போய்க் கொண்டிருக்கும். கட்டிலடங்காது. திருநாமம் மட்டும் கட்டுப்பட்டது என்ற பொருளைக் கொடுக்கும்.
பொருள் விஸ்தாரம் கட்டிலடங்காது. பொருள் பரம்பரை எல்லையில்லாமல் மேல்மேலே போய்க்கொண்டிருக்கும்.
“மங்களாநாம் ப்ரபந்தாந்”, “க்ரியாப்ரபந்தா தயமத்வராணா மஜஸ்ர மாஹூத ஸஹஸ்ரநேத்ர:”

அமீ ப்ரபந்தா: —
இப்பிரபந்தங்கள். இந்த என்று சொல்லலாமே யொழிய, இப்படிக்கொத்தது என்று
வரையறுத்துப் பேச முடியாது. இதோ என் மனதுக்கும், காதுக்கும், நாக்குக்கும் சுவைக்கிறதே அந்தப் பிரபந்தங்கள்.
“க்ருஷ்ணேத்யக்ஷரயோரயம் மதுரிமா” என்று ஜகந்நாத பண்டிதர். “க்ருஷ்ண” என்ற இரண்டு அக்ஷரங்கள்
தன் மனதிற்குச் சுவைத்த இனிப்பை “இவ்இனிப்பு” என்று பேசியதுபோல.

யத் ஸ்வதந்தே — தித்திப்பது என்னும் இதம் இது, தித்திப்பது.

கிமத்புதம் — என்ன ஆச்சரியம்? இது ஓர் ஆச்சரியமா? கைமுத்தியத்தால் கிடைப்பது ஆச்சர்யமாகுமோ?
‘அத்புதம்’ என்பதை அத்புதம் ஸ்வதந்தே என்று ஒட்டிக் கொள்ள வேண்டும். இங்கே இரண்டு கைமுத்தியங்கள்.
(1) உன்னிடம் பிறந்தவர் லோகோத்தர கவியாகையால் உன் காவ்யங்கள் லோகோத்தரமென்பதற்கு என்ன தடை?
(2) உன் காதில் பிறந்தவர் வாக்கு அத்தனை இனிமையாகையில் உன் திருவாயிலிருந்து வரும் வாக்குகளின் இனிப்புக்குக் கேட்பானேன்?

வால்மீகி விஷயமான இந்த சுலோகத்தை 7வது சுலோகமாக வைக்கப்பட்டது.
உன் “ச்ரவணத்திலிருந்து” என்பதற்கு எதிர்த்தட்டு உன் “வக்த்ராரவிந்தத்திலிருந்து” என்பது. (7)

—-

போக்தும் தவ ப்ரியதமம் பவதீவ கோதே
பக்திம் நிஜாம் ப்ரணயபாவநயா க்ருணந்த: |
உச்சாவசைர் விரஹஸங்கமஜை ருதந்தை:
ச்ருங்காரயந்தி ஹ்ருதயம் குரவஸ்த்வதீயா:|| (8)

கோதே — கோதாய்; தவ — உன்னுடைய; ப்ரியதமம் — அத்யந்த ப்ரியனான பர்த்தாவை;
பவதீவ — உன்னைப் போலவே; போக்தும் — அநுபவிப்பதற்காக; நிஜாம் — தங்களுடைய (சொந்தமான);
பக்திம் — பக்தியை; ப்ரணயபாவநயா — ப்ரணய மார்க்கமாக; (நாயகீபாவமாக);
க்ருணந்த: — பேசிக்கொண்டு; த்வதீயா — உன்னுடைய; குரவ: — பெற்றோர்கள்;
உச்சாவசை: — மிகவும் அதிக்ரமித்த; விரஹஸங்கமஜை: — பிரிவு கூடல்களால் ஏற்படும்;
உதந்தை: — வ்ருத்தாத்தங்களால்; ஹ்ருதயம் — தங்கள் மனதை;
ச்ருங்காரயந்தி — ச்ருங்கார பாவமுடையதாக ஆக்கிக் கொள்கிறார்கள்.

கோதா தேவியே! உன் குருக்கள் (பெரியோர்கள், ஆழ்வார்கள், உன் பிதா விஷ்ணு சித்தர்) உன்னைப் போலவே
உன் பிரிய தமரான பெருமாளை அனுபவிக்க ஆசை கொண்டு, தங்கள் பக்தியை ராகம், ஸ்நேஹம் என்னும்
காம பாவத்தினால் பேசிக் கொண்டு, கீழும், மேலுமான பற்பல விரஹ ச்ருங்கார ஸம்ச்லேஷ ச்ருங்கார
வ்ருத்தாத்தங்களால் தங்கள் மனதை ச்ருங்கார பாவத்தால் நிரப்புகிறார்கள்.

பகவான் உனக்கு மிக மிகப் பிரியமானவன் அவனை உன்னைப் போல் அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லாருக்கும் வந்துவிட்டது.
உள்ளம் கனிந்து ,அவனையே நினைத்துப் பேசுகிறார்கள். ப்ரேமத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
ப்ரேமமும் பக்தி தானே. பக்தி ச்ருங்காரமாக மாறிவிட்டது.அவர்கள் ஆண்களாகப் பிறந்தாலும், பகவானிடம் ஈடு பட்டு,
அனுபவிக்கும் வழியை உன்னிடம் கற்றுக்கொண்டார்களோ !
உனக்குப் பின் வந்தவர்கள், இப்படிச் செய்தால் உன்னிடம் கற்றுக் கொண்டார்கள் எனலாம்;
ஆனால், உன் திருத் தகப்பனார் கோஷ்டியில் சேர்ந்த வர்களே இவ்வாறான நிலையை அடைந்தார்கள் என்றால், அது ,அதிசயம் அல்லவா !

அவதாரிகை
(1) வால்மீகி புத்தேறின தபஸ்வி. காமங்களெல்லாம் வற்றி உலர்ந்துபோன நெஞ்சுடைய விரக்தமுனி.
அத்புதமான விப்ரலம்பக ச்ருங்கார, ஸம்ச்லேஷ ச்ருங்கார ரஸங்களை எப்படி நெஞ்சில் வாங்கி ப்ரத்யக்ஷம் போல் வர்ணித்தார்?

(2) நீர் சுஷ்கசுஷ்கமான விரக்தராயிற்றே, “தருணீகுணபம்” என்று பேசுகிறவராயிற்றே!
எனக்கும் என் நாயகனுக்கும் உள்ள ப்ரணய ரஸங்களை எப்படி வர்ணிப்பீர்?

(3) என் புத்திரரான ஆதிகவி வால்மீகியின் மதுரவாக்கைப் புகழ்ந்தீர். என் பெரியோரான அபிநவ தசாவதாரமான
ஆழ்வார்கள் வாக்கின் இனிப்பெப்படி? என்னைப்பெற்ற என் தகப்பனார் வாக்கு எப்படி?
என் நாயகனுக்கும் எனக்குமுள்ள ப்ரணய ரஸத்தையும், எங்கள் திருக்கல்யாணத்தையும் வர்ணிக்கப் போகிறீரே!
ஜாமாதாவான என் நாயகனுடைய மாதுர்யம் எப்படி?

இதற்கெல்லாம் பதில்:– வால்மீகி நெஞ்சம் அத்யந்த விரக்தமும், சுஷ்கமுமானதுதான். அவரென்ன பண்ணுவார்?
வர்ணிக்கப்படும் ரகுவரனிடத்தில் பக்தி அவரைத் தம்பதிகளுக்குள்ள ச்ருங்கார பாவத்தை வர்ணிக்கச் செய்கிறது.
“பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்” என்று தன்னைப் பெண்ணுடையுடுத்தச் செய்யும் ரூபாதிகளில்
ஸ்வாநுபவத்தாலே அவர் பேசுகிறார். நான் என்ன விரக்தனானாலென்ன? பரமாத்மாவான உன் நாயகனிடம் ரக்தி (ரதி)யுடையவனே.
சாஸ்த்ரீய சுத்த நிருபாதிக நிரதிசய ரஸமான உன் நாயகன் விஷயத்தில் விரக்தி கூடுமோ?
“அத்யர்த்தம் ப்ரிய”, ‘ப்ரியதம ஏவ வாணீயோ பவதி’ என்றபடி தனக்கு ப்ரியதமமாக அவனை பஜித்து,
அவனுக்குப் பிரியதமமானால்தானே ஆத்மா பிழைக்கலாம்! உன் பெரியோர்களான, மயர்வற மதிநலமருளப் பெற்றவரும்
பெண்ணுடையுடுத்திக் கொள்ளச்செய்யும் மாப்பிள்ளை யம்மா. மற்ற ஆழ்வார்கள் போகட்டும்.
உன்னைப் பெற்ற ஆழ்வார் பெரிய ஆழ்வாரானாரேயம்மா! ரூபவதியான பார்யை அநேக ஸபத்நர்கள் (விரோதிகள்)
ஏற்படுவதற்குக் காரணமாவாரென்பர். ‘கந்யா வரயதே ரூபம்’. ஸர்வாதிசாயியான லாவண்யத்தையுடைய அரங்கனைத்தான் நீ தேடினாய்.
நீ ஈடுபடும் உன் நாயகன் அழகே புமான்களுடைய த்ருஷ்டி சித்தங்களை அபஹரித்து உனக்கு ஸபத்னீக்களாக்குகிறது.
உன் தகப்பனார் கூடத் தன் மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட ஆசைப்பட்டுப் பெண்ணுக்கே ஸபத்னீயானாரே.
அதோடு நிற்காமல் “வந்து மண்ணும் மணமும் கொண்மின்” என்று உலகத்தை முழுவதும் கூப்பிட்டு,
என் மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்படுங்கள் என்று கூப்பிடுகிறாரே. ஆண் பெண் விபாகமற உலகத்தாரெல்லோரையும்
உனக்கு ஸபத்னீக்களாக வாருங்கள் என்று அழைக்கிறாரே! யாரென்ன செய்வதம்மா!
பெற்ற தகப்பனார் பெண்ணின் பதியிடம் ஆழ்வது ஓர் ஆச்சர்யமானதால் அவரைப் பெரிய ஆழ்வாரென்பது.
வெறும் ஆண்களாய் ஆழ்வார் ஆழ்வார். மாமனாராயிருந்தும் ஆழ்வார் பெரியாழ்வார். 13வது சுலோகம் வரையில்
கோதையின் பிறப்பு முதலிய ஸம்பந்தத்தால் அடையப்படும் பெருமைகளைப் பேசுகிறார்.
கோதையின் குடிப்பெருமை, அவளுக்கு ஜனகத்வாதி ஸம்பந்தங்களால் அடையப்படும் பெருமையைப் பேசுகிறார்.
கன்யையின் பிறப்பகத்தின் மஹிமைகள்.

போக்தும் —
பேரின்பத்துடன் அநுபவிக்க. பெண்ணுக்குப் பதிஸம்யோகஸுலபமான வயது வந்ததைப் பார்த்து,
இந்தக் கற்பகக் கொடியை ஓர் கற்பக வ்ருக்ஷத்திலணைத்து விட வேண்டுமே என்று சிந்தார்ணவ மக்னராய்,
அதன் கரை காண அநுரூப வரனைத் தேடுவர். வரனைப் பார்க்கவே இவர் ச்ருங்கார சபளிதஹ்ருதயராய்,
ஸ்வயம் போகத்தில் ஆசையாகிய சிந்தார்ணவத்தில் ஆழ்ந்து மூழ்குகிறார்.
அந்த ராகக் கடலிற்குக் கரையையே காண்கிறாரில்லை. ‘ந ஜாநே போக்தாரம் கமிஹ’ என்று
காந்தர், காந்தைகளது ரூபதாம்பத்யத்தைக் கோரி வரிக்கப்பட்ட ப்ரியவஸ்துவின் போகத்திலாழ்வார்.
உன் பெரியோரான ஆழ்வார்களும், உன் பிதாவும் ஜாமாதாவைக் கண்டதும் தாங்களே போகத்தில் ஆழ்ந்தார்கள்.

தவ ப்ரியதமம் —
பெண்ணாகிய உனக்கு வரன் தேடினாரோ? ஆணாகிய தமக்கு ஓர் பதி தேடினாரோ?
பெண்ணுக்கு ப்ரியதமராகப் போக்யராக ஆசைப்படவேண்டியிருக்க, தமக்கே ப்ரியதமராகவும் ஏகபோக்யமாயும் கொண்டார்.
நீ ச்ருங்கார பாவங்களையும், பக்தி பாவங்களையும், அத்புதமாய்ப் பாடினாய் என்றேன் முன் சுலோகத்தில்.
உன் தகப்பனாரே அப்படிப் பாடுகையில் நீ பாடுவது அத்புதமா? “கோதே கிமத்புதம் இதம்”

பவதீவ —
உன்னைப்போல. (அநுபவிக்க) இந்த ப்ரஹ்ம ஜாமாதா விஷயத்தில்
‘ஜாமாத்ருபோக்யதாம் புத்ரீ வேத்தி நோ பிதா” என்ற வைஷம்யமில்லை.

கோதே — நீ ப்ரணயரஸப் பாசுரம் கொடுப்பவள். உன்னைப் போலவே அவர்கள்
ச்ருங்கார ரஸப் பாமாலை தொடுத்து ஸமர்ப்பிக்கிறார்கள்.

பக்திம் நிஜாம் —
தங்கள் ஸ்வந்த பக்தியை. இதில் எல்லாவற்றிற்கும் பரிஹாரம் ஸூசிதம்.
வாஸ்தவத்தில் அவர்கள் பாவம் ஸ்வரூபத்திற்குப் பிராப்தமும், அத்யந்தோசிதமுமான விச்வபதி விஷயமான பக்தியம்மா!
அந்த பக்தியே நிரதிசய ப்ரீதி ரூபமாய் ஸ்நேஹ ரூபமாய் விட்டது.
அடைய வேண்டிய அநுபவமான நித்திய விபூதி போக விபூதி தானே! இங்கு போகம் நித்ய போகத்திற்கு ஸாதனம்.
வேறு கதியில்லையே, என்ன செய்வது? விச்வத்திற்கே ஒரு பதிதானேயுள்ளது.
‘ப்ரியதமம்’ என்பது பரஸ்பர ப்ரிய தமத்வத்தைப் பேசும் ஸ்ரீபாஷ்ய பாஷணத்தை ஸ்மரிப்பிக்கிறது. அங்கும் வரணப்பேச்சே.

ப்ரணயபாவநயா —
பக்தி என்பது மஹநீய விஷயத்தில் ப்ரீதி. அதுவே ஓர் சமயத்தில் ச்ருங்காரம் என்னும் வ்ருத்தியாகப் பரிணமிக்கிறது.
‘ஸ்நேஹோ மே பரம: பக்திஶஃச நியதா, பாவோ நாந்யத்ர பச்சதி’ என்று பேசுவது உசிதம்தானே.
ராகமும் முற்றிப் பிச்சேறக்கூடியதுதானே! க்ருணந்தே –பேசுவது பக்திதான்.
ஆயினும் அதில் ‘ஸதீவ ப்ரியபர்த்தாரம்’ என்னும் ராகமும் கலக்கிறதம்மா!

உச்சாவசை: — உதக்ச அவாக்ச வடக்கும் தெற்குமாய். மேலும் கீழுமாய்.
வில்லிப்புத்தூரிலிருந்து மனத்தால் வடக்கே கோயிலுக்கு ஓடுகிறார்.
மனது திரும்பவும் ஊருக்கு உன்னிடம் ஓடிவருகிறது. “யாந்தீமிவ மநோரதை:” என்று வடக்கே ஓடுகிறார்.

விரஹஸங்கமஜை: —
விரஹத்தில் தவிப்புகள். ஸம்ச்லேஷ மனோரதத்தோடு நிற்காமல் ஸம்ச்லேஷத்தையே அடைந்து
அதனால் சித்தித்த ஹர்ஷத்தைப் பாடுவது.

உதந்தை:–
வ்ருத்தாந்தங்களால். ஸுந்தரகாண்டத்திலுள்ள விரஹ வ்ருத்தாந்தத்திற்கு மேல் இவர் வ்ருத்தாந்தம்.
உதந்தை: — அந்தமில்லாத. உத்கதோ அந்தோ யேப்ய: — “உத்” என்பது ஸர்வ பாப்மோதிதரான
அப்ராக்ருத திவ்ய மங்கள வீக்நஹமுடைய ஸூர்யமண்டலாந்தர்வர்த்தியான பெருமாளுக்குத் திருநாமம்.
அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹமென்று “உத்” என்னும் சப்தத்தாலும்,
அதில் ‘அந்தத்தை நிச்சயத்தை’ உடையவர் என்று ‘அந்த’ சப்தத்தாலும் காட்டி,
ப்ராக்ருத திருமேனியல்லாததால் அணைவதில் யாதொரு தோஷமுமில்லை என்று பரிஹாரத்தை ஸூசித்தார்.

ச்ருங்காரயந்தி ஹ்ருதயம் —
தங்கள் ஹ்ருதயத்திலேயே ச்ருங்கார பாவமுள்ளது போல் செய்கிறார்கள்.
“பும்ஸ: ஸ்த்ரியாம் ஸ்த்ரியா: பும்ஸி ஸம்போகம் ப்ரதி யா ஸ்ப்ருஹா|
ஸ ச்ருங்கார இதி க்யாத:க்ரீதாரத்யாதிகாரக:” என்பது ச்ருங்காரத்திற்கு லக்ஷணம்.
ச்ருங்காரம் போன்ற பாவமுடைய பெரிய ஆழ்வாருக்கு அத்திருநாமம் ஏற்பட்டதற்குக் காரணமும் இங்கே ஸூசிதம்.
மற்ற ஆழ்வார்கள் பெண்ணைக் கொடுத்தவர்களல்ல. பெருமாளுக்குக் குரு முறைமையான தான்,
பெருமாளுக்கு ச்வசுரராயிருந்தும், தன் அருமைப் பெண்ணுக்குப் பிதாவாயிருந்தும்
அவரும் நாயகீபாவத்தில் ஆழ்ந்தாரே என்று ஆழ்வதில் அவருக்கு மஹத்தரத்வம்.
பெருமாளுக்கு ஸேவிக்கத்தக்க குருவாயிருந்த ஆழ்வார் என்பதாலும் அத்திருநாமம்.
இந்த ச்லோகத்தில் முதல் உபபத்தியையும், 10வது ச்லோகத்தில் இரண்டாமுபபத்தியையும் ஸாதிக்கிறார்.

‘ராமஜாமாதரம் ப்ராப்ய ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம்’ என்று ஸீதைப்பிராட்டியாரேசல்.
‘ரங்கஜாமாதரம் ப்ராப்ய’ அரங்கனென்னும் ஜாமாதாவை அடந்த ச்வசுரரே, புருஷவிக்ரஹமான
தன்னைப் பெண்ணாக நினைத்தாரே, அதனையே வலுவாக ஸமர்ப்பிக்க மனோரதம்.
‘ஆத்மாதி, ஆத்மக்ரீட, ஆத்மமிதுன’ இதுவிஷயத்தை தேவநாயக பஞ்சாசத் வ்யாக்யானத்தில் விஸ்தரித்துள்ளது.
‘ப்ரவ்ரஜ்யாதியுதா பரத்ர புருஷேபாதிர்வதீம் பிப்ருதீ பக்தி:ஸா’ என்று ஸங்கல்ப ஸூர்யோதயத்தில்
பக்தியை ஸந்யாஸம் முதலிய துறவி குணங்களோடு கூடியதாய பரபுருஷனிடத்தில்
பதிவ்ரதா நிஷ்டையை உடையதாயும் வர்ணித்தார். அதிலுள்ள வேடிக்கைகளும் கவனிக்கத்தக்கன.

———

மாதஸ் ஸமுத்திதவதீமதி விஷ்ணுசித்தம்
விச்வோபஜீவ்ய மம்ருதம் வசஸா துஹாநாம் |
தாபச்சிதம் ஹிமருசேரிவ மூர்த்திமந்யாம்
ஸந்த: பயோதிதுஹிதுஸ் ஸஹஜாம் விதுஸ்த்வாம் || (9)

மாத: — தாயே!; அதிவிஷ்ணுசித்தம் — (1) விஷ்ணுசித்தரிடம், (2) விஷ்ணுவின் மனதில்,
(3) விஷ்ணுவை நடுவில் கொண்ட (கடலில்); ஸமுத்திதவதீம் — அழகாய் அவதரித்தவளும்;
விச்வோபஜீவ்யம் –ஸகல ஜீவர்களும் பருகி உஜ்ஜீவிப்பதற்கு யோக்யமான; அம்ருதம் — அமுதினை;
வசஸா — வாக்கினாலே, (பாசுரங்களாலே); துஹாநாம் — சுரக்கிறவளாயும்;
தாபச்சிதம் — தாபத்திரயங்களையும் போக்கிக்கொண்டு, ஹிமருசே — குளிர்ந்த பனிக்கிரணமுடைய சந்த்ரனுடைய,
அந்யாம் மூர்த்திமிவ — மற்றோர் (விலக்ஷணமான) மூர்த்தி போன்றவளுமான,; த்வாம் — உன்னை;
ஸந்த: — பெரியோர் (ப்ரஹ்மவித்துக்கள்); பயோதிதுஹிது — பாற்கடலின் பெண்ணாகிய பெரியபிராட்டியாரின்,
ஸஹஜாம் — உடன்பிறந்தவளாக; விது — அறிகிறார்கள்.

அம்மா! விஷ்ணு சித்தரிடம் தோன்றியவளும், அநுபவித்து உய்யத் தக்க அமுதை வாக்கினால் சுரக்கிறவளாயும்,
ஸாம்ஸாரிக ஸகல தாபங்களையும் நீக்கத் தக்க குளிர்ச்சியை யுடைய ஓர் விலக்ஷணமான சந்திர மூர்த்தி யென்று
சொல்ல வேண்டியவளுமான உன்னைப் பாற்கடலிலவதரித்த பெரிய பிராட்டியாருக்கு உடன் பிறந்தாளென்று
ப்ரஹ்ம வித்துக்களான ஸத்துக்கள் அறிகிறார்கள்.
(அல்லது பெரியபிராட்டியார் கூடப்பிறந்த உன்னை ஓர் விலக்ஷண சந்திரமூர்த்தியென்று அறிகிறார்கள்)

வாக்கைக் கொடுத்த தாயே ! நீயே பெரிய பிராட்டி. அவளுக்கும், உனக்கும் வேற்றுமை இல்லை.
விஷ்ணுவின் ஹ்ருதாயத்தில் சந்த்ரன் தோன்றினான்; நீயும் விஷ்ணுவைச் சித்தத்தில் கொண்டவளாய்த் தோன்றினாய்;
சந்திரனைப்போல் சந்தோஷப் படுத்துகிறாய்; நீ சந்திர சஹோதரி ஆகிறாய்; உலகம் வாழ அமுதப் பாசுரங்களை அளித்தாய்;
உனக்கு அம்ருத சம்பந்தம் உள்ளது; பாற்கடலில் உதித்த ,பிராட்டிக்கு உள்ள தன்மைகள் எல்லாம் உன்னிடம் உள்ளன;
அதனால், பிராட்டியின் உடன்பிறந்தவள் என்றே கூறுகின்றனர்; தகப்பனாரோ விஷ்ணுசித்தர் —விஷ்ணுவிடம் சித்தத்தை உடையவர். பெரியாழ்வார் .
நீங்கள் இருவரும் உலகங்கள் உய்யுமாறு அமுதத்தை, கிரணங்களாலும், வாக்குகளாலும் வாரி வழங்குகிறீர்கள்

அவதாரிகை

(1) “உன்னுடைய தகப்பன்மார்” என்று அநேக பிதாக்கள் சேர்ந்து என்னைப் பெற்றவரென்றீர் முன் சுலோகத்தில்.
‘ஸ்ரீவிஷ்ணுசித்தகுலக் கற்பகக்கொடி’ என்று முதல் சுலோகத்தில் என்னைப் பேசினீர்.
நிகண்டுகாரரும் என்னை விஷ்ணுசித்தர் பெண் (விஷ்ணுசித்தாத்மஜா) என்பர்.
“த்வதீயா: குரவ:” என்று பன்மை பேசுகிறீரே? ‘பட்டர்பிரான் கோதை’ அல்லவோ நான்!
மற்ற ஆழ்வார்களும் பட்டர்களோ? ‘அஞ்சுகுடிக்கு ஒரு ஸந்ததி’ என்ற முறையாக என்னைப் பேசுகிறீரே,
இது யுக்தமோ? இதற்கு பதில் கூறுகிறார்.

பதில்கூற ஆரம்பிக்கையிலேயே ‘மாத:’ “தாயே’ என்றழைக்கிறார். உண்மையில் நீ ஒருவரும் பெற்ற பெண்ணல்லள்.
நீ எல்லோருக்கும் தாய் அம்மா! அபிமானத்தால் தங்கள் குடிப்பெண், தங்கள் குல ஸந்ததி என்று நினைப்பும் பேச்சும்.
உன் அபிமானத்தாலும் அவர்கள் பிதாக்கள். பரஸ்பர அபிமானமே இப்பேச்சிற்குக் காரணம்.
அவ்வபிமானத்திலும் விஷ்ணு சித்தருக்கு ஸந்நிகர்ஷம் அதிகம். ‘பட்டர்பிரான் கோதை’ என்று சொல்லுவதும்,
விஷ்ணு சித்தாத்மஜை என்று சொல்லுவதும் அத்யந்தம் உசிதமே.
‘விஷ்ணுசித்தரிடம் தோன்றியவளே’ என்றே இங்கே பேசுகிறேன். ஆனால் அப்படிப் பேசுவதிலும் அவரோடு
இன்னமிரண்டு சேர்ந்து விடுகிறது.
‘பெருமாள் சித்தம்’ என்பதும், பெருமாள் தன் நடுவில் வசிக்கப்பெற்ற ஸமுத்திரம்’ என்பதும்
‘விஷ்ணுசித்த’ என்பதில் சிலேடையாகச் சேர்ந்து விடுகிறது.
அப்படிச் சிலேஷைப் பொருள்களுக்கும் ஔசித்யம் ரொம்பவும் ஏற்பட்டுவிடுகிறது.
விஷ்ணு சித்தரான பட்டர்பிரானொருவரை மட்டுமே நான் பேசப் பார்த்தாலும், பாஷை இன்னமிரண்டைச் சேர்க்கிறது.
அப்படிச் சேர்ப்பதும் உன்னுடைய ஏற்றத்திற்கே யாகிறது.
(2) திருமணப் பெண்ணான கோதையை வர்ணிக்குமிடத்தில் அவளை மதிமுக மடந்தை என்று பேசவேண்டாமோ?
அவளுடைய தேன்போன்ற பாட்டுக்களைப் புகழ வேண்டாமோ? ஓர் பிராட்டியைப் பெற, கடலைக் கடைவர் பெருமாளென்பரே,
அப்படிப் பேசவேண்டாமோ? பெரியபிராட்டியாரை மனைவியாயுடையவர் மணம் செய்யவேண்டுமானால்,
அவள் கூடப்பிறந்து அவளுக்கு அத்யந்த ப்ரியஸஹோதரியென்று பேசவேண்டாமோ?
இதையெல்லாம் இதோ பேசுகிறேனம்மா! வாக் கர்மிகமென்பர். ஒன்றொன்றாய்த்தானே பேசவேண்டும்!
(3) “ஸ்த்ரீ ரத்னமான ஊர்வசியைப் படைத்தவர் ப்ரஹ்மாவன்று; காந்தியைப் பரப்பும் சந்திரன் இவளைப் படைத்தானோ?
அல்லது, ச்ருங்கார நிதியான மன்மதன் படைத்தானோ? அல்லது, புஷ்பாகரமான வசந்த மாதம் படைத்ததோ?’ என்று விக்ரமர் பேசினார்.
“ப்ரஹ்மா எல்லா ச்ரேஷ்ட ரூபங்களையும் சேர்த்து ஒருமிக்கப் பார்க்கவேண்டுமென்று பொருள்களில்
பொறுக்கிச் சேர்த்து மனதினாலேயே ஸ்ருஷ்டித்தாரோ? கைபட்டால் கெட்டுப்போகுமென்று மனதாலேயே
அழகைக் கூட்டிக்கூட்டி ஸ்ருஷ்டித்தாரோ?” என்று துஷ்யந்தன் சகுந்தலையை வர்ணித்தான்.
“ஒரே வடிவில் விச்வத்திலுள்ள முழு அழகுக் கூட்டத்தையும் சேர்த்துப் பார்க்கவேண்டுமென்ற ஆசையினால்
பார்வதியை ப்ரயத்தனப்பட்டு ஸ்ருஷ்டித்தார்” என்று காளிதாஸர் குமார ஸம்பவத்தில் வர்ணித்தார்.
இந்த அபூர்வமான கல்யாணப் பெண்ணைப் பற்றி அந்த வழிகளில் கவி ஸிம்ஹமாயிருப்பவர் பாடவேண்டாமோ?
அதற்கு மேலே பாடுகிறார். —

நான்முகன் மனதினால் நிர்மிதமானாள் பார்வதியென்றால், நான்முகனைப் படைத்த நாராயணன் மனம்
எப்படி எப்படி ஆசைப்பட்டதோ, அப்படியே அவன் திருவுள்ளத்திலிருந்தே தோன்றியவள் கோதை.
படைக்கப்பட்டவளல்ல, தானாக ஆவிர்பவித்தவள்.
‘பெருமாள் உகந்ததெவ்வுருவம் அவ்வுருவம் தானானவள்.’ பெருமாள் திருவுள்ளப்படி அங்கே உதித்தவளென்றதால்,
சந்த்ரன் அவ்விடமிருந்து உதித்ததுபோல் உதித்தவள். சந்திரனெப்படி இவளை ஸ்ருஷ்டிக்கும் ப்ரஜாபதியாகக்கூடும்?
கூடப்பிறப்பவன் ஸ்ருஷ்டித்தவனாவானோ? சந்திரன் பிறந்தவன். கோதை பிறவாதவள்.
நாயகன் மனதிற்கினிதாம்படி ஓர் விலக்ஷணச் சந்திரமூர்த்தியாகத் தோன்றியவள்.
அவளைப்போலவே அவளவதரித்த திவ்யதேசத்தில் அவள் அர்ச்சாமூர்த்தியும்.
பெருமாள் மனதிலிருந்தே கிளம்புவதால் அவர் பிள்ளைகளான ப்ரஹ்மாவிற்கும் ப்ரத்யும்னனுக்கும் ஸ்ருஷ்டிக்க அதிகாரம் எப்படிக்கூடும்?
அழகுக்கடலும், ரஸ்ஸ்வரூபருமான பெருமாள் ஆசைப்பட்டபடியெல்லாம் உருவம் அடைந்து தோன்றினாளென்றால்,
அதினிலும் அழகில் உயர்த்தியுண்டோ? பதனாயிரம் பூர்ண சந்திரர்கள் சேர்ந்த காந்தியையுடைய
பெருமாளிலும் அழகனோ சந்திரன்? ஸாக்ஷாத் மந்மத மன்மதனிலும் உயர்ந்தவனோ மன்மதன்?
‘மாஸானாம் குஸுமாகர’ என்றபடி வசந்தமாசம் பெருமாளுடைய ஓர் விபூத்யேகதேசந்தானே?

மாத: — தாயே! யாருக்குத் தாய்? விஶ்த்திற்குத் தாய். விச்வோபஜீவ்ய மாத்ருத்வம்.
முன் சொன்ன ஆழ்வார்களுக்கும் உண்மையில் நீ தாய். பெரியபிராட்டியாருக்கு மட்டும் நீ தங்கை.
மற்ற உலகுக்கெல்லாம் நீ தாய். ‘தாயே’ என்று முதலில் பொதுவில் கூப்பிட்டு,
முடிவில் ‘லக்ஷ்மிக்குத் தங்கை’ என்பதால் அங்கே மட்டும் ‘தாய்’ என்பதற்கு ஸங்கோசம்.

ஸமுத்தி தவதீம் —
“அம்ருதம் வெளிக்கிளம்பி மிதக்கும் ஸமயத்தில் கடைந்த பாற்கடலில் பெரியபிராட்டியார் உத்திதையானாள்” என்று
ஸ்ரீஸ்துதியில் வர்ணித்ததுபோல. நாயகன் மனதிலிருந்து அவரிச்சையை அநுஸரித்த உன் ஸ்வேச்சையினால் கிளம்பியவள்.
அவர் மனதிலிருந்து சந்திரபிம்பம்போல உதுத்தவள். ‘அழகாக மேலே கிளம்பினாள்’ என்பது இதற்குப் பொருள்.
குழந்தை பிறப்பதானால், பூமியில் கீழே விழுமா? பூமிக்கு மேலே கிளம்புமா?
பூமிப் பிராட்டியான நீ கர்ப்பத்திலிருந்து பூபதனமாய் விழுந்த குழந்தையல்லவே?
உலகத்தையெல்லாம் உன் கர்ப்பத்திற்கொண்ட விச்வம்பரையல்லவோ நீ!

அதிவிஷ்ணுசித்தம் —
பட்டர்பிரான் ஸ்ரீவிஷ்ணுசித்தரிடம் நீயாகத் தோன்றினாய். பெருமாள் திருவுள்ளத்தில் அவர் உகந்த மூர்த்தியாய்த் தோன்றினாய்.
ஜகத்துக்கு ஆஹ்லாதத்தை உண்டு பண்ணும் சந்திரன் பிறந்தவிடத்திலிருந்து நீயும் உதித்தாய்.
இதனால் சந்திரஸஹஜை என்று சொல்லவேண்டும். சித்தமென்பது நடுவைச் சொல்லுமென்பர்.
விஷ்ணுவை நடுவில் வஸிக்கப் பெற்ற பாற்கடலில் பெரியபிராட்டியாரோடும், சந்திரனோடும், அம்ருதத்தோடும்
கூடப்பிறந்தவளென்பர் பெரியோர். அதினிலும் உயர்த்தி பட்டர்பிரானாகிய விஷ்ணுசித்தரிடம் தோன்றியது.
‘விஷ்ணுசித்த’ என்பதற்கு அவர்தான் முக்கியமான (ரூடமான) முதற்பொருள்.

விச்வோபஜீவ்யம் அம்ருதம் —
தாரதம்மியமில்லாமல், அதிகாரி பேதமில்லாமல், எல்லோருக்கும் எளிதான அம்ருதத்தை.
தாய் கறக்கும் எந்தப் பாலில் குழந்தைக்குப் பங்கில்லை? பாற்கடலைக் கடைந்தெடுத்த அம்ருதம் தேவஜாதிக்கு மட்டுமேயுண்டு.
மானிடருக்குக் கிடையாது. இவ்வம்ருதம் எல்லோர்க்கும் கிடைப்பது. எல்லோரையும் போஷிப்பது, உஜ்ஜீவனம் செய்வது.
யஜ்ஞ்சிஷ்டமான அம்ருதமும் எல்லோருக்கும் கிடைக்காது. ஓர் விலக்ஷணமான சந்திர பிம்பமென்று அடுத்த பாதத்தில் ஸாதிக்கிறார்.
இங்கே ஓர் விலக்ஷணமான அம்ருதத்தைத் தன் பாசுரங்களால் வார்க்கிறாளென்கிறார்.
விக்ரமோர்வசீயத்தில் விக்ரமனுடைய அழகில் ஈடுபட்ட ஊர்வசீ ராஜாவைச் சந்திரனென்றும்,
அவருடைய மொழி (வசனம்) அம்ருதமென்றும் மனதிற்குள் புகழ்கிறாள்.
“அழகாயிருக்கிறதே இவருடைய வசனம்” அல்லது “சந்திரனிடமிருந்து அம்ருதம் பிறக்கிறது என்பது என்ன ஆச்சர்யம்” என்று
ஆக்ஷேபாலங்கார ரீதியாகத் தன் மனதிற்குள் பேசுகிறாள். அதை இங்கே ஸ்வாமி நினைத்து முதலில்
அம்ருத வசனங்களைப் பொழிவதைப் பேசி, அடுத்த பாதத்தில் சந்த்ரமூர்த்தி என்று வர்ணிக்கிறார்.

வசஸா துஹாநாம் —
வாக்கினால் அம்ருதத்தைச் சுரக்கிறாள். பாற்கடலை 33 கோடி தேவர்களும், கணக்கில்லாத அஸுரர்களும்
சேர்ந்து மந்தரமலையை மத்தாகக்கொண்டு கடைந்து அம்ருதத்தை எடுத்தார்கள்.
நீ அனாயாஸமாக உயர்ந்து தூயதான அம்ருதத்தைப் பால் கறப்பதுபோல் லகுவாகக் கறக்கிறாய்.
சந்த்ரன் தன் கரங்களினால் அம்ருதத்தைப் பொழிவான். நீ வாக்கினால் (மொழியினால்) பொழிகிறாய்.
சுகருடைய முகத்திலிருந்து (வாயிலிருந்து) ‘அம்ருதத்ரவஸம்யுத’மாய் வேதகல்ப வ்ருக்ஷத்திலிருந்து
பாகவதமென்னும் ரஸப்பழம் (பழரஸம்) விழுகிறதென்பர்.
உன் முகத்திலிருந்து அம்ருதத்ரவமாய்ப் பெருகுகிறது உன் ப்ரபந்த பாகவதம். எந்தப் பசுக்களைக் கறக்கிறாள்?
உபநிஷத்துக்களான பசுக்களை, கண்ணன் கறந்து கீதாம்ருதத்தைத் துக்தமாக்கினதுபோல (பால் ஆக்கினதுபோல).
ஆத்மநே பதத்தால் நாம் பருக, நமக்குக் கறந்து கொடுப்பதைத் தன் பேறாக நினைப்பதை வர்ணிக்கிறார்.

ஹிமருசே: —
குளிர்ந்த பனிக்கிரணமுடையவன் சந்த்ரனென்பர். இனிய காந்திக்காக சந்த்ரமூர்த்தியை ஓர் உவமையாக எடுத்தது.
பாற்கடலில் பெரியபிராட்டியாரோடும், அம்ருதத்தோடும் பிறந்தவளென்று சந்த்ரனை எடுத்தது.
சந்த்ரன் தாபங்களையெல்லாம் தீர்க்கக் கூடியவன் அல்லன். “ஹிமத்தை (பனியை) கர்ப்பத்திற்கொண்ட
கிரணங்களால் அக்கினியைப் பொழிகிறான்.” என்றான் துஷ்யந்தன். ஹிமருசி என்று பெயர் மட்டுந்தான்.
அக்னி ருசியென்றால் தகும். “அடே பாபி ! துச்சரித சந்த்ரசாண்டாள” என்று காதம்பரியில் சந்த்ரனைப் பற்றி வாழ்த்து!

தாபச்சிதம் — ஸம்ஸார தாபத்திரயங்களையும் போக்குவதான. சந்த்ரமூர்த்தியைக் காட்டிலும்,
வைலக்ஷண்யம் (வ்யதிரேகம்) சொல்லப்படுகிறது. அம்ருதத்தைக் காட்டிலும் வைலக்ஷண்யம்
‘விச்வோபஜீவ்யம்’ என்று காட்டப்பட்டதுபோல. ‘அந்யாம்’ என்று சொல்லப்படும் வேற்றுமையையும்,
ஏற்றத்தையும் இந்த அடைமொழி விளக்குகிறது. நீ சுரக்கும் வாகம்ருதத்தைப் பருகினால்,
அம்ருதத்வமென்னும் மோக்ஷம் ஸித்திக்கும். தாபத்திரயங்களும் தொலையும்.
ஸ்வர்க்கிகளின் அம்ருதம் ம்ருதமென்னும் ஸம்ஸாரத்தைக் கறக்கும்.

அந்யாம் மூர்த்திமிவ — வேறு விலக்ஷணமான ஒரு மூர்த்தி

த்வாம் — உன்னை; ‘தாயே’ என்று தொடங்கி ‘உன்னை’ என்று முடிக்கிறார்.

பயோதிதுஹிது — பாற்கடலில் தோன்றிய பெரிய பிராட்டியாருடைய;
“யாருக்காக, யாரை அடைய, ‘அம்போதி’ என்னும் ஸமுதிதரம் கடையப்பட்டதோ, அணையால் கட்டப்பட்டதோ”
என்று ஆளவந்தார் பிராட்டி பெருமையை வர்ணித்தார்.
‘பயோதி’ என்றால் பாற்கடலுக்கும் சேரும், உப்பு நீருக்கும் சேரும்.
‘பய’ என்பதற்கு ஜலமென்றும் பொருள், பாலென்றும் பொருள். இங்கே ‘பயோதி’ என்று பிரயோகித்ததால்,
இரண்டுக்கும் பொதுவான சப்தமாகுமானாலும், முதலில் திருவணை கட்டத் தடங்கல் செய்த
ஸமுத்ரத்தைப் ‘பாற்கடல்’ என்னுமோர் பொருள்படக் கூடிய சப்தத்தால் பேச ஆளவந்தாருக்குத் திருவுள்ளமில்லை.
கல் நெஞ்சனைப் பாற்கடலென்பரோ? அதனால் ஆங்கே ‘பாற்கடலையும்’ ‘அம்போதி’ என்று ரூடிப்பெயரால் பேசுகிறார்.
இங்கே பாற்கடலை மட்டும் பேசுவதால் ‘பயோதி’ என்று பிரயோகிக்கிறார்.
‘பாற்கடலில் தோன்றிய பெண்’ என்பதால், அங்கே தோன்றியதால் மட்டும் எப்படி ‘புத்திரி’ என்ற அபிமானமோ,
அப்படித்தான் நீ புத்திரி என்ற அபிமானமும் என்பது கருத்து. ஸமஸ்த ஜநநியான லக்ஷ்மியும் துஹிதையென்பது
போலத்தான் உன்னையும் மகள் என்பது என்று காட்டப் பெரியபிராட்டியாரைத் துஹிதா என்று குறிக்கிறார்.
துஹாநா — துஹிதையின் ஸஹஜை.

ஸஹஜாம் — கூடப் பிறந்தவளென்று. ‘அம்ருத ஸஹஜை’ என்று ஸ்ரீஸ்துதியில் பெரியபிராட்டியாரை வர்ணித்தது
தேவஜாதியின் புத்தியைக் கொண்டு. தேவஜாதிக்கு அம்ருதமே ப்ரதானமாய்த் தோன்றியது.
‘அம்ருதத்துடன் பிறந்தாள் லக்ஷ்மி’ என்றார்கள். முதலில் அம்ருதத்தைப் பார்த்து மகிழ்ந்தார்கள்.
பிறகு பிராட்டி அவதரித்து விஷ்ணு மார்பிலேறியதும், அவள் காலில் விழுந்தார்கள்.’ என்பது ஸ்ரீஸ்துதியின் வர்ணனம்.
காலில் விழுந்ததற்குக் காரணம் முன் சாபம் வந்ததனால் ஏற்பட்ட பயமென்றும் அங்கே காட்டினார்.
“ஆலோக்ய த்வாமம்ருதஸஹஜை விஷ்ணுவக்ஷ:ஸ்தலஸ்தாம் ஶாபாக்ராந்தாஶ்ஶரணமகமந்’ .
பெரியபிராட்டியாருடைய உடன் பிறந்தாள் என்று இங்கே வர்ணனம்.
அம்ருதத்தை இவள் கறக்கிறாளென்பதால் அம்ருதத்திற்குப் பின் பிறந்தவளன்று என்று ஸூசனம்.

ஸந்த: —
ப்ரஹ்மத்தை அறிந்த ஸத்துக்கள். ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் சேர்ந்த பெரிய பிராட்டியாருடைய
உடன் பிறந்தாளும் அம்சமுமான உன்னை ப்ரஹ்மவித்துக்கள்தானே அறியக்கூடும். விது: — அறிவர்.

ஸ்ரீவிஷ்ணுசித்தரிடம் உதித்ததாலும், அம்ருதத்தைப் பொழிவதாலும், பெரிய பிராட்டியாரோடு உடன் பிறந்ததனாலும்,
தாபத்தைப் போக்குவதாலும், ஓர் விலக்ஷண சந்த்ர பிம்பம், ஓர் விலக்ஷண கௌமுதி, —
ஜ்யோத்ஸ்னை என்று இங்கே ஸாதிப்பதில் நோக்கு. மூன்றாம் பாதத்திலுள்ளதை விதேயமாக வைத்துக் கொள்ளலாம்.
ஜ்யோத்ஸ்நேவ ஹிமதீதிதே: – சந்த்ரனுடைய சந்த்ரிகை போன்றவள்.
ஆனால் பெருமாளென்னும் சந்த்ரனுடைய சந்த்ரிகை இவள்.

———-

தாதஸ்து தே மதுபித: ஸ்துதிலேசவச்யாத்
கர்ணாம்ருதை: ஸ்துதிஶதைரநவாப்த பூர்வம் |
த்வந் மௌளிகந்த ஸுபகாமுபஹ்ருதய மாலாம்
லேபே மஹத்தர பதாநுகுணம் ப்ரஸாதம் || (10)

தே — உன்னுடைய; தாதஸ்து — தகப்பனாரோ என்றால்;
ஸ்துதிலேஶ்வஶ்யாத் — கொஞ்சம் தோத்திரத்தாலேயே கூட வசப்படக் கூடிய; மதுபித: — பெருமாளிடமிருந்து;
கர்ணாம்ருதை: — செவிக்கு அமுதமான; ஸ்துதிஶதை: — பல நூறு துதிப் பாசுரங்களாலும்;
மஹத்தரபதாகுணம் — மஹத்தரர் (மிகப் பெரியவர்) என்னும் திருநாமம் பெறுவதற்கேற்ற; (பதவிக்கேற்ற);
ப்ரஸாதம் — அநுக்ரஹத்தை; த்வந்மௌளி கந்த ஸுபகாம் — உன்னுடைய கூந்தல் வாசனை ஏறியதால் ஸௌபாக்யம் பெற்ற;
மாலாம் — மாலையை; உபஹ்ருத்ய — உபஹாரமாக ஸமர்ப்பித்து; லேபே — பெற்றார்.

கொஞ்சம் ஸ்துதி செய்தாலேயே வசப்பட்டு விடக்கூடிய மதுஸூதனன் நூற்றுக்கணக்கான கர்ணாம்ருதமான
ஸ்துதிப் பாசுரங்களாலும் முன்பு மகிழ்ந்து அளிக்காத மஹத்தர பத லாபத்திற்கு அநுகுணமான அநுக்ரஹத்தை
உன்னுடைய தக‌ப்பனார்தானே (அம்மா) உன் கூந்தல் வாசனை ஏறியதால் ஸுபகமான மாலையை ஸமர்ப்பித்துப் பெற்றார்!

ஹே….கோதா….உன் பெருமை அளவிடற்கு அரியது. உன் நாதனாகிய பகவான் ,ஸ்துதி ப்ரியன்.
மது என்கிற அசுரனை மாய்த்தவன். உன் தகப்பனார் , பகவானைப் பலப் பலப் பாசுரங்களால் பாடினார்.
அப்போதெல்லாம் அவருக்குப் பலன் கிட்டவில்லை. உன் கூந்தலில் சூடிய மாலைகளைக் களைந்து ,
அவனுக்கு அணிவித்த பிறகு தான் அவருக்குப் பெரியாழ்வார் என்கிற விருதைக் கொடுத்தான்.

அவதாரிகை

(1) ஆழ்வார்களெல்லோரும் உன்னைப் புத்திரி என்று அபிமானிக்கிறார்கள். ஆனால் நீ விஷ்ணு சித்தரிடமிருந்து
தான் தோன்றியவளென்றீர். எல்லா ஆழ்வார்களும் அபிமானத் தாதைகளாய் இருந்தாலும் விஷ்ணுசித்தரை விசேஷித்துப்
பிதா என்று கொள்ளக் காரணம் என்ன? அம்மா! எல்லா ஆழ்வார்களும் பொதுவில் ஆழ்வார்களென்ற
மஹத்தான பதத்தைப் பெற்றவர்கள். ஆழ்வார் பதம் மஹத்தானது என்பதில் ஐயமில்லை.
பெருமாளுடைய தசாவதாரங்கள் போல், அவர்கள் அவருடைய அபிநவ தசாவதாரங்கள்.
தமிழ் வேத மந்த்ர த்ரஷ்டாக்களான தச ரிஷிகள். மஹத் பதம் மஹர்ஷி பதம்தான்.
ஆழ்வார் பதமே மஹாபதமாயிருக்கையில், ‘பெரியாழ்வார்’ என்று உன் தகப்பனாருக்குத் தானே ‘மஹத்தர’ பதம் கிடைத்தது!
மஹத்தான ஆழ்வார் பதத்திற்கும் மேற்பட்ட ‘பெரிய’ பதம் கிடைத்தது. அவர் வேதப் பாசுரங்களால் கிடைத்தது ஆழ்வார் பதம்.
உன் பிதாவால் நீ சூடிக்கொடுத்த மாலையை ஸமர்ப்பித்ததால் ஆழ்வார்களிலும் ‘பெரிய ஆழ்வார்’ என்னும்
பஹுமான பதம் கிடைத்தது. மற்ற ஆழ்வார்கள் குடிக்கும் நீ ஸந்ததி என்று அபிமானத்தில் பேசினாலும்
அவர்களுக்கு அது கிடைக்கவில்லையே!

(2) பெரிய பிராட்டியாருக்கு உடன் பிறந்தாளென்று முன் ச்லோகத்தின் முடிவில் ஸாதித்தார்.
பெரியபிராட்டியாரை ‘கந்தத்வாராம்’ என்று ஸர்வகந்தரான பெருமாளுடைய ஸௌகந்தயத்திலீடுபட்ட வேதம் புகழ்ந்தது.
அவளுக்கு உடன் பிறந்தாளும், அவளோடுகூட பெருமாளுக்குப் பத்தினியுமாவதற்கு ஆநுகுண்யத்தைக்
கோதையின் ஸர்வோத்தரமான ஸௌகந்த்யத்தைக் காட்டி ஸமர்த்திக்கிறார்.

தாதஸ்து தே — உன் தகப்பனாரான பெரியாழ்வாரோ என்றால்; விசேஷித்து உன் பிதாவானதால்
மற்ற ஆழ்வார்களிலும் மேலாக ‘பெரிய’ என்னும் உயர்த்தியான உபபதத்தைப் பெற்றார்.
‘து’ என்பதால் இந்த வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது. ‘உன் தகப்பனார்’ ஆனது பற்றித் தான் இந்த ஏற்றம்.
ஆழ்வாரானதால் மட்டுமல்ல. உன் விஷயமான இந்த கோதாஸ்துதியைப் படிப்பவன்கூட அவருக்கு (பெருமாளுக்கு)
பஹுமான்யராகும் போது உன் மாலையை ஸமர்ப்பித்த உன் தகப்பனாரை இப்படி அவர் பஹுமானியாது இருப்பாரோ?

மதுபித:– வேதங்களை அபஹரித்த மது என்னும் அஸுரனை ஸம்ஹரித்து வேதங்களை மீட்ட பெருமாளிடமிருந்து.
இதனால் வேதங்களின் அரும்பெருமையைப் பெருமாளே அறிந்தவர் என்பது ஸூசனம்.
வேதங்களை அப்படி அரும் பெரும் பாடுபட்டுப் பஹுமானிக்கும் பெருமாள் வேதங்களான ஆழ்வார்கள்
ப்ரபந்தங்களைப் பஹுமானித்து அவர்களுக்கு ‘ஆழ்வார்கள்’ என்று ‘மஹத்’ பதத்தை அளிப்பது உசிதமே.
வேதங்களை அஸுரர் அபஹரித்தாலும், தமிழ் வேதங்களிருந்தால் போதும்.
ஸம்ஸ்க்ருத வேதங்களை மீட்டுக்கொண்டு வந்தது போதுமோ? அதன் பொருளைத் தெளிய தமிழ் மறைகளும் வேணும்.

ஸுத்திலேஶவஶ்யாத் – ‘ஸ்தவப்ரிய:’ என்று திருநாமம். ஸ்வாராதரென்பர். ஓர் அஞ்ஜலிக்குக் கிங்கரரென்பர்.

கர்ணாம்ருதை: — “ப்ரதி ச்லோகமும் அபத்தமாயிருந்தாலும், அநந்தனுடைய யசோமுத்ரை உடைய திருநாமங்கள்
கலந்திருப்பதால், ஸாதுக்கள் கேட்டும், பாடியும் மகிழ்வர்” என்று பகவத் ஸ்தோத்ரங்களின் பெருமையை
சுகர் மகிழ்ந்து பாடினார். “கிருஷ்ணகர்ணாம்ருதம்”, “ராமகர்ணாம்ருதம்” என்று பகவத் ஸ்தவங்களுக்குத் திருநாமமிடுவர்.

ஸ்துதிஶதை: — யோகியான ஒரு ஆழ்வார் ‘பத்தே’ பாசுரங்கள் பாடினார். உன் தகப்பனார் கிட்டத்தட்ட ஐந்நூறுகள் பாடினார்.

அநவாப்தபூர்வம் — கர்ணாம்ருதமான வேதங்களான பல நூறுகள் பாடியதற்கு மற்ற ஆழ்வார்களைப் போல,
‘ஆழ்வார்’ என்று திருநாமம் மட்டும் கிடைத்தது. ‘பெரிய” என்று ஏற்றப் பதம் கிடைக்கவில்லை.
மற்ற ஆழ்வார்களுக்கும் அது கிடைக்கவில்லை.

த்வந் மௌளிகந்த ஸுபகாம் — தம்முடைய கர்ணாம்ருத வேதப் பாசுரங்களால் கிடைக்கவில்லை.
தம் மாலைகளால் கிடைக்கவில்லை. நீ அவதரிக்குமுன் எத்தனையோ பூமாலைகள் ஸமர்ப்பித்தவரே.
உன் பூமாலையால் கிடைத்தது. பாக்களால் கிடைக்கவில்லை. உன் ஒரு பூமாலையால் கிடைத்தது.
நீ சூடி வாசனையேற்றிக் கொடுத்த ஒரு பூமாலையை உபஹாரமாக ஸமர்ப்பிக்கும் பாக்யம் உன் பிதாவுக்குத்தானே கிடைத்தது!
உன் சிரஸான மூளையின் (புத்தி வ்ருத்திகளின்) வாசனை உன் பாமாலையிலேறியுளதுபோல், நீ சூடின பூமாலையிலும் ஏறியது.
“மௌளி” என்பது மூளையென்னும் புத்திஸ்தானமுமாகும்.
உன் கூந்தல் வாசனையால் மாலை ஸுபகமாயிற்று என்றால், உன் ஸௌபாக்யத்திற்குக் கேட்க வேணுமோ?

மாலாம் உபஹ்ருத்ய — மாலையை உபஹாரமாக ஸமர்ப்பித்து (உடனே)

லேபே — உபஹ்ருத்ய லேபே — இரண்டு பதங்களையும் சேர்த்தது ரஸம். ஸமர்ப்பித்த உடனே பெற்றார்.
நடுவில் ஒரு க்ஷணமேனும் தாமதமில்லை. “நாகாரணா தாநந்தர்யம்” என்று ந்யாயம்.
உன் மாலையை ஸமர்ப்பித்ததுதான் ‘பெரிய’ என்ற ‘மஹத்தர’ பதம் கிடைத்ததற்குக் காரணம்.
அந்வய வ்யதிரேகங்களால் கார்ய காரண பலம் ஸித்திக்கும். நூற்றுக்கணக்கான பாமாலைகளாலும்
பூமாலைகளாலும் முன்பு அடையப்படாதது என்று வ்யதிரேகம் காட்டப்பட்டது. இங்கே அந்வயம் காட்டப்பட்டது.

மஹத்தரபதாநுகுணம் ப்ரஸாதம் —
ஆழ்வார்களிலும் உயர்த்தியாய் ‘பெரிய ஆழ்வார்’ என்னும் ஏற்ற பதவி கிடைக்கும்படியான அநுக்ரஹத்தைப் பெற்றார்.
ஏனைய ஆழ்வார்கள் சிலர் நாயகீ பாவத்தில் ஆழ்ந்து மூழ்கினார்கள். ஆனால் அவர்கள் தங்கள் பெண்ணுக்கே
ஸபத்நியாகவில்லை. உன் பிதா சில அவஸரங்களில் உனக்கே ஸபத்நீ பாவத்தை அடைந்தார்.
மூன்றாம் சதகத்தில் ‘ஐயபுழுதி’யில் “மாயன் மாமணிவண்ணன் மேலிவள் மாலுறுகின்றாளே” என்றும்,
“நல்லதோர் தாமரை”யில் “என் மகளை எங்கும் காணேன்”, “செங்கண்மால்தான் கொண்டுபோனான்” என்றும்,
இவ் வாழ்வாரைப் பெற்ற தாயலற்றியதைக் கவனிக்கவேண்டும்.
புருஷ‌ப் பிள்ளையாய்ப் பெற்று வளர்த்தது, ஏதோ பெண்ணாக மாறிவிட்டது. அது போகட்டும்.
பெண்ணாக மாறிவிட்ட என் புருஷ‌க் குழந்தையை இந்தப் பாடா படுத்தவேண்டும் என்று அலற்றல்.
உன் மணாளனுக்கே பத்தினியாகி அவருடைய அந்த ரீதியான அநுபவ ஆழ்ச்சி மற்றவர் ஆழ்ச்சியிலும் பெரிதாயிற்று.
மிக வியக்கத் தக்கதாயிற்று.

இன்னுமொரு ரஸமும் உண்டு. ‘பெருமாள்’, ‘பெரிய புருஷர்’, ‘மஹாபுருஷர்’. ஆண் என்பது ‘ஓர் புருஷன்’.
ஜீவாத்மாக்கள் ‘புருஷர்கள்’. பெருமாள் மஹத்தான ‘மஹா புருஷர்’.
உன் பிதா அவருக்கும் மாமனாராகி அம்மஹா புருஷனுக்குக் குருவானார்.
ஹிமவானை “த்ரயம்பக ஈச்வரரான குரு” என்று ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் வர்ணிக்கப்பட்டது.
‘பூர்வரான குருக்களுக்கும் குருதமர்’ என்று ஜனகர் வசிஷ்டரை வர்ணித்தார்.
மஹாபுருஷனுக்கு மஹனீயரான ச்வசுர குருவானதால் ‘மஹத்தரர்’ என்னும் பதம்.

‘மஹத்தரபதம்’ என்பது பரமபதத்தைச் சொல்லுவதாகவும் உரை கொள்ளுவர். ‘விஷ்ணுவின் பரமம் பதம்’ என்று ச்ருதி.
விஷ்ணுசித்தர் விஷ்ணுவின் பரமமான பதத்தைப் பெற்றார்.
இது எல்லா ஆழ்வார்களுக்கும் பொதுவானதால், வைலக்ஷண்யம் ஏற்படாமற் போகும். ரஸிகர் மனமே ப்ரமாணம்.
“பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடி வந்தென் மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பீ”
என்பதைக் கவனிக்கவேண்டும். ச்வசுரராகிய பாற்கடலில் பள்ளி கொண்டிருந்தவர் இவர் மணாளனானதும்,
அந்த ச்வசுரராகிய வீட்டையும் படுக்கையையும் விட்டு இந்த ச்வசுரர் மனக்கடலில் பள்ளிகொண்டார்.
“மாயனை மன்னு வடமதுரை மைந்தனை” என்றபடி இவர் மணாளன் மாயன்.
“ஔதந்வதே மஹதி ஸத்மதி” என்ற பாற்கடலாகிய அந்த மஹாக்ருஹத்திலும் மஹத்தரமான க்ருஹமாயிற்று இவர் மனக்கடல்.
பெரிய பெருமாளான மஹாபுருஷருக்கும் பெரிய குருவானார், மஹத்தரானார். முத்ராராக்ஷஸாதி நாடகங்களில்
‘ஸ்வஜாதிமஹத்தர’ என்று கௌரவமாயழைப்பர்.
‘உம் ஜாதியில் (குலத்தில்) உயர்ந்தவரே’ என்று ‘மஹத்தர’ பதத்தாலழைப்பர்.
ஆழ்வார் ஜாதியில் (குலத்தில்) பெரியவரே, மஹத்தரரே என்று அழைப்பு. .10.

————

திக்தக்ஷிணாபி பரிபக்த்ரிம புண்யலப்யாத்
ஸர்வோத்தரா பவதி தேவி தவாவதாராத் |
யத்ரைவ ரங்கபதிநா பஹுமாநபூர்வம்
நித்ராளுநாபி நியதம் நிஹிதா: கடாக்ஷா:|| (11)

தேவி — கோதாதேவியே! திக் தக்ஷிணாபி — தெற்குத் திக்குங்கூட;
பரிபக்த்ரிம் புண்ய லப்யாத் — பரிபக்குவமான புண்யத்தால் கிடைக்கத்தக்க;
தவ அவதாராத் — உன்னுடைய அவதாரத்தால்;
ஸர்வோத்தரா — எல்லா விதத்திலும் உத்தரமாய் (ச்ரேஷ்டமாய், வடக்காய்); பவதி — ஆகிறது;
யத்ரைவ — எந்தத் திக்கிலேயே; நித்ராளு நாபி — தூங்கிக் கொண்டிருந்தாலும்;
ரங்கபதிநா — ரங்கேச்வரரால்; பஹுமாந பூர்வம் — பஹுமானத்தோடு கூட;
நியதம் — இடைவிடாமல்; (நியமமாக); காடாக்ஷ: — கடாக்ஷங்கள்; நிஹித: — வைக்கப்பட்டுளவோ?

அம்மா கோதாதேவியே! பரிபாகமுடைய புண்யத்தால் பெறக்கூடிய உன் அவதார ஸம்பந்தத்தால்,
தென் திசை கூட வடகோடி திசையாயிற்று. (ஸர்வோத்தரமாயிற்று, ஸர்வ ச்ரேஷ்டமாயிற்று).
ஏனெனில் அந்த திக்கில்தானே ரங்கபதியாகத் தூங்கிக் கொண்டிருக்கையிலும் கௌரவத்தோடு
கடாக்ஷங்கள் இடைவிடாமல் நியதமாக வைக்கப் பட்டிருக்கின்றன!

ஹே தேவி….நீ அவதரித்ததால், இந்தத் தக்ஷிண தேசமே ஸர்வோத்தரமாக ஆகிவிட்டது
ஸ்ரீ ரங்க பதியான ரங்கநாதன், உறங்குகிறவன் போல, தெற்குத் திக்கையே நோக்கி
ஸ்ரீ வில்லிபுத்தூரில் உன் அவதாரத்தை எதிர் நோக்கும் கருத்துடையான் ஆனான்

அவதாரிகை

(1) நம்மாழ்வாரிலும் என் பிதா மஹத்தரரான பெயரை அடைந்தார் என்றீரே! என் பிதா வாங்கி என் மாலையை
ஸமர்ப்பித்ததால் அப்படி அரும் பெரும் ஏற்றம் கிடைக்குமோ? அம்மா! இது என்ன ஆச்சர்யம்!
நீ அவதரித்த மஹிமையால் தக்ஷிண திக்கும் ஸர்வோத்தரமாயிற்றே! ஓர் ஆழ்வார் உன்னை அவதரிப்பித்து
வளர்த்த பிதாவானதால், மஹத்தரராவது அரிதோ? ‘ஸர்வோத்தரம்’ என்பதால் உத்தமமாயிற்று.
ஓர் திக்கு நீ பிறந்த திக்கு என்கிற ஏத்தோ ஒரு ஸம்பந்தத்தாலே ஸர்வோத்தமாகையில்,
ஆழ்வாரான உன் பிதா நீ அவதரித்ததால், மஹத்தரராவது கொஞ்சமே என்று சொல்ல வேண்டும்.

(2) பெருமாளுடைய அபிநவ தசாவதாரங்களான ஆழ்வார்களைப் பேசினார். இங்கே கோதைப் பிராட்டியான
தேவி ஆழ்வார்களைப் போல பிரபந்தமியற்றிய கவியாக அவதாரம் செய்ததைப் பேசுகிறார்.

திக் தக்ஷிணா அபி —
தென்திசை கூட; தென் திக்கின் அதிபதி ‘பித்ரு பதி’ என்பர். அவர் பேரே நடுங்கச் செய்யும்.
பித்ரு நாமத்தை உடையவராய் அதிஷ்டிதமான ஓர் திக்கின் ஓர் மூலையில் பிறப்பென்னும் ஸம்பந்தம் கூட
பயத்தைக் கொடுக்கக் கூடிய திக்குக் கூட.

பரிபக்த்ரிம புண்யலஹ்யாத் —
எத்தனை புண்யங்கள் பரிபாக தசையை அடைந்து இப்படிக் கொத்த
பயனைக் கொடுக்கவேணும்! ‘தர்மராஜர்’ பயங்கரரென்று உலகம் பயந்தாலும், அவர் தர்மமூர்த்தி யல்லவோ?
தர்மம், புண்யம். அந்த திக்பதியின் மஹாபுண்யங்களெல்லாம் அந்தத் திக்கைச் சேர்ந்தது. பதியின் புண்யம் பத்நிக்குடையது.

தேவி தவ் அவதாராத் —
தேவி! என்னுடைய திவ்யமான அவதாரத்தால், விபீஷணாழ்வார் அவதரித்ததும்,
அரசு செலுத்துவதுமான திக்கென்று முன்பு ஏற்றமுண்டு. நம்மாழ்வார் அவதரித்ததால், அந்தத் திக்கு முன்பே ஓர் ஏற்றம் பெற்றது.
அந்த அவதாரமும் மஹா புண்ய பரிபாகத்தால் ஸப்யம். ஆனால், அது தேவன் அவதாரம்.
பெருமாளோ, விஷ்வக்ஸேன தேவரோ நம்மாழ்வாராய் அவதரித்தார். இங்கே தேவியான உன்னுடைய அவதாரம்.
‘உன்னுடைய அவதாரக்ஷணத்திலிருந்து’ என்றும் பொருள். விபீஷணர் தேவரல்ல.

ஸர்வோத்தரா பவதி —
எல்லாவற்றிலும் சிரேஷ்டமாயாகிறது. தெற்குத் திக்கு வடகோடியாகி விடுகிறது என்பது ஆச்சரியம்!
‘உத்தர’ என்பது ச்ரேஷ்டத்தையும் சொல்லும், வடக்கையும் சொல்லும்.
‘ரொம்ப தூரம் கிழக்கே போனால், அது மேற்காகி விடும்’ என்று ஓர் ஆங்கிலப் பழமொழி.
‘கிழக்கும் மேற்கும் ஓரிடத்தில் சேரும்’ என்பர். ‘தெற்கும் வடக்கும் ஒருகாலும் சேராது, நித்திய விரோதிகள்’ என்பர்.
உன் அவதார மஹிமையால் இளப்பமானது லோகோத்தரமாகும். சேராத விருத்தங்களும் விரோதத்தை விட்டுச் சேர்ந்து விடும்.

யத்ரைவ — எந்தத் திக்கை நோக்கியே

ரங்கபதிநா —
“தென்னாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கம்” என்பர்.
தென் நாட்டுக்கும் வடநாட்டுக்கும் மத்தியத்திலுள்ள ரங்கபதி. இரண்டு திக்குகளுக்கும் பொதுவாய்ப்
பக்ஷபாதமில்லாமல் மத்தியஸ்தமாயிருக்க வேண்டியவர். அப்படி மத்தியஸ்தராக இருக்கவேண்டியவரான “ரங்கபதியாலேகூட” .
திருவரங்கத் திருப்பதி மத்தியஸ்தமாய் இருப்பதுபோல அத்திருப்பதியின் பதியும் மத்தியஸ்தமாய் இருக்க வேண்டாவோ?

பஹுமான பூர்வம் —
பஹுமானத்தோடுகூட. அரங்கத்தில் தூக்கம் நடனமே யம்மா!
நீ பிறந்த திக்கென்று பஹுமதியாய் எண்ணிக் கொண்டேயிருக்கிறார். மனது லயமடைந்தால் அல்லவோ தூக்கம்!
தெற்குத் திக்கிலேயே உன் அவதார ஸம்பந்தத்தையிட்டும் இத்தனை பஹுமானமிருக்கும்போது,
அதை ‘உத்தம’மாக ‘ஸர்வோத்தர’மாகச் செய்யும்போது, உன் பிதாவை மஹத்தரராக்குவது அரிதாகுமோ?
திக்கை ‘தம’மாக்குபவர் உன் பிதாவை ‘தா’ரராக்காரோ?

நித்ராளுநா அபி —
தூக்கமாயிருந்தாலும், ரங்கத்தில் தூக்கத்தை நடிப்பது போலத் தான் ரங்கபதியின் தூக்கம்.
‘நித்ராதி ஜாகர்யயா’ ‘விழித்துக்கொண்டே தூங்குகிறார்’, ‘யோகநித்ரை’. என்ன யோகம்?
ஆண்டாள் யோகம். “அநித்ர:ஸததம் ராம” என்று சொல்லி நிறுத்திவிட வேணும்.

நியதம் — நிரந்தரமாய். யோகத்தில் எப்படி இடைவிடாமல் அவிச்சின்னமான நினைப்போ, அப்படியே.

கடாக்ஷ: நிஹித: —
கடாக்ஷங்கள் வைக்கப் பட்டிருக்கின்றனவோ. ‘உன்னுடைய அவதார காலத்திலிருந்து
இப்படி நியதமாக த்ருஷ்டி வைக்கப் பட்டுளது’
‘தவ அவதாராத்’ என்பதை இங்கும் அந்வயிக்க. ‘எப்போ வருவாளோ?’ என்று த்யானம்.

————

ப்ராயேண தேவி பவதீவ்யபதேசயோகாத்
கோதாவரி ஜகதிதம் பயஸா புநீதே|
யஸ்யாம் ஸமேத்ய ஸமயேஷு சிரம் நிவாஸாத்
பாகீரதி ப்ரப்ருதயோபி பவந்தி புண்யா: || .12.

தேவி — ஏ கோதாதேவியே! பவதீவ்யபதேஶயோகாத் — உன் பெயரைப் பெற்ற ஸம்பந்தத்தால் (பாக்யலாபத்தால்),
கோதாவரீ — கோதாவரி நதியானது; இதம் ஜகத் — இவ்வுலகை; பயஸா — தன் தீர்த்தத்தால்; ப்ராயேண — மிகவும்;
புநீதே — பரிசுத்தப்படுத்துகிறது. யஸ்யாம் — எந்த கோதாவரி நதியில்; ஸமயேஷு — புண்ய காலங்களில்;
பாகீரதி ப்ரப்ருதயோ அபி — கங்கை முதலிய புண்ய நதிகளும் ; ஸமேத்ய — சேர்ந்து;
சிரம் நிவாஸாத் — வெகு காலம் கூடி வஸிப்பதால்; புண்யா: — பரிசுத்தங்களாக; பவந்தி — ஆகிறார்களோ.

அம்மா கோதா தேவியே! உன் பெயரை வஹித்த ஸம்பந்தத்தாலும், பாக்யத்தாலும் கோதாவரீ நதி
இவ்வுலகத்தைத் தன் தீர்த்தத்தால் மிகவும் புண்யமாக(சுத்தமாக)ச் செய்கிறாள்.
எந்த கோதாவரீ நதியில் கங்கை முதலிய புண்ய நதிகளும் சில புண்ய காலங்களில் கூடி
நீண்ட காலம் வஸிப்பதால், பரிசுத்தமாகின்றார்களோ.

கோதாப் பிராட்டியே——-கோதாவரி நதி உன் பெயரைத் தாங்கி உள்ளதால் அல்லவா,
இந்த உலகத்தைத் தன்னுடைய தீர்த்தத்தால் நனைத்துப் புனிதமாக்குகிறது.
கங்கை முதலிய நதிகளும் இங்கு கோதாவரி நதியில் வந்து தங்கித் தன பாவங்களைக் களைந்து ,புண்ய நதியாக ஆகிறது.
கோதா என்கிற உன் திருநாமத்தின் பெருமை வர்ணிக்க இயலாதது.

அவ — தென் திக்கின் ஓர் கோணத்தில் நீ அவதரித்தாய் என்ற வஸ்து ஸம்பந்தமாவது அந்தத் திக்குக்கு உண்டு.
அந்த ஸம்பந்தம் லேசமுமில்லை கோதாவரீ நதிக்கு. உன் பெயரைத் தன் பேராகப் பெற்ற ஸம்பந்தந்தானுண்டு.
பேர் ஒற்றுமை என்ற சப்த ஸம்பந்தம் நாமமாத்ர ஸம்பந்தம் தானுண்டு. அந்த ஸம்பந்தத்தாலும்,
அந்நதி ஸர்வோத்தரமான (உத்தமமான) பரிசுத்தியை உடையது. உலகத்தையெல்லாம் பரிசுத்தமாக்குகிறாள்.
உலகத்தை எல்லாம் புனிதமாக்கும் புண்யநதிகளையும் தன் சேர்க்கையால் புண்யமாகச் செய்யும் சக்தியை அடைகிறாள்.
பெருமாள் ஸ்ரீபாத தீர்த்தமான கங்கையும் கோதாநதியில் தீர்த்த யாத்திரை செய்து அங்கே க்ஷேத்ரவாசம் செய்து
அசுத்தியை நீக்கிப் புண்யமாகிறாள். அதெல்லாம் உன் திருநாமத்தைப் பெற்ற பாக்கியத்தின் மஹிமை.
“நாமவஹனம்” ஓர்விதமான தாஸ்யமாகும். ‘த்வத்தாஸ தாஸீகண” என்பதுபோல.
கோதாநதீ என்னும் தேவீ தாஸீகணத்தில் சேர்வாள், உன் திருநாமத்தை வஹிப்பதால்.

தேவி —
கோதாதேவியே! கோதாவரீதேவி, பாகீரதீதேவீ முதலிய புண்யநதீதேவிகள் உன் விபூதிகள், உன் தாஸிகள்.

பவதீவ்யதேஶயோகாத் —
உன் திருநாமம் தனக்கும் பெயரான ஓர் ஸம்பந்தத்தால், பெயர் ஸம்பந்தத்தால் மாத்ரம்.
யோகம் என்பதற்கு ‘ஸம்பந்தம்’ என்று பொருள். அது கிடைக்காதது கிடைப்ப தென்னும் அலப்த லாபத்தையும் சொல்லும்..
அநவாப்த பூர்வமானதைப் புதிதாக அடைதலைச் சொல்லும். உன் திருநாமம் தனக்கும் அமையப் பெறும் பாக்கியம் அலப்ய லாபமே.
10இல் “உன் தாதைக்கு முன்பு கிடையாதது உன்னால் கிடைத்தது” என்றார்.
11இல் “மஹாபுண்ய பரிபாகத்தால் லப்யம் உன் அவதார ஸம்பந்தம்” என்றார்.
இங்கும் “யோகாத்” என்பதால் உன் பெயர் தனக்கும் அமையப் பெற்ற (கிடையாதது கிடைத்த)
பாக்கியத்தால் என்று விளக்குகிறார்.
எல்லாம் இங்கே பாக்யமும் புண்யமும், இலப்ய லாபமும், பரிசுத்தி லாபமுமாகவே இருக்கின்றன.
நிகண்டுவில் “கோதா” என்பது ‘கோதாவரீ நதிக்கும்’ ‘விஷ்ணுசித்தர்’ ஆத்ரஜைக்கும் பெயர் என்று
சேர்த்துப் படிக்கப்பட்ட சப்த ஸம்பந்தந்தான். வேறு வஸ்து ஸம்பந்தமில்லை. நிகண்டுவில் ஸஹயோகந்தான்.
சப்த மாத்ரமான ஸம்பந்தத்திற்குக்கூட இத்தனை மஹிமையுளது. உன் பிதாவான ஆழ்வார்
‘பெரிய ஆழ்வாராவது’ என்ன ஆச்சரியம்! இப்படி கைமுத்யங்களால் அதை ஸமர்த்திப்பதில் திருவுள்ளம்.

கோதாவரீ — ‘கோதாவரீ’ என்பது நதிக்கு மட்டும் பெயர். ‘கோதா’ என்பது உங்களிருவருக்கும் நிருநாமம்.

இதம் ஜகத் —

இவ்வுலகனைத்தையும். தீர்த்த ஸ்நானம் எல்லோருக்கும் பொது.
உன் ஸரஸ்வதீ நீராட்டமும் எல்லோர்க்கும் பொது.

பயஸா ப்ராயேண புநீதே — தீர்த்தத்தால் விசேஷமாய்ப் பரிசுத்தமாக்குகிறாள். தீர்த்தத்தால் சுத்தமாக்குகிறாள்.
நீ உன் நாம மாத்ரத்தாலும் கோதாவரீ நதிக்கு ஸர்வோத்தரமாகும் மஹிமையை அளிக்கிறாய்.
ப்ராயேண — அநேகமாய்ப் பரிசுத்தமாக்குகிறாள் கோதாவரீ.
பூர்ணமாக, ஏகாந்தமாக சுத்தமாவது உன் ஸரஸ்வதீ நீராட்டத்தினால்தான்.

யஸ்யாம் —
எந்த கோதாவரீ நதியில். ஸீதைப்பிராட்டி சிர காலம் பஞ்சவடியில் அந்நதியில் நீராடி
அதைப் புண்யமாக்கினாள். ‘ஹநகதநயா ஸ்நான புண்யோதகேஷு’ என்று காளிதாஸர் கோதாவரீ தீர்த்தங்களைப் புகழ்ந்தார்.

ஸமயேஷு — சில புண்யகால விசேஷங்களில்.

ஸமேத்ய —
சேர்ந்து. ‘நதிகளின் சங்கமம்’ உயர்த்தி என்பர். இங்கே மற்ற புண்ய நதிகள் தங்களுக்கு
நேர்ந்த பல பாபிகளின் ஸம்பந்தத்தால் வந்த அசுத்தியைப் போக்குவதற்காக கோதாவரீ நதிக்குத்
தீர்த்த யாத்திரையாக வந்து, அங்கே சேர்ந்து பஹுகாலம் வஸித்து அதனால் சக்தி பெறுகிறார்கள்.
தீர்த்தங்கள் செய்யும் தீர்த்த யாத்திரை, தீர்த்த வாஸம்.

சிரம் நிவாஸாத் —
சிர காலம் வஸிக்கிறார்கள். உன் பெயரைப் பெற்ற நதியென்னும் அந்த
உன் ஸம்பந்தத்தால் மஹா பரிசுத்தமான நதியென்னும் கௌரவம். ‘தே புந்யேந்துருகாலேந’
‘ஜலமயமான தீர்த்தங்கள் வெகுகாலத்தால் பரிசுத்தியைச் செய்கின்றன’ என்கிற வசனப்படி
நதீ ஸாமான்ய வாஸனையால் சிரகாலம் வஸிக்கிறார்கள்.

பாகீரதீ ப்ரப்ருதயோபி —
கங்கை முதலிய மஹாநதிகளும். பகீரத ப்ரயத்தினத்தின் பேரில் ஸ்வர்க்கத்திலிருந்து
இங்கே அவதீர்ணமான கங்கையும், உத்தம புண்ய நதிகளும். “கங்கை கங்கையென்ன வாசகத்தாலே
கடுவினை களைந்திடுகிற்கும் கங்கையின் கரைமேல்”, “எழுமையும் கூடி யீண்டிய பாவமிறைப் பொழுதளவினிலெல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல்” என்றபடி பிறர் பாவங்களைக் கழுவினாலும்,
அந்தப் பாபங்கள் தங்களோடு சேர்ந்து தமக்கே செய்த அசுத்தியைத் தாமே கழுவச் சக்தியில்லை.

புண்யா: பவந்தி —
புண்யங்களாக (பரிசுத்தங்காள) ஆகின்றார்கள். இதனால் புண்ய நதிகளெல்லா வற்றிலும்,
கோதாவரீ, உன் திருநாம ஸம்பந்த மாத்ரத்தால், ஸர்வோத்தரமான புண்ணியநதி யாகிறாளென்று ஸூசனம்.
வடக்குத் திக்கிலுள்ள கங்கா யமுனா நதிகளிலும் கோதாவரீயென்னும் தென் நதி உத்தரமாகின்றாள்.
கோதாவரீ தீரத்தில் பிறந்த பவபூதி கவியும், உத்தரராம சரிதத்தின் இரண்டாமங்கம் முடிவில்
“தக்ஷிணதேச மலைகளின் குஹைகளில் கோதாவரீ தீர்த்தங்கள் புகுந்து சப்திக்கின்றன” என்று வர்ணித்திருக்கிறார்.
கோதாவரீ நதியை அவர் தக்ஷிணதேச நதியென்றார்.
முராரி நாடகத்தில் புஷ்பக விமானத்தில் அயோத்திக்குச் செல்லும் பெருமாள்
“கோதாவரீயை வந்தனம் செய்” என்று ஸீதைக்குச் சொன்னார். .12.

——–

நாகேஶயஸ் ஸுதநு பக்ஷிரத: கதம் தே
ஜாத: ஸ்வயம்வரபதி: புருஷ: புராண: |
ஏவம்விதாஸ் ஸமுசிதம் ப்ரணயம் பவத்யா:
ஸந்தர்ஶயந்தி பரிஹாஸகிரஸ் ஸகீனாம் || .13.

ஸுதநு — அழகிய மேனி யமைந்தவளே!; நாகேஶய: — பாம்பணையிற் பள்ளி கொண்டவனும்;
பக்ஷிரத: — பக்ஷியின் மேல் சவாரி செய்கிறவனுமான; புராண: புருஷ: — கிழவர்;
கதம் — எப்படி; தே — உனக்கு (உனக்கிஷ்டமான); ஸ்வயம்வரபதி — ஸ்வேச்சையால் வரிக்கப்பட்ட பதியாக;
ஜாத: — ஆனார். ஸகீநாம் — (உன்னுடைய தோழிமாருடைய;
ஏவம்விதா — இப்படிக்கொத்த; பரிஹாஸகிர: — பரிஹாஸப் பேச்சுக்கள்;
பவத்யா: — உன்னுடைய; ப்ரணயம் — நாயகன் விஷயமான ராகத்தை,(விருப்பத்தை);
ஸமுச்சித: — தகுதியுள்ளதாக; ஸந்தர்ஶயந்தி — நன்றாய் விளக்குகின்றன.

அழகிற் சிறந்தவளே! பாம்பின்மேல் படுப்பவரும், பக்ஷியின் மேலேறிப் பறப்பவரும், தனக்கு மேல்பட்ட
மூத்தோரில்லாத கிழவருமானவர் எப்படி நீ ஆசைப்பட்டு வரித்தவரானார்? என்றிம்மாதிரியான தோழிகளின்
பரிஹாஸ மொழிகள் (உண்மையில்) உன்னுடைய பதி விஷய ப்ரணயம் மிகவும் உசிதம் என்று நன்கு காட்டுகின்றன.

அழகான மெல்லிய திருமேனியை உடையவளே …”..நீ வரித்த புருஷன், பாம்பில் படுக்கிறான்;
பக்ஷியின் மீது அமர்ந்து செல்கிறான்; புராண புருஷன் …..மிக மிக வயதானவன்;
நீ ,எப்படி இந்த வரனைத் தேர்ந்தெடுத்தாய் ….” என்று உன் தோழிகளின் பரிகாசப் பேச்சுக்கு ஆளாகி இருக்கிறாயே
இவைகளைக் கேட்டு நீ பூரிக்கிறாய். குணமாகவே எடுத்துக் கொள்கிறாய்.
இவையெல்லாம் தத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றன என்று உன் அன்பை வெளிப்படுத்துகிறாய்

அவதாரிகை

(1) ஆண்டாள் பிறப்பையும், அவள் பிறப்பு முதலிய ஸம்பந்தலேசங்களாலும் வரும் லோகோத்தரமான
ஏற்றங்களையும் ஸாதித்தார். ஆண்டாள் கல்யாணம் ப்ரஸ்துதம். வதூவின் பிறப்பின் சிறப்பை ஸாதித்தார்.
வரனின் சிறப்பைப்பற்றி என்ன பேசுவது? பிறவாதவனுக்குப் பிறப்பேது?
இந்த வரனுக்கு ஜாதகமென்ன? ஜாதனானாலல்லவோ ஜாதகமிருக்கும்!
(2) கல்யாண விஷயத்தில் ‘சீலம், வயசு, வ்ருத்தம்’ முதலியதெல்லாம் துல்யமாக அநுரூபமாக இருக்கிறது.
ஆகையால் ராகவனும் ஸீதைக்குத் தக்கவர், ஸீதையும் ராகவனுக்கேற்றவள் என்பரே!
இங்கே சேர்க்கை ஔசித்யங்கள் எப்படி?
(3) கல்யாண ஸந்தர்ப்பத்தில் தோழிமார் மாப்பிள்ளையப் பற்றிப் பரிஹாஸங்கள் பேச வேண்டுமே!
கோதை நர்த பரிஹாஸோக்திகளில் மிகக் கெட்டிக்காரியான நர்மதையல்லவோ!
அவளுக்கு இன்பமான பரிஹாஸ வசனங்களைப் பேசவேண்டுமே! அந்தத் தாயார் கல்யாண விஷயத்தில்
மேல் பார்வைக்கேனும் பழிப்புகள் போன்ற நர்ம ஹாஸங்களை நாம் பேசக்கூடாது.
அடியோடு ஏசல் இல்லாமையும் கல்யாணத்திற்கு ஒவ்வாது. தோழிகள் மூலமாகத் துளியே பேசுவோம்.
பாதி ச்லோகத்தோடு பேசி நிறுத்துவோம். அரைகுறையாகவே பேசுவோம்.
(4) பரிஹாஸம் பேசிப் பழிப்பது துதியாகுமோ? துதியல்லவோ இங்கே ப்ரஸ்துதம்!
இந்த க்ரந்தம் கோதை நிந்தை க்ரந்தமல்லவே! அல்ல. துதிதான். நிந்நையே துதியாகும். இது வ்யாஜஸ்துதி அணி.
(5) ரங்கத்தில் ஹாஸ்யம் ப்ரதானமே. அரங்கர் கல்யாணத்தில் ஹாஸ்யம் வேணுமே!

நாகேஶய: —
பாம்பின் மேற்படுப்பவர். ஸஹ சயன மனோரதம் தானே முதன்மையானது?
‘பாம்போடு ஒரு கூரையில் வசிப்பதே துன்ப’மென்பர். படங்களை விரித்திருக்கும் ஆயிரம் தலை பாம்பின் மேல்
என்றும் சயனிப்பவராயிற்றே! நாகேசயன் என்று அலுக்ஸமாஸத்தினால் இப் படுக்கை தான் நித்யம்,
இதற்கு லோபமேயில்லை என்று வேடிக்கை. பத்னியோடு சேர்க்கை போல படுக்கைக்கும் நித்ய யோகம்.
பாம்பின் விரித்த படங்களே படுக்கைக்குமேல் அஸமானகிரி. இந்த விதானத்திற்கு ஸமானமில்லையாம்.
அஸமானமாம். பாம்பின் சிரோரத்னங்களே படுக்கையறை தீபங்கள். இது என்ன படுக்கை ஜோடிப்பு?
பெருமாள் நித்ராளுவானாலும், இப்பாம்புக்குத் தூக்கமேயில்லை. பாம்பு தூங்கினாலும், அக்காலத்திலாவது பயமற்றிருக்கலாம்.
நீர் ஜாக்ரதையாயிருந்தாலும், தூங்கினாலும், நான் தூங்காமல் கண்ணைக் கொட்டாமல் விழித்திருந்து
காவல் ஊழியம் செய்வேன் என்று வ்ரதம் அனுஷ்டிக்கும் படுக்கை.
கல்யாணத்தில் பரதேசம் போவதற்குக் குடை பிடித்துக் கொள்ள வேணுமே!
நான்தான் குடை என்று பாம்பே குடையாக முன்வருமே! வேறு குடைக்கு இடம்கொடாமல் சீறுமே!
பர தேசம் போம பாதுகை வேணுமே! அதற்கும் நானே என்று முன்வருமே! நிவாஸமும் தானாகுமே! ரஹஸ்யம் தெரியாதோ?
இப்பாம்பு தானே உன் வேங்கடவர் வசிக்கும் வேங்கடம்! மனைப் பலகையில் உட்கார வேண்டுமே மாப்பிள்ளை!
வேறு ஆசனத்திற்கு இடம் கொடாதே! பூம் பட்டு வேண்டுமே! அதுவும் தானே என்று முன்வருமே! அம்மா!
இந்த ரஹஸ்யமெல்லாம் உன் தாதைகளான ஆழ்வார்களுக்குத் தெரியுமே!
“சென்றாற் குடையா மிருந்தாற் சிங்காதனமாம் நின்றால் மரவடியாம் நீள்கடலுள் என்றும் புணையாம்
மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கு மணையாம் திருமாற்கரவு” என்று அவர்கள் பாடுகிறார்களே!
அவர்கள் எப்படி இந்த வரனுக்கு வாழ்க்கைப்பட சம்மதித்தார்கள்?
“பையரவினணைப் பள்ளியானொடு கைவைத்தின் வருமே” என்றாரே விஷ்ணுசித்தரும்!

பக்ஷிரத: —
படுக்கை யிருக்கட்டும். ஊரெல்லாம் கூட வந்து வாத்ய கோஷங்களோடு ரதத்தில் ஊர்வலம் மெள்ள மெள்ள
விடியும் வரையில் வரவேண்டுமென்று ஒரு பெண் ஆசைப்பட மாட்டாளோ?
ஆகாயத்தில் பறக்கும் பக்ஷியல்லவோ இந்த மாப்பிள்ளைக்கு வாஹனம்! ரதம்! ஒருத்தர் கூடவர முடியுமோ?
நீதான் அந்தப் பக்ஷியின் முதுகிலேறிப் பறப்பாயோ! சிறு பெண்ணுக்கு ஆகாயத்தில் பறக்க பயமிராதோ?
பயமிருந்தால் ஸுகமிருக்குமோ? ஸந்தோஷமிருக்குமோ? ஊர்வலம் மெள்ள மெள்ள ஊர்ந்தல்லவோ வரவேண்டும்?
மெள்ள அடியடியாக ஊர்வது ஊர்வலத்திற்கு அழகு. பக்ஷி பூமியில் நடக்குமோ? வேறு வாஹனம் இவருக்கு ஆகாதே!
‘பெருமாளும் நல்ல பெருமாள், திருநாளும் நல்ல திருநாள், ஆயினும் இப்பெருமாளைப் பருந்து தூக்கிப் போவதே’
என்று காளமேகக் கவி பாடினார். ‘பறவையேறு பரம்புருடா’ என்றார் உன் தந்தை.

ஸுதநு —
அழகிற் சிறந்தவளே! இதைப் ‘பாம்பணையோன்’ என்பதற்கும் ‘பக்ஷிரதர்’ என்பதற்கும்
நடுவில் வைத்தது ரஸம். இரண்டும் உன் அழகிய மேனிக்கு மிகவும் அநுசிதம்.
உன் ஆத்மா ஒத்துக்கொண்டாலும், உன் காத்திரமொவ்வாதே! நாகமும் பக்ஷியும் ஸஹஜ சத்ருக்களல்லவோ!
நடுவே ஈச்வரதத்துவம் நின்று விரோதமே மனதிலுதிக்காமல் தடுக்கிறது என்று வ