Archive for the ‘Acharyarkall’ Category

ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை -ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ வானமாமலை ஜீயர் —வைபவங்கள் —

October 21, 2020

ஸ்ரீ மணவாள மாமுனிகள்-

ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முனிம்

ஸ்ரீ சடாரி குரோர் திவ்ய ஸ்ரீ பாதாப்ஜ மதுவ்ரதம்
ஸ்ரீ மத் யதீந்திர பிரவணம் ஸ்ரீ லோகாச்சார்ய முனிம் பஜே

ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மகாத்மனே
ஸ்ரீ ரெங்க வாசினே பூயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம்

ஸ்ரீ மத் ரெங்கம் ஜெயது பரமார்த்த தர்ம தேஜோ நிதானம்
பூமா தஸ்மின் பவதி குசலி ஹோ பிபோ மா ஸஹாய
திவ்யார்த் தஸ்மை திசத்து விபவத் தேசிகோ தேசிகானாம்
காலே காலே வர வர முனி கல்பயன் மங்களானி

மாசற்ற செம்பொன் மணவாள மா முனிவன் வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே

திரு மூலமே நமக்கு மூலம்
பூதூரில் வந்து உதித்த புண்ணியனோ ?
பூம் கமழும் தாதர் மகிழ் மார்பன் தான் இவனோ ?
தூத்தூர வந்த நெடுமாலோ
மணவாள மா முனி எந்தை இம் மூவரிலும் யார் ?–ஸ்வாமி ஆய் அருளியது

——————-

ஸ்ரீ திருவரங்கத்தில் இருந்து ஸ்ரீ அழகிய மணவாளனும்
ஸ்ரீ ஆழ்வார் திரு நகரியில் இருந்து ஸ்ரீ நம்மாழ்வாரும் -கலாபத்துக்கு பிறகு -1323- தம் தம்
ஸ்தானங்களை விட்டு கோழிக்கோடு முந்திரிப்பூ காடு வழியாக கர்நாடக -திருக் கணாம்பி -என்னும் ஊரில் எழுந்து அருளினார்கள்
கலாபத்துக்கு பின்பு ஸ்ரீ திருக் குருகூர் புனர் நிர்மாணம் பண்ணி அருளினார்
ஸ்ரீ திருமலை ஆழ்வார் என்னும் ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை

நம ஸ்ரீ சைல நாதாய குந்தீ நகர ஜன்மனே ப்ரஸாத லப்த
பரம ப்ராப்ய கைங்கர்ய சாலி நே

சீர் உற்ற செஞ்சொல் திருவாய் மொழிப்பிள்ளை செம்முகமும் தார் உற்ற மார்பும் தளிரேய் பதங்களும் தன் மனத்து
பூரித்து வாழும் மணவாள மா முனிகள் பொன்னடிகள் பாரில் தரித்து அடியேன் பற்றினனே –ஸ்ரீ கந்தாடை அண்ணன்

ஸ்ரீ பகவத் விஷய உபதேச மார்க்கம் தமக்கு திருவாய் மொழிப்பிள்ளை பேர் அருளாலே வந்த படியை
தமக்கு உள்ள பேர் அன்பாலே பாசுரம் இட்டு அருளுகிறார் மா முனிகளும்

திரு அருள் மால் சேனை முதலி சடகோபன் நாத முனி சீர் உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி சென்றான் ஆளவந்தார்
குரு மாலாதரர் குருகைப் பிராற்கு அன்பாம் எதிராசர் கோவிந்தர் கூரேசர் பட்டர் வேதாந்த முனி
இரு கண்ணற்கு அன்புடைய நம்பிள்ளை இவர் ஈடு அளித்ததற்கு ஏய்ந்த மாதவர் பத்ம நாதர் இவர் அருளாளர்
திருவடி ஊன்றிய தேவப்பெருமாள் கைக்கொண்டு அருளும் திருமலை ஆழ்வார் பதங்கள் முன்பு என்னுள் சேர்ந்தனவே – –

1301-1406-இவர் விபவ வருஷம் வைகாசி விசாகத்தில் பூர்வ சிகை ஸ்ரீ வைஷ்ணவ குலத்தில் திரு அவதாரம் –
மதுரைக்கு அருகில் குந்தீ -இப்பொழுது மருவி கொந்தகை என்று அழைக்கப் படுகிறது –

திரு நாமங்கள்
ஸ்ரீ சைலேசர்
திருமலை ஆழ்வார்
திருவாய் மொழிப்பிள்ளை
காடு வெட்டி ஐயன்
சடகோப தாசர்
ஸ்ரீ நாத முனிகள் சிஷ்யர் உய்யக் கொண்டார் வம்சத்தவர் என்பர்

திருத்தாயார் சாத்விகை அம்மையார்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் இடம் பஞ்ச சம்ஸ்காரம்
பாண்டிய ராஜ புரோகிதர் -பின்பு ராஜாவாகவும் ஆனவர்
பிள்ளை லோகாச்சார்யார் ஜோதிஷ் குடியில் அழகிய மணவாளரை பாது காத்து
அருளும் பொழுது இவருக்கு 40 திரு நக்ஷத்ரம்

பிள்ளை லோகாச்சார்யார் திருமலை ஆழ்வாரை அனுவர்த்தித்து
ஸ்ரீ கூர குலோத்தமை தாசரை ரஹஸ்யார்த்தங்களை ப்ரசாதிக்கும் படியாகவும்
திருக் கண்ணங்குடி பிள்ளைக்கும் திருப் புட் குழி ஜீயருக்கும் திருவுவாய் மொழிப் பொருளை உபதேசிக்கும் படியாகவும்
மற்றும் உள்ள மூவாயிரம் வியாக்கியானங்களை உபதேசிக்கும் படி நாலூர்ப்பிள்ளைக்கும்
ஸ்ரீ வசன பூஷண சாரார்த்தமான ஸப்த காதை முதலான அர்த்த விசேஷங்களை
விளாஞ்சோலைப் பிள்ளைக்கும் நியமித்து அருளினார் –

கூர குலோத்தமை தாசர் திருவடிகளே சரணம் என்று அநவரதம் சொல்லக் கேட்டு
ராஜ மஹிஷி இவருக்கு அரசுப் இருந்து ஒய்வு வழங்கி விட்டார்

கூர குலோத்தம தாசர் திரு வரசு சிக்கில் கிடாரத்தில் உள்ளது
இங்கு திருவாய் மொழிப்பிள்ளை தங்கி இருந்த திரு மாளிகை சேஷமும் இன்றும் உள்ளது
குந்தீ -கொந்தகையில் வீற்று இருந்த திருக்கோலத்துடனும் செங்கோலுடனும் சேவை சாதித்து அருளுகிறார்

நம்மாழ்வாரை முந்திரிப்பூ பள்ளத்தாக்கில் இருந்து எழுந்து அருளப்பண்ணி –
அங்கேயே பரமபதம் அடைந்த தோழப்பர் திருக்குமாரர் -அப்பன் பிள்ளைக்கு -ஆறுதல் கூறி
ஆழ்வார் உம்மை புத்ரராக கொண்டார் -இன்றும் ஆழ்வார் தோழப்பர் -அருளப்பாடு -உண்டே

நம்மாழ்வாரை திருக்கணாம்பி எழுந்து அருளப்பண்ணி -இருந்த கோயிலிலே மேலே கருட பக்ஷி கூடு கட்டி இருந்தது
ஆழ்வாரை சேவிக்க திருவனந்த புரம் திருவட்டாறு திருவண் பரிசாரம் திருவல்லவாழ் திவ்ய தேச நம்பூதிரிகள் போத்திமார்கள் வந்து
உதய காலத்தில் திரு மஞ்சனம் செய்து அருளி
தத்யோந்நம் நெய் தோசைப்படி பாகு கூட்டின கட்டிப்பொரி -பால் கஞ்சிக் கடாரம் அமுது செய்து அருளி
மத்தியானம் நாயக அலங்காரம் -சம்பா அவசரம் திருப்பணியாரங்கள் –
சாயங்காலம் திருவாராதனம் கண்டு அருளி
அஸ்தமன சமயத்தில் உப்புச் சாத்தமுது -சம்பா -தோசைப்படி -பொரி அமுது செய்து அருளி
பிற்பாடு அத்தாளமுது செய்து அருளி
இராக்காலமாய் ஸ்ரீ பலிதுடி -திரு உற்ற சாதம் -அரவணை -சுக்கு கஷாயம் அமுது செய்து அருளி
போத்திமார் திட்டம் பண்ணி நடத்திப் போந்தார் –

பேர் அருளாளர் நியமனம் அடியாக கச்சி மா நகரில் ஆச்சான் பிள்ளை திரு மலை ஆழ்வாருக்கு
ஈடும் நாலாயிர பொருள்களையும் சாதித்து அருளினார்

காடு வெட்டி நாடாக்கி -நல்லார் பலர் வாழ் குருகூர் என்னும்படி குடியேறி திருக் கணாம்பியில் இருந்து
திருநகரிக்கு எழுந்து அருளப்பண்ணி -குருகூர் சடகோபன் என்னும்படி
உறங்கா புளி நிழலிலே ஏறி அருளப் பண்ணி சேவித்து நின்றார்

நம்மாழ்வார் சடகோப தாசர் -திருநாமம் யதார்த்தமாம் படி பிரசாதித்து அருளினார்
ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே -என்னும் படியும்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியனாய் -என்னும் படியும்
புகழ் வண் குருகையும் பொற் கோபுரமும் புரிசை சூழ் கழனி
தண் பொருனை மன் ஆழ்வார் மறைத் தமிழ் ஆயிரமும் திகழும் படி செய்த
ஸ்ரீ சைலேசர் என்னும் படி கைங்கர்யமே நிரூபகமாக இருந்தார்

1371-விஜய நகர மன்னர் வீர கம்பண்ணர் -செஞ்சி மன்னன் கோபணார்யன் –
விஜய நகர் படைத்தலைவன் சாளுவ மங்கி ஆகியோரின் பெரு முயற்சியால்
நம்பெருமாள் பரிதாபி ஆண்டு வைகாசி -17- நாள் திருவரங்கத்துக்கு எழுந்து அருள
அருணோதயம் போல் 1370 சாதாரண வருஷம் ஐப்பசி திரு மூலம் -மா முனிகள் திரு அவதாரம்

திருவாய் மொழிப்பிள்ளை உடைய திரு ஆராதனப் பெருமாள் -இன வாயர் கொழுந்து –

இவர் சிஷ்யர்கள்
பெரிய ஜீயர்
நம்மாழ்வார் கோயில் எம்பெருமானார் ஜீயர்
எம்பெருமானார் கோயில் சடகோபர் ஜீயர்
தத்வேச ஜீயர்
இவர் 105 திரு நக்ஷத்ரம் எழுந்து அருளி இருந்தார்
திரு அத்யயனம் வைகாசி கிருஷ்ண அஷ்டமி

————

ஸ்ரீ கோ மடத்து ஆழ்வான் -7 th ஸிம்ஹாஸனாதி பதி
ஸ்ரீ கோ மடத்துப் பிள்ளான் என்றும் அழைக்கப் படுவார்
இவர் சிஷ்யர் காக்கைப் பாடி ஆச்சான் பிள்ளை -மூன்று தட்வை ஸ்ரீ பாஷ்யம் கேட்டாராம்
இவரது வம்சமே ஸ்ரீ திகழக் கிடந்தான் திரு நா வீறுடைய தாஸர் அண்ணர் –
ஸ்ரீ மா முனிகளின் திருத் தகப்பனார் –
ஸ்ரீ மா முனிகளின் திருப் பேரனார் ஸ்ரீ ஜீயர் நாயனார் –
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் உடைய அஷ்ட திக் கஜங்களில் ஒருவர் –

ஜகத் ரஷா பரோ அநந்தோ ஜனிஷ்யத்த பரோ முனி ததஸ்ரஸ் யாஸ் ஸதாச்சாரா சாத்விகாஸ் தத்வ தர்சன —
தேவப் பெருமாள் கந்தாடை தொழப்பர் ஸ்வப்னத்தில் மா முனிகள் அவதாரம் பற்றிய ஸ்ரீ ஸூக்தி

கிடாம்பி ஆச்சான் சிஷ்யர் கிடாம்பி நாயனார் இடம் ஸ்ரீ பாஷ்யம் கற்றார் -திருவாய் மொழிப் பிள்ளை ஆணைப் படி –
ஒரு தடவை கால ஷேபம் செய்து அருளிச் செயல்களில் மட்டுமே பொழுது போக்காகக் கொண்டார் –
செல்வ நாயனார் -ஐகள் அப்பா -இருவரும் கிடாம்பி நாயனார் உடன் கால ஷேபம்
ஆதி சேஷன் உருவம் கண்டார்கள்

யதோத்தகாரி சந்நிதியில் வியாக்யான முத்திரை உடன் இன்றும் சேவை உண்டே

பிரணவம்
ஆழ்வார் -அகாரம்
எம்பெருமானார் -உடையவர் –
ஜீயர் -மணவாள மா முனிகள் -மகாரம்

மன்னிய சீர் மாறன் கலையை உணவாகப் பெற்றோம் -திருவாய் மொழி ஜீயர் எண்ணலாமே
கிடாம்பி ஆச்சான் -ஸ்ரீ பாஷ்யம் சாதித்தவர் -ஈடு அனுசந்தானம் செய்து கொண்டே இருக்கும் ஜீயர் -என்று உண்டே

இயல் பெயர் -அழகிய மணவாள பெருமாள் நாயனார்-
திருத் தகப்பனார் -திரு நா வீறுடைய பிரான் தாதர் அண்ணர் –
அவதார வருஷம் -சாதாரண வருஷம் -துலா மாதம் –26- நாள் – in AD 1370.–திரு மூலம் -கௌண்டிந்ய கோத்ரம் –
சிக்கில் கடாரம் திரு அவதாரம் இருந்தாலும் ஆழ்வார் திரு நகரியிலே வளர்ந்து கற்றார் –
திருக்கல்யாணம் –15 திரு நக்ஷத்திரத்தில் –1386 AD (February)-க்ரோதன ஸம்வத்சரம் –மகர மாசம் –
சந்யாச ஆஸ்ரமம் –விஜய நாம சம்வத்சரம் –1415-AD -(APRIL ) -பெரிய திரு மண்டபத்தில் -ஸ்ரீ சடகோப முனி ஜீயரால் –

திருக்குமாரர் -எம் ஐயன் ராமானுஜன்
அவர் உடைய திருக் குமாரரர்கள் -ஜீயர் நாயனார் -வேதப்பிரான் பட்டர் ஸ்ரீ ஜீயர் நாயனார்-
24 th வம்சத்தவர் -ஸ்ரீ கோமடம் எதிராஜ சம்பத் குமாராச்சார்யர் –
இப்பொழுது ஸ்ரீ ரெங்கம் மா முனி சந்நிதி கைங்கர்யம்
இவர் திருத் தகப்பனார் -ஸ்ரீ கோமடம் சடகோபாச்சார்யர்

1443-ஆனி மூலம்
ஸ்ரீமான் வகுள தர ஸாஸ்த்ர பாவம் ஸ்ரீ சைலே பத்ர் -எறும்பி அப்பா
அப்புள்ளார் -சம்பிரதாய சந்திரிகை -ஆனந்த வருஷம் முன் நாள் திங்கள் பவுர்ணமி மூலம் -ப்ரமாதித வருஷம்
12-JUNE -1433-மாலை
அரங்கர் தாமே வந்து தனியன் செய்து தலைக் காட்டினார்
பானு வாரம் –
கூட இருந்த ஸ்வாமிகள் பட்டோலை
மாப்பிள்ளை -மணவாளப்பிள்ளை ஜா மாதா
ரம்ய -அழகிய
சந்யாச ஆஸ்ரமம் பின்பு அழகிய மணவாள மா முனி ஜீயர்
ஸ்ரீ சைலேச -திருமலை ஆழ்வார் -திருவாய் மொழிப் பிள்ளை
முனிம் -ஐந்தாவது பெருமை தனியனில்
தனியன் -மற்ற ஸ்தோத்ரங்களில் இருந்து எடுத்தவை
சுக்ரீவன் சைலேச தயா பாத்திரம் -நாதம் இச்சதி -சரணம் கத
மதங்க முனிவர்

தவம் புரிந்து உயர்ந்த மா முனி -வால்மீகி
வான் தமிழ் மா முனி -அகஸ்தியர்
சாந்தீபன் அடி பணிந்து அடி பட்டு மனம் வருந்தி
ஆர்ணவம் -லவ ஆர்ணவம்
தன்னை உற்றாரை அன்றி தன்மை உற்றாரை -யதீந்த்ரர் திருவடி விட யதீந்த்ர பிரவணர் திருவடி

அஸ்மத் ஆச்சார்யர் -கூரத்தாழ்வான் -லஷ்மீ நாத சமாரம்பாம் -நாத யமுனா மத்யமாம்
அஸ்மத் குரு சமாரம்பாம் யதி சேகர மத்யமாம் -லஷ்மீ வல்லன பர்யந்தாம் -குரு பரம்பரை -சொல்லி ஆழ்வார்
இதுக்கு முன்பு சொல்லி
இது வந்த பின்பு இத்தை சொல்வது -க்ரமம் பெரிய பெருமாளே ஏற்பாடு
ஒருவரைச் சொல்லி பின்பு குரு பரம்பரை -எல்லா ஆச்சார்யர்களையும் காட்டும் தனியன்

அனைவருக்கும் அன்வயித்து அர்த்தம் சொல்லலாம் படி பொதுவான
ஸ்ரீ சைலேசர் தயா பாத்திரம்
திருமலை -ஸ்ரீ சைலம் -ஈசன் -தயைக்கு பாத்திரம் நம்மாழ்வார் –
ஸ்ரீ நம் பெருமாள் இங்கே தங்கி -ஸ்ரீ ரெங்க மண்டபம் -22-வருஷங்கள்
1371 திரும்பி -பரிதாபி வருஷம்
1370 மா முனிகள் அவதாரம் -பின்பே வர தைர்யம்

ஸ்ரீ சைலத்தை தனக்கு பாத்திர பூதமாகி –
தீ ஞானம்
பக்தி -அவனுக்கு உண்டோ -ஸ்நேஹ பூர்வ அநு த்யானம்
பகவத் பக்தி -நமக்கு -பக்தர்கள் இடத்தில் -பக்த வத்சலன் அன்றோ
யதீந்த்ரர் இடம் ப்ராவண்யம் -அறிவோம் -அரையர் மூலம் கூட்டி வந்து –
யதீந்த்ர ப்ராவண்யம் தன்னிடம் கொண்டவர்
ரம்யா ஜாமாதரம் -இவனுக்கும் பொருந்தும்
சந்யாச ஆஸ்ரமம் பின்பு அழகிய மணவாளன் இயல் பெயரை மாற்ற வேண்டாம் —
சடகோப ஜீயர் ஆசைப் பட்டார் என்று -முன்புள்ள திரு நாமமே வைத்து நடத்தும்
மா முனி -மட்டும் சேர்த்து
ஆச்சார்யர் திரு நாமம் பின்பு சிஷ்யன் வகுக்க வேண்டும் -மாற்ற வேண்டாமே என்பதால் இப்படி
மனன சீலன் -முனியே இவனே
பிராட்டிக்கும்
அகலகில்லேன் -பாத்ர பூதை
எம்பெருமானார் இடம் ஈடுபாடு -வித்யாசல வேடன் வேடுவிச்சி
அவருக்கும் இவள் இடம் ப்ராவண்யம்
ரம்யா ஜா மாதாவை எப்பொழுதும் த்யானம்

சேனை முதலியார்
வானவர் கோன் உடன் சிந்து பூ மகிழும்
எம்பெருமானார் இவரே தேசிகன் -சப்ததி
பிரம்பு -த்ரி தண்டம்

நம்மாழ்வாருக்கும் பொருந்தும்
மாரி மாறாத –
த்வய சாரம் -பூர்வ உத்தர திரு வேங்கடம் விஷயம்
இருவருக்கும் ஈடுபாடு வாசா மகோசரம்
மதி நலம் -தீ பக்தி
பவிஷ்யதாச்சார்யர்
அவர் ப்ராவண்யம் இவர் இடமே
மாறன் அடி பணிந்து
பராங்குச பாத பத்மம்
இப்படி அனைவருக்கும் பொருந்தும்

திரு முடி சம்பந்தம் திருவடி சம்பந்தம் -அனைவருக்கும் யதீந்த்ர ப்ராவண்யம்
எம்பெருமானாருக்கு ஆளவந்தார் மீதும் அவருக்கு இவர் மீதும் ப்ராவண்யம் உண்டே
அனைத்து ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகள் அறிந்தவர் இவர் ஒருவரே –
ஆளவந்தாருக்கு ஸ்ரீ பாஷ்யம் தெரியாதே
சகல பூர்வாச்சார்ய ஸ்ரீ ஸூ க்திகள் ஆகிற சாகர சந்த்ரன் அன்றோ இவர் –
தனி ஒருவர் இல்லை
முன்னவர் தாம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம் —
embodiment of all

தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு –தான் -நண்ணார் அவர்கள்
அன்பு தன் பால் -என்று தன் -அவரைச் சொல்லி
தன் குரு -மா முனிகள் தானே
ஐந்து கார்யம் சிஷ்யன் ஆச்சார்யருக்கு செய்ய வேண்டும்
தனியன் சமர்ப்பித்து
திரு நாமம் வகித்து
சொத்தை சமர்ப்பித்து -ஆதி சேஷனையே கொடுத்து அருளி -ஆச்சார்ய சம்பாவனை -சேஷ பீடம்
திரு நக்ஷத்ரம் -தீர்த்தம் கொண்டாடி
நேர் சிஷ்யர்கள் தானே திரு அத்யயனம் –
வேறே எவருக்கும் இல்லாமல் -மாசி சுக்ல பக்ஷம் துவாதசி இன்றும்
எம்பெருமானாருக்கு எம்பார் பண்ணி பின்பு அவர்க்கு பின்பு பண்ணுவார் இல்லை
என்றும் இறவாத எந்தை அன்றோ இவர் சிஷ்யர்
உச்சிக்கால பூஜை அப்புறம்
சுருள் அமுது கண்டு அருள மாட்டான் இன்றும் –
குரு பிரகாசம் -எங்கும் ஓலை அனுப்பி ஏற்பாடு –

இந்த ஒன்றை அனுசந்தித்தால் அனைவரையும் அனுசந்திப்பதாக இருப்பதால்
வைதிகம் விதி பிரேரிதம் இல்லாமல் எங்கும் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்
தாமரை உடன் இருக்கும் தவளை அறியாத ஏற்றம் வண்டு உணரும்
தெய்வ வண்டு காட்டக் கண்டு அனுபவிப்போம்

———————

மூலம் –19 நக்ஷத்ரம் -ஆச்சார்யர் வரிசைகளில் –19–
எம்பெருமானார் -திருப்பாவை ஜீயர் -ஆச்சார்யர் வரிசைகளில் -9-
திருவாய் மொழிப் பிள்ளை -ஆச்சார்யர் வரிசைகளில்-18-

தென் திசை இலங்கை நோக்கி -இலக்காக நோக்கி -ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்
எழுந்து அருளிய ஆழ்வார் திரு நகரியையே நோக்கி -ரக்ஷண அர்த்தமாக –
இவர் அவர்களுக்கு ரக்ஷணம் -அவர்கள் இவனுக்கு ரக்ஷணம்

நான்கு யானைகள் வட பாலானாய் -அவனுக்கு -ஆச்சார்யருக்கு இரட்டை சம்பாவனை -அஷ்ட திக் கஜங்கள்

11 பட்டம் -12 பட்டம் மா முனிகள் அலங்கரித்த 1428-சீலக வருஷம் -ஸுவ்மய வருஷம் சாதாரண –
மூன்று வருஷம் -58–61-திரு -சாதாரண -நடுவில் -ஷஷ்ட்டி அப்த பூர்த்தி அங்கு
திருவேங்கட ராமானுஜ ஜீயர் சின்ன ஜீயர் –
இவரே பெரிய ஜீயராகி அவர் சிஷ்யர் சின்ன ஜீயர்
பெரிய சின்ன சேஷ வாகனங்கள் எம்பெருமானார் பெரிய ஜீயர் அடிமை ஸ்மாரகம்
திருவாய் மொழி நூற்று அந்தாதி ஸ்பஷ்டமாக திருவேங்கடம் பிராட்டி பெருமாள் நினைவாக –மா முனிகளின் ஈடுபாடு –

பத்து ஒற்றுமைகள் -ஸ்ரீ பராங்குச முனிக்கும் நம் மா முனிகளுக்கும் –

1-ஸ்ரீ சைலேசர் தயா பாத்திரம் -திருமலையான் கருணையில் மூழ்கி
த்வயம் பூர்வ உத்தர வாக்யார்த்தம் இங்கேயே
எங்கும் திருவேங்கடத்தான் சந்நிதி ஆழ்வார் திருநகரியை சூழ்ந்து
கண்ணாவான் -வேங்கட வெற்பனே முதலில் திவ்ய தேசம்
மலை மேல் தான் நின்று என் மனத்துள் நின்றானை
பக்கம் நோக்கு அறியாமல் பராங்குசன் மேல் ஒருங்கே கடாக்ஷம்
2-மயர்வற மதி நலம் அருள பெற்றவர்கள் இருவரும்
என் மனனே அப்புறம் -இங்கு யாருக்கு அருளினான் -அருளி சத்தை பெற்றதால்
மா முனிகள் -தீ பக்த்யாதி குண அர்ணவம் -ஆதி -சரம பர்வம் -நிஷ்டையில் முழுவதும் –
திவ்ய தேசம் திரு அவதரித்த நாள்களையும் காட்டி அருளி உபதேச ரத்ன மாலையில் –
3-திருக் குருகூரில் அவன் அருளால் தோன்றி -தானே யான் என்னும் படி –
வரகுண பாண்டியன் -இசை -ஹேம நாத பாகவதர் -பாடி -சம்பாவனை -பாண்டிய நாட்டையே கொடுக்கும் படி -வாய் வார்த்தை –
குடி மகன் பேச்சு வேறே -சிம்காசன பேச்சு வேறே -எனக்கு நிகராக உன் நாட்டு பாடகர் பாடினால் கொடுக்க
பாண பத்ரர் -மீனாட்சி பக்தி -இசைத்தமிழே -சாதாரி பண்ணில் -பந்து வராளி –
விறகு வெட்டுபவராக -பாண பத்ரர் சிஷ்யராக கொள்ளாத நான் –
அகஸ்திய முனிவர் -வண் தமிழ் மா முனி -குறுங்குடி நம்பி இடம் -போக –
விஷ்வக்ஸேனராக நம் ஆழ்வார் தென் பாண்டி சீமையிலே -திரு விளையாடல் புராணம் –
பண் தரு மாறன் பசும் தமிழ் -சாம வேதம் -இன்னிசை பாடித் திரிவேனே
ஆதியிலே அரவசரை –மா முனிகளும் இவரால்
புக்ககம் இருந்து பிறந்தகம் போவதாக மா முனிகளே சொல்லிக் கொள்கிறார்
4-ஸ்ரேஷ்ட முனி இருவரும்
நாத யமுன ராமானுஜ முனிகள் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் அதுவே பொழுது போக்காகப் பெற்றோம் என்று
தானே சொல்லும் படி -மா முனி -முன்னோர் ஸ்ரீ ஸூ க்திகள் அனைத்தும் இவர் இடமே
5-யதீந்த்ர ப்ரவணர்கள் -பொலிக பொலிக -உடையவருக்கு நண்பராகி
அகில புவன -ஜென்ம -ஸ்தேம பங்காதி லீலைகளில் பொழுது போக்கு -இதுவே உலகம் என்று-இருந்த ஆழ்வார்
இது கொண்டு சூத்திரங்களை ஒருங்க விடுவார்
செயல் நன்றாக திருத்திப் பணி கொள்ள -ரக்ஷ ஏக தீக்ஷை
அவனோ தீர்ந்த அடியாரை
உயர்ந்த ஸ்ரீ நிவாஸன் -கைங்கர்ய ஸ்ரீ யைப் பெற்றவர்
பக்தி ரூபா பன்ன ஞானம் இவர் இடம் பெறவே ஸ்ரீ பாஷ்யம் மங்களா சாசனம்
வண்ணான் பிள்ளைகளை கூப்பிட்ட ஐ திக்யம் –
கஷ்டப்பட்டால் அவன் மோக்ஷம் இஷ்டப்பட்டால் மோக்ஷம் -ராமானுஜர் –
அதிகாரம் இருந்தால் அரங்கர் இரங்குவார்-நம் ஐயன் ராமானுஜன் இவர் திருக்குமாரர்
6-வாக்கு வன்மை -வேதம் தமிழ் செய்த மாறன் -விசத வாக் சிரோமணி
உளன் எனில் உளன் -இலன் எனில் அவ்வருவம் அவன் உருவம்
god is no where- god is now here
7-வேதம் விளக்கிய சாம்யம் – பஞ்சகம் -தமிழ் வேத நான்முகன் நம்மாழ்வார் -தானான -தலைவி தோழி தாய் –
உடல் மீசை உயிர் எங்கும் பரந்துளன் -யஸ்ய ஆத்ம சரீரம் -உடல் -நியாந்தா -ஆனால் அறியாமல் –
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் –
அந்த தமிழ் வேதத்தை மூ உள்ள காளியே -காளி க்கு மங்களா சாசனம் தப்பாக –
முப்பத்தாயிர பெருக்கர் -ஈடு சதா அனுசந்தானம் -நூற்று அந்தாதி –
2000 நாக்குகள் -1000 வாய்கள் -ஆற்றில் கரைத்த புளி ஆகாமல்
8-ரஹஸ்யார்த்த விளக்கம் -த்வயார்த்தம் தீர்க்க சரணாகதி
நாலாம் பத்து -முழுவதும் ஸ்ரீ மன் நாராயண சரணவ் ஐந்தாம் பத்து சரணம் -ஆறாம் பத்து பிரபத்யே –
ஸ்ரீ மதே -செல்வ நாராயணன் -முதல் பத்து -நாராயணாயா -தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே –
நம -மூன்றாம் பத்து வழு இலா அடிமை -ததீய சேஷத்வம் பயிலும் சுடர் ஒளி
9-பெரியவர் -பூமா -பஹு -மா -வார்த்தை பேச்சு மனஸ் உறுதி புத்தி த்யானம் விஞ்ஞானம் உடல் வலிமை
உணவு தண்ணீர் ஒளி ஆகாசம் நினைவு ஆற்றல் ஆர்வம் ஆத்மா -இப்படி ஒன்றுக்கு மேல் ஓன்று பூம வித்யை
நம்பெருமாளுக்கும் ஆச்சார்ய -பெருமை -ஆதி சேஷன் ஆசனம்
10-ஸச் சிஷ்யர் கூடவே
மதுர கவி நாதமுனிகள் உடன் ஆழ்வார்
இவரோ அஷ்ட திக் கஜங்கள்

—- —————

அகஸ்தியர் விசுவாமித்திரர் மந்த்ர உபதேசம் -அவர்களுக்கும் மா முனி சப்தம் அருளிச் செயல்களில் உண்டே
அதே போல் இவரும் உபதேசித்ததால் மா முனி
நாயனார் -நாயனார் ஆச்சான் பிள்ளை -இவ்வாறு வேறு படுத்தி
வடக்கு திரு வீதிப்பிள்ளை திருக்குமாரரும் பெரியவாச்சான் பிள்ளை திருக்குமாரரும்
இவருக்கு மட்டுமே அதே திரு நாமம்
ஆகவே சந்யாச ஆஸ்ரமம் ஏற்றுக் கொண்ட பொழுது திரு நாமம் மாற்ற வேண்டாம் என்று அரங்கன் நியமனம்
ஆச்சார்யர் திரு நாமம் சிஷ்யர் கொள்ள வேண்டுமே
இவரை ஆச்சார்யராக கொள்ள நினைப்பதால் -அந்த திருநாமம் வஹிக்க வேண்டுமே
மணவாள மா முனி தானே வர வர மா முனி
வரன் -மாப்பிள்ளை மணவாள பிள்ளை சுருக்கி
மணவாள பெண் மாட்டுப்பெண்
வர ஸ்ரேஷ்டம்

——————

ஸ்ரீ ஒன்றான வானமாமலை ஜீயர் வைபவம்

1. ‘பொன்னடிக்கால் ஜீயர்’ என்று பெயர் பெற்ற ஒன்றான வானமாமலை ஜீயர்
அவதார திருநக்ஷத்ரம் புரட்டாசி மாதம் புனர்பூச நக்ஷத்ர
2. ஸ்ரீமணவாளமாமுனிகள் நியமித்தருளிய அஷ்டதிக்கஜங்களில் முதன்மையானவர்.
3. பிரம்மசாரியாய் இருந்தபோதே ஸந்யாச ஆச்ரமத்தை ஏற்றார்.
4. அழகிய வரதர் என்பது இவருடைய பூர்வாச்ரம திருநாமமாகும்.
5. ஸ்ரீமணவாளமாமுனிகளின் நியமனத்தின் பேரில் வடநாட்டு யாத்திரை செய்து,
தோதாத்திரி ராமானுஜ ஸிம்மாஸனத்தை நிறுவி, மஹந்துக்களை நியமித்து
விசிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தத்தை வளர்த்தவர்.
6. வடநாட்டில் ஆச்ரயித்த மஹான்களில் ஸ்ரீஸ்வாமி ராமானந்தர் முக்கியமானவர்.
7. திருப்பதியிலிருந்து ஸ்ரீவரமங்கை நாச்சியாரை எழுந்தருளப் பண்ணி ஸ்ரீ தெய்வநாயகப் பெருமானுக்கு
விவாஹம் செய்வித்து ஜனகரைப் போலவும், பெரியாழ்வாரைப் போலவும்
எம்பெருமானுக்கு மாமனாராக இருக்கும் பெருமை பெற்றவர்.
8. திருப்பாவைக்கு ஸ்வாபதேச வ்யாக்யானம்.
நாச்சியார் திருமொழிக்கு அமைந்துள்ள கோலச் சுரிசங்கை தனியன் ஆகியவை இவர் இயற்றியவையாகும்.
9. ஸ்ரீமணவாளமாமுனிகளின் ப்ரதான சிஷ்யர்கள்.
1) ஸ்ரீவானமாமலை ராமானுஜ ஜீயர்.
2) திருவேங்கட ஜீயர்.
3) பட்டர்பிரான் ஜீயர்.
4) கந்தாடை அண்ணன்
5) எறும்பியப்பா
6) பிரதிவாதி பயங்கரம் அண்ணன்.
7) அப்புள்ளார்
8) அப்பிள்ளை ஆகியோர் ஆவர்.
10. இதை எளிதாக நினைவாற் கொள்வதற்காக,
“பாராரு மங்கை திருவேங்கடமுனி பட்டர்பிரான்
ஆராமம் சூழ் கோயில் கந்தாடையண்ணன் எறும்பியப்பா
ஏராருமப்பிள்ளை அப்பிள்ளார் வாதிபயங்கரரென்
பேரார்ந்த திக்கயஞ்சூழ் வரயோகியைச் சிந்தியுமே”.
என்ற பாடலை அனுஸந்திப்பதன் மூலம் அஷ்டதிக் கஜங்களின் திருநாமங்களை நினைவில் கொள்ளலாம்.
11. வானமாமலையிலே உயர்குடியிலே தோன்றி மிகுந்த வைராக்ய சீலராக நின்று உலக வாழ்வு என்றால்
திருமணம் செய்து கொண்டு வாழ்வதுதானா? அனைவருக்கும் உதவுமாறு உலக வாழ்வைத் துறந்து வாழமுடியாதா?
என்ற எண்ணத்துடன் வானமாமலைப் பெருமாளை ஆச்ரயித்து துறவறத்தை மேற்கொண்டவர் இவர்.
12. ஸ்ரீ மணவாளமாமுனிகளின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு அவருடைய நிழல் போல் வாழ்ந்து
மாமுனியின் அனைத்து கைங்கர்யத்திலும் பங்கு கொண்டார்.
13. இவர் சிஷ்யரான பின்பு தான் ஸ்ரீமணவாளமாமுனிக்கு சிஷ்யர்கள் பெருகினராம்.
ஏன் அரங்கநாதனே சிஷ்யனாகி விட்டானே!! அதனால் இவர் திருவடி பொன்னடி எனப்பட்டது.
14. பெருமாள் திருவடி-ஸ்ரீசடகோபம் (சடாரி)
நம்மாழ்வார் திருவடி-உடையவர்,
உடையவர் திருவடி-முதலியாண்டான்,
மணவாளமாமுனி திருவடி- பொன்னடியாம் செங்கமலம் என்று அழைக்கப்படுகின்றன.
15. ஒன்றான வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் அஷ்டதிக்கஜங்கள்.
1. அப்பாச்சியாரண்ணா.
2. போரேற்று நயினார்
3. சுத்த ஸத்வம் அண்ணா
4. ராமாநுஜம் பிள்ளை
5. சண்டமாருதம் மஹாசாரியர்
6. திருக்கோட்டியூரையன்
7. பள்ளக்கால் சித்தர்
8. ஞானக்கண் ஆத்தான் ஆகியோர்.
16.வானமாமலை மடத்து ஜீயர்கள் , வானமாமலைப் பெருமாளுக்கு பல திவ்யதேசங்களிலும் கைங்கர்யங்கள் செய்து வருகின்றனர்.
17. ஸ்ரீவானமாமலை மடத்தின் கிளைகள் (வட நாட்டில் தோத்தாத்திரி மடம் என்றழைக்கப்படும்) இந்தியாவெங்கும்
அமைந்துள்ளன. லட்சணக்கணக்கான சிஷ்யர்களைக் கொண்டது இந்த மடம்.
18. ஸ்ரீசைலேச தயாபாத்ரம் என்று தொடங்கும் தனியனை நம்பெருமாள் அருளிச் செய்திட அதுகண்டு மகிழ்ந்த
ஒன்றான வானமாமலை ஜீயர்
“இரண்டு முலைக் காம்பிலும் மாறாதே பெருகுகிற பாலை ஆராவமுதமாகக் பருகுவார் நாமே யன்றோ?” என்று அருளிச் செய்தார்.
19. பொன்னடிக்கால் ஜீயரை ஸ்ரீவானமாமலைக்கு காரிய நிமித்தமாய் அனுப்பி வைப்பதற்காகத் திருவுள்ளம் கொண்டு
நம்பெருமாள் கோயில் கொண்டிருக்கும், பூபாலராயனிலே எழுந்தருளியிருந்த அரங்க நகரப்பனை
ஸ்ரீவானமாமலை ஜீயர் திருக் கரங்களில் எழுந்தருளப் பண்ணிக் கொடுத்தார் ஸ்ரீமணவாளமாமுனிகள்.
20. ஒன்றான வானமாமலை ஜீயரும் மங்கள வாத்தியங்களுடனே அரங்க நகரப்பனை கோயிலாழ்வாரிலே எழுந்தருளப்பண்ணி ஆராதித்து வந்தார்.
21. இன்றும் ஸ்ரீவானமாமலை மடத்தில் ஆராத்யப்பெருமாளாய் அரங்கநகரப்பன் எழுந்தருளியிருப்பதை அனைவரும் ஸேவித்து மகிழலாம்.
22. ஸ்ரீமணவாளமாமுனிகள் பரமபதித்தபோது வடநாட்டு யாத்திரை நிமித்தமாக எழுந்தருளியிருந்த
ஸ்ரீவானமாமலை ஜீயர் உடனிருக்கவில்லை. இதனால் பல நாட்கள் துயருற்றிருந்தார் வானமாமலை ஜீயர்.
23. திருவரங்கத்தில் கீழைச் சித்திரை வீதியில் அமைந்துள்ளது ஸ்ரீவானமாமலை மடம். ***

————————

ஸ்ரீ நடுவில் ஆழ்வான்

யேந ப்ரோல்ல சதே நித்யம் கார்க்ய வம்ச மஹாம் புதி
மன் மஹே தம் ஸதா ஸித்தே மத்யமார்யம் கலா நிதிம் –தனியன் –

இவர் கண்ணன் -யது வம்ச புரோஹிதரான கர்கர் வம்சத்தவர்
மேல்கோட்டையில் ஸ்ரீ உடையவர் எழுந்து அருளின காலத்தில் உடனே இருந்த ஸ்வாமி
இவர் ஸ்ரீ பாஷ்யம் சாதித்த காலத்தில் ஸ்ரீ வங்கி புரத்து ஆச்சியும் ஸ்ரீ சொட்டை அம்மாளும் கேட்டு
அற்புதமாக இருந்தது என்றார்களாம்
இவர்கள் இடம் எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள் என்று அருளிச் செய்தார்
ஸ்ரீ மா முலைகளின் அஷ்ட திக் கஜங்களில் ஒருவரான பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் இவர் வம்சத்தவர்
எம்பெருமானார் உடைய சரம தசையில் இவர் ஸ்ரீ திருவரங்கம் எழுந்து அருளினார்

எம்பெருமானார் தன்னை ஆஸ்ரயித்த
ஸ்ரீ மாருதி ஆண்டான்
ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டான்
ஸ்ரீ அரண புரத்து ஆழ்வான்
ஸ்ரீ ஆ ஸூரிப் பெருமாள்
ஸ்ரீ முனிப் பெருமாள்
ஸ்ரீ அம்மங்கிப் பெருமாள் -முதலானவரை இவரை ஆஸ்ரயிக்கச் செய்தார்
இவர்கள் அனைவரும் -74- ஸிம்ஹாஸனாபதிகள்

இவர் வம்ச பரம்பரை
ஸ்ரீ நடுவில் ஆழ்வான்
ஸ்ரீ ஆழ்வான்
ஸ்ரீ வைத்த மா நிதி
ஸ்ரீ அழகிய மணவாளர் –
ஸ்ரீ வரதாச்சார்யர்
ஸ்ரீ வேங்கடத்து உறைவார்
ஸ்ரீ சடகோபாச்சார்யார்
ஸ்ரீ போர் ஏற்று நாயனார்
ஸ்ரீ கோவிந்தாச்சார்யார்
ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யார்
ஸ்ரீ ராமானுஜாச்சார்யார்
ஸ்ரீ கோவிந்த தாஸப்பர் என்னும் ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்

பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் திருப் பேரானார் பிள்ளை லோகம் ஜீயர் –

————————————————-

திரு மண் பெட்டி சொம்பு – இரண்டு திரு மேனி -வீற்று இருந்த திரு மேனிதிரு அரங்கம்
நின்று இருந்த திரு மேனி ஆழ்வார் திரு நகரி

பல்லவராய மண்டபம்-ஸ்வாமி மண வாளமா முனிகள் சந்நிதி ஸ்ரீ ரெங்கம்
திரு பரியட்டம் திரு மாலை சாத்துபடி
பொன் அடியாம் செம் கமலம்-மா முனிகள் திரு அடி பிரசாதம்
ரகஸ்யம் விளைந்த மண் இன்றும் சேவிக்கலாம் கால ஷேப கூடத்தில்
தொட்டி பிரசாதம்-தயிர் சாதம் உப்பு இன்றி

சேற்றுக்கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்ப
போற்றித் தொலும் நல்ல அந்தணர் வாழ்வு இப் பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள மா முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி யல்லவோ தமிழ் ஆரணமே

கிருபயா பரயாச ரங்கராட் மஹிமானம் மஹதாம் பிரகாசயன்
லுலுபே ஸ்வயம் ஏவ சேதஸா வரயோகி ப்ரவரச்ய சிஷ்யதாம் -ஸ்ரீ சைல அஷ்டகம்

முப்பத்தொன்றில்
சொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
தொல் கிழமை வளர் பக்க நாலா நாளில் செல்வ மிகு பெரிய திரு மண்டபத்தில்
செழும் திருவாய் மொழிப் பொருளை செப்பும் என்று
வல்லி யுறை மணவாளர் அரங்கர் நங்கண் மணவாள மா முனிக்கு வழங்கினாரே –அப்பிள்ளார் -சம்பிரதாய சந்த்ரிகை

தெருளுடைய வ்யாக்கியை ஐந்தி னோடும் கூடி -சம்ப்ரதாய சந்திரிகை -9-

ஸ்ருதி பிரக்ரியை
ஸ்ரீ பாஞ்சராத்ர பிரக்ரியை
ஸ்ரீ இராமாயண பிரக்ரியை
ஸ்ரீ மகா பாரத பிரக்ரியை
ஸ்ரீ விஷ்ணு புராண பிரக்ரியை
ஸ்ரீ மகா பாகவத பிரக்ரியை
ஸ்ரீ பாஷ்ய பிரக்ரியை
ஸ்ரீ கீதா பாஷ்ய பிரக்ரியை
ஸ்ரீ ஸ்ருத பிரகாசா பிரக்ரியை
பதார்த்தம் -வாக்யார்த்தம் -மகா வாக்யார்த்தம் -சமபிவ்யாஹார்த்தம் -த்வயனர்த்தம் –
அர்த்த ரசம் பாவ ரசம் ஒண்பொருள் உட்பொருள்

போத மணவாள மா முனி ஈடுரைப்பது கேட்டுப் பூரித்து நின்ற பெருமாள் -அரையர் கொண்டாட்டம்

ஆனி மாசம் திரு மூல நஷத்ரம் பௌர்ணமி திதி ஞாயிற்றுக் கிழமை
ஆனந்த வருடத்திலே கீழ்மை யாண்டில் அழகான வருடத்தில் மூல நாளில்
பானுவாரம் கொண்ட பகலில் செய்ய பௌர்ணமியின் நாளிட்டுப் பொருந்தி
ஆனந்தமயமான மண்டபத்தில் அழகாக மணவாளர் ஈடு சாத்த —
வைத்தே வானவரும் நீரிட்ட வழக்கே என்ன மணவாள மா முனிகள் களித்திட்டாரே –

தேசம் திகழும் திருவாய் மொழிப் பிள்ளை
மாசில் திருமலை ஆழ்வார் என்னை -நேசத்தால்
எப்படியே எண்ணி நின்பால் சேர்த்தார் எதிராசர்
அப்படியே நீ செய்து அருள் —ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் —12-

ஆசிலாத மணவாள மா முனி யண்ணல் பூமியுறு வைப்பசியில் திரு மூலம்
தேச நாளது வந்தருள் செய்த நம் திருவாய் மொழிப்பிள்ளை தான்
ஈசனாகி எழுபத்து மூவாண்டு எவ் வுயிர்களையும் வுய்வித்து வாழ்ந்தனன்
மாசி மால் பக்கத் துவாதசி மா மணி மண்டபத்து எய்தினான் வாழியே-

குருநாதன் எங்கள் மணவாள யோகி குணக் கடலைப்
பல நாளும் மண்டிப் பருகிக் கழித்து இந்தப் பாரின் உள்ளே
உலகாரியன் முனி மேகம் இந்நாள் என்னுள்ளம் குளிர
நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே –

” செய்ய தாமரைத் தாளினை வாழியே ,சேலை வாழி திருநாபி வாழியே
துய்ய மார்பும் புரிநூலும் வாழியே சுந்தரத் திரு தோளினைவாழியே
கையுமேந்திய முக்கோலும் வாழியே கருணை பொங்கிய கண்ணினை வாழியே
பொய்யில்லாத மணவாள மாமுனி புந்தி வாழி புகழ் வாழி வாழியே”

ஸ்ரீ மத் ரெங்கம் ஜெயது
பரமம் தாமம் தேஜோ நிதானம்
பூமா தஸ்மிந் பூ மா சஹாயா குஸலீ பவது
திவ்யம் தஸ்மை ஜகது விபவம் வர வர முனி தேசிகோ தேசிகா நாம் மங்களானி கல்பயன்
ரெங்க தேசிகன் பெரிய பெருமாள் லஷ்மீ நாதன் -மா முனிகளோ தேசிகோ தேசிகா நாம்-

திருமாலவன் கவி நம்மாழ்வார்
நம்மாழ்வார் கவி மதுரகவி
அமுதனார் ராமானுஜர் கவி
எறும்பி அப்பா வர வர முனி கவி -ஷட் பதமாக -தேவராஜம் –
காட்டில் இருந்தாலும் -வண்டு போல் அல்லவே மண்டூகம் தாமரை அருகில் இருந்தாலும்
வண்டே கமல மது உண்ணும்
அண்டே பழகி இருந்தாலும் தவளை இதன் ஏற்றம் அறியாதே –
திவ்ய ஞானம் -ம முனிகள் திருவடிகளைப் பற்றுவதையே காட்டி அருளினார்

மூலம் சடரிபி முக ஸூ க்தி விவேசனாயா
கூலம் காவேரி கரையில் –
மம ஆலம்பநஸ்ய -பற்றுக்கோடு
ஜன்மஸ்ய மூலம்
சதுலம்-அளவோடு கூடியது -அர்த்தம் இல்லை -துலா மாச மூலம் அர்த்தம்
அதுலஸ்ய சித்தம் -அளவில்லாதது
சதுலம்
துங்கம் ரெங்கம் ஜெயது
பூமா ரமா மணி பூஷணம் ஜெயது
வரத குரு (கோயில் அண்ணன் ) சஹா சுப அநுவர்த்த ஸ்ரீ மன் ராமானுஜ ஏவ ஜெயது

“ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வாது மில் குரவர் தாம் வாழி” .
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தன் தமிழ் நூல் வாழ
கடல் சூழ்ந்த மண் உலகம் வாழ
மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

ஆழ்வார்கள் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அருளிச் செயல் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
தாழ்வாது மில் குரவர் தாம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அடியார்கள் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அரங்க நகர் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

ஆழ்வார்கள் வாழ அருளிச் செயல் வாழ வேண்டும்
அருளிச் செயல் வாழ தாழ்வாது மில் குரவர் தாம் வாழ வேண்டும்
தாழ்வாது மில் குரவர் தாம் வாழ அடியார்கள் வாழ வேண்டும்
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ வேண்டும்
அரங்க நகர் வாழ சடகோபன் தண் தமிழ் நூல் வாழ வேண்டும்
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ வேண்டும்
கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இருக்க வேண்டுமே

ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மகாத்மனே
ஸ்ரீ ரெங்க வாசினே பூயாத் நித்ய சீர் நித்ய மங்களம் –

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜர் நியமித்த -74- ஸிம்ஹாஸனாதி பதிகள் வைபவம் –11-20-

October 21, 2020

11-ஸ்ரீ மிளகு ஆழ்வான்
வித்வத் பரிக்ஷைக்கு இவரை நீர் வைஷ்ணவர் ஆதாலால் நுழைய முடியாது என்ன-
ஸ்ரீ வைஷ்ணவர் என்று சொன்னதாலேயே கொண்டாடினவர்
வித்வான் ஆகையால் ஸ்ரீ முதலியாண்டானை வாதத்துக்கு அழைத்து தோற்று அவரை தோளில் சுமந்தவர்
ஸ்ரீ முதலியாண்டான் இவரை ஸ்ரீ உடையவர் இடம் கூட்டிச் சென்று ஆஸ்ரயிக்க வைத்தார்
திருவானைக்கா சென்று பகவத் வைபவம் பேசி திருத்திப் பணி கொள்வேன் என்று சொல்ல
அப்படி திருந்தினவர்கள் உண்டோ என்ன
நான் அனைவரையும் ஸ்ரீ மன் நாராயண சம்பந்திகளாகவே நினைக்கிறேன்
ப்ரக்ருதி சம்பந்திகள் அல்ல -அப்ருதக் ப்ரஹ்ம வஸ்துக்கள் இல்லையே என்பாராம் –

————————-

12-உக்கல் ஆழ்வான்
இவர் ஸ்ரீ ராமானுஜர் மடத்தில் பிரசாத கலம் எடுக்கும் கைங்கர்யம் பெற்றவர்

————-

13-ஸ்ரீ கணியனூர் சிறியாச்சான்
இவர் ஸ்ரீ வங்கி புரத்து நம்பி சிஷ்யர் -போசள நாட்டில் இருந்து வந்தவர்
பசும் புல்லைக் கூட மிதிக்காத சாது
இட்டீரிட்டு விளையாடும் -வார்த்தையை ரசிப்பவர் –
கன்றுகள் உடன் விளையாடும் கண்ணன் மேல் மிகவும் பரவசப் பட்டவர்
சிறந்த அனுஷ்டானம் கொண்டவர் -உடம்பில் தழும்பு வரும் படி தொழுபவர்
மேனி சிறுத்து பெரிய ஞானம் கொண்ட சிறு மா மனுஷர் என்று ஸ்ரீ கூரத்தாழ்வானால் புகழப் பெற்றவர்
சத்யம் சத்யம் புனர் சத்யம் யதிராஜோ ஜகத் குரோ
ச ஏவ சர்வ லோகா நாம் உத்தர்த்தா ந சம்சய -இவர் சொன்னதாகவும் சொல்வர்
ராமபிரான் தூது போக வில்லையே எதனால் என்று பட்டர் இடம் கேட்டவர் –
அனுப்புவார் இல்லையே -க்ஷத்ரியர் ஆகையால்
மன்மதனையும் சுப்ரமண்யனையயும் ராமனுக்கு அழகுக்கு ஒப்பாக சொல்லி ருஷி கரி பூசுகிறார்
என்று பட்டர் வாயால் கேட்கப் பெற்றவர்

—————

14-ஆட் கொண்ட வில்லி ஜீயர்

ஞான வைராக்ய சம்பந்தம் ராமானுஜ பாதாஸ்ரிதம்
சதுர்த்த ஆஸ்ரம சம்பந்தம் சம்ய மீந்த்ரம் நமாம் யஹம் –

சித்திரை திருவாதிரை இவர் திரு அவதாரம்
ஸ்ரீ எம்பெருமானார் நியமனத்தால் ஸ்ரீ முதலி ஆண்டான் திருக்குமாரர் ஸ்ரீ கந்தாடை ஆண்டான்
இவரை ஆஸ்ரயித்தார்
இவர் நஞ்சீயரை வணங்கி தனக்கு பகவத் விஷயத்தில் உண்மையான ருசி இல்லை என்றும்
பாகவதர்களைக் கண்டால் என்று மகிழ்ச்சி ஏற்படுகிறதோ அன்று தான் பகவத் ருசி ஏற்படுகிறது
என்று அர்த்தம் என்றும் தெரிவித்தார் –

———————-

15- ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்

ஸிம்ஹே ம்ருக ஸ்ரோத் பூதம் ராமானுஜ பாதாஸ்ரிதம்
த்ராவிடாம் நாய தத்வஞ்ஞம் குருகாதிபம் ஆஸ்ரயே –

த்ராவிட ஸாரஞ்ஞம் ராமானுஜ பாதாஸ்ரிதம்
ஸூ தியம் குருகேசார்யம் நமாமி சிரஸான் வஹம்

ஆவணி மிருக சீர்ஷம் திரு அவதாரம்
இவர் ஸ்ரீ பெரிய திருமலையின் திருக்குமாரர்
ஸ்ரீ ராமானுஜரின் அபிமான புத்திரர்
பிள்ளான் என்ற இவருக்கு திருக் குருகைப் பிரான் பிள்ளான் என்று ஸ்ரீ உடையவரே
திரு நாமம் சாத்தி அருளினார்
திருக்கோட்டியூர் நம்பிக்கும் திருக்குருகைப் பிரான் என்ற திரு நாமமும் உண்டே
இவர் சிறு புத்தூரில் எழுந்து அருளி சோமாசி ஆண்டான் இவர் இடம் மூன்று முறை
ஸ்ரீ பாஷ்யம் சாதித்து அருளினார்
அவர் இவர் இடம் தனக்குத் தஞ்சமாக ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் என்று
கேட்ட பொழுது இவர் நீர் பாட்டம் பிரபாகரம் மீமாம்ஸை இவை அனைத்துக்கும் கர்த்தா
பாஷ்யம் வாசித்தோம் என்று மேன்மை அடித்து இராதே எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம்
என்று அருளிச் செய்தார்
ராமானுஜர் ஆணைப்படியே ஆறாயிரப்படி சாதித்து அருளி உள்ளார்
இவர் இடம் ஸ்ரீ எங்கள் ஆழ்வான் அருளிச் செயல்கள் அர்த்தம் கேட்டு அருளினார்
இவரே ஸ்ரீ டாமானுஜருக்கு சரம கைங்கர்யம் செய்து அருளினார்
இவர் கொங்கில் நாட்டுக்கு எழுந்து அருளும் பொழுது ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசார்யன் திரு நாமத்தைச்
சொல்லாமல் எம்பெருமான் திரு நாமத்தைச் சொல்ல அங்கு இருந்து வெளி ஏறினார்
வளர்த்ததனால் பயன் பெற்றேன் என்று ஸ்ரீ உடையவர் கொண்டாடும் படி இருந்தவர்
இவருடைய இறுதிக் காலத்தில் -கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -என்று
சொல்லக் கேட்ட நஞ்சீயர் அழத் தொடங்க
அப்போது இவர் சீயரே நீர் கிடந்து அழுகிறது என் -அங்கு போய் பெறுகிற பேறு
இதிலும் தண்ணிது என்று தோற்றி இருந்ததோ என்று அருளிச் செய்தாராம்

———————————-

16- ஸ்ரீ திருக் கண்ண புரத்து எச்சான்
செறு வரை முன் ஆசு அறுத்த சிலை அன்றோ கைத்தலத்து -பாசுரம் அருளிச் செய்ய
உடனே ஒரு நொடியிலே விரோதிகளை அழித்து விடுவேன் என்று எம்பெருமானும் சொன்னாராம்

——–

17- ஸ்ரீ அம்மங்கிப் பெருமான்
இவர் ஸ்ரீ ராமானுஜருக்கு பால் அமுது காய்ச்சித் தரும் கைங்கர்யம் –

———————-

18- ஸ்ரீ மாருதிப் பெரியாண்டான்
இவர் ஸ்ரீ ராமானுஜருக்கு திருக்கை சொம்பு பிடிக்கும் கைங்கர்யம்

—————-

19- ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டான்

ஞாதும் கூர குலாதிபம் க்ருமி களாத் ப்ராப்தா பதம் ப்ரேஷிதே
ஸ்ரீ ராமா வர ஜேந கோஸல பாதாத் த்ருஷ்ட்வா ததீ யாம் ஸ்திதம்
ஸம் ப்ரதாஸ் த்வரயா புராந்தக புராத் கல்யாண வாபீ தடே
யோ அசவ் மாருதி ரித்ய ஸம் சத வயம் தஸ்மை நமஸ் குர்மஹே

இவர் மடத்துக்கு அமுது படி -கனி அமுது -பால் -நெய் முதலியவை வாங்க ஏற்பாடு செய்யும்
கைங்கர்யம் செய்து வந்தார்
இவரையும் சிறிய ஆண்டானையும் அம்மங்கி அம்மாளையும் ஸ்ரீ ரெங்கத்துக்கு அனுப்ப
இவர் அங்கே சென்று ஸ்ரீ பெரிய நம்பி திரு நாட்டுக்கு எழுந்து அருளியதையும்
ஸ்ரீ கூரத்தாழ்வான் கண் இழந்ததையும் ஸ்ரீ உடையவருக்குத் தெரிவித்தார்

———————-

20-ஸ்ரீ சோமாசி ஆண்டான்

நவ்மி லஷ்மண யோகீந்த்ர பாத சேனவக தாரகம்
ஸ்ரீ ராம க்ரது நாதார்யம் ஸ்ரீ பாஷ்ய அம்ருத சாகரம் –

சித்திரை திருவாதிரை திரு அவதாரம்
இயல் பெயர் -ராம மிஸ்ரர்
அவதார ஸ்தலம்: காராஞ்சி
ஸோம யாகம் செய்து சோமாசி ஆண்டான் பெயர்
எம்பெருமானாரே சரணம் -இவர் சொல்வது போல் யாராலும் இனிமையாக சொல்ல முடியாதே
கண்ண புரம் -திருமங்கை ஆழ்வார் –அழகிய மணவாளன் -பட்டர் –
திருத் தொலை வில்லி மங்கலம் -நம்மாழ்வார் -சொல்லுவது போலே அன்று இதுவும்
திரு நாராயண செல்வப்பிள்ளைக்கு அந்தரங்கர் -பாட்டுப்பாடி மகிழ்விப்பவர்
பாடினத்துக்கு ஆடினேன் -மோக்ஷம் ராமானுஜரை விஸ்வசித்துப் பற்றினால் உண்டாகும் என்று
அருளிச் செய்ய பற்றினார்
இவர் வம்சத்தவர்களே ஸ்ரீ ரெங்க வாக்ய பஞ்சாங்கம் மிராசு பெற்றவர்கள் –
ஸ்ரீ பாஷ்ய விவரணம்
ஸ்ரீ குரு குணா வளி-(எம்பெருமானார் பெருமை பேசுவது),
ஸ்ரீ ஷடர்த்த ஸம்க்ஷேபம் ஆகிய கிரந்தங்களை அருளிச் செய்துள்ளார் –

க்ருபாமாத்ர ப்ரசன்னாசார்யர்களின் பெருமையை விளக்கும் ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை இவரது
குரு குணாவளி ச்லோகம் ஒன்றை உதாஹரிக்கிறார்.

யஸ்ஸாபராதாந் ஸ்வபதப்ரபந்நாந் ஸ்வகீயகாருண்ய குணேந பாதி |
ஸ ஏவ முக்யோ குருரப்ரமேயஸ் ததைவ ஸத்பி: பரிகீர்த்யதேஹி ||

ஆசார்யன் தன்னுடைய பெருங்கருணையால், தன்னிடய் சரணடைந்த சிஷ்யனை ரக்ஷித்து உஜ்ஜீவிக்கிறான் –
அந்த ஆசார்யனே முக்யமானவன். இவ்விஷயம் ஆப்த தமர்களால் காட்டப்பட்டுள்ளது.

சரமோபாய நிர்ணயத்தில் ஸ்ரீ எம்பெருமானார் இவர்க்குச் செய்த பெருங்கருணை விளக்கப் படுகிறது.

எம்பெருமானாரிடம் காலக்ஷேபம் கேட்டு அவரோடிருந்த ஸ்ரீ சோமாசியாண்டான், சிறிது காலம் தம் ஊரான காராஞ்சி வந்து,
திருமணம் ஆகி, பின் மனைவி வற்புறுத்தலால் மீண்டும் ஸ்ரீ எம்பெருமானாரிடம் சென்று சேர இயலாது கிராமத்திலேயே இருக்க,
தம் வழிபாட்டுக்கு ஒரு ஸ்ரீ எம்பெருமானார் விக்ரஹம் செய்விக்க, அவ்விக்ரஹம் சிற்பி முயன்றும் சரிவராமல் போக,
சிற்பியிடம் அந்த விக்ரஹத்தை அழித்து வேறு விக்ரஹம் செய்யுமாறு கூறுகிறார்.
அன்று இரவு அவர் கனவில் ஸ்வாமி வந்து,
”ஆண்டான், நீர் எங்கிருப்பினும் நம் நினைவுண்டதாகில் கவலை வேண்டாவே.
நீர் ஏன் நம்மை இப்படித் துன்புறுத்துகிறீர்? நம்மிடம் விச்வாஸம் இல்லையெனில்
இவ்விக்ரஹத்தால் மட்டும் என்ன பயன்”என வினவ,
விழித்தெழுந்த ஆண்டான் விக்ரஹத்தைப் பாதுகாப்பாய் வைத்துவிட்டு, மனைவியைத் துறந்து, ஸ்ரீரங்கம் வந்து
ஸ்ரீ எம்பெருமானார் திருவடியில் வந்து அழுதபடி விழுந்தார்.
ஸ்ரீ எம்பெருமானார் என்ன நடந்தது என்று வினவ, ஆண்டான் நடந்ததை விவரித்தார்.
ஸ்ரீ உடையவரும் சிரித்து, “உம்முடைய மனைவியிடத்தில் உமக்கு இருந்த பற்றை விலக்கவே இதைச் செய்தோம்.
நீர் நம்மை விட்டாலும், நாம் உம்மை விடமாட்டோம். நீர் எங்கிருந்தாலும், நம்முடைய அபிமானம் உள்ளதால்
உம்முடைய பேற்றுக்கு ஒரு குறையும் இல்லை. நம்மிடம் எல்லாக் கவலைகளையும் விட்டு
இனி நீர் சுகமாய் இருக்கலாம்” என்று அருளினார் –
இவ்வாறு நம் பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்வர்.

ஸ்ரீ வார்த்தா மாலையிலும் ஸ்ரீ சோமாசியாண்டான் விஷயமான சில ஐதிஹ்யங்களுண்டு:

126 – ஸ்ரீ சோமாசியாண்டான் ப்ரபன்னருக்கு எம்பெருமானே உபாயம், பக்தியோ ப்ரபத்தியோ அன்று என்று நிலை நாட்டுகிறார்.
பகவான் நம்மைக் கைகொள்ள, நம்மைக் காத்துக்கொள்வதில் நம்முடைய முயற்சியை நாம் கைவிட வேண்டும்.
பக்தியோ ப்ரபத்தியோ உண்மையான உபாயம் அன்று. நாம் சரணடையும் எம்பெருமானே உயர்ந்த பலத்தை அளிப்பதால்,
அவனே உண்மையான உபாயம்.
279 – ஸ்ரீ சோமாசி யாண்டானை விட வயதில் குறைந்த ஆனால் ஞானம் அனுஷ்டான மிக்க அப்பிள்ளை என்ற ஸ்ரீவைஷ்ணவர்,
ஆண்டானிடம்,”ஸ்வாமி! தேவரீர் வயதிலும், ஆசாரத்திலும் சிறந்தவர்; ஸ்ரீபாஷ்யம் பகவத் விஷயாதி அதிகாரி;
இருந்தாலும், பாகவத அபசாரம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்கு உம் வேஷ்டியில் ஒரு முடிச்சு முடித்துக்கொள்ளும்!” என்று கூறினாராம்,
பாகவதாபசாரம் மிகக் கொடிது என்பதே விஷயம் – எத்தனை பெரியவராக இருந்தாலும், அபசாரங்களை விலக்க வேண்டியதின்
முக்கியத்துவத்தை அப்பிள்ளை இங்கு எடுத்துரைத்தார்.
304 – ஸ்ரீ வைஷ்ணவன் விஷய சுகத்தில் ஆசை கொள்ளக் கூடாது என்கிறார் ஆண்டான். ஏனெனில்:
ஜீவாத்மா முற்றிலும் பெருமாளை நம்பியுள்ளது என்பதாலும்
நம் லக்ஷ்யம் பெருமாளை அடைவதொன்றே, வேறல்ல என்பதாலும்
எம்பெருமானுக்கு நமக்குமுள்ள சம்பந்தமே உண்மை, வேறல்ல என்பதாலும்
எம்பெருமான், அவன் சம்பந்தம் மட்டுமே சாஸ்வதம், மற்றவை நிலையற்றவை என்பதாலும் விஷய சுகம் தள்ளுபடி.
375 – ஓர் இடையன் பால் திருடியதற்காகத் தண்டிக்கப் பட்டான் என்று கேட்ட ஆண்டான் மூர்ச்சை ஆனாராம்!
கண்ணன் எம்பெருமான் யசோதையால் தண்டிக்கப்பட்டதை நினைவு படுத்தியதால் அவ்வளவு உணர்ச்சி வசப்பட்டாராம்.

————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜர் நியமித்த -74- ஸிம்ஹாஸனாதி பதிகள் வைபவம் –1-10-

October 21, 2020

1-ஸ்ரீ ஆளவந்தார் திருக்குமாரர் ஸ்ரீ சொட்டை நம்பி –

மகரே சைகை பாத்யேச யாமுனாசார்ய நந்தனம்
கூர நாத குரோ ஸிஷ்யம் ஸேவே ஸூப குணார்ணவம் -இவர் தனியன் –

தை மாதம் பூரட்டாதி நக்ஷத்ர திரு அவதாரம்
ஸ்ரீ கூரத்தாழ்வான் சிஷ்யர்
இவர் ஒரு சமயம் திருக் கோஷ்ட்டியூர் நம்பி இடம் கடுமையாகப் பேசி நடந்து கொள்ள –
இங்கு இல்லாமல் போ என்று ஆணை இட
தலைநகர் சென்று அரசாங்க உத்யோகம் பார்த்து வந்தார்
சரம காலத்தில் ஒரு வைஷ்ணவர் இவர் இடம் தேவரீர் என்ன திரு உள்ளம் பற்றி உள்ளார் என்று வினவ

ஸ்ரீ ஆளவந்தார் சம்பந்தத்தால் பேறு சித்தம் -அங்கு ஸ்ரீ வைகுண்ட நாதன் திரு முகம் நம் பெரிய பெருமாள்
போல் குளிர்ந்து இரா விட்டால் பரம பத அண்டச் சுவரை முறித்துக் கொண்டு இங்கே வந்து விடுவேன் என்றாராம்
திருவாய் மொழி -தன் தனக்கு இன்றி நின்றானை –4-5-7-என்று அருளிச் செய்தது
ஆத்மாநாம் மானுஷம் மன்யே – என்று அருளிச் செய்த
ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனுக்கே இந்தப் பெருமை சேரும் என்றார்
இவர் திருக் குமாரர் என் ஆச்சான்
அவர் திருக் குமாரர் -பிள்ளை அப்பன் –

————

2- ஸ்ரீ பெரிய நம்பி திருக் குமாரர் -ஸ்ரீ புண்டரீகர் –
இவர் ஸ்ரீ அத்துழாயின் திருச் சகோதரர்

ஸூசவ் மாஸ் யுத்தராஷாட ஜாதம் பூர்ண குரோஸ் ஸூ தம்
யதி ராஜ அங்க்ரி ஸத் பக்தம் புண்டரீகாக்ஷம் ஆஸ்ரயே —

ஆடி உத்தராடம் திரு அவதாரம்
ஸ்ரீ உடையவர் சிஷ்யர்
இவர் சேரக் கூடாத ஸஹ வாசத்தால் போகக் கூடாத இடம் போக –
நீர் எம்மை விட்டாலும் நான் உம்மை விடேன் -என்று கண்டு பிடித்து
அருளிச் செய்து திருத்திப் பணி கொண்டார்

———————

3- ஸ்ரீ தெற்காழ்வான்
ஸ்ரீ திருக் கோட்டி நம்பி திருக் குமாரர் -ஆடித் திரு வோணம் திரு அவதாரம் –
ஸ்ரீ தேவகிப் பிராட்டியார் சகோதரர் -காஸ்யப கோத்தரம்
இவரது திருப்பேரானாரும் ஸ்ரீ தெற்காழ்வான்-ஸ்ரீ பட்டர் சிஷ்யர் -இவர் நண்பர் ஸ்ரீ கோளரி ஆழ்வான்
பாபங்கள் குளிப்பதனால் போகாது -ஸ்ரீ சிங்கப் பிரானது சக்ராயுதத்தால் மட்டுமே தொலையும் -என்று
அருளிச் செய்ததை கேட்டு
இவர் ஞானத்தையும் விசுவாசத்தையும் ஸ்ரீ பட்டர் பாராட்டிய ஐதிக்யம் உண்டே

——————

4-ஸ்ரீ ஸூ ந்தரத் தோளுடையான்
ஸ்ரீ திருமாலை ஆண்டான் திருக் குமாரர் –
இவருக்கு ஸ்ரீ பெரியாண்டான் என்னும் திரு நாமமும் உண்டு –
காஸ்யப கோத்ரம்
சித்திரை சித்திரை திரு அவதாரம்

மாலாதார குரோ புத்ரம் ஸுவ்ந்தர்ய புஜ தேசிகம்
ராமாநுஜார்ய ஸத் சிஷ்யம் வந்தே வர கருணா நிதம்

திருமாலிருஞ்சோலை அழகர் சந்நிதியில் புரோஹிதர்
இவருடைய மூதாதையரில் ஒருவர் கண்ணுக்கு இனியான் அழகரை ஒரு ஆபத்தில் ரக்ஷித்து
இதனால் இவர் வம்சத்துக்கு ஆண்டான் என்ற பட்டப் பெயர் வந்தது
இவர் வம்சத்தில் வந்த யமுனாச்சார்யர் ஸ்ரீ வாதி கேசரி ஜீயரின் சிஷ்யர் -யோக சாஸ்திரத்தில் மேதாவி –

——————

5–ஸ்ரீ பிள்ளை திருமலை நம்பி –

வ்ருஷே விசாக ஸம்பூதம் ராமானுஜ பதாஸ்ரிதம்
ஸ்ரீ சைல பூர்ண ஸத் புத்ரம் ஸ்ரீ சைலார்யம் அஹம் பஜே–தனியன்

ஸ்ரீ பெரிய திருமலை நம்பி திருக் குமாரர் -வைகாசி திரு விசாகம் திரு அவதாரம் –
இவருக்கு ஸ்ரீ ராமானுஜர் என்ற சகோதரர் உண்டு
இவருடைய சகோதரியின் கணவர் -அருளாளப் பெருமாள் எம்பெருமானாரின் திருக் குமாரர்
ஸ்ரீ அலங்கார வேங்கடவர் -இவரும் ஸிம்ஹாஸனாதி பதிகளில் ஒருவர்–35-
இவருடைய மருமகன் புகழ் பெற்ற விஞ்சிமூர் தாதாச்சார்யர்

———————

6- ஸ்ரீ நடுவில் ஆழ்வான்

யேந ப்ரோல்ல சதே நித்யம் கார்க்ய வம்ச மஹாம் புதி
மன் மஹே தம் ஸதா ஸித்தே மத்யமார்யம் கலா நிதிம் –தனியன் –

இவர் கண்ணன் -யது வம்ச புரோஹிதரான கர்கர் வம்சத்தவர்
மேல்கோட்டையில் ஸ்ரீ உடையவர் எழுந்து அருளின காலத்தில் உடனே இருந்த ஸ்வாமி
இவர் ஸ்ரீ பாஷ்யம் சாதித்த காலத்தில் ஸ்ரீ வங்கி புரத்து ஆச்சியும் ஸ்ரீ சொட்டை அம்மாளும் கேட்டு
அற்புதமாக இருந்தது என்றார்களாம்
இவர்கள் இடம் எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள் என்று அருளிச் செய்தார்
ஸ்ரீ மா முனிகளின் அஷ்ட திக் கஜங்களில் ஒருவரான பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் இவர் வம்சத்தவர்
ஸ்ரீ எம்பெருமானார் உடைய சரம தசையில் இவர் ஸ்ரீ திருவரங்கம் எழுந்து அருளினார்

ஸ்ரீ எம்பெருமானார் தன்னை ஆஸ்ரயித்த
ஸ்ரீ மாருதி ஆண்டான்
ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டான்
ஸ்ரீ அரண புரத்து ஆழ்வான்
ஸ்ரீ ஆ ஸூரிப் பெருமாள்
ஸ்ரீ முனிப் பெருமாள்
ஸ்ரீ அம்மங்கிப் பெருமாள் -முதலானவரை இவரை ஆஸ்ரயிக்கச் செய்தார்
இவர்கள் அனைவரும் -74- ஸிம்ஹாஸனாபதிகள்

இவர் வம்ச பரம்பரை
ஸ்ரீ நடுவில் ஆழ்வான்
ஸ்ரீ ஆழ்வான்
ஸ்ரீ வைத்த மா நிதி
ஸ்ரீ அழகிய மணவாளர் –
ஸ்ரீ வரதாச்சார்யர்
ஸ்ரீ வேங்கடத்து உறைவார்
ஸ்ரீ சடகோபாச்சார்யார்
ஸ்ரீ போர் ஏற்று நாயனார்
ஸ்ரீ கோவிந்தாச்சார்யார்
ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யார்
ஸ்ரீ ராமானுஜாச்சார்யார்
ஸ்ரீ கோவிந்த தாஸப்பர் என்னும் ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்

————————-

7- ஸ்ரீ கோ மடத்து ஆழ்வான்
ஸ்ரீ கோ மடத்துப் பிள்ளான் என்றும் அழைக்கப் படுவார்
இவர் சிஷ்யர் காக்கைப் பாடி ஆச்சான் பிள்ளை -மூன்று தட்வை ஸ்ரீ பாஷ்யம் கேட்டாராம்
இவரது வம்சமே ஸ்ரீ திகழக் கிடந்தான் திரு நா வீறுடைய தாஸர் அண்ணர் –
ஸ்ரீ மா முனிகளின் திருத் தகப்பனார் –
ஸ்ரீ மா முனிகளின் திருப் பேரனார் ஸ்ரீ ஜீயர் நாயனார் –
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் உடைய அஷ்ட திக் கஜங்களில் ஒருவர் –

———

8-ஸ்ரீ பிள்ளைப் பிள்ளை ஆழ்வான்
ஸ்ரீ கூரத்தாழ்வான் சிஷ்யர்
பாகவத அபசாரம் செய்யாமல் இருக்க சத்யம் – தண்ணீர் வார்த்து தானம் -செய்து கொடுத்து –
மீண்டும் அபசாரப்பட்டு மனம் வருந்தி
ஸ்ரீ கூரத்தாழ்வானை சந்திக்கக் கூசினார் -இதை அறிந்து இவர் வீடு சென்று
ஸ்ரீ கூரத்தாழ்வான் மன்னித்து இவர் மனம் தேற்றினார்
வீர சுந்தர பிரம ராயர் இவர் திரு மாளிகை இடிக்க ஸ்ரீ பட்டர் மனம் வருந்தி
திருக் கோஷ்ட்டியூர் சென்று இருந்த விருத்தாந்தம்
புள்ளும் சிலம்பின் காண் -காலையில் எம்பெருமானை அனுசந்திக்க பறவைகளின் சப்தம்
உத்தேச்யம் என்று சொல்வாராம்
திரு விருத்தம் வியாக்யானத்தில் -குழந்தை தாய் பால் பருகி முகம் பார்க்குமா போல்
அடியார்கள் எம்பெருமான் திருவடிகளை முன்னிட்டுக் கொண்டு
அவன் திரு மேனி குணங்களில் ஈடுபடுவார்கள் என்பாராம்-

———————

9- ஸ்ரீ நடாதூர் ஆழ்வான்

யஸ்மின் பதம் யதி வரஸ்ய முகாத் ப்ரணே துர் நிஷ் க்ராம தேவ நிததே நிகமாந்த பாஷ்யம்
தஸ்யைவ தம் பகவத ப்ரிய பாகி நேயம் வந்தே குரும் வரத விஷ்ணு பதாபிதாநம் —

ஸ்ரீ காஞ்சிபுரம் ஸ்ரீ வத்ஸ கோத்ரம் -ஸ்ரீ ராமானுஜர் சகோதரி திருக்குமாரர் -அந்தரங்க கைங்கர்ய பூதர்
ஸ்ரீ வராத விஷ்ணு என்ற பெயரும் உண்டு
ஸ்ரீ பாஷ்ய ஸிம்ஹாஸனாதிபதி ஸ்ரீ ராமானுஜர் வழங்கிய பட்டம்
இவர் 19-12 சிஷ்யர்களுக்கு ஸ்ரீ பாஷ்யம் வழங்கி உள்ளார்
மான யாதாத்ம்ய நிர்ணயம் கிரந்தம் அருளி உள்ளார்
திரு வெள்ளறை கோயிலில் இவர் அர்ச்சா விக்ரஹம் உள்ளது
ஸ்ரீ எங்கள் ஆழ்வான் இவர் சிஷ்யர் –
ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்ரீ வாத்ஸ்ய வரதாச்சார்யர் இவரது திருப்பேரானார்

—————

10-ஸ்ரீ எங்கள் ஆழ்வான்
ஸ்ரீ விஷ்ணு சித்த பத பங்கஜ சங்க மாய சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத பரேண
நோ சேத் மமாபி யதி சேகர பாரதீ நாம்
பாவா கதம் பவிது மர்ஹதி வாக் விதேயா

சீராரும் வெள்ளறையில் சிறந்து உதித்தோன் வாழியே
சித்திரை ரோஹிணி நாள் சிறக்க வந்தோம் வாழியே
பார் புகழும் எதிராஜர் பதம் பணிந்தோன் வாழியே
பங்கயச் செல்வியின் பதங்கள் பணியுமவன் வாழியே
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திரு அருளோன் வாழியே
தீதிலா பாடியத்தைத் தேர்ந்து உரைப்போன் வாழியே
தரணியில் விஷ்ணு மதம் தழைக்க வந்தோன் வாழியே
தண்ணளியோன் எங்கள் ஆழ்வான் தாளிணைகள் வாழியே

ஸ்ரீ விஷ்ணு பிராணத்துக்கு ஸ்ரீ விஷ்ணு சித்தீயம் வியாக்யானம் அருளியவர் –
ஸ்ரீ நஞ்சீயர் ஆயர் தீவு இவர் கனவில் நாவல் பழம் கேட்ட ஐதிக்யம்
திரு நாராயண புரத்தில் இருந்தும் திரு வரங்கம் வந்த ஸ்ரீ பாஷ்ய காரருக்கு ஸ்ரீ பாஷ்யம்
எழுத உஸாத் துணையாக இருந்தவர் –
அதனாலேயே எங்கள் ஆழ்வான் என்று பெயர் இடப் பெற்றவர்
ஸ்ரீ பாஷ்யகாரரை விட 80 வயசு சிறியவர்
ப்ரமேய ஸங்க்ரஹம்
சங்கதி மாலா
கத்ய வியாக்யானம் எழுதியவர்
இவர் திருக்குமாரத்தி செங்கமல நாச்சியார்
இவர் மாப்பிள்ளை வரதாச்சார்யர் –

————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருக்கோளூர்ப் பெண் பிள்ளை ரஹஸ்ய வார்த்தைகள் – 1-8- விவரணம் –

October 13, 2020

1. அழைத்து வந்த அக்ரூரர்

தேவகியின் எட்டாவது மகனால் தனக்கு அழிவு நேரிடும் என்பதால்,
கம்சன் கண்ணனைக் கொல்லப் பல திட்டங்களையும் தீட்டினான்.
பூதகி, சகடாசுரன் போன்ற கொடியவர்களை, கம்சன் அம் முயற்சியில் ஈடுபடுத்தித் தோல்வி கண்டான்.
வடமதுரையில் நடந்த வில்வித்தைப் போட்டிக்கும், மல்யுத்தப் போட்டிக்கும் கண்ணனை அழைத்து வந்து,
தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளத் திட்டம் தீட்டினான்.

கம்சன், குவலயாபீடம் என்ற பட்டத்து யானையைக் கொண்டும், சாணூரன், முஷ்டிகன் போன்ற மல்லர்களைக் கொண்டும்
கண்ணனைக் கொல்லவும் எண்ணினான்.
கம்சன் தன் முயற்சியைச் செயற்படுத்த, கண்ணனை வட மதுரைக்கு அழைத்துவர வேண்டுமே?
அப்பணியில் தன்னுடைய அமைச்சர் அக்ரூரரை ஈடுபடுத்தினான் கம்சன்.
கொடியவன் கம்சனின் நல்லமைச்சராக விளங்கிய அக்ரூரர், நந்தகோபரின் நெருங்கிய நண்பர்.
எனவே, அவரைக் கோகுலத்திற்கு அனுப்பி, கண்ணனை வடமதுரைக்கு அழைத்து வர வேண்டினான்.

அக்ரூரர் ஒரு கிருஷ்ண பக்தர். கண்ணனை நம்பி, தன் கடமையைச் செய்யப் புறப்பட்டார் அக்ரூரர்.
நந்தகோபர், கம்சனின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றரசர். அவரிடம் அக்ரூரர் கம்சனின் ஆணையைத் தெரிவித்தார்.
கோகுலத்தில் இருந்தோர் அனைவரும் கம்சனால் கண்ணனுக்கு ஆபத்து நேரிடும் என்று அஞ்சினர்.
கொடியவர்களை அழிக்கும் நேரத்தை எதிர்பார்த்திருந்த கண்ணன், அனைவருக்கும் ஆறுதல் கூறி,
அண்ணன் பலராமர் உடன்வர, அக்ரூரருடன் வடமதுரைக்குப் புறப்பட்டான்.

வழியில் அக்ரூரர் சந்தியாவந்தனம் செய்ய யமுனையில் இறங்கினார். கண்ணனும் பலராமரும் தேரில் அமர்ந்திருந்தனர்.
அக்ரூரர் கையில் யமுனை நீரை அள்ளினார். அந்த நீரில் கண்ணனின் திருவுருவம் தோன்றியது. மேல்நோக்கிப் பார்த்தார்.
தேரில் கண்ணன் வீற்றிருந்தான். மாயங்களில் வல்லவனான கண்ணனின் தெய்வத் தன்மையை அக்ரூரர் புரிந்து கொண்டார்.
அவனே வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கையுடன் வடமதுரையை நோக்கிச் சென்றார்.

கண்ணன் வடமதுரையில் விற்போட்டியில் வென்றான். குவலயாபீடத்தைக் கொன்றான். மல்லர்களை எதிர்த்துக் கொன்றான்.
இறுதியில் கம்சனையும் வதைத்தான். பெற்றோர் வசுதேவரும் தேவகியும் மகிழ்ந்தனர்.
நாட்டு மக்கள் கண்ணனையும், அவனை அழைத்து வந்த அக்ரூரரையும் வாழ்த்தி வணங்கினர்.
இந்த நிகழ்ச்சியைத் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை,

“அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே!” என்று குறிப்பிட்டாள்.
அக்ரூரர் கோகுலத்துக்குச் சென்று, கண்ணனை வடமதுரைக்கு அழைத்து வந்தார். அதனால் கொடியவர்கள் மாண்டனர்.
நாட்டு மக்கள் மகிழ்ந்தனர். அக்ரூரர் அவற்றுக்கு மூலகாரணமாக இருந்தார்.
‘துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம்’ என்ற பகவானின் கொள்கைக்கு உதவியாகச் செயற்பட்ட அக்ரூரரின் பெருமையை,
திருக்கோளூர்ப் பெண் பிள்ளை வியந்து போற்றினாள்.

—————–

2. மூன்றெழுத்துச் சொல்லி முத்தி பெற்றவன்

க்ஷத்திரிய பந்து என்பவன் பல கொடுஞ்செயல்களைச் செய்து வந்தான். அவனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று
திரண்டு அவனைக் காட்டிற்கு விரட்டினர். க்ஷத்திரியபந்து காட்டில் கிடைத்த காய், கனிகளைப் புசித்து வாழத் தொடங்கினான்.
அவனிடம் சத்வகுணம் வளர்ந்தது. தான் செய்த வன்செயல்களுக்கு வருந்தினான். திருந்தி வாழத் தீர்மானித்தான்.
திருமால் அவனுக்குப் பக்தியைக் கொடுத்தார். அதனால் அவன் திருமாலடியாராக உயர்ந்தான்.

அவன் கிடைத்ததை உண்டு, மரத்தடியில் தரையில் உறங்கினான். ஒருநாள் அவனுக்கு நாவல்கனிகள் கிடைத்தன.
அவற்றைத் திருமாலுக்கு நிவேதித்து உண்டான். அன்று ஒரு முனிவரின் தொடர்பு கிடைத்தது.
அவருக்கும் நாவல்கனிகளை வழங்கினான். அவர் க்ஷத்திரியபந்துவுக்கு, திருமாலின் மூன்றெழுத்து மந்திரமாகிய,
கோவிந்த மந்திரத்தை உபதேசித்தார். க்ஷத்திரிய பந்து அந்த மந்திரத்தை இடையறாது ஜபித்தான். எளிதில் வீடுபேறும் எய்தினான்.

செய்யுளைப் போல், மந்திரங்களிலும் ஒற்றெழுத்து அதாவது, க்,ச்,ந் போன்ற எழுத்துகள் கணக்கில் சேராது.
ஆகவே, ‘கோவிந்த’ என்ற மந்திரம் மூன்றெழுத்து மந்திரம் என்று கூறப்படுகிறது.
க்ஷத்திரியபந்துவைத் தமிழில், ‘கத்திரபந்து’ என்பர்.

“மூன்றெழுத்து சொன்னேனோ கத்திரபந்துவைப் போலே!”

என்று திருக்கோளூர்ப் பெண்பிள்ளை, தன் ஏக்கத்தைத் தெரிவித்தார்.
கோவிந்த மந்திரத்தின் மகிமை இவ்வரலாற்றில் உட்பொருளாக அமைந்துள்ளது.

——————-

3. கவந்தன் சொன்ன அடையாளம்

இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றான். அவளைத் தேடி இராமரும் இலக்குமணனும் காட்டில் நடந்தனர்.
அவர்கள் ஓரிடத்தில் ஒரு விசித்திரமான உருவத்தைக் கண்டனர். தலையும் கால்களும் இல்லாமல்
இரண்டு நீண்ட கைகளை மட்டும் பெற்றிருந்த கவந்தனே அவ்வுருவம்!
தன்னுடைய எல்லைக்குள் நுழையும் உயிர்களைப் பிடித்து இழுத்துத் தின்பவன் கவந்தன்.

இராமரும் இலக்குமணனும் கவந்தனின் எல்லைக்குள் வந்தனர். அவர்களையும் பிடித்துத் தின்ன முற்பட்டான் கவந்தன்.
இராம, லட்சுமணர்கள் கவந்தனின் கரங்களை வெட்டித் துண்டித்தனர். உடனே அவனுடைய சாபம் நீங்கியது.
தன் வரலாறு கூறினான். பிறகு, சுக்ரீவன் இருக்கும் இடத்தைக் கூறினான்.
அவனுடன் நட்புக் கொண்டு, சீதையைத் தேடவும் ஆலோசனை வழங்கினான். ஸ்தூலசிரஸ் என்ற முனிவரின்
சாபத்தால் கவந்தன் கோரவுருவம் பெற்றான் என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறது.
இந்திரனின் சாபத்தால் கோரவுருவம் பெற்றதாகக் கம்பராமாயணம் உரைக்கிறது.

“அடையாளம் சொன்னேனோ கவந்தனைப் போலே!”
என்று, கவந்தன் இராமருக்கு அடையாளம் சொன்ன அரிய செயலைத் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை நினைவு படுத்தினாள்.

——————–

4. மிதிலையில் தீ!

சீதையைப் பெண்ணாக அடைந்த ஜனகர் சிறந்த கல்வியாளர். தெளிவான ஞானம் பெற்றவர்.
‘எல்லாம் ஈசன் செயல்’ என்ற கொள்கையில் உறுதியாக இருந்தவர். பேரிடர் வந்தாலும் சிறிதும் கலங்காமல்
தனக்குரிய கடமைகளைச் செவ்வனே செய்தவர்.
முதிர்ந்த ஞானம் பெற்ற முனிவர்கள் பலரும் ஜனகருடன் உரையாடி மகிழ்வார்கள்.
அதனால், ஜனகரை, ‘ராஜரிஷி’ என்று போற்றினர்.

அறிவுரைகளைக் கூறுவது எளிது. அவற்றைப் பின்பற்றுவது அனைவருக்கும் எளிதன்று.
அதிலும், “எல்லாம் ஈசன் செயல்’ என்றும், “இறைவன் அனைத்தையும் பார்த்துக்கொள்வான்” என்றும் எண்ணி,
அதன்படி நடத்தல் மிகவும் கடினமான செயலாகும். ஆனால், ஜனகர் விதிவிலக்கானவர். சொன்னதைச் செய்தவர்.

யாக்ஞவல்கியர் மிகச் சிறந்த பிரம்மஞானி. அவருடைய தலைமையில், பல முனிவர்களும் சான்றோர்களும் கூடி,
பிரம்ம வித்தை குறித்து ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
மிதிலையில் நடைபெற்ற அந்த ஆய்வரங்கத்தில் ஜனகரும் பங்கு பெற்றார்.
யாக்ஞவல்கியர் அந்த ஆய்வரங்கத்தில் பங்கு பெற்றவர்களின் மனநிலையையும், பண்புகளையும் அறிந்துகொள்ள ஓர் ஏற்பாட்டைச் செய்தார்.

யாக்ஞவல்கியர் சில வீரர்களை அழைத்தார். ஆய்வரங்கம் காரசாரமாக நடைபெறும்பொழுது,
“மீதிலை தீப்பிடித்து எரிகிறது” என்று கூறச் சொன்னார். அந்த வீரர்களும் அவசரமாக ஓடிவந்து,
“ஜனகமகாராஜா! மிதிலை தீப்பற்றி எரிகிறது!” என்று கூறினர். முனிவர்களில் பலர் தங்கள் உயிருக்கு அஞ்சி ஓடினர்.
சான்றோர்கள் பலர் தங்கள் உடைமைகளைக் காப்பாற்றும் நோக்கத்துடன் ஓடினார்கள்.
ஆனால், ஜனகர் மட்டும் சற்றும் சஞ்சலமின்றி, “எல்லாம் ஈசன் செயல்!” என்று கூறியபடி அமர்ந்திருந்தார்.
யாக்ஞவல்கியர், ஜனகரே உண்மையான பிரம்மஞானி என்று பிரகடனம் செய்தார்.

உண்மையில் மிதிலையில் தீப்பிடிக்கவில்லை என்பதை அறிந்து பிறகு அனைவரும் அரங்கிற்குத் திரும்பினர்.
அவர்கள், ஜனகரால் எவ்வாறு சிறிதும் சஞ்சலம் அடையாமல் இருக்க முடிந்தது என்று வினவினார்கள்.
“உலகங்களும், அவற்றிலுள்ள பொருள்களும் கடவுளின் உடைமைகள்! அவற்றைப் பாதுகாப்பதும், காவாமல் இருப்பதும் அவன் செயல்.
நாம் எதற்காக வீணில் கவலைப்பட வேண்டும்?” என்றார் ஜனகர்.
அவருடைய விவேகத்தையும், ஞானத்தையும் எண்ணி அனைவரும் வியந்தனர்.

பெருமாள் சும்மா இருப்பாரா? இத்தகைய கர்மயோகியின் கலப்பையில் ஸ்ரீதேவியாகிய சீதையை அகப்படச் செய்தார்.
சீதையும் ஜனகரின் பெண்ணாகவே வளர்ந்து இராமனுக்கு மாலையிட்டாள்.

“கர்மத்தால் பெற்றேனோ சனகரைப் போலே!”

ஜனகர் பலனில் பற்று வைக்காமல் கடமையைச் செய்த கர்மயோகியாகத் திகழ்ந்தார்.
அதனால், விவேகியானார். பிரம்மஞானியாக உயர்ந்தார். அதன் பயன் ஸ்ரீதேவியை மகளாகப் பெற்றார்.
அது போன்ற கர்மயோகியாகத் தன்னால் வாழ முடியவில்லையே! என்று ஏங்குகிறாள் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை.
அதே நேரத்தில் ஜனகரின் சாதனையையும் பாராட்டினாள்.

———————-

5. திருமேனியில் புகுந்த திருப்பாணாழ்வார்

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் திருப்பாணாழ்வார். யாழிசைக்கும் பாணர் குலத்தில் பிறந்தவர்.
அவருக்குத் திருவரங்கனிடம் பக்தி மேலிட்டது. அக்காலத்தில், அவர் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
எனினும், அவர் காவிரிக்கரையில் நின்று, யாழிசைத்து அரங்கனைப் போற்றிப் பாடிவந்தார்.

திருவரங்கம் திருக்கோயிலில் அர்ச்சகர் பணியில் இருந்த லோகசாரங்கர் என்பவர், தினமும் காவிரிக்குச் சென்று,
திருமஞ்சனத்திற்காகத் தீர்த்தம் எடுத்து வருவார். அவர் சென்ற வழியில் நின்று, திருப்பாணாழ்வார் தன்னை
மறந்த நிலையில் அரங்கனுக்கு இசையால் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்.
லோகசாரங்கர் சிறு கல்லை எடுத்து, திருப்பாணாழ்வார் மீது வீசினார். அது அவருடைய நெற்றியில் பட்டு உதிரம் பெருக்கெடுத்தது.
அவர் அதனைப் பொருட்படுத்தவில்லை. லோகசாரங்கரின் தொண்டுக்குத் தன்னால் தடை ஏற்பட்டுவிட்டதை எண்ணி வருந்தினார்.

லோகசாரங்கர் காவிரி தீர்த்தத்துடன் திருவரங்கன் சந்நிதியில் நுழைந்தார்.
பெருமாளின் நெற்றியில் உதிரம் வழிந்ததைக் கண்டு துணுக்குற்றார்.
அதன் காரணம் புரியாது வருந்தினான். அன்றிரவு லோகசாரங்கரின் கனவில் அரங்கன் தோன்றினார்.
“பாணர் எம் அடியவர்; அவருடைய இசையும் எமக்கு மிகவும் உகப்பானது;
நீர் அவரைக் கல்லால் அடித்துக் காயப்படுத்தி, பாகவத அபச்சாரம் செய்துவிட்டீர்;
நாளை நேரில் சென்று அவரை உமது தோளில் சுமந்து எமது சந்நிதிக்கு அழைத்து வாரும்!
அதுவே தக்க பரிகாரம் ஆகும்!” என்று பெருமாள் கூறி யருளினார்.

அடுத்த நாள் காலையில் லோகசாரங்கர் காவிரிக் கரைக்குச் சென்றார். பாணரிடம் மன்னிப்புக் கேட்டார்.
பெருமாள் உரைத்தபடி அவரைத் தமது தோளில் அமரச் செய்து, திருக்கோயிலுக்கு அழைத்துவந்தார்.
பெருமாளைச் சுமக்கும் பெரியதிருவடியின் (கருடாழ்வாரின்)பேறு தமக்குக் கிடைத்ததாகக் கூறி மகிழ்ந்தார்.

பாணர் அரங்கனை அருகில் கண்டார். அழியா அழகைத் தன் கண்களால் பருகினார்.
பெருமாளின் திருவடி முதல், திருமுடி வரை, கேசாதிபாத வருணனை செய்து பாடினார்.
“அமலன் ஆதிபிரான். . . . . ” என்று தொடங்கும் பாசுரத்தைத் திருப்பாணாழ்வார் பாடியருளினார்.
பெருமாள் திருப்பாணாழ்வாரைத் தம் திருமேனியில் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
ஆண்டாளும், திருப்பாணாழ்வாரும் திருவரங்கனின் திருமேனியில் ஐக்கியமான தனிச்சிறப்பைப் பெற்றவர்கள்.
திருப்பாணாழ்வார் ஐம்பதாண்டுகள் பூவுலகில் வாழ்ந்திருந்தார்.

திருவரங்கன் திருப்பாணாழ்வாரைத் தன் பால் அழைத்துவரச் செய்து, தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
இதனால் பக்தி நெறியில் குறிப்பாக, வைணவத்தில் சாதி வேறுபாடுகளுக்கு இடமில்லை என்பதை உலகிற்கு உணர்த்தினார்.

“அவன் திருமேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே!”
என்று திருக்கோளூர்ப் பெண்பிள்ளை திருப்பாணாழ்வார் பெற்ற பேரருளைக் குறிப்பிட்டார்.

——————–

6. மாலுக்கு உகந்த மண்மலர்

திருப்பதிக்கு அருகில் குருவபுரம் என்ற சிற்றூர் உள்ளது. அங்கு நம்பி என்ற திருமாலடியார் வாழ்ந்துவந்தார்.
அவர் மண்பாண்டங்கள் செய்யும் தொழிலாளியாவார்.
குருவபுரத்தைச் சேர்ந்த நம்பி என்ற பொருளில் அவரை, ‘குருவநம்பி’ என்று அழைத்தனர்.

குருவநம்பி அன்றாடம் தன்னுடைய தொழிலைத் தொடங்கும்பொழுது, மண்ணால் ஒரு தாமரை மலரைச் செய்வார்.
அதனை வேங்கடவனுக்கு என்று ஓரிடத்தில் தனியே வைத்துவிட்டு, தனது தொழிலைத் தொடருவார்.
குருவநம்பி, அன்றாடம் மண்ணால் செய்து வைக்கும் மலரை வேங்கடவன் ஏற்றுக்கொள்வார்.
வேங்கடவன் திருவடியில் மண்மலர் அன்றாடம் தவறாமல் சென்று சேர்ந்து விடும்.

அவரைப் போலவே தொண்டைமான் அன்றாடம் பொன்மலர் ஒன்றைச் செய்து வேங்கடவனுக்குச் சமர்ப்பிப்பார்.
பெருமாள் குருவநம்பி சமர்ப்பிக்கும் மண்மலரே தமக்கு உகப்பானது என்று தொண்டைமானிடம் கூறிவிட்டார்!
ஏனெனில், தொண்டைமான் பொன்மலரைக் கர்வத்துடன் சமர்ப்பித்தார்.
அதன் பின்னர் தொண்டைமான் தனது செருக்கை மாற்றிக்கொண்டார்.

“மண்பூவை இட்டேனோ குருவ நம்பியைப் போலே!”
என்று திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ஏங்குகிறாள்.

————————

7. கண்ணனை மறைத்த ததி பாண்டன்

கோகுலத்தைச் சேர்ந்த ததிபாண்டன் என்பவன் கண்ணனின் நெருங்கிய தோழர்களில் ஒருவனாவான்.
கோகுலத்தில் கண்ணன் செய்துவந்த பிள்ளைக் குறும்புகளில் ததிபாண்டனும் தவறாது பங்கேற்பான்.
நந்தகோபரின் இல்லத்தில் தயிரும் வெண்ணெயும் நிறைந்திருந்தன.
எனினும் ஆயர்பாடியில் உள்ள அத்துணை இல்லங்களிலும் வெண்ணெய் திருடி உண்பதில் கண்ணனுக்கு அலாதியான இன்பம் இருந்தது.
கண்ணனின் கைபட்ட இடங்களிலெல்லாம் செல்வம் கொழித்தது! அதனால் கோகுலத்துப் பெண்கள் அவன் வரவை எதிர்பார்த்திருந்தனர்.
எனினும்,அதனை வெளிக்காட்டாமல், கண்ணனைக் கடிந்துகொள்வது போல் நடிப்பார்கள்.

ஒருநாள் ததிபாண்டன் வீட்டில், தயிரும் வெண்ணெயும் விற்றுத் தீர்ந்த பிறகு, அவன் பெரிய பானையைக் கவிழ்த்துவிட்டு,
கண்ணனின் வருகைக்காகக் காத்திருந்தான். குறும்புகள் செய்த கண்ணனைக் கண்டிக்கவும், தண்டிக்கவும் விரும்பிய
யசோதை அவனைத் துரத்திச் சென்றாள். அவள் பிடியில் சிக்காமல் நழுவிய கண்ணன் ததிபாண்டன் இல்லத்திற்குள் நுழைந்தான்.
தன்னைத் தேடி யசோதை வந்தால், தான் அங்கு இல்லை என்று கூறும்படி,
ததிபாண்டனிடம் வேண்டிய கண்ணன், பெரிய பானைக்குள் ஒளிந்து கொண்டான்.

யசோதை கண்ணனைத் தேடி ததிபாண்டனின் இல்லத்திற்கு வந்தாள்.
ததிபாண்டன், கண்ணன் தன்வீட்டில் இல்லை என்று பொய்யுரைத்தான். யசோதை திரும்பிச் சென்றாள்.
கண்ணன் பானையைத் திறந்து தன்னை வெளியேவிட வேண்டினான்.
ஏனெனில், பானையின் மூடியின் மீது ததிபாண்டன் அமர்ந்திருந்தான்.

கண்ணன் தன்னுடன் நெருங்கிப் பழகும் தோழன் என்றாலும், அவன் பரம்பொருளே என்று ததிபாண்டன் அறிந்திருந்தான்.
உரிய நேரத்தில் அவனிடம் மோட்சத்தைக் கேட்டுப் பெறவேண்டும் என்று காத்திருந்தான்.
பானையைத் திறந்து வெளியே விடுவதற்கு ஒரு நிபந்தனை விதித்தான் ததிபாண்டன்.
தனக்கு மோட்சம் தருவதாக உறுதியளித்தால் மட்டுமே பானையின் மூடியைத் திறக்கப் போவதாகக் கூறினான்.
உற்ற நண்பனுக்குக் கண்ணன் வீடுபேறு அருளாமல் இருப்பானா?
“ததிபாண்டா! எனக்கு மூச்சு முட்டுகிறதடா! என்னை வெளியே விடு! உனக்கு மோட்சம் உறுதி!” என்று
கண்ணன் வேடிக்கையாகக் கூறி வெளியே வந்தான்!

“இங்கில்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே!”

“கண்ணன் இங்கில்லை என்று பொய்யுரைத்து மோட்சம் எய்திய ததிபாண்டனின் சாமர்த்தியம் கூட எனக்கு இல்லையே”
என்று ஏங்குகிறாள் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை.

——————-

8. வடுக நம்பியின் குரு பக்தி

இராமானுஜரிடம் அபாரமான குருபக்தி கொண்ட சீடர்கள் சிலர் இருந்தனர்.
அவர்களில் உறங்காவில்லி தாசர், வடுகநம்பி ஆகிய இருவரும் முக்கியமானவர்கள்.
வடுகநம்பி, இராமானுஜரின் அணுக்கத் தொண்டராக இருந்து பணிவிடைகள் செய்தார்.

ஒருநாள், திருவரங்கம் வீதிகளில் பெருமாள் உலா நடைபெற்றது. பெருமாள் சர்வாலங்காரங்களுடன் எழுந்தருளி வந்தார்.
அவரைச் சேவிக்க எம்பெருமானாராகிய இராமானுஜர் தமது திருமடத்திலிருந்து வெளியே வந்தார்.
பெருமாளைக் கண்குளிரக் கண்டார். தான் கண்ட அரங்கநாதன் உலாவைத் தன் சீடர் வடுகநம்பியும்
தரிசித்துப் பயனடைய வேண்டுமென்று அவர் விரும்பினார்.

“வடுகா! சீக்கிரம் வா! பெருமாள் எழுந்தருளுகிறார்! வெளியே வந்து சேவித்துக்கொள்!” என்றார் இராமானுஜர்.
அப்போது வடுகநம்பி, தளிகை அறையில் இராமானுஜருக்காகப் பால் காய்ச்சிக் கொண்டிருந்தார்.
“சுவாமி! தாசானுதாசனை மன்னிக்கவேணும்; அடியேன் உம் பெருமானைச் சேவிக்க வந்தால்
எம்பெருமானுக்காகக் காய்ச்சிக் கொண்டிருக்கும் பால் பொங்கிவிடும்!” என்று கூறினார்.
பெருமாளைச் சேவிப்பதைவிட அவருக்கு, குருகைங்கர்யமே சாலச்சிறந்ததாகத் தோன்றியது.

“இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுகநம்பியைப் போலே!”

குருநாதருக்குப் பணிவிடைகள் செய்யும் பேறும் தமக்குக் கிடைக்கவில்லையே என்று ஏங்கினார் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை.

————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்கோளூர்ப் பெண் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருக்கோளூர்ப் பெண் பிள்ளை ரஹஸ்ய வார்த்தைகள் –

October 13, 2020

1. அழைத்து வருகிறேன் என்றோனோ அக்ரூரரைப் போலே!
2. அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போலே!
3. தேகத்தை விட்டேனோ ரிஷி பதினியைப் போலே!
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே!
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே!

6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே!
7. தாய் கோலம் செய்தேனோ அனுசூயையைப் போலே!
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே!
9. மூன்றெழுத்து சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே!
10. முதலடியை பெற்றேனோ அகலிகையைப் போலே!

11. பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே!
12. எம்பெருமான் என்றேனோ பட்டர் பிரானைப் போலே!
13. ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே!
14. அவன் சிறியனென்றேனோ அழ்வாரைப் போலே!
15. ஏதேனும் என்றேனோ குலசேகரரைப் போலே!

16. யான் சத்யம் என்றேனோ அழ்வாரைப் போலே!
17. அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே!
18. அந்தரங்கம் சொன்னேனோ திரிஜடையைப் போலே!
19. அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே!
20. அஹம் வேத்மி என்றேனோ விஸ்வாமித்திரரைப் போலே!

21. தேவுமற்றரியேனோ மதுரகவியாரைப் போலே
22. தெய்வத்தை பெற்றேனோ தேவகியைப் போலே!
23. ஆழிமறை என்றேனோ வசுதேவரைப் போலே!
24. ஆயனை(னாய்) வளர்த்தேனோ யசோதையைப் போலே!
25. அநுயாத்திரை செய்தேனோ அணிலங்கனைப் போலே!

26. அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே!
27. ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே!
28. அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே!
29. கர்மத்தால் பெற்றேனோ ஜநகரைப் போலே!
30. கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கயாரைப் போலே!

31. குடை முதலானதானேனோ ஆனந்தால்ழ்வான் போலே!
32. கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே!
33. இளைப்பு விடாய் தீர்தேனோ நம்பாடுவான் போலே!
34. இடைக்கழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே!
35. இருமன்னரைப் பெற்றேனோ வால்மீகரைப் போலே!

36. இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப் பொடியார் போலே!
37. அவனுரைக்க பெற்றேனோ திருக்கச்சியார் போலே!
38. அவன்மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே!
39. அனுப்பி வையுமேன்றேனோ வசிஷ்டரைப் போலே!
40. அடி வாங்கினேனோ கொங்கில் பிராட்டியைப் போலே!

41. மண்பூவை இட்டேனோகுரவ நம்பியைப் போலே!
42. மூலமென்றழைத்தேனோ கஜராஜனைப் போலே!
43. பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே!
44. பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே!
45. வைத்தவிடத்து இருந்தேனோ பரதரைப் போலே!

46. வழி அடிமை செய்தேனோ இலக்குவணனைப் போலே!
47. அக்கரைக்கே விட்டேனோ குகப்பெருமாளைப் போலே!
48. அரக்கனுடன் பொருதேனோ பெரியவுடயாரைப் போலே!
49. இக்கரைக்கே செற்றேனோ விபீஷணனைப் போலே!
50. இனியதென்று வைத்தேனோ சபரியைப் போலே!

51. இங்கும் உண்டென்றேனோ பிரஹலாதனைப் போலே!
52. இங்கில்லை என்றேனோ திதிபாண்டனைப் போலே!
53. காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே!
54. கண்டுவந்தேன் என்றேனோ திருவடியைப் போலே!
55. இருகையும் விட்டேனோ திரௌபதியைப் போலே!

56. இங்குபால் பொங்கும் என்றேனோ வடுகனம்பியைப் போலே!
57. இருமிடறு பிடித்தேனோ செல்வப்பிள்ளையைப் போலே!
58. நில்லென்று(னப்) பெற்றேனோ இடையற்றூர்நம்பியைப் போலே!
59. நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே!
60. அவன் போனான் என்றேனோ மாருதியாண்டான் போலே!

61. அவன் வேண்டாம் என்றேனோ அழ்வானைப் போலே!
62. அத்வைதம் வென்றேனோ எம்பெருமானாரைப் போலே!
63. அருளாழங் கண்டேனோ நல்லானைப் போலே!
64. அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே!
65. ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வவாரியாண்டானைப் போலே!

66. அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே!
67. அனுகூலம் சொன்னேனோ மால்ய்வானைப் போலே!
68. கள்வனிவன் என்றேனோ லோககுருவைப் போலே!
69. கடலோசை என்றேனோ பெரியநம்பியைப் போலே!
70. சுற்றிக்கிடந்தேனோ திருமாலையாண்டான் போலே!

71. சூலுறவு கொண்டேனோ திருக்கோட்டியூரார் போலே!
72. உயிராய பெற்றேனோ ஊமையைப் போலே!
73. உடம்பை வெறுத்தேனோ திருனறையூரார் போலே!
74. என்னைப்போல் என்றேனோ உபரிசரனைப் போலே!
75. யான் சிறியன் என்றேனோ திருமலைநம்பியைப் போலே!

76. நீரில் குதித்தேனோ கணப்புரதாளைப் போலே!
77. நீரோருகம் கொண்டேனோ காசிசிங்கனைப் போலே!
78. வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே!
79. வாயிற் கையிட்டேனோ எம்பாரைப் போலே
80. தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே!

81. துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே!

——————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்கோளூர்ப் பெண் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அருளிச் செயல்களில் வண்டு பத பிரயோகம் – /ஸ்ரீ தெய்வ வண்டோடே சேர்விக்கும் சேமமுடை நாரதர் முனி வாஹனர் தம்பிரான்மார் போல்வாரை வண்டு தும்பி என்னும்-

October 8, 2020

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி

செம்கமலப் பூவில் தேனுண்ணும் வண்டே போல்
பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்பச்
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய
அங்கைகளால் வந்து அச்சோ அச்சோ ஆரத் தழுவு வாய் வந்து அச்சோ அச்சோ -1 8-2 –

செந்தாமரைப் பூவில் மதுபானம் பண்ணுகிற வண்டுகள் போலே –
சுருண்ட திருக் குழல்கள் வந்து உன் திருபவளத்தை மொய்க்கும்படியாக –

அண்டத்த அமரர் பெருமான் அழகமர் வண்டு ஒத்து இருண்ட குழல் வாராய் அக்காக்காய்
மாயவன்தன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-7 – –
கார் வண்ணன் வண்டார் குழல் வார வாராய் என்ற ஆய்ச்சி சொல்-2-5-10-

வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரித் தென் அரங்கன்
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல்-2-9-11-

வண்டமர் பூம் குழலார் துகில் கைக் கொண்டு விண் தாய் மரத்தானால் இன்று முற்றும்
வேண்டவும் தாரானால் இன்று முற்றும் – 2-10 2-

———————

பூங்குவளைப் போதில் பொறி வந்து கண் படுப்ப -ஸ்ரீ திருப்பாவை -3-

பொறி வண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே என் கரு மாணிக்கம் வரக் கூவாய்-ஸ்ரீ நாச்சியார் திரு மொழி- —5-3-

————

மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே–ஸ்ரீ பெருமாள் திருமொழி – 2-8-

வண்டுகள் நெருங்கி இருக்கிற செவ்வித் திருத் துழாய் மாலை சேர்ந்து -வரை போலே இருக்கிற
பெரும் திரு மார்வை உடையராய் –
மை போல் நெடு வரைவாய்த் தாழும் அருவி போல் தார் கிடப்ப -என்னக் கடவது இறே-

பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேம்கடத்து
செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே –4-4-

இயலைக் கற்று சிஷா பலத்தாலே இசை வரும் தனைய வார்த்தை சொல்லும் போதும் பண்ணாய் இருக்கை
தாங்கள் பாடுகிற பாட்டுக்கு இசைந்து வண்டினங்களானவை பண் பாடுகிற ஸ்ரீ திரு மலையிலே-

தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற் குவடாம் அரும் தவத்தேன் ஆவேனே –4-6-

தென் தென் என்று ஆளத்தி வைத்து வண்டினங்கள் பண் பாடுகிற ஸ்ரீ திருமலையிலே
அப்படிப்பட்ட பொற்குவடம் என்னும் அத்தனை -வேறு உபமானம் இல்லை –
ஸ்ரீ திருவேங்கடமுடையானுக்கு அவ்வருகு இருக்கில் இறே -ஆகையால்
அரும் தவத்தேன்-என்னக் குறை இல்லை இறே –

வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ வாண் முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப
தண் தயிர் கடைந்திட்ட வண்ணம் தாமோதரா! மெய் அறிவன் நானே 6-2-

உன் குழலை விச்வசித்த வண்டுகள் என் பட்டனவோ –
உன் உடம்பில் தழும்பை மறைக்கலாமாகில் அன்றோ உன் செயல்களை மறைக்கலாவது –

வண்டினங்கள் காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே!
ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ– 8-4–

வண்டினங்கள்-காமரம் -என்கிற பண்ணிலே -இசை பாடுகிற ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே சந்நிஹிதன் ஆனவனே
ஆரேனும் பிடிக்கிலும் ஏவிலே மீட்டும் ஸ்ரீ சார்ங்கத்தை உன் நினைவிலே வரும் படி செலுத்த வல்லவனே –

———————–

வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் கலந்த சீர்ப்
புண்டரீகப் பாவை சேரு மார்ப பூமி நாதனே –ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–22-

வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே –50-

வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
இண்ட வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த-71-

————

வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே–ஸ்ரீ திரு மாலை-14-

கிண்ணகத்தில் இழிவார் திரளாக இழியுமா போலே
மது வெள்ளத்தால் வண்டுகள் திரள் திரளாக வாய்த்து இழிவது –
கழுத்தே கட்டளையாக மது பானத்தைப் பண்ணி புக்க த்ரவ்யம் இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலும்
தான் வாய் விட மாட்டாமையாலும் ஆளத்தி வையா நிற்கும் ஆயத்து –
முக்தர் திரள் திரளாக பகவத் அனுபவம் பண்ணி போக்குவீடாக சாமகானம் பண்ணிக் களிக்குமா போலே
இவ் ஊரில் திர்யக்குகளும் கழித்து வர்த்திக்கும் -என்கை –

ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம் தன்னுள்
கார்த்திரள் அனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே–32-

திருச் சோலையிலே மதுவைப் பானம் பண்ண இழிந்த வண்டுகள் ஆனவை
அபிநிவேசத்தாலே பரிச்சேதித்து இலிய அறியாதே இழிந்து கழுத்தே கட்டளையாகப் பருகி
புக்க மது இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே ஆர்த்துக் கொள்ளா நிற்கும் –
முக்தர் பகவத் அனுபவ ஜனித்த ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக சாம கானம் பண்ணுமா போலே
ஒரு தேச விசேஷத்திலே –பகவத் அனுபவத்தாலே முக்தருக்கு பிறக்கும் விகாசம் திர்யக்குகளுக்கும்
பிறக்கும் படி யாய்த்து கோயிலின் போக்யதை இருப்பது
காயந்தி கேசித் பிரணமந்தி கேசித் நர்த்யந்தி கேசித் -என்று
மது வனத்தை அழித்த முதலிகள் ஹர்ஷத்துக்கு போக்குவீடு விட்டு
பாடுவார் ஆடுவார் ஒருவரை ஒருவர் சுமப்பார் ஒருவரை ஒருவர் பொகடுவார் ஆனார்கள் இறே-
இவர் தம்முடைய சத்தை உண்டாகைக்கு கூப்பிடுகிறார் –
இவை பிரீதிக்கு போக்கு வீடாக கூப்பிடுகின்றன –
மது பானம் பண்ண இழிந்த வண்டுகள் மதுவின் மிகுதியாலே
பிரளயத்தில் அகப்பட்ட மார்கண்டேயனைப் போலேயும்
கிண்ணகத்தில் அகப்பட்ட திருச்சோலை போலேயும் அலையா நிற்கும் யாய்த்து –

—————

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —-ஸ்ரீ அமலனாதி பிரான்–6-

அழகிய சிறகை உடைத்தான வண்டுகள் வாழா நின்ற சோலை சூழ்ந்த பெரிய கோயிலிலே
கண் வளர்ந்து அருளுகிற பிதாவானவன்
வண்டுகள் அவன் பக்கல் செல்லாது –-திருச் சோலையின் போக்யதையிலே இள மணல் பாய்ந்து
கால் வாங்க மாட்டாதே நிற்கும் –
அவ் வண்டுகளைப் போலே தம்மை அனுபவித்து விடாய் கெடுத்தான் -என்கிறார் –

—————-

ஸ்ரீ பெரிய திருமொழி-

மஞ்சுலாம் சோலை வண்டு அறை மா நீர் மங்கையார் வாள் கலி கன்றி
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை-1-1-10-
வேழம் பிடியினோடு வண்டிசை சொலத் துயில் கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-3-
வண்டிசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-6-

தாது மல்கிய பிண்டி விண்டலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-9-
அறிவில்லாத வண்டுகள் -அப்புஷ்ப விகாச சோபையைப் பார்த்து நெருப்பாகவே நினைத்து பயப்படும்
நித்யமாக அச்சமும் அச்சம் கழிதலும் மாறி மாறிச் செல்லும்
அவன் சர்வ ரஷகன் என்று தெரிந்தும் பல்லாண்டு -போற்றி -என்று மங்களா சாசனம் செய்யும்
பெரியாழ்வார் போல்வார் வண்டுகள்
பயமும் பய நிவ்ருத்தியும் மாறி மாறி செல்லும் பிரபன்னர்கள் வாழும் இடம் –

வரி கொள் வண்டு அரை பைம் பொழில் மங்கையர் கலியனதொலி மாலை-1-2-10-

மது வுண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –1-3-2-
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே -என்னும்படியான எம்பெருமானை பரிபூர்ணமாக அனுபவித்து ஹர்ஷத்துக்கு போக்குவீடாக
ஏதத் சாம காயன் நாஸ்தே -ஹாவுஹாவு ஹாவு -சாமகானம் பண்ணிக் களிக்கும் முமுஷூக்கள் வாழப் பெற்ற வதரி-

நெஞ்சம் அன்பாய் ஆயிர நாமம் சொல்லி வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –1-3-3-
வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே—1-3-5-
வண்டு தண் தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை-1-3-10-

பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டறைகின்ற தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-4-
வண்தார் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாய தண்டாமரைகள் முக மலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-9-

தொல் சீர் வண்டறை தார்க் கலியன் செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே—-1-7-10-

நீல மார் வண்டுண்டு வாழும் நெய்தலந்தண் கழனி ஏல நாறும் பைம் புறவில் எவ்வுள் கிடந்தானே–2-2-5-
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை வண்டு பாடும் பைம் புறவில் மங்கையர் கோன் கலியன்-2-2-10-

வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு தீங்கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-4-

தூவிரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே பூவிரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே-3-6-1-
பிணியவிழும் நறு நீல மலர் கிழியப் பெடையொடும் அணி மலர் மேல் மது நுகரும் அறுகால சிறு வண்டே-3-6-2-
தாராய தண் துளவ வண்டுழுத வரை மார்பன் போரானைக் கொம்பு ஒசித்த புட் பாகன் என்னம்மான்-3-6-6-
வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயலாலி மைந்தா !என்
கண் துயில் நீ கொண்டாய்க்கு என் கன வளையும் கடவேனோ!–3-6-7-

மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் போது வண்டாடு செம்மல் புனலாளி புகுவர் கொலோ ?–3-7-4-

வண்டு பல இசை பாட மயில் ஆலு நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-3-
நாங்கூர் வைகுந்த விண்ணகர் மேல் வண்டறையும் பொழில் சூழ் மங்கையர் தம் தலைவன்-3-9-10-

மாதவன் தான் உறையுமிடம் வயல் நாங்கை வரி வண்டு
தேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே–4-1-1-

குல மயில் நடமாட வண்டு தான் இசை பாடிடு நாங்கூர் வண் புருடோத்தமமே–4-2-3-

வண்டொலியும் நெடும் கணார் தம்
சிற்றடிமேல் சிலம்பொலியும் மிழற்று நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-2-

மாங்கனி நுகர்ந்து மந்தி வந்து வண்டிரிய வாழைத் தீங்கனி நுகரு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே -4-5-4-

வண்டு உலவு பொழில் கொள் நாங்கை மன்னு மாயன் என்று என்று ஓதி
பண்டு போல் அன்று என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே -4-8-3-

வரி வண்டு மிண்டித் தேநிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-2-

எழிலார் மஞ்ஞை நடமாடப் பொறி கொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே -5-1-1-
அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட புன்னை பொன்னேய் தாது உதிர்க்கும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-6-
குடையா வண்டுகள் உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும் புடையார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-7-

நறும் தண் தீம் தேனுண்ட வண்டு குறிஞ்சி பாடும் கூடலூரே—5-2-2-

வண்டு பாடும் மதுவார் புனல் வந்திழி காவிரி அண்ட நாறும் பொழில் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே –5-4-3-

வரி வண்டார் கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
வந்தணனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே-5-6-7-

வண்டறை பொழில் திருப்பேர் வரி வரவு அணையில் பள்ளி
கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கை
திண் திறல் தோள் கலியன் செஞ் சொலால் மொழிந்த மாலை
கொண்டிவை பாடி யாடக் கூடுவர் நீள் விசும்பே—-5-9-10-

வண்டுகள் மதுபான மத்தமாய்க் கொண்டு த்வனியா நின்றுள்ள பொழிலை உடைத்தான திருப் பேரிலே வரிகளை உடையனான
திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாகக் கொண்டு கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனை கவி பாடிற்று –
இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக இவ் வனுபவத்துக்கு மேலே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்-

மைய வரி வண்டு மதுவுண்டு கிளையோடு மலர் கிண்டி யதன் மேல்
நைவளம் நவிற்று பொழில் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே -5-10-2-

ஸ்யாமமான நிறத்தையும் வரியையும் உடைத்தாய் இருக்கிற வண்டுகள் தன் பந்து வர்க்கத்தோடே கூட மது பானத்தைப் பண்ண
கழுத்தே கட்டளையாக மது பானம் பண்ணின படியாலே கால் வாங்கிப் போக மாட்டாமை அவ்விடத்திலே இருந்து பூக்களைக் கோதி
அதின் மேலே இருந்து நைவளம் என்கிற பண்ணைப் பாடா நின்றுள்ள பொழிலை உடைத்தான தேசம்  –

வண்டுண் மலர் இண்டை கொண்டு பண்டை நம் வினை கெட வென்று அடியேன்–6-1-1-

செவ்விப் பூ மாலையை கையிலே கொண்டு முன்பு நாம் பண்ணி வைத்த பாபங்களை அடையப் போக்க வேணும்
என்று திருவடிகளின் மேலே

பொறியார் மஞ்ஞை பூம் பொழில் தோறும் நடமாட நறு நாண் மலர் மேல் வண்டிசை பாடும் நறையூரே —6-5-4-

மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணிமாடம் சேர்மின்களே –6-6-1-
இன வண்டாலும் உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள
செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-2-

மென்மலர் மேல் கழியா வண்டு கள் உண்ணக் காமர் தென்றல் அலர் தூற்ற
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே-6-7-4-

பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய்
நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ நாராயணமே–6-10-3-

வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும்
தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ் மாலை-7-1-10-

வண்டு கிண்டும் நறைவாரும் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-4-
நற்போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-8-

வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இதுகாணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே-7-4-6-

மென் தளிர் போல் அடியினானைப் பண்ணாரா வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை யம்மான் தன்னை-7-4-8-

புலம்பு சிறை வண்டு ஒலிப்பப் பூகம் தொக்கப் பொழில்கள் தொறும் குயில் கூவ மயில்கள் ஆல
அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-4-

சிறை வண்டினம் அறையும் சிறு புலியூர்ச் சல சயனத்
துறையும் மிறையடி யல்லது ஓன்று இறையும் அறியேனே–7-9-3-

கானுலா மயிலின் கணங்கள் நின்றாடக் கண முகில் முரச நின்றதிரத்
தேனுலா வரி வண்டின் இன்னிசை முரலும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே–9-1-7-

கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்
மங்கை நல்லாய் தொழுதும் எழு போயவன் மன்னுமூர்
பொங்கு முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே —9-3-4-

நம்முடைய தலைவன் என்று சொல்லலாம் படி சம்ஸ்லேஷித்து பிரிந்தான்
மது பானம் பண்ணுகிற வண்டே சாஷியாக வந்தான்
நான் உபவாசத்தால் மெலிந்து கிடக்க அந்த வண்டு மது உண்டு களித்து-
அவன் இடமே மண்டி உள்ளதே -என்ன பாக்கியம்
ஒரு நாளும் தாமும் நோவு படாதே -பிறர் நோவும் அறியாதே உண்டு களித்து திரியும் வண்டுகள்
நமக்கு சாஷி சொல்ல மாட்டாவே
தகுந்த சாஷி இல்லாமல் கலந்த பாவியேன் -கொடியேற்கு -என்கிறார்-

இரவும் பகலும் வரி வண்டு இசை பாடக் குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே —–9-6-9-

———————-

அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா முன்
அருள் ஆழிப் புட் கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று
அருள் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
யருள் ஆழி வரி வண்டே! யாமும் என் பிழைத்தோமே–1-4-6-

ஸ்ரமஹரமாய் -வருத்தத்தை நீக்கக் கூடியதாய் அழகியதாய் இருக்கிற வண்டே.
இனி, இதற்கு ‘வடிவு சிறுத்திருக்கவும் காமபீர்யம் பெருத்திருக்கிற வண்டே’ என்றும்,
‘சுழலப் பறக்கிற வண்டே’ என்றும் பொருள் கூறலுமாம்.
இதனால், கடகருடைய -இறைவனோடு சேர்க்கின்ற ஆசாரியனுடைய ஆத்தும குணத்தைப் போன்றே,
ரூப உருவத்தின் குணமும்-உத்தேச்யம் – உட்கோள் என்கை,

குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை
அடைந்த தென் குருகூர்ச் சடகோபன்-1-7-11-

தேனைக் குடிப்பதற்கு இழிந்த வண்டுகளானவை பெருங்கடலிலே இழிந்தாரைப் போன்று உள்ளே உள்ளே
இடங்கொண்டு குடித்தலை அன்றி,மது வற்றிக் கைவாங்க ஒண்ணாதபடி இருக்கிற திருத்துழாய் மாலையாலே
அலங்கரிக்கப் பட்ட திருமுடியை யுடையவனை.
அம் மதுவிலே படிந்த வண்டுகள் விடமாட்டாதவாறு போன்று,
பகவத் விஷயத்தை விடமாட்டாத ஆழ்வார் ஆயிற்று அருளிச் செய்தார்.

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்-2-8-11-

வெள்ளத்திலே அலைவாரைப் போலே தேன் வெள்ளத்திலே வண்டுகள் அலையா நின்றுள்ள சோலையை உடைய
திரு வழுதி வள நாட்டை உடைய ஆழ்வார் அருளிச் செய்தது –

வண்டார் தண் ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரி கின்றனவே–5-2-2-

வண்டுகள் மாறாதபடியான செவ்வித் துழாய் மாலையை யுடையனாய்,
ஸ்ரீயபதி- திருமகள் கேள்வன் ஆகையால் வந்த ஏற்றத்தையுடையனாய் இருக்கிறவனுடைய-
ஸ்ரீய:பதித்வத்திலும் ஒப்பனையிலும் தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்.

பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங் கானல் திரு வல்ல வாழ்-5-9-6-

இவற்றின் குரல் த்வனியில் -ஓசையில் வெள்ளோசையாய்க் கழியுண்பது இல்லை,
பரப்பு அடங்கலும் பாட்டாக இருக்கும். என்றது,
இயல் கற்று இசையோடு கூட்டிற்று அன்று அவற்றுக்கு, பேச்சே தொடங்கி இசை என்றபடி.
தேன் போலே இனிய பாட்டு’ என்னுமது போய், வடிவே தேனாய்
அதற்கு மேலே பாட்டும் ஆனால் மிகவும் இனியதாயிருக்குமன்றோ.
அன்றிக்கே, பாண் குரல் – இசை ரூபமான மிடற்றோசை என்னுதல்.

குழல் என யாழும் என்னக் குளிர் சோலையுள் தேனருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்ல வாழ்-5-9-9-

குழல் என்னவுமாய் யாழ் என்னவுமாய் இருக்கை.
நாட்டில் இனியவற்றை எல்லாம் சேரக் கேட்டால் போலே இருக்கை.
“விஷ்ணுநா ஸத்ருஸோ வீர்யே ஸோமவத் ப்ரியதர்ஸந:”- பால. 1-18-
வீரியத்தில் விஷ்ணுவை ஒத்தவர், பிரியமாகப் பார்க்கப்படுவதில் சந்திரனை ஒத்தவர்” என்னுமாறு -.
ஒன்றற்குப் பல பொருள்களை உவமை -போலே
ஸ்ரமஹரமான சோலையிலே குளிருக்குப் பரிஹாரமாகத் தேனைக் குடித்து. அருந்தி – குடித்து.
முக்தமாய் -இளமையோடு கூடியதாய்க் தர்ச நீயமான -காண்பதற்கு இனியதாயிருக்கின்ற வண்டுகள்,
பிரீதிக்குப் போக்கு விட்டுப் பாடா நின்றுள்ள திருவல்லவாழ்.
செருக்கருமாய் ஸுகுமாரருமாயிருப்பார், ‘மரம்’ என்று சந்தனத்தைக் கழித்துப்
புழுகு நெய்யை ஏறிட்டுக்கொண்டு திரியுமாறு போலே,
இவையும் இயலை விட்டு இசையையே பாடுகின்றன வாதலின் ‘இசை பாடும்’ என்கிறது.

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வட பாலைத் திருவண் வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே–6-1-10-

சில வண்டுகளைக் குறித்து, அவர் இத் தலையில் சத்தையும் இல்லை என்று இருப்பர்,
அவளும் உளள் என்று சொல்லுங்கோள் என்று சொல்லுகிறாள்” என்று ஆளவந்தார் அருளிச்செய்வர்.
இத் தலை இல்லையாகில் அத்தலை உண்டாகக் கூடாது;
பெண் பிறந்தார் காரியம் எல்லாம் செய்தோம்’ என்று கிருதக்கிருத்யரா யிருக்குமவர்க்கு,
ரக்ஷ்ய வர்க்கத்திலே நானும் ஒருத்தி உண்டு என்று சொல்லுங்கோள்” என்று எம்பெருமானார் அருளிச் செய்வர்.

இவற்றை வேறுகொண்டு இரக்க வேண்டுவான் என்? என்னில்,
அவற்றினும் இவை பதஸ்தம் -பல கால்களை யுடையன ஆகையாலே.
இன்னம் ஒன்று, சபைக்கு அஞ்ச வேண்டாதே வளையத்தே இருந்து வார்த்தை சொல்லவும் வல்லனவே யன்றோ
அன்றிக்கே. “தேன் உண்ணும் வண்டே போல் பங்கிகள்”-பெரியாழ்வார் திருமொழி,-1. 8 : 2. ‘- என்றும்
அவனுக்குத் தலையான திருஷ்டாந்தமாகவும் சொல்லுவது இவற்றை அன்றோ.
செந்தாமரைப் பூவில் மதுபானம் பண்ணுகிற வண்டுகள் போலே –
சுருண்ட திருக் குழல்கள் வந்து உன் திருபவளத்தை மொய்க்கும்படியாக –தலையான திருஷ்டாந்தம்-

ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதிரோ?
கூடிய வண்டினங்காள்! குரு நாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மா நெடுந் தேர்ப் படை நீறு எழச் செற்ற பிரான்
சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே–6-8-3-

பேரளவுடையார் படும் ஈடுபாட்டினைக் கண்டு, தன் குழலின் வீறு தான் அறிந்திருக்குமே.
சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டு ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ
என்பான் என்? காரியம் செய்து சமைந்தால் கைக் கூலி கொடுப்பாரைப் போலே? என்னில்,
இவற்றுக்கு இவள் குழலிலே விஷயம் உண்டாக வேணுமே.
இப்போது மது மாறிச் சருகாய் அன்றோ கிடக்கிறது;
இவை மீண்டால் அன்றோ இத் தலையில் செவ்வி பிறப்பது.
அவனுக்குத் தூது போய் வந்தாரிற் காட்டிலும் இவளுக்குத் தூது போனார்க்கு உண்டான தன்னேற்றம் இருக்கிறபடி.
அங்கு மஹா ராஜருடைய மது வனம் அன்றோ அழிந்தது;
இங்கு அவன் காவற் காட்டினை உங்களுக்குத் தருகிறேன் என்கிறாள்.
அளகாடவி அன்றோ.-தலையான பரிசில் அன்றோ இது தான்.

என்றும் இவள் குழலில் மது பானம் செய்வன வண்டுகளே அல்லவோ.
தூவி அம் புள்ளுடைத் தெய்வ வண்டாதல்-திருவாய்.-9. 9 : 4.–
இவை யாதல். அவனேயோ சாம்யா பத்தி – ஒத்த தரத்தைத் தர வல்லான்,
நானும் உங்களுக்கு அவனோடு ஒத்த தன்மையைத் தருகிறேன் என்கிறாள். என்றது,
ஸோஸ்நுதே – அந்த முக்தன் பரமாத்வோடு அநுபவிக்கிறான்” என்கிறபடியே,
உங்களையும் அவனையும் ஒரு கலத்திலே ஊட்டுகிறேன் என்கிறாள் என்றபடி. தலையான ஊண் அன்றோ.
உங்கள் வரவாலே தளிர்த்திருக்கிற என்னுடைய குழலில் ஒளியை யுடைத்தாய்
ஸ்லாக்யமான மலரில் மதுவைப் பானம் செய்யீரோ?
ஊதிரோ-மதுவின் நிறைவாலே, கிண்ணகத்தில் இழிவாரைப் போலே தனித்து இழிய மாட்டாமல்
நின்று பறக்கிற படியைத் தெரிவிப்பாள் ‘ஊதிரோ’ என்கிறாள்.
உங்கள் காரியமும் பர ரக்ஷணமுமானால் -பிறரைப் பாதுகாப்பதுமானால் ஆறி இருக்கிறது என்? என்கை,
கூடிய வண்டினங்காள் –மஹா ராஜரைப் போலே படை திரட்ட வேண்டா அன்றோ உங்களுக்கு
என்னுடைய ரக்ஷணத்திலே ஒருப்பட்டு முன்பே திரண்டிருக்கப் பெற்றது அன்றோ.
இளைய பெருமாள் கிஷ்கிந்தா நகரத்தின் கோட்டை த்வாரத்திலே -வாசலிலே சென்று
குண கீர்த்தனம் செய்த பின்பன்றோ படை திரட்டிற்று.

பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன் குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்–9-5-9-

மதுபான மத்தமாய் -தேனைக் குடித்து மயங்கிப் பாடுகின்ற சில வண்டுகளையும் தும்பிகளையும் குறித்து
உங்கள் த்வனி -இசை எனக்கு துஸ்ஸஹமாய் -பொறுக்க ஒண்ணாததாய் இருந்தது
நீங்கள் பாடாதே கொள்ளுங்கோள் –என்கிறாள்-

தூதுரைத்தல் செப்புமின்கள் தூ மொழி வாய் வண்டினங்காள்
போதிரைத்து மது நுகரும் பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்பகத்தே வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையுமே–9-7-6-

இனிய பேச்சை உடைய வண்டுகாள் –
அவன் அநாதரிக்கிலும் -விரும்பானாகிலும் உங்கள் பேச்சு இனிமையாலே
வர வேண்டும்படி அன்றோ பேச்சு இருப்பது –
பூக்களிலே இரைத்துக் கொண்டு-மது பானம் -தேனைக் குடிக்கும் பொழில்
அன்றிக்கே
மலர்கிற காலத்தில் சென்று தேனைக் குடிக்கும் சோலை என்னுதல்
உங்களுக்கு மீட்சியில் ஆகவும் வேண்டா
ததிமுகன் முதலானோர் காவலும் இல்லை
முன்பு தேனைக் குடிக்கிறவர் களோடு தேனைக் குடிக்க அமையும் –
நீங்கள் சொல்லும் அத்தனையே வேண்டுவது
உங்கள் வார்த்தை கேட்டிருக்கவும் கேட்டுக் கொண்டாடுகைக்கும் புருஷகாரம் உண்டு -என்கை-

எனக்கு ஓன்று பணியீர்காள் இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும் வண்டினங்காள் தும்பிகாள்
கனக் கொள் திண் மதிள் புடை சூழ் திரு மூழிக் களத்து உறையும்
புனக் கொள் காயா மேனிப் பூந்துழாய் முடியார்க்கே–9-7-8-

சில வண்டுகளையும் தும்பிகளையும் குறித்து அங்கு உள்ளவனுக்கு என்ன தீங்கு வருமோ -என்று
அஞ்ச வேண்டாதபடி ஸூ ரஷிதமான தேசத்திலே – காவல் உள்ள இடத்தில் அவன் இருக்கப் பெற்றோம்
இனி எனது ஆர்த்தியை -துன்பத்தை அறிவியுங்கோள் -என்கிறாள்

தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-

பெரிய திருவடியை உடைய தெய்வம் ஆகிற வண்டாலே ஆத்த -எடுக்கப் பட்ட சாரத்தை உடையதான
என்னுடைய பெண்மை யாகிற பூ -பெண்மையாம் பூ -பாட பேதமும் உண்டே –
ஏவம் -இந்த விதமாய் நலிய -நலிவு படா நின்றது –

வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து அண்ட வாணன் அமரர் பெருமானையே-9-10-3-

வண்டுகள் மதுபான மத்தமாய் -தேனை உண்டு அதனால் மயக்கம் கொண்டு
பாடா நின்றுள்ள சோலை சூழ்ந்த தேசம்
ஏதத் சாமகாயான் ஆஸ்தே-தைத்ரியம் -10–அந்த சாம வேதத்தைப் பாடிக் கொண்டு இருக்கிறார்கள் -என்றபடியே
வண்டு பாடும் சோலை -என்கிறார் –
இதனால் நிரதிசய போக்யமான -எல்லை இல்லாத இனிமை உடைய தேசம் -என்பதனை தெரிவித்த படி –

——————–

மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும்
தண்டுழாய்க் கண்ணனையே காண்க நங்கண் —ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி——8–

பிரளயம் வரும் என்று ஏற்கவே கோலி திரு வயிற்றிலே வைத்து-வெளி நாடு காண உமிழ்ந்து –
நிரதிசய போக்ய பூதனான ஸூலபனான கிருஷ்ணனையே விரும்பிக் காண வேணும் கண்

காண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு
பூண்டார கலத்தான் பொன் மேனி -பாண் கண்
தொழில் பாடி வண்டறையும் தொங்கலான செம்பொற்
கழல் பாடி யாம் தொழுதும் கை ——35–

காண வேணும் காண வேணும் என்று விரும்பி நின்றன கண்கள் ஷாம காலத்தில்
பசல்கள் சோறுசோறு -என்னுமா போலே –
வண்டுகள் மீட்கில் இறே என் இந்த்ரியங்களை மீட்கலாவது –
நமக்கு இவற்றின் கீழ் குடி இருப்பு அரிதான பின்பு இனி நாமும் அவனுடைய
ஸ்லாக்யமான திருவடிகளை வாயாரப் பாடி கையாலே தொழுவோம் –

பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு
கரிய முகிலிடை மின் போல் -திரியுங்கால்
பாண் ஒடுங்க வண்டறையும் பங்கயமே மற்றவன் தன்
நீண் நெடுங்கண் காட்டும் நிறம் ———-55-

———————————

அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே –ஸ்ரீ –திரு விருத்தம் -30-

ஜந் த்ரவ்யா கரண பண்டித -சிறிய திரு வடி -ஸ்வத சர்வஞ்ஞன் –ஸ்ரீ கிருஷ்ண பகவான்-
தூது போக கடவத்தை உங்களை இரவா நின்றேன்-
என் தசை–உத்தியோகமும் மிகை என்று இருக்கும் அளவுக்கு அவ் அருகும் சொன்ன படி
அஞ்சலிக்கு அவ் அருகு இல்லை-என்று இருக்க இரப்பவும் செய்தேன்-

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும் இப்பாயிருள் போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம் காள வண்ண
வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய -மண்ணேர் அன்ன ஒண்ணுதலே -49 –

வண்டுந்துழாய் -ஒப்பனையால் வந்த அழகை சொல்லுகிறது –

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–55-

இத்தால் பர வியூக விபவாதிகள் எங்கும் புக்கு பகவத் குணங்களை அனுபவித்து
திரிகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அக்குணங்களில் அவஹாகித்து இருக்கிற இவர் படி
நீங்கள் அனுபவிக்கிற அவ்விஷயத்தில் தானுண்டோ -என்று தம்மை அனுபவிக்கிற
ஸ்ரீ வைஷ்ணவர்கள் வார்த்தையை -அவர்கள் பாசுரத்தாலே தாம் அனுபவிக்கிறார் –
அம்பஸ்யபாரே-புவனஸ்ய மத்யே -நாகச்யப்ருஷ்டே -என்னக் கடவது இறே –
அம்பஸ்ய -வியூகம்
புவனஸ்ய -விபவம் அர்ச்சை
நாகசா -பரம்
இவையே இங்கு மூன்று வித மலர்கள் என்று உரைக்கப்பட்டன –

——————-

ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை-152-

வண்டு தும்பிகள் என்கிறது யாரை என்று அருளிச் செய்கிறார் மேல்–

என் பெறுதி என்ன பிரமியாது உள்ளத்துளூறிய மது வ்ரதமாய் தூமது வாய்கள் கொண்டு
குழல் வாய் வகுளத்தின் சாரம் க்ரஹித்துத் தே தென வென்று ஆளம் வைத்துச் சிறு கால் எல்லியம் போது
குறிஞ்சி மருள் காமரம் கந்தாரம் தலைக் கொள்ளப் பாடித் துன்னிட்டு நெருக்க நீக்கென்று கடந்து புகும்
தகைவறப் புக்கு வண்டு ஒத்து இருண்ட குழலிலே சங்கை அற மருவி அருளாத யாம் என்று ஓடி வந்து
வாசமே ஊதி வண்டே கரியான தெய்வ வண்டோடே சேர்விக்கும்
சேமமுடை நாரதர் முனி வாஹனர் தம்பிரான்மார் போல்வாரை வண்டு தும்பி என்னும்-

அதாவது
1-என் பெறுதி என்ன பிரமியாது
கோல் தும்பீ ஏரார் மலர் எல்லாமூதி நீ என் பெறுதி–பெரிய திருமொழி -8-4-5 – என்று
நிவர்திப்பிக்க வேண்டும் படி- அப்ராக்ருத விஷயங்களை போக்கியம் என்று பிரமியாதே-
(இது ஒன்றே வண்டுகளும் தும்பிகளுக்கும் இவருக்கும் உண்டான வாசி -மேல் எல்லாம் ஒற்றுமைகள் –
( ஒன்பதோடு ஓன்று -முதல் மட்டும் -பிரமிக்காமல் -வண்டு பிரமரதம் என்பர் – -எதிர்மறை -மற்றவை எல்லாம் சாம்யம் ))

2-உள்ளத்துளூறிய மது வ்ரதமாய் –
களங்கனி வண்ணா கண்ணனே என் தன் கார் முகிலே என நினைந்திட்டு
உளம் கனிந்து இருக்கும் அடியவர் உள்ளத்துளூறிய தேனை -பெரிய திருமொழி-4-3-9-என்று
தன்னுடைய சௌந்தர்ய சீலாதிகளை நினைத்து ஹிருதயம் பக்குவமாய் இருக்கும்
சேஷ பூதருடைய ஹிருதயத்தில் ஊறிய தேனை -என்கிற பகவத் விஷயம் ஆகிற மதுவை விரும்பி –
த்வாம் ருதஸ்யந்தினி பாத பங்கஜே நிவேசிதாத்மா கதமன்யதிச்சதி –
ஸ்திதேரேவிந்தே மகரந்த நிர்ப்பரே மது வ்ரதோ நேஷூரகம் ஹி வீஷதே – ஸ்தோத்ர ரத்னம் -27-என்கிறபடி-
மற்று ஒன்றை புரிந்து பாராதே இத்தை புஜிக்கையே வ்ரதமாக உடையவராய் —

3-தூ மது வாய்கள் கொண்டு —
சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டு-திருவாய்-6-8-3- -என்று
பகவத் போக்யதா அனுபவத்தாலே பரிசுத்தமான இனியதான வாயைக் கொண்டு ..

4-குழல் வாய் வகுளத்தின் சாரம் க்ரஹித்து –
என் குழல் மேல் ஒளி மா மலரூதீரோ -திருவாய் -6-8-3–என்கிறபடியே
நாள் கமழ் மகிழ் மாலை மார்பர் –4-10-11–ஆகையாலே வகுள தாரரான ஆழ்வார் உடைய
வைகுந்த மன்னாள் குழல் வாய் விரை போல் விண்டுகள் வாரும் மலருளவோ நும் வியலிடத்தே–திருவிருத்தம் –55 -என்று
பரத்வாதிகள் போக்யதையும் பரிச்சின்னம் என்னும் படியான திருக் குழலிலே வைத்த –
ஒளி மா மலரான-வகுளத்தின் சாரத்தை கிரஹித்து அவ்வழியாலே
இத் தலையில் போக்யத்தை அனுபவித்து –

5-தே தெனவென்று ஆளம் வைத்து –
வரி வண்டு தே தென வென்று இசை பாடும் –பெரிய திருமொழி -4-1-1-
யாழின் இசை வண்டு இனங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே–பெரியாழ்வார் -4-8-6–என்கிற படியே
இப்படி பகவத் பாகவத போக்யதைகளை அனுபவித்து -செருக்குக்குப் போக்கு வீடாக ஆளத்தி வைத்து-
(இத்தால் யாழில் இசை வேதத்து இயல்களை வாயாரப் பாடிக் கொண்டு இருக்கும்படியைச் சொன்னவாறு )

6-சிறு கால் எல்லியம் போது குறிஞ்சி மருள் காமரம் கந்தாரம் தலைக் கொள்ள பாடித் —
(இத்தால் -எம்மானைச் சொல்லிப் பாடி -பண்கள் தலைக் கொள்ளப் பாடி –
வேத முதல்வனைப் பாடி -கொண்டு இருத்தலைச் சொன்னவாறு )
அறுகால் வரி வண்டுகள் ஆயிரம் நாமம் சொல்லி சிறு காலை பாடும்
தென் திருமாலிருஞ்சோலையே –பெரியாழ்வார் -4-2-8–என்றும் –
எல்லியம் போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி — பெரியாழ்வார்-4-8-8–என்றும்
(மல்லிகை வெண் சங்கூதும் பெரியாழ்வார்-4-8-8–மல்லிகை பூ மலர -காற்று வீச சங்கு போல இசை வருமே )
வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் -பெரிய திருமொழி -2-1-2-என்றும் –
வண்டினங்கள் காமரங்கள் இசை பாடும் -பெருமாள் -8-4-என்றும் –
கந்தார மன் தேனிசை பாட-பெரிய திருமொழி -3-8-1 -என்றும் –
என்கிறபடியே காலோசிதமான பண்களை –
பண்கள் தலைக் கொள்ளப் பாடி-திருவாய் -3-5 2–என்கிற படி தலைமை பெறும் படி பாடி —

7-துன்னிட்டு நெருக்க நீக்கு என்று கடந்து புகும் தகைவற புக்கு –
(இத்தால் வண்டுகள் மிக நெருக்கமான இடங்களிலும் தடை இன்றி செல்லும் -தன் இனமான பொருள்களோடு நட்பு கொள்ளும் –
இறைவன் சந்நிதியில் அச்சம் சிறிதும் இன்றி நிற்கும் –
அவ்வாறே இவர்களும் நேச நிலைக்கதம் நீக்கு என்று சொல்லி -பொன்னியியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு-
அங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களோடே சேர்ந்து -அஞ்ச வேண்டிய அபராதம் சிறிதும் இல்லாமையால் சங்கை இல்லாமல்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி நிற்பார்கள் -என்கிறது )
பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும் துன்னிட்டு புகலரிய –பெருமாள் -4-3-என்றும் –
சுந்தரர் நெருக்க –திருப்பள்ளி எழுச்சி –7-என்றும் –
சொல்லுகிறபடியே திரு வாசலிலே சேவாபரர்கள் நிறைந்து -தலை நுழைக்க ஒண்ணாத படி நெருக்க –
நேச நிலை கதவம் நீக்கு–திருப்பாவை –16 -என்று
திரு வாசல் காப்பானை திருக் கதவு திறக்க வேணும் என்று அபேஷித்து ,
பொன்னியியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு -பெரிய திருமடல் –73-என்கிறபடி-
திருஷ்ட்டி சித்த அபஹாரம் பண்ணும் திரு வாசல் அழகிலே துவக்கு ஒண்ணாதே –
அத்தை கடந்து புக வேண்டுகையாகிற தகைவு அற –
பாடுவாரான அந்தரங்கதை யாலும் ஏகாக்ர சித்ததையாலும் போய்ப் புக்கு

8-வண்டு ஒத்த இருண்ட குழலில் சங்கை அற மருவி –
வண்டு ஒத்த இருண்ட குழல்-பெரியாழ்வார் -2-5-7-என்கிறபடியே -ஸ்வசமான விஷயம் உள்ள இடத்தில் சேர்ந்து –
நீ மருவி அஞ்சாதே நின்று–திரு நெடும் தாண்டகம் -26- என்கிறபடி நிச்சங்கமாக அவனுக்கு சமீப வர்திகளாய்–

9-அருளாத யாம் என்று ஓடி வந்து வாசமே ஊதி- –
அருளாத நீ அருளி–திருவாய் -1-4-6 -என்றும் ,
யாமிதுவோ தக்கவாறு–திருவாய் –6-8-4-என்றும் ,
இத்தலையில் ஆர்த்தியை அவனுக்கு அறிவித்து –
ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ-திருவாய் -6-8-3 -என்று
அவனோடு கூட வர இராதே முந்துறவே ஓடி வர வேண்டும் என்று அபேஷித்து விட்ட படியே –
இத்தலையில் ஆர்த்திக்கு ஈடாக அவன் வரவை அறிவிக்க விரைந்து வந்து —
தங்கள் வரவாலே -இத்தலையில் வந்த செவ்வியை அனுபவித்து –
மிக்க சீர் தொண்டர் இட்ட பூம் துளவ வாசமே வண்டு கொண்டு வந்து ஊதுமாகில் –பெரிய திருமொழி -11-1-9-
என்கிற படியே-அத் தலையில் தாங்கள் அனுபவித்த போக்யதையை –தங்கள்
வாக்காலே -வரவாலே இத் தலைக்கு பிரகாசிப்பியா நின்று கொண்டு ஆஸ்வசிப்பித்து-

10-வண்டே கரியான தெய்வ வண்டோடே சேர்விக்கும்-இத்யாதி –
கொங்குண் வண்டே கரியாக வந்தான் -பெரிய திருமொழி -9-3-4-என்கிறபடி
சாகாக்ர சார க்ராஹியாய்-ஷட்பத நிஷ்டராய்–பஷ த்வய யோகத்தாலே –
அப்ரதிஹத கதியானவரை முன்னிட்டு அங்கீகரிக்குமவனாய் —
தூவியம் புள்ளுடை தெய்வ வண்டு -திருவாய் -9-9-4-என்று
வேதாந்த்ய வேத்யன் என்று தோற்றும் படி –
கருட வாஹனாய் – சார க்ராஹியாய் இருக்கிற சர்வேஸ்வரனுடன் சேர்விக்கும் —

சேமமுடை நாரதன் -பெரியாழ்வார் -4-9-5-என்று
ப்ரஹ்ம பாவனை ஏக நிஷ்டதையாய் ஆகிற ரஷையை உடையவனாய் –
பகவத் குண அனுபவ ஹர்ஷ பிரகர்ஷத்தாலே நிருத்த கீத பரனாய் இருக்கும் ஸ்ரீ நாரத ப்ரஹ்ம ரிஷி —
(மஹதி நாரதருடைய வீணைக்கு பெயர்-கர்ம -உபய -பாவனை இல்லாமல் ப்ரஹ்ம பாவனையில் மட்டும் இருக்கும் க்ஷேமம் )
லோக சாரங்க மகா முநிகளால் வஹிக்க படுகையாலே முனிவாஹனர் என்று நிரூபிதரான திருப் பாண் ஆழ்வார் ,
திரு வாய் மொழி இசையே தங்களுக்கு போக்யமாய் இருக்கிற தம்பிரான்மார் போல்வாரை –
( அரையர் ஸ்வாமிகளை -பாவின் இன்னிசை பாடித்திரிவனே என்று உள்ள வர்கள் என்றவாறு )
இக் குண சாம்யத்தாலே – வண்டு என்றும் தும்பி என்றும் சொல்லும் என்கை–

தும்பி ஆவது ப்ருங்க ஜாதியிலே – ஓர் அவாந்தர பேதம் —
ஆகையால் இறே -வண்டினங்காள் தும்பிகாள் -என்று ஏக ஸ்தலத்திலே இரண்டையும்
பிரிய அருளிச் செய்தது-

———————————————————-———————————————————-———————————————————-———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ வைபவ ஸ்லோகங்கள் –ஸ்ரீ ஸ்வாமி வடிவு அழகு பாசுரங்கள் –

October 6, 2020

ஸ்ரீமாதாவ்ங்க்ரி ஜலஜத்வய நித்யசேவா
ப்ரேமா விலாசய பராங்குச பாதபக்தம்
காமாதி தோஷகரம் ஆத்ம பதாஸ்ருதாநாம்
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா.– (யதிராஜவிம்சதி – ஸ்ரீமணவாள மாமுனிகள்)

உகாரத்தால் அகாரத்தை மகாரம் அடைந்து உஜ்ஜீவிக்க
மாசுறு சோதியான நம்மை மாசறு சோதி ஆக்கி அருளும் ஆச்சார்யர்கள் அன்றோ
த்வம் மே -அஹம் மே இத்யாதி –
உடையவர் -ஸ்வாமி -ஒருவரே
இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே இருக்க
பச்சாது தாபம் -பின் வருந்துவது இன்றிக்கே இருக்க
உபகார ஆச்சார்யர் அன்றோ நம்மை உத்தாரக ஆச்சார்யரான ஸ்வாமி திருவடிகளில் சேர்த்து அருளுகிறார் –
மண் மிசை யோனிகளைப்பித்தோரும் மாதவனே வந்து கண்ணுற நிற்கிலும் கணகிலா–
அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே நாரணனுக்கு ஆள் ஆனோமே

ஆத்மாவுக்கு அழியாத பெயர் அடியான் ஒன்றே
குரு ரேவ பர ப்ரஹ்ம பர தனம் –
பர ப்ரஹ்மம் காட்டித்தரும் ஆச்சார்யர்
ஆச்சார்யரைப் பெற்றுத் தரும் பர ப்ரஹ்மம்
ஸத்ருச ப்ரத்யுபகாரம் செய்ய விபூதி சதுஷ்டயமும் ஈஸ்வர த்வயமும் வேண்டும்
உத்சவம் உபயம்-சொல்வதே நாமும் சேர்ந்து கொள்வதே -அதுவும் அவனது இன்னருளே –
ஆச்சார்யர் அபிமானமே உத்தாரகம் –
ஆண்டாள்- இதனாலே அவனையும் ஆண்டாள் -நம்மையும் ஆண்டாள் -பக்தியையும் ஆண்டாள் –
அரி உருவாய் -கொண்டாடும் பெரியாழ்வாரை அண்டி அவனையும் ஆண்டாளே
பிதாமஹம் நாத முனையே விலோஸ்ய -ஆனியில் பிறந்த தாத்தா பேரைச் சொல்லி
அவனையே ஆட வைத்து அனுக்ரஹம் பெற்று ப்ரகர்ஷ யிஷ்யாமி -ஆளவந்தார் –

தஸ்மை ராமானுஜார்யாய நம பரம யோகிநே
யஸ் ஸ்ருதி ஸ்ம்ருதி ஸுத்ராநாம் அந்தர் ஜ்வர அஸீஸமது

இதிகாச புராணாப்யாம் வேதம் செளபப்ரம்மயேது
விபேத்யல்பத் ஸ்ருதாத் வேதஹா மாமயம் ப்ரதரிஷ்யதி

பாராசர்ய வசஸ்ஸுதாம் உபநிஷத் துக்தாத்பி மத்யோத்ருதாம்
சம்சாராக்னி விதீபனப் வியபகதப் ப்ராணாத்ம சஞ்சீவனி
பூர்வாச்சார்ய ஸுரக்ஸிதாம் பகுமதி வ்யாகாத தூரஸ்திதாம்
ஆநீதாந்து நிஜாச்ஷரைஹி சுமனசஹா பெளமாஃப் பிமவ்துன்வகம்

வியாசம் வஷிஷ்ட நப்தாரம் சக்தே பெளத்ரம கல்மஸம்
பராசராத்மஜம் வந்தே சுகதாந்த தபோநிதிம்

சம்யங் ஞாய கலாபேந மகதா பாரதேநச
உபப்ரம்மித வேதாய நமோ வியாசாய விஷ்ணவே

எதிகாஸ்தீத தன்யத்ர எந்நேகாஸ்தீ நதக்கொஸிது தர்மேச அர்த்தேச காமேச மோக்ஷ்சேச பரத ரிஷப,
எதுவும் இதற்குள் உண்டு என்பதைத்தான் வைசம்பாயனர், ஜனமேஜயன் என்னும் ராஜாவுக்குச் சொல்லுகிறார்

மதி மந்தானம் ஆவித்ய, ஏனாசெள ஸ்ருதி சாகராது ஜகத்ஹிதாய ஜனிதஹா மகாபாரத சந்த்ரமாஹா –

புண்யாம்போஜ விகாஸாய பாபத்தாம் தக்ஸயாயச ஸ்ரீமான் ஆவிர பூத்பூமவ் ராமானுஜ திவாகரஹ”,

அமுனா தபநாதிசாயு பூம்னா எதிராஜேன நிபக்த நாயகஸ்ரீஹி
மஹதி குருபந்திஹாரயட்டிஹி விபுதானாம் ஹ்ருதயங்கமா விபாதி–எதிராஜ சப்ததி-

ஸ்வஸ்திஹஸ்திகிரி மஸ்தசேகரஹா சந்ததோது மயிசந்ததம் பரிஹி
நிஸ்சவாப்யதிக மப்யதத்தயந்தேவம் ஒளபநிஷதீ சரஸ்வதீ
ஸ்ரீநிதிம் நிதிமபார மர்த்தினாம் அர்த்திதார்த்த பரிதான தீக்ஷ்சிதம்
சர்வபூத ஸுர்தம் தயாநிதிம் தேவராஜ மதிராஜ மாஸ்ரயே

ஆமுதல்வன் இவனென்னு தத்தேத்தி
என்நா முதல் வந்து புகுந்த நல் ஈங்கவி
தூமுதல் பத்தர்க்கு தான் தன்னைச் சொன்ன
என்வாய் முதல் அப்பனை என் சொல்லி மறப்பனோ

கஸ்ஸ்ரீஸ்ரீயஹா பரமசத்த சாமாஸ்ரயஹ்கஹா
கஹா புண்டரீக நயனஹா கஃப்புண்டரீக நயனஹா கஃப் புருஷோத்தமஹா

545 சூத்திரம். ப்ரம்ம சூத்திரத்திலே, 545 சூத்திரங்கள், 156 அதிகரணங்கள், 16 பாதங்கள், 4 அத்தியாயங்கள்.
முதல் அத்தியாயம் (சமந்வயா அத்தியாயம்), இரண்டாவது அத்தியாயம் (அவிரோதா அத்தியாயம்)
மூணாவது அத்தியாயம் (ஸாதனா அத்தியாயம்) நாலாவது அத்தியாயம் (பலா அத்தியாயம்)

செளத்ரீ சங்க்யா சுபாஷீஹி, இந்த சூத்திர கணக்கு வேணும்ன்னா, செளத்ரீ சங்க்யா – சூத்திர சங்க்கை.
சுபாஷீஹின்னா, சு பா ஷா, சு-ங்க்கறது அஞ்சு, य र ल व श, श அஞ்சாவது எழுத்தால்லையோ?
प फ ब भ , நாலோல்லையோ, மறுபடியும் ச, அஞ்சாவது எழுத்து. 545.
அதனால செளத்ரீ சங்க்யா சுபாஷீஹின்னு சொல்லுவர்கள்.

ஸ்ரீரங்கம், கரிசைலம் அஞ்சனகிரிம் தார்க்‌ஷாத்திரிசிம்மாசலவ்
ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீமத்த்வாரவதி ப்ரயாக் மதுரா அயோத்தியா கயா புஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே இராமானுஜோயம் முநிஹி

ஸத்யம் ஸத்யம் புனஸ்ஸத்யம் உத்ருச்சபுதமுச்சதே எதிராஜோ ஜகத்குருஹு
நாத்ர சம்சயஹா சயேவ சமுத்ரத்தா நாத்ர சம்சயஹா

விஷ்ணுலோக மணி மண்டப மார்க்கதாயி’

இதம் அகிலதமக் கரிசனம் தரிசனம் நமஹ. த்ராதம் சம்யது யதீந்த்ரைஹி.

எம்பெருமானார் தரிசனம் என்னே இதற்கு
நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார்
அம்புவியோர் இந்த தரினத்தை
எம்பெருமானார் வளர்த்த அந்தச்செயல் அறிகைக்கா.

பாதுகே எதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா
தஸ்யதாஸரதே பாதவ் சிரஸா தாரயாம்யகம்

உன்ன ஒழிய ஒரு தெய்வம் மத்தறியா வடுக நம்பி தன்னிலையை எனக்கருள் எதிராசா

பொலிக பொலிக பொலிக! *
போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த *
நமனுக்கிங்கு யாதொன்றும் இல்லை *
கலியும் கெடும் கண்டு கொள்மின் *
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல் *
மலியப் புகுந்திசைபாடி *
ஆடி உழிதரக் கண்டோம்
கண்டோம் கண்டோம் கண்டோம் * கண்ணுக்கினியன கண்டோம் *
தொண்டீர்! எல்லீரும் வாரீர் * தொழுது தொழுது நின்றார்த்தும்

பண் தரு மாறன் பசுந்தமிழ் * ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் * கலைப் பெருமான்
ஒலிமிக்க பாடலை உண்டு * தன் உள்ளம் தடித்து * அதனால்
வலி மிக்க சீயம் இராமானுசன்

பற்பமெனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராட பதிந்த மருங்கழகும்
முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
எப்போதும் கற்பகமே விழி கருணை பொருந்திடு கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் கணணச் சிகைமுடியும்
எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே

ஸ்ரீபாஷ்யத்தை வாசித்தும் வாசிப்பித்தும் போருகை.
அருளிச்செயலை ஓதியும் ஓதுவித்தும் போருகை.
உகந்தருளின நிலங்களிலே அமுதுபடி சாத்துப்படி முதலானவற்றையுண்டாக்கி நடத்திக்கொண்டு போருகை.
த்வயத்தை அர்தாநுஸந்தாநம் பண்ணிப் போருகை.
என்னுடையவன் என்று அபிமாநிப்பான் யாவனொரு பரமபாகவதன் அவனுடைய அபிமானத்திலே ஒதுங்கிப் போருகை.
திருநாராயணபுரத்திலே ஒரு குடில் கட்டிக்கொண்டு இருக்கை.

திசைகளில் ஒளிரும் கமலச் செங்கதிர் திரளும் அழகாய் திருவடி அழகும்…
இசைவுடன் அதிலே இணைந்து அமைந்து இனிமை கூட்டிடும் இடது கழலும்…
இடது துடை மேல் வளரும் விரியும் ஈடிணையில்லா வலமேற்கழலும்…
திடமென அழகை எல்லாம் சேர்த்த திவ்யமான கணுக்கால் எழிலும்…
அதிசய ஒளிமுகம் சுருளாய் இறங்கும் அழகைப் போல் இரு முழந்தாள்களும்…
உதிரென அமையும் திருத்தொடைகளும், பொன்னரைஞாணைப் பூண்ட அழகும்…
அந்தி நிறத்தில் அமையும் ஆடையும், அஞ்சலி செய்யும் தடக்கைகளும்…
உந்தி மலரும் உயரிய கரமும், உடன் இணைந்திடும் கணுக்கைகளும்…
தங்க வளையலைத் தாங்கிய அழகும், தானாய் மடிந்த முழங்கைகளும்,
அங்கம் விரிந்து நீண்டு அமைந்த, அழகிய புஜங்கள் ஆடும் அழகும்,
பளபளவென்று பரவிய வகையில் பாரை மயக்கும் அழகிய மார்பும்,
தளமாய்ப் பிரிந்த முந்நூல் அழகும், வளர்ந்து உயர்ந்த திண்தோள்களும்…
வலம்புரிச் சங்கின் சுழிபோல் அமையும் வளப்பமான கழுத்தின் அழகும்…
உலகை மயக்கும் மந்திர முகமும், உரையை வழங்கும் திருப்பவளமும்…
மந்தகாஸமும், ஸ்படிகமயத்தில் மண்டலம் போற்றிடும் கபோலங்களும்…
செங்கநகத்தில் செழித்து வளர்ந்து செவிமேல் அமைந்த கர்ணபாசமும்…
குடிமூக்கழகும், கோலத்தாமரை குடிகொண்டாடும் இரு நயனங்களும்…
வடிவில் வில்லாய் வண்ணம் காட்டும் வளைந்த வட்டத் திருப்புருவமும்…
சந்திரகிரணம் ஒன்று கலந்து, சரியும் அழகாய்த் தாமரை நாமமும்…
இந்திரை மலராய்த் திருவடிபோலே, இலங்கி வளரும் ஸ்ரீசூர்ணமும்…

உயர்ந்து மலர்ந்த திருமுடி அழகும், உறைந்து தழைந்த திருக்கேசமும்,
நயந்து சுற்றிய நல்ல குழலிணை நன்றாய்ச் சுற்றிய சிகாபந்தமும்,
பின்னெடுத்ததோர் பிடரியின் அழகும், பிரிந்து கூடிய முக்கோல் அழகும்,
கண்ணொடு பிரியும் அரவப்படமாய் கண்களை மயக்கும் அழகிய முதுகும்,
காணக் காணத் திகட்டிடாது கவினாய்த் தோன்றும் இராமாநுஜநே!

தேனாம் உன்னடிச் சரணம் அடைந்தோம் தினமும் எம்மைக் காத்தருள் என்றே.. காத்தருள் என்றே!

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கண்ணனும் ஸ்ரீ ஆழ்வார்களும் ஸ்ரீ ஆச்சார்யர்களும் —

September 9, 2020

கடவுளே -அருளிச் செயலில் சப்த பிரயோகம் கண்ணனையே –

பட வரவுச்சி தன்னில் பாய்ந்து பன்னடங்கள் செய்து
மடவரல் மங்கை தன்னை மார்வகத்து இருத்தினானே
தடவரை தங்கு மாடத் தகு புகழ் நாங்கை மேய
கடவுளே காவளந் தண் பாடியாய் களை கண் நீயே -ஸ்ரீ பெரிய திருமொழி–4-6-5-

கடவுளே காவளந் தண் பாடியாய் களை கண் நீயே
கடவுள் என்று பர தேவதை என்ற படியாய்
சர்வாதிகனான நீயே
சந்நிஹிதனாய் இருக்க நான்
வேறு ஒருவரைத் தேடித் போகவோ-
கண்ணன் அனுபவத்திலேயே மண்டி இருப்பார்களே

——————

ஸ்ரீ பொய்கை ஆழ்வாரும் ஸ்ரீ கண்ணனும் -ஸ்ரீ கிடாம்பி வெங்கடேசன் ஸ்வாமிகள் –

கிடந்தது பூமி எடுத்தது குன்றம் கை உலகம் தாயவனை அல்லது தாம் தொழா
காணாக் கண் கேளாச் செவி -சேர்ந்தே அனுபவம்
வாய் அவனை அல்லது வாழ்த்தாது –பேய் முலை நஞ்சூணாக உண்டான்
பூதனா நிரசனத்துடன் அனுபவம் தொடங்கும்
புள்ளின் வாய் கீண்டானும் -மருதிடை போய் மண் அளந்த மால்
கடை வெண்ணெய் உண்டாய் –
அறியும் உலகு எல்லாம் -உவணம் ஊர்ந்தாய்-பரத்வ ஸூசகம் –
தாம்பின் தழும்பு ஸுவ்லப்யம் பறை சாற்றும் –
கண்டு பற்றுகைக்கு ஸுவ்லப்யம்-
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு -களவாடிய செயலைக் காட்டி
குரல் ஓவாது ஏங்கி அயலார் காண இருந்த ஓங்காத வண்ணா உரை
அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள் வாய் குரவை குட முலை மல் குன்றம்
விட்டு இறுத்து மேய்த்து ஓசித்து கீண்டு கோத்து ஆடி உண்டு அட்டு எடுத்த
செங்கண் அவன் -நிரை நிரை அணி –10 சேஷ்டிதங்களை ஒரே பாசுரத்தில் அனுபவம்
தோள் கார்யங்கள் -62–
மருதினூடு போய் -பூம் குறுந்தம் சாய்த்து -மண மருவ மால் விடை ஏழு செற்று –
ஏழு உலகம் தாயினவும் எண் திசையும் போயினவும் சூழ் அரவ பொங்கு அணையான் தோள்
87-இனி யார் புகுவார் எழு நரக வாசல்
கலியும் கெடும் கண்டு கொண்மின் போல்
ஓர் அடியும் -சாடு உதைத்த –கேசவனை -ஈர் அடியும் காணலாம் –
கேசவனை மாயவனையே மனத்து வை -100 நிகமனம்

——————

*ஸ்ரீ பூதத்தாழ்வாரும் கண்ணனும்* *ஸ்ரீ உ வே திருக்கோவலூர் ஸுதர்ஸன் ஸ்வாமி* ஸ்ரீ க்ருஷ்ணானுபவத் தொடர்

ஸ்ரீ கிருஷ்ணன் திரு அவதாரம் -ஆவணி ரோஹிணி -கிமு 3102-125 ஆண்டுகள்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திரு அவதாரம்
ஸூகாதிகளும் முதல் ஆழ்வாரும் பரத்வத்தில் ஈடுபட்டு இருப்பார்கள் –
காலத்தால் முன்னால் -பக்தியில் முதிர்ந்த முதல் ஆழ்வார்கள்

அத்புதம் பாலகம் -பரத்வம் தோன்றவே அவதாரம்
அம்புஜ அக்ஷணம்
சதுர்புஜம் சங்க கதாயுதம் –
செய்ய சுடர் ஆழி
அன்பே விஷயமான திருவந்தாதி
வேணு கோபாலன் ஷேத்ராதிபதி
ஆயனர் -திருவிக்ரமன் -பரத்வம் பொலிய இருக்கும் திவ்ய தேசம்
முத்துக்கள் சேரும் கடல் மல்லை
கடல் மல்லைக் கிடக்கும் கரும்பு –
கிருபா சாகரம் கடல் மல்லை பூதத்தாழ்வார்-இதுவே நிரூபகம்
கடல் மல்லை தல சாயனத்து உறைவார் -அவனுக்கும் இதுவே நிரூபகம்
கதையின் பெரும் பொருளும் கண்ணா -நின் பேரே-இதயம்-64-
இதிஹாச புராணங்கள் கண்ணனையே சொல்லும்
திரு நாம சங்கீர்த்தனமே சார தமம் –
வேதைஸ் சேர்வை அஹம் ஏவ போல் –
இருந்தவையே ஏத்தில் – கதையின் திருமொழியாய் நின்ற திரு மாலே
உன்னைப் பரு மொழியால் காணப் பணி -ஸதா பஸ்யந்தி பண்ணப் பண்ணி அருள்

———————

பேயாழ்வார் அனுபவித்த கண்ணன் -ஸ்ரீ உ வே M A மதுஸுதனன் ஸ்வாமி-

ஆயனைக் கண்டமை காட்டும் தமிழ் தலைவன்
பரத்வத்தில் முதல் ஆழ்வார்கள் ஊன்றி இருப்பார்கள்
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய கேள்வன் –
குறும்பு யோசித்த கோபாலகனே பாற் கடலிலும் வேங்கடத்திலும் பனி விசும்பிலும் மனத்துள்ளும்
வெற்பு என்று வேங்கடம் பாடும் -முதல் நாயகி தாயார் பாசுரம் -மல் போன்ற நீண்ட தோள் மால் கிடந்த
கண்ணனே -மேகங்களைக் காணிலும்
அடைந்தது அரவணை மேல் -ஐவர்க்காய் –பேய்ச்சி பால் உண்ட பிரான் யசோதை மத்துக்கு அஞ்சி
அஞ்சாதவன் பீஷ்மாதிகளுக்கு-ப்ரஹ்மாஸ்திரத்துக்கும் அஞ்சாதவன் மத்துக்கு பீதனானான்
அவர்களும் வில்லை போய்ட்டு மத்தைக் கையில் கொண்டு இருந்தால் வென்று இருப்பார்கள்
நர நாராயணனாய் சிங்காமை விரித்தவன் ஆய்ச்சியால் வெண்ணெய் உண்டு ஆப்புண்டவன்
அம்மனே -இது இவருடைய எத்திறம் இருந்தபடி
மண்ணுண்டும் -பேய்ச்சி முலை உண்டும் ஆற்றாதாய் வெண்ணெய் உண்டு -வயிற்றினொடு ஆற்றா மகன்
திருமழிசை மூன்றும் அருளிச் செய்தது போல் இவரும்
வயிற்றை அறுத்து வண்ணானுக்கு இட மாட்டானோ -வண்ணான் சாலில் எவ்வளவு போட்டாலும் ரொம்பாதே
மகன் ஒருவனுக்கு அல்லாத மா மேனி மாயன் -மகனாம் –
லோக பிதா பித்ரனைத் தேர்ந்து எடுத்து பிதாவாகக் கொண்டான் வேதம் காடகம்
மகன் தன் காதல் மகனை -அநிருத்தனுக்காக வாணனை கர வனம் அழித்து
திரு வேங்கடத்திலும் ஊன்றி-
அவனே திருவல்லிக் கேணியான்
கண்ணனாகவே திருவேங்கடத்தானை அனுபவிப்பார் பெரும்பாலும்
அவர் திருவவதாரம் -வேங்கட கிருஷ்ணனே அவர் மனத்தில் இருந்து அனுபவிப்பிக்கிறான்

உம்பர் கோமானே உறங்காது -கண்ணனை எழுப்ப -ஆண்டாளும்
பேயாழ்வார் சந்நிதியில் கண்ணன் எழுந்து அருளி சேர்ந்தே சேவை திருவல்லிக் கேணியில்

————-

திருமழிசைப்பிரானும் கண்ணனும் ஸ்ரீகோயில் தேவராஜன் ஸ்வாமி

கோயில் ப்ராதான்யம் போல் கண்ணன் ப்ராதான்யம்
பன்னிரு ஆழ்வார்களும் மங்களா சாசனம் கண்ணனுக்கும் கோயிலுக்கும்
ஒரு பிறவியில் இரு பிறவி இருவரும்
யது குலம் கோப குலம்
ரிஷி குமாரராக பிறந்து பிரம்பு அறுத்தவனால் வளர்க்கப்பட்டு
அக்ர பூஜை சாம்யம்
கூனி -கூன் போக்கி பால் கொடுத்த தம்பதிக்கு இளமை
மன்னு திரு மழிசை -மன்னு வடமதுரை
கால நேமி
காசி ராஜன்
பவ்ண்ட்ர வாசுதேவன் இவர் மட்டுமே அனுபவம்
ஆதி ஆதி ஆதியான -முக்காரணங்களும் –ஆயனாய மாயம் என்ன மாயமே–35- –
சிசுபாலாதிகளும் அகப்பட உஜ்ஜீவிக்கும் படி –
ஆயர் மாதர் பிள்ளையாய் எம்பிரானுமாய வண்ணம் என் கொலோ –36-
சர்வ நியாமகன் நியமிக்கப் படுவதே
குரூரமான முலைகள் குரூரமான பால் –
விஷப்பாலை குடித்ததுக்கு கோபிகள் வாய் அமுதம் பரிகாரம்
ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் மாயன் -கபிஸ்தலம்

——————

ஸ்ரீ குலசேகராழ்வாரும் கண்ணனும் ஸ்ரீ உ வே பிள்ளைலோகம் ராமானுஜன் ஸ்வாமி

வால்மிகி பகவானும் குலசேகரப் பெருமாளும் ஸ்ரீ ராமாவதாரத்தில் பூர்ண அனுபவம்
முகுந்தா மாலை தனி பிரபந்தம்
ஸ்ரீ ரெங்க யாத்ரா தினே தினே –
தோய்த்த தயிர் -அரங்கன் -அடியார் -பெரிய பெருமாளும் கண்ணனே –
ஊடல்-வாஸூ தேவா உன் வரவு பார்த்தேன்
ஒன்பது பெண்களை வஞ்சித்தது
தேவகி புலம்பிய புலம்பல்
தொல்லை இன்பத்து இறுதி காணும்படி அழுகையும் அஞ்சின நோக்கும் -தொழுத கையும் –
எழில் கொள் தாம்பு -அசேதனமும் எழில் இவன் சம்பந்தத்தால்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே

——————

பெரியாழ்வாரின் க்ருஷ்ணானுபவம் – விதுஷி ஸ்ரீமதி ஹரிப்ரியா அம்மங்கார்

வண்ண மாடங்கள் கண்ணன் கேசவன் நம்பி
கண்ணன் கேசவன் கிலேச நாசகன்
ஏகோ ப்ரஹ்ம ஆனந்தம் -நம்பி -ஸமஸ்த கல்யாண குண சாகரம்
பண்புடைப் பாலகன் -அஹம் வோ பாந்தவ ஜாத –
மாயன் -ஆத்ம மாயயா-பாதக் கமலங்கள் காணீரே -மாம் ஏகம் சாதனம் வ்ரஜ –
திண் கழல் அன்றோ
பரம் பரனே ஆடுக செங்கீரை -அங்கே அவாக்ய அநாதர-
மன்னு குறுங்குடி திரு வெள்ளறை கண்ணபுரம் அவனே இங்கும்
அந்தமில் பேர் இன்பத்தை சிற்றின்பமாக்கி அன்றோ ஆய்ப்பாடியில்
தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்
அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான்
அரு மருந்து பிறவிக்கும் போகம் குறையாமைக்கும்
பந்தம் அறுப்பதற்கும் போகம் வளர்க்கைக்கும்
பத்து மஞ்சள் -பூசி பாவை மாருடன் பாடியில்
பாதம் நண்ணாத நாள் பட்டினி நாள்
உபவாச திவசம் –
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் –
மாயன் மணி வண்ணன் மேல் இவள் மால் உருகின்றாளே

——————

ஸ்வாமி நம்மாழ்வாரும் கண்ணனும்–ஸ்ரீ உ வே பள்ளிகரணை திருமாலை நடாதூர் சேஷாத்ரி ஸ்வாமி–

கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -பராசராதிகள் போல் கிருஷ்ணாவதாரத்தில் ஊன்றி
திருவரங்கம் த்ரித விபூதி போல் தத்வ த்ரயங்களை விட இது தனி தத்வம்
ஆராமங்களில் ராஜ நீதி –
ஸ்ரவணம் –தாஸ்யம் -நவவித பக்தி
குண க்ருத தாஸ்யம்
ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் இதிலே ஆழ்வார் ஊன்றி
சேமம் குருகையோ –நாரணமோ -அத்விதீயம்
பூ பாரம் -மண்ணில் பாரம் நீக்க -தர்ம ஸம்ஸ்தானம் -ஸ்வரூபத்தை தர்சிப்பித்து ஸ்தாபிக்கவே
சாஷாத் தர்மம் இவனே காட்டவே அவதார நோக்கம்
எத்திறம் மூ ஆறு மாதம் மோகித்து –
பத்துடை அடியவர்க்கு எளியவன் -பிறந்தவாறும் வளர்ந்தவாறும் -கண்கள் சிவந்து –அடியேன் உள்ளான்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்
திருவாய்மொழி என்னும் தேன்
ஒரு நீராக ஆக்கினான்
கரண கலக்கத்தை -ஒருபடிப்படுத்த கண்ணன்
சீலமில்லா சிறியன்–சீலமிகு கண்ணன் திரு நாமத்தால் உணர்ந்து
மடலூர ஒருப்பட -கண்ணன் வந்து கலவாமையால்
பேர் அருள் -கண்ணன்
கோபிமார் ஆகாரம் ஏறிட்டு மின்னிடை மடவார்
குரவை முதலான கோலச் செயல்கள்
கிருஷி பூ வாசகம் -கிருஷ்ணன் பூமிக்கு சுகம் திவ்ய தேசங்கள் -அர்ச்சாவதாரமே தாரகாதிகள்
கண்ணன் அடி இணையில் காதல்-சுருங்க செப்பி -உபதேசம் நிகமனம்
அத்தனை பதிகங்களில் கண்ணன் -கேட்ப்பார் கேசவன் கீர்த்தி அன்றி மற்றும் கேட்ப்பாரோ

———————

ஸ்ரீ மதுரகவியாழ்வாரும் கண்ணனும் ஸ்ரீ உ வே தென்திருப்பேரை பார்த்தசாரதி ஸ்வாமி

தேவு மற்று அறியேன் என்பவரும்
முதலிலே ஆழங்கால் பட்டு
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ட பெரு மாயன் என் அப்பனில்
எடுத்துக் கழிக்கவும்
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் விளக்க கிருஷ்ண அனுபவம்
எத்திறம் என்று ஆழ்வார் ஆழங்கால் பட்ட இதுவே ஆழ்வார் திரு உள்ளத்துக்கு நெருக்கமாக இருக்குமே

———————-

திருப் பாணாழ்வார் அனுபவிக்கும் கண்ணன் -பரவஸ்து வரதராஜன் ஸ்வாமி-

அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் -ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போல்
லோக சாரங்க முனிவரால் எழுந்து அருளப் பண்ணி -முனி வாகன போகம்
ராமனாகவும் நரசிம்மனாகவும் உலகு அளந்தவனாகவும் பாடி -தப்பைச் செய்தோம்-கண்ணனே இவன்
கோவலன் வெண்ணெய் உண்ட வாயன் அண்டர் கோன் -ஆயர்களுக்கு நாயகன்
கொண்டல் வண்ணன் -முகில் வண்ணன் -தானே இவன் சீதள காள மேகம் பட்டர் –
மின்னல் இந்த்ரியா -பெரிய பிராட்டியார் -பூஷா மணி இந்திர தனுஸ் வானவில் -தயா ரசம் விஞ்சி –
மேகம் கீழே வருமோ இவனோ கோவலனாய் அண்டர் கோனாய் நமக்காக
அவதார பிரயோஜனம் கோவலனாகைக்கும் அண்டர் கோன் ஆகைக்கும் வெண்ணெய் உண்ணவுமே
வெண்ணெய் உண்டது எனது உள்ளத்தைக் கவரவே என்கிறார்
வெண்ணெய் உண்டது அப்யாசம் இதுக்காகவே
அணி அரங்கன் இவனே தான் என்கிறார்
அபேச்சேத நியாயம் -இறுதி சொன்னதே கொள்ளத் தக்கது
தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் -கண்ணனை அரங்கமாலை என்று நிகமிக்கிறார் –

——–

ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வாரும் கண்ணனும் ஸ்ரீ உ வே கோவில் வகுளாபரணன் ஸ்வாமி

மதுர வாறே -மழைக்கு அன்று வரையை ஏந்திய ஆறே திருவரங்கத்தில்
பண்டு அவன் செய்த க்ரீடை தான் கிருஷ்ணாவதாரம் -பெரியாழ்வார்
பிரபந்த தாத்பர்யம் உபக்ரம உப சம்ஹாரம்
திருமாலையில் –அச்யுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே
கண்ணனை அரங்க மாலை உபஸம்ஹாரம்
தனியனிலும் கற்றினம் மேய்த்த கழலிணைக் கீழ் பாடப் பெற்றதாகவே
கற்றினம் மேய்த்த கழலிணை ஆழ்வாரும்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உபத்தி
கன்றுகளை மேய்த்து இனிது உகப்பவன்
பட்டரும் பிருந்தாவனம் பண்டிதன் இவனே பெண்களையும் வெண்ணெயும் ஒளித்து வைத்தாலும்
அறிய வல்ல பண்டிதன்
தாண்டவம் கற்றதும் தயிர் கடையும் ஓசைக்கு ஆடிக் கற்றுக் கொண்டான்
மொசு மொசுப்பு எல்லாம் இன்றும் காணலாம்
கார் ஒளி வண்ணனே கண்ணனே
மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுரவாறே
காக்கும் இயல்பினன் கண்ணபிரான்
கோயில் சாந்து அழியாத திரு மார்பு
ஆமைத்தாலி அச்சுத்தாலி புலி நகம் பஞ்சாயுத மாலை-
கவள மால் யானையைக் கொன்ற கண்ணனை
திருப்பள்ளி எழுச்சியிலும்
ப்ரஹ்மாதிகள்
அயோத்தி அம் அரசே
இலங்கையர் கோன் வழி பாடு செய்யும்
இதுக்கு எல்லாம் அசையாமல்
துகில் உடுத்து ஏறினாய் கண்ணனை அருளிச் செய்தே நிகமிக்கிறார் –
சூழ் புனல் அரங்கா -ரசம் இழக்கப் போகிறாய்
துடி இடையர் சுரி குழல்-துகில் உடுத்து ஏறுகிறார்களே
பள்ளி எழுந்து அருளாய் -கேட்டதும் பதறி எழுந்தானாம்

——————

திரு மங்கை ஆழ்வாரும் கண்ணனும் -ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி

பிடி தோறும் நெய் போல் அடி தோறும் அர்ச்சையிலே இருந்தாலும் –
காதில் கடிப்பிட்டு ஊடல்
பிள்ளைத் தமிழ் பதிகங்கள்
எங்கேனும் இது ஒப்பதோர் மாயம் உண்டோ
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -பசு நிரை மேய்ப்பு உவத்தி
நீரூட்டி -தடம் பருகு கரு முகிலை
சொல்லுண்டான் காணேடீ –சாழலே
பார்த்த சாரதி அனுபவம் பெரிய திருமொழி பதிகங்கள் தோறும் கலியன்
4-10-5-/ஆழியால் அங்கு மறைத்து /6-5-9-/9-9-8 /10-/11-காணேடீ
ஆஸ்ரித ரக்ஷணம் ஆழங்கால் பட்டு அனுபவம்
ஆஸ்ரித பக்ஷபாதன் தெளிவாகக் காட்டி
பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பண்ணினவை –
விரித்த தலை காண மாட்டாதவன் வெறும் கழுத்தைக் காண மாட்டான் அன்றோ

———-

கீதாச்சார்யரும் ஜெகதாச்சார்யரும் – திருக்கோவலூர் மணிவண்ணன் ஸ்வாமி
அனைத்து உலகும் வாழப் பிறந்த யதிராஜர்
ஈஸ்வரனும் ஆச்சார்ய பதவியை ஆசைப்பட்டு இருக்கும்
அவதார சம்பந்தமும் அருளிச் செயல் சம்பந்தமும் உண்டு
அநந்தன் பிரதம ரூபம் -பார்த்த சாரதியே -என்றும் உண்டே
பலராமாநுஜனே இளையாழ்வார்
எம்பெருமானார் -அவரோ நீர் -திருக் கோஷ்ட்டியூர் நம்பி கேட்ட ஐதிக்யம்-பர ஸம்ருத்தி ஏக பிரயோஜனம்
லோக ரக்ஷணத்தில் பாரிப்பு மிக்கு
சமிதோதிதய சங்கர கர்வம் அடக்கி பாணாசுரன் சங்கர பாஸ்கர இத்யாதி –
யாதவ பிரகாச–உஜ்ஜீவனம் -யது குலம் உத்தரிக்க – –
ஸ்ருதோ அபார்த்தான் -அபார்த்தங்கள் நிரசித்து ஸ்ரீ பாஷ்யாதி முகத்தால் -மூன்று சாம்யங்கள் தேசிகன் –

அருளிச் செயல் -ஸ்ரீ கீதை -ஸ்ரீ கீதா பாஷ்யம் சம்பந்தமும் உண்டே
செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப் பாரினில் அருளிச் செய்து –
அவதார ரஹஸ்ய ஞானம் -சம்பவாமி ஆத்ம மாயயா -அஜஹத் ஸ்வபாவம் -மாயம் சங்கல்பம் இச்சையால் –
எத்திறம் என்று மொஹித்த மாறன் அடி பணிந்தவர் ஸ்ரீ கீதா பாஷ்யம்
சாதுநாம் -ஸ்வாமி வியாக்யானம் மிக ரசமாய் இருக்குமே
கம்பீர -மதுர –
யுக்த லக்ஷண தர்ம சீல -வைதிக அக்ரேஸர் -நம்மாழ்வார் நிலையையே விளக்கி வியாக்யானம்
தொழுது எழு என் மனனே
என் சொல்லிச் சொல்லுகேன் நான்
வெண்ணெய் உண்ணும் ஈனச் சொல்லே
உண்டோ கண்கள் துஞ்சுதல்
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும்
முக்கிய பிரயோஜனம் சாது சம்ரக்ஷணமே மற்றவை ஆனு ஷங்கிகம் -சங்கல்பத்தாலே அவையை செய்ய வல்லவன் அன்றோ
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்தது போல் இங்கு அவதரித்து
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினாயே
மழுங்காத ஞானமே படையாக இருந்து இருந்தால் –சோதி மறைந்து இருக்குமே
கரஸ்த கமலம் பாதயோஸ் அர்ச்சிக்கவே அழைக்கவே அந்தர்யாமியாய் அறிந்து அவதரித்து
அரை குலைய தலை குலைய வந்த த்வரைக்கு நமஸ்காரம்

கண்ணன் ஸ்ரீ ஸூக்திகளை கிருஷ்ண த்ருஷ்ணா தத்துவத்தின் ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே வியாக்யானம்

————–

ஆழ்வானும் கண்ணனும் -ஆழ்வானும் கண்ணனும் …. ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சாரியார் ஸ்வாமி
மொழியைக் கடக்கும்
சிஷ்ய ஆச்சார்ய பூர்த்தி
உபய காவேரி மத்யத்தில் விண்ணப்பிக்கவோ -மேதா விலாசம் -பாவஜேன கிருதஞ்ஜேனே தர்மஜ்ஜேன–
உமது ரூபத்தில் ஆளவந்தார்-ராமானுஜர்
அதி மானுஷ ஸ்தவம் -துயரறு சுடர் அடி -எத்திறம் மோஹித்து -ஆழ்வான்
கேள்விகள் -பால்ய உசித சேஷ்டிதங்கள் ஆகிற -நெருப்பு பொறியில் விழுவார்கள்
தயரதன் பெற்ற மணி தடாகத்தில் புக்கு அழுத்துவது போல்
கம்ச பீதியால் போனது எதனால்
பஞ்சியன்ன மெல்லடியால் சகட நிரஸனம் –
யோக அப்யாஸத்தால் கூட பிடிக்க முடியாத நீ வெண்ணெய் களவு -பிடிபட்டு அடி பட்டு என்ன நீர்மை
ஒளித்து வைத்த வெண்ணெய் மட்டுமே களவு கண்டு
திருமேனியில் பூசி -மறைக்க சாதனம் -என்ன மதி உடைமை
நிர் பயனாக இருந்து -என்ன நீர்மை
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம்
வெண்ணெய் போல் ஹிருதயம் வெண்மை உருகும் உயர்ந்த ஸ்தானம்
நீர் பண்டமா -சொல்ல முடியாமல்
மோர் குடத்தை உருட்டி
ஆர்ய ஜன -ஆழ்வார் போல்வாரை மோஹிக்க செய்வதற்கே
தாமத்தால் இல்லாமல் பிரேமத்தால் கட்டி வைத்து
கனைத்து இளம் -அத்தாணிச் சேவகத்தில் பொதுவான தர்மங்கள் நழுவும்
ஜீயர் புரம் -எழுந்து அருள -உறங்குவான் கைப்பண்டம் போல் நழுவும்
உரலில் கட்டி வைப்பதே ஸூ வ ஸ்தானம்
பின்பே ஆக்களைப் பார்க்கப் போகிறாள்

———————–

ஸ்ரீ கண்ணனும் ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யரும் கீதாசார்யனும் லோகாசார்யரும் .. Sri U Ve Aththangi Srinivasacharyar
ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ தேவப்பெருமாள் ஆறாம் நாள் -மூலம் நக்ஷத்ரம்
ஸ்ரீ கண்ணனாகவே ஸ்ரீ தேவப்பெருமாள் சேவை
அவரே ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யராக
ஸ்ரீ கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்
இவரும் ஸ்ரீ லோகாச்சார்யார்
பிள்ளை என்று புகழப் படுபவர்கள்
ப்ரஹ்மசர்யம் -பரிஷத் விஷயம்
சத் பிராதா
பிராமண ரக்ஷணம் இருவரும் அஷ்டாதச ரஹஸ்யம் அஷ்டாதச அத்யாய ஸ்ரீ கீதை உபநிஷத்
ப்ரமேய ரக்ஷணம் இருவரும்
ராம பிரியன் -அரங்கன் ஜோதிஷ்குடி
தன்னுடைச் சோதி தனியாகவே இருவரும் ப்ரபாஸ க்ஷேத்ரம் ஜோதிஷ்குடி
ஸ்ரீ கீதா பாஷ்யம் யதி புனர் அவதாரம் ஆதி சேஷனே -ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் இவற்றுக்கு

——————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

நியாய தர்சனம் /இந்தியத் தத்துவ இயல் நூல்களும் ஆசிரியர்களும்–

August 30, 2020

நியாயம் என்பது தரிசனங்கள் எனப்படும் ஆறு தத்துவப் பிரிவுகளில் ஒன்று.
இது ஏரணத்தையும் (அளவையியல், (logic)), அறிவாராய்ச்சியியலையும் (epistemology) முதன்மையாகக் கொள்கிறது.
இந்தத் தத்துவப் பிரிவுக்கு அடிப்படையானது கௌதம ரிஷி அல்லது அட்சபாதர் என்பவரால் எழுதிய நியாய சூத்திரம் என்னும் நூல் ஆகும்.
இது கி.மு ஆறாவது நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகக் கூறப்படுகின்றது

நியாயம் தத்துவப் பிரிவு
நவீன இந்து தத்துவச் சிந்தனைகளுக்கு வழங்கிய முக்கியமான பங்களிப்பு அதன் வழிமுறை (methodology) ஆகும்.
தருக்கம் அல்லது ஏரணம் (அளவையியலை) அடிப்படையாகக் கொண்ட இந்த வழிமுறையைப், பின்னர்,
பெரும்பாலான மற்ற இந்து தத்துவப் பிரிவுகளும் கைக்கொள்ளலாயின.

நியாயத்தைப் பின்பற்றுபவர்கள், எற்புடைய அறிவைப் (valid knowledge) பெறுவதன் மூலமே
துன்பங்களிலிருந்து விடுதலை பெற முடியும் என நம்புகிறார்கள்.
இதனால் அவர்கள் ஏற்புடைய அறிவைப் பெறுவதற்கான வழிகளை (பிரமாணங்கள்) அடையாளம் காண்பதில் பெரும் அக்கறை செலுத்துகின்றனர்.
நியாயத் தத்துவப் பிரிவினர் இந்த ஏற்புடைய அறிவை அடையாளம் காண நான்கு பிரமாணங்கள் அல்லது வழிமுறைகளைக் கைக்கொள்கிறார்கள். அவை:

பிரத்தியட்சம் – நேரடிக்காட்சி
அனுமானம் – உய்த்துணர்வு
உபமானம் – ஒப்பீடு
சப்தம் – உரைச்சான்று என்பனவாகும்.

ஸூ த் ரங்கள் –ஐந்து அத்தியாயங்கள் -ஒவ் ஒன்றிலும் இரண்டு பாகங்கள்

The core of the text dates to roughly the 2nd century BC, although there are significant later interpolations.
கௌதமர் -அக்ஷய பாதர் -காலிலே கண் உள்ளவர்
தீர்க்க தபஸ்வீ -மஹா ரிஷி
நியாய ஸூ த் ரங்கள் — 528 –
வாத் சயனர் -(c.450–500 CE),
நியாய வார்த்திகா -உத்யோதகாரர் (c. 6th–7th century),
வாசஸ்பதி மிஸ்ரர் (9th century)
உதயனர் -தாத்பர்ய பரிசுத்தி , (10th century),
ஜெயந்தர் நியாய மஞ்சரி (10th century).

16 வகையால் ஞானம் –ஞானத்தாலே மோக்ஷம்
பிரமாணம்
பிரமேயம்
சம்சயம்
பிரயோஜனம்
த்ருஷ்டாந்தம்
சித்தாந்தம்
அவயவங்கள்
தர்க்கம்
நிர்ணயம்
வாதம்
ஜல்பம்
விதண்டாவாதம்
ஹேத்வ ஆபாசம்
சலம்
வாத நிரசனம்
நிக்ரஹ ஆஸ்தானம்

நித்யம்
அநித்யம்
சேதன க்ருத்யமே காரணம் -பகவான் நியமனம் -சஹகாரி என்பர்

ப்ரதிஜ்ஜை
மலை உச்சியில் புகையைப் பார்த்து -ஹேது
சமையல் அறையில் புகையையும் நெருப்பையும் சேர்த்து பார்த்த அனுபவம் உதாஹரணம்
ஐந்து வித தப்பான ஹேதுக்கள்
ஸவ்யபிசார -முடிவு கொள்ள முடியாத -பல முடிவுகள் கொள்ளும் படி
விருத்த முடிவு
பிரகரணஸ் சாம-விரோதமாயுள்ள முடிவு
ஸத்யாசமா -கேள்விக்கு உரிய முடிவு
கால அதீத

ஆறு ஆஸ்த்திக அல்லது வைதிக தரிசனங்கள் (Vedic Systems or Homogeneous Systems)
ஆறு வேத தரிசனங்களும் அவற்றின் நிறுவனர்களும் பின்வருமாறு:

நியாயம் – கௌதமர்
வைசேடிகம் – கணாதர்
சாங்கியம் – கபிலர்
யோகம் – பதஞ்சலி
மீமாம்சை (பூர்வ மீமாம்சை) – ஜைமினி
வேதாந்தம் (உத்தர மீமாம்சை) – பாதராயணர்
இவற்றுக்கு இடையிலான ஒற்றுமைகளைக் கருத்திற்கொண்டு இந்த ஆறு தரிசனங்களும்,
இரண்டிரண்டாகச் சேர்த்து மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

நியாயம் – வைசேடிகம்
சாங்கியம் – யோகம்
மீமாம்சை – வேதாந்தம்
நான்கு நாத்திக அல்லது அவைதிக தர்சனங்கள் (Non-Vedic or Heterogeneous System)
நான்கு நாத்திக அல்லது அவைதிக தரிசனங்களும் அவற்றை நிறுவியவர்களும் பின்வருமாறு:

சார்வகம் எனும் உலகாயதம்
ஆசீவகம்
மூவகைச் ஜைனம் = 1 திகம்பரர், 2 சுவேதாம்பரர், 3 யாபனியம் — மகாவீரர்
நால்வகை பௌத்தம் = ஈனயான பௌத்தப் பிரிவுகள் 1 சௌத்திராந்திகம் 2 வைபாடிகம் ;
மகாயான பௌத்த பிரிவுகள் 3 மாத்தியமிகம் 4 யோகசாரம் — கௌதம புத்தர்

————–

கணாதரர், கானடா அல்லது கணபுஜா –
கணபுஜா என்பதற்கு அணுக்களை உண்பவர் என்று பொருள்.
இப் பெயர் வரக் காரணம், அவரது எளிமையை விளக்குவதாகும்.
அறுவடை முடிந்த நிலங்களில் சிதறிக்கிடக்கும் நெல், கோதுமை மற்றும் இதர தாணியங்களை பொறுக்கி
அதனை சமைத்து உண்பவராம்

————

தர்க்க சாஸ்திர நூல்கள்
‘ந்யாய சாஸ்த்ரம்’செய்த கௌதம மஹரிஷிக்கு ‘அக்ஷபாதர்’என்று பேர்*.
அவர் அறிவால் ஓயாமல் சிந்தனை பண்ணிக் கொண்டே இருப்பாராதலால் வெளி உலகமே அவர் கண்ணுக்குத் தெரியாதாம்.
எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்பதால் absent mind கௌதமர் இப்படித்தான் இருந்தார்.
அதனால் எதையோ பலமாக யோசித்துக் கொண்டே போய் ஒரு கிணற்றிலே விழுந்து விட்டாராம்.
அப்போது பகவானே அவரை மேலே ஏற்றி விட்டு அவருடைய காலிலேயே கண்ணை வைத்துவிட்டாராம்!
கால் தானாக, involuntary – யாக, நடக்கிற போது அதிலுள்ள கண்ணும் தானாகப் பார்த்து விடும்படி அனுக்ரஹம் செய்தாராம்.
பாதத்திலே அக்ஷம் (கண்) ஏற்பட்டதால் இவருக்கு அக்ஷபாதர் என்று பேர் வந்தது என்று கதை.

இவருடைய சாஸ்த்ரத்துக்குப் பாஷ்யம் எழுதியவர் வாத்ஸ்யாயனர்.
வார்த்திகம் செய்தவர் உத்யேதகரர்.
பரம அத்வைதியான வாசஸ்பதி மிச்ரர் இந்த வார்திகத்துக்கு ஒரு விளக்கம் எழுதியிருக்கிறார்.
ந்யாய – வார்த்திக – தாத்பர்ய டீகா என்று அதற்குப் பெயர்.
இந்த விளக்கத்துக்கு விளக்கம் எழுதியிருக்கிறார் உதயனாசாரியார். தாத்பாய – டீகா – பரிசுத்தி என்று அதற்குப் பெயர்.
ந்யாய குஸுமாஞ்ஜலி என்றும் உதயனர் ஒரு புஸ்தகம் எழுதியிருக்கிறார்.
இவர்தான் புத்த மதத்தைக் கண்டனம் பண்ணி நம் தேசத்தில் இல்லாமல் பண்ணியவர்களில் முக்கியமான ஒருவர்.
‘ந்யாய சாஸ்த்ரத்துக்கு ஜயந்தர் எழுதிய ‘ந்யாய மஞ்ஜரி’என்ற பாஷ்யமும் இருக்கிறது.
அன்னம் பட்டர் என்பவர் தர்க்க ஸங்கிரஹம் என்றும் அதற்குத் தாமே விரிவுரையாக ஓரு ‘தீபிகை’யும் எழுதியிருக்கிறார்.
ஸாதாரணமாக ந்யாய சாஸ்திரம் படிக்கிறவர்கள் (கடைசியில் சொன்ன) இந்த இரண்டு புஸ்தகங்களோடு தான் ஆரம்பிக்கிறார்கள்.

கணாத மஹரிஷி எழுதிய வைசேஷிக சாஸ்த்ரத்துக்கு ராவண பாஷ்யம் என்று ஒன்று இருந்து காணாமற் போய்விட்டதாகச் சொல்கிறார்கள்.
பாஷ்யம் மாதிரியாகப் பிரசஸ்தபாதர் எழுதிய ‘பதார்த்த – தர்ம – ஸங்க்ரஹம்’நமக்குக் கிடைத்திருக்கிறது.
இதற்கு உதயனர் வியாக்கியானம் எழுதியிருக்கிறார்.
ஸமீபத்தில் உத்தமூர் வீரராகவாச்சாரியார் வைசேஷிக ரஸாயனம் என்ற நூலை எழுதியிருக்கிறார்.

வைசேஷிகத்துக்கு ஒளலூக்ய தர்சனம் என்றும் ஒரு பெயர் உள்ளது.
‘உலுகம்’என்றால் ஆந்தை. ‘உலூ’தான் இங்கிலீஷில் ‘OWL’ என்று ஆயிற்று. ஆந்தை சம்பந்தப்பட்டது ஒளலூக்யம்.
கணாதருக்கே ‘உலூகம்’என்று பேர் வந்ததாகச் சொல்கிறார்கள்!
கௌதமர் யோசனையிலேயே இருந்ததால் கண் தெரியாமல் கிணற்றில் விழுந்தார் என்றால்,
கணாதர் பகலெல்லாம் ஆராய்ச்சியிலேயே இருந்துவிட்டு இரவுக்குப் பின்தான் பி¬க்ஷக்குப் புறப்படுவாராம்.
பகலில் கண்ணுக்கு அகப்படாமல் ராத்ரியிலேயே இவர் சஞ்சாரம் செய்ததால்,’ஆந்தை’என்று nick – name பெற்றதாகச் சொல்கிறார்கள்.
அஞ்ஞானியின் ராத்திரி ஞானிக்குப் பகலாயிருக்கிறது என்று கீதையில் பகவான் சொல்லும்போது
எல்லா ஞானிகளையுமே ஆந்தையாகத்தான் சொல்லிவிட்டார்!

கணாதர் ஸ்தாபித்ததால் காணாத சாஸ்திரம் என்றும் வைசேஷிகத்துக்குப் பெயர்.
‘தமிழ் ‘காணாத’அல்ல;எல்லாவற்றையும் ‘கண்டு’சொன்னவர்’என்று ஒரு பண்டிதர் வேடிக்கையாகச் சொன்னார்*.
மற்ற எந்த சாஸ்திரத்தையும் படித்து அறிவதற்கு வியாகரணமும் வைசேஷிகமும் நிரம்ப ஒத்தாசை செய்கின்றன
என்பது வித்வான்களின் அபிப்பிராயம்.
இதனால்.
காணாதம் பாணினீயம் ச ஸர்வசாஸ்த்ரோபகாரகம் என்று வசனமும் இருக்கிறது.
(காணாதம் – வைசேஷிகம்;பாணினீயம் – வியாகரணம்.)
வியாகரணம் நடராஜாவின் டமருவிலிருந்து வந்தது என்றால்
நியாய – வைசேஷிக சாஸ்திரங்களும் சிவ பெருமான் ஸம்பந்தமுடையவை.
வைசேஷிக சாஸ்திரங்களில் மஹேச்வரனையே பரமாத்மாவாகச் சொல்லி நமஸ்காரம் பண்ணியிருக்கிறது.
ஜகத்துக்கு ஈச்வரன் ‘நிமித்த காரணம்’என்று கொள்வதில் சைவ மதங்கள் நியாய சாஸ்திரத்தையே பின்பற்றுகின்றன எனலாம்.

——————-

இந்தியத் தத்துவ இயல் நூல்களும் ஆசிரியர்களும் :

இந்திய மெய்யியலுக்கு ஆறு முதன்மையான தர்சனங்கள் அல்லது தத்துவங்கள் உள்ளது.
அதில் நியாயம் (தர்க்கம்) தத்துவத்தை நிறுவியவர் கௌதமர்.
வைசேசிகம் எனும் பட்டறிவு தத்துவத்தின் ஆசிரியர் கணாதர்.
சாங்கியம் எனும் தத்துவத்தின் ஆசிரியர் கபிலர் (சாங்கியம்),
யோகம் என்ற தத்துவதிற்கு ஆசிரியர் பதஞ்சலிஆவர்.
மீமாம்சம் எனும் தத்துவத்துவதிற்கு ஆசிரியர் ஜைமினி ஆவர்,
மற்றும் வேதாந்தம் எனும் உபநிடதங்கள் என ஆறு தத்துவங்கள் அல்லது ஆறு தர்சனங்கள் உள்ளது.
இதில் முதல் ஐந்தில் பிரம்மம் எனும் இறையியலைப் (பிரம்மம்) பற்றி பேசுவதில்லை.
வேதாந்தம் ஒன்றுதான் மூலப்பரம்பொருள் எனும் பிரம்மத்தைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது.

இந்தியத் தத்துவ இயலுக்கு இறைமறுப்பு கொள்கையை கடைப்பிடிக்கும்,
சார்வகம் மற்றும் லோகாயதம் எனும் பொருள் முதல்வாதிகள்,
ஆசீவகம், பௌத்தம், மற்றும் சமண சமயம் போன்ற கருத்தியல் ஆசிரியர்களும்
இந்தியத் தத்துவ வளர்ச்சிக்கு மிக அதிகமாக பங்களித்துள்ளனர்.
இந்திய இறையியல், கருத்தியல், மெய்யியல், அறிவாய்வியல், தர்க்கம் மற்றும் பொருள் முதல் வாதம்
குறித்து அறிஞர்கள் படைத்த தத்துவ நூல்களின் விவரம்.

அபிதம்ம கோசம் : சர்வாஸ்திவாதிய பௌத்த கொள்கைகளை விளக்கும் அடிப்படை நூல். எழுதியவர் வசுபந்து.

அபிதம்ம கோச வியாக்யா : யசோமித்திரர் எமுதியது. அபிதம்ம கோசம் எனும் நூலின் விளக்க உரை நூல்.

அபிதம்ம பீடகா : மூன்றாவதும் இறுதியானதுமான புத்த பீடக நூல்.
நுண்புலப் பொருளியல் (Meta Physics) பிரச்சனைகள் பற்றி எழுதப்பட்டது என கருதப்படுவது.

அபிதம்ம விபாசா : காத்தியாயனரின் ’ஞானப்ரஸ்தானா’பற்றிய விமர்சனம். மன்னர் கனிஷ்கர் ஆதரவின் கீழ்
நடைபெற்ற நான்காம் புத்த மாநாடு குழுவால் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

அசிந்த-பேதாபேத-வாதம் : இருமை (Dualism) எனும் துவைதம் மற்றும் இருமைப் மறுப்புக் கொள்கை (Non-Dualism)
வங்காள வைஷ்ணவியத்தை நிறுவியவர் என்று அறியப்பட்ட சைதன்ய வேதாந்த கருத்தியலின் தத்துவகோட்பாடு.

அத்வைத-பிரம்ம-சித்தி : 18வது நூற்றாண்டில் வாழ்ந்த சதானந்த யதி எழுதியது. அத்வைத சித்தாந்தம் பற்றியது.

அத்வைத வேதாந்தம் : பரிசுத்தமான தன்னுணர்வே மெய்ம்மை (பிரம்மம்) என்ற வேதாந்த கருத்தியல்.
ஆதிசங்கரர் எனும்அத்வைத வேதாந்தியால் முன் வைக்கப்பட்டது. சங்கரர் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

அஜிதகேசகம்பிளி : கௌதம புத்தர் காலத்தில் வாழ்ந்த பொருள்முதல்வாதி.

அகலங்கர் : கி. பி.750இல் வாழ்ந்த சமண தத்துவவாதி. தர்க்கவியல் குறித்த அடிப்படை சமண விளக்கங்களுக்கு
முதன்முதலில் இறுதி வடிவம் தந்தவர்.

அக்சபாதா : கோதமரின் மறு பெயர். நியாய தத்துவ (தர்க்கம்) அமைப்பினை நிறுவியர்.

ஆலம்பன பரீக்சா : திக்நாகர் என்பவர் எழுதியது. யோகசாரம் கருத்தியற் கோட்பாட்டிற்கு ஆதரவான ஆய்வுக்கட்டுரை நூல்.

அனிருத்தா : கி. பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த சாங்கிய சூத்ரங்களுக்கு விளக்கம் எழுதியவர்.

அனாகா : சமணர்களின் புனித இலக்கியங்களில் ஒருவகை.

அன்னம பட்டர் : 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நியாயம் – வைசேடிக தத்துவவாதி.
தர்க்க சங்கிரஹா எனும் புகழ் பெற்ற நூலை எழுதியவர்.

ஆபாதேவா : 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, மீமாம்ச தத்துவவாதி

ஆரண்யகா : வேதத்தை சேர்ந்த இலக்கிய வகை. மாயாவாதம், போன்ற முன்மாதிரி தத்துவம் பற்றிய கேள்விகளை இது ஆய்கிறது.

அரியேதா : கி பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த தத்துவவாதி. தர்மகீர்த்தி என்பவர் எழுதிய
ஹேது-பிந்து நூலைப் பற்றிய விளக்கம் அளித்தவர்.

அர்த்தசாஸ்திரம் : கௌடில்யர் எனும் சாணக்கியர் எழுதிய பழமையான சமுக அரசியல் நூல்.

ஆரியதேவர் : கி பி.320இல் வாழ்ந்தவர். மத்தியமிகம் பௌத்த தத்துவத்தின் திறனாய்வாளர்.

ஆர்யசூரா : கி.பி.4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ஜாதக மாலா எனும் நூலை எழுதி புகழ் பெற்றவர்.

அசங்கா : கி.பி.450-ஆம் ஆண்டைச் சேர்ந்தவர். யோகாகார புத்த த்த்துவத்தை தொடக்க காலத்தில் முறையாக செய்தவர்.

ஆசுரி : பண்டைய சாங்கிய தத்துவ ஆசிரியர்.

அஸ்வகோசர் : கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த தத்துவவாதி, கவிஞர், நாடக ஆசிரியர்.

அதர்வ வேதம் : பண்டைய நான்கு வேதங்களில் இறுதியானது. இது மந்திர தந்திரங்களை மையமாக கொண்டது.
இதனை தொகுத்தவர் பைலர் எனும் ரிஷி.

ஆத்ம தத்துவ விவேகம் : உதயணாவின் ஒப்பீட்டு இலக்கியம், சுயம் பற்றி புத்தம் கூறும் கருத்துக்கு
மறுப்பு தெரிவிக்கும் நியாய வைசேசிக தத்துவ ஆய்வு நூல்.

பாதராயணர் : பிரம்ம சூத்திரம் எனும் புகழ்பெற்ற வேதாந்த நூலை எழுதியவர்.

பவதாயணா : கி.பி. 300ஆம் ஆண்டைச் சேர்ந்தவர். சட்டம் பற்றி எழுதிய முன்னோடி.

பகவத் கீதை : கர்ம யோகம், பக்தி யோகம் மற்றும் ஞான யோகம் போன்ற தத்துவங்களை,
ஸ்ரீகிருஷ்ணர், அருச்சுனனுக்கு உபதேசம் செய்த நூல். இது மகாபாரதத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.
பிரஸ்தானத்ரயம் எனும் மூன்று உயர்ந்த வேதாந்த நூல்களான உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் ஆகியவற்றில் பகவத் கீதையும் ஒன்று.
பகவத் கீதைக்கு, ஆதிசங்கரர், இராமானுசர் மற்றும் மத்வர் ஆகியோர் எழுதிய விளக்க உரைகள் குறிப்பிடத்தக்கது.

வாசஸ்பதி மிஸ்ரர்: தத்துவபிந்து மற்றும் பிரம்ம சூத்திரம் பற்றிய ஆதிசங்கரரின் விளக்க உரைகளுக்கு விரிவுரை எழுதி
பாமதி எனும் தன் மனைவியின் பெயரில் வெளியிட்டவர்.

பாஸ்கரர் : பிரம்ம சூத்திரம் பற்றி விளக்கமளித்தவர். ஆதிசங்கரர் மற்றும் இராமானுஜர் இருவருக்கும் இடைப்பட்ட காலத்தவர்.

பாட்ட தீபிகா : கச்சதேவரின் மீமாம்ச தத்துவ கட்டுரைகள் எழுதியவர்.

பாட்ட மீமாம்சம் : குமரிலபட்டர் எழுதிய மீமாம்ச கருத்தியல் நூல்.

பாவவிவேகா : கி. பி. 5ஆம் நூற்றாண்டின் வாழ்ந்த மாத்யமக பிரிவு புத்த தத்துவ நிபுணர்.

பிரஸ்தானத்திரயம் : பிரம்மத்தை விளக்கும் உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதை ஆகிய
மூன்று முதன்மையான வேதாந்த நூல்களை பிரஸ்தானத்திரயம் என்பர்.

பேதாபேத-வாதம் : பாஸ்கரரின் இருமை மற்றும் இருமையின்மை கொள்கை விளக்கம் நூல்.

போதிகார்யவாதாரா : சாந்தி தேவர் எழுதியது. மகாயான புத்தமத தத்துவத்தை போற்றும் கவிதைகள்.

பிராமணம் : வேத சடங்குமுறைகளை ஆய்வு செய்யும் வேத இலக்கியம்.

பிரம்ம சூத்திரம் அல்லது வேதாந்த சூத்திரம் : உபநிடதங்களில் காணப்படும் முரணான கருத்துக்களை,
பிரம்ம சூத்திரம் எனும் நூல் மூலம் பாதராயணர் களைந்து விளக்கி எழுதியதாக கூறப்படுகிறது.
இந்நூலுக்கு பாஷ்யம் எழுதியவர்களில் சிறப்பானவர்கள், ஆதிசங்கரர், இராமானுசர் மற்றும் மத்வர்.

ப்ரஹதி : மீமாம்ச சூத்திரம் பற்றிய சபரரின் கருத்துக்கள் மீது பிரபாகரர் எழுதிய விளக்கங்கள்.

கௌதம புத்தர் : புத்த தத்துவத்தை தோற்றுவித்தவர். கி. மு. 483ஆம் ஆண்டில் இறந்தார்.

புத்தசரிதா : புத்தரின் வரலாற்றை கவிதை வடிவில் அஸ்வகோசர் எழுதியது.

புத்தபாலிதா : கி. பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மத்தியமிகம் புத்த தத்துவ நிபுணர்.

சைதன்யர் : கி. பி. 485வது ஆண்டில் பிறந்தவர். வங்காள வைணவ தத்துவம் என பொதுவாக அறியப்பட்ட மத இயக்கத்தை தோற்றுவித்தவர்.

சந்திரகீர்த்தி : கி. பி. 6வது நூற்றாண்டில் வாழ்ந்த மாத்யமிக புத்த தத்துவ நிபுணர்;
நாகார்ஜுனரின் கருத்துக்களுக்கு விமர்சனம் எழுதியதால் புகழ் பெற்றார்.

சரக சம்ஹிதை : கி. பி. இரண்டாவது நூற்றாண்டில் வாழ்ந்த சரகர் என்பவர் இந்த மருத்துவ நூலை எழுதியவர்.

சார்வகம்: சார்வகம் எனில் லோகாயவாதம் எனும் பொருள் முதல்வாதம் எனப்படும்.
சார்வாகர் என்ற பகுத்தறிவுவாதி ’சார்வகம்’ எனும் தத்துவத்தை நிறுவியவர்.

சாது சதகம் : மாத்யமக புத்த தத்துவ அறிஞரான ஆரியதேவர் எழுதியது.

சித்சுகர்: கி. பி. 1220களில் வாழ்ந்தவர். அத்வைதி. பட்டறிவு சார்ந்த உள்ளமைவியல் (Ontology) மற்றும்
அறிவாராய்ச்சியியல் (Epistemology) பற்றிய எதிர்மறையான வாதத்தை முன்வைத்து புகழ் பெற்றவர்.

தர்மகீர்த்தி : கி. பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திக்நாகருக்கு பின்வந்த புகழ்பெற்ற புத்த தத்துவவாதி.

தத்துவ – சங்கிரஹம் : கி. பி. 8வது நூற்றாண்டில் வாழ்ந்த சாந்தராட்சிதா என்பவர் எழுதிய புத்தவியல் தர்க்கநூல் ஆகும்.

தர்மோத்தரர் : கி. பி. 840களில் வாழ்ந்தவர். தர்மகீர்த்தியின் கருத்துகளுக்கு விளக்கம் அளித்தவர்.

திக்நாகர்: கி. பி. 500களில் வாழ்ந்தவர். புத்த தர்க்கவியல் கருத்தியலை நிறுவியவர்.

திபாஷிகா : சாலிகநாதர் எழுதியது. பிரபாகர மீமாம்சம் பற்றிய ஒரு நூல்.

துர்வேகர் : புத்த தத்துவவாதிகளான தர்மோத்தரர் மற்றும் அர்க்கடர் ஆகியவர்களை விமர்சனம் செய்தவர்.

துவைதாத்வைத வாதம்: நிம்பர்க்கர் என்பவர் பேதாபேதம் வேதாந்த கருத்தியலின் இருமை (துவைதம்)மற்றும்
இருமையின்மை (அத்வைதம்) தத்துவ கோட்பாட்டை விளக்கியவர்.

துவைதவாதம்: இத்த்துவத்தின் ஆசிரியர் மத்வர். இருமை எனும் துவைதம் எனும்
தத்துவக் கொள்கையை (இறைவனும் சீவனும் வேறு) கடைப்பிடிப்பவர்கள்.

சுதாதரர் : கி. பி. 13வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். நியாயம் தத்துவ நிபுணர்.

கங்கேசர்: கி. பி. 13வது நூற்றாண்டில் வாழ்ந்த நியாயம் தத்துவ அறிஞர்.

கௌடபாதர்: கி. பி. 800களில் வாழ்ந்தவர். ஆதிசங்கரரின் குருவின் குரு. மாண்டூக்ய காரிகை நூலின் ஆசிரியர். அத்வைத வேதாந்தி.

குணரத்ன : கி. பி. 15வது நூற்றாண்டில் வாழ்ந்த சமண தத்துவவாதி. தர்க்க-ரகசிய-தீபிகா என்ற விமர்சன நூலை எழுதியவர்.
இந்நூல் ஹரிபத்ரரின் இந்திய தத்துவ விளக்கத் தொகுப்பான சத் தர்சன சமுக்காயம் என்ற நூலின் விமர்சனம் ஆகும்.

ஹரிபத்ரர் : கி. பி. 8வது நூற்றாண்டில் வாழ்ந்த சமண தத்துவவாதி. இந்திய தத்துவ விளக்கத் தொகுப்பான
சத் தர்சன சமுக்காயம் என்ற நூலை எழுதியவர்.

ஹேமச்சந்திரர் : இவரது காலம் கி. பி. 1018 – 1172. புகழ்பெற்ற சமண சமய தத்துவ அறிஞர்.
தத்துவம் மற்றும் தர்க்க நூல்களை எழுதியவர்.

ஹேது – பிந்து : தர்மகீர்த்தி என்பவர் எழுதிய புத்த தர்க்கவியல் நூல்.

ஹீனயானம் : தமது முன்னோர்களை (மட்டமாக) குறிக்க, மகாயானம் பிரிவு புத்த சமயத்தவர் பயன் படுத்திய சொல்.
(ஹீனயானம் எனில் தாழ்வான வழி அல்லது குறைந்த வழி என்று பொருள்).

ஜகதீசா : கி. பி. 17வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். நவ நியாய தத்துவ அறிஞர்.

ஜைமினி : பூர்வ மீமாம்சக சூத்திரம் எழுதியவர்.

ஜாதகா : புத்தரின் ’முந்தைய பிறப்புகளை’ பற்றிய கதைகள் கூறுவது.

ஜெயந்த பட்டர் : கி. பி. 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நியாய மஞ்சரி எழுதியவர். நியாய – வைசேஷிக தத்துவ அறிஞர்.

ஜெயராசி பட்டர் : கி. பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அன்றைய காலத் தத்துவங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தவர்.
இவரை ஒரு பொருள்முதல்வாதி என்று தவறாக எண்ணினார்கள்.

ஞானப்பிரஸ்தானா : இந்நூலை காத்தியாயனர் எழுதியது. வைபாசிக புத்த தத்துவவாதிகளின் விளக்கமான
மஹா விபாச என்ற நூல் ஞானப்ரஸ்தானாவின் விமர்சனமாக எழுதப்பட்டது.

கமலசீலா : கி. பி. 750-இல் வாழ்ந்தவர். புத்த தர்க்கவியல்வாதி. சாந்தராக்சிதாவின் தத்துவ சங்கிரா என்ற நூலுக்கு விளக்கம் எழுதியவர்.

கணாதர் : வைசேசிகம் எனும் தத்துவத்தை (தர்சனம்) நிறுவியவர்.

கபிலர் (சாங்கியம்) : சாங்கியம் எனும் தத்துவத்தை நிறுவியவர்.

காத்தியாயனர் : கி. பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தியவர். ஞானப்ரஸ்தானம் எனும் நூலை எழுதியவர்.

கௌடில்யர் : இவரை சாணக்கியர் என்றும் அழைப்பர். கி. மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
அர்த்தசாஸ்திரம் எனும் அரசியல் மற்றும் சமூகம் தொடர்பாக நூலை எழுதி புகழ்பெற்றவர்.

கந்ததேவா : கி. பி. 17வது நூற்றாண்டில் வாழ்ந்த மீமாம்ச தத்துவவாதி

காந்தன-காந்த-காத்யம் : கி. பி. 1150இல் வாழ்ந்த ஸ்ரீஹர்சர் என்பவர் எழுதியது. அத்வைத வேதாந்த கருத்தியல் பற்றி,
பட்டறிவு சார்ந்த உள்ளமையியல் (Ontology) மற்றும் அறிவாராய்ச்சியியல் (Epistemology) மீதான முதல் விரிவான விமர்சனம் செய்தவர்.

கிராணவளி : வைசேஷிகம் தத்துவம் பற்றிய பிரசஸ்தபாதரின் விளக்கம் மீதான விமர்சனம். உதயணர்என்பவர் எழுதியது.

குல்லுக பட்டர் : மத்திய காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். மனுதரும சாத்திரம் (மனு ஸ்மிருதி) எனும் நூலுக்கு விளக்கம் அளித்தவர்.

குமரிலபட்டர் : கி. பி. 8வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். மீமாம்ச தத்துவத்தை நிறுவியவர்.
பாட்டா மீமாம்சா பள்ளியை (Bhatta School of Mimasa) நிறுவியவர்.

லக்வி : மீமாம்ச சூத்ரம் பற்றி சபரர் எழுதிய விளக்கத்திற்கு சுருக்கமான விளக்கம் எழுதியவர்.

லலித விஸ்தாரா : மகாயான புத்த சிந்தனைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தரின் வாழ்க்கை வரலாறு.

லங்காவதார சூத்திரம் : மகாயான பெளத்த மத சூத்திரங்களில் முக்கியமான ஒன்று.

லோகாயாதம் : பொருள்முதல்வாதம் (Materialism) எனும் தத்துவத்தை நிறுவியவர் சார்வாகர்.
இதனை சார்வகம் என்றும் அழைப்பர்.

மாதவா : கி. பி. 14வது நூற்றாண்டில் வாழ்ந்த அத்வைத வேதாந்தி. சர்வ தரிசன சங்கிரஹ என்ற
இந்திய தத்துவவியல் தொகுப்பை எழுதிப் புகழ் பெற்றவர்.

மதுசூதன சரஸ்வதி : காலம் 1565-1650. அத்வைத சித்தி என்ற நூலை எழுதிய அத்வைத வேதாந்தி.

மத்வர் : கி. பி. 13வது நூற்றாண்டில் வாழ்ந்த துவைதம் எனும் இருமை கருத்தியலை நிறுவிய மாத்வ சம்பிராயத வைணவ குரு.

மத்தியமிகம் : மகாயான பௌத்த சமயத்தின் கருத்தியல் பிரிவு. இதனை நிறுவியது நாகார்ஜுனர்.
யதார்த்தம் (உண்மை) என்பது ’வெறுமையே’ என்பது இவர்கள் பார்வை.

மாத்யமிக காரிகை : இதன் ஆசிரியர் நாகார்ஜுனர்

மகாபாரதம் : இந்தியாவின் புகழ்பெற்ற இரு இதிகாசங்களில் ஒன்றான இதை எழுதியவர் வியாசர்.
இப்போது நாம் பார்க்கின்ற வடிவம் கி. மு. 400க்கும் கி. பி. 400க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாகியது.

மகா சாங்கிகர்கள் : பழமை வாத புத்த சங்கத்திலிருந்து முதன்முதலில் வெளியேற்றப்பட்டவர்கள்.
பின் இவர்கள் தங்களுக்கு என தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள்.

மகாவிபாசா : அபிதம்ம விபாசாவும் இதுவும் ஒன்றே.

மகாவீரர் : சமண சமய தத்துவத்தை நிறுவியவர். கௌதம புத்தர் காலத்தில் வாழ்ந்தவர்.

மகாயானம் : ‘ உயர்ந்த பாதை ‘ என்று பொருள். பிற்கால புத்தவியல்வாதிகள் உருவாக்கிய புத்தமதப் பிரிவு.
இவர்கள் தங்களின் எதிர்தரப்பை ஹீனயானம் (குறுகிய பாதை)என்பர்.

மகாயான சூத்திரங்கள் : மகாயான புத்தமத இறையியல் தத்துவபாடல்கள் அடங்கிய நூல்.

மைத்ரேயநாதர் : புத்தவியல் அடிப்படையிலான யோககார கருத்தியலை உருவாக்கியவர். கி. பி. 400இல் வாழ்ந்தவர்.

மந்தன மிஸ்ரர் : கி. பி. 9வது நூற்றாண்டில் வாழ்ந்த முக்கிய பாட்டா மீமாம்ச தத்துவ அறிஞர்.

மாண்டூக்ய காரிகை : கி. பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கௌடபாதர் எழுதியது.

மனு : இவர் மனுதரும சாத்திரம் எனும் மனுஸ்மிர்தியின் ஆசிரியர். இந்திய சட்டங்கள் பற்றி கூறும் முதல் நூல்.
இப்போது நாம் பார்க்கின்ற வடிவம் கி. மு. 200க்கு முன்பு இருந்ததாகும்.

மாயாவாதம் : பிரம்மம் தவிர படைக்கப்பட்ட அனைத்துப் பிரபஞ்சங்களும் சீவராசிகளும் மித்யா(பொய்மையானது)
எனக்கூறும் அத்வைத வேதாந்தக் கொள்கை.

மிலிண்ட பனாஹ : புத்தவியல் குறித்த பழங்கால பாலி மொழி (இந்தோனேசியா) நூல்.

பூர்வ மீமாம்சம்: ஜைமினி என்பவர் இதனை தொகுத்தவர். இப்பகுதியில் வேதத்தின் சடங்குகள் குறித்த
விளக்கங்கள் கொண்ட மிகப் பழங்கால நூல்.

உத்தர மீமாம்சம் : இப்பகுதியில் வேதத்தின் இறுதி பகுதிகளான உபநிடதங்கள் அமைந்துள்ளது.

மீமாம்ச சூத்ரா : மீமாம்சம் தத்துவம் பற்றிய மூல நூல்.

நாகார்ஜுனர் : கி. பி. 200இல் வாழ்ந்தவர். புத்தவியல் தத்துவத்தின் மாத்யமிக கருத்தியலை உருவாக்கியவர்

நிம்பர்க்கர் : கி. பி. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பிரம்ம சூத்திரம் பற்றி விளக்கம் கொடுத்தவர்.

நவ்ய நியாயா : நவ நியாயம் (இந்து தத்துவம்). காங்கேசர் போதித்த நியாய தத்துவவியலின் இறுதிக் கட்டம்.

நியாயம் (இந்து தத்துவம்) (தர்க்கம்) : இத்ததுவத்தை நிறுவியவர் கௌதமர்.
அறிவாய்வியல் மற்றும் தர்க்கம் குறித்த கேள்விகள் மீது கவனம் செலுத்தும் தத்தவ நூல்.

நியாய – பிந்து : புத்த தர்க்கவியல் நூல். தர்மகீர்த்தி எழுதியது.

நியாய – பிந்து – திகா : ’நியாய – பிந்து’ நூலைப் பற்றி தர்மோத்தரா எழுதிய விமர்சன நூல்.

நியாய – கந்தழி : வைசேடிக தத்துவ முறை பற்றி பிரசஸ்தபாதர் கூறியதன் மீதான விமர்சன நூல்.

நியாய – கணிகா : மீமாம்சம் பற்றி வாசஸ்பதி மிஸ்ரர் எழுதியது.
இது மந்தன மிஸ்ரர் எழுதிய ’விதி விவேகா’ என்ற நூலின் மீதான விமர்சன நூல்.

நியாய – குசுமாஞ்சலி : இந்நூலை உதயணர் எழுதியது. கடவுள் இருப்பதை நிரூபிக்கும் நியாய வைசேஷிக உரைகள் கொண்டது.

நியாய-மஞ்சரி : நியாயம் (இந்து தத்துவம்)- வைசேஷிகம் முறை குறித்து ஜெயந்த பட்டர் எழுதிய முக்கியமான நூல்.

நியாய-சூத்ரம் : நியாய முறைப் பற்றிய மூல நூல். கோதமர் அல்லது அக்சபாதர்எழுதியதாக கூறப்படுகிறது.

நியாய-வைசேஷிகம் : நியாயம் மற்றும் வைசேஷிக தத்துவங்கள் ஒருங்கிணைந்த போது உருவான பெயர்.

நியாய-வார்த்திகா : உத்யோதகாரர் எழுதியது. நியாய சூத்திரம் மீதான வாத்ச்யாயணரின் நூல் பற்றி எழுதப்பட்டு
இன்றும் இருக்கின்ற நூல்களில் இதுவே மிகப் பழமையானது.

நியாய-வார்த்திகா-தாத்பரிய-பரிசுத்தி : உதயணர் எழுதியது. நியாய-வார்த்திகா-தாத்பர்ய-திகா பற்றி எழுதப்பட்ட நியாய வைசேஷிக விளக்க நூல்.

நியாய வார்த்திகா-தாத்பரிய-திகா : வாசஸ்பதி மிஸ்ர்ர் எழுதியது இது நியாய-வைசேஷிக விளக்க நூல்.

பதார்த்த-தர்ம-சங்கிரஹா : வைசேடிகம் தத்துவம் பற்றி இன்றும் உள்ள நூல்; எழுதியது ப்ரசஸ்பாதர்.

பத்மபாதர் : ஆதிசங்கரரின் சீடர். அத்வைத வேதாந்தி.

பங்காசிகர் : தொடக்க கால சாங்கிய ஆசிரியர்.

பாணினி : கி. மு. 300க்கு முற்பட்டவர். சிறந்த சமஸ்கிருத மொழி இலக்கண ஆசிரியர்.

பார்த்தசாரதி மிஸ்ரர் : பாட்ட மீமாம்ச தத்துவ ஆசிரியர்களில் முக்கியமானவர். காலம் 16வது நூற்றாண்டு.

பதஞ்சலி : யோகம் எனும் தத்துவத்தை நிறுவியர்.

பயாசி : புத்தருக்குப் பின் வந்த பொருள்முதல்வாதி.

திரிபிடகம் : தொடக்க கால புத்த தத்துவ நெறிமுறை இலக்கியத் தொகுப்புகள்.

பிரபாசந்திரர் : கி. பி. 9வது நூற்றாண்டில் வாழ்ந்த சமண சமய தர்க்கவாதி.

பிரபாகர மீமாம்சம் : கி. பி. 7வது நூற்றாண்டில் வாழ்ந்தவர் பிரபாகரர். மீமாம்சம்எனும் தத்துவவியல் கொள்கையை பரப்பியவர்.

பிரக்ஞபாரமிதா சூத்ரம் : மகாயான புத்தமத சூத்ரங்களில் ஒன்று.

பிரக்ஞ – ப்ரதீபா : பாவவிவேகர் என்பார் எழுதியது. மாத்யமக புத்த தத்துவம் பற்றியது.

பிரகரண – பஞ்சிகம் : சாலிகநாதர் எழுதியது. பிரபாகரரின் கருத்துகளுக்கு முக்கிய விளக்க நூல்.

பிரமாண சமுக்காயம் : திக்நாகர் எழுதியது. புத்தமத தர்க்கவியல் பற்றிய அடிப்படை நூல்.

பிரமாண – வார்த்திகா : தர்மகீர்த்தி எழுதியது.

பிரசன்ன – பாதா : சந்திரகீர்த்தி எழுதியது. மாத்யமிக காரிகை பற்றிய முக்கியமான விளக்க நூல்களில் ஒன்று.

பதார்த்த – தர்ம – சங்கிரகம் : கி. பி. 5வது நூற்றாண்டில் வாழ்ந்த பிரசஸ்தபாதா என்பவர் எழுதியது.

புரந்தரர் : லோகாயத தத்துவவாதி. (பொருள்முதல்வாதி)

பூர்வங்கள் : தொடக்க கால சமணர்களின் புனித இலக்கியம்.

ரகுநாத சிரோமணி : கங்கேசரின் தத்துவங்களை விமர்சித்தவர். 16வது நூற்றாண்டினர்.

ராஜசேகர சூரி : சமண சமய தத்துவ ஆசிரியர். கி. பி. 1340ல் வாழ்ந்தவர்.

ராமாயணம் : இந்தியாவின் புகழ்பெற்ற இரண்டு இதிகாசங்களில் ஒன்று. கி. மு. 3வது நூற்றாண்டில் உருவானது.
இப்போது நாம் பார்க்கின்ற வடிவம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் உருவானது.

இராமானுசர் : கி. பி. 11வது நூற்றாண்டில் வாழ்ந்த விசிட்டாத்துவைதம் எனும் தத்துவத்தை நிறுவிய வைணவ சமயப் பெரியார்.
பிரம்ம சூத்திரம் பற்றி ஸ்ரீபாஷ்யம் எனும் ஆத்திக அடிப்படையிலான விளக்கங்கள் எழுதியவர்களில் மிக முக்கியமானவர்.

ராவண-பாஷ்யம்: தொடக்க கால வைசேடிகம் நூல்களில் ஒன்று.

ரமணர் : காலம் 1879-1950, அத்வைத வேதாந்தி. “உள்ளவை நாற்பது” போன்ற அத்வைத வேதாந்த நூல்களை எழுதியவர்.

ருக் வேதம் : வேத நூல்களில் மிகப்பழமையானதும் முக்கியமானதும் ஆகும். இதன் காலம் கி. மு. 1500 – 1100 ஆகும்.

ரிஜ்விமாலா : சாலிகநாதர் என்பவர் எழுதியது. பிரபாகரின் பிரஹதி என்ற நூல் பற்றிய விளக்க நூல்.

சபரர் : கி.பி. 400ல் வாழ்ந்தவர். மீமாம்சம் பற்றிய விளக்க நூல். இன்றும் நம்மிடையே உள்ள மிகப் பழமையான இந்நூலை எழுதியவர் சபரர்.

சபர பாஷ்யம் : மீமாம்சம் குறித்து விளக்க நூலை எழுதியவர் சபரர்.

சத்-தர்சன-சமுக்காயம் : இந்தியத் தத்துவங்களின் தொகுதி. ஹரிபத்ரர் எழுதியது.

சத்தர்ம-புண்டரீகம் : மகாயான பௌத்த சமய சூத்திர நூல்.

சாலிகநாதர் : கி. பி. 7 அல்லது 8-வது நூற்றாண்டை ஒட்டி வாழ்ந்தவர். பிரபாகரரின் தத்துவங்கள் பற்றி எழுதப்பட்ட
விளக்கங்களில் சாலிகநாதரின் விளக்கங்கள் புகழ் பெற்றது.

சமாதிராஜா : மகாயான பௌத்த சமய சூத்திர நூல்.

சமந்தபத்ரா : முற்காலத்திய சமண சமய தத்துவவாதி.

சாம வேதம் : நான்கு வேதங்களில் மூன்றாவது. சடங்குகளின் போது பாடப்படும் பாடல்கள் கொண்டது.
இதனை தொகுத்தவர் ஜைமினி ரிஷி.

சங்கரர் : கி. பி.788 – 820இல் வாழ்ந்த அத்வைத வேதாந்திகளில் மிக முக்கியமானவர்.
இவர் தத்வ போதம், விவேக சூடாமணி, பஜ கோவிந்தம், ஆத்ம போதம், முதலிய நூல்கள் இயற்றியவர்.
மேலும் முக்கிய பத்து உபநிடதங்களுக்கும் மற்றும் பிரம்ம சூத்திரம் ஆகியவற்றுக்கும் பாஷ்யம் (விளக்க உரை) எழுதியவர்.

சாங்கியம் : மிகப் பழமையான இந்திய தத்துவப் பிரிவுகளில் ஒன்று. சாங்கியம் இத்தத்துவத்தை நிறுவியவர்.

சாங்கிய-காரிகா : ஈஸ்வர கிருஷ்ணர் எழுதியது. சாங்கியம் பற்றி இன்றும் நம்மிடையே உள்ள மிகப் பழமையான நூல் இதுவே.

சாங்கிய-ப்ரவசன-பாஷ்யா : விஞ்ஞான பிட்சு என்பவர் எழுதியது. சாங்கிய சூத்திரம் பற்றிய விளக்க நூல்.

சாங்கிய-சூத்திரம் : மத்திய காலத்தின் இறுதிப் பகுதியில் எழுதப்பட்ட சாங்கியம் பற்றிய நூல்.

சாங்கிய-தத்துவ-கவ்முதி : வாசஸ்பதி மிஸ்ரர் எழுதியது. சாங்கிய காரிகா எனும் நூலின் விளக்க உரை நூல் இது.

சங்கபத்ரா : வசுபந்துவுக்கு பிறகு வைபாடிகம் பௌத்தப் பிரிவின் தத்துவவாதி.

சஞ்சய பெலத்திட்டா : புத்தர் காலாத்தில் வாழ்ந்த கடவுள் மறுப்புவாதி.

சாந்திதேவா : கி. பி. 7வது நூற்றாண்டில் வாழ்ந்த மகாயான புத்தவியலை பரப்பியவர்.

சாரீரக – பாஷ்யம் : சங்கரரின் பிரம்ம சூத்திரம் நூலின் பாஷ்யத்திற்கு விரிவான விளக்க நூல்.

சர்வ-தர்சன-சங்கிரகம் : மாதவர் எழுதிய இந்திய தத்துவவியல்கள் பற்றிய மிகப் புகழ் பெற்ற தொகுப்பு.

சர்வாஸ்தி-வாதம் : “எல்லாமும் எப்போதும் உயிருடன் உள்ளது” என்ற புத்தவியல் கருத்தியல் கொள்கையை விளக்கும் நூல்.

சௌத்திராந்திகம் : புத்தமத தத்துவவியல் மற்றும் கருத்தியல் கொள்கைகளை விளக்கும் பௌத்தப் பிரிவின் தத்துவம்.

சாயனர் : கி. பி. 14ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பேரரசில், முதலாவது புக்கா ராயன் காலத்தில் வாழ்ந்தவர்.
நான்கு வேதங்களைப் பற்றி விரிவான விளக்க நூல்கள் எழுதியவர். இன்று நாம் படிப்பது இவரது வேத விளக்க நூல்களே.

சித்தசேனர் : தொடக்ககால சமண சமய தத்துவவாதி.

சிக்ஷா சமுக்காயம் : சாந்தி தேவர் எழுதிய மகாயான பௌத்த சமயத்தை பரப்ப உதவிய கவிதை நூல்.

சுலோக வார்த்திகா : குமரிலபட்டர் எழுதிய முக்கிய தத்துவவியல் நூல்.

ஸ்புதார்த்த-அபிதம்ம-கோசாம்-வியாக்யா : யசோமித்ரர் எழுதியது. அபிதம்ம கோசம் பற்றிய விளக்க நூல்.

ஸ்தவீரவாதிகள் : புத்தவியல் கருத்தியலை பின்பற்றிய மிகப்பழமையான தொண்டர்கள்.

சுவேதாம்பரர் : சமண சமயத்தின் ஒரு பெரும் பிரிவினர்.

ஸ்ரீகந்தா : பிரம்ம சூத்திரம் எனும் வேதாந்த நூலுக்கு விளக்கம் எழுதியவர்.

சூன்யவாதம் : மாத்யமிக புத்தவியலாளர்களின் தத்துவக்கொள்கை. அதாவது “ உண்மை என்பது வெற்றிடமே “.

சுரேஷ்வரர் : ஆதிசங்கரரின் காலத்தில் வாழ்ந்தவர். சங்கரரின் சீடர்.
சங்கர அத்வைத வேதாந்திகளில் வேதாந்தங்களைப் பற்றி விளக்கம் எழுதியவர்களில் முதன்மையானவர்.

சுத்த பீடகம் : தொடக்க கால புத்த நெறிமுறை இலக்கியத் தொகுப்புகள் அடங்கிய மூன்று நூல்களில் ஒன்று.

தந்திர-வார்த்திகா : மீமாம்ச தத்துவம் பற்றி குமரிலபட்டர் எழுதியது.

தர்க்க-ரகஸ்ய-தீபிகா : சத்-தர்சண-சமுக்காயம் எனும் நூல் பற்றி குணரத்ணா என்பவர் எழுதிய விளக்க நூல்.

தர்க்க-சங்கிரஹா : அன்னம பட்டர் என்பவர் நியாய-வைசேஷிகம் தத்துவம் பற்றி எழுதிய பிரபலமான நூல்.

தத்துவார்த்த அதிகாம சூத்திரம் : உமாஸ்வாதி எழுதியது. சமண சமயம் பற்றி தொடக்க காலத்தில் எழுதப்பட்ட முறையான விளக்க நூல்.

தத்துவ சிந்தாமணி : கங்கேசர் எழுதியது. புதிய நியாயா தத்துவத்தின் மூல நூல்.

தத்துவ சங்கிரகம் : சந்திராக்சிதா என்பவர் எழுதிய புத்த தத்துவ நூல்.

தத்துவ வைசாரதி : வாசஸ்பதி மிஸ்ரர் என்பவர் பிரம்ம சூத்திரம் எனும் வேதாந்த நூலுக்கு எழுதிய விரிவான விளக்க நூல்.

தத்வோபப்ளவசிம்மம் : ஜெயராசி பட்டர் எழுதிய நூல். யதார்த்த நிலை மீது ஏற்படும் தீவிர சந்தேகம் பற்றிய நூல்.
பொருள்வாதிகள் எழுதியதாக தவறாக கருதப்படுவது இந்நூல்.

துப்திகா : குமாரில பட்டர் எழுதிய மீமாம்ச தத்துவ நூல்.

உதயணா : கி. பி. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நியாய – வைவேஷிக தத்துவத்தின் பழைய வடிவம் பற்றி போதித்தவர்களில் இறுதியானவர்.

உத்யோதகாரர் : வாத்ஸ்யாயனர் எழுதிய நியாய சூத்ரம் எனும் நூலுக்கு விளக்கம் எழுதியவர். கி. பி. 6 அல்லது 7வது நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

உபநிஷத்துக்கள் : நான்கு வேதங்களின் இறுதியில் வரும் இறையியல் அல்லது மெய்யியல் தொடர்பான தத்துவ நூல்கள்
என்பதால் இதனை வேதாந்தம் என்றும் உத்தர மீமாம்சம் என்றும் அழைப்பர். இவைகள் பிரம்மத்தை பற்றியும், பிரபஞ்சம் பற்றியும்,
பிரபஞ்சம் மித்யா எனும் நிலையாமை என்றும், சீவ-பிரம்ம ஐக்கிய தத்துவத்தையும் வலியுறுத்தும் நூல்கள்.
ஆதிசங்கரர் பத்து முதன்மையான உபநிஷத்துகளுக்கு பாஷ்யம் (விளக்கம்) எழுதியுள்ளார்.
சங்கரருக்குப் பின் வந்தவர்களில் இராமானுசர் மற்றும் மத்வர் ஆகியோர் பாஷ்யம் எழுதியுள்ளனர்.

உமாஸ்வாதி : கி. பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சமண சமயத்திற்கு தொடக்க காலத்தில் முறையான வடிவம் கொடுத்தவர்.

வாசஸ்பதி மிஸ்ரர் : கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சாங்கியம், யோகம், நியாயம், மீமாம்சம், அத்வைத
வேதாந்தம் போன்ற பலதரப்பட்ட தத்துவங்களுக்கு இவர் எழுதிய விளக்கங்கள் மிக முக்கியமானவை.

வைபாடிகம் : புத்தவியல் கருத்தியல் அடங்கிய நூல்.

வைசேஷிகம் : பட்டறிவின் அடிப்படையிலான உள்ளமைவியல் குறித்த இந்தியத் தத்துவம்.

வைசேசிக சூத்ரம் : வைசேசிக தத்துவத்தின் நிறுவனரான கணாதர் என்பவரால் எழுதப்பட்ட வைசேசிக தத்துவத்தின் அடிப்படை நூல்.

வல்லபர் : 15வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். பிரம்ம சூத்திரத்திற்கு ஆத்திக அடிப்படையில் விளக்கம் அளித்தவர்.

வாசுதேவ சார்வபா உமா : கி. பி. 15 மற்றும் 16வது நூற்றாண்டிற்கு இடைப்பட்டவர்.
நவ நியாயம் எனும் தத்துவத்தை வங்காளத்தில் அறிமுகம் செய்தவர்.

வசுபந்து : கி. பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பௌத்த அறிஞர். சௌத்திராந்திக யோகசாரம் எனும் பௌத்த தத்துவத்தை நிறுவியவர்.

வாத்ஸ்யாயணர் : கி. பி. 4-வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் எழுதிய பழமையான நியாய சூத்திரம் எனும் நூல் இன்னும் நம்மிடையே உள்ளது.

வேதம் : இந்துசமயத்தின் புனித நூல். மிக விரிவான இலக்கியத் தொகுப்பு. இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் மிகப்பழமையானது.
இதனை ருக் வேதம், யசுர்வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் என்று நான்காக தொகுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வேதத்தின் இறுதியில் அமைந்துள்ள பகுதிகளுக்கு வேதாந்தம் அல்லது உபநிசத்துக்கள் என்பர்.

வேதாந்தம் : வேதத்தின் இறுதிப் பகுதியில் அமைந்துள்ளதால் இதனை உத்தர மீமாம்சம் என்பர்.

வேதாந்த சூத்திரம் : இதனையே பிரம்ம சூத்திரம் என்றும் பிட்சு சூத்திரம் என்றும் அழைப்பர்.

வேதாந்த சாரம் (நூல்) : 18-வது நூற்றாண்டில் வாழ்ந்த சதானந்தர் என்பவர் உபநிடதங்களின் சாரத்தை இந்நூலில் எளிமையாக விளக்கியுள்ளார்.

விபாசா : இதனையே அபிதம்ம விபாசம் என்பர்.

விதி-விவேகா : மந்தன மிஸ்ரர் எழுதியது. பாட்ட மீமாம்சம் பற்றிய நூல்.

வித்யானந்தா : சமண சமய தர்க்கவியல்வாதி.

வித்யாரண்யர் : விசயநகரப் பேரரசு தோண்றக் காராணமானவர். உபநிடதங்களின் தெளிவுரையாக இவர் எழுதிய
பஞ்ச தசீ எனும் அத்வைத வேதாந்த விளக்க நூல் மிகவும் பிரபலமானது.
மேலும் சிருங்கேரி மடாதிபதியாகவும் திகழ்ந்தவர். சிறந்த அத்வைத வேதாந்தி

விஞ்ஞான பிட்சு : கி. பி. 16வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். சாங்கிய தத்துவத்தை பின்பற்றிய ஆன்மிகவாதி.

விஞ்ஞான-வாதம் : அகநிலைக் கருத்துக் கொள்கை. புத்தவியலின் யோககார கருத்தியலின் தத்துவக் கொள்கை.

விஞ்ஞாப்திமாத்ரா சித்தி : வசுபந்து எழுதியது. விஞ்ஞான வாதத்திற்கு ஆதரவான தத்துவக் கொள்கை கொண்ட நூல்.

வினய பீடகம் : தொடக்க கால புத்த சமய மூன்று நூல்களில் ஒன்று. புத்த துறவற நெறிகள் விளக்குவது.

விசிட்டாத்துவைதம் : முழுமுதற் கொள்கை. இராமானுஜரின் வேதாந்த கருத்தியலின் தத்துவப் பார்வை கொண்டது.

விருத்திகாரர் : மீமாம்ச சூத்திரம் பற்றி தொடக்க காலத்தில் விளக்கியவர்களில் ஒருவர் எனச் சபரர் சுட்டுகிறார்.

விவேகசூடாமணி (நூல்): ஆதிசங்கரர் எழுதியது.

யோகா சூத்ரம் : மனிதனுக்கும் அப்பாற்பட்ட சக்திகளை அடைய மேற்கொள்ளப்படும் ஒரு பண்டைய பயிற்சி முறை.
பதஞ்சலி முனிவர் இதனை அறிமுகப்படுத்தியவர்.

யோககார : மைத்ரேயநாதர் மற்றும் அசங்கர் ஆகியோர் நிறுவிய மகாயான புத்த தத்துவ கருத்தியல் எண்ணங்களே
உண்மை என்பது இவர்கள் கொள்கை.

யோககார-பூமி-சாஸ்த்ரா : அசங்கர் எழுதியது. யோககார புத்தவியல் பற்றிய அடிப்படை நூல்.

பதஞ்சலி யோக சூத்திரம் : பதஞ்சலி முனிவர் இத்தத்துவத்திற்கு ஆசிரியர். இவரின் பதஞ்சலியோக சூத்திரம் எனும் நூல் உலகளவில் பெருமை பெற்றது.

யாக்யவல்க்கியர் : உபநிடதங்கள் பற்றி போதித்த முக்கிய தத்துவவாதி. இவரது மனைவி மைத்ரேயி கூட ஒரு வேதாந்தி ஆவர்.

யாக்ஞயவல்கிய ஸ்மிருதி : கி. மு. 100க்கும் 300வது ஆண்டுகளுக்கு இடைப்பட்டது.

யசுர்வேதம் : பண்டைய நான்கு வேதங்களில் மூன்றாவதாகும். வேத சடங்குகள் பற்றிய விளக்க நூல். இதனை தொகுத்தவர் வைசம்பாயனர்.

யசோமித்ரா : வசுபந்துவின் அபிதம்ம கோசம் நூலுக்கான விளக்க நூல் எழுதியவர்.

யசோவிஜயா : சமண சமய தர்க்கவியல்வாதி.

—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ராமானுஜ சதுஸ்லோகி–

July 17, 2020

ஸ்ரீ ராமானுஜ சதுஸ்லோகி –

ஸ்ரீ ஸ்வாமி இராமானுசர் மீது அளவுகடந்த பக்தி கொண்டவர் ஶ்ரீஅனந்தாழ்வான்.
இவர், கர்நாடகத்தின் மாண்டியா மாவட்டத்தில் சிறுப்புத்தூர் (இன்றைய கிரங்கனூர் -மேல்கோட்டை அருகில்) எனும்
அழகிய சிற்றூரில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அனந்தன் என்னும் இயற்பெயரில் பிறந்தவர்.

தனியன் –

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்|
ஆச்ரிதாநாம் ஸுஸரணம் வந்தே அநந்தார்ய தேசிகம்||

ஶ்ரீமத்ராமாநுஜாசார்ய ஶ்ரீபாதாம் போருஹத்வயம்|
ஸதுத்தமாங்க ஸந்தார்யம் அனந்தார்யமஹம் பஜே||

சக்ரே கோதா சதுஸ்லோகீம் யோ வேதார்த்த பிரகர்ப்பிதம்
ஸ்ரீ வேங்கடேச சத்பக்தம் தம நந்தகுரும் பஜே-

வேதப் பொருள்களைத் தன்னுள் கொண்ட “கோதா சதுஸ்லோகி” என்னும் துதியை அருளிச் செய்த
குருவாகிய திருமலை அனந்தாண்பிள்ளையைப் போற்றித் தொழுகிறேன்-

———————————————————————

அநிஶம் பஜதாம் அநந்ய பாஜாம் சரணாம் போருஹ மாதரேண பும்ஸாம் |
விதரந் நியதம் விபூதி மிஷ்டாம் ஜய ராமானுஜ ரங்க தாம்நி நித்யம் –ஸ்லோகம் -1-

ஶ்ரீ உடையவரே! தேவரீர் திருவடிகளைப் பற்றி வேறு புகல் இல்லாத அடியவர்களுக்கு
கேட்ட விபூதியை அளித்துக் கொண்டு
திருவரங்கம் பெரிய கோயிலிலே விஜய ஸ்ரீ யாக விளங்கக் கடவீர் விஷயீ பவ ஸ்ரீ ராமாநுஜ!

——————————————————————————————–

புவி நோ விமதாம்ஸ் த்வதீய ஸூக்தி:
குலிஷீ பூய குத்ருஷ்டி பிஸ் ஸமேதாந் |
ஷகலீ குருதே விபக்ஷ்வி தீட்யா
ஜய ராமாநுஜ ஷேஷ ஷைல ஸ்ருங்கே ||–ஸ்லோகம் -2-

அப்பனுக்கு சங்காழி அளித்தவரே!) தேவரீருடைய ஸ்ரீ ஸூக்திகள் வஜ்ராயுதம் போலே குத்ருஷ்டிகள் போன்ற
எதிரிகளை பொடி படுத்த “வேதாந்த சங்க்ரஹம்” தேவரீர் அருளிச் செய்ததால் தேவரீர் திருவேங்கடமா மலையுச்சியில்
பல்லாண்டுகள் வெற்றித் திருமகளோடு விளங்குவீராக!
விஜயீபவ ஸ்ரீ ராமாநுஜ!

——————————————————————————————–

ஸ்ருதி ஷூ ஸ்ம்ருதி ஷூ பரமான தத்வம்
க்ருபயா லோக்ய விஷுத்தயா ஹி புத்த்யா |
அக்ருதாஸ் ஸ்வத ஏவ ஹி பாஷ்ய ரத்னம்
ஜய ராமாநுஜ ஹஸ்தி தாம்நி நித்யம் ||–ஸ்லோகம் -3–

ஶ்ரீபாஷ்யகாரரே! யதிராசரே! நிர்ஹேதுக கருணையினாலே ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலுள்ள பிரமாணங்களின்
உண்மையை குற்றமற்ற மதியினாலே நடுநிலையாக ஆராய்ந்து ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்தீர். அவ்வாறான தேவரீர்!
ஸ்ரீ ஹஸ்திகிரியில் வெற்றியுடன் “நித்யஸ்ரீ” யாக விளங்க வேணும்
ஜய விஜயீ பவ ஸ்ரீ ராமாநுஜ!

———————————————————————————————
ஜய மாயி மதாந்தகார பாநோ
ஜய பாஹ்ய பிரமுகாடவீ க்ருஷா நோ |
ஜய ஸம்ஷ்ரித ஸிந்து ஷீத பாநோ
ஜய ராமாநுஜ யாதவாத்ரி ஷ்ருங்கே ||––ஸ்லோகம் –4-

ஆதிசேஷ அவதாரமான லக்ஷ்மண முநியே!) மாயாவாதிகளின் மதமாகிற இருளுக்கு சூரியன் போன்றவரே!
பாஹ்ய குத்ருஷ்டிகளாகிற காட்டிற்கு நெருப்புப் போன்றவரே! உமது அடியார்களாகிற கடலைப் பூரிக்கச் செய்யும் சந்திரனாயிருப்பவரே!
யதிராசரே! திருநாராயணபுரமாகிய (ஶ்ரீபலராமன் ஆண்ட) யாதவாத்ரியில் நித்யஸ்ரீ யை வளரச் செய்து
நீடுழி விளங்க வேணும். ஜய விஜயீ பவ ராமாநுஜ!

———————————————————————————————–

ராமாநுஜ சது: ஷ்லோகீம் ய: படேந் நியத: ஸதா |
ப்ராப் நுயாத் பரமாம் பக்திம் யதிராஜ பதாப்ஜயோ ||

பல ஸ்ருதி:− இந்த ஸ்ரீ ராமானுஜ சதுஸ்லோகியை எப்போதும் பாராயணம் செய்பவர்க்கு
ஸ்ரீ யதிராசருடைய திருவடிகளில் பரம பக்தி உண்டாகும்
மேன்மேலும் பக்தி வளரப் பெறுவார்
ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் என்பதால் தக்க பலம் அடைவர் –

————————————————————————————————

ஸ்ரீ அநந்தார்யா மஹா குரவே நம–

——————————————————————————————–————————————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அனந்தாழ்வான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –