Archive for the ‘Acharyarkall’ Category

ஸ்ரீ ஆழ்வார் திரு நகரி -ஸ்ரீ மத் ஆத்தான் திருமாளிகை -வைபவம் –

November 21, 2020

ஸ்ரீ வைகுண்டேது பரேலோகே ஸ்ரீஸஹாயோ ஜனார்த்தன: |
உபாப்யாம் பூமி நீளாப்யாம் ஸேவித : பரமேஸ்வர: ||

ஸ்ரீய: பதியான ஸர்வேஸ்வரன், ஸம்ஸாரிகளை உஜ்ஜீவிக்கும் பொருட்டு, இப்பாரத தேசமெங்கும் பல்லாயிரக்கணக்கான
ஊர்களிலே கோயில் கொண்டுள்ளான். இவற்றில் விசேஷமானவை, ஸ்ரீ ஆழ்வார்களாலே பாடப்பெற்ற திவ்ய தேசிங்களாகும்.
நூற்று எட்டு திருப்பதிகள் எனப்படும் இவற்றில் விசேஷமானவை கோவில், திருமலை, பெருமாள் கோவில் எனப்படும் மூன்றும் ஆகும்.
எல்லாவற்றிலும் ப்ரதானம் “கோவில்” எனப்படும் ஸ்ரீரங்கமே ஆகும்.
ஸ்ரீரங்கம் தான் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் ராஜதானி(தலைநகரம்) ஆகும்.
ஆகையால் தான் “ஸ்ரீமந் ஸ்ரீரங்க ச்ரியம் அநுபத்ராவ மநுதினம் ஸம்வர்த்தய” என்று தினமும் அநுஸந்திக்கிறோம்”.
ஸ்ரீ திருவரங்கம் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்” என்று அங்கிருந்து கொண்டு தான்
நம் ஆசார்யர்கள் நம் ஸம்ப்ரதாயத்தை வளர்த்து வந்தார்கள்.

ஸ்ரீ சதுஸ் ஸப்ததி ஸிம்ஹாஸநாதிபதிகள்

ஓராண் வழியாக வந்த குருபரம்பரையின் நடுநாயகரத்னமான ஸ்ரீஉடையவர் (ராமாநுஜர்)
ஒரு ஸமயம் ஸ்ரீ வீரநாராயணபுரம் எழுந்தருளினார்.
அங்குள்ள பெரிய ஏரியின் 74 மதகுகள் வழியாகப் பாயும் நீரானது, சுற்றியுள்ள அத்தனை ப்ரதேசங்களையும்
வளங்கொழிக்கச் செய்வதை பார்த்தார்.
“நம் ஸம்ப்ரதாயமும் இதே போல் செழித்தோங்கிப் பெருகி ஜனங்களை வாழ்விக்க வேணும்” என்று திருவுள்ளம் பற்றினார்.
ஆயிரக்கணக்கான தம் சிஷ்யர்களிலே 74 பேரைத் தேர்ந்தெடுத்தருளி
“பாருலகில் ஆசையுடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறும்” என்று உலகோர்க்குப் பஞ்ச ஸம்ஸ்கார பூர்வகமாக
ஹிதத்தை உபதேசிக்கும்படி நியமித்தருளினார். இவர்களே சதுஸ் ஸப்ததி ஸிம்ஹாஸநாதிபதிகள் எனப்படுவர்.
இந்த ஆசார்யர்களின் திரு வம்சத்தவர்களே “ஸ்ரீ ஆசார்ய புருஷர்கள்” என்று அழைக்கப் படுகின்றனர்.

ஸ்ரீ முடும்பை நம்பி

ஸ்ரீ காஞ்சிபுரத்துகருகில் ஸ்ரீ முடும்பை என்னும் அக்ரஹாரத்தில் ஸ்ரீவத்ஸ கோத்ரத்தில் அவதரித்தவர் ஸ்ரீ வரதாசாரியர் என்பவர்.
இவர் பால்யத்திலிருந்தே மஹா ஞானியாகவும், ஆழ்வார்கள் அருளிச் செயல்களில் ஆழ்ந்த ஞானமும் ஈடுபாடும் உடையவராகவும்,
ப்ரஸித்தமான பண்டிதராகவும், உதாரராகவும், வாத்ஸல்ய பரிபூர்ணராயும், தோஷமற்றவராகவும் இருந்தார்.
அத்தோடு அவர் ஸ்ரீ ராமாநுஜரின் பஹ்னீபதியும்(ஸஹோதரியின் பர்த்தா) ஆவார்.
தேஹ ஸம்பந்தத்தோடு, மட்டுமல்லாது ஆத்ம ஸம்பந்தமும் வேணுமென்று ஸ்ரீ உடையவர் திருவடிகளில் ஆச்ரயித்தவர்.
ஸ்ரீ யதிராஜரின் திருவடித் தாமரைகளிலேயே சுற்றி வரும் வண்டு போன்றவர்.
ஸ்ரீ கூரத்தாழ்வானின் ப்ரியத்துக்குப் பாத்ரமானவர். கெளரவம் தோற்ற “ ஸ்ரீ முடும்பை நம்பி” என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டார்.
இவற்றை

“ஸ்ரீ ராமாநுஜ ஸம்ய தீந்த்ர சரணம் ஸ்ரீவத்ஸ சிஹ்ன ப்ரியம்,
ஸேவேஹம் வரதார்ய நாம கமமும் ஸூக்த்யா ப்ரஸித்தம் முதா |
பால்யாத் பரிபூர்ண போத சடஜித் காதாநுரா கோஜ்வலம்,
வாத்ஸ்யம் பூர்ண முதாரம் ஆச்ரித நிதிம் வாத்ஸல்ய ரத்னாகரம் ||

ஸ்ரீ ராமாநுஜ யோகீந்த்ர பத பங்கஜ ஷட் பதம் |
ஸ்ரீ முடும்பை பூர்ணமநகம் வந்தே வரத ஸம்க்ஞகம் ||”–என்று இவரது தனியன்களிலிருந்து அறியலாம்.

74 ஸிம்ஹாஸநாதிபதிகளில் ஸ்ரீ முடும்பை நம்பியும் ஒருவராவார்.
இவர் குமாரர் ஸ்ரீ ராமாநுஜ நம்பி.
ஸ்ரீ முதலியாண்டான் போலே ஸ்ரீ எம்பெருமானார்க்கு ஸ்ரீ ராமாநுஜ நம்பியும் பாகிநேயர் (மருமான்) ஆவார். இவர் தனியன்

“பாஷ்யக்ருத் பாகிநேயோசஸெள பவசந்தாப சாந்தயே |
வரதார்யாத் மஜோஸ்மாகம் பூயாத் ராமாநுஜாஹ்வய: ||”

இவர் குமாரர் ஸ்ரீ முடும்பையாண்டான் (தாசரதி). இவர் முடும்பையிலிருந்து ஸ்ரீரங்கத்துக்குக் குடி பெயர்ந்தருளினார்
என்பதை “ஸ்ரீரங்க வாஸ ப்ரியம்” என்ற இவர் தனியனிலிருந்து அறியலாம்.
இவர் குமாரர் ஸ்ரீ தேவப்பெருமள் என்னும் ஸ்ரீ வரதார்யர்.
இவர் குமாரர் ஸ்ரீ இளையாழ்வார் என்னும் ஸ்ரீ லக்ஷ்மணாசாரியார்.

ஸ்ரீ இளையாழ்வாரின் குமாரர்களில் ஒருவர் ஸ்ரீ க்ருஷ்ணபாத குரு. இவர் ஸ்ரீ நம்பிள்ளையின் கால க்ஷேப கோஷ்டியில்
ப்ரதம ச்ரோதாக்களாயிருந்த இரு ஸ்ரீ க்ருஷ்ணமாசாரியர்களில் ஒருவர். “ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை” என்றே ப்ரஸித்தர்.
“இந்த நாடறிய மாறன் மறைப் பொருளை நன்குரைத்த” ஸ்ரீ ஈடு முப்பதாறாயிரப்படியை ப்ரஸாதித்தவர்.
ஸ்ரீ திருவாய்மொழியைக் காத்த குணவாளர். “ஸ்ரீ ஆசார்ய ஸம்மதி” என்ற க்ரந்தமும் அருளிச் செய்தார்.
இவரது குமாரர்கள் இருவர் ஜ்யேஷ்டர் ஸ்ரீ பிள்ளை லோகாசாரியார்.
ஸுப்ரஸித்தி பெற்ற அஷ்டாதச ரஹஸ்யங்களை அருளிச் செய்து ப்ரமாணங்களைக் காத்ததோடு,
துருஷ்கக் கலாபத்தில் ஸ்ரீ நம்பெருமாளை ஸ்ரீரங்கத்தினின்றும் எழுந்தருளப் பண்ணி, ப்ரமேயத்தையும் காத்தருளினவர்.
அவர் திருத் தம்பியார் ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். திருப்பாவை ஆறாயிரப்படி, திருவிருத்தம் ஆறாயிரப்படி,
திருப்பல்லாண்டு வ்யாக்யாந்ங்கள், ஆசார்யஹ்ருதயம், அருளிச் செய்தவர்.
இவ்விருவரும் நைஷ்டிக ப்ரம்மசாரிகளாயிருந்து விட்டனர்.

ஸ்ரீ இளையாழ்வாரின் மற்றொரு குமாரர் ஸ்ரீ வரதாசாரியார்.
இவர் குமாரர் ஸ்ரீ ராமாநுஜகுரு.
இவர் குமாரர் ஸ்ரீ அழகப்பங்கார்.
இவர் குமாரர் பேரருளாள ஸ்வாமி (ஸ்ரீ தேவராஜ குரு).
இவர் குமாரர் ஸ்ரீ ராமாநுஜம் பிள்ளை.

ஸ்ரீ மணவாளமாமுனி ஸம்பந்தம்

ஸ்ரீ நம்பெருமாள் நியமனப்படி கோயில் ஸ்ரீ பெரிய திரு மண்டபத்திலே, ஸ்ரீ நம்பெருமாள் திருமுன்பே
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி காலஷேபம் செய்து “ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப் பெருக்கர்” என்ற அபிதானத்தையும்,
“ஸ்ரீசைலேசதயாபாத்ரம்” தனியனையும் அடைந்த ஸ்ரீமந்மணவாள மாமுனிகளின் காலஷேப கோஷ்டி மிகவும் ப்ரஸித்தமாக இருந்தது.
விசதவாக் சிகாமணியான அவருடைய கோஷ்டியில் அந்வயித்த முதலிகளில் ஸ்ரீ ராமாநுஜம் பிள்ளையும் ஒருவர்.
ஸ்ரீ ராமாநுஜம் பிள்ளையும், ஸ்ரீ மா முனிக்குப் பாத ரேகை ஸ்தானத்தராயிருந்த ஸ்ரீ ராமாநுஜ ஜீயரும்(ஸ்ரீ வானமாமலை)
ஒருவருக்கு ஒருவர் அத்யந்த ப்ரியதமரா யிருந்தனர்.
“நமக்குண்டான அதிசயங்கள் எல்லாம் இவர்க்கும்(ஸ்ரீ வானமாமலை ஜீயருக்கும்) உண்டாக வேணும்” என்ற
ஸ்ரீ மாமுனிகள் நியமனத்தை “வேலேவ ஸாகரம்” போலே அதிக்ரமியாது ஸ்ரீ வானமாமலை ஜீயருக்கு ப்ரிய ஸுஹ்ருத்தாக
ஸ்ரீ ராமாநுஜம் பிள்ளை இருந்தார். அவரிடம் பகவத் விஷய காலஷேபமும் பண்ணினார்.

ஸ்ரீ பெரிய ஜீயர் பரமபதம் அடைதல்

ஸ்ரீ பெரிய ஜீயருக்கு வார்த்திகத்தோடு நோயும் வந்து அநுவர்த்திக்க,
“நோயே மூப்பு பிறப்பு இறப்பு பிணியே என்றிவையொழியக் கூயேகொள் அடியேனை” என்று
“அந்தோ! எதிராசா நோய்களால் என்னை நலுக்காமல், சதிராக நிந் திருத் தாள் தா” என்று தமதார்த்தியெல்லாம் தோற்றக்
கூப்பிட்டு சரிராவஸநாஸமயம் வந்தவாறே தம்மை ஆச்ரயித்திருந்த முதலிகள் பலரையும் ஓரோர் திவ்ய தேசங்களுக்கு சென்று
ஸ்ரீ எம்பெருமான் கைங்கர்யங்களை நடத்தி வரும்படி நியமித்தருளினார்.
ஸ்வ தேசமான ஸ்ரீ திருநகரியில் ஸ்வாமி ஆழ்வார் திருவடிகளிலே திருவுள்ளம் குடிபோய்
“ஸ்வாமி ஆழ்வார் கைங்கர்யங்களைக் குறைவின்றிச் செய்யவல்லார் ஆர்” என ஆராய்ந்து,
ஸ்ரீ ராமாநுஜம் பிள்ளையும் அவர் குமாரர் ஆத்தானை (ஸ்ரீ வரதாசாரியாரை)யும் அழைத்து தாம் ஆதரத்துடன் ஆராதனம் செய்து
போந்த ஸ்ரீ பேரருளாளனையும், அருளி, “நீங்கள் திருநகரி சென்று ஸ்ரீ ஆதிப்பிரானையும் ஸ்ரீசடகோபரையும் நமக்காகத்
துஞ்சும் போதும் விடாது அநுவர்த்தித்துத் திருவாய்மொழியையும் வளர்த்துக் கொண்டு போருங்கோள்” என்று நியமித்தார்.
ஸ்ரீ ஜீயர் திருநாடலங்கரித் தருளினவாறே முதலிகளெல்லோரும் ஸ்ரீ சூர்ண பரிபாலநந் தொடங்கி
இயல் சாத்து வரை எல்லாக் கைங்கர்யங்களையும் ஸம்ப்ரமமாக நடத்தினார்கள்.

ஸ்ரீ ராமாநுஜம் பிள்ளை திருநகரி எழுந்தருள்தல்

ஸ்ரீ பெரிய ஜீயரின் பரமபத ப்ராப்தியாலும், வானமாமலை ஜீயரும் (பத்ரிகாச்ரம யாத்திரை) அருகிலில்லாமையாலும்,
போர க்லேசத்தோடே எழுந்தருளியிருந்த ஸ்ரீ ராமாநுஜம் பிள்ளைக்கு ஓரிரவில் ஸ்ரீ ஸ்வாமி ஆழ்வார்
“உடனே திருநகரி யேற வந்து சேரும்படி” ஸ்வப்ன முகேந நியமித்தருளினார்.
ஸ்ரீ மாமுனிகள் நியமனமும், மகிழ் மாறன் நியமனமும் பிள்ளையைத் தெளிவிக்கத் தெளிந்து ஹ்ருஷ்டராய்,
ஸ்ரீ நம்பெருமாளிடம் விடை கொண்டு, ஸ்ரீ கோயிலிலுள்ள தம் ஸகல ஐஸ்வர்யங்களையும் அங்கேயே விட்டு,
“ஸ புத்ர பெளத்ரஸ் ஸ கண:” என்றபடி குடும்பத்துடனும் சிஷ்யர்களுடனும் திருநகரி நோக்கி விடை கொண்டார்.
இதறிந்த வழியிலுள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் பலரும், “லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந:” என்றாற்போலே
ஸ்ரீ ஆழ்வார் கைங்கரிய ஸ்ரீயோடு எழுந்தருளும் உத்தமமாம் முடும்பைக் குலம் உதித்த பிரானை
ஆதரித்தும் ஸேவித்தும் சிஷ்யர்களாகியும் பின் தொடர்ந்தனர். இப்படி மஹா வைபவத்தோடே திருநகரியை அடைந்து
திருப் பொருநலில் திருச் சங்கணித் துறையில் நீராடி, ஸ்வாமி ஆழ்வாரும் போரத் திருவுள்ளமுகந்து,
தமது சத்ர, சாமர. தண்ட, தீப மேள தாள வாத்ய ந்ருத்யங்களான ஸகல வரிசைகலோடு, பரிவட்டம், மாலை, தீர்த்தம்,
சுருள், சந்தனம், அபயஹஸ்தம், திருத்துழாய், புஷ்ப ப்ரஸாதங்கள் அனுப்பி எதிர் கொண்டழைத்துக் கொண்டார்.
பிள்ளையும், ஆதிப் பிரானையும், திருப்புளியின் அடியில் உறையும் ஞான தேசிகனையும் ஸேவித்து அளப்பரிய ஆனந்தமடைந்தார்.
ஸ்வாமி ஆழ்வாரையும் போர வுகந்தருளி, அர்ச்சக முகேந “ஸ்ரீ சடகோபாசாரியார்” என்று அருளிப் பாடிட்டு
“நம் கோவில் பரிகரமனைத்துக் கொத்தும் நிர்வஹித்து வாரும்” என்று நியமித்தருளி நித்யம் ஸாய ரக்ஷை
நித்யாநுஸந்தான காலத்தில் (ஸ்வாமி ஆழ்வார்) தாம் அமுது செய்தருளுகிற ப்ரஸாதம், நெய், கீரையமுது,
உப்புச் சாற்றமுது ஆகிய தளிகை ப்ரஸாதத்தையும் பிள்ளைக்கு பஹுமானமாகத் தந்தருளினார்.
அது முதல் ஸ்ரீ ராமானுஜம் பிள்ளையும் “ஸ்ரீ சடகோபாசாரியார்” என்ற தன்னேற்ற அருளிப் பாட்டையும்
“ஸ்ரீ கோவில் பரிகரமனைத்துக் கொத்தும்” என்ற கொத்தருளிப் பாட்டையும் பெற்றார்.

ஸ்ரீ திருநகரியில் நித்ய வாஸம்

“ஸ்ரீநகர்யாம் மஹா புர்யாம் தாம்ப்ரபர்ண் யுத்தரே தடே” என்கிறபடியே திருநகரியில் திருத் தாம்ப்ர பர்ணியின்
ச்லாக்யமான(சிறந்த, உயர்ந்த) கரையாகிய தெங்கரையிலே, வடக்குத் திருவீதிப் பிள்ளையின் வம்சத்தவராகையாலே
ஸ்வாமி ஆழ்வாரின் வடக்குத் திருவீதியிலே தமக்குத் திருமாளிகை அமைத்துக் கொண்டு
தம் திருவாராதனப் பெருமாள்களை ஆராதித்துக் கொண்டு வரவரமுனி திவ்யாக்ஞைப்படி
ஆதிநாதர், ஆழ்வாரின் நித்ய, பக்ஷ, மாஸ, அயந, ஸம்வத்ஸ ரோத்ஸவங்களெல்லாம் ஒன்றால் ஒன்றும் குறைவின்றி,
ஸ்ரீ கோயில் பரிகரமனைத்துக் கொத்தும் நிர்வஹித்து நடத்திவந்தார்.
ஸ்ரீ ஆழ்வார் கைங்கர்யத்தோடு, அவர் திருவுள்ளம்(மேலும்) உகக்கும்படி அவராலே தந்தை, தாயாக அடையப்பட்ட
ஸ்ரீ திருத் தொலை வில்லி மங்கலத்து எம்பெருமான்கள், திருக்குளந்தை, திருக்கோளுர் எம்பெருமான்கள்
“ஆழ்வாரை யன்றி தேவு மற்றறியாத” ஸ்ரீ மதுரகவியாழ்வார் கைங்கர்யங்களையும் நிர்வஹித்து நடத்தி வந்தார்.

ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்தவை

ஸ்ரீ ராமாநுஜம் பிள்ளை ஸ்ரீ கந்தாடை நாயனுக்கு ஸாதிக்க, ஸ்ரீ கந்தாடை நாயனும் ஸ்ரீ திருவாய்மொழிக்கு
ஸம்ஸ்க்ருத அரும்பதம் அருளிச்செய்தார். பகவத்விஷய அரும்பதத்தில் “பிள்ளை நிர்வாஹம்” என்று
சில இடங்களில் ராமாநுஜம் பிள்ளையின் நிர்வாஹங்கள் காட்டப்பட்டுள்ளன.

ஸ்ரீ ஆத்தான் ஸ்வாமி

ஸ்ரீ ராமாநுஜம் பிள்ளையின் திருக் குமாரர் ஸ்ரீ வரதாசாரியார்.
இவர் பால்யத்தில் திருத் தகப்பனாரோடு ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ மாமுனி கோஷ்டியில் அந்வயித்தவர்.
ஸ்ரீ வானமாமலை ஜீயரின் அத்யந்தப்ரிய பாத்ரராயும், அவர் திருவடிகளில் ஆரா அன்புடையவராயும் இருந்தார்.
ஜ்ஞாநாநுஷ்டாநங்களில் மிக்கும், அருளிச் செயல்களில் ஆழ்ந்த ஞானத்தோடு ஈடுபாடும் உடையவராய்,
அதி மேதாவியாய் இருந்தார். ஸ்ரீ திருநகரிக்கெழுந் தருளிய சில வருஷங்களிலேயே
ஸ்ரீ ராமாநுஜம் பிள்ளை பரமபதித்து விட்டார்.

“ஆத்தான்” என்றே ப்ரஸித்தராயிருந்த ஸ்ரீ வரதாசாரியார், ஸ்வாமி ஆழ்வார் கைங்கர்யதுரந்தரராய்,
ஸ்ரீ கோயில் பரிகரம் அனைத்துக் கொத்தும் நிர்வஹித்து, நித்ய நைமித்திக் கோத்ஸவங்களைக் குறைவின்றி நடத்தி வந்தார்.
ஸ்ரீ ஆதி நாதருக்குப் பங்குனி உத்திரத் திருக்கல்யாணோத் ஸவத்தையும் ஏற்படுத்தி பங்குனித் திருத்தேரையும் செய்து
ஸமர்ப்பித்து நடத்தி வைத்தார்.
ஸ்ரீ ஆழ்வாருக்கு நிரவதிகமான ஸம்பத் சேகரித்தும், திருப்பீதாம்பரங்கள், திருவாபரணங்கள்,
திருப்பல்லக்குகள் முதலானவை செய்து ஸமர்ப்பித்து நடத்தி வந்தார்.

ஆத்தாநிதீஹ விதிதோ வரதார்ய சர்மா |
காரீந்த்ரஸுநு க்ருதி ஸாகர பூர்ண சந்த்ர : ||–என்கிறபடியே ஸ்ரீ வரதகுருவும் “ஸ்ரீ ஆத்தான்” என்றே ப்ரஸித்தராய்,
அருளிச் செயல்களுக்கு ப்ரவசந க்ரமத்தில் அத்யந்தம் அபிவ்ருத்திகரராய் “ஸ்ரீ பகவத்விஷயம் வரதாசாரியார்” என்றே
ப்ரஸித்தராய், தர்சந நிர்வாஹமும், ஸ்ரீ ஆழ்வார் கைங்கர்ய நிர்வாஹமும் செய்து கொண்டு
மஹா ப்ரபாவத்தோடே எழுந்தருளியிருந்தார்.

இவர் அருளிச் செய்தவை

“பகவத் விஷயம் வரதாசாரியார்” என்றே நிரூபகமாம் படியிறே, பகவத் விஷயத்தில் அவகாஹநம் இருந்தபடி,
திருநகரியில் திருப்புளி யாழ்வாரடியில் ஸ்ரீ மணவாள மாமுனி திருவடிக் கீழ் பகவத் விஷயம் ஸாதித்தருளினார்.
ஸ்ரீ குன்றத்தூர் அப்பனுக்கு பகவத் விஷயம் ஸாதிக்க, அவரும் ஸ்ரீ திருவாய்மொழிக்கு, அரும் பதம் அருளிச் செய்தார்.
இவர் திருவடிகளில் ஆச்ரயித்த வேதாந்தி ஸ்ரீ ராமாநுஜ ஜீயரும் “திவ்ய ஸூரி ப்ரபாவ தீபிகை” முதலானது அருளிச் செய்தார்.

ஸ்ரீ ஞானத்ருஷ்டி அழகப்பங்கார் ஸ்வாமி

ஸ்ரீ வாநசைல முனிராஜ பதாப்ஜ ஸங்காத்
ராமாநுஜார்ய தநயஸ் ஸுதராம்பபாஸே என்றும்
“தஸ்யாபூத் தநயோ லோகவிச்ருதஸ் ஸுந்தராஹ்வய:
யதாத்மநாவதீர்ணோத்ர வாநசைலேச ஸுந்தர: ||” என்கிற படியே
ஸ்ரீ வரதார்யரிடத்திலே(ஸ்ரீ ஆத்தான் ஸ்வாமி) வானமாமலைப் பெருமாள் போர வுகந்தருளி,
அவருக்குத் தாமே திருக் குமாரராய் அவதரித்தருளினார். ஸ்ரீ ஸுந்தராசாரியார் என்ற திருநாமமுடைய இவர்
திகந்த விச்ராந்த ப்ரஸித்தி பெற்று வாழ்ந்தருளினார். இவர் ப்ரஸித்தி இருந்தபடி என் என்னில்
“யச் சிஷ்ய பாவமநவாப்ய சடாரி வேத பாவம் ப்ரபோத்துமநலம் பஹு சாஸ்த்ர வித்பி||
ஸோயம்ஹி ஸுந்தர குருர் விஜய த்வஜோ பூத் ஸித்தாந்த ஸீம்னி யதிராஜ குரோர் மஹாத்மா||

ஸகலசாஸ்த்ர நிபுணர்களான மஹாவித்வான்களும் கூட இவர் ஸம்பந்தம் பெற்றாலொழிய
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செயல் வ்யாக்யாநபோத முண்டாவது அரிது என்று நினைக்கும் படியாயும்,
ஸ்ரீ ராமாநுஜ ஸித்தாந்தத்தின் எல்லைக்கு விஜய த்வஜ பூதராயும், “ஸ்ரீ ஞாநத்ருஷ்டி அழகப்பங்கார்” என்றே
ஸகலரும் கொண்டாடும்படி மஹா ப்ரபாவமுடையவராயு மிருந்தார்.

இவர் அருளிச் செய்தவை

ஸாரார்த்த மாலை, ஈட்டுக்குப் பாட்டுத் தோறும் உபந்யாஸம், நூறு திருவாய்மொழிக்கும் உபந்யாஸம்,
பத்து பத்துக்கும் உபந்யாஸம், உபோத்கா தோபந்யாஸம், நிகமந உபந்யாஸம், ஈட்டு ப்ரமாணத் திரட்டுக்கு உரை,
திருப்பாவை தாத்பர்யம், திருப்பாவை கருத்து, திருமந்த்ர யோஜனை, த்வய யோஜனை உபந்யாஸம்,
மூவாயிரத்துக்கும் ப்ரமாணத் திரட்டு, ரஹஸ்ய த்ரய, ஸ்ரீவசந பூஷண, ஆசார்ய ஹ்ருதய ப்ரமாணத்திரட்டு
முதலானதுகள் அருளிச் செய்தார்.

இவர் அருளிச் செய்யக் கேட்டு, கேட்டபடியே அப்பு முதலானோர் அரும் பதம் அருளிச்செய்தார்.
அப்பு அரும்பதம், பிள்ளை அரும்பதம், அய்யங்கார் அரும்பதம், ராமாநுஜய்யங்கார் அரும்பதம், தொட்டை யரும்பதம்
போன்ற அரும்பதங்களும் உண்டாயின.
அப்புவும், பிள்ளையும் மூவாயிரத்துக்கும் அரும்பதங்களும்,
தத்வத்ரய, ரஹஸ்யத்ரய, ஸ்ரீவசநபூஷண, ஆசார்யஹ்ருதய அரும்பதங்களும்,
உபந்யாஸங்களும், பரந்த படிக்கும் கடின வாக்யார்த்தம், தீப ப்ரகாசிகை யரும்பதமும் அருளிச் செய்தனர்.
ஆக இப்படி ஞாநத்ருஷ்டி அழகப்பங்கார் காலம் “அரும்பதகாலம்” என்னலாம் படியிறே நடத்தி வந்தார்.

ஸ்ரீ ஞாநத்ருஷ்டி அழகப்பங்கார் குமாரர்( ஸ்ரீ பெரிய) சடகோபாசாரியார்.
இவர், திருத்தகப்பனாரிடம் கால க்ஷேபங்கள் கேட்டு அருளிச் செயல்களின் ஆழ் பொருள்களைத் தேர்ந்துரைத்தும்,
“ஸ்ரீ ஈடு ப்ராஸங்கிக ப்ரமாணத் திரட்டும்” அருளிச் செய்தார்.
ஸ்ரீ பேரருளாளரிடம் பேசும் படியான ஏற்றம் பெற்ற ஸ்ரீ திருக்கச்சி நம்பியிடம் அபார ஈடுபாடுடையவராய்
“ஸ்ரீ திருக்கச்சிநம்பி சரிதம்” முதலானது அருளிச் செய்தார்.
“ஸ்ரீ ராமாநுஜமுநேர் மான்யம்” என்று உடையவராலே மிகவும் போற்றப்பட்ட ஸ்ரீ திருக்கச்சிநம்பிக்கு திருநகரியிலே
ஸ்ரீ உடையவரின் “ஸ்ரீ ராமாநுஜ சதுர்வேதி மங்கலத்திலே” ஸந்நிதி வீதியிலே ஒரு ஸந்நிதியும் கட்டி ப்ரதிஷ்டிப்பித்து,
உடையவரை ஆனந்திப்பித்தார். அப்போதிலிருந்து ஸ்ரீ திருக்கச்சி நம்பிக்கு ஸ்வாமி ஆழ்வார் மங்களாசாஸனமும் ஏற்பட்டு நடந்து வருகின்றது.

இவர் குமாரர் ஸ்ரீ குமார சாடகோபாசாரியாருக்கு ஐந்து குமாரர்கள்.
ஜ்யேஷ்டர் ஸ்ரீ அழகப் பிரானார்க்கு ஸந்ததியில்லை.
அவர் காலத்துக்குப் பின்பு, தம்பிகள் நால்வரும்
“உலகமேத்தும் தென்னானாய், வடவானாய், குடபாலானாய், குணபாலமதயானாய்” என்றாற்போலே
நான்கு திரு மாளிகைகள் ஏற்படுத்திக் கொண்டு ஸ்வாமி ஆழ்வார் கைங்கர்யம் மற்றும் எம்பெருமான்கள்
கைங்கர்யங்களையும் முறை வைத்து நிர்வஹித்துக் கொண்டு இன்றளவும் நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீமத் ஆத்தான் கீழத்திருமாளிகை ஸ்தாபிதம்

ஸ்ரீ குமார சடகோபாசாரியாருக்கு 5 குமாரர்கள்

1-அழகப்பிரானார் – ஸந்ததியில்லை
2-சடகோபாசாரியார் – கீழத் திருமாளிகை ஸ்தாபகர்
3-ஸுந்தராசாரியார் – மேலத் திருமாளிகை ஸ்தாபகர்
4-கெளஸ்துபாசாரியார் (எ) ராமாநுஜம் பிள்ளை – வடக்குத் திருமாளிகை ஸ்தாபகர்
5-அப்பு வாசாரியார் – தெற்குத் திருமாளிகை ஸ்தாபகர்

தெற்குத் திருமாளிகை தற்போது ஸந்ததியின்றிப் போயிற்று.
மீதி மூன்றில் கீழத் திருமாளிகை. நால்வரில் ஜ்யேஷ்டராயிருந்த த் சடகோபாசாரியார் ஸ்வாமி ப்ராசீனமான(ஆதி)
கீழத் திருமாளிகையில் எழுந்தருளியிருந்தார்.
ஒன்றான ராமாநுஜம் பிள்ளை இவ்வூருக்கு எழுந்தருளி அமைத்துக் கொண்டது இத்திருமாளிகை.
ஸ்ரீ பேரருளாளப் பெருமாள் இங்கு தான் எழுந்தருளி யிருந்து நித்ய ததீயாராதநா திசயங்கள் அனைத்தழகும் கண்டருளுகிறார்.

ஸ்ரீ சடகோபாசாரியார் ஞானாநுஷ்டானங்களில் மிக்கு, ஸ்வாமி ஆழ்வாரின் மறு அவதாரமோ என்னலாம்படி
“வ்ருஷமாஸி விசாகாயாம் அவதீர்ணம் குணோஜ்வலம்” என்று வைகாசி விசாகத்திலே வந்தவதரித்து
ஸ்வாமி ஆழ்வார் கைங்கர்யங்களைக் குறைவின்றி நடத்தி வந்தார்.
இவர் குமாரர் ராகவாசாரியார்……. என்று வம்ச பரம்பரை தொடர்ந்து வருகின்றது.

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கூர நாராயண ஜீயர் ஸ்வாமி வைபவம் – / ஸ்ரீ திருநாராயணபுரம் ஆய் ஸ்வாமி வைபவம் —

November 20, 2020

ஸ்ரீ கூர நாராயண ஜீயர் ஸ்வாமி வைபவம்

திருநக்ஷத்ரம்: மார்கழி கேட்டை
அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம்
ஆசார்யன்: ஸ்ரீ கூரத்தாழ்வான், ஸ்ரீ பராசர பட்டர்
ஸ்ரீ பரமபதம் அடைந்த இடம்: ஸ்ரீரங்கம்

நூல்கள்:
ஸ்ரீ ஸூதர்சன சதகம்,
ஸ்ரீ ஸ்தோத்ர ரத்ன வ்யாக்யானம்,
ஸ்ரீ ஸூக்த பாஷ்யம்,
ஸ்ரீ உபநிஷத் பாஷ்யம்,
ஸ்ரீ நித்ய கிரந்தம்(திருவாராதனம்)

சிஷ்யர்கள்:
ஸ்ரீ சேமம் ஜீயர்,
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் ஜீயர்,
ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவன் போன்றோர்

ஸ்ரீ எம்பாரின் இளைய ஸஹோதரர் ஸ்ரீ சிறிய கோவிந்தப் பெருமாளின் குமாரரான இவர்
சன்யாசம் பெற்றபின்
ஸ்ரீ கூர நாராயண ஜீயர்,
ஸ்ரீ நலம் திகழ் நாராயண ஜீயர்,
ஸ்ரீ நாராயண முனி,
ஸ்ரீ பெரிய ஜீயர்,
ஸ்ரீரங்க நாராயண ஜீயர் என்றெல்லாம் பெயர் பெற்றார்.

சன்யாசம் பெறுமுன் இவர்க்கொரு குமாரர், “ஸ்ரீ எடுத்தகை அழகிய நாராயணர்” என்றிருந்தார்.
இவர் முதலில் ஸ்ரீ ஸ்ரீ ஆழ்வானிடமும் பின் பட்டரிடமும் காலக்ஷேபம் கேட்டார்.

இவர் ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீ பார்த்தசாரதி ஸந்நிதி, ஸ்ரீ கருடாழ்வார் ஸந்நிதி முதலியன காட்டினார்.
ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு அந்தரங்க கைங்கர்யங்கள் செய்தார்.

இவர்க்கு நெடுங்காலத்துக்குப் பின் வாழ்ந்த ஸ்ரீ வேதாந்தாசார்யர் இவரைத் தம் நூல்களில் பெரிய ஜீயர் என்று குறிப்பிடுகிறார்.
ஸ்ரீ வேதாந்தாசார்யருக்குப் பின் ஒரு கூர நாராயண ஜீயர் இருந்தார் எனத் தெரிகிறது.
ஸ்ரீ ஸ்ரீ வேதாந்தாசார்யர் தம் ஸ்தோத்ர வ்யாக்யானத்தில் இவரது ஸ்ரீ ஸ்தோத்ர வ்யாக்யானத்தையும்,
ஸ்ரீ ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் ஸ்ரீ ஸூக்த பாஷ்யத்தையும் ஸ்ரீ நித்ய கிரந்தத்தையும் குறிப்பிடுகிறார்.
இவர் ஸ்ரீ ஆழ்வான் சிஷ்யராதலால் ஸ்ரீ நஞ்சீயரை விட வயதில் மூத்தவராக இருந்திருக்க வேண்டும்.
அதனாலேயே, ஸ்ரீ நஞ்சீயரிடத்தில் இருந்து இவரை வேறு படுத்திக் காண்பிக்க,
ஸ்ரீ வேதாந்தாசார்யார் இவரை ஸ்ரீ பெரிய ஜீயர் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

ஸ்ரீ மாமுனிகள் ஈடு பிரமாணத் திரட்டில் இவரது உபநிஷத் பாஷ்யத்தை மேற்கோள் காட்டுகிறார்,
மேலும் ஸ்ரீ மாமுனிகள் இவரை “ஸ்ரீ ஸுத்த ஸம்ப்ரதாய நிஷ்டர்” என்று மிகவும் கொண்டாடுகிறார்.

ஸ்ரீ கூரநாராயண ஜீயர் ஸ்ரீ ஸூதர்சன உபாசகர். ஒருமுறை ஸ்ரீ ஆழ்வான் இவரிடம்,
”நாம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமானையே முழுதாக நம்புகிறோம்,
ஸ்வ ப்ரவ்ருத்தி நிவிருத்தியே அமையும் நமக்குத் பிற உபாசனைகள் தகா” என்னவும்,
இவர், “அடியேன் ஸ்வார்த்தமாக ஏதும் பிரார்த்திப்பேனல்லன்,
ஸ்ரீ எம்பெருமானுக்கும் பாகவதருக்கும் மங்களம் வேண்டியே பிரார்த்திப்பேன்”என்றாராம்.

இவரைப் பற்றி ஓரிரு ஐதிஹ்யங்கள் உள,

முன்பு ஸ்ரீ நம்பெருமாள் திருக்காவேரியில் கண்டருளும்போது திடீர் பெள்ளப் பேருக்கு வர,
இவர் தம் உபாசனை சித்தியால் அதை நிறுத்தித் தெப்பத்தைச் சேமமாகக் கரை சேர்த்தார்.
பின் ஸ்ரீ ரங்க நகருக்குள்ளேயே பெரிய திருக்குளம் வெட்டி, தெப்போத்சவம் அதில் ஏற்பாடு செய்தார்.
ஒருமுறை ஸ்ரீ திருவரங்கப்பெருமாள் அரையர் நோவு சாத்தி ஸ்ரீ பெரிய பெருமாள் கைங்கர்யம் தடைபட,
ஸ்ரீ ஜீயர் ஸூதர்சன சதகம் செய்தருளி அவர் நோவு தீர்ந்தது, இது ஸூதர்சன சதக தனியனில் தெளிவு.

ஸ்ரீ எம்பெருமானார்க்குப் பிறகு, ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ எம்பெருமானார் மடத்துப் பொறுப்பு இவர்க்குத் தரப்பட்டது.
இதுவே ஸ்ரீ ரங்க நாராயண ஜீயர் மடம் என்று பிரசித்தி பெற்று இன்றளவும் ஸ்ரீ கோயில் கைங்கர்யங்களைப் பார்த்து வருகிறது.

இவரது தனியன்:
ஸ்ரீபராஸர பட்டார்ய சிஷ்யம் ஸ்ரீரங்க பாலகம்
நாராயண முநிம் வந்தே ஜ்ஞாநாதி குண ஸாகரம்
ஸ்ரீபராசர பட்டர் சிஷ்யரும் ஸ்ரீரங்கத்தைப் பாதுகாப்பவரும் ஞான பக்தி வைராக்யக் கடலுமான
ஸ்ரீ நாராயண முனியை வணங்குகிறேன் –

———————–

ஸ்ரீ திருநாராயணபுரம் ஆய் ஸ்வாமி வைபவம்-

ஸ்ரீ திருநாராயணபுரம் என்று அழைக்கப்படும் மேலக்கோட்டையில் ஸ்ரீ ஸேனை முதலியார் அவதரித்த
நன்னாளில் திருவவதரித்தார். திருநக்ஷத்ரம் – ஐப்பசி பூராடம்.

மற்ற திருநாமங்கள் –
ஸ்ரீ தேவராஜர்,
ஸ்ரீ தேவப்பெருமாள்,
ஸ்ரீ ஆஸூரி தேவராயர்,
ஸ்ரீ திருத் தாழ்வரை தாஸர்,
ஸ்ரீஸாநுதாசர்,
ஸ்ரீ மாத்ரு குரு,
ஸ்ரீ ஜநந்யாச்சார்யர்,
ஸ்ரீ ஆயி, தேவராஜ முநீந்த்ரர் ஆகியவை ஆகும்.

ஸ்ரீ ஜநந்யாசார்யருக்கு வேதம், திவ்ய ப்ரபந்தம் கற்பித்து, பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தது
அவருடைய திருதகப்பனார் ஸ்ரீலக்ஷ்மணாச்சார்யார் ஆவார்

திருநாடு அலங்கரித்தது ஸ்ரீ திருநாராயண புரத்திலே.

ஸ்ரீ ஈடு பரம்பரையின் ஆசார்யர் ஸ்வாமி ஸ்ரீ நம்பிள்ளை.
அவர் சிஷ்யர் ஸ்ரீ ஈயுண்ணி மாதவர்.
அவர் குமாரர் ஸ்ரீ ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள்.
இவர் சிஷ்யர் ஸ்ரீ நாலூர்ப் பிள்ளை.
இவர் சிஷ்யர் ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை.
இவருடைய சிஷ்யர்கள் ஸ்ரீ திருநாராயணபுரத்து ஆயி,
ஸ்ரீ இளம்பிளிசைப் பிள்ளையான திருவாய்மொழி ஆச்சான்,
ஸ்ரீசைலேசர் என்னும் திருநாமமுடைய ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளை மற்றும்
ஸ்ரீ ஈயுண்ணி தேவப் பெருமாள் ஆகியோர் ஆவர்.

ஸ்ரீ எம்பெருமானார் தம் திருக்கைகளாலே திருவாராதநம் ஸமர்ப்பித்த ஸ்ரீ திருநாராயணப் பெருமாளுக்கும்,
ஸ்ரீ ராமப்ரியனும் ஸ்ரீ யதிராஜ சம்பத்குமாரனுமான ஸ்ரீ செல்வப்பிள்ளைக்கும் பாலமுதும்,
ஸ்ரீ மாலாகாரர், ஸ்ரீ விஷ்ணுசித்தர் மற்றும் ஸ்ரீ ஆண்டாளைப் போல புஷ்பமும் ஸமர்ப்பித்துக் கொண்டு
கைங்கர்ய நிரதராய் ப்ரசித்தி பெற்றவர் ஸ்ரீ திருநாராயணபுரத்து ஆயி ஸ்வாமி.

ஆய் என்ற சொல்லுக்கு தாய் என்று பொருள். இந்த ஸ்வாமி ஸ்ரீ திருநாரணனுக்கு பாலமுது சமர்ப்பிக்கும்
கைங்கர்யத்தை தாயன்போடு செய்து வந்தாராம். ஒரு நாள் பாலமுது சமர்பிப்பதற்கு கொஞ்சம் காலம் தாழ்ந்து போக,
ஸ்ரீ திருநாரணன் அது பொறாமல் நம் ஆய் எங்கே (தாய்) இன்னம் காணோமே? என்று அர்ச்சகர் மூலம்
வினவினபடியாலே அன்று முதல் இவருக்கு ஆய் என்று திருநாமம் உண்டாயிற்று.

ஸ்ரீ மாமுனிகளுக்கும் இவருக்கும் உள்ள சம்பந்தம்:
ஸ்ரீ மணவாளமாமுனிகள் ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யானம் அருளிச் செய்தபோது
“ஜ்ஞான சதுர்த்திகளின் மேலேயிறே ஆநந்தஷஷ்டிகளுக்கு உதயம்” என்கிற வாக்கியத்திற்கு அர்த்தம்
அருளிச் செய்யும் போது சில விளக்கங்கள் தேவைப்பட தமது ஆசார்யரான ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளையின்
ஸஹ அத்யாயியாய்(கூடப் படித்தவர்) எழுந்தருளியிருந்த ஸ்ரீ ஆய் ஸ்வாமியினிடத்திலே கேட்க வேணும் என்று
திருவுள்ளம் கொண்டு ஸ்ரீ திருநாராயணபுரம் நோக்கி புறப்பட்டாராம் ஸ்ரீ மாமுனிகள்.
அதே ஸமயம் ஸ்ரீ திருநாரணன் ஸ்ரீ ஆயி ஸ்வாமியின் ஸ்வப்னத்திலே ஸ்ரீ மாமுனிகள் அவதார ரஹஸ்யத்தை காட்டி யருள
ஸ்ரீ ஆய் ஸ்வாமி ஸ்ரீ மாமுனிகளை சேவிப்பதற்காக ஆழ்வார் திருநகரிக்கு புறப்பட்டார்.
இருவரும் ஸ்ரீ ஆழ்வார் திருநகரி எல்லையில் சந்தித்துக் கொள்ள ஸ்ரீ ஆயியும் தாளும் தடக்கையும் கூப்பி சேவிக்க,
இதனைக் கண்ட ஸ்ரீ பெரிய ஜீயர் ஸ்வாமியின் சிஷ்யர்கள் ஸ்ரீ பெரிய நம்பியும் ஸ்ரீ எம்பெருமானாரும் எதிர்பட்டாப்
போலாயிற்று என்று உகந்தனராம். ஸ்ரீ மாமுனிகளும் ஆசார்ய ஹ்ருதய காலக்ஷேபம் கேட்டு முடித்த பின்பு
ஸ்ரீ ஆய் ஸ்வாமிக்கு ஒரு தனியன் சமர்ப்பிக்க

“ஆசார்ய ஹ்ருதயஸ்யார்த்தா: ஸகலா யேந தர்ஸிதா:
ஸ்ரீ ஸாநுதாஸம் அமலம் தேவராஜம் தமாஸ்ரயே”

ஸ்ரீ ஆயி ஸ்வாமியும் மாமுனிகள் விஷயமாக ஒரு பாசுரம் அருளிச் செய்தாராம்

பூதூரில் வந்துதித்த புண்ணியனோ?
பூங்கமழும் தாதாரு மகிழ்மார்பன் தானிவனோ, தூதூர வந்த நெடுமாலோ?
மணவாளமாமுனிவன் எந்தையிவர் மூவரிலும் யார்?

பிறகு ஸ்ரீ ஆய் ஸ்வாமி சிலகாலம் அங்கேயே எழுந்தருளி யிருந்த பின்னர் ஸ்ரீ திருநாராயணபுரம் எழுந்தருளினார்.

இவர் அருளிச் செய்தவை
ஸ்ரீ திருப்பாவைக்கு ஸ்ரீ ஈராயிரப்படி மற்றும் ஸ்ரீ நாலாயிரப்படி வ்யாக்யானம்,
ஸ்ரீ வசனபூஷண வ்யாக்யானம்,
ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யானம் ஆகியவை ஆகும்

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருநாராயணபுரம் ஆய் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூர நாராயண ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளை வைபவம் -/ ஸ்ரீ ஸப்த காதை —

November 20, 2020

ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளை வைபவம் –

திருநக்ஷத்ரம் – ஐப்பசி உத்திரட்டாதி
திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள ஆறநூர் என்னும் கிராமத்தில் அவதரித்தவர்.
ஆசார்யன் – ஸ்ரீ பிள்ளைலோகாசார்யார்
வேறு திருநாமம் – நலந்திகழ் நாராயண தாஸர்

தனியன்
துலாஹிர்புத்ந்ய ஸம்பூதம் ஸ்ரீ லோகார்ய பதாஸ்ரிதம்
ஸப்தகாதா ப்ரவக்தாரம் நாராயணமஹம் பஜே

ஐப்பசி உத்திரட்டாதியில் அவதரித்தவரும் பிள்ளை லோகாசார்யரின் திருவடிகளைப் பற்றியவரும்
ஸப்தகாதை அருளிச் செய்தவரும் “நலந்திகழ் நாராயண தாஸர் என்ற விளாஞ்சோலைப் பிள்ளையை வழிபடுகிறேன்.

மற்றொரு தனியன்
ஸ்ரீ லோகார்ய பதாரவிந்த மகிலம் ஸ்ருத்யர்த்த கோசாம் ஸ்ததா
கோஷ்டீஞ்சாபி ததேக லீநமநஸா ஸஞ்சிந்தயந்தம் முதா
ஸ்ரீ நாராயண தாஸமார்யமமலம் சேவே ஸதாம் ஸேவிதம்
ஸ்ரீ வாக்பூஷண கடபாவ விவ்ருதிம் யஸ்ஸப்த காதாம் வ்யதாத்

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யருடைய பாதாரவிந்தங்களில் மறைப்பொருள் அனைத்தையும் பெற்றவரும்
அவருடைய கோஷ்டியை எப்போதும் நினைத்துக்கொண்டு இருப்பவரும்,
ஸ்ரீ வசனபூஷணத்தின் உட்பொருள்களை ஸப்தகாதை என்ற நூலால் வெளியிட்டவரும்
ஸ்ரீ நாராயண தாஸர் என்ற திருநாமமுடையவரான உயர்ந்தவரை எப்போதும் சேவிக்கிறேன்.

ஸ்ரீ பிள்ளை உறங்காவில்லிதாஸர் ஸ்வாமி எம்பெருமானாருக்கு அந்தரங்கராய் இருந்தது போல்,
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் ஸ்வாமியினிடத்திலே, அந்தரங்க சிஷ்யராய் இருந்து
ஸகல சாஸ்திர அர்த்தங்களையும் கேட்டவர் ஸ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளை.

இவர் ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் திருவாய்மலர்ந்தருளிய ஸ்ரீ வசனபூஷண திவ்ய சாஸ்த்ரத்தில் ஊன்றினவராயும்
அதிலுள்ள அர்த்த விசேஷங்களை அனுபவிப்பதைத் தவிர வேறொன்று அறியாதவராயும் வாழ்ந்து வந்தவர்.

ஸ்ரீமத் பகவத் கீதையில் அமைந்துள்ள ஸ்லோகங்களுள் சரம ஸ்லோகம் சிறப்பெய்தினது போல,
ஸ்ரீ வசனபூஷணத்தில் அமைந்துள்ள ப்ரகரணங்களுள் சரம பர்வ நிஷ்டா ப்ரகரணம் சிறப்புற்றது.
ஆகையால் இந்த ப்ரகரணத்தில் அருளிச்செய்யப்பட்ட அர்த்த விசேஷங்களை எல்லாம் திரட்டி
ஒரு பிரபந்தம் அருளிச்செய்ய திருவுள்ளம் கொண்டு திருவாசிரியம் போலே
ஏழு பாசுரம் கொண்ட ஸப்தகாதை என்னும் நூலை அருளிச்செய்தார் ஸ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளை என்று பெரியோர் பணிப்பர்.

ஸ்ரீ வசனபூஷண ரஹஸ்ய அர்த்தத்தை ஸ்வாமி திருவாய்மொழிப் பிள்ளைக்கு உபதேசித்தார்.
இவருடைய திருவரசு திருவனந்தபுரம் எம்பெருமானின் கர்பக்ரஹம் (அநந்த பத்மநாப பெருமாள் திருவடி).

——————-

மாதங்களிலே முதல் மாதம் எது என்று யாரையேனும் கேட்டால் – சித்திரை மாதம் என்று கூறுவார்கள்.
அதே போன்று நமது பரம வைதிக மதமான ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்திலே முதலாவது மாதமாக
பூருவர்களால் கொண்டாடப்பட்டது ஐப்பசி மாதமாகும்.

ஸ்ரீவைஷ்ணவ மதத்திற்கு புத்துயிர் ஊட்டிய முதல் ஆழ்வார்களில் முதல் ஆழ்வாரான
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் அவதரித்த தினம் ஐப்பசித் திருவோணம்.
அதே போன்று சத்சம்ப்ரதாய இரகசிய அர்த்தங்களை சம்சாரி சேதனர்களுக்கு அனுக்ருஹிக்க
திருவவதாரம் பண்ணின சுவாமி பிள்ளை உலகாரியனின் திருநக்ஷத்திரமும் ஐப்பசித் திருவோணம் ஆகும்.

ஸ்ரீ வசனபூஷன அர்த்தத்தை எளிமையாக பிரசாதித்த ஸ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளையின் திருவவதாரம் நிகழ்ந்ததும்
ஐப்பசித் திங்களிலே ஆகும்(ஐப்பசி உத்திரட்டாதி).
மேலும் பெரிய ஜீயர் சுவாமி உட்பட பல ஸ்ரீவைஷ்ணவ வித்வான்கள் இந்தத் திங்களிலே அவதரித்திருக்கிறார்கள்.

பெரிய ஜீயர் அருளிச் செய்த உபதேசரத்தினமாலை என்னும் ஆசார்ய ரத்ன ஹார பிரபந்தத்திலே
ஸ்ரீ பிள்ளை உலகாரியன் அருளிச் செய்த ஸ்ரீ வசனபூஷனம் என்னும் சம்பிரதாய இரகசிய பிரபந்தத்தின்
பெருமையை எடுத்துக் காட்டியபோது, அதிலே சுவாமி சாதித்த விஷயங்களை ஒருவர் அனுஷ்டித்தாலும்
ஜகத்தே வாழ்ந்து போகும் என்ற மேன்மையையும் தெளிவாக அனுக்ருஹிக்கிறார்.

சுவாமி விளாஞ்சோலைப்பிள்ளையும் ஆசார்யன் இட்ட வழக்காக வாழ்ந்து,
ஆசார்யன் சுவாமி உலகாரியன் அருளிச் செய்த ரத்தினம் போன்ற ஸ்ரீ வசன பூஷணம் என்னும் ரகச்யத்திலே ஊன்றினவராயும்,
அதில் உள்ள அர்த்த விஷேங்களை அனுபவிப்பதைத் தவிர வேறு ஒன்று அறியாதவராகவும் வாழ்ந்து வந்தார் என்பதும் பிரசித்தம் ஆகும்.

ஸ்ரீ மதுரகவிகளும், சுவாமி வடுகநம்பியும் தங்கள் சரம பர்வ நிஷ்டையை அனுஷ்டானத்தாலே காட்டியது போல
இந்த சுவாமியும் காட்டினர் என்பதும் ஸ்ரீவைஷ்ணவ பெரியோர்கள் அறிந்ததே.

————-

அம் பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரங்க
சம்பந்தங் காட்டித் தடை காட்டி – உம்பர்
திவமென்னும் வாழ்வுக்குச் சேர்ந்த நெறி காட்டும்
அவனன்றோ ஆசாரியன்–1-

இந்த பாசுரத்தால் ஆசாரியன் படியைப் பேசுகிறார். ஜீவாத்மாவுக்கு பரமாத்மாவோடே நவவித சம்பந்தம் உள்ளன.
பிதா புத்திர பாவம், ரக்ஷ்ய ரக்ஷக பாவம், சேஷ சேஷி பாவம், பர்த்ரு பார்யா பாவம், ஜ்ஞாத்ரு ஜஞேய பாவம்,
ஸ்வத் ஸ்வாமி பாவம், ஆதார ஆதேய பாவம், சரீர ஆத்ம பாவம், போக்த்ரு போக்ய பாவம் என்கிற
ஒன்பது விதமான சம்பந்தங்கள் திருமந்திரமானது காட்டும்.
அது மட்டும் இல்லாமல் நம: என்கிற பதத்தாலே
மூன்று விரோதிகளான ஸ்வரூப விரோதி, உபாய விரோதி மற்றும் ப்ராப்யவிரோதி ஆகியவற்றையும்,
ப்ராப்யமான புருஷார்தத்தையும், ப்ராபகமான உபாயத்தையும் காட்டும்.
இதை நமக்குக் காட்டி உணர்த்துபவனே ஆசார்யன் என்று அருளிச்செய்கிறார்.

—————

அஞ்சு பொருளும் அளித்தவன் பால் அன்பிலார்
நஞ்சில் மிகக் கொடியர் நாம் சொன்னோம் – நஞ்சு தான்
ஊனை முடிக்கும் துயிர் முடிக்கும் என்று
ஈனமிலார் சொன்னார் இவை–2-

அஞ்சு பொருள் என்ற சொல் அர்த்த பஞ்சகத்தைக் குறிக்கும்–அர்த்த பஞ்சகமானது
ஸ்வ ஸ்வரூபம், பர ஸ்வரூபம், உபாய ஸ்வரூபம், விரோதி ஸ்வரூபம் மற்றும் உபேய ஸ்வரூபம் ஆகியவை ஆகும்.
“மிக்க இறை நிலையும் மொய்யாம் உயிர்நிலையும் தக்கநெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும்” என்னும் திருவாய்மொழித் தனியனில் அர்த்த பஞ்சகம் இன்னவை என்று
நிரூபிக்கப்பட்டிருகின்றமையை உணர வேணும் இங்கே.
இப்படிப் பட்ட அஞ்சு பொருள்களை அளித்தவனான ஆசார்யன் பக்கலிலே அன்பு இல்லாதவர்கள் நஞ்சை விட மிக கொடியவர்கள் என்கிறார்.
நஞ்சானது வெறும் தேக நாசத்தையே விளைவிக்கும், ஆனால் ஆசார்யன் பக்கல் அன்பில்லாமை ஆனது
ஆத்மனாசத்தையே விளைவிக்கும் என்றது ஸ்ரீ வசன பூஷணம். இதனையே இந்த பாசுரத்தால் உறுதி படுத்துகிறார்.

ஸ்ரீ வசன பூஷண சூத்ரம்: ” இவனுக்கு சரீராவசானத் தளவும் ஆச்சார்ய விஷயத்தில்,
” என்னைத் தீ மனம் கெடுத்தாய்”, “மருவித் தொழும் மனமே தந்தாய்” என்று உபகார ஸ்ம்ருதி நடக்க வேணும்.

—————————

பார்த்த குருவின் அளவில் பரிவின்றிச்
சீர்த்த மிகு ஞானம் எல்லாம் சேர்ந்தாலும் – கார்த்த கடல்
மண்ணின் மேல் துன்புற்றும் அங்குமே தேங்காமல்
நண்ணுமே கீழா நரகு.

எத்தனை ஞான விகாசம் உடையவனாய் இருந்தாலும், விசேஷ கடாக்ஷம் செய்து அருளினவனான ஆசார்யன் இடத்தில்
பரிவு இல்லையாகில் அதோகதியே என்று ஸ்திரமாகச் சொல்கிறார் இப்பாசுரத்தில்.
அதாவது சம்ஸ்க்ருத வேதாந்த ஞானம், திராவிட வேதாந்த ஞானம் மற்றும் ரஹஸ்யார்த்த ஞானம் இவற்றை அறிந்தவனாயினும்,
பார்த்த குருவின் அளவில் பரிவில்லையாகில் இந்த கடல் சூழ்ந்த மண்ணுலகில் அனுபவிக்கக்கூடிய க்லேசங்களை எல்லாம்
அனுபவித்துக் கொண்டு நித்ய சம்சாரியாய்க் கிடந்து உழல நேரிடும் என்பதை
” தேங்காமல் நண்ணுமே கீழா நரகு” என்பதனால் தெளிவு படுத்துகிறார் ஸ்வாமி.

————————-

தன்னை இறையைத் தடையைச் சர நெறியை
மன்னு பெரு வாழ்வை ஒரு மந்திரத்தின் – இன்னருளால்
அஞ்சிலுங் கேடோட வளித்தவன் பாலன்பிலார்
நஞ்சிலும் கேடு என்றிருப்பன் நான்*–4-

பிராப்யஸ்ய பிரம்மனோ ரூபம், ப்ராப்துச்ச்ச ப்ரத்யகாத்மந:, ப்ராப்த்யுபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா,
ப்ராப்தி விரோதிச என்கிற ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட அர்த்த பஞ்சகக் கிராமமே இங்கு விரிவாகக் கூறுகிறார்.
இந்த அர்த்தபஞ்சகமும் திரு அஷ்டாக்ஷர மகாமந்திரத்திலிருந்து ஆசார்யானாலே உபதேசிக்கப்படும்.
அதாவது பிரணவத்தில் மகாரத்தாலும், லுப்த சதுர்த்தியாலும், உகாரத்தாலும் ஸ்வ ஸ்வரூபம்,
அகாரத்தாலே பர ஸ்வரூபம், நமஸ்சில் ம: என்பதாலே விரோதி ஸ்வரூபமும், நம: என்பதால் உபாய ஸ்வரூபமும்,
நாராயணாய என்பதனாலே உபேய ஸ்வரூபமும் ஆகும்.
ஆக அச்சர்யன் பக்கலிலே அன்பிலாதார் நஞ்சிலும் கேடு என்கிறார் இந்த பாசுரத்தில்.

————————–

என் பக்கல் ஓதினார் இன்னார் எனும் இயல்வும்
என் பக்கல் நன்மை எனும் இயல்வும் – மன் பக்கல்
சேவிப்பார்க் கன்புடையோர் சன்ம நிருபனமும்
ஆவிக்கு நேரே அழுக்கு.–5-

கீழ் பாசுரத்தால் சிஷ்யனுக்குண்டான குறைகளைப் பேசினார். இந்த பாசுரத்தில் ஆசாரியனுக்கு நேரக் கூடிய அவத்யத்தைப் பேசுகிறார்.
உபதேசிக்கும் ஆசார்யன் ஆனவன் உபதேச சமயத்திலே தன்னுடைய ஆசார்யனே இவனுக்கும் உபதே சகர்த்தா என்றும்,
தான் அவ்வாசார்யனுக்கு கரண பூதனாகவும் பிரதிபத்திப் பண்ணிக் கொண்டும் உபதேசிக்க வேண்டுமாம்,
அப்படிச் செய்யாது தன்னை இவனுக்கு ஆசார்யன் என்று நினைப்பது தவறு என்று முதல் அடியில் தெரிவிக்கிறார்.
மேலும் உபதேச பாத்ர பூதனானவனையும் தன்னைப் போல தன்னுடைய ஆசாரியனுக்கு சிஷ்யனாக
பிரதிபத்திப் பண்ணிக் கொண்டு உபதேசிக்க வேண்டுமாம்.
அதைச் செய்யாமல் இவன் தனக்கு சிஷ்யன் என்று நினைப்பதும் தன்னிடத்தில் ஆசார்யத்வம் உள்ளது என்று
நினைப்பதும் தவறு என்கிறார் அடுத்த அடியாலே.
மகா பாகவதர்களிடத்தில் பகவத் சம்பந்த பிரயுக்தமான சிறப்பைப் பாராதே அவரவர்களுடைய ஜன்மங்களை நிரூபிக்கையாவது
மகா அபசாரம் என்பதை அடுத்த அடியில் தெரிவிக்கிறார்.
இவை எல்லாம் ஆவிக்கு நேரே அழுக்கு என்றும் உறுதிபடுத்துகிறார் அடுத்த அடியில்.

————————

அழுக்கென்று இவை அறிந்தேன் எம் பொன் அரங்கா
ஒழித்தருளாய் உள்ளில் வினையைப் – பழிப்பிலா
என்னாரியர்காக எம்பெருமானார்க்காக
உன்னா ரருட்க்காக உற்று.–6-

ஆவிக்கு அழுக்காகத் தெரிவிக்கப்பட்ட விஷயங்களைப் பலர் அழுக்கென்று அறிந்திருந்தும்,
பிரகிருதி வாசனையாலே இவ்வழுக்குகளில் சிக்கி நசிக்கிரார்களே என்று நினைத்து,
அது தமக்கு நேராது இருக்க வேணும் என்று எம்பெருமான் திருவடிகளில் பிரார்த்தனை செய்கிறார் இப்பாட்டில்.
மேலும் அஸ்மதாசார்யரான பிள்ளை உலகாரியனுக்காகவும், உலகுக்கு ஓர் உயிரான ஸ்வாமி எம்பெருமானாருக்காகவும்
இத் திருவருளை அடியேனுக்கு அளிக்க வேணும் என்றும் பிரார்த்திக்கிறார்.

————————-

தீங்கேது மில்லாத தேசிகன் தன் சிந்தைக்குப்
பாங்காக நேரே பரிவுடையோர் – ஓங்காரத்
தேரின் மேல் ஏறிச் செழுங்கதிரின் ஊடு போய்
சாருவரே அந்தாமந் தான்.-7-

தீங்கு ஏதும் இல்லாதவனும், மகா உபகாரகனுமான ஆசார்யனுடைய திருவுள்ளத்திற்கு அனுகூலமாகவும்,
அவருடைய திருமேனியைப் பேணிக்கொண்டு உண்மையான அன்புடையவர்களாகவும் இருப்பவர்களான
சத் சிஷ்யர்கள் பெரும் பேற்றை இந்த பாசுரத்தால் விவரிக்கிறார்.

வையம் மன்னி வீற்றிருந்து என்று சொல்லும் படி, இருக்கும் நாட்களிலே உபயவேதாந்த கால க்ஷேப கோஷ்டியோடும்,
ததியாராதன ஸ்ரீயோடும், உகந்தருளின நிலங்களில் மங்களாசாசன ஸ்ரீயோடும், தத் கைங்கர்ய ஸ்ரீயோடும்
ஸ்வாமி எம்பெருமானாரைப் போல நெடும் காலம் வாழ்ந்திருந்து சரீராவசானத்தில் பரமபக்தி தலையெடுத்து,
பிரணவமாகிற தேரின் மேல் ஏறி சாச்வதச்தானமாகிய திருநாடே கிடைக்கப் பெறுவார்களாம்.

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்வாமி ஸ்ரீ நம்மாழ்வாரை பற்றிய ஸ்லோகங்கள்–

November 9, 2020

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்வாமி நம்மாழ்வாரை பற்றிய ஸ்லோகங்கள்.

ஸ்ரீ ஸ்வாமி ஸ்ரீ கூரத்தாழ்வான் பாடிய 2 ஸ்லோகங்கள்,
ஸ்ரீ பராசர பட்டர் பாடிய 2 ஸ்லோகங்கள்-
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் பாடிய முக்தகம் – 4 ஸ்லோகங்கள்,
ஸ்ரீ ஜீயர் நாயனார் பாடிய கடைசி ஸ்லோகம், இவற்றின் தொகுப்பே ஸ்ரீ பராங்குஷாஷ்டகம்.

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் தனியன்கள்

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம உக்தி மதீ மஹே |
யதுக்தய ஸ்த்ர யீ கண்டே யாந்தி மங்கள சூத்ர தாம் ||– – ஸ்வாமி ஸ்ரீ கூரத்தாழ்வான் தனியன் –

ஸ்ரீ பராஸர பட்டார்ய ஸ்ரீரங்கேச புரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமான் ச்ரேயஸே மேஸ்து பூயஸே ||–ஸ்ரீ பராசர பட்டர் தனியன் 2

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகங்கள்

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 1 (ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது)

த்ரைவித்ய வ்ருத்த ஜன மூர்த விபூஷணம் யத்
ஸம்பச்ச ஸாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம் |
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத்ஸம் ஸ்ரேயம வகுளா பரணாங்க்ரி யுக்மம் ||

யாதொரு ஸ்ரீ நம்மாழ்வார் திருவடி இணையானது பரம வைதிகர்களுடைய முடிக்கு அலங்காரமாய் இருக்கின்றதோ –
யாதொரு திருவடி இணையே சர்வ காலமும் சாத்விகர்களுக்கு சகல ஐஸ்வர்யமுமாக இருக்கின்றதோ –
யாதொரு திருவடி இணையே புகல் ஒன்றில்லாதவர்களுக்குத் தஞ்சமாய் இருக்கின்றதோ –
அப்படிப் பட்ட பரம பாவனமான ஸ்ரீ நம்மாழ்வாரது திருவடி இணையை ஆச்ரயிக்கக் கடவோம்

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 2 (ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது)

பக்தி ப்ரபாவ பவதத்புத பாவபந்த
ஸந்துக்ஷித ப்ரணயஸார ரஸௌக பூர்ண: |
வேதார்த்த ரத்ன நிதிரச்யுத திவ்ய தாம
ஜீயாத் பராங்குச பயோதிர ஸீம பூமா ||

“பக்தியின் கனத்தால் உண்டாகிய ஆச்சர்யமான அபிப்ராய விசேஷங்களினால் வளர்க்கப் பட்ட
சிறந்த ப்ரணயம் ஆகிற தீர்த்த பிரவாஹத்தாலே நவரச சமூஹத்தாலே நிறைந்ததாயும் –
வேதப் பொருள் ஆகிற நவ ரத்னங்களுக்கு நிதியாயும் ஸ்ரீ எம்பெருமானுக்கு திவ்யமான அளவில்லாத
பெருமையை யுடைதாயும் இருக்கிற ஸ்ரீ நம்மாழ்வார் ஆகிற கடல் நெடுநாள் வாழ வேணும்”

அடுத்து வரும் இரு ஸ்லோகங்கள் ஸ்ரீ பராசர பட்டர் அருளியவை.
ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 3

ருஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ண
த்ருஷ்ணா தத்வமிவோதிதம் |
ஸஹஸ்ர சாகாம் யோத்ராக்ஷீத்
த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் ||

எந்த ஒரு முனிவர் – ஆயிரம் சாகைகள் உள்ள சாம வேதம் போலே ஆயிரம் பாசுரங்களை யுடையதான
திராவிட ப்ரஹ்ம சம்ஹிதையை சாஷாத் கரித்தாரோ,
ஸ்ரீ கிருஷ்ண பக்தியே வடிவு எடுத்து அவதரித்தது என்று சொல்லும்படியான அந்த ஸ்ரீ சடகோப முனிவரை ஸேவிக்கிறோம்!

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 4

யத்கோஸஹரஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்
நாராயணோ வஸதி யத்ர ஸசங்க சக்ர: |
யந்மண்டலம் ஸ்ருதிகதம் ப்ரணமந்தி விப்ரா:
தஸ்மை நமோ வகுளபூஷண பாஸ்கராய ||

சூர்யனுடைய ஆயிரம் கிரணங்கள் வெளி இருளைப் போக்குவது போலே யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் உடைய
ஆயிரம் பாசுரங்கள் சகல சேதனர்களுடையவும் அகவிருளைத் தொலைக்கின்றனவோ,
சூர்யன் இடத்தில் ஸ்ரீ நாராயணன் சங்கு சக்கரங்களோடு கூடி விளங்குவது போல்
அப்பெருமான் யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் இடத்தில் அவ்விதமாகவே உறைகின்றானோ,
வேத ப்ரதிபாத்யமான ஸூர்ய மண்டலத்தை அந்தணர்கள் வணங்குவது போலே யாவரொரு
ஸ்ரீ ஆழ்வார் யுடைய திவ்ய ஸ்தலம் செவிப்பட்ட யுடனே பரம பாகவதர்கள் கை கூப்பி வணங்குவார்களோ –
அப்படிப்பட்ட ஸ்ரீ நம்மாழ்வார் ஆகிற ஸூர்யனை வணங்குவோமாக!

கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே
வெண் பல் இலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேனுள் உள்ளானே” –
அப்படிப்பட்ட ஸ்ரீ எம்பெருமானைத் தம்மிடத்தே கொண்டவர் ஸ்ரீ நம்மாழ்வார்!

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 5 – அடுத்து வரும் ஸ்லோகங்கள் எளிமையானவை.

பத்யு: ச்ரிய பிரசாதேன ப்ராப்த சார்வஜ்ஞ்ய சம்பதம் |
ப்ரபன்ன ஜன கூடஸ்தம் ப்ரபத்யே ஸ்ரீ பராங்குசம் ||

ஸ்ரீ திருமால் திருவருளால் – மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் –
சர்வஜ்ஞத்வம் ஆகிற சம்பத்தைப் பெற்றவரும் பிரபன்ன ஜனங்களுக்கு தலைவருமான –
ஸ்ரீ நம்மாழ்வாரைத் தஞ்சமாகப் பற்றுகிறேன்

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 6

சடகோப முநிம் வந்தே
சடாநாம் புத்தி தூஷணம் |
அஜ்ஞாநாம் ஜ்ஞான ஜனகம்
திந்த்ரிணீ மூல ஸம்ஸ்ரயம் ||

குடில புத்திகளுடைய துர்ப்புத்தியைத் தொலைப்பவரும் – தீய மனத்தவர்களுடைய தீய மனத்தை கெடுத்து –
அறிவில்லாதவர்களுக்கு நல்லறிவை நல்குமவரும் – அறிவிலிகளுக்கு மருவித் தொழும் மனமே தந்து –
ஸ்ரீ திருப்புளி யாழ்வார் அடியிலே வீற்று இருப்பவருமான –
இங்குத்தை வாழ்வே தமக்கு நிரூபகமாகக் கொண்ட ஸ்ரீ நம்மாழ்வாரை வணங்குகிறேன்!

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 7

வகுளாபரணம் வந்தே ஜகதாபரணம் முநிம் |
ய: ச்ருதே ருத்தரம் பாகம் சக்ரே த்ராவிட பாஷயா ||

“உலகுக்கு எல்லாம் அலங்கார பூதரான – ஸ்ரீ நம்மாழ்வாரை, யாவரொரு ஸ்ரீ ஆழ்வார் வேதத்தின்
உத்தர காண்டம் ஆகிய உபநிஷத்தை தமிழ் மொழியினால் வெளியிட்டு அருளினாரோ –
அந்த ஸ்ரீ நம்மாழ்வாரை வணங்குகின்றேன்”

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் கடைசி ஸ்லோகம் 8

நமஜ்ஜனஸ்ய சித்த பித்தி, பக்தி சித்ர தூலிகா
பவார்ஹி வீர்ய பஞ்சநே, நரேந்த்ர மந்த்ர யந்த்ரனா |
ப்ரபன்ன லோக கைரவ, ப்ரஸந்ந சாரு சந்த்ரிகா
சடாரி ஹஸ்த முத்ரிகா, ஹடாத்கரோதுமே தம: | |

தம்மை வணங்குபவர்களுடைய ஹ்ருதயம் ஆகிற சுவரிலே பக்தியாகிற சித்திரத்தை எழுதும் கருவியாகவும் –
காலை மாலை கமல மலர் இட்டு -இத்யாதி உபதேசித்து சம்சாரம் ஆகிற சர்ப்பத்தின் உடைய வீர்யத்தைத் தணிக்கும்
விஷயத்தில் விஷ வைத்தியனுடைய (நரேந்திர -விஷ வைத்தியன்) மந்திர பிரயோகச் சிடிகை போன்றதையும்
நரகத்தை நகு நெஞ்சே -மாறன் சொல் நேராகவே விளையும் வீடு –
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்று ஆக்கம் தரும்.

பிரபன்ன ஜனங்கள் ஆகிற ஆம்பல் மலர்களை விகசிப்பிக்க வல்ல அழகிய நிலாப் போன்றதையும்
இருக்கிற ஸ்ரீ நம்மாழ்வாருடைய திருக் கைத்தல முத்ரையானது (உபதேச முத்திரை)
என்னுடைய அகவிருளை எப்படியாவது தொலைத்து போக்கி அருள வேணும்.

ஸ்லோகம் 9 (சில கோயில்களில் இந்த 9வது ஸ்லோகத்தையும் பெரியோர்கள் ஸேவிப்பர்)

வகுளாலங்க்ருதம் ஸ்ரீமச்சடகோப பதத்வயம் |
அஸ்மத்குல தனம் போக்யுமஸ்து மே மூர்த்நி பூஷணம் | |

மகிழ மலர்களினால் அலங்கரிக்கப் பட்டதும்
எமது குலச் செல்வமும் பரம போக்யமுமான
ஸ்ரீ ஆழ்வார் திருவடி இணையானது எனது சென்னிக்கு அலங்காரம் ஆயிடுக.

—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஜீயர் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கீதா பாஷ்யத்தின் தொடக்கத்தில் உள்ள ஸ்வாமி ஸ்ரீ ஆளவந்தார் பற்றிய தனியன்—

November 5, 2020

ஸ்ரீ கீதா பாஷ்யத்தின் தொடக்கத்தில் உள்ள ஸ்வாமி ஸ்ரீ ஆளவந்தார் பற்றிய தனியன்”

யத் பதாம்போருஹ-த்யான வித்வஸ்தாசேஷ-கல்மஷ
வஸ்துதாம்-உபயாதோ-ஹம் யாமுநேயம் நமாமி தம்.

“யத்பதாம்போருஹ ” எனும் சொல்
ய், அ, த், ப், அ, த், அ, ம், ப், ஒ, ர், உ, ஹ், அ எனப் பதிநான்கு பகுதிகளாலானது.
அதாவது ஏழு ஜோடித் திருவடிகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

இந்த ஏழு இணைத் திருவடிகள் ஸ்வாமியின் ஐந்து ஆசார்யர்கள்,
ஸ்ரீ ஆழ்வார், ஸ்ரீ ஆளவந்தாரையே குறிப்பனவாகக் கொள்ள வேணும்.

இதை வேறு விதமும் காணலாம்.
இந்த “யத்பதாம்போருஹ ” சப்தத்தை ஷஷ்டி தத்புருஷ ஸமாஸமாக எடுத்து,
யஸ்ய பதாம்போருஹே எனக் கொண்டு,
யாவருடைய தாமரைத் திருவடிகளில் என விளக்கம் பெற்று,
மேலும் அதை இப்படி மூவகைகளில் நிர்வஹிக்கலாம்:

ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடித் தாமரைகள் அவரது திருமேனியிலே வணங்கப்படுகின்றன.
ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடிகள் – அவரால் தொழப்பட்ட எம்பெருமான், ஆழ்வார், நாதமுனிகளின் திருவடிகள்,

ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடிகள் –
அவர் தம் சிஷ்யர்கள், சிஷ்யர்களைத் திருவடிகளாகக் கூறுதல் மரபாதலால். ஆகவே அவர்தம் ஐந்து சிஷ்யர்களைக் குறிக்கும்.

ஸ்ரீ ஸ்வாமியின் இத் தனியன் “பதாம்போருஹ” என “ப” சப்தத்தோடு தொடங்குகிறது.
ஸ்ரீ பெரிய நம்பிகள் தாம் ஸ்வாமிக்குப் பஞ்ச சம்ஸ்காரங்கள் செய்து மந்த்ரோபதேசமும் அர்த்த உபதேசமும் செய்து வைத்தார்.
ஆகவே அவர்க்கு ஸ்வாமியின் ஆசார்ய பரம்பரையில் விசேஷ இடமுண்டு.
அவர் திருநாமம் ஸ்ரீ பராங்குச தாசர் என்பது “ப”வில் தொடங்குவது.
ஸ்ரீ பராங்குசர் என்பது முதலிலேயே நம்மாழ்வார் திருநாமம்.
இவ்வாறாக, ஸ்ரீ இராமாநுசர் தம் ஆசார்யன் தனியனில் குருபரம்பரை முழுமையையும் துதித்தாராயிற்று.

ஸ்ரீ ஆழ்வானின் சிஷ்யரும் சுவாமியின் சமகாலத்தவருமான ஸ்ரீ அமுதனார் தம் க்ரந்தத்தில்
ஸ்ரீ இராமானுசருக்கு அவர் முன்னோருடனான தொடர்பையே விசேஷித்துப் பாடினார்.

இதுவே ஒரு பேரறிவாளனுக்கான அடையாளம்.
ஒரு சாதாரண வித்வான் சொல்லுக்கு, தானே உள்ள பொருளோடு நிற்பார்.
ஸ்ரீ சுவாமியின் ஈடு இணையற்ற மேதா விலாசம் நமக்கு அவரது ஒரு சொல்லில் பல பொருள்களைக் காட்டுகிறது.
ஸ்ரீ எம்பெருமானாரின் க்ரந்தங்கள், சொற்கள் பழையதாகி வருகின்றன, ஆனால் பொருளோ தினமும் இளமையாய் உள்ளது.

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டா ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ குரு பரம்பரை தனியன்கள் —

November 4, 2020

ஸ்ரீ பெரிய பெருமாள் (பங்குனி ரேவதி)
ஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயம் ஆச்ரயே |
சிந்தாமணிம் இவோத்வாந்தம் உத்ஸங்கே அநந்தபோகிந: ||

ஸ்வயம் ப்ரகாசமானவனும், ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரின் திருமார்பில் ஒளிரும் அணிகலன் போன்றவனும்,
ஸ்ரீ ஆதிசேஷன் உமிழ்ந்த மணி போல் ஜ்வலிப்பவனுமான ஸ்ரீரங்க விராமனான
ஸ்ரீரங்கநாதனை அடியேன் சரண் அடைகிறேன்.

ஸ்ரீ பெரிய பிராட்டியார் (பங்குனி உத்தரம்)
நம: ஸ்ரீரங்க நாயக்யை யத் ப்ரோ விப்ரம பேதத: |
ஈசேசிதவ்ய வைஷம்ய நிம்நோந்நதம் இதம் ஜகத் ||

எவளது புருவ நெறிப்பு ஜீவர்களின் நிலையைப் பாமரன் என்றோ பண்டிதன் என்றோ,
செல்வன் என்றோ தரித்ரன் என்றோ நிர்ணயிக்கிறதோ அந்த ஸ்ரீ ரங்க நாச்சியாரை வணங்குகிறேன்.

ஸ்ரீ சேனை முதலியார் (ஐப்பசி பூராடம்)
ஸ்ரீ ரங்க சந்த்ரமஸம் இந்திரயா விஹர்தும்
விந்யஸ்ய விச்வசித சிந்நயநாதிகாரம் |
யோ நிர்வஹத்ய நிஸமங்குளி முத்ரயைவ
ஸேநாந்யம் அந்ய விமுகாஸ் தமஸி ச்ரியாம ||

ஸ்ரீ ரங்க சந்த்ரர்களாகிய ஸ்ரீ பெரியபெருமாள் ஸ்ரீ பெரிய பிராட்டியார் லீலைகளைச் செய்து போர,
ஸ்ரீ எம்பெருமான் அனுமதித்த தம் திருவிரல் அசைவினாலேயே உயிர் உள்ளன மற்றும் உயிர் அல்லன அனைத்தையும்
நடத்தும் ஸ்ரீ விஷ்வக்சேனர் திருவடிகளையே ஒரே புகலாகப் பற்றுகிறோம்.

ஸ்ரீ நம்மாழ்வார் (வைகாசி விசாகம்)
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் ய தேவ நியமேன மத் அந்வயாநாம் |
ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

ஸ்ரீவைஷ்ணவ சந்தானத்தின் தலைவரும், ப்ரபந்நஜன கூடஸ்தரும் மகிழ மாலை அணிந்தவரும்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ நிறைந்த திருவடிகளை உடையவரும், தாய் தந்தை மனைவி மக்கள் ஏய்ந்த பெருஞ்செல்வம்
எல்லாமும் ஆனவருமான ஸ்ரீ நம்மாழ்வாரை வணங்குகிறேன்.

ஸ்ரீமந் நாதமுனிகள் (ஆனி அனுஷம்)
நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே |
நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே ||

எப்போதும் பகவத் த்யானத்தில் ஆழ்ந்து பக்திக்கு கடலானவரும், அளப்பரிய ஞானம் நினைப்பரிய வைராக்யம்
ஆகியன பெற்றவருமான ஸ்ரீமந் நாதமுனிகளை வணங்குகிறேன்.

ஸ்ரீ உய்யக் கொண்டார் (சித்திரை கார்த்திகை)
நம: பங்கஜ நேத்ராய நாத: ஸ்ரீ பாத பங்கஜே |
ந்யஸ்த ஸர்வ பராய அஸ்மத் குல நாதாய தீமதே ||

ஸ்ரீமந் நாதமுனிகள் திருவடிகளில் தம் ஸர்வ பாரமும் விட்டுச் சரணடைந்த நம் குல நாதரான
ஸ்ரீ புண்டரீகாக்ஷரை வணங்குகிறேன்.

ஸ்ரீ மணக்கால் நம்பி (மாசி மகம்)
அயத்நதோ யாமுநம் ஆத்ம தாஸம் அலர்க்க பத்ரார்ப்பண நிஷ்க்ரயேண |
ய: க்ரீதவான் ஆஸ்தித யௌவராஜ்யம் நமாமிதம் ராமமேய ஸத்வம் ||

பட்டத்து இளவரசாகிய ஸ்ரீ யாமுனாசார்யரைத் தூதுவளை தந்து மிக எளிதாகத் திருத்திப் பணிகொண்ட
ஸ்ரீராம மிச்ரர் எனும் அளவிலா ஸாத்விகோத்தமரை வணங்குகிறேன்.

ஸ்ரீ ஆளவந்தார் (ஆடி உத்தராடம்)
யத் பதாம் போருஹ த்யாந வித்வஸ்தாசேஷ கல்மஷ: |
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம் ||

அசத்தாய்க் கிடந்த எனக்கு ஆத்மாவைக் காட்டி, சத்தை தந்து எல்லா அஞ்ஞானங்களையும் த்வம்சம் செய்து
என்னை ஒரு பொருளாக உளவாக்கிய ஸ்ரீ யாமுனாசார்யரின் திருவடிகளை த்யாநிக்கிறேன்.

ஸ்ரீ பெரிய நம்பி (மார்கழி கேட்டை)
கமலாபதி கல்யாண குணாம்ருத நிஷேவயா |
பூர்ண காமாய ஸததம் பூர்ணாய மஹதே நம: ||

எப்போதும் கமலாபதியான ஸ்ரீமந் நாராயணனின் கல்யாண குணக் கடலில் ஆழ்ந்துள்ள
நிறைவுள்ள ஸ்ரீ மஹா பூர்ணரை வணங்குகிறேன்.

ஸ்ரீ எம்பெருமானார் (சித்திரை திருவாதிரை)
யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே |
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ:
ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

ஸ்ரீ அச்யுதனின் திருவடியில் பக்தியால் மற்றெல்லாவற்றையும் புல்லாக மதித்துத் தள்ளியவரும்,
அடியேன் குருவும், கருணைக் கடலே போல் வடிவெடுத்தவரும் ஆகிய ஸ்ரீ பகவத் ராமானுசரை அடி பணிகிறேன்.

ஸ்ரீ எம்பார் (தை புனர்வஸு)
ராமானுஜ பதச் சாயா கோவிந்தாஹ்வ அநபாயிநீ |
ததா யத்த ஸ்வரூபா ஸா ஜீயாந் மத் விச்ரமஸ்தலீ ||

ஸ்ரீ ராமானுஜரின் திருவடித் தாமரை நிழல்போல் பிரியாதவரும், அடியேன் துயர்களை நீக்கி
இளைப்பாற்றும் நிழலுமான ஸ்ரீ கோவிந்தப் பெருமாளின் புகழ் ஓங்குக.

ஸ்ரீ பட்டர் (வைகாசி அனுஷம்)
ஸ்ரீ பராஸர பட்டார்ய ஸ்ரீரங்கேச புரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமான் ச்ரேயஸே மேஸ்து பூயஸே ||

கைங்கர்ய ஸ்ரீ நிறைந்த புகழாளர், ஸ்ரீ ரங்கேசனின் புரோகிதர், ஸ்ரீவத்சாங்கர் ஸ்ரீ கூரத்தாழ்வானின் திருக்குமாரர்
ஸ்ரீ பராசர பட்டர் திருவருளால் அடியேனுக்கு சகல மங்களமும் ஆகுக.

ஸ்ரீ நஞ்சீயர் (பங்குனி உத்தரம்)
நமோ வேதாந்த வேத்யாய ஜகந் மங்கள ஹேதவே
யஸ்ய வாகாம்ருதாஸார பூரிதம் புவந த்ரயம்

மூவுலகுக்கும் மங்களம் சேர வேதாந்த சாரமான தம் அமுத வாக்குகளைப் பொழியும் வேதாந்தி
ஸ்ரீ நஞ்சீயரை வணங்குகிறேன்.

ஸ்ரீ நம்பிள்ளை (கார்த்திகை கார்த்திகை)
வேதாந்த வேத்ய அம்ருத வாரிராசேர்
வேதார்த்த ஸார அம்ருத பூரமக்ர்யம் |
ஆதாய வர்ஷந்தம் அஹம் ப்ரபத்யே
காருண்ய பூர்ணம் கலிவைரி தாஸம் ||

நீர் நிறைந்த மேகம் போல் வேதாந்த ஞானம் செறிந்த ஸ்ரீ நஞ்சீயர் திருவாக்குகளைத் தம் கருணையால்
வேத வேதாந்தப் பொருள்களைச் சுவைப்படக் கூறும் பெருங்கருணையாளரான
ஸ்ரீ கலிவைரி தாசர் திருவடிகளைப் பற்றுகிறேன்.

ஸ்ரீ வடக்குத் திருவீதி பிள்ளை (ஆனி ஸ்வாதி)
ஸ்ரீ க்ருஷ்ண பாத பாதாப்ஜே நமாமி சிரஸா ஸதா |
யத் ப்ரஸாதப் ப்ரபாவேந ஸர்வ ஸித்திரபூந்மம ||

ஸ்ரீ நம்பிள்ளையின் திருவடித் தாமரைகளில் அடியவரான ஸ்ரீ க்ருஷ்ணர் வடக்குத் திருவீதிப் பிள்ளை
திருவருளால் சகல ஸாரார்த்தமும் அறியப் பெறுகிறேன். இப்படிப்பட்ட ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளையின்
திருவடிகளை எப்பொழுதும் வணங்குகிறேன்.

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் (ஐப்பசி திருவோணம்)
லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம: ||

ஸ்ரீ க்ருஷ்ணபாதர் ஆகிய ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை திருக்குமாரர், ஸம்ஸாரமாகிய பாம்புக் கடியிலிருந்து
ஜீவர்களுக்கு விடுதலை தரும் மருந்தான ஸ்ரீ பிள்ளை உலகாசிரியரை வணங்குகிறேன்.

ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை (வைகாசி விசாகம்)
நம ஸ்ரீசைலநாதாய குந்தீ நகர ஜந்மநே |
ப்ரஸாதலப்த பரம ப்ராப்ய கைங்கர்யஸாலிநே ||

ஸ்ரீ குந்தீ நகரில் அவதரித்தவர், ஆசார்ய கடாக்ஷத்தால் பரம ஸ்லாக்யமான கைங்கர்ய ஸ்ரீயை அடைந்தவரான
ஸ்ரீ திருமலை ஆழ்வார் என்கிற ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடியை வணங்குகிறேன்.

ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகள் (ஐப்பசித் திருமூலம்)
ஸ்ரீசைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ||

ஸ்ரீ திருமலை ஆழ்வார் கருணைக்குப் பாத்திரரும், ஞானம் பக்தி முதலிய குணங்கள் கடல் போல் நிரம்பியவரும்
ஸ்ரீ யதீந்த்ரர் ஸ்ரீ ராமாநுசரை எப்போதும் அனுசரித்திருப்பவருமான ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்.

ஸ்ரீ ஆழ்வார்களும் நம் குரு பரம்பரையில் உள்ளனர்.
வரிசைக் கிரமத்தில் ஸ்ரீ ஆழ்வார்கள்:

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் (ஐப்பசி திருவோணம்)
காஞ்ச்யாம் ஸரஸி ஹேமாப்ஜே ஜாதம் காஸார யோகிநம் |
கலயே ய: ச்ரிய:பத்யே ரவிம் தீபம் அகல்பயத் ||

ஸ்ரீ காஞ்சித் திருவெஃகாத் திருக்குளத்தில் தங்கத் தாமரைப் பூவில் அவதரித்த, தம் திவ்ய ஞான ஒளியால்
ஸூர்ய தேஜஸ்ஸில் ஸ்ரீமந் நாராயணனைக் கண்ட ஸ்ரீ பொய்கை ஆழ்வாரைத் துதிக்கிறேன்.

ஸ்ரீ பூதத்தாழ்வார் (ஐப்பசி அவிட்டம்)
மல்லாபுர வராதீசம் மாதவீ குஸுமோத்பவம் |
பூதம் நமாமி யோ விஷ்ணோர் ஜ்ஞானதீபம் அகல்பயத ||

ஸ்ரீ திருக்கடல்மல்லைத் தலைவர், மாதவிப் பூவில் அவதரித்தவர், தம் ஞான திருஷ்டியால்
ஸ்ரீ நாராயணனைக் கண்டு களிக்க ஞான தீபம் ஏற்றியவரான ஸ்ரீ பூதத்தாழ்வாரை வணங்குகிறேன்.

ஸ்ரீ பேயாழ்வார் (ஐப்பசி சதயம்)
த்ருஷ்ட்வா ஹ்ருஷ்டம் ததா விஷ்ணும் ரமயா மயிலாதிபம் |
கூபே ரக்தோத்பலே ஜாதம் மஹதாஹ்வயம் ஆச்ரயே ||

ஸ்ரீ திருமயிலைத் தலைவர், கிணற்றில் செவ்வல்லிப் பூவில் அவதரித்த ஸ்ரீமந் நாராயணனைக் கண்ட
திவ்ய சக்ஷுஸ் பெற்ற ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளை வணங்குகிறேன்.

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் (தை மகம்)
சக்தி பஞ்சமய விக்ரஹாத்மநே சூக்திகாரஜத சித்த ஹாரிணே |
முக்திதாயக முராரி பாதயோர் பக்திஸார முநயே நமோ நம: ||

ஸ்ரீ எம்பெருமான் முராரியின் கமலப் பாதங்களில் வைத்த பக்தியே வடிவெடுத்தவரும்,
பஞ்சோபநிஷத்மய திருமேனியை உடைய (நம் சரீரம் நிலம் நீர் காற்று வெளி தீ எனும் பஞ்ச பூதங்களால் ஆனது.
ஸ்ரீ எம்பெருமான் திருமேனியோ விஸ்வம், நிவ்ருத்தம், சர்வம், பரமேஷ்டி, புமான் எனும் பஞ்ச உபநிஷத்துகளால் ஆனது)
ஸ்ரீ எம்பெருமானைத் தன் நெஞ்சிலே தரித்தவரும், நமக்கு மதி தர வல்லவருமான ஸ்ரீ திருமழிசைப் பிரானுக்கு என் வணக்கங்கள்.
ஸூக்திஹாரன் என்னும் அரசனிடத்தில் ஜயித்த ஹாரத்தை அணிந்து கொண்டிருப்பவர் என்றும் சொல்லப்படும்.

ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் (சித்திரை சித்திரை)
அவிதித விஷயாந்தரஸ் சடாரேர் உபநிஷதாம் உபகான மாத்ர போக: |
அபி ச குண வசாத் ததேக சேஷி மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து ||

ஸ்ரீ நம்மாழ்வாரைப் பாடுவது தவிர வேறொன்றும் செயலாக நினையாதவர், ஸ்ரீ நம்மாழ்வார் பாசுரம்
தவிர வேறொன்றையும் பாடவும் விழையாதவர், அவருக்கே அடிமைப் பட்டவரான
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அடியேன் மனத்தில் உறுதியாக எழுந்தருளட்டும்.

ஸ்ரீ நம்மாழ்வார் (வைகாசி விசாகம்)
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் ய தேவ நியமேன மத் அந்வயாநாம் |
ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

ஸ்ரீ வைஷ்ணவ சந்தானத்தின் தலைவரும், ப்ரபந்நஜன கூடஸ்தரும் மகிழ மாலை அணிந்தவரும்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ நிறைந்த திருவடிகளை உடையவரும், தாய் தந்தை மனைவி மக்கள் ஏய்ந்த பெருஞ்செல்வம்
எல்லாமும் ஆனவருமான ஸ்ரீ நம்மாழ்வாரை வணங்குகிறேன்.

ஸ்ரீ குலசேகர ஆழ்வார் (மாசி புனர்வஸு)
குஷ்யதே யஸ்ய நகரே ரங்கயாத்ரா தினே தினே |
தமஹம் சிரஸா வந்தே ராஜாநம் குலசேகரம் ||

எப்போதும் ஸ்ரீ ரங்க யாத்ரை பற்றிய பேச்சே நிகழும் நகரைத் தலைநகராகக் கொண்ட அரசர்
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் திருவடிகளை அடியேன் தலையால் வணங்குகி கிறேன்.

ஸ்ரீ பெரியாழ்வார் (ஆனி ஸ்வாதி)
குருமுகம் அநதீத்ய ப்ராஹவேதாந் அஸேஷாந்
நரபதி பரிக்லுப்தம் ஸுல்கமாதாது காம: |
ச்வசுரம் அமர வந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜ குல திலகம் விஷ்ணுசித்தம் நமாமி ||

ஒரு குருவிடமும் பயிலாது எம்பெருமான் க்ருபையினாலேயே அனைத்து வேதங்களையும் அறிந்து வேத சாரங்களை
சொல்லிப் பரத்வ ஸ்தாபநம் பண்ணிய அந்தணர் தலைவர், ஸ்ரீ ஆண்டாளின் தமப்பனார்,
ஸ்ரீ திருவரங்க நாதனுக்கே மாமனார் ஆகிய ஸ்ரீ பெரியாழ்வாரை அடி பணிகிறேன்.

ஸ்ரீ ஆண்டாள் (ஆடி பூரம்)
நீளா துங்க ஸ்தனகிரி தடீ ஸுப்தம் உத்போத்ய க்ருஷ்நம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சத சிரஸ் சித்தம் அத்யாபயந்தீ |
ஸ்வோசிஷ்டாயாம் ச்ரஜிநிகளிதம் யாபலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய: ||

ஸ்ரீ நீளா தேவியின் திருமார்பில் தலைவைத்துறங்கும் ஸ்ரீ கண்ணன் எம்பெருமானை, பாரதந்தர்யம் உணர்த்தும் வகையில்
துயிலுணர்த்துபவள் , ஸ்ரீ எம்பெருமானுக்கே தான் சூடிக்களைந்த மாலையை அவன் விரும்பியபடி சமர்ப்பித்தவள்
திருவடிகளை மீண்டும் மீண்டும் தொழுகிறேன்.

ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார் (மார்கழி கேட்டை)
தமேவ மத்வா பரவாஸுதேவம் ரங்கேசயம் ராஜவதர்ஹணியம் |
ப்ராபோதிகீம் யோக்ருத ஸூக்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே ||

ஸ்ரீ ரங்கநாதனைப் ஸ்ரீ பர வாசு தேவனாகவே பாவித்து அவனை ஓர் அரசனை போல் மிகவும் நளினமாகத்
துயிலெழுப்பிய ஸ்ரீதொண்டரரடிப் பொடி ஆழ்வாரைப் போற்றுகிறேன்.

ஸ்ரீ திருப்பாணாழ்வார் (கார்த்திகை ரோஹிணி )
ஆபாத சூடம் அனுபூய ஹரிம் சயாநம்
மத்யே கவேர ஹிதுர் முதிதாந்தராத்மா |
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோ நிச்சிகாய மனவை முநிவாஹநம் தம் ||

இரண்டு ஆறுகளின் நடுவே அறி துயில் கொண்ட ஸ்ரீ அரங்கநாதனைத் திருவடி முதல் திருமுடி வரை அனுபவித்தப் பாடிய,
ஸ்ரீ லோகஸாரங்க முனிவரால் தோள் மேல் சுமந்து அவனைக் கண்டு களித்து அவனைக் கண்டு களித்த கண்களால்
இனி வேறொன்றும் காணேன் என்று அவன் திருவடி சேர்ந்த ஸ்ரீ திருப்பாணாழ்வாரை த்யானிக்கிறோம்.

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் (கார்த்திகை கார்த்திகை)
கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோக திவாகாரம்
யஸ்ய கோபி: ப்ரகாசாபிர் ஆவித்யம் நிஹதம் தம:

கலிகன்றி என்று திருநாமம் கொண்டவர், கவிகளில் ஸூர்யன் போல் ப்ரகாசிப்பவர், அடியேன் அஞ்ஞாந இருளைத்
தம் ஒளிமிக்க சொற்களால் முற்றிலும் அகற்றிய ஞானக் கதிரவனான ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரை த்யானிக்கிறேன்.

————————————-

ஓராண் வழி ஆசார்ய பரம்பரையில் வாராத ஆசார்யர்களும் (மேலும் பலர் உள்ளனர்):

ஸ்ரீ காவலப்பன் (தை விசாகம்)
நாதமௌநி பதாஸக்தம் ஜ்ஞானயோகாதி ஸம்பதம் |
குருகாதிப யோகீந்த்ரம் நமாமி சிரஸா ஸதா ||

ஸ்ரீ நாதமுனிகள் திருவடித் தாமரைகளில் மிக்க பக்தி கொண்டவர், ஞான யோக பக்தி யோகங்களில் நிறை செல்வர்,
யோகிகளில் சிறந்தவரான ஸ்ரீ குருகைக் காவலப்பன் திருவடித் தாமரைகளில் எப்போதும் வணங்குகிறேன்

ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் (வைகாசி கேட்டை)
ஸ்ரீராமமிச்ர பத பங்கஜ ஸஞ்சரீகம் ஸ்ரீயாமுனார்ய வர புத்ரம் அஹம் குணாப்யம் |
ஸ்ரீரங்கராஜ கருணா பரிணாம தத்தம் ஸ்ரீபாஷ்யகார சரணம் வரரங்கமீடே ||

ஸ்ரீ யாமுனாசார்யர் திருக்குமாரர், ஸாத்விக குணபூர்ணர், ஸ்ரீ மணக்கால் நம்பிகளின் திருவடித் தாமரைகளில்
வண்டு போன்றவர், ஸ்ரீ பாஷ்யகாரரைத் தம் சிஷ்யராகப் பெற்றவரான ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரைப் போற்றுகிறேன்.

ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி (வைகாசி ரோஹிணி )
ஸ்ரீவல்லப பதாம்போஜ தீபக்த்யம்ருத ஸாகரம் |
ஸ்ரீமத்கோஷ்டீபுரீபூர்ணம் தேசிகேந்த்ரம் பஜாமஹே ||

ஸ்ரீ மஹாலக்ஷ்மி நாதன் நாராயணன் திருவடிகளில் ஞானாம்ருத பக்தி அம்ருதக் கடல் போன்றவர்,
ஆசார்யர்களில் சிரேஷ்டரான ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் சரண் அடைகிறோம்.

ஸ்ரீ பெரிய திருமலை நம்பி (வைகாசி ஸ்வாதி)
பிதாமஹஸ்யாபி பிதாமஹாய ப்ராசேதஸாதேசபலப்ரதாய |
ஸ்ரீபாஷ்யகாரோத்தம தேசிகாய ஸ்ரீசைலபூர்ணாய நமோ நம: ஸ்தாத் ||

ஸ்ரீ திருமலை யப்பனாலேயே தன் தகப்பனாராகக் கொண்டாடப்பட்டவர், அதனால் அவன் மகனாகிய
சதுர்முக பிதாமஹனுக்கே பிதாமஹரானவர், ஸ்ரீ பாஷ்யகாரருக்கு ஸ்ரீமத் வாலமீகி ராமாயணம் உபதேசித்த
உத்தம தேசிகரான ஸ்ரீ திருமலை நம்பிகளை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.

ஸ்ரீ திருமாலை ஆண்டான் (மாசி மகம்)
ராமாநுஜ முநீந்த்ராய த்ராமிடீ ஸம்ஹிதார்த்ததம் |
மாலாதர குரும் வந்தே வாவதூகம் விபஸ்சிதம் ||

த்ராவிட வேதமான ஸ்ரீ திருவாய்மொழியைத் தம் வாக்கு வன்மையால் ஸ்ரீ ராமானுஜ முனிவர்க்கு உபதேசித்தவரான
மஹா மேதாவி ஸ்ரீ திருமாலை ஆண்டான் எனும் ஸ்ரீமாலாதரரைப் பூசிக்கிறேன்.

ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் (மாசி ம்ருகசீர்ஷம்)
தேவராஜ தயாபாத்ரம் ஸ்ரீ காஞ்சி பூர்ணம் உத்தமம் |
ராமாநுஜ முநேர் மாந்யம் வந்தேஹம் ஸஜ்ஜநாச்ரயம் ||

ஸ்ரீ தேவராஜனின் கருணைக்குப் பாத்ரபூதர், உத்தமரான ஸ்ரீ காஞ்சிபூர்ணர்,
ஸ்ரீ ராமானுசரால் மிகவும் போற்றப் பட்டவர்,
ஸ்ரீ வைஷ்ணவர்களால் சூழப்பட்ட திருக்கச்சி நம்பிகளை வணங்குகிறேன்.

ஸ்ரீ மாறனேரி நம்பி (ஆனி ஆயில்யம்)
யாமுநாசார்ய ஸச்சிஷ்யம் ரங்கஸ்தலநிவாஸிநம் |
ஜ்ஞாநபக்த்யாதிஜலதிம் மாறனேரிகுரும் பஜே ||

ஸ்ரீ யாமுனாசார்யரின் ப்ரிய சிஷ்யர், ஸ்ரீரங்கம் பெரியகோயில் நித்ய வாசி,
ஞான பக்திக் கடல் ஆகிய ஸ்ரீ மாறனேரி நம்பியை பஜிக்கிறேன்.

ஸ்ரீ கூரத்தாழ்வான் (தை ஹஸ்தம்)
ஸ்ரீவத்ஸ சிந்ந மிச்ரேப்யோ நம உக்திம தீமஹே: |
யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்: ||

ஸ்ரீ நாராயண பரத்வமாகிய மங்கல நாண் பூண்டவள் வேத மாதா எனத் தம் ஸ்தோத்ரங்களால்
காட்டி யருளிய ஸ்ரீ கூரத்தாழ்வானுக்கு நம் வணக்கங்கள்.

ஸ்ரீ முதலியாண்டான் (சித்திரை புனர்வஸு )
பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா |
தஸ்ய தாஸரதே: பாதௌ சிரஸா தாரயாம்யஹம் ||

ஸ்ரீ தாசரதி என்று திருநாமம் உள்ளவர், ஸ்ரீ எம்பெருமானாரின் திருவடி நிலைகளாகப் போற்றப் பெறுபவர்,
ஸ்ரீ முதலியாண்டானின் திருவடிகளைத் தலையால் தாங்குகிறேன்.

ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் (கார்த்திகை பரணி)
ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் வேதசாஸ்த்ரார்த்த ஸம்பதம் |
சதுர்த்தாச்ரம ஸம்பந்நம் தேவராஜ முநிம் பஜே ||

ஸ்ரீ எம்பெருமானாரின் ப்ரிய ஸிஷ்யர், வேதங்கள் சாஸ்த்ரங்களை உட்பொருளுணர்ந்து கற்றவர்,
ஸந்யாஸாச்ரமம் மேற்கொண்டவர் ஆகிய ஸ்ரீ தேவராஜ முனிவர் எனும்
ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை அடியேன் சரண் புகுகிறேன்.

ஸ்ரீ கோயில் கோமாண்டூர் இளையவில்லி ஆச்சான் (சித்திரை ஆயில்யம்)
ஸ்ரீ கௌசிகாந்வய மஹாம்புதி பூர்ணசந்த்ரம்
ஸ்ரீ பாஷ்யகார ஜநநீ ஸஹஜா தநுஜம் |
ஸ்ரீசைலபூர்ண பத பங்கஜ சக்த சித்தம்
ஸ்ரீபாலதந்வி குருவர்யம் அஹம் பஜாமி ||

கௌசிக குல சமுத்ரத்துப் பூர்ண சந்திரன் போன்றவர், ஸ்ரீ பாஷ்யகாரரின் திருத்தாயாரின் ஸஹோதரி குமாரர்,
ஸ்ரீ சைலபூர்ணரின் திருவடிகளில் ஆழ்ந்த பக்தர் ஆகிய பால தன்வி மஹா குருவை வணங்குகிறேன்.

ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் (சித்திரை ஹஸ்தம்)
ராமானுஜ பதாம்போஜயுகளீ யஸ்ய தீமத: |
ப்ராப்யம் ச ப்ராபகம் வந்தே ப்ரணதார்த்திஹரம் குரும் ||

மஹாமேதாவி, தம் ஆசாரயர் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று உறுதியானவர்
ஆகிய ஸ்ரீ ப்ரணதார்த்திஹர குரு ஸ்ரீ கிடாம்பி ஆச்சானைத் தொழுகிறேன்.

ஸ்ரீ வடுக நம்பி (சித்திரை அஸ்வினி)
ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாளக்ராம நிவாஸிநம் |
பஞ்சமோபாய ஸம்பந்நம் ஸாளக்ராமார்யம் ஆச்ரயே ||

ஸ்ரீ ராமானுஜரின் சச்சிஷ்யர், சாளக்ராமத்தில் வசிப்பவர், ஆசார்ய நிஷ்டையாகிய பஞ்சமாபாயத்தில்
நிலை நின்றவர் ஆகிய ஸ்ரீ சாலக்ராமாசார்யர் ஸ்ரீ வடுக நம்பியைத் தொழுகிறேன்.

ஸ்ரீ வங்கிபுரத்து நம்பி
பாரத்வாஜ குலோத்பூதம் லக்ஷ்மணார்ய பதாச்ரிதம் |
வந்தே வங்கிபுராதீஸம் ஸம்பூர்ணாயம் க்ருபாநிதிம் ||

ஸ்ரீ பாரத்வாஜ குலத்திலகர், ஸ்ரீ எம்பெருமானார் திருவடியில் ஆச்ரயித்தவர்,
ஸ்ரீ வங்கிபுரத் தலைவர் க்ருபா நிதியாகிய ஸ்ரீ வங்கிபுரத்து நம்பியைத் தொழுகிறேன்.

ஸ்ரீ சோமாசியாண்டான் (சித்திரை திருவாதிரை)
நௌமி லக்ஷ்மண யோகீந்த்ர பாதஸேவைக தாரகம் |
ஸ்ரீராமக்ரதுநாதார்யம் ஸ்ரீபாஷ்யாம்ருத ஸாகரம் ||

ஸ்ரீ எம்பெருமானார்க்குக் குற்றேவல்கள் பெருங்களிப்போடு செய்தவர், ஸ்ரீபாஷ்ய அமுதக் கடல் என்னலாம்படி
அதைக் கற்றறிந்தவர், ஸ்ரீ ராமர் எனும் திரு நாமம் பூண்ட ஸ்ரீ சோமாசி ஆண்டானைத் தொழுகிறேன்.

ஸ்ரீ பிள்ளை உறங்கா வில்லி தாசர் (மாசி ஆயில்யம்)
ஜாகரூக தநுஷ்பாணிம் பாணௌ கட்கஸமந்விதம்
ராமானுஜஸ்பர்சவேதிம் ராத்தாந்தார்த்த ப்ரகாசகம் |
பாகிநேயத்வயயுதம் பாஷ்யகார பரம்வஹம்
ரங்கேசமங்களகரம் தநுர்தாஸம் அஹம் பஜே ||

எப்போதும் உறங்காத விழிப்புள்ள ஸ்ரீ உறங்காவில்லி தாசர், ஒருகையில் வில்லும் மற்றொன்றில் கத்தியும் ஏந்தி
ஸ்ரீ நம்பெருமாளைக் காப்பவர், ஸ்ரீ ராமாநுசர்க்கு ஸ்பர்சவேதி, ரஹஸ்ய புருஷார்த்தங்களைத் தம் வாழ்வில்
வெளிப்படுத்தியவர், இரு மருமகன்களை உடையவர், ஸ்ரீ எம்பெருமானார் மடத்தை நடத்தியவர், நித்தியமாக
ஸ்ரீ பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்தவருடைய திருவடிகளை புகலாக அடைகிறேன்.

ஸ்ரீ திருக்குருகைப் பிரான் பிள்ளான் (ஐப்பசி புனர்வஸு )
த்ராவிடாகம ஸாரக்யம் ராமாநுஜ பதாச்ரிதம் |
ஸுதியம் குருகேசார்யம் நமாமி சிரஸாந்ஹவம் ||

த்ராவிட வேதத்தின் உட்பொருள் நன்கு உணர்ந்தவர், ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகலில் சரணம் புக்கவர்,
மஹா மேதாவியான ஸ்ரீ குருகேசாசார்யரை தினமும் தொழுகிறேன்.

ஸ்ரீ எங்களாழ்வான் (சித்திரை ரோஹிணி)
ஸ்ரீவிஷ்ணுசித்த பத பங்கஜ ஸம்ச்ரயாய சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண |
நோசேந் மமாபி யதிஸேகரபாரதீனாம் பாவ: கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய: ||

ஸ்ரீ விஷ்ணு சித்தரை அடைந்திருக்க அடியேன் மனம் விரும்புகிறது. அவர் திருவடிகளைத் தவிர வேறு எது பயனுள்ளது?
அவர் திருவடிகளைச் சார்ந்திரேனாகில் அடியேன் எவ்வாறு ஸ்ரீ எம்பெருமானார் அருளிய திவ்யார்த்தங்களைக் கற்றிருக்க முடியும்?

ஸ்ரீ அநந்தாழ்வான் (சித்திரை சித்திரை)
அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதாநாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||

அனைத்துக் கல்யாண குணங்களின் இருப்பிடம், அஞ்ஞான இருளை ஒழிப்பவர்,
தம்மைச் சரண் புக்கோர்க்கு ஒப்பிலா அரண் ஆகிய ஸ்ரீ அநந்தாழ்வானை வணங்குகிறேன்.

ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் (பங்குனி ஹஸ்தம்)
ஸ்ரீரங்கே மீநஹஸ்தே ச ஜாதம் ரங்கார்யநந்தநம் |
ராமாநுஜபதாஸ்கந்தம் ரங்கநாதகுரும் பஜே ||

கைங்கார்யருக்குப் புதல்வராகப் பங்குனி ஹஸ்தத்தில் அவதரித்த, ஸ்ரீ ராமானுஜரின் திருவடி பக்தர்,
ஸ்ரீ ரங்கநாதர் எனும் திருநாமம் கொண்ட ஸ்ரீ திருவரங்கத்து அமுதத்தனாரிடம் புகல் அடைகிறேன்.

ஸ்ரீ நடாதூரம்மாள் (சித்திரை சித்திரை)
வந்தேஹம் வரதார்யம் தம் வத்ஸாபி ஜநபூஷணம் |
பாஷ்யாம்ருத ப்ரதாநாத்ய ஸஞ்ஜீவயதி மாமபி ||

அடியேனுக்கு ஸ்ரீ பாஷ்யத் தேன் அமுது ஊட்டிய ஸ்ரீவத்ஸ குல திலகர்
ஸ்ரீ நடாதூர் அம்மாள் எனும் ஸ்ரீ வரதாசார்யரை வணங்குகிறேன்.

ஸ்ரீ வேத வ்யாஸ பட்டர்(வைகாசி அனுஷம்)
பௌத்ரம் ஸ்ரீராமமிச்ரஸ்ய ஸ்ரீவத்ஸாங்கஸ்ய நந்தநம்
ராமஸூரிம் பஜே பட்டபராசரவராநுஜம்

ஸ்ரீ ராம மிச்ரர் (ஸ்ரீ கூரத்தாழ்வானின் திருத்தகப்பனார், கூரத்து ஆழ்வார்) திருப்பேரனாரும்,
ஸ்ரீ ஆழ்வானின் திருக்குமாரரும், ஸ்ரீ பராசர பட்டரின் இளைய சஹோதரருமான ஸ்ரீ ராமப் பிள்ளை எனும்
ஸ்ரீ வேத வ்யாஸ பட்டரை அடியேனுக்குப் புகலாக அடைகிறேன்.

ஸ்ரீ கூரநாராயண ஜீயர் (மார்கழி கேட்டை)
ஸ்ரீபராசரபட்டார்ய சிஷ்யம் ஸ்ரீரங்கபாலகம்
நாராயணமுநிம் வந்தே ஜ்ஞாநாதிகுணஸாகரம்

ஸ்ரீ பராசர பட்டர் சிஷ்யரும், ஸ்ரீ ரங்கத்தின் பாது காவலரும் ஞான, பக்திக்கடலுமான
ஸ்ரீ நாராயண முனியைத் தொழுகிறேன்..

ஸ்ரீ ச்ருத ப்ரகாசிகா பட்டர்
யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந தர்சிதா: |
வரம் ஸுதர்சநார்யம் தம் வந்தே கூர குலாதிபம் ||

எவரது ஸ்ரீ ச்ருதப்ரகாசிகா வ்யாக்யானத்தில் ஸ்ரீ யதிராஜரின் ஸ்ரீ பாஷ்யம் நன்கு விளக்கப் பட்டுள்ளதோ,
அந்த ஸ்ரீ கூர குலத்தோன்றல், மஹா ஞானி ஸ்ரீ சுதர்சனாசார்யரை வணங்குகிறேன்.

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை (ஆவணி ரோஹிணி)
ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுந ஸூநவே |
யத் கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா ||

ஸ்ரீ யாமுனாசார்யர் குமாரரும், எவர் க்ருபையினால் ஸ்ரீ எம்பெருமானை எளிதில் அடைய முடியுமோ
அந்த ஸ்ரீ கிருஷ்ணர் எனும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையைத் துதிக்கிறேன்.

ஈயுண்ணி மாதவப் பெருமாள் (கார்த்திகை பரணி)
லோகாசார்ய பதாம்போஜ ஸம்ச்ரயம் கருணாம்புதிம் |
வேதாந்த த்வய ஸம்பந்நம் மாதவார்யம் அஹம் பஜே ||

ஸ்ரீ நம்பிள்ளை லோகாசார்யர் திருவடிகளில் சரண் புக்கவரும், கருணா சாகரரும் ஸம்ஸ்க்ருத த்ராவிட (உபய)
வேதாந்தங்களில் கரை கண்டவருமான ஸ்ரீ ஈயுண்ணி மாதவப் பெருமாளை சரண் அடைகிறேன்.

ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள் (ஸ்வாதி)
மாதவாசார்ய ஸத்புத்ரம் தத்பாதகமலாச்ரிதம் |
வாத்ஸல்யாதி குணைர் யுக்தம் பத்மநாப குரும் பஜே ||

ஸ்ரீ மாதவாசார்யர் ஸத்புத்ரர், அவரது சிஷ்யர், வாத்சல்யாதி கல்யாண குணக் கடல் ஆகிய
ஸ்ரீ ஈயுண்ணி பத்மநாபப் பெருமாளை சரண் அடைகிறேன்.

நாலூர்ப் பிள்ளை (பூசம்)
சதுர்க்ராம குலோத்பூதம் த்ராவிட ப்ரஹ்ம வேதிநம் |
யஜ்ஞார்ய வம்சதிலகம் ஸ்ரீவராஹமஹம் பஜே ||

ஸ்ரீ கூரத்தாழ்வான் சிஷ்யர் நாலூரான் வம்சத்தவர், ஸ்ரீ எம்பெருமானார் சிஷ்யரான ஸ்ரீ எச்சான் வம்சத் திலகர்,
திராவிட வேத பாரங்கதர் ஆகிய ஸ்ரீ வராஹர் எனும் ஸ்ரீ நாலூர்ப் பிள்ளையை வணங்குகிறேன்.

நாலூர் ஆச்சான் பிள்ளை (மார்கழி பரணி)
நமோஸ்து தேவராஜாய சதுர்க்ராம நிவாஸிநே |
ராமானுஜார்ய தாஸஸ்ய ஸுதாய குணசாலிநே ||

ஸ்ரீ நாலூர்ப் பிள்ளை எனும் ஸ்ரீ ராமாநுஜாசார்யர் குமாரர், சதுர்க்ராமம் எனும் நாளூரில் வசிப்பவர்
ஸ்ரீ தேவராஜ குரு ஆகிய மஹா குணசாலி ஸ்ரீ நாலூர் ஆச்சான் பிள்ளையைத் தொழுகிறேன்.

ஸ்ரீ நடுவில் திருவீதி பிள்ளை பட்டர் (ஐப்பசி அவிட்டம்)
லோகாசார்ய பதாஸக்தம் மத்யவீதி நிவாஸிநம் |
ஸ்ரீவத்ஸசிஹ்நவம்சாப்திஸோமம் பட்டார்யமாச்ரயே ||

ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளில் ஆழ்ந்த பக்தர், ஸ்ரீரங்கம் நடுவில் திருவீதியில் வாழ்ந்தவர்,
ஸ்ரீ கூரத்தாழ்வானின் வம்சத்துக்கு முழு நிலவு போன்றவரான
ஸ்ரீ நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரைச் சரண் அடைகிறேன்.

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் (ஐப்பசி சதயம்)
ஜ்ஞாந வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸுந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத் குரும் பஜே ||

திராவிட வேதமாகிய ஸ்ரீ திருவாய்மொழியை விளக்கியவர், ஞானமும் வைராக்யமும் மிக்கவரான
எனது ஆசார்யர் ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயரைத் தொழுகிறேன்.

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் (மார்கழி அவிட்டம்)
த்ராவிடாம்நாய ஹ்ருதயம் குருபர்வக்ரமாகதம் |
ரம்யஜாமாத்ருதேவேந தர்சிதம் க்ருஷ்ணஸூநுநா ||

குருபரம்பராகதமான த்ராவிடவேதம் ஸ்ரீ திருவாய்மொழியின் பொருளை நமக்கு நன்கு உரைத்தருளியவர்
ஸ்ரீ கிருஷ்ணர் எனும் ஸ்ரீ வடக்குத் திருவீதி பிள்ளையின் குமாரர் ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை (ஆவணி ரோஹிணி)
ச்ருத்யர்த்தஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம்
பத்மோல்லஸத் பகவதங்க்ரி புராணபந்தும் |
ஜ்ஞாநாதிராஜம் அபயப்ரதராஜ ஸூநும்
அஸ்மத் குரும் பரமகாருணிகம் நமாமி ||

ச்ருதிப் பொருளை அமுதமாய்ப் பொழிபவர், ஸ்ம்ருதிப் பொருளைத் தாமரையை அலர்த்தும்
கதிரவன் போல் விளங்கச் செய்பவர், ஸ்ரீ எம்பெருமானின் தாமரைத் திருவடிகளில் பழவடியார், ஞானப் பேரரசர்,
அபயப்ரத ராஜர் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையின் திருக்குமாரரான என் ஆசார்யர் பரம காருணிகர்
ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளையை வணங்குகிறேன்.

ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் (ஆனி ஸ்வாதி)
ஸுந்தரஜாமாத்ருமுநே: ப்ரபத்யே சரணாம்புஜம் |
ஸம்ஸாரார்ணவ ஸம்மக்ந ஜந்து ஸந்தாரபோதகம் ||

சம்சாரக் கடலில் மூழ்கும் மக்களுக்கு நல்ல படகாகும் ஸ்ரீ அழகிய மணவாள முனியின்
திருவடித் தாமரைகளை பணிகிறேன்.

ஸ்ரீ கூர குலோத்தம தாசர் (ஐப்பசி திருவாதிரை)
லோகாசார்ய க்ருபாபாத்ரம் கௌண்டிந்ய குல பூஷணம் |
ஸமஸ்தாத்ம குணாவாஸம் வந்தே கூர குலோத்தமம் ||

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் பரிபூர்ண க்ருபைக்குப் பாத்ரர், கௌண்டிந்ய குலத்தின் அணிகலன்,
ஸகல குண ஸம்பன்னரான ஸ்ரீ கூர குலோத்தம தாஸரைத் தொழுகிறேன்.

ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளை (ஐப்பசி உத்தரட்டாதி)
துலாஹிர்புத்ந்யஸம்பூதம் ஸ்ரீலோகார்ய பதாச்ரிதம் |
ஸப்தகாதா ப்ரவக்தாரம் நாராயணமஹம் பஜே ||

ஐப்பசி உத்தரட்டாதியில் அவதரித்தவர், ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரைச் சரண் புக்கவர்,
ஸ்ரீவசன பூஷண சாரமான சப்த காதையை அருளிச் செய்தவரான
ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளையை வணங்குகிறேன்.

ஸ்ரீ வேதாந்தாசார்யர் (புரட்டாசி திருவோணம்)
ஸ்ரீமான் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேசரீ |
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

எதிர்க்கும் கவிகளுக்கும் தார்க்கிகர்க்கும் வெல்ல ஒண்ணாத சிங்கம், வேதாந்த ஞானக் கடலான
ஸ்ரீமான் வேங்கட நாதார்யரை எப்போதும் என் இதயத்தில் எழுந்தருளப் பண்ணுகிறேன்.

ஸ்ரீ திருநாராயண புரத்து ஆய் ஜநன்யாசார்யர் (ஐப்பசி பூராடம்)
ஆசார்ய ஹ்ருதயஸ்யார்த்தா: ஸகலா யேந தர்சிதா: |
ஸ்ரீஸாநுதாஸம் அமலம் தேவராஜம் தமாச்ரயே ||

ஸ்ரீசானு தாஸர் என்றும் தேவராஜர் என்றும் புகழ் மிக்கவர், களங்கமற்றவர், ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதய பொருளை
விரித்துரைத்தவர் ஸ்ரீ ஆய் ஜனந்யாசார்யர் திருவடிகளைப் புகலாய் அடைகிறேன்.

—————————-

ஸ்ரீ மாமுனிகளின் அஷ்ட திக் கஜங்கள்

ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் (புரட்டாசி புனர்வஸு)
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா |
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமானுஜ முநிம் பஜே ||

ஸ்ரீ மாமுனிகளை எப்போதும் ஆஸ்ச்ரயித்தவரும், அவர் திருவடி ரேகைகள் போன்றவரும்,
அவரையே தம் சத்தையாகக் கொண்டவருமான ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரைப் போற்றுகிறேன்.

ஸ்ரீ பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் (கார்த்திகை புனர்வஸு)
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாத ஸேவைக தாரகம் |
பட்டநாத முநிம் வந்தே வாத்ஸல்யாதி குணார்ணவம் ||

ஸ்ரீ மாமுனிகள் திருவடித் தாமரைகளையே எப்போதும் புருஷார்த்தமாக உடையவர், சகல குணங்களும் நிறைந்தவர்,
வாத்சல்யம் மிக்கவரான ஸ்ரீ பட்டநாத முனிவரை வணங்குகிறேன்.

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் (புரட்டாசி பூரட்டாதி)
ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்
விபுல வாதூல கோத்ரோத்பவாநாம் வரம் |
ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பாதாச்ரயம்
வரத நாராயணம் மத் குரும் ஸம்ச்ரயே ||

சகல வேதாந்த தாத்பர்யங்களைக் கற்ற அறிவுக் கடல், புகழ் மிக்க வாதூல கோத்ரர், ஸ்ரீ மணவாள மாமுனிகளின்
திருவடிகளில் சரண் புக்கவரான ஸ்ரீ வரத நாராயண குரு எனும் ஸ்ரீ கோயில் அண்ணனை நான் சரண் அடைகிறேன்.

ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் (ஆடி பூசம்)
வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்தபோதம்
காந்தோபயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம் |
வத்ஸாந்வவாயமநவத்ய குணைருபேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் ||

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கடாக்ஷத்தால் விரிந்து விகஸித்த ஞானமுள்ளவர், ஸ்ரீ மணவாள மாமுனிகள் கருணைக்குப்
பூர்ண பாத்ரர் ஸ்ரீவத்ச குல விளக்கு, கல்யாண குணசாலியான ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணனை பக்தியோடு பஜிக்கிறேன்.

ஸ்ரீ எறும்பி அப்பா (ஐப்பசி ரேவதி)
ஸௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞான ப்ரதம் சுபம் ||

ஸ்ரீ மாமுனிகளின் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர், நம்மை ஞானம் தந்து காக்கும்
மங்கள ஸ்வபாவருமான ஸ்ரீ தேவராஜ குரு என்கிற ஸ்ரீ எறும்பி அப்பாவை வணங்குகிறேன்.

ஸ்ரீ அப்பிள்ளை
காந்தோபயந்த்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
வத்ஸாந்வயபவம் வந்தே ப்ரணதார்த்திஹரம் குரும் ||

ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருவடித் தாமரைகளில் வண்டு போன்ற, ஸ்ரீவத்ச குல திலகர்
ஸ்ரீ ப்ரணதார்த்திஹர குரு என்கிற ஸ்ரீ அப்பிள்ளையை வணங்குகிறேன்.

ஸ்ரீ அப்பிள்ளார்
காந்தோபயந்த்ரு யோகீந்த்ர ஸர்வ கைங்கர்யதூர்வஹம் |
ததேக தைவதம் ஸௌம்யம் ராமாநுஜ குரும் பஜே ||

ஸ்ரீ மாமுனிகள் ஒருவரையே தம் தேவனாகக் கருதி அவருக்கே எல்லாப் பணிவிடைகள் செய்த
ஸ்ரீ ராமானுஜ குரு என்கிற ஸ்ரீ அப்பிள்ளாரை வணங்குகிறேன்.

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் (புரட்டாசி மகம்)
வரதகுரு சரணம் வரவரமுநிவர்ய கநக்ருபா பாத்ரம் |
ப்ரவரகுண ரத்ந ஜலதிம் ப்ரணமாமி ஸ்ரீநிவாஸ குருவர்யம் ||

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் திருவடிகளையே பற்றினவரும், ஸ்ரீ மாமுனிகள் கருணையைப் பெற்றவரும்
குண ரத்நக் கடலுமான ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் என்கிற ஸ்ரீனிவாச குருவை வணங்குகிறேன்.

ஸ்ரீபெரும்புதூர் ஆதி யதிராஜ ஜீயர்(ஐப்பசிப்பூசம்)
ஸ்ரீமத் ராமாநுஜாங்க்ரி ப்ரவண வரமுநே: பாதுகம் ஜாதப்ருங்கம்
ஸ்ரீமத் வாநாத்ரி ராமாநுஜ கணகுரு ஸத்வைபவ ஸ்தோத்ர தீக்ஷம் |
வாதூல ஸ்ரீநிவாஸார்ய சரணசரணம் தத் க்ருபா லப்த பாஷ்யம்
வந்தே ப்ராஜ்ஞம் யதீந்த்ரம் வரவரதகுரோ: ப்ராப்த பக்தாம்ருதார்த்தம் ||

ஸ்ரீ மாமுனிகள் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர்,
ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரை போற்றிக் கொண்டே இருந்தவர்,
ஸ்ரீ வாதூல ஸ்ரீநிவாஸாசார்யரிடம் ஸ்ரீ பாஷ்யம் பயின்றவரான ஸ்ரீ பெரும்பூதூர் யதிராஜ ஜீயரை வணங்குகிறேன்.

ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணா (ஆவணி ஹஸ்தம்)
ஸ்ரீமத் வாநமஹாசைல ராமாநுஜ முநிப்ரியம் |
வாதூல வரதாசார்யம் வந்தே வாத்ஸல்ய ஸாகரம் ||

ஸ்ரீ வானமாமலை ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் ப்ரியத்துக்குரியவர், வாத்சல்யக் கடல் போன்றவர்,
ஸ்ரீ வாதூல வரதாசார்யர் என்கிற ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணாவை வணங்குகிறேன்.

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் (சித்திரை திருவோணம்)
ஸ்ரீசடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம் |
ஸ்ரீமத்யதீந்த்ரப்ரவணம் ஸ்ரீ லோகார்ய முநிம் பஜே ||

ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளில் வண்டு போன்றவர், ஸ்ரீ மாமுனிகளிடம் பரம பக்தர்,
ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் திவ்ய கிரந்தம் அருளிச் செய்தவர்,
ஸ்ரீ லோகார்ய முனி என்கிற ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயரை வணங்குகிறேன்..

ஸ்ரீ திருமழிசை அண்ணா அப்பங்கார் (ஆனி அவிட்டம்)
ஸ்ரீமத் வாதுல நரஸிம்ஹ குரோஸ்தநூஜம்
ஸ்ரீமத் ததீய பதபங்கஜ ப்ருங்கராஜம்
ஸ்ரீரங்கராஜ வரதார்ய க்ருபாத்த பாஷ்யம்
ஸேவே ஸதா ரகுவரார்யம் உதாரசர்யம்

ஸ்ரீ வாதூல நரசிம்மச்சார்யர் குமாரர், அவரடி பணிந்தவர், அவர் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர்,
அவரிடமும் ஸ்ரீ ரங்கராஜாசார்யரிடமும் ஸ்ரீ பாஷ்யம் பயின்றவர், ஸ்ரீ வாதூல வீரராகவர் என்றும்
ஸ்ரீ அண்ணா அப்பங்கார் என்றும் பிரசித்தி பெற்ற ரகுவராயரை வணங்குகிறேன்.
.
ஸ்ரீ அப்பன் திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் (ஆவணி ரோஹிணி)
ஸ்ரீவாதூல ரமாப்ரவாள ருசிர ஸ்ரக்ஸைந்ய நாதாம்சஜ
ஸ்ரீகுர்வீந்த்ரம் மஹார்ய லப்த நிஜஸத் ஸத்தம் ச்ருதா பீஷ்டதம்
ஸ்ரீராமாநுஜ முக்ய தேசிகலஸத் கைங்கர்ய ஸம்ஸ்தாபகம்
ஸ்ரீமத்வேங்கடலக்ஷ்மணார்ய யமிநம் தம்ஸத்குணம் பாவயே

ஸ்ரீ வாதூல குலாசார்யர்களில் நல்முத்துப் போன்றவர், ஸ்ரீ சேனை முதலியார் அம்சர்,
அண்டி வந்தோர் விரும்பியதைத் தந்தவர், திருவாதிரை உத்சவம் போன்றவற்றில்
கட்டிய கைங்கர்யம் போன்றவற்றை ஏற்படுத்தியவர், ஸ்ரீமத் வேங்கட லக்ஷ்மணார்ய யதி என்கிற
ஸ்ரீ எம்பார் ஜீயர் திருவடிகளை வணங்குகிறேன்.

ஸ்ரீ நாத முனிகள் ( 824-924 AD )
ஸ்ரீ உய்யக்கொண்டார் (புண்டரீகாக்ஷர்) ( 826-931AD )
ஸ்ரீ மணக்கால் நம்பி (ராமமிச்ரர்) ( 832-937AD )
ஸ்ரீ ஆளவந்தார் (யாமுனாசர்யர்) ( 916-1041 AD )
ஸ்ரீ கூரத்தாழ்வான் (1009-1133AD)
ஸ்ரீ உடையவர் (ஸ்ரீ ராமாநுஜர்) (1017-1137 AD)
ஸ்ரீ முதலி ஆண்டான் (1027-1132)
ஸ்ரீ எம்பார் (1021-1140)
ஸ்ரீ திருக்குருகைப் பிரான் பிள்ளான் (1026-1131 AD )
ஸ்ரீ அனந்தாழ்வான் ( 1055-1205 AD)
ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் (1057-1157AD )
ஸ்ரீ பராசர பட்டர் ( b 1074 AD )
ஸ்ரீ எங்கள் ஆழ்வான் (விஷ்ணு சித்தர்) (1106-1206 AD)
ஸ்ரீ நஞ்சீயர் (1113-1208 AD)
ஸ்ரீ நம்பிள்ளை (வரதாசார்யர்) (1147– 1252AD)
ஸ்ரீ நடாதூர் அம்மாள்(வாத்ஸ்ய வரதர்) (1165-1275 AD )
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை (க்ருஷ்ண ஸூரி) (1167-1262 AD)
ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை (க்ருஷ்ணபாத:) ( 1167-1264 AD )
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் (1205-1311 AD)
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ( வேங்கடநாதன்) (1268 – 1369 AD)
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை (ஸ்ரீசைலேசர்) (1290-1410 AD)
ஸ்ரீ ஸ்வாமி மணவாள மாமுனிகள் (1370-1443 AD)

ஸ்ரீ மாமுனிகள் அரங்கன் திருமுன்னிலையில் திருவாய்மொழிக்கு விரிவுரை செய்தருளிய ஆண்டு 1430 AD
உடையவருக்கு மடைப்பள்ளி கைங்கர்யம் செய்துவந்த ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் என்ற ஆத்ரேய ராமாநுஜரின் வம்சத்தில்
தோன்றிய ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளாரின் மருகர் ஸ்ரீ ஸ்வாமி தேசிகன்; அவரிடமே பயின்றவர்.
ஸ்ரீ ஸ்வாமி தேசிகனின் முதன்மைச் சீடர்கள் அவர்தம் திருக்குமாரரான ஸ்ரீ வரதாசார்யரும், ஸ்ரீ ப்ரம்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயரும்;
ஸ்ரீ குமார வரதாசார்யர் ( 1316-1401AD )
ஸ்ரீ ப்ரம்ஹதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் ( 1286-1386 AD )
பரகால மடம் இவரால் நிறுவப்பட்டது.

என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம்புக்கி
யானடைவே அவர்குருக்கள் நிரைவணங்கிப்
பின்னருளால் பெரும்பூதுர் வந்தவள்ளல்
பெரியநம்பி ஆளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனை நாதன்
இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே.- தேசிகப் பிரபந்தம்

’ஸ்ரீ திவ்யஸூரி சரிதம்’, ‘ஸ்ரீ யதிராஜ வைபவம்’ போன்ற நூல்கள் நாம் ஆசார்யர்களை அறிந்து
கொள்வதற்கு உதவுகின்றன. இவை ஸ்ரீ உடையவர் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்டவை; ‘
ஸ்ரீ இராமாநுச நூற்றந்தாதி’ உடையவரின் பெருமைகளைக் கூறுவது.

‘ஸ்ரீ பெரிய திருமுடி அடைவு’ என்னும் நூல் ஆசார்ய புருஷர்களின் வரலாற்றுக் குறிப்பைத் தெரிவிப்பது.
ஸ்ரீ ஆளவந்தாரின் சீடரான ஸ்ரீ மாறநேர் நம்பி அவதரித்தது பாண்டிய நாட்டின் ’பராந்தகபுரம்’ என்ற ஊர் என்பது
இந்நூல் தெரிவிக்கும் செய்தி.

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மா முனிகள் அஷ்ட திக் கஜங்கள் -வைபவம் –

October 23, 2020

ஸ்ரீ மா முனிகள் அஷ்ட திக் கஜங்கள் –

1-ஸ்ரீ வான மா மலை ராமானுஜ ஜீயர்
2-ஸ்ரீ திரு வேங்கடம் ஜீயர்
3-ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் –இவர் ஸ்ரீ நடுவில் ஆழ்வான் வம்சம்
4-ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் -இவர் ஸ்ரீ முதலி ஆண்டான் வாசம்
5-ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா -இவர் ஸ்ரீ முடும்பை நம்பி வம்சம்
6-ஸ்ரீ எறும்பி அப்பா -இவரும் ஸ்ரீ முடும்பை நம்பி வம்சம்
7-ஸ்ரீ அப்பிள்ளார்
8-ஸ்ரீ அப்பிள்ளை

———

1-ஸ்ரீ திருவேங்கட ராமானுஜ ஜீயர்

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பத பங்கே ருஹாஸ்ரிதம்
ஸ்ரீ வேங்கட ரகூத்தம்ஸ ஸோதரம் மநைவை முனிம்

ஸ்ரீ ராமானுஜர் ஸ்தாபித்த மட முதல் பட்ட ஜீயர் ஸ்ரீ அப்பன் சடகோப ராமானுஜ ஜீயர் –1119-1173-
ஸ்ரீ மா முனிகள் –12 th பட்டம் -1428-1431-
அதன் பின்பே ஸ்ரீ பெரிய கேள்வி ஜீயர் -ஸ்ரீ சின்ன ஜீயர் கள் எழுந்து அருளி உள்ளார்கள்

————–

2-ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாத சேவ ஏக தாரகம்
பட்ட நாத முனிம் வந்தே வாத்ஸல்யாதி குண ஆர்ணவம்

வ்ருஸ்சிகே ஸ்திதி பே ஜாதம் பர வஸ் த்வம்ஸ பூஷணம்
வர யோகி பதாதாரம் பட்ட நாதம் முனிம் பஜே

வர யோகி பதாதாரம் பர வஸ் த்வம்ஸ பூஷணம்
பட்ட நாதம் முனிம் வந்தே தீ பக்த்யாதி குண ஆர்ணவம்

வ்ருஸ்சிகே ஸ்திதி பே ஜாதம் வர யோகி பதாஸ்ரிதம்
கார்க்ய வம்ஸ ஸமுத் பூதம் பட்ட நாத முனிம் பஜே

ஸ்ரீ நடுவில் ஆழ்வான் வம்சம்
கார்த்திகை புனர்பூசம் திரு அவதாரம்
திருத் தகப்பனார் -ஸ்ரீ ராமானுஜாச்சார்யார்
இயல் பெயர் -ஸ்ரீ கோவிந்த தாஸர் அப்பன்
இவருக்கு ஸ்ரீ மா முனிகள் ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாளைத் திரு ஆராதனத்துக்குக் கொடுத்து அருளிச் செய்தார்
இவர் ஒரு திருவாடிப் பூரத்தில் சூடிக் கொடுத்து அருளிய நாச்சியார் பிரசாதம் கொண்டு வந்து சமர்ப்பிக்க
ஸ்ரீ மா முனிகள் இவருக்கு ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் தாசர் -என்ற திரு நாமம் இட்டு அருளினார்
இவர் பின்பு ஸ்ரீ மா முனிகள் இடமே சந்யாச ஆஸ்ரமம் பெற்று
ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்-என்று திரு நாமம் இடப் பெற்றவர்

இவர் அந்திம உபாய நிஷ்டை -பிரபந்தம் அருளிச் செய்துள்ளார்

இவர் வம்ச பரம்பரை
ஸ்ரீ கோவிந்த தாசர் அப்பன் -ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்
ஸ்ரீ பரவஸ்து நாயனார்
ஸ்ரீ சட கோபாச்சார்யார்
ஸ்ரீ வரதாச்சார்யார் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் -1525- சித்திரை திருவோணம்
ஸ்ரீ ஸ்தல சயனத் துறைவார் வம்சத்தார் இன்றும் ஸ்ரீ திருவல்லிக் கேணியில் அத்யாபகராக உள்ளார்

இன்னுலகில் கச்சி தனில் வந்து உதித்தோன் வாழியே
எழில் கார்த்திப் புனர் பூசித்து இங்கு உற்றான் வாழியே
மன்னு மறைத் தண் தமிழை மகிழ்ந்து உரைத்தான் வாழியே
மணவாள யோகி மலர்த்தாள் பணிவோன் வாழியே
பன்னு சிச்சன் அனுஷ்டானம் அறிவித்தோன் வாழியே
பாரில் அட்ட திக் கயத்தில் பேர் பெற்றான் வாழியே
சொன்ன நெறி மதுர கவி போலுமவன் வாழியே
தூய்மை மிகு பட்டர் பிரான் துணை அடிகள் வாழியே

—————–

3-ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன்

சகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்
விபுல வாதூல கோத்ர உத்பவா நாம் வரம்
ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பதாஸ்ரயம்
வரத நாராயண மத் குரும் ஸம்ஸ்ரயே

1389-புரட்டாசி பூரட்டாதி -திரு அவதாரம்
திருத் தகப்பனார் ஸ்ரீ தேவராஜ தோழப்பர்
இவருக்கு 7 சகோதரர்கள்
இயல் பெயர் ஸ்ரீ வரத நாராயண குரு
இவருடைய பால்யத்திலே திருத் தகப்பனார் ஸ்ரீ பரமபதம் ஆச்சார்யர் திருவடி அடைய
ஸ்ரீ கோயில் மரியாதை கிடைக்காமல் போனது
ஸ்ரீ ராமானுஜர் ஸ்வப்னத்தில் ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயிக்க த் தெரிவித்து அருளினார்
1371-ஸ்ரீ நம் பெருமாள் ஸ்ரீ கோயிலுக்குத் திரும்பினாலும் 1415 வரை ஸ்ரீ கோயில் மரியாதைகள்
இவர் வம்சத்துக்கு கிடைக்க வில்லை
ஸ்ரீ மா முனிகளே பின்பு ஏற்பாடு செய்து அருளினார்
ஸ்ரீ அழகிய ஸிம்ஹர் திரு ஆராதனப் பெருமாளையும் தந்து அருளினார்
கீழ் உத்தர வீதி 16 கால் மண்டபத்தையும் இவருக்கு மடமாகக் கொடுத்து அருளினார்

ஸ்ரீ மா முனிகளின் நியமனப்படி இவருடைய சிற்றண்ணர் குமாரர் அப்பாச்சியார் அண்ணா –
தமையனார் போர் ஏற்று நாயனாரையும் ஸ்ரீ வான மா மலை ராமானுஜ ஜீயர் இடம் ஆஸ்ரயிக்கச் செய்தார்
ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணா – ஸ்ரீ காஞ்சி புர கோயில் நிர்வாகம் செய்து வந்தார்

இவரே ஸ்ரீ உத்தம நம்பியையும்
ஸ்ரீ அப்பிள்ளார்
ஸ்ரீ அப்பிள்ளை
ஸ்ரீ எறும்பி அப்பா -ஆகியோரையும் ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயிக்கச் செய்தார்

இவர் ஸ்ரீ மா முனிகள் விஷயமான கண்ணி நுண் சிறுத்தாம்பு
ஸ்ரீ வர வர முனி அஷ்டகம்
ஸ்ரீ ராமாநுஜார்யா திவ்யாஜ்ஞா –நூல்களையும்
ஸ்ரீ உபதேச ரத்ன மாலை தனியனையும் அருளிச் செய்துள்ளார்
இவருக்கு ஸ்ரீ பகவத் சம்பந்தாச்சார்யார் -என்னும் விருது ஸ்ரீ மா முனிகள் தந்து அருளினார்
ஸ்ரீ நம் பெருமாள் இவருக்கு ஜீயர் அண்ணன் -என்று அருளப்பாடிட்டார் –
ஸ்ரீ காஞ்சி பேர் அருளாளர் இவருக்கு ஸ்வாமி அண்ணன் -என்று அருளப்பாடிட்டார்
ஸ்ரீ மா முனிகள் சரம தசையில் இவர் கையாலேயே தளிகை சமைக்கச் செய்து விரும்பி அமுது செய்து மகிழ்ந்தாராம்

இவர் வம்சத்தின் பெருமையால் ஸ்ரீ மா முனிகள் இவர் வம்சத்தாரை கீழ் உள்ள 7 கோத்ர த்துக்குள்ளேயே
சம்பந்தம் செய்து கொள்ள அறிவுறுத்தி அருளினாராம்
1-ஸ்ரீ முதலியாண்டாம் வம்சம் -வாதூல கோத்ரம்
2-ஸ்ரீ முடும்பை நம்பி வம்சம் -ஸ்ரீ வத்ச கோத்ரம்
3-ஸ்ரீ முடும்பை அம்மாள் வம்சம் -கௌண்டின்ய கோத்ரம்
4-ஸ்ரீ ஆஸூரிப் பெருமாள் வம்சம் -ஹரிதா கோத்ரம்
5-ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் வம்சம் -ஆத்ரேய கோத்ரம்
6-ஸ்ரீ குமாண்டூர் இளைய வல்லி வம்சம் -கௌசிக கோத்ரம்
7-ஸ்ரீ வங்கி புரத்து நம்பி வம்சம் -பரத்வாஜ கோத்ரம்

ஸ்ரீ கோயில் அண்ணனின் அஷ்ட திக் கஜங்கள்

1-ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் –இவர் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -இவரது திருத் தம்பியார்
2-ஸ்ரீ திருக் கோபுரத்து நாயனார் -இவரும் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -ஸ்ரீ அழகிய சிங்கர் திருத்தம்பியார்
3-ஸ்ரீ கந்தாடை நாயன் -இவரும் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -இவரது திருக் குமாரர் –1408-மார்கழி உத்திரட்டாதி
4-ஸ்ரீ சுத்த சத்வம் அண்ணன் -இவர் ஸ்ரீ இளைய வல்லி வம்சம் -இவரது திரு மருமகன்
5-ஸ்ரீ திருவாழி ஆழ்வார் பிள்ளை -இவரும் ஸ்ரீ இளைய வல்லி வம்சம் –
6-ஸ்ரீ ஜீயர் நாயனார் -ஸ்ரீ கோமடத்தாழ்வான் வம்சம் -ஸ்ரீ மா முனிகள் திருப்பேரானார்
7-ஸ்ரீ ஆண்ட பெருமாள் நாயனார் -ஸ்ரீ குமாண்டூர் ஆச்சான் பிள்ளை திருப்பேரானார்
8-ஸ்ரீ ஐயன் அப்பா –

ஸ்ரீ திருமலை அனந்தாழ்வான் வம்ச ஸ்ரீ குன்னத்து ஐயன் இவர் இடத்திலும்
இவர் குமாரர் பேரர்கள் இடத்திலும் அன்பு பூண்டு பல கைங்கர்யங்களைச் செய்தாராம்

இவர் விபவ வருஷம் -1448- சித்திரை மாதம் கிருஷ்ண பக்ஷ த்ருதீயை அன்று
ஸ்ரீ ஆச்சார்யர் திருவடிகளை அடைந்தார் –

தேன் அமரு மலர் முளரித் திருத் தாள்கள் வாழியே
திருச் சேலை இடை வாழி திரு நாபி வாழியே
தானமரு மலர்க்கண்கள் தனி யுதரம் மார்பம்
தங்கு தொங்கும் உப வீதம் தடந்தோள்கள் வாழியே
மானபரன் மணவாள மா முனி சீர் பேசும்
மலர்ப் பவளம் வாய் வாழி மணி முறுவல் வாழியே
ஆனனமுந் திரு நாம மணி நுதலும் வாழியே
அருள் வடிவன் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

————–

4-ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமி

கர்கடே புஷ்ய சஞ்சாத் வாதி பீகரம் ஆஸ்ரயே
வேதாந்தா சார்யா ஸத் சிஷ்யம் வர யோகி பதாஸ்ரிதம்

வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்த போதம்
காந்தோ பயந்த்ருய மிந கருண ஏக பாத்ரம்
வத்ஸ அந்வயம் அநவத்யா குணை ருபேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம்

முடும்பை வம்சம்
1361-ஆடி -பூசம் -ஸ்ரீ காஞ்சியில் திரு அவதாரம்
ஸ்ரீ வத்ஸ கோத்ரம்
இயல் பெயர் ஸ்ரீ ஹஸ்தி கிரி நாதர் அண்ணா
திருத்தகப்பனார் -ஸ்ரீ அனந்தாச்சார்யார்
திருத்தாயார் -ஸ்ரீ ஆண்டாள்
ஸ்ரீ தேசிகன் திருக்குமாரர் ஸ்ரீ நயன வரதாச்சார்யர் இடம் ஸ்ரீ பாஷ்யம் கற்றார்
க்ருஹஸ்தாஸ்ரமம் ஸ்வீ கரித்து –திருமஞ்சனத்துக்கு சாலைக் கிணறு தீர்த்த கைங்கர்யம்
கைங்கர்யம் செய்து வந்தார்
நரஸிம்ஹ மிஸ்ரன் மாயாவதி இவற்குருவான ஸ்ரீ நாயந வரதாச்சார்யரை வாதத்துக்கு அழைக்க
அவர் இவரை அனுப்ப வென்றதால் பிரதிவாதி பயங்கரர் விருது பெற்றார்

இவருக்கு
ஸ்ரீ ஸ்ரீ நிவாசார்யார்
ஸ்ரீ அநந்தாச்சார்யார்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் -மூன்று திருக்குமாரர்கள்
ஆந்திர ராஜா வீர நரஸிம்ஹ ராயன் -இவரது சிஷ்யன்
ஸ்ரீ திருமலையில் ஸ்ரீ ஆகாச கங்கையில் இருந்து திரு மஞ்சன தீர்த்த கைங்கர்யம் செய்து வர
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ மா முனிகள் பிரபாவம் பேச அத்தைக் கேட்டு ஏலக்காய் இத்யாதிகள் சேர்க்க மறக்க
ஸ்ரீ திருவேங்கடமுடையானோ அர்ச்சக முகேந இன்று தீர்த்தம் மிக்க மணத்துடன் இருந்தது என்று அருளிச் செய்ய
ஸ்ரீ மா முனிகளின் பிரபாவம் கேட்டதாலே நடந்த விசேஷம் என்று தெரிந்து மகிழ்ந்து
ஸ்ரீ ரெங்கம் சென்று ஆஸ்ரயிக்க ஆசை கொண்டார் –

ஸ்ரீ ராமானுஜருக்கு ஸ்ரீ கூரத்தாழ்வானைப் போலவே ஸ்ரீ மா முனிகளுக்கு இவர் உஸாத் துணையாக இருந்தார் –
ஸ்ரீ மா முனிகள் உடன் ஸ்ரீ திருமலைக்கு எழுந்து அருளி ஸூ ப்ரபாதம் -ஸ்தோத்ரம் -பிரபத்தி -மங்களா சாசனம்
அருளிச் செய்யும் படி செய்து நித்ய அநுஸந்தான ஏற்பாடு செய்ய வைத்து அருளினார் –
ஸ்ரீ ரெங்கம் திரும்பி சிஷ்யர்களுக்கு ஸ்ரீ பாஷ்ய கால ஷேபம் சாதிக்கும் படி செய்து அருளி ஸ்ரீ அண்ணாவை
ஸ்ரீ பாஷ்ய சிம்ஹாசனத்தில் அபிஷேகம் செய்து ஸ்ரீ பாஷ்யாச்சார்யர் என்ற பட்டமும் வழங்கி அருளினார் –
ஸ்ரீ மா முனிகள் திரு நாட்டுக்கு எழுந்து அருளின பின்னர் ஸ்ரீ திருமலைக்கு எழுந்து அருளி
கைங்கர்யம் செய்து கொண்டு ஸ்ரீ பரவஸ்து ஸ்ரீ நிவாஸாச்சார்யார் போல்வாருக்கு
ஸாஸ்த்ர அதி வர்த்தனங்கள் செய்து அருளினார் –

இவர் அருளிச் செய்த நூல்கள்
ஸ்ரீ பாஷ்யம் -ஸ்ரீ பாகவதம் -ஸ்ரீ ஸூ பால உபநிஷத் -ஸ்ரீ அஷ்ட ஸ்லோஹீ –
ஸ்ரீ யதிராஜ விம்சதி -இவற்றுக்கு வியாக்யானங்களும்
ஸ்ரீ வர வர முனி சதகம்
ஸ்ரீ வர வர முனி ஸூ ப்ரபாதம்
ஸ்ரீ 108 திவ்ய தேச ஸூ ப்ரபாதம் -ஸ்தோத்ரம் -பிரபத்தி -மங்களம்
ஸ்ரீ ராமானுஜ ஸூ ப்ரபாதம்
ஸ்ரீ ரெங்க ராஜ ஸூ ப்ரபாதம்
ஸ்ரீ கிருஷ்ண மங்களம்
ஸ்ரீ பிரபத்தி யோக காரிகை
ஸ்ரீ ப்ரசார்ய சப்ததி ரத்ன மாலை
ஸ்ரீ நித்ய ஆராதனை விதி
ஸ்ரீ விஜய த்வஜம்
ஸ்ரீ ஜீயர் வாழித் திரு நாமம்
ஸ்ரீ இருபது வார்த்தை
ஸ்ரீ பெரிய ஜீயர் பாதாதி கேசாந்த மாலை
ஸ்ரீ வ்ருத்தி ஸ்தவம் –ஆகியவை –

92 வருஷங்கள் வாழ்ந்து -1453-பங்குனி சுக்ல பக்ஷ நவமி புஷ்ய நக்ஷத்திரத்தில்
ஸ்ரீ திருநாடு எழுந்து அருளினார் –

————

5-ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள்

துலா ரேவதி ஸம்பூதம் வர யோகி பதாஸ்ரிதம்
ஸர்வ வேதாந்த ஸம் பூர்ணம் அப்பாசார்யம் அஹம் பஜே

ஸ்ரீ வத்ஸ கோத்ரம் -ஸ்ரீ முடும்பை வம்சம் -ஐப்பசி ரேவதி –
ஸ்ரீ சோளிங்கர் அருகில் சித்தூர் சாலையில் எறும்பியில் திரு அவதாரம்
திருத்தகப்பனார் -ஸ்ரீ பெரிய சரண்யாச்சார்யர் -ஐயை -என்றும் ஸ்ரீ ரெங்கராஜர் என்றும் திரு நாமங்கள்
இயல் பெயர்-ஸ்ரீ தேவ ராஜர்
திரு ஆராதனப் பெருமாள் -ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் -இவர் சங்கல்பித்த படியே
ஸ்ரீ கோயில் அண்ணன் மூலம் ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயித்தார்

அருளிச் செய்த நூல்கள்
ஸ்ரீ பூர்வ தினசரி
ஸ்ரீ உத்தர தினசரி
ஸ்ரீ சைலேச அஷ்டகம்
ஸ்ரீ வர வர முனி சதகம்
மேலும் 10 கிரந்தங்கள்
ஸ்ரீ உபதேச ரத்ன மாலை -மன்னுயிர் காள் இங்கே -பாசுரமும் இவர் அருளிச் செய்ததே

———————-

6- ஸ்ரீ அப்பிள்ளார்
இயல் பெயர் -ஸ்ரீ ராமானுஜன்
ஸ்ரீ ஸம்ப்ராய சந்திரிகை -11-பாடல்கள் உள்ள கிரந்தம் அருளிச் செய்துள்ளார்
இவர் வம்சத்தார் இன்றும் ஸ்ரீ காட்டு மன்னார் கோயிலில் தீர்த்தகாரர்கள் –
ஸ்ரீ நாதமுனி சந்நிதி கைங்கர்யம் செய்து கொண்டு உள்ளார்கள்
ஸ்ரீ மா முனிகள் திருக்கைச் செம்பை உருக்கி இவரால் செய்யப்பட ஸ்ரீ மா முனிகள் அர்ச்சா விக்ரஹம்
இன்றும் ஸ்ரீ ரெங்கம் பல்லவ ராயன் மடத்தில் உள்ள ஸ்ரீ மா முனிகளின் சந்நிதியில்
திரு ஆராதனம் செய்யப் பட்டு வருகிறது –

————————-

7- ஸ்ரீ அப்பிள்ளை
இயல் பெயர் -ஸ்ரீ ப்ரணதார்த்தி ஹரர்
இவர் ஐந்து ஸ்ரீ திருவந்தாதிகளுக்கும்
ஸ்ரீ எதிராஜ விம்சதிக்கும் உரை சாதித்து உள்ளார்
பத்து ஸ்ரீ ஆழ்வார்களும் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் மேலும்
மூன்று பாடல்களுடன் 15 பாடல்களுடன் வாழித் திரு நாமங்கள் அருளிச் செய்துள்ளார்
ஸ்ரீ மா முனிகளைப் பற்றிய செய்ய தாமரைத் தாளிணை வாழியே -என்ற
பாசுரமும் இவர் அருளிச் செய்ததே –

—————-

ஸ்ரீ வான மா மலை ராமானுஜ ஜீயரின் அஷ்ட திக் கஜங்கள்

1-ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணா -இவர் ஸ்ரீ முதலி யாண்டான் வம்சம்
2-ஸ்ரீ போர் ஏற்று நாயனார் -இவரும் ஸ்ரீ முதலி யாண்டான் வம்சம்
3-ஸ்ரீ சுத்த சத்வம் அண்ணா -இவர் ஸ்ரீ இளைய வல்லி வம்சம்
4-ஸ்ரீ ராமானுஜம் பிள்ளை -இவர் ஸ்ரீ முடும்பை நம்பி வம்சம்
5-ஸ்ரீ சண்ட மாருதம் மஹாச்சார்யார் -இவர் ஸ்ரீ இளைய வள்ளி வம்சம்
6-ஸ்ரீ ஞானக் கண் ஆத்தான் -இவர் முடும்பை நம்பி வம்சம்
7-ஸ்ரீ திருக் கோட்டியூர் அரையர்
8-ஸ்ரீ பள்ளக் கால் சித்தர்

———————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜர் நியமித்த -74- ஸிம்ஹாஸனாதி பதிகள் வைபவம் –31-41-

October 22, 2020

31- ஸ்ரீ உக்கல் அம்மாள் ஸ்வாமி
ஸ்ரீ உடையவருக்கு திரு ஆல வட்ட கைங்கர்யம் செய்தவர்

———–

32- ஸ்ரீ சொட்டை அம்மார் ஸ்வாமி
இவர் ஸ்ரீ திரு நாராயண புரத்தில் ஸ்ரீ உடையவர் ஸந்நிதியில்
ஸ்ரீ நடுவில் ஆழ்வான் இடம் ஸ்ரீ வங்கி புரத்து ஆச்சி உடன் ஸ்ரீ பாஷ்யம் கேட்டவர்
அவர் இவர்களை ஆசீர்வதித்து ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று
இருங்கோள் -என்று அருளிச் செய்தார் –

————-

33-ஸ்ரீ கிடாம்பிப் பெருமாள் ஸ்வாமி
இவர் ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் உடன் சேர்ந்து திரு மடப்பள்ளி கைங்கர்யம் செய்தவர்
ஸ்ரீ பாஷ்யம் முடித்த பின்பு ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாஷ்ய கோசத்துடன் ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் உடன்
காஷ்மீர் சென்று சாரதா பீடத்தில் வைத்து அங்கீ காரம் பெறச் செய்தார்

————————–

34-ஸ்ரீ ஈச்சம் பாடி ஆச்சான் ஸ்வாமி

ஸ்ரீ ஈச்சம்பாடி ஸ்ரீ திரு மலைக்கு அருகில் உள்ளது
இவர் திருத் தகப்பனார் -ஸ்ரீ சுந்தர தேசிகர் என்ற ஸ்ரீ அழகப் பிரான் –
திருத்தாயார் -ஸ்ரீ திருமலை நம்பியின் திருக்குமாரத்தில்
இருவரும் ஸ்ரீ ஆளவந்தார் நியமனப்படி திருமலையில் கைங்கர்யம் செய்து கொண்டு இருந்தார்கள்
ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ திருமலைக்கு எழுந்து அருளிய போது அவருக்கு ஸ்ரீ சுந்தர தேசிகர்
ஸ்ரீ தாப நீய உபநிஷத்தையும் ஸ்ரீ நரஸிம்ஹ நிமந்த்ரத்தையும் உபதேசித்தார்
அவருக்கு 1026 தை மாசம் ஹஸ்தம் இவர் பிறக்க
ஆச்சான் ஸ்ரீ நிவாஸாசார்யார்-என்ற பெயர் சாற்றி அருளினார்
இவர் ஸ்ரீ ராமானுஜரை ஆஸ்ரயித்து தர்சன ப்ரவர்த்தனம் செய்து அருளினார் –

ஏராரும் தை யத்தம் இங்கு உதித்தான் வாழியே
சுந்தரேசன் திரு மகனாய் துலங்குமவன் வாழியே
பார் புகழும் யதி ராஜன் பதம் பணிவோன் வாழியே
சீராரும் வேங்கடத்தில் திகழுமவன் வாழியே
பார் மகிழும் பாடியத்தை பகருமவன் வாழியே
உத்தமமாம் குலமதனில் தொல் புகழோன் வாழியே
தொண்டர் குழாம் கண்டு உகக்கும் தொல் புகழோன் வாழியே
நல் ஈச்சம்பாடி வாழ் நம் ஆச்சான் வாழியே

——————

35- ஸ்ரீ ஈச்சம் பாடி ஜீயர் ஸ்வாமி

இவர் ஸ்ரீ ஈச்சம் பாடி ஆச்சானின் இளைய சகோதரர்
இவர் 1030 ஆனி திருவோணம் திரு அவதாரம்
ஸ்ரீ வேங்கடேசன் திரு நாமம் இயல் பெயர்
ஐவரும் ஸ்ரீ ராமானுஜரை ஆஸ்ரயித்து தரிசன பிரவர்தனம் செய்து கொண்டு இருந்தார்
அவர் இடமே சந்யாச ஆஸ்ரமம் ஸ்வீ காரம் பெற்று ஸ்ரீ ஈச்சம் பாடி ஜீயர் ஆனார்

ஆனி தனில் ஓணத்தில் அவதரித்தான் வாழியே
வேங்கடத்தைப் பாதியாக விரும்புமவன் வாழியே
பூவார்ந்த கழல்களையே போற்றுமவன் வாழியே
பதின்மர் கலை உட் பொருளை பகருமவன் வாழியே
அநவரதம் அரி யுருவன் அடி தொழுவோன் வாழியே
எப்பொழுதும் யதி பதியை ஏத்துமவன் வாழியே
முக்தி தரும் முந்நூலும் முக்கோலும் வாழியே
எழில் ஈச்சம் பாடி உறை ஜீயர் தாள் வாழியே –

————

36–ஸ்ரீ காராஞ்சி சோமயாஜியார் ஸ்வாமி

இவர் ஸ்ரீ உடையவரை ஆஸ்ரயித்தவர்
ஸ்ரீ உடையவர் இருக்கும் இடம் சென்று கைங்கர்யம் செய்ய இவர் மனைவி இடம் தராததால்
ஸ்ரீ உடையவர் விக்ரஹம் பண்ணி பூஜை செய்ய விரும்பினார்
விக்ரகம் சரிவர அமையாததால் அதை அழித்து வேறே ஒரு விக்ரஹம் பண்ணினார்
ஒரு நாள் இரவில் ஸ்ரீ உடையவர் ஸ்வப்னத்தில் தோன்றி ஏன் இப்படி செய்கிறீர் -என்று கேட்டார்
கண் விழித்து நேரே ஸ்ரீ ரெங்கம் புறப்பட்டுச் சென்று ஸ்ரீ உடையவராய் தண்டம் சமர்ப்பித்து நடந்தத்தைச் சொன்னார்
ஸ்ரீ உடையவர் முறுவல் செய்து அபயம் அளித்து இவருடைய கவலைகளைத் தீர்த்தார்

——————-

37-ஸ்ரீ ஆஸூரிப் பெருமாள் ஸ்வாமி

இவருக்கு ஆஸூரித் தேவர் -ஆஸூரி புண்டரீகாக்ஷர் -என்ற திரு நாமங்கள் உண்டு
ஹாரித கோத்ரம்
ஸ்ரீ நடுவில் ஆழ்வானுடைய சிஷ்யர்
ஸ்ரீ திரு நாராயண புரம் இருந்து தர்சன நிர்வாஹம் செய்து வந்தார்
இவரது திருவம்சத்தில் திரு அவதரித்தவர் ஸ்ரீ ஆய் ஜெகந்நாதாச்சார்யார் -என்ற பிரசித்தி பெற்ற வர் –

—————-

38- ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் ஸ்வாமி

ராமானுஜ பதாம் போஜ யுகளீ யஸ்ய தீமத
ப்ராப்யம் ச ப்ராபகம் வந்தே ப்ரணதார்த்தி ஹரம் குரும்

ஆஸ்திகா அக்ரேசரம் வந்தே பரிவ்ராட் குரு பாஸகம்
யாசிதம் குரு கேசேந ப்ரணதார்த்தி ஹரம் குரும்

சித்திரை ஹஸ்தம்
ஆத்ரேய கோத்ரம்
தளிகைக் கைங்கர்யம் -திருக் கோட்டியூர் நம்பி நியமனம் பிரசித்தம்
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் உடைய அத்தை கணவர்
ஸ்ரீ திரு விருத்தத்துக்கு தனியன் சாதித்து உள்ளார்

அபராத ஸஹஸ்ர பாஜநம் –அகதிம் -சொல்ல அழகர் நீ ராமானுஜன் அடியவராக இருக்க
அகதி சொல்லக் கூடாதே என்று அருளிச் செய்த விருத்தாந்தம் –
தீர்த்தம் சாதிக்க -பணிமானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட -பாசுரம் சொல்லி
கிருதஜ்ஜை தெரிவித்துக் கொண்டாரே
பட்டர் இடம் தாழ்ந்து பரிமாற்ற -வயசில் மூத்த ராமானுஜர் அடியாராய் இருக்க இவ்வாறு செய்வது என் என்று கேட்க
நம்முடைய அடங்கலும் நம்மை நினைத்து இருக்குமா போல் பட்டரை நினைத்து இருக்க –
எம்பெருமானார் அருளிச் செய்தது உண்டே என்றாராம்
ஸ்ரீ பாஷ்ய கோசம் இவரையே காஷ்மீருக்கு சென்று சரஸ்வதி தேவி பாஷ்யகாரர் பட்டம் சாதித்த விருத்தாந்தம்
இவருக்கு வேதாந்த உதயனன் என்ற விருதை ஸ்ரீ உடையவர் வழங்கினார்
நியாய சாஸ்திரத்தில் உதயனன் பிரபல வித்வானாய் இருந்தார்

இவர் திருக்குமாரர் ஸ்ரீ கிடாம்பி ராமானுஜாச்சார்யார்
அவர் திருக்குமாரர் ஸ்ரீ கிடாம்பி ரங்க ராஜாச்சார்யார்
அவர் திருக்குமாரர் ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளார்
அவர் திரு சகோதரி ஸ்ரீ தோத்தாத்ரி அம்மையார்
இவர் திருக்குமாரர் ஸ்ரீ வேதாந்த தேசிகன்
இவர் வம்சமே ஸ்ரீ சிங்கப் பெருமாள் ஸ்வாமியும்
அவருடைய ஸ்வீ கார புத்ரருமான காரப்பங்காடு வெங்கடாச்சார்யார் ஸ்வாமிகள் –1906-1971-

———-

39-ஸ்ரீ அலங்கார வேங்கடவர் ஸ்வாமி

ஸ்ரீ மத் தயாபால முநேஸ் த நூஜம் தத் பாத ஸேவாதி கத ப்ரபோதம்
ஸ்ரீ மத் யதீந்த்ர அங்க்ரி நிவிஷ்ட சித்தம் ஸ்ரீ கௌசிகம் வேங்கட ஸூரி மீடே

ஸ்ரீ ராமானுஜ பாத பத்ம யுகளம் ஸம்ஸ்ருத்ய ஸத் கோஷ்டிஷு
ப்ரேம்ண அலங்க்ருத வேங்கடேச குரு இத்யாக்யாம் பராம் ப்ராப்தவான்

யோ அசவ் கௌசிக தேசிகோ குண நிதி ஸ்ரீ விஞ்ச புர்யாம் ஸ்தி தஸ்
தத் பாதாப்ஜ யுகம் நமாமி ஸததம் ஸம்ஸார சந்தாரகம்

ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானா உடைய திருக்குமாரர்
கௌசிக கோத்ரம்
மார்கழி திருவாதிரை
இவர் ஸ்ரீ பெரிய திருமலை நம்பி திருப்புதல்வியை மணந்தார்
இவர் திருக்குமாரர் ஸ்ரீ விஞ்சிமூர் தாத்தாச்சாரியார்

திரு மருவும் விஞ்சை நகர் செழிக்க வந்தோன் வாழியே
ஸ்ரீ பாஷ்யகார் அடி சேர்ந்து உய்ந்தோன் வாழியே
அருளாள மா முனிவன் அருள் மைந்தன் வாழியே
அரு மறை நூல் மாறன் உரை ஆய்ந்து உரைப்போன் வாழியே
மருளில் திருமலை நம்பி மணவாளன் வாழியே
மார்கழியில் ஆதிரை நாள் மகிழ்ந்து உதித்தோன் வாழியே
திருவரங்கர் தாளிணை யின் தம் பகர்வோன் வாழியே
திரு வேங்கட ஆசிரியன் திருவடிகள் வாழியே

————-

40-ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமி-

கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ர ஆஸ்ரிதம் ஆஸ்ரயே
ஞானப் பரமேய சார அபி வக்தாரம் வரதம் முனிம்

ஞான பக்த்யாத்த வைராக்யம் ராமானுஜ பத ஆஸ்ரிதம்
பஞ்சம உபாய ஸம்பந்தம் சம்ய மீந்த்ரம் நமாம் யஹம்

தயா பாலந தேவாய ஞான சாரா ப்ரதாயி நே
ப்ரமேய சாரம் தததே நமோஸ்து ப்ரேம ஸாலி நே

யஜ்ஞ மூர்த்தியாய் இருந்து -18 நாள் வாதம் -செய்து –
திரு ஆராதனை கைங்கர்யம்
ஞான சாரம் ப்ரேம சாரம்
தம் மடத்தை இடித்த விருத்தாந்தம்
ஸ்ரீ உடையவர் தம்மை ஆஸ்ரயிக்க வந்த
ஸ்ரீ அனந்தாழ்வான்
ஸ்ரீ எச்சான்
ஸ்ரீ தொண்டனூர் நம்பி
ஸ்ரீ மருதூர் நம்பி
ஸ்ரீ மழுவூர் நம்பி –ஆகியவர்களை இவர் இடம் ஆஸ்ரயிக்கச் செய்தார்

ஸ்ரீ வடுக நம்பி திரு நாட்டுக்கு எழுந்து அருளியதாக சொல்ல -அப்படிச் சொல்லக் கூடாது
ஸ்ரீ உடையவர் திருவடி சேர்ந்தார் என்று சொல்ல வேண்டும் என்றார் –
இவர் சரம காலத்தில் ஸ்ரீ கூரத்தாழ்வானும் ஸ்ரீ உறங்கா வில்லி தாஸரும் எழுந்து அருள
ஸ்ரீ கூரத்தாழ்வானுக்கு விரும்பியவருக்கு ஸ்ரீ பரமபதம் சாதிக்க சக்தி இருந்தும் தான் இப்படி
கஷ்டப்பட வைக்கிறார் என்று எண்ணி தான் சீக்கிரம் ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகள் சேர வேணும் என்று பிரார்த்தித்தார் –
சிறு மா மானிடராய் -8-10-3-மேனி சிறுத்து கீர்த்தி பெருத்து இருந்த
ஸ்ரீஅருளாளப் பெருமாள் எம்பெருமானாரைப் போல் என்று காட்டியது –

திரு வாழும் தென்னரங்கம் சிறக்க வந்தோன் வாழியே
தென் அருளாளன் அன்பால் திருந்தினான் வாழியே
தரு வாழும் எதிராசன் தாள் அடைந்தோன் வாழியே
தமிழ் ஞான ப்ரமேய சாரம் தமர்க்கு உரைப்போன் வாழியே
தெருளாரு மதுரகவி நிலை தெளிந்தோன் வாழியே
தேசு பொலி மடம் தன்னை சிதைத்திட்டோன் வாழியே
அருளாள மா முனியாம் ஆரியன் தாள் வாழியே
அருள் கார்த்திகைப் பரணியோன் அனைத்தூழி வாழியே –

————–

41-ஸ்ரீ குமாண்டூர் இளைய வல்லி ஸ்வாமி

ஸ்ரீ கௌசிக அந்வய மஹாம் பூதி பூர்ண சந்த்ரம்
ஸ்ரீ பாஷ்ய கார ஜநநீ ஸஹஜா தூ நூ ஜம்
ஸ்ரீ சைல பூர்ண பத பங்கஜ சக்த சித்தம்
ஸ்ரீ பால தன்வி குரு வர்யம் அஹம் பஜாமி

ஸ்ரீ யதீந்த்ர மாத்ஷ்வ ஸ்ரீய ப்ரதி தார்ய பதே ஸ்திதஸ்
மூல பத கௌசிகா நாம் தம் வந்தே பால தந்விதம்

சித்திரை ரேவதி நஷத்ரம் திரு அவதாரம்
கௌசிக கோத்ரம்
ஸ்ரீ ராமானுஜர் உடைய சிறிய திருத் தாயாருடைய திருக் குமாரர்
ஸ்ரீ பெரிய திருமலை நம்பியின் மருமகன்
ஸ்ரீ பால தந்வி -வட மொழி திரு நாமம்
இவர் வம்சம்
ஸ்ரீ பால தந்வி –சித்திரை ரேவதி
ஸ்ரீ திரு விக்ரம குரு
ஸ்ரீ ராமானுஜ குரு
ஸ்ரீ வரத்தார்ய குரு –கும்ப மூலம்
ஸ்ரீ வரம் தரும் பெருமாள் அப்பை -ஆவணி அவிட்டம் -இவர் ஸ்ரீ மா முனி சிஷ்யர்

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஶ்ரீசைலேச தயாபாத்ரம்–ஶ்ரீ அரங்கன் அருளிய தனியன் திரு நாள்: ஆனி மூலம்

October 22, 2020

ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்–ஸ்ரீ அரங்கன் அருளிய தனியன்
தனியன் திரு நாள்: ஸ்ரீ ஆனி மூலம்

ஶ்ரீ மணவாள மாமுனிகள் தனியன் சமர்பித்து, ஶ்ரீ மணவாள மாமுனிகளை குருவாய்க் கொண்ட
ஶ்ரீ அழகிய மணவாளன்-அரங்கநாதன்.

ஶ்ரீ அரங்கன் கேட்ட ஶ்ரீ மணவாள மாமுனிகளின் உபன்யாசம்
ஶ்ரீ மணவாள மாமுனிகள், ஸ்ரீரங்க கோயில் நிர்வாகத்தை ஏற்று, ஶ்ரீ ராமானுஜர் காலம் போன்ற நிர்வாகத்தை ஏற்படுத்தினார்.
தன் ஆச்சாரியார் ஶ்ரீ திருவாய் மொழி பிள்ளையின் ஆணையின் பேரில் ஶ்ரீ ஆழ்வார் திருநகரியில்
ஸ்ரீ ராமானுஜர் விக்ரகத்தை நிறுவி ராமானுஜர் பற்றிய இருபது பாக்கள் கொண்ட ஶ்ரீ யதிராஜ விம்சதி இயற்றினார் –
அதனால் இவரை யதீந்த்ர ப்ரவணர் என போற்றப்பட்டார் .

ஸ்ரீ ரங்கநாதப் பெருமான் முன்னிலையில் -அவரது அவாவின் படி, ஓராண்டு காலம் (1430 AD)
ஸ்ரீ நம்மாழ்வார் அருளிய ஸ்ரீ திருவாய்மொழிக்கு உபன்யாசம் நிகழ்த்தினார் .
அந்த ஓராண்டு காலத்திற்கும் உபன்யாசம் தடைபடாமல் இருக்க ஸ்ரீ கோயில் உத்சவங்கள் அனைத்தும் நிறுத்தப் பட்டிருந்தன.
ஓராண்டு கால இறுதி நாளன்று ஸ்ரீரங்கநாதரே ஓர் சிறுவன், வடிவில் வந்து ஸ்ரீ மா முனிகளின் திறமையை பாராட்டி
“ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்” என்ற புகழ் பெற்ற தனியனை வழங்கினார்.
இந்த தனியனே ஸ்ரீ கோயில்களிலும், கோஷ்டிகளிலும் சேவிக்கப்படுகின்றது.

தனியன்
தனியன் என்பது ஸ்ரீ ஆழ்வார்கள்-ஸ்ரீ ஆசார்யர்களைப் போற்றி சீடர்கள் இயற்றிப் பாடும் ஸ்தோத்ரம்.
ஸ்ரீ ஆழ்வார்கள், ஸ்ரீ ஆசார்யர்கள் இயற்றிய கிரந்தங்களை சேவிக்கும் முன், இந்த ஸ்தோத்ரத்தைச் சேவித்தே
தொடங்க வேண்டும் என்பதால் தனியன் எனப்படுகிறது.

ஶ்ரீசைலேச தயாபாத்ரம், தீபக்யாதி குணார்ணவம்
யதீந்திர ப்ரவணம், வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம்→

ஶ்ரீசைலேச தயாபாத்ரம்–விளக்கம்-1
“ஶ்ரீசைலேசர், என்ற ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை, ஆசார்யர்யின் எல்லையற்ற கருணைக்குப் பாத்திரமானவரும்,……………
பக்தி, ஞானம், வைராக்ய குணங்கள் நிறைந்த சமுத்திரம் போன்றிருப்பவரும்……….
யதிராஜரான ஸ்ரீ ராமானுஜர் மீது அளவு கடந்த பக்தி நிறைந்தவருமான,……………..
அழகிய ஸ்ரீ மணவாள மாமுனிகளை அடியேன் வணங்குகிறேன்”

தனியனைப் பாடியவர்: ரங்கநாயகம் என்னும் சிறுவன் வடிவில் வந்த, சாட்சாத் ஶ்ரீரங்கநாதப் பெருமாளே.

5. ஶ்ரீசைலேச தயா பாத்ரம்-விளக்கம்-2

ஶ்ரீசைலேச தயாபாத்ரம்
ஸ்ரீ ராமாவதாரத்தில் ஸ்ரீசைல மலையான, ரிஷ்யமுகப் பர்வதத்துக்கு அதிபதியாக, விளங்கிய
ஸ்ரீ மதங்க முனிவரின் தயைக்குப் பாத்திரமாக விளங்கியவன் சுக்ரீவன்.
ஆனால் அந்தச் சுக்ரீவனும், தகுந்த நேரத்தில் ஶ்ரீராமருக்கு உதவ வராததால், ஶ்ரீராமன் அவன் மேல் கோபப்பட நேர்ந்தது.
அந்தக் குறை தீர, இப்போது ஒரு சைலர் (ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை மற்றும் ஸ்ரீ திரு”மலை”ஆழ்வார்)
என்னும் ஆச்சாரியர் கருணைக்குப் பாத்திரமான ஸ்ரீ மணவாளமாமுனிகளின் மேல் அன்பு கொண்டான்..

தீபக்யாதி குணார்ணவம்
ஸ்ரீ ராமராக அவதரித்து, தீபம்-சமுத்திர ராஜனிடம், இலங்கையைச் சென்றடைய கடல் நீரை வற்ற வேண்டிய போது
ஸ்ரீ திருப்புல்லாணிக் கரையில், ஸ்ரீ தர்பசயண ராமராக, மூன்று நாட்களாகியும் அவன் வரவில்லை யாகியதால்
ஸ்ரீ ராமருக்குக் கோபம் வந்து வில்லெடுத்ததும் ஓடோடி வந்து, ஸ்ரீ ராமரிடம் சரணடைந்தான்.
ஆனால் எவ்விதக் குறையும் இல்லாத, நிறைகளே நிறைந்த ஸ்ரீ மணவாள மாமுநிகளைச் சரணடைந்தான்.

யதீந்திர ப்ரவணம்
ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ திருவேங்கடவனுக்கு, சங்கு, சக்கரம் வழங்கி, “அப்பனுக்குச் சங்காழி அளித்தர பெருமான்” என்று
ஆசார்ய ஸ்தானத்தில் இருந்தார். அவர் ஐந்து ஆசார்யர்களின் பொங்கும் பரிவுடையவர்,
குணங்கள் நிறைந்த மகாசமுத்திரம். அப்படியிருக்க அவரை, ஆசார்யராக அரங்கன் வரிக்கவில்லை.
ஸ்ரீ இராமானுஜ நூற்றந்தாதியைச் செவிமடுத்த ஸ்ரீ அரங்கன், ஸ்ரீ ராமானுஜர் காலத்திலேயே,
“தன்னை யுற்று ஆட் செய்யும் தன்மையினோர்” என்ற பாசுரத்தின்படி, அவரை உற்று ஆட் செய்யும் தன்மையில்
மிகச் சிறந்தவரான ஸ்ரீ மாமுநிகளுக்காகக் காத்திருந்தார்.

வந்தே ரம்ய ஜாமாதர முநிம்-
எந்தக் குறையுமில்லாத, எதையும் எதிர்பார்க்காத ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிவரை வணங்குகிறேன்

ஆதலால், ஸ்ரீ மணவாள மாமுனிகளின் குண விசேஷங்கள். அப்படிப் பாடும் பொழுது
ஸ்ரீ அரங்கன் முற்காலத்தில் அவருக்கு ஏற்பட்ட சில ஏமாற்றங்களையும்,
இப்போது ஏற்பட்ட குறையொன்றுமில்லாத ஏற்றத்தையும் கூட்டிப் பாடியுள்ளார்:

ஸ்ரீ ராமவதாரத்தில் ஸ்ரீ விஸ்வாமித்திர முனிவரை குருவாக ஏற்றிருந்தாலும், அவருடைய முழு வரலாறைக்
கேள்வியுற்ற ஸ்ரீ ராமருக்கு, அவர் மேல் ஈடுபாடு குறைந்தது.

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் ஸ்ரீ சாந்தீபினி முனிவரிடம், பயின்ற பின் அவர் குரு தட்சணையாக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம்
உயர்ந்த மோட்சத்தைக் கேட்கவில்லை. மாறாக என்றோ இறந்து போன தம் மகனை மீட்டுத் தர வேண்டுமென்ற
ஒரு சாதாரண பலனைக் கேட்டுப் பெற்றார். எனவே ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அவர் மேல் ஈடுபாடு குறைந்தது.

ஆனால் எந்தக் குறையுமில்லாத, எதையும் எதிர்பார்க்காத மாமுனிவர் ஒருவர் உண்டேல்,
அவர் ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிவர் மட்டுமே; என்வே அவரை வணங்குகிறேன்

ஶ்ரீசைலேச தயாபாத்ரம்-விளக்கம்-3:ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் வியாக்யானம்
ஸ்ரீசைலேச தயா பாத்ரம்–சுக்ரீவன்
ஸ்ரீ இராமாவதாரத்தின்போது “சைலேச தயா பாத்ரன்” என்பவனிடம் ஸ்ரீ இராமன் புகுந்தான்.
சைலம்=ரிஷ்யமுக மலை. அதன் அதிபதி மாதங்க மஹரிஷி. அவரது கருணையைப் பெற்றவன் சுக்ரீவன்.
தனக்கு உதவும்படி ஸ்ரீ இராமன் சுக்ரீவனிடம் புகுந்தாலும், சுக்ரீவன் தான் ஸ்ரீ இராமனுக்குப் பட்ட கடனை
அடைக்கவில்லை என்பதால், அவனை ஸ்ரீ இராமன் கண்டிக்க வேண்டியதாயிற்று.
இது சரணாகதிக்கு விரோதமாக ஆனதால், சரணாகதி தவறியது என்று ஸ்ரீ இராமன் வருத்தம் கொண்டான்.
இக்குறை தீர உயர்ந்த ஒரு ஆசார்யனிடம் சிஷ்யனாக இருப்பதே சிறந்தது என்று எண்ணினான்.

தீபக்யாதி குணார்ணவம்– ஸமுத்ர ராஜன்
ஸமுத்ர ராஜனிடம் ஸ்ரீ இராமன் அடைந்தான். ஆனால், அவன் இராமனின் சொற்களுக்கு ஏற்ற மதிப்பு
அளிக்கவில்லை என்பதால், அவன் மீதும் இராமன் சீற்றம் கொள்ள வேண்டியதானது.

யதீந்த்ர ப்ரணவம்–இராமாநுசர்
ஸ்ரீ இராமாநுச நூற்றந்தாதியின் 97-ஆவது பாசுரமான – தன்னை உற்றச் செய்யும் தன்மையின் ஓர் – என்பதை
ஸ்ரீ திருவரங்கன் கேட்டான். இந்தப் பாசுரத்தில் ஸ்ரீ எம்பெருமானாரின் சிஷ்யர்களின் மேன்மை கூறப்பட்டுள்ளது.
இதனைக் கேட்டவுடன், ஸ்ரீ எம்பெருமானாருக்கு சிஷ்யனாக இருப்பதைக் காட்டிலும்,
அவரது சிஷ்யனுக்கு சிஷ்யனாக இருப்பது மேலானது என்று முடிவு செய்தான்.

வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்–
ஸ்வாமி, ஸ்ரீ மணவாளமாமுனிகள் விஷயத்தில் கடல் போன்ற ஞானம், அறிவு, பக்தி கொண்ட
ஸ்வாமியிடம் சரணம் அடைந்தான்.

ஸ்ரீ இராமனின் குருவான ஸ்ரீ விச்வாமித்ரரின் குறைகளை நாம் அறிவோம்.
ஸ்ரீ கண்ணனின் குருவான ஸாந்தீபநி முனிவரும், குரு தக்ஷிணையாக தனது பிள்ளையைக் கேட்டாரே அன்றி,
மோக்ஷம் கேட்கவில்லை.
ஆக தனது இரு குருவிடமும் எம்பெருமானுக்கு அந்த அளவு பிடிப்பு உண்டாகவில்லை.
எனவே குருவுக்கு இலக்கணமான ஒருவரைத் (ஸ்ரீ மணவாள மா முனிகள்) தேர்ந்தெடுத்தான்.

ஸ்ரீ அரங்கனின் சிஷ்ய-லட்சணம்
சீடர் ஆசார்யருக்கு செய்ய வேண்டிய சிஷ்ய-லட்சணமான ஐந்து கடமைகளைச்
செம்மையாக நடத்தி-நடத்தும் அரங்கன்:

(i) தனியன் சமர்ப்பித்தல்

(ii) ஆசார்யன் கீர்த்தியை வையமெங்கும் பரப்புதல்:
எல்லா ஸ்ரீ திவ்ய தேசங்களிலும், ஸ்ரீ பெருமாள் கோவில்களிலும் திருவாராதனை தொடங்கும் முன்னும்,
சாறறு முறை முடிவிலும் தம் ஆசார்ய தனியனான ‘ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்” சேவிக்க வேண்டுமென்று நியமித்தார்,
மடங்கள், கூடங்கள், ஶ்ரீ வைஷ்ணவர்கள், பாகவதர்களின் இல்லங்களிலும் தினம் தோறும்
முதலிலும், முடிவிலும் இந்தத் தனியன் சேவிக்கப் பட்டு வருகிறது.

(iii) சீடனுக்கு தனக்கென்று இல்லை
எந்த உடமையும் (சொத்தும்) தனக்கென்று இல்லையென்றும், எல்லாம் ஆசார்யனுடையவே,
தாம் அனுபவிப்பது அவர் கருணயால் கொடுத்தருளியதே என்ற நிஷ்டையில் இருக்க வேண்டும்.
எனவே தம் உடமைகளையெல்லாம் நிர்வகிக்கும், ஸ்ரீ ஆதி சேஷனையே ஸ்ரீ மா முநிகளுக்குக் கொடுத்துவிட்டார் ஸ்ரீ அரங்கன்.
அதனால் தான் ஸ்ரீ மணவாள மாமுனிகள் எங்கும், எப்பொழுதும் ஸ்ரீ சேஷ பீடத்திலேயே எழுந்தருளி யிருக்கிறார்.
ஸ்ரீ ஆதி சேஷ அவதாரமாகிய ஸ்ரீ ராமானுஜருக்கே இல்லாத சேஷாச-ஆசனத்தை ஸ்ரீ மாமுநிகளுக்குக் கொடுத்தருளினார்.

(iv) ஆசார்யனுடைய திருநாமத்தை சீடன் தரிக்க வேண்டும்.
ஸ்ரீ அரங்கனின் பெயரான ஸ்ரீ அழகிய மணவாளன் என்னும் பெயரே,
ஸ்ரீ மாமுநிகளுக்கு அவர் பெற்றோரால் சூடப்பட்டது.
ஸ்ரீ மாமுநிகள் துறவறம் மேற்கொண்ட போது, ஸ்ரீ சடகோப ஜீயர் என்னும் திருநாமத்தை ஏற்க விரும்பி
ஸ்ரீ அரங்கனிடம் வேண்ட, ஸ்ரீ அரங்கன் அதை ஏற்காமல், பழைய நாமத்துடனே இருக்கும்படி அருளினார்.
தம் ஆசார்யர் நாமம் அப்படியே இருந்தால் தான்,தாமும் ஆசார்யன் நாமத்துடன்(ஸ்ரீ அழகிய மணவாளன்)
என்று இருக்கு முடியும் என்று கருதியே இவ்வாறு ஸ்ரீ அரங்கன் நியமனம் ஆயிற்று

(v) ஆசார்யன் அவதார-திருநட்சித்திரத்தையும், ஸ்ரீ பரமபத-திதியையும் சீடன் சிறப்பாக நடத்தி வைக்க வேண்டும்.
ஸ்ரீ அரங்கன் இவ்விரண்டையும் செவ்வனே நடத்தி வருகிறார்.
இரண்டு நாட்களிலும் அரங்கன் பிரசாதங்கள், மாலை, மரியாதைகள் மாமுனிகள் சந்நிதிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
தீர்த்த திதியன்று, ஸ்ரீ அரங்கனுக்கு திருவாராதனை செய்யும் அர்ச்சகரே, ஸ்ரீ மாமுநிகளுக்கும் திருவாராதனை செய்கிறார்.
ஸ்ரீ மாமுனிகள் தளிகை அமுது செய்த பின்னரே, ஸ்ரீ அரங்கனுக்கு உச்சி கால நைவேத்யம்.அன்று
ஸ்ரீ அரங்கன் சுருளமுது (வெற்றிலை) கண்டருளுவதில்லை.

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ,
சடகோபன் தண்தமிழ்நூல் வாழ, கடல் சூழ்ந்த,
மன்னுலகம் வாழ, மணவாள மாமுனியே,
இன்னுமொரு நூற்றாண் டிரும்.

இவ்வாறாக குரு பரம்பரையின் முதல் ஆசார்யரான, ஶ்ரீமந் நாராயணனே, கடைசி ஆசார்யன்
ஸ்ரீ மணவாள மாமுநிகளுக்கு சீட்ரானதால் ஆதியும், அந்தமும் ஒன்றே என்றாயிற்று.

—————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜர் நியமித்த -74- ஸிம்ஹாஸனாதி பதிகள் வைபவம் –21-30-

October 22, 2020

21- ஸ்ரீ சிறியாண்டான்
இவர் ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதி சிறியாண்டான் உடன் ஸ்ரீ ரெங்கம் வந்து
செய்தி திரு நாராயண புரத்தில் அருளிச் செய்தவர்

————–

22-ஸ்ரீ தொண்டனூர் நம்பி –
ஸ்ரீ தொண்டனூரில் பாகவத கைங்கர்யமே நிரூபகமாகக் கொண்டவர் –
ஸ்ரீ திருக் கோட்டியூரில் செல்வ நம்பியைப் போலவே
சைவப்பண்டாரம் ஒருவன் ஸ்ரீ மதே ராமாநுஜாய நம -சொல்லி -இவர் பிச்சை அளிக்க –
மற்றவர் குறை சொல்ல -இவர் திரு நாம வைபவம் எடுத்து விளக்க
பின்பு அவன் ஸ்ரீ வைஷ்ணவன் ஆனானாம்
இவர் ஸ்ரீ அனந்தாழ்வான் உடன் ஸ்ரீ ரெங்கம் செல்ல இவர்களை ஸ்ரீ ராமானுஜர்
ஸ்ரீ அருளாளப் பெருமான் எம்பெருமானார் இடம் ஆஸ்ரயிக்கப் பண்ணி அருளினார்
இவர் ஸ்ரீ ராமானுஜர் இடம் விண்ணப்பித்து விட்டல தேச ராஜன் மக்களது பிசாச பீடையைப்
போக்குவித்து அருளினார் –

—————-

23- ஸ்ரீ மருதூர் நம்பி
இவர் ஸ்ரீ தொண்டனூர் நம்பி ஸ்ரீ அனந்தாழ்வான் உடன் ஸ்ரீ ரெங்கம் செல்ல இவர்களை ஸ்ரீ ராமானுஜர்
ஸ்ரீ அருளாளப் பெருமான் எம்பெருமானார் இடம் ஆஸ்ரயிக்கப் பண்ணி அருளினார்

————-

24- ஸ்ரீ மழுவூர் நம்பி

இவர் ஸ்ரீ மருதூர் நம்பி ஸ்ரீ தொண்டனூர் நம்பி ஸ்ரீ அனந்தாழ்வான் உடன்
ஸ்ரீ ரெங்கம் செல்ல இவர்களை ஸ்ரீ ராமானுஜர்
ஸ்ரீ அருளாளப் பெருமான் எம்பெருமானார் இடம் ஆஸ்ரயிக்கப் பண்ணி அருளினார்

—————–

25- ஸ்ரீ முடும்பை நம்பி

ஸ்ரீ ராமானுஜ சம்ய தீந்த்ர சரணம் ஸ்ரீ வத்ஸ சிஹ்ன ப்ரியம்
சேவ அஹம் வரதார்ய நாம கமமும் ஸூ க்த்யா ப்ரிஸித்தம் முதா
பால்யாத் பரி பூர்ண போத சடஜித் காதா ராகோஜ்ஜ்வலம்
வாத்ஸ்யம் பூர்ண முதாரம் ஆஸ்ரித நிதிம் வாத்சல்ய ரத்நாகரம் –

ஸ்ரீ ராமானுஜ யோகீந்த்ர பத பங்கஜ ஷட் பதம்
முடும்பை பூர்ண மநகம் வந்தே வரதஸம் கஞகம்

ஸ்ரீ வத்ஸ கோத்ரம்
ஸ்ரீ காஞ்சீ புரம் அருகில் ஸ்ரீ முடும்பையில் திரு அவதாரம்
இயல் பெயர் -ஸ்ரீ வரதாச்சார்யர்
ஸ்ரீ ராமானுஜர் உடைய சகோதரி கணவர்
இவர் திருக் குமாரர் -ஸ்ரீ ராமானுஜ நம்பி
அவர் திருக்குமாரர் -ஸ்ரீ முடும்பை ஆண்டான் -என்னும் ஸ்ரீ தாசாரதி
இவர் முடும்பையில் இருந்து ஸ்ரீ ரெங்கம் குடி பெயர்ந்தார்
இவர் வம்சம்
ஸ்ரீ தாசரதி
ஸ்ரீ தேவப் பெருமாள் என்னும் ஸ்ரீ வரதார்யர்
ஸ்ரீ இளையாழ்வார் என்னும் ஸ்ரீ லஷ்மண ஆச்சார்யர்
இவருக்கு இரண்டு திருக்குமாரர்கள்
ஒருவர் ஸ்ரீ கிருஷ்ண பாத குரு என்னும் ஸ்ரீ வடக்குத் திரு வீதிப்பிள்ளை –
அவருக்கு ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யரும் ஸ்ரீ நாயனாரும் திருக்குமாரர்கள்
மற்ற ஒருவர் ஸ்ரீ வரதாச்சார்யர்
இவருக்கு திருக்குமாரர் ஸ்ரீ ராமானுஜ குரு
அவருக்குத் திரு குமாரர் ஸ்ரீ அழகப்பயங்கார்
அவருக்கு திருக்குமாரர் தேவராஜ குரு என்னும் பேர் அருளாலே ஸ்வாமி
அவர் திருக்குமாரர் ஸ்ரீ ராமானுஜம் பிள்ளை -இவர் மாமுனிகள் சிஷ்யர் -வான மா மலை ஜீயரின் அஷ்ட திக் கஜங்களில் ஒருவர்
இவர் திருக்குமாரர் ஸ்ரீ ஆழ்வார் திரு நகரி ஸ்ரீ ஆதி நாதன் ஸ்வாமி
ஆழ்வார் திரு நகரியில் கீழத் திரு மாளிகை மேலத் திரு மாளிகை வடக்குத் திருமாளிகை என்று இவர் வம்சம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணாவும் ஸ்ரீ முடும்பை வம்சமே

————-

26-ஸ்ரீ வடுக நம்பி

ஸைத் ரேத் வஸ்வநி ஸஞ்ஜாதம் ஸம்ஸார ஆர்ணவ தாரகம்
ராமாநுஜார்ய ஸத் ஸிஷ்யம் ஆந்த்ர பூர்ணம் அஹம் பஜே

ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாளக்ராம நிவாஸிநம்
பஞ்சமோபாய ஸம்பந்நம் ஸாளக்ராமார்யம் ஆச்ரயே

திருநக்ஷத்ரம்: சித்திரை அஸ்வினி-1047-
அவதார ஸ்தலம்: சாளக்ராமம், கர்நாடகா
ஆசார்யன்: ஸ்ரீ எம்பெருமானார்-பால் அமுது கைங்கர்யம்
இவருடைய திரு மடியிலே திரு முடியை வைத்து ஸ்ரீ எம்பெருமானார் திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்
ஸ்ரீ பரமபத ப்ராப்தி ஸ்தலம்: சாளக்ராமம்

கிரந்தங்கள்: ஸ்ரீ யதிராஜ வைபவம்,
ஸ்ரீ ராமானுஜ அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்,
ஸ்ரீ ராமானுஜ அஷ்டோத்தர சத நாமாவளி

ஸ்ரீ எம்பெருமானார் திருநாராயணபுரம் எழுந்தருளிய போது அங்குள்ள மிதிலாபுரி சாளக்கிராமம் சென்று,
ஸ்ரீ முதலியாண்டானை அங்கிருந்த தீர்த்தத்தில் திருவடி நனைக்கச் சொல்லவும், பின்னர் அதில்
நீராடிய உள்ளூரார் அனைவரும் ஸ்வாமியின் சிஷ்யர்களாக மாறினர். அவர்களில் ஒருவர் ஸ்ரீ ஆந்த்ர பூர்ணர் எனும் வடுக நம்பி.
இவர் ஸ்ரீ எம்பெருமானாரிடம் பூண்ட ஆசார்ய பக்தி அளப்பரியது, ஈடற்றது.
ஸ்ரீ எம்பெருமானார் இவர்க்கு சகல சாரார்த்தங்களும் போதித்தருளினார்.
அதனாலும் இவர் ஆசார்ய ப்ரதிபத்தி பள்ளமடை ஆயிற்றது.

ஸ்ரீ வடுக நம்பி ஆசார்ய நிஷ்டையில் ஊறியிருந்தார்.
தினமும் இவர் ஸ்ரீ எம்பெருமானார் திருவடி நிலைகளுக்கே திருவாராதனம் செய்வர்.
ஒரு நாள் ஸ்வாமி யாத்திரை கிளம்புகையில் அவரது திருவாராதன எம்பெருமான்களோடு, தாம் பூசித்து வந்த
ஆசார்யன் திருவடி நிலைகளையும் மூட்டை கட்ட, அது கண்டு துணுக்குற்ற ஸ்ரீ எம்பெருமானார், “நம்பீ! என் செய்தீர்!” என்று
கடிந்த போது, இவர், “ஸ்வாமி! உம் திருவாராதனப் பெருமாளைவிட நம் திருவாராதனப் பெருமாள் குறைவிலரே” என்றாராம்.

ஸ்ரீ எம்பெருமானார் பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்யப் போகும்போதெல்லாம் நம்பியும் உடன் எழுந்தருளி,
அவர் பெருமாளின் அழகை அனுபவிக்கும்போது இவர் ஸ்வாமியையே நோக்கியிருக்க, அவர் இவரைப் பெருமாளின்
திருக்கண் அழகைப் பாரீர் என்ன, நம்பி, ஆசார்யன் திருவுள்ளம் குளிர,
“என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே!”
(அதாவது, என்னுடைய ஸ்வாமியான தேவரீரைக் (எம்பெருமானாரை) கண்ட கண்கள் எம்பெருமானையே கூட காணாது)
என்று ஸ்ரீ திருப்பாணாழ்வார் திருவாக்கைக் கூறினாராம்.

ஸ்ரீ வடுக நம்பி எப்போதும் எம்பெருமானார் அமுது செய்த மிச்சில் ப்ரஸாதத்தையே ஸ்வீகரித்து அமுது செய்தபின்,
கைகளை அலம்பாமல் தம் தலையில் துடைத்துக் கொள்வார், பிரசாதம் உட்கொண்டபின் கையை அலம்பிச் சுத்தம்
செய்யக் கூடாதென்பதால். ஒரு நாள், இது கண்டு துணுக்குற்ற ஸ்ரீ எம்பெருமானார் கேள்வி எழுப்பவே,
ஸ்ரீ நம்பி தம் கைகளை அலம்பினார். பிற்றைநாள் பெருமாள் பிரசாதம் தாம் உட்கொண்ட மிகுதியை
ஸ்வாமி தர வாங்கி உண்ட நம்பி கைகளை அலம்ப எம்பெருமானார் வியப்புற்று வினவ,
“தேவரீர் நேற்று உபதேசித்தபடியே அடியேன் செய்தேன்” என்றாராம்.
அதைக் கேட்ட ஸ்ரீஎம்பெருமானார், ”உம்மிடம் நாம் தோற்றோம்!” என்றார்.

ஒரு முறை ஸ்ரீ வடுக நம்பி ஸ்ரீ எம்பெருமானாருக்கு, திருமடைப்பள்ளியில் பால் அமுது காய்ச்சிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது ஸ்ரீ நம்பெருமாள் திருவீதியில் புறப்பாடாக மடத்து வாசலில் எழுந்தருள,
ஸ்ரீ எம்பெருமானார் வெளியே சென்று சேவித்து, ஸ்ரீ வடுக நம்பியை வெளியே வருமாறு கூப்பிட்டார்.
அப்பொழுது, நம்பியோ, வெளியே வராமல், உள்ளிருந்தபடியே “அடியேன் உம் பெருமாளைக் காண வெளியே வந்தேன் என்றால்,
என் பெருமாளின் பால் பொங்கிவிடும், ஆதலால் அடியேன் வெளியே வர முடியாது” என்று கூறும்படியான ஆசார்ய நிஷ்டையுடன் திகழ்ந்தார்.

நம்பிகளின் அவைஷ்ணவ உறவினர் சிலர் வந்து, தங்கிச் சென்றதும், நம்பிகள் எல்லாப் பாத்திரங்களையும் எடுத்து வீசிவிட்டு,
ஸ்ரீ முதலியாண்டான் திருமாளிகையின் பின்புறத்தில் வைத்திருந்த பழைய உபயோகித்த பாத்திரங்களைப் பயன்படுத்த எடுத்துக் கொண்டார்.
ஆசார்யர்கள் சம்பந்தம் நம்மை எல்லா வகையிலும் சுத்தி செய்யும் என இப்படி அனுஷ்டித்து விளக்கினார்.

ஸ்ரீ எம்பெருமானார் திருவனந்தபுரம் சேவிக்கச் சென்றபோது அங்கு ஆகம முறையைச் சீர்திருத்தத் திருவுள்ளம் பற்றினார்.
ஆனால் எம்பெருமான் திருவுள்ளம் வேறுமாதிரி இருந்ததால், அவன் அவரை இரவோடிரவாக உறங்குகையில்
ஸ்ரீ திருக்குறுங்குடி சேர்ப்பித்து விட்டான். விடிவோரை திருக்கண் மலர்ந்த ஸ்வாமி நீராடித் திருமண் காப்புத் தரிக்க
இன்னும் ஸ்ரீ திருவனந்தபுரத்திலேயே இருந்த நம்பியை “வடுகா!” என்றழைக்க,
ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பியே வடுக நம்பி போல் வந்து திருமண் காப்பு தந்தருளினார்.
பின்னர் ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பியையும் தம் சிஷ்யனாய் ஏற்றார்.

ஸ்ரீ எம்பெருமானார் திருநாடலங்கரித்தபின் வடுக நம்பி மீண்டும் சாளக்கிராமம் வந்து ஸ்ரீ எம்பெருமானார் க்ரந்தங்களைக்
காலக்ஷேபம் செய்தும், தன் சிஷ்யர்களுக்கு ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்ற உபதேசம் செய்து கொண்டும்,
எப்பொழுதும் ஸ்ரீ எம்பெருமானாருக்குத் திருவாராதனம் செய்தும், வேறு ஒரு ஸ்ரீ பாத தீர்த்தமும் ஏற்காமல்
ஆசார்ய நிஷ்டையோடே ஸ்ரீ எம்பெருமானார் திருவடியைச் சென்று அடைந்தார்.

ஸ்ரீ வடுக நம்பியின் வைபவம் வ்யாக்யானங்களிலும் ஐதிஹ்யங்களிலும் காணக் கிடைக்கிறது. அவற்றில் சில:

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி 4.3.1 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம்.
இப்பதிகம் “நாவகாரியம்” – சொல்லக்கூடாத சொற்களைச் சொல்லுதல்.
வடுக நம்பி அருகே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் திருமந்திரம் ஓதவும், நம்பி, ”இது நாவகாரியம்” என்று வெறுத்து அகன்றாராம்.
ஏனெனில் திருமந்திரம் ஓதுமுன் குருபரம்பரையை ஒத வேண்டும், பிறகே திருமந்திரம் ஒத வேண்டும் என்பது முறை,
பிள்ளை லோகாசார்யரும் ஸ்ரீ வசன பூஷணம் 274வது ஸூத்ரத்தில், “ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும்” என்று அருளினார்.

பெரியாழ்வார் திருமொழி 4.4.7 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம், வடுக நம்பி திருநாடு எய்தினார் என்று
ஒரு ஸ்ரீவைஷ்ணவர் தகவல் கூறவும், அவர் ஆசார்ய நிஷ்டர் ஆகையால் அவர் ஆசார்யர் திருவடி அடைந்தார் என்று
கூற வேண்டும் என்று அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருத்தி யருளினாராம்.

ஸ்ரீ வடுக நம்பி யதிராஜ வைபவம் என்றோர் அழகிய நூல் சாதித்துள்ளார்.
அதில் எம்பெருமானாரோடு 700 சன்யாசிகளும், 12000 ஸ்ரீ வைஷ்ணவர்களும், கணக்கற்ற ஸ்ரீ வைஷ்ணவிகளும் இருந்தனர் என்கிறார்.
தம் மாணிக்க மாலையில், பெரியவாச்சான் பிள்ளை, ஆசார்ய பதவி தனிச் சிறப்புள்ளது,
அது ஸ்ரீ எம்பெருமானார் ஒருவருக்கே பொருந்தும் என வடுக நம்பி கூற்று என்கிறார்.

பிள்ளை லோகாசார்யர், ஸ்ரீ வசன பூஷணம் 411வது ஸூத்ரத்தில்
“வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர்” என்று சாதிக்கிறார். இதை மாமுனிகள் விளக்குகையில்,
மதுரகவிகள் முற்றிலும் ஆழ்வாரையே பற்றினாப் போலே நம்பி எம்பெருமானாரையே பற்றினார்,
ஆண்டானும் ஆழ்வானும் எம்பெருமான் எம்பெருமானார் இருவரையும் பற்றி இருந்தார்கள் என்கிறார்.

இறுதியாக, ஆர்த்தி ப்ரபந்தம் 11ஆம் பாசுரத்தில் மாமுனிகள் எம்பெருமானாரிடம் தம்மையும் அவரையே பற்றியிருந்த
ஸ்ரீ வடுக நம்பிகளைப் போலே ரக்ஷித்தருள வேணும் என்று இறைஞ்சுகிறார்.
ஸ்ரீ வடுக நம்பி எம்பெருமானாரிடம் கொண்டிருந்த அளவற்ற ஈடுபாட்டினால், ஸ்ரீ எம்பெருமானைத் தனியாக வணங்கவில்லை.
ஆசார்யனை நாம் வழிபடும்போது, இயற்கையாகவே அவ்வாசார்யன் அண்டி இருக்கும் எம்பெருமானையும் வழிபட்டதாக ஆகி விடும்.
ஆனால், எம்பெருமானை மட்டும் வழிபட்டால், ஆசார்யனை வணங்கியதாக ஆகாது என நம் பூர்வர்கள் தெளிவாகக் காட்டியுள்ளனர்.
ஆகையால் ஆசார்யனையே எல்லாமாகக் கொண்டு இருப்பதே நம் ஸம்ப்ரதாயத்தின் முக்கியமான கொள்கை.
இந்த அம்சம் வடுக நம்பியிடம் அழகாகப் பொருந்தியுள்ளது என்கிறார் மாமுனிகள்.

இவ்வாறாக பாகவத நிஷ்டையை ஆசார்ய பக்தியால் அனுஷ்டித்த வடுக நம்பி திருவடிகளே நமக்குப் புகல்.

——————-

27- ஸ்ரீ வங்கி புரத்து நம்பி

பாரத்வாஜ குல உத்பூதம் லஷ்மணார்ய பத ஆஸ்ரிதம்
வந்தே வங்கீ புராதீஸம் ஸம்பூர்ணார்யம் கிருபா நிதிம்

இவர் ஸ்ரீ திருவாய் மொழியின் சாரம் அர்த்த பஞ்சகம் என்று அருளிச் செய்வர்
பிராட்டியின் பதியாய் இருப்பதே எம்பெருமானுக்குப் பெருமை –
ஸ்ரீ வைஷ்ணவ மதத்தின் பெருமையும் அதுவே என்று அடித்து அருளிச் செய்வர்
ஸ்ரீ எம்பெருமானே ஸ்ரீ நம்மாழ்வாராக அவதரித்தார் என்பாராம் –

ஸ்ரீ மணக்கால் நம்பி சிஷ்யரான ஸ்ரீ வங்கி புரத்து ஆய்ச்சியின் திருக்குமாரர் –
ஸ்ரீ சிறியாத்தான் இவரது சிஷ்யர் –

ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேத –நாக பர்யங்க உத்ஸ்ருஜ்ய —
ஆகதோ மதுராம் புரீம்
சர்வ நியாந்தா
ஸ்ரீ கிருஷ்ணனாய் பிறந்து
நியாம்யனாய் இருந்த வ்ருத்தாந்தம் – பெரிய திருமொழி -6-7-4-
ஸ்ரீ வங்கி புரத்து நம்பி பல காலம்
திரு வாராதன க்ரமம் அருளிச் செய்ய வேணும் என்று  போருமாய்
அவசர ஹானியாலே அருளிச் செய்யாமலே போந்தாராய்
திருமலையிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
ஸ்ரீ ஆழ்வானுக்கும் நம்பி   ஸ்ரீ ஹனுமந்தத் தாசருக்கும் அது தன்னை அருளிச் செய்தாராய்
சமைக்கிற அளவிலே நம்பி தோற்ற
திரு உள்ளம் துணுக் என்று  அஞ்சி அப்போது அருளிச் செய்த வார்த்தை –
என்றும் உள்ள இஸ் சம்சயம் தீரப் பெற்றோம் ஆகிறது
நியாமகன் நியாம்யங்களிலே   சிலர்க்கு அஞ்சிக் கட்டுண்டு அடி உண்டு
அழுது நின்றான் என்றால்  இது கூடுமோ என்று இருந்தோம் –
இரண்டு இழவுக்கும் நம்முடைய ஹிருதயம் அஞ்சி
நொந்தபடியால் அதுவும் கூடும் -என்று –

ஸ்ரீ நம் பெருமாள் வீதி உலாக்கில் பால் உண்பீர் பழம் உண்பீர் என்று இடையர்கள் –
விஜயீ பவ -இவர் சொல்ல ஸ்ரீ முதலியாண்டான்
முரட்டு சம்ஸ்க்ருத குறை சொல்லி அவர்கள் அவர்களே நாம் நாம் தான் என்று
ஆய்ச்சிகளின் பக்தியை மெச்சி அருளிச் செய்தாராம்

நமக்குத் தஞ்சமாக நினைத்து இருப்பது –உன்னை அருள் புரிய வேண்டும் என்ற
க்ஷத்ர பந்துவின் வார்த்தை -என்று எம்பெருமானார் சொல்ல
உன்னை வணங்கத் தெரியாத எனக்கு கிருபை செய்து எனக்கு அருள் புரிய வேண்டும் என்ற
காளியன் வார்த்தை என்றாராம்
இவர் நிர்ஹேதுக கிருபையின் பெருமையை விளக்க இந்த சம்வாதம்

———————–

28-ஸ்ரீ பராங்குச நம்பி

கோவிந்த ராஜான் வயஜோ மநீஷீ பரங்குசோ யாமுனவை மநஸ்யம்
அபாசகார பிரசபம் த்ருதீயம் விராஜதே வ்ருத்த மணி ப்ரதீப –

இவர் ஸ்ரீ எம்பாருடைய தம்பியான சிறிய கோவிந்த பட்டரின் திருக்குமாரர்
இவர் திருக்குமாரர் ஸ்ரீ கூர நாராயண ஜீயர் ஸ்ரீ புத்தருடைய சிஷ்யர்
ஸ்ரீ உடையவர் ஸ்ரீ எம்பாரிடம் ஸ்ரீ நம்மாழ்வார் திரு நாமத்தைச் சாத்தகி சொல்ல இந்த திரு நாமம் –
தமிழில் வல்லவர்
ஸ்ரீ கூரத்தாழ்வான் இவரை பாலேய் தமிழர் என்பாராம் –

————

29- ஸ்ரீ அம்மங்கி அம்மாள்
இவர் ஒரு சமயம் ஸ்ரீ நம்பிள்ளையின் நோய் தீர ஒரு மந்திரிக்கப்பட்ட யந்திரத்தை அவர்
கையில் வைக்க முற்பட அவர் அத்தை ஏற்க மறுத்தார்
இவர் ஸ்ரீ மழுவூர் நம்பி ஸ்ரீ மருதூர் நம்பி ஸ்ரீ தொண்டனூர் நம்பி ஸ்ரீ அனந்தாழ்வான் உடன்
ஸ்ரீ ரெங்கம் சென்று வந்தார் –

இவர் நீதிப்பாடல்கள் பாடி மகிழ்விப்பாராம் –
இவரது சரம தசையில் ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ நம்பிள்ளை அறிய வந்து அவர் படுகிற கிலேசங்களைக் கண்டு
இங்குத்தை ஆச்சார்ய சேவைகளும்
பகவத் குணங்களைக் கொண்டு போது போக்கின படிகள் எல்லாம் கிடக்க
அல்லாதாரைப் போலே இப்படி பட வேண்டுவதே -என்ன –
நீயாள வளை யாள மாட்டோமே -ஸ்ரீ பெரிய திரு மொழி -3-6-9–என்றவாறே
பகவத் பரிக்ரஹம் ஆனால் கிலேசப் பட்டே போம் இத்தனை காணும் -என்றார்
புறப்பட்ட பின்பு ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ பிள்ளையை பார்த்து முடிகிற இவ்வளவிலேயும் இவ்வார்த்தை சொல்லுகிறது
விஸ்வாசத்தின் கனமான பாவ பந்தத்தில் ஊற்ற்ம் இறே என்று அருளிச் செய்தார்-

——————–

30- ஸ்ரீ பருத்திக் கொல்லை அம்மாள்

ஸ்ரீ உடையவர் திருமலைக்கு எழுந்து அருளும் போது ஸ்ரீ திருக்கோவலூர் சென்று அங்கு இருந்து
ஸ்ரீ காஞ்சி புரம் நோக்கி நடக்க அதில் இரண்டு வழிகள் பிரிய -அங்குள்ள இடையர்கள்
ஓன்று ராஜஸரான எச்சான் இடத்துக்குப் போகும் வழி என்றும் –
மற்ற ஓன்று சாத்விகரான இவர் இடத்துக்குப் போகும் வழி என்று சொல்ல
அதன் வழி இவர் இடத்துக்கு வந்தவர் -அங்கு அவர் இல்லாமல் அவர் தேவிமார் சரியான புடவை இல்லாமல்
வெளியே வர முடியாமல் இருக்க அறிந்த ஸ்ரீ உடையவர் தனது உத்தரீயத்தை எடுத்து எறிய –
அத்தைக் கட்டிக் கொண்டு வந்து வணங்க அவரைத் தளிகை பண்ணும்படி சொல்ல
பண்ணி முடித்ததும் அவள் கணவர் வந்து தண்டம் சமர்ப்பித்து ஸ்ரீ பாத தீர்த்தம் ஸ்வீ கரித்து
அனைவரும் அமுது செய்தார்கள்
இவர் தேவிக்கு தீங்கு நினைத்த வைசியன் ஒருவனை ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாத தீர்த்தம் சாதித்து
இவர் திருத்திப் பணி கொண்டார் –

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-