Archive for the ‘ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்’ Category

ஸ்ரீ யாமுனாசார்யர் அருளிச் செய்த ஸ்ரீ ப்ரேமேய ரத்னம் -நான்காம் பிரகரணம் –உபேய யாதாத்ம்யம் –

November 24, 2015

ஸ்ரீ ப்ரேமேய ரத்னம்-நான்காம் பிரகரணம் –உபேய யாதாத்ம்யம்

அநந்தரம்-உபேய யாதாத்ம்யம் பிரதிபாதிக்கப் படுகிறது -எங்கனே என்னில் -உபேயங்கள் அநேக விதங்களாய் இருக்கும்
-ஐஸ்வர்யம் என்றும் -கைவல்யம் என்றும் -பகவத் பிராப்தி என்றும் -இதில் ஐஸ்வர்யம் பலவகையாய் இருக்கும் –
கைவல்யமாவது கன்று நாக்கு வற்றிச் சாவா நிற்க தாய் தன முலையைத் தானே உண்ணுமா போலே -என்று பட்டர் அருளிச் செய்வர் –
சர்வ அலங்க்ருதையான ஸ்திரீக்கு பர்த்ரு விக்ரஹம் போலே என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்
இனி பகவத் பிராப்தியாவது ஐஸ்வர்யா கைவல்யங்களை காற்க் கடைக் கொண்டு அர்ச்சிராதி மார்க்கத்தாலே அந்தமில் பேரின்பமான பரம பதத்தை அடைந்து
ஆவிர்பூத ஸ்வரூபராய்-சாலோக்ய சாரூப்ய சாமீப்ய சாயுஜ்யாதிகளைப் பற்றி அனுபவிக்கை-
ஐஸ்வர் யத்தில் ஆசை நீர்க் குமிழியை பூரணமாகக் கட்ட நினைக்குமா போலே –
கைவல்யம் மஹா போகத்துக்கு இட்டுப் பிறந்து இருக்க ஸ்வயம் பாகம் பண்ணுமோ பாதி

இனி பகவத் பிராப்தியாவது ஈஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை சாஷாத் கரித்து அனுபவித்து -அவ்வனுபவ
அதிசயத்துக்குப் போக்கு வீடாக -பணி மானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட -என்று சர்வ வித கைங்கர்யங்களையும்
பண்ணி அந்த கைங்கர்ய விசேஷத்தாலே ஈஸ்வரனுக்கு பிறந்த முகோல்லாசத்தைக் கண்டு ஆனந்தியாய் இருக்கை –

சிலர் குணாநுபவம் பண்ணுவார்கள் -கரை கட்டாக் காவேரி போலே பகவத் குணங்கள் என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்
சிலர் விக்ரஹ அனுபவம் புண்ணுவார்கள்–பக்தர்களுக்கு அன்ன பானாதிகளே தாரகம் – ஸ்ரக் சந்தனாதிகள் போஷகம் -சப்தாதிகள் போக்யம்
நித்ய முக்தர்களுக்கு திவ்ய மங்கள விக்ரஹம் தாரகம் -கைங்கர்யம் போஷகம் -பகவத் ப்ரீதி போக்யம் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்
இரண்டு பங்குக்கு ஒரு கை ஓலையோ பாதி உபாய உபேயம் இரண்டும் ஈச்வரனே என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்
உபாய பிரார்த்தனையும் உபேய பிரார்த்தனை-அதிகாரி க்ருத்யம் என்று எம்பார் அருளிச் செய்வர்
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் என்கிறபடி பிரதி ஷணம் அபூர்வ ரசத்தை உண்டாக்குகை யாலே
நித்ய பிரார்ர்த்த நீயமுமாய் இருக்கும் உபேயம் என்று பட்டர் அருளிச் செய்வர்
புருஷகார விசிஷ்டம் உபாயம் லஷ்மீ விசிஷ்டம் உபேயம் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்
புத்ரனுக்கு மாத்ரு பித்ரு ஸூ ஸ் ருஷை இரண்டும் ப்ராப்தமாய் இருக்குமோ பாதி சேதனனுக்கு மிதுன சேஷ வ்ருத்தியே
உபேயமாகக் கடவது என்று பெரிய பிள்ளை அருளிச் செய்வர்
இவனுக்கு பிராப்யமான தொரு மிதுனம் மரமும் கொடியும் சேர்ந்தால் போலே என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –

சேஷித்வம் ஆவது உபேயத்வம்-எங்கனே என்னில் சேஷ பூதனாலே பண்ணப் பட்ட கிஞ்சித் காரமாகிற அதிசயத்துக்கு ஆஸ்ரயமாய்
-அதிசயம் ஆக்குகை என்று நஞ்ஜீயர் அருளிச் செய்வர்
ராஜ்ய பிரஷ்டனான ராஜாவுக்கு மீண்டும் ராஜ்ய பிராப்தி உண்டானவோ பாதி சேஷ பூதனான இச் சேதனனுக்கு சேஷித்வ அனுபவம்
என்று இளைய ஆழ்வாரான திருமலை யாண்டான் அருளிச் செய்வர்
மிதுன சேஷ பூதனனுக்கு ஸ்வரூப அனுரூபமான பிராப்யம் மிதுனமேயாய் இருக்கும் -இதில் ஒன்றில் பிரிக்கில் பிராபா பிரவான்களைப்
பிரிக்க நினைக்குமோபாதி என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்
இதில் ஒன்றை விட்டு ஒன்றைப் பற்ற நினைத்தான் ஆகில் மாத்ரு ஹீனனான புத்ரனோபாதி அறவையாயும் பித்ரு ஹீனனான
புத்ரனோபாதி அநாதனயுமாயும் இருக்கும் –இருவரும் கூடின போது இ றே ஸ்ரீ மத புத்ரன் ஆவது -என்று பெரியாண்டான் அருளிச் செய்வர்
பிராட்டியை ஒழிய ப்ரஹ்மசாரி எம்பெருமானை பற்ற நினைத்தான் ஆகில் ஏகாயநம் ஆகிற படு குழியில் விழும்
எம்பெருமானை ஒழிய பிராட்டியைப் பற்ற நினைத்தான் ஆகில் ஆநீசாக்ரம் ஆகிற படு குழியில் விழும் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர் –
வயாகர சிம்ஹங்களோ பாதி உபாய விசேஷம் -யூதபதியான மத்த கஜத்தோ பாதி உபேய விசேஷம் என்று திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்வர்

இச் சேதனனுக்கு கைங்கர்யம் பண்ணுன் போது சேஷத்வ சித்தி இல்லை -ஈஸ்வரனுக்கு கைங்கர்யம் கொள்ளாத போது சேஷித்வ சித்தி இல்லை
-இருவருக்கும் இரண்டும் இல்லாத போது இருவருடைய போகமும் குலையும் என்று பிள்ளை யுறங்கா வல்லி தாசர் அருளிச் செய்வர் –
இதில் சேஷத்வத்தால் உண்டான போகம் சேஷியதாய்-இவன் இப்படி கொள்ளுகிறான் என்கிற பரிவு சேஷ பூதனுக்கு
உள்ள போகம் என்று மிளகு ஆழ்வான் வார்த்தை –படியாய்க் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே -எனபது பிரமாணம்
ஸ்ரீ ஸ்தனம் போலே போக்யன் சேதனன் போக்தா பரம சேதனன் -ஆனால் அசித்தில் காட்டில் வாசி ஏது என்னில் –
ஈஸ்வரன் போக்தா -நாம் போக்யம் என்கிற ஜ்ஞான விசேஷம் என்று திருமாலை யாண்டான் அருளிச் செய்வர்
இக்கைங்கர்யம் போக ப்ரீதியாலே உண்டாம் -அந்த ப்ரீதி அனுபவத்தால் வரும் -அனுபவம் அனுபாவ்யத்தை அபேஷித்து இருக்கும் –
அனுபாவ்ய ஸ்வரூபமும் ரூபமும் குணமும் விபூதியும் உபாதா நமுமாய் -இதில் ஸ்வரூபம் பரிச்சேதிக்க அரிது
குணங்கள் அளவிறந்து இருக்கும் -சீலம் எல்லையிலான் -பிணங்கி அமரர் பிதற்றும் குணம் என்று பிரமாணம் –
இனி பூர்ண அனுபவம் பண்ணலாவது விக்ரஹம் ஒழிய இல்லை –
அவ விக்ரஹம் தான் அப்ராக்ருதமாய் ஸ்வயம் பிரகாசமுமாய் ஆனந்த அம்ருத தாரைகளைச் சுரக்கக் கடவதாய்
பொற் குப்பியின் மாணிக்கம் போலே அகவாயில் உண்டான திவ்யாத்ம ஸ்வரூபத்தை புறம் பொசிந்து காட்டக் கடவதாய்
முத்தின் திரள் கோவை என்கிறபடியே அபரிமித கல்யாண குணங்களைக் கண்ணாடி போலே பிரகாசிப்பக் கடவதாய்
-வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை -என்கிறபடியே பூவில் பரிமளமான பிராட்டியும்
மண்ணில் பரிமளமான பிராட்டியும் மடித்துப் பிடித்தாலும் மாந்தும் படியான மென்மையை உடைத்தாய் நித்ய அனுபாவ்யமாய்
பூர்வ பாக சித்தமான கர்ம பாகத்தாலும் ஆராதிக்கப் படுமதாய் இருப்பதொன்று

-அது தான் அஞ்சு வகையாய் இருக்கும்
பரத்வம் என்றும் வ்யூஹம் என்றும் அவதாரம் என்றும் அந்தர்யாமித்வம் என்றும் அர்ச்சாவதாரம் என்றும் –
அதில் பரத்வம் ஆவது -முக்த ப்ராப்யமாய் இருக்கும் -வ்யூஹம் ஆஸ்ரிதர் உடைய கூக்குரல் கேட்கைக்காக திருப் பாற் கடலிலே
பள்ளி கொள்ளக் கடவதாய் சனகாதிகளுக்கு போக்யமாய் இருப்பதொன்று -அவதாரங்கள் ராம கிருஷ்ணாதிகள்
அந்தர்யாமித்வம் ஆத்ம உஜ்ஜீவன அர்த்தமாக ஸ்வரூபேண நியமித்துக் கொண்டு நிற்கும் நிலை
அங்கன் அன்றியே உபாசகர்க்கு ஸூ பாஸ்ரயமான விக்ரஹத்தோடு ஹ்ருதய புண்டரீகத்திலே நிற்பதொரு ஆகாரம் உண்டு
அர்ச்சாவதாரங்கள் கோயில் திருமலை துடக்கமான ப்ராப்ய ஸ்தலங்கள்
நாடு அழியா நிற்க மேல் நிலமாகிற நீணிலா முற்றத்திலே இனிய சந்தன குஸூம தாம்பூலாதிகளாலே அலங்கரித்து
-சத்திர சாமராதிகள் பணிமாற-அத்தேச வாசிகளுக்கு முகம் கொடுத்து த்ரிபுவன சக்ரவர்த்தி என்று விருது பிடிக்குமா போலவும்
பயிர் உலவா நிற்க கடலிலே வர்ஷிக்கும் காள மேகம் போலவும் -த்ருஷார்த்தன் நாக்கு வற்றிச் சாவா நிற்க
மத்ச்யத்துக்கு தண்ணீர் வார்க்கும் தார்மிகனைப் போலவும் -பரத்வத்தில் இருப்பு
பரம உதாரனாய் இருப்பவன் -ஒரு தார்மிகன் ஒரு க்ராமத்துக்குக் கொடுத்த த்ரவ்யத்தை நாலு கிராமணிகள் வாங்கி
விபஜித்துக் கொள்ளுமோ பாதி ஷீர வ்யூஹமான ஷீராப்தி
குண ஹீன பிரஜைகளைத் தள்ளி குணவான்களைக் கைக் கொள்ளும் பிதாவோபாதியும் மண்டல வர்ஷம் போலவும் அவதாரங்கள்
நாம் அழிக்க நினைத்தாலும் அழியாதபடி நம்மையும் தன்னையும் நோக்கிக் கொண்டு நாமாக நினைத்த வன்று அதுக்கான இடத்தில்
முகம் காட்டியும் -பித்தர் கழுத்திலே சுளுக்கு இட்டுக் கொண்டால் பின்னே நின்று அறுத்து விடும் மாதாவைப் போலேயும்-மதம் பட்ட ஆனை
கொல்லப் புக்கால் அதின் கழுத்தில் இருந்த பாகன் அதன் செவியை இட்டு அதன் கண்ணை மறைக்குமா போலேயும் இராமடமூட்டுவாரைப்
போலேவும் உணரில் கையைக் கடிக்கும் என்று உறக்கத்தில் பாலும் சோறும் புஜிப்பிக்கும் மாதாவைப் போலவும் அந்தர்யாமித்வம்
ராஜ மகிஷி தன பர்த்தாவினுடைய பூம் படுக்கையில் காட்டில் பிரஜையினுடைய தொட்டில் கால்கடை போக்யமாக வந்து கிடைக்குமா போலவும் கோயில் திருமலை பெருமாள் கோயில் துடக்கமான அர்ச்சா ஸ்தலங்கள் –
முத்துத் துறையிலே குடில் கட்டிக் கொடுக்கிற கர்ஷகனைப் போலவும் க்ராமாதி தேவதையும் க்ருஹார்ச்சையும் என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் -ஷீராப்தி போலே -பூகத ஜலம் போலே அந்தர்யாமித்வம் -அவற்றில் தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்
சேதனனுடைய ஸ்வரூப ஸ்தித்யாதிகள் பகவத் அதீனங்களாய் இருக்குமா போலே அர்ச்சாவதாரத்தினுடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்யாதிகளும் ஆஸ்ரிதர் இட்ட வழக்காய் இருக்கும் என்று ஜீயர் அருளிச் செய்வர்
பக்த பராதீனம் -தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே என்று பிரமாணம் –
தான் உகந்த விக்ரஹத்தை ஆராதிக்கும் போது ராஜவத் உபசாரமும் -புத்ரவத் ச்நேஹமும் சர்ப்பவத் பீதியும்
உண்டாக வேண்டும் என்று எம்பார் அருளிச் செய்வர்
பரத்வாதிகள் ஐந்தையும் சேர பரமாச்சார்யர் அனுசந்தித்து அருளினார் -தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக் கோனே -என்று
பட்டருடைய சரம காலத்தில் பெருமாள் எழுந்து அருளி வந்து நாம் உமக்குச் செய்ய வேண்டுவது என் என்று கேட்டருள
பரம பதத்தில் இந்தச் சிவந்த முகம் காணேன் ஆகில் மீண்டும் இங்கே வர வேணும் என்று விண்ணப்பம் செய்தார்
ஸூ ஷேத்ரம் உழுவான் ஒருவனுக்கு மெட்டு நிலத்தையும் காட்டுமோ பாதி கோயில் வாஸம் தனக்கு
பரமபதம் கழுத்துக் கட்டியாய் இ றே இருப்பது என்று பட்டர் அருளிச் செய்வர்
மஹதா புண்ய மூலே ந-என்று பிரமாணம் -நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் என்னும் கோயில் விட்டு பரமபதத்துக்கு போ
என்றால் குறைப்பாடு படும் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –
அமரர் சென்னிப் பூ என்கையாலே காக ந கு ஸூ மாம் போலே பரத்வம்
வ்யூஹம் -பாற் கடல் பையத் துயின்ற பரமன் -என்றும் -அனந்தன் தன மேல் நண்ணி நன்கு உறைகின்றான் என்றும்
சொல்லுகிறபடியே அருள் விஞ்சி இருக்கும்
மீனோடு ஆமை கேழல் அரி குரலாய் முன்னும் இராமனாய்த் தானாய்ப் பின்னும் இராமனாய்த் தாமொதரனாத்க்
கற்கியும் ஆனான் என்கிறபடியே அவதாரங்கள் பத்தின் கீழ் மாற்றாய் இருக்கும்
அந்தர்யாமித்வம் ஆத்ம யாதாம்ய அதீனமாய் அங்கணஸ்த கூப ஜலம் போலே குணவத் க்ராஹ்யமாய் இருக்கும்

இனி அர்ச்சாவதாரமே பின்புள்ளார்க்கும் ஆஸ்ரயிக்கலாவது -பின்னானார் வணங்கும் சோதி என்று
பரத்வத்தில் ஈஸ்வரத்வம் ஆகிற அழல் விஞ்சி இருக்கும் -ஆகையாலே அர்ச்சாவதார ஸ்தலமே முக்யமாகக் கடவது
பிள்ளை திரு நறையூர் அரையர் பட்டர் ஸ்ரீ பாதத்திலே தெண்டன் இட்டு தஞ்சமாய் இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் என்ன
பொய்யே யாகிலும் அவன் உகந்து அருளின திவ்ய தேசங்களிலே புக்குத் திரிவார்க்கு அந்திம தசையிலே கார்ய கரமாம் -என்று அருளிச் செய்தார்
ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே -ஸ்தல சஞ்சாரியை விட்டு சாகா சஞ்சாரியைப் பற்றுவதே -என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்
அழகர் திரு ஓலக்கத்திலே பிள்ளை அழகப பெருமாள் வந்து புகுந்து பெரியாண்டானைப் பார்த்து பரமபதம் இருக்கும் படி என் என்று கேட்க –
இப்படி இருக்கும் என்ன -ஆனால் இத்தை விட்டு அங்கு போவான் என் என்ன -இங்கு இருந்தால் முதுகு கடுக்கும்
அங்குப் போனால் செய்யாது என்று அருளிச் செய்தார்
இப்படிக் கொத்த ஸ்தலங்களிலே அடிமை செய்து போருகை இவனுக்கு பகவத் பிராப்தி யாவது
விரோதி கழிந்தால் கைங்கர்யம் ஸ்வரூப பிராப்தம் என்று சோமாசி யாண்டான் அருளிச் செய்வர்
சம்பந்தம் சம்பாத்தியம் அன்று -தடை விடுகை சம்பாத்தியம் என்று பிள்ளான் பணிக்கும்
பரமன் அடி பாடி நெய் உண்ணோம் பால் உண்ணோம் உண்டார்க்கு உன்ன வேண்டா வென்று நம்பிள்ளை அருளிச் செய்வர்
இக்கைங்கர்யா போகம் யாதாம்யபாவி ஐஸ்வர்யா னந்தத்தில் விலஷணமாய் இருக்கும்
இத்தால் சர்வ காலத்திலும் உண்டு என்னும் இடம் தோற்றுகிறது
இது ப்ரஹ்ம போகம் ஆகையாலே சங்குசிதமான கைவல்ய அனுபவத்தில் விலஷணமாய் இருக்கும்
இத்தால் சர்வ தேசத்திலும் உண்டு என்னும் இடம் தோற்றுகிறது
இது கொண்ட சீற்றம் இத்யாதியாலே ஈஸ்வர ஆனந்தத்திலும் விலஷணமாய் இருக்கும்
அந்தரங்க பஹிரங்க பாவத்தாலே சர்வ அவஸ்தையிலும் உண்டாய் இருக்கும்
இது சர்வவிதம் ஆகையாலே பிராட்டியினுடைய ஆனந்தத்திலும் விலஷணமாய் இருக்கும்

கைங்கர்யமாவது -தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணம்
துழாய் உடை அம்மான் -என்கிறபடியே திருத் துழாய் யோபாதி இஷ்ட விநியோஹ அர்ஹமாய் இருக்கும்
ஆளும் பணியும் படியும் அடியேனைக் கொண்டான் –பின்னும் ஆளும் செய்வன் -என்று பிரமாணம்
தான் உகந்ததும் கைங்கர்யம் அல்ல -தானும் அவனும் உகந்ததும் கைங்கர்யம் அல்ல -அவன் உகந்ததே கைங்கர்யம் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -உனக்கே நாம் ஆட செய்வோம் -என்று பிரமாணம்
கைங்கர்யம் ததீய கைங்கர்யம் பர்யந்தமாக வேணும்
பகவத் குண அனுபவத்துக்கு படிமா பெரியாண்டானும் எம்பாரும்
பகவத் கைங்கர்யத்துக்கு படிமா எண்ணாயிரத்து
எச்சானும் தொண்டனூர் நம்பியும்
பாகவத கைங்கர்யத்துக்கு படிமா வடுக நம்பியும் மணக்கால் நம்பியும்

ஸ்ரீ ராமாயணத்தாலும் ஸ்ரீ மஹா பாரதத்தாலும் ஸ்ரீ விஷ்ணு புராணத்தாலும் மூன்று அதிகாரிகளுடைய ஏற்றம் சொல்லுகிறது
எங்கனே என்னில் ஸ்ரீ ராமயணத்தாலே-சபரியினுடைய ஏற்றம் சொல்லுகையாலே உபேய ஏற்றம் வெளியிடுகிறது
மஹா பாரதத்தாலே த்ரைபதியினுடைய ஏற்றம் சொல்லுகையாலே உபாய வைபவம் வெளியிடுகிறது
ஸ்ரீ விஷ்ணு புரானத்தாலே சிந்த யந்தியினுடைய ஏற்றம் சொல்லுகையாலே உபாய விச்லேஷத்தில் தரியாமையை
வெளியிடுகின்றது என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்

ஆசார்ய விச்வாசத்துக்கு படிமா பொன்னாச்சியார் எங்கனே என்னில்
பிள்ளை உறங்கா வல்லி தாசர் உடையவருடைய வைபவம் பரப்பிக்க அவரை இரு கரையர் என்றாள் -அதுக்கடி என் என்னில்
பாஷ்ய காரரை ஒழியவும் பெருமாளைச் சரண் புக்குப் போருவர் என்றாள் இ றே
உபாய வ்யாவசாயத்துக்கு படிமா கூரத் தாழ்வான் ஆண்டாள் -எங்கனே என்னில் பட்டர் ஒரு ஆர்த்தி விசேஷத்தில்
பெருமாளே சரணம் என்ன வேண்டி இரா நின்றது என்ன இக்குடிக்கு இது தான் என்றாள்

ஆக வைஷ்ணத்வ ஜ்ஞானம் பிறக்கை யாவது ஜ்ஞானா நந்தங்களும் புற இதழ் என்னும் படி பகவத் சேஷத்வமே ஸ்வரூபமாயப் போந்த
இவனுக்கு அந்தப் பகவச் சேஷத்வம் புற இதழ் என்னும் படி பாகவத் சேஷத்வமே ஸ்வரூபம் என்று இருக்கை
இது பிறவாது இருக்கை யாவது ஒரு பாகவத விச்லேஷத்திலே நெஞ்சு நையாது இருக்கிறதுக்கு மேலே வருந்தி
ஒரு பாகவதனோடு சம்ச்லேஷிக்க இழிந்து அவனுடைய தோஷ தர்சனம் பண்ணுகை-
உபாயத்துக்கு முற்பாடன் ஆகையாலும் உபேயத்துக்கு எல்லை நிலம் ஆகையாலும் இருந்த நாளைக்கு உசாத் துணை யாகையாலும்
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன் என்று பட்டருக்கு எம்பார் அருளிச் செய்வர்
ஆகையால் அன்பர் கூடிலும் நீன்கிலும் யாம் மெலிதும்-என்று பிரதமாச்சார்யர் அனுசந்தித்து அருளிற்றதும்
ஒரு பாகவதனுடைய நியமனத்தை வெறுத்தல் பொறுத்தல் செய்கை யன்றிக்கே விஷய பிரவணனுக்கு படுக்கைத் தலையிலே
விஷய பாரூஷ்யம் போக்யமாம் போலே யாகிலும் போக்யம் என்று இருக்கை என்று திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்வர்
ஆர்த்த பிரபத்தி பண்ணி இக்கரைப் படுக்கையிலே ஒருப்பட்டு இருக்கச் செய்தேயும் மாதா பிதாக்களும் கூட அநாதரிக்கும் படியான
ஆர்த்தியை உடைய ஸ்ரீ வைஷ்ணவனைக் கண்டால் அவனுடைய ரஷணத்துக்கு உறுப்பாக இங்கேயே இருக்கையிலே ஒருப்படுகை
என்று திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்வர் –
வைஷ்ணவனுக்கு ஜ்ஞான அனுஷ்டானங்கள் இரண்டும் வேணும் -அனுஷ்டான ஹீனமான ஜ்ஞானம் சரண ஹீனனான சஷூஷ் மானோபாதி-
ஜ்ஞான ஹீனமான அனுஷ்டானம் அங்க்ரி சஹிதனான அந்தகனோபாதி-என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்
அனுஷ்டானம் இல்லாத ஜ்ஞானமும் கிஞ்சித்காரம் இல்லாத ஸ்வரூபமும் குமர் இருக்கும் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

இனி ஆசார்ய வைபவ ஜ்ஞானம் பிறக்கை யாவது அந்தகன் ஆனவனுக்கு திருஷ்டியைத் தந்தவன் -இருட்டு அறையில் கிடக்கிற
என்னை வெளிநாடு காணும் படி பண்ணின மஹா உபகாரகன்
-செறிந்த இருளாலே வழி திகைத்த எனக்கு கை விளக்கு காட்டுமோ பாதி அஜ்ஞ்ஞான திமிர உபஹதனான எனக்கு மந்திர தீபத்தைக் காட்டி
நல்ல தசையிலே சிநேக பூர்வகமாக அதுக்கு பாத்ரமாக்கி சேஷத்வ ஜ்ஞானம் பிறவாமையாலே உருமாய்ந்து கிடக்கிற எனக்கு
ரஷகத்வ சேஷித்வங்கள் எம்பெருமானுக்கு ஸ்வரூபம் என்னும் இடத்தையும் ரஷ்யத்வ சேஷத்வங்கள் எனக்கு ஸ்வரூபம் என்னும் இடத்தையும்
தோற்றக்கடவ சரீராத்மா பாவத்தையும் வெளியிட்டு சரீரிக்கு ரஷகத்வமாய் சரீரத்துக்கு இல்லாதவோபாதி ஸ்வ ரஷண நிவ்ருத்தியையும் பண்ணி
சரீர சம்ஸ்காரம் சரீரிக்கு ஆமோபாதி போக்த்ருத்வம் தத் அதீநமாம் படி பண்ணி
இப்படி சேஷத்வத்தில் கர்த்ருத்வம் ஜ்ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வம் -கர்த்ருத்வத்தில் கர்த்ருத்வம் -போக்த்ருத்வத்தில் கர்த்ருத்வம் இவற்றை
நிவர்த்திப்பிக்கக் கடவனாய் -எங்கனே என்னில்

சேஷத்வத்தில் கர்த்ருத்வம் ஆவது -ராஜா சக்தியை யிட்டு ராஜ்யத்தைப் பிடிக்கும் மந்த்ரிகள் போலே பகவதா சத்தியை யிட்டு சதார்யனை நெகிழுகை-
அதாவது சப்தாதி விஷய ஸ்பர்சத்தில் அச்சம் பிறவாது இருக்கையும் பகவத் பாகவத கைங்கர்யத்தில் அநாதாரம் பிறக்கையும்
தந் நிவ்ருத்தியாவது -ப்ராமாதிகமாகவும் விஷய ஸ்பர்சம் இன்றியிலே இருக்கையும் -பகவத் பாகவத கைங்கர்யத்தில் அத்யாதரம் நடக்கையும் –

ஜ்ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வமாவது -நாம் ஜ்ஞாதா வாகையாலே யன்றோ நம்மை அங்கீ கரித்தது என்று பஹூ மானம் பண்ணுகை
தந் நிவ்ருத்தி யாவது தேஹாத்மா அபிமாநிகளிலும் கடையாய் அசித் ப்ராயனான என்னை இரும்பைப் பொன் ஆக்குவாரைப் போலே
ஆத்ம ஜ்ஞானத்தைத் தந்து அங்கீ கரித்தான் என்று க்ருதஜ்ஞனாய் இருக்கை -அந் நலனுடை ஒருவனை நணுகினம் நாமே -என்று பிரமாணம்

கர்த்ருத்வத்தில் கர்த்ருத்வம் ஆவது -நிஷித்தங்களை விட்டு விஹிதங்களைப் பற்றின வாறே இ றே நம்மை அவன் அங்கீ கரித்தான்
என்று தன்னைப் போரப் பொலிய நினைத்து இருக்கை -தந் நிவ்ருத்தி யாவது மரப்பாவையை ஆட்டுவிக்குமா போலே நிஷித்தங்களையும்
தானே நிவ்ருத்திப்பித்து விஹிதங்களையும் பற்றுவித்தான் என்று இருக்கை

போக்த்ருத்வத்தில் கர்த்ருத்வமாவது -நாம் அவனுக்கு அடிமை செய்கிறோம் என்று இருக்கை -தந் நிவ்ருத்தியாவது தன் கையாலே
தன் மயிரை வகிர்ந்தால் அன்யோன்ய உபகார ஸ்ம்ருதி வேண்டாவோபாதி சரீர பூதனான ஆத்மா சரீரிக்கு அடிமை செய்கிறான் என்று இருக்கை –

இப்படி கர்த்ருத்வத்தை யதாவாக உபகரித்த ஆசார்யன் மஹா உபாகாரகன் என்று இருக்கை
ஸ்வ அனுவ்ருத்தி பிரசன்னாச்சார்ய அங்கீ காரத்துக்கு ஒழிய உபேய சித்தி இல்லை என்று முதலி யாண்டான் நிர்வஹிப்பர்
க்ருபா மாத்திர பிரசன்னாசார்ய அங்கீ காரத்துக்கு ஒழிய உபேய சித்தி இல்லை என்று ஆழ்வான் பணிப்பர்
தன்னாசார்யன் திறத்தில் செய்த அடிமையை மறந்து செய்யப் பெறாத அடிமைக்கு இழவாளனாய் இருக்கை
அதாவது ஆசார்யன் திரு உள்ளத்தைப் பின் சென்ற அனந்தாழ்வானைப் போலே
-ஆசார்யன் நியமித்த படி செய்த அம்மாளைப் போலவும் ஆசார்யன் திரு உள்ளத்தில் அநாதரம் தமக்கு அநர்த்தம் என்று
தம்மை தாழ விட்டு அடிமை செய்த எச்சானைப் போலவும் இருக்கை

இனி உபாய விசேஷ ஜ்ஞானம் பிறக்கை யாவது -சாத்தியமான சகல உபாயங்களையும் சாங்கமாகவும் மறுவல் இடாதபடி விட்டு
ஸ்வ இதர சமஸ்த நிரபேஷமாக சித்த உபாயம் ச்வீகாரம் என்று இருக்கை
இவ்வுபாய நிஷ்டை யாவது பிரபத்தி பிரகாரமும் பிரபத்தி பிரபாவமும் நெஞ்சிலே படுகை
பிரபத்தி பிரகாரம் நெஞ்சிலே படுகையாவது பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஸ்வ ஆதீனம் என்று இராதே ஒழிகை
பிரபத்தி பிரபாவம் நெஞ்சிலே படுகை யாவது பிரபத்தி நிஷ்டனுடைய பிரக்ருதியில் பிரகிருதி நிரூபணம் பண்ணாது ஒழிகை
அபிரூபையான ஸ்திரீக்கு அழகு வர்த்திக்க வர்த்திக்க அபி ரூபவானாய் ஐஸ்வர்யவனான புருஷன் ஆந்தரமாக ஆழம் கால் படுமோபாதி
அஜ்ஞனான சேதனன் அழுக்கு அறுக்க அறுக்க ஈஸ்வரன் திரு உள்ளம் அத்யாசன்னமாய்ப் போரும் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்
சிறியாச்சான் அமுதனாரைப் பார்த்து உம்முடைய அனநுஷ்டானம் பேற்றுக்கு இலக்காகும் போது காணும் என்னுடைய
அனுஷ்டானம் பேற்றுக்கு சாதனம் ஆவது என்றார்
ச்வீகாரத்தில் அந்வயம் இல்லாத போது ஸ்வதஸ் சர்வஜ்ஞ்ஞன் ஸ்வத பிரசாதத்தாலே சேர விடான்
சோக நிவ்ருத்தி பிறவாத போது சுமை எடுத்துவிடும் என்று திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்வர்
சித்த உபாயத்தில் நிலை தாமரை ஓடையில் அன்னம் இறங்குமோபாதி-சாத்திய உபாயங்களில் நிலை அவ வோடையிலே
யானை இறங்குமோ பாதி என்று இளைய யாழ்வாரான திருமாலை யாண்டான் அருளிச் செய்வர்
இவ்வுபாயம் எய்ப்பினில் வைப்பு என்று தப்தனுக்கு வைத்த தண்ணீர் பந்தலோபாதி என்று பெரிய பிள்ளை யருளிச் செய்வர்

இனி உபேய யாதாம்ய ஜ்ஞானம் ஆவது -பரபக்தி யுக்தனாய் சேஷ பூதனான தான் தர்மமாகவும் சேஷியான ஈஸ்வரன் தர்மியாகவும் அறிந்து
தர்ம தர்மிகளோபாதி தனக்கும் அவனுக்கும் ஆவிநாபூதம் ஆவதொரு படி விசிஷ்ட விசேஷத்தில் அவனேயாய்த் தான் இல்லையாம் படி
ஐக்கியம் பிறந்து தன் சைதன்யத்துக்கு அனுகூலமாம் படி அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை பிரிகதிர் படாதபடி அனுபவித்து
அவ்வனுபவத்துக்கு போக்குவீடாக அவனுக்கே அபிமதமான சர்வ வித கைங்கர்யங்களையும் பண்ணி அவ்வளவிலே நில்லாமல்
ததீய கைங்கர்யமே ஸ்வரூப அனுரூபமான பரம பிராப்யம் என்று இருக்கை –
ச்வீகரத்தில் உபாயத்வ புத்தியும் பேற்றில் சம்சயமும் ப்ரதிபந்தகம் என்று திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்வர்

வைஷ்ணவத்வம் நெஞ்சில் பட்டதில்லை யாகில் ஸ்வரூப நாசகரையும் ஸ்வரூப வர்த்தகரையும் அறிந்திலனாகக் கடவன்
ஆசார்ய வைபவம் நெஞ்சில் பட்டது இல்லையாகில் ஜாத்யந்தனோபாதி யாகக் கடவன்
உபாய வைபவம் நெஞ்சிலே பட்டதில்லை யாகில் மரக் கலத்தை விட்டு சுரைப் பதரைக் கைக் கொண்டானாகக் கடவன்
உபேய யாதாத்ம்யம் நெஞ்சிலே பட்டது இல்லையாகில் ராஜ புத்ரனாய் பிறந்து உஞ்சவ்ருத்தி பண்ணுமோபாதியாகக் கடவன்

——————————————————————————–

யாமுன கவிவா தீந்திர ஸூ ந்தரஸ்ய புரோஹித
பிரமேய ரத்ன மகரோத் சர்வேஷாம் ஜ்ஞான சம்பதே –

—————————————————————————–

திருமாலை ஆண்டான்-திருக் குமாரர் -ஸூ ந்த்ரத் தோளுடையார் -திருக் குமாரர் -இளைய யாழ்வார்
-இவர் புத்ரர் யமானாசார்யர் -இந்நூல ஆசிரியர்
இவர்கள் அனைவரும் காஸ்யப கோத்தரத்தினர்

கோவிந்த பெருமாள் சிறிய கோவிந்த பெருமாள் சகோதரர்கள்
கிடாம்பியாச்சான் கிடாம்பி பெருமாள் சகோதரர்கள் அருளாள பெருமாள் எம்பெருமானார் -அலங்கார வேங்கடவர் சகோதரர்கள்
மாருதிப் பெரியாண்டான் மாருதிச் சிறியாண்டான் சகோதர்கள்
கோமடத் தாழ்வான் கோமத்து சிறியாழ்வான் சகோதரர்கள் -போலே
பெரியாண்டன் சிறியாண்டான் சகோதரர்கள் 74 சிம்ஹாசனபதிகளில் ஒருவர்
பெரியாண்டான் திருக்குமாரர் மாடபூசி -மாடங்களுக்கே பூஷணமாக இருப்பாராம் –
பெரியாண்டான் தன் சைதன்யம் குலையும்படி அழகர் இடத்தில் பேர் அன்பு பூண்டவர்
இவர் திருத் தோரணம் கட்டி அழகர் திருவடிகள் அறுதியாக பத்தெட்டு திவசம் தெண்டன் இட்டு கிடப்பர்
-ராத்ரி மனுஷ்யர் போகும் போது ஆண்டான் கிடக்கிறாரோ ப ஸூ கிடக்கிறதோ வழி பார்த்து போங்கோள் என்னும் படி
சலியாமல் பகவத் அனுபவம் பண்ணுவாராம்

——————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ யாமுனாசார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்- ஸ்லோகம் -57-58-59-60-61-62-63-64-65—-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

February 4, 2014

ஸ்தோத்ரம் -57-அவதாரிகை

கீழ் சேஷத்வ காஷ்டை யான ததீய சேஷத்வத்தை அனுசந்தித்தார் –
இதில் சேஷத்வத்துக்குப் புறம்பான வற்றில்
அருசியைச் சொல்லி -அவற்றைத் தவிர்த்துத்
தந்து அருள வேணும்-என்கிறார் –

ந தேஹம் ந ப்ராணான்ந ஸ ஸூ க மேசேஷாபி லஷிதம்
ந சாத்மானம் நாந்யத்  கிமபி தவ சேஷத்வ விபவாத்
பஹிர்ப்பூதம் நாத ஷணம் அபி சஹே யாது ஸததா
விநாஸம் தத் ஸத்யம் மது மதன விஜ்ஞாப நமிதம்—57-

ந தேஹம் –
அஹமபி மானத்துக்கு அர்ஹமாம்படி
அந்தரங்கமான சரீரத்தையும் –
தேவர் உடைய சேஷத்வத்துக்கு புறம்பாகில் வேண்டேன் –

ந ப்ராணான் –
தேகாதிகளுக்கு தாரகமான பிராணன் களையும்
சேஷத்வ பஹிர்ப்பூதம் ஆகில் வேண்டேன் –

ந ஸ ஸூகம் –
தேஹாதிகளையும்
பிராணன் களையும்
ஆதரிப்பது ஸூகார்த்தமாக இறே –
அந்த ஸூகமும் வேண்டா –
ஸூகம் என்ற மோஷ ஸூகத்தைச் சொல்லவுமாம் –

அ சேஷாபி லஷிதம் ஸூகம் –
எல்லாரும் ஆதரிக்கும் ஸூகம் என்றுமாம் –
ஸூகம் என் என்னில்
தேவாதி சகல ஜந்துக்களும் ஆதரிக்குமது இறே
ஸூகம் என்று பிரியச் சொன்ன போது
அசேஷாபி லஷிதம் நாந்யத் கிமபி -என்று
மேல் கூடக் கடவது –
நாந்யத் கிமபி -என்கிறது புத்திர மித்ர களத்ரங்கள் -என்கிறது

ந சாத்மானம் –
கீழ்ச் சொன்ன சகலத்துக்கும் ஆஸ்ரயமாய்
ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வங்களை உடைய
ஆத்மாவை –

தவ சேஷத் வவிபவாத் பஹிர்ப்பூதம் –
ப்ராப்த விஷயத்தில் சேஷத்வம் ஆகிற பெருமைக்கு புறம்பு ஆனத்தை
அந்தர்ப்பூதம் ஆனவன்று
எல்லாம் உபாதேயம் -என்கை

நாத –
சேஷத்வத்துக்கு புறம்பானவை
அசஹ்யம் என்கைக்கு அடியான
அவர்ஹநீய -விட ஒண்ணாத -சம்பந்தத்தை சொல்லுகிறது

ஷணம் அபி சஹே –
ஷண காலமும் சஹிக்க கில்லேன்
காமினிக்கு பர்த்ரு விரஹத்தில் சந்தன குஸூமாதிகள்
அசஹ்யமானாப் போலே
மாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே -4-8-
ந தேவ லோகா க்ரமணம் –
இது இளைய பெருமாள் உடைய -ஏறாளும் இறையோன்
ந ஹி மே ஜீவிதே நாரத்த -இது பிராட்டியினுடைய ஏறாளும் இறையோன்

யாது ஸததா விநாஸ்ம் –
உரு மாய்ந்து போக வேண்டும்
அடிமைக்குப் புறம்பானவை
அசஹ்யம் ஆனாலும் போக்குகை
ஈஸ்வர கருத்தியம்
அனுகூலங்கள் ஆதரணீயமானாலும்
உண்டாக்குகை ஈஸ்வர கருத்தியம் –

தத் ஸ்த்யம் –
இது லோகத்திலே கேட்டு அறிவது ஓன்று அன்று
மெய்யாகக் கூடுமோ -என்ன
இது அஹ்ருதயமாக சொன்னது அன்று -மெய்

மது மதன-
திரு முன்பே பொய் சொன்னேன் ஆகில்
உமக்குப் பொய்யனான மது பட்டது படுகிறேன்
சேஷத்வத்துக்கு புறம்பானவற்றை மதுவைப் போக்கினால் போலே
போக்கி அருள வேணும் -என்னவுமாம்

விஜ்ஞாப நமிதம்
இதம் விஜ்ஞாபநம் தத் சத்யம்
ப்ராப்ய அபேஷையில் புரை குற்றம் உண்டாகிலும்
விரோதி வர்க்கத்தில் அருசியில் பொய்யில்லை –

(கீழே இஷ்ட பிராப்தியை அபேக்ஷித்து இங்கே அநிஷ்ட நிவ்ருத்தியை அபேக்ஷிக்கிறார் –
ஏறாளும் இறையோனும் -திருவாய்மொழி -4–8-அர்த்த ஸ்லோகம் இது
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னை கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எரிந்து
எண் அழலை தீர்வேனே போலே – அழிவில்லா ஆத்மவஸ்துவையும் உருமாய்ந்து போகட்டும் என்றது
சேஷத்வ ஊற்றத்தைப் பற்ற –
விஞ்ஞாபனம் — விஞ்ஞாபிதம் –பாட பேதங்கள் -)

—————————————————————————————-

ஸ்லோகம் -58-அவதாரிகை –

நிக்ரஹ ஹேதுவான பகவத் அபசாராத்ய அஸூபங்கள்
சஞ்சரிக்கிற சம்சாரத்திலே -கைங்கர்ய விரோதிகள் அசஹ்யமாம்படி –
அதிலே அருசி பிறந்து –
அத்தைப் போக்கி தந்து அருள வேண்டும் என்று
யோகிகளுக்கு துர்லபமான இதை அபேஷிப்பார் உண்டாவதே -என்ன
அவதி யில்லாத அஸூபங்களையும் போக்க வல்ல
தேவர் உடைய அபரிச்சின்ன குணங்களை
நினைத்து இருந்து அபேஷிக்கிறேன் -என்கிறார்-

துரந்தஸ்யா நாதே ரபரிஹரணீ யஸ்ய மஹதோ
நிஹீந ஆசாரோ அஹம் ந்ருபஸூர ஸூபஸ்யாஸ் பதமபி !
தயா ஸிந்தோ ! பந்தோ ! நிரவதிக வாத்ஸல்ய ஜலதே !
தவ ஸ்மாரம் ஸ்மாரம் குணகணமி தீச்சாமி கத பீ—58-

துரந்தஸ்யா –
முடிவு இன்றிக்கே இருக்கும் அஸூபம்.
பிராயச் சித்தத்தால் ஆதல் –
அனுபவத்தால் ஆதல்
உத்தர கோடி காண ஒண்ணாது இருக்கை-
துர் விபாகமாய் இருக்குமது -என்னவுமாம் –
உத்தரத்தில் எதிர்காலத்தில் -நரக கர்ப்ப வாசங்கள் பலிக்கை –

அநாதே –
முன் செய்த முழு வினை -திருவாய் -1-4-2-என்னக் கடவது -இறே –

அபரிஹரணீ யஸ்ய –
சர்வ சக்தியான தேவருக்கும்
பிற்காலிக்கும் படி இருக்கை –

மஹதோ –
சங்க்யாவதி ரஹீதமாய் இருக்கை –
கால தத்வம் உள்ளது அனையும் அனுபவியா நின்றாலும்
அவதி காண ஒண்ணாது இருக்கையும்
இப்படிப் பட்ட அஸூபத்திற்குத் தொகை இன்றிக்கே இருக்கையும் –
யத் ப்ரஹ்ம கல்ப நியுத அனுபவ வேபய நாஸ்யம் –
அணு பரிமாணனான சேதனன் இவற்றை எல்லாம் செய்தான் என்று
விஸ்மயப் படும்படி இருக்கை –
சீலமில்லாச் சிறியன் -திருவாய் -4-7-1-

நி ஹீ நா சாரோ அஹம் –
அஹம் புத்தி போத்யமான தரமி ஸ்வரூபம்
அதர்மாசார நிரூபகமாய் இருக்கை –
ஆசாரம் ஆகிறது -விலஷண தர்மத்திலே இழிகைக்கு
யோக்யதாபாதகம்-தகுதியைக் கொடுப்பது -சந்த்யா வந்த நாதிகள்-
பாப அனுஷ்டானத்துக்கு யோக்யன் -என்கை

ந்ருபஸூ –
சதுஷ் பாத்துக்களில் காட்டில்
த்வி பாதமே விசேஷம் -என்கை –
ஜ்ஞாநேன ஹீன பஸூபிஸ் சமான –
சாஸ்திர வஸ்ய ஜன்மம் ஆகையாலே -பசு -என்ன ஒண்ணாது –
ஆஹார நித்ர அபயமைது நாதி களிலே -நியதி இல்லாமையாலே
மனுஷ்யன் என்ன ஒண்ணாது
இரண்டு ஜென்மத்தையும் தப்பினேன் -என்கை –

அஸூபஸ்யாஸ் பதமபி !-
அஸூபம் ஆகிறது -ஸூப விரோதி
ஸூபம் ஆகிறது புருஷார்த்தம்
தத் விரோதிக்கு எல்லாம் ஆஸ்ரயம் –
அக்ருத்ய கரணம் முதலாக அசஹ்ய அபசாரம் முடிவானவற்றுக்கு ஆகரமாய் இருக்கை –
தேவர் குணாநாம் ஆகரம் ஆனால் போலே –
நான் அஸூபாநாம் ஆகரம் -என்கை –

அபி –
இப்படிப் பட்டவனாய் இருக்கச் செய்தேயும்
ஷணம் அபி சஹே யாது ஸததா விநாசம் -என்று
அபேஷிக்கைக்கும் ஒரு வழி யுண்டு –
அது ஏன் என்னில் –

தயா ஸிந்தோ ! –
கீழ்ச் சொன்ன அஸூப சாகரம் எல்லாம்
தேவர் உடைய தயார்ணவத்திலே
ஒரு குளப்படியாய் யன்றோ தேவர் உடைய க்ருபா சத்தை –
வதார் ஹம்பி காகுத்ஸ்த க்ருபயா பர்யா பாலயத்-
யதி வா ராவண ஸ்வயம் –
கச்சா நுஜா நாமி –
பந்தோ ! –
ஆஸ்ரிதர் உடைய இழவு பேறு தன்னதாம் படியான
நிருபாதிக சம்பந்தம் சொல்லுகிறது –
அஹம் வோ பாந்தவோ ஜாத-
க்ருத்க்ருத்யஸ் ததா ராம –
ருணம் ப்ரவ்ருத்த மிவ மே –
உரஸா தாரயாமாஸ பார்த்தம் ஸ்ஞ்சாத்ய மாதவ –
மம ப்ராணா ஹி பாண்டவ

நிரவதிக வாத்ஸல்ய ஜலதே !-
வாத்ஸல்யம் -ஆகிறது
அன்று ஈன்ற கன்றின் பக்கல் தோஷம் தாய்க்கு போக்யமாய் இருக்குமா போலே
ஆஸ்ரித தோஷம் போக்யமாய் இருக்கை –
க்ருபா சமுத்ரத்துக்கு கரை உண்டாகிலும்
வாத்ஸ்ல்ய சாகரத்துக்கு கரை இல்லை -என்கை

சரணாகத வத்ஸல –
ரிபூணாம்பி வத்ஸல-
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்-
த்வயி கிஞ்சித் சமா பன்நே கிம் கார்யம் சீதயா மம –
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம்

தவ ஸ்மாரம் ஸ்மாரம் குணகணம் –
ஸ்ம்ருத்வா ஸ்ம்ருத்வா –
கீழ்ச் சொன்ன குணங்களை உடைய தேவர் உடைய திருக் கல்யாண குண சமூஹத்தை
எப்போதும் சிந்தை செய்து
குணா நாமா கரோ
யதா ரத்நாநி ஜலதே
சதுர்முகாயு –

இதீச்சாமி கதபீ-
அஸூபாஸ்பதமான என்னை நினைத்து அஞ்சாதே
தேவர் குண கணத்தை நினைத்து
ந தேஹம் ந பிராணான்-என்கிறபடியே
இச்சியா நின்றேன் –

(ந்ருபசு -மனுஷ்யனாக பிறந்தும் வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டான வரம்பை மீறி
ஆஹார நித்ராதிகளிலே நியதி இன்றி மனம் போன படியே திரியும் பசுபிராயர்)

———————————————————————————-

ஸ்தோத்ரம் -59-அவதாரிகை –

இச்சாம் -என்கிற இச்சை தான் சத்தியமோ -என்ன
மந்த புத்தியான நான் விஷய அனுரூபமான இச்சை உண்டு
என்று திரு முன்பே விண்ணப்பம் செய்யப் போகாது –
இச்சா ஸூ சகமான வசனத்தை
அவலம்பித்து மெய்யாம்படி என்னுடைய
மனஸ்சை ஸிஷித்து அருள வேண்டும் –
என்கிறார் –

அநிச்சன்நப் யேவம் யதி புநரி தீச்சந்நிவ ரஜஸ்
தமஸ் சந்தஸ் சத்மஸ்துதி வசன பங்கீ மரசயம்
ததா அபித்தம் ரூபம் வசநம வலம்ப்யா அபி க்ருபயா
த்வமேவை வம்பூதம் தரணி தர மே சிஷ்ய மந–59-

அநிச்சன்நப் யேவம் –
யேவம் அநிச்சன்நபி-
உக்தமான பிரகாரத்துக்கு அனுரூபமாக இச்சை இன்றிக்கே
இருந்த தாகிலும்
நாஸ்திகர் அல்லாமையாலே இச்சை இல்லை -என்ன மாட்டார் –
பேற்றுக்கு அனுரூபமான இச்சை பெறாமையாலே உண்டு -என்ன மாட்டார்

யதி புநரி தீச்சந்நிவ –
புனர் இதீச்சந்நிவ-
மெய்யான இச்சை உடையார் சொல்லுமா போலே –

சத்மஸ்துதி வசன பங்கீ மரசயம்
க்ருத்ரிம ஸ்துதி வசனம் மெய் என்று பிரமிக்கும் படி
பண்ணினேன் –
வசன பிரகாரத்தைப் பார்த்தால் சர்வஜ்ஞாரான தேவரும்
மெய் என்று பிரமிக்கும் படி சொன்னேன் –
பொய்யே கைம்மை சொல்லி -திருவாய் -5-1-1- என்னுமா போலே –
ஹேது என் என்ன –

ரஜஸ் தமஸ் சந்தஸ் –
அந்யதாஜ்ஞான விபரீதஜ்ஞான ஹேதுவான
ரஜஸ் தமஸ் ஸூக்களாலே மறைக்கப் பட்டவனாய்க் கொண்டு -என்றபடி –
அநாதி காலம் அந்த தேஹம் ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்களை
மறைத்துப் போந்தது ரஜஸ் தமோ த்வாரத்தாலே இறே –

ததா அபி-
இப்படி த்யாஜ்யமாக வேண்டும் செயலைச்
செய்தேன் ஆகிலும் –
யாதாதத் யேன வர்ணிதம் -என்கிறபடியே
சர்வஜ்ஞ சகாசத்திலே மெய் சொல்லிப் பிழைக்க வேண்டி இருக்க
அங்கே பொய் பற்றினால் த்யாஜ்யன் இறே

இத்தம் ரூபம் வசநம வலம்ப்யா –
ந தேஹம் ந பிராணான்
தயா சிந்தோ பந்தோ –
என்கிற வசன மாதரத்தையே பற்றாசாகக் கொண்டு
மாதவன் என்றதே கொண்டு -திருவாய் -2-7-3-என்றும்
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்னத் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -திருவாய் -10-8-1- என்றும்
உக்தி மாத்ரமே ஜீவிக்கையாம் விஷயம் இறே –

அபி க்ருபயா –
வதார்ஹம் -என்கிறபடியே
தோஷத்தில் அவிஜ்ஞாதா வாயிற்று
கிருபா பாரதந்த்ர்யத்தாலே-

த்வமேவை வம்பூதம் மே சிஷ்ய மந –
ஏவம் பூதம் மே மனஸ் த்வமேவ ஸிஷய –
சத்மா ஸ்துதிக்கு உபகரணமான மனஸ் சை
அடிமை கொள்ளக் கடவ தேவரே அதுக்கு
உபகரணாம் படி சிஷித்து அருள வேண்டும்
தீ மனம் கெடுத்தாய் -2-7-8-
மருவித் தொழும் மனமே தந்தாய் -2-7-7-என்கிறபடியே
பாஹ்யமான மனஸ் ஸைத் தவிர்த்து
அடிமைக்கு அனுகூலமான மனஸ் ஸைத் தந்து அருள வேணும்
மனனக மலமறக் கழுவி -1-3-8-என்கிறபடியே
மநோ நைர்மல்யம் யோகத்தாலே பிறக்கக் கடவது உபாஸ்கனுக்கு –
அந்த யோக ஸ்தானத்திலே
பகவத் அனுக்ரஹமாய் இறே இவ்வதிகாரிக்கு இருப்பது –

தரணி தர –
ரசாதல கதையான பூமியை
ஆபத்தே ஹேதுவாக உத்தரித்தவர் அல்லீரோ தேவர் –
ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே –5-7-6-என்றும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான்-பெரிய திருமொழி -1-1-4- என்றும்
சம்பந்தமும் சக்தியும் உண்டு
இவன் இடத்தில் இனி இச்சையே வேண்டுவது –
அதை உண்டாக்கி ரஷித்து அருள வேண்டும் என்கிறார் –

(கையார் சக்கரத்து என் கருமாணிக்கமே என்று என்று பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே
யாடி மெய்யே பெற்று ஒழிந்தேன் –
ஏதேனும் வியாஜ்யத்தை கொண்டு அஸ்மாதாதிகள் அஹ்ருதயமாக சொல்வதையும் கொண்டு
கார்யம் செய்ய வல்லவன் அன்றோ – )

———————————————————————————–

ஸ்லோகம் -60-அவதாரிகை –

இச்சையும் இன்றிக்கே
உக்தி மாதரத்தைக் கொண்டு
இச்சையையும் உண்டாக்கி
ரஷித்து அருள வேண்டும் -என்கிறது என் என்ன
அவர்ஜநீய சம்பந்தத்தைச் சொல்லுகிறார் –

பிதா த்வம் மாதா த்வம் தயித தநயஸ் த்வம் ப்ரிய ஸூஹ்ருத்
த்வமேவ த்வம் மித்ரம் குருரஸி கதிஸ் சாஸி ஜகதாம்
த்வதீ யஸ் த்வத் ப்ருத்யஸ் தவ பரிஜநஸ் த்வத் கதி ரஹம்
பிரபன்னஸ் சைவம் ஸத்யஹம்பி தவை வாஸ்மி ஹி பர–60-

பிதா த்வம்-
உத்பாதகராய்
ஹிதகாமராய்
இருக்கிறவர் தேவர்

மாதா த்வம் –
கர்ப்ப தாரணம் பண்ணி
பிரசவ க்லேசத்தை அனுபவித்து
அஸூசி பிரசவங்களையும் மதியாதே
இவன் ப்ரிய ஹிதமே அபேஷித்து இருக்கும்
தாயைப் போலே பரிவுடையீர் தேவர்
பிதா அஹம் அசய ஜகத –
பூதா நாம் யோ அவ்யய பிதா –
தஞ்சமாகிய தந்தை தாய் -திருவாய் -3-6-9-

தயித தநயஸ் த்வம் –
அபிமதனாய் நிரயநிஸ் தாரகனான புத்ரனைப் போலே
நின்று சஹகரிப்பீர் தேவர்
நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே -திருவாய் -5-1-8-

ப்ரிய ஸூஹ்ருத் த்வமேவ –
அபிமதருமாய் சர்வ காலத்திலும்
ஸோபனத்தையே பண்ணும் திரு உள்ளத்தை யுடையராய்
இருப்பீர் தேவரீர் –
அனர்த்தத்தைப் பண்ணி விட்டாலும்
விட ஒண்ணாத அபிமதத்வம்
அநபிமதன் ஆனாலும் விட ஒண்ணாத ஸூஹ்ருத்த்வம் –
அவதாரணம் -சர்வத்திலும் அந்வயிக்க கடவது –

த்வம் மித்ரம் –
அர்ஜுனன் ஸூபத்ரையுடைய ஸ்வயம்வரத்தை
தேவருக்கு அறிவித்து லபித்தால் போலே
அசேஷ ரஹஸ்யங்களையும் அறிவிக்கலாம் படி
விஸ்வஸ நீயராய் இருப்பீர் தேவரே –

குருரஸி –
மன்மனா பவ மதபக்த -என்றும்
மாமேகம் சரணம் வ்ரஜ -என்றும்
நின்ற நிலைகளிலே ஹித உபதேசம் பண்ணும் ஆசார்யரும் தேவரே –

கதிஸ் சாஸி –
புருஷார்த்த உபாய பூதரும் தேவர் -என்னுதல் –
கந்தவ்யத்வாதி கதி -என்று பரம ப்ராப்யர் தேவர் -என்னுதல்

ஜகதாம் –
இந்த சம்பந்தம் தேவாதி சகல பிராணிகளுக்கும் சாதாரணம்
உபய விபூதிக்கும் சாதாரணம் -என்னவுமாம் –

த்வதீ யஸ் –
அந்த சாமான்யம் ஒழிய தமக்கு உண்டான விசேஷ பிரதிபத்தியை
அருளிச் செய்கிறார் –
யஸ் யாஸ்மி -என்கிறபடியே
தேவருக்கு சேஷ பூதன் –

த்வத் ப்ருத்யஸ் –
தேவருக்கு அதிசயத்தை விளைத்து
ஸ்வரூபம் பெரும் சம்பந்தத்தை உடையன் -என்கை
அதனால் தேவருக்கு பரணீயன் -என்னுதல்

தவ பரிஜநஸ் –
ஆத்ம தாஸ்யம் -என்கிற நிருபாதிக தாஸ பூதன் -என்னுதல் –
தாஸ பூதாஸ் ஸ்வதாஸ் சர்வே ஹயாத் மாந பரமாத்மந –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று
சர்வ கைங்கர்யத்துக்கும் அர்ஹன் –

த்வத் கதிர் –
தேவரே ப்ராப்ய பூதர் -என்று இருக்கிறேன்

அஹம் பிரபன்னஸ் –
ப்ராப்யம் பெறுகைக்கு தேவரையே உபாயமாக
அத்யவஸிக்கிறேன்-

ஏவம் ஸதி-
தேவர் சர்வ வித பந்துவுமாய்
நான் அநந்ய கதியுமான
பின்பு –

யஹம்பி –
அஹ்ருத யோக்தன் ஆனாலும்

தவை வாஸ்மி ஹி பர –
தவைவ ப்ரோ அஸ்மி –
தேவருக்கே பரனாகிறேன்
ஜ்ஞான சகத் யாதியாலும்
ப்ராப்தி யாலும்
என் கார்யம் தேவருக்கே பரம் -என்கை –
பரம் ஆகையாவது –
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை களிலும்
சர்வ பிரகார நிர்வாஹ்யனாகை –

(சேலேய் கண்ணியரும் பெரும் செல்வனும் நல் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவரே-என்றும்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் நீயாய் நீ நின்றவாறு -என்றும் -போலே –
ஸூஹ்ருத்-எப்பொழுதும் ஹித விரும்பி
மித்ரன் -சமண வயஷகன் -சகல ரஹஸ்யங்களையும் பகிர்ந்து கொள்ள உரியவன் )

———————————————————————————-

ஸ்தோத்ரம் -61- அவதாரிகை –

நீர் மஹா வம்ஸ ப்ரஸூதர் அல்லீரோ –
நிராலம்பரைப் போலே இங்கன் சொல்லுகிறது -என் -என்ன
இவ் வம்ஸ்த்தில் பிறந்தேனே யாகிலும்
பாப ப்ரசுரனாகையாலே
சம்சாரத்தில் அழுந்தா நின்றேன்
எடுத்து அருள வேண்டும் – என்கிறார் –

ஜநித்வா அஹம் வம்ஸே மஹதி ஜகதி க்யாதய ஸ ஸாம்
ஸூசீ நாம் யுக்தா நாம் குண புருஷ தத்தத்வ ஸ்திதி விதாம்
நிஸர்க்காத் ஏவ த்வச் சரண கமல ஏகாந்த மநஸாம்
அதோ அத பாபாத்மா ஸரணத! நிமஜ்ஜாமி தமஸி–61-

ஜநித்வா அஹம் வம்ஸே மஹதி –
வம்ஸ்த்துக்கு மஹத்தை யாவது –
மஹாத்மாக்கள் வந்து ஜனிக்கை —
ஏதத்தி துர்லப தரம் லோகே ஜந்ம யதீத் ருஸ்ம் -ஸ்ரீ கீதை -6-42-என்னும்
வம்சத்திலே பிறந்து வைத்து அனர்த்தப் படா நின்றேன் -என்கை –

ஜகதி க்யாத யஸஸாம் –
சதுஸ் ஸாகர பர்யந்தமான பூமி எல்லாம் பிரசித்தமான
புகழை உடையவர்கள் –
திகழும் தன திருவருள் செய்து உலகத்தார் புகழும் புகழ் தானது காட்டித் தந்து -திருவாய் -8-7-5–
என்கிறபடியே பகவத் விஷயீ காரத்தால் வந்த புகழ் –

ஸூசீ நாம் –
பகவத் வ்யதிரிக்த விஷயங்களில் போக்யதா கந்த ரஹிதராய் இருக்கை –
ஆந்த்ர பாஹ்யமான உபய ஸூசியைச் சொல்லவுமாம்-
இவ்வம்சத்திலே பிறந்து அஸூபாஸ் பதம் என்னக் கடவீரோ –

யுக்தாநாம்-
க்ருதக்ருத்யா ப்ரதீ ஷந்தே-என்கிறபடியே
நித்ய யோகத்தில் ஆகாங்ஷமாணராய் இருக்குமவர்கள் –
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய் -9-3-7-என்று இருக்கை
இளைய பெருமாளைப் போலே தேவரோடே யல்லது
செல்லாதவர்கள் -என்னுதல்
இப்படிப் பட்ட வம்சத்திலே பிறந்து
இச்சை போராது -என்னக் கடவீரோ -என்ன –

குணா புருஷ தத்தத் வஸ்தி திவிதாம் –
சித் அசித் ஈஸ்வரர்களுடைய
ஸ்வரூப ஸ்வ பாவ சம்பந்தங்களை அறியுமவர்கள் –
குணம் என்று குண ஆஸ்ரயமான பிரக்ருதியைச் சொல்லுகிறது
ஸ்திதி யாவது ஸ்வரூப ஸ்வபாவாதிகள் –

நிஸ்ரக்கா தேவ தவச் சரண கமலை காந்த மநஸாம்
வத்ஸ்ம் ஆனது ஜனித்த போதே தாய் முலையிலே
வாய் வைக்குமா போலே
தவச் சரணார விந்தங்களிலே ஏகாந்தமான
மனஸ் சை ஜந்ம ப்ரப்ருதியாக உடையவர்கள் –
கீழ்ச் சொன்ன ஸூஸி யோகாதிகள் நைசர்க்கிகம் -என்கை –

பாபாத்மா –
பாபம் தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்குமவன் –
ஞானாநந்தம் ஒழிய பாபமே நிரூபகமாய் -இருக்கை –

ஸ்ரணத! –
இவ்வளவிலும் உன் பக்கல் அவகாசம் உண்டாம் படி
ஆள் பார்த்து உழி தரும் -நான் -திரு -60-தேவரீரே –

தமஸி -அதோ அத -நிமஜ்ஜாமி
பிரக்ருதியிலே தேவர் எடுக்க நினைத்தாலும் கைக்கு எட்டாதபடி ஆழ நின்றேன்
பன்மாமாயப் பல் பிறவியில் படிகின்ற யான் -திருவாய் -3-2-2-என்கிறபடியே
இன்னம் தரை கண்டிலன் -என்கிறார் –

இத்தால் –
சந்தாநிகர் தேவர் பக்கல் அவகா ஹித்த அளவும் நான்
பிரக்ருதியில் உள் புக்கேன் -என்கை –

ஜனித்த வம்சம் இது
தேவர் சரண்யர்
நான் படுகிற பாடு இது இ றே
அவமஞ்ஜனைப் போலே -வம்ஸ ப்ரபாவமும் ஜீவியாதே
தேவருடைய நீர்மையும் ஜீவியாதே
இருக்கிற படி இ றே -என்னுடைய பாப ப்ராசுர்யம்
என்கிறார் –

(யுக்தானாம் -1-ஆத்ம சாஷாத்கார யோகத்தில் ஊன்றியவர்கள்
2-உன்னுடன் நித்ய சம்பந்தத்தை விரும்பி இருப்பவர்கள்
3-ஒருக்காலும் உன்னை விட்டு புரியாதவர்கள் -என்ற மூன்றும் உண்டே
சரணத–தத்வ ஞானம் அறிந்தவர்களுக்கு தகுந்த உபாயத்தை கொடுத்து அருளுபவன் -)

——————————————————-

ஸ்தோத்ரம் -62-அவதாரிகை –

இவ்வம்சத்தில் ஜென்மத்தையும்
அசத் சமமாக்க வல்ல பாபம் உமக்கு எது -என்ன
பாபாத்மா -என்கிறத்தைப் பரக்க பேசுகிறார்-

அமர்யாத ஷூத்ரஸ் சலமதிர ஸூயாப்ரஸ்வபூ
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மர ப்ரவஸோ வஞ்சன பர
ந்ரு ஸ்ம்ஸ பாபிஷ்ட கத மஹமிதோ துக்க ஜலதே
அபாராதுத் தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ—62-

அமர்யாத –
வேத மரியாதைக்கு பஹிர்ப்பூதன்

ஷூத்ரஸ் –
ஷூத்ரத்வம் அவது
நீச விஷயங்களில் அதி சபலன் –
உஜ்ஜீவன ஹேதுவான வேத மரியாதையை அனாதரித்து
அதுக்கு மேலே விநாச ஹேதுவான
நீச சேவையிலே அதி சபலன்-

சலமதிர்-
நீச விஷய ப்ராவண்யம் நாச ஹேது
வேத பிரதி பாத்தியா விஷயமே உத்தேச்யம் -என்று
ஒரு ஜ்ஞாநாதிகன் ஹிதம் சொன்னால்
அதில் வ்யவஸ்திதன் அல்லேன் –

அஸூயா ப்ரஸ்வபூ –
பர குணங்களிலே தோஷத்தை உண்டாக்குகைக்கு உத்பத்தி ஸ்தானம் –
தனக்கு தோஷம் உண்டாம் அளவன்றிக்கே
பிறர் குணங்களிலும் தோஷத்தை உண்டாக்குமவன் -என்கை –

க்ருதக்ந –
உபகரித்த விஷயத்தில் அபகாரத்தைப் பண்ணுகை-
கோக் நே சைவ ஸூ ரா பேச சோரே பக்நவ்ரதே ததா
நிஷ்க்ருதிர் விஹிதா ஸத்பி கருதக்நே நாஸ்தி நிஷ்க்ருதி -என்று
மாதா பித்ரு சதத்திலும் வத்சல தரமான சாஸ்திரத்திலும்
பஹிஷ்க்ருதன் -என்கை-

துர்மாநீ –
இப்படி நிக்ருஷ்டனாய் இருக்கச் செய்தேயும்
சர்வோத் க்ருஷ்டருக்கு அவ்வருகாகத் தன்னை நினைத்து
ஈஸ்வரோஹம் -என்று இருக்குமவன் –

ஸ்மர ப்ரவஸோ –
தன்னை உத்க்ருஷ்ட ஆத்மாக்களுக்கும் மேலாக
நினைத்து இருக்கிற அளவன்றிக்கே
விஷய ப்ராவண்ய ஹேதுவான காமனுக்கு பர தந்த்ரனாகவும்
பகவத் ப்ராவண்ய ஹேது பூதரானாரைத் தாழ நினைத்தும்
அனர்த்தப் பட்டேன் -என்கை –

வஞ்சன பர –
காம பாரவஸ்யத்தாலே விஷயங்களிலே பிரவணனாய் –
அவ்விஷயங்களிலும் த்ரவ்யங்களை வஞ்சித்து -வர்த்திக்குமவன் –
சூதனாய்க் கள்வனாகி -திருமாலை -16
சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து -பெரிய திருமொழி -1-6-3-என்று
சொல்லுகிறபடியே-

ந்ரு ஸ்ம்ஸ –
தான் விரும்பின விஷயங்களில் வஞ்சகனாய் அன்றிக்கே –
தன்னை விச்வசித்து இருப்பார் பக்கல்
க்ரூர கர்மாவாய் இருக்குமவன் –

பாபிஷ்ட-
இதுக்கு எல்லாம் அடி பாப ருசியாய்
அதிலே வ்யவஸ்திதனாய் இருக்கை –
பாவமே செய்து பாவியானேன் -பெரிய திரு மொழி -1-9-9-
ஒப்பிலாத் தீ வினையேன் -திருவாய் -7-9-4-
நானே நாநாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2-
அஹம் அஸ்மா அபராதாநாம் ஆலய –
ராவணோ நாம துர்வ்ருத்த
நீசனேன் நிறை வொன்றும் இலேன் –திருவாய் -3-3-4-என்று
அறிவுடையார் தம்தாமை
பேசும்படியான பாபத்திலே நிஷ்டை யுடையவன் –

அபாராத் துக்க ஜலதே கதம் உத்தீர்ண –
ஒரு நாளிலே தொடங்கின துக்கம் -என்னுதல்
மேல் ஒரு நாளிலே முடிவு காணுதல் செய்யுமது அல்லாமையாலே
த்ருஷ்டி விஷம் போலே காணவே பயமாய் இருக்கிற
துக்க சாகரத்தில் நின்றும் –

கதம் உத்தீர்ண –
இதில் அழுந்திக் கிடக்கிற நான்
கரை ஏற எனபது ஓன்று உண்டோ –
முத்தனார் -திருச்சந்த -115-என்கிறபடியே
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான தேவரே
கரை ஏற்ற வேண்டும் -என்கை –

தவ சரணயோ -கதம் -பரிசரேயம் –
துக்க நிவ்ருத்திக்கும் அஷமனாய் இருக்கிற நான்
நித்ய ஸூரிகள் அடிமை செய்கிற தேவர் திருவடிகளிலே
எங்கனே பரிசர்யை பண்ணுவன்
துக்க நிவ்ருத்தியும் தேவருக்கே பரம் –
அடிமை கொள்ளுகையும் தேவருக்கே பரம் -என்கை —

(கீழே பாபாத்மா -என்றத்தையே பத்து விசேஷங்களால் விரித்து அருளுகிறார் –
நாம் அனுசந்தித்து உஜ்ஜீவிக்க அருளிச் செய்கிறார் -)

—————————————————————————

ஸ்தோத்ரம் -63-அவதாரிகை –

புத்தி பூர்வேண பண்ணின
பராதி கூல்யங்களைப் போக்கப் போமோ -என்ன
காகாபராதத்தையும்
ஸிஸூபாலாப ராதத்தையும்
பொறுத்து அருளின தேவருக்குப்
பொறுக்க முடியாதது உண்டோ –
என்கிறார் –

ரகுவர யத பூ ஸ்தவம் தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய
ப்ரணத இதி தயாளூர் யச்ச சைத் யஸ்ய கிருஷ்ண
பிரதிப வமபராத்துர் முக்த சாயுஜ்யதோ அபூ
வத கிமபத மாகஸ் தஸ்ய தி அஸ்தி ஷமாயா-63-

ரகுவர –
சரணாகத ரஷணம் பண்ணிப் போந்த
ரகு ப்ரப்ருதிகள் காதகர் என்னும்படி
சரணாகத ரஷணததிலே அதிகரராய் இருக்கை –
ரகு ராஷச சம்வாதத்தில் சரணாகத ரஷணம் பண்ணிப் போந்தவர்கள் அன்றிக்கே –
ஸூக்ரீவம் சரணம் கத -என்றும்
த்வயி கிஞ்சித் சமாபன்நே -என்றும் இறே இவர் படி –

தாத்ருஸ –
அப்படிப் பட்டவன் என்னுமது ஒழிய
அனுபாஷிக்கை தான் அசஹ்யமாம் படி இறே பண்ணின அபராதம் –

வாயஸ்ஸ்ய –
அபராதம் பண்ணுகைக்காக
ப்ராப்தமான தேவத்வத்தை விட்டு
நிஹீனமான திர்யக் த்வத்தைப் பரிக்ரஹித்தான் -என்கை –

ப்ரணத இதி –
ஸ பித்ரா ஸ பரித்யக்த -என்கிறபடியே
இவனைப் பரிக்ரஹிக்கில் நமக்கு அனர்த்தம் என்று
சர்வரும் உபேஷிக்க -புகலற்று
ஸ தம் நபதிதம் பூ மௌ-என்கிறபடியே
விழுந்தவனை சரணாகதன் என்று பிரதிபத்தி பண்ணி
ருஷி -சரணாகதம் -என்றதும் ராம அபிப்ராயத்தாலே-

த்வம் தயாளூரபூ –
ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு இலக்காம் அளவிலே தேவர்
க்ருபயா பர்யபாலயத் -என்கிறபடியே
தயாளு வானீர் –
ஷிபாமி -என்றும் ந ஷமாமி -என்றும் பண்ணி வைத்த
பிரதிஜ்ஞை பழியாதே
தேவர் க்ருபா கார்யமே பலித்து விட்டது –
பிராட்டி சந்நிதி யாகையால் இறே-

யச்ச –
ச சப்தத்தாலே-காகாபராதத்தை பொறுத்த அளவேயோ-என்று
உதாஹரணாந்தரத்தை சமுச்சயிக்கிறார்-

சைத்யஸ்ய –
யது வம்ஸ பூதரில் காட்டில்
சேதி குலோத்பவன் என்று தன்னை உத்க்ருஷ்டனாக அபிமானித்து இருக்குமவன் –

பிரதிப வமபராத்து-
காகத்தைப் போலே ஒரு கால் அபராதத்தைப் பண்ணின
அளவன்ற்றியே-
ஜன்மம் தோறும் பிரதி கூல்யத்திலே வாசனை பண்ணினவனுக்கு –

சாயுஜ்யதோ அபூ –
பஹூ நாம் ஜந்ம நாமந்தே -என்றும்
அநேக ஜந்ம சமசித்த -என்றும்
ஜன்மம் தோறும் ஆஸ்ரயித்தார் பெரும் பேற்றை இறே கொடுத்தது –
சாயுஜ்யம் ஆவது -சமான குண யோகம் –
சாயுஜ்யம் ப்ரதிபன்னா யே தீவர பக்தாஸ் தபஸ் விந –
கிங்கரா மம தே நித்யம் பவந்தி நிருபத்ரவா

முக்த –
ஆயர் குலத் தீற்றிளம் பிள்ளை -திருவாய் -7-6-10-என்கிறபடியே
அபராத அநபிஜ்ஞன் இறே கிருஷ்ணன்
அதுக்கு மேலே ஒரு பேற்றை முடிக்கிற தசையிலே
ஸூக ரூபமான வடிவைக் கண்ணுக்கு இலக்காக்கின ஏற்றம் –

தஸ்ய தே ஷமாயா அபத்த மாக கிமஸ்தி-
கால பேதத்தாலே தேவர் வேற ஒருவன் ஆகிறீர் அல்லீர்
தேவர் க்ருபைக்கு அவிஷயமான பாபம் உண்டோ
கிம் ஷேப அப்தம் -அஸ்தானம் -அவிஷயம் இத்யர்த்த –
வத
சர்வஜ்ஞரான தேவருக்கும் மறு மாற்றம் இல்லை
க்ஷமித்து அருளி விஷயீ கரிக்கும் இத்தனை -என்கை –

(ப்ரதிபவம் -காகாசுரன் ஒரு ஜன்மாவில் பண்ணின அபசாரம் -சிசுபாலனோ மூன்று ஜன்மாக்களில் அபராதம் –
இருந்தாலும் க்ஷமித்து சாயுஜ்யம் அளித்தாயே-
சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட்பால் அடைந்த தன்மை –திருவாய் -7-5-3-)

————————————————————-

ஸ்தோத்ரம் -64-அவதாரிகை –

ஸ்வ தந்த்ரரான நாம் சிலர் திறத்தில்
ஒன்றைச் செய்தோம் -என்னா
இதுவே மரியாதையாகக் கடவதோ -என்ன
கடல் கரையிலே ஆஸ்ரித சாமான்யத்திலே
தேவர் பண்ணின பிரதிஜ்ஞை
என்னை ஒருவனை ஒழியவோ
என்கிறார் –

நநு பிரபன்னஸ் ஸக்ருதேவ நாத
தவாஹ மஸ்மீதி ச யாசமாந
தவா நுகம்ப்ய ஸ்மரத பிரதிஜ்ஞாம்
மதே கவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே–64-

நநநு பிரபன்னஸ் –
ஸ்க்ருதேவ -என்றத்தை ஸ்மரிக்கிறார்

ஸ்க்ருதேவ –
என்றது -சஹசைவ -உடனேயே -என்று ஆழ்வான் நிர்வஹிக்கும் –
அநாதி காலம் சம்சரித்துப் போந்த இவன் ஒரு ஜன்மம் எல்லாம் ப்ரபத்தியை
அனுசந்தித்தால் தான் -ஸ்க்ருத் -என்கைக்குப் போருமோ -என்பர் எம்பார் –
பகவத் ப்ரபாவத்தைப் பார்த்தால் ஒரு காலுக்கு மேல் மிகை –
ப்ராப்ய ருசி ப்ராப்தி அளவும் அனுவர்த்திக்கும் -என்பர் பட்டர் –

நாத –
ஒரு கால் பண்ணின பிரபத்தி அமைகிறது வகுத்த நாதன் ஆகையாலே –
ஆபி முக்யம் மாத்ரமே அமைந்து இருக்கிறது –
இழவு பேறு தன்னதான குடல் துடக்கு –
அசரண்ய விஷயத்தில் ஆர்த்த பிரபத்திக்கும் பலம் பாஷிதம் –
வகுத்த விஷயத்தில் த்ருப்த பிரபத்திக்கும் பல வ்யாப்தி யுண்டு –

தவாஸ்மீதி ச யாசமாந -அஹம் தவாஸ்மி
பிரத்யக் வஸ்து வானது
கிஞ்சித் கரித்துத் தன சத்தையை லபிக்க வேணும் என்று யாசிக்கை –
உத்தார்த்த பிரக்ரியையால் -த்வயம் உத்தரார்தம் -கைங்கர்யத்தை பிரார்திக்கை –
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே -என்று
என்னுடைய வெறுமையை முன்னிட்டுக் கொண்டு பிரபத்தி பண்ணினேன் –
ஐ காந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி -என்று ப்ராப்ய அபேஷையும் பண்ணினேன் –
இரண்டு பதத்தாலும்
பக்தி பிரபத்திகள் இரண்டிலும் அதிகரித்த அதிகாரிகள்
இருவரையும் சொல்லுகிறது -என்பாரும் உண்டு

தவா நுகம்ப்ய ஸ்மரத பிரதிஜ்ஞாம் –
ஏதத் வ்ரதம் மம -என்று கடல் கரையில் பண்ணின
பிரதிஜ்ஞையை ஸ்மரியா நின்று கொண்டு
தேவருக்கு அனுக்ராஹ்யன் –

மதே கவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே –
சர்வ சாதாரண பூதரான தேவர் உடைய
அசாதாராண இந்த சங்கல்பம்
என்னை ஒழிந்து இருக்குமோ –
கிம் ஷேப –
இன்னானை ஒழிய -என்று விசேஷித்த தாகில் அன்றோ
எனக்கு இழக்க வேண்டுவது
தேவர் சத்ய சங்கல்பராகையால்
என்னை ரஷித்து அருள வேணும் -என்கை –

———————————————————————————

ஸ்தோத்ரம் -65-அவதாரிகை –

ராமோ த்விர் நாபி பாஷதே-என்கிற சங்கல்பத்தை விட்டீரே யாகிலும்
ஸ்ரீ பெரிய முதலியாரோடு வித்யையாலும்
ஜன்மத்தாலும் உண்டான சம்பந்தத்தையே பார்த்து அருளி –
என்னுடைய நன்மை தீமைகளைப் பாராதே
விஷயீ கரிக்க வேணும் -என்ன
அதுக்குக் கண்ணழிவு இல்லாமையாலே
அப்படிச் செய்கிறோம் -என்று ஈஸ்வரன் அனுமதி பண்ண
தாம் அனுமதி பெற்றாராய்
ஸ்தோத்ரம் தலைக் கட்டுகிறது –

அக்ருத்ரிம த்வச் சரணார விந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதி மாத்மவந்தம்
பிதாமஹம் நாத முநிம் விலோக்ய
ப்ரஸீத மத் வ்ருத்தம சிந்தயித்வா–65-

அக்ருத்ரிம –
க்ரியயா நிர்வ்ருத்த க்ருத்ரிம தத் ரஹித அக்ருத்ரிம
ஸ்வாபாவிக -இத்யர்த்த –
ஒரு செய்கையால் உண்டாக்கப் பட்டது க்ருத்ரிமம் -செயற்கை
அப்படி அற்றது அக்ருத்ரிமம் -இயற்கையானது –
குலம் தானே யோகி குலம் ஆகையாலே
நை சர்க்கிகம் -என்கை –
மெய்யான ப்ரேமம் -என்னவுமாம் –

தவச் –
ப்ராப்த சேஷியான உன்னுடைய

சரணார விந்த –
ஆஸ்ரிதருக்கு இழியும் துறையை போக்யமான
திருவடிகளை –

ப்ரேம ப்ரகர்ஷாவதிம்-
ப்ரேமாதிஸய ஸீமா பூமி யானவர்
நமக்கு இதர விஷயங்களில் ப்ரேமம் எல்லாம்
இவர்க்கு வகுத்த விஷயத்திலே இறே இருப்பது –

மாத்மவந்தம் –
பகவத் சேஷத்வம் ஸ்வரூமாகவே
ஆத்மா யாதாம்ய ஜ்ஞானம் உடையவர் -என்கை –
தநவந்தம் -என்னுமா போலே –

பிதாமஹம் நாத முநிம் –
குடல் துடக்கை உடையராய்
பகவத் ஜ்ஞான நிதியாய்
உள்ளவரை –

விலோக்ய –
கடாஷித்து

ப்ரஸீத –
அபராதங்களைப் பொறுத்து அருள வேணும் –

மத் வ்ருத்தம சிந்தயித்வா –
அஸ்த் கர்மத்தை விஸ்மரிக்கக் கடவராக வேணும் -என்கை –
மத் வ்ருத்தம் -என்று
சத் கர்மத்தை நினைக்கிறது –
வ்ருத்தவான் என்றால் சத் கர்ம யுக்தனை இறே சொல்லுகிறது –
ஸ்வ கதமான வற்றை அநாதரித்து
பெரிய முதலியார் சம்பந்தம் எனக்குத் தஞ்சமாக வேணும் என்று பிரார்த்தித்து
ஸ்தோத்ரத்தைத் தலைக் கட்டுகிறார் –

(பிதாமஹத்வம் வித்யையாலும் ஜென்மத்தாலும் –ஸ்ரீ ஈஸ்வர பட்டாழ்வார் இவர் திருத்தந்தை – )

—————————————————————————–

யத் பதாம் போருஹ த்யாந வித்வஸ்த அசேஷ கல்மஷ
வஸ்து தாம் உபயாதோ அஹம் யாமுநேயம் நமாமி தம்

எவர் உடைய திருவடித் தாமரையை தியானிப்பதால் எல்லா பாபங்களும் அழியப் பெற்று
அடியேன் ஒரு பொருள் ஆனேனோ அத்தகைய ஸ்ரீ யாமுனாசார்யரை வணங்குகிறேன் –

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்- ஸ்லோகம் -47-48-49-50-51-52-53-54-55-56—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

February 4, 2014

ஸ்தோத்ரம் -47-அவதாரிகை –

இதில்
பிராப்யனான ஈஸ்வரன் உடைய வைலஷண்யத்தையும்
தம்முடைய பூர்வ வருத்தத்தையும் பார்த்து
விதி சிவா சநகாதிகள் உடைய மனஸ்ஸூக்கு
அத்யந்த தூரமாய்
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய சூரிகள் ஆசைப்படுமதான
கைங்கர்ய சாம்ராஜ்யத்தை
சம்சாரியானவன் ஆசைப்படுவாதாவது -என்-
ராஜ அன்னம் விஷ சம்ஸ்ப்ருஷ்டம் ஆவதே -என்று
வளவேழுலகில்-1-5- ஆழ்வாரைப் போலே
தம்மை நிந்திக்கிறார் –

திக ஸூ சிமவி நீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரம புருஷ யோ அஹம் யோகி வர்யாக் ரகண்யை
விதி ஸிவ ஸ்நகாத் யைர் த்யாது மத்யந்த தூரம்
தவ பரி ஜன பாவம் காம்யே காம வ்ருத்த —47–

அஸூசிம் –
அநாதியான தேக சம்பந்த யுக்தனான என்னை
தேக சம்பந்தா பாவம் சத்தா பிரயுக்தமான
நித்ய சித்தர் இறே நித்ய ஸூத்தர்

அ விநீதம்-
இவாத்மாவுக்கு தேக சம்பந்தம் அஸூசி ஹேது என்று
அறிக்கைக்கு அடியான ஆசார்ய சேவை இல்லாமையாலே
ஸூஷிதன் அல்லாத -என்னை

நிர்த்தயம் –
அம்ருதத்தை விஷத்தாலே தூஷித்தால் போலே
விலஷண போக்யமான பகவத் தத்தவத்தை
கண்ணற்று தூஷிக்கப் பார்த்த நிர்த்தயனை

அலஜ்ஜம் –
கடதாஸி சார்வ பௌமனை மேல் விழுமா போலே –
நம்மைப் பாராதே மேல் விழுந்தோம்
இது அபஹாஸ்யம் -என்று லஜ்ஜிக்கவும் அறியாத என்னை –

மாம் திக் –
இப்படி ஹேய குண பூர்ணனான என்னை
வேண்டேன் என்று தம்மை குத்ஸிக்கிறார் –

பரம புருஷ –
சர்வாதிகனான புருஷோத்தமனே –

யோ அஹம் –
நிஹீ நாக்ர கண்யன் என்று பிரசித்தனான -நான் –

யோகி வர்யாக் ரகண்யைவிதி ஸிவ ஸ்நகாத் யைர் த்யாது மத்யந்த தூரம் –
யோகி ஸ்ரேஷ்டரில் பிரதமகண்யரான ப்ரஹ்ம ருத்ராதிகள் என்ன –
ப்ரஹ்ம பாவ நிஷ்டரான சநகாதிகள் என்ன
இவர்களாலே நினைக்கைக்கும் அத்யந்தம் தூரமாய் உள்ளத்தை –

தவ பரி ஜன பாவம் –
ஆத்ம ஸ்வாமியாய்
நிரதிசய போக்யரான தேவர் உடைய
கைங்கர்ய அம்ருதத்தை
சத்தா பிரயுக்தமான ருசியையும் வைலஷண்யத்தையும் உடைய
நித்ய ஸூரிகள் ஆதரிக்கும் அத்தை அன்றோ நான் ஆதரித்தது –

காம்யே –
சங்கத்து அளவிலே நின்றேனோ
பெற்று அல்லது தரியாத தசையைப் பற்றி நின்றேன்
கதா நு சாஷாத் கரவாணி -என்றும்
கதா ப்ரஹர்ஷயிஷ்யாமி -என்றும் -கூப்பிட்டேன்

காம வ்ருத்த –
விஷய பிரவணனாய்
யுக்த அயுக்தங்கள் பாராதாப் போலே
தோற்றிற்றுச் செய்த நான் –
ராகம் ஸ்வ ரூபத்தைப் பார்க்க ஒட்டாதே-

(அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் -யான் யார் –
அசுசிம் -அவிநீதம் –நிர்த்தயம் -அலஜ்ஜம் -நான்கு விசேஷணங்கள்
தம்முடைய புன்மையை அருளிச் செய்கிறார் -நிர்ப்பயம் -பாட பேதம் தேசிகன் காட்டுகிறார் –
திருமாற்கு யாமார் வணக்கமார் ஏ பாவம் நல் நெஞ்சே நாமா மிகவுடையோம் நாழ் -பெரிய திருவந்தாதி -10-)

——————————————————————————-

ஸ்தோத்ரம் -48-அவதாரிகை –

தம்முடைய அயோக்யதையை அனுசந்தித்து –
அகலப் பார்த்தவர்
ருசியின் மிகுதியாலே அகல மாட்டாதே நிற்க
இந்த அயோக்யதைக்குப் பரிஹாரமும்
நம் கிருபா ஜநிதமான பிரபத்தியே காணும் – என்ன மீண்டாராய்
இந்த அயோக்யதா ஹேது பூத சர்வ அபராதங்களுக்கும்
பரிஹாரம் தன்னுடைய வெறுமையை முன்னிட்டுப்
பண்ணும் பிரபத்தியே யாகாதே -என்று
வேதாந்திர ரஹச்யத்தை முன்னிட்டு
கேவல கிருபையாலே தேவர் என் பாபத்தைப் போக்கி
விஷயீ கரிக்க வேணும் -என்கிறார் –
அதவா
தாம் பிரார்த்தித்த போதே ப்ராப்யம் சித்தி யாமையாலே
சம்சாரியான நாம் ஆசைப்படக் கடவோமோ -என்று
நிந்தித்துக் கொண்டு –
பின்பும் ருசியாலே அகல மாட்டாதே
இப்படி விளம்பிக்கைக்கு ஹேதுவான பாபத்தையும்
தேவர் உடைய கேவல கிருபையாலே
போக்கித் தந்து அருள வேணும் -என்கிறார் ஆகவுமாம் –
அத்தலையில் பெருமையின் எல்லையைப் பார்த்து அன்றோ அகன்றார் அங்கு
இங்கு நீர்மையின் எல்லையைப் பார்த்து கிட்டுகிறார் –

அபராத சஹஸ்ர பாஜநம்-
பதிதம் பீம்ப வார்ண வோதரே
அகதிம் சரணா கதம் ஹரே
க்ருபயா கேவல மாத்மஸாத் குரு–48–

அபராத சஹஸ்ர பாஜநம்-
தேவர் குணைக பாஜநராப் போலே
அஸங்குசிதமான அபராதங்களுக்குக் கொள்கலமான என்னை –
அபராத சப்தத்தாலே சொல்லிற்று
புண்ய பாப ரூபமான பகவன் நிக்ரஹ அனுக்ரஹம் -என்கை
ஆகையால் இந்த வேதார்த்தத்தை வெளி இடுகிறார் –

பதிதம் –
அந்த பாபத்தை விளைக்கும் சம்சாரத்திலே இருந்து இறே கூப்பிடுகிறது –
கொடு வினைத் தூற்றுள் நின்று –

பீம் –
ஜ்ஞானம் பிறந்தார்க்குக் கட்டடங்க
பய அவஹமாய் இருக்கும் -என்கை –
அஹம் பீதோ அஸ்மி தேவேஸ சம்சாரே அஸ்மின் பயாவஹே-

பவார்ணவ –
பரிச்சேதிக்க அரியதாய்
அத்தாலே துஸ்தரமாய் இருக்கை –
சம்சாரம் ஆகிற கடலிலே புக்கார்க்கு
விஷ்ணு போதம் ஒழியத் தம் தாமால்
கரை ஏற ஒண்ணாது இருக்கை –
வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -நாச் திருமொழி -5-4-என்னக் கடவது இறே

உதரே-
நின் பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான் -3-2-2- என்கிறபடியே
எடுக்கப் பார்த்தாலும் எட்டாத படியாய் இருக்கை –

பதிதிம்-
கர்மம் புகத்தள்ள விழுந்து கிடக்கிற படி –

அகதிம் –
உன்னை ஒழிய வேறு புகல் அற்று இருக்கிற என்னை –

சரணா கதம் –
சரணா கத சப்த யுக்தனான என்னை –

ஹரே –
மித்ர பாவமே யடியாக
சமஸ்த துக்கங்களையும் போக்குகையே ஸ்வ பாவமாக உடையவனே –

க்ருபயா கேவல –
ஆர்த்த ப்ரபன்னன் அல்லன் -என்னாதே
க்ருபா மாத்திர மநோ வ்ருத்தி -என்கிறபடியே
சஹகாரம் இல்லாத கிருபையினாலே

ஆத்மஸாத் குரு –
ஆத்மா ஸாத்தாகப் பண்ணி அருள வேணும் –
நம்முடையவன் என்று விஷயீ கரித்து அருள வேணும் –

(இங்கே விசேஷணங்களை மாத்திரம் அருளிச் செய்து -விசேஷயமான தம்மை
மாம் -என்று கூட சொல்லிக் கொள்ள திரு உள்ளம் இல்லாமல் –
கீழ் அனுசந்தித்த நைச்ய பாவம் தொடர்கிறது-
பகவத் சந்நிக்குள் புகும் பொழுது அனுசந்திக்க வேண்டிய ஸ்லோகம் – )

—————————————————————————-

ஸ்தோத்ரம் -49-அவதாரிகை –

அபராத பஹூளமான பின்பு
சாஸ்த்ரீயமான உபாயாந்தரங்களைப் பற்றி போக்குதல்
விட்டுப் பற்றுதல் -செய்கை ஒழிய
கிருபயா கேவல மாத்ம ஸாத் குரு – என்று
நம்மை நிர்பந்திக்கிறது என் -என்ன
சாஸ்த்ரீய அனுஷ்டானத்துக்கு ஜ்ஞானமே இல்லை
வேறு கதி இல்லாமையாலே விட மாட்டேன்
ஆனபின்பு கிருபா கார்யமான விசேஷ கடாஷமே
எனக்கு உஜ்ஜீவன சாதனம் -என்கிறார் –

அவிவேகக நாந்த திங்முகே
பஹூதா ஸ்ந்தத துக்க வர்ஷிணி
பகவன் பவது ர்த்தி நே பத
ஸ்கலிதம் மாமவ லோகயாச்யுத—49-

அவிவேக-க நாந்த திங்முகே –
அதாவது -விவேக அபாவம்
ஜீவ பர விவேக அபாவம் –
தேஹாத்ம விவேக அபாவம்
த்யாஜ்ய உபாதேய விவேக அபாவம்
பந்த விமோசன விவேக அபாவம்
இவை ஆகிற மேக படலங்களாலே திரோஹிதமான
மனஸ்சை யுடையவனாகை யாலே
உஜ்ஜீவன உபாயத்தில் திங் மாதரமும் தெரியாது இருக்கிறதற்கு மேலே –

பஹூதா ஸ்ந்தத துக்க வர்ஷிணி –
பஹூ பிரகாரமாய் இடைவிடாதே யுண்டான துக்க வர்ஷத்தை உடைத்தானதிலே –
அவிவேகம் துக்கத்தை விளைக்கை யாவது –
அஜ்ஞாநத்தாலே கர்மமாய் –
அத்தாலே தேவாதி சரீர பிரவேசமாய்
அத்தாலே தாப த்ரயரூபமான துக்கமாய் இருக்கும் –
பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -என்கிறபடியே

பஹூதா –
ஆத்யாத் மிகாதி பஹூ பிரகாரமாய் இருக்கை –
பகவன்-
இந்த துக்கத்தை பரிஹரிக்கைக்கு இத்தலையில்
ஜ்ஞான சக்த்யாத்ய பாவமும்
தேவரால் அல்லது பரிஹாரம் இல்லை
என்கிற இதுவும் தேவரீர் அறியீரோ -என்கை –
இதிலும் தேவரீர் அறியாதது உண்டோ –

பவதுர்த்தி நே –
சம்சாரம் ஆகிற மழைக் கால விருளிலே-
துர்த்திநம் -மேக திமிரம்

பத ஸ்கலிதம் –
கொடு வினைத் தூற்றுள் நின்று பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமருகின்றேன்-3-3-9-என்கிறபடியே

மாம் –
கர்மாதி யுபாயங்களில் பிரச்யுதனான என்னை –
நான் படுகிற பாடு இதுவானால்
சாஸ்த்ரீய அனுஷ்டானத்துக்கு நான் ஆர் –
தேவரை ஒழிய வேறு உண்டோ -என்று கருத்து –

அவலோகய-
அவலோகனதா நேன பூயோ மாம் பாலய -என்று சொல்லுகிற படியே
சகல கிலேசமும் போம்படி பார்த்து அருள வேணும்
சாதனாந்தர நிஷ்டர்க்கும் தேவர் விசேஷ கடாஷம் உத்தாரகம் இறே –
ஜாயமா நம் ஹி புருஷம் யம் பஸ்யேன்மது ஸூதன -என்று
அதிகார சித்தியும் தேவர் கடாஷம் இறே

அச்யுத –
அடியரை வல்வினைத் துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான் -1-7-2-என்கிறபடியே
ஆஸ்ரிதரை ஒரு வழியாலும் நசிக்க விட்டுக் கொடாதவர் இறே தேவர் –
அவர் உயிரைச் சோர்ந்தே போகல கொடாச் சுடரை -2-3-6- என்னக் கடவது இறே –

——————————————————————

ஸ்தோத்ரம் -50-அவதாரிகை –

தேவர் கிருபையால் அல்லது வேறு எனக்கு
இல்லாதவோ பாதி
தேவர் கிருபைக்கு நான் அல்லது விஷயம் இல்லை –
இத்தை இழவாதே கொள்ளீர் – என்கிறார்-

ந ம்ருஷா பரமார்த்த மேவ மே
ஸ்ருணு விஜ்ஞாப நமேக மக்ரத
யதி மே ந தயிஷ்யஸே ததோ
தய நீயஸ் தவ நாத துர்லப—50-

ந ம்ருஷா பரமார்த்த மேவ –
இது சம்சாரத்திலே கேட்டு அறிவது ஓன்று அல்லாமையாலே
மெய்யாக மாட்டாது -என்று
ஈஸ்வர ஹ்ருதயத்தில் பிறந்த அதி சங்கையைத் தவிர்க்கைக்காக
அந்வய வ்யதிரேகத்தாலே சத்யம் -என்கிறார் –

ந ம்ருஷா-
லௌகிகர் பக்கலிலே இரக்கம் பிறக்கைக்காக
அபுத்த்யா சொல்லும் வார்த்தையைப் போலே பொய் அன்று –

பரமார்த்த மேவ –
நினைவுக்கு வாய்த்தலை இருந்து அறியும் தேவர் திரு முன்பே
விண்ணப்பம் செய்யும் அதுவே உஜ்ஜீவன உபாயம்
என்று இருக்கும் என்னுடைய விண்ணப்பத்தை
மெய் நின்று கேட்டு அருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பம் -என்னக் கடவது இறே

ஏகம் –
அத்விதீயம்
இதுக்கு மேலாக நிஷ்கர்ஷித்துச் சொல்லுவது ஒரு வார்த்தை இல்லை –
இதுவே எல்லையான நிஷ்கர்ஷம் –

அக்ரத ஸ்ருணு –
மேல் கார்யம் செய்யிலும்
செய்யாது ஒழியிலும் முற்படக் கேட்டு அருள வேணும் –
சம்சாரத்தில் பரிமாறாதது ஓன்று என்று அனாதரியாதே
அவதானம் பண்ணிக் கேட்டு அருள வேணும் –

யதி மே ந தயிஷ்யஸே –
தயைக ரஷ்யனான எனக்கு
தயை பண்ணி அருளீர் ஆகில் –

தத-
தேவரீரைக் கிட்டின இவ்வஸ்து தப்பினால் பின்பு

தய நீயஸ் தவ –
ரஷ்ய விஷயார்த்தி யாகைக்கு
தயையே அன்று -பிராப்தியும் உண்டு -என்கை

துர்லப –
தயைக ரஷ்யராய் இருப்பார் துர்லபர்
ஸ மகாத்மா ஸூ துர்லப -என்னும் அவர் இறே தேவர் –

(கொள்வார் தேட்டமான தேவரீர் கிருபைக்கு என்னைப் பாத்ரமாக்கா விடில் வேறு கிடைப்பது அரிது –
இழக்காதே -என்று சமத்காரமாக அருளிச் செய்கிறார் )

————————————————————————–

ஸ்தோத்ரம் -51-அவதாரிகை –

இப்படி தய நீயத யாவான்களான
இருவர்க்கும் முக்யமான
இஸ் சம்பந்தம்தானும்
தேவரீர் உடைய கிருபையாலே யாயிற்று
ஆனபின்பு -இதைக் கை விடாதே ரஷித்து அருள வேணும்
என்கிறார்-

தத் அஹம் த்வத் ருதே ந நாதவான்
மத்ருதே த்வம் தயநீயவான் ந ஸ
விதி நிர்மிதமே ததந்வயம்
பகவன் பாலய மா ஸம ஜீஹப —51-

தத் –
ஆதலால் தய நீயர் தேவருக்கு துர்லபமான பின்பு –

அஹம் –
ஸா பதாரனாய்
அனுதாபம் பிறந்த நான் –

த்வத் ருதே ந நாதவான் –
ப்ருஸம் பவதி துக்கித -என்று
துக்கியான என்னிலும் என் துக்கத்தைப் பொறுக்க மாட்டாத
தேவரை ஒழிய நாதவான் அல்லேன் –
பர துக்க அஸ்ஹிஷ்ணுத்வம் இறே தயை –

மத்ருதே தவம் தயநீயவான் ந ஸ –
தயைக ரஷ்யனான என்னை ஒழிந்தாலும்
தேவரீர் உடைய கிருபை குமர் இருந்து போம் இத்தனை –

விதி நிர்மிதமே ததந்வயம் –
ஏதத் அநவயம் விதி நிர்மிதம்
ஒருவரை ஒழிய ஒருவருக்குச் செல்லாத
இம்முக்ய சம்பந்தம் தேவரீர் உடைய
கிருபையால் வந்தது –
விதி வாய்க்கின்று காப்பாரார் -5-1-1- என்கிறபடியே –
இப் பஷத்தில் ததஹம் -என்கிற இடத்தில்
தச்சப்தம் மேலுக்கு உடலாக இங்கும் அந்வயிக்கக் கடவது –
அதவா
விதி என்று தைவமாய்
இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா -என்கிறபடியே
சத்தா பிரயுக்தமான சம்பந்தத்தைச் சொல்லிற்று -ஆகவுமாம் –

பகவன் –
இவற்றில் தேவருக்கு அறிவிக்க வேண்டியது உண்டோ –

பாலய –
இதை ரஷித்து அருள வேண்டும் -என்னுதல்
இதி புசித்து அருள வேண்டும் -என்னுதல்
புஜ பால நாப்யவஹாரயோ –

மா ஸம ஜீஹப –
இத்தலையில் பூர்வ அபராதத்தைப் பார்த்தாதல்
தேவர் பூர்த்தியைப் பார்த்த்தாதல்
கை விட்டு அருளாது ஒழிய வேண்டும் –

(விதி -ஸூஹ்ருத விசேஷம் -பகவத் கிருபையே -உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாதே- )

——————————————————————————

ஸ்தோத்ரம் -52-அவதாரிகை –

இதில்
ஆத்ம அநு ரூபமாக வன்றோ
நம்முடைய ரஷணம் இருப்பது –
தய நீயரான உம்முடைய ஸ்வ ரூபத்தை நிஷ்கர்ஷித்து
நம் பக்கலிலே சமர்ப்பியும் -என்ன
சிறப்பில் வீடு -2-9-5- என்கிற பாட்டின் படி
எனக்கு அதில் நிர்ப்பந்தம் இல்லை
அஹம் புத்தி போத்யமான இவ்வஸ்து
தேவர் திருவடிகளிலே என்னாலே சமர்ப்பிதம் – என்கிறார் –

வபுராதி ஷூ யோ அபி கோ அபி வா
குண தோ அஸாநி யதா ததா வித
ததயம் தவ பாத பத்மயோ
அஹமத் யைவ மயா ஸ்மர்ப்பித்த –52-

வபுராதி ஷூ யோ அபி கோ அபி வா –
தேக இந்த்ரிய மன பிராண புத்திகளைச் சொல்லுகிறது –
இவற்றில் ஒன்றே ஆத்மா என்பாரும்
ப்ரக்ருதே பரமாய்
ஜ்ஞான ஆனந்த லஷணம் என்பாருமாய்
ஸ்வ ரூபத்தில் -விப்ரதிபத்தி -அபிப்ராய பேதம் -உண்டாய் இருக்கும்
இவற்றில் ஏதேனும் ஓன்று ஸ்வ ரூபமாகவும் –

குண தோ அஸாநி யதா ததா வித –
ஸ்வ பாவாத –
அணுத்வ விபுத்வ சரீர பரிமாணத்வ நித்யத்வ அநித்யத்வ
ஜ்ஞாத்ருத் வதாதிகளிலே
விப்ரதிபத்தி உண்டாய் இருக்கும்
அதில் ஏதேனும் ஓன்று ஸ்வரூபம் ஆகிலும்
அதிலும் எனக்கு ஒரு நிர்பந்தமும் இல்லை –

தத் –
தஸ்மாத்
கீழ் சொன்ன ஸ்வரூப ஸ்வ பாவங்களிலே நிர்ப்பந்தம் இல்லாமையாலே –

அஹம் –
பராகர்த்த வ்யாவ்ருத்தனாய்
பிரத்யகர்த்த பூதனாய்
ப்ரத்யஷ பூதனாய்
பிரகாசிக்கிற நான் –

தவ பாத பத்மயோ –
ரஷகரான தேவரீர் உடைய
போக்யமான திருவடிகளிலே –

அத்யைவ –
ஆத்ம ஷணிகம் ஆகிலும்
இந்த ஷணத்திலே சமர்ப்பிதம் -என்கை –

மயா ஸ்மர்ப்பித்த –
என்னாலே சமர்ப்பிதன் –
யோ அஹம் அஸ்மி ஸ சந் யஜே –
யஸ்ய அஸ்மி ந தமந்த ரேமி –
ஆத்மா ராஜ்யம் தனம் மித்ரம் களத்ரம் வஹநானி ஸ –இதி தத் ப்ரேஷிதம் சதா –
ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய தர்மம் வக்தும் இஹார்ஹசி –

(தேஹ இந்திரிய மன பிராணாதிகளில் விலக்ஷணனாய் அஹம் புத்தி போத்யனாய் உள்ளவனே ஆத்மா –
சித்தாந்தமும் அருளிச் செய்தார் ஆயிற்று -)

———————————————————————————

ஸ்தோத்ரம் -53-அவதாரிகை –

இவரை பிரமத்தோடே விடுகிறது என் -என்று பார்த்து அருளி –
நீர் ஆர் –
அத்தை ஆருக்கு சமர்ப்பித்தீர் -என்ன
நிரூபித்த விடத்து
எனதாவியும் நீ –எனதாவி யார் யானார் -2-3-4- என்கிறபடியே
உமதை நீரே ஸ்வீகரித்தீர் இத்தனை
ஆத்மா சமர்ப்பணமும் ஆத்மா அபஹாரத்தோ பாதி -என்று
பண்ணின ஆத்மா சமர்ப்பணத்தை அனுஸ்யிக்கிறார் –
பகவத் பர தந்த்ரமான ஆத்மாவுக்கு
அநாதி அவித்யா சித்தமான ஸ்வா தந்த்ர்யம் அடியாக
பகவத் வைமுக்யம் பிறந்து
அத்தாலே ஹதன் என்று பீதி பிறந்த அளவிலே
ததீயத்வ அனுசந்தானத்தாலே வந்த
தாதாம்யைக கரண சங்கல்பம் ஆதல் –
ராஜ ஆபரணத்தை ரஷித்து வைத்து
ப்ராப்த காலங்களிலே கொடுக்குமா போலே
ஆத்மாவை ஈஸ்வரன் பக்கலிலே சமர்ப்பிக்கை என்னுதல் –
இவை இரண்டும் அர்த்தம் அன்று என்னும்படி
பண்டே அவனைத்தான வஸ்துவை அவனதாக இசையுமது
ஒழிய -சமர்ப்பணமும் ஆத்மா அபஹாரத்தோடு ஒக்கும்

மம நாத யதஸ்தி யோஅஸ்ம்யஹம்
சகலம் தத்தி தவைவ மாதவ
நியத ஸ்வ மிதி பரப்புத்ததீ
அதவா கிந்நு சமர்ப்பயாமி தே–53-

மம நாத யதஸ்தி யோஅஸ்ம்யஹம்
நாத –
அகில ஜகத் ஸ்வாமின்
அவனைத்தான சம்பந்தத்தைச் சொல்லுகிறது –
மம யதஸ்தி யோஅஸ்ம்யஹம் –
குணமாயும்-விபூதியாயும் மமதா விஷயமாயும்
உள்ளது யாதொன்று
அதுக்கு ஆஸ்ரயமான நான் யாவனொருவன் ஆகிறேன்

தத் சகலம் –
ஔ பாதிகமாயும்
ஸ்வா பாவிகமாயும்
உள்ளது எல்லாம் –

தவைவ மாதவ –
ஸ்ரீ ய பதியாய் -சர்வ சேஷியாய் உள்ள உன்னுடையது
அவதாரணத்தால்
அந்ய சேஷத்வத்தை வ்யாவர்த்திக்கிறது-

ஹி –
சர்வேஷா மேவ லோகானாம் பிதா மாதா ஸ மாதவ -இத்யாதி
பிரமாண பிரசித்தியைச் சொல்லுகிறது –

நாத மாதவ –
சர்வ ஸ்வாமி யாய் -ஸ்ரீயபதியான வஸ்துவுக்கே
அனன்யார்ஹ சேஷம் சர்வ பதார்த்தங்களும் -என்கை –
யானே நீ என் உடைமையும் நீயே -2-9-9-
நியதஸ்வம்-
சமர்ப்பணம் மிகையாம்படி ஜ்ஞானம்
பிறந்த காலத்துடன் பிரமித்த காலத்துடன்
வாசி அற நியதஸ்வம்-

இதி பரப்புத்ததீ –
என்று தெரிந்த புத்தியை யுடைய நான் –

அதவா –
கீழில் சமர்ப்பண பஷ வ்யாவ்ருத்தி –

கிந்நு சமர்ப்பயாமி தே
இத்தை உடைய உனக்கு எதை சமர்ப்பிப்பேன்
சமர்ப்பணீயம் ஏது
சமர்ப்பகர் ஆர் –
சமர்ப்பணீயம் ஆகைக்கு ஸ்வாம்யம் இல்லை –
சமர்ப்பிக்கைக்கு ஸ்வா தந்த்ர்யம் இல்லை –
சம்சார பீதையாலே சமர்ப்பிக்கையும்
ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானத்தாலே அநு சயிக்கையும்
இரண்டும் யாவன் மோஷம் அநு வர்த்திக்கக் கடவது-

(எனது ஆவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே –என்றதுமே –
எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய் -எனது யாவி யார் யான் யார் தந்த நீ கொண்டாக்கினையே –
திருக் குருகைப் பிரான் பிள்ளான் –இப்படி எம்பெருமான் உடன் கலந்த கலவையால் உள்ள நிரவதிக ப்ரீதியாலே
அறிவு இழந்து இவ்வாத்மா தன்னுடையது அன்று என்று நிரூபிக்க மாட்டாராய் –
அவன் தம்மோடு கலந்த இப்பெரு நல் உதவிக்கு கைம்மாறாக தம்முடைய ஆத்மாவை அவனுக்கு மீளா வடிமையாகக் கொடுத்து –
பின்னையும் தம்முடைய ஸ்வரூபத்தை உள்ளபடி விவேகித்து -என்று அருளிச் செய்கிறார் –
கர்ம உபாத்திகம் அன்றிக்கே ஞான விபாக கார்யம் -ஆகையால் அடிக் கழஞ்சு பெறுமே)

————————————————————————

ஸ்தோத்ரம் -54- அவதாரிகை –

ஆத்மா அபஹார பர்யாயமான ஆத்ம சமர்ப்பணத் தளவிலே நான் நில்லாமையாலே –
நிர்ஹேதுக கிருபையால்
இந்த சேஷத்வத்தை உணர்த்தினாப் போலே
இந்த ஜ்ஞானம் புருஷார்த்த உபயோகியாம்படி
இந்த கிருபையாலே
ஸ்தான த்ரயோதித -பர பக்தியைத் தந்து அருள வேண்டும் என்கிறார் –

ஸ்தான த்ரயம் ஆவது
புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வ நன்யயா -ஸ்ரீ கீதை -8-22
பக்த்யா த்வ நன்யயா சக்ய -11-54-என்றும்
மத் பக்திம் லபதே பராம் -18-54-

அவபோதி தவா நிமாம் யதா
மயி நித்யாம் பவதீ யதாம் ஸ்வயம்
க்ருபயைதத நனய போக்யதாம்
பகவன் பக்திமபி ப்ரயச்ச மே—54-

மயி நித்யாம் பவதீ யதாம் அவபோதி தவாந-
என் பக்கலிலே நியதியான
த்வத் விஷய சேஷதையை –
பவதீ யதை -என்கையாலே அந்ய சேஷத்வ வ்யாவ்ருத்தி
மயி நித்யாம் -என்றது இத்தலையில் பகவச் சேஷத்வம் ஸ்வரூபம் -என்கை
ஸ்வ த்வமாத்மனி ஸ்ஞ்ஜாதம் ஸ்வாமி த்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் –
இமாம் என்று சேஷத்வத்தில் இனிமையாலே கொண்டாடுகிறார்

யதா அவபோதி தவாந –
யாதொருபடி அறிவிக்கப் பட்டேன் –

ஸ்வயம் க்ருபயா –
கேவல கிருபையாலே
ஸ்வயம் -கேவலம் –

ஏதத நனய போக்யதாம் –
இது ஒழிய வேறு ஒன்றுக்கும் நெஞ்சுக்கு விஷயம் ஆகாதபடி இருக்கும்
போக்யதையை உடைத்தான -பக்தியை –

பகவன் –
ஒன்றை ஒருத்தனுக்கு கொடுப்போம் என்றால்
ஒரு தடை இல்லாத ஜ்ஞான சகத்யாதிகளால்
பூரணன் -என்கை –

பக்திமபி ப்ரயச்ச
யாதொரு படி ஜ்ஞானத்தைத் தந்தாய்
அப்படியே பக்தியையும் தந்து அருள வேணும் –

மே
அஞனாய் அசக்தனாய் ருசி மாத்ரமேயாய்
இருக்கிற எனக்கு-

(சேஷத்வ ஞானம் அருளி ஆத்ம சமர்ப்பணத்துக்கு அனுதபிக்கச் செய்தது போலவே
ஸ்வயம் புருஷார்த்தமான பக்தியையும் தந்து அருள வேணும் –
வேறு ஒன்றுக்கும் நெஞ்சுக்கு விஷயமாக்காத படி இருக்கும் போக்யதை யுடைத்தான பக்தியை -என்றபடி – )

————————————————————————

ஸ்தோத்ரம் -55 அவதாரிகை –

பகவத் ப்ரசாதத்தாலே லப்தமான பக்தி ப்ராசுர்யத்தாலே
தச் சேஷத்வ அளவில் பர்யவசியாதே
ததீய சேஷத்வத்தை பிரார்த்திக்கிறார் –
ஆழ்வார் -கண்கள் சிவந்து -8-8- விலே பகவச் சேஷத்வத்தை அனுபவித்து
கருமாணிக்க மலை -யிலே அனன்யார்ஹ சேஷத்வத்தை
அனுசந்தித்து
அவ்வளவிலும் பர்யவசியாதே
நெடுமாற்கு அடிமை யிலே ததீய சேஷத்வத்தை
அனுசந்தித்தாப் போலேயும்
ஸ்ரீ இராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருகன ஆழ்வானைப் போலேயும்
ததீய சேஷத்வத்தை பிரார்த்திக்கிறார் –

தவ தாஸ்ய ஸூ கைக ஸங்கி நாம்
பவ நேஷ் வஸ்த்வபி கீட ஜன்ம மே
இதரா வஸ தே ஷூ மா ஸம பூத்
அபி மே ஜன்ம சதுர்முகாத்மா நா—55-

தவ தாஸ்ய ஸூக
ஐஸ்வர்ய கைவல்ய ஸூகங்கள்
விக்நமாம் படி இறே
தாஸ்ய ஸூகம் இருப்பது –
தஸ்யாந்தராயோ மைத்ரேய தே வேந்த்ரத் வாதிகம் பலம் –
ஸ்வர்க்காப் திஸ் தஸ்ய விக்னோ அநு மீ யதே -என்றும்
அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர் செற்றது -1-2-5-என்றும்
இறுகல் இறப்பு -4-1-10-என்றும்
இவை தாச்யத்துக்கு விரோதியாய் இறே இருப்பது –

ஏக ஸ்ங்கி நாம் –
நிஸ் தரந்தி மநீ ஷீண -என்றும்
ஸோ த்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
சம்சார நிவ்ருத்தியால் வந்த ஸூகமும்
பரம பத ப்ராப்தியால் வந்த ஸூகமும்
தாஸ்ய ஸூகத்துக்கு
அபாயம் -என்கை –
தஸ்ய யஜ்ஞ் வராஹ்ஸ்ய விஷ்ணோ ரமித தேஜஸ
ப்ரணாமம் யே அபி குர்வந்தி தேஷாமபி நமோ நம –
வாஸூ தேவஸ்ய யே பக்தா சாந்தாஸ் தத் கத மானஸா
தேஷாம் தாஸ்ஸ்ய தாஸோ அஹம் பவேஜஜன்மநி ஜன்மநி
அடியார் அடியார் அடியார் எம் கோக்கள் அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல
கோட்பாடே –வாய்க்க -8-10-10-என்னக் கடவது இறே
தாஸ்ய ரசம் ரசித்தால்

தேஷாம் -பவநேஷ் கீடஜன்ம மே வஸ்த்வபி-
அவர்கள் திருவடிகளில் அடிமை செய்ய வேண்டா –
அவர்கள் திரு மாளிகையில் ஒரு கீடமாய்
ஜனிக்கும் அதாகிலும் உண்டாக வேண்டும்
அபி -சப்தம் அவதாரணத்திலே யாய்
கீட ஜன்மமே உண்டாக வேண்டும் என்றுமாம் –
மனுஷ்யாதி ஜன்மங்களில் ஆசைப் படாது ஒழிந்தது
தேசாந்தர பிராமண சம்பாவனையாலே
உத்பத்தி ஸ்திதி நிலையங்கள் அங்கேயாகக் கிடையாது என்னும் அத்தாலே
எல்லாரும் உத்க்ருஷ்ட ஜன்மங்களை அன்றோ ஆசைப் படுவது -என்ன
தம் தாம் உகந்த தன்றோ புருஷார்த்தம் என்கிறது
எனக்கு இதுவே பெற வேணும் என்கை –

இதரா வஸ தே ஷூ –
தாஸ்ய ரசம் அறியாதே -எனக்கு என்னும் அவர்கள் இருப்பிடத்திலே

மா ஸம பூத் அபி மே ஜன்ம சதுர்முகாத்மா நா –
சதுர முகாத்மனா ஜன்மாபி மா ஸம பூத்
சதுர்முக ரூபேண வரும் ஜன்மமும் எனக்கு உண்டாமதன்று
சதுர முகாதி ஜன்மம் லௌகிகருக்கு ஸ்லாக்யமானாலும்
தாஸ்ய ருசியை உடைய எனக்கு வேண்டா -என்கிறார் –
அன்வயத்திலும் வ்யதிரேகத்திலும் இரண்டிலும் உண்டான
நிர்ப்பந்தம் தோற்ற இருக்கலாம் -என்கிறார் –

———————————————————————————–

ஸ்தோத்ரம் -56-அவதாரிகை –

ஸ்ரீ வைஷ்ணவ க்ருஹத்தில் பிறக்கும் பிறப்பால்
வந்த ஏற்றம் எல்லாம் வேணுமோ –
அவர்கள் கண்டால் உபேஷியாதே -நம்முடையவன் -என்று
விசேஷ கடாஷம் பண்ணுகைக்கு
அர்ஹனாம் படி பண்ணி அருள வேணும் – என்கிறார் –

ஸ்க்ருத் த்வ தாகார விலோக நாஸ்யா
த்ருணீ கருதா நுத்தம புக்தி முக்திபி
மஹாத்மபிர் மாமவ லோக்யதாம் நய
ஷானே அபி தே யத் விரஹொ அதிது ஸ்ஸ்ஹ–56-

ஸ்க்ருத் த்வ தாகார விலோக நாஸ்யா –
பஸ்யேம சரதஸ் ஸ்தம் –
சதா பஸ்யந்தி ஸூராய -என்கிறபடியே
சதா தர்சனம் பண்ண வேண்டி இருக்க -ஸ்க்ருத் -என்றது
சத்தையை தரிப்பைக்கைக்கு
ஒருகால் அமையும் என்கைக்காக-
போக மோஷங்களை உபேஷிக்கைக்கும் ஒரு கால் அமையும் -என்கைக்காக –
ஒரு நாள் காண வாராய் -8-5-1- என்று இ றே விடாய்த்தவர் வார்த்தை –
நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே -பெரிய திருமொழி -4-9-1-

த்வ தாகார விலோக ந –
ஸ்வரூபத்து அளவிலும்
தத் ஆஸ்ரயமான குணத்தளவிலும் பர்யவசியாதே
உபயத்துக்கும் ப்ரகாசகமான விக்ரஹத் தளவிலே வர
அவகாஹித்தவர்கள் –

ஆஸ்யா த்ருணீ கருதா நுத்தம புக்தி முக்திபி –
காண வேண்டா காண்-
காண வேணும் என்னும் ஆசை தானே த்ருணீ கரிப்பிக்கும்
அநுத்தம புக்தி -ப்ரஹ்மாதிகள் போகம்
அநுத்தம முக்தி –பரம புருஷார்த்த லஷண மோஷம் –
அலமத்ய ஹி புக்திர் ந பரமார்த்தி ரலஞ்ச ந
யதா பஸ்யாம் நிர்யாந்தம் ராமம் ராஜே ப்ரதிஷ்டிதம்
த்வயாபி ப்ராப்த மைஸ்வர்யம் –
ஏதே வை நிரயாஸ்தாத ஸ்தா நஸய பர மாதமான –

மஹாத்மபிர் –
மஹாத்மா நஸ்துமாம் பார்த்த தை வீம் பிரகிருதி மாஸ்ரிதா-
ஸ மஹாத்மா ஸூ துர்லப -என்றும்
பேராளன் பேரோதும் பெரியோரை –பெரிய திரு மொழி -7-4-4-என்றும்
ஈஸ்வரன் தானும்
ஆழ்வார்களும் கூடக் கவி பாடுகிறவர்களாலே –

மாம் –
புருஷார்த்தின் மேல் எல்லையிலே ருசியை உடைய என்னை

அலோக்யதாம் –
அவலோகன விஷயனாம் படி –

நய –
சர்வ சக்தியான தேவர் நிர்வஹிக்க வேண்டும்
நம் பக்கல் ஒழிய நம்முடையார் பக்கல்
கீட ஜன்ம மே அப் யஸ்து -என்றும்
அவலோக்யதாம் நய -என்றும்
அத்ய ஆதாரத்தைப் பண்ணுகிறது எத்தாலே -என்ன
ஸா பேஷனான நான் ஆதரிக்கைக்கு ஹேதுவைச் சொல்லுகிறேன்
ஸ்வத பூரணரான தேவர்க்கு அவர்கள் உடைய விஸ்லேஷம்
அசஹ்யமாய் இருக்கைக்கு ஹேது அருளிச் செய்ய வேணும் -என்கிறார்

ஷானே அபி தே யத் விரஹொ அதிது ஸ்ஸ்ஹ
ஸ்வத பூர்ணனாய் அவாப்த சமஸ்த காமனான தேவருக்கு
ஷண மாதரம் துஸ் ஸ்ஹம் அன்று –
அதி துஸ் ஸ்ஹம் -என்கை
சிரம் ஜீவதி வைதே ஹீ யதி மாஸ்ம் தரிஷ்யதி
ந ஜீவேயம் ஷணம் அபி விநா தாமஸி தேஷணம்
யத் விநா பரதம் த்வாஞ்ச ஸ்த்ருக் நஞ்சாபி மா நத –
ஸ்ம்ஸ்மராம் யஸ்ய வாக்யாநி
ஜ்ஞாநீ த்வாத் மைவ மே மதம்
மம ப்ராணா ஹி பாண்டவா
கிம் கார்யம் ஸீதயா மம –

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்- ஸ்லோகம் -31-32-33-34-35-36-37-38-39-40-41-42-43-44-45-46—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

February 4, 2014

ஸ்லோகம் -31-அவதாரிகை –

இதில் –
கண்ணால் காணும் அளவும் போறாது
படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -திருவாய் மொழி -9-2-2–என்றும்
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -திருவாய்மொழி -4-3-6- என்றும்
சொல்லுகிறபடியே
உன் திருவடிகளாலே என் தலையை அலங்கரிக்க வேண்டும் -என்கிறார் –

கதா புநஸ் சங்க ரதாங்க கல்பக
த்வஜார விந்த அங்குஸ வஜ்ர லாஞ்சநம்
த்ரிவிக்ரம த்வச் சரணாம் புஜத்வயம்
மதிய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி—31-

கதா புநஸ் –
திருவடிகளில் உண்டான பிராப்தியையும்
சௌலப்யத்தையும் போக்யதையையும்
அனுசந்தித்து -அத்தாலே வந்த த்வரையாலும்
விளம்ப ஹேது இல்லாத உபாயத்தைப் பரிக்ரஹித்தவர் ஆகையாலும்
பின்னை எப்போது செய்வது -என்கிறார் –

சங்க ரதாங்க கல்பக த்வஜார விந்த அங்குஸ வஜ்ர லாஞ்சநம் –
சர்வேஸ்வரனுடைய ஐஸ்வர்ய ஸூசகமாய் –
என் தலைக்கு ஆபரணமான
சங்க சக்ராதி லஷணங்களாலே
லிகிதமாய் உள்ளத்தை –
அவனுக்கு ஐஸ்வர்ய ஸூசகமாய் ஆகர்ஷகமுமாய் –
திருவடிகளோட்டை சம்பந்தத்தாலே இவர் தலைக்கு
சேஷத்வ லஷணமுமாய் ஆபரணமுமாய் இறே இருப்பது –
பாத விலச்சினை வைத்தார் -என்னக் கடவது இறே
என் சென்னி -பெரியாழ்வார் திரு மொழி -5-2-8-இத்யாதி –

த்ரிவிக்ரம –
குணாகுண நிரூபணம் பண்ணாதே
திருவடிகளில் வை லஷண்யமும் பாராதே
எல்லார் தலையிலும் வைக்குமவன் அல்லையோ –

தவச் சரணாம் புஜத்வயம் –
இப்படி பிராப்தனுமாய்
ஸூலபனுமான உன்னுடைய
நிரதிசய போக்யமான திருவடிகளை

மதிய மூர்த்தாநம் -அலங்கரிஷ்யதி
என்னுடையதான ஸிரஸ்ஸிலே எப்போது அலங்கரிக்கப் புகுகிறாய்
என் தலை மேலவே -திரு நெடும் தாண்டகம் -1- என்று-அபகர்ஷம் சொல்லிற்று
நரக ஹேதுவான பதார்த்தங்களின் கால் காண பிரார்த்தித்துப் போந்த என் தலையை -என்னுதல்
இதுக்கு பிராப்தனாய் போந்த என் தலையை -என்னுதல்
பதி வ்ரதைக்கு மங்கள ஸூத்ரம் போலே இறே சேஷ பூதனுக்கு திருவடிகள் –
மே மூர்த்நி பாதி என்று தன் தலையிலே நீர்மைக்கு உடலாக
ஸ்வ சம்பந்தம் அத்தலைக்கு ஏற்றமாகச் சொன்னார்
இங்கு
தத் சம்பந்தமே இத்தலைக்கு ஏற்றம் -என்கிறார்
ஸ்வ சேஷத்வ சித்திக்காக-

(நீ ஒரு நாள் படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் என்றும் –
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -என்றும் –
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா யூன் கோலப் பாதம் -என்றும் –
இந்த விபூதியில் பேறு கிடைக்க என்றும் –
திரு நாட்டிலே புகுந்து அப்ராக்ருத தேகத்தை பெற்று பர வாசு தேவனுடைய
பாதார விந்தங்களை சிரோ பூஷணமாக பெற த்வரிக்கிறார் -என்றுமாம் -)

———————————————————————

ஸ்தோத்ரம் -32- அவதாரிகை –

இந்த ஸ்லோகம் முதலாக
பவந்தம் -ஸ்லோகம் -46- அளவும்
பர்வ க்ரமத்தாலே
அவயவ
ஆபரண
ஆயுத
மகிஷி
பரிஜன
பர்ச்சேதங்களோட்டை சேர்த்தி அழகை அனுபவித்து
அனுபவ ஜனித ப்ரீதி காரிதமான கைங்கர்யத்தாலே
உன்னை உகப்பிப்பது எப்போது -என்கிறார் –
இத்தால் தம்முடைய ப்ராப்யத்தை அருளிச் செய்கிறார்
வைகுண்டே து பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத் பதி
ஆஸ்தே விஷ்ணுர சிந்த்யாத்மா பக்திர் பாகவதைஸ் சஹ –
என்று இறே வஸ்து இருப்பது –

விராஜமானே உஜ்ஜ்வல பீதவாஸஸம்
ஸ்மித அதஸீ ஸூந அமலச்சவிம்
நிமக்ன நாபிம் தநு மத்யம் உந்நதம்
விஸால வஷச் ஸ்தல ஸோபி லஷணம்–32-

விராஜமானே –
திருவடிகளைத் தலையிலே வைக்க அமையுமோ -என்ன
அவ்வளவு போராது -என்று
சாமான்ய ஸோபையை அனுபவிக்கிறார்
விராஜமான
திரு நிறத்துக்கு பரபாகமான அழகு

உஜ்ஜ்வல –
மாஹார ரஜனம் -என்கிற ஸ்வரூபத்தாலே வந்த ஔஜ்ஜ்வல்யம்
உடையார்ந்த ஆடை -திருவாய்மொழி -3-7-4-என்று
திருவரை பூத்தால் போலே இருக்கிற அழகு –

பீதவாஸஸம் –
பீதக வாடை யுடையான் -என்று அழகே அன்றிக்கே ஐஸ்வர்ய ஸூசகமமாய் இருக்கை –

ஸ்மித அதஸீ –
அலருகிற போதை செவ்வியை உடைத்தான
காயம் பூப் போலே இருக்கை –
அத ஸீ புஷ்ப சங்காஸம் –
காயாம்பூ மலர்ப்பிறங்கள் அன்ன மாலை -பெருமாள் திருமொழி -1-2-என்று
அபியுக்தர் ஆழம் கால் படும் நிலம் இறே

ஸூந அமலச்சவிம் –
தோஷம் அற்ற காந்தியை உடையவனாயும்-

நிமக்ன நாபிம் –
ஆவர்த்த இவ கங்கா யா -என்கிறபடியே
சௌந்தர்ய வெள்ளம் சுழித்தால் போலே
இருக்கிற திரு நாபியை உடையவன்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய உந்தி -பெரியாழ்வார் திருமொழி -1-3-8-என்னக் கடவது இறே

தநு மத்யம் –
சிற்றிடையும் வடிவும் -திருவாய் மொழி -5-5-8-
துடி சேர் இடையும் -திருவாய்மொழி -8-5-3-என்னக் கடவது இறே

உந்நதம்-
இவ்வடிவாலும்
உடையாலும்
அழகாலும்
சர்வாதிகனாய் இருக்கிற இருப்பு தோற்றும்படி இருக்கை –

விஸால வஷச் ஸ்தல ஸோபி லஷணம் –
விஸ்தருதமான திரு மார்பிலே
விளங்கா நிற்பதான
ஸ்ரீ வத்ஸ சிஹ்னம் உடைய -உன்னை-

(இது முதல் -14-ஸ்லோகங்களால் விசேஷணங்களை அருளிச் செய்து அனுபவித்து
46-ஸ்லோகத்தில் -க்ரியா பதம் -பவந்தமே வாநுசரன்—-நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித–என்று அணுகி –
கைங்கர்யம் செய்து -உன்னை உகப்பிப்பது என்றைக்கோ -என்கிறார் -இவை குளகம் -என்பர்
விராஜமானே உஜ்ஜ்வல பீதவாஸஸம்-இரண்டு விசேஷணங்கள்-
இயற்கையான சோபையையும் திவ்ய மங்கள விக்ரஹத்துடன் சேர்ந்த பரபாக சோபையையும் காட்டும் –
அதஸீ ஸூ நம் -என்றது –காயம் பூ -பூவைப் பூ )

———————————————————————–

ஸ்தோத்ரம் -33- அவதாரிகை –

திருத் தோள்களில்
சௌர்ய வீர்யாதிகளையும்
அழகையும்
அனுபவிக்கிறார்

சகாஸதம் ஜ்யாகிண கர்க்கசைஸ் ஸூபைஸ்
சதுர்ப்பிர் ஆஜாநு விளம்பிபிர் புஜை
ப்ரியாவதம் ஸோத் பல கர்ண பூஷண
ஸ்லதாலகா பந்த விமர்த்த ஸம ஸிபி–33-

சகாஸதம்
ப்ரகாசிப்பவனாகவும்
ஜாகிண கர்க்கசைஸ் –
நான் தழும்பு ஏறிக் கரடு முரடாய் இருப்பவையும்
தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்தவா மங்கை -முதல் திருவந்தாதி -23-என்கிறபடியே
ஸ்ரீ சார்ங்கத்தில் நாணித் தழும்பாலே அலங்க்ருதமான திருத் தோள்கள் –
நாணித் தழும்பு எல்லாவற்றிற்கும் உண்டாகையாலே
ஸ்வ்யவாசி -என்கை -இடது கைகளாலும் அம்பு விடுபவன்
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்து
தழும்பை யுதைத்தான திருத் தோள்கள்
வீரத் தழும்பு வீர புஜங்களுக்கு அழகு இறே

ஸூபைஸ் –
ஸூபேந மனஸா த்யாதம் -என்னுமா போலே
ஆஸ்ரித சம்ருத்தியே பிரயோஜனமாக
வெறும் புறத்திலே உபகரிக்கும் தோள்கள் -என்னுதல்
ஆஸ்ரிதர்க்கு ப்ராப்யமான தோள்கள் -என்னுதல் –

சதுர்ப்பி-
கல்பக தரு பணைத்தால் போலே
ஆஸ்ரித ரஷணமே விளை நீராக பணைத்த படி –
ஆஜாநு விலம்பிபி –
முழம் தாள்கள் வரை தொங்குகின்றவையும்
ஆஜாநு பாஹூவாய் இருக்கை இறே-புருஷோத்தம லஷணம்

ப்ரியாவதம் ஸோத் பல கர்ண பூஷண-ஸ்லதாலகா பந்த விமர்த்த ஸம ஸிபி –
ப்ரிய அவதம்ஸ் உத்பல கர்ண பூஷண ஸ்தல அழகா பந்த விமர்த்த ஸம்ஸிபி –
ஆஸ்ரித ரஷணமே யாத்ரையாம்படி சொல்லிற்று -கீழ்
அதுவே பச்சையாக பிராட்டி அணைக்கும் படி சொல்லுகிறது இங்கு
பிராட்டி திருச் செவி மலரான உத்பலம் என்ன
கர்ண பூஷணம் என்ன
ஸ்பர்சத்தாலே தத் காலத்தில் கிஞ்சிதா குஞ்சிதமான திருக் குழல் கற்றை என்ன
இவற்றின் உடைய ஸ்ம்மர்த்ததைக் கோள் சொல்லுமவையாய்
அவற்றாலே விளங்கா நின்று உள்ளவனை
ஸ்யனே சோத்த மாங்கே ந ஸீதாயா ஸோபிதம் புரா -யுத்தம் -21-5-என்கிறபடியே
வீர புஜத்தை இறே வீர பத்னி அணைவது
அல்லாத போது சஜாதீயை யான ஸ்திரீயை அணைத்த வோபாதி இறே
ப்ரணய சிஹனங்களும்
ரஷண சிஹனங்களும் இறே திருத் தோள்களுக்கு மாங்கள்யம்

சகாஸதம் –
இப்படிப் பட்ட தோள்கள் இறே
நாராயண பிரணயி யானவனுக்கு
ஔஜ்ஜ்வல்ய ஹேதுக்கள்-

(பரத்வ திசையிலும் அவதார திசையிலும் திவ்ய மங்கள விக்ரஹத்தில் பேதம் இல்லாமல்
தழும்புகள் இருக்கும் என்பதே ஆளவந்தார் திரு உள்ளம்
பிராட்டி திருக்கைகளை தலை அணையாக வைத்து கண் வளர்ந்து அருளும் போது திவ்ய ஆபரணங்கள் அழுந்திய தழும்பும்
திருக் குழல் கற்றை பரிமளமும் திருத் தோள்களில் ப்ரத்யக்ஷம் ஆகுமே )

—————————————————————————-

ஸ்தோத்ரம் -34- அவதாரிகை –

திருத் தோள்களுக்கு அனந்தரமான
திருக் கழுத்தையும்
தத் அனந்தரமான
திரு முகத்தில் சாமான்ய ஸோபையையும்
அனுபவிக்கிறார்-

உதக்ர பீன அம்ஸ விலம்பி குண்டல
அலக ஆவளீ பந்துர கம்பு கந்தரம்
முக ஸ்ரீ யா ந்யக்ருத பூர்ண நிர்மலா
அம்ருதாம் ஸூ பிம்பாம்புருஹ உஜ்ஜ்வல ஸ்ரீயம்–34-

உதக்ர பின அம்ஸ விலம்பி குண்டல அலக ஆவளீ –
ஓங்கித் தசைத்து இருந்துள்ள அம்ஸ்த்திலே வரத் தாழ்ந்த
திருக் குண்டலங்கள் -என்ன
அவ்வளவு வரத் தாழ்ந்த திருக் குழல்கள் -என்ன
இவற்றாலே சுந்தரமாய்-வடிவு தான் ரேகா த்ரயாங்கிதமாய்
இருந்துள்ள திருக் கழுத்தை உடையவனை –

பந்துர-
சுந்தர
ரேகா த்ரயாங்கிதா க்ரீவா கம்பு க்ரீவேதி கத்யதே –
மின்னு மணி மகரக் குண்டலங்கள் வில் வீச -பெரிய திருமடல் -2-
மகரம் சேர் குழை இருபாடு இலங்கி யாட -திரு நெடும் தாண்டகம் -21-என்றும்-சொல்லுகிறபடியே
திருக் கழுத்துக்கு பர பாகமான ஒளியை யுடைத்தாய்
இரண்டு ஆதித்யர்கள் ஆபரண வேஷத்தாலே அலங்கரிக்கிறாப் போலே இருக்கை –
கொள்கின்ற கோள் இருளை -திருவாய்மொழி -7-7-9-இத்யாதிப் படியே
திருக் குழலாலே அலங்க்ருதமாய் இருக்கிறபடி

முக ஸ்ரீ யா ந்யக்ருத பூர்ண நிர்மலா அம்ருதாம் ஸூ பிம்பாம்புருஹ உஜ்ஜ்வல ஸ்ரீயம் –
அத் திருக் குழலாலே அழகு திரு முகத்திலே மூட்ட
அந்த அழகை அனுபவிக்கிறார் –
தன்னுடைய ஜ்யோதிஸ்ஸாலே பூர்ண சந்தரன் உடைய ஒளியையும்
அப்போது அலர்ந்த தாமரைப் பூவில் அழகையும்
தோற்ப்பிக்கும் திரு முகத்தை உடைய உன்னை –

முக ஸ்ரீ யா -முக காந்த்யா
ந்யக்ருத -அவன்
சம்பூர்ண கலைகளாலும் பூரணமான பௌரணமாவாஸ்யையில்
சந்திர மண்டலமாய் மறு கழற்றின அளவிலே யாயிற்று-அஸ்த்ருசமாய் இருப்பது
எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய் -பெரியாழ்வார் திருமொழி -1-4-3-என்று
அது தன்னைத் தாழ விட்ட இடத்திலே யாயிற்று ஒவ்வாது ஒழிவது
தேஜஸ்ஸே யன்றியே சௌகுமார்யத்துக்கும்
விகாஸி ஸார தாம்போஜமவஸ் யாய ஜ லோ ஷிதம் –
செவ்விக்கும் தாமரைப் பூவும் ஸ்த்ருஸ்ம் அன்று
பரிபூய ஸ்திதம் -என்னக் கடவது இ றே

(திருக் கழுத்துக்கு சங்கு உவமை -கம்பு -சிங்குக்கு பெயர் –
கம்பு க்ரீவா -மூன்று ரேகைகள் -கொடுக்கல் அமைந்த கழுத்து -)

——————————————————————————

ஸ்தோத்ரம் -35-அவதாரிகை –

கோள் இழைத் தாமரை -திருவாய்மொழி -7-7-8-என்கிறபடியே
திரு முகத்தில் அவயவ சௌந்தர்யத்தின் உடைய
சேர்த்தியை அனுபவிக்கிறார்

ப்ரபுத்த முக்தாம்புஜ சாரு லோசனம்
ஸவிப்ரமப் ரூலத முஜ்ஜ்வலாதரம்
ஸூ சிஸ்மிதம் கோமள கண்ட முந்நஸ்ம்
லலாட பர்யந்த விலம்பி தாலகம்–35-

ப்ரபுத்த –
ஆஸ்ரித சம்ச்லேஷத்தாலே
விகஸிதமாய் இருக்கை –

முக்த-
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே –அங்கண் இரண்டும் கொண்டு –திருப்பாவை -22-
என்கிறபடியே அலரத் தொடங்கின அளவாய் இருக்கும் -என்னுதல் –
பேதுறு முகம் செய்து -திருவாய் மொழி -9-10-9-என்னும் படிக்கு ஆஸ்ரிதர் ஓட்டைக் கல்வியால்
வந்த ஆனந்தாதிஸயத்தில் விக்ருதியைச் சொல்லுதல் –
அம்புஜ சாரு லோசனம் –
இப்படிப் பட்ட தாமரை த்ருஷ்டாந்தமாகப் போராமையாலே
தார்ஷ்டாந்திகம் தன்னையே சொல்கிறது
தத் புண்டரீக நயனம் விஷ்ணோர் த்ரஷ்யாம் யஹம் முகம் -என்று
ஆஸ்ரிதர் ஆசைப்படுமது இ றே

ஸவிப்ரமப் ரூலதம் –
மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலை கொல்-திருவாய்மொழி -7-7-4- என்கிறபடியே
ஆஸ்ருதர் பக்கல் ஆதரம் எல்லாம் தோற்றும்படி
நெரித்து இருக்கும் புருவத்தை உடைய உன்னை –
தன் கைச் சார்ங்கம் அதுவே போல் – நாச்சியார் திரு மொழி -14-7-என்று
த்ருஷ்டாந்திக்கும் படி இ றே

உஜ்ஜ்வலாதரம் –
வாலியதோர் கனி கொல் -திருவாய்மொழி -7-7-5- என்றும்
கோலம் திரள் பவளக் கொழும் துண்டம் கொல் -திருவாய்மொழி -7-7-3- என்றும்
நீல நெடு முகில் போல் திரு மேனி யம்மான் தொண்டை வாய் -திருவாய் மொழி -7-7-3- என்றும் –
சொல்லுகிறபடியே மிக்க அழகை உடைய திரு அதரத்தை உன்னை –

ஸூசி ஸ்மிதம்-
பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள வெள்ளி முளை போல் சில பல்லிலக -பெரியாழ்வார் திருமொழி -1-6-9-என்றும்
என்னாவி யடும் அணி முத்தம் கொல் -திருவாய்மொழி -7-7-5- என்றும்
சொல்லுகிற திரு முறுவலை யுடையவனை

கோமள கண்ட-
அனுபவிப்பார்க்கு ஆகர்ஷகமாய்
ஸூகுமாரமான கண்ட ஸ்தலத்தை யுடைய உன்னை –

உநநஸ்ம் –
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ -திருவாய் மொழி -7-7-2-
என்கிறபடியே நாஸ்லதையை உடைய உன்னை –

லலாட பர்யந்த விலம்பி தாலகம்-
முன்னமுகத் தணியார் மொய் குழல்கள் -பெரியாழ்வார் திருமொழி -1-5-5- என்றும்
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான் -பெரியாழ்வார் திருமொழி -3-6-9- என்றும்
சொல்லுகிற திரு நெற்றியின் எல்லையிலே வர அலை எறிகிற திருக் குழலை உடைய உன்னை
பின்பு -அம்ஸ விலம்பி -யாய்
முன்பு லலாட பர்யந்தமாய் -இருக்கிறபடி-

(கீழே திரு முக மண்டலா சமுதாய சோபை -இங்கு திரு முக அவயவ சோபை அனுபவம்
முக்த -அழகிய புதியதான
சுசி ஸ்மிதம் -வெளுத்த –பரிசுத்த -ருஜுவான -கள்ளம் கபடு அற்ற
கீழே திருக் குழல்கள் திருத் தோள்கள் அளவும் -இங்கு முன் நெற்றியில் தொங்கும் அழகு
களி வண்டு எங்கும் கலந்தால் போலே கமழ் பூம் குழல்கள் தடம் தோள் மேல் மிளிர
நின்று விளையாட -நாச் -14–8-
செங்கமலப் பூவில் தேன் உண்ணும் வண்டே போல் –பங்கிகள் வந்து உன் பவள வாய்
மொய்ப்ப –பெரியாழ்வார் -1–8–2—பங்கி -மயிர் )

——————————————————————

ஸ்தோத்ரம் -36- அவதாரிகை-

ஆபரண
ஆயுதாதிகள் உடைய
சேர்த்தி அழகை
அனுபவிக்கிறார்

ஸ்புரத் கிரீ டாங்க தா ஹார கண்டிகா
மணீந்த்ர காஞ்சீ குண நூபுராதி பி
ரதாங்க சங்க அஸி கதா த நுர்வரை
லஸ்த் துளஸ்யா வனமாலய உஜ்ஜ்வலம்–36-

ஸ்புரத் கிரீட-
உபய விபூதி நாதத்வம் ஆகிற ஐஸ்வர்யத்துக்கு அனுரூபமாய் –
திரு முடியிலே விளங்கா நிற்கிற திரு வபிஷேகம்
கதிராயிர மிரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடி -பெரியாழ்வார் திருமொழி -4-1-1-இ றே –

அங்கத-
சர்வ ஆஸ்ரயமான
திருத் தோள்களைப் பற்றி விளங்கா நின்றுள்ள
திருத் தோள் வளைகள்-

ஹார –
பொன்னின் மா மணி யார மணியாகத் திலங்கு மால் –பெரியாழ்வார் திருமொழி -8-1-3–என்றும்
சொல்லுகிறபடியே விளங்கா நின்ற திருவாரம் –

கண்டிகா –
திருக் கழுத்திலே விளங்கா நின்ற முத்துத் திருக் கட்டு வடம் –

மணீந்த்ர –
அவன் தனக்கும் சதா ஸ்ப்ருஹணீ யமான ஸ்ரீ கௌஸ்துபம் –

காஞ்சீ குண –
திருவரையிலே விளங்கா நின்ற அரை நூல் பட்டிகை

நூபுர-
திருவடிகளைப் பற்றி விளங்கா நின்றுள்ள திருச் சிலம்பு –

ஆதி –
சப்தத்தாலே
பல பலவே ஆபரணம் -என்றும்
அபரிமித திவ்ய பூஷண – என்றும்
சொல்லுகிறபடியே
அசங்க்யாதம் என்கை –

ரதாங்க -சங்க அஸி கதா தநுர் வரை
இந்த ஆபரணங்களோடு விகல்ப்பிக்கலாம் படி
ஸோப அவஹமான திவ்ய ஆயுதங்களின்
சேர்த்தியை அனுபவிக்கிறார் –

லஸ்த் துளஸ்யா வனமாலய உஜ்ஜ்வலம்
சர்வ ஐஸ்வர்ய ஸூசகமாய் திருவடிகள் அளவும் தாழ்ந்து
அல்லித் துழாய் அலங்கல் -திருவாய்மொழி -7-9-10-
என்கிற வனமாலையால் விளங்கா நின்ற உன்னை
ஆபரண ஆயுதாதிகள் தன்னைப் பற்றி விளங்குகையும்
அவற்றாலே தான் விளங்குகையுமாக செல்லுகிறபடி-
ஸ்ரக் வஸ்த்ர ஆபரணைர் யுக்தம் ஸ்வரூபைர் அநு பூமி
சிந்மயை ஸ்வ பிரகாச சைஸ்ஸ அந்யோந்ய ருசி ரஞ்ஜகை –

——————————————————————-

ஸ்தோத்ரம் -37-அவதாரிகை –

மேலில் ஸ்லோக த்வயத்தாலே
பிராட்டியட்டைச் சேர்த்தியை அனுபவிக்கிறார் –
இதில் முதல் ஸ்லோகத்தாலே-
பிராட்டி உடைய மேன்மையையும்
இவள் பக்கல் ஈஸ்வரனுக்கு உண்டான
வ்யாமோஹத்தையும் அருளிச் செய்கிறார் –

சகரத்த யஸ்யா பவனம் புஜாந்தரம்
தவ ப்ரியம் தாம யதி யஜன்மபூ
ஜகத் சமஸ்தம் யத் அபாங்க சம்ச்ராயம்
யதர்த்த மம்போதிர மந்தய பந்தி ச–37-

சகரத்த யஸ்யா பவனம் புஜாந்தரம் தவ –
சர்வ யஜ்ஞமயம் வபு -என்கிற
திரு மார்பைப் பிராட்டிக்குக் கோயில் கட்டணமாகப்
பன்னி யருளிற்று-
யஸ்யா -என்கிறது இதில் உண்டான பிரமாண பிரசித்தியாலே-
சர்வ யஜ்ஞ்மயம் வபுரத் யாஸ்தே –
பஸ்யதாம் சர்வதேவா நாம் யயௌ வஷஸ்ஸ்தலம் ஹரே –
நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கை –
திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும் திகழ்கின்ற திரு மாலார் -திருவாய் மொழி -10-6-9
என் திருமகள் சேர் மார்பன் -திருவாய் மொழி -7-2-9-
மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் உறை மார்பினன் -திருவாய்மொழி -4-5-2-
அலர்மேல் மங்கை யுறை மார்பா -திருவாய்மொழி -610-10-
மார்வத்து மாலை -திருவாய்மொழி -10-10-2-
செய்யாள் திரு மார்பினில் சேர் திருமால் -திருவாய் மொழி -9-4-1-

தவ ப்ரியம் தாம யதி யஜன்மபூ –
யாவள் ஒருத்தி அவதரித்த திருப்பாற்கடல்
அயர்வறும் அமரர்கள் அதிபதியான தேவருக்கு இனிது அமரும் இடம் ஆயிற்று
ஸ்ரீ பூர்வமுத தே –தேவதா நவயத் நேன ப்ரஸூதாம்ருத மந்தனே -என்றும்
நேதா நீம் த்வத் ருதே ஸீதே ஸ்வர்க்க அபி மம ரோசதே

ஜகத் சமஸ்தம் யத் அபாங்க சம்ச்ராயம் –
அஸ்யேசா நா ஜகத –
ஈச்வரீம் சர்வ பூதா நாம்
தவம் மாதா சர்வ லோகா நாம் -என்கிறபடியே
இவ் உபய விபூதியும் யாவள் ஒருத்தி உடைய
மந்த கடாஷத்தைப் பற்றி உண்டாய் இருக்கிறது –

யதர்த்த மம்போதிர மந்தய பந்தி ச –
விண்ணவர் அமுது உண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமான் -பெரிய திருமொழி -6-1-2-
என்கிறபடியே யாவள் ஒருத்தியைப் பெறுகைக்கு கடல் கடைந்து அருளிற்று

அபந்தி ச
யாவள் ஒருத்தி உடைய பிரிவாற்றாமையாலே கடலை அசைத்து அருளிற்று
ஏஷ ஸே துர் மயா பத்தஸ் ஸா கரே ஸ லிலார்ணவே
தவ ஹேதோர் விசாலாஷி நள ஸே துஸ் ஸூ துஷ்கார-

(விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுதுண்ட எம்பெருமான் –
உன்மூல்யாஹர மந்தராத்ரி மஹிநா பலேக்ரஹிர் ஹி கமல ஆலாபேந சரவச்சிரம -)

———————————————————————————–

ஸ்தோத்ரம் -38-அவதாரிகை –

இதில் பிராட்டி உடைய நிரதிசய போக்யதையும்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை -திருவாய்மொழி -10-10-6-
என்கிறபடியே அவனுக்கேயாய் இருக்கிற இருப்பையும் -அனுபவிக்கிறார்

ஸ்வ வைஸ்வ ரூப்யேண் சதா அநு பூதா அப்
யா பூர்வவத் விஸ்மயம் ஆகததாநயா
குணேந ரூபேண விலாஸ சேஷ்டி தைஸ்
சதா தவை வோ சிதயா தவ ஸ்ரீ யா–38–

ஸ்வ வைஸ்வ ரூப்யேண் சதா அநு பூதா –
சர்வ சக்தியான தேவர்
சர்வ விக்ரஹத்தாலும்
சர்வ காலமும்
சர்வ பிரகாரத்தாலும்
அனுபவியா நின்றாலும்
பிராட்டியினுடைய போக்யதையைப் பரிச்சேதிக்கப் போகாது –
சௌபரியைப் போலே அநேக விக்ரஹத்தைப் பரிக்ரஹித்தாலும் முடியாது –
பர்யாயேண் பிரஸூப்தஸ் ச-என்கிறபடியே
பிரகாரங்கள் அநேகம் ஆனாலும் முடியாது

அபூர்வவத் விஸ்மய மாத தா நயா –
நித்ய அபூர்வம் போலே
ஆச்சர்ய அவஹமாய் இருக்கும்
ஸ ஏகதா பவது த்விதா பவதி -என்று
நித்ய ஸூரிகள் தன் திறத்தில் படுவது எல்லாம்
பிராட்டியைக் குறித்து தான் படும் -என்கை –
பண்டு இவரைக் கண்டு அறிவது எவ் ஊரில் -பெரிய திருமொழி -8-1-9- என்றும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் -திருவாய் மொழி -2-6-6- என்றும் ஆழ்வார்களும்
சதா பஸ்யந்தி -என்று நித்ய ஸூரிகளும்
நித்ய அபூர்வதையாலே தேவர் திறத்தில் படுமது எல்லாம்
தேவர் படும்படி இறே பிராட்டி போக்யதை இருப்பது –

உகப்பிப்பது எவ்வழியாலே என்னில்
குணேந ரூபேண விலாஸ சேஷ்டி தைஸ் –
வடிவு அழகாலும்
சீலாதி குணங்களாலும்
சக்ருத் த்வதா கார விலோக நாசயா -என்றும்
ஈர்க்கின்ற குணங்களை யுடையாய் -திருவாய் மொழி -8-1-8–இப்படி குணங்களாலும்
உன் செய்கை நைவிக்கும் –5-10-2- என்கிற சேஷ்டிதங்களாலும்
அபியுக்தர் ஆழம் கால் படும்படி இருக்கும் இறே அவன்
இப்படி இவள் ஸ்வரூபாதிகளிலே அழுந்துகிறான்
அவன் ஸ்வரூபத்தாலே அபரிச்சின்னன்
இவள் போக்யதையாலே அபரிச்சின்னை

சதா தவை வோ சிதயா –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் -என்றும்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை -என்றும் சொல்லுகிறபடியே
தேவர் தமக்குத் தகுதியாய் இருக்குமவள் –

சதா
என்று பர வ்யூஹ விபவ ரூபேண உண்டான சர்வ அவஸ்தை களிலும் என்கிறது
குனேன ரூபேண விலாஸ சேஷ்டிதைஸ் சதா தவை வோ சிதயா -என்னவுமாம்

தவ ஸ்ரீ யா
விஷ்ணோ ஸ்ரீ -என்றும்
உன் திரு -10-10-2- என்றும்-சொல்லுகிறபடியே
அனன்யார்ஹை என்னுதல்
தேவர்க்கு சம்பத்தாய் இருக்கும் என்னுதல்-

(தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் தாள்கள் ஆயிரத்தாய் –
கொண்டு அனுபவித்தாலும்
அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதாகும் விலக்ஷண வஸ்து –
உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவைக்கு-பாசுரம் படியே —
தவைவ உசிதயா -தவச்ரியா -அநந்யார்ஹத்வம் )

—————————————————————————-

ஸ்தோத்ரம் -39-அவதாரிகை –

பர்யங்க விதையில் சொல்லுகிறபடியே
திரு வநந்த ஆழ்வான் -மடியிலே
பிராட்டியோடே எழுந்து அருளி இருக்கிற
சேர்த்தியை -அனுபவிக்கிறார் –

தயா ஸஹா ஸீ நம நந்த போகி நி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பலை கதா மநி
பணா மணி வ்ராதம யூக மண்டல
பிரகாஸ மாநோத ரதி வ்யதா மநி–39-

தயா ஸஹா ஸீ நம –
ஸ்ரீ யா ஸார்த்தம் ஜகத் பதி ராஸ்தே -என்கிறபடியே
நித்ய விபூதியில் மிதுனமாய் இருந்து இறே அடிமை கொள்வது
அவதாரத்திலும் -பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா-என்னக் கடவது இறே –

அநந்த போகி நி-
ஸ்ரீய பதித்வத்தால் வந்த உத்கர்ஷத்தோ பாதி இறே
இவனோட்டைச் சேர்த்தியும் –
கந்தர்வாப்ஸ ரஸ்ஸ் சித்தாஸ் ஸ கின்னர மஹோ ரகா
நாந்தம் குணா நாம் கச்சந்தி தேனா நந்தோ அயமுச்யதே-
என்கிறபடியே குண அநந்யத்தாலே -அநந்தன்-என்ன கடவது இறே
ஈஸ்வரன் ரஷணத்திலே அசங்க்யாத குணன் –
இவன் கைங்கர்யார்த்தமாக அசங்க்யாத குணன் –

போகிநி –
மென்மை குளிர்ச்சி நாற்றம் இவற்றை
ஸ்வபாவமாக உடைய திரு மேனியிலே –
போகம் -சரீரம் –

ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பலை கதா மநி-
இருவருமாய்ப் பரிமாறும் போது
அவர்களுக்கும் படியான -ஒப்பான -ஜ்ஞான சக்த்யாதி களுக்கு
ஆஸ்ரயமாய் இருக்குமவன் –
ஒருத்தன் என்று அவனுக்குக் கூச வேண்டாதே
துகைத்துப் பரிமாறலாம் படியான
தாரண சாமர்த்தியத்துக்கு ஆஸ்ரயமாய் இருக்குமவன் –

பணா மணி வ்ராதம யூக மண்டலபிரகாஸ மாநோத ரதி வ்யதா மநி-
தன்னுடைய பணா மணி சமூஹங்களின் உடைய
ரஸ்மி மண்டலங்களினாலே
பிரகாசியா நின்ற மத்யத்தை யுடைய
திவ்ய அந்தப்புரத்தை உடையவன்
மணி விளக்காம் -முதல் திருவந்தாதி -53 என்கிறபடியே
திவ்ய அந்தப்புரத்துக்கு மங்கள தீபமாய் இறே இருப்பது –

———————————————————————————

ஸ்தோத்ரம் -40-அவதாரிகை –

திரு வனந்த ஆழ்வான் உடைய வ்ருத்தி விசேஷங்களை
அனுபவிக்கிறார் –
தமக்கு அடிமையில் உண்டான த்வரையாலே
உபமாநம சேஷாணாம் ஸாது நாம் -என்னும் ந்யாயத்தாலே
அடிமையில் ருசி யுடையார்க்கு எல்லாம்
உதாஹரண பூதமாய் இறே திரு வநந்த ஆழ்வான் உடைய
வ்ருத்தி விசேஷங்கள் இருப்பது
இவன் உடைய காஷ்டையை அருளிச் செய்கிறார் –

நிவாஸ ஸய்யா ஆஸன பாதுகா அமஸூக
உப தான வர்ஷா தபவாரணாதிபி
சரீர பேதைஸ் தவ சேஷதாம் கதைர்
யதோ சிதம் சேஷ இதீரிதே ஜனை–40-

நிவாஸ –
எழுந்து அருளி இருக்கிற திரு மாளிகையாம்

ஸய்யா-
கண் வளர்ந்து அருளுகைக்குப் படுக்கையாம்

ஆஸன –
இருந்தால் சிங்காசனமாம் -முதல் திருவந்தாதி -53-

பாதுகா –
நின்றால் மரவடியாம் –

அமஸூக –
பும்ஸ்த்வ அவஹமான திருப் பரியட்டமாம் –

உப தான –
புல்கும் அணையாம் –

வர்ஷா தபவாரணாதிபி –
சென்றால் குடையாம் -என்கிறபடியே
வர்ஷத்துக்கும் ஆதபத்துக்கும் சத்ரமாம் –

ஆதி சப்தத்தாலே
அடிமையில் அபி நிவேச அநு ரூபமாக சரீரத்துக்கு தொகை இல்லை –
ஸ ஏக்தா பவதி -என்று தொடங்கி சஹஸ்ரதா பவதி -என்னக் கடவது இறே –

சரீர பேதைஸ் –
கைங்கர்ய பேதமே சரீர பேதத்துக்கு ஹேது –

தவ சேஷதாம் கதை –
தேவரீர் உடைய விக்ரஹங்கள் ரஷண ஹேதுவாய் இருக்கிறாப் போலே
இவனுடைய விக்ரஹங்கள் சேஷத்வத்தை அடைந்து இருக்கும் என்கை –
யதோ சிதம் –
யதா யதார் ஹி கௌசல்யா -என்கிறபடியே
தத் தத் கால உசிதமாய் இருக்காய்

சேஷ இதீரிதே ஜனை –
சிறியார் பெரியார் என்னாதே
சர்வராலும் சேஷம் என்று சொல்லப் படுகை –
சேஷத்வம் தான் ஒரு வடிவு கொண்டாப் போலே இருக்கை
ஜனை
பெருமக்கள் உள்ளவர் -திருவாய் மொழி -3-7-5-என்கிறபடியே
நித்ய சித்தரைச் சொல்லவுமாம்-
பரகத அதிசய அதான இச்சா உபாதேயதவ மேவ யஸ்ய ஸ்வரூபம் ஸ சேஷ -பரஸ் சேஷி –
என்கிற சேஷத்வத்தின் படியே
பாரதந்த்ர்யம் பரே பும்சி -இத்யாதி –

(மன்னிய பல் பொறி சேர் ஆயிரவாய் வாள் அரவின் சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள் மன்னிய
நாகத்தணை மேல் -ஸ்ரீ பெரிய திருமடல் பாசுரம் படியே – பணா மணிவ்ராத-
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும் புணையாம் அணி விளக்காம்
பூம் பட்டாம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு -முதல் திருவந்தாதி பாசுரம் அடி ஒற்றியே இந்த ஸ்லோகம் –
வர்ஷாத பவாரண–வெய்யில் மழை இரண்டாலும் காக்கும் குடை என்றவாறு -)

——————————————————————————

ஸ்தோத்ரம் -41- அவதாரிகை-

இதில் வாகன த்வஜாதி
சர்வ வ்ருத்திகளையும் உடையவனாய்
ஈஸ்வரனுக்கு -மோம் பழம்-மோந்து கொண்டு இருக்கிற பழம் -போலே
சதா விரும்பும்படி அபிமதனாய் இருக்கிற
பெரிய திருவடி யோட்டைச் சேர்த்தியை அனுபவிக்கிறார்

தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸனம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜனம் த்ரயீமய
உபஸ்திதம் தேன புரோ கருத்மதா
த்வத் அங்க்ரி சம்மர்த்த கிண அங்க ஸோபிநா–41

தாஸஸ் –
தன்னுடைய வியாபாரங்கள் அடங்க
ஈஸ்வரனுக்கு அதிசயத்தை விளைக்குமவையாய் இருக்கும்

ஸகா –
ஜகத் வியாபாரங்களில் ஈஸ்வரன் தன்னோடு உசாவ வேண்டும்படியான
பெருமையை உடையவன்

வாஹநம் –
ஆஸ்ரிதர் உடைய ஆபத்துக்களிலே
ஈஸ்வரனைக் கொடு வந்து சேர்க்குமவனாய் இருக்கை –

ஆஸனம் –
ஒரு கார்யம் இல்லாத போது ஸிம்ஹாசனஸ்தனாய்
இருந்தாலோபாதி தன் மேன்மைக்கு சத்ருஸ்ம்
என்னும்படி சிம்ஹாசனமாய் இருக்கை –

த்வஜோ-
ஈஸ்வரன் கிட்டுவதற்கு முன்னே
எழுந்து அருளி நின்றான் என்று ஆஸ்ரிதர்க்கு ப்ரீதி
ஹேதுவான கொடியானவன் –
அவனுடைய ரஷகத்வத்துக்கு ஹேது வானவன் -என்றுமாம்
பொன் மலையின் மீமிசைக் கார்முகில் போலே -திருவாய் மொழி -9-2-6–என்றும்
புள்ளூர் கொடியான் -திருவாய்மொழி -3-8-1-என்றும்
உண்டான பிரசித்தியைச் சொல்லுகிறது

யஸ்தே விதாநம் –
வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவான் -நாச்சியார் திருமொழி -14-3-
என்கிறபடியே ஆதப நிவாரணமாய் இருக்கை
கருடஞ்ச ததர் ஸோச்சைரந்தர்த்தா நக்தம் த்விஜ
க்ருதச்சாயம் ஹரேர் மூர்த்னி பஷாப் யாம் பஷி புங்கவம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-12-4-இதி பராசர –

வ்யஜனம் –
தன்னை மேற்கொண்டு போம் போது
சாமரங்கள் போலே திருச் சிறகாலே ஆஸ்வாஸ்கனாய் இருக்கை –

த்ரயீமய-
ஸூபர்னோ அஸீ கருத்மான் த்ரிவ்ருத் தே ஸிர காயத்ரம் சஷூ -என்கிறபடியே
வேதங்களை அவயவங்களாக உடையனாய் இருக்கை –
அவயவார்த்தே மயட் -ஈஸ்வரன் வேத பிரதிபாத்யன் -இவன் வேத சரீரன் –

உபஸ்திதம் தேன புரோ கருத்மதா –
சர்வேஸ்வரன் தன்னை பிரகாசிப்பிக்கும் நிலைக் கண்ணாடி போலேயும்
மோம் பழம் போலேயும்
திரு முன்பே சர்வதா சந்நிஹிதனாய் உள்ளவனை –

த்வத் அங்க்ரி சம்மர்த்த கிண அங்க ஸோபிநா –
தன்னை மேற்கொண்டால் திருவடிகளால் நெருக்கின தழும்பு
தனக்கு போக சிஹ்னம் ஆகையாலே -அத்தாலே விளங்கா நிற்குமவன் –
ஈஸ்வரனுக்கு ஸ்ரீ கௌஸ்துபம் லஷணம் ஆனால் போலே
இவனுக்கும் அது தாஸ்ய சிஹ்னமாய் இருக்கும்-

(ஸூபர்னோஸி கருத்மான் த்ரி வ்ருத்தே சிர–தைத்ரியம் -வேதாத்மா விஹகேஸ்வர -சதுஸ் ஸ்லோகி
ஹூங்காராஸ் பாலநாங்க்ரி ப்ரஹதிபிரபி தம் தார்ஷ்யமத்யஷி பஸ்த்வம் –தழும்பு அலங்காரம் உண்டே
விதானம் -மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவானை -)

————————————————————————————-

ஸ்தோத்ரம் -42-அவதாரிகை –

உபய விபூதி விஷயமான
தன்னுடைய சர்வ பரத்தையும் இவன் பக்கலிலே வைத்து
இவன் இட்ட வழக்காய் இருக்கிற
ஸ்ரீ சேநாபதி யாழ்வான் உடைய தாஸ்ய சாம்ராஜ்யத்தை
அனுபவிக்கிறார் –

த்வதீய புக்த உஜ்ஜீத சேஷ போஜிநா
த்வயா நிச் ருஷ்டாத்ம பரேண யத் யதா
பிரியேண  சேநாபதிநா ந்யவேதி தத்
ததா அநு ஜாநந்த முதார வீஷணை–42-

த்வதீய புக்த உஜ்ஜீத –
தேவர் அமுது செய்து கை வாங்கின ப்ரசாதத்தாலே
தரிக்குமவராய் இருக்கை –
த்வதீய -என்கையாலே வகுத்த ஸ்வாமி உடைய சேஷமே போஜ்யம் -என்கிறது –
யதுச் சிஷ்டம் போஜ்யம் -யத் வா துஸ் சரிதம் மம சர்வம் புநந்து மாமாய -என்கையாலே
அல்லாதார் உடைய உச்சிஷ்டம் அபோஜ்யம் -என்கை –
புக்த உஜ்ஜிதம் -என்கையாலே
கலத்ததுண்டு -திருப் பல்லாண்டு -9- என்கிறபடியே
அமுது செய்து கை வாங்கின பின்பு அற்றையதே போஜ்யம் –
முன்பு பாத்திர சேஷமே அபோஜ்யம் என்கிறது –

சேஷ போஜிநா –
தனக்கு தாரகமாய் இருக்கும் அளவு அன்றிக்கே
ரஸான் பக்தஸ்ய ஜிஹ்வாயாம் -என்கிறபடியே ஈஸ்வரனுக்கு போக்யமாவதும்
ஆழ்வார் அமுது செய்தால் -என்கை –

த்வயா நிச் ருஷ்டாத்ம பரேண –
நம்மிலும் பெரியவன்-சமர்த்தன் என்று தேவராலே
தன் பக்கலிலே வைக்கப் பட்ட
உபய விபூதி ரூபமான பரத்தை உடையவனாலே-

பிரியேண –
சர்வ அபிமதன் ஆனவனாலே-

சேநாபதிநா –
சர்வ சேநா நிர்வாஹகனாலே –
அசைவில் அமரர் தலைவர் தலைவா -திருவாய் -5-8-9-என்னக் கடவது இறே

யத் யதா ந்யவேதி –
யாதொரு கார்யம் யாதொருபடி விண்ணப்பம் செய்யப் பட்டது
இதில் உள்மானம் புறமானம் பார்ப்பது இல்லை –
செய்யும் பிரகாரங்களும் அனுசந்திப்பதும் இல்லை
ஈஸ்வரன் இவன் உக்தியைப் பின் செல்லும் இத்தனை –

தத் -ததா அநு ஜாநந்த முதார வீஷணை –
அவலோக நாதா நேன பூயோ மாம் பாலயாச்யுத -என்றும்
உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் -பெரிய திருமொழி -7-1-9-என்றும்
சொல்லுகிறபடியே
அநவதிக தயா சௌஹார்த்த அநு ராக கர்ப்பமான இக் கடாஷங்களாலே யாயிற்று –
இவன் இப்படிச் செய்வது -என்று நினைப்பிடுவது –

ததா அநு ஜாநந்தம் –
ஐயராலே யாதொரு விண்ணப்பம் செய்யப் பட்டதோ அது அப்படியே -என்று
பாசுரப் பரப்பற நியமித்து அருளுவது –

(சேஷாசனர் –இதுவே நிரூபகம் ஸ்ரீ விஷ்வக் சேனர்-
பர தத்வம் ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் பிரம்பின் கீழே வளரும் -விசேஷித்து இங்கு – ப்ரியேண் )

————————————————————————————–

ஸ்தோத்ரம் -43-அவதாரிகை –

சதா பஸ்யந்தி ஸூரய-இத்யாதிகளில் சொல்லுகிற
நித்ய ஸூரிகளுடைய தாஸ்யைக
சம்ருத்தியை அனுபவிக்கிறார் –
அடியார்கள் குழாம்களை –உடன் கூடுவது என்று கொலோ -திருவாய் -2-3-10-என்று இறே
இவர் பிரார்த்தனை-

ஹத அகில க்லேஸ் மலை ஸ்வ பாவாத
ஸ்தா ஆநு கூல்யை கரசைஸ் தவ உசித
க்ருஹீத தத் தத் பரிசார சாதநை
நிஷேவ்ய மாணம் ஸ சிவைர் யதோ சிதம்–43-

ஹத அகில க்லேஸ் மலை –
அவித்யா அஸ்மித அபி நிவேச ராக த்வேஷா பஞ்ச க்லேசா-என்கிறவை க்லேசங்கள் –
அவற்றின் உடைய -ப்ராகபாவம் -முன் எப்பொழுதும் இல்லாது இருத்தல் –
உடையவர்கள் -என்கை –
மலம் என்று ப்ரக்ருதியாய் தத் சம்சர்க்க அனர்ஹதயா வந்த ப்ராக பாவத்தை
உடையவர்கள் -என்கை
இத்தால் பிரபுத்த ஸ்வ பாவ யுக்தரான முக்த வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது –

ஸ்வ பாவாத ஸ்தா ஆநு கூல்யை கரசைஸ் –
சத்தா பிரயுக்தமாக
தேவர் திருவடிகளில் கைங்கர்யத்தையே போக்யமாக உடையராய் இருக்கை –
இத்தாலும் ஒரு நாள் தொடங்கி அடிமை செய்யத் தொடங்கின முக்த வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது –

தவ உசித –
ஸ்வரூப ரூப குணங்களாலே தேவருக்கு
சத்ருச லஷண ரானவர்கள் –

க்ருஹீத தத் தத் பரிசார சாதநை -நிஷேவ்ய மாணம் –
கைங்கர்ய உசித பரிகரங்களை ஆதர அதிசயத்தாலே விட மாட்டாமையாலே
சூட்டு நன் மாலை -திரு விருத்தம் -21-படியே தரித்து இருக்கையாலே
தேவர்க்கே சத்ருசர் ஆனவர்களாலே சேவிக்கப் படா நின்று உள்ள உன்னை

ஸ சிவைர் –
வாத்சல்யத்தாலே அவன் முறை அழியப் பரிமாற்ற நினைத்தாலும்
அவனை முறை உணர்த்தி அடிமை செய்யுமவர்கள்
நீதி வானவர் -அமலனாதி -1- இ றே
ஆஸ்ரித ரஷணத்தில் தேவரை பிரேரிக்கும் அவர்கள் இறே

யதோ சிதம் –
ஸ்வரூப அநு ரூபமாக என்னுதல் –
அவஸ்ரோசிதமாக-என்னுதல்-

(யாதோசிதம் நிஷேவ்ய மாணம் –அவரவர்கள் அதிகாரத்துக்கு தக்கபடியும் –
அவன் திரு உள்ளத்துக்கு தக்கபடியும் -சமயங்களுக்கு தக்க படியும் கைங்கர்யம் )

——————————————————————————–

ஸ்தோத்ரம் -44-அவதாரிகை –

பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிசா அநு ஷூ ரம்ஸ்யதே – –
என்கிறபடியே
பிராட்டியை நாநா ரசங்களாலே
உகப்பிக்கும் படியை அனுபவிக்க வேண்டும்-என்கிறார்

அபூர்வ நாநா ரஸ்பாவ நிர்ப்பர
ப்ரபத்தயா முக்த விதக்த லீலயா
ஷணாணுவத் ஷிப்த பராதி காலயா
ப்ரஹர்ஷ யந்தம் மஹி ஷீம் மஹா புஜம் –44-

அபூர்வ –
பிரதி ஷணமும் முன்பு கண்டு அறியாதது போலே இருக்கை –

நாநா ரஸ்பாவ நிர்ப்பர-
பஹூ முகமான ரசத்தாலும்
பாவத்தாலும் நெருங்கும் படி –

ப்ரபத்தயா-
ஸ்ம்பத்தயா-
ரசமாவது -சேதனர் யாதொன்றை
அனுசந்தியா நின்றாலும்
யேன மாத யதி-என்கிறபடியே மதியா நிற்பார்
அது இறே ரசம்
அதுக்கு அடி பாவம்
மானச விகாசம் –

முக்த விதக்த லீலயா –
அவ்வோ தச அநு குணமாய்
முக்தமாயும் விதக்தமாயும்
உள்ள லீலையாலே –

ஷணாணுவத் ஷிப்த பராதி காலயா –
ஒரு ஷணத்தில் ஏக தேசம் போலே
போக்கப் பட்ட பரகாலம்
பரார்த்த காலம் இவற்றை உடைத்தாய் இருக்கும் அதனாலே
பரகாலம் ஆகிறது -ப்ரஹ்மா ஆயுஸ்ஸூ
பரார்த்த காலம் ஆகிறது -அதில் சம பாதி

ப்ரஹர்ஷ யந்தம் மஹிஷீம் –
யஸ் த்வ்யா சஹ ஸ ச்வர்க்கோ நிரயோ யஸ் த்வ்யா விநா -என்றும் –
த்வத் வியோ கே ந மே ராம த்யக்தவ்ய மிஹ ஜீவிதம் -என்றும்
சர்வதா தேன ஹீநாயா ராமேண் விதிதாத்மநா
தீ ஷணம் விஷமி வாஸ் வாத்ய துர்லபம் மம ஜீவிதம் -என்றும்
அகலகில்லேன் இறையும் -என்கிறபடியே
வ்யதிரேகத்தில் ஆற்ற முடியாத பிராட்டியை மிகவும் உகப்பியா நின்று உள்ளவனை
ப்ரஹர்ஷ யந்தம் -என்கையாலே
இவ் உகப்பு நித்யம் -என்கை –

மஹா புஜம் –
கீழ் சொன்ன லீலா ரசத்தாலே உகப்பிக்கும் அவனோபாதி யன்று
அணி மானத் தட வரைத் தோளாலே -திருவாய் -4-8-2- அணைத்து உகப்பிக்கும்
என்றும் ஸ்வரூப குணங்களைக் காட்டில்
ரூப குணம் இறே இனிதாய் இருப்பது –

(கீழே பிராட்டியுடைய சேர்த்தி அழகை அனுபவித்து இதில் பிராட்டியை உகப்பிக்கும் பரிசு —
சமரசனாய் இருக்கும்படியை அருளிச் செய்கிறார் –
பிரமனுடைய ஆயுள் காலமும் சிறிய நொடிப் பொழுது போலே தோன்றுமே இந்த லீலா ரசத்தால்
அவிதித கதயாமா ராத்ரிரேவ வயரம்ஸீத-உத்தர ஸ்ரீ ராமாயணம் -)

——————————————————————————-

ஸ்தோத்ரம் -45-அவதாரிகை –

இப்படிப் பிராட்டியை உகப்பிக்கிற
ரச பாவங்களுக்கு ஆஸ்ரயமான
வடிவையும் குணங்களையும்
அனுசந்திக்கிறார்

அசிந்த்ய திவ்ய அத்புத நித்ய யௌவன
ஸ்வ பாவ லாவண்யமய அம்ருதோதிதம்
ஸ்ரீய ஸ்ரீயம் பக்த ஜனைக ஜீவிதம்
ஸ்மர்த்த மாபத்ஸ்க மர்த்தி கல்பகம்-45-

அசிந்த்ய –
விக்ரஹ குணங்கள் உடைய அவாங் மனஸ் அகோசரத்வத்தை
சொல்லுகிறது
ஸ்வரூபத்தையும் குணத்தையும் பரிச்சேதிக்கிலும்
வடிவில் போக்யதை பரிச்சேதிக்க ஒண்ணாது -என்கை
இச்சா க்ருஹீ தாபி மதோரு தேக –

திவ்ய-
ந பூத சங்க சம்ச்தானோ தேஹோச்ய பரமாத்மன -என்கிறபடியே
அப்ராக்ருதமாய் இருக்கை –

அத்புத –
க்ருஹீ தாமசம் ஆச்சர்யமாய் இருக்கை
முழுசி வண்டாடிய தண் துழாயின் மொய்ம் மலர்க் கண்ணி -என்கிறபடியே இருக்கை –
நித்ய –
அகால கால்யத்வத்தைச் சொல்கிறது

யௌவன -ஸ்வ பாவ
யுவா குமார -என்கிறபடியே -இருக்கை –
தருநௌ ரூப சம்மன்ன நௌ -என்கிற படி
ஸ்வா பாவிகமான யௌ வனத்தை உடைத்தாய் இருக்கை –

லாவண்யமய –
பிரசுரமான சாமான்ய சோபையை உடைத்தாய் இருக்கை –

அம்ருதோதிதம்-
சர்வ பிரகார போக்யதையாலே
அப்ரமேயோ மஹோததி -என்கிறபடியே
பரிச்சேதிக்கபோகாமைக்கு ஒரு சமுத்ரம் என்கை

ஸ்ரீய ஸ்ரீயம் –
திருவுக்கும் திருவாகிய செல்வன் -பெரிய திருமொழி -7-7-1- என்கிறபடியே
பிராட்டிக்கும் மங்கள அவஹனாய் இருக்குமவனை

பக்த ஜனைக ஜீவிதம் –
எல்லாம் கண்ணன் -6-7-1- என்கிறபடியே ஆஸ்ரிதர்க்கு தாரகாராதிகள் தானேயாய் இருக்குமவனை
பக்த ஜனங்களையே தனக்கு தாரகமாய் உடையவன் -என்றுமாம் –
மம ப்ராணா ஹி பாண்டவா –

ஸ்மர்த்தம் –
அளவுடையரான நித்ய சூரிகளை அனுபவிக்குமவனை –
நித்ய சூரிகள் அனுபவிக்கும்படி
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை -4-5-5- என்கிறபடியே
சாத்மிக்க சாத் மிக்க அனுபவிப்பிக்கும் சாமர்த்தியத்தை உடைய உன்னை

ஆபத்ஸ்கம்-
காண வாராய் என்று கண்ணும் வாயும் துவர்ந்த அளவிலே -8-5-2-
உதவும் ஸ்வ பாவனான உன்னை –

அரத்தி கல்பகம் –
என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -2-7-11-
என்கிறபடியே தன்னை ஔதார்யம் பண்ணுமவனை-

(கீழே தனித் தனியே பிரஸ்தாபிக்கப் பட்ட திவ்ய மங்கள விக்ரஹ குணம் -திவ்யாத்ம குணம் –
எல்லாவற்றையும் சேர்த்து அனுபவிக்கிறார் இதில் –
திருவுக்கும் திருவாகிய செல்வன் -சகலவித ஜீவனம் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை
எல்லாம் கண்ணன் –சாத்மிக்க போக ப்ரதன் –
அடியேனை அனுபவிக்கப்ப் பண்ணுவது என்றோ -என்று கீழ் உடன் அன்வயம் )

————————————————————————

ஸ்தோத்ரம் -46-அவதாரிகை –

கீழ் சொன்ன ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே
பூர்ணனாய்
நித்ய விபூதியிலே குறைவற எழுந்து அருளி இருக்கிற தேவரை
பாஹ்ய மநோ ரதங்களைத் தவிர்ந்து
என்னுடைய சததையால் உள்ள பிரயோஜனம் பெறும்படி
நித்ய கைங்கர்யத்திலே உகப்பிப்பது -என்று – என்கிறார் –

பவந்தமேவா நுசரன் நிரந்தரம்
ப்ரசாந்த நிஸ் சேஷ மநோ ரதாந்த்ர
கதா அஹ மை காந்திக நித்ய கிங்கர
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித–46-

பவந்தம்
ஸ்வரூப ரூப குண விபவை-பரி பூர்ணம்
இன்பம் பயக்க -7-10-1-என்று தொடங்கி
ஆள்கின்ற எங்கள் பிரான் -என்கிற பூர்த்தியைச் சொல்லுகிறது –

ஏவ-
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -2-9-4- என்கிறபடியே
அநுகூல வருத்தி தேவருக்கே அனுகூலமாய் இருக்கை –

அநுசரன்-
யேன யேன தாத்தா கச்சதி
ஏதமாநந்த மயமாத்மா நமுப சங்க க்ரமய –
அநு சஞ்சரன் –
குருஷ்வ மாமு நுசரம் -என்கிறபடியே
அநு வர்த்தனத்தை யுடையனாய்

நிரந்தரம் –
இடைவிடாதே இருக்கை –

ப்ரசாந்த நிஸ் சேஷ மநோ ரதாந்த்ர –
மற்றை நம் காமங்கள் மாற்று -என்று
தேவரை ஒழிந்த விஷயங்களில் மநோ வியாபாரங்களை ஸூ வாசனமாக தவிர்ந்து

கதா –
என்று கொள் கண்கள் காண்பது -3-6-10-
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவன் -3-2-1-என்னும்படியே
காலத்துக்கு எல்லை அருளிச் செய்ய வேணும் –

அஹம் –
ருசியேயாய்
இத்தலையால் உபாயம் இல்லாத நான் –

ஐகாந்திக நித்ய கிங்கர –
ஏக ரூபமாய்
யாவதாத்மபாவியான
கைங்கர்யத்தை நிரூபகமாக உடையனாய் –

ஸநாத ஜீவித –
சநாதமான சத்தையை உடையனாய்
என் சத்தையை ஸ பிரயோஜனமாக்கி -என்கை –

ப்ரஹர்ஷயிஷ்யாமி –
மிகவும் உகப்பிக்கக் கடவேன் –
தன்னுடைய அநு வ்ருத்தியால் ஈஸ்வரனுக்குப்
பிறந்த ப்ரஹர்ஷம் இறே
சேதனனுக்கு பிராப்யம் –

(நிரந்தரம் அநு சரன் -சென்றால் குடையாம் இத்யாதி சகல வித கைங்கர்யங்களும்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் –
மற்றை நம் காமங்கள் மாற்று -ஐகாந்திக நித்ய கிங்கர –
சேதன லாபம் எம்பெருமானுக்கே புருஷார்த்தம் –
ப்ரஹர்ஷயிஷ்யாமி -எப்பொழுது உன்னை ஸந்துஷ்டனாக செய்யப் போகிறேன் என்றபடி -)

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்- ஸ்லோகம் -21-22-23-24-25-26-27-28-29-30—-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

February 4, 2014

ஸ்லோகம் -21-அவதாரிகை –

இதுக்கு கீழ்
ஈஸ்வரன் உடைய ஸ்வரூபத்தால் வந்த உத்கர்ஷத்துக்கும் –
உபய விபூதி யோகத்தால் வந்த ஐஸ்வர்யத்துக்கும் –
குண உத்கர்ஷத்தால் வந்த நீர்மைக்கும் –
தோற்று
ஜிதந்தே -என்னும் ஸ்வேத த்வீப வாசிகளை போலேயும்
நம புரஸ்தா தத ப்ருஷ்ட்ட தஸ்தே -என்ற அர்ஜுனன் போலேயும்
யாருமோர் நிலைமையன் -என்ற ஆழ்வாரைப் போலேயும்
சரண்யன் உடைய பெருமையை அனுசந்திக்கிறார் –
இதுக்கு முன்பு
பிராப்ய ஸ்வரூபம் சொல்லிற்றே
இதில் ப்ராப்தாவின் ஸ்வரூபம் சொல்லுகிறது -என்றுமாம்-
கீழ் சரண்ய ஸ்வரூபம் சொல்லிற்றாய்
மேல் சொல்லப் படுகிற சரணாகதியை -இதில் ப்ரஸ்தாபிக்கிறார் -என்றுமாம் –

நமோ நமோ வாங் மனஸாதி பூமயே
நமோ நமோ வாங் மனசைக பூமயே
நமோ நமோ அநந்த மஹா விபூதயே
நமோ நமோ அநந்த தயைக சிந்தவே—-21-

நமோ நமோ வாங் மனஸாதி பூமயே-
வாங் மனஸாதி பூமயே-நமோ நம-
எத்தனை யேனும் ஜ்ஞாநாதி கரும் ஸ்வ யத்னத்தால்
அறியப் புக்கால் அவர்களுக்கு
வாங் மனஸஸூக்களுக்கு அபூமியாய் இருக்கிற உனக்கு
எதோ வாசோ நிவர்த்தந்தே
யன்நாயம் பகவான் ப்ரஹ்மா ஜாநாதி புருஷோத்தமம் –

நம –
என்று அஹங்காரம் இல்லாத ஸ்வரூபத்தை சொல்லுகிறது –
அநாத்மன் யாத்மபுத்தி –
அஹமபி ந மம -இத்யாரப்ய
இத்யேவ மமமதாம் யோஜயதயதோ நம இதி –
த்வய ஷரஸ்து பவேன் ம்ருத்யுஸ் த்ரய ஷரம் ப்ரஹ்மண பதம் -இத்யாதி
நமஸ் சப்தம் பர்யாயம் ஆகையாலே சரணா கதியை பிரஸ்தாபிக்கிறது ஆகவுமாம்
வீப்சையாலே அந்த ஸ்வ பாவத்துக்குத் தோற்று அருளிச் செய்கிறார் –
சகருத்தே நம த்விச்தே நம இத்யாராப்ய
சஹச்ரக்ருத் வஸதே நம அபரிமிதக்ருத் வஸதே நம இத்யாதி

நமோ நமோ வாங் மனசைக பூமயே
வாங் மனசைக பூமயே -நமோ நம –
நீ காட்டக் காண்பார் உடைய வாங் மனஸ் ஸூக்களுக்கு
நிலமாய் இருக்கிற உனக்கு –
பவந்தி பாவா பூதா நாம் மத்த ஏவ ப்ருத கவிதா -ஸ்ரீ கீதை -10-5- -இத்யாதி

நமோ நமோ அநந்த மஹா விபூதயே –
அநந்த மஹா விபூதயே -நமோ நம —
அபரிச்சேத்ய
உபய மஹா விபூதிகனாய் இருக்கிற உனக்கு
வாங் மனஸ் ஸூக்களுக்கு அபூமியாகைக்கு அடி
அபரிச்சேத்ய மஹா விபூதிமானாய் இருக்கை –

நமோ நமோ அநந்த தயைக சிந்தவே –
அநந்த தயைக சிந்தவே -நமோ நம —
உன்னை வாங் மனஸ் ஸூக்களுக்கு ஏக பூமியாம் படி
பண்ணும் அபரிச்சேத்ய
தயைக்கு ஒரு சிந்துவாய் இருக்கிற உனக்கு –
யதி சகநோஷி கச்ச தவம் -என்று
சர்வ சக்தியை ஓர் இடைச்சி பரிச்சேதிக்கலாம்
படி இறே கிருபையினுடைய நிரவதிகத்வம் –

(தயா -என்றது வாத்சல்யம் -ஸுசீல்யம் -ஸுலப்யம் -இத்யாதிகளுக்கும் உப லக்ஷணம் –
ஏக கிருஷ்ண நமஸ்காரோ முக்தி தீரஸ்ய தேசிக -ஒரு முறை நமஸ்கரித்தாலே முக்தி கிட்டும் –
பராசம்சாயாம் ப்ரதிஞ்ஞாயாம் ப்ரலாபே தர்ஜ நேபிச பயேச விஜயே சைவ பவ்நம் புன்யம் அலங்க்ருதி -என்றபடி
அச்சம் தோற்ற மீண்டும் மீண்டும் நமஸ்காரம் -பாம்பு பாம்பு பாம்பு என்று ஒரே பாம்பை கண்டு சொல்வது போலே
தண்டவத் நிபபாத -தண்டம் விழுந்தால் தானே எழாதே –
கணக்கு எண்ணி சேவிப்பதை விட்டு -பக்தி பாரவசயத்தாலே -மெய் மறந்து விழுவது எழுவதாக
அத்யந்த பக்தி யுக்தானாம் ந சாஸ்திரம் நைவ ச க்ரம–)

—————————————————————-

ஸ்லோகம் -22-அவதாரிகை –

தம்முடைய அதிகாரத்தைச் சொல்லிக் கொண்டு
பிரஸ்துதமான ப்ரபத்தியை ப்ரயோகிக்கிறார்-
கீழ்ச் சொன்ன உபேய அனுகூலமான
உபாயத்தை அனுஷ்டிக்கிறது -என்றுமாம் –
கீழ் -த்வாம் சீல -உல்லன்கித -என்கிற இடத்தில்
துஷ் பிரகிருதிகள் உன் பெருமையை அறியார்கள்
சத் பிரகிருதிகள் அறிவார்கள் -என்றார்
நமோ நம -என்கிற ஸ்லோகத்திலே
ஸ்வரூபத்தைப் பர தந்தரமாக உணர்ந்தவனுக்கே
இவ்விஷயம் ப்ராப்யம் ஆவது
ஸ்வ தந்த்ரனுக்கு பிராப்யம் அன்று -என்கிறது
ஆஸ்ரயிக்கும் இடத்தில்
ஸ்வ சக்தி கொண்டு விஷயம் அன்று
தன்னுடைய ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டுக் கொண்டு
ஆஸ்ரயிக்கும் விஷயம்-என்கிறார் –

ந தர்ம நிஷ்ட்டோஸ்மி ந சாத்ம வேதீ
ந பக்திமாம் ஸ்தவச சரணாரவிந்தே
அகிஞ்சநோ அநந்ய கதிஸ் சரண்ய
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே–22-

ந தர்ம நிஷ்ட்டோஸ்மி –
தார்மிகனாக என்கிறேன் அல்லேன்
தர்மத்தில் நிஷ்ட்டை உடையேன் அல்லேன்
சிலர் -தார்மிகன் -என்று நினைக்கைக்கும்
நானும் -எனக்கு நன்மை யுண்டு -என்று பிரமிக்கைக்கும்
தானே சில ப்ரவர்த்தியா நின்றான் ஆகில்
தானே செய்திடுக -என்று நீ கை விடுகைக்கும்
வேண்டுவது உண்டு இத்தனை –
உன் திருவடிகளை ப்ராபிக்கைக்கு ஹேதுவாக வேண்டும்படியான
ப்ரவ்ருத்தியில் நிஷ்டை இல்லை -என்கை –

ந சாத்ம வேதீ-
ஆத்ம தர்சனம் பண்ணிப் போருமவர்களைப் போலே
சொல்லி நிர்ப்பந்திகிறேன் அல்லேன் –
கர்ம யோகாநுஷ்டாநத்தாலே ஷீண பாபனானவனுக்கு
ஆத்மயாதாத்ம்ய தர்சனமாய் இருக்க
அது இல்லை என்ற போதே தத் சாத்தியமான ஜ்ஞானம் இல்லாமை
அர்த்த சித்தமாய் இருக்க -ஜ்ஞானம் இல்லை -என்கிறது –
பஹூ நாம் ஜன்ம நாமந்தே ஜ்ஞான வான் – என்று
ஜன்மாந்தர சம்ஸ் காரத்தாலே ஜ்ஞானம் பிறக்கலாம் இறே
என்னில் -அதுவும் இல்லை -என்கிறார் –

நபக்திமாம் ஸ்தவச சரணாரவிந்தே
இவ்வாத்மாவுக்கு நாதனாய் இருந்துள்ள
உன்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளில்
அனவரத பக்தியை உடையேன் அல்லேன் –
கர்ம ஜ்ஞானங்களை அங்கமாக வுடைத்தான பக்தி
அங்கம் தான் இல்லை -என்ற போதே இதுவும் இல்லை அன்றோ -என்னில்
பூர்வோக்த பிரகாரத்திலே ஜன்மாந்தர சம்ஸ்காரம் உதவி உண்டாகலாம் இறே
குளித்து மூன்று அனலை -திரு மாலை -15
நோற்ற நோன்பு -திருவாய் மொழி -5-7-1-
கறவைகள் பின் சென்று -திருப்பாவை -28-என்று

அகிஞ்சநோ –
என்று அனுதாபம் -என்ன
இவை உண்டாகைக்கு உறுப்பான ஆத்மகுணம் என்ன
அதிகாரி சக்தி வாஞ்சாதிகள்-என்ன
இவற்றை உடையேன் அல்லேன் –

அநந்ய கதிஸ் –
இப்படி நம்மைக் கிட்டுககைக்கு கைம்முதல் இல்லை யாகில்
புறம்பே ரஷகராய் இருப்பார் பக்கலிலே
போனாலோ -என்னில்
புறம்பு ஒரு புகல் இல்லை -என்னுதல் –
உன்னை விட்டு ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன் -திருவாய்மொழி -5-7-1-என்கிறபடியே
உன்னை ஒழியச் செல்லாது -என்னுதல்

சரண்ய
தன் பக்கல் முதல் இல்லாதார்க்கு
சரண வரண அர்ஹன் இறே
நிருபாதிக சரண்யர் ஆகையாலே ருசியே வேண்டுவது
தேவரைப் பெறுகைக்கு ஒரு கைம்முதல் வேண்டா விறே –

த்வத் பாத மூலம் –
தேவர் திருவடிகளை –
மூலம் என்றது சௌலப்யாதி குணங்களையும்
இதர அவயவங்களையும் ஒழிய
திருவடித் தாமரைகளை நினைக்கிறது

சரணம் ப்ரபத்யே
விரோதி நிவ்ருத்தி பூர்வகமான
கைங்கர்ய சித்திக்கு
உபாயமாக அத்யவசிக்கிறேன் –
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்ற தேவரீர் திருவடிகளே மூலம் –
உபாயே கருக ரஷித்ரோ-
அஹிர்புத்ன்ய சம்ஹிதையிலெ இதினுடைய ஸ்வரூபம் சொல்லுகிறது
அஹம் அஸ்ம் அபராதா நாம் ஆலய
ஸ்வ தாஸ்வதரே
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்

இந்த ஸ்லோகத்தாலே
அதிகாரி ஸ்வரூபமும்
சரணாகதி பிரயோகமும்
சொல்லிற்று –

(நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன்
குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை தன்னை ஒளித்திட்டேன் என் கண் இல்லை
நின் காணும் பக்தனும் அல்லேன்
புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே
இந்த ஸ்லோகம் -இவற்றை அனுசந்தித்திக் கொண்டே பகவத் சந்நிதிகளில் நாம் சேவிக்க வேண்டும் -)

————————————————————————–

ஸ்லோகம் -23- அவதாரிகை –

அனுகூலங்கள் இல்லை என்று வெறுக்க வேண்டா
உண்டான யோக்யதையையும் அழிக்க வற்றான
நிஷித்த அனுஷ்டானங்கள் இல்லை யாகில்
நன்மைகளை உண்டாக்கிப்
புருஷார்த்தத்தையும் தருகிறோம் -என்று
பகவத் அபிப்ராயமாக
பிரதிகூலங்களாலே பூரணன்-என்கிறார்

ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே
சஹஸ்ரசோ யன்ன மயா வ்யதாயி
ஸோ அஹம் விபாகா வஸ்ரே முகுந்த
க்ரந்தாமி ஸம்ப்ரத்ய கதிஸ் தவாக்ரே —23-

ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே சஹஸ்ரசோ யன்ன மயா வயதாயி
சஹஸ்ரசோ யன்ன மயா வயதாயி –
நிந்திதம் கர்ம
தத் லோகே நாஸ்தி
ஆயிரம் மடங்கு என்னால் பண்ணப் படாதது
யாதொரு நிந்தித்த கர்மம் உண்டு
அதி பாதக மஹா பாதகாதிகள்
அது சாஸ்த்ரத்தில் இல்லை
அனுஷ்டாதாக்கள் பக்கல் இல்லாத நிஷித்தங்களும்
சாஸ்த்ரத்திலே காணலாம் இ றே

ஸோ அஹம் –
நிஷித்தங்களை அனுஷ்டித்து
பிராயச் சித்தங்களிலும் இழியாதே
தப்பச் செய்தோம் என்கிற அனுதாபமும் இன்றிக்கே
இருக்கிற நான்

விபாகா வஸ்ரே –
அவை பக்வமாய்
அனுபவத்தை ஒழியப் போக்கிடம் இல்லாத
அவஸ்தையிலே

முகுந்த
முக்தி பூமி பரத
இத் துர்தசையை ப்ராப்தனானவனுக்கும்
தேவரே உஜ்ஜீவன ஹேது என்னும்
இத்தையே புத்தி பண்ணி
துரா சாரோ அபி சர்வாசீ கருதக் நோ நாஸ்திக –
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்
வதார்ஹமபி காகுத்ச்த க்ருபயா பர்யா பாலயத்
தஸ்மாதபி வத்யம் பிரபன்னம் ந ப்ரதி ப்ரயச் சந்தி
அஹிர் புத்ன்ய சம்ஹிதாயாம்
அநேநைவ ப்ரபன்னச்ய பகவந்தம் ஸ நாதனம்
தஸ்யா நுபந்தா பாபமா நஸ் சர்வே நச்யந்தி தத் ஷணாத்
கரு தான்ய நேன சர்வாணி தபாம் சி தபதாம் வர
சர்வே தீர்த்தாஸ் சர்வ யஜ்ஞ்ஞாஸ் சர்வ தாநானி தத் ஷணாத்
க்ருதாந்யே தேன மோஷச்ச தஸ்ய ஹஸ்தே ந சம்சய

அகதி
தேவரீர் உடைய நீர்மையே அன்றியே
என்னுடைய கதி ஸூந்யதையே
ஹேதுவாக

க்ரந்தாமி ஸ்ம்ப்ரததி –
ஸ்ம்ப்ரததி -க்ரந்தாமி-

க்ரந்தாமி -கதறுகிறேன்
தேவரீருக்கு பரிஹரிக்க ஒண்ணாத தசையிலே
தேவர் பக்கல்
குணஹானியை சம்சிக்கும் படி
சாதனா அனுஷ்டானம் பண்ணிப் பலம் பெறாதாரைப் போலே
கூப்பிடா நின்றேன்

தவாக்ரே –
தவ அக்ரே
ஹரீரேஷா ஹி மமாதுலா -என்கிற தேவர் திரு முன்பே

(லோக சப்தம் -சாஸ்த்ரத்திலே -என்றவாறு
காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன் யாருளர் களைகண் அம்மா
அரங்க மா நகருளானே -பாசுரம் தழுவிய ஸ்லோகம்
தவ அக்ரே க்ரந்தாமி-ருணம்-என்று திரௌபதி கோவிந்தா கதறலுக்கு உதவவில்லையே என்ற
புண் பட்ட தேவரீர் முன்னே அன்றோ கதறுகின்றேன் -)

———————————————————————-

ஸ்லோகம் -24-அவதாரிகை –

உம்முடைய பூர்வ வ்ருத்தி இதுவாய் இருக்க –
க்ரந்தாமி -என்று நம் குற்றம் போலே கூப்பிடுவது எத்தாலே -என்ன –
சம்சார ஆர்ணவத்திலே அழுந்துகிற எனக்கு
நிர்ஹேதுக கிருபையாலே உன் வாசியை அறிவித்தாய் –
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்தந்தந்தோ -திருவாய் மொழி -10-10-2- என்கிற
ப்ராங் ந்யாயத்தாலே உன் திருவடிகளை ப்ராபிக்கைக்கும் அந்த கிருபையே ஹேது என்று
தயைக ரஷ்யத் வத்தாலே கூப்பிடுகிறேன் -என்கிறார் –
எனக்கு தேவரை லபிக்கை பெறாப் பேறு ஆனாப் போலே இறே
தேவருடைய கிருபைக்கும் என்னுடைய லாபம் -என்கிறார் –

நி மஜ்ஜதோ அநந்த பவ அர்ணவ அந்தஸ்
சிராய மே கூலம் இவ அஸி லப்த
த்வயாபி லப்தம் பகவந் நிதா நீம்
அநுத்தமம் பாத்ரம் இதம் தயாயா—24-

நி மஜ்ஜதோ அநந்த பவ அர்ணவ அந்தஸ்
அநந்த பவ அர்ணவ அந்தஸ் நி மஜ்ஜதோ
த்ரிவித பரிச்சேத ரஹித
என்னுடைய சம்சாரத்தைப் பரிச்சேதிக்கிலும்
தேவருடைய பிரபாவத்தை பரிச்சேதிக்க ஒண்ணாது -என்கை –
பவார்ணவ விசேஷணமாய்-கரை காண ஒண்ணாத சம்சார அர்ணவத்திலே
ஆவாரார் துணை என்று அலை நீர்க் கடலுள் அழுந்தும் -திருவாய்மொழி -5-1-9- என்கிறபடியே
அழுந்துகிற எனக்கு -என்னவுமாம் –
சனகாதிகளைப் போலே கண் பற்றிலே இருந்தேனோ –

சிராய-மே
அநாதி காலம் எல்லாம் அழுந்து இருக்கும் எனக்கு –
அழுந்துகை ஒழிய பரிஹாரம் பார்க்க அறியாத எனக்கு

கூலம் இவ அஸி லப்த
உன் பேர் அருளால் இக்கரை ஏறி -பெரியாழ்வார் திருமொழி -5-3-7-என்னும்படி
அழுந்துகிற இடத்தில் கரை கிட்டினால் போலே
லப்தனாகா நின்றாய்

த்வயாபி லப்தம் –
தேவராலும் லபிக்கப் பட்டது –
எனக்கு தேவர் பெறாப் பேறு ஆனாப் போலே இறே
எதிர் சூழல் புக்குத் -திருவாய் மொழி -2-7-6- திரிந்த தேவர்க்கும் இவ் வஸ்து –

பகவந் –
ஜ்ஞானாதி குண பூரணரான
தேவருடைய பேறு என்னும் இடம்
நான் சொல்ல வேண்டுமோ -என்கை

இதா நீம்-
தேவரும் நம்மை அற்று விடும்படியான
துர்தசையிலே

அநுத்தமம் பாத்ரம் –
உத்தமோத்தமான பாத்ரம்

இதம் –
ரஷக அபேஷைக்கு இனி இல்லை
என்னும் இவ் வஸ்து

தயாயா-
ரஷ்ய விஷயம் உண்டாகில் தான்
உண்டாம் தேவர் தயைக்கு –

(அநந்த-விசேஷணம் ஸ்வரூப குண விபூதிகளுக்கும் -எல்லை அற்ற இவை –
பாவார்ணவம் -எல்லை அற்ற -தூராக குழி -கரை காண ஒண்ணாத சம்சார கடலுக்கும் –
ஆவாரார் துணை என்று அலை நீர் கடலுள் அழுந்தும் நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்க –
சேதன லாபம் அவனுக்கே -எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய –
நிர்ஹேதுக கிருபையினால் கைக் கொண்டே தீர வேண்டிய நிலைமை யுண்டே என்று விஞ்ஞாபனம் – -)

———————————————————————————

ஸ்லோகம் -25- அவதாரிகை –

நம் பக்கல் ந்யஸ்த பரராய் இருக்கிற உமக்கு
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்கிறபடியே
கண்டிருக்கை ஸ்வரூபமாய் இருக்க
இங்கனே நிர்பந்திக்கக் கடவீரோ -என்ன
என்னுடைய அனர்த்தத்தை பரிஹரிக்கச் சொல்லுகிறேன் அல்லேன் –
ஆஸ்ரிதர்க்கு விஷயங்களால் வரும் பரிபவம்
ரஷகரான தேவருக்கு தேஜோ ஹாநி -என்று
அத்தைப் பரிஹரிக்கச் சொல்லுகிறேன்
என்கிறார்-

அபூத பூர்வம் மம பாவி கிம் வா
சர்வம் சஹே மே சஹஜம் ஹி துக்கம்
கிந்து த்வதக்ரே சரணாக தா நாம்
பராபவோ நாத ந தே அநுரூப—–25-

அபூத பூர்வம் மம பாவி கிம் வா –
நரக கர்ப்ப வாச ஜனன மரண க்லேசாதிகளே
யாத்ரையாய்ப் போந்த எனக்கு
முன்பு அநு பூதம் அன்றிக்கே
இனி அநு பாவ்யமாய் இருப்பதொரு துக்கம் உண்டோ –
கிம் ஷேபே –

சர்வம் சஹே –
ஆதி வாதிகள் பர பரிபவம் சீதோஷ்ணாதிகள்
தத் விஸ்லேஷ ஜனித்த துக்கம்
இவற்றை இவர் சஹிக்க வல்லராய்ச் சொல்லுகிறார் அல்லர் –
ஆத்மா நித்யன்
காலம் அநாதி
இவற்றைப் பொறுத்து உட்கொதி போலே நசியாதே கிடந்த
ஆச்சர்யத்தைக் கண்டு சொல்லுகிறார் –

மே சஹஜம் ஹி துக்கம் –
அநாதி காலம் கர்மமே நிரூபகமாகப் போந்த எனக்கு –
அதின் பலமான துக்கமும் சஹஜம் அன்றோ –

கிந்து –
பொறுக்க ஒண்ணாதது ஓன்று உண்டு –

த்வதக்ரே –
சர்வ சேஷியாய்
சர்வத்ர சந்நிஹிதரான தேவர் முன்பே

சரணாக தா நாம் பராபவோ –
உன் பக்கல் ந்யச்த பரராய் இருக்கும் அவர்களுக்கு
சப்தாதி விஷய ப்ராவண்யத்தால் வந்த எளிவரவு-
பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ – திருவாய் மொழி -6-9-9-
கிறி செய்து என்னைப் புறத்து இட்டு இன்னம் கெடுப்பாயோ -திருவாய் மொழி -6-9-8-என்று
விஷய சந்நிதியே தொடங்கி
எளிவரவாய் இறே அநந்ய ப்ரயோஜனர் இருப்பது
பஹூ வசனத்தாலெ சொல்லுகிறது –
ஒருத்தனுடைய எளிவரவு சஜாதீயர்க்காக வந்தது என்கை –
எங்கனம் தேறுவர் உமர் -திருவாய் மொழி -8-1-3-என்கிறபடியே
உனக்குக் கை புகுந்தவர்களும்
உன்னுடைய ரஷணத்தில் அதி சங்கை பண்ணுவார்கள் -என்கை –

நாத –
இது தன்னரசு நாடாகில்
தேவருக்கு வருவது உண்டோ
உடைமை நோவுபடுகிறது உடையவனுக்கு எளிவரவு அன்றோ

ந தே அநுரூப-
தே நா நுரூப
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்று தேவருக்கு அநு ரூபம் அன்று
அது தனக்கு அசஹ்யம் -என்கை —

————————————————————————–

ஸ்லோகம் -26- அவதாரிகை –

தேவர் உடைய ரஷண அபாவத்தால் வந்த
தேஜோ ஹாநியையும் பாராதே
என்னைக் கைவிடும் அன்றும்
நான் விடப் பார்க்கிறிலேன் -என்று
தம்முடைய அகதிவத்தாலே தம்முடைய
மகா விஸ்வாசத்தை ஆவீஷ்கரிக்கிறார்-

நிராஸ கஸ்ய அபி ந தவ உத்ஸஹே
மஹேஸ ஹாதும் தவ பாத பங்கஜம்
ருஷா நிரஸ்தோ அபி ஸிஸூ ஸ்தநந்தயோ
ந ஜாது மாதுஸ் சரனௌ ஜிஹாஸதி——–26–

நிராஸ கஸ்ய அபி –
ரஷகத்வம் ஸ்வரூபமாய் இருக்கிற தேவர்
நிராஸகராக பிரசங்கம் இல்லை –
இப்படிப் பட்ட தேவர் நிஷ் கருணராய் -நிராஸகரானாலும்-

தவ பாத பங்கஜம் -தாவத் -ஹாதும் -நோத்ஸஹே-
ரஷகமுமாய்
ப்ராப்தமமுமாய்
போக்யமுமான
திருவடிகளை முந்துற முன்னம் விட்டு ஜீவிக்க
ஸ்ரத்தை பண்ணு கிறிலேன்-
கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல் -என்று
தேவர் ரஷகர் அன்றியிலே ஒழிந்தாலும்
புறம்பு போக்கில்லை -என்கை –

மஹேஸ –
தமீஸ் வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்றும்
ஈச்வரஸ் சர்வ பூதா நாம் -என்றும் -சொல்லுகிறபடியே
நிருபாதிக நிர்வாஹகனானவனே-
சம்சாரத்தில் பந்தங்களைப் போலே
கர்மோ பாதிகமாய் புறம்பே போய் உஜஜீவிக்கிறேனோ-
ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம்
சர்வேஷா மேவ லோகா நாம் பிதா மாதா ஸ மாதவ என்னும்
நிருபாதிகமான பரிவும் சம்பந்தமும் புறம்பே யுண்டாய்
தேவரை விட்டுப் போய் உஜ்ஜீவிக்கவோ –

ருஷா நிரஸ்தோ அபி ஸி ஸூ ஸ்தநந்தயோ –
ஸ்தந்யமே தாரகமான சிசுவானது
ஜனநியாலே குரோதம் அடியாக விடப் பட்டாலும்
ஸ்வ ரஷணத்தில் சக்தி இன்றிக்கே
தத் ஏக ரஷ்யமான தசையைச் சொல்லுகிறது –
இவ்வ்வாத்ம வஸ்து ஈஸ்வர ஏக ரஷ்யமாய்
நித்ய ஸ்தனந்த்யமாய் இறே இருப்பது
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும்
மற்றவள் தன அருள் நினைந்தே அழும் குழவி –
ஈன்ற தாய் -என்றும் -அரி சினம் -என்றும் விருத்த தர்மம் –
ஏக ஆஸ்ரயத்தில் சம்பவியாது என்கை
பிதாவுக்கு ஹிதார்த்தமாக குரோதம் சம்பவித்தாலும்
மாத்ரு விஷயத்தில் சம்பாவனை இல்லை இ றே –

ஜாது-
க்ருதையான போதொடு
ஆதரித்த போதொடு
வாசி அற

ந மாதுஸ் சரனௌ ஜிஹாஸதி –
கையாலே தள்ளுகை அன்றிக்கே
காலாலே தள்ளிலும்
அந்தக் காலைக் கட்டிக் கொள்ளும் அத்தனை ஒழிய
புறம்பு போகப் பாராதாப் போலே-

(தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை –அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன்
அருள் நினைந்ததே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -பாசுரம் தழுவிய ஸ்லோகம் -)

—————————————————————————-

ஸ்லோகம் -27-அவதாரிகை –

என்னுடைய அநந்ய கதித்வத்தாலே
விட மாட்டாத அளவேயோ-
தேவர் போக்யதையிலே அழுந்தின
மனஸ்ஸூம் வேறு ஒன்றில்
போக மாட்டாது –
என்கிறார் –

தவாம்ருதஸ் யந்தி நி பாத பங்கஜே
நிவேஸி தாத்மா கத மந்யதிச் சதி
ஸ்திதே அரவிந்தே மகரந்த நிர்ப்பரே
மது வ்ரதோ நே ஷூ ரகம் ஹி வீஷதே–27-

தவாம் ருதஸ் யந்தி நி பாத பங்கஜே –
ப்ராப்தமுமாய்
போக்யமுமான தேவர் திருவடிகளிலே
விஷ்ணோ பதே பரமே மதவ உத்ஸ –
ரசோ வை ஸ –
தேனே மலரும் திருப் பாதம் -என்று
ஸ்ருதி சித்தம் இ றே போக்யதை –

நிவேஸி தாத்மா –
தேவர் உடைய நிர்ஹேதுகமான ப்ரசாதத்தாலே
நிவேசிக்கப் பட்ட மனஸ் ஸானது
அபோக்யமுமாய் அப்ராப்தமுமான ஹேய விஷயங்களிலே
பழகிப் போந்த மனஸ்ஸூ
ஸூரி போக்யமான தேவர் திருவடிகளிலே
அவகாஹிக்கும் போது
தேவர் ப்ரசாதமே வேண்டாவோ –

கத மந்யதிச் சதி –
மய்யா ஸகதம நா -என்கிறபடியே
தேவர் திருவடிகளில் சக்தமான மனஸ்ஸூ தத் வ்யதிரிக்த விஷயங்களில் ஸ்ரத்தை
பண்ணும்படி எங்கனே
உன் வாசியையும் அறிந்து வைத்து
சைதன்ய பிரசார த்வாரமான இது
விஷயாந்தரங்களை விரும்பும்படி எங்கனே –

ஸ்திதே அரவிந்தே மகரந்த நிர்ப்பரே –
ஸூக ஸ்பர்சமாய்
மதுவாலே பூரணமான செந்தாமரை யானது
போக்தாக்களைக் குறித்து
அவசர ப்ரதீஷமாய் இருக்க –

மது வ்ரதோ –
மதுவே ஜீவனமான பதார்த்தம் -என்னுதல்-
மது சம்ருத்தமாய் இருக்கிற இடத்திலே பருகக் கடவோம்
என்கிற சங்கல்பத்தை உடைய பதார்த்தம் -என்னுதல்

நே ஷூ ரகம் ஹி வீஷதே
கிட்டுகையே அரிதாய் -கிட்டினாலும் நாக்கு நனையப் போராதே இருக்கிற
முள்ளிப் பூவிலே சென்று
பணியாது ஒழிகை அன்றிக்கே-கடாஷிப்பதும் செய்யாது –

ஹி
இது உபதேசிக்க வேண்டுமோ தேவருக்கு
சம்ப்ரதிபன்னம் அன்றோ
எங்குப் போய் உய்கேன் உன் இணை யடியே யடையல் அல்லால் –பெருமாள் திருமொழி -5-5-என்று இராதோ-

(அம்ருதஸ்யந்தி நி பாத பங்கஜே-அம்ருதத்தை பெருக்கும் -மோக்ஷத்தை அளிக்கும் –
உன்னுடைய திருவடித் தாமரையில் -உன் தேனே மலரும் திருப் பாதம் –
இஷூரகம் -முள்ளிப் பூவை
நிவேஸி தாத்மா -தேவர் உடைய நிர்ஹேதுகமான ப்ரசாதத்தாலே-நிவேசிக்கப் பட்ட மனஸானது-என்பதே சிறந்த அர்த்தம்
ஸ்தாபிக்கப் பட்ட மனம் உடையவன் -என்ற அர்த்தம் சிறப்புடையது இல்லை )

——————————————————————————-

ஸ்தோத்ரம் -28-அவதாரிகை –

ந தர்ம நிஷ்ட்டோஸ்மி-யிலே தேவர் திருவடிகளை லபிக்கைக்கு அனுகூலங்கள் ஒன்றும் இல்லை -என்றார்
அவ்வளவே அன்று -பிரதிகூலங்களால் பூரணன் -என்றார்
இப்படிப் பட்ட எனக்கும் பேற்றில் வந்தால் தேவர் கிருபையே பயாப்தம் என்றார்
இப்படி ந்யஸ்த பரனான என் பக்கலிலே விரோதி மேலிடுகை தேவர்க்கு தேஜோ ஹாநி -என்றார்
அத்தை பாராதே தேவர் கை விட்ட அன்றும் புறம்பு போக்கில்லை -என்றார்
இனி மேல்
த்வத் பாத மூலம் சரணம் பரபத்யே -என்று பண்ணின பிரபத்தி ஒன்றும் அமையுமோ
விரோதி நிவ்ருத்திக்கும் அபிமத சித்திக்கும் –என்ன
மநோ வாக் காயங்கள் மூன்றாலும் பண்ணின பிரபத்தி எல்லாம் வேண்டுமோ –
பத்தாஞ்சலி புடம் தீநம் யாசந்தம் சரணாகதம் -என்கிற
காயிகமான அஞ்சலி ஒன்றுமே அமையாதோ -என்கிறார் இதில்

த்வத் அங்க்ரிம் உத்திஸ்ய கதா அபி கேநசித்
யதா ததா வா அபி சத்ருக் ருத்தோ அஞ்ஜலி
ததைவ முஷ்ணாத்ய ஸூ பான்யசேஷ தஸ்
ஸூ பானி புஷ்ணாதி ந ஜாது ஹீயதே—28-

த்வத் அங்க்ரிம் –
நிருபாதிக சேஷியான உன்னுடைய நிரதிசய போக்யமுமாய்
சர்வ ஸூலபமுமான திருவடிகளை –
இத்தால் –
பிராப்யமுமாய் -பிராபகமுமாய் –ப்ராப்தமுமாய் –
இருக்கிறபடியைச் சொல்லுகிறது

உத்திஸ்ய-
இத்தையே பரம ப்ராப்யமாக நினைத்து
இத்தால் பிரயோஜநாந்தர வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –

கதா அபி –
இச்சை பிறந்த போது காலம் -என்கை –
இத்தால் வசந்த க்ரீஷ்மாதி ஸூ கள கிருஷ்ண பாஷா
பூர்வ ஆஹ்ணா பராஹ்னாதி கால நியதியை உடைய
ஜ்யோதிஷ்டோமாதிகளில் இதுக்கு உண்டான வ்யாவ்ருத்தி
வசந்தே வசந்தே ஜ்யோதிஷா யஜேத் –

கேநசித் –
இத்தால் தரை வர்ணிககத்வ க்ருஹ மேதித்வ
கிருஷ்ண கேசத்வ வேத வேதாங்க வித்யாதிகாரி நியமம் உடைய கர்மங்களில் வ்யாவ்ருத்தி –
ஆகையால் சர்வ அதிகாரம் -என்கை –
ஜாத புத்ர கிருஷ்ண கேசோ அக்னி நாத தீத –

யதா ததா-
பிரகார நியதி இல்லை -என்கிறது
இத்தால் -சாஸ்த்ரங்களில் பிரகார விசேஷ நியமம் உண்டான
கர்மங்களில் வ்யாவ்ருத்தி

வா அபி –
என்று விகல்ப சமுச்சய ஸூ சகமான அவ்யயங்கள் இரண்டாலும்
ஒன்றிலே நியதமான கர்மங்களில் இதுக்கு உண்டான வ்யாவ்ருத்தி சொல்கிறது

சத்ருக் க்ருத –
என்று யாவ ஜ்ஜீவாதி காரமான
நித்ய கர்ம வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –

தோ அஞ்ஜலி –
ஜாயாதி சஹகாரி ஸாபேஷமான
அச்வமேதாதி களில் காட்டில்
இதுக்கு உண்டான சூகரத்வம் சொல்லுகிறது
அயஜ்ஞோ வா ஏஷ யோ அபத் நீக –

ததைவ –
தேசாந்த்ரே காலாந்த்ரே தேஹாந்த்ரே
பல பிரதமான கர்மங்களில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –
முஷ்ணாத்ய

அஸூபான்யசேஷதஸ் –
சர்வ பாபங்களும் மறுவல் இடாத படி போகை-
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி
இத்தால் ஒரு பாபத்துக்கு ஒரு பிராயச்சித்தமான
த்வாதச வார்ஷிக சம்வத்சர சாந்தராயன கருச்ச ராதிகளில் வ்யாவ்ருத்தி

முஷ்ணாதி-
முஷ -ச்தேய –
வஞ்சித்து –முற்றம் தவிர்ந்த -திருவாய்மொழி -8-10-1-
சும்மனாதே கை விட்டோடி -பெரியாழ்வார் திருமொழி -5-4-3-என்று போன பிரகாரம் தெரியாது ஒழிகை –
ஸூ பானி புஷ்ணாதி –
விரோதியைப் போக்கி விடும் அளவு அன்றிக்கே
அபிமதங்களாலே பூர்ணமாக்கும் –
பஹூ வசனத்தாலே-பர பக்தி பரஜ்ஞானம் பரம பக்தி
தேச விசேஷ பிராப்தி பகவல் லாபம் ,ப்ராப்தி பலமான கைங்கர்யம் -இவற்றைச் சொல்லுகிறது
இத்தால் ஸ்வர்க்காதி களான ஒரோ பலங்களிலே நியதமான கர்மங்களில் வ்யாவருத்தி

ந ஜாது ஹீயதே –
இத்தனையும் கொடுத்தாலும் தான் குறையாது இருக்கை –
இத்தால் பல பிரதானத்து அளவிலே ஷீண சக்திகமான கர்மங்களில் வ்யாவ்ருத்தி
அஞ்சலி பரமா முத்ரா ஷிப்ரம் தேவ பிரசாதி நீ
ஸூ ஸூ கம் கர்த்தும் அவ்யயம் –
க்ரியா ரூபமான அஞ்சலி குறையாது இருக்கை யாவது என் -என்னில்
அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு பண்ணின அஞ்சலி ஆகையாலே
பிரசன்னனான ஈஸ்வரன் எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்யாதானாய் இருக்கையாலே
ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயான் நாப சர்ப்பதி
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ -பெரிய திருவந்தாதி -58-என்னக் கடவது இ றே-

(அஞ்சலி -அம் ஜலயதி
ந ஜாது ஹீயதே –பலன்களை வர்த்தித்து கொண்டே இருக்கும் –
பலன் கை புகுந்த பின்பும் அஞ்சலி தானே போது போக்காய் இருக்குமே )

——————————————————————————-

ஸ்லோகம் -29-அவதாரிகை –

ஆயாஸாத்மகமான அஞ்சலி தான் வேண்டுமோ
சிந்திப்பே அமையும் -திருவாய் மொழி -9-1-7-என்கிறபடியே
மானசமாக அமையாதோ –
விரோதி பூர்வகமான பரம பதத்தைத் தர -என்கிறார்
இத்தால் -தீனம் -என்கிற மானச பிரபத்தியைச் சொல்லுகிறது
ந தர்ம நிஷ்ட்டோஸ்மி -என்கிற இது வாசிக ப்ரபத்தியாய்
த்வத் அங்க்ரி உத்திஸ்ய -என்றது காயிக ப்ரபத்தியாய்
இதில் மானசமான பிரபத்தி -என்னவுமாம்
அதவா
த்வத் அங்க்ரிம் –உதீர்ண –என்கிற ஸ்லோக த்வயத்தாலே
பிரபத்தி பலமான பர பக்தியைச் சொல்லுகிறது -என்னவுமாம்

உதீர்ண சம்சார தவ ஆஸூஸூ ஷணிம்
ஷாணோத நிர்வாப்ய பராம் ஸ நிர்வ்ருதிம்
ப்ரயச்சதி தவச் சரணா ருணாம் புஜ
த்வய அநு ராக அம்ருத ஸிந்து ஸீகர–29-

உதீர்ண சம்சார தவ ஆஸூஸூ ஷணிம்-
கிளர்ந்து எரிகிற காட்டுத் தீயை –
சம்சாரத்தை காட்டுத் தீயாகச் சொல்லுகிறது -தாஹ்யமான காட்டில்
அக்னியை அவிக்க ஒண்ணாதாப் போலே
அவித்யாதி களுக்கு இலக்காம் இத்தனை ஒழிய
பரிஹரிக்க ஒண்ணாது -என்கைக்காக
ஆத்மா அதாஹ்யம் -என்கிறது -லௌகிக அக்னியில் இறே –
அசந்நேவ-என்கிறபடியே தக்த படம் போலே ஆக்கும் இறே

ஷாணோத நிர்வாப்ய –
அத ஸோ அபயங்கத-என்கிறபடியே -அப்போதே அவித்து
ததைவ முஷ்ணாதி -ஷனே ந நிர்வாப்ய -என்று சொல்லுகையாலே
அவ்வதிகாரிக்கு பலத்துக்கு விளம்பம் இல்லை என்கிறார்
யதே ஷீகதூல மக்நௌ ப்ரோதம் ப்ரதூயேத -என்கிறபடியே
இவன் பட்ட நோவை இவன் விரோதி வர்க்கத்தோடு போக்கும் ஈஸ்வரன் -என்கை

பராம்ஸ நிர்வ்ருதிம் ப்ரயச்சதி –
ஒரு தேச விசேஷத்திலே
ஆனந்த நிர்ப்பரனாய் இருக்கும்
இருப்புத் தரா நிற்கும்
நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி
மம சாதர்ம்யம் ஆகாதா
ஸ ஸ்வராட் பவதி –என்னும் ஸூகம் இறே

தவச் சரணா ருணாம் புஜத்வய அநு ராக அம்ருத ஸிந்து ஸீகர –
ப்ராப்தனாய் ஸூலபனான உன்னுடைய
நிரதிசய போக்யமான திருவடிகளில்
அனுராகம் ஆகிற அம்ருத சாகரத்திலே ஒரு திவலை
அருண பதத்தாலே பரபாக ரசம் சொல்லுகிறது
அம்புஜ பதத்தாலே மென்மை குளிர்ச்சி நாற்றங்களால் வந்த ரசம்

த்வயம்
அந்யோந்ய சத்ருசமான சேர்த்தி அழகாலே வந்த சாரஸ்யம்
இத்தால்
அநுராக ஜனகமான திருவடிகள் -என்கை

அநுராக-
திருவடிகளில் அத்யவஸா யாத்மகமான ருசி -என்னுதல்
பிரபத்தி பலமாய் கைங்கர்ய உபகரணமான பக்தி -என்னுதல்
ப்ரீதி காரிதம் இறே கைங்கர்யம்

அம்ருத –
ஸ்மர்த்தவ்ய விஷய ஸாரஸ்யத்தாலே
ஸ்வயம் பிரயோஜனமாய் இருக்கை அன்றியே
பத்யமுமாய் இருக்கை

ஸிந்து ஸீ கர –
அதனில் பெரிய அவா -திருவாய்மொழி -10-10-10-என்கிற
விஷய அநு ரூபமான ப்ரேமம் எல்லாம் வேண்டா
அபிமத ஸித்திக்கு -என்கை-

(பிரபத்தி தான் வேணுமோ -அஞ்சலியை போதாதோ என்றவர் இதில்
அஞ்சலி தான் வேணுமோ சிறிது ஆசை கிடந்தால் போதாதோ என்கிறார் –
பாதாரவிந்த ப்ரீதி விஷய அமுதக் கடலில் ஒரு திவலையே சம்சார காட்டுத் தீயை அணைத்து
முக்தர்கள் உடன் ஓக்க பரம ஆனந்தத்தையும் அளிக்க நல்லதே –
ஆஸூஸூஷணி- என்று அக்னிக்கும் பெயர் -)

———————————————————————-

ஸ்லோகம் -30-அவதாரிகை –

இப்படி விளம்ப ஹேது இல்லாத
ஸித்த உபாயத்தைப் பரிக்ரஹித்தவர் -ஆகையாலே
க்ரம ப்ராப்தி பற்றாதே-த்வரை பிரேரிக்க
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -திருவாய் மொழி -6-9-9-என்கிறார்
பிரபத்தி பலமான பர பக்தியாலே
கனை கழல் காண்பது என்று கொல் கண்கள் -திருவாய்மொழி -6-3-10 -என்றும்
காணக் கருதும் என் கண்ணே -திருவாய் மொழி -9-5-1-என்றும்
சொல்லுகிறபடியே
கண்ணாலே காண்பது என்று -என்கிறார் -என்றுமாம் –

விலாஸ விக்ராந்த பர அவர ஆலயம்
நமஸ் யதார்த்தி ஷபணே க்ருத ஷணம்
தனம் மதீயம் தவ பாத பங்கஜம்
கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா—30-

விலாஸ –
லீலையாக ஆக்கிரமிக்கப் பட்ட உத்க்ருஷ்டரான
தேவதைகள் உடைய இருப்புக்களையும்
மரண தர்மாக்களான மனுஷ்யாதி களுடைய இருப்புக்களையும்
உடைத்தாய் உள்ளத்தை
விமுகர் உடைய தலையிலே அநாயாசேன சென்று இருந்த திருவடிகளுக்கு
ருசியை யுடையார் தலையிலே இருக்கை பணி யுண்டோ –

விக்ராந்த –
அந்ய பரரானார் பக்கலிலேயோ மேல் விழல் ஆவது
அநந்ய ப்ரயோஜனர் பக்கலிலே மேல் விழல் ஆகாதோ

பர அவர ஆலயம் –
வசிஷ்ட சண்டாள விபாகம் இன்றிக்கே
தூளி தானம் பண்ணின திருவடிகள்
அத்தை ஒழியச் செல்லாத எனக்கு அரிதாவதே-
சங்கைஸ் ஸூராணாம்-என்கிற கர்ம பாவந நிஷ்டரும்
தவம் செய்து நான்முகன் பெற்றான் –இரண்டாம் திருவந்தாதி -78-என்கிறபடியே
உபய பாவ நிஷ்டரும்
பெற்ற பேறு எனக்கு அரிதாவதே –

நமஸ் யதார்த்தி ஷபணே க்ருத ஷணம்-
ப்ராசங்கிகமாகப் பிறந்த அபதானம் -முன் நடந்த வ்ருத்தாந்தம் -கிடக்க கிடீர் –
திருவடிகளிலே தலை சாய்த்தார் உடைய ஆர்த்திகளைப் போக்குகையிலே
க்ருத அவசரமாய் உள்ளத்தை
ஆஸ்ரித ரஷணத்திலே அவசர ப்ரதீஷமான காலத்தை எதிர்பார்த்து –
இருக்கிற திருவடிகளைக் காண்கைக்கு –
கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா -என்று கூப்பிட வேண்டுவதே –

தனம் மதீயம்-
வைத்த மா நிதி -திருவாய் மொழி -6-7-11-என்கிறபடியே
எனக்கு ப்ராப்யமுமாய் பிராபகமுமாய் உள்ளத்தை

தவ பாத பங்கஜம் –
சர்வ ஸூ லபமுமாய் ஆஸ்ரித வத்ஸ்லமுமாய்
நிரதிசய போக்யமுமான திருவடிகளை –

கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா –
த்ரிவிக்ரமா பதாந தூளி தானத்திலும் காணப் பெறாத நான்
என்று காண இருக்கிறேன்
விஷயங்களிலே மண்டிக் கிடக்கிற சம்சாரிகள் நடுவே இருக்கிற உமக்கு
நம்மை ஒழியச் செல்லாதபடி புகுர நிருத்தினோமாகில்
ஒன்றும் செய்யாதாரைப் போலே கூப்பிடுகிறது என் -என்ன
கண்ணாலே கண்டு விடாய் தீர இருக்கிற எனக்கு
சம்சாரிகளில் காட்டில் ஒரு வ்யாவ்ருத்தி பண்ணித் தர அமையுமோ

சஷூஷா-
ஒரு தேச விசேஷத்திலே
சதா தர்சனம் பண்ணப் பெறாதே
காண விடாய்த்த எனக்கு
கண்ணாலே காண வேணும் .

(இது வரை த்வய பூர்வார்த்தம் அருளிச் செய்து மேலே உத்தரார்த்தம் -கைங்கர்ய பிரார்த்தனை –
இது முதல் அவன் வை லக்ஷண்யத்தை பரக்க-17-ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார் –
அதில் முதலில் இதிலும் அடுத்த ஸ்லோகத்திலும் பரம புருஷார்த்தமான திருவடிகளை கண்டு களிப்பது என்றோ என்று அலமருகிறார்
தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே கோவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ-என்றும்
அன்று தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ கண்களே –என்றும்
சாஷாத்காரம் பெற பதறி அருளிச் செய்கிறார் –
சஷூஷா—திவ்ய சஷூஸ் ஸூக்களை கொடுத்து அருளினாய் அதே போலே பாவியேனுக்கும் அருள வேணும் –
நெஞ்சு என்னும் உட் கண்ணால் காண விரும்புகிறார் –பரமபத பிராப்தியை அபேக்ஷிக்கிறார் என்றுமாம் – )

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்- ஸ்லோகம் -15-16-17-18-19-20—–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

February 4, 2014

ஸ்லோகம் -15- அவதாரிகை –

நாவேஷ ஸே – யில் –வேதாந்த பிரதமபாத உக்த காரணத்வம் சொல்லுகிறது –
ஸ்வா பாவிக-த்திலே -குண உபசம்ஹார பாதார்த்தம் சொல்லுகிறது
க ஸ்ரீஸ் ஸ்ரீய -வில் த்ரிபாதத்தில் அர்த்தம் சொல்லுகிறது
வேத அபஹார த்தில் -உப ப்ரும்ஹணமான அர்த்தம் சொலுகிறது –
கஸ்யோதர -வில் பிரமாண அனுக்ருஹீத தர்க்க சித்த பரத்வம் சொல்லுகிறது –
இனி -இதில் இப்படி
த்ருட பிரமாண சித்தமாய் இருக்க
ஆசூரீம் யோநிமா பன்னா -ஸ்ரீ கீதை -16-20-என்கிறபடியே ஆசூர பிரகிருதிகள் அவனை இழப்பதே
என்று அவர்கள் இழவுக்கு இன்னா தாகிறார்
அதவா
யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் -திருவாய் மொழி -1-3-4-என்று
துஷ் பிரகிருதிகள் கண் படாது ஒழியப் பெறுவதே
இவ் விலஷண விஷயம் -என்றுமாம் –

த்வாம் சீல ரூப சரிதை பரம ப்ரக்ருஷ்ட
சத்த் வேன சாத்த்விகதயா ப்ரபலைச்ச சாஸ்த்ரை
பரக்யாத தைவ பரமார்த்த விதாம் மதைச்ச
நைவா ஸூ ரப்ரக்ருதய ப்ரபவந்தி போத்தும்-15-

த்வாம்-
சர்வாதிகனாய் -இவ் வாத்மாவுக்கு வகுத்த உன்னை

சீல –
மஹததோ மந்தை -நா வேஷ ஸே -என்கிற ஸ்லோகத்திலே சொல்லுகிற ஸ்வ பாவம்
அதாகிறது -சர்வாதிகனாய் இருந்து வைத்து
பஹூஸ்யாம் -என்கிறபடியே இவற்றின் இழவு பேறு தன்னதாய்
அபிமானியும் தானேயாய் இருக்கை-

ரூப –
க புண்டரீக நயன -என்கிற வடிவு
ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே –தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ –
நீல தோ யத மதயஸ்தா –
ந பூத சங்க சம்ஸ்தானோ தே ஹோ அஸ்ய பரமாத்மன
ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்தி மாம் ஸ மஜ்ஜாச்தி சம்பவா -இத்யாதி

சரிதை –
க்ரந்த்வா நிகீர்யா புனருத் கிரதி-என்றும்
வேத அபஹார குரு பாதக என்றும் சொல்லுகிற அதி மானுஷ சேஷ்டிதங்களாலும்

பரம ப்ரக்ருஷ்ட சத்த் வேன –
பரம சத்த்வ சமாஸ்ரய க -என்று ஸூத்த சத்வமயமான விபூதி யோகத்தாலும்
ஷயந்த மஸ்ய ரஜஸ பராகே-
தம்ஸ பரஸ்தாத்
ஸ்வ சத்தா தாரகம் சத்த்வம் மிஸ்ர சத்த்வாத் விலஷணம் -இத்யாதி

சாத்த்விகதயா ப்ரபலைச்ச சாஸ்த்ரை –
வேதத்தில் சாத்விகருக்கு ஹித அனுசானம் பண்ணும் ஜ்ஞான பாகத்தாலும்
அக்னேஸ் சிவச்ய மகாத்மியம் -இத்யாரப்ய
சாதத் விகேஷ்வத கல்பேஷூ மாஹாத்ம்ய மதிகம் ஹரே -என்று
ஸ்ரீ மாத்ச்ய புராணத்திலே சத்வ உத்ரிக்தனான ப்ரஹ்மாவின் வாக்கியம் ஆகையாலே
பிரபலமான சாஸ்த்ரங்களாலும்

பரக்யாத தைவ பரமார்த்த விதாம் மதைச்ச –
பிரக்யாதமான தைவத்தின் உடைய யதார்த்த வித்துக்கள் உடைய மதங்களாலும்
சிருஷ்டி வாக்கியம் -நாராயண அனுவாகம் -ஸூபால உபநிஷத்
அந்தர்யாமி ப்ரஹ்மணாதிகளில் சர்வாதிகனாக பிரசித்தனாய் இருக்கை –

ஏவம் விசிஷ்டம் -நைவாஸூர ப்ரக்ருதய ப்ரபவந்தி போத்தும் –
த்வாம் ஆசூர பிரக்ருதய போத்தும் இவ ந பிரபவந்தி –
ஆசூரீம் யோநிமா பன்னா -இத்யாதி

பிரக்யாததைவ பரமார்த்த வித்துக்கள் -என்கிறது
ஸ ஹோவாச வியாச பாராசர்ய -என்கிற பராசர பகவான்
யாதவை கிஞ்ச மனுரவதத் தத் பேஷஜம் -என்கிற மனு
வேதாசார்யனான வேத வியாசன்’வாஜசனேய பிரசித்தனான யாஜ்ஞ வல்க்யன்
நமஸ் சௌநகாய -என்று வைதிக அக்ரேசர் சொல்லும் ஸ்ரீ சௌநகன்
ஏவம் பூதனான ஆபஸ்தம்பன்
அயோ நிஜனாய் ஸ்ரீ இராமாயண ப்ரவர்த்தகனான வால்மீகி
ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நர ஸூ நவ -இதி
வசிஷ்ட புலஸ்திய ருக்மாபம் ஸ்வப்னதீ கம்யம் இதி மனு

ஷேத்ரஜ்ஞ்ஸ் யேச்வர ஜ்ஞாநாத் விஸூத்தி பரமா மதா -இதி யாஜ்ஞ் வல்க்யன்
பூ பிராணி நச் சர்வ ஏவ குஹாச யஸ்ய -இதி ஆபஸ்தம்ப
பவான் நாராயணோ தேவ -இதி வால்மீகி -என்கிற இவர்களை
ஏவம் விசிஷ்டம் -த்வாம் ஆசூர ப்ரக்ருத்ய
க்ரூர கர்மக்களான பேர்கள் சர்வாதிகரான தேவரீரை

போத்தும் இவ ந பிரபவந்தி
அறிக்கைக்கு ஆன சமர்த்தர்கள் அன்று ‘
ஆசூரீம் யோநிமா பன்னா -இத்யாதி-

(வேடன் வேடுவிச்சி குரங்கு இடையன் இடைச்சி -ஒரு நீராக கலந்த சீலம் –
பரக் யாததை வ பரமார்த்த விதாம்–ப்ரக்யாத பதம் தைவத்துக்கு விசேஷணம் என்பர் பெரியவாச்சான் பிள்ளை
தைவ பரமார்த்த நாராயண அநுவாகம்-ஸூபால உபநிஷத் – அந்தர்யாமி ப்ராஹ்மணம் –
இவற்றில் பிரசித்தமான பரம புருஷன் உண்மை நிலையை
கண்டு அறிந்த பரமார்த்த வித்துக்கள் -வியாசர் பராசரர் வால்மீகி மனு யாஜ்ஞ வல்க்யர் ஸுநகர் ஆபஸ் தம்பர்
ஆழ்வார்கள் போன்றவர்களே என்றவாறு )

———————————————————————-

ஸ்லோகம் -16- அவதாரிகை –

மஹாத்மா நஸ்து மாம் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
உன்னைப் பெரும் சத் பிரகிருதிகள் காணப் பெறுவதே -என்றும்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான் -என்று
அது தன் பேறு என்றும் இருக்கிறார் –

உல்லங்கித த்ரிவித சீம சமாதி சாயி
சம்பாவனம் தவ பரிப்ரடிம ஸ்வ பாவம்
மாயா பலே ந பவதா அபி நிகூஹ்ய மாநம்
பஸ்யந்தி கேசித் அநிஸம் த்வத் அநன்ய பாவா–16-

உல்லங்கித த்ரிவித சீம சமாதி சாயி சம்பாவனம் தவ பரிப்ரடிம ஸ்வ பாவம் –
த்ரிவித பரிச்சேத ரஹிதமாய்
சமாதிக சம்பாவனையும் கடந்துள்ள
உன்னுடைய ப்ரபுத்வத்தை
விபுத்வாத் தேச பரிச்சேத ரஹித
நித்யத்வாத் கால பரிச்சேத ரஹித
சர்வ பிரகாரித்வேன ப்ருதக் ஸ்திதி யோக்ய அவஸ்த அந்தராபாவத் வஸ்து பரிச்சேத ரஹித –
சத்ருக்வச்த் வந்தாரா பாவத் துலயா ப்ரஸ்தாதி நா வா பரிச்சேத ரஹித இதி வா அத ஏவ சமாதி கத ரித்ர-

மாயா பலே ந –
பகவத் ஸ்வரூபத்தை மறைக்கும் பிரகிருதி பலத்தாலே -என்னுதல்
திவ்ய விக்ரஹத்தை இதர சஜாதீயம் ஆக்கும் ஆச்சர்ய சக்தி யோகத்தாலே -என்னுதல்
பவதா அபி நிகூஹ்ய மாநம் –
ஆத்மானம் மானுஷம் மன்யே
அஹம் வோ பாந்தவோ சாத -என்று
ஆள் பார்த்து உழி தரும் -நான்முகன் திருவந்தாதி -60 -உன்னாலே மறைக்கப் பட்டதே யாகிலும்

பஸ்யந்தி கேசித நிஸம் த்வத நன்ய பாவா
சத் பிரக்ருதிகளாய் இருப்பார் சில மகாத்மாக்கள் சர்வ காலமும் உள்ளபடி காணா நின்றார்கள் –
த்வத நன்ய பாவா –
க்ரியதாம் இதி மாம் வத -என்று உன்னை ஒழிய வேறு நினைவு-விஷயம் – இல்லாதவர்கள் -என்னுதல்
உன்னை ஒழிய உபாயாந்தரம் அறியாதவர்கள் என்னுதல்
உன்னை ஒழிய வேறு பரதவ புத்தி இல்லாதவர்கள் -என்னுதல்-

(பஸ்யந்தி -சாஸ்திரம் மூலம் பார்க்கிறார்கள் முதலில் -யோகம் மூலம் சாஷாத்காரிக்கிறார்கள்
சரபங்க மகரிஷி -ததிபாண்டாதிகள் விபவத்திலே நேராக கண்டார்கள் அன்றோ )

———————————————————————

ஸ்லோகம் -17- அவதாரிகை –

கீழ் பிரதிபாதித்த சர்வேஸ்வரத்துக்கு
பிரதிசம்பந்தி தயா அபேஷிதமான
ஈசித வ்யஜாதத்தை
ப்ரபஞ்சீ கரிக்கிரார் –

யதண்ட மண்டாந்தர கோ சரஞ்ச யத்
தச உத்தராணி ஆவரணாநி யாநி ஸ
குணா பிரதானம் புருஷ பரம் பதம்
பராத்பரம் ப்ரஹ்ம ச தே விபூ தய—17-

யதண்டம் –
சதுர்தச புவநாத் மகமான அண்டம் ஒன்றாக
அண்டா நாந்து சஹஸ்ராணாம் -இத்யாதிகளில் படியே அண்ட சமூஹம் யாதொன்று

அண்டாந்தர கோ சரஞ்ச யத் –
அண்டாதிப த்ரிலோக ஈஸ்வர திக்பால நரபதி ப்ரமுகமாய் –
ஸ்தாவர ஜங்கமாத் மகமான அண்டாந்தர் வர்த்தி சமூஹம் யாதொன்று

தச உத்தராணி ஆவரணாநி யாநி ஸ –
மேன்மேலும் தச குணிதமான வாரிவஹ்நயா நிலாகாசங்களும்-
பூதாதியும் -மகானும் -கார்ய உந்முகமான பிரகிருதி அம்சமான ஆவரணங்கள் யாவை சில

குணா –
அது சேதனரை பந்திப்பது குணா த்வாரா வாகையாலே -பந்த காரணமான சத்வாதிகள் –

பிரதானம் –
அவிக்ருத பிரகிருதி பிரதேசம்
குணா பிரதானம் -என்று குணா குணிகளைப் பிரித்து பேசுகிறது
குணங்களை ஜகத் காரணமாகச் சொன்ன சாங்க்ய மதம் அவைதிகம் -என்கைக்காக –

புருஷ –
பத்தாத்மா சமஷ்டி
கார்ய காரண உபய அவஸ்த பிரக்ருத்யாஸ்ரய ஷேத்ரஜ்ஞர்
ஷேத்ரஜ்ஞக ஆத்மா புருஷ -என்னக் கடவது இறே-
அண்டாந்தர கோசரம் என்று வ்யஷ்டியைச் சொல்லுகையாலே-இது சமஷ்டி விஷயம்

பரம் பதம் –
கார்ய காரண உபய அவஸ்த
ப்ரக்ருத் யாஸரயாத் ஷேத்திர ஜ்ஞாத் ஆனந்தாத் பரமம் பதம் –
ஹிரண்மயே பரே லோகே இத்ராப்ய
ஜ்யோதிஷாம் ஜ்யோதிஸ் தத் யதாத்மா விதோ விது –
பரமே வ்யோமன்-
ஸோ அஸ்நுதே –
த்ரிபாதஸ் ஸ்யாம்ருதம் திவி –
யத்ர பூர்வே சாத்யா ஸந்தி தேவா –
அத யர்க்கா நல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மன
ஸ்வ யைவ ப்ரப யா ராஜன் துஷ் ப்ரேஷம் தேவதாநவை
தத்ர கத்வா புநர் நேமம் லோகமா யாந்தி பாரத -இத்யாதி பி -உகதா த்ரிபாத் விபூதி –

பராத்பரம் –
ப்ரஹ்மாதிகளில் பரர் -முக்தர்
அவர்களில் பரர் நித்ய சித்தர்

ப்ரஹ்ம ச –
ஸூ த்த சத்வமாய்
பரஞ்ஜ்யோதிர் மயமாய்
சௌந்தர்ய சௌகுமார்யாதி கல்யாண குணோ பேதமாய்
ப்ருஹத் சப்த வாச்யமான திவ்ய விக்ரஹம்
ச பரச சர்வ சக்தி நாம் ப்ரஹ்மணஸ் சமநந்தரம் மூர்த்தம் ப்ரஹ்ம –
சாந்த அனந்த மஹா விபூதி பரமம் யத் ப்ரஹ்ம ரூபம் ஹரேர் மூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி
தத் ப்ரிய தரம் ரூபம் யத த்யத் புதம் -இத்யாதி –

தே விபூ தய –
விபூதி சரீர சப்தங்கள் பர்யாயம் ஆகையாலே
சரீர தயா சேஷங்கள்
விபூதயோ ஹரே ரேதா ஜகத சிருஷ்டி ஹேதவ
யாநி மூர்த்தான்ய மூர்த்தானி யான்ய த்ரான்யத்ர வா க்வசித்
ஸந்தி வை வஸ்து ஜாதானி தாநி சர்வாணி தத் வபு
தத் சர்வம் வை ஹரேஸ்தநு -இத்யாதிபி –
விபூதி சரீர சப்தயோ பர்யா யத்வம் சாஸ்த்ரேஷூ பிரசித்தம்-

(ப்ரஹ்ம சப்தம் -திவ்ய மங்கள விக்ரஹத்தையே குறிக்கும் –
தே விபூதய-இவை எல்லாம் உன்னுடைய விபூதிகள்
உனக்கு ஆதேயங்கள் -நியாம்யங்கள் -சேஷங்கள் என்றவாறு )

——————————————————————————–

-ஸ்லோகம் -18-அவதாரிகை –

கீழ் சரண்யன் உடைய உத்கர்ஷம் சொல்லி
இதில் உபய விபூதி நாதனை நம்மால் கிட்டலாமோ -என்று கூசாதபடி
ஆஸ்ரிதருக்கு இழியும் துறையான
கல்யாண குணங்களிலே பன்னிரண்டு குணங்களை
அருளிச் செய்கிறார்
அதவா
கீழ் சர்வேஸ்வரத்வம் சொல்லிற்றே
இனி சொல்ல பிராப்தமான
சமஸ்த கல்யாண குணாத் மகதையை
அருளிச் செய்கிறார்
என்றுமாம் –

வஸீ வதாந்யோ குணவான் ருஜூஸ் ஸூசிர்
ம்ருதுர் தயாளூர் மது ரஸ் ஸ்திரஸ் ஸம
க்ருதீ க்ருதஜ்ஞஸ் த்வமஸி ஸ்வ பாவதஸ்
சமஸ்த கல்யாண குணாம்ருதோ ததி—18–

1-வஸீ –
கீழ் சொன்ன ஈசிதவ்யதையைத் தன் வசத்திலே நடத்தி
வர்த்திக்கும் -என்கை -இத்தாலும் ஸ்வ தந்த்ரன் பக்கலிலே
குணம் கிடந்தது பெரு விலையனாம் –
என்னும் இடம் சொல்லுகிறது –
சர்வச்ய வஸீ சர்வச்யேசான –
ஜகத் வாசே வர்த்ததேதம்
அதவா
தன்னுடைய திருவடிகளில் ஆனுகூல்யம் உடையார் வசத்தில் தாழ நிற்கும் -என்றுமாம் –
இமௌ ஸ்மமுநி சார்தூல கிங்கரௌசமுபஸ்திதௌ
ஆஜ்ஞாபயா யதேஷ்டம் வை ஸாசனம் கரவாவ கிம் –
ஆஜ்ஞாபய மஹாபாஹோ ப்ரூஹி யத்தே விவஷிதம் –
ஸ்வ யமேவ ஹரிர் வவரே விபர பாதாவநே ஜனம்
அனந்யாதீ நத்வம் -இத்யாதி –
ஆஸ்ரித பர தந்த்ரனாய் இருக்கும் இருப்பு பிறர்க்காக என்றால்
நியாமகர் இல்லாமையாலே ஸ்வ தந்திர கார்யமாய் இருக்கும் –

2-வதாந்ய-
இப்படி ஆஸ்ரித பர தந்த்ரனாய் செய்யும் கார்யம் ஏது என்னில்
தன்னையும் தன் உடைமையையும் அவர்களுக்கு கொடுக்கும்
ஔதார்யத்தைச் சொல்லுகிறது
ப்ரியவாக்தா ந ஸீ லச்சவ தான்ய பரி கீர்த்தித –
ய ஆத்மாதா பலதா
ச சர்வா நர்த்தி நோ த்ருஷ்ட்வா ச மேத்ய ப்ரதி நந்த்ய ச
உதாராஸ் சர்வ ஏவித
ந தே ரூபம்

3-குணவான் –
தன்னையும் தன் உடைமையையும் அவர்களுக்குக் கொடுக்கும் இடத்தில்
அவர்கள் தன்னையும் தங்கள் சிறுமையையும் பார்த்து பிற்காலியாமே
அவர்கள் அளவாகத் தன்னை அமைக்கும் சீலம்
மஹதோ மந்தை –
குண பிரகரணம் ஆகையாலே
குணவான் -என்கிறது குண சாமான்யத்தைச் சொல்லுகிறது அன்று –
குண விசேஷத்தை சொல்லுகிறது
குண்யத இதி குண -என்கிற படியே அனுசந்தாவுக்கு
எப்போதும் ஒக்க விட ஒண்ணாமை யாலே
சீலத்தை குண சப்தத்தாலே சொல்லுகிறது
சால சப்தம் வ்ருஷ சாமான்ய வாசியாய் இருக்கிறது வ்ருஷ விசேஷத்தைக் காட்டுகிறாப் போலே –
அஜாயமான
கோன்வஸ்மின் சாம்ப்ரதம் லோகே குணவான் -என்று தொடங்கி
இஷ்வாகு வம்ச பிரபவ -பபூவ குணவத்தர ச ஹி தேவைருதீர்ண்ஸ்ய -என்கிறபடியே
சீல கார்யம் அவதாரம் -என்கை

4-ருஜூஸ்
இப்படித் தன்னை அமைத்துக் கொண்டு பொருந்தும் போது
அவர்கள் நாநா ருசிகள் ஆகையாலே
மேட்டிலே விரகாலே நீர் எற்றுமா போலே
அவர்கள் செவ்வைக் கேடே செவ்வை யாம்படி செவ்வியனாகை
ஆர்ஜவம் ஆவது -ஆஸ்ரித விஷயத்தில் மநோ வாக் காயங்களால் ஏக ரூபனாகை-
யஜ்ஜாதீயோ யாத்ருசோ யத் ஸ்வ பாவ –தாஜ்ஜாதீய தாத்ருச தத் ஸ்வ பாவ –
ததவை ததாஸ்து கதமோ அயமஹோ ஸ்வ பாவோ யாவான் யதாவித குணோ பஜதே பவந்தம்
தாவாம்ஸ் ததாவித குணஸ் த்தீன வ்ருத்தி
சம்ச்லிஷ்யசி த்வமிஹ தேன சமான தர்மா –

5-ஸூசிர் –
இப்படி உபகரிக்கும் இடத்தில் ஒரு பிரயோஜனத்தைக் கணிசியாதே
வெறும் புறத்தில் உபகரிக்கும் பாவ ஸூத்தியைச் சொல்கிறது –
யோ அர்த்தே ஸூசி ஸ ஹி ஸூ சி –
நித்ய சம்சாரியை ஸ்வ சம்பந்தமே ஹேதுவாக நித்ய சூரிகளோடு ஒரு கோவை யாக்க வல்ல
பாவனத்வத்தைச் சொல்லுகிறது -என்றுமாம் –
பாவனா சர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தன –
பக்தி ரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மின் ம்லேச்சே அபி வர்த்ததே
ஸ விப்ரேந்த்ரோ முநிஸ்ஸ்ரீ மான் ஸ யதிச் ஸ ஸ பண்டித
மயா பூஜ்ய சதா சா சௌ மதபக்த ஸ்வ ப ஸோ அபி
தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ஸ ஸ பூஜ்யோயதா ஹ்யஹம்

6-ம்ருதுர் –
சம்ச்லேஷத்தில் இப்படி இருக்கிறவன் இவர்கள் விச்லேஷத்தில் ஆற்ற மாட்டான் -என்கிறது
ஆத்மகுண பிரகரணம் ஆகையாலே மானச தௌர்பலத்தைச் சொல்லுகிறது –
நைவ தம்சான் ந மசகான் –
ந ஜீவேயம் ஷணம் அபி
அவகாஹ் யார்ணவம் ச்வப்ஸ்யே

7-தயாளூர் –
ஆஸ்ரித விஷய துக்கத்தில்
அசஹனாய் இருக்கை
தயை பர துக்க அசஹத்வம்
வ்யசநேஷூ மனுஷ்யாணாம்
இதி சர்வ சாதாரணம் ஆனால் ஆஸ்ரித விஷயத்தில் கிருபை
அவாங் மனஸ் அகோசரம் இறே
ப்ரியோ ஹி ஜ்ஞானி நோ அத்யர்த்தம் -இதி
ஸ்திரீ ப்ரணஷ்டேதி காருண்யாத்-
ஸ தம் நிபதிதம் -இத்யாதி

8-மதுர-
நிர்தயனானாலும் விட ஒண்ணாத சாரச்யத்தைச் சொல்லுகிறது –
நாநா வித ருசிகளான ஜந்துக்களுக்கு அவ்வவர் நிலைகளிலே இனியனாய் இருக்கை –
ரசோ வை ஸ
ஏஷ ஹேவா நந்த யாதி
ரசம் ஹ்யேவாயம் லப்த்வா நந்தி பவதி -இத்யாதய-

9-ஸ்திர-
இப்படி சர்வ ரசிகனாய் இருக்கிறவன் பக்கலிலே அல்ப அனுகூல்யம் பண்ணினார்க்கு
தனக்கு அந்தரங்கரானார் விரோதிகள் ஆனாலும் அவர்களால் அப்ரகம்யனாய் இருக்கை –
ந த்யஜேயம் கதஞ்சன –
அபயம் சர்வ பூதேப்ய
என்னடியார் அது செய்யார்
ஸ்திர –
ஆஸ்ரிதர் உடைய பராதி கூல்யங்களாலும்
அவிக்ருதனாய் இருக்கும் என்றுமாம் —

10-ஸம-
ஆஸ்ரயிக்கும் இடத்தில் ஜ்ஞான வ்ருத்தாதிகளில் குறைந்து இருந்தார்களே யாகிலும்
ஆஸ்ரயணீயத்வே சமனாகை –
ஸ்மோஹம் சர்வ பூதேஷு
ஈடும் எடுப்புமில் ஈசன் –திருவாய் மொழி -1-6-3-
கொள்கை கொளாமை இலாதான் -திருவாய் மொழி -1-6-5-

11-க்ருதீ –
கர்த்தும் உத் யுக்தவான்
இப்படி ஆஸ்ரயித்தால்-அவருடைய கர்த்தவ்ய அம்சம் எல்லாம்
தனக்கே அனுஷ்டேயம் என்று இருக்கும்
ஆதி கர்மணி க்த
ந ஸ்மரத்யப காராணாம் ஸ்தமப்யாத் மவத்தயா
கதஞ்சிதுப காரேண க்ருதே நை கேன துஷ்யதி
உச்யமா நோ அபி பருஷம் நோத்தரம் ப்ரதி பத்யதே
ஆஸ்ரிதர் தன்னை லபித்தால் இழந்தவர்கள் பெற்றாராய் இருக்குமது அன்றிக்கே -தன் பேறாய் இருக்கை –
அபி ஷிச்ய ஸ
தவ சார்த்த ப்ரகல்பதே

12-க்ருதஜ்ஞஸ் –
இப்படித் தான் அவர்களுக்கு எல்லா உபகாரங்களைப் பண்ணினாலும்
அவர்கள் அடியில் பண்ணின அல்ப அனுகூல்யத்தைக் குவாலாக -பெரியதாக -நினைத்து இருக்கும் –
அவர்கள் பண்ணும் அபகாரமும் அறியான் –
அவிஜ்ஞாதா சஹஸ்ராம் ஸூ –
தான் பண்ணின உபகாரமும் அறியான் –
ருணம் ப்ரவ்ருத்த மிவ மே ஹ்ருதயானநாப ஸ்ர்ப்பத்தி -என்று இருக்குமவன் –
சிரஸா யாசத்

த்வமஸி –
ஆஸ்ரயத்தில் நலங்கள் குணம் பெறாத படி இருக்கும் -என்னுதல் –
இக் குணங்களும் தன்னைப் பற்றி நிறம் பெறும்படி ஸ்பருஹணீயமாய் இருக்கும் -என்னுதல் –

ஸ்வ பாவதஸ் –
இக்குணங்கள் ஆவித்யகம் அன்று
ஆவித்யகம் -அவித்யா கல்பிதம் –
ஔபாதிகம் என்னலாகாத படி -நை சர்க்கிகம் -இயற்க்கை யானது -என்னுதல்

சமஸ்த கல்யாண குணாம்ருதோ ததி –
எல்லா குணங்களும் கல்யாணமே
நிரதிசய போக்யங்களுமாய்
அனுபவிக்க இழிந்தார்க்கு கரை காண ஒண்ணாமைக்கு
ஒரு கடல் என்னும் அத்தனை -என்கிறார்
மதிஷாயான்நிவர்த்தந்தே ந கோவிந்த குண ஷயாத்-

(ஸ்வபாவத-என்பதை ஒவ் ஒன்றிலும் அன்வயித்து -சிலவற்றை அருளிச் செய்து
ஸமஸ்த கல்யாண குண அமுதக் கடல் -என்று நிகமிக்கிறார் -)

—————————————————————————

ஸ்லோகம் -19- அவதாரிகை –

இக் குணங்களுக்கு சங்க்யை
இல்லாதோபாதி ஒரோ
குணங்களுக்கு அவதி இல்லை
என்கிறார் –

உபர்யுபர்யப் ஜபு வோ அபி பூருஷான்
பிரகல்ப்ய தே யே சதா மித்ய நுக்ரமாத்
கிரஸ் த்வதே கைக குணாவதீ ப்ஸயா
ஸதா ஸ்திதா நோத் யமதோ அதி ஸேரதே–19-

உபர்யுபர்யப் ஜபு வோ அபி பூருஷான் பிரகல்ப்ய தே யே சதா மித்ய நுக்ரமாத் –
அப்ஜ புவ உபர்யு பரி தே யே ஸதா மித்ய நுக்ரமாத் பூருஷான் பிரகல்ப்ய –
திரு நாபீ கமலத்திலே அவ்யவதானே பிறந்து
அவனோடு ஓதின சதுர் முகனுக்கு மேலே
அவனை மனுஷ்யர் கோடியிலே நிறுத்தி
தே யே சத -க்ரமத்தாலே
மனுஷ்ய கந்தர்வாதி ப்ரஹ்மாந்தமாக –
அநந்த அவதி சித்த்யர்த்தமாக ப்ரஹ்மாக்களை கற்பித்து –
கிரஸ் த்வதே கைக குணாவதீ ப்ஸயா -ஸதா ஸ்திதா –
ஆனந்த குணம் ஒன்றையும் எல்லை காண்கையிலே
இச்சையாலே உத்யோகித்து
சர்வ காலமும் ஸ்திதைகளான வைதிககீர்கள் ஆனவை –
யெகைக-என்கையாலே ஜ்ஞான ஆனந்த அவஹமான யுவத வாதிகளை நினைக்கிறது –

சதா ஸ்திதா கிர -என்று
நித்யத்வ அபௌருஷேயத்வங்களை சொல்லிற்று ஆகவுமாம் –
வேத அஷர ராசி என்னாதே-கீர்கள் -என்கிறது
வேத சப்தேபய ஏவாதௌ -என்கிறபடியாலே
லௌகிக சப்தங்களும் வைதிக சப்தங்கள் ஆகையாலே சொல்லுகிறது
அவை அந்த குணங்களைக் கண்டபடி யென் -என்னில்

நோத் யமதோ அதி ஸேரதே-
உத்தியோக தசையான இது ஒழிய மேல் கால் வாங்கிற்றன வில்லை –
சைஷா நந்தச்ய மீமாம்ஸா பவதி -இத்ராப்ய
ஸ ஏகோ ப்ரஹ்மண ஆனந்த -இதி
யுவா ஸ்யாத்-
ஸ்வரூப ரூப குணங்களுக்கும் உப லஷணம் ஆதல்
யுவத வைத்தால் வந்த தேஜஸ் சை சொல்லுதல்

அத்யாயக இதி ஜ்ஞானம்
ஆசிஷ்ட்ட இதி சக்தி
த்ரடிஷ்ட்ட இதி வீர்யம்
பலிஷ்ட்ட இதி பலம்
தஸ்யேயம் -இதி ஐஸ்வர்யம்
த்ரய்யு யதா தவ யுவத்வ முகைர் குனௌ கை இத்யாதய
உத்யமத –
உத்யோகாத்
நாதி சேரதே
அதிக்ரமண சமர்த்தா ந பவந்தி-

(அப்ஜபுவ உபர்யுபரி / அப்ஜபுவ பூருஷான் ப்ரகல்ப்ய ப்ரஹ்மாக்களை மநுஷ்யர்களாக கல்பித்து -சதம் சதம் நூறு நூறாக –
ஆனந்தவல்லி -சொல்லுமா போலே
சொல்லலாமது ஒழிய -உபர்யுபரி ப்ரகல்ப்ய-என்று கல்பித்தததே மேலும் மேலும் செல்லும் -முடிந்தபடி இல்லை –
தே யே சதம் தே யே சதம் தே யே சதம் -என்று அநு க்ரமம்-ஒன்றின் பின் ஒன்றாக -கிர-வேத வாக்கியம் செல்லும் என்றவாறு –
ஆனந்த வல்லீ தவ குண நிவஹம் யவ்வன ஆனந்த பூர்வம் -நான்மறைகள் தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் –
ஆழ்வார் போலே உயர்வற உயர்நலம் உடையவன் என்று பேசி விடாமல் ஏதோ பேசத் தொடங்கி பரிபவப் பட்டனவே வேதங்கள் –
அருமையான வேதாந்த விழுப் பொருளை அருளிச் செய்கிறார் இத்தால் -)

————————————————————————–

ஸ்லோகம் -20- அவதாரிகை –

கீழ்ச் சொன்ன குணங்களுக்கு போக்தாவான
ஆஸ்ரிதர் பெருமையை அருளிச் செய்கிறார்
அஸ்மின் நஸய ஸ தத் யோகம் சாஸ்தி -ப்ரஹ்ம சூத்ரம் -1-1-20-
இந்த ஆனந்த சேர்க்கையை ஸ்ருதி -ரசம் ஹ்யேவாயம் லப்த் வா நந்தீ பவதி -ஸ்ருதி -என்று
இவனாலே வந்த பெருமையை உடையவர்கள் அளவு இதுவானால்
அவன் பெருமை பரிச்சேதிக்க ஒண்ணாது என்னும் இடம்
கிம்புநர் நியாய சித்தம் அன்றோ -என்கிறார்-என்றுமாம் –

த்வத் ஆஸ்ரிதா நாம் ஜகத் உத்பப ஸ்திதி
பிரணாச சம்சார விமோசன ஆதய
பவந்தி லீலா வித யஸ்ஸ வைதிகாஸ்
த்வதீய கம்பீர மநோ நுசாரிண–20-

த்வத் ஆஸ்ரிதா நாம் –
ப்ரஹ்ம ருத்ராதி நாம் -ஸ நாகாதி நாம் -ஸ
தேவரை தூர நின்று ஆஸ்ரயிக்கிற ப்ரஹ்மாதிகள்
சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களை உபதேச க்ரமத்தாலே பெற்று-
சம்சார விமோசநத்தையும் பண்ண சக்தரான பின்பு
அநந்ய பிரயோஜனராய் ஆஸ்ரயிக்கும் அவர்கள்
அவற்றைச் செய்யப் பார்த்தால் –
லீலையாகா நின்றது –
முக்தர் தேவரோடு லீலா ரசம் அனுபவிக்கும் போது
சங்கல்ப்பத்தாலே ஜ்ஞாத்யாதிகளை சிருஷ்டித்தே அனுபவிப்பது –
சங்கல்பா தேவ தச்சருதே -ப்ரஹ்ம சூத்ரம் -4-4-8-
ஸ யதி பித்ரு லோக காமோ பவதி
சங்கல்பா தே வாஸ்ய பிதரஸ் ஸ முத்திஷ் டந்தி -சாந்தோக்யம் –
ஜகத் ஸ்ருஷ்ட்யாதி யில் ப்ராப்தி இல்லாமை போக்கி
சக்தி இல்லாமையாலே தவிருகிரார் அல்லர் –
ஆதி சப்தத்தாலே அநேக சரீர அந்த பிரவேச நியமங்களை நினைக்கிறது –
ஜகத் வியாபார வர்ஜம் ப்ரகரணாத சன்னிஹி தத்வாச்ச -ப்ரஹ்ம சூத்ரம் -4-4-17-
போக மாத்ர சாம்ய லிங்காச்ச -ப்ரஹ்ம சூத்ரம் -4-4-21-
அதவா
ஜகத் உத்பப ஸ்திதி பிரணாச சம்சார விமோசன ஆதய பவந்தி லீலா -த்வத் ஆஸ்ரிநாம் –
முமுஷூ சிஸ் ருஷையா வி றே ஸ்ருஷ்டியாதிகள்-
நிரதிசய போகயதையே ஸ்வரூபமாய் இருக்க
சம்சார விமோசகர் என்கிறது ஆஸ்ரித அர்த்தமாக விறே –
ஆதி சப்தத்தாலே ததர்த்தமான அநேக அவதாரங்கள் –
திருக் குரவையிலே அநேக விக்ரஹ பரிக்ரகாதிகள் –

வித யஸ்ஸ வைதிகாஸ்-
இதம் குரு இதம் மா கார்ஷீ -என்று ஸ்வ தந்த்ரமான வைதிக விதிகளும்
த்வதீய கம்பீர மநோ நுசாரிண
அநந்ய ப்ரயோஜனராய்
ஆஸ்ரயித்த வர்களுடைய
கம்பீரமான மனஸ்சைப் பின் செல்லா நின்றன –
மனஸ்ஸூக்கு கம்பீரத்வம் ஆவது -ஷூத்ரமான ஐஸ்வர்யாதிகளிலே கால் தாழாதே அநந்ய பிரயோஜனமாகை
ப்ரஹ்ம வாதி நோ வதந்தி
ஸ ஹோவாச வியாச பாராசர்ய
யே தத்ர ப்ராஹ்மாணாஸ் சம்மர்சின -இத்ராப்ய
யதா தே தத்ர வர்த்தே ரன் ததா தத்ர வரத்தே தா –
நினை தொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் -திருவாய் மொழி -9-6-2- என்று
பகவத் விஷயத்தில் இவ்வளவு அவகாஹி யாதார்க்கு
நிதித்யாசி தவ்ய
விஜ்ஞாய ப்ரஜ்ஞாம் குர்வீத
ஆத்மானம் த்யாயீத -என்று விதிக்கிறது இறே –
த்வதீயமான கம்பீர மனஸ்சை அனுசரியா நின்றன -என்றுமாம் –
ஸ்ருதி ச்ம்ருதிர் மமை வாஜ்ஞா –

(நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய் சென்று சென்று ஆகிலும் கண்டு
ஜன்மம் களிப்பான் எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் –
அடுத்து அடுத்து உபகார பரம்பரைகளை செய்து அருளி -ஒருவராவது அகப்படுவாரோ என்ற நப்பாசையாலே -என்றபடி –
த்ரிபி பிரஜாபதேர் பக்தா சப்தபிச் சங்கரஸ்ய து விம்சத்யா அக்னி இந்திரா ஸூர்யாதே விஷ்ணு பக்த ப்ரஜாயதே )

—————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்- ஸ்லோகம் -10-11-12-13-14—-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

February 4, 2014

ஸ்தோத்ரம் -10-அவதாரிகை –

இப்படி ஸ்தோத்ர ஆஷேப சமாதானத்தைப் பண்ணி
ஈஸ்வரன் உடைய சரண்யதைக்கு உறுப்பான பகவத் பரத்வத்தை
மேல் அஞ்சு ஸ்லோகத்தாலே அருளிச் செய்கிறார் –
இதில் முதல் ஸ்லோகத்தாலே –
சத் ப்ரஹ்மாதி சாமான்ய வாசி சப்தங்களாலே ஜகத் காரணதயா பிரதிபாதிக்கப் படுகிறான் நாராயணன் என்று
கதி சாமான்ய ந்யாயத்தாலே காரண வாக்ய விஷயமான பரத்வத்தை அருளிச் செய்கிறார் –
ஸ்தோத்ரம் பண்ண உபக்ரமித்தவாறே வாத்சல்ய ஜன்யமான
விசேஷ கடாஷத்தைப் பண்ணினான் என்கிற இது
பிரளய காலத்திலேயே அசித் கல்பரான சேதனரை தயமானவாய்க் கொண்டு
விசேஷ கடாஷத்தைப் பண்ணி உண்டாகி
அந்த ஜந்துக்கள் உடைய ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஹேதுவாய்
உபகாரகனான உனக்கு ஸ்ருஷ்டமான ஜந்துக்கள் ஆபிமுக்யம் பண்ண
முகம் கொடுத்தாய் என்கிற இது ஆச்சர்யமோ -என்கிறார் -என்றுமாம் –

நா வேஷசே யதி ததோ புவ நான்ய மூநி
நாலாம் ப்ரபோ பவிது மேவ குத ப்ரவ்ருத்தி
ஏவம் நி சரக்க ஸூ ஹ்ருதி த்வயி சர்வ ஜந்தோ
ஸ்வாமின் ந சித்ர மித மாஸ்ரித வத்ஸ்லத்வம்–10-

நா வேஷசே யதி –
ந அவேஷசே யதி –
நீ கடாஷித்து இரா விடில் –
ததை ஷத பஹூஸ்யாம் பிரஜாயேயேதி -என்று
அசத் கல்பரான சேதனரைக் கடாஷித்து இலையாகில்
அநாதி காலம் பண்ணிப் போந்த அபராதங்களை பாராதே
அவற்றின் உடைய துர்க்கதியைப் பார்த்து
க்ருபா பர தந்த்ரனாய் இறே அப்போதே கடாஷித்தது
அல்லது உன்னைக் கடாஷித்திலையே -என்பார் இல்லையே –

தத-
பிரளயத்துக்கு பின் –
பஹூஸ்யாம் -என்கிற சங்கல்பத்துக்கு பின்பு
புவன சிருஷ்டிக்கு முன்பு உண்டான தூரத்தை சொல்லுகிறது –
புவ நான்ய மூநி நாலாம் -பவிது மேவ
அமூநி புவநானி பவிதுமேவ நாலாம் –
இவ் உலகங்ககள் உண்டாகவே மாட்டாது –
போக மோஷங்களை சாதித்துக் கொள்ளுகைக்கு ஏகாந்தமான
சதுர்தச புவனங்கள் ஆனவை உண்டாகவே மாட்டாது –
வயதிரேக நிர்த்தேசம் அர்த்த ஸ்தைர்யத்துக்காக –
கோ ஹ்யேவான் யாத் க ப்ராண்யாத்
ந ததஸ்தி விநாயத் ஸ்யான்மயா பூதம் சராசரம்-என்னக் கடவது இறே

குத ப்ரவ்ருத்தி –
எக்கார்யம் செய்ய மாட்டாது என்பது சொல்லவும் வேண்டுமோ
உன் சங்கல்பம் ஒழிய உண்டாக மாட்டாத இவை ப்ரவர்த்திப்பது எத்தாலே
சகல உத்பத்தியும் பிரவ்ருத்தி நிவ்ருத்தியும்
உன்னுடைய கடாஷ பலம் அன்றோ –

ப்ரபோ –
ஜகத் காரண்த்வ பிரயுக்தமான ஐஸ்வர்யத்தை பிரகாசிப்பிக்கிறது

ஏவம் நி சரக்க ஸூ ஹ்ருதி த்வயி சர்வ ஜந்தோ – சர்வ ஜந்தோ ரேவம் நி சரக்க ஸூ ஹ்ருதி-
நித்ய விபூதி உண்டாய் இருக்க இவற்றை இழக்கையாலே
ஸ ஏகாகீ ந ரமேத -என்னும்படி தனிமைப் பாடாய்
ப்ரஹ்ம ருத்ராதி ஸ்தாவராந்தமான ஜந்து ஜாதத்துக்கு கரண களேபரங்களை கொடுத்து
குறை தீர்ந்தே என்னும்படி
அகாரண ஸூஹ்ருத்தான உன் பக்கல்

ஸ்வாமின் –
இவற்றை உண்டாக்குகிற இது உன் பேறாக வேண்டிற்று
இவற்றோடு உண்டான குடல் துவக்கு இறே
ஸ்வ முத்திச்ய –உபாதத்தே -என்று இறே அபிஉக்தர் -ஸ்ரீ பட்டர் -வார்த்தை
ஸ்வ வ்யதிரிக்த சகல சேதன அசேதனங்களும் உனக்கு அனன்யார்ஹ சேஷமான ச்வாமித்வத்தை உடையவனே –

ந சித்ர மித மாஸ்ரித வத்ஸ்லத்வம் – இத ஆஸ்ரித வத்சலத்வம் ந சித்ரம் –
சகல வாங் மனஸ் அகோசரமான -த்வத் விஷய ஸ்தோத்ரத்துக்கு
யோக்யனாம் படி என் பக்கல் உண்டான வத்சலத்வம் உனக்கு ஆச்சர்யமோ

கிமத்ர சித்ரம் -இத்யாதி
ஜகத் காரணத் வத்தாலே -சர்வ உத்க்ருஷ்டன் என்றும்
காரணம் து த்யேய-என்கையாலே சர்வ சமாஸ்ரயணீயன் என்றும்
ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்கையாலே ப்ராப்யன் என்றும்
ஸ்ருஷ்ட்யாதிகளை தன் பேறாகப் பண்ணுகையாலே சர்வ ஸ்வாமி என்றும்
தாம் ஸ்தோத்ரத்தில் மூளும் படி முகம் காட்டுகையாலே ஆஸ்ரித வத்சலத்வமும் – சொல்லிற்று ஆயிற்று –
(கீழே அப்ஜ நேத்ரே -என்ற சம்போதம் திரு விழி செவிப் பட்டவாறே தாமரைக் கண்களால் கடாக்ஷித்து அருள –
தத் ஐஷத–பஹுஸ் யாம் பிரஜாயேயேதி -ஸ்ருதி படியே இவரும்
அவேஷஸே-ஈஷணம்-ஸ்வாபாகிக ஸூஹ்ருத கடாக்ஷம் -என்றவாறு
வாத்சல்யம் பிரபாவம் அத்புதம் அன்று இயற்க்கை என்றவாறு )

—————————————————————————————

ஸ்லோகம் -11-அவதாரிகை

இத்தால் பரத்வ லஷணம் சொல்லுகிறது
கீழ் கதி சாமான்ய ந்யாயத்தாலே நாராயணனே சர்வ ஸ்மாத் பரன் -என்றது
இதில் விசேஷ வாசியான சிவா சம்ப்வாதி வாக்யங்களாலும்
பிரதி பாதிக்கப் படுகிறான் நாராயணனே -என்று
சர்வ வேதாந்த வ்யாக்யானமாய்
அநந்ய பரனான நாராயண அநுவாக
சித்தமான பகவத் பரத்வத்தை -அருளிச் செய்கிறார் –

ஸ்வா பாவிக அநவதிக அதிசய ஈசித்ருத்வம்
நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக க
ப்ரஹ்மா சிவச் சதமக பரம ஸ்வ ராடித்
யேதே அபி யஸ்ய மஹிமார்ணவ விப்ருஷஸதே–11-

ஸ்வாபாவிக –
இத்தால் கர்ம உபாதிகமாய் -அத்தாலே
அநித்யமாய் துக்க மிஸ்ரமான ப்ரஹ்மாதிகள் ஐஸ்வர்யத்தை வ்யாவர்த்திக்கிறது –

அநவதிக அதிசய-
இத்தால் நித்யரையும் முக்தரையும் வ்யாவர்த்திக்கிறது –
ஸ ஸ்வராட் பவதி -என்றும்
சத்ய காமஸ் சத்ய சங்கல்ப -என்றும்
நித்ய முக்த விஷயமான ஐஸ்வர்யங்களும் பாகவதா யத்தமாய்
சாவதிகங்களுமாய் இருக்கையாலே –

ஈசித்ருத்வம்
இந்த அசாதாரண ஸ்வரூப நிர்தேசத்தாலே
நிர் விசேஷ சின்மாத்திர வஸ்து -என்ற புத்த கந்திகளான வேதாந்திகளை வ்யாவர்த்திக்கிறது
நாராயண –
சத் ப்ரஹ்மாதி சாமான்ய வாசி சப்தங்களையும்
விசேஷ வாசியான சிவா சம்ப்வாதி சப்தங்களையும்
நாராயணன் பக்கலிலே வ்யவஸ்தாபிக்கிற
நாராயண அனுவாகம் சொல்லுகிற இவ்வர்த்தத்தில்
பிரமாணம் ப்ரத்ய பிஜ்ஞை பன்னப் படுகிறது –

த்வயி –
சர்வ வேதாந்தங்களிலும்
சர்வாதிகனாக பிரதி பாதிக்கப் படுகிறவனாய்
இவ்வாத்மாவுக்கு வகுத்தவனான உன் பக்கலிலே

ந ம்ருஷ்யதி
உக்தமான ஐஸ்வர்யத்தை பொறாதே ஒழிகிறவன்

வைதிக க –
அப்ராஹ்மண இத்யர்த்தம் –
யோ விஷ்ணும் சத்தம் த்வேஷ்டி
விஷ்ணு பக்தி விஹீ நோ யஸ் சர்வ சாஸ்த்ரார்த்த வேத்யபி
பிராமண்யம் தஸ்ய ந பவேத் தச்யோத் பத்திர் நிரூப்யதாம் இத்யாதி –
ஹிரண்ய கர்ப்பச் சம வர்த்த தாக்ரே பூ தஸ்ய ஜாத பதி ரேக ஆஸீத் –
கிரிந்த்ர த்வதுத்தர
ஏகோ ஹி ருத்ரோ ந த்விதீயாய தஸ்து -இத்யாதிகளிலே
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு சர்வேஸ்வரத்வம் ஓதா நிற்க
சிவா சம்ப்வாதி சப்தம் நாராயணனை பிரதி பாதிக்கிறது என் என்று
இப் பிரமாணங்களில் அபர்ய வசித்தவன் வைதிகன் அல்லன் என்று ஷேபித்த படி -எங்கனே என்னில் –

ச ப்ரஹ்மா ச சிவச் சேந்திர -இத்யாதிகளில் பரிஹரித்தது என்கிறது உத்தரார்தம்-
ப்ரஹ்ம ருத்ராதிகளோடே சம்ப்ரதிபந்த ஷேத்ரஞ்ஞன் ஆன-நன்கு அறியப் பட்ட ஜீவன் ஆன – இந்த்ரனையும்
பார தந்த்ர்யமே ஸ்வரூபமான முக்தாத்மா ஸ்வரூபத்தையும்
சம்பி வ்யாபஹரிக்கை யாலே -கூடப் படிக்கையாலே –
அவர்கள் உடைய அநீஸ்வரத்வம் சம்ப்ரதிபன்னம் -என்கிறது

யேதே அபி –
இந்த லோகத்திலே ஈஸ்வர தயா பிரசித்தரான இவர்களும்
யஸ்ய-
நாராயண பரா வேதா -என்று சர்வ வேதாந்த பிரசித்தியை -நினைக்கிறது

மஹிமார்ணவ விப்ருஷஸதே-
சர்வேஸ்வர மகிமை யாகிற கடலிலே
ஒரு பிந்து மாதரம் என்று நாராயண அனுவாகம் தானே
பரிஹரியா நின்றது -என்கிறார் –

யஸ்ய தே –
என்று ஸ்ருதி பிரசித்தியையும் தமக்கு அவ்வர்த்தத்தில் உண்டான
சாஷாத் காரத்தையும் அருளிச் செய்கிறார் –

(ஸ்வா பாவிக/ அநவதிக அதிசய/ ஈசித்ருத்வம்-இரண்டு விசேஷணங்கள் இவனுக்கே அசாதாரணம் –
ச ப்ரஹ்மா ச சிவஸ் சேந்த்ரஸ் ஸோஷர -பரமஸ் ஸ்வராட்
முக்தருக்கும் ச ஸ்வராட் பவதி -நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி —
ஸ்வ தந்திரம் இங்கு முக்தர்களுக்கு தங்கள் நினைத்த படி கைங்கர்யம் செய்ய
அநேக சரீரம் பரிக்ரஹம் கொண்டு –அவனை மகிழ்விக்க என்றபடி
எந்த வைதிகன் உன் ஐஸ்வர்யம் சகிக்க மாட்டான் என்றது
ஸ்ரீ மன் நாராயணனுடைய ஜகத் காரணத்வம் சர்வ ஸ்வாமித்வம் போன்ற ஐஸ்வர்யத்தை பெறாதவர்கள்
வேத பாஹ்யர்கள் -என்றதாம் – )

————————————————————————————–

ஸ்லோகம் -12- அவதாரிகை —

இதில் விப்ரதிபத்தி ஷமங்கள் அன்றியிலே
தனித் தனியே பூரணமாய்
வஸ்து சாமர்த்யா பர நாமங்களான
லிங்கங்களாலே பரத்வத்தை அருளிச் செய்கிறார் –

கஸ்ஸ்ரீ ஸ்ரீய பரம சத்த்வ சமாஸ்ரய க
க  புண்டரீக நயன புருஷோத்தம க
கஸ்யா யுத அயுத சதா ஏக கலா அம்சக அம்சே
விச்வம் விசித்திர சித் அசித் ப்ரவிபாக வ்ருத்தம்—12-

கஸ்ஸ்ரீ ஸ்ரீய –
ஈஸ்வர வ்யதிரிக்த சகல சேதனமும்
தம் தாமுடைய ஸ்வரூப ரூப ஸ்தித்யாதிகளுக்காக
பற்ற வேண்டும்படியான மேன்மை யுடைத்தான பிராட்டியும்
தன்னுடைய ஸ்வரூப ரூப ஸ்தித் யாதிகளுக்காக
பற்ற வேண்டும்படியான மேன்மையை உடையார் உன்னை ஒழிய ஆர் –
கிம் ஷேப -ஆர்த்தமாக இல்லை -என்றபடி –

ஈஸ்வரீம் சர்வ பூதானாம் –
அஸ்ய ஈசானா ஜகதோ விஷ்ணு பத்நீ –
திருவுக்கும் திருவாகிய செல்வா -பெரிய திருமொழி -7-7-1- என்னக் கடவது இறே-

பரம சத்த்வ சமாஸ்ரய க –
பரம -சப்தத்தாலே
ரஜஸ் தமஸ் ஸூக்களையும்
அத்தோடு சமபிவ யாஹ்ருதமான சத்வத்தையும் வ்யாவர்த்திக்கிறது
ஸூத்த சத்வத்துக்கு ஆஸ்ரயமான விக்ரஹாதிகளை உடையவன் ஆர்

மகான் ப்ரபுர்வை புருஷ சத்த்வஸ் யைஷ ப்ரவர்த்தக –
ஆதித்ய வர்ணம் தம்ஸ பரஸ்தாத் –

க புண்டரீக நயன –
ஸுவ அனுபவ ஆனந்த த்ருப்தியாலும்
ஆஸ்ரித அர்த்தமான நீர்மைகளுக்கு பிரகாசமாயும்
சர்வேஸ்வரத்வ ஸூசகமான திருக் கண்களை உடையவன் ஆர் –
தஸ்ய யதா –புண்டரீகம் ஏவம் அஷிணீ –
மஹா வராஹ ஸ்புட பத்ம லோசன –
ஜிதந்தே புண்டரீ காஷ –
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா -பெரிய திருமொழி -7-7-9-

புருஷோத்தம க –
உன்னை ஒழிய புருஷாணாம் உத்க்ருஷ்ட தமராய் இருக்கிறார் ஆர் –
யஸ்மாத் ஷரமதீ தோஹம்-இத்ராப்ய
அதோ அஸ்மி லோகே வேதே ச பிரதித புருஷோத்தமா -ஸ்ரீ கீதை -15-38-என்று
ஆப்தரான தேவரீரே அருளிச் செய்திலீரோ –

கஸ்யா யுத அயுத சதா ஏக கலா அம்சக அம்சே விச்வம் விசித்திர சித் அசித் ப்ரவிபாக வ்ருத்தம் –
விசித்திர சித் அசித் ப்ரவிபாக வ்ருத்தம் -கஸ்ய அயுத அயுத சதா ஏக கலா அம்சக அம்சே –
சித் அசித் விபாகத்தாலும் வர்த்திக்கிற இந்த ஜகத் விசித்ரமாய்க் கொண்டு
ஆருடைய சங்கல்ப சதா சஹாஸ்ராயுதைக தேசத்தில் வர்த்திக்கிறது –
கர்மத்தால் வந்த சதுர்வித சரீரங்களும்
தத் போக்யாதிகளும்
அம்சம் என்று கலோபாதிகம் –
அல்பார்த்தத்திலே-
பாதோ அஸ்ய விஸ்வா பூதானி –
யஸ்ய அயுத அயுத அம்ஸ அம்சே –
மேரோரிவாணுர் யஸ்யை தத் –
இதம் க்ருத்ஸ்நம் ஏகாம்சேன ஸ்திதோ ஜகத் -இத்யாதி-

(வேதாந்தாஸ் -தத்வ சிந்தாம் முரபிதுரஸி யத் பாத சிஹ்னைஸ் தராந்தி-திருவுக்கும் திருவாகிய செல்வன் –
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷணீ –பரத்வ லிங்கங்கள் / க க கஸ்ய கஸ்ய-கேள்விகள்
-மேலே -14- த்வத் அந்நிய க -உன்னை தவிர வேறே யார் -என்று எம்பருமானையே நேராக ஸ்பஷ்டமாக –கேட்டு
-நீயே பரம்பொருள் என்று விஞ்ஞாபித்த படி )

—————————————————————————————-

ஸ்லோகம் -13-அவதாரிகை –

இதிஹாச புராண
ப்ரக்ரியையாலே ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய
ஷேத்ரஜ்ஞத்வத்தையும்
பகவத் பரத்வத்தையும்
அருளிச் செய்கிறார் –

வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாத்
யாபத் விமோசன மஹிஷ்ட்ட பலப்ரதானை
கோ அந்ய ப்ரஜாப ஸூ பதி பரிபாதி கஸ்ய
பாதோ தகேந ச சிவஸ் ஸ்வ சிரோத்ருதேந–13-

வேத அபஹார –
யோ வை வேதாம்ஸ்ச-என்று ப்ரஹ்மாவுக்கு
வேத சஷூஸ் சைகொடுக்க -அது அசுரர்களாலே அபஹ்ருதமாக
ப்ரஹ்மா வேதத்தை இழந்து துக்காந்தர் நிமக்நனான அளவிலே
விரோதிகளை அழியச் செய்து மீட்டுக் கொடுத்த உபகாரத்தைச் சொல்லுகிறது

ததோ ஹ்ருதேஷூ வேதேஷூ ப்ரஹ்மாணம் காசமஅவிசத் –
ததோ வசனமீஸாநம் ப்ராஹ வேதைர் விநாக்ருத
ப்ரஹ்மா வேதா மே பரமம் சஷூ வேதா மே பரமம் தனம்
வேதா மே பரமம் தாம வேதா மே ப்ரஹ்ம சோத்தமம்
மம வேதா ஹ்ருதாஸ் சர்வே தானவாப்யாம் பலாதித்த
அந்த காரா இமே ஜாதா லோகா வேதைர் விவர்ஜிதா
வேதா தருதே ஹி கிம் குர்யாம் லோகன் வை ஸ்ரஷ்டுமுத்யத
அஹோ பத மஹத் துக்கம் வேத நாச நஜம் மம
ப்ராப்தம் து நோதி ஹ்ருதயம் மாம் து சோகாமயஸ் த்வயம்
ஜக்ராஹ வேதா ந கிலான் ரஸா தல கதான் ஹரி
ப்ராதாச்ச ப்ரஹ்மனே ராஜன்
ததாஸ் ஸ்வாம் ப்ரக்ருதிம் யயௌ
ததஸ் தயோர் வதே நாஸூ வேதோ பஹரனேந ச-
சோகாப நயனம் சக்ரே ப்ரஹ்மன புருஷோத்தம -இத்யாதி

குரு பாதக –
ருத்ரன் லோக குருவும் பிதாவுமாய் இருக்கிற ப்ரஹ்மாவை துர்மானமே ஹேதுவாக
தலையை அறுத்துப் பாதகியான பாதகத்தையும் போக்கி
தலை அறுப்புண்ட ப்ரஹ்மாவையும் ஜீவிக்கும்படி பண்ணி ரஷித்த படி

ஸ்ரீ மாத்ச்யே-
தேவீம் ப்ரதி ருத்ர -தத கரோத பரீதேன சம்ரக்தனய நேன ச
வாமாங்குட்ட நாகாக் ரேன சின்னம் தஸ்ய சிரோ மயா
ப்ரஹ்மா -யசமாத நபரா தஸ்ய சின்னம் த்வயா மம
தஸ்மாச்சா பசமா விஸ்ட கபாலீ தவம் பவிஷ்யசி
ருத்ர -ப்ரஹ்ம ஹாஸ் ஸ் குலிதோ பூத்வா சரண தீர்த்தானி பூதலே
ததோ அஹம் கதவான் தேவி ஹிமவந்தம் சிலோச்ச்சயம்
தத்ர நாராயணஸ் ஸ்ரீ மான் மயா பிஷாம் பிரயாசித்த
ததச்தேன ஸ்வகம் பார்ச்வம் நகாக்ரேன விதாரிதம்
மஹதீ ஸ்ரவதீ தாரா தஸ்ய ரக்தச்ய நிஸ் ஸ்ருதா
விஷ்ணு பிரசாதாத் ஸூ ஸ்ரோணி
கபாலம் தத் சஹஸ்ரதா ஸ் புடிதம் பஹூதா யாதம் ஸ்வப்ன லப்தம் யதா -இத்யாதி

தைத்ய பீடாத் யாபத் விமோசன –
ஹிரண்ய ராவணாதிகள் என்ன -த்ரிபுரத்தில் அசுரர்கள் என்ன
ஆதி சப்தத்தாலே
துரவாசஸ் சாபாதிகளை நினைக்கிறது –
இவர்களால் தேவதைகளுக்கு வரும் ஆபத்தைப் போக்கி

மஹிஷ்ட்ட பலப்ரதானை-
ஷேத்ரஜ்ஞத் வேன சம்ப்ரதி பன்னரான அவர்களுக்கு
ஸ்வ சமாராதா நத்தாலே-லோகம் அடங்க
ஈஸ்வரன் என்று கொண்டாடும் படியான பதங்களைக் கொடுத்த படியாலே
யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்மபூ
புநஸ் த்ரை லோகய தாத்ருத்வம் ப்ராப்தவாநிதி ஸூ ச்ரும-என்றும்
ப்ரஹ்மா தயஸ் ஸூ ராஸ் சர்வே விஷ்ணும் ஆராத்ய தே புரா
ஸ்வம் ஸ்வம் பதம் அநு ப்ராப்தா கேசவச்ய பிரசாத்த -என்றும்
ஏவமேஷாஸ் ஸூ ராணாம் ச ஸூ ராணாஞ்சாபி சர்வச
பயா பயங்கர கிருஷ்ணஸ் சர்வ லோகேஸ்வரபிரபு -என்றும்

கோ அந்ய ப்ரஜாப ஸூ பதி பரிபாதி –
பிரஜா பஸூ பதிகளைத்
தம்தாமால் வந்த ஆபத்துக்களோடு
பிறரால் வந்த ஆபத்துகளோடு வாசி அற
சாகல்யேன ரஷிக்கிறான் மற்று எவன் –

கஸ்ய பாதோ தகேந ச சிவஸ் ஸ்வ சிரோத்ருதேந-
ஆருடைய திருவடிகளின் நின்றும் விழுந்த ஜலத்தை ஜடையிலே தரிக்கையாலே
அந்த ருத்ரன் சிவனாயிற்று -சுத்தனாயிற்று
அவன் அசுத்தியை விளைத்து கொள்ளவும்
அவனை சுத்தனாக்கும் பரம பாவனன் உன்னை ஒழிய வேறு ஆர் தான் –

த்ரவீபூ தஸ் ததா தரமோ ஹரி பக்த்யா மஹா முனே
க்ருஹீத்வா தர்ம பாநீயம் பதம் நாதஸ்ய துஷ்டயே
ஷாளிதம் பரா பக்த்யா பாத் யார்க்யாதி பிரர்ச்சிதம்
ததம்பு பதிதம் த்ருஷ்ட்வா ததார சிரஸா ஹர
பாவ நாரத்தம் ஜடா மத்யே யோகயோ அஸ்மீத்யவ தாரணாத்
வர்ஷா யுதாந்யத பஹூன் ந முமோச ததா ஹர
சதுர முகன் கையில் சதுப்புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி
கதிர் முக மணி கொண்டு இழி புனல் கங்கைக் கண்டம் என்னும் கடி நகரே -பெரியாழ்வார் திரு மொழி -4-7-3-
நலம் திகழ சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும் கலந்து
இழி புனல் -பெரியாழ்வார் திரு மொழி -4-7-2-

(யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்ம பூ –புனஸ் த்ரை லோக்ய தாத்ருத்வம் ப்ராப்தவா நிதி சுச்ரும -என்றும்
ப்ரஹ்மாதயஸ் ஸூராஸ் சர்வே விஷ்ணும் ஆராத்ய தே புரா-ஸ்வம் ஸ்வம் பதம் அநு ப்ராப்தா கேசவஸ்ய ப்ரசாதத-என்றும் சுருதிகள் உண்டே –
மங்கை பாகன் சடையில் வைத்த கங்கை யார் பாதத்து நீர் -வனச மேவு முனிவனுக்கு மைந்தன் ஆனதில்லையோ
செங்கையால் இரந்தவன் கபாலம் ஆர் அகற்றினார் -செய்ய தாளின் மலரான் சிரததில் ஆனதில்லையோ –
வெம் கண் வேழ மூலம் என்ன வந்தது உங்கள் தேவனோ -வீறு வாணன் அமரில் அன்று விறல் அழிந்தது அல்லையோ –
அம் கண் ஞாலம் உண்ட போது வெள்ளி வெற்பு அகன்றதோ – ஆதலால் அரங்கன் அன்றி வேறு தெய்வம் இல்லையே –
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் -)

——————————————————————————-

ஸ்தோத்ரம் -14- அவதாரிகை –

பிரமாண அனுகூலமான தர்க்க ரூப ந்யாயத்தாலே
உக்தமான பரத்வத்தை
நியமிக்கிறவர் –

கஸ்யோ தர ரே ஹர விரிஞ்சி முக ப்ரபஞ்ச
கோ ரஷதீ மமஜ நிஷ்ட ச கஸ்ய நாபே
க்ரந்த்வா நிகீர்ய புனருத் கீரதி தவ தன்ய
க கேன வைஷ பரவாநிதி சக்ய சங்க—14-

கஸ்யோ தர ரே ஹர விரிஞ்சி முக ப்ரபஞ்ச –
ப்ரஹ்ம ருத்ர முகமான சகல பதார்த்தங்களும் மஹா ப்ரலயத்திலே ஆருடைய பக்கலிலே லயித்து இருக்கிறது –
ஸ தேவ சோமயே தமக்ர ஆஸீத் -ஏகமேவ அத்விதீயம் -என்கிறபடியே
தவி பரார்த்த காலம் நாம ரூபங்களை இழந்து
தம பர் தேவ -ஏகி பவதி -என்கிறபடியே
சர்வேஸ்வரன் பக்கலிலே கிடக்கிற படி –

ப்ரஹ்மாதி ஷூ ப்ரலீநேஷூ நஷ்டே லோகே சராசரே
ஆபூத சம்ப்லவே ப்ராப்நே ப்ரலீநே ப்ரக்ருதௌ மஹான்
ஏகஸ் திஷ்டதி விச்வாத்மா ஸ து நாராயண பிரபு -இத்யாதி
சம்ஹாராதிகளிலே கர்மீ பவிக்கும் இடத்தில் ப்ரஹ்மாதிகளோடு பிபீலிகாதிகளோடு வாசி இல்லை -என்கை –

கோ ரஷதீ –
ஹர விரிஞ்சி முகமான பிரபஞ்சத்தை ரஷிக்கிறார் ஆர் –
ந ஹி பாலான சாமர்த்தியம் ருதே சர்வேஸ்வரம் ஹரிம்
ஸ்தி தௌ ஸ்திதம் மகாப்ராஜ்ஞ பவத் யன்யச்ய கஸ்யசித் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-21
ந சம்பதாம் சமாஹாரே விபதாம் விநிவர்த்தனே-

அஜ நிஷ்ட ச கஸ்ய நாபே –
மஹா பிரளயத்திலே அவிபக்தமாய்க் கிடக்கும் பிரபஞ்சம் யாருடைய குஷியினின்றும் உத்பன்னம் ஆயிற்று
மஹா பாராதே மார்க்கண்டேய சமாக்யானே
ஸ்ருஜதஸ் தஸ்ய தேவஸ்ய பத்மம் ஸூரிய சமப்ரதம்
நா பேர் வினிஸ் ஸ்ருதம் தஸ்ய தத் ரோத் பன்ன பிதா மஹா

ஸூ பர்ண வைகுண்ட சமவாதே-
யத் தத் பத்ம பூத் பூர்வம் தத்ர ப்ரஹ்மா வ்யாஜாயத
ப்ரஹ்மனாஸ் சாபி சம்பூதஸ் சிவா இதய வதார்ய தாம்
சிவாத் ஸ்கந்தாஸ் சம்பபூவா ஏதத் சிருஷ்டி சதுஷ்டயம் -இத்யாதி

க்ரந்த்வா –
ப்ரஹ்மாதி ஸ்தாவராந்தகமான எல்லார் தலைகளிலும் திருவடியை வைத்தவன் ஆர்
திருவடியை தலையிலே வைத்தவனோ திருவடியின் கீழே துகை யுண்டவனோ ஈஸ்வரன் -என்கிறார் –
சங்கைஸ் ஸூ ராணாம் இத்யாஹி

நிகீர்ய புனருத் கீரதி –
இப்படி சர்வ பிரகார ரஷகர் உன்னை ஒழிய மற்று ஆர் –

தவ தன்ய க கேன வைஷ பரவாநிதி சக்ய சங்க –
இதரராலே பரதந்த்ரம் என்றும் சக்ய சங்கமாய் இருக்கிறதோ
சந்திக்தே கலு நியாய ப்ரவர்த்ததே –
வேறே சிலரை சம்சயிக்கைக்கு சம்பாவனை இல்லை -என்கை –
ஒருவன் ஜனகனாய் -ஒருவன் ஜன்யனாய்
ஒருவன் சேஷியாய் -ஒருவன் சேஷனாய்
ஒருவன் ஸ்ரீ ய பதியாய் ஒருவன் உமாபதியாய்
ஒருவன் புண்டரீ காஷனாய் ஒருவன் விரூ பாஷனாய்
ஒருவன் கருட வாஹனாய் ஒருவன் வ்ருஷப வாகனனாய்
ஒருவன் பாதகியாய் ஒருவன் சோதகனாய்
ஒருவன் புருஷோத்தமனாய் ஒருவன் புருஷனாய்
ஒருவன் சிரஸ் ஸ்தித பாத பங்கஜனாய்-ஒருவன் பாத பாம்ஸூ மாத்ரமாய்
ஒருவன் ஸூரி த்ருச்யனாய் -ஒருவன் வேதாள த்ருச்யனாய்
இப்படி தம பரகாசங்கள் போலே
ருத்ரனுக்கும் சர்வேஸ்வரனுக்கும் நெடு வாசி உண்டு ஆகையாலே
ருத்ரனுக்கு அஸ்மத் யாதிகளோபதி ஷேத்ரஜ்ஞதையாலே
ஈஸ்வரத்வ சங்கை இல்லை
பிரம்மாவுக்கும் சமான ந்யாயத்தாலே ஈஸ்வரத்வ சங்கை இல்லை –
என்றது ஆயிற்று –
(அன்று எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் -உதரே-திரு வயிற்றினுள்ளே -ஒவ்பசாரிக பிரயோகம்
அவன் இடமே லயிக்கும் -என்றவாறு -நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும் நின்னுளே அடங்குகின்ற -என்றபடி
தன்னுள்ளே என்றபடியே இங்கும் -நாராயணே ப்ரலி யந்தே–லீயதே பரமாத்மநி-ஸ்ருதிகள் போலே –
இமாம் கோ ரஷதி – காக்கும் இயல்வினன் கண்ணபிரான் –
உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான் முகனை
க்ராந்த்வா –பாரை உண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை யாண்ட பேராளன் -/சர்வாந்தர்யாமி என்றுமாம் –
உனக்கே பரத்வம் பொலிகின்ற படியால் வேறு ஒரு தெய்வம் இடமும் பரத்வ சங்கை உண்டாவதற்கும்
இடம் இல்லையே -என்று சொல்லி நிகமிக்கிறார் )

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்- ஸ்லோகம் -6-7-8-9—-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

February 4, 2014

ஸ்லோகம் -6- அவதாரிகை –

அறியாதன அறிவித்த அத்தா நீ செய்தன -திருவாய் மொழி -2-3-2- என்று
உபகாரத்தில் ப்ரதமனாய் இருக்கும் இறே-
வைகுந்தனாகப் புகழ் -திருவாய்மொழி -7-9-7-என்கிறபடியே
தன்னுடைய ஸ்துதி ஈஸ்வரனுக்கு அபிமதம் ஆகையாலும்
இது தான் ஆச்சார்யர்களுக்கு ப்ரியம் ஆகையாலும்
ஸ்தோத்ரத்தில் மேல் சொல்லப் புகுகிற உபாய உபேயங்களை
சங்க்ரஹித்துக் கொண்டு
உபக்ரமித்த படியே பகவத் ஸ்தோத்ரத்திலே இழிகிறார் –

யன் மூர்த்நி மே ஸ்ருதி ஸிரஸ்ஸூ ச பாதி
யஸ்மின் அஸ்மன் மநோ ரத பதஸ் சகலஸ் சமேதி
ஸ் தோஷ்யாமி ந குலதனம் குல தைவதம் தத்
பாதார விந்த மரவிந்த விலோச நஸய–6-

மே மூர்த்நி -இத்யாதி
தம்முடைய நிஹிநதாதிசயத்தையும்
சௌந்தர் யாதிகளிலே தோற்று அத்தாலே வந்த சேஷத்வத்தையும் –
அந்த காரத்தில் தீபம் போலே தம்முடைய திரு முடியில் வந்த பின்பு திருவடிகள் மிகவும் விளங்கின படியையும் சொல்லுகிறது –
இத்தால் -அவனுடைய உபாய பாவத்துக்கு ஏகாந்தமான சௌலப்யாதிகளையும்
இத்தலையில் விஷயீ காரம் தன் பேறாக நினைத்து இருக்கும் என்றும் சொல்லுகிறது –
தலைக்கு அணியாய் -திருவாய் மொழி -9-2-2-என்று
சேஷ பூதர் பிரார்த்திக்கும் அத்தைப் பெற்றேன் -என்கிறார் –
சேஷி யாகையாலே சர்வ விஷயங்களிலும் அவன் இருக்கும் படி இது –
க்ருதஜ்ஞர் ஆகையாலே பேசுகிறார்

ஸ்ருதி ஸிரஸ்ஸூ ச பாதி –
ஸ்ருதி ஸிரஸ்ஸூக்களிலும் விளங்கா நின்றது
இத்தால் ப்ராப்யத்வமும் சர்வாதிகத்வமும் சர்வ மங்களாகாரத்வமும் அதி துர்லபத்வமும் சொல்லுகிறது –

சகாரத்தாலே-
வேதாந்தங்களிலும் – தம் தலையிலும் ஒக்கத் திருவடிகளைத்
தரமிடாதே வைத்த படியாலே
தம் பக்கல் அவனுக்கு உண்டான ஆதராதிசயம் சொல்லுகிறார் –
ச சப்தம் அவதாரணத்திலே யாய்
தம்முடைய தலையிலே அந்வயித்த சௌலப்யம் திருவடிகளுக்கு ஸ்வரூபம் என்றதாகவுமாம் –
திருப் பாற்கடலே என் தலையே -திருவாய்மொழி -10-7-8- என்னுமா போலே –

யஸ்மின் அஸ்மன் மநோ ரத பதஸ் சகலஸ் சமேதி-
பிதா த்வம் மாதா த்வம் -இத்யாதிகளான என்னுடைய
ஐஹிகாமுஷ்மிக சகல மநோ ரதங்களும் அழகியதாக யாது ஒன்றிலே சேருகிறது –

ஸ்தோஷ்யாமி –
இப்படி பிராப்யமுமாய் விலஷணமுமாய் உபகாரகமுமான
திருவடிகளிலே வாசிகமான அடிமை செய்கிறேன் –

ந குலதனம் –
தனம் ஆவது -ஆபத் ரஷகமுமாய் நித்ய போக்யமுமாய் இருக்குமது
குல தனம் என்கையாலே அயத்ன சித்தமுமாய் ஸ்வத பிராப்தமுமாய் இருக்கை –

குல தைவதம்-
இத்தனத்தை தருமதாய்
ஆஸ்ரயணீ யமாய் இருக்குமது –
இத்தால் ஸ்தோத்ர ப்ரதிபாத்யமான ப்ராப்ய ப்ராபகங்களைச் சொல்லுகிறது –

தத் பாதார விந்தம் –
உக்த ஸ்வபாவமான திருவடித் தாமரைகளை –

மரவிந்த விலோச நஸய
ஜிதந்தே புண்டரீ காஷ-என்று ருசி ஜனகமுமாய்
தன் கால் பணிந்த என்பால் எம்பிரான் தடம் கண்கள் -திரு விருத்தம் -42- என்று வாத்சலமுமாய்
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலை மகனை -திரு வாய் மொழி -2-6-3- என்று
ஸூரி போக்யமான திருக் கண்களை உடையவன் உடைய –
இத்தால் இவருடைய உத்யோகத்தைக் கண்ட ப்ரீதி திருக் கண்களிலே தோற்றுகிறது-என்னுதல்

யன் மூர்த்நிமே ஸ்ருதி ஸிரஸ்ஸூ ச பாதி யஸ்மின்
அஸ்மன் மநோ ரத பதஸ் சகலஸ் சமேதி ந
குலதனம் குல தைவதம் அரவிந்த விலோசநஸய
தத் பாதார விந்தம் ஸ்தோஷ்யாமி -என்று
அந்வயம்
(குல தனம்–உபாயத்வமும் –குல தைவதம் -உபேயத்வம் —
அடிச்சியாம் தலை மீசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா உன் கோலப் பாதம் –)

——————————————————————–

ஸ்லோகம் -7- அவதாரிகை –

விதி ஸிவ ஸநகாதிகள் கரை பற்றிலே நின்று
அழுந்துகிற விஷயத்தைப் பரிச்சேதித்துப் புகழ இழிந்தேன் -என்று
தம்மை ஷேபித்து யுத்தத்திலே உத்யுக்தனான அர்ஜுனன்
விஸ்ருஜ்ய ஸஸ்ரம் சாபம் -என்று நிவ்ருத்தனானால் போலே
ஸ்தோத்ரத்தில் நின்றும் நிவ்ருத்தர் ஆகிறார் –

தத்த்வேன யஸ்ய மஹிமார்ணவ ஸீ கரானு
சக்யோ ந மாதுமாபி சர்வபிதா மஹாத்யை
கர்த்தும் ததீய மஹி மஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ அஸ்து கவயே நிரபத்ரபாய–7-

தத்த் வேன –
ஈஸ்வரன் உடைய ஸ்வரூப ரூபாதிகள் இருந்தபடியே –

யஸ்ய –
யதா ரத் நானி ஜலதே -இத்யாதி களாலே
அநந்த குணகனாக பிரசித்தனான வனுடைய

மஹிமார்ணவ ஸீ கரானு-
குணார்ணவத்தின் உடைய ஸீகராணு வானது –
திவலையில் ஸ்பர்ச வேத்யமானது -அத்யல்பமானது –

சக்யோ ந மாதும் –
மாதும் ந சக்ய –
மனஸ்ஸால் பரிச்சேதிக்கவும் சகயம் அன்று –
ஆராலே -என்னும் அபேஷையிலே சொல்லுகிறது –

அபி சர்வபிதா மஹாத்யை –
சர்வ பிதா மஹாத்யை ரபி –
ஈச்வராத் ஜ்ஞானமன்விச்சேத் -என்று ஜ்ஞானாதிகனாகவும்-
சர்வ சம்ஹர்த்தா என்று சொல்லுகிற ருத்ரனாலும் –
அவனை ஒதுவித்தவனுமாய்
ஜகத் ஸ்ரஷ்டாவான ப்ரஹ்மாவாலும்
ஆதி -சப்தத்தாலே ப்ரஹ்ம பாவனையேயான சநகாதிகளையும்
சர்வருக்கும் ஹிதானுசானம் பண்ணுகிற வேதத்தையும் நினைக்கிறது –
மேலே சதா ஸ்துவந்த வேதா -என்றும்
விதி சிவா சன காத்யை -என்றும் -சொல்லுகிற படியாலே

கர்த்தும் ததீய மஹி மஸ்துதி முத்யதாய
ததீய மஹிம ஸ்துதிம் கர்த்தும் உத்யதாய –
அவனுடைய பெருமையை உள்ளளவும் சொல்லி விடுகை அன்றிக்கே
இல்லாததையும் சொல்ல உத்யுக்தனாகை –

மஹ்யம் நமோ அஸ்து –
இப்படி சாஹசிகனாகையாலே
ஸ்துத்ய விஷயத்தை விட்டு
எனக்கு நமஸ்காரம் –

கவயே –
சர்வ வர்ணன் முகராய்

நிரபத்ரபாய –
நிர் லஜ்ஜனாய் இருக்கிறவனுக்கு –
நாம் புகழ்கை இவனுக்கு நிறக் கேடாம் -என்று லஜ்ஜியாது ஒழிகை –

யஸ்ய மஹிமார்ணவ சீகராணு
சர்வ பிதா மஹாத்யை ரபி
தத்த் வேன மாதும் ந சக்ய
ததீய மகிமா ஸ்துதிம் கர்த்தும் உத்யதாய
நிர்பத்ரபாய கவயே மஹ்யம் நமோ அஸ்து -என்று
அந்வயம் – ( மஹ்யம் நமோ அஸ்து –ஸாஹஸ கார்யம் செய்வபர்களுக்கு நமஸ்காரம் என்பர்களே )

—————————————————————-

ஸ்லோகம் -8-அவதாரிகை –

இஷூ ஷயான் நிவரத்தந்தே –
காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் -திருவாய்மொழி -5-8-2- என்று
அளவுடையாரும் தாம்தாம் ஜ்ஞான சக்த்யாதிகள் அளவும்
புகழ்ந்தார்கள் அத்தனை –
உமக்கும் அவ்வளவு புகழ்கைக்கு விரோதம் இல்லை –
ஸா ஜிஹ்வா யா ஹரிம் ஸ்தௌதி –வாய் ஸ்துதிக்க வன்றோ கண்டது –
ஸ்தவ்யஸ் ஸ்தவ ப்ரிய-என்கிறபடியே -ஸ்தோத்ரம் நமக்கு பிரியம் அன்றோ -என்று
யுத்தான் நிவ்ருத்தனான அர்ஜுனனை கரிஷ்யே வசனம் தவ -என்னப்
பண்ணினால் போலே ஈஸ்வரன் தானே மூட்ட சமாஹிதர் ஆகிறார்-

யத்வா ஸ்ரமாவதி யதாமதி வாப்ய சக்த
ஸ்தௌம் யேவமேவ கலு தேஅபி சதா ஸ்துவந்த
வேதாஸ் சதுர்முகாஸ் ச மஹார்ணவாந்த
கோ மஜ்ஜதோரணுகுலா சலயோர் விசேஷ –8-

யத்வா-
பூர்வ பஷ நிவ்ருத்தி –
முன்பு அல்லோம் என்ற இடம் அர்த்தம் அன்று -என்கிறார்

ஸ்ரமாவதி யதாமதி வா –
இளைப்பு எல்லையாக வாதல்
ஜ்ஞானம் எல்லையாக வாதல் –
ஜ்ஞான சக்த்யாதிகள் அளவே ஸ்தோத்ரம் பண்ணலாவது -என்கை –

அசக்தஸ் தோபிஸ் தௌமி –
சர்வ பிரகாரத்தாலும் அசக்தனே யாகிலும் ஸ்துதிக்கிறேன்-

யேவமேவ கலு தேஅபி சதா ஸ்துவந்த வேதாஸ் சதுர்முகாஸ் ச
சதா ஸ்துவந்த வேதாஸ் சதுர்முகாஸ் ச யேவமேவ கலு தேஅபி-
த்யாஜ்ய உபாதேயங்களை பிரிக்கைக்கும்
த்யாஜ்யத்தை விட்டு -உபாதேயத்திலே அவகாஹிக்கைக்கும்
அடியான ஜ்ஞான சக்த்யாதிகளால் அதிகரானவர்களும்

சதா ஸ்துவந்த வேதாஸ்-
சர்வ கால சம்யோகத்தை உடைத்தான வேதங்களும்

சதுர்முகாஸ் ச-
த்விபரார்த்த காலாவதிகரான ப்ரஹ்ம ருத்ரர்களும்
அதிகாராவ ஸானத்தளவும் ஸ்துதிக்கிற ஸ்நகாதிகளும் –

யெவமெவ கலு –
ஜ்ஞான சக்த்யாதிகள் அளவே இறே
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ –
யன்நாயம் பகவான் ப்ரஹ்மா ஜாநாதி புருஷோத்தமம் –
மா மலரான் வார் சடையான் வல்லரே அல்லரே வாழ்த்து -நான் முகன் திருவந்தாதி -10-
பேசுவார் எவ்வளவு பேசுவார் அவ்வளவே -மூன்றாம் திருவந்தாதி -21
வல்லதோர் வண்ணம் -திருவாய் மொழி -7-8-10-
ந க்ராஹ்ய கே நசித் க்வசித் –
இங்கனே யாகிலும் உமக்கும் அவர்க்கும் நெடு வாசி உண்டே என்னில்
வேதங்களுக்கும் சதுர்முகா திகளுக்கும் வாசி உண்டாய் இருக்கச் செய்தே
அவனை உள்ளபடி பேச மாட்டாமை ஒத்தால் போலே எனக்கும்
அவர்களுக்கும் வாசி உண்டானாலும் உள்ளபடி பேச மாட்டாமையாலே வாசி இல்லை
எது போலே என்னில்

மஹார்ணவாந்த கோ மஜ்ஜதோரணுகுலா சலயோ விசேஷ –
மஹார்ணவாந்தர் மஜ்ஜதோரணுகுலா சலயோ கோவிசேஷ-
சர்ஷப மஹீ தரங்களுக்கு நெடு வாசி -சர்ஷபம் -கடுகு மஹீ தரம் -மலை
இப்படி வைஷம்யம் உண்டானாலும்
பெரும் கடலிலே புக்கு அமிழ்ந்தும் அளவில்
விசேஷம் இல்லை இறே
அது போலே இறே
(வேதம் உரைத்து இமையோர் வணங்கும் செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் –
இப்படி தேவர் வைதிகர் வேதங்கள் அல்லும் பகலும்
ஸ்துதிக்குக் கொண்டே இருந்தாலும் தலைக் கட்ட ஒண்ணாதே மீளும் படி –அவரவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி –
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால் தலைத் தலைச் சிறந்து பூசிப்ப –
ச்ரமாவதி-களைத்து போகிறவரையில் தண்ணீர் இறைக்கிறேன் போலே ஸ்துதிக்க இழிகிறார்)

———————————————————————————–

ஸ்லோகம் -9 – அவதாரிகை –

ப்ரஹ்மாதிகளில் காட்டில் எனக்கு ஸ்தோத்ரத்தில்
இழிகைக்கு அதிக ஹேது உண்டு என்கிறார் –
பரக்கப் புகழ்கை ஈஸ்வரன் அனுக்ரஹ ஹேது அன்றிக்கே
ஸ்துதி க்ருதமான பரிஸ்ரமம் அனுக்ரஹ ஹேதுவாம் படி
சீலவான் ஆகையாலே மந்த புத்தியான எனக்கு
அந்த ஸ்ரமம் ஸூ லபம் ஆகையாலே அவர்களில் காட்டில்
நான் ஸ்தோத்ர அதிகாரி -என்கிறார்

கிஞ்சசைஷ சக்த்யதிச யேன ந தே அனுகம்ப்ய
ஸ்தோதாபி து ஸ்துதி க்ருதேன பரிஸ் ரமேண
தத்ர ஸ்ரமச்து ஸூலபோ மம மந்த புத்தே
இதயத் யமோ அயமுசிதோ மம சாப்ஜ நேத்ர–9-

கிஞ்ச -மேலும் –
கீழ் சொன்ன சாம்யம் ஒழிய
ஸ்தோத்ரத்தில் அவர்களில் காட்டில் எனக்கு அதிகாரம் உண்டு என்கைக்கு
ஒரு ஹேது உண்டு -என்கிறார்

ஏஷ -ஸ்தோதா-துதிக்கும் அடியேன் –
பகவத் ஆபி முக்யத்தாலே சம்சாரிகளில் காட்டில் வ்யாவ்ருத்தனாய்
வாய் படைத்த ப்ரயோஜனம் இது -என்று பகவத் ஸ்தோத்ரத்திலே அதிகரித்தவன் –

சக்த்யதிச யேன ந தே அனுகம்ப்ய –
நம்மை ஸ்தோத்ரம் பண்ண சக்தன் என்று உனக்கு அனுக்ராஹ்யனாகிறேன் அல்லேன் –

தே -உனக்கு
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்றும்
தத் விப்ராசோ விபந்யவ-என்றும்
வேதங்களும் நித்ய ஸூரிகளும் புகழ்ந்து எல்லை காண மாட்டாத மகிமையை உடைய
உனக்குப் பரக்க ஸ்தோத்ரம் பண்ணுகை தேட்டம் அன்றே -என்னுதல்
சம்சாரிகள் ஆபி முக்கியம் பண்ணுகை தேட்டமான சீலவான் ஆகையாலே
இவன் பண்ணும் ஸ்தோத்ரம் மிகையான உனக்கு -என்னுதல் –

அபி து-ஆனால் –
மற்றப்படி -என்னுதல்
பின்னை எங்கனே -என்று ஸாநு நய பிரஸ்னம் ஆதல் –
ஸ்துதி க்ருதேன பரிஸ் ரமேண-துதிப்பதினால் ஏற்படும் களைப்பினாலேயே
உன்னை ஸ்துதிக்கையிலே அத்ய ஆதாரத்தைப் பண்ணி
அதுக்கு ஈடான சக்தி இல்லாமையாலே
புகழவும் மாட்டாதே படும் இளைப்பாலே இறே நீ இரங்குவது

தத்ர-இப்படி இருக்கும் இடத்தில்
அர்த்தம் இப்படியாய் நின்ற இடத்தில்

ஸ்ரமச்து ஸூலபோ மம –
எனக்கு விசேஷித்த ஸ்ரமமானது குறைவற உண்டு -என்றுமாம்

து -அவதாரணமாய்
எனக்கே குறைவற்ற ஸ்ரமம் உள்ளது -என்றுமாம்

மந்த புத்தே -என்று ஸ்ரம ஹேதுவை சொல்லுகிறது –
அல்ப புத்தி -என்கை –

இதி –
ஆகையால் என்று ஹேதுவை சொல்லுதல்
இப்படி என்னுதல்

யத்யமோ அய
அயம் உதயம்
இந்த முயற்சி
ஸ்தோஷ்யாமி -என்று கொண்டு உண்டான இந்த உத்யமம்

முசிதோ மம –
உசிதோ மம ச –
ச சப்தம் அவதாரணமாய் -எனக்கே உசிதம் என்னுதல்
சமுச்சயமாய் எனக்கும் உசிதம் -என்று கீழ் ஸ்லோகத்தோடு கூட்டுதல் –

அப்ஜ நேத்ர –
செங்கண் மாலே –
அவலோக நதா நேன பூயோ மாம் –
உன் தாமரைக் கண்களால் நோக்காய் –திருவாய் மொழி -9-2-1-என்றும் சொல்லுகிறபடியே
அவிக்நேன ஸ்தோத் ரத்தை தலைக் கட்டும்படி அழகிய திருக் கண்களால்
நோக்கி அருள வேணும் -என்னுதல்
ஸ்தோத்ரத்தில் நிலை நின்ற படியைக் கண்டு
செந்தாமரைக் கண்ணோடு மறப்பற என்னுள்ளே மன்னினான் –திருவாய் மொழி -1-10-10-என்கிறபடியே
ப்ரீதியாலே திருக் கண்கள் குளிர்ந்த படியைச் சொல்லுதல் –
(மம ச -அவதாரணம் -எனக்கே -என்றபடி –கீழ் ஸ்தோத்ரம் உடன் சேர்த்து எனக்கும் -என்றுமாம்
-இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த ஈனும் ஏத்தினேன் -என்றால் போலே )

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்- அவதாரிகை –ஸ்லோகம் -1-2-3-4-5—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

February 4, 2014

ஸ்வாத யன்நிஹா சர்வேஷாம்
த்ரய்யந்தார்த்தம் ஸூ துர்க் ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர
தம் வந்தே யாமுநாஹ்வயம்-

ஸூ துர்க் ரஹம்–த்ரய்யந்தார்த்தம்-அறிவரிய வேதாந்தார்த்தங்களை
ஸ்தோத்ர யாமாஸ-ஸ்தோத்ர ரூபமாக வெளியிட்டு அருளினாரோ
யோகீந்திர-எந்த யோகி ஸ்ரேஷ்டர்–எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவனான ஆளவந்தார் –

————

நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம

———————————————————

ஸ்ரீமத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லாபஸ் ஸ்ரீ தர்ஸ்சதா –
அபயப்ரதா நாமா நமஸ் மதகுரு மஹம் பஜே
யத் கடாஷா தயம் ஜந்துர புநர் ஜன்மதாம் கத

————————————————-

அவதாரிகை –
ஸ்ரீ சர்வேஸ்வரன் ஆழ்வாருக்கு தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை
மயர்வற மதிநலம் அருளினான் -என்கிறபடியே
நிர்ஹேதுக கிருபையாலே காட்டிக் கொடுக்க –
கொடுத்த ஜ்ஞானம் பக்தி ரூபா பன்ன ஜ்ஞானம் ஆகையாலே பரபக்தி யுக்தராய்க் கொண்டு
பகவத் குண அனுபவத்தை பண்ணிக் கொண்டு
அதினுடைய விபாக தசையான பரஜ்ஞானம் பிறந்து -அதடியாக பரம பக்தி பிறந்து
அத்தாலே -ஏஷ சம்ப்ரசாதே அஸ்மா சரீராத் சமுத்தாய பரம்
ஜ்யோதிரூப சம்பாத்திய ஸ்வேன ரூபேணாபி நிஷ்பத்யதே -என்றும்
ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் சாம்யம் உபைதி -என்றும்
தம்மையே ஒக்க அருள் செய்வர் -திருவாய் மொழி -11-8-5- என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வ ஸ்வரூபத்தைப் பெற்று -பார்யைக்கு அங்க பூஷணம் போலே
வழு விலா அடிமை செய்ய வேண்டும் –என்றும்
அவா அற்று வீடு பெற்ற -என்றும் சொல்லுகிறபடியே
ப்ராப்தி பலமான கைங்கர்யத்தைப் பெற்ற ஸ்ரீ ஆழ்வார் உடைய
திராவிட உபநிஷத் ரஹச்யத்தை ஸ்ரீ பெரிய முதலியார்
ஸ்ரீ ஆழ்வார் உடைய ப்ரசாதத்தாலே லபித்தது
பின்பு ஆச்சார்ய உபதேச க்ரமத்தாலே ஆளவந்தார் அந்த திராவிட உபநிஷத் ரஹச்ய அர்த்தங்களை லபித்தது
அத்தை தாம் அனுபவித்து
அவ் வனுபவத்தால் வந்த ப்ரீதி உள் அடங்காமலே பரீவாஹ அபேஷை பிறக்கையாலும்
சம்சாரிகள் துர்க்கதி கண்டு இவர்கள் இத்தை இழக்க ஒண்ணாது என்னும் கிருபையாலும்
சகல உபநிஷத் ரகஸ்யமாய் -துர்ஜ்ஞேய மான அர்த்தத்தை சர்வரும் அறியும்படியாக இவர் ஸ்தோத்ரமாக வெளி இடுகிறார் –

பகவத் வ்யதிரிக்த விஷயங்களில் ஸ்தோத்ரம் ஆவது –
ஸ்தோத்ரம் நாம கிமாம நந்தி -என்றும்
அந்யத்ராதத் குணோக்தி -என்றும்
இல்லாதவற்றை ஏறிட்டுச் சொல்லுதல் -உள்ளத்தை அடையச் சொல்லுதலாய் இருக்க –
எதோ வாசோ நிவர்த்தந்தே -என்றும்
அவிஜ்ஞாதம் விஜாநதாம் –என்றும்
பூதார்த்தே கதமா ஸ்துதி -என்றும்
ந சமர்த்தாஸ் ஸூ ராஸ் ஸ்தோதும் -என்றும்
பரிச்சேதித்துப் பேச நிலம் அல்லாத பகவத் விஷயம் ஸ்துதி விஷயமான படி என் -என்னில்
அங்கனே இருந்த தாகிலும் ஸ்தவயஸ் ஸ்தவ ப்ரிய -என்று ஸ்துதி பிரியன் ஆகையாலும்
ஏத்த ஏழுலகம் கொண்ட கோலக் கூத்தனை -திருவாய்மொழி -2-2-11- என்றும்
ஏத்த ஏத்த எங்கு எய்தும் -திருவாய்மொழி -4-3-10- என்றும்
ஸ்தோத்ர வ்யவஹாரம் உண்டாய்ப் போருகையாலும்
இது ஒழிய வாசக சப்தம் இல்லாமையாலும்
இவ் விஷயத்திலும் ஸ்தோத்ரம் -என்னலாம்

அதவா –
தர்மார்த்த காம மோஷாக்யா புருஷார்த்தா உதாஹ்ருதா இதம் சதுஷ்டயம் -என்றும்
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு -பெரிய திருமடல் -11- என்றும் சொல்லுகிறபடியே
புருஷார்த்தம் நாலாய்-அவற்றில் தர்மம் சாதன தயா புருஷார்த்தம் ஆகையாலும்
க்லேச சாத்தியம் ஆகையாலும் –
அர்த்தம் ஸ்வயம் புருஷார்த்தம் ஆனாலும் அஸ்திரிமாய் க்லேச சாத்தியம் ஆகையாலும் –
புருஷார்தங்களுக்கு சாதனம் ஆகையாலும் –
காமம் ஸ்வயம் புருஷார்த்தம் ஆனாலும் அல்ப அஸ்த்ரத்வா அநர்த்த அவஹத்வ
பீபத் சாத்திய அநந்த தோஷ துஷ்டம் ஆகையாலும் –
மோஷ சாஸ்த்ரத்திலே மோஷ விரோதித்வேன நிந்திதமாய் இருக்கையாலும்
ஸ்ரீ ஆளவந்தார் அவற்றை விட்டு மோஷத்திலும் ஆத்ம பிராப்தி
துக்கேன சிரகால சாத்தியம் ஆகையாலும்
பகவத் அனுபவத்தைப் பற்ற அல்பம் ஆகையாலும் -அதையும் விட்டு
பகவத் பிராப்திக்கு உக்த தோஷங்கள் இன்றி இருக்கும் அளவு அன்றிக்கே
நிரஸ்தாதி சயாஹ்லாத ஸூக பாவைக லஷ்ணா -என்கிறபடியே நிரதிசய ஸூக ரூபமாய்
ஏஷ ஹேவா நந்தயாதி -என்றும்
பரமம் சாம்யம் உபைதி -என்றும்
தம்மையே ஒக்க அருள் செய்வர் -பெரிய திருமொழி -11-8-5- என்கிற படியே
ஆஸ்ரிதர் தன்னைப் போலே ஆனந்திப்பிக்கக் கடவனாய்
தஸ்யாஹம் ஸூலப -என்று அத்யந்த சாத்தியமாய்
ப்ராப்த புருஷார்தமுமாய் இருக்கையாலே
இதுவே புருஷார்த்தம் என்று அத்யவசித்து –

அந்த பகவத் பிராப்தி ஆகிறதும்
ப்ரதான ஷேத்ரஜ்ஞபதிர் குணேச -என்றும்
ஜ்ஞாஜ்ஜௌ தவா வஜா வீஸ நீ சௌ-என்றும்
தமீஸ் வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்றும்
தாசோஹம் வாஸூ தேவஸ்ய -என்றும்
தாச பூதாஸ் ஸ்வதஸ் சர்வே -என்றும்
தாசோஹம் கோஸலேந்த்ரஸய -என்றும்
யஸ் யாத்மா சரீரம் -என்றும்
அந்த ப்ரவிஷ்டச் சாஸ்தா ஜ்நாநாம் சர்வாத்மா -என்றும்
பூ பிராணி நஸ் சர்வ ஏவ குஹா சயசய -என்றும்
தாநி சர்வாணி தத்வபு -என்றும் –
ஜீவ பரர்களுக்கு அனன்யார்ஹ சேஷ சேஷி பாவேன சம்பந்தத்தைச் சொல்லி –
ஏன ஏன ததா கச்சதி -என்றும்
சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா -என்றும்
காமயே வைஷ்ணவத்வம் து சர்வ ஜன்ம ஸூ கேவலம் -என்றும்
ஒழிவில் காலம் எல்லாம் -இத்யாதிகளிலே ஸ்வரூப அனுரூபமான போகத்தை சொல்லுகையாலும்
பதிவ்ரதைக்கு பத்தி ஸூஸ்ருஷண்ம் போலே
சேஷ வஸ்துவுக்கு கைங்கர்யம் என்று அத்யவசித்து –

இனி பேஷஜம் பகவத் பிராப்தி -என்று அவனே பிராப்யம் என்னுமதும் கைங்கர்ய பிரதி சம்பந்தி ஆகையாலே
ஸ்வேன ரூபேனே அபிநிஷ்பத்யதே-என்று ஸ்வ ஸ்வரூபத்தை ப்ராப்யம் என்கிறதும்
கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயமாகை ஆகையாலே
சோஸ்த்வன பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்று
தேச விசேஷத்தை ப்ராப்யம் என்கிறதும் கைங்கர்ய வர்த்தகம் ஆகையாலே
நிஸ்தரந்தி மநீஷின -என்று சம்சார நிவ்ருத்தியை புருஷார்த்தம் என்கிறதும் கைங்கர்ய விரோதி யாகையாலே –
இவை கைங்கர்ய உபயோகி அல்லாத அன்று
ந ஹி மேஜீவிதே நாரத்த –
மணிமாமை குறைவிலம் -உடம்பினால் குறைவிலம் -உயிரினால் குறைவிலம் -என்கையாலே
அபுருஷார்த்தம்
ததீய சேஷத்வத்தை புருஷார்த்தம் என்கிறதும் பதி வ்ரதைக்கு
பதியினுடைய ஆத்மாம்சத்திலும் குணாம்சத்திலும்
சௌந்தர்ய விசிஷ்டமான தேகாம்சமே ப்ராப்யமாய் –
அத்தாலே பாதி வ்ரதய ஹானி இல்லாதாப் போலே –
இப்படி சகல சாஸ்திர தாத்பர்யமான புருஷார்த்தத்தை நிச்சயித்து

இதுக்கு உபாயம் பக்தி ப்ரபத்திகள்–என்று இரண்டாய்
அதில் பக்தி யாவது -ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்றும்
ஆத்மாவா அரே த்ரஷ்டவ்யஸ் ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசிதவ்ய -என்றும்
நாயமாத்மா ப்ரவச நேன லப்யோ ந மேதயா ந பஹூ நா ஸருநேன
யமேவைஷ வ்ருணுதே தேன லப்யஸ் தச்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்-என்றும்
பித்யதே ஹ்ருத யக் ரந்திஸ் சித் யந்தே சர்வ சம்சயா
ஷீ யந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மின் த்ருஷ்டே பராவரே -என்றும்
பக்த்யா த்வ நன்யா சக்ய அஹம் ஏவம் விதோ அர்ஜுன
ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்வேன ப்ரவேஷ்டும் ச பரந்தப -ஸ்ரீ கீதை -11-54- என்றும்
சமஸ் சர்வேஷூ பூதேஷு மத் பக்திம் லபதே பராம் -ஸ்ரீ கீதை -18-54- என்றும்
வேதன த்யான உபாசன சப்த வாச்யமாய்
பக்தி ரூபா பன்னமாய் தர்சன சமானாகாரமான ஜ்ஞான விசேஷம் பக்தி ஆகிறது –

அக்னி வித்ய அங்கிகையாய் கர்மஜ்ஞான சஹ க்ருதையுமாய் ஆகையாலே
அதிக்ருதாதி காரமாய் விளம்பிய பல பிரதமுமாய் பிரமாத சம்பாவனையும் உண்டாகையாலே -அவற்றை விட்டு
இந்த தோஷம் ஒன்றும் இன்றிக்கே
முமுஷூர் வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்றும்
நயாச மாஹூர் மநீஷிணோ ப்ரஹ்மாணம்-என்றும்
நயாச இதி ப்ரஹ்மா -என்றும் –
தாஸ்மான் நயாச மேஷாம் தபஸா மதிரிக்த மாஹூ-என்றும்
தஸ்மாதபி வத்யம் பிரபன்னம் ந ப்ரதி ப்ரயச்சதி -என்றும் –
ச ப்ராதுஸ் சரனௌ காடம் நிபீட்ய ரகு நந்தன -என்றும்
சக்ருதேவ பிரபன்னாய -என்றும்
சோஹம் த்வாம் சரணமபாரம பிரமேயம் -என்றும்
சர்வாத்மனா யஸ் சரணம் சரண்யம் நாராயணம் லோக குரும் ப்ரபன்ன -என்றும்
மாம் ஏவ எ ப்ரபத்யந்தே -என்றும்
தமேவ சரணம் கச்ச -என்றும்
சர்வ தரமான் பரித்யஜ்ய -என்றும்
தாவதார்த்திச் ததா வாஞ்சா -என்றும் இத்யாதி சுருதி ஸ்ம்ருதி சித்தமாய் ஸூகரமாய்
அத்யவசாயாத்மக ஜ்ஞான விசேஷமான ப்ரபத்தியையே உபாயமாக நிச்சயித்து –
இப்படி ப்ராப்ய ப்ராபகங்களை நிஷ்கர்ஷித்து
இவற்றை ஸ்தோத்ர ரூபத்தாலே
ஸ்ரீ சர்வேஸ்வரனை நோக்கி பிரார்த்திக்றார் -என்னவுமாம் –

ஸ்ரீ பகவத் ஸ்தோத்ரம் பண்ணப் புக்கவர் ஆசார்ய ச்துதியிலே பார்ப்பான் என் -என்னில்
கர்னே ச்ப்ருஷ்டெ கடிம் சாலயதி -போலே அசங்கதம் -என்னில்
ஸ்ரீ பகவத் விஷயத்தைத் தமக்கு ஸ்துதி விஷயம் ஆக்கிக் கொடுத்த உபகார ச்ம்ருதியாலும்
ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு அடியான ஜ்ஞான வைசத்யார்த்தமாகவும்
அவிக்ன பரி சமாப்த் யர்த்தமாகவும் -பண்ணுகிறார் -ஆகையாலே சங்கதம் –
ஆனால் மானசமாக அமையாதோ -என்னில்
இப்பிரபந்தத்தை அதிகரிப்பார்க்கு உபகாரம் ஆகையாலே வாசிகம் ஆக்கினதும் யுக்தம் –
உபகார ச்ம்ருதியாலே வந்த ஆசார்ய அனுவர்த்தனம் பிரமாண பிரசித்தம் –
ஆசார்ய தேவோ பவ -என்றும்
நம ருஷிப்யோ மந்திர க்ருத்ப்ய -என்றும்
ச ஹி வித்யா தஸ்தம் ஜநயதி தச் ஸ்ரேஷ்டம் ஜன்ம -என்றும்
மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்திர பிரதே குரௌ -என்றும்
ஒரு ரத்னத்தை ஒருவன் கொடுத்தால் அதனுடைய மஹார்க்கத்தை அறியக் கொடுத்தவனை
ஆதரிக்க பிரமாணம் வேண்டுமோ -ஆகையால் இது உபபன்னம் –
ஜ்ஞான வைசத் யார்த்தமாக ஆசார்ய அனுவர்த்தனம் சிஷ்டாசார ப்ராப்தம் –
அபி வந்தா குரு நாதௌ-சிஷ்யதீ பதமி நீர வீன் –இது மீமாம்சகா -என்றும்
யதா கனன் கனித்ரேண-இதி மனு -என்றும்
யஸ்ய பிரசாதாத் வஷ்யாமி நாராயண கதாமிமாம் -இதி வைசம்பாயன -என்றும்
லௌகிகம் வைதிகம் வாபி -இதி மனு -என்றும்
அங்கனே ஆகில்
ஸ்வ ஆசார்யனை விட்டு அவர் குருக்களை பற்றுவான் என் என்னில்
ஆசார்ய ஸ்துதியிலும் ஆசார்ய பிரியம் இறே உத்தேச்யம் –
ஸ்வாஸ்ரயணத்தில் காட்டில் ஸ்ரீ பெரிய முதலியாரை ஆஸ்ரயிக்கும் இடத்தில்
ப்ரீதி மிக்கு இருக்கையாலே அதைப் பேசுகிறார் –

ஸ்ரீ பெரிய முதலியார் ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் ப்ராவண்யம் அடியாக பிறந்த ஜ்ஞாநத்தை
ஸ்ரீ ஆழ்வார் பிரசாதத்தாலெ பெற்று -தம் அளவிலே பர்யவசிக்கை அன்றிக்கே
பின்பு உள்ளார்க்கும் உபகாரமாம் படி
இந்த தர்சன ஸ்தாபகர் ஆனபடியாலும் –
ஸ்ரீ மணக்கால் நம்பி -பெரிய முதலியார் உடைய அர்த்தம் இது
உம்முடைய பேற்றுக்கு எல்லாம் அவருடைய திருவடிகளிலே சம்பந்தமே -என்கையாலும் அவரை ஆஸ்ரயிக்கிறார்
இதை நினைத்து இறே ஸ்ரீ பட்டர் – ப்ரதமமபி குரும் நாத மீடே -என்றதும் .
வேத காரணமான பிரணவம் வேதாத் யந்தம் களிலே ஆனால் போலே –

இங்கும் ஆதி அந்தம் களிலே ஆசார்ய ஸ்துதி யாய்
நடுவிலே பகவத் ஸ்தோத்ரம் ஆக இருக்கிறது –
முதலிட்டு மூன்று ஸ்லோகத்தாலே ஸ்ரீ பெரிய முதலியாரை நமஸ்கரிக்கிறார் –

————————————————————————

ஸ்லோகம் -1- அவதாரிகை –

முதல் ஸ்லோகத்தில் ஒருவனைக் கவி பாடப் புக்கால்
அவன் ஐஸ்வர்யத்தைச் சொல்லிக் கவி பாடுமா போலே
ஸ்ரீ வைஷ்ணவனுக்கு ஐஸ்வர்யமான ஜ்ஞான வைராக்யங்கள் உடைய பிரகர்ஷத்தை சொல்லி நமஸ்கரிக்கிறார் –
மனமாசு தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கை கூடும் –புனமேய
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி
தாம் தொழா நிற்பார் தமர் -முதல் திருவந்தாதி -43-என்று ஸ்ரீ வைஷ்ணவனுக்கு தனம்
பக்த்யாதிகள் என்று சொல்லிற்று இறே –

நமோ அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
நாதாயா முநயே அகாத பகவத் பக்தி சிந்தவே–1-

நமோ –
அஹமபி ந மம பகவத ஏவாஹம் அஸ்மீத் ஏவம் அமமதாம் யோஜயத்யதோ நம இதி -என்கிறபடியே
எனக்கு உரியேன் அல்லேன் -பெரிய முதலியாருக்கு சேஷம் -என்கிறார் –
நமோ விஷ்ணவே -என்கிறாப் போலே –
நமோ நாதாயா -என்கிறார் உபகார ஸ்ம்ருதி யாலே –
நமோ விஷ்ணவே -என்றும்
நம இத்யேவ வாதி ந -என்றும்
நம ரிஷிப்யோ மந்த்ரக்ருத்ப்ய -என்றும்
தேஷாமபி நமோ நம -என்றும் சொல்லக் கடவது இறே –
ஸ்ரீ ஈஸ்வர முனிகள் -ஸ்ரீ ரங்க நாதன் என்று திருநாமம் சாற்றுகையாலே நாதன் என்று திரு நாமம் ஆகிறது –
எப்படிப் பட்டவர் -என்னும் அபேஷையில் சொல்லுகிறது –
அசிந்த்ய –
இவருடைய ஜ்ஞானாதிகள் இன்னாருடைய ஜ்ஞானாதிகள் போலே இருக்கும் என்று
நினைக்க ஒண்ணாது -என்னுதல்
இவ்வளவு என்று ஜ்ஞானாதி கராலும் -பரிச்சேதிக்க ஒண்ணாது -என்கை

அத்புத –
கீழ் இயத்தா ராஹித்யத்தைச் சொல்லுகையாலே-க்ருஹீதாம்சம் அனுசந்தித்தார்க்கு
ஆச்சர்ய அவஹமாய் இருக்கும் -என்கை –
அமுதூரும் என்றக்கால் -இத்யாதியில் க்ருஹீதாம்சம் இனிதாய் இருக்கும் என்றது இறே –

அக்லிஷ்ட –
வ்யாசாதிகளைப் போலே ஸ்வ யதன சாத்திய தபஸ்ஸாலே வந்தது அன்றிக்கே
ததாமி புத்தி யோகம் தம் -என்றும்
மயர்வற மதி நலம் அருளினான் -என்றும் சொல்லுகிறபடியே
பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே வருத்தம் அற்று இருக்கை-

ஜ்ஞான –
ஜ்ஞானம் ஆவது -சித் அசித் ஈஸ்வர தத்தவங்களை விஷயமாக உடைத்தாய் இருக்கை –
அதாவது -ஆத்மா ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷம் என்றும்
அசித் ஸ்வரூபம் த்யாஜ்யம் என்றும் –
ஈஸ்வரன் உபயோர் நியந்தா என்றும் -அறிகை –
ஜ்ஞானம் என்றால் இவ் விசேஷத்தைக் காட்டுகிறது
தத் ஜ்ஞானம் அஜ்ஞானம் அதோ அந்ய துக்தம்-என்றும்
வித்ய அந்ய அசில் பனை புணம் -என்றும்
வ்யதிரிக்த விஷய ஜ்ஞானம் அநர்த்தா வஹம் என்றும் அதி சூத்ரம் என்றும் -சொல்லிற்று இறே –

வைராக்ய –
இவ் விலஷண ஜ்க்னானத்தாலே பகவத் வ்யதிரிக்தங்களில்
நிச்ப்ருஹராய் இருக்கை –
வேண்டேன் மனை வாழ்க்கையை -பெரிய திருமொழி -6-1-

ராசயே –
ராசி என்று சமூஹம்
ஜ்ஞான இராசே –வைராக்ய ராசயே –
ஜ்ஞான வைராக்யங்கள் ஒன்றாய் இருக்க ராசயே -என்பான் என் -என்னில் –
ஸ்ரீ பகவத் ஸ்வரூபாதிகள் ஜ்ஞான விஷயங்கள் ஆகையாலே பல –
பிதரம் மாதரம் -என்று த்யாஜ்ய விஷயங்களும் பலவாகையாலே சொல்லலாம் –
லோகத்தில் விலஷணர் உடைய ஜ்ஞான வைராக்யங்கள் எல்லாம் இவருடைய
ஜ்ஞான வைராக்யங்களிலே அந்தர்ப்பூதம் ஆம்படி இருக்கையாலே சொல்லுகிறது -என்றுமாம் –
யத் கிஞ்சித் சாது குர்வந்தி யஸ்தத் வேத யத்ச வேத ச மயைத துக்த இதி –
யத் கிஞ்சித் சாத்வ நுஷ்டிதம் கர்ம யச்ச சர்வ சேதன கதம்
விஜ்ஞானம் ததுபயம் யதி யஜ்ஞான கர்மாந்தர்கதம் ச ரைக்வ -இதி -என்றும்
லோகத்தில் அனுஷ்டிதமான கர்மங்களும் ஞானங்களும் யாவன் ஒருத்தன் உடைய
கர்ம ஞானங்களிலே அந்தர்க்கதமாய் இருக்கும் -அவன் தானே கிடீர் ரைக்வன் -என்று பார்த்து சொல்லுமா போலே

முநயே –
ந விவேதாத்மநோ காத்ரம் -என்றும்
பஸ்யந்நபி ந த்ருஷ்ட்வான் -என்கிறபடியே
தேய வஸ்துவை சர்வதா சாஷாத் கரிக்கை
ஏது செய்தால் மறக்கேன் மனனே -பெரிய திரு மொழி -9-3-3- என்றும்
என்நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -திருவாய் மொழி -7-3-6- என்றும்
இவர் கிருஷ்ணனை அனுசந்தித்து இருக்க ராஜாவாலும் சமாதி பங்கம் பண்ணப் போயிற்று இல்லை –
ராம மேவா நுபச்யந்த -என்னுமா போலே –

அகாத பகவத் பக்தி சிந்தவே –
பக்தியாவது ஜ்ஞான விசேஷமாய் இருக்க -பக்தியைப் பிரித்துச் சொல்லிற்று –
அதினுடைய ப்ராசுர்யம் சொல்லுகைக்காகவும் –
ப்ரதான்யம் சொல்லுகை தோற்றுகைக்காகவும் –
பக்தி யாகிறது -சிநேக பூர்வம் அனுத்யானம் பக்தி -என்றும்
ஸ்வாமிநி தாசச்ய சிநேக மயீ ஸ்திதி -என்றும் சொல்லுகிறபடியே-
அனுபவ ஆசை -அனுபவிப்பதில் விருப்பம் –

பகவச் சப்தத்தாலே பரம பதத்தில் இருப்பைச் சொல்கிறது –
வாஸூ தேவோ அஸி பூர்ண – என்று ஷாட் குணிய பூர்ணனாய் இறே இருப்பது

அகாத
அஷோப்ய-கலக்க ஒண்ணாத –
அர்த்தாந்தரம் -பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –
ஒருவரால் நிலை கொள்ள ஒண்ணாது இருக்கை –

சிந்தவே –
காதல் கடலின் மிகப் பெரிது –திருவாய்மொழி -7-3-6-என்றும்
ஆசை என்னும் கடல் -பெரிய திருமொழி -4-9-3- என்றும்
ஈஸ்வரனுக்கும் நிலை கொள்ள ஒண்ணாதே
தாம் அதில் புக்கு அமிழ்ந்தபடியாய் இருக்கை –

அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
முனயே அகாத பகவத் பக்தி சிந்தவே நாதாய நம -என்று அந்வயம் –

(பகவத் பக்தி ரசத்துக்கு -ஆழ்ந்ததோர் கடல் போலே இருப்பாரே -கலக்க முடியாதபடி –
பகவத் பக்திக்கு சமுத்திரம் என்றும்
பகவத் பக்தியாகிற சமுத்திரத்தை தம்மிடம் கொண்டவர் என்றுமாம் )

————————————————————————–

ஸ்லோகம் -2- அவதாரிகை
முதல் ஸ்லோகத்தாலே பரத்வ விஷயமான ஜ்ஞானாதிகள் உடைய பிரகர்ஷம் சொல்லிற்று
இந்த ஸ்லோகத் தாலே அவதார விஷயமான ஜ்ஞானாதிகள் ஆகையாலே
அதினுடைய ப்ரக்ருஷ்ட தரத்வம் சொல்லுகிறது
அன்றிக்கே
கீழ் சொன்ன ஜ்ஞானாதிகள் தம்மளவில் பர்யவசியாதே
என்னளவும் வர வெள்ளம் கோத்தது –
என்னவுமாம் –

தஸ்மை நமோ மது ஜிதங்க்ரி ஸரோஜா தத்தவ
ஜ்ஞான அனுராக மஹிமா அதிசய அந்த ஸீம்நே
நாதாயா நாத முநயே அத்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரனௌ சரணம் மதீயம்-2-

தஸ்மை நமோ –
நமஸ் தஸ்மை நமஸ் தஸ்மை -என்றும்
நமோ நமஸ்தே ஆஸ்து சஹஸ்ரக்ருத்வ-என்றும் சொல்லுகிறபடியே –
இன்னம் அவர்க்கு அடியேன் -என்கிறார் –

மது ஜீத் –
அநிருத்தராய்வந்து அவதரித்து
முதல் களையான மதுவை நிரசித்தால் போலே
பகவத் ப்ராப்தி பந்தகங்களைப் போக்குமவன் -என்கை –

அங்க்ரி –
அந்த ஸ்வ பாவத்திலே -குணைர் தாஸ்யம் உபாகத -என்று பெரிய முதலியார் தோற்று இருக்கும் படியையும்
அவருடைய அனன்யார்ஹ சேஷத்வமும் சொல்லுகிறது –

ஸரோஜ –
சம்பந்தம் இல்லா விடிலும் விட ஒண்ணாத போக்யதையைச் சொல்லுகிறது –
விகாசம் செவ்வி குளிர்ச்சி பரிமளம் முதலான வற்றுக்குத் தாமரையை ஒரு படிக்குப் போலியாகச்
சொல்லலாய் இருக்கை –

தத்தவ ஜ்ஞான –
தத்வ ஜ்ஞானம் ஆவது –
அவதார விஷய ஜ்ஞானமும்
ஆஸ்ரித பாரதந்த்ர்ய விஷய ஜ்ஞானமும் –
ஜன்ம கர்ம ஸ மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத
த்யக்த்வா தேகம் புநர் ஜன்ம நைதி மாமேதி ஸோ அர்ஜுன -ஸ்ரீ கீதை -4-9-என்று தானே அருளிச் செய்தான் இறே –

தஸ்ய தீரா பரிஜா நந்தி யோநிம் -என்றும்
அஹத்வா ராவணம் சங்க்யே-என்றும்
யத் விநா பரதம் த்வாஞ்ச சத்ருக் நஞ்சாபி மாந்த
பவேன் மம ஸூகம் கிஞ்சித் பஸ்மாசாத் குருதாம் சிகி -என்று அருளிச் செய்தான் இறே சக்கரவர்த்தி திருமகன் –
அப்யஹம் ஜீவிதம் ஜ்ஹ்யாம் -என்றும்
ஆத்மாநாம் நாதி வர்த்தேதா -இத்யாதி

அனுராக-
அனுராகம் ஆவது -இவற்றை எல்லாவற்றையும் அனுபவித்தால் அல்லது நிற்க ஒண்ணாத ப்ரேமம் –

மஹிமா அதிசய அந்த ஸீம்நே –
ஜ்ஞான அநு ராகங்கள் உடைய மஹத்த்வத்தின் முடிவே எல்லையாய் இருக்குமவர்க்கு
மகிமா -மஹத்த்வம் –
மனுஷ்ய ஆனந்தமே தொடங்கி-தே யே சதம் – என்கிற க்ரமத்தாலே
ஈஸ்வர ஆனந்தத்திற்கு எல்லையாய் இருக்கும் இருப்பு போலே
இவருக்கும் தத் விஷய ப்ரேமத்துக்கு எல்லையாய் இருக்கும் இருப்பு –

நாதாயா –
அஸ்மத் நாதாயா –

நாத முநயே –
இத் தர்சனத்துக்கு நாதனே -என்று
மது சூதனை யன்றி மற்று இலேன் -திருவாய்மொழி -2-7-6-என்று இருக்கும்
மகாதமாக்களாலே கொண்டாடப் படுவாராய் ஆயிற்று –
தத்வ ஹிதங்களை திரு வுள்ளத்திலே கூடு பூரிக்குமவர் –
தஸ்மை நம -என்று அந்வயம் –

உபகார ஸம்ருதியாலே அவரை ஆதரித்தீர் ஆகில்
ஐஹிக ஆமுஷ்மிகங்களுக்கு வேண்டாவோ -என்று பகவத் அபிப்ராயமாக அருளிச் செய்கிறார் –
அத்ர பரத்ர சாபி –
சம்சாரத்திலும்
பிராப்யமான நித்ய விபூதியிலும் –

நித்யம் –
நித்ய அக்னி ஹோத்ரம் போல் அன்றிக்கே
அனவரதம் -என்கை –

யதீய சரனௌ –
என்னை இவ் வவஸ்தாபன்னனாக்கிய திருவடிகள் –

சரணம் –
உபாய உபேயங்கள் இரண்டும்

மதீயம் –
பெரிய முதலியார் திருவடிகள் ஆகில் எனக்கு இரண்டுமாய் இருக்கும் -என்கை –
அதாவது -சம்சார தசையிலே பகவானே உபாயம் என்று உபதேசித்து
உபாயாத்யவசாயத்துக்கு அடியான ஸ்வ அனுக்ரஹத்தாலே
பகவத் பிராவணயத்தை விளைத்தும்
பிராப்ய தேசத்தில் சென்றால் நித்ய சூரிகள் கோஷ்டியில் பிரவேசிப்பித்தும்
பின்பு நித்ய சூரிகளோபாதி உத்தேச்யமாய் இருக்கையாலும் -அப்படிச் சொல்கிறது –

அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரனௌ மதீயம் சரணம்
மது ஜிதங்க்ரி சரோஜ தத்தவ ஜ்ஞான அனுராக மஹிம
அதிசய அந்த சீம்னே நாதாய தஸ்மை
நாத முனயே நம -என்று அந்வயம் –

அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ –வானவர் நாடு -ஆச்சார்யர் திருவடிகளே உத்தேச்யம்
-சரணம் -உபாயம் உபேயம் இரண்டுமே என்றபடி -)

——————————————————————————-

ஸ்லோகம் -3- அவதாரிகை –

த்ருஷார்த்தனுக்குத் தண்ணீர் குடிக்கப் பர்யாப்தி பிறவாதாப் போலே
பின்னையும் அவர்க்கு அடியேன் -என்கிறார்
ஆஸ்ரிதரை ஒரு காலும் நழுவ விடாத அச்யுத விஷயத்திலே
ஜ்ஞான பக்த்யாதிகள் ஆகையாலே
தம்மளவில் பர்யவசியாதே
பகவத் விஷயத்துக்கு அபூமியான சம்சாரம் எங்கும்
வெள்ளம் இடும்படியான இவர் உடைய
ஜ்ஞான பக்திகள் உடைய
பிரக்ருஷ்டதையைச் சொல்லுகிறது –

பூயோ நமோ அபரிமித அச்யுத பக்தி தத்தவ
ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி
யோகாய நாத முநயே யமிநாம் வராய-3-

பூயோ நமோ
புனஸ்ஸ நம
நமோ நமஸ்தே -என்கிறபடியே

அபரிமித –
கிடந்த பாயிலே வெள்ளம் கோத்தால் போலே
இருந்த இடங்களிலே வந்து கிட்டும்படி
எல்லை இறந்து இருக்கை –

அச்யுத –
நியந்த்ருத்வ ச்வாமித்வாதி கல்யாண குணங்களாலே குறை வற்று இருக்கை -என்னுதல் –
ஏக ரூபமாய் இருக்கும் -என்னுதல்
என்றும் ஆஸ்ரித அர்த்தமாய் இருக்கும் இருப்பை நழுவ விடாதவன் -என்னுதல் –
ஆர்ந்த புகழ் அச்சுதன் -திருவாய்மொழி -3-5-11- என்றும்
நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தன்னை -திருவாய்மொழி -3-6-8-என்கிறபடியே
ஆஸ்ரிதரை தாம்தாம் கையிலும் பிறர் கையிலும் காட்டிக் கொடாதவன் -என்னுதல் –

பக்தி தத்தவ ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி –
பக்தி தத்வ ஜ்ஞானங்கள் ஆகிற
அம்ருதாப்தி யினுடையபரிவாஹ ரூபமான
ஸூபமான வசஸ் ஸூக்களாலே-
உபாயம் ஈஸ்வரன் ஆகையாலே ஜ்ஞான பக்திகள் போக ரூபமாய்
அபரிச்சின்னமாய் இருக்கும் -என்கை –

பரிவாஹம் ஆவது -அவ்வவ ரஷண அர்த்தமாக
அதிக ஜல நிர்க்க மனஸ் ரோதஸ்ஸூ –
வசஸ் ஸூக்களுக்கு ஸூபதவம் ஆவது –
அவிஸ் தர்ம சந்திக்தம் -இத்யாதிகளை உடைத்தாய் இருக்கை

லோகே –
பகவத் பக்திக்கு மேட்டு மடையான சம்சாரத்திலே
சைஷா பார்க்கவீ வாருணீ வித்யா பரமே வ்யோமன் ப்ரதிஷ்ட்டிதா -என்று
பரம பதத்தில் பரிமாறக் கடவ பக்தியை
நான் முகனார் பெற்ற நாட்டுளே நற்பாலுக்கு உய்த்தனன் -திருவாய்மொழி -7-5-1-என்கிறபடியே
சம்சாரத்தில் நடையாடும்படி பண்ணினபடி –

அவதீர்ண –
ஈச்வராவதாரம் போலே இறே
ஸ்வயம் பிரயோஜனமான பக்த்யவதாரம் –

பரமார்த்த –
பரம பிரயோஜன ரூபமாய் இருக்கை –
சமக்ர –
அதனில் பெரிய அவா -என்னும்படி குறைவற்று இருக்கை –

பக்தி யோகாய –
பக்தியை உடையரான –
உக்தமான பக்தி தத்வ ஜ்ஞானங்கள் இரண்டையும்
பக்தி சப்தத்தாலே சொல்லிற்று

நாத முநயே யமிநாம் வராய –
முடியானே -திருவாய்மொழி -3-8- யில் சொல்லுகிற படியே
அவனை அல்லது அறியாத கரணங்களை உடையராய் இருப்பார்க்குத் தலைவர் ஆனவருக்கு
வாய் அவனை அல்லது வாழ்த்தாது -முதல் திருவந்தாதி -11-என்று
இருக்கும் அவர்களுக்கு வரணீயராய் இருக்குமவர் -என்றுமாம்-

அபரிமித அச்யுத பக்தி தத்வ ஜ்ஞானம்
அம்ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி யோகாய
யமிநாம் வராய நாத முனயே பூயோ நம -என்று அந்வயம்-

(வசோபி – ஸ்ரீ -ந்யாய தத்வம் -கிரந்தம் ஸ்ரீ தேசிகன் போன்றார் காட்டி அருளி உள்ளார்கள்
நித்ய காலஷேப ஸ்ரீ ஸூக்திகளும் உண்டே
பக்தி யோகம் -ஸ்ரீ -குருகை காவல் அப்பனுக்கு பிரசாதித்து அருளிய யோக சாஸ்திரமும் –
ஸ்ரீ -மணக்கால் நம்பி போல்வாருக்கு சாதித்து அருளிய பிரபத்தி சாஸ்திரமும் –
பரமார்த்த -சமக்ர -இரண்டு விசேஷணங்கள்-பரம புருஷார்த்தம் என்றும் -பரி பூர்ணம் -என்றும் –
ஸ்வயம் பிரயோஜனம் என்றதாயிற்று -)

———————————————————————————

ஸ்லோகம் -4- அவதாரிகை –

பெரிய முதலியார் ஜ்ஞானத்துக்கு –
லோக பரிக்ரஹம் மாத்ரம் அன்றிக்கே
வேதவிதக்ரேசர பராசரானுமதியாலே
ப்ராமாணிகத்வம் உண்டு என்று
இவ்வர்த்தத்தின் உடைய ப்ராமாணிகத்வம் சொல்லுகிறது
கிஞ்ச
இவர்க்கும் ஸ்ரீ பராசர பகவானுக்கும் ஸ்வபாவ ஐக்கியம் உண்டு
கிருஷ்ண ப்ராவணயமும்
லோகத்துக்கு பண்ணின ஔதார்யமும்
இருவருக்கும் உண்டு
அத்தாலும் அவரை நமஸ்கரிக்கிறார் –

தத்த்வேன யஸ் சித் அசித் ஈஸ்வர தத் ஸ்வபாவ
போக அபவர்க்க தத் உபாய கதீ உதார
ஸ்ந்தர்ஸ்யன் நிரமிமீத புராண ரத்னம்
தஸ்மை நமோ முநிவராய பராசராய –4-

தத்த்வேன –
ஜ்ஞாதவ் யார்த்தங்களை உள்ள படியே காட்டுகை –
ச ஹோவாச வியாச பாராசர்ய -என்கிற பிரமாண பிரசித்தியை பிரகாசிப்பிக்கிறது –

சித் –
ஆத்மா ஸூ ததோ அஷரஸ் சாந்தோ நிர்க்குண ப்ரக்ருதே பர
ப்ரவ்ருத்த்ய பசயௌ நாச்ய சைகஸ் யாகில ஜந்துஷூ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-13-71-இத்யாதி –
இதில் நிர்க்குண த்வம் ஆவது –சத்வாதி குணா ராஹித்யம் .
ஏக ச்யாகில ஜந்துஷூ -தேவ திர்யக் மனுஷ்யாக்ய சர்வ ப்ரானிஷூ ஏகச்ய -ஜ்ஞானைக
ஆகாரத யாசம இத்யர்த்த -என்றும்
நிர்தோஷம் ஹி சமம் ப்ரஹ்ம -என்றும்
பண்டிதாச் சம தர்சின -இதி பகவதைவோக்தம்-

அசித் –
அசம்ஜ்ஞா வத்தான அசேதனம் –
விகார ஜநநீம் அஜ்ஞாம்-இத் யுபநிஷத்
தத்ராபி பராசர –
த்ரிகுணம் தஜ்ஜகத் யோனி அநாதி ப்ரபவாப்யயம் அஷய்யம் -இத்யாதி

ஈஸ்வர
உபயோர் நியந்தாவான ஸ்வாமி –
தத்ராபி பராசர –
பரமாத்மா ச சர்வேஷா மாதார பரமேஸ்வர
விஷ்ணு நாமா ச வேதேஷூ வேதாந்தேஷூ ச கீயதே -என்றும்
பர பராணாம் பரம பரமாத்மாத்ம சம்ஸ்தித
ரூப வரணாதி நிர்தேச விசேஷண விவர்ஜித
சர்வத்ரா சௌ சமஸ்தஞ்ச வசத்யத்ரேதி வை யத
ததஸ் ச வாசு தேவாதி வித்வத்பி பரிபட்யதே -இத்யாதி –

தத் ஸ்வபாவ-
தேஷாம் ஸ்வ பாவ தத்ர ஸ ச –
ப்ரதாநஞ்ச புமாம்ச்சைவ சர்வ பூதாத்மா பூதா
விஷ்ணு சக்த்யா மகா புத்தே வருதௌ சம்ச்ரய தரமிநௌ-இத்யாதி

போக –
ப்ரஹ்மாதி பிபீலி காந்தமான பத்த சேதன வர்க்கத்துக்குக்
கர்ம அனுகுணமாக தாரதம்யேன அனுபாவ்யமான சப்தாதிகள் –

அபவர்க்க –
சப்தாதிகள் உடைய அல்ப அஸ்திரத்வாதி தோஷ தர்சனத்தாலே பீதரான சேதனருக்கு
துக்க நிவ்ருத்தி ரூபமானஆத்மபிராப்தியும் -ஸூகைகதமான பகவத் பிராப்தியும் .-

தத்ராபி ஸ –
யோகி நாமம்ருதம் ஸ்தாநம் ஸ்வாத்ம சந்தோஷ காரிணாம் –
ததச்ய த்ரிவித ஸ்யாபி துக்க ஜாதஸ்ய -இத்யாரப்ய –
நிரஸ்தாதிசய ஆஹ்லாத ஸூ காபாவைக லஷ்ணா
பேஷஜம் பகவத் ப்ராப்தி ஏகாந்தாத் யந்திகீ மதா -இத்யாதி –

தத் உபாய கதீ –
போக மோஷங்கள் உடைய சாதன பேதங்களை
நித்ய நைமித்திக காம்ய கர்ம அனுஷ்டானம் போகச்ய-
சாங்கா நுஷ்டித கர்மசாத் யஜ்ஞானயோகாதி ஆத்மப்ராப்தே
ஜ்ஞான கர்மானுக்ருஹீத பக்தி பிரபதிஸ்ஸ பகவத் பிராதே

உதார-
சம்சாரிகள் பக்கல் அர்தித்வம் ஆதல் -பிரயோஜனம் ஆதல் -நினையாதே
இவர்கள் அனர்த்த பரிஹாரமே பிரயோஜனமாக உபகரித்து அல்லது நிற்க மாட்டாத மேகம் போலே உபகரித்தவர் –

ஸ்ந்தர்ஸ்யன் –
சம்சய -விபர்யய -ரஹிதமாக -பிரத்யஷிப்பியா நின்று கொண்டு –

நிரமிமீத –
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ பொருளை -நான் முகன் திருவந்தாதி -1- என்கிறபடியே
துரவகாஹமான வேதார்த்தத்தை அல்ப க்ரந்தாத்தாலே பண்ணினான் -என்கை –

புராண ரத்னம்-
புராணம் ஆவது -சர்க்கச்ச பிரதி சர்க்கச்ச -இத்யாரப்ய
புராணம் பஞ்ச லஷணம் -என்கிற படியே பஞ்ச லஷனோபேதமான கிரந்த சாதம்
புராபி நவம் புராணம் -என்றுமாம் –
அதாவது -ஸ்வ ரசத்தை என்றும் ஒக்க ஒருவரால் அழிக்க ஒண்ணாது இருக்கை –
ரத்னம் –
அர்த்த பிரகாசகமாய் இருக்கையும் –
சங்க்ரஹமாய் இருக்கையும் –
ஆபத் ரஷகமாய் இருக்கையும் –
இந்தப் புராணாதிகாரிக்கு லோக பரிக்ரஹம் சித்திக்கையும் –

தஸ்மை நமோ – முநிவராய –
தனக்கு வரம் கொடுத்த வசிஷ்ட புலஸ்த்யர்களுக்கு
முத்ரிதா முத்ரித பிரதி முத்ரிதராய்
அத்தாலே அவர்கள் படியை உடையவன் -என்னுதல் –
முநிநாம் வரணீயாய் – என்கிறபடியே -அவர்களுக்கு ஆதரணீயன் -என்னுதல்

பராசராய —
பரராகிரார் -பாஹ்ய குத்ருஷ்டிகள்
அவரை பிரமாண சரங்களாலே ஹிம்சித்து
வைதிக மரியாதையை ஸ்தாபித்தான் -என்னுதல் –
இந்திரிய ஜயத்தாலே ரஜஸ் தமஸ் ஸூக்களை ஜெயித்தான் -என்னுதல்

யா உதார சித் அசித் ஈஸ்வர
தத் ஸ்வ பாவ போக அபவர்க்க தத் உபாய கதீ
தத்த்வேன சந்தர்சயன்
புராண ரத்னம் நிரமிமீத
முநிவராய பராசராய நம -என்று
அந்வயம்

——————————————————————

ஸ்லோகம் -5- அவதாரிகை –

இந்த ஜ்ஞானம் அதிக்ருதாதிகாரமாய்ப் போகாமே சர்வாதிகாரமாம் படி
த்ராவிடமான ப்ரஹ்ம சம்ஹிதையை
மயர்வற மதி நலம் அருளினான் -என்கிற பக்தியாலே வாசிதமாக்கி
மரங்களும் இரங்கும் வகை -திருவாய் மொழி -6-5-9-என்கிற
தம்முடைய ஆகர்ஷகமான ஈரச் சொல்லாலே அருளிச் செய்கையாலும்
பெரிய முதலியாருக்கு இந்த ஜ்ஞானத்துக்கு உத்பாதகம் ஆழ்வார் திருவடிகள் ஆகையாலும்
இவர் திருவடிகளிலே விழுகிறார் –
எத்திறம் -திருவாய்மொழி -1-3-1- என்றும்
நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள -திருவாய்மொழி -5-10-3- என்றும்
எல்லாம் கண்ணன் -திருவாய்மொழி -6-7-1- -என்றும்
பெரிய முதலியாரையும்
ஸ்ரீ பராசர பகவானையும் போலே
கிருஷ்ண குணவித்தராய் இருக்கும் படியையும் நினைத்து
ஆழ்வார் திருவடிகளிலே சரணம் புகுகிறார் –

மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி
சர்வம் யதேவ நியமேன மதநவ்யாநாம்
ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபி ராமம்
ஸ்ரீ மத ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –5-

மாதா –
உத்பத்திக்கு முன்னே வரம் கிடந்தது
பெருகைக்கு வருந்தி
பத்து மாசம் கர்ப்ப தாரணம் பண்ணி
பிரசவ வேதனையை அனுபவித்து
அஸூத்திகளையும் மதியாதே
பால்ய தசையிலே ஆதரித்து
பகவான் ஆனாலும் இவன் புருஷ பாஷணம் பண்ணப் பொறுத்து
அகல இசையாதே
அவன் பிரியத்தையே வேண்டும் –
மாதாவைப் போலே உபகாரகனாய் இருக்கை –

பிதா –
அவள் பாத்ர மாத்ரமாம் என்னும்படி
உத்பாதகனாய்
என்றும் ஒக்க ஹித பரனான பிதாவும்

யுவதயஸ் –
இருவரையும் மறந்து விரும்பும்
யுவதிகளைப் போலே நெஞ்சுக்கு இனியராய் இருக்கை

தனயா –
அவளுடைய யௌவனத்தை அழிய மாறிப் பெற்றவனாய்
பால்யத்தில் ஸூககரனாய்
பக்வ தசையில் ரஷகனாய்
ஆமுஷ்மிகத்தில் நிரய நிஸ்தாரகனான-புத் -என்னும் நரகத்தை -தாண்டுவிப்பவன் –
புத்ரனைப் போல் இருக்கை –

விபூதி –
விபவம் இல்லாத போது இவை எல்லாம் அசத் சமமாய் இருக்கையாலே
இவற்றை நன்றாக்கும் ஐஸ்வர்யம் போலே உத்தேச்யமாய் இருக்கை –

சர்வம் –
அனுக்தமான சர்வ போகங்களுமாய் இருக்கை –

யதேவ –
அவதாரண்த்தாலே -சேலேய் கண்ணியர்-திருவாய் மொழி -5-1-8-
என்று இருக்கும் ஆழ்வார் நினைவு இன்றி இருக்கை –
நியமேன –
என்றும் ஒக்க அவருக்கு பிரியம் என்று போமது ஒழிய
ப்ராமாதிகமாகவும் புறம்பு போவது அன்றிக்கே இருக்கை –
மதநவ்யாநாம் –
வித்யயா ஜந்ம நா வா -என்று சூர்யன் வாயு இருவருக்கும் வித்யை ஜந்ம புத்திரன் தன்மை அடைந்த ஹனுமான் –
உபய சந்தான ஜாதருக்கும்
ஆத்யஸ்ய –
வைதிக சந்தானத்துக்கு பிரதம ஆசார்யராய் இருக்கை –
ந குலபதேர் –
ஸ்திரீக்கு பர்த்ரு குலம் போலே
கோத்ர ரிஷிகளும் அவரே என்கை –
வகுளாபி ராமம் –
திரு மகிழ மாலையாலே அலங்க்ருதமாய் உள்ளத்தை –
மகிழ் அலங்காரமான திருவடிகள்
இத்தாலே திருவடிகளில் பரிமளத்தாலே வந்த போக்யதையைச் சொல்லுகிறது –
நல்லடி மேல் அணி நறு துழாயை -திருவாய் மொழி -4-2-2-வ்யாவர்த்திக்கிறது –
ஸ்ரீ மத –
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யோடே நித்ய சம்யுக்தமாய் இருக்கை –
அப்ர வீச்ச ததா வாக்யம் ஜாதக்ரோதா விபீஷண
அந்தரி ஷகதஸ் ஸ்ரீமான் ப்ராதரம் ராஷஸாதிபம் -யுத்த -16-17-
பரமாபதமா பன்னோ மனஸா சிந்தயத் ஹரிம்
ஸ து நாக வர ஸ்ரீ மான் நாராயண பராயண -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-47-
சர்வ பரியகரஸ் தஸ்ய ராம ஸ்யாபி சரீரத
லஷ்மனோ லஷ்மி சம்பன்னோ பஹி ப்ராண இவாபர -பால -18-28-என்று
பகவத் பிரத்யாசத்தியை ஐஸ்வர்யமாக சொல்லக் கடவது இறே –
என்னுடைய சம்பத்துக்கு அடியான ஐஸ்வர்யத்தை உடையார் -என்றுமாம்
ததங்க்ரி யுகளம் –
அது -என்னும் அத்தனை ஒழிய
பேசி முடிக்க ஒண்ணாது -என்கை –
யுகளம் –
சேர்த்தியால் வந்த அழகை உடைத்தாய் இருக்கை –
ப்ரணமாமி மூர்த்நா –
ஆழ்வார் உடைய திருவடிகளை நினைத்த வாறே
நம -என்று நிற்க மாட்டாதே
அவர் திருவடிகளிலே தலை சேர்க்கிறார் –
கீழ் உபகாரகரை ஆஸ்ரயித்த இத்தால் செய்தது
முமுஷூவுக்கு உபகாரகரே சேஷித்வ பிரதிபத்திக்கு விஷய பூதரும் ஸ்துத்யரும்
என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று
ஒருவருக்கு சேஷிகள் இருவராம் படி இருக்கை எங்கனே -என்னில்
ஸ்ருதி சேஷித்வம் யாகத்துக்கும் புரோடாசத்துக்கும் உண்டானால் போலே
ஈஸ்வரன் பிரதான சேஷியாய்
ததீயர் த்வார சேஷிகளாம் இடத்தில் விரோதம் இல்லை
அதவா
நிருபாதி சேஷி அவன்
தத் சம்பந்தம் அடியாக வந்தது ஆகையாலே பாகவத சேஷித்வம் சோபாதிகம் என்றுமாம் –
தமக்கு ஸ்தோத்ர ஆரம்ப ஹேதுவான
ஜ்ஞான பக்த்யாதிகள்
பிதா மஹோபாத்ததனம் -என்கைக்காக-

முதல் மூன்று ஸ்லோகத்தாலே
பெரிய முதலியார் உடைய ஜ்ஞான பக்த் யாதிக்யம் -சொன்னார்
நாலாம் ஸ்லோகத்தாலே -இவ்வர்த்தம் த்ரைவித்ய வ்ருத்தானுமதம் -அதாவது –
வைதிகரும் பெரியோருமான பராசரால் அனுமதிக்கப் பட்டது -என்கிறார் –
ஐஞ்சாம் ஸ்லோகத்தாலே இவருக்கு இந்த ஜ்ஞானம் ஆழ்வாராலே வந்தது -என்கிறார் –

மத் அன்வயாநாம் யதேவ நியமேன
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம்
ஆத்யஸ்ய ந குலபதே வகுளாபி ராமம்
ஸ்ரீ மத் அங்க்ரி யுகளம் மூர்த்நா ப்ரணமாமி -என்று
அந்வயம் –

(ஆத்யஸ்ய ந குலபதே-எங்கள் பிரபன்ன குடித் தலைவர் -விப்ரர்க்கு கோத்ர-சரண -ஸூத்ர கூடஸ்தர்
பராசர பாராசார்ய போதாய நாதிகள்–பிரபன்ன ஜன கூடஸ்தர் -பராங்குச பரகால யதிவராதிகள்-
ஆத்யஸ்ய ந குலபதே–ஸ்ரீ லஷ்மி நாதனை சொல்லி -ஸ்ரீ மத் அங்க்ரி யுகளம்-ஸ்ரீ சடகோபரை சொல்லிற்று என்றுமாம் –
நம்மாழ்வாரை சொல்லுவதே உசிதம் என்பது பூர்வர்கள் திரு உள்ளம் –
மத் அன்வயாநாம்-இவருக்கு முன்பு உள்ளோர்க்கும் பின்பு உள்ளோர்க்கும் -ஸ்ரீ வைஷ்ணவ சந்தானங்களுக்கு அனைவருக்கும்
ஆழ்வார் திருவடிகளே சர்வஸ்வம் -என்றதாயிற்று -வகுளாபி ராமம்–மகிழ் மாலை மார்பினன் -வகுளாபரணர்)

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –