Archive for the ‘ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்’ Category

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —பிள்ளைப்பாக்கம் இளையவல்லி ஸ்ரீ லஷ்மி நரசிம்ஹ ஆச்சார்யரால் அருளப்பட்ட தமிழ் பாசுரங்கள்

January 15, 2023

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-தனியன்கள்-

ஸ்வாதயந்நிஹ ஸர்வேஷாம் த்ரய்யந்தார்த்தம் ஸுதுர்க்ரஹம் |
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ர: தம் வந்தே யாமுநாஹ்வயம் ||

யோகிகளுக்குள் சிறந்தவரும், புரிந்து கொள்ள அரிதான வேதாந்த அர்த்தங்களை எல்லோரும்
புரிந்து கொள்ளும்படி ஸ்தோத்ரங்களாக அருளிச்செய்தவருமான ஆளவந்தாரை வணங்குகிறேன்.

நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: |
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: ||

ஆளவந்தாரை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். என்னால் அவரை வணங்குவதை நிறுத்த முடியவில்லை.

ஶ்லோகம் 1 –
முதல் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஸ்ரீமந்நாதமுனிகளின் உண்மையான செல்வமான
ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார்.

நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே |
நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே ||

நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை
எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.
அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர்.
இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.

சிந்தையினுக்கு எட்டாமே சிறந்த அருளால் எளிது இலகி
விந்தையுறு மெய்ஞ்ஞான விரக்திக் களஞ்சியமாய்
பைந்துளவ பகவான் மீதுறு பக்திக்கு ஆழ் கடலாம்
அந்தணனாம் அந்நாத முனிகள் அடி பணிவேனே

அந்தணன் -அந்தத்தை அணவுவான் -கிட்டுவான் முனிவன்

மனத்தினால் அளவிடக் கூடாததாய்
அறிந்த மட்டில் ஆச்சர்யத்தை விளைவிப்பதாய்
பகவத் கிருபையால் வந்த காரணத்தால் ஸ்ரமம் அற்று இருப்பதாயுமுள்ள விலக்ஷணமான ஞானமும்
அந்த ஞானத்தால் யுண்டாகும் வைராக்கியமும்
ஆகிய இவற்றுக்கு இருப்பிடமானவரும்
திருத்துளஸீ தரிக்கும் பகவான் இடத்தில் உண்டாகும் பக்திக்கு நிலைக்காத ஸமுத்ரம் போன்றவரும்
முனி ஸ்ரேஷ்டருமுமான அந்த ஸ்ரீ மன் நாதமுனிகளுக்கு நமஸ்காரம் பண்ணுகிறேன்

————-

ஶ்லோகம் 2 –
இதில், பகவத் அவதாரங்களில் ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு இருந்த ஞானம் ஆகியவற்றின் மேலான சிறப்பு விளக்கப்படுகிறது.
அல்லது, “(முந்தைய ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல், என்னளவும் பெருகி வருகிறது”
என்று ஆளவந்தார் அருளிச் செய்கிறார்.

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக
விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும்.
அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

மதுவை வென்ற நெடிய மாலின் மரை மலர்ப்பதத்தின் கண்
முதிரும் தத்வ ஞான மோக மஹிமை முற்று மோர்ந்துயர்
விதுர நாதனாம் என் நாத முலைகளை வியப்பனே
கதி எனக்கு அவன் கழல்கள் இங்கும் அங்கும் என்றுமே –

விதுரன் -அறிஞன் –வியத்தல் -ஸ்துதித்தல்

மது என்னும் அசுரனை ஸம்ஹரித்த -ஆஸ்ரித விரோதி நிவர்த்தகனான -திருமாலின்
திருவடித் தாமரைகள் விஷயமாய் முதிர்ந்து இருக்கும் தத்வ ஞானமும் -அதாவது
அத்திருவடிகளே மோக்ஷத்திற்கு உபாய உபேயம் என்னும் ஞானமும்
அனுபவித்தால் அல்லது தரிக்க ஒண்ணாத ஒரு ப்ரேமமுமாகிய இவற்றின் மஹிமையை முற்றும் உணர்ந்தவரும்
மஹா ஞானியாயும் நமக்கு ஸ்வாமியுமான ஸ்ரீ மன் நாத முனிகளை நமஸ்கரிக்கின்றேன்
இவருடைய திருவடிகளே இம்மையிலும் மறுமையிலும்
எக்காலத்தும் எமக்கு கதியாகும்

————

ஶ்லோகம் 3 –
தாகம் உள்ள ஒருவன் நீரை மேலும் மேலும் பருகியும் தாகம் தீராமல் இருப்பதைப் போலே,
ஆளவந்தார் “மீண்டும் மீண்டும் நான் ஸ்ரீமந் நாதமுனிகளின் தொண்டன்” என்று அருளிச் செய்கிறார்.

பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய ||

பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும்
உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.
அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

அச்சுதற்கு அளப்பில்லாத பக்தி தத்வ ஞானமாம்
அச்சுதைக் கடல் பெருக்கு எனத் தரைச்சுபுச் சொலான்
மெச்சி மெய்ப்பலன் விளைக்கும் பக்தி யோக கர்த்தனை
நச்சு நான் ஸ்துதிப்பன் இன்று நாதனாம் முனீந்த்ரனே –3-

அச்சுதன் -ஆஸ்ரிதர்களை ஒருகாலும் நழுவ விடாதவன்

ஸர்வேஸ்வரன் விஷயத்தில் அளக்க ஒண்ணாத பக்தி தத்வ ஞானம் ஆகிய அந்த அமுதக் கடலானது
உள்ளடங்காது மேலே பொங்கியது போலே மதுரமான சொற்களால் பரம ப்ரயோஜன ரூபமாயும் பரிபூர்ணமாமாயும் இருக்கிற
பக்தி யோகத்தை அன்பு கூர்ந்து இவ்வுலகத்தில் பிரகாசிக்கும் படி செய்து அருளினவரும்
முனிவர்களுக்கும் ஸ்ரேஷ்டருமாய் -அவர்களாலும் பூஜிக்கத் தக்கவராயும்
அந்த நாத முனிகளை மறுபடியும் நான் வணங்குகிறேன் –

—————

ஶ்லோகம் 4 –
ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

தத்துவத்தின் சித் அசித்தோடு ஈசன் என்னும் தன்மையும்
முக்தி போக சாதனத்து உபாய மார்க்க முழுமையும்
வித்தரித்த மெய்யுரைப் புராண ரத்ன மீது யரும்
சத்துவப் பராசர முனீந்திரன் முன் தாழ்வனே –4-

பராசரன் பர சமயங்களை பிராமண சரங்களால் நிரசித்தவன்

சேதனம் அசேதனம் இவற்றின் ஸ்வரூபங்களையும்
இவ்விரண்டு தத்துவங்களுக்கும் ஸ்வாமியான ஈஸ்வர ஸ்வரூபத்தையும்
இம்மூன்றின் தன்மைகளையும் -யாவருக்கும் அனுபாவ்யமான போகங்களையும்
மோக்ஷத்தையும் -இவற்றை அடைவதற்கு உரிய உபாய மார்க்கங்களையும்
முழுமையும் உணர்ந்து பிறர்க்கு விசதமாய் விளங்கச் செய்பவராய்
பொருளை விளக்குவதிலும் ஆத்ம ரக்ஷணத்திலும் ரத்னம் போன்றதான ஸ்ரீ விஷ்ணு புராணத்தைச் செய்து அருளினவரும்
முனி ஸ்ரேஷ்டருமான பராசர முனிவர் முன் வணங்குகின்றேன்

————-

ஶ்லோகம் 5 –
ஆளவந்தார் நம்மாழ்வார் திருவடிகளில் விழுந்து அவரிடத்தில் சரணடைகிறார்.

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

நம்மாழ்வாரின் திருவடிகளே எனக்கும் என் குலத்தவர்களுக்கும், தாய், தந்தை, மனைவி, மக்கள், சிறந்த செல்வம் மற்றும் எல்லாமாகும்.
மகிழ மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும், கைங்கர்யச் செல்வத்தை உடையராயிருக்கும், நம் வைஷ்ணவ குலத்துக்குத்
தலைவரான நம்மாழ்வாரின் இரண்டு திருவடிகளில் என் தலையை வைத்து வணங்குகிறேன்.

என்னிட வம்சத்தார்களுக்கு எக்காலத்திலும் இணை இல்லாத் தமரும்
அன்னையும் அத்தன் தானும் ஓர் இனிய வரிவையும் ஆக்கமும் மகவும்
பின்னும் மேலாய பேறுகள் யாவும் யாகும் எம் குலபதியாம் அம்
மன்னு சீர் மகிழ மாலையார் மாறன் அடியிணைத் தலை வணங்குவனே –5-

எம் வம்சத்தார்களுக்கு எக்காலத்திலும் இணை இல்லாமல் அமர்ந்து
பிரியத்தைச் செய்வதில் தாய் போன்றவரும்
ஹிதத்தைச் செய்வதில் தந்தை போன்றவரும்
இன்பம் விளைப்பதில் ஒரு அருமையான ஸ்த்ரீ போன்றவரும்
பாதுகாப்பத்தில் புத்ரனைப் போன்றவரும்
எல்லாவற்றையும் சாதிப்பதில் தனம் போன்றவரும்
இவ்விதம் இன்னம் பலவாய் உத்தமமான சம்பத்து போன்றவரும்
எங்கள் குலத்துக்கு பரம ஆச்சார்யராயும்
மகிழ மாலை அணிந்து விளங்குபவருமான அந்த நம்மாழ்வாருடைய
திருவடி இணையைத் தலையால் வணங்குகின்றேன் –

—————–

ஶ்லோகம் 6 –
திருவாய்மொழி 7.9.7இல் “வைகுந்தனாகப் புகழ” (ஆழ்வார் “ஸ்ரீவைகுண்டநாதன்” என்று எம்பெருமானைப் புகழும்படி
எம்பெருமான் செய்தான்) என்று சொன்னபடி, எம்பெருமானுக்குக் கொண்டாட்டங்கள் விருப்பம் என்பதாலும்,
எம்பெருமானைக் கொண்டாடுவது ஆசார்யர்களுக்கும் விருப்பம் என்பதாலும், எம்பெருமானைக் கொண்டாடும் எண்ணத்துடன்,
எம்பெருமானே உபாயம் (வழி) மற்றும் உபேயம் (குறிக்கோள்) என்று சுருக்கமாகச் சொல்லி,
எம்பெருமானைக் கொண்டாடத் தொடங்குகிறார் ஆளவந்தார்.

யந் மூர்த்நி மே ஶ்ருதி ஶிரஸ்ஸு ச பாதி யஸ்மிந்
அஸ்மந் மநோரத பதஸ் ஸகலஸ்ஸமேதி |
ஸ்தோஷ்யாமி ந: குல தநம் குல தைவதம் தத்
பாதாரவிந்தம் அரவிந்த விலோசநஸ்ய ||

புண்டரீகாக்ஷனின் (தாமரைக் கண்ணனின்) திவ்ய திருவடிகளைக் கொண்டாடப் போகிறேன்.
இந்த எம்பெருமானே நம் குலத்துக்கு தனமாகவும், தெய்வமாகவும் விளங்குகிறான்.
நம்முடைய அதிகமான பக்தி எல்லாம் அந்த எம்பெருமானின் திருவடிகளிலே போய்ச் சேரும்.
அந்த எம்பெருமானின் திருவடிகளே என்னுடைய தலையிலும், வேதாந்தத்திலும் காணப்படுகின்றன.

இலகும் என் சென்னி மீதும் இன் மறை முடியின் மீது
மலகில் என் மனத்தின் இச்சை அகிலமும் நாடும் எங்கள்
குல தனம் குலத்தின் தெய்வங் கோமளக் கமலக் கண்ணன்
மலரும் அம்மரை மலர்த்தாள் மனம் உறப் புகழ்வன் நன்றே –6-

எந்த புண்டரீகாக்ஷனுடைய திருவடி என் சிரஸ்ஸிலும்
வேதாந்தங்களின் மீதும் ஓக்க பிரகாசிக்கின்றதோ
எந்த திருவடியில் என் இச்சையின் வழிகள் யாவும் செவ்வனே சென்று அடைகின்றனவோ
எது என் குலத்துக்குத் தனமாயும் தெய்வமாயும் இருக்கின்றதோ
அந்தத் திருவடியை என் நெஞ்சமார ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்

—————

ஶ்லோகம் 7 –
ஸ்ரீ கீதை 1.47இல் “விஸ்ருஜ்ய ஸசரம் சாபம்” (வில்லையும் அம்புகளையும் கீழே நழுவவிட்டான்) என்று சொன்னபடி
அர்ஜுனன் எப்படி யுத்தத்திலிருந்து பின் வாங்கினானோ, ஆளவந்தாரும் தன் முயற்சியில் இருந்து பின்வாங்குகிறார்.

தத்வேந யஸ்ய மஹிமார்ணவ ஶீகராணு:
ஶக்யோ ந மாதுமபி ஶர்வ பிதா மஹாத்யை: |
கர்த்தும் ததீய மஹிம ஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ’ஸ்து கவயே நிரபத்ரபாய ||

எம்பெருமானின் பெருமை என்னும் கடலில் ஒரு திவலையில் இருக்கும் ஒரு அணுவின் அளவு கூட ருத்ரன், ப்ரஹ்மா
போன்றவர்களால் அளக்கமுடியாது. கவிஞன் என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டு, அப்படிப்பட்ட
எம்பெருமானின் பெருமைகளைப் பாடத் தொடங்கியதை நினைத்து (இப்படிப்பட்ட நகைப்பிற்குரிய செயலை நினைத்து)
என்னை நானே வணங்கிக் கொள்கிறேன்.

அன்னவன் மஹிமை வெள்ளத்து திவலையின் அணுவை யேனும்
இன்னது என்றுள்ளது ஒர விறை சிவாதியர்க்கும் ஒண்ணா
மன்னும் மஹிமை பாட மானம் அற்று எத்தனித்த
என்னையும் வணங்குவேன் நான் இந்த ஸாஹஸத் செயற்கே –7-

ஓர்தல் –ஆராய்தல் தெளிதல்

எந்த சர்வேஸ்வரனுடைய குணக்கடலின் சிறு திவலையில் அணு மாத்ரத்தையும் உள்ளபடி அளந்து அறிவதற்கும்
ஞானாதிகனான சிவனாலும் அவனுக்கு உபதேசம் செய்த பிரமனாலும் பிரமனுக்கு சமானமான சனகாதிகளாலும் முடியாதோ
அத்தன்மையானுடைய குணங்களை ஸர்வ பிரகாரத்தாலும் ஸ்துதிப்பது என்கிற இந்த
ஸாஹஸத்தைச் செய்ய வெட்கம் இல்லாமல் எத்தனித்த எனக்கு நமஸ்காரம் –

—————–

ஶ்லோகம் 8 –
யுத்தத்திலிருந்து பின்வாங்கிய அர்ஜுனனை ஸ்ரீ கீதை 18.73இல் “கரிஷ்யே வசனம் தவ” (நீ சொல்லும்படி நான் யுத்தம் செய்கிறேன்)
என்று சொல்லும்படி உற்சாகப்படுத்திய எம்பெருமான், ஆளவந்தாரை
“வாய் படைத்த பயன் அவனைக் கொண்டாடுவதற்கே; ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் ‘ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய:’
(அவன் கொண்டாடத்தகுந்தவன்; அவன் கொண்டாட்டங்களை விரும்புபவன்)” என்று சொல்லும்படி உற்சாகப்படுத்தினான்.
இதைக் கேட்ட ஆளவந்தார், எம்பெருமானைக் கொண்டாடுவது என்று முடிவெடுத்தார்.

யத்வா ஶ்ரமாவதி யதாமதி வாப்ய ஶக்த:
ஸ்தௌம்யேவமேவ கலு தே’பி ஸதா ஸ்துவந்த: |
வேதாஶ் சதுர்முக முகாஶ்ச மஹார்ணவாந்த:
கோ மஜ்ஜதோர் அணுகுலாசலயோர் விஶேஷ: ||

அல்லது, சக்தியற்ற நான் சோர்வடையும் வரையிலோ எனக்குத் தெரிந்த அளவிலோ அவனைக் கொண்டாடுவேன்;
இவ்வாறே, வேதங்களும், நான்கு முகங்களைக் கொண்ட ப்ரஹ்மா முதலியவர்களும் எம்பெருமானைக் கொண்டாடுகின்றனர்;
கடலுக்குள் மூழ்கி இருக்கும் சிறு கூழாங்கல்லுக்கும் பெரிய மலைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? (ஒன்றும் இல்லை)

சக்தி இலனாகிலும் யான் தளர்ச்சி எய்திச் சகிக்க இனித் தரமில்லேன் என்னும் மட்டும்
புத்தி எனக்கு உற்ற அளவும் போற்றி நிற்பன் புகழ் ஆர்ந்து எக்காலத்தும் பொருந்தி ஏத்தும்
தத்துவத்தை யுணர் மறையும் சதுர் முகத்தோன் சங்கரன் ஆதியர்களும் இங்கனமே யன்றோ
ஒத்திடில் ஓர் பெரும் கடலுள் அமிழ்ந்து மூழ்கும் உயர் மலைக்கும் அணுவிற்கும் வாசி யுண்டோ –8-

உள்ளபடியே உன்னை ஸ்தோத்ரம் செய்ய சக்தி இல்லேனாயினும் என் உணர்ச்சியில் தளர்ச்சி யுண்டாகி
இனி என்னால் ஸாத்யம் இல்லை என்னும் மட்டுமாவது என் ஞானத்துக்கு எட்டும் வரையிலுமாவது ஸ்துதி பண்ணுகிறேன்
ஜகத் ப்ரஸித்தமாய் ஆதி காலம் தொட்டு உன்னை ஸ்துதிக்கும் ஸகல தத்துவத்தையும் அறிந்த வேதங்களும்
சதுர் முகன் சங்கரனாதி மற்றவர்களும்
தத்தம் ஞான சக்தி யாதிகள் அளவே யன்றோ ஸ்துதிக்கின்றார்கள் ஸ்துதிக்கின்றார்கள்
ஒரு பெரும் கடலிலே அமிழ்ந்து மூழ்குகின்ற ஒரு பெரிய பர்வதத்துக்கும் ஒரு அணுவிற்கும் என்ன வித்யாஸம் இருக்கிறது –
உள்ளபடி யுன்னை ஸ்துதி செய்ய மாட்டாமையில் வேதம் முதலியவைகளும் எனக்கு யாதொரு வாசியும் இல்லை என்பது கருத்து –

—————–

ஶ்லோகம் 9 –
இதில், ஆளவந்தார் தான் ப்ரஹ்மா முதலியவர்களை விட எம்பெருமானைக் கொண்டாடுவதற்குத்
தகுதி படைத்தவர் என்று அருளிச் செய்கிறார்.

கிஞ்சைஷ ஶக்த்யதிஶயேந ந தே’நுகம்ப்ய:
ஸ்தோதாபி து ஸ்துதி க்ருதேந பரிஶ்ரமேண |
தத்ர ஶ்ரமஸ்து ஸுலபோ மம மந்த புத்தே:
இத் யுத்யமோ’யமுசிதோ மம சாப்ஜ நேத்ர ||

மேலும், என்னுடைய கவிதை பாடும் சிறந்த திறமையால், நீ கருணையைப் பொழியும் நிலையில் நான் இல்லை;
ஆனால், உன்னைக் கொண்டாட முயன்று சோர்வடையும் தன்மையை உடையவன் ஆகையால், நீ என் மீது உன் கருணையைப் பொழியலாம்;
எனக்கு மிகவும் குறைந்த ஞானமே உள்ளதால், எளிதில் சோர்வடைந்து விடுவேன்;
ஆகையால், உன்னைக் கொண்டாடும் இம்முயற்சி ப்ரஹ்மா முதலியவர்களைக் காட்டிலும், எனக்கே மிகவும் பொருத்தமாக உள்ளது.

உன்னையே ஸ்துதிப்ப யெய்தும் யுணர்ச்சியின் தளர்ச்சி யன்றி
நின் அருட்க்கு உரியதாமோ நிறை கவித் திரனும் சீரும்
என்னிட மந்த புத்திக்கு எளிது இளைப்பாதல் பற்றி
நன்னல நயனா விந்த முயற்சிக்கு யுரியனானே –9-

நன்னலம் –அழகு

உன்னை ஸ்துதிப்பதில் இச்சை கொண்டும் -அதற்கு வேண்டிய சக்தி இல்லாமையால் புகழவும் தவிர மாட்டாமையாலே
ஒருவன் படுகிற இளைப்புக்கு இரங்கி நீ அருள் செய்வதே யன்றி ஸ்தோத்ரம் செய்வதற்கு வேண்டிய பூர்ணமான
ஸாமர்த்ய அதிசயங்களைக் கொண்டு நீ அனுக்ரஹிக்கிறது இல்லை –
இங்கனம் இருக்க அல்ப புத்தியேனான எனக்கு ஸ்ரமம் அதிக சுலபத்தில் உண்டாய் விடுகிறது –
ஆகையால் -என் ஸ்தோத்ரத்தைத் தலைக்கட்டும்படி கடாக்ஷிக்க வல்ல அழகிய திருக்கண்களை யுடையவனே
இந்த ஸ்தோத்ரம் செய்ய வேணும் என்னும் முயற்சிக்கு யுரியவன் நானே யாகின்றேன்
எனக்கு அம்முயற்சி தகுந்துள்ளது –

—————-

ஶ்லோகம் 10 –
எம்பெருமானைக் கொண்டாடுவதிலிருந்து பின் வாங்கி, பிறகு எம்பெருமானால் ஸமாதானம் செய்யப்பட்ட ஆளவந்தார்,
எம்பெருமானைப் புகலாக ஆக்கும் அவனுடைய பரத்வத்தை, இனி வரும் ஐந்து ச்லோகங்களில் அருளிச்செய்கிறார்.

அதில், இந்த முதல் ச்லோகத்தில்,
ஆளவந்தார் சாஸ்த்ரத்தில் இருக்கும் காரண வாக்யங்களைக் கொண்டு (எம்பெருமானிலிருந்தே எல்லாம் உருவாகின்றன என்று சொல்பவை)
எம்பெருமானின் பரத்வத்தை அருளிச் செய்கிறார்.

நாவேக்ஷஸே யதி ததோ புவநாந்யமூநி
நாலம் ப்ரபோ பவிதுமேவ குத: ப்ரவ்ருத்தி: |
ஏவம் நிஸர்க்க ஸுஹ்ருதி த்வயி ஸர்வ ஜந்தோ:
ஸ்வாமிந் நசித்ரமிதமாஶ்ரித வத்ஸலத்வம் ||

எம்பெருமானே! மஹா ப்ரளயத்துக்குப் பின், நீ உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தைக் காட்டவில்லை என்றால்,
இவ்வுலகங்கள் படைக்கப்பட்டிருக்காது; வேறு எந்த நிகழ்வுகளும் நடந்திருக்காது என்பதும் தெளிவு.
எம்பெருமானே! இப்படி நீயே எல்லோருடைய இயற்கையான நண்பனாக இருப்பதால்,
நீ உன்னுடைய அடியார்களிடம் தாயன்பைக் காட்டுவதைப் பார்ப்பதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை.

நாத நின் ஸங்கல்பம் இன்றி யுண்டாய் நன்மை யுறும் இருக்கைக்கும் சமர்த்தம் இல்லா
சாதனமாம் இப்புவனங்கட்க்கும் எங்கன் ஸம்பவிக்கும் ப்ரவ்ருத்தி இவ்விதத்தே
ஏது விலாத எல்லா உயிர்களுக்கும் இதம் புரியும் இயற்கையனாம் ப்ரபோ நின் தன்
பாதம் அணி அன்பர்க்கு இவ்வாற் ஸலீயம் படைத்து உள்ளாய் என்பதிலோர் விந்தை என்னே -10-

பிரபோ ஆதியில் நீ ஸங்கல்பித்து கடாக்ஷித்து இரா விட்டால் இப்பதினான்கு உலகங்களும்
உண்டாய் இருப்பதற்கே ப்ரமேயம் இருந்திராது -அப்படி இருக்க அவைகளுக்கு ப்ரவ்ருத்தி எங்கனே யுண்டாகும்
ஏ ஸர்வ சேஷியானவனே பிரமன் முதலிய சகலஜீவன்களுக்கும் கரண களேபரங்களைக் கொடுத்து குறை தீர்த்து அருளிய
ஸ்வ பாவமாய் ஸூஹ்ருத்தான உன் விஷயத்தில் ஸ்துதி பண்ண வல்லராம் படி
உன் அன்பரைச் செய்வதற்காக உனக்கு யுண்டான வாற் ஸலீயம் ஓர் ஆச்சர்யம் ஆகுமோ-

—————-

ஶ்லோகம் 11 –
இதில், எம்பெருமானின் பரத்வ லக்ஷணம் (அடையாளம்) விளக்கப்படுகிறது.

ஸ்வாபாவிகாநவதிகாதிஶயேஶித்ருத்வம்
நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக: க: |
ப்ரஹ்மா ஶிவஶ் ஶதமக: பரம: ஸ்வராடிதி
ஏதே’பி யஸ்ய மஹிமார்ணவ விப்ருஷஸ்தே ||

நாராயணனே! உன்னுடைய பெருமைக் கடலில் ஒரு திவலையைப் போன்றவர்களே (கர்மத்துக்கு வசப்பட்ட)
ப்ரஹ்மா, சிவன், இந்திரன் ஆகியோரும், இந்த தேவதைகளைவிடச் சிறந்தவர்களான, கர்மத்துக்கு வசப்படாத முக்தாத்மாக்களும்;
உன்னுடைய இயற்கையான மற்றும் எல்லை யில்லாத பெருமையை உடைய ஐச்வர்யத்தை (ஆளுமையை) எந்த வைதிகன் பொறுக்க மாட்டான்?

விந்தையாய் இயற்கையாம் உன் விதப்புறு நாயகத்தை
எந்த மா வைதிகர் தான் பொறுத்திலார் நாரணா நின்
சிந்துவா மஹிமை தன்னில் சிறு துளி யாவர் யன்றோ
நந்தி நான்முகன் வலாரிமுத்தராம் ஏனையோரும் –11-

விதப்பு –அதிசயம் -மிகுதி
வைதிகர் -வேதாந்த ஸாஸ்த்ரம் உணர்ந்தவர்
நந்தி -சிவன்
வலாரி -இந்த்ரன்

நாராயணா -இயற்கையையும் ஆச்சர்யமாயும் உன்னிடத்து அமைந்துள்ள உனது இப்புயர்வு இல்லாத
உபய விபூதி ஸாம்ராஜ்யத்தை -வேதாந்த ஸாரத்தை அறிந்த எவர் தான் பொறுக்க மாட்டார் –
பிரமன் சிவன் இந்திரன் முக்தர் முதலிய இவர்கள் எல்லோரும் கடல் போன்ற உன் மஹிமையில் ஒரு துளியே ஆகின்றார்கள் அன்றோ –

—————

ஶ்லோகம் 12 –
இதில், ஆளவந்தார், ஸந்தேஹத்துக்கு இடமளிக்கும் பொதுப் பெயர்களைச் சொல்லாமல்,
தன்னடையே முழுமையான மற்றும் எம்பெருமானின் பரத்வத்தை நன்றாக வெளியிடும் திருநாமங்களை அருளிச்செய்கிறார்.

கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?
யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி,
பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?

ஆர் திருவுக்கும் திருவாகுபவன் ஆனார் பரம ஸத்வ ஸ்வரூபம் உளனார்
ஆர் மலரும் தாமரையின் கண்ணுடையவன் யாவன் புருஷோத்தமன் எனும் பெயர் உளான்
ஆறுடை ஸ்வரூபம் அதில் ஆயிரத்து ஆயிரம் கோடி பதினாயிரம் அதில்
ஆர் கலையினோர் சிறிய பாகம் அதில் அகில பிரபஞ்சமும் அடங்கி உளதே –12-

திருவுக்கும் திருவாகுபவன் யாவன் -ஸ்ரீ மஹா லஷ்மிக்கும் ஒரு சம்பத்தாய் அமைந்துள்ளவன் யாவன்
ஸூத்த ஸத்வ ஸ்வரூபம் யுடையவன் நீ யல்லாமல் வேறே யாவன்
ஸர்வேஸ்வரத்வத்தைக் குறிப்பிக்கும் மலர்ந்த தாமரை போன்ற திருக்கண்களை யுடையவன் வேறு யாவன்
புருஷோத்தமன் என்னும் பெயரை யுடையவன் உன்னிலும் எவன்
சரீர போக்யாதிகளால் அத்யந்தம் வேறு பட்டு இருக்கிற சேதன அசேதன கங்களுடைய வியாபகத்தோடு கூடிய
அகில பிரபஞ்சமும் உன்னை விட மற்று எவனுடைய ஸ்வரூபத்தில்
பலகோடி நூறு ஆயிரங்களின் ஒரு சிறு பங்கில் அடங்கி இருக்கின்றது –

—————–

ஶ்லோகம் 13 –
ஆளவந்தார் ப்ரஹ்மா, ருத்ரன் ஆகியோரின் க்ஷேத்ரஜ்ஞத்வத்தையும் (ஜீவாத்மாவாக இருக்கும் தன்மையையும்)
பகவானின் பரத்வத்தையும், இதிஹாஸ மற்றும் புராணங்களில் உள்ள சரித்ரங்களைக் கொண்டு அருளிச் செய்கிறார்..

வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
ஆபத் விமோசந மஹிஷ்ட பல ப்ரதாநை: |
கோ’ந்ய: ப்ரஜா பஶு பதீ பரிபாதி கஸ்ய
பாதோதகேந ஸ ஶிவஸ் ஸ்வ ஶிரோத்ருதேந ||

ப்ரஜாபதி என்று சொல்லப்படும் பிரமனையும், பசுபதி என்று சொல்லப்படும் ருத்ரனையும் மற்றும் இந்திரனையும்
முறையே அவர்களுக்கு வந்த ஆபத்தான வேதம் திருடப்பட்டு அதை இழந்ததையும்,
தன்னுடைய தந்தையின் தலையைக் கிள்ளிய பாபத்தையும், அஸுரர்களால் ஏற்பட்ட துன்பத்தையும் போக்கியவன் யார்?
யாருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கி, ருத்ரன் புனிதத் தன்மையை அடைந்தான்?

வேதம் அபகாரம் உறு நாளிலும் குரூர குரு பாதகம் விளை நாளினும்
தீதர அசுரர் செயிட ராதிபல வாப தங்க டீர்த்தருண் மகோத்தம பலன்
போதன் அரனார்க்கு அருள் புரிந்த பரதேவன் எவன் புகலில் யுனை யல்லாது எவன்
பாத மலர் ஆதரவின் பாய் நதி புனல் தன் தலை ஏந்து சிவன் ஏந்து சிவமே –13–

ஆபதம் -ஆபத்து
போதன் -பிரமன்
சிவம் -மங்களம் -நன்மை –

வேதமானது மது கைடபர்களால் அபஹரிக்கப் பட்ட காலத்திலும் –
தனது பிதாவும் குருவுமான பிரமனுடைய தலையைக் கொய்தலால் யுண்டான குரூரமான குரு பாதகம் சிவனுக்கு நேரிட்ட காலத்திலும்
திரிபுர அசுரர் முதலிய அசுரர்களால் யுண்டான பீடையாதி ஆபத்துக்கள் நேரிட்ட காலத்திலும்
அவைகளின் நின்றும் விடுவித்து
தன்னைப் பிரார்த்தித்ததால் லோகத்தில் ஈஸ்வரன் என்று கொண்டாடும் படியான பதவியை பிரம ருத்ராதிகளுக்குக் கொடுத்து
அவர்களுக்கு ரக்ஷகனான நீ அன்றி வேறு யார் உள்ளான்
எவனுடைய ஸ்ரீ பாத தீர்த்தத்தைத் தன் தலை மேல் கொண்டதனால் சிவன் மங்களத்தை அடைந்தான் –

—————–

ஶ்லோகம் 14 –
ஆளவந்தார் எம்பெருமானின் பரத்வத்தை சாஸ்த்ரத்துக்கு அனுகூலமான ந்யாயத்தின் மூலமாக நிரூபித்து,
(இந்த ஐந்து பாசுரங்களின் தொடரை) முடிக்கிறார்.

கஸ்யோதரே ஹரவிரிஞ்சிமுக: ப்ரபஞ்ச:?
கோ ரக்ஷதீமம் அஜனிஷ்டச கஸ்ய நாபே:?|
க்ராந்த்வா நிகீர்ய புநருத்கிரதி த்வதந்ய:
க:? கேந வைஷ பரவாநிதி ஶக்யஶங்க: ||

யாருடைய வயிற்றில் ருத்ரன், ப்ரஹ்மா முதலியவர்களும் இவ்வுலகமும் அடங்கியது? யார் இந்த உலகத்தைக் காப்பவன்?
யாருடைய திருநாபியிலிருந்து இவ்வுலகம் படைக்கப்பட்டது? உன்னைத் தவிர வேறு யாரால் இவ்வுலகம்
அளக்கப்பட்டு, விழுங்கப்பட்டு மீண்டும் வெளியே உமிழப்பட்டது? இவ்வுலகத்தின் தலைவன் யார் என்பதில் ஸந்தேஹம் இருக்க முடியுமா?

யார் இறையோன் இறை யுப்பட யண்டம் யடங்கலும் தன் உதரத்து யுடையான்
யார் இத்தலைக்கண் நின்று ஆயினவாகும் அண்டம் அனைத்தும் அளித்து அருள்வான்
யார் அகிலத்தை அளந்து விழுங்கி யுமிழ்ந்தவன் இன்னும் அன்னியனே
யார் பரதந்த்ரம் உற்றுளது அகிலமும் நின் அதலாது இதிலையமுமே –14-

இறையோன் -சிவன்
இறை -பிரமன்
இதலை -கொப்பூழ் –உந்தி

எவனுடைய திரு வயிற்றிலே பிரமன் சிவன் ஆதியரான சகலமும் அடங்கிய இந்தப் பிரபஞ்சம் அடங்கி இருந்தது
இப்பிரபஞ்சமானது வேறு எவனுடைய நாபியில் இருந்து உண்டாயிற்று
இப்பிரபஞ்சத்தை நீ அல்லது எவன் ரக்ஷிக்கின்றான்
உன்னை அல்லால் வேறு எவன் இப்பிரபஞ்சத்தை த்ரிவிக்ரமனாக அளந்து
பிரளய காலத்தில் விழுங்கி மறுபடியும் உமிழ்கின்றவன்
இப்பிரபஞ்சம் உன்னைத் தவிர வேறே எவனுடைய ஸ்வ அதீனத்தில் அடங்கி உள்ளது –
இவைகளைக் குறித்து சந்தேகிக்கவும் கூடுமோ

——————–

ஶ்லோகம் 15 –
இதில், சாஸ்த்ரத்தின் மூலம் நன்றாக நிரூபிக்கப்பட்டாலும்,
ஸ்ரீ பகவத் கீதை 16.20இல் “ஆஸுரீம் யோனிமாபன்னா:” (அஸுரப் பிறவியில் பிறந்து) என்று சொன்னபடி,
“ஐயோ! இப்படிப்பட்ட அஸுர குணம் உடையவர்கள் எம்பெருமானை இழக்கிறார்களே” என்று அவர்கள் இழவுக்கு ஆளவந்தார் வருந்துகிறார்.
அல்லது –
ஆளவந்தார், இப்படிப்பட்ட பெருமையையுடைய எம்பெருமானை அஸுரத் தன்மை யுடையவர்கள் பார்க்கக் கூடாது என்று
திருவாய்மொழி 1.3.4இல் “யாருமோர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்”
(அவனிடத்தில் விரோதம் பாராட்டுபவர்களால் “இவன் இன்ன தன்மையை உடையவன்” என்று புரிந்து கொள்ள முடியாதவன்)
ஆழ்வார் அருளிச்செய்த க்ரமத்தில் அருளிச் செய்கிறார்.

த்வாம் ஶீல ரூப சரிதை: பரம ப்ரக்ருஷ்ட
ஸத்வேந ஸாத்த்விகதயா ப்ரபலைஶ்ச ஶாஸ்த்ரை: |
ப்ரக்யாததைவ பரமார்த்த விதாம் மதைஶ்ச
நைவாஸுர ப்ரக்ருதய: ப்ரபவந்தி போத்தும் ||

[ஐயோ!] எல்லோரையும் விட உயர்ந்தவனான உன்னை அஸுரர்கள் அறிந்து கொள்ள முடியாது.
உன்னை அறிந்து கொள்ளும் வகைகள்:
உன்னுடைய சீல (எளிமை) குணம், வேதத்தில் கொண்டாடப்பட்ட ரூபங்கள் மற்றும் திவ்யமான லீலைகள்
சுத்த ஸத்வத்தால் நிறைந்திருக்கும் உன்னுடைய பரம பதம்
தன்னிடம் இருக்கும் நன்மையினால் திடமாக இருக்கும் சாஸ்த்ரம்
உன்னைப் பற்றிய உண்மையை அறிந்தவர்களின் அபிப்ராயத்தின் மூலம்

உத்தம சீல குணத்தகையால் உருவால் அதி மானுட சரிதைகளால்
சத்துவ சுத்த விபூதியினால் உயர் சாத்து விகத்தினை யுரை மறையால்
தத்துவ மெய்ப்பொருள் யுன்னை யுணர்த்திடு சான்றவர் கொள்ளும் மதங்களினால்
எத்திறன் எனும் உறார் சில தாமஸ இயல்புடையோர் யுனை அறியுமே –15-

உன் உத்தமமான ஸுசீல்ய குணத்தினாலும்
அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரகத்தினாலும்
அதி மானுஷ சரித்ரங்களினாலும்
அத்யந்தம் ஸ்ரேஷ்டமான சுத்த ஸத்வ யோகத்தினாலும்
ஸாத்விக கல்பத்தில் சொல்லுகிறபடியால் ப்ரபலங்களான ஸாஸ்த்ரங்களினாலும்
ப்ரஸித்தமான தேவதா பாரமார்த்யத்தை அறிந்த பரசாராராதி ஸித்தாந்தங்களினாலும்
உன்னை அறிவதற்கும் கூட ஆஸூர ப்ரப்ருதிகளான சிலருக்கு எவ்வளவேனும் சாத்தியப்படுகிறது இல்லை –

—————

ஶ்லோகம் 16 –
எம்பெருமானின் எளிமையினால் அவனை அடையும் உயர்ந்த ஆத்மாக்களைப் பற்றி எண்ணிய ஆளவந்தார்,
அவர்களுக்குக் கிடைத்த பேறு தனக்குக் கிடைத்ததாக நினைக்கிறார்.

உல்லங்கித த்ரிவித ஸீமஸமாதிஶாயி
ஸம்பாவநம் தவ பரிப்ரடிம ஸ்வபாவம் |
மாயாபலேந பவதா’பி நிகூஹ்யமாநம்
பஶ்யந்தி கேசிதநிஶம் த்வதநந்ய பாவா: ||

உன்னுடைய ஸ்வாமித்வத்தை நீ உன்னுடைய ஆச்சர்ய சக்தியினால் மறைத்துக் கொண்டாலும்,
உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும், மிகவும் உயர்ந்த ஆத்மாக்கள் கால, தேச, வஸ்துக்களுக்கு அப்பாற்பட்ட
உன்னுடைய ஸ்வாமித்வத்தை உணர்ந்து, “எம்பெருமானுக்கு ஸமமாகவோ அவனைவிட உயர்ந்தவராகவோ எவரேனும் உண்டோ?”
என்று ஸந்தேஹம் கொள்ளாமல் இருப்பார்கள்.

வீத மூன்று அளப்பு விஞ்சி ஒப்புயர் விலா துயர்
நாத மாயையோடு நீ யுன்னாகம் மறைக்கினும்
ஓத யுன்னை அன்றி இல்லன் என்னும் ஓர்தலார் சிலர்
வாதமின்றி என்றும் உள்ள வாறு காண வல்லரே –16-

காலத்தாலும் தேசத்தாலும் வஸ்துவினாலும் -ஆகிய மூன்று விதங்களினாலும்
இவ்வளவு என்று நிச்சயிக்க முடியாததும் ஒப்பு உயர்வு இல்லாமல் உயர்ந்து இருக்கிற உன் பிரபுத் வத்தை
உன் ஆச்சார்ய சக்தி யோகமாகிற மாயையைக் கொண்டு நீ மறைத்த போதிலும்
உன்னைத்தவிர வேறே ஒரு சேஷியையும் அறியாத மன நிலையை யுடைய சில மகான்கள்
எக்காலத்திலும் அந்தப் பிரபுத்வத்தை உள்ளபடி அறிகின்றார்கள் –

———–

ஶ்லோகம் 17 –
இதில் ஆளவந்தார் பகவானாலே நிர்வஹிக்கப்படும், முன்பு விளக்கப்பட்ட அவனுடைய ஸர்வேச்வரத்வத்துக்கு
உட்பட்ட பலவிதமான வஸ்துக்களை அருளிச் செய்கிறார்.

யதண்டம் அண்டாந்தர கோசரம் ச யத்
தஶோத்தராண்யாவரணாநி யாநி ச |
குணா: ப்ரதாநம் புருஷ: பரம் பதம்
பராத்பரம் ப்ரஹ்ம ச தே விபூதய: ||

1) ப்ரஹ்மாவின் ஆளுகைக்குட்பட்ட, 14 லோகங்கள் கொண்ட ப்ரஹ்மாண்டம்,
2) அந்த அண்டத்துக்குள் இருக்கும் வஸ்துக்கள்,
3) ஒவ்வொரு அண்டத்தை மூடிக்கொண்டிருக்கும், முந்தைய ஆவரணத்தைப்போலே பத்து மடங்கு அளவுள்ள, ஸப்த ஆவரணங்கள்,
4) ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்கள் 5) மூல ப்ரக்ருதி 6) இவ்வுலகில் இருக்கும் பத்தாத்மாக்கள் (கட்டுப்பட்ட ஆத்மாக்கள்),
7) ஸ்ரீவைகுண்டம் 8) (தேவதைகளைவிட உயர்ந்தவர்களான) முக்தாத்மாக்களைவிட உயர்ந்தவர்களான நித்ய ஸூரிகள்
9) உன்னுடைய திய்வ மங்கள விக்ரஹங்கள் ஆகிய எல்லாம் உனக்கு சரீரங்களே.

ஆதி யண்டம் யவ்வண்டம் அடங்கிய அகில வத்தும் ஐ இரண்டள வுயர்
மீது சூழும் ஏழு ஆவரணங்களும் விரி குணங்களும் வேற்றுமை அற்றதும்
வேதகத்திய சேதன வர்க்கமும் மேலதான் வைகுண்டமும் நித்தரும்
சோதி யாகு நின் சுந்தர ரூபமும் சொந்தமாம் உன் விபூதிகளாகுமே –16-

வேதகம் -வேறு படுத்தல்

ஆதி காலத்தில் உண்டான அண்டங்களும்
அவ்வண்டங்களில் அடங்கிய அகில வஸ்துக்களும்
பதின் மடங்கு அதிகமான அண்ட ஆவரணங்களும்
ஸத்வாதி குணங்களும்
விகாரப்படாத ப்ரக்ருதியும்
சேதனர்களும்
உயர்ந்த பரமபதமும்
பத்த முக்தர்களிலும் மேலான நித்யர்களும்
ஸூத்த ஸத்வ தேஜஸ்ஸுடன் விளங்கும் உன் திவ்ய மங்கள விக்கிரகமும்
ஆகிய இவை எல்லாம் உனது சேஷ வஸ்துக்கள்

—————

ஶ்லோகம் 18 –
ஆளவந்தார் முன்பு ஶரண்யனான (புகல்) எம்பெருமானின் பெருமைகளைப் பேசினார்.
இதில் “இப்படிப்பட்ட உபய விபூதி நாதனை நாம் எப்படி அணுகுவது?” என்ற தயக்கத்தைப் போக்க,
அவனுடைய அடியார்கள் ஈடுபடும் பன்னிரண்டு குணங்களை அருளிச் செய்கிறார்.
முன்பு பகவானின் ஸர்வேஶ்வரத்வத்தை அருளிய ஆளவந்தார், இப்பொழுது அவனுடைய பேசத் தகுந்த குணங்களை அருளிச் செய்கிறார்.

வஶீ வதாந்யோ குணவாந் ருஜுஶ் ஶுசிர்
ம்ருதுர் தயாளுர் மதுரஸ் ஸ்திரஸ் ஸம: |
க்ருதீ க்ருதஜ்ஞஸ்த்வமஸி ஸ்வபாவதஸ்
ஸமஸ்த கல்யாண குணாம்ருதோததி:||

நீ இயற்கையாகவே அமுதக் கடல் போன்ற இனிமையான குணங்களை உடையவன். உன் குணங்களாவன
1) உன் அடியார்களுக்கு வசப்பட்டவன்
2) உன்னுடைய அடியார்களுக்கு உன்னையே தரும் குணத்தை உடையவன்
3) எல்லோரிடமும் கலந்து பழகும் ஸௌஶீல்யத்தை உடையவன்
4) உள்ளம் உரை செயல்களில் நேர்மை உடையவன்
5) நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணும் பரிசுத்தியை உடையவன்
6) அடியார்களின் பிரிவைத் தாங்க முடியாதவன்
7) அடியார்களின் துயரைத் தாங்க முடியாத கருணை உள்ளம் கொண்டவன்
8) இனிமையானவன்
9) அடியார்களைக் காப்பதில் உறுதியாக இருப்பவன்
10) உன்னிடம் சரணடைந்தவர்களிடத்தில் ஸமமாக இருப்பவன்
11) உன் அடியார்களின் செயல்களை உன் செயல்களாக நினைத்துச் செய்பவன்
12) அடியார்களின் சிறு உதவிகளுக்கும் நன்றியுடன் இருப்பவன்.

மன்னு மிரு வச முகந்து வண்மை வீசி வாய்மையுடன் தூய்மையினை வகித்து அன்பர்க்கே
இன்னமுதாய் ஏனையோருக்கும் சமனாய் என்றும் இளகிய நெஞ்சுடன் அளி கூர்ந்து அவர் தம் வேட்கை
யுன்னி முடித்து அன்னவர் செய் நன்றி நாடி யுகந்து யுதவி யரும் சீல குணவானா நீ
நின்னியல்வாம் கல்யாண குணங்கட்க்கு எல்லா நிகர் அற்ற சுதை யாழி என நின்றாயே –18-

எல்லாவற்றையும் தன் வசமாக்கி நடத்துவதோடு ஆஸ்ரிதர்களுக்குத் தானே வசமாகி நடப்பவனும்
இனிய வசனங்களோடு தன் ஆஸ்ரிதற்குத் தன்னையும் தன்னுடைமையையும் கொடுக்கும் தன்மையை யுடையவனும்
ஆஸ்ரித ரக்ஷணத்தில் அவரது அபராதத்தால் மாறுபாடு இல்லாமல் ஒரே நிலையில் நின்று தான் வாக்கு அளித்தபடி ரக்ஷிப்பவனும்
நித்ய ஸம்ஸாரிகளை தன் ஸம்பந்தத்தினால் நித்ய ஸூரிகளோடே சேர்க்க வல்ல பரி ஸூத்தன் ஆனவனும்
அவர்கள் அனுபவிக்கத் தக்க போக்யனானவனும்
தன் பெருமையைக் கருதாது தன்னை அடைபவரை சாதி பேதம் பாராட்டாமல் கூடி உறவாடி அவர்களுக்கு சமானமாய் இருப்பவனும்
அவரது பிரிவையும் அவர் படும் துன்பத்தையும் சகியாத இளம் நெஞ்சை யுடையவனும்
கைம்மாறு கருதாமல் அவர்களுக்கு உபகரிக்குமவனும்
அவரது இச்சையை தன் திரு உள்ளத்தில் கொண்டு அதற்குத் தக்கபடி தான் அடைந்து அவர் கார்யத்தைத் தானே அடைபவனும்
அவர்களுக்குத் தான் செய்த பேர் உபகாரத்திற்காக அவர் செய்யும் அல்ப உபகாரத்தையும் பெரிதாக நினைப்பவனுமாகிய நீ
உனக்கு இயற்கையாகவே அமைந்துள்ள சகல கல்யாண குணங்களுக்கும் இணை இல்லாததான
ஓர் அம்ருத சாகரம் போலே -கரை இல்லாமலும் பரம போக்யமாகவும் ஆகின்றாய் –

——————

ஶ்லோகம் 19 –
இதில், எப்படி பகவானின் திருக்கல்யாண குணங்களுக்கு எல்லை இல்லையோ அதேபோல
ஒவ்வொரு குணத்துக்கும் எல்லை இல்லை என்கிறார் ஆளவந்தார் .

உபர்யுபர்யப்ஜ புவோ’பி பூருஷாந்
ப்ரகல்ப்ய தே யே ஶதமித்யநுக்ரமாத் |
கிரஸ் த்வதேகைக குணாவதீப்ஸயா
ஸதா ஸ்திதா நோத்யமதோ’திஶேரதே ||

வேத வாக்யங்கள் “தேயே சதம்” (இது போன்ற நூறு) என்று மீண்டும் மீண்டும் புதிய ப்ரஹ்மாக்களை கற்பனை செய்து,
உன்னுடைய ஒரு (ஆனந்தம் என்னும்) குணத்தின் எல்லையைக் காண முயன்று,
சிறிதளவும் முன்னேறாமல், ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன,

கீதம் கிளத்திடும் தேயேசதம் எனும் கிரமத்தில்
போதனின் மென் மேற் புருடர் விதித்து உன் குணம் ஒன்றின்
ஏதமில் எல்லை காணிய விச்சித்து என்றும் உறை
வேத முயற்சி தசையினை யின்னும் விட்டிலதே –19-

வேதத்தில் கூறிய -தே யே சதம் -என்னும் ஒரு கிரமத்தை அனுசந்தித்து உன் அநந்த குணங்களில் ஆனந்த குணமாகிய ஒன்றினுடைய
எல்லையைக் காணும் பொருட்டு வேதங்கள் பிரம்மாவை மனுஷ்ய கோடிகளில் ஒன்றாய் நிறுத்தி அவனுக்கு மேன்மேல்
ப்ரம்மா வரையில் புருஷர்களைக் கற்பித்து அதில் ஒவ்வொருவருடைய ஆனந்த குணமும் நூறு நூறு மடங்கு
அதிகம் எனக் கணக்கிட்டுச் சொல்லியும் கடைசியில் அந்த உன் ஆனந்த குணத்தின் எல்லையைக் காண
மாட்டாமல் இன்றும் காணும் ப்ரயத்னத்தில் நின்றும் மீள வில்லையே –

——————-

ஶ்லோகம் 20 –
ஆளவந்தார் முன்பு அருளிச் செய்த பகவத் குணங்களை அனுபவிக்கும் அடியார்களின் பெருமையை அருளிச் செய்கிறார்.
அல்லது –
ப்ரஹ்ம ஸூத்ரம் 1.1.20இல் “அஸ்மிந்நஸ்ய ச தத்யோகம் ஶாஸ்தி”
(வேதம் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஆனந்தமாகக் கூடியிருக்கும் ஆனந்தத்தை விளக்குகிறது) என்று சொன்னபடி
பகவானிடத்திலிருந்து அடைந்த பெருமையை உடைய அடியார்களின் பெருமையே மிகப் பெரியது என்றால்,
அந்த பகவானின் பெருமை அளவிட முடியாதது என்பது தெளிவு என்கிறார்.

த்வதாஶ்ரிதாநாம் ஜகதுத்பவ ஸ்திதி
ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாதய: |
பவந்தி லீலா விதயஶ்ச வைதிகா:
த்வதீய கம்பீர மநோநுஸாரிண: ||

ப்ரஹ்மா முதலான உன் அடியார்களுக்கு இவ்வுலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது மற்றும் இந்த ஸம்ஸாரத்தை கடக்க உதவுவது
ஆகியவை எளிய விளையாட்டாக இருக்கும்;
வேதத்தின் விதிகளும் கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.

உனை யடுப்போர்க்கு உண்டாக்கல் உலகம் எல்லாம் அளித்து ஒழித்தல்
வினை யுறும் ஸம்ஸாரத்தின் விமோசனம் அடைதல் என்னும்
அனையவும் லீலையாகும் அன்னவர் தம் கம்பீர
மனதினை அநுசரிக்கும் மா மறை விதி கண் மாதோ –20-

இவ்வுலகங்களை எல்லாம் உண்டாக்குதல்
ரஷித்தல் -அழித்தல் -முதலான தொழில்களும்
ஸம்ஸார விமோசனம் அடைதல் முதலிய மற்ற சகலமும்
உன் ஆஸ்ரிதர் விஷயத்தில் லீலைகளாக்கி அவர் நிமித்தமாகவே உண்டாய் இருக்கின்றன
வேதங்களில் சொல்லப்பட்ட விதிகளும் உன்னை ஆஸ்ரயித்த அநந்ய ப்ரயோஜனருடைய கம்பீரமான மனஸ்ஸை அனுசரிக்கின்றன –

————-

ஶ்லோகம் 21 –
ஶரண்யனான எம்பெருமானின் பெருமைகளை த்யானிக்கிறார்.
அல்லது –
முன்பு உபேயத்தை (குறிக்கோளை) விளக்கினார், இங்கே அதை அடைய விரும்புபவரின் தன்மையை விளக்குகிறார்.
மற்றொரு விளக்கம் –
முன்பு ஶரண்யனான பகவானின் தன்மையை விளக்கிய ஆளவந்தார்,
இங்கே மேலே விளக்கப்படும் சரணாகதியின் தன்மையை வெளியிடுகிறார்.

நமோ நமோ வாங்மநஸாதிபூமயே
நமோ நமோ வாங்மநஸைக பூமயே |
நமோ நமோ’நந்த மஹா விபூதயே
நமோ நமோ’நந்த தயைக ஸிந்தவே ||

தன் முயற்சியால் அறிய முயல்பவர்களின் வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;
உன்னுடைய கருணையால் உன்னை அறிந்தவர்களின் வாக்குக்கும் மனதுக்கும் எட்டுபவனான உனக்கு
என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;
எல்லையில்லாத ஐச்வர்யத்தை உடைய உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;
கருணைக்கடலான உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்.

நெஞ்சுடன் வாக்கினை மீறியதாகு நினைப் பணிவேன் பணிவேன்
நெஞ்சுடன் வாக்கு அதினுக்கு இடமாகு நினைப் பணிவேன் பணிவேன்
விஞ்சும் அநந்த விபூதியனாகு நினைப் பணிவேன் பணிவேன்
விஞ்சு மஹா தயை வேலையனாகு நினைப் பணிவேன் பணிவேன் –21-

ஞானத்தில் மிக்கோர் ஆயினும் தம்முடைய பிரயத்தனத்தால் அறிய நினைக்கில் –
அவரது வாக்குக்கும் மனதுக்கும் எட்டாதவனான உன்னைப் பன்முறை நமஸ்கரிக்கிறேன்
உன் கிருபையால் நீ காட்டி அருள -அந்தக் காரணத்தால் உன்னைக் காண்பவருடைய வாக்கிற்கும் மனதுக்கும்
விஷயமான வுன்னைப் பன் முறை நமஸ்கரிக்கிறேன்
அநேகங்களான மகத்தான உபய விபூதியை யுடையனான யுன்னைப் பன் முறை நமஸ்கரிக்கிறேன்
வாக்கினுக்கும் மனசுக்கும் விஷயமாகிய பரம தயா சக்கரமான உன்னைப் பன் முறை நமஸ்கரிக்கிறேன்

—————-

ஶ்லோகம் 22 –
ஆளவந்தார் தன்னுடைய தகுதியைச் சொல்லி, முன் பாசுரத்தில் சொல்லப்பட்ட சரணாகதியைச் செய்கிறார்.
அல்லது –
முன்பு சொன்ன குறிக்கோளுக்குத் தகுந்த வழியை அனுஷ்டிப்பதை அருளிச் செய்கிறார் என்றும் சொல்லலாம்.

ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே ||

சரணடையத் தகுந்த ஸ்வாமியே! நான் கர்ம யோகத்தில் நிலையாக இல்லை; என்னிடத்தில் ஆத்ம ஞானமும் இல்லை;
என்னிடத்தில் உன் திருவடிகள் விஷயமான பக்தியும் இல்லை; இப்படி வேறு உபாயமும் புகலும் இல்லாத நான்,
உன் திருவடிகளையே உபாயமாக உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன்.

நிலை பெறக் கரும நிடடை நின்றிலேன் ஞானம் இல்லேன்
மலரடி இணையைப் பற்றும் அன்பினை வகித்தேன் அல்லேன்
இலை சரண்யனும் வேறு சாதனமும் ஒன்றும் இல்லேன்
தலைவ நின் பாத மூலம் சரண் எனப் பற்றுவேனே –22-

உன் திருவடிகளை அடைந்து நிலை பெறுவதற்கு அவஸ்யமான கர்ம யோகத்தில் நிஷ்டை யுடையேன் அல்லேன்
ஞான யோகமும் யுடையேன் அல்லேன்
உன் திருவடித் தாமரைகளில் பக்தி யுடையவனும் அல்லேன்
இவைகள் இல்லை என்று அனுதாபம் யுண்டாவதற்கு ஏற்ற ஆத்ம குணம் யுடையேனும் அல்லேன்
ஏ ஸர்வ சரண்யனான ஸ்வாமியே -விரோதி நிவர்த்தக பூர்வகமாக கைங்கர்ய ப்ராப்திக்கு உபாயமாக உன் திருவடிகளையே சரணமாகப் பற்றுகிறேன் –

——————

ஶ்லோகம் 23 –
எம்பெருமான் “உம்மிடத்தில் நன்மைகள் இல்லை என்றாலும் சரி; ஆனால் உம்முடைய தகுதியைக் குலைக்கும்
தடை செய்யப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் இருந்தாலே, நானே உமக்கு நன்மைகளை உண்டாக்கி பேற்றையும் கொடுப்பேன்”
என்று சொல்லுவதாக எண்ணி “நான் தீமைகளின் முழுமையான வடிவமாக இருக்கிறேன்” என்கிறார் ஆளவந்தார் .

ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே
ஸஹஸ்ரஶோ யந்ந மயா வ்யதாயி |
ஸோ’ஹம் விபாகாவஸரே முகுந்த!
க்ரந்தாமி ஸம்ப்ரத்யகதிஸ் தவாக்ரே ||

மோக்ஷத்தைக் கொடுக்கும் ஸ்வாமியே! பல்லாயிரம் முறை என்னால் செய்யப்படாத நிந்திக்கப்பட்ட கர்மங்கள்
சாஸ்த்ரங்களிலேயே இல்லை; இப்பொழுது, என்னுடைய பாபங்கள் பலன் கொடுக்கும் சமயத்தில்,
வேறு புகல் இல்லாததால், நான் தேவரீர் திருமுன்பே நின்று கதறுகிறேன்.

பலமுறை யான் இயற்றா பாதக் கணங்கள் தம்முள்
உலகினில் ஒன்றும் இல்லை யுறு பலன் எனை வதைப்ப
நிலை குலைந்து ஏங்கி வேறு கதியிலேனாகி நின் முன்
கலியுடன் முகுந்த வின்றுக் கதறியே கரைகின்றேனே –23-

பலதடவைகளில் என்னால் பண்ணப்படாத மஹா பாதகக் கணங்களுள் ஒன்றேனும் இவ்வுலகின் கண் இல்லை
ஏ முகுந்த அப்பாவங்கள் பக்வ தசையை அடைந்து பலத்தை எனக்கு விளைவிக்க
இதை அனுபவித்து உழன்று நிலை குலைந்து ஏங்கி வேறே கதி ஒன்றும் இலேயேனாய்
உன் முன்பு இப்பொழுது கதறிக் கரைகின்றேன் –

—————-

ஶ்லோகம் 24 –
ஆளவந்தார் எம்பெருமானை அழைத்து “உன்னுடைய கருணையே எனக்கிருக்கும் ஒரே புகல்” என்கிறார்;
ஆளவந்தார் “உன்னை அடைவது எனக்கு எப்படி ஒரு பாக்யமோ, உன்னுடைய கருணைக்கும் நானே தகுதியான பேறு” என்கிறார்.

நிமஜ்ஜதோ’நந்த பவார்ணவாந்த:
சிராய மே கூலமிவாஸி லப்த: |
த்வயாபி லப்தம் பவகவந்நிதாநீம்
அநுத்தமம் பாத்ரமிதம் தயாயா: ||

தேச கால வஸ்துக்களினால் எல்லையிலாத ஸ்வாமியே! இந்த ஸம்ஸாரக் கடலில் பல காலமாக மூழ்கியிருக்கும் எனக்கு
நீ கரையைப் போலே வந்தாய்; பகவானே! உன்னுடைய கருணைக்கு நானே தகுந்த பாத்திரம்.

பவம் என்னும் பரவை தன்னுள் பகவ நீடு ஊழியாகக்
கவலையோடே அழுந்தும் எற்கு ஓர் கரையென யகப்பட்டாய் காண்
உவமையில் யுன் தயைக்கோர் யுத்தமே யுரிமை பூண்ட
வவலமார் இதுவும் உன்னால் அடை தலைப் பெற்றது இன்றே –24-

அநேக ஊழிகளாக ஸம்ஸாரம் என்னும் பெரும் கடலில் கவலையோடு கூடி அழுந்தி
வேறு பரிகாரம் அறியாத எனக்கு ஒரு கரை போலே நீ அகப்பட்டாய்
இது எங்கனம் இருக்க -ஏ ஸ்வாமியே
உன்னுடைய இணை இல்லாத தயைக்கு உத்தம உத்தமமான ஒரு விஷயமாக
இந்த அவல வஸ்துவும் உன்னால் இப்பொழுது அடையப் பெற்றது –

—————–

ஶ்லோகம் 25 –
எம்பெருமான் “உம்முடைய பாரத்தை முழுவதுமாக என்னிடம் வைத்த பின்பு,
நீர் ஸ்ரீராமாயணம் ஸுந்தர காண்டம் 9.30இல் ‘தத் தஸ்ய ஸத்ருஶம் பவேத்’
(ஸ்ரீராமனே லங்கையை அழித்து என்னை ரக்ஷிப்பதே அவன் தன்மைக்குச் சேர்ந்தது – ஆகையால் நான் அவர் வரும் வரை காத்திருப்பேன்)
என்றபடி இருக்க வேண்டாமோ? எதற்காக உடனே நான் உமக்கு உதவ வேண்டும் என்று நிர்பந்தம் செய்கிறீர்?” என்று கேட்க,
ஆளவந்தார் “என்னுடைய துயரத்தைப் போக்கும்படி நான் கேட்க வில்லை; உன்னுடைய அடியார்கள் இவ்வுலகில் துன்பப்பட்டால்
அது உன்னுடைய பெருமைக்குத் தானே அவப் பெயர்; அதைப் போக்கிக் கொள்ளும்படி ப்ரார்த்திக்கிறேன்” என்கிறார்.

அபூத பூர்வம் மம பாவி கிம்வா
ஸர்வம் ஸஹே மே ஸஹஜம் ஹி து:க்கம் |
கிந்து த்வதக்ரே ஶரணாகதாநாம்
பராபவோ நாத! ந தே’நுரூப: ||

ஸ்வாமியே! இதுவரை அனுபவிக்காத எந்தப் புதிய துன்பம் எனக்கு ஏற்படப்போகிறது இப்போது?
இந்தத் துன்பங்களை நான் பொறுத்துக்கொள்கிறேன்; இவை என்னுடன் பிறந்தவை;
ஆனால் உன்னிடம் சரணடைந்தவர்களுக்கு தேவரீரின் திருமுன்பே ஒரு அவமானம் ஏற்பட்டது என்றால்,
அது தேவரீருடைய பெருமைக்குச் சேராது.

இதுவரை யான் படாத இடர் எனக்கு இனி ஓன்று உண்டோ
எதையும் நான் சகிப்பன் துக்கம் இயற்கையே எனக்கானால் யுன்
பதமுறச் சரண் அடைந்தோர் பரிபவப் படில் யுன் முன்னர்
அது உனக்கு இணக்கம் அன்றே நாத எவ்விதத்தும் அந்தோ -25-

இதுவரையும் நான் அனுபவியாத சங்கடங்களில் இனி நான் அனுபவிக்கும்படி நேரிடக்கூடிய சங்கடம் ஓன்று யுண்டோ
எதையும் நான் சகிப்பன்
காமியான எனக்கு கர்ம பலமான துக்கங்கள் ஸஹஜமே
ஆனால் ஓன்று யுண்டு -ஏ ஸர்வேஸ்வரனே
உன் முன்பே உன் திருவடிகளிலே சரணம் அடைந்தோர் பரிபவப் பட்டால் அப்பரிபவம் உனக்கு எவ்விதத்திலும் தகுதி அன்று –

—————

ஶ்லோகம் 26 –
ஆளவந்தார் “நீ உன்னுடைய பெருமைக்கு ஏற்படும் தோஷத்தையும் பார்க்காமல் என்னைக் கை விட்டாலும்,
நான் உன்னை விடமாட்டேன்” என்று தன்னுடைய அகதித்வத்தினாலே (வேறு புகலில்லாத நிலையினாலே)
உண்டான மஹா விஶ்வாஸத்தை வெளியிடுகிறார்.

நிராஸகஸ்யாபி ந தாவதுத்ஸஹே
மஹேஶ! ஹாதும் தவ பாத பங்கஜம் |
ருஷா நிரஸ்தோ’பி ஶிஶு: ஸ்தநந்தயோ
ந ஜாது மாதுஶ் சரணௌ ஜிஹாஸதி ||

ஸர்வேஶ்வரனே! நீ என்னைத் தள்ளினாலும், நான் உன்னுடைய திருவடித் தாமரைகளை விடத் துணிய மாட்டேன்;
பால் குடிக்கும் குழந்தையைத் தாயானவள் கோபத்தில் தள்ளினாலும், அக்குழந்தை தாயின் காலை விடாமல் இருக்குமா போலே.

என்னை நீ நூக்கினாலும் ஈசனே கமலம் அன்ன
யுன்னடி ஒருக்கணத்து நீத்து நான் உய்ய மாட்டேன்
என்னையே முனிந்து நூக்கின் அவள் முலைப்பால் என்றும்
மன்னியா யடியைப் பற்றா ததை விட மனமுறாதே –26-

ஆஸ்ரித ரக்ஷணத்தையே ஸ்வரூபகமாக உடைய நீ என்னை கிருபை பண்ணாமல் தள்ளிவிட்ட போதிலும்
உன் திருவடிகளை ஒரு க்ஷணமேனும் விட்டு விட்டு உஜ்ஜீவிக்க சமர்த்தன் அல்லேன்
ஏ ஸர்வேஸ்வரனே ஸ்தன்யமே தாரகமாக யுடைய ஒரு சிசுவானது கோபம் கொண்ட தன் மாதாவால் தள்ளப்பட்ட போதிலும்
தன்னை ஆதரித்த காலத்தில் போலே அவளைக் காலைக் கட்டிக் கொள்ளுமே அன்றி அதை விட்டுவிட விரும்பாதது அன்றோ –

—————-

ஶ்லோகம் 27 –
ஆளவந்தார் “அநந்ய கதித்வத்தினால் மட்டுமா நான் உன்னைப் பிரியாமல் இருக்கிறேன்?
உன்னுடைய போக்யமான தன்மையில் என் மனம் மூழ்கியிருப்பதால், நான் வேறு விஷயங்களை விரும்ப மாட்டேன்” என்கிறார்.

தவாம்ருதஸ்யந்திநி பாத பங்கஜே
நிவேஶிதாத்மா கதம் அந்யதிச்சதி? |
ஸ்திதே’ரவிந்தே மகரந்தநிர்ப்பரே
மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே ||-

அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம்,
வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்?
தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது, ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?

நின்னருள் தன்னால் அமுதினைப் பொழியும் அம்புயத்தாள் களின் நிலையாய்
மன்னிய மனதும் உன்னையே யன்றி மற்றதை நாடல் எங்கனமாம்
தன்னுயிர்க்கு அரிய மதுவினை நிரம்பத் தாமரை கொண்டு அலர்ந்திருப்பப்
பின்னும் உள்ளியினைப் பிரமரம் கண்ணால் நோக்கவும் நோக்கிடாது அன்றோ -27-

உனது தேனே மலர்ந்த திருவடித்தாமரைகளில் உன் நிர்ஹேதுக கிருபையாலே நிலையாகச் செலுத்தப்பட்ட
மனஸ்ஸானது உன்னைத் தவிர வேறு விஷயத்தை எப்படி இச்சிக்கக் கூடும்
தேனை நிரம்பக் கொண்டு தாமரைப் புஷ்பமானது மலர்ந்து இருப்ப தேனையே யுண்டு ஜீவிக்கும் வண்டானது
அதை விட்டு விட்டு நெருங்கிச் செல்லவே ஸ்ரமமாயும் ஸ்ரமப்பட்டு நெருங்கினும் அற்பமான தேனை யுடையதுமான
முள்ளிப் பூவைக் கண் எடுத்தும் பாராது அன்றோ –

—————

ஶ்லோகம் 28 –
ஆளவந்தார் “எனக்கு நீ உதவுவதற்கு நான் ஒரு முறை அஞ்சலி (கை கூப்புதல்) செய்வது அமையாதோ?”
என்று அருளிச் செய்கிறார்..

த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||

காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும், அது எல்லாப் பாபங்களையும்
அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்; அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.

ஒருமுறை யுனது திருவடி இணையை யுன்னியே எப்பொழுதேனும்
இரு கரம் கூப்பி எத்திறத்தவர் தாமேனும் எவ்விதமாயேனும்
புரியும் அஞ்சலி அப்பொழுது இனித்தானே இடர் எல்லாம் மாயமாய்ப் போக்கித்
தரும் அரும் சுபர்கள் சகலமும் என்றும் தான் குறை ஒன்றும் இல்லாதே –28-

ஸர்வ ஸுலபமானதும் -அதி போக்யமானதுமான யுன் திருவடிகளை உத்தேசித்து எப்பொழுதாவது
இச்சை பிறந்த போது -ஜாதியாதி நியமம் இல்லாமல் எவரேனும்
முறை யாவது -நியமமாவது -பல அபேக்ஷையாவது -யாது ஒன்றும் இல்லாமல் எவ்விதமாயாவது
எந்நாளும் செய்ய வேண்டியது இல்லாமல் ஏதோ ஒரு தடவை இரு கரம் கூப்பிச் செய்யும் அஞ்சலியானது
அப்பொழுதே எல்லாப் பாவங்களையும் ஒரு குவியலாகக் களவு போனது போலே சென்ற வழி தெரியா வண்ணம் மாயமாய்ப் போக்கி
இவ்வளவு செய்தும் என்றும் தனக்கு ஒரு குறைவும் இல்லாமல் பிரபத்தி ஞானம் முதலிய ஸகல சம்பத்துக்களையும் விருத்தி பண்ணித் தரும் –

—————–

ஶ்லோகம் 29 –
இந்த ச்லோகம் மானஸீக ப்ரபத்தியைக் காட்டும்.
அல்லது –
28 மற்றும் 29ஆம் ச்லோகங்களில் சரணாகதியின் பலனான பர பக்தியை விளக்குவதாக அமைந்திருக்கும்.

உதீர்ண ஸம்ஸார தவாஶுஶுக்ஷணிம்
க்ஷணேந நிர்வாப்ய பராஞ்ச நிர்வ்ருதிம் |
ப்ரயச்சதி த்வச் சரணாருணாம்புஜ
த்வயாநுராகாம்ருத ஸிந்து ஶீகர:||

உன்னுடைய சிவந்த திருவடித் தாமரைகளில் கொள்ளும் அன்புக் கடலில் ஒரு சிறு துளியே மிகவும் உக்ரமாக எரியும்
காட்டுத் தீ போன்ற ஸம்ஸாரத்தை ஒரு க்ஷணத்திலே போக்கி, உயர்ந்த ஆனந்தத்தையும் கொடுக்கும்.

செந்தழல் இட்டுச் சீறும் பவம் என்னும் காட்டுத் தீயை
முந்தியோர் கணத்து அவித்து முடிவிலா அநந்த மீயும்
சந்தமார் யுனது செந்தாமரை இணைத்தாளின் அன்பாம்
அந்தமா அமுத வாரித் திவலையில் ஓன்று தானே –29-

உன்னுடைய அழகான செந்தாமரைத் திருவடிகளின் மீது வைத்துள்ள கைங்கர்ய உபகரணமான பக்தியாகிற அந்த
அமுதக் கடலின் ஒரு திவலை யானது செந்தழல் இட்டு மேலே கிளம்பிச் சீறி எரிகிற ஸம்ஸாரம் ஆகிற காட்டுத்தீயை ஒரு ஷணத்திலே அவித்து
அத்யுன்னதமான மோக்ஷ அனுபவ ஆனந்தத்தையும் கொடுக்கிறது –

—————-

ஶ்லோகம் 30 –
ஆளவந்தார், பலன் கொடுப்பதில் விளம்பமில்லாத ஸித்தோபாயமான பகவானைப் பற்றியிருப்பதாலும்,
அந்தப் பலனைப் பெறுவதற்குக் காத்திருக்க முடியாததாலும், த்வரையால் தூண்டப்பட்டு
திருவாய்மொழி 6.9.9இல் “கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ”
(என்னை உன்னிடத்தில் அழைத்துக்கொள்ளும் காலம் அருகில் வாராதோ?) என்று ஆழ்வார் கேட்டபடிக் கேட்கிறார்.
அல்லது –
ப்ரபத்தியின் பலனான பரபக்தியினால், ஆளவந்தார்,
திருவாய்மொழி 6.3.10இல் “கனைகழல் காண்பதென்று கொல் கண்கள்”
(என்னுடைய கண்கள் எப்பொழுது எம்பெருமானின் திருவடிகளைக் காணும்) என்றும்
திருவாய்மொழி 9.5.1இல் “காணக் கருதும் என் கண்ணே”
(அவனைக் காண என் கண்கள் ஆசைப்படும்) என்றும் ஆழ்வார் சொன்னபடி எம்பெருமானின் திருவடிகளை
எப்பொழுது காண்பேன் என்று கேட்கிறார்.

விலாஸ விக்ராந்த பராவராலயம்
நமஸ்யதார்த்தி க்ஷபணே க்ருதக்ஷணம் |
தநம் மதீயம் தவ பாத பங்கஜம்
கதாநு ஸாக்ஷாத் கரவாணி சக்ஷுஷா ||

என்னுடைய கண்கள் என்னுடைய தனமும், உயர்ந்த தேவர்கள் மற்றும் தாழ்ந்த மனிதர்களின் இருப்பிடங்களை
விளையாட்டாக அளந்து தன்னதாகக் கொண்டு இருக்கும், வணங்குபவர்களின் துன்பத்தைப் போக்கும்
உன்னுடைய திருவடியை எப்பொழுது காணும்?

விண்ணவராதி மண்ணோர் யுலகெலாமே அளந்து
நண்ணு நரார்த்தியாவு நசித்தலே தொழிலாய் நின்றேன்
எண்ணரும் தனமாம் யுன் தன் அம்புயத்தாளை இந்தக்
கண்ணினால் கண்டு நானே களிக்கும் நாள் என்னாளோ — 30-

திரி விக்ரம அவதாரத்தில் ஸர்வ லோகங்களையும் அளந்ததும்
ஆஸ்ரிதர்களுடைய ஸ்ரமங்களைப் போக்குவதில் தாமே மேல் விழுந்து ஸமயம் பார்த்துக் கொண்டு இருப்பதும்
எனக்கு எண்ணுதற்கு அரிதான ஒரு நிதியாயும் உள்ள உன் திருவடித் தாமரைகளை
என் கண்களால் கண்டு நான் களிக்கும் நாள் எந்த நாளோ
எப்போது கண்டு களிக்கப் போகின்றேனோ –

———————

ஶ்லோகம் 31 –
இதில், ஆளவந்தார் “உன்னுடைய திருவடிகளைக் கண்டால் போதாது, அவை என்னுடைய தலையை அலங்கரிக்க வேண்டும்”
என்று ஆழ்வார் திருவாய்மொழி 9.2.2இல் “படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்”
(இவ்வுலகத்தின் அளவுக்கு நீட்டிய திருவடித் தாமரைகளை என் தலைக்கு அணியாக ஆக்க வேண்டும்) என்றும்
திருவாய்மொழி 4.3.6இல் “கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே”
(என்னுடைய தலைக்கு உன்னுடைய தாமரை போன்ற திருவடிகளே அலங்காரமாகும்) என்றும் கேட்டபடி அருளிச் செய்கிறார்.

கதா புநஶ் ஶங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குஶ வஜ்ரலாஞ்சநம் |
த்ரிவிக்ரம! த்வச் சரணாம்புஜ த்வயம்
மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி ||

த்ரிவிக்ரமனாக அவதரித்த என் ஸ்வாமியே! சங்கம், சக்ரம், கற்பக மரம், கொடி, தாமரை, அங்குசம், வஜ்ராயுதம்
ஆகிய அடையாளங்கள் பொருந்திய உன்னுடைய திருவடிகள் எப்பொழுது என்னுடை தலையை அலங்கரிக்கும்.

சங்கு சக்கரத்தினோடு ஸரோருகம் த்வஜம் சார்ந்த
வங்குசம் வயிரம் கற்ப தரு முதலாகும் சின்னம்
தங்கு நின் தாமரைத் தாள் விக்ரம என் சிரத்தைப்
பொங்கும் என் மனம் களிப்பப் புனையும் நாள் எந்த நாளோ –31-

எல்லாருடைய சிரஸ்ஸுக்களிலும் உன் திருவடியை அமர்த்தி அருளிய ஏ த்ரி விக்ரமனே
சங்கம் சக்கரம் பத்மம் த்வஜம் அங்குசம் வஜ்ரம் கற்பம் இவை முதலியவற்றின் உபய விபூதி சாம்ராஜ்யத்தை
குறிக்கின்ற திவ்ய ரேகைகளையுடைய உன் திருவடிகள் என் மனம் பொங்கிக் களிக்குமாறு
எப்பொழுது என் சிரஸ்ஸை அலங்கரிக்கப் போகின்றவோ –

—————–

ஶ்லோகம் 32 –
இதிலிருந்து 46ஆவது ச்லோகம் வரை ஆளவந்தார் எம்பெருமானுடன் கூடியிருக்கும் அவனுடைய
அழகிய அவயவங்கள், திருவாபரணங்கள், திவ்ய ஆயுதங்கள், திவ்ய மஹிஷிகள், திவ்ய அடியார்கள், செல்வம்
ஆகியவைகளை அனுபவித்து, இப்படிப்பட்ட ஆனந்தமான அனுபவத்தினால் கிடைக்கும் கைங்கர்யம்
தனக்கு எப்பொழுது கிடைக்கும் என்கிறார்.
இதன் மூலம், ஆளவந்தார் பகவானுக்குப் பரமபதத்தில் அடியார்களுடன் கூடி இருந்து கைங்கர்யம் செய்யும் குறிக்கோளை அருளிச் செய்கிறார்.

விராஜ மாநோஜ்ஜ்வல பீத வாஸஸம்
ஸ்மிதாத ஸீஸூந ஸமாமலச்சவிம் |
நிமக்ந நாபிம் தநுமத்யம் உந்நதம்
விஶால வக்ஷஸ்ஸ்தல ஶோபி லக்ஷணம் ||

எம்பெருமான் ஒளிவிடும் திருப் பீதாம்பரத்தை அணிந்துள்ளான்;
மலர்ந்த காயாம்பூவின் நிறத்தைப் போன்ற தோஷமற்ற ஒளியுடையவன்;
ஆழமான திருநாபி மற்றும் மெலிந்த இடைப்பகுதியை உடையவனாகச் சிறந்து விளங்குகிறான்,
ஒளிவிடும் ஸ்ரீவத்ஸம் என்கிற மறுவைத் தன் பரந்த திருமார்பில் உடையவன்-

விந்தையுடன் திருவரை யது பூத்தது எனச் சுடர் வீசு பொன் அம்பரமும்
அந்தமுடன் அலர் காயாம்பூ நிற வாசறு மேனியும் யுன்னதமும்
சுந்தர வாழி சுழன்றது எனச் சுழற் ஆழ்ந்திடும் உந்தியும் சிற்றிடையும்
சந்தமுடன் தட மார்வம் விளங்குவதாம் மறு ஓன்று தரிப்பவனாய் –32-

திருவரையே பூத்தது என்று சொல்லும்படி வெகு ஆச்சர்யமாயும் அழகாயும் ப்ரகாசிக்கும் பீதாம்பரத்தையும்
அலர்ந்த காயாம்பூவைப் போன்ற நிர்மலமான திரு மேனியையும்
அழகு என்னும் கடலில் சுழல் யுண்டாக்கியது என்னும் படி அழுத்திச் சுழல் கொண்ட திரு நாபி கமலத்தையும்
சிற்று இடையையும் விசால மார்வில் பொலிவுடன் விளங்குகின்ற ஸ்ரீ வத்ஸம் என்னும் ஒரு மறுவையும் தரித்து உன்னதமாய்ப் ப்ரகாசிப்பவனாய் –

————

ஶ்லோகம் 33 –
இதில், ஆளவந்தார் எம்பெருமானுடைய வீரம், சௌர்யம் முதலிய குணங்களையும்
எம்பெருமானின் திருத்தோள்களின் அழகையும் அனுபவிக்கிறார்.

சகாஸதம் ஜ்யாகிண கர்க்கஶைஶ் ஶுபை:
சதுர்பிராஜாநு விளம்பிபிர் புஜை: |
ப்ரியாவதம்ஸோத்பல கர்ண பூஷண
ஶ்லதாலகாபந்த விமர்த்த ஶம்ஸிபி: ||

வில்லில் நாணேற்றியதால் கடினமாக இருக்கும் நான்கு திருக் கைகளால் ஒளிவிடுகிறான் எம்பெருமான்;
மேலும் அவனுடைய திருத்தோள்களில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாரின் காதுகளில் அணிந்திருக்கும் கரிய நிறத்தில்
இருக்கும் அல்லிப் பூக்கள், அவளின் காதணிகள் மற்றும் அலையும் கூந்தலின் அடையாளங்கள் தெரிகின்றன –

பத்த விரோதிகள் பட்டற வேந்து வில் நாணியின் சுவடு படிந்து உளவா
யுத்தம புருட விலக்ஷண முற்று முழந்தளவாய்ச் சுப ஸூசிகையாய்
அத்திருவின் செவி யலர் மலர் உத்பலமும் இழையும் மவிழ் பின்னகமும்
ஒத்தி யுறுத்தியது என்ன ஒளிர் தரு மென்மையில் நான்கு புயத்தவனாய் –33-

ஆஸ்ரித விரோதிகளைக் களையும் பொருட்டு தரித்த சார்ங்கத்தின் நாணினால் யுண்டான தழும்பு படிந்துள்ளவனாய்
உத்தம புருஷ லக்ஷணமாக முழங்கால் வரைக்கும் நீண்டவனாய் பக்தர்களுக்கு மங்கள கரமானவையாய்
அந்த மஹா லஷ்மியினுடைய திருச்செவி மலரான உத்பலமும் கரண ஆபரணங்களும்
அவிழ்ந்து இருக்கும் திருக் குழல் கற்றையும் ஆகிய இவைகள் உறுத்தினது தோற்றும்படி ப்ரகாசிக்கும்
மிருதுவான நான்கு திருத் தோள்களையும் யுடையவனாய்

————-

ஶ்லோகம் 34 –
திருத்தோள்களை அனுபவித்த பிறகு, எம்பெருமானின் திருக்கழுத்தையும் திருமுகமண்டலத்தின் அழகையும்
ஆளவந்தார் அனுபவிக்கிறார்.

உதக்ர பீநாம்ஸ விலம்பி குண்டல
அலகாவளீ பந்துர கம்புகந்தரம் |
முகஶ்ரியா ந்யக்க்ருதபூர்ண நிர்மலா’-
ம்ருதாம்ஶு பிம்பாம்புருஹோஜ்ஜ்வல ஶ்ரியம் ||

எம்பெருமான் அணிந்திருக்கும் குண்டலங்கள் அவனுடைய உயர்ந்த திரண்டிருக்கும் திருத்தோள்களின் வரை வந்து தொங்குவதாலும்,
அவனுடைய சுருண்ட கூந்தலினாலும், மூன்று வரிகள் இருப்பதாலும் அவனுடைய திருக்கழுத்து அழகாக இருக்கிறது.
தன்னுடைய திருமுக மண்டலத்தின் ஒளியால் தோஷமற்ற நிலவு மற்றும் அப்போதலர்ந்த தாமரை மலரை ஜயித்திருக்கிறான் —

பருத்து உயர்வான திருப்புய மட்டும் படிந்து இழி குண்டலமும் குழலும்
இருத்தலின் ஓர் எழில் ஏந்து இலங்கும் இடம் புரி போல் ஒளிர் கண்டம் அதும்
தரித்ததுவும் ஓர் அழகோ என நின்மல பூர்ண சந்த்ரனார் ஒளியும்
திருத்துவதா மலர் மரை எழிலும் மிகு திரு முக மண்டல சோதியனாய் –34-

பருத்து உயர்ந்த திருத்தோள்கள் மட்டும் தாழ்ந்து தொங்குகின்ற குண்டலங்களாலும் குழல்களாலும்
பொலிந்து விளங்குகின்ற சங்கம் போன்ற அழகான திருக் கழுத்துடன்
தன் காந்தியினாலே கலைகளால் நிறைந்தும் நிர்மலமுமான பூர்ண சந்திரனுடைய ஒளியும்
அப்போது மலர்ந்த தாமரைப் புஷ்பமும் படைத்துள்ள அழகும்
ஒரு அழகோ எனத் தோற்பிக்கும் பேர் அழகு வாய்ந்த திரு முக மண்டலத்துடன் ஜ்வலித்துப் பிரகாசிக்கும் ஒரு ஜோதி யானவனாய் –

————-

ஶ்லோகம் 35 –
ஆழ்வார், திருவாய்மொழி 7.7.8இல் “கோளிழைத் தாமரை”
(எம்பெருமானின் திருக்கண்கள் அவற்றின் ஒளியையே ஆபரணமாகக் கொண்டிருக்கின்றன) என்று சொன்னபடி,
ஆளவந்தார் எம்பெருமானின் திருமுகமண்டலத்தை ஒவ்வொரு அவயமாக அனுபவிக்கிறார்.

ப்ரபுத்த முக்தாம்புஜ சாருலோசநம்
ஸவிப்ரம ப்ரூலதம் உஜ்ஜ்வலாதரம் |
ஶுசிஸ்மிதம் கோமல கண்டம் உந்நஸம்
லலாடபர்யந்த விலம்பிதாலகம் ||

எம்பெருமான் மலர்ந்த, புதிய தாமரை மலரைப் போன்ற திருக்கண்களையும், கொடி போன்று வளைந்த திருப்புருவங்களையும்,
மிகவும் ஒளிவிடும் திருவதரங்களையும், புனிதமான புன்முறுவலையும், அழகிய கன்னங்களையும், நிமிர்ந்த திருமூக்கையும்,
திருநெற்றி வரை படர்ந்திருக்கும் திருக்குழலையும் (கூந்தலையும்) உடையவன் –

சீரலர் செவ்விய தாமரை போன்ற திருக்கண் இணைகள் அமர்ந்தவனாய்
நேரியதாம் யடியார்க்கு அருள் தோன்ற நெரித்து உளவாம் புருவத்தனனாய்
ஏர் ஆதரத்துடன் இலகு கபோலமும் இன் முறுவல் உயர் நாசிகையும்
காரின் இருண்டு சுருண்டு நுதல் வரைக் கவினுற வீழ் அளகத்தனனாய் –35-

சிறப்புடன் மலர்ந்த செந்தாமரை மலர் போன்ற சுந்தரமான திருக்கண்களை யுடையவனாய்
ஆஸ்ரிதர் விஷயத்தில் தன் ஆதரவு எல்லாம் தோற்றும்படி நெறித்து இருக்கும் புருவத்தை யுடையவனாய்
அழகான திரு அதரத்துடன் தாவள்யமான திரு முறுவலுடன் கோமளங்களான கபோலங்களுடனும்
உயர்ந்த திரு நாசிகை யுடனும் -மேகம் போல் இருண்டு நெற்றி வரையில் தாழ்ந்து சுருண்டு இருக்கும் திருக் குழல்களுடன் விளங்குபவனாய்

——————

ஶ்லோகம் 36 –
ஆளவந்தார் எம்பெருமானின் திருவாபரணங்கள் மற்று திவ்ய ஆயுதங்களின் சேர்த்தியை அனுபவிக்கிறார்.

ஸ்புரத் கிரீடாங்கத ஹாரகண்டிகா
மணீந்த்ர காஞ்சீகுண நூபுராதிபி: |
ரதாங்க ஶங்காஸி கதா தநுர்வரைர்
லஸத் துளஸ்யா வநமாலயோஜ்ஜ்வலம் ||

எம்பெருமான் ஒளிவிடும் திருமுடி (கிரீடம்), தோள் காப்புகள், ஹாரம், கழுத்தில் அணியும் சங்கிலி, ஸ்ரீகௌஸ்துப மணி,
திவ்ய அரை நாண், திவ்ய சதங்கைகள் முதலிய திவ்ய ஆபரணங்களாலும்,
திருவாழி, திருச்சங்கு, திருநாந்தகம் என்னும் வாள், கௌமோதகீ என்னும் கதை, சார்ங்கம் என்னும் வில் ஆகிய திவ்ய ஆயுதங்களாலும்,
அவனுடைய திருமேனி ஸம்பந்தத்தால் ஒளி விடும் திருத்துழாய் மற்றும் வனமாலையால் மிகவும் ஜ்வலித்துக் கொண்டிருக்கிறான்.

தேசமரும் திரு முடியனோர் மௌலியும் அங்கத ஆரமும் கண்டிகையும்
காசில் ஒளி தரு கௌத்துவமும் அரை நாணுடன் நூபுரம் முதலியவும்
மாசுகம் ஆர் தனு வாழி வளைக் கதை வாள் முதலாகிய ஆயுதமும்
வாச நறும் துளவத் தழகாம் வன மாலையுடன் விரி தேசனுமாய் –36-

ஜோதி மயமான திருமுடியை அலங்கரிக்கும் கிரீடம் -தோள் வளைகள் -முத்துத் திருக்கட்டு வடம்
மாசு மறு இன்றிப் ப்ரகாசிக்கும் ரத்ன ஸ்ரேஷ்டமான கௌஸ்துபம்
அரை நூல் பட்டிகை திருச் சிலம்புகள் முதலான திவ்ய ஆபரணங்களால்
திருவாழி திருச்சங்கு வாள் கதாயுதம் சார்ங்கம் முதலிய திவ்ய ஆயுதங்களாலும்
வாசனை வீசும் திருத்துழாயாலே அழகு வாய்ந்த வனமாலையாலும் பிரகாசிப்பவனாய் –

—————-

ஶ்லோகம் 37 –
இனி வரும் இரண்டு ஶ்லோகங்களில் எம்பெருமான் பெரிய பிராட்டியுடன் கூடி இருப்பதை அனுபவிக்கிறார்.
இந்த ஶ்லோகத்தில், ஆளவந்தார் பிராட்டியின் பெருமையையும், ஈஶ்வரனுக்கு அவளிடத்தில் இருக்கும் பேரன்பையும் அருளிச் செய்கிறார்.

சகர்த்த யஸ்யா பவநம் புஜாந்தரம்
தவ ப்ரியம் தாம யதீய ஜந்மபூ: |
ஜகத்ஸமஸ்தம் யதபாங்க ஸம்ஶ்ரயம்
யதர்த்தம் அம்போதிரமந்த்ய பந்திச ||

எம்பெருமானே! எந்தப் பிராட்டிக்கு இருப்பிடமாக உன்னுடைய திருமார்பை ஆக்கினாயோ,
எந்தப் பிராட்டியின் பிறப்பிடமான திருப்பாற்கடல் உனக்கு விருப்பமான உறைவிடம் ஆனதோ,
எந்தப் பிராட்டியின் கடாக்ஷத்தை நம்பி இவ்வுலகம் இருக்கிறதோ, யாருக்காக நீ கடலைக் கடைந்தாயோ,
யாருக்காக நீ கடலில் அணை கட்டினாயோ–

உன் அழகான யுரம் தனை உன் பிரியைக்கு உறை மாளிகையாய் யுதவி
அன்னவனுடன் ஒன்றிய ஆழி யுனக்கு இனிது அமரும் இருப்பிடமாய் அருளி
மன்னும் இவ்வுபய விபூதி யினுள் பவம் ஆர்ந்திடும் அந்த கடாக்ஷம் உறும்
பொன்னை யடை குபு புணரி கடைந்து அணை கட்டி யுகந்து பொலிந்தவனாய் –37-

உன் அழகான திரு மார்பை உன் ப்ரியையான பெரிய பிராட்டியார் உறைவதற்குத் தக்க ஒரு மாளிகையாகக் கொடுத்து
அந்நாள் அவதரித்த ஷீராப்தியை உனக்கு இனிதாக அமரும் இருப்பிடமாய்க் கொண்டு
இவ்வுபாய விபூதியும் கடைக்கண் பார்வையாக-கடாக்ஷம் யுடைய அந்தப் பிராட்டியாரைப் பெறுவதற்காக கடலைக் கடைந்தும்
பின்பு ஒரு கால் திரு அணை கட்டியும் உக்காந்து திகழ்ந்து அருளியவனாய் –

————

ஶ்லோகம் 38 –
இதில், ஆளவந்தார் பிராட்டியின் எல்லை இல்லாத இனிமையையும், அவள் எம்பெருமானுக்காகவே இருப்பதையும்,
திருவாய்மொழி 10.10.6இல் “உனக்கேற்கும் கோல மலர்ப் பாவை”
(உனக்குத் தகுந்தவளான, அழகிய தாமரை மலரில் வசிக்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மி) சொன்னபடி அனுபவிக்கிறார்.

ஸ்வவைஶ்வ ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாததாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||

நீ விஶ்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள்
மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய
எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.

நின்னிட சேர்த்தி நிரந்தரமாய்ப் பல வடிவிலும் செவ்வி நிலை பெறினும்
அன்ன வணிக்கு ஓர் அபூர்வமாகிய ஆச்சார்யத்தை விளைப்பவளாய்
தன் நிகரில் வடிவாலும் தகைமையினாலும் விலாஸ விதங்களிலும்
உன் ஒருவருக்கே யுரியவளாகும் உன் நித்ய ஸம்பத்து உறுபவனாய் –38-

ஸர்வ சக்தனான உன்னுடைய எல்லா விக்ரகத்தாலும் ஸர்வ காலத்தும் உன்னால் அனுபவிக்கப் பட்டு இருந்தும்
நித்யம் அபூர்வமான ஆச்சர்யத்தை யுனக்கு யுண்டாக்குபவளாய்
நிகரில்லாத உன் வடிவு அழகாலும் சீலாதி குணங்களாலும் திரு விளையாட்டுக்களினாலும்
பர வ்யூஹ விபவ விபவாதி எல்லா அவஸரங்களிலும் உனக்கே உரியவளாய் விளங்கும் அந்த மஹா லஷ்மியை
உன் நித்ய சம்பத்தாய்க் கொண்டான் இலங்குபவனாய்

—————-

ஶ்லோகம் 39 –
ஆளவந்தார், திருவனந்தாழ்வானின் திருமடியில் எம்பெருமானும் பிராட்டியும் கூடியிருப்பதைப்
பர்யங்க வித்யையில் காட்டியபடி அனுபவிக்கிறார்.

தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால்
ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–

உத்தம ஞான பலன்கள் தமக்கு ஒரு உறைவிடமாக நிலைத்து அவனும்
துத்தி யுடைப் பணம் ஏந்தும் ரத்னம் எங்கும் துலங்கும் ஓர் சோதியுடன்
மத்தி யமாம் உதரத்தை ஓர் அத்புத மாளிகையாக வகிப்பவனும்
பத்தனுமான அநந்தன் அணை மிசை பத்தினியோடு உறைகின்றவனாய் –39-

உத்தமமான ஞான சக்திகளுக்கு ஒரு இருப்பிடமாக நிலை பெற்றவனும் பொறிகளை யுடைய படங்களை ஏந்தும்
தன் சிரோ ரத்னங்களின் காந்தியினால் பிரகாசிக்கின்ற தன் உத்தரத்தின் மத்திய பிரதேசத்தை
ஒரு திவ்ய அந்தப்புரமாக வகிப்பவனும் பரம பக்தனுமான திரு அநந்த ஆழ்வான் மடியிலே பத்தினியாக பெரிய பிராட்டியாரோடு வீற்று இருப்பவனாய் –

—————–

ஶ்லோகம் 40 –
கைங்கர்யத்தில் இருக்கும் ஆசையால், ஆளவந்தார் திருவனந்தாழ்வானின் உயர்ந்த லீலைகளை அனுபவிக்கிறார்.
ஸ்ரீவிஷ்ணு புராணம் 1.15.157இல் ““உபமானமஶேஷாணாம் ஸாதூனாம் யஸ்ஸதா’பவத் |”
(எப்படி ப்ரஹ்லாதன் எல்லா நல்லவர்களுக்கும் உதாரணமாக இருக்கிறானோ) சொன்னபடி,
கைங்கர்யத்தில் ருசியுடைய அனைவருக்கும் திருவனந்தாழ்வானின் செயல்களே சிறந்த உதாரணம்.
ஆளவந்தார் இப்படிப்பட்ட ஆதிசேஷனின் உயர்ந்த நிலையை அருளிச் செய்கிறார்.

நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||

நீ திருவனந்தாழ்வானின் திருமேனியிலே திவ்யமாக சயனித்திருக்கிறாய். திருவனந்தாழ்வான் நீ வசிக்கும் திருமாளிகையாகவும்,
சயனித்துக்கொள்ளும் படுக்கையாகவும், வீற்றிருக்கும் ஸிம்ஹாஸனமாகவும். அணிந்துகொள்ளும் பாதுகையாகவும்,
உடுத்திக்கொள்ளும் ஆடைகளாகவும், அணைத்துக்கொள்ளும் தலையணையாகவும்,
வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கும் குடையாகவும், மேலும் பல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு
உனக்குத் தொண்டு செய்வதால் எல்லோராலும் “சேஷன்” (தொண்டன்) என்றே அழைக்கப்படுகிறான் —

வாஸம் யுனக்கு ஒரு மாளிகையும் உபாதானமும் பள்ளியும் அஞ்சுகமும்
ஆசனமும் மணி பாதுகையும் மழை யாதவர்க்கு அரணாதி பல
பேச அரிதாம் உபச்சார விசித்ர பேத சரீர விதங்களினால்
தேசுறும் சான்றவரால் உசிதப்படி சேஷன் எனப்படுவோன் மிசையே –40-

நீ நிவாஸம் பண்ணுவதற்காக ஒரு திரு மாளிகையாயும்
சயனத்திற்காகப் படுக்கையாயும் தலையணை யாகவும்
ஸிம்மாஸனமாகியும் மரவடியாகவும்
மழை வெயில் இத்யாதிகளை போக்க ஒரு குடையாகவும்
இவை முதலாக இன்னும் அநேக கைங்கர்ய பேதங்களுக்குத் தக்கபடி தன் சரீர பேதங்களினால் உன்னுடைய சேஷத்வத்தை அடைந்து இருப்பதனால்
உசிதப்படி நித்ய ஸூரிகளால் சேஷன் என்று சொல்லப்படும் அந்த திரு வந்த ஆழ்வான் மீது வீற்று இருப்பவனுமாய் –

————-

ஶ்லோகம் 41 –
இதில், ஆளவந்தார் எம்பெருமான் பெரிய திருவடியுடன் (கருடாழ்வார்) கூடியிருப்பதை அனுபவிக்கிறார்.
பெரியதிருவடி, எம்பெருமானுக்குக் கொடியாகவும், மற்றும் எல்லாமாகவும் பழுத்த கனியைப் போன்று
எம்பெருமானுக்கு விரும்பத்தக்கவராக இருக்கிறார்.

தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும்,
ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்;
மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்;
உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —

நண்ணு நினக்கு ஒரு தாசனும் நண்பனும் வாகனமும் மரி யாசனமும்
திண்ணம் உறத் திகழும் கொடியும் விரி சாரமும் ஓர் விதானமுமாய்
எண்ணின் மறை வடிவானவனாய் அடி இணைகள் இறுத்தும் தழும்பு இலகிய
ஒண்ணும் உனக்கு எதிர் நின்று பணிந்திடும் உத்தமன் கலுழன் உகந்தவனாய் –41–

உனக்கு தாஸனும் தோழனும் வாகனமும் ஸிம்ஹாஸனமும் கொடியும் மேற் கட்டியும்
திருவால வட்டமும் ஆகின்றவனும் உன்னுடைய திருவடிகள் நெருங்குவதால் உண்டாகிய
தழும்பின் அடையாளத்தாலே சோபிக்கிறவனும்
வேத ஸ்வரூபியுமான பெரிய திருவடியாலே உன் முன் நிலைக்கண்ணாடி போல் நின்று கொண்டு சேவிக்கப் படுகின்றவனாய் –

————–

ஶ்லோகம் 42 –
ஆளவந்தார் ஸ்ரீ ஸேனாபதி ஆழ்வானின் (விஷ்வக்ஸேனர்) தாஸ்ய ஸாம்ராஜ்யத்தை அனுபவிக்கிறார்;
எம்பெருமான் தன்னுடைய எல்லாப் பொறுப்புகளையும் விஷ்வக்ஸேனரிடம் அளித்துத் தன்னையும் அவர் அதீனத்தில் அமைத்துக் கொள்கிறான்.

த்வதீய புக்தோஜ்ஜித ஶேஷபோஜிநா
த்வயா நிஸ்ருஷ்டாத்ம பரேண யத்யதா |
ப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி தத்
ததா’நுஜாநந்தம் உதார வீக்ஷணை: ||

விஷ்வக்ஸேனர் உன்னுடைய ப்ரஸாதத்தையே உண்டு, உன்னுடைய நித்ய மற்றும் லீலா விபூதிகளை நடத்தும்
பொறுப்புகளை உன்னிடத்திலிருந்து பெற்றிருக்கிறார்;
எல்லோருக்கும் இனியவரான அவர், உன்னுடைய கண்ணசைவினாலே செய்ய வேண்டிய விஷயங்களுக்கு ஒப்புதல் வாங்கி,
அவற்றை நடத்தக் கூடியவர்.

நித்தமும் நீ யமுதுண்ட பின் நின்றதை நிகர் இலதாம் ப்ரஸாதம் எனா
பத்தி மகிழ்ந்து அதை யுண்பவனும் நினது ஆணையினால் செக பாரம் எல்லாம்
சித்திரமாய் சிரம் ஏந்தி நடத்து நின் நண்பனுமாம் சேனா பதியின்
வித்தகமாம் பணிவிடைகள் உகந்து அவன் வேண்டியவாறு பணிப்பவனாய் –42–

பிரதி தினமும் அமுது செய்த பிற்பாடு சேஷமாய் நின்றதை பரம உத்தமமான ப்ரஸாதமாக மதித்து மன மகிழ்ச்சியுடன்
அதைப் புஜிப்பவனும் உன் நியமனப்படி ஜகத்தின் -உபய விபூதியின் -பாரத்தை எல்லாம் தன் சிரஸ்ஸில் வஹித்து விசித்ரமாய் நடத்துபவனும் உனக்கு இஷ்டனுமான ஸேனாபதி ஆழ்வான்
செய்யும் பணிவிடைகளை உகந்து அவன் செய்யும் விண்ணப்பத்திற்கு அநு குணமாகவே அவனுக்கு கட்டளைகள் இடுபவனாய் –

—————

ஶ்லோகம் 43 –
விஷ்ணு ஸூக்தத்தில் “ஸதா பஶ்யந்தி ஸூரய:” (நித்யஸூரிகள் எப்பொழுதும் எம்பெருமானைப் பார்த்து அனுபவிக்கிறார்கள்)
என்று சொன்னபடி, எம்பெருமானுக்கு நித்யஸூரிகள் செய்யும் கைங்கர்யத்தை அனுபவிக்கிறார்.
இவருடைய ப்ரார்த்தனை திருவாய்மொழி 2.3.10இல் “அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ?”
(எப்பொழுது நான் நித்யஸூரிகள் கோஷ்டியில் இருப்பேன்?) என்று ஆழ்வார் கேட்டபடி இருக்கும்.

ஹதாகில க்லேஶமலை: ஸ்வபாவத:
*ஸதாநுகூல்யைகரஸைஸ் தவோசிதை: |
க்ருஹீத தத்தத் பரிசார ஸாதநை:
நிஷேவ்யமாணம் ஸசிவைர் யதோசிதம் ||-

* த்வதாநுகூல்யைக என்றும் ஒரு பாடம் உண்டு..

துன்பங்களும் தோஷங்களும் இல்லாத, எப்பொழுதும் உனக்குத் தொண்டு செய்யும் அனுபவத்தை உடைய,
உனக்குப் பொருத்தமாக இருக்கக்கூடியவர்களான, கையில் எப்பொழுதும் கைங்கர்யத்துக்குத் தேவையான
மாலை, தூபம், தீபம் முதலியவைகளை ஏந்தி இருப்பவர்களான, உனக்கும் முறையை உணர்த்திக்
கைங்கர்யம் செய்யக்கூடியவர்களான, அவர்கள் மற்றும் உன் தன்மைக்கேற்ப உன்னை வணங்கக்கூடிய நித்யஸூரிகளால் வணங்கப்படுபவனே!

துன்ப மலங்கள் அனைத்தையும் நீத்து நின் தூய மலர்த் திருவடி இணையில்
இன்பம் இயற்கையில் ஊட்டுவதாம் பணிவிடைகளில் போக்யம் உற்றவராய்
யன்புடன் இற்கு உபசாரம் இழைத்திட வாயின ஸாதனம் ஏந்தினராய்ப்
பொன் புரை நித்தியர் நின்னை யதோ உசிதம் போற்ற மகிழ்வுடன் பொலிபவனாய் –43-

துன்பத்தைத் தரக்கூடிய -அவித்யை முதலான குற்றங்கள் ஒன்றும் இல்லாதவராய்
மகா பரிசுத்தமாகிய உன் திருவடிகளில் கைங்கர்யங்களையே இயற்கையாக எக்காலத்தும் போக்யமாக எண்ணுபவராய்
பரம ப்ரேமத்துடன் உனக்கு உபசாரம் செய்யும் பொருட்டு அந்தவந்த கைங்கர்ய உப கரணங்களான சத்ர சாமராதிகளைத் தரித்துக் கொண்டு இருப்பவராய் உள்ள அந்த நித்ய ஸூரிகள் உன்னை ஸ்வரூப அனுரூபமாக சேவிக்க அதனால் மன மகிழ்ச்சி கொண்டு பிரகாசிப்பவனாய்

————–

ஶ்லோகம் 44 – ஸ்ரீ ராமாயணம் அயோத்யா காண்டம் 31.25இல்
இளைய பெருமாள் “பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸானுஷு ரம்ஸ்யதே”
(நீ ஸீதாப்பிராட்டியுடன் மலைத்தாழ்வரைகளில் ரமித்திருக்கும்போது, நான் உங்கள் இருவருக்கும் தொண்டு செய்வேன்)
என்று சொன்னபடி, ஆளவந்தார் எம்பெருமான் பிராட்டிக்கு ஆனந்தம் கொடுப்பதை அனுபவிக்க ஆசைப்படுகிறார்.

அபூர்வ நாநா ரஸ பாவ நிர்பர
ப்ரபுத்தயா முக்த விதக்த லீலயா |
க்ஷணாணுவத் க்ஷிப்தபராதி காலயா
ப்ரஹர்ஷயந்தம் மஹிஷீம் மஹாபுஜம் ||

தன்னுடைய அழகான மற்றும் சிறந்ததான லீலைகளால் பிராட்டிக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவன் எம்பெருமான்;
இப்படிப்பட்ட லீலைகளால் பிராட்டிக்கு ப்ரஹ்மாவின் ஆயுட்காலமும் ஒரு நொடிப்பொழுதில் செல்லும்படி
ஒவ்வொரு க்ஷணமும் புதியதாக ரசிக்கும்படியாக இருக்கும்; பிராட்டியைத் தழுவுதற்கு ஏற்ற பெரிய திருக்கைகளை உடையவன்.

பற்பலவாகும் அபூர்வ பாவ ரசங்கள் பணித்து நிறைப் பதினாறு
கல்பம் அநேகம் அடங்கிய காலம் அதும் கண லேஸம் எனக் கழியப்
பொற்புடன் சாதுரியம் பல பூண்டு விளங்கு விலாஸ வகைகளினால்
அற்புதம் என்று உனது அன்பினள் மெச்சி யணைக்கு மகா புயம் உற்றவனாய் –44-

இதற்கு முன் என்றும் கண்டு அறியாதன போன்று வெகு விதங்களாய் ஸ்ருங்கார உத்ஸஹாதி ரசங்களால் அதிகமாய் விருத்தி அடைந்து இருப்பதால்
பரம்பரார்த்தம் என்னும் கற்பகங்கள் அடங்கிய காலமானது ஒரு க்ஷணம் போலே கழிந்து கொண்டு இருக்க
வெகு சாதுர்யம் பூண்டு அழகாய் அமைந்துள்ள லீலைகளினால் பெரிய பிராட்டியார் அற்புதம் என்று மெச்சி அணைத்துக் கொள்ளும் பெரிய திருத்தோள்களை யுடையவனாய்

—————

ஶ்லோகம் 45 –
ஆளவந்தார் பிராட்டிக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும், ரசிக்கும்படியான விஷயங்களுக்கு இருப்பிடமான
எம்பெருமானின் திருமேனிகள் மற்றும் திருக்கல்யாண குணங்களை அனுபவிக்கிறார்.

அசிந்த்ய திவ்யாத்புத நித்ய யௌவந
ஸ்வபாவ லாவண்யமயாம்ருதோததிம் |
ஶ்ரிய: ஶ்ரியம் பக்த ஜநைக ஜீவிதம்
ஸமர்த்தம் ஆபத்ஸகம் அர்த்தி கல்பகம் ||

எம்பெருமான் நினைவுக்கு அப்பாற்பட்ட, திவ்யமான, ஆச்சர்யமான, நித்யமான, இயற்கையான இளமையை உடையவன்;
அழகுக் கடலாக இருப்பவன்; ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் ஸ்ரீயாக (செல்வமாக) இருப்பவன்;
தன்னுடைய அடியார்களின் உயிராக இருப்பவன்; அறிவில் குறைந்தவர்களையும் படிப்படியாக உயர்த்தக்கூடியவன்,
ஆபத்துக் காலத்தில் நண்பனாக இருப்பவன், அவனை விரும்புபவர்களுக்கு கற்பக மரமாக இருப்பவன் –

நெஞ்சில் நினைக்க அரிதாகிய அற்புத நித்ய யவ்வன நீர்மையனாய்
விஞ்சும் எழில் மயமாய் அமுதக் கடலாய் விமலைக்கும் ஓர் சுப கரனாய்
தஞ்சம் அடைபவர்க்கு ஒரு தாரக போஷக போக்ய சதுரனுமாய்
நஞ்சின் விதத்திலும் நண்பனுமாய் வர நாடுபவர்க்கு ஒரு கற்பகமாய் –45–

மனத்தால் எண்ணுதற்கு அரிதாகி வெகு ஆச்சர்யத்தை உண்டு பண்ணுவதான நித்ய யவ்வனத்தை இயற்கையாக யுடையவனாய்
லாவண்யம் நிறைந்து அமுதக்கடல் போன்றவனாய் -ஸ்ரீ மஹா லஷ்மிக்கும் மங்கள கரனாய்
தன்னை அடையும் ஆஸ்ரிதற்கு தாரக போஷக போக்யனாய்
தன் ஆஸ்ரிதர் அனுபவிக்கும் பொருட்டு தன்னையே கொடுக்க ஸாமர்த்யம் யுடையவனாய்
எந்த ஆபத்தில் நின்றும் ரக்ஷிக்க தோழன் போன்றவனாய்
யாசிப்பவர்க்குக் கொடுக்கும் விஷயத்தில் ஒரு கற்பக வ்ருக்ஷம் போன்றவனாய் –

——————-

ஶ்லோகம் 46 –
ஆளவந்தார் “எப்பொழுது உலக விஷயங்களில் ஆசையைவிட்டு தேவரீருடைய ஆனந்துக்காகவும்
என்னுடைய இருப்பின் பயனாகவும், முன்பு சொன்ன ஸ்வரூபம், ரூபம், குணம், விபூதி ஆகியவைகளில்
பூர்த்தியை உடைய தேவரீருக்குக் கைங்கர்யம் செய்வேன்?” என்று கேட்கிறார்.

பவந்த மேவாநுசரந் நிரந்தரம்
ப்ரஶாந்த நிஶ்ஶேஷ மநோரதாந்தர: |
கதா’ஹம் ஐகாந்திக நித்ய கிங்கர:
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாதஜீவித: ||

மற்ற எல்லா விஷயங்களிலுமிருக்கும் ஆசையை அடியோடு விட்டு உன்னையே தொடரும்படி இருந்து,
எப்பொழுதும் உனக்கு நித்ய கைங்கர்யம் செய்து உனக்கு ஆனந்தத்தைக் கொடுத்து என் வாழ்கைக்கும் ஒரு பயனைப் பெறுவேன்?

நின்று நிறை நினையே யனுவர்த்தனம் என்றும் இயற்றி நினை ஒழி மற்று
ஒன்றிலும் இச்சை லேசமும் ஒன்ற விடாமல் ஒழித்து ஒரு நியதம் உடன்
என்றும் உன் நித்ய கைங்கர்யங்களை ஏந்தும் ஓர் சத்துடை வாழ்க்கையனாய்
நன்றென நிற்கு மகிழ்ச்சி விளைப்பதை நானும் வகித்தல் எஞ்ஞான்று கொலோ –46-

இத்யாதி ஸ்வரூப ரூப குண விபவங்களால் நிறைந்த உன்னையே இடைவிடாது என்றும் அனுவர்த்தித்துக் கொண்டு
உன்னைத்தவிர மற்ற விஷயங்களில் மநோ வியாபாரங்களை முற்றவும் தவிர்த்தவனாய்
இந்த ஆத்ம ஸ்வ பாவமுள்ள காலம் அத்தனையும் திடமான மனத்துடன் உனக்கு நித்ய கைங்கர்யங்களையே
செய்து கொண்டு சபலமான சத்தை யுடைய வாழ்க்கை யுள்ளவனாய் உன்னை நான் உகப்பிக்கும் நாள் எப்பொழுது வருமோ –

———————

ஶ்லோகம் 47 –
இதில், ஆளவந்தார் ஈஶ்வரனின் அடையத்தக்க உயர்ந்த நிலையையும் தன்னுடைய முந்தைய (தாழ்ந்த) நிலையையும் பார்த்து
“ஸம்ஸாரியான நான் எப்படி ப்ரஹ்மா ருத்ரன் போன்றவர்களின் எண்ணத்துக்கும் அப்பாற்பட்ட, இவ்வுலக விஷயங்களால்
தீண்டப்படாத நித்யஸூரிகள் ஆசைப்படும் கைங்கர்யத்தை ஆசைப்படலாம்?
எப்படி உயர்ந்த உணவானது விஷத்தால் தீண்டப்படலாம்?” என்று நினைத்து,
நம்மாழ்வார் “வளவேழுலகில்” செய்ததைப்போலே தன்னைத் தானே கடிந்து கொள்கிறார்.

திகஶுசிம் அவிநீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரம புருஷ! யோ’ஹம் யோகிவர்யாக்ரகண்யை: |
விதிஶிவ ஸநகாத்யைர் த்யாதும் அத்யந்த தூரம்
தவ பரிஜநபாவம் காமயே காமவ்ருத்த: ||

புருஷோத்தமனே! என்னுடைய (தவறான) எண்ணப்படி நடக்கும் தன்மையை உடைய காரணத்தால் ப்ரஸித்தமான நான்,
என்னுடைய புனிதமற்ற தன்மையாலும், சீர் செய்யப்படாத தன்மையாலும், கருணையும், வெட்கமும் இல்லாத தன்மையாலும்,
ப்ரஹ்மா, சிவன், ஸனகாதி முனிவர்கள் போன்ற உயர்ந்த யோகிகளுக்கும் எட்டாததான
உன் கைங்கர்யத்தை ஆசைப்பட்டதை என்னையே நினைத்து நொந்து கொள்ள வேண்டும்.

பத்துடை யோகிகளுக்குள் முதன்மைப்படும் அயன் அரன் ஸநகாதிகளாலும்
எத்துணை எண்ணுதலுக்கு மிகக்கும் வெகு துலை யுறு நின் பணிவிடை தன்னை
நத்துவன் காம விருத்தி யனேனான் நசை யுறு மசுசியன் விநயம் இலாதேன்
உத்தம புருட விலச்சை யொடச்சம் ஒழித்த வெனக்குறு மிழிவசையாமே –46-

ஏ புருஷோத்தம பரம யோகிகளுக்குள் முதன்மை பட்ட பிரமன் சிவன் ஸநகாதியர் முதலானவர்களாலும்
நினைப்பதற்கும் எட்டாத
வெகு தூரத்தில் உள்ள உன்னுடைய கைங்கர்யங்களை சரீர சம்பந்தத்தினால் அபரிசுத்தனனும்
ஆச்சார்ய முகமாக சிஷிக்கப்படாதவனும் காம விருத்தியை யுடையவனுமான நான் அபேக்ஷிக்கத் துணிந்தேன்
இப்படி பயத்தை ஒழித்து வெட்கத்தை விட்டுத் துணிந்த எனக்கு நிந்தையே தகும்

——————

ஶ்லோகம் 48 –
ஆளவந்தார் எம்பெருமானிடத்தில் “உன்னுடைய கருணையால், என்னுடைய பாபங்களைப் போக்கி
என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
அல்லது –
ஆளவந்தார் எம்பெருமானிடத்தில் “என்னுடைய குறிக்கோளை அடைவதற்குத் தடையாக இருக்கும்
பாபங்களை நீயே போக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
முன்பு, எம்பெருமானின் மேன்மையின் உச்சக்கட்ட நிலையைப் பார்த்து விலகினார்;
இப்பொழுது எம்பெருமானின் எளிமையின் உச்சக் கட்ட நிலையை நினைத்து அவனை அணுகுகிறார்.

அபராத ஸஹஸ்ர பாஜநம்
பதிதம் பீமபவார்ணவோதரே |
அகதிம் ஶரணாகதம் ஹரே!
க்ருபயா கேவலமாத்ஸமாத் குரு ||

துன்பங்களைப் போக்கி என்னை ரக்ஷிப்பவனே! கணக்கில்லாத அபராதங்களுக்கு இருப்பிடம் நான்;
இப்பொழுது இந்த ஸம்ஸாரம் என்கிற க்ரூரமான கடலில் முழுகியுள்ளேன்; எனக்கு வேறு புகல் இல்லை;
உன்னிடத்திலே சரணடைந்துள்ளேன்; உன்னுடைய கருணையினாலே என்னை உன்னுடையவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எண்ணிலா அபராதங்கட்க்கு இருப்பிடமாகி நானே
பண்ணிய வினையின் கோரப் பவக்கடல் நடுவில் வீழ்ந்தே
திண்ணமுற்ற கதியேனாய்ச் சேவடி யடைந்த என்னை
கண்ண நின் கருணை ஒன்றே கொண்டு உகந்து அருளுவாயே –48-

எண்ணுக்கு வராத ஆயிரக்கணக்கான அபராதங்களுக்கு இருப்பிடமாகி
நான் பண்ணிய பாவத்தின் பலனாக விளைந்த கோரமான ஸம்ஸார சாகரத்தின் நடுவில் விழுந்து தடுமாறி
உன்னைத் தவிர வேறு கதி இல்லேனாய் உன்னை உறுதியுடன் சரண் அடைந்த என்னை
அருள் நிறைந்த திருக் கண்களை யுடைய நீ கடாக்ஷித்து
உன் நிர்ஹேதுக கிருபையாலே உன்னுடையவன் என்று அங்கீ கரித்து அருள வேணும்

————–

ஶ்லோகம் 49 –
எம்பெருமான் ஆளவந்தாரைப் பார்த்து “இத்தனை தோஷங்களை உடைய நீர், வேறு உபாயங்களைக் கொண்டோ
அல்லது மற்றவைகளை விட்டு என்னையே பிடித்துக் கொண்டோ அவற்றைப் போக்கிக்கொள்ளாமல்,
என்னை ‘க்ருபயா கேவலம் ஆத்மஸாத் குரு’
(உன்னிடைய கருணையாலே, என்னை உன்னுடையவனாக ஏற்றுக் கொள் என்று ஏன் நிர்பந்திக்கிறீர்?” என்று கேட்க,
அதற்கு ஆளவந்தார்
“சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட அனுஷ்டானங்களில் ஈடுபட எனக்கு ஞானம் இல்லை,
ஆகையால் மற்ற உபாயங்களில் ஈடுபட வழியில்லை; எனக்கு வேறு புகல் இல்லாததால்,
இருப்பவற்றைக் கைவிடவும் முடியாது. ஆகையால் உன்னுடைய பெரிய கருணையினால்,
உன்னுடைய கடாக்ஷமே எனக்கு உஜ்ஜீவனத்துக்கு வழி” என்கிறார்.

அவிவேக கநாந்த திங்முகே
பஹுதா ஸந்தத து:க்கவர்ஷிணி |
பகவந்! பவதுர்திநே பத:
ஸ்கலிதம் மாம் அவலோகயாச்யுத ||

ஞானம், பலம் முதலிய ஆறு குணங்களால் பூர்த்தியை உடைய பகவானே! உன்னுடைய அடியார்களை நழுவ விடாதவனே!
திசைகள் கரிய மேகங்களால் மறைக்கப்பட்டிருக்கும், மழைக்கால இருட்டை உடைய, பெரிய மழை தொடர்ந்து பொழியும்
இந்த ஸம்ஸாரத்தில், நல்வழியில் இருந்து நான் நழுவுகிறேன்; உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தை எனக்கு அருள்.

அடா விவேக மேகப் படலம் எத்திசையும் மூடி
இடை விடாது இடும்பை மாரி பலவிதம் சொரியும் இந்தப்
படு பவ துர்த்தி நத்தில் பதம் ஒழிந்து ஏங்கி நிற்கும்
கடையனைக் கடைக் கணிப்பாய் அச்யுத பகவானேயோ –49-

துர் தினம் -கொடிய தினம் -ஸூர்ய தர்சனம் இல்லாத தினம்

அவி விவேகம் ஆகிற மேகங்கள் எல்லாத் திக்குகளையும் மூடிக் கொண்டு பலவிதமாக இடைவிடாமல்
துக்கங்களை வர்ஷிக்கிற இந்த ஸம்ஸாரம் ஆகிற துற தினத்தில் சரியான வழியின் நின்றும்
நழுவி ஏக்கம் கொண்டு நிற்கும் கடையனான என்னை ஏ பகவானே
ஆஸ்ரிதரை நழுவ விடாதவனே -கடாக்ஷித்து அருள வேண்டும்

—————–

ஶ்லோகம் 50 –
ஆளவந்தார் “எனக்கு உன்னுடைய கருணையைத் தவிர வேறு புகல் இல்லாததால், உன்னுடைய கருணைக்கும்
என்னை விட சிறந்த பாத்திரம் கிடையாது; ஆகையால் இந்த வாய்ப்பை நழுவ விடாதே” என்கிறார்.

ந ம்ருஷா பரமார்த்தமேவ மே
ஶ்ருணு விஜ்ஞாபநம் ஏகமக்ரத: |
யதி மே ந தயிஷ்யஸே ததோ
தயநீயஸ் தவ நாத துர்லப: ||

ஸ்வாமி! முதலில் என்னுடைய ப்ரார்த்தனையைக் கேள்; இது பொய்யல்ல; இது உண்மையே;
உன்னுடைய கருணையை எனக்கு அளிக்காமல் என்னை இழந்து விட்டாய் என்றால்,
உன்னுடைய கருணையைப் பெற என்னைவிடத் தகுந்த எவரையும் நீ பெறமாட்டாய்.

வஞ்சனை அன்று நாத வாய்மையே யான் வழங்கும்
செஞ்சொலில் இவ்விண்ணப்பம் செவியில் நீ முன்னம் ஏற்பாய்
தஞ்சமாய் அடைந்த என்னைத் தயை யுறாது ஒழிகில் அந்தோ
விஞ்சும் உன் தயைக்குத் தக்க விஷயம் மற்று அரியதாமே –50-

ஏ ஸர்வ சேஷியே -அடியேன் செய்யும் இவ்விண்ணப்பம் பொய்யன்று -உண்மையே ‘
இத்தை முன்னம் நீ திருச்செவி சாய்த்து அருள வேணும்
தஞ்சமாக அடைந்த என்னை நீ தயை பண்ணாது ஒழிவாயாயின்
உனக்குத் தயை பண்ணி ரக்ஷிக்கத் தக்க வஸ்து கிடைப்பது துர்லபம்

——————

ஶ்லோகம் 51 –
ஆளவந்தார் “உன்னுடைய அருளை வேண்டும் எனக்கும் அருளை உடைய உனக்கும் உள்ள இந்த ஸம்பந்தம்,
தேவரீருடைய கருணையினாலே ஏற்பட்டது; ஆகையால் இதைக் கைவிடாமல் நீ காக்க வேண்டும்” என்கிறார்.

ததஹம் த்வத்ருதே ந நாதவாந்
மத்ருதே த்வம் தயநீயவாந் ந ச |
விதி நிர்மிதம் ஏததந்வயம்
பகவந்! பாலய மா ஸ்ம ஜீஹப: ||

ஞானம் நிறைந்த ஸ்வாமியே! ஆதலால் உன்னைத் தவிர எனக்கு வேறு ஒரு ஸ்வாமி கிடையாது;
அதே போல உன்னுடைய கருணைக்கும் என்னைத் தவிர வேறு யாரும் சரியான பாத்திரம் கிடையாது.
உன்னுடைய கருணையால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஸம்பந்தம் காக்கப்பட வேண்டும்; அதை நழுவ விடாதே.

எனக்கும் ஓர் நாதனில்லை நின்னை விட்டு என்னை அன்றி
யுனக்கியல் பாந்தயைக்கும் உரிமை யோர் ஒருவரும் இல்லை
தனித்த நின் தயையினால் எம் இருவர் இனி இவ்விணக்க
மனத்தினில் கொண்டு அருள்வாய் மாதவ கை விடாமே –51-

எனக்கும் உன்னை விட ஒரு நாதனும் இல்லை
இயல்பாக அமைந்து இருக்கும் உன்னுடைய தயைக்கும் என்னை விட உரிமை பூண்டவர் வேறே ஒருவரும் இல்லை
ஆகையால் ஏ மாதவ உன் கிருபையினால் ஏற்பட்டு இருக்கும் இந்த சம்பந்தத்தைத் திரு உள்ளம் கொண்டு
அடியேனைக் கை விடாது ரக்ஷித்து அருள வேண்டும் –

—————–

ஶ்லோகம் 52 –
எம்பெருமான் “என்னுடைய ரக்ஷணம் ஆத்மாவின் ஸ்வரூபத்தின்படி இருக்கும்; உம்முடைய ஸ்வரூபத்தை ஆராய்ந்து,
என்னிடத்தில் உம்மை ஸமர்ப்பியும்” என்று சொல்ல,
ஆளவந்தாரும் ஆழ்வார் திருவாய்மொழி 2.9.6இல் “சிறப்பில் வீடு” என்று செய்தபடி,
“எனக்கு எந்த நிர்பந்தமும் இல்லை; ஆத்மா என்று சொல்லப்படும் இந்த வஸ்து தேவரீரின் திருவடிகளில் என்னால் ஸமர்ப்பிக்கப்பட்டது”

வபுராதிஷு யோ’பி கோ’பி வா
குணதோ’ஸாநி யதா ததாவித: |
ததயம் தவ பாத பத்மயோ:
அஹமத்யைவ மயா ஸமர்ப்பித: ||

நான் சரீரம் முதலான எதுவாகவோ எப்படிப்பட்ட தன்மையை உடையவனாகவும் இருக்கலாம்;
அதைப் பற்றி எனக்கு ஒரு நிர்பந்தமும் இல்லை; நான் என்று சொல்லப்படும் இந்த வஸ்து இப்பொழுது
உன்னுடைய திருவடித் தாமரைகளில் என்னால் ஸமர்ப்பிக்கப் பட்டது.

உடன் முதலாய வற்றுள் உற்றதி யாவனேனும்
படிகளின் பல விதத்தில் எவ்வகைப் பட்டனேனும்
திடமுற நினதே என்னும் திண்ணமார் தெரிவால் உன் தன்
அடியினில் சமர்ப்பித்தேன் இவ் வென்னையே இக்கணத்தே –52-

தேஹ இந்திரியாதிகளுக்குள் எந்த ஸ்வரூபத்தை யுடையேனேனும்
அணுத்வ விபுத்வாதி குணங்களினால் எவ்வகைப் பட்டேனேனும் ஆகக் கடவன்
இவற்றைப் பற்றிய ஞானம் இவ்விஷயத்தில் அனாவஸ்யம்
உன்னுடைய சொத்து என்று மட்டில் நிச்சயமாய் என்னால் அறியப்பட்ட இந்த நான் என்னும் வஸ்து
உன் திருவடிகளிலே இக்கணத்திலேயே என்னால் ஸமர்ப்பிக்கப் பட்டது –

————–

ஶ்லோகம் 53 –
எம்பெருமான் கருணையுடன் “எப்படி நாம் ஆளவந்தாரைக் கலக்கத்தில் இருக்கும்படி விடுவது?” என்று எண்ணி
“நீர் யார்; நீர் யாரை என்னிடம் ஸமர்ப்பித்தீர்?” என்று கேட்க,
ஆளவந்தார், தன்னுடைய ஸ்வரூபத்தை ஆழ்வார் திருவாய்மொழி 2.3.4இல் “எனதாவி ஆவியும் நீ … எனதாவி யார்? யானார்?”
(நீயே எனக்கு அந்தராத்மா; என்னுடைய ஆத்மா யார்? நான் யார்? எல்லாம் உன்னுடையவையே) என்றபடி
“உன்னுடைய உடைமையை நீயே ஏற்றுக்கொண்டாய்; ஆத்மாவை ஸமர்ப்பிப்பதும் ஆத்மாவைத் திருடுவது போலன்றோ?”
என்று சொல்லி தன்னுடைய ஆத்ம ஸமர்ப்பணச் செயலுக்கு வருந்துகிறார்.

மம நாத ! யதஸ்தி யோ’ஸ்ம்யஹம்
ஸகலம் தத்தி தவைவ மாதவ |
நியதஸ்வம் இதி ப்ரபுத்ததீ:
அதவா கிந்நு ஸமர்ப்பயாமி தே ||

ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானே! லக்ஷ்மீநாதனே! என்னுடைய எல்லா உடைமைப் பொருள்களும் நானும்
எப்பொழுதும் உன்னுடையவையே. இது தெரிந்த நான், உனக்கு எதை ஸமர்ப்பிப்பேன்?

எனது நா என்ப எல்லா மாதவ யேற்று நிற்கும்
உனதலான் மற்று எவர்க்கும் உண்மையில் உரிய தாமோ
தனி முதலாகு நீயே சருவ சேடி எனத் தேர்ந்தே
யினி யுனதடிக்கு எதை நான் இன்புடன் சமர்ப்பிப்பேனே –53-

ஸ்ரீ யபதியே என்னுடைய சகலமும் அவைகளுக்குத் தங்கும் இடமான நானும் ஆகிய எல்லாம் உண்மையில்
ஸர்வ சேஷியான உனக்கே சொந்தம் அல்லால் மற்று எவருக்கு ஆயினிமாமோ
இப்படி சகலமும் உன்னுடையதே எனத் தெளிந்த உணர்ச்சியை யுடைய நான்
முன் செய்த ஆத்ம சமர்ப்பணம் அபராதத்தோடே ஒக்குமாயின் உன் திருவடிகளுக்கு வேறே எதை ஸமர்ப்பிக்கிப் போகின்றேன்

—————–

ஶ்லோகம் 54 –
ஆளவந்தார் எம்பெருமானிடம் “ஆத்மாவைத் திருடுவதற்கு ஸமமான இந்த ஆத்ம ஸமர்ப்பணத்தை நான் நிறுத்தாததால்,
உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினால் என்னுடைய சேஷத்வத்தை வெளியிட்டதைப் போலே,
பரபக்தி, பரஞானம் மற்றும் பரமபக்தி ஆகியவைகளையும் அளித்து,
இந்த ஞானம் உன்னுடைய கைங்கர்யத்துக்கு உதவும்படிச் செய்” என்கிறார்.

அவபோதிதவாநிமாம் யதா
மயி நித்யாம் பவதீயதாம் ஸ்வயம் |
க்ருபயைததநந்ய போக்யதாம்
பகவந்! பக்திம் அபி ப்ரயச்ச மே ||

என் ஸ்வாமியே! எப்படி உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் என்னுடைய சேஷத்வத்தை எனக்கு அறிவுறுத்தினாயோ,
அதேபோல வேறு எங்கும் கிடைக்காத, உன்னிடத்தில் பக்தி செய்யும் அந்த இனிய அனுபவத்தையும், நீயே அளிக்க வேண்டும்.

என்னிடம் எக்காலத்தும் இசைந்து நின் விஷயமாக
மன்னிய யுரிமை நாத வகை யுடன் அறிவித்தால் போல்
]நின்னிடம் அன்றி மற்றோர் நிலையினைப் பற்றாதாகும்
பன்னரும் பக்தி எற்குப் பணித்திடாய் அன்பு கூர்ந்தே –54–

ஏ நாத எக்காலத்தும் என் பக்கலில் இசைந்து நிற்கும் உன் விஷயமான அநந்யார்ஹ சேஷத்வத்தை வகையுடன்
தெரிவித்து இருக்கும் வண்ணமே யுன்னை விட்டு வேறே ஒன்றிலும் போக்யதையைப் பெறாது உன்னிடத்தே யுண்டாகும்
பரம பக்தியை கேவலம் உன்னுடைய கிருபையாலேயே அடியேனுக்கு உண்டு பண்ண வேணும்

—————–

ஶ்லோகம் 55 –
ஆளவந்தார் பகவானிடத்தில் அதிகமான பக்தியைப் பெற்றபின், பகவானிடத்தில் அடிமைத்தனத்துடன் நிறுத்தாமல்,
அவனுடைய அடியார்களுக்கு அடிமையாக இருப்பதை ப்ரார்த்திக்கிறார்.

தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||

எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும்.
மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.

உனது கைங்கர்ய இன்பம் ஒன்றையே நாடுவோர் சீர்
மனையினில் கிருமிச் சென்மம் வாய்க்கினும் மகிழ்வன் நானே
நினதொழி மற்றோர் மார்க்க நேடுவார் தன்னிடத்தில்
இனிமையார் எண் கணார் தம் சென்மமும் இச்சியேனே –55-

உன் கைங்கர்யம் ஒன்றிலேயே விருப்பம் கொள்ளும் பாகவதர்களுடைய திரு மாளிகையில் எனக்கு
ஒரு கிருமி புழு ஜென்மம் யுண்டாயினும் அதை நான் மகிழ்ந்து அடைவேன்
அப்படி அன்றி உன் கைங்கர்யங்களை விட்டு மற்ற எந்த மார்க்கத்தை ஏனும் இச்சிப்போருடைய
குடி இருப்பில் ப்ரம்மாவினுடைய சென்மம் கிடைத்த போதிலும் அதில் எனக்கு அபேக்ஷை இல்லை –

—————–

ஶ்லோகம் 56 –
ஆளவந்தார் “எனக்கு ஒரு வைஷ்ணவரின் திருமாளிகையில் பிறக்கும் பெருமை தான் வேண்டுமோ?
அவர்கள் என்னைக் கண்டால், என்னைத் தள்ளி விடாமல், “இவன் நம்மவன்” என்று கருதித் தங்கள் விசேஷமான
கருணையை எனக்கு அளிக்க வேண்டும்படி நீ செய்ய வேண்டும்” என்கிறார்.

ஸக்ருத் த்வதாகார விலோகநாஶயா
த்ருணீ க்ருதாந் உத்தம புக்தி முக்திபி: |
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய
க்ஷணே’பி தே யத்விரஹோ’திதுஸ்ஸஹ: ||

உன்னுடைய பிரிவைத் தாங்க முடியாதவர்களான, எத்தனை இன்பங்களும் மோக்ஷமும் பெற்றிருந்தாலும்
உன்னுடைய திருமேனியை ஒரு முறை பார்ப்பதைக் கருதினால், அவற்றைப் புல்லைப் போல மதிப்பவர்களான
சிறந்த வைஷ்ணவர்களின் கருணைப் பார்வைக்கு நான் இலக்காகும் தகுதியை எனக்குக் கொடு.

ஒரு முறை யுன் வடிவு அழகின் நோக்கில் யுறும் ஆசையினால் உயர்ந்து சீர்த்த
வரிய சுக போகமுடன் முத்தியையும் அபதார்த்தம் என நினைப்போர்
பிரிவதினால் ஒரு நொடியும் ஆற்றாமை யுனக் கூட்டும் பேற்றை யுற்றோர்
பரம வர பாகவதர் பார்வைக்குப் பாத்திரனா எனைப் பணிப்பாய் –56-

உன் திவ்ய மங்கள விக்ரகத்தை ஒரு முறை சேவிக்க ஆசை கொண்டு அதினால் அருமையான பிரமாதி போகத்தையும்
அதற்கும் மேலான மோக்ஷத்தையும் கூட ஒரு அபதார்த்தமாக நினைக்கின்றவர்களும்
தாம் ஒரு க்ஷணம் பிரிந்தாலும் அப்பிரிவினால் பொறுக்க முடியாத சங்கடத்தை உனக்கே உண்டு பண்ணுபவருமான அந்த பரம பாகவதர்களுடைய கடாக்ஷத்துக்குத் தக்கவனாக அடியேனைச் செய்து அருள வேண்டும் –

—————–

ஶ்லோகம் 57 –
முன் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஶேஷத்வத்தின் உயர்ந்த நிலையான அடியார்களுக்கு அடிமைப்பட்டிருப்பதை அனுபவித்தார்.
இங்கே ஶேஷத்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் விஷயங்களில் தனக்கு இருக்கும் வெறுப்பைச் சொல்லி,
எம்பெருமானிடத்தில் “அவற்றை நீக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.

ந தேஹம் ந ப்ராணாந்ந ச ஸுகம் அஶேஷாபிலஷிதம்
ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஶேஷத்வ விபவாத் |
பஹிர்பூதம் நாத! க்ஷணமபி ஸஹே யாது ஶததா
விநாஶம் தத்ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபனம் இதம் ||

ஸ்வாமியே! உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய
தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும்
அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும்.
மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை.

உன்னுரிமையாம் பெருமை யிற்கு வெளியுள்ள யுடல் வேண்டிலேன் உயிர் வேண்டிலேன்
பின்னும் எவரும் பெற விரும்பும் சுகமானம் முதலான பிறவும் வேண்டிலேன்
என்னுடைய நாத மது ஸூதன சகிக்ககிலன் இந்நொடியில் இவை களுக்கு எலாம்
மன்னிய விநாஸம் பலவகையில் யுற வேண்டுவன் இனி வசனம் அது வாய்மை யதுவே –57-

ஏ ஸ்வாமியே உன்னுடைய சேஷத்வமாகிய பெருமைக்கு வெளிப்பட்டுள்ள சரீரத்தையும் உயிரையும்
எல்லாரும் அடைவதற்கு ஆசைப்படக் கூடிய ஸுகத்தையும் ஆத்மாவையும் இன்னும் இது போன்ற மற்ற எதையும் நான் வேண்டிலேன் –
ஏ மது ஸூதன இவைகள் ஒன்றையும் நான் சகிக்க வல்லேன் அல்லேன்
இவ்வஸ்துக்கள் யாவும் பல விதங்களால் இந்த க்ஷணத்தில் நாஸம் அடையட்டும்
இப்படி சொல்லும் அடியேனது விண்ணப்பம் சத்தியமானதே –

—————–

ஶ்லோகம் 58 –
எம்பெருமான் “இந்த ஸம்ஸாரத்தில் என்னுடைய கோபத்துக் காரணமான பகவத் அபசாரம் முதலிய எத்தனையோ விஷயங்கள் இருக்க,
கைங்கர்யத்துக்கு விரோதியான இவற்றில் வெறுப்பு ஏற்பட்டு, யோகிகளுக்கும் அரிதான இந்நிலையை ப்ரார்த்திப்பவரும் உளரே!”
என்று ஆச்சர்யப்பட,
ஆளவந்தார் “இந்த தோஷங்களை நீக்கக்கூடிய தேவரீரின் எல்லையில்லாத திருக்கல்யாண குணங்களை
நினைத்து இதை ஆசைப்பட்டேன்” என்கிறார்.

துரந்தஸ்யானாதேர் அபரிஹரணீயஸ்ய மஹதோ
நிஹீநாசாரோ’ஹம் ந்ருபஶுரஶுபஸ்யாஸ் பதம் அபி |
தயாஸிந்தோ! பந்தோ! நிரவதிக வாத்ஸல்யஜலதே
தவ ஸ்மாரம் ஸ்மாரம் குணகணம் இதீச்சாமி கதபீ: ||

கருணைக் கடலான ஸ்வாமியே! என்னுடன் எல்லா உறவுகளையும் உடையவனே! வாத்ஸல்யக் கடலாக இருப்பவனே!
நான் மிகப் பெரிய, அநாதி கால, முடிவில்லாத, போக்க முடியாத பாபங்களை உடையவனாக இருந்தாலும்,
மீண்டும் மீண்டும் உன்னுடைய திருக்கல்யாண குணங்களை நினைப்பதால், பயமில்லாமல் இதை ஆசைப் படுகிறேன்.

ஆதியறத் துன்பமுறு மகத்தாய் நின்று யூன் அருள் அதினாலே யன்றி யகற்ற ஒண்ணா
வேதமுறும் பாவத்திற்கு இடமாய் நின்று ஓர் ஈன நடை யுற்று நரப்பசு போன்றேனும்
மாதவ தயோ ததியே பந்துவே ஓர் வரம்பில்லா வாற் சலியக் கடலே நின் தன்
கோதிலவாம் குண கணங்கள் எண்ணி எண்ணிக் கூசாது இங்கனம் இச்சை கொள்ளுவேனே –58–

அநாதி யாய் துன்பங்களை விளைவித்துக் கொண்டு நாளுக்கு நாள் விருத்தி அடைந்து பருத்து நின்று
உன் கிருபை ஒன்றினால் அன்றி மற்று எதினாலும் பரிஹரிக்க முடியாதன வாயுள்ள பாவங்களுக்கு இருப்பிடமாகி
துராசாரம் யுடையவனாய் நர ஜன்மம் எடுத்தும் ஞானம் இல்லா ஒரு பசுவைப் போலே இருந்தேனாயினும்
ஏ மாதவ ஏ தயா சாகரமே ஏ பந்துவே கரை இல்லாத வாத்சல்யக் கடலே உன்னுடைய அநந்த திருக்கல்யாண கூட்டங்களை நினைத்து
நினைத்து அஞ்சாமல் இவ்வண்ணம் பரம புருஷார்த்தத்தில் இச்சை கொள்கின்றேன் –

—————-

ஶ்லோகம் 59 – எம்பெருமான் “நீர் இச்சாமி என்று முன் ச்லோகத்தில் கூறியபடி உண்மையிலே
என் விஷயத்தில் ஆசை கொண்டுள்ளீரா?” என்று கேட்க
“நான் மந்த மனதை உடையவன் ஆகையால் தேவரீருடைய திருமுன்பே, தேவரீரின் பெருமைக்குத் தகுந்த
என் ஆசையை வெளியிட முடியவில்லை. என்னுடைய ஆசையைக் காட்டும் வார்த்தைகளைக் கொண்டு மனதைத் திருத்தி,
இந்நிலை எனக்கு உண்மையில் ஏற்படும்படிச் செய்ய வேண்டும்” என்கிறார்.

அநிச்சந்நப்யேவம் யதி புநரிதீச்சந்நிவ ரஜஸ்-
தமஶ் சன்னஶ்சத்மஸ்துதி வசன பங்கீமரசயம் |
ததா’பீத்தம் ரூபம் வசனம் அவலம்ப்யா’பி க்ருபயா
த்வமேவைவம் பூதம் தரணிதர! மே ஶிக்ஷய மந: ||

பூமியை எடுத்த எம்பெருமானே! இந்த அடியவன் ரஜோ மற்றும் தமோ குணங்களால் மூடப்பட்டிருந்தாலும்,
என்னிடத்தில் உண்மையான ஆசை இல்லாமல் இருந்தாலும், உண்மையான ஆசை உடையவர்களைப் போலே
உன்னை மயக்கும் வார்த்தைகளை நான் சொன்னாலும், அதையே காரணமாகக் கொண்டு,
உன்னுடைய கருணையால் என்னுடைய மனதைத் திருத்தி யருள வேண்டும்.

இவ்வகையே பேற்றுக்குத் தக்க இச்சை இலேனேனும் உள்ளவன் போல் நடித்து உன் தன்
மெய்யறியாத் தம விரசோ குணங்கள் மேலாய் மிறை யுற்ற கபட மனது யுடையேனாகிப்
பொய் வசனம் கொண்டு துதி புரிந்தேனேனும் பூவளித்தோய் இதையே நீ பொருட்டாய்க் கொண்டு என்
உய்யும் வகை யுணர்ந்திடுமாறு என்னுள்ளத்தை யுன் அருளால் சிஷித்துத் திருத்துவாயே –59-

இம்மாதிரி பேற்றுக்குத் தகுந்த இச்சையை யுடையேன் அல்லேனேனும் உடையவன் போல் நடித்து
ராஜஸ தாமஸ குணங்களால் மூடப்பட்ட நான் என் கபட மனத்துடன் பொய் வசனங்களைக் கொண்டு உன் ஸ்தோத்ரம் புரிந்தேனேனும்
ஏ பூமியை நிர்த்தாரணம் பண்ணினவனே -இதையே ஒரு பற்றாசாகக் கொண்டு என் கபட மனத்தை உன் கிருபையால் நீயே சிஷித்து
நான் உஜ்ஜீவிக்கும் வகையை உணர்ந்திடுமாறு அடிமைத்தனத்துக்கு அனுகூலமாம் படி அதைத் திருத்தி அருள வேணும் –

——————-

ஶ்லோகம் 60 –
எம்பெருமான் “உம்மிடத்தில் ஆசையும் இல்லாதபோதும், நானே உம்மிடத்தில் ஆசையை உண்டாக்கி
உம்மைக் காக்கவும் செய்ய வேண்டும் என்கிறீரே – இவற்றை நான் ஏன் செய்ய வேண்டும்” என்று கேட்க
ஆளவந்தார் தனக்கும் அவனுக்கும் உள்ள ஒழிக்க ஒழியாத உறவைக் காட்டுகிறார்.

பிதா த்வம் மாதா த்வம் தயித தநயஸ்த்வம் ப்ரிய ஸுஹ்ருத்
த்வமேவ த்வம் மித்ரம் குருரஸி கதிஶ்சாஸி ஜகதாம் |
த்வதீயஸ் த்வத்ப்ருத்யஸ் தவ பரிஜநஸ் த்வத்கதிரஹம்
ப்ரபந்நஶ் சைவம் ஸத்யஹமபி தவைவாஸ்மி ஹி பர: ||

இவ்வுலகங்களுக்கு நீயே தந்தை; நீயே தாய்; நீயே விரும்பத்தக்க பிள்ளை; நீயே நல்ல உள்ளம் கொண்ட நண்பன்;
நீயே நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பன்; நீயே குரு; நீயே உபாயம் (வழி) மற்றும் உபேயம் (குறிக்கோள்);
நான் உன்னுடையவன்; உன்னுடைய அடிமை; உன்னுடைய தொண்டன்;
உன்னையே சிறந்த உபேயமாகவும், உபாயமாகவும் கொண்டுள்ளவன்; ஆகையால் நான் ஏன் உன்னால் ரக்ஷிக்கப்படக் கூடாது?

அத்தனும் நீ யன்னையும் நீ செகத்திற்கு எல்லாம் அரு மகவும் மித்ரனும் இதனும் நீயே
வித்தகமாம் குரு நீயே கதியும் நீயே வினையேனும் நின்னடிமை கதி வேறு இல்லேன்
உத்தமமாம் உன் பணிகள் பலவும் செய்ய யுரியேனான் உனை அடைக்கலம் புகுந்தேன்
எத்திறனும் இலனாய் யுன் இணக்கம் கொண்டேன் இனி யான் உனக்கே யாம் பாரம் தானே –60-

இவ்வுபய விபூதிகளுக்குள் அடங்கிய எல்லா செகங்களுக்கும் தந்தை நீயே தாய் நீ
அருமையான புத்ரன் நீ -மித்ரன் நீ ஹிதனும் நீ -ஆச்சார்யனும் நீ -அடைய வேண்டிய கதியும் நீயே
அடியேன் உன்னுடைய சேஷ பூதன் -ஊழியன் -உன்னால் போஷிக்கத் தக்கவன்
எத்திறனும் இல்லேனாய் உன்னையே கதியாக அடைந்துள்ளேன்
ஆகையால் என்னை ரக்ஷிக்கும் பாரம் உன்னுடையதே –

—————–

ஶ்லோகம் 61 –
எம்பெருமான் ஆளவந்தாரிடம்
“நீர் உயர்ந்த வம்சத்தில் பிறந்துள்ளீரே. ஏன் எப்படி உதவியற்றவரைப் போல் பேசுகிறீர்?” என்று கேட்க,
ஆளவந்தார்
“நான் உயர்ந்த வம்சத்தில் பிறந்திருந்தாலும், என்னுடைய பெரிய பாபங்களினாலே, ஸம்ஸாரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்;
என்னை நீயே இதிலிருந்து எடுத்தருள வேண்டும்” என்கிறார்.

ஜநித்வா’ஹம் வம்ஶே மஹதி ஜகதி க்யாதயஶஸாம்
ஶுசீநாம் யுக்தாநாம் குணபுருஷ தத்த்வ ஸ்திதி விதாம் |
நிஸர்கா தேவ த்வச்சரண கமலைகாந்த மநஸாம்
அதோ’த: பாபாத்மா ஶரணத! நிமஜ்ஜாமி தமஸி ||

புகலிடம் கொடுக்கும் ஸ்வாமியே! நான் பரிசுத்தமான, உன்னுடன் எப்பொழுதும் இருக்க விரும்புபவர்களான,
சித் மற்றும் அசித் ஆகியவற்றின் ஸ்வரூபத்தையும் தன்மைகளையும் நன்கு உணர்ந்தவர்களான,
உன் திருவடிகளிலேயே எப்பொழுதும் தன்கள் மனதை வைத்திருக்கும் சிறந்தவர்களான, ப்ரஸித்தமான புகழை உடைய
பெரியோர்கள் அவதரித்த, உயர்ந்த வம்சத்தில் பிறந்திருந்தாலும், பாபமே வடிவெடுத்தவனாகையாலே,
இந்த ப்ரக்ருதியில் ஆழமாக மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.

பூ தலம் எங்கும் பரவும் புகழ் பெற்றோராய் புனிதரு நித்ய யோகம் புரிவோர் தாமாய்
கோதில தாய்க் குண புருட தத்துவத்தின் குறிப்பு உணர்ந்து ஜனன முதல் இயற்க்கை கொண்டு
மாதவ நின் மலர் அடி பால் நிலைத்து நின்ற மனமுடையோர் தம் சிறந்த மரபில் தோன்றி
ஏதமுறு இருள் ப்ரக்ருதியில் ஆழ்வேன் எட்டாமே சரணிய மா பாவி நானே –61-

ஜகத் பிரசித்தமான கீர்த்தியை யுடையவர்களாய் மஹா பரி ஸூத்த ஆத்மாக்களாய்
உன்னுடன் நித்ய யோகத்தை அபேக்ஷித்தவர்களாய்
சித் அசித் ஈஸ்வரர்களுடைய ஸ்வரூப ஸ்வ பாவ ஸம்பந்தங்களை அறிந்தவர்களாய்
ஜனன காலம் தொடங்கி இயற்கையாவே உன் திருவடிட் தாமரைகளில் நிலைத்து நின்ற மனத்தை யுடையவர்களாய்
விளங்கும் உத்தமர்களுடைய திரு வம்சத்திலே ஜனித்து ஆபாஸமான இருள் நிறைந்துள்ள இந்த ப்ரக்ருதியில்
நீச்ச நிலை யற்று அமிழ்ந்து கிடக்கின்றேன்
மஹா பாவியேன் -ஏ -சரண்யனே –

—————-

ஶ்லோகம் 62 –
எம்பெருமான் “உயர்ந்த வம்சத்தில் பிறந்தும் அது ப்ரயோஜனப்படாமல் போகும் அளவிற்கு உம்மிடத்திலே
என்ன பாபங்கள் உள்ளன?” என்று கேட்க,
ஆளவந்தார் சென்ற ஶ்லோகத்தில் பாபாத்மா என்று சொன்னதை விளக்கி அருளுகிறார்.

அமர்யாத: க்ஷுத்ரஶ் சலமதிர் அஸூயா ப்ரஸவபூ:
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஶோ வஞ்சநபர: |
ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: கதம் அஹமிதோ து:க்க ஜலதே:
அபாராதுத்தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ: ||

நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன், தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன்,
நிலை இல்லாத மனதை உடையவன், பொறாமையின் பிறப்பிடம், எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன்,
கைவிடவேண்டிய கர்வத்தை உடையவன், காமத்துக்கு வசப்பட்டவன், ஏமாற்றுபவன், க்ரூரமான செயல்களில் ஈடுபட்டவன்
மற்றும் பாபங்களில் மூழ்கியுள்ளவன். நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக்கடலின் கரையை அடைந்து
உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்?

நீதி நெறி நீத்தவனேன் நீசனானேன் நிலையின் மதியேன் பொறாமைக்கு இடமாய் நின்றேன்
பாதகனேன் இறுமாந்தேன் நன்றி கொன்றேன் படும் காமனுக்குப் பர வசனே யானேன்
கோதுடைய வஞ்சகனேன் குரூர நெஞ்சன் கொடும் பாவியாம் அடியேன் குணிக்க ஒண்ணா
வேத முறு மிக்கேதக் கடல் கடந்தே எங்கன நின்னடி இணையில் பணி செய்வேனே –62-

சந் மார்க்கத்தைத் துறந்தவனாய்
நீசமான விஷயங்களில் சபலம் யுடையேனாய்
நிலையாது எப்பொழுதும் சஞ்சலிக்கும் புத்தி யுடையேனாய்
பொறாமைக்கு உத்பத்தி ஸ்தானமான வனாய்
நன்றி கொன்றவனாய்
மஹா பாதகனாய்
அஹங்காரியாய்
காம வசத்தனாய்
வஞ்சகனாய்
குரூரம் உள்ளவனாய்
பாவத்தில் நிலைத்தவனாய் நின்ற
நான் கரை காண முடியாத இந்தத் துன்பக் கடலில் நின்றும் எப்படிக் கரை ஏறி உன் திருவடிகளிலே கைங்கர்யம் பண்ணப் போகின்றேன் –

—————–

ஶ்லோகம் 63 –
எம்பெருமான் “நீர் தெரிந்தே செய்த தவறுகளை நான் எப்படிப் போக்க முடியும்?” என்று கேட்க,
ஆளவந்தார் “காகாஸுரன் மற்று சிசுபாலன் ஆகியோர் செய்த அபராதங்களைப் பொறுத்த தேவரீரால்,
என்னுடைய தவறுகளைப் பொறுக்க முடியாதோ?” என்கிறார்.

ரகுவர! யதபூஸ்த்வம் தாத்ருஶோ வாயஸஸ்ய
ப்ரணத இதி தயாளுர் யச்ச சைத்யஸ்ய க்ருஷ்ண! |
ப்ரதிபவம் அபராத்துர் முக்த! ஸாயுஜ்யதோ’பூ:
வத கிமபதமாகஸ்தஸ்ய தே’ஸ்தி க்ஷமாயா: ||

ரகுகுல திலகமான ஸ்ரீராமராக அவதரித்தவனே! பெரிய தவறைச் செய்த காகாஸுரன் விஷத்தில்,
அவனை ஒரு சரணாகதனாகக் கொண்டு, உன் கருணையைக் காட்டவில்லையோ?
எந்தத் தவறுகளையும் பொருட்படுத்தாத கண்ணனே! சேதி குலத்தைச் சேர்ந்த, பிறவிதோறும் உன்னிடத்தில் அபராதம் செய்த
சிசுபாலனுக்கு நீ மோக்ஷத்தையே அளித்தாயே. எந்த பாபம் தேவரீருடைய பொறுமைக்கு விஷயமாகாது? எனக்கு தேவரீர் விளக்கியருள வேண்டும்.

அத்தகைய காகனையும் அன்று அளித்தாய் அடி பணிந்தான் என விரகு திலக ராமா
மொய்த்த பவம் தொறும் பிழையே முடித்து வந்த மூர்க்கன் சிசு பாலனுக்கும் கண்ண அந்நாள்
உத்தமமாம் ஓர் பதவி யுதவினாய் ஒப்பிலாதாம் பொறுமைக்கு ஓர் இலக்கு ஆகாத
எத்தகைய அபராதம் எங்கு தானும் இசைந்துளதோ என் நாத இயம்புவாயே –63-

ஏ ரகூத்தமா -அத்தன்மைத்த மஹா அபராதியான காகாசூரன் கீழே விழ-அவனை சரணாகதி பண்ணினவனாகக் கொண்டு ரக்ஷித்தாய்
ஜென்மம் தோறும் அபராதமே செய்து நின்ற அந்த சிசுபாலனுக்கும் ஏ கண்ணபிரானே ஸாயுஜ்ய பதவியைத் தந்து அருளினை
ஆதலால் உன் க்ஷமா குணத்தால் -ஆஸ்ரித அபராதங்களை அறியாதவன் போல் இருக்கும் தன்மையினால் முக்தனானவனே
இவ்விதமான உன்னுடைய பொறுமைக்கும் அகப்படாமல் விலக்கான எந்த அபாராதமேனும் எங்காயினும் இருக்கின்றதோ
ஏ நாத அருளிச் செய்வாய் –

————

ஶ்லோகம் 64 –
எம்பெருமான் “ஸ்வதந்த்ரனான நான் சிலருக்கு சில விசேஷ காரணங்களுக்காக உஜ்ஜீவனத்தைச் செய்து கொடுத்தால்,
அதுவே என்னுடைய பொதுவான நடத்தையாகக் கருதமுடியுமோ?” என்று கேட்க,
ஆளவந்தார் “கடற்கரையில், நீ உன்னிடத்தில் சரணடைவர்களை ரக்ஷிப்பேன் என்று சபதம் எடுத்தபோது,
அதில் என்னைத் தவிர என்று சபதம் செய்தாயோ?” என்கிறார்.

நநு ப்ரபந்நஸ் ஸக்ருதேவ நாத!
தவாஹம் அஸ்மீதி ச யாசமாந: |
தவாநுகம்ப்ய: ஸ்மரத: ப்ரதிஜ்ஞாம்
மதேகவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே ||

ஸ்வாமி! “நான் உன்னிடத்தில் ஒருமுறை சரணடைந்துள்ளேன்” என்றும்
“உனக்கே நான் தொண்டு செய்ய வேண்டும்” என்றும் சொல்லி,
நீ கடற்கரையில் விபீஷணன் சரணடைய வந்த ஸமயத்தில் செய்த சபதத்தை நினைக்கும் நான்,
உன்னுடைய கருணையைப் பெறத் தகுந்தவன்; தேவரீருடைய சபதம் என் ஒருவனைத் தவிர்த்தோ?

ஒரு முறை யுனக்கு அடைக்கலம் புகுந்து எனக்கே யான
யுரிமையை யுடையேனாக வேண்டு நான் சபதம் முன்னி
யருளு நின்னருளுக்கு இலக்கா வாகுவன் நாத னினில்
விரதம் என் ஒருவனைத் தான் விலக்கியே ஒழிக்கும் கொலோ –64-

ஏ நாத ஒரு தரம் உனக்கு அடைக்கலம் புகுந்து உனக்கே சேஷபூதன் ஆகின்றேன் என்று பிரார்த்திக்கும் அடியேன்
தென் கடல் கரையில் செய்து அருளிய ப்ரதிஜ்ஜையை நினைத்து உன் கிருபைக்குப் பாத்திரம் ஆகிறேன்
இப்படிப்பட்ட உன் ஸங்கல்பம் அடியேன் ஒருவனை மாத்ரம் விலக்கி ஒழித்து விடுமோ -ஒருக்காலும் ஒழியாது அன்றோ –

—————–

ஶ்லோகம் 65 –
ஆளவந்தார் “நீ ஸ்ரீராமாயணம் அயோத்யா காண்டம் 18.30இல் ‘ராமோ த்விர் நாபிபாஷதே’
(ஸ்ரீராமர் இரண்டு விதமாகப் பேச மாட்டார்) என்ற சபதத்தைக் கை விட்டாலும்,
என்னுடைய புண்ய பாபங்களைக் கருதாமல், பெரிய முதலியாரான ஸ்ரீமந்நாதமுனிகளுடன் எனக்கு இருக்கும்
ஞானத்தால் மற்றும் பிறப்பால் இருக்கும் ஸம்பந்தத்தைக் கருத்தில் கொண்டு, என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கேட்க,
எம்பெருமானும் “இந்த வழியில் எந்தக் குறையும் இல்லை; இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று சொல்லி
இந்த வரத்தை ஆளவந்தாருக்கு அளித்தான்.
ஆளவந்தாரும், த்ருப்தியடைந்தவராய், ஸ்தோத்ரத்தை முடிக்கிறார்.

அக்ருத்ரிம த்வச்சரணாரவிந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதிம் ஆத்மவந்தம் |
பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய
ப்ரஸீத மத்வ்ருத்தம் அசிந்தயித்வா ||

எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான,
தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும்.

இயற்கையில் இசைந்து இலங்கு நின் மலரடியின் பக்தி
வியப்பினுக்கு எல்லையாம் என் வித்தகப் பாட்டனாராம்
நயப்புறும் ஸ்ரீ மன் நாத முனிகளைக் கடைக் கணித்து என்
கயப்புறும் காதை நோக்காக் கனிவுடன் அருளுவாயே –65-

இயற்கையினாலேயே யுண்டான உன் திருவடிக்கண் உற்ற பக்தியின் விசேஷத்துக்கு எல்லை போன்றவரும்
ஆத்ம ஞானம் யுடையவரும் -ஜென்மத்தாலும் ஞானத்தாலும் எனக்குப் பாட்டனாருமான
ஸ்ரீ மன் நாத முனிகளைக் கடாக்ஷித்து அடியேனுடைய கைப்பு உண்டாக்கும் ஹீன சரித்திரங்களைப் பாராது
அடியேன் அபராதங்களைப் பொறுத்து அன்பு கூர்ந்து அருள வேணும் –

————-——————————————————————-——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னத்துக்குள் ஸ்ரீ மன் நாதமுனிகள் விஷயமாக சதுஸ் ஸ்லோஹி –

July 9, 2022

ஸ்வாதயன் நிஹா சர்வேஷாம்
த்ரய்யந் தார்த்தம் ஸூ துர் க்ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர
தம் வந்தே யாமுநாஹ் வயம்-

ஸ்வாதயன்-அனுபவத்திக் கொண்டே –
யன் ப்ரத்யயம் -அனுபவிப்பித்து-
இஹ -இந்த காலத்தில் -இத்தைச் சொல்லும் பொழுது -இதில் –
சர்வேஷாம்-சர்வாதிகாரம் இந்த ஸ்தோத்ரம் -ஸ்ரத்தையே வேண்டுவது
ஸூ துர்க் ரஹம்–த்ரய்யந் தார்த்தம்-அறிவரிய வேதாந்தார்த்தங்களை
ஸ்தோத்ர யாமாஸ-ஸ்தோத்ர ரூபமாக வெளியிட்டு அருளினாரோ
யோகீந்திர-எந்த யோகி ஸ்ரேஷ்டர்–எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவனான ஆளவந்தார் –

————

நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம

நமோ நமோ யாமுநாயா-அஷ்டாக்ஷர மந்த்ரம் போல் இதுவே-

———————————————————

ஸ்ரீமத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லாபஸ் ஸ்ரீ தர்ஸ்சதா –

அபயப்ரதா நாமா நமஸ் மதகுரு மஹம் பஜே
யத் கடாஷா தயம் ஜந்துர புநர் ஜன்மதாம் கத

————————————————-

ஸ்ரீ பகவத் ஸ்தோத்ரம் பண்ணப் புக்கவர்
ஆசார்ய ஸ்துதியிலே பார்ப்பான் என் -என்னில்
கர்னே ஸ்ப்ருஷ்டே கடிம் சாலயதி -போலே அசங்கதம் -என்னில்
ஸ்ரீ பகவத் விஷயத்தைத் தமக்கு ஸ்துதி விஷயம் ஆக்கிக் கொடுத்த உபகார ஸ்ம்ருதியாலும்
ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு அடியான ஜ்ஞான வைசத்யார்த்தமாகவும்
அவிக்ன பரி சமாப்த் யர்த்தமாகவும் -பண்ணுகிறார் -ஆகையாலே சங்கதம் –

ஆனால் மானசமாக அமையாதோ -என்னில்
இப் பிரபந்தத்தை அதிகரிப்பார்க்கு உபகாரம் ஆகையாலே வாசிகம் ஆக்கினதும் யுக்தம் –

உபகார ச்ம்ருதியாலே வந்த ஆசார்ய அனுவர்த்தனம் பிரமாண பிரசித்தம் –
ஆசார்ய தேவோ பவ -என்றும்
நம ருஷிப்யோ மந்திர க்ருத்ப்ய -என்றும்
ச ஹி வித்யா தஸ்தம் ஜநயதி தச் ஸ்ரேஷ்டம் ஜன்ம -என்றும்
மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்திர பிரதே குரௌ -என்றும்
ஒரு ரத்னத்தை ஒருவன் கொடுத்தால் அதனுடைய மஹார்க்கத்தை அறியக் கொடுத்தவனை
ஆதரிக்க பிரமாணம் வேண்டுமோ -ஆகையால் இது உபபன்னம் –

ஜ்ஞான வைசத் யார்த்தமாக ஆசார்ய அனுவர்த்தனம் சிஷ்டாசார ப்ராப்தம் –
அபி வந்தா குரு நாதௌ-சிஷ்யதீ பதமி நீர வீன் –இது மீமாம்சகா -என்றும்
யதா கனன் கனித்ரேண-இதி மனு -என்றும்
யஸ்ய பிரசாதாத் வஷ்யாமி நாராயண கதாமிமாம் -இதி வைசம்பாயன -என்றும்
லௌகிகம் வைதிகம் வாபி -இதி மனு -என்றும்

அங்கனே ஆகில்
ஸ்வ ஆசார்யனை விட்டு அவர் குருக்களை பற்றுவான் என் என்னில்
ஆசார்ய ஸ்துதியிலும் ஆசார்ய பிரியம் இறே உத்தேச்யம் –
ஸ்வாஸ்ரயணத்தில் காட்டில் ஸ்ரீ பெரிய முதலியாரை ஆஸ்ரயிக்கும் இடத்தில்
ப்ரீதி மிக்கு இருக்கையாலே அதைப் பேசுகிறார் –

ஸ்ரீ பெரிய முதலியார் ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் ப்ராவண்யம் அடியாக பிறந்த ஜ்ஞாநத்தை
ஸ்ரீ ஆழ்வார் பிரசாதத்தாலெ பெற்று -தம் அளவிலே பர்யவசிக்கை அன்றிக்கே
பின்பு உள்ளார்க்கும் உபகாரமாம் படி
இந்த தர்சன ஸ்தாபகர் ஆனபடியாலும் –
ஸ்ரீ மணக்கால் நம்பி -பெரிய முதலியார் உடைய அர்த்தம் இது
உம்முடைய பேற்றுக்கு எல்லாம் அவருடைய திருவடிகளிலே சம்பந்தமே -என்கையாலும்
அவரை ஆஸ்ரயிக்கிறார்

இதை நினைத்து இறே ஸ்ரீ பட்டர் – ப்ரதமமபி குரும் நாத மீடே -என்றதும் .
வேத காரணமான பிரணவம் வேதாத் யந்தம் களிலே ஆனால் போலே –

இங்கும் ஆதி அந்தம் களிலே ஆசார்ய ஸ்துதி யாய்
நடுவிலே பகவத் ஸ்தோத்ரம் ஆக இருக்கிறது –

முதலிட்டு மூன்று ஸ்லோகத்தாலே
ஸ்ரீ பெரிய முதலியாரை நமஸ்கரிக்கிறார் –

————————————————————————

ஸ்லோகம் -1- அவதாரிகை –

முதல் ஸ்லோகத்தில் ஒருவனைக் கவி பாடப் புக்கால்
அவன் ஐஸ்வர்யத்தைச் சொல்லிக் கவி பாடுமா போலே
ஸ்ரீ வைஷ்ணவனுக்கு ஐஸ்வர்யமான ஜ்ஞான வைராக்யங்கள் உடைய பிரகர்ஷத்தை சொல்லி நமஸ்கரிக்கிறார் –

மனமாசு தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கை கூடும் –புனமேய
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி
தாம் தொழா நிற்பார் தமர் -முதல் திருவந்தாதி -43-என்று
ஸ்ரீ வைஷ்ணவனுக்கு தனம் பக்த்யாதிகள் என்று சொல்லிற்று இறே –

நமோ அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
நாதாயா முநயே அகாத பகவத் பக்தி சிந்தவே–1-

நமோ –
அஹம் அபி ந மம பகவத ஏவ அஹம் அஸ்மீத் ஏவம் அமமதாம் யோஜயத்யதோ நம இதி -என்கிறபடியே
எனக்கு உரியேன் அல்லேன் –
பெரிய முதலியாருக்கு சேஷம் -என்கிறார் –

நமோ விஷ்ணவே -என்கிறாப் போலே –
நமோ நாதாயா -என்கிறார் உபகார ஸ்ம்ருதி யாலே –

ஓம் நமோ விஷ்ணவே (ஷடத் அக்ஷரீ )-என்றும்
நம இத்யேவ வாதி ந -என்றும்
நம ரிஷிப்யோ மந்த்ர க்ருத்ப்ய -என்றும்
தேஷாமபி நமோ நம -என்றும் சொல்லக் கடவது இறே –

ஸ்ரீ ஈஸ்வர முனிகள் -ஸ்ரீ ரங்க நாதன் என்று திருநாமம் சாற்றுகையாலே
நாதன் என்று திரு நாமம் ஆகிறது –
எப்படிப் பட்டவர் -என்னும் அபேஷையில் சொல்லுகிறது –

அசிந்த்ய –
இவருடைய ஜ்ஞானாதிகள் இன்னாருடைய ஜ்ஞானாதிகள் போலே இருக்கும் என்று
நினைக்க ஒண்ணாது -என்னுதல்
இவ்வளவு என்று ஜ்ஞானாதிகராலும் -பரிச்சேதிக்க ஒண்ணாது -என்கை

அத்புத –
கீழ் இயத்தா ராஹித்யத்தைச் சொல்லுகையாலே-க்ருஹீதாம்சம் அனுசந்தித்தார்க்கு
ஆச்சர்ய அவஹமாய் இருக்கும் -என்கை –
அமுதூரும் என்றக்கால் -இத்யாதியில் க்ருஹீதாம்சம் இனிதாய் இருக்கும் என்றது இறே –

அக்லிஷ்ட –
வ்யாசாதிகளைப் போலே ஸ்வ யதன சாத்திய தபஸ்ஸாலே வந்தது அன்றிக்கே
ததாமி புத்தி யோகம் தம் -என்றும்
மயர்வற மதி நலம் அருளினன் -என்றும் சொல்லுகிறபடியே
பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே வருத்தம் அற்று இருக்கை-

ஜ்ஞான –
ஜ்ஞானம் ஆவது -சித் அசித் ஈஸ்வர தத்தவங்களை விஷயமாக உடைத்தாய் இருக்கை –
அதாவது –
ஆத்மா ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷம் என்றும்
அசித் ஸ்வரூபம் த்யாஜ்யம் என்றும் –
ஈஸ்வரன் உபயோர் நியந்தா என்றும் -அறிகை –

ஜ்ஞானம் என்றால் இவ் விசேஷத்தைக் காட்டுகிறது
தத் ஜ்ஞானம் அஜ்ஞானம் அதோ அந்ய துக்தம்-என்றும்
வித்ய அந்ய அசில் பனை புணம் -என்றும்
வ்யதிரிக்த விஷய ஜ்ஞானம் அநர்த்தா வஹம் என்றும் அதி சூத்ரம் என்றும் -சொல்லிற்று இறே –

வைராக்ய –
இவ் விலஷண ஜ்ஞானத்தாலே பகவத் வ்யதிரிக்தங்களில்
நிஸ்ப்ருஹராய் இருக்கை –
வேண்டேன் மனை வாழ்க்கையை -பெரிய திருமொழி -6-1-

ராசயே –
ராசி என்று சமூஹம்-
ஜ்ஞான இராசே –வைராக்ய ராசயே –
ஜ்ஞான வைராக்யங்கள் ஒன்றாய் இருக்க ராசயே -என்பான் என் -என்னில் –
ஸ்ரீ பகவத் ஸ்வரூபாதிகள் ஜ்ஞான விஷயங்கள் ஆகையாலே பல –
பிதரம் மாதரம் -என்று த்யாஜ்ய விஷயங்களும் பலவாகையாலே சொல்லலாம் –

லோகத்தில் விலஷணர் உடைய ஜ்ஞான வைராக்யங்கள் எல்லாம் இவருடைய
ஜ்ஞான வைராக்யங்களிலே அந்தர்ப்பூதம் ஆம்படி இருக்கையாலே சொல்லுகிறது -என்றுமாம் –

யத் கிஞ்சித் சாது குர்வந்தி யஸ் தத் வேத யத்ச வேத ச மயைத துக்த இதி –
யத் கிஞ்சித் சாத்வ நுஷ்டிதம் கர்ம யச்ச சர்வ சேதன கதம்
விஜ்ஞானம் ததுபயம் யதி யஜ்ஞான கர்மாந்தர்கதம் ச ரைக்வ -இதி -என்றும்
லோகத்தில் அனுஷ்டிதமான கர்மங்களும் ஞானங்களும் யாவன் ஒருத்தன் உடைய
கர்ம ஞானங்களிலே அந்தர் கதமாய் இருக்கும் -அவன் தானே கிடீர் ரைக்வன் -என்று பார்த்து சொல்லுமா போலே

முநயே –
ந விவேதாத்மநோ காத்ரம் -என்றும்
பஸ்யந்நபி ந த்ருஷ்ட்வான் -என்கிறபடியே
த்தேய வஸ்துவை சர்வதா சாஷாத் கரிக்கை

ஏது செய்தால் மறக்கேன் மனனே -பெரிய திரு மொழி -9-3-3- என்றும்
என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -திருவாய் மொழி -7-3-6- என்றும்
இவர் கிருஷ்ணனை அனுசந்தித்து இருக்க ராஜாவாலும் சமாதி பங்கம் பண்ணப் போயிற்று இல்லை –

ராம மேவா நுபச்யந்த -என்னுமா போலே –

அகாத பகவத் பக்தி சிந்தவே –
பக்தியாவது ஜ்ஞான விசேஷமாய் இருக்க -பக்தியைப் பிரித்துச் சொல்லிற்று –
அதினுடைய ப்ராசுர்யம் சொல்லுகைக்காகவும் –
ப்ரதான்யம் சொல்லுகை தோற்றுகைக்காகவும் –

பக்தி யாகிறது -சிநேக பூர்வம் அனு த்யானம் பக்தி -என்றும்
ஸ்வாமிநி தாசச்ய சிநேக மயீ ஸ்திதி -என்றும் சொல்லுகிறபடியே-
அனுபவ ஆசை -அனுபவிப்பதில் விருப்பம் –

பகவச் சப்தத்தாலே பரம பதத்தில் இருப்பைச் சொல்கிறது –
வாஸூ தேவோ அஸி பூர்ண – என்று ஷாட் குணிய பூர்ணனாய் இறே இருப்பது

அகாத
அஷோப்ய-கலக்க ஒண்ணாத –
அர்த்தாந்தரம் -பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –
ஒருவரால் நிலை கொள்ள ஒண்ணாது இருக்கை –

சிந்தவே –
காதல் கடலின் மிகப் பெரிது –திருவாய்மொழி -7-3-6-என்றும்
ஆசை என்னும் கடல் -பெரிய திருமொழி -4-9-3- என்றும்
ஈஸ்வரனுக்கும் நிலை கொள்ள ஒண்ணாதே
தாம் அதில் புக்கு அமிழ்ந்தபடியாய் இருக்கை –

அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
முனயே அகாத பகவத் பக்தி சிந்தவே நாதாய நம -என்று அந்வயம் –

இப்படிப்பட்ட எம்பெருமானுடைய ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி இவற்றைப் பற்றிய ஞானம் -ஞானமாவது தத்வ த்ரய -சித் அசித் ஈஸ்வர தத்தவங்களை விஷயமாக உடைத்தாய் இருக்கை-அர்த்த பஞ்சக ஞானம் என்றுமாம்
அன்னை அத்தன் புத்ரன் பூமி வாசவார் குழலார் இவர்களைப் பற்றிய வைராக்யங்கள் -இரண்டுமே கும்பலாகக் குவிந்து இவராக ஆயிற்று

(பகவத் பக்தி ரசத்துக்கு -ஆழ்ந்ததோர் கடல் போலே இருப்பாரே -கலக்க முடியாதபடி –
பகவத் பக்திக்கு சமுத்திரம் என்றும்
பகவத் பக்தி யாகிற சமுத்திரத்தை தம்மிடம் கொண்டவர் என்றுமாம் )

————————————————————————–

ஸ்லோகம் -2- அவதாரிகை
முதல் ஸ்லோகத்தாலே பரத்வ விஷயமான ஜ்ஞானாதிகள் உடைய பிரகர்ஷம் சொல்லிற்று
இந்த ஸ்லோகத்தாலே அவதார விஷயமான ஜ்ஞானாதிகள் ஆகையாலே
அதினுடைய ப்ரக்ருஷ்ட தரத்வம் சொல்லுகிறது

அன்றிக்கே
கீழ் சொன்ன ஜ்ஞானாதிகள் தம்மளவில் பர்யவசியாதே
என்னளவும் வர வெள்ளம் கோத்தது –
என்னவுமாம் –

தஸ்மை நமோ மது ஜிதங்க்ரி ஸரோஜா தத்தவ
ஜ்ஞான அனுராக மஹிமா அதிசய அந்த ஸீம்நே
நாதாயா நாத முநயே அத்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரனௌ சரணம் மதீயம்-2-

மது ஜிதங்க்ரி ஸரோஜா -எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளைப் பற்றின
தத்தவ ஜ்ஞான–உண்மை உணர்ச்சி என்ன
அனுராக –ஆசை என்ன
மஹிமா அதிசய அந்த ஸீம்நே–இவற்றின் பெரு மேன்மைக்கு எல்லை நிலமாயும்
நாதாயா-எனக்கு நாதராயும் இருக்கிற
தஸ்மை நாத முநயே நமோ–அந்த நாத முனிகளுக்கு நமஸ்காரம்
அத்ர பரத்ர சாபி-இவ்வுலகத்திலும் மேல் உலகத்திலும்
நித்யம் யதீய சரனௌ-எப்போதும் -எந்த ஸ்ரீமந் நாதமுனிகளுடைய திருவடிகள்

தஸ்மை நமோ –
நமஸ் தஸ்மை நமஸ் தஸ்மை -என்றும்
நமோ நமஸ்தே ஆஸ்து சஹஸ்ர க்ருத்வ-என்றும் சொல்லுகிறபடியே –
இன்னம் அவர்க்கு அடியேன் -என்கிறார் –

மது ஜீத் –
அநிருத்தராய் வந்து அவதரித்து
முதல் களையான மதுவை நிரசித்தால் போலே
பகவத் ப்ராப்தி பந்தகங்களைப் போக்குமவன் -என்கை –

அங்க்ரி –
அந்த ஸ்வ பாவத்திலே -குணைர் தாஸ்யம் உபாகத -என்று பெரிய முதலியார் தோற்று இருக்கும் படியையும்
அவருடைய அனன்யார்ஹ சேஷத்வமும் சொல்லுகிறது –

ஸரோஜ –
சம்பந்தம் இல்லா விடிலும் விட ஒண்ணாத போக்யதையைச் சொல்லுகிறது –
விகாசம் செவ்வி குளிர்ச்சி பரிமளம் முதலான வற்றுக்குத் தாமரையை ஒரு படிக்குப் போலியாகச்
சொல்லலாய் இருக்கை –

தத்தவ ஜ்ஞான –
தத்வ ஜ்ஞானம் ஆவது –
அவதார விஷய ஜ்ஞானமும்
ஆஸ்ரித பாரதந்த்ர்ய விஷய ஜ்ஞானமும் –
ஜன்ம கர்ம ஸ மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத
த்யக்த்வா தேகம் புநர் ஜன்ம நைதி மாமேதி ஸோ அர்ஜுன -ஸ்ரீ கீதை -4-9-என்று
தானே அருளிச் செய்தான் இறே –

தஸ்ய தீரா பரிஜா நந்தி யோநிம் -என்றும்
அஹத்வா ராவணம் சங்க்யே-என்றும்
யத் விநா பரதம் த்வாஞ்ச சத்ருக் நஞ்சாபி மாந்த
பவேன் மம ஸூகம் கிஞ்சித் பஸ்மாசாத் குருதாம் சிகி -என்று அருளிச் செய்தான் இறே சக்கரவர்த்தி திருமகன் –
அப்யஹம் ஜீவிதம் ஜ்ஹ்யாம் -என்றும்
ஆத்மாநாம் நாதி வர்த்தேதா -இத்யாதி

அனு ராக-
அனு ராகம் ஆவது -இவற்றை எல்லாவற்றையும் அனுபவித்தால் அல்லது நிற்க ஒண்ணாத ப்ரேமம் –

மஹிமா அதிசய அந்த ஸீம்நே –
ஜ்ஞான அநு ராகங்கள் உடைய மஹத்த்வத்தின் முடிவே எல்லையாய் இருக்குமவர்க்கு
மஹிமா -மஹத்த்வம் –
மனுஷ்ய ஆனந்தமே தொடங்கி-தே யே சதம் – என்கிற க்ரமத்தாலே
ஈஸ்வர ஆனந்தத்திற்கு எல்லையாய் இருக்கும் இருப்பு போலே
இவருக்கும் தத் விஷய ப்ரேமத்துக்கு எல்லையாய் இருக்கும் இருப்பு –

நாதாயா –
அஸ்மத் நாதாயா –

நாத முநயே –
இத் தர்சனத்துக்கு நாதனே -என்று
மது சூதனை யன்றி மற்று இலேன் -திருவாய்மொழி -2-7-6-என்று இருக்கும்
மஹாத்மாக்களாலே கொண்டாடப் படுவாராய் ஆயிற்று –
தத்வ ஹிதங்களை திரு வுள்ளத்திலே கூடு பூரிக்குமவர் –
தஸ்மை நம -என்று அந்வயம் –

உபகார ஸம்ருதியாலே அவரை ஆதரித்தீர் ஆகில்
ஐஹிக ஆமுஷ்மிகங்களுக்கு வேண்டாவோ -என்று பகவத் அபிப்ராயமாக அருளிச் செய்கிறார் –
அத்ர பரத்ர சாபி –
சம்சாரத்திலும்
பிராப்யமான நித்ய விபூதியிலும் –

நித்யம் –
நித்ய அக்னி ஹோத்ரம் போல் அன்றிக்கே
அனவரதம் -என்கை –

யதீய சரனௌ –
என்னை இவ் வவஸ்தாபன்னனாக்கிய திருவடிகள் –

சரணம் –
உபாய உபேயங்கள் இரண்டும்

மதீயம் –
பெரிய முதலியார் திருவடிகள் ஆகில் எனக்கு இரண்டுமாய் இருக்கும் -என்கை –
அதாவது -சம்சார தசையிலே பகவானே உபாயம் என்று உபதேசித்து
உபாயாத்யவசாயத்துக்கு அடியான ஸ்வ அனுக்ரஹத்தாலே
பகவத் பிராவணயத்தை விளைத்தும்
பிராப்ய தேசத்தில் சென்றால் நித்ய ஸூரிகள் கோஷ்டியில் பிரவேசிப்பித்தும்
பின்பு நித்ய ஸூரிகளோபாதி உத்தேச்யமாய் இருக்கையாலும் -அப்படிச் சொல்கிறது –

அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரனௌ மதீயம் சரணம்
மது ஜிதங்க்ரி சரோஜ தத்தவ ஜ்ஞான அனுராக மஹிம
அதிசய அந்த சீம்னே நாதாய தஸ்மை
நாத முனயே நம -என்று அந்வயம் –

அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ —
வானவர் நாடு –
ஆச்சார்யர் திருவடிகளே உத்தேச்யம்
சரணம் -உபாயம் உபேயம் இரண்டுமே என்றபடி -)

பகவத் தத்வ ஞானமும் பகவத் அநு ராகமும் இவர் இடம் சேர்ந்து விசரமித்தன போலும் -ஆகவே இவற்றுக்கு இவரே ஸீமா பூமி –

மனுஷ்ய ஆனந்தமே தொடங்கி-தே யே சதம் – என்கிற க்ரமத்தாலே
ஈஸ்வர ஆனந்தத்திற்கு எல்லையாய் இருக்கும் இருப்பு போலே
இவருக்கும் தத் விஷய ப்ரேமத்துக்கு எல்லையாய் இருக்கும் இருப்பு –

——————————————————————————-

ஸ்லோகம் -3- அவதாரிகை –

த்ருஷார்த்தனுக்குத் தண்ணீர் குடிக்கப் பர்யாப்தி பிறவாதாப் போலே
பின்னையும் அவர்க்கு அடியேன் -என்கிறார்

ஆஸ்ரிதரை ஒரு காலும் நழுவ விடாத அச்யுத விஷயத்திலே
ஜ்ஞான பக்த்யாதிகள் ஆகையாலே
தம்மளவில் பர்யவசியாதே
பகவத் விஷயத்துக்கு அபூமியான சம்சாரம் எங்கும்
வெள்ளம் இடும்படியான இவர் உடைய
ஜ்ஞான பக்திகள் உடைய
பிரக்ருஷ்டதையைச் சொல்லுகிறது –

பூயோ நமோ அபரிமித அச்யுத பக்தி தத்தவ
ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி
யோகாய நாத முநயே யமிநாம் வராய-3-

அபரிமித அச்யுத பக்தி –அளவில்லாத பகவத் பக்தி என்ன
அபரிமித தத்தவ ஜ்ஞாநம்–அளவில்லாத தத்வ ஞானம் என்ன
அம்ருதாப்தி பரிவாஹ ஸூபைர்–இவை யாகிற அமுதக் கடலின் பரிவாஹம் போன்று பிரசன்ன சீதளங்களான
வசோபி-ஸ்ரீ ஸூக்தி களாலே
லோகே -இவ் வுலகத்தில்
அவதீர்ண பரமார்த்த –அவதாரம் செய்து இருக்கிற பரம புருஷார்த்தமாயும்
சமக்ர பக்தி யோகாய –பரி பூர்ணமாயும் இருக்கிற பக்தி யோகத்தை உடையவராய்
யமிநாம் வராய–யோகிகளின் சிறந்தவரான
நாத முநயே -பூயோ நமோ—நாத முனிகளுக்கு மறுபடியும் நமஸ்காரம்

பூயோ நமோ
புனஸ்ஸ நம
நமோ நமஸ்தே -என்கிறபடியே

அபரிமித –
கிடந்த பாயிலே வெள்ளம் கோத்தால் போலே
இருந்த இடங்களிலே வந்து கிட்டும்படி
எல்லை இறந்து இருக்கை –

அச்யுத –
நியந்த்ருத்வ ஸ்வாமித்வாதி கல்யாண குணங்களாலே குறை வற்று இருக்கை -என்னுதல் –
ஏக ரூபமாய் இருக்கும் -என்னுதல்
என்றும் ஆஸ்ரித அர்த்தமாய் இருக்கும் இருப்பை நழுவ விடாதவன் -என்னுதல் –
ஆர்ந்த புகழ் அச்சுதன் -திருவாய்மொழி -3-5-11- என்றும்
நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தன்னை -திருவாய்மொழி -3-6-8-என்கிறபடியே
ஆஸ்ரிதரை தம் தாம் கையிலும் பிறர் கையிலும் காட்டிக் கொடாதவன் -என்னுதல் –

பக்தி தத்தவ ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூபைர் வசோபி –
பக்தி தத்வ ஜ்ஞானங்கள் ஆகிற
அம்ருதாப்தி யினுடைய பரிவாஹ ரூபமான
ஸூபமான வசஸ் ஸூக்களாலே-
உபாயம் ஈஸ்வரன் ஆகையாலே ஜ்ஞான பக்திகள் போக ரூபமாய்
அபரிச்சின்னமாய் இருக்கும் -என்கை –

பரிவாஹம் ஆவது -அவ்வவ ரஷண அர்த்தமாக
அதிக ஜல நிர்க்க மனஸ் ரோதஸ்ஸூ –
வசஸ் ஸூக்களுக்கு ஸூபத்வம் ஆவது –
அவிஸ் தர்ம சந்திக்தம் -இத்யாதிகளை உடைத்தாய் இருக்கை

லோகே –
பகவத் பக்திக்கு மேட்டு மடையான சம்சாரத்திலே
சைஷா பார்க்கவீ வாருணீ வித்யா பரமே வ்யோமன் ப்ரதிஷ்ட்டிதா -என்று
பரம பதத்தில் பரிமாறக் கடவ பக்தியை
நான் முகனார் பெற்ற நாட்டுளே நற்பாலுக்கு உய்த்தனன் -திருவாய்மொழி -7-5-1-என்கிறபடியே
சம்சாரத்தில் நடையாடும்படி பண்ணினபடி –

அவதீர்ண –
ஈஸ்வராவதாரம் போலே இறே
ஸ்வயம் பிரயோஜனமான பக்த்யவதாரம் –

பரமார்த்த –
பரம பிரயோஜன ரூபமாய் இருக்கை –
சமக்ர –
அதனில் பெரிய அவா -என்னும்படி குறைவற்று இருக்கை –

பக்தி யோகாய –
பக்தியை உடையரான –
உக்தமான பக்தி தத்வ ஜ்ஞானங்கள் இரண்டையும்
பக்தி சப்தத்தாலே சொல்லிற்று

நாத முநயே யமிநாம் வராய –
முடியானே -திருவாய்மொழி -3-8- யில் சொல்லுகிற படியே
அவனை அல்லது அறியாத கரணங்களை உடையராய் இருப்பார்க்குத் தலைவர் ஆனவருக்கு
வாய் அவனை அல்லது வாழ்த்தாது -முதல் திருவந்தாதி -11-என்று
இருக்கும் அவர்களுக்கு வரணீயராய் இருக்குமவர் -என்றுமாம்-

அபரிமித அச்யுத பக்தி தத்வ ஜ்ஞானம்
அம்ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி யோகாய
யமிநாம் வராய நாத முனயே பூயோ நம -என்று அந்வயம்-

ஸ்ரீ ஸூக்திகளை பக்தி பரிவாஹம் என்றது –சொல்லாவிடில் சரீரம் தரிக்க முடியாது -பக்தி பலாத்காரத்தாலே அவதரித்த சொற்கள்
அம்ருத பரிவாஹம் -பிரசன்னமாயும் மதுரமாயும் சீதளமாயும்
ஸ்ரீ நியாய தத்வம் போன்ற இப்பொழுது லுப்தமான கிரந்தங்களும்-நித்ய காலக்ஷேப ஸ்ரீ ஸூக்திகளும் -இவையே பின்பு ஏடு படுத்தப் பட்டு நம்மளவும் வந்தனவே
யோகம் -குருகைக் காவல் அப்பன் அளவு மட்டுமே –
பக்தி -நெஞ்சு கனிந்து ப்ரீதி ரூபமான த்யானம் -பரமார்த்த சமக்ர -இரண்டு விசேஷங்கள் -ஸ்வயம் பிரயோஜனம் -என்றும் அவனை பிராபிக்க பர்யாபதமான உபகரணம் என்றது ஆயிற்று –
அவதீர்ண –
ஈச்வராவதாரம் போலே இறே
ஸ்வயம் பிரயோஜனமான பக்த்யவதாரம் –
பரமார்த்த –
பரம பிரயோஜன ரூபமாய் இருக்கை –
சமக்ர –
அதனில் பெரிய அவா -என்னும்படி குறைவற்று இருக்கை –

(வசோபி – ஸ்ரீ -ந்யாய தத்வம் -கிரந்தம் ஸ்ரீ தேசிகன் போன்றார் காட்டி அருளி உள்ளார்கள்
நித்ய கால ஷேப ஸ்ரீ ஸூக்திகளும் உண்டே
பக்தி யோகம் -ஸ்ரீ -குருகை காவல் அப்பனுக்கு பிரசாதித்து அருளிய யோக சாஸ்திரமும் –
ஸ்ரீ -மணக்கால் நம்பி போல்வாருக்கு சாதித்து அருளிய பிரபத்தி சாஸ்திரமும் –
பரமார்த்த -சமக்ர -இரண்டு விசேஷணங்கள்-பரம புருஷார்த்தம் என்றும் -பரி பூர்ணம் -என்றும் –
ஸ்வயம் பிரயோஜனம் என்றதாயிற்று -)

———————————————————————————

ஸ்தோத்ரம் -65-அவதாரிகை –

ராமோ த்விர் நாபி பாஷதே-என்கிற சங்கல்பத்தை விட்டீரே யாகிலும்
ஸ்ரீ பெரிய முதலியாரோடு வித்யையாலும்
ஜன்மத்தாலும் உண்டான சம்பந்தத்தையே பார்த்து அருளி –
என்னுடைய நன்மை தீமைகளைப் பாராதே
விஷயீ கரிக்க வேணும் -என்ன

அதுக்குக் கண்ணழிவு இல்லாமையாலே
அப்படிச் செய்கிறோம் -என்று ஈஸ்வரன் அனுமதி பண்ண

தாம் அனுமதி பெற்றாராய்
ஸ்தோத்ரம் தலைக் கட்டுகிறது –

அக்ருத்ரிம த்வச் சரணார விந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதி மாத்மவந்தம்
பிதாமஹம் நாத முநிம் விலோக்ய
ப்ரஸீத மத் வ்ருத்தம சிந்தயித்வா–65-

அக்ருத்ரிம –
க்ரியயா நிர்வ்ருத்த க்ருத்ரிம தத் ரஹித அக்ருத்ரிம
ஸ்வாபாவிக -இத்யர்த்த –
ஒரு செய்கையால் உண்டாக்கப் பட்டது க்ருத்ரிமம் -செயற்கை
அப்படி அற்றது அக்ருத்ரிமம் -இயற்கையானது –
குலம் தானே யோகி குலம் ஆகையாலே
நை சர்க்கிகம் -என்கை –
மெய்யான ப்ரேமம் -என்னவுமாம் –

தவச் –
ப்ராப்த சேஷியான உன்னுடைய

சரணார விந்த –
ஆஸ்ரிதருக்கு இழியும் துறையை போக்யமான
திருவடிகளை –

ப்ரேம ப்ரகர்ஷாவதிம்-
ப்ரேமாதிஸய ஸீமா பூமி யானவர்
நமக்கு இதர விஷயங்களில் ப்ரேமம் எல்லாம்
இவர்க்கு வகுத்த விஷயத்திலே இறே இருப்பது –

மாத்மவந்தம் –
பகவத் சேஷத்வம் ஸ்வரூமாகவே
ஆத்மா யாதாம்ய ஜ்ஞானம் உடையவர் -என்கை –
தநவந்தம் -என்னுமா போலே –

பிதாமஹம் நாத முநிம் –
குடல் துடக்கை உடையராய்
பகவத் ஜ்ஞான நிதியாய்
உள்ளவரை –

விலோக்ய –
கடாஷித்து

ப்ரஸீத –
அபராதங்களைப் பொறுத்து அருள வேணும் –

மத் வ்ருத்தம சிந்தயித்வா –
அஸ்த் கர்மத்தை விஸ்மரிக்கக் கடவராக வேணும் -என்கை –

மத் வ்ருத்தம் -என்று
சத் கர்மத்தை நினைக்கிறது –
வ்ருத்தவான் என்றால் சத் கர்ம யுக்தனை இறே சொல்லுகிறது –

ஸ்வ கதமான வற்றை அநாதரித்து
பெரிய முதலியார் சம்பந்தம் எனக்குத் தஞ்சமாக வேணும் என்று பிரார்த்தித்து
ஸ்தோத்ரத்தைத் தலைக் கட்டுகிறார் –

(பிதாமஹத்வம் வித்யையாலும் ஜென்மத்தாலும் –ஸ்ரீ ஈஸ்வர பட்டாழ்வார் இவர் திருத் தந்தை – )

—————————————————————————–

ப்ரஹர்ஷயிஷ்யாமி என்கிற இத்தால் பரார்த்த கைங்கர்யமே பரம புருஷார்த்தம் என்ற ஸம்ப்ரதாய தாத்பர்யத்தை அறுதி யிட்டார்

த்வயத்தில் உத்தர வாக்கியத்தில் நமஸ் ஸப்தம் கைங்கர்யத்தில் களை அறுக்கிறது
களையாவது தனக்கு என்னப் பண்ணுகை
ஸ்வயம் துருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -என்று இளைய பெருமாளும்
தனக்கே யாக எனைக்கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -என்று ஆழ்வாரும்
மற்றை நம் காமன்கள் மாற்று -என்று நாச்சியாரும்
ஐம்புலன் அகத்தடக்கி -என்று தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரும்
ப்ராப்தாவும் ப்ராபகனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே -என்று ஸ்ரீ மத் லோகாச்சார்யாரும்
அஹம் அந்நாத -என்ற போக்த்ருத்வத்துக்கு முன்னே அஹம் அன்னம் என்று

தன்னுடைய போக்யத்வத்தை அன்றோ முக்தன் சொல்லுவதாக ஸ்ருதியும் ஓதிற்று
போக்த்ருத்வமும் போக்யத்வாய விறே
புங்க்தே ஸ்வ போகம் அகிலம் பதி போக சேஷம் -என்னா நின்றது இறே –

—————–

இப்படிப்பட்ட புருஷார்த்தத்துக்கு உபாயமாக அவன் தன்னையே பற்றுகிறார் ஆளவந்தார்-

ந தர்ம நிஷ் டோஸ்மி -என்று கர்ம ஞானாதிகளைக் கை விட்டது அஞ்ஞான அசக்திகளால் அன்று
பல விலம்பம் என்றும் அல்ல
அவதார ரஹஸ்ய ஞான ஸஹ க்ருத பக்தி ரூப உபாயாந்தரம் தேஹ அவசானத்திலே பலிக்கும் என்று
ஏவம் யோ வேத்தி தத்த்வத த்யக்த்வா தேஹம் புனர் ஜென்ம நைதி மாமேதி -என்று கீதாச்சார்யன் அருளிச் செய்தான் அன்றோ
அவ்வழியாலும் கை வையாதே எம்பெருமானையே தஞ்சமாகப் பற்றியது உபாயாந்தர சாமான்யம் அப்ராப்தம் என்று அன்றோ —

ஸ்வரூப விருத்தம் என்று இறே கை விட்டது
ப்ரபாகாந்தர்ப் பரித்யாகத்துக்கும் அஞ்ஞான சக்திகள் அன்று
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது -என்று அன்றோ ஸ்ரீ வசன பூஷண நிஷ் கர்ஷம்
ஆகையால் அன்றோ விதி ரஹஸ்யத்தில் பரித்யஜ்ய என்று உபாயாந்தர பரித்யாகத்தை விதித்தான்
ஸ்நாத்வா புஞ்ஜீத -என்னுமா போலே விட்டே பற்ற வேண்டும் -என்று இறே சம்பிரதாய நிஷ் கர்ஷம் –

——————-

இதில் ஆதி அந்தங்களில் பிதா மஹாரான ஸ்ரீ மன் நாதமுனிகளை நிர்தேசித்து உள்ளார்

ஸ்ரீ காட்டு மன்னார் கோயில் கோபால ரத்னத்தைத் தனக்குத் தந்த மஹா உபகாரகரான ஆச்சார்யன்

என்று முதற் கண் மூன்று ஸ்லோகங்களாலே ஸ்துதித்தார்

தன்னுடைய சரணாகதி தர்மத்தையும் அநாதரித்து அவர் சம்பந்தமான கண்ணழிவு அற்ற உபாயத்தையே பார்த்து
அடியேனைக் கடாக்ஷிக்க வேண்டும் என்று விண்ணப்பித்து தலைக் கட்டுகிறார்

தனமாய தானே கை கூடும் -என்று ஸ்ரீ வைஷ்ணவ தனமான ஞான பக்தி வைராக்யங்களோடே
பகவத் கைங்கர்ய சாம்ராஜ்யத்தோடே வாசியற எல்லாமே ஆச்சார்ய அதீநம் என்றபடி

ஆச்சார்ய வைபவத்தில் உபக்ரமித்து ஆச்சார்ய வைபவத்தில் உப ஸம்ஹாரம் செய்யும் உத்க்ருஷ்ட ஸ்தோத்ர ரத்னம் –

————————————————————-

யத் பதாம் போருஹ த்யாந வித்வஸ்த அசேஷ கல்மஷ
வஸ்து தாம் உபயாதோ அஹம் யாமுநேயம் நமாமி தம்

எவர் உடைய திருவடித் தாமரையை தியானிப்பதால் எல்லா பாபங்களும் அழியப் பெற்று
அடியேன் ஒரு பொருள் ஆனேனோ அத்தகைய ஸ்ரீ யாமுனாசார்யரை வணங்குகிறேன் –

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னத்தின் சிறப்பு -ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –

May 28, 2022

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-தனியன்கள்-

ஸ்வாதயந்நிஹ ஸர்வேஷாம் த்ரய்யந்தார்த்தம் ஸுதுர்க்ரஹம் |
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ர: தம் வந்தே யாமுநாஹ்வயம் ||

யோகிகளுக்குள் சிறந்தவரும், புரிந்து கொள்ள அரிதான வேதாந்த அர்த்தங்களை எல்லோரும்
புரிந்து கொள்ளும்படி ஸ்தோத்ரங்களாக அருளிச்செய்தவருமான ஆளவந்தாரை வணங்குகிறேன்.

நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: |
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: ||

ஆளவந்தாரை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். என்னால் அவரை வணங்குவதை நிறுத்த முடியவில்லை.

ஶ்லோகம் 1 –
முதல் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஸ்ரீமந்நாதமுனிகளின் உண்மையான செல்வமான
ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார்.

நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே |
நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே ||

நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை
எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.
அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர்.
இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.

————-

ஶ்லோகம் 2 –
இதில், பகவத் அவதாரங்களில் ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு இருந்த ஞானம் ஆகியவற்றின் மேலான சிறப்பு விளக்கப்படுகிறது.
அல்லது, “(முந்தைய ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல், என்னளவும் பெருகி வருகிறது”
என்று ஆளவந்தார் அருளிச் செய்கிறார்.

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக
விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும்.
அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

————

ஶ்லோகம் 3 –
தாகம் உள்ள ஒருவன் நீரை மேலும் மேலும் பருகியும் தாகம் தீராமல் இருப்பதைப் போலே,
ஆளவந்தார் “மீண்டும் மீண்டும் நான் ஸ்ரீமந் நாதமுனிகளின் தொண்டன்” என்று அருளிச் செய்கிறார்.

பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய ||

பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும்
உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.
அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

—————

ஶ்லோகம் 4 –
ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

————-

ஶ்லோகம் 5 –
ஆளவந்தார் நம்மாழ்வார் திருவடிகளில் விழுந்து அவரிடத்தில் சரணடைகிறார்.

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

நம்மாழ்வாரின் திருவடிகளே எனக்கும் என் குலத்தவர்களுக்கும், தாய், தந்தை, மனைவி, மக்கள், சிறந்த செல்வம் மற்றும் எல்லாமாகும்.
மகிழ மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும், கைங்கர்யச் செல்வத்தை உடையராயிருக்கும், நம் வைஷ்ணவ குலத்துக்குத்
தலைவரான நம்மாழ்வாரின் இரண்டு திருவடிகளில் என் தலையை வைத்து வணங்குகிறேன்.

—————–

ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் ஆச்சார்யா பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் -கூரத் ஆழ்வான்-

நாத யாமுன மத்யமாம் –
இந்த குரு பரம்பரையில் ஆதி மத்ய அவசானங்களை அருளிச் செய்கிறவர் ஆகையாலே
நாத யாமுனர்களை மத்யம பதஸ்தராக அருளிச் செய்கிறார் –
நாத முனிகளும் யாமுன முனிகளும் -அவர்கள் தான் பரம ஹம்சர் இறே

நாத யாமுனர் போல்வாரை அன்னம் என்றும் -என்று இறே ஆச்சார்யஹிருதயத்தில் அருளிச் செய்தது –
அவனும் அன்னமாய் இ றே அருமறைகளை அருளிச் செய்தது –
ஏவம்விதரான இவர் தான் மதுர கவிகளின் உடைய திவ்ய பிரபந்த அனுசந்தானத்தாலே
ஆழ்வார் உடைய –அருள் பெற்ற நாதமுனி யானார் –

அந்த நாதமுனி அருளாலே இறே யமுனைத் துறைவர் அவதரித்து-தர்சனத்தை ஆள வந்தார் ஆனது –
நாதோ பஜஞம் ப்ரவ்ருத்தம் பஹூபி ருபசிதம் யாமு நேய பிரபந்தை -என்னக் கடவது இ றே

அவ்வளவு அன்றிக்கே
விஷ்ணு பக்தி பிரதிஷ்டார்த்தம் சேநேசோ அவதரிஷ்யதி -என்று
ஸ்ரீ சேனாபதி ஆழ்வார் அவதாரமாக நம் ஆழ்வாரைச் சொல்லிற்று இறே
ஆளவந்தாருக்கு பிரபத்தி அர்த்த உபதேசம் பண்ணுகைக்கு அடியான உய்யக் கொண்டாரும்
மணக்கால் நம்பியும் இவர்கள் இடையிலே அடைவு படக் கடவராய் இருப்பார்கள்
நாத யாமுன மத்யமாம் -என்று ஆழ்வான் அனுசந்தான க்ரமமாயிற்று இது
இவரை ஒழிந்த மற்றையார் –அஸ்மத் குரு சமாரம்பாம் யதிசேகர மத்யமாம்
லஷ்மி வல்லப பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் -என்றும் இ றே அனுசந்திக்கப் போருவது-
உடையவர் தான் குருபரம்பரைக்கு நடுநாயகம் இறே
அவர்தாம் ஆழ்வானுக்கு சதாச்சார்யர் ஆகையால் அஸ்மத்சார்ய பர்யந்தம் என்கிறது –
அஸ்மத் குரோர் பகவதோ அஸ்ய தயைக சிந்தோ ராமானுஜச்ய -என்னக் கடவது இறே
ராமானுஜாங்க்ரி சரணோ அஸ்மி -என்றும் அனுசந்தித்தார் –
இதிலே யமுனைத் துறைவன் இணை அடியாம் கதி பெற்று உடைய இராமானுசன் ஆகையாலே
ஆளவந்தாருக்கு சரணத்வயம் என்னலாம்படியான பெரிய நம்பியும் ஸூசிதர்
இளையாழ்வாரை விஷயீ கரித்த அனந்தரத்திலே-
இளையாழ்வீர் பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யத்துக்கு எழுந்து அருளும் போது-மரவடியை தம்பிக்கு வான் பணையம் வைத்து போய் வானோர் வாழ எழுந்து அருளினாப் போலே
மேலை வானோர் வாழ இவரும் தமக்கு அடியேனான அடியேனை அப்படியும் யுமக்கு வைத்து திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் -என்று அவர் அருளிச் செய்தார்
அத்தைப் பற்ற யமுனைத் துறைவன் இணை அடியாம் கதி பெற்றுடைய இராமானுசன் என்று அமுதனார் அருளிச் செய்தார் -என்று
திரு நாராயண புரத்தில் திருவாய்மொழி யாச்சார்யர் அருளிச் செய்தார் –
உடையவரை குரு பங்க்தி ஹார நாயகமாக நடுவே அனுசந்திக்க வேண்டி இருக்க
யதா பாடம் எல்லாம் அனுசந்திக்கிறது –ஆழ்வான் திவ்ய ஸூ க்தி என்னுமது அறிக்கைக்காக —

இதில் ஆச்சார்யா அபிமான யுக்தராய் இவ்வருகிலும் யுண்டான அனைவரும் ஸ்வாச்சார்ய பர்யந்தமாக அனுசந்திக்கும் போது
நாத யாமுனர்களை நடுவாக சொன்னது யதிவரர்க்கும் உப லஷணம் ஆகிறது என்று கண்டு கொள்வது

மந்த்ராணாம் பரமோ மந்த்ர -என்று கொண்டாடப்படும் திருமந்திரம் மந்த்ர ராஜம்
இதன் விவரணம் த்வயம் மந்த்ர ரத்னம்
ராஜா ரத்னத்தை விரும்புவான் -திருமந்திரமும் ஸ்வ அர்த்த ப்ரகாஸனத்தில் மந்த்ர ரத்னத்தை அபேக்ஷிக்கும்
ஸ்ரீ ரெங்கராஜ யதிராஜ சம்வாதம் -த்வயம் அர்த்த அனுசந்தாநேந ஸஹ சதைவம் வக்தா –
மந்த்ர ரத்ன அநுஸந்தான சந்தத ஸ்புரிதா தரம் -திநசர்யை –
வளம் கொள் மந்திரமும் மெய்ம்மைப் பெரு வார்த்தையும் அருளிச் செய்த வாயாலே -த்வயவக்தா -த்வயம் அர்த்த அனுசந்தாநேந ஸஹ -என்று
இரண்டின் ஏற்றமும் வெளியிடப்பட்டது இறே என்று அருளிச் செயல் ரஹஸ்யத்தில் நாயனார் –
ஏகம் த்வயம் த்ர் யவ யவம் ஸூக லப்ய துர்யம் வ்யக்தார்த்த பஞ்சகம் உபாத்த ஷட் அங்க யோகம்
ஸப்த அர்ணவீ மஹிமவத் விவ்ருதாஷ்ட வர்ணம் ரெங்கே ஸதாம் இஹ ரஸம் நவமம் ப்ரஸூத -தேசிகன்

ஜகதி விததம் மோஹநம் இதம் தமோ யேநா பாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி -வேதார்த்த ஸங்க்ரஹம்

மாநத்வம் பகவன் மதஸ்ய மஹத பும்ஸ தாத்தா நிர்ணய திஸ்ர சித்தய
ஆத்ம ஸம்வித கிலாதீ சார தத்வாஸ்ரயா கீதார்த்தஸ்ய ச ஸங்க்ரஹம் ஸ்துதி யுகம் ஸ்ரீ ஸ்ரீ சயோ
இத்யமூன் அனுசந்ததே யாதிபதி தம் யாமுநே யம் நம-தேசிகன்

ஆளவந்தார் அருளிச் செய்தவை
ஆகம ப்ராமாண்யம்
புருஷ நிர்ணயம்
ஸித்தி த்ரயம்
கீதார்த்த ஸங்க்ரஹம்
சதுஸ் ஸ்லோகீ
ஸ்தோத்ர ரத்னம் -எனப்படுபவைகள் –

—————

திருப் பாட்டனாரும் திருப் பேரனாரும் திரு அவதரித்தது திரு காட்டு மன்னார்குடி என்னும் திவ்ய ஷேத்ரத்திலே –
திருவடி உத்தராடம்-கடக உத்தராடம் – -சூன்யமான ஆடி மாதத்தை அசூன்யமாக ஆக்கி அருளினார் இவரும் நாச்சியாரும் -திருவாடிப்பூரத்தில் திரு அவதரித்து –
ஆ முதல்வன் இவன் என்று இவரது கடாக்ஷ வீசாணத்தாலேயே எம்பெருமானார் ஜெகதாச்சார்யராக ஆனார் –
பாடியத்தோன் ஈடேறப் பார்வை செய்தோன் வாழியே –
இவரது ஸ்ரீ ஸித்தி த்ரயமே ஸ்ரீ பாஷ்யத்துக்கு மூலம்
இவரது ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹமே ஸ்ரீ கீதா பாஷ்யத்துக்கு மூலம்

பகவத் பரங்களான பூர்வாச்சார்ய ஸ்தோத்ரங்களுக்கு எல்லாம் மூலம் ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் –
மந்த்ர ரத்னம் போல் இதுவும் புராண ரத்னமும் ஸ்ரேஷ்டங்கள் –

இந்த ஸ்தோத்ரத்தின் ப்ரமேயம் -ஆழ்வாருடைய திருவாய் மொழி -த்ராவிட உபநிஷத் –
இதன் ரஹஸ்யம் -பகவத் கைங்கர்யமே மேலான புருஷார்த்தம் -என்னும் அர்த்தம்
இதனை ஆழ்வாருடைய நிர்ஹேதுக கிருபையால் அருளப் பெற்றார் ஸ்ரீ மன் நாதமுனிகள் –
உய்யக்கொண்டார் -மணக்கால் நம்பி -ஆச்சார்ய பரம்பரயா பெற்று ஆளவந்தார் இங்கு அருளிச் செய்கிறார்

அன்றிக்கே
சகல வேதாந்த ஸாரார்த்தங்களான ப்ராப்ய ப்ராபகங்களை அறுதியிட்டு இத்தாலே பிராபகத்தை -உபாயத்தை -அத்யவசித்து

ப்ராப்யத்தை -புருஷார்த்தத்தைப் பிரார்திக்கிறார் என்றுமாம் –
ஆழ்வார் திருவாய் மொழி ப்ராப்ய பரம் என்றும் ப்ராப்ய ப்ராபக பரம் என்றும் ஈட்டில் காட்டப்பட்டது போலே

இத்தையும் பலபடிகளாலே நிர்வஹிப்பர்கள் நம் பூர்வர்கள் – –

நம என்று தொடங்கி உபகாரகர்களை வணங்கி
யன் மூர்த்தி என்று தொடங்கும் ஸ்லோகத்திலே –
மே மூர்த்நி பாதி என்று அவனுடைய உபாயத்வத்தையும்
ஸ்ருதி சிரஸ்ஸூ பாதி -என்று அவனுடைய ப்ராப்யத்வத்தையும் ஸங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் இ-
இந்த ஸ்லோகம் இறே கிரந்த ப்ரதிபாத்ய ஸங்க்ரஹம்

யந் மூர்த்நி மே ஶ்ருதி ஶிரஸ்ஸு ச பாதி யஸ்மிந்
அஸ்மந் மநோரத பதஸ் ஸகலஸ்ஸமேதி |
ஸ்தோஷ்யாமி ந: குல தநம் குல தைவதம் தத்
பாதாரவிந்தம் அரவிந்த விலோசநஸ்ய ||-ஶ்லோகம்–6-

புண்டரீகாக்ஷனின் (தாமரைக் கண்ணனின்) திவ்ய திருவடிகளைக் கொண்டாடப் போகிறேன்.
இந்த எம்பெருமானே நம் குலத்துக்கு தனமாகவும், தெய்வமாகவும் விளங்குகிறான்.
நம்முடைய அதிகமான பக்தி எல்லாம் அந்த எம்பெருமானின் திருவடிகளிலே போய்ச் சேரும்.
அந்த எம்பெருமானின் திருவடிகளே என்னுடைய தலையிலும், வேதாந்தத்திலும் காணப்படுகின்றன.

————-

தத்வேந யஸ்ய மஹிமார்ணவ ஶீகராணு:
ஶக்யோ ந மாதுமபி ஶர்வ பிதா மஹாத்யை: |
கர்த்தும் ததீய மஹிம ஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ’ஸ்து கவயே நிரபத்ரபாய || -ஶ்லோகம்7-என்று தொடங்கி

பகவத் விஷயத்தை ஸ்தோத்ரம் செய்ய தான் அயோக்யன் என்று நைச்யம் பாவித்து

எம்பெருமானின் பெருமை என்னும் கடலில் ஒரு திவலையில் இருக்கும் ஒரு அணுவின் அளவு கூட ருத்ரன், ப்ரஹ்மா
போன்றவர்களால் அளக்கமுடியாது. கவிஞன் என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டு, அப்படிப்பட்ட
எம்பெருமானின் பெருமைகளைப் பாடத் தொடங்கியதை நினைத்து (இப்படிப்பட்ட நகைப்பிற்குரிய செயலை நினைத்து)
என்னை நானே வணங்கிக் கொள்கிறேன்.

காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் என்கிறபடியே அவரவர் அறிந்தவாறு ஏத்தலாம் என்று அறுதியிட்டு
ஸ்தோத்ரத்திலே இழிகிறார் –

———-

நாவேக்ஷஸே யதி ததோ புவநாந்யமூநி
நாலம் ப்ரபோ பவிதுமேவ குத: ப்ரவ்ருத்தி: |
ஏவம் நிஸர்க்க ஸுஹ்ருதி த்வயி ஸர்வ ஜந்தோ:
ஸ்வாமிந் நசித்ரமிதமாஶ்ரித வத்ஸலத்வம் || -ஶ்லோகம்7-10-என்று தொடங்கி
அவனுடைய பரத்வ ஸுலப்யங்களை பரக்க அருளிச் செய்து

எம்பெருமானே! மஹா ப்ரளயத்துக்குப் பின், நீ உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தைக் காட்டவில்லை என்றால்,
இவ்வுலகங்கள் படைக்கப்பட்டிருக்காது; வேறு எந்த நிகழ்வுகளும் நடந்திருக்காது என்பதும் தெளிவு.
எம்பெருமானே! இப்படி நீயே எல்லோருடைய இயற்கையான நண்பனாக இருப்பதால்,
நீ உன்னுடைய அடியார்களிடம் தாயன்பைக் காட்டுவதைப் பார்ப்பதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை.

———-

ந தர்ம நிஷ்டோஸ்மி -என்று உபாயாந்தர தியாக பூர்வமாகச் சரணாகதி செய்கிறார் –

ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே ||-ஶ்லோகம்-22-

சரணடையத் தகுந்த ஸ்வாமியே! நான் கர்ம யோகத்தில் நிலையாக இல்லை; என்னிடத்தில் ஆத்ம ஞானமும் இல்லை;
என்னிடத்தில் உன் திருவடிகள் விஷயமான பக்தியும் இல்லை; இப்படி வேறு உபாயமும் புகலும் இல்லாத நான்,
உன் திருவடிகளையே உபாயமாக உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன்.

————

விராஜமாந -என்று தொடங்கி
திவ்ய மங்கள விக்ரஹ
திவ்ய ஆபரண
திவ்ய ஆயுத
திவ்ய மஹிஷீ
நித்ய முக்த விஸிஷ்ட ப்ரஹ்ம அனுபவத்தையும்
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யத்தையும்
அதுவும் பரார்த்தம் என்னும் அத்தையும் வெளியிட்டு
ப்ராப்யத்தை அருளிச் செய்கிறார் –

————–

ஆழ்வார் வள வேழுலகு தலை எடுத்து அகலப் பார்த்தது போலவே
இவரும் திக் அசுசிம் என்று அகல நினைத்தார்-

ஶ்லோகம் 47 –
இதில், ஆளவந்தார் ஈஶ்வரனின் அடையத்தக்க உயர்ந்த நிலையையும் தன்னுடைய முந்தைய (தாழ்ந்த) நிலையையும் பார்த்து
“ஸம்ஸாரியான நான் எப்படி ப்ரஹ்மா ருத்ரன் போன்றவர்களின் எண்ணத்துக்கும் அப்பாற்பட்ட, இவ்வுலக விஷயங்களால்
தீண்டப்படாத நித்யஸூரிகள் ஆசைப்படும் கைங்கர்யத்தை ஆசைப்படலாம்?
எப்படி உயர்ந்த உணவானது விஷத்தால் தீண்டப்படலாம்?” என்று நினைத்து,
நம்மாழ்வார் “வளவேழுலகில்” செய்ததைப்போலே தன்னைத் தானே கடிந்து கொள்கிறார்.

திகஶுசிம் அவிநீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரம புருஷ! யோ’ஹம் யோகிவர்யாக்ரகண்யை: |
விதிஶிவ ஸநகாத்யைர் த்யாதும் அத்யந்த தூரம்
தவ பரிஜநபாவம் காமயே காமவ்ருத்த: ||

புருஷோத்தமனே! என்னுடைய (தவறான) எண்ணப்படி நடக்கும் தன்மையை உடைய காரணத்தால் ப்ரஸித்தமான நான்,
என்னுடைய புனிதமற்ற தன்மையாலும், சீர் செய்யப்படாத தன்மையாலும், கருணையும், வெட்கமும் இல்லாத தன்மையாலும்,
ப்ரஹ்மா, சிவன், ஸனகாதி முனிவர்கள் போன்ற உயர்ந்த யோகிகளுக்கும் எட்டாததான
உன் கைங்கர்யத்தை ஆசைப்பட்டதை என்னையே நினைத்து நொந்துகொள்ள வேண்டும்.

ருசியின் மிகுதியால் அகலமாட்டாது நிற்கிறார்
அத்தலையின் பெருமையின் எல்லையைப் பார்த்து அகலுவதும்
அத்தலையின் நீர்மையின் எல்லையைப் பார்த்து அணுகுவதும் உசிதம் இறே
இதுவே வள வேழுலகு-திருவாய் மொழியின் சாரம் –

——————–

கண்கள் சிவந்து -திருவாய் மொழியிலே ஜீவாத்ம ஸ்வரூபம் பகவத் சேஷ பூதம் என்று நிரூபித்து
கரு மாணிக்க மலையிலே -அது அநந்யார்ஹம் என்று நிரூபித்து
நெடுமாற்கு அடிமையிலே பகவத் சேஷத்தளவு அன்று -பாகவத சேஷத்தளவு செல்ல வேணும் என்று அருளிச் செய்தார்
இது இறே சத்ருன ஆழ்வான் படி –

அவ்வோபாதி ஆளவந்தாரும் -தவ தாஸ்ய ஸூக ஏக சங்கி நாம் -என்று ததீய சேஷத்வத்தைப் பிரார்திக்கிறார் –

ஶ்லோகம் 55 –
ஆளவந்தார் பகவானிடத்தில் அதிகமான பக்தியைப் பெற்றபின், பகவானிடத்தில் அடிமைத்தனத்துடன் நிறுத்தாமல்,
அவனுடைய அடியார்களுக்கு அடிமையாக இருப்பதை ப்ரார்த்திக்கிறார்.

தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||

எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும்.
மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.

ப்ரஹ்ம ஜென்மமும் இழுக்கு என்பாருக்கு பண்டை நாளில் பிறவி உண்ணாட்டுத் தேசு இறே

பகவத் சேஷத்வமும் பாகவத சேஷத்வ பர்யந்தமாக வேணுமே –
பதிவிரதைக்கு பார்த்தாவினுடைய தேஹாம்சம் உத்தேச்யமான காலத்தில் பாதி வ்ரத்ய பங்கம் இல்லை
அவ்வோபாதி பகவானுக்கு சரீர பூதர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு கிஞ்சித்கரித்ததால் இவனுக்கு ஸ்வரூப ஹானி இல்லை இறே

ஸ்ரீ வைஷ்ணவர்கள் பகவானுக்கு ஜங்கம ஸ்ரீ விமானங்கள் இறே
நெஞ்சமே நீண் நகராக
எனது உடலே ஒரு மா நொடியும் பிரியான் –என்னா நின்றது இறே

ஆழ்வாரும் -ஊனில் வாழ் உயிரிலே -பகவத் அனுபவத்தைச் செய்து -ஹ்ருஷ்டராய்
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று பாகவத அனுபவத்தை ஆசைப்பட்டு
நெடுமாற்கு அடிமையிலே -பெற்று பரமானந்த பரிதரானார்
பாகவத அனுபவம் இல்லாத அன்று ஏற்பட்ட பகவத் அனுபவமும் அபூர்ணம் இறே –

ஆளவந்தாரும் இவ்வர்த்தத்தையே இதில் அருளிச் செய்கிறார் –

————

ஸ்வ பிதா மஹரான ஸ்ரீ மன் நாதமுனிகள் சம்பந்தத்தை நிர்தேசித்து ஸ்தோத்ரத்தைத் தலைக் கட்டுகிறார் –

ஶ்லோகம் 65 –
ஆளவந்தார் “நீ ஸ்ரீராமாயணம் அயோத்யா காண்டம் 18.30இல் ‘ராமோ த்விர் நாபிபாஷதே’
(ஸ்ரீராமர் இரண்டு விதமாகப் பேச மாட்டார்) என்ற சபதத்தைக் கை விட்டாலும்,
என்னுடைய புண்ய பாபங்களைக் கருதாமல், பெரிய முதலியாரான ஸ்ரீமந்நாதமுனிகளுடன் எனக்கு இருக்கும்
ஞானத்தால் மற்றும் பிறப்பால் இருக்கும் ஸம்பந்தத்தைக் கருத்தில் கொண்டு, என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கேட்க,
எம்பெருமானும் “இந்த வழியில் எந்தக் குறையும் இல்லை; இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று சொல்லி
இந்த வரத்தை ஆளவந்தாருக்கு அளித்தான்.
ஆளவந்தாரும், த்ருப்தியடைந்தவராய், ஸ்தோத்ரத்தை முடிக்கிறார்.

அக்ருத்ரிம த்வச்சரணாரவிந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதிம் ஆத்மவந்தம் |
பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய
ப்ரஸீத மத்வ்ருத்தம் அசிந்தயித்வா ||

எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான,
தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும்.

—————-

ஐஸ்வர்ய கைவல்யங்கள் ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் அல்ல
பகவத் அனுபவ கைங்கர்யங்களே ஸ்வரூப அனுரூப பலம் என்றும்
கர்ம ஞான பக்திகள் ஸ்வரூப விருத்தங்கள் என்றும்
பகவானே உபாயபூதன் என்றும் ஆழ்வார் அறுதியிட்டார்
ஒரு நாயகம் திருவாய் மொழியில் ஐஸ்வர்ய கைவல்ய ப்ராவண்யம் த்யாஜ்யம் என்று உபதேசித்து
நண்ணாதார் -திருவாய் மொழியிலே
ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லாச் சற்று இன்பம்
ஒண்டொடியாள் திரு மகளும் நீயும் நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன் -என்று ஸ்வ அனுஷ்டானத்தைக் காட்டி அருளினார்
புருஷார்த்த பல அந்நிய ருசி ஒழிகை இறே நாலாம் பத்தின் ப்ரமேயம்

நோற்ற நோன்பிலேன் இத்யாதியால் கர்ம ஞானாதிகளைக் கழித்து
உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று ஸர்வேஸ்வரனையே உபாயமாகப் பற்றினார் ஆழ்வார்

ஆளவந்தாரும் இவ்வர்த்தத்தை இறே வெளியிட்டு அருளுகிறார் –
பகவத் கைங்கர்யமே ப்ராப்யமாயினும் தத் பிரதிசம்பந்தி தயா பகவான் ப்ராப்யனாகிறான்
தத் வர்த்தக தயா திரு நாடும் ப்ராப்யம் ஆகிறது
தத் விரோதியான ப்ரக்ருதி சம்பந்தினுடைய நிவ்ருத்தியும் ப்ராப்யம் ஆகிறது
இவை இத்தனையும் கைங்கர்யத்துக்காகவே இறே
இவை கைங்கர்ய உபயோகி இல்லாத போது த்யாஜ்யம் இறே

இது தன்னை
ந தேஹம் -என்கிற ஸ்லோகத்தாலே அருளிச் செய்கிறார் –
ஏறாளும் இறையோனில் ஆழ்வார் நிரூபித்த அர்த்தமே இது இறே –

ஶ்லோகம் 57 –
முன் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஶேஷத்வத்தின் உயர்ந்த நிலையான அடியார்களுக்கு அடிமைப்பட்டிருப்பதை அனுபவித்தார்.
இங்கே ஶேஷத்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் விஷயங்களில் தனக்கு இருக்கும் வெறுப்பைச் சொல்லி,
எம்பெருமானிடத்தில் “அவற்றை நீக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.

ந தேஹம் ந ப்ராணாந்ந ச ஸுகம் அஶேஷாபிலஷிதம்
ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஶேஷத்வ விபவாத் |
பஹிர்பூதம் நாத! க்ஷணமபி ஸஹே யாது ஶததா
விநாஶம் தத்ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபனம் இதம் ||

ஸ்வாமியே! உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய
தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும்
அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும்.
மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை.

————

ஏறு திருவுடைய ஈசன் உகப்புக்கு வேறுபடில் என்னுடைமை மிக்க உயிர் தேருங்கால் என் தனக்கும் வேண்டா என்றபடி
ந ஹி மே ஜீவிதே ந அர்த்தா விநா ராமம் மஹா ரதம் -என்றாள் இறே பிராட்டியும்
ஜீவிதாதிகளால் குறைவின்றி -என்று நாயனார் சங்கலநம் செய்து அருளிச் செய்தார்
ஆகையால் சேஷத்வமே புருஷார்த்தம் என்றதாயிற்று –
லுப்த சதுர்த்தியிலும்
வியக்த சதுர்த்தியிலும் யுக்தங்களான சேஷ தர்ம சேஷ விருத்திகளான நிரூப்ய நிரூபாக பாவம் இறே ஸம்ப்ரதாய ஸித்தம்
குருஷ்வ மாம் அநு சரம் -என்றார் இளையபெருமாள்
நா கிஞ்சித் குர்வத சேஷத்வம் இறே
சேஷத்வம் இல்லாத போது ஸ்வரூபம் இல்லை என்கிற இத்தால் ப்ரணவ யுக்த சேஷத்வம் ஜீவாத்ம ஸ்வரூப நிரூபகம் –
த்ருதீய அக்ஷர யுக்த ஞாத்ருத்வத்தில் காட்டில் ஸ்ரேஷ்டம் என்றதாயிற்று –

————-

ப்ரஹர்ஷயிஷ்யாமி என்கிற இத்தால் பரார்த்த கைங்கர்யமே பரமபுருஷார்த்தம் என்ற ஸம்ப்ரதாய தாத்பர்யத்தை அறுதியிட்டார்

த்வயத்தில் உத்தர வாக்கியத்தில் நமஸ் ஸப்தம் கைங்கர்யத்தில் களை அறுக்கிறது
களையாவது தனக்கு என்னப் பண்ணுகை
ஸ்வயம் துருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -என்று இளைய பெருமாளும்
தனக்கே யாக எனைக்கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -என்று ஆழ்வாரும்
மற்றை நம் காமன்கள் மாற்று -என்று நாச்சியாரும்
ஐம்புலன் அகத்தடக்கி -என்று தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரும்
ப்ராப்தாவும் ப்ராபகனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே -என்று ஸ்ரீ மத் லோகாச்சார்யாரும்
அஹம் அந்நாத -என்ற போக்த்ருத்வத்துக்கு முன்னே அஹம் அன்னம் என்று

தன்னுடைய போக்யத்வத்தை அன்றோ முக்தன் சொல்லுவதாக ஸ்ருதியும் ஓதிற்று
போக்த்ருத்வமும் போக்யத்வாய விறே
புங்க்தே ஸ்வ போகம் அகிலம் பதி போக சேஷம் -என்னா நின்றது இறே –

—————–

இப்படிப்பட்ட புருஷார்த்தத்துக்கு உபாயமாக அவன் தன்னையே பற்றுகிறார் ஆளவந்தார்-

ந தர்ம நிஷ் டோஸ்மி -என்று கர்ம ஞானாதிகளைக் கை விட்டது அஞ்ஞான அசக்திகளால் அன்று
பல விலம்பம் என்றும் அல்ல
அவதார ரஹஸ்ய ஞான ஸஹ க்ருத பக்தி ரூப உபாயாந்தரம் தேஹ அவசானத்திலே பலிக்கும் என்று
ஏவம் யோ வேத்தி தத்த்வத த்யக்த்வா தேஹம் புனர் ஜென்ம நைதி மாமேதி -என்று கீதாச்சார்யன் அருளிச் செய்தான் அன்றோ
அவ்வழியாலும் கை வையாதே எம்பெருமானையே தஞ்சமாகப் பற்றியது உபாயாந்தர சாமான்யம் அப்ராப்தம் என்று அன்றோ —

ஸ்வரூப விருத்தம் என்று இறே கை விட்டது
ப்ரபாகாந்தர்ப் பரித்யாகத்துக்கும் அஞ்ஞான சக்திகள் அன்று
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது -என்று அன்றோ ஸ்ரீ வசன பூஷண நிஷ் கர்ஷம்
ஆகையால் அன்றோ விதி ரஹஸ்யத்தில் பரித்யஜ்ய என்று உபாயாந்தர பரித்யாகத்தை விதித்தான்
ஸ்நாத்வா புஞ்ஜீத -என்னுமா போலே விட்டே பற்ற வேண்டும் -என்று இறே சம்பிரதாய நிஷ் கர்ஷம் –

——————-

இதில் ஆதி அந்தங்களில் பிதா மஹாரான ஸ்ரீ மன் நாதமுனிகளை நிர்தேசித்து உள்ளார்

காட்டுமன்னார் கோயில் கோபால ரத்னத்தைத் தனக்குத் தந்த மஹா உபகாரகரான ஆச்சார்யன்

என்று முதற் கண் மூன்று ஸ்லோகங்களாலே ஸ்துதித்தார்

தன்னுடைய சரணாகதி தர்மத்தையும் அநாதரித்து அவர் சம்பந்தமான கண்ணழிவு அற்ற உபாயத்தையே பார்த்து
அடியேனைக் கடாக்ஷிக்க வேண்டும் என்று விண்ணப்பித்து தலைக்கட்டுகிறார்

தனமாயதானே கைகூடும் -என்று ஸ்ரீ வைஷ்ணவ தனமான ஞான பக்தி வைராக்யங்களோடே
பகவத் கைங்கர்ய சாம்ராஜ்யத்தோடே வாசியற எல்லாமே ஆச்சார்ய அதீநம் என்றபடி

ஆச்சார்ய வைபவத்தில் உபக்ரமித்து ஆச்சார்ய வைபவத்தில் உப ஸம்ஹாரம் செய்யும் உத்க்ருஷ்ட ஸ்தோத்ர ரத்னம் –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த முக்த ஸ்லோகம் /ஸ்ரீ முதலியாண்டான் அருளிச் செய்த முக்த ஸ்லோகங்கள்/ஸ்ரீ முதலியாண்டான் திருவம்ஸ ப்ரபாவ ஸ்லோகம் /ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தோத்ரம்–ஸ்ரீ பராசர பட்டர் —–

October 2, 2021

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த முக்த ஸ்லோகங்கள் —

யஸ்ய ப்ரஸாத கலயா
பதிர ஸ்ருனோதி
பங்கு பிரதாவதி
ஜவேந வக்தி ச மூக
அந்த ப்ரபஸ்யதி
ஸூதம் லபதே ச வந்த்யா
தம் தேவதேவ வரதம் சரணம் கதோஸ்மி

ராமானுஜரை சம்பிரதாயத்துக்கு வரவழைக்க ஆளவந்தார் ஆ முதல்வன் மானசீகமாக கடாக்ஷித்து சரணம்

யஸ்ய ப்ரஸாத கலயா –அருள் வெள்ளத்தால்
பதிர ஸ்ருனோதி -காது கேட்க்காதவன் கேட்ப்பான் –
வேறே சம்ப்ரதாயம் கேட்டு வீணாக்கப் போகாமல் கேட்க வேண்டாதத்தை கேட்பது

பங்கு பிரதாவதி -நொண்டி ஓடுவான் -எங்கும் செல்லாமல் –
(எப்பாடும் பேர்ந்து உதறி)
“ஸ்ரீ ரெங்கம் கரிசைலம் அஞ்சனகிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ
ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமஞ்ச பத்ரி நாராயணம் நைமிசம்
ஸ்ரீமத த்வாராபதி ப்ரயாகா மதுரா அயோத்யா கயாபுஷ்கரம்
சாளக்ராம கிரிம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முனிம்” என்கிறபடியே -(தார்ஷ்யாத்ரி — திரு அஹோபிலம் )
எண்டிசையும் பாதசரத்தாலே சஞ்சரித்து, ஆங்காங்கு விபக்ஷர்களுண்டாகில் அவர்களை உதறியருளினவர் ஸ்வாமி.

ஜவேந வக்தி ச மூக -ஊமையும் பேசுகிறான் -நவக்ரந்தங்கள் வெளி வந்தனவே

அந்த ப்ரபஸ்யதி -குருடனும் நன்றாக பார்க்கிறான் -பார்க்க வேண்டாதவற்றை பார்ப்பவன் குருடன்

ஸூதம் லபதே ச வந்த்யா -மலடியும் பிள்ளைகளை பெறுகிறாள் -சிஷ்ய கூட்டங்கள் சேரப் பெற்றார்
12000 ஸ்ரீ வைஷ்ணவர் 700 சந்யாசிகள் கிடைக்கப் பெற்றார்

தம் தேவதேவ வரதம் சரணம் கதோஸ்மி -தேவாதி ராஜா வரதா சரணம் அடைகிறேன் –

——–

காஞ்சிபுரத்தின் மகிமையை ஆளவந்தார் நன்றாகவே அறிவார். அதாவது,
‘புரீணாமபி ஸர்வாஸாம் ஸ்ரேஷ்ட்டா பாப்ஹரா ஹி ஸா’ என நகரங்கள் அனைத்திலும் சிறந்ததாய்
பாவத்தைப் போக்கடிப்பதாக, புண்ணியத்தை வளரச் செய்வதாக இருக்கிறது காஞ்சிபுரம்.
முக்தி தரும் ஏழு தலங்களுள் ஒன்றானது என்று எண்ணிக்கொண்டே வந்தார்.
ஆனால், யாதவப் பிரகாசரின் பிடிவாத வேதாந்த பாடங்களும், அவரின் துர்நடத்தையும் கண்டு
மிகவும் மன வருத்தம் கொண்டு, கூடவே ஸ்ரீராமானுஜரைப் பற்றியும் எண்ணம் கொண்டு
இவ்வாறு சொல்லத் தொடங்கினார்:

‘‘அஸந்த ஏவாத்ர ஹி ஸம்பவந்தி
ஹஸ்திகாயாமிவ ஹவ்யவாஹ:
அத்ரைவ ஸந்தோ யதி ஸம்பவந்தி
தத்ரைவ லாபஸ்ஸர ஸீருஹாணாம்’’

இதன் பொருள்,
‘‘நெருப்புச் சட்டியில் உள்ள நெருப்பு போல, இவ்வுலகில் துஷ்டர்களே உள்ளனர்.
இதிலே நல்லோர்களாகச் சிலர் காணப்படுகின்றனர். இது எப்படி உள்ளதெனில்,
நெருப்புச் சட்டியிலேயே தாமரை புஷ்பங்கள் பூத்தது போலாகும்’’ என்பதாகும்.

பிறகு ஸ்ரீஆளவந்தார் பேரருளாளனையும், பெருந் தேவி தாயாரையும் சேவித்தார்.
பேரருளாளனை சேவித்துக் கொண்டு பிரதட்சணமாக வரும்போது, ஸ்ரீஆளவந்தார், திருக்கச்சி நம்பிகளை நோக்கி,
‘‘இவர்களில் அந்த இளையாழ்வார் (ஸ்ரீராமானுஜர்) யார்?’’ என்று கேட்டார்.
திருக்கச்சி நம்பிகள் மிக அழகாக ‘‘அதோ சிவந்து நெடுகி வலியராய் நீண்ட கைகளுடன்
நடுவே வருகிறாரே அவர்தான் ஸ்ரீராமானுஜர்’’ என்று காட்டியருள,
ஸ்ரீஆளவந்தாரும் மானசீகமாக கடாட்சம் செய்து அருளினார்.
தன்னுடைய கம்பீர நயனங்களாலே மீண்டும், மீண்டும் செவ்வரியோடே, மதுரப்பார்வையினால் பார்த்தருளி
‘ஆம் முதல்வன் இவன்’ என்று விசேஷமாக உகந்து கடாட்சித்து அருளினார்.
அதாவது, நம் வைஷ்ணவ தரிசனத்திற்கு ஏற்ற முதல்வன் இவன்தான் என்று கூறினார்.

உடனே ஸ்ரீஆளவந்தார் வேகமாக விரைந்து
மீண்டும் பேரருளாளன் சந்நதிக்கு வந்து நமஸ்
கரித்தார். எல்லா சிஷ்யர்களும் எழுந்தருளி
யிருந்தனர். அப்போது ஸ்லோகம் ஒன்றை உரக்கச் சொன்னார்:

‘‘யஸ்ய ப்ரஸாத கலயா பதிர: ச்ருணோதி பங்கு:
ப்ரதாவதி ஜவேனசவக்தி மூக:று
அந்த: ப்ரபச்யதி ஸுதம் வபதேச
வந்த்யா, தம்தேவமேல வரதம் சணம்
கதோஸ்மிறுறு’’

அதாவது, ‘‘எந்த பேரருளாளனுடைய அனுக்ரஹத்தின் காரணமாக செவிடன் கேட்கும் சக்தியுடையவனாக ஆகிறானோ,
காலில்லாதவன் வேகமாக நடக்க வல்லவனாக ஆகிறானோ, ஊமை பேசவல்லவனாக ஆகிறானோ,
மலடியும் பிள்ளையைப் பெறுகிறாளோ, அந்த தேவப் பெருமாளான வரதராஜனை சரணமடைகிறேன்.”
பிறகு, ‘‘ஒரு விண்ணப்பம்,’’ என்றும் பிரார்த்தனை செய்தார்.
‘‘நம் ஸ்ரீ வைஷ்ணவ தரிசனத்திற்கு ஸ்ரீ ராமானுஜரைத் தந்தருள வேண்டும்’’ என்று பிரார்த்தித்தார்.

ஏனெனில், ஒரு அத்வைதியாகக்கூட இல்லாமல் வெறும் பிடிவாதம் பண்ணக்கூடிய வேதாந்தியான
யாதவப் பிரகாசரிடம் படிப்பதும் அவரிடம் மறுப்பு சொல்லி வெறுப்பையும், கோபத்தையும் சம்பாதிப்பதும் என்று
இப்படியே காலம் கழிந்தால், ஸ்ரீராமானுஜருடைய அவதார காரியம் என்ன ஆவது என்கிற ஆதங்கத்தில் அவ்வாறு பிரார்த்தித்தார்.
பிறகு, ஸ்ரீஆளவந்தார் தம் முதலிகளுடனும், சிஷ்ய கணங்களுடனும் ஸ்ரீரங்கம் புறப்பட்டார்.

திருக்கச்சி நம்பியிடம் பிரியாவிடை பெற்றபோது, ‘‘அடியேனுக்கு நல்வார்த்தை கூறலாகாதா?’’ என்ற போது,
ஸ்ரீஆளவந்தார் சில நல்ல வார்த்தைகளைக்கூறி சமாதானப்படுத்தி, ஆனந்தக் கண்ணீரோடு நின்று கொண்டிருந்த
திருக்கச்சி நம்பிகளை ஆரத்தழுவி சமாதானம் செய்தார்.
‘‘ஸ்ரீராமானுஜரை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ளும்,’’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

இதற்கிடையில் காஞ்சிபுரத்திலேயே ஒரு முக்கியமான சம்பவம் நிகழ்ந்தது.
அங்கு நாட்டை ஆண்டு கொண்டிருந்த பல்லவ மன்னனின் பெண்ணுக்கு பிரம்மராட்சஸ் பிடித்திருந்தது.
மிகுந்த கவலையோடு இருந்த பல்லவ மன்னன் பல வைத்தியர்களைக் கொண்டு சிகிச்சை செய்து பார்த்தும் பலனில்லாமல் போயிற்று.
இந்தக் கவலையினால் ராஜ்ய நிர்வாகத்தை சரிவர நடத்த இயலவில்லை.
மேலும், பற்பல மந்திரவாதிகளை அழைத்து வந்து தம் பெண்ணைக் காண்பித்தார்.

அப்படியும் பலனில்லாது போயிற்று. நாளுக்கு நாள் மன்னனுக்கும், ராணிக்கும் கவலை பெருகியபடி இருந்தது.
அவரது கன்னிகையோ நாளுக்குநாள் மெலிந்து கொண்டே வந்தாள். முகம் வெளிறிப்போய்,
எதுவுமே சாப்பிட முடியாது நோயால் பீடிக்கப்பட்டு, எதிலுமே நாட்டமில்லாமல் ‘ஹாய், ஹோய்’ என்று கத்திக் கொண்டிருந்தாள்.
இதனாலேயே பல்லவ மகாராணி கல்யாணி கவலைப்பட்டு கவலைப்பட்டு, பரலோகம் சென்றடைந்தாள்.

பல்லவ மன்னனுக்கு எல்லாமே சூன்யமாகப் போனது. இப்படிப்பட்ட தருணத்தில்தான் அரசனிடம், யாதவப் பிரகாசரைப் பற்றி கூறி,
அவர் இங்கு எழுந்தருளினால், ராஜகுமாரிக்கு விடிவு கிடைக்கும் என்று உறுதியாக மந்திரிமார்கள் கூற,
அவரை உடனே அழைத்து வருமாறு பல்லவ அரசன் ஆணையிட்டான்.

ஆணையை மேற்கொண்டு யாதவப் பிரகாசர், ஸ்ரீராமானுஜரை அழைத்துக்கொண்டு, தன் சிஷ்யர்கள் புடைசூழ
பல்லவராஜனின் அரசவைக்கு ஏகினார். பல்லவ அரசன் இவரைப் பலவாறு மன்றாடி கேட்டுக் கொண்டு தம் கன்னிகையை சரிசெய்யுமாறு கூறினான்.

உடனே, யாதவப் பிரகாசரும் ஏதோ ஜெபிப்பதுபோல் சில மந்திரங்களைக்கூறி சிறிது தீர்த்தத்தை அவள்மீது தெளிக்க,
யாருக்குமே அடங்காத, ஏன் பதிலேகூட சொல்லாத பிரம்மராட்சஸ் இவருக்கு மட்டுமே பதில் கூறியது.
‘‘நீ ஏன் இங்கு வந்தாய்?’’ என வினவியது.
யாதவப் பிரகாசரோ, தன்னுள் தேங்கிய பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு,
சற்றே தள்ளி நின்று, ‘‘நீ யார்? ஏன் இவளைப் பிடித்திருக்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்? என்ன செய்தால் விட்டு விடுவாய்?’’
என்று பல்வேறு கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்.

‘‘ஹே… யாதவனே, நீ ஜெபிக்கும் மந்திரம் எனக்குத் தெரியாது என்று நினைக்கிறாயோ?’’ என்று கூறி
அவர் ஜெபித்த மந்திரத்தை அப்படியே கூறியது.
‘‘உன் ஜெபத்திற்கும், மந்திரத்திற்கும் நீ தெளித்த ஜலத்திற்கும், இவளை விட்டுவிட்டுப் போவேனோ?
அவ்வளவு சக்தி, உனக்கும், உன் மந்திரத்திற்கும் உன் ஜெபத்திற்கும் கிடையாது,’’ என்று கர்ஜித்தது.
‘‘அட! நான் சொன்ன மந்திரங்களை அப்படியே சொல்கிறாயே! அப்படியானால் நீ உண்மையில் யார்?’’ என்று தவிப்புடன் கேட்டார்.

‘‘இது மட்டுமா? உன்னுடைய முன் ஜென்மமும், என் முன் ஜென்மமும் எனக்குத் தெரியும்,’’ என்றது.
‘‘அப்படியானால், நான் யார்? நீ யார் என்று கூறலாகாதோ?’’
‘‘இதோ பார்! உன் போன ஜென்மத்தில் மதுராந்தகம் என்ற இடத்திலுள்ள ஒரு ஏரிக்கரையிலுள்ள புற்றில்
உடும்பு என்ற ஜந்துவாக நீ இருந்தாய். அப்போது ஸ்ரீரங்கம் கோயில் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
திருமலை திருப்பதிக்கு புறப்பட்டுச் செல்லும்போது மதுராந்தகம் வந்தடைந்தனர்.

சற்று இளைப்பாற எண்ணி, ஏரியில் நீராடி, பகவத் ஆராதனங்களை முடித்துக் கொண்டு வந்த ஆகாரத்தை உண்டு
ஏரியில் கைகளை அலம்பினார்கள். அந்த நீரை நீங்கள் பருகியதால், அந்தக் கருணையால் இப்போது
வேதாந்தம் பேசும்படியான ஒரு வித்வத்துவ ஜென்மத்தை கிடைக்கப் பெற்றிருக்கிறீர்கள்.
அதன் காரணமாகத்தான் உனக்கு சிஷ்யனாக, இதோ எதிரில் அவதாரமாக நிற்கும் ஸ்ரீ ராமானுஜரையும் பெற்றிருக்கிறாய்.

நான் செய்த தவறு என்னவெனில் என்னுடைய அந்தணப் பிறவியில் வேதத்தை தவறாக உச்சரித்ததும்,
யாகத்தில் மந்திரத்தை தவறாகச் சொன்னதுமே ஆகும். அதனாலேயே இப்படி பிரம்ம ராட்சஸ் ஆனேன்.’’
‘‘நீ சொன்ன வரையில் சந்தோஷம். ஆனால், இந்த ராஜ கன்னிகையை விட்டு விட்டுப் போ,’’ என்று யாதவப் பிரகாசர் கூறினார்.
‘‘நீ சொன்னால், நான் போக வேண்டுமோ? நான் போவேனா என்ன?’’ என்று பிரம்மராட்சஸ் கோரமான குரலில் கர்ஜித்தது.

‘‘சரி, யார் சொன்னால் இவளை விட்டுவிடுவாய்?’’ என்று யாதவப் பிரகாசரும் விடாமல் கேட்டார்.
அப்போது கண்களில் நீர் மல்க பிரம்மராட்சஸ் சாந்தமாகப் பேசத் தொடங்கியது.
‘‘உம்மிடம் பாடம் பயிலும் மாணவரான நித்யஸுரிகளில் ஒருவர், அதோ உள்ளாரே,’’ என்று கூற
‘‘அது யார்?’’ என்று யாதவப் பிரகாசரும் வினவ,
ஸ்ரீ ராமானுஜரைக் காட்டி, ‘‘இவர் என் தலையை, தன் காலால் தீண்டி,
‘‘நு போவுதி’’ என்று கூறினால் அவளை விட்டு விடுகிறேன்,’’ என்று கம்பீரமாகவும், அமைதியாகவும் கூறியது.

யாதவப் பிரகாசர் இளையாழ்வாரை (ஸ்ரீராமானுஜரை) நோக்கி பிரம்மராட்சஸ் சொன்னதுபோல் செய்யவும் என்று கூறியவுடன்,
அப்படியே, தன் காலால் அவளைத் தீண்டி, ‘இவளை விட்டுப்போ’ என்று கூறிய மறுகணமே அவளை விட்டு பிரம்மராட்சஸ் நீங்கி,
நீங்கியதற்கு அடையாளமாக, அங்குள்ள மரத்தாலான கம்பத்தின் கணுவை முறித்துவிட்டுச் சென்றது.

யாதவப் பிரகாசரும், அந்த சமயத்தில் ஸ்ரீராமானுஜரை மனதாரப் புகழ்ந்து கொண்டாடி சிஷ்ய கணங்களுடன் தன் மடத்திற்கு வந்தார்.
அந்த சமயத்தில், அப்படி புகழ்ந்தாரே தவிர, ஸ்ரீராமானுஜர் மேல் இந்த சம்பவத்தால்,
அதிகமான பொறாமையும் கோபமும் யாதவப் பிரகாசருக்கு உண்டாயிற்று.
அதேசமயம், இந்த சம்பவத்திற்குப் பிறகு இளையாழ்வாரின் புகழ் மேலும் ஓங்கியது.

———————–

ஸ்ரீ முதலியாண்டான் அருளிச் செய்த முக்த ஸ்லோகங்கள்

சித்திரை புனர்வஸு – ஸ்ரீ முதலியாண்டானின் திருநக்ஷத்திரம்

தனியன்
பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா|
தஸ்ய தாஸரதே: பாதௌ ஸிரஸா தாரயாம்யஹம் ||

அர்த்தம்:
யதிராஜருடைய பாதுகைகள் எவருடைய பெயராலே (முதலியாண்டான் என்று) வழங்கப்படுகின்றனவோ,
தாஸரதி எனும் திருநாமமுடைய அந்த முதலியாண்டானின் திருவடிகளை யான் தலையாலே தரிக்கிறேன்.

வைபவச் சுருக்கம்:
ஸ்வாமி எம்பெருமானார் அவதரித்துப் பத்து வருடங்களுக்குப் பின் (கிபி 1027) பிரபவ வருடத்தில்
பச்சைப் பெருமாள் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் புருஷமங்கலத்தில்/வரதராஜபுரத்தில்
சித்திரை மாதம் புனர்வஸு நக்ஷத்திரத்தில் ஆபஸ்தம்ப சூத்ரம் வாதூல கோத்ரத்தில்
எம்பெருமானாருக்கு மருமகனாகவும், பரதனின் அம்சமாகவும் “தாசரதி” என்னும் திருநாமத்தோடு அவதரித்தவர்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமி.

எம்பெருமானாருடைய சிஷ்யர்கள் அனைவருக்கும் நிர்வாஹகராக இருந்தமையால் “முதலியாண்டான்” என்று அழைக்கப்பெற்றார்.

எம்பெருமானாருடைய திருவடி ஸ்தானமாயிருந்து அவருக்கு அந்தரங்க கைங்கர்யங்கள் செய்தமையால்
எம்பெருமானாருடைய திருவடி நிலை இன்றளவும் “முதலியாண்டான்” என்றே அழைக்கப்படுகிறது.

ஸ்வாமி எம்பெருமானார் நியமனத்தாலே, பெரிய நம்பிகள் திருக்குமாரத்தியான அத்துழாய்க்குச்
சீதன வெள்ளாட்டியாகி தாஸவ்ருத்திகள் செய்த பெரியவர் இவர்.

எம்பெருமானார் இவரைத் தமது த்ரிதண்டாமாக அபிமானித்தார்.

முதல் திருவந்தாதி ப்ரபந்தத்துக்கு தனியன் அருளிச்செய்தார் ஸ்வாமி முதலியாண்டான்.

——–

முக்த ஸ்லோகங்கள்

முதலியாண்டான் அருளிச் செய்த ஸ்லோகம்

புரா ஸூத்ரைர் வ்யாஸ ஸ்ருதி சத சிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஸ்ராவ்யம் வகுல தர தாமேத்ய ஸ புந
உபா வேதவ் க்ரந்தவ் கடயிதுமலம் யுக்தி ப்ரஸவ்
புநர் ஜஜ்ஜே ராமா வரஜ இதி ஸ ப்ரஹ்ம முகுர —

ஸ்ரீ வேத வியாஸர் திருவவதரித்து ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் இயற்றி வேதாந்த பொருளை விளக்கி அருளினார்
அவரே தாமே மீண்டும் ஸ்ரீ நம்மாழ்வாராக திரு அவதரித்து செவிக்கு இனிய செஞ் சொற்களாலே அவற்றை விவரித்து அருளினார்
இந்த உபய வேதாந்தங்களையும் உபபத்திகளாலே ஏக ஸாஸ்த்ரமாக்கி அருளுவதற்காகவே
அவரே மீண்டும் ஸ்ரீ ராமானுஜராக திரு அவதரித்து அருளினார் –

—————–

ய: பூர்வம் பரதார்த்தித: பிரதிநிதிம் ஸ்ரீ பாதுகாமாத்மந:
ராஜ்யாய ப்ரததௌ ஸ ஏவ ஹி குரு: ஸ்ரீ தாஸரத்யாஹ்வய:
பூத்வா லக்ஷ்மண பாதுகாந்திமயுகே ஸர்வாத்மநாம் ஸ்ரேயஸே
ஸாம்ராஜ்யம் ஸ்வயமத்ர நிர்வஹநி நோ தைவம் குலஸ்யோத்தமம்–ஸ்லோகம்–1-

எவனொருவன் முற்காலத்தில் பரதனால் ப்ரார்திக்கப் பட்டு அரசாளுவதற்குத்
திருப்பாதுகையைத் தனக்கு ப்ரதிநிதியாகக் கொடுத்தானோ,
அந்த ராமனே தாசரதி (முதலியாண்டான்) என்ற திருநாமமுள்ள ஆசார்யனாய்,
கலி காலத்தில் நம் குலத்திற்கு உத்தம தெய்வமான ஸ்ரீ ராமானுஜ பாதுகையாகி
அனைத்து ஆத்மாக்களும் உஜ்ஜீவிக்கும் படி
ஸ்ரீவைஷ்ணவ ஸாம்ராஜ்யத்தைத் தானே இங்கு நடத்திக் கொண்டிருக்கிறான்.

ஸ்ரீவைஷ்ணவ ஸிரோபூஷோ ஸ்ரீ ராமானுஜ பாதுகா|
ஸ்ரீ வாதூல குலோத்தம்ஸ: ஸ்ரீ தாசரதி ரேததாம்||–ஸ்லோகம்–2-

ஸ்ரீவைஷ்ணவர்களின் தலைக்கு அலங்காரமாயிருக்கும் ஸ்ரீ ராமானுஜரின் பாதுகையாய்,
வாதூல குலத்திற்குச் சிறந்த அலங்காரமான ஸ்ரீ தாசரதியெனும் முதலியாண்டான்
வெற்றி பெருவாராக என்பதாக அமைந்த ஸ்லோகம்.

ஸ்ரீ ராமாம்ஸ ஸமாஸ்லிஷ்டம் பாஞ்சஜன்யாம்ஸ ஸம்பவம்|
பஞ்ச நாராயணஸ்தாந ஸ்தாபகம் குருமாஸ்ரயே||–ஸ்லோகம்–3-

ஸ்ரீராமனின் அம்ஸத்தோடு கூடியவராய், பாஞ்சஜன்ய அம்ஸமாக அவதரித்தவராய்,
ஐந்து நாராயண ஸ்தலங்களை ஸ்தாபித்தவரான முதலியாண்டானை ஆஸ்ரயிக்கிறேன்.

யஸ் சக்ரே பக்த நகரே தாடீ பஞ்சக முத்தமம்
ராமனுஜார்ய ஸச்சாத்ரம் வந்தே தாசரதிம் குரும்–ஸ்லோகம்–4–

பக்த நகரத்தில் எவரொருவர் சிறந்த தாடீபஞ்சக ஸ்தோத்திரத்தை இயற்றினாரோ,
ராமானுஜாச்சார்யரின் ஸத் சிஷ்யரான ஸ்ரீ முதலியாண்டானை வணங்குகிறேன்

——–

ஸ்ரீ முதலியாண்டான் திருவம்ஸ ப்ரபாவ ஸ்லோகம்

வித்யா விமுக்திஜநநீ விநயாதி கத்வம்
ஆசாரஸம்பத் அநுவேலவிகாஸசீலம்
ஸ்ரீ லக்ஷ்மணார்ய கருணா விஷயீ க்ருதாநாம்
சித்ரம் ந தாசரதி வம்ஸ ஸமுத்பவாநாம்||–ஸ்லோகம்:

மோகஷத்திற்கு உறுப்பான ஜ்ஞானம், சிறந்த அடக்கம், அநுஷ்டானச் செல்வம், சிறந்த குணம், ஆகியவை
எம்பெருமானாருடைய கருணைக்கு இலக்கான முதலியாண்டான் வம்சத்தினற்கு
வாய்துள்ளதில் வியப்பில்லை என்பதாக அமைந்த ஸ்லோகம்.

—–

ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தோத்ரம்–ஸ்ரீ பராசர பட்டர் — அருளிச் செய்தவை —

ஸ்ரீபராசர பட்டார்யா ஸ்ரீரெங்கேச புரோஹித
ஸ்ரீவத்சாங்க ஸூதா ஸ்ரீமான் ஸ்ரேயசே மேஸ்து பூயஸே

சப்த பிரகார மத்யே சரசிஜ முகளோத்பா சமாநே விமாநே
காவேரி மத்யதேச ம்ருதுதர பணிராட் போக பர்யங்கே பாகே
நித்ரா முத்ரா பிராமம் கடி நிகட சிர பார்ச்வ வின்யச்த ஹஸ்தம்
பத்மாதாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கராஜம் பஜேஹம் –1-

காவிரி நதியின் நடுவில் ஏழுமதில்களால் சூழப்பட்டு, நடுவில் தாமரை மொட்டுப் போன்று விளங்கும் விமானத்தின் கீழ்,
மிகவும் மென்மையான ஆதிசேஷனின் உடலாகிய கட்டிலில் யோகநித்திரையில் துயில்பவரும்,
இடது கையை இடுப்பில் வைத்திருப்பவரும்,
ஸ்ரீதேவியும், பூதேவியும் தாங்கிநிற்கும் திருப்பாதங்களைக் கொண்டவருமான ஸ்ரீரங்கநாதரை வணங்குகிறேன்.

——

கஸ்தூரீ கலிதோர்த்வ புண்டர திலகம் கர்ணாந்த லோலேஷணம்
முக்தஸ் மேரம நோஹரா தர தளம் முக்தா க்ரீடோஜ்ஜ்வலம்
பச்யன்மா நஸ பச்யதோ ஹரருசி பர்யாய பங்கே ருஹம்
ஸ்ரீ ரங்காதீபதே கதா நு வதநம் சேவேய பூயோப் யஹம் –2-

கஸ்தூரி திலகம் இட்டவரும், காது வரை நீண்டிருக்கும் திருக்கண்களைக் கொண்டவரும்,
முத்துக்களால் இழைக்கப் பட்ட கிரீடத்தைச் சூடியவரும்,
தன்னைத் தரிசிப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்பவரும்,
தாமரை மலர் போன்ற திருமுகத்தைக் கொண்டவருமான ரங்கநாதரே!
உம்மை மறுபடியும் எப்போது பார்ப்பேன்?

————-

கதாஹம் காவேரி தட பரிசரே ரங்க நகரே
சயானம் போகீந்த்ரேசதமகமணி ச்யாமல ருசிம்
உபாசீன க்ரோசன் மதுமதன நாராயண ஹரே
முராரே கோவிந்தேத்ய நிசமப் நேஷ்யாமி திவசான் –3-

காவிரிக் கரையின் அருகில் வீற்றிருப்பவரும், இந்திர நீலமணியை போன்ற பிரகாசமுடையவரும்,
மது என்னும் அரக்கனைக் கொன்றவருமான ரங்கநாத மூர்த்தியே!
உம்மை ஹே நாராயணா! ஹே முராரே! ஹே கோவிந்தா! என்று திருநாமங்களை சொல்லி
மகிழும் பாக்கியம் என் வாழ்நாளில் எப்போது கிடைக்கும்?

————–

கதாஹம் காவேரி விமல சலிலே வீத கலுஷோ
பவேயம் தத்தீரே சரம முஷி வசேயம் கநவநே
கதா வா தம் புண்யே மஹதி புளிநே மங்கள குணம்
பஜேயம் ரங்கேசம் கமல நயனம் சேஷ சயனம் –4-

எப்போது காவிரியில் ஸ்நானம் செய்து என் பாவங்களைப் போக்குவேன்?
அடர்ந்த மரங்களைக் கொண்டதும், ரம்மியமானதும், பசுமையானதுமான
காவிரிக்கரையில் எப்போது நான் வாசம் செய்வேன்?
ஆதிசேஷன் மீது துயில்பவரும், செந்தாமரைப்பூ போன்ற கண்களைக் கொண்டவருமான
ஸ்ரீரங்கநாதரை எப்போது சேவிப்பேன்?

———–

பூகீ கண்ட த்வயஸ ஸரஸ ஸ்நிக்த நீரோப கண்டாம்
ஆவீர்மோத ஸ்திமித சகுநா நூதித ப்ரஹ்ம கோஷாம்
மார்க்கே மார்க்கே பதிக நிவஹை ருஞ்ச்யமாந அபவர்க்காம்
பச்யேயம் தாம் புநரபி புரீம் ஸ்ரீ மதீம் ரங்கதாம் நஹ –5-

பாக்கு மரங்களின் கழுத்து அளவாகப் பெருகுகின்றதும் தேனோடு கூடினதும் சிநேக யுக்தமுமான தீர்த்தத்தை சமீபத்தில் உடையதாய்
மகிழ்ச்சி உண்டாகி ஸ்திமிதமாய் இருக்கின்ற பறவைகளினால் அனுவாதம் செய்யப் பட்ட வேத கோஷத்தை உடைய
வழிகள் தோறும் வழி நடப்பவர்களின் கூட்டங்களினால் திரட்டி எடுத்து கொள்ளப் படுகிற மோஷத்தை யுடையதான
ஸ்ரீ ரெங்க திரு வீதிகளிலே முக்தி கரஸ்தம் என்ற படி -கோயில் வாசமே மோஷம் என்றுமாம்
காவேரீ விரஜா சேயம்-வைகுண்டம் ரங்க மந்த்ரம் -ஸூ வாஸூ தேவோ ரங்கேச –ப்ரத்யஷம் பரமம் பதம் -என்னக் கடவது இறே
ஸ்ரீ ரெங்க நாதனுடைய அந்தக் கோயிலை அடியேன் மறுபடியும் சேவிக்கப் பெறுவேனோ

——————————-

ந ஜாதுபீதாம்ருத மூர்ச்சிதா நாம் நா கௌகசாம் நந்தந வாடிகாஸூ
ரங்கேஸ்வர த்வத்புரமாச்ரிதா நாம் ரத்யா சுநாம் அந்யதாமோ பவேயம் –6-

அமரலோகத்தில் வாசம் செய்து, தேவாமிர்தத்தைப் பருகும் பாக்கியம் எனக்கு வேண்டாம்.
ஸ்ரீரங்கநாதா! உம் பட்டணத்து வீதியில் திரியும் நாயாகப் பிறக்கும் பாக்கியத்தை எனக்கு கொடுப்பீராக.

———–

அசந்நிக்ருஷ்டசஸ்ய நிக்ருஷ்ட ஜந்தோர்
மித்த்யாபவாதேன கரோஷி சாந்திம்
ததோ நிக்ருஷ்டே மயி சந்நிக்ருஷ்டே
காம் நிஷ்க்ருதிம் ரங்க பதே கரோஷி –7–

உண்மையில் உமது அருகில் வாராத ஒரு நாயின் சம்பந்தமான
பொய்யான அபவாதத்தினால் சாந்தி கர்மாவைச் செய்து போரா நின்றீர்
அந்த நாயினும் கடை பெற்றவனான அடியேன் வெகு சமீபத்திலே வந்த போது
ஸ்ரீ ரெங்க நாதரே என்ன சாந்தி செய்வீர்

————————-

பசியாக இருக்கிறது. அதனால் உடம்பு நடுங்குகிறது’ என்று கூறினால் கருணை கொண்ட தாய்,
எப்படி குழந்தையை நோக்கி ஓடி வருவாளோ, அதுபோல பக்தர்களின் துன்பத்தைப் போக்க
ஓடி வந்து அருள் செய்யும் ரங்கநாதரே! உம்மைப் பணிந்து வணங்குகிறேன்.

———-

ஸ்ரீ ரங்கம் கரிசைலம் அஞ்ஜந கிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ
ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமம் ஸ பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீ மத த்வாரவதீ ப்ராயாக மதுரா அயோத்யா கயா புஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முநி —

ஸ்ரீரங்கத்தையும், காஞ்சிபுரத்தையும், திருப்பதியையும், அஹோபிலத்தையும், சிம்மாசலத்தையும்(சோளிங்கர்),
கூர்மத்தையும் (ஆந்திரா), புரு‌ஷோத்தமத்தையும், பத்ரிகாசிரமத்தையும், நைமிசாரண்யத்தையும்,
அழகு பொருந்திய துவாரகா பட்டினத்தையும், பிரயாகையையும், மதுராபுரியையும், அயோத்தியையும்,
கயா ஷேத்திரத்தையும், புஷ்கரத்தையும், சாளக்கிராமத்தையும் நேரில் கண்டு
உம் திருப்பாதங்களை சேவிக்கும் பாக்கியத்தை அருள் செய்வீராக.

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்- -ஸ்ரீ வேதாந்த தேசிகன் பாஷ்யம்/ -அருள் தரும் ஸ்ரீ ஆரண தேசிகன் —

August 6, 2021

ஸ்வாதயன் நிஹா சர்வேஷாம்
த்ரய்யந் தார்த்தம் ஸூ துர் க்ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர
தம் வந்தே யாமுநாஹ் வயம்-

ஸ்வாதயன்-அனுபவத்திக் கொண்டே –
யன் ப்ரத்யயம் -அனுபவிப்பித்து-
இஹ -இந்த காலத்தில் -இத்தைச் சொல்லும் பொழுது -இதில் –
சர்வேஷாம்-சர்வாதிகாரம் இந்த ஸ்தோத்ரம் -ஸ்ரத்தையே வேண்டுவது
ஸூ துர்க் ரஹம்–த்ரய்யந் தார்த்தம்-அறிவரிய வேதாந்தார்த்தங்களை
ஸ்தோத்ர யாமாஸ-ஸ்தோத்ர ரூபமாக வெளியிட்டு அருளினாரோ
யோகீந்திர-எந்த யோகி ஸ்ரேஷ்டர்–எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவனான ஆளவந்தார் –

————

நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம

நமோ நமோ யாமுநாயா-அஷ்டாக்ஷர மந்த்ரம் போல் இதுவே-

———————————————————

ஸ்ரீ மத யமுனா முனே நாத ஸஹாயேந -நாத முனி என்றும் பெருமாளே என்றும் -கூடியவராக -உள்ள ஆளவந்தரால்
அஹம் நாதம் உடையவராய் ஆனேன் -தேசிகன்
யஸ்ய வதன சந்த்ர உத்பன்ன புவன போக்கிய அம்ருதம்
அம்ருத கிரணங்கள் உடைய சந்திரன் -சகோர பஷி இத்தையே தாரகமாக கொள்ளுமே
ஸூ மனஸா-ஸ்ரீ வைஷ்ணவாம் போக்யம் -அமரர்கள் -பூ ஸூ ரர்களுக்கும் –

———————–

ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னம் நாலாம் ச்லோகத்தின் பொருள் விரிக்கையில் ஸ்ரீ தேசிகன்
“மாதா பிதா”வுக்கு விளக்கம் அருள்வது காணீர் –
”அத பராசர ப்ரபந்தாதபி வேதாந்த ரஹஸ்ய வைசாத்யாதிசய ஹேதுபூதை: சாத்ய பரமாத்மனி சித்த ரஞ்சக தமை:
ஸர்வோபஜீவ்யை: மதுரகவி ப்ரப்ருதி ஸம்ப்ரதாய பரம்பரயா நாதமுநேரபி உபகர்த்தாரம் காலவிப்ரகர்ஷேபி
பரமபுருஷ ஸங்கல்பாத் கதாசித் ப்ராதுர்பூய ஸாக்ஷாதபி ஸார்வோபநிஷத் ஸாரோபதேசதரம் பராங்குசமுநிம் “
மாதா பிதா ப்ராதேத்யாதி உபநிஷத் ப்ரசித்த பகவத் ஸ்வபாவ த்ருஷ்ட்யா ப்ரணமதி மாதேதி”.

இங்கு ஸ்ரீ தேசிகன் வேத விஷயங்களை
ஆழ்வார் பராசராதி ரிஷிகளையுங்காட்டில் வெகு நன்றாக விளக்குவதாகக் காட்டியருளுகிறார்.
மேலும் ஆழ்வார் பாசுரங்கள் எல்லார்க்கும் ஏற்புடையனவாயும். ரசகனமாயும் உள்ளன.
ஆகவே எம்பெருமானைப் போன்றே ஆழ்வாரும் தாய், தந்தை என எல்லா உறவு முறையிலும் கொண்டாடப் படுகிறார்.

———————–

ஸ்லோகம் -10-
ஸ்தோத்ரம் செய்ய அல்ப சக்தனான தாமே தகுதியானவர் என்று அவனது ஸ்வாபாவிக வாத்சல்யம் வெளிப்பட்டது
அது அவன் இடம் திருப்பத்தில் எவ்விதமும் ஆச்சர்யம் அன்று என்று
ஒரு கைமுதிக நியாயத்தால் இந்த ஸ்லோகத்தில் ஸ்தாபிக்கிறார்
இது முதல் 12 ஸ்லோகங்களால்
நாராயண சப்தார்த்தம் ஸர்வ ஸ்மாத் பரத்வமும் ஸுலப்யமும் என்று பிரபஞ்சித்திக் கொண்டு
ஸ்ரீ ஆளவந்தார் அவனை நமஸ்கரிக்கிறார் என்பதே ஸ்ரீ தேசிகருடைய அவதாரிகை –

ஹே பிரபு உன்னுடைய சங்கல்பம் இல்லா விடில் விசித்ரமாகப் தென்படும் இப்பிரபஞ்சம் முழுவதும் உண்டாகிறதற்காவது –
ஸத்தை யுடன் கூடி இருக்கிற தற்காவது ஸமர்த்தம் அன்று
அப்படி இருக்கவே அசமர்த்தம் என்றால் ப்ரவ்ருத்தி அதுக்கு எவ்வாறு சம்பவிக்கும்
ஆக இப்படி ஸர்வ ஜந்துக்களும் ஸ்வாபா விக ஸூஹ்ருத்தாகிய உம் இடத்தில் ஆஸ்ரிதவாத்சல்யம் இருப்பது ஆச்சர்யம் அன்று
இவற்றை உண்டாக்கி -ஸத்தயைக் கொடுத்து
போக மோக்ஷம் அடைய கரண களே பரங்க ளையும் கொடுத்த ஸர்வ உபகாரகனுக்கு இல்லாமல்
வேறே யாருக்கு ஆஸ்ரித வாத்சல்யம் சம்பவிக்க முடியும்

நிகில காரணன்–
காரணத்வம் –நியந்த்ருத்வம் -ஸூஹ் ருத்வம் -ஸ்வாமித்வம் -வாத்சல்யம் —
ஐந்து கல்யாண குணங்கள் நிறைந்தவன் அவன் ஒருவனே

அவேஷணம் -ஸங்கல்பம் -அநுஹ்ரஹத்தை முன்னிட்டே செய்து அருளுகிறான்
ஞானம் பலம் இத்யாதி ஸ்வாபாவகிம் போல் ரக்ஷணமும் ஸ்வாபாவகிம் தான்
தன் இடம் த்வேஷம் பாரட்டி உள்ளார் இடம் கூட அவன் வாத்சல்யம் காட்டி அருளுகிறான்

கட வல்லி -ஜூகுப் ஸை இல்லாமல் அந்தர்யாமி -வாத்சல்யம் அடியாகவே
மழலைச் சொல்லை உகக்கும் தாய் போல் நம் பழிச் சொற்களையும் ஏற்கிறான்

———

ஈஸித்ருத்வம் -காரணத்வம் -ஸ்வாமித்வம் -இருக்கும் தன்மை விளக்கம் –11-ஸ்லோகத்தால்

ஹே நாராயணா வேதங்களை பிரமாணமாக ஒத்துக்க கொள்பவர்களின் எவர் தான்
ஸ்வ பாவ ஸித்தமாயும் அளவற்ற மகிமையும் உள்ள ஈஸீத்ருத்வத்தை உம்மிடத்தில் ஸஹிக்க மாட்டார்
ப்ரஹ்மாதிகள் முக்தர்கள் அனைவரதும் உமது மஹிமையில் ஒரு திவிலை ஸ்தானீயர்கள் ஆகிறார்கள் அன்றோ என்று அர்த்தம் –

அநந்ய அதீனம் அபரிமிதம் இவனது ஈஸித் ருத்வம்
மற்றவர்களது -ப்ரஹ்மாதிகளுக்கு
கர்மாதீனம் துக்க மிஸ்ரம் அநித்யம்
முக்தர்களுக்கு பரம அதீனம் -பரிச்சின்னம்
இவனே ஸர்வ அந்தராத்மா -ப்ரவர்த்தகன் -ஸர்வ ஸாக்ஷி -அனைத்துக்கும் ஆஸ்ரயம்

———-

ஸ்ரீ பிள்ளை அந்தாதி
உன் அருள் அன்றி எனக்கு ஒரு நல் துணை இன்மையால்
என் இரு வல்வினை நீயே விலக்கி ஹிதம் கருதி
மன்னிய நல் திரு மந்த்ரம் ஓதும் பொருள் நிலையே
பொன் அருளால் அருளாய் புகழ் தூப்பூல் குல விளக்கே –15-

விளக்காகி வேங்கட வெற்பினில் வாழும் விரை மலராள்
வளக் காதல் கொண்டு மறை மார்பன் திருத்தும் உனது அடியார்
துளக் காதல் இல்லவர் தங்கள் திறத்திலும் தூய்மை எண்ணிக்
களக்காதல் செய்யும் நிலை கடியாய் தூப்புல் காவலனே –16-

——–

வெள்ளப் பரிமுகர் தேசிகராய் விரகால் அடியோம்
உள்ளத்து எழுதியது ஓலையில் அட்டனம் யாம் இதற்கு என்
கொள்ளத் துணியின் இங்கு ஏது ஓன்று இகழினும் கூர் மதியீர்
எள்ளத்தனை யுகவாது இகழாது எம் எழில் மதியே —-அதிகார ஸங்க்ரகம் –56-

——————

பாத்ர பதமாஸ கத விஷ்ணு விமலர் ஷே
வேங்கட மஹீத் ரபதி தீர்த்த திந பூதே
ப்ராதுர பவஜ் ஜகதி தைத்ய ரிபு கண்டா ஹந்த
கவி தார்க்கிக ம்ருகேந்த்ர குரு மூர்த்யா –ஸப்ததி ரத்ன மாலிகா ஸ்லோகம்
திருமணி ஆழ்வாரே ஸ்வாமியாக திரு அவதாரம் என்கிறதே –

——————

வித்ராஸி நீ விபூதவைரி வரூதி நீ நாம்
பத்மாஸநேந பரிசார விதவ் ப்ரயுக்தா
உத் ப்ரேஷ்யதே புத ஜனைர் உப பத்தி பூம் நா
கண்டா ஹரே ஸமஜ நிஷ்ட யதாத்ம நேதி -சங்கல்ப ஸூர்யோதய ஸ்லோகம்

ப்ரஹ்மதேவன் ஆராதனத்துக்கு உபயோகித்த மணி –
இதன் நாதத்தாலே அசுரர்கள் பயந்து ஓடச் செய்ததே –
அவதாரமே நம் ஸ்வாமி -என்றவாறு
திரு ஆராதனத்துக்கு திருமலையில் கை மணி இதனாலே தான் சேவிக்க மாட்டார்கள் –

ஸ்வஸ்தி சுக்ல வர்ஷம் கதகலி 4370-கச்சி நகர் அனந்தாச்சார்யார் தோதார அம்மையாருக்கு
வரத வேங்கட பிரசாதமாக ஸ்வப்னத்தில் அருளிய படி
புரட்டாசி -11- ஞாயிற்றுக் கிழமை 11-28-சுக்ல ஏகாதசி -6 நாழி -19 வினாடிக்கு
திருவோணம் நக்ஷத்ரம் கன்யா லக்கினத்தில் திரு அவதாரம் -1268-
பேர் அருளாளனும் திருச்சின்னம் அருளினான்

இவர் முப்பது தடவை ஸ்ரீ பாஷ்யம் சாதித்து அருளியதை
த்ரிம் ஸத்வாரம் ஸ்ராவித சாரீரக பாஷ்யா -ஸ்லோகம் சங்கல்ப ஸூ ர்யோதயத்தில் அருளிச் செய்துள்ளார்

—————–

தேசம் எல்லாம் உகந்திடவே பெரும்பூதூரில் சித்திரையில் ஆதிரை நாள் தோன்றிக்
காசினி மேல் வாதியாரை வென்று அரங்கர் கதியாக வாழ்ந்து அருளும் எதிராசா முன்
பூ சுரர் கோன் திருவரங்கத்து அமுதனார் உன் பொன்னடி மேல் அந்தாதியாகப் போற்றிப்
பேசிய நற் கலித்துறை நூற்று எட்டுப் பாட்டும் பிழை அறவே எனக்கு அருள் செய் பேணி நீயே

பூ மகள் கோன் தென்னரங்கர் பூம் கழலுக்குப் பாதுகமாய்த்
தாம் மகிழும் செல்வர் சடகோபர் -தே மலர்த் தாட்க்கு
உய்ந்து இனிய பாதுகமாம் எந்தை இராமானுஜனை
வாய்ந்து எனது நெஞ்சமே வாழ் –

—————–

ஸ்ரீ கருட ஸ்தோத்ரம்
கருடாய நமஸ் துப்யம் நமஸ் தே பக்ஷிணாம் பதே
ந போக மாதி ராஜாய ஸூ பர்ணாய நமோ நம
விநதா தந்த ரூபாயா கஸ்யபஸ்ய ஸூதாய ச
அஹீ நாம் வைரிணே துப்யம் விஷ்ணு பத்ராய தே நம
ரக்த ரூபாய தே பஷின் ஸ்வேத மஸ்தக பூஜித
அம்ருதா ஹரணே ஹ்ருஷ்ட தஸ்மை தேவாய தே நம

அம்ருத கலச யுக்தம் காந்தி சம்பூர்ண காத்ரம்
சகல விபூத வந்த்யம் வேத ஸாஸ்த்ரர் அசிந்த்யம்
விவித விமல பஷைர் தூய மாநாண்ட கோளம்
ஸகல விஷவி நாஸம் சிந்த யேத் பக்ஷி ராஜம் –

——–

கருணாகரன் -தயா சதகம்
பயக்ருத் பய நாசன -அபீத ஸ்தவம்
வீர -மஹா வீர வைபவம்
ஸர்வ வாக் ஈஸ்வரேஸ்வர -ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
நைகமாய -தசாவதார ஸ்தோத்ரம்
யோக விதாம் நேத -பகவத் த்யான சோபனம்
ஸ்ரீ மான் -ஸ்ரீ ஸ்துதி
நரஸிம்ஹ வபு—காமாஸிகாஷ்டகம்
அச்யுத -அச்யுத சதகம்
விக்ரம -கருட தண்டகம் –கருட பஞ்சா சத்
வாமன பிராம்சு -தேஹ ளீச ஸ்துதி
வரத -வரதராஜ பஞ்சா ஸத்
ஸவ்ரி -கோபால விம்சதி

—————

வஞ்சப் பர சமயம் மாற்ற வந்தோன் வாழியே
மன்னு புகழ் பூதூரோன் மனம் உகப்போன் வாழியே
கஞ்சத் திரு மங்கை உகக்க வந்தோன் வாழியே
கலியன் உரை குடி கொண்ட கருத்துடையோன் வாழியே
செஞ்சொல் தமிழ் மறைகள் தெளிந்து உரைப்பான் வாழியே
திருமலை மால் திரு மணியாய்ச் சிறக்க வந்தோன் வாழியே
தஞ்சப் பர கதியைத் தந்து அருள்வோன் வாழியே
தண் தமிழ் தூப்புல் திரு வேங்கடவன் தாள் வாழியே –

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —

February 20, 2021

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-தனியன்கள்-

ஸ்வாதயந்நிஹ ஸர்வேஷாம் த்ரய்யந்தார்த்தம் ஸுதுர்க்ரஹம் |
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ர: தம் வந்தே யாமுநாஹ்வயம் ||

யோகிகளுக்குள் சிறந்தவரும், புரிந்து கொள்ள அரிதான வேதாந்த அர்த்தங்களை எல்லோரும்
புரிந்து கொள்ளும்படி ஸ்தோத்ரங்களாக அருளிச்செய்தவருமான ஆளவந்தாரை வணங்குகிறேன்.

நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: |
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: ||

ஆளவந்தாரை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். என்னால் அவரை வணங்குவதை நிறுத்த முடியவில்லை.

ஶ்லோகம் 1 –
முதல் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஸ்ரீமந்நாதமுனிகளின் உண்மையான செல்வமான
ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார்.

நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே |
நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே ||

நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை
எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.
அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர்.
இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.

————-

ஶ்லோகம் 2 –
இதில், பகவத் அவதாரங்களில் ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு இருந்த ஞானம் ஆகியவற்றின் மேலான சிறப்பு விளக்கப்படுகிறது.
அல்லது, “(முந்தைய ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல், என்னளவும் பெருகி வருகிறது”
என்று ஆளவந்தார் அருளிச் செய்கிறார்.

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக
விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும்.
அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

————

ஶ்லோகம் 3 –
தாகம் உள்ள ஒருவன் நீரை மேலும் மேலும் பருகியும் தாகம் தீராமல் இருப்பதைப் போலே,
ஆளவந்தார் “மீண்டும் மீண்டும் நான் ஸ்ரீமந் நாதமுனிகளின் தொண்டன்” என்று அருளிச் செய்கிறார்.

பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய ||

பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும்
உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.
அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

—————

ஶ்லோகம் 4 –
ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

————-

ஶ்லோகம் 5 –
ஆளவந்தார் நம்மாழ்வார் திருவடிகளில் விழுந்து அவரிடத்தில் சரணடைகிறார்.

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

நம்மாழ்வாரின் திருவடிகளே எனக்கும் என் குலத்தவர்களுக்கும், தாய், தந்தை, மனைவி, மக்கள், சிறந்த செல்வம் மற்றும் எல்லாமாகும்.
மகிழ மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும், கைங்கர்யச் செல்வத்தை உடையராயிருக்கும், நம் வைஷ்ணவ குலத்துக்குத்
தலைவரான நம்மாழ்வாரின் இரண்டு திருவடிகளில் என் தலையை வைத்து வணங்குகிறேன்.

—————–

ஶ்லோகம் 6 –
திருவாய்மொழி 7.9.7இல் “வைகுந்தனாகப் புகழ” (ஆழ்வார் “ஸ்ரீவைகுண்டநாதன்” என்று எம்பெருமானைப் புகழும்படி
எம்பெருமான் செய்தான்) என்று சொன்னபடி, எம்பெருமானுக்குக் கொண்டாட்டங்கள் விருப்பம் என்பதாலும்,
எம்பெருமானைக் கொண்டாடுவது ஆசார்யர்களுக்கும் விருப்பம் என்பதாலும், எம்பெருமானைக் கொண்டாடும் எண்ணத்துடன்,
எம்பெருமானே உபாயம் (வழி) மற்றும் உபேயம் (குறிக்கோள்) என்று சுருக்கமாகச் சொல்லி,
எம்பெருமானைக் கொண்டாடத் தொடங்குகிறார் ஆளவந்தார்.

யந் மூர்த்நி மே ஶ்ருதி ஶிரஸ்ஸு ச பாதி யஸ்மிந்
அஸ்மந் மநோரத பதஸ் ஸகலஸ்ஸமேதி |
ஸ்தோஷ்யாமி ந: குல தநம் குல தைவதம் தத்
பாதாரவிந்தம் அரவிந்த விலோசநஸ்ய ||

புண்டரீகாக்ஷனின் (தாமரைக் கண்ணனின்) திவ்ய திருவடிகளைக் கொண்டாடப் போகிறேன்.
இந்த எம்பெருமானே நம் குலத்துக்கு தனமாகவும், தெய்வமாகவும் விளங்குகிறான்.
நம்முடைய அதிகமான பக்தி எல்லாம் அந்த எம்பெருமானின் திருவடிகளிலே போய்ச் சேரும்.
அந்த எம்பெருமானின் திருவடிகளே என்னுடைய தலையிலும், வேதாந்தத்திலும் காணப்படுகின்றன.

—————

ஶ்லோகம் 7 –
ஸ்ரீ கீதை 1.47இல் “விஸ்ருஜ்ய ஸசரம் சாபம்” (வில்லையும் அம்புகளையும் கீழே நழுவவிட்டான்) என்று சொன்னபடி
அர்ஜுனன் எப்படி யுத்தத்திலிருந்து பின் வாங்கினானோ, ஆளவந்தாரும் தன் முயற்சியில் இருந்து பின்வாங்குகிறார்.

தத்வேந யஸ்ய மஹிமார்ணவ ஶீகராணு:
ஶக்யோ ந மாதுமபி ஶர்வ பிதா மஹாத்யை: |
கர்த்தும் ததீய மஹிம ஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ’ஸ்து கவயே நிரபத்ரபாய ||

எம்பெருமானின் பெருமை என்னும் கடலில் ஒரு திவலையில் இருக்கும் ஒரு அணுவின் அளவு கூட ருத்ரன், ப்ரஹ்மா
போன்றவர்களால் அளக்கமுடியாது. கவிஞன் என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டு, அப்படிப்பட்ட
எம்பெருமானின் பெருமைகளைப் பாடத் தொடங்கியதை நினைத்து (இப்படிப்பட்ட நகைப்பிற்குரிய செயலை நினைத்து)
என்னை நானே வணங்கிக் கொள்கிறேன்.

—————–

ஶ்லோகம் 8 –
யுத்தத்திலிருந்து பின்வாங்கிய அர்ஜுனனை ஸ்ரீ கீதை 18.73இல் “கரிஷ்யே வசனம் தவ” (நீ சொல்லும்படி நான் யுத்தம் செய்கிறேன்)
என்று சொல்லும்படி உற்சாகப்படுத்திய எம்பெருமான், ஆளவந்தாரை
“வாய் படைத்த பயன் அவனைக் கொண்டாடுவதற்கே; ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் ‘ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய:’
(அவன் கொண்டாடத்தகுந்தவன்; அவன் கொண்டாட்டங்களை விரும்புபவன்)” என்று சொல்லும்படி உற்சாகப்படுத்தினான்.
இதைக் கேட்ட ஆளவந்தார், எம்பெருமானைக் கொண்டாடுவது என்று முடிவெடுத்தார்.

யத்வா ஶ்ரமாவதி யதாமதி வாப்ய ஶக்த:
ஸ்தௌம்யேவமேவ கலு தே’பி ஸதா ஸ்துவந்த: |
வேதாஶ் சதுர்முக முகாஶ்ச மஹார்ணவாந்த:
கோ மஜ்ஜதோர் அணுகுலாசலயோர் விஶேஷ: ||

அல்லது, சக்தியற்ற நான் சோர்வடையும் வரையிலோ எனக்குத் தெரிந்த அளவிலோ அவனைக் கொண்டாடுவேன்;
இவ்வாறே, வேதங்களும், நான்கு முகங்களைக் கொண்ட ப்ரஹ்மா முதலியவர்களும் எம்பெருமானைக் கொண்டாடுகின்றனர்;
கடலுக்குள் மூழ்கி இருக்கும் சிறு கூழாங்கல்லுக்கும் பெரிய மலைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? (ஒன்றும் இல்லை)

—————–

ஶ்லோகம் 9 –
இதில், ஆளவந்தார் தான் ப்ரஹ்மா முதலியவர்களை விட எம்பெருமானைக் கொண்டாடுவதற்குத்
தகுதி படைத்தவர் என்று அருளிச் செய்கிறார்.

கிஞ்சைஷ ஶக்த்யதிஶயேந ந தே’நுகம்ப்ய:
ஸ்தோதாபி து ஸ்துதி க்ருதேந பரிஶ்ரமேண |
தத்ர ஶ்ரமஸ்து ஸுலபோ மம மந்த புத்தே:
இத் யுத்யமோ’யமுசிதோ மம சாப்ஜ நேத்ர ||

மேலும், என்னுடைய கவிதை பாடும் சிறந்த திறமையால், நீ கருணையைப் பொழியும் நிலையில் நான் இல்லை;
ஆனால், உன்னைக் கொண்டாட முயன்று சோர்வடையும் தன்மையை உடையவன் ஆகையால், நீ என் மீது உன் கருணையைப் பொழியலாம்;
எனக்கு மிகவும் குறைந்த ஞானமே உள்ளதால், எளிதில் சோர்வடைந்து விடுவேன்;
ஆகையால், உன்னைக் கொண்டாடும் இம்முயற்சி ப்ரஹ்மா முதலியவர்களைக் காட்டிலும், எனக்கே மிகவும் பொருத்தமாக உள்ளது.

—————-

ஶ்லோகம் 10 –
எம்பெருமானைக் கொண்டாடுவதிலிருந்து பின் வாங்கி, பிறகு எம்பெருமானால் ஸமாதானம் செய்யப்பட்ட ஆளவந்தார்,
எம்பெருமானைப் புகலாக ஆக்கும் அவனுடைய பரத்வத்தை, இனி வரும் ஐந்து ச்லோகங்களில் அருளிச்செய்கிறார்.
அதில், இந்த முதல் ச்லோகத்தில்,
ஆளவந்தார் சாஸ்த்ரத்தில் இருக்கும் காரண வாக்யங்களைக் கொண்டு (எம்பெருமானிலிருந்தே எல்லாம் உருவாகின்றன என்று சொல்பவை)
எம்பெருமானின் பரத்வத்தை அருளிச் செய்கிறார்.

நாவேக்ஷஸே யதி ததோ புவநாந்யமூநி
நாலம் ப்ரபோ பவிதுமேவ குத: ப்ரவ்ருத்தி: |
ஏவம் நிஸர்க்க ஸுஹ்ருதி த்வயி ஸர்வ ஜந்தோ:
ஸ்வாமிந் நசித்ரமிதமாஶ்ரித வத்ஸலத்வம் ||

—————-

ஶ்லோகம் 11 –
இதில், எம்பெருமானின் பரத்வ லக்ஷணம் (அடையாளம்) விளக்கப்படுகிறது.

ஸ்வாபாவிகாநவதிகாதிஶயேஶித்ருத்வம்
நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக: க: |
ப்ரஹ்மா ஶிவஶ் ஶதமக: பரம: ஸ்வராடிதி
ஏதே’பி யஸ்ய மஹிமார்ணவ விப்ருஷஸ்தே ||

நாராயணனே! உன்னுடைய பெருமைக் கடலில் ஒரு திவலையைப் போன்றவர்களே (கர்மத்துக்கு வசப்பட்ட)
ப்ரஹ்மா, சிவன், இந்திரன் ஆகியோரும், இந்த தேவதைகளைவிடச் சிறந்தவர்களான, கர்மத்துக்கு வசப்படாத முக்தாத்மாக்களும்;
உன்னுடைய இயற்கையான மற்றும் எல்லை யில்லாத பெருமையை உடைய ஐச்வர்யத்தை (ஆளுமையை) எந்த வைதிகன் பொறுக்க மாட்டான்?

——————-

ஶ்லோகம் 12 –
இதில், ஆளவந்தார், ஸந்தேஹத்துக்கு இடமளிக்கும் பொதுப் பெயர்களைச் சொல்லாமல்,
தன்னடையே முழுமையான மற்றும் எம்பெருமானின் பரத்வத்தை நன்றாக வெளியிடும் திருநாமங்களை அருளிச்செய்கிறார்.

கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?
யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி,
பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?

—————–

ஶ்லோகம் 13 –
ஆளவந்தார் ப்ரஹ்மா, ருத்ரன் ஆகியோரின் க்ஷேத்ரஜ்ஞத்வத்தையும் (ஜீவாத்மாவாக இருக்கும் தன்மையையும்)
பகவானின் பரத்வத்தையும், இதிஹாஸ மற்றும் புராணங்களில் உள்ள சரித்ரங்களைக் கொண்டு அருளிச் செய்கிறார்..

வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
ஆபத் விமோசந மஹிஷ்ட பல ப்ரதாநை: |
கோ’ந்ய: ப்ரஜா பஶு பதீ பரிபாதி கஸ்ய
பாதோதகேந ஸ ஶிவஸ் ஸ்வ ஶிரோத்ருதேந ||

ப்ரஜாபதி என்று சொல்லப்படும் பிரமனையும், பசுபதி என்று சொல்லப்படும் ருத்ரனையும் மற்றும் இந்திரனையும்
முறையே அவர்களுக்கு வந்த ஆபத்தான வேதம் திருடப்பட்டு அதை இழந்ததையும்,
தன்னுடைய தந்தையின் தலையைக் கிள்ளிய பாபத்தையும், அஸுரர்களால் ஏற்பட்ட துன்பத்தையும் போக்கியவன் யார்?
யாருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கி, ருத்ரன் புனிதத் தன்மையை அடைந்தான்?

—————–

ஶ்லோகம் 14 –
ஆளவந்தார் எம்பெருமானின் பரத்வத்தை சாஸ்த்ரத்துக்கு அனுகூலமான ந்யாயத்தின் மூலமாக நிரூபித்து,
(இந்த ஐந்து பாசுரங்களின் தொடரை) முடிக்கிறார்.

கஸ்யோதரே ஹரவிரிஞ்சிமுக: ப்ரபஞ்ச:?
கோ ரக்ஷதீமம் அஜனிஷ்டச கஸ்ய நாபே:?|
க்ராந்த்வா நிகீர்ய புநருத்கிரதி த்வதந்ய:
க:? கேந வைஷ பரவாநிதி ஶக்யஶங்க: ||

யாருடைய வயிற்றில் ருத்ரன், ப்ரஹ்மா முதலியவர்களும் இவ்வுலகமும் அடங்கியது? யார் இந்த உலகத்தைக் காப்பவன்?
யாருடைய திருநாபியிலிருந்து இவ்வுலகம் படைக்கப்பட்டது? உன்னைத் தவிர வேறு யாரால் இவ்வுலகம்
அளக்கப்பட்டு, விழுங்கப்பட்டு மீண்டும் வெளியே உமிழப்பட்டது? இவ்வுலகத்தின் தலைவன் யார் என்பதில் ஸந்தேஹம் இருக்க முடியுமா?

——————–

ஶ்லோகம் 15 –
இதில், சாஸ்த்ரத்தின் மூலம் நன்றாக நிரூபிக்கப்பட்டாலும்,
ஸ்ரீ பகவத் கீதை 16.20இல் “ஆஸுரீம் யோனிமாபன்னா:” (அஸுரப் பிறவியில் பிறந்து) என்று சொன்னபடி,
“ஐயோ! இப்படிப்பட்ட அஸுர குணம் உடையவர்கள் எம்பெருமானை இழக்கிறார்களே” என்று அவர்கள் இழவுக்கு ஆளவந்தார் வருந்துகிறார்.
அல்லது –
ஆளவந்தார், இப்படிப்பட்ட பெருமையையுடைய எம்பெருமானை அஸுரத் தன்மை யுடையவர்கள் பார்க்கக் கூடாது என்று
திருவாய்மொழி 1.3.4இல் “யாருமோர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்”
(அவனிடத்தில் விரோதம் பாராட்டுபவர்களால் “இவன் இன்ன தன்மையை உடையவன்” என்று புரிந்து கொள்ள முடியாதவன்)
ஆழ்வார் அருளிச்செய்த க்ரமத்தில் அருளிச் செய்கிறார்.

த்வாம் ஶீல ரூப சரிதை: பரம ப்ரக்ருஷ்ட
ஸத்வேந ஸாத்த்விகதயா ப்ரபலைஶ்ச ஶாஸ்த்ரை: |
ப்ரக்யாததைவ பரமார்த்த விதாம் மதைஶ்ச
நைவாஸுர ப்ரக்ருதய: ப்ரபவந்தி போத்தும் ||

[ஐயோ!] எல்லோரையும் விட உயர்ந்தவனான உன்னை அஸுரர்கள் அறிந்து கொள்ள முடியாது.
உன்னை அறிந்து கொள்ளும் வகைகள்:
உன்னுடைய சீல (எளிமை) குணம், வேதத்தில் கொண்டாடப்பட்ட ரூபங்கள் மற்றும் திவ்யமான லீலைகள்
சுத்த ஸத்வத்தால் நிறைந்திருக்கும் உன்னுடைய பரம பதம்
தன்னிடம் இருக்கும் நன்மையினால் திடமாக இருக்கும் சாஸ்த்ரம்
உன்னைப் பற்றிய உண்மையை அறிந்தவர்களின் அபிப்ராயத்தின் மூலம்

—————

ஶ்லோகம் 16 –
எம்பெருமானின் எளிமையினால் அவனை அடையும் உயர்ந்த ஆத்மாக்களைப் பற்றி எண்ணிய ஆளவந்தார்,
அவர்களுக்குக் கிடைத்த பேறு தனக்குக் கிடைத்ததாக நினைக்கிறார்.

உல்லங்கித த்ரிவித ஸீமஸமாதிஶாயி
ஸம்பாவநம் தவ பரிப்ரடிம ஸ்வபாவம் |
மாயாபலேந பவதா’பி நிகூஹ்யமாநம்
பஶ்யந்தி கேசிதநிஶம் த்வதநந்ய பாவா: ||

உன்னுடைய ஸ்வாமித்வத்தை நீ உன்னுடைய ஆச்சர்ய சக்தியினால் மறைத்துக் கொண்டாலும்,
உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும், மிகவும் உயர்ந்த ஆத்மாக்கள் கால, தேச, வஸ்துக்களுக்கு அப்பாற்பட்ட
உன்னுடைய ஸ்வாமித்வத்தை உணர்ந்து, “எம்பெருமானுக்கு ஸமமாகவோ அவனைவிட உயர்ந்தவராகவோ எவரேனும் உண்டோ?”
என்று ஸந்தேஹம் கொள்ளாமல் இருப்பார்கள்.

———–

ஶ்லோகம் 17 –
இதில் ஆளவந்தார் பகவானாலே நிர்வஹிக்கப்படும், முன்பு விளக்கப்பட்ட அவனுடைய ஸர்வேச்வரத்வத்துக்கு
உட்பட்ட பலவிதமான வஸ்துக்களை அருளிச் செய்கிறார்.

யதண்டம் அண்டாந்தர கோசரம் ச யத்
தஶோத்தராண்யாவரணாநி யாநி ச |
குணா: ப்ரதாநம் புருஷ: பரம் பதம்
பராத்பரம் ப்ரஹ்ம ச தே விபூதய: ||

1) ப்ரஹ்மாவின் ஆளுகைக்குட்பட்ட, 14 லோகங்கள் கொண்ட ப்ரஹ்மாண்டம்,
2) அந்த அண்டத்துக்குள் இருக்கும் வஸ்துக்கள்,
3) ஒவ்வொரு அண்டத்தை மூடிக்கொண்டிருக்கும், முந்தைய ஆவரணத்தைப்போலே பத்து மடங்கு அளவுள்ள, ஸப்த ஆவரணங்கள்,
4) ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்கள் 5) மூல ப்ரக்ருதி 6) இவ்வுலகில் இருக்கும் பத்தாத்மாக்கள் (கட்டுப்பட்ட ஆத்மாக்கள்),
7) ஸ்ரீவைகுண்டம் 8) (தேவதைகளைவிட உயர்ந்தவர்களான) முக்தாத்மாக்களைவிட உயர்ந்தவர்களான நித்ய ஸூரிகள்
9) உன்னுடைய திய்வ மங்கள விக்ரஹங்கள் ஆகிய எல்லாம் உனக்கு சரீரங்களே.

—————

ஶ்லோகம் 18 –
ஆளவந்தார் முன்பு ஶரண்யனான (புகல்) எம்பெருமானின் பெருமைகளைப் பேசினார்.
இதில் “இப்படிப்பட்ட உபய விபூதி நாதனை நாம் எப்படி அணுகுவது?” என்ற தயக்கத்தைப் போக்க,
அவனுடைய அடியார்கள் ஈடுபடும் பன்னிரண்டு குணங்களை அருளிச் செய்கிறார்.
முன்பு பகவானின் ஸர்வேஶ்வரத்வத்தை அருளிய ஆளவந்தார், இப்பொழுது அவனுடைய பேசத் தகுந்த குணங்களை அருளிச் செய்கிறார்.

வஶீ வதாந்யோ குணவாந் ருஜுஶ் ஶுசிர்
ம்ருதுர் தயாளுர் மதுரஸ் ஸ்திரஸ் ஸம: |
க்ருதீ க்ருதஜ்ஞஸ்த்வமஸி ஸ்வபாவதஸ்
ஸமஸ்த கல்யாண குணாம்ருதோததி:||

நீ இயற்கையாகவே அமுதக் கடல் போன்ற இனிமையான குணங்களை உடையவன். உன் குணங்களாவன
1) உன் அடியார்களுக்கு வசப்பட்டவன்
2) உன்னுடைய அடியார்களுக்கு உன்னையே தரும் குணத்தை உடையவன்
3) எல்லோரிடமும் கலந்து பழகும் ஸௌஶீல்யத்தை உடையவன்
4) உள்ளம் உரை செயல்களில் நேர்மை உடையவன்
5) நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணும் பரிசுத்தியை உடையவன்
6) அடியார்களின் பிரிவைத் தாங்க முடியாதவன்
7) அடியார்களின் துயரைத் தாங்க முடியாத கருணை உள்ளம் கொண்டவன்
8) இனிமையானவன்
9) அடியார்களைக் காப்பதில் உறுதியாக இருப்பவன்
10) உன்னிடம் சரணடைந்தவர்களிடத்தில் ஸமமாக இருப்பவன்
11) உன் அடியார்களின் செயல்களை உன் செயல்களாக நினைத்துச் செய்பவன்
12) அடியார்களின் சிறு உதவிகளுக்கும் நன்றியுடன் இருப்பவன்.

——————

ஶ்லோகம் 19 –
இதில், எப்படி பகவானின் திருக்கல்யாண குணங்களுக்கு எல்லை இல்லையோ அதேபோல
ஒவ்வொரு குணத்துக்கும் எல்லை இல்லை என்கிறார் ஆளவந்தார் .

உபர்யுபர்யப்ஜ புவோ’பி பூருஷாந்
ப்ரகல்ப்ய தே யே ஶதமித்யநுக்ரமாத் |
கிரஸ் த்வதேகைக குணாவதீப்ஸயா
ஸதா ஸ்திதா நோத்யமதோ’திஶேரதே ||

வேத வாக்யங்கள் “தேயே சதம்” (இது போன்ற நூறு) என்று மீண்டும் மீண்டும் புதிய ப்ரஹ்மாக்களை கற்பனை செய்து,
உன்னுடைய ஒரு (ஆனந்தம் என்னும்) குணத்தின் எல்லையைக் காண முயன்று,
சிறிதளவும் முன்னேறாமல், ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன,

——————-

ஶ்லோகம் 20 –
ஆளவந்தார் முன்பு அருளிச் செய்த பகவத் குணங்களை அனுபவிக்கும் அடியார்களின் பெருமையை அருளிச் செய்கிறார்.
அல்லது –
ப்ரஹ்ம ஸூத்ரம் 1.1.20இல் “அஸ்மிந்நஸ்ய ச தத்யோகம் ஶாஸ்தி”
(வேதம் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஆனந்தமாகக் கூடியிருக்கும் ஆனந்தத்தை விளக்குகிறது) என்று சொன்னபடி
பகவானிடத்திலிருந்து அடைந்த பெருமையை உடைய அடியார்களின் பெருமையே மிகப் பெரியது என்றால்,
அந்த பகவானின் பெருமை அளவிட முடியாதது என்பது தெளிவு என்கிறார்.

த்வதாஶ்ரிதாநாம் ஜகதுத்பவ ஸ்திதி
ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாதய: |
பவந்தி லீலா விதயஶ்ச வைதிகா:
த்வதீய கம்பீர மநோநுஸாரிண: ||

ப்ரஹ்மா முதலான உன் அடியார்களுக்கு இவ்வுலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது மற்றும் இந்த ஸம்ஸாரத்தை கடக்க உதவுவது
ஆகியவை எளிய விளையாட்டாக இருக்கும்;
வேதத்தின் விதிகளும் கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.

————-

ஶ்லோகம் 21 –
ஶரண்யனான எம்பெருமானின் பெருமைகளை த்யானிக்கிறார்.
அல்லது –
முன்பு உபேயத்தை (குறிக்கோளை) விளக்கினார், இங்கே அதை அடைய விரும்புபவரின் தன்மையை விளக்குகிறார்.
மற்றொரு விளக்கம் –
முன்பு ஶரண்யனான பகவானின் தன்மையை விளக்கிய ஆளவந்தார்,
இங்கே மேலே விளக்கப்படும் சரணாகதியின் தன்மையை வெளியிடுகிறார்.

நமோ நமோ வாங்மநஸாதிபூமயே
நமோ நமோ வாங்மநஸைக பூமயே |
நமோ நமோ’நந்த மஹா விபூதயே
நமோ நமோ’நந்த தயைக ஸிந்தவே ||

தன் முயற்சியால் அறிய முயல்பவர்களின் வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;
உன்னுடைய கருணையால் உன்னை அறிந்தவர்களின் வாக்குக்கும் மனதுக்கும் எட்டுபவனான உனக்கு
என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;
எல்லையில்லாத ஐச்வர்யத்தை உடைய உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;
கருணைக்கடலான உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்.

—————-

ஶ்லோகம் 22 –
ஆளவந்தார் தன்னுடைய தகுதியைச் சொல்லி, முன் பாசுரத்தில் சொல்லப்பட்ட சரணாகதியைச் செய்கிறார்.
அல்லது –
முன்பு சொன்ன குறிக்கோளுக்குத் தகுந்த வழியை அனுஷ்டிப்பதை அருளிச் செய்கிறார் என்றும் சொல்லலாம்.

ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே ||

சரணடையத் தகுந்த ஸ்வாமியே! நான் கர்ம யோகத்தில் நிலையாக இல்லை; என்னிடத்தில் ஆத்ம ஞானமும் இல்லை;
என்னிடத்தில் உன் திருவடிகள் விஷயமான பக்தியும் இல்லை; இப்படி வேறு உபாயமும் புகலும் இல்லாத நான்,
உன் திருவடிகளையே உபாயமாக உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன்.

——————

ஶ்லோகம் 23 –
எம்பெருமான் “உம்மிடத்தில் நன்மைகள் இல்லை என்றாலும் சரி; ஆனால் உம்முடைய தகுதியைக் குலைக்கும்
தடை செய்யப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் இருந்தாலே, நானே உமக்கு நன்மைகளை உண்டாக்கி பேற்றையும் கொடுப்பேன்”
என்று சொல்லுவதாக எண்ணி “நான் தீமைகளின் முழுமையான வடிவமாக இருக்கிறேன்” என்கிறார் ஆளவந்தார் .

ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே
ஸஹஸ்ரஶோ யந்ந மயா வ்யதாயி |
ஸோ’ஹம் விபாகாவஸரே முகுந்த!
க்ரந்தாமி ஸம்ப்ரத்யகதிஸ் தவாக்ரே ||

மோக்ஷத்தைக் கொடுக்கும் ஸ்வாமியே! பல்லாயிரம் முறை என்னால் செய்யப்படாத நிந்திக்கப்பட்ட கர்மங்கள்
சாஸ்த்ரங்களிலேயே இல்லை; இப்பொழுது, என்னுடைய பாபங்கள் பலன் கொடுக்கும் சமயத்தில்,
வேறு புகல் இல்லாததால், நான் தேவரீர் திருமுன்பே நின்று கதறுகிறேன்.

—————-

ஶ்லோகம் 24 –
ஆளவந்தார் எம்பெருமானை அழைத்து “உன்னுடைய கருணையே எனக்கிருக்கும் ஒரே புகல்” என்கிறார்;
ஆளவந்தார் “உன்னை அடைவது எனக்கு எப்படி ஒரு பாக்யமோ, உன்னுடைய கருணைக்கும் நானே தகுதியான பேறு” என்கிறார்.

நிமஜ்ஜதோ’நந்த பவார்ணவாந்த:
சிராய மே கூலமிவாஸி லப்த: |
த்வயாபி லப்தம் பவகவந்நிதாநீம்
அநுத்தமம் பாத்ரமிதம் தயாயா: ||

தேச கால வஸ்துக்களினால் எல்லையிலாத ஸ்வாமியே! இந்த ஸம்ஸாரக் கடலில் பல காலமாக மூழ்கியிருக்கும் எனக்கு
நீ கரையைப் போலே வந்தாய்; பகவானே! உன்னுடைய கருணைக்கு நானே தகுந்த பாத்திரம்.

—————–

ஶ்லோகம் 25 –
எம்பெருமான் “உம்முடைய பாரத்தை முழுவதுமாக என்னிடம் வைத்த பின்பு,
நீர் ஸ்ரீராமாயணம் ஸுந்தர காண்டம் 9.30இல் ‘தத் தஸ்ய ஸத்ருஶம் பவேத்’
(ஸ்ரீராமனே லங்கையை அழித்து என்னை ரக்ஷிப்பதே அவன் தன்மைக்குச் சேர்ந்தது – ஆகையால் நான் அவர் வரும் வரை காத்திருப்பேன்)
என்றபடி இருக்க வேண்டாமோ? எதற்காக உடனே நான் உமக்கு உதவ வேண்டும் என்று நிர்பந்தம் செய்கிறீர்?” என்று கேட்க,
ஆளவந்தார் “என்னுடைய துயரத்தைப் போக்கும்படி நான் கேட்க வில்லை; உன்னுடைய அடியார்கள் இவ்வுலகில் துன்பப்பட்டால்
அது உன்னுடைய பெருமைக்குத் தானே அவப் பெயர்; அதைப் போக்கிக் கொள்ளும்படி ப்ரார்த்திக்கிறேன்” என்கிறார்.

அபூத பூர்வம் மம பாவி கிம்வா
ஸர்வம் ஸஹே மே ஸஹஜம் ஹி து:க்கம் |
கிந்து த்வதக்ரே ஶரணாகதாநாம்
பராபவோ நாத! ந தே’நுரூப: ||

ஸ்வாமியே! இதுவரை அனுபவிக்காத எந்தப் புதிய துன்பம் எனக்கு ஏற்படப்போகிறது இப்போது?
இந்தத் துன்பங்களை நான் பொறுத்துக்கொள்கிறேன்; இவை என்னுடன் பிறந்தவை;
ஆனால் உன்னிடம் சரணடைந்தவர்களுக்கு தேவரீரின் திருமுன்பே ஒரு அவமானம் ஏற்பட்டது என்றால்,
அது தேவரீருடைய பெருமைக்குச் சேராது.

—————

ஶ்லோகம் 26 –
ஆளவந்தார் “நீ உன்னுடைய பெருமைக்கு ஏற்படும் தோஷத்தையும் பார்க்காமல் என்னைக் கை விட்டாலும்,
நான் உன்னை விடமாட்டேன்” என்று தன்னுடைய அகதித்வத்தினாலே (வேறு புகலில்லாத நிலையினாலே)
உண்டான மஹா விஶ்வாஸத்தை வெளியிடுகிறார்.

நிராஸகஸ்யாபி ந தாவதுத்ஸஹே
மஹேஶ! ஹாதும் தவ பாத பங்கஜம் |
ருஷா நிரஸ்தோ’பி ஶிஶு: ஸ்தநந்தயோ
ந ஜாது மாதுஶ் சரணௌ ஜிஹாஸதி ||

ஸர்வேஶ்வரனே! நீ என்னைத் தள்ளினாலும், நான் உன்னுடைய திருவடித் தாமரைகளை விடத் துணிய மாட்டேன்;
பால் குடிக்கும் குழந்தையைத் தாயானவள் கோபத்தில் தள்ளினாலும், அக்குழந்தை தாயின் காலை விடாமல் இருக்குமா போலே.

—————-

ஶ்லோகம் 27 –
ஆளவந்தார் “அநந்ய கதித்வத்தினால் மட்டுமா நான் உன்னைப் பிரியாமல் இருக்கிறேன்?
உன்னுடைய போக்யமான தன்மையில் என் மனம் மூழ்கியிருப்பதால், நான் வேறு விஷயங்களை விரும்ப மாட்டேன்” என்கிறார்.

தவாம்ருதஸ்யந்திநி பாத பங்கஜே
நிவேஶிதாத்மா கதம் அந்யதிச்சதி? |
ஸ்திதே’ரவிந்தே மகரந்தநிர்ப்பரே
மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே ||-

அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம்,
வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்?
தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது, ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?

—————

ஶ்லோகம் 28 –
ஆளவந்தார் “எனக்கு நீ உதவுவதற்கு நான் ஒரு முறை அஞ்சலி (கை கூப்புதல்) செய்வது அமையாதோ?”
என்று அருளிச் செய்கிறார்..

த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||

காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும், அது எல்லாப் பாபங்களையும்
அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்; அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.

—————–

ஶ்லோகம் 29 –
இந்த ச்லோகம் மானஸீக ப்ரபத்தியைக் காட்டும்.
அல்லது –
28 மற்றும் 29ஆம் ச்லோகங்களில் சரணாகதியின் பலனான பர பக்தியை விளக்குவதாக அமைந்திருக்கும்.

உதீர்ண ஸம்ஸார தவாஶுஶுக்ஷணிம்
க்ஷணேந நிர்வாப்ய பராஞ்ச நிர்வ்ருதிம் |
ப்ரயச்சதி த்வச் சரணாருணாம்புஜ
த்வயாநுராகாம்ருத ஸிந்து ஶீகர:||

உன்னுடைய சிவந்த திருவடித் தாமரைகளில் கொள்ளும் அன்புக் கடலில் ஒரு சிறு துளியே மிகவும் உக்ரமாக எரியும்
காட்டுத் தீ போன்ற ஸம்ஸாரத்தை ஒரு க்ஷணத்திலே போக்கி, உயர்ந்த ஆனந்தத்தையும் கொடுக்கும்.

—————-

ஶ்லோகம் 30 –
ஆளவந்தார், பலன் கொடுப்பதில் விளம்பமில்லாத ஸித்தோபாயமான பகவானைப் பற்றியிருப்பதாலும்,
அந்தப் பலனைப் பெறுவதற்குக் காத்திருக்க முடியாததாலும், த்வரையால் தூண்டப்பட்டு
திருவாய்மொழி 6.9.9இல் “கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ”
(என்னை உன்னிடத்தில் அழைத்துக்கொள்ளும் காலம் அருகில் வாராதோ?) என்று ஆழ்வார் கேட்டபடிக் கேட்கிறார்.
அல்லது –
ப்ரபத்தியின் பலனான பரபக்தியினால், ஆளவந்தார்,
திருவாய்மொழி 6.3.10இல் “கனைகழல் காண்பதென்று கொல் கண்கள்”
(என்னுடைய கண்கள் எப்பொழுது எம்பெருமானின் திருவடிகளைக் காணும்) என்றும்
திருவாய்மொழி 9.5.1இல் “காணக் கருதும் என் கண்ணே”
(அவனைக் காண என் கண்கள் ஆசைப்படும்) என்றும் ஆழ்வார் சொன்னபடி எம்பெருமானின் திருவடிகளை
எப்பொழுது காண்பேன் என்று கேட்கிறார்.

விலாஸ விக்ராந்த பராவராலயம்
நமஸ்யதார்த்தி க்ஷபணே க்ருதக்ஷணம் |
தநம் மதீயம் தவ பாத பங்கஜம்
கதாநு ஸாக்ஷாத் கரவாணி சக்ஷுஷா ||

என்னுடைய கண்கள் என்னுடைய தனமும், உயர்ந்த தேவர்கள் மற்றும் தாழ்ந்த மனிதர்களின் இருப்பிடங்களை
விளையாட்டாக அளந்து தன்னதாகக் கொண்டு இருக்கும், வணங்குபவர்களின் துன்பத்தைப் போக்கும்
உன்னுடைய திருவடியை எப்பொழுது காணும்?

———————

ஶ்லோகம் 31 –
இதில், ஆளவந்தார் “உன்னுடைய திருவடிகளைக் கண்டால் போதாது, அவை என்னுடைய தலையை அலங்கரிக்க வேண்டும்”
என்று ஆழ்வார் திருவாய்மொழி 9.2.2இல் “படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்”
(இவ்வுலகத்தின் அளவுக்கு நீட்டிய திருவடித் தாமரைகளை என் தலைக்கு அணியாக ஆக்க வேண்டும்) என்றும்
திருவாய்மொழி 4.3.6இல் “கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே”
(என்னுடைய தலைக்கு உன்னுடைய தாமரை போன்ற திருவடிகளே அலங்காரமாகும்) என்றும் கேட்டபடி அருளிச் செய்கிறார்.

கதா புநஶ் ஶங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குஶ வஜ்ரலாஞ்சநம் |
த்ரிவிக்ரம! த்வச் சரணாம்புஜ த்வயம்
மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி ||

த்ரிவிக்ரமனாக அவதரித்த என் ஸ்வாமியே! சங்கம், சக்ரம், கற்பக மரம், கொடி, தாமரை, அங்குசம், வஜ்ராயுதம்
ஆகிய அடையாளங்கள் பொருந்திய உன்னுடைய திருவடிகள் எப்பொழுது என்னுடை தலையை அலங்கரிக்கும்.

—————–

ஶ்லோகம் 32 –
இதிலிருந்து 46ஆவது ச்லோகம் வரை ஆளவந்தார் எம்பெருமானுடன் கூடியிருக்கும் அவனுடைய
அழகிய அவயவங்கள், திருவாபரணங்கள், திவ்ய ஆயுதங்கள், திவ்ய மஹிஷிகள், திவ்ய அடியார்கள், செல்வம்
ஆகியவைகளை அனுபவித்து, இப்படிப்பட்ட ஆனந்தமான அனுபவத்தினால் கிடைக்கும் கைங்கர்யம்
தனக்கு எப்பொழுது கிடைக்கும் என்கிறார்.
இதன் மூலம், ஆளவந்தார் பகவானுக்குப் பரமபதத்தில் அடியார்களுடன் கூடி இருந்து கைங்கர்யம் செய்யும் குறிக்கோளை அருளிச் செய்கிறார்.

விராஜ மாநோஜ்ஜ்வல பீத வாஸஸம்
ஸ்மிதாத ஸீஸூந ஸமாமலச்சவிம் |
நிமக்ந நாபிம் தநுமத்யம் உந்நதம்
விஶால வக்ஷஸ்ஸ்தல ஶோபி லக்ஷணம் ||

எம்பெருமான் ஒளிவிடும் திருப் பீதாம்பரத்தை அணிந்துள்ளான்;
மலர்ந்த காயாம்பூவின் நிறத்தைப் போன்ற தோஷமற்ற ஒளியுடையவன்;
ஆழமான திருநாபி மற்றும் மெலிந்த இடைப்பகுதியை உடையவனாகச் சிறந்து விளங்குகிறான்,
ஒளிவிடும் ஸ்ரீவத்ஸம் என்கிற மறுவைத் தன் பரந்த திருமார்பில் உடையவன்-

————

ஶ்லோகம் 33 –
இதில், ஆளவந்தார் எம்பெருமானுடைய வீரம், சௌர்யம் முதலிய குணங்களையும்
எம்பெருமானின் திருத்தோள்களின் அழகையும் அனுபவிக்கிறார்.

சகாஸதம் ஜ்யாகிண கர்க்கஶைஶ் ஶுபை:
சதுர்பிராஜாநு விளம்பிபிர் புஜை: |
ப்ரியாவதம்ஸோத்பல கர்ண பூஷண
ஶ்லதாலகாபந்த விமர்த்த ஶம்ஸிபி: ||

வில்லில் நாணேற்றியதால் கடினமாக இருக்கும் நான்கு திருக் கைகளால் ஒளிவிடுகிறான் எம்பெருமான்;
மேலும் அவனுடைய திருத்தோள்களில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாரின் காதுகளில் அணிந்திருக்கும் கரிய நிறத்தில்
இருக்கும் அல்லிப் பூக்கள், அவளின் காதணிகள் மற்றும் அலையும் கூந்தலின் அடையாளங்கள் தெரிகின்றன –

————-

ஶ்லோகம் 34 –
திருத்தோள்களை அனுபவித்த பிறகு, எம்பெருமானின் திருக்கழுத்தையும் திருமுகமண்டலத்தின் அழகையும்
ஆளவந்தார் அனுபவிக்கிறார்.

உதக்ர பீநாம்ஸ விலம்பி குண்டல
அலகாவளீ பந்துர கம்புகந்தரம் |
முகஶ்ரியா ந்யக்க்ருதபூர்ண நிர்மலா’-
ம்ருதாம்ஶு பிம்பாம்புருஹோஜ்ஜ்வல ஶ்ரியம் ||

எம்பெருமான் அணிந்திருக்கும் குண்டலங்கள் அவனுடைய உயர்ந்த திரண்டிருக்கும் திருத்தோள்களின் வரை வந்து தொங்குவதாலும்,
அவனுடைய சுருண்ட கூந்தலினாலும், மூன்று வரிகள் இருப்பதாலும் அவனுடைய திருக்கழுத்து அழகாக இருக்கிறது.
தன்னுடைய திருமுக மண்டலத்தின் ஒளியால் தோஷமற்ற நிலவு மற்றும் அப்போதலர்ந்த தாமரை மலரை ஜயித்திருக்கிறான் —

————-

ஶ்லோகம் 35 –
ஆழ்வார், திருவாய்மொழி 7.7.8இல் “கோளிழைத் தாமரை”
(எம்பெருமானின் திருக்கண்கள் அவற்றின் ஒளியையே ஆபரணமாகக் கொண்டிருக்கின்றன) என்று சொன்னபடி,
ஆளவந்தார் எம்பெருமானின் திருமுகமண்டலத்தை ஒவ்வொரு அவயமாக அனுபவிக்கிறார்.

ப்ரபுத்த முக்தாம்புஜ சாருலோசநம்
ஸவிப்ரம ப்ரூலதம் உஜ்ஜ்வலாதரம் |
ஶுசிஸ்மிதம் கோமல கண்டம் உந்நஸம்
லலாடபர்யந்த விலம்பிதாலகம் ||

எம்பெருமான் மலர்ந்த, புதிய தாமரை மலரைப் போன்ற திருக்கண்களையும், கொடி போன்று வளைந்த திருப்புருவங்களையும்,
மிகவும் ஒளிவிடும் திருவதரங்களையும், புனிதமான புன்முறுவலையும், அழகிய கன்னங்களையும், நிமிர்ந்த திருமூக்கையும்,
திருநெற்றி வரை படர்ந்திருக்கும் திருக்குழலையும் (கூந்தலையும்) உடையவன் –

——————

ஶ்லோகம் 36 –
ஆளவந்தார் எம்பெருமானின் திருவாபரணங்கள் மற்று திவ்ய ஆயுதங்களின் சேர்த்தியை அனுபவிக்கிறார்.

ஸ்புரத் கிரீடாங்கத ஹாரகண்டிகா
மணீந்த்ர காஞ்சீகுண நூபுராதிபி: |
ரதாங்க ஶங்காஸி கதா தநுர்வரைர்
லஸத் துளஸ்யா வநமாலயோஜ்ஜ்வலம் ||

எம்பெருமான் ஒளிவிடும் திருமுடி (கிரீடம்), தோள் காப்புகள், ஹாரம், கழுத்தில் அணியும் சங்கிலி, ஸ்ரீகௌஸ்துப மணி,
திவ்ய அரை நாண், திவ்ய சதங்கைகள் முதலிய திவ்ய ஆபரணங்களாலும்,
திருவாழி, திருச்சங்கு, திருநாந்தகம் என்னும் வாள், கௌமோதகீ என்னும் கதை, சார்ங்கம் என்னும் வில் ஆகிய திவ்ய ஆயுதங்களாலும்,
அவனுடைய திருமேனி ஸம்பந்தத்தால் ஒளி விடும் திருத்துழாய் மற்றும் வனமாலையால் மிகவும் ஜ்வலித்துக் கொண்டிருக்கிறான்.

—————-

ஶ்லோகம் 37 –
இனி வரும் இரண்டு ஶ்லோகங்களில் எம்பெருமான் பெரிய பிராட்டியுடன் கூடி இருப்பதை அனுபவிக்கிறார்.
இந்த ஶ்லோகத்தில், ஆளவந்தார் பிராட்டியின் பெருமையையும், ஈஶ்வரனுக்கு அவளிடத்தில் இருக்கும் பேரன்பையும் அருளிச் செய்கிறார்.

சகர்த்த யஸ்யா பவநம் புஜாந்தரம்
தவ ப்ரியம் தாம யதீய ஜந்மபூ: |
ஜகத்ஸமஸ்தம் யதபாங்க ஸம்ஶ்ரயம்
யதர்த்தம் அம்போதிரமந்த்ய பந்திச ||

எம்பெருமானே! எந்தப் பிராட்டிக்கு இருப்பிடமாக உன்னுடைய திருமார்பை ஆக்கினாயோ,
எந்தப் பிராட்டியின் பிறப்பிடமான திருப்பாற்கடல் உனக்கு விருப்பமான உறைவிடம் ஆனதோ,
எந்தப் பிராட்டியின் கடாக்ஷத்தை நம்பி இவ்வுலகம் இருக்கிறதோ, யாருக்காக நீ கடலைக் கடைந்தாயோ,
யாருக்காக நீ கடலில் அணை கட்டினாயோ–

————

ஶ்லோகம் 38 –
இதில், ஆளவந்தார் பிராட்டியின் எல்லை இல்லாத இனிமையையும், அவள் எம்பெருமானுக்காகவே இருப்பதையும்,
திருவாய்மொழி 10.10.6இல் “உனக்கேற்கும் கோல மலர்ப் பாவை”
(உனக்குத் தகுந்தவளான, அழகிய தாமரை மலரில் வசிக்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மி) சொன்னபடி அனுபவிக்கிறார்.

ஸ்வவைஶ்வ ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாததாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||

நீ விஶ்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள்
மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய
எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.

—————-

ஶ்லோகம் 39 –
ஆளவந்தார், திருவனந்தாழ்வானின் திருமடியில் எம்பெருமானும் பிராட்டியும் கூடியிருப்பதைப்
பர்யங்க வித்யையில் காட்டியபடி அனுபவிக்கிறார்.

தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால்
ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–

—————–

ஶ்லோகம் 40 –
கைங்கர்யத்தில் இருக்கும் ஆசையால், ஆளவந்தார் திருவனந்தாழ்வானின் உயர்ந்த லீலைகளை அனுபவிக்கிறார்.
ஸ்ரீவிஷ்ணு புராணம் 1.15.157இல் ““உபமானமஶேஷாணாம் ஸாதூனாம் யஸ்ஸதா’பவத் |”
(எப்படி ப்ரஹ்லாதன் எல்லா நல்லவர்களுக்கும் உதாரணமாக இருக்கிறானோ) சொன்னபடி,
கைங்கர்யத்தில் ருசியுடைய அனைவருக்கும் திருவனந்தாழ்வானின் செயல்களே சிறந்த உதாரணம்.
ஆளவந்தார் இப்படிப்பட்ட ஆதிசேஷனின் உயர்ந்த நிலையை அருளிச் செய்கிறார்.

நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||

நீ திருவனந்தாழ்வானின் திருமேனியிலே திவ்யமாக சயனித்திருக்கிறாய். திருவனந்தாழ்வான் நீ வசிக்கும் திருமாளிகையாகவும்,
சயனித்துக்கொள்ளும் படுக்கையாகவும், வீற்றிருக்கும் ஸிம்ஹாஸனமாகவும். அணிந்துகொள்ளும் பாதுகையாகவும்,
உடுத்திக்கொள்ளும் ஆடைகளாகவும், அணைத்துக்கொள்ளும் தலையணையாகவும்,
வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கும் குடையாகவும், மேலும் பல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு
உனக்குத் தொண்டு செய்வதால் எல்லோராலும் “சேஷன்” (தொண்டன்) என்றே அழைக்கப்படுகிறான் —

————-

ஶ்லோகம் 41 –
இதில், ஆளவந்தார் எம்பெருமான் பெரிய திருவடியுடன் (கருடாழ்வார்) கூடியிருப்பதை அனுபவிக்கிறார்.
பெரியதிருவடி, எம்பெருமானுக்குக் கொடியாகவும், மற்றும் எல்லாமாகவும் பழுத்த கனியைப் போன்று
எம்பெருமானுக்கு விரும்பத்தக்கவராக இருக்கிறார்.

தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும்,
ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்;
மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்;
உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —

————–

ஶ்லோகம் 42 –
ஆளவந்தார் ஸ்ரீ ஸேனாபதி ஆழ்வானின் (விஷ்வக்ஸேனர்) தாஸ்ய ஸாம்ராஜ்யத்தை அனுபவிக்கிறார்;
எம்பெருமான் தன்னுடைய எல்லாப் பொறுப்புகளையும் விஷ்வக்ஸேனரிடம் அளித்துத் தன்னையும் அவர் அதீனத்தில் அமைத்துக் கொள்கிறான்.

த்வதீய புக்தோஜ்ஜித ஶேஷபோஜிநா
த்வயா நிஸ்ருஷ்டாத்ம பரேண யத்யதா |
ப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி தத்
ததா’நுஜாநந்தம் உதார வீக்ஷணை: ||

விஷ்வக்ஸேனர் உன்னுடைய ப்ரஸாதத்தையே உண்டு, உன்னுடைய நித்ய மற்றும் லீலா விபூதிகளை நடத்தும்
பொறுப்புகளை உன்னிடத்திலிருந்து பெற்றிருக்கிறார்;
எல்லோருக்கும் இனியவரான அவர், உன்னுடைய கண்ணசைவினாலே செய்ய வேண்டிய விஷயங்களுக்கு ஒப்புதல் வாங்கி,
அவற்றை நடத்தக் கூடியவர்.

—————

ஶ்லோகம் 43 –
விஷ்ணு ஸூக்தத்தில் “ஸதா பஶ்யந்தி ஸூரய:” (நித்யஸூரிகள் எப்பொழுதும் எம்பெருமானைப் பார்த்து அனுபவிக்கிறார்கள்)
என்று சொன்னபடி, எம்பெருமானுக்கு நித்யஸூரிகள் செய்யும் கைங்கர்யத்தை அனுபவிக்கிறார்.
இவருடைய ப்ரார்த்தனை திருவாய்மொழி 2.3.10இல் “அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ?”
(எப்பொழுது நான் நித்யஸூரிகள் கோஷ்டியில் இருப்பேன்?) என்று ஆழ்வார் கேட்டபடி இருக்கும்.

ஹதாகில க்லேஶமலை: ஸ்வபாவத:
*ஸதாநுகூல்யைகரஸைஸ் தவோசிதை: |
க்ருஹீத தத்தத் பரிசார ஸாதநை:
நிஷேவ்யமாணம் ஸசிவைர் யதோசிதம் ||-

* த்வதாநுகூல்யைக என்றும் ஒரு பாடம் உண்டு..

துன்பங்களும் தோஷங்களும் இல்லாத, எப்பொழுதும் உனக்குத் தொண்டு செய்யும் அனுபவத்தை உடைய,
உனக்குப் பொருத்தமாக இருக்கக்கூடியவர்களான, கையில் எப்பொழுதும் கைங்கர்யத்துக்குத் தேவையான
மாலை, தூபம், தீபம் முதலியவைகளை ஏந்தி இருப்பவர்களான, உனக்கும் முறையை உணர்த்திக்
கைங்கர்யம் செய்யக்கூடியவர்களான, அவர்கள் மற்றும் உன் தன்மைக்கேற்ப உன்னை வணங்கக்கூடிய நித்யஸூரிகளால் வணங்கப்படுபவனே!

————–

ஶ்லோகம் 44 – ஸ்ரீ ராமாயணம் அயோத்யா காண்டம் 31.25இல்
இளைய பெருமாள் “பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸானுஷு ரம்ஸ்யதே”
(நீ ஸீதாப்பிராட்டியுடன் மலைத்தாழ்வரைகளில் ரமித்திருக்கும்போது, நான் உங்கள் இருவருக்கும் தொண்டு செய்வேன்)
என்று சொன்னபடி, ஆளவந்தார் எம்பெருமான் பிராட்டிக்கு ஆனந்தம் கொடுப்பதை அனுபவிக்க ஆசைப்படுகிறார்.

அபூர்வ நாநா ரஸ பாவ நிர்பர
ப்ரபுத்தயா முக்த விதக்த லீலயா |
க்ஷணாணுவத் க்ஷிப்தபராதி காலயா
ப்ரஹர்ஷயந்தம் மஹிஷீம் மஹாபுஜம் ||

தன்னுடைய அழகான மற்றும் சிறந்ததான லீலைகளால் பிராட்டிக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவன் எம்பெருமான்;
இப்படிப்பட்ட லீலைகளால் பிராட்டிக்கு ப்ரஹ்மாவின் ஆயுட்காலமும் ஒரு நொடிப்பொழுதில் செல்லும்படி
ஒவ்வொரு க்ஷணமும் புதியதாக ரசிக்கும்படியாக இருக்கும்; பிராட்டியைத் தழுவுதற்கு ஏற்ற பெரிய திருக்கைகளை உடையவன்.

—————

ஶ்லோகம் 45 –
ஆளவந்தார் பிராட்டிக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும், ரசிக்கும்படியான விஷயங்களுக்கு இருப்பிடமான
எம்பெருமானின் திருமேனிகள் மற்றும் திருக்கல்யாண குணங்களை அனுபவிக்கிறார்.

அசிந்த்ய திவ்யாத்புத நித்ய யௌவந
ஸ்வபாவ லாவண்யமயாம்ருதோததிம் |
ஶ்ரிய: ஶ்ரியம் பக்த ஜநைக ஜீவிதம்
ஸமர்த்தம் ஆபத்ஸகம் அர்த்தி கல்பகம் ||

எம்பெருமான் நினைவுக்கு அப்பாற்பட்ட, திவ்யமான, ஆச்சர்யமான, நித்யமான, இயற்கையான இளமையை உடையவன்;
அழகுக் கடலாக இருப்பவன்; ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் ஸ்ரீயாக (செல்வமாக) இருப்பவன்;
தன்னுடைய அடியார்களின் உயிராக இருப்பவன்; அறிவில் குறைந்தவர்களையும் படிப்படியாக உயர்த்தக்கூடியவன்,
ஆபத்துக் காலத்தில் நண்பனாக இருப்பவன், அவனை விரும்புபவர்களுக்கு கற்பக மரமாக இருப்பவன் –

——————-

ஶ்லோகம் 46 –
ஆளவந்தார் “எப்பொழுது உலக விஷயங்களில் ஆசையைவிட்டு தேவரீருடைய ஆனந்துக்காகவும்
என்னுடைய இருப்பின் பயனாகவும், முன்பு சொன்ன ஸ்வரூபம், ரூபம், குணம், விபூதி ஆகியவைகளில்
பூர்த்தியை உடைய தேவரீருக்குக் கைங்கர்யம் செய்வேன்?” என்று கேட்கிறார்.

பவந்த மேவாநுசரந் நிரந்தரம்
ப்ரஶாந்த நிஶ்ஶேஷ மநோரதாந்தர: |
கதா’ஹம் ஐகாந்திக நித்ய கிங்கர:
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாதஜீவித: ||

மற்ற எல்லா விஷயங்களிலுமிருக்கும் ஆசையை அடியோடு விட்டு உன்னையே தொடரும்படி இருந்து,
எப்பொழுதும் உனக்கு நித்ய கைங்கர்யம் செய்து உனக்கு ஆனந்தத்தைக் கொடுத்து என் வாழ்கைக்கும் ஒரு பயனைப் பெறுவேன்?

———————

ஶ்லோகம் 47 –
இதில், ஆளவந்தார் ஈஶ்வரனின் அடையத்தக்க உயர்ந்த நிலையையும் தன்னுடைய முந்தைய (தாழ்ந்த) நிலையையும் பார்த்து
“ஸம்ஸாரியான நான் எப்படி ப்ரஹ்மா ருத்ரன் போன்றவர்களின் எண்ணத்துக்கும் அப்பாற்பட்ட, இவ்வுலக விஷயங்களால்
தீண்டப்படாத நித்யஸூரிகள் ஆசைப்படும் கைங்கர்யத்தை ஆசைப்படலாம்?
எப்படி உயர்ந்த உணவானது விஷத்தால் தீண்டப்படலாம்?” என்று நினைத்து,
நம்மாழ்வார் “வளவேழுலகில்” செய்ததைப்போலே தன்னைத் தானே கடிந்து கொள்கிறார்.

திகஶுசிம் அவிநீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரம புருஷ! யோ’ஹம் யோகிவர்யாக்ரகண்யை: |
விதிஶிவ ஸநகாத்யைர் த்யாதும் அத்யந்த தூரம்
தவ பரிஜநபாவம் காமயே காமவ்ருத்த: ||

புருஷோத்தமனே! என்னுடைய (தவறான) எண்ணப்படி நடக்கும் தன்மையை உடைய காரணத்தால் ப்ரஸித்தமான நான்,
என்னுடைய புனிதமற்ற தன்மையாலும், சீர் செய்யப்படாத தன்மையாலும், கருணையும், வெட்கமும் இல்லாத தன்மையாலும்,
ப்ரஹ்மா, சிவன், ஸனகாதி முனிவர்கள் போன்ற உயர்ந்த யோகிகளுக்கும் எட்டாததான
உன் கைங்கர்யத்தை ஆசைப்பட்டதை என்னையே நினைத்து நொந்துகொள்ள வேண்டும்.

——————

ஶ்லோகம் 48 –
ஆளவந்தார் எம்பெருமானிடத்தில் “உன்னுடைய கருணையால், என்னுடைய பாபங்களைப் போக்கி
என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
அல்லது –
ஆளவந்தார் எம்பெருமானிடத்தில் “என்னுடைய குறிக்கோளை அடைவதற்குத் தடையாக இருக்கும்
பாபங்களை நீயே போக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
முன்பு, எம்பெருமானின் மேன்மையின் உச்சக்கட்ட நிலையைப் பார்த்து விலகினார்;
இப்பொழுது எம்பெருமானின் எளிமையின் உச்சக் கட்ட நிலையை நினைத்து அவனை அணுகுகிறார்.

அபராத ஸஹஸ்ர பாஜநம்
பதிதம் பீமபவார்ணவோதரே |
அகதிம் ஶரணாகதம் ஹரே!
க்ருபயா கேவலமாத்ஸமாத் குரு ||

துன்பங்களைப் போக்கி என்னை ரக்ஷிப்பவனே! கணக்கில்லாத அபராதங்களுக்கு இருப்பிடம் நான்;
இப்பொழுது இந்த ஸம்ஸாரம் என்கிற க்ரூரமான கடலில் முழுகியுள்ளேன்; எனக்கு வேறு புகல் இல்லை;
உன்னிடத்திலே சரணடைந்துள்ளேன்; உன்னுடைய கருணையினாலே என்னை உன்னுடையவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

————–

ஶ்லோகம் 49 –
எம்பெருமான் ஆளவந்தாரைப் பார்த்து “இத்தனை தோஷங்களை உடைய நீர், வேறு உபாயங்களைக் கொண்டோ
அல்லது மற்றவைகளை விட்டு என்னையே பிடித்துக் கொண்டோ அவற்றைப் போக்கிக்கொள்ளாமல்,
என்னை ‘க்ருபயா கேவலம் ஆத்மஸாத் குரு’
(உன்னிடைய கருணையாலே, என்னை உன்னுடையவனாக ஏற்றுக் கொள் என்று ஏன் நிர்பந்திக்கிறீர்?” என்று கேட்க,
அதற்கு ஆளவந்தார்
“சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட அனுஷ்டானங்களில் ஈடுபட எனக்கு ஞானம் இல்லை,
ஆகையால் மற்ற உபாயங்களில் ஈடுபட வழியில்லை; எனக்கு வேறு புகல் இல்லாததால்,
இருப்பவற்றைக் கைவிடவும் முடியாது. ஆகையால் உன்னுடைய பெரிய கருணையினால்,
உன்னுடைய கடாக்ஷமே எனக்கு உஜ்ஜீவனத்துக்கு வழி” என்கிறார்.

அவிவேக கநாந்த திங்முகே
பஹுதா ஸந்தத து:க்கவர்ஷிணி |
பகவந்! பவதுர்திநே பத:
ஸ்கலிதம் மாம் அவலோகயாச்யுத ||

ஞானம், பலம் முதலிய ஆறு குணங்களால் பூர்த்தியை உடைய பகவானே! உன்னுடைய அடியார்களை நழுவ விடாதவனே!
திசைகள் கரிய மேகங்களால் மறைக்கப்பட்டிருக்கும், மழைக்கால இருட்டை உடைய, பெரிய மழை தொடர்ந்து பொழியும்
இந்த ஸம்ஸாரத்தில், நல்வழியில் இருந்து நான் நழுவுகிறேன்; உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தை எனக்கு அருள்.

—————–

ஶ்லோகம் 50 –
ஆளவந்தார் “எனக்கு உன்னுடைய கருணையைத் தவிர வேறு புகல் இல்லாததால், உன்னுடைய கருணைக்கும்
என்னை விட சிறந்த பாத்திரம் கிடையாது; ஆகையால் இந்த வாய்ப்பை நழுவ விடாதே” என்கிறார்.

ந ம்ருஷா பரமார்த்தமேவ மே
ஶ்ருணு விஜ்ஞாபநம் ஏகமக்ரத: |
யதி மே ந தயிஷ்யஸே ததோ
தயநீயஸ் தவ நாத துர்லப: ||

ஸ்வாமி! முதலில் என்னுடைய ப்ரார்த்தனையைக் கேள்; இது பொய்யல்ல; இது உண்மையே;
உன்னுடைய கருணையை எனக்கு அளிக்காமல் என்னை இழந்து விட்டாய் என்றால்,
உன்னுடைய கருணையைப் பெற என்னைவிடத் தகுந்த எவரையும் நீ பெறமாட்டாய்.

——————

ஶ்லோகம் 51 –
ஆளவந்தார் “உன்னுடைய அருளை வேண்டும் எனக்கும் அருளை உடைய உனக்கும் உள்ள இந்த ஸம்பந்தம்,
தேவரீருடைய கருணையினாலே ஏற்பட்டது; ஆகையால் இதைக் கைவிடாமல் நீ காக்க வேண்டும்” என்கிறார்.

ததஹம் த்வத்ருதே ந நாதவாந்
மத்ருதே த்வம் தயநீயவாந் ந ச |
விதி நிர்மிதம் ஏததந்வயம்
பகவந்! பாலய மா ஸ்ம ஜீஹப: ||

ஞானம் நிறைந்த ஸ்வாமியே! ஆதலால் உன்னைத் தவிர எனக்கு வேறு ஒரு ஸ்வாமி கிடையாது;
அதே போல உன்னுடைய கருணைக்கும் என்னைத் தவிர வேறு யாரும் சரியான பாத்திரம் கிடையாது.
உன்னுடைய கருணையால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஸம்பந்தம் காக்கப்பட வேண்டும்; அதை நழுவ விடாதே.

—————–

ஶ்லோகம் 52 –
எம்பெருமான் “என்னுடைய ரக்ஷணம் ஆத்மாவின் ஸ்வரூபத்தின்படி இருக்கும்; உம்முடைய ஸ்வரூபத்தை ஆராய்ந்து,
என்னிடத்தில் உம்மை ஸமர்ப்பியும்” என்று சொல்ல,
ஆளவந்தாரும் ஆழ்வார் திருவாய்மொழி 2.9.6இல் “சிறப்பில் வீடு” என்று செய்தபடி,
“எனக்கு எந்த நிர்பந்தமும் இல்லை; ஆத்மா என்று சொல்லப்படும் இந்த வஸ்து தேவரீரின் திருவடிகளில் என்னால் ஸமர்ப்பிக்கப்பட்டது”

வபுராதிஷு யோ’பி கோ’பி வா
குணதோ’ஸாநி யதா ததாவித: |
ததயம் தவ பாத பத்மயோ:
அஹமத்யைவ மயா ஸமர்ப்பித: ||

நான் சரீரம் முதலான எதுவாகவோ எப்படிப்பட்ட தன்மையை உடையவனாகவும் இருக்கலாம்;
அதைப்பற்றி எனக்கு ஒரு நிர்பந்தமும் இல்லை; நான் என்று சொல்லப்படும் இந்த வஸ்து இப்பொழுது
உன்னுடைய திருவடித் தாமரைகளில் என்னால் ஸமர்ப்பிக்கப் பட்டது.

————–

ஶ்லோகம் 53 –
எம்பெருமான் கருணையுடன் “எப்படி நாம் ஆளவந்தாரைக் கலக்கத்தில் இருக்கும்படி விடுவது?” என்று எண்ணி
“நீர் யார்; நீர் யாரை என்னிடம் ஸமர்ப்பித்தீர்?” என்று கேட்க,
ஆளவந்தார், தன்னுடைய ஸ்வரூபத்தை ஆழ்வார் திருவாய்மொழி 2.3.4இல் “எனதாவி ஆவியும் நீ … எனதாவி யார்? யானார்?”
(நீயே எனக்கு அந்தராத்மா; என்னுடைய ஆத்மா யார்? நான் யார்? எல்லாம் உன்னுடையவையே) என்றபடி
“உன்னுடைய உடைமையை நீயே ஏற்றுக்கொண்டாய்; ஆத்மாவை ஸமர்ப்பிப்பதும் ஆத்மாவைத் திருடுவது போலன்றோ?”
என்று சொல்லி தன்னுடைய ஆத்ம ஸமர்ப்பணச் செயலுக்கு வருந்துகிறார்.

மம நாத ! யதஸ்தி யோ’ஸ்ம்யஹம்
ஸகலம் தத்தி தவைவ மாதவ |
நியதஸ்வம் இதி ப்ரபுத்ததீ:
அதவா கிந்நு ஸமர்ப்பயாமி தே ||

ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானே! லக்ஷ்மீநாதனே! என்னுடைய எல்லா உடைமைப் பொருள்களும் நானும்
எப்பொழுதும் உன்னுடையவையே. இது தெரிந்த நான், உனக்கு எதை ஸமர்ப்பிப்பேன்?

—————–

ஶ்லோகம் 54 –
ஆளவந்தார் எம்பெருமானிடம் “ஆத்மாவைத் திருடுவதற்கு ஸமமான இந்த ஆத்ம ஸமர்ப்பணத்தை நான் நிறுத்தாததால்,
உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினால் என்னுடைய சேஷத்வத்தை வெளியிட்டதைப் போலே,
பரபக்தி, பரஞானம் மற்றும் பரமபக்தி ஆகியவைகளையும் அளித்து,
இந்த ஞானம் உன்னுடைய கைங்கர்யத்துக்கு உதவும்படிச் செய்” என்கிறார்.

அவபோதிதவாநிமாம் யதா
மயி நித்யாம் பவதீயதாம் ஸ்வயம் |
க்ருபயைததநந்ய போக்யதாம்
பகவந்! பக்திம் அபி ப்ரயச்ச மே ||

என் ஸ்வாமியே! எப்படி உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் என்னுடைய சேஷத்வத்தை எனக்கு அறிவுறுத்தினாயோ,
அதேபோல வேறு எங்கும் கிடைக்காத, உன்னிடத்தில் பக்தி செய்யும் அந்த இனிய அனுபவத்தையும், நீயே அளிக்க வேண்டும்.

—————–

ஶ்லோகம் 55 –
ஆளவந்தார் பகவானிடத்தில் அதிகமான பக்தியைப் பெற்றபின், பகவானிடத்தில் அடிமைத்தனத்துடன் நிறுத்தாமல்,
அவனுடைய அடியார்களுக்கு அடிமையாக இருப்பதை ப்ரார்த்திக்கிறார்.

தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||

எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும்.
மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.

—————–

ஶ்லோகம் 56 –
ஆளவந்தார் “எனக்கு ஒரு வைஷ்ணவரின் திருமாளிகையில் பிறக்கும் பெருமை தான் வேண்டுமோ?
அவர்கள் என்னைக் கண்டால், என்னைத் தள்ளி விடாமல், “இவன் நம்மவன்” என்று கருதித் தங்கள் விசேஷமான
கருணையை எனக்கு அளிக்க வேண்டும்படி நீ செய்ய வேண்டும்” என்கிறார்.

ஸக்ருத் த்வதாகார விலோகநாஶயா
த்ருணீ க்ருதாந் உத்தம புக்தி முக்திபி: |
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய
க்ஷணே’பி தே யத்விரஹோ’திதுஸ்ஸஹ: ||

உன்னுடைய பிரிவைத் தாங்க முடியாதவர்களான, எத்தனை இன்பங்களும் மோக்ஷமும் பெற்றிருந்தாலும்
உன்னுடைய திருமேனியை ஒரு முறை பார்ப்பதைக் கருதினால், அவற்றைப் புல்லைப் போல மதிப்பவர்களான
சிறந்த வைஷ்ணவர்களின் கருணைப் பார்வைக்கு நான் இலக்காகும் தகுதியை எனக்குக் கொடு.

—————–

ஶ்லோகம் 57 –
முன் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஶேஷத்வத்தின் உயர்ந்த நிலையான அடியார்களுக்கு அடிமைப்பட்டிருப்பதை அனுபவித்தார்.
இங்கே ஶேஷத்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் விஷயங்களில் தனக்கு இருக்கும் வெறுப்பைச் சொல்லி,
எம்பெருமானிடத்தில் “அவற்றை நீக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.

ந தேஹம் ந ப்ராணாந்ந ச ஸுகம் அஶேஷாபிலஷிதம்
ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஶேஷத்வ விபவாத் |
பஹிர்பூதம் நாத! க்ஷணமபி ஸஹே யாது ஶததா
விநாஶம் தத்ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபனம் இதம் ||

ஸ்வாமியே! உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய
தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும்
அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும்.
மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை.

—————–

ஶ்லோகம் 58 –
எம்பெருமான் “இந்த ஸம்ஸாரத்தில் என்னுடைய கோபத்துக் காரணமான பகவத் அபசாரம் முதலிய எத்தனையோ விஷயங்கள் இருக்க,
கைங்கர்யத்துக்கு விரோதியான இவற்றில் வெறுப்பு ஏற்பட்டு, யோகிகளுக்கும் அரிதான இந்நிலையை ப்ரார்த்திப்பவரும் உளரே!”
என்று ஆச்சர்யப்பட,
ஆளவந்தார் “இந்த தோஷங்களை நீக்கக்கூடிய தேவரீரின் எல்லையில்லாத திருக்கல்யாண குணங்களை
நினைத்து இதை ஆசைப்பட்டேன்” என்கிறார்.

துரந்தஸ்யானாதேர் அபரிஹரணீயஸ்ய மஹதோ
நிஹீநாசாரோ’ஹம் ந்ருபஶுரஶுபஸ்யாஸ் பதம் அபி |
தயாஸிந்தோ! பந்தோ! நிரவதிக வாத்ஸல்யஜலதே
தவ ஸ்மாரம் ஸ்மாரம் குணகணம் இதீச்சாமி கதபீ: ||

கருணைக் கடலான ஸ்வாமியே! என்னுடன் எல்லா உறவுகளையும் உடையவனே! வாத்ஸல்யக் கடலாக இருப்பவனே!
நான் மிகப் பெரிய, அநாதி கால, முடிவில்லாத, போக்க முடியாத பாபங்களை உடையவனாக இருந்தாலும்,
மீண்டும் மீண்டும் உன்னுடைய திருக்கல்யாண குணங்களை நினைப்பதால், பயமில்லாமல் இதை ஆசைப் படுகிறேன்.

—————-

ஶ்லோகம் 59 – எம்பெருமான் “நீர் இச்சாமி என்று முன் ச்லோகத்தில் கூறியபடி உண்மையிலே
என் விஷயத்தில் ஆசை கொண்டுள்ளீரா?” என்று கேட்க
“நான் மந்த மனதை உடையவன் ஆகையால் தேவரீருடைய திருமுன்பே, தேவரீரின் பெருமைக்குத் தகுந்த
என் ஆசையை வெளியிட முடியவில்லை. என்னுடைய ஆசையைக் காட்டும் வார்த்தைகளைக் கொண்டு மனதைத் திருத்தி,
இந்நிலை எனக்கு உண்மையில் ஏற்படும்படிச் செய்ய வேண்டும்” என்கிறார்.

அநிச்சந்நப்யேவம் யதி புநரிதீச்சந்நிவ ரஜஸ்-
தமஶ் சன்னஶ்சத்மஸ்துதி வசன பங்கீமரசயம் |
ததா’பீத்தம் ரூபம் வசனம் அவலம்ப்யா’பி க்ருபயா
த்வமேவைவம் பூதம் தரணிதர! மே ஶிக்ஷய மந: ||

பூமியை எடுத்த எம்பெருமானே! இந்த அடியவன் ரஜோ மற்றும் தமோ குணங்களால் மூடப்பட்டிருந்தாலும்,
என்னிடத்தில் உண்மையான ஆசை இல்லாமல் இருந்தாலும், உண்மையான ஆசை உடையவர்களைப் போலே
உன்னை மயக்கும் வார்த்தைகளை நான் சொன்னாலும், அதையே காரணமாகக் கொண்டு,
உன்னுடைய கருணையால் என்னுடைய மனதைத் திருத்தி யருள வேண்டும்.

——————-

ஶ்லோகம் 60 –
எம்பெருமான் “உம்மிடத்தில் ஆசையும் இல்லாதபோதும், நானே உம்மிடத்தில் ஆசையை உண்டாக்கி
உம்மைக் காக்கவும் செய்ய வேண்டும் என்கிறீரே – இவற்றை நான் ஏன் செய்ய வேண்டும்” என்று கேட்க
ஆளவந்தார் தனக்கும் அவனுக்கும் உள்ள ஒழிக்க ஒழியாத உறவைக் காட்டுகிறார்.

பிதா த்வம் மாதா த்வம் தயித தநயஸ்த்வம் ப்ரிய ஸுஹ்ருத்
த்வமேவ த்வம் மித்ரம் குருரஸி கதிஶ்சாஸி ஜகதாம் |
த்வதீயஸ் த்வத்ப்ருத்யஸ் தவ பரிஜநஸ் த்வத்கதிரஹம்
ப்ரபந்நஶ் சைவம் ஸத்யஹமபி தவைவாஸ்மி ஹி பர: ||

இவ்வுலகங்களுக்கு நீயே தந்தை; நீயே தாய்; நீயே விரும்பத்தக்க பிள்ளை; நீயே நல்ல உள்ளம் கொண்ட நண்பன்;
நீயே நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பன்; நீயே குரு; நீயே உபாயம் (வழி) மற்றும் உபேயம் (குறிக்கோள்);
நான் உன்னுடையவன்; உன்னுடைய அடிமை; உன்னுடைய தொண்டன்;
உன்னையே சிறந்த உபேயமாகவும், உபாயமாகவும் கொண்டுள்ளவன்; ஆகையால் நான் ஏன் உன்னால் ரக்ஷிக்கப்படக் கூடாது?

—————–

ஶ்லோகம் 61 –
எம்பெருமான் ஆளவந்தாரிடம்
“நீர் உயர்ந்த வம்சத்தில் பிறந்துள்ளீரே. ஏன் எப்படி உதவியற்றவரைப் போல் பேசுகிறீர்?” என்று கேட்க,
ஆளவந்தார்
“நான் உயர்ந்த வம்சத்தில் பிறந்திருந்தாலும், என்னுடைய பெரிய பாபங்களினாலே, ஸம்ஸாரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்;
என்னை நீயே இதிலிருந்து எடுத்தருள வேண்டும்” என்கிறார்.

ஜநித்வா’ஹம் வம்ஶே மஹதி ஜகதி க்யாதயஶஸாம்
ஶுசீநாம் யுக்தாநாம் குணபுருஷ தத்த்வ ஸ்திதி விதாம் |
நிஸர்கா தேவ த்வச்சரண கமலைகாந்த மநஸாம்
அதோ’த: பாபாத்மா ஶரணத! நிமஜ்ஜாமி தமஸி ||

புகலிடம் கொடுக்கும் ஸ்வாமியே! நான் பரிசுத்தமான, உன்னுடன் எப்பொழுதும் இருக்க விரும்புபவர்களான,
சித் மற்றும் அசித் ஆகியவற்றின் ஸ்வரூபத்தையும் தன்மைகளையும் நன்கு உணர்ந்தவர்களான,
உன் திருவடிகளிலேயே எப்பொழுதும் தன்கள் மனதை வைத்திருக்கும் சிறந்தவர்களான, ப்ரஸித்தமான புகழை உடைய
பெரியோர்கள் அவதரித்த, உயர்ந்த வம்சத்தில் பிறந்திருந்தாலும், பாபமே வடிவெடுத்தவனாகையாலே,
இந்த ப்ரக்ருதியில் ஆழமாக மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.

—————-

ஶ்லோகம் 62 –
எம்பெருமான் “உயர்ந்த வம்சத்தில் பிறந்தும் அது ப்ரயோஜனப்படாமல் போகும் அளவிற்கு உம்மிடத்திலே
என்ன பாபங்கள் உள்ளன?” என்று கேட்க,
ஆளவந்தார் சென்ற ஶ்லோகத்தில் பாபாத்மா என்று சொன்னதை விளக்கி அருளுகிறார்.

அமர்யாத: க்ஷுத்ரஶ் சலமதிர் அஸூயா ப்ரஸவபூ:
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஶோ வஞ்சநபர: |
ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: கதம் அஹமிதோ து:க்க ஜலதே:
அபாராதுத்தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ: ||

நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன், தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன்,
நிலை இல்லாத மனதை உடையவன், பொறாமையின் பிறப்பிடம், எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன்,
கைவிடவேண்டிய கர்வத்தை உடையவன், காமத்துக்கு வசப்பட்டவன், ஏமாற்றுபவன், க்ரூரமான செயல்களில் ஈடுபட்டவன்
மற்றும் பாபங்களில் மூழ்கியுள்ளவன். நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக்கடலின் கரையை அடைந்து
உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்?

—————–

ஶ்லோகம் 63 –
எம்பெருமான் “நீர் தெரிந்தே செய்த தவறுகளை நான் எப்படிப் போக்க முடியும்?” என்று கேட்க,
ஆளவந்தார் “காகாஸுரன் மற்று சிசுபாலன் ஆகியோர் செய்த அபராதங்களைப் பொறுத்த தேவரீரால்,
என்னுடைய தவறுகளைப் பொறுக்க முடியாதோ?” என்கிறார்.

ரகுவர! யதபூஸ்த்வம் தாத்ருஶோ வாயஸஸ்ய
ப்ரணத இதி தயாளுர் யச்ச சைத்யஸ்ய க்ருஷ்ண! |
ப்ரதிபவம் அபராத்துர் முக்த! ஸாயுஜ்யதோ’பூ:
வத கிமபதமாகஸ்தஸ்ய தே’ஸ்தி க்ஷமாயா: ||

ரகுகுல திலகமான ஸ்ரீராமராக அவதரித்தவனே! பெரிய தவறைச் செய்த காகாஸுரன் விஷத்தில்,
அவனை ஒரு சரணாகதனாகக் கொண்டு, உன் கருணையைக் காட்டவில்லையோ?
எந்தத் தவறுகளையும் பொருட்படுத்தாத கண்ணனே! சேதி குலத்தைச் சேர்ந்த, பிறவிதோறும் உன்னிடத்தில் அபராதம் செய்த
சிசுபாலனுக்கு நீ மோக்ஷத்தையே அளித்தாயே. எந்த பாபம் தேவரீருடைய பொறுமைக்கு விஷயமாகாது? எனக்கு தேவரீர் விளக்கியருள வேண்டும்.

————

ஶ்லோகம் 64 –
எம்பெருமான் “ஸ்வதந்த்ரனான நான் சிலருக்கு சில விசேஷ காரணங்களுக்காக உஜ்ஜீவனத்தைச் செய்து கொடுத்தால்,
அதுவே என்னுடைய பொதுவான நடத்தையாகக் கருதமுடியுமோ?” என்று கேட்க,
ஆளவந்தார் “கடற்கரையில், நீ உன்னிடத்தில் சரணடைவர்களை ரக்ஷிப்பேன் என்று சபதம் எடுத்தபோது,
அதில் என்னைத் தவிர என்று சபதம் செய்தாயோ?” என்கிறார்.

நநு ப்ரபந்நஸ் ஸக்ருதேவ நாத!
தவாஹம் அஸ்மீதி ச யாசமாந: |
தவாநுகம்ப்ய: ஸ்மரத: ப்ரதிஜ்ஞாம்
மதேகவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே ||

ஸ்வாமி! “நான் உன்னிடத்தில் ஒருமுறை சரணடைந்துள்ளேன்” என்றும்
“உனக்கே நான் தொண்டு செய்ய வேண்டும்” என்றும் சொல்லி,
நீ கடற்கரையில் விபீஷணன் சரணடைய வந்த ஸமயத்தில் செய்த சபதத்தை நினைக்கும் நான்,
உன்னுடைய கருணையைப் பெறத் தகுந்தவன்; தேவரீருடைய சபதம் என் ஒருவனைத் தவிர்த்தோ?

—————–

ஶ்லோகம் 65 –
ஆளவந்தார் “நீ ஸ்ரீராமாயணம் அயோத்யா காண்டம் 18.30இல் ‘ராமோ த்விர் நாபிபாஷதே’
(ஸ்ரீராமர் இரண்டு விதமாகப் பேச மாட்டார்) என்ற சபதத்தைக் கை விட்டாலும்,
என்னுடைய புண்ய பாபங்களைக் கருதாமல், பெரிய முதலியாரான ஸ்ரீமந்நாதமுனிகளுடன் எனக்கு இருக்கும்
ஞானத்தால் மற்றும் பிறப்பால் இருக்கும் ஸம்பந்தத்தைக் கருத்தில் கொண்டு, என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கேட்க,
எம்பெருமானும் “இந்த வழியில் எந்தக் குறையும் இல்லை; இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று சொல்லி
இந்த வரத்தை ஆளவந்தாருக்கு அளித்தான்.
ஆளவந்தாரும், த்ருப்தியடைந்தவராய், ஸ்தோத்ரத்தை முடிக்கிறார்.

அக்ருத்ரிம த்வச்சரணாரவிந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதிம் ஆத்மவந்தம் |
பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய
ப்ரஸீத மத்வ்ருத்தம் அசிந்தயித்வா ||

எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான,
தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும்.

————-——————————————————————-——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் – –

November 9, 2020

ஸ்வாதயந்நிஹ ஸர்வேஷாம் த்ரய்யந்தார்த்தம் ஸுதுர்க்ரஹம் |
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ர: தம் வந்தே யாமுநாஹ்வயம் ||

யோகிகளுக்குள் சிறந்தவரும், புரிந்து கொள்ள அரிதான வேதாந்த அர்த்தங்களை எல்லோரும்
புரிந்து கொள்ளும்படி ஸ்தோத்ரங்களாக அருளிச் செய்தவருமான ஸ்ரீ ஆளவந்தாரை வணங்குகிறேன்.

நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: |
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: ||

ஸ்ரீ ஆளவந்தாரை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். என்னால் அவரை வணங்குவதை நிறுத்த முடியவில்லை.

ச்லோகம் 1 – முதல் ச்லோகத்தில், ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீமந்நாதமுனிகளின் உண்மையான செல்வமான
ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார்.

நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே |
நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே ||

நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை எம்பெருமானின்
கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.
அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர்.
பகவத் பக்திக் கடலாக இருப்பவர். இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.

ச்லோகம் 2 – இதில், பகவத் அவதாரங்களில் ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு இருந்த ஞானம் ஆகியவற்றின்
மேலான சிறப்பு விளக்கப்படுகிறது.
அல்லது, “(முந்தைய ச்லோகத்தில் சொல்லப்பட்ட) ஞானம் முதலியவை அவரிடமே தங்காமல்,
என்னளவும் பெருகி வருகிறது” என்று ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்கிறார்.

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக
விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும்.
அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

ச்லோகம் 3 – தாகம் உள்ள ஒருவன் நீரை மேலும் மேலும் பருகியும் தாகம் தீராமல் இருப்பதைப் போலே,
ஸ்ரீ ஆளவந்தார் “மீண்டும் மீண்டும் நான் ஸ்ரீமந் நாதமுனிகளின் தொண்டன்” என்று அருளிச் செய்கிறார்.

பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய ||

பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள்
மற்றும் உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.
அவர் பூர்த்தியையும் பக்தியோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

ச்லோகம் 4 – ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஸ்ரீ ஆளவந்தார் வணங்குகிறார்.

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராணரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான ஸ்ரீ பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

ச்லோகம் 5 – ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளில் விழுந்து அவரிடத்தில் சரணடைகிறார்.

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவடிகளே எனக்கும் என் குலத்தவர்களுக்கும், தாய், தந்தை, மனைவி, மக்கள்,
சிறந்த செல்வம் மற்றும் எல்லாமாகும். மகிழ மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்,
கைங்கர்யச் செல்வத்தை உடையராயிருக்கும், நம் வைஷ்ணவ குலத்துக்குத் தலைவரான
ஸ்ரீ நம்மாழ்வாரின் இரண்டு திருவடிகளில் என் தலையை வைத்து வணங்குகிறேன்.

ச்லோகம் 6 – திருவாய்மொழி 7.9.7இல் “வைகுந்தனாகப் புகழ”
(ஸ்ரீ ஆழ்வார் “ஸ்ரீவைகுண்டநாதன்” என்று எம்பெருமானைப் புகழும்படி எம்பெருமான் செய்தான்) என்று சொன்னபடி,
எம்பெருமானுக்குக் கொண்டாட்டங்கள் விருப்பம் என்பதாலும், எம்பெருமானைக் கொண்டாடுவது ஆசார்யர்களுக்கும்
விருப்பம் என்பதாலும், எம்பெருமானைக் கொண்டாடும் எண்ணத்துடன்,
ஸ்ரீ எம்பெருமானே உபாயம் (வழி) மற்றும் உபேயம் (குறிக்கோள்) என்று சுருக்கமாகச் சொல்லி,
ஸ்ரீ எம்பெருமானைக் கொண்டாடத் தொடங்குகிறார் ஸ்ரீ ஆளவந்தார்.

யந் மூர்த்நி மே ஶ்ருதிஶிரஸ்ஸு ச பாதி யஸ்மிந்
அஸ்மந் மநோரதபதஸ் ஸகலஸ்ஸமேதி |
ஸ்தோஷ்யாமி ந: குலதநம் குலதைவதம் தத்
பாதாரவிந்தம் அரவிந்தவிலோசநஸ்ய ||

புண்டரீகாக்ஷனின் (தாமரைக் கண்ணனின்) திவ்ய திருவடிகளைக் கொண்டாடப் போகிறேன்.
இந்த எம்பெருமானே நம் குலத்துக்கு தனமாகவும், தெய்வமாகவும் விளங்குகிறான்.
நம்முடைய அதிகமான பக்தி எல்லாம் அந்த எம்பெருமானின் திருவடிகளிலே போய்ச் சேரும்.
அந்த எம்பெருமானின் திருவடிகளே என்னுடைய தலையிலும், வேதாந்தத்திலும் காணப்படுகின்றன.

ச்லோகம் 7 – ஸ்ரீ கீதை 1.47இல் “விஸ்ருஜ்ய ஸசரம் சாபம்” (வில்லையும் அம்புகளையும் கீழே நழுவவிட்டான்) என்று
சொன்னபடி அர்ஜுனன் எப்படி யுத்தத்திலிருந்து பின் வாங்கினானோ, ஆளவந்தாரும் தன் முயற்சியில் இருந்து பின்வாங்குகிறார்.

தத்வேந யஸ்ய மஹிமார்ணவ ஶீகராணு:
ஶக்யோ ந மாதுமபி ஶர்வ பிதாமஹாத்யை: |
கர்த்தும் ததீய மஹிமஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ’ஸ்து கவயே நிரபத்ரபாய ||

எம்பெருமானின் பெருமை என்னும் கடலில் ஒரு திவலையில் இருக்கும் ஒரு அணுவின் அளவுகூட ருத்ரன், ப்ரஹ்மா
போன்றவர்களால் அளக்க முடியாது. கவிஞன் என்று வெட்கமில்லாமல் சொல்லிக்க் கொண்டு, அப்படிப்பட்ட
எம்பெருமானின் பெருமைகளைப் பாடத் தொடங்கியதை நினைத்து (இப்படிப்பட்ட நகைப்பிற்குரிய செயலை நினைத்து)
என்னை நானே வணங்கிக் கொள்கிறேன்.

ச்லோகம் 8 – யுத்தத்திலிருந்து பின்வாங்கிய அர்ஜுனனை ஸ்ரீ கீதை 18.73இல் “கரிஷ்யே வசனம் தவ”
(நீ சொல்லும்படி நான் யுத்தம் செய்கிறேன்) என்று சொல்லும்படி உற்சாகப்படுத்திய எம்பெருமான்,
ஸ்ரீ ஆளவந்தாரை “வாய் படைத்த பயன் அவனைக் கொண்டாடுவதற்கே; ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில்
‘ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய:’ (அவன் கொண்டாடத்தகுந்தவன்; அவன் கொண்டாட்டங்களை விரும்புபவன்)” என்று
சொல்லும்படி உற்சாகப்படுத்தினான். இதைக் கேட்ட ஸ்ரீ ஆளவந்தார், எம்பெருமானைக் கொண்டாடுவது என்று முடிவெடுத்தார்.

யத்வா ஶ்ரமாவதி யதாமதி வாப்யஶக்த:
ஸ்தௌம்யேவமேவ கலு தே’பி ஸதா ஸ்துவந்த: |
வேதாஶ்சதுர்முக முகாஶ்ச மஹார்ணவாந்த:
கோ மஜ்ஜதோர் அணுகுலாசலயோர் விஶேஷ: ||

அல்லது, சக்தியற்ற நான் சோர்வடையும் வரையிலோ எனக்குத் தெரிந்த அளவிலோ அவனைக் கொண்டாடுவேன்;
இவ்வாறே, வேதங்களும், நான்கு முகங்களைக் கொண்ட ப்ரஹ்மா முதலியவர்களும் எம்பெருமானைக் கொண்டாடுகின்றனர்;
கடலுக்குள் மூழ்கி இருக்கும் சிறு கூழாங்கல்லுக்கும் பெரிய மலைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? (ஒன்றும் இல்லை)

ச்லோகம் 9 – இதில், ஸ்ரீ ஆளவந்தார் தான் ப்ரஹ்மா முதலியவர்களை விட எம்பெருமானைக் கொண்டாடுவதற்குத்
தகுதி படைத்தவர் என்று அருளிச் செய்கிறார்.

கிஞ்சைஷ ஶக்த்யதிஶயேந ந தே’நுகம்ப்ய:
ஸ்தோதாபி து ஸ்துதிக்ருதேந பரிஶ்ரமேண |
தத்ர ஶ்ரமஸ்து ஸுலபோ மம மந்தபுத்தே:
இத்யுத்யமோ’யமுசிதோ மம சாப்ஜநேத்ர ||

மேலும், என்னுடைய கவிதை பாடும் சிறந்த திறமையால், நீ கருணையைப் பொழியும் நிலையில் நான் இல்லை;
ஆனால், உன்னைக் கொண்டாட முயன்று சோர்வடையும் தன்மையை உடையவன் ஆகையால்,
நீ என் மீது உன் கருணையைப் பொழியலாம்; எனக்கு மிகவும் குறைந்த ஞானமே உள்ளதால், எளிதில் சோர்வடைந்து விடுவேன்;
ஆகையால், உன்னைக் கொண்டாடும் இம்முயற்சி ப்ரஹ்மா முதலியவர்களைக் காட்டிலும், எனக்கே மிகவும் பொருத்தமாக உள்ளது.

ச்லோகம் 10 – எம்பெருமானைக் கொண்டாடுவதிலிருந்து பின்வாங்கி, பிறகு எம்பெருமானால் ஸமாதானம் செய்யப்பட்ட
ஸ்ரீ ஆளவந்தார், எம்பெருமானைப் புகலாக ஆக்கும் அவனுடைய பரத்வத்தை,
இனி வரும் ஐந்து ச்லோகங்களில் அருளிச்செய்கிறார். அதில், இந்த முதல் ச்லோகத்தில்,
ஸ்ரீ ஆளவந்தார் சாஸ்த்ரத்தில் இருக்கும் காரண வாக்யங்களைக் கொண்டு
(எம்பெருமானிலிருந்தே எல்லாம் உருவாகின்றன என்று சொல்பவை) ஸ்ரீ எம்பெருமானின் பரத்வத்தை அருளிச்செய்கிறார்.

நாவேக்ஷஸே யதி ததோ புவநாந்யமூநி
நாலம் ப்ரபோ பவிதுமேவ குத: ப்ரவ்ருத்தி: |
ஏவம் நிஸர்க்க ஸுஹ்ருதி த்வயி ஸர்வஜந்தோ:
ஸ்வாமிந் நசித்ரமிதமாஶ்ரித வத்ஸலத்வம் ||

எம்பெருமானே! மஹா ப்ரளயத்துக்குப் பின், நீ உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தைக் காட்டவில்லை என்றால்,
இவ்வுலகங்கள் படைக்கப்பட்டிருக்காது; வேறு எந்த நிகழ்வுகளும் நடந்திருக்காது என்பதும் தெளிவு.
எம்பெருமானே! இப்படி நீயே எல்லோருடைய இயற்கையான நன்பனாக இருப்பதால், நீ உன்னுடைய அடியார்களிடம்
தாயன்பைக் காட்டுவதைப் பார்ப்பதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை

ச்லோகம் 11 – இதில், எம்பெருமானின் பரத்வ லக்ஷணம் (அடையாளம்) விளக்கப்படுகிறது.

ஸ்வாபாவிகாநவதிகாதிஶயேஶித்ருத்வம்
நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக: க: |
ப்ரஹ்மா ஶிவஶ் ஶதமக: பரம: ஸ்வராடிதி
ஏதே’பி யஸ்ய மஹிமார்ணவ விப்ருஷஸ்தே ||

ஸ்ரீ நாராயணனே! உன்னுடைய பெருமைக் கடலில் ஒரு திவலையைப் போன்றவர்களே (கர்மத்துக்கு வசப்பட்ட)
ப்ரஹ்மா, சிவன், இந்திரன் ஆகியோரும், இந்த தேவதைகளைவிடச் சிறந்தவர்களான,
கர்மத்துக்கு வசப்படாத முக்தாத்மாக்களும்; உன்னுடைய இயற்கையான மற்றும் எல்லையில்லாத பெருமையை
உடைய ஐச்வர்யத்தை (ஆளுமையை) எந்த வைதிகன் பொறுக்கமாட்டான்?

ச்லோகம் 12 –இதில், ஸ்ரீ ஆளவந்தார், ஸந்தேஹத்துக்கு இடமளிக்கும் பொதுப் பெயர்களைச் சொல்லாமல்,
தன்னடையே முழுமையான மற்றும் எம்பெருமானின் பரத்வத்தை நன்றாக வெளியிடும் திருநாமங்களை அருளிச் செய்கிறார்.

கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?
யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி,
பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?

ச்லோகம் 13 – ஸ்ரீ ஆளவந்தார் ப்ரஹ்மா, ருத்ரன் ஆகியோரின் க்ஷேத்ரஜ்ஞத்வத்தையும்
(ஜீவாத்மாவாக இருக்கும் தன்மையையும்) பகவானின் பரத்வத்தையும், இதிஹாஸ மற்றும் புராணங்களில்
உள்ள சரித்ரங்களைக் கொண்டு அருளிச் செய்கிறார்..

வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
ஆபத் விமோசந மஹிஷ்ட பல ப்ரதாநை: |
கோ’ந்ய: ப்ரஜா பஶுபதீ பரிபாதி கஸ்ய
பாதோதகேந ஸ ஶிவஸ் ஸ்வஶிரோத்ருதேந||

ப்ரஜாபதி என்று சொல்லப்படும் பிரமனையும், பசுபதி என்று சொல்லப்படும் ருத்ரனையும் மற்றும் இந்திரனையும்
முறையே அவர்களுக்கு வந்த ஆபத்தான வேதம் திருடப்பட்டு அதை இழந்ததையும்,
தன்னுடைய தந்தையின் தலையைக் கிள்ளிய பாபத்தையும், அஸுரர்களால் ஏற்பட்ட துன்பத்தையும் போக்கியவன் யார்?
யாருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கி, ருத்ரன் புனிதத்தன்மையை அடைந்தான்?

ச்லோகம் 14 – ஸ்ரீ ஆளவந்தார் எம்பெருமானின் பரத்வத்தை சாஸ்த்ரத்துக்கு அனுகூலமான ந்யாயத்தின்
மூலமாக நிரூபித்து, முடிக்கிறார்.

கஸ்யோதரே ஹரவிரிஞ்சிமுக: ப்ரபஞ்ச:?
கோ ரக்ஷதீமம் அஜனிஷ்டச கஸ்ய நாபே:?|
க்ராந்த்வா நிகீர்ய புநருத்கிரதி த்வதந்ய:
க:? கேந வைஷ பரவாநிதி ஶக்யஶங்க: ||

யாருடைய வயிற்றில் ருத்ரன், ப்ரஹ்மா முதலியவர்களும் இவ்வுலகமும் அடங்கியது? யார் இந்த உலகத்தைக் காப்பவன்?
யாருடைய திருநாபியிலிருந்து இவ்வுலகம் படைக்கப்பட்டது? உன்னைத் தவிர வேறு யாரால்
இவ்வுலகம் அளக்கப்பட்டு, விழுங்கப்பட்டு மீண்டும் வெளியே உமிழப்பட்டது?
இவ்வுலகத்தின் தலைவன் யார் என்பதில் ஸந்தேஹம் இருக்க முடியுமா?

ச்லோகம் 15 – இதில், சாஸ்த்ரத்தின் மூலம் நன்றாக நிரூபிக்கப்பட்டாலும், ஸ்ரீ பகவத் கீதை 16.20இல்
“ஆஸுரீம் யோனிமாபன்னா:” (அஸுரப் பிறவியில் பிறந்து) என்று சொன்னபடி,
“ஐயோ! இப்படிப்பட்ட அஸுர குணம் உடையவர்கள் எம்பெருமானை இழக்கிறார்களே” என்று
அவர்கள் இழவுக்கு ஸ்ரீ ஆளவந்தார் வருந்துகிறார். அல்லது –
ஸ்ரீ ஆளவந்தார், இப்படிப்பட்ட பெருமையையுடைய எம்பெருமானை அஸுரத்தன்மையுடையவர்கள் பார்க்கக்கூடாது என்று
திருவாய்மொழி 1.3.4இல் “யாருமோர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்”
(அவனிடத்தில் விரோதம் பாராட்டுபவர்களால் “இவன் இன்ன தன்மையை உடையவன்” என்று புரிந்து கொள்ள முடியாதவன்)
ஸ்ரீ ஆழ்வார் அருளிச்செய்த க்ரமத்தில் அருளிச் செய்கிறார்.

த்வாம் ஶீல ரூப சரிதை: பரம ப்ரக்ருஷ்ட
ஸத்வேந ஸாத்த்விகதயா ப்ரபலைஶ்ச ஶாஸ்த்ரை: |
ப்ரக்யாததைவ பரமார்த்த விதாம் மதைஶ்ச
நைவாஸுர ப்ரக்ருதய: ப்ரபவந்தி போத்தும் ||

[ஐயோ!] எல்லோரையும் விட உயர்ந்தவனான உன்னை அஸுரர்கள் அறிந்து கொள்ள முடியாது.
உன்னை அறிந்து கொள்ளும் வகைகள்:
உன்னுடைய சீல (எளிமை) குணம், வேதத்தில் கொண்டாடப்பட்ட ரூபங்கள் மற்றும் திவ்யமான லீலைகள்
சுத்த ஸத்வத்தால் நிறைந்திருக்கும் உன்னுடைய பரமபதம்
தன்னிடம் இருக்கும் நன்மையினால் திடமாக இருக்கும் சாஸ்த்ரம்
உன்னைப் பற்றிய உண்மையை அறிந்தவர்களின் அபிப்ராயத்தின் மூலம்

ச்லோகம் 16 –எம்பெருமானின் எளிமையினால் அவனை அடையும் உயர்ந்த ஆத்மாக்களைப் பற்றி எண்ணிய
ஸ்ரீ ஆளவந்தார், அவர்களுக்குக் கிடைத்த பேறு தனக்குக் கிடைத்ததாக நினைக்கிறார்.

உல்லங்கித த்ரிவித ஸீமஸமாதிஶாயி
ஸம்பாவநம் தவ பரிப்ரடிம ஸ்வபாவம் |
மாயாபலேந பவதா’பி நிகூஹ்யமாநம்
பஶ்யந்தி கேசிதநிஶம் த்வதநந்ய பாவா: ||

உன்னுடைய ஸ்வாமித்வத்தை நீ உன்னுடைய ஆச்சர்ய சக்தியினால் மறைத்துக் கொண்டாலும்,
உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும், மிகவும் உயர்ந்த ஆத்மாக்கள் கால, தேச, வஸ்துக்களுக்கு அப்பாற்பட்ட
உன்னுடைய ஸ்வாமித்வத்தை உணர்ந்து,
“எம்பெருமானுக்கு ஸமமாகவோ அவனைவிட உயர்ந்தவராகவோ எவரேனும் உண்டோ?” என்று ஸந்தேஹம் கொள்ளாமல் இருப்பார்கள்.

ச்லோகம் 17 – இதில் ஸ்ரீ ஆளவந்தார் பகவானாலே நிர்வஹிக்கப்படும், முன்பு விளக்கப்பட்ட அவனுடைய
ஸர்வேச்வரத்வத்துக்கு உட்பட்ட பலவிதமான வஸ்துக்களை அருளிச்செய்கிறார்.

யதண்டம் அண்டாந்தர கோசரம் ச யத்
தஶோத்தராண்யாவரணாநி யாநி ச |
குணா: ப்ரதாநம் புருஷ: பரம் பதம்
பராத்பரம் ப்ரஹ்ம ச தே விபூதய: ||

1) ப்ரஹ்மாவின் ஆளுகைக்குட்பட்ட, 14 லோகங்கள் கொண்ட ப்ரஹ்மாண்டம்,
2) அந்த அண்டத்துக்குள் இருக்கும் வஸ்துக்கள்,
3) ஒவ்வொரு அண்டத்தை மூடிக்கொண்டிருக்கும், முந்தைய ஆவரணத்தைப்போலே பத்து மடங்கு அளவுள்ள, ஸப்த ஆவரணங்கள்,
4) ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்கள்
5) மூல ப்ரக்ருதி
6) இவ்வுலகில் இருக்கும் பத்தாத்மாக்கள் (கட்டுப்பட்ட ஆத்மாக்கள்),
7) ஸ்ரீவைகுண்டம்
8) (தேவதைகளைவிட உயர்ந்தவர்களான) முக்தாத்மாக்களைவிட உயர்ந்தவர்களான நித்யஸூரிகள்
9) உன்னுடைய திய்வ மங்கள விக்ரஹங்கள் ஆகிய எல்லாம் உனக்கு சரீரங்களே.

ச்லோகம் 18 – ஸ்ரீ ஆளவந்தார் முன்பு சரண்யனான (புகல்) எம்பெருமானின் பெருமைகளைப் பேசினார். இதில்
“இப்படிப்பட்ட உபய விபூதி நாதனை நாம் எப்படி அணுகுவது?” என்ற தயக்கத்தைப் போக்க,
அவனுடைய அடியார்கள் ஈடுபடும் பன்னிரண்டு குணங்களை அருளிச் செய்கிறார்.
முன்பு பகவானின் ஸர்வேச்வரத்வத்தை அருளிய ஸ்ரீ ஆளவந்தார், இப்பொழுது அவனுடைய பேசத் தகுந்த குணங்களை அருளிச்செய்கிறார்.

வஶீ வதாந்யோ குணவாந் ருஜுஶ் ஶுசிர்
ம்ருதுர் தயாளுர் மதுரஸ் ஸ்திரஸ் ஸம: |
க்ருதீ க்ருதஜ்ஞஸ்த்வமஸி ஸ்வபாவதஸ்
ஸமஸ்த கல்யாண குணாம்ருதோததி:||

நீ இயற்கையாகவே அமுதக் கடல் போன்ற இனிமையான குணங்களை உடையவன். உன் குணங்களாவன
1) உன் அடியார்களுக்கு வசப்பட்டவன்
2) உன்னுடைய அடியார்களுக்கு உன்னையே தரும் குணத்தை உடையவன்
3) எல்லோரிடமும் கலந்து பழகும் ஸௌசீல்யத்தை உடையவன்
4) உள்ளம் உரை செயல்களில் நேர்மை உடையவன்
5) நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணும் பரிசுத்தியை உடையவன்
6) அடியார்களின் பிரிவைத் தாங்க முடியாதவன்
7) அடியார்களின் துயரைத் தாங்க முடியாத கருணை உள்ளம் கொண்டவன்
8) இனிமையானவன்
9) அடியார்களைக் காப்பதில் உறுதியாக இருப்பவன்
10) உன்னிடம் சரணடைந்தவர்களிடத்தில் ஸமமாக இருப்பவன்
11) உன் அடியார்களின் செயல்களை உன் செயல்களாக நினைத்துச் செய்பவன்
12) அடியார்களின் சிறு உதவிகளுக்கும் நன்றியுடன் இருப்பவன்.

ச்லோகம் 19 – இதில், எப்படி பகவானின் திருக்கல்யாண குணங்களுக்கு எல்லை இல்லையோ அதேபோல
ஒவ்வொரு குணத்துக்கும் எல்லை இல்லை என்கிறார் ஸ்ரீ ஆளவந்தார் .

உபர்யுபர்யப்ஜ புவோ’பி பூருஷாந்
ப்ரகல்ப்ய தே யே ஶதமித்யநுக்ரமாத் |
கிரஸ் த்வதேகைக குணாவதீப்ஸயா
ஸதா ஸ்திதா நோத்யமதோ’திஶேரதே ||

வேத வாக்யங்கள் “தேயே சதம்” (இது போன்ற நூறு) என்று மீண்டும் மீண்டும் புதிய ப்ரஹ்மாக்களை கற்பனை செய்து,
உன்னுடைய ஒரு (ஆனந்தம் என்னும்) குணத்தின் எல்லையைக் காண முயன்று, சிறிதளவும் முன்னேறாமல்,
ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன,

ச்லோகம் 20 – ஸ்ரீ ஆளவந்தார் முன்பு அருளிச்செய்த பகவத் குணங்களை அனுபவிக்கும் அடியார்களின்
பெருமையை அருளிச் செய்கிறார்.
அல்லது – ப்ரஹ்ம ஸூத்ரம் 1.1.20இல் “அஸ்மிந்நஸ்ய ச தத்யோகம் சாஸ்தி”
(வேதம் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஆனந்தமாகக் கூடியிருக்கும் ஆனந்தத்தை விளக்குகிறது) என்று சொன்னபடி
பகவானிடத்திலிருந்து அடைந்த பெருமையை உடைய அடியார்களின் பெருமையே மிகப் பெரியது என்றால்,
அந்த பகவானின் பெருமை அளவிடமுடியாதது என்பது தெளிவு என்கிறார்.

த்வதாஶ்ரிதாநாம் ஜகதுத்பவ ஸ்திதி
ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாதய: |
பவந்தி லீலா விதயஶ்ச வைதிகா:
த்வதீய கம்பீர மநோநுஸாரிண: ||

ப்ரஹ்மா முதலான உன் அடியார்களுக்கு இவ்வுலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது மற்றும் இந்த ஸம்ஸாரத்தை
கடக்க உதவுவது ஆகியவை எளிய விளையாட்டாக இருக்கும்;
வேதத்தின் விதிகளும்கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.

ச்லோகம் 21 –சரண்யனான எம்பெருமானின் பெருமைகளை த்யானிக்கிறார். அல்லது –
முன்பு உபேயத்தை (குறிக்கோளை) விளக்கினார், இங்கே அதை அடைய விரும்புபவரின் தன்மையை விளக்குகிறார்.
மற்றொரு விளக்கம் –
முன்பு சரண்யனான பகவானின் தன்மையை விளக்கிய ஸ்ரீ ஆளவந்தார், இங்கே
மேலே விளக்கப்படும் சரணாகதியின் தன்மையை வெளியிடுகிறார்.

நமோ நமோ வாங்மநஸாதிபூமயே
நமோ நமோ வாங்மநஸைக பூமயே |
நமோ நமோ’நந்த மஹா விபூதயே
நமோ நமோ’நந்த தயைக ஸிந்தவே ||

தன் முயற்சியால் அறிய முயல்பவர்களின் வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத உனக்கு
என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;
உன்னுடைய கருணையால் உன்னை அறிந்தவர்களின் வாக்குக்கும் மனதுக்கும் எட்டுபவனான உனக்கு
என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;
எல்லையில்லாத ஐச்வர்யத்தை உடைய உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;
கருணைக்கடலான உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்.

ச்லோகம் 22 –ஸ்ரீ ஆளவந்தார் தன்னுடைய தகுதியைச் சொல்லி, முன் பாசுரத்தில் சொல்லப்பட்ட சரணாகதியைச் செய்கிறார்.
அல்லது – முன்பு சொன்ன குறிக்கோளுக்குத் தகுந்த வழியை அனுஷ்டிப்பதை அருளிச் செய்கிறார் என்றும் சொல்லலாம்.

ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே ||

சரணடையத் தகுந்த ஸ்வாமியே! நான் கர்ம யோகத்தில் நிலையாக இல்லை; என்னிடத்தில் ஆத்ம ஞானமும் இல்லை;
என்னிடத்தில் உன் திருவடிகள் விஷயமான பக்தியும் இல்லை; இப்படி வேறு உபாயமும் புகலும் இல்லாத நான்,
உன் திருவடிகளையே உபாயமாக உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன்.

ச்லோகம் 23 – எம்பெருமான் “உம்மிடத்தில் நன்மைகள் இல்லை என்றாலும் சரி; ஆனால் உம்முடைய தகுதியைக் குலைக்கும்
தடை செய்யப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் இருந்தாலே,
நானே உமக்கு நன்மைகளை உண்டாக்கி பேற்றையும் கொடுப்பேன்” என்று சொல்லுவதாக எண்ணி
“நான் தீமைகளின் முழுமையான வடிவமாக இருக்கிறேன்” என்கிறார் ஆளவந்தார் .

ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே
ஸஹஸ்ரஶோ யந்ந மயா வ்யதாயி |
ஸோ’ஹம் விபாகாவஸரே முகுந்த!
க்ரந்தாமி ஸம்ப்ரத்யகதிஸ் தவாக்ரே ||

மோக்ஷத்தைக் கொடுக்கும் ஸ்ரீ ஸ்வாமியே! பல்லாயிரம் முறை என்னால் செய்யப்படாத நிந்திக்கப்பட்ட கர்மங்கள்
சாஸ்த்ரங்களிலேயே இல்லை; இப்பொழுது, என்னுடைய பாபங்கள் பலன் கொடுக்கும் சமயத்தில்,
வேறு புகல் இல்லாததால், நான் தேவரீர் திருமுன்பே நின்று கதறுகிறேன்.

ச்லோகம் 24 – ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ எம்பெருமானை அழைத்து “உன்னுடைய கருணையே எனக்கிருக்கும் ஒரே புகல்” என்கிறார்;
ஸ்ரீ ஆளவந்தார் “உன்னை அடைவது எனக்கு எப்படி ஒரு பாக்யமோ, உன்னுடைய கருணைக்கும் நானே தகுதியான பேறு” என்கிறார்.

நிமஜ்ஜதோ’நந்த பவார்ணவாந்த:
சிராய மே கூலமிவாஸி லப்த: |
த்வயாபி லப்தம் பவகவந்நிதாநீம்
அநுத்தமம் பாத்ரமிதம் தயாயா: ||

தேச கால வஸ்துக்களினால் எல்லையிலாத ஸ்ரீ ஸ்வாமியே! இந்த ஸம்ஸாரக் கடலில் பல காலமாக மூழ்கியிருக்கும்
எனக்கு நீ கரையைப் போலே வந்தாய்; ஸ்ரீ பகவானே! உன்னுடைய கருணைக்கு நானே தகுந்த பாத்திரம்.

ச்லோகம் 25 – எம்பெருமான் “உம்முடைய பாரத்தை முழுவதுமாக என்னிடம் வைத்த பின்பு, நீர்
ஸ்ரீராமாயணம் ஸுந்தர காண்டம் 9.30இல் ‘தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்’
(ஸ்ரீராமனே லங்கையை அழித்து என்னை ரக்ஷிப்பதே அவன் தன்மைக்குச் சேர்ந்தது –
ஆகையால் நான் அவர் வரும் வரை காத்திருப்பேன்) என்றபடி இருக்கவேண்டாமோ?
எதற்காக உடனே நான் உமக்கு உதவ வேண்டும் என்று நிர்பந்தம் செய்கிறீர்?” என்று கேட்க,
ஸ்ரீ ஆளவந்தார் “என்னுடைய துயரத்தைப் போக்கும்படி நான் கேட்கவில்லை;
உன்னுடைய அடியார்கள் இவ்வுலகில் துன்பப்பட்டால் அது உன்னுடைய பெருமைக்குத் தானே அவப்பெயர்;
அதைப் போக்கிக்கொள்ளும்படி ப்ரார்த்திக்கிறேன்” என்கிறார்.

அபூத பூர்வம் மம பாவி கிம்வா
ஸர்வம் ஸஹே மே ஸஹஜம் ஹி து:க்கம் |
கிந்து த்வதக்ரே ஶரணாகதாநாம்
பராபவோ நாத! ந தே’நுரூப: ||

ஸ்ரீ ஸ்வாமியே! இதுவரை அனுபவிக்காத எந்தப் புதிய துன்பமும் எனக்கு ஏற்படப்போகிறது இப்போது?
இந்தத் துன்பங்களை நான் பொறுத்துக்கொள்கிறேன்; இவை என்னுடன் பிறந்தவை;
ஆனால் உன்னிடம் சரணடைந்தவர்களுக்கு தேவரீரின் ஸ்ரீ திரு முன்பே ஒரு அவமானம் ஏற்பட்டது என்றால்,
அது உன்னுடைய பெருமைக்குச் சேராது.

ச்லோகம் 26 – ஸ்ரீ ஆளவந்தார் “நீ உன்னுடைய பெருமைக்கு ஏற்படும் தோஷத்தையும் பார்க்காமல் என்னைக் கைவிட்டாலும்,
நான் உன்னை விடமாட்டேன்” என்று தன்னுடைய அநாதிகத்வத்தினாலே (வேறு புகலில்லாத நிலையினாலே) உண்டான
மஹா விச்வாஸத்தை வெளியிடுகிறார்.

நிராஸகஸ்யாபி ந தாவதுத்ஸஹே
மஹேஶ! ஹாதும் தவ பாத பங்கஜம் |
ருஷா நிரஸ்தோ’பி ஶிஶு: ஸ்தநந்தயோ
ந ஜாது மாதுஶ் சரணௌ ஜிஹாஸதி ||

ஸ்ரீ ஸர்வேச்வரனே! நீ என்னைத் தள்ளினாலும், நான் உன்னுடைய திருவடித் தாமரைகளை விடத் துணிய மாட்டேன்;
பால் குடிக்கும் குழந்தையைத் தாயானவள் கோபத்தில் தள்ளினாலும், அக்குழந்தை தாயின் காலை விடாமல் இருக்குமாபோலே.

ச்லோகம் 27 –ஸ்ரீ ஆளவந்தார் “அநந்யகதித்வத்தினால் மட்டுமா நான் உன்னைப் பிரியாமல் இருக்கிறேன்?
உன்னுடைய போக்யமான தன்மையில் என் மனம் மூழ்கியிருப்பதால், நான் வேறு விஷயங்களை விரும்ப மாட்டேன்” என்கிறார்.

தவாம்ருதஸ்யந்திநி பாத பங்கஜே
நிவேஶிதாத்மா கதம் அந்யதிச்சதி? |
ஸ்திதே’ரவிந்தே மகரந்தநிர்ப்பரே
மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே ||-

அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம்,
வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்? தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது,
ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?

ச்லோகம் 28 – ஸ்ரீ ஆளவந்தார் “எனக்கு நீ உதவுவதற்கு நான் ஒரு முறை அஞ்சலி (கை கூப்புதல்)
செய்வது அமையாதோ?” என்று அருளிச் செய்கிறார்..

த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||

காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச்சமயத்தில் எவ்வாறு செய்தாலும்,
அது எல்லாப் பாபங்களையும் அடியோடு உடனே போக்கிவிடும்; மங்களங்களை வளர்க்கும்;
அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.

ச்லோகம் 29 – இந்த ச்லோகம் மானஸீக ப்ரபத்தியைக் காட்டும்.
அல்லது – 28 மற்றும் 29ஆம் ச்லோகங்களில் சரணாகதியின் பலனான பரபக்தியை விளக்குவதாக அமைந்திருக்கும்.

உதீர்ண ஸம்ஸார தவாஶுஶுக்ஷணிம்
க்ஷணேந நிர்வாப்ய பராஞ்ச நிர்வ்ருதிம் |
ப்ரயச்சதி த்வச் சரணாருணாம்புஜ
த்வயாநுராகாம்ருத ஸிந்து ஶீகர:||

உன்னுடைய சிவந்த திருவடித் தாமரைகளில் கொள்ளும் அன்புக் கடலில் ஒரு சிறு துளியே மிகவும்
உக்ரமாக எரியும் காட்டுத்தீ போன்ற ஸம்ஸாரத்தை ஒரு க்ஷணத்திலே போக்கி, உயர்ந்த ஆனந்தத்தையும் கொடுக்கும்.

ச்லோகம் 30 – ஸ்ரீ ஆளவந்தார், பலன் கொடுப்பதில் விளம்பமில்லாத ஸித்தோபாயமான பகவானைப் பற்றியிருப்பதாலும்,
அந்தப் பலனைப் பெறுவதற்குக் காத்திருக்க முடியாததாலும், த்வரையால் தூண்டப்பட்டு
ஸ்ரீ திருவாய்மொழி 6.9.9இல் “கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ”
(என்னை உன்னிடத்தில் அழைத்துக்கொள்ளும் காலம் அருகில் வாராதோ?) என்று ஸ்ரீ ஆழ்வார் கேட்டபடிக் கேட்கிறார்.
அல்லது – ப்ரபத்தியின் பலனான பரபக்தியினால், ஸ்ரீ ஆளவந்தார்,
ஸ்ரீ திருவாய்மொழி 6.3.10இல் “கனை கழல் காண்பதென்று கொல் கண்கள்”
(என்னுடைய கண்கள் எப்பொழுது எம்பெருமானின் திருவடிகளைக் காணும்) என்றும்
ஸ்ரீ திருவாய்மொழி 9.5.1இல் “காணக் கருதும் என் கண்ணே”
(அவனைக் காண என் கண்கள் ஆசைப்படும்) என்றும் ஸ்ரீ ஆழ்வார் சொன்னபடி
ஸ்ரீ எம்பெருமானின் திருவடிகளை எப்பொழுது காண்பேன் என்று கேட்கிறார்.

விலாஸ விக்ராந்த பராவராலயம்
நமஸ்யதார்த்தி க்ஷபணே க்ருதக்ஷணம் |
தநம் மதீயம் தவ பாத பங்கஜம்
கதாநு ஸாக்ஷாத் கரவாணி சக்ஷுஷா ||

என்னுடைய கண்கள் என்னுடைய தனமும், உயர்ந்த தேவர்கள் மற்றும் தாழ்ந்த மனிதர்களின் இருப்பிடங்களை
விளையாட்டாக அளந்து தன்னதாகக் கொண்டு இருக்கும், வணங்குபவர்களின் துன்பத்தைப் போக்கும்
உன்னுடைய திருவடியை எப்பொழுது காணும்?

ச்லோகம் 31 – இதில், ஸ்ரீ ஆளவந்தார் “உன்னுடைய திருவடிகளைக் கண்டால் போதாது,
அவை என்னுடைய தலையை அலங்கரிக்க வேண்டும்” என்று ஸ்ரீ ஆழ்வார்
ஸ்ரீ திருவாய்மொழி 9.2.2இல் “படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்”
(இவ்வுலகத்தின் அளவுக்கு நீட்டிய திருவடித் தாமரைகளை என் தலைக்கு அணியாக ஆக்க வேண்டும்) என்றும்
ஸ்ரீ திருவாய்மொழி 4.3.6இல் “கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே”
(என்னுடைய தலைக்கு உன்னுடைய தாமரை போன்ற திருவடிகளே அலங்காரமாகும்) கேட்டபடி அருளிச் செய்கிறார்.

கதா புநஶ் ஶங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குஶ வஜ்ரலாஞ்சநம் |
த்ரிவிக்ரம! த்வச் சரணாம்புஜ த்வயம்
மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி ||

ஸ்ரீ த்ரிவிக்ரமனாக அவதரித்த என் ஸ்வாமியே! சங்கம், சக்ரம், கற்பக மரம், கொடி, தாமரை, அங்குசம், வஜ்ராயுதம்
ஆகிய அடையாளங்கள் பொருந்திய உன்னுடைய திருவடிகள் எப்பொழுது என்னுடை தலையை அலங்கரிக்கும்.

ச்லோகம் 32 – இதிலிருந்து 46ஆவது ச்லோகம் வரை ஸ்ரீ ஆளவந்தார் எம்பெருமானுடன் கூடியிருக்கும் அவனுடைய
அழகிய அவயவங்கள், திருவாபரணங்கள், திவ்ய ஆயுதங்கள், திவ்ய மஹிஷிகள், திவ்ய அடியார்கள், செல்வம்
ஆகியவைகளை அனுபவித்து, இப்படிப்பட்ட ஆனந்தமான அனுபவத்தினால் கிடைக்கும் கைங்கர்யம் தனக்கு
எப்பொழுது கிடைக்கும் என்கிறார்.
இதன் மூலம், ஸ்ரீ ஆளவந்தார் பகவானுக்குப் பரமபதத்தில் அடியார்களுடன் கூடி இருந்து
கைங்கர்யம் செய்யும் குறிக்கோளை அருளிச் செய்கிறார்.

விராஜ மாநோஜ்ஜ்வல பீத வாஸஸம்
ஸ்மிதாத ஸீஸூந ஸமாமலச்சவிம் |
நிமக்ந நாபிம் தநுமத்யம் உந்நதம்
விஶால வக்ஷஸ்ஸ்தல ஶோபி லக்ஷணம் ||

ஸ்ரீ எம்பெருமான் ஒளிவிடும் திருப் பீதாம்பரத்தை அணிந்துள்ளான்;
மலர்ந்த காயாம்பூவின் நிறத்தைப் போன்ற தோஷமற்ற ஒளியுடையவன்;
ஆழமான திருநாபி மற்றும் மெலிந்த இடைப்பகுதியை உடையவனாகச் சிறந்து விளங்குகிறான்,
ஒளிவிடும் ஸ்ரீவத்ஸம் என்கிற மறுவைத் தன் பரந்த திருமார்பில் உடையவன் …

ச்லோகம் 33 – இதில், ஸ்ரீ ஆளவந்தார் எம்பெருமானுடைய வீரம், சௌர்யம் முதலிய குணங்களையும்
ஸ்ரீ எம்பெருமானின் திருத்தோள்களின் அழகையும் அனுபவிக்கிறார்.

சகாஸதம் ஜ்யாகிண கர்க்கஶைஶ்ஶுபை:
சதுர்பிராஜாநு விளம்பிபிர் புஜை: |
ப்ரியாவதம்ஸோத்பல கர்ண பூஷண
ஶ்லதாலகாபந்த விமர்த்த ஶம்ஸிபி:||

வில்லில் நாணேற்றியதால் கடினமாக இருக்கும் நான்கு திருக்கைகளால் ஒளிவிடுகிறான் ஸ்ரீ எம்பெருமான்;
மேலும் அவனுடைய திருத்தோள்களில் ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரின் காதுகளில் அணிந்திருக்கும்
கரிய நிறத்தில் இருக்கும் அல்லிப் பூக்கள், அவளின் காதணிகள்
மற்றும் அலையும் கூந்தலின் அடையாளங்கள் தெரிகின்றன …

ச்லோகம் 34 – திருத்தோள்களை அனுபவித்த பிறகு, ஸ்ரீ எம்பெருமானின் திருக்கழுத்தையும் திருமுகமண்டலத்தின்
அழகையும் ஸ்ரீ ஆளவந்தார் அனுபவிக்கிறார்.

உதக்ர பீநாம்ஸ விலம்பி குண்டல
அலகாவளீ பந்துர கம்புகந்தரம் |
முகஶ்ரியா ந்யக்க்ருதபூர்ண நிர்மலா’-
ம்ருதாம்ஶு பிம்பாம்புருஹோஜ்ஜ்வல ஶ்ரியம் ||

ஸ்ரீ எம்பெருமான் அணிந்திருக்கும் குண்டலங்கள் அவனுடைய உயர்ந்த திரண்டிருக்கும் திருத்தோள்களின்
வரை வந்து தொங்குவதாலும், அவனுடைய சுருண்ட கூந்தலினாலும், மூன்று வரிகள் இருப்பதாலும்
அவனுடைய திருக்கழுத்து அழகாக இருக்கிறது.
தன்னுடைய திருமுக மண்டலத்தின் ஒளியால் தோஷமற்ற நிலவு மற்றும் அப்போதலர்ந்த தாமரை மலரை ஜயித்திருக்கிறான் …

ச்லோகம் 35 – ஸ்ரீ ஆழ்வார், திருவாய்மொழி 7.7.8இல் “கோளிழைத் தாமரை”
(எம்பெருமானின் திருக்கண்கள் அவற்றின் ஒளியையே ஆபரணமாகக் கொண்டிருக்கின்றன) என்று சொன்னபடி,
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ எம்பெருமானின் திருமுக மண்டலத்தை ஒவ்வொரு அவயமாக அனுபவிக்கிறார்.

ப்ரபுத்த முக்தாம்புஜ சாருலோசநம்
ஸவிப்ரம ப்ரூலதம் உஜ்ஜ்வலாதரம் |
ஶுசிஸ்மிதம் கோமல கண்டம் உந்நஸம்
லலாடபர்யந்த விலம்பிதாலகம் ||

ஸ்ரீ எம்பெருமான் மலர்ந்த, புதிய தாமரை மலரைப் போன்ற திருக்கண்களையும்,
கொடி போன்று வளைந்த திருப்புருவங்களையும், மிகவும் ஒளிவிடும் திருவதரங்களையும்,
புனிதமான புன்முறுவலையும், அழகிய கன்னங்களையும், நிமிர்ந்த திருமூக்கையும்,
திருநெற்றி வரை படர்ந்திருக்கும் திருக்குழலையும் (கூந்தலையும்) உடையவன் …

ச்லோகம் 36 –ஸ்ரீ ஆளவந்தார் எம்பெருமானின் திருவாபரணங்கள் மற்று திவ்ய ஆயுதங்களின்
சேர்த்தியை அனுபவிக்கிறார்.

ஸ்புரத் கிரீடாங்கத ஹாரகண்டிகா
மணீந்த்ர காஞ்சீகுண நூபுராதிபி: |
ரதாங்க ஶங்காஸி கதா தநுர்வரைர்
லஸத் துளஸ்யா வநமாலயோஜ்ஜ்வலம் ||

ஸ்ரீ எம்பெருமான் ஒளிவிடும் திருமுடி (கிரீடம்), தோள் காப்புகள், ஹாரம், கழுத்தில் அணியும் சங்கிலி,
ஸ்ரீகௌஸ்துப மணி, திவ்ய அரை நாண், திவ்ய சதங்கைகள் முதலிய திவ்ய ஆபரணங்களாலும்,
திருவாழி, திருச்சங்கு, திருநாந்தகம் என்னும் வாள், கௌமோதகீ என்னும் கதை,
சார்ங்கம் என்னும் வில் ஆகிய திவ்ய ஆயுதங்களாலும், அவனுடைய திருமேனி ஸம்பந்தத்தால் ஒளி விடும்
திருத்துழாய் மற்றும் வனமாலையால் மிகவும் ஜ்வலித்துக் கொண்டிருக்கிறான்.

ச்லோகம் 37 – இனி வரும் இரண்டு ச்லோகங்களில் ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ பெரிய பிராட்டியுடன் கூடி இருப்பதை அனுபவிக்கிறார்.
இந்த ச்லோகத்தில், ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீபிராட்டியின் பெருமையையும், ஸ்ரீ ஈச்வரனுக்கு அவளிடத்தில் இருக்கும்
பேரன்பையும் அருளிச்செய்கிறார்.

சகர்த்த யஸ்யா பவநம் புஜாந்தரம்
தவ ப்ரியம் தாம யதீய ஜந்மபூ: |
ஜகத்ஸமஸ்தம் யதபாங்க ஸம்ஶ்ரயம்
யதர்த்தம் அம்போதிரமந்த்ய பந்திச ||

ஸ்ரீ எம்பெருமானே! எந்தப் பிராட்டிக்கு இருப்பிடமாக உன்னுடைய திருமார்பை ஆக்கினாயோ,
எந்தப் ஸ்ரீ பிராட்டியின் பிறப்பிடமான ஸ்ரீ திருப்பாற்கடல் உனக்கு விருப்பமான உறைவிடம் ஆனதோ,
எந்த ஸ்ரீ பிராட்டியின் கடாக்ஷத்தை நம்பி இவ்வுலகம் இருக்கிறதோ, யாருக்காக நீ கடலைக் கடைந்தாயோ,
யாருக்காக நீ கடலில் அணை கட்டினாயோ …

ச்லோகம் 38 – இதில், ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ பிராட்டியின் எல்லை இல்லாத இனிமையையும்,
அவள் ஸ்ரீ எம்பெருமானுக்காகவே இருப்பதையும்,
ஸ்ரீ திருவாய்மொழி 10.10.6இல் “உனக்கேற்கும் கோல மலர்ப் பாவை”
(உனக்குத் தகுந்தவளான, அழகிய தாமரை மலரில் வசிக்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மி) சொன்னபடி அனுபவிக்கிறார்.

ஸ்வவைஶ்வ ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாததாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||

நீ விச்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், ஸ்ரீ பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள்
மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய
எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.

ச்லோகம் 39 – ஸ்ரீ ஆளவந்தார், ஸ்ரீ திருவனந்தாழ்வானின் திருமடியில் ஸ்ரீ எம்பெருமானும் ஸ்ரீ பிராட்டியும்
கூடியருப்பதைப் பர்யங்க வித்யையில் காட்டியபடி அனுபவிக்கிறார்.

தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||

ஸ்ரீ ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும்
ரத்னங்களின் ஒளியால் ஒளிவிடும் திருமடியில், ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ பிராட்டியும் எழுந்தருளியிருக்கும்
திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட ஸ்ரீ திருவனந்தாழானின் திருமேனியில், ஸ்ரீ எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான் …

ச்லோகம் 40 – கைங்கர்யத்தில் இருக்கும் ஆசையால்,
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ திருவனந்தாழ்வானின் உயர்ந்த லீலைகளை அனுபவிக்கிறார்.
ஸ்ரீவிஷ்ணு புராணம் 1.15.157இல் ““உபமானாமசேஷாணாம் ஸாதூனாம் யஸ்ஸதா’பவத் |”
(எப்படி ப்ரஹ்லாதன் எல்லா நல்லவர்களுக்கும் உதாரணமாக இருக்கிறானோ) சொன்னபடி,
கைங்கர்யத்தில் ருசியுடைய அனைவருக்கும் ஸ்ரீ திருவனந்தாழ்வானின் செயல்களே சிறந்த உதாரணம்.
ஸ்ரீ ஆளவந்தார் இப்படிப்பட்ட ஸ்ரீ ஆதிசேஷனின் உயர்ந்த நிலையை அருளிச் செய்கிறார்.

நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||

நீ ஸ்ரீ திருவனந்தாழ்வானின் திருமேனியிலே திவ்யமாக சயனித்திருக்கிறாய்.
ஸ்ரீ திருவனந்தாழ்வான் நீ வசிக்கும் திருமாளிகையாகவும், சயனித்துக் கொள்ளும் படுக்கையாகவும்,
வீற்றிருக்கும் ஸிம்ஹாஸனமாகவும். அணிந்து கொள்ளும் பாதுகையாகவும், உடுத்திக் கொள்ளும் ஆடைகளாகவும்,
அணைத்துக் கொள்ளும் தலையணையாகவும், வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கும் குடையாகவும்,
மேலும் பல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு உனக்குத் தொண்டு செய்வதால்
எல்லோராலும் “சேஷன்” (தொண்டன்) என்றே அழைக்கப்படுகிறான் …

ச்லோகம் 41 – இதில், ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ பெரிய திருவடியுடன் (ஸ்ரீ கருடாழ்வார்) கூடியிருப்பதை
அனுபவிக்கிறார். ஸ்ரீ பெரியதிருவடி, ஸ்ரீ எம்பெருமானுக்குக் கொடியாகவும், மற்றும் எல்லாமாகவும்
பழுத்த கனியைப் போன்று ஸ்ரீ எம்பெருமானுக்கு விரும்பத்தக்கவராக இருக்கிறார்.

தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த ஸ்ரீ கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும்,
ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்;
மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்;
உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் …

ச்லோகம் 42 –ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஸேனாபதி ஆழ்வானின் (ஸ்ரீ விஷ்வக்ஸேனர்) தாஸ்ய ஸாம்ராஜ்யத்தை அனுபவிக்கிறார்;
ஸ்ரீ எம்பெருமான் தன்னுடைய எல்லாப் பொறுப்புகளையும் ஸ்ரீ விஷ்வக்ஸேனரிடம் அளித்துத்
தன்னையும் அவர் அதீனத்தில் அமைத்துக் கொள்கிறான்.

த்வதீய புக்தோஜ்ஜித ஶேஷபோஜிநா
த்வயா நிஸ்ருஷ்டாத்ம பரேண யத்யதா |
ப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி தத்
ததா’நுஜாநந்தம் உதார வீக்ஷணை: ||

ஸ்ரீ விஷ்வக்ஸேனர் உன்னுடைய ப்ரஸாதத்தையே உண்டு, உன்னுடைய நித்ய மற்றும் லீலா விபூதிகளை நடத்தும்
பொறுப்புகளை உன்னிடத்திலிருந்து பெற்றிருக்கிறார்; எல்லோருக்கும் இனியவரான அவர்,
உன்னுடைய கண்ணசைவினாலே செய்ய வேண்டிய விஷயங்களுக்கு ஒப்புதல் வாங்கி, அவற்றை நடத்தக்கூடியவர்.

ச்லோகம் 43 – ஸ்ரீ விஷ்ணு ஸூக்தத்தில் “ஸதா பச்யந்தி ஸூரய:” (ஸ்ரீ நித்யஸூரிகள் எப்பொழுதும்
ஸ்ரீ எம்பெருமானைப் பார்த்து அனுபவிக்கிறார்கள்) என்று சொன்னபடி,
ஸ்ரீ எம்பெருமானுக்கு நித்யஸூரிகள் செய்யும் கைங்கர்யத்தை அனுபவிக்கிறார். இவருடைய ப்ரார்த்தனை
ஸ்ரீ திருவாய்மொழி 2.3.10இல் “அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ?”
(எப்பொழுது நான் ஸ்ரீ நித்யஸூரிகள் கோஷ்டியில் இருப்பேன்?) என்று ஸ்ரீ ஆழ்வார் கேட்டப்டி இருக்கும்.

ஹதாகில க்லேஶமலை: ஸ்வபாவத:
*ஸதாநுகூல்யைகரஸைஸ் தவோசிதை: |
க்ருஹீத தத்தத் பரிசார ஸாதநை:
நிஷேவ்யமாணம் ஸசிவைர் யதோசிதம் ||-

* த்வதாநுகூல்யைக என்றும் ஒரு பாடம் உண்டு..

துன்பங்களும் தோஷங்களும் இல்லாத, எப்பொழுதும் உனக்குத் தொண்டு செய்யும் அனுபவத்தை உடைய,
உனக்குப் பொருத்தமாக இருக்கக்கூடியவர்களான, கையில் எப்பொழுதும் கைங்கர்யத்துக்குத் தேவையான
மாலை, தூபம், தீபம் முதலியவைகளை ஏந்தி இருப்பவர்களான, உனக்கும் முறையை உணர்த்திக் கைங்கர்யம்
செய்யக்கூடியவர்களான, அவர்கள் மற்றும் உன் தன்மைக்கேற்ப
உன்னை வணங்கக்கூடிய ஸ்ரீ நித்யஸூரிகளால் வணங்கப்படுபவனே!

ச்லோகம் 44 – ஸ்ரீ ராமாயணம் அயோத்யா காண்டம் 31.25இல் ஸ்ரீ இளைய பெருமாள்
“பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸானுஷு ரம்ஸ்யதே”
(நீ ஸ்ரீ ஸீதாப்பிராட்டியுடன் மலைத் தாழ்வரைகளில் ரமித்திருக்கும் போது, நான் உங்கள் இருவருக்கும் தொண்டு செய்வேன்)
என்று சொன்னபடி, ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ பிராட்டிக்கு ஆனந்தம் கொடுப்பதை அனுபவிக்க ஆசைப்படுகிறார்.

அபூர்வ நாநாரஸ பாவ நிர்பர
ப்ரபுத்தயா முக்த விதக்த லீலயா |
க்ஷணாணுவத் க்ஷிப்தபராதி காலயா
ப்ரஹர்ஷயந்தம் மஹிஷீம் மஹாபுஜம் ||

தன்னுடைய அழகான மற்றும் சிறந்ததான லீலைகளால் பிராட்டிக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவன் ஸ்ரீஎம்பெருமான்;
இப்படிப்பட்ட லீலைகளால் பிராட்டிக்கு ப்ரஹ்மாவின் ஆயுட்காலமும் ஒரு நொடிப்பொழுதில் செல்லும்படி
ஒவ்வொரு க்ஷணமும் புதியதாக ரசிக்கும்படியாக இருக்கும்;
ஸ்ரீ பிராட்டியைத் தழுவுதற்கு ஏற்ற பெரிய திருக்கைகளை உடையவன்.

ச்லோகம் 45 – ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ பிராட்டிக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும், ரசிக்கும்படியான விஷயங்களுக்கு
இருப்பிடமான எம்பெருமானின் திருமேனிகள் மற்றும் திருக்கல்யாண குணங்களை அனுபவிக்கிறார்.

அசிந்த்ய திவ்யாத்புத நித்ய யௌவந
ஸ்வபாவ லாவண்யமயாம்ருதோததிம் |
ஶ்ரிய: ஶ்ரியம் பக்த ஜநைக ஜீவிதம்
ஸமர்த்தம் ஆபத்ஸகம் அர்த்தி கல்பகம் ||

ஸ்ரீ எம்பெருமான் நினைவுக்கு அப்பாற்பட்ட, திவ்யமான, ஆச்சர்யமான, நித்யமான, இயற்கையான இளமையை உடையவன்;
அழகுக் கடலாக இருப்பவன்; ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் ஸ்ரீயாக (செல்வமாக) இருப்பவன்;
தன்னுடைய அடியார்களின் உயிராக இருப்பவன்; அறிவில் குறைந்தவர்களையும் படிப்படியாக உயர்த்தக்கூடியவன்,
ஆபத்துக் காலத்தில் நண்பனாக இருப்பவன், அவனை விரும்புபவர்களுக்கு கற்பக மரமாக இருப்பவன் …

ச்லோகம் 46 –ஸ்ரீ ஆளவந்தார் “எப்பொழுது உலக விஷயங்களில் ஆசையைவிட்டு தேவரீருடைய ஆனந்துக்காகவும்
என்னுடைய இருப்பின் பயனாகவும், முன்பு சொன்ன ஸ்வரூபம், ரூபம், குணம், விபூதி ஆகியவைகளில் பூர்த்தியை
உடைய தேவரீருக்குக் கைங்கர்யம் செய்வேன்?” என்று கேட்கிறார்.

பவந்த மேவாநுசரந் நிரந்தரம்
ப்ரஶாந்த நிஶ்ஶேஷ மநோரதாந்தர: |
கதா’ஹம் ஐகாந்திக நித்ய கிங்கர:
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாதஜீவித: ||

மற்ற எல்லா விஷயங்களிலுமிருக்கும் ஆசையை அடியோடு விட்டு உன்னையே தொடரும்படி இருந்து,
எப்பொழுதும் உனக்கு நித்ய கைங்கர்யம் செய்து உனக்கு ஆனந்தத்தைக் கொடுத்து
என் வாழ்கைக்கும் ஒரு பயனைப் பெறுவேன்?

ச்லோகம் 47 – இதில், ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஈச்வரனின் அடையத்தக்க உயர்ந்த நிலையையும் தன்னுடைய
முந்தைய (தாழ்ந்த) நிலையையும் பார்த்து “ஸம்ஸாரியான நான் எப்படி ப்ரஹ்மா ருத்ரன் போன்றவர்களின்
எண்ணத்துக்கும் அப்பாற்பட்ட, இவ்வுலக விஷயங்களால் தீண்டப்படாத
ஸ்ரீ நித்யஸூரிகள் ஆசைப்படும் கைங்கர்யத்தை ஆசைப்படலாம்?
எப்படி உயர்ந்த உணவானது விஷத்தால் தீண்டப்படலாம்?” என்று நினைத்து,
ஸ்ரீ நம்மாழ்வார் “வளவேழுலகில்” செய்ததைப்போலே தன்னைத் தானே கடிந்து கொள்கிறார்.

திகஶுசிம் அவிநீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரமபுருஷ! யோ’ஹம் யோகிவர்யாக்ரகண்யை: |
விதிஶிவ ஸநகாத்யைர் த்யாதும் அத்யந்த தூரம்
தவ பரிஜநபாவம் காமயே காமவ்ருத்த: ||

ஸ்ரீ புருஷோத்தமனே! என்னுடைய (தவறான) எண்ணப்படி நடக்கும் தன்மையை உடைய காரணத்தால்
ப்ரஸித்தமான நான், என்னுடைய புனிதமற்ற தன்மையாலும், சீர் செய்யப்படாத தன்மையாலும், கருணையும்,
வெட்கமும் இல்லாத தன்மையாலும், ப்ரஹ்மா, சிவன், ஸனகாதி முனிவர்கள் போன்ற உயர்ந்த யோகிகளுக்கும்
எட்டாததான உன் கைங்கர்யத்தை ஆசைப்பட்டதை என்னையே நினைத்து நொந்து கொள்ள வேண்டும்.

ச்லோகம் 48 – ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ எம்பெருமானிடத்தில் “உன்னுடைய கருணையால், என்னுடைய பாபங்களைப் போக்கி
என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
அல்லது – ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ எம்பெருமானிடத்தில் “தேவரீர் என்னுடைய குறிக்கோளை அடைவதற்குத் தடையாக
இருக்கும் பாபங்களை நீயே போக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.
முன்பு, ஸ்ரீ எம்பெருமானின் மேன்மையின் உச்சக்கட்ட நிலையைப் பார்த்து விலகினார்;
இப்பொழுது ஸ்ரீ எம்பெருமானின் எளிமையின் உச்சக்கட்ட நிலையை நினைத்து அவனை அணுகுகிறார்.

அபராத ஸஹஸ்ர பாஜநம்
பதிதம் பீமபவார்ணவோதரே |
அகதிம் ஶரணாகதம் ஹரே!
க்ருபயா கேவலமாத்ஸமாத் குரு ||

துன்பங்களைப் போக்கி என்னை ரக்ஷிப்பவனே! கணக்கில்லாத அபராதங்களுக்கு இருப்பிடம் நான்;
இப்பொழுது இந்த ஸம்ஸாரம் என்கிற க்ரூரமான கடலில் முழுகியுள்ளேன்; எனக்கு வேறு புகல் இல்லை;
உன்னிடத்திலே சரணடைந்துள்ளேன்; உன்னுடைய கருணையினாலே என்னை உன்னுடையவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ச்லோகம் 49 –ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ ஆளவந்தாரைப் பார்த்து “இத்தனை தோஷங்களை உடைய நீர்,
வேறு உபாயங்களைக் கொண்டோ அல்லது மற்றவைகளை விட்டு என்னையே பிடித்துக் கொண்டோ
அவற்றைப் போக்கிக்கொள்ளாமல், என்னை ‘க்ருபயா கேவலம் ஆத்மஸாத் குரு’
(உன்னிடைய கருணையாலே, என்னை உன்னுடையவனாக ஏற்றுக் கொள் என்று ஏன் நிர்பந்திக்கிறீர்?” என்று கேட்க,
அதற்கு ஸ்ரீ ஆளவந்தார் “சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட அனுஷ்டானங்களில் ஈடுபட எனக்கு ஞானம் இல்லை,
ஆகையால் மற்ற உபாயங்களில் ஈடுபட வழியில்லை; எனக்கு வேறு புகல் இல்லாததால்,
இருப்பவற்றைக் கைவிடவும் முடியாது. ஆகையால் உன்னுடைய பெரிய கருணையினால்,
உன்னுடைய கடாக்ஷமே எனக்கு உஜ்ஜீவனத்துக்கு வழி” என்கிறார்.

அவிவேக கநாந்த திங்முகே
பஹுதா ஸந்தத து:க்கவர்ஷிணி |
பகவந்! பவதுர்திநே பத:
ஸ்கலிதம் மாம் அவலோகயாச்யுத ||

ஞானம், பலம் முதலிய ஆறு குணங்களால் பூர்த்தியை உடைய பகவானே! உன்னுடைய அடியார்களை நழுவ விடாதவனே!
திசைகள் கரிய மேகங்களால் மறைக்கப்பட்டிருக்கும், மழைக்கால இருட்டை உடைய, பெரிய மழை தொடர்ந்து பொழியும்
இந்த ஸம்ஸாரத்தில், நல்வழியில் இருந்து நான் நழுவுகிறேன்; உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தை எனக்கு அருள்.

ச்லோகம் 50 – ஸ்ரீ ஆளவந்தார் “எனக்கு உன்னுடைய கருணையைத் தவிர வேறு புகல் இல்லாததால்,
உன்னுடைய கருணைக்கும் என்னைவிட சிறந்த பாத்திரம் கிடையாது; ஆகையால் இந்த வாய்ப்பை நழுவ விடாதே” என்கிறார்.

ந ம்ருஷா பரமார்த்தமேவ மே
ஶ்ருணு விஜ்ஞாபநம் ஏகமக்ரத: |
யதி மே ந தயிஷ்யஸே ததோ
தயநீயஸ் தவ நாத துர்லப: ||

ஸ்ரீ ஸ்வாமி! முதலில் என்னுடைய ப்ரார்த்தனையைக் கேள்; இது பொய்யல்ல; இது உண்மையே;
உன்னுடைய கருணையை எனக்கு அளிக்காமல் என்னை இழந்துவிட்டாய் என்றால்,
உன்னுடைய கருணையைப் பெற என்னைவிடத் தகுந்த எவரையும் நீ பெறமாட்டாய்.

ச்லோகம் 51 – ஸ்ரீ ஆளவந்தார் “உன்னுடைய அருளை வேண்டும் எனக்கும் அருளை உடைய உனக்கும் உள்ள
இந்த ஸம்பந்தம், தேவரீருடைய கருணையினாலே ஏற்பட்டது; ஆகையால் இதைக் கைவிடாமல் நீ காக்க வேண்டும்” என்கிறார்.

ததஹம் த்வத்ருதே ந நாதவாந்
மத்ருதே த்வம் தயநீயவாந் ந ச |
விதி நிர்மிதம் ஏததந்வயம்
பகவந்! பாலய மா ஸ்ம ஜீஹப: ||

ஞானம் நிறைந்த ஸ்ரீ ஸ்வாமியே! ஆதலால் உன்னைத் தவிர எனக்கு வேறு ஒரு ஸ்ரீ ஸ்வாமி கிடையாது;
அதே போல உன்னுடைய கருணைக்கும் என்னைத் தவிர வேறு யாரும் சரியான பாத்திரம் கிடையாது.
உன்னுடைய கருணையால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஸம்பந்தம் காக்கப்பட வேண்டும்; அதை நழுவ விடாதே.

ச்லோகம் 52 – ஸ்ரீ எம்பெருமான் “என்னுடைய ரக்ஷணம் ஆத்மாவின் ஸ்வரூபத்தின்படி இருக்கும்;
உம்முடைய ஸ்வரூபத்தை ஆராய்ந்து, என்னிடத்தில் உம்மை ஸமர்ப்பியும்” என்று சொல்ல,
ஸ்ரீ ஆளவந்தாரும் ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ திருவாய்மொழி 2.9.6இல் “சிறப்பில் வீடு” என்று செய்தபடி,
“எனக்கு எந்த நிர்பந்தமும் இல்லை; ஆத்மா என்று சொல்லப்படும் இந்த வஸ்து
தேவரீரின் திருவடிகளில் என்னால் ஸமர்ப்பிக்கப்பட்டது”

வபுராதிஷு யோ’பி கோ’பி வா
குணதோ’ஸாநி யதா ததாவித: |
ததயம் தவ பாத பத்மயோ:
அஹமத்யைவ மயா ஸமர்ப்பித: ||

நான் சரீரம் முதலான எதுவாவகவோ எப்படிப்பட்ட தன்மையை உடையவனாகவும் இருக்கலாம்;
அதைப்பற்றி எனக்கு ஒரு நிர்பந்தமும் இல்லை; நான் என்று சொல்லப்படும் இந்த வஸ்து
இப்பொழுது உன்னுடைய திருவடித்தாமரைகளில் என்னால் ஸமர்ப்பிக்கட்டது.

ச்லோகம் 53 –ஸ்ரீ எம்பெருமான் கருணையுடன் “எப்படி நாம் ஸ்ரீ ஆளவந்தாரைக் கலக்கத்தில் இருக்கும்படி விடுவது?”
என்று எண்ணி “நீர் யார்; நீர் யாரை என்னிடம் ஸமர்ப்பித்தீர்?” என்று கேட்க,
ஸ்ரீ ஆளவந்தார், தன்னுடைய ஸ்வரூபத்தை ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ திருவாய்மொழி 2.3.4இல்
“எனதாவி ஆவியும் நீ … எனதாவி யார்? யானார்?”
(நீயே எனக்கு அந்தராத்மா; என்னுடைய ஆத்மா யார்? நான் யார்? எல்லாம் உன்னுடையவையே) என்றபடி
“உன்னுடைய உடைமையை நீயே ஏற்றுக்கொண்டாய்; ஆத்மாவை ஸமர்ப்பிப்பதும் ஆத்மாவைத் திருடுவது போலன்றோ?”
என்று சொல்லி தன்னுடைய ஆத்ம ஸமர்ப்பணச் செயலுக்கு வருந்துகிறார்.

மம நாத ! யதஸ்தி யோ’ஸ்ம்யஹம்
ஸகலம் தத்தி தவைவ மாதவ |
நியதஸ்வம் இதி ப்ரபுத்ததீ:
அதவா கிந்நு ஸமர்ப்பயாமி தே ||

ஸர்வ ஸ்வாமியான ஸ்ரீ எம்பெருமானே! ஸ்ரீ லக்ஷ்மீநாதனே! என்னுடைய எல்லா உடைமைப் பொருள்களும்
நானும் எப்பொழுதும் உன்னுடையவையே. இது தெரிந்த நான், உனக்கு எதை ஸமர்ப்பிப்பேன்?

ச்லோகம் 54 – ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ எம்பெருமானிடம் “ஆத்மாவைத் திருடுவதற்கு ஸமமான இந்த
ஆத்ம ஸமர்ப்பணத்தை நான் நிறுத்தாததால், உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினால்
என்னுடைய சேஷத்வத்தை வெளியிட்டதைப்போலே, பரபக்தி, பரஞானம் மற்றும் பரமபக்தி
ஆகியவைகளையும் அளித்து, இந்த ஞானம் உன்னுடைய கைங்கர்யத்துக்கு உதவும்படிச் செய்” என்கிறார்.

அவபோதிதவாநிமாம் யதா
மயி நித்யாம் பவதீயதாம் ஸ்வயம் |
க்ருபயைததநந்ய போக்யதாம்
பகவந்! பக்திம் அபி ப்ரயச்ச மே ||

என் ஸ்ரீ ஸ்வாமியே! எப்படி உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் என்னுடைய சேஷத்வத்தை
எனக்கு அறிவுறுத்தினாயோ, அதேபோல வேறு எங்கும் கிடைக்காத, உன்னிடத்தில் பக்தி செய்யும்
அந்த இனிய அனுபவத்தையும், நீயே அளிக்க வேண்டும்.

ச்லோகம் 55 – ஸ்ரீ ஆளவந்தார் பகவானிடத்தில் அதிகமான பக்தியைப் பெற்றபின்,
பகவானிடத்தில் அடிமைத்தனத்துடன் நிறுத்தாமல், அவனுடைய அடியார்களுக்கு அடிமையாக இருப்பதை ப்ரார்த்திக்கிறார்.

தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||

ஸ்ரீ எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும்.
மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.

ச்லோகம் 56 – ஸ்ரீ ஆளவந்தார் “எனக்கு ஒரு ஸ்ரீ வைஷ்ணவரின் திருமாளிகையில் பிறக்கும் பெருமை தான் வேண்டுமோ?
அவர்கள் என்னைக் கண்டால், என்னைத் தள்ளிவிடாமல், “இவன் நம்மவன்” என்று கருதித்
தங்கள் விசேஷமான கருணையை எனக்கு அளிக்க வேண்டும்படி நீ செய்ய வேண்டும்” என்கிறார்.

ஸக்ருத் த்வதாகார விலோகநாஶயா
த்ருணீ க்ருதாந் உத்தம புக்தி முக்திபி: |
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய
க்ஷணே’பி தே யத்விரஹோ’திதுஸ்ஸஹ: ||

உன்னுடைய பிரிவைத் தாங்க முடியாதவர்களான, எத்தனை இன்பங்களும் மோக்ஷமும் பெற்றிருந்தாலும்
உன்னுடைய திருமேனியை ஒரு முறை பார்ப்பதைக் கருதினால், அவற்றை புல்லைப்போல மதிப்பவர்களான
சிறந்த ஸ்ரீ வைஷ்ணவர்களின் கருணைப் பார்வைக்கு நான் இலக்காகும் தகுதியை எனக்குக் கொடு.

ச்லோகம் 57 – முன் ச்லோகத்தில், ஸ்ரீ ஆளவந்தார் சேஷத்வத்தின் உயர்ந்த நிலையான அடியார்களுக்கு
அடிமைப்பட்டிருப்பதை அனுபவித்தார். இங்கே சேஷத்வத்துக்கு வெளிப்பட்டிருக்கு விஷயங்களில் தனக்கு
இருக்கும் வெறுப்பைச் சொல்லி,ஸ்ரீ எம்பெருமானிடத்தில் “அவற்றை நீக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.

ந தேஹம் ந ப்ராணாந்ந ச ஸுகம் அஶேஷாபிலஷிதம்
ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஶேஷத்வ விபவாத் |
பஹிர்பூதம் நாத! க்ஷணமபி ஸஹே யாது ஶததா
விநாஶம் தத்ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபனம் இதம் ||

ஸ்ரீ ஸ்வாமியே! உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய
தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும்
அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும்.
மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்ரீ ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை.

ச்லோகம் 58 – ஸ்ரீ எம்பெருமான் “இந்த ஸம்ஸாரத்தில் என்னுடைய கோபத்துக் காரணமான பகவத் அபசாரம்
முதலிய எத்தனையோ விஷயங்கள் இருக்க, கைங்கர்யத்துக்கு விரோதியான இவற்றில் வெறுப்பு ஏற்பட்டு,
யோகிகளுக்கும் அரிதான இந்நிலையை ப்ரார்த்திப்பவரும் உளரே!” என்று ஆச்சர்யப்பட,
ஸ்ரீ ஆளவந்தார் “இந்த தோஷங்களை நீக்கக்கூடிய தேவரீரின் எல்லையில்லாத திருக்கல்யாண குணங்களை
நினைத்து இதை ஆசைப்பட்டேன்” என்கிறார்.

துரந்தஸ்யானாதேர் அபரிஹரணீயஸ்ய மஹதோ
நிஹீநாசாரோ’ஹம் ந்ருபஶுரஶுபஸ்யாஸ் பதம் அபி |
தயாஸிந்தோ! பந்தோ! நிரவதிக வாத்ஸல்யஜலதே
தவ ஸ்மாரம் ஸ்மாரம் குணகணம் இதீச்சாமி கதபீ: ||

கருணைக் கடலான ஸ்ரீ ஸ்வாமியே! என்னுடன் எல்லா உறவுகளையும் உடையவனே!
வாத்ஸல்யக் கடலாக இருப்பவனே! நான் மிகப் பெரிய, அநாதி கால, முடிவில்லாத,
போக்க முடியாத பாபங்களை உடையவனாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் உன்னுடைய
திருக்கல்யாண குணங்களை நினைப்பதால், பயமில்லாமல் இதை ஆசைப்படுகிறேன்.

ச்லோகம் 59 – ஸ்ரீ எம்பெருமான் “நீர் இச்சாமி என்று முன் ச்லோகத்தில் கூறியபடி உண்மையிலே
என் விஷயத்தில் ஆசை கொண்டுள்ளீரா?” என்று கேட்க
“நான் மந்த மனதை உடையவன் ஆகையால் தேவரீருடைய திருமுன்பே, தேவரீரின் பெருமைக்குத் தகுந்த
என் ஆசையை வெளியிட முடியவில்லை. என்னுடைய ஆசையைக் காட்டும் வார்த்தைகளைக் கொண்டு மனதைத் திருத்தி,
இந்நிலை எனக்கு உண்மையில் ஏற்படும்படிச் செய்ய வேண்டும்” என்கிறார்.

அநிச்சந்நப்யேவம் யதி புநரிதீச்சந்நிவ ரஜஸ்-
தமஶ் சன்னஶ்சத்மஸ்துதி வசன பங்கீமரசயம் |
ததா’பீத்தம் ரூபம் வசனம் அவலம்ப்யா’பி க்ருபயா
த்வமேவைவம் பூதம் தரணிதர! மே ஶிக்ஷய மந: ||

பூமியை எடுத்த ஸ்ரீ எம்பெருமானே! இந்த அடியவன் ரஜோ மற்றும் தமோ குணங்களால் மூடப்பட்டிருந்தாலும்,
என்னிடத்தில் உண்மையான ஆசை இல்லாமல் இருந்தாலும், உண்மையான ஆசை உடையவர்களைப் போலே
உன்னை மயக்கும் வார்த்தைகளை நான் சொன்னாலும், அதையே காரணமாகக்கொண்டு,
உன்னுடைய கருணையால் என்னுடைய மனதைத் திருத்தியருள வேண்டும்.

ச்லோகம் 60 – ஸ்ரீ எம்பெருமான் “உம்மிடத்தில் ஆசையும் இல்லாதபோதும், நானே உம்மிடத்தில் ஆசையை உண்டாக்கி
உம்மைக் காக்கவும் செய்ய வேண்டும் என்கிறீரே – இவற்றை நான் ஏன் செய்ய வேண்டும்” என்று கேட்க
ஸ்ரீ ஆளவந்தார் தனக்கும் அவனுக்கும் உள்ள ஒழிக்க ஒழியாத உறவைக் காட்டுகிறார்.

பிதா த்வம் மாதா த்வம் தயித தநயஸ்த்வம் ப்ரிய ஸுஹ்ருத்
த்வமேவ த்வம் மித்ரம் குருரஸி கதிஶ்சாஸி ஜகதாம் |
த்வதீயஸ் த்வத்ப்ருத்யஸ் தவ பரிஜநஸ் த்வத்கதிரஹம்
ப்ரபந்நஶ் சைவம் ஸத்யஹமபி தவைவாஸ்மி ஹி பர: ||

இவ்வுலகங்களுக்கு நீயே தந்தை; நீயே தாய்; நீயே விரும்பத்தக்க பிள்ளை; நீயே நல்ல உள்ளம் கொண்ட நண்பன்;
நீயே நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பன்; நீயே குரு; நீயே உபாயம் (வழி) மற்றும் உபேயம் (குறிக்கோள்);
நாம் உன்னுடையவன்; உன்னுடைய அடிமை; உன்னுடைய தொண்டன்;
உன்னையே சிறந்த உபேயமாகவும், உபாயமாகவும் கொண்டுள்ளவன்; ஆகையால் நான் ஏன் உன்னால் ரக்ஷிக்கப்படக் கூடாது?

ஜநித்வா அஹம் வம்ஸே மஹதி ஜகதி க்யாதய ஸ ஸாம்
ஸூசீ நாம் யுக்தா நாம் குண புருஷ தத்வ ஸ்திதி விதாம்
நிஸர்க்காத் ஏவ த்வச் சரண கமல ஏகாந்த மநஸாம்
அதோ அத பாபாத்மா ஸரணத! நிமஜ்ஜாமி தமஸி–61-

ஸரணத! –வழி காட்டும் பெருமானே –அவர் அவர்களுக்கு தகுந்த உபாயத்தைக் கொடுத்து அருளுபவனே
அஹம் ஜகதி க்யாதய ஸஸாம்–அடியேன் உலகம் எங்கும் பரவின புகழை யுடையவர்களும்
ஸூசீநாம்–பரிசுத்தர்களும்
யுக்தா நாம்–உன்னை விட்டுப் பிரியாதவர்களும்
ஆத்ம சாஷாத்காரமான யோகத்தில் ஊன்றினவர்கள் என்றும்
உன்னுடன் நித்ய சம்ச்லேஷத்தை விரும்பி இருப்பவர்கள் என்றும்
ஒரு காலும் உன்னை விட்டுப் பிரியாதவர்கள் என்றும் மூன்றுமே உண்டே
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய் -9-3-7-என்று இருக்கை
இளைய பெருமாளைப் போலே தேவரோடே யல்லது
செல்லாதவர்கள் -என்னுதல்
குண புருஷ தத்வ ஸ்திதி விதாம்–அசேதன தத்வம் என்ன சேதன தத்வம் என்ன இவற்றின்
ஸ்வரூப ஸ்வ பாவங்களை அறிந்தவர்களும்
குண த்ரயாத்மகமான பிரக்ருதியை குணம் -புருஷன் -ஆத்மா –
தத்வ ஸ்திதி உண்மை நிலையை உணர்ந்தவர்கள் -தத்துவங்களின் ஸ்தியை உணர்ந்தவர்கள் என்றுமாம்
நிஸர்க்காத் ஏவ –த்வச் சரண கமல ஏகாந்த மநஸாம்–பரிமளத்துடனே அங்குரிக்கும் திருத்துழாய் போலவும்
வத்ஸ்ம் ஆனது ஜனித்த போதே தாய் முலையிலே வாய் வைக்குமா போலவும்
இயற்கையாகவே உன்னுடைய திருவடித் தாமரைகளில் ஊன்றின மனமுடையவர்களான மஹான்களினுடைய
ஜநித்வா வம்ஸே மஹதி –சிறந்த குலத்திலே பிறந்து வைத்து
அதோ அத பாபாத்மா தமஸி–பாபிஷ்டனாய்க் கொண்டு இருள்மயமான மூதாவியிலே
அடி காண ஒண்ணாத கீழ் எல்லையில்
நிமஜ்ஜாமி–அழுந்திக் கொண்டே கிடக்கிறேன்
பன்மாமாயப் பல் பிறவியில் படிகின்ற யான் -திருவாய் -3-2-2-என்கிறபடியே
இன்னம் தரை கண்டிலன் -என்கிறார் –
சந்தாநிகர் தேவர் பக்கல் அவகா ஹித்த அளவும் நான் பிரக்ருதியில் உள் புக்கேன் -என்கை –

ஜனித்த வம்சம் இது
தேவர் சரண்யர்
நான் படுகிற பாடு இது இறே
அவமஞ்ஜனைப் போலே -வம்ஸ ப்ரபாவமும் ஜீவியாதே
தேவருடைய நீர்மையும் ஜீவியாதே இருக்கிற படி இறே -என்னுடைய பாப ப்ராசுர்யம் என்கிறார் –

——————–

அமர்யாத ஷூத்ரஸ் சலமதிர ஸூயாப்ரஸ்வபூ
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மர ப்ரவஸோ வஞ்சன பர
ந்ரு ஸ்ம்ஸ பாபிஷ்ட கத மஹமிதோ துக்க ஜலதே
அபாராதுத் தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ—62-

1-அமர்யாத –வரம்பு மீறினவனும்
2-ஷூத்ரஸ் –அற்ப விஷயங்களில் சாபல்யம் உள்ளவனும்
3-சலமதிர் -நின்றவா நில்லா நெஞ்சை உடையவனாயும்
4-அஸூயா ப்ரஸ்வபூ–பொறாமைக்குப் பிறப்பிடமானவனும்
5-க்ருதக்நோ -நன்றி கெட்டவனும்
6-துர்மாநீ –துர் அஹங்காரம் உள்ளவனும்
7-ஸ்மர ப்ரவஸோ –காமத்துக்குப் பரவசப் பட்டவனும்
8-வஞ்சன பர–பிறரை வஞ்சிப்பவனும்
சூதனாய்க் கள்வனாகி -திருமாலை -16
சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து -பெரிய திருமொழி -1-6-3-என்று சொல்லுகிறபடியே-
9-ந்ரு ஸ்ம்ஸ –கொடும் தொழில் புரிபவனும்
10-பாபிஷ்ட –மஹா பாபியுமான
பாவமே செய்து பாவியானேன் -பெரிய திரு மொழி -1-9-9-
ஒப்பிலாத் தீ வினையேன் -திருவாய் -7-9-4-
நானே நாநாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2-
அஹம் அஸ்மா அபராதாநாம் ஆலய –
ராவணோ நாம துர்வ்ருத்த
நீசனேன் நிறை வொன்றும் இலேன் –திருவாய் -3-3-4-என்று
அறிவுடையார் தம்தாமை-பேசும்படியான பாபத்திலே நிஷ்டை யுடையவன் –
அஹம் இத அபாராத துக்க ஜலதே-அடியேன் இந்த கங்கு கரை அற்ற துன்பக் கடலில் நின்றும்
உத்தீர்ணஸ் –கரை சேர்ந்தவனாய்
கதம் பரிசரேயம் தவ சரணயோ—உனது திருவடிகளில் எங்கனே கைங்கர்யம் பண்ணப் பெறுவேன் –

முத்தனார் -திருச்சந்த -115-என்கிறபடியே
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான தேவரே கரை ஏற்ற வேண்டும் -என்கை –
கீழே பாபாத்மா என்று சுருங்கச் சொன்னதை விரித்து அருளுகிறார் -நம்முடைய அனுசந்தானத்துக்காக
நான் அனுசந்தித்து உஜ்ஜீவிக்க ஒரு பத்து விசேஷணங்களை விஸ்தாரமாக அருளிச் செய்கிறார்
துக்க நிவ்ருத்தியும் தேவருக்கே பரம் –
அடிமை கொள்ளுகையும் தேவருக்கே பரம் -என்கை —

—————

ரகுவர யத பூ ஸ்தவம் தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய
ப்ரணத இதி தயாளூர் யச்ச சைத் யஸ்ய கிருஷ்ண
பிரதிப வமபராத்துர் முக்த சாயுஜ்யதோ அபூ
வத கிமபத மாகஸ் தஸ்ய தி அஸ்தி ஷமாயா-63-

ஹே ரகுவர –ராகு வம்சத்தில் ஸ்ரீ ராமனாக திரு அவதரித்தவனே
த்வம் -நீ
தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய-அப்படிப்பட்ட மஹா அபராதியான காகாஸூரனது விஷயத்திலே
ப்ரணத இதி-இக் காகம் நம்மை வணங்கிற்று என்பதையே கொண்டு
தயாளூர் யத் அபூ –தயை பண்ணினாய் இறே
ஷிபாமி -என்றும் ந ஷமாமி -என்றும் பண்ணி வைத்த பிரதிஜ்ஞை பழியாதே
தேவர் க்ருபா கார்யமே பலித்து விட்டது – பிராட்டி சந்நிதி யாகையால் இறே-

முக்த கிருஷ்ண-குற்றம் அறியாத கண்ண பிரானே
கிருஷ்ணனாகி என்றும் கிருஷ்ண என்று சம்போதானமாகவும் –
பிரதிபவம் அபராத்துர்–பிறவி தோறும் அபராதம் பண்ணின
சைதயஸ்ய–சிசுபாலனுக்கு – யது வம்ஸ பூதரில் காட்டில்
சேதி குலோத்பவன் என்று தன்னை உத்க்ருஷ்டனாக அபிமானித்து இருக்குமவன் –
சாயுஜ்யதோ அபூச சயத-சாயுஜ்யம் அளித்தவனாயும் ஆனாய் இறே
சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட்பால் அடைந்த தன்மை –திருவாய் -7-5-3-
தஸ்ய தே ஷமாயா-அப்படி எல்லாம் செய்தவனான உன்னுடைய பொறுமைக்கு
அபதம ஆகஸ் கிம் அஸ்தி -இலக்காகாத குற்றம் என்ன இருக்கிறது
வத –அருளிச் செய்ய வேணும்
உனக்குப் பொறுக்க முடியாதது உண்டோ
சர்வஜ்ஞரான தேவருக்கும் மறு மாற்றம் இல்லை
க்ஷமித்து அருளி விஷயீ கரிக்கும் இத்தனை -என்கை –

—————

நநு பிரபன்னஸ் ஸக்ருதேவ நாத
தவாஹ மஸ்மீதி ச யாசமாந
தவா நுகம்ப்ய ஸ்மரத பிரதிஜ்ஞாம்
மதே கவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே–64-

நநு நாத-ஸ்வாமிந்
அஹம் ஸக்ருதேவ பிரபன்னஸ் இதி –நான் ஒரு கால் பிரபத்தி பண்ணினவன் என்றும்
அஹம் தவ அஸ்மி இதி ச -நான் உனக்கே உரிமைப்பட்டு இருக்கிறேன் என்றும் சொல்லிக் கொண்டு
யாசமாநஸ் அஹம் -கைங்கர்ய புருஷார்த்தத்தைப் பிரார்திக்கிற அடியேன்
தவ ஸ்மரத பிரதிஜ்ஞாம்–அன்று நீ கடற்கரையில் ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்குப் பண்ணின ப்ரதிஜ்ஜையைத்
திரு உள்ளத்திலே கொண்டு இருக்கிற உனக்கு
அநு கம்ப்ய –அருள் புரிய அறியேன் –
மதேக வர்ஜம் கிம் இதம் வ்ரதம் தே–உன்னுடைய இந்த விரதம் என் ஒருவனைத் தவிர்த்ததோ
சர்வ சாதாரணமான ப்ரதிஜ்ஜை பொய்யோ
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே –ஸக்ருத் பிரபதனம் பண்ணினேன்
கதா அஹம் ஐகாந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி -என்று
தவாஸ்மீதி யாசநனும் பண்ணினேன் -ப்ராப்ய அபேஷையும் பண்ணினேன் –
அபயம் ததாமி ப்ரதிஜ்ஜை பலிக்க வேண்டியது அன்றோ –

சக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே -அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம
ஸ்க்ருதேவ -என்றது –
சஹசைவ -உடனேயே -என்று ஆழ்வான் நிர்வஹிக்கும் –
அநாதி காலம் சம்சரித்துப் போந்த இவன் ஒரு ஜன்மம் எல்லாம் ப்ரபத்தியை
அனுசந்தித்தால் தான் -ஸ்க்ருத் -என்கைக்குப் போருமோ -என்பர் எம்பார் –
பகவத் ப்ரபாவத்தைப் பார்த்தால் ஒரு காலுக்கு மேல் மிகை –
ப்ராப்ய ருசி ப்ராப்தி அளவும் அனுவர்த்திக்கும் -என்பர் பட்டர் –

—————-

அக்ருத்ரிம த்வச் சரணார விந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதி மாத்மவந்தம்
பிதாமஹம் நாத முநிம் விலோக்ய
ப்ரஸீத மத் வ்ருத்தம சிந்தயித்வா–65-

மத் வ்ருத்தம் –என்னுடைய நடவடிக்கையை
அசிந்தயித்வா–கணிசியாமல்
அக்ருத்ரிம த்வச் சரணார விந்த ப்ரேம ப்ரகர்ஷ அவதிதம் -உனது திருவடித் தாமரையில் உண்மையாக
உண்டான பரம பக்திக்கு எல்லை நிலமாய் இருப்பவரும்
ஆத்மவந்தம்–ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி உணர்ந்தவரும் -ஜிதேந்த்ரியர் -சத்தை பெற்றவர்
பிதாமஹம் நாத முநிம் -எனக்குப் பாட்டனாருமாகிய ஸ்ரீ மந் நாத முனிகளை–
ஸ்ரீ ஈஸ்வர பட்டரது திருக்குமாரர் நம் ஆளவந்தார்
விலோக்ய–கடாக்ஷித்து
ப்ரஸீத –அடியேனை அனுக்ரஹித்து அருளாய்

ஸ்ரீமந் நாத முனிகளுடைய தேக சம்பந்தமும் ஆத்ம சம்பந்தமும்–ஜென்மத்தாலும் -வித்யையாலும் -சம்பந்தம்
முக்கிய ஹேது -அவனாலும் விட ஒண்ணாதது அன்றோ
மத் வ்ருத்தம சிந்தயித்வா-நிக்ரஹத்துக்கு என்னுடைய பாபங்கள் ஹேதுவானாலும்
அனுக்ரஹத்துக்கு இந்த மஹத் சம்பந்தம் உண்டே
மத் வ்ருத்தம் -என்று சத் கர்மத்தை நினைக்கிறது -என்றுமாம் –
வ்ருத்தவான் என்றால் சத் கர்ம யுக்தனை இறே சொல்லுகிறது –
ஸ்வ கதமான வற்றை அநாதரித்து
பெரிய முதலியார் சம்பந்தம் எனக்குத் தஞ்சமாக வேணும் என்று பிரார்த்தித்து
ஸ்தோத்ரத்தைத் தலைக் கட்டுகிறார் –
அப்படியே அனுக்ரஹித்தோம் என்று சோதிவாய் திறந்து அருளிச் செய்ய
மநோ ரதம் தலைக் கட்டப் பெற்று ஸ்தோத்ரத்தையும் தலைக் கட்டி அருளுகிறார்

யத் பதாம் போருஹ த்யாந வித்வஸ்த அசேஷ கல்மஷ
வஸ்து தாம் உபயாதோ அஹம் யாமுநேயம் நமாமி தம்

எவர் உடைய திருவடித் தாமரையை தியானிப்பதால் எல்லா பாபங்களும் அழியப் பெற்று
அடியேன் ஒரு பொருள் ஆனேனோ அத்தகைய ஸ்ரீ யாமுனாசார்யரை வணங்குகிறேன் –

——————————————————————-——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த ஸ்ரீ அஞ்சலி வைபவம் –சில்லறை ரஹஸ்ய கிரந்தம் —

April 27, 2020

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

ஸ்ரீ அம்ருதா ஸ்வாதிநீ -ரஹஸ்யங்களில் மூன்றாவது-ஸ்ரீ அஞ்சலி வைபவம் –

ஸ்ரீ ஆளவந்தார் -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -28-ஸ்லோக விஸ்தரமான வியாக்யானம் – அருளிச் செய்ய –
ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் இந்த கிரந்தம் அருளிச் செய்கிறார்
இதில் அஞ்சலி பிரபாவமும் -அது பரம்பரையா மோக்ஷ காரணமாவதும் –
அஞ்சலி முத்திரை ஆகிஞ்சனம் தெரிவிப்பதாய் ப்ரபத்தியே விவஷிதம் என்பதால் சாஷாத் மோக்ஷ காரணம்
என்பதும் அருளிச் செய்யப்பட்டது

இதில் அவதாரிகா ரூபமாய் -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-27-

தவாம்ருதஸ் யந்தி நி பாத பங்கஜே
நிவேஸி தாத்மா கத மந்யதிச் சதி
ஸ்திதே அரவிந்தே மகரந்த நிர்ப்பரே
மது வ்ரதோ நே ஷூ ரகம் ஹி வீஷதே–27-திருச் சரணார விந்தங்களின் போக்ய அதிசயம்

இந்த ஸ்லோகத்துக்கு மூலப்பாட்டு –
நாளும் நின்று அடும் நம் பழமை யம் கொடு வினை உடனே
மாளும் ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திரு உடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே –திருவாய் -1-3-8-

சேவா யோக்யதை அருளிச் செய்யும் முதல் பத்தில் -ஸுவ்லப்யத்தை அருளிச் செய்யும் மூன்றாம் திருவாய் மொழியில் –
சர்வ கால ஆஸ்ரயத்வத்தை வெளியிட்டு அருளும் எட்டாவது பாசுரம் இது

இதற்கு திருக் குருகைப் பிரான் பிள்ளான் -இப்படி அநந்ய ப்ரயோஜனராய்க் கொண்டு
நம் திரு உடை அடிகள் தம் நலம் கழல் வணங்கவே–ஒரு குறை இல்லை –
நாம் அபேக்ஷித்த படியே எம்பெருமானை அனுபவிக்கப் பெறலாம் -இப்படி சிர காலம் கூட பலவத் சாத்தியமான
பக்தி யோகத்தை சாதிக்கைக்குக் காலமும் பலமும் இன்றியே அந்திமதசாபன்னரானார் இழந்து போம் யத்தனையோ என்னில் –
அந்த அந்திம தசையிலாகிலும் ஓர் அஞ்சலி மாத்ரமாதல் ஓர் யுக்தி மாத்ரமாதல் ஓர் ஸ்ம்ருதி மாத்ரமாதல்
அவன் திறத்திலே செய்ய அந்த பக்தி யோகத்திலும் நன்று என்கிறார் -என்று நிரூபிக்கப் பட்டு இருக்கிறது –
ப்ரபத்தியே ஸூசிக்கப்படுகிறது

அந்தராதி கரணம்
முன் பின் -கேசவன் தமர் கீழ் மேல் -ரக்ஷித்துக் கொடுக்கும்

த்வத் அங்க்ரிம் உத்திஸ்ய கதா அபி கேநசித்
யதா ததா வா அபி சத்ருக் ருத்தோ அஞ்ஜலி
ததைவ முஷ்ணாத்ய ஸூ பான்யசேஷ தஸ்
ஸூ பானி புஷ்ணாதி ந ஜாது ஹீயதே—28-

த்வத் அங்க்ரிம் உத்திஸ்ய ————திரு உடை அடிகள் தம் நலம் கழல்
கதாபி கேநசித் யதா —————மனனக மலமறக் கழுவி
ததா வாபி ஸக்ருத் க்ருத அஞ்சலி —-மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது
ததைவம் உஷ்ணதி —————-உடனே மாளும்
அஸூபாநி அசேஷத—————–நாளும் நின்று அடும் நம் பழமை யம் கொடு வினை
ஸூபாநி புஷ்ணாதி —————–வலமே
ந ஜாது ஹீயதே ——————–ஓர் குறைவில்லை

இவ் வஞ்சலி–நோற்ற நோன்பிலேன் –புகல் ஓன்று இல்லா அடியேன் –இத்யாதிகளில் படியே –
ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வாதி யோகத்தால் -பிரபத்தி அதிகாரியாய்ப் -பர ந்யாஸம் பண்ணுகிறவனுடைய –
ஸ்வ ரக்ஷண அர்த்த -ஸ்வ வியாபாரத்தில் -கை முடங்குகிற படியைக் காட்டுகிற முத்ரையாய் நின்ற போது

தாவதார்த்திஸ் ததா வாஞ்ஜா தாவந் மோஹஸ் ததா ஸூகம்
யாவந் ந யாதி சரணம் த்வாம் அசேஷாக நாசநம் –இத்யாதிகளில் படியே
இவ்வஞ்சலிக்கு உள்ளீடாய்க் கொண்டு சகல பல ஸாதனமாய் நிற்கிற பிரபத்தியின் ப்ரபாவத்தைச் செல்லுகையில்
தாத்பர்யம் ஆகையால் இங்கு ஒரு பிராமண விரோதமும் வாராது –

அல்லாத பகவத் கர்மங்கள் போல் இவ்வஞ்சலியும் ஒரு சத் கர்ம விசேஷமாய் நின்றால் —
இட்ட படை கல் படையாய் -பாப ஷயம் -சத்வ உந் மேஷம் -சம்யக் ஞானம் -பக்தி பிரபத்திகள் -என்று
இப்பரம்பரையாலே மோக்ஷ சாதனத்வம் உண்டாகையாலே கீழ்ச் சொன்ன
சர்வ அநிஷ்ட நிவ்ருத்திக்கும் சர்வ அபீஷ்ட சித்திக்கும் விரோதம் இல்லை

———-

அஞ்சலி -அம் ஜலயதி –நெஞ்சு உருகும் பக்தனை கண்டு நெஞ்சு உருகுவானே அவனும் –

இரும்பு போல் வலிய நெஞ்சையும் உருக்குவானே —

கர்த்ருத்வ தியாகம் காட்டுவதே அஞ்சலி –

அகிஞ்சனன் என்பதைக் காட்டுவதே அஞ்சலி என்றுமாம் –

—————-

இதன் தனியன் –
ஹிதாய சர்வ ஜெகதாம் வ்யக்தம் யோ அஞ்சலி வைபவம்
பிராஸீக சத் தம் வந்தே அஹம் வேதாந்த யுக தேசிகம் —

————-

அவதாரிகை -த்வத் அங்க்ரிம் உத்திஸ்ய –சப்தார்த்தம் –கதாபி-சப்தார்த்தம்- கேநசித் -சப்தார்த்தம்
யதா ததா வாபி -சப்தார்த்தம்—ஸக்ருத் க்ருத –சப்தார்த்தம் –அஞ்சலி–சப்தார்த்தம்–
ததைவ -சப்தார்த்தம் முஷ்ணதி அஸூபாநி –சப்தார்த்தம்–அசேஷத –சப்தார்த்தம்
ஸூபாநி புஷ்ணாதி —சப்தார்த்தம்-ந ஜாது ஹீயதே -சப்தார்த்தம்–
அஞ்சலி பிரபன்னன் ஆகிஞ்சன்யத்தைக் காட்டும் முத்திரை –சரண்யனுடைய அபய முத்திரையின் பிரயோஜனம் —
பர ந்யாஸ வ்யஞ்ஜக முத்ரா ரூபத்வ சமர்த்த தமம் -சஹஜ கிருபா விஸிஷ்ட பகவானே மோக்ஷ ப்ரதன்–
அஞ்சலியின் பரம்பரயா மோக்ஷ சாதனத்வம் -அஞ்சலி விஷயத்தில் அதிவாதாதிகளின் அநவ் சித்ய நிரூபணம் –
ஸ்லோகார்த்த ஸங்க்ரஹம் -பகவத் அநந்யார்ஹத்வ அத்யவசாயத்தைக் காணும் பிரகாரம் -உப சம்ஹாரம் –

————

அவதாரிகை –

ஸ்ரீ பெரிய முதலியார் -தவாம்ருதஸ் யந்திநி பாத பங்கஜ -என்கிற ஸ்லோகத்தில் –
பகவச் சரணார விந்தத்திலே போக்யதாதிசயத்தை அத்ய வசித்தவனுக்கு அதனுடைய துத்ஸ்த்ய ஜதையால்
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம் -என்னுமதில்
சொல்லுகிற ஐஸ்வர்ய கைவல்ய ரூபங்களான ப்ராப்யாந்தரங்களிலே இளைப்பாறுகை கூடாது என்று அருளிச் செய்தார்

அநந்தரம்-தவத் அங்க்ரி முத்திஸ்ய –என்கிற ஸ்லோகத்தால்
அப்படிப்பட்ட அதிகாரிகளுக்குத் திருவடிகளை உத்தேசித்து உண்டான அல்ப அநு கூலங்களான வியாபாரத்தால்
சர்வ அபேக்ஷித சித்தி உண்டாம் படியான ஆஸ்ரயண ஸுவ்கர்யத்தாலும் திருவடிகளுடைய
துஸ்த்ய ஜதையை அருளிச் செய்கிறார் -தவத் அங்க்ரி முத்திஸ்ய-இத்யாதியால்

த்வத் அங்க்ரிம் உத்திஸ்ய -கதாபி– கேநசித் யதா ததா வாபி —-ஸக்ருத் க்ருத — –அஞ்சலி–
ததைவ – முஷ்ணதி அஸூபாநி — –அசேஷத — ஸூபாநி புஷ்ணாதி — -ந ஜாது ஹீயதே

———–

த்வத் அங்க்ரிம் உத்திஸ்ய –சப்தார்த்தம் —
த்வத் அங்க்ரிம் உத்திஸ்ய-என்கிறது சர்வ லோக சரண்யமாய் -சர்வ போக்யாதிசயிகளான தேவரீருடைய
சரணார விந்தங்களை உபாயமாகவும் பிராப்யமாகவும் அபி சந்தி பண்ணி என்கிற படி -இத்தால்
ப்ராஹ்மாணம் சிதி கண்ட்டம் ச யாஸ் ச அந்யா தேவதா ஸ்ம்ருதா
பிரதிபுத்தா ந சே வந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் –சாந்தி பர்வம் -357-36–
ஏதவ் த்வவ் விபுத ஸ்ரேஷ்ட்டவ் பிரசாத க்ரோதஜவ் ஸ்ம்ருதவ்
தத் ஆதர்சித பந்தாநவ் ஸ்ருஷ்ட்டி சம்ஹார காரரவ் –சாந்தி பர்வம் -357-19-இத்யாதிகளில்
பரதந்த்ர சேதனராகச் சொல்லுகையாலே சாஷாந் மோக்ஷத்திற்கு சமர்த்தர் அல்லாத
எருத்துக் கொடியுடையானும் பிரமனும் இந்திரனும் முதலான திருவில்லாதத் தேவரை கை விட்ட படியும்
அல்ப அஸ்திரத்வாதி தோஷ தூஷிதங்களான ப்ரயோஜனாந்தரங்களில் பற்று அற்ற படியும் சொல்லிற்று ஆயிற்று

———————

கதாபி-சப்தார்த்தம்-
பஹு த்வாரஸ்ய தர்மஸ்ய –என்கிறபடியே நாநா விதங்களான தர்மங்கள் எல்லாம் கால விசேஷங்களைப்
பற்றி இருக்கும் -எங்கனே என்னில் –
அந்யே க்ருதயுகே தர்மா -மனு -1-85-இத்யாதிகளில் படியே -யுக வேதம் -அயன பேதம் -மாச பேதம் -பக்ஷ பேதம் –
திதிவார நக்ஷத்ர பேதம் -ராத்ரி திவ சாதி பேதம் -யாம பேதம் -ராசி பேதம் -முஹுர்த்த பேதம் -என்று இப்படிப்பட்ட
கால பேதங்களில் வ்யவஸ்திதங்களாய் இறே கர்ம விசேஷங்கள் இருப்பது
இவ்வஞ்சலி பந்த ரூபமான ஸூகர்மத்திற்கு ருசி பிறந்த போதே காலம் -மற்றொரு கால விசேஷம்
பார்த்து இருக்க வேண்டாம் என்னும் இடத்தை கதாபி -என்று அருளிச் செய்கிறார் –

மதுராந்தகத்திலே பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டாரே எம்பெருமானார் பெரிய நம்பியிடம்

பிரதமத்தில் பாடம் செய்த சிஷ்யன் அறிவு மங்குமா போல் பிராட்டி இளைத்து இருந்தாள் -வால்மீகி ராமாயணம்

—————

கேநசித் -சப்தார்த்தம்
வர்ண தர்மம் -ஆஸ்ரம தர்மம் -குண தர்மம் -நிமித்த தர்மம் என்றால் போலே சொல்லும் தர்மங்கள் எல்லாம்
சில அதிகாரி விசேஷங்களை பற்றி இருக்கும் –
இவ்வஞ்சலி பந்தம் ஸத்ய வசனாதிகளைப் போலே சாமான்ய தர்மம் ஆகையால்
ப்ராஹ்மணன் முதலாக ஸ்வ பாகன் அளவாக சர்வருக்கும் சாஸ்த்ரயீமுமாய் ஸூ கரமுமாய் இருக்கும் என்னும் இடத்தை –
கேநசித் -என்று அருளிச் செய்கிறார்

—————-

யதா ததா வாபி -சப்தார்த்தம்—

அல்லாத தர்மங்களுக்கு எல்லாம் நாநா விதங்களான பிரகார விசேஷ நியமங்கள் உண்டாய் இருக்கும் –
இவ்வஞ்சலிக்குப் பர அவர தத்துவ ஹித புருஷார்த்தங்களில் தெளிவு உண்டாகவுமாம்-இல்லை யாகவுமாம் –
மஸ்திஷ்க சம்புடாதிகளில் வேண்டியபடி யாகவுமாம் -வசம் செய்யும் கை இல்லாத போது வாக்காலும் மனஸ்ஸாலும் ஆகவுமாம்
எல்லாப்படிக்கும் இது ச பலமாம் என்னும் இடத்தை-யதா ததா வாபி -என்று அருளிச் செய்கிறார்

ஐஸ்வர்யம் அக்ஷர கதிம் பரமபதம் வா கஸ்மை சித் -லஜ்யதே -அனைத்தும் அருளி அஞ்சலிக்கு ஈடாக செய்ய வில்லையே
கடைக்குப் போகும் பொழுது கை கூப்பி வைப்போமே என்று இருந்தவர்களுக்கும் அருளிய பின்பு
ஸத்ருசமாக செய்யப் பெற்றிலோமே வெட்க்கி குனிந்து -பட்டர்

—————-

ஸக்ருத் க்ருத –சப்தார்த்தம் —
ஸக்ருத் க்ருத சாஸ்த்ரார்த்த -என்கிற சாமான்யத்துக்கு அபவாதம் இல்லாமையால்
ஆவ்ருத்த் யபேஷை இல்லை -என்னும் இடத்தை -ஸக்ருத் க்ருத -என்று அருளிச் செய்கிறார்

————————

அஞ்சலி–சப்தார்த்தம்–
ஸர்வேஷாம் ஏவ தர்மாணாம்ந் உத்தமோ வைஷ்ணவோ விதி
ரக்ஷதே பகவான் விஷ்ணு பக்தான் ஆத்ம சரீரவத்–ஆனு பர்வம் -36-24- இத்யாதிகளில்
தர்மாந்தரங்களில் காட்டில் அதிக ப்ரபாவங்களாக ப்ரசித்தங்களான சம்மார்ஜன உப லேபனே மாலாகரண
தீப ஆரோபண ப்ரதக்ஷிண ப்ரணாம ஸ்துதி சங்கீர்த்தன ஜாபாதிகளில் காட்டில் அதிக தமமாக
அஞ்சலி பரமா முத்ரா -ஸ்ரீ பரத்வாஜ சம்ஹிதை -என்று சொல்லப்பட்ட இதன் ஸ்வரூபம்
கை கூப்பும் அளவே என்று தோற்றுகைக்காக அஞ்சலி என்கிறார்

உப லேபனே-பெருக்கி விளக்குவது -கடைத்தலை சீய்க்கப் பெறுதல்
அதிக தமமாக–பரமாம் -greatest

—————

ததைவ -சப்தார்த்தம்
காலாந்தரத்தில் பலிக்கும் கர்மங்கள் போல் அன்றிக்கே –
க்ஷிப்ரம் தேவ ப்ரஸாதி நீ –ஸ்ரீ பரத்வாஜ சம்ஹிதை-என்ற ப்ரபாவத்தை -ததைவ- என்று அருளிச் செய்கிறார்

————-

முஷ்ணதி அஸூபாநி –சப்தார்த்தம்–
அஸூபங்களை நசிப்பிக்கும் என்ற அர்த்தத்தை -முஷ்ணதி அஸூபாநி–என்று அருளிச் செய்ய வேண்டிற்று என் என்னில்
ஆஸ்ரிதனானவன் அநாதி வாசனைகள் மேலிட்டு சாம்சாரிக புண்ய பாப ரூபங்களான விலங்குகளை விடுவிக்க இசையாது ஒழியிலும்
தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சதிர் மூர்த்தி என்கிறபடி
பாலனை உபச் சந்தனம் பண்ணி அபத்தயத்தை பரிஹரிக்குமா போலே ஒரு விரகால் இவனுக்கு
அநு கூலங்களாகத் தோற்றும் பந்தகங்களைக் கழிக்கும் என்றபடி
இங்குச் சொல்லுகிற அசுபங்கள் ஆவன-பிராப்தி விரோதிகளான கர்மங்கள் ஆதல் –
உபாக்யாதிகளை விரோதிக்கும் கர்மங்களை யாதல் என்று யதா அதிகாரம் கண்டு கொள்வது

முஷணம் pick pocket -அறியாமலே திருடுதல் பிரார்த்திக்காமலேயே -நானும் வேண்டாம் நீயும் வேண்டாம் தன்னடையே போகும் –

ஸ்ரீ மூஷ்ணம் -திவ்ய தேசம் இத்தைப் பண்ணுவதாலேயே பெற்ற பெயர்
முஷித க்ருத கர்மம்– -சபரி செய்ததாக ரகுவீர கத்யம் -ஸாஷீ மாத்திரம் பெருமாள்

—————-

அசேஷத –சப்தார்த்தம்

க்ருச்சர சாந்த்ரயாணாதி கர்மங்கள் சில அஸூ பங்களைக் கழிக்க வற்றாய் இருக்கும் –
இது அப்படி அன்று -சர்வ அநிஷ்டங்களையும்

——————

ஸூபாநி புஷ்ணாதி —சப்தார்த்தம்-ந ஜாது ஹீயதே -சப்தார்த்தம்–
அஞ்சலி பிரபன்னன் ஆகிஞ்சன்யத்தைக் காட்டும் முத்திரை –சரண்யனுடைய அபய முத்திரையின் பிரயோஜனம் —
பர ந்யாஸ வ்யஞ்ஜக முத்ரா ரூபத்வ சமர்த்த தமம் -சஹஜ கிருபா விஸிஷ்ட பகவானே மோக்ஷ ப்ரதன்–
அஞ்சலியின் பரம்பரயா மோக்ஷ சாதனத்வம் -அஞ்சலி விஷயத்தில் அதிவாதாதிகளின் அநவ் சித்ய நிரூபணம் –
ஸ்லோகார்த்த ஸங்க்ரஹம் -பகவத் அநந்யார்ஹத்வ அத்யவசாயத்தைக் காணும் பிரகாரம் -உப சம்ஹாரம் –

———–

ந ஜாது ஹீயதே

சந்ததிகளுக்கும் சேர்த்தே பேறு -கேசவன் தமர் கீழ் மேல் ஏழு பிறப்பும்
விபீஷணன் உடன் வந்த நால்வருக்கும் பேறு-ஏழு தலைமுறைகளுக்கும் குடி குடி ஆக்கமும் அளிக்கும் –

————

12-அம் ஜலயதி அஞ்சலி –கர்த்ருத தியாக ஸூ சகம்

பிரபத்தி லக்ஷணம் -ஸூ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி

வாக்ய குரு பரம்பரை ஸ்லோக குரு பரம்பரை
கை முடங்கி -இரு கையையும் கூப்பினேனோ திரௌபதியைப் போலே
ஓட்டைக்கைக்கும் யானைக்கும் இடையே ஓர் ஆயிரம் தூரம் –
துவாரகை =ஹஸ்தினா புரம்
இடையே நடக்குது புடவை வியாபாரம்

——–

13-அஞ்சலி முத்திரை பிரபன்னனுக்கு-சேஷனுக்கு அடையாளம்
சேஷிக்கு முத்திரை – அபய ஹஸ்தம்–ஸத்யஸங்கல்பன் -சங்கல்ப மாத்திரத்தில் அஞ்சலி கண்டு உகந்து அனைத்தையும் அளிப்பான்–
அஞ்சலி விரதம் சத்வ குணத்தை வளர்க்கும் -பலன் கருதாமல் அஞ்சலி செய்வதே சாலச் சிறந்தது –

ப்ரபன்னன் வாங்கிய கைக்கு வைத்த கை அபய ஹஸ்தம்

————

14-பலன் காட்டி அருளுகிறார்
ப்ரயோஜனாந்தர பரர்களுக்கு அவ்வோ ப்ரயோஜனாந்தரங்களை அளிக்கும்
அநந்யார்ஹ அவா அற்று வீடு பெறும் அவஸ்தை அருளும்

———–

15-பிரதி ஹஸ்தம் இதுவே

ஹஸ்தீஸ துக்க விஷ திக்த பல அநு பந்தினி
அப்ரஹ்ம கிதம பராஹதா ஸம்ப்ரயோகே
துஷ் கர்ம சஞ்சய வஸாத் துரதிக்ரமே நா
பிரதி அஸ்ரம் அஞ்சலி அசவ் தவ நிக்ரஹ அஸ்த்ரே––ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத் —–30-

அஞ்சலி பரமாம் முத்திரை அன்றோ -நிக்ரஹ சங்கல்பம் மாற்றி மோக்ஷ பர்யந்தம் அளிக்கச் செய்யுமே –

அஸ்வத்தாமா நாராயண அஸ்திரம் ஏவ
அர்ஜுனன் இதற்கு பிரதி
துரோணர் பிள்ளைக்கு மட்டும் சொல்லிக் கொடுத்த அஸ்திரம்
கை கூப்புவதே -பிரதி
பீமன் செய்யாமல் இருக்க இருவர் கைகளைத் தூக்கி
hands up போல் இதுவே

————

16-நான்கு அடையாளங்கள்

கண புரம் நான் ஒருவருக்கு உரியேனோ
மற்ற தெய்வம் தொழாமல்
சிற்றின்ப ஆசை ஒழித்து
நிர் பரத்வ அத்யவசாயம்
இந்த நான்கு அடையாளங்கள் இருக்க வேண்டும் என்று அருளிச் செய்து நிகமிக்கிறார்

————

1.-ஸ்ரீ யபதியே பராத்பரன் -ஸர்வேச்வரேச்வரன் –
2. அஞ்சலிக்கு கால நியதி இல்லையே –
3. சர்வாதிகாரம் -சரம எளிய உபாயம்–
4. மற்ற தர்மங்களில் அதி உத்க்ருஷ்டம் அஞ்சலியே-
5. அஞ்சலியே அனைத்து பிரதிபந்தகங்களையும் பாப சமூகங்களைப் போக்கி அருளும் –
6. அஞ்சலியின் பயன்கள் –
7. அஞ்சலியா சரணாகதியா எது மோக்ஷ உபாயம் –
8. -சேதனனுக்கு அஞ்சலி முத்திரை -பரம சேதனனுக்கு அபய ஹஸ்தம் –
9.-அஞ்சலி தன்னுள்ளே பரந்யாசத்தையும் கொண்டு உள்ளதே –
10. நம் அபராதங்களால் அவனுக்கு உள்ள சீற்றம் ஒரே அஞ்சலியால் காணாமல் போகுமே –
11.ஒப்பற்ற சரணாகதியின் மஹிமை –
12. பிரபன்னன் தனது ஆத்மாவாகவே கொல்லப்படுகிறானே-
13. அஞ்சலி அனைத்தையும் அருளி ப்ரீதி காரித கைங்கர்யத்தையும் அளிக்கும் –
14. அஞ்சலி மஹிமையை அதிசங்கை பண்ணுவார்கள் வாதங்கள் சமாதானம் –
15. ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஸூக்திகளில் அஞ்சலி மஹாத்ம்யம் –
16. பிரபன்னனுக்கு முக்கியமான நான்கு விசேஷணங்கள்-அவற்றை அங்கீ கரிக்கும் அடையாளங்கள் -போன்றவை இதில் உள்ளன –

சார அசார விவேகிகள்-ஸ்ரீ யயதியின் திருவடிகளே உபாயமும் உபேயமும் என்று அறிவார்கள்
இவனே மோக்ஷபலப்ரதன் -சர்வ நியாமகன் -ப்ரஹ்மாதிகளுக்கும் ஈஸ்வரன் –
அஞ்சலிக்கு கால தேச அதிகார நியதி இல்லையே -வர்ணாஸ்ரம தர்ம நியதியும் இல்லையே –
ப்ரஹ்மாதி பிப்பிலி ஈறாக இதற்கு அதிகாரிகள் –

பரிபூர்ண அனுக்ரஹம் அளிக்கும் – தத்வ த்ரய ரஹஸ்ய த்ரய அர்த்த பஞ்சக ஞான சூன்யர்களும் இதுக்கு அதிகாரிகள்-
மனஸ் பூர்வகமாக இல்லாவிட்டாலும் -வாக் சஹகாரியாக இல்லாவிட்டாலும் -காயம் முழுவதும் வணங்காமல்
அஞ்சலி மாத்திரமே பலனை அளிக்க வல்லதே-
கை கூப்பாமலே மனசாலே நினைத்தாலும் வாய் வார்த்தையாகச் சொன்னாலும் பலன் கொடுக்கும் –
கடைத்தலை சீய்க்கப் பெறுதல் -தூ மலர் தூவித் தொழுதால் -திரு விளக்கு ஏற்றுதல் -ப்ரதக்ஷிணங்கள் செய்தல் –
சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தல் – -ஸ்தோத்திரங்கள் ஸ்துதிப்பதும் செய்தல் – -திருநாம சங்கீர்த்தனம் செய்தல் –
இவற்றை விட அஞ்சலி எளிமையானது மட்டும் இலை -அவனுக்கு மிகவும் உகப்பாக கால விளம்பம் இல்லாமல் பலனை அளிக்கும்

ருசி வாசனைகளையும் போக்கி அருளும்-அஞ்சலி விரதமே சதாச்சார்யர் அனுக்ரஹம் பெற்று உஜ்ஜஜீவிக்க உதவுமே –
பரிபூர்ண அனுபவம் அங்கும் பெற இது வழி காட்டும் -ப்ரபத்தியில் மூட்டும் -பிரபத்தி அங்கங்களை எளிதாக்கும் –
பகவத் பாகவத கைங்கர்யங்களிலும் மூட்டும் –
ஏழு தலைமுறைகளுக்கும் குடி குடி ஆக்கமும் அளிக்கும் –
பக்தியில் அசக்தனுக்கு இது -ப்ரபன்னனைக் காட்டும் முத்திரை -அஞ்சலியும் ப்ரபத்தியும் வேறே வேறே இல்லையே –

——-

13-அஞ்சலி முத்திரை பிரபன்னனுக்கு-சேஷனுக்கு அடையாளம்
சேஷிக்கு முத்திரை – அபய ஹஸ்தம்–ஸத்யஸங்கல்பன் -சங்கல்ப மாத்திரத்தில் அஞ்சலி கண்டு உகந்து அனைத்தையும் அளிப்பான்–
அஞ்சலி விரதம் சத்வ குணத்தை வளர்க்கும் -பலன் கருதாமல் அஞ்சலி செய்வதே சாலச் சிறந்தது –

ப்ரபன்னன் வாங்கிய கைக்கு வைத்த கை அபய ஹஸ்தம்

————

14-பலன் காட்டி அருளுகிறார்
ப்ரயோஜனாந்தர பரர்களுக்கு அவ்வோ ப்ரயோஜனாந்தரங்களை அளிக்கும்
அநந்யார்ஹ அவா அற்று வீடு பெறும் அவஸ்தை அருளும்

1-அந்ய சேஷத்வம் கழிந்து
2-தேவதாந்த்ர போஜனம் இல்லாமல்
3-பலனைக் கருதாமல்
4-பர சமர்ப்பணம் தானே அஞ்சலி

பரம ஏகாந்தி -உபாயாந்தர தோஷம் இல்லாமல் -தேவதாந்த்ர பஜநம் இல்லாமல் –
பிரயோஜனாந்தர தோஷம் இல்லாமல் –பர சமர்ப்பணம் பண்ணி
நிர்ப்பர நிர்ப்பயராய் -நம் பூர்வர்களைப் போலவே இருப்போம்
பூசும் சாந்து என் நெஞ்சமே –தேசமான அணிகலனும் என் கை கூப்புச் செய்கையே –ஸ்ரீ நம்மாழ்வார் –

கண்ணன் கழல் தொழக் கூப்பிய கையின் பெருமை தனை
எண்ணம் கடக்க யமுனைத் துறைவர் இயம்புதலால்
திண்ணம் இது என்று தேறித் தெளிந்த பின் சின் மதியோர்
பண்ணும் பணிதிகள் பாற்றிப் பலம் தொழில் பற்றினமே

ஸ்ரீ மத் வேங்கடாந்த ஸ்ரீதரா பாத பத்ம சக்த சிந்தனம்
அஞ்சலி வைபவம் அகதயத் அநு ஸ்ம்ருதம் யமுனாச்சாரியை –

——————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரும் தேவி தாயார் சமேத ஸ்ரீ தேவாதி ராஜ பர ப்ரஹ்மம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்–ஸ்லோகம் –57-58-59-60-61-62-63-64-65—-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகளின் ஸ்ரீ ரத்ன பிரபா வியாக்யானம்

November 27, 2019

ந தேஹம் ந ப்ராணான்ந ஸ ஸூ க மேசேஷாபி லஷிதம்
ந சாத்மானம் நாந்யத்  கிமபி தவ சேஷத்வ விபவாத்
பஹிர்ப்பூதம் நாத ஷணம் அபி சஹே யாது ஸததா
விநாஸம் தத் ஸத்யம் மது மதன விஜ்ஞாப நமிதம்—57-

நாத
தவ சேஷத்வ விபவாத் பஹிர்ப்பூதம்–உனது சேஷப்பட்டு இருக்கும் செல்வத்துக்குப் புறம்பான -உனக்கு சேஷப்படாத
தேஹம் க்ஷணம் அபி ந –உடம்பை ஒரு க்ஷணமும் பொறுக்க மாட்டேன்
ந ப்ராணான் சஹே –அப்படிப்பட்ட பிராணனையும் பொறுக்க மாட்டேன்
ந ஸ ஸூகம் அசேஷ அபி லஷிதம் சஹே -எல்லாரும் விரும்பக் கூடிய ஸூகத்தையும் ஸஹிக்க மாட்டேன்
ந ச ஆத்மானம் சஹே –ஆத்மாவையும் ஸஹிக்க மாட்டேன்
அந்யத்  கிமபி ந சஹே -சேஷத்வ சூன்யமான வேறே ஒன்றையும் ஸஹிக்க மாட்டேன்
யாது ஸததா விநாஸம் -சேஷத்வ சூன்யமான கீழ்ச் சொன்ன தேஹாதிகள் எல்லாம் உரு மாய்ந்து போகட்டும்
தத் ஸத்யம் மது மதன விஜ்ஞாபநம் இதம் —-இங்கனம் விண்ணப்பம் செய்த இது சத்யம்
இது பொய்யாகச் சொன்னேன் ஆகில் மது பட்டது படுவேன் அத்தனை

கீழே இஷ்ட பிராப்தி -இதில் அநிஷ்ட நிவ்ருத்தி –
ஏறாளும் இறையோனும் -4-8-உடம்பினால் குறையிலமே-உயிரினால் குறையிலமே -மணிமாமை குறைவிலமே —
பத்தும் பத்தாக பரக்க அருளிச் செய்ததை ஒரு ஸ்லோகத்திலே அடக்கி அருளிச் செய்கிறார் –
ந தேவ லோகா க்ரமணம் -இது இளைய பெருமாள் உடைய -ஏறாளும் இறையோன்
ந ஹி மே ஜீவிதே நாரத்த -இது பிராட்டியினுடைய ஏறாளும் இறையோன்
பகவத் கைங்கர்யத்துக்கு உறுப்பு அல்லாதது முமுஷுக்களுக்கு த்யாஜ்யம் என்னும் சாஸ்த்ரார்த்தம் –
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னை கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எரிந்து
எண் அழலை தீர்வேனே போலே –
அழிவில்லா ஆத்மவஸ்துவையும் உருமாய்ந்து போகட்டும் என்றது சேஷத்வ ஊற்றத்தைப் பற்ற –
விஞ்ஞாபனம் — விஞ்ஞாபிதம் –பாட பேதங்கள் –

————-

துரந்தஸ்யா நாதே ரபரிஹரணீ யஸ்ய மஹதோ
நிஹீந ஆசாரோ அஹம் ந்ருபஸூர ஸூபஸ்யாஸ் பதமபி !
தயா ஸிந்தோ ! பந்தோ ! நிரவதிக வாத்ஸல்ய ஜலதே !
தவ ஸ்மாரம் ஸ்மாரம் குணகணமி தீச்சாமி கத பீ—58-

தயா ஸிந்தோ ! –கருணைக் கடலே
பந்தோ !–சகலவித பந்துவானவனே
நிரவதிக வாத்ஸல்ய ஜலதே !–எல்லையற்ற வாத்சல்ய சமுத்ரமே
நிஹீந ஆசாரோ அஹம்–இழிவான நடத்தை உள்ள நான்
துரந்தஸ்ய –முடிவு இல்லாததும்
அநாதே-அடி அற்றதும்
அபரிஹரணீ யஸ்ய –பரிஹரிக்க முடியாததும்
மஹதோ–பெரியதுமான
அஸூபஸ்ய–பாபத்திற்கு
ஆஸ்பதமபி !–இருப்பிடமாய் இருந்தாலும்
தவ குணகணம் –உன்னுடைய அளவற்ற குணங்களை
ஸ்மாரம ஸமாரம் –பலகாலும் நினைத்து
கதபீ—அச்சம் கெட்டவனாய்
இதி இச்சாமி –இங்கனே இச்சிக்கின்றேன்
உனது சேஷத்வத்தை ஆசைப் படுகிறேன் என்கை –
பாபங்கள் வலிமை அச்சப்பட வைத்தாலும் திருவருள் முதலிய திருக் கல்யாண குணங்களை அனுசந்திக்க
பயங்கள் விலகி கைங்கர்யப் பிரார்த்தனை பண்ணுகிறார்
ந்ருபசு –ம்ருக பிராயன் -வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானங்களை மீறி ஆகார நித்தமும் இன்றி
மனம் போனபடி திரிவதால் –

——————–

அநிச்சன்நப் யேவம் யதி புநரி தீச்சந்நிவ ரஜஸ்
தமஸ் சந்தஸ் சத்மஸ்துதி வசன பங்கீ மரசயம்
ததா அபித்தம் ரூபம் வசநம வலம்ப்யா அபி க்ருபயா
த்வமேவை வம்பூதம் தரணி தர மே சிஷ்ய மந–59-

ஹே தரணி தர–சர்வ லோக நிர்வாஹனான எம்பெருமானே
ரஜஸ் தமஸ் சந்தஸ்-அஹம் -ரஜோ குணத்தாலும் தமோ குணத்தாலும் மூடப்பட்டுள்ள அடியேன்
அநிச்சந் அபி ஏவம் -உண்மையாக இப்படி இச்சியாது இருந்த போதிலும்
இச்சந்நிவ–இச்சிப்பவன் போலே அபிநயித்து
சத்மஸ்துதி வசன பங்கீம் -கபடமாக ஸ்தோத்ரம் சொல்லுகிற இத்தை
யதி புநஸ் அரசயம்ந் ததா அபி -செய்தேனேயாகிலும்
இத்தம் ரூபம் வசநம் –இப்படிப்பட்ட கபடமான சொல்லை
அவலம்ப்ய அபி –ஆதாரமாகக் கொண்டாவது
இந்த பொறி தடவின வார்த்தையைவாவது பற்றாசாகக் கொண்டு
க்ருபயா–திருவருளாலே நீ தானே
ஏவம் பூதம் மே மநஸ் சிஷ்ய –இப்படிப்பட்ட எனது மனஸ்ஸைத் திருத்த வேணும்
திருத்திப் பணி கொண்டு அருள வேணும்

நாஸ்திகர் அல்லாமையாலே இச்சை இல்லை -என்ன மாட்டார் –
பேற்றுக்கு அனுரூபமான இச்சை பெறாமையாலே உண்டு -என்ன மாட்டார்
மாதவன் என்றதே கொண்டு -திருவாய் -2-7-3-என்றும்
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்னத் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -திருவாய் -10-8-1- என்றும்
உக்தி மாத்ரமே ஜீவிக்கையாம் விஷயம் இறே –

தீ மனம் கெடுத்தாய் -2-7-8-
மருவித் தொழும் மனமே தந்தாய் -2-7-7-என்கிறபடியே-பாஹ்யமான மனஸ் ஸைத் தவிர்த்து
அடிமைக்கு அனுகூலமான மனஸ் ஸைத் தந்து அருள வேணும்-மனனக மலமறக் கழுவி -1-3-8-என்கிறபடியே
மநோ நைர்மல்யம் யோகத்தாலே பிறக்கக் கடவது உபாஸ்கனுக்கு –
அந்த யோக ஸ்தானத்திலே-பகவத் அனுக்ரஹமாய் இறே இவ்வதிகாரிக்கு இருப்பது –
கையார் சக்கரத்து என் கருமாணிக்கமே என்று என்று பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே
யாடி மெய்யே பெற்று ஒழிந்தேன் –
ஏதேனும் வியாஜ்யத்தை கொண்டு அஸ்மாதாதிகள் அஹ்ருதயமாக சொல்வதையும் கொண்டு
கார்யம் செய்ய வல்லவன் அன்றோ –

————-

பிதா த்வம் மாதா த்வம் தயித தநயஸ் த்வம் ப்ரிய ஸூஹ்ருத்
த்வமேவ த்வம் மித்ரம் குருரஸி கதிஸ் சாஸி ஜகதாம்
த்வதீ யஸ் த்வத் ப்ருத்யஸ் தவ பரிஜநஸ் த்வத் கதி ரஹம்
பிரபன்னஸ் சைவம் ஸத்யஹம்பி தவை வாஸ்மி ஹி பர–60-

ஜகதாம் பிதா த்வம் மாதா த்வம் –உலகங்கட்க்கு எல்லாம் தகப்பனும் நீயே பெற்ற தாயும் நீயே
தயித தநயஸ் த்வம் –அன்பனான மகனும் நீயே
ப்ரிய ஸூஹ்ருத் த்வமேவ –உயிர்த் தோழனும் நீயே
த்வம் மித்ரம் –சர்வ ரஹஸ்யங்களும் சொல்லிக் கொள்ளுதற்குப் பாங்கான மித்ரனும் நீயே
குருரஸி –ஆச்சார்யனும் நீயே
கதிஸ்சாஸி –உபாய உபேயமும் நீயே
அஹம் த்வதீயஸ் –அடியேனோ என்றால் உன்னுடையவன்
த்வத் ப்ருத்யஸ் -உன்னாலே பரிகரிக்கத் தகுந்தவன்
தவ பரிஜநஸ் –உனக்குத் தொண்டன்
த்வத் கதிர் –உன்னையே கதியாகக் கொண்டவன்
பிரபன்னஸ் ச -ப்ரபன்னனுமாயும் இருக்கிறேன்
ஏவம் ஸதி –ஆன பின்பு
அஹம் அபி தவ ஏவ –அடியேனும் உனக்கே
பர அஸ்மி ஹி–ரஷ்யனாக இரா நின்றேன் காண் –

ஒழிக்க ஒழியாத உறவு முறை உள்ளதே
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வனும் நல் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவரே-என்றும்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் நீயாய் நீ நின்றவாறு -என்றும் -போலே –

——————

ஜநித்வா அஹம் வம்ஸே மஹதி ஜகதி க்யாதய ஸ ஸாம்
ஸூசீ நாம் யுக்தா நாம் குண புருஷ தத்வ ஸ்திதி விதாம்
நிஸர்க்காத் ஏவ த்வச் சரண கமல ஏகாந்த மநஸாம்
அதோ அத பாபாத்மா ஸரணத! நிமஜ்ஜாமி தமஸி–61-

ஸரணத! –வழி காட்டும் பெருமானே –அவர் அவர்களுக்கு தகுந்த உபாயத்தைக் கொடுத்து அருளுபவனே
அஹம் ஜகதி க்யாதய ஸஸாம்–அடியேன் உலகம் எங்கும் பரவின புகழை யுடையவர்களும்
ஸூசீநாம்–பரிசுத்தர்களும்
யுக்தா நாம்–உன்னை விட்டுப் பிரியாதவர்களும்
ஆத்ம சாஷாத்காரமான யோகத்தில் ஊன்றினவர்கள் என்றும்
உன்னுடன் நித்ய சம்ச்லேஷத்தை விரும்பி இருப்பவர்கள் என்றும்
ஒரு காலும் உன்னை விட்டுப் பிரியாதவர்கள் என்றும் மூன்றுமே உண்டே
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய் -9-3-7-என்று இருக்கை
இளைய பெருமாளைப் போலே தேவரோடே யல்லது
செல்லாதவர்கள் -என்னுதல்
குண புருஷ தத்வ ஸ்திதி விதாம்–அசேதன தத்வம் என்ன சேதன தத்வம் என்ன இவற்றின்
ஸ்வரூப ஸ்வ பாவங்களை அறிந்தவர்களும்
குண த்ரயாத்மகமான பிரக்ருதியை குணம் -புருஷன் -ஆத்மா –
தத்வ ஸ்திதி உண்மை நிலையை உணர்ந்தவர்கள் -தத்துவங்களின் ஸ்தியை உணர்ந்தவர்கள் என்றுமாம்
நிஸர்க்காத் ஏவ –த்வச் சரண கமல ஏகாந்த மநஸாம்–பரிமளத்துடனே அங்குரிக்கும் திருத்துழாய் போலவும்
வத்ஸ்ம் ஆனது ஜனித்த போதே தாய் முலையிலே வாய் வைக்குமா போலவும்
இயற்கையாகவே உன்னுடைய திருவடித் தாமரைகளில் ஊன்றின மனமுடையவர்களான மஹான்களினுடைய
ஜநித்வா வம்ஸே மஹதி –சிறந்த குலத்திலே பிறந்து வைத்து
அதோ அத பாபாத்மா தமஸி–பாபிஷ்டனாய்க் கொண்டு இருள்மயமான மூதாவியிலே
அடி காண ஒண்ணாத கீழ் எல்லையில்
நிமஜ்ஜாமி–அழுந்திக் கொண்டே கிடக்கிறேன்
பன்மாமாயப் பல் பிறவியில் படிகின்ற யான் -திருவாய் -3-2-2-என்கிறபடியே
இன்னம் தரை கண்டிலன் -என்கிறார் –
சந்தாநிகர் தேவர் பக்கல் அவகா ஹித்த அளவும் நான் பிரக்ருதியில் உள் புக்கேன் -என்கை –

ஜனித்த வம்சம் இது
தேவர் சரண்யர்
நான் படுகிற பாடு இது இறே
அவமஞ்ஜனைப் போலே -வம்ஸ ப்ரபாவமும் ஜீவியாதே
தேவருடைய நீர்மையும் ஜீவியாதே இருக்கிற படி இறே -என்னுடைய பாப ப்ராசுர்யம் என்கிறார் –

——————–

அமர்யாத ஷூத்ரஸ் சலமதிர ஸூயாப்ரஸ்வபூ
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மர ப்ரவஸோ வஞ்சன பர
ந்ரு ஸ்ம்ஸ பாபிஷ்ட கத மஹமிதோ துக்க ஜலதே
அபாராதுத் தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ—62-

1-அமர்யாத –வரம்பு மீறினவனும்
2-ஷூத்ரஸ் –அற்ப விஷயங்களில் சாபல்யம் உள்ளவனும்
3-சலமதிர் -நின்றவா நில்லா நெஞ்சை உடையவனாயும்
4-அஸூயா ப்ரஸ்வபூ–பொறாமைக்குப் பிறப்பிடமானவனும்
5-க்ருதக்நோ -நன்றி கெட்டவனும்
6-துர்மாநீ –துர் அஹங்காரம் உள்ளவனும்
7-ஸ்மர ப்ரவஸோ –காமத்துக்குப் பரவசப் பட்டவனும்
8-வஞ்சன பர–பிறரை வஞ்சிப்பவனும்
சூதனாய்க் கள்வனாகி -திருமாலை -16
சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து -பெரிய திருமொழி -1-6-3-என்று சொல்லுகிறபடியே-
9-ந்ரு ஸ்ம்ஸ –கொடும் தொழில் புரிபவனும்
10-பாபிஷ்ட –மஹா பாபியுமான
பாவமே செய்து பாவியானேன் -பெரிய திரு மொழி -1-9-9-
ஒப்பிலாத் தீ வினையேன் -திருவாய் -7-9-4-
நானே நாநாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2-
அஹம் அஸ்மா அபராதாநாம் ஆலய –
ராவணோ நாம துர்வ்ருத்த
நீசனேன் நிறை வொன்றும் இலேன் –திருவாய் -3-3-4-என்று
அறிவுடையார் தம்தாமை-பேசும்படியான பாபத்திலே நிஷ்டை யுடையவன் –
அஹம் இத அபாராத துக்க ஜலதே-அடியேன் இந்த கங்கு கரை அற்ற துன்பக் கடலில் நின்றும்
உத்தீர்ணஸ் –கரை சேர்ந்தவனாய்
கதம் பரிசரேயம் தவ சரணயோ—உனது திருவடிகளில் எங்கனே கைங்கர்யம் பண்ணப் பெறுவேன் –

முத்தனார் -திருச்சந்த -115-என்கிறபடியே
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான தேவரே கரை ஏற்ற வேண்டும் -என்கை –
கீழே பாபாத்மா என்று சுருங்கச் சொன்னதை விரித்து அருளுகிறார் -நம்முடைய அனுசந்தானத்துக்காக
நான் அனுசந்தித்து உஜ்ஜீவிக்க ஒரு பத்து விசேஷணங்களை விஸ்தாரமாக அருளிச் செய்கிறார்
துக்க நிவ்ருத்தியும் தேவருக்கே பரம் –
அடிமை கொள்ளுகையும் தேவருக்கே பரம் -என்கை —

—————

ரகுவர யத பூ ஸ்தவம் தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய
ப்ரணத இதி தயாளூர் யச்ச சைத் யஸ்ய கிருஷ்ண
பிரதிப வமபராத்துர் முக்த சாயுஜ்யதோ அபூ
வத கிமபத மாகஸ் தஸ்ய தி அஸ்தி ஷமாயா-63-

ஹே ரகுவர –ராகு வம்சத்தில் ஸ்ரீ ராமனாக திரு அவதரித்தவனே
த்வம் -நீ
தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய-அப்படிப்பட்ட மஹா அபராதியான காகாஸூரனது விஷயத்திலே
ப்ரணத இதி-இக் காகம் நம்மை வணங்கிற்று என்பதையே கொண்டு
தயாளூர் யத் அபூ –தயை பண்ணினாய் இறே
ஷிபாமி -என்றும் ந ஷமாமி -என்றும் பண்ணி வைத்த பிரதிஜ்ஞை பழியாதே
தேவர் க்ருபா கார்யமே பலித்து விட்டது – பிராட்டி சந்நிதி யாகையால் இறே-

முக்த கிருஷ்ண-குற்றம் அறியாத கண்ண பிரானே
கிருஷ்ணனாகி என்றும் கிருஷ்ண என்று சம்போதானமாகவும் –
பிரதிபவம் அபராத்துர்–பிறவி தோறும் அபராதம் பண்ணின
சைதயஸ்ய–சிசுபாலனுக்கு – யது வம்ஸ பூதரில் காட்டில்
சேதி குலோத்பவன் என்று தன்னை உத்க்ருஷ்டனாக அபிமானித்து இருக்குமவன் –
சாயுஜ்யதோ அபூச சயத-சாயுஜ்யம் அளித்தவனாயும் ஆனாய் இறே
சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட்பால் அடைந்த தன்மை –திருவாய் -7-5-3-
தஸ்ய தே ஷமாயா-அப்படி எல்லாம் செய்தவனான உன்னுடைய பொறுமைக்கு
அபதம ஆகஸ் கிம் அஸ்தி -இலக்காகாத குற்றம் என்ன இருக்கிறது
வத –அருளிச் செய்ய வேணும்
உனக்குப் பொறுக்க முடியாதது உண்டோ
சர்வஜ்ஞரான தேவருக்கும் மறு மாற்றம் இல்லை
க்ஷமித்து அருளி விஷயீ கரிக்கும் இத்தனை -என்கை –

—————

நநு பிரபன்னஸ் ஸக்ருதேவ நாத
தவாஹ மஸ்மீதி ச யாசமாந
தவா நுகம்ப்ய ஸ்மரத பிரதிஜ்ஞாம்
மதே கவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே–64-

நநு நாத-ஸ்வாமிந்
அஹம் ஸக்ருதேவ பிரபன்னஸ் இதி –நான் ஒரு கால் பிரபத்தி பண்ணினவன் என்றும்
அஹம் தவ அஸ்மி இதி ச -நான் உனக்கே உரிமைப்பட்டு இருக்கிறேன் என்றும் சொல்லிக் கொண்டு
யாசமாநஸ் அஹம் -கைங்கர்ய புருஷார்த்தத்தைப் பிரார்திக்கிற அடியேன்
தவ ஸ்மரத பிரதிஜ்ஞாம்–அன்று நீ கடற்கரையில் ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்குப் பண்ணின ப்ரதிஜ்ஜையைத்
திரு உள்ளத்திலே கொண்டு இருக்கிற உனக்கு
அநு கம்ப்ய –அருள் புரிய அறியேன் –
மதேக வர்ஜம் கிம் இதம் வ்ரதம் தே–உன்னுடைய இந்த விரதம் என் ஒருவனைத் தவிர்த்ததோ
சர்வ சாதாரணமான ப்ரதிஜ்ஜை பொய்யோ
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே –ஸக்ருத் பிரபதனம் பண்ணினேன்
கதா அஹம் ஐகாந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி -என்று
தவாஸ்மீதி யாசநனும் பண்ணினேன் -ப்ராப்ய அபேஷையும் பண்ணினேன் –
அபயம் ததாமி ப்ரதிஜ்ஜை பலிக்க வேண்டியது அன்றோ –

சக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே -அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம
ஸ்க்ருதேவ -என்றது –
சஹசைவ -உடனேயே -என்று ஆழ்வான் நிர்வஹிக்கும் –
அநாதி காலம் சம்சரித்துப் போந்த இவன் ஒரு ஜன்மம் எல்லாம் ப்ரபத்தியை
அனுசந்தித்தால் தான் -ஸ்க்ருத் -என்கைக்குப் போருமோ -என்பர் எம்பார் –
பகவத் ப்ரபாவத்தைப் பார்த்தால் ஒரு காலுக்கு மேல் மிகை –
ப்ராப்ய ருசி ப்ராப்தி அளவும் அனுவர்த்திக்கும் -என்பர் பட்டர் –

—————-

அக்ருத்ரிம த்வச் சரணார விந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதி மாத்மவந்தம்
பிதாமஹம் நாத முநிம் விலோக்ய
ப்ரஸீத மத் வ்ருத்தம சிந்தயித்வா–65-

மத் வ்ருத்தம் –என்னுடைய நடவடிக்கையை
அசிந்தயித்வா–கணிசியாமல்
அக்ருத்ரிம த்வச் சரணார விந்த ப்ரேம ப்ரகர்ஷ அவதிதம் -உனது திருவடித் தாமரையில் உண்மையாக
உண்டான பரம பக்திக்கு எல்லை நிலமாய் இருப்பவரும்
ஆத்மவந்தம்–ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி உணர்ந்தவரும் -ஜிதேந்த்ரியர் -சத்தை பெற்றவர்
பிதாமஹம் நாத முநிம் -எனக்குப் பாட்டனாருமாகிய ஸ்ரீ மந் நாத முனிகளை–
ஸ்ரீ ஈஸ்வர பட்டரது திருக்குமாரர் நம் ஆளவந்தார்
விலோக்ய–கடாக்ஷித்து
ப்ரஸீத –அடியேனை அனுக்ரஹித்து அருளாய்

ஸ்ரீமந் நாத முனிகளுடைய தேக சம்பந்தமும் ஆத்ம சம்பந்தமும்–ஜென்மத்தாலும் -வித்யையாலும் -சம்பந்தம்
முக்கிய ஹேது -அவனாலும் விட ஒண்ணாதது அன்றோ
மத் வ்ருத்தம சிந்தயித்வா-நிக்ரஹத்துக்கு என்னுடைய பாபங்கள் ஹேதுவானாலும்
அனுக்ரஹத்துக்கு இந்த மஹத் சம்பந்தம் உண்டே
மத் வ்ருத்தம் -என்று சத் கர்மத்தை நினைக்கிறது -என்றுமாம் –
வ்ருத்தவான் என்றால் சத் கர்ம யுக்தனை இறே சொல்லுகிறது –
ஸ்வ கதமான வற்றை அநாதரித்து
பெரிய முதலியார் சம்பந்தம் எனக்குத் தஞ்சமாக வேணும் என்று பிரார்த்தித்து
ஸ்தோத்ரத்தைத் தலைக் கட்டுகிறார் –
அப்படியே அனுக்ரஹித்தோம் என்று சோதிவாய் திறந்து அருளிச் செய்ய
மநோ ரதம் தலைக் கட்டப் பெற்று ஸ்தோத்ரத்தையும் தலைக் கட்டி அருளுகிறார்

யத் பதாம் போருஹ த்யாந வித்வஸ்த அசேஷ கல்மஷ
வஸ்து தாம் உபயாதோ அஹம் யாமுநேயம் நமாமி தம்

எவர் உடைய திருவடித் தாமரையை தியானிப்பதால் எல்லா பாபங்களும் அழியப் பெற்று
அடியேன் ஒரு பொருள் ஆனேனோ அத்தகைய ஸ்ரீ யாமுனாசார்யரை வணங்குகிறேன் –

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்–ஸ்லோகம் –47-48-49-50-51-52-53-54-55-56—-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகளின் ஸ்ரீ ரத்ன பிரபா வியாக்யானம்

November 26, 2019

திக ஸூ சிமவி நீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரம புருஷ யோ அஹம் யோகி வர்யாக் ரகண்யை
விதி ஸிவ ஸ்நகாத் யைர் த்யாது மத்யந்த தூரம்
தவ பரி ஜன பாவம் காம்யே காம வ்ருத்த —47–

பரம புருஷ-புருஷோத்தமனே
காம வ்ருத்த —மனம் போகும் படி நடக்கிற
ய அஹம்–யாவன் ஒருவன்
யோகி வர்யாக் ரகண்யை–யோகி ஸ்ரேஷ்டர்களுள் சிரந்தவர்களான
விதி ஸிவ ஸ்நகாத் யைர்-பிரமன் சிவன் சனகர் முதலான வர்களாலும்
த்யாதும் அத்யந்த தூரம்–நெஞ்சால் நினைப்பதற்கும் மிகவும் எட்டாதான
தவ பரி ஜன பாவம் காம்யே –உனது பரிசாரகன் ஆவதற்கு விரும்புகின்றேனோ
தம -அப்படிப்பட்ட
அ ஸூசிம் அ விநீதம் நிர்த்தயம் அலஜ்ஜம்-மாம் திக் -அபரிசுத்தனும் -வணக்கம் அற்றவனும்
இரக்கம் அற்றவனும் வெட்கம் அற்றவனுமான என்னை நிந்திக்க வேணும்

கீழே பவந்தம் -என்று அனுசந்தித்து -அஹம் -தன்னைப் பார்த்த வாறே
அசுசிம் -அவிநீதம் –நிர்த்தயம் -அலஜ்ஜம் -நான்கு விசேஷணங்கள்
நிர்த்தயம்-அம்ருதத்தை விஷத்தாலே தூஷித்தால் போலே விலஷண போக்யமான பகவத் தத்தவத்தை
கண்ணற்று தூஷிக்கப் பார்த்த நிர்த்தயனை
நிர்ப்பயம் -பாட பேதம் தேசிகன் காட்டுகிறார் –
நிரதிசய போக்யரான தேவர் உடைய கைங்கர்ய அம்ருதத்தை சத்தா பிரயுக்தமான ருசியையும்
வைலஷண்யத்தையும் உடையநித்ய ஸூரிகள் ஆதரிக்கும் அத்தை அன்றோ நான் ஆதரித்தது –
சங்கத்து அளவிலே நின்றேனோ-பெற்று அல்லது தரியாத தசையைப் பற்றி நின்றேன்
கதா நு சாஷாத் கரவாணி -என்றும் கதா ப்ரஹர்ஷயிஷ்யாமி -என்றும் -கூப்பிட்டேன்
ராஜ அன்னம் விஷ சம்ஸ்ப்ருஷ்டம் ஆவதே -என்று-வளவேழுலகில்-1-5- ஆழ்வாரைப் போலே
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் -யான் யார்
திருமாற்கு யாமார் வணக்கமார் ஏ பாவம் நல் நெஞ்சே நாமா மிகவுடையோம் நாழ் -பெரிய திருவந்தாதி -10-)
ஹா ஹா என்ன சகாசமான கார்யம் செய்ய முயன்றோம் என்று தம்மை நிந்திக்கிறார் –

——————-

அபராத சஹஸ்ர பாஜநம்-
பதிதம் பீம்ப வார்ண வோதரே
அகதிம் சரணா கதம் ஹரே
க்ருபயா கேவல மாத்மஸாத் குரு–48–

ஹரே-ப்ரணதார்த்தி ஹரனான பெருமானே
அபராத சஹஸ்ர பாஜநம்-பலவகைப்பட்ட அபராதங்களுக்கு கொள்கலமாகவும்
பதிதம் பீம்ப வார்ண வோதரே–பீம பாவ அர்ணவ உதரே பதிதம்–பயங்கரமான சம்சாரக் கடலினுள்ளே விழுந்தவனாயும்
உதரே-நின் பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான் -3-2-2- என்கிறபடியே
எடுக்கப் பார்த்தாலும் எட்டாத படியாய் இருக்கை –
அகதிம் –வேறே கதி அற்றவனாயும்
சரணா கதம் -சரணாகத்தான் என்று பேர் இட்டுக் கொண்டவனாயும் இருக்கிற அடியேனை
க்ருபயா கேவல மாத்மஸாத் குரு–உனது திருவருள் ஒன்றையே கொண்டு திருவுள்ளம் பற்றி அருள வேணும் –

அகலப்பார்த்தார் கீழ் -கைங்கர்ய அபிநிவேசம் மிக்க இருக்க கை வாங்க முடியாதே –
இரும்பையும் பொன்னாக்க வல்ல சர்வசக்தன் அன்றோ –
கிருபை ஒன்றையே கொண்டு நித்ய கைங்கர்யத்துக்கு
ஆளாக்கிக் கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்
இங்கு விசேஷணங்களை மாத்திரமே சொல்லி –
மாம் –நிந்தைக்கு யோக்யமாயும் வெறுப்புக்கு இடமாயும் உள்ளத்தை –
தம்மைச் சொல்லிக் கொள்ள திரு உள்ளம் இல்லாமல் –
வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -நாச் திருமொழி -5-4-என்னக் கடவது இறே
பகவத் சந்நிக்குள் புகும் பொழுது அனுசந்திக்க வேண்டிய ஸ்லோகம் – இதுவும் –

————-

அவிவேகக நாந்த திங்முகே
பஹூதா ஸ்ந்தத துக்க வர்ஷிணி
பகவன் பவது ர்த்தி நே பத
ஸ்கலிதம் மாமவ லோகயாச்யுத—49–

பகவன் அச்யுத—அடியாரைக் கை விடாத எம்பெருமானே
அவிவேகக நாந்த திங்முகே–அவிவிவேகம் ஆகிற மேகங்களினால் இருந்து கிடக்கிற திசைகளை உடையதும்
பஹூதா ஸ்ந்தத துக்க வர்ஷிணி–பலவிதமாக இடைவிடாமல் பெருகுகின்ற துக்கங்களை வர்ஷித்துக் கொண்டு இருப்பதுமான
பவதுர்த்திநே –சம்சாரமாகிற துர் ததிநத்திலே–மழைக் கால விருளிலே—மப்பு மூடின தினத்துக்கு துர்த்தினம்
நண்ணாதார் முறுவலிப்ப நல்ல உற்றார் கரைந்து ஏங்க எண்ணாராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை –
பத ஸ்கலிதம் மாமவ லோகயா–கொடு வினைத் தூற்றுள் நின்று பாவியேன் பல காலம்
வழி திகைத்து அலமருகின்றேன்-3-3-9-என்கிறபடியே
நல் வழியில் நின்றும் தப்பி இருக்கிற அடியேனை கடாக்ஷித்து அருள வேணும்
கிருபயா கேவல மாத்ம ஸாத் குரு – என்று-உனது கடாக்ஷம் அடியேனுக்கு உஜ்ஜீவன ஹேது

—————–

ந ம்ருஷா பரமார்த்த மேவ மே
ஸ்ருணு விஜ்ஞாப நமேக மக்ரத
யதி மே ந தயிஷ்யஸே ததோ
தய நீயஸ் தவ நாத துர்லப—50-

நாத-எம்பெருமானே
ந ம்ருஷா –பொய் அன்றிக்கே
பரமார்த்த மேவ –உண்மையாகவே இருக்கிற
மே ஏக விஜ்ஞாபநம் –அடியேனது ஒரு விண்ணப்பத்தை
ஸ்ருணும் அக்ரத–முந்துற முன்னம் கேட்டு அருள்
இமையோர் தலைவா மெய் நின்று கேட்டு அருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பம் -ஆழ்வார் போலே இங்கு இவரும்
மே ந தயிஷ்யஸே யதி -அடியேனுக்கு அருள் செய்யாயாகில்
தத -அடியேன் கை தப்பிப் போன பின்பு
தய நீயஸ் தவ துர்லப—உனக்கு அருள் செய்யத் தகுந்தவன் கிடைக்க மாட்டான்
கொள்வார் தேட்டமான தேவரீர் கிருபைக்கு என்னைப் பாத்ரமாக்கா விடில் வேறு கிடைப்பது அரிது –
இழக்காதே -என்று சமத்காரமாக அருளிச் செய்கிறார்

—————–

தத் அஹம் த்வத் ருதே ந நாதவான்
மத்ருதே த்வம் தயநீயவான் ந ஸ
விதி நிர்மிதமே ததந்வயம்
பகவன் பாலய மா ஸம ஜீஹப —51-

பகவன்-எம்பெருமானே
தத் அஹம் த்வத் ருதே ந நாத வான்–ஆகையினால் அடியேன் உன்னைத் தவிர வேறே ஒருவனை நாதனாக உடையேன் அல்லேன்
மத்ருதே த்வம் தயநீயவான் ந ஸ-நீயும் என்னைத் தவிர வேறு ஒருவனை அருள் கொள்பவனாக உடையை அல்ல
விதி நிர்மிதமே ததந்வயம்–தெய்வ வசத்தால் நேர்ந்த இந்த சம்பந்தத்தை
விதி வாய்க்கின்று காப்பாரார் -5-1-1- என்கிறபடியே –
விதி வசத்தால் வாய்ந்து இருக்கிற ரஷ்ய ரஷக பாவத்தை
ஸூஹ்ருத விசேஷம் அடியாகப் பிறக்கும் பகவத் கிருபையை -நம்மால் பரிஹரிக்க ஒண்ணாததை -விதி என்கிறோம்
உன் தன்னோடு உறவேல் நம்மோடு இங்கு ஒழிக்க ஒழியாதே-அவனாலும் பரிஹரிக்க ஒண்ணாதே
ஏதத் அந்வயம் ஏதம் அந்வயம் -பாட பேதங்கள்

பாலய மா ஸம ஜீஹப —காப்பாற்றிக் கொள் விடுவிக்க வேண்டாம் –
இந்த சம்பந்தத்தை நான் விட நினைத்தாலும் நீ விடுவிக்க ஒண்ணாது தடுக்க வேண்டும் என்றபடி –
இத்தலையில் பூர்வ அபராதத்தைப் பார்த்தாதல்
தேவர் பூர்த்தியைப் பார்த்த்தாதல்
கை விட்டு அருளாது ஒழிய வேண்டும் –

————

வபுராதி ஷூ யோ அபி கோ அபி வா
குண தோ அஸாநி யதா ததா வித
ததயம் தவ பாத பத்மயோ
அஹமத் யைவ மயா ஸ்மர்ப்பித்த –52-

வபுராதி ஷூ –சரீரம் முதலியவைக்குள்
யோ அபி கோ அபி வா-ஏதாவது ஒன்றாகவும்
குண தோ அஸாநி யதா ததா வித–குணத்தினால் எனும் ஒருபடிப் பட்டவனாகவும் இருக்கக் கடவேன் –
அவற்றில் ஒரு நிர்பந்தம் இல்லை
ததயம் தவ பாத பத்மயோ அஹம் -ஆகையினால் இந்த ஆத்ம வஸ்துவானது உன்னுடைய திருவடித் தாமரைகளில்
மத் யைவ மயா ஸ்மர்ப்பித்த –இப்பொழுதே என்னால் சமர்ப்பிக்கப் பட்டதாயிற்று

சம்பந்தம் உண்டு என்று ஹ்ருதய விசுவாசம் இல்லாமல் மேல் எழுந்த -பொறி புறம் பூசின பாசுரம் இல்லை
த்வம் மே அஹம் மே -விவாதம் செய்யாமல் ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகிறார்
ஆத்மா ராஜ்யம் தனம் மித்ரம் களத்ரம் வஹநானி ஸ –இதி தத் ப்ரேஷிதம் சதா –
ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய தர்மம் வக்தும் இஹார்ஹசி –
சித்தி த்ர்யம் அருளிச் செய்த இவரே ஆத்மா தேகமோ இந்த்ரியமோ பிராணனோ எதுவாக இருந்தாலும்
ஆத்மா அணுவாகவோ சர்வ வியாபியோ ஏக ரூபனோ பரிணாமம் கொண்டதோ ஞானியா அஞ்ஞானியா –
இவற்றை நிஷ்கரிக்கப் போகிறேன் அல்லேன்
அதுவாகவே கொண்டு உன்னை ஆராதிப்பேன் என்கிற வேத வாக்கியத்தின் படியே -என்பது சேஷத்வ
பிரதானத்தை அருளிச் செய்கிறார்

இங்கு ஆத்மாவை அஹம்-அஹம் –
பராகர்த்த வ்யாவ்ருத்தனாய்
பிரத்யகர்த்த பூதனாய்
ப்ரத்யஷ பூதனாய்
பிரகாசிக்கிற நான் – என்கிறார் ஆகையால்
தேக இந்திரிய மனா பிராணாதி விலக்ஷணனாய் அஹம் புத்தி போத்யனாய் உள்ள ஆத்மா
என்கிற சித்தாந்தமும் வெளியிட்டு அருளுகிறார்

—————–

மம நாத யதஸ்தி யோஅஸ்ம்யஹம்
சகலம் தத்தி தவைவ மாதவ
நியத ஸ்வ மிதி பரப்புத்ததீ
அதவா கிந்நு சமர்ப்பயாமி தே–53-

மாதவ நாத-ஸ்ரீ யபதியான பெருமானே
மம யதஸ்தி யோஅஸ்ம்யஹம்—-யத மம அஸ்தி -அஹம் யஸ் அஸ்மி –யாது ஓன்று எனக்கு உரியதாய்
இருக்கின்றதோ -நான் எப்படிப்பட்டவனோ
சகலம் தத்தி தவைவ –நியத ஸ்வ மிதி-அது எல்லாம் உனக்கே எப்போதும் உரிமைப் பட்டது என்று
பரப்புத்ததீ–நன்றாகத் தெரிந்து கொண்ட அடியேன்
அதவா கிந்நு சமர்ப்பயாமி தே–உனக்கு எத்தை சமர்ப்பிப்பேன்
அதவா -கீழில் சமர்ப்பண பஷ வ்யாவ்ருத்தி –

யானே நீ என் உடைமையும் நீயே -அனுதபிக்கிறார்
எனது ஆவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே –என்றதுமே –
எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய் -எனது யாவி யார் யான் யார் தந்த நீ கொண்டாக்கினையே –
திருக் குருகைப் பிரான் பிள்ளான் –இப்படி எம்பெருமான் உடன் கலந்த கலவையால் உள்ள நிரவதிக ப்ரீதியாலே
அறிவு இழந்து இவ்வாத்மா தன்னுடையது அன்று என்று நிரூபிக்க மாட்டாராய் –
அவன் தம்மோடு கலந்த இப்பெரு நல் உதவிக்கு கைம்மாறாக தம்முடைய ஆத்மாவை அவனுக்கு மீளா வடிமையாகக் கொடுத்து –
பின்னையும் தம்முடைய ஸ்வரூபத்தை உள்ளபடி விவேகித்து -என்று அருளிச் செய்கிறார் –
கர்ம உபாத்திகம் அன்றிக்கே ஞான விபாக கார்யம் -ஆகையால் அடிக் கழஞ்சு பெறுமே

ஒட்டு உரைத்து இவ் வுலகு உன்னை புகழ்வு எல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி —
இழிவுச் செயல் –என்றவரே கொண்டல் வண்ணா கடல்வண்ணா என்று பலகாலும் அருளிச் செய்கிறார்களே
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம் -என்று அருளிச் செய்தெ பலவாறு புகழ்கின்றார்களே
பரஸ்பர வ்ருத்தமாக தோற்றினாலும் விருத்தம் இல்லையே

சமர்ப்பணீயம் ஆகைக்கு ஸ்வாம்யம் இல்லை –
சமர்ப்பிக்கைக்கு ஸ்வா தந்த்ர்யம் இல்லை –
சம்சார பீதையாலே சமர்ப்பிக்கையும்
ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானத்தாலே அநு சயிக்கையும்
இரண்டும் யாவன் மோஷம் அநு வர்த்திக்கக் கடவது-

—————–

அவபோதி தவா நிமாம் யதா
மயி நித்யாம் பவதீ யதாம் ஸ்வயம்
க்ருபயைதத நனய போக்யதாம்
பகவன் பக்திமபி ப்ரயச்ச மே—54-

பகவன் மயி நித்யாம்–எம்பெருமானே என் பக்கல் சாஸ்வதமாய் உள்ள
இமாம் பவதீ யதாம்–உனக்கே உரிமைப்பட்டு இருக்கிற இந்த சேஷத்வத்தை
யதா ஸ்வயம் அவபோதி த்வாந் -எப்படி நீ தானே அறிவித்தாயோ
ஏதத் அநந்ய போக்யதாம-இது தவிர வேறு ஒன்றில் போக்யதையை உடைத்தது ஆகாதே -பரம போக்யமான
பக்திமபி ப்ரயச்ச மே—பக்தியையும் அடியேனுக்குத் தந்து அருள வேணும்

ஸ்வயம் புருஷார்த்தமான பக்தியையும் தந்து அருள வேணும்
வேறு ஒன்றில் போக்யதா புத்தியையும் தவிர்த்து அருளி -வேறு ஒன்றுக்கு நெஞ்சுக்கு விஷயம்
ஆக்காதபடியான பக்தியைத் தந்து அருள வேணும் –
நிர்ஹேதுக கிருபையால்-இந்த சேஷத்வத்தை உணர்த்தினாப் போலே
இந்த ஜ்ஞானம் புருஷார்த்த உபயோகியாம்படி-இந்த கிருபையாலே
ஸ்தான த்ரயோதித -பர பக்தியைத் தந்து அருள வேண்டும் என்கிறார் –
ஸ்தான த்ரயம் ஆவது
புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வ நன்யயா -ஸ்ரீ கீதை -8-22
பக்த்யா த்வ நன்யயா சக்ய -11-54-என்றும்
மத் பக்திம் லபதே பராம் -18-54-

—————

தவ தாஸ்ய ஸூ கைக ஸங்கி நாம்
பவ நேஷ் வஸ்த்வபி கீட ஜன்ம மே
இதரா வஸ தே ஷூ மா ஸம பூத்
அபி மே ஜன்ம சதுர்முகாத்மா நா—55-

தவ தாஸ்ய ஸூ கைக ஸ்ங்கி நாம்–உன்னுடைய அடிமை யாகிற இன்பம் ஒன்றிலேயே
விருப்பம் உள்ள மஹான்களுடைய
பவ நேஷ் வஸ்த்வபி கீட ஜன்ம மே-அஸ்து -திரு மாளிகைகளில் அடியேனுக்குப் புழுவாகப் பிறப்பதுவும் ஆயிடுக
அபி -சப்தம் அவதாரணத்திலே யாய் கீட ஜன்மமே உண்டாக வேண்டும் என்றுமாம் –

இதரா வஸ தேஷூ –அடிமைச் சுவடு அறியாத மற்றையோர் வீடுகளில்
மா ஸம பூத்அபி மே ஜன்ம சதுர்முகாத்மா நா–நான்முகனாகப் பிறப்பது தானும் எனக்கு வேண்டா

பாகவத சேஷத்வ பர்யந்தம் போனால் தானே பகவத் சேஷத்வம் ரசிக்கும் -என்கிற
சாஸ்த்ரார்த்தம் அருளிச் செய்கிறார்
ஜாதியில் ஏற்றத்தாழ்வு உபயோகம் அற்றது பாகவத சேஷத்வமே வாய்க்கும் அத்தனையே வேண்டுவது
பகவத் ப்ரசாதத்தாலே லப்தமான பக்தி ப்ராசுர்யத்தாலே
தச் சேஷத்வ அளவில் பர்யவசியாதே
ததீய சேஷத்வத்தை பிரார்த்திக்கிறார் –
ஆழ்வார் -கண்கள் சிவந்து -8-8- விலே பகவச் சேஷத்வத்தை அனுபவித்து
கருமாணிக்க மலை -யிலே அனன்யார்ஹ சேஷத்வத்தை அனுசந்தித்து
அவ்வளவிலும் பர்யவசியாதே
நெடுமாற்கு அடிமை யிலே ததீய சேஷத்வத்தை அனுசந்தித்தாப் போலேயும்
ஸ்ரீ இராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருகன ஆழ்வானைப் போலேயும்
ததீய சேஷத்வத்தை பிரார்த்திக்கிறார் –
அன்வயத்திலும் வ்யதிரேகத்திலும் இரண்டிலும் உண்டான நிர்ப்பந்தம் தோற்ற இருக்கலாம் -என்கிறார் –

—————-

ஸ்க்ருத் த்வ தாகார விலோக நாஸ்யா
த்ருணீ கருதா நுத்தம புக்தி முக்திபி
மஹாத்மபிர் மாமவ லோக்யதாம் நய
ஷானே அபி தே யத் விரஹொ அதிது ஸ்ஸ்ஹ–56-

ஸ்க்ருத் த்வ தாகார விலோக நாஸ்யா–ஒரு கால் உனது திரு மேனியை சேவிக்க வேணும் என்கிற விருப்பத்தினால்
த்ருணீ கருதா நுத்தம புக்தி முக்திபி-மிகவும் சிறந்த செல்வத்தையும் மோக்ஷத்தையும் த்ருணமாக வெறுத்து இருக்கிற
மஹாத்மபிர் அவ லோக்யதாம் –மஹானுபவர்களால் கடாக்ஷிக்க உரியனாய் இருக்கையையே
மாம் நய–அடியேனுக்கு அளித்து அருள வேண்டும்
எப்படிப்பட்ட மஹான்களின் கடாக்ஷத்தை விரும்புகிறேன் என்னில்
ஷனே அபி தே யத் விரஹ–எந்த மஹான்களினுடைய பிரிவானது உனக்கு ஒரு நொடிப் பொழுதும்
அதிது ஸ்ஸ்ஹ–மிகவும் பொறுக்க முடியாததோ
தை- மஹாத்மபிர் அவ லோக்யதாம்–என்று கீழோடே அந்வயம்

கூராழி வெண் சங்கு ஏந்திக் கொடியின் பால் வாராய் விண்ணும் மண்ணும் மகிழவே -என்று பிரார்த்தித்து
இந்திரா லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்
எம்மா வீட்டுத் திறமும் செப்பம்
வானாளும் மா மதி போல் வெண் குடைக் கீழ் மன்னவர் தம் கோனாகி வீற்று இருந்து கொண்டாடும் செல்வம் அறியேன்
கம்ப மத யானைக் கழுத்தகத்தின் மேல் இருந்து இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன் —
ஆழ்வார்கள் கடாக்ஷம் பெற ஆசைப்படுகிறார்
இவர்கள் தானே -அரு மா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே ஒரு மா நொடியும் பிரியான
என் ஊழி முதல்வன் ஒருவனே -என்று இருப்பார்கள் அன்றோ –