Archive for the ‘ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம்’ Category

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்-ஸ்ரீ பாஷ்ய கட்டமைப்பு –அதிகார பாத அதிகாரண விவரம் -உபோத்காத சதுர் அதிகரணம் —

May 27, 2023

ஶ்ரீராமானுஜர் காயத்ரி

ஓம் ராமாநுஜாய வித்மஹே ஸ்ரீ தாசரதாய தீமஹி
தன்னோ சேஷ ப்ரசோதயாத் ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ.

ஶ்ரீஇராமானுசர் இயற்றிய நூல்கள்:

ஸ்ரீபாஷ்யம் அவருடைய தலைசிறந்த படைப்பாகும். (வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை காலத்திற்கும் நிலைநாட்டிய நூல்.)

ஸ்ரீ வேதாந்த சங்கிரகம். (இது உபநிடத தத்துவங்களை விவரிக்கிறது).

ஸ்ரீ வேதாந்த சாரம் மற்றும் ஸ்ரீ வேதாந்த தீபம்: (இவை பிரம்ம சூத்திரத்தைப்பற்றிய சிறு உரைகள்.)

ஸ்ரீ கீதா பாஷ்யம். (இது கீதைக்கு விசிட்டாத்துவைதத்தையொட்டி எழுதப்பட்ட உரை.)

நித்யக் கிரந்தங்கள். (அன்றாட வைதீகச் சடங்குகளும், பூசை முறைகளும்.)

மற்றும் ஸ்ரீ கத்யத்ரயம் என்ற மூன்று உரைநடை நூல்களான ஸ்ரீ வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீ சரணாகதி கத்யம் என்ற ஒன்பது நூல்களை செய்தருளினார்.

—————

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே|
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

————–

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகங்கள்–

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று
சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்

நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோபாத்யாலீடம் விவசம் அசுபஸ் யாஸ்பதமிதி I
ச்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய-ஆளவந்தார்- நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய -ஆளவந்தார்-நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் -ப்ரஹ்மமே அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம்
ப்ரம பரிகதம் -பிரமங்கள் -தனக்கு உள்ள ஏகத்துவம் அத்விதீயம் உணராமல்
ஸம்ஸரதி -தானே சம்சாரத்தில் உழன்று -சங்கர மதம்
தத் பரோபாத்யாலீடம் விவசம் -பாஸ்கர மதம் உபாதிக்கு அதீனம் -பர உபாதி -மேம்பட்ட -தன்னை விட வேறுபட்ட கர்மம்
தன் வசம் இல்லாமல் -ஸ்வதந்த்ரம் என்று கொள்ளாமல் பரதந்த்ரம் கல்பித்து -விவசத்வம் என்பர்
அஞ்ஞாத்வம் சங்கரர் விவசாத்வம் இவர்கள்
அசுபஸ் யாஸ்பதமிதி I-அசுபங்களுக்கு இருப்பிடம் -யாதவ பிரகாசர் -உபாதையும் இல்லை அஞ்ஞானமும் இல்லை -ஸ்வரூப பரிமாணம்
தோஷங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கு என்பர்
ச்ருதி நியாயா பேதம் -ஸ்ருதிகளுக்கும் நியாயங்களும் அபேதம் விலகி –
மூன்றும் சேர்ந்து சமுதாயமாக அத்வைதம்
ஜகதி விததம் -உலகம் எங்கும் இது பரவி
மோஹனமிதம்-அஞ்ஞானம் உண்டு பண்ணி -மோஹிக்கப் பண்ணும்
தமோ யேநாபாஸ்தம் -இவை எவரால் போக்கடிக்கப்பட்டதோ -அந்த
ஸஹி விஜயதே யாமுன முனி-ஆளவந்தார் பல்லாண்டு வாழட்டும்

—————-

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

———–

ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –

மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–முதல் மங்கள ஸ்லோகம்

ஸ்ரீ யபதியான அவனே பிரமேயம் –
காரணம் ஏவ -உபாசனம் –
சம்சார நிவ்ருத்திக்கும் நிரதிசய ஆனந்த கைங்கர்ய இஷ்ட பிராப்திக்கும் -அவனே உபாயம் –
எவையும் எவரும் தன்னுன்னே ஆகியும் ஆக்கியும் தானே -நிமித்த உபாதான காரணம் அவனே –

ஸ்ரீயகாந்தோ அனந்த -வர குண—-வாங்மனசோ யோகோ -ஆதி புருஷ–8 விசேஷணங்கள் –

1-ஸ்ரீ யகாந்தன் –
ப்ரீதி விஷயம் -தகுந்த -பூரணமாய் –
அரவிந்த லோசன மனச் காந்தா பிரசாத –காந்தஸ்தே புருஷோத்தம –
ஸ்ரீ சுத்கா மங்களம் -உத்கர்ஷம் –
ஸ்ரீ -சேர்த்து மங்களம் மற்றவர்களுக்கு –
இவளுக்கே ஸ்ரீ என்பதே -வேற சேர்க்க வேண்டாம் –
தரும் திருமகளார் தனிக் கேள்வன் பெருமை உடைய பிரான் –
அப்ரமேயம் –ஜனகாத்மஜா

2–அநந்த-அளவற்ற –
தேச கால வஸ்து ஸ்திதி மூன்றாலும் அளவற்ற – –
விபு -நித்யம் -எல்லா வஸ்துக்களும் அவனே என்பதால் -மூன்றும் உண்டே

3-வர குண கணகை ஆஸ்பதம் வபுகு –
இருப்பிடம் -திவ்ய விக்ரஹம்
வபுகு –ஸ்ரேஷ்டமான –
யதிவரர் -எம்பெருமானார்
குருவரர் தேசிகன் -வரவர முனி –குணங்களை கொண்டு லோகங்கள் வாழும் -சமுதாயம் திரள் -கணங்கள்
திவ்ய மங்கள விக்ரகம் ஸ்வரூபம் இரண்டையும் குறிக்கும் –

4-ஹத-அசேஷ அவத்யம் -தோஷம் -ஒன்று விட -அண்ட ஒண்ணாமல் –
அழித்து-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம்
ஹத -ஆஸ்ரிதர்க்கும் பண்ணி அருளுவான் -சாஷாத் பரம்பரா சம்பந்தம் -உண்டே
பஞ்ச மஹா பாதகங்கள் நான்கு சொல்லி ஐந்தாவது இவற்றோடு சம்பந்தம் உள்ளவர் சொல்லுவார்

5-பரம கம் பதக -பரம ஆகாசம் –
தெளி விசும்பு -இருப்பிடம்

6- வாங்க மனஸ்-யோகோ அபூவுகி –பிறர்களுக்கு அறிய வித்தகன் –
யாரும் ஓர் நிலைமையான அறிவரிய எம்பெருமான்

7-நத ஜன த்ருஷான் பூமி -கண்ணுக்கும் இலக்காவான்
அகில ஜன நயன –அறி வெளிய எம்பெருமான் –
ப்ரீதியால் வணங்குபவர்களுக்கு -எவ்வளவு சாதாரண ஜனங்களுக்கும் கண்ணுக்கு இலக்காவான் –

8- ஆதி புருஷ மனஸ்
புருஷன் -ஜகத் காரண பூதன் –
அந்தர்யாமி –
புரி சேதைகி புருஷன் –

தத் பாதாப்யம் -பரி சரணம் -ப்ரீதி பூர்வக கைங்கர்யம்
திருவடித் தாமரைகளில் -சததம் பற்றுடையவையாக –

மே மனஸ் பவது -அடையட்டும் –
இதுவே பரம புருஷார்த்தம் –

————–

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

அடுத்து ஆசார்ய வந்தனங்கள் -குரு பரம்பரை
வேதாந்தார்த்த அர்த்தம் அறிய

பிரணமய ஆச்சார்ய சிரஸா —வணங்கிய பின் –

தத் ஆதிஷ்டேன வர்த்தமான மார்க்கம் –அவர்கள் அனுஷ்டானம் படியே நடந்து

ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே –
தெளிவாக காட்டப் படுகிறது
தத்வ ஹித புருஷார்த்தம் காட்டும் வேதாந்த அர்த்தங்கள்

ப்ரஹ்ம ஸூத்ரங்கள் பதங்களில் உள்ளடங்கி –
கிருபா மாத்திர ஞான அனுஷ்டான ஆசார்யர்களால் -பிரகாசிப்பிக்கிறோம் –

ஸ்ரீ பாஷ்யம் -156–அதிகரணங்கள்–545- ஸூத்ரங்கள் –

அத்ர இயமேவ வேத விதாம் ப்ரக்ரியா –இதுவே வேத வித்துக்கள் உடைய பிரகிரியை –
சேதன அசேதன விலக்ஷணன் பர ப்ரஹ்மம் என்பது

அசித் வஸ்துந -ஸ்வரூபத்தாலும் ஸ்வாபவத்தாலும் –
ஜடம் பராக் -விகாரங்கள்-சரீர பூதம் –

ப்ரத்யக் ஆத்மா -பத்தன் முக்தன் நித்யன்–ஞான ஆஸ்ரயம் ஆத்ம பூதன்-சேதனன் –

இவர்களை விட அத்யந்த விலக்ஷணன் –

ஹேய ப்ரத்ய நீகத்வம் –
கல்யாணை குணம் –
வியாப்யம் –
தாரகம்
நியாந்தா
சேஷி -இவற்றால் -விலக்ஷணன்

யதோ பகவதா யுக்தம் -ஸ்ரீ கீதாச்சார்யனால் சொல்லப் பட்டது -15-புருஷோத்தம வித்யை –
மூன்று ஸ்லோகங்கள் உதாகரித்து
பக்தி யோக நிஷ்டனுக்கு -விளம்பம் இல்லா பலன் -அவதார ரகஸ்யமும் இந்த புருஷோத்தம வித்யையும் –

க்ஷரம்-அக்ஷரம் -விட வேறு பட்டவன் –
சேதன வர்க்கம் இரு வகை –விகாரம் -ஸ்வ பாவத்தால் –
லோகே-ஸ்ருதி ஸ்ம்ருதி ரூபமான சாஸ்திரத்தில் என்றபடி –

இங்கு –
உத்தம புருஷன் அந்நியன் –பரமாத்மா -உதகரிக்கப் பட்டு
லோகே -சாஸ்திரத்தில் -இப்படி சொல்லப் பட்டதே –

லோக த்ரயம் -சேதன அசேதன -லோகம் -ஆதித்யே –அநு பிரவேசித்து -வியாபித்து -தாங்கி–ஐஸ்வர்ய நியமித்து-

ததாபி – -அவ்யய -ஒட்டாமல் -0வியாப்யகத தோஷம் தட்டாமல்
இவை எல்லாம் -ஸ்வாபாவிகம்-வந்தேறி இல்லை -ஸ்வ பாவ சித்தம் –
யஸ்மாத் விலக்ஷணன் –புருஷோத்தமன் -பிரசித்தி -உடையவன் -இதனால்

வாஸூதேவ -விஷ்ணு -புருஷோத்தமன் -ப்ரஹ்ம நாராயண சப்தம் -ஸ்ம்ருதி புராண ஸ்ருதிகள் கோஷிக்குமே –

ஸ்ருதி ச -பிரதான க்ஷேத்ர –பயோக பதி -சேஷி –

குணே ச –சேஷ சேஷி பாவத்துடன் தத்வ த்ரயம்

பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரீம் -ஜகத்பதி -தனக்கே தான் நியந்தா -ஸ்வாமி -ஸூநிஷ்டன்

அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் வியாப்ய நாராயண -சர்வ ஆதாரன்-சர்வ நியாந்தா –

———————————

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

ஸ்வாமி இந்த முதல் ஸ்துதியில் வேதங்களின் உள்ளுறைப் பொருளான விஷ்ணுவுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக் கொள்கிறார்.

கண்ணன் எம்பெருமானும் கீதையில் இதை, “ஸர்வை: வேதை: அஹமேவ வேத்ய:”
(எல்லா வேதங்களினாலும் நான் ஒருவனே அறியப் படுகிறேன்) என்று தெரியப்படுத்தினான்.

வேதங்கள் அனைத்தின் உள்ளுறைப் பொருளாக விஷ்ணு விளங்குவதால் ஸ்வாமி தொடங்கும் போதே
அவனுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக் கொள்கிறார்.

இதன் மூலமாகத் தம் சிஷ்யர்களையும் இதை ஸேவிப்பவர்களையும் விஷ்ணு பகவானுக்குத் தங்களை
ஸமர்ப்பித்துக்கொள்ள வழி வகுக்கிறார்.

சிஷ்யர்களை வழிப்படுத்தும்போதே வேத ஸாரத்தையும் அறிவுறுத்தினாராகிறார்.

விஷ்ணு பகவான் மூன்று வகைகளில் உருவகப் படுத்தப் பட்டிருக்கிறார்:

(i)அசேஷ சித்-அசித்-வஸ்து-சேஷிணே

அவனே ஒன்று விடாது எல்லாப் பொருள்களுக்கும் அதிபதி.
அவன் ஆதிபத்யத்தில் உணர்வுள்ளன உணர்வற்றன யாவும் அடங்குவன.
சித் அசித்-அறிவுள்ளன அறிவற்றன யாவும் அடங்குவன.

அசேஷ பதம் சித்திலும் அசித்திலும் அந்வயிக்கும் –

நம் அனுபவத்தில் நாம் உணர்வுள்ளன/உணர்வற்றன யாவும் சில தொடர்புகளாலும் நெறிமுறைகளாலும்
கட்டுப்படுத்தப் பட்டுள்ளதைக் காண்கிறோம்.

அவை ஒன்றுக்கொன்று ஸ்வதந்த்ரமாயும் இல்லை.
அவற்றின் அவ்வப்போதைய நிலை சில நெறிகளுக்குட்பட்டே அமைகின்றன.
அவை யாவுமே ஓர் உயர் கோட்பாட்டுக்குட்பட்டே இயங்குகின்றன.

அவை “சேஷ பூதர்”, அதாவது கட்டுப்பட்டவர்கள் என அறியப்படுகின்றன.

இவ்வாறின்றி, தன்னிச்சையாய் ஸ்வதந்த்ரனாய் இருப்பவன் சேஷி எனப்படுகிறான்.

இப் பதம் லீலா விபூதி நாயகத்வத்தைக் காட்டும்-
விசிஷ்டாத்வைத சித்தாந்தம் சுருக்கமாக இங்கே அருளிச் செய்கிறார் —

அசேஷ சித் -ஜீவன் ஒருவன் அல்ல பலர் என்றதாயிற்று

வஸ்து-ஜகத் மித்யை பொய்யானது இல்லை மெய் என்றதாயிற்று

ஜீவாத்மா தன் சரீரத்தை தனது வசமாக்கிக் கொள்வது போலே அனைத்துக்கும் ஜீவனாகிய ப்ரஹ்மம்
அசேஷ சித்துக்களை அசித்துக்களையும் தனது வசமாக்கிக் கொள்கிறான்

ஜகத் ப்ரஹ்மமே என்றதும் சரீராத்மா சம்பந்தம் அடியாகவே ஒழிய
ஐக்கியம் சொல்வது அல்ல என்றதும் ஆயிற்று

இத்தால் ப்ரஹ்மம் வேறு சேதன அசேதனங்கள் அடங்கிய ஜகத் வேறு என்றதாயிற்று –

ii) சேஷ சாயினே

அவன் ஆதிசேஷனாகிற திவ்ய நாகத்தின் மீது சாய்ந்துள்ளான்.

ஸம்ஸார பந்தங்களிலிருந்து நித்யமாக விடுவிக்கப் பட்டிருப்பதால் நித்யஸூரி அல்லது ஸர்வகால முநி எனப்படுகிறான்.

இதனால் எம்பெருமானின் ஆதிபத்யம் என்பது ஒரு உண்மையான உறவு என்பது ஆதிசேஷன் போன்ற
நித்யஸூரிகளால் நமக்குத் தெரிகிறது.

ஞானம் பிறந்த தசையில் எம்பெருமானுக்கு நாம் சேஷ பூதர்கள் எனும் உணர்வுண்டு என்பதும் தெரிகிறது.

இதுவே சேஷ -சேஷி ஸம்பந்தம்.

இது நித்ய விபூதி யோகத்வத்தை சொல்லும்-

நித்ய முக்த பத்னி பரிஜனாதிகளுக்கும் இது உப லக்ஷணம்

முதல் குறிப்பால் ஸ்வாமி எல்லாவற்றுக்கும் விஷ்ணுவுக்கும் உடையவன்-அடிமை என்றார்.
இரண்டாவது குறிப்பால் ஸம்பந்த ஞானம் பெற்றவனே முக்தனாகக் கடவன் என்கிறார்.

ஆனால் ஒருவனுக்கு அடிமைப் பட்டிருப்பது துக்கமான விஷயமன்றோ?
ஆகில், இந்தத் துக்கத்தைத் தவிர்க்க ஒவ்வொருவனும் இந்த ஞானப் ப்ராப்தியைத் தள்ளிப் போட விரும்புவானன்றோ?

இதற்கு விடையாவது,
இவ்வுறவு உண்மையானது என்பதால் ஒவ்வொருவரும் உணராமல் போனாலும் இவ்வுறவிலிருந்து தப்ப முடியாது.
மேலும் எம்பெருமானின் ஆளுகைக்குட்பட்டிருப்பது அளவற்ற இன்பமே ஆதலால் துன்பம் இல்லை என்பதே.
இதையே ஸ்வாமி மூன்றாவது குறிப்பில் விளக்குகிறார்.

[iii] நிர்மலானந்த-கல்யாண-நிதி:-நிர்மலன் -அனந்தன் -கல்யாண நிதி

விஷ்ணு பகவான் தூய முடிவற்ற மங்கள ஸ்வரூபி. அவன் தன்னிகரற்றவன்.
நித்ய ஸூரிகளும் அவனாலேயே ஆனந்தம் அனுபவிக்கின்றனர்.

உணர்வுள்ளவை யாவும் சம்சார சம்பந்தத்தினால் தூய்மை இழக்கின்றன.
ஆனால் அவன் எப்போதும் தூயோனாயுள்ளான்.
அவனவதாரங்கள் தூயன, தெய்வீகமானவை. அவன் விடுபட்டவன், மற்றவர்களை விடுவிக்கவும் வல்லவன்.
ஆகவே நாம் அவனைச் சரண் புகுதலும், மோக்ஷம் பெறுதலும் நியாயமே .

நிர்மலன் அவன் குற்றமற்றவன்,
அனந்தன் -அபரிச்சேத்யன் -தேச கால வஸ்து த்ரிவித பரிச்சேத ரஹிதன் –
கல்யாண நிதி -நற்குண ஸமுத்ரம், அழகின் முழு உரு,

ஆகவே விஷ்ணு அநுபவம் ஆனந்தம் தருவது.

அவன் ஸ்வாமித்வம் நமக்கு ஸுக ரூபமானது.
ஞானிகளும் முக்தரும் நித்தியரும் இந்த ஆனந்தத்தை அனுபவிதத்திருப்பவர்கள்.

ஸம்சார ஸம்பந்தம் தாற்காலிகம், துன்பம் நிறைந்தது.

விஷ்ணு ஸம்பந்தம் நித்யமானது, இன்பமயமானது.

அகிலஹேய ப்ரத்ய நீகத்வமும் கல்யாண குணாத்மகாத்வமுமே ப்ரஹ்மத்துக்கு உபய லிங்கங்கள் –

அவனது எல்லையற்ற மங்கலத்தன்மை அவனது பூர்ணத்வத்தைக் காட்டுகிறது.
அவன் ஸ்வாமித்வத்திலும் கூட அபூர்ணனல்லன்.
அவனது இந்த பூர்ணத்வமே நமக்கு நம் விடுதலையை, மோக்ஷத்தை உறுதி செய்கிறது.

அவனே விஷ்ணு பகவான். அவன் தூரஸ்தனல்லன்.
அவன் எல்லாவற்றிலும் நிறைந்துள்ளான் என்பதே அச் சொல்லின் பொருளுமாகும்.

எல்லாவற்றிலும் நிறைந்திருந்தும் அவன் அவற்றால் மாசடைவதில்லை.

சூர்யனின் கதிர்கள் போல் அவன் அப்பழுக்கின்றித் திகழ்கின்றான்.
சூர்யனின் கதிர்கள் சேற்றின் மேல் படிந்தாலும் அவை அழுக்கடைவதில்லை அன்றோ!

நாம் விஷ்ணுவைச் சரண் அடைகின்றோம்.
நம
கீழே ப்ராப்யமான ப்ரஹ்மத்தை விவரித்து அருளி
இனி பிராபகம்- இதுவே ப்ரஹ்மத்தை அடையும் உபாயம் -என்கிறார்

கேவலம் நமஸ்காரத்தை சொன்னது அன்று இது –
பக்தி பிரபத்தி பர்யந்தம் நமஸ் அர்த்தம் கொள்ள வேண்டும்

ஆக இத்தால் ஸ்வ சித்தாந்த சுறுக்கங்களை அருளிச் செய்தார் ஆயிற்று

—————–

பரம் ப்ரஹ்மை வாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோ பாத்யா லீடம் விவசம் அசுபஸ்யாஸ் பதமிதி I
ஸ்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய நமஸ்கார ரூபம்-

இந்த ஸ்லோகம் ஸ்ரீ யாமுநாசார்யரைப் புகழ்ந்து ஸமர்ப்பிக்கப்பட்டது.

அவர் காலத்தில் வேதங்களின் உள்ளுறைப் பொருளைப் புரிந்து கொள்வதில் இருந்த குழப்பங்களை நீக்குவதில்
அவரது பெரும்பங்கு இதில் வற்புறுத்தப் படுகிறது.
வேதங்களின் நிலைப்பாட்டை விளக்க
ஸ்ரீ யாமுநாசார்யர் ஸித்தித்ரயம் மற்றும் ஆகமப் ப்ராமாண்யம் போன்ற க்ரந்தங்களை சாதித்தருளினார்.

இந்த ஸ்லோகத்தில் எம்பெருமானார் தம் காலத்தில் இருந்த
மூன்று ப்ரதான வேதாந்தக் கோட்பாடுகளைக் குறிப்பிடுகிறார்.
இம் மூன்று கோட்பாடுகளையும் ஏற்பதில் உள்ள பெரும் ப்ரச்சினைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டுகிறார்.
இவ்வாறாக, மாற்றுக் கோட்பாடுகளைப் பற்றிய ஒரு சிறு விமர்சத்தை நமக்கு வைக்கிறார்.

சங்கர பாஸ்கர யாதவ பிரகாச மதங்களை நிரசித்தும்
தம்மை ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷித்து அருளிய
ஸ்ரீ ஆளவந்தாரை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் இதில்

(i) பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி

ப்ரஹ்மம் நிர்விசேஷ சின் மாத்திரம் -ஞான மயம் -ஸ்வயம் பிரகாசம் -மற்றவை அனைத்தும் மித்யா –
அந்த ப்ரஹ்மமே மாயையால் அஞ்ஞானத்தால் ஜகத்தாகத் தோற்றம் அளித்து
ஜென்ம ஜரா மரணாதி துக்கங்களை அடைகிறது என்பர் அத்வைதிகள்

அத்வைதத்தில் பர ப்ரஹ்மமே குழம்பியுள்ளது, ஸம்ஸாரத்தில் அந்வயிக்கிறது.

“பரம்” எனும் சொல் எல்லா வகையிலும் மேன்மையைக் குறிக்கும்.
வேதங்களில் ப்ரஹ்மத்தின் மேன்மை விளக்கப் படுகிறது.

ப்ரஹ்மம் எல்லா மங்களங்களாலும் நிறைந்தது, ஒரு குறையுமற்றது.
ஆகவே தான் அது ப்ரஹ்மம் எனப்படுகிறது,
அறியப்பட வேண்டியது என ஓதப்படுகிறது.
தன்னை உபாசிப்போர் குறைகளைப் போக்கி,
அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்கிறது.

அத்வைதத்தில் இரு முரண்பாடுகள் உள்ளன –
(i) எல்லா வகையிலும் மேன்மையுற்ற ப்ரஹ்மமே அஞ்ஞானத்தில் மூழ்குமாயின் அதை
ப்ரஹ்மம் என்றழைக்க அதன் மேன்மை தான் யாது?
(ii) எல்லாரையும் உஜ்ஜீவிப்பிக்க வேண்டிய ப்ரஹ்மம் சோகிக்குமாயின் அதை உய்விப்பார் யார்?

”ஏவ” எனும் சொல் இந்த முரண்பாடுகளை வலியுறுத்துகிறது.
எப்பொழுதும் தனக்குத் தானே பிரகாசித்துக் கொண்டு இருக்கும் ப்ரஹ்மத்துக்கு தன்னை அறியாமையாகிய
அவித்யை எப்படி சம்பவிக்கும் -என்கிற விரோதமும்
ப்ரஹ்மமே சம்சாரம் அடைந்தால் மோக்ஷம் பெற வேதாந்த ஸ்ரவணாதிகள்
செய்ய வேண்டி இருக்கும் விரோதமும் உண்டாகுமே

தனக்கு ஏற்படும் அஞ்ஞானத்தினால் ப்ரஹ்மம் மாயையில் சிக்குண்கிறது
(ப்ரம பரிகதம்) இம்மாயையே பார்வையில் வேறுபாட்டை விளைக்கிறது.

அத்வைதத்தில் ப்ரஹ்மம் ஒன்றே உணர்வுள்ளதாக ஒப்புக் கொள்ளப் படுவதால் வேறுபாடு பற்றிய
உணர்வு பூர்வமான அநுபவம் மட்டுமே இருக்க முடியும்.

ப்ரஹ்மம் மாயையை அனுபவிப்பதில்லை,
பிற யாவும் அனுபவிக்கின்றன என அத்வைதியால் வாதாட இயலாது.
ப்ரஹ்மம் தவிர்த்த ஏனைய யாவும் மாயையின் பாற்பட்டனவே.

மாயையினால் உண்டான ஒன்று மாயையை அனுபவிப்பது என்பது முரண்பாடாகும்.

முதலில் தான் ஸ்ருஷ்டித்த மாயையின் விளைவு தன் மாயையைத் தானே உருவாக்க முடியாது.
மாயையின் பொருள்களை அநுபவிக்க வேண்டுமாயின் அம்மாயை முன்பே இருக்க வேண்டும்.
ஆகவே, ப்ரஹ்மம் தானே அதை முதலில் அநுபவித்தாக வேண்டும்.

(ii) தத் பரோபாத்யாலீடம் விவசம்

ப்ரஹ்மன் மாற்றம் விளைப்பவற்றால் கட்டுண்டு கிடக்கிறது.

இது பாஸ்கராசார்யரின் கொள்கையை விளக்குகிறது.
தான் மட்டுமே ஸத்யமாயுள்ள ப்ரஹ்மத்தை மாயை-அவித்யை எவ்வாறோ குழப்புகிறது
என்பதை நிலை நிறுத்துவதில் உள்ள ஸ்ரமங்களை பாஸ்கரர் உணர்ந்திருந்தார்.

“பர” என்றதால்
இயல்வுகள் யாவும் தனிப்பட்டவை, உண்மையானவை என்பதும் பெறப்படுகிறது.
இவ் வியல்புகள் ப்ரஹ்மத்திலிருந்து வேறுபட்டவை.
இவற்றால் தளை யுண்டு ப்ரஹ்மம் கர்ம சக்கரத்தில் மாட்டிக்கொள்கிறது.

மேலும் இவ் விளக்கத்தில், மேம்பட்ட ஒரு ப்ரஹ்மம் தானே கட்டுண்பதும்
துக்கத்தில் உழல்வதுமான முரண்பாடும் உள்ளது.

(iii) அசுபஸ் யாஸ் பதம் = ப்ரஹ்மம் அசுபங்களின் இருப்பிடமாகிறது

இது யாதவ ப்ரகாசரின் கொள்கையை விளக்குகிறது.

யாதவ ப்ரகாசர் ப்ரஹ்மமே அறிவுள்ளன-அறிவற்றன இரண்டுமாகவும் பிரிந்திருப்பதாகவும்,
ஆகவே அசுபங்களின் இடமாய் இருப்பதாகவும் கருதினார்.

அறிவற்றனவின் அசுபத்தன்மை அவை எப்போதும் மாறிக் கொண்டே இருப்பதாலும்,
நிலை நில்லாமையாலும் ஏற்படுகிறது.

அறிவுள்ளனவற்றின் அசுபத் தன்மை அவை கர்ம ஸாகரத்தில் மாட்டிக் கொள்வதாலும்
அவ்வினைகளால் துன்புறுவதாலும் ஏற்படுகிறது.

வேதங்களில் சொல்லப்படும் ப்ரஹ்மம்
“ஸ்வேதர-ஸமஸ்த-வஸ்து-விலக்ஷண”மாய் , அதாவது
மற்றெல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபட்டும்,
அவற்றின் அசுபங்கள்/அமங்கலங்கள் யாதொன்றும் இல்லாமலும் இருக்கிறது.

ஆனால், யாதவப்ரகாசரின் யோஜனையில், வேதக் கோட்பாட்டுக்கு விருத்தமாக,
ப்ரஹ்மமே அமங்கலங்களின் இருப்பிடமாய் உள்ளது.

”பரம் ப்ரஹ்மைவ” எனும் சொற்கள் இம்மூன்று கோட்பாடுகளுக்குமே பொருந்தும்.
அதாவது
எல்லாப் பொருள்களுக்கும் மேலானதும்
எல்லா வகைகளிலும் மேம்பட்டதும்
ஆனந்த ஸ்வரூபமானதும்
குறைகளே அற்றதும்
எல்லாவகைகளிலும் மங்கலமானதும் பரிசுத்தமானதும் ஆன ஒன்றை
சங்கரர், பாஸ்கரர், யாதவப்ரகாசர் மூவருமே
அஞ்ஞானம், அமங்கலங்கள், துக்கம் இவற்றால் உழல்வதாகக் கருதுகிறார்கள்.

(iv) ச்ருதி ந்யாயா பேதம் ஜகதி விததம் மோஹநம் இதம் தம:

ப்ரஹ்மத்தை பூர்ணம் என்றும், பூர்ணமன்று என்றும் இவ் விளக்கங்களால் அறிந்து கொள்வது
தவறான அறிவும், அறியாமையும் ஆகும்.

“இதம் தம:” என்றது இதையே.
இத்தகைய புரிந்து கொள்ளல் தர்க்க நெறிகளுக்கு முரணானது.
வேதங்களைப் புரிந்து கொள்ள உதவும் நியாய சாஸ்த்ரத்துக்கு முரணானது ஆகும்.

கேள்வி: இவை யாவும் தவறான புரிந்து கொள்ளல், வேதங்களுக்கு விரோதமானவை,
வேதங்களின் அங்கங்களான நெறிகளுக்கு முரணானவை….எனில், இவற்றை விமர்சிப்பான் என்?

விடை: ஏனென்றால், அவைகளும், “ஜகதி விததம்” உலகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன,
பலரும் இக் கொள்கைகளால் மயங்கியும் கிளர்ச்சியுற்றும் உள்ளனர்.

அவ்வாறே இருக்கட்டுமே.
இக்கருத்துகள் தவறானவை, மறைகளின் கருத்துக்கு முரணானவை, தமக்குள்ளும் முரண்பாடுகளைக் கொண்டவை
பலராலும் பின்பற்றப் படுபவை…..இருக்கட்டுமே!
நாம் ஏன் அவற்றை விமர்சிக்க வேண்டும்?

விடை: ஏனெனில் இப் பாதைகளைப் பின்பற்றினால் பற்றுவோர் வழி தவறிப் போவர்.
இக் கருத்துகள் “மோஹநம்” = மதி மயக்குபவை.
ஆகவே, அறியாமை இருள் விமர்சிக்கத் தக்கதே.

இப்படிச் சொல்லி, ஆசிரியர் இவ் விமர்சத்தைத் தாம் செய்ய மேற்கொண்ட பின்னணியை விளக்கி யருளுகிறார்.

வேதங்களுக்குத் தவறான விளக்கங்களை ஸ்வாமி தம் கருணையினால் மறுத்துரைக்கிறார்.

ஞானம் பெற்றவர் பெறாதோருக்கு அறிவுறுத்தி நெறிப் படுத்துவது கடமையாகும்.

ஆகிலும் ஸ்வாமி இதைத் தம் ஆசார்யரான
ஆளவந்தார் மேல் ஏறிட்டு ஸாதிக்கிறார்:

(v) யே நா பாஸ்தம் ஸ ஹி விஜயதே யாமுன முநி:
இச் சொன்ன அறியாமை இருளை நீக்கும் யாமுன முநி வென்று நிற்பாராக!

தர்க்க விரோதமானதும் சாஸ்த்ர விரோதமானதுமான கோட்பாடுகளை மறுத்து ஒழிப்பதில் தம்
ஆசார்ய அருள் பெரும் பணியினை நினைவு கூறுகிறார்.

தம் ஆசார்யருக்கு இவ்விஷயத்தில் ஜய கோஷம் இடுகிறார்.

வேதார்த்த ஸங்க்ரஹத்தின் மூலம் யாமுநாசார்யரின் வெற்றியை ஸ்வாமி நிரந்தரமாக்கியுள்ளார் என்ன வேண்டும்.

தம் குருவின் திருவுள்ளத்தை சீடர் இக் க்ரந்தம் முழுக்கத் தெளிவாக அர்த்த புஷ்டி யுள்ளதாக்கி யுள்ளார்.

————————

ஸ்ரீ ப்ரஹ்ம சப்தேந –
ச ஸ்வ பாவதோ
நிரஸ்த
நிகில தோஷ
அநவதிக
அதிசய
அஸங்க்யேய
கல்யாண குண கண
புருஷோத்தம
அபி கீயதே –ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனையே குறிக்கும் பதம்

ஸ்ருதி -ரிக் யஜுஸ் ஸாமம் அதர்வணம்
ஒவ்வொன்றிலும் ஸம்ஹிதை -ப்ராஹ்மணம் -ஆரண்யகம் -உபநிஷத் என்று நான்கு பகுதிகள் உண்டு

இவற்றை ஒத்துக்க கொள்ளும் ஆஸ்திக தர்சனங்கள் ஷட் வித தர்சனங்கள் –
நியாயம் -கௌதம மகரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
வைசேஷிகம் -கணாத மஹரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
சாங்க்யம் -கபில மஹ ரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
மீமாம்ஸம் -ஜைமினி மஹ ரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
வேதாந்தம் -பாதாராயண மஹ ரிஷியால் ப்ரவர்த்திக்கப்பட்டது
வேத வியாஸர் முதல் ஐந்திலும் உள்ள குற்றங்களைக் காட்டி இறுதியில் உள்ள நம் தரிசனத்தின் வை லக்ஷண்யம் காட்டி அருளுகிறார் –

உபநிஷத் சமுத்ரத்தைக் கடைந்து ப்ரஹ்ம ஸூத்ரம் அமுதம் தந்து அருளுகிறார்
சாரதா பீடத்தில் ஸரஸ்வதி தேவியரால் கொண்டாடப்பட்டு ஸ்ரீ பாஷ்யம் திருநாமம் சூட்டப்பட்டது

பூர்வ உத்தர -இரண்டு த்விகங்கள்
சமன்வயம் -அவிரோதம் -உபாஸனம் -பலம் -நான்கு அத்யாயங்கள்
ஒவ்வொரு அத்தியாயத்திலும் நான்கு பாதங்கள் -ஆக 16 பாதங்கள்
156 அதிகரணங்கள்
545-ஸூத்ரங்கள்-

பூர்வ த்வீகத்தால்
ப்ரஹ்மம் சேதன அசேதனங்களைக் காட்டிலும் வேறுபட்டு விலக்ஷணமாகவும்
ஜகத் காரணமாகவும் உள்ள ஸ்வரூபம் நிரூபிக்கப்படுகிறது
ஞானத்துக்கு விஷயமாக உள்ள த்வீகம்
ப்ரஹ்மம் குறித்து விளக்கும் த்வீகம்
ஆகவே
ஸித்த த்வீகம்
விஷய த்வீகம் –என்றும் கூறப்படும்

உத்தர த்வீகம்
ப்ரஹ்ம உபாஸனை குறித்தும்
பலத்தைக் குறித்தும்
ப்ரஹ்மத்தை அடைய ஸாத்யமாகவும்
ஞான ரூப மாகவும் உள்ள பக்தி உள்ளிட்டவையைப் பற்றி குறித்து உரைப்பதால்
ஸாத்ய த்வீகம்
விஷயீ த்வீகம் என்றும் கூறப்படும்

அத்தியாயங்கள் விவரம்
1-ஸமன்வய அதிகாரம்
ப்ரஹ்மம் ஸமஸ்த சித் அசித் விலக்ஷணம்
ஞான ஆனந்த ஸ்வரூபம்
எல்லையற்ற கல்யாண குணங்களின் இருப்பிடம்
ஸமஸ்த ஏக த்ரிவித -உபாதான -நிமித்த -ஸஹ காரி -காரணம்
அனைத்துக்கும் ஆத்மாவாக உள்ளது
இத்தகைய ப்ரஹ்மத்தை வேதாந்தங்கள் மூலமே அறிய முடியாதகு என்று அறிய முடியும்
அனைத்து வேதாந்த கார்ய வாக்கியங்களும் ப்ரஹ்மத்திடம் இடம் சென்று
ஒடுங்குவதால் ஸமன்வய அத்யாயம் என்ற பெயர் பெற்றது –

2-அவிரோத அத்யாயம்
கீழ் அத்தியாயத்தில் கூறப்பட்ட கருத்தான
ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணப் பொருளாக உள்ளது
ஜகத்து காரியப் -என்னும் பொருளாக உள்ளது என்னும்
ஸித்தாந்தங்கள் எந்த விதத்திலும் -எந்த ப்ரமாணங்களாலும் -எந்த யுக்திகளாலும் -எந்த நியாயத்தாலும்
தள்ளப்பட இயலாது என்று கீழே நிரூபிக்கப் படுகிறது
இந்தக் கருத்துக்களில் எழுகின்ற அனைத்து ஐயங்களும் நீக்கப் படுகின்றன
இதில் வேதாந்தத்துக்கு முரணாக உள்ள அனைத்து மதங்களும் தள்ளப் படுகின்றன –

கீழ் கூறப்பட்ட கருத்துக்களில்
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸம் போன்ற ப்ரமாணங்களுக்குள்
எந்தவிதமான முரண்பாடுகளும் -விரோதம் -உண்டாக வில்லை
என்று கூறுவதால் இப்பெயர் பெற்றது –

3-உபாஸன அதிகாரம்
ப்ரஹ்மத்தை அடையும் உபாயம் ஆராயப்படுகிறது
ஜீவாத்மா தோஷம் உள்ளவன் -ப்ரஹமம் தோஷம் அற்றது -ப்ரஹ்ம உபாஸனம் -உபாஸனை அங்கங்கள் போல்வன
கூறப்படுகின்றன

4-பல அத்யாயம்
உபாஸனம் செய்யும் முறை
அர்ச்சிராதி கதி மார்க்கம்
மோக்ஷத்தின் பலன் -ஆகியவை கூறப்படுகின்றன
கர்மங்கள் விலகுவது முதல் பாதத்திலும்
ஸ்தூல சரீரம் நீங்குதல் இரண்டாம் பாதத்திலும்
ஸூஷ்ம சரீரம் நீங்குதல் மூன்றாம் பாதத்திலும்
ப்ரஹ்மத்தை அடைதல் நான்காம் பாதத்திலும் கூறப்படுகின்றன

அதிகரணம் -இடம் -நீதி மன்றம் -உபநிஷத்துக்களில் உள்ள வாக்கியங்களுடைய ஆழ்ந்த பொருளை
இன்னது என்பதை பல நியாயங்கள் மூலம் உணர்த்தும்
இது
1- விஷயம் -உபநிஷத்தின் எந்த வாக்கியத்தின் ஆழ்ந்த பொருளை நிர்ணயம் செய்யப்படுகிறதோ -அதுவே விஷய வாக்யம்
2- சம்ஸயம் -சந்தேகம் -விஷய வாக்கியத்தில் உண்டாகும் சந்தேகம்
3-சங்கதி -உபநிஷத் -ஸூத்ரம் இவற்றுக்கு இடையே உள்ள சம்பபூர்வ பஷம் –
4-பூர்வ பஷம் உண்மையான ஆழ்ந்த பொருளை ஆராயாமல் மேலோட்டமாக முதன் முதலாக தோன்றும் கருத்து
5-ஸித்தாந்தம் –தாத்பர்ய நிர்ணயம்
ஆராயப்படும் உபநிஷத்தின் உபக்ரமும் உப ஸம்ஹாரமும் –தொடக்கமும் முடிவும்
அப்யாஸமும் -மீண்டும் மீண்டும் உரைத்தல்
அபூர்வதை -இந்த முடிவு ஸாஸ்த்ரத்தால் மட்டுமே உண்டாகும் என்கிற உறுதி
இதன் மூலம் உண்டாகும் பலன்
அர்த்தவாதம் -தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் புகழ்ந்து பேசுதல்
உபபத்தி -இதற்கான காரணம் பிரமாணம் போன்றவை
இவற்றைக் கொண்டு சித்தாந்தம் நிர்ணயம்-

முதல் அத்யாயம் -முதல் பாதம் -அயோக வியச்சேத பாதம் –அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க விசாரம்
அயோகம் -சம்பந்தம் அற்ற நிலை –ப்ரஹ்மத்துக்கு ஜகத் காரணத்துடன் உள்ள சம்பந்தம் அற்ற நிலை
வியச்சேதம் –இந்தக் கருத்தைத் தள்ளுதல்
ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்று நிரூபிக்கப் படுகிறது
அஸ்பஷ்ட–தெளிவில்லாமல் -காணப்படும் வாக்கியங்கள்
ஜீவாதி லிங்க விசாரம்-ஜீவாத்மாவும் ப்ரக்ருதியும் ஜகத் காரணம் என்று
மேல் எழுந்தவாறு கூறுவது போன்ற விஷ வாக்கியங்கள் விசாரம்

இந்தப் பாதத்தில் 11 அதிகரணங்கள்-32 ஸூத்ரங்கள்- உண்டு

1-1-1-ஜிஞ்ஞாசாதி அதிகரணம்-வேத வரிகள் அனைத்தும் ப்ரஹ்மத்தைப் பற்றி உள்ளதால் –
ப்ரஹ்மத்தைப் பற்றிய ஆய்வு சரியானதே-
இந்த ஸாஸ்த்ரம் தொடங்குவதற்கு ஏற்றதே என்று நிரூபணம் –ஒரே ஸூத்ரம்

1-1-2- ஜந்மாத்யாதி அதிகரணம் -படைத்து காத்து அழிப்பது ப்ரஹ்மமே-
ஆகவே ப்ரஹ்மத்தை அறிய வேண்டும் என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்

1-3-சாஸ்திர யோநித்வாதிகரணம் -வேதங்களே மூலமாக ப்ரஹ்மத்தை அறிய வேண்டும் என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்

1-4-சமந்வயாதிகரணம் –ப்ரஹ்மத்துக்கு வேதங்களே பிரமாணங்கள் –
சாஸ்திரமீ ப்ரஹ்மத்தை மட்டுமே புருஷார்த்தமாகவே உணர்த்துகிறது என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்-

1-5-ஈஷத் யதிகரணம் –சத் எனபது ஸ்ரீ மன் நாராயணனே-மூலப்பிரக்ருதி அல்ல என்று நிரூபணம் –8 ஸூத்ரங்கள்

1-6-ஆனந்த மயாதிகரணம் -தைத்ரிய ஆனந்தவல்லியில் ஆனந்த மயமாக உள்ளது ப்ரஹ்மமே –என்று நிரூபணம் -8 ஸூத்ரங்கள்

1-7-அந்தர் அதிகரணம் -ஸூரியனுக்கு உள்ளே உள்ளவனும் கண்களில் உள்ளே உள்ளவனும் ப்ரஹ்மமே .-பரமாத்மாவே என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்

1-8-ஆகாசாதி கரணம் -சாந்தோக்யத்தில் ஆகாயம் எனப் படுவதும் ப்ரஹ்மமே –என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்

1-9-ப்ராணாதி கரணம்–சாந்தோக்யத்தில் பிராணம் எனப்படுவதும் ப்ரஹ்மமே-என்று நிரூபணம் -ஒரே ஸூத்ரம்

1-10-ஜ்யோதிர் அதிகரணம் -சாந்தோக்யத்தில் ஜோதி என்பதும் ப்ரஹ்மமே என்று நிரூபணம்–4-ஸூத்ரங்கள்

1-11-இந்திர பிராணா அதிகரணம் -கௌஷீதகீயில் இந்த்ரன் பிராணன் என்பது ஜீவன் மட்டும் அல்ல -அவற்றைச் சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மமே என்று நிரூபணம்–4 ஸூத்ரங்கள்

————

இரண்டாம் பாதம்-அந்நிய யோக வியவச்சேத பாதம்-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்- -6–அதிகரணங்கள் –

ஜகத்துக்குப் பலவும்-பிரக்ருதியும் -ஜீவாத்மாவும் – காரணம் என்பவர்களைக் குறித்து
அவ்வாறு அல்ல ப்ரஹ்மமே ஜகத்துக்கு ஏக காரணம் என்று நிரூபணம்-33 ஸூத்ரங்கள்-

1-2-1- சர்வத்ர பிரசித்த அதிகரணம்—ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம் -சாந்தோக்யம் -3-14-1-
இவை அனைத்தும் ப்ரஹ்மமே–என்பது பரம் பொருளே–என்று நிரூபணம் -8 ஸூத்ரங்கள்

1-2-2-2-2-அத்தா அதிகரணம் -யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரம் சேபே பவத ஓதந
ம்ருத்யுர் யஸ்ய உபசேஸநம் க இத்தா வேத யத்ர ச -கடவல்லி -2-24-
யாருக்கு அந்தணர் மற்றும் க்ஷத்ரியர் ஆகிய இருவரும் -மற்றவர்களுக்கும் உப லக்ஷணம் -உணவாகிறார்களோ
யாருக்கு எமன் ஊறுகாய் ஆகிறானோ
அவன் எங்கு உள்ளான் என்று யார் அறிவார் என்று அனைத்து சராசரங்களையும் உண்பவனாக கூறப்படுபவன் ப்ரஹ்மமே-என்று நிரூபணம் –4- ஸூத்ரங்கள்

2-3-அந்த்ராதிகரணம் —ச ஏஷோ அக்ஷிணீ புருஷோ த்ருஸ்யதே
ஏஷ ஆத்மேதி ஹேவாஸ ஏதத் அம்ருதம் அபயமேதத் ப்ரஹ்ம –சாந்தோக்யம் -4-15-1-
கண்களில் எந்தப்புருஷன் காணப்படுகிறானோ அவனே ஆத்மா என்றும் அம்ருதம் என்றும்
அபயம் என்றும் ப்ரஹ்மம் என்றும் கூறினார் என்பதில்
ப்ரஹ்மமே என்று நிரூபணம் –4 ஸூத்ரங்கள்-

2-4-அந்தர்யாமி யதிகரணம் -ஏஷ த ஆத்மா அந்தர்யாமி அம்ருத ப்ருஹதாரண்யம் -3-7-23-
உனக்கு ஆத்மாவாகவும் மரணம் அற்றவனாகவும் உள்ள அவனே அந்தர்யாமி ஆவான் என்று என்று நிரூபணம் –3-ஸூத்ரங்கள் –

2-5-அத்ருத்யஸ்வாதி குணாதிகரணம் -அத பரா யயா தத் அக்ஷரம் அதி கம்யதே
யத் தத் அத்ரேஸ்யம் அக்ராஹ்யம் அகோத்ரம் அவர்ணம் அஸஷு ஸ்ரோத்ரம் தத் அபாணி பாதம்
நித்யம் விபும் ஸர்வ கதம் ஸூ ஸூஷ்மம் தத் அவ்யயம் யத் பூத யோநி பரிபஸ்யந்தி தீரா -முண்டகம் -1-1-5,6
பர வித்யை -உயர்ந்த வித்யை மூலம் அடுத்தபடியாக அக்ஷரம் என்ற அழிவற்ற அந்தப் பொருள் அடையப்படுகிறது
அது காணப்படாதது
அறியப்படாதது
கோத்ரம் அற்றது
வர்ணம் அற்றது
கண் மற்றும் காது அற்றது
தலைமையாக உள்ளது
எங்கும் பரவி உள்ளது
மிகவும் நுண்ணியது
அழிவற்றது
பூதங்களுக்குக் காரணமாக உள்ளது
இதனை அனைத்தும் அறிந்தவர்கள் காண்கிறார்கள்
என்பதில் அஷரம் எனப்படுபவனும் ப்ரஹ்மமே-என்று நிரூபணம் -3-ஸூத்ரங்கள் –

2-6-வைஸ்வா நராதிகரணம் —ஆத்மாநம் ஏவ இமம் வைஸ்வா நரம் வைஸ்வா நரம் ஸம் ப்ரத்யத் யேஷி தமேவ நோ ப்ரூஹி -சாந்தோக்யம் -5-11-6-
இப்போது நீவிர் இந்த வைஸ்வா நர ஆத்மாவை உபாஸிக்கிறீர்
அவனைக் குறித்து எங்களுக்கு உரைப்பீராக என்று தொடங்கி
யஸ்த் வேத மேதம் ப்ராதேச மாத்ரமபி விமாந மாத்மாநம் வைஸ்வா நரம் அபாஸ்தே –சாந்தோக்யம் -5-18-1-
எங்கும் இருப்பதன் காரணமாக அளவற்றவனாக உள்ள வைஸ்வா நர ஆத்மாவை ஓர் இடத்தில்
உள்ளவன் என்று யார் உபாஸிக்கிறானோ
என்று முடியும் பகுதியில் கூறப்படும் வைஸ்வாநரன் எனப்படுபவனும் பரம் பொருளே-என்று நிரூபணம் –9-ஸூ த்ரங்கள் –

————–

மூன்றாம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-இங்கு ப்ரக்ருதியும் ஜீவாத்மாவும் ஜகத் காரணம் என்று தெளிவாக உள்ளது போல் உள்ள வாக்கியங்களின் விசாரம் -10 -அதிகரணங்கள் –44 ஸூத்ரங்கள்-

1-3-1-த்யுத்வாத்யதிகரணம் -யஸ்மின் த்யவ் ப்ருத்வீ ச அந்தரிக்ஷ மோதம் மனஸ் ஸஹ பிராணைச் ச ஸர்வை
தமே வைகம் ஜாநதாத்மாநம் அன்யா வாஸோ விமுஞ்சத அம்ருதஸ் யைஷ சேது
யாரிடம் தேவ லோகம் பூமி அந்தரிக்ஷம் மனம் அனைத்து இந்திரியங்கள் ஆகியவைகள் சேர்ந்து உள்ளனவோ
அந்த ஆத்மா ஒருவனையே அறிவீர்களாக
மற்ற சொற்களைக் கை விடுவீர்களாக
அவனே மோக்ஷத்துக்கு வழி ஆவான் என்பதில் கூறப்பட்ட –த்யு லோகம் -ஸ்வர்க்கம் -பூமி போன்றவற்றுக்கு
இருப்பிடமாக கூறப்படுபவன் ப்ரஹ்மமே என்று நிரூபணம் –6- ஸூத்ரங்கள் –

1-3-2-பூமாதி கரணம் -யதா நான்யத் பஸ்யதி நான்யத் ஸ்ருணோதி நான்யத் விஜா நாதி ஸ பூமா
அத யத்ர அந்யத் பஸ்யதி அந்யத் ஸ்ருணோதி அந்யத் விஜா நாதி ததல்பம் –சாந்தோக்யம் -7-24-1-
எந்த ஒன்றை அறியும் போது வேறு ஒன்றைக் காண்பதும் கேட்பதும் அறிவதும் இல்லையோ அதுவே பெரிதாகும் -பூமா
எதனை அறியும் போது மற்ற ஒன்றைக் ஒன்றைக் காண்பதும் கேட்பதும் அறிவதும் உண்டோ அது சிறியதாக
என்பதில் உள்ள பூமா எனப்படுவதும் ப்ரஹ்மமே என்று நிரூபணம் –2-ஸூத்ரங்கள் –

1-3-3-அஷர அதி கரணம் -ஸ ஹோவாஸ ஏதத் வை தத் அக்ஷரம் கார்க்கி
ப்ராஹ்மணா அபி வதந்தி அஸ்தூலம் அநணு அஹ்ரஸ்வம் அதீர்க்கம் அலோஹிதம் அஸ்நேஹம்
அமச்சாயம் -ப்ருஹதாரண்யம் -3-8-8-
யாஜ்ஞ வல்க்யர் கார்க்கியிடம் -இதனையே ப்ரஹ்மம் அறிந்தவர்கள் அக்ஷரம் என்று கூறுகிறார்கள்
அது ஸ்தூலமானதும் அல்ல
ஸூஷ்ம மானதும் அல்ல
குட்டையானதும் அல்ல
நீளமானதும் அல்ல
சிவப்பானதும் அல்ல
பசையானதும் அல்ல
நிழலுடன் கூடியதும் அல்ல
என்பதில் மூல ப்ரக்ருதிக்கு ஆதாரமாகக் கூறப்படும் அஷரம் எனபது ப்ரஹ்மமே –என்று நிரூபணம் –3-ஸூ த்ரங்கள்

1-3-4-ஈஷதி கர்மாதிகரணம் -ய புநரேதம் த்ரி மாத்ரேண ஓம் இதி ஏதேந ஏவ அஷரேண பரம் புருஷம் அபித்யாயீத
ஸ தேஜஸீ ஸூர்யே சம்பந்நோ யதா பாதோதர த்வச்சா விநிர் முச்யதே
ஏவம் ஹ வை ஸ பாப்மநா விநிர் முக்த ச ஸாமபி உந்நீயதே ப்ரஹ்ம லோகம்
ஸ ஏதஸ் மாத் ஜீவ நாத் பராத்பரம் புரிசயம் புருஷன் ஈஷதே -ப்ர-5-5-
மூன்று மாத்திரைகள் கொண்டதான இந்த ஓம் என்ற அக்ஷரத்தை மட்டுமே கொண்டு
யார் ஒருவன் இந்தப் பரம புருஷனைத் த்யானம் பண்ணுகிறானோ
அவன் மிகுந்த தேஜஸ் கொண்டதான ஸூர்யனை அடைத்தவனாக
பாம்பு தனது சட்டையை உரிப்பது போன்று பாபத்தில் இருந்து நீங்கப் பெற்றவனாக
ஸாம கானம் செய்பவர்களால் ப்ரஹ்ம லோகத்தில் சேர்க்கப் பட்டவனாக உள்ளான்
இந்த்ரியங்களைக் காட்டிலும் உயர்ந்த ஜீவாத்மாவைக் காட்டிலும் மிக உயர்ந்தவனும்
ஹ்ருதயத்தில் உள்ளவனும் ஆகிய புருஷனைக் காண்கிறான்
என்பதில் உள்ள காணப்படுபவன் ப்ரஹ்மமே-என்று நிரூபணம் –ஒரே ஸூ த்ரம்

1-3-5-தஹராதி கரணம் —அத யதிதம் அஸ்மின் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம தஹர
அஸ்மின் அந்தர ஆகாஸ தஸ்மிந் யதந்தஸ் தத் அன்வேஷ்டவ்யம் தத்வாவ விஜிஜ்ஜ்ஞாஸி தவ்யம் –சாந்தோக்யம் -8-1-1-
ப்ரஹ்மத்தின் இருப்பிடமான இந்த சரீரத்தில் தாமரை போன்ற சிறியதான ஹ்ருதயம் இடம் உள்ளது
அதற்குள் ஸூஷ்மமான ஆகாசம் உள்ளது
அதற்குள் இருப்பதே தேடப்பட்டு புரிந்து கொள்ள வேண்டியதாகும்
என்பதில் தஹரம் என்னும் இடத்தில் -ஆகாசத்தில் -உள்ளவன் ப்ரஹ்மமே என்று நிரூபணம் –10 ஸூ த்ரங்கள் –

1-3-6–ப்ரமிதாதி கரணம் -அங்குஷ்ட மாத்ர புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி
ஈஸோநோ பூத பவ் யஸ்ய ந ததோ விஜூ குப்ஸதே –ஏதத் வை தத் -கட –4-12-13-6-17-
எந்தப்புருஷன் கட்டை விறல் அளவு கொண்டவனாக ஆத்மாவின் நடுவில் உள்ளானோ
இறந்த காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை எல்லாம் நியமித்தபடி உள்ளானோ
அவ்விதம் அமர்வதில் எந்தவித வெறுப்பும் இல்லாமல் உள்ளானோ
அவனே அடையப்பட வேண்டியவன் -என்று இவற்றில்
-கட்டை விரல் அளவுள்ளவன் ப்ரஹ்மமே –என்று நிரூபணம் -2- ஸூ த்ரங்கள்

1-3-7-தேவாதிகரணம் -தேவர்களுக்கும் ப்ரஹ்ம உபாசனையில் அதிகாரம் உண்டு என்று நிரூபணம் -5 ஸூ த்ரங்கள்

1-3-8–மத்வதிகரணம் -ஆதித்யன் போன்ற தேவர்களுக்கு சாந்தோக்யத்தில் உள்ள மதுவித்யையில் அதிகாரம் உண்டு என்று நிரூபணம் –3- ஸூ த்ரங்கள்

1-3-9-அப ஸூ த்ராதி கரணம் -ஸூத்ரர்களுக்கு ப்ரஹ்ம வித்யைகளில் அதிகாரம் இல்லை –என்று நிரூபணம் –7- ஸூ த்ரங்கள்

1-3-6-ப்ரமிதாதி கரணம் சேஷம்-இதில் இரண்டு ஸூ த்ரங்கள்

1-3-10-அர்த் தாந்தரத்வ அதி வ்யபதேச அதிகரணம்-ஆகாஸோ ஹ வை நாம ரூபயோர் நிர்வஹிதா தே யதந்தரா
தத் ப்ரஹ்ம தத் அம்ருதம் ஸ ஆத்மா –சாந்தோக்யம் -8-14-1-
ஆகாசம் என்பது பெயர் மற்றும் ரூபங்களை ஏற்படுத்துகிறது
இவை இன்றி உள்ளது எதுவோ அதுவே ப்ரஹ்மமாகவும் அம்ருதமாகவும் ஆத்மாவாகவும் உள்ளது
என்பதில் நாம ரூப விபாகம் ஏற்படுத்தியவன் பரமாத்மாவே என்பதால்
ஆகாயம் என்பது ப்ரஹ்மமே—என்று நிரூபணம் –3-ஸூ த்ரங்கள்

——-

நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

1-4-1-ஆநுமாநிகாதி கரணம் –இந்த்ரியேப்ய பரா ஹி அர்த்தா -அர்த்தேப் யச்ச பரம் மனஸ்
மனஸ் ஸஸ்து பரா புத்திர -புத்தே ஆத்மா மஹான் பர
மஹத பரம் அவ்யக்தம் அவ்யக்தாத் புருஷ பர -புருஷான் ந பரம் கிஞ்சித்
ஸா காஷ்டா ஸா பரா கதி –கட –3-10-11-என்று
இந்த்ரியங்களைக் காட்டிலும் உயர்ந்தவை அவற்றால் அறியப்படும் விஷயங்கள்
அந்த விஷயங்களைக் காட்டிலும் உயர்ந்தது மனம்
மனத்தை விட உயர்ந்தது புத்தி என்னும் அறிவு
புத்தியை விட உயர்ந்தது ஆத்மாவாகிய மஹான்
மஹானைக் காட்டிலும் பெரியது அவ்யக்தம்
அவ்யக்தத்தைக் காட்டிலும் உயர்ந்தவன் புருஷன்
புருஷனைக் காட்டிலும் உயர்ந்தது ஏதும் இல்லை
புருஷனே உயர்ந்த எல்லையாகவும்
ப்ரஹ்மத்தை ஆத்மாவாகக் கொள்ளாத மூலப் பிரக்ருதியானது ஜகத்தின் காரணப்பொருள்
என்று கூறப்பட வில்லை என்று நிரூபணம் –7- ஸூ த்ரங்கள்

1-4-2-சமசாதிகரணம்—அஜாம் ஏகம் லோகித சுக்ல க்ருஷ்ணாம் பஹ்வீ ப்ரஜா ஸ்ருஜமாஸ ரூபா
அஜோ ஹி ஏகோ ஜூஷ மாண அநு சேதே ஜஹாதி ஏனாம் புக்த போகாம அஜ அந்நிய –ஸ்வேதாஸ்வர -4-5-
சிவப்பு ரஜஸ்
வெளுப்பு சத்வம் மற்றும் கறுப்பு தமஸ் ஆகிய மூன்று நிறங்களைக் -குணங்களைக் கொண்டதாகவும்
தன்னைப் போன்றே மேலும் பல பிரஜைகளை உண்டாக்குவதாகவும்
பிறப்பற்றதாகவும் உள்ள
ஒன்றுடன் -பிரக்ருதியுடன்
பிறப்பற்ற ஒருவன் -ஜீவாத்மா -மகிழ்ச்சியுடன் கூடி உள்ளான்
தன்னால் அனுபவிக்கப் பட்ட இந்தப் பிரக்ருதியை மற்ற ஒருவன் -முக்தாத்மா -விட்டுச் செல்கிறான்
என்பதில் உள்ள அஜா என்ற சொல்லால் ப்ரஹ்மத்தை அந்தர்யாமியாகக் கொண்டு உள்ளது பிரகிருதி என்று நிரூபணம் -3-ஸூ த்ரங்கள்

1-4-3-சங்க்ய உப சங்க்ரஹாதி கரணம் —யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜநா ஆகா கச்ச ப்ரதிஷ்டித –ப்ருகு –4-4-17-
எந்த ஆத்மாவிடம் ஐந்து ஐந்து பேர்கள் மற்றும் ஆகாசம் ஆகியவை நிலை நிற்கின்றனவோ
என்னும் வாக்கியத்தை ஆராயும் போது இந்த்ரியங்களுக்கும் ஆகாசம் போன்ற அனைத்துக்கும் ப்ரஹ்மமே அந்தர்யாமி –என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்

1-4-4-காரணத்வாதி கரணம் -வேதங்கள் அனைத்துமே ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் –என்று உரைக்க முடியும் என்று நிரூபணம் –2- ஸூ த்ரங்கள்

1-4-5-ஜகத்வாசித்வாதி கரணம் –யோ வை பாலாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய ச ஏதத் கர்ம
ஸ வை வேதி தவ்ய –கௌஷீகீ -4-18-
பாலாகீ -யார் இந்த புருஷர்களுக்குக் கர்த்தாவாக உள்ளானோ
யாருக்கு இந்த புண்ய பாப ரூபமான கர்மம் உள்ளதோ
அவனே அறியத்தக்கவன் என்பதில்
அறியத்தக்கவனாக உபதேசிக்கப் படுபவன் ப்ரஹ்மமே அறியத்தக்கது –என்று நிரூபணம் –3 ஸூ த்ரங்கள்

1-4-6-வாக்ய அந்வயாதி கரணம் -ஆத்மநி கல்வரே
த்ருஷ்டே ஸ்ருதே மதே விஞ்ஞாதே இதம் ஸர்வம் விதிதம் -ப்ரு -4-5-6-
அந்த ஆத்மாவே காணப்பட வேண்டியது
கேட்கப்பட வேண்டியது
நினைக்கப்பட வேண்டியது
மற்றும் தியானிக்கப்பட வேண்டியது
ஆத்மாவைக் காணவும் கேட்கவும் நினைக்கவும் தியானிக்கவும் அறியவும் செய்தால்
இவன் அனைத்தையுமே அறிந்தவன் ஆகிறான்
என்பதில் காணப்படுபவனாக சொல்வது ப்ரஹ்மமே –என்று நிரூபணம் -4-ஸூ த்ரங்கள்

1-4-7-பிரக்ருத்யதிகரணம் —ப்ரஹ்மம் ஜகத்துக்கு நிமித்த காரணமாக மட்டுமே அல்லாமல்
ப்ரஹ்மமே உபாதான காரணமாகவும் உள்ளான் என்று நிரூபணம் -6-ஸூ த்ரங்கள் –

1-4-8-சர்வ வியாக்யான அதிகரணம் -பரமாத்மாவுக்கே உரிய தன்மைகள் படிக்கப் படுவதால்
ஹிரண்ய கர்ப்பன் முதலான சொற்களால் படிக்கப் படுபவன் பரமாத்மாவான ஸ்ரீ மன் நாராயணனே ஆவான் என்று
அனைத்து வித்யைகளும் கூறுகின்றன என்று நிரூபணம் -1 -ஸூ த்ரம் –

—————-

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –ஸ்வ பக்ஷ ஸ்தாபனம் இதில் –
முதல் பாதம் ஸ்ம்ருதி பாதம் –10 அதிகரணங்கள் –36 ஸூத்ரங்கள்

2-1-1. ஸ்ம்ருதி அதி கரணம்–கபில மஹரிஷியால் -பிரக்ருதியே ஜகத் காரணம் என்பது மயக்கத்தால் இயற்றப் பட்டது என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்

2-1-2. யோக ப்ரத் யுக்தி அதி கரணம்–நான்முகனால் இயற்றப்பட்ட யோக ஸ்ம்ருதி நிரஸனம் -1 ஸூ த்ரம்

2-1-3–விலக்ஷணத்வ அதி கரணம்–வேறுபட்ட பலவற்றையும் கொண்டுள்ள ஜகத்துக்கு ப்ரஹ்மம்
காரணமாக இருப்பதில் குறையில்லை என்று நிரூபணம் -9-ஸூ த்ரங்கள்

2-1-4. ஶிஷ்ட அபரிக்ரஹ அதிகரணம்-பரம அணுவே ஜகாத் காரணம் என்று கூறும்
நையாயிக மதம்
காணாதருடைய வைசேஷிக மதம்
சமண மதம் -போன்றவை நிரஸனம் -1 ஸூ த்ரம்

2-1-5. போக்த்ரு ஆபத்தி அதி கரணம்–ஜீவாத்மாவின் ஸூக துக்கங்கள் கர்மத்தின் அடிப்படையில் உண்டாவதால்
ப்ரஹ்மத்துக்கு ஸூக துக்கங்கள் இல்லை என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

2-1-6. ஆரம்பண அதிகரணம்–காரணப் பொருளாக உள்ள ப்ரஹ்மத்தைக் காட்டிலும் காரியப் பொருளான ஜகத்
வேறுபடாதவையே ஆகும் என்று நிரூபணம் -6 ஸூ த்ரங்கள்

2-1-7. இதர வ்யபேதஶ அதிகரணம்–ஜீவனும் ப்ரஹ்மமும் வெவ்வேறு என்று ஸ்ருதி கூறுவதால்
ப்ரஹ்மத்தை ஜீவனாகக் கூறுவதால் தோஷங்கள் ஏற்படும் என்னும் வாதம் நிரஸனம் –3 ஸூத்ரங்கள்

2-1-8. உபஸம்ஹார தர்ஶந அதி கரணம்–பொருள்களைச் செய்வதற்கு அவசியமான உப கரணங்கள் ப்ரஹ்மத்துக்கு இல்லை
ஆயினும் ப்ரஹ்மம் ஜகாத் ஸ்ருஷ்டி செய்வதில் குறையில்லை என்று நிரூபணம் –2- ஸூ த்ரங்கள்

2-1-9. க்ருத்ஸ்ந ப்ரஸக்த அதிகரணம்–அவயவங்கள் இல்லாத ப்ரஹ்மத்தின் இடம் இருந்து இந்த ஜகத் உண்டானது
ஆயினும் அந்தப் ப்ரஹ்மமே உபாதானக் காரணம் என்பதில் குறையில்லை என்று நிரூபணம் -6-ஸூ த்ரங்கள்

2-1-10. ப்ரேயாஜநத்வ அதி கரணம்-ப்ரஹ்மம் அவாப்த ஸமஸ்த காமனாக இருந்தாலும்
லீலா-தத்கால -விளையாட்டு ரூபமாக உள்ள பலன் -காரணமாக ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்பதில் கீரையில் -என்று நிரூபணம் –5-ஸூ த்ரங்கள்

———

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
இரண்டாம் பாதம் தர்க்க பாதம் -இதில் பரபஷ ப்ரதிஷேதம் -சாங்க்ய -வைசேஷிக -புத்த -ஜைன -சைவ மத நிரஸனம்
பாஞ்சராத்ர ஆகமம் பிரமாணம் அல்ல என்னும் வாதமும் நிரஸனம் –8-அதிகரணங்கள் –42-ஸூத்ரங்கள்

2-2-1. ரசநா அநுபபத்தி அதிகரணம்–சாங்க்யர் கருத்துக்கள் அனைத்தும் நிரஸனம் -9 ஸூ த்ரங்கள்

2-2-2- மஹத் தீர்க அதி கரணம்–வைசேஷிகர் கருத்துக்கள் அனைத்தும் நிரஸனம் -97ஸூ த்ரங்கள்

2-2-3- -ஸமுதாய அதிகரணம்-புத்த மத பிரிவான வை பாஷிகர் சவ்த்ராந்திகர் மாதங்கள் நிரஸனம் –10 ஸூ த்ரங்கள்

2-2-4- உபலப்தி அதி கரணம்-புத்த மதத்தின் யோகாசார மதம் நிரஸனம் -3 ஸூ த்ரங்கள்

2-2-5- ஸர்வதா அநுபபத்தி அதி கரணம்-புத்த மதத்தின் பிரிவான மாத்யமிக மதம் நிரஸனம் -1 ஸூ த்ரம்

2-2-6- ஏகஸ்மிந் அஸம்பவ அதி கரணம்-ஜைன மத நிரஸனம் -4 ஸூத்ரங்கள்

2-2-7- பசுபதி அதி கரணம்–பாசுபத மத நிராசனம் -4-ஸூத்ரங்கள்

2-2-8- உத்பத்தி அஸம்பவ அதிகரணம்–ஜீவாத்மாவின் உத்பத்தி கூறுவது போன்று உள்ளதால்
பாஞ்சராத்ர ஆகமம் பிரமாணம் அல்ல என்கிற வாதம் நிரஸனம் -4-ஸூத்ரங்கள்

————–

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
மூன்றாம் பாதம் – வியத் பாதம் –-இதில் ஆகாசத்துக்கு ஸ்வரூப ஸ்வ பாவ விகாரங்கள் உள்ளன என்றும்
ஆகாசமும் ப்ரஹ்ம காரியமே என்று நிரூபணம் இந்தப் பாதத்தில் -7-அதிகரணங்கள் –52-ஸூத்ரங்கள்-

2-3-1-வியத் அதி கரணம்–வியுத் எனப்படும் ஆகாசமும் ப்ரஹ்மத்தின் காரியப்பொருளே என்று நிரூபணம் -9- ஸூ த்ரங்கள்

2-3-2-தேஜஸ் அதிகரணம்–ஆகாஸம் போன்றவற்றை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே
தேஜஸ் போன்றவை உண்டாகின்றன என்று நிரூபணம்–8-ஸூத்ரங்கள்

2-3-3. ஆத்மா அதிகரணம்–ஆத்மாக்களுக்கு உத்பத்தி இல்லை என்று நிரூபணம்–1-ஸூத்ரம்

2-3-4- ஜ்ஞ: அதிகரணம்–ஞான ஸ்வரூபமாக உள்ள ஜீவாத்மா ஞானத்தை குணமாகவும் கொண்ட படியும்
அறிபவனாகவும் உள்ளான் என்று நிரூபணம் -14 ஸூத்ரங்கள்

2-3-5- கர்த்ரு அதி கரணம்–ஜீவனுக்கு செயல்களை செய்பவனாக உள்ள தன்மை
கர்த்ருத்வம் உண்டு என்று நிரூபணம் -5 ஸூத்ரங்கள்

2-3-6- பர ஆயத்த அதிகரணம்–ஜீவாத்மாவின்
கர்த்ருத்வம் என்பது பரமாத்மாவின் கட்டளைக்கு உட்பட்டதே யாகும் என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்

2-3-7- அம்ஶ அதி கரணம்–ஜீவாத்மா
பரமாத்மாவின் அம்சமாகவே உள்ளான் என்று நிரூபணம் -11 ஸூத்ரங்கள்

————-

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
நான்காம் பாதம் – பிராண பாதம் –-ஜீவனின் உபகரணமாக உள்ள பிராணங்கள் இந்திரியங்கள் ஆகியவை
ஸ்வரூபத்துக்கு ஏற்றபடி ஸ்வரூப ஸ்வ பாவக விகாரங்கள் உள்ளன என்றும்
இவற்றுக்கும் ப்ரஹ்ம கார்யத்வம் உண்டு என்று நிரூபணம்
8-அதிகரணங்கள் –19-ஸூத்ரங்கள்-

2-4-1- ப்ராண உத்பத்தி அதி கரணம்–சதபத ப்ராஹ்மணம் -6-1-1- விசாரிக்கப்படுகிறது
இந்திரியங்கள் ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே உத்பத்தி என்று நிர்ப்பனம் –3- ஸூத்ரங்கள்

2-4-2- ஸப்தகதி அதி கரணம்–இந்திரியங்கள் ஏழு அல்ல 11 என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்

2-4-3- ப்ராண அணுத்வ அதி கரணம்–இந்திரியங்களும் அணு அளவே ஆகும் என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்

2-4-4- வாயு க்ரியா அதி கரணம்–முக்ய பிராணன் வாயுவோ செயல்பாடோ அல்ல என்று நிரூபணம் –4-ஸூத்ரங்கள்

2-4-5- ஶ்ரேஷ்ட அணுத்வ அதி கரணம்-முக்ய பிராணனும் அணு அளவே என்று நிரூபணம் –1 ஸூத்ரம்

2-4-6- ஜ்யோதி ஆதி அநுஷ் டாந அதிகரணம்–ஜீவன் அக்னி முதலான தேவதைகள் பிராணனை அண்டி நிற்பது
பரமாத்மாவின் ஆஜ்ஜையாலே தான் என்று நிரூபணம் –

2-4-7- இந்த்ரிய அதி கரணம்–இந்திரியங்கள் அனைத்தும் முக்ய பிராணனை விட வேறுபட்டவை என்று நிரூபணம் -2- ஸூத்ரங்கள்

2-4-8- ஸம்ஜ்ஞா மூர்த்தி க்லுப்தி அதி கரணம்–த்ரி வ்ருத் கரணம் மற்றும் நாம ரூப விபாகன்கள் செய்பவன்
ஒருவனே ஆவான் என்று நிரூபணம் –2 -ஸூத்ரங்கள் –

—————–

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
முதல் பாதம் – வைராக்ய பாதம் –

ஜீவாத்மா ஒரு சரீரத்தில் இருந்து வேறே ஒரு சரீரத்துக்குள் செல்லும் போதும்
சுவர்க்கம் நரகம் இவற்றால் இருந்து அடுத்த சரீரம் எடுக்க பூமியில் வரும் போதும்
பூத ஸூஷ்மங்கள் மற்றும் எஞ்சிய கர்மங்களுடனே வருகிறான் என்றும்
இதன் காரணமாக பல தாழ்வுகளை அனுபவிக்க வேண்டி வருகிறது என்றும் கூறி
இதன் மூலம் கர்மங்கள் காரணமாக இந்தச் சரீரத்துடன் சேர்ந்துள்ள ஸம்ஸாரத்தில் வைராக்யம் உண்டாக்குகிறார்
மேலும் ஜீவாத்மாவின் பலவித தோஷங்களும் இந்தப் பாதத்தில் காண் பிக்கப்படுகின்றன –6-அதிகரணங்கள் –27-ஸூத்ரங்கள்-

3-1-1-தத் அந்தர ப்ரதி பத்தி அதி கரணம்–சாந்தோக்யத்தில் கூறியபடி ஜீவன் ஒரு உடலை விட்டு வெளியே கிளம்பும் போது
பஞ்ச பூதங்களுடன் கூடியவனாக ஸூஷ்ம ரூபத்துடன் செல்கிறான் என்று நிரூபணம் –7-ஸூத்ரங்கள்

3-1-2- க்ருத அத்யய அதி கரணம்–யாவத் ஸம் பாதம் உஷித்வா அத ஏதமேவ அத் வாநம் புநஸ் நிவர்த்தந்தே –சாந்தோக்யம் -5-10-5-
கர்மபலன் உள்ளவரையில் ஸ்வர்க்கத்தில் வாழ்ந்து அதன் பின்னர் உலகிற்குத் திரும்புகின்றனர்
என்கிறபடியே ஜீவன் தான் அனுபவிக்க வேண்டிய எஞ்சிய கர்ம பழங்களுடன் வருகிறான் என்று நிரூபணம் –4-ஸூத்ரங்கள்

3-1-3- அநிஷ் டாதி கார்ய அதி கரணம்–பாபம் செய்தவர்கள் சந்த்ர மண்டலம் செல்வது இல்லை என்று நிரூபணம் 10-ஸூத்ரங்கள்

3-1-4- தத் ஸ்வாபாவ்ய ஆபத்தி அதி கரணம்-மேலே கிளம்பும் ஜீவன் ஆகாசம் போன்றவற்றுடன் தொடர்பு மற்றும் அடைகிறான் என்று நிரூபணம் -1-ஸூத்ரம் –

3-1-5- ந அதி சிர அதி கரணம்–ஆகாசம் போன்றவற்றில் ஜீவன் சிறிது காலமே மட்டுமே தங்கி விட்டுக் கிளம்புகிறான் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-1-6- அந்ய அதிஷ்டித அதி கரணம்-மேகோ பூத்வா ப்ரவர்ஷதி
த இஹ வ்ரீஹி யவா ஓஷதி வநஸ்பதயே தில மாஷா இதி ஜாயந்தி -சாந்தோக்யம் -5-10-6-
மேகமாகி பின்பு மழை யாகிறான்
அதன் மின்னார் நெல் கோதுமை மூலிகைகள் செடிகள் எள் உளுந்து போன்றவையாகப் பிறக்கிறான்
என்கிற வாக்யம் ஆராயப்பட்டு
ஜீவாத்மா தானியம் போன்றவற்றைச் சரீரமாகக் கொண்டுள்ள மற்ற ஜீவன்களுடன் நெருங்கிய தொடர்பு மட்டுமே கொள்கிறான் என்று நிரூபணம் -4- ஸூத்ரங்கள் –

———

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
இரண்டாம் பாதம் – உபய லிங்க பாதம் –

கீழ் பாதத்தில் கூறப்பட்ட விஷயங்களால் வைராக்யம் ஏற்பட்டு அப்படிப்பட்டவனுக்கு
ப்ரஹ்மத்தைக் குறித்து ஆசை உண்டாக -அனைத்து விதமான தாழ்வுகளுக்கு எதிர்த்தட்டாக இருத்தலும்
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாயும் கொண்ட
இரண்டு –
அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாணை ஏக குண தாயகனாய் -உபய -லிங்கங்கள் உடன் ப்ரஹ்மம் உள்ளான் என்று நிரூபணம் -8-அதிகரணங்கள் –40-ஸூத்ரங்கள்-

3-2-1- ஸந்த்யா அதி கரணம்–ஜீவன் தனது கனவில் காணும் பொருள்கள் அனைத்தும் பரமாத்மாவால் படைக்கப் படுகின்றன என்று நிரூபணம் –6- ஸூத்ரங்கள்

3-2-2- தத் அபாவ அதி கரணம்–ஜீவாத்மா உறங்கும் இடங்களாக ஹிதா ப்ரீதத் மற்றும் ப்ரஹ்மம்
ஆகியவை கூறப்பட்டு ஸித்தாந்தம் நிரூபணம் -2 ஸூத்ரங்கள்

3-2-3- கர்ம அநு ஸ்ம்ருதி ஶப்த விதி அதி கரணம்–உறங்கிய ஜீவனே மீண்டும் விழித்து எழுகிறான்
அவன் வேறு ஒரு ஜீவன் அல்லன் என்று நிரூபணம் –1- ஸூத்ரம்

3-2-4- முக்த அதி கரணம்–மோர்ச்சை என்னும் மயக்க நிலை
என்பது
விழிப்பு கனவு ஆழ்ந்த உறக்கம் -ஆகியவற்றைக் காட்டிலும் மாறுபட்டது என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-2-5- உபய லிங் க அதி கரணம்–சரீரங்களில் அந்தர்யாமியாக ப்ரஹ்மம் உள்ள போதிலும்
சரீரங்கள் தோஷங்கள் ப்ரஹ்மத்தைத் தீண்டுவது இல்லை என்று நிரூபணம் –15- ஸூத்ரங்கள்

3-2-6- அஹி குண் டல அதிகரணம்-ப்ரஹ்மம் அசேதனப் பொருள்களைத் தனது ரூபமாகக் கொண்டாலும்
அந்த அசேதனங்களில் உள்ள தோஷங்கள் ப்ரஹ்மத்திடம் ஏற்படுவது இல்லை என்று நிரூபணம் -4- ஸூத்ரங்கள்

3-2-7- பர அதி கரணம்–ப்ரஹ்மத்தைக் காட்டிலும் உயர்ந்த வாஸ்து வேறே எதுவும் இல்லை என்றும்
இதைத் தவிர வேறே அடைய வேண்டிய இலக்கு வேறே எதுவும் இல்லை என்று நிரூபணம் -7- ஸூத்ரங்கள்

3-2-8- பல அதி கரணம்–அனைத்துக் கர்மங்களின் பலனையும் பரமாத்மாவே அளிக்கிறான் என்று நிரூபணம் -4- ஸூத்ரங்கள்

———–

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
மூன்றாம் பாதம் – குண உப சம்ஹார பாதம் –

பல ப்ரஹ்ம வித்யைகள் உண்டு -இவற்றில் கூறப்பட்ட பல்வேறு குணங்களை ஒன்றாகத் திரட்டிய பொருள் கொள்ள வேண்டும்
இந்தப்பாதத்தில் ப்ரஹ்மம் ஸ குண ப்ரஹ்மமே என்று நிரூபணம் 26-அதிகரணங்கள் –64-ஸூத்ரங்கள்-

3-3-1- ஸர்வ வேதாந்த ப்ரத்யய அதி கரணம்–வைஸ்வாநர வித்யை -தஹர வித்யை போன்ற
பல வேறு வித்யைகள் பல வேறு சாகைகளில் ஓதப்படுகின்றன
இவை அனைத்தும் ஒன்றே என்று நிரூபணம் -5- ஸூத்ரங்கள்

3-3-2- அந்யதாத்வ அதிகரணம்–சாந்தோக்யம் ப்ருஹத் உபநிஷத்துக்களில் உள்ள உத்கீத வித்யைகள் வெவ்வேறே என்று நிரூபணம் -4-ஸூத்ரங்கள்

3-3-3- ஸர்வ அபேத அதி கரணம்–சாந்தோக்யம் -கௌஷீதகீ -இவற்றில் கூறப்படும் பிராண வித்யை ஒன்றே என்று நிரூபணம் –1 ஸூத்ரம்

3-3-4- ஆநந்தாதி அதி கரணம்
ப்ரஹ்மம் ஆனந்த மயமானது
மாற்றம் அடையாமல் உள்ளது
ஞான மயமானது
அளவு படுத்த இயலாதது
தோஷங்கள் அனைத்துக்கும் எதிர் தட்டாய் உள்ளது
இந்த ஐந்து குணங்களும் அனைத்து வித்யைகளிலும் படிக்கப்பட வேண்டும் என்று நிரூபணம் -7- ஸூத்ரங்கள்

3-3-5- கார்ய ஆக்யாந அதி கரணம்–ஆசமனம் செய்யப்படும் நீரானது ப்ராணனுக்கு வஸ்திரமாக எண்ணப்பட வேண்டும் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-3-6- ஸமாந அதி கரணம்–அக்னி ரஹஸ்யம் ப்ருஹத் ஆரண்யகம் -இவற்றில் கூறப்பட்ட சாண்டில்ய வித்யை ஒன்றே என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-3-7- ஸம்பந்த அதி கரணம்–ஆதித்யனை இருப்பிடமாகக் கொண்ட ப்ரஹ்மம் என்பதன் மூலம் அந்தராதித்ய வித்யை என்பதும்
கண்களை இருப்பிடமாக ப்ரஹ்மம் என்பதால் அஷி வித்யை என்பதும்
எண்ணப்பட பிவேண்டும் என்று நிரூபணம் -3- ஸூத்ரங்கள்

3-3-8- ஸம்ப்ருதி அதி கரணம்–கட உபநிஷத்தில் உள்ள தரித்தல் என்னும் தன்மை
மற்றும் வியாபித்தல் என்னும் தன்மைகள்
அனைத்து வித்யைகளிலும் உபாஸிக்க வேண்டியது இல்லை என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-3-9- பு ருஷ வித்ய அதி கரணம்–சாந்தோக்யத்திலும் தைத்ரியத்திலும் கூறப்படும் புருஷ வித்யைகள் வெவ்வேறே என்று நிரூபணம் 1- ஸூத்ரம்

3-3-10- வேதாதி அதி கரணம்–தைத்ரிய சீஷா வல்லி யில் உள்ள சில மந்த்ரங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் அல்ல என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-3-11-ஹாநி அதி கரணம்–புண்ணியம் மற்றும் பாப கர்மங்கள் மோக்ஷம் பெறுபவனிடம் இருந்து விலகி
மற்றவர்கள் இடம் சேர்கின்றன என்று அனைத்து வித்யைகளிலும் கொள்ள வேண்டும் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-3-12- ஸாம்பராய அதி கரணம்–உபாசகனின் கர்மம் முழுவதும் அவன் தனது உடலை வீட்டுக் கிளம்பும் காலத்தில்
அழிந்து விடுகின்றன என்று நிரூபணம் -5- ஸூத்ரங்கள்

3-3-13-அநியம அதி கரணம்–அனைத்து வித்யைகளுக்கும் அர்ச்சிராதி கதி மார்க்கம் பொதுவானது -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-3-14- அஷரதி அதி கரணம்–தாழ்வுகளால் தீண்டப்படாமல் உள்ள ப்ரஹ்மத்தின் மேன்மை
அனைத்து வித்யைகளிலும் எண்ணப் பட வேண்டும் என்று நிரூபணம் -2- ஸூத்ரங்கள்

3-3-15- அந்தரத்வ அதி கரணம்–ப்ருஹத் உபநிஷத்தில் -உஷஸ்தர் -கஹோலர்-ஆகியவர்கள்
இரண்டு வெவ்வேறு பகுதிகளில் கேட்கப்பட்ட வித்யை ஒன்றே என்று நிரூபணம் -3-ஸூத்ரங்கள்

3-3-16- காமாதி அதி கரணம்–சாந்தோக்யம் ப்ருஹத் -இரண்டிலும் உள்ள தஹர வித்யை ஒன்றே என்று நிரூபணம் -3- ஸூதரங்கள்

3-3-17-.தந் நிர்தாரண அதி கரணம்–சாந்தோக்யத்தில் உள்ள உத்கீதா உபாஸனை ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக உள்ள
யாகங்களில் சேர்ந்தாலும் விடுத்தாலும் தவறு இல்லை என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-3-18- ப்ரதாந அதி கரணம்–அபஹத பாப்மத்வம் போன்ற குணங்களை உபாசிக்கும் போது
தஹர ஆகாசம் ப்ரஹ்ம ஸ்வரூபமும் உபாஸிக்கிப் பட வேண்டும் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-3-19- லிங்க பூயஸ் த்வ அதி கரணம்–நாராயண அநு வாக்கம் என்பது ப்ரஹ்ம வித்யைகளின்
மூலம் உபாசிக்கப்படும் பரம் பொருளை உணர்த்துவதற்காகவே உள்ளது என்று நிரூபணம் -5 ஸூத்ரங்கள்

3-3-20- பூர்வ விகல்ப அதி கரணம்-மனச்சித் அக்னி போன்றவை -கிரியாமயமான யாகத்துக்கு
கற்களை அடுக்கி உண்மையான அக்னி உண்டாக்கச் செய்யும் யாகம் -அங்கம் அல்ல
வித்யா மயமான யாகத்துக்கே -எண்ணத்தின் மூலமாக அக்னி எழுப்பிச் செய்யப்படும் யாகம் -அங்கமாக உள்ளது என்று நிரூபணம் -7- ஸூத்ரங்கள்

 

3-3-21-சரீேர பாவாத் அதி கரணம்–சாதனா தசையில் அனைத்து வித்யைகளிலும் தன்னைப் பாபங்கள் அற்றவன்
முதலான ஸ்வரூபம் உள்ளதாகவே ஜீவன் உபாஸித்திக் கொள்ள வேண்டும் என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்

3-3-22- அங்காவபத்த அதி கரணம்–சாந்தோக்யத்தின் உத்கீத உபாஸனங்கள் அனைத்து சாகைகளிலும் தொடர்புடையவை ஆகும் என்று நிரூபணம் -2 ஸூ தரங்கள்

3-3-23- பூம் ஜ்யாயஸ் த்வ அதி கரணம்-சாந்தோக்யத்தில் கூறப்பட்ட வைஸ்வாநர உபாஸனமே சரியானது என்று நிரூபணம் -1-ஸூத்ரம்

3-3-24- ஶப்தாதி பேத அதி கரணம்–ஸத் வித்யை தஹர வித்யை போன்ற ப்ரஹ்ம வித்யைகள் ஒன்றுக்கு ஓன்று வேறு பட்டவையே என்ற நிரூபணம் -1- ஸூத்ரம்

3-3-25-விகல் ப அதி கரணம்–ப்ரஹ்ம வித்யைகளில் ஏதாவது ஒன்றைப் பின் பற்றினாலே பேறு என்று நிரூபணம் -2- ஸூ த்ரங்கள்

3-3-26-யதா ஆஶ்ரய பாவ அதி கரணம்–முன்பு நிரூபிக்கப் பட்ட உத்கீத உபாஸனமானது அனைத்து யாகங்களில்
எப்போதும் அங்கம் அல்ல என்பதைச் சிலர் மறுக்க அதற்கு சமாதானம் கூறப்படுகிறது -6- ஸூத்ரங்கள்-

————

நான்காம் பாதம் – அங்க பாதம் –-கர்மங்கள் அனைத்துமே கைவிடத்தக்கவை என்னும் கூற்று மறுக்கப்படுகிறது
ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக உள்ள பலவற்றையும்
அவற்றைக் கைக்கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள் குறித்தும் லில் கூறப்படுகின்றன
15-அதிகரணங்கள் –51-ஸூத்ரங்கள்-

3-4-1-புருஷார்த்த அதிகரணம்–கர்மங்களை அங்கமாகக் கொண்ட ப்ரஹ்ம உபாஸனம் மூலம்
மோக்ஷம் என்கிற புருஷார்த்தம் கிட்டும் என்று நிரூபணம் -20-ஸூ த்ரங்கள்

3-4-2- ஸ்துதி மாத்ராதிகரணம்–ஸ ஏஷ ரஸா நாம் ரஸ தம -சாந்தோக்யம் -1-1-3- என்பதன் மூலம்
உத்கீதம் புகழப்படுவதற்கு மட்டுமே இது போன்று கூறப்படுகிறது
என்னும் வாதம் நிரஸனம் -இது விதி வாக்யமே என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்

3-4-3- பாரிப்லவாதி கரணம்–கௌஷீதகி -3-10- சாந்தோக்யம்-6-1-1- போன்றவற்றில் காணப்படும் சிறு கதைகள்
அங்கு கூறும் வித்யைகளைப் புகழுவதற்காகவே என்று நிரூபணம் –2- ஸூத்ரங்கள்

3-4-4- அக்நீ இந்தநாத்யாதி கரணம்–சந்நியாசிகளுக்கு ப்ரஹ்ம உபாசனம் செய்யும் போது
அக்னி ஹோத்ரம் போன்றவை எதிர்பார்க்கப் படுவது இல்லை என்று நிரூபணம் –1- ஸூத்ரம்

3-4-5-சர்வ அபேஷாதி கரணம்–க்ருஹஸ்தர்களுக்கு யஜ்ஜம் போன்றவை ப்ரஹ்ம உபாஸனம் எதிர்பார்க்கிறது என்று நிரூபணம் -1-ஸூத்ரம்

3-4-6- சம தமாத்யாதிகரணம்–க்ருஹஸ்தர்களுக்கும் சம தமாதிகள் கைக்கொள்ளத் தக்கவையே என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

3-4-7-சர்வ அன்ன அநுமத்யதிகரணம்-பிராண வித்யை கூடிய ஒருவனுக்கு உயிர் போகும் நேரத்தில் மட்டுமே
அனைத்து விதமான உணவும் அனுமதிக்கப்படுகின்றன என்று நிரூபணம் –4-ஸூத்ரங்கள்

3-4-8- விஹி தத்வாதி கரணம்–யஜ்ஜாதி கர்மங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக இருப்பதால்
ப்ரஹ்ம நிஷ்டர்கள் க்ருஹஸ்தர்கள் அனுஷ்ட்டிக்க வேண்டும் என்று நிரூபணம் –4 ஸூத்ரங்கள்

3-4-9-விதுராதிகரணம்–எந்த ஆஸ்ரமமும் இல்லாத மனைவியை இழந்த விதுரர்களுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் உண்டு என்று நிரூபணம் –4- ஸூத்ரங்கள்

3-4-10-தத் பூதாதிகரணம்–ப்ரஹ்மசாரி வான ப்ரஸ்தன் ஸந்நியாசி ஆகியவர்கள் தங்கள் ஆஸ்ரமங்களைக் கைவிட நேர்ந்தால்
அவர்களுக்கு அதன் பின்னர் ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்று நிரூபணம் –4-ஸூத்ரங்கள்

3-4-11-ஸ்வாம்யதிகரணம்–ருத்விக்கால் -யாகம் நடத்தி வைக்கும் அதிகாரியால்
உத்கீத உபாஸனம் செய்யப்பட வேண்டும் என்று நிரூபணம் -2- ஸூத்ரங்கள்

3-4-12-சஹ கார்யந்தர வித்யதிகரணம்–பால்யம் பாண்டித்யம் மவ்நம் போன்றவை ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாகவையே என்று நிரூபணம் -3-ஸூத்ரங்கள்

3-4-13-அநாவிஷ்கராதி கரணம்-பால்யம் என்பது ப்ரஹ்ம ஞானிகளை பொறுத்த வரையில்
தங்கள் மேன்மையை வெளிக்காட்டாமல் இருப்பதே ஆகும் என்று நிரூபணம் -2- ஸூத்ரங்கள்

3-4-14-ஐஹிகாதிகரணம் –இந்தப்பிறவியில் பலன்கள் அளிக்க வல்ல வித்யைகள் தடைகள் இல்லாமல் இருந்தால் மட்டுமே கைகூடும் என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

3-4–15-முக்தி பலாதிகரணம்-மோக்ஷ பலன் அளிக்க வல்ல உபாசனங்களுக்குத் தடை ஏற்படா விட்டால் பலன் உடனே கிட்டும்
தடைகள் ஏற்பட்டால் தாமதமாகவே கிட்டும் என்று நிரூபணம் -1- ஸூத்ரம்

———-

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்–

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் -உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் -பக்தியும் -ஆராயப்படுகின்றன –
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது
கதி பாதம் -பரமபததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் –
உபாசகன் கைக்கொள்ள வேண்டிய முறை -புண்ய பாபங்கள் நீங்கும் விதம் –
நித்ய நைமித்திக கர்மங்களை இயற்றிய தீர வேண்டும் என்பதும்
உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் –
பக்தியும் -ஆராயப்படுகின்றன –11-அதிகரணங்கள்–19 ஸூத்ரங்கள்–

4-1-1-ஆவ்ருத்யதிகரணம் –ஆயுள் முடியும் வரை உபாசனத்தை பலமுறை அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்–

4-1-2-ஆத்மத்வோபாஸ நாதிகரணம்—தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-

4-1-3- ப்ரதீகாதி கரணம் – பிரதீகம் -மனம் சரீரம் போன்றவை -இவற்றை உபாசனம் சரி அல்ல –இவை ஆத்மா அல்ல
இவற்றை உயர்ந்த தேவதை என்று எண்ணியே உபாஸிக்க வேண்டும் -என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள்—

4-1-4-ஆதித்யாதிமத்யதிகரணம் – உத்கீதம் போன்றவற்றையே ஸூரியன் முதலான தேவர்களாப் பார்க்க வேண்டும் -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்–

4-1-5-ஆஸிநாதி கரணம் —அமர்ந்து கொண்டு தான் உபாசனை செய்ய வேண்டும் என்று நிரூபணம்–4 ஸூத்ரங்கள்-

4-1-6–6-ஆப்ரயாணாதி கரணம் -மரணம் அடையும் காலம் வரையில் உபாசனம் செய்ய வேண்டும் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-

4-1–7-ததிகமாதிகரணம் –ப்ரஹ்ம வித்யைக்கு முன்னால் செய்த பாவங்கள் ,வரப் போகும் பாவங்கள் ஆகியவை அழிகின்றன என்று நிரூபணம் -1 ஸூத்ரம்-

4-1–8-இதராதிகரணம்–முன்னர் செய்த புண்ணியங்கள் அழிந்து விடும் இனி செய்யப்படும் புண்யங்கள் ஒட்டாது -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்-

4-1-9-அநாரப்த கார்யாதிகரணம்–பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாப கர்மங்கள் மட்டுமே அழிகின்றன எனபது நிரூபணம் -1 ஸூத்ரம்-

4-1-10-அக்னி ஹோதராத்ய திகரணம்–பலனை விரும்பாதவர்கள் கூட அக்னி ஹோத்ரம் போன்ற நித்ய கர்மாக்களை இயற்ற வேண்டும் என்று நிரூபணம் –3 ஸூத்ரங்கள் –

4-1-11-இதர ஷபணாதி கரணம் –பிராரப்த கர்மம்-பலன் தரத் தொடக்கி விட்ட கர்மங்கள் ஒரே சரீரத்தில் முடிந்து விடும் என்னும் விதி கிடையாது என்று நிரூபணம் -1 ஸூத்ரம்-

————-

இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது –
11 அதிகரணங்கள்–20 ஸூத்ரங்கள்–

4-2-1-வாகாதி கரணம்– மரணம் அடைகின்றவனின் வாக்கு என்னும் இந்த்ரியம் மனத்துடன் இணைந்து விடுகிறது என்று நிரூபணம் -2 ஸூத்ரங்கள் –

4-2-2- மநோதிகரணம் – மனம் பிராணனுடன் சேர்த்தியை அடைகிறது என்று நிரூபணம் 1 ஸூத்ரம்-–

4-2-3- அத்யஷாதி கரணம் -பிராணன் ஜீவனுடன் சேர்க்கிறது என்று நிரூபணம் –1 ஸூத்ரம்–

4-2-4-பூதாதிகரணம் -ஜீவனுடன் கூடிய பிராணன் மற்ற பூதங்களுடன் சேர்ந்த தேஜஸ் ஸில் சேர்க்கிறது என்று நிரூபணம் –2 ஸூத்ரங்கள்-

4-2-5-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் – வெளிக்கிளம்புதல் -உத்க்ராந்தி எனபது மோஷம் பெறுபவன் மற்றவர்கள் இருவருக்கும் மூர்த்தன்ய நாடியில் புகுவதற்கு
முன்பே பொதுவானது என்று நிரூபணம் –7 ஸூத்ரங்கள்-

4-2-6-பர சம்பத்த்யதிகரணம் — தேஜஸ் போன்றவை பரமாத்மாவுடன் இணைகின்றன என்று நிரூபணம் ––1 ஸூத்ரம்-

4-2–7-அவிபாகாதி கரணம்– பரமாத்மாவிடம் சேர்கின்றன ஒழிய லயம் அடைவது இல்லை என்று நிரூபணம் –1 ஸூத்ரம் –

4-2-8-ததோகோதி கரணம் – மூர்த்தன்ய நாடியின் மூலமே முக்தி அடைபவன் தன் சரீரத்தை விட்டு வெளியே கிளம்புகிறான் என்று நிரூபணம் -1 ஸூத்ரம்-

4-2-9-ரஸ்ம்யநு சாராதி கரணம் -– ஸூரியனின் கிரணங்கள் மூலமாகவே ப்ரஹ்ம ஞானி மேலே செல்கின்றான் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-

4-2-10-நிசாதிகரணம் -இரவில் மரணம் அடையும் ப்ரஹ்ம ஞானி ப்ரஹ்மத்தை அடைவான் என்று நிரூபணம் –1 ஸூத்ரம் –

4-2-11-தஷிணாயநாதி கரணம் – தஷிணாய நத்தில் மரணம் அடைந்தாலும் ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு என்று நிரூபணம் –2–ஸூத்ரங்கள்–

———–

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்–மூன்றாம் பாதம் கதி பாதம் -பரமபததுக்கு ஆதி வாஹிகர்கள் மூலமாக
ப்ரஹ்ம ஞானியை அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது — 5 அதிகரணங்கள்–15 ஸூத்ரங்கள்

4-3-1- அர்ச்சிராத்யாதி கரணம் — அனைத்து ப்ரஹ்ம விதியை நிஷ்டர்களும் அர்ச்சிராதி மார்க்கம் என்னும் ஒரே வழி மூலம் மோஷம் அடைகிறார்கள் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-

4-3-2-வாய்வதிகரணம்-– சம்வத்சரத்தை அடையும் முக்தன் அதன் பின்னர் ஆதித்யனை அடைவதற்கு முன்னர் வாயுவை அடைகிறான் -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

4-3-3–வருணாதி கரணம் –– தடித் எனப்படும் மின்னல் பின் வருணனும் இந்த்ரனும் அடையப் படுகிறார்கள் -என்று நிரூபணம் -1 ஸூத்ரம்

4-3-4-ஆதி வாஹாதிகரணம்- – அர்ச்சிஸ் போன்றவர்கள் ப்ரஹ்ம ஞானியை ப்ரஹ்மத்திடம் அழைத்துச் செல்லும் தேவதைகள் என்று நிரூபணம் –2 ஸூத்ரங்கள்

4-3-5-கார்யாதிகரணம் -ஆதி வாஹிகர்கள் யாரை ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறார்கள் எனபது நிரூபணம் –10 ஸூத்ரங்கள்-

————–

நான்காம் பாதம் -முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம்-கைங்கர்யம் – கூறப் படுகிறது
6 அதிகரணங்கள்–22-ஸூத்ரங்கள்

4-4-1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் – முக்தாத்மா ஸ்வரூபத்தின் விளக்கத்தை அடைகிறான் எனபது நிரூபணம் -3 ஸூத்ரங்கள் –

4-4-2-அவிபாகே நத்ருஷ்டவாதிகரணம் -முக்தன் பர ப்ரஹ்மத்தை விட்டு பிரியாதவன் என்று எண்ணிய படியே அனுபவிக்கிறான் என்று நிரூபணம் –1 ஸூத்ரம்-

4-4-3-ப்ரஹ்மாதிகரணம்— ஸ்வேன ரூபேண ஸ்வரூபம் பெறுவது அல்லாமல் -அபஹதபாப்மா போன்ற எட்டு வித தன்மைகளையும் முக்தாத்மா அடைகிறான் என்று நிரூபணம் -3 ஸூத்ரங்கள் –

4-4-4-சங்கல்பாதி கரணம் – – தனது சங்கல்பத்தினால் மட்டுமே முக்தி நிலையில் ஜீவன் தன விருப்பங்களை அடைகிறான் என்று நிரூபணம் –2 ஸூத்ரங்கள்

4-4-5-அபாவாதி கரணம் – முக்தன் சில கட்டங்களில் சரீரம் உள்ளவனாயும் சில கட்டங்களில் சரீரம் அற்றவானாகவும் உள்ளான் என்று நிரூபணம் –7 ஸூத்ரங்கள்-

4-4-6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் – ஸ்ருஷ்டியாதி செயல்பாடுகள் முக்தனுக்கு இல்லை -போகத்திலே மட்டுமே சாம்யம் –
சம்சாரத்துக்கு முக்தன் திரும்புவது இல்லை -எனபது போன்றவை நிரூபணம் -6 ஸூத்ரங்கள்-

——–

அதிகாரணம் -1- ஜிஞ்ஞாஸா அதிகரணம்
1-1-1- அதாதோ ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா–அத அத ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா-

அத பிறகு -அத ஆகவே -கர்மங்களைக் குறித்து அறிந்ததால் -அதன் பின்னர் -அதன் காரணமாக
ப்ரஹ்மத்தைக் குறித்து ஆராய்வதில் ஆர்வம் உண்டாக வேண்டும்
பூர்வ மீமாம்ஸையிலும் -1-1-1-அதாதோ தர்ம ஜிஞ்ஞாஸா–அதன் பிறகு -ஆகவே தர்மத்தைக் குறித்த ஆய்வு –
அதன் இறுதியில் -12-4-35-ப்ரபுத்வாத் ஆர்த்விஜ்யம் -அவர்களால் இயலும் என்பதால் ருத்விக்காக இருத்தல்
என்கிற ஸூத்ரம் அதன் இறுதிப் பகுதியில் உண்டு

ப்ரக்ருதி விக்ருதி என்ற இரண்டுவிதமான கர்மங்கள்
தர்மம் அர்த்தம் காமம் என்ற மூன்று புருஷார்த்தங்களையும் தர வல்லது

பரீக்ஷ்ய லோகாந் கர்ம சிதாந் ப்ராஹ்மணோ நிர்வேத மாயாந் நாஸ்த்ய கரிதஃ கரிதேந.
தத் விஜ்ஞாநார்தஂ ஸ குரூமேவாபி கச்சேத் ஸமித் பாணிஃ ஷ்ரோத்ரியஂ ப்ரஹ்ம நிஷ்டம்৷৷முண்டகம் -1.2.12৷৷

ப்ராஹ்மணர்- கர்ம வசம் படாமல் இருப்பதற்காக சாத்விக தியாகத்துடன்-விஷயாந்தர்களில் பற்று இன்றி -நிர்வேதத்துடன்
– ப்ரஹ்ம நிஷ்டர்களான -ஸமித் பாணி யாக ஞானம் அனுஷ்டானம் இவை நன்குடைய ஆச்சார்யர்களை பற்றி-அவர்கள் அபிமானத்தாலே பர ப்ரஹ்மத்தை அடைந்து அனுபவிக்கிறார்கள் –
ஸ குரூமேவாபி கச்சேத் ஸமித் பாணிஃ ஷ்ரோத்ரியஂ ப்ரஹ்ம நிஷ்டம்-ஆச்சார்யரை அணுகி கற்கிறான்

ப்ராஹ்மண -வேத அப்யாஸத்தில் இழிந்தவன்
கர்மசிதான் -கர்மங்களால் ஸம்பாதிக்கப்பட்ட
பரீஷ்ய –கர்மங்கள் மூலம் ஆராதிக்கப் படுபவர்களும் -அந்த லோகங்களும் அழியக்கூடியவையே என்று அறிந்து
அக்ருத –நித்தியமாக உள்ள பரம புருஷன்
க்ருதேந -கர்மங்கள் மூலம் பெறப்படுபவன் அல்லன் என்று அறிந்து
நிர்வேத மாயான் -ஒருவன் ஆசைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறான்
ஸ –அப்படிப்பட்டவன்
தத் விஜ்ஞாநார்தம் ஸ குரூமேவாபி கச்சேத் ஸமித் பாணிஃ-அந்தப்பிரம புருஷனை அறியும் பொருட்டு
தனது கையில் சமித்தை எடுத்துக் கொண்டு ஆச்சார்யனை அடைய வேண்டும்
ஷ்ரோத்ரியம் –வேதாந்தங்களை நன்கு அறிந்த ஆச்சார்யன்
ப்ரஹ்ம நிஷ்டம்–பரம புருஷ ஸ்வரூபத்தை நேரடியாக அறிந்தவராக இருக்க வேண்டும்

தஸ்மை ஸ வித்வாநுபஸந்நாய ஸம்யக் ப்ரஷாந்த சித்தாய ஷமாந் விதாய.
யேநாக்ஷரஂ புரூஷஂ வேத ஸத்யஂ ப்ரோவாச தாஂ தத்த்வதோ ப்ரஹ்ம வித்யாம்৷৷1.2.13৷৷

மனஸ் சாந்தி உடன் -பிரசாத சித்தம் -புலனை அடக்கி -அக்ஷரம் -ஸ்வரூப விகாரம் இல்லாமல் –
சத்யம் குணத்தாலும் மாறாமல் -ப்ரஹ்ம ஞானம் ஆச்சார்யர் மூலமே பெறலாம்

————–

அதிகரணம் 2- ஜந்மாத் அதிகரணம்
1-1-2-ஜன்மாதி அஸ்ய யதி

இந்த ஜகத்துக்கு ஸ்ருஷ்டி போன்ற செயல்கள் எதனால் ஏற்படுகின்றதோ அதுவே ப்ரஹ்மம்

யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத் ப்ரயந்த்யபி ஸம் விஷந்தி தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்ம–-தைத்ரியம் ৷৷3.1.1৷৷

யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் -த்ரிவித காரணம் -மேலே நாலாவது மோக்ஷம் -ஜென்மாதிகரணம் –
யேந ஜாதாநி ஜீவந்தி -யாரால் காப்பாற்ற படுகிறதோ
யத்ப்ரயந்த்யபிஸம் விஷந்தி-எத்தனை அடைகின்றனவோ -லயம் அடையுமோ -இறுதியாக மோக்ஷம் -ஆக சதுர்வித காரணங்கள் –

ஸூத்ரத்தில் யத -ஐந்தாம் வேற்றுமை உருபு -காரணத்தைக் காட்டும்
ஜன்மத்துக்குக் காரணம் நிமித்த உபாதானம் இரண்டையுமே கொள்ள வேண்டும்
யதோ வா இமாநி –எந்த ஒன்றிடம் இருந்து

என்பதால் இந்த அர்த்தம் உறுதி ஆகிறது
ஸத் ஏவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் –6-2-1-
தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத -சாந்தோக்யம் -6-2-3-
ப்ரஹ்மம் மட்டுமே இருந்தது-அந்த ஓன்று மட்டும் இருந்தது – நான் பலவாகக் கடவேன் என்று சங்கல்பித்து முதலில் தேஜஸ்ஸைப் படைத்தது

அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வம் ஏதத் -ஸ்வேதாஸ்வரம் -4-9-
மாயையை யுடைய ஈஸ்வரன் ப்ரக்ருதி மூலம் ஜகத்தை ஸ்ருஷ்டிக்கிறான்

பூர்வ பக்ஷம் -நிமித்த உபாதான இரண்டுமாக ப்ரஹ்மம் இல்லை என்பது
இத்தை -1-4-23-பிரகிருதி ச பிரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் —
ப்ரஹ்மமே உபாதான காரணம் என்றால் மட்டுமே உறுதிபட உரைக்கும் வாக்கியங்களும் உதாரணங்களும் முரண் படாமல் இருக்கும் -என்றும்
1-4-24-அபித்யோப தேஸாத் ச–ப்ரஹ்மம் தானே சங்கல்பிப்பதாகக் கூறுவதால் என்றும்
1-4-25-சாஷாத் உபயாம்நா நாத் ச-இந்த நிமித்த உபாதான இரண்டு விதமாகவும் உள்ளதாக ஸ்ருதிகள் நேரடியாக் கூறுவதால் என்றும்
1-4-26-ஆத்ம க்ருதே-தன்னைத் தானே ஸ்ருஷ்டிப்பதாகக் கூறுவதால் என்றும்
உள்ள ஸூத்ரங்களால் தள்ளப் படுகின்றன

இதற்கு ஆஷேபம் தானே காட்டி சமாதானமும் அருளிச் செய்கிறார்
2-1-8 அபீதவ் தத்வத் ப்ரஸங்காத் அஸமஞ்ஜஸம்–பிரளயத்தின் போது உலகத்தைப் போன்று
ப்ரஹ்மத்துக்கும் மாற்றம் அடையும் என்னும் தோஷம் வருமே

2-1-21 இதர வ்யபேதஶாத் ஹிதா கரணாத் தோஷ ப்ரஸக்தி–ப்ரஹ்மம் தனக்கு நன்மையைச் செய்து கொள்ள வில்லை
தோஷத்தையே ஏற்படுத்திக் கொள்கிறது

இதற்க்கு சமாதானமாக
2-1-9 ந து த்ருஷ் டாந்த பாவாத்–ப்ரஹ்மத்திடம் தோஷங்கள் ஏற்படாது
வேதாந்த வாக்கியங்கள் பொருந்தாத வாக்கியங்கள் ஆகாது உதாரணங்கள் உள்ளதால் என்றும்
2-1-22 அதிகம் து பேத நிர்தேஶாத்–ப்ரஹ்மம் வேறானது என்று கூறுவதால்-

ஷரம் து அவித்யா ஹி அம்ருதம் து வித்யா வித்யா அவித்யே ஈஸதே யஸ்து ஸ அந்நிய –ஸ்வேதாஸ்வரம் -5-1-
அவித்யை கர்மம் அழியக் கூடியது
வித்யை ப்ரஹ்ம ஞானம் அழியாதது
இரண்டையும் நியமிப்பவன் ஜீவாத்மாவை விட வேறு பட்ட ப்ரஹ்மம்

ச காரணம் காரணாதி பாதிபோ ந ச அஸ்ய கச்சித ஜனிதா ந ஸாதிப -ஸ்வேதாஸ்வர -6-9-
பரம புருஷனே அனைத்துக்கும் காரணம்
இந்திரியங்களின் அதிபதியாக உள்ள ஜீவாத்மாவின் அதிபதியாக உள்ளான்
அவனை உண்டாக்கியவரும் அவனுக்கு தலைவனும் யாரும் இல்லை -என்றும்

ஷரம் ப்ரதானம் அம்ருத அக்ஷரம் ஹரஸ் ஷராத்மாநா விஸதே தேவ ஏக -ஸ்வேதாஸ்வர -1-10-
பிரதானம் ஷரம் அழியக்கூடியது
இதனைத் தனது இன்பத்துக்காகக் கொள்பவன் அக்ஷரம் எனப்படும் ஜீவாத்மா -இதனால் ஹரஸ் எனப்படுபவன்
ஒரே தேவன்
இவை இரண்டையும் நியமித்தபடி உள்ளான்

அதஃ மத்த ஏவ ஸர்வ வேதாநாஂ ஸார பூதம் அர்தஂ ஷ்ரரிணு —

த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச–
க்ஷர ஸர்வாணி பூதாநி கூடஸ்தோக்ஷர உச்யதே–৷৷15.16৷৷

த்வ = இரண்டு
இமௌ = அவைகள்
புருஷௌ = புர்ஷர்கள்
லோகே = உலகில்-இத்தால் பார்க்கப்படுவதால் லோகே என்று சாஸ்திரத்தையே சொன்னவாறு
க்ஷரஸ் = அழியக் கூடியது
ச = மேலும்
அக்ஷர = அழியாதது-முக்த ஜீவாத்மா
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
க்ஷர: = அழியக் கூடியது-பக்த ஜீவாத்மா
ஸர்வாணி = அனைத்தும்
பூதாநி = உயிர்களிலும்
கூடஸ்தோ = விடுதலை அடைந்தவன்
அக்ஷர = அழிவற்றது
உச்யதே = சொல்லப் படுகிறது

லோகே க்ஷர: ச அக்ஷர ஏவ ச-உலகத்தில் அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என,
இமௌ த்வௌ புருஷௌ-இரண்டு வகைப் புருஷருளர்,-இத்தால் பார்க்கப்படுவதால் லோகே என்று சாஸ்திரத்தையே சொன்னவாறு
ஸர்வாணி பூதாநி க்ஷர:-க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும்,
கூடஸ்த: அக்ஷர உச்யதே-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.

உத்தம புருஷஸ் த்வந்ய பரமாத்மேத் யுதாஹருத–
யோ லோக த்ரய மாவிஸ்ய பிபர்த் யவ்யய ஈஸ்வர–৷৷15.17৷৷

உத்தம: = உயர்ந்த, சிறந்த
புருஷஸ் = புருஷன்
து = மேலும், ஆனால்
அந்ய: = வேறான, மற்ற
பரமாத்மா = பரமாத்மா
இதி = இதுவே
உதாஹ்ருத: = சொல்லப்படுகிறது, பிரகட்டணப் படுத்தப்பட்ட
யோ = அவன்
லோக = உலகங்களில்
த்ரய = மூன்று
அவிஸ்ய = நுழைந்தபின் , சேர்ந்தவுடன்
பிபர்த்தி = எவன் தாங்குகின்றானோ
அவ்யய = மாறாத, மாற்றம் இல்லாத
ஈஸ்வர: = ஈஸ்வரன்

ய: லோகத்ரயம் ஆவிஸ்ய-எவர் மூன்று உலகுகளினுட் புகுந்து,
பிபர்தி-தாங்கி போஷிக்கிறாரோ,
அவ்யய: ஈஸ்வர: பரமாத்மா இதி-அழிவற்றவர் என்றும் ஈசுவரன் என்றும் பரமாத்மா என்றும்,
உதாஹ்ருத:-அழைக்கப் படுகிறாரோ,
உத்தம: புருஷ: து-அந்த புரு÷ஷாத்தமன்,
அந்ய:-இவரில் வேறுபட்டோன்.

யஸ்மாத் க்ஷரமதீதோஹம் அக்ஷராதபி சோத்தம–
அதோஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம—৷৷15.18৷৷

யஸ்மாத் = அதனால்
க்ஷரம் = அழியக்கூடிய, மாறக் கூடிய
அ தீத = அதை தாண்டியவன், மீறியவன், கடந்தவன்
அஹம் = நான்
அக்ஷராத = அழியாத
அபி = இப்போது
ச =மேலும்
உத்தம:= சிறந்த , உயர்ந்த
அதோ = அதிலிருந்து
அஸ்மி = நான்
லோகே = உலகில்
வேதே = வேதங்களில்
ச = மேலும்
ப்ரதி²த: = அறியப்பட்ட, சிறப்பித்து கூறப் பட்ட
புருஷோத்தம: = புருஷோத்தமன்

யஸ்மாத் அஹம் க்ஷரம் அதீத: ச-எக்காரணத்தினால் நான் அழியக் கூடிய ஜட வர்க்கத்திற்கு அப்பாற்ப்பட்டவனாகவும்,
அக்ஷராத் அபி உத்தம:-அக்ஷர புருஷனைக் (ஜீவாத்மாவைக்) காட்டிலும் சிறந்தவனாக உள்ளேனோ,
அத: லோகே வேதே ச-அக்காரணத்தினால் உலகத்தாராலும் வேதங்களாலும்,
புருஷோத்தம: ப்ரதித: அஸ்மி-புருஷோத்தமன் என்று புகழ் பெற்றுள்ளேன்.

ப்ரஹ்மமே பிரத்யாகாத்மாவின் ஆத்மாவாக உள்ளவன் என்பதை
யஸ் ஆத்மநி திஷ்டன் –யஸ்ய ஆத்மா சரீரம் -ப்ரு -3-7-22-
யார் ஆத்மாவில் வஸிக்கிறாரோ –யாருக்கு ஆத்மா ஸரீரமோ என்றும்

ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்ய ஏகோ நாராயண -ஸூபால –7-1-
அனைத்து பூதங்களுடைய ஆத்மா ஆவான்
பாபங்கள் அற்றவன்
மனிதர்க்குத் தேவர் போல் தேவர்களுக்கும் தேவாதி தேவன்
அவன் நாராயணனே ஆவான்
போன்ற பல ஸ்ருதிகள் உண்டே

குணங்களும் தோஷங்களும் சரீர அளவிலே உள்ளவையே
2-1-9 ந து த்ருஷ் டாந்த பாவாத்–ப்ரஹ்மத்திடம் தோஷங்கள் ஏற்படாது
வேதாந்த வாக்கியங்கள் பொருந்தாத வாக்கியங்கள் ஆகாது உதாரணங்கள் உள்ளதால் என்பதில்
உதாரணங்கள் -என்றது சரீரத்துடன் கூடிய ஜீவாத்மா
மனிதன் தேவன்
குழந்தைப் பருவம் வாலிபன் வயோதிகம் போன்ற தோஷங்கள் சரீரத்துக்குத் தானே
இதே போல் ஆத்மாவுக்கு உள்ள ஞானம் சுகம் தேகத்தைத் தொடுவது இல்லை

ஆகவே காரண நிலையிலும் கார்ய நிலையிலும் பிரத்யகாத்மாவை சரீரமாகக் கொண்டதாயும்
அதன் ஆத்மாவாகவும் உள்ள ப்ரஹ்மமும் பிரத்யாகாத்மாவும் சாமான கரண்யத்தில் வைக்கப்படலாம்
இதனால் இருவதும் ஒன்றே என்னும் மாயாவாதத்தைத் தவிர்க்கவே
1-4-20-பிரதிஜ்ஞா சித்தே லிங்கம் ஆஸ்மரத்ய-என்று
ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்பது உறுதியாகும் பொருட்டே
ஒரே வேற்றுமையில் ப்ரஹ்மத்தையும் பிரத்யகாத்மாவையும் படிக்கலாமே

2-1-34 வைஷம்ய நைர்க்ருண்யே ந சாபேஷாத் வாத் ததா ஹி தர்ஸயதி
கர்மம் காரணமாகவே இருப்பதால் பாரபக்ஷமோ கருணை இன்மையோ ப்ரஹ்மத்துக்கு வராதே

2-1-35 ந கர்ம அவி பாகாத் இதி சேத் ந அநாதித்வாத் உபபத்யேத ச அபி உபலப்யேத ச
ஸ்ருஷ்டி காலத்தில் ப்ரஹ்மம் தவிர வேறே ஒன்றுமே இல்லை என்பதால்
ஜீவாத்மாவும் கர்மமும் இல்லை என்றால்
அது சரியல்ல -அவை அநாதி

ஜீவாத்மாக்களும் கர்ம ப்ரவாஹமும் தொடக்கம் அற்றது என்பதை கட -5-13-நித்யோ அநித்யானாம் சேதன அசேதனாநாம் என்றும்
ஞா அஜ்ஞவ் த்வவ் –ஸ்வே -1-9-பிறப்பற்ற இரண்டில் ஓன்று அறிந்ததும் ஓன்று அறியாததும் –
என்ற ஸ்ருதி வாக்கியங்கள் விளக்கும்

பிரளய காலத்தில் நாம ரூப விபாகம் இல்லாமல் ப்ரஹ்மத்துடன் ஒன்றியே இருப்பதை
ஆத்மா வா இதம் ஏக ஏவ அக்ர ஆஸீத் ந -அந்யத் கிஞ்சித் மிஷத் – ஸ்ருதி விளக்கும்

ஆத்மா நித்யம் உத்பத்தி இல்லை என்பதை
2-3-18 ந ஆத்மா ஶ்ருதேர் நித்யத்வாத் ச தாப்ய:-என்று
ஸ்ருதி கூறுவதாலும் ஸ்ருதி நித்யமாகையாலும் என்றும்
அது ஞான ஸ்வரூபமே என்பதை -2-3-19- ஜ்ஜோ அத ஏவ-என்றும்
அது அணு அளவானதே என்பதை 2-3-20- உத்க்ராந்தி கதி ஆகதீ நாம்-என்று
சரீரத்தில் இருந்து வெளிக்கிளம்புதல் நகர்தல் மீண்டும் திரும்புதல் கூறப்படுவதால் என்றும்

ஞான ஸ்வரூபன் -ஞானம் உடையவன் -தர்மபூத ஞானமும் தர்மி ஞானமும் இரண்டும் உண்டு என்பதை
2-3-29- தத் குண ஸாரத்வாத் து தத் வ்யபேதஶ: ப்ராஜ்ஞவத்-என்றும்
2-3-30- யாவத் ஆத்மபாவித்வாத் ச ந தோஷஸ் தத் தர்ஶநாத்-என்றும்
ஆத்மா உள்ளவரை ஞானம் தொடர்வதால் ஞானம் என்றே கூறுவதில் தவறு இல்லையே –

ஒரு சிலர் ஞானமே ஆத்மா -ஆத்மாவுக்கு அறிவே ரூபம்
இந்த்ரங்கள் மூலம் பெறப்பட்ட ஞானமே ஆத்மா
ஆத்மா விபு
என்று கூறும் தோஷங்கள் அனைத்தும்
2-3-32- நித்ய உபலப்தி அநு பலப்தி ப்ரஸங்க: அந்யதர அநியேமா வா அந்யதா-என்ற
ஸூத்ரத்தால் கூறப்பட்டன

2-3-33-கர்தா ஶாஸ்த்ர அர்த்த வத்வாத்
2-3-34-உபாதாநாத் விஹார: உபேதஶாத்
2-3-35-வ்யபேதஶாத் ச க்ரியாயாம் ந சேத் நிர்தேஶ விபர்யய:
2-3-36-உபலப்திவத் அநியம:
2-3-37-ஶக்தி விபர்யயாத்
2-3-38-ஸமாத்ய பாவாத் ச
2-3-39-யதா ச தஷோ பயதா
என்று
ஜீவனே செய்கிறான் பிரகிருதி அல்ல
அதுவும் ப்ரஹ்மத்தின் தூண்டுதலால் என்பதை
2-3-40-பராத்து தத் ச்ருதே :
2-3-41-க்ருத ப்ரயத்ந அபேக்ஷஸ் து விஹித ப்ரதி ஷித்தா வையர்த்யாதிப்ய:–என்ற ஸூத்ரங்கள் நிரூபிக்கின்றன

2-3-42-அம்ஸோ நாநா வ்யபேதஶாத் அந்யதா ச அபி தாஶ கித வாதித்வம் அதீயத ஏகே
2-3-43-மந்த்ர வர்ணாத்
2-3-44-அபி ச ஸ்மர்யதே
2-3-45-ப்ரகாஶாதி வத் து ந ஏவம் பர:
2-3-46-ஸ்மரந்தி ச-போன்ற ஸூ த்ரங்கள் விளக்கும்

ஸ்வேதாஸ்வர -4-7- அநீசயா சோசதி முஹ்யமாந
ஜூஷ்டாம் யதா பஸ்யத் அந்நிய மீச மஸ்ய மஹிமாநம் இதரோ வீத சோக -என்று
ஜீவன் பிரக்ருதியால் மோகம் அடைந்து வருந்துகிறான்
அதே மரத்தில் உள்ளவனும் அனைத்தையும் நியமிப்பவனுமான பரமாத்மாவின் மேன்மையை அறிந்து
அவன் துன்பங்கள் விளக்குகின்றன -என்றும்
ஸ்வே –5-1- ஷரம் து அவித்யா ஹி அம்ருதம் து வித்யா வித்யா அவித்யே ஈஸதே யஸ்து ஸ அந்நிய
அழியக்கூடிய அவித்யை கர்மம் அழியாத ப்ரஹ்ம ஞானம் இரண்டையும் இயக்கம் ப்ரஹ்மம்
ஜீவாத்மாவை விட வேறு பட்டவன் என்றும்

ப்ராஞ்ஜே ந ஆத்ம நா ஸம் பரிஷ்வக்தோ ந பாஹ்யம்ன் கிஞ்சன வேத ந அநந்தரம் –4-3-21-
பரமாத்மாவால் தழுவி அணைக்கப்பட்டு அதன் பின்னர் உள்ளும் புறமும் சிறிதும் அறியாதவனாக என்றும்
ஸ்வே -1-19- ஞா அஜ்ஞவ் த்வா அஜவ் ஈஸ அநீஸவ்-என்றும்
ஸ்வே -1-6- பிருத காத்மா நம் பிரேரிதாரம் ச மத்வா ஜுஷ்டஸ் ததஸ்தேந அம்ருதத்வமேதி
வெவ்வேறாக அறிந்தவன் அந்த ஞானமே ஹேதுவாக ப்ரஹ்மத்தின் பிரீதிக்கு இலக்காகி மோக்ஷம் அடைகிறான்

இத்தையே முண்டகம் -3-1-3-யதா பஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரம் ஈசம் புருஷம் ப்ரஹ்மம் யோநிம்
ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி -என்றும்
ஸ்வே –6-9-ஸ காரணம் காரணாதி பாதிபோ ந ச அஸ்ய கச்சித் ஜனிதா ந ஸாதிப –
முண்ட -1-1-9- யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் -அனைத்தையும் அறிந்து உணர்ந்தவன்
ஸ்வே -6-8- பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வ பாவிகீ ஞான பல க்ரியா ச
ஸ்வ 6-19–நிஷ் கலம் நிஷ் க்ரியம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்சனம் -என்றும்
கட -5-13- நித்யோ நித்யானாம் சேதனச் சேதனநாம் ஏகோ பஹு நாம் யோ விததாதி காமான்
பதிம் விஸ் வஸ்ய ஆத்ம ஈஸ்வரம்

சாந்தோக்யம் -6-8-7-தத் த்வம் அஸீ
ப்ரு -2-5-19- அயம் ஆத்மா ப்ரஹ்ம
ஐதரேயம் -2-2-46- ய அசவ் ச அஹம் ய அசவ்
ப்ரு -1-4-10-அதயோ அந்யாம் தேவதாம் உபாஸ்தே அந்நிய அசவ் அந்நிய அஹம் அஸ் மீதி ந ஸ வேத
ப்ரு -1-4-7-அக்ருத்ஸ நோ ஹி ஏஷ –ஆத்மா இதி ஏவ உபாஸீத
ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்ம இமே கிதவா

ஜீவாத்மா பரமாத்மாவின் அம்சமே என்பதை

சாந்தோக்யம் -3-12-6-பாதோஸ்ய விஸ்வா பூதாநி
அனைத்து உயிர்களும் அவனுடைய ஒரு பாதமே ஆகும் என்றும்
மேலான முக்தாத்மா என்னுடைய அம்சமே என்றதும் பக்தாத்மா எவ்வாறு என்ன அதற்குப் பதில்

மமை வாம்ஸோ ஜீவ லோகே ஜீவ பூத ஸநாதந–
மந ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ருதி ஸ்தாநி கர்ஷதி৷৷15.7৷৷

ஜீவலோகே ஸநாதந: ஜீவபூத:-இவ்வுடலில் என்றும் உள்ள ஜீவாத்மா,
மம அம்ஸ ஏவ-எனது அம்சமே!
ப்ரக்ருதிஸ்தாநி-(அதுவே) பிரக்ருதியில் உள்ள,
மந:ஷஷ்டாநீ இந்த்ரியாணி-மனம் மற்றும் ஐந்து புலன்களையும்
கர்ஷதி-ஈர்க்கிறது.

அநாதி காலமாய் இருப்பவனாய் என் அம்சமாகவே இருக்கும் ஜீவர்களில் ஒருவன் பத்த ஜீவனாக இருந்து கொண்டு
லீலா விபூதியில் இருப்பவனாய் -உடலில் இருக்கும் ஐந்து இந்த்ரியங்களையும்
ஆறாவது இந்த்ரியமான மனசையும் செயல் புரியச் செய்கிறான்

2-3-45-ப்ரகாஶாதி வத் து ந ஏவம் பர:-ஒளி முதலானவை போன்றே -ஜீவாத்மாவும் பரமாத்மாவும்-அம்சமாக இருந்தாலும் வேறே வேறே தான்
பால் வெண்மை -பிரகாசம் ஜாதி குணம் சரீரம் போல்
2-3-33-கர்தா ஶாஸ்த்ர அர்த்த வத்வாத்-ஜீவாத்மா கர்த்தாவாகிறான் என்பதற்கும்
2-3-40-பராத்து தத் ச்ருதே :-அந்த செயல் ஆற்றும் தன்மை பரமாத்மாவாலேயே உண்டாகிறது
என்பதற்கும் முரண்பட்டு இல்லை

ஸ்ரீ விஷ்ணு புராணமும்
ஏக தேச ஸ்தி தஸ்ய அக்நே ஜ்யோத்ஸ்நா விஸ்தாரிணீ யதா
பரஸ்ய ப்ரஹ்மண சக்தி தத் ஏதம் அகிலம் ஜகத் –1-22-56-57
ஒரு இடத்தில் உள்ள அக்னியின் தேஜஸ் பல இடங்களிலும் பரவுவது போல்
பர ப்ரஹ்மத்தின் சக்தி எங்கும் பரவி உள்ளது

யத் கிஞ்சித் ஸ்ருஜ்யதே யேந ஸத்வ ஜாதோந வை த்விஜ
தஸ்ய ஸ்ரு ஜஸ்ய ஸம் பூதவ் தத் ஸர்வம் வை ஹரே –1-22-38-
பிராணியை ஸ்ருஷ்டித்த ஹரியே அந்தர்யாமியாகவும் உள்ளான்

தே ஸர்வே ஸர்வ பூதஸ்ய விஷ்ணோர் அம்சம் உத்பவா –1-22-20-

சிலர் உபாதி என்ற ஒன்றைக் கல்பித்து சொல்லும் வாதங்களை
2-3-49-ஆபாஸ ஏவ ச
2-3-50-அத்ருஷ்டா நியமாத்
2-3-51-அபி ஸந்த்யாதிஷு அபி ச ஏவம்
2-3-52-ப்ரேதஶ பேதாத் இதி சேத் ந அந்தர் பாவாத்
இவ்வாறு அவித்யை உபாதி இரண்டையும் தள்ளி ஸித்தாந்தம் நிரூபணம்

——–

1-3-சாஸ்திர யோநித்வாதிகரணம் -வேதங்களே மூலமாக ப்ரஹ்மத்தை அறிய வேண்டும்

1-1-3- சாஸ்திர யோநித்வாத் -வேதங்களே பிரமாணங்கள்-அநு மானம் பிரத்யஷம் கொண்டு அறியலாகாது –

யதோ வா இமானி பூதாநி – தைத்ரியம் 3-1-1- ஒரே காரணம் ப்ரஹ்மமே
அனுமானம் கொண்டு அறிய ஒண்ணாது

———-

1-4-சமந்வயாதிகரணம் –ப்ரஹ்மத்துக்கு வேதங்களே பிரமாணங்கள் –
1-1-4-தத் து சமன்வயாத் –

ஸமன்வய என்பது புருஷார்த்ததுடன் ஸம்பந்தம் கொண்டு இருத்தல்
ஸாஸ்த்ரத்துக்கு புருஷார்த்தம் போதிப்பதே நோக்கம்
ஆகவே ஸாஸ்த்ரத்தால் மட்டுமே அறியப்படும் என்பதில் எந்த வித தோஷமும் இல்லையே

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–ஸ்ரீ வேதாந்த தீப–மங்கள ஸ்லோகங்கள்–

November 29, 2021

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே|
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

————–

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மங்கள ஸ்லோகங்கள்–

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று
சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்

நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோபாத்யாலீடம் விவசம் அசுபஸ் யாஸ்பதமிதி I
ச்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய-ஆளவந்தார்- நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய -ஆளவந்தார்-நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் -ப்ரஹ்மமே அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம்
ப்ரம பரிகதம் -பிரமங்கள் -தனக்கு உள்ள ஏகத்துவம் அத்விதீயம் உணராமல்
ஸம்ஸரதி -தானே சம்சாரத்தில் உழன்று -சங்கர மதம்
தத் பரோபாத்யாலீடம் விவசம் -பாஸ்கர மதம் உபாதிக்கு அதீனம் -பர உபாதி -மேம்பட்ட -தன்னை விட வேறுபட்ட கர்மம்
தன் வசம் இல்லாமல் -ஸ்வதந்த்ரம் என்று கொள்ளாமல் பரதந்த்ரம் கல்பித்து -விவசத்வம் என்பர்
அஞ்ஞாத்வம் சங்கரர் விவசாத்வம் இவர்கள்
அசுபஸ் யாஸ்பதமிதி I-அசுபங்களுக்கு இருப்பிடம் -யாதவ பிரகாசர் -உபாதையும் இல்லை அஞ்ஞானமும் இல்லை -ஸ்வரூப பரிமாணம்
தோஷங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கு என்பர்
ச்ருதி நியாயா பேதம் -ஸ்ருதிகளுக்கும் நியாயங்களும் அபேதம் விலகி –
மூன்றும் சேர்ந்து சமுதாயமாக அத்வைதம்
ஜகதி விததம் -உலகம் எங்கும் இது பரவி
மோஹனமிதம்-அஞ்ஞானம் உண்டு பண்ணி -மோஹிக்கப் பண்ணும்
தமோ யேநாபாஸ்தம் -இவை எவரால் போக்கடிக்கப்பட்டதோ -அந்த
ஸஹி விஜயதே யாமுன முனி-ஆளவந்தார் பல்லாண்டு வாழட்டும்

—————-

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

———–

ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –

மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–முதல் மங்கள ஸ்லோகம்

ஸ்ரீ யபதியான அவனே பிரமேயம் –
காரணம் ஏவ -உபாசனம் –
சம்சார நிவ்ருத்திக்கும் நிரதிசய ஆனந்த கைங்கர்ய இஷ்ட பிராப்திக்கும் -அவனே உபாயம் –
எவையும் எவரும் தன்னுன்னே ஆகியும் ஆக்கியும் தானே -நிமித்த உபாதான காரணம் அவனே –

ஸ்ரீயகாந்தோ அனந்த -வர குண—-வாங்மனசோ யோகோ -ஆதி புருஷ–8 விசேஷணங்கள் –

1-ஸ்ரீ யகாந்தன் –
ப்ரீதி விஷயம் -தகுந்த -பூரணமாய் –
அரவிந்த லோசன மனச் காந்தா பிரசாத –காந்தஸ்தே புருஷோத்தம –
ஸ்ரீ சுத்கா மங்களம் -உத்கர்ஷம் –
ஸ்ரீ -சேர்த்து மங்களம் மற்றவர்களுக்கு –
இவளுக்கே ஸ்ரீ என்பதே -வேற சேர்க்க வேண்டாம் –
தரும் திருமகளார் தனிக் கேள்வன் பெருமை உடைய பிரான் –
அப்ரமேயம் –ஜனகாத்மஜா

2–அநந்த-அளவற்ற –
தேச கால வஸ்து ஸ்திதி மூன்றாலும் அளவற்ற – –
விபு -நித்யம் -எல்லா வஸ்துக்களும் அவனே என்பதால் -மூன்றும் உண்டே

3-வர குண கணகை ஆஸ்பதம் வபுகு –
இருப்பிடம் -திவ்ய விக்ரஹம்
வபுகு –ஸ்ரேஷ்டமான –
யதிவரர் -எம்பெருமானார்
குருவரர் தேசிகன் -வரவர முனி –குணங்களை கொண்டு லோகங்கள் வாழும் -சமுதாயம் திரள் -கணங்கள்
திவ்ய மங்கள விக்ரகம் ஸ்வரூபம் இரண்டையும் குறிக்கும் –

4-ஹத-அசேஷ அவத்யம் -தோஷம் -ஒன்று விட -அண்ட ஒண்ணாமல் –
அழித்து-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம்
ஹத -ஆஸ்ரிதர்க்கும் பண்ணி அருளுவான் -சாஷாத் பரம்பரா சம்பந்தம் -உண்டே
பஞ்ச மஹா பாதகங்கள் நான்கு சொல்லி ஐந்தாவது இவற்றோடு சம்பந்தம் உள்ளவர் சொல்லுவார்

5-பரம கம் பதக -பரம ஆகாசம் –
தெளி விசும்பு -இருப்பிடம்

6- வாங்க மனஸ்-யோகோ அபூவுகி –பிறர்களுக்கு அறிய வித்தகன் –
யாரும் ஓர் நிலைமையான அறிவரிய எம்பெருமான்

7-நத ஜன த்ருஷான் பூமி -கண்ணுக்கும் இலக்காவான்
அகில ஜன நயன –அறி வெளிய எம்பெருமான் –
ப்ரீதியால் வணங்குபவர்களுக்கு -எவ்வளவு சாதாரண ஜனங்களுக்கும் கண்ணுக்கு இலக்காவான் –

8- ஆதி புருஷ மனஸ்
புருஷன் -ஜகத் காரண பூதன் –
அந்தர்யாமி –
புரி சேதைகி புருஷன் –

தத் பாதாப்யம் -பரி சரணம் -ப்ரீதி பூர்வக கைங்கர்யம்
திருவடித் தாமரைகளில் -சததம் பற்றுடையவையாக –

மே மனஸ் பவது -அடையட்டும் –
இதுவே பரம புருஷார்த்தம் –

————–

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

அடுத்து ஆசார்ய வந்தனங்கள் -குரு பரம்பரை
வேதாந்தார்த்த அர்த்தம் அறிய

பிரணமய ஆச்சார்ய சிரஸா —வணங்கிய பின் –

தத் ஆதிஷ்டேன வர்த்தமான மார்க்கம் –அவர்கள் அனுஷ்டானம் படியே நடந்து

ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே –
தெளிவாக காட்டப் படுகிறது
தத்வ ஹித புருஷார்த்தம் காட்டும் வேதாந்த அர்த்தங்கள்

ப்ரஹ்ம ஸூத்ரங்கள் பதங்களில் உள்ளடங்கி –
கிருபா மாத்திர ஞான அனுஷ்டான ஆசார்யர்களால் -பிரகாசிப்பிக்கிறோம் –

ஸ்ரீ பாஷ்யம் -156–அதிகரணங்கள்–545- ஸூத்ரங்கள் –

அத்ர இயமேவ வேத விதாம் ப்ரக்ரியா –இதுவே வேத வித்துக்கள் உடைய பிரகிரியை –
சேதன அசேதன விலக்ஷணன் பர ப்ரஹ்மம் என்பது

அசித் வஸ்துந -ஸ்வரூபத்தாலும் ஸ்வாபவத்தாலும் –
ஜடம் பராக் -விகாரங்கள்-சரீர பூதம் –

ப்ரத்யக் ஆத்மா -பத்தன் முக்தன் நித்யன்–ஞான ஆஸ்ரயம் ஆத்ம பூதன்-சேதனன் –

இவர்களை விட அத்யந்த விலக்ஷணன் –

ஹேய ப்ரத்ய நீகத்வம் –
கல்யாணை குணம் –
வியாப்யம் –
தாரகம்
நியாந்தா
சேஷி -இவற்றால் -விலக்ஷணன்

யதோ பகவதா யுக்தம் -ஸ்ரீ கீதாச்சார்யனால் சொல்லப் பட்டது -15-புருஷோத்தம வித்யை –
மூன்று ஸ்லோகங்கள் உதாகரித்து
பக்தி யோக நிஷ்டனுக்கு -விளம்பம் இல்லா பலன் -அவதார ரகஸ்யமும் இந்த புருஷோத்தம வித்யையும் –

க்ஷரம்-அக்ஷரம் -விட வேறு பட்டவன் –
சேதன வர்க்கம் இரு வகை –விகாரம் -ஸ்வ பாவத்தால் –
லோகே-ஸ்ருதி ஸ்ம்ருதி ரூபமான சாஸ்திரத்தில் என்றபடி –

இங்கு –
உத்தம புருஷன் அந்நியன் –பரமாத்மா -உதகரிக்கப் பட்டு
லோகே -சாஸ்திரத்தில் -இப்படி சொல்லப் பட்டதே –

லோக த்ரயம் -சேதன அசேதன -லோகம் -ஆதித்யே –அநு பிரவேசித்து -வியாபித்து -தாங்கி–ஐஸ்வர்ய நியமித்து-

ததாபி – -அவ்யய -ஒட்டாமல் -0வியாப்யகத தோஷம் தட்டாமல்
இவை எல்லாம் -ஸ்வாபாவிகம்-வந்தேறி இல்லை -ஸ்வ பாவ சித்தம் –
யஸ்மாத் விலக்ஷணன் –புருஷோத்தமன் -பிரசித்தி -உடையவன் -இதனால்

வாஸூதேவ -விஷ்ணு -புருஷோத்தமன் -ப்ரஹ்ம நாராயண சப்தம் -ஸ்ம்ருதி புராண ஸ்ருதிகள் கோஷிக்குமே –

ஸ்ருதி ச -பிரதான க்ஷேத்ர –பயோக பதி -சேஷி –

குணே ச –சேஷ சேஷி பாவத்துடன் தத்வ த்ரயம்

பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரீம் -ஜகத்பதி -தனக்கே தான் நியந்தா -ஸ்வாமி -ஸூநிஷ்டன்

அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் வியாப்ய நாராயண -சர்வ ஆதாரன்-சர்வ நியாந்தா –

———————————

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

ஸ்வாமி இந்த முதல் ஸ்துதியில் வேதங்களின் உள்ளுறைப் பொருளான விஷ்ணுவுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக் கொள்கிறார்.

கண்ணன் எம்பெருமானும் கீதையில் இதை, “ஸர்வை: வேதை: அஹமேவ வேத்ய:”
(எல்லா வேதங்களினாலும் நான் ஒருவனே அறியப் படுகிறேன்) என்று தெரியப்படுத்தினான்.

வேதங்கள் அனைத்தின் உள்ளுறைப் பொருளாக விஷ்ணு விளங்குவதால் ஸ்வாமி தொடங்கும் போதே
அவனுக்குத் தம்மை ஸமர்ப்பித்துக் கொள்கிறார்.

இதன் மூலமாகத் தம் சிஷ்யர்களையும் இதை ஸேவிப்பவர்களையும் விஷ்ணு பகவானுக்குத் தங்களை
ஸமர்ப்பித்துக்கொள்ள வழி வகுக்கிறார்.

சிஷ்யர்களை வழிப்படுத்தும்போதே வேத ஸாரத்தையும் அறிவுறுத்தினாராகிறார்.

விஷ்ணு பகவான் மூன்று வகைகளில் உருவகப் படுத்தப் பட்டிருக்கிறார்:

(i)அசேஷ சித்-அசித்-வஸ்து-சேஷிணே

அவனே ஒன்று விடாது எல்லாப் பொருள்களுக்கும் அதிபதி.
அவன் ஆதிபத்யத்தில் உணர்வுள்ளன உணர்வற்றன யாவும் அடங்குவன.
சித் அசித்-அறிவுள்ளன அறிவற்றன யாவும் அடங்குவன.

அசேஷ பதம் சித்திலும் அசித்திலும் அந்வயிக்கும் –

நம் அனுபவத்தில் நாம் உணர்வுள்ளன/உணர்வற்றன யாவும் சில தொடர்புகளாலும் நெறிமுறைகளாலும்
கட்டுப்படுத்தப் பட்டுள்ளதைக் காண்கிறோம்.

அவை ஒன்றுக்கொன்று ஸ்வதந்த்ரமாயும் இல்லை.
அவற்றின் அவ்வப்போதைய நிலை சில நெறிகளுக்குட்பட்டே அமைகின்றன.
அவை யாவுமே ஓர் உயர் கோட்பாட்டுக்குட்பட்டே இயங்குகின்றன.

அவை “சேஷ பூதர்”, அதாவது கட்டுப்பட்டவர்கள் என அறியப்படுகின்றன.

இவ்வாறின்றி, தன்னிச்சையாய் ஸ்வதந்த்ரனாய் இருப்பவன் சேஷி எனப்படுகிறான்.

இப் பதம் லீலா விபூதி நாயகத்வத்தைக் காட்டும்-
விசிஷ்டாத்வைத சித்தாந்தம் சுருக்கமாக இங்கே அருளிச் செய்கிறார் —

அசேஷ சித் -ஜீவன் ஒருவன் அல்ல பலர் என்றதாயிற்று

வஸ்து-ஜகத் மித்யை பொய்யானது இல்லை மெய் என்றதாயிற்று

ஜீவாத்மா தன் சரீரத்தை தனது வசமாக்கிக் கொள்வது போலே அனைத்துக்கும் ஜீவனாகிய ப்ரஹ்மம்
அசேஷ சித்துக்களை அசித்துக்களையும் தனது வசமாக்கிக் கொள்கிறான்

ஜகத் ப்ரஹ்மமே என்றதும் சரீராத்மா சம்பந்தம் அடியாகவே ஒழிய
ஐக்கியம் சொல்வது அல்ல என்றதும் ஆயிற்று

இத்தால் ப்ரஹ்மம் வேறு சேதன அசேதனங்கள் அடங்கிய ஜகத் வேறு என்றதாயிற்று –

ii) சேஷ சாயினே

அவன் ஆதிசேஷனாகிற திவ்ய நாகத்தின் மீது சாய்ந்துள்ளான்.

ஸம்ஸார பந்தங்களிலிருந்து நித்யமாக விடுவிக்கப் பட்டிருப்பதால் நித்யஸூரி அல்லது ஸர்வகால முநி எனப்படுகிறான்.

இதனால் எம்பெருமானின் ஆதிபத்யம் என்பது ஒரு உண்மையான உறவு என்பது ஆதிசேஷன் போன்ற
நித்யஸூரிகளால் நமக்குத் தெரிகிறது.

ஞானம் பிறந்த தசையில் எம்பெருமானுக்கு நாம் சேஷ பூதர்கள் எனும் உணர்வுண்டு என்பதும் தெரிகிறது.

இதுவே சேஷ -சேஷி ஸம்பந்தம்.

இது நித்ய விபூதி யோகத்வத்தை சொல்லும்-

நித்ய முக்த பத்னி பரிஜனாதிகளுக்கும் இது உப லக்ஷணம்

முதல் குறிப்பால் ஸ்வாமி எல்லாவற்றுக்கும் விஷ்ணுவுக்கும் உடையவன்-அடிமை என்றார்.
இரண்டாவது குறிப்பால் ஸம்பந்த ஞானம் பெற்றவனே முக்தனாகக் கடவன் என்கிறார்.

ஆனால் ஒருவனுக்கு அடிமைப் பட்டிருப்பது துக்கமான விஷயமன்றோ?
ஆகில், இந்தத் துக்கத்தைத் தவிர்க்க ஒவ்வொருவனும் இந்த ஞானப் ப்ராப்தியைத் தள்ளிப் போட விரும்புவானன்றோ?

இதற்கு விடையாவது,
இவ்வுறவு உண்மையானது என்பதால் ஒவ்வொருவரும் உணராமல் போனாலும் இவ்வுறவிலிருந்து தப்ப முடியாது.
மேலும் எம்பெருமானின் ஆளுகைக்குட்பட்டிருப்பது அளவற்ற இன்பமே ஆதலால் துன்பம் இல்லை என்பதே.
இதையே ஸ்வாமி மூன்றாவது குறிப்பில் விளக்குகிறார்.

[iii] நிர்மலானந்த-கல்யாண-நிதி:-நிர்மலன் -அனந்தன் -கல்யாண நிதி

விஷ்ணு பகவான் தூய முடிவற்ற மங்கள ஸ்வரூபி. அவன் தன்னிகரற்றவன்.
நித்ய ஸூரிகளும் அவனாலேயே ஆனந்தம் அனுபவிக்கின்றனர்.

உணர்வுள்ளவை யாவும் சம்சார சம்பந்தத்தினால் தூய்மை இழக்கின்றன.
ஆனால் அவன் எப்போதும் தூயோனாயுள்ளான்.
அவனவதாரங்கள் தூயன, தெய்வீகமானவை. அவன் விடுபட்டவன், மற்றவர்களை விடுவிக்கவும் வல்லவன்.
ஆகவே நாம் அவனைச் சரண் புகுதலும், மோக்ஷம் பெறுதலும் நியாயமே .

நிர்மலன் அவன் குற்றமற்றவன்,
அனந்தன் -அபரிச்சேத்யன் -தேச கால வஸ்து த்ரிவித பரிச்சேத ரஹிதன் –
கல்யாண நிதி -நற்குண ஸமுத்ரம், அழகின் முழு உரு,

ஆகவே விஷ்ணு அநுபவம் ஆனந்தம் தருவது.

அவன் ஸ்வாமித்வம் நமக்கு ஸுக ரூபமானது.
ஞானிகளும் முக்தரும் நித்தியரும் இந்த ஆனந்தத்தை அனுபவிதத்திருப்பவர்கள்.

ஸம்சார ஸம்பந்தம் தாற்காலிகம், துன்பம் நிறைந்தது.

விஷ்ணு ஸம்பந்தம் நித்யமானது, இன்பமயமானது.

அகிலஹேய ப்ரத்ய நீகத்வமும் கல்யாண குணாத்மகாத்வமுமே ப்ரஹ்மத்துக்கு உபய லிங்கங்கள் –

அவனது எல்லையற்ற மங்கலத்தன்மை அவனது பூர்ணத்வத்தைக் காட்டுகிறது.
அவன் ஸ்வாமித்வத்திலும் கூட அபூர்ணனல்லன்.
அவனது இந்த பூர்ணத்வமே நமக்கு நம் விடுதலையை, மோக்ஷத்தை உறுதி செய்கிறது.

அவனே விஷ்ணு பகவான். அவன் தூரஸ்தனல்லன்.
அவன் எல்லாவற்றிலும் நிறைந்துள்ளான் என்பதே அச் சொல்லின் பொருளுமாகும்.

எல்லாவற்றிலும் நிறைந்திருந்தும் அவன் அவற்றால் மாசடைவதில்லை.

சூர்யனின் கதிர்கள் போல் அவன் அப்பழுக்கின்றித் திகழ்கின்றான்.
சூர்யனின் கதிர்கள் சேற்றின் மேல் படிந்தாலும் அவை அழுக்கடைவதில்லை அன்றோ!

நாம் விஷ்ணுவைச் சரண் அடைகின்றோம்.
நம
கீழே ப்ராப்யமான ப்ரஹ்மத்தை விவரித்து அருளி
இனி பிராபகம்- இதுவே ப்ரஹ்மத்தை அடையும் உபாயம் -என்கிறார்

கேவலம் நமஸ்காரத்தை சொன்னது அன்று இது –
பக்தி பிரபத்தி பர்யந்தம் நமஸ் அர்த்தம் கொள்ள வேண்டும்

ஆக இத்தால் ஸ்வ சித்தாந்த சுறுக்கங்களை அருளிச் செய்தார் ஆயிற்று

—————–

பரம் ப்ரஹ்மை வாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோ பாத்யா லீடம் விவசம் அசுபஸ்யாஸ் பதமிதி I
ஸ்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய நமஸ்கார ரூபம்-

இந்த ஸ்லோகம் ஸ்ரீ யாமுநாசார்யரைப் புகழ்ந்து ஸமர்ப்பிக்கப்பட்டது.

அவர் காலத்தில் வேதங்களின் உள்ளுறைப் பொருளைப் புரிந்து கொள்வதில் இருந்த குழப்பங்களை நீக்குவதில்
அவரது பெரும்பங்கு இதில் வற்புறுத்தப் படுகிறது.
வேதங்களின் நிலைப்பாட்டை விளக்க
ஸ்ரீ யாமுநாசார்யர் ஸித்தித்ரயம் மற்றும் ஆகமப் ப்ராமாண்யம் போன்ற க்ரந்தங்களை சாதித்தருளினார்.

இந்த ஸ்லோகத்தில் எம்பெருமானார் தம் காலத்தில் இருந்த
மூன்று ப்ரதான வேதாந்தக் கோட்பாடுகளைக் குறிப்பிடுகிறார்.
இம் மூன்று கோட்பாடுகளையும் ஏற்பதில் உள்ள பெரும் ப்ரச்சினைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டுகிறார்.
இவ்வாறாக, மாற்றுக் கோட்பாடுகளைப் பற்றிய ஒரு சிறு விமர்சத்தை நமக்கு வைக்கிறார்.

சங்கர பாஸ்கர யாதவ பிரகாச மதங்களை நிரசித்தும்
தம்மை ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷித்து அருளிய
ஸ்ரீ ஆளவந்தாரை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் இதில்

(i) பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி

ப்ரஹ்மம் நிர்விசேஷ சின் மாத்திரம் -ஞான மயம் -ஸ்வயம் பிரகாசம் -மற்றவை அனைத்தும் மித்யா –
அந்த ப்ரஹ்மமே மாயையால் அஞ்ஞானத்தால் ஜகத்தாகத் தோற்றம் அளித்து
ஜென்ம ஜரா மரணாதி துக்கங்களை அடைகிறது என்பர் அத்வைதிகள்

அத்வைதத்தில் பர ப்ரஹ்மமே குழம்பியுள்ளது, ஸம்ஸாரத்தில் அந்வயிக்கிறது.

“பரம்” எனும் சொல் எல்லா வகையிலும் மேன்மையைக் குறிக்கும்.
வேதங்களில் ப்ரஹ்மத்தின் மேன்மை விளக்கப் படுகிறது.

ப்ரஹ்மம் எல்லா மங்களங்களாலும் நிறைந்தது, ஒரு குறையுமற்றது.
ஆகவே தான் அது ப்ரஹ்மம் எனப்படுகிறது,
அறியப்பட வேண்டியது என ஓதப்படுகிறது.
தன்னை உபாசிப்போர் குறைகளைப் போக்கி,
அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்கிறது.

அத்வைதத்தில் இரு முரண்பாடுகள் உள்ளன –
(i) எல்லா வகையிலும் மேன்மையுற்ற ப்ரஹ்மமே அஞ்ஞானத்தில் மூழ்குமாயின் அதை
ப்ரஹ்மம் என்றழைக்க அதன் மேன்மை தான் யாது?
(ii) எல்லாரையும் உஜ்ஜீவிப்பிக்க வேண்டிய ப்ரஹ்மம் சோகிக்குமாயின் அதை உய்விப்பார் யார்?

”ஏவ” எனும் சொல் இந்த முரண்பாடுகளை வலியுறுத்துகிறது.
எப்பொழுதும் தனக்குத் தானே பிரகாசித்துக் கொண்டு இருக்கும் ப்ரஹ்மத்துக்கு தன்னை அறியாமையாகிய
அவித்யை எப்படி சம்பவிக்கும் -என்கிற விரோதமும்
ப்ரஹ்மமே சம்சாரம் அடைந்தால் மோக்ஷம் பெற வேதாந்த ஸ்ரவணாதிகள்
செய்ய வேண்டி இருக்கும் விரோதமும் உண்டாகுமே

தனக்கு ஏற்படும் அஞ்ஞானத்தினால் ப்ரஹ்மம் மாயையில் சிக்குண்கிறது
(ப்ரம பரிகதம்) இம்மாயையே பார்வையில் வேறுபாட்டை விளைக்கிறது.

அத்வைதத்தில் ப்ரஹ்மம் ஒன்றே உணர்வுள்ளதாக ஒப்புக் கொள்ளப் படுவதால் வேறுபாடு பற்றிய
உணர்வு பூர்வமான அநுபவம் மட்டுமே இருக்க முடியும்.

ப்ரஹ்மம் மாயையை அனுபவிப்பதில்லை,
பிற யாவும் அனுபவிக்கின்றன என அத்வைதியால் வாதாட இயலாது.
ப்ரஹ்மம் தவிர்த்த ஏனைய யாவும் மாயையின் பாற்பட்டனவே.

மாயையினால் உண்டான ஒன்று மாயையை அனுபவிப்பது என்பது முரண்பாடாகும்.

முதலில் தான் ஸ்ருஷ்டித்த மாயையின் விளைவு தன் மாயையைத் தானே உருவாக்க முடியாது.
மாயையின் பொருள்களை அநுபவிக்க வேண்டுமாயின் அம்மாயை முன்பே இருக்க வேண்டும்.
ஆகவே, ப்ரஹ்மம் தானே அதை முதலில் அநுபவித்தாக வேண்டும்.

(ii) தத் பரோபாத்யாலீடம் விவசம்

ப்ரஹ்மன் மாற்றம் விளைப்பவற்றால் கட்டுண்டு கிடக்கிறது.

இது பாஸ்கராசார்யரின் கொள்கையை விளக்குகிறது.
தான் மட்டுமே ஸத்யமாயுள்ள ப்ரஹ்மத்தை மாயை-அவித்யை எவ்வாறோ குழப்புகிறது
என்பதை நிலை நிறுத்துவதில் உள்ள ஸ்ரமங்களை பாஸ்கரர் உணர்ந்திருந்தார்.

“பர” என்றதால்
இயல்வுகள் யாவும் தனிப்பட்டவை, உண்மையானவை என்பதும் பெறப்படுகிறது.
இவ் வியல்புகள் ப்ரஹ்மத்திலிருந்து வேறுபட்டவை.
இவற்றால் தளை யுண்டு ப்ரஹ்மம் கர்ம சக்கரத்தில் மாட்டிக்கொள்கிறது.

மேலும் இவ் விளக்கத்தில், மேம்பட்ட ஒரு ப்ரஹ்மம் தானே கட்டுண்பதும்
துக்கத்தில் உழல்வதுமான முரண்பாடும் உள்ளது.

(iii) அசுபஸ் யாஸ் பதம் = ப்ரஹ்மம் அசுபங்களின் இருப்பிடமாகிறது

இது யாதவ ப்ரகாசரின் கொள்கையை விளக்குகிறது.

யாதவ ப்ரகாசர் ப்ரஹ்மமே அறிவுள்ளன-அறிவற்றன இரண்டுமாகவும் பிரிந்திருப்பதாகவும்,
ஆகவே அசுபங்களின் இடமாய் இருப்பதாகவும் கருதினார்.

அறிவற்றனவின் அசுபத்தன்மை அவை எப்போதும் மாறிக் கொண்டே இருப்பதாலும்,
நிலை நில்லாமையாலும் ஏற்படுகிறது.

அறிவுள்ளனவற்றின் அசுபத் தன்மை அவை கர்ம ஸாகரத்தில் மாட்டிக் கொள்வதாலும்
அவ்வினைகளால் துன்புறுவதாலும் ஏற்படுகிறது.

வேதங்களில் சொல்லப்படும் ப்ரஹ்மம்
“ஸ்வேதர-ஸமஸ்த-வஸ்து-விலக்ஷண”மாய் , அதாவது
மற்றெல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபட்டும்,
அவற்றின் அசுபங்கள்/அமங்கலங்கள் யாதொன்றும் இல்லாமலும் இருக்கிறது.

ஆனால், யாதவப்ரகாசரின் யோஜனையில், வேதக் கோட்பாட்டுக்கு விருத்தமாக,
ப்ரஹ்மமே அமங்கலங்களின் இருப்பிடமாய் உள்ளது.

”பரம் ப்ரஹ்மைவ” எனும் சொற்கள் இம்மூன்று கோட்பாடுகளுக்குமே பொருந்தும்.
அதாவது
எல்லாப் பொருள்களுக்கும் மேலானதும்
எல்லா வகைகளிலும் மேம்பட்டதும்
ஆனந்த ஸ்வரூபமானதும்
குறைகளே அற்றதும்
எல்லாவகைகளிலும் மங்கலமானதும் பரிசுத்தமானதும் ஆன ஒன்றை
சங்கரர், பாஸ்கரர், யாதவப்ரகாசர் மூவருமே
அஞ்ஞானம், அமங்கலங்கள், துக்கம் இவற்றால் உழல்வதாகக் கருதுகிறார்கள்.

(iv) ச்ருதி ந்யாயா பேதம் ஜகதி விததம் மோஹநம் இதம் தம:

ப்ரஹ்மத்தை பூர்ணம் என்றும், பூர்ணமன்று என்றும் இவ் விளக்கங்களால் அறிந்து கொள்வது
தவறான அறிவும், அறியாமையும் ஆகும்.

“இதம் தம:” என்றது இதையே.
இத்தகைய புரிந்து கொள்ளல் தர்க்க நெறிகளுக்கு முரணானது.
வேதங்களைப் புரிந்து கொள்ள உதவும் நியாய சாஸ்த்ரத்துக்கு முரணானது ஆகும்.

கேள்வி: இவை யாவும் தவறான புரிந்து கொள்ளல், வேதங்களுக்கு விரோதமானவை,
வேதங்களின் அங்கங்களான நெறிகளுக்கு முரணானவை….எனில், இவற்றை விமர்சிப்பான் என்?

விடை: ஏனென்றால், அவைகளும், “ஜகதி விததம்” உலகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன,
பலரும் இக் கொள்கைகளால் மயங்கியும் கிளர்ச்சியுற்றும் உள்ளனர்.

அவ்வாறே இருக்கட்டுமே.
இக்கருத்துகள் தவறானவை, மறைகளின் கருத்துக்கு முரணானவை, தமக்குள்ளும் முரண்பாடுகளைக் கொண்டவை
பலராலும் பின்பற்றப் படுபவை…..இருக்கட்டுமே!
நாம் ஏன் அவற்றை விமர்சிக்க வேண்டும்?

விடை: ஏனெனில் இப் பாதைகளைப் பின்பற்றினால் பற்றுவோர் வழி தவறிப் போவர்.
இக் கருத்துகள் “மோஹநம்” = மதி மயக்குபவை.
ஆகவே, அறியாமை இருள் விமர்சிக்கத் தக்கதே.

இப்படிச் சொல்லி, ஆசிரியர் இவ் விமர்சத்தைத் தாம் செய்ய மேற்கொண்ட பின்னணியை விளக்கி யருளுகிறார்.

வேதங்களுக்குத் தவறான விளக்கங்களை ஸ்வாமி தம் கருணையினால் மறுத்துரைக்கிறார்.

ஞானம் பெற்றவர் பெறாதோருக்கு அறிவுறுத்தி நெறிப் படுத்துவது கடமையாகும்.

ஆகிலும் ஸ்வாமி இதைத் தம் ஆசார்யரான
ஆளவந்தார் மேல் ஏறிட்டு ஸாதிக்கிறார்:

(v) யே நா பாஸ்தம் ஸ ஹி விஜயதே யாமுன முநி:
இச் சொன்ன அறியாமை இருளை நீக்கும் யாமுன முநி வென்று நிற்பாராக!

தர்க்க விரோதமானதும் சாஸ்த்ர விரோதமானதுமான கோட்பாடுகளை மறுத்து ஒழிப்பதில் தம்
ஆசார்ய அருள் பெரும் பணியினை நினைவு கூறுகிறார்.

தம் ஆசார்யருக்கு இவ்விஷயத்தில் ஜய கோஷம் இடுகிறார்.

வேதார்த்த ஸங்க்ரஹத்தின் மூலம் யாமுநாசார்யரின் வெற்றியை ஸ்வாமி நிரந்தரமாக்கியுள்ளார் என்ன வேண்டும்.

தம் குருவின் திருவுள்ளத்தை சீடர் இக் க்ரந்தம் முழுக்கத் தெளிவாக அர்த்த புஷ்டி யுள்ளதாக்கி யுள்ளார்.

————————

வேதங்களும் அவற்றின் இறுதியான வேதாந்தமும்
உலகம் யாவும் நன்றாய் இருக்க அவச்யமான ஒழுக்க நெறியைப் போதிக்கின்றன.

இதன் மூலம், ஸ்வாமி அனைத்து வேதங்களின் நோக்கமே முழு சமுதாயத்தின் மங்களமே என அறுதியிடுகிறார்.
வேதாந்தத்தைக் கற்பதன் மூலம் ஒரு சரியான பொருளைப புரிந்து கொள்ள முடியும்.

வேதாந்தத்தைப் பல்வேறு வழிகளில் புரிந்து கொள்ள முடியும் என்பதை ஸ்வாமி மறுக்கிறார்.

ஒரு தனிப்பட்ட ஆத்மா, பரமாத்மா இரண்டுமே துல்யமாகப் புரிந்து கொள்ளப் படவேண்டும்.
அதன்பின், ஆத்மா, பரமாத்மா இரண்டைப் பற்றிய அறிவோடு
ஒவ்வொருவரும் தந்தமக்குள்ள ஸமூஹ நிலை,
வகுப்புக்கேற்ப மனோபாவத்தோடு செயல் முறையில் ஈடுபட வேண்டும்.
இந்தச் செயல்பாடே பக்திக்கு வழி வகுக்கும்.

உலகம் முழுதுக்கும் மங்கள ஹேதுவானதால்
வேதாந்தம் மக்களை முற்றும் துறத்தல் போன்ற தீவிர துறவு நிலைகளை
ஏற்கச் சொல்வதாக நினைக்கவில்லை.

ப்ரத்யக்ஷ வாழ்வுக்கு ஒரு அர்த்தமும் இலக்குமுண்டு என்பதை மறக்கலாகாது.
ஒரு துறவிகூட, உலகியலில் உள்ள பிறர் வாழ்வோடு இயையாமல் இருக்க முடியாது.

சங்கரர் போன்றோர் உலகியல் ஜீவனத்துக்கு ஒரு ப்ரத்யக்ஷ வாழ் முறையும்,
ஆத்மோஜ்ஜீவனத்துக்கு பந்தங்கள் அறுபட்ட இன்னொரு முறையையும் இருவேறு வாழ்வுகளாகக் கண்டனர்.

இதில் முன்னது தாழ்ந்த நிலை,
பின்னது உயரிய நிலை என்று அபிப்ராயம்.

அசேஷ ஜகத் –நான்கு வித புருஷார்த்தங்களையும் –
ஒன்றில் பற்று கொண்ட பலவகைப்பட்ட அதிகாரிகளும் –

ஹித அநு சாசன -ஹிதத்தை தெளிவாகவும் விவரமாகவும் சொல்லும் வேதங்கள்
முக் குணத்தவர்களுக்கும் வேதம் உபதேசிக்கும் –

ஸ்வாமி வாழ்க்கையை இப்படி இரு கோடுகள் போட்டுப் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை.

மாறாக, ப்ரத்யக்ஷ உலகியல் வாழ்வும், உஜ்ஜீவனம் தேடும் ஆன்மீக வாழ்வும் ஒன்றெனக் கருதினார்

பந்தங்களினின்று விடுபட ப்ரத்யக்ஷ வாழ்வை அவஸ்யம் விடவேண்டும் என்று அவர் கருதவில்லை.
மாறாக,
இவ்வாழ்க்கையை வாழ்ந்தபடியே நம் லக்ஷ்யத்துக்குச் செயல்பட வேண்டும்.

ஒரு வேதாந்திக்கும் ஒரு ஞானமற்றவனுக்கும் உள்ள வேறுபாடு, மனத்தளவில் ஆனதே.

ஒரு வேதாந்தி ஆத்மா பரமாத்மா இரண்டையும் புரிந்து கொண்டு செயல்படுகிறார்,

ஒரு ஸாமான்யர் வெறும் உணர்ச்சிகள், ஆசைகள், குழப்பத்தோடு செயல்படுகிறார்.

ஆத்மா பரமாத்மாவைப் பற்றிய தெளிந்த சிந்தையோடு
தார்மீகமாக இலக்கில் வாழ்க்கையை நடத்துபவர்க்கு தெய்வீகக் காதல்,

பக்தி தானே ஏற்பட்டு அவரை எம்பெருமானிடம் அழைத்துச் செல்கிறது.
பக்தியே வேதாந்தத்தின் இறுதிச் செய்தி.

அபிசாராதி யாகங்களைச் செய்து நாளடைவில் புத்தி மாறி
சாத்விகர்கள் ஆவரே

இவ்வாறு சகல ஜனங்களுக்கும் வேதம் வாத்சல்யம் காட்டி ஸ்ருதி –
அழிவற்ற நித்ய அபவ்ருஷேயத்வத்தால் -சுடர் மிகு ஸ்ருதி –

ஸ்ருதி நிகரம் -வேத சமூகம் -சிரஸீ – வேதாந்தம் –
அயமர்த்த சமதி கத –சொல்ல இருக்கும் பொருள் நன்கு அறியப் படுகிறது –

இவை ஜீவ பரமாத்ம யாதாம்ய ஞான பூர்வக –
சேஷி சேஷ சம்பந்த ஞானமும்
சகலமும் ப்ரஹ்ம சரீரம் –
அவன் உள்ளே புகுந்து நியமிக்கிறார் என்ற ஞானமும் வருமே –

வர்ணாஸ்ரம தர்ம இதி கர்தவ்யதாக –
யாதாம்யா ஞானத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கும்

வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானம் கொண்டு -உபாசனம் –
த்யான அர்ச்சன ப்ரணாமங்கள் -செய்து ப்ரஹ்ம பிராப்தி அடைய உபதேசிக்கும் –

கர்ம அனுஷ்டானம் ப்ரஹ்ம உபாசன இச்சையைப் பிறப்பிக்கும் –

கர்ம யோகம் ஒன்றாலேயே –
ஞான யோகம் ஒன்றாலேயே –
ப்ரஹ்ம பிராப்தி என்பது ஸ்ரீ பாஷ்யகாரர் பக்ஷம் இல்லையே

நாம் செய்யும் கர்ம யோகம் பகவத் ஆராதனம் ஆகும் –
அதனால் ரஜஸ் தமஸ் அழிந்து சத்வம் வளர்ந்து பக்தி பிறந்து
பக்தி யோகமாக வளர்ந்து மோக்ஷ சாதனம் ஆகுமே –

எம்பெருமானின் திருவடித் தாமரைகளில் வைக்கும் உறுதியான அன்பே பக்தி.
இதுவே த்யானம், தொழுகை, ஸ்மரணம், கீர்த்தனம் என வெவ்வேறு நிலை அடைகிறது.

ஸ்வாமியின் திருவுளத்தில் அறியப்படாத ஒன்றின்மேல் அறிவுணர்வின்றிச் செய்வது பக்தி அன்று.

ஞானியர் சிலர் பக்தி ஞானம் இரண்டும் வெவ்வேறு பாதைகள் போலக் காட்டினர்.

சிலர் தம் ப்ரத்யக்ஷ அநுபவத்திலிருந்து பக்தியைவிட ஞாநமே உயர்ந்தது என்றும் கருதுவர்.

ஆனால் ஸ்வாமிக்கு பக்தி ஞானம் இரண்டும் ஒன்றே.
ஞானமே பக்தியாக முதிர்கிறது,
அன்பே மேலும் அறிந்துகொள்ள உதவுகிறது.
ஆழ்ந்த அன்பு முதிர்ந்து தளைகளிலிருந்து விடுவித்து எம்பெருமானுடன் பிணைக்கிறது.

எம்பெருமானின் இணையடித் தாமரைகளை அடைவிக்கும் மங்களமே
வேதாந்தம் சொல்லித்தரும் பாடம்.

பரம புருஷ சரண யுகள -“இணை யடித் தாமரைகள்” என்பதால்
ஸ்வாமி ஆத்மா எம்பெருமானுக்கு சேஷப்பட்டவன் என உணர்த்துகிறார்.

எத் தடையுமின்றி எல்லா வகையிலும் எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்வதே பந்தத்திலிருந்து விடுதலை.
அன்பின் மகிழ்ச்சி கைங்கர்யத்தில் உள்ளது.
உகப்பைத் தருவது ஒன்றே நோக்காய்,
பிரதிபலன் எதிர்பாராமல் பிறர் மகிழ்ச்சிக்காகவே செய்யப்படும் பணியே கைங்கர்யம்.

ஈஸ்வரானுபவமானது
அவனுக்கு அவன் உகக்கக் கைங்கர்யம் செய்யும் அவா மிகுதலே.
கைங்கர்யம் என்பது கட்டாயத்தின் பேரிலன்று,

ஈஸ்வரானுபவத்தினாலே தானே கிளர்ந்தெழும் அவா.

இக்கருத்துகளின் மூலம் ஸ்வாமி செயல்பாடு ஆன்மிகம் இரண்டையும் வெகு எளிதாகப் பிணைக்கிறார்.
ஒருவரின் செயல்பாடு அவரது ஞானம், அநுபவம் இரண்டினாலேயே அமைகிறது

ஒருவரின் ஞானம் பிழையற வளர்க்கப்பட்டால்,
அவரது அநுபவமும் முழுக்க ஈச்வராநுபவமாயின் செயல்பாட்டுக்கு அஞ்சவோ அதைத் தள்ளவோ வேண்டா.

ஆகவே ஸ்வாமியின் திருவுள்ளப்படி பந்த ஜீவனத்தில் செயல்பாடோ அல்லது மோக்ஷமோ
இரண்டிலுமே (கைங்கர்யமாகிற) செயல்பாடு இருக்கவே செய்கிறது.
கர்மம் இல்லாமல் இல்லை, செயல் இன்றி இருப்பதுமில்லை.

அத்யர்த்த ப்ரிய-பூர்வக த்யான அர்ச்சன பிரணாமாதிகள் -ஆதி சப்தம் -திரு நாம சங்கீர்த்தனம் -யஜனம் –
இவை அனைத்தும் பிரதிபந்தகங்களையும் போக்க வல்லவை –
தத் பிராப்தி பலம் -இவற்றுக்கு உண்டே

இந்த ஆரம்ப வாக்யங்களால் ஸ்வாமி ஆத்மா, இறைவன், பந்தம், மோக்ஷம், அன்பு, ஞானம், கர்மம் (செயல்பாடு), கைங்கர்யம்
ஆகிய யாவற்றையும் ஒரு கோப்புக்குள் கொணர்ந்து அவை ஒன்றுக்கொன்று
இயல்பாகத் தொடர்புடையவை என்பதை அழகாகக் காட்டுகிறார்.

ஆத்மாக்கள் சரீர பயத்தில் உள்ளன. தேவர், மனிதர், என்பன போன்ற உயிர் வாழிகளாய் சரீரத்தில் அவை படும் துயர்களால்
சரீரத்தை ஆத்மா என்று மயங்கியுள்ளன.
இம்மயக்கமே எல்லாத் துன்பத்துக்கும் காரணம்.

சரீரத்தை ஆத்மா என்று மயங்குவதே சரீரம் எடுக்கவும் துயரப்படவும் ஹேது. துயரத்தால் பயம்.

வேதாந்த வாக்யங்கள் இவ் வச்சத்தைப் போக்குவதிலேயே உத்பத்தி ஆகின்றன.

அவை ஆத்மாவின் உண்மை சாரம்,
இறைவனின் உண்மை நிலை,
ஈச்வரனை வணங்கும் வகை,
ப்ரஹ்மத்தை உணர்வதின் பேரின்பம் இவற்றை அறிவுறுத்தி இவ்வச்சத்தைப் போக்குகின்றன.

அஸ்ய ஜீவாத்மா –பரமாத்மாவுக்கு சரீர பூதன் -சேஷ பூதன் -அவனில் வேறு பட்டவன் –
இத்தால் ஐக்கியம் மறுக்கப் படுகிறது

அநாதி அவித்யா சஞ்சித -என்று
அவித்யை அடியாகவே சரீரம் –

கர்ம ப்ரவாஹ ஹேதுக-ப்ரஹ்மாதி ஸூர நர ஸ்தாவராத்மக சதுர்வித தேக பிரவேச க்ருத –
தத் தத் ஆத்ம அபிமான ஜெனித அவர்ஜனீய பவ பய வித்வம்ஸனாய –
விலக்க முடியாத சம்சார பயத்தைப் போக்க
தேக வ்யதிரிக்த ஆத்ம ஸ்வரூப -ஞான ஆனந்த லக்ஷணம் -ஸ்வ பாவம் –
அநந்யார்ஹ சேஷ பூதன்-என்பதை அறிந்து
தத் அந்தர்யாமி பரமாத்ம ஸ்வரூப -சர்வ சேஷி -ஸ்வ பாவம் -ஆஸ்ரித ஸூலபன் -சரணாகத வத்சலன் -என்பதையும் அறிந்து
தத் உபாசன -தத் பல பூத -ஆத்ம ஸ்வரூப ஆவிர்பாக பூர்வக
அனவதிக அதிசய ஆனந்த ப்ரஹ்ம அனுபவ ஞாபநே–அநு சாஸந -சப்தமும் ஞாபநே-சப்தமும் ஒன்றே –

ஸ்வாமி தொடங்கும் போதே
வேதாந்தத்தின் நோக்கம் ஸர்வ ஜன சுகம் என்பதை விளக்கினார்.

வேதாந்தம் ஆத்ம ஞானத்தைப் போதித்து
சரீர பயத்தையும் துயரத்தையும் நீக்குகிறது.

துயரத்தை மறுப்பது மட்டுமன்று,
பேரின்பத்தை அநுபவிப்பதும் வேதாந்தத்தின் பயனாகும்.

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சுருதி பிரகாசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்– — நியாய சாஸ்த்ரம்– பாடம் -40–

August 5, 2021

பாடம் -40-நியாய சாஸ்த்ர சுருக்கங்கள் பார்த்து –
அவை வேதாந்த பாடத்துக்கு உதவு மவற்றைப் பார்த்து நிகமிப்போம் –

அறிவின்மை இருளைப் போக்கவே வேதம் -மானம் ப்ரதீதி
த்யாஜ்ய உபாதேய விபாகம் பெறுவதற்கு உதவும்
ஸாஸனாத் -ஸாஸ்த்ரம்
18-வித்யா ஸ்தானங்கள் -நான்கு வேதங்கள் -ஆறு அங்கங்கள் -எட்டு உப அங்கங்கள்

நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும்
ருக் யஜுஸ் சாமம் அதர்வணம்
வேதத்தின் சொற்களை காக்க
1-சிஷா -எழுத்துக்களின் உருவாக்கம் உச்சரிப்பு கற்க
2-சந்தஸ் -செய்யுள்களின் எழுத்துக்களின் அளவு மற்றும் தன்மைகளை பயில

வேதத்தின் பொருளைக் காக்க
3-வியாகரணம் -சொல்லின் பகுதிகளையும் அவற்றின் பொருள்களையும் அறிய
4-நிருக்தம் -வேதத்தில் கடினமான பதங்களுக்குப் பொருள் தெரிய

வைதிக கர்மங்களின் பிரயோகத்தைக் காக்க
5-கல்பம் -வைதிக கர்மங்களை செய்யும் முறையைப் புரிய
6-ஜ்யோதிஷம் -வைதிக கர்மங்களை செய்யும் காலத்தை நிர்ணயிக்க

வேதங்களின் எட்டு உப அங்கங்கள்
1-புராணங்கள் -நற் பண்புகளை வளர்க்க
2-நியாயம் -பொருள்களின் தன்மைகளை அறிய -தர்க்க சாஸ்திரம் என்றும் இதற்கு பெயர்
3-மீமாம்ஸை -வேதங்களை ஆராய
4-தர்ம சாஸ்திரம் -ஆசாரம் கடைப்பிடிக்க
5-ஆயுர் வேதம் -உடலைப் பராமரிக்க
6-தனுர் வேதம் -அரசர்கள் நாட்டைக் காக்க
7-காந்தர்வ வேதம் -சங்கீத சாஸ்திரம் -மனசை சாந்தமாக்க
8–அர்த்த ஸாஸ்த்ரம் -அரசர்கள் ராஜ்ஜியம் செய்ய –

நியாயத்தின் முக்யத்வம்
காணாதாம் பாணி நீயம் ச ஸர்வ ஸாஸ்த்ர உபகாரகம்

நியாமமும் வியாகாரணமும் அனைத்து சாஸ்திரங்களுக்கும் உதவுகின்றன

ஆர்ஷம் தர்ம உபதேசம் ச வேத ஸாஸ்த்ர அவிரோதி நா
யஸ் தர்கேண அநு சந்தத்தே ச தர்மம் வேத ந இதர -மனு ஸ்ம்ருதி -2-106-

ஆர்ஷம் என்னும் வேதத்தையும் -ஸ்ருதிகளையும்-
தர்ம உபதேசம் என்னும் ஸ்ம்ருதிகளையும்
வேதத்தோடு முரண்படாத தர்க்கத்தைக் கொண்டு எவன் ஆராய்கிறானோ அவன் தான் தர்மத்தை அறிகிறான்
மற்றவன் அறிவது இல்லை

வைசேஷிக மதம்
ப்ராஸீன நியாய மதம்
மற்றும் நவீன நியாய மதம்

வைசேஷிக மதம்
கணாத மகரிஷி -வைசேஷிக ஸூத்ரங்கள்
ப்ரசஸ்தா பாதர் -பதார்த்த தர்ம ஸங்க்ரஹம்

ப்ராஸீன நியாய மதம்
கௌதம மகரிஷி -நியாய ஸூத்ரங்கள்
வாத்ஸ்யாயனர் -நியாய பாஷ்யம்
உத்யோதகரர் -நியாய வார்த்திகம்
வாசஸ்பதி மிஸ்ரர் -நியாய வார்திக தாத்பர்ய டீகா
உதயநாச்சார்யர் -நியாய வார்திக தாத்பர்ய டீகா பரிசுத்தி

நவீன நியாய மதம்
கங்கேச உபாத்யாயர் –தத்வ சிந்தாமணி
ரகுநாத சிரோமணி -தத்வ சிந்தாமணி தீதிதி
ஜகதீச தர்க்க அலங்காரர் -ஜகதீச
கதாதர பட்டாச்சார்யார் -தீதிதி பிரகாசிகை

நியாய சாஸ்திரத்தின் செயல்முறை
பொருள்களை பிரித்து ஆராய்வதன் பயிற்சி
அதன் படிகள்
1-உத்தேசம் -பெயராலே பொருள்களைக் குறிப்பிடுதல்
2- லக்ஷணம் -பொருள்களின் லக்ஷணத்தை -தனித் தன்மையை உரைத்தல் -அசாதாரணம் –
3–பரீஷா –பொருள்களையும் அவற்றின் தனித் தன்மையையும் சோதித்து நிலை நாட்டுதல்

ஒரு பொருளின் தனித் தன்மையை அதன் லக்ஷணம் ஆகிறது
லக்ஷணம் என்பதில்
அசம்பவம்
அவ்யாப்தி அதிவ்யாப்தி -மூன்று தோஷங்களும் இல்லாமல் இருக்க வேண்டும்

அசம்பவம் -ஒரு பொருளின் லக்ஷணம் அந்தப் பொருளில் இல்லாமை
அவ்யாப்தி –ஒரு பொருளின் லக்ஷணமாக அந்தப் பொருளின் சில எடுத்துக் காட்டுக்களில் இருந்து சிலவற்றில் இல்லாமை
அதிவ்யாப்தி -ஒரு பொருளின் லக்ஷணம் அந்தப் பொருளிலும் இருந்து வேற பொருள்களில் இருத்தல்

ஏழு பதார்த்தங்கள்
பதார்த்தம் என்னும் சொல் உலகில் உள்ள அனைத்தையும் கூறும்
ஒரு சொல்லின் பொருளாக இருத்தல் -ஒரு சொல்லாலே குறிப்பிடுதல் தான் உலகில் உள்ள அனைத்துக்கும் -பதார்த்தத்துக்கு -லக்ஷணம் –

பதார்த்தங்கள் ஏழு வகைப்படும்
1-த்ரவ்யங்கள் -நாம் காணும் கல் மண் போன்ற வஸ்துக்கள்
2- குணம் -நிறம் சுவை மணம் போன்ற பண்புகள்
3-கர்ம -செயல்கள்
4-சாமான்யம் -பொதுத்தன்மை -பலபொருள்களில் மாடு குடம் என்று ஒரே மாதிரியான புத்தி ஏற்படக் காரணமாய் இருப்பது
5- விசேஷம் –சிறப்பு -தனித்துவம் -வேறு எந்த முறையிலும் பிரித்து அறிய முடியாத பரம அணுக்களுக்குள் வேறு பாட்டைக் காட்டுவது
6-சமவாயம் -த்ரவ்யம் குணம் கர்ம சாமான்யம் விசேஷம் ஆகியவை ஒரு த்ரவ்யத்தை அண்டி இருக்கும் போது அவற்றுக்குள் இருக்கும் தொடர்பு
7-அபாவம் -இன்மை இல்லாமை

1-த்ரவ்யங்கள் ஒன்பது வகைப்படும்
1-பிருத்வீ -நிலம் -கந்தவதி பிருத்வி -மணம் உள்ளது
2-அப்பு -நீர் -குளிர்ந்த ஸ்பர்சம் இதுக்கு லக்ஷணம்
3-தேஜஸ்ஸூ -நெருப்பு -வெப்பமாக- உஷ்ண ஸ்பர்சவத் இருப்பதே லக்ஷணம் –
4-வாயு -காற்று -நிறம் அற்றதாக(இத்தால் கீழ் சொன்ன மூன்றும் தள்ளுபடி ) ஸ்பர்சம் உள்ளதாக இருப்பது –
5-ஆகாசம் -ஆகாயம் -விபு என்பர் இத்தை -அணுக்கள் கிடையாது -ஸப்த குணகம் ஆகாசம் -பிரிக்க முடியாதது
6-காலம் -காலம் -அதீத வியவஹார ஹேது -அனைத்துக்கும் ஆதாரம் இது
மாலையில் சென்னையில் ராமன் இருந்தான் -ஏழாம் வேற்றுமை -அனைத்தையும் தாங்கும் -அதிகரணம் தேசம் போல் காலமும் –
7-திக்கு -திசை
8-ஆத்மா -ஆன்மா -ஞானம் உடையவர் -ஞான அதிகரணம் ஆத்ம லக்ஷணம் -அறிவின் அளவில் வாசி இருக்கும்
9-மனஸ் -மனது -மனசால் நினைக்கிறேன் -கருவி அந்தக்கரணம் –

பரமாணு காரணத்வாதிகள் இவர்கள் -பிருத்வீ -நிலம் மண் செடி பஞ்சு -பூமியில் வந்த அனைத்தும்
இவை சேர்ந்து த்வி -மூன்று த்ரி -சேர்ந்து கண்ணால் பார்க்கும் பொருள்கள் உண்டாக்கப்படுகிறது
நியாயம் படி பரமாணுக்கள் நித்யம் -அழிவோ உத்பத்தியோ இல்லை –
ஆக பரமாணு -கார்ய த்ரவ்யங்கள் இரண்டும் இவற்றுக்கு உண்டு

2-குணங்களின் வகைகள் –24-வகைப்படும்
1-ரூபம் -நிறம் -பிருத்வி அப்பு தேஜஸ் மூன்றுக்கும்
2-ரஸம் -சுவை -ஆறு சுவை -பிருத்வி -நீர் மட்டுக்கும்-மதுர ரசம் நீருக்கு
3-கந்தம் -மணம் -பிருத்வி மட்டுக்கும்
4-ஸ்பர்சம் -தொடு உணர்வு -உஷ்ணம் தேஜஸ் சீதம் ஜலத்துக்கு நடுநிலை பிருத்விக்கும் வாயுவுக்கும்
5-சம்க்யா -எண்ணிக்கை
6-பரிமாணம் -அளவு
7-ப்ருதக்த்வம் -வேறுபாடு
8-ஸம்யோகம் -சேர்க்கை -மோதிரம் கையில் –
9-விபாகம் -பிரிவு
10-பரத்வம் -தொலைவு -வயசாலும் பழைமை
11-அபரத்வம் -அருகாமை
12-குருத்வம் -எடை -பிருத்விக்கும் ஜலத்துக்கும் மட்டும் –
13-த்ரவத்வம் -த்ரவத் தன்மை
14-ஸ்நேஹம் -பசைத் தன்மை
15-ஸப்தம் -ஒலி -ஆகாச தன்மை -வர்ணாத்மகம் எழுத்து –அவர்ணாத்மகம் -கை தட்டும் ஓசை இரண்டு வகை
16-புத்தி -அறிவு
17-ஸூகம் -இன்பம்
18-துக்கம் -துன்பம்
19-இச்சா -ஆசை
20-த்வேஷம் -வெறுப்பு
21-பிரயத்தனம் -முயற்சி
22-தர்மம் -நல் வினை
23-அதர்மம் -தீ வினை
24-சம்ஸ்காரம் -பதிவு

3-கர்மங்களின் வகைகள் -ஐந்து
1-உத்க்ஷேபணம்–மேலே செல்லுதல்
2-அப ஷேபணம்–கீழே செல்லுதல்
3-ஆகுஞ்சனம் -மடித்தல்
4-ப்ரசாரணம் -விரித்தல்
5-கமநம் -பக்கவாட்டில் செல்லுதல்

4-சாமான்யம் -பொதுத்தன்மை
பல பொருள்களில் ஒரே மாதிரியான புத்தியானது அந்தப்பொருள்களில் பொதுவான ஒரு தன்மை இல்லாமல் ஏற்படாது
கருப்பான மாடு -கருப்பான ஆடு என்னும் அறிவு கருமை என்னும் பண்பு மாட்டிலும் ஆட்டிலும் இல்லாவிடில் ஏற்படாது

பண்புகளால் வேறுபட்ட பல பொருள்களில் ஒரே மாதிரியான அறிவு ஏற்படுவதைப் பார்க்கிறோம்
இது கருப்பான மாடு வெள்ளையான மாடு -இரண்டிலும் பொதுவான -மாட்டுத்தன்மை -என்று
ஓன்று இல்லாமல் இந்த அறிவு ஏற்படாது
ஆகவே மாட்டுத் தன்மை என்னும் ஸாமான்யத்தை -ஜாதியை கல்பிக்கிறோம் -அனுமானிக்கிறோம் –

குடத்தன்மை –இதுக்கும் மேல் -நிலத் தன்மை –இதுக்கும் மேல் த்ரவ்யத்வம் –

5-விசேஷம்
பரமாணு போன்ற எந்த த்ரவ்யத்துக்கு பகுதிகள் -அவயவங்கள் இல்லையோ –
அதை மற்ற த்ரவ்யங்களில் இருந்து வேறுபடுத்த வேறு வழி இல்லாத படியால்
அந்த த்ரவ்யத்தில் விசேஷம் என்ற ஒரு பதார்த்தம் கல்பிக்கப் படுகிறது

அப்படி அவயவங்கள் இல்லாத த்ரவ்யங்கள் எவை
நித்தியமான த்ரவ்யங்கள் தான்

நித்யம் என்றால் எப்போதும் இருப்பது -அதாவது உண்டாக்குவதும் அழிவும் இல்லாதது –

பகுதிகள் அவயவங்கள் கொண்ட ஒரு த்ரவ்யம் கட்டாயம் ஒரு நாள் அவற்றின் சேர்க்கையால் உண்டாகி இருக்கும் –
வேறே ஒரு நாள் அவற்றின் பிரிவால் அழிந்து போகும்

ஆகவே நித்யமான பொருள்கள் தான் -பகுதிகள் அவயவங்கள் இல்லாமல் இருக்கும்
ஆகவே விசேஷம் என்பது நித்ய த்ரவ்யங்களில் மட்டும் இருக்கும் என்று அறியலாம் –

6-சமவாயம்
ஒரு த்ரவ்யத்துக்கும் -அதில் இருக்கும் த்ரவ்யம் குணம் செயல் சாமான்யம் விசேஷம் ஆகியவற்றுக்கும்
உள்ள சம்பந்தம் சம்யோகமாக இருக்க முடியாது -த்ரவ்யங்களுக்கு இடையில் மட்டுமே சம்யோகம் இருக்கிற படியால்
மேலும் ஸம்யோகத்தால் சேர்ந்த இரு பொருள்களை பிரிக்க முடியும்
ஆனால் குணமோ செயலோ சாமான்யமோ விசேஷமோ அவற்றின் இருப்பிடமான த்ரவ்யத்தின் இடம் இருந்து பிரிக்க முடியாது
ஆகையால் சாமான்யம் என்ற ஒரு புதிய தொடர்பைக் கல்பிக்கிறோம் –

அபாவம்
த்ரவ்யம் குணம் செயல் சாமான்யங்களைப் பார்ப்பது போல் இன்மையையும்
இங்கு குடம் இல்லை த்ரவ்ய அபாவம்
இது சிவப்பாக இல்லை -குண அபாவம்
இது நகரவில்லை -செயல் அபாவம்
இதில் மாட்டுத்தன்மை இல்லை -சாமான்ய அபாவம்
குடத்தில் விசேஷம் இல்லை -விசேஷ அபாவம்
இரு த்ரவ்யங்களுக்கும் சமவாயம் இல்லை -சமவாய அபாவம்
ஆகையால் அபாவம் என்று ஏழாவது பதார்த்தம் கல்பிக்கப்படுகிறது

இது நான்கு வகைப்படும்
1-ப்ராக் அபாவம்
2-ப்ரத்வம்ஸ அபாவம்
3-அத்யந்த அபாவம்
4-அந்யோன்ய அபாவம்

ஞானத்தின் வகைகள் இரண்டு
1-ஸ்ம்ருதி நினைவு
2-அனுபவம்
ஒரு பொருளை பார்க்கும் பொழுது கேட்க்கும் பொழுது ஆத்மாவில் சம்ஸ்காரம் பதிவு ஏற்படுத்தி விட்டுச் செல்கிறது
அதனுடன் தொடர்வு உள்ள வேறே ஒன்றைக் கண்டால் கேட்டால் இந்த ஸம்ஸ்காரத்தால் தூண்டப்பட்டு நினைவு ஏற்படுகிறது
அனுபவம் புதிதாக ஒரு பொருளை காண்பது கேட்பது

இது இரண்டு வகை
யதார்த்தம்
அயதார்த்தம்

ஒரு தன்மையை உண்மையாகவே யுடைய ஒரு பொருளை அந்தத் தன்மையை யுடையதாக அறியும் அனுபவம்
குடத்தைப் பார்த்து குடம் என்று அறிதல்
ஒரு தன்மை இல்லாத ஒரு பொருளை அந்தத்தன்மை யுடையதாக அறிவது அயதார்த்தம்
ஒரு கயிற்றைப் பார்த்து பாம்பு என்று அறிதல் –

யதார்த்த அறிவு நான்கு வகை
1-ப்ரத்யக்ஷம் புலன்களால் அறிவது
2-அநு மிதி -ஊகத்தால் ஏற்படும் ஞானம்
3-உப மிதி -சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு
4-சாப்த போதம் -சொல் தொடரைக் கேட்டவுடன் ஏற்படும் அறிவு

அயதார்த்தம் மூன்று வகை
1-சம்சயம்
2-விபர்யயம்
3-தர்க்கம்

யதார்த்த அனுபவம் ப்ரமா என்றும் சொல்லுகிறோம்
அறிவுக்கு விஷயம் ப்ரமேயம்
ஞானம் உடைய ஆத்மா ப்ரமாதா
அறிவுக்கு -ப்ரமாவுக்கு காரணம் பிரமாணம்
கரணம் அறிய காரணம் அறிய வேண்டும் -காரணம் அறிய காரியம் அறிய வேண்டும் –

ப்ரத்யக்ஷம் -பிரதி முன்னால் -அக்ஷம் -கண் -புலன்களால் ஏற்படும் அறிவு -ப்ரத்யக்ஷ ப்ரமா
இந்த்ரியத்துக்கும் க்ரஹிக்கப்படும் பொருளுக்கும் -அர்த்தத்துக்கும் -இடையில் உள்ள தொடர்பால் ஏற்படும் ஞானம்
அப்படிப்பட்ட ப்ரத்யக்ஷம் என்ற ப்ரமாவுக்கு -ஞானத்துக்கு அஸாதிகாரணமான காரணம் இந்திரியங்கள்
அவற்றுக்கும் ப்ரத்யக்ஷ பிரமாணம் என்று பெயர்

அநு மிதிக்கு காரணம் அனுமானம்
அடுப்பு விளக்கு இவற்றைப் பார்த்து-நெருப்பையும் புகையும் சேந்து இருப்பதை பார்த்து
எங்கு எங்கு புகை உள்ளதோ அங்கு நெருப்பு இருக்க வேண்டும்
பின்பு மலையில் புகையைப் பார்த்து நெருப்பு இருக்க வேண்டும் என்று -முன்பு அறிந்து வைத்த தகவல் நினைவுக்கு வர
நெருப்பை விட்டு பிரியாத புகை உடையது இந்த மலை என்ற அறிவு ஏற்படுமே இதுவே பரமார்சம்
இந்த மலையில் கண்டிப்பாக நெருப்பு உள்ளதே என்று அறிவதே அநு மிதி ஆகும் –

அனுமானம் முக்கியம் இந்த நியாய சாஸ்திரத்தில் ஆன்மிஷிகி -என்றே இதற்குப் பெயர்

உப மிதிக்கு -காரணம் உப மானம்
நாட்டில் கோ என்ற மாட்டைப் போல் உள்ளதே காட்டில் உள்ள கவயம் என்பது போல்
ஸாத்ருஸ்யத்தைக் கண்ணால் கண்டு அறியும் அறிவு

ஸப்த பிரமாணம்
ஆப்த வாக்யம் ஸப்த -என்பதே லக்ஷணம் ஆப்தனால் சொல்லப்பட்ட சொல் தொடரே ஸப்தம்
உள்ளபடி அறியாதவர் நன்மையைச் செய்ய முடியாது
உள்ளபடி அறிந்து இருந்தாலும் வஞ்சனையுடன் இருந்தாலும் நன்மை ஏற்படாதே
பொருளை உள்ளபடியே அறிந்து அப்படியே கூறுபவர் ஆப்தர்

வாக்கியம் -பத ஸமூஹம் -சொல் தொடர்
சக்தம் பதம் -சக்தியை யுடைய ஒன்றே சக்தம்
பொருளை போதிக்கும் சக்தியை திறனை உடைய சொல்லுக்குப் பதம் என்று பெயர்
சொல் தொடர் ஒலிகளின் வரிசை -ஒலிகள் ஆகாசம் மூலம் பரவி நம் காதை அடைகின்றன –
காது இந்திரியம் ஒலியை கிரஹிக்கும் அறிவு ப்ரத்யக்ஷம்
ஒவ்வொரு சொல்லின் பொருளையும் ஸ்மரணம் ஸ்ம்ருதி

ராமன் மாரீசனைக் கொன்றான்
ராமன் மாரீசன் கொலை கடந்த காலம் ஒருமை ஆண் பால் என்ற நினைவு ஏற்படவே
சப்தத்துக்கும் அர்த்தத்துக்கும் உள்ள தொடர்பை சக்தியை அறிந்து இருக்க வேண்டும்
இவற்றின் பொருளையும் இவற்றின் சம்பந்த ஞானமும்-பற்றிய அறிவே
வாக்யார்த்த ஞானம் சாப்த போதம் ஆகும் –

இது ஏற்பட தேவைகள்
1-ஆகாங்ஷை -எதிர்பார்ப்பு -எந்த பதங்களோடு சேர்ந்தால் மட்டும் விஷயத்தைப் போதிக்குமோ
அந்த ஆகாங்ஷையை அறிந்தால் தான் சாப்த போதம் ஏற்படும்
2- யோக்யதா -சொல் தொடரின் அர்த்தம் சாத்தியமாக இருக்க வேண்டுமே
நெருப்பால் நனைகிறான் சொல் தொடரில் சாப்த போதம் ஏற்படாதே – நனைதல் என்ற செயலில்
கருவியாக நெருப்பு ஆகாதே என்ற புரிதல் ஏற்படுகிற படியால்
3-சந்நிதி -சொற்களில் இடைவெளி இல்லாத உச்சரிப்பு
சொற்கள் அடுத்து அடுத்து உச்சரிக்கப்பட்டு ஒரே சமயத்திற்க்கேட்பவரின் மனதில் இருக்க வேண்டும்
4-தாத்பர்யம் -பேசுபவரின் இச்சை கருத்து -ஒரே சொல்லுக்குப்பல பொருள்கள் இருக்கக் கூடுமாகையால்
பேசுபரின் கருத்தை அறிந்தால் தான் சொல் தொடரின் பொருளை அறிய முடியும் –

அயதார்த்த அனுபவம்
1-சம்சயம் -கயிறா பாம்பா -கிளிஞ்சலா வெள்ளியா -சந்தேகம்
2-விபர்யயம் -மஞ்சக் காமாலையால் வெள்ளையான சங்கை மஞ்சள் என்று ட்தப்பாக தீர்மானித்தல்
3- தர்கம்-பொருள்களின் தன்மைகளை பார்த்து இந்தப்
பொருள் இப்படிப்பட்டதாக இருந்து இருந்தால் கண்டிப்பாக
அதற்கு அந்தத் தன்மையும் இருந்து இருக்கும் என்ற வாதம் செய்வதே தர்கம் என்று பெயர் –

இந்த ப்ரமாணங்களால் -அறிவின்மை போக்கி –ஆசை வெறுப்பு கழிந்து -பாபம் புண்யம் கழிந்து –
மறு ஜென்மம் இல்லாமல் – துக்க நிவ்ருத்தி -முத்தி அடையலாம் என்பர் நியாய ஸாஸ்த்ரத்தில் –

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -3 –வேதாந்த சாஸ்த்ரம்– பாடங்கள் -31-39 —

August 5, 2021

பாடம் -31–பரமாத்மா யார்

தத்வம் புருஷார்த்தம் ஹிதம் -மூன்றையும்
வஸ்துக்கள் உண்மைப்பொருள்கள் இலக்கு வழி-அறிய வேண்டும்
ஞான த்ரயம் உபாதேயம் -ஸ்வ ஞானம் ப்ராப்ய ஞானம் ப்ராபக ஞானம் -மூன்றையும் அறிய வேண்டுமே –
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
கடல் நதிகளுக்கு இலக்கு -பூ கதிரவனையே நோக்கும் -உயிர் எம தர்ம ராஜனையே நோக்கும் –

ஜீவாத்மா தன்னுடைய ஞானத்தைக் கொண்டு அறிய வேண்டிய பொருள்களில் முக்கியமானவர் பரமாத்மா
அவரை அறிவதே அறிவின் பயன் என்று ஸாஸ்திரங்கள் கூறுகின்றன
பரமாத்மா என்று ஒருவரை ஏற்பதையும் ஏற்காததையும் வைத்து
ஆஸ்திக தர்சனங்கள் என்றும் நாஸ்திக தர்சனங்கள் என்றும் பிரிக்கப் படுகின்றன
பரமாத்மாவை ஏற்கும் தர்சனங்களிலும் கூட அவரைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் உள்ளன –

சாங்க்யர்கள்
பரமாத்மா என்பவர் ஸ்ருஷ்டிக்கு காரணமாய் எட்டு ஸித்திகளையும் பெற்றவர் என்கிறார்கள்
அணிமா –ஈஸித்வம்-வஸித்வம் -அஷ்ட மஹா சித்திகள்

யோக மதத்தைச் சேர்ந்தவர்கள் –
பரமாத்மா -அவித்யா அஸ்மிதா ராகம் த்வேஷம் அபி நிவேசம் என்ற ஐந்து கிலேசங்களும்
கர்மங்கள் பிறப்பு ஆயுஸ் போகம் என்ற மூன்று விபாகங்களும்
பாப புண்யங்கள் என்ற ஆசயங்களும்-
அற்றவர் பரமாத்மா
அவரே வேதத்தை இயற்றி அதை உலகுக்குக் கொடுத்தார் என்று கூறுகிறார்கள் –

பாசுபத மதம் -ருத்ரன்

புராண -நான்முகன்

புத்தர்கள்
உலகம் க்ஷணிகம் என்றும் பொய்யானது என்றும் அறிந்தவரே ஈஸ்வரன் என்கிறார்கள்

ஜைனம் -தர்மங்கள் அதர்மங்கள் உடல் மூன்றும் ஆவரணங்கள் மூடி
மேல் நோக்கி பிரயாணம் ஜீவாத்மா இயற்கையில்

சாருவாகர்கள் -மிகுந்த யுக புருஷர்கள் -ராஜாக்கள் -வடிவில் கடவுள் என்பர்

நியாய மாதத்தில்
ஜடமாய்-அளவற்ற ஞானம் உடையவராய்-ஸூகம் துக்கம் பாபம் புண்ணியம் அற்றவராய்
உலகைப் படைப்பவர் பரமாத்மா என்கிறார்கள்

மீமாம்ஸையில் யாகங்களில் உச்சரிக்கப்படும் மந்திரங்களே கடவுள்
யஜ்ஜை ரூபியே ஈஸ்வரன் என்றும் சிலர் மீமாம்ஸா

அத்வைத மதத்தின் படி
குற்றம் அற்றவராய் ஞானம் ஆனந்த வடிவமாய் இருப்பவர் பரமாத்மா –
சச்சிதானந்த ஸ்வரூபன் நிர்மலன் -ஸத் -சித் -ஆனந்தம் —
அவித்யையால் மறைக்கப்பட்டு ப்ரஹ்மத்துக்கே பிரமம்
ஆச்சாத்தான சக்தி மறைக்கும்

விசிஷ்டாத்வைத ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தத்தின் படியே
இவனே புருஷோத்தமன்
அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாணை ஏக –
ஸர்வஞ்ஞன் -சர்வ சக்தன் -சர்வ அந்தர்யாமி –
ஞான பல இத்யாதி
அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன்
ஸூ பாஸ்ரயம்
ஸ்ரீ யபதி
ஞான ஆனந்த வடிவமாய்
உலகைக் காத்து படைத்து அழிப்பவராய்
உலகத்தில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் இருப்பவராய்
குற்றங்களே அற்றவராய்
கணக்கற்ற கல்யாண குணங்களை யுடைய ஸ்ரீ மன் நாராயணன் பரமாத்மா —

ப்ரஹ்மம் என்றால் என்ன
வேதங்களில் பரம் பொருளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொற்களில் முக்கியமானது ப்ரஹ்மம் என்கிற சொல்
எந்தச் சொல்லும் ஒரு தன்மையை முதலில் உணர்த்தி பின் அந்தத் தன்மையை யுடைய பொருளைக் குறிக்கும்
அதே போல் ப்ரஹ்மம் என்ற சொல் -உயர்வு அல்லது பெரிதாய் இருத்தல் – என்ற தன்மையை யுடைய பொருளையே குறிக்கும்
இந்தச் சொல் பிரகிருதி -முக்த ஆத்மா மற்றும் பரமாத்மா-மூவரையும் குறிக்கவும் வேதத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது
இவை மூன்றுக்குமே ஒவ்வொரு படியால் உயர்வு உள்ள படியாலேயோ அவை பெரியதாய் இருக்கும் படியாலேயோ அது பொருந்தும்
ஆனால் இவற்றுள் முக்கியமான பொருள் எது என்று அறிய வேண்டும்

ஒரு சொல்லால் உணர்த்தப்படும் தன்மை பல பொருள்களில் இருந்தால் அவை அனைத்துமே அந்தச் சொல்லின் பொருள் ஆகும் –
ஆனால் அந்தத்தன்மை எந்தப்பொருளில் முழுமையாக -அதிகமாக -உள்ளதோ -அதுவே அந்தச் சொல்லின் முக்கிய பொருள் ஆகும்
அந்த முறையில் பார்த்தால் ஸ்வரூபத்தாலும் தன்னுடைய குணங்களாலும் பரமாத்மா தான் மற்ற இரண்டையும் காட்டிலும் மிக மிக உயர்ந்தவர்
எனவே ப்ரஹ்மம் என்ற சொல்லுக்கு பரமாத்மாவே முக்கிய பொருள் ஆவார் –
பகவான் -சப்த பிரயோகம் போல் -ஆறு குணங்களும் பூர்ணம் -அவனுக்கு -மற்றவர்களுக்கு கௌணம் போல் ப்ரஹ்மம் சப்தமும் –
எனவே ப்ரக்ருதி அல்லது முக்தாத்மாவைக் குறிக்க ப்ரஹ்மம் என்ற சொல்லை உபயோகித்தால் அது தவறு அல்ல
ஆனால் அது இரண்டாம் பக்ஷ பொருள் தான் -முக்கியம் அல்ல -இதுக்கு அமுக்யம் கௌணம் என்று பெயர் –

ப்ரஹ்மத்தின் லக்ஷணம் என்ன
லக்ஷணம் -தனித்தன்மை -பலவும் பரமாத்மாவுக்குச் சொல்லலாம்
ஸர்வேஸ்வரத்வம் -அனைத்தையும் இயக்குதல்
ஸர்வ சேஷித்வம் -அனைத்துக்கும் ஸ்வாமி
ஸர்வ கர்ம ஸமாராதித்யம் -எல்லா வைதிக செயல்கஜலாலும் பூஜிக்கப்படுத்தல்
ஸர்வ கர்ம பல பிரதத்வம்
ஸர்வ ஆதாரத்வம்
ஸர்வ ஸரீரத்வம் –போன்ற பலவும் சொல்லலாம் –

லக்ஷணங்கள் இரண்டு வகைப்படும்
ஸ்வரூப லக்ஷணம் -தன்மைகளை வைத்தே லக்ஷணம் சொல்லுதல் –
தடஸ்த லக்ஷணம் -வேறே ஒரு பொருளைக் கொண்டு வேறே ஒரு பொருளுக்கு லக்ஷணம் சொல்லுதல்
கரையில் நின்று நதியைக் காட்டுவது போல் –

ப்ரஹ்மத்தின் தடஸ்த லக்ஷணம்
உலகு அனைத்தையும் காத்து படைத்து அழிப்பவர்
இங்கு உலகம் என்ற வேறே ஒரு பொருளைக் கொண்டு ப்ரஹ்ம லக்ஷணம்
தைத்ரியம் -வருணன் தன் பிள்ளைக்கு உபதேசம்
ஜென்மாதிகரணம் –
ஸ்ரீ விஷ்ணு புராணம் -இத்தையே சொல்லும் –

ஸ்வரூப லக்ஷணம்
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்
என்றுமே மாறாமல் ஒரே மாதிரி உள்ளபடியால் பிரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்டதாகவும்
என்றுமே குறைவில்லாத ஞானம் யுடையவர் -பக்த முக்த வ்யாவ்ருத்தம்
தேச கால வஸ்து–த்ரிவித அபரிச்சேத்யம்-அளக்க முடியாத படியால் நித்யர்களில் வேறுபாடு –
இந்த மூன்று தன்மைகளின் சேர்க்கையே ப்ரஹ்மத்தின் ஸ்வரூப லக்ஷணம் –

———-

பாடம் -32-பரமாத்ம ஸ்வரூபம்
ஸ்ரீ சரணாகதி கத்யத்தில் ஸ்ரீ ராமானுஜர் -பகவத் ஸ்வரூபம் –
இன்றியமையாத தன்மைகள் என்ன என்று அருளிச் செய்கிறார் –

அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாண ஏக ஸ்தான –ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் –
அநந்த -ஞான ஆனந்த ஏக ஸ்வரூப –

இவையே ஸ்வரூப நிரூபக தர்மங்கள் –

1- அகில ஹேய ப்ரத்ய நீக
எல்லாவித தோஷங்களுக்கும் எதிர்த் தட்டானவர்
அசேதனங்களுக்கு விகாரம் என்கிற தோஷமும்
பத்தர்களுக்கு சம்சார சம்பந்த தோஷமும் -துக்க அஞ்ஞானம் மலம் –தோஷங்கள் பிரகிருதி சம்பந்தத்தால் -விஷ்ணு புராணம்
முக்தர்களுக்கு முன்பு ஒரு நாள் சம்சார சம்பந்தம் இருந்தது என்கிற தோஷமும்
நித்யர்களுக்கு பரிச்சேத -அளவுபட்டு இருத்தல் -வேறே ஒருவருக்கு ஆள்பட்டு இருத்தல் போன்ற தோஷங்கள் உண்டே
இவை எவையும் பரமாத்மாவிடம் இருக்க முடியாதே –
இருட்டுக்கு தேஜஸ்ஸூ விரோதியாய் இருக்குமா போலே இந்த தோஷங்களுக்கு பரமாத்மா எதிரி என்றவாறு –

தத்வ த்ரயம் -சர்ப்பத்துக்கு கருடன் போலவும் -தமஸூக்கு தேஜஸ்ஸூ போலவும் -அகில ஹேய ப்ரத்ய நீக –
ஆஸ்ரயிப்பார் விகாராதி தோஷங்கள் வரவிடாமல் செய்பவர் என்றுமாம் –
சர்வ பூத ப்ரக்ருதிம் -விகாரான் -அபஹத பாப்மா -வி ஜர -வி மிருத்யு -வி சோக -இத்யாதி –
நித்யம் -அஜம்–பிறப்பிலி -அஷயம்- அவ்யயம் ஏக ஸ்வரூபம் -நிர்மலம் -பவித்ரானாம் பவித்ரம்

2–கல்யாண ஏக ஸ்தான
தன்னோடு தொடர்பு பட்டவர்களுக்கு நன்மையைக் கொடுக்கக் கூடிய மங்களமான குணங்கள்
அனைத்துக்கும் ஒரே இருப்பிடம் பரமாத்மா –
ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவ ஸ்லோகம் இவற்றை விளக்கும் –
பரமாத்மாவின் குணங்கள் நித்யங்கள் -என்றுமே அழியாதவை
நிஸ் ஸீமங்கள் -எல்லை அற்றவை -உயர்வற உயர் நலம் உடையவன் –
நிஸ் சங்க்யங்கள் -எண்ணிக்கை அற்றவை -எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசன்
நிருபாதிகங்கள்–இயற்கையானவை
நிர்தோஷம் -தோஷங்களோடே சேர்ந்து ஓர் இடத்தில் இருக்காமல் -தோஷத்தின் சேர்க்கையே இல்லாமல் -இருப்பவை
ஸமான அதிக ரஹிதங்கள் -தனக்கு நிகராகவோ உயர்ந்தோ இல்லாத குணங்கள்

ஞானம் பலம் ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் மூலமான கல்யாண குணங்கள்
கருணை ஞான வடிவம் போல் -அனைத்தும் இந்த ஆறு குணங்களுக்குள் அடங்கும் –
வஸீ -இத்யாதி ஸ்தோத்ர ரத்னம் -கத்ய த்ரயம் இந்த குணங்கள் பட்டியல் காட்டும் –
நிரலேபம் -தோஷ சம்பந்தம் இல்லாமல்
உபதா -உபாதை மூலம் இல்லாமல்
இயற்கையாக
நிகரற்ற ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்லும் –

3–ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன்
இப்படி தோஷங்களுக்கு எல்லாம் எதிர்த்தட்டாய் இருத்தல்
கல்யாண குணங்களுக்கு எல்லாம் ஒரே இருப்பிடமாக இருத்தல்
என்ற இரண்டு அறிகுறிகளால் -உபய லிங்கங்களால் பரமாத்மா
தன்னைத் தவிர்ந்த அனைத்துப் பொருள்களைக் காட்டிலும் உயர்ந்தவராக உள்ளார்
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -ஆழ்வார் –

உபய லிங்க அதிகரணம்–3-2-11-
வ்யாப்த கத தோஷம் தட்டாத ப்ரஹ்மம்
ந ஸ்தான தோபி பரஸ்ய -உபய லிங்கம் -சர்வ சுருதி சொல்வதால் –

4-அநந்த
அந்தம் என்றால் முடிவு -எல்லை -அளவு
அநந்தன் -என்றால் -எல்லை அற்றவர் -என்று பொருள்
பரமாத்மாவை எந்த வகையாலும் அளவுபடுத்த இயலாது
அவர் நித்யமான படியால் அவரைக் காலத்தால் அளவுபடுத்த முடியாது
அவர் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறபடியால் அவர் விபு ஆவார்
அவர் இல்லாத இடமே கிடையாது
எனவே தேசத்தாலும் அளவு படுத்த முடியாது
அவருக்கு இணையான எந்தப்பொருளும் உலகில் இல்லாத படியால் –
பரமாத்மா இந்தப் பொருளைப் போன்றவர் என்று சொல்ல ஒரு பொருள் இல்லாத படியால்
அவர் பொருளாலும் அளவு படாதவர்
மேலும் அவரே உலகம் அனைத்துமாக இருக்கிற படியால் -இந்தப்பொருள் பரமாத்மா அல்ல –
என்று சொல்ல முடியாதே
ப்ரஹ்மாத்மகம் இல்லாத பொருளே இல்லையே
இதனால் எந்த வஸ்துவாலும் அளவு படாதவர்
இப்படி காலம் தேசம் வஸ்து -மூன்று அளவுகளும் அற்றவர்
த்ரிவித பரிச்சேத ரஹிதன் என்றவாறு –

ஒரு பொருளை உபமானம் சொல்லி –வஸ்துவால் அளவுபடுத்துதல் இல்லாமல் என்றும்–
கட்டுரைக்குள் தாமரை -கண் ஒவ்வா –சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனிக்கு ஒவ்வா -ஒட்டு உரைத்து
உலகு எல்லாம் உன்னை புகழ்வது எல்லாம் –கட்டுரையாய் –
வஸ்துவில் அளவு படுத்த முடியாதவன் என்றும் -இது குடம் துணி இல்லை என்பது போல் சொல்ல முடியாதே
அந்தர்யாமித்வம் மேலே பார்ப்போம் –

5-ஞான ஆனந்த ஏக ஸ்வரூபம்
ஞானமே வடிவானவர்
ஆனந்தமே வடிவானவர்
ஆனந்தம் என்பது அனுகூலமான ஞானம் -அதாவது நமக்குத் பிடித்ததாக ஏற்பனதாக ஞானம்
பரமாத்மா ஞானமே வடிவானவர் -அந்த ஞானத்துக்குத் தான் மட்டுமே விஷயம் –
தான் தனக்குப் பிடித்தவர் ஆகையாலே தன்னைப் பற்றிய ஞானமும் தனக்குப் பிடித்ததே
ஆகையால் பரமாத்மா என்கிற ஞானம் இயற்கையாகவே பிடித்த விஷயத்தைப் பற்றின
ஞானமே யாகையாலே அதுவே ஆனந்தமும் ஆகிறது –
எனவே பரமாத்மா ஆனந்த வடிவமான ஞானம் ஆகிறார் –
தத்வ த்ரயம் -ஆனந்த ரூப ஞான வடிவாய் இருக்கும் –
கட்டடங்க ஞானம் பிரகாசம்-கட்டடங்க அனுகூலம் –
ஜீவாத்மாவும் ஞான ஸ்வரூபம் -ஞானம் த்ரவ்யம் –

நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்
ஸூ த்தம் பரம் நிர்மலம் ஏக ரூபம்
ப்ரஹ்மம் அறிவதே ஞானம்

——

பாடம் –33-சரீர ஆத்ம பாவம் –
நம் சம்ப்ரதாயம் -பிரதான பிரதிதந்தரம் -இதுவே

அபேத பேத கடக ஸ்ருதிகள்
வேதங்களில் –ஸர்வம் கலு இதம் ப்ரஹ்ம (சாண்டில்ய வித்யை )-இந்த உலகம் அனைத்தும் ப்ரஹ்மமே -போன்ற இடங்களில்
பரமாத்வாவும் கல் போன்ற அசேதனப் பொருள்களும் ஒன்றே என்று சொல்லப்படுகிறது

அதே போன்று அஹம் ப்ரஹ்மாஸ்மி –தத் த்வம் அஸி -போன்ற இடங்களில்
பரமாத்மாவும் ஜீவாத்மா-சேதனப் பொருள்களும் ஒன்றே கூறப்படுகிறது –
இவற்றுக்கு அபேத ஸ்ருதிகள் என்று பெயர்
பேதம் -வேறுபாடு -வேறுபாடு இல்லை யுரன்கிறபடியால் இவை அபேத ஸ்ருதிகள்

போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்த்வா
ஷரம் பிரதானம் அம்ருத அக்ஷரம் பர –ஈசத தேவ ஏக
பிரதான ஷேத்ரஞ்ஞன் பதி குணே ஸஹ -முதலானவற்றில் தெளிவாக
சேதன அசேதன ஈஸ்வர -மூன்றையும் வேதம் சொல்வதால் இவை பேத ஸ்ருதிகள் ஆகும்

இந்த முரண்பாட்டைத் தீர்க்க கடக ஸ்ருதிகள் –
கடகம் -சேர்த்து வைக்கும் -முரண்பட்டவை போன்ற ஸ்ருதி வாக்யங்களை சேர்த்து வைக்கும்
யஸ்ய ப்ருத்வீ சரீரம்
யஸ்ய ஆத்மா சரீரம் -அந்தர்யாமி ப்ராஹ்மணம் -ப்ருஹதாரண்யம்
ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா –இத்யாதி
அந்த ப்ரவிஷ்டா ஸாஸ்தா ஜனா நாம் ஸர்வாத்ம-
இந்த கடக ஸ்ருதிகள் அனைத்தும் சரீர ஆத்ம பாவம் சொல்லும்
உலகம் அனைத்தும் சரீரம் உடல் – உடல் உயிர் தொடர்பு இருக்கிறபடியால் அவை
வெவ் வேறாக இருந்தாலும் ஒன்றே என்றும் சொல்லப் படலாம் –

சரீரம் என்றால் என்ன
ஸ்ரீ பாஷ்யத்தில் ஸ்ரீ ராமானுஜர்
யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் ஸர்வாத்மநா ஸ்வார்த்தும் நியந்தும் தாரயிதும் ச சக்யம்
தத் சேஷதைக ஸ்வரூபஞ்ச ச தத் தஸ்ய சரீரம் -என்று -மூன்று

எந்த ஒரு அறிவாளியாலே எந்த ஒரு த்ரவ்யம் அது இருக்கும் வரை
எப்பொழுதும் தாங்கப்படுவதற்கும்
அதுக்கு இயன்ற செயல்களிலே செலுத்தப்படுவதற்கும்
தகுதி யுடையதோ
மேலும்
அவருடைய மேன்மைக்காகவே உள்ளதோ
அந்த த்ரவ்யம் அந்த அறிவாளியின் சரீரம் -அந்த அறிவாளி தான் ஆத்மா –

இதை நம் உடல் நாம் என்கிற ஜீவாத்மா இடம் பொருத்திப் பார்ப்போம்
நாம் அறிவாளி -இந்த மாம்ச பிண்டம் த்ரவ்யம்
இந்த மாம்ச பிண்டம் நான் என்கிற அறிவாளியால் தங்கப்படுவதற்கும் செலுத்தப் படுவதற்கும் தகுதியானது தான்
நான் என்கிற ஆத்மா வெளியே சென்று விட்டால் இந்த மாம்ச பிண்டம் எழுந்து நிற்காது -எந்தச் செயலும் செய்யாது –
இந்த மாம்ச பிண்டம் என்னுடைய நன்மைக்காகவே உள்ளது
இத்தை சரீரம் என்றும் -நம்மை ஆத்மா என்றும் கூறுகிறோம் –

இதே போலே ஸமஸ்த சேதன அசேதனங்கள் அனைத்துமே ப்ரஹ்மத்துக்கு உடல் ஆகும் -பகவான் அறிவாளி –
இவை அனைத்தும் அவராலேயே தாங்கப்படுகின்றன -இயக்கப்படுகின்றன –
அவருடைய மேன்மைக்காகவே இவை அனைத்தும் உள்ளன
எனவே உலகையே சரீரம் என்றும் ப்ரஹ்மத்தை ஆத்மா என்றும் கூறலாம் –

திட விசும்பு –முழுவதுமாய் அவை அவை தோறும்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -சுடர் மிகு சுருதி -ஆழ்வார்

ஒரு ஆத்மா அதன் உடலுக்குச் செய்யும் உதவிகள் இரண்டு
1- சத்தா ஹேதுத்வம்
அந்த உடல் சத்தை -இருப்பு பெறுவதற்கு ஆத்மா தான் காரணம்
அதாவது ஆத்மா உள்ளே இல்லாவிட்டால் அதன் பெயரே மாறி விடும்
சரீரத்தின் சத்தை ஆத்மாவின் சத்தையைப் பொறுத்தது -இதற்கு ஆத்மா விழித்து இருக்க வேண்டும்
தன் அறிவைக் கொண்டு ஒன்றும் செய்யத் தேவை இல்லை உள்ளே ஆத்மா இருந்தால் மட்டுமே போதுமானது

2-உடல் இயங்குவதற்கும் காரணமாக ஆத்மா இருக்கிறார் —
இது அறிவால் செய்யக் கூடிய செயல் —
எனவே ஆத்மா விழித்து இருக்கும் பொழுது தான் இதை ஆத்மா செய்வதை நாம் உலகில் பார்க்கிறோம்

இந்த இரண்டு செயல்களையும் பரமாத்மா
தன்னுடைய சரீரமான உலகு அனைத்தைக்கும் செய்கிறார்

1- பரமாத்மா விபு -எல்லாவற்றையும் விட மிகப் பெரியவராக எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறார் –
அப்படி இருந்து கொண்டு அனைத்தையும் தாங்குகிறார்
பூமி அனைத்தையும் தாங்குவது போலே அவர் உலகம் அனைத்தையும் தாங்குகிறார்
ஏஷ சேது விதுரண
ஏதத் ஸர்வம் ப்ரஞ்ஞானே ப்ரதிஷ்டிதம் –
யதா ரத –நாபி -குச்சி -இத்யாதி –போன்ற
ஸ்ருதி வாக்கியங்கள் இத்தைக் காட்டும்
வாஸூதேவ வீர்யேண விதுர் தாணி -சங்கல்ப ஸஹஸ்ர ஏக தேசத்தாலே தாங்குகிறான் –
அவர் ஆசைப்பட்டு -விபுவான ஸ்வரூபத்தால் தாங்குகிறேன் -என்பதால்
சங்கல்பம் ஸ்வரூபம் இரண்டும் தாங்கும் என்பதில் தவறு இல்லை
தார்யமாகைவது -ஸ்வரூப சங்கல்பம் ஒழிந்த போது தன் சத்தை இல்லாத படி இருக்கை –தத்வ த்ரயம் 39-

2-பெரியதாக அனைத்தும் தாங்குவதைத் தவிர மிகச் சிறியவராகவும் இருந்து அனைத்து ஜீவாத்மாக்குள்ளும் இருக்கிறார் –
அங்கு இருந்து கொண்டு அனைத்து செயல்களையும் அனுமதித்து இயக்குகிறார் –
இப்படி உள்ளே புகுந்து இயக்குகிற படியால் அந்தராத்மா -என்றும் பெயர்
அந்த ப்ரவிஷ்டா ஸாஸ்தா ஜனா நாம் ஸர்வாத்ம -ஸ்ருதி இத்தைக் காட்டும் –
நியாம்கை யாவது -புத்தி அதீனமாக எல்லா வியாபாரங்களும் உண்டாம்படி இருக்கை –தத்வ த்ரயம் 38-

தர்ம பூத ஞானம் -அறிவைக் கொண்டே -ஸுபரி -50 சரீரங்களையும் – இயக்கினார் அது போல் இல்லை இல்லாமல்
ப்ரஹ்மம் -உள்ளே இருந்து -அகடி கட நா சாமர்த்தியம் -ஒன்றும் குறையாமல் இங்கும்
சேஷத்வம்–பரகத அதிசய ஆதேய -அவனுக்காகவே -இதுவே இயற்க்கை –
ஆத்மா தாஸ்யம்-ப்ரஹ்மம் ஸ்வாமி – தாஸ்ய பூதா ஸ்வத-இங்கும் அங்கும் –

—–

பாடம் –34-ஜகத் காரணத்வம்

யன் மய ஜகத் ஸர்வம் -கேள்வி ஸ்ரீ விஷ்ணு புராணம்
யதஸ்ய ஏதஸ்ய சராசரம் யார் இடம் இருந்து வந்தது
எங்கே லயித்தது
விஷ்ணு உத்ப்பூதம் -அவன் இடமே ஒன்றி -ஸ்திதி ஸம்யமம் -காத்து -இயக்குகிறார் –
ஜகத் ச ஸஹ -அவரே ஜகத்தாக உள்ளார் -பராசரர்
கீழே அந்தர்யாத்மாவாக இருந்து இயக்குகிறார் பார்த்தோம்
ஸர்வ ஸப்த வாஸ்யன் -பர்யவசானாம்
ஜகத் ஜன்மாதி காரணம் -லக்ஷணம் ப்ரஹ்மதுக்கு

புத்த ஜைன தர்க்க மதம் மூன்றிலும் நுண்ணிய பரம அணுக்கள் சேர்ந்தே உலகில் காணும் பொருள்கள் உண்டாகின்றன
பரம அணுக்களே காரணம் என்பர்
தார்க்கிகர் -வைசேஷிக நியாய மதம் -கொஞ்சம் வாசி இரண்டுக்கும் உண்டு
இவர்களே தார்க்கிகர்
இவர்கள் பரமாத்மாவை ஒத்துக் கொண்டு பரம அணுக்களை உலகமாக உருவாக்குகிறார் -குயவன் ஸ்தானத்தில் –

ஆனால் இது சரி இல்லை
சுருதி விரோதம் –
புலன்களுக்கு அப்பால் பட்ட பரம அணு இருக்க பிரமாணமே இல்லையே
பிரகிருதி மிகப்பெரியது
2-2-தர்க்க பாதம்

சாங்க்ய மதத்தில்
முக்குண -வசத்தில் உள்ள பிரக்ருதியே உலகமாக என்பர்
ஆனால் இது சுதந்திரமாக தானாகவே ஸ்ருஷ்டிக்கும் என்பர்
சேதனன் துணை வேண்டாம் என்பர்
பால் தயிராக தானாகவே மாறுவது போல் என்பர்
காரணத்துக்கும் காரியத்துக்கும் ஒற்றுமை இருக்க வேண்டுமே
உலகில் முக்குண மய பொருள்களைப் பார்ப்பதால் இப்படி சொல்வர்

இதுவும் சரி இல்லை -அறிவற்ற ஒன்றால் இது முடியாதே -அறிவுள்ள சேதனன் வேண்டும்
தானாகவே செய்யும் என்றால் எப்பொழுதும் ஸ்ருஷ்ட்டி அல்லது எப்பொழுதும் பிரளயமாக ஆய்க்கொண்டே இருக்க வேண்டும்
ஸ்ருஷ்ட்டி சம்ஹார வியவஸ்தை கூடாதே
இத்தையே பிள்ளை லோகாசசார்யார் தத்வ த்ரயத்தில் காட்டி அருளுகிறார் –
ஈஸ்வரன் அதிஷ்டானம் இல்லாமல் இது கூடாதே
இது என்னுடையது என்று பயன் படுத்தா விட்டால் பரிமாணம் அடையாதே

ஆகவே பிரகிருதி பிரதானம் தானாகவே மாற முடியாதே
வேதம் ஸ்பஷ்டமாக இத்தைக் காட்டும்

சிலர் நான்முகன் போல் சிறந்த புண்ணியம் செய்த ஆத்மாவே காரணம் என்பர்
இதுவும் கூடாதே
கர்மவசப்பட்டவர் -துக்கப்படுபவர் 0ஆகவே இதுவும் சரியில்லை –

உபநிஷத்துக்கள்
ஸத் -இருக்கும் பொருளே காரணம்
சதேவ சோம்ய-இதம் அக்ரே-சதேவ ஆஸீத் –
சிலர் உண்டாவதும் முன்பு அபாவம் -அஸத் கார்ய வாத நிராசனத்துக்கு சொன்னதே

மேலும் உபநிஷத் ப்ரஹ்மம் காரணம் -ஆத்மா காரணம் -என்றும் சொல்லும்
இவற்றுக்கு முரண்பட்டு இல்லை
சாமான்ய விசேஷ நியாயம்
விலங்கைக் கூட்டி வா மாட்டைக் கூட்டி வா -இரண்டுக்கும் வாசடி இல்லாதது போல்
பொதுவாக சொல்லி பின்பு விசேஷித்து சொல்லலாமே

அதே போல்
இருக்கும் பொருளே காரணம் -ஸத்
பெரிய பொருளே காரணம் -ப்ரஹ்மம்
ப்ரஹ்மம் ஏக அக்ர ஆஸீத்
அதுக்கும் மேலே அறிவுடைய பொருளே காரணம் என்றும் சொல்லும்
ஆத்மா வா இதம் ஏகமே வ அக்ர ஆஸீத்
ஏகோ வை நாராயணா ஆஸீத்
பின்பு நாராயணனே ஒருவராக முன்பு இருந்தார் என்றது –

நிமித்த காரணம் ப்ரஹ்மம் என்னும் இதில் பல கேள்விகள் எழும்
1-உலகில் ஒரு பொருளை படைக்கும் போது –
அவித்யை அறிவின்மை -கர்மம் பாபம் புண்யம் -பர நியோகம் பிறரால் ஏவப்பட்டு படைக்கிறார்கள்
பரமாத்மாவும் அப்படியேயோ

பதில் -ப்ரஹ்மம் நிர் அவத்யம் -நிரஞ்சனம் -அறிவின்மை அற்றவர்
அபஹத பாப்மா -கர்மங்கள் அற்றவர்
ந தஸ்ய ஈசே கச்சன் -யாராலும் ஏவப்படாதவர்
தன்னுடைய இச்சை ஆசையாலேயே ஸ்ருஷ்டிக்கிறார் –

2- இவ்வளவு பெரிய உலகைப் படைக்க சிரமமோ களைப்போ அடைவாரா

சங்கல்ப ஏக தேசத்தாலே படைக்கிறார் -நிஜ இச்சையால் மட்டுமே
நினைத்த எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் -முதலில் சிதையாமே -தனக்கு மாறுபாடு விகாரம் இல்லாமல்
மனம் செய் ஞானத்து உன் பெருமை -ஆழ்வார் –

3-அவாப்த ஸமஸ்த காமனாய் இருந்தும் எந்த ப்ரயோஜனத்துக்காகப் படிக்கிறார்
ஜீவர்கள் உலகில் படும் துன்பங்களைக் கண்டால் அவர்கள் நன்மைக்காகப் படைக்கிறார் என்று சொல்ல முடியாதே

லீலை -அச்சமய போகத்துக்காகவே -வேறே பலனை
எதிர்பார்க்காமல்
அரசன் தோட்டத்தில் பந்து விளையாடி வேறே பலனுக்காக இல்லாமல் மகிழ்வது போல்
ந ப்ரயோஜனத்வாத் -ப்ரஹ்ம ஸூத்ரம்
லோகவத் லீலா கைகைவல்யம் –2-1-32-
பாலன க்ரீடநகைரிவ–வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்
பல பல மாய மயக்குகளால் இன்புறும் இவ்விளையாட்டு உடையான்

4-முக்தி பெற படைக்கிறார் என்றால் எப்படி இது லீலை ஆகும்

உண்மையே தான்
வெகு சிலரே முக்தர் ஆவதால்
லீலையே அதிகமாக கிடைக்கும் பலன்

ஒரு பொருள் எதற்க்காக படைக்கப்பட்டது அதுக்காக இல்லாமல் இருந்தால் சிரிப்பு வருமே
நன்றாக செய்தால் அது போகமாக இருக்கும்
சிரிக்கும் பொழுது கேட்க சொன்ன கதை
எண்ணெய் வாங்க கோணிப்பை எடுக்க சிரிக்க
ஊதியம் உயர்வு கேட்டான்
ஆழ்வாராதிகளைக் கண்டால் போக ரசம் பெறுவான்

லீலா கைவல்யம் -லீலையே பிரயோஜனம்
நின்று நின்று பல நாள் உய்க்கும் இவுடல் நீங்கிப் போய் சென்று சென்று ஆகிலும் கண்டு
உண்டியே உடையே உக்காந்து போகிறவன் எப்பொழுதாவது
ஜென்மம் கழிப்பான் என்று எண்ணி சோம்பாது ஒன்றி ஒன்றி உலகம் படைக்கிறான் -உத்ஸாகத்துடன் –

பிரதானம்-முக்கியம் வேறே –
பிரசுரம் அதிகம் வேறே –
இரண்டு பிரயோஜனங்களும் உண்டு -இரண்டுக்கும் பிரமாணங்கள் உண்டு
முக்தனாக்குவதே பிரதானம் –
ஆசைப்பட்டது எல்லாம் கிடைக்காதே
பிரசுரம் மிகுதி லீலா ரசம் -தான் அடைகிறான் –

5-உலகை அழிப்பது எப்படி லீலை ஆகும்

குழந்தை மண் வீடு கட்டி அழிப்பது போல்

6-ஏற்றத் தாழ்வுகள் காண்கிறோம்
வைஷம்யம் -பாகுபாடு
நைர் க்ருண்யம் -கருணை இன்மை வாராதோ

சா பேஷத்வாத் -தானாகவே செய்ய வில்லையே -கர்மம் அடியாகவே ஏற்றத்தாழ்வுகள்
தவறு செய்யும் குழந்தையை தாய் அடித்துத் திருத்துவது போல்
ஸமோகம் ஸர்வ பூதேஷு அவன் –
கர்மம் அடியாக செய்வதாலும் மண் தின்னும் பிரஜை -நாக்கில் குறி இட்டு அஞ்சப் பண்ணும் மாதாவைப் போல்
ஹித பரன் –
பிரதான காரணம் ஜீவர்களுடைய கர்மங்கள் தான்
நிமித்த காரணம் -பொதுவான காரணம் ப்ரஹ்மம்
குற்றங்கள் வராதே

———–

பாடம் -35-அபின்ன நிமித்த காரணம்
உபாதானமாகவும் ப்ரஹ்மம்
இத்தை மேலே பார்ப்போம்

த்ரிவித–மூன்று வித – காரணங்கள்
1-உபாதான காரணம்
நிலை மாறி கார்யமாவது
உருண்டை வடிவில் இருக்கும் மண் குடம் ஆவது போல் –
மண் உருண்டையை குடத்துக்கு உபாதான காரணம் ஆகும்

சமவாய காரணம் -இத்தை நியாய மதம் சொல்லுவார்
ஸத் கார்ய வாதம் வேதாந்தம்
ப்ராக் பாவம் அபாவம் -நியாய மதஸ்தர்

ஜீவாத்மா நித்யம் -அதுக்கு உபாதானம் என்ன கேட்க வேண்டாமே
அசித் தான் பரிமாணம் அடையும் –

2-நிமித்த காரணம் -யார் ஒருவர் உபாதான காரணத்தை மாற்றுகிறாரோ அவர் –
குயவன் தானே மண்ணை குடம் ஆக்குகிறார்

3-ஸஹ காரி காரணம் -கார்யம் பண்ண உதவும் கருவிகள் -சக்கரம் போல்வன

ப்ரஹ்மமே நிமித்த காரணம் முன்பு பார்த்தோம்

உலகில் நாம் காணும் அனைத்தும் முக்குண வசமாய் இருப்பதால்
உபாதான காரணமும் அப்படியே தானே இருக்க வேண்டும் என்று தோன்றும்
மூலப் பிரக்ருதியே மஹான் இத்யாதிகளாக ஆகிறது என்றும் ஸ்ருதிகள் சொல்லும்
எனவே பிரக்ருதியே தான் உலகுக்கு உபாதான காரணம் என்று சொல்லத் தோன்றும்
ஆனால் வேத வியாசர் இத்தை ஏற்க வில்லை

ப்ரக்ருதிச் ச ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநு பரோ தாத் —1-4-23-

ப்ரக்ருதி ச -உபாதான காரணமும் அவனே
முன்பே நிமித்த காரணம் முடிவானதால்
ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த-இரண்டு காரணங்களாலும்
இரண்டுடன் முரண்பாடு இல்லாமல் இருக்கும்

கீழே நிமித்த காரணமாக சொன்ன பரமாத்மாவே உபாதான காரணமாக உள்ளார்
அப்பொழுது தான் ப்ரதிஞ்ஜை யோடும் –
எடுத்துக் காட்டும் முரண்பாடு இல்லாமல் இருக்கும்

சாந்தோக்யம் -ஆறாவது அத்யாயம் ஸத் வித்யை –
உத்தாலகர் தனது பிள்ளை ஸ்வேதகேதுவுக்கு உபதேசம்

ஏக விஞ்ஞானம் ஸர்வ விஞ்ஞானம் –ப்ரதிஞ்ஜை-
ஆதேசம் -உலகு அனைத்தையும் இயக்கம் அவனை அறிந்தாயா –
இவனை அறிந்தால் அனைத்தையும் அறிந்தவனாக ஆவாய்
இவனைப் பற்றி கேட்டாயானால் அனைத்தையும் கேட்டதாக ஆகும்

உலகை இயக்கக் கூடிய ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்தது ஆகும் -எடுத்துக் காட்டு-
மண் உருண்டையை அறிந்தால் அதில் இருந்து உண்டாகும் அனைத்தையும் அறிந்தால் போலே
அதே போல் ப்ரஹ்மத்தை அறிந்தால் அனைத்தையும் அறிந்தது ஆகும் என்றால்
ப்ரஹ்மமே உபாதான காரணம் என்றதாகும் –

காலையில் குயவன் வீட்டில் மண் உருண்டையைப் பார்த்து
பின்னால் மதியம் அங்கு இருக்கும் குடம் மடக்கு போன்றவற்றைப் பார்த்து
இவை அனைத்தும் காலையில் பார்த்த மண் உருண்டையை என்று கூறுவதால்
மண் உருண்டையை உபாதான காரணம் என்றதாயிற்று
மேலும் தங்க காசு ஆபரணங்கள் எடுத்துக் காட்டுகளும் சொன்னார்

அதே போல் மரம் கல் துணி நீர் -போன்ற பல பெயர்களோடும் வடிவங்களோடும்
இருக்கும் உலகம் அனைத்தும்
முன்பு ஸத் -ப்ரஹ்மம் -ஆத்மா -நாராயணன் -என்று சொல்லப்படும்
பரமாத்மாவே -வேறே யாரும் முன்பு இல்லை
எனவே அவரே உபாதான காரணமாகவும் நிமித்த காரணமாகவும் உள்ளார் என்று கிடைக்கிறது

ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்

இதம் அக்ர ஆஸீத்-இவை அனைத்தும் முன் ஸ்ருஷ்டிக்கு முன்னால் –
மண் உருண்டையாகவே இருந்தது போல் இங்கும் -ஸதேவ -ஸத் -பரமாத்மாவேயாக இருந்தன

ஏகமேவ -ஒன்றாகவே இருந்தது -உபாதான காரணம் இதுவே -குடம் தட்டு இவை எல்லாம்
காலையில் மண் உருண்டை பெயர் வடிவத்துடன் இருந்தது போல் -நாம ரூப வேறுபாடுகள் இல்லாமல் –

அத்விதீயம் -இரண்டாவது இல்லாமல் இருந்தது –
மண்ணை அறிந்தால் மண்ணால் உண்டான அனைத்தையும் அறியலாம் -குயவனை அறிய முடியாதே
அது போல் இல்லை
மாற்ற குயவன் போல் தனியாக வேறே ஒருவர் நிமித்த காரணம் இல்லை
இவரைத் தவிர வேறே இல்லை
அபின்ன நிமித்த ப்ரஹ்மம் என்றவாறு

மேலும் குயவன் இந்த மண் உருண்டையை குடம் மடக்கு போன்றவாறாக மாற்றுவேன்
என்று சங்கல்பம் கொள்வான்
பரமாத்மாவோ
நான் பலவாக ஆகப் போகிறேன் -அதற்காக படைக்கப் போகிறேன் -என்று
சங்கல்பம் செய்து கொள்வான் என்று மகன் இடம் கூறினார்

தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய
நான் இந்த மூலப்பிரக்ருதியைக் கொண்டு பலவற்றையும் ஸ்ருஷ்ட்டிக்கப் போகிறேன் என்று சொல்லாமல்
அந்த பரமாத்மா நானே பலவாக ஆகக் கடவேன் அதுக்காக ஸ்ருஷ்ட்டி செய்யக் கடவேன் -என்றவாறு

தானே -ஸ்வயம் -நிமித்தம்
தன்னை -ஆத்மநாம் -உபாதானம்
தானே தன்னை உலகமாக ஸ்ருஷ்டித்துக் கொள்கிறார்

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகாதிக்கு எல்லாம் -திருவாய் -10-10-
வித்து
முதல் வித்து
தனி வித்து

உபாதான காரணம் காரியமாக உரு மாற வேண்டுமே
பரமாத்மாவோ அவிகாராயா -விகாரம் மாறுபாடு அற்றவர் அன்றோ
அவிகாராய விகாராய ஸூத்தாயா நித்யாய
நிரஞ்சனம்
அகில ஹேய ப்ரத்யநீகன் -பரிணாமம் அற்றவன்
எவ்வாறு உபாதான காரணம் ஆக முடியும்
இதுக்குப் பதிலாக சிலவற்றைப் பார்ப்போம்

1-மண் உருண்டை குடமாக உரு வாகிறது

2-சிறுவன் முதிர்ந்தவர் ஆகிறான்
சிறியவனாக இருந்த நானே முதிர்ந்தவனாக உள்ளேன் என்பான்
உருவ வேறுபாடு உடலிலே தானே
உள்ளே இருக்கும் ஜீவாத்மாவின் உருவ வேறு பாடு இல்லையே
நிலை வேறுபாடு மட்டுமே உள்ளது
பால்ய அவஸ்தை கொண்ட சரீர விஸிஷ்ட ஜீவாத்மாவே –
யுவா அவஸ்தை கொண்ட சரீர விஸிஷ்ட ஜீவாத்மாக ஆனேன்
ஸ்வரூப மாற்றம் இல்லை -ஸ்வபாவ மாற்றமே

3-ப்ரஹ்மமும் -ஏஷ சர்வ பூத அந்தராத்மா –
இந்த உலகம் அனைத்துமே
பரமாத்மாவால் தாங்கப்பட்டு
இயக்கப்பட்டு
அவருடைய மேன்மைக்காகவே இருக்கிறபடியால்
அவருடைய உடலாகும் என்று பார்த்தோம்

பிரகிருதி மஹானாக ஆகும் பொழுது
ப்ரக்ருதிக்கு அந்தர் ஆத்மாவான ப்ரஹ்மமே மஹானுக்கும் அந்தர் ஆத்மாவான ப்ரஹ்மம் ஆகிறார் -அன்றோ
இதே போல் ஒவ்வொன்றுக்கும் கொள்ள வேண்டும்
காரணமும் காரியமும் ப்ரஹ்மமே
இது தான் சரீர ஆத்ம பாவ ஆச்சார்யம்

எனவே பரமாத்மாவே உலகமாக ஆகிறார் என்றால்
ஸூஷ்ம சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் —
ஸூஷ்ம சேதன அசேதனங்களை உடலாகக் கொண்ட ப்ரஹ்மமே
ஸ்தூல சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் –
ஸ்தூல சேதன சேதனங்களை உடலாகக் கொண்ட ப்ரஹ்மம் ஆகிறார் -என்று பொருள்

இங்கு உருவ வேறுபாடு அசேதனப் பொருள்களுக்கே
பரமாத்மாவுக்கு நிலை மட்டுமே வேறுபாடு
உபாதான காரணமாக இருந்தாலும் அவர் அவிகாராயா -விகாரமும் உருவ வேறுபாடும்
இல்லாமலேயே இருக்கிறார் -என்று தெளிவு –

ப்ரஹ்மமே -அபின்ன நிமித்த காரணம் -ஒருவரே உபாதானமாகவும் நிமித்தமாகவும் உள்ளார்
1– யதா ஊர்ண நாபி ஸ்ருஜதே க்ருஹ்ணதே ச (முண்டக உபநிஷத் சொல்லும் )
சிலந்திப் பூச்சி வலை கட்டுகிறது
தானே சங்கல்பித்து முடிவு செய்து பின்னுகிறபடியால் -செய்வதால் நிமித்த காரணம்
அதன் எச்சிலே வலையாக மாறுவதால் அதுவே உபாதான காரணம்

2-பராசர பட்டர் காட்டும் உதாரணம்
ஆண் மயில் பெண் மயிலை மகிழ்விக்க தானே முடிவு செய்து தனது-சரீர ஏக தேசம் -தோகை விரித்து ஆடுகிறது
விளையாட்டு முடிந்த பின் தோகையைச் சுருக்கிக் கொள்கிறது
விரிந்த தோகைக்கு மயிலே நிமித்த உபாதான காரணம்

இதே போல்
ஸ்வம் சரீர ஏவ தேசம் -ஸ்வ இச்சையால் விஸ்திருத –
பரமாத்மாவும் பிராட்டி மகிழ்ச்சிக்காக தானே முடிவு செய்து விளையாட்டாகப் படைத்து –
விளையாட்டு முடிந்ததும் பிரளயம் -தன்னிடமே லயம் அடையச் செய்கிறார் –

ஆக
1-சேதன அசேதன பொருள்களை உடலாகக் கொண்ட –
சேதன அசேதன விஸிஷ்ட பரமாத்மாவே உபாதான காரணம் ஆவார்
2-சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மமே நிமித்த காரணம் ஆவார்
3-ஞான சக்த்யாதி குண விசிஷ்டா ப்ரஹ்மமே ஸஹ காரி காரணம் ஆவார்

————

பாடம் –36- பரமாத்மாவின் பெருமைகள்

யஸ்மாத் பரம் ந பரம் அஸ்தி கிஞ்சித் -அசையாத மரம் போல் ஸ்ரீ வைகுண்டத்தில்
உயர்வு அற -மற்றவர்களின் உயர்வு அறும் படி என்றுமாம்
உலகம் பூர்ணமாக வியாபிக்கப்படுகிறது
விபு ஸ்வரூபம் –
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
ஸ்வரூபம் விபு
அனைத்தையும் தாங்கி
அளவுபட்டு ஆத்மாவுக்குள்ளும் அந்தர்யாமி யாகவும் பூர்ணனாக ஒன்றுமே குறையாமல் வியாபிக்கிறார்
இவரே ஜகத் காரணம் -முன்பு பார்த்தோம்

அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாணை ஏக தாமம் -ஸமஸ்த இதர வஸ்து விலக்ஷணன்
விசிஷ்டம் என்றால் சேர்ந்தது
அத்வைதம் -இரண்டாவது இன்மை
சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம்
ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறே உயர்ந்த பொருள் உண்டு என்கிற அதிசங்கை -ப்ரஹ்ம ஸூத்ரத்தில் விசாரம்
ப்ரஹ்மத்தை சேது என்பதாலும்
அவருக்கு அளவுண்டு என்பதாலும்
அம்ருதம் எனப்படும் பரமாத்மாவை அடைய ப்ரஹ்மமே வழி என்பதாலும்
உயர்த்தத்தைக் காட்டிலும் உயர்ந்தவர் என்பதாலும்
ப்ரஹ்மம் வேறே பரமாத்மா வேறே என்று அதிசங்கை வருமே

பராதிகரணம் –3-1-விசாரம்
3-1-30- நான்கு காரணங்களையும் காட்டும்
ப்ரஹ்மம் சேது என்பது பாலம் என்ற பொருளில் இல்லை
உலகம் அனைத்தையும் அதன் அதன் இடத்தில் நிலை நிறுத்தி வைப்பவர் என்கிற பொருளில் வந்ததே
அணை -நதிகளை -இரண்டு புறத்திலும் உள்ளவற்றை கலக்காமல் இருப்பது போல்
ஸமஸ்த வஸ்துக்களும் அவை அவை நிற்க காரணமே இவனே -யேஷாம் லோகான் அசம்பாவத
ப்ரஹ்ம் அளவுபட்டு தன்னை அமைத்துக் கொள்வது தியானத்துக்கு உதவுவதற்கே
உன்மானம் -நான்கு கால் -16 கலைகள் -இத்யாதி இதற்காகவே
புத்யர்த்தா பாதவத் –த்ரிபாத் விபூதி -லீலா விபூதி சொல்வது போல் –
ஐஸ்வர்யம் சொல்லவே வந்தது
சம்பந்தம் –அம்ருதம் -இவர் சேது வழி
அம்ருதஸ்ய ஏஷ சேது -தன்னை அடைய தானே வழி என்கிறது
வழி என்பதால் மட்டும் அடையப்படும் வஸ்து வேறே என்பது இல்லை
பேத அபேதம் சொல்ல வந்தது இல்லை
பராத்பரன் -புருஷன் உபைதி
அனைத்தையும் காட்டிலும் உயர்ந்தவர்

சர்வ கர்ம ஸமாராத்யாம்
பரமாத்மாவை மகிழ்விக்கவே அனைத்தும் –
அனைத்து தேவதைகளுக்கும் அந்தராத்மாவாக இருந்து
வாசனைக்கு ஏற்ப –கர்மம் அடியாக -லௌகிக விஷயங்களில் செல்ல -பசு மாடு வீடு வாசல் சுவர்க்கம் ஆசை –காம்ய கர்மங்கள்
அந்த அந்த தேவதையை ஆராதனம் செய்து அல்ப பலன்கள் பெறுகிறார்கள்
அவற்றுக்கு அந்தர்யாமியாக பரமாத்மா இருப்பதை அறிந்து த்யானத்தில் முக்தர் ஆகிறார்கள்
அஹம் ஹி சர்வ யஞ்ஞானாம் போக்தா ச பிரபுரேவ ச
அனைத்து யாகங்களாலும் இவனே பூஜிக்கப்படுகிறான் -இவனே பலன்களையும் அளிக்கிறான்
பலம் அத உப பத்தே –3-2-37-
அனைத்து பலன்களையும் ப்ரஹ்மமான பரமாத்மாவே வழங்குகிறார் -என்கிறார் வேத வியாசர் –
சர்வ தேவ நமஸ்கராம் கேசவன் கச்சதி -நதிகள் கடலில் சேருவது போல்
3-2-40-சேது வியாபதேசாத் –
வாயு தேவதை வேகமாக பலன் கொடுக்கிறார் வேதம் சொல்லும்
அபூர்வம் மட்டும் பலன் என்ன கூடாது
அந்தர்யாமியாக இருக்கும் ப்ரஹ்மமே பலன் அளிப்பார் இந்த்ராதிகள் அல்ப ஆயுஸ் -அன்றோ –
புண்யம் அபுண்யம் அவனது ப்ரீதியும் அப்ரீதியும்

ப்ரஹ்மம் நிர்குணம் என்றும்
ச குணம் -ஸர்வஞ்ஞன்
ஞான பல ஐஸ்வர்யா வீர்ய சக்தி தேஜஸ் கருணை உதாரம் சவ்ஸீல்யாதி குணங்கள் உண்டு என்றும் ஸ்ருதிகள் கூறும்
சமுச்சயமாக கொள்ளக் கூடாது இவை இரண்டையும்
விகல்பம் -என்றும் கொள்ள முடியாது
பொய் சொல்லக்கூடாது
கல்யாணத்துக்கு பொய் சொல்லலாம்
ஓன்று விதி -உத்சர்க்கம்
மற்ற ஓன்று அபவாதம் -விதி விலக்கு
கல்யாணம் போன்ற இடங்களில் தவிர பொய் சொல்லக்கூடாது என்றே கொள்ள வேண்டும்
உத்சர்க்க அபவாத நியாயம்
அதே போல் தீய குணங்கள் கிடையாது -நிர்குணம் -அபஹத பாப்மா -இத்யாதிகள்
ஆனந்தம் வள்ளல் தன்மை இத்யாதி இருந்தால் தானே பலன்களைக் கொடுக்க முடியும்

திவ்ய மங்கள விக்ரஹம் உண்டு
ஹிரண்மயம் -கப்யாஸம் புண்டரீக அக்ஷிணீ
ஸ்வரூப ரூப குணங்களைக் காட்டிலும் அத்யந்த அபிமதமாய் இருக்குமே -பிள்ளை லோகாச்சார்யார்
கருணை- -ஆத்ம குணம்
ஸ்வ அனுரூபமாய்
நித்தியமாய் ஏக ரூபமாய் ஸூத்த ஸத்வமாய்
சேதன தேகம் போலே ஞான மயமான ஸ்வரூபத்தை மறைக்கை அன்றிக்கே
மாணிக்கச் செப்பிலே பொன்னை இட்டு வைத்தால் போலே இருக்க
பொன்னுருவமான திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு ப்ரகாசமாய்
நிரவதிக தேஜோ ரூபமாய்
ஸுகுமார்யாதி கல்யாண குண கண நிதியாய்
யோகி த்யேயமாய்
சகல ஜன மோஹனமாய் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரமாய்
ஸமஸ்த போக வைராக்ய ஜனகமாய் -சிற்றின்பம் நீயும் அவளும் நிற்க கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன்
ருசி ஜனக விபவ லாவண்யம்
நித்ய முக்த அனுபாவ்யமாய்
வாசத்தடம் போலே சகல தாப ஹரமாய் -ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த –
அநந்த அவதார கந்தமாய்
ஸர்வ ரக்ஷகமாய்
சர்வ ஆஸ்ரயமாய்
அஸ்திர பூஷண பூஷிதமாய் இருக்கும் –

இதில் ஐந்து நிலைகள் உண்டே
1-பரத்வம் -ஸ்ரீ வைகுண்டத்தில் -தர்மாதி பீடம் -வீற்று இருந்த -திரு மேனி -பாட்டு கேட்க்கும் இடம் – நாராயண ஸ்ரீ மான்

2-வ்யூஹம் -திருப்பாற்கடலில் ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம்
வாசுதேவன் -சங்கர்ஷணன் -ப்ரத்யும்னன் -அநிருத்தனன் -தன்னையே வ்யூஹித்து பிரித்து ஸேவை
உந்தித்தாமரையில் நான்முகனைப்படைத்து -கூப்பீடு கேட்க்கும் இடம் -ஷீராப்தி நிகேதன

3-விபவம் -ராமர் கிருஷ்ணன் -ஆகாதா மதுராம் புரீம் -அவதார ரஹஸ்யம் —
இச்சா க்ருஹீத -அப்ராக்ருதம் -சம்பவாமி யுகே யுகே -பூதானாம் ஈஸ்வரோபிசன் –
பரித்ராணாம் ஸாதூ நாம் –தொழும் காதல் களிறு அளிப்பான்
விநாசாய துஷ்க்ருதாம்
தர்ம சமஸ்தானநார்த்தம் -தானே தர்மம் -என்று காட்டி அருளி -கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -ராமோ விக்ரஹவான் தர்ம –
ஜென்ம கர்ம மே திவ்யம்

4-அந்தர்யாமி
உதாசீனம் -அனுமதி -சர்வ நியந்தா –
இரண்டு வகை
த்யானிப்பவர் -எளிதில் தியானிக்க சின்னவடிவில் ஹ்ருதய புண்டரீகாக்ஷம்
அங்குஷ்ட மாத்ர புருஷ
அகம்படி வந்து புகுந்து
கருட உத்சவம் நம்மாழ்வார் உள்ளத்தில்
த்யானம் மனிதர்களுக்குள் சிலருக்கு மட்டுமே

5-அந்தர்யாமி -சத்தை நியாந்தாவாக அனைத்திலும் உருவம் இல்லாமல்
இப்படி இரண்டு வகை
அர்ச்சை –
கோயில்களிலும் க்ருஹங்களிலும்
அர்ச்சனை பராதீனன்
ப்ரதிமா அப்ரதிபத்தி -சம தர்சனம் -ஒவ்வொரு ஜீவர்களுக்குள்ளும் பரமாத்மா இருப்பதை உணர்வார்கள் இல்லாதாருக்காக
பரதவ ஸுலப்யம் இரண்டிலும் எல்லை அர்ச்சையிலே

———

பத்து அத்ரவ்யங்கள் -மேல் பார்ப்போம்
உண்மை பொருள்கள் ஆறு வகை த்ரவ்யங்கள் இவை தான்
தத்வம் அறிந்து
புருஷார்த்தம் நிஷ்கர்ஷித்து
ஹிதம் பார்த்து
வேதாந்தம் நிகமிப்போம்

———

பாடம் -37-அத்ரவ்யங்கள்
இது வரை ஆறு த்ரவ்யங்கள்
1-ப்ரக்ருதி
2-ஸூத்த ஸத்வம்
3-காலம்
4-ஜீவாத்மா
5-பரமாத்மா
6-இருவடைய தர்ம பூத ஞானம் -பார்த்தோம்
முக்காலத்திலும் உள்ளவற்றை – யுகபத் -ஸர்வ -ஸூத இயற்கையாக அறியும்
ஸர்வஞ்ஞன்-பரமாத்மாவுக்கு தர்ம பூத ஞானம் உண்டே

இனி அத்ரவ்யங்கள் -த்ரவ்யம் அல்லாதவை
நியாய மாதத்தில் இவற்றையே குணங்கள் என்று -சொல்கிறார்கள்
குணமானது த்ரவ்யத்தை விட வேறு பட்டது என்பர் அவர்கள்
வேதாந்தத்தில் அப்படி அல்ல
குணமானது எப்பொழுதும் வேறே ஒரு பொருளை அண்டியே இருக்கும் –
ஆஸ்ரயத்து பிரிக்க முடியாமல் இருக்கும் –
அது த்ரவ்யமாகவோ அத்ரவ்யமாகவோ இருக்கலாம்
தர்ம பூத ஞானம் த்ரவ்யமாக இருந்தாலும் ஆத்மாவை ஆஸ்ரயித்து இருக்கும்
ஸத்வாதி முக்குணங்கள் -அத்ரவ்யங்கள் -பிரக்ருதியை ஆஸ்ரயித்து இருக்கும்

விசிஷ்டாத்வைத மதத்தில் 10 அத்ரவ்யங்கள்
1-ஸத்வம்
2-ரஜஸ்
3-தமஸ்
4-ஸப்தம் -ஒலி
5-ஸ்பர்சம் -வெப்பம்
6-ரூபம் -நிறம்
7-ரஸம் -சுவை
8-கந்தம் -மணம்
9-ஸம்யோகம் -சேர்க்கை
10-சக்தி -திறன்-potency -ஆகியவை இவை –

பிரகிருதியின் பண்புகள்
1-ஸத்வம்
ஞானம் ஸூகம் பாரமின்மை ஆகிய தன்மைகளுக்குக் காரணமான –
புலன்களுக்கு அப்பால் பட்ட – சக்தியைக் காட்டிலும் வேறுபட்ட ஒரு அத்ரவ்யம் தான் ஸத்வம்
ப்ரகாஸம் -ஸூகம் -லாகவம் -மூன்றுக்கும் காரணம் —அதீந்த்ரியம் -திறமை -சக்தி -அத்தை விட வேறு பட்ட -அத்ரவ்யமாய் இருக்கும்
மனஸூக்கும் இவை ஒத்து வரும் -ஆகவே அத்ரவ்யமாக என்று லக்ஷணம்
இது ஸூத்த ஸத்வம் என்னும் அசேதனப் பொருளில் தனியாக இருக்கும்
மிஸ்ர தத்வம் -ப்ரக்ருதி -என்ற அசேதனப் பொருளில் ரஜோ தமோ குணங்கள் உடன் கூடி இருக்கும் –

2- ரஜஸ் –
ராக த்ருஷ்ணா ப்ரவ்ருத்தி -ஆசை பற்று முயற்சி -மற்றும் பேராசை முதலானவற்றுக்குக் காரணமாயும்
புலன்களுக்கு அப்பால் பட்ட சக்தியைக் காட்டிலும் வேறுபட்ட ஒரு த்ரவ்யம் தான் ரஜஸ்

3- தமஸ்
பிரமாத மோஹாதி நிதானம் -கவனமின்மை சோம்பல் தூக்கம் முதலானவற்றுக்குக் காரணமாயும்
புலன்களுக்கு அப்பால் பட்ட சக்தியைக் காட்டிலும் வேறுபட்ட ஒரு த்ரவ்யம் தான் தமஸ்

இவை மூன்றும் பிரகிருதியின் குணங்கள் -ப்ரக்ருதியுடன் தொடர்பு கொண்ட ஆத்மாவையும் தாக்கக் கூடியவை
இவை -ப்ரவாஹதோ நித்யம் -அழியக் கூடியவையாக இருந்தாலும் தொடர்ச்சியாக எல்லாப் பொருள்களிலும் இவை இருக்கும்
பிரளயத்தில் ஸமமான திசையிலும்
ஸ்ருஷ்டியில் ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்கும் –

சாங்க்ய மாதத்தில் இவை த்ரவ்யங்கள்
நம் சித்தாந்தத்தில் இவை அத்ரவ்யங்கள் -பிரகிருதியின் பண்புகள் தான்

பஞ்ச பூதங்களின் பண்புகள்
4-ஸப்தம் -நம் காதால் கேட்கப்படும் அத்ரவ்யம்
இது ஆகாசத்தில் குணம்
பஞ்சீ கரணத்தால் மற்றவற்றிலும் உள்ளது
ஆகாசத்தோடு தோன்றி மறையும் பொருள்

நித்யர்களுக்கு அப்படி அல்லவே
ஆகவே அஸ்மதாதி நம் போல்வாருடைய காதால் கேட்கப்படும் என்று லக்ஷணம்
ஸப்தம் நித்ய விபூதியிலும் உண்டு -அப்ராக்ருத பஞ்ச உபநிஷத் –
இங்கு இருப்பவரால் க்ரஹிக்கப்படும் சப்தத்வம்
வேறு பட்டத்தைக் காட்டிலும் வேறுபட்டது -விஜாதீயம் -ரூபாதிகளை காட்டிலும் வேறு பட்டதாய் அங்குள்ள ஸப்தம்
விஜாதீய வ்யாவ்ருத்தம் –என்று லக்ஷணம்

இது இரண்டு வகைப்படும்
வர்ணம் -எழுத்தாக இருக்கும் ஒலி
அவர்ணம் -எழுத்து அல்லாத ஒலி -மிருதங்க ஒலி போல்வன –
தொலைவில் உள்ள ஒலியை காது சென்று க்ரஹிக்கிறது என்றும்
அவ்வொலி வாயு மூலம் பயணித்து நம் காதை அடைகிறது என்றும் இரண்டு கருத்துக்கள் உள்ளன –
தொலைவில் ஒலி கேட்க்கிறது -அருகில் -கிழக்கில் இருந்து ஒலி வருகிறது என்கிறோம் –
ஸ்ரோத்ரிய இந்திரியம் பிரயாணித்து அறிகிறது என்றே கொள்ள வேண்டும் –

5-ஸ்பர்சம் -நமது ஸ்பர்ச இந்த்ரியத்தால் -தோலால் -அறியப்படும் அத்ரவ்யம்
இங்கும் விஜாதீய வ்யாவ்ருத்தம் என்பதை அப்ராக்ருத ஸ்பர்சம் சொல்ல லக்ஷணம் –
வெப்பம் என்ற ஸ்பர்சம் நெருப்பிலும்
குளிர்ச்சி என்ற ஸ்பர்சம் நீரிலும்
நடுவான ஸ்பர்சம் பிருத்வியிலும் வாயுவிலும் இருக்கும்
மென்மை -கடினத் தன்மை -ஆகியவையும் ஸ்பர்சத்தின் வகைகள் தான்
நியாய மதத்தில் -கடினம் மென்மை- ஸம்யோகம் என்பர் -சேர்க்கையும் சேர்க்கை இன்மையுமே என்பர்
பிருத்வியாலான பொருள்களில் வெப்பத்தின் தாக்கத்தால் ஸ்பர்சம் மாறக்கூடும் -இதற்கு பாகம் -என்று பெயர் –
மாங்காய் அரிசிக்குள் வைத்தால் மாம்பழம் ஆவது போல் -பால் தயிர் ஆவது போலவும் –

6-ரூபம் -நம் கண்ணால் மட்டும் அறியப்படும் அத்ரவ்யம்
இங்கும் விஜாதீய வ்யாவ்ருத்தம் என்பதை அப்ராக்ருத ரூபம் சொல்ல லக்ஷணம்
வெளுப்பு கருப்பு சிவப்பு மஞ்சள் -என்று நான்கு நிறங்கள் உண்டு
மஞ்சள் சிவப்பின் ஒரு வகை என்பாரும் உண்டு –
த்ரிவிக்கரணம் -என்பதால் இம் மூன்றும் -வெளுப்பு கருப்பு சிவப்பு –
மேலும் ஒளி விடக்கூடியது -ஒளி விடாதது -என்றும் பாகுபாடு உண்டு
நெருப்பில் ஒளி விடும் –lustrous -சிவப்பு
நீரில் ஒளி விடும் வெள்ளை
பிருத்வியில் ஒளி விடாத நான்கு (மூன்று)நிறங்களும் இருக்கும்
சித்ர ரூபம் -கலந்த நிறம் நியாய மாதத்தில் உண்டு என்பர்

7-ரஸம்-நமது ரசன இந்த்ரியத்தால் -நாக்கால் -அறியப்படும் அத்ரவ்யம்
இங்கும் விஜாதீய வ்யாவ்ருத்தம் என்பதை அப்ராக்ருத ரஸம் சொல்ல லக்ஷணம்
இனிப்பு புளிப்பு உவர்ப்பு கார்ப்பு துவர்ப்பு கசப்பு -என்று ஆறு வகைகள்
இது பிருத்வீ ஜலம் இரண்டிலும் இருக்கும் –

8-கந்தம் -நம் க்ராண இந்த்ரியத்தால் அறியப்படும் அத்ரவ்யம்
இங்கும் விஜாதீய வ்யாவ்ருத்தம் என்பதை அப்ராக்ருத கந்தம் சொல்ல லக்ஷணம்
ஸூரபி-நறு மணம் -துர் நாற்றம் என்று இரண்டு வகைகள்
இது பிருத்வியில் மட்டும் இருக்கும் –

பஞ்சீ கரணத்தால் எல்லாவற்றிலும் எல்லாமும் பார்க்கிறோம்

அனைத்து த்ரவ்யங்களின் பண்புகள்
9-ஸம்யோகம்
இரண்டு த்ரவ்யங்களின் இடையில் இருக்கும் சேர்க்கை
சம்யுக்த ப்ரயுக்த நிமித்தம் -ஸம்யோகம்
இது
1-உண்டாகக் கூடியது
இரண்டு அளவு பட்ட பொருள்கள் அல்லது
ஒரு அளவு பட்ட பொருள் மற்ற ஒரு அளவு படாத பொருள் –
இடையே இருக்கும் தொடர்பு –
காலம் -எங்கும் உள்ளது -இங்கு ஸம்யோகம் -நான் நகர்ந்து -அங்கு ஸம்யோகம்
ஒரு நாள் உண்டாகும் -ஒரு நாள் அழியும்
2-உண்டாகாதது
இரண்டு அளவற்ற பொருள்களுக்கு இடையே தொடர்பு -என்பது எப்பொழுதும் இருக்கும்
பரமாத்மா காலம் ஸம்யோகம் நித்யம்

உண்டாகக் கூடிய ஸம்யோகம் இரண்டு வகைப்படும்
1-இருவரின் செயலால் உண்டானது -உபய க்ரியா ஜன்ய ஸம்யோகம்
இரண்டு மிருகங்கள் மோதிக் கொள்ளும் போது ஏற்படும் சேர்க்கை போல்வன
2-ஒருவர் செயலால் உண்டாவது
பறவை பறந்து வந்து ஒரு தூணில் அமர்ந்தால் ஏற்படும் ஸம்யோகம்

ஸம்யோகம் என்பது அனைத்து விதமான த்ரவ்யங்களிலும் உண்டு –
ஸம்யோகம் இல்லாத ஒரு பொருள் த்ரவ்யமாகவே இருக்க முடியாது
அத்ரவ்ய லக்ஷணமே ஸம்யோகம் இல்லாத பொருள்
நிறம் பொருளில் தொடுவது வேறே– இரண்டு த்ரவ்யங்கள் சேர்க்கை வேறே தானே

10-சக்தி
ஒரு பொருளுக்கு -காரணத்துக்கு -மற்ற ஒரு பொருளை -காரியத்தை -உண்டாக்கும் திறன் தான் சக்தி
ஸர்வ காரணத்வம் -மல்லிகைப் பூ மணம் -போல் ஒவ் ஒன்றிலும் சக்தி உண்டு
இது தர்க்கத்தாலும் வேதத்தாலும் நிரூபிக்கப் படுகிறது

நெருப்பு காகிதத்தை எரிக்கும்
சந்த்ர காந்த மணியை அருகில் எடுத்து வந்தால் நெருப்பால் காகிதத்தை எரிக்க முடியாமல் போகும்
நெருப்பில் இருந்த அந்த எரிக்கும் சக்தி திறன் சந்த்ர காந்த மணியால் அழிக்கப் படுகிறது
இப்படி தர்க்கத்தால் சக்தி என்று ஓன்று உண்டு என்று அறியலாம்
ஸாஸ்த்ரங்களும்
சக்த்ய ஸர்வ பாவாநாம் அசிந்த்ய ஞான கோசரா –
அனைத்துப் பொருள்களுக்கும் சக்தி என்கிற விசித்ர தன்மை -நம்மால் எண்ணிப் பார்க்க முடியாததாய் உள்ளது

நியாய மதம் –மணி பிரதிபந்தகம் தடை தான் சக்தி என்று ஒன்றைக் கொள்ள வேண்டாம் என்பர்
சுருதி சொல்வதால் நாம் ஒத்துக் கொள்கிறோம்
இது அதீந்த்ரியம் -கார்யம் பார்த்து சக்தி இருப்பதை அனுமானிக்க வேணும்

இது த்ரவ்யங்களில் மட்டும் அல்லாமல்
அத்ரவ்யங்களிலும் கூட இருக்கும்
அவையும் ஏதோ ஒரு கார்யத்தைச் செய்கிறபடியால் –

நியாய மாதத்தில் 24 குணங்கள் உண்டு என்று முன்பு பார்த்தோம்
இவை அனைத்தையும் இந்த ஆறு த்ரவ்யங்கள் பத்து அத்ரவ்யங்களில் அடக்கலாம்

புத்தி -ஸூகம் -துக்கம் -இச்சா -த்வேஷம் -ப்ரயத்னம் -தர்மம் -அதர்மம் -ஸம்ஸ்காரங்கள் —
ஆகிய எட்டும் ஞானம் என்ற த்ரவ்யத்தின் வெவ்வேறு நிலைகள்
புத்தி -ஸூகம் -துக்கம் -இச்சா -த்வேஷம் -ப்ரயத்னம்-ஆத்மாவின் தர்மபூத ஞான வகை
தர்மம் -அதர்மம்-ப்ரீதி கோபம் -அவனது ஞானம் வகை
ஸம்ஸ்காரங்கள்-பாவனா -பதிவு -வேகம்-ஸ்திதி ஸ்தாபனம் elasticity -ஸம்யோகம் -சேர்க்கையின் தன்மை தானே

விபாகம் ப்ருதக்த்வம் -இவை ஸம்யோகத்தின் இன்மை தான்

பரத்வம் அபரத்வம் இரண்டுமே ஒரு பொருளுக்கு காலத்தோடும் தேசத்தோடும் உள்ள தொடர்பு -ஸம்யோகம் -தவிர வேறு இல்லை

சம்க்யை -எண்ணிக்கை -பரிமாணம் -அளவு -த்ரவத்வம் -த்ரவத்தன்மை -ஸ்நேஹம் பசைத்தன்மை பிசுபிசுப்பு ஆகியவை
அந்த அந்தப் பொருள்கள் தான் தவிர தனியாக அத்ரவ்யங்கள் அல்ல

குருத்வம் -எடை -என்பது சக்தியின் ஒரு வகை தான்

ரூபம் ரஸம் கந்தம் ஸ்பர்சம் ஸப்தம் ஸம்யோகம் ஆகியவை அப்படியே ஏற்கப் பட்டுள்ளன

———-

பாடம் –38-புருஷார்த்தங்கள்

தத்வம் ஒன்றாகவும் ஏகோ மஹா யோகி –
தத்வ த்ரயம் – விஸிஷ்ட அத்வைதம் –
அவனையே ஆஸ்ரயத்து ப்ரஹ்மாத்மகமாக சேதன அசேதனங்கள்
தத்வம் பற்றி முன்பு பார்த்தோம்

புருஷன் எனப்படும் ஜீவாத்மாவால் -ஆசைப்பட்டு -வேண்டப்பட்டு -பெறப்படுவது
புருஷார்த்தம் என்று சொல்லப் படுகிறது
அர்த்தம் பிரயோஜனம் என்றுமாம் –
இவை தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் என்று நான்கு வகைப்படும்

தர்மமாவது –
தர்மம் -வேதம் சொன்னபடி -செய்வது -யாகம்-செயல் தானே அதுவே பயனாகுமோ -என்னில்
பிராணிகளின் ரக்ஷணத்துக்காகப் பண்ணும் செயல்கள் தர்மமாவது-
குளம் வெட்டுவது அன்னதானம் போல்வன –
தார்மிகர்
தன்னைப் பற்றி நினைக்காமல் பிராணி ரக்ஷணம் -அதுவே பிரயோஜனம்
கியாதி லாபமாக கருதாமல் தர்மமே பயனாக செய்பவர் –
அறம் -என்றாலே தனக்குச் செய்வது இல்லையே

அர்த்தமாவது –
பொருள் -தனம் -அத்தைக் கொண்டு தானே அனுபவிப்பத்தைச் சொல்ல வில்லை –
அவரவர் வர்ணாஸ்ரம தர்மத்துக்கு ஏற்ப செல்வம் தான்யம் முதலான வற்றைக்
நியாயமான முறையிலே ஈட்டி -தேவதைகளுக்கோ பித்ருக்களுக்கோ பிராணிகளுக்கோ
உத்க்ருஷ்டமான தேச கால பாத்ரங்களை அறிந்து -தர்ம புத்யா –
நன்மை செய்யும் வகையில் தர்ம புத்தியுடன் செலவிடுகை

காமமாவது
ஐஹ லௌகிகம் என்றும் பார லௌகிகம்-என்றும் இரண்டு வகைப்படும் –

இஹ லோகத்தில் காமமாவது –
தந்தை தாய் ரத்னம் செல்வம் தான்யம் வஸ்த்ரம் உணவு மக்கள் நண்பர்கள்
மனைவி மாடு வீடு நிலம் சந்தனம் வெற்றிலை மலர்கள் முதலான பொருள்களைக் கொண்டு
ஸப்தம் ஸ்பர்சம் ரூபம் ரஸம் கந்தம் ஆகியவற்றை அனுபவித்து ஸூகப்படுகை –

பர லோகத்தில் காமமாவது –
இதில் விலக்ஷணமாய் -தேஜோ ரூபமான –
ஸ்வர்க்காதி லோகங்களுக்குச் சென்று பசி தாகம் சோகம் மோஹம் மூப்பு மரணம் முதலானவை இல்லாமல்
சேர்த்து வைத்த புண்யத்துக்கு ஈடாக ஸப்தம் முதலான விஷயங்களை அனுப்பவிக்கை

மோக்ஷம் -விடுபடுதல்
உடல் -சம்சாரம் -பிரகிருதி -கர்மங்கள் -பிறவி சுழலில் இருந்து
அடையும் இடத்தைப் பொறுத்து இரண்டாக
கைவல்ய ப்ராப்யம்
பகவத் ப்ராப்யம்
ஆக ஐந்து புருஷார்த்தங்கள் என்றும் சொல்லலாம் –

ஆத்ம அனுபவமாவது –
ஸம்ஸாரத்தைத் தொலைத்து-துக்க நிவ்ருத்த மாத்ரமான –
ஸூக வசிவமான ஆத்மா தன்னைத் தானே அனுபவித்துக் கொண்டு
தனிமையில் உடல் கூட இல்லாமல் என்றும் இருத்தல்

பகவத் அனுபவம் என்று சொல்லப்படும் உயர்ந்த புருஷார்த்தமான மோக்ஷமானது
கர்மங்கள் ஸம்ஸாரம் முதலானவற்றை துறந்து லீலா விபூதியைக் கடந்து நித்ய விபூதிக்குச் சென்று
அங்கு ஸ்ரீ வைகுண்டம் என்ற இடத்தில் ஸ்ரீ மன் நாராயணனை அனுபவித்துக் கைங்கர்யம் செய்வது –

ஜீவனம் salvation -மட்டுமே
உஜ்ஜீவனமே நமக்கு -பரம புருஷார்த்தம்
திரு நாராயணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமின்

மோக்ஷம் இஷா முமுஷு
ப்ராப்யம் ப்ராபகம் -பயன் -வழி -பேறும் ஆறும் -விருந்தும் மருந்தும்
பயனை அறிந்த பின்பே வழிகளை அறிய வேண்டும் –

மோக்ஷம் அடையும் முறை
ஜீவன் ஏதோ ஒரு உபாயத்தைப் பற்றி மோக்ஷம் அடைய முயற்சிக்கும் பொழுது
அவனுடைய பாபங்கள் பகவானால் நீக்கப் படுகின்றன

4-1-13-தத் அதிகமே -உத்தர அக பூர்வ அக யோகோ அஸ்லேஷ விநாச

தத் அதிகமே-உபாயம் கைகூடி விட்டால்

நாம் செய்த புண்ய பாபங்களில்
பயன் கொடுக்கவே தொடங்காதவற்றுக்கு ஸஞ்சித கர்மம் -என்றும் பெயர்
இந்த மூட்டையில் இருந்து சிலவற்றை -ஆரப்தம் -தொடங்கப்பட்டவை –
பலன் கொடுக்கத் தொடக்கி விட்டதை பிராரப்த கர்மம் என்றும் –

இவற்றில் தீயில் இட்ட பஞ்சு போலே -சஞ்சித கர்மத்தை -பூர்வ அகத்தை -பகவான் அழிக்கிறார்

உபாயம் செய்த பிறகு மேல் உள்ள காலத்தில் இவன் செய்யும் பாபங்களை -உத்தர அகத்தை
அந்த ஜீவனிடம் ஒட்டாதபடி செய்கிறார் –

பிராரப்த கர்மத்தை அவர் அழிப்பது இல்லை –
பல பிறவிகள் ஆனாலும் அதன் பயனை அந்த ஜீவன் அனுபவித்தே முடிக்க வேண்டும் –

அடுத்த ஸூ த்ரம் –இதர பாதே து –புண்யங்களையும் போக்கி அருளுகிறார்
மோக்ஷத்துக்கு விலக்கு -பொன் விலங்கு இவையும் முமுஷுக்கு

அநாரப்த கார்யே -சஞ்சித ஒன்றுமே
போகேந -அனுபவித்தே போக்க வேண்டும் பிராரப்த கர்மாக்களை
ஒரு பிறவியே பலவோ-பக்தி யோக நிஷ்டனுக்கு
பிராரப்த கர்மம் இருந்தால் தான் -மரணம் அடைந்தால் முக்தி -மரணம் அடைவித்து முக்தி இல்லையே

அந்த ஜீவனிடம் இருந்து விலகுகிற சஞ்சித கர்மாவில்
புண்யங்களை இவனுடன் பிரியத்தோடு அனுகூலராய் இருப்பவர்களையும்
பாபத்தை இவனை வெறுப்பவர்கள் -பிரதிகூலராய் இருப்பவர்களையும் அடையும்
3-3-26-இத்தைச் சொல்லும் –

எப்பொழுது போகும் –
குதிரை சிலிர்த்து மயிர்களை தள்ளி
ராகு இடம் பிடிப்பில் இருந்து சந்த்ர ஸூர்ய விடுபடுவது போல்
உடல் நீங்கும் பொழுது பாப புண்யங்கள் போகும் என்றும்
விரஜையில் நீராடிய பின்பே அனைத்தும் நீங்கும்
இரண்டும் சுருதியில் உண்டே

கடைசி உடல் எப்பொழுது விழுகிறதோ அப்பொழுது தான் அனைத்து கர்மங்களும் தொலைக்கப் படுகின்றன
அதற்குப் பிறகு இந்த உலகத்தைக் கடந்து முக்தி அடைய இந்த ஜீவாத்மா உபயோகிக்கும்
ஸூஷ்ம சரீரம் -நுண்ணிய உடல் – இவன் செய்த பக்தி -சரணாகதியின் பெருமையால் ஏற்பட்டதே தவிர கர்மத்தால் அல்ல

ஜீவாத்மா புறப்பட வேண்டிய வேளையிலே இவன் செய்த உபாயத்தால் சந்தோஷம் அடைந்த பரமாத்மா
இருதயத்தில் இருந்து கொண்டு இருட்டான ஹிருதயத்தில் இந்த ஜீவாத்மா செல்ல வேண்டிய பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்
4-2-14-லோக அக்ர ஜ்வலனம் -ஹார்த்தமான பகவத் அனுக்ரஹம் –
உடலில் இருக்கும் 101-நாடியான ஸூஷ்ம்நா நாடி மூலமாக தலையின் உச்சி வழியே ஜீவாத்மா வெளியே புறப்பட்டு
அர்ச்சிராதி கதி -மார்கம் -மூலமாகப் பரம பதத்தை நோக்கிச் செல்கிறார் –

ஒளி உலகம் -பகல் உலகம் -வளர்பிறை உலகம் -உத்தராயண உலகம் -ஆண்டு உலகம் -ஸூர்ய உலகம் -சந்த்ர உலகம் –மின்னல் உலகம் –
முதலானவற்றைக் கடந்து -அங்கு இருக்கும் தேவர்களால் வழி நடத்தப்பட்டு
லீலா விபூதிக்கும் நித்ய விபூதிக்கும் இடையில் உள்ள விராஜா நதியில் நீராடி -அதுவரை இருந்த ஸூஷ்ம உடலையும் தொலைத்து
நித்ய விபூதிக்குள் புகுந்து அங்கே திவ்யமான அழகிய திருமேனியைப் பெறுகிறான் –

இதுவரை சம்சாரத்தாலும் கர்மங்களாலும் ஜீவாத்மாவின் இயற்கையான பல குணங்கள் மூடப்பட்டு இருந்தன
அவை இப்பொழுது விளங்குகின்றன –
ஸ்வேன ரூபேண அவி நிஷ்பத்யதே -சேற்றில் விழுந்த வைரம் போல் கீழே ப்ரக்ருதி விஸிஷ்ட ஆத்மா –
ஸ்வரூப ஆவிர்பாவம் -ஸூ ர்யன் கிழக்கு திக்கில் தோன்றுவது போல் –
எனவே ஜீவாத்மாவும் அக் குணங்களில் பரமாத்வாவுக்கு நிகராகிறார் –

அந்த முக்தன் தான் ஆசைப் பட்டத்தைச் செய்ய முடியும் -அஸ்ய சங்கல்ப ஏவ -ஸத்ய ஸங்கல்பம் -ஸத்ய காமத்வம் -உண்டே –
தன் பித்ருக்களைக் காண வேண்டும் என்று நினைத்தாலே உடனே அவர்கள் அங்கேயே தோன்றுவார்கள் –

முக்தி அடைந்த ஜீவன் எட்டு கல்யாண குணங்களிலும் ஆனந்தத்தில் மட்டுமே பரமாத்மாவுக்கு நிகராவார்
ஜகத் வியாபார வர்ஜம் -ப்ரகரணாத் அசந்நிஹித்வாத்
போக மாத்ர சாம்யா லிங்காத் -நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி
ஜகத்தைப் படைப்பது காப்பது அழிப்பது முதலான தொழில்கள் பரமாத்மாவுக்கே உண்டு

ப்ரஹ்ம அலங்காரம் சதம் மாலா அஞ்சன ஹஸ்தா இத்யாதி -திரு மா மணி மண்டபம்
நடுவாக வீற்று இருக்கும் -அஹம் அன்னம் –அஹம் அந்நாத –அநா வ்ருத்தி சப்தாத்-4-4-22 -நச புந ஆவர்த்ததே

ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து கொண்டு மற்ற முக்தர்களோடும் நித்யர்களோடும் சேர்ந்து பகவானை அனுபவித்து
அந்த ஆனந்தத்தால் அவருக்கு கைங்கர்யம் செய்து கொண்டு இருப்பதே மிகச் சிறந்த புருஷார்த்தமான பகவத் ப்ராப்தி ஆகும்

இப்படி முக்தி அடைந்த ஜீவன் என்றும் திரும்பி வருவதே கிடையாது -நச புந ஆவர்த்ததே -என்று வேதங்கள் கூறுகின்றன –

இந்த வுடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி
இவ்வண்டம் கழித்து இடையில் ஆவரணம் ஏழ் போய்
அந்தமில் பாழ் கடந்து அழகார் விரசை தனில் குளித்து அங்கு
அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று அமரர்
வந்து எதிர் கொண்டு அலங்கரித்து வாழ்த்தி வழி நடத்த
வைகுந்தம் புக்கு மணி மண்டபத்துச் சென்று
நம் திருமால் அடியார்கள் குழாங்களுடன் கூடும்
நாள் எனக்குக் குறுகும் வகை நல்கு என் எதிராசா–23-

சரீர பாத சமே து கேவலம் மதீயயைவ தய்யா அதிபர புத்த
மாமேவா வலோகயன் அப்ரச்யுத
பூர்வ சம்ஸ்கார மநோரத
ஜீர்ண மிவ வஸ்த்ரம் ஸூ கேன இமாம் ப்ரக்ருதிம்
ஸ்தூல ஸூ ஷ்ம ரூபாம் விஸ்ருஜ்ய
ததா நீமேவ மத பிரசாத லப்த
மச் சரணார விந்த யுகளை
காந்திகாத் யந்திக பரபக்தி பரஜ்ஞான பரம பக்தி க்ருத
பரி பூர்ண அநவரத நித்ய விசததம
அநந்ய பிரயோஜன அநவதிக அதிசய ப்ரிய
மத் அனுபவ ஸ்தவம்
ததாவித மத் அனுபவ ஜனித
அநவதிக அதிசய ப்ரீதி காரிதா
அசேஷ அவஸ்த உசித
சேஷ சேஷ தைக ரதி ரூபா
நித்ய கிங்கரோ ப விஷ்யசி–ஸ்ரீ சரணாகதி கத்யம்—சூரணை -20-21-22-23

————-

உபாயம் வழி ஹிதம் பார்த்து
நியாய மீமாம்ஸ சுருக்கங்கள் பார்த்து –
அவை வேதாந்த பாடத்துக்கு உதவு மவற்றைப் பார்த்து நிகமிப்போம் –

பாடம் -39—மோக்ஷ உபாயங்கள் –

முமுஷு க்களுக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும்
ஸூவ ஞானம் ப்ராப்ய ஞானம் ப்ராபக ஞானம் -மூன்றும் அறிய வேண்டும்
தன்னைப் பற்றிய அறிவு -பிரகிருதி உடலை விட வேறுபட்ட -அறிவுடைய -சேஷ பூதன் –
ஆத்மாவைப் பற்றி முன்பே பார்த்தோம் –

ப்ராப்யம் -புருஷார்த்தங்கள் முன்பு பார்த்தோம் –
தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் -நான்குக்கும் வழிகள்
உத்புத யாகம் பசு அடைய
செழிப்புக்கு வாயு தேவதை
ப்ரஹ்ம தேஜஸ்ஸூ ஸுர்ய தேவதை பற்றி யாகம் –
ஜ்யோதிஷ்டோம ஹோமம் ஸ்வர்க்கம் –
இவை அனைத்துக்கும் உபாயங்களை ஸ்ருதி சொல்லும் –

பரம புருஷார்த்த லக்ஷணத்துக்கு உபாயம்
பலத்துக்கு அருகில் அழைத்துச் செல்லப்படுவதே உபாயம் –

உபாயங்கள் வேறு -பல பிரதம் -ப்ரஹ்மமே -ரக்ஷகம் –
ஆசைப்படும் பலனை அறிந்து கொடுக்க பரம சேதனன் வேண்டுமே –

பக்த்யா ப்ரபத்யா -மஹா முனே–வேறே வழி இல்லை -கைங்கர்யம் செய்ய -ஸம்ஹிதை சொல்லும்
ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் -தைத்ரியம்
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -சாம்யா பத்தி கீழே பார்த்தோம் –

விஞ்ஞாய -அறிந்து பிரஞ்ஞாம் அறிந்து கொண்டு -அறிந்து அறிந்து தேறி தேறி -பல நிலைகள் உண்டே

ஸ்ருதி உபாயம் பற்றித் தெளிவாக
ப்ரஹ்மத்தை அறிந்தால் அவரை அடையலாம் -என்று சொல்லும்
அறிதல் இங்கு ஓர் இரண்டு முறை அறிவது அல்ல
ஸ்ருதியே -ப்ரஹ்மத்தைத் தியானிக்க வேண்டும் -என்றும் சொல்லும்
ஆக அறிதல் -இடைவிடாமல் தியானித்தல் என்றபடி
தைல தாராவத் -அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபம்

ஆத்மா அரே த்ரஷ்டவ்யா -ஸ்ரோதவ்யா-மந்தவய-நிதித்யாஸி தவ்ய –
மேலும் அந்த த்யானம் நீடிக்க நீடிக்க -நேரே காண்பது போல் த்யானிக்கப் பெறுவோம்
இது தான் தர்சன சமானா கார த்யானம்
தர்சனமே புருஷார்த்தம் -அந்த அளவுக்கு தெளிவாக த்யானம் வேண்டுமே –

இது சாதாரணம் அல்ல -தன் இடம் பக்தி உள்ளோருக்கு மட்டும் தானே தன்னைக் காட்டிக் கொடுக்கிறார் என்றும் ஸ்ருதி சொல்லும்
நாயமாத்மா ஸ்ருதி –பேசியோ -கேட்டோ ஆலோசனையாலோ த்யானத்தாலோ அறிய முடியாது
யாரைத் தேர்ந்து எடுக்கிறானோ அவனே காண்பான்
விஸ்வரூபம் காண திவ்ய சஷுஸ் கொடுத்து காணும் படி அனுக்ரஹித்தால் போல்

நான் ஞானிகளுக்கு பிரியமாக இருக்கிறேன் -அப்படிப்பட்ட ஞானிகளை நானும் விருன்புக்கிறேன் -கீதை
ப்ரியதம வரணம் -ஸ்=வயம் வரம் போல் -தேர்ந்து எடுப்பது பக்தர்களையே
தேர்ந்து எடுத்துக் காட்டிக் கொடுத்து -அவர்களே தனக்கு ஆத்மா -மே மதம் –
வேதனம்–உபாசனம் -த்யானம் -நிதித்யா சனம் -இவை அனைத்தும் – ஸ்நேக பூர்வ அநு த்யானம்

கீதார்த்த ஸங்க்ரஹம் முதல் ஸ்லோகம் —ஸூவ தர்மம் –ஞானம் -வைராக்யம் -சாத்ய பக்தி ஏக கோசர
பக்தி யோகம் வேறே -பக்தி வேறே -நியமத்துடன் செய்வது -அங்கங்கள் உடன்
வேதார்த்த ஸங்க்ரஹம் –ஜீவ பர யாதாத்மா ஞான பூர்வக -வர்ணாஸ்ரம கர்மங்களை செய்து -த்யான -அர்ச்சன -ப்ரணாம –
ஸ்மரணம் கீர்த்தனம் பாத சேவகம் அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் -அஷ்ட வித பக்தி

எனவே தியானத்தை பக்தியுடன் செய்ய வேண்டும் -இதுவே பக்தி யோகம் ஆகும் –
பக்தி யோகம் ஏற்பட வேண்டுமானால் அதற்கு முன் கர்ம யோகமும் ஞான யோகமும் கை கூட வேண்டும் –

கர்ம யோகம்
ஜீவாத்மா பரமாத்மா இருவரையும் உண்மையாக அறிந்து
மூன்று வித த்யாகங்களுடன் -வர்ணாஸ்ரம தர்மத்தை பகவத் ஆராதனமாகவே நினைத்து செய்தல்

அந்த மூன்று வித தியாகங்கள்
1- கர்த்ருத்வ புத்தி தியாகம் -நான் தான் இந்தச் செயலைச் செய்கிறேன் -என்ற எண்ணத்தை விடுதல்
2- மமதா தியாகம் -இது என்னுடைய கர்மம் என்ற எண்ணத்தை விடுதல்
3-பல சங்க தியாகம் -அந்த கர்ம பலன்களில் ஆசையை விடுதல்

தபஸ்ஸூக்கள் -தீர்த்த யாத்திரை -தானம் யஜ்ஞம் -முதலியவற்றைச் செய்தல் எல்லாமே கர்ம யோகம் ஆகும்
கீதார்த்த ஸங்க்ரஹ ஸ்லோகம் இவற்றைக் காட்டும்

இப்படி கர்மயோகம் செய்து கொண்டே வந்தால்
அந்தக் கர்மங்கள் அவன் சேர்த்து வைத்து இருக்கும் பழைய பாபங்களை எல்லாம் போக்கும்
அவை குறைந்தால் மனசில் ஸத்வ குணம் வளரும்
அதன் மூலம் மனத்தை ஒருமித்து ஒரு விஷயத்தைத் த்யானிக்கத் தகுதி உடையதாகும்

இந்த கர்ம யோகம் ஞான யோகம் மூலமாகவும் பக்தி யோகத்தை ஏற்படுத்தும்

ஜனக மஹாராஜர் போல்வார் கர்ம யோகத்தாலேயே நேராக பக்தி யோகம் போவதையும் கீதையில் உண்டு

1-யஜமான சம்ஹ்யா -ஆமை போல் விஷயங்களில் இருந்து இந்திரியங்களை திருப்பி
2-வியதிரேக சம்ஹ்யா
3-ஏகேந்த்ரிய சம்ஹ்யா-மனசைக் கட்டுப்படுத்துதல்
4-வசீகர சம்ஹ்யா
இப்படி வைராக்யம் வளர வேண்டும்

ஞான யோகம்
மனதைக் கட்டுப்படுத்தி -புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்து -ப்ரக்ருதியில் காட்டில் விலக்ஷணமான
பரமாத்மாவின் உடலான -சேவகனான ஜீவாத்மாவை தியானித்தல் –

பக்தி யோகம்
அன்போடு நேரே காண்பது போல் தெளிவாக அறியும் அளவுக்கு பகவானை இடைவிடாமல் தியானித்தல்
பக்திஸ் ச ஞான விசேஷ -ஞானம் கனிந்த நலமே பக்தி

இதற்கு -சாதன ஸப்தகம் -ஏழு காரணங்கள் உண்டு
1-விவேகம் -குற்றமற்ற உணவால் உடலை ஸூத்தமாக வைத்துக் கொள்ளுதல் -ஆகார ஸூத்தி -ஸத்வ சித்தி
ஜாதி- வெங்காயம் போல்வன – ஆஸ்ரய -யார் பொருள் -நிமித்த-தலை முடி விழுந்த – துஷ்டங்கள் இல்லாமல் –
2-விமோகம் -எந்தப் பொருளிலும் அதிகமாக ஆசை வையாது இருத்தல்
3-அப்யாஸம் -பகவானின் திருமேனியை எப்பொழுதும் -எந்தத் தொழில்களை செய்து கொண்டு இருந்தாலும் நினைக்கை
த்யானம் -யோக காலம் -அவனை தியானிப்பது போல் மற்ற சமயங்களிலும் நினைக்க வேண்டும் ஸூபாஸ்ரயம் -அன்றோ
த்யானம் போல் ஆசன நியமாதிகள் வேண்டாம் -ஆலம்பநம்
4-க்ரியா -வர்ணாஸ்ரம தர்மங்களை இயன்ற அளவும் செய்கை
5-கல்யாணம் -உண்மை பேசுதல் நேர்மை தயை தானம் அஹிம்சை போன்ற குணங்கள்
சத்யம் ஆர்ஜவம் தயா தானம் அஹிம்சை போன்ற குணங்கள்
6-அந வாஸம் -எந்தக் காரணத்துக்காகவும் மிகவும் வருந்தாமை
7-அநுத் தர்சம் -எந்தக் காரணத்துக்காகவும் மிகவும் மகிழ்ச்சி அடையாமை –
ஸூக துக்க சாம்ய புத்தி வேண்டுமே –

இந்த பக்தி யோகத்தில் மூன்று நிலைகள் உண்டு
1-பர பக்தி -பகவானைக் காண வேண்டும் என்ற ஆசை மிகுந்து அவரை தியானித்தல்
2-பர ஞானம் -நேரே காண்பது போல் பகவானை தியானிக்கும் நிலை
3-பரம பக்தி -பகவானைக் காண வேண்டும் என்ற ஆசை மிகுந்து அவரை தியானித்தல் –

பர ஏகாந்த ப்ரீத்யா –
ஞானம் தர்சனம் பிராப்தி நிலைகள் இவை-

பக்தி யோகம் கொண்டு ஐஸ்வர்யமும் கைவல்யமும் -பகவத் ப்ராப்தி-மூன்றும் பெறலாம்
உண்மையான ஸ்வரூபம் அறிந்து முமுஷுவான பின்பு பகவத் பிராப்தி –
அனுபவ ஜனித்த ப்ரீதி கார்ய கைங்கர்யம் ஒன்றையே பிரார்த்திப்பார்கள் அன்றோ –

சாதன பக்தி
ஸாத்ய பக்தி
ஸஹஜ பக்தி -இவையும் உண்டே

சரணாகதி
பக்தி யோகம் செய்ய சக்தி இல்லாதவர்களுக்கு சரணாகதி
சக்தி இருந்தாலும் கூட -பிராப்தி -ஜீவாத்மாவின் உண்மையை தெளிவாக அறிந்து –
பக்தி யோகம் செய்வது கூடாது என்று சரணாகதி செய்வார் நம் பூர்வாச்சார்யர்கள்
ஜீவாத்மா பகவானுக்கு அடிமை -சொத்து -என்று புரியப் புரிய
ஸூய யத்னம் ஒன்றும் இல்லாமல் அவனே நம்மைக் கைக்கொள்ளுவார் என்று மஹா விச்வாஸமும்
அவன் நம்மைக் கைக்கொள்ளும் போது அவனை விலக்காமையும் போதும் என்கிற
புரிதல் வந்தபின்பு பக்தி யோகம் செய்வது தவறு என்று உணர்ந்து சரணாகதியை ஒரே வழி என்று அறிகிறோம் –

நான் ஆசைப்படும் பொருளை அடைய வேறே வழிகள் இல்லாத போது –
ஒருவர் இடம் மஹா விஸ்வாஸம் வைத்து வேண்டுதல் தான் சரணாகதி என்று சாஸ்திரங்கள் கூறும்

எனவே சரணாகதி என்பது
பரமாத்மாவே நமக்கு முக்தி அடைய உபாயம் என்ற உறுதி மட்டுமே –
அதற்குள் நாம் பரமாத்மாவிடம் வைக்கும் பிரார்த்தனையும் அடங்கி இருக்கும்

அநந்ய சாத்யே –மஹா விஸ்வாஸ பூர்வகம்– ததேக உபாய தயா யாஸ்மிதா —
இதி -ப்ரார்த்தனா கர்ப்பமான மதி சரணாகதி –
அவனே உபாயம் -மாம் ஏகம் அர்த்தம் -குஹ்ய தமம்

ஒருவன் சரணாகதி செய்து விட்டால்
அவனுக்குத் தானாகவே ஏற்படும் சில ஸ்வ பாவங்கள் உள்ளன -அவகாத ஸ்வேதம் போல் –
1-அனுகூல்ய சங்கல்பம் -பரமாத்மாவுக்கு பிடித்தத்தை மட்டுமே செய்வேன்
2-பிராதி கூல்ய வர்ஜம் -அவருக்குப் பிடிக்காததை தவிர்த்தல்
3-ரஷிஸ்யதி விஸ்வாச -அவர் கண்டிப்பாக காப்பாற்றுவார் என்ற உறுதி
4-கோப்த்ருத்வ வரணம் ததா -அவரே காக்க வேண்டும் என்று தேர்ந்து எடுத்தல்
5-கார்ப்பண்யம் -கர்வம் இன்மை
6-ஆத்ம நிஷேபம் -ஆத்மாவைக் காக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைப்பது –

ஆச்சார்ய அபிமானம் -நம் சம்பிரதாய -விசிஷ்டாத்வைத அசாதாரணம் இது

(ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த அர்த்த பஞ்சகம் –
ஆச்சார்ய அபிமானம் ஆவது -இவை ஒன்றுக்கும் சக்தன் இன்றிக்கே ஒருவனைக் குறித்து –
இவனுடைய இழவையும் -இவனைப் பெற்றால் ஈஸ்வரனுக்கு யுண்டான ப்ரீதியையும் அனுசந்தித்து
ஸ்த நந்த்ய பிரஜைக்கு வியாதி யுண்டானால் அது தன் குறையாக நினைத்து
ஔஷத சேவை பண்ணும் மாதாவைப் போலே இவனுக்காகத் தான்
உபாய அனுஷ்டானம் பண்ணி ரஷிக்க வல்ல பரம தயாளுவான மஹா பாகவதன் அபிமானத்திலே ஒதுங்கி
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும் -நாச்சியார் -10-10-என்று சொல்லுகிறபடியே –
சகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் அவனிட்ட வழக்காக்குகை –
எம்பெருமான் தனித்து நித்ய சித்த ப்ராப்யனாகா நிற்கச் செய்தே
சகல தேவதாந்த்ர்யாமியாயாய்க் கொண்டு ப்ராப்யன் ஆகிறாப்
இவ்வாச்சார்ய அபிமானமும் தனியே உபாயமாகா நிற்கச் செய்தேயும்
எல்லா உபாயங்களுக்கும் சஹ காரியுமாய் ஸ்வ தந்த்ரமுமாய் இருக்கும் )

சரணாகதி செய்யும் பொழுது பகவான் கண்டிப்பாக ரக்ஷிப்பார் என்கிற மஹா விச்வாஸம் வேண்டுமே
அது ஏற்படுவது மிகவும் துர்லபம்
நாம் சேர்த்து வைத்து இருக்கும் பாபங்கள் கனத்தைப் பார்த்தாலும்
ஈஸ்வரன் நிரங்குச ஸ்வ தந்த்ரர் என்பதைப் பார்த்தாலும்
ஒரு வேளை கைக் கொள்ளாமல் போவாரோ என்கிற சந்தேகம் ஏற்படலாம்
அதனால் சரணாகதி செய்ய சக்தி இல்லாதவர் களுக்காக உள்ள ஒரே உபாயம் தான் ஆச்சார்ய அபிமானம்

நம்முடைய இயலாமையைக் கண்ட ஒரு பக்தர்
நம்மை அடைந்தால் பகவான் பெரும் ஆனந்தமே ஹேதுவாக திரு உள்ளம் பற்றி
நம்மால் செய்ய முடியாத சரணாகதியை நமக்காக அவர் செய்கிறார்
பால் குடிக்கும் குழந்தைக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் தாய் தானே மருந்தைக் குடிப்பது போலே
நம் இயலாமையால் அவர் நமக்காக பகவான் இடம் சரணாகதி செய்கிறார்

அப்படி தயையுடைய பக்தரின் நிழலில் ஒதுங்கி
அவருடைய அபிமானத்துக்கு இலக்காகி
நாம் இருப்பதே ஆச்சார்ய அபிமானம் ஆகும்
அவர் உபதேசித்தபடி வாழ்க்கையை அமைத்துக் கொண்டு –
அவர் இட்ட வழக்காக நாம் வாழ்ந்து வந்தால்
அதற்காகவே பகவான் உகந்து நமக்கு முக்தி அளிக்கிறார் என்று ஸாஸ்த்ரங்கள் கூறும்

பசுர் மனுஷ்ய பஷீ வா யே ச வைஷ்ணவ சம்ஸ்ரயா
தேநை வ தே ப்ரயாஸ் யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம்
அதாவது
விலங்கோ மனிதனோ பறவையோ ஒரு ஸ்ரீ வைஷ்ணவனை அண்டி வாழ்ந்து வந்தால் –
அதனாலேயே அவர்கள் பரமபதத்தை அடையலாம்
அளியல் நம் பையல் என்று அபிமானம் ஒன்றே வேண்டுவது –

இதுவே நாம் அனைவருக்காகவும் பகவான் ஏற்படுத்தியுள்ள சிறந்த எளிய நெறி ஆகும் –

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -3 –வேதாந்த சாஸ்த்ரம்– பாடங்கள் -21-30 —

August 5, 2021

பாடம் -21-ஆத்மா –
ஆத்மா பொதுச்சொல்லை அறிந்து பின்பு ஜீவாத்மா பரமாத்மா பாகுபாட்டை அறிவோம் –
ஆத்மா -நான் என்கிற அறிவுக்கும் பேச்சுக்கும் விஷயமாக இருப்பவர் -இலக்காக இருப்பவர் –
நான் என்கிற அறிவும் சொல்லும் ஆத்மாவைக் குறிக்கும் –நம் உடலை அல்ல
தேக ஆத்மா விபாகம் விரிவாக பின்பு பார்ப்போம்
ஆத்மா ஞானம் என்ற பொருளால் ஆக்கப்பட்டது —
மண்ணால் குடங்களும் -தங்கத்தால் ஆபரணங்களும் -பஞ்சால் துணிகளும் -ஆக்கப்பட்டவை போலே ஆத்மா ஞானத்தாலேயே ஆக்கப்பட்டது –
உப்புக்குக் கட்டி எங்குமே உப்பு மயமாக இருப்பது போல் ஆத்மாவும் முழுவதுமே ஞான மயமாகவே இருக்கும் –
நியாய மதத்தின் படி ஞானம் குணமே-தன்மையே தவிர – த்ரவ்யம்-பொருள் – அல்ல –
ஆனால் வேதாந்தப்படி ஞானம் தனியாக த்ரவ்யம்
ஞானம் – ஞானம் நகரு கிறது -விரிகிறது சுருங்குகிறது –இது போல் செயல்கள் த்ரவ்யத்துக்குத் தானே இருக்க முடியும்
தன்மை குணத்துக்கு கூடாதே –ஆகவே மண் தங்கம் பஞ்சு போல் இதுவும் த்ரவ்யமே
ஆத்மாக்கள் கோடிக்கணக்கானவை –
தங்க துகள்கள் தங்கத்தாலே ஆனது போல் ஆத்மா ஞானத்தால் ஆன ஸூஷ்மமான -நுண்ணியதாக பொருள் –

ஆத்மா ஸ்வயம் ப்ரகாஸம் ஆனவர் –
ஜடம் -தானாக பிரகாசிக்காது
அஜடம் -தானாகப் பிரகாசிக்கக் கூடியது -இதுவே ஸ்வயம் பிரகாசம் –
இங்கு பிரகாசம் -ஒளி விடுதல் என்கிற பொருளில் இல்லை -தோற்றுதல் என்கிற பொருளில் உண்டு –
குருவின் உபதேசத்தால் எனக்கு அர்த்தம் பிரகாசிக்கிறது தோற்றுகிறது -என்னுமா போலே -தெளிவாக தோற்றுகிறது என்று பொருள்
தோற்றுதல் -வ்யவஹார யோக்யத்வம் -தகுதி உடையதாக இருத்தல் -வியவஹாரம் பேச்சு செயல் –
குடத்தைப் பற்றி வ்யவஹாரம் செய்கிறேன் என்றது குடத்தைப் பற்றி பேசுகிறேன் -அல்லது குடத்தை கையிலே வைத்து உள்ளேன் போல் –
அறியாத பொருளைப் பற்றி வியவஹாரம் செய்ய முடியாதே –
அறியப் படுவதாவது -அறிவுக்கு விஷயமாதல் -இலக்கு ஆதல் –
ஆக
1- ஒரு பொருள் முதலில் அறிவுக்கு விஷயம் ஆகிறது
2- இதனால் அது பிரகாசம் அடைகிறது -தோற்றுகிறது -வியவஹாரம் செய்ய தகுதி யாகிறது –
3- அந்த வியவஹாரம் செய்யப்படுகிறது -பேசப்படுகிறது -கையாளப் படுகிறது –

எனவே ஒரு பொருள் பிரகாசிக்க -அது முதலில் அறியப்பட வேண்டும் –
ஒரு குடம் அறியப்பட வேண்டும் என்றால் ஒரு ஜீவாத்மா தன்னுடைய ஞானத்தை
கண் மூலமாக வெளியே செல்ல வைத்து –
வெளிச்சத்தின் உதவியோடு அத்தை அறிய வேண்டும் –
ஆகவே ஒரு குடத்துகை அறிய கண் வெளிச்சம் ஞானம் போன்றவற்றின் உதவி தேவை
ஆகவே குடம் ஜடம் -தானாகாத் தோற்றாத த்ரவ்யம் -பொருள்
உலகப் பொருள்கள் அனைத்துமே இப்படி ஜடம் -தானாகாத் தோற்றாதவை –

இப்பொழுது ஞானம் -என்ற த்ரவ்யத்தை எடுத்துக் கொண்டால்
அறிவைப்பற்றிய வ்யவஹாரம் -எனக்கு இந்த அறிவு ஏற்படுகிறது -நான் இதை அறிகிறேன் போன்ற பேச்சு வர
அறிவு முதலில் பிரகாசிக்க தோற்ற வேண்டும் –
அறிவு அறியப்பட வேறே ஒரு பொருளின் உதவி வேண்டாம் -அறிவு தோன்றும் போது அத்துத்தானாகவே தன்னையும் அறிவிக்கிறது
விளக்கு இருட்டையும் போக்கி -தன்னைத்தானே பிரகாசிப்பது போல் -அறிவும் மற்றப் பொருள்களையும் பிரகாசப்படுத்தி தானும் பிரகாசிக்கும் –
ஆகவே அறிவு அஜடம் -ஸ்வயம் பிரகாசம் -தானாகவே தோற்றுவது –
ஆத்மாவும் ஞானத்தால் ஆக்கப்பட்ட பொருள் ஆதலால் -ஸ்வயம் பிரகாசம் -அஜடம் –

ஆத்மா ப்ரத்யக்
உலகப்பொருள்கள் ப்ரத்யக் பராக் இரண்டு வகைப்படும் –
பராக் -வேறே ஒருவருக்குத் தோற்றம் அளிக்கும் பொருள்
ப்ரத்யக் -தனக்குத் தானே தோற்றம் அளிக்கும் பொருள் –
குடம் துணி போன்றவற்றை அறிவைக் கொண்டே ஆத்மா அறிகிறார் -குடம் தன்னைத்தானே குடம் என்று அறியாது –
ஆத்மா தன்னைத்தானே அறிகிறார் -நான் -நாம் -சொல்வதால் =நம்மை நாம் அறிகிறோம் -என்பது விளங்கும் –
ஆகவே ஆத்மா ப்ரத்யக் –
ஒரு பொருள் பேசப்பட வேண்டும் என்றால் அது அறியப்பட வேண்டும் –அறிவுக்கு விஷயமாக வேண்டும் –
நான் நாம் சொல்லும் பொழுது -நம்மைப் பற்றியே பேசுகிறோம் –
இதற்கு முன் ஆத்மா என்ற ஆத்மா அறிவுக்கு விஷயமாக ஆகி இருக்க வேண்டும் —
அது வேறே ஒரு அறிவு அல்ல -ஆத்மா என்ற அறிவு தான்
ஆத்மாவே அறிவு வடிவமானவர் –
ஞானம் என்றால் அதற்கு விஷயம் இருக்க வேண்டும்
ஆத்மா என்ற ஞானத்துக்கு எது விஷயம் என்றால் தான் மட்டுமே தான் விஷயமாக ஆகிறது –

ஆத்மா சேதனர் –
சைதன்யம் என்றால் அறிவு -ஞானம் என்று பொருள்
சைதன்யம் உடைய பொருள் சேதனம் என்று சொல்லப்படுகிறது –
ஆத்மா ஞானமே வடிவானவர் என்று பார்த்தோம் -இனி ஆத்மா ஞானத்தையும் உடையவர் என்பதையும் பார்ப்போம் –
பஞ்ச பூதங்களில் தேஜஸ்ஸூ ஓன்று -நெருப்பு தீபம் -போன்றவை தேஜஸ்ஸால் ஆனவை –
தீபம் ஓர் இடத்தில் இருந்தாலும் -ஒளி சுற்றும் பரவுகிறது –
ஒளி விளக்கின் குணம் என்று சொல்ல முடியாதே – குணம் ஓர் இடத்தை விட்டு நகராதே –
சுற்றி இருக்கும் ஒளி -பிரபா -அதுவும் தேஜஸ்ஸாலே ஆன த்ரவ்யம் –
எனவே தீபம் பிரபை -இரண்டு த்ரவ்யங்கள் -இரண்டுமே தேஜஸ்ஸாலேயே ஆனவை –
பிரபை எப்பொழுதும் தீபத்தையே அண்டி இருக்கும் -தனியாக இருக்க முடியாது –
தீபம் அழிந்தால் சுற்றி இருக்கும் பிரபையும் அழிந்து விடுமே –
அதே போல் இங்கும் ஞானம் -என்று ஒருவகையான த்ரவ்யம் -அதனால் ஆக்கப்பட்ட இரண்டு பொருள்கள் –
முதல் பொருள் தீபத்தை தனது ஸ்தானத்தில் கொண்ட ஆத்மா -அணுவாக ஓர் இடத்தில் இருப்பார் –
தீபத்தை அண்டி இருக்கும் பிரபை போலே ஆத்மாவையே ஆஸ்ரயித்து இருக்கும் – மற்றை ஓரு ஞானப் பொருள் –
அது தான் தர்ம பூத ஞானம் –ஆத்மாவின் அறிவு -சைதன்யம் –
இந்த அறிவு த்ரவ்யமாக இருந்தாலும் ஆத்மாவினுடையபிரிக்க முடியாத தன்மை ஆகும்
ஞானமே வடிவான ஜீவாத்மா ஞானத்தையும் உடையவராகவும் இருக்கிறார் –

அறிவு -தர்ம பூத ஞானம் -சைதன்யம் -ஞானம் வடிவு -ஸ்வயம் பிரகாசம் -பராக் -அசேதனம் –
ஆத்மா -ஞானமே வடிவானவர் -அதனாலே -ஸ்வயம் பிரகாசம் -ப்ரத்யக் –சேதனம் –
ஆத்மா ஞானத்தை உடையவர் –அதனால் சேதனம் –
தன்னைத்தானே அறிபவர் -ஆகவே ப்ரத்யக்
அறிவு என்பதும் ஞானமே வடிவானது -எனவே இதுவும் ஸ்வயம் பிரகாசம் –
அது ஞானத்தை உடையது அல்ல -எனவே அசேதனம்
அறிவு தானே அறியாது-ஆத்மாவுக்கு அறிவிக்கும் -ஆகவே பராக்
குடம் ஞான வடிவம் ஆனது அல்ல -எனவே அஸ்வயம் பிரகாசம் –
அது ஞானத்தை உடையது அல்ல –எனவே அசேதனம் –
குடம் தான் தன்னை அறியாது – ஆத்மாவால் தான் அறியப்படும் -ஆகவே பராக் –

ஆத்மாவின் லக்ஷணம்
இப்படிப்பட்ட ஆத்மாவின் லக்ஷணங்கள்
1-ப்ரத்யக்காய் இருத்தல் -தன்னைத்தானே அறிதல்
2-சேதனனாய் இருத்தல் -அறிவுடைய பொருளாக இருத்தல்
3-சரீரத்வம் -உடலைக் கொண்டதாக இருத்தல்

இந்த லக்ஷணங்கள் அனைத்துக்கும் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கு பொதுவானவை –

ஜீவாத்மாவின் தனிப்பட்ட லக்ஷணம் என்ன என்றால்
1- அணுவாக இருந்து கொண்டு சேதனமாய் இருத்தல் -அணுத்வே சதி சேதனத்வம்
பரமாத்மா அணு அல்ல -விபு -உலகில் அனைத்து இடங்களிலும் இருக்கக் கூடியவர் -எனவே அவருக்கு இது பொருந்தாது –
2- இயற்கையான அடிமையாக இருந்து கொண்டு சேதனமாய் இருத்தல் -ஸ்வாபாவிக சேஷத்வே சதி சேதனத்வம் –
பரமாத்மா தன்னிடம் அதிகமான பக்தி உடையவர்களுக்குத் தான் ஆசைப்பட்டு அடிமை செய்கிறான்
ஆனால் அது பக்தியால் வந்த அடிமைத்தனமே தவிற இயற்கையானது அல்ல –

எனவே இயற்கையான அடிமைத் தனத்தை உடைய அறிவாளி ஜீவாத்மா மட்டுமே –

————-

பாடம் –22- ஜீவாத்மாவின் தனித்தன்மை

ஸ்வாமி ஆளவந்தார் ஸ்ரீ ஸித்தி த்ரயத்தில் ஆத்மாவின் தனித் தன்மையை விளக்கி அருளுகிறார்

சித்தி த்ரயம் -ஜீவாத்மா -ஞானம் -ஈஸ்வரன் மூன்றையும் ஆத்ம சம்வித் ஈஸ்வர-காட்டி அருளும்
ஆத்ம சித்தியில் -ஸங்க்ரஹ ஸ்லோகம்
தேக இந்திரிய மன பிராண தீ–அந்நிய
அநந்ய சாதன

அறிவால் ஆக்கப்பட்ட ஆத்மாவே தானே
தீ -ஸம்விக் -இரண்டு வகை ஞானம்
விளக்கு பிரபை போல்
ஆத்மா -தர்மி ஞானம் தர்ம பூத ஞானம்
ஞானமும் ஒரு த்ரவ்யம் தகானே வேதாந்தத்தில்

நான் -என்று குறிக்கப் படுபவர் ஜீவாத்மா என்பதில் சந்தேகம் இல்லை –
அவர் எப்படிப்பட்டவர் என்பதிலே பல விவாதங்கள் உண்டு
உடலே ஜீவாத்மா
புலன்களே ஜீவாத்மா –
மனதே ஜீவாத்மா
பிராண வாயுவே ஜீவாத்மா
உலகப் பொருள்களின் அறிவே ஜாவாத்மா
இந்த வாதங்களை முறி அடித்து அருளவே ஸ்வ இதர விலக்ஷணன் ஜீவாத்மா என்கிறார் ஸ்ரீ ஆளவந்தார்
தேகம் என்றால் உடல்
இது என்னுடைய உடல் என்பதால் உடலை விட்டு வேறுபாடு தெளிவு
பிராணன் என்பது நம்முடைய மூச்சுக் காற்று -ஆகவே ஆத்மா பிராணனை விட பிராணனை விட வேறுபட்டது என்பது தெளிவு
நான் கண்ணால் காண்கிறேன் மூக்கால் முகர்கிறேன் என்பதால் புலன்களில் இருந்து வேறுபட்டது என்பது தெளிவு –
தீ -என்றால் அறிவு -நான் அறிவு என்று சொல்லாமல் -அறிவுடையவன் நான் என்கிறோம் -ஆகவே அறிவும் ஜீவாத்மாவும் வேறு

அடுத்து -அநந்ய சாதன -என்கிறார்
அந்நியம் -என்றால் வேறே ஓன்று
அநந்யம் -என்றால் வேறே அல்லாதது -அதாவது தானே -என்று பொருள் –
சாதன -என்றால் அதனால் பிரகாசிப்பது
எனவே அநந்ய சாதன -என்றால் வேறே ஒரு பொருளின் உதவி இல்லாமல் தானாகவே பிரகாசிக்கக் கூடிய வஸ்து -என்றதாயிற்று
இத்தையே ஸ்வயம் பிரகாசம் -அஜடம் -என்கிறோம் –
ஒரு குடம் அறியப் பட வேண்டும் என்றால்
அறிவு -கண் -வெளிச்சம் இவை அனைத்தும் தேவை -ஆகவே அது ஜடம்-தானாகப் பிரகாசிப்பது இல்லை
ஆனால் ஆத்மா அப்படி அல்ல
தானாகவே பிரகாசிக்கிறார்
நான் நான் என்று தோற்றிக் கொண்டே இருக்கிறார் -ஆகவே ஆத்மா தோற்ற எந்தப் பொருள்களின் உதவியும் தேவை இல்லை –
இதை அறிய பல பிரமாணங்கள் உள்ளன
1-ப்ரத்யக்ஷம் –
நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது உள் புலன்களோ வெளிப்புலன்களோ இயங்காது
அப்போதும் நான் நான் என்று தோற்றிக் கொண்டே இருப்பார்
2-ஸாஸ்த்ரம்
அத்ர அயம் புருஷ ஸ்வயம் ஜ்யோதி என்று வேதம் கூறும்
ஸ்வயம் ஜ்யோதி என்றால் தானாகவே பிரகாசிக்கும் என்றதாயிற்று –
3-அநு மானம்
ஆத்மா ஸ்வயம் ப்ரகாசமானவர் -ஞானமான படியால் -நம் அறிவைப் போலே -என்கிற
அனுமானத்தாலும் இத்தை அறியலாம்
ஸ்வாமி வேதாந்த தேசிகன் ஸ்லோகம்
தத்வ முக்த கலாபம்
கிஞ்ச வேதாந்த த்ருஷ்ட்யா ஞானத்வாத் ஏஷ தீ வத்– ஸ்வ விஷய த்ருஷ்ணா
நிரபேஷ ஸ்வ ஸித்தி –அறிவு பிரகாசம் -வியவஹாரத்துக்கு தகுதி ஆவதே
தன்னைப் பற்றிய அறிவு தானாகவே வெளிக்காட்டும்
இரண்டு ஞானங்கள் உண்டே –
வேதாந்த ஸாஸ்த்ரத்தில் ஞானம் என்று வழங்கப் படுபவை எல்லாம் ஸ்வயம் ப்ரகாசங்கள்
ஆத்மாவும் ஞானம் எனப்படுகிறார்
ஆகவே அவரும் அப்படியே —

——-

பாடம் –23- ஜீவாத்மாவின் பண்புகள்

நியாய கலாபம் -ப்ரஹ்ம ஸூ த்ரம் -நியாயக் கூட்டம் -வேத வியாசர் –தீர்ப்பை எங்குமே கொள்ளலாமே –
சகல உபநிஷத்துக்களையும் பொருத்தி பார்த்து -சம்யக் நியாய க்லாபேண மஹதா பாரதம் –
உப ப்ரும்ஹத வேத வேதார்த்த விஷயீ கரணம்

ஆத்மா நித்யமானவர்
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ சித்தி த்ரய ஸ்லோகம் முதல் பாதி கீழே பார்த்தோம் –
தேக இந்திரிய மன பிராண தீ–அந்நிய
அநந்ய சாதன (ஸ்வயம் பிரகாசம் -)

இரண்டாம் பாதியில் ஆத்மாவின் குணங்களை அருளிச் செய்கிறார்

நித்யோ வ்யாபி பிரதி க்ஷேத்ரம் பிரதி சரீரம் பின்ன ஸ்வத ஸூகீ–

புத்த மதத்தில் ஆத்மா க்ஷணிகமான -ஒரு நொடியில் அழிந்து விடக்கூடிய அறிவுகளின் தொடர் தான் ஆத்மா என்பர்
ஆகவே இதுவும் அழியக் கூடியது என்பர்
இத்தை மறுக்கவே -ஆத்மா நித்யம் -பிறப்பு இறப்பு அற்றவர் என்கிறார் ஸ்ரீ ஸ்வாமி ஆளவந்தார்
முதலில் ஆத்மா க்ஷணிகம் அல்ல -நிலையானது என்பதற்கு பிரமாணம் பார்ப்போம்
நேற்று குடத்தைப் பார்த்த நானே இன்று அதைத் தொடுகிறேன் -என்கிற அறிவு ஏற்படுகிறது –
ப்ரத்யபிஞ்ஞா என்கிற இந்த அறிவால் நேற்று பார்த்தவருக்கு இன்று தொடுபவரும் ஒருவரே -என்று அறிகிறோம்
ஆகவே ஆத்மா நிலைத்து நிற்கும் ஒரு பொருளே என்பது தெளிவு –

ஸ்ரீ வேத வியாசர் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தில் –ஆத்ம அதிகரணம் இது –
ந ஆத்மா ஸ்ருதே –நித்யத் வாச்ச தாப்ய–2-3-18-
ந ஆத்மா-ஆத்மா உண்டாவது இல்லை —
ஸ்ருதே–அவ்வாறு ஸ்ருதி சொல்லுகிறபடியால் —
நித்யத் வாச்ச தாப்ய–ஸ்ருதிகளில் இருந்து ஆத்மா நித்தியமான படியாலும் –

ஆத்மா உண்டாவது இல்லை என்று வேதம் நேராக நேரடியாகக் கூறுகிறது –
ந ஜாயதே ம்ரியதே வா விபஸ்சித்
ஞாஜ்ஜ்வ த்வவ் அஜவ் -முதலிய இடங்களில் -(அறிவு உள்ளார் அறிவு குறைவாளர் இருவரையும் பிறப்பிலிகள் )
ஸ்ரீ கீதையில் இதே போல் வாக்கியம் உண்டே –
ந ஜாயதே ம்ரியதே கதாசித்–நாயம் பூத்வா –அஜ நித்ய ஸாஸ்வத புராண –புரா அபி நவ- இத்யாதி
ஸத் கார்ய வாதம் -அவஸ்தா பேதங்கள் உண்டே அசேதனங்களுக்கு

மேலும் ஆத்மா நித்யமானவர் என்றும் கூறுகிறது –
நித்யோ நித்யாநாம்
அஜ நித்ய ஸாஸ்வத அயம் புராண -போன்ற சுருதி வாக்கியங்கள் மூலம் ஆத்மா உண்டாவது இல்லை என்று அறியலாம் –
உடலோடு தொடர்பு படுவதே பிறப்பு -அதை விட்டுப் பிரிவதே இறப்பு என்று உலகில் சொல்லுகிறோம் –

ஆத்மா அணுவானவர்
குடம் புத்தகம் போல் நடுவாக அளவாகக் கொண்டால் அது பகுதிகளால் ஆக்கப்பட்டு இருக்க வேண்டும் –
எனவே அழிந்தே தீரும்
இது ஒவ்வாத படியால் ஆத்மா நடுவாக அளவு கொண்டது இல்லையே –

உத் க்ராதி-கதி -ஆகதிநாம் –2-3-20—ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் –ஆத்மா இவ்வுடலில் இருந்து புறப்படுகிறார் என்பதை
தேந ப்ரத்யோ தேந ஏஷ ஆத்மா நிஷ் க்ராமதி -என்றும்
வேறு உலகங்களுக்குச் செல்கிறார் என்பதை
யே வை கே ச அஸ்மாத் லோகாத் ப்ரயந்தி சந்த்ர மசமேவ தே ஸர்வே கச்சந்தி -என்றும்
அங்கு இருந்து மறுபடியும் திரும்பி வருகிறார் என்பதை
தஸ்மாத் லோகாத் புந ஏதி அஸ்மை லோகாய கர்மணே என்றும் வேதம் கூறுகிற படியால்
புறப்படுதல் செல்லுதல் வருதல் ஆகியவை விபுவான -எங்கும் பரந்துள்ள -பொருளுக்குக் கூடாத படியால் ஆத்மா விபு அல்ல

மேலும்
ஸ்வ ஸப்த உன் மாநாப்யாம் –2-3-23-ஸூத்ரத்தில் கோருகிறார்

வேதம் நேரடியாக ஜீவாத்மா அணு என்று கூறுகிறது
ஏஷ அணு ஆத்மா
ஸ்வரூபம் அணு மாத்ரம் ஸ்யாத் –முதலானவற்றில்

மேலும்
ஆராக்ர மாத்ரோ ஹ்யவரோபி த்ருஷ்ட
வாலாக்ர சத பாகஸ்ய சததா கல்பிதஸ்ய ச பாகோ ஜீவஸ் ஸ விஜ்ஜேய -என்பனவற்றில்
தலைமுடியின் நுனி ஊசியின் நுனி –முதலியவற்றுக்கு சிறியது ஆத்மா என்கிறது –

அவிரோத சந்தனவத்
சந்தானம் ஒரு இடத்தில் பூச உடம்பு முழுவதும் குளிர்வது போல்
இது நம் சித்தாந்தம் அல்ல
வேறே ஒருவர் சித்தாந்தம்
நம் சித்தாந்தம்-
குணாத்வா ஆலோக வத் –2-3-26- அணுவான ஆத்மா உடலில் ஓர் இடத்தில் இருந்தாலும்
அவருடைய தர்ம பூத ஞானம் உடல் முழுவதும் பரவி இருக்கிற படியால் உடல் முழுவதும் உள்ள இன்ப துன்பங்களை அறிகிறார்
ஆபாசத்துக்கு ஸுவ்ரி –50 உடல்களை கொண்டாரே –
இதே போல் முக்தி அடைந்த ஆத்மாவின் அறிவும் உலகம் முழுவதும் பரவி இருந்து அனைத்தையும் அறிகிற படியால்
ச ச அநந்த -அளவற்ற தர்ம பூத ஞானம் விரியும் –
ஸ்ரீ ஸ்வாமி ஆளவந்தார் ஸ்லோகத்தில் -வ்யாபி -என்று அருளிச் செய்கிறார்
விளக்கு ஓர் இடத்திலே இருந்து கொண்டு தன் ஒளியாலே வியாபித்து போலே
ஆத்மா அணுவாக இருந்தாலும் தன் அறிவால் வியாபிக்கிறார் —

ஆத்மாக்கள் பலர்
அடுத்து ஸ்லோகத்தில் பிரதி சரீரம் பின்ன -என்பதாக
ஆத்மாக்கள் பலர் உள்ளனர் -உலகில் ஆத்மா ஒன்றே என்று சொல்ல முடியாது
வேதம் -தேவ திர்யக் மனுஷ்யேஷு புமான் ஏக வ்யவஸ்தித –என்று
தேவ உடலிலும் மனுஷ்ய உடலிலும் மிருக உடலிலும் ஒரே ஆத்மா உள்ளார் -என்பதின் பொருளை உள்ளபடி அறிய வேண்டும்
எந்த உடலில் எந்த ஜீவாத்மா இருந்தாலும் -அவர்
ஞான வடிவாகவும்
நித்யமாகவும்
அணுவாகவும்
ஸ்வயம் ப்ரகாசராயும் இருப்பர்
சமமான ஒத்தவராக வேறு பாடு இன்றி இருப்பதால் ஒரே ஆத்மா உள்ளார் என்கிறது –
அரிசி மண்டியில் பல வகை மூட்டைகள் அரிசி இருக்க இது ஒரு அரிசி 52 ரூபாய் இது ஒரு அரிசி -60 ரூபாய் –
ஒரே தரத்தோடும் தன்மையோடும் உள்ளதால் ஒரே அரிசி என்கிறோம்
அதே போல் அனைத்து உடல்களிலும் உள்ள ஆத்மாவும் ஒரே தன்மை களைக் கொண்டவையே
தேஷாம் ஆதித்யவத் ஞானம் ப்ரகாசயதி தத் பரம் -முதலான வற்றால் முக்தர்களை பன்மையில் கூறும் –
ஆகவே ஆத்மா பலர் என்பது ஸித்தம்
ஸ்லோகத்தில் பிரதி சரீரம் பின்ன என்பதால் சரீரம் தோறும் வேறு பட்டவர் -என்றதாயிற்று –
அனைத்து சரீரங்களிலும் ஒரே ஆத்மா இருந்தால் அவரே உலகில் இருக்கும்
அனைத்து இன்ப துன்பங்களை எல்லாம் அனுபவிக்க நேரிடும் –

ஆத்மா ஆனந்த வடிவானவர்
ஸ்லோகத்தில் கடைசியில் ஸ்வத ஸூகீ -இயற்கையாகவே ஆனந்தமாகவே இருப்பவர் -என்று பொருள்
ஆத்மா ஞானமே வடிவானவர் என்று பார்த்தோம்
ஞானம் என்று ஓன்று இருந்தால் அதுக்கு விஷயமாக ஓன்று இருக்க வேண்டும்
அது பிடித்ததாக இருந்தால் அந்த ஞானம் ஸூகம்
பிடிக்காததாக இருந்தால் அதுவே துக்கம்
அதே போல் பயம் வெட்கம் கோபம் சந்தேகம் உறுதி போண்டாவை ஞானத்தின் வெவ்வேறு நிலைகள் தான்
எனவே ஆத்மா என்பவர் ஞானமே வடிவானவர் என்றால் அந்த ஞானத்துக்கு ஏதாவது ஒரு விஷயம் இருக்க வேண்டும் –
ஆத்மா என்கிற ஞானத்துக்கு உலகப் பொருள்கள் விஷயம் ஆக மாட்டா -அதுக்கு தான் மட்டுமே விஷயமாக இருக்கும்
எனவே ஆத்மா என்பது தன்னையே எப்பொழுதும் அறியக்கூடிய ஒரு ஞானம் என்று சொல்ல வேண்டும்
தான் தனக்கு எப்பொழுதும் விரும்பக் கூடியவராக அனுகூலராகவே இருப்பார்
யாரும் தன்னையே வெறுப்பது இல்லையே
எனவே ஆத்மா என்பது தன்னைப் பற்றிய ஒரு ஞானம் -தான் தனக்கு எப்பொழுதும் விருப்பமானவர் –
ஆகவே ஆத்மா என்பது விரும்பப்படும் பொருளை பற்றிய ஞானம்
இதுவே ஸூ கம் -ஆனந்தம்
எனவே ஆத்மா ஆனந்தமே வடிவானவர் என்கிறோம்
நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது எந்தப் பியருளையும் அறிவது இல்லை
ஆனால் விழித்ததும் ஸூகமாகத் தூங்கினேன் என்கிறோம்
தூங்கும் பொழுது எந்த ஸூகத்தை அனுபவித்து இருக்க முடியும் –ஆத்மா என்கிற ஸூகத்தை மட்டும் தான் –
அதனால் தான் ஆத்மா இயற்கையிலே ஸூகமாய் இருப்பவர் என்று சொல்கிறார்
துக்கம் எல்லாம் சம்சாரத்தால் தான் வருகிறது –

———

பாடம் -24—ஜீவாத்மாவின் ஞாத்ருத்வம்

ஞானமே வடிவானவர் என்றும் ஞானம் -அறிவுடையவர் என்றும் பார்த்தோம் -அந்தர் ஜோதி புருஷ –
சாங்க்யர் -கபிலர் -புத்தர் -இருவரும் ஞானம் வடிவானவர் மட்டும் தான் என்பர் -ஞானம் என்ற பண்பு கிடையாது என்பர்
நியாய மதத்தின் படி ஞான வடிவானவர் அல்ல
கல் கட்டை போல் ஜடமான பொருள் தான் -ஆனால் ஞானம் என்ற பண்பு-குணம் -உண்டு என்பர் –
இவை இரண்டுமே தவறு -ஆத்மா ஞான வடிவானவரும் ஞானம் உடையவருமாகவே உள்ளார் என்று
வேத வியாசர் ப்ரஹ்ம ஸூத்ரத்தில் கூறுகிறார்
ஞா அத ஏவ –2-3-19-(ஞாதி கரணம் -இந்த ஸூத்ரம் -பெயரால் இந்த அதிகரணம் )
எந்த வேதத்தின் அடிப்படையில் நித்யமானவர் என்று கூறப்படுகிறாரோ அதே வேத அடிப்படையில்
ஆத்மா அறிவாளி அறிவுடையவர் ஞாதா

1-அத யோ வேத இதம் ஜிக்ராணி இதி ஸ ஆத்மா-
எவன் நான் நுகர்கிறேன் என்று அறிகிறானோ அவன் ஆத்மா
2-ய அயம் விஞ்ஞான மய ப்ராணேஷூ ஹ்ருதி அந்தர் ஜ்யோதி புருஷ
ஆத்மா ஞானம் என்ற குணத்தை யுடையவராய் ஹ்ருதயத்தில் உள்ளே ஞான வடிவாகவே இருக்கிறார் –
ஜ்யோதி என்று ஸ்வயம் பிரகாசம்
இவை போன்ற வேத வாக்கியங்கள் ஆத்மா அறிவுடையார் – என்று கூறுகின்றன
உலக வாழ்விலும் நான் அறிவுடையான் என்று தானே அறிகிறோம் –

இந்த பிரமாணங்கள்
ஞானம் வேறு -ஆத்மா வேறு -ஞானத்தை யுடையவர் ஆத்மா என்று ஸ்பஷ்டமாகக் கூற வில்லை –
எனவே ஞானமே ஆத்மா என்று சிலர் கேள்வி எழுப்பலாம் –
அதற்கு பதில் உரைக்கிறார் வேத வியாசர்
வியதிரேக கந்தவத் ததா ச தர்சயதி–2-3-27-
மணம் உடையது ப்ருத்வீ என்று சொல்லும் பொழுது
ஆறாம் வேற்றுமை மணத்துக்கும் பிருத்வீயுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகிறது –
அதே போல்
ஞாநாதி ஏவ அயம் புருஷ–முதலான வேத வாக்கியங்களில் ஞானம் யுடையவர் ஆத்மா – என்று சொல்லுகிற படியால்
ஞானம் வேறு என்றும் ஆத்மா வேறு என்றும் ஞானத்தை யுடையவர் ஆத்மா என்றும் அறிகிறோம் –

இதே போல் ப்ரஹ்மம் ஆனந்த மயன் என்றும் வேதம் சொல்லும் ப்ரஹ்மத்தின் ஆனந்தம் அளவிட முடியாதே –

இங்கே பராசர பட்டர் —
நான் அறிவுடையவன் என்னும் பொழுது ஆத்மாவும் அறிவும் வெவ்வேறாகவே தோற்றினாலும் இரண்டே ஒன்றே என்று கொண்டால்
குடத்தை நான் அறிகிறேன் -என்னும் பொழுது நானும் குடமும் ஒன்றே-வேறுபோராடு தோற்றம் பொய்யானது என்றும் சொல்லலாமே –
ஆகவே ஆத்மாவுக்கும் அறிவுக்கும் உள்ள வேறுபாட்டை ஏற்றுக் கொள்ளவே வேண்டும்

இதுவும் ஸ்பஷ்டமாக இல்லை என்று நினைத்தால் -மேலும் வேத வியாசர் கூறுகிறார்
ப்ருதக் உபதேசாத் –2-3-28-
நேரடியாகத் தன் சொல்லைப் பயன்படுத்தியே அறிவானது ஆத்மாவைக் காட்டிலும் வேறுபட்டதாகச் சொல்லப் பட்டுள்ளது வேதத்தில்
ந விஞ்ஞாது விஞ்ஞாதே விபரி லோபோ வித்யதே
அறிவு வடிவமான ஆத்மாவினுடைய அறிவுக்கு அழிவே கிடையாது என்று இதற்குப் பொருள் –

இங்கு ஒரு கேள்வி எழலாம்
ஆத்மா அறிவுடையவராக இருந்தால் ஆத்மாவை அறிவு என்றே பல இடங்களில் கூறுவது எதனால் –
யோ விஞ்ஞானே திஷ்டன்
ஞானம் எனப்படும் ஆத்மாவின் மேல் எந்த பரமாத்மா இருக்கிறாரோ -என்றும்
விஞ்ஞானம் யஜ்ஜம் தநுதே
ஞானம் யாகத்தைச் செய்கிறது
போன்ற இடங்கள் உண்டே —
ஞான ஸ்வரூபம் ஆத்மா விஷ்ணு புராணமும் சொல்லுமே
இங்கு அறிவு என்றே -அறிவாளி -என்று சொல்லாமல் உள்ளதே –

இதற்கு வேத வியாசர் பதில் உரைக்கிறார் –
தத் குண சாரத்வாத் து தத் வியபதேச ப்ராஞ்ஞ வத் –2-3-29-
ஞானத்தை சாரமான குணமாக ஆத்மா கொண்டு இருக்கிறபடியால் ஆத்மாவை ஞானம் என்றே கூறலாம் –
தவறு இல்லை என்றவாறு –

ஒருவருக்கு ஸாரமான குணம் எதுவோ அவரை அக் குணம் என்றே உலகில் சொல்கிறோமே
நம்மாழ்வாரை கிருஷ்ண பக்தர் என்று சொல்லாமல் க்ருஷ்ண த்ருஷ்ண தத்வம் -கிருஷ்ண பக்தியே உருவானவர் –
அதே போலவே இங்கும் ஆத்மாவை அறிவே என்பதில் தவறு இல்லை
இங்கே ஸாஸ்த்ரீயமான எடுத்துக்காட்டு காட்டுகிறார் வேத வியாசர்
ப்ராஞ்ஞவத்–என்று பரமாத்வையே
பிரகர்ஷேண ஞானம் -சர்வஞ்ஞன்-அவனையே ப்ராஞ்ஞ என்று வேதம் சொல்லும் –
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் சொல்லும் சுருதி -அறிவுடையார் என்று சொல்லாமல் ஞானம் என்றே சொல்லும்
ஆனந்த வல்லி -மேலே மேலே சொல்லி திரும்பிற்றே –
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் -ப்ரஹ்மத்தினுடைய ஆனந்தை என்று -எவ்வளவு என்று அறிய முடியாதோ
என்று அறிபவன் -ஸ்பஷ்டமாக தன்மை வேறே ப்ரஹ்மம் வேறே என்றும் சொல்லும்
அவன் ஆனந்தம் உடையவராக இருந்தாலும் அவனை ஆனந்தம் என்றே வேதம் பல இடங்களில் கூறும் –
அதே போல் ஞானம் உடையவராக இருந்தாலும் ஞானம் என்றே கூறும்
அவ்விடங்களில் போல் இங்கும் ஸாரமான குணத்தைக் கொண்டே அழைக்கப் படுகிறது –

இங்கு இன்னும் ஒரு கேள்வி எழும்
தூங்கும் பொழுது ஆத்மாவுக்கு ஞானம் இல்லையே -எவ்வாறு இது ஸாரம் என்று சொல்ல முடியும் –
இதுக்கு வேத வியாசர் பதில் அளிக்கிறார்
யாவதாத்ம பாவித்வாத் ச ந தோஷ தத் தர்ச நாத் –2-3-30-என்று
ஆத்மாவிடம் ஞானம் எப்பொழுதும் உண்டு
விழித்து இருக்கும் பொழுது உலகப் பொருள்களை அறிய அது உதவுகிறது தானும் அறியப்படுகிறது

நாம் தூங்கும் பொழுது இந்திரியங்கள் செயல் படாமையால் நாம் வெளிப்பொருள்களை அறிவது இல்லை –
அக்காலத்தில் நம்மிடம் இருக்கும் அறிவு தொற்றுவது இல்லை –
இதற்கு ஒரு எடுத்துக் காட்டு வேத வியாசர் காட்டுகிறார்
பும்ஸ்த்வாதிவத் து அஸ்ய சத அபி வியக்தி யோகாத் –2-3-31-
என்று எப்படி பிறந்த குழந்தை இடமே ஆண் தன்மை பெண் தன்மை இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வயசிலே
தான் வெளித் தோன்றுகின்றனவோ
அதே போல் ஆத்மாவிடம் எப்பொழுதுமே இருக்கும் ஞானம் நாம் விழித்து இருந்து மற்றப் பொருள்களை
அறியும் பொழுது மட்டும் தான் தோற்றுகிறது
மற்றப் பொழுதில் தோற்றுவது இல்லை -ஆகவே ஸாரமான குணம் என்று சொல்லத் தட்டில்லை

முன் சொன்ன ஸூத்ரத்தில் –ச -என்ற சொல் –
இது மட்டும் சமாதானம் இல்லை -வேறே ஒன்றும் உண்டு அது என்ன என்றால்
ஆத்மா அறிவுடையவனாக இருந்தால் ஆத்மாவை அறிவு என்றே எதனால் சொல்ல வேண்டும் என்ற கேள்விக்கு
இப்படி சுற்றி வந்து சமாதானம் சொல்லத் தேவை இல்லை –
ஆத்மா அறிவுடையவராக இருந்து கொண்டு -தானும் ஞானமே வடிவுடையவராக இருக்கிற படியால்
வேதம் அப்படிச் சொல்கிறது என்று எளிமையாக சமாதானமும் சொல்லலாம் -என்று காட்டும் –

—–

பாடம் –25- ஜீவாத்மாவின் கர்தவ்யம் –

ஞாத்ருத்வம் வந்தாலே
கர்த்ருத்வமும்
போக்த்ருத்வமும் வருமே
ஹேய உபாதேய ஞான மூலம் -தத் கர்த்ருத்வ – சிகீர்ஷா -செய்வதில் ஆசை
ஞானம் இச்சா க்ருதி–மூன்றும் உண்டே

கர்த்ருத்வம் -செயல்களை செய்பவராக இருக்கும் தன்மை
போக்த்ருத்வம் -செயல்களின் பயனை அனுபவிப்பராக இருக்கும் தன்மை
முதலில் ஒரு பொருளை அறிகிறோம்
அறிந்து அதில் ஆசையோ வெறுப்போ தோன்றி -பெறுவதற்கோ பிளாக்குவதற்கோ முயல்கிறோம் –
அடுத்து அம் முயற்சியின் பயனை அனுபவிக்கிறோம்
ஆத்மா அறிவுடையவராய் இருப்பதால் கொள்ளத்தக்கது என்றோ தள்ளத்தக்கதோ என்றோ அறிகிறார்
அவரே கர்த்தாவான படியால் பிடித்ததை அடையவும் பிடிக்காதத்தை விலக்கவும் முடியும் –
ஆகவே ஆத்மா -ஞாதா -கர்த்தா -போக்தா என்பதே நம் சம்பிரதாய சித்தாந்தம் –

பூர்வ பக்ஷம் ஆத்மா கர்த்தா அல்ல
கபிலர் -சாங்க்ய மதம் -ஆத்மா கர்த்தா அல்ல -போக்தா மட்டும் தான் –
முக்குணங்களால் ஆக்கப்பட்ட பிரக்ருதியே அனைத்து செயல்களும் செய்கிறது
குணங்களே கார்யங்களை செய்கின்றன என்றும் சொல்வர்
சாங்க்ய மதத்தில் முக்குணம் என்று கொள்ளாமல் -மூன்று த்ரவ்யங்களே -தன்மை அல்ல
ப்ரக்ருதி த்ரவ்யமே மூன்று த்ரவ்யங்களின் கலவை என்பர் –
அவர்கள் வாதங்கள் பின்வருமாறு –

ஹந்தா சேத் மந்யதே ஹந்தும் ஹத: சேத் மந்யதே ஹதம் |
உபவ் தௌ ந விஜாநீத: நாயம் ஹந்தி ந ஹந்யதே ||(கட உப நிஷத் 2 – 19)
இதன் பொருள் – “கொலை செய்யும் ஒருவர் தன்னைக்
கொலை காரன் என்று நினைத்தாலோ கொலை செய்யப்படும் ஒருவர்
தன்னைக் கொல்லப்பட்டவராக நினைத்தாலோ , அவர்கள் ஆத்மாவின் தன்மையைப் புரிந்து கொள்ளவில்லை
என்று பொருள் ஏன் என்னில் ஆத்மா கொள்வதும் கிடையாது கொல்லப்படுவதும் கிடையாது –
இதிலிருந்து ஆத்மா எந்தச் செயல்களையும் செய்வது இல்லை என்று தேருகிறது

ப்ரக்ருதே க்ரிய மாணாநி குணை கர்மணி ஸர்வஸ
அஹங்கார விமுடாத்மா கர்த்தா அஹம் இதி மன்யதே –ஸ்ரீ கீதை –3-27-
இதன் பொருள் -பிரகிருதியின் குணங்களால் செய்யப்படும் செயல்களை தானே செய்கிறான்
என்று நினைப்பவன் அஹங்காரத்தால் மூடப்பட்டு மயங்குகிறான்

கார்ய காரண கர்த்ருத்வே ஹேது ப்ரக்ருதே உச்யதே
புருஷ ஸூக துக்கா நாம் போக்த்ருத்வே ஹேதுர் உச்யதே –13-20-
உடலும் இந்திரியங்களும் செயல்படுவதற்கு பிரகிருதி காரணமாகும்
ஸூக துக்கங்கள் அனுபவிக்க ஆத்மா காரணம் ஆவார் –

இப்படி பல பிரமாணங்களால் ஆத்மா கர்த்தா அல்ல பிரகிருதி தான் கர்த்தா என்றும்
ஆத்மா போக்தா மட்டுமே என்றும்
கூறப்பட்டுள்ள படியால் இதுவே சரியானது என்று சாங்க்ய மதம் –

இனி சித்தாந்தம்
இதற்கு பதில் உரைக்கிறார் வேத வியாசர்
கர்த்தா சாஸ்த்ரார்த்த வத்த்வாத் –2-3-33–(கர்த் அதிகரணம் )
ஆத்மா தான் கர்த்தா -ஸாஸ்த்ரம் என்று சொல்லப்படும் வேதங்கள் பயன் உடையவை ஆவதற்காக –
அறிதல் -செயல் படுதல் -பயனை அனுபவித்தல் -இவை மூன்றும் ஒருவர் இடம் தான் இருக்க முடியும்
என்பதை வைத்து சாங்க்ய மத நிரஸனம் செய்கிறார்
சுவர்க்கத்தில் ஆசை இருப்பவன் ஜ்யோதிஷ்டோம ஹோமம் செய்ய வேண்டும்
முக்தியை ஆசை இருப்பவன் ப்ரஹ்மத்தை தியானிக்க வேண்டும்
போன்ற கட்டளைகள் போக்தாவே கர்த்தா என்பதைக் காட்டும்
ஆத்மா போக்தா என்பதை அனைவரும் ஒத்துக் கொள்கிறார்கள்
எனவே வேதம் பயன் உள்ளதாக வேண்டும் என்றால் போக்தாவான ஆத்மாவே கர்த்தாவாகவும் இருக்க வேண்டும் –
ஸாஸனாத் ஸாஸ்த்ரம் –கட்டளை இடுவதால் இந்தப்பெயர் -ஒரு செயலில் மூட்டுதல் -ஈடுபடுத்துதல் –
எவர் அறிவுள்ளவரோ அவரைத்தான் வேதம் இத்தைச் செய் இதம் குரு இத்தைச் செய்யாதே -என்று கட்டளை இட வேண்டும்
பிரகிருதி அறிவுடையது அல்ல -எனவே அறிவுடைய ஆத்மா தான் கர்த்தாவாகவும் இருக்க வேண்டும் –

தத்வ த்ரயம் -யதீந்த்ர மத தீபிகை போன்றவை இவற்றை சொல்லும்
கர்த்ருத்வம் இல்லை என்றால் இவனுக்கு சஸ்த்ர வஸ்யத்தையும் போக்த்ருத்வமும் குலையும்
சக்தி விபர்யதயாத் –2-3-37- என்றும் இத்தையே சொல்லும் –

பூர்வ பஷத்துக்கு சமாதானம்

ஹந்தா சேத் மந்யதே ஹந்தும் ஹத: சேத் மந்யதே ஹதம் |
உபவ் தௌ ந விஜாநீத: நாயம் ஹந்தி ந ஹந்யதே ||(கட உப நிஷத் 2 – 19)
இதில் ஆத்மா எந்தச் செயலையும் செய்வது இல்லை என்ற கருத்தில் சொன்னது அல்ல
ஆத்மா நித்யமானவர் –அவரை யாராலும் அழிக்க முடியாது
கொல்வது உடலை மாத்திரம் தான் -கொலை செய்பவர் உடலைத்தான் அழிக்கிறார் ஆத்மாவை அல்ல
கொல்லப்படுபவரின் உடல் தான் அழிகிறது ஆத்மா அல்ல -என்பதே இதன் பொருள் –

ப்ரக்ருதே க்ரிய மாணாநி குணை கர்மணி ஸர்வஸ
அஹங்கார விமுடாத்மா கர்த்தா அஹம் இதி மன்யதே –ஸ்ரீ கீதை –3-27-
இதிலும் கண்ணன் சொல்ல வருவது ஆத்மா கர்த்தாவே அல்ல என்பது அல்ல
ஆத்மா தான் கர்த்தா -ஆனால் சம்சாரத்தில் நாம் செய்யும் தினசரி செயல்களுக்கு எல்லாம்
ஆத்மா இயற்கையாக கர்த்தா அல்ல செயற்கையாகத் தான் இவற்றை எல்லாம் செய்கிறார் என்றே இதற்குப் பொருள் –
ஏன் என்றால் இயற்கையாக பாப புண்யங்கள் இல்லாமல் உடல் இல்லாமல் இருக்கும் ஆத்மாவுக்கு
பசி தாகம் துக்கம் போன்றவை இல்லையே -ஆகவே இந்தச் செயல்களைச் செய்யத் தேவை இல்லை
ஒரு உடலை எடுத்துக் கொண்டு முக்குண சேர்க்கை ஏற்படும் பொழுது தான் இவற்றைச் செய்கிறார் என்பதைக் காட்டவே இந்த ஸ்லோகம்

கார்ய காரண கர்த்ருத்வே ஹேது ப்ரக்ருதே உச்யதே
புருஷ ஸூக துக்கா நாம் போக்த்ருத்வே ஹேதுர் உச்யதே –13-20-
இங்கும் உடலும் புலன்களும் செயல்பட ப்ரக்ருதியுடன் தொடர்புடைய ஆத்மாவே காரணம் –
இயற்கை நிலையில் இருக்கும் ஆத்மா அல்ல

ஆத்மா ஸ்வ தந்த்ரரா -பர தந்த்ரரா –
தன் இச்சையால் செயல்படுகிறாரா -வேறே ஒருவருக்கு கட்டுப்பட்டு செயல் படுகிறாரா –

பூர்வ பக்ஷம்
தானாக யோசித்து -தன் இச்சையால் முடிவு எடுத்து செயல் படுபவர்க்குத் தான் ஸாஸ்த்ரம் கட்டளை இட முடியும்
வேதம் பயன் உள்ளவையாக இருக்க வேண்டும் என்றால் ஆத்மா ஸ்வ தந்த்ரராகவே இருக்க வேண்டும் –

ஸித்தாந்தம்
இதற்கு வேத வியாஸர் பதில் அளிக்கிறார்
பராத் து தத் ஸ்ருதே –2-3-40-(பராயத்தா அதிகரணம் )
ஜீவாத்மாவின் கர்த்ருத்வம் -செயல்பாடும் தன்மை பரமாத்மாவுக்குக் கட்டுப் பட்டதே -வேதம் கூறுகிறபடியால்

அந்த ப்ரவிஷ்ட ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா
பரமாத்மா ஜீவாத்மாக்குள் புகுந்து அவரை நியமிக்கிறார் -இயக்குகிறார்
சாஸ்தா விஷ்ணு அசேஷ ஜகத் -உன்னைக் கேட்க செய்தவனும்
என்னை திரு நாமம் சொல்லக் செய்தவனும் அவனே -பிரகலாதன் –

ய ஆத்மநி திஷ்டன் ஆத்மந அந்தர -யம் ஆத்மா ந வேத
யஸ்ய ஆத்மா சரீரம் ய ஆத்மாநம் அந்தர யமயதி
எவர் ஆத்மாவின் மேல் உள்ளாரோ -எவர் ஆத்மாவுக்குள் உள்ளாரோ -எவரை ஆத்மா அறிவது இல்லையோ –
ஆத்மா யாருக்கு சரீரமோ -எவர் ஆத்மாவை உள் இருந்து இயக்குகிறாரோ அந்த பரமாத்மா

இவை போன்ற பல வேத வாக்கியங்கள் ஜீவாத்மாவுக்குள் பரமாத்மா இருக்கிறார் என்றும் –
அவரே ஜீவாத்மாவை இயக்குகிறார் என்றும் -சொல்லப்பட்டுள்ள படியால்
ஜீவாத்மா ஸ்வ தந்த்ரர் அல்ல பர தந்த்ரரே –
தனது இச்சையாக செயல்படுவது இல்லை –
பரமாத்மாவுக்கு கட்டுப்பட்டு அவரால் இயக்கப்பட்டு தான் செயல்படுகிறார் என்பது தெளிவு –

மனதில் எழும் கேள்விகள்
இப்படி பரமாத்மாவே இயக்குகிறார் என்றால் பல சங்கைகள் எழுமே
1–தன் இச்சையால் செயல்படாத ஜீவாத்மாவுக்கு எதனால் வேதங்கள் உபதேசிக்க வேண்டும் —
எதையும் முடிவு செய்து செயல் பட முடியாதே -வேதங்களுக்கு பிரோயோஜனம் இல்லாமல் போகுமே —

2- பரமாத்மா தூண்டுவாராகில் அந்தச் செயலின் பயனையும் அவரே அனுபவிப்பாரா –
பாப புண்யங்களும் அவருக்குத் தானே சேர வேண்டும் –
ஜீவாத்மாவுக்கு கர்மங்கள் எப்படி ஏற்படுகின்றன

3-தீய செயல்களை செய்விப்பான் ஆகில் -அதனால் துன்பப்பட வைப்பான் ஆகில் அவனுக்கு கருணை இல்லையா

4-ஒரு சிலரை நல்ல செயல்களில் தூண்டி புண்யம் பெற வைத்து –
ஒரு சிலரை தீய செயல்களில் தூண்டி பாபம் பெற வைப்பான் ஆகில்
ஒரு தலைப் பக்ஷ செயல் ஆகாதா -ஏன் இந்தப்பாகுபாடு -இது பரமாத்மாவுக்குப் பொருந்துமா

5-இப்படி பரமாத்மாவே இயக்குகிறார் என்றால் தானாகவே யோசித்து மாறுவதற்கு வாய்ப்பே இல்லையா
எனக்கு உள்ள அறிவு வீணாகப் போகுமே

இவை அனைத்துக்கும் பதில் அளிக்கவே அடுத்த ஸூத்ரம்
க்ருத ப்ரயத்ன அபேஷஸ்து விஹித ப்ரதி ஷித்த அவை யர்த்யாதிப்ய –2-3-41–

இதற்கு ஸ்ரீ பாஷ்யத்தில் ஸ்வாமி ராமானுஜர்
எல்லாச் செயல்களிலும் ஜீவாத்மா எடுக்கும் முதல் முயற்சியை எதிர்பார்த்து தான் அந்தர்யாமியாய் இருக்கும்
பரமாத்மா தனது அனுமதியை வழங்குவதில் மூலம் அச்செயலில் நம்மை மூட்டுகிறார் –
இந்த ஒரு ஸ்ரீ ஸூ க்தி நமது அனைத்து சங்கைகளையும் தீர்க்கும் –

ஜீவாத்மா கர்மம் அடிப்படையில் ஒரு உடலை எடுக்கிறார் –
அப்பிறவியில் எத்தனையோ பொருள்களைப் பார்க்கிறார்
முன் பிறவியில் அனுபவித்த விஷயங்களை பொறுத்து அவருக்கு ருசி -விருப்பு வெறுப்புக்கள் -உள்ளன –
அதன் அடிப்படியில் விருப்பமோ வெறுப்போ அடைகிறார்
அடையவோ விலக்கவோ முயற்சி செய்கிறார்
பின்பு அடுத்து அடுத்த முயற்சிகளில் செயல்களில் ஈடுபடுகிறார் –

இந்தச் சங்கிலியில் ஒவ்வொரு இலக்கையும் குறித்து முயல் முயற்சியில் -அந்தர்யாமியாக இருந்து
உதாசீனனாக -அலட்சியமாக இருந்து விடுகிறார்
அடுத்த நொடியில் அது ண்பல்ல செயலா தீய செயலா என்று பார்க்காமல் அதைத் தான் அனுமதிக்கிறார்
அவர் அனுமதி இல்லாமல் எந்தச் செயலும் நடக்க முடியாதே –
இந்த இரண்டாவது நிலை -அநுமந்த்ருத்வம் -அனுமதி கொடுத்தல் –

நம் சங்கைகளுக்கு பதில்கள் —
பதில்-1-முடிவு எடுத்து செயல் படும் ஸ்வா தந்தர்யம் நமக்கு உண்டு –
எனவே வேதங்கள் நமக்கு கட்டளை இடுவது சரியே -வீணாகாது

பதில்-2-இருவருக்குப் பொதுவாக ஒரு சொத்து உள்ளது -அதில் ஒருவர் அந்தச் சொத்தில் இருந்து ஒரு பகுதியை எடுத்து
மற்ற ஒரு உரிமையாளரின் அனுமதியைப் பெற்று -அந்த நாட்டின் அரசருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்
அந்த அரசர் மகிழ்ந்து பல நன்மைகளை செய்தார் -அதை அனுபவிக்கும் உரிமை முயற்சி எடுத்தவருக்கே உண்டு –
அனுமதி கொடுத்தவருக்கு கிடையாதே –
அதே போல் செயலைச் செய்ய முடிவு செய்த ஜீவாத்மாவுக்கு கர்மங்கள் சேரும்
அனுமதி கொடுத்த மற்ற ஒருவருக்கு கிட்டாதே –பரமாத்மாவுக்கு ஒரு குற்றமும் வராதே –

பதில் -3-தீய செயலை செய்யவும் அனுமதி கொடுப்பதால் கருணை அற்றவர் ஆக மாட்டார் –
ஜீவாத்மா தவறான செயலில் ஈடுபட்டது ஸாஸ்த்ர விரோதமாக உள்ளதால் தண்டனை வழங்க வேண்டுமே –
தண்டனை வழங்கும் முறையில் தான் அனுமதி வழங்குகிறார்

பதில் 4-பக்ஷபாதி என்று பரமாத்மாவை சொல்ல முடியாது
ஜீவாத்மா அவரவர் சுதந்திரத்தைப் பயன்படுத்தி முடிவு எடுத்து செய்யும் எந்தச் செயலையும் அனுமதிக்கிறார்
இவரே எந்தச் செயலிலும் மூட்டவில்லையே

பதில் 5–சுதந்திரமாக முடிவு எடுத்து செயல்படும் சக்தி ஜீவாத்மாவுக்கு இருப்பதால்
அவர் அறிவு யுடையவராய் இருக்கும் தன்மை வீண் ஆகாது –

ஆகவே பகவான் அனைத்தையும் இயக்குகிறார் என்பதற்குப் பொருள்
ஜீவாத்மா ஸ்வ தந்திரமாக முடிவு எடுத்து செயல் படத் தொடங்கும் வரை அவர் உதாஸீனமாக அலட்சியமாக இருந்து
அதற்குப் பின் தான் அனுமந்தாவாக -அனுமதி அளிப்பவராகவே இருக்கிறார் என்பதே —

1-பரமாத்மா அனைத்துக்கும் காரணம் –
2-ஜீவாத்மா முதல் முயற்சி செய்ய ஸ்வாதந்தர்யம்
3-அனுமதிப்பதால் பலன் அவனைத் தீண்டாதே
4-பார பக்ஷம் காடடாதவன்
5-காருண்யம் மிக்கவனே -நிர்தயத்வம் அல்லவே -அனைத்துமே பொருந்துமே

இதற்கு விதி விலக்கும் உண்டு –
ஏஷ ஏவ சாது கர்ம காரயதி தம் யம் ஏப்ய-லோகேப்ய உந்நிநீஷதி
ஏஷ ஏவ அசாது கர்ம காரயதி தம் யம் அதோ நிநீஷதி -என்று கூறும்
யாரை மேலே உயர்த்த பகவான் ஆசைப்படுகிறாரோ அவர்களை நல்ல செயல்களை பண்ணும்படி தூண்டுகிறார் –
யாரைத் தாழ்வடைய வைக்க ஆசைப்படுகிறாரோ அவர்களை தீய செயல்களை செய்யும் படி தூண்டுகிறார் –

இங்கு கீழ் போல் அனுமதி மட்டும் அல்ல -தூண்டுதலும் உண்டு
இது ஒரு சிலருக்கே -ஸ்ரீ கீதையில் இத்தை தெளிவாக்க காட்டி அருளுகிறார்
யார் எல்லாம் என்னிடத்தே மிகுந்த பக்தியுடன் என்னை அடைய விரும்புகிறார்களோ அவர்களை நற் செயல்களில் தூண்டுகிறேன்
யார் எல்லாம் என்னை வெறுக்கிறார்களோ அவர்களை வேறே வழி இல்லாமல் தாழ்ந்த பிறவிகளில் தள்ளுகிறேன்
எனவே ப்ரயோஜகத்வம் -மறைமுகமாகத் தூண்டுதல் – என்ற மூன்றாவது நிலையில் பகவான் இருப்பது
பொதுவான நிலை அல்ல -ஒரு சிலருக்குத் தான் –

ததாமி புத்தி யோகம் -என்றும்
ஷிபாமி –ந க்ஷமாமி–ஆஸூர யோனியில் தள்ளுகிறேன் -என்றும் கீதையில் உண்டே
அதிமாத்ர அனுகூலர்களுக்கும் -தேஷாம் சததி யுக்தானாம் -ப்ரீதி உந்த இருப்பர்களுக்கு –
அதிமாத்ர பிரதி கூலர்களுக்கும்

———

பாடம் -26- ஜீவாத்மாவின் வகைப்பாடு –

ஜீவாத்மா -மூன்று வகை -பத்தர்கள் -முக்தர்கள் -நித்யர்கள் –
பத்தர்கள் -பாப புண்ய -கர்மங்களில் கட்டுப்பட்டு -பந்தப்பட்டு -இந்த அண்டத்துக்குள்ளே ஏதோ ஒரு இடத்தில்
இருந்து துன்பப்பட்டுக் கொண்டே இருக்கும் ஜீவாத்மா
அஜோகி ஏக பிறக்காத நித்தியமான ஆத்மா ப்ரக்ருதி சம்பந்தத்தால் -பந்தம் -கட்டுப்பட்டு -ஆசை உடன் -சேர்ந்து
போகம் அனுபவித்து – -ஜகாதி- வெறுத்து முக்தன் ஆக

இவர்கள் நான்கு வகைப்பட்ட பிறவி கொண்டவர்கள்
தேவர்கள் -மனிதர்கள் -விலங்குகள் -ஸ்தாவரங்கள் –
அசுரர்கள் கிங்கரர்கள் கந்தர்வர்கள் இவர்கள் தேவர்கள் சப்தத்தில் அடங்கும் -33 கோடி -ஒரு வகை பிறவி இது
திதி அதிதி -பிள்ளைகள் -கஸ்யபர்
ராக்ஷசர் மனிதரில் ஒரு வகை போல்
தேவர்களுக்குள்ளும் மனிதர்களுக்கும் யோனிஜர் அயோனிஜர் உண்டே -நான் முகன் அஜன் அயன்
ஸ்வேதர் வியர்வை மூலம் வந்தவர் போல் உண்டு

செடி கொடிகளும் சில செயல்களைச் செய்வதால் அவற்றுக்குள்ளும் ஜீவர்கள் உண்டு –
கண்ணன் திருவடி பெற்ற கதம்ப மரம் புண்ணியம் நமக்கு இல்லையே –
இவற்றுள் விலங்குகளும் ஸ்தாவரங்களும் ஸாஸ்த்ரத்துக்குக் கட்டுப் பட்டவை அல்ல —
அதாவது -அவர்களுக்கு ஸாஸ்த்ரம் எதையும் -விதிக்காது
அவை ஸாஸ்த்ரம் சொல்லியதை செய்யா விட்டாலும் பாபம் இல்லை
தேவர்கள் மனிதர்கள் -ஸாஸ்த்ர வஸ்யர் -அதன் படியே நடக்க வேண்டும் –

இவர்களில் –
புபுஷுக்கள் முமுஷுக்கள் -இரண்டு வகையாகப் பிரிக்கலாம்
ஸம்ஸாரத்திலே இருந்து ஸூக துக்கங்களையே அனுபவிக்க ஆசைப்பட்டவர்கள் புபுஷுக்கள்
போகம் ஸூ க துக்க அனுபவம் -இதையே உண்ண ஆசைப்பட்டவர்கள் புபுஷு –
ஸம்ஸாரத்தில் இருந்து விடுபட ஆசைப்படுபவர்கள் முமுஷுக்கள் –

புபுஷுக்களை
அர்த்த காம பரர்கள் என்றும்
தர்ம பரர்கள் -என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்

அர்த்த காம பரர்கள்
உடலையே ஆத்மா என்று நினைத்தும் வேறே உலகங்கள் இல்லை என்று நினைத்தும்
இவ்வுலக போகங்களையும் செல்வங்களையும் ஆசைப்படுபவர்கள்

தர்ம பரர்கள் –
உடலைக் காட்டிலும் ஆத்மா வேறுபட்டவர் என்று உணர்ந்து ஸாஸ்த்ரம் படி செயலைச் செய்து
புண்யம் சேர்த்து வேறே லோகங்களை அடைந்து ஸூகப்படலாம்
ஐஹிக ஆமுஷ்மிக ஸூகங்கள் -இவ்வுலக இவ்வுலக இன்பங்கள் —
என்று உணர்ந்து யாகம் தானம் தபஸூக்கள் செய்பவர்கள்
இவர்கள் பரமாத்மாவை அறியாமல் நிலையான ஸூகத்தை அடைய மாட்டாதவர்கள் என்று ஸ்ரீ கீதையில் உண்டே –

இந்த தர்ம பரர்களை
தேவதாந்த்ர பரர்கள்
பகவத் பரர்கள் என்றும் இரண்டு வகை பட்டவர்கள் –

தேவதாந்த்ர பரர்கள் –
இதர தேவர்களைக் குறித்து -பரமாத்மா இவர்களுக்கும் ஆத்மா– நியாந்தா என்று அறியாமல்
மேலோட்டமாக கர்மங்களை செய்து பலன்களைப் பெறுவார்கள் –
பூ போல் பேசி -காயோ பழமோ தராது -வேத வாத ரதர்கள் -ஸ்வர்க்க பரர்கள் கிரியா விசேஷ பஹுளாம் —
என்கிறார் கீதாச்சார்யர் –

பகவத் பரர்கள் –
எந்த பலன்களைப் பெற வேண்டிலும் பரமாத்மாவையே பற்றி அடைபவர்கள்
ஆனால் செல்வம் போகங்களையே விரும்பி பெறுவதால் இவர்களும் புபுஷுக்கள் தான் –

அர்த்தார்த்திகள் அபூர்வ ஐஸ்வர்ய காமன்
இழந்த அர்த்தம் பெறவும் –
அண்டக்குலத்துக்கு அதிபதி -பாசுரத்தியல் இருவரையும் குறித்து —
அண்டாதிபதி -ராக்ஷஸர்கள் அசுரர்களை-இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் –
இவர்களையும் உதாரர் என்று கொண்டாடுகிறான் கீதாச்சார்யர் —

முமுஷுக்கள் இரண்டு வகை
கைவல்ய பரர்கள்
பகவத் பிராப்தி பரர்கள்

கைவல்ய பரர்கள் –
சம்சாரத்தில் இருந்து விடுபட்டு -உடல் இல்லாத நிலையில் -ஆனந்தமாக இருக்க –
ஆனந்த வடிவமான ஆத்மாவையே அனுபவித்துக் கொண்டு –
பரமாத்மாவை அடைய ஆசைப்படாமல் இருந்து இழந்து போகிறவர்கள் –

பகவத் பிராப்தி பரர்கள் –
சேஷத்வ ஞானம் அறிந்து பரமாத்மாவையே அடைந்து ப்ரீதி கார்ய கைங்கர்யம்
ஒன்றே உயர்ந்த புருஷார்த்தம் என்று அறிந்து அதற்கு ஆசைப்படுபவர்கள் –
இவர்களை
பக்தர்கள் -உபாசகர்கள்
சரணாகதர்கள் -ப்ரபன்னர்கள் -என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம் –

பக்தர்கள் -மிகுந்த அன்புடன் பகவானை இடைவிடாமல் த்யானம் செய்து அதன் மூலம் முக்தி அடைபவர்கள்
சரணாகதர்கள் -தங்கள் முயற்சி ஒன்றுமே இல்லாமல் -அவன் திருவடிகளையே பற்றி அவரே நம்மை
அவருடன் சேர்த்துக் கொள்வார் என்று மஹா விச்வாஸத்துடன் இருப்பவர்கள் –

இவர்களையும்
ஏகாந்திகள்
பரம ஏகாந்திகள் -என்று இரண்டாக பிரிக்கலாம்
ஏகாந்திகள் -அவனை சரண் அடைந்து அவரை அடைய ஆசைப்படுவதோடு
இவ்வுலக இன்பங்களையும் அவர் இடம் பிரார்த்திப்பவர்கள்
பரம ஏகாந்திகள் -வேறே பயன்களை ஒன்றுமே எதிர்பார்க்காமல் அவனையே அடைந்து
கைங்கர்யம் செய்வதே பரம புருஷார்த்தகம் என்று இருப்பவர்கள் –

பரம ஏகாந்திகளும் இரண்டு வகை
ஆர்த்தர்கள்
திருப்தர்கள்
ஆர்த்தர்கள் சம்சாரத்தில் வெறுப்பால் இனி இங்கே சிறுது நேரமும் இருக்க முடியாமல்
உடனே அவனை அடைந்து கைங்கர்யம் செய்ய பார்க்கும் ஆழ்வார்கள் போல்வார்

திருப்தர்கள் -சரணாகதி செய்த பிறவி எப்பொழுது முடிகிறதோ அப்பொழுது இனி மறு
பிறவி எடுக்காமல் அவனை அடைந்து கைங்கர்யம் செய்ய ஆசைப்படும் நம் போல்வார் –

——–

பாடம் -27-
சம்சாரத்தின் காரணம்
ப்ரம்மா தொடங்கி பீபிலி வரை அனைத்தும் கர்மம் அடியாகவே சம்சாரத்தில் கட்டுப்பட்டு உள்ளன
ஆத்மா இயற்கையிலே ஞானமே வடிவானவர் -ஆனந்தமே வடிவானவர் -குற்றங்கள் அற்றவர் –
பிரகிருதி இயற்கையிலே துக்கமாயும் குற்றம் உடையதாகவும் ஞானத்துக்கு எதிராகவும் உள்ளது
அதில் கட்டுப்பட்டு ஆத்மாவும் செயற் கையாக அஞ்ஞானம் குற்றங்கள் துக்கங்கள் அனுபவிக்கிறது –
என்று ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்கிறது –
ஆகவே சம்சாரத்துக்கு மூலம் கர்மம் -கர்மம் என்றால் நாம் செய்த செயல்களால் ஏற்படும் பாப புண்யங்கள் –
பல பிறவிகளில் சேர்த்து வைத்துள்ளோம் இப்போதும் சேர்த்துக் கொண்டே இருக்கிறோம்
அனுபவித்தே கழிக்க வேண்டும் என்பதால் மேலும் பல பிறவிகளை எடுக்கிறோம் –
பாபங்கள் தீய பிறவிகளில் பிறப்பித்து சம்சாரத்தில் கட்டுப்பட வைக்கின்றன
புண்யங்கள் நல்ல பிறவியில் பிறப்பித்து சம்சாரத்தில் கட்டுப்படுத்துகின்றன –

கர்மத்தின் காரணம்
நாம் பாப புண்யங்களை சேர்ப்பதற்கு காரணம் அவித்யை தான் -அவித்யை என்றால் அறிவின்மை -தவறான அறிவு
அதன் வடிவத்தை ஸ்ரீ பராசர முனிவர் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் கூறுகிறார்
வேதார்த்த ஸங்க்ரஹம் -பவ பயம் -கோரம் ஸம்ஸாரம் -அநாதி அவித்யா சஞ்சிதா –
அநாத்மனி ஆத்ம புத்தியே அஹங்காரம்
நான் என்பது ஆத்மாவையே குறிக்கும்-உடலில் நின்றும் வேறு பட்டவர் – -இத்தை அறியாமல் உடலே நான் என்று நினைத்து
ஆத்மாவைக் காட்டிலும் வேறே ஒரு பொருளை ஆத்மா என்று நினைக்கிறோம் –
இதுவே தேக ஆத்ம ப்ரமம் -என்றும் அஹங்காரம் என்றும் பெயர்
இது அவித்யையின் ஒரு வடிவம்
இவ்வுலகம் அனைத்தும் பகவானால் படைக்கப்பட்டு ரக்ஷிக்கப்பட்டு -அவரது சொத்தாகவே உள்ளது
நான் தவறாக சில பொருள்களை நம்மது என்று நினைத்தால் அதற்கு மமகாரம் என்று பெயர்
இது அவித்யையின் இன்னொரு வடிவம்
ஆத்மா ஸ்வதந்த்ரன் என்ற நினைவும் அவித்யையின் ஒரு வடிவமே –
இவ்வாறு பிறவி எடுத்த ஒருவர் அஹங்கார மமகார -இரண்டு வித அவித்யைகளால் -மயங்கி செயல்களை செய்து –
அதன் பலனாக பாப புண்யங்களை அடைகிறார்
அவற்றைக் கழிப்பதற்கு மறுபடியும் பிறவி எடுக்கிறார் —

ஸம்ஸார சக்கரம்
இப்படி ஒரு சமயத்தில் அவித்யை இருந்து கர்மங்களை சேர்த்து இப்போது பிறவி எடுக்கிறோம் என்பதோடு நிற்க வில்லை
அப்படி எடுக்கும் பிறவிகளில் மறுபடியும் கர்மங்களை சேர்க்கிறோம் -அதனால் மறுபடியும் பிறவி எடுக்கிறோம்
எனவே சம்சாரம் என்பது அவித்யையும் கர்மமும் மாறி மாறி வரும் சக்கரம் ஆகும்
கர்மம் அடியாக எடுத்த பிறவியில் மீண்டும் எதனால் கர்மங்கள் சேர்க்கிறோம் என்றால் அதுக்கு அடி வாசனைகளும் ருசிகளும் –
நான் செய்யும் செயல்களால் பாப புண்யங்கள் ஏற்படுவது போலவே வாசனையும் ருசியும் ஏற்படுகின்றன –
வாசனை என்றால்
முன் செய்த செயல்களால் நம்மிடம் உண்டான பதிவுகள்
நான் எந்தச் செயலை அடிக்கடி செய்கிறோமோ அவற்றைப் பற்றிய பதிவுகள் நம்மிடம் அடிக்கடி ஏற்படும் –
எனவே மறுபடியும் அந்தச் செயலை செய்வது எளியதாக இருக்கும் –
அதே போல் பிறவியை எடுத்த பின்பு உலகப் பொருள்களை அனுபவிப்பதே நமக்குத் பழக்கப் பட்டது என்பதால்
மறுபடியும் மனஸூ அதிலேயே செல்லும் –
பரமாத்மாவை பற்றிய சிந்தனையில் ஈடுபடாது -அதனால் மறுபடியும் அவித்யையே ஏற்படுகிறது
ருசி என்றால்
முன் ஜென்மங்களில் ஏற்பட்ட அனுபவங்களால் இயற்கையாக ஏற்படும் விருப்பு வெறுப்புகள்
அவற்றின் அடிப்படையில் தான் இப்பிறவியில் நமக்கு இயற்கையாக எது பிடித்து இருக்கும் என்பது முடிவாகிறது
அதனால் உலகப் பொருள்களின் மேல் ஈடுபாடு இயற்கையாகவே ஏற்படும் -பரமாத்மா இடம் அல்ல –
இதனாலும் மேலும் அவித்யையே ஏற்படுகிறது –

ப்ரவாஹ அநாதித்வம் -பீஜாங்குர நியாயம் –

பிறவியின் ஏற்றத் தாழ்வுகள்
நாம் எடுக்கும் பிறவிகளில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன
அவனே ஸ்ருஷ்டிக்கிறார் -கர்மம் அடியாகப் பிறக்கிறோம்
ஏற்றத்தாழ்வுகளை இவர்களில் யார் காரணம்
ஸ்ரீ விஷ்ணு பூரணம்சொல்லும் -அவன் நிமித்த மாத்ரமாகவே உள்ளான் -பொதுவான காரணம் ஆகிறார்
பிறவிகளுக்கு விசேஷ முக்ய காரணம் அந்த அந்த ஜீவனின் பாபமும் புண்ணியமும் தான்
ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
வைஷம்ய நைர் க்ருண்யே ந சாபேஷாத் வாத் –2-1-34-
அவனுக்கு பாகுபாடு பார்ப்பது என்னும் குற்றமோ கருணை இன்மை என்னும் குற்றமோ வாராது –
அவன் ஸ்ருஷ்டிக்கும் பொழுது அந்த அந்த ஜீவனின் கர்மத்தை எதிர்பார்த்து அதன் அடிப்படையிலே
ஸ்ருஷ்டிப்பதால் -என்கிறார் வேத வியாசர் இதில் –

முக்தர்களும் நித்ய ஸூரிகளும்
முக்தர்கள் -ஜீவாத்மாகில் இரண்டாவது வகை –
பல நாள்கள் சம்சாரத்திலே கட்டுப்பட்டு இருந்து –
பகவானின் அருளால் -பக்தி சரணாகதி -முதலான உபாயங்களில் ஒன்றை அனுஷ்ட்டித்து –
அதன் மூலம் கர்மங்களைத் தொலைத்து
சம்சாரத்தை நீத்து
தங்கள் இயற்கையான தன்மைகளை விளங்கப் பெற்று
பகவானை அடைந்து -அனுபவித்து -அதனால் ஏற்படும் மகிழ்ச்சி உந்த கைங்கர்யம் செய்பவர்கள்

நித்யர்கள்
என்றுமே பாப புண்யங்களின் தொடர்பே இல்லாமல்
அதனால் சம்சாரத்தில் என்றுமே கர்மம் அடியாகப் பிறக்காமல்
பரமபதத்தில் அவனுடன் எப்போதும் சேர்ந்தே இருந்து
என்றுமே அடிமைத்தனத்தைப் புரிந்து கொண்டு -அதற்கு ஏற்ப தொண்டு செய்து கொண்டு இருக்கும்
ஆதி சேஷன் கருடன் விஷ்வக்ஸேனர் போல்வார் –

———

ப்ரக்ருதி நித்ய விபூதி காலம் ஜீவாத்மா
பரமாத்மா தர்ம பூத ஞானம் மேலே பார்த்து த்ரவ்யங்கள் பார்த்து முடிப்போம்
மேலே அத்ரவ்யங்கள் பார்த்து முடிப்போம் –

பாடம் -28- தர்ம பூத ஞானம்

இவர் குணசாலி -குணம் இவர் இடம் உள்ளது -அறிவாளி -அறிவு என்பதே தர்ம பூத ஞானம் –

ஐந்தாவது த்ரவ்யம்
இதன் லக்ஷணம்
ஸ்வயம் ப்ரகாஸமாகவும் –அசேதனமாகவும் –விஷயம் உடையதாகவும் -இருக்கும் த்ரவ்யம்
ஸ்வயம் பிரகாசம் -என்பதால் ப்ரக்ருதி -காலம் -இவற்றில் இருந்து வேறுபாடு காட்டப் பட்டது
அசேதனம் என்பதால் ஜீவாத்மா பரமாத்மா இவற்றில் இருந்து வேறுபாடு காட்டப்பட்டது –
விஷயம் உடையது என்பதால் நித்ய விபூதியில் இருந்து வேறுபாடு ஸித்தம்
மற்ற ஒரு லக்ஷணம்
அர்த்த ப்ரகாஸத்வம்
அதாவது பொருள்களை ஆத்மாவுக்குக் காட்டிக் கொடுத்தல் –
ஆத்மா வேறு –அவர் இடம் உள்ள அறிவு வேறு –
ஆத்மா அணுவாக தனக்குத் தான் தோற்றம் அளிப்பவராக -தன்னை மட்டுமே விஷயமாகக் கொண்டு உருவம் மாறாமல் இருக்கும்
தர்ம பூத ஞானம் விபுவாக தனக்குத் தானே தோற்றம் அளிக்காமல் -ஆத்மாவுக்கே தோற்றம் அளிப்பதாய் –
உலகப் பொருள்களையும் விஷயமாகக் கொண்டு தன் உருவம் மாறாக் கூடியதாகவும் இருக்கும்
நான் அறிகிறேன் என்று உலகில் அனைவரும் உணருவதாலும்
வேதங்களிலும் ஆத்மாவை விஞ்ஞாதா -சேதனன் -என்று எல்லாம் சொல்லுகிறபடியாலும்
விஞ்ஞாதா -அறிவாளி -அறிவு உடையவன் –
ஆத்மாவைத் தவிர அவருடைய அறிவு என்று வேறு ஓன்று என்று தனியாக இருப்பது தெரிகிறது –

தர்மம் பொது சொல்- குணம் நிறம் செயல் த்ரவ்யம் இவற்றைச் சொல்லும் -இவை -தர்மியை அண்டி இருக்கும் –
தர்மி ஞானம் தர்ம ஞானம் -இரண்டும் அறிவு -இது ஆத்மாவை அண்டி இருக்கும்-
தர்மி ஞானம் -ஆத்மாவைச் -சேதனனைச் சொல்லி– தர்ம பூத ஞானம் சேதனன் இடம் உள்ள சைதன்யத்தைச் சொல்லும் –

தர்ம பூத ஞானத்தின் செயல்பாடு
ப்ரஞ்ஞா ச தஸ்மாத் ப்ரஸ்ருதா புராணீ -முதலான பல இடங்களில் சாஸ்திரங்களில் சொல்லப்படுகிற படியால்
ஆத்மாவின் தர்ம பூத ஞானம் பரவத் தொடங்கும்
ப்ரஸ்ருதா-ஓடுகிறது -ப்ரவாஹம் போல் ஞானம் ஓடும்-
ஒரு இந்திரியம் ஓடினால் -அதன் மூலம் அறிவு வெளியே ஓடும் -அனைத்தையும் கட்டுப்படுத்து -கீதாச்சார்யர்
கண் முதலான இந்திரியங்கள் மூலம் உடலில் இருந்து வெளியே சென்று வெளியில் உள்ள பொருள்களை அடைந்து
அவற்றை ஆத்மாவுக்குக் காட்டிக் கொடுக்கிறது –
ஒரு ஜீவாத்மா விழித்து இருக்கும் பொழுது அதன் ஞானம் புறப்பட்டு வெளியே சென்று பொருள்களைக் காட்டும்
ஜீவாத்மா தூங்கும் பொழுது இந்திரியங்கள் இயங்காத படியாலும்
தமோ குணம் அதிகமான படியாலும் தர்ம பூத ஞானம் வெளியே செல்ல இயலாது –

அதனால் நாம் பொருள்களை அறிவது இல்லை –
இந்திரியம் மட்டும் செல்வது இல்லை -அறிவும் செல்கிறது —
இதனால் தான் தூக்கம் ஸ்வப்னம் அவஸ்தைகள் -மனஸ் மட்டும் வேலை -ஆழ்ந்த உறக்கம் மனசும் வேலை செய்யாமல் –
சங்கோசம் விகாசம் அறிவுக்கு -உண்டே
இப்படிக் கட்டுப்படுத்துவதே தமோ குணம் -ஞானம் இயற்கையாகவே பரவக்கூடியது –

இப்படி விரிதல் சுருங்குதல் முதலான நிலைகளையும் -வெளியே செல்லுதல் முதலான செயல்களையும் கொண்டபடியால்
தர்மபூத ஞானம் ஒரு த்ரவ்யமாகவே கொள்ளப் படுகிறது –
நியாய சாஸ்திரத்தில் ஞானம் -புத்தி -என்பது ஆத்மாவின் ஒரு குணம் மட்டுமே -த்ரவ்யம் அல்ல என்று சொல்லுகிறார்கள்
நம் விஸிஷ்டாத்வைத சித்தாந்தத்தில் ஞானம் ஒரு த்ரவ்யம் ஆகும்
ஒரு பொருள் எப்பொழுதும் மற்ற ஒரு பொருளையே அண்டி இருந்தால் அது அதற்கு குணம் என்று சொல்லப்படுகிறது –
எனவே ஞானம் த்ரவ்யமாக இருந்தாலும் அத்தை ஆத்மாவின் குணம் என்று சொல்வதிலும் ஒரு தவறும் இல்லை
தீபம் என்னும் தேஜஸ்ஸூ த்ரவ்யத்தை பிரபை என்னும் தேஜஸ்ஸூ த்ரவ்யம் அண்டி இருப்பது போல்
ஜீவாத்மா என்ற ஞான த்ரவ்யத்தை தர்ம பூத ஞானம் என்னும் ஞான த்ரவ்யம் அண்டி உள்ளது –

நான் உயரமாக இருக்கிறேன் மோதிரம் அணிந்து இருக்கிறேன்
அண்டியே இருப்பதே குணம் -த்ரவ்யமாகவும் இருக்கலாம்
நடத்தல் செயல் நடப்பவனை அண்டியே இருக்கும் -செயல் குணம்
வெண்மை நிறம் வேஷ்ட்டிக்கு குணம்
மோதிரம் கழற்றி விடலாம்
ஆத்மாவுக்கும் தர்ம பூத ஞானத்துக்கும் விட்டுப் பிரியாத -அப்ருதக் ஸித்த விசேஷணம் –
எனவே குணம் என்றும் த்ரவ்யம் என்றும் சொல்லலாமே
ஆத்மாவை -ஆஸ்ரயம் -விட்டு பிரியாமல் -வெளியில் போயும் இருக்கும் தர்ம பூத ஞானம் –
இதனால் குண பூத ஞானம் என்று சொல்லாமல் -தர்ம பூத ஞானம் – என்கிறோம் –

தர்ம பூத ஞானத்தின் தன்மைகள்
ஆத்மா எப்படி நித்யமானவரோ அதே போலே ஆத்மாவின் தன்மையான தர்ம பூத ஞானமும் நித்யம் என்று வேதம்
ந விஞ்ஞாது விஞ்ஞாதே விபரி லோபோ வித்யதே
ததா ஹேய குண த்வம்சாத் அவ போதய குண ப்ரகாஸந்தே ந ஜன்யந்தே நித்யா ஏவ ஆத்மநோ ஹி தே -என்ற இடத்திலும்
(ப்ரகாஸந்தே ந ஜன்யந்தே-விளங்குகின்றன ஒழிய பிறப்பது இல்லை-நித்யா ஏவ-நித்யமாகவே இருக்கும் )
ஒரு ஜீவாத்மா முக்தி அடையும் பொழுது அவருக்கு புதிதாக அறிவு உண்டாவது இல்லை –
இயற்கையாக அவரிடம் உள்ள அறிவு முழுவதுமாக வெளிப்படுகிறது அவ்வளவே என்று சொல்லப் படுகிறது –
எனக்கு அறிவு உண்டானது -அறிவு நஷ்டமானது என்று உலகில் நாம் சொல்வது எல்லாம் உண்மையில்
தர்ம பூத ஞானத்தின் உத்பத்தியையோ அழிவையோ குறிக்கவில்லை
தர்மபூத ஞானம் உடலில் இருந்து பரவி வெளியே வந்து ஒவ்வொரு பொருளின் தொடர்பை அடைந்து
அதைக் காட்டிக் கொடுக்கும் பொழுது அந்தப் பொருளைப் பற்றின ஞானம் உண்டானது என்று சொல்கிறோம் –
உண்மையில் தொடர்பு மட்டுமே புதிதாக உண்டாகியது
இந்த ஞானம் இயற்கையாக விபுவாக -உலகு எங்கும் பரவியதாக -இருக்க வேண்டும்
நித்ய ஸூரிகளுக்கும் முக்தர்களுக்கும் அப்படித்தான் இருக்கும் –
பத்தர்களான சம்சாரிகளுக்கு மட்டும் அவர்கள் செய்த பாப புண்யங்களைப் பொருத்து அதனுடைய பரவும் தன்மை தடுக்கப்படும்
கல்லுக்குள் உள்ள தர்ம பூத ஞானம் வெளியே வர முடியாது –செடி கொடிகளில் சிறிது வரலாம் –
மனிதனாக இருந்தால் அதிகமாக வரலாம் -தேவர்களுக்கு இன்னும் அதிகம் –

தர்ம பூத ஞானத்தின் நிலைகள்
தர்ம பூத ஞானம் தான் -ஞானம் -சைதன்யம் -மதி -ப்ரஞ்ஞா- ஸம்வித் -திஷணா -தீ -மநீஷா –சேமுஷீ –மேதா –புத்தி –
முதலான சொற்களால் வழங்கப்படுகிறது
நியாய சாஸ்திரத்தின் படி நமக்குத் பிடித்த பொருளைப் பற்றின அனுபவம் ஏற்பட்டால் அதனால்
ஸூகம் என்ற தனி குணம் ஆத்மாவுக்கு உண்டாகும் -அது அனுபவிக்கப்படும் –
ஆனால் இப்படி தனியாக ஒரு குணத்தை நம் ஸித்தாந்தத்தில் ஏற்க வில்லை
ஸூகம் என்பது ஞானத்தைக் காட்டிலும் வேறான பொருள் இல்லை –
இஷ்டமான விஷயத்தின் அனுபவம் என்கிற ஞானம் தான் ஸூகம் ஆகும் –
பிடிக்காத விஷயத்தின் அனுபவம் என்கிற ஞானம் தான் துக்கம் ஆகும்
காமம் ஆசை -சங்கல்பம் முடிவு -விசிகித்சா சந்தேகம் -ஸ்ரத்தை -அஸ்ரத்தை -உறுதி உறுதியின்மை -வெட்கம் -அறிவு -பயம்
முதலான அனைத்துமே மனத்தின் மாறுபாடுகளே என்று ஸாஸ்த்ரம் சொல்லும்
அதன் பொருள் யாது என்னில் இவை எல்லாம் மனத்தின் தாக்கத்தால் தர்ம பூத ஞானத்தின் மாறுபாடுகள் என்பதே –
ஞானத்தின் வேறுபாடுகள் தான் -மனசின் துணையால் தர்ம பூத ஞானம் இத்தனை மாற்றங்கள் என்றபடி –

தர்ம பூத ஞானம் பற்றி பல மதஸ்தர்கள் உடைய க்யாதி வாதம் மேலே பார்ப்போம்

———

பாடம் –29-க்யாதி வாதம்

எந்த தரிசனமாக இருந்தாலும் உலகத்தின் உண்டாக்கும் அழிவு பிராணிகளின் பிறப்பு இறப்பு
முதலானவை எப்படி நடக்கின்றன என்பதை ஆராய்வது போல்
அறிவு என்றால் என்ன
நாம் அறிவு பெறுவது எப்படி
ஒரு அறிவு சரியாதனதா தவறானதா என்று எப்படி அறியலாம்
முதலான கேள்விகளுக்கும் பதில் உரைக்க வேண்டும் –
இதற்குத் தான் க்யாதி வாதம் என்று பெயர்

கியாதி என்றால் அறிவு
வாதம் -ஆராய்ச்சி

தன்மைகளையும் சேர்த்தே அறிகிறோம் -வெண்மை அளவு சுவை செயல் இவற்றைச் சேர்த்தே பொருளை –
ச விசேஷ -இது என்றாலே அருகில் -அது -உது-போல் – அறிகிறோம் –
பொருள் பதார்த்தம் -என்றே அறிகிறோம் -ஒரு ஏகத்துவம் அறிகிறோம் —
இங்கு ஒரு பொருள் உள்ளது -சத்தை உடன் இருப்பதையே சுருக்கமாக இது ஒரு பொருள் என்கிறோம் –
இது பொருள் தன்மை -விசேஷணங்கள் -இரண்டையும் அறிந்து வேறே ஒன்றில் இருந்து வேறுபடுத்திக் காட்டும்
விசேஷ்யம்–பிரகாரம் விசேஷணம் இவற்றை அறிகிறோம் –

அதில் முக்கியமாக பிரமம் -தவறான அறிவு ஏற்ப்படி ஏற்படுகிறது என்பதே முக்யமாகப் பேசப்படுகிறது –
அந்த முறையில் நம் விசிஷ்டாந்த சித்தாந்தத்தில் ஏற்ப்படி என்று பார்ப்போம்

அதற்கு முன்பு மற்ற தரிசனத்தில் எப்படி என்பதை முதலில் பார்ப்போம் –
ஸ்லோகம் ஐந்து கியாதி வாதங்களை சொல்லும்
1- ஆத்ம க்யாதி -புத்தர்களால் முன் வைக்கப்படுகிறது
2-அஸத் க்யாதி -சாருவாகர்களால் தழுவப்பட்டது
3-அக்யாதி -மீமாம்ஸகர்களில் ஒரு பிரிவினரான ப்ரபாகரர்களால் சொல்லப்படுகிறது
4-அந்யதா க்யாதி -நியாய மாதத்தில் ஒப்புக் கொள்ளப்படுகிறது
5-அநர்வசநீய க்யாதி -அத்வைத மதத்தால் ஏற்கப் படுகிறது
6-யதார்த்த கியாதி -விசிஷ்டாத்வ மதத்தில் ஏற்கப் படுகிறது –

ஆத்ம க்யாதி
புத்தர்கள் -யோகாச்சார்கள் -ஞானமே வடிவான ஆத்மாவைத் தவிர உலகில் எதுவுமே உண்மை அல்ல என்பர் –
குடம் சுவர் கயிறு போன்ற பொருள்கள் உலகில் இல்லை -எல்லாம் அறிவின் வெவ்வேறு வடிவங்களே
அந்த அறிவே தான் ஆத்மா
எனவே ஞான வடிவமான ஆத்மாவே கூடமாகவும் சுவராகவும் துணி யாகவும் அறியப்படுகிறார் –
இதுவே ஆத்ம க்யாதி
அவிபாகோபி புத்தயாத்மா விபர்யாசித தர்வநை
க்ராஹ்ய க்ராஹக ஸம் வித்தி பேதவாந் இவ லஷ்யதே –என்பதே அவர்கள் கூற்று –
கிரஹணம் க்ரஹீதா க்ராஹ்யம் -மூன்றும் -அறிவும் அறிவாளியும் அறியும் பொருளும் ஒன்றே –
ஞானத்தொடர் ஆத்மா க்ஷணிகம் அனைத்தும் -வேறு பாடு இருப்பது போல் தோற்றும் என்பர் –
சேர்ந்தே தோற்றம் அளிக்கிறது -அறிவு தான் பொருள் -ஸஹ ஆலம்பநம் –
உண்மையில் ஞானம் மட்டுமே உள்ளது –
அதுவே தான் நம் தோஷங்களின் காரணமாக
அறியப்படும் பொருள் என்றும் —
அறிவு என்றும் –
அறிபவன் என்றும் மூன்றாகத் தோற்றுகிறது என்பதே அவர்கள் மதம் –

அஸத் க்யாதி
இது சாருவாகர்கள் சொல்வது
இவர்கள் ப்ரத்யக்ஷம் என்கிற ஒரே பிரமாணத்தை ஏற்கிறார்கள் –
புலன்களால் அறியப்படுவது மட்டும் உண்மை என்பர்
கயிற்றைப் பார்த்து பாம்பு என்று பிரமிக்கும் பொழுது இல்லாத பாம்பு தான் தோற்றம் அளிக்கிறது
எனவே பிரமம் ஏற்படும் இடங்களில் -அஸத் -இல்லாத பொருள் தான் தோற்றம் அளிக்கிறது என்பது அவர்கள் மதம் –

அந்யதா க்யாதி -இது நியாய மாதத்தில் சொல்லப்படுவது -மீமாம்சை -பாட்ட மதம் -இதே போல்–
சில சந்தர்ப்பங்களில் கண் முன்னாள் இருக்கும் கிளிஞ்சல் நமக்கு வெள்ளியாகத் தோற்றும்
அங்கு கண்ணுக்கும் கிளிஞ்சலுக்கும் தொடர்பு ஏற்படுகிறது –
ஆனால் கண்ணில் இருக்கும் தோஷத்தால் அது கிளிஞ்சல் என்று அறியவில்லை
பளபளப்பான ஏதோ ஒரு பொருள் உள்ளது என்று மட்டும் அறிகிறேன் –
உடனே கடையில் என்றோ பார்த்த வெள்ளியின் நினைவு ஏற்பட்டு அதே போன்ற வெள்ளி தான்
நம் கண் முன் இருக்கிறது என்று நினைக்கிறேன்
அதனால் ஒரு பொருள் மற்ற ஒரு பொருளாக அறியப்படுகிறது –
இதுவே அந்யதா -வேறு மாதிரியான க்யாதி அறிவு எனப்படுகிறது –

அக்யாதி -இது மீமாம்சை ப்ரபாகர மதத்தில் சொல்லப்படுகிறது –
இவர்களும் கண் கிளிஞ்சலைப் என்றும் -அது கிளிஞ்சல் என்று தெரியவில்லை என்றும்
பளபளப்பாக இருப்பதைக் கண்டு வெள்ளியின் நினைவு ஏற்படுகிறது என்றும் ஒப்புக் கொள்கிறார்கள்
ஆனால் அதற்குப் பிறகு கிளிஞ்சலை வெள்ளி என்று கிரஹிக்கும் ஓர் அறிவு ஏற்படுகிறது என்று அவர்கள் ஏற்க வில்லை
கண் முன் இருக்கும் பொருளுக்கும் நினைவுக்கு வந்த வெள்ளிக்கும் உள்ள வேறுபாட்டை அறியாத படியால் தான் பிரமம் ஏற்படுகிறது
இரண்டும் ஓன்று என்று அறியத் தேவையில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்
ஆகவே இரண்டும் ஒன்றே என்ற அறிவு தோன்றுவதாகக் கொண்டால் அது அந்யதா க்யாதி
அவை வேறு என்ற அறியாமை மட்டுமே போதுமானது என்று சொன்னால் அக்யாதி –
அசம்சர்க்க அக்ரஹா தொடர்பு இல்லாமை அறியாமை இது –
ஞானம் உண்மையாகவே இருக்கும் -தவறாகவே இருக்காது என்பர் –
வெள்ளியும் கிளிஞ்சாலும் வேறே வேறே என்று அறியாமல் போனேன் என்பர் –

அநிர்வசநீய க்யாதி -இது அத்வைதிகளால் சொல்லப்படுவது -உலகமே பொய்யானது என்பர் –
பரமாத்மாவையே அவித்யை மூடிக் கொண்டு இருப்பதால் உலகம் தோற்றுகிறது
நாம் ஒரு கிளிஞ்சலை வெள்ளி என்று நினைக்கும் இடத்தில் அங்கு இருக்கும் அவித்யை என்ற பொருள்
உருமாறி வெள்ளியின் வடிவத்தை அடைகிறது –
அந்த வெள்ளிக்கு அநிர்வசநீயமான வெள்ளி என்று பெயர் -ஏன் என்றால் அது இருக்கும் பொருள் என்று சொல்ல முடியாது –
பின் ஒரு காலத்தில் பொய் என்று அறியப்படுகிற படியால் இல்லாத பொருள் என்றும் சொல்லப்பட முடியாது
தோற்றம் அளிக்கிற படியால் -அநிர்வசநீயம் -சொல்லப்பட முடியாதது என்றே அது சொல்லப்படுகிறது –

வேதாந்த பரிபாஷை -கிளிஞ்சல் வடிவில் அவித்யை
பளபளப்பை கண்டு -வெள்ளி நினைவு -பதிவு ஆத்மா இடம் உள்ளது
ஸாதர்சம் -தூண்டப்பட்டு -கண்ணில் காமாலை தோஷம் -அறியாமல் -அவித்யையே வெள்ளியாக உருவம் –
பார்க்கும் பொழுது தான் இது தோன்றும் -இந்தவித வெள்ளி உண்டாகிறது –
அவித்யையே வெள்ளியாக -ஸத் என்றும் அஸத் என்றும் சொல்ல முடியாதே இதை –

யதார்த்த க்யாதி –இது நமது விசிஷ்டாத்வைத சித்தாந்தம் -இதன் படி அனைத்து பரிவும் சரியானது தான்
தவறான அறிவு என்று ஒன்றே கிடையாது
கிளிஞ்சலை வெள்ளி என்று காட்டும் அறிவும் கூட இல்லாத பொருள் எதையும் காட்டவில்லை –
ஸ்ருஷ்டியின் தொடக்கத்தில் பகவான் பஞ்சீ கரணம் செய்து பஞ்ச பூதங்களையும் கலந்த படியால்
ப்ருத்வியாலான கிளிஞ்சலிலும் வெள்ளியை உருவாக்கும் தேஜஸ்ஸின் சிறு அவயவங்கள் உள்ளன
எனவே நாம் அந்த வெள்ளியின் அவயவங்களை அதிகமாகவும் கிளிஞ்சலின் அவயவங்களை குறைவாகவும் அறிந்தால்
அது வெள்ளி என்று சொல்லி விடுகிறோம் –
அந்த அறிவு தவறானது அல்ல -இல்லாத எந்தப் பொருளையும் க்ரஹிக்க வில்லை -யதார்த்தம் சர்வஞ்ஞாம் –
உண்மையை முழுமையாகக் கிரஹிக்க வில்லை என்பது மட்டுமே –
அது அறிவின் தோஷம் ஆகாது -இப்படி ஒரு அறிவு ஏற்பட்டால் அதனால் ஏற்படும் செயல் வீணாகப் போகும் –
முழுமையான உண்மையை அறிந்தால் அதனால் ஏற்படும் செயல் பயன் உள்ளதாகும் என்பதே வேறுபாடு –

பிரதி நியதி நியாயம்
நெல் இல்லா விட்டால் சத்ருசமாக வ்ருஹீ கொள்ளலாம் -நீவாரங்கள் கொண்டு யாகம் செய்யலாம் –
ததேவ சத்ருசம் தஸ்ய -த்ரவ்ய -ஏக தேச பாவாத் -சில அவயவங்கள் அதிலும் இருக்குமே –
கானல் நீர் மணலிலும் நீரின் அவயவங்கள் உண்டே -பஞ்சீ கரணத்தால் –
கயிறு பாம்பு -இங்கு இரண்டுமே பிருத்வியாலே ஆனவையே -இங்கு பிரதி நியாயம் -உண்டே
சர்வம் ஞானம் யதார்த்தம் இதனாலே -செயல் வீணாக போனால் தானே பிரமம் ஆகும் –

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி/ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் /ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை /ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி- –2-10–கிளர் ஒளி இளமை–சாரங்கள் —

May 21, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஏதந் நிஜ அர்த்தி தம் இஹைவ ஹரி பிரதாதும்
ஆ ஸேதிவாந் வந மஹீத ரமித்யவேஷ்ய
பிராப்யம் தமேவ ச தத் அன்வயி நஞ்ச சர்வம்
ப்ரா சீகஸத் ஸ தசமே தசகே முநீந்த்ரர்–20-

————–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

தீப்த ஆச்சர்ய ஸ்வபாவம் முகரித ஜலஜம் வர்ஷு காம்போத வர்ணம்
சைலஸ் சத்ராபி குப்தா ஸ்ரீ த மதி விலசத்தே திமாபீத கவ்யம்
சம்ப்ராம்போத் ஷிப்த பூமிம் பிரணத மத் அனுகுணம் பூதனா சேதனாந்தம்
பூர்வாச்சார்யம் ஸ்ருதீ நாம் ஸூப ஸவித கிரி ஸ்தாநநோ நிர் விஸேஸ –2-10-

1-தீப்த ஆச்சர்ய ஸ்வபாவம் –வளர் ஒளி மாயோன்- -நிரவதிக தேஜஸ்ஸை யுடையவனுமாய் -ஆச்சார்ய சக்தி யுக்தனுமாய் –

2-முகரித ஜலஜம் —அதிர்குரல் சங்கத்து அழகர்–முழங்கா நிற்கிற திருச்சங்கை யுடையனுமாய் –

3-வர்ஷு காம்போத வர்ணம் -புயல் மழை வண்ணர்–நீல மேக ஸ்யாமளனுமாய் –

4-சைலஸ் சத்ராபி குப்த ஆஸ்ரிதம் –பெருமலை எடுத்தான்—கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையாலே கோ கோப ஜாதிகளை ரஷித்தவனுமாய் –

5-அதி விலசத்தே திம் —-அற முயலாழிப் படையவன்–ஆஸ்ரித விரோதி நிரஸனத்தில் அத்யந்தம் முயலா நிற்கிற திரு ஆழியை யுடையனுமாய் –

6–ஆபீத கவ்யம்—-உறியமர் வெண்ணெய் யுண்டவன்–உறியில் அமைந்து இருக்கிற வெண்ணெயை யுண்டவனுமாய் –

7-சம்ப்ராம்போத் ஷிப்த பூமிம்–நிலமுன மிடந்தான்– -பூமியை உத்தரித்தவனுமாய்

8-பிரணத மத் அனுகுணம் –வலம் செய்யும் ஆய மாயவன்–ஆஸ்ரிதற்கு ப்ரதக்ஷிண பிரணாமாதிகளாலே சக்தியைக் கொடுத்து
அவர்களுக்கு அனுரூபனுமாய் –தன்னையும் சக்தியையும் கொடுப்பவனுமாய் –

9-பூதனா சேதனாந்தம்—-அழக்கொடி யட்டான் –பூதனையை முடித்தவனுமாய்

10-பூர்வாச்சார்யம் ஸ்ருதீ நாம் –வேத முன் விரித்தான்– வேதங்களுக்கு எல்லாம் முந்தின ப்ரவர்தகனுமாய் இருக்கிற எம்பெருமானை

ஸூப ஸவித கிரி ஸ்தாநநோ நிர் விஸேஸ –கிளர் ஒளி இளமை என்னும் தசகத்திலே அதி ஸமீப வர்த்தியாய்
அதி மநோ ஹரமான திருமாலிருஞ்சோலையிலே கண்டு ஆழ்வார் அனுபவித்து அருளினார் -என்கிறார் –

———

இத்யப்ரூதாத்ய ஸஹ்ய ஷண விரஹதயா மானுஷத்வே பரத்வாத்
சர்வாத் ஆஸ்வாதத்வ பூம்நா வியசன ஹர தயா ஸ்வாப்தி ஸம்ப்ரதீ மத்த்வாத்
வைமுக்ய த்ராஸ யோகாத் நிஜ ஸூஹ்ருத வ நாத் முக்தி சாரஸ்ய தாநாத்
கைங்கர்ய உத்தேஸ்ய பாவாத் ஸூப நிலயதயா சாதி போக்யம் த்வதீயே–2-11-

த்வதீய சதகத்தில்
பத்து தசகங்களாலும் ப்ரதிபாதிதங்களான அர்த்தங்களை ஸங்க்ரஹித்துக் காட்டி அருளுகிறார் –

1-இத்யப்ரூதாத்ய ஸஹ்ய ஷண விரஹதயா –க்ஷண மாத்ரமும் துஸ் ஸஹமாம்படியான தன் விரஹத்தை யுடைத்தாகையாலும்

2-மானுஷத்வே பரத்வாத் –மனுஷ்ய ஸஜாதீயனாய் அவதரிக்கச் செய்தே பரனாய் இருகையாலும்

3-சர்வாஸ் வாதத்வ பூம்நா -ஸமஸ்த மதுர பதார்த்தங்களுடைய ரஸத்தை யுடைத்தான போக்யதையை யுடையனாகையாலும்

4-வியசன ஹர தயா –ஆஸ்ரிதருடைய வியசனத்தை ஹரிக்குமவன் ஆகையால்

5-ஸ்வாப்தி ஸம்ப்ரதீ மத்த்வாத்–ஆஸ்ரிதரோடே ஸம்ஸ்லேஷித்து அத்தாலே அத்யந்த ப்ரீதன் ஆகையாலும்

6-வைமுக்ய த்ராஸ யோகாத் -ஆஸ்ரிதர் தன்னை விடில் செய்வது என் என்று மிகவும் பீதன் ஆகையாலும்

7-நிஜ ஸூஹ்ருதவநாத் -ஆஸ்ரிதருடைய சம்பந்த சம்பந்திகளையும் ரக்ஷிக்குமவன் ஆகையாலும்

8-முக்தி சாரஸ்ய தாநாத்-மோக்ஷ பிரதனாகையாலும்

9-கைங்கர்ய உத்தேஸ்ய பாவாத் -கைங்கர்ய உத்தேச்யன் ஆகையாலும் –

10-ஸூப நிலயதயா சாதி போக்யம் த்வதீயே–தர்ச நீயமான தெற்குத் திருமலையிலே நின்று அருளுகையாலும்

எம்பெருமான் அத்யந்த போக்யன் என்று த்விதீய சதகத்திலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –
அநிதர சாதாரணம்– திவ்ய மங்கள விக்ரஹம் உள்ளவனுக்கே மூன்றாம் பத்தில்-ஸூப ரூபம் ஸூபாஸ்ரயம் –

————

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –

இதில் போக்யத்வ ஸ்தாபகங்களாக -இரண்டாம் பத்தில் பத்து திருவாய் மொழிகளாலும்
ப்ரதிபாதிதங்களான பத்து குணங்களையும் ஸங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் –

த்வதீயே அதி கிலேச க்ஷண விரஹ முத்துங்க லலிதம்
மில்லத் சர்வஸ் வாதம் வியஸன சமனம் ஸ்வாப்தி முதிதம்
ஸ்வ வைமுக்யத் ரஸ்தம் ஸ்வ ஜன ஸூஹ்ருதம் முக்தி ரசதம்
ஸ்வ கைங்கர்யோதேஸ்யம் சுபகச விதஸ்தம் நிரவிசத் –6-

முதல் பத்தால் ஆஸ்ரயணீயன்-மோக்ஷ உபாயம் அவனே /
இரண்டாம் பத்தால் -இவன் அனுபவ போக்யன் –பரம புருஷார்த்தம் அவனே

அதி கிலேச க்ஷண விரஹ –வாயும் திரை –
ஸர்வஸ் ஸ்மாத் பரன்-உத்துங்க லலிதம் -திண்ணன் வீடு –
சர்வ மதுர ரஸ ஊனில் வாழ்
ஆஸ்ரித வியஸன சமன ஸ்வபாவம் -ஆடி யாடி
ஸ்வ ஆஸ்ரித பிராப்தி ஸந்துஷ்டன் -ஆஸ்ரித சம்ச்லேஷ பிரியன் -அந்தாமத்து அன்பு
ஆஸ்ரித விரகம் அஸஹத்வம் -வைகுந்த
சம்பந்த சம்பந்திகளுக்கும் ஸூஹ்ருத் -கேசவன் தமர்
முக்த சாரஸ்யம் ததா –அணைவது அரவணை மேல்
ஸ்வ கைங்கர்யோதேஸ்யம்-எம்மா வீடு
சுப நிலையன்-அதி போக்யன் -கிளர் ஒளி

முதல் திருவாய் மொழியில் -எம்பெருமான் தன்னைப் பிரிந்தாருக்கு நித்ரா விச்சேதாதிகளைப் பண்ணுமவன் ஆகையாலே
அவனுடைய க்ஷண மாத்ர விரஹமும் அத்யஸஹம் என்று கொண்டு அதி கிலேச க்ஷண விரஹன் -என்று அருளிச் செய்தார்

இரண்டாம் திருமொழியில் -எம்பெருமான் மனுஷ்ய ஸஜாதீயனாய் அவதரித்து இருக்கச் செய்தேயும்
ஸர்வ ஸ்மாத் பரனாய் இருக்கும் என்று கொண்டு
லலித உத்தங்கன் என்று அருளிச் செய்தார் –

மூன்றாம் திருவாய் மொழியில் எம்பெருமான் ஸர்வ ரஸ சமாகாரம் போலே ரஸ்யனாய்க் கொண்டு தம்மோடு கலைக்கையாலே
அவன் தான் ஸமஸ்த மதுர பதார்த்தங்களினுடைய ரஸத்தை யுடைத்தான போக்யதையை யுடையவன் என்று கொண்டு
ஸர்வ ஆஸ்வாத ஆஸ்ரயன் -என்று அருளிச் செய்தார் –

நான்காம் திருவாய் மொழியிலே -ஆஸ்ரிதருடைய ஆபத்தில் வந்து முகம் காட்டி
வ்யஸநங்களைப் என்று கொண்டு வியசன சமனன் என்று அருளிச் செய்தார்

ஐந்தாம் திருவாய் மொழியில் –
யதா தாதம் தசரதம் யதா ஐஞ்ச பிதாமஹம்
ததா பவந்தம் ஆஸாத்ய ஹ்ருதயம் மே ப்ரஸீததி -என்கிறபடியே
தான் ஆஸ்ரிதரோடு ஸம்ஸ்லேஷிக்கப் பெறில் நிரதிசயமாக ஆநந்திக்கும் ஸ்வ பாவன் என்று கொண்டு
ஸ்வ பிராப்தி ஸம் ப்ரீதிமான் -என்று அருளிச் செய்தார் –

ஆறாம் திருவாய் மொழியில் எம்பெருமான் -வளவேழ் உலகில் போலே ஸ்வ அநர்ஹதா அநுசந்தானாதிகளாலே
ஆஸ்ரிதற்கு தன் பக்கல் வைமுக்யம் வருகிறதோ என்று வியாகுலனாய் இருக்குமவன் ஆகையாலே –
ஸ்வ விரஹ சகிதன் என்று அருளிச் செய்தார் –

ஏழாம் திருவாய் மொழியிலே -பெருமாளுக்கு ஸ்ரீ விபீஷணன் பக்கல் ஓரம்
க்ரியதாம் அஸ்ய ஸம்ஸ்காரா மமாப்யேஷ யதா தவ –என்று ராவணன் அளவும் சென்றால் போலே
எம்பெருமான் ஆஸ்ரிதர் பக்கல் அபி நிவேசத்தால் தத் சம்பந்தி சம்பந்திகளையும் விஷயீ கரித்து
அருளுமவன் ஆகையாலே ஸ்வ ஜன ஹிதன் -என்று அருளிச் செய்தார் –

எட்டாம் திருவாய் மொழியில் -எம்பெருமான் முக்தி தசையில் ரஸாவகனாய் இருக்கும் என்று கொண்டு
முக்தி ஸாரஸ்ய ஹேது என்று அருளிச் செய்தார் –

ஒன்பதாம் திருவாய் மொழியில் -உன் கைங்கர்யமே எனக்கு உத்தேச்யம் என்று கொண்டு
பரவா நஸ்மி காகுத்ஸத த்வயி வர்ஷ சதம் ஸ்திதே
ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -இத்யாதிகளைப் போலே ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகையாலே
கைங்கர்ய உத்தேச்யன் என்று அருளிச் செய்தார்

பத்தாம் திருவாய் மொழியில் எம்பெருமான் தம்மோடு ஆஸ்ரிதர் நினைத்த வகை எல்லாம் பரிமாறி
அனுபவிக்கும் படி தர்ச நீயமான தெற்குத் திருமலையில் நின்று அருளுகையாலே
ஸூப ஸவித கிரி நிலையன் -என்று அருளிச் செய்கிறார்

இப்படி அத்ய அஸஹ்ய க்ஷண விரஹாதிகளாலே அத்யந்த போக்யனான எம்பெருமானை –
ஆழ்வார் அனுபவித்துத் தலைக் கட்டுகையாலே
போக்யத்வேன முக்த ப்ராப்யன் என்று இரண்டாம் பத்தில் அருளிச் செய்தார் என்கிறார் –

—————————

ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை –ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் —

பிரவேசம் –
கீழில் திருவாய் மொழியில் இவர் ஒல்லை -1-என்றும் ஒல்லை -10 -என்றும்
அருளிச் செய்த கருத்தை அறிந்து திருமேனியோடே வந்து ஆஸ்ரயிக்கும் படி
எம்பெருமான் திருமலையில் நிலையைக் காட்டிக் கொடுக்கக் கண்டு அனுபவிக்கிறார்

———-

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –-2-10-1-

கிளர் ஒளியின் இடையில் பிறந்த ஸ்ரத்தை மாறுவதற்கு முன்னே –
வளரா நின்றுள்ள படிகளை யுடைய ஆச்சர்ய சக்தன் நித்ய வாசம் பண்ணுகிற லோயிலாகிற
வளர வளர இளகிப் பதித்து வரும் பொழில்களாலே சூழப் பட்ட திருமாலிருஞ்சோலையை
அநர்த்தம் வாராது ஒழிய வேண்டில் கிட்டுமதே இவ்வாத்மாவுக்கு சதிர்
என்கிறார் -கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்-இத்யாதியாலே –

———-

சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே –-2-10-2-

சதிரையும் இளமையையும் உடைய மடவார் தாங்கள் பண்ணும் தாழ்ச்சியை ஒன்றும் மதியாதே
திருக்கையின் ஸ்பர்சத்தாலே எப்பொழுதும் ஓக்க முழங்கா நின்றுள்ள ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை திருக்கையிலே யுடையராய்
அந்த அழகாலே -அழகர் -என்று சொல்லப்படுமவர் கோயில் இருக்கிற
சந்திரன் தவழ்ந்து ஏறா நின்றுள்ள சிகரத்தை யுடைய திருமலையில் பதியை –
ஸ்வரூப அனுரூபமாக ஏத்தி உஜ்ஜீவிக்கும் இதுவே இவ்வாத்மாவுக்கு பிரயோஜனம்
என்கிறார் –சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது–இத்யாதியாலே –

——–

பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை
அயன்மலை யடைவது அது கருமமே –2-10-3-

ப்ரயோஜன அநாஸ்ரயமானவற்றைச் செய்து ஒரு பிரயோஜனம் இல்லை காண் நெஞ்சே —
வர்ஷுக வலாஹகம் போலே இருக்கிற அழகை யுடையவர் அவ்வடிவு அழகை
ஸர்வ ஸ்வ தானம் பண்ணி வர்த்திக்கிற கோயிலாய் இருக்கிற
போக்யதா ப்ரகர்ஷத்தாலே நெஞ்சை இருளப் பண்ணும் திருமால் இருஞ்சோலையோடு
சம்பந்தித்த மலையை அடைவது -அது ஒன்றுமே கர்தவ்யம்
என்கிறார்-பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே -இத்யாதியாலே —

————

கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
திருமலை யதுவே யடைவது திறமே –2-10-4-

கர்மமாகிற வலிய பாசத்தை ஸ்வ யத்னத்தாலே கழித்து –
ப்ராப்யமான கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவித்துத் தலைக்கட்டப் போமோ –
கர்மமாகிற வலிய பாசங்களைக் கழிக்கைக்காகவும் –
கைங்கர்யங்களைப் பண்ணி உஜ்ஜீவிக்கைக்காகவும்
பெரிதான கோவர்த்தன பர்வதத்தை எடுத்தவன் -அந்தப் பெருமையோடே வந்து
நித்ய வாஸம் பண்ணுகிற கோயிலாக இருக்கிற
வாரா நின்றுள்ள மேகங்கள் தவழும் திருமாலிருஞ்சோலை யாகிற திருமலையை
ஆஸ்ரயிக்குமதுவே செய்ய அடுத்து என்கிறார் -கரும வன்பாசம் கழித்து உழன்று-இத்யாதியாலே —

———–

திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அற முயலாழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை
புறமலை சாரப் போவது கிறியே –2-10-5-

திரண்ட பலத்தாலே ப்ரயோஜனாந்தர ப்ராவண்யம் ஆகிற மஹா பாபத்தைக் கூடு பூரியாதே
ஸர்வேஸ்வரனிலும் ஆஸ்ரித ரக்ஷணத்தில் முயலா நின்றுள்ள திருவாழியை
ஆயுதமாக யுடையவன் வந்து வர்த்திக்கிற கோயிலாகிற
மறுவற்றுத் தெளிவை யுடைத்தாய் தர்ச நீயமாய் ஊற்று மாறாத சுனைகளாலே சூழப்பட்ட
மாலிருஞ்சோலைப் புறமலை சாரப் போமிதுவே
பகவத் ப்ரத்யா சத்தி வேண்டி இருப்பார்க்கு வருத்தமற லபிக்கலாம் நல் விரகு
என்கிறார் –திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது–இத்யாதியால் –

————-

கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை
நெறி படவதுவே நினைவது நலமே –2-10-6-

இது நல் விரகு என்று புத்தி பண்ணுங்கோள்
ப்ரயோஜனாந்தரங்களிலே ப்ராவண்யம் செய்யாதே
உறிகளிலே சேமித்துக் கள்ளக் கயிறு உருவி வைத்த வெண்ணெயை தெய்வம் கொண்டதோ
என்னலாம் படி களவு கண்டு அமுது செய்தவன் வந்து வர்த்திக்கிற தேசமாய் இருக்கிற
ரஷ்ய ரக்ஷகங்கள் தன்னிலே பிரியாதே வார்த்தைக்கும் மாலிருஞ்சோலையை
நெஞ்சிலே அடிபடும் படியாக அநுஸந்திக்குமதுவே நன்மை யாவது
என்கிறார் -கிறியென நினைமின்-இத்யாதியாலே –

———–

நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7-

நான் சொல்லுகிற வார்த்தையை நன்மை என்று புத்தி பண்ணுங்கோள்
பிரிவால் வரும் கிலேச அனுபவம் பண்ணாதே வராஹ கல்பத்தின் ஆதியிலே மஹா வராஹமாய்
அண்ட புத்தியில் சேர்ந்து உரு மாய்ந்த பூமியை எடுத்துக் கொண்டு ஏறின
நிருபாதிக ஸூஹ்ருத்து நித்ய வாசம் பண்ணும் தேசமாய் இருக்கிற நிர்மலமான ஞான லாபத்தை உண்டாக்கும்
திருமாலிருஞ்சோலையை அனுகூலமான முறையிலே கிட்டிப் பரிசர்யை பண்ணுதல்
ஸ்ரேஷ்டம் என்கிறார்–நலமென நினைமின்– இத்யாதியால்

———–

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8-

ஸர்வேஸ்வரன் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு உறுப்பாகத் தந்த மனுஷ்ய சரீரத்தைக் கொண்டு
பலத்தை உண்டாக்கி -பின்னை அவனை ஆஸ்ரயிக்கை இன்றிக்கே
இதர விஷய ப்ராவண்யத்துக்கு உடலாக்கி -அநர்த்தப் படாதே
பிராட்டி கையைப் பிடித்துக் கொண்டு அழகர் ஆதாரத்தோடு சஞ்சரிக்கிற தேசமாய் இருக்கிற
நித்ய ஸூரிகளாதான திருமாலிருஞ்சோலையை அனுகூல புத்தி களைப் பண்ணி
பரிசர்யை பண்ணுதல் நியாயம் என்கிறார் -வலம் செய்து-இத்யாதியால் —

———-

வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே –2-10-9-

நான் சொல்லுகிற இதுவே முறை என்று புத்தி பண்ணுங்கோள்
உங்களால் போக்கிக் கொள்ள ஒண்ணாத மஹா பாபங்களைப் பரிஹரிக்க வேண்டி இருந்தீர்களாகில்
பேய்ப் பெண்ணான பூதனையை முடித்தவன் நித்ய வாசம் பண்ணுகையாலே ஸ்லாக்யமான கோயிலாய் இருக்கிற
இள யானைக் கன்றுகள் இனம் இனமாகச் சேரா நின்றுள்ள திருமலையைத் தொழ வேணும் என்னும்
மநோ ரதத்திலே துணிவதே இவ்வாத்மாவுக்கு விஜய ஹேது என்கிறார் -வழக்கென நினைமின்-இத்யாதியாலே —

————

சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே –2-10-10-

நமக்கு நல்ல வாய்ப்பாய் இருந்தது என்று ஆத்ம அபஹாரத்தையும் துர் உபதேசத்தையும் செய்யாத படியாக
வேதார்த்தத்தை விஸதீ கரித்த கீதா உபநிஷத் ஆச்சார்யன் வர்த்திக்கிற கோயிலாய்
பேடையை உற்ற மயில் சேர்ந்துள்ள திருமாலிருஞ்சோலை யாகிற பூ மலரா நின்றுள்ள திருமலையைக் கிட்டுமதுவே
இவ்வாத்மாவுக்கு பிரயோஜனமாய்த் தலைக்கட்டுமிது -அல்லாதவை எல்லாம் வியர்த்தம்
என்கிறார் -சூதென்று களவும் சூதும்-இத்யாதியாலே —

———-

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-

நிகமம் –
ப்ரயோஜனப்படும் என்று இந்த லோகங்களை உண்டாக்கினவனுடைய கல்யாண குண விஷயமாக
அஞ்ஞான கந்தம் இல்லாத ஆழ்வார் அருளிச் செய்து தத்வ ஞானம் கொள்ளும் படி சொன்ன
ஓர் ஆயிரத்தில் இப்பத்தான் அருளே நிரூபகமான அவன் திருவடிகளை ஸம்ஸார சம்பந்தத்தை
வாசனையோடு போக்கிச் சேர்த்து விடும் என்று யுக்த அர்த்தத்தை
நிகமிக்கிறார்-பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன்– இத்யாதியாலே

——–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -20-பாசுரம்–

அவதாரிகை –

இதில் சர்வ பிரகாரத்தாலும் திருமலையை ஆஸ்ரயிக்கையே
புருஷார்த்த சாதனம் என்று பரோபதேசம்
பண்ணுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அன்றிக்கே –
ஸ்வயம் புருஷார்த்தமாக வனுபவிக்கிற பிரகாரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் -என்று ஆகவுமாம் –
இது எங்கனே என்னில்
எம்மா வீட்டில் ஸ்வ பிராப்யத்தை நிஷ்கரிஷத்த அளவில்
ஒல்லை ஒல்லை -என்று இவர் த்வரிக்கப் புக்கவாறே
இவர் த்வரிக்கைக்கு அனுகுணமாக
இங்கேயே
இவ்வுடம்போடேயே
கிட்டி அடிமை செய்யலாம் படி
தெற்குத் திருமலையிலே தான் நிற்கிற படியை
இவருக்குக் காட்டிக் கொடுக்க
அத்தை அனுசந்தித்து
அவனிலும்
அவன் உகந்து வர்த்திக்கிற தேசமே பிராப்யம் என்று நினைத்து
திருமலை ஆழ்வாரை பெரிய ஆதாரத்தோடு அனுபவித்து
ப்ரீதராய்
சம்சாரிகளையும் அங்கே ஆஸ்ரயிக்கும் படி
பரோபதேசம் பண்ணுகிற கிளர் ஒளியின் அர்த்தத்தை
கிளர் ஒளி சேர் இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் —

கிளர் ஒளிசேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க
வளர் ஒளி மால் சோலை மலைக்கே -தளர்வறவே
நெஞ்சை வைத்துச் சேரும் எனும் நீடு புகழ் மாறன் தாள்
முன் செலுத்துவோம் எம்முடி——–20-

வியாக்யானம்–

கிளர் ஒளிசேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க –
அதிசயமான ஒஜ்வல்யத்தை யுடைத்தாய்
கீழ் உக்தமான எம்மா வீட்டில் பிராப்யமானது லபிக்கைக்காக –

வளர் ஒளி மால் சோலை மலைக்கே –
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை -என்னும்படி
கிளர் ஒளி மாயோனாய்
நாள் செல்ல செல்ல வளர்ந்து வாரா நின்றுள்ள ஒளியை யுடைய சர்வேஸ்வரன் வர்த்திக்கிற
திருமால் இரும் சோலை மலைக்கே –

தளர்வறவே நெஞ்சை வைத்துச் சேரும் எனும்-
பகவத் ஸ்மரண ராஹித்யம் ஆகிற
அநர்த்தம் இன்றிக்கே
அவன் வர்த்திக்கிற திருமலையில்
மனஸை வைத்து ஆஸ்ரயிங்கோள்
என்று அருளிச் செய்யும் –

தளர்வு -மநோ தௌர்ப்பல்யம்-ஜீவ ஸ்வா தந்த்ர்யம் -நின்றவா நில்லா நெஞ்சு

அறவே –அது இன்றிக்கே -என்றபடி
கீழ் பிராப்யம்மான பாத பற்புக்கு
தென்னன் உயர் பொருப்பை பிராப்யமாக விதித்த படி –
இது வன்றாட்சி மயமாகையாலே -திரு விருத்தம் -ஆஸ்ரயிக்கைக்கு அடி உடைத்து –சிமயம் -சிகரம் –
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே –

இப்படி நெஞ்சை வைத்து சேரும் எனும் –
நெஞ்சை வைத்துச் சேரும் என்கிறதுக்கு மூலம் –கிளர் ஒளி இளமை –என்கிற பாட்டு
மானஸ ஸ்ரத்தை மாறுவதற்கு முன்னே -என்று இறே இதுக்கு அர்த்தம் அருளிச் செய்தது –
உய்த்து உணர்வு எனும் ஒளி விளக்கு –என்னக் கடவது இறே
சேரும் என்றது –கிளர் ஒளி இளமை கெடுவதம் முன்னம் என்கிற முதல் பாட்டு பிரதானமாய்
போதவிழ் மலையே புகுவது பொருளே –என்னும் அளவும் அருளிச் செய்தவை –
அதாவது
சார்வது சதிரே -என்றும்
ஏத்தி எழுவது பயனே -என்றும்
அயன் மலையை அடைவது கருமமே -என்றும்
திருமலை யதுவே அடைவது திறமே -என்றும்
நெறி பட வதுவே நினைவது நலமே -என்றும்
பிரதஷிணஞ்ச குர்வாணஸ் சித்ர கூடம் மஹா கிரிம் -என்னும்படி
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -என்றும்
தொழக் கருதுவது துணிவது சூதே -என்றும்
போதவிழ் மலையே புகுவது பொருளே -என்றும்
திருமலையோடு
அத்தைச் சேர்ந்த அயன்மலையோடு
புற மலையோடு
திருப்பதியோடு
போம் வழியோடு
போகக் கடவோம் -என்று துணிந்த துணிவோடு
வாசி அற பிராப்யாந்தர்க்கதமாய்
ஸ்வ அனுபவ கர்ப்ப
பரோபதேச முகேன
அனுபவித்து இனியராகிற பிரகாரமும் இவர்க்கு இப்பாட்டிலே விவஷிதம் –
அந்தர்கத குணா உபாசனத்தை
மதித்து பெருக்கி மூழ்கி அழுந்து கீழ்மை
வலம் சூது செய்து இளமை கெடாமல் செய்யும் ஷேத்திர வாசம்
சங்கீர்த்தனம் அஞ்சலி பிரதஷிண கதி சிந்தநாத்யங்க உக்தம் ஆக்குகிறார் இரண்டாம் பத்தில் –
என்று இறே-ஆச்சார்யா ஹிருதயம் -சூர்ணிகை -220-உபாயபரமாக நாயனார் அருளிச் செய்கிறார்
நாயனார் உபாய பரமாக அருளிச் செய்தது
ஆகையால் திருமலையை பிராப்யதயாவும் ப்ராபகதயாவும்
ஆஸ்ரயிக்கும் படி அருளிச் செய்யக் குறை இல்லை இறே
நெஞ்சை வைத்து சேரும் எனும் -நீடு புகழ் மாறன் தாள் –
இப்படி பரர அநர்த்தம் கண்டு
பரோபதேசம் பண்ணுகையாலே
நெடுகிப் போருமதாய்
அத்தாலே நித்தியமான
யசஸை யுடைய ஆழ்வார் திருவடிகளிலே –

முன் செலுத்துவோம் எம்முடி –
அவர் திருவடிகளின் முன்பே
நம்முடைய தலை சேரும்படி நடத்துவோம்
ஸ்ரீ மத தத் அங்கரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்நா-என்னக் கடவது இறே
இனி அவர் அடி அறியவே இறே வேண்டுவது
அன்றிக்கே
ஆழ்வார் திருவடிகள் நம் சென்னியிலே சேருவதற்கு முன்னமே
நாம் முற்பாடராய்
முடியைச் செலுத்துவோம் -என்றாகவுமாம் –

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–இந்தியத் தத்துவ இயல் நூல்கள்– ஆசிரியர்கள் —

May 10, 2021

இந்தியத் தத்துவ இயல் நூல்கள்: ஆசிரியர்கள் : இந்திய மெய்யியலுக்கு ஆறு முக்கியமான தர்சனங்கள் அல்லது தத்துவங்கள் உள்ளது.
அதில் நியாயம், இதன் தத்துவ ஆசிரியர் கௌதமர்.
வைசேசிகம் எனும் பட்டறிவு தத்துவத்தின் ஆசிரியர் கணாதர். சாங்கியம் எனும் தத்துவத்தின் ஆசிரியர் கபிலர் (சாங்கியம்),
யோகம் என்ற தத்துவதிற்கு ஆசிரியர் பதஞ்சலி ஆவர்.
மீமாம்சம் எனும் தத்துவத்துவதிற்கு ஆசிரியர் ஜைமினி ஆவர்,
மற்றும் வேதாந்தம் எனும் உபநிடதங்கள் என ஆறு தத்துவங்கள் அல்லது ஆறு தர்சனங்கள் உள்ளது.
இதில் முதல் ஐந்தில் இறைவன் அல்லது பிரம்மம் எனும் இறையியலைப் பற்றி பேசுவதில்லை.
வேதாந்தம் ஒன்றுதான் பரம்பொருள் எனும் பிரம்மத்தைப் எனும் தத்துவத்தைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது.

இந்தியத் தத்துவ இயலுக்கு லோகாயதம் எனும் பொருள் முதல் வாதிகள்,
பௌத்தம், மற்றும் சமண சமயம் போன்ற கருத்தியல் ஆசிரியர்களும் மிகவும் அதிகமாக பங்களித்துள்ளனர்.
இந்திய இறையியல், கருத்தியல், மெய்யியல், அறிவாய்வியல், தர்க்கம் மற்றும் பொருள் முதல்வாதம் குறித்து
அறிஞர்கள் படைத்த தத்துவ நூல்களின் விவரம்.

அபிதம்ம கோசம் : சர்வாஸ்திவாதிய புத்த மதத்வரின் அடிப்படை நூல். எழுதியவர் வசுபந்து.

அபிதம்ம கோச வியாக்யா : யசோமித்திரர் எமுதியது. அபிதம்ம கோசம் எனும் நூலின் விளக்க உரை நூல்.

அபிதம்ம பீடகா : மூன்றாவதும் இறுதியானதுமான புத்த பீடக நூல். நுண்புலப் பொருளியல் (Meta Physics) பிரச்சனைகள் பற்றி எழுதப்பட்டது என கருதப்படுவது.

அபிதம்ம விபாசா : காத்யாயனிபுத்ரரின் ’ஞானப்ரஸ்தானா’பற்றிய விமர்சனம். மன்னர் கனிஷ்கர் ஆதரவின் கீழ் நடைபெற்ற நான்காம் புத்த மாநாடு குழுவால் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

அசிந்த-பேதாபேத-வாதம் : இருமை (Dualism) மற்றும் இருமைப் மறுப்புக் கொள்கை (Non-Dualism) வங்காள வைஷ்ணவியத்தை நிறுவியவர் என்று அறியப்பட்ட சைதன்ய வேதாந்த கருத்தியலின் தத்துவகோட்பாடு.

அத்வைத-பிரம்ம-சித்தி : 18வது நூற்றாண்டில் வாழ்ந்த சதானந்த யதி எழுதியது. அத்வைத சித்தாந்தம் பற்றியது.

அத்வைத வேதாந்தம் : பரிசுத்தமான தன்னுணர்வே மெய்ம்மை (பிரம்மம்) என்ற வேதாந்த கருத்தியல். ஆதிசங்கரர் என்வர் அத்வைத வேதாந்தியால் முன் வைக்கப்பட்டது. இவர் 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

அஜிதகேசகம்பிளி : புத்தர் காலத்தில் வாழ்ந்த பொருள் முதல்வாதி.

அகலங்கர் : கி. பி.750இல் வாழ்ந்த சமண தத்துவவாதி. தர்க்கவியல் குறித்த அடிப்படை சமண விளக்கங்களுக்கு முதன்முதலில் இறுதி வடிவம் தந்தவர்.

அக்சபாதா : கோதமரின் மறு பெயர். நியாய தத்துவ அமைப்பினை நிறுவியர்.

ஆலம்பன பரீக்சா : திக்னாகா என்பவர் எழுதியது. யோக்கார கருத்தியற்கோட்பாட்டிற்கு ஆதரவான ஆய்வுக்கட்டுரை நூல்.

அனிருத்தா : கி. பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த சாங்கிய சூத்ராவுக்கு விளக்கம் எழுதியவர்.

அனாகா : சமணர்களின் புனித இலக்கியங்களில் ஒருவகை.

அன்னம பட்டர் : 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நியாய – வைசேசிக தத்துவவாதி. தர்க்க சங்கிரஹா எனும் புகழ் பெற்ற நூலை எழுதியவர்.

ஆபாதேவா : 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, மீமாம்ச தத்துவவாதி

ஆரண்யகா : வேதத்தை சேர்ந்த இலக்கிய வகை. மாயாவாத, போன்ற முன்மாதிரி தத்துவம் பற்றிய கேள்விகளை இது ஆய்கிறது.

அரியேதா : கி பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த தத்துவவாதி. தர்ம கீர்த்தி என்பவர் எழுதிய ஹேது-பிந்து நூலைப் பற்றிய விளக்கம் அளித்தவர்.

அர்த்தசாஸ்திரம் : கௌடில்யர் எனும் சாணக்கியர் எழுதிய பழமையான சமுக அரசியல் நூல்.

ஆர்யதேவா : கி பி.320இல் வாழ்ந்தவர். மாத்யமிக புத்த தத்துவத்தின் அதி நுட்ப திறனாய்வாளர்.

ஆர்யசூரா : கி.பி.4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ஜாதக மாலா எனும் நூலை எழுதி புகழ் பெற்றவர்.

அசங்கா : கி.பி.450ம் ஆண்டைச் சேர்ந்தவர். யோகாகார புத்த த்த்துவத்தை தொடக்க காலத்தில் முறையாக செய்தவர்.

ஆசுரி : பண்டைய சாங்கிய தத்துவ ஆசிரியர்.

அஸ்வகோசர் : கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த தத்துவவாதி, கவிஞர், நாடக ஆசிரியர்.

அதர்வ வேதம் : பண்டைய நான்கு வேதங்களில் இறுதியானது. இது மந்திர தந்திரங்களை மையமாக கொண்டது.

ஆத்ம தத்துவ விவேகம் : உதயணாவின் ஒப்பீட்டு இலக்கியம், சுயம் பற்றி புத்தம் கூறும் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் நியாய வைசேசிக தத்துவ ஆய்வு நூல்.

பாதராயணர் : பிரம்ம சூத்திரம் எனும் நூலை எழுதியவர்.

பவதாயணா : கி.பி. 300ஆம் ஆண்டைச் சேர்ந்தவர். சட்டம் பற்றி எழுதிய முன்னோடி.

பகவத் கீதை : கர்மயோகம், பக்தியோகம் மற்றும் ஞானயோகம் போன்ற தத்துவங்களை, ஸ்ரீகிருஷ்ணர், அருச்சுனனுக்கு உபதேசம் செய்த நூல். இது மகாபாரதத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. பிரஸ்தானத்ரயம் எனும் உயர் வேதாந்த நூல்களான உபநிடதங்கள், பிரம்மசூத்திரம் ஆகியவற்றில் பகவக் கீதையும் ஒன்று.

பாமதி : பிரம்ம சூத்திரம் பற்றிய ஆதிசங்கரரின் பாஷ்யத்திற்கு விரிவுரை எழுதியவர்.

பாஸ்கரர் : பிரம்ம சூத்திரம் பற்றி கடவுள் நம்பிக்கை நிலையிலிருந்து விளக்கமளித்தவர். ஆதிசங்கரர் மற்றும் இராமானுஜர் இருவருக்கும் இடைப்பட்ட காலத்தவர்.

பாட்ட தீபிகா : கச்சதேவரின் மீமாம்ச தத்துவ கட்டுரைகள் எழுதியவர்.

பாட்ட மீமாம்சம் : குமாரில பட்டர் எழுதிய மீமாம்ச கருத்தியல் நூல்.

பாவவிவேகா : கி. பி. 5ஆம் நூற்றாண்டின் வாழ்ந்த மாத்யமக பிரிவு புத்த தத்துவ நிபுணர்.

பிரஸ்தானத்திரயம் : பிரம்மத்தை விளக்கும் உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதை ஆகிய மூன்று முதன்மையான வேதாந்த நூல்களை பிரஸ்தானத்திரயம் என்பர்.

பேதாபேத-வாதம் : பாஸ்கரரின் இருமை மற்றும் இருமையின்மை கொள்கை விளக்கம் நூல்.

போதிகார்யவாதாரா : சாந்தி தேவர் எழுதியது. மகாயான புத்தமததத்துவத்தை போற்றும் கவிதைகள்.

பிராமணம் : வேத சடங்குமுறைகளை ஆய்வு செய்யும் வேத இலக்கியம்.

பிரம்ம சூத்திரம் அல்லது வேதாந்த சூத்திரம் : உபநிடதங்களில் காணப்படும் முரணான கருத்துக்களை, பிரம்ம சூத்திரம் எனும் நூல் மூலம் பாதராயணர் களைந்து விளக்கி எழுதியதாக கூறப்படுகிறது. இந்நூலுக்கு பாஷ்யம் எழுதியவர்களில் சிறப்பானவர்கள், ஆதிசங்கரர், இராமனுஜர் மற்றும் மத்வர்.

ப்ரஹதி : மீமாம்ச சூத்திரம் பற்றிய சபரரின் கருத்துக்கள் மீது பிரபாகரர் எழுதிய விளக்கங்கள்.

புத்தர் : புத்த தத்துவத்தை தோற்றுவித்தவர். கி. மு. 483ஆம் ஆண்டில் இறந்தார்.

புத்தசரிதா : புத்தரின் வரலாற்றை கவிதை வடிவில் அஸ்வகோசர் எழுதியது.

புத்தபாலிதா : கி. பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாத்யமக புத்த தத்துவ நிபுணர்.

சைதன்யர் : கி. பி. 485வது ஆண்டில் பிறந்தவர். வங்காள வைணவ தத்துவம் என பொதுவாக அறியப்பட்ட மத இயக்கத்தை தோற்றுவித்தவர்.

சந்திரகீர்த்தி : கி. பி. 6வது நூற்றாண்டில் வாழ்ந்த மாத்யமக புத்த தத்துவ நிபுணர்; நாகார்ஜுனரின் கருத்துக்களுக்கு விமர்சனம் எழுதியதால் புகழ் பெற்றார்.

சரக சம்ஹிதை : கி. பி. இரண்டாவது நூற்றாண்டில் வாழ்ந்த சரகர் என்பவர் இந்த மருத்துவ நூலை எழுதியவர்.

சார்வாகம்: சார்வாகம் எனில் லோகாயவாதம் எனும் பொருள்முதல்வாதம் எனப்படும். சார்வாகர்என்ற பொருள்முதல்வாதி சார்வாகம் எனும் தத்துவத்தை நிறுவியவர்.

சாது சதகம் : மாத்யமக புத்த தத்துவ அறிஞரான ஆர்யவேதர் எழுதியது.

சித்சுகர்: கி. பி. 1220களில் வாழ்ந்தவர். அத்வைதி. பட்டறிவு சார்ந்த உள்ளமைவியல் (Ontology) மற்றும் அறிவாராய்ச்சியியல் (Epistemology) பற்றிய எதிர்மறையான வாதத்தை முன்வைத்து புகழ் பெற்றவர்.

தர்மகீர்த்தி : கி. பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திக்நாகருக்கு பின்வந்த புகழ்பெற்ற புத்த தத்துவவாதி.

தத்துவ – சங்கிரஹம் : கி. பி. 8வது நூற்றாண்டில் வாழ்ந்த சாந்தராட்சிதா என்பவர் எழுதிய புத்தவியல் தர்க்கநூல் ஆகும்.

தர்மோத்தரர் : கி. பி. 840களில் வாழ்ந்தவர். தர்மகீர்த்தியின் கருத்துகளுக்கு விளக்கம் அளித்தவர்.

திகம்பரர் : சமண தத்துவத்தின் ஒரு பிரிவு. இப்பிரிவுக்கு மாறானவர்கள் சுவேதாம்பரர்எனப்படுவர்.

திக்நாகர்: கி. பி. 500களில் வாழ்ந்தவர். புத்த தர்க்கவியல் கருத்தியலை நிறுவியவர்.

திபாஷிகா : சாலிகநாதர் எழுதியது. பிரபாகர மீமாம்சம் பற்றிய ஒரு நூல்.

துர்வேகர் : புத்த தத்துவவாதிகளான தர்மோத்தரர் மற்றும் அர்க்கடர் ஆகியவர்களை விமர்சனம் செய்தவர்.

துவைதாத்வைத வாதம்: நிம்பர்க்கர் என்பவர் பேதாபேதம் வேதாந்த கருத்தியலின் இருமை (துவைதம்)மற்றும் இருமையின்மை (அத்வைதம்) தத்துவ கோட்பாட்டை விளக்கியவர்.

துவைதவாதம்: இத்த்துவத்தின் ஆசிரியர் மத்வர். இருமை எனும் துவைதம் தத்துவக் கொள்கையை (இறைவனும் சீவனும் வேறு) கடைப்பிடிப்பவர்கள்.

சுதாதரர் : கி. பி. 13வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். தவ நியாய தத்துவ நிபுணர்.

கங்கேசர்: கி. பி. 13வது நூற்றாண்டில் வாழ்ந்த தவ நியாய தத்துவ அறிஞர்.

கௌடபாதர்: கி. பி. 800களில் வாழ்ந்தவர். ஆதிசங்கரரின் குருவின் குரு. மாண்டூக்ய காரிகை நூலின் ஆசிரியர். அத்வைத வேதாந்தி.

குணரத்ன : கி. பி. 15வது நூற்றாண்டில் வாழ்ந்த சமண தத்துவவாதி. தர்க்க-ரகசிய-தீபிகா என்ற விமர்சன நூலை எழுதியவர். இந்நூல் ஹரிபத்ரரின் இந்திய தத்துவ விளக்கத் தொகுப்பான சத் தர்சன சமுக்காயம் என்ற நூலின் விமர்சனம் ஆகும்.

ஹரிபத்ரர் : கி. பி. 8வது நூற்றாண்டில் வாழ்ந்த சமண தத்துவவாதி. இந்திய தத்துவ விளக்கத் தொகுப்பான சத் தர்சன சமுக்காயம் என்ற நூலை எழுதியவர்.

ஹேமச்சந்திரர் : இவரது காலம் கி. பி. 1018 – 1172. புகழ்பெற்ற சமண சமய தத்துவ அறிஞர். தத்துவம் மற்றும் தர்க்க நூல்களை எழுதியவர்.

ஹேது – பிந்து : தர்ம கீர்த்தி என்பவர் எழுதிய புத்த தர்க்கவியல் நூல்.

ஹீனயானம் : தமது முன்னோர்களை (மட்டமாக) குறிக்க, மகாயானம் பிரிவு புத்த சமயத்தவர் பயன் படுத்திய சொல். (ஹீனயானம் எனில் தாழ்வான வழி அல்லது குறைந்த வழி என்று பொருள்).

ஜகதீசா : கி. பி. 17வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். நவ நியாய தத்துவ அறிஞர்.

ஜைமினி : பூர்வ மீமாம்சக சூத்திரம் எழுதியவர்.

சமண தத்துவம் : துறவிகளின் மதம். தனித்துவமான தத்துவப்பார்வைகள் கொண்டது.

ஜாதகா : புத்தரின் ’முந்தைய பிறப்புகளை’ பற்றிய கதைகள் கூறுவது.

ஜெயந்த பட்டர் : கி. பி. 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நியாய மஞ்சரி எழுதியவர். நியாய – வைசேஷிக தத்துவ அறிஞர்.

ஜெயராசி பட்டர் : கி. பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அன்றைய காலத் தத்துவங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தவர். இவரை ஒரு பொருள்முதல்வாதி என்று தவறாக எண்ணினார்கள்.

ஞானப்பிரஸ்தானா : இந்நூலை காத்யாயனிபுத்ரர்என்பவர் எழுதியது. வைபாசிக புத்த தத்துவவாதிகளின் விளக்கமான மஹாவிபாச என்ற நூல் ஞானப்ரஸ்தானாவின் விமர்சனமாக எழுதப்பட்டது.

கமலசீலா : கி. பி. 750இல் வாழ்ந்தவர். புத்த தர்க்கவியல்வாதி. சாந்தராக்சிதாவின் தத்துவ சங்கிரா என்ற நூலுக்கு விளக்கம் எழுதியவர்.

கணாதர் : வைசேசிகம் எனும் தத்துவத்தை (தர்சனம்) நிறுவியவர்.

கபிலர் (சாங்கியம்) : சாங்கியம் எனும் தத்துவத்தை (தர்சனம்) நிறுவியவர்.

காத்யாயனிபுத்ரர் : கி. பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தியவர். ஞானப்ரஸ்தானம்எனும் நூலை எழுதியவர்.

கௌடில்யர் : இவரை சாணக்கியர் என்றும் அழைப்பர். கி. மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அர்த்தசாஸ்திரம் எனும் அரசியல் மற்றும் சமூகம் தொடர்பாக நூலை எழுதி புகழ்பெற்றவர்.

கந்ததேவா : கி. பி. 17வது நூற்றாண்டில் வாழ்ந்த மீமாம்ச தத்துவவாதி

காந்தன-காந்த-காத்யம் : கி. பி. 1150இல் வாழ்ந்த ஸ்ரீஹர்சர் என்பவர் எழுதியது. அத்வைத வேதாந்த கருத்தியல் பற்றி, பட்டறிவு சார்ந்த உள்ளமையியல் (Ontology) மற்றும் அறிவாராய்ச்சியியல் (Epistemology) மீதான முதல் விரிவான விமர்சனம் செய்தவர்.

கிராணவளி : வைசேஷிக தத்துவம் பற்றிய பிரசஸ்தபாதரின் விளக்கம் மீதான விமர்சனம். உதயணர்என்பவர் எழுதியது.

குல்லுக பட்டர் : மத்திய காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். மனுதரும சாத்திரம் (மனு ஸ்மிருதி) எனும் நூலுக்கு விளக்கம் அளித்தவர்.

குமாரில பட்டர் : கி. பி. 8வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். மீமாம்ச தத்துவத்தை நிறுவியவர். பாட்டா மீமாம்சா பள்ளியை (Bhatta School of Mimasa) நிறுவியவர்.

லக்வி : மீமாம்ச சூத்ரம் பற்றி சபரர் எழுதிய விளக்கத்திற்கு சுருக்கமான விளக்கம் எழுதியவர்.

லலித விஸ்தாரா : மகாயான புத்த சிந்தனைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தரின் வாழ்க்கை வரலாறு.

லங்காவதார சூத்திரம் : மகாயான பெளத்த மத சூத்திரங்களில் முக்கியமான ஒன்று.

லோகாயாதம் : பொருள்முதல்வாதம் (Materialism) எனும் தத்துவத்தை நிறுவியவர் சார்வாகர். இதனை சார்வாகம் என்றும் அழைப்பர்.

மாதவா : கி. பி. 14வது நூற்றாண்டில் வாழ்ந்த அத்வைத வேதாந்தி. சர்வ தரிசன சங்கிரஹ என்ற இந்திய தத்துவவியல் தொகுப்பை எழுதிப் புகழ் பெற்றவர்.

மதுசூதன சரசுவதி : காலம் 1565-1650. அத்வைத சித்திஎன்ற நூலை எழுதிய அத்வைத வேதாந்தி.

மத்வர் : கி. பி. 13வது நூற்றாண்டில் வாழ்ந்த துவைதம் எனும் இருமை கருத்தியலை நிறுவிய மாத்வ சம்பிராயத வைணவ குரு.

மாத்யமக : மகாயான புத்தவியல் தத்துவ கருத்தியல். இதனை நிறுவியது நாகார்ஜுனர். யதார்த்தம் (உண்மை) என்பது ’வெறுமையே’ என்பது இவர்கள் பார்வை.

மாத்யமக காரிகை : இதன் ஆசிரியர் நாகார்ஜுனர்

மகாபாரதம் : இந்தியாவின் புகழ்பெற்ற இரு இதிகாசங்களில் ஒன்றான இதை எழுதியவர் வியாசர். இப்போது நாம் பார்க்கின்ற வடிவம் கி. மு. 400க்கும் கி. பி. 400க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாகியது.

மகாசாங்கிகர்கள் : பழமைவாத புத்த சங்கத்திலிருந்து முதன்முதலில் வெளியேற்றப்பட்டவர்கள். பின் இவர்கள் தங்களுக்கு என தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள்.

மகாவிபாசா : அபிதம்ம விபாசாவும் இதுவும் ஒன்றே.

மகாவீரர் : சமண சமய தத்துவத்தை நிறுவியவர். கௌதம புத்தர் காலத்தில் வாழ்ந்தவர்.

மகாயானம் : ‘ உயர்ந்த பாதை ‘ என்று பொருள். பிற்கால புத்தவியல்வாதிகள் உருவாக்கிய புத்தமதப் பிரிவு. இவர்கள் தங்களின் எதிர்தரப்பை ஹீனயானம் (குறுகிய பாதை)என்பர்.

மகாயான சூத்திரங்கள் : மகாயான புத்தமத இறையியல் தத்துவபாடல்கள் அடங்கிய நூல்.

மைத்ரேயநாதர் : புத்தவியல் அடிப்படையிலான யோககார கருத்தியலை உருவாக்கியவர். கி. பி. 400இல் வாழ்ந்தவர்.

மந்தன மிஸ்ரா : கி. பி. 9வது நூற்றாண்டில் வாழ்ந்த முக்கிய பாட்டா மீமாம்ச தத்துவ அறிஞர்.

மாண்டூக்ய காரிகை : கி. பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கௌடபாதர் எழுதியது.

மனு : இவர் மனுதரும சாத்திரம் எனும் மனுஸ்மிர்தியின் ஆசிரியர். இந்திய சட்டங்கள் பற்றி கூறும் முதல் நூல். இப்போது நாம் பார்க்கின்ற வடிவம் கி. மு. 200க்கு முன்பு இருந்ததாகும்.

மாயாவாதம் : பிரம்மம் தவிர படைக்கப்பட்ட அனைத்துப் பிரபஞ்சங்களும் சீவராசிகளும் மித்யா(பொய்மையானது) எனக்கூறும் அத்வைத வேதாந்தக் கொள்கை.

மிலிண்ட பனாஹ : புத்தவியல் குறித்த பழங்கால பாலி மொழி (இந்தோனேசியா) நூல்.

மீமாம்சா (பூர்வ): ஜைமினி என்பவர் இதனை தொகுத்தவர். இப்பகுதியில் வேதத்தின் சடங்குகள் குறித்த விளக்கங்கள் கொண்ட மிகப் பழங்கால நூல்.

மீமாம்சா (உத்தர) : இப்பகுதியில் வேதத்தின் இறுதி பகுதிகளான உபநிடதங்கள் அமைந்துள்ளது.

மீமாம்ச சூத்ரா : மீமாம்ச தத்துவம் பற்றிய மூல நூல்.

நாகார்ஜுனர் : கி. பி. 200இல் வாழ்ந்தவர். புத்தவியல் தத்துவத்தின் மாத்யமிக கருத்தியலை உருவாக்கியவர்

நிம்பர்க்கர் : கி. பி. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பிரம்ம சூத்திரம் பற்றி ஆத்திக விளக்கம் கொடுத்தவர்.

நவ்ய நியாயா : நவ நியாயா. காங்கேசர் போதித்த நியாய தத்துவவியலின் இறுதிக் கட்டம்.

நியாயம் : இத்த்துவத்தை நிறுவியவர் கௌதமர். அறிவாய்வியல் மற்றும் தர்க்கம் குறித்த கேள்விகள் மீது கவனம் செலுத்தும் தத்தவ நூல்.

நியாய – பிந்து : புத்த தர்க்கவியல் நூல். தர்மகீர்த்தி எழுதியது.

நியாய – பிந்து – திகா : ’நியாய – பிந்து’ நூலைப் பற்றி தர்மோத்தரா எழுதிய விமர்சன நூல்.

நியாய – கந்தழி : வைசேஷிக தத்துவ முறை பற்றி பிரசஸ்தபாதர் கூறியதன் மீதான விமர்சன நூல்.

நியாய – கணிகா : மீமாம்சம் பற்றி வாசஸ்பதி மிஸ்ரர் எழுதியது. இது மந்தன மிஸ்ரர் எழுதிய ’விதி விவேகா’ என்ற நூலின் மீதான விமர்சன நூல்.

நியாய – குசுமாஞ்சலி : இந்நூலை உதயணர் எழுதியது. கடவுள் இருப்பதை நிரூபிக்கும் நியாய வைசேஷிக உரைகள் கொண்டது.

நியாய-மஞ்சரி : நியாய வைசேஷிக முறை குறித்து ஜெயந்த பட்டர் எழுதிய முக்கியமான நூல்.

நியாய-சூத்ரம் : நியாய முறைப் பற்றிய மூல நூல். கோதமர் அல்லது அக்சபாதர்எழுதியதாக கூறப்படுகிறது.

நியாய-வைசேஷிகம் : நியாயம் மற்றும் வைசேஷிக தத்துவங்கள் ஒருங்கிணைந்த போது உருவான பெயர்.

நியாய-வார்த்திகா : உத்யோதகாரர் எழுதியது. நியாய சூத்திரம் மீதான வாத்ச்யாயணரின் நூல் பற்றி எழுதப்பட்டு இன்றும் இருக்கின்ற நூல்களில் இதுவே மிகப் பழமையானது.

நியாய-வார்த்திகா-தாத்பரிய-பரிசுத்தி : உதயணர் எழுதியது. நியாய-வார்த்திகா-தாத்பர்ய-திகா பற்றி எழுதப்பட்ட நியாய வைசேஷிக விளக்க நூல்.

நியாய வார்த்திகா-தாத்பரிய-திகா : வாசஸ்பதி மிஸ்ரா எழுதியது இது நியாய-வைசேஷிக விளக்க நூல்.

பதார்த்த-தர்ம-சங்கிரஹா : வைசேஷிக தத்துவம் பற்றி இன்றும் உள்ள நூல்; எழுதியது ப்ரசஸ்பாதர்.

பத்மபாதர் : ஆதிசங்கரரின் சீடர். அத்வைத வேதாந்தி.

பங்காசிகர் : தொடக்க கால சாங்கிய ஆசிரியர்.

பாணினி : கி. மு. 300க்கு முற்பட்டவர். சிறந்த இலக்கண ஆசிரியர்.

பார்த்தசாரதி மிஸ்ரர் : பாட்ட மீமாம்ச தத்துவ ஆசிரியர்களில் முக்கியமானவர். காலம் 16வது நூற்றாண்டு.

பதஞ்சலி : யோகம் எனும் தத்துவத்தை நிறுவியர்.

பாயாசி : புத்தருக்குப் பின் வந்த பொருள்முதல்வாதி.

பீடகங்கள் : தொடக்க கால புத்த தத்துவ நெறிமுறை இலக்கியத் தொகுப்புகள்.

பிரபாசந்திரர் : கி. பி. 9வது நூற்றாண்டில் வாழ்ந்த சமண சமய தர்க்கவாதி.

பிரபாகர மீமாம்சம் : கி. பி. 7வது நூற்றாண்டில் வாழ்ந்தவர் பிரபாகரர். மீமாம்சம்எனும் தத்துவவியல் கொள்கையை நிறுவியவர்.

பிரக்ஞபாரமிதா சூத்ரம் : மகாயான புத்தமத சூத்ரங்களில் ஒன்று.

பிரக்ஞ – ப்ரதீபா : பாவவிவேகர் என்பார் எழுதியது. மாத்யமக புத்த தத்துவம் பற்றியது.

பிரகரண – பஞ்சிகம் : சாலிகநாதர் எழுதியது. பிரபாகரரின் கருத்துகளுக்கு முக்கிய விளக்க நூல்.

பிரமாண சமுக்காயம் : திக்நாகர் எழுதியது. புத்தமத தர்க்கவியல் பற்றிய அடிப்படை நூல்.

பிரமாண – வார்த்திகா : தர்மகீர்த்தி எழுதியது.

பிரசன்ன – பாதா : சந்திரகீர்த்தி எழுதியது. மாத்யமிக காரிகை பற்றிய முக்கியமான விளக்க நூல்களில் ஒன்று.

பதார்த்த – தர்ம – சங்கிரகம் : கி. பி. 5வது நூற்றாண்டில் வாழ்ந்த பிரசஸ்தபாதா என்பவர் எழுதியது.

புரந்தரர் : லோகாயத தத்துவவாதி. (பொருள்முதல்வாதி)

பூர்வங்கள் : தொடக்க கால சமணர்களின் புனித இலக்கியம்.

ரகுநாத சிரோமணி : கங்கேசரின் தத்துவங்களை விமர்சித்தவர். 16வது நூற்றாண்டினர்.

ராஜசேகர சூரி : சமண சமய தத்துவ ஆசிரியர். கி. பி. 1340ல் வாழ்ந்தவர்.

ராமாயணம் : இந்தியாவின் புகழ்பெற்ற இரண்டு இதிகாசங்களில் ஒன்று. கி. மு. 3வது நூற்றாண்டில் உருவானது. இப்போது நாம் பார்க்கின்ற வடிவம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் உருவானது.

இராமானுஜர் : கி. பி. 11வது நூற்றாண்டில் வாழ்ந்த விசிட்டாத்துவைதம் எனும் தத்துவத்தை நிறுவிய வைணவ சமயப் பெரியார். பிரம்ம சூத்திரம் பற்றி ஸ்ரீபாஷ்யம் எனும் ஆத்திக அடிப்படையிலான விளக்கங்கள் எழுதியவர்களில் மிக முக்கியமானவர்.

ராவண-பாஷ்யம்: தொடக்க கால வைசேஷிக நூல்களில் ஒன்று.

ரமணர் : காலம் 1879-1950, அத்வைத வேதாந்தி. “உள்ளவை நாற்பது” போன்ற அத்வைத வேதாந்த நூல்களை எழுதியவர்.

ருக் வேதம் : வேத நூல்களில் மிகப்பழமையானதும் முக்கியமானதும் ஆகும். இதன் காலம் கி. மு. 1500 – 1100 ஆகும்.

ரிஜ்விமாலா : சாலிகநாதர் என்பவர் எழுதியது. பிரபாகரின் பிரஹதி என்ற நூல் பற்றிய விளக்க நூல்.

சபரர் : கி.பி. 400ல் வாழ்ந்தவர். மீமாம்ச சூத்திரம்பற்றி இன்றும் நம்மிடையே உள்ள மிகப் பழமையான நூலை எழுதியவர் சபரர்.

சபர பாஷ்யம் : மீமாம்ச சூத்திரம் பற்றி சபரர் எழுதிய நூல்.

சத்-தர்சன-சமுக்காயம் : இந்தியத் தத்துவங்களின் தொகுதி. ஹரிபத்ரர் எழுதியது.

சத்தர்ம-புண்டரீகம் : மகாயான பௌத்த சமய சூத்திர நூல்.

சாலிகநாதர் : கி. பி. 7 அல்லது 8வது நூற்றாண்டை ஒட்டி வாழ்ந்தவர். பிரபாகரரின் தத்துவங்கள் பற்றி எழுதப்பட்ட விளக்கங்களில் சாலிகநாதரின் விளக்கங்கள் புகழ் பெற்றது.

சமாதிராஜா : மகாயான பௌத்த சமய சூத்திர நூல்.

சமந்தபத்ரா : முற்காலத்திய சமண சமய தத்துவவாதி.

சாம வேதம் : நான்கு வேதங்களில் மூன்றாவது. சடங்குகளின் போது பாடப்படும் பாடல்கள் கொண்டது.

சங்கரர் : கி. பி.788 – 820இல் வாழ்ந்த அத்வைத வேதாந்திகளில் மிக முக்கியமானவர். இவர் தத்வ போதம், விவேக சூடாமணி, பஜ கோவிந்தம், ஆத்ம போதம், முதலிய நூல்கள் இயற்றியவர். மேலும் முக்கிய பத்து உபநிடதங்களுக்கும் மற்றும் பிரம்ம சூத்திரம் ஆகியவற்றுக்கும் பாஷ்யம் (விளக்க உரை) எழுதியவர்.

சாங்கியம் : மிகப் பழமையான இந்திய தத்துவப் பிரிவுகளில் ஒன்று. கபிலர் (சாங்கியம்) இத்தத்துவத்தை நிறுவியவர்.

சாங்கிய-காரிகா : ஈஸ்வர கிருஷ்ணா எழுதியது. சாங்கியம் பற்றி இன்றும் நம்மிடையே உள்ள மிகப் பழமையான நூல் இதுவே.

சாங்கிய-ப்ரவசன-பாஷ்யா : விஞ்ஞான பிட்சு என்பவர் எழுதியது. சாங்கிய சூத்திரம் பற்றிய விளக்க நூல்.

சாங்கிய-சூத்திரம் : மத்திய காலத்தின் இறுதிப் பகுதியில் எழுதப்பட்ட சாங்கியம் பற்றிய நூல்.

சாங்கிய-தத்துவ-கவ்முதி : வாசஸ்பதி மிஸ்ரர் எழுதியது. சாங்கிய காரிகா எனும் நூலின் விளக்க உரை நூல் இது.

சங்கபத்ரா : வசுபந்துவுக்கு பிறகு வைபாஷிக புத்த தத்துவவாதி.

சஞ்சய பெலத்திட்டா : புத்தர் காலாத்தில் வாழ்ந்த கடவுள் மறுப்புவாதி.

சாந்திதேவா : கி. பி. 7வது நூற்றாண்டில் வாழ்ந்த மகாயான புத்தவியலை பரப்பியவர்.

சாரீரக – பாஷ்யம் : சங்கரரின் பிரம்ம சூத்திரம் நூலின் பாஷ்யத்திற்கு விரிவான விளக்க நூல்.

சர்வ-தர்சன-சங்கிரகம் : மாதவர் எழுதிய இந்திய தத்துவவியல்கள் பற்றிய மிகப் புகழ் பெற்ற தொகுப்பு.

சர்வாஸ்தி-வாதம் : “எல்லாமும் எப்போதும் உயிருடன் உள்ளது” என்ற புத்தவியல் கருத்தியல் கொள்கையை விளக்கும் நூல்.

சௌராந்திகா : புத்தமத தத்துவவியல் மற்றும் கருத்தியல் கொள்கைகளை விளக்கும் நூல்.

சாயனர் : கி. பி. 14ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பேரரசில், முதலாவது புக்கா ராயன் காலத்தில் வாழ்ந்தவர். நான்கு வேதங்களைப் பற்றி விரிவான விளக்க நூல்கள் எழுதியவர். இன்று நாம் படிப்பது இவரது வேத விளக்க நூல்களே.

சித்தசேனர் : தொடக்ககால சமண சமய தத்துவவாதி.

சிக்ஷா சமுக்காயம் : சாந்தி தேவர் எழுதிய மகாயான பௌத்த சமயத்தை பரப்ப உதவிய கவிதை நூல்.

சுலோக வார்த்திகா : குமாரில பட்டர் எழுதிய முக்கிய தத்துவவியல் நூல்.

ஸ்புதார்த்த-அபிதம்ம-கோசாம்-வியாக்யா : யசோமித்ரர் எழுதியது. அபிதம்ம கோசம் பற்றிய விளக்க நூல்.

ஸ்தவீரவாதிகள் : புத்தவியல் கருத்தியலை பின்பற்றிய மிகப்பழமையான தொண்டர்கள்.

சுவேதாம்பரர் : சமண சமயத்தின் ஒரு பெரும் பிரிவினர்.

ஸ்ரீகந்தா : பிரம்ம சூத்திரம் எனும் வேதாந்த நூலுக்கு விளக்கம் எழுதியவர்.

சூன்யவாதம் : மாத்யமிக புத்தவியலாளர்களின் தத்துவக்கொள்கை. அதாவது “ உண்மை என்பது வெற்றிடமே “.

சுரேஷ்வராச்சாரியர் : ஆதிசங்கரரின் காலத்தில் வாழ்ந்தவர். சங்கரரின் சீடர். சங்கர அத்வைத வேதாந்திகளில் வேதாந்தங்களைப் பற்றி விளக்கம் எழுதியவர்களில் முதன்மையானவர்.

சுத்த பீடகம் : தொடக்க கால புத்த நெறிமுறை இலக்கியத் தொகுப்புகள் அடங்கிய மூன்று நூல்களில் ஒன்று.

தந்திர-வார்த்திகா : மீமாம்ச தத்துவம் பற்றி குமரில பட்டர் எழுதியது.

தர்க்க-ரகஸ்ய-தீபிகா : சத்-தர்சண-சமுக்காயம் எனும் நூல் பற்றி குணரத்ணா என்பவர் எழுதிய விளக்க நூல்.

தர்க்க-சங்கிரஹா : அன்னம பட்டர் என்பவர் நியாய – வைசேஷிகம் தத்துவம் பற்றி எழுதிய பிரபலமான நூல்.

தத்துவார்த்த அதிகாம சூத்திரம் : உமாஸ்வாதி எழுதியது. சமண சமயம் பற்றி தொடக்க காலத்தில் எழுதப்பட்ட முறையான விளக்க நூல்.

தத்துவ சிந்தாமணி : கங்கேசர் எழுதியது. புதிய நியாயா தத்துவத்தின் மூல நூல்.

தத்துவ சங்கிரகம் : சந்திராக்சிதா என்பவர் எழுதிய புத்த தத்துவ நூல்.

தத்துவ வைசாரதி : வாசஸ்பதி மிஸ்ரர் என்பவர் பிரம்ம சூத்திரம் எனும் வேதாந்த நூலுக்கு எழுதிய விரிவான விளக்க நூல்.

தத்வோபப்ளவசிம்மம் : ஜயராசி பட்டர் எழுதிய நூல். யதார்த்த நிலை மீது ஏற்படும் தீவிர சந்தேகம் பற்றிய நூல். பொருள்வாதிகள் எழுதியதாக தவறாக கருதப்படுவது இந்நூல்.

தேரவாதிகள் : தேரவாத பௌத்த சமய பிரிவினர். இது ஸ்தவீரவாதிகள் என்ற பாலி மொழிச் சொல்.

துப்திகா : குமாரில பட்டர் எழுதிய மீமாம்சகத் தத்துவ நூல்.

உதயணா : கி. பி. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நியாய – வைவேஷிக தத்துவத்தின் பழைய வடிவம் பற்றி போதித்தவர்களில் இறுதியானவர்.

உத்யோதகாரர் : வாத்ஸ்யாயனர் எழுதிய நியாய சூத்ரம் எனும் நூலுக்கு விளக்கம் எழுதியவர். கி. பி. 6 அல்லது 7வது நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

உபநிஷத்துக்கள் : நான்கு வேதங்களின் இறுதியில் வரும் இறையியல் அல்லது மெய்யியல் தொடர்பான தத்துவ நூல்கள் என்பதால் இதனை வேதாந்தம் என்றும் உத்தர மீமாம்சம் என்றும் அழைப்பர். இவைகள் பிரம்மத்தைபற்றியும், பிரபஞ்சம் பற்றியும், பிரபஞ்சம் மித்யா எனும் நிலையாமையானது என்ற கொள்கையும், சீவ-பிரம்ம ஐக்கிய தத்துவத்தையும் வலியுறுத்தும் நூல்கள். இவைகளைப் பல ரிஷிகள் இயற்றியுள்ளனர். ஆதிசங்கரர் பத்து முதன்மையான உபநிஷத்துகளுக்கு பாஷ்யம் (விளக்கம்) எழுதியுள்ளார். சங்கரரின் உபநிடத விளக்கங்களுக்கு அவருக்கு பின் வந்தவர்கள் விரிவான விளக்கங்கள் எழுதியுள்ளனர்.

உமாஸ்வாதி : கி. பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சமண சமயத்திற்கு தொடக்க காலத்தில் முறையான வடிவம் கொடுத்தவர்.

வாசஸ்பதி மிஸ்ரர் : கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சாங்கியம், யோகம், நியாயம், மீமாம்சம், அத்வைத வேதாந்தம் போன்ற பலதரப்பட்ட தத்துவங்களுக்கு இவர் எழுதிய விளக்கங்கள் மிக முக்கியமானவை.

வைபாசிகம் : புத்தவியல் கருத்தியல் அடங்கிய நூல்.

வைசேசிகம் : பட்டறிவின் அடிப்படையிலான உள்ளமைவியல் குறித்த இந்தியத் தத்துவம்.

வைசேசிக சூத்ரம் : வைசேசிக தத்துவத்தின் நிறுவனரான கணாதர் என்பவரால் எழுதப்பட்ட வைசேசிக தத்துவத்தின் அடிப்படை நூல்.

வல்லபர் : 15வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். பிரம்ம சூத்திரத்திற்கு ஆத்திக அடிப்படையில் விளக்கம் அளித்தவர்.

வாசுதேவ சார்வபாஉமா : கி. பி. 15 மற்றும் 16வது நூற்றாண்டிற்கு இடைப்பட்டவர். நவ நியாயம் எனும் தத்துவத்தை வங்காளத்தில் அறிமுகம் செய்தவர்.

வசுபந்து : கி. பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். முதலில் வைபாசிக புத்த சமயத்தை பின்பற்றியவர். பின்னர் யோககார புத்த சமயத்தை தழுவியவர்.

வாத்ஸ்யாயணர் : கி. பி. 4வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் எழுதிய பழமையான நியாய சூத்திரம் எனும் நூல் இன்னும் நம்மிடையே உள்ளது.

வேதம் : இந்துசமயத்தின் புனித நூல். மிக விரிவான இலக்கியத் தொகுப்பு. இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் மிகப்பழமையானது. இதனை ருக் வேதம், யசுர்வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் என்று நான்காக தொகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேதத்தின் இறுதியில் அமைந்துள்ள பகுதிகளுக்கு வேதாந்தம் அல்லது உபநிசத்துக்கள் என்பர்.

வேதாந்தம் : வேதத்தின் இறுதிப் பகுதியில் அமைந்துள்ளதால் இதனை உத்தர மீமாம்சம் என்பர்.

வேதாந்த சூத்திரம் : இதனையே பிரம்ம சூத்திரம் என்பர்.

வேதாந்த சாரம் : 18வது நூற்றாண்டில் வாழ்ந்த சதானந்தர் என்பவர் உபநிடதங்களின் சாரத்தை இந்நூலில் எளிமையாக விளக்கியுள்ளார்.

விபாசா : இதனையே அபிதம்ம விபாசம் என்பர்.

விதி-விவேகா : மந்தன மிஸ்ரர் எழுதியது. பாட்ட மீமாம்சம் பற்றிய நூல்.

வித்யானந்தா : சமண சமய தர்க்கவியல்வாதி.

வித்தியாரண்யர் : விசயநகரப் பேரரசு தோண்றக் காராணமானவர். உபநிடதங்களின் தெளிவுரையாக இவர் எழுதிய பஞ்ச தசீ எனும் அத்வைத வேதாந்த நூல் மிகவும் பிரபலமானது. மேலும் சிருங்கேரி மடாதிபதியாகவும் திகழ்ந்தவர். சிறந்த அத்வைத வேதாந்தி

விஞ்ஞான பிட்சு : கி. பி. 16வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். சாங்கிய தத்துவத்தை பின்பற்றிய ஆன்மிகவாதி.

விஞ்ஞான-வாதம் : அகநிலைக் கருத்துக் கொள்கை. புத்தவியலின் யோககார கருத்தியலின் தத்துவக் கொள்கை.

விஞ்ஞாப்திமாத்ரா சித்தி : வசுபந்து எழுதியது. விஞ்ஞான வாதத்திற்கு ஆதரவான தத்துவக் கொள்கை கொண்ட நூல்.

வினய பீடகம் : தொடக்க கால புத்த சமய மூன்று நூல்களில் ஒன்று. புத்த துறவற நெறிகள் விளக்குவது.

விசிட்டாத்துவைதம் : முழுமுதற் கொள்கை. இராமானுஜரின் வேதாந்த கருத்தியலின் தத்துவப் பார்வை கொண்டது.

விருத்திகாரர் : மீமாம்ச சூத்திரம் பற்றி தொடக்க காலத்தில் விளக்கியவர்களில் ஒருவர் எனச் சபரர் சுட்டுகிறார்.

யோகா சூத்ரம் : மனிதனுக்கும் அப்பாற்ப்பட்ட சக்திகளை அடைய மேற்கொள்ளப்படும் ஒரு பண்டைய பயிற்சி முறை. பதஞ்சலி முனிவர் இதனை அறிமுகப்படுத்தியவர்.

யோககார : மைத்ரேயநாதர் மற்றும் அசங்கர் ஆகியோர் நிறுவிய மகாயான புத்த தத்துவ கருத்தியல் எண்ணங்களே உண்மை என்பது இவர்கள் கொள்கை.

யோககார-பூமி-சாஸ்த்ரா : அசங்கர் எழுதியது. யோககார புத்தவியல் பற்றிய அடிப்படை நூல்.

பதஞ்சலி யோக சூத்திரம் : பதஞ்சலி முனிவர் இத்தத்துவத்திற்கு ஆசிரியர். இவரின் பதஞ்சலியோக சூத்திரம் எனும் நூல் உலகளவில் பெருமை பெற்றது.

யாக்ஞவல்கியர் : உபநிடதங்கள் பற்றி போதித்த முக்கிய தத்துவவாதி. இவரது மனைவி மைத்ரேயி கூட ஒரு வேதாந்தி ஆவர்.

யாக்ஞயவல்கிய ஸ்மிருதி : கி. பி. 100க்கும் 300வது ஆண்டுகளுக்கு இடைப்பட்டது.

யசுர்வேதம் : பண்டைய நான்கு வேதங்களில் மூன்றாவதாகும். வேத சடங்குகள் பற்றிய விளக்க நூல்.

யசோமித்ரா : வசுபந்துவின் அபிதம்ம கோசம் நூலுக்கான விளக்க நூல் எழுதியவர்.

யசோவிஜயா : சமண சமய தர்க்கவியல்வாதி.

————

ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி–

வேதாந்த மார்க்கத்துக்குப் பெரும் வித்திட்ட அப்பெரியோர்களின் வரிசையில் மிக முக்கியமான இடத்தை வகிப்பவர்
அத்வைத சம்பிரதாயத்தின் ஸ்ரீமத் ஆச்சாரியராகிய ஸ்ரீ சங்கர பகவத்பாதர் ஆவார்.
பகவத் கீதை, உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், ஆகியவற்றிற்கு ஒப்பற்ற பாஷ்யங்கள் (விளக்கவுரைகள்) எழுதி
நம் மார்க்கத்துக்குத் தொண்டு புரிந்தவர்–
“பிரம்ம சூத்திரத்திற்கு ’யுஷ்மதஸ்மத் ப்ரத்யய கோசரயோ:’ என்று தொடங்கி,
’அனாவ்ருத்தி: சப்தாத் இதி ஸூத்ராப்யாஸ: சாஸ்த்ரபரிஸமாப்திம் த்யோதயதி’ என்று முடியும் பிரபல பாஷ்ய உரை நூலை எழுதியவர்”

சாக்ஷாத் அவருடைய சீடர் பத்மபாதர் “பஞ்சபாதிகா” என்ற நூலில் சங்கர பாஷ்யத்தின்
முதல் நான்கு சூத்திர பாஷ்யங்களை விரிவாக விளக்கியுள்ளார். இதை மேலும் விவரிக்க, ராமானுஜர் காலத்திற்கு முன்பே
பிரகாசாத்ம யதிகள் “பஞ்சபாதிகா விவரணம்” என்ற அநு பாஷ்யம் செய்துள்ளார்.
“விவரண பிரஸ்தானம்” என்ற அத்வைத பாண்டித்ய உட்பிரிவை ஏற்படுத்தியவர் இவர்.
இவ்விவரண நூலை மேலும் விளக்க, “ருஜு விவரணம்”, “தத்வ தீபனம்” முதலிய பாஷ்ய நூல்கள் 13,14,15-ஆம்
நூற்றாண்டுகளில் வெளிவந்தமை பண்டிதர்கள் அனைவரும் அறிவர்.

ஆனந்தகிரி அல்லது ஆனந்தஞானர் எனப்படும் அத்வைத ஆச்சாரியார் சங்கரருடைய
பிரம்ம சூத்திர பாஷ்யம், பத்து உபநிடத பாஷ்யங்கள், கீதா பாஷ்யம், உபதேச சாஹச்ரி கிரந்தம் ஆகியவற்றுக்கும்,
சங்கரருடைய பிரதான சீடராகிய சுரேஷ்வரருடைய பிருகதாரண்யக தைத்திரீய பாஷ்ய வார்த்திகங்களுக்கும், டீகைகளை இட்டுள்ளார்.

மேலும், ஒன்பதாவது/பத்தாவது நூற்றாண்டில் வாழ்ந்தவராக அறியப்படும் வாசஸ்பதி மிச்ரா என்பவர்
சங்கர பாஷ்யத்தை விவரிக்கும் “பாமாதி” என்னும் நூலை எழுதியுள்ளார்.
இவர் “பாமாதி பிரஸ்தானம்” என்ற அத்வைத பாண்டித்ய உட்பிரிவை உண்டாக்கியவர்.
அதையும் மேலும் விவரித்து அமலானந்தர் என்னும் 13-ஆம் நூற்றாண்டு அத்வைதியர் “வேதாந்த கல்பதரு” என்ற ஒரு உரையையும் எழுதியுள்ளார்.

(4) இன்று சங்கர பிரம்ம சூத்திர பாஷ்யத்தை விளக்கும் “பிரகடார்த்த விவரணம்” என்ற நூல் பதிப்பில் உள்ளது.
இதில் பேதாபேத மதமாகிய பாஸ்கரமதம் கண்டிக்கப்படுகிறது. ஆனால் ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யத்தில் இருந்து ஒரு குறிப்பும் இல்லை.
ஆகையால் இது இராமானுஜர் காலத்திற்கு முந்தையது என்று கொள்ள இடமிருக்கிறது.
பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக அறியப்படும் ஸ்ரீ ஆனந்தகிரியும் தம் சூத்திர பாஷ்யத்தில் “பிரகடார்த்த காரர்” என்று
இவ்வாசிரியரைக் குறிப்பிட்டு, இந்நூலிலிருந்து மேற்கோளும் எடுத்துள்ளார்.

அத்வைத பிரம்ம சூத்திர பாஷ்யகாரராகிய சங்கரர் எழுதிய வேறு நூல்கள் எவை எவை என்று பார்த்தால்,
சர்ச்சைக்கு இடமில்லாதபடி அவருடைய
(1) கீதா பாஷ்யம்,
(2) ஈசாவாஸ்ய-கேன (பத/வாக்ய பாஷ்யங்கள் இரண்டு)-கட-பிரஷ்ன-முண்டக-மாண்டூக்ய-ஐதரேய-தைத்திரீய-பிருகதாரண்யக-சாந்தோக்ய
ஆகிய பத்து உபநிடதங்களுக்கு அவரிட்ட பாஷ்யங்கள்,
(3) ‘உபதேச சாஹச்ரி’ என்ற கிரந்தம் ஆகியவற்றை சம்பிரதாயமும் வரலாற்று ஆராய்ச்சியும் ஒப்புக் கொள்கிறது.
இது தவிர விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் முதலிய நூல்கள் அவருடையதா என்பதில் வரலாற்று ஆசிரியர்கள் மத்தியில் சர்ச்சை உள்ளது –

ஸ்ரீ ராமானுஜர் காலம் கி.பி. 11 அல்லது 12-ஆம் நூற்றாண்டு என்பதும், அவர் ஆதி சங்கரர் கொள்கைகளைத் தம்
ஸ்ரீபாஷ்யத்திலும் கீதா பாஷ்யத்திலும் விமர்சித்துள்ளமையால் அவர் சங்கரர் காலத்திற்கு பின்பு வாழ்ந்தவர் என்பதும் திண்ணம்.
அத்துடன், ஸ்ரீ ராமானுஜரின் இளைய பருவத்தில் வயதில் முதிர்ந்தவராக இருந்த யாமுனாச்சாரியார் அல்லது ஆளவந்தார்,
தம் நூல்களான “சித்தி திரயம்” மற்றும் “ஆகம பிராமாண்யம்” எனும் நூல்களில் சங்கரரின் சில கொள்கைகளைச்
சுட்டிக் காட்டி அவைகளிலிருந்து மாறுபடுகிறார்.

சங்கர பாஷ்யத்தை விளக்க எழுந்த பாமாதி என்ற நூலின் ஆசிரியராகிய வாசஸ்பதி மிச்ரர்
தம் “நியாய சூசி நிபந்தனம்” என்னும் நூலில் “வருடம் 898-இல் முடிக்கப்பட்டது” என்று குறிப்பிடுகிறார்.
இந்திய வருடக்கணக்கில் சாக வருடம் விக்கிரம வருடம் என்று இரண்டு கணக்குகள் உண்டு.
சாக வருடம் என்று எடுத்துக் கொண்டால் வாசஸ்பதி மிச்ரர் கூறும் தேதி கி.பி. 976 என்று கொள்ள வேண்டி வரும்.
விக்கிரம வருடம் என்று எடுத்துக் கொண்டால் கி.பி. 841 என்று கொள்ள வேண்டி வரும்.
இவ்விரண்டில் “விக்கிரம வருடம் 898”, அதாவது ஆங்கில வருடம் கி.பி. 841 என்று கொள்வது தான் சரி என்று
வரலாற்று ஆராய்ச்சியாளர் Hajime Nakamura தமது “A History of Vedanta Philosophy, Vol. 1” என்ற நூலில் விளக்கியுள்ளார்.

ஆளவந்தார் என்னும் யாமுனாச்சாரியார் தம் சித்தித்ரயத்தில் “ஸ்ரீவத்சாங்கர் என்னும் வேதாந்தி
சங்கரர் காலத்துக்கும் பாஸ்கரர் காலத்துக்கும் இடையே வாழ்ந்தார்” என்று குறிப்பிடுகிறார்.
இது சித்தி த்ரயம் ஐந்தாம் பாகம், முதல் அத்தியாயத்தில் உள்ளதென்றும் குறிப்பிடுகிறார்.
இதையும், வாசஸ்பதி மிச்ரர் கி.பி. 841-இல் நூற்கள் எழுதியிருப்பதையும் சேர்த்துப் பார்த்தால், சங்கரர் கால வரையறையைக்
கண்டிப்பாகக் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்கு முன் வைக்க வேண்டும். இதிலிருந்து சிருங்கேரி மடம் கூறும் “கி.பி. 788-820” என்ற
கணக்கு சற்று அடிபடுகிறது. ஓர் ஐம்பதாண்டுகளாவது தாமதமாக இருக்க வேண்டும்.

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வேதங்களும் ஸ்ரீ வேதாந்தங்களும் -ஸ்ரீ உபநிஷத்துக்கள் சுருக்கம் —

April 9, 2021

வேதம் – அநாதியானது
அதாவது ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. இதை ஒருவரும் இயற்றவில்லை. மஹரிஷிகளால் த்யானத்தில்
காணப்பட்டவை வேதம். இந்த மஹரிஷிகள்”மந்த்ர த்ரஷ்டா ”எனப்பட்டனர். வேதம் ”அபௌருஷேயம்” எனப்படும்.
அதாவது
ஒருவராலும் இயற்றப்படாதது. உலகில் வேறு எந்த நூலோடு கூடவும் ஒப்பிட இயலாதது. ஏனெனில் வேதம் ஆரம்பமும்,
முடிவும் இல்லாதது. இது எப்போது தோன்றியது என்பதை வரையறுத்து சொல்லவும் இயலாது. பகவானின் மூச்சுக்காற்று
என்று சொல்லப்படுவதால், பகவானைப் போலவே வேதமும் ஒருவராலும் தோற்றுவிக்கப்படாதது. வேதம் மிக கவனமாக பல
லட்சக்கணக்கான ஆண்டுகளாக முன்னோர்களால் எழுத்துப் பிசகாமல், ஸ்வரம் பிசகாமல் மனனம் பண்ணி, வழிவழியாக,
இப்போதுள்ள தலைமுறை வரை கொண்டு வந்திருப்பது வேறு எங்கும் காணாத, கேட்கப்படாத விந்தை. உலகத்தில் மிகமிகப்
பழமையானவை ‘வேதங்கள்”.
வேதத்தில் தர்மத்தைச் சொல்லும் பாகம் ”ஸம்ஹிதை”.
தத்வத்தைச் சொல்லும் பாகம் ”உபநிஷத்” அல்லது ”வேதாந்தம்”.
வேதத்தை ”ஸ்ருதி” என்றும் சொல்வர்.
ஆசார்யன் உபதேசிக்க சிஷ்யன் கேட்க, பிறகு, அந்த சிஷ்யன் தன் சிஷ்யனுக்கு அல்லது சிஷ்யர்களுக்குச் சொல்ல
இப்படி வேதம், வழி வழியாகச் சொல்லப்பட்டது. தமிழில் இதை ”எழுதாக் கிளவி” என்று சொல்வர்.

க்ருஷ்ண த்வைபாயநர் – அச்வத்தாமா

ஒவ்வொரு த்வாபரயுகத்திலும் விஷ்ணுவின் அம்சமாக ஒரு ரிஷி ”வ்யாஸர்” என்கிற பெயருடன் தோன்றி வேதத்தை
ஒழுங்குபடுத்துகிறார். இது 28வது சதுர்யுகம். இந்த யுகத்தில். ”க்ருஷ்ண த்வைபாயனர்” என்கிற ரிஷி வ்யாஸராக அவதரித்து
வேதங்களை ஒழுங்குபடுத்தினார்.
அடுத்து வரும் த்வாபரயுகத்தில் த்ரோணாரின் புத்ரர் ”அச்வத்தாமா” (இவர் சிரஞ்சீவிகளில் ஒருவர்) வ்யாஸராகத்
தோன்றி, வேதங்களை ஒழுங்குபடுத்துவார் என்று சாஸ்த்ரக்ஞர்கள் கூறியுள்ளனர்.
வேதம் என்பது ஸ்வர்க்கம், பசு, புத்ரன் முதலிய இஷ்டத்தை அடைவதற்கும், நரகம் முதலிய
அநிஷ்டத்தை அடையாமல் இருப்பதற்கும் உபாயத்தை, லோக ரீதியில் இல்லாததான ஒரு விஷயத்தைச் சொல்கிறது;.
யாகம்,ஹோமம், தானம், த்யானம் – இவை தர்மங்கள்.
இவைகளுக்கு ப்ரமாணமாக இருப்பது—_மூலமாக இருப்பது ”வேதம்”. இதை ”வேதோமீ கில தர்ம மூலம்” என்று சொல்வர்.
இப்படி வேதத்தின் அருமை, பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். இது பாரத நாட்டின் பொக்கிஷம்,
கலியுகத்தில், மனிதர்கள் மந்த புத்தி உடையவர்களாக இருப்பர் என்று வ்யாஸர் (க்ருஷ்ணத்வைபாயனர்) வேதத்தை நான்காக
பிரித்தார் என்று பொரியோர்கள் சொல்வார்கள்

வேதங்களை அத்யயனம் செய்ய ”ஸ்வரம்” முக்கியம். இதை ஐந்து விதமாக அத்யயனம்/ பாராயணம் செய்வார்கள்.

பாராயண முறை விவரம்
(1) வேத மந்த்ரங்களை சந்தி சேர்த்து பாராயணம் செய்தல்– இது ”மூலஸம்ஹிதை” எனப்படும்.
(2) வேத மந்த்ரங்களைப் பதம் பதமாக பிரித்து அத்யயனம் செய்தல் – இது ”பதஸம்ஹிதை” எனப்படும்
(3) ஒரு பதத்தை முன்னும், பின்னும் சொல்லுதல் (உ.ம்:அக்னிம் ஈளே, ஈளே ப்ரோஹிதம், ப்ரோஹிதம்
யஜ்ஞஸ்ய, யஜ்ஞஸ்ய தேவம், தேவம் ரித்விஜம் —இப்படி ) இது ”க்ரம ஸம்ஹிதை” எனப்படும்.
(4) பதங்களைச் சேர்த்து சேர்த்து மறுபடியும் பிரித்துச்சொல்லுதல் (உ.ம்: .அக்னிம் ஈளே, ஈளே அக்னிம்,அக்னிம் ஈளே, ஈளே ப்ரோஹிதம்,
ப்ரோஹிதம் ஈளே,ஈளே ப்ரோஹிதம், ப்ரோஹிதம் யஞ்ஞயஸ்ய,யஞ்ஞயஸ்ய ப்ரோஹிதம் இப்படி) – இது”ஜடஸம்ஹிதை” எனப்படும்.
(5) கடினமாக அத்யயனம் செய்தல் (உ.ம்: அக்னிம் ஈளே, ஈளே அக்னிம், அக்னிம் ஈளே ப்ரோஹிதம், ப்ரோஹிதம் அக்னிம் ஈளே,
அக்னிம் ஈளே ப்ரோஹிதம், ஈளே ப்ரோஹிதம், ஈளே, ஈளே ப்ரோஹிதம், யஞ்ஞஸ்ய ப்ரோஹிதம் -இப்படி) இது ”கனம்” எனப்படும்

———

ஸ்ரீ வேதாந்தங்கள்-ஸ்ரீ உபநிஷத்துக்கள்

இவற்றில் முக்கியமானவை
1. ஈசோபநிஷத்
(ஈசாவஸ்ய உபநிஷத்)
2. கேநோபநிஷத்
3. கடோபநிஷத்
4. ப்ரச்னோபநிஷத்
5. முண்டக உபநிஷத்
6. மாண்டூக்ய உபநிஷத்
7. தைத்திரீய உபநிஷத்
8. ஐதரேய உபநிஷத்
9. சாந்தோக்ய உபநிஷத்
10. ப்ருஹதாரண்யக உபநிஷத்
இவற்றின் சுருக்கம் ”ப்ருஹ்ம ஸூத்ரம் ” . வ்யாஸர் இயற்றியது. 545 ஸுத்ரங்கள்

மேற்சொன்ன, பத்து உபநிஷத்துக்களுடன்கூட,
(11)ச்வேதாச்வதர உபநிஷத்
(12) அதர்வசிர உபநிஷத்
(13) அதர்வசிகோ உபநிஷத்
(14) கௌஷீதகி உபநிஷத்
(15) மந்த்ரிகோபநிஷத்
(16) ஸூபாலோபநிஷத்
(17)அக்நி ரஹஸ்யம்
(18) மஹோபநிஷத் –

———-

வேதமும் உபநிஷத்தும் கங்கை.
பாஞ்சராத்ர நூல் -யமுனை.
ஆழ்வார் அருளிச் செயல்கள் – சரஸ்வதி நதியைப் போல.
ஆக விசிஷ்டாத்வைதம் ”த்ரிவேணி வைஷ்ணவம்” எனப்படுகிறது.

————-

வேதாங்கங்கள் – ஆறு
1.சிக்ஷை 2. வியாகரணம் 3. சந்தஸ் 4. நிருக்தம் 5.ஜ்யோதிஷம் 6.கல்பம்

1) சிக்ஷை – பாணினி, நாரதர் முதலியவர்களால் செய்யப்பட்டது என்று சொல்வர். 32 சிக்ஷைகள் கிடைத்துள்ளதாகவும்,
இதில் சப்தங்களின் அக்ஷரங்கள், மூன்று ஸ்வரங்கள், இவற்றைச் சரியாக உச்சரிக்கும் விதம் சொல்லப்பட்டுள்ளது என்றும் சொல்வர்.

2) வ்யாகரணம் – இது இலக்கணம். அனுமானை நவ வ்யாகரண பண்டிதன் என்று புகழ்வார்கள்.
வ்யாகரணம். ஸமஸ்க்ருத மொழிக்கும், வேதத்துக்கும் முக்யமானது

3) சந்தஸ் – வேத மந்திரங்களின் மாத்திரை. ; உச்சரிப்பு,உச்சரிக்கும்போது உள்ள ஏற்ற, இறக்கம் சந்தஸ்எனப்படுகிறது.

4) நிருக்தம் – வேதச் சொற்களைப் பிரிக்கும் விதம் இதில் சொல்லப்படுகிறது. அரிய பதங்களின் அர்த்தங்களும்
நிகண்டுவும் இதில் உள்ளன. பாஸ்கர முனிவரால் செய்யப்பட்டது தற்போது வழக்கத்தில் உள்ளது.

5) ஜ்யோதிஷம் – வானஇயல் என கருதப்படுகிறது. வானசாஸ்த்ரமும் இதில்சொல்லப்படுகிறது. ஜ்யோதிஷத்துக்கு சம்பந்தப்பட்டது
வானவியல். இதில் வைதீக கர்மாக்களை செய்ய வேண்டியகாலம், பலன் விசாரிக்கப்படுகிறது.
ஸுர்யன், மற்றும் க்ரஹங்களைப் பற்றிய கணித சாஸ்த்ரம் உள்ளது.

6) கல்பம் – வேதங்களில் சொல்லும் கர்மாக்களை ”கல்பம்” சொல்கிறது.
காத்யாயனர், ஆச்வலாயனர், போதாயனர் – இவர்கள் அருளிய கல்பஸுத்ரங்கள் புகழ் பெற்றவை

உப அங்கங்கள் (உபாங்கங்கள்)
(வேதத்திற்கு உப அங்கமாக ஆறு ரிஷிகள் அருளியவை
1. சாங்கியம் 2. யோகம் 3.மீமாம்ஸம் 5.ந்யாயம் 6 வைசேஷிகம்

1. சாங்கியம் – ஸ்ரீ கபில முனிவர் அருளியது. 25 தத்வங்கள் இதில் சொல்லப்படுகின்றன. பஞ்ச அங்க யோகத்தால்,
ஞானத்தை அடையலாம் என்றும் சொல்லப்படுகிறது.

2. யோகம் – ஸ்ரீ பதஞ்சலி முனிவர் இயற்றியது.இவர் இருபத்து மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகச் சொல்வர்
யோகஸுத்ரம் என்கிற நுhலை இயற்றியிருக்கிறார்-ஸம்ஸ்க்ருதத்திற்கு மஹா பாஷ்யம் என்கிற இலக்கணமும் இயற்றியிருக்கிறார்
யோகத்தில்194 ஸுத்ரங்கள் உள்ளன.-=மனஸ், உடல், ஆத்மா இவைகளை யோகம் செய்து நெறிப்படுத்தி பகவானுக்கு அர்ப்பணிப்பதைப் பற்றிச்
சொல்கிறது. இது ”யோகஸித்தி” எனப்படுகிறது.
யோகஸுத்ரத்தில் 185 பழமொழிகள் வாக்யங்களாக உள்ளன.
இதில் நான்கு பிரிவுகள் உள்ளன அவை சமாதி, ஸாதனா, விபூதி, கைவல்யம் (மோக்ஷம்) எனப்படும்

3. மீமாம்ஸம் (பூர்வ மீமாம்ஸம்) – ஜைமினி முனிவர் அருளியது.12 காண்டங்கள் 60 அத்யாயங்கள் வேதத்தில் உள்ள தத்வ விசாரணைகள் இதில் உள்ளன.

4. மீமாம்ஸம் (உத்தர மீமாம்ஸம்) – இது வேதாந்தம் எனப்படும்.ஸ்ரீ வியாஸ முனிவர் அருளியது. இது வேதங்களின் ஸாரம்.
இது ”ப்ருஹ்ம ஸுத்ரம் ” என்றும் சொல்லப்படும். 4 அத்யாயங்கள் உள்ளன. ஒவ்வொரு அத்யாயத்துக்கும் 4பாதங்கள்.
ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் இதற்கு பாஷ்யம் (உரை) எழுதியுள்ளார். இது ”சாரீரக மீமாம்ஸை” எனப்படுகிறது.
பகவத்ஸ்ரீ ராமனுஜரின் உரை ”ஸ்ரீ பாஷ்யம்” எனப்படுகிறது.
ஸ்ரீ மத்வாச்சாரியாரும் உரை எழுதியிருக்கிறார்.

5. ந்யாயம் – வேதத்தில் சொல்லப்பட்டவைகளைக் கடைந்து அதிலிருந்து எடுக்கப்பட்டவை ”ந்யாயம்” , 537 ஸுத்ரங்கள் உள்ளன.
”ந்யாயத்தை”அறிய 16 வழிகளைச் சொல்கிறது
(1) ப்ரமாணம் (2) ப்ரமேயம் (3) ஸம்சயம் (4) ப்ரயோஜனம்
(5) உதாரணம் (6) சித்தாந்தம் (7) அவயவம் (8) தர்க்கம்
(9) நிர்ணயம் (10) வாதம் (11) ஜல்பம் (12) விதண்டாவாதம்
(13) ஹேத்வபாஸம் (14) தந்த்ரம் (15) ஜோதி
16) நிக்ரஹஸ்தானம்

6. வைசேஷிகம் – ஸ்ரீ கணாத முனிவர் அருளியது. உலகில் உள்ள எல்லாப் பொருள்களின் குண ஆராய்ச்சி ஸம்பந்தமானது.
இவை ஆறு 1) த்ரவியம் – இது 9 பிரிவு –
அவையாவன – மண், ஜலம், தேஜஸ், வாயு, ஆகாயம், காலம், திசை, ஆத்மா, மனம்
2) குணம் – இது த்ரவியத்துடன்சேர்ந்தது. 24 பிhpவுகள் உள்ளன.
அவை ரூபம் , ரஸம், கந்தம்,பரிசம், சங்க்யை, பரிமாணம், பிரிதல், சம்யோகம், வியோகம்,முன்னிலை, பின்னிலை, புத்தி,ஸுகம், துக்கம்,
த்வேஷம்,முயற்சி குருத்வம், ஸ்நேஹம், சப்தம், வேகம், திரவத்வம், விருப்பு, வெறுப்பு, அடக்கம் – ஆக 24.
3) கர்மம் (வினை)
4)சாமான்யம் (த்ரவ்யம், குணம் கர்மத்திலே சேரும். இது உயர்வு, தாழ்வு என்று இரண்டு வகை)
5) விசேஷம் (கடைசியாக மீதமாகும் இரண்டு அணுக்களின் நிலை)
6) ஸமவாயம்(கர்த்தா, செயல், அணு , அண்டம் – இவற்றின் ஆராய்ச்சி) –

”ருக்” வேதத்திலிருந்து ஆயுர்வேதமும்
”யஜூர்” வேதத்திலிருந்து தனுர்வேதமும்
”ஸாம” வேதத்திலிருந்து கான வேதமும்
”அதர்வண” வேதத்திலிருந்து அர்த்த வேதமும் (அர்த்தசாஸ்த்ரம் – ஆட்சிக்கலை) தோன்றியது என்று சொல்வர்.

இப்படி மிக முக்கியமானதாக உள்ள உபநிஷத்துக்களை, ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீ ப்ரஹ்ம ஸுத்ரம் இவைகளுடன் சேர்த்து
”ப்ரஸ்தான த்ரயம்” என்று சொல்வர்.

———

1 – ஈசாவாஸ்ய உபநிஷத்

இது குரு, சிஷ்யனுக்கு உபதேசம் செய்வதைப் போல அமைந்துள்ளது. 18 மந்த்ரங்கள் இந்த உபநிஷத்தில் இருக்கின்றன.
இதன் சுருக்கம் –
குரு, சிஷ்யனுக்கு உபதேசம்
பகவான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான். வெளிப்புறக் காட்சிகளைக் கண்டு மயங்காமல், உள்ளே இருக்கும் பகவானை
த்யானம் செய்வதில் வைராக்யம் இருக்க வேண்டும். அதே சமயம், கர்மாக்களையும் செய்தல் வேண்டும். எல்லாவற்றிலும்
வ்யாபித்து, எல்லாவற்றையும் நியமித்து, எல்லாவற்றிற்கும் ஆத்மாவாக பகவான் இருக்கிறான். ஆதலால் எல்லாமே
பகவானுக்குச் சரீரம். எல்லாக் கல்யாண குணங்களும் நிறைந்தவன் பகவான். பகவானை அடைய தனியான கர்மமோ,
தனியான ஞானமோ போதாது. ஸத்கர்மாக்களைச் செய்து கொண்டே இருந்து, வினைகளைப் போக்கிக் கொண்டு, நல்ல
ஞானம் வரப்பெற்று மோக்ஷம் அடைய வேண்டும்.
இதற்கு பக்தி அல்லது ப்ரபத்தி வழி.
இதில் 18 மந்த்ரங்கள் உள்ளன. இந்த 18மந்த்ரங்களின் விசேஷத்தை விவரிப்பது தான் ஸ்ரீமத் பகவத்கீதையின்
18 அத்யாயங்கள். ஈசன் வாஸம் பண்ணுகிற விஷயத்தைச் சொல்வதால் ”ஈசாவாஸ்யம்” எனப்பட்டது.

————-

2 – கேநோபநிஷத்து

இது சிஷ்யன் கேள்வி கேட்கும் ரூபமாய் அமைந்துள்ளது.
சிஷ்யன் –
மனது தன் இஷ்டப்படி சஞ்ரிக்கிறது. இப்படியே கண், காது, வாக்கு தம்தம் கார்யங்களைச் செய்கிறது.
இது யாருடைய கட்டளையால்?

ஆசார்யன் –
ப்ராணனுக்கும் ப்ராணனாய், நீ சொன்ன எல்லாவற்றிற்கும் சக்தியை அளித்து, பகவான் இயக்குகிறான்.
அவன் அனுக்ரஹத்தாலே ஒவ்வொரு அவயவமும், வேலை செய்கிறது. எவ்வளவு தெளிவாக பகவானின் செயலை நீ அறிய
முயன்றாலும், ஒரு ”திவலை” அளவுதான் தெரிந்து கொண்டவன் ஆவாய். பகவானை நான் நன்கு அறியேன் என்று
வணக்கத்துடன் சொல்பவனே, பகவானை அறிந்தவன் ஆவான்.-தேவர்களே கூட பகவானை முழுமையாக அறிந்தவரில்லை.
இதற்கு ஒரு உபாக்யானம் (கதை) உள்ளது.

பகவான் தன்னுடைய பக்தர்களான தேவர்கள் மீதுள்ள அன்பினால் அஸுராதிகளை ஜெயிக்கிறான். ஆனால் தேவர்கள்,
தாங்களே அஸுராதிகளை ஜெயிப்பதாக கர்வம் கொண்டனர்.
இந்தக் கர்வத்தை அழிக்க, பகவான் திருவுள்ளம் கொண்டான்.
உடனே பரப்ரம்மம் (பகவான்) யக்ஷரூபமெடுத்து அவர்கள் எதிரில் நின்றது. அவர்களுக்கு இது யாரென்று தெரியவில்லை.

தேவர்கள், அக்னி தேவனைப் பார்த்து இந்த ”யக்ஷன்” யாரென்று தெரிந்து கொண்டு வா என்றார்கள்,
அக்னி தேவன் யக்ஷனிடம் வந்தான். யக்ஷன் நீர் யாரென்று கேட்க
அக்னிதேவன் தன் பெருமை எல்லாவற்றையும் சொன்னான். உன்னுடைய வீர்யம்
எப்படிப்பட்டது என்று யக்ஷன் கேட்க எல்லாவற்றையும் ஒரு நொடியில் எரித்து விடுவேன் என்று அக்னி தேவன் சொன்னான்.
பரப்ரம்மம் ஒரு புல்லை எடுத்து எதிரில் வைத்து அக்னியைப் பார்த்து இதை எரித்து விடு என்றது. அக்னி, வெகு துரிதமாகவும்,
முழு ஆற்றலோடும் முயன்றும் அந்தப் புல்லை எரிக்க முடியவில்லை. இவன் யாரென்று தெரியவில்லை என்று
அக்னிதேவன் திரும்பி விட்டான்.

தேவர்கள் வாயு தேவனை யக்ஷனிடம் அனுப்பினார்கள்.
யக்ஷன், உன் பலம் எப்படிப்பட்டது என்று கேட்க,
வாயுதேவன், நான் எல்லாவற்றையும் என் ஆற்றலால் தூக்கி எறிந்து விடுவேன் என்றான்.
பரப்ரம்மம் இந்தப் புல்லை எடுத்துச் செல் என்றது. வாயுதேவன் தன்னுடைய சக்தியை எல்லாம் ப்ரயோகித்தும் புல்லை அசைக்க
முடியவில்லை. வாயுதேவனும் திரும்பி விட்டான்.
இவர்கள் இருவரும் பூமி, அந்தரிக்ஷம், ஸ்வர்க்கம் என்ற மூன்று உலகங்களுக்கும் ப்ரதான தேவதைகள் இவர்களால் முடியவில்லை.

மூன்றாவது ப்ரதான தேவதையான இந்த்ரனை தேவர்கள் அனுப்பினார்கள். இப்போது பரப்ரம்மம் மறைந்து விட்டது.
இந்திரன் திகைத்து நின்றான். அச் சமயம் ஆகாயத்தில் ஸர்வாபரண பூஷிதையாய் ஒரு ஸ்த்ரி தோன்றினாள்.
அவள் பார்வதி தேவி.
இந்த்ரன் அவளிடம் , ”யார் அந்த யக்ஷன்” என்று கேட்டான்.
”இந்திரனே, அது யக்ஷனல்ல! பரப்ரம்மம்.பரப்ரம்மத்தின் அனுக்ரஹம் இல்லாவிடில் உங்களால் ஒரு அணுவைக் கூட அகற்ற முடியாது.
உங்கள் கர்வத்தை விட்டு பரப்ரம்மத்தின் பெருமையை உணருங்கள்! என்று பார்வதி சொன்னாள்.
இந்திரன், இந்த உண்மையை எல்லாத் தேவர்களுக்கும் எடுத்துச் சொல்லி கர்வத்தை ஒழித்தான்.

பரப்ரம்மம் அனந்த கல்யாண குணங்களை உடையது.
வேத, வேதாங்கங்களை அத்யயனம் செய்து, ஸத்யஸந்தர்களாக இருப்பவர்களுக்கு ப்ரஹ்மஜ்ஞானம் கூடி வரும்.
நல்ல ஒழுக்கம், இந்த்ரியநிக்ரஹம், தபஸ் உள்ளவர்களுக்கு, ப்ரம்மவித்யை நிலையாக நிற்கும்.
இந்த வித்யையைப் பெற்றவர்கள், பகவான் வீற்றிருக்கும் உலகிற்குச்சென்று உயர்ந்த புருஷார்த்தத்தை அடைவர் என்று சொன்னார்.

இதில் நான்கு காண்டம்.
”கேந” என்கிற சொல்லைக் கொண்டு தொடங்குவதால் இது ”கேநோபநிஷத்து” எனப்பட்டது.

————

3 – கடோபநிஷத்து

இது க்ருஷ்ண யஜூர் வேதத்தில் உள்ளது.
”கடசாகை”யைச் சேர்ந்த உபநிஷத். ”கடா” என்பவரைச் சார்ந்த சாகை கடசாகை. இதில் நசிகேதஸ் உபாக்யானம் உள்ளது.
இது தைத்திரீய ப்ராம்மணத்திலும் (3-11-8) உள்ளது. மஹா பாரதத்தில் உள்ளது சிறிது வேறுபடும்.
இந்த உபநிஷத்தில் ”வல்லி” என்கிற பிரிவுகள் ஆறு உள்ளன. மும் மூன்றாக இரண்டுஅத்யாயங்கள் உள்ளன.

வாஜச்ரவஸர் (கௌதமர் என்றும் சொல்வர்) என்கிற மஹரிஷி தன் சொத்துக்களை எல்லாம் தக்ஷிணையாக கொடுத்து ஒரு யாகம் செய்தார்.
மிகவும் வயது முதிர்ந்த பசுக்களைத் தானம் செய்ய முற்பட்டபோது இவர் குமாரரான நசி கேதஸ், தந்தை இப்படித் தானம் செய்வதால்
(ஒன்றும் உபயோகப்படாத பசுக்களை) இருள் சூழ்ந்த உலகில் அல்லவோ வசிக்க நேரிடும் என்கிற தர்ம சாஸ்த்ரத்தை உணர்ந்து அதற்காக வருந்தி
தந்தையிடம் தன்னையே தானம் செய்யும்படி ஒரு தரத்துக்கு மூன்று தரம் வேண்டினான்.
தந்தைக்குக் கோபம் வந்து ”உன்னை யமனுக்குத் தானம் பண்ணுகிறேன்” என்று சொன்னார்.
நசிகேதஸ்,தந்தையின் வாக்கைச் சத்யமாக்க யம லோகம் செல்லப் புறப்பட்டான்.
வாஜச்ரவஸர் வருத்தம் மேலிட்டு, யமன் தன்னுடைய க்ருஹத்தில் இல்லாத சமயமாக பார்த்து நசிகேதஸ் என்கிற குமாரனை
யம லோகத்துக்குச் செல்ல அனுமதித்தார்.

அப்படியே யமனுடைய உலகத்தில் அவனுடைய க்ருஹத்துக்குச் சென்ற நசிகேதஸ், யமன் க்ருஹத்தில் இல்லாததால், அவன்
வீட்டிற்கு திரும்பும் வரை வீட்டு வாசலிலேயே காத்திருந்தான்.-மூன்று நாட்கள் அன்ன, ஆகாரமின்றி பட்டினியுடன் காத்திருந்தான்
யமன் வந்ததும் அதிதியான ப்ராம்மணச் சிறுவன் பட்டினியுடன் இருப்பதை அறிந்து அதற்கு பிராயச்சித்தமாக மூன்று வரங்களை கொடுப்பதாகவும்,
வரங்களை கேட்க வேண்டும் என்றும், நசிகேதஸைக் கேட்டுக் கொண்டான்.

நசி கேதஸ் கேட்ட முதல் வரம் – தன்னுடைய தந்தை துயரம் நீங்கி தன்னை அனுக்ரஹிக்க வேண்டும் என்றும், 2வது வரமாக
வயோதிகம், மரணம் இவை இல்லாத ஸ்வர்க்கமான மோக்ஷத்தை அடைய, அக்னி விஷயமாக ஹோமத்தைச் செய்யும் விதத்தைச்
சொல்ல வேண்டும் என்று கேட்டான்.-இந்த இரண்டு வரங்களும் யமனால் அருளப்பட்டன.
மூன்றாவது வரமாக இறந்தவனுடைய உண்மை நிலையை, ஆத்ம தத்துவத்தைச் சொல்லுமாறு கேட்டான். யமன் இந்த
விவரத்தை உடனே சொல்லாமல் பலவிதங்களில் நசிகேதஸ்ஸை, பரீக்ஷை செய்துவிட்டு பிறகு சொன்னான்.

”ஜீவாத்மா” பிறப்பு, இறப்பு அற்றவன். உடல் அழியுமே தவிர ஜீவாத்மா அழியாது. ஜீவாத்மா, பரமாத்மா இருவரும் ஹ்ருதயத்தில் இருக்கின்றனர்.
ஜீவாத்மாவுக்கு உடம்பு-ஒரு ரதம்.
புத்தி – ஸாரதி. மனது – கடிவாளம்.
புலன்கள் – குதிரைகள்.
விஷயங்கள் – அவற்றின் புலங்கள்.
இவற்றைக் கொண்டு ஜீவன், சுக துக்கங்களை அனுபவிக்கிறான். அறிவுள்ளவன் இவற்றை தக்கவாறு பயன்படுத்தி பகவானை அடைகிறான்.
பரமாத்மாவை அடைவதே ”ஸ்ரேயஸ்”.
ஹ்ருதயத்தில் பகவானை உபாஸிக்க வேண்டும்.

ஹ்ருதயத்தில் பகவானை உபாஸிக்க வேண்டும். வேர் மேலாகவும், கிளைகள் கீழாகவும், உள்ள இந்த ஸம்சாரம் என்கிற மரத்தில்,
எல்லாம் பகவானின் இஷ்டப்படி நடக்கிறது. கண்ணால் காணமுடியாத பகவானை மனத்தினால் காண,யோகத்தில் நிலை பெற வேண்டும்.
பலவகை நாடிகளும் தலையில் உள்ள ”ஸுஷும்நா ” நாடி வழியாகச் செல்ல அப்போது ஜீவனும் சென்று பகவானின் இருப்பிடம் சென்று விளங்குவான்.
பகவானை உபாஸித்து அவனுக்கு அடிமையாக பரமபதத்தில் ஸுகானுபவம் பெற்று வாழ்வான் என்று யமன் சொல்லி முடித்தான்.
கடோபநிமூத்தில் மிக விவரமாக இது சொல்லப்படுகிறது.

—————-

4 – பிரச்னோபநிஷத்து

இதில் 6 ப்ரச்னங்கள். ”ப்ரச்னம்” என்றால் கேள்வி.
ஒவ்வொரு ப்ரச்னமும் ஒரு மஹரிஷியின் கேள்வியாக அமைந்து அதற்கான பதிலை விளக்குகிறது.
ஸுகேசர், சைப்யர்,ஸெளர்யாயணி, கௌஸல்யர், பார்க்கவர், கபந்தி என்று ஆறுரிஷிகளும்,
பிப்பலாத மஹரிஷியை அணுகி, ஒரு வருட காலம் தபஸ், ப்ரம்மச்சர்யம், ச்ரத்தை இவைகளுடன் இருந்து
மஹரிஷியிடம் கேள்விகள் கேட்டுத் தெளிவு பெறுகின்றனர்.

ஒவ்வொரு மஹரிஷியின் கேள்வியும், மஹரிஷியின் பதிலும் சுருக்கமாகத் தரப்படுகிறது.

1-முதலில் கபந்தி – ப்ரஜைகள் எங்கிருந்து பிறக்கின்றன?
பிப்பலாதர் –
ப்ரஜாபதியானவர், ப்ரஜைகளை ச்ருஷ்டிக்க எண்ணி,”ரயி”, ”ப்ராணன்” என்ற இரண்டையும் ச்ருஷ்டித்தார்.
”ப்ராணன்” என்பது ஜீவ சமஷ்டி .”ரயி” என்பது அதற்கு உடலாக இருக்கின்ற ப்ரக்ருதி.
ஸ்ருஷ்டிக்கும் பகவானே, ஸம்வத்ஸரம், மாஸம், நாள் என்று கால ரூபமாக இருக்கிறான்.
தக்ஷிணாயனத்தின் வாயிலாக சில ப்ரஜைகள் சந்திரலோகம் (ஸ்வர்க்கம்) சென்று பலனை அனுபவித்து திரும்புகின்றனர் (மறுபடியும் பிறவி)
இவர்கள் கர்மானுஷ்டானத்திலேயே நோக்கம் உள்ளவர்கள்
வித்யையை அனுஷ்டித்து ஆத்மாவை அறிந்தவர் உத்தராயணம் வாயிலாக ஸுர்ய மண்டலம் சென்று
மறுபடியும் திரும் பமாட்டார்கள்.
த்ரிகரண சுத்தியும், தபஸ்ஸ@ம், ப்ரஹ்மசர்யமும் உள்ளவர்களுக்கு ப்ரக்ருதி மண்டலத்துக்கு மேலேயுள்ளது ப்ரஹ்மலோகம்.

2 – பார்க்கவர் கேட்பது –
ப்ரஜைகளின் உடம்பைத் தாங்குபவர் எவர்?
ப்ரகாசப்படுத்துகிறவர் எவர்?
இவர்களில் யார் சிறந்தவர்?

பிப்பலாதர் பதில் –
பஞ்சபூதங்களும், இந்திரியங்களும் உடம்பைத் தாங்குகின்றன. இதில் ப்ராண வாயு சிறந்தது. இதை நிரூபித்தும்
ப்ராண வாயு மற்ற இந்த்ரியங்களுக்கு உணர்த்தியது.
வாக்கு, கண், மனசு, காது போன்றவை. ப்ராணனைப் பலவாறு புகழ்ந்தன.
இந்த ஸ்தோத்ரம் இங்கு விவரமாகச் சொல்லப்பட்டுள்ளது ).

3 – கௌசல்யரின் கேள்வி –
இந்த ப்ராணவாயு எங்கிருந்து பிறக்கிறது?
எப்படி உடலில் வந்து சேருகிறது?
எவ்வாறு தன்னைப் பிரித்துக் கொள்கிறது?
எந்த வழியாக வெளியே கிளம்புகிறது?
உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் எப்படி இருந்து வருகிறது?

பிப்பலாதர் பதில் –
பரமாத்மாவிடமிருந்து (பகவான்) ப்ராண வாயு பிறக்கிறது. ஒவ்வொருவர் உருவத்திற்கும் நிழல் இருப்பதைப்
போல, ஜீவனின் உடலில் சேர்ந்து( ப்ரவேசித்து) மனசும் மற்ற இந்த்ரியங்களும் பிரியாதபடி இருக்கிறது.
முகபாவத்தில் இருக்கிறது. ஹ்ருதயத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கீழ் இந்த்ரிய ஸ்தானத்தில் ”அபானன்” என்கிற பெயராலும்,
ஹ்ருதய நாடித்துடிப்பில் ”வ்யானன்” என்கிற பெயராலும்,
பாப புண்ய பலன் பெறும் நாடியில் – ”உதானன்” என்கிற பெயராலும்,
வயிற்றில் அக்னியாக ”ஸமானன்” என்கிற பெயராலும்,ப்ராணவாயு வசிக்கிறது.

கீழ் இந்தீரிய ஸ்தானம் – அபானன் – ஸுர்யன்
வயிற்றில் – ஸமானன் – பூமி
ஹ்ருதயத்தில் வ்யானன் – ஆகாயம்
புண்ய, பாப நாடித் துடிப்பில் – உதானன் – வாயு
முக்ய ப்ராணன் – தேஜஸ்
இப்படி பஞ்ச பூதங்களுக்கு சம்பந்தப்படுத்துவர்.

(அதனால்தான் ஆகாரம் உட்கொள்ளும் முன்பாக ப்ராணாஹுதி என்று ப்ராணாயஸ்வாஹா , அபாநாயஸ்வாஹா ,
வ்யாநாயஸ்வாஹா , உதானாயஸ்வாஹா , ஸமாநாயஸ்வாஹா , ப்ரஹ்மணேஸ்வாஹா … என்று துளி சாதம் எடுத்துக் கொண்டு
பல்லில் படாமல் ஒவ்வொரு மந்த்ரத்தையும் சொல்லி சாப்பிடுகிறோம்).

4. ஸெளர்யாயணி முனிவர் கேள்விகள் –
தூங்கும்போது உடலில் எவை வேலை செய்கின்றன?
எவை வேலை செய்யாமல் உள்ளன?
ஸ்வப்னம் காண்பது எப்படி?
எதற்கு சுகம் உண்டாகிறது?
எல்லாம் எங்கே தங்கி நிற்கின்றன?

பிப்பலாதர் பதில் –
உறங்கும்போது எல்லா இந்த்ரியங்களும் மனத்தில் லயிக்கின்றன. அப்போது ப்ராண, அபான, வாயுக்கள் வேலை செய்கின்றன.
அப்போது ப்ராணன் (ஜீவன் என்று பொருள் கொள்க), மனசை உடலிலேயே பரப்ரம்மம் உள்ள இடத்திற்கு கொண்டு செல்கிறது.
அப்போது வழியில் கண்டது, கேட்டது, எப்போதோ அனுபவித்தது, அனுபவிக்காதது, இருப்பது,
இல்லாதது எல்லாம் ஸ்வப்னத்தில் – ஸ்வப்ன அனுபவத்தில் வருகிறது.
தேஜஸ் (பராமாத்மா)ஸினால் தாக்கம் ஏற்பட்டு ஸ்வப்னமும் போய் சுகத்தை ஜீவன் அனுபவிக்கிறது.
எல்லாம் இப்படி தன்னிடத்தில் லயித்து இருக்கும்போது ஜீவன், பரமாத்மாவிடம் தங்கி நிற்கிறான்.
இப்படி உபாசிப்பவன் எல்லாவற்றையும ;அறிந்தவன் ஆவான்.

5 – சைப்யரின் கேள்வி –
ப்ரணவத்தை சாகும் வரை உபாஸிப்பவன் பெறும் உலகம் எது?

பிப்பலாதர் பதில் –
ஒற்றை மாத்ரை உள்ள ப்ரணவத்தை உபாஸிப்பவன் தபஸ், ப்ரஹ்மச்சர்யம், ஆஸ்திக்யம், என்ற
செல்வங்களுடன் உயர்ந்ததை அனுபவிப்பான்.
இரண்டு மாத்திரைஉள்ள ப்ரணவத்தை உபாஸிப்பவன் ஸ்வர்க்க லோகம் வரை(சந்திர லோகம்) சென்று நல்ல
அனுபவங்களை அனுபவித்து திரும்புவான்.
மூன்று மாத்ரை கொண்ட ப்ரணவத்தினாலே, பரமான ப்ரஹ்மத்தை உபாசிப்பவன், எல்லா பாபமும் போய்
பயத்தையும் போக்குகின்ற பரமபுருஷனைக் கண்ணாலே காண்பான்.

6 – ஸுகேசர் கேள்வி –
ஷோட சகல புருஷன் யார்?
எங்கு உள்ளான்?

பிப்பலாதர் பதில் –
பதினாறு கலைகளுக்கு புருஷன். இந்த உடலிலேயே இருக்கிறான். சிந்தனை செய்து ப்ராணன், ச்ரத்தை,
5 பூதங்கள், இந்த்ரியம், மழை, அன்னம், வீர்யம், தபஸ், மந்த்ரம், கர்மம், பலன், பேர் என்கிற பதினாறையும் அமைத்துக்
கொண்டால் இந்த ஜீவனுக்கும் மேலானவன் ப்ரம்மம் – பரமாத்மா என்று அறிவான்.
16 கலைகளும் ஜீவனிடம் அடங்கியுள்ளன.
இப்படி அறிந்தவனுக்கு ம்ருத்யு பயம் இல்லை. பொதுவாக ப்ராண வாயு முக ஸ்தானம் என்றும், இதுவே கீழ் இந்திரிய
ஸ்தானத்தில் அபான வாயு (அபானன்), வயிற்றில் அக்னி இருக்குமிடத்தில் ஸமானன், ஆத்மாவின் இருப்பிடமான
ஹ்ருதயத்தில் ஆயிரக்கணக்கான நாடிகளில் வ்யானன், புண்யத்தினால் பெறப்படும் புண்ய லோகம், பாவத்தின் பலனாக
பெறப்படும் பாப லோகம், இரு வினைகளின் பயனாக மனித உலகத்தையும் பெற வழியாக உள்ள நாடிகளில் உதானன் என்றும்
ப்ராண வாயு தன்னை பிரித்துக் கொண்டு இயங்குவதாக சொல்லப்படுகிறது.

————-

5 – முண்டகோபநிஷத்து

ப்ரஹ்மா, எல்லா வித்யைகளுக்கும் ஆதாரமான ”ப்ரஹ்ம வித்யை”யை, தன் மூத்த குமாரரான அதர்வர் என்பவருக்கு உபதேசித்தார்.
இந்த வித்யை அங்கீர், பாரத்வாஜர், ஸத்யவாஹர் வழியாக ”அங்கிரஸுக்கு” வந்தது.
சௌநகர் என்கிற ரிஷி ,அங்கிரஸை அணுகி
”எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்ததாகும்?” எனக் கேட்டார். அதற்குரிய விளக்கம் தான்—-முண்டகோபநிஷத்து.

”பரை”, ”அபரை” என்கிற இரண்டு வித்யைகளை அறிய வேண்டும்.
அபரை என்பது வேதங்களும் அவற்றின் அங்கங்கள் உபாங்கங்கள். இவற்றை அர்த்தத்துடன் அத்யயனம் செய்து
அடையப்படும் தெளிவான ப்ரஹ்ம ஞானமே அபர வித்யை (உலக வாழ்க்கைக்கு பயன்படும் பலவகையான
கல்விகளைச் சொல்வது என்றும் சொல்லப்படுகிறது).

”பரை” – என்பது அழிவே இல்லாத பர ப்ரஹ்மத்தைப் பெற வழியாக உள்ள ஸாக்ஷாத்காரம். இது ஜ்ஞானிகளுக்கு உரியது.

ப்ரஹ்மத்திற்கு உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால்,
தன் த்ரேகத்திலிருந்து நூல் உண்டாக்கி அதனால் கூடு ஒன்று செய்து அதில் இருக்கும் ”ஊக்ணநாபி” என்கிற சிலந்திப் பூச்சியே.
நித்ய கர்மாக்களை விடாமல் செய்தால் ப்ரஹ்ம லோகம் வரையிலுள்ள பலன்கள் எல்லாம் கர்மம் செய்வதாலேயே வந்து சேரும்.

பரமபுருஷன் – பகவான் என்று அறிந்து அனுஷ்டான பரர்களாக இருப்பவர்கள் ஸுர்ய மண்டலம் வழியாக பகவானின் உலகத்தை அடைவர்.
காம்யங்களை விட்டு, நித்ய கர்மாக்களை விடாமல் செய்து வேத வேதாந்த ஞானமுள்ள குருவை அடைந்து அவர் மூலம் ப்ரஹ்மத்தை அறிய வேண்டும்.

ப்ரணவம் என்கிற வில்லில் ஜீவாத்மா என்கிற அம்பை உபாஸனையால் கூர்மை யாக்கி வில்லில் தொடுத்து, ப்ரஹ்மம் என்ற இலக்கில் எய்ய வேண்டும்.
இதுதான் மோக்ஷத்திற்கு உபாயம். இப்படிப்பட்ட மோக்ஷ ராஜ்யத்திற்கு உரியவனான பகவான் ஹ்ருதயத்திலும் இருக்கிறான்.
இதை அறிந்தவன் த்வேஷம், வினைகள் எதுவும் இல்லாதவனாக ஆகிறான்.

உடல் ஒரு வ்ருக்ஷம். இதில் இரண்டு பக்ஷிகள் உள்ளன. ஒன்று வ்ருக்ஷத்தில் உள்ள பழங்களை சாப்பிடுகிறது
இன்னொரு பக்ஷி எதுவும் சாப்பிடாமல் ஒளியுடன் உள்ளது.
கர்மானுஷ்டானன் ப்ரஹ்ம வித்யை செய்யத் தகுந்தவன். ப்ரஹ்ம வித்யையை அனுசரிப்பவனை ஆராதிப்பவனுக்கு ஸர்வ லோகமும் பயன்.

ஸ்ரீ பாஷ்யத்தில் சொல்லப்பட்ட விவேகம், விமோகம், அப்யாஸம், க்ரியை, கல்யாணம், அனவஸாதம், அனுத்தர்ஷம் ஆகிய ஏழும் வேண்டும்.

1) விவேகம் – சாஸ்த்ர சம்பந்தமான சுத்தமான ஆஹாரத்தை எடுத்துக் கொண்டு வாழ்தல்.
2) விமோகம் – பற்றற்று இருப்பது.
3) அப்யாஸம் -பக்திக்கு இலக்கான பகவானையே சிந்தனை செய்வது.
4) க்ரியை – வைதீக கர்மானுஷ்டானம்.
5) கல்யாணம்- சத்யம், முக்கரணங்களுடன் (மனோ, வாக்கு,காயம்) ஒத்திருப்பது. தயை – நன்கொடை, அஹிம்சை – பிறருக்கு துன்பம் நினைக்காமை என்பன.
6) அனவஸாதம் – சோர்வில்லாமல் இருப்பது.
7) அனுத்தர்ஷம் – அதிக மகிழ்ச்சிக்கு ஆளாகாமல் இருத்தல்.

பக்தி யோகம் செய்ய இவை எல்லாமும் வேண்டும். இதனால் பகவானை அடையலாம்.

இந்த உபநிஷத் மூன்று பிரிவாக உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு கண்டங்கள்.

————-

6 – மாண்டூக்யோபநிஷத்து

ஆறு கண்டங்கள். இது ப்ரணவத்தில் உள்ள அக்ஷரங்களைப் பிரித்துச் செய்யப்படும் உபாஸநத்தைப பற்றிச் சொல்கிறது.
இந்த அக்ஷரங்களை வைச்வாநரன், தைஜஸன், ப்ராஜ்ஞன் – என்றிப்படி உபாஸிக்க வேண்டும்.
ஜீவனுக்கு விழிப்பு,ஸ்வப்நம், உறக்கம், மோக்ஷம் என்று நான்கு நிலைகள் உள்ளன.
ஒவ்வொரு நிலைக்கும் ஒரு மூர்த்தி.
இம் மூர்த்தி ஸ்ருஷ்டி, ஸ்திதி,வ்யாபாரங்களுக்குக் காரணன்.
சாந்தமாக இருப்பது நான்காவது மூர்த்தி. அதுவே ஆத்மா.
வைச்வாநரன் – அநிருத்தனையும்,
தைஜஸன் – ப்ரத்யும்நனையும்,
ப்ராஜ்ஞன் – ஸங்கர்ஷணனையும்,
துரீயன் – வாஸுதேவனையும் குறிக்கும்.
(உபநிஷத் பாஷ்யகாரர்–ப்ரஹ்மஸுத்ரத்தில் உபயலிங்க அதிகரணத்தில் விவரம் உள்ளது).

ஜீவனின் மூர்த்தி வ்யூஹம் குணங்கள்–நிலை

விழிப்பு வைச்வாநரன் அநிருத்தன் சக்தி,தேஜஸ் –(ஜாக்ரந் மூர்த்தி) ரக்ஷணம் – அறிவு
ஸ்வப்னம் தைஜஸன் ப்ருத்யும்னன் ஐச்வர்யம்,(ஸ்வப்னமூர்த்தி) வீர்யம்,ஸ்ருஷ்டி, தர்மம்
உறக்கம் ப்ராஜ்ஞன் ஸங்கர்ஷணன் க்ஞானம், பலம்(ஸஷுப்த ஸம்ஹாரம் மூர்த்தி) சாஸ்த்ரப்ரசாரம்
மோக்ஷம் வாசுதேவன் வாஸுதேவன் (மூர்ச்சாமூர்த்தி)

*முதல் வ்யூஹம் – வாஸுதேவன் என்றும், மொத்தம் நான்கு வ்யூஹங்கள் என்றும் சொல்வர். மூலவாஸுதேவனை –
பரவாஸுதேவன் என்றும், இந்த முதல் வ்யூஹ வாஸுதேவனை வ்யூஹ வாஸுதேவன் என்றும் சொல்வர்.
வ்யூஹ வாஸுதேவன் எல்லாவற்றிற்கும் பொது.
விழித்திருப்பவன் – எல்லாவற்றையும் செய்கிறான். ஸ்வப்னத்தில் உடலின் செயல் இல்லை.

ஜீவன் செய்யும் த்யானத்திலும் நான்கு நிலை:
1) வெளிவிஷயங்களிலே ஈடுபட்டுக் கொண்டே பகவானை சிந்தித்தல் – ஜாக்ரத் த்யானம்
2) வெளி விஷயங்கள் இல்லாமல், மனஸ் மட்டும் வெளிவிஷயங்களில் பற்றைவிடாமல்——பகவத்சிந்தனை—–ஸ்வப்ந த்யானம்
3) வெளிவாஸனையோடுமட்டும் கலப்புண்ட சிந்தனை——ஸுஷுப்தி த்யானம்
4) எல்லாமும் விலக பகவத் த்யானம் மட்டுமே இருப்பது—-மூர்ச்சா த்யானம்

பகவானின் லீலா விபூதியில் (உலகங்களையெல்லாம், ஜீவன்களை எல்லாம் படைத்துக் காத்து அழிக்கும் விளையாட்டில்)
ஸ்ருஷ்டி, ஸ்திதி ஸம்ஹாரங்களில் வாஸுதேவ மூர்த்தியிடமிருந்து ஸங்கர்ஷண மூர்த்தி,
அதனின்று ப்ரத்யும்னமூர்த்தி, அதனின்று அநிருத்தமூர்த்தி தோன்றுகிறது.

ஸங்கர்ஷணன் – ஜீவ தத்துவத்திற்கு அபிமானி.
ப்ரத்யும்னன் -மனஸ்ஸுக்கு அபிமானி.
அநிருத்தன் அஹங்காரத்திற்கு அபிமானி.

மோக்ஷ ஆசை யுள்ளவர்கள் முதலில் அநிருத்தன், பிறகு ப்ரத்யும்னன், பிறகு ஸங்கர்ஷணன் அதன் பிறகு வாஸுதேவ உபாஸனம் செய்ய வேண்டும்.

ப்ரணவத்திற்கு வ்யூஹ மூர்த்தி விஷயமாக விவரித்துச் சொல்லப்படுகிறது.
அதர்வ வேதத்தைச் சேர்ந்த பிப்பலாத சாகையில் உள்ள ப்ரச்னோபநிஷத்து, முண்டக சாகையில் உள்ள முண்டகோபநிஷத்து,
மண்டூக சாகையில் உள்ள மாண்டோக்ய உபநிஷத்து இவை பிரஸித்தி பெற்றவை.

ஆத்மாவின் பதங்கள் நான்கு.
வைச்வாநரன், தைஜஸன், ப்ராஜ்ஞன், துரீயன்.
ஜீவனுடைய நான்கு அவஸ்தைகள்
விழிப்பு,ஸ்வப்னம், ஸுஷுப்தி மோக்ஷம்.-இந்த நான்கு அவஸ்தைகளை (நிலைகளை) நிர்வஹிப்பது நான்கு மூர்த்திகள் என்று சொல்லப்படுகிறது.

————-

7. தைத்திரீயோபநிஷத்து

கிருஷ்ண யஜூர்வேதம் – தைத்திரீய சாகை – ஆரண்யகத்தில் ஐந்தாவது, ஆறாவது ப்ரச்னம் என்பதாக தைத்திரீயோபநிஷத்து உள்ளது.

ஐந்தாவது (முதல் ப்ரச்னம்) – சீக்ஷா வல்லி, ஆனந்த வல்லி என்கிற ப்ரஹ்ம வல்லி, ப்ருகு வல்லி என்று மூன்று பிரிவுகள்.

ஐந்தாவது, ஆறாவது ப்ரச்னங்கள், ஸாம்ஹிதி உபநிஷத்,வாருணீ உபநிஷத் , யாஜ்ஞிகீ உபநிஷத் என்றும் மூன்றாகப் பிரிப்பர்.

சீக்ஷாவல்லிக்கு ஸாம்ஹிதீ உபநிஷத் என்றும், ஆனந்த வல்லியும், ப்ருகுவல்லியும் – ஆனந்தமயமான ப்ரஹ்ம வித்தையைச் சொல்வதால் ஸைஷா ,
பார்கவீ, வாருணீ வித்யா என்று சொல்லப்பட்டதற்கு இணங்க
வாருணீ உபநிஷத் என்றும் நாராயண உபநிஷத் – யாஜ்ஞகீ உபநிஷத் என்றும் சொல்லப்படுகிறது .

வேதாங்கங்களில் கூறப்படும் சிக்ஷையைச் சொல்வதால், சீக்ஷாவல்லி என்றும், ஆநந்தமய வித்யையைச் சொல்வதால் ஆனந்த வல்லி என்றும்,
”ப்ரஹ்மவித் ஆப்நோதிபரம்…..” என்ற ப்ரஹ்மசப்தத் தொடக்கத்தாலே ”ப்ரஹ்மவல்லி” என்றும் சொல்வர்.
இது வாருணீ உபநிஷத்தின் முன் பகுதி. பின் பகுதியானது ப்ருகுவுக்கு அவர் பிதாவான வருணன் உபதேசித்தது”ப்ருகுவல்லி.”

யக்ஞன் என்கிற நாராயணன் என்கிற மஹரிஷியால் ஸக்ஷாத்கரிக்கப்பட்டிருப்பதால், ”யாஜ்ஞகீ” என்றும், நாராயண உபநிஷத் என்றும் சொல்வர்.
நாராயணாநுவாகம் நடுநாயகமாக இதில் உள்ளது.
பகவான் நாராயணனையும், அவனை ஆராதிக்கும் முறையையும் சொல்கிறது. இது முக்யமானது.

சீக்ஷாவல்லி

வேதத்திற்கு அங்கமானவை ஆறு. அவற்றில் ஒன்று சிக்ஷை.
இதில் வர்ணம், ஸ்வரம், ஹ்ரஸ்வதீர்க்காதி மாத்ரை. உச்சரிப்புக்கு வேண்டிய ப்ரயத்ன பலம் (வலிமை) ஸாமஸம்ஹி தை எனப்படும்
ஸந்தானம் – இவைகள் இதில் உள்ளன.-ஸம்ஹிதை என்பது இணைப்பு,-இணைப்பதற்கு இரண்டு வேண்டும்.
பூர்வ ரூபம்,உத்தரரூபம், ஸந்தி, ஸந்தானம் என்ற நான்கு வஸ்துக்களில்
லோகம், ஜோதி, வித்யா, ப்ரஜை , சாரீரம் இவை ஸம்பந்தமாகச் சொல்லி இவற்றைச் சொல்பவருக்கு மக்கள், பசுக்கள்,
வேதார்த்தஜ்ஞானம், அன்னம், ஸ்வர்க்கம் போன்ற பலன்கள் சொல்லப்பட்டது.
ப்ரணவத்தைச் சொல்லி, அதனால் அறிவு, ஆரோக்யம், பேசும் ஆற்றல், காதுக்கு வன்மை வேண்டப்பட்டது.
பூ:, புவ:, ஸுவ: என்றமூ_ன்று வ்யாஹ்ருதிகள். அத்துடன் ”மஹ ” சேர்த்து நான்கு உபாஸனங்கள் சொல்லப்பட்டது.
உபாஸன பலனாக, பகவானைத் தியானித்து ஹ்ருதய நாடி மூலம் சிரசில் கபாலத்தை பிளந்து அக்னிலோகம்,
வாயுலோகம், ஸுர்ய லோகம் இவற்றில் தங்கி ப்ரஹ்மத்திடம் சேர்ந்து பேரானந்தத்தை அனுபவிப்பது சொல்லப்பட்டது.
பிறகு பங்க்தி, ஐந்து ஐந்தாக சொல்லப்பட்டது. துர்க்குணங்களை ஒழித்து ஸத்வ குணத்தை வளர்த்து தபஸ் செய்தல் – ”ந்யாஸம்”
என்கிற தபஸ் சொல்லப்பட்டது. முக்யமாக வேதரஹஸ்யம் சொல்லப்பட்டது.

ஆநந்தவல்லி

பகவானிடமிருந்து பஞ்சபூதங்களும் ஓஷதிகளும், அன்னமும், அன்னத்தின் மூலம் உடலும் பிறக்கின்றன.
எல்லாரும் அன்னத்தால் போஷிக்கப்படுகிறார்கள். அன்னம் உயர்ந்தது.
அன்னமய உடலில், ப்ராணமய ஆத்மா. இதற்கு ப்ராணன் தலை; வ்யானன் வலப்பக்கம்; அபானன் இடப்பக்கம்;
வாயு நடுவுடல்; பூமி ஆதாரம்; ப்ராணனே ப்ரஹ்மம்.

இதற்கு மேல் மனோமயம். யஜூர்வேத சிந்தனம் தலை; ருக்வேத சிந்தனம் வலப்பக்கம்; ஸாமவேத சிந்தனம் இடப்பக்கம்;
ஆசார்யர்களின் ஆக்ஞை நடுவுடல்; அதர்வ வேத சிந்தனம் ஆதாரம்.
இப்படி உபாஸிப்பதால் மனதிற்கு எட்டாத பேரானந்தம் கிடைக்கும். இதற்கு மேல் விஞ்ஞானமயம். ஜீவன் இதற்கு
(அறிவுகள் சக்தி – அவயவங்கள். ச்ரத்தை. அநித்ய வஸ்துவின் அநுபவம், நித்ய வஸ்துவின் அநுபவம். யோகம், சக்தி –அவயவங்கள்)
இப்படி உபாஸித்தால் உடலிலிருந்து வெளியே வரும் போது எல்லா பாபங்களையும் போக்கி எல்லாவற்றையும் அடையலாம்.

இதற்கு மேல் ஆனந்த மயம்.
ப்ரியம் – தலை; மோதம் -வலப்பக்கம்; ப்ரமோதம் – இடப்பக்கம் ;
ஆனந்தம் – நடுவுடல் ;ப்ரஹ்மம் – ஆதாரம்.
சிறந்த ஸுகஅனுபவம்.
இதை இப்படி உபாஸிப்பவன் பெறும் ஆனந்தம் அளவிட இயலாதது .

மானுஷ ஆனந்தம் – நல்ல ஆரோக்யத்துடன், யுவாவாய் இருக்கும்போது சிஷ்யர்களுக்கு நன்கு உபதேசித்துச்
செல்வத்துடன் இருக்கும்போது பெறும் ஆனந்தம்.

இதைப் போல் நூறு மடங்கு – மனுஷ்ய கந்தர்வர்களின் ஆனந்தம். தேவகந்தர்வர்கள், பித்ருக்கள், தேவலோக வாசிகள்,
இந்த்ரன், ப்ருஹஸ்பதி, ப்ரஹ்மா வரை ஆனந்தத்தை நூறு நூறாகப் பெருக்கி சதுர்முகாநந்தம் நூறு கொண்டது,
பரப்ரஹ்மத்தின் ஆனந்தம் என்று சொல்கிறது. இவ்வளவாக மோக்ஷம் அடைந்து, பரப்ரஹ்மத்தை அடைவது சொல்லப்படுகிறது.

ப்ருகுவல்லீ

வருணர் – தன் குமாரனான ப்ருகுவுக்கு சொன்னது.

ப்ரஹ்மம் என்பது அன்னம், ப்ராணன், கண், மூக்கு, மனஸ், வாக்கு, பிறகு ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் இப்படி உபாஸிப்பது –
இதுதான் ப்ரஹ்மம் என்றார்.
கடைசியில் பிதாவின் உபதேசப்படி தபஸ் செய்து ஆனந்தமயமே
ப்ரஹ்மம் என்று ப்ருகு தெளிந்தான்.
இதில் ”விசிஷ்டாத்வைத”ப்படி மோக்ஷம் விளக்கப்படுகிறது

இரண்டாம் ப்ரச்னம் – நாராயணோபநிஷத்

திருப்பாற்கடலிலும், ஸுர்ய மண்டலத்திலும், பரமபதத்திலும் உள்ளவன்.
ஸர்வந்தர்யாமி.
எல்லாவற்றையும் படைத்து, காத்து,அழிப்பவன்.
எல்லாவற்றிலும் ஆராதிக்கப்படுபவன் என்று
பலவாறாக துதிக்கிறது நாராயணோபநிஷத்து.

திருப்பாற்கடலிலும், ஸுர்ய மண்டலத்திலும், பரமபதத்திலும் உள்ள ஸர்வந்தர்யாமி
இதில் அக்னி, ருத்ரன், விநாயகர், கருடன், துர்க்கை, நாராயணன் இவர்களைப் பற்றிய மந்த்ரங்கள் உள்ளன.
அகமர்ஷ ண ஸுக்தம் – ஸ்நானம் செய்யும் முறை, அபிகமன காலம் வரை செய்பவை சொல்லப்படுகின்றன.
ப்ரம்மோபாஸனம் சொல்லப்படுகிறது.

மதுஸுக்தம், க்ருதஸுக்தம் உள்ளது. ஸாத்விக த்யாகம் சொல்லப்படுகிறது.
தஹர வித்யை, மோக்ஷ வித்யை, பர வித்யைகளாலே உபாசிக்கப்படுபவன் என்கிறது.
ஸுர்ய மண்டலத்திலே பகவானை உபாசிக்கும் விதம் சொல்லப்படுகிறது.

உபாதான கால விவரம், ஆராதனம் இவைகள் கோடி காட்டுகிறது.
ஹிரண்ய கர்ப்ப ஸுக்தம், மேதா ஸுக்தம், த்ரி ஸுபர்ண ப்ரஹ்ம ஸுக்தம் இதில் உள்ளன.

ஸன்யாஸ,ஹோம மந்த்ரங்கள் சொல்லப்படுகின்றன–ஸத்யம், தபஸ், தமம்,சமம், தானம், தர்மம், பிரஜநனம், அக்னி,
அக்னிஹோத்ரம்,யஜ்ஞம், மாநஸம் இவைகளைச் சொல்லிக் கடைசியாக ”ந்யாஸத்தை”ச் சொல்கிறது.
இதுவே ப்ரபத்தி.

ப்ரபத்தி செய்து கொள்பவன் மீண்டும் பிறப்பதில்லை.
ப்ரணவத்தைக் கொண்டு ஜீவனை , பகவானிடம் சமர்ப்பிக்கும் தேவ ரஹஸ்யம் என்பது சொல்லப்படுகிறது.

தைத்திரியோபநிஷத்தில் உள்ள மஹா நாராயணோபநிஷத்”
பர தத்துவத்தைச் சொல்கிறது.

இதற்கு இரண்டு ப்ரச்னங்கள்.
முதல் ப்ரச்னத்தில் சீக்ஷாவல்லி, ப்ருகுவல்லி, ஆனந்தவல்லி.
இரண்டாவது ப்ரச்னத்தில் ”யாஜ்ஞிகி உபநிஷத்”.

—————————

தைத்திரியோபநிஷத்

இது மூன்றாக உள்ளது.
(1) ஸாம்ஹிதி உபநிஷத் (சீக்ஷாவல்லி),
(2) வாருணி உபநிஷத் (ப்ருஹ்ம வல்லி, ஆனந்த வல்லி)
(3) யாஜ்ஞிகி உபநிஷத் (ப்ருகுவல்லி)

பரவித்யாவின் அங்கம் – பூர், புவஸ், ஸுவ: என்கிற வ்யாஹ்ருதி த்ரயம் (பூர், புவ:, ஸுவ:மூன்று) நாலாவது வ்யாஹ்ருதி – மஹ

இந்த நாலாவது வ்யாஹ்ருதி – முதல் மூன்று வ்யாஹ்ருதிக்கு சரீரம்.
இந்த சரீரத்திற்கு ஆத்மா பரப்ருஹ்மம்.
இதற்கு ”வ்யாஹ்ருத் உபாசனை” என்று பெயர்.
இதைச் செய்பவனுக்கு ”ப்ரஹ்ம வித்யை” ஸித்திக்கிறது.

உபாஸனா | பூ | புவ: | ஸுவ: | மஹ :

1. லோகோபாஸனா | உலகம் | அந்தரிக்ஷம் | ஸ்வர்க்கம் | ஆதித்யன்
2. தேவதோபாஸனா | அக்னி | வாயு | ஆதித்யன் | சந்த்ரன்
3. வேதோபாஸனா | ருக் | ஸாமம் | யஜூர் | ப்ரஹ்ம| (ப்ரணவம்)
4. ப்ராணோபஸனா | ப்ராணன் |அபானன் |வ்யானன் | அன்னம்

இப்படி ப்ரஹ்ம வித்யை ஸித்திக்கும் உபாஸகன் தனது ஹ்ருதயாகாசத்தில் உள்ள அழகிய, அழிவற்ற ஒரு புருஷனை
உபாசித்து வாயினுள், அடி நாக்கின் மேலே” தாலுகை” எனப்படும்.
நடுவில், பசுவின் காம்பு போல் தொங்கும் ஒருவகை மாமிச பிண்டத்தின் உள் வழியாகச் சென்று, தலையின் ரோம வேர்களை
அடைந்து, பின் மண்டையோட்டை விலக்கிக் கொண்டுச் செல்லும்” ஸுஷும்னா” என்கிற நாடியின் வழியாக
அக்னி, வாயு,மற்றும் ஆதித்ய லோகங்களை அடைந்து, ப்ரஹ்மத்தை அடைந்து, கர்ம பந்தஹீனன் ஆகையாலே
அப்ராக்ருத சரீர இந்த்ரியங்களை தன் விருப்பப்படி பெற்று, நித்ய ஸூரிகள் அனுபவிக்கும் எல்லையில்லாப் பேரானந்தத்தை அனுபவிக்கிறான்.

————-

தைத்திரிய நாராயண உபநிஷத்

இப்போது நடப்பது, ஸ்வேதவராஹ கல்பம்.
இது முடிந்ததும் நைமித்திக ப்ரளயம். அப்போது ஸுர்ய மண்டலம் நாசம்.
ஒரு வஸ்துவை அறிய வேண்டிய ஜ்ஞானம் – தர்ம பூத ஜ்ஞானம் எனப்படும். நித்ய முக்தர்களுக்கு இது அளவில்லாதது.
பாபத்தை போக்கக்கூடிய வருணனுக்கு ”அகமர்ஷணன்” என்று பெயர். அகமர்ஷண ஸுக்தம் என்றால் எல்லா பாபங்களையும்
போக்குவதற்காக ஜபிக்கப்படும் மந்த்ரம் என்று அர்த்தம்.

பரமாத்மாவிடமிருந்து உண்டான வஸ்துக்கள்.

(1) ஏழு இந்த்ரியங்கள் (மனஸ், புத்தி, ஐந்து ஜ்ஞானேந்த்ரியங்களான கண், காது, மூக்கு, தோல், நாக்கு)
(2) ஏழு அக்னிகள் – ஆவஹனீயம், கார்ஹ பத்யம், தக்ஷிணாக்னி, ஸப்ய, ஆவஸத்ய, ப்ராஜஹித,அக்னிர்த்ராஹா ::
(3) ஏழு ஸமித்துக்கள் (மரங்கள் – அச்வத்த, உதும்பல, பலாச, ஸமீ, விகங்கத, அசனீ, புஷ்கரபர்ன)
(4) அக்னிக்கு ஏழு நாக்குகள் (காயீ, கராலீ, மனோஜவ, சுநீசுதா, சுதாம்பரவர்ணா, ஸ்ப்ரிலிங்கிணீ, விஸ்வரூபி)
(5) ஏழு லோகங்கள் – பூலோக, புவர், ஸுவர், மஹர், ஜனோ, தபோ, ஸத்ய லோகம்

நாராயண உபநிஷத்தில்
64வது மந்த்ரம் – ஜ்ஞானத்தைப் பெற, ஜபிக்கப்பட வேண்டும்.
65வது மந்த்ரம் – கெட்ட கனவுகள், பயத்தைப் போக்க ஜபிக்கப்படவேண்டும்.
66வது மந்த்ரம் – மதுஸுக்தம் (அமாவாஸ்யை, ச்ராத்த காலங்களில் சொல்லப்படுகிறது)

————–

8. ஐதரேயோபநிஷத்து

இது ”ருக்” வேதத்தைச் சேர்ந்தது. ”ஐதரேயர்” என்கிற மஹரிஷி தவம் புரிந்து கண்ட ப்ராஹ்மணம். ஐதரேய ஆரண்யகமும் உள்ளது.
(ஐந்து ஆரண்யகங்கள் – இரண்டாவதுமற்றும் மூன்றாவது ஆரண்யகத்திற்கு ஐதரேயோபநிஷத்து என்றுபெயர்).

ப்ராணன் சிறந்தது. இது உடலை விட்டு கிளம்பினால் எல்லா அவயவங்களும் செயல்படாது.
ஸத்யம் – இதை ”ஸத்” ,”தி”, ”யம்” என்று மூன்றாகப் பிரித்தால் ”ப்ராணன்”, ”அன்னம்”,”ஆதித்யன்” என்று பொருள்படும்
வாக்கு – இதில் அடங்கிய சந்தஸ்களுக்கு,
ப்ருஹதி சந்தஸ் என்பது ப்ராணன்.

தண்ணீரால் ப்ராணனுக்கு புஷ்டி ஏற்படுகிறது.
விஸ்வாமித்ரர், இந்திரனிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த்ரன் சொன்னதாவது:-
நான் ப்ராணன், எல்லா பூதங்களும் ப்ராணனே, ஆதித்யன் ப்ராணனே.
எனக்கு அன்னம் இதுவே.
இது வைச்வாமித்ரம் ஆகும். (கௌஷீதகி உபநிஷத்தில்” ப்ரதர்தந வித்யை” முதலியவற்றில் உள்ளது).

மரம், செடி இவற்றில் ஆத்மா சிறிது விரிந்திருக்கும்.
பிராணிகளிடத்தில் கொஞ்சம் அதிகம்.
மனித உடலில் இந்த விரிவு அதிகம். (ஜீவாத்மா)

மனித உடலில் வாயு ஐந்து விதமாக இருக்கிறது.
இவைகளுக்கு கட்டுப்பட்டது கண், காது,மூக்கு,மனம், சொல் (வாக்கு).
வாக்கினால் செய்யப்படும் யஜ்ஞம் ஐந்து விதம் (ஸோம யாகமும் சேர்த்து)

உக்தி (அல்லது) உக்த்தம் மிக முக்கியமானது.
நிஷ்கேவல்யம் என்பது உக்த்த சாஸ்த்ரம்.
இது ஒரு விதமான மந்த்ர பாடம்.
பல த்ருஷ்டி விதிகள் இதில் சொல்லப்படுகின்றன (த்ருஷ்டி என்பது, ஒன்றை மற்றொன்றாகப் பாவிப்பது)
ப்ருஹதீயை (ஆயிரமாக) பாவித்து, இந்த்ரனாக பாவித்து, அதனால் இந்த்ர லோகத்தை அடையலாம்.
ஆனால்,மீண்டும் பிறப்பு உண்டு.
ஆதித்ய, அக்னியின் (இரண்டின்) அம்சங்கள் சுக்ல சோணிதங்கள். இவை ஒன்று சேர்வதால் ஆத்மா இவ்வுலகை அடைகிறது.
ஆத்மாவுக்கு ஆண்,பெண் என்கிற வித்யாஸம் இல்லை.
மனுஷ்ய ஆயுள் நூறு வயது.
அதாவது முப்பதாயிரம் நாட்கள்தான். நூறு என்பதை 365ல் பெருக்காதீர்கள். மொத்தத்தில் நூறு வயது;( நூறு வருஷம் அல்ல)
ப்ருஹதிசந்தஸ் ஆயிரம் என்று சொன்னதைப் போல,
இந்த எண்ணிக்கையும் முடிவடையும் போது, தேவ ரதத்தில் (ஐந்து உரு) சென்று பரமாத்மாவை அடையலாம்.
ஐந்து உரு என்பது – 1) வாக்கு – ரதத்தின் ஏர்க்கால்,
2) காதுகள் -சக்கரங்கள்,
3) கண்கள் – குதிரைகள்,
4) மனம் – தேர் பாகன் அல்லது கடிவாளம்,
5) ப்ராணன் – முதலாளி (ஆத்மா)

இதில் (ஐதரேயோபநிஷத்தில்) ஆத்ம ஷட்கம்

உலகெல்லாம் ச்ருஷ்டிப்பதற்கு முன்பு ஆத்மா ஒன்றே. (அதாவது பரமாத்மா ; பரமபுருஷன்)
இது ஸங்கல்பித்துக் கொண்டு ச்ருஷ்டி செய்யத் தொடங்கியது.
அம்பஸ் (ஸ்வர்க்கம்)
,மரீசி (அந்தரிக்ஷ லோகம்),
மரம் (பூலோகம்),
அப்பு (பாதாளம்).
லோக பாலர்கள், இவைகளை முதலில் ச்ருஷ்டித்தது.-பிறகு,ஜலத்தினின்று ஒரு புருஷ வடிவத்தை உண்டாக்கியது.
இதற்கு, அண்டம் போல் வாய் இருந்தது. வாக்கு, மூக்கு, கண், காது இந்த்ரியங்களையும் அவைகளுக்கான தேவதைகளையும்
பிறகு,
ஹ்ருதயம், ப்ராணன், மனஸ், சந்த்ரன், நாபி, அபானம், ம்ருத்யு தேவதை, ஆண் குறி, வீர்யேந்த்ரியம், இப்படி உண்டாக்கப்பட்டது.
இவைகளுக்கு பசி,தாகத்தை பரமாத்மா, உண்டாக்கியது.
அவைகள் ”நாங்கள் வசிப்பது எங்கே?” என்று கேட்க,
பரமாத்மா முதலில் பசுவைக் கொடுத்தது.-பிறகு குதிரையைக் கொடுத்தது.-மனித உடலை உண்டாக்கிக் கொடுத்தது.
பசி, தாகம் இரண்டும் எங்கள் இடம் எது என்று மறுபடியும் கேட்க ”ஹவிஸின்” பாகம் என்று பரமாத்மா சொல்லிற்று.

பிறகு ஜலத்திலிருந்து அன்னத்தை உண்டாக்கியது.
வாய்,அபானம் என்கிற வாயுவினாலே அன்னத்தை உண்ணத் தெரிந்து கொண்டது. ப்ராணன் என்கிற ஜீவாத்மா’ ஸீமா” என்கிற
தலையின் உச்சியைப் பிளந்து கொண்டு உள்ளே புகுந்தது. இது ”வித்ருதி” எனப்படும்.
இந்த ஜீவாத்மாவுக்கு விழிப்பு (ஜாக்ரம்),சொப்பனம் (ஸ்வப்னம்) ஸுஷுப்தி (தூக்கம்) என்கிற மூன்று நிலைகள் உண்டு.
இவை யாவும் அழியக் கூடியது. எங்கும் ப்ரம்மம் (பரமாத்மா) வ்யாபித்துள்ளது.

ஜீவாத்மா, முதலில் புருஷனிடத்தில்” வீர்ய”மாக இருக்கிறது.–புருஷன் வீர்யத்தை ஒன்று சேர்த்து ஸ்திரீயிடத்தில் சேர்த்தவுடன்,
இது ஜீவாத்மாவிற்கு முதல் பிறப்பு.-பிறகு எப்போதும் போலப் பிறப்பது இரண்டாவது பிறப்பு.
ஆயுள் முடிந்து, மரித்து,மறுபடியும் பிறக்கிறான்.-இது மூன்றாவது பிறப்பு.
இப்படி எண்ண இயலாத பிறப்புகள், இறப்புகள், சங்கிலித் தொடர் போல ஜீவாத்மாவுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

வாமதேவர் என்கிற மஹரிஷி , கர்ப்பத்தில் இருக்கும்போதே முன் ஜன்மங்களையெல்லாம் அறிந்து, பிறந்தவுடனேயே கர்ம
பந்தத்திலிருந்து விடுபட்டு பரமபதம் சேர்ந்தார், என்று சொல்வர்.

இது எல்லோராலும், ரிஷிகளால் கூட இயலாத செயல்.

பரமாத்மா சர்வ சேஷி . ப்ரஹ்மா, இந்த்ரன், ப்ரஜாபதி எல்லா தேவதைகள், பஞ்ச பூதங்கள், யோநிஜங்கள், அயோநிஜங்கள்,
முட்டையில் பிறப்பன, கர்ப்பத்தில் பிறப்பன, புழுக்கத்தில் பிறப்பன, பூமியை பிளந்து பிறப்பன, பறக்கும் பிராணிகள், நீர் வாழ்வன என்று
இப்படி ஜீவராசிகள் எல்லாமும், பரமாத்மாவின் ஆக்ஞைக்கு உட்பட்டு, அவனுக்கு சேஷனாக இருப்பவை.

மனித உடலில் எலும்புகள் 360. அவற்றில் கொழுப்பு 360 ஆக 720.
ஒரு வருடத்தில் பகல் 360 இரவு 360 ஆக 720.
உடல் என்கிற குடிசையி;ல் எல்லா மூங்கில்களுக்கும் ஆதாரமான நடுமூங்கில் போல, கண், காது, மூக்கு இவற்றிற்கு ஆதாரமான
ப்ராணனை நாளுக்கு சமமாக பாவித்து பாவனை செய்தால் ஆயுள் முதலிய பலன் கிடைக்கிறது.

அக்ஷரங்களை 360 , 360 என்று இரண்டு பாகமாக ஆக்கி, அவற்றின் சேர்க்கையை 360ஆக ஆக்குங்கள் (எப்படி என்று யோசியுங்கள்).
பகல், இரவு, சந்தி இவை முறையே 360 , 360 360, ஆக மொத்தம் 1080 ஆகும்- இப்படி ப்ருஹதி 1080 ஆகிறபடி,

இதை எலும்பு, கொழுப்பு 540, 540 ஆக பிரித்து மறுபடியும் கூட்டி”1080” என்று சொல்லி, பாவனை செய்யும் விதமும் அதன் பலனும் சொல்லப்படுகிறது.

சரீர புருஷனுக்கு, ரஸம், ப்ரஜ்ஞாத்மா. ஸந்தஸ் புருஷனுக்கு,ரஸம், அகாரம். வேதங்கள் மூன்றுக்கு, ரஸம் பிரமன். மஹா புருஷன் என்பது ஸம்வத்ஸரம்(வருடம்).
இதன் ரஸம் ஆதித்யன்.
ஸரீர ரசமான ப்ரஜ்ஞாத்மாவையும் மஹா புருஷனான ஆதித்யனையும் ஒன்றாக பாவனை செய்வது சொல்லப்படுகிறது.
பரமாத்மா, தன் ஆத்மாவின் அந்தராத்மா என்று தெளிய வேண்டும் என்று ஒரு மந்த்ரம் சொல்கிறது. (அதாவது ஜீவாத்மாவுக்கும் ஆத்மா).
சரீரத்தை வீணைக்கு ஒப்பிட்டு இதை நன்கு தெளிந்தவன், பார் புகழும் வண்ணம் இருப்பான் என்பது சொல்லப்படுகிறது.

ஸம்ஹிதையில் ”ண”காரம் பலம்.
”ஷ ”காரம் ப்ராணன்.
பரமாத்மாவே எல்லாமும் என்று இந்த உபநிஷத் சொல்கிறது.

—————

9 – சாந்த்யோக்யோபநிஷத்

இது ஸாம வேதத்தைச் சேர்ந்தது. இது ”தாண்டி”சாகையின் கடைசி பாகம்.
வேத வ்யாஸர் ப்ரம்மஸுத்ரத்திற் குஎடுத்துக் கொண்ட உபநிஷத்துக்களில் இதுவே அதிகமாக எடுத்தாளப்பட்டுள்ளது.

ஸாம வேதத்தைச் சேர்ந்ததாகையால், உத்கீதத்தைப் பற்றி இது (இந்த உபநிஷத்) சொல்கிறது.
ப்ரணவத்தை முதலில் சொல்லி, பலவாறு உபாஸனங்களைச் சொல்லி,
உத்கீத பதம்,ஸாம பதம், ஸாம பொது, அதன் அம்சங்கள், உட் பிரிவுகள்
இவைகளில் உபாஸனம் செய்வதைச் சொல்லி, ஐஷிகம், ஆமுஷ்மிகம் என்று பல பலன்களுக்கான உபாஸனங்களைச் சொல்லிப்
பிறகு மோக்ஷத்திற்கான பக்தியோகம் இவற்றைச் சொல்கிறது.

எட்டு பிரபாடகங்களாக உள்ளது. பிரபாடகம் என்பது
அத்யாயம். அத்யாயத்தில் அனேக காண்டங்கள் (பிரிவுகள்).
ஸாமம் – வேத கானம்.”ருக்”குகளில் கானம் பண்ணப்படும்.
ஒவ்வொரு” ரிக்”கிலும் கானம் பண்ணும்போது அந்த கானத்தை ஐந்து பாகமாக பிரிப்பார்கள். அவையாவன:-
1) ஹிங்காரம்,
2) ப்ரஸ்தாவம்,
3) உத்கீதம்,
4) ப்ரதிஹாரம்,
5) நிதனம்.
இதை ஏழாகவும் பிரித்துச் சொல்வார்கள்.
1) ஹிங்காரம், 2) ப்ரஸ்தாவம், 3) ஆதி, 4) உத்கீதம், 5) ப்ரதிஹாரம், 6) உபத்ரவம், 7) நிதனம்.

ப்ரபாடகம் -1 –
ப்ரணவத்தை உத்கீதமாக உபாசிக்கச் சொல்கிறது.
உத்கீதம் உலகில் ஸாரமானது. பூமியின் ஸாரம்எதுவென்றால் விளையும் பயிர்களுக்கு ஜலம் மூலமாக இருப்பதால், ஜலம் – ஸாரம்.
அதில் உண்டான ஓஷதிகள் ஸாரம். இவற்றைச் சாப்பிட்ட மனித உடல் ஸாரம். இந்த உடலில் வாக்கு ஸாரம்.
வாக்குகளில் ”ருக்” ஸhரம். இதற்கு மேல் ஸாம கானம். இதில் சிறந்தது உத்கீதம்.

உபாஸனம் இல்லாமல் விதிக்கப்பட்டதைச் செய்தாலும் பலன் உண்டு.
உபாஸனத்தோடு செய்தால், பலன் மிகவும் அதிகம்.
இந்த உத்கீதத்தை -ப்ராணவாயுவாக உபாஸிப்போருக்கு விரோதிகள் அழிவர்.

கச்யப ப்ராஜபதிக்கு திதி, அதிதி என்று இரண்டு மனைவிகள்.-இவரின் புதல்வர்கள் தேவர்களும், அசுரர்களும் ஆவர்.

இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அசுரர்களை ஜெயிக்க தேவர்கள் முடிவெடுத்து தேவர்கள் மூக்கில் உள்ள இந்த்ரியமாக
உத்கீதத்தில் சொல்லப்பட்ட ”ப்ரணவத்தை” உபாஸித்தனர்.

அசுரர்கள் அதைக் கெடுத்தனர். இப்படி வாக்கு, கண், காது, மனஸ் என்பதையெல்லாம் உபாஸித்தனர். அசுரர்கள்
எல்லாவற்றையும் கெடுத்தனர்.
கடைசியில் முகத்தில் உள்ள ப்ராணனான ப்ராண வாயுவை உத்கீதமாக தேவர்கள் உபாஸித்ததும் அசுரர்கள் அதன் மீது
எறிந்த பாவங்கள் வெளியே சிதறி ஓடியது.
(ப்ராணன் பாதிக்கப்படவில்லை). இவ்வாறாக ப்ராணனாக பாவிக்கப்பட்ட உத்கீதத்தின் பெருமை சொல்லப்பட்டது.

உத்கீத ப்ரணவத்தை ”அமிர்தம்” எனப்படும் ப்ரம்மமாக உபாஸிக்கச் சொல்கிறது. தேவதைகள், ம்ருத்யுவுக்குப் பயப்பட்டு
வேத வித்யைக்குள் புகுந்து வேத மந்த்ரங்களால் தங்களை மறைத்துக் கொண்டனர்.
அப்போது ம்ருத்யு, தண்ணீரில் மீனைக்கண்டாற் போல் தேவதையைப் பார்த்து விட்டான்.
பிறகு அவர்கள் அமிர்தமான ப்ரணவத்திலே மறைந்து கொண்டனர்.
இங்ஙனம் தங்களைக் காத்துக் கொண்டனர்.
இப்படி உபாஸிப்பவனுக்கு ” ம்ருத்யு ” இல்லை, பயமுமில்லை.

”கப்யாஸ புண்டரீகாக்ஷ த்ருஷ்டி” என்பது சொல்லப்படுகிறது.
ஆகாசமாக உத்கீதத்தைப் பார்ப்பவனுக்கு உயர்ந்த ஜீவனம் —-, உயர்ந்த உலகங்கள் கிடைக்கும். (சௌனகர் – சாண்டில்யருக்குச் சொன்னது).

உமூஸ்தி என்கிற மஹரிஷி , பஞ்சம் ஏற்பட்ட சமயத்தில் உணவு கிடைக்காமல், ஒரு கிராமத்தில், யானைக்குக்
கொடுக்கப்படும் ”குல்மாஷம்” என்கிற உணவை, உயிர் தரிக்க வேண்டும் என்ற காரணத்தால், யானைப் பாகனிடம் கேட்டு, ஒரு
கவளம் வாங்கிச் சாப்பிட்டார்.
ஆனால் தொடர்ந்து யானைப் பாகன் கொடுத்த தண்ணீரை ”இது எச்சில் வேண்டாம்” என்று சொல்லிவிட்டார்
. உயிர் தரிக்க கொஞ்சம் உணவு சாப்பிட்டால் போதும் என்கிற நியதி இந்தத் தத்வத்தில் சொல்லப்படுகிறது.

ஒரு அரசன் யாகம் செய்யப் போகும் சமயத்தில் ”ப்ரஸ்தாபம்”, ”உத்கீதம்”, ”ப்ரதிஹாரம்” என்கிற ஸாமங்களுக்கு தேவதை யார்
யார் என்று ரிக் வித்குகளிடம் கேட்க (யாகத்தை நடத்திவைப்பவர்கள்),
அவர்கள் தெரியாது என்று சொல்ல,
அரசன் இவரையே (உஷஸ்தி) (அச்சமயர் உஷஸ்தி அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்) ரிக்வித்தாக நியமித்து அவரை மேற்கண்ட
ஸாமங்களுக்கு தேவதைகளைப் பற்றிக் கேட்க உஷஸ்தி. ”ப்ரஸ்தாபம்” என்கிற ஸாமகானத்தில்
ஸர்வ பூதங்களுக்கும் பிறவி,அழிவு இவைகளுக்கு காரணமாக உள்ள ”ப்ராண” தேவதையையும் , உத்கீதத்திலே ”ஆதித்யன்” தேவதையையும்,
ப்ரதிஹாரத்தில் ”அன்னத்தையும்” தேவதையாகப் பாவிக்க வேண்டும் என்று சொல்லி யாகத்தை நடத்தி வைத்தார்.

அன்னத்தைப் பெறக் காரணமாக உள்ள ”சௌவோத்கீதம்” என்கிற உத்கீதம் இதில் சொல்லப்படுகிறது. ஸாமகானத்தில்
இசையின் பொருத்தத்திற்காக புதிய அக்ஷரங்கள் இருக்கும். அவை” ஸ்தோபாக்ஷரங்கள்” எனப்படும்.
”ஹா உ”, ”ஹா இ ”’போன்றவை

1) ஸுர்யோதயத்திற்கு முன்பு ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்குபுறப்படும் காலம்;
2) மனிதர்கள் விழித்தெழும் உதய காலம்;
3) பறவைகள் பறக்கும் ஸங்கவ காலம்;
4) தேவதைகளின் உச்சிக் காலம்;
5)அபரான்ன காலம்;
6) அஸ்தமனத்திற்கு முன்பு கால்நடைகள் திரும்பும் காலம்;
7) பித்ருக்களின் அஸ்தமன காலம்.
இப்படி ஏழு பிரிவுகளாக ஸுர்யனைப் பாவித்து ஸாமத்தை உபாஸிப்பது சொல்லப் படுகிறது.

மேலும், ”அதிம்ருத்யூபாஸனம்” விவரிக்கப்படுகிறது.

மாதங்கள் 12,
ருதுக்கள் 5 (ஹேமந்த ருது, சிசிர ருது ஒன்றாக கணக்கிடப்படுகிறது)
உலகங்கள் 3 . ஸுர்யன் 1
ஆக 21. ஸாம பக்திகளில் எழுத்துக்கள் 22.
இப்படி ஸுர்யோபாசனம் செய்தால் ம்ருத்யுவை ஜயித்து மோக்ஷத்திற்கு அருகதையாவது சொல்லப்படுகிறது.
ஸோம யாகத்தில் 3 யவனங்களுக்கு அதிபதியான வஸு , ருத்ர, ஆதித்யர்களைப் பற்றிய ஸாமங்களைச் சொன்னால்
மூவுலகும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

——————

10 ப்ருஹதாரண்யக உபநிஷத்து

இது உருவில் பெரியது. சுக்ல யஜூர் வேதத்தைச் சேர்ந்த சதபத ப்ராம்மணத்தின் கடைசிப் பகுதி.
இது காண்வம்,மாத்யந்தினம் என்று இரண்டு பிரிவுகள். (கிளைகள்).
ப்ராஹ்மணம் – காண்வ சாகையிலும் மாத்யந்தின சாகையிலும் உள்ளது.

எட்டு அத்யாயங்கள் இதில் உள்ளன. முதல் இரண்டு அத்யாயங்கள் ஜ்ஞானத்தைப் பற்றிச் சொல்கிறது. “ப்ரவர்க்யம்”
என்கிற ஸோம யாகத்தைச் சேர்ந்த ஒரு அங்கத்தைச் சொல்வதாகவும் சொல்வர். மீதி ஆறு அத்யாயங்களுக்கும் பாஷ்யம் (விரிவுரை) உண்டு .

ஒன்றை மற்றொன்றாகப் பாவிப்பது “த்ருஷ்டி விதி” எனப்படும். அச்வமேத யாகம் தொடங்கி, ஒரு வருஷ காலம்
கழித்து இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது
(ஒன்றை மற்றொன்றாகப் பாவிப்பது). குதிரையின் தலை, கண், ப்ராணன் முதலிய அங்கங்களை விடியற்காலை வேளை (உஷத் காலம்)
ஸுர்யன், வாயு இவைகளைப் போல பாவிக்க வேண்டும்.
யாகம் செய்பவன் இது போன்ற பாவனைகளைத் தெளிந்து செய்ய வேண்டும். விரைவில் பலன் பெறலாம்.

பரமாத்மா உருவத்தை எடுக்க விருப்பம் கொண்டு ஜலத்தை உற்பத்தி செய்தது. ஜலத்தின் சாரமாக, பூமி உண்டாயிற்று.
அதிலிருந்து, அக்னி உண்டாயிற்று. அக்னியே, ஆகாயத்தில் வாயுவாகவும், மேலுலகில் ஆதித்யனாகவும் உள்ளது.
அக்னி என்கிற உருவத்தை எடுத்த பரமாத்மா, ஸம்வத்ஸரத்தை உண்டாக்கியது. அதாவது பல ஸம்வத்ஸர காலம் (பல வருஷங்கள்)
ப்ராணிகளை படைக்கும் ப்ரஹ்மா என்று கொள்ளலாம்.

ப்ரஹ்மஞானம் உண்டாகத் தடையாக இருக்கும் பாபங்களைப் போக்க ப்ராணனை உபாஸிக்கச் சொல்கிறது.
”மதுப்ராம்மணம்” என்பது இதில் சொல்லப்படுகிறது.
ஓவ்வொரு இந்த்ரியத்திற்கும் ஒரு அதிஷ்டான தேவதை உண்டு. தேவதைகள் இஷ்டப்படி இவை இருக்கின்றன. ஆதலால் மது என்று பெயர்.
இந்த தேவதைகள், ”மற்ற எல்லாருக்கும், அழிவே இல்லாமல் ஒருவன் அந்தர்யாமியாக இருக்கிறான். அவனே
ஆத்மா , அவனே மது” என்று உபாசித்தன (பரமாத்மாவை). இந்த மது ரஹஸ்யத்தை ”தத்தியங்” என்கிற மஹரிஷியிடத்தில்
”அச்வினி தேவர்கள்” வந்து, இந்த வித்யையை உபதேசிக்குமாறு கேட்டார்கள். இந்த ரஹஸ்யத்தை வெளியிட்டால் தலையை
வெட்டி விடுவதாக இந்த்ரன் சொல்லியிருப்பதால் அஞ்சுகிறேன் என்றார் முனிவர்
உங்களுடைய தலையை வெட்டித் , தனியாகப் பாதுகாத்து குதிரையின் தலையைப் பொருத்துகிறோம். நீங்கள் உபதேசியுங்கள்.
இந்த்ரன் வெட்டுவதாயிருந்தால், இந்த குதிரைத் தலையைத் தான் வெட்ட வேண்டும். வெட்டியவுடன் உங்கள் தலையைப் பொருத்தி விடுகிறோம் என்றனர்
அச்வினி தேவர்கள் –வைத்யர்கள் அல்லவா? மஹரிஷி ஒப்புக் கொண்டு ரஹஸ்யத்தை தேவர்களுக்கு குதிரை முகமாக உபதேசித்தார். (ஹயக்ரீவ ஸ்வரூபம்)

”பரமாத்மா எல்லா உயிர்களிலும் இருக்கிறான். உள்ளே, வெளியே எங்கும் இருக்கிறான். அவன் இல்லாத இடமே இல்லை.
உலக வ்யவஹாரங்களை நடத்த பற்பல உருவங்களை எடுத்துக் கொள்கிறான்.
ஹரியானவன் அவன் —-பல ஆயிரக்கணக்கான ஹரியாக ஆகிறான். இந்தப் பரமாத்மா, எல்லாக் காலங்களிலும்
எல்லா இடங்களிலும் இருந்து ஸர்வேச்வரன் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறான்”. இதுதான், உபதேசத்தின் சுருக்கம்.

இந்த்ரன் கோபத்துடன் வந்து, முனிவரின் தலையை (குதிரைத்தலை) வெட்ட, அச்வினீ தேவர்கள், முனிவரின்
சுயமான தலையைப்பொருத்த, ”தத்தியங்” என்கிற அந்த முனிவர் செய்த பேருபகாரம் இவையெல்லாம்—————- தனிக்கதை.

வித்யையை உபதேசிக்கும் ஆசார்யன் முதல் பகவான் வரையிலுள்ள வம்ச ப்ராம்மணம் முக்யம். (வம்ச வித்யை) இதை
ஒவ்வொருவரும் அநுஸந்திக்க வேண்டும்.
அச்வலர் -யாஜ்ஞவல்க்யர் – ஸம்வாதம்
விதேஹ தேச ராஜாவான ஜனகர், விசேஷமாக ஒரு யாகம் நடத்தினார். அதற்கு, ஏராளமான வேத வித்துக்கள் வந்தனர்.
இவர்களில், வேதங்களை வேதாங்கங்களை அத்யயனம் செய்து, ப்ரம்ம வித்யை வரையில் எல்லா வித்யைகளிலும் சிறந்து
விளங்குபவர் யார் என்று அறிய விருப்பம் கொண்டார்.
சிறந்த ஜ்ஞானியாக இருப்பவர், பொன் குப்பிகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த ஆயிரம் பசுக்களை ஸ்வீகரிக்க வேண்டும் என்று
ப்ரார்த்தித்தார். ஒருவரும் முன்வரவில்லை.
அச்சமயத்தில் யாஜ்ஞவல்க்யர் (இவர் ஸுர்யனைத் த்யானம் பண்ணி ஸுர்யன் குதிரை ரூபமாகப் ப்ரஸன்னமாகி உபதேசிக்க அவரிடம் உபதேசம்
பெற்றார். இதற்கு அந்தர்யாமி ப்ராம்மணம் என்று பெயர்).
தன் சிஷ்யனை அழைத்து, ”பசுக்களை நம் க்ருஹத்திற்கு ஓட்டிக் கொண்டு போ” என்றார்.
மற்ற ப்ராம்மணர்கள் ஆக்ஷேபித்தனர்.
ஜனக ராஜனின் யாகத்தை நடத்தி வைக்கும் ருத்விக் அச்வலர், நீர்தான் சிறந்த ப்ரம்ம வித் என்று உங்களைக் கருதுகிறீரா ? என்று கேட்டார்.
யாஜ்ஞ வல்க்யர் ”அத்தகைய ப்ரஹ்ம வித்யைக்கு எனது நமஸ்காரம்,எனக்கு பசுக்கள் தான் தேவை” என்றார்.
அச்வலர், யாஜ்ஞவல்கயரை கேள்வி கேட்கலானார்.
அச்வலர் யாகத்தை நடத்தும் எஜமானர் மோக்ஷம் பெற ஹோதா, அத்வர்யு, உத்காதா, ப்ரம்மா, என்கிற ருத்விக்குகள் பற்றியும்,
ஹோதா சொல்லும் ருத்விக்குகள், உத்காதா செய்யும் சாமகான ருக்குகள், ப்ரஹ்மா யாகத்தைக் காப்பது, பிற தேவதைகள்
பற்றியும் அவ்வப்போது பெறும் பலன்களைப் பற்றியும், யாஜ்ஞ வல்க்யரைக் கேட்டுத் , திருப்தி அடைந்தார்.

ஆர்த்தபாகர் என்கிற மஹரிஷி கேள்வி கேட்க யாஜ்ஞவல்க்யர்,
அவருக்கு க்ரஹங்கள் எட்டு
அவை மூக்கு, வாக்கு, நாக்கு, கண்,காது, மனஸ், கை, த்வக் என்பவை என்றும், அவற்றின் விஷயங்கள் அதிக்ரஹங்கள் என்றும்,
அக்னி ம்ருத்யு என்றும்,ஜலம் அதை அன்னமாக உடையது என்றும்,
ஜீவன் மரணம் அடையும்போது, ப்ராணன்கள் அவற்றை விடுவதில்லை என்றும் சொன்னார்.
ஜீவன் லயமடையப் போகுமிடம் எங்கே?” என்றுஆர்த்தபாஹர் கேட்க,
அவரைத் தனியே அழைத்துப்போய் புண்யம், பாபம் என்கிற கர்மாக்களுக்கு ஏற்பச் செல்கிறான் என்று பதில் சொன்னார்.
(ஸதஸ்ஸில் சொல்லாமல், தனிமையில் ஒருவருக்கு மட்டில் – கேள்வி கேட்டவருக்கு மட்டில்—- சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது)

புஜ்யு என்பவர், மத்ர தேசத்தில் அத்யயனம் செய்து கொண்டிருந்தபோது, ”பதஞ்சலர் என்பவர் வீட்டிற்குச்
சென்றோம். அவருடைய பெண்ணை, ஒரு கந்தர்வன் பிடித்திருந்தான் (ஒருவகைப் பிசாசம்) அதை நீ யார் என்று
கேட்டோம். நான் ஸுதன்வா–”ஆங்கீரஸ கோத்ரம்” என்று பதில் சொல்லிற்று. பிறகு லோகங்கள் விஷயமாகச் சில கேள்விகள்
கேட்டு “பாரிக்ஷிதர்கள்” எங்கே போயிருந்தன என்று அந்தக் கந்தர்வனைக் கேட்டோம். இதற்கு நீர் பதில் சொல்லும்” என்று
யாஜ்ஞவல்க்யரைக் கேட்டாh.

”பாரிக்ஷதர்கள், அச்வமேதயாகம் செய்யும் இடத்திற்குப் போனார்கள்” என்று பதில் சொன்னார்.
புஜ்யு , ”அச்வமேத யாகம் செய்பவர் எங்கே போகிறார்?” என்று கேட்டார்.
ஸுர்யனை, பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது. இதில் பெரும் பகுதி ஸமுத்ரம். இந்த அண்டகடாஹத்தில்— இதில் கத்தி
முனையளவு கொசுவின் இறகளவு கனமுள்ள சந்தில் பாரிக்ஷதர்கள் சென்றனர். இந்த்ரன் அவர்களைக் கருடனாக
இருந்து சுமந்து சென்று வாயுவிடம் சேர்த்தான். வாயு அவர்களை அச்வமேத யாகம் செய்பவர் இடத்தில் சேர்த்தது. இப்படி அந்தக்
கந்தர்வன் உமக்குச்சொல்லி வாயுவே வ்யஷ்டி, சமஷ்டி எல்லாம் எங்கும் சஞ்சரிப்பவன் என்று சொல்லியிருப்பான் என்றார்.

பிறகு உஷஸ்தர் , கஹேளர்-இருவரின் கேள்விகள்.
உஷஸ்தர் – எல்லாவற்றுக்குள்ளும், உள்ளே இருக்கும் ஆத்மா ப்ரத்யக்ஷமாக இருக்கிற ப்ரம்மம் என்கின்றனர். இது என்ன?
யாஜ்ஞ வல்க்யர் – உமக்கும் ஆத்மாவாக இருப்பது அது.
உஷஸ்தர் – இது மாடு, இது குதிரை என்று சொல்வதைப் போல இருக்கிறதே ?
யாஜ்ஞவல்க்யர் – ச்ரவணம், மனனம், த்யானம், தர்சனம் என்பவற்றைச் செய்யும் ஆத்மாவை நான் சொல்லவில்லை.இது
ஜீவாத்மா. நான் சொன்னது எல்லா ஜீவாத்மாக்களுக்கும் ஆத்மாவாக இருப்பது.
கஹோளர் – அது எந்த ஆத்மா ?
யாஜ்ஞவல்க்யர் – பசி, தாகம், சோகம், மூப்பு, மரணம் இவை எதுவுமே இல்லாத ஆத்மா. இதனை உணர்ந்தவர்கள்
(ப்ராஹ்மணர்கள்) புத்ரன், பணம், உலகம் என்கிற மூன்றிலும் பற்று இல்லாமல், பிக்ஷை எடுத்து வாழ்கின்றனர். ப்ராஹ்மணன்,
உபதேசம் மூலம் பாண்டித்யம் பெற்று, அஹங்காரம் அற்று இருக்க வேண்டும். எப்போதும் அந்த ஆத்மாவையே சிந்திக்க வேண்டும்.

கார்கி என்கிற ஸ்த்ரீ கேள்வி கேட்டாள்
”இந்த பூமிக்கெல்லாம் ஆதாரமானது ஜலம். அதற்கு எது ஆதாரம்” என்று கேட்டு மேன்மேலும் கேள்விகளை கேட்டுக் கொண்டே வந்தாள்.
யாஜ்ஞயவல்க்யர் மேன்மேலும் பதில்களைச் சொல்லி லோகங்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டே வந்தார்.

கடைசியாக ”ப்ரம்ம லோகங்களுக்கு எது ஆதாரம்?” எனக் கேட்டாள்.
கேட்கத் தகாததை, உள்ளபடி உணராமல் கேட்டால் தலை விண்டு விழுந்து விடும் என்று யாஜ்ஞவல்க்யர் சொல்ல,
கார்கி அத்துடன் கேள்வி கேட்பதை நிறுத்திக் கொண்டாள்.

உத்தாலகர் சொன்னதாவது:
மத்ர தேசத்தில் பதஞ்சலரின் வீட்டில் அத்யயனம் செய்து கொண்டிருந்த போது அவருடைய மனைவியை ஒரு கந்தர்வன்
பிடித்தான். அவனை யார் என்று கேட்டோம். நான் ஆதர்வணன், கபந்தன் என்றான். அந்த கந்தர்வன் என்கிற பிசாசம் எங்களைக் கேட்டான்.

”எல்லா உலகங்களையும் எல்லா ஜந்துக்களையும் தரித்திருக்கும் ஸுத்ரம், அவற்றின் உள்ளே இருந்து நியமிக்கும்
அந்தர்யாமியை அறிவீர்களா?
இதை அறிந்தவன்தான் லோகம்,வேதம், ப்ரம்மம் இவற்றை அறிந்தவனாவான் என்று சொன்னான்.
அது என்ன?”
யாஷ்ஞவல்க்யர் – நான் அறிவேன். அந்த ஸுத்ரமானது ப்ராணன். எல்லா உலகங்களையும் ஜந்துக்களையும் உள்ளே
இருந்து நியமிக்கும் அந்தர்யாமிதான் ப்ரம்மம். சாதாரணமாக உத்தாலகர் கேள்விகளுக்குத் த்ருப்தியான பதில் வந்தால்,
ஸதஸ்ஸில் கேள்வி கேட்பதை அத்துடன் நிறுத்திக் கொள்வார்கள். (இவரை வெல்ல யாருமில்லை என்று பொருள்)

ஆனால், கார்கி மறுபடியும் கேள்வி கேட்டாள்.
கார்கி – வானுலகுக்கு கீழும், மேலும் (எல்லா இடங்களிலும்) எல்லா காலங்களிலும் எல்லா வஸ்துக்களும் எதை ஆதாரமாக
உடையதோ, எது காரணமோ, அது என்ன?
யாஜ்ஞவல்க்யர் – ஆகாசம் (மூலப்ரக்ருதி)
கார்கி – இதற்கும் (ஆகாசத்திற்கும்) ஆதாரம் எது ?
யாஷ்ஞவல்க்யர் – அக்ஷரம். சிறிதுமல்ல, பெரிதுமல்ல, நீண்டதுமல்ல, குறுகியதுமல்ல எந்த நிறமுமல்ல. எல்லா
இடத்திலுமிருப்பது. இதன் ஸங்கல்பத்தினாலே ஸுர்யன், சந்த்ரன்,ஸ்வர்க்கம், நக்ஷத்ரங்கள், பூமி யாவும் தரிக்கப்பட்டு இருக்கின்றன.
இதற்கு மேம்பட்ட எதுவுமில்லை என்று பலவாறாக எடுத்துரைத்தார்.

கார்கி என்பவள் ”இவரை ஜெயிக்க இயலாது எல்லோரும் இவருக்கு நமஸ்காரம் செய்யுங்கள்” என்றார்.

பிறகும் விதக்தர் என்பவர் கேள்விகள் கேட்டார்.
யாஜ்ஞவல்க்யர் ”இவ்வளவு மஹரிஷிகள் இந்த ஸதஸ்ஸில் கேள்விகள் கேட்டு என்னுடைய பதில்களால் திருப்தி
அடைந்தார்கள். நீர் வீண் ஆடம்பரத்திற்காக கேள்விகள் கேட்கிறீர். நான் கேட்கும் கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லும்” என்று பலவாறாகக் கேட்க,
எல்லாவற்றிற்கும் விதக்தர் பதில் சொல்லிக்கொண்டே வந்தார்.
இந்தச் சமயத்தில்,
யாஜ்ஞவல்க்யர் முன்பு எட்டு புருஷர்களைப் பற்றிச் சொன்னேன் -அவர்களுக்கும் அவர்களின் ஆதாரம் முதலியவற்றிற்கும்
மேற்பட்டு அவற்றையெல்லாம் நியமித்து அடக்கும் ஓளபநிஷத புருஷன்–உபநிஷத்துக்களிலே சொல்லப்படும் புருஷன் யார்?
நீர் அது யார் என்று சொல்லவில்லையெனில், உமது தலை துண்டாகிக் கீழே விழும்” என்றார்.
விதக்தர் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தவுடன் தலை துண்டாகிக் கீழே விழுந்தது.

அவருடைய சிஷ்யர்கள், அவருடைய அஸ்திகளை மூட்டையாகக் கட்டி, அவர் வீட்டில் சேர்க்க, எடுத்துச் செல்லும்
போது, வழியில், திருடர்கள், இந்த மூட்டையில் பணம் இருக்கிறது என்று எண்ணி அதைப் பிடுங்கிக் கொண்டு ஓடினர்
(ப்ரம்ம வித்திடம் அபசாரப்பட்டதால் இப்படிநேர்ந்தது என்பதை உணர வேண்டும்).

யாஜ்ஞவல்க்யர், ஸதஸ்ஸில் உள்ளவர்களைப் பார்த்து, இன்னும் யாராவது கேள்விகள் கேட்கலாம் என்றார்.
நடுநடுங்கிய அவர்கள் ஒன்றும் பேசவில்லை. ஸதஸ் கலைந்தது.

10(2) ஜநகர் – யாஜ்ஞவல்க்யர் – ஸம்வாதம்

பிறிதொரு சமயம் யாஜ்ஞவல்க்யர் ஜனக ராஜன் சபைக்கு மறுபடியும் சென்றார். அரசன் வணங்கி, வரவேற்று, பசுக்கள்
வேண்டுமா அல்லது வேத அர்த்தங்களுக்கா என்றார்.
யாஜ்ஞவல்க்யர் இப்போது அரசனுக்கு உபதேசித்தார்.

வலது கண்ணிலே ”இந்த்தன்” என்கிற புருஷன் இருக்கிறான்
(இந்திரன் என்கிறதை மறைமுகமாக இப்படிச் சொல்லும் பழக்கம் உண்டு) இடது கண்ணில் அவனுடைய பத்னி இருக்கிறாள்.
இவ்விருவருக்கும் ஹ்ருதயமே வாசஸ்தலம். அங்குள்ள மாம்ஸமே அன்னம்.
ஹ்ருதயத்தில் பின்னலைப் போல உள்ள நாடிகள் வஸ்த்ரம்.
ஹ்ருதயத்தினுள் பல ஆயிரமாகப் பிரிந்து, கேசத்தைவிட மெல்லிய நாடிகள் உள்ளன. அவற்றிற்கு ”ஹிதை” என்று பெயர்.
அவற்றின் வழியாக, ஜீவன் வெளியே கிளம்புகிறான்.

ஹ்ருதயத்திலிருந்து உச்சந்தலை உள்ளவரை உள்ள மார்க்கமானது (சுஷும்நா நாடி) ப்ராண, இந்த்ரியங்களில்
சிக்குண்ட ஜீவாத்மாவைக் காட்டிலும், பற்றற்றவனாக அழிவற்றவனாக ஹ்ருதயத்திலுள்ள பரமாத்மா வேறுபட்டவன்.

இன்னொரு சமயம், இதே போன்ற ஒரு ஸம்வாதம் நடந்தது.
அரசன் கேட்க யாஜ்ஞவல்க்யர் பதில் சொல்ல மிக உன்னதமான கருத்துக்கள் கிடைத்தன.

அரசன் – புருஷ னுக்கு எது ஜ்யோதிஸ் ?
யாஞவல்க்யர்- ஸுர்யன்தான் ஜ்யோதிஸ்
அரசன் – ஸுர்யன் அஸ்தமித்தால் ?
யாஜ்ஞவல்க்யர் – அப்போது சந்த்ரன்
அரசன் – இருவரும் இல்லாதபோது ?
யாஜ்ஞவல்க்யர் – அப்போது அக்னி (விளக்கு போன்றவை)
அரசன் – அதுவுமில்லாதபோது ?
யாஜ்ஞவல்க்யர் – வாக்கு, மையிருட்டிலும் பேசினால் பேச்சைக் கொண்டு அவனை அறியலாம், அணுகலாம்
அரசன் – வாக்கும் இல்லாத போது ?
யாஜ்ஞவல்க்யர் – ஆத்மாவே ஜ்யோதிஸ்
அரசன் – ஆத்மாவாவது எது ?
யாஜ்ஞவல்க்யர் – ஹ்ருதயத்திலே ப்ராண வாயு முதலியன இருக்க அறிவுக்கு ஆதாரமாக இருப்பது ஆத்மா. ஸ்வப்ன லோகத்தை
ஆத்மா சேரும்போது, துக்க ரூபமான இவ்வுலகைக் கடக்கிறது.
உடலோடு சேர்ந்திருக்கும்வரை பாபம் செய்கிறது.
உடலிலிருந்து விடுபட்டு விட்டால் பாபம் இல்லை. ஸ்வப்ன காலத்தில், அவற்றில் ஏற்பட்டதைக் கொண்டு தானே அவற்றை அறிகிறான்.
திரும்பவும் இவ்வுலகத்திற்கு வருகிறான். ஸ்வப்னத்தில் துக்கம், மகிழ்ச்சி, சோகம், இன்பம் இப்படி அனுபவிக்கிறான். எல்லாம்
ஸ்வப்னம் என்று பிற்பாடுதான் தெரிகிறது. ஸ்வப்ன காலத்திலே ஜீவன் தனக்குத் தானே ஜ்யோதிஸ்ஸாக ஆகிறான்.
உறக்கத்தில்(ஸுஷுப்தி) பரமாத்மாவுடன் ஐக்கியமாகிறான். அப்போது உற்றார், உறவினர், புண்யம், பாபம் , துக்கம் என்று எதனோடும்
இணைப்பு இருப்பதில்லை
தைத்திரியோபநிஷத்தில் சொல்லியபடி,

மனுஷ்ய ஆநந்தம், பித்ருக்களின் ஆநந்தம், தேவர்களின் ஆநந்தம், சதுர்முக (ப்ரம்மா) ஆநந்தம் என்று மேன்மேலும் உள்ள
ஆநந்தத்தை அடைகிறான். இப்போது எந்த இந்த்ரியமும் வேலை செய்வதில்லை. மனஸ் ஓய்வில் இருக்கிறது.

10(3) – விழிப்பு, ஸ்வப்னம், உறக்கம், இறப்பு

விழிப்பு, ஸ்வப்னம், உறக்கம் என்ற நிலைகளுக்கு மேற்பட்ட நிலை இறப்பு. அப்போது பரமாத்மாவினால் வேறு இடம் கொண்டு போகப்படுகிறான்.
புண்ய, பாபங்களுக்கு ஏற்றவாறுவேறு சரீரம் எடுத்து அனுபவிக்கிறான்.
ஜ்ஞானம், கர்மாக்கள்,பூர்வ வாஸனை, இந்த மூன்றும இந்த ஜீவனைத் தொடர்கின்றன.
ஜ்ஞானமும், கருமங்களும் ஜீவனுக்கு அடுத்த பிறவியில் அநுபவிக்க வேண்டிய விஷயங்களைச் சேர்த்து வைக்கின்றன.
இந்த விஷயங்களைக் கையாள பூர்வ வாசனை உதவுகிறது.
ப்ரஹ்மஞானம் உள்ளவன், ப்ரம்மாநுபவம் பெறுகிறான்.
புனர் ஜன்மம் இன்றி, தேவயானம் வழியாக ஸுர்ய மண்டலம் புகுந்து மோக்ஷம் பெறுகிறான்.
பரமாத்மாவே,ப்ராணேந்த்ரியங்களுக்குச் சக்தி அளிப்பவன். அவன் எங்குமிருப்பவன். மனஸ்ஸால் தான் அவனைப் பார்க்க இயலும்.
அந்தர்யாமியாய் ஹ்ருதயத்தில் இருக்கிறான். இவனை அறிய, வேத அத்யயனம், யஜ்ஞம், தானம், தபஸ் முதலியன செய்கின்றனர்.
யோகநிஷ்டையில் இழிந்து, இவனைக் காண முயற்சிக்கின்றனர். இவனை அடைய ஸன்யாஸம் மேற்கொள்கின்றனர். இந்த்ரியங்களை அடக்கி, தீயதைச்
செய்யாமல், காம்ய கர்மங்களைச் செய்யாமல், சீதோஷ்ண சுக துக்கங்களைப் பொறுத்துக்கொண்டு, மனஸ்ஸை நன்கு
நிலைநிறுத்தி தனக்குள்ளே இருக்கும் இந்தப் பரமாத்மாவைப் பார்க்கவேண்டும்.
இதுவே ”பரப்ரம்மம்”. இந்த பரப்ரம்மம் , இக பர சுகங்களையும் எல்லாவற்றையும் அளிக்கும்.

பூர்ணத்தில் இருந்து பூர்ணம் உயர்ந்தது. பூர்ணத்தைச் சார்ந்த பூர்ணத்தை அழித்து , பூர்ணம் தான் முடிவில் இருக்கிறது.
வேதத்தில் சொல்லியபடி, எல்லா உலகமும் உயிர்களும் ப்ரஹ்மாவால் சிருஷ்டிக்கப் படுகின்றன. ஆதலால், வேதம்
எங்கும் நிறைந்திருக்கிறது. இதற்குக் காரணமான வேதம்,
கார்யமான ப்ரபஞ்சத்தைக் காட்டிலும் உயர்ந்தது. கார்யமாய் காரணம் நிறைந்து உள்ளதற்கும், மேலான வ்யாஹ்ருதி ( பூ:, புவ:,ஸு வ:)க்கு, லயஸ்தானமாய் எல்லாவற்றிற்குமே காரணமாக இருப்பது ப்ரணவம். இந்த ப்ரணவத்தை ப்ரம்மமாக உபாஸிக்க வேண்டும்
(பூர்ணம் என்கிற மந்திரத்திற்குப் ப்ரம்மம் என்றும் பொருள் உண்டு).

10(4) ப்ரஜைகள் மூன்று வகை

தேவர்கள் (தேவதைகள்), மனிதர்கள், அசுரர்கள். இவர்கள் தங்களுடைய தகப்பனாரை அண்டி, உபதேசிக்குமாறு வேண்டினர்.
தேவர்கள் வேண்டிய போது “த” என்று உபதேசித்து தெரிந்து கொண்டீர்களா என்று தகப்பனார் கேட்டார்.
”தமம்”அதாவது ”இந்த்ரிய நிக்ரஹம்” வேண்டும் என்று புரிந்து கொண்டோம் என்றனர்.

மனிதர்களிடம் ”த” என்பதைச் சொன்னபோது ”தானம்” செய்யுங்கள் என்பதை உணர்ந்ததாக, அவர்கள் சொன்னார்கள்.

அசுரர்களிடம், அந்த எழுத்தைச் சொன்ன போது, தயை புரியுங்கள் என்று உணர்ந்ததாகச் சொன்னார்கள்.

ப்ரம்மத்திலிருந்து பிறந்த ”ப்ரஜாபதியின்” புதல்வர்களான தேவர்கள் ஸத்யத்தை உபாஸிக்கின்றனர். பரப்ரம்மமே ஸத்யம்.
இது (பரப்ரம்மம்) ஆதித்ய மண்டலத்திலும் உள்ளது.
கண்ணிலும் உள்ளது. இதற்கு பூ: , புவ:, ஸுவ: என்கிற வ்யாஹ்ருதிகள்.

சாந்தோக்ய உபநிஷத்தில் சொல்லப்பட்ட சாண்டில்ய வித்யை, மின்னலை ப்ரம்மமாக உபாஸிப்பது சொல்லப் படுகிறது
வாக்கை, ”பசு”வாக உபாஸிப்பது, மோக்ஷம் செல்பவன் தேவயான மார்க்கத்தில், ஆத்யாத்மிக, ஆதிபௌதிக, ஆதிதைவிக
தாபங்களுக்கு இடமில்லாத ப்ரம்ம லோகம் சென்று சந்தோஷிப்பது சொல்லப்படுகிறது .
அன்னத்தை ”வி” என்றும், ப்ராணனை ”ரம்” என்றும் சேர்த்து ப்ரம்மமாக உபாஸிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
ப்ராணனை, ருக்காகவும், யஜூஸ்ஸாகவும், ஸாமமாகவும் உபாஸிப்பது சொல்லப்படுகிறது. வாக் எனப்படும் வேதத்தை
பசுவாக உபாஸிக்க வேண்டும். பசுவுக்கு நான்கு மடிகள்.
ஸ்வாஹா , வஷட், ஹந்த, ஸ்வதா.
தேவர்களுக்குக்கொடுக்கப்படும் ஹவிர் பாகங்கள் ஸ்வாஹா அல்லது வஷட்.
மனுஷ்ய யஜ்ஞத்தில், ஹந்த என்று சொல்லி ஹவிஸ்ஸும்,
பித்ருக்களை உத்தேசித்துச் செய்யும்போது ஸ்வதா என்றும் சொல்லப்படுகிறது.

பசு – வாக்கு.
காளை – ப்ராணன்.
கன்று – மனஸ்.
பால்-பகவானை துதிக்கும் ஸ்தோத்ரங்கள்.

10(5) – காயத்ரீ உபாஸனம்

காயத்ரீயின் முதல் பாதத்தை மூன்று உலகங்களாக உபாஸிப்பவன் மூன்று உலகங்களில் எதையும் அடைவான்.
இரண்டாம் பாதத்தை மூன்று வேதங்களாக உபாஸிப்பவன்,
வேதத்தில் சொல்லப்பட்ட பலன்களை அடைவான்.
மூன்றாம் பாதத்தை, ப்ராண அபான, வ்யானங்களாக உபாஸித்தால், எல்லாப் ப்ராணிகளையும் வசமாக்கிக் கொள்ளலாம்.
நான்காம் பாதத்திற்கு “தர்சபதம்” என்று பெயர். இதைப் ப்ரம்மமாக உபாஸித்தால், புகழ், பொருள் கிடைக்கும்.
ப்ராணன்களுக்கு,“கயம்” என்று பெயர்.
கயங்களைக் காப்பதாலே காயத்ரீ .
காயத்ரீ உபாஸனம் செய்பவன் இஷ்டப்பட்ட பலனை அடைவான்.

ப்ரம்ம உபாஸனம் செய்பவனுக்கு நான்கு மந்த்ரங்கள் –
ப்ரார்த்தனை செய்வதற்காக இங்கு சொல்லப்படுகிறது.
(இது,ஈசாவாஸ்ய உபநிஷத்திலும் உள்ளது).

10(6) மந்த்த கர்மா

ப்ராண வித்யை, பஞ்சாக்னி வித்யை, மந்த்த கர்ம – –மூன்றும் சொல்லப்படுகின்றன (சாந்தோக்ய உபநிஷத்தைப் பார்க்க) .
மந்த்த கர்மாவில் நெய்யினால் ஹோமங்களைச் செய்த பிறகு, ”மந்த்த”என்கிற வஸ்துவை, ப்ராணனைப் புகழும் மந்த்ரத்தைச் சொல்லிக்
கொண்டே கையில் வைத்துக் கொண்டு, காயத்ரீயினாலும், இன்னும் சில மந்த்ரங்களாலும், விதிப்படி ஆசமனம் செய்து,
அக்னிக்கு மேற்கே கிழக்கில் தலை வைத்து இரவில் படுத்திருந்து,
உதயத்தில் ஸுர்யனுக்கு உபஸ்தான மந்த்ரங்களைச் சொல்ல வேண்டும்.
இப்படியான மந்த்த த்ரவ்யத்தாலே உலர்ந்த கட்டையை நனைத்தால் அது துளிர் விட்டு, கப்பும் களையுமாக வளரும்.
”மந்த்த த்ரவ்யம்” என்பது, நெல், யவம், எள், உளுந்து, கோதுமை, ப்ரயங்கு, மஸுரம் கல்வம், கலகுலம்,இன்னொன்று
பெயர் தெரியவில்லை (பத்து தானியங்கள்)
இவற்றை எல்லாம் அரைத்து தயிர், தேன், நெய் இவற்றில் ஊற வைக்க வேண்டும்.
ஹோமங்கள் நெய்யினாலே செய்யப்பட வேண்டும்.
பிள்ளை பெறுகிறவன், இந்த பிள்ளை ,தனக்குச் சிறந்த பலன்களை மேலுலகில் அடையுமாறு செய்ய,இவன் எப்படி நடந்து கொள்ளவேண்டும்,
என்ன கார்யங்களைச்செய்யவேண்டும் என்று பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன.

தீர்க்கமான ஆயுளைப் பிள்ளை பெறும்படியாகவும்,நன்கு படிக்கவும்,
பிரஸித்தியாக வேண்டுமென்றாலும் செய்ய வேண்டிய முறைகள்,இதில் சொல்லப்படுகின்றன.

”வம்ஸ ப்ராம்மணம்” என்கிற பரம்பரை சொல்லப்படுகிறது.
பரப்ரம்மம், ப்ரஜாபதி என்கிற பரம்பரை ஒன்று.
ஆதித்யனிடமிருந்து வரும் பரம்பரை மற்றொன்று.
இரண்டும் ஒன்று சேர்ந்ததும் சொல்லப்படுகிறது.
யாஜ்ஞ்யவல்க்யர், ஸுர்யனிடம் ஸூக்ல யஜூஸ் வேதத்தைப் பெற்றது சொல்லப்படுகிறது .

இதுவே ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் சாரம்.

————

11 – ச்வேதாச்வதரோபநிஷத்

ஆறு அத்யாயங்கள். சித், அசித், ஈச்வரன் என்று தத்துவங்களை மூன்றாக வகுத்ததற்கு இது ஆதாரம்.
பரமாத்மாவின் ஸ்வரூபம்,சக்ர ரூபமாகச் சொல்லப்படுகிறது.
பிறப்பது, வாழ்வது, இறப்பது முதலிய எல்லாவற்றிற்கும் காரணமானது எது?
காலமா?
இயற்கையா?
முன்வினையா?
பஞ்சபூதங்களா?
மூலப்ரக்ருதியா?
ஜீவனா?—இல்லை,
இவை எல்லாம் சேர்ந்ததா?
சேர்ந்ததாக இருந்தால், சேர்த்தது யார்?
என்று விவாதித்து “பரமாத்மா” என்கிற முடிவுக்கு வந்தது.

ஸம்ஸாரத்திலே உழல்கின்ற ஜீவர்.
எல்லாம் அறிந்த ஈச்வரன்.
போகத்தை அளிக்கும் அசித் (அசேதநம்).
ஈச்வரன், குணங்கள் நிறைந்த குறையில்லாத ஜோதி.
இவன், சேதனன், அசேதனங்களுக்கு அந்தர்யாமியாக இருக்கிறான்.
இதுதான் ப்ரம்மம்.-இதற்கு மேல் ஒன்றுமில்லை.
இது அரணிக்கட்டையில் உள்ள அக்னியைப் போன்றது.-எளிதில் அறிய இயலாது.
ஜீவாத்மா கீழ் அரணிக் கட்டை.
ப்ரணவம் மேல் அரணி.
கடைதல் என்பது த்யானம் செய்தல்.
இப்படி ஜீவாத்மாவுக்குள் பரமாத்மா மறைந்திருப்பதைத் த்யானம் செய்து,அறிந்து உபாஸிக்க வேண்டும்.
த்யானம் செய்பவருக்கு,கர்மானுஷ்டானம் முக்கியம்.
விஷ்வக்ஸேனர், ஆசார்யன் இவர்களின் அநுக்ரஹத்தைப் பெற வேண்டும்
பகவானை ஸ்தோத்தரித்து, அவன் அருளாலே, அவனிடம் மனதைப் பதிய வைக்கவேண்டும்.
தலை, கழுத்து, மார்பு இவற்றை நன்கு நிமிர்த்தி, சுத்தமான இடத்தில் தகுந்த ஆஸனத்தில் அமர்ந்து புலன்களை அடக்கி ,
ப்ராணாயாமங்களைச் செய்து, மனஸ்ஸை பரப்ரம்மத்திடம் நிறுத்த வேண்டும்.

அக்ஷரங்கள் யாவும் அகரத்திலிருந்து உண்டாகின்றன.
அகரத்தின் பொருளான பரமாத்மாவிடமிருந்து எல்லா உலகங்களும் உண்டாகின்றன.
அவன் அனைத்துக்கும் அந்தராத்மா. அவன் மாயன். மாயை ”மூலப்ரக்ருதி”.
அவனுடைய அம்சங்களே ஜீவாத்மாக்கள். இவனைச் சரணம் அடைய வேண்டும்.
ஜ்ஞானம், கர்மம் இரண்டாலும் அவனை ஆராதிக்க வேண்டும்.
இந்த ஜீவாத்மா ஆணல்ல, பெண்ணல்ல,அலியுமல்ல.
எந்த உடலை, கர்ம வினையால் பெறுகிறதோ, அதன் அடிப்படையில் ஜென்மாக்களில் இந்த ஜீவன்
அழைக்கப்படும்.
இவற்றையெல்லாம் தெளிந்து, பரமாத்மாவை ஆராதிப்பவர் அவன் திருவடியை அடைவர்.

பரமாத்மா ஜகத்காரணன்.
பந்த பாசங்களிடமிருந்து விடுபட்டு, அவனையே கதி என்று நினைப்பவருக்கு மோக்ஷம் உண்டு.
பரமாத்மா – ஆறு விதமான – எட்டுகளை உடையவன்.
(1) அஷ்டமாசித்தி
(2) எட்டு திக்குகள்
(3) எட்டு திக்பாலகர்கள்
(4) எட்டு ப்ரக்ருதிகள் (பூமி, ஜலம், ஆகாசம், நெருப்பு, வாயு,மனஸ், புத்தி, அஹங்காரம்)
(5) எட்டு தேவதைகள் (ப்ரஹ்மா, ப்ரஜாபதி போன்றவர்கள்)
(6) எட்டு வஸுக்கள்
(7) எட்டு திருக்கல்யாண குணங்கள்

(இந்த ஏழில் ஏதேனும் ஆறு) மூன்று மார்க்கங்களை உடையவன்.
(1) மோக்ஷத்திற்குச் செல்லும் தேவயாநம்
(2) கர்மலோகத்திற்குச் செல்லும் பித்ருயாநம்
(3) க்ஷூத்ர ஜந்துக்களுக்கான மார்க்கம்

ச்வேதாச்வதரர், தன் தபோபலத்தாலும், தெய்வ அநுக்ரஹத்தாலும், ப்ரம்மத்தை அறிந்து பலருக்கு இப்படி உபதேசித்தார்.

—————-

12 -அதர்வசிர உபநிஷத்து

தேவதைகள், ஸ்வர்க்கத்திற்குச் சென்று, ருத்ரனைப் பார்த்து, ”நீர் யார்?” என்று கேட்க,
அவர், ”நான் ஒருவனே முதலில் இருந்தேன்: இப்போதும் இருக்கிறேன்.
இனிமேலும் இருக்கப் போகிறேன் என்னைத் தவிர வேறொன்றும் இல்லை” என்றார்.
தேவதைகள், பகவான் சொல்ல வேண்டியதை இவர் சொல்கிறாரே என்று நினைத்தனர்.

ருத்ரன், ”தேவதைகளே! நீங்கள் நினைத்த அந்த பகவான் சூக்ஷ்மத்திற்கும் சூக்ஷ்மமானவன். எங்கும் பரந்து உள் புகுந்து
இருப்பவன். எனக்கும் அந்தர்யாமி. இவ்வாறே எனக்குள் புகுந்திருப்பதால், நான் என்றேன்” என்று சொன்னார்.
ருத்ரன், பகவானின் பக்தன். தேவதைகள் இவ்வாறு ருத்ரனைத் துதித்தனர்.
ப்ரணவம், அதற்கு விளக்கம்-இது ஒருஉபாஸனா மார்க்கம் என்று சொல்லப்பட்டது.
இந்த்ரன், நான்முகன், ஆதித்யன், பசுபதி, யாவருக்கும் பகவான் அந்தர்யாமி . இது ஒருவகை உபாஸனம்.

————-

13 – அதர்வ சிகோபநிஷத்து

பைப்பலாதர் மற்றும் பல மஹரிஷிகள், ”அதர்வா” என்பவரிடம் சென்று ”த்யானத்திற்கு மந்த்ரம் எது?
த்யானமானது எது?
த்யானம் செய்பவன் யார்?
த்யானம் செய்யப்படும் தத்துவம் என்ன?” என்று கேட்டனர்.

அதர்வா பதில் சொன்னார்.
”த்யானத்திற்கு மந்த்ரம் ப்ரணவம். அது நான்கு பாதம் உள்ளதாய் ப்ரம்மமாகும். அகார,உகார, மகாரங்கள்
அவற்றின் மேல் அரை மாத்திரை –
இதுவே வேதங்கள். இதுவே லோகங்கள் என்றும் மற்றும் பலவிதமாகவும் , இது புகழப்படுகிறது .
இந்தப் ப்ரணவம் ஹ்ரஸ்வம், தீர்க்கம், ப்லுதம், எனவும் பிரிக்கப்படும்.
இந்த நான்கு மாத்திரைகளை மனிதனுக்கு உள்ள விழிப்பு, ஸ்வப்னம், உறக்கம், மோக்ஷம் என்கிற நான்கு தசைகளாகச் சொல்வர்.
இந்தப் ப்ரணவமே த்யானத்திற்குச் சாதனம்.
த்யானத்தை விஷ்ணுவாகப் பாவிக்க வேண்டும்.
த்யானத்திற்கு அதிஷ்டான தேவதை விஷ்ணு . த்யானம் செய்பவனை ருத்ரனாகப் பாவிக்க வேண்டும்.
ஸர்வ ஐச்வர்யம் உள்ள எல்லாவற்றிற்கும் காரணனான முன்பு அரை மாத்திரையில் தேவதையாகச் சொல்லப்பட்ட
பரம புருஷனே எல்லோருக்கும் சுகம் அளிப்பவன். அவனே உபாஸிக்கப்படவேண்டியவன்.

ஓம்-உபாஸனா மந்த்ரம். இதில் பரமாத்மா என்கிற எண்ணம் வேண்டும்.
ஓம் – இதற்கு நான்கு பாதங்கள்- அகாரம், உகாரம், மகாரம், நாதம்.

அகாரம் – பாஸ்வதீ என்றும் பெயர்.
ப்ருத்வி லோகம்;சிவப்பு, மஞ்சள் நிறம்;
ருக் வேதம்; ப்ரஹ்மா
தேவதை; அஷ்டவஸுக்கள்;
காயத்ரீ சந்தஸ்;
கார்ஹபத் அக்னி; என்று த்யானித்தல்.அவச்யம்

உகாரம் – வித்யுமதீ என்றும் பெயர்.
அந்தரிக்ஷ லோகம்;
யஜூர்வேதம்;
கருப்பு நிறம்;
விஷ்ணு தேவதை;
ஏகாதச ருத்ரர்கள்;
த்ருஷ்டுப்சந்தஸ்;
தக்ஷிணாக்னீ;
என்று த்யானிக்க வேண்டும்.

மகாரம் – ”சுபாசுபா” என்றும் பெயர்.
ஸாம வேதம்;
வெளுப்பு நிறம்;
ருத்ரன் தேவதை;
பன்னிரண்டு ஆதித்யர்கள்;

ஜகதீசந்தஸ்;
ஆஹவநீயாக்னி; என்று த்யானிக்க வேண்டும்.

நாதம் – ”வித்யுமதி” என்றும் பெயர்.
அதர்வ வேதம். அர்த்த மாத்திரை;
ஸோம லோகம்;
எல்லா நிறங்களும்;
மருத்தேவதைகள்;
விராட் சந்தஸ்;
ஏகர்ஷி என்கிற அக்னி; என்று த்யானிக்க வேண்டும்.

————

14 – கௌஷீதகி உபநிஷத்து

இதில் பர்யங்க வித்யை, ப்ரதர்தந வித்யை, பாலகி வித்யை சொல்லப்படுகிறது.
இவை யாவும் வித்யைகளில் சொல்லப்பட்டுள்ளது.

—————

15 – மந்த்ரிகோபநிஷத்து

ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களால் மூல ப்ரக்ருதியானது, பரப்ரம்ம ஸ்வரூபத்தை மறைக்கிறது.
ரஜஸ், தமோ, குணம் ஒழிந்து ஸத்வ குணம் மேலோங்கியவர்களின் ஹ்ருதயத்திலே அந்தர்யாமியாக ப்ரம்மத்தை தர்சிப்பார்கள்.
உலகில் ப்ரம்மத்தைச் சிலர் 26வது தத்துவமாயும், 27வதாகவும், 24-ஆகவும், இன்னும் எவ்வெவ்வாறோ
பார்க்கிறார்கள். எல்லாம் அவனிடமிருந்து பிறந்து அவனிடமே மறைகின்றன. இந்த ப்ரம்மத்தை அறிந்து உபாஸிப்பவர் அவனிடம்
சேர்ந்து விளங்குவர்.

————–

16 – ஸூபாலோபநிஷத்து

16 அத்யாயங்கள் உடையது. நாராயணனே பரதத்துவம் என்பதைச் சொல்கிறது.
”கோராங்கர்” என்பவர் ரைக்வருக்குச் சொன்னது இது.

சேதனங்கள், அசேதனங்கள், சேதனா சேதனங்கள் இவைகளுக்கு கார்யமாக இல்லாத ஒன்றிலிருந்து ”தமஸ்” தோன்றியது.
தமஸ்ஸிலிருந்து பஞ்ச பூதங்களுக்குக் காரணமான தாமஸ அஹங்காரம்,
இதிலிருந்து ஆகாசம்,
இதிலிருந்து வாயு,
வாயுவிலிருந்து அக்னி,
இதிலிருந்து ஜலம்,
ஜலத்திலிருந்து மண்
இப்படியாகத் தோன்றி இதெல்லாம் ப்ரம்மாண்டமாக ஆயிற்று.
கொஞ்சகாலத்திற்குப் பிறகு, இந்த ப்ரம்மாண்டம் பிளக்கப்பட்டு, மேல் பாகம் – ஸ்வர்க்கம், கீழ் பாகம் பூமியாகவும் ஆயிற்று.
நடுவில் ப்ரம்மாவுக்கு அந்தர்யாமியான மஹா புருஷன்.
அவன் ப்ராணிகளுக்கு ம்ருத்யுவைப் படைத்தான். அவன்தான் ருத்ரன். (கண்ட பரசு என்றும்பெயர்).
அந்த ம்ருத்யு ப்ரம்மாவிடத்தில் புகுந்து மறைந்தான்.

ப்ரஹ்மா, மானஸ புத்ரர்களாக ஏழு பேரைப் படைத்தான்.
அவர்கள் புத்ரர்களைப் படைத்தனர் (ப்ரஜாபதி எனப்படுபவர்கள்).
முகத்திலிருந்து ப்ராம்மணனும், கைகளிலிருந்து க்ஷத்திரியர்களும், தொடையிலிருந்து வைச்யர்களும்,
கால்களிலிருந்து ஸுத்ரர்களும் உண்டானார்கள்.
மனஸ்ஸிலிருந்து சந்த்ரனும், கண்ணிலிருந்து
ஸுர்யனும் காதிலிருந்து காற்றும், ப்ராண வாயுவும்,
ஹ்ருதயத்திலிருந்து மற்ற எல்லாமும் உண்டாயிற்று.
நெற்றியிலிருந்து கோபத்தினால் ருத்ரன் உண்டானார்.
எல்லா உலகங்களையும் தனதாக்கிக் கொண்ட ஹிரண்ய கர்ப்பன்,
ஸ்த்ரீ , புருஷன் இரு உருவமாகப்பிரிந்து, தேவ – ரிஷி – யக்ஷ –
ராக்ஷஸ – கந்தர்வ ஜாதிகளையும், மிருகங்களையும் மற்றப் பிராணிகளையும் ச்ருஷ்டித்தான்.

ப்ரளய காலத்தில் அவனே அக்னியாகி எல்லாவற்றையும் எரிக்கிறான். அப்போது பூமி, ஜலத்திலும், ஜலம், நெருப்பிலும்,
நெருப்பு, காற்றிலும், காற்று, ஆகாசத்திலும் லயிக்கின்றன.

ஆகாசம், இந்த்ரியங்களோடும், இந்த்ரியங்கள், தன்- மாத்ரைகளோடும், தன்மாத்ரைகள், அஹங்காரத்திலும்,
அஹங்காரம், மஹத்திலும், மஹத், அவ்யக்தத்திலும், அவ்யக்தம், அக்ஷரத்திலும், அக்ஷரம், தமஸ்ஸிலும் லயிக்கின்றன.
தமஸ் பகவானுடன் ஒன்றி மறைகிறது.

இப்படிப்பட்ட பகவானை அடைய பலனில் பற்றில்லாமல், ஸத்யம், கொடை, தவம், ப்ரம்மச்சர்யம், வைராக்யம், யஜ்ஞம்,
என்கிற ஆறு அங்கங்களைக் கொண்டு உபாஸிக்க வேண்டும்.
ஹ்ருதயத்தின் நடுவே, மாம்ஸ பிண்டம் ஒன்று உள்ளது. (புரிதத்து) . அதில் தாமரைப் பூ போல ஓர் அவயவம் உள்ளது.
அங்கே நாடிகளின் வாயாக பத்து த்வாரங்கள் உள்ளன.அவற்றில் ப்ராண, அபான முதலிய வாயுக்கள் உலவுகின்றன.
யோகி, அந்தந்த வாயுவின் ஸகாயத்தால் எல்லா லோகங்களையும் யக்ஷ , ராக்ஷஸ, கந்தர்வர்களையும் மற்ற எல்லாவற்றையும் பார்க்கிறான்.
முக்யமான இந்த பத்து நாடிகள் ஒவ்வொன்றுக்கும் 72,000 சிறிய நரம்புகள் உள்ளன. ஜீவாத்மா இந்த நாடிகளில் இருக்கிறான்
(விழித்திருக்கும்போது).ஸ்வப்ன தசையில், ஸ்வப்னம் காண்பது,உறக்கத்தில் உடலைக் காப்பது,
ரத்தத்தை எல்லா நாடிகளிலும் பரப்புவது,ஹிதை எனப்படும் நாடிகளோடு சேர்ந்த ”புரிதத்து”என்கிற
ஹ்ருதயாகாசத்தில் போய் உறங்குவது எல்லாமே இதன் செயல்.
கண், காது, மூக்கு, நாக்கு, த்வக் (தோலில் எங்கும் உள்ளது) மனஸ், புத்தி, அஹங்காரம், சித்தம், வாக்கு, கை, கால்,
மலேயந்திரியம், மூத்திரேந்திரியம்-ஆக 14 இந்த்ரியங்கள்.
இவைகளுக்குத் தனித்தனியாக உள்ள விஷயம் – இவற்றுக்கான
தேவதை-இப்படி 14 உபாஸனைகள்.
நாடி, ப்ராணன், அதனால்உண்டாகும் அறிவஅப்போது ஏற்படும் ஆநந்தம், ஹ்ருதயாகாசம்
ஆகிய 8 இடங்களில் பரந்து உள்ளவனாக-பகவானை உபாஸிக்கவேண்டும்.
எல்லாவற்றையும் நிர்வஹிப்பவன். கட்டளையிடுகிறவன்.
எல்லா ஜீவாத்மாக்களுக்கும் ஆத்மா.
ப்ராணனுக்கும் ஆத்மா.
அறிவுக்கு எட்டாதவன்.
பலபடியாக வருணிக்கப்படும் பரமாத்மா
ஸ்ரீமன்நாராயணன். ஆதித்யர்கள், ருத்ரர்கள் அவனே.
காரணமும் அவனே. அவனுக்கு எல்லாப் பூமிகளும் உடல்.
பரமபதத்தில் எழுந்தருளியிருப்பவன்.
எல்லாம் உடலாய், பகவான்எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாய் –
ஆத்மாவாய் இருக்கும் இந்தவித்யையை உபதேசமாகப் பெற்றார்.
இது வேத ரஹஸ்யம்.

உடம்பில் உள்ள நாடிகளில் நான்கு நாடிகள்
முக்கியமானவை. ரமை, அரமை, இச்சை, அபுநர்பவை –
புண்யலோகம், பாப லோகம், நினைத்த இடம், மோக்ஷ ஸ்தானம், என்கிற இடங்களுக்கு இவை முறையே வாயில்கள்.
நான்காம் நாடி வழியாகப் புறப்பட்டு, ஹ்ருதயகோசம்,
தலைக்கபாலம் இவற்றைப் பிளந்து கொண்டு ப்ருத்வி முதல் எல்லா தத்துவங்களையும் கடந்து ஜீவன் மேலே செல்கிறான்.

இப்படிப்பட்ட வித்யையை புத்ரன், சிஷ்யன் தவிர வேறு யாருக்கும் உபதேசிக்கலாகாது.

————————

17 – அக்னி ரஹஸ்யம்

சுக்ல யஜூர் வேதத்தில், சதபத ப்ராம்மணத்தில் இது ஒரு பாகம். இது உபநிஷத்து அல்ல.
யாகங்கள், ஹோமங்கள் செய்பவர் வைதீகமான அக்னியை ”ஆதானம்” என்பதை அனுஷ்டித்து ஸம்பாதிக்கிறான்.
இவன் ”ஆயிதாக்னி” எனப்படுகிறான்.
ஸோம யாகம் செய்யும்போது கருடன் முதலான உருவில இடம், நிர்மாணிக்கப்பட்டு,ஆஹவநியாக்னி வைக்கப்படுகிறது.
புருஷனுடைய ஆயுட்காலம் 36,000 நாட்கள்.ஒவ்வொரு நாளிலும் செய்யும் கடமைகளை, யாகத்துக்கு வேண்டிய அங்கங்களாக பாவித்து க்ரது (யாகம்)
செய்ய வேண்டும். (ஸ்தோத்ரங்கள், பூஜை உட்பட ஒவ்வொருவரும் செய்யும் கடமைகள்).
இது” வித்யாமயக்ரது” எனப்படும்.(வைச்வாநர வித்யை – சாண்டில்ய வித்யை தனியே சொல்லப்பட்டுள்ளது)

————-

18- மஹோபநிஷத்

நாராயணன் ஒருவன் தான் ச்ருஷ்டிக்கு முன்பு இருந்தான்.
ப்ரம்மன், ருத்ரன், ஜலம், அக்னி, ஸோமன், ஸ்வர்க்கம்,பூமி,நக்ஷத்ரம், ஸுர்யன், சந்த்ரன் முதலிய எதுவும் இல்லை,
தனியாக இருப்பதில் த்ருப்தி இல்லாத நாராயணன்
த்யானம் செய்ய 14 பிள்ளைகள். (10 இந்த்ரியங்கள், மனஸ், அஹங்காரம்,ப்ராணன், ஆத்மா (உடல்).
புத்தி 15வது—— இப்படியாகப் பிறந்தன.
பிறகு 5 பூதங்கள், 5 தன்மாத்ரைகள்,, 25வது தத்துவமாக ஜீவன் பிறந்தன.
பரமாத்மா எல்லாவற்றையும் ஒன்றாக்கி ஜீவனை அதில் புகுத்தி ஸ்ருஷ்டி செய்தான்.
இப்படி எல்லா ஜீவ ஸ்ருஷ்டிக்கும் காரணம் நாராயணன்.
நெற்றியிலிருந்து ருத்ரன், இவனிடம் சத்யம், ப்ரம்மச்சர்யம்,
வேதம் மற்றும் பல செல்வங்கள் சேர்ந்தன.
ஆகவே அவன் ஈசானன், மஹா தேவன் எனப்பட்டான்.
அவன் நாராயணனை தியானம் செய்ய நெற்றியில் வியர்வை உண்டாயிற்று.
அது எங்கும் பரவி நீராக ஆயிற்று.
அதில் ப்ரம்மாண்டம் உண்டாயிற்று. ப்ரம்மன் அங்கு தோன்றினான்.
பிறகு அந்தந்த லோகங்கள், தேவதைகள் பிறந்தன.
இதற்கெல்லாம் காரணம் நாராயணன். அவனை ஆச்ரயித்தே எல்லா உலகமும் உயிர்களும் உள்ளன.
தாமரை மொட்டுபோன்ற ஹ்ருதயத்தில் அக்னி ஜ்வாலை உள்ளது.
அதனிடையில் பரமாத்மா இருக்கிறான். ப்ரம்மன், சிவன், இந்த்ரன் எல்லோருடைய ஹ்ருதயத்திலும் இருக்கிறான்.
இதற்கு மேல் ச்லோக ரூபமாக இந்த உபநிஷத் உள்ளது.

வேதம்- பெரிய பர்வதம்.
வேதாந்தம் என்கிற உபநிஷத் —-மலைக்குள் இருக்கும் குகை.
இந்த குகைக்குள் நம்மை அழைத்துப் போய்
நமக்கு வழிகாட்டுபவர்கள் ஆசார்யர்கள்.
வேதத்தை அத்யயனம் செய்தால் மட்டும் போதாது.
வேதாங்கங்களையும் கற்க வேண்டும் (வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், கல்பம், சிக்ஷா , ஜோதிடம்).

மஹரிஷிகள், ருக் வேதத்தை புத்தியாகிற மத்தினால் கடைந்தார்கள். எட்டு அக்ஷரம் கிடைத்தது.
இப்படியே யஜூர் வேதம் கடையப்பட்டது.
இதிலிருந்து எட்டு அக்ஷரம் கிடைத்தது.
இப்படியே ஸாமவேதம் கடையப்பட்டது.
இதிலிருந்து எட்டு அக்ஷரம் கிடைத்தது.
இந்த 24 அக்ஷரங்கள் தான் காயத்ரீ மந்த்ரம்.

இதையும் சுருக்கினார்கள்.
ருக் வேத 8 அக்ஷரங்களிலிருந்து ” பூ: ”
யஜூர் வேத 8 அக்ஷரங்களிலிருந்து ”புவ:” ,
ஸாமவேத 8 அக்ஷரங்களிலிருந்து ” ஸுவ:”
பூ:, புவ:, ஸுவ: —– வ்யாஹ்ருதி மந்த்ரம் என்று பெயர். இதை மேலும் சுருக்கினார்கள்.

ருக் —–.. பூ:.—— … என்பதிலிருந்து ”அ ”காரம்
யஜூர் ..—- புவ : —–… என்பதிலிருந்து” உ”காரம்
ஸாம —–.. ஸுவ:—- … என்பதிலிருந்து ”ம” காரம்
மூன்றையும் சேர்த்தார்கள்.
”ஓம்காரம்” பிறந்தது. வேதத்திற்கு இதுவே சிரஸ்.

யஜ்ஞ ப்ரகரணத்தில்
உத்கீதத்தாலே (ஸாம வேதம்)தேவதைகளையும், பகவானையும் அழைக்க வேண்டும்.
ருக் வேதத்தாலே அப்படி வந்தவர்களை ஸ்தோத்ரம் பண்ண வேண்டும்.
யஜூர் வேத மந்த்ரங்களால் இப்படி இப்படி அழைக்கப்பட்டு வந்துள்ள தேவதைகளுக்கும் பகவானுக்கும் ஹோமம் பண்ண வேண்டும்.
அதர்வ வேதமானது ப்ரஹ்மாவாக இருந்து இந்த யஜ்ஞத்தை நடத்தி வைக்கிறது.
வேதமும், ஸ்ம்ருதிகளும் என் கட்டளைகள். அவற்றை மீறி நடப்பவன் என் கட்டளையை மீறியவனாவான்.
அவன் என்னிடம் பக்தி கொண்டாலும் ஏற்கப்படாது என்று ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் பகவானே அருளி யிருக்கிறார்.

ஸ்ரீ நாராயண உபநிஷத் மந்த்ரத்தைச் சொல்லி வேதோபாஸனத்தை நிறைவு செய்கிறோம்.

ஓம் அத புருஷோ ஹவை நாராயணோ காமயத ப்ரஜாஸ் ஸ்ருஜேயதி |
ஸ்ரீ நாராயணாத் ப்ராணோ ஜாயதே |
ஸ்ரீமனஸ்ஸர்வேந்த்ரியாணிச |
ஸ்ரீ கம்வாயுர் ஜ்யோதிராப: ப்ருதிவீ விச்வஸ்ய தாரிணீ |
ஸ்ரீ நாராயணாத் ப்ரஹ்மாஜாயதே |
ஸ்ரீ நாராயணாத் ருத்ரோ ஜாயதே |
ஸ்ரீ நாராயணாதிந்த்ரோ ஜாயதே |
ஸ்ரீ நாராயணாத் த்வாதாசா தித்யா ருத்ரா வஸவ: ஸர்வாணிச சந்தாகும்ஸி |
ஸ்ரீ நாராயணாதேவ ஸமுத்பத்யந்தே |
ஸ்ரீ நாராயணாத் ப்ரவர்த்தந்தே |
ஸ்ரீ நாராயணே ப்ரலீயந்தே |
ஸ்ரீ அத நித்யோ நாராயண: |
ஸ்ரீ ப்ரஹ்மாச நாராயண: |
ஸ்ரீ சிவஸ்ச நாராயண: |
ஸ்ரீ சந்ரஸ்ச்ச நாராயண: |
ஸ்ரீ காலஸ்ச்ச நாராயண: |
ஸ்ரீ ஊர்த்வம்ச நாராயண: |
ஸ்ரீ அதஸ்ச்ச நாராயண: |
ஸ்ரீ அந்தர்பஹிஸ்ச நாராயண: |
நாராயண ஏவேதகும் ஸர்வம் |
யத்பூதம் யச்சபவ்யம் |
நிஷ் களங்கோ நிர்விகலபோநிராஞ்ஜநோ நிராக்யாத:

ஸுத்தோதேவ ஏகோ நாராயண: |
நத்விதியோஸ்தி கஸ்சித் |
ய ஏவம் வேத
ஸவிஷ்ணுரேவபவதி ஸவிஷ்ணுரேவ பவதி

ஓமித்யக்ரே வ்யாஹ்ரேத்
நம இதி பஸ்சாத்
நாராயணாயேத்யுபரிஷ்டாத்
ஓமித்யோகாக்ஷரம்
நம இதி த்வே அக்ஷரே
ஸ்ரீ நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி
ஏதத்வை நாராயண-ஸ்யாஷ்டாக்ஷரம் பதம்
யோஹவை நாராயணஸ்யாஷ்டாக்ஷரம் பதமத்யேதி
அனபப்ருவ: ஸர்வமாயுரேதி
விந்ததே ப்ராஜாபத்யம் ராயஸ்போஷம் கௌபத்யம்
ததோம்ருதத்வமச்நுதே ததோம் ருதத்வ மச்னுத இதி
ய ஏவம் வேத
இத்யுபநிஷத்

ப்ரத்யகானந்தம் ப்ரம்ஹ புருஷம் ப்ரணவ ஸ்வரூபம்
அகார உகார மகார இதி
தானேகதா ஸதபவத்ததோமிதி
யமுக்த்வா முச்யதோ யோகீ ஜன்ம ஸம்ஸார பந்தனாத்
ஓம் நமோ நாராயணாயேதி மந்த்ரோபாஸக:
வைகுண்டலோக புவனம் கமிஷ்யதி
ததிதம் பரம் புண்டரீகம் விக்ஞாநகனம்
தஸ்மாத் ததிதாப மாத்ரம்
ப்ரம்ஹ்ண்யோ தேவகீ புத்ரோம் ப்ரம்ஹண்யோ மதுஸுதனோம்
ஸர்வபூதஸ் தமேகம் நாராயணம்
காரண ரூப மகாரம் பரம்ப்ரஹ்மோம்
ஏதத தர்வதிரோயோ தீயதே

ப்ராதரதீயானோ ராத்ரிக்ருதம் பாபம் நாசயதி
ஸாயமதீயானோ சிவஸ்க்ருதம் பாபம்நாசயதி
மாத்யந்தின மாதித்யாபிமுகோதீயான:
பஞ்சபாதக உபபாதகாத் ப்ரமுச்யதே

ஸர்வவேதபராயண புண்யம் லபதே
நாராயண ஸாயுஜ்யமவாப்னோதி
நாராயண ஸாயுஜ்யமவாப்னோதி

ய ஏவம் வேத
இத்யுபநிஷத்

ஹரி : ஓம்

————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேத வியாஸர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -2 –மீமாம்ச சாஸ்த்ரம்– பாடங்கள் -22-30—

March 24, 2021

பாடம் -22
அத்யாயம் -9-ஊகம்
•ஏழாவது அத்யாயத்தில் அதிதேசம் பொதுவாக சொல்லப்பட்டு, எட்டாவது அத்யாயத்தில்
அதி தேசத்தைப் பற்றின சில சிறப்பு விசாரங்கள் செய்யப் பட்டன.
•அதற்கு அடுத்ததாக, ஒன்பதாவது அத்யாயத்தில், ஊஹம் என்பது ஆராயப் படுகிறது.
• ப்ரக்ருதி யாகத்தில் ஒன்றைக் குறித்து செய்யப் பட்ட ஒரு செயல் விக்ருதி யாகத்தில் வேறு ஒன்றைக் குறித்து
செய்யப் படுதலுக்கு ஊஹம் என்று பெயர்.
• ப்ரக்ருதி யாகத்திலிருந்து ஒரு அங்கத்தை விக்ருதி யாகத்துக்கு அதிதேசம் செய்யும் பொழுது, அந்த அங்கம்
விக்ருதியில் வேறே ஒரு பொருளைக் குறித்தும் செய்யப் படலாம். இதற்கு ஊஹம் என்று பெயர்.
•இதுமூன்று சைகைப்படும்
•(1) ஸம்ஸ் காரத்தின் ஊஹம்
•(2) மந்த்ரத்தின் ஊஹம்
•(3) ஸாமத்தின் ஊஹம்

ஸம்ஸ்கார ஊகம்
தர்சபூர்ணமாஸம் என்ற கர்மத்தில் ஒரு யாகமான ஆக்நேய யாகத்தின் விக்ருதி தான்
ஸௌர்ய யாகம் என்று எட்டாவது அத்யாயத்தில் பார்த்தோம்.
• தர்சபூர்ணமாஸத்தில் ’ நெல்லை ப்ரோக்ஷிப்பாய் ’ என்று ஒரு கட்டளை உள்ளது. இந்தக்
கட்டளையில் ப்ரோக்ஷணம் என்ற செயல் எதைக் குறித்து விதிக்கப் படுகிறது, அதாவது,
ப்ரோக்ஷணத்தின் குறிக்கோள் என்ன என்று ஆராய வேண்டும்.
• ப்ரோக்ஷணம் என்பது நெல் உண்டாவதற்காக என்று சொல்ல இயலாது, ப்ரோக்ஷணம்
இல்லாமல் நெல் உண்டாகிற படியால். ஆகவே , ப்ரோ க்ஷணம் என்பது நெல்லில் ஒரு
தகுதியை ஏற்படுத்துவதற்காக என்று கொள்ள வேண்டும்.
• தகுதி ஏற்படுவதாவது – “ப்ரோக்ஷிக்கப் பட்ட நெல்லைக் கொண்டு புரோடாசத்தை சமைத்து
யாகம் செய்தால் தான் அந்த யாகத்திலிருந்து பயன் கிடைக்கும்,இல்லை என்றால் வெறும் நெல்லால்
புரோடாசத்தைச் செய்து யாகம் செய்தால் பயன் கிடைக்காது” என்பது தான்.
• அந்தத் தகுதி ஒரு வகையான அபூர்வம் / அத்ருஷ் டம் / புண்ணியம். ப்ரோக்ஷணம்
செய்வதால் நெல்லில் ஒரு அபூர்வம் உண்டாகிறது.
அது இருந்தால் தான் அந்த நெல்லால் செய்யப்பட யாகத்துக்கு பலன் கிடைக்கும்.

• ஆகவே , ப்ரோக்ஷணம் என்பது நெல் நெல்லாக ஆவதற்காக அல்ல. யாகத்தில்
பயன் படக்கூடிய த்ரவ்யமாக நெல்லை ஆக்குவதற்காகத் தான்.
ஆகையால், “நெல்லை ப்ரோக்ஷிப்பாய் ” என்ற கட்டளைக்கு உண்மையான பொருள் “அரிசி
உண்டாக்குவதன் மூலம் எந்த பொருள் யாகத்துக்கு உதவுகிறதோ , அந்த ப்ரோக்ஷணம்
செய்ய வேண்டும்” என்பதுதான். அது நெல்லா மற்ற ஓன்றா என்பது முக்கியம் அல்ல.
• இப்படி இருக்கிற படியால், இந்த ப்ரோக்ஷணம் என்கிற ஸம்ஸ்காரத்தை ஒரு விக்ருதி
யாகத்துக்கு அதிதேசம் செய்யும் பொழுது, அங்கு நெல் இல்லாமல் வேறே ஓரு
தான்யத்தால் ஹவிஸ் செய்யப்படவிருந்தாலும் அந்த தாந்யத்துக்கு ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்.
•ப்ரக்ருதியில் நெல்லுக்கு செய்யப்பட்ட ஸம்ஸ்காரம் விக்ருதியில் ச்யாமாகம் முதலான
த்ரவ்யங்களுக்குச் செய்யப்படுகிறடியால் இது ஊஹம் ஆகும்

மந்த்ர ஊகம்
யாகங்களில் ஒவ்வொரு செயலைச் செய்யும் பொழுதும் மந்த்ரத்தை உச்சரிக்கிறோம்.
அந்த மந்த்ரங்கள் அடுத்தடுத்து செய்ய வேண்டிய செயலை நமக்கு நினைவூட்டுகின்றன.
• ப்ரக்ருதியான ஆக்நேய யாகத்தில் நாலு கைப்பிடி அளவு நெல்லை யாகத்துக்காக எடுக்கும் பொழுது,
’இந்த நெல் அக்நிக்கு பிரியமானதாக ஆகும் படி இதத நிர்வாபம் செய்கிறேன்” என்ற
மந்த்ரம் சொல்ல ப்படுகிறது
• இந்த மந்த்ரத்தை ஸௌர்ய யாகத்துக்கு அதிதேசம் செய்யும் பொழுது, ஸூர்யனுக்காக செய்யப்படும் யாகத்தில் இந்த
மந்த்ரத்தை அப்படியே உச்சரித்தால் அது தவறாகும்,
ஏன் என்றால் இந்த யாகத்தில் ஸூர்யனுக்காக தான் நெல், அக்நிக்காக அல்ல.
• பிரக்ருதியில் அக்நியைப் பற்றி பேசிய மந்த்ரம் விக்ருதியில் ஸூர்யனைப் பற்றப் பேசுகிற டியால் இது மந்த்ரத்தின் ஊஹம் ஆகும்.
•ஆனால், அக்நிக்கு பதிலாக ஸூர்யன் இந்த யாகத்தில் தேவதையாக இருக்கிற படியால், மந்த்ரத்தில் அக்நி என்ற சொல்லை எடுத்துவிட்டு
அவ்விடத்தில் ’ஸூர்யன்’ என்ற சொல்லைச் சேர்த்துக் கொண்டு,
“இந்த நெல் ஸூர்யனுக்கு பிரியமானதாக ஆகும் படி இதை நிர்வாபம் செய்கிறேன் ” என்று தான் சொல்ல வேண்டும்.
• இது தான் மந்த்ரத்தின் ஊஹம்

சாம ஊகம்
•ஸாமம் என்பது இசை . ருக் என்பது ஸாஹித்யம் / பாடல் வரிகள் போல். ஒரு ஸாமத்தோடு சேர்த்து ஒரு ருக் மந்த்ரத்தைப் பாடி,
அதன் மூலம் ஒரு பொருளின் குணங்களைப் புகழ்ந்ததால் அதற்கு ஸ்தோத்ரம் என்று பெயர்.
•ஸாமம் என்ன செய்கிறது என்றால் – ருக்கில் இருக்கும் எழுத்துகளை விஸ்லேஷம் அதாவது விரித்தல் / நீட்டிப்பு செய்கிறது. எடுத்துக்காட்டு
– ருக் மந்த்ரத்தில் ’எ’ என் ற எழுத்து இருந்தால், அதை இசையாகப் பாடும் பொழுது ’ஆஇ’ என்று பிரித்துப் பாட வேண்டும்
• பிரக்ருதியில் ஒரு ருக் மந்த்ரத்தில் மூன்றாவது இடத்தில் ’எ’ என்ற எழுத்து இருந்திருந்தால், அவ்விடத்தில் ’ஆஇ’ என்று பாடி யிருப்போம்.
• அதத ஸாமத்தை வேறே ருக்கில் அதிதேசம் செய்து, அந்த ருக்கோடு சேர்த்து பாடும் பொழுது, அதிலும் மூன்றாவது இடத்தில்
’எ’ என்ற எழுத்து இருக்கும் என்று சொல்ல இயலாது. ஏழாவது இடத்தில் இருக்கலாம்.
• அப்பொழுது, ’ஆஇ’ என்ற இதை ஏழாவது இடத்திலிருக்கும் ’எ’ என்ற எழுத்தை விஸ்லேஷம் செய்யப் பயன் படுகிறது.
•ஆக, பிரக்ருதியில் மூன் றாவது ஸ்தாநத்திலிருந்த எழுத்தை விஸ்லேஷம் செய்யப் பயன் பட்ட ஸாமம் விக்ருதியில் ஏழாவது
இடத்திலிருக்கும் எழுத்தை விஸ்லேஷம் செய்யப் பயன் படுகிற டியால் இது ஸாமத்தின் ஊஹம் ஆகும்.

—————-

பாடம் -23-அத்யாயம் -10-பாதம்
மீமாம்ஸா சாஸ்த்ரத்தில், எட்டாவது அத்யாயத்தில் அதிதேசத்தைப் பற்றிச் சொன்ன பிறகு, ஒன்பதாவது
அத்யாயத்தில் ஊஹமும் பத்தாவது அத்யாயத்தில் பாதமும் சொல்லப்பட்டுள்ளன.
•ப்ரக்ருதி யாகத்தில் ஒன்றைக் குறித்து செய்யப்பட்ட ஒரு செயல் விக்ருதி யாகத்தில் வேறே ஒன்றைக் குறித்து
செய்யப்படுதலுக்கு ஊஹம் என்று பெயர் என்று சென்ற பாடத்தில் பார்த்தோம்.
•ப்ரக்ருதி யாகத்துக்கு அங்கமான ஒரு செயல் விக்ருதி யாகத்துக்கு அங்கமாக இல்லாமல் போவதற்கு பாதம் என்று பெயர்.
•அதிதேசம் செய்யப்படும் செயலை சிறு மாற்றத்தோடு செய்வது ஊஹம். அந்தச் செயலை முழுவதுமாகக்
கை விடுவது பாதம். ஆகையால், அதிதேசத்தைச் சொன்னவுடன், அதில் சிறு மாற்றத்தை மட்டும் சொல்லும்
ஊஹத்தை முதலில் சொல்லிவிட்டு, கை விடுதல் என்ற பெரிய மாற்றத்தைச் சொல்லும் பாதம் பின்னால் சொல்லப்பட்டுள்ளது.

பாதம் ஏன் ஏற்படுகிறது
•விக்ருதி யாகம் நேரடியாக ப்ரக்ருதி யாகத்தின் அங்கங்களை எதிர்ப்பார்க்கவில்லை . ’எனக்கு உதவி வேண்டும்’ என்ற தேவை
முதலில் ஏற்பட்டு, அதன் பின் தான் ’அந்த உதவியைச் செய்யக் கூடிய செயல்கள் / பொருள்கள் எவை ’ என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.
•ஆகையால், ப்ரயாஜம் அநுயாஜம் ஆஜ்யபாகம் முதலான அங்கங்களை ஆக்நேய யாகத்திலிருந்து ஸௌர்ய யாகத்துக்கு
அதிதேசம் செய்யும் பொழுதும், அவற்றை மற்றும் அதிதேசம் செய்யக் கூடாது. எனவே , ’ப்ரயாஜம் செய்து, அநுயாஜம் செய்து,
ஆஜ்யபாகம் செய்து ஸௌர்ய யாகம் செய்ய வேண்டும்’ என்று அதிதேசத்தை ஏற்க முடியாது.
• ’ப்ரயாஜத்தால் இந்த உதவியைச் செய்து, அநுயாஜத்தால் இந்த உதவியைச் செய்து, ஆஜ்யபாகத்தால் இந்த உதவியைச் செய்து,
ஸௌர்ய யாகத்தைச் செய்ய வேண்டும்’ என்று உதவிகளின் பின்னால் தான் செயல்கள் வர வேண்டும்.
•ஆகவே , ப்ரக்ருதி யாகமான ஆக்நேய யாகத்தில் தேவைப்பட்ட ஓர் உதவி விக்ருதியான ஸௌர்ய யாகத்தில் தேவைப்படாவிட்டால்,
அந்த உதவியையோ அதைச் செய்யும் செயலையோ அதிதேசம் செய்யத் தேவை இல்லை –
•ஆகவே , ப்ரக்ருதிக்கு அங்கமான ஒன்று விக்ருதிக்கு அங்கமாக இல்லாமல் போனபடியால் அந்தச் செயலுக்கு / பொருளுக்கு பாதம்
ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது –

அர்த்த லோபத்தால் பாதம் –
• அர்த்தம் என்றால் ப்ரயோஜனம்/ பயன். லோபம் என்றால் மறைதல் .
• தர்சபூர்ணமாஸம் என்ற கர்மத்தில் ஆக்நேய யாகம் உள்ளது. அந்த யாகத்தைச் செய்ய நெல்லை உலக்கையால்
குத்தி, உமியை நீக்கி,அரிசியை எடுக்க வேண்டும்.
• மற்ற ஓரு யாகம் – “நீண் ட ஆயுஸ் வேண்டும் என்று ஆசைப்படுபவன்,ப்ரஜாபதி என்ற தேவதைக்காக நூறு தங்கத்தகடுகளை நெய்யில்
சேர்த்து சரு செய்து யாகம் செய்ய வேண்டும்” என்று விதிக்கப்பட்டுள்ளது. இது ஆக்நேய யாகத்தின் விக்ருதி ஆகும்.
•ஆக்நேய யாகத்திலிருந்து இந்த யாகத்துக்கு அங்கங்களை அதிதேசம் செய்யும் பொழுது, உலக்கையால் குத்துதல் என்ற செயலை
அதிதேசம் செய்வதில் எந்த ப்ரயோஜனமும் இல்லை , ஏன் என்றால் தங்கத் தகடுகளை உலக்கையால் குத்தி உமியை நீக்க முடியாது.
•ஆக, இவ்விடத்தில், ப்ரக்ருதியில் ஒரு செயலால் ஏற்படும் பயன் விக்ருதியில் தேவைப்படாமல் போகிறபடியால்,
ப்ரயோஜனமில்லாதமயால் ’உலக்கையால் குத்துதல்’ என்ற செயலுக்கு அதிதேசம் கிடையாது, அதாவதி, அதற்கு பாதம் ஏற்படுகிறது.
• அதே போல் ஒரு யாகத்தில் ’தானாக வெட்டப்பட்ட தர்பத்தைக் கொண்டு யாகம் செய்ய வேண்டும்’ என்று வேதம் சொல்கிறது.
ஆகையால், தர்மத்தை வெட்டுதல் என்ற செயலை ப்ரக்ருதியிலிருந்து இந்த யாகத்துக்கு அதிதேசம் செய்யத் தேவையில்லை –

பிரதி ஆம்நாநத்தால் பாதம் –
ப்ரதி என்றால் எதிர்மறை என்று பொருள். ஆம்நாநம் என்றால் உபதேசம்.
• ப்ரக்ருதியில் ஒரு அங்கத்தை உபதேசித்துவிட்டு, விக்ருதியில் அதற்கு முறண் பட்ட வேறே ஒரு அங்கத்தை
வேதமே உபதேசித்தால், ப்ரக்ருதியில் சொல்லப்பட்ட அங்கத்தை விக்ருதிக்கு அதிதேசம் செய்யத் தேவையில்லை .
ஆகையால், அந்த அங்கத்துக்கு விக்ருதியில் பாதம் ஏற்படுகிறது.
• எடுத்துக்காட்டு – ப்ரக்ருதி யாகத்தில் ’குசம்’ என்ற புல்லை தர்பமாகப் பயன் படுத்த வேண்டும் என்று வேதம் சொல்கிறது.
ஆனால், ஒரு விக்ருதியில், ’சரம்’ என்ற மற்ற ஓரு புல் வகையை தர்பமாகப் பயன் படுத்தச் சொல்கிறது.
ஆகையால், ப்ரக்ருதியில் சொல்லப்பட்ட குசம் விக்ருதிக்கு அங்கமாக அழைத்து வரப் படக் கூடாது. ஆகையால்,
அந்த ’குசம்’ என்ற புல்லுக்கு விக்ருதி யாகத்தில் பாதம் ஏற்படுகிறது.
• ப்ரக்ருதியில் சொல்லப்பட்ட அங்கத்துக்கும் விக்ருதியில் சொல்லப்பட்ட அங்கத்துக்கும் ஒரே ப்ரயோஜனம் இருந்தால் தான் இப்படி பாதம்
ஏற்படும். நக்ஷத்ர இஷ்டி என்று ஒரு யாகம் உள்ளது. அதற்கு நாரிஷ்ட ஹோமம் என்ற ஒரு ஹோமம் அதிதேசத்தால் வந்து அடைகிறது.
புதிதாக இந்த யாகத்தில் உபஹோமம் என்ற ஒரு ஹோமமும் விதிக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில், நாரிஷ் டஹோமம்
உண்டாக்கும் அதே அபூர்வத்தைத் தான் உபஹோமம் உண்டாக்கும் என்பதற்கு எந்த ப்ரமாணமும் இல்லாததால், இரண்டையுமே
செய்ய வேண்டும். ஒன்று மற்ற ஒன்றைப் பாதிக்காது.

பிரதி ஷேதத்தால் பாதம்
ப்ரதிஷேதம் என்றால் ஒன்றைச் செய்யாதே என்ற உபதேசம்.
ஒன்றைத் தவிற மற்றவற்றைச் செய் என்ற கட்டளைக்கு பர்யுதாஸம் என்று பெயர்.
• பொதுவாக யாகங்களின் யஜமாநன் சில ரித்விக்குளை அவனுக்குத் துணையாக அழைத்து, அவர்களை வரிக்க வேண்டும்.
ஆனால், மஹாபித்ரு யஜ்ஞம் என்று அழைக்கப்படும் விக்ருதியில் ’ஹோதா என் ற ரித்விக்கை வரிக்காதே ’ என்று கட்டளை உள்ளது.
• பூர்வபக்ஷம் – ப்ரக்ருதியில் ஹோதாவை வரிக்க வேண்டும் என்ற கட்டளை உள்ளது. எனவே அதிதேசத்தால் ஹோதாவை வரித்தல்
என்ற செயல் இந்த விக்ருதியை வந்து அடையும். ஆனால் விக்ருதியில் ’ஹோதாவை வரிக்காதே ’ என்று ப்ரதிஷேதம் / நிஷேதம் உள்ளது.
ஆகையால், சாஸ் த்ரமே ஹோதாவை வரிக்க வேண்டும் என்றும் வரிக்க வேண்டாம் என்றும் சொல்கிறபடியால் இரண்டுக்கும்
விகல்பம் தான், நம் ஆசைப்படி ஏதோ ஒன்றைச் செய்யலாம்.
• ஸித்தாந்தம் – விகல்பம் ஒப்புக் கொண்டால் பல தோஷங்கள் ஏற்படுகின்றன. ஆகையால், பர்யுதாஸம் சொல்வது தான் சிறந்தது.
பர்யுதாஸம்-இதைத்தவிர வேறே ஒன்றைச் செய்யாதே -சொல்வது தான் சிறந்தது.-
எனவே , இந்த கட்டளைக்கும் நாம் கல்பித்த கட்டளைக்கும் தொடர்பைக் கல்பித்து, ’மஹாபித்ரு யஜ்ஞத்தில் ஹோதாவை
வரித்தலைத் தவிற மற்ற அங்கங்கள் அனைத்தையும் செய்ய வேண்டும்’ என்று பொருள் கொள்ள வேண்டும். ஆகையால்,
இங்கு ஹோதாவை வரித்தல் என்ற செயல் பாதிக்கப்படுகிறது, ஆனால் பர்யுதாஸத்தின் மூலம், ப்ரதிஷேதத்தால் அல்ல.

தர்ச பூர்ண மாஸங்களில் ஆறு ப்ரதான யாகங்கள் சொல்லப் பட்டுள்லன. அவற்றின் அங்கங்களில்
ஆஜ்யபாகங்கள் என்று இரு யாகங்கள் உள்ளன. அவற்றை உபதேசித்துவிட்டு, ’இவற்றை ஒரு விக்ருதி யாகத்தில்
செய்யக்கூடாது’ என்று ஒரு கட்டளை உள்ளது.
• இங்கும் முன் சொன்னது போல் ப்ரதிஷேதம் ஒப்புக் கொண்டால் விகல்பம் ஏற்படும் என்ற காரணத்தால் பர்யுதாஸம் தானா?
’அந்த விக்ருதியில் ஆஜ்யபாகங்கள் தவிற மற்ற அங்கங்களைத்தான் அதிதேசம் செய்ய வேண்டும்’ என்று பொருளா?
என்று பார்த்தால், அல்ல. ஏன் என்றால்,
எங்கோ இருக்கும் விக்ருதியின் அதிதேச வாக்யத்துக்கும் இங்கிருக்கும் வாக்யத்துக்கும் தொடர்வை கல்பிக்க இயலாது.
• ஆகையால், தவறு வழி இல்லாமல் இது ப்ரதிஷேதம் தான். ஆகையால், அந்த விக்ருதி யாகத்தில் ஆஜ்யபாகங்களுக்கு பாதம் ஏற்படுகிறது

————

பாடம் -24- அத்யாயம் -11-
• மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் பத்தாவது அத்யாயத்தில் பாதம் என்பது விசாரிக்கப்பட்டது.
ஆக பத்து அத்யாயங்களால் ப்ரக்ருதி கர்மங்களிலும் விக்ருதி கர்மங்களிலும் எவை எல்லாம் அங்கங்கள் ஆகின்றன என்பது
முடிவாகியுள்ளது. இப்படி அந்தந்த யாகத்தில் ப்ரயோஜ்யமான அங்கங்கள் முடிவான பிறகு, அவற்றின் ப்ரயோகத்தைப் பற்றின விசாரம்
செய்யப் படுகிறது, தந்த்ரம் என்பதை விசாரிப்பதன் மூலம்.
• தந்த்ரம் என்றால் பலவற்றைக் குறித்து ஒரே முறை அநுஷ்டித்தல்.
• ப்ரயோக விதியானது அங்கங்களையும் ப்ரதாநங்களையும் சேர்த்து விதிக்கிறபடியால் அதிலிருந்து ஒரு சேர்க்கை நமக்குத் தோற்றுகிறது.
அச் சேர்க்கை , ஒரே க்ஷணத்தில் அவை அனைத்தையும் செய்தால் தான் ஏற்படும். ஆனால், எங்கு அது இயலாதோ அங்கு இடை விடாமல்
அடுத்தடுத்து அநுஷ்டானம் செய்ய வேண்டும் என்று வேதமே கூறுகிறது .
• ஆனால், எங்கு எங்கு முடியுமோ அங்கு சேர்த்தே அநுஷ் டிக்க வேண்டும், அதற்கு தான் தந்த்ரம் என்று பெயர்.
• (1) ப்ரதாந யாகங் களில் தந்த்ரம் –
வெவ்வேறு தேவதைகளைக் குறித்து செய்யும் யாகங்களை ஒரே நொடியில் சேர்த்துச் செய்ய முடியாவிட்டாலும்,
ஒரே தேவதைக்காகச் செய்யப் படும் பல யாகங்களை ஒரே க்ஷணத்தில் சேர்த்துச் செய்யலாம்.ஆகையால், இது தந்த்ரம் ஆகும்.
• (2) அங்கங்களுக்குள் தந்த்ரம் –
பல யாகங்களுக்கு அங்கமாக ஒரே செயல் இருக்கும் பொழுது, அவற்றுக்குள் காலத்தாலோ தேசத்தாலோ
எந்த வேறுபாட்டையும் வேதம் காட்டா விட்டால், வேறுபாடு அறியாதபடியாலேயே அந்தச் செயலை ஒரே முறை செய்வதன் மூலம்
அனைத்து யாகங்களுக்கும் உதவலாம். இது அங்கங்களில் தந்த்ரம் ஆகும்

தந்திரம் ஏற்படுமா
• பூர்வபக்ஷம்
• தர்சபூர்ணமாஸம் என்ற கர்மத்தில் உள்ள ஆறு ப்ரதாந யாகங்கள் தனித் தனி விதி வாக்கியங்களால் விதிக்கப்படுகின்றன.
ஆகையால், அவை ஒவ் ஓன்றும் தங்கள் தங்கள் பலனை உண்டாக்க தனித் தனியே ஸாமர்த்யம் படைத்தவை என்று அறிகிறோம்.
• அடுத்து, ஒரு வேத வாக்கியம், இந்த யாகங்களுக்கு எல்லாம் ஸ்வர்கம் தான் பயன் என்று சொல்கிறது.
ஆகையால், தனித்தனியே ஒவ் ஓரு யாகத்தைச் செய்வதாலும் ஸ்வர்கம் பெறலாம்.
• ஆகையால், ஒன்றைச் செய்யும் பொழுது மற்ற ஓரு யாகத்தைச் செய்யும் ஆசை இருக்கத் தேவையில்லை .
எனவே அவற்றினிடையே ஒரு எத்ர்பார்ப்பு இல்லாத படியால் ஒரே ப்ரயோக விதிக்கு அவை இலக்கு ஆக மாட்டா.
• ஆகையால், அவற்றைச் சேர்த்து அநுஷ்டிக்க வேண்டும் என்று வேதம் சொல்லாத படியால், தந்த்ரம் என்பதே கிடையாது.
•ஸித்தாந்தம்
• முதலில் தனித்தனியே யாகங்கள் போதிக்கப் பட்டிருந்தாலும் அவை அனைத்துக்கும் சேர்த்து ஸ்வர்கம் என்ற ஒரே பயன் வேதத்தால்
சொல்லப் பட்டுள்ளது. ஆகையால், அவை ஒவ் ஓன்றும் மற்ற 5 யாகங்களை எதிர்பார்த்து தான் பலத்தைக் கொடுக்கின்றன.
• ஆகையால், பரஸ்பரம் எதிர்பார்ப்பு உள்ளபடியால் அனைத்துக்கும் சேர்த்து ஒரே ப்ரயோக விதி தான் உள்ளது.
ஆகையால், ஆறு ப்ரதாந யாகங்களையும் அவற்றின் அங்கங்கள் அனைத்தையும் சேர்த்தே செய்ய வேண்டும் என்பது வேதத்தின் எண்ணம்.
• ஆகையால், பல ப்ரதாநங்களைக் குறித்து ஒரு செயலை ஒரே முறை செய்யும் தந்த்ரம் என்பது ஏற்படலாம்.

கபிஞ்ஜல அதிகரணம் -உத்தர அதிகரணம்
• கபிஞ்ஜலாதிகரணம்
• வேதத்தில் ’வஸந்தம் என்ற தேவதைக்காக கபிஞ்ஜலங்களைக் கொண்டு யாகம் செய்ய வேண்டும்’
என்று ஒரு வாக்கியம் விதிக்கிறது.
• பூர்வபக்ஷம் –
இங்கு ’கபிஞ்ஜலங்கள்’ என்று பன்மை இருக்கிற படியால், பன்மை யானது மூன்று தொடங்கி இருக்கும் அனைத்து
எண்ணிக்கைகளையும் குறிக்கும் என்பதனால் யஜமாநனின் இஷ்டப்படி இரண்டுக்கு மேற்பட்ட எத்தனை
கபிஞ்ஜலங்களை வேண் டுமானாலும் பயன் படுத்தலாம்
•ஸித்தாந்தம் –
பன்மையைப் பார்த்தவுடன் முதலில் நினைவுக்கு வருவது மும்மை தான். மேலும், நான்கு ஐந்து என்ற
எதை எடுத்தாலும் அதில் மூன்றும் அடங்கும் என்பதனால் மும்மை என்பது தவிர்க்கமுடியாதது.
ஆகையால், மூன்று கபிஞ்ஜலங்களைப் பயன் படுத்தினாலே சாஸ்த்ரம் சொன்னது நிறைவேறி விடும்
என்பதால் பன்மைக்கு மும்மை தான் பொருள்
• உத்தராதிகரணம்
• தர்சபூர்ணமாஸத்திலுள்ள பால் யாகத்துக்காக மாடுகளைக் கறக்கும் போது
’மூன்று மாடுகளைக் கறந்து விட்டு மேலுள்ள மாடுகளைக் கறக்க வேண்டும்’ என்று வேதம் சொல்கிறது.
• பூர்வபக்ஷம் –
இங்கும் பன்மைக்கு மும்மை தான் பொருள். ஆகையால், மேலுள்ள மாடுகளில் மூன்றை மட்டும் கறக்க வேண்டும்.
•ஸித்தாந்தம் –
இங்கு ’அன்று இரவு குழந்தைகளுக்கும் பால் கிடைப்பதில்லை , பாலால் இவன் அக்நி ஹோத்ரமும் செய்ய முடியாது’ என்று
வேதம் சொல்கிற படியால், அந்த யஜமானனிடம் எத்தனை மாடுகள் உள்ளனவோ அவை அனைத்தையும்
கறக்க வேண்டும் என்று தெரிகிறது–மூன்றோடு நிறுத்தக் கூடாது –

ஆதாநம் ஒரு முறை தான்
•ஒரு யாகத்தைச் செய்ய அத்யயநம் செய்து பெற்ற வித்யை ,
ஆதாநம் செய்து பெற்ற அக்நிகள், ஸாமர்த்யம் ஆகியவை தேவை என்று பார்த்தோம்.
•ஒவ்வொரு யாகத்துக்கும் அக்நிகள் தேவைப்படுகிறபடியால், ஒவ்வொரு யாகத்துக்கு
முன்னாலும் ஆதாநம் செய்ய வேண்டுமா என்பது கேள்வி.
•பதில் – ஆதாநத்தால் கிடைக்கும் அக்நிகள் அனைத்து யாகங்களிலும் பயன்பட்டாலும், ஆதாநம் எந்த ஒரு
யாகத்தின் ப்ரகரணத்திலும் சொல்லப் படவில்லை .
அநாரப்யாதீதமாகச் சொல்லப் பட்டபடியால் அனைத்து யாகங்களுக்கும் பொதுவானது. மேலும், ’வஸந்த காலத்தில்
ஆதாநம் செய்ய வேண்டும்’ என்று தனியே ஆதாநத்துக்கு என்று ஒரு காலம் சொல்லப்பட்டபடியால்,
அவனத்து யாகங்களுக்காகவும் சேர்த்து ஒரே முறை ஆதாநம் செய்ய வேண்டும் என்று தெரிகிறது.
•ஆகவே ,ஆதாநம் செய்வதும் தந்த்ரம் தான்

விதிக்கப் பட்டதும் விதிக்கப் படாததும்
• ஸோம யாகத்தில் காலையில் இருந்து தொடங்கி மதியம் ருத்விக்குகளுக்கு தக்ஷிணை கொடுக்கும் வரை
யஜமாநனுக்கு அரிப்பு ஏற்பட்டால், சொரிந்து கொள்வதற்காக ஒரு மான் கொம்பு விதிக்கப்பட்டுள்ளது சாஸ்த்ரத்தால்.
• மதியம் தக்ஷிணை கொடுத்த பிறகு மான் கொம்பை ஒரு குழியில் எறிந்துவிட வேண்டும் என்று வேதம் சொல்கிறது.
ஆகையால், மதியம் யாகத்தைத் தொடரும் போது அரிப்பு ஏற்பட்டால் கையால் தான் சொரிந்து கொள்ள வேண்டும்.
• இந்த யாகத்தின் விக்ருதியாக பல நாட்கள் செய்யும் ஸோம யாகங்கள் உள்ளன.
அவற்றில் ஒவ்வொரு நாளும் மதியும் ருத்விக்குகளுக்கு தக்ஷிணை கொடுக்க வேண்டும்.
• கேள்வி – முதல் நாள் தக்ஷிணை கொடுத்த பின்பு மான் கொம்பை எறிய வேண்டுமா?
கடைசி நாள் தக்ஷிணையைக் கொ டுத்த பின்பு எறிய வேண்டுமா?
• பூர்வபக்ஷம் –
நம் இஷ்டப்படி செய்யலாம். முதல் நாள் மதியம் அதை எறிந்துவிட்டால், இரண்டாம் நாள் தொடங்கி காலையில் யாகம்
செய்யும் பொழுது அரிப்பு ஏற்பட்டால் சொரிந்து கொள்ள மான் கொம்பு இல்லாதபடியால் சாஸ்த்ரத்தை மீறினவராவோம்.
கடைசி நாள் எறிந்தால், முதல் நாள் தொடங்கியே மதியம் கையால் சொரிய வேண்டும் என்று வேதம்
சொன்னதை மீறினராவோம்.ஆகையால், ஒரு வேறுபாடும் இல்லை .
•ஸித்தாந்தம் –
கடைசி நாள் தான் எறிய வேண்டும். தினமும் காலையிலும் மான் கொம்பால் சொரிந்து கொள்ளுதல் என்பது விதிக்கப்பட்டதே
தவிற மதியம் கையால் சொரிந்து கொள்வது வேதத்தில் விதிக்கப்படவில்லை ,
நாமாக அறிந்து கொண்டது தான்.ஆகையால், அதற்கு பாதம் ஏற்பட்டால் தவறில்லை

————

பாடம் -25- அத்யாயம் -12-பிரசங்கம் –
• பதினோராவது அத்யாயத்தில் தந்த்ரம் என்பதை விசாரித்து, கடைசியாக பன்னிரண்டாம்
அத்யாயத்தில் ப்ரஸங்கம் என்பதைப் பற்றி ஆராய்கிறார் மஹர்ஷி ஜைமிநி.
• ப்ரஸங்கம் என்றால் – ஒரு யாகத்துக்குத் தன் அங்கம் ஒன்றிலிருந்து கிடைக்க வேண்டிய உதவியானது
வேறே ஓரு வழியில் கிடைத்து விட்டால் அந்த அங்கத்தைச் செய்யாமல் இருப்பது.
• எடுத்துக்காட்டு –
அக்நீ ஷோமீயம் என்று ஒரு யோகம் உள்ளது. அது தர்ச பூர்ண மாஸத்தில் இந்த்ரனுக்காகச் செய்யப்படும் தயிர் யாகத்தின்
விக்ருதி ஆகும். அந்த அக்நீ ஷோமீய யோகத்துக்கு அங்கமாக புரோடாச யோகம் ஒன்று உள்ளது.
அதுவும் தர்ச பூர்ண மாஸத்தின் விக்ருதிதான் .
தர்ச பூர்ண மாஸங்களுக்கு எல்லாம் ப்ரயாஜங்கள் என்ற அங்கம் இருக்கிற படியால், அதி தேசத்தின் மூலம்,
இந்த அக்நீஷோமீயத்துக்கும் புரோடாச யாகத்துக்கும் கூட ப்ரயாஜங்கள் அங்கம் ஆகின்றன .

பிரசங்கம்
• இந் நிலையில், அக்நீஷோமீயம் என்ற யாகத்தின் பிரயோகம் -அனுஷ்டானம் பெரியது. அதற்கு
அங்கமான புரோடாச யோகத்தின் ப்ரயோகம் (அநுஷ் டானம் ) சிறியது.
ஆகையால், புரோடாச யாகத்தின் அநுஷ்டானம் அக்நீஷோமீய அநுஷ்டானத்துக்குள் அடங்கியது தான் .
• உதாஹரணத்துக்காக,
அக்நீ ஷோமீய யாகத்தின் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செய்கிறேன் என்று வைத்துக் கொள்வோம் .
அதற்கு அங்கமான ப்ரயாஜங்களை காலை 7 மணிக்கு செய்ய வேண்டும். அதே போல், புரோடாச யாகத்தை
மதியம் 12 மணி முதல் 1 மணி வரை செய்கிறேன் -அதற்கு அங்கமான ப்ரயாஜங்களை மதியம் 12:30 மணிக்கு செய்ய வேண்டும்.

• இந் நிலையில் காலை 7 மணிக்கு அக்நீ ஷோமீயத்துக்கு அங்கமாக நான் ப்ரயாகங்களைச் செய்தவுடன்
அதிலிருந்து அபூர்வம்/ அத்ருஷ்டம்/புண்ணியம் உண் டாகிறது. அந்த அபூர்வம் யோகத்தின் ப்ரயோகம் முழுவதும்
முடிந்து பரம அபூர்வம் உண்டாகும் வரை இருக்க வேண்டும் என்ற படியால் மாலை 6 மணி வரை இருக்கப் போகிறது.
• இந் நிலையில், மதியம் நான் புரோடாச யோகத்தைச் செய்யும் பொழுது, அந்த யாகத்துக்கும் ப்ரயாஜங்களால்
உண்டான உதவி (அபூர்வம்) தேவைப்படும் பொழுது, நான் காலை செய்த ப்ரயாஜங்களால் உண்டான
அபூர்வம் ஸித்தமாக (தயாராக) இருக்கிற படியால் அதுவே புரோடாச யாகத்துக்கும் உதவி செய்து விடும். ஆகையால்,
தனியான புரோடாச யாகத்துக்கு அங்கமான ப்ரயோஜங்களை அநுஷ்டிக்கத் தேவை யில்லாமல் போகிறது –
• அக்நீ ஷோமீய யாகத்துக்கு அங்கமான ப்ரயாஜங்களில் இருந்தே புரோடாச யோகத்துக்கு தேவையான உதவியும்
கிடைத்து விட்ட படியால், புரோடாச யாகத்துக்கு எனத் தனியாக ப்ரயோஜங்களைச் செய்யத் தேவையில்லை
இதுவே ப்ரஸங்கம் ஆகும்.

மற்ற அங்கங்கள்
• ப்ரஸங்கம் ஏற்படும் இடத்தில், ஒரு யாகத்துக்குத் தன் அங்கத்திடம் இருந்து வர வேண்டிய உபகாரம் வேறே ஒன்றிலிருந்து
கிடைக்கிற படியால், அதற்கு என எந்த அங்கங்களும் தேவையில்லை -ஆகையால் அதிதேசமே வேண்டாம் என்று சொல்லக் கூடாது
• அதிதேசம் என்பது நாம் வேதத்தைக் கற்று ஆராயும் போது நாம் மனசால் ஏற்படும் ஒன்று.
அதன் மூலம் புரோடாச யாகத்துக்கும் அங்கமாகப் ப்ரயாஜங்கள் கண்டிப்பாக வந்து சேர்கின்றன
• அதற்குப் பிறகு, எப்பொழுது ப்ரயோக விதியால் ப்ரயோகம் என்ற அனுஷ்டானத்தை விதிக்கிறதோ,
அப்பொழுது தான் இந்த யாகத்துக்குத் தேவையான ஒரு உதவி வேறே ஓரு வழியில் கிடைக்கிற படியால், இதற்கு
அங்கமோ ப்ரயாஜங்களைச் செய்ய வேண்டாம் என்ற காரணத்தால், ப்ரயோக விதி ”ப்ரயாஜங்களைச் செய் ” என்று கட்டளை இடாது
• இப்படி இருக்கும் நிலையில், அக்நீ ஷோமீய யாகத்துக்கு அங்கமாக இல்லாத ஒரு செயல் புரோடாச யாகத்துக்கு அங்கமாக இருந்தால்,
அப்பொழுது ப்ரஸங்கம் ஏற்பட வாய்ப்பே இல்லை . ஆகையால் புரோடாச யாகத்தின் அங்கமாக அந்தச் செயலைச் செய்தே
ஆக வேண்டும்.
• எடுத்துக் காட்டு – அக்நீ ஷோமீயத்தில் ஆஜ்ய பாகங்கள் என்ற அங்கங்கள் கிடையாது
ஆனால் புரோடாச யாகத்தில் அவை அங்கங்கள் தான் . ஆகையால் , ப்ரஸங்கம் ஏற்பட முடியாததால்,
புரோடாச யகத்துக்காக ஆஜ்ய பாகங்களைச் செய்து தான் ஆக வேண்டும் –

பலருக்காக சிலரை விடலாம்
• இந்த அத்யாயத்தில் “பூயஸாம் ஸ்யாத் ஸ்வ தர்மத்வம்” என்று ஒரு ந்யாயம் சொல்லப் படுகிறது.
ஒரு கூட்ட த்தில், சிலருக்கு ஒரு தேவையும் பலருக்கு வேறே ஓரு முரண் பட்ட தேவையும் இருந்தால்,
பலரின் எதிர் பார்ப்பைப் பூர்த்தி செய்வதே சரியானது என்பது தான் அந்த நியாயம் –

• வேதத்தில், கீழ்க் கண்ட ஏழு யாகங்கள் சேர்த்து ஒரு பலனுக்காக விதிக்கப் பட்டுள்ளன .
இவற்றில் ஒவ் வொரு யாகமும் தர்சபூர்ணமாஸத்தில் இருக்கும் 6 யோகங்களுள் ஏதோ ஒன்றின் விக்ருதி ஆகும்.
எந்த யாகத்தின் விக்ருதியாக எந்த யாகம் உள்ளதோ, அது அதன் தன்மைகளைக் கொண்டு இருக்கும்

1-அக்னிக்கு புரோடாசம் -ஆக்னேய யாகத்தின் விக்ருதி
2-இந்திரனுக்கு புரோடாசம் -ஐந்த்ராக்னி யாகத்தின் விக்ருதி
பிரஜாபதி தேவதைக்காக ஐந்து
1-தயிர் -இந்திரனுக்கான தயிர் யாகத்தின் விக்ருதி
2-தேன் -உபாம்சு யாஜத்தின் விக்ருதி
3-நெய் -உபாம்சு யாஜத்தின் விக்ருதி
4-நீர் -உபாம்சு யாஜத்தின் விக்ருதி
5- தான்யம் -ஆக்னேய யாகத்தின் விக்ருதி

தர்ச பூர்ண மாஸத்தில் ஆக்நேய யோகம் அமாவாசையிலும் பௌர்ணமியிலும் செய்யப்படுகிறபடியால்,
அதன் விக்ருதிகளும் (யோகம் 1 மற்றும் யோகம் 7) இரண்டுக்கும் பொது வானவை .
• ஐந்த்ரோக்ந யோகமும் இந்த்ரனுக்கான தயிர் யாகமும் அமாவாஸையில் மட்டும் உள்ளபடியால் அவற்றின்
தன்மைகள் தான் அவற்றின் விக்ருதிகளுக்கும் (யாகம் 2 மற்றும் யாகம் 3)
• உபாம்சு யாஜம் பௌர்ணமியில் செய்யப்படுகிறபடியால், அதன் விக்ருதிகளுக்கு
(யாகம் 4,5,6) பௌர்ணமியின் தன்மைகள் தான் –

சமமானவர்களுள் முதலாவது
பலருக்கு ஒரு விருப்பமும் சிலருக்கு வேறே ஓரு விருப்பமும் இருந்தால் பலரின் விருப்பத்தைச் செய்ய வேண்டும் என்று பார்த்தோம்.
•ஸமமான எண்ணிக்கையக் கொண்ட இரண் டு பக்ஷங்களுக்குள் முரண் பாடு வந்தால் முதலில் சொல்லப் பட்டத்தை
எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நாம் உபக்ரம ந்யாயம் என்ற விஷயத்திலும் முன்னமே பார்த்தோம் .
• வேதத்தில், புரோடாசத்தை வைத்து செய்யப்படும் ஆக்நா வைஷ்ணவம் என்ற ஒரு யாகமும்
ஸரஸ்வதிக்காக நெய்யைக் கொண்டு செய்யப்படும் யாகமும் சேர்ந்து ஒரே பயனுக்கக விதிக்கப் பட்டுள்ளன .
இதில் முதல் யாகம், தர்ச பூர்ண மாஸத்தில் அமாவாசை யன்று செய்யப்படும் ஐந்த்ராக்ந யாகத்தின் விக்ருதி.
இரண்டாம் யாகம் பவுர்ணமி அன்று செய்யப்படும் உபாம்சு யாஜத்தின் விக்ருதி.
•ஆகையால் முதல் யாகத்துக்கான ஆஜ்ய பாகங்கள் வ்ருதந்வதீ மந்த்ரங்களோடும்
இரண்டாவதற்கான ஆஜ்ய பாகங்கள் வார்த்ரக்நீ மந்த்ரத்தோடும் செய்யப் பட வேண்டியவை –
ஆனால் தந்த்ரமாக ஒரே முறை செய்கிற படியால் ஏதோ ஒன்றைத் தான் செய்ய முடியும்.
•ஸித்தாந்தம் – முதலில் சொல்லப் பட்ட படியால் ஆக்நா வைஷண யாகத்தால் எதிர் பார்க்கப்படும்
வ்ருதந்வதீ மந்த்ரத்தத்தைத் தான் சொல்ல வேண்டும்

காம்ஸ்ய போஜி நியாயம்
• ஒரு கூட்டத்தில் , பலருக்கு எந்த சிறப்பு எதிர்பார்ப்பும் இல்லை , ஆனால் சிலருக்கு ஒரு விசேஷ எதிர்பார்ப்பு
உள்ளது என்றால் , அந்த சிலரின் எதிர் பார்ப்பு தான் செய்யப்பட வேண்டும் –
• வேதத்தில் ஆக்ரயணம் என்ற ஒரு கர்மத்தில் ஐந்த்ராக்நம்,
வைச்வதேவம் , த்யாவா ப்ருதிவ்யம் என்று மூன்று யாகங்கள் சொல்லப் பட்டுள்ளன
. இவற்றில் முதல் இரண்டு யாகங்களில் இந்தப் புல்லைத் தர்பமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற
எந்த நியமமும் வேதத்தில் சொல்லப்பட வில்லை –
ஆனால் மூன்றாவதில் ப்ரஸூநமயமோ (பூவோடு கூடின / வெட்டப்பட்டு மறுபடியும் வளர்ந்த) புல்லைக் கொண்டு
செய்ய வேண்டும் என்று சொல்லப் பட்டுள்ளது
•ஆகையால், முதல் இரண்டு யாகங்களுக்கும் எந்த விசேஷ எதிர்பார்ப்பும் இல்லாத படி யாகையால் ,
மூன்றாவது யாகத்தின் தேவைப்படியே மூன்றையும் செய்ய வேண்டும்
• இதற்கு அடிப்படை காம்ஸ்ய போஜி ந்யாயம் ஆகும் – குரு என்பவர் சிஷ்யரை விட உயர்ந்தவர்.
குருவிற்கு ’இந்த பாத்திரத்தில் தான் சாப்பிட வேண்டும் என்ற நியமம் இல்லை -.
ஆனால் சிஷ்யன் ’பித்தளை பாத்திரத்தில் மட்டும் தான் உண்பேன் என்ற நியமம் கொண்டவர் –
இந்நிலையில், இருவரும் சேர்ந்து ஒரே பாத்திரத்தில் உண்ணும் பொழுது, குரு உயர்ந்தவராக இருந்தாலும்
சிஷ்ய விஷயத் தேவைக்கு ஏற்பத் தானும் பித்தளை பாத்திரத்தில் தான் உண்ண வேண்டும்.
அதே ந்யாயம் தான் இங்கும் சொல்லப்படுகிறது.

விகல்பமும் சமுச்சயமும் –
ஒரு த்ருஷ்டமான ப்ரயோஜனத்துக்காக்க இரண்டு பொருள்கள் விதிக்கப் பட்டால் அவற்றில்
ஏதோ ஒன்றைத் தான் உபயோகிக்க முடியும் / செய்ய முடியும்.
ஆகையால் அவ்விடத்தில் அவ்விடத்தில் விகல்பம் ஏற்படும். எடுத்துக்காட்டு – புரோடாசத்தை செய்வது என்ற
த்ருஷ்டமான ப்ரயோஜனத்துக்கு நெல் மற்றும் யவம் என்ற இரண்டு தானியங்கள் வேதத்தால் போதிக்கப் பட்டுள்ளன
ஆகையால் அவற்றில் ஒன்றைத் தான் உபயோகிக்க முடியும் என்ற விகல்பம் ஏற்படுகிறது.
• அத்ருஷ்டத்துக்காக -அதாவது -அபூர்வம் என்ற புண்யத்துக்காக சில செயல்கள் விதிக்கப் பட்டால்
அதில் ஒரு செயலில் இருந்து வரும் அபூர்வம் மற்ற ஒன்றில் இருந்து வராது என்பதால்
ஒன்றைச் செய்தால் மற்ற ஓன்று வீணாகாது ஆகையால் அவற்றைச் சேர்த்தே செய்ய வேண்டும் –
இதற்கு சமுச்சயம் என்ற பெயர் -. எடுத்துக்காட்டு –
ப்ரயாஜங்கள் அநுயாஜங்கள் என்ற அங்கங்களுக்கு ஸமுச்சயம் தான் –
•அத்ருஷ்டமான ப்ரயோஜனங்கள் இருந்தால் எந்த இடத்தில் பிரயோஜனம் ஓன்று என்று முடிவு
செய்ய முடியுமோ அங்கு விகல்பம் தான் -எடுத்துக்காட்டு
– தர்ச பூர்ண மாஸம் செய்ய வேண்டிய ஒருவன் அமாவாசை அல்லது பௌர்ணமியைத் தெரியாமல் விட்டு விட்டால்
அதற்கு இரண்டு ப்ராயச்சித்த யாகங்கள் சொல்லப் பட்டுள்ளன .
அவை அத்ருஷ்டமான ப்ரயோஜனத்தை உண்டு செய்தாலும் தர்ச பூர்ணமாஸம் செய்யயாதலால் வந்த ஒரே பாபத்தைப் போக்க
இரு யாகங்களும் என்று நாம் அறிவோம்.ஆகையால் ஒன்றைச் செய்தால் மற்ற ஓன்று தேவையில்லை என்ற விகல்பம் ஏற்படுகிறது –

————–

சங்கர்ஷ தேவதா காண்டம் மேலே நான்கு அத்யாயங்கள்
மேலே மீமாம்ஸா தர்சனம் பார்ப்போம்

பாடம் –26-மீமாம்சையில் பிரமாணங்கள்

மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் பன்னிரண்டு அத்யாயங்களின் பொருளையும் நாம் படித்தோம்.
அதில் சொல்லப்பட்ட கருத்துக்களைக் கொண்டு தான் வேதத்தின் பொருள் நிச்சயிக்கப்படுகிறது.
இப்படி வேதத்தின் உபாங்கமாக விளங்கும் மீமாம்ளஸ, ஒரு தனி தர்சநமாகவும் வளர்ந்துள்ளது.
அந்த தர்சநத்தின் சிறப்பம்சங்களைத் தான் நாம் மேல் வரும் சில வகுப்புகளில் படிக்கப் போகிறோம்.
• ஒவ்வொரு தர்சநமும் அவர்கள் ஏற்கும் ப்ரமாணங்களையும், அவற்றால் அறியப்படும் விஷயங்களான
ப்ரமேயங்களளயும் நிர்ணயிக்க வேண்டும்.

ப்ரத்யக்ஷம், அநுமானம், சப்தம், உபமாநம், அர்த்தாபத்தி, அநுபலப்தி, ஸம்பவம் ஐதிஹ்யம் என்ற எட்டு ப்ரமாணங்கள் வெவ்வேறு
சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டுள்ளன.
அவற்றில் சார்வாகர்கள் முதல் ப்ரமாணத்தை மட்டும் ஒப்புக் கொண்டார்.
பௌத்தர்களும் வைஸேஷிகர்களும் முதலிரண்டு ப்ரமாணங்களை ஏற்றனர்.
பாஸவஜ்ஞர் முதலான சில நையாயிகர்களும், ஸாங்க்ய மதத்தாரும் முதல் மூன்று ப்ரமாணங்களை ஏற்றார்கள்.
நையாயிகர்களில் பலர் முதல் நான்கு ப்ரமாணங்களை ஒப்புக் கொண்டார்கள்.
ப்ராகாரர்கள் என்ற ஒரு வகையான மீமாம்ஸகர்கள் முதல் ஐந்து ப்ரமாணங்களை ஏற்றனர்.
பாட்டர்கள் என்ற மீமாம்ஸகர்களும், அத்வைத தேதாந்திகளும் முதல் ஆறு ப்ரமாணங்களை ஒப்புக் கொண்டார்கள்.
இறுதியாக, பௌராணிகர்கள் என்பவர் எட்டு ப்ரமாணங்களையும் ஆதரித்தார்கள்.

• ந்யாய மதத்தில், ஒரு பொருளை உள்ளபடி காட்டிக்டுக்கும் ஜ்ஞாநம் ப்ரமா (யதார்த்த ஜ்ஞாநம்) என்று சொல்லப்பட்டது.
குமாரில பட்டரின் சிஷ்யர்களான பாட்ட மீமாம்ஸகர்கள் இதை ஏற்க வில்லை
• “முன்னால் அறியப்படாத விஷயத்தை உள்ளபடி காட்டிக் கொடுக்கும் அறிவு தான் ப்ரமா ” என்று அவர்கள் கூறுகிறார்கள்.
• ’முன்னால் அறியப்படாத’ என்று சொன்னபடியால், ஸ்ம்ருதி என்று அழைக்கப்படும் நினைவுக்கு ப்ரமா என்ற பெயர் கிடையாது என்று
அறியலாம், ஏன் என்றால் நிளனவு எப்பொழுதுமே முன்னால் அறியப்பட்ட விஷயத்தைப் பற்றியதாகத் தான் இருக்கும்.

• ’உள்ளபடி’ என்று சொன்னபடியால், ப்ரமம் ஸந்தேகம் முதலானஅறிவுகளுக்கும் ப்ரமா என்று பெயர் கிடையாது என்று தேருகிறது.
• கேள்வி – தாராவாஹிக ஜ்ஞாநம் (அறிவுத் தொடர்) என்று ஒன்று உண்டு. நீண்ட நேரத்துக்கு நான் என் கண்ணால் ஒரு குடத்தைப் பார்த்தால்,
’இது குடம்’, ’இது குடம்’ என் ற அறிவு பல முறை ஏற்படும். இவை அனைத்துமே ப்ரத்யக்ஷம் என்ற அறிவு தான், ஸ்மரணம் அல்ல.
அறிவு என்பது சில வினாடிகள் மட்டுமே இருக்கும் ஒன்று, ஆகையால், நீண்ட காலத்துக்குள் அந்தக் குடத்தைப் பற்றின பல அறிவுகள் ஏற்பட வேண்டும்.
அதில் முதல் அறிவானது, நான் இதுவரை அறியாத குடத்தைக் காட்டிக் கொடுத்தபடியால் ப்ரமா ஆகும்.
அதற்குப் பிறகு, அதே குடத்தைப் பற்றி மறுபடியும் மறுபடியும் ஏற்படும் மற்ற ஜ்ஞாநங்கள் ப்ரமா ஆகுமா?
• பதில் – தாராவாஹிக ஜ்ஞாநத்தில் முதல் அறிவி லேயே குடம் அறியப்பட்டுவிட்டாலும், அது ’அந்தந்த வினாடியில் உள்ளது’ என்ற
புது புது அம்சம் அந்தந்த ஜ்ஞாநத்தில் புதிதாக அறியப்படுகிறபடியால் அவற்றையும் ப்ரமா என்று கூறலாம்.

ப்ராபகர மாதத்தில் ஞானம்
பாட்டர்களின் மதத்தில், கயிற்றை பாம்பு என்றும், கிளிஞ்சலை வெள்ளி என்றும், சங்கத்தை மஞ்சளானது என்றும்
காட்டிக் கொடுக்கும் தவறான அறிவுகள் உண்டு.
ந்யாய மதத்தில் அயதார்த்த ஜ்ஞாநம் எப்படி சொல்லப்பட்டதோ அதே போல்தான் பாட்ட மதத்திலும்.
• ப்ராபாகரர்கள் என்ற ஒரு வகையான மீமாம்ஸகர்களின் மதத்தில் வேறான அறிவு என்று ஒன்றே கிடையாது.
ஜ்ஞாநம் அனைத்துமே சரியானதுதான்.
• கயிற்றைப் பார்த்து பாம்பு என்று அறிகிறோமே , எப்படி அது சரியாக இருக்க முடியும்? அவர்களின் கூற்றைப் பார்ப்போம்.
• கயிற்றைப் பார்த்து ’இது பாம்பு’ என்று அறியும் இடத்தில் தோன்றுவது ஒரு ஜ்ஞாநமே அல்ல, இரண்டு ஜ்ஞாநங்கள்.
கண் முன் இருக்கும் பொருள் நீளாமானது, வளைந்தது , பச்சையானது என்று கண்ணால் அறிகிறேன்.
இது புலன்களால் ஏற்படும் ப்ரத்யக்ஷம் ஆகும்.
கயிற்றிலுருக்கும்’கயிற்றுத் தன்மை ’ என்ற ஸாமாந்யத்தை (ஜாதியை ) மட்டும் க்ரஹிக்க வில்லை .
இல்லாத ஒரு தன்மையை உள்ளது என்று நினைத்தால் தான் ப்ரமம் ஆகும்.
இருக்கும் தன்மையை க்ரஹிக்காதது குற்றமல்ல.ஆகதே, இந்த ஜ்ஞாநம் சரியானது தான்.
• அதே ஸமயத்தில், இதே தன்மைகளை உடைய ஒரு பாம்பை நான் முன் ஓரு நாள் கண்டிருந்தபடியால் பாம்பின் நிளனவு ஏற்படுகிறது.
இதிலும் எந்த பொய்யான தன்மையும் தோற்றவில்லை . இதுவும் சரி தான்.
• நினைவுக்கு வந்த பாம்புக்கும் கண் முன் இருக்கும் பொருளுக்குமுள்ள வேறுபாட்டை அறியாத படியால் அதைக் கண்டு பயந்து விட்டேன்.
• ஆகவே , ஒரு பொருளின் ப்ரத்யக்ஷம், மற்ற ஓரு பொருளின் ஸ்மரணம், அவற்றுக்குள் வேறுபாட்டை அறியாமை
என்ற மூன்று தான் உள்ளன. ப்ரமம் இல்லை

ஞானம் ப்ரத்யக்ஷமா அல்லவா –
ஆத்மாவினுடைய குணமான ஜ்ஞாநம் என்பதை புலன்களால் அறிய முடியுமா முடியாதா என்ற விஷயத்திலும் வாதமுள்ளது.
• ந்யாய மதத்தில், மனது என்ற புலனைக் கொண்டு ஆத்மாவையும், ஆத்மாவின் குணங்களான ஜ்ஞாநம், இச்சை , த்தேஷம், ஸுகம்,
துக்கம் முதலானவற்றை அறியலாம் என்று படித்துள்ளோம்.
• ந்யாய மதத்தில் ஒரு பொருளை நான் பார்த்தவுடன் ’இது குடம்’ என்ற அறிவு ஏற்படுகிறது. இதற்கு வ்யவஸாயம் என்று பெயர்.
அதற்குப் பிறகு, ’நான் குடத்தை அறிகிறேன்’ என்ற ஜ்ஞாநம் உண்டாகிறது. இதற்கு அநுவ்யவஸாயம் என்று பெயர்.
இதுதான் ஜ்ஞாநத்தைப் பற்றின ப்ரத்யக்ஷம்.
• ப்ராபாகர மதத்தில், முதலில் ஏற்படும் ஜ்ஞாமே பொருள், அறிவு, ஆத்மா என்று மூவரையும் காட்டிக் கொடுக்கும்,
அதாவது “நான் குடத்தை அறிகிறேன்” என்று தான் முதலிலேயே ஜ்ஞாநம் உண்டாகும்.
ஆகவே , ஜ்ஞாநம் புலன்களால் அறியக் கூடியது தான்.
• பாட்ட மதத்தில் ஜ்ஞாநம் புலன்களுக்கு அப்பாற்பட்டது. நமக்கு ஒரு ஜ்ஞாநம் ஏற்பட்டாலும், அதை நாம் மனதால் அறிய இயலாது.
நாம் அறிந்த விஷயத்தில் ’அறியப்படுதல்’ என்ற ஒரு தன்மையை முதலில் பார்த்து, இந்தப் பொருளில் அறியப் படுதல் என்ற தன்மை
உள்ளபடியால் நான் என்ற ஆத்மாவிடம் அறிவு இருக்க வேண்டும்’ என்று அநுமானம் செய்து தான் அறிவு உள்ளது என்றே அறிய முடியம்

த்ரிபுட ப்ரத்யக்ஷம் -குடத்தை நான் அறிகிறேன் குடமும் நான் அறிவு மூன்றுமே ப்ரத்யக்ஷம் –
மூன்றுமே அறியலாம் -ப்ராபகரர்கள் -ஞானம் ப்ரத்யக்ஷம்
பாட்ட மதத்தில் அனுமானத்தாலே அறிகிறோம் -குடம் அறியப்பட்டது என்றால் அறிவு இருக்க வேண்டும் என்று அனுமானம் செய்து கொள்ள வேண்டும் –

ஞானம் சரியானது என்று எப்பொழுது அறியலாம் –
ந்யாய மதத்தில் ஒரு ஜ்நாநம் சரியானதா தவறானதா என்பதை உடனடியாக அறிய முடியாது.
’இது ஜலம்’ என் றஅறிவு ஏற்பட்டவுடன் அதை எடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
குடத்தால் ஜலத்தை எடுக்க முடிந்தால், நமக்கு வந்த ஜ்ஞாநம் சரியானது என்று முடிவு செய்யலாம்.
குடத்தில் நீர் வராமல் மண் மட்டுமே வந்தால், நாம் கண்டது கானல்நீர், ஆகையால் நமக்கு ஏற்பட்ட
அறிவு தவறானது என்று அறியலாம்.
ஆகவே , ஒரு ஜ்ஞாநம் சரியானது என்றோ தவறானது என்றோ முயற்சி செய்த பிறகு தான் அறிய முடியும்.
இதற்கு ’பரத: க்ராஹ் யத்வம் ’ (வேறே ஒன்றின் மூலம் க்ரஹிக்கப் படுதல்) என்று பெயர்.
• மீமாம்ஸையில் (ப்ராபாகர மதத்திலும் பாட்ட மதத்திலும் பொதுவாக ) ஒரு ஜ்ஞாநம் ஏற்படும் பொழுதே அது சரியானது தான்
என்று அறியப்படுகிறது. இதற்கு ஸ்வத: க்ராஹ் யத்வம் (தானாக /இயற்கையாகவே அறியப்படுதல்) என்று பெயர்.
ஆனால், முயற்சி செய்த பிறகு, முயற்சி வீணாகப் போனால், நமக்கு ஏற்ப